கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: பிரவாகினி 2005.06

Page 1
ijaut
WERC
g, Sufi 2005
வன்முறை வன்முை
இன்றைய காலகட்டத்தில் கொலே கொள்னை Urall LGű" வல்லுறவுகள் என்று அசம்பாவிதங் களை அடுக்கிக் கொண்டே போகலாம் பாதுகாப்புநில்ைமைகள் வெகுவாகச் சீர்குலைந்து வருவதை நாம் அன்றாடம் பத்திரிகைகள் வாயிலாக அறியக் கூடியதாக உள்ளது. படு கொலை என்பது இன்று ang நாட்டில்
மலிந்துவிட்டது வில்ை மதிப்பற்ற
மனித உயிர்கள் நாள் தோறும் கோவு கொள்ளப்படுகின்றமை பெரும்
கவலைக்கரிய விடயமாக உள்ளது.
TTT T ".
சிவில் சமூகத்தை அச்சுறுத்திக் கொண்டிருக்கும்-பயங்கரவாதம் அமைச்சர் கதிர்காமரின் உயிரையும் பலியெடுத்துவிட்டது அமைச்சர் கதிர் காமரின் கொலை நடந்த அன்று: மேலும் நான்கு கொலைகள் நடந்து இருப்பதை பத்திரிகை வாயிலாக நாம் அறியக்கூடியதாக உள்ளது.
அன்றைய தினத்திலேயே பிரபல்வி
அறிவிப்பாளர் ரேலங்கியும் கன்வரும் பம்பலப்பிட்டியில் தமது வேலைத்
தளத்திலேயே கட்டுக் கொல்லுப்
பட்டுள்ளனர். பொலிஸ் அதிகாரிகள், சுதந்திரக் கட்சி பிரமுகர் ਵ அமைச்சர்கள் முதற் கொண்டு தெருவில் செல்லும் சாதாரண மனிதன்
வரை அனைவருமே ஒவ்வொரு
நிமிடமும் உயிருக்கு அஞ்சவேண்டி புள்ளது. கடந்த ஒரு வருட காலமாக தினமும் பத்திரிகைகளில் குறைந்த பட்சம் ஒரு கொலையாவது இடம் பெறாமல் இருந்ததில்லை. இக் கொலைகள் அனேகமானவை பட்டப் பகலில் பொதுமக்களின் முன்னிலை யிலேயே நடக்கின்றன.
கொலைகள் கொள்ளைகள் எங்கே எப்போ தொடங்குகிறது எங்கே
நடைபெறும் என்று தெரிவதில்லை, ஊ செய்வோர் மூலம நாட்டு நடப்புக்கள் தாக உள்ளது. இ உயிருக்குக்கூடி உச் நிலை ஏற்பட்டு: கெல்லாம் யார் முன்னயின் சுதர் இவர் . விட்டன. வாய் மூ pg|TLEcÚlUCITETH பட்டமை இதற்காக காட்டாகும் அ அடையாள அட்னி பார் என்று அை இருந்து அனைத்து பறிக்கப்பட்டு தார் மட்டுமல்லாது உர் கொள்ளப்பட்டதன் அடையாளம் ET TIL பட்டுள்ளார் இது லாளர்களுக்கான
--
வன்முறைகள்! மசூதிகள், தேவாலய என வழிபாட்டுத்தல் பெற்று வருவது நேயம் குழி தோ பட்டுள்ளது என்ப காட்டுவதாகவுள்ெ தளங்களுக்குள் இ வகையான படுே போதும் நியாயப்ப கவோ முடியாததா
பட்டப்பகலில் முன்னால் கைதிகள் படுகிறார்கள். இவற் கோரப்போகிறார் செல்வது நீதி ெ
நாட்டில் நீதி மன்ற
பிரயாகினி ஆனி 2004 இதழ் 22

திணி
பெண்கள் கல்வி ஆய்வு நிறுவனம்
செய்தி மடல்
இதழ் 22
இப்போதெல்லாம் சுட்டுக்கொல்லப்ப்டுகிறதா? அநீதி
டகங்களில் வேன: ாகத்தான் மக்கள் ளை அறியக்கூடிய ன்று அவர்களின் ந்தரவாதம் இல்
காரணம்? பே ला । திரம் கொண்ட கள் கட்டப்பட்டு விட்டது النقاط பதுர்ஷன் தாக்கப் 7 சிறந்த எடுத்துக் வரிடம் இருந்த ட மற்றும் தன்னை டயாளம் காட்ட து உடைமைகளும் க்கப்பட்டார். அது மைகள் பறித்துக் பின்யர் என்பதை ட்டுமாறு கேட்கப் தான் ஊடகவிய சுதந்திரமா?
இன்று சாதாரணமாக பங்கள் கோவில்கள் 1ங்களில் கூட இடம் நாட்டில் மனித ண்டிப் புதைக்கப் ஐதயே எடுத்துக்
ாது. வழிபாட்டுத் =
டம் பெறும் இந்த = கொலைகள் ஒரு டுத்தவோ மன்னிக் கும்.
ཟ
நீதிமன்றத்துக்குட T கட்டுக்ெே றிற்கு யார் உரிமை கள்?-நீதிமன்றம் பறுவதற்காக, நம் த்துக்கு முன் நீதி
s
ܢܝܬܐ
1 ܨܠܐ
சுட்டுக் கொல்லப்படுகிறதா? வன் முறைகள் ஏட்டிக்குப் போட்டியாகவே நடைபெறுகின்றது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை குலேந்து நிம்மதியற்ற ஒரு வாழ்க்கை வாழ நேர்ந்துள்ளது.
3 இப் படிப்பட்ட வன்முறை
எவ்வாறு எம்மிடம் தன்ல தூக்கியது? மேல் நாட்டவரின் பண் பாட்டை
குறைவாக எடைபோட்டு எமது
பண்பாட்டை உயர்வாக நினைத்துக் கொண்டிருந்த எமது பண்பாட்டிற்கு என்ன நடந்தது? ஒரு நாட்டில் சட்டம், நீதி ஒழுங்குமுறை ஒழுங்சாக அமைந்தால் வன்முறை தலை தூக்குமா? இந்நிலையை முடிவுக்கு கொண்டுவர சகல தரப்பினரும் திறந்த மனதுடன் செயற்பட வேண்டும்.
) - r- ¬ ܒܸܕ ܝܣ - I -
# , , , , -
இந்த இதழில்
8 வன்முறை வன முறையை = வளர்க்கும்.
அதிகரித்து வரும் சிறுவர் نے 5 * B, כד
துஷ்பிரயோகம் - உமறை முக துன்புறுத்தல் அவறுமையின் கொடுரம்.
— Rio
வேலைக்காரி எழுத்தாளரான. குழந்தைகளின். * ஒரு வினோதக்.
காதலித்தால். கணவன் எதிரில்.
நூலகம்
எமது செய்திகள்
EEE வெளி IG

Page 2
அதிகரித்து வரும் சிறுவர் துஷ்பிரயோகம்
ಸ್ಕ್ರೆ
பின்ளைகளுக்கும். வயது வந்தவர்களுக்குமிடையிலுள்ள சமமற்ற பலமும் பொருளாதாரத் தொடர்புமே சிறுவர் துஷ்பிரயோகங்களுக்கு அடிப்படையாக அமைகின்றது. சிறுவர் துஷ்பிரயோகங்களுக்கு மூலகாரணங்களாக வறுமை, கல்வியறிவின்மை, போதைவஸ்துப் பாவனை, குடும்பப் பிரச்சனைகள் என்பன முக்கிய காரணிகளாக அமைகின்றன. இலங்கையின் இன்றைய பிரதான பிரச்சனையாக அமைவது குடும்பத்துக்குள் சிறுவர்கள் மீதான துன்புறுத் தல்கள், பாலியல் ரீதியான வன்முறைகள் மற்றும் பாட சாலைகளில் சிறுவர்கள் துன்புறுத்தப்படுதல். மிகவும் கவலைக்குரிய விடயம் என்ன வெனில் சிறுவர்கள் துஷ்பிர யோகிக்கப்படுவது அவர்கள் மிகவும் விரும்பி அன்பாகப் பழகும் அப்பா, அம்மா, மாமா, தாத்தா மற்றும் நெருங்கிப் பழகும் ஒருவரால் தான். தற்போது கல்வி கற்பிக்கும் ஆசிரியர்களே இதற்கு உடந்தையாக இருக்கிறார்கள். வேலியே பயிரை மேய்வதற்கு ஒப்பாக இந்நடவடிக்கைகள் அமைகின்றன. 327 சம்பவங்களில் :
18 பேர் - பிள்ளைகளின் தந்தைமார்களாலும்
2 பேர் - பாட்டன்களாலும் 4 பேர் - சொந்தச் சகோதரர்களாலும் 7 பேர்- சகோதரிகளின் கணவன்மார்களாலும் 15 பேர் - மாமன்மார்களினாலும் (கூடுதலாக இது தாயின் சகோதரர் அல்லது தந்தையின் சகோதரி கணவன்)
அண்மைய காலங்களில் சிறுவர்கள், பாடசாலை மாணவிகள் மீது நடந்த பல வகையான துன்புறுத்தல்களை தொடர்பு சாதனங்களுடாகக் கண்டும், கேட்டும் அறியக் கூடியதாக இருக்கின்றன. சிறுவர்கள் உள்நாட்டவர்கள் மட்டு மல்லாது வெளிநாட்டவர்களாலும் சுரண்டப்படுகிறார்கள்.
சுற்றுலாத் தொகுதிகளில் அந்நியர்களால் சிறுவர்கள் துஷ்பிரயோகிக்கப்படுவது இன்றைய பெரும் பிரச்சனை களில் ஒன்றாகியுள்ளது. இத்தொகுதியில் வாழும் ஒரு பெண்ணுக்கு தனது 10 வயது மகன் வெளி நாட்டவர் ஒருவருடன் சென்று கொண்டு வரும் 100 ரூபாவே பெரிய விடயமாக இருக்கும். தனது பிள்ளைகளை விபச்சாரத்தில் ஈடுபடுத்துவதற்கு மறைமுகமாகப் பெற்றோரும் ஒத்துழைக் கிறார்கள். தனது பிள்ளை அவருடன் செல்வதன் விளை வாக பாலியல் ரீதியாகக் கடத்தப்படும் எச்.ஐ.வி எயிட்ஸ் தொற்றையும் பெறுகிறான் என்பதை அவள் அறியாள். இதனால் பிள்ளைகளின் சுகாதாரம் பாதிக்கப்படுகின்றது. அண்மையில் இலங்கையில் முதன்முதலாக மேற் கொள்ளப்பட்ட விஞ்ஞான ஆய்வின் சாராம்சம் யாதெனில் தினமும் 100 இளம் சிறார்கள் பாலியல் துஷ்பிரயோகத்திற் காளாகிறார்கள் என்பதாகும். 10000-15000 ஆண் பிள்ளைகள் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்டதுடன் கடற்கரை யோர பிரதேசங்களில் மட்டுமன்றி, மலையகத்திலும் அதனை அண்டிய சுற்றுலாத் தளங்களிலும் இத்தொழில்
 

கொடிகட்டிப் பறக்கின்றது. பெரும்பாலான இச்சிறார்கள் மீனவ மற்றும் கரையோரம் வாழ் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள். 1/3 பகுதி யினர் வேலை பெற்றுத் தருவதாகக் கூறி ஏமாற்றப்பட்டுக் கடத்தப்பட்டவர்கள். ஆனமடுவ விலும், தென்மராட்சியிலும் சிறுவர்களைப் பயன்படுத்தி திருட்டுச் செயல்களில் ஈடுபடச் செய்கின்றனர் என்று அண்மைய கால பத்திரிகை வாயிலாக நாம் அறியக்கூடிய தாக இருந்தது. கடந்த இருவருடங்களில் சிறுவர்களுக் கெதிரான துஷ்பிரயோகங்களும், துன்புறுத்தல்களும் இரு மடங்காக அதிகரித்துள்ளன என சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை தெரிவித்துள்ளது.
மூலம் - தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார van 23 ஆம் ஆண்டு
துஷ்பிரயோகத்தின் வடிவம் 2000 2001 2002 2003
தண்டனை 9 作 16 8 மன உளைச்சல் 31 2 20 8 கடத்தல்கள் 10. 7 10 27 சிறுவர்கள் வேலைக்கமர்த்தப்படல் 38 71 46 2 ஒதுக்கப்படுதல் 9 10 2 62 உடல் ரீதியான துன்புறுத்தல் 作,46 88 51 பாலியல் துன்புறுத்தல்கள் 76 108 194 205 மொத்தம் 184 276 386 393
வயது பாலியல்துன்புறுத்தல்கள்
O-1 «
1-3 3
3-6 5
6-10 35
10-14 75
14-16 49
16-18 38
மொத்தம் 205
புரட்சிக் கலைஞர் கே. சுப்பிரமணியம்
‘தமிழ்ப் படங்களின் தந்தை' என்று போற்றப்பட்ட கே. சுப்பிரமணியம் தயாரிப்பாளராகவும் இயக்குனரா கவும் இயங்கியவர். காதல் காட்சிகளே இல்லாமல் அந்த நாளில் 'பக்த குசேலா எடுத்து, அதை வெற்றிப்படமாக் கியவர். 20 வயது சுப்புலட்சுமி 27 குழந்தைகளுக்கு தாயாக அதில் நடித்தார். இன்று 30 வயது நடிகை 3வயது குழந்தைக்குத் தாயாக நடிக்கத் தயங்குகிறார். பிராமண ராகப் பிறந்த சுப்பிரமணியம் பிராமண ஆசாரங்களுக்கு எதிராகவும், பூனூலைக் கதாநாயகன் அறுத்தெறிவதா கவும் “சேவா சதனம்’ படத்தில் காட்டிய புரட்சிக் கலைஞர். அவர் தயாரித்து இயக்கிய "தியாக பூமி’யில், சம்பு சாஸ்திரி சேரி மக்களுடன் சேர்ந்து வாழ்வதாகவும், பாலியல் தவறிழைத்த கணவனிடம் விவாகரத்து வேண்டி நீதிமன்றம் ஏறிய சாவித்திரி, தன் கணவனுக்குத் தேவைப் பட்டால், ஜீவனாம்சம் தருவதற்குத் தான் தயார் என்று கூறுவதாகவும் படத்தில் காட்சிகளை அமைத்தார். அதனால் பிராமண சமூகம் அவரை ஜாதிப் பிரஷ்டம் செய்தது. படத்தின் நாயகி சாவித்திரி சுதந்திரப் போரில் ஈடுபட்டதால், பிரிட்டிஷ் அரசு தடை உத்தரவு பிறப்பித்தது. தடை ஆணை திரையரங்குகளுக்கு வரு வதற்கு முன்பே சுப்பிரமணியம் ஒரு நாள் முழுவதும் i மக்களுக்கு இலவசமாகப் படத்தைக் காட்டினார். அப்படி அன்று சாதி எதிர்ப்பையும், அரசின் தடையையும் மீறி மக்களுக்கு நல்ல படம் தந்தார் சுப்பிரமணியம்.
நன்றி ஆனந்தவிகடன்
பிரவாகினி ஆனி 2005 இதழ் 22

Page 3
மறைமுகத் துன்புறுத்தல்
பெண்கள் வேலைக்குப் போவது இன்று சாதாரணமாகி விட்டது. வீட்டு வேலைகளில் இருந்து வெளி வேலை வரை பெண்கள் வேலை பார்க்கிறார்கள். சில பெண்கள் குடும்ப கஷ்டத்தைப் போக்குவதற்காக வேலைக்குச் செல் கிறார்கள். அநேகமான சந்தர்ப்பங்களில் ஆண் மந்தைக் கூட்டங்களுக்கு மேய்ச்சல் நிலமாகப் பெண்கள் உள்ளனர். அதைவிடக் கொடுமை இவர்களின் சேட்டைகளை வெளியே சொல்லமுடியாது தங்கள் மனதுக்குள் வைத்து வெந்து வேதனைப்படுகிறார்கள். இந்தச் சேட்டைகளைப் பொறுமையோடு பொறுத்துக்கொள்ள வேண்டிய காலத்தின் கட்டாயமாக இருப்பது தெரியவந்துள்ளது.
40 சதவீத பெண்கள் ஆண்களே இப்படித்தான் என விட்டுவிடுகிறார்கள். 35 சதவீதமான பெண்கள் பெரிய அதிகாரிகளிடம் புகார் செய்கிறார்கள். 7.8 சதவீதமான பெண்கள் தங்களுடன் வேலை பார்ப்பவர்களிடம் சொல்லி வேதனைப்படுகிறார்கள். 10 சதவீதமான பெண்கள் “இந்த வேலை எல்லாம் என்னிடம் விட வேண்டாம்” என எதிர்ப்பு தெரிவிக்கின்றார்கள் 9 சதவீதமான பெண்கள் “கை காலை முறித்து விடுவேன் ஜாக்கிரதை' எனப் பாய்கின்றனர். 1 சதவீதமான பெண்கள்தான் காவல்துறையினரிடம் முறைப் பாடு செய்கிறார்கள்.
தொடுகையால் மட்டும் பாலியல் இம்சை ஏற்படுத்த முடியும் என்பது அல்ல. சொற்களால் கூட ஒருவரை பாலியல் இம்சைக்கு உள்ளாக்கலாம். அதாவது ஒரு பெண் ணுக்குப் பிடிக்காத சொற்களைப் பாவிப்பதன் மூலமாகவும் ஒரு பெண்ணை பாலியல் இம்சைக்கு உள்ளாக்கலாம் என்று திருமதி சாவித்ரீ விஜேசேகர தனது பேட்டி ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.
காரியாலயங்களில், பொது இடங்களில், அதிகாரிகளின் அறைகளில் தகுதியற்ற ஒவியங்கள், படங்கள் அதாவது அரைநிர்வாணமான படங்கள் தொங்கவிடப்பட்டிருப்பதும் ஒருவித பாலியல் துஷ்பிரயோகம் ஆகும்.
பெண் உத்தியோகத்தர் ஒருவர் அவ்அறைக்கு அடிக்கடி செல்ல வேண்டி ஏற்படும் சந்தர்ப்பங்களில் ஒரு அசெளகரிய நிலைக்குத் தள்ளப்படுகிறாள்.
காரியாலயங்களில் இடம்பெறும் பாலியல் துஷ்பிர யோகங்கள் சிக்கல் மிக்கவையாக அமைகின்றன. அனேக மான இடங்களில் மேலதிகாரிகளாலேயே இவ்வாறான செயல்கள் மேற்கொள்ளப்படுகின்றன. சம அந்தஸ்தில் அல்லது அதற்கு மேல் அந்தஸ்தில் இருப்பவர்களிடம் இவ்வாறான செயல்கள் இடம்பெறுவதில்லை. மாறாக கீழ் நிலையில் உள்ள சேவையாளர்களிடமே இது நடை பெறுகிறது. தம் தொழில் மீதுள்ள பயத்தினாலும், தான் இதை வெளியில் சொல்வதால் அதை நம்புவார்களோ என்ற பீதியால் பெண்கள் இவற்றை வெளியில் சொல்லாமல் தமக்குள்ளேயே போட்டு புழுங்கிக் கொண்டு இருக்கிறார்கள்.
பிரவாகினி ஆனி 2006 இதழ் 22

என்னதான் செய்வது..?
இன்று பெண்கள் தனியாகப் பிரயாணம் செய்வது ஒன்றும் புதிதல்ல. திருமணத்திற்காக நாடு விட்டு நாடு போதலும், வேலைக்காக இடம் விட்டு இடம் போதலும் நகள்ப்புறமாயினும், கிராமப்புறமாயினும் நடந்துகொண்டே தான் இருக்கின்றது. நீண்டதோ குறுகியதோ பெண்களின் பஸ் பிரயாணம் என்றைக்கும் இலகுவானதல்ல. அவர்கள் எதிர்நோக்கும் அசெளகரியங்களை வார்த்தைகளால் வடிக்க (փlգեւITՑl.
ஒரு பெண் பேருந்தில் பயணம் செய்யும்போது பக்கத்தில் இருப்பவர் ஆணாக இருந்தால் அந்தப் பெண் அமர்வதற்கு போதிய இடம் கொடுக்கமாட்டார் மாறாக இரட்டைப் பிறவி போல் எந்நேரமும் ஒட்டிக் கொண்டே கேள்வி அம்புகளைத் தொடுத்துக் கொண்டேயிருப்பார். துணிகரமான, புத்தி சாதுரியம் உள்ள பெண்ணாயின் சாதுரியமாகப் பிரச்சினைக்கு முகம் கொடுப்பாள். இல்லையேல் மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் தத்தளிக்க வேண்டி நேரிடும். இதனால் அவளது பயணமே நரகமாக மாறி வேலையைக் கூட இடைநிறுத்த வேண்டி ஏற்படும்.
அதுமட்டுமா அளவுக்கு அதிகமான பயணிகளை வண்டியினுள் ஏற்றுவார்கள். உள்ளே நிற்பவர்கள் சுவாசிக் கவோ, கால் ஊன்றி நிற்கவோ முடியாமல் தத்தளிக்கும் வேளையில், சாரதிகள் வாகனங்களை போட்டிக்கும், வேகமாகவும் ஒட்டிச் செல்வதும், சடுதியாக வாகனத்தை நிறுத்துவதும் அவர்களது வழக்கமாக உள்ளது. இவ்வாறான சந்தர்ப்பத்தில் பெண்களும், குழந்தைகளும், முதியோருமே பாதிக்கப்படுகின்றனர். இறங்கும் போதாவது சற்றுத் தாமதித்துச் செல்வார்களா? அதுவும் முடியாத காரியம். வண்டியினுள் நிற்க முடியாது தத்தளிக்கும் வேளையில் பெண்கள்மீது சாய்வதும், தீய எண்ணங்களோடு உற்று நோக்குவதும், தொடுவதும், பாலியல் தொனியிலான வார்த்தைகளைப் பிரயோகித்து அசெளகரியங்களுக்கு உள்ளாக்குகின்றனர். இது ஒரு மனித உரிமை மீறல் என்பதை அவர்கள் சிந்திக்க மறுக்கின்றனர்.
பாலியல் தொல்லைக்குச் சமமான இக்குற்றத்திற்கு 5 வருடங்களிற்கு மேற்படாத மறியல் தண்டனை தமக்கு காத்திருப்பதை இவர்கள் சிந்திக்கத் தவறுகின்றனர். இது மட்டுமா அவர்களது உடமைகளையும் தமதாக்க முயற்சிக் கின்றனர். இவ்வாறான பிரச்சனைகளைச் பந்திக்க நேருகின் றமையால் பெண்கள் தம் உடன் பிறப்புக்களோடு செல் கின்றனர். ஆனால் இன்றைய சமூகமோ தவறான கண் ணோட்டத்தில் பார்க்கிறது. இந்நிலையில் இச்சமூகத்தில் பெண்கள் என்னதான் செய்யமுடியும்.?

Page 4
வறுமையின் கொடூரம் ஐயாயி
இந்திர மாநிலத்தில் "லம்பாடி' மலைவாழ் மக்கள் வாழ்கிறார்கள். கடந்த 3 வருட காலமாக பருவ மழை பொய்த்ததால் விவசாயத்தை நம்பியிருக்கும் இவர்களது வாழ்க்கை வறுமையால் சீரழிகிறது. குடும்பத்தைக் காப்பாற்ற கடன் வாங்கிய இவர்கள் கடனை அடைக்க முடியாமல் தற்கொலை செய்து கொள்கிறார்கள்.
இப்பிரதேச மக்கள் இவர்களுக்கு வேலை கொடுக்கவும் முன்வருவதில்லை. இவர்களின் பரிதாப நிலையைக் கண்டு கொண்ட விபச்சார முகவர்கள் இதனைத் தமக்கு சாதக மாக்கிக் கொண்டு இருக்கிறார்கள்.
லம்பாடி இனத்தில் உள்ள அழகான இளம் பெண் களை வேலை வாங்கித் தருவதாகக் கூறி, ஏமாற்றி
பால்ய விவாகத்திற்கு எதிரான நடவழக்கைகள்
Uத்து, பன்னிரெண்டு வயதுகளையுடைய சிறுவர். சிறுமியர்களிடையே இடம்பெறும் பால்யத் திருமணங்கள் பல காலந்தொட்டே இந்தியாவில் இடம் பெற்று வருவதை நாங்கள் அவதானிக்கின்றோம். 45.6 வயது சிறுவர் சிறுமி யர்களிடையேயும் கூட இவ்வாறான திருமணங்கள் நடாத்தப்படுகின்றன. பால்யத் திருமணங்களினூடாக திருமணச் சடங்குகள் மாத்திரமே செய்து வைக்கப்பட்டு, அதன் பின்னர் உரிய வயதுகளை அவர்கள் அடைந்ததன் பின்னர் கணவன் மனைவி என்ற ரீதியில் இணைத்து வைக்கப்படுகின்றனர்.
இவ்வாறான பால்யத் திருமணங்கள் சட்ட ரீதியிலான திருமணங்கள் அல்ல. குறிப்பாக இதன் பின்னணியானது பெரும் துக்ககரமானது.
சிறு பிராயத்திலேயே தனது கணவன் என்று ஆகி விட்ட சிறுவன் இறந்துவிட்டால், இந்தியாவில் சில சம்பிரதாயங்களின் அடிப்படையில் தேவதாசியாகவோ அல்லது கணவனது சிதையிலே உடன்கட்டை ஏற வேண்டியநிலை அச்சிறுமிக்கு நேருகின்றது.
1978ல் இந்திய அரசால் புதியதொரு சட்டம் கொண்டு வரப்பட்டு பால்யத் திருமணச் சடங்குகளைத் தடை செய்த துடன் ஒரு பெண் திருமணம் செய்து கொள்ள வேண்டு மானால் அப்பெண் 18 வயதைப் பூர்த்தி செய்திருக்க வேண்டும் என்றும் ஓர் ஆண் திருமணம் செய்துகொள்ள வேண்டுமானால் 21 வயதைப் பூர்த்தி செய்திருக்க வேண்டும் என்றும் அச்சட்டம் அமுல் படுத்தப்பட்டது. இந்தியாவில் ராஜஸ்தான் மாநிலத்தில் 1993 ஆம் வருடம் மேற்கொள்ளப் பட்ட ஒர் ஆய்வின் படி அங்குள்ள முழு சனத்தொகையில் 56 சதவீதத்தினர் 15 வயது பூர்த்தியாவதற்கு முன்னதாக திருமணம் செய்து கொண்டுள்ளதாகத் தெரிய வந்துள்ளது. இதில் 3 சதவீதத்தினர் 5 வயது பூர்த்தியாவதற்கு முன்ப தாகவும், 14 சதவீதத்தினர் 10 வயது பூர்த்தியாவதற்கு முன்ப தாகவும் திருமணம் செய்து கொண்டுள்ளனர்.
இதே நேரம் பிறக்கின்ற அனைத்து 1000 குழந்தைகளில் 73 குழந்தைகள் சிறுபிராயத்திலேயே இறந்து விடுவதாகவும், இதில் 103 குழந்தைகள் 5 வயது பூர்த்தியாவதற்கும் முன்ப தாகவே இறந்து விடுவதாகவும் தெரியவந்துள்ளது.
இவ்வாறான சம்பவங்களைக் கேட்டும், கண்டும் பழக்கப்பட்ட யுவதிகளும் வெறுப்படைந்த யுவதிகளுமாக சுமார் 200 பேர் ஒன்றிணைந்து 18 வயது பூர்த்தியாகும் வரை தாங்கள் திருமணம் செய்து கொள்வதில்லை என சத்தியம் செய்து வாக்குறுதி வழங்கியுள்ளனர்.

ரம் இளம் பெண்கள் பலி!!!.
விபச்சார விடுதிகளுக்கு விற்றுவிட்டனர். வறுமையைப் போக்க படு குழியில் வீழ்ந்தனர். இவ்வருமானத்தின் மூலம் குடும்பத்தில் உள்ளவர்களுக்கு கால்வயிறு, அரைவயிறு உணவுக்கு வழி வகை செய்தனர். இத்தொகுதியில், ஒரளவு வருமானம் வருவதைக் கண்ட மற்றக் குடும்பத்தினரும் தங்கள் வீட்டுப் பெண்களைத் தாங்களாகவே முன்வந்து விபச்சாரத்துக்கு அனுப்பியுள்ளனர்.
லம்பாடி மக்களில் 350 குடும்பங்களைச் சார்ந்த 9 ஆயிரம் பெண்கள் விபச்சாரத் தொழிலில் ஈடு பட்டுள்ளனர். இவர்களில் 5000 பேர் எய்ட்ஸ் நோய்க்கு பலியாகிவிட்டனர்.
(வீரகேசரி 7.08.05)
7ேங்கும் ஏழைகளுக்கு ஒன்றுமில்லை. கூலி வேலை செய்பவர்களுக்கு கூலி மாத்திரம்தான். அதைவிட மிக அதீதமாக, எங்கும் விரயங்களுக்கு ஓய்வில்லை. இதெல்லாம் கலாச்சாரக் கோளாறு அதனால். எல்லாக் கலாச்சாரங்களும் அழிந்து போகட்டும். அழித்தலில் ஆக்கம் உள்ளது, ஆக எல்லாம் அழிந்து போகட்டும், அன்பையும், பண்பையும், பாசத்தையும் தவிர. வரதட்சணையும், தீண்டாமையும் கலாச்சாரத்தின் குறிப்பாக இருந்தால், தமிழ்க் கலாச்சாரமும் முழுதாக அழிந்துவிடட்டும். அந்த அநீதிகளும் ஒழிந்துவிடும். கோடானுகோடி மனிதர்களின் கற்பனைத்திறனின் சாட்சியாக விளங்கும் தமிழ்மொழியும் செவ்வியல் வடிவமாகிவிடும். பாட்டாளிகளின் உதடுகளிலிருந்து அது மறைந்துவிடும். மழலைகளின் மொழிகளில் உயிரிழந்துவிடும். அப்போது தமிழகமே ஆங்கில நாடக அரங்கமாகிவிடும். எல்லாமே அமெரிக்கா! எல்லாமே கணனி எல்லாமே நகாசு! அப்போது பாடப்படும் மேல்கலையின் மொட்டாக தமிழ் சொற்கள் ஒதப்படும். ତୃଢ଼ତୃଢ଼ଢ଼ତୃଢ଼ଢ଼ଢ଼st'] – uଔld – ଔld. டும் - டும் - டும் - டும் - டும் - டும்.
i
S
- நன்றி அரவிந் அப்பாதுை
(சலம்பகம்-1)
2.
ZクKR-、*ss
تصميم
yyeyyyyyyeeyy
பிரவாகினி ஆனி 2005 இதழ் 22

Page 5
புரட்சி
திம்பதுகளில்; உலகம் முழுவதும் வெளியான அத்தனை செய்தித்தாள் களையும் ஆக்கிரமித்தவர். அமெரிக் T, Tash GT ="|5 5 081 Lg7 - GTL || களுக்கும் அடியில் ஒட்டிக்கிடக்கும் அழுக்கையும் தோலுரித்துக் காட்டி அமெரிக்க கறுப்பர் இனத்தாருக் கான உரிமைகளைப் பெற்றுத் தந்த
Het git LULF. LDPEGIDF, CGITEIT Utrici). சராசரி மத்தியதரக் குடும்பம் ஒன்றில் 19-03ம் ஆண்டு பிப்ரவரி 4ம் தேதி, அமெரிக்காவின் அலபாமா மாகாணத்தில் பிறந்தார். இயற்பெயர் ரோசா லூயி மெக்காலே தந்தை தச்சா. அம்மா உச்சர். 1932 ம் ஆண்டு ரெமன்ட் பார்க்ஸ் என்பவரை மணந்து ரோசா மெக்காலே ரோசா பார்க்ஸ் ஆனார்.
ரோசா 1955 ம் ஆண்டு கைதான போதுதான், உலகுக்கே தெரிய வந்தார் அமெரிக்காவில் நிறவெறி கொடிகட்டிட் பறந்து கொண்டு இருந்தகாலம் அது கறுப்பர்கள் என்றால் அத்தனைக் கேவலம் பேருந்து ஓட்டல் எதை எடுத்தாலும் அவர்களுக்கென்று வேறாக ஒதுக் கப்பட்டிருக்கும். ரேஷனுக்கு தனி க்யூ சினிமாவுக்கு தனி தியேட்டர் அப்படிப்பட்ட காலகட்டத்தில் ஒருநாள். ரோசா வழக்கம் போல் மாநகரப் பேருந்து ஒன்றில் ஏறி, தான் பணியாற்றும் சூப்பர் மார்க்கெட்டுக்குப் போய்க் கொண்டு இருந்தார். பயனத்தின் போது அவருக்கு ஒரு பிரச்சனை ஏற்பட்டது. தென்னாபிரிக்க ரயிலில் காந்தி சந்தித்த அதே பிரச்சனை.
ரோசாஃப எழுந்திரு என்றார் ஒரு வெள்ளைக்காரர் ரோசா எழுந்திருக்கவில்லை. "ஏன் எழுந்திருக்க வேண்டும்? காசு கொடுத்து டிக்கெட் வாங்கியிருக்கிறேன்" என்றார்.
ஆனால், அந்த வெள்ளைக்காரர் விடுவதாக இல்லை. கறுப்பு இனப் பெண்வெள்ளை இன ஒருவருக்கு மதிப்பு கொடுக்காமல் இருந்தமையை ஒருவர் போலீசாரிடம் முறையிட போலீஸ் ரோசவை கைது செய்தது. போலீஸ் அவரை அன்றேய பொழுதுக்கு லாக் கப்பல் வைத்துவிட்டு, மறுநாள் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர். நான்கு நாள் கழித்துத் தீர்ப்பு ரோசா பார்க்ஸ் பேருந்தில் நடந்து கொண்டவிதம் தவறுதான் பதினாலு டொலர் அபராதம் கட்டியாக வேண்டும். விஷயம் உடனே அபோமா முழுவதும் காட்டுத்தி போல் பரவிவிட்டது. பெரும்பாலும் கறுப்பர்கள் நிறைந்த அந்தப் பகுதியில், ரோசா விவகாரம் மிகப் பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்த பல்லோயிரக் கனக் கான கறுப்பர்கள் உடனே ஓர் இளைஞரின் தலைமையில் அணி திரண்டார்கள். தங்களுக்கு நீதி கிடைக்கும் வரை மாநகரப் பேருந்தில் ஏறுவதில்லை என்று அவர்கள்முடிவு செய்தார்கள்.
ஏறாவிட்டால் போகட்டுமே, யாருக்கென்ன நஷ்டம்? என்று தோன்றலாம். ஆனால், அமெரிக்காவில் பெரும்
பிரவாகினி ஆவரி 2005 இதழ் 22
 
 

8]]ाका
பான்மை மக்கள் ஆளுக்கொரு கார் வைத்திருப்பார்கள். கார் வாங்க வசதி இல்லாதவர்கள் கறுப்பா இனத்தவர்கள் தாம் பெரும்பாலும் தினக் கடலிகள் பணிக்குச் செல்ல, அவர்கள் மாநகரப் பேருந்துகளை மட்டுமே நம்பியிருந் தாள்கள். அதே போல், மாநகரப் பேருந்துப் பயணத்தைப் புறக்கணித்ததும், அலபாமா மாகாணமே ஸ்தம்பித்தது. இந்தப் புறக்கணிப்புப் போராட்டம் மொத்தம் 331 நாள்கள் நடந்தது?
பஸ்ஸில் ஏறக் கறுப்பர்கள் மறுத்து விட்டதால், அவர் கள் தத்தம் பணிகளுக்குப் போகவில்லை. அதனால், மாநிலம் முழுவதும் எந்த அடிப்படைப் பணியும் நடைபெறவில்லை. உற்பத்தி சுத்தமாக பாதிக்கப்பட்டது. அரசும் தனியார் துறை களும் பலத்த நஷ்டத்தை சந்தித்தன. இப்படி ஒரு நூதன் போராட்டத்தை ரோசாவுடன் ஆலோசித்து நடத்திய அந்த இளைஞர்தான். கறுப்பர் இனத்தின் மாபெரும் தலைவர் என்று பின்னாளில் வாணிக்கப்பட்ட மார்ட்டின் லூதர் கிங்
இதற்கிடையில் ரோசா பார்க்ஸ் தன் வழக்கை விடாமல் நடத்திக் கொண்டிருந்தார். மாநில நீதிமன்றங்கள், கறுப்பர் விரோதசத் தீர்ப்புகளை மட்டுமே தொடர்ந்து வழங்கிக் கொண்டிருக்க, ரோசா சவிக்காமல் தன் வழக்கை சுட்ரீம் கோட்டுக்கு எடுத்துச் சென்றார். ஆயிரக் கணக்கான மிரட்டல்கள் நூற்றுக்கணக்கான தாக்குதல் முயற்சிகள் என வாழ்க்கையே சின்னா பின்னமாக்கப்பட்ட போதிலும், அவர் மனம் தளரவே இல்லை.
-r, fuւյTLDIT LL #; a crflai ஒத்துழைப் பேயும் சொல்வ வேண்டும். 1956ம் வருடம், நவம்பர் 13ம் தேதியன்று. அமெரிக்க உச்ச நீதிமன்றம் "ரோசாவுக்கு இழைக்கப்பட்டது அநீதிதான் என்று தீர்ப்பு வழங்கும் வரை அவர்களும் தங்கள் பஸ் புறக்கணிப்புப் போராட்டத்தை நிறுத்தவே இல்லை.
தனக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளை எல்லாம் ரோசா பார்க்ஸ் பொறுமையுடன் சகித்துக் கொண்டு விடாமல் போராடியதன் விளைவாகத்தான். அமெரிக்காவில் கறுப்பாகளுக்கு இழைக்கப்படும் அநீதி வெளியுலகுக்குத் தெரிய வந்தது. கறுப்பர்கள் மிச்சமிருக்கும் கொஞ்ச நஞ்ச மானத் தேயாவது காப்பாற்றிக் கொள்ளும் விதத்தில் அங்கே சிவில் உரிமைச் சட்டங்கள் இயற்றப்பட்டன
பிறகாவது வழங்கப்பட்டது. எனவேதான்; சிவில் உரிமை களின் "தாய்' என்று அழைக்கப்படுகிறார் ரோசா பார்க்ஸ்
கடந்த அக்டோபர் மாதம் 25ம் தேதி திங்கட்கிழமை யன்று டெடராய்ட் நகரில், தனது 42வது வயதில் ரோசா பார்க்ஸ் காலமானபோது ஒட்டுமொத்த அமெரிக்கக் கறுப்பர் இனத்தவரும் சொன்ன ஒரே வார்த்தை "அன்றைக்கு அவள் எழுந்திருக்க மறுத்ததால்தான், இன்றைக்கு நாங்கள் எழுந்து நிற்கவும் தலை நிமிர்ந்து நடக்கவும் முடிகிறது."
நன்றி ஆனந்தவிகடன்

Page 6
ஒரு வேலைக்காரி எழுத்தாளரான கதை
இருபது வருஷத்துக்கு மேல் பள்ளிக்கூடத்தில் பாடம் எழுதியது. அதற்குப் பின் பேனாவை தொட வில்லை அவள் . ஆனாலும் ஒரு வைராக்கியம் எழுதத் தொடங்கினால் காட்டாறு பிரவாகம் ஒடுவது போல வார்த்தைகள் வந்து விழுந்தது.
"பேபி ஹல்தார்’ டெல்லியை ஒட்டிய குர்கான் நகரிலுள்ள ஒய்வு பெற்ற பேராசிரியர் பிரபாத் குமாரின் வீட்டில் வேலைக்காரியாக இருந்தவள். அன்று ஒரு நாள் அவள் படித்துக் கொண்டிருந்த புத்தகமும் அவளின் கண்களில் இருந்த கண்ணீரும் பிரபாத் குமாரை வினவ வைத்தது. அவள் தான் சிறுவயதில் தாய் இறந்த பின் சித்தியிடம் அனுபவித்த சித்திரவதை, 12 வயதில் நடந்து முடிந்த கட்டாயத் திருமணம், அதன் பின் குடிகாரக் கணவனிடம் அனுபவித்த சித்திரவதை போன்றவை அனைத்தையும் பிரபாத் குமாரிடம் சொன்னாள். அவளின் அழுகை நிற்பதற்கு முன் ஒரு நோட்டும், பேனாவும் அவளிடம் கொடுத்து சொன்னதை அப்படியே எழுதச்
சொன்னர் அவளும் எழுதினாள்.
ཚོ་ 3.
జ్ఞాః နိ္ဒန္တီး
இவள் வங்க மொழியில் எழுதியதை பிரபாத் குமார் இந்தியில் மொழிபெயர்த்தார். தன் இலக்கிய நண்பர்களிடம் அதை அவர் காட்டபடித்தவர்கள் நெகிழ்ந்து போனார்கள். ஆனால், அதைப் புத்தகமாக வெளியிட யாரும் முன்வர வில்லை. 'ஒரு வேலைக்காரி எழுதினால் யார் சார் படிப்பா? என்று கிண்டல் செய்தனர். கடைசியாக கொல்கத்தா பதிப்பாளர் ஒருவர் இதை வெளியிட முன்வந்தார். ஆலோ ஆந்தாரி' (வெளிச்சமும் இருட்டும்) வெளியானது. 'பள்ளிப் படிப்பைக்கூட முடிக்காத ஒரு வேலைக்காரி எழுதியதா? என ஆச்சரியப்பட்டு எல்லோரும் அதை வாங்க 2 மாதங்களில் மறுபதிப்பு வெளியிட வேண்டியதாயிற்று இந்த நாவல் வெளியான ஒரு வருடத்தில் தன் வாழ்க்கை எப்படி மாறிப்போனது என்பது பற்றி அடுத்த படைப்பை எழுத ஆரம்பித்து விட்டாள்.
முன்பெல்லாம் என் குழந்தைகள் என்னை அவர்களது நண்பர்களிடம் அறிமுகப்படுத்தி வைக்க கூச்சப்பட்டார்கள். இப்போது ‘எங்கம்மா எழுத்தாளர் என்று அறிமுகம் செய்து வைக்கிறார்கள். எனக்குப் புதுசாக ஒரு முகம் கிடைத்ததில் சந்தோஷம். எனக்கு வாழ்க்கை மீது முதல் முறையாக நம்பிக்கை வந்திருக்கிறது. நான் அனுபவித்த கஷ்டங்கள் என் குழந்தைகள் அனுபவிக்கத் தேவையில்லை என்கிறார் பேபி ஹல்தார்.
- நன்றி அவள்
 

குழந்தைகளின் முன்மாதிரி
நாம் பிறரை மறந்தும் பல சமயங்களில் மிதித்தும் கூட முன்னேற நாம் வெறிகொள்கிறோம். குறுக்கு வழி களும் தேடுகிறோம். இதில் வரும் பிஞ்சுக் குழந்தைகளின் கலங்கமற்ற மனப்பான்மையைப் பாருங்கள். சொல்லாமலே அறிவுரைகளை செய்கைகளிலே சொல்லிக் காட்டுகிறார்கள்.
ஹைதிராபாத்தில் உள்ள நேஷனல் இன்ஸ்டிடியூட் 9|...tu Qup65TL6) GigiD605 (National Institute of Mental Health) என்ற மனநிலை மருத்துவ மையம் நடத்திய விளையாட்டுப் போட்டியில் நடந்த சம்பவம் பற்றியதே இது. இந்தப் போட்டியில் பங்கு பற்றிய சிறாக்கள் அத்தனையும் வளர்ச்சியில் பின்தங்கிய குழந்தைகள்.
ஒரு பந்தய மைதானம், எட்டுக் குழந்தைகள் ஒட்டப் பந்தயத்திற்கு ஆயத்தமாய் அணிவகுத்து நின்றனர். ஒன்யுவர் மார்க் கெட் செட் ரெடி கோ' (On you mark get Setreadygo) என்றதும் டுமீல் என துப்பாக்கி ஒலித்தது.
எட்டுக் ந்தைகளும் ஓட ஆரம்பித்தார்கள்.
f 3 ఖః $ 舒 மூசசரைககு வகத்தில் புவில்லை. சிறு பாதங்கள்
அவர்கள்ை மெல்ல்த்தான் தூ தடுக்கி விழுந்து விட்டிது சிரா அழ ஆரம்பித்தது:அ குழந்தைகளும் நின்று குழந்தைகளும் ஓடிய ವಿ: .
ஒரு குழந்தை
மெல்ல் குனிந்து கர் Dicosidoo MSMSssS S qy SAAAS SASA qAqAS eAeAe ese MMS A A A இப்போவுல் குறைஞ்சிருக்குடி என்று செல்லமாகச் சின்னக் குரலல: கேட்டாள். குட்டிக் கைகளும், பிஞ்சு புஜங்களும் குழந்தை
ய்ைஎழுபி நிறுத்தின"ஓடி முடியாத D தக் குழநிதையின் ᎧᏈᎠ Ꭶ5 8Ꮠ ᎧᏛ0 ᎧII
*。
இருபுறமும் இருகுழந்தைகள் பற்றிக் குழந்தைகளும் சங்கிலி போல ஒருவரோடு ஒருவர் கைகோர்த்துக் கொண்டு இணைய அனைத்துக் குழந்தை களும் மெல்ல மெல்ல நடந்து, ஒட்டப் பந்தயப் பாதையைக் கடந்தனர். வெற்றிக் கம்பத்தை அவர்கள் ஒருசேர அடைந்த கணத்தில், பார்வையாளர்கள் எழுப்பிய கரவொலி, கடவுளின்
காள்ள, மற்ற
காதுகள் வரை எட்டி அவர் கண்களும் துளிர்த்திருக்கும்.
இச்சம்பவம் அன்றைய பந்தயத்தை நேரில் கண்ட அனைவருமே இன்னமும் அதுகுறித்து கண் கலங்கப் பேசி வியக்கிறார்கள். ஈமெயில் மூலம் அறிவித்து பகிர்கிறார்களாம். காரணம் என்ன.?
“வாழ்க்கையில் வெற்றி பெறுவது முக்கியம்தான். ஆனால் மற்றொருவர் வெற்றி பெறுவதற்கு உதவுவதற்கு, நம் முன்னேற்றத்தின் வேகத்தைக் குறைத்துக் கொள்வது அதைவிட முக்கியமானதுமல்லாது அர்த்தமுள்ளதும் கூட” என்ற பேருண்மையைக் காட்டியது அந்தப் பிஞ்சு உள்ளங்களின் களங்கமற்ற அன்பு.
பிரவாகினி ஆனி 2005 இதழ் 22

Page 7
ஒரு வினோதக் கிராமம்
Cம்மணியூர், திண்டுக்கல்லிலிருந்து 40 கிலோ மீற்றர் தொலைவில் தொடர்ச்சியான மலைகளிற்கு அடியில் ஒளிந்து கிடக்கின்ற ஊர். வட மதுரையிலிருந்து ஆட்டோவுக்கு கெஞ்சினால் சொத்தை விற்றுக் கொடுக்கும் தொகை கேட்பார்கள். இங்கொன்றும் அங்கொன்றுமாகத் தலைக்கட்டு வீடுகள். மருத்துவ வசதியோ நெருங்க முடியாததொன்று நெருஞ்சி முள் நிரம்பிய வழி அதுதான் மம்மணியூர். இவ்வூர் குறிப்பிட்ட சமூகத்தினரால் நிரம்பியிருக்கிறது. கம்பு, சோளம், திணை, கேப்பை பயிரிடுவது மட்டும் தான் இவர்களது வாழ்க்கை. இப்போதுதான் மின்சாரம் எட்டிப் பார்த்திருக்கிறது. ஊருக்கு ஒளியூட்டப்பட்டாலும் பெண்களின் வாழ்க்கை இன்றும் இருண்டுதான் இருக்கின்றது.
திருமணத்திற்கு பரிசம் போட்டால் “7 1/4” ரூபாய் மணவாழ்க்கை முறிவுக்கு “7 1/4" ரூபாய் என பெண் களின் வாழ்க்கை நொறுக்கப்பட்டிருக்கின்றது. ஆண் களுக்கு சர்வ சாதாரணமாக நாலைந்து மனைவிகள். அங்கே பல்வேறு விதமான கொடூரச் சம்பவங்கள். அறுபது வயது ஆண்களை இருபது வயதுப் பெண்கள் திருமணம் செய்வது சுலபம். அவ்வாறு திருமணம் செய்தவர்களில் இருபது வயது பழனியம்மாளும் ஒருத்தி. அவள் கூறுகிறாள் என் தாய் மாமனாரைத் தான் நான் முதலில் திருமணம் செய்தேன். எனக்கு ஒரு மகள் இருக்கிறாள். ஆனால் என் மாமன் காலமாகி விட்டார். அவர் இறந்த 10ம் நாள், "உன் தாத்தாவுக்கு யார் துணை?” என்று கூறி எனக்கு மறுமணம் செய்து வைத்தார்கள்.
இன்னொரு குடும்பம், பிச்சைக்கு 70 வயது, ஆண்டி அம்மாவுக்கு 35 வயது. இப்போது நான் அவரின் மூன்றாவது மனைவி. அவர் எனது பிள்ளைகளை நன்றாகப் பார்க்கிறார். மீதிக் காலத்தையும் பிள்ளைகளின் முன்னேற்றத்தையும் பார்த்துக் காலத்தைப் போக்க வேண்டியதுதான் என்கிறாள்.
தள்ளாத வயதில் உள்ள சில தாத்தாக்களை மணம் செய்த பேத்திகள், வீட்டுக் கடமைகளோடு மட்டும் நின்று விடாது, வேலைக்குச் சென்று பணம் சம்பாதிப்பது எனப் பல தொல்லைகளையும் அனுபவித்து மெளனிகளாக வாழ்கிறார்கள். அவர்கள் கண்ணிருக்கு விடைதான் என்ன?
223.5 魏 s 2 গ্ৰন্থ
இஇஜ்
外婉
德
N?
போக விடுங்கள் என்னை! நான் படிக்கப் போக வேணும்
பிரவாகினி ஆனி 2005 இதழ் 22
 
 
 
 
 

காதலித்தால் இறுதிச் சடங்கு 672ளிேயூர்வாசிகள் ஊருக்குள்ளே வரக்கூடாது.
உள்ளுர்வாசியை சந்திக்க வருபவர்கள் கிராம எல்லை யிலுள்ள முத்தாலம்மன் கோயில் மரத்தடியில் தான் காத்திருக்கவேணும்.
உள்ளுர்வாசி விரும்பினால் மட்டுமே கிராமத்திற்குள் போகலாம். அதுவும் செருப்புப் போட்டு நடக்கக் கூடாது. கள், சாராயம் குடித்தாலோ, காதலித்தாலோ இறந்த பிறகு செய்யும் இறுதிச் சடங்குகளைச் செய்து, ஊரை விட்டே வெளியேற்றிவிடுவர்.
இப்படியான கட்டுப்பாடுகள் எல்லாம் திருச்சி மாவட்டம் முசிறியிலிருந்து தாத்தையாங் கார்பேட்டை செல்லும் வழியில் 8 கிலோமீற்றர் தூரத்தில் உள்ள கீழத் தொட்டியப் பட்டி கிராமத்திலுள்ளது.
கிராமத்தில் நுழைந்ததுமே மரத்தடியில் வண்டியை நிறுத்திவிட்டு, செருப்புக்களை அங்கே கழற்றிவிட்டு, ஊர்ப் பெரியவர்களின் அனுமதிக்காக காத்திருந்து, அனுமதி கிடைத்ததும் தான் ஊருக்குள் செல்ல வேண்டும். வெளியூர்வாசிகள் யாராவது இரவில் அவ்வூரில் தங்க வேண்டுமாயின் முத்தாலம்மன் கோவில் மரத்தடியில்தான் தங்க வேண்டும். அரச அதிகாரியாயினும், எவராயினும் ஊருக்குள் வந்தால் செருப்பைக் கழற்றி மரத்தடியில் விட்டு விட்டு, வண்டியில் வந்தால் அதனைத் தள்ளிக் கொண்டே செல்ல வேண்டும். அவ்வாறு செய்யாவிடின் பொம்மக்கா கோபத்திற்கு ஆளாகி சிலர் இறந்தும் இருக்கிறார்கள்.
இவர்கள் கட்டபொம்மன் வம்சத்தைச் சேர்ந்தவர்கள் என்று கூறுவர். அவர்களுக்கு எல்லாமே பொம்மக்கா சாமியும், முத்தாலம்மன் சாமியும் தான். பொம்மக்கா இட்ட கட்டளைப்படிதான் எல்லோரும் நடப்பார்கள். பெண்கள் வயதுக்கு வந்துவிட்டால் காட்டில்தான் 17 நாட்கள் தங்க வைப்பார்கள். அதன் பின் சடங்குகள் செய்து, சீர்வரிசை யோடு வீட்டுக்கு அழைப்பார்கள்.17 வயதுள்ள ஆணுக்கும், 7 வயதுப் பெண் பிள்ளைக்கும் திருமணம் செய்யும் 'பால்ய விவாகமும் உண்டு.
ஊருக்கு வெளியில் யாராவது வேலைக்குச் செல்லு மிடத்தில் மது அருந்தினால், ஊருக்கு வந்து பொம்மக்கா சாமியிடம் முறையிடவேண்டும். அதேபோல் பிறசாதிக்காரர் யாரையாவது காதலித்தால் உடனே இறந்தவர்களுக்குச் செய்யும் இறுதிக்கிரிகையை செய்து உடனே ஊரைவிட்டு அனுப்பி விடுவார்கள். காதலுக்குத் தான் எத்தனை மரியாதை !
பேய்களுக்கிடையில் அகப்பட்ட அபலை

Page 8
கணவன் எதிரில் கூட ஆ பெண்கள், பலர் முன்னி6ை
ஒட்டுமொத்த இந்தியாவும் அதிர்ச்சியில் உறையும் படி, இந்திய இராணுவத்திற்கு எதிராக மணிப்பூரில் பெண் களின் பிறந்த மேனியாகப் போராட்டம் எதற்காக? 32 வயது மனோரமா தேவியின் கோர மரண சம்பவமே இதற்குக் 85ITT600TLs). * ,
சென்ற ஆண்டு யூலை மாதம் 10ம் திகதி இரவு மனோரமாவின் வீட்டுக்குள் அதிரடியாகப் புகுந்த இந்திய இராணுவம், "மனோரமா தலை மறைவுத் தீவிரவாத இயக்கம் ஒன்றின் கமாண்டோ” என்று தங்களுக்கு உளவுத் துறை ரிப்போர்ட் கொடுத்திருப்பதாக சொன்னார்கள். மனோரமாவின் வயதான அம்மாவும் இரண்டு தம்பிகளும் ஹாலில் இருக்க படுக்கை அறையில் புகுந்து மனோரமாவை தர தரவென இழுத்து வந்து தாழ் வாரத்தில் கிடத்தி இருக்கி றார்கள். மூன்று மணித்தியால சித்திரவதை அவளின் அலறல் சத்தம் மட்டுமே கேட்டிருக்கிறது. சமையல் அறையில் இருந்து கத்தியை எடுத்து சென்றிருக்கிறார்கள். அதைத் திரும்பவும் கொண்டுவந்து வைக்கும்போது கத்தி முழுக்க இரத்தம்
அதிகாலை 3 மணிக்கு, மனோரமா கைது செய்யப்பட்டி
ருப்பதாக கூறி சொல்லி, அவரை இழுத்துச் சென்றிருக்கிறது இந்திய இராணுவம். உடல் முழுக்க காயங்கள், நகக்கீறல்கள், ஆழமான கத்திவெட்டு, முதுகில் ஐந்து இடங்களில் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்த அடையாளங்களுடன் பக்கத்துத் தெருவில் கிடந்தாள். மனோரம்மாவின் கொலைக்குக் காரணம் இராணுவம் தான் என்று அவரது குடும்பம் கதற, அவர் பயங்கர தீவிரவாதி. வெடிகுண்டு ஏகே47 துப்பாக்கி, வயர் லெஸ் எல்லாம் வைத்திருந்தார். அவரைக் கைது செய்த போது தப்பியோட முயன்றதனால் சுட்டோம் என்றது இராணுவம்.
ஐரோப்Uாலில் வாழும்· ჟtნბზ
4/லம்பெயர்ந்து வாழும் பெண்கள் சந்தித்து, தமது கருத்துக்களையும், அனுபவங்களையும் பரிமாறிக் கொள்ளும் முகமாக ஐரோப்பாவில் வெவ்வேறு பாகங்களில் நடைபெற்றுவரும் பெண்கள் சந்திப்பின் 24 ஆவது தொடர் லண்டனில் ஒக்டோபர் மாதம் 1516 ஆம் திகதிகளில் நடைபெற்றது.
1990 ஆம் ஆண்டு, மேற்கு ஐரோப்பிய நாடுகளில் வாழும் தமிழ்ப்பெண்கள், பெண்களின் பிரச்சினைகளைத் தங்களுக்குள் கலந்துரையாடப் பெண்கள் சந்திப்பை உரு வாக்கினார்கள். இச்சந்திப்பு கடந்த பதினைந்து வருடங் களாகப் பல நாடுகளிலும் தொடர்ச்சியாக நடந்து வந்தது மட்டுமல்லாமல் இந்தியா, இலங்கையைச் சேர்ந்தப் பெண் எழுத்தாளர்கள், சமூகநலவாதிகள், பெண்ணிய அமைப்புப் பெண்கள் என்று பலர் இக்கலந்துரையாடல் களில் கலந்து கொண்டனர். அத்துடன் பெண் படைப் பாளிகளின் படைப்புக்களை பதிவாக்கி 8 பெண்கள் சந்திப்பு மலர்களும் வெளிவந்துள்ளன.

டை களைந்து நிற்க கூசும்
லயில் பிறந்த மேனியாக ..!!!
இரவில் பெண்ணைக் கைது செய்யக்கூடாது. பெண்கள் விசாரிக்கப்படும்போது கூடவே ஒரு பெண் அதிகாரியாவது இருக்க வேண்டும் என்ற சட்டத்தை எல்லாம் தூக்கி எறிந்து
விட்டது இராணுவம்.
ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தின்படி இராணுவம் சந்தேகத்தின் பேரில் யாரையும் கைது செய்ய லாம், விசாரிக்கலாம். அதை எவரும் கேள்வி கேட்க முடியாது. ஆனால் இந்தச் சட்டம் தீவிரவாதிகளை ஒடுக்குவதைவிட அப்பாவிகளை சித்திரவதை செய்யத்தான் அதிகம் பயன் பட்டதாக மணிப்பூர் மக்கள் குமுறுகின்றனர். 24 வருடங் களாகத் தீவிரவாதிகளை ஒழிக்க முடியாதபோது எதற்கு இந்தச் சட்டம், எதற்கு இராணுவம் என்று கேள்வி எழுப்பிக் கொண்டிருந்த மணிப்பூர் மக்கள், மனோரம்மாவின் மரணத் திற்குப் பிறகு, இந்தச் சட்டத்தை உடனே நீக்க வேண்டும் என்று ஆவேசக் குரலோடு ஆர்ப்பாட்டத்தில் இறங்கி விட்டனர். அதில் ஒன்றுதான் நிர்வாணப் போராட்டம் : இதனால் மிரண்டு போன இராணுவம் மனோரம்மாவின் விடயத்தில் தவறுகள் நடந்து இருப்பதை ஒப்புக் கொண்டுள்ளது.
8.8 இந்தப் போராட்டத்துக்கு தலைமை ஏற்றிருப்பது மீரா பைபி (Meira Paibi) தீப்பந்தம் ஏந்திய பெண்கள் என்ற பெண்கள் அமைப்பு. இதன் பொதுச் செயலாளர் தோக்கம் ரமணி, வயது 70,
இராணுவத்தை வெளியேறச் சொல்லி, அதற்கு குறிப்பிட்ட காலக்கெடுவும் வைத்திருக்கும் இந்த ஆவேசத் தாய்மார்களின் பின்னால் மொத்த மணிப்பூரும் அணி வகுத்து நிற்க, இயல்பு வாழ்க்கை ஸ்தம்பிக்க, திகைத்து நிற்கிறது அரசாங்கம்.
பெண்களின் 24 ஆவது சந்திப்பு
இச்சந்திப்பில் பெண்கள் கலந்து கொண்டு தத்தமது கருத்துக்களைத் தெரிவித்து இச்சந்திப்பினை சிறப்படையச் செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டனர். கலந்துரையாடப்பட்ட விடயங்கள் பின்வருமாறு :- > பெண்களின் உடல், உள நலம் பற்றிய கருத்தரங்கம். > சுனாமியின் அனர்த்தங்களும், பெண்களின் நிலையும். > நேரில் கண்டவையும், சில அறிவிப்புக்களும், > தொடரும் வன்முறைகளும், வாழ்க்கைப் பிரச்சினைகளும் ) வீடுகளில் தொடர்பவை. > தொடரும் போரும், பெண்களும் குழந்தைகளும் > தற்கால இலக்கியம், சினிமா, ஊடகங்களில் பெண்கள் > இலக்கியத்தில் பெண்கள் > சினிமாவும் பெண்களும் > ஊடகங்களும் பெண்களும் > பெண்கள் சந்திப்பு மலர் வெளியீடும் அதன் மீதான விமர்சனமும் > கலாசாரமும், பாலியல் பிரச்சினைகளும் > பெண்களின் படைப்புக்கள் > ஓவியக்கண்காட்சிகள் > குறும்படக்காட்சிகள் > நாடகங்கள்
பிரவாகினி ஆனி 2005 இதழ் 22

Page 9
எமது நூலகம்
அரசியலும் பெண்களும்
இம்முறை எமது நூலக வரவு பற்றிய பகுதியில் எமது நாட்டு அரசியலும் அரசியலில் பெண்களின் பங்களிப்பும் எனும் பிரிவு பற்றி விளம்ப முனைகின் றோம். எமது நாட்டு அரசியல் பிரச்சினைகள் இன வேற்றுமை அடிப்படையாகக் கொண்டே தோன்று கின்றன. இந்நிலையில் ஒடுக்கு முறைகளுக்குள்ளாகிக் கொண்டிருக்கும் சமூக சக்திகளில் முக்கிய சக்தியாக பெண்கள் காணப்படுகின்றனர். ஆணாதிக்க மயப்பட்ட சகல சூழல்களிலிருந்தும் தப்பி அதிகாரத்தில் பெண்களும் பங்கு செலுத்துவது என்பது எளிமையான காரியமல்ல அதற்கான நீண்ட போராட்டம் பெண்கள் தலைமையேற்று நடத்தப்பட வேண்டியுள்ளது. புரட்சிகர சமூக மாற்றத்துக்கான அரசியல் முயற்சிகளை மேற் கொள்கின்ற எந்தச் சக்தியும் இதனைப் புறக்கணித்து விட முடிவதில்லை. எமது நூலகத்தில் அரசியலும் பெண்களும் எனும் பிரிவில் சிறந்த நூல்களை மும் மொழிகளிலும் பெறக்கூடியதாக உள்ளது. உள்நாட்டு அரசியல் மட்டுமல்லாது வெளிநாட்டு அரசியல் சம்பந்தமான நூல்களையும் பெறமுடியும். பலரது கவனத்தையும் ஈர்த்த ஒரு சில நூல்களை இம்முறை அறிமுகம் செய்ய முனைகின்றோம்.
இலங்கை அரசியலில் பெண்களும் பெண்களின் அரசியலும்
ஆசிரியர் : என். சரவணன் வெளியீடு : மூன்றாவது மனிதன் பதிப்பகம் 1995 க்குப் பின் நடந்த அனைத்து தேர்தல்களின் போதும் பெண்களின் அரசியல் பிரதிநிதித்துவம் குறித்த புதிய நிலைமைகள் புதுப்பிக்கப் பட்டுள்ளன. இந்நூலில் முக்கியமாக இலங்கையின் சர்வஜன வாக்குரிமை பெற்றதிலிருந்து இது வரையான பாராளுமன்றத் தேர்தல்களை மையப்படுத்திய கட்டுரைகளை விட, உள்ளூராட்சி மன்றங்கள், மாகாண சபைகள், என்பனவற்றில் பெண்களின் பிரதி நிதித்துவம் பற்றியும் உள்ளடக்கப்பட்டுள்ளது. மேலும் ஆயுதப் போராட்ட அரசியலில் பெண்களின் பங்களிப்பு பற்றியும் உள்ளடக்கப்பட்டுள்ளது. வாசிப்பை இலகு படுத்துவதற்காக அட்டவணைகள் சேர்க்கப்பட்டுள்ளன. பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின் பின்னணி சுருக்கமாக விளக்கப்பட்டு தரப்பட்டுள்ளது.
பாராளுமன்றத்தில் பெண்கள்
ஆசிரியை டல்சி த சில்வா வெளியீடு : இலங்கையின்
அன்னையரும் புதல்வியரும் நான்கு தசாப்தங்களுக்கு மேலான வர லாறுக்கு உரிமை கோரக் கூடிய, இலங்கைப் பாராளுமன்ற பெண்கள் பிரதிநிதித்துவம் பற்றிய ஓர் சுருக்க மான விளக்கவுரை இச்சிறு நூலூடாக உங்கள் முன்வைக்கப்படுகிறது. அரசியலுக்குள் பெண்களின்
பிரவாகினி ஆனி 2005 இதழ் 22
 
 
 
 

பங்களிப்பை அதிகரிக்கச் செய்வதற்கு ஊக்கத்தை காண்பிக்கின்ற பெண்களுக்கு தலைமைத்துவ பயிற்சிப் பாடத்தொடர் ஒன்று சீடா நிறுவனத்தின் ஆதரவுடன் ஒழுங்கு செய்யப்பட்டதன் பிரதிபலனாகவே இச்சிறு நூல் வெளியாகி உள்ளது.
மூன்றாம் உலகில் பெண்ணியமும் தேசியமும்
కి: பாகம் 1, பாகம் 2
భ్వీ
ஆசிரியை குமாரி ஜயவர்தன வெளியீடு சமூக விஞ்ஞானிகள் V− சங்கம் இந்நூலில் பெண்ணிலை வாதத்தின் ஆரம்ப வருடங்களையும் பல கீழைத்தேய நாடுகளில் புதிய பெண் களின் எழுச்சியையும் எடுத்து விளக்கியுள்ளார் ஆசிரியர் பெண்கள் தமது முக்கியத்துவத்தை உணர்த்த தமது விடுதலைக் காக நடத்திய தீரமிக்க துணிவுடைய போராட்டங்கள் பற்றியும் ஆசிரியர் விளக்கியுள்ளார். இந்தியாவிலும் இலங்கையிலும் தமது விடுதலைக்கும் முன்னேற் றத்துக்குமாகப் பெண்கள் நடத்திய அரசியல் சமூக போராட்டங்கள் பற்றி அறியப்படாத வரலாறுகளும் இந்த நூலில் விபரிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் பெண்களும் ஆட்சி முறையும்
ஆசிரியை கிஷாலி பின்டோ
ஜெயவர்த்தன
சூலனி கொடிக்கார GG), i Gifu îG) : ICES
இந்த வெளியீடானது இனத்துவ ஆய்வுக்கான
சர்வதேச நிலையத்தினால் ஆரம்பித்து வைக்கப்பட்டு பெண்கள் மற்றும் ஆட்சி முறை தெற்காசியாவில் சன நாயகச் செயன்முறைகள் அரசினை மீளுருவாக்கல் எனும் தலைப்பில் அமைந்த தெற்காசிய பிராந்திய ஆய்வின் இலங்கை நாட்டிற்கான அறிக்கையாகும். இச் செயற்றிட்டம் பின்வரும் விடயங்களை ஆய்வு செய்கிறது.
(1) பெண்களின் அரசியற் பங்கேற்பு
(2) பால்நிலை, அரசியல், அரசு என்பனவற்றிற்
கிடையிலான தொடர்பு
(3) பெண்களின் பிரஜாவுரிமை தொடர்பான
பேச்சுக்கள் (4) குடியியல் சமூக நிறுவனங்களில் பெண்களின்
ஈடுபாடு (5) அரசினைப்பற்றிய பெண்களின் நோக்கு (6) பெண்களின் சிபார்சுகள்
இத்தகைய மையக்கருக்களின் ஊடாக மேற் குறிப்பிடப்பட்ட ஆய்வானது இலங்கைப் பெண்கள் அரசினை எவ்வாறு வரையறை செய்கிறார்கள் அரசுடனான பெண்களின் இடைத்தாக்கம் பெண் பிரசைகளுக்கான அரசின் நடைமுறை வரையறை களும் கடமைப்பாடுகளும் போன்ற விடயங்களை நுணுக்கமாக ஆய்வதற்கு முயற்சிக்கின்றது.

Page 10
எமது தயாரிப்புக்கள் வெளிவருகின்றன
7ேUண்கள் கல்வி ஆய்வு நிறுவனத்தினராகிய நாங்கள், பத்து வருடங்களுக்கு மேலாக உயர்தர மட்டத்தி னரும் மற்றும் அரசாங்க உத்தியோகத்தினரும் நடாத்தி வரும் சமாதானப் பேச்சுவார்த்தைகள் எவ் வகையான பாதையில் செல்கின்றன என்ற நோக்குடன் சில விடயங் களையும், முரண்பாடுகளையும் தெரிவு செய்து எப்படி விளக்க வேண்டுமோ அதன்படி விளக்கம் கொடுக்க முனைந்திருக்கின்றோம்.
இலங்கையின் சமய சார்பற்ற பன்முகத்தன்மையை பேணுபவர்களையும், ஜனநாயகப் பண்பாட்டை பேணு பவர்களையும் எமது தொகுப்புக்கான கட்டுரைகளை வரைவதற்கு தேர்ந்தெடுத்துள்ளோம். இம் மீள் கட்டமைப்பில் நாம் ஒரு சமூக நீதியைப்பேணும் ஜன நாயகப் பண்பாட்டை எதிர் பார்க்கின்றோம் எனவே இந்நூலை மும்மொழிகளிலும் வெளியிட்டு உள்ளோம். O அமைதியான இலங்கைக்கு சமஷ்டி ஆட்சி
முறை யின் மூலம் இனப்பிரச்சினைக்குத் தீர்வு - பேராசிரியர் குமார் டேவிட் O சமாதான முயற்சி பால்நிலை பிரதிநிதித்துவம்
- டில்ருக்ஷிகா பொன்சேகா O இலங்கையின் இன உறவுகள் சமூக வரலாற்று
சூழமைவு - லக்ஷரி பெர்னாண்டோ
ഇബ
~
0ff് മിമ്മയെ പ്രത്യെ விளக்கும் பயிற்சி அகுைகள்
1. பெண்களுக்கு இழைக்கப்படும் வன்முறைகள்
(Violence Against Women)
2. போர்காலச் சூழ்நிலையில் பெண்கள்
(Women in Conflict Situation)
. Glugors(Gibb 3,606.hub (Women and Education) 4. GILJ60öT5(65b, 5 'L-(UpLb (Women and Law) 5. பால்நிலைச் சமத்துவத்திற்கான பண்பாட்டுத் g560L5GT. (Cultural Constraints & Media) 6. அரசியல், தீர்மானம் செய்தல், ஆட்சிமுறைமை
(Politics Decision Makers & Governance) 7. பெண்களுக்கான சட்டவியல் விளக்கம்
(Women & Law) 8. உழைக்கும் பெண்கள் தொடர்பான தொழிற்
FL L356ft. (Women & Labour Laws)
3
掘
TT
t
s
..."

O பெறுபேறற்ற யுத்தமும் அதில் மனித இழப்புகளும்
- ஜெகன் பெரெரா
O மதச்சார்பற்ற ஒரு அரசியலமைப்பு சமாதானத்திற்கு
இன்றியமையாதது - ஜி அன்டன் பெர்னாண்டோ
திருகோணமலையில் நடாத்தப்பட்ட ஆய்வு
07மது நிறுவனத்தினரால் திருகோணமலையின் கிண்ணியா, கன்னியா, நெய்வேலி, குச்சவெளி, அதனைச் சூழ உள்ளதுமான 5 பகுதிகளில் பால் நிலை வன்முறைக்கு உள்ளாக்கப்பட்ட 334 பெண் களிடையே ஆய்வுகள் மேற் கொள்ளப்பட்டன.
இவர்களில் 305 பேர் மிகவும் கொடூரமான உடல் ரீதியான பாலியல் வன்முறைக்கு உள்ளாக் கப்பட்டுள்ளார்கள். இவற்றிற்கான முக்கிய காரணம் அவர்களுக்குப் பொருளாதார சமூக பாதுகாப்பு எதுவும் இன்மையே. தமது பிள்ளைகள், குடும்ப அங்கத்தவர்கள் இவர்களுக்காக வன்முறைகளைப் பொறுத்துக்கொண்டு இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என்பதை எமது ஆய்வாளர்களால் காணமுடிந்தது.
SLSSSSS SYSSS LSS SSS SS LSSLSS - - - - - - - - - - - - -
ாரிப்புக்கள்
வீடியோ ஒளிநாடாக்கள் اع
* பெண்களும் சட்டமும். * பெண்களின் தொழில்சார் விடயங்கள். * பெண்களும் வன்முறையும். * தூது நாடகம் * ஊடகங்களில் பெண்களின் பிரதிபலிப்பு. * ஐநா.சபை சாசனங்களும் பெண்களும். * பெண்களும் அரசியலும். * குடும்பம் என்ற நிறுவனம். * மலையகப் பெண்களின் பிரச்சினைகள். * பெண்களின் இலக்கியமும், இலக்கியத்தில்
பெண்களும். * உளவியலும், பெண்களும் தூது. நாடகம் * பெண்களது உழைப்பு - பாரமுறி விளையாட்டு.
நாடகம்)
முதலிய தலைப்புகளில் நிபுணத்துவம் பெற்ற பல பெண்ணிய ஆய்வறிவாளர்கள், பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் பங்குபற்றிய கலந்துரையாடல் களின் வீடியோ ஒளி நாடாக்களை, கருத்தரங்குகள், பயிற்சி காண்பிக்க விரும்பும் நிறுவனங்கள் இவற்றை எங்களிடமிருந்து பெற்றுக்கொள்ளலாம்.
SDS SS S S S - - - - - -
பிரவாகினி ஆனி 2005 இதழ் 22

Page 11
கருத்த
“பெண்களின் அண்மைய கலை இலக்கிய வெளிப்பாடும் அவற்றின் வேறுபடும் கருப் பொருளும்” என்ற தொனிப் பொருளிலான கருத்தரங்கு எமது நிறுவ னத்தினால் எமது நிறுவன கேட்போர் கூடத்தில் யூலை மாதம் 28ஆம், 23ஆம் திகதிகளில் நடாத்தப்பட்டது. இந்நிகழ்வில் பல எழுத்தாளர்களும், கலைஞர்களும் பல்துறைசார்ந்த அறிஞர்களும் கலந்து சிறப்பித்தார்கள் முதல் நாள் காலை நிகழ்வில் எமது நிறுவனத்தின் இயக்குனர் செல்வி திருச்சந்திரன் தலைமை தாங்கினார்.
”மதச் சடங்குகளும் பெண்களும்' என்ற முதல் அமர்வில் மட்டக்களப்பு பெண் தெய்வச் சடங்குகளில் பெண்களின் பங்குபற்றல் நாவற்குடா, நொச்சிமுனை, முத்துமாரியம்மன், சடங்கு விழாவை அடிப்படையாகக் கொண்ட பார்வை வாசிக்கப்பட்டு வாதப்பிரதி வாதங் களும் இடம்பெற்றன. இலக்கியமும் பெண்களும் பற்றிய அமாவில் "ஈழத்துப் போராளிகளின் படைப்புக் கள். சில அவதானிப்புக்கள்” என்றும் கலாநிதி சியோக ராஜாவின் கட்டுரை வாசிக்கப்பட்டது.
மாதுமையின் "தூரத்துக்கோடை இடிகள் சிறு கதைத் தொகுப்பு பற்றிய ஆய்வும், தினகரன் பிரதம
பிரவாரணி ஆனி 2008 நிதழ் 22
 

ரங்கு
ஆசிரியர் சிவா சுப்பிரமணியத்தின் ஆய்வுக் கட்டுரை
யும், முற்போக்குக் கவிஞர் ஏஇக்பால் அவர்களின் கட்டுரையும் வாசிக்கப்பட்டன.
"இலக்கியப் போக்கு” என்ற தொனிப்பொருளில் திரு மதுசூதனன் தனது ஆய்வை வழங்கினார். தொடர்ந்து, "பெண்களுக்கு இழைக்கப்படும் வன் முறைகளுக்கு எதிரான ஆண்களின் செயல்வாதம் வேண்டாம் என்று சொல்கிறோம்" வீதிநாடக ஆக்கமும், ஆற்றுகையும் ஒரு பங்குகொள் பார்வை என்ற விடயம் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.
கூத்து என்னும் கலை வடிவமும், பெண்களும் என்னும் அமர்வில் இக்கட்டுரைகள் வாசிக்கப்பட்டன. "திரைப்படத் துறையும், பெண்களும்' என்ற இறுதி 3|LDiréis) (Power of Women) Lipsis fat) JJULL ஒரு பார்வை என்னும் கட்டுரை வாசிக்கப்பட்டது. பெண்களுக்கு எதிரான ஆணாதிக்கத்தைக் கோடிட்டுக் காட்டும் இத்திரைப்படம் பற்றி எமது மக்கள் மத்தியில் பேசப்படாதிருப்பது பற்றி எல்லோரையும் வியப்பில் ஆழ்த்தியது.
ம் பற்றிய கருத்தரங்கு
நத்தரங்கு
11

Page 12
மொழிபெயர்ப்பு வசதிகளைக் கொண்ட பெண்கள் கல்வி
ஆய்வுநிறுவன கேட்போர் கூடம்
பெண்களின் கல்வி ஆய்வு நிறுவனத்தின் கருத்தரங்கு மண்டபம் 50 சொகுசு இருக்கை களைக் கொண்டது. மற்றும் சமகால மொழி பெயர்ப்புக் கருவிகளுடன் புதுப்பிக்கப்பட்டுள்ளது. உணவு, தேநீர் வசதி செய்து கொடுக்கப்படும், உங்கள் கூட்டம், கருத்தரங்கு செயலமர்வு படக் காட்சி, விழிப்புணர்வு நிகழ்ச்சிகளுக்குத் தகுந்த வசதிகள் வழங்கப்படும்.
WERC
fiuditoriuin Charges
Hull Churges A/C Non f/C Full Day (8 hours) 4,500- 4,OO) Two Hours 2,OOC): 1500/-
e. Every Additional
| Hour 40[]|- 25Ա|-
Television 4()()|-
FCR 3OOClverhead Projector 3OOMilkes (perhead) 了5/-
Service charges 5% of the total amount
இ Catering can be arranged
Maximum seating capacity 50
Ample Parking Space
事*州州*冲冲、伞伞中:±李李李李率:率球豪冲冲冲**臀津車事惠率率車車事津
பைணிகள் கல்வி ஆய்வு நிறுவனம் 58, தர்மராம வீதி, கொழும்பு 06. தொலைபேசி : 2595296. 2590985 தொலைநகல் : 2598313
YzYYLLL eeLLLLLLLL YYYYY LLL zYYzY LL YzYY Y eeeL eee Seee eeeLLLLLLe BLBL LkLkLkLSLSLs s s ss Yz
OWomen's Education & Research Centre
58, DharTriarana Road, Colombo - 06, Sri Lanka. T. P. : 2595296,259.0985 Fair 2596.33 E-mail . worriedra (a sliet, k
L2
 

மேல்மாடி வீடு வாடகைக்கு
படுக்கையறை, சனமால்லுற இருக்கையறை கொண்ட விசாவி t;பசதியுடைய மாடி இருப்பிடம் ஜனவ ய் வாடகைக்கு விடப்படும்.
. நன்றி ,
னாமியினால் பாதிக்கப்ப்ட்ட் இலங்கை சிறார்களின் ல்வி முன்னேற்றத்திற்கு உதவும் முகமாக பல ழிகளிலும் எம்க்கு உதவி கிட்டியது எமது
ய்வாள்கள் மட்டக்களப்பு பாலயடித்தோனா. ல்ாமுனை, யாழ்ப்பாணம் குடத்தனை பகுதி ளுக்குச் சென்று அங்கு வாழும் பாதிக்கப்பட்ட றுவர்களின் கல்வி நிலமைகள் அறிந்து பல நாடு ரிேலிருந்தும் உதவி பெற்றோம். பல வழிகளிலும் க்கு உதவி புரிந்த அன்பு நெஞ்சங்களிற்கு எமது னமார்ந்த நன்றிகள்.
näA, Prikh WERCSIf Iren Henschen Alexander SchiTuxeller ngeborg Wirtky Hällll:HenschEI tefan Sokol Weller Rose Mr. T, Jeremiah Uli and Christiac Herschen
S. M. JeľcIliah Julergen Wiogt Mr. Scott Pesedivise Uschi and Walter Rieckenberg Mr. De Heer R. Kanaganayagam Uciand ChristianeZuendee Ms. A. E. Heather Stawe Ms.S. Den Driver
く
疆 திரைப்பட விருந்து
பெண்கள் கல்வி ஆய்வு நிறுவனம், விபவி நிறுவனத்தினரின் ஏற்பாட்டில் நடாத்தப்படும் திரைப்படக்காட்சி ஒவ்வொரு மாதமும் இரண்டாம் சனி அல்லது ஞாயிறுகளில் மாலை 330 மணிக்குப் பெண்கள் கல்வி ஆய்வு நிறுவனத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெறும் உணர்ச்சிமிக்க அறிவு சம்பந்தமான திரைப்படங்கள் திரையிடப்படும். சிங்களம், தமிழ், ஆங்கிலம் ஆகிய மும்மொழி களிலும் இந்நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. திரைப்படத்தின் பின் கலந்துரையாடல் நடைபெறும்
மேலதிக விபரங்களுக்கு
மாலதி பவானந்தனர்
السـ
LřJiljí
c
ಹೈಫ
!ք
K
2005 sea