கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: பெண்ணின் குரல் 2006.09

Page 1

|
C
* SSN 1891-04 * விலை ரூபா 20

Page 2
உள்ளடக்கம்
01. சுனாமிக்கு பின்னரான புனர்வாழ்வு 02
02. இரு வெற்றிக் கதைகள் 10
03. அழிவு முகாமைத்துவத்திற்கு வாழ்வாதார 12
மையத்திலான அணுகுமுறை
04. சண்டையிடுதல் - சிறுவர்கள் 16
05. சேதமும், மீளுதலும் 18
06. பச்சோந்தி 2
07. முயற்சி திருவினையாக்கும் 24
08. சிறிய மூலதனங்கள் பெரிய சாதனைகள் 27
ULEJ56i: ! ஜானகி சமந்தி
கணனி அமைப்பு : செல்வி ராமேஸ்வரன்
அச்சுப் பதிவு ஹைரெக் பிறின்ற்ஸ்
ஆதரவளிப்பு : SIDA
ISSN 1391-0914
செப்ரெம்பர் 2006 September
வெளியீடு
பெண்ணின் குரல் 21/25 பொல்ஹேன்கொட கார்டின்ஸ் கொழும்பு 05
தொலைபேசி O74-4O7879
2816585 ஈ மெயில் voicewom(a) visualnet.lk

மீளுதல்
இந்த இதழில் சுனாமியின் பேராபத்து, உயிருக்கும், ஆதனங்களுக்கும் அதன் சேதம், காணிக்கும், பயிர்ச் செய்கைக்கும் அதன் அழிவு ஆகியவற்றில் நாம் சம்பந்தப்படவில்லை. இயற்கையினாலும், இத்தகைய அழிவினை உருவாக்குவதற்கு உதவுகின்ற இயற்கையானவை என விபரிக்கப்படும் மனிதரினால் ஆக்கப்படுகின்ற பிரச்சினைகளினாலும் விளைவிக்கப்படுகின்ற இந்த துயரங்களை மட்டுமே நாம் குறிப்பிடுகின்றோம்.
மீளுதலுக்கான வழிகளையும், உபாயங்களையும் கண்டறிவதே எமது மேற்கோளின் பங்காகும். தேசிய மற்றும் சர்வதேச ஆதரவுடன் ஒன்றிணைந்து, எமது சொந்த அயராத முயற்சியுடன் மீளுதலின் வழியில் நாம் உள்ளோம். நாம் என்னவாக இருந்தோமோ
அவ்வாறாக எம்மால் இருக்க முடியாது. ஆனால், நாம் எப்படி இருக்க வேண்டுமோ அப்படியே இருக்க முடியும். மனித பலத்திற்கும், சேமநலனுக்கும் கைகளை ஒன்று சேர்ப்பதற்காக ஒவ்வொருவருமே தமது குரோதங்களைக் களைவதே எமது மீளுதலின் பிரதான பங்குகளாகும்.
கஷ்டத்தில் இருந்தவர்களுக்கு உதவி தேவைப்பட்ட தருணத்தில் எம்மில் பெரும்பாலானோர் எழுந்தனர். அழிவு இடம்பெற்ற போது எழுந்த மனிதர்களுக்கும், ஏனைய உயிர்களுக்குமான ஊக்கமூட்டுகின்ற உணர்வுகளை அப்பால் போட்டுவிடக்கூடாது.
ஈவா ரணவீர
ン ܢܠ
2006 செப்ரெம்பர் 9 பெண்ணின் குரல் 9 1

Page 3
சுனாமிக்கு பின்ன
டொரத்தி
பீ.ஏ.பொருளாதாரம் (இலங்கை); எம்.எஸ்சி,
ஆற்றுப்படுத்தல் கல்விமானும், மு தற்போது முகாமைத்துவத்திலும், தொ ஆற்றுப்படுத்தல் மீதான ஒரு தொடர் நு
இலங்கையின் கரையோரப் பகுதிகளைத் தாக்கி, ஆயிரக்கணக்கான மக்களை வீடற்றவர்களாகவும், அனாதைகளாகவும் ஆக்கியதுடன், ஒரு சில நிமிடங்களினுள்ளே 40,000 அளவிலான அலறித் துடித்து, கத்திக் கதறிய பெண்களையும், ஆண் களையும், சிறுவர்களையும் இழுத்துச் சென்று சின்னாபின்னமாக்கிய பயங்கரமான சுனாமி அலைகள் தாக்கிய சம்பவத்தின் முதலாவது ஆண்டு நிறைவின் பின்னர் வாசிக்கும் பழக்கமுள்ள மக்களை இக் கட்டுரை அடையும்.
நாம் அந்த நெருக்கடி நிலையை, அதாவது அவசரகாலக் கட்டத்தை தற்போது கடந்து விட்டோம். ஆனால், சமஅளவில் கஷ்டமானதும், நெருக்கடியிலானதுமான கட்டத்தின் ஊடாக அதாவது புனர்வாழ்வுக் கட்டத்தையும், மீள் நிருமாணக் கட்டத்தையும் கடந்து நாம் செல்கின்றோம். சுனாமியின் பின்னர் அண்ணள வாக பன்னிரண்டு மாதங்களின் பின்னரே திட்டமிடுதலும், அமுலாக்கமும், மாற்றங்களும், மீளாய்வுகளும் இடம்பெறுகின்றன. கடலிலிருந்து 100/200 மீட்டர்கள் கொண்ட அடிதாங்கி வலயத்தினுள் புதிய நிருமாணங்கள் இடம்பெற முடியாது என்ற சட்டம் கூட, அண்மையில் மாற்றியமைக்கப்பட்டது. தலை தூக்காத அடிப்படை யின் மீது பிரயோகத்திற்கு அது செய்யமுடியாது எனக் கருதப்பட்டதே இதற்கான காரணமாகும். இதனால் சில பிராந்தியங்களில் மீள் நிருமாணம் அடியோடு நின்றுவிட்டதாக செய்திப்பத்திரிகைகள் அறிவித்தன. மேற்படி சட்டமே தடையை ஏற்படுத்து கின்றது என பிரதேசச் செயலாளர்களினால் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.
தேசிய அழிவுகள் சிக்கலான சம்பவங்களாகும். இவை தனிப்பட்டவர்களினதும். சனசமூகங்களினதும், அரசாங்கங்களினதும், ஒத்துப் போகும் தகுதி களுக்கு சவால்விடுக்கின்றன. இக் கட்டுரையானது இத்தகைய சம்பவங்களினால் விளையக்கூடிய தாக்கத்தை, விசேடமாக சுனாமியில் இருந்து தப்பிய பாதிக்கப்பட்ட பெண்களின் வகிபங்குடனும், வெளியிலிருந்தும், தப்பிய பாதிக்கப்பட்டவர்கள் மத்தியிலிருந்தே பெண் வசதிப்படுத்துனர்களினதும், ஆற்றுப்படுத்துனர்களினதும் வகிபங்குடனும் ஒத்துப் போகின்ற தப்பிய பாதிக்கப்பட்டவர்களுக்கான
2 பெண்ணின் குரல் 9 2006 செப்ரெம்பர்

ாரான புனர்வாழ்வு
அபேவிக்ரம ஆற்றுப்படுத்துனர் கல்வி (ஐக்கிய அமெரிக்கா) ன்னாள் ஆளணி முகாமையாளரும் றில் அபிவிருத்தியிலும் உசாவலராகவும், ல்களின் ஆசிரியராகவும் விளங்குகின்றார்.
தகுதியுடன் இணங்குகின்ற இத்தகைய தாக்கங் களினதும், காரணிகளின் நிகழக்கூடிய தாக்கத் தினை மதிப்பாய்கின்றது. இவ்வகிபங்குகளுக்கு ஆண்கள் பொருத்தமானவர்கள் அல்லர் என்பதை இது எவ்வழியிலும் குறிப்பிடவில்லை. இக் கட்டுரையை நான் பங்களிக்கும் இச்சஞ்சிகையின் நோக்கு பெண்களாக இருப்பதே இதற்குக் காரணமாகும். இதற்குப் புறம்பாக, வடக்கு, கிழக்கு, தெற்கு என முழுப்பிராந்தியத்திலும் எண்ணிக்கை களைக் கருத்திற்கு எடுக்கும் போது, சுனாமிக்கு ஆண்களை விட அதிகளவு பெண்களே அழிந்து ள்ளனர் என்பது ஒர் உண்மையாகும். உயிர் தப்பியுள்ள பாதிக்கப்பட்டவர்களின் மத்தியிலும் கூட, ஆண்களை விட பெண்கள் மீதே அதிகளவு தாக்கம் கண்டறியப்பட்டுள்ளது என்பதும் ஓர் உண்மையாகும். ஆகவே, இந்த அமைப்பில் இருந்த பெண்கள் மிகவும் ஊறுபடத்தக்க நிலைமையில் இருப்பதனால், அவர்கள் ஆற்று வதற்கான மிகவும் முக்கியமான வகிபங்கொன்றை கொண்டுள்ளார்கள். இது பற்றி இனி வரவுள்ள பந்திகளில் மேலும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
பாதிப்படைந்த தப்பிய பெண்களின் முக்கிய வகிபங்கு
வம்சகுல தலைமையிலான சமூகம் என எமது சமூகம் விபரிக்கப்பட்டுள்ள போதிலும், குடும்பத்தில் உள்ள பெருமளவு தீர்மானம் எடுப்பவர்களாக பெண்களே விளங்குவதுடன், இது ஒரளவுக்கு நுட்பமான வழியிலேயே இடம்பெறுகின்றது என்பது அறியப்பட்ட உண்மையாகும். 'வீட்டில் அம்மாவே தெய்வம்' என பொதுவாகக் கூறப்படுவதற்கு நாம் எல்லோரும் பரீட்சயமாகிவிட்டோம். இந்துக்களும் இவ் வழியாகவே தாயை விபரிக்கின்றார்கள். அவர்கள் தாய்க்கு சிவசக்தி என்ற சொற்பதத்தைப் பயன்படுத்துகிறார்கள். பெண் கடவுளையே சக்தி என்கிறார்கள். சக்தியே ‘சிவா'வை செயல்நோக்கப் படுத்தும் சக்தியாகக் கருதப்படுகின்றது. இவ் வழியாக, குடும்பத்தில் பெண் முக்கியமான வகிபங்கொன்றை ஆற்றுகிறாள். எமது சமூகத்தில் முழுவதும் முக்கியமான கூடமொன்றே குடும்ப அலகாகும். இங்கேயே எமது சமூகத்தில் சன்சமூகப் பணி ஆரம்பிப்பதுடன், பெண்ணே எப்பொழுதும் முக்கியமான வகிபங்கொன்றையும் ஆற்றுகின்றாள்.

Page 4
சுனாமியின் பின்னர், பலதரப்பட்ட வகைகளி லானதும், மட்டங்களிலானதுமான குரூரத்தின் மன அதிர்ச்சியான அனுபவங்களுக்கு தப்பிப் பிழைத்த பாதிக்கப்பட்ட பெண்கள் முகம் கொடுத்தனர். இவ்வகையான அனுபவங்கள் பஸ் தரிப்பிடங்களில் பாலியல் வல்லுறவுக்குள்ளாகுதல், மற்றும் அகதி கள் முகாம்களுக்கு உள்ளேயும், வெளியேயும் அவர்கள் உணர்ச்சிபூர்வமான வகையில் சீரழிந்துள்ள வேலையில் பாலியல் வல்லுறவுக் குள்ளாகுதல் ஆகியனவற்றை உள்ளடக்குகின்றன. இவ்வகையான சம்பவங்களின் தாக்கம் ஆண்களை விட பெண்களுக்கே இருந்தது. என்னவிருந்தாலும், அவர்கள் மீது விழுந்துள்ள பேரழிவின் சுமையை அவர்கள் நியாயமான முறையில் நன்கு தாங்கிக் கொண்டுள்ளார்கள். எப்படி இருந்த போதிலும், இந் நிகழ்வுகளில் சில நிகழ்வுகள் கடந்த காலத்திய விடயங்களாகும். அத்துடன் தப்பிப் பிழைத்த பாதிக்கப்பட்ட பெண்கள் ஒரு நிலையான வாழ்க்கை முறையினுள் பிரவேசிக்கின்றார்கள்; அல்லது ஏற்கனவே பிரவேசித்துவிட்டதாகத் தோன்றுகின்றது. பாதிக்கப்பட்டவர்களில் சிலர் உளவியல்ரீதியிலான விளவுைகளில் இருந்து தம்பாட்டிலேய மீண்டெழுந்துள்ள அதேவேளை, ஏனையோர் வசதிப்படுத்துனர்களினதும், ஆற்றுப் படுத்துனர்களினதும் உதவியுடன் மீண்டெழுந்து 6îl L60f. g|Elflooggl6) Post Traumatic Stres Diorders என அழைக்கப்படும் மன அதிர்ச்சிக்குப் பின்னரான அழுத்த ஒழுங்கீனங்களைக் கொண்டு ள்ளார்கள் என அடையாளங் காணப்படும்
 

மோசமான வகுதியினர் உள்நாட்டில் அல்லது வெளிநாடுகளில் மனோதத்துவவியலாளர் களிடமிருந்து அல்லது வைத்தியசாலை சார்ந்த மனோதத்துவியலாளர்களிடமிருந்து உதவியைப் பெற்றுள்ளார்கள் அல்லது தொடர்ந்தும் உதவியைப் பெறுகின்றார்கள். நாம் காணுகின்ற தோன்றிவருகின்றதாக தெரிகின்ற நிலையான வாழ்க்கை முறையைத் தவிர, இவை யாவுமே நடந்து கொண்டிருக்கும் ஒரு நடைமுறையாகும். திட்டமிடப்பட்ட நீண்ட கால சமூக உதவி நிலையங்களும், வேறு அமுல்படுத்தல் குழுக் களும் அரசாங்க பொறிநுட்பங்களாக நன்கொடை நாடுகளினாலும், உதவி முகவராண்மைகளினாலும் தாபிக்கப்படுவதை நாம் கவனத்திற்கெடுக்கின்றோம். சுனாமியின் பின்னர் வழங்கப்பட்ட கூடாரங்களில் இருந்து அல்லது வணக்க ஸ்தலங்களின் மண்ட பங்களில் இருந்து இடம்பெயர்வதற்கு இன்னுமே நிரந்தரமான வீட்டைப் பெறாதவர்களுக்கு அவர் களது இதுகாறும் உள்ள நிலை அதேவாறாக உள்ளது என்பதுடன், மீண்டும் ஒரு முறை நிலையான வகையிலான வாழ்க்கையையும், நிலையான வாழ்வாதாரமொன்றையும் தொடங்கு வதைச் செய்கின்ற பிரதான நீரோட்டத்தினுள் இன்னுமே அவர்கள் பிரவேசிக்க வில்லை.
இந்த புனர்வாழ்வு, புனர்நிருமாணக் கட்டத்தில், தப்பிப்பிழைத்த பாதிக்கப்பட்ட பெண்கள் முக்கிய மான வகிபங்கொன்றை ஆற்றுகின்றார்கள். சுனாமியின் பின்னர் குடும்பத்தின் ஆண்களுக்கு
2006 செப்ரெம்பர் 9 பெண்ணின் குரல் 3

Page 5
சிறியதொரு தொகை வழங்கப்பட்டது; அவர்கள் குடிப்பதற்காக அத்தொகையை செலவழித்தார்கள்; குடும்பத்தின் மீது ஒன்றுமே செலவழிக்கப்பட வில்லை என ஊடகங்கள் செய்தி வெளியிட்டி ருந்தன. ஆகவே, அத்திட்டத்தினை அமுல்படுத்தி யவர்கள் அதை மீள் திருத்தியமைத்தனர். புதிய தொரு வாழ்வாதாரத்தை ஈட்டுமுகமாக அழிவினால் தாக்கப்பட்ட சனசமூகத்தை விட்டு சில ஆண்கள் வெளியேற ஆரம்பித்தார்கள். இதனால் குடும்ப த்தை பராமரிப்பதற்கான உடனடிச் சுமையை உயிர் தப்பிய பாதிக்கப்பட்ட பெண்கள் தாங்கிக் கொள்ள வேண்டியிருந்தது.
ஆட்களுக்கு இடையிலான உறவையும், சமூக வலைப்பின்னலையும் பொறுத்தளவில் பெண்கள் பலமிக்கவர்களாவர். ஆகவே, ஆட்களை விட அதிகளவு ஆதரவை அவர்களால் திரட்டிக் கொள்ள முடியும். நெருக்கடி நிலையின் போது அதன் ஊடாகச் செல்வதற்கும், அதிலிருந்து வெளியே வருவதற்கும் அவர்களிடம் அளவு கடந்த தற்பெருமையிலான பலமும் உள்ளது. ஒரு சூழி நிலை யரிலிருநீது இனி னொரு சூழ்நிலைக்குச் செல்லும் இக்கட்டத்தில், சில பெண்கள் குடும்ப த்தின் வருமானத்தை ஈட்டுபவர்களாகவும் , பராமரிப்பினை வழங்குபவர்களாகவும் வந்துள்ளனர். அத்துடன் உள்ளூரையும், வெளிநாடுகளையும் சேர்ந்த பனி னிலையிலான தொணி டர் உதவிக் குழுக்களினால் பயிற்றுவிக்கப்பட்ட புதிய திறன் களைக் கற்றுக்கொண்ட பின்னர் சுயதொழில் புரிபவர்களாகவும் வந்துள்ளனர். உண்மையில், வெளிநாட்டு உதவிக் குழுக்களைச் சேர்ந்தவர் களும், இந்த அவசரகால புனரமைப்புக் கட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக வெளி நாடுகளில் தங்கியிருந்த இலங்கையர்களும் இலங்கைக்கு திரும்பி பறந்து வந்த போது துணிகளில் அச்சிடுதல், பின்னுதல், வர்ணம் பூசுதல் ஆகியவற்றுக்கான மூலப் பொருட்களின் போதியளவு கையிருப்புக்களை தம்முடன் கொண்டு வந்தனர் என்பதையிட்டு நாம் அறிந்துள்ளோம்.
இதற்குப் புறம்பாக, சமூகமொன்றில் உள்ள பெண்களை இறுக்கமான அடைப்புக்களில் உள்ளவர்களாகவும், பிள்ளைகளிடமிருந்து சுதந்திரமாக உள்ளவர்களாகவும் எண்ண முடியாதுள்ளது. குடும்ப அமைப்பொன்றில் உள்ள பெண்கள் அவர்கள் தாய்மார்களாக, பாட்டிமார் களாக, சித்திமார்களாக அல்லது வயதான பெண் சகோதரிகளாக இருக்கும் போது, 'பெண்களும் சிறுவர்களும்' என்றவாறு சிறுவர்களுடன் சேர்த்தே எப்பொழுதும் நினைவுகூரப்படுகின்றனர்.
4 பெண்ணின் குரல் 9 2006 செப்ரெம்பர்

அவசரகால கட்டத்தின் போது நாட்டில் வந்து இறங்கிய அதிகளவு ஆதரவுக் குழுக்கள் சிறுவர் கள் மீதே நோக்கினைக் கொண்டிருந்தன. அவர்கள் விளையாட்டுச் சிகிச்சை', 'கலைச் சிகிச்சை', 'சங்கீதச் சிகிச்சை என்றவாறு சிறுவர்களுக்கு உதவியளிப்பதில் முனைந்தனர். இத்தகையதொரு குழுவினர் அகதி முகாமில் உள்ள சிறுவர்களை கலை சிகிச்சை ஒன்றில் எவ்வாறு சம்பந்தப்படுத்த வைத்தனர் என்பதும், அவர்கள் சிறுவர்களுக்கு கலைப் பொருட்களை எவ்வாறு கொடுத்தனர் என்பதும், சிறுவர்களுடன் நீண்ட நேரங்களைச் செலவழித்தனர் என்பதும், இதில் பங்கெடுக்காத நிலையில் தனிமையில் இருந்த சிறுவன் ஒருவனை அவர்கள் எதிர்கொண்டனர் என்பதும் என் நினைவில் படிந்துள்ளன. எப்படி இருந்த போதிலும், எதையோ கீறுவதற்கு அச்சிறுவனை அவர்கள் ஊக்குவித்தனர். அவன் என்ன கீறினான்? அவன் தாளின் கீழ் பாதியில் (கிடையாக) சிவப்பாகவும், மேல் பாதியில் கறுப்பாகவும் வர்ணம் பூசியிருந் தான். இதைப் பற்றி அவனிடம் கேட்ட போது, கீழே உள்ள பாதி (சிவப்பு) சுனாமி வர முன்னரும், மேலே உள்ள பாதி சுனாமி குடும்பத்தைப் பாதித்த பின்னரும் என்பதே அவனின் விளக்கமாகும். இச் சிறுவன் ஆறு வயதானவன் என்பதுடன், அவனின் சித்திரம் மிகவும் தொடர்பாடலினதாகவும் விளங்கியது. இவ்வழியாக, பேரழிவின் தாக்கங்களைச் சிறுவர்கள் உணர்வதுடன், பன்னிலையான வழிகளில் பேரழிவு க்கும் தாக்கமுறுகின்றனர்.
சிறுவர்கள் நீள்மீட்சியுடையவர்கள்; அவர்களை சுனாமி அவ்வளவாகத் தாக்கவில்லை; அவர்கள் அதை இலகுவிலேயே மறந்து விடுவார்கள் என நினைப்பது தவறாகும். அது அப்படி அல்ல. மரணத்தினாலும், தமது வீடுகள் அழிந்து போனமையினாலும், தமது அன்புக்குரியவர்கள் மரணித்ததினாலும், தமது விளையாட்டு நண்பர் களையும், தமது வகுப்பறைகளையும் இழந்த தினாலும் சிறுவர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டு ள்ளனர். அவர்களினால் இவற்றைக் கிரகித்துக் கொள்ள முடியும்; முழுமையான வெற்றுத்தன்மை யையும், அடித்தளமின்மைகளையும் எடுக்க முடியும். சில வேளைகளில், தமது பெற்றோர்களின் பதிலிறுப்புகளுக்கு அவர்கள் எதிராகச் செயற்படு கின்றார்கள். அவர்கள் அதை வெளிக்காட்டுவார்கள்; அல்லது காட்டாமல் இருப்பார்கள். சில வேளை களில், வயது வந்தவர்களுடன் தமது மன அதிர்ச்சியான அனுபவங்களைத் தாமதித்திருப்பார் கள். ஆனால், இது வரை அவர்கள் பெரிதுமே வழமை போலவே நடக்கின்றனர்.

Page 6
சிறுவர்கள் என்று வரும் போது, சுனாமியினால் பாதிக்கப்பட்ட சிறுவர்களைக் கையாள்வதற்காக அவர்களுடன் ஒத்துப் போகின்ற பொறிமுறைகளை பெண்கள், அதாவது தாய்மார்கள், பாட்டிமார்கள், சித்திமார்கள், வயதான பெண் உடன்பிறவாதவர்கள் கற்க வேண்டியவர்களாகவுள்ளனர். மனம் குழம்பிய பிள்ளையின் நிலையைப் பற்றி பெற்றோர் இரு வருமே கரிசனை கொண்டுள்ளதாகத் தெரிகின்ற போதிலும், அதிகளவு கரிசனையை தாயே காட்டுவதும், அவளே விரைவில் ஏதாவது செய்யப்பட வேண்டும் எனவும் வலியுறுத்துகிறாள். சிறுவர்களின் மனோநிலை என்று வரும் போது, தாய்மார்களே மிகவும் மனவுணர்வுடன் விளங்கு கின்றார்கள். அவர்களே தமது கரிசனையுடனும், அவதானிப்புத்தன்மையுடனும் சிறுவர்களின் வழமையற்ற நடத்தையை அவதானிக்கின்றார்கள். அதே வேளை, ஏய்ப்புக் காட்டுகின்றார்கள் என அவர்களை ஆண்கள் ஒதுக்கி வைப்பதையும் நான் புரிந்துள்ளேன். ஆனால், இது சிறிதளவு சம்பந்தத் தையே கொண்டுள்ளது அல்லது அறவே கொண்டிருக்கவில்லை.
பாடசாலைக்கு சிறுவர்களை மீண்டும் அனுப்புகின்ற பிரச்சினை தொடர்பில் கூட, இதுவும் சமஅளவில் கஷ்டமான சூழ்நிலையாக இருந்துள்ளது. பாடசாலைக்குச் சென்ற சிறுவர்கள் தமது வகுப்பறைக்குள் பிரவேசிப்பதற்கு மறுத்துள்ளனர். இச் சூழ்நிலைகள் யாவற்றிலும் சிறுவர்களை மீளவும் வகுப்பறையில் தமது வழமையான நாற்காலியில் அமர்வதற்கு கற்பித்தல் பணியாளர் சகல முயற்சிகளை எடுத்ததிற்கு மேலதிகமாக, இதில் குறிப்பிடத்தக்க வகிபங்கினை தாய்மார்களே ஆற்றினார்கள். தமது குடும்பத்திற்கு ஆதரவை அளிப்பதற்காக, வெளியிடத்தில் வேலையையும், புதிய வாழ்வாதாரத்தையும் தேடி தமது சனசமூகத்தை விட்டு ஆண்கள் வெளியேறிச் சென்றதனால், சிறுவர்களுக்கு உதவியளிக்கக் கூடிய நிலையில் ஆண்கள் இருக்கவில்லை என்பது உண்மை என்பதில் ஐயமில்லை.
இது இவ்வளவு அல்ல. சில வேளைகளில், அழிவினால் பாதிக்கப்பட்ட பெண்கள் அழிவு களினால் சிறுவர்கள் இழுத்துச் செல்லப்பட்ட தனாலும், வீடுகளை இழந்ததினாலும் தமது வாழ்க்கைத் துணைகளின் ஏச்சுக்களுக்கும், தாக்குதல்களுக்கும் ஆளாகின்றனர். வைத்திய ரல்லாத பல்கலைக்கழக முதல்வரான தொண்டர் ஆற்றுப்படுத்துனர் ஒருவர் தென் பகுதியில் தனக்கு ஏற்பட்ட அனுபவங்களை என்னுடன் பகிர்ந்து

கொண்டார். சுனாமி அலைகளில் இழுத்துச் செல்லப்பட்ட பிள்ளையின் இழப்புக்கு தனது மனைவி மீது கணவர் ஒருவர் எப்பொழுதும் பழி போட்டார். “இந்த அதிர்ஷ்டம் கெட்டவளால் தான் இது எல்லாம் நடந்திருக்கின்றது” என அவர் தூற்றியுள்ளார். இது ஒர் இயற்கையான அழிவு, முழு நாட்டையும், வேறு அயல் நாடுகளையும் கூட பாதித்துள்ளது என யாரோ விளக்கமளிப்பதற்கு முயன்ற போதும் அக் கணவர் அதற்கு செவி மடுக்கத் தயாராகவிருக்கவில்லை. உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் கண் அசைவு சம்பந்தப்பட்ட தொழில் நுட்பம் போன்ற மனஅதிர்ச்சி ஆற்றுப்படுத்தல் பயிற்சித் திட்டங்களுக்கு (Eye Movement Desensitisation and Reprocessing - EMDR) முகங் கொடுத்துள்ள இந்த தொண்டர் ஆற்றுப்படுத்துனர் ஒரு குறிப்பிட்ட கால நேரத்திற்கு கணவருடன் ஆற்றுப்படுத்தலை மேற்கொண்டு, இறுதியாக நியாயமான விதத்திலும், நடைமுறை ரீதியிலும் எண்ணுவதற்கு அவரை மாற்றுவதில் வெற்றி யீட்டினார். இது வெற்றியீட்டியுள்ளது என எனக்குச் சொல்லப்பட்டது. இது போன்ற ஊறுபடத் தக்க பெருமளவு சூழ்நிலைகளில் மனைவியே (பெண்) கண்டனத்தை அடையும் நிலையில் இருக்கிறாள் என்ற உண்மையையே நான் இங்கு குறிப்பிடு கின்றேன். இங்கு குறிப்பிடப்பட்டுள்ள சம்பவத்தில், EMDR சிகிச்சையின் பின்னர் மட்டுமே தமது எண்ணுகின்ற நடைமுறையை கணவர் மாற்றி, நியாயமான விதத்தில் நினைப்பதை ஆரம்பித் ததுடன், அது முதல் இருந்து மட்டுமே, சுனாமிக்கு முன்னர் இருந்ததைப் போன்று தனது மனைவியுடன் அன்பாகப் பழகினார்.
வசதிப்படுத்துனர்களாகவும், ஆற்றுப்படுத்துனர்களாகவும் பெண்களின் வகிபங்கு (உயிர் வாழ்கின்ற பாதிக்கப்பட்ட பெண்களும், வெளியிலிருந்து பெண் தொண்டர்களும்)
சுண்ாமியிலிருந்து தப்பி உயிர் வாழ்கின்ற பெண்கள் எவ்வாறு தாமாகவே வசதிப்படுத்துனர்களாக மாற்றமடைந்துள்ளார்கள் என்பதையும் , ஆண்களுடன் ஒப்பிடுகையில் ஆதரவைத் தேடிக் கொள்வதில் மனிதாபிமானம், மென்மைப் போக்கு, பலங்கள், இதெல்லாவற்றுக்கும் மேலாக அவர் களது தற்பெருமையிலான பலங்கள், பெண்மைத் தன்மை ஆகியன தொடர்பில் அவர்கள் கொண்டுள்ள பலமான காரணங்களையும் நான் ஏற்கனவே தொட்டுக் காட்டியுள்ளேன். சனசமூ கத்தை ஒன்று சேர்த்து வைக்கக்கூடிய பரஸ்பர உறவுகளைக் கட்டியெழுப்புவதற்கான புதுமையான தகுதியைப் பெண்கள் கொண்டுள்ளார்கள்.
2006 செப்ரெம்பர் 9 பெண்ணின் குரல் 5

Page 7
சுனாமியிலிருது தப்பிய பாதிக்கப்பட்டவர்களாக அல்லது வெளியார் ஆதரவு மற்றும் உதவிக் குழுக்களின், உள்ளுர் அல்லது வெளிநாட்டு அ.சா.தாபனங்களின் அல்லது வேறு ஏனைய வற்றின் பிரதிநிதிகளாகப் பெண்கள் விளங்கும் போது மேற்கூறியவை உண்மையானதாகும். ஆண்கள் இந்த தகுதிகளையும், திறன்களையும், திறமைகளையும் கொண்டிருக்கவில்லை என எவ்வழியிலும் நான் சுட்டிச் சொல்லவில்லை. எனினும், ஆண்களை வெற்றி கொள்ளும் அளவுக்கு பெண்களிடம் விசேட பலங்கள் உள்ளன என்ற உண்மை தொடர்ந்துமிருக்கின்றன. இவையெல்லாவற்றுக்கும் புறம்பாக, உயிர் தப்பிய பாதிக்கப்பட்ட பெண்கள் தொடர்பில், இவர்களில் பெரும்பான்மையானோர் இல்லம் அடிப்படையிலா னவர்கள் என்ற உண்மையினால் வசதிப்படுத்துனர் களாக/ஆற்றுப்படுத்துனர்களாக தமது பெறுமதியை உயர்த்துகிறார்கள் என்பதுடன், ஆகவே இந்த புனர்வாழ்வு, புனர்நிர்மாணக் கட்டத்தில் இந்த மூலவளம் பெறப்பட வேண்டும்.
நாம் தற்போது முக்கியமான சூழ்நிலையை மாற்றுகின்ற கட்டத்தில் உள்ளோம். ஆதரவுக் குழுக்களிடமிருந்து முதல் பிறர் மூலமல்லாது நேரே அறிவுக்கும், வேறு பின்னூட்டலுக்கும் மேலாக, நாம் வாசிக்கும் தினசரிகளில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள குடும்பங்களுக்கு பெருமளவு வீடுகள் கையளிக்கப்பட்டன என்பது பற்றிய செய்திகளை வாசிக்கின்றோம். மேலதிகமாக, வாழ்கின்ற ஒழுங்குகளைப் பொறுத்தளவில் நிரந்தரமான மீளுதல் திட்டத்தின் அங்கமாக பாரிய அளவிலான கட்டிட நிருமாணம் தொடர்பில் TAFREN என்ற அரசாங்கத் தாபனத்தின் நடைமுறையிலான பணி பற்றியும் அதிகளவை நாம் அறிந்து கொள்கின்றோம். சம்பந்தப்பட்ட பகுதிகளில் 100/200 மீட்டர்கள் கொண்ட அடிதாங்கி வலயம் அவசியப்படுமிடத்து 25/50 மீட்டர்களுக்கு குறைக்கும்படி பிரதேச செயலாளர்கள் சிபார்சு செய்ததுடன், இது ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதென செய்திப்பத்திரிகைகள் அண்மையில் செய்தி வெளி யிட்டிருந்தன. இவை யாவுமே சமூக உட்கட்டமைப்பு முன்னேற்றம் பற்றியவையாகும். இதற்குப் புறம்பாக, சமூக மற்றும் பொருளாதார மீள் நிருமாணம் நிலையான, திட்டமிடப்பட்ட அடிப்படையில் இடம் பெற வேண்டும் என்பதுடன், மாற்று வாழ்வாதார அமைப்புகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட வேண்டும். நாம் தற்போது அத்திசையிலும், மீள்நிருமானத்தின் அக்கட்டத்தின் ஊடாகவும் நகருகின்றோம். அ.சா.தாபனங்களினாலும், தனியார் துறை உட்பட பெருமளவு ஆதரவுக் குழுக்களினாலும் ஏற்கனவே வழங்கப்பட்ட சிறிய வீடமைப்பு அலகுகளுக்கும் இது பிரயோகிக்கப்படும். இந்த சூழ்நிலையிலிருந்து
6 பெண்ணின் குரல் 9 2006 செப்ரெம்பர்

மாறுகின்ற கட்டமானது மிகவும் கஷ்டமானது, சிக்கலானது, அத்துடன் கடினமானதாகும். இந்தக் கட்டத்தில் தான், வாழ்க்கை முறையின் நிலையான வகையொன்றுக்கான வழியைச் சமைத்தலை ஆரம்பிப்பதின் நோக்கு மாற்றமடைகின்றது. இது எந்த வழிவகையிலும் உயிர் வாழ்கின்ற பாதிக்கப் பட்டவர்கள் குறைந்த மட்டத்திலான அழுத்தத்தின் மன அதிர்ச்சியின் கீழ் இல்லை எனச் சுட்டிச் சொல்லவில்லை. இதற்கு மாறாக, வழமையான நிலையில் உள்ள உயிர்தப்பிய சில பாதிக்கப்பட்ட வர்கள், ஒரு வருடத்திற்குப் பின்னர் கூட, திடீரென பயப்பிராந்தியை அல்லது அதிக மன அதிர்ச்சி யிலான தாக்கத்தை அடைய முடியும் என்பதுடன், இவர்களுக்கு சீவியத்தொழில்ரீதியிலான உளவியல் உதவி அவசியப்படும். இவ்விடயத்திற்காக, சிறைச் சாலையிருந்து தப்பியோடிய யாரோ ஒருவரைப் பிடிப்பது போன்ற வேறு காரணங்களுக்காக ஒலிக்கப்படும் “பொலிஸ் சைரனின் ஒலி கூட இந்த உயிர் தப்பிய பாதிக்கப்பட்டவர்களில் மன அதிர்ச்சி யைத் தூண்டிவிடக்கூடும். உண்மையில், இது பெரிதுமே நிகழக்கூடிய விளைவொன்றாகும்.
சுனாமியிலிருந்து உயிர் தப்பிய பாதிக்கப்பட்டவர் களுடன் பன்னிலையிலான வழிகளில் தொண்டர் பணியினை மேற்கொள்வதில் சம்பந்தப்பட்டுள்ளவர் கள் இச் சாத்தியக்கூற்றினையிட்டு உணர்வினைக் கொண்டிருக்க வேண்டும். உதாரணம் ஒன்றை வழங்குகையில் மத்திய தர வகுப்பினைச் சேர்ந்த படித்த, வேலையிலிருந்து இளைப்பாறிய பெண் ஒருவர், ஞாயிற்றுக்கிழமை காலை வேளைகளில் நடைபெற்ற ‘ரியூஷன் வகுப்பில் பங்கெடுப்பதற்காக நகர மையத்திற்கு சைக்கிளில் சென்ற தனது ஒரேயொரு “டீன்ஏஜ் மகனை இழந்தார். அந்த பயங்கரமான தினத்திற்குப் பின்னர், அலைகளால் இழுத்துச் செல்லப்பட்டு, நெளிந்து வளைந்து கிடந்த மகனின் சைக்கிளை மட்டும் பெற்றோர் களினால் கண்டுபிடிக்க முடிந்தது. எப்படி யிருப்பினும், டீன் ஏஜ் வயதைக் கொண்ட பெறா மகன் அவர்களுடன் வாழ்வதனாலும், அவர்களது ஆலயத்தின் பெளத்த பிக்குவின் உதவியினாலும் (அவர் இவர்களை ஆற்றுப்படுத்தியதுடன், சில வேளைகளில் நேரில் அவர்களைச் சந்தித்து அவர்களுடன் பேசுவதில் நேரத்தைச் செலவழித்தும் உள்ளார்), நூல்களை வாசிப்பதனாலும் தமது இழப்புக்கு ஒத்துப் போயுள்ளதாகத் தோன்று கின்றது. எனினும், ஒன்பது மாதங்களுக்குப் பின்னர், மேற்படி தாய், ஆடைகளைக் கொண்ட சிறிய பையொன்றுடன் விரைந்து செல்வதை அவரை அறிந்த சனசமூகத்தைச் சேர்ந்த மக்கள் கண்டுள்ளனர். இது வழமையற்ற சம்பவம் என்பதனால் அவரை அணுகி, அவர் எங்கே போகின்றார் என்று கேட்டார்கள். அதற்கு அவர்

Page 8
தனது மகன் தன்னை வரச் சொன்னதாகவும், அதனால் அவரைச் சந்திப்பதற்காக விரைந்து செல்வத்ாகவும் கூறினார். இது பொதுவாக அறியப்பட்ட சுனாமிக்கு பின்னரான அழுத்த ஒழுங்கீனத்தின் தெளிவானதொரு சம்பவமாகும். அவர் தற்போது சீவியத்தொழில் பராமரிப்பின் கீழ் உள்ளதாக நான் அறிந்துள்ளேன்.
இது உண்மைநிலை என்பதுடன், 2004 டிசம்பரில் இடம்பெற்ற சுனாமியின் பின் அதிகளவு நேரம் கடந்துள்ள போதிலும் கூட இத்தகைய சூழ்நிலை களுக்கு நாம் தயாராக இருக்க வேண்டும். இப்போது, மீண்டும் இங்கு தாயே இந்த மனஅதிர்ச்சி அனுபவத்தின் ஊடாகச் செல்ல வேண்டியிருந்தது. அனேகமாக மகனின் இழப்பு அவரை அதிகளவு தொட்டுவிட்டது.
புனர்வாழ்வு
இக் கட்டுரையை புனர்வாழ்வினதும், மீள்நிருமான த்தினதும் கட்டங்களின் மீது நான் நோக்கினைக் கொண்டுள்ளேன். அதாவது, சுனாமியிலிருந்து மீளுதல் திட்டத்தில் தற்போதைய கட்டம் உடனடியாக சம்பந்தத்தைக் கொண்டிருப்பதுடன், ஆகவே, சுனாமியில் உயிர்தப்பிய பாதிக்கப்பட்ட வர்கள் மத்தியில் உள்ள உதவியாளர்கள், வசதிப்படுத்துனர்கள், ஆற்றுப்படுத்துனர்கள், மற்றும் தலைவர்கள் வெளிப்படுகின்ற சாத்தியமான சூழ்நிலைகளுடன் இணங்குகின்ற ஆகக்குறைந்தது சகல கருவிகளைக் கொண்டிருக்க வேண்டும்.
பாரிய எண்ணிக்கையிலான தனிப்பட்டவர்கள், உள்ளூர் மற்றும் வெளிநாட்டு அ.சா.தாபனங்கள், மற்றும் இதையொத்த குழுக்கள் - மனிதநேயம், நேரம், பணம், நலன்புரி, முனைப்பாக்கல் ஆகிய வற்றைக் கொண்டுள்ள பாதிக்கப்படாத பகுதி களிலிருந்து குடும்ப அலகுகள் வீடுகளைக் கட்டுவதிலும், தமது வழமையான வாழ்வாதாரத்தை அல்லது மாற்று வாழ்வாதாரத்தை சம்பாதிப்பதிலும் சம்பந்தப்பட்டுள்ளன. கட்டப்பட்ட வீடுகள் சம்பந்தப் பட்ட அரசாங்கத் தாபனங்கள் ஊடாக கையளிக்கப் பட்டுள்ளன அல்லது அவை முடிவடையும் தறுவாயில் உள்ளன. 2005 வரவு-செலவுத் திட்டத்தை நிதி அமைச்சர் சமர்ப்பித்த போது மட்டுமே 65,000 வீடமைப்பு அலகுகள் ஏற்கனவே முடிக்கப்பட்டுள்ளன எனக் குறிப்பிட்டிருந்தார். ஆகவே, இப்புதிய வீடுகளுக்கு உயிர் தப்பிய பாதிக்கப்பட்டவர்கள் குடியேறும் போதே சாத்தியமான பிரச்சினைகளையிட்டு நினைப்பதற்கான சரியான நேரமாகும். கூடாரத்திலிருந்து அல்லது அகதி முகாமிலிருந்து வெளியேறி, அவர்கள் வாழ்வதற்கு புதியதொரு வீட்டைப் பெறுகிறார்கள்

என்பது உண்மையே. ஆனால், இன்னொரு மனவுணர்விலிருந்து இந்த மாற்றத்தை நோக்கும் போது, அவர்கள் பெரிதுமே செளகரியமாக வாழ்ந்துவிட்டு, இப்போது சிறிய வகையிலான வீடொன்றில் அடைந்து இருக்கப் போகிறவர்களாக இருக்கக்கூடும். இந் நிகழ்வுக்காக அழைக்கப்பட்ட சூழ்நிலையையும், மாற்றத்தையும், சீராக்கல்களையும ஏற்றுக்கொள்வதில் பிரச்சினைகளை அவர்கள் எதிர்நோக்க வேண்டியிருக்கும்.
ஆகவே, புனர்வாழ்வு நடைமுறையில் அவர் களுக்கு உதவுமுகமாக ஆற்றுப்படுத்தலின் சில அளவு அவசியமாக விளங்கும் என்பது புரிந்து கொள்ளப்பட வேண்டும். உயிர் தப்பிய பாதிக்கப் பட்டவர்கள் மத்தியில், ஆண்களை விட பெண் களுக்கே இவ்வகையான உதவி அவசியமாகும். ஏனெனில், பெரிதுமே பெண்களே நடைமுறையில் நகள்வதிலும், இணங்குவதிலும் சம்பந்தப்பட்டுள்ளனர். புதியதொரு வாழ்வாதாரத்தைச் சம்பாதிப்பதற்காக கிராமத்தை விட்டு ஆண்கள் தற்காலிகமாக வெளியேறாவிட்டால், உண்மையான பெளதீக நகர்வில் சம்பந்தப்படுவார்கள் என்பதில் ஐயமில்லை. ஏனெனில் அது ஆண்கள் ஆதிக்கத்திலானது என வழமையாகக் கருதப்படுகின்றது. இந்த வீடமைப்பு அலகுகளின் நன்கொடையாளர்களைப் பொறுத்த ளவில் வீடுகளைப் பெற்றவர்கள் சந்தோஷப்படு கின்றார்கள் என எதிர்பார்க்கின்ற அதே வேளை, அவர்கள் அழுத்தத்தினதும், மன அதிர்ச்சியினதும் கீழ், சில வேளைகளில் உளவியல்ரீதியில் பாதிப்படைந்திருப்பதை கண்டறியும் போது, அது அவர்களுக்கே ஆச்சரியமாக இருக்கக்கூடும். ஆகவே, இத்தகைய நன்கொடையாளர்கள் இந்நன்மை பயப்பாளர்களின் உளவியலை புரிந்து கொள்ள வேண்டும் என்பதுடன், ஏற்றுக்கொள்தல், சரிக்கட்டுதல், புனர்வாழ்வு நடைமுறை ஆகிய வற்றிலிருந்து அவர்களை வெளியேற்றுவதற்கு உதவுவதற்காக தயாராகச் செல்ல வேண்டும்.
ஆகவே, வசதிப்படுத்துனரின்/ஆற்றுப்படுத்துனரின், பயிற்றுனரினதும் கூட வகிபங்கினை எடுப்பது தற்போது நன்கொடையாளர்களின் சந்தர்ப்பமாகும் (அடையாளங் காணப்பட்ட உயிர்தப்பிய பாதிக்கப் பட்ட பெண் தலைவர்களுக்கு). பெளத்த குடும்ப மொன்றின் விடயத்தை எடுப்போம். துரதிர்ஷ்ட வசமாக, பெளத்தர்களைப் பொறுத்தளவில், அவலநிலையினால் தாக்கப்படும் போது அவர் களில் பெரும்பான்மையானோர் “அது எங்கள் கர்ம வினை’ என்று கூறுவார்கள். இதுவே உயிர் தப்பிய பாதிக்கப்பட்டவர்கள் சிலரின் மனங்களில் அச்சொட்டாக எதிரொலிக்கின்றது. பாதிக்கப்பட்டவர் களைக் குடியேற்றுவதில் உதவிக் கரத்தை நீட்டு கின்ற நன்கொடையாளர்கள், இதெல்லாம் தமது
2006 செப்ரெம்பர் 9 பெண்ணின் குரல் 9 7

Page 9
கர்மவினை என்ற அவர்களது தோல்வி மனப் பான்மையிலான எண்ணத்திலிருந்து விடுபடு வதற்காக அவர்களது தற்பெருமைப் பலத்தை மீள் கட்டியெழுப்புவதற்கும், அவர்கள் உறுதியான தன்மையிலான எண்ணத்தைக் கொண்டிருப்பதற்கும் அவர்களுக்கு உதவக்கூடியதாக இருக்க வேண்டும். புத்த பெருமானின் போதனைகளின் படி, 'பஞ்ச நியம தர்ம’ என அழைக்கப்படும் ஐந்து காரணி களின் விளைவே இயற்கை அழிவுகள் என்பதுடன், கர்மா என்பது ஒரு காரணி மட்டுமே, அதே வேளை, 'சூழல்', 'காலங்கள் போன்ற வேறு காரணிகள் உள்ளன. எனினும், இத்தகைய வசதிப்படுத்துனர்கள இதை நீண்ட ஆடம்பரமான பிரசங்கமாகவும், மதப் போதனையாகவும் மாற்றக் கூடாது என்பதை தமது மனதில் கொண்டிருக்க வேண்டும். தாம் தொடர்பை ஏற்படுத்துகின்ற நன்மைபயப்பாளர்களின் சமய நம்பிக்கைகளை வருகைதரும் இந்த தொண்டர்கள் அறிந்து வைத்திருப்பதனால், இந்து மதம், இஸ்லாம் மதம் அல்லது வித்தியாசமான பிரிவுகளைக் கொண்ட கிறிஸ்தவ மதம் போன்ற வேறு சமயங்களில் இருந்து இதையொத்த வேத நூல்களை அறிந்து வைத்திருக்க வேண்டும் என்பதே கவனத்திற்கு எடுக்கப்படுவதற்கான இன்னொரு மிகவும் முக்கிய மான விடயமாகும். சமயோசிதமாக மேற்கோள் செய்யப்பட வேண்டிய அதே வேளை, மதப் போதனையை ஒருவர் மேற்கொள்ளக்கூடாது என்பதை வலியுறுத்துவது அவசியமானதாகும். இதன் பின்னர், அதன் மீது உயிர் வாழ்கின்ற பாதிக்கப்பட்டவர்கள் திட்டமிட முனைவதுடன், தோற்கடிக்கும் எண்ணத்தை களைவதற்கும், சுய இரக்கம் கொள்வதில் ஈடுபடு வதை நிறுத்துவதற்கும் கற்றுக் கொள்வார்கள்.
சம்பந்தப்பட்ட சமய போதனைகளிலிருந்து மேற்கோள்களின் பெறுமதியை நான் வலியுறுத்து கின்றேன். ஏனெனில், அழிவினால் தாக்கப்பட்ட மக்கள் தமது அதிர்ச்சியையும், துயரத் தாக்குதல் களையும் களைவதில் சமயம் உதவியளிக்கின்றது என்றும், இத்தகைய செய்தியைப் பரப்புவதற்கு இதுவே அனுகூலமான விடயம் என்றும் ஆராய்ச்சி காட்டியுள்ளது. ஆகவே, சம்பந்தப்பட்ட சமயங் களில் இருந்து இத்தகைய முக்கியமான போதனை களைப் பயன்படுத்துவதற்கும், அவர்களது எண்ணத்தை மாற்றுவதற்கும்', அந்த விடயத் திலிருந்து தமது வாழ்க்கையை மீள்கட்டியெழுப்பு வதையும், உறுதியாக எண்ணுபவர்களாக விளங்கு வதையும் ஆரம்பிப்பதற்கு சகல வசதிப்படுத்துனர் களும்/ஆற்றுப்படுத்துனர்களும் தயார்நிலையில் இருக்க வேண்டும். இத்தகைய கருத்துரைகள் சுருக்கமாக இருப்பதுடன், பிரசங்கத்தில் உள்ள படியே மதப் போதனைகளை அல்லது
8 பெண்ணின் குரல் 9 2006 செப்ரெம்பர்

பிரசங்கங்களை அளிப்பதை ஒருவர் தவிர்த்துக் கொள்ள வேண்டும். ஆகவே மன அதிர்ச்சியினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான எண்ணத்தில் மாற்றத்தைக் கொண்டு வருவதில் ஒரு பெறுமதி மிக்க கருவியாக சமயம் நிரூபித்துள்ளதால், இவ்வகையான தகவலை வசதிப்படுத்துனர்கள்/ ஆற்றுப்படுத்துனர்கள் கொண்டிருக்க வேண்டும். இங்கு, பெண்களே செய்தியை பரப்புவதற்கு பொருத்தமானவர்களாவர்.
இதைச் செய்யுமுகமாக, குறிப்பிட்ட வீடமைப்பு அலகுகளின் தொகுதியில் உள்ள பெண் தலைவர்களை அடையாளங் காண்பதன் மூலம் அவர்களை வசதிப்படுத்துனர்களாக புத்திசாலித் தனமாக வழிகாட்டுவதற்கும், பயிற்றுவிப்பதற்கும் நன்கொடை வசதிப்படுத்துனர்களினாலும், ஆற்றுப் படுத்துனர்களினாலும் உதவி செய்யமுடியும். இப் பெண் தலைவர்கள் பின்னர் தமது அயலவர் களுக்கு உதவி செய்யக்கூடியவர்களாக இருப்பார் கள். சிறிய வீடமைப்புத் தொகுதிகளில், முறைசாராத் தலைவர் தோன்றுவது ஒரு இயற்கையான அம்சம் என்பதை வாசகர்கள் ஞாபகப்படுத்திக் கொள்ள முடியும். நீங்கள் விசாரணையை நடத்தும் போது இத்தகையதொரு அலகுக்கு குடிபெயர்ந்த குடும்ப மொன்றைத் தேடிய அனுபவத்தை நீங்கள் எப்பொழுதாவது கொண்டிருந்தால், ‘மார்கிரெட் அக்காவிடம் அல்லது "சரஸ்வதி அக்காவிடம் நீங்கள் அனுப்பப்படுவீர்கள் என்பதுடன், அவர்கள் விசாரணை நடத்தும் விருந்தினருக்கு உதவி யளிக்கும் நிலையில் இருப்பார்கள். எப்பொழுதுமே இவ்வாறான ஒரு நிலையில் பெண்ணே இருப்பார். ஏனெனில், வழமையாக ஒரு பெண்ணே முறை சாராத் தலைவராக விளங்குவார்.
மீளுதல் கட்டத்தினுள் நகருகின்ற கட்டத்திலும் கூட, வசதிப்படுத்துனர்கள்/ஆற்றுப்படுத்துனர்கள் ஆற்றுவதற்கு பாரியதொரு வகிபங்கினைக் கொண்டிருப்பார்கள். இக்காரணத்திற்காக, விசேட மாக சுனாமிப் பகுதிகளில் இன்னுமே சம்பந்தப் பட்டுள்ள பெண் அ.சா.தாபனங்கள் ஆற்றுவதற்கு முக்கியமான வகிபங்கொன்றுள்ளது. மாற்றத்துடன் ஒத்துப்போவதற்கு தமது தற்பெருமைப் பலங் களையும், வாழ்க்கைத் தரத்தில் பாரிய அக்கறை யையும், மென்மைத் தனத்தையும் பெண்கள் கொணி டிருப்பதன் காரணமாக, ஏற்றுக் கொள்ளலையும், நிரந்தரமாக சரிக்கட்டுதலையும் வேண்டுகின்ற இக் கட்டத்தில் பாரிய உதவி யளிப்பவர்களாக அவர்கள் விளங்கக்கூடும். இவ்வாறு செய்வதற்கான திறன்களையும், தகுதி யையும் தாம் கொண்டிருக்கவில்லை என அ.சா.தா. உறுப்பினர்கள் உணர்ந்தால், ஆற்றுப்படுத்தலில்

Page 10
நிபுணத்துவத்தைக் கொண்ட அறிவுப்பூர்வமானவர் களினால் நடத்தப்படும் செயலமர்வொன்றை ஒழுங்குபடுத்துவதற்கு அ.சா.தாபனத்திற்கு அல்லது வேறு நன்கொடை தொண்டர் உதவியாளர்களுக்கு பெறுமதியானதாகும். தீவிரமான செவிமடுத்தல் திறன்களில் புலமை அடைதல், தவறான நேரத்தில் கேள்விகளை அவர்கள் கேட்கக்கூடாது எனக் கற்றுக் கொள்ளுதல்; ஆனால், தோதான நேரத்தில் சரியான கேள்வியைக் கேட்டல், உறுதியான எண்ணத் திறன்களில் புலமை அடைதல், சமய தியானத்தின் பெறுமதியின் அறிவை கற்றுக் கொள்ளுதல் ஆகியனவே தொண்டர்கள் தாமாகவே புலமை அடைய வேண்டியதற்கான சில திறன்கள் ஆகும். கடந்த காலத்தை மறந்து விட்டு முன்னேறிச செல்வதற்கு உயிர் தப்பிய பாதிக்கப்பட்டவர்களைச் செயல் நோக்கமளித்தல், குடும்பத்திற்காக உயிரிழந்தவர்கள் தம் மனதில் கொண்டிருந்த நிறைவேற்றப்படாத செயற்பணியை நிறைவேற்று வதற்கு முயலுதல், சவால் ஒன்றாகவும், குடும்பத்தின் உயிரிழந்த உறுப்பினருக்கு தாம் கடன்பட்டிருக்கும் ஒரு கடமையாகவும் நோக்கி தமது சொந்த செயற்பணியைக் கொண்டு செல்லுதல் போன்ற செயல் நோக்கத்திலான மூலோபாயங்களையும் அவர்கள் கற்றுக்கொள்ள வேண்டும். பல்வாறான தாக்கத்தின் காரணமாக உயிர் தப்பிய பாதிக்கப்பட்டவர்கள் மத்தியிலிருந்து தோன்றுகின்ற முறைசாராப் பெண் தலைவர்களை அடையாளங் காணுதலும், இம் மாற்றத்தை ஏற்றுக் கொள்வதில் சனசமூகத்தில் உள்ள ஏனையோ ருக்கு உதவுவதற்காக அவர்களுக்கு இவ்வழியாக ஈட்டப்பட்ட அறிவை முறைசாராரீதியில் பகிர்தலும் வழமைத்தனத்தின் சில மட்டத்திற்கு அக்குறிப்பிட்ட சனசமூகத்தில் வாழ்க்கையைக் கொண்டு வருதலும் அளப்பரிய பெறுமதியிலானதாக விளங்கும்.
இறுதியாக, யோசனையொன்றை வெளியிட நான் விரும்புகின்றேன். சமூக, சமயத்திற்கான நிலையத் தினால் 2005 ஜூனில் வெளியிடப்பட்ட சமூக ஆய்வுகள் சஞ்சிகையில் “சுனாமிக்குப் பின்னரான மீள் நிருமானத்தை எவ்வாறு கட்டமைப்பது” மீது PAFFREL விதந்துரைப்பு அறிக்கையிடப்பட்டு ள்ளது. இதில் பந்தி 2ஐ நான் குறிப்பிட விரும்பு கின்றேன்.
“நிவாரணம், புனரமைப்பு மற்றும் மீள்குடியேற்றம் ஆகிய நடைமுறை மீது இடம்பெயர்ந்தவர்களின் கருத்துக்களைப் பெறுவதற்காக, இந் நடைமுறை யில் இடம்பெயர்ந்தவர்களின் பங்கெடுப்பினைப் பட்டியல்படுத்துவதற்காக நலன்புரி நிலையங்களில் ப்லதரப்பட்ட குழுக்களை நியமிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கையை எடுத்துள்ளது. ஆனால் , பெருமளவு நலன்புரி நிலையங்கள் இத்தகைய

குழுக்களைக் கொண்டிருக்கவில்லை. இத்தகைய குழுக்களை அமைப்பதை தீவிரப்படுத்த வேண்டும். இத்தகைய குழுக்களை அமைத்தல் நலன்புரி நிலையங்களுக்கு கட்டுப்பட்டிருக்கக்கூடாது. இத்தகைய குழுக்களை அமைப்பதற்கு உறவினர் களுடனும், நண்பர்களுடனும் வாழ்கின்ற இடம் பெயர்ந்த மக்களையும் சேர்த்துக் கொள்வதற்கு பொறிநுட்பமொன்று உருவாக்கப்பட வேண்டும்.”
இந்த அதிசிறந்த விதந்துரைப்பு தொடர்பில் நான் ஒரு கருத்தைச் சேர்த்துக் கொள்ள விரும்பு கின்றேன். இக் குழுக்களிலும், சகல வேறு இதை யொத்த சுனாமி புனர்வாழ்வு, மீளுதல் குழுக் களிலும் பால்நிலை நியாயத்தை, இல்லாதுவிடில் பால்நிலை பெரும்பான்மையை உறுதிப்படுத்துவது நல்லதொரு விடயமாகும். இந்த ஆலோசனை பெண் தீவிரமனப்போக்குடையவர்களினால் செய்யப் படும் பால்நிலை சமத்துவத்திற்கான ஒரு வாதமல்ல. ஆனால், உண்மை நிலையிலான முனைப்புடன் செய்யப்படும் ஒன்றாகும். சுனாமியானது பால்நிலை நடுநிலைமையானதல்ல. பெருமளவு பெண்கள் அழிந்துவிட்டார்கள், உயிர் தப்பியவர்களில் பெரும் பாலானோர் பெண்களாவர், சுனாமி அழிவின் பின்னர் அவர்கள் மீதான கெடுவிளைவு மிகவும் கடுமையானது என எம் எல்லோருக்கும் தெரியும். இவை தவிர, மாற்றத்தைக் கையாள்வதற்கும், அதற்கு ஒத்துப்போவதற்கும், சமாளிப்பதற்கும் முன்னர் சுருக்கமாக விபரிக்கப்பட்டவாறு அவர்கள் அதிக தற்பெருமை பலத்தையும், வேறு உறுதியான விடயங்களையும் , கொண்டுள்ளதுடன், இவை போன்ற வீடமைப்பு அலகுகளில் சக்திமிக்கதும், வெற்றிகரமானதுமான முறைசாராத் தலைவர் களாகவும் விளங்குகின்றார்கள். ஆகவே, பரிந்துரைக்கப்படுவதும், அமுல்படுத்தப்படுவதுமான திட்டமிடப்பட்ட சுனாமி மீட்பித்தல் முறைமையினுள் அவர்கள் அதிகாரத்தினைக் கொண்டிருக்க வேண்டும். இந்த சுனாமி மீட்பித்தல் குழுக்களின் மீது சமமான எண்ணிக்கையினராக அல்லது அதற்கு மேற்பட்டவர்களாக இருக்க வேண்டும். தெரிவு செய்யப்படுபவர்கள் வெறுமனே அரசியல் நியமத்தர்களாகவன்றி, உண்மையான தலைவர் களாக அடையாளம் காணப்பட வேண்டும். ஜனாதிபதியாக சத்தியப்பிரமாணம் செய்யும் வைபவத்தின் பின்னர் புதிய ஜனாதிபதி உரையை நான் செவிமடுத்தேன். அதி மேன்மை தங்கிய ஜனாதிபதியின் கீழ் நேரடியாக சுனாமியிலிருந்து மீளுதல் பணி வரவுள்ளது என்பதை அறிந்து நான் மகிழ்ச்சியடைந்தேன். சகல சுனாமி செயல் குழுக்களிலும் பெண்கள் தோதான முறையிலும், நியாயமானரீதியிலும் பிரதிநிதித்துவப்படுவார்கள் என்பதே எமது சிரத்தையிலான நம்பிக்கையாகும்.
2006 செப்ரெம்பர் 9 பெண்ணின் குரல் 9

Page 11
இரு சிவந்து
2004 டிசம்பர் 26இன் இலங்கையின் தென் கிழக்க பகுதியிலிருந்து இரு
சோமா 56 வயதான பெண். அவர் சிறியதொரு கடையைத் தாபித்துள்ளார். சுனாமிக்கு முன்னர் அவர் சிறிய மீன்பிடிக் கிராமமொன்றில் வாழ்ந்தார். அவரது கணவர் ஒரு கமக்காரர். இருவருமே கிராமத்தில் கடையொன்றை நடத்தினார்கள்.
சுனாமி அவர்களது கிராமத்தை முழுமையாக அழித்தது. அவர்கள் உடுத்திருந்த ஆடைகளைத் தவிர வேறு ஒன்றையும் அவர்களால் காப்பாற்ற முடியவில்லை. சகலரும் தமது வாழ்வாதாரங்களை இழந்துவிட்டார்கள் . பெருமளவு மக்கள் இறந்தார்கள். இவர்களில் ஒருவர் சோமாவின் கணவர்.
10 பெண்ணின் குரல் 9 2006 செப்ரெம்பர்
 

த் கதைகள்
சுனாமியைத் தொடர்ந்து Iல் மோசமாகப் பாதிக்கப்பட்ட } வெற்றிக் கதைகள்
உயிர் வாழ்வதற்கு சோமா அதிர்ஷ்டசாலியாவார். மேட்டு நிலத்தை நோக்கி ஓடுவதற்கு அவருக்கு நேரம் இருக்கவில்லை. அவர் அலைகளினால் சூழப்பட்டார். அதிர்ஷ்டவசமாக அவர் உயிர் தப்பிவிட்டார். ஆனால், உடல் முழுவதும் பெருமளவு சிராய்ப்புக் காயங்களுக்கு உள்ளானார். இதனால் வைத்தியசாலையில் ஒரு மாதமளவில் தங்க நேரிட்டது. இப்போது, 2005 நொவம்பர். அவர் நல்ல தேகாரோக்கியத்தில் உள்ளார்.
விதவையான சோமா தன்பாட்டிலேயே தன் வாழ்க்கையை தொடர்ந்து நடத்த வேண்டியுள்ளது. அவருக்கு வயதான ஆறு மகன்மார் உள்ளனர்.

Page 12
அவர்கள் தாய் க்கு சிறிதளவு ஆதரவை வழங்கினார்கள். நான்கு மகன்மார் தமது குடும்பங் களுடன் அதே சனசமூகத்தில் வாழ்கின்றார்கள். ஏனைய இருவர் அருகில் உள்ள கிராமத்தில் வாழ்கின்றனர்.
கிராமக் கடையொன்றை நடத்திய அனுபவத்தை சோமா கொண்டிருந்ததினால், வியாபாரத்தை மீளத் தாபிக் கலாம் என உணர்ந்தார். தனது தற்காலிகமான வீட்டின் முன்புறத்தில் கடையை அமைப்பதற்காக அவசியப்பட்ட கையிருப்பினையும், சாதனங்களையும் வாங்குவதற்காக 10,000 ரூபா வங்கிக் கடனொன்றை அவர் பெற்றார். வெளிநாட்டு நன்கொடையாளர் உடன் தின்பண்டங்கள், பிஸ் கற்கள் போன்றவற்றை வைப்பதற்காக கண்ணாடி அலுமாரி ஒன்றை அவருக்கு அளித்தார். அருகில் உள்ள பட்டினத்தில் உள்ள மொத்த வியாபாரியிடமிருந்து கெட்டுப் போகின்ற பொருட்கள் வாங்கப்படவில்லை. உடன் மரக்கறிகளை வாங்குவதற்காக ஒன்றுவிட்ட ஒரு நாள் பட்டினத்திற்கு சோமா சென்று வந்தார். பஸ்ஸைப் பிடிப்பதற்காக அவர் 1-2 கி.மீ. நடந்து சென்று, பின்னர் சுமார் 3 நிமிடங்கள் பஸ்சில் பிரயாணம் செய்ய வேண்டியிருந்தது. திரும்பி வரும் பிரயாணத்தின் போது, அவர் நிறையவே மரக்கறிகளைக் கொண்டு வரவேண்டியுள்ளது. கடை திறக்கப்பட்டு சில மாதங்களினுள் நல்ல வியாபாரத்தை சோமா படிப்படியாக தாபித்ததுடன், மாதமொன்றுக்கு 1,000 ரூபாவை பெற்ற கடனை அடைப்பதற்காக ஒதுக்குகின்றார்.
இதே கிராமத்தை சேர்ந்த இளம் பெண் பிரியா ஏழு வருடங்களுக்கு முன் திருமணமாவதற்கு முன்னர் உள்ளூர் வங்கியொன்றில் கணக்கியல் வேலையைச் செய்தார். அச்சமயத்தில் அவர் அடிப்படை ஆங்கிலத்தில் அறிவை ஈட்டிக் கொண்டார். டெயிலர்களாக விளங்கிய தனது பெற்றோர்களிடமிருந்து தைப்பதற்கு அவர் பழகிக் கொண்டார்.
சுனாமிக்கு முன்னர் பிரியா - தையல் இயந்திர மொன்றைச் சொந்தமாகக் கொண்டிருந்தார். தனது குடும்பத்திற்காக அவர் ஆடைகளைத் தைத்ததுடன், குடும்ப வருமானத்தைக் குறைநிரப்புவதற்காக ஆடைகளை தைத்து விற்பனையும் செய்தார்.
ஏனைய சகல கிராமவாசிகளைப் போன்று சுனாமியின் போது பிரியாவும் , அவரது

குடும்பத்தினரும் சகலவற்றையும் இழந்தனர். மீனவரான அவரது கணவர் தனது வாழ்வாதா ரத்தை இழந்தார். மே மாதம் வரை அவரினால் மீன்பிடிக்கச் செல்ல முடியாதிருந்தது. ஆனால், அதன் பின் வெளிநாட்டு நன்கொடையாளர் படகொன்றையும், வலைகளையும் அன்பளிப்பாக வழங்க, அவர் மீன்பிடிக்கச் சென்றார்.
வியாபாரத்தில் உள்ள தனது அறிவுடன் குடும்பம் சுதந்திரமாக இருப்பதற்காக பிரியா வியாபார மொன்றைத் தாபித்தார். உணவையும், அடிப்படைத் தேவைகளையும் வழங்கும் அரசாங்கத்தின் உதவித்திட்டம் சில மாதங்களுக்கே நீடிக்கும் என்பதை பிரியா தெரிந்து வைத்திருந்தார். கணவருக்குப் புறம்பாக பிரியாவுக்கு 3 வயதானதும், 6 வயதானதுமான இரு இளம் மகள்மார் உள்ளனர். பெப்ரவரியில் கடல்கடந்த நம்பிக் கைப் பொறுப்பொன்று பிரியாவுக்கு இலத்திரனியல் தையல் இயந்திரம், 2 சுருள் துணி, கத்திரிக்கோல், நூல் ஆகியவற்றை வழங்கியதுடன், தற்போது அவர் ‘ஒவர் லொக் இயந்திரம் ஒன்றையும் பெற்றுள்ளார்.
அண்மைய சகல கஷடங்களுடன், பிரியா கெளரவத்துடன் வாழ்ந்துள்ளதுடன், அவர் தனது குடும்பத்தின் பின்னாலுள்ள செலுத்துகின்ற விசையாக விளங்குகின்றார்.
அவர் நல்லதொரு தையல் வியாபாரத்தைத் தாபிக்கும் வழியில் உள்ளார். ஆடைகளுக்குப் புறம்பாக தலையணை உறைகள், பைகள், குழந்தைகளைக் காவுவதற்கான மெத்தைகள் ஆகியவற்றை அவர் தயாரிக்கின்றர். அவர் கையினால் பூசப்படும் வர்ணத்திலான வடிவமைப்பு டனும், இயந்திரப் பூப்போடுதலுடன் இவற்றை அலங்காரப்படுத்துகின்றார். தைப்பதற்குக் கற்றுக் கொள்ளும்படி கிராமத்தில் உள்ள ஏனைய பெண்களுக்கு பிரியா ஊக்கமளிப்பதுடன், உதவி யுமளிக்கின்றார். அவர்களும் தையல் இயந்திரங் களை வைத்திருக்கிறார்கள்.
இவ்விரு கதைகளும், சம்பந்தப்பட்ட பெண்களின் அனுமதியுடன் எழுதப்பட்டுள்ளதுடன், துரதிர்ஷ்டம் நிலவினாலும் அயராத உழைப்புடனும் , முன்னெடுப்புடனும் வாழ்க்கையில் முன்னேறி, சுய தேவையை அடைய முடியும் என்பதை அவர்கள் நிரூபிக்கின்றார்கள்.
E.N.
2006 செப்ரெம்பர் 9 பெண்ணின் குரல் 9 11

Page 13
அழிவு முகாமைத்து மையத்திலான
மாதவி மலல்கொட ஆரியபந்து அம்ஜாத் பாத்தி
தென் ஆசிய இடைத் தர தொழில் நுட்ப அபிவிருத்திக் குழுவையும் (ITDG), பாகிஸ்தான் கிராமிய அபிவிருத்திக் கொள்கை நிறுவனத்தையும் “அழிவு முகாமைத்துவத்திற்கு வாழ்வாதார மையத்திலான அணுகுமுறை - தென் ஆசியா வுக்கான கொள்கைத் திட்டவரை (Livelihood Centered Approach to Disaster Management - A Policy Framework for South Asia) 666p Spigs வெளியீட்டை தயாரித்தமைக்காக பாராட்ட வேண்டும். இந்த நாடு என்று முகங்கொடுக்காத மாபெரும் இயற்கை அழிவிலிருந்து மீளுகின்ற நடைமுறையில் இலங்கை உள்ளது என்பதை கரிசனைக்கு எடுக்கும் போது, இந்த ஆவணம் மிகவும் நேரகாலத்திற்குரியதாகும். அழிவுக்குப் பிந்திய பதிலிறுப்பு மனத்தேற்றப்பாட்டிலிருந்து அழிவுகளை கவனத்திற்கு எடுக்கின்ற வரலாற்றைக் கொண்டுள்ள உலகின் பிராந்தியமோன்றில் உள்ள நாடொன்றுக்கு அபாய மதிப்பீட்டிலிருந்தும், தணிப்பு சம்பந்தத்திலிருந்தும் அழிவு முகாமைத்துவத்தை தீவிரம் சார்ந்த அணுகுமுறைக்கான எளிய, நன்கு ஆராய்சசி செய்யப்பட்ட கொள்கைத் திட்டவரை பெறுமதியானதாகும். வறுமை, அழிவு அபாயம் மற்றும் வாழ்வாதாரங்கள் ஆகியவற்றுக்கு இடையிலான ஒன்றுடன் மற்றொன்றுக்கான உறவை வலியுறுத்தி வாழ்வாதாரங்கள் மீதே அணுகுமுறை மையத்தைக் கொண்டுள்ளமை மிக முக்கியமானதாகும். அழிவுகள் நிருவகிக்கப்படு கின்ற வழியில் நிலைப்பாடு மாற்றமொன்றில் ஒன்றாக இணைந்து கொள்வதற்கு தென் ஆசியா வில் உள்ள அரசாங்கங்களையும், அபிவிருத்திப் பங்காளிகளையும் கொள்கைத் திட்டவரை அழைக்கின்றது. அவசரகாலப் பதிலிறுப்புக்குப் பதிலாக உத்தேசமான அழிவுகளுக்கு ஊறுபடுந் தன்மையைக் குறைப்பது மீது நோக்கொன்றுக்கு அது அழைப்பு விடுக்கின்றது.
உலகத்திலேயே மிகவும் அழிவுக்கு ஊறுபடத்தக்க பிராந்தியங்களில் ஒன்றாக தென் ஆசியா விளங்கு கின்றது என்பது நன்கு அறியப்பட்ட உண்மை யொன்றாகும். தென் ஆசியாவில் உள்ள எமக்கு அது போதுமானதல்ல என்னுமாப் போல, மிகவும் ஏழைகளையும், மிகவும் ஊறுபடத்தக்கவர்களையும்
12 பெண்ணின் குரல் 9 2006 செப்ரெம்பர்

வத்திற்கு வாழ்வாதார
9.g.00)(35(p6OB
இயற்கையான அழிவுகள் பெரிதுமே தாக்குவதுடன், இதன் விளைவாகப் பாதிக்கப்பட்டவர்கள் மேலும் ஏழைகளாவதுடன், மிகவும் ஊறுபடத்தக்கவர்களாக விளங்குகின்றனர். அத்துடன் இன்னொரு அழிவுக்கு கஷ்டமுறும் பாரிய அபாயத்தில் உள்ளனர் என அனுபவம் காட்டியுள்ளது. பொதுவாக, வறுமையை ஒழிப்பதற்கு ஏககால முயற்சிகள் இல்லாத போது, ஊறுபடுந்தன்மையை குறைப்பதற்கான முயற்சிகள் பரிதாபமாகத் தோல்வியடைந்துள்ளன. அழிவு முகாமைத்துவம் மீது இலக்கியத்தின் அதிகரிக் கின்ற உறுப்பொன்று உள்ளது. இது வாழ்வாதா ரத்தை முன்னேற்றுவது மீதான அடிப்படையிலான அபிவிருத்திக்கான தொடர்புகளை மேம்படுத்து கிறது; அழிவிலான அதிர்ச்சிகளுக்கு அதிக மீள்தன்மையுள்ளதாக அழிவுக்கு ஊறுபடும் சமுதாயங்களுக்கு அதிகாரமளிக்கின்றது. இந்த அழிவு கிட்டுகின்றதென்றால், இலங்கை போன்ற தென் ஆசிய நாடுகள் பழைய நிலைக்கு அடை கின்ற நோக்கு நிலையிலிருந்து அழிவுகளையும், அவசரகால நிலைமைகளையும் சமாளிப்பதை ஏன் இன்னுமே தொடர்கின்றன?
கட்டுப்படுத்துவதற்குப் பதிலாக நிருவகிக்கப்பட வேண்டிய சூழலியலின் அங்கமாக அழிவுகளை நாம் ஒரு அடிப்படைப் பிரச்சினையாக நோக்கு வதில்லை. மேலதிகமாக, அழிவுக்கு ஊறுபடும் சனசமூகங்களின் கோரிக்கைகளுக்கும், தேவை களுக்கும், உரிமைகளுக்கும் பதிலிறுப்பதாகவும், கூருணர்விலானதாகவும், பொறுப்புக் காட்டக் கூடியதாகவும் இருப்பதாக நாடுகள் செய்யப்பட்டு, அபிவிருத்தியினதும், ஆட்சியினதும் பிரச்சினைகளாக அழிவுகள் கருதப்பட வேண்டும் என கொள்கை திட்டவரை சுட்டிச் சொல்கின்றது. அழிவு முகாமைத்துவக் கொள்கைகளின் நோக்கானது நஷ்டஈட்டு, நிவாரணப் பதிலிறுப்புக்களுக்குப் பதிலாக வறுமையை ஒழிப்பதையும், ஊறுபடுந் தன்மையைக் குறைப்பதையும் நோக்கி இருக்க வேண்டும். அழிவு முகாமைத்துவத்திற்கு மூலோபா யங்களில் “கடுமையாக” வகுத்தமைக்கப்படும் கட்டமைப்பு நடவடிக்கைகள் முக்கியமானவையாக உள்ள அதே வேளை, உரித்துப் பெறுகைகளை மேம்படுத்துதல், மிகவும் ஊறுபடத்தக்க சனசமூகங்

Page 14
களினதும், தாழ்நிலையிலான சமூகக் குழுக் களினதும் பேச்சுவார்த்தையிலான அதிகாரம் போன்ற “மிருதுவான” நடவடிக்கைகளுடன் இந் நடவடிக்கைகள் ஒன்றிணைக்கப்பட வேண்டும். அழிவு தொடர்பாக தீர்மானமெடுத்தல் , அபிவிருத்தியைத் திட்டமிடுதல், கண்காணித்தல் ஆகிய நடைமுறையில் அழிவுக்கு ஊறுபடும் சனசமூகங்கள் பாரபட்சமின்றி ஈடுபட வேண்டும் என்பது மிகவும் முக்கியமானதாகும்.
இருந்தும், “மேலிருந்து கீழ்” என்ற அணுகு முறையின் ஊடாக அழிவு முகாமைத்துவத்துடன் சமாளிக்க நாடுகள் முனைகின்றன. சக்திமிக்க அழிவு முகாமைத்துவத்திற்கு நடைமுறையிலான சட்டம் போதுமானதல்ல என்பதே பிராந்தியத்தில் உள்ள ஏதாவது அரசாங்கத்தினால் குறிப்பிட்டுக் கூறும் ஒரு வெளிப்படையான காரணமாகும். அழிவுச் சூழ்நிலைகளுடன் அரசாங்கம் சக்திமிக்க தாகச் சமாளிப்பதற்கு அதிகளவு “பலத்தை” வழங்குவதை எதிர்ப்பார்க்கின்ற இலங்கையில் உத்தேசமான அழிவு முகாமைத்துவச் சட்டமானது அதிக சட்டக் கட்டுப்பாடாக விளங்கும் பிரச்சினை ஒன்றுக்கு ஏதாவது தென் ஆசிய அரசாங்கத்தின் உருமாதிரியான பதிலிறுப்பொன்றாகும். சட்டங்கள் அவசியமானவையாகும், ஆனால், சக்திமிக்க அழிவு முகாமைத்துவத்திற்கு போதியதொரு நிபந்தனை அல்ல என்ற வழியாக அதை சிறந்த சட்டம் மட்டும் மேம்படுத்தமாட்டாது என்பது நன்கு அறியப்பட்டுள்ளது. பிராந்தியத்தில் உள்ள அரசாங் கங்கள் சமர்ப்பிக்கின்ற சகல அம்சங்களை “வாங்கும்” வரை, சக்திமிக்க அழிவு முகாமைத்து வத்திற்கு சகல அவசியப்படும் அம்சங்களை கொள்கைத் திட்டவரை தெளிவாக உச்சரிக் கின்றது. அழிவு முகாமைத்துவத்திற்கு துண்டு அடிப்படையிலான அணுகுமுறையொன்று, நாம் இன்றுள்ள நிலையை விளைவிக்கும் நாட்டை அல்லது உள்ளூர் நிலைமையைப் பொறுத்து கொள்கைத் திட்டவரையின் சில அம்சங்கள் மீது அதிக வலியுறுத்தலுக்கான அவசியமொன்று இருக்கும் அதேவேளை, சக்திமிக்கதாக விளங்கு வதற்கு கொள்கைத் திட்டவரையில் அடையாளங் காணப்பட்ட சகல அம்சங்களினதும் ஒன்றிணைந்த அணுகுமுறையொன்று அவசியம் என்ற உடன் பாடானது அழிவு முகாமைத்துவ நிபுணர்கள் மத்தியில் உள்ளது.
வெள்ளம், வரட்சி, சூறாவளி, நிலச்சரிவுகள், தற்போது சுனாமி, நிலநடுக்கம் ஆகியன உட்பட பலதரப்பட்ட இயற்கை அழிவுகளுக்கு இலங்கை உட்படுகின்றது. அழிவுகளில் இருந்து விளைகின்ற

மனித, பொருளாதாரத் தாக்கங்களுக்கு மேலதிக மாக, வாழ் வாதாரங்களுக்கு கடுமையான தாக்கங்கள் உள்ளன. வறுமைக்கும், மற்றும் ஊறுபடுந்தன்மைக்கும், இயற்கை வளங்களுக்கும் மற்றும் வாழ்வாதாரங்களுக்கும், வாழ்வாதாரங் களுக்கும், மற்றும் அழிவுகளுக்கும் இடையில் தொடர்பொன்றின் ஊடாக அழிவுகளின் சமூகப் பரிமாணங்களைத் திட்டவரை அடையாளங் காண்கின்றது. இத் தொடர்புகள் சுருக்கமான தத்துவார்த்தங்கள் அல்ல. ஆனால், “தென் ஆசியாவில் அழிவு ஆபத்தைக் குறைப்பதற்கான வாழ்வாதார விருப்புக்கள்’ மீதான இத்திட்ட வரையை ஆக்கிய தாபனங்களினால் அண்மையில் முடிக்கப்பட்ட திட்டமொன்றின் ஊடான “உண்மை யான உலக” அனுபவங்களில் இருந்து தோன்றி யுள்ளன. இலங்கை உட்பட ஐந்து பிராந்திய நாடுகளைத் திட்டம் உள்ளடக்கி யிருந்ததுடன், அழிவு ஆபத்துக்கும், வாழ்வாதரங் களுக்கும் இடையில் தொடர்புகளை ஆய்வதற்கு ஒரு தொடர் ஆராய்ச்சிக் கருத்திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டன. மிகவும் அழிவுக்கு உட்படும் சனசமூகங்கள் கிராமியப் பகுதிகளிலும், ஓரங்கட்டப்பட்ட காணிகள் மீதான நகர புறளல்லைகளிலும் வாழ்கின்ற அதே வேளை, ஆபத்தின் ஓர் அமைப்பின் அல்லது மற்றொன்றின் தொடர்ச்சியான பயமுறுத்தலின் கீழ் உள்ளன. நல்ல நேரங்களில் அவர்களுக்கு சிறிதளவு வாழ்வாதார விருப்புக்கள் கிட்டுவதுடன், அவர்களது வாழ்வாதார சொத்துக்கள் அழிவு களினால் சேதமடைவதற்கு * மிகவும் ஊறுபடத்தக்கதாக விளங்குகின்றன. வாழ்வாதாரங் கள் மீது மாற்றக்கூடாத தாக்கங்களின் காரணமாக, அழிவுகளில் இருந்து மீளுகின்ற சனசமூகங்கள் பெரிதுமே அடிக்கடி மிகவும் ஊறுபடத்தக்கதாக விளங்குகின்றன. இலங்கையில் சுனாமிக்குப் பின்னர் தெளிவாக வெளிப்படையானது போன்ற உயிருக்கும், பெளதீகக் கட்டமைப்புகளுக்குமான சேத்ம் மீது பெரிதுமே நோக்கினைக் கொண்டுள்ள அழிவுகளின் பொதுவான மனத்தோற்றப்பாடு களுக்கு இம் முடிவுகள் சவால்விடுக்கின்றன.
தமது கொள்ளை விதந்துரைப்புகளுக்கு அடிப்படை யாக உண்மையான வாழ்க்கை அனுபவங்களை ITDG மற்றும் RDPI ஆகியன பயன்படுத்தி யுள்ளன. ஊறுபடுந்தன்மையைக் குறைப்பதற்கு நிலையானதும், பன்னிலைப்படுத்தப்பட்டதுமான வாழ்வாதாரங்களே ஒரு திறவுகோல் என்பதை அவற்றின் அடிமட்டப் பரிசோதனைகள் காட்டி யுள்ளன. பொருளாதாரத்தின் கீழ் நோக்கிய போக்கு மற்றும் இயற்கையான அழிவுகள் ஆகிய இரண்டுக்கும் எதிராக சிறந்ததும், பன்னிலைப்
2006 செப்ரெம்பர் 9 பெண்ணின் குரல் 9 13

Page 15
படுத்தப்பட்டதுமான வாழ்வாதாரத் தளமொன்று பாதுகாப்பளிக்க முடியும். உள்ளூர் தேவைகளுக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டால், சமூக மற்றும் பெளதீக கட்டமைப்பு ஆபத்துக்கு உட்படும் சமுதாயங் களுக்கு இது உருப்படியான செய்திகளைக் கொண்டு வருகின்றது. “ஆபத்து தணிப்பு ஆற்றலளவை அதிகரிப்பதுடன், அழிவுகளிலிருந்து வாழ்க்கையையும், வாழ்வாதாரங்களையும் அது பாதுகாக்கின்றது. வாழ்வாதார அடிப்படையிலான அணுகுமுறையொன்று சுய நம்பிக்கையை உருவாக்குவதுடன், கூட்டு சனசமூக நடவடிக் கையையும் தயார்படுத்துகின்றது. இயற்கை வள முகாமைத்துவத்தில் சனசமூக சம்பந்தத்தை அது மேம்படுத்துகின்றது. மிகவும் முக்கியமான, ஓரங் கட்டப்பட்ட சனசமூகங்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதன் மூலம் ஒன்று திரட்டப்பட முடியும். ஆதலினால், முன்மொழியப்படுகின்ற ஏதாவ தொன்று அழிவு முகாமைத்துவத்திற்கான திட்டவரை ஒன்று மட்டுமே அல்ல, ஆனால், விரிவான சனசமூக முன்னேற்றத்தை சக்திமிக்க அமுலாக்கம் விளைவிக்கின்றது. நிலைத்திருக்கத் தக்க ஆபத்தைக் குறைத்தலும், வறுமை ஒழிப்பும் கைகோர்த்த நிலையில் செல்கின்றன.
வெளியீட்டில் விபரிக்கப்பட்டுள்ளவாறு, அழிவின் தாக்குப்பிடித்தலுக்கான நிலைத்திருத்தல் வாழ்வாதார (DRSL) திட்டவரையானது அழிவின் தாக்குப்பிடித்தலுக்கான நிலைத்திருத்தல் வாழ்வாதாரங்களில் தளமாக சொத்துக்களை (இயற்கையான, பெளதீக, நிதிசார், சமூக மற்றும் மனித) அங்கீகரிக்கின்றது. சொத்துக்கள் மட்டும் நிலைத்திருத்தல் வாழ்வாதாரங்களை மாற்ற முடியாது என்பதையும் அது பரிந்துரைக்கின்றது. இதற்கு இயலத்தக்கதொரு சூழல் அவசியமான தாகும். தென் ஆசியாவைப் பொறுத்தளவில், விரும்பத்தக்க இயலுகின்ற சூழலை உருவாக்கு வதற்கு அடையாளங் காணப்பட்ட நான்கு முன்தேவைப்பாடுகள் உள்ளன: (1) அழிவுக்கு தாக்குப்பிடிக்கும் பெளதீக மற்றும் சமூகக் கட்டமைப்பு; (ii) முறைமையான அல்லது முறைசாரா குழுக்களாக விளங்கக்கூடிய கூட்டு அக்கறையிலான சனசமூக நிறுவனங்கள்; (iii) சனசமூகத் தேவைகளுக்கு கூருணர்விலானதும், அதன் கோரிக்கைகளுக்கு பதிலிறுப்பதுமான பதிலிறுப்பிலான ஆட்சிக் கட்டமைப்புகள்; (iv) சமூகரீதியில் பொறுப்பான சந்தைகள். உலக பண்ட விலைகளின் ஏற்ற இறக்கங்களுக்கு கிராமிய சனசமூகங்களின் ஊறுபடுந்தன்மையை குறைப்ப தற்கான அவசியம் பற்றி திட்டவரை பேசுகின்றது. கிராமியப் பொருளாதாரங்களை நிலைத்திருக்க
14 பெண்ணின் குரல் 9 2006 செப்ரெம்பர்

வைப்பதற்குத் தேவைப்படும் கமத்தொழில் பொருளாதாரங்களுக்கு ஆதரவளிப்பதற்கு சந்தை ஒழுங்குவிதிகளின் சார்பாக இது வாதம் புரிகின்றது. கிராமியச் சனசமூகங்களின் ஊறுபடுந்தன்மையை குறைப்பது முக்கியமானது என உடன்படுகின்ற அதேவேளை, சந்தைத் தலையீடு இதைச் சாதிப்ப தற்கு மிகவும் சக்திமிக்கதும், நிலைத்திருக்கக் கூடியதுமான வழியல் ல என்பதே எனது கருத்தாகும்.
வாழ்வாதார மனத்தோற்றப்பாட்டின் மூலம் அழிவு களை நோக்குவதன் மூலமும், சனசமூகங்கள் ஊடாக பொதுசன கொள்கையை அணுகுவதன் மூலமுமே நிலைத்திருக்கத்தக்க அழிவு முகாமைத் துவம் அடையப்பட முடியும் என DRSL திட்டவரை சுட்டிச் சொல்கின்றது. வாழ்வாதார மனத்தோற்ற த்தின் ஊடாக அழிவு முகாமைத்துவத்தை அணுகுதல் அழிவுகளினதும், ஆபத்து வளங்களி னதும், சொத்துக்களினதும் மற்றும் நடைமுறையின் முழுவதும் சனசமூகங்களை ஈடுபடுத்தி, சனசமூக மட்டத்தில் சமூக-பொருளாதார சம்பந்தத்தினுள் ஊறுபடுந்தன்மைகளினதும், ஆற்றலளவுகளினதும் நடைமுறை-அடிப் படையிலான பகுப் பாயப் வொன்றைப் பரிந்துரைக்கின்றது. கொடுக்கப் பட்டுள்ள அமைவிடங்களுக்கும், ஆபத்துகளுக்கும், வளங்களுக்கும், சனசமூகங்களுக்கும் மிகவும் பொருத்தமான வாழ்வாதார விருப்புக்களை அடையாளங் காண்பதற்கான அடிப்படையை வழங்கி, பகுப்பாய்வானது அமைவிட, ஆபத்து குறிப்பானதாக விளங்க வேண்டும். அழிவு முகாமைத்துவத்தின் போது இந்த அணுகு முறையை இலங்கையர்களான நாம் எடுப்பதாகத் தெரிந்து வைத்திருக்காதது துரதிர்ஷ்டவசமான தாகும். மீளத் திரும்புதல் நடைமுறையில் வாழ் வாதார மையத்திலான அழிவு முகாமைத்துவத்தின் வழிகாட்டும் தத்துவங்களைப் பிரயோகிப்பதற்கு அண்மைய சுனாமியினால் விளைவிக்கப்பட்டுள்ள துன்பியலின் நடுவில் இவ்வாய்ப்பினை இலங்கை கொண்டுள்ளது. ஆனால், அழிவுக்கு உடனடியாக பதிலிறுப்பு காண வேண்டுமென்ற எமது அவசர த்தில், தமது வாழ்க்கையின் மீளுதலிலும், மீள் நிருமாணத்திலும் வரையறுக்கின்ற வகிபங்கு ஒன்றை பாதிக்கப்பட்ட சனசமூகங்கள் ஆற்ற வேண்டுமென்பதை நாம் மறந்துவிட்டோம். சனசமூகத்தின் ஏதாவது கருத்தாழமிக்க ஈடுபாடு இன்றி, பாதிக்கப்பட்ட சனசமூகங்களுக்காக முழு மீளுதல் மற்றும் மீள் நிருமான முயற்சியும் தீர்மானிக்கப்படுகின்றது என்பது எம் எல்லோருக்கும் தெரியும். சனசமூகங்கள் உண்மையாகவே பண்டங் களாக மாற்றியுள்ள மீளுதல் முயற்சிக்கு இந்த

Page 16
மையத்திலான அணுகுமுறைக்கான பழியை பாரிய பங்கொன்றை அரசாங்கம் உண்மையாகவே எடுக்க வேண்டிய அதேவேளை, சிவில் சமூகமான நாம் பழியிலிருந்து விடுபட முடியாது. மீளுதல் மற்றும் மீள் நிருமான முயற்சியில் சனசமூகத்தை நாம் கருத்தாழமிக்கதாக ஈடுபடுத்தியுள்ளோமா? சனசமூகங்கள் சமமான பங்காளிகளைக் கொணி டிருந்த தருணங்கள் உறுதியாக இருந்துள்ள அதேவேளை, பெருமளவு உதாரணங் கள் வேறு முறையாக விளங்கின. அடிதாங்கி வலயத்தினுள் சனசமூகத்திற்காக புதிய வீடுகளின் நிருமாணம் முக்கியமான விடயமொன்றாகும். பெரும்பான்மையான மீள் குடியமர்த்தப்படும் வீடுகள் தனியார் நன்கொடைகளினாலும், அ.சா. தாபனங்களினாலும் நிருமாணிக்கப்படுகின்றன. அவர்களது வீடுகளின் நிருமாணத்தில் சனசமூகத் திடம் நாம் ஆலோசனையைப் பெற்று, அவர்களை அதில் சம்பந்தப்படுத்தியுள்ளோமா அல்லது நாம் வீடுகளைக் கட்டி, நன்மைபயப்பாளர்களுக்கு சம்பிரதாயபூர்வமாக சாவிகளை கையளிக்கின் றோமா? சனசமூக யோசனையின் தத்துவத்தை வாய் மொழியில் மட்டுமன்றி ஆனால் உட்கருத்தின் அடிப்படையில் அரசாங்க மற்றும் சிவில் சமூகம் “வாங்க” வேண்டும்.
அழிவு முகாமைத்துவத் திட்டங்களின் மையத்தில், வாழ்வாதாரங்களை இடுவதன் மூலம், அழிவு முகாமைத் துவத்தின் கொள்கைகளிலும் , நடைமுறையிலும் மாற்றமொன்றை DRSL திட்டவரை கோருகின்றது. தன்மையில் மேலிருந்து கீழ்வரை என விளங்கும் இலங்கையில் ஆட்சியின் அரசியல் உண்மைநிலைகளை வழங்குகையில், புதிய கருத்துக்களுக்கு அல்லது வேறுபட்ட அணுகுமுறைகளுக்கு அரசாங்க நிறுவனங்கள் யோசனைகளை இலகுவில் ஏற்றுக்கொள்ளும் இயல்புடையவை அல்ல. இது வாழ்வாதார மனத் தோற்றப்பாட்டிலிருந்து அழிவு முகாமைத்து வத்திற்கு அவசரகால பதிலிறுப்பிலிருந்து நிலைப் பாட்டிலான மாற்றம் இலகுவான பணியொன்றல்ல என்பதைச் செய்கின்றது. சனசமூகத்திலிருந்து அழுத்தத்தினதும், கோரிக்கைகளினதும் காரண மான பொதுசனக் கொள்கையில் மாற்றங்கள் இன்னும் அதிக கஷடமாகவிருக்கும். ஆனால், நிலைத்திருக்கத்தக்க அழிவு முகாமைத்துவம் பற்றி நாடு மனப்பூர்வமானது என்றால், இவ்வாறு செய்வதை அன்றி வேறு மாற்றுவழி இல்லை எனத் தோன்றுகின்றது. பொதுசன நடவடிக்கையாக மாற்றப்படும் போது, அழிவு ஆபத்துக்குறைப்பில்

சனசமூக ஒன்றுதிரட்டலானது அரசியல் மற்றும் அரசாங்க நிறுவனங்களை மிகவும் பதிலிறுப்ப தாகவும், பொறுப்புக்காட்டுவதாகவும் செய்கின்றது என்பதை அனுபவம் தெளிவாகக் காட்டியுள்ளது. ஆரம்ப முனையாக உள்ளூராட்சி நிறுவனங்களும், உத்தியோகத்தர்களும் விளங்கலாம். இவர்களுடன் ஒன்று திரட்டப்பட்ட சனசமூகங்கள் ஒன்றுடன் மற்றொன்று உறவை ஏற்படுத்த முடியும். இந்த வகையிலான சனசமூக அரசாங்கத் தொடர்பு பரஸ்பரம் நன்மை பயப்பதாகும். இருந்தும், இலங்கையில், அழிவு முகாமைத்துவத்தின் சகல வடிவங்களிலும், விசேடமாக சுனாமிக்குப் பின்னரான மீள் நிருமாணத்தில் பொதுவாகவே உள்ளூராட்சி சபைகள் விடப்படுகின்றன. இரண்டாம் பட்சத்தின் தத்துவம் சொல்லில் மட்டுமன்றி, ஆனால செயலிலும் அமுல்படுத்தப்பட வேண்டும்.
திட்டவரை வலியுறுத்துகின்றவாறு, வாழ்வாதார மையத்திலான அணுகுமுறையான “பெட்டிகளில் எண்ணுவது” என்பதாக நாம் உணர வேண்டும். அழிவு முகாமைத்துவம், புத்தாயிரமாமாண்டு அபிவிருத்தி குறிக்கோள்கள் மற்றும் வறுமையைக் குறைத்தல் மூலோபாயங்கள் ஆகியன ஒரே சமன்பாட்டின் சகல அங்கமாகும். சூழல்ரீதியில் நிலைத்திருத்தல் அபிவிருத்தியின் சம்பந்தத்தில், ஒன்றிணைந்த தன்மையொன்றில் இவை சகல வற்றினதும் மீது சுனாமிக்கு பின்னரான மீளுதல் மற்றும் மீள்நிருமாண முயற்சிகள் நோக்கினைக் கொண்டிருக்க வேண்டும். ஒன்றிணைக்கப்படாத செயற்பாடுகளாக இவற்றை நாம் இன்னுமே நினைத்துப் பார்க்கின்றோம் எனத் தோன்றுகின்றது.
முடிவாக, அழிவு முகாமைத்துவ, அபிவிருத்தி கொள்கை வகுப்போர்களுக்கும், செயற்பாட்டாளர் களுக்கும், அபிவிருத்தி பங்காளிகளுக்கும் அழிவு முகாமைத்துவத்திற்கு வாழ்வாதார மையத்திலான அணுகுமுறை - தென் ஆசியாவுக்கான கொள் கைத் திட்டவரை “கட்டாயம் வாசிக்கும்’ ஆவணம் என்பதை நான் பலமாக விதந்துரைக்கின்றேன். இலங்கையின் சுனாமிக்குப் பின்னரான மீளுதல் மீள் நிருமாணமானது நிலைத்திருக்கத்தக்கது என்பதை உறுதிப்படுத்துவது இன்னுமே பிந்தி விடவில்லை.
சுமித் பிலப்பிற்றிய சிரேஷ்ட சூழலியல் எந்திரவியல் தென் ஆசிய சூழல், சமூக அபிவிருத்தித் துறை அலகு- உலக வங்கி
2006 செப்ரெம்பர் 9 பெண்ணின் குரல் 15

Page 17
JF60560)Lu
“ஆட்களின் வாழ்க்கைக்கும், சுதந்திரத்திற்கும், பாதுகாப்புக்குமான உரிமையை ஒவ்வொருவரும் கொண்டுள்ளனர்’ என மனித உரிமைகளின் ஐக்கிய நாடுகள் பிரகடனத்தின் உறுப்புரை 3 குறிப்பிடுகின்றது.
“அடிமைத்தனத்திலும், அடிமைப்பட்ட வாழ்விலும் ஒருவருமே வைத்திருக்கப்படலாகாது; அடிமைத் தனமும், அடிமைத் தொழிலும் அதன் சகல வடிவங்களிலும் தடைசெய்யப்பட வேண்டும்.”
“உதாசீனம், கொடுமை, மற்றும் சுரண்டல் ஆகிய சகல வடிவங்களுக்கும் எதிராக சிறுவர் பாதுகாக் கப்பட வேண்டும். அவர்கள் ஏதாவது வடிவத்திலான முறையற்ற விதமாகக் கொண்டு செல்லப்படு தலுக்கு உட்படலாகாது.” சிறுவர் உரிமைகள் மீதான ஐக்கிய நாடுகள் சமவாயத்தின் தத்துவம் 9 தெரிவிக்கின்றது.
மனிதரை முறையற்ற விதமாகக் கொண்டு செல்லுதலானது பால்நிலை, வயது அல்லது தேசியம் ஆகியவற்றின் எல்லைகளை கண்டு கொள்வ தில்லை. ஆனால், வெளிப்படைக் காரணங்களின் நிமித்தம், சனத்தொகையின் மிகவும் ஊறுபடத்தக்க வர்கள் பாரிய ஆபத்தில் உள்ளனர். ஆதலினால், விசேடமாக அபிவிருத்தி அடைந்து வரும் நாடு களைச் சேர்ந்த சிறுவர்கள் நடைமுறையிலான பொருளாதார நிலைமைகளின் காரணமாக, அடிக் கடியும் , இலகுவாகவும் இரையாகின்றனர். இலங்கையில், மிகவும் வறுமைப் பட்ட சிறுவர்கள் பாலியல் நோக்கங்களுக்காகவும், சிறுவர் உடலுழைப்பு நோக்கங்களுக்காகவும், சகல அதன் பலதரப்பட்ட தரங்கெட்ட வடிவங் களிலான சிறுவர் உடலுழைப்புக்காகவும், வீட்டு வேலைச் சேவைகளுக்காகவும் பல வருடங்களாக ஆபத்தான நிலையில் இருக்கின்றார்கள். மாகாணங்களுக்கு இடையில் முறையற்ற விதமாகக் கொண்டு செல்லுதல் மிகவும் பொதுவானதாகும். ஆனால், சிறுவர்கள் கடத்தப்பட்டு, சட்ட விரோதமாகக் கொண்டு செல்லப்பட்டு, வாங்கப்பட்டு பலதரப்பட்ட தவறானதும், சட்டவிரோதமானதுமான வழிவகை களின் மூலம் வெளிநாடுகளுக்கு அனுப்பப்படு கின்றனர் என்பதற்கு உண்மையான தகவல் உள்ளது.
16 பெண்ணின் குரல் 9 2006 செப்ரெம்பர்

பிடுதல்
சிறுவர்கள்
எனினும், 26.12.2004 அன்று இலங்கையின் கரையோரப் பிராந்தியங்களின் பாரியளவு பகுதியை அழித்த இயற்கையின் அழிவான சுனாமியின் பின்னர் சிறுவர்களின் நிலைமை பயங்கரமான தாகும். கணக்கிடப்பட்ட எண்ணிக்கையின்படி இரு பெற்றோர்களையும் இழந்த சுமார் 1,500 சிறுவர்கள் சுனாமி அனாதைகள் என வகைப்படுத்தப்பட்டு ள்ளனர். ஒரு பெற்றோரை இழந்த ஆயிரக்கணக் கான சிறுவர்களும் உள்ளனர்.
சில வினாடிகள் இச் சிறுவர்கள் "துணையற்றவர் களாக” விடப்பட்டுள்ளதுடன், இவர்களில் எல்லோருமே முறையற்ற விதத்தில் கொண்டு செல்லப்படுவதற்கான அபாயத்தில் உள்ளனர். பாதிக்கப்பட்ட பகுதிகளில் சிக்கிய குறைந்தள விலான மத்திய தர மற்றும் உயர் தர குடும்பங்கள் எவ்வளவுதான் அழிவிலானதாக இருந்தபோதிலும், நெருக்கடி நிலையிலிருந்து மீண்டுள்ளன என்ற அதிவிசேட உண்மைக்குப் புறம்பாக, நூற்றுக் கணக்கான ஏனையோர் ஆதரவுக்கான வெளிப் படையான வழிவகைகள் இன்றி விளங்குகின்றனர். தமது பெற்றோர்களை/குடும்பங்களை இழக்காத சிறுவர்கள் கூட பாதிக்கப்பட்டுள்ளனர். ஏனெனில், முன்னரை விட மிகவும் மோசமான வறுமைக்கு அவர்கள் உள்ளாகியுள்ளனர்.
சுனாமி அழிவு இடம்பெற்று ஒரு வருடத்தின் பின்னர் கூட ஆயிரக்கணக்கான குடும்பங்கள் இன்னுமே இடம்பெயருகின்றன. ஆயிரக்கணக்கானோர் தற்காலிகமான வீடமைப்பிலும், கூடாரங்களிலும், மரத்தினால் செய்யப்பட்ட குடிசைகளிலும் வாழ்கின்றனர். இது கரையோரம் முழுவதும் கண்கூடானதாகும். தமது வாழ்வாதாரங்களை மீளடையும் வழிவகைகளைப் பாதிக்கப்பட்டவர்கள் கொண்டிருக்கவில்லை. போதியளவு உணவு விநியோகங்கள் அவர்களிடமிருந்து பிடுங்கிக் கொள்ளப்பட்டுள்ளன. எதையுமே எதிர்நோக்கு வதற்கு இல்லாத காரணத்தினால் மிகவும் இலகுவில் செலவழிக்கப்படக்கூடிய பண்டமாக அவர்களது சிறுவர்களே விளங்குகின்றனர். இதயத்தைத் தாக்குகின்ற துயரத்தையும் , சொல்லொணா கஷடங்களையும் அனுபவித்த பின்னரும், பெரிய அலைகளினால் தமது சகல உடமைகளையும் இழந்த பின்னரும், ஒரு தொகை உறவினர்களையும், குடும்ப உறுப்பினர்களையும் இழந்த பின்னரும் மேலும் இன்னொரு சிறுவர் தொலைந்தால் என்ன?

Page 18
கடற்கரைகளில் பணியாற்றுகின்ற எம்மைப் போன்ற சமூக ஊழியர்கள் ஆடுகளை பசி வெறியுடன் தேடித் திரியும் நரிகளான அவர் களை எப்பொழுதுமே காண்கின்றனர். தன்னினச் சேர்க்கையாளர் அல்லது சிறுவர்களை துஷபிர யோகிக்கின்றவர்கள் இந்த சொர்க்கத் தீவுக்கு அபூர்வமான விருந்தினர் அல்லர். விளக்க முடியாத காரணங்களுக்கு உள்ளூரைச் சேர் நீத துஷ்பிரயோகிப்பாளர்கள் பல்கிப் பெருகியுள்ளனர். பாலியல் பொருட்களான சிறுவர்களுக்கு கிராக்கி யுள்ளது. பெரும் எண்ணிக்கையிலான “தொண்டர் களை’ சுனாமி கொண்டு வந்துள்ளது. சிலரின் அர்ப்பணிக்கப்படும் பணியைப் பாராட்டுகின்ற அதே
வேளை, ஏனையோரின் அந்தரங்கமானதும், தீங்கிலானதுமான நோக்கங்களைப் பெருமளவு தருணங்கள் வெளிப்படுத்தியுள்ளன. அவர்களைக் கண்டறிவதற்கு, அவர்களை அடையாளங் காண் பதற்கு, அவர்களது நோக்கங்களை சந்தேகிப்ப தற்கு ஒருவருக்கு அதிகளவு சூட்சுமபுத்தி தேவை யில்லை. அவர்களில் சிலரை ஊடகங்கள் வெளிப் படுத்தியுள்ளன. உதாரணமாக, தெற்கு சிறுவர்
 

நிறுவனத்தை தாபித்த தம்பதியினர், பின்னர் சிறுவர்களை முறையற்ற விதத்தில் கொண்டு போகச் செய்துள்ளனர்.
அதிகாரவர்க்கத்தினரும் இதற்கு பாராமுகமாக வுள்ளனர். இந்த சுனாமிக்குப் பின்னரான காலத்தில் பணியாற்றும் சிறுவர்களினதே இன்னொரு பொதுவான அம்சமாகும். அலைகளினால் சேதமாக்கப்பட்ட தமது சொந்த வீடுகளை கட்டுவதில் அவர்களில் சிலர் உதவுகின்றனர். ஆனால், ஏனையோர் சகலரும் பார்க்கத்தக்கதாக நிருமாண அமைவிடங்களில் தொழில்புரிகின்றனர். சிறியதொரு வருமானத்தை உழைப்பதற்கு இது அவர்களை இயலச் செய்கின்றது என்பது உண்மையே. ஆனால், அவர்களது சிறுவர் பராயத்தையும், பாடசாலைக்குச் செல்வதையும் அவர்கள் இழக்க வேண்டியுள்ளது.
கரையோரப் பகுதிகளில் சிறுவர் பாலியல் சுரண்டலுக்கும், கிராமிய ஏழைச் சிறுவர்கள் தொழிலுக்கு கொண்டு செல்லப்படுவதற்குமான அபாயம் எப்பொழுதுமே இருந்தது. சட்ட விரோதமான சுவீகாரத்தைத் தடுப்பதற்கு பலமான சட்டங்களை அறிமுகப்படுத்துதல் , மற்றும் இச்சிறுவர்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்து வதற்கு கிட்டுகின்ற மூலவளங்களையும் , பொறிநுட்பங்களையும் பயன்படுத்துதல் போன்ற வாறு, சுனாமியின் பின்னர் சிறுவர்களின் பாதுகாப்பினை மேம்படுத்துவதற்காக அதிகார வர்க்கத்தினரினால் நடவடிக்கை எடுக்கப்பட்ட அதே வேளை, பசியும், தேவையும் சட்டங்களினதும், சட்ட வினைப்படுத்தலினதும் மேலாக முன்னுரி மையை எடுக்கின்றது. போதிய கண்காணித்தல் இன்றி, அதிகார வர்க்கத்தினரும், பெற்றோர்களும், ஆசிரியர்களும் விழிப்பாகவும், உஷாராகவும் இல்லாத போது, தற்போதைய நேரத்தில் சிறுவர் களை முறையற்ற விதத்தில் கொண்டு செல்கின்ற பிரச்சினை பயங்கரமான பரிமாணங்களை அடைய முடியும். P.B.A.C.B. போன்ற (எங்கும் சூழலையும், சிறுவர்களையும் பாதுகாத்தல்) தாபனங்கள் அவை பணியாற்றும் பகுதிகளில், சுனாமியினால் பாதிக்கப் பட்ட பகுதிகளில் சூழ்நிலையைப் பரிசீலிப்பதற்கும், கண்காணிப்பதற்கும் பாதுகாப்புக் குழுக்களை அமைத்துள்ளது. மக்களை சம்பந்தப்படுத்துவதன் மூலமும், அவர்களது பொறுப்புக்களையும், அபாய த்தில் உள்ள சிறுவர்களைப் பாதுகாப்பதன் முக்கிய த்துவத்தையும் கற்பிப்பதன் மூலமும் இதை அவை செய்கின்றன.
மொரீன் செனிவிரத்ன
2006 செப்ரெம்பர் 9 பெண்ணின் குரல் 17

Page 19
சேதமும்,
கலாநிதி சுஜாதா விஜேதிலக்க
அறிமுகம்
2004 டிசம்பர் 26 அன்று உலகின் பாரிய பூமிநடுக்கங்களில் ஒன்றான சுனாமி தென் ஆசியாவிலுள்ள பெருமளவு நாடுகளைத் தாக்கியது. மிகவும் பாதிக்கப்பட்ட நாடுகளில் ஒன்றாக இலங்கையும் விளங்குகின்றது. நாட்டின் கரையோரத்தின் ஆயிரம் கிலோ மீற்றர்களை அல்லது மூன்றில் இரண்டை உள்ளடக்கும் சார்புரீதியில் ஒடுங்கிய, ஆனால் நீண்ட கரையோரப் பகுதியை அது தாக்கியது. வடக்கில யாழ்ப்பாணத்திலிருந்து கிழக்கு வரையிலான முழுக கரையோரமும் சேதமடைந்ததுடன், தெற்கின் கரையோர வளைவையும், மேற்கின் கரையோரப் பகுதிகளையும் அது பாதித்தது.
அரசாங்க மூலங்களின் பிரகாரம், அண்ணளவாக 38,000 மக்கள் தமது உயிரையிழந்ததுடன், 5,000 பேரை இன்னுமே காணவில்லை. சுமார் 1,000,000 மக்கள் இடம்பெயர்ந்ததுடன், பாதிக்கப்பட்டு முள்ளனர்.
உயர்வான மரண எண்ணிக்கையும், பாரிய எண்ணிக்கையிலான காயமடைந்தவர்களும்,
பாதிக்கப்பட்ட மாகாணங்களும், மாவட்டங்களு
оазыт6oolb மாவட்டம்
தெற்கு காலி
மாத்தறை
ஹம்பாந்தோட்டை
மேற்கு களுத்துறை
கம்பஹா கொழும்பு
கிழக்கு அம்பாறை
வடக்கு யாழ்ப்பாணம்
வட மேற்கு புத்தளம்
18 பெண்ணின் குரல் 9 2006 செப்ரெம்பர்

மீளுதலும்
காணாமல் போயுள்ளவர்களும், பொருள்ரீதியான சேதமும் உயிர் வாழ்கின்ற குடும்ப உறுப்பினர் களதும், விதவைகளினதும், அனாதைகளினதும், ஒற்றைப் பெற்றோரினதும், வயது வந்தவர்களினதும் நல்வாழ்வு மீது நீண்ட கால பின்விளைவுகளைக் கொண்டிருக்கும்.
மதிப்பீடுகளின் பிரகாரம், 193,000 வீடுகளை சுனாமி அழித்ததுடன், சுமார் 46,292 வீடுகளையும் சேதமாக்கியது. இது நாட்டில் மொத்தமாகவுள்ள வீடுகளின் எண்ணிக்கையில் சுமார் 13% ஆகும். அம்பாறை மற்றும் திருகோணமலை ஆகிய மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் வீடுகளின் எண்ணிக்கையில் சுமார் 20%ஆனவை சேதமடைந்தன. ஏனையவை வருமாறு: மட்டக் களப்பு - 19%, மாத்தறை - 7%, காலி - 4%, களுத்துறை- 3%, ஹம்பாந்தோட்டை - 3%.
168 பாடசாலைகளுக்கும், 4 பல்கலைக்கழகங் களுக்கும், 18 தொழில் முன்னிலை பயிற்சி நிறுவனங்களுக்கும் சேதமேற்பட்டன. பதிவு செய்யப்பட்ட நான்கில் ஒரு ஹொட்டேல்கள் பாதிப்படைந்தன. பெருமளவு கமநலசேவை நிலையங்களும், நீர்ப்பாசன வாய்க்கால்களும், 97
ளூம், கிராம உத்தியோகத்தர் பிரிவுகளும்
கிராம உத்தியோகத்தர் பிரிவுகள்
ஹபரதுவ, அம்பாலங்கொடை, பலப்பிட்டிய, ஹிக்கடுவ, பெந்தோட்டை, காலி
வெலிகம, மாத்தறை, டிக்வெல, தெவிநுவர
ஹம்பாந்தோட்டை, தங்காலை, அம்பலாந்தோட்டை திஸ்ஸமஹராம
பாணந்துறை, வாதுவை, மொரட்டுவை, களுத்துறை நீர்கொழும்பு தெஹிவளை, இரத்மலானை
மட்டக்களப்பு, திருகோணமலை
முல்லைத்தீவு, கிளிநொச்சி

Page 20
சுகாதார பராமரிப்பு நிறுவனங்களும் கடுமையாகச் சேதமடைந்தன.
இந்தப் பெளதீக சொத்துக்களுக்குப் புறம்பாக, பொதுக் கட்டிடங்கள், வங்கிகள், மற்றும் வேறு நிதிசார் நிறுவனங்கள், ‘பொல, சிறிய வர்த்தக நிலையங்கள், மற்றும் பலசரக்குக் கடைகள் போன்ற முறைசாரா சந்தை மையங்கள், சமய வணக்க ஸ்தலங்கள், பைசிக்கிள்கள், முச்சக்கர வண்டிகள், பஸ்கள் மற்றும் லொறிகள் போன்ற போக்குவரத்து வழிவகைகள் ஆகியனவும் சேதமடைந்தன. அத்துடன் பாரிய தொகையிலான வீதிகளும், கரையோரப் புகையிரத மார்க்கமும் சேதமடைந்தன.
பெருமளவு மாவட்டங்களில் உள்ள கரையோர சனசமூகங்கள் நாட்டின் ஏனைய பாகங்களில் வாழ்கின்றவர்களுடன் ஒப்பிடுகையில் வறுமை யானவர்களாவர். சுனாமியினால் மிகவும் பாதிக்கப்பட்ட ஒன்றாக வடக்கு, கிழக்கு பிராந்தியம் விளங்குவதுடன், கிளிநொச்சியில் 35%இனரும், முல்லைத்தீவில் 80%இனரும், அம்பாறையில் 78%இனரும் பாதிப்படைந்தனர்.
இப்பகுதிகளில் வாழ்கின்ற சகல சனசமூகங் களையும் சேர்ந்த மக்கள் 20 வருடங்களைக் கொண்ட சிவில் மோதலின் தாக்கங்களையும் அனுபவித்துள்ளனர். பொருளாதார வாழ்க்கையை மீள ஏற்படுத்துவதும், இந்த சனசமூகங்களை மீள்தாபிப்பதற்கு வாழ்வாதாரங்களை ஏற்படுத்து வதும் அவசியமானதாகும்.
சுனாமியுடன் சகல பாதிக்கப்பட்ட பகுதிகளையும் சேர்ந்த மீனவர்கள் தமது வாழ்வாதாரங்களை இழந்தனர். 19,000 என மதிப்பிடப்பட்ட மீன் படகுகள் சேதமடைந்தன. அத்துடன் மீன்களை விற்பனை செய்தல், கம-பதப்படுத்தல், வர்த்தகம் செய்தல், தயாரித்தல் போன்ற முறைசாராச் செயற்பாடுகளில் உள்ள சுமார் 25,000 பேர் தமது வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். தச்சுவேலைக் கருவிகள், சிமெந்து துண்டங்களைச் செய்தல், மற்றும் அரிகல் செய்தல், கருவிகள், கமத்தொழில் சாதனங்கள், தும்பு கயிறு நூற்கும் இயந்திரங்கள், மீன்பிடிப் படகுகள் மற்றும் வலைகள் போன்ற தமது வாழ்வாதார செயற்பாடு களுக்கு பயன்படுத்தப்படும் சாதனங்களையும், கருவிகளையும் அவர்கள் இழந்துவிட்டார்கள். நெற்செய்கை மற்றும் வீட்டுத் தோட்டங்கள், மேய்ச்சல் நிலங்கள் மற்றும் வேறு பண்ணைக் காணிகள் போன்ற சிறிய கமத் தொழில் முயற்சிகளும் அழிந்துள்ளன அல்லது அவற்றின் உற்பத்தித்திறன் ஆற்றலளவு இழக்கப்பட்டுள்ளன. இந்த கரையோரப் பகுதிகளைச் சேர்ந்த ஏழைக் குடும்பங்கள் தமது வீட்டுக் கால்நடைகளையும் இழந்துள்ளன. இவை பயிர் தவறிப் போவதற்கு

எதிரான ஒரு பாதுகாப்பு வலையாக விளங்கின. அம்பாறை, முல்லைத்தீவு, மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை ஆகிய நான்கு மாவட்டங்களில் 63,000 பறவைகளும், 6,500 பசுமாடுகளும் மற்றும் 3,100 ஆடுகளும் இறந்து போயின. உல்லாசப் பயண விடுதிப் பகுதிகளுக்கு ஏற்பட்ட சேதத்தின் காரணமாக உல்லாசப் பயணம் தொடர்பிலான சேவைகள் மீது தங்கியிருந்த பெருமளவு இளம் வயதினர் தமது வருமானத்தை இழந்தனர்.
தமது பாடசாலைகளை 1,500,000க்கு மேற்பட்ட மாணவர்கள் இழந்துவிட்டதுடன், பாதிக்கப்படாத பகுதிகளில் மாற்றுப் பாடசாலைகளைக் கண்டறி வதற்கு ஒழுங்குகள் செய்யப்பட்டன. க.பொ.த. சாதாரண மட்ட மற்றும் உயர் மட்ட பரீட்சைகள் போன்ற கட்டாய தேசிய பரீட்சைகளுக்குத் தயாராகிக் கொண்டிருந்த பெருமளவு மாணவர்கள் தமது சகல சாதனங்களையும், நூல்களையும் இழந்ததனால் பாரிய கஷ்டங்களுக்கு முகங்கொடு த்ததுடன், நெருக்கடிமிக்க சுற்றுச்சூழல்களில் மோசமான வசதிகளுக்கும் முகங்கொடுத்தார்கள். இளம் வயதினர் மத்தியில் இச் சூழ்நிலையானது மனவிரக்தியை உருவாக்கியுள்ளதுடன், நம்பிக்கை யீனத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இதனால் பாடசாலைச் சிறுவர்களும், ஆசிரியர்களும், அதிபர்களும் மற்றும் பல்கலைக்கழக சீவியத் தொழில் புரிபவர்களும் கடுமையான உளவியல் ரீதியான மன அதிர்ச்சியினால் பாதிக்கப்பட்டு ள்ளனர். இதற்கு ஆற்றுப்படுத்தலும், தீர்விலான கற்பித்தலும் மன அதிர்ச்சியினால் பாதிக்கப்பட்ட சிறுவர்களின் கற்பித்தலுடன் ஒத்துப் போவதற்கு ஆசிரியர்களுக்கு பயிற்சியும் அவசியமானதாகும்.
பெளதீக சொத்துக்கள் மட்டுமன்றி ஆனால் வீடமைப்புக்கும், வர்த்தக ஆதனத்துக்குமான ஆதன உரிமைகள்/காணி உரித்துறுதிகள் சட்டபூர்வ வாரிசுகளுக்கான உரிமைகளின் கைமாற்றம் போன்ற சட்ட ஆவணங்கள், சான்றுப்பத்திரங்கள், அடையாள அட்டைகள், கல்விசார் ஆவணங்கள், வங்கி ஆவணங்கள், ஆபரணங்கள் மற்றும் பண சேமிப்புகள் போன்றவையும் தொலைந்து போயுள்ளன.
மேலும் சனசமூகத்தின் சமூக சுற்றுச் சூழலை இந்த அழிவு கடுமையாகச் சேதமாக்கியுள்ளதுடன், சுனாமியின் பின்னர் உருவாக்கப்பட்டுள்ள புதிய உறுதியற்றதும், நம்பிக்கையற்றதுமான நிலைமை களினால் முழு உறவும் பயமுறுத்தப்பட்டுள்ளது. நம்பிக்கையினத்தின் புதிய சூழலானது முன்னர் இளைஞர்களினதும், சிறுவர்களினதும் மற்றும் சுறுசுறுப்பானதும்; சக்திமிக்கதுமான வேலைப் படையாக விளங்கிய வயது வந்தவர்களினதும் மத்தியில் தங்கியிருக்கும் மனோநிலையொன்று கொண்டு வரப்பட்டுள்ளது.
2006 செப்ரெம்பர் 9 பெண்ணின் குரல் 9 19

Page 21
மீளுதல் நடைமுறை
சுனாமியின் பின்னரும், சுனாமியின் பின்னர் புனர் வாழ்வு நடைமுறையிலும் அவர்கள் அனுபவித்த தொந்தரவினதும், நம்பிக் கையீனத்தினதும் காரணமாக தாம் இழந்த தமது வாழ்க்கையை மீள்கட்டியெழுப்புவதற்கும், சுயநம்பிக்கையை கட்டி யெழுப்புவதற்கும் சனசமூகத்தின் செயல்நோக்கமும, அதிகாரமளிப்பும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவசியமானதாகும்.
இது கல்வி, ஆரோக்கியம், மற்றும் சுகாதார வசதிகள், வாழ்வாதாரங்களை மீளப் பெறுதல், புதிய தொழில் வாய்ப்புக்கள், மற்றும் தொழில் முன்னிலைப் பயிற்சி, சனசமூக வாழ்க்கை, விளையாட்டு, மற்றும் பொழுதுபோக்கு, ஒன்று கூடுவதற்கான இடம், தமது குடும்பங்களில் இரகசியத்தன்மையைப் பேணுவதற்கான வாய்ப்பு, சனசமூகத்தைக் கட்டியெழுப்பும் செயற்பாடுகளில் பெண்களின் அதிகரித்த பங்கெடுப்பு, மற்றும் தலைமைத்துவம் மற்றும் தீர்மானமெடுத்தல் ஆகியவவற்றை உள்ளடக்குகின்றது. சிறுவர் உரிமைகளை ஏற்றுக்கொள்ளுதல், பாடசாலைக்குச செல்லுதல் மற்றும் ஒன்றுகூடுவதற்கும், சுதந்திரத் திற்குமான வாய்ப்புக்கள் ஆகியவற்றையும் சன சமூகங்களின் மீள்கட்டியெழுப்புதல் உள்ளடக்கு கின்றது.
முகாம்களில் பெண்களுக்கும், சிறுவர்களுக்கும் பாதுகாப்பின்மை நிலவுகின்றது. பாலியல் தொந்தரவு, பாலியல்வல்லுறவு, வன்முறை, மற்றும் சிறுவர்களைக் கடத்துதல் போன்ற சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. சலவை செய்தல், உடைகளை மாற்றுதல், தாய்ப்பாலுTட்டுதல் போன்றன தொடர்பில் பெண்களுக்கும், யுவதிகளுக்கும் இரகசியத்தன்மை இல்லாதிருப்பதை முகாம் களிலிருந்து அறிக்கைகள் எடுத்துக்காட்டுகின்றன. அத்துடன் சுகாதார வசதிகளுக்கும் கடும் பற்றாக் குறை உள்ளது.
பெற்றோர்களின்றி சுமார் 9,000 சிறுவர்கள் உள்ளதாக UNICEF தரவு வெளிப்படுத்துகின்றது. 3,000க்கு மேற்பட்ட சிறுவர்கள் தமது ஒரு பெற்றோரை இழந்துள்ளனர். இதனால் சகல சம்பந்தப்பட்ட செயற்பாட்டாளர்களையும் இலக்குப் படுத்தி சிறுவர் உரிமைகளினதும், சிறுவர் பாதுகாப்பினதும் மீது விழிப்பியலை நிறுத்து வதிலும், பயிற்சியிலும் மனோவியல் சமூக ஆதரவுக்கும் அவசரமான தேவையொன்றுள்ளது.
அழிவிலிருந்து வீட்டிலான வன்முறையின் மட்டம் அதிகரித்துள்ளதுடன், இனப்பெருக்கம் மற்றும் தாய்மை சுகாதாரப் பராமரிப்பு ஆகியவற்றுக்கு போதிய அடைதலை கர்ப்பிணிப் பெண்கள்
20 பெண்ணின் குரல் 9 2006 செப்ரெம்பர்

கொண்டிருக்கவில்லை எனவும் அறிவிக்கப்படுகின்றது. பாலியல்ரீதியில் பரவுகின்ற நோய்கள், எச்ஐவி/ எயிட்ஸ் ஆகியவற்றின் ஆபத்துக்கள் மீது விழிப்பியலை உயர்த்துவதற்கும் அவசியமொன்று ள்ளது.
புதிய போட்டிக்குரிய தங்கியிருத்தல் கலாசாரத் தினால் உருவாக்கப்பட்ட சுனாமிக்கு பின்னரான நிலைமையில் பெருமளவு பெண்கள் உதாசீனம் செய்யப்படுகிறார்கள் அல்லது கரிசனைக்கு எடுக்கப்படுவதில்லை. பாதிக்கப்பட்டவர்களுக்கான நிவாரணப் பொருட்கள் பால்நிலை முனைப்பானது அல்ல என்பது தெளிவானது என்பதுடன், கிராக்கி யினதும், அவர்களது உதவியற்ற தன்மையினதும் காரணமாக பலதரப்பட்ட தொந்தரவுகளுக்கு பெண்கள் உள்ளாக வேண்டியிருந்தது. அரசாங் கத்தினதும், மற்றும் அரச சார்பற்ற தாபன பொறிமுறைகளினதும் மீள்கட்டியெழுப்புதல் நடைமுறையானது பெரிதுமே பெண்களின் பங்கெடுப்பைக் குறைத்து மதிப்பிடுவதுடன், விசேடமாக ஒற்றைப் பெற்றோர்களினதும், விதவைகளினதும் நிலையை அவை மறந்து விட்டன. சனசமூகம் ஒன்றாக தமது பலத்தை பாதிக்கப்பட்டவர்களின் பெரும்பாலானோர் இழந்து விட்டதுடன், தங்கியிருக்கும் கலாசாரத்தினதும், அதன் விளைவிலான தாக்கங்களினதும் பாதிக் கப்பட்டவர்களாக அதிகரித்தளவில் வருகின்றார்கள்.
தமது இழக்கப்பட்ட சொத்துக்களிலிருந்தும், வாழ் வாதார வழிவகைகளிலிருந்தும் மீளுவதிலிருந்து இந்த குடித்தனங்களுக்கு உதவுவதற்காக விரிவானதொரு பொதி (உதவு தொகைகள், கடன்கள், நுண்-நிதி) அவசியமானதாகும்.
தமது சட்ட உரிமைகள் தொடர்பில் ஏழைகளுக்கும், விதவைகளுக்கும் மற்றும் அநாதைகளுக்கும் விசேட உதவி வழங்கப்பட வேண்டும். வயதானவர் கள், அங்கவீனர்கள், பெண் தலைமையிலான குடித் தனங்கள் போன்ற ஊறுபடத்தக் க குழுக்களுக்கு மீள் நிருமான நடைமுறையில் விசேட உதவி அவசியமாகும்.
மீள்நிருமான மற்றும் மீளுதல் நடைமுறையில் சனசமூகப் பங்கெடுப்பும் , சம்பந்தப்பட்ட மக்களுடனான ஆலோசனைகளும் முக்கிய காரணிகளாகும். மக்களின் தேவைகள் அவர்களது திருப்திக்கேற்ப நிறைவேற்றப்பட்டுள்ளதை உறுதிப்படுத்துவதற்கு இவற்றை மனதில் வைத்திருக்க வேண்டும். தங்கியிருத்தலைக் குறைப்பதற்கு பாதிக்கப்பட்ட குடித்தனங்கள் தமது வாழ்வாதாரங்களை மீட்பதற்கு வசதியளிக்கப்பட வேண்டும் என்பதுடன், தமது வாழ்க்கையில் கட்டுப்பாட்டை எடுப்பதற்காக ஊக்கமளிக்கப்பட வேண்டும்.

Page 22
usic
மல்லிகா ராஜன்
நான் செல்லம்மா. பல வருடங்களாக சமையலறை உதவியாளராகப் பணியாற்றியுள்ளேன். நான் முதலில் காலடி எடுத்து வைத்தது ஒரு சிங்கள வீட்டில். அவர்கள் என்னை “சிறியா’ என்றே அழைத்தார்கள். அவர்கள் எனக்கு சிங்களப் பெயரொன்றையே தந்திருந்தார்கள். சிங்களப் பெயரொன்றுடன் கொழும் பில் வாழ்வது இலகுவானது என்று அவர்கள் என்னிடம் கூறியிருந்தார்கள். அநேகமாக அவர் களுக்கு அது இலகுவாக இருக்கும் என அவர்கள் எண்ணி யிருக்கக்கூடும்! எனது இரு மூக்குகளிலும் இரு மூக்குத்திகள் 'பளிச்சென்று வீற்றிருந்தன. முதலில் அதில் ஒன்றை அவர்கள் கழற்றச் செய்தனர். ஒரு சில மாதங்களின் பின்னர் மற்றையதையும் கழற்றச் செய்தனர். அவர்கள் எனது அடையாள த்தை அமைதியாக எடுப்பதாகவே நான் உணர்ந்தேன். சாரதி என்னை “சிறியாணி’ என்றே அழைத்தான். இன்றும் கூட அவன் ஏன் என்னை சிறியா என்று கூப்பிடவில்லை என்று எனக்குத் தெரியாது. வயதான ஒருவனின் தோற்றத்தையே அவன் கொண்டிருந்த தனால் நான் அதையிட்டு அலட்டிக் கொள்ளவில்லை. எனது உயரத்திற்கு அவனது உயரம் பொருந்தவே மாட்டாது. சில வேளைகளில் எஜமானி என்னுடன் அன்பாக நடக்கவில்லை என அவன் எண்ணியிருக்கக் கூடும். அதனால் அவன் என்னுடன் நன்றாக பழக முயன்றான். எஜமானி இல்லாத வேளையில் அவன் ஒரு வாயாடி. எனக்கு நிறையவே தந்திரங்கள் தெரியும் என்று அவனுக்கு சிறிதளவே தெரிந்திருந்தது. எனது சிறிய விரலினால் அவனை என்னால் சுழற்றியெடுக்க முடியும். எனது
 

P/jটg6
தந்தையைப் போன்றே நானும் ஆறடி உயர மானவள். எனது அசாதாரண உயரம் எனக்கு மேலதிக சக்தியை வழங்கியிருந்தது. இப்பொழுது கடந்து போன ஆணி டுகளை நினைவு கூருகையில்.
அப்பொழுதெல்லாம் வேலை இலகுவாகவே இருந்தது. சமைத்தல் மட்டுமே. வாரத்திற்கொரு தடவை பொருட்களின் பட்டியலொன்றை நான் கொடுக்க வேண்டும். எல்லா சாமான்களுமே கொண்டுவரப்பட்டன. எனது வெற்றிலையும் பாக்கும் கூட. நான் ஒரு நச்சரிக்கும் தன்மை யானவள். எனது நீண்ட அலை அலையான கூந்தலுக்கு நான் அம்லா எண்ணெயை மட்டுமே பயன்படுத்தினேன். மாலை மங்கும் வேளைகளில் குளித்துவிட்டு எனது கூந்தலை விரித்து வைப்பதை நான் கட்டாயமாக்கியிருந்தேன். அது என்னை தனித்துவமாக்கியது. அது தலைகளை உருள வைத்தது என்று எனக்குத் தெரியும். விசேடமாக எனது எஜமானின். எனக்குச் சொந்தமாக அறையொன்றை கேட்டு நான் நச்சரித்தேன். அதன் பின்னர் கட்டிலும், மின்சார காற்றாடியும் கேட்டேன். ஒரு ரேடியோ. எல்லாவற்றையும் சிறிது, சிறிதாகப் பெற்றுக் கொண்டேன். அவளது ராஜ்யத்திற்குள் எனது அத்துமீறலையிட்டு எஜமானி ஆத்திரம் அடைந்திருப்பாள். ஆண்கள் எவ்வளவு பலவீன மானவர்கள் என்பதை அறிந்து எனது எஜமானின் தேவைகள் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் நிறைவேற்றப் படுவதை நான் பார்த்துக் கொண்டேன். அவர் என் மீதும், எனது அலுவல் களிலும் அதிக அக்கறை காட்டினார். அவரது
2006 செப்ரெம்பர் 9 பெண்ணின் குரல் 9 21

Page 23
மனைவி படிப்படியாக இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டாள்.
பதினான்கு பேருக்கு நானே சமைக்க வேண்டி யிருந்தது. கிரமமான காலை ஆகாரம் . எப்பொழுதுமே வார நாட்களில் பருப்புடனும், தேங்காய் சம்பலுடனும் பாண். சனிக்கிழமை களில் கட்டச்சம்பலுடன் தேங்காய் ரொட்டி. ஞாயிற்றுக் கிழமைகளில் பாற்சோறும், லுணுமிரிஸPம். அவர் கள் பப்படத்தை தயாரித்து சந்தைப் படுத்தும் வியாபாரத்தை செய்தார்கள். எல்லாமாக பத்து ஊழியர்கள். சகலரும் ஆண்கள். எங்களில் நான்கு பேர். எனது எஜமானி நடுத்தர வயதிலான மனைவி. அவளுக்குப் பிள்ளைகள் இல்லை. எஜமான் உண்மையாகவே ஒரு ‘கோழி’ என ஒரு முறை சாரதி என் காதில் குசுகுசுத்தான். கணவனே எல்லாம் என்ற உலகத்தில் எஜமானி சஞ்சரித்தாள். அவரது 'சல்லாபங்களை’ நோட்டமிடுவதற்கு அவள் தவறி னாள், அல்லது எல்லாவற்றையும அவள் தெரிந்து வைத்திருந்தும் தொடராக ஏற்படக்கூடிய பிரச்சினை யையிட்டு பயந்தாள். நானும் அவ்வளவு இளமையானவள் அல்ல. எனது எஜமான் உணர்ச்சி வேகத்துடன் என்னை நெருங்கும் போதெல்லாம் அவர் கலவரமடைவதை நான் உணர்ந்தேன். அவரது குழப்ப நிலையை யிட்டு நான் மகிழ்ச்சியடைந்தேன்.
இன்னும் பின்னோக்கிச் செல்லும் பொழுது பல சம்பவங்கள் நினைவுக்கு வருகின்றன. விறகு தேடி தோட்டத்தில் நாம் குழுக்களாக சுதந்திரமாக சுற்றித் திரிவோம். இரவு மங்கும் வேளைகளில் எமது தலைகளில் பாரமான சுமையுடன் வருவோம். அப்பொழுதே வசந்தனைச் சந்தித்தேன். அவன் ஏற்கனவே திருமாணமானவன் என்பதை நான் தாமதித்தே அறிந்து கொண்டேன். துரைசாமிக்கு என்னை திருமணம் செய்து வைப்பதற்கு ஒழுங்குகள் செய்யப்பட்டன. அவர் மனைவியை இழந்தவர். அவருடன் வழமையான வாழ்க்கை யைப் பங்கு போடுவதற்கு என்னையே சமாளிக்க வேண்டி யிருந்தது. குழந்தை இறந்து பிறந்தது. குழந்தை ஆணா, பெண்ணா என்று ஒரு போதுமே எனது அம்மாவிடம் நான் கேட்கவில்லை. எனக்கு அக் குழந்தை தேவைப்படவில்லை. துரைசாமி அதையிட்டுக் கவலைப்படவில்லை. அதிர்ஷ்ட வசமாக அவர் எந்தக் கேள்வியும் என்னிடம் கேட்கவில்லை. அவரது மனைவி நிரப்பியிருந்த இடத்தை மட்டுமே நான் நிரப்பிக்கொண்டிருந்தேன்.
கொழும்பு மகாவத்தை வீதியில் வேலைத்தல மொன்றில் பாதுகாப்பு உத்தியோகத்தராக துரைசாமி பணியாற்றினார். அருகில் எனக்கொரு தங்கு மிடத்தையும் கண்டறிந்தார். ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமைகளில் அவர் என்னைப் பார்க்க வந்தார். முட்டாள். அவர் ஒரு சிறிய
22 பெண்ணின் குரல் 9 2006 செப்ரெம்பர்

பொதியைக் கொண்டு வருவார். அவர் எதைக் கொண்டு வந்தார்? இரண்டு சைனீஸ் ரோல்கள்’. அவரைச் சந்தோஷப் படுத்த வேண்டுமென்பதற்காக நான் ஒன்றைச் சாப்பிட்டுவிட்டு, மற்றதை அவரிடம் நீட்டுவேன். சிறிதளவு தேநீரும் தயாரிப்பேன். எனது கண்கள் எப்பொழுதுமே சமையலறை மணிக்கூட்டையே நோக்கியிருக்கும். அவருடன் அரை மணித்தியாலமே செலவழிக்கப் போது மானது. அவர் தனது அமைவிடத்தைப் பற்றி, பணத்தை வைப்புச் செய்வதற்கு அவரது எஜமான் எவ்வாறு அவரை அனுப்புகின்றார் என்பது பற்றி, இரவு வேளைகளில் நுளம்புகள் எவ்வாறு அவரைத் தேடி வருகின்றன என்பதைப் பற்றி என்றெல்லாம் மூச்சுவிடாமல் கதைப்பார்.
ஆண்டவனே அந்த நாள் நாம் தனித்திருந்தோம். நான் அறையொன்றை சொந்தமாகக் கொண்டிரு ந்தேன். துரைசாமிக்கு கதைப்பதிலேயே இன்பம். அதனால் நான் சமைக்க வேண்டுமென்று அவரிடம் கூறினேன். உருக்கு கம்பிகளின் விலைகளைப் பரிசீலிக்கும்படி அவரது எஜமான் தன்னிடம் கூறியிருப்பது அவரது நினைவுக்கு வரவே அவர் அங்கிருந்து விரைந்து சென்றுவிட்டார்.
நான்கு வருடங்கள் உருண்டோடின. பணத்தையும், தங்கத்தையும் கொண்டு வருவதற்காக பெண்கள் துபாய்க்கு சென்றார்கள். எனது கணவர்
துரைசாமி மிகவும் வயதானவராக விளங்கினார். எல்லாவற்றிலும். எஜமானின் வேலைத்தலத்திலும் ஒரு பிடிப்பின்றி காணப்பட்டார். உலகத்தையே வென்று வரலாம் என்ற பலம் எனது மனதிலும், உடலிலும் குடிபுகுந்திருந்தது. அதன் பின்னர் தோட்டத்திற்கு தேர்த் திருவிழாவிற்கு செல்கிறேன். எனது தம்பி அழகனை நெருங்குகிறேன். துபாய்க்கு சென்றால் அன்பளிப்புகளை அவனுக்கு அனுப்பி வைப்பதாக வாக்களித்து எனது கடவுச்சீட்டையும், வேறு அவசியமானவைகளையும் பெற்றுத் தருமாறு அவனிடம் உதவி கேட்டேன். நான் பணத்தை சேமித்து வைத்திருந்ததினால் அதை இப்பொழுது பயன்படுத்தினேன். அழகன் எல்லாவற்றையும் தெரிந்து வைத்திருந்தான். அவன் ஒவ்வொரு வாரமுமே கொழும்பிற்கு எமது தோட்டத்திலிருந்து சென்று வருவான். மக்கள் அவனை "எக்ஸ்பிரஸ் என்றே அழைத்து வந்தார்கள். மூவாயிரம் ரூபாவுக்கு அவன் பிறப்புச் சான்றுப்பத்திரத்திலிருந்து அடையாள அட்டை, மூன்று பெயர்களுடன் கடவுச்சீட்டு என்று எல்லா புதிய ஆவணங்களையும் எனக்காக எடுத்துத் தந்தான். கொழும்பில் உள்ள ஆட்களை எக்ஸ்பிரஸ் அறிந்து வைத்திருந்ததுடன், துபாய்க்கு மூன்று பெயர்கள் அவசியம் என்று என்னிடம் கூறியிருந்தான். எனது சொந்தப் பெயரான செல்லம்மா எனக்கு தேவைப்பட்டது. முஸ்லிம் ‘ரிக்கற்றில் துபாய்க்கு செல்வதற்கு சலீமா, சிறியாணி என்ற பெயர்களையும் சேர்த்துக்

Page 24
கொள்ளும்படி அவனிடம் கூறியிருந்தேன். மீண்டும் திரும்பி வரும்போதெல்லாம் சிங்கள வீடொன்றில் மீண்டும் வேலை செய்யலாம் என நான் எண்ணினேன்.
துபாய் மாயாஜால பெயராகும். நீங்கள் லெபனா னுக்கு அல்லது சவூதிக்கு அல்லது குவைத்துக்குக் கூட அனுப்பப்படலாம். யாராவது என்னிடம் எங்கே போகிறாய் என்று கேட்டால் நான் “துபாய்’ என்று சொல்வேன். இதனால் லயத்தில் எனக்கு ஒரு புதிய அந்தஸ்து கிடைக்கும். “செல்லம்மா துபாய்க்கு போறாவாமே!” அங்குள்ள பெண்கள் தமது நாடியில் ஆள்காட்டி விரலை வைத்து தமது வெறுமையான தலைகளை ஆட் டியபடி கூறுவார்கள். ܫ
துரைசாமி என்னைச் சந்திப்பது குறைவடைந்தது. என்னுடனான எனது எஜமானின் உறவு இப்பொழுது நிலையாக விளங்கியது. ஒன்றில் தனக்கு தெரியாமல் ஏதோ நடக்கின்றது என்று அவரது மனைவிக்கு தெரிந்திருந்தது, அல்லது தனது கணவரை மனதாலும், உடலாலும் அவள் நம்பியதனால் இதை உதாசீனம் செய்திருக்கலாம். “காலையில் கோப்பி’ என்ற வகையானவள். அவள் எந்நேரமும் வீட்டிற்கு வெளியே சுற்றித் திரிவாள். என்னதான் நடந்தாலும் எனது கட்டில் ஒவ்வொரு நாளுமே உஷ்ண மடைந்தது. பணமும் சுற்றிச் சுழன்று வந்தது. அவர் சிறிதளவு மது அருந்தியிருந்தால் சில பணத் தாள்களை வெளியே எடுப்பார். தொகையைக் குறித்து எதையுமே யோசிக்காமல் எனது கட்டிலில் விட்டுச் செல்வார். அது ஒரு பரபரப்பான சூழல். விவஸ்தை கெட்ட நேரமெல்லாம் அவர் நுழைவார். இது சிறிது காலத்திற்குத் தான் நீடித்தது. நான் விரைவிலேயே துபாய்க்கு செல்லப் போவதாக அவரிடம் கூறிவிட்டேன். அவர் அதையிட்டு அலட்டிக் கொள்ளவில்லை. அங்கு எப்பொழுதுமே ஒரு சமையலாள் - பெண் இருப்பாள் என்று அவர் கூறினார்.
ஒரு காலை வேளை எனது தம்பி அழகன் என்னைத் தேடி வந்தான். இரவு எமது அம்மா இறந்துவிட்டதாக சொன்னான். ஒப்பாரிக்காக அவர்கள் எனக்காக காத்திருக்கின்றார்களாம். இது போன்ற ஒன்றை நான் ஒரு போதுமே விரும்புவதில்லை. பெண்கள் தங்கள் மார்பில் அடித்துக் கொண்டு, தலைமயிரை பிய்த்தெறிந்து இழுப்பது போன்று. ஒப்பாரி வைத்து பறைமேளமடிப்போர் இதற்கு சுருதி சேர்க்க. அவளுக்கா? அவள் மூன்று தடவைகள் திருமணமாகி யிருந்தாள். ஏனைய இருவரைப் போலன்றி இந்த கணவன் இன்னுமே வாழ்கிறான். அவள் ஒரு சுயநலப் போக்கானவள். தனக்காகவே வாழ்ந்தாள். நான் போக வேண்டுமா? அன்றிரவே

திரும்பிப் போவதாக அழகன் என்னிடம் சொன்னான். எனது துபாய் அலுவல்கள் பற்றி பார்ப்பதற்கு நல்ல சந்தர்ப்பம். நான் எனது எஜமானிடமிருந்தும், அவரது மனைவியிடமிருந்தும் விடை பெற்றுச் சென்றேன். அவர்கள் எனது வருமதிகளைத் தந்ததுடன், இன்னொரு பச்சை நோட்டொன்றையும் நீட்டினார்கள். என் மீது அவர்கள் சந்தேகம் கொள்ளக்கூடாது என்பதற்காக சில பழைய பாவாடைகளை வீட்டில் விட்டுவிட்டு எனது மிகுதி உடமைகளை எடுத்துச் சென்றேன். நான் மீளத் திரும்பமாட்டேன் என்று எதுவோ கூறியது. என்னைத் தேடி அவர்கள் வருவதற்கு கஷ டப் பட மாட் டார் கள் என று எனக் கு தெரிந்திருந்தது. எனது எஜமான் யாராவது ஒரு புதியவளை எடுத்துவிடுவார்.
எனது சகல ஆவணங்களையும் அழகன் எடுத்தான். அவை எல்லாவற்றையும் எனக்கு தருவதற்கு முன்னர் அவன் என்னிடம் ஐந்நூறு ரூபாவுக்கு கைகளை நீட்டினான். “குடுத்து கதையை முடித்து விடு அக்கா.’ அழகன் கூறுகிறான். நான் அதற்கு இணங்குகிறேன். அம்மாவின் மரணச் சடங்கை விட எனது துபாய் பயணத்திற்கு தயாராவதற்கே நான் வீட்டிற்குச் சென்றிருந்தேன். அம்மாவின் மரண வீடு ஒரு இரைச்சலானதும், சத்தமானதுமான ஒரு விவகாரம். அம்மாவின் சகோதரர்களில் ஒருவர் எம்முடன் சண்டை போட்டார். தனது இளைய மகளுக்கு இரத்தினக்கல் பதிக்கப்பட்ட சிவப்பும், வெள்ளையும் கலந்த தோட்டைத் தருவதாக அம்மா வாக்குறுதி யளித்ததாக அவர் வாக்குவாதப்பட்டார். ஆனால், மயானத்திற்கு எடுத்துச் செல்வதற்கு முன்னர் யாரோ அதை அகற்றிவிட்டனர். அவரை யாரோவெல்லாம் சேர்ந்து துரத்திவிட்டார்கள். அவரை மீண்டும் எம்மால் பார்க்க முடியவில்லை. அவர் என்ன மாதிரியான ஒரு முட்டாள்தனத்தை செய்திருந்தார்.
துபாய்க்கு செல்வதற்கான எனது ‘ரிக்கற்றை பெறுவதற்கான நாட்களை எண் ணிக் கொண்டிருந்தேன். எத்தனை தடவைகள் நான் “ஏஜென்சிக்கு சென்றிருப்பேன். ஒவ்வொரு நாளும் ஒரு வித்தியாச மான கதை பிறந்தது. ‘பொஸ் - அலியார் பெரியப்பா என்னைப் பார்த்து “சலீமா ‘ரிக்கற்' இன்னும் வரயில்லையம்மா. இப்பவும் ‘கோல்’ கொடுத்தேன். என்ன செய்ய நீயே சொல்லு” என்று சொல்வார். பட்டினத்திலுள்ள அவ்வீதிகளில் பிரயாணம் செய்வ தற்கு மூன்று மணித்தியாலங்களை நான் செலவழித்தேன் என்பதையிட்டு அவருக்கு கவலை இருக்கவில்லை. மதிய போசனத்திற்கு ‘பணிஸ்’ ஒன்றை மட்டுமே நான் சாப்பிட்டேன் என்பது பற்றி அவருக்கு கவலை இருக்கவில்லை. சில வேளை களில் நான் தனியேயுள்ள பெண்ணாக இருந்ததினால் அதைச்
2006 செப்ரெம்பர் 9 பெண்ணின் குரல் 9 23

Page 25
தமக்கு சாதகமாக எடுக்கக்கூடிய அந்நியர்களுடன் இரவில் எட்டு மணிக்கு வீட்டுக்கு திரும்பிச் சென்றாலும் அதைப் பற்றி அவருக்கு கவலை இருக்கவில்லை.
அலியார் பெரியப்பாவும் என்னை சலீமா என்று அழைத்ததையிட்டு நான் புதுமைப்படுவேன். அவரு க்கு என்னை எனது பாடசாலை நாட்களில் இருந்தே தெரியும். மாயாஜால மூவாயிரம் ரூபாய் கடவுச்சீட்டுடன எனது பெயர் எப்படித்தான் மாறிவிட்டது? செல்லம்மா ஒரு மறக்கப்பட்ட பெயராகிவிட்டது. நானும் என்னை சலிமா என்றே எண்ணினேன்.
“நீ திரும்பி வரும்வரை சலீமா தான்.” குவைத்தில் நான் இறங்கிய போது எனக்குள் சொல்லிக் கொண்டேன். அது ஒரு நல்ல வீடு. எனது வேலையையிட்டு அவர்கள் மகிழ்ச்சியடைந்தனர். அவர்களைப் போலவே ஆடையணிந்தேன். அவர்களைப் போலவே வாழ்ந்தேன். அவர்களைப் போலவே தொழுதேன்.
இரு வருடங்களுக்குப் பின்னர் அழகனின் மனைவி பவானியை எனது ‘பாபாவின் சகோதரியின் வீட்டில் பணியாற்றுவதற்காக அழைப்பித்தேன். சில மாதங்கள் கழிய நான் வேலை செய்த இடத்தில் சாரதியாக வேலை செய்வதற்கு அழகன் வந்தான்.
முயற்சி திருவி
சோ.ரா
சுனாமியினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மூன்று மாதங்களாக அகதி முகாமாக செயல்பட்ட அம்மகளிர் பாடசாலை மீண்டும் திறக்கப்பட்ட போது, மிகச் சொற்ப மாணவிகளே வருகை தந்திருந்தார்கள். பெரும்பாலான மாணவிகள் ஏதோ ஒரு வழியில் பாதிக்கப்பட்டதனால், பாடசாலைக்குச் சமூகமளிக்கவில்லை.
எட்டாம் தரத்தில் மொத்தமாக முப்பது மாணவிகள் கல்வி பயின்றனர். அவர்களில் பன்னிரண்டு மாணவிகள் மட்டுமே வருகை தந்திருந்தனர். அவர்கள் தமக்கு ஏற்பட்ட கசப்பான, மறக்க முடியாத அனுபவங்களை ஒருவருடன் ஒருவர் பரிமாறிக் கொண்டனர்.
அன்றைய தினம் திங்கட்கிழமை, நேரசூசியின் படி முதல் பாடம் ஆங்கிலப் பாடமாகும். ஆங்கில ஆசிரியை நேரத்திற்கு வந்தார்.
மிகக் குறைந்தளவு மாணவிகளே வந்திருக் கிறார்கள் என்பதை அவர் அவதானித்தார். இருந்தாலும் அவர் பாடத்தை நடத்தத் தொடங் கினார்.
24 பெண்ணின் குரல் 9 2006 செப்ரெம்பர்

நான் குவைத்திலிருந்து வெளியேறுவதற்கான நேரம் வந்து விட்டது. நான்கு வருடங்கள் நான் தங்கியிருப்ப தற்கான நேர எல்லையாக விளங்கியது. இதனிடையே துரைசாமி இறந்துவிட்டதாக அழகன் என்னிடம் கூறினான். எனக்கு தந்தியனுப்புவது பயனற்றது என அவர்கள் எண்ணியதாக அவன் சொன்னான். ஏனென்றால் அவரது மரண வீட்டுக்காக குவைத்தை விட்டு நான் ஒரு போதுமே செல்லமாட்டேன் என அவர்கள் அறிந்துவைத்திருந்தார்களாம். சகல விடயத்தையுமே கட்டங்களில் நான் திட்டமிடு வதனால் அழகனுக்கும், அவன் மனைவிக்கும் நான் வேலை எடுத்துக் கொடுத்தேன். இப்பொழுது இங்கிருந்து வெளியேறும்படி எனது மனம் கூறுகின்றது.
“திரும்பிப் போ” - சலீமா ஒரு கனவு மட்டுமே. “இந்தப் பொய் நடிப்பு போதும்.” - நான் இவ்வாறாக சென்றால் சலீமாகவே எனது காலம் முடியும். அதன் பின்னர் என்ன நடக்கும். அவர்களில் ஒருத்தியாக நான்கு வருடங்கள் என்னைக் கவனித்த இந்த நல்ல வீட்டிலிருந்து வெளியேறு வதையிட்டு நினைக் கும் போது மனம் வருந்தினேன். அவர்களுக்கு நான் லயத்தைச் சேர்ந்த செல்லம்மா என்று தெரியாது. ஆனால், அது ஒரு பொருட்டான விடயமல்ல.
வினையாக்கும்
அப்பொழுது சுசிலா என்ற மாணவி வகுப்புக்கு வந்தாள். அவள் தனது வலது கையை இழந்திருப்பதை ஆசிரியை அவதானித்தார்.
“உமக்கு என்ன நடந்தது” என ஆசிரியை கேட்டார்.
“சுனாமியின் போது அலைகள் என்னை இழுத்துக் கொண்டு போயின. அகப்பட்டதை எல்லாம் பிடித்தேன். ஆனால், ஒன்றையுமே இறுக்கமாகப் பிடிக்க முடியவில்லை. கற்பாறையிலும் மோதி னேன். இறுதியாக பாறை ஒன்றுடன் கை மோதியது. கை முறிந்த மாதிரி இருந்தது. பலமாக வலி ஏற்பட்டது. இருந்தும் நான் ஒருவாறு நீந்தி உயிர் தப்பினேன். ஆனால், கரையை அடைந்த வுடன் மயங்கிவிட்டேன்.”
சுசிலா பேசுவதை நிறுத்தினாள். அவள் கண்கள் கலங்கின. அவளே தொடர்ந்தும் பேசினாள்.
“மீண்டும் கண் விழித்த போது ஆஸ்பத்திரியில் கிடந்தேன். என்னை "டொக்டர் ஒருவர் சோதித்தார். கையை தூக்கித் தூக்கிப் பார்த்தார். இரண்டு, மூன்று நாட்களாகச் சிகிச்சை அளித்தார். அதன்

Page 26
பின்னர் தான் "டொக்டர்’ அந்த உண்மையைச் சொன்னார்.”
“என்ன உண்மை?” ஆசிரியை ஆர்வத்துடன் (335LLTff.
“தோள்பட்டையடியில் கை முறிந்துவிட்டது என்றும், அதை ஒட்ட வைக்க முடியாது என்றும் , சத்திரச்சிகிச்சை மூலம் கையை அகற்ற வேண்டும் என்றும் "டொக்டர் சொன்னார். இரண்டு நாட்களின் பின் எனது கையை அகற்றிவிட்டார்கள். ஒரு மாதமளவில் வைத்தியசாலையில இருந்தேன். அதன் பின் வீடு சென்றேன்.”
அவளுக்காக யாவரும் துக்கப்பட்டார் கள்.
“உம்மால் எழுத முடியுமா?” ஆசிரியை வினவினார்.
"இடது கையால் தான் எழுதிப் பழக வேண்டும். முயற்சியுடையார் இகழ்ச்சி யடையார் என்று நீங்கள் தானே சொல்லித் தந்திருக்கிறீர்கள். அதன்படி நானும் முயற்சி செய்யப் போகிறேன்.”
அதன் பின் சுசிலா தனது ஆசனத்தில் அமர்ந்தாள்.
ஆசிரியை பாடத்தைத் தொடர்ந்து நடத்தினார்.
அவர் கரும்பலகையில் எழுதியதை அப்பியாசக் கொப்பியில் மாணவிகள் எழுதிய போதும், சுசிலாவினால் சரிவர எழுத முடியவில்லை. அவள் வழமை யாக வலது கைப் பழக்கமுள்ளவள். அதனால் இடது கையினால் எழுது வதில் கஷடப்பட்டாள். இருந்தும் கஷடத்தைப் பொருட்படுத்தாமல் எழுதினாள். ஆனாலும், மற்றவர்களின் எழுத்து வேகத்திற்கு அவளால் ஈடு கொடுக்க முடியவில்லை. அவள் தன் முயற்சியைக் கைவிடவேயில்லை.
ஆங்கில ஆசிரியை பாடத்தை முடித்துக் கொண்டு போனார். அதன் பின் ஒரிரு பாடங்களே நடந்தன. மாணவிகள் குறைவாக இருந்ததினால் இருபது மாணவிகளாவது வந்த பின் படிப்பைத் தொடரலாம் என ஏனைய ஆசிரியைகள் கூறினார்கள்.
மறு நாள் வழமை போல் சுசிலா பாடசாலைக்குச் சென்றாள்.
அன்றைய தினம் முதல் நாளைப் போல பன்னிரண்டு மாணவர்களே வருகை தந்திருந்தனர். ஆனாலும், ஆசிரியைகள் எல்லோருமே பாடங்களைப் போதித்தனர். வழமை போல குறிப்புக்களை வழங்கினர். மற்றவர்கள் கடகட’வென எழுதிய
 
 

போதும், சுசிலாவினால் இடது கையினால் விரைவாக எழுத முடியவில்லை. ஓரிரு ஆசிரியை கள் சுசிலாவின் வேகத்திற்கு ஏற்ப, குறிப்புக்களை மெதுவாக வழங்கினர். சுசிலாவின் விடாமுயற்சியை யிட்டு அவர்கள் மனமகிழ்ந்தனர்.
அடுத்த நாள் மாணவிகளின் வருகை அதிகரித்தது. அன்று இருபத்திநான்கு மாணவிகள் வந்திருந்தனர்.
புதிதாக வந்த பன்னிரண்டு மாணவிகளும் ஒட்டு
மொத்தமாக கூறியதைக் கேட்டு மற்ற மாணவிகள் யாவரும் திகைத்துப் போயினர்.
வலது கையை இழந்த சுசிலா இடது கையினால் எழுதுவதைக் கேள்விப்பட்டு அவர்கள் ஆச்சரியப்
பட்டுப் போனார்களாம். சிறு சிறு காயங்களுக்காகப் படிப்பை கைகழுவிவிட்டு வீட்டில் முடங்கிக் கிடப்பதை இட்டு அவர்கள் வெட்கப்பட்டார்களாம். சுசிலாவைப் போல தாமும் முயற்சி எடுத்து, படிப்பைத் தொடர விரும்பியதனால், பாடசாலைக்கு வந்ததாக அவர்கள் கூறினார்கள்.
சுசிலாவின் விடாமுயற்சி மற்ற மாணவர்களை உணர வைத்துவிட்டது. உண்மையில் அவர் களைத் திருத்தியேவிட்டது.
இரு மாதங்களுக்குள்ளாகவே சுசிலா இடது கையினால் நன்றாக எழுதக் கற்றுவிட்டாள்.
2006 செப்ரெம்பர் 9 பெண்ணின் குரல் 9 25

Page 27
/
சுனாமியினால் பாதிக்கப்பட்ட வதிவிடலாளர்களை
பெண்ணின் குரல் விஜயம் செய்தது. ஹம்பாந்தே பகுதியில் கிராமம் அமைந்துள்ளது.
கலாமிட்டிய மீ6
அங்கு முப்பத்தொரு குடும்பங்கள் இருந்தன. சகல அவர்களது பிரதான நிலைத்திருத்தல் தொழி கடுமையாகப் பாதிக்கப்பட்டிருந்ததுடன், தம. இக்குடும்பங்களிலிருந்து அவர்களது அனுபவத்ை எவ்வாறு சிறப்பாக புனர்வாழ்வளிக்க முடியும் என்ப; நாம் ஐம்பது பெண்களை தெரிவு செய்தோம்.
ஒன்றுகூடலானது வயதானதும், இளமையானதும் கருத்து பரிமாறலின் பின்னர் தமது கருத்துக்களை
அனுபவங்களை வெளிப்படுத்துவதற்கும், மகிழ்ச்சிக முன்னோடியாக ஈவிரக்கமற்ற அனுபவங்களை மற அவர்களுக்கு வெளியிடங்கள் தேவையென்ட கொண்டவர்களில் பாரிய எண்ணிக்கையினர் இளமையானவர்கள். தமது தொலைந்த ஆவணங் வேறு அலுவல்களில் வயதானவர்களில் சிலர் ப
இவ்வறிக்கையானது செயலமர்வொன்றின் கதை மானதுமான ஒரு நிகழ்வாகும். நாம் பாதிக்கப்பட் கட்டுப்பாடுகளின் கீழ் சிறந்த வகையில் சமாளிக் நிலைமைக்கு கொண்டு வருவதற்கு நாம் கடு இதையொத்த செயற்பாடுகளிலிருந்து இந்த
வித்தியாசமானதாக மாற்றமடைந்தது. ஒன்றுகூ பதிலிறுப்புடன் பேண முடியவில்லை. ஏனெனில் அன கீழிருந்தன. ஆனால், அமைதியாக பதிலிறுப்பு ெ
நாம் அவர்களுடன் இரு நாட்களைக் கழித்ததுடன் அணுகுமுறைகளைத் திட்டமிட்டோம். எமது பாடல்களையும் மற்றும் உயர்வுக்கு வருவதற்கு ஒன்றை வழங்குவதையும் உள்ளடக்கியிருந்தது. நாம் துஷாரி மடஹாபொலவினதும், எச்.எம்.மள ரோனி வீரவன்சவினால் விசேடமாக உதவியளிக்க ஒன்றுகூடலுக்குள் கஷ்டமுறுகின்ற மக்களை ஒழு அவர்களை விலகிச் செல்லுமாறும், புதியதொரு எ படியும் நாம் முயன்றோம்.
பங்குபற்றியவர்களில் பெரும்பாலானோர் இள கொண்டவர்கள். இது ஒரு விரும்பத்தக்க 6 தலைமைத்துவத்தையும், நிபுணத்துவத்தையும் ெ
அவர்கள் தற்போது வீடுகளைக் கொண்டிருப்பதுட ரீதியில் தங்கியிருக்கின்றனர். ஒருபோதும் அனுப விடுவித்துக் கொள்வதற்கு அவர்களுக்கு தொழிலி செயற்பாடுகளில் பிரவேசிப்பதற்கு வீட்டைச் கொண்டிருக்கின்றார்கள். இச் செயற்பாடுகள் அவ ஆதாயத்தையும் வழங்கும்.
ஆனால், கல்விகற்ற இளவயதினர் ஆசிரியத் தொ தைத்தல் மற்றும் கணக்கு பதிவியல் போன்ற ே இதில் அவர்கள் பயிற்சியைப் பெற்றிருந்தார்கள் பின்னர் தாம் நிறைவேற்றுவதற்கு عانسان هذه معها
26 பெண்ணின் குரல் 2006 செப்ரெம்பர்

ཡོད༽
ந்திப்பதற்காக கலாமிட்டிய மீன்பிடிக் கிராமத்திற்கு ட்டை மாவட்டத்தில் அம்பலாந்தோட்டை, ஹங்கம
பிடிக் கிராமம்
வையுமே மீன்பிடித்தலில் தங்கியிருந்தன. அதுவே )ாகும். சகல குடும்பங்களுமே சுனாமியினால் து வீடுகளையும், உயிர்களையும் இழந்தன. நயிட்டு கருத்துப் பரிமாறுவதற்கும், அவர்களுக்கு பற்றிய கருத்துக்களைப் பரிமாறிக்கொள்வதற்கும்
பெண்களைக் கொண்டிருந்ததுடன், ஒரு சிறிய வெளிப்படுத்துவதற்கும், தமது மன அதிர்ச்சியிலான மான எதிர்காலமொன்றைக் கட்டியெழுப்புவதற்கான ப்பதற்கு செயல்திட்டமொன்றை திட்டமிடுவதற்கும் தை நாம் உணர்ந்து கொண்டோம். பங்கு கல்வியறிவைக் கொண்டிருந்ததுடன், வயதிலும் களையிட்டு கிராம சேவகருடன் பதிவது போன்ற ங்கெடுக்க வேண்டியிருந்தது.
யல்ல. இது ஒரு துக்ககரமானதும், மகிழ்ச்சிகர டவர்களுடன் கலந்து பேசி மிகவும் கடுமையான கக்கூடியதாக அவர்களது வாழ்க்கையை வழமை மையாக முயன்றோம். நாம் அனுபவித்த வேறு
செயலமர்வு அல்லது ஒன்றுகூடல் மிகவும் டலை தொடர்ச்சியான கவனத்துடன் அல்லது வை குழப்பப்பட்டன. அத்துடன் அவை அழுத்தத்தின் வெளிப்பட ஆரம்பித்தது.
, புதிய சூழ்நிலைக்கு பொருந்தக்கூடிய வேறுபட்ட
செயல்திட்டமானது விளையாட்டுக்களையும், அவர்களில் பெரும்பான்மையோருக்கு சந்தர்ப்பம் நாம் அவர்களது மனங்களை கட்டியெழுப்பினோம். ல்ஸினாவினதும் ஆதரவை பெற்றுக்கொண்டோம். ப்பட்டது. அவரே பொருத்தமானதொரு முறைசாரா ஓங்குபடுத்தினார். அவர்களது கஷ்டங்களிலிருந்து திர்காலத்தின் ஆரம்பத்தை புதிதாக கட்டியெழுப்பும்
மையானவர்கள் என்பதுடன், கல்வியறிவையும் பிடயமாகும். ஏனெனில் நாம் பன்னிலையான காண்டிருக்கவில்லை.
ன், தமது வாழ்க்கைக்காக இன்னுமே பொருளாதார வித்திருக்காத சூழ்நிலையிலிருந்து தமது மனதை அவசியமாகத் தேவைப்படுகின்றது. கமத்தொழில் சுற்றிலும் போதுமான நிலத்தை அவர்கள் களுக்கு உணவையும், அனேகமாக பொருளாதார
ழில், எழுதுவினைஞர் தொழில், நிருவாக வேலை, வறு தொழில்களே அவர்களுக்கு அவசியமாகும். நிலைத்திருத்தற்தன்மையும், வழமை நிலையும் முன்னோக்கியுள்ள எதிர்காலம் இதுவேயாகும். |

Page 28
சிறிய மூலத பெரிய
எலிஸபெத் நியூமென்
2004 டிசம்பர் 26இன் சுனாமியில் சகலவற்றையும் இழந்த ஒரு சிறிய மீன்பிடி சனசமூகத்திற்கு எவ்வாறு ஒரு சிறிய கடல்கடந்த நம்பிக்கைப் பொறுப்பினால் உதவியளிக்க முடிந்தது என்பதைச் சித்தரிப்பதற்கே இக்கட்டுரை எழுதப்பட்டுள்ளது. ஆண்களைப் போல் சனசமூகத்தை மீள் தாபிப்பதில் பெண்களுக்கும் அதிகளவு உரிமையிருந்தது. உண்மையாகவே சுனாமிக்குப் பின்னர் முதல் சில நாட்களில் தமது குடும்பங்களை ஒன்றாக வைத்திருப்பதற்கும், மீண்டும் வருமானம் ஒன்றை உழைப்பதற்கான தமது முயற்சிகளுடன் ஆண்களுக்கு ஆதரவளிப்பதற்கும் சனசமூகத்தின் முதுகெலும்பாக பெண்கள் விளங்கினார்கள். பெருமளவு பெண்களும் குடும்ப வருமானத்தை குறைநிரப்புவதற்கு தயாரானார்கள்.
2004 டிசம்பர் 26 அன்று சுனாமியினால் விளைவிக்கப்பட்ட பயங்கரமான அழிவைத் தொடர்ந்து எனது சகோதரன் பீற்றர் ஜனவரி முற்பகுதியில் எனக்கொரு ஈ-மெயிலை அனுப்பி வைத்தார். அந்த இயற்கை அழிவினைத் தொடர்ந்து வாழ்வதற்காக உழைப்பதை மீள மேற்கொள்ளும் சனசமூகங்களுக்கு உதவும் குறிக்கோளுடன் இங்கிலாந்தின் கிராமியமயமான சசெக்ஸ்ஸின் மையத்திலுள்ள ஹைபுறுாக் என்ற சிறிய குக்கிராமத்தில் தரும நம்பிக்கைப் பொறுப்பொன்று அமைக்கப்பட்டு ஸ்ளதாக அவர் தெரிவித்திருந்தார். இவ்விடயத்தில் ஹைபுறுக்கிற்கு ஒத்த அளவிலான இலங்கையின் சிறிய மீன்பிடி சனசமூகத்திற்கு உதவி செய்வதே குறிக்கோளாகும். ஹைபுறுக்கின் சனத்தொகை சுமார் 100 ஆகும்.
சசெக்ஸ்ஸில் வாழ்கின்ற இலங்கையர் ஒருவரினால் உள்ளூர் பத்திரிகையில் வெளியிடப்பட்ட கட்டுரை யொன்றைத் தொடர்ந்தே தரும நம்பிக்கைப் பொறுப்பின் கருத்து உருப்பெற்றது. உடனடி அவசரகால உதவியுடன் தனது சக நாட்டவர் களுக்கு உதவி செய்வதற்காக உடைகளை நன்கொடையாக வழங்குமாறு அவர் மக்களைக் கேட்டுக் கொண்டார். அவர் ஒரு கொள்கலனை நிரப்புவதில் வெற்றியீட்டினார். அக்கொள்கலனை அவர் பின்னர் கொழும்புக்கு அனுப்பி வைத்தார். இந்த கனவானுடன் சிறிய மீன்பிடி சனசமூகத்திற்கு உதவியளிக்கும் தமது கருத்தையிட்டு பீற்றரும்,

னங்கள்
சாதனைகள்
ஹைபுறுக்கைச் சேர்ந்த ஏனையோரும் கருத்துப் பரிமாறினார்கள். இக்கனவான் தனது உடனடி ஆதரவை வழங்கியதுடன், ஹைபுறுாக் தரும நம்பிக்கைப் பொறுப்புக்கான பிரதம பேச்சாளரான பீற்றரை கொழும்பிலுள்ள தனது நண்பர் ஒருவருடன் தொடர்பு கொள்ளச் செய்தார். பீற்றர் ஒரு போதுமே இலங்கைக்கு சென்றிருக்கவில்லை. அதனால் தான் அவர் என்னுடன் தொடர்பு கொண்டிருந்தார். இந்நாட்டில் சில காலத்தை நான் செலவழித்திருந்தேன். சனசமூகப் பணியில் எனது சம்பந்தம் பெரிதுமே பயனுள்ளதாக இருக்குமென அவர் தெரிந்து வைத்திருந்தார். நான் அவருடன் இணைந்து கொள்வதென்றால் அவர் இலங்கையில் பெப்ரவரி 12இலிருந்து 18 வரை இருப்பார். அடுத்த சில வாரங்கள் இலங்கையைப் பற்றி அறிந்தவர் களிடமிருந்தும், உதவித் திட்டங்களுடன் தொடர்பு களைக் கொண்டிருந்தவர்களிடமிருந்தும் ஆலோ சனையைப் பெறுவதில் செலவழிக்கப்பட்டது. முதலில் அவசரகால உதவியை விட வேறு உதவியை வழங்குவதற்குச் செல்வது பெரிதுமே சரியானதா என்பதையிட்டு என்னால் நிச்சயமாக கூற முடியாது. நாம் சற்று முன்கூட்டியே செல்கின்றோமோ என நான் உணர்ந்தேன். எனினும், பெற்றுக் கொண்ட தகவலுடனும், கொழும்பில் வர்த்தகரான ஒரு தொடர்பாளின் உதவியை பீற்றர் கொண்டிருப்பதையும் அறிந்த நிலையில் நான் அங்கு பெப்ரவரி ஆரம்பத்தில் செல்கிறேன் என்று கூறினேன்.
2005 பெப்ரவரி 12 அன்று பீற்றரை அவரது தொடர்பாளுடன் கொழும்பில் சந்தித்தேன். பீற்றர் இங்கிலாந்திலிருந்து வந்திருந்தார். நான் அவுஸ்திரேலியாவிலிருந்து வந்திருந்தேன். ஜனவரி 8இலிருந்து பெருமளவு ஈ-மெயில் களும் , தொலைபேசி அழைப்புக்களும் மாறிமாறி கிடைத்தன. நாம் திரட்டிய தகவலுடனும், ஆலோசனையுடனும் பிரதான உல்லாச பயண பகுதியிலிருந்து தூரத்திலுள்ள ஹம்பாந்தோட்டை யின் தென் கிழக்கில் நாம் மிகவும் சக்திமிக்கவர் களாக விளங்குவோமென நாம் உணர்ந்தோம். மட்டக்களப்பைச் சூழவுள்ள கிழக்குக் கரையோர மும் சாத்தியமானதொரு இடம்தான். ஆனால்,
2006 செப்ரெம்பர் 9 பெண்ணின் குரல் 9 27

Page 29
தொடர்ந்து கொண்டிருந்த சிவில் குழப்பத்தின் காரணமாக சக்திமிக்க கருத்திட்டமொன்றை உருவாக்குவது மிகவும் கஷ்டமென்பதுடன், அதை இங்கிலாந்திலிருந்து அல்லது அவுஸ்திரேலியா விலிருந்து கண்காணிப்பதும் சாத்தியமற்றதாக விளங்கும். ஹம்பாந்தோட்டைக்கு செல்வதற்கான எமது திட்டத்திற்கு எமது தொடர்பாளின் ஆதரவு எமக்கு இருந்தது. மறு நாள் அவர் எம்மை ஹம்பாந்தோட்டைக்கு அழைத்துச் சென்றார். மொரட்டுவையிலிருந்து தென் கரையோரம் முழுவதும் அழிவு மிகவும் கண்கூடானதாக விளங்கியது. மேலும், கிழக்கே நாம் சென்ற போது அது மோசமாகத் தெரிந்தது. கரையோரத்தில் அமைந்திருந்த பறைகளும், மணல் மேடுகளும் சில வீடுகளுக்கு பாதுகாப்பை அளித்திருந்தன. இல்லாவிடில் சுமார் 100 - 200 மீற்றர் அகலமான சுற்றுவட்டம் முழுமையாக அழிந்திருக்கும். இதனால் பயிர் வளங்கள் பாதுகாக்கப்பட்டன. ஆனாலும், குறைந்தளவிலான பயிர் வளங்கள் உவர்நீரினால் வரண்டிருப்பது தெரிந்தது. இரண்டாம் உலக மகா யுத்தத்தில் லண்டனின் குண்டுத் தாக்குதலை விட இந்த அழிவு மோசமானதென எனக்கு ஏற்கனவே எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. அது சரிதான். பெருமளவு அரசாங்க சார்பற்ற தாபனங்கள் வீடமைப்பு உட்பட அவசரகால உதவியை அளிப்பதில் பணியாற்றின. வீடமைப்புகள் பெரும்பாலானவை கூடாரங் களாகவே விளங்கின. ஆனால், இப்போது பலகையிலான குடிசைகள் கட்டப்படுகின்றன. காலி வரையும் ரயில் சேவை நடைபெற்றது. அத்துடன் வீதியிலமைந்திருந்த பாலங்களும் பாதுகாப்பானவை என அறிவிக்கப்பட்டது. ஹம்பாந்தோட்டையில் பெரும்பாலானவை முழுமையாக அழிந்ததினால் நாம் தங்குவதற்கு பொருத்தமான இடம் ஒன்றும் இருக்கவில்லை. அதனால் நாம் திஸ்ஸமஹரகம வுக்கு பிரயாணம் செய்தோம். திஸ்ஸமஹரகம போதியளவு தூரத்தில் உட்பகுதியில் அமைந்திரு ந்தமையினால் சுனாமியிலிருந்து ஏதாவது சேதத்தினால் பாதிப்படையவில்லை.
நாம் தங்கியிருந்த ஹொட்டேல் திஸ்ஸமஹரகம குளத்திற்கு அருகிலும், ஆலயத்தை பார்க்கக்கூடிய இடத்திலும் அமைந்திருந்தது. ஹொட்டேலைச் சுற்றியிருந்த நிலத்தை நெற்பயிர்கள் பொறுப் பேற்றிருந்தன. இதனால் அது ஒரு குளிர்ச்சியான, பிரகாசமான பச்சையாக விளங்கியது. அழிவடைந்த கரையோரச் சுற்றுவட்டத்தில் நாம் தங்கியிருந்த மூன்று நாட்களில் பெரும்பாலானவற்றை செலவழித்த பின்னர் மாலைகளில் இந்த சூழலுக்கு திரும்புவதையிட்டு நாம் மிகவும் மகிழ்ச்சி யடைந்தோம். எதுவுமே நடக்கவில்லை என்பது போல் நாளாந்த காரியங்கள் நிறைவேறின. திஸ்ஸ
28 பெண்ணின் குரல் 2006 செப்ரெம்பர்

மஹரகம சேதமடையாத போதிலும் நகரம் பாதிப்படைந்திருந்தது. பெரும்பாலானோர் தமது உறவினர்களை அல்லது நண்பர்களை சுனாமியில் இழந்திருந்தனர். உல்லாசப் பயணிகள் அங்கு அறவே இருக்கவில்லை. இதனால் நகரத்தின் பொருளாதாரம் பாதிப்படைந்தது. திஸ்ஸமஹரகம ஓர் உல்லாசப் பயண மையமென்றில்லாத போதிலும், அதுவே யால தேசிய பூங்காவிற்கு நுழைவாயில் என்பதுடன், அதன் வடக்கே இந்துக் களுக்கு முக்கியமான சமய ஸ்தலமான கதிர்காமம் அமைந்திருந்தது. சுனாமியின் பின்னர் யாத்திரிகர் கள் கூட வருவதை நிறுத்திவிட்டார்கள்.
பிற்பகல் பிந்திய வேளை ஹொட்டேலில் எம்மை விட்டு விட்டு எமது தொடர்பாள் சென்றார். அவர் கொழும்பிற்கு திரும்பி சென்றுவிட்டார். அடுத்த நாள் ஒரு மணியளவில் அவரது சாரதியும், எமது மொழிபெயர்ப்பாளராக விளங்கும் தரக்கட்டுப்பாட்டு உத்தியோகத்தரும் வானுடன் திரும்பி வருவார்கள் என அவர் சொல்லி இருந்தார். அவர்கள் நாம் அங்கிருந்து செல்லும் வரை எமது உதவிக்கு இருப்பார்கள். இலங்கையிலிருந்து நாம் வெள்ளிக் கிழமை புறப்பட முன்னர், அது வரை நாம் எதைச் சாதிக்கலாம் என்பதையிட்டு நாம் இருவரும் மாலை வேளை கருத்துப் பரிமாறினோம். அடுத்த நாள் காலை சமூக சேமநலத்திற்கான மையமொன்றாக ஆலயங்கள் விளங்கும் என்ற எனது ஆலோசனை யின் பெயரில் நாம் ஆலயத்திற்கு சென்றோம். உடனடியாக எம்மிடம் பிரதம மதகுருவின் அலுவலகம் காட்டப்பட்டது. அவரே சுனாமி நிவாரணத்தின் உள்ளூர் இணைப்பாளர் என்பதை நாம் அறிந்து கொண்டோம். இக் குறிப்பிட்ட ஆலயம் அதன் சமூக சேமநலன் திட்டங்களுக்கு நல்ல பெயரை எடுத்திருந்தது. நாம் செய்ய இருப்பதன் கருத்துருவிற்கு பிரதம மதகுரு ஆதரவாக விளங்கியதுடன், எமது உதவிக்குப் பொருத்தமானவராக விளங்கும் சனசமூகங்களை யிட்டு யோசனையும் வெளியிட்டார். நாம் கிராம த்தை தெரிவு செய்தவுடன் அவர் குடும்பங்கள் குழுவாக உள்ள சகல கிராமங்களின் பட்டியலை எம்மிடம் தந்தார். இப்பட்டியல் குடும்பங்களின் பிரதான தொழில்நிலை, ஏதாவது பிள்ளைகளின் வயது கொல்லப்பட்ட குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கை ஆகியவற்றை கொண்டிருந்தது. இப் பட்டியல் பெரு மதிப்பிலானதாகும். பிரதம மதகுரு பெரிதுமே வேலையில் கடுமையாக மூழ்கியிருந் தாலும், நன்கு களைத்துப் போயிருந்தாலும் மிகவும் உதவியாக விளங்கினார். அவர் எப்பொழுதுமே தனது அலுவலகத்தில் உள்ளவர்களுக்கு எம்மை அறிமுகம் செய்து வைத்ததுடன், மாவட்ட

Page 30
வீடமைப்பு உத்தியோகத்தருடனான கூட்டத்திலும் எம்மை உள்ளடக்கினார்.
அருகிலுள்ள இன்னொரு ஆலயத்திற்கும் நாம் சென்றோம். அங்கு எமக்கு பெரு வரவேற்பளிக்கப் பட்டது. ஆனால், அது பாடசாலை ஒன்றையே நடத்தியது. சுனாமியினால் அனாதை களானதும், இடம்பெயர்ந்ததுமான பாடசாலைக்கு செல்லும் ஒரு தொகை சிறுவர்களை அது கொண்டிருந்தது.
எமது சாரதியும், மொழிபெயர்ப்பாளரும் வாக்குறுதி யளித்தபடி ‘வேனுடன்’ திரும்பி வந்தவுடன், அருகிலுள்ள கரையோரப் பட்டினத்திற்கு நாம் சென்றோம். இப்பட்டினம் பெரிதுமே முழுமையாக அழிந்திருந்தது. பிரதம குருவுக்கு நன்றி தெரிவிக்க வேண்டும். ஏனெனில் அவர் எமக்கு வழிகாட்டியாக செயல்படுவதற்காக பிற்பகல் வேளைக்கு பிக்கு ஒருவரை அனுப்பி வைத்தார். சகலவற்றையும் இழந்ததும், எமது நோக்கத்திற்கு நன்கு பொருந்து வதுமான ஒரு சிறிய மீன்பிடி சனசமூகத்தை எம்மால் கண்டறியக்கூடியதாக இருந்தது. இச் சனசமூகம் எம்மை வரவேற்றதுடன், சுதந்திரமான இயங்கும் தன்மையை எடுத்துக்காட்டியதுடன், எமது உதவிக்கு உண்மையான நன்றி செலுத்து வதாகவும் தோன்றியது. அடுத்த நாள் காலை நாம் அங்கு திரும்பிச் சென்று அவர்களுக்கு ஆதரவளிப்பதற்காக அவர்களைத் தெரிவு செய்திருப்பதாக கூறியதுடன், முகாம் முகாமை யாளரினதும், தொண்டர் ஒருவரினதும் உதவியுடன் எமது விஜயத்திற்கான நோக்கத்தையும், அவர்களுக்கு எம்மால் அளிக்கக்கூடிய சிறிய அளவிலான உதவியையும் பற்றி கிராமவாசி களுக்கு விளக்கமளித்தோம். எமது உதவியை ஏற்றுக்கொள்வதையிட்டு அவர்கள் மகிழ்ச்சி யடைந்தார்கள். பிரதம குருவின் பட்டியலின் உதவியுடன் மீன்பிடிக்கச் சென்ற குடும்பங்களின் எண்ணிக்கையை எம்மால் தாபிக்கக்கூடியதாக இருந்தது. ஆண்கள் மத்தியில் ஒரு முடிதிருத்து பவரையும், இரு தச்சுத் தொழிலாளிகளையும், ஒரு மேசனையும், அத்துடன் தையலில் ஈடுபட்ட , ஒரு தொகைப் பெணி களையும் நாம் கண்டறிந்தோம். அவர்கள் தமது நல்வாழ்வுக்கு மீண்டும் உழைப்பதை ஆரம்பிப்பதற்கு சனசமூகத்திற்கு என்ன தேவைப்படுகின்றது என்பதைத் திட்டமிடுவதற்காக முகாம் முகாமை யாளருடனும், தொண்டருடனும் கிராமத்தைச் சேர்ந்த பிரதிநிதிகளுடனும், எமது மொழிபெயர்ப்பா ளருடனும் நாம் கருத்துப் பரிமாறினோம். அரசாங்கத்தின் உதவி நீண்ட காலத்திற்கு இருக்கா தென்பதுடன், அது ஆறு மாதங்களுக்கு மட்டுமே

2006 செப்ரெம்பர் 9 பெண்ணின் குரல் 9 29

Page 31
இருக்கும். பொதுவாகவே சேமநலன்கள் அற்ற ஒரு நாடாகவே இலங்கை விளங்கியது. எமது வரவுசெலவுத் திட்டம் பெரிதானதல்ல. சுமார் 12,000 ஸ்ரேர்லிங் பவுண்களாகும். இதனால் தமது சொந்த வருவாயை உழைக்கும் வழிவகைகளுடன் ஒவ்வொரு குடும்பத்தையும் அமைப்பது சாத்திய மற்றதாகும். கிராமவாசிகள் இதைப் புரிந்து கொண்டதுடன், தமக்கு எது தேவை என்பதை அறிந்து வைத்திருந்தனர். அத்துடன் அவர்கள் பொருட்களின் விலைகளையும் அறிந்து வைத்திருந்தனர். அவர்கள் அவா கொண்டவர் களல்லர். நாம் வலைகளுடன் சேர்த்து, ஐந்து எண்ணிக்கையிலான தினப்படகுகளை கொள்வனவு செய்வதெனத் தீர்மானித்தோம். வலைகள் மூன்றைக் கொண்ட தொகுதிகளாக வருவதாகவே நாம் பின்னர் அறிந்து கொண்டோம். இவை மிகவும் விலை கூடியவையாகும். ஆதலினால் ஒவ்வொரு படகுமே மூன்று மீனவர்களுக்கு ஆதரவளிக்கும். இதைச் சுருங்கச் சொல்லின் பதினைந்து ஆண்களுக்கு நாம் வாழ்வாதாரத்தை வழங்கி னோம். நாம் கொழும்புக்குத் திரும்பும் வரை எம்மால் படகுகளுக்கு 'ஒடர் கொடுக்க முடிய வில்லை. சிறுவர்கள் சங்கீதக் கருவிகளை விரும்பு வார்கள் என்பதையும், இரு வயது வந்தவர்கள் சங்கீதக் கருவிகளை இசைக்க தெரிந்திருக்கிறார் கள் என்பதையும், சிறுவர்களுக்கு சங்கீதக் கருவிகளை கொடுத்து அவர்களுக்கு உதவி செய்யலாம் என்பதையும் நாம் அறிந்தோம். சிறுவர் களுக்கு 'மெலோடிக்காவையும், வயதானவர் களுக்கு புல்லாங்குழலையும், கீ போர்ட்டையும் நாம் கொள்வனவு செய்ய வேண்டுமென வேண்டுகோள் விடுக்கப்பட்டது. இவற்றைக் கூட எம்மால் உள்ளூரில் கொள்வனவு செய்ய முடியவில்லை. சசெக்ஸ்ஸிலுள்ள ஆரம்பநிலைப் பாடசாலையொன்று, குறிப்பாக சிறுவர்கள் மீது செலவழிப்பதற்காக ஒரு சிறிய தொகையைச் சேகரித்திருந்தது. சங்கீதக் கருவிகளை வாங்கு வதற்கான செலவினத்திற்கு இது பாரியளவில் பங்களித்தது. இரு தச்சுத் தொழிலாளிகளுக்கும், மேசனுக்கும், முடிதிருத்துபவருக்கும் திஸ்ஸமஹர கமவில் அடிப்படைக் கருவிகளை எம்மால் வாங்கக் கூடியதாகவிருந்தது. தையலில் ஈடுபட்டிருந்த பெண்களுக்கு மோட்டார், கத்தரிக்கோல்கள், நூல், மற்றும் துணிகள் ஆகியவற்றுடன், இரு தையல் இயந்திரங்களைக் கொள்வனவு செய்ய எம்மால் முடிந்தது. சிறுவர்களுக்கு பாடசாலைச் சீருடை களைத் தைப்பதற்காக இரு சுருள் துணி அவர் களுக்குத் தேவைப்பட்டது. வயது வந்தவர் களுக்கும், சிறுவர்களுக்கும் தேவையான குடைகளின் தேவையை எம்மால் பூர்த்தி செய்யக் கூடியதாக இருந்தது. இவற்றை பெறுவதையிட்டு அவர்கள் மகிழ்ச்சியடைந்தனர். தமது சிறிய
30 பெண்ணின் குரல் 9 2006 செப்ரெம்பர்

முகாமுக்கு அப்பால் உலகத்துடன் தொடர்பு கொள்ளலாம் என்பதற்காக ஒரு 'ட்ரான்ஸ்சிஸ்டர் ரேடியோ’விற்கும் கிராமவாசிகள் வேண்டுகோள் விடுத்தனர். எம்மால் இரு 'ரேடியோ’க்களை கொள்வனவு செய்ய முடிந்தது.
சுனாமிக்குப் பின்னர் உள்ளூர் மக்களுக்கு உதவியளிப்பதற்காக நானும், பீற்றரும் அங்கு இருப்பதையிட்டு நாம் தொடர்பு கொண்டிருந்த உள்ளூர் கடைக்காரர்கள் மிகவும் பாராட்டும் தன்மையுடன் விளங்கினார்கள். உள்ளூர் வாசிகளுக்கு வழங்குவதைப் போன்று எமக்கும் தன்னிச்சையாகவே அவர்கள் கழிவுகளை வழங்கினார்கள். பணத்திற்கு ஏற்ற பெறுமதியை நாம் பெற்றுக் கொண்டோம் என்பதில் எமது மொழிபெயர்ப்பாளர் சிரத்தை காட்டினார். கிராம வாசிகள் தாம் கேட்டதையே பெற்றுக் கொள்கிறார்கள் என்பதை நிச்சயப்படுத்துவதற்கு அவர்களைச் சம்பந்தப்படுத்தியே உள்ளூரில் கொள்வனவு செய்வதையிட்டு நாம் மகிழ்ச்சி யடைந்தோம். அத்துடன் இவ்வாறாக மோசமாக பாதிப் படைந்து கொணி டிருந்த உள்ளூர் பொருளாதாரத்திற்கு எம்மால் உதவி செய்யவும் முடிந்தது.
மூன்று நாட்களில் பொருத்தமான சனசமூக மொன்றை நாம் கண்டறிந்ததுடன், நாம் உண்மை யாகவே உதவியளிக்கக்கூடிய தேவைகளையும் தாபித்துக் கொண்டோம். வீடமைப்பானது எமது நோக் கெல் லைக்கு அப்பாற் பட்டதாகும் . நாட்டிலிருந்து வெளியே இதை நிருவகிப்பதென்பது ஒரு கனவாகவே இருந்திருக்கும். இத்தேவையைப் பாரிய தாபனங்களே சமாளிப்பதற்கு மிகவும் சிறந்த நிலையில் இருக்கும். கிராமவாசிகளின் உடனடித் தேவைகள் மன்றம் ஒன்றினால் கவனிக்கப்பட்டது. கிராமவாசிகளுக்கு பரிந்துரைப்பதற்கும், அவர் களது நாளாந்த தேவைகளைப் பார்ப்பதற்கும் இலங்கையைச் சேர்ந்த முகாமையாளர் ஒருவரும், வெளிநாட்டு தொண்டர் ஒருவரும் இருந்தனர். அரசாங்கத்தின் பங்கீடுகள் திஸ்ஸமஹரகம ஆலயத்தினால் கையாளப்பட்டன. அடிப்படைக் குடித்தன விடயங்கள் போன்ற பொருட்களுக்கு பிரதம குரு சிறிதளவு உதவியை அளிக்கக் கூடிய நிலையில் இருந்தார். பகுதியின் சுனாமி உதவியின் இணைப்பாளராக பிரதம குரு நாம் செய்வதையிட்டு மகிழ்ச்சியடைந்தவராகக் காணப் பட்டார்.
அங்கிருந்த மக்கள் பெரிதுமே சகலவற்றையும் இழந்துவிட்டார்கள். அவர்களது அடையாள அட்டைகளே முக்கியமானதொரு விடயமாகும்.

Page 32
அடையாள அட்டை இல் லாதவர்களின் பெயர் களைப் பெறுவதற்கு குறிப்பிட்ட நாளொன்றில், குறிப்பிட்ட இடமொன்றில் தாம் இருப்பதாக அரசாங்க உத்தியோகத்தர்கள் விளம்பரப்படுத்தினார்கள். 'வயலர்ஸ்'களும், தொலைக்காட்சிகளும், செய்திப்பத்திரிகைகளும் у h j ரூர் மக்களுக்கு இக்கூட்டங்கள் பற்றி தெரிந்திருக்கவில்லை. நாம் படகுகளுக்கு 'ஒடர் கொடுத்த போது உரிமை யாளரின் அடையாள அட்டை இலக்கமின்றி படகுகளை விடுவிக்க முடியாதென எமக்கு தெரிவிக்கப்பட்டது. ஒவ்வொரு படகும் அதற்கென நியமிக்கப்பட்ட நபரின் பெயரில் பதிவு செய்யப்பட வேண்டும். எனினும், மே மாதத்தில் படகுகள் தயாரான போது, புதிய அடையாள அட்டை இலக்கங்களை உரிமையாளர்கள் இன்னுமே பெறாத போதிலும், அவை விடுவிக்கப்பட்டன.
கொழும்புக்கு திரும்பிய தினம் முழுவதும் நாம் சுறுசுறுப்பாக இயங்கினோம். நாம் படகுகளுக்கு 'ஒடர் கொடுத்ததுடன், அந்நேரத்தில் கிராமத்திற்கு தமது ஆதரவை வழங்கிய மன்றத்திற்கும் நாம் விஜயம் செய்தோம். நாம் செய்கின்ற விடயங்கள் மன்றத்தின் பணியின் மீது எவ்வேளையிலும் குறுக்கிடவில்லை என்பதைத் தாபிப்பதற்கு நாம் விரும்பினோம். கொழும்பிலிருந்த எமது தொடர் பாளுக்கும் நாம் இதைச் சுருக்கமாக விளக்கினோம். நாம் கொழும்புக்கு திரும்பிய பின்னரே சங்கீதக் கருவிகளுக்கு 'ஒடர்’ செய்யப் பட்டது.
அன்று பின்னிரவில் பீற்றர் புறப்பட்டுச் சென்றவுடன், அடுத்த நாள் அதிகாலை நான் புறப்பட்டுச் சென்றேன். கடந்த ஒரு வாரமாக எதிர்பார்த்ததை விட அதிகளவை நிறைவேற்றுவதற்காக நாம் கடுமையாகப் பணியாற்றிருந்தோம். நாம் எதைக் கண்டறியப் போகின்றோம் என்பதை உண்மை யாகவே அறிந்து கொள்ளாமல் நாம் சென்றிருந்தோம். நாம் எதை அமைத்திருந்தோமோ அது சரிவர இயங்கும் எனவும், கருத்திட்டம் வெற்றியை ஈட்டும் எனவும் நாம் தற்போது நம்பிக்கை கொண்டுள்ளோம்.
விசேடமாக ஆரம்ப நாட்களில் தகவல் தொடர்பு ஒரு பிரச்சினையாக விளங்கியது. இங்கிலாந்தில் உள்ள வங்கியின் புரிந்துணர்வும், ஒத்துழைப்பும் இல்லாமையினால் படகுகளுக்கும், சங்கீதக் கருவி களுக்குமான கொடுப்பனவுக்காக பணத்தைக் கைமாற்றுவதில் சிக்கல் ஏற்பட்டது. நாம் இவ்வாறான சூழலிலிருந்து விலகுவதை சமாளித்துக்

கொண்டதுடன், மார்ச் மாதத்தின் கடைசிப் பகுதி யளவில் கருவிகள் விநியோகிக்கப்பட்டன. வலைகளுடன் ஐந்து படகுகள் மே மாதத்தில் தயாராகவிருந்தன. உரிமையாளராக நியமிக்கப் பட்ட ஐந்து மீனவர்களுக்கும் படகுகளை உத்தியோகபூர்வமாகக் கையளிப்பதற்காக பீற்றரும், அவரது மனைவியும் விஜயம் செய்யக்கூடிய நிலையில் விளங்கினார்கள். அவர்களை திஸ்ஸ மஹரகமவைச் சேர்ந்த பிரதம குரு ஆசிர்வாதம் செய்தார். அந்த விஜயத்தின் போது தற்காலிகமான வீடமைப்புக்கு கிராமவாசிகள் இடம்பெயர்ந்துள்ள தையும், தமது வாழ்க்கையை மீண்டும் ஒழுங்கு படுத்த முனைவதையும் கண்டு பீற்றர் மகிழ்ச்சி யடைந்தார். பகுதியில் மீள்நிருமாணப் பணியில் ஈடுபடுவதற்காக தச்சுத் தொழிலாளிகளும், மேசனும GOALஇனால் தொழிலுக்கமர்த்தப்பட்டனர். ஆதலினால் நாம் ஆண்களுக்கு வழங்கிய கருவிகள் சிறந்த வகையில் பயன்படுத்தப்பட்டன. அத்துடன் பெண்களில் ஒருவர் தையலில் ஈடுபடுவதன் மூலம் பணத்தை ஈட்டுவதையும் ஆரம்பித்திருந்தார்.
இரண்டரை வாரங்களுக்கு மேலாக தங்கியிருந்த பின்னர் 2005 ஒக்டோபர் இறுதியில் திஸ்ஸமஹர கமவிற்கு நான் திரும்பி வந்தேன். மக்களுடன் கதைப்பதன் மூலமும், ஒரு சில வீடமைப்பு கருத் திட்டங்களுக்கு விஜயம் செய்தவன் மூலமும் பொதுவாக மீள்நிருமானத்துடன் என்ன நடைபெறு கின்றது என்பதையிட்டு நியாயமானளவிலான புரிந்துணர்வை என்னால் அந்நேரத்தில் ஈட்டக் கூடியதாகவிருந்தது. பெப்ரவரியை விட குறைந்தளவு உதவி ஊழியர்களும், சற்றே அதிகமான உல்லாசப் பிரயாணிகளும் இருந்தனர். ஆலயத் தினால் இளம் வயதினருக்கு வழங்கப்படும் பயிற்சிப் பாடநெறிகளை பிரதம குருவினால் அதிகரிக்கக் கூடியதாக இருந்தது. அவர் பெரிதுமே ஒய்வு மனப்பான்மையுடன் விளங்கியதுடன், பெப்ரவரியில் இருந்தது போலன்றி களைத்தவராக காணப்பட வில்லை. நாம் உதவியளித்த கிராமவாசிகள் இன்னுமே தற்காலிக வீடமைப்பில் இருந்தனர். எனினும், அவர்கள் வாழ்க்கையைத் தொடர்ந்தும் நடத்தினர். குடும்ப எண்ணிக்கையிலும் ஒரு சிறிய மாற்றம் இருந்தது. இப்பொழுது 20 குடும்பங்கள் அங்கிருந்தன. இது பெப்ரவரியில் இருந்ததை விட இரண்டிலான ஓர் அதிகரிப்பாகும். சகல இருபது குடும்பங்களுமே வாழ்வாதாரத்தை ஈட்டின. ஆனால், ஐந்து குடும்பங்கள் ஒரு படகையோ அல்லது ட்ரக்டரையோ அல்லது இவற்றை ஒத்ததொன்றையோ சொந்தமாகக் கொண்டிருக்க வில்லை. அவர்கள் ஏனையவர்களுக்காக பணியாற்றினார்கள். குறிப்பாக மீனவர்கள் நன்றாக வாழ்வதாகத் தெரிந்தது. படகுகளின் நிருமாணம்
2006 செப்ரெம்பர் 9 பெண்ணின் குரல் 31

Page 33
பற்றி கரிசனையொன்று இருந்தது. படகுகளில் சில பலப்படுத்த வேண்டியிருந்தது. இரு பெண்கள் தைப்பதன் மூலம் பணத்தை ஈட்டினார்கள். மூன்றாமவர் உணவையும், நாளாந்த அடிப்படைப் பொருட்களையும் விற்கின்ற கடையொன்றை அமைத்திருந்தார். மேலும் இரு பெண்களுக்கு கயிறு திரிப்பதற்கு சாதனங்கள் வழங்கப்பட்டிருந் ததுடன், அவர்கள் கயிறுகளை விற்பதை ஆரம்பித்திருந்தனர். தமது கயிறுகளுக்காக அவர் கள் ஒரு தொகைப் பரிசில்களையும் வெற்றியீட்டி யிருந்தனர். கிராமத்தில் பலதரப்பட்ட நடவடிக்கை கள் இடம்பெற்றதுடன், மக்கள் ஒய்வாகவும், சந்தோஷமாகவும் இருப்பதாகத் தெரிந்தது. தைப்பவர்களில் ஒருவருக்கு 'ஒவலொக் இயந்திரம் தேவைப்பட்டது. ஹைபுறுாக் தரும நம்பிக்கைப் பொறுப்பின் சார்பில் இதை வாங்குவதற்கு. நான் அங்கீகாரம் அளித்திருந்தேன். அத்துடன் தையல் இயந்திரங்களைக் கொண்டிருந்த சில பெண் களுக்கு கத்திரிக்கோல் தேவைப்பட்டது. ஏதாவது சிறியதாக எவருக்கும் தேவைப்படாததினால் சில கத்திரிக்கோல்களையும், மேலும் சிறிதளவு துணி களையும் என்னால் கொள்வனவு செய்ய இயலுமாக விருந்தது. கிராம சபையின் சில பிரதிநிதிகளுடன் நான் கலந்தாலோசித்தேன். ஒவ்வொரு குடும்பமுமே வாழ்க்கைக்காக சம்பாதிப்பதாக உறுதிப்பாட்டுடன் விளங்கியது. சாதனங்களைப் பொறுத்தளவில் அவர்களுக்கு மேலும் எதுவும் தேவைப்படுகின்றதா என்று கேட்ட போது ஐந்து குடும்பங்கள் படகொன்றையோ, அல்லது அதையொத்த ஒன்றையோ கொண்டிருக்கவில்லை என எனக்குக் கூறப்பட்டது. நாம் மேலும் பணத்தை சேகரிக்க வேண்டியிருந்ததனால் மேலும் ஏதாவது செலவினமான சாதனங்களை விநியோகிப்பதை யிட்டு என்னால் வாக்கு கொடுக்க முடியாதென நான் பிரதிநிதிகளிடம் கூறினேன். சில சிறிய விடயங்கள் குறித்து முடிவு எடுக்க வேண்டி யிருந்தது. நான் கொழும்பிற்கு திரும்பிய போது படகுகளை கட்டுபவர்களுடன் படகுகள் பற்றிய எனது கரிசனைகளை எழுப்பினேன். கிராமவாசிகள் தாம் அடைந்த சாதனையையிட்டு நான் மிகவும் மகிழ்ச்சியடைகின்றேன். நான் அங்கு விஜயம் செய்த போது நின்று போன அரசாங்க உதவு தொகைகள் இன்றி வாழ்வதற்கான நிலைமையில் அவர்கள் இருந்தார்கள்.
கருத்திட்டத்தை அமைத்து ஒரு வருடத்தின் பின்னர், 2006 பெப்ரவரியில் பீற்றருடனும், அவரது மனைவியுடனும் திஸ்ஸமஹரகமகவிற்கு நான் விஜயம் செய்தேன். நிரந்தரமான வீடமைப்பு
32 பெண்ணின் குரல் 9 2006 செப்ரெம்பர்

முடிக்கப்படாததினால் பெருமளவு கிராமவாசிகள் அருகிலிருந்து புதிய வீடமைப்புக்கு இடம்பெயர்ந் திருந்தனர். கிராமம் பிளவுபட்டிருக்குமோ என நாம் கரிசனை கொண்டிருந்தோம். ஆனால், சகல குடும்பங்களுமே தொடர்ந்தும் அந்நியோன்னிய மாகவும் ஒன்றுக்கொன்று ஆதரவாகவும் விளங்கின. நாம் கிராமவாசிகளை முதலில் சந்தித்ததை விட இப்போது மகிழ்ச்சியாகவும், அதிக ஆரோக்கிய மானதாகவும் விளங்கியதாகத் தோன்றுகின்றது. ஏனையவர்களுக்காக பணியாற்றிய ஐந்து குடும்பங் கள் உட்பட தாமாகவே மீள்தாபிப்பதற்கான வழியொன்றில் அவர்கள் பயணம் செய்வதையிட்டு நாம் பெரும் திருப்திகொண்டோம். இன்று வரை மேலும் சாதனங்களைக் கொள்வனவு செய்வதற்கு போதிய பணம் இருக்கவில்லை என்பதுடன், எம்மிடம் மேலும் ஏதாவது கோரப்படவுமில்லை. பன்னிரண்டு மாதங்களுக்கு முன்னர், ஒரு சிறிய மீன்பிடி சனசமூகம் வாழ்வதற்காக உழைப்பதை மீள மேற்கொள்வதற்கு உதவுவதற்காக நாம் எதைச் செய்வதற்காக புறப்பட்டோமோ, அதை நாம நிறைவேற்றியுள்ளோம் என நாம் உணர்கின்றோம். இப்போதே ஒரு வெற்றிகரமான கருத்திட்டம் என கருதும் இதை நிறைவு செய்ய வேண்டிய நேரமாகும். நாம் எதைச் செய்வதற்கு புறப்பட்டு வந்தோமோ அதைச் செய்துவிட்டோம் என்பதை கிராமவாசிகள் புரிந்துவிட்டார்கள் என்பதுடன், தமது பாராட்டுதலையும் அவர்கள் வெளிப்படுத்தியுள்ளார் கள். நாம் அவர்களிடம் தொடர்பு கொண்டிருப் போம். ஆனால், நம்பிக்கைப் பொறுப்பிலிருந்து இனிமேலும் உதவி கிட்டமாட்டாது.
கொழும்புக்கு திரும்பிய பின்னர் எமக்கு மேலும் ஒரு பணியிருந்தது. படகுகளின் வடிவமைப்பில் மேலும் தவறுகள் இருந்ததினால் படகு கட்டு பவர்களுடன் அது பற்றி கதைக்க வேண்டி யிருந்தது. இத் தவறை நிறுவனம் ஏற்றுக் கொண்டதுடன் இது சீரமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தது. படகுகளுக்கான பாரிய கிராக்கியின் காரணமாக சுனாமியின் பின்னர் சில மாதங்களின் போது தரம் இறங்கிவிட்டதாகவும் அவர்கள் ஏற்றுக் கொண்டனர். கட்டணமின்றி படகுகளை பழுது பார்ப்பதாகவும் மிகவும் பின்தங்கிய பகுதியிலே கிராமம் அமைந்திருந்ததினால் பழுதுபார்த்தல்களை எவ்வாறு சரிவர பொறுப்பேற்பது என மீனவர் களுக்கு தாம் கற்பிப்பதாகவும் நிறுவனம் தெரிவித்தது. கருத்திட்டத்தை கண்காணிப்பதற்கு நாம் அங்கிருந்திருக்காவிட்டால் இத்தகையதொரு சிறந்த விளைவினை நாம் கொண்டிருக்க மாட்டோம் என்பது நிச்சயமே.

Page 34
புதிய போட்டிக்குரி கலாசாரத்தினால் சுனாமிக்கு பின்னரா பெருமளவு பெண்கள் இ கிறார்கள் அல்ல, எடுக்கப்படுவதில்ை வர்களுக்கான நிவா
பால்நிலை முனை என்பது தெளிவானது என் அவர்களது உதவிய JITTITI ĠEJ JITLDTT-E L 1605J LIL ILLI பெண்கள் உள்ளாக அரசாங்கத்தினதும், ம தாபன பொறிமுறைகளினது நடைமுறையானது டெ பங்கெடுப்பைக் குறைத் விசேடமாக ஒற்றைப் விதவைகளினதும் நிலைை
|EL ) பாதிக்கப்பட்டவர்களின் இழந்துவிட்டதுடன் கலாசாரத் அதன் விளைவிலான பாதிக்கப்பட்டவர்களா வருகின்ற
கலாநிதி சுஜாத

தங்கியிருத்தல் உருவாக்கப்பட்ட ான நிலைமையில் டதாசீனம் செய்யப்படு து கரிசனைக்கு ல. புதிக்கப்பட்ட ரனப் பொருட்கள் ப்பானவை அல்ல பதுடன், கிராக்கியினதும், ற்ற தன்மையினதும் ட தொந்தரவுகளுக்கு
வேண்டியிருந்தது. ற்றும் அரச சார்பற்ற தும் மீள்கட்டியெழுப்புதல் பரிதுமே பெண்களின் ந்து மதிப்பிடுவதுடன், பெற்றோர்களினதும், ய அவை மறந்துவிட்டன. 5 தமது பலத்தை 1 பெரும்பாலானோர்
தங்கியிருக்கும் தினதும்,
தாக்கங்களினதும் க அதிகரித்தளவில் ார்கள்.
விஜேதிலக்க