கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: பிரவாகினி 2004.01

Page 1
பிறவா
பெண்கள் கல்வி ஆய்வு நிறுவ
ஜனவரி 2004
சமாதான முன்னெடுக்கட்
இலங்கையின் அரை நூற்றாண்டுக்கால இனப் பிரச்சினையைத் தீர்க்க - 20 ஆண்டுகாலப் போரினாலும் முடியாதுபோன பட்சத்தில், சுமார் இரு வருடங்களுக்கு முன் பிரதமர் ரணில் - விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் ஆகியோரிடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுதற்காலிக போர் நிறுத்தம் நிலவி வந்தது. இரு பகுதியாருக்கு மிடையில் பேச்சுவார்த்தைகள் பல வெளிநாட்டு அரசாங்கங்களின் அனுசரணையுடன் கமுகமாக நடைபெற்று வந்தன.
வடக்கு கிழக்கின் தற்காலிக இடைக்கால நிர்வாக அதிகாரத்துக்கான திட்ட வரைவை அரசின் பரிசீலனைக்காக விடுதலைப்புலிகள் முன்வைத்தபோது, நாட்டின் நிர்வாக அதிகாரங்களைக் கொண்ட ஜனாதிபதி, சமாதானத்துடன் தொடர்புள்ள, மூன்று முக்கிய அமைச்சுக்களைத் தம்வசப் படுத்திக் கொண்டிருக்கிறார். சமாதானம் ஏற்படுமென்ற பெரும் நம்பிக்கை யோடிருந்த மக்கள் மனதில் அச்சமும், பீதியும் ஏற்பட்டுள்ளன. சமாதானப் பேச்சுவார்த்தை முன்னெடுப்பு அரும்பொட்டான கயிற்றில் தொங்கிக் கொண்டிருக்கிறது. நிர்ப்பந்தம் என்ற பாரத்தைத் தாங்க முடியாமல் கயிறு அறுந்துவிட்டால், அதலபாதாளத்தில் வீழ்ந்து,நாடு மீண்டும் ஒரு பயங்கரவாத யுத்தத்துக்கும், பேரழிவுக்கும் முகம் கொடுக்க வேண்டிவரும் என மக்கள் மனம் பதைபதைத்துக் கொண்டிருக்கிறது.
வடக்குக் கிழக்கு மக்கள் மட்டுமல்ல, தென்பகுதி மக்களும் யுத்தத்தின் கொடுமையையும், கொடுரத்தையும் நன்கு அனுபவித்தவர்கள். யுத்தத்தினால் பெரிதும் பாதிப்புறுபவர்கள் பெண்களும், சிறார்களுமே, விமானக் குண்டுப் பொழிவுகள், பீரங்கிகளின் மிலேச்சப் பாய்ச்சல்கள் முதலியவற்றால் பிள்ளைகளை இழந்த தாய்மார், கணவர்களைப் பறிகொடுத்த பெண்கள், அழிந்த வீடுகள், இடப் பெயர்வுகள், அகதிமுகாம் வாழ்க்கை, சிறார்களின் மன அதிர்ச்சிப்பாதிப்புகள், போஷாக்கு உணவின்மை, கல்வி வசதி பாதிப்பு எனப் பலவித கஷ்டங்களை யுத்தப் பிரதேசப் பெண்கள் அனுபவித்து விட்டார்கள். குடும்பச் சுமையைத் தூக்க முடியாமல், பல ஆயிரம் பெண்கள் இன்னமும் அல்லற்படுகின்றனர். தென்னிலங்கையிலே பிள்ளைகளைப்

حيخ حسي
WERC
இதழ் 19
கினி
ானச் செய்தி மடல்
முயற்சி பட வேண்டும்
படைக்கனுப்பி, திரும்பி வருவார்களெனக் காத்திருந்து, அது நடக்காமல் போனதால் அவர்களின் அழுகைக்குரல் இன்னும் ஒலித்தபடியேயுள்ளது.
போர் நடைபெற்ற பிரதேசங்களில் இராணுவத்தால் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்ட பெண்கள், புதைக்குழிக்குள் மூடப்பட்டவர்கள், இடப் பெயர்வால் அகதிமுகாம்களில் கூட, பாலியல் துன்புறுத்தல்களுக்கு ஆளாகிய பெண்கள், குளிக்கவோ உடுப்பு மாற்றவோகூட ஒதுக்கிடம் இல்லாமல் அவதிப்பட்டவர்கள், இப்படிப் போரினால் பெண்கள் அனுபவித்த அவலங்கள், கொடுமைகள் பலவகைப்பட்டன. பிரவாகினி இவற்றைப் பல தடவைகள் வன்மையாகக் கண்டித்துக் குரல் எழுப்பியிருப்பதுடன், பெண்கள் கல்வி ஆய்வு நிறுவனத்தின் குழுவொன்று போர்ப் பிரதேசங்களின் பேரழிவுகளையும்
அப்பகுதி மக்கள் ட 二亨 அனுபவித்து வந்த உள்ளே. கொடுமைகளையும், நேரில் பார்த்துச் சில |* நோபல் பரிசு பெற்ற கோரிக்கைகளை | ஷிறின் ஏபாடி முன்வைத்தது. $ சவுதியில் முதல் பெண்
| பீடாதிபதி, போர் வேண்டாம், ! சமாதானமே வேண்டு s கற்கை நெறி வகுப்புகள் மென சமாதானத்தில் பயிற்சி நெறிகள். நாட்டமுள்ள பல ஆய் |s "சீடோ' கைந் நூல் வறிவாளர், ஜனநாயக வெளியீட்டுத் திட்டம்.
சூரிச்சில் பெண்கள் சர்ந்து பெண்கள் சந்திப்பு. கல்வி ஆய்வுநிறுவனம் பலதடவை குரல் எழுப்பி མ་ ஆப்கானில் பெண்கள் வந்தது. உரிமைக்குரல்.
சிகள் அதிகாரப் நிகழ்ச்சிகள். பதவிப் போட்டிகளில் சிக்கிச் சீரழிந்து தொடரும் பாலியல் குலைந்து போய், | வதைகள் வல்லுறவுகள்
SS .الي

Page 2
அதனால் நாடு மீண்டும் யுத்தத்துக்குள் தள்ளப்பட்டால் ஏற்படக் கூடிய பயங்கர விளைவைக் கற்பனை கூடச் செய்து பார்க்க முடியாதுள்ளது. எனவே நாட்டை முதன்மைப்படுத்திப் பேச்சுவார்த்தை முயற்சிகளை முன்னெடுக்குமாறு அரசியல்
வாதிகளைக் கேட்டுக் கொள்கிறோம்.
போர்ச்சூழல் நிலவிய பகுதிகளில் வாழும் பெண்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகள் எவை என அடையாளங்கண்டு அவற்றை ஓரளவாவது தீர்ப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டதுடன் அரசு மற்றும் அரசு சாரா தொண்டர் நிறுவனங்களின் கவனத்தையிர்க்கும் வகையில் பெண்கள் கல்வி ஆய்வு நிறுவனமும் பல செயற்பாடுகளை மேற்கொண்டது. பிரவாகினி இதுவரை நடந்துவந்த பாதையைத் திரும்பிப் பார்க்கின்றபோது, சமுதாயத்தில் பெண்களுக்கும் சமஉரிமைகள் அளிக்கப்பட வேண்டும். தொழில் வாய்ப்புகளில் உரிய இடங்கள் ஒதுக்கப்படவேண்டும் என வலியுறுத்தியதுடன், பெண்கள் தொழில் பார்க்கும் இடங்களில் பலவகையான சுரண்டல்கள், துன்புறுத்தல்கள், பாலியல் சேஷ்டைகள், தொழிலுக்கேற்ற ஊதியம் அளிக்கப்படாமை, சுதந்திர வர்த்தக வலையத் தொழிற் சாலைகளில் பணிபுரியும் பெண்கள் முகம்கொடுக்கும் பிரச்சினைகள், வெளிநாடுகளில் பணிப்பெண்களாகத் தொழில்புரியும் பெண்கள் அனுபவிக்கும் கொடுமைகள் முதலியவற்றை வெளிப்படுத்தி அவற்றை நீக்க அரசாங்கமும், சம்பந்தப்பட்டவர்களும் உரிய நடவடிக்கைகளை அவசரமாக
மேற்கொள்ளவேண்டுமென வலியுறுத்தி வந்துள்ளோம்.
பெருந்தோட்டப்புற அப்பாவிப் பாமரப்பெண்கள் கட்டாயக் கருக்கலைப்புக்கு, அவர்களின் சுயவிருப்பத்துக்கு மாறாக உட்படுத்தப்படுகின்றனர். அங்குள்ள தொழிற்சங்கங்களில் அவர்களுக்குரிய இடம் கிடைப்பதில்லை. பெரும்பாலும் அவற்றில் ஆணாதிக்கமே மேலோங்கிநிற்கிறது. உழைப்புக்கேற்றஊதியம் இப்பெண்களுக்குக் கிடைப்பதில்லை. இவை பற்றிப் பல தடவைகளில் பிரவாகினி குரல் எழுப்பியிருக்கிறது.
சடங்குகளும், சம்பிரதாயங்களும் பெண்களை ஆணாதிக்க சமுதாயக்கட்டமைப்பில் அடக்கி வைத்திருக் கின்றன. சினிமாப்பாடல்களும், காட்சிகளும் அவளைப் போகப் பொருளாகவே இன்னும் சித்தரித்த வண்ணமுள்ளன. சீதனக் கொடுமையும், சிசுக் கொலைகளும் பெண்களைவிட்டு இன்னும் விலகிச் செல்லவில்லை. வெளியில் மட்டுமல்ல, வீடுகளிலும் பெண்கள் பல வடிவங்களில் வன்முறைகளைச் சந்தித்த
வண்ணமேயுள்ளனர்.
இவற்றைப் பற்றிய விழிப்புணர்வூட்டும் கருத்தரங்குகள், செயலமர்வுகள், பயிற்சி நெறிகள் நடத்தப்பட்ட போதிலும், இம் முயற்சிகள் மேலும் முன்னெடுக்கப்படுவதன் மூலமே நல் விளைவை ஏற்படுத்த முடியும் என்பது எமது நம்பிக்கை.
(2

கவிதை
6/27
பெண்னே
எதிர்கொள் . . புரட்சியின்
வலிமை .. புதையுண்ட
வேர்கள் விரல்களில் சிக்கும் ..!
அடர்ந்த
பாறைகளே எம் முகங்கள்
உளிகளின் பொழியீட்டிற்கும் முன் ..! பெண்
என்னும்
பொறுமையுள் பிசுபிசுக்கிறத ஆதி முகம் ..!
அவ்வளவே பெண். பேச்சிலும் எழுத்திலும் கசியும்
சிவப்பு ..!
உள்ளாடைகளை உடைத்தப் பறக்கிறோம்
வானம்
நிறம்பல !
எலும்புகளுக்குள்ளும் சதைகளுக்குள்ளும்
இறுகிப் போய்க்கிடக்கிறது
பெண்மை ..!
அடையாளங்களில் தொலைய விருப்பின்றி கைக்குள் அகப்படும் நெருப்பு பெண் ..!
வீடே
கூடாய்ச் சுருங்கியும்
சன்னல் தாண்டி
வானம் வழியும்
சின்னத் திரையில்
உலக நிதர்சனம்
எம்பி எம்பி பெண்மை பேசும்
அதே ஆதிப் பழங்கதைகளை !
பூரீதேவி -
4ސ...........................
பிரவாகினி)

Page 3
சமாதானத்துக்கான (
(ஷ்றிறின்
ஈரான் நாட்டின் சட்ட வல்லுனராக விளங்கு என்னும் பெண்மணிக்கு சென்ற ஆண்டிற்கான கிடைத்துள்ளதையிட்டு உலக நாடுகளிலுள்ள ெ மகிழ்ச்சியடைந்துள்ளனர். ஈரானில் ஜனநாயகம் களுக்காக, குறிப்பாகப் பெண்கள் மற்றும் சிறார்களின் பல நெருக்கடிகள், அச்சுறுத்தல்களின் மத்தியில் ஓங்கி செயற்பட்டவர் இவர். இவற்றிற்காகவே இப்ட கிடைத்துள்ளது. பாப்பாண்டவர் ஜோன் போல் உட் பேர்களின் விண்ணப்பங்கள் நோபல் பரிசுத் கிடைத்திருந்தன.
நீதிபதியாக 1974ல் நியமனம் பெற்ற முதலாவ எனினும் 1979ல் அங்கு நிகழ்ந்த இஸ்லாமியப் பு அதிகாரத்துக்கு வந்தவர்கள் இவரை அட நீக்கிவிட்டனர். இவர் நாட்டைவிட்டு ஒடவில்லை. பல எதிர்ப்புகளின் மத்தியிலும் துணிச்சலுடன் வழக்கறிஞர்கள் வாதாடத் தயங்கிய மனத உரிமை வாதாடினார். அரசுடன் ஒத்துப்போகாத மr எழுத்தாளர்கள், ஆய்வறிவாளர்களை அரசாங்க அநியாய சம்பவங்கள் அங்கு அரங்கேறின. தெஹ்ரா மிருகத்தனமாகத் தாக்கி, கெடுபிடி புரிந்தன. செயலாற்றியவர் ஏபாடி,
"ஒரு சட்ட வாதியாக, நீதிபதியாக, விரிவு செயற்பாட்டாளராக துணிச்சலாகவும், உறுதிப்பா குரல் எழுப்பியவர். தமது சொந்தப் பாதுகாப்புக்கு பொருட்படுத்தாமல் துணிவுடன் நின்று செயலாற்றி
சமாதானத்துக்கான நோபல் பரிசு பெற்ற முத "எனக்கும் இஸ்லாமிய மதத்துக்கும் முரண்பா கட்டமைக்கப்பட்டுள்ள கலாசாரத்தினாலேயே கொண்டே மனித உரிமைகளுக்கு மதிப்பளிக்கும் சட் சென்ற 20 ஆண்டுகளாக வலியுறுத்தி வருகிறேன்' எ
கருத்தைத் தெரிவித்தார்.
மனித உரிமைக்காகப் போராடும் பெண்களு திகழ்கிறார். இலங்கையில் சமாதானம், மனித இயக்கங்களில் ஈடுபட்டுள்ளவர்கள், ஷிறின் ஏ பெருமையும், மகிழ்ச்சியுமடைகின்றனர்.
சவூதியில் முதலாவ
சிவூதி அரேபியாவில் முதன்முறையாக பெண் ஒருவர்
பல்கலைக்கழகப் பீடாதிபதியாக நியமிக்கப்பட்டிருக்கிறார்.
இஸ்லாமிய ஆட்சி நடைபெறும் சவூதி அரேபியாவில் பல்வேறு துறைகளில் பணியாற்ற பெண்களுக்கு தடைவிதிக்கப் பட்டுள்ளது. ஆரம்ப காலத்தில் பெண்கள் வேலைக்குச் செல்வதற்கே தடைவிதிக்கப்பட்டு இருந்தது. ஆனால் படிப்படியாக சில துறைகளில் பெண்கள் அனுமதிக்கப்பட்டனர்.
எனினும், உயிர் பதவிகளிலோ அல்லது சில குறிப்பிட்ட பொறுப்புகளுக்கோ பெண்கள் வருவதுதடுக்கப்பட்டுள்ளது. சவூதி அரேபியாவின் மொத்த பெண்களில் 6 சதவீதம் பேர் மட்டுமே
முரவாகினி

நோபல் பரிசு பெற்ற ஏபாழ)
g h Shirin Ebadi T நோபல் பரிசு பண்கள் பெரும் , மனித உரிமை உரிமைகளுக்காக கிக் குரல் எழுப்பிச் பரிசு இவருக்குக் LIL GIL IoT ġġi5Liżb 3-1 தேர்வுக்காகக்
பெண் இவர் آفائی" ரட்சியின் பின்பு, பதவியிலிருந்து அங்கேயே தங்கியிருந்து மனித உரிமைகளுக்காக, போராடினார். LIL jáigit #5 TIT3?)3T LOTF, 3 JT 3) 3-3TK_I தொடர்பான வழக்குகளை இவர் பொறுப்புேற்று ாற்றுக் கருத்துக்கொண்ட அரசியல்வாதிகள், ம் கைது செய்து துன்புறுத்திக் கொலை செய்த ான் பல்கலைக்கழக மாணவர்களை அரச படைகள் அம்மாணவர்களுக்கு ஆதரவாக முன்னின்று
புரையாளராக, எழுத்தாளராக, துணிகரமான ட்டுடனும் ஈரான் நாட்டிலும் அதற்கு வெளியேயும் ந அச்சுறுத்தல்களிருப்பதை அறிந்தும் அவற்றைப் பவர்" என நோபல் பரிசுக் குழு புகழாரஞ்சூட்டியது.
லாவது இஸ்லாமிய பெண்ணான ஷிறின் ஏபாடி, டு எதுவுமில்லை. ஆணைகுடி முதல்வன் எனக் தொந்தரவு ஏற்படுகின்றது. முஸ்லிமாக இருந்து -டங்களுடன் இனைந்துபோக முடியும் என்பதைச் னச் சமாதானப் பரிசைப் பெற்றுக் கொண்டபோது
க்கு விரின் ஏபாடி சிறந்தவொரு உதாரணமாகத் உரிமைகள் பால் நிலைச் சமத்துவம் போன்ற பாடிக்கு கிடைக்கப்பெற்ற நோபல் பரிசினால்
து பெண் பீடாதிபதி
பணிக்குச் செல்கின்றனர். அதுவும் இவர்களில் பெரும் பாலானவர்கள், ஆசிரியை, தாதி போன்ற பணிகளில் மட்டுமே
S-fTSTEIII.
சவூதி அரேபியாவில் தற்போது புதிய மாறுதல்களை ஏற்படுத்த வேண்டும் என்று ஆய்வறிவாளர்கள் கோரி வருகின்றனர். இதனையேற்று அந்நாட்டு மன்னரும் சில மாறுதல்களைச் செய்து வருகிறார். சில குறிப்பிட்ட துறைகளில் பெண்கள் பணியாற்ற அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஜெட்டா நகரில் உள்ள பல்கலைக் கழகத்தில் பெண் ஒருவர் முதன் முறையாக பீடாதிபதியாக நியமிக்கப்பட்டிருக்கிறார்.

Page 4
பெண்களின் கற்கைநெறி
பெண்கள் கல்வி ஆய்வு நிறுவனம் நான்கு மாதக் கற்கை நெறி வகுப்புகளை நடத்துவதற்கு ஒழுங்கு செய்துள்ளது. இத்திட்டத்தின் பிரதான நோக்கம் பெண்களின் கற்கை நெறித்துறை பற்றிய அடிப்படைக் கல்வியைப் புகட்டுவதாகும். இக்கற்கை நெறிக்கான சமூக மாற்றத்துக்குப் பயன்படத்தக்க விரிவான செயற்திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் பெ. க. ஆ. நிறுவனத்தின் கொள்கைகளையும், செயற்பாடுகளையும் ஒருங்கிணைக்கும் வகையில் பன்முகப்பரிமாணம் கொண்டது. பாரம்பரியமாகக் கையளிக்கப்படும் அறிவு, இன்றைய பெண்களின் அனுபவத்துடன் முரண்படும் பாங்கை இத்திட்டம் சுட்டிக்காட்டுகிறது. அறிவைப்பரப்பும் முறையில் குலம், வர்க்கம், இனம், சாதி ஆகியவற்றின் பகைப்புலத்தில் ஆராய்வதே இத்திட்டத்தின் அடிப்படை நோக்கமாகும். இந்தக் கற்கை நெறி பின்வரும் 1 அலகுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
1. பால், பால் நிலையின் சமூக உருவாக்கம். பால் உணர்ச்சி
என்பன பற்றிய அறிமுகம் பெண் நிலைவாதக் கோட்பாடுகள் பால்நிலை முரண்பாடுகள்
பெண்களும், கருத்தியலும் பெண்களும், வன்முறையும்
பெண்களும், சட்டமும் பெண்களது ஊழியம், ஊதியம், அந்நியச் செலவாணி பெண்களும், அபிவிருத்தியும் பெண்களும், அரசியலும் மாற்றத்துக்கான வழிமுறைகள் பெண்ணிலைவாத மைய ஆய்வுமுறை.
இக் கற்கை நெறிக்கான பாடவிதானம் தாய் மொழியில் தயாரிக்கப்பட்டுள்ளது.
கற்கை நெறியின் போதனா மொழி தமிழ்/சிங்களம். காலவரையறை : 4 மாதங்கள் இவற்றில் 3 மாதங்கள் விரிவுரை. ஒரு மாதம் : ஆய்வுக் கட்டுரை சமர்ப்பித்தல்.
பட்டதாரிகள் அல்லது அரசுசாரா தொண்டர் நிறுவனங்களில் மூன்று மாதகாலம் பணிபுரிந்த அனுபவங் கொண்டவர்களுக்கான இப்பயிற்சிநெறி, பெண்கள் கல்வி ஆய்வு நிறுவனக் கேட்போர் கூடத்தில் சென்ற செப்டம்பர் 13ந் திகதி தொடக்கி வைக்கப்பட்டது. ஒவ்வொரு சனிக்கிழமையும் ஒன்றரை மணித்தியாலம் நடைபெற்ற இப்பயிற்சிநெறி நான்கு மாதங்களுக்குத் தொடர்ந்து நடைபெற்றது. முதல் மூன்று மாத காலத்தில், பால் நிலை பற்றிய அறிமுகம், பெண்களும் அபிவிருத்தியும், பெண்களும் கருத்தியலும், ஊடகம் விஞ்ஞான ரீதியான ஆய்வுமுறை, பெண்களும் வேலைவாய்ப்பும், பெண்களுக்கெதிரான வன்முறைகள், பால் நிலையும் சட்டமும், பெண்கள் இயக்கம், அரசியலும் பால்நிலையும் ஆகிய விடயங்கள் பற்றி பல்கலைக்கழக விரிவுரையாளர்களும் இவ்விடயங்களில் நிபுணத்துவங்கொண்ட அறிஞர்களும் விரிவுரைகள் ஆற்றினர். பயிற்சி நெறியின் இறுதி அமர்வு
(4

டிசம்பர் 20 அன்று இடம் பெற்றது. அடுத்த ஒருமாத காலத்தில் இவர்கள் தாம் விரும்பிய தலைப்பில் ஒர் ஆய்வுக்கட்டுரையை எழுதிச் சமர்ப்பிக்க வேண்டும். அதற்கான கண்காணிப்பையும், ஆலோசனையையும் சம்பந்தப்பட்ட விரிவுரையாளரிடம் பெறலாம். ஆய்வுக் கட்டுரைகளின் பரிசீலிப்பு முடிவுற்ற பின் 2004 ஆம் ஆண்டு முற்பகுதியில் சான்றிதழும், விருதும் வழங்கும் வைபவமும் நடைபெறும்.
மட்டக்களப்பில் பெண்களுக்கான பயிற்சி நெறி
மட்டக்களப்புப் பிரதேசத்தில் பல ஆயிரம் பெண்கள் வறுமை, அறியாமை, வேலையின்மை எனப் பல துன்பங்களுக்கு முகம் கொடுத்தபடியுள்ளனர். இராணுவக் கட்டுப்பாட்டில் உள்ள அத்தகைய இடங்களில் அல்லாத, வறுமைக்கோட்டின் கீழ்வாழும் பெண்தலைமைத்துவக் குடும்பங்களைச் சேர்ந்த 40 வயதிற்குட்பட்ட சுமார் 35 பெண்களைத் தேர்ந்தெடுத்து, வருவாய்க்காக அவர்களுக்குச் சில தொழில்களைக் கற்றுக் கொடுக்கவும், தொழில்புரிவதற்கு அவசியமான அறிவை வழங்குவதற்குமான 3 மாதப்பயிற்சித் திட்டம் ஒன்றினைப் பெண்கள் கல்வி ஆய்வு நிறுவனம் மட்டக்களப்பிலுள்ள தொழிற்பயிற்சி நிலையத்தில் சென்ற ஒக்டோபர் தொடக்கம் டிசம்பர் வரை நடத்தியது. இலவச சுகாதார சிகிச்சையும் கூட ஆலோசனைகளும் இவர்களுக்கு அளிக்கப்பட்டதுடன், ஒரு தொழிலைப் புரிவதற்கு அடிப்படைத் தேவைகளான தலைமைத்துவம், தொடர்பாடல், அடிப்படைக்கணக்கறிவு, தொழில்முயற்சி ஒன்றை நடத்துவதற்கான நிதி நிர்வாக அறிவு, வங்கிக் கணக்கு சம்பந்தமான ஆலோசனைகளும், போதனைகளும் கற்பிக்கப்பட்டன. சென்ற செப்டம்பர் 29 அன்று தொடங்கப்பெற்ற இப்பயிற்சி நெறியில் பங்கேற்றுள்ளவர்களின் முன்னேற்றம் பற்றிய மதிப்பீடு டிசம்பரில் நடத்தப்படும். தேர்ச்சித் திறம் பெற்றவர்களால் அவர்களின் சொந்த ஊர்களில், தையல்கடை, உணவுச் சாலை போன்ற தொழில்களில் ஈடுபட்டுச் சுயவருமானத்தை ஈட்டிக் கொள்ள இயலும்.
/ N கருத்தரங்கு மண்டபம் ཛོད། பெண்கள் கல்வி ஆய்வு நிறுவனத்தின் கருத்தரங்கு மண்டபம், 40 இருக்கை வசதிகள், ! தளபாடம் ஏனைய உபகரணங்கள், ஒலி பெருக்கி, வீடியோ மற்றும் நவீன சாதனங் களைக் கொண்டது. கட்டம், கருத்தரங்கு, செயலமர்வு, படக்காட்சி, விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு பொருத்தமான இடம் இது. உணவு, தேநீர்வசதி ஏற்பாடு செய்து கொடுக்கப்படும்.
சிதாடர்புகட்கு:
பெண்கள் கல்வி ஆய்வு நிறுவனம் 58, தர்மராம வீதி, கொழும்பு - 06
தொலைபேசி இல: 2595296, 2596826
لد ܢܠ
பிரவாகினி)

Page 5
“சீடோ’ பற்றிய கைந்நூல் வெளி
பெண்களுக்கெதிரான சகலவகை வன்முறைகளையும் முற்றாக ஒழிப்பதற்கான பொது இணக்க ஒப்பந்தம் (CFDAW) 1979ல் ஐ.நா. பொதுச் சபையால் அங்கீகரிக்கப்பட்டது. இலங்கை அதனை 1981ல் ஏற்றுக் கொண்டது. எனினும் அது பெண்கள் சமத்துவத்தை உறுதிப்படுத்தியுள்ளதென்பதைப் பெரும்பாலான மக்கள் விளங்கிக் கொள்ளாமலிருக்கின்றனர். சாதாரண மக்கள் புரிந்து கொள்ளமுடியாத எளிய மொழி நடையில் அது
வரையப்பட்டிருக்காமை ஒரு காரணமாகும்.
சீடோ அடக்கியுள்ள செய்திகள் பரவலாக சமூகத்தின் பல தளங்களிலுள்ளவர்களையும் குறிப்பாக இளைய தலைமுறை யினரைச் சென்றடைய வேண்டும், அதன் மூலமாக விழிப்புணர்வு ஏற்பட வேண்டுமென்பதற்காகச் சீடா நிறுவனத்தின் நிதியுதவியுடன் இக்கைந் நூலை வெளியிடும் திட்டத்தைப் பெண்கள் கல்வி ஆய்வு நிறுவனம் மேற்கொண்டது.
சென்ற ஒகஸ்ட் 8ந் திகதி சீடோ ஆவணத்தை எளிய நடையில் எழுதும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. பால் நிலை தொடர்பான விஷயங்களில் புலமைமிக்கவர்களான பேராசிரியர்கள் ரிறெஸ்ஸி லெபிட்டான், ரமணி ஜெயதிலக, கலாநிதிகள் சுபாங்கி ஹோத் மரியா கோமஸ், சட்டத்தானிகள் சியாமளா கோமஸ், ரேணுகா சேனநாயகா, றொக்கி ஆரியரத்ன, ரமணி ஜயசுந்தா ஆகியோனாக் கொண்ட குழு இப்பணியில் ஈடுபட்டது. ஆலோசகர்களாக பேராசிரியர் சாவித்திரி குணசேகராகவும், கலாநிதி செல்வி திருச்சந்திரனும் பங்களிப்புச் செய்தனர்.
ரமணி ஜயசுந்தா ஆவணத்தின் ஒவ்வொரு விதியையும் நுண்ணிதாகப் படித்து இலகுபடுத்தி எழுதி அதன் சிங்கள மொழி பெயர்ப்பையும் செய்தார். கே. டபிள்யு. ஜயரத்ன பொருத்தமான சித்திரங்களை இளைஞர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் அமைத்து உதவினார்.
திருகோணமலை வெளிக்கள உத்தியே
WOMENSE
擂
பயிற்சியாளர்கள் ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த பெண்ண ஆய்வாளர் கதி என்பவருடன் கானப்படுகின்றனர்.
(ப்ரவாகினி
 
 

இக்கைந்நூல் மிக நெருக்கமாகவும், பெரிதாகவும்
அமைந்ததால், சீடா நிறுவன இனக்கத்துடன் சிங்களத்திலும், ஆங்கிலத்திலும் ஒன்றும், தமிழிலும், ஆங்கிலத்திலும் மற்றொன்றுமாக அச்சிடப் பெற்றன. இக் கை நூலின்
வெளியீடு நவம்பர் 13 அன்று நடைபெற்றது. நாட்டின் பல இடங்களில் இந் நூலின் அறிமுகம் இடம் பெறவுள்ளதுடன் நாடெங்குமுள்ள பாடசாலைகளுக்கும் இந் நூல் அனுப்பி
வைக்கப்படவுள்ளது.
J J5Tjbj56J6)ITT JsfilJj Tகத்தர்களுக்குப் பயிற்சி
' .
t
திருகோணமலையில் இயங்கிவரும் காந்தி சேவா சங்கத்தின் கோரிக்கைக்கு இனங்க அவர்களின் மூன்று வெளிக்கள உத்தியோகத்தர்களுக்குப் பயிற்சி அளிக்கும் நிகழ்ச்சித் திட்டம் பெண்கள் கல்வி ஆய்வு நிலையத்தில் சென்ற அக்டோபர் 27 முதல் 31 வரை நடைபெற்றது. அரசு சாராத் தொண்டர் அமைப்புகளின் செயற்பாட்டாளர் களுக்கான பன்முக நிகழ்ச்சித் திட்டத்தின் முக்கிய அம்சங்களான பால் நிலை பற்றிய விழிப்புணர்வூட்டல், தலைமைத்துவப் பண்புகள், நிகழ்ச்சித் திட்டமொன்றை வரைவதெப்படி, பெண் சமத்துவம், அரசு சாராத் தொண்டரமைப்புகள் கடைப்பிடிக்க வேண்டிய உத்திகளும், வழிமுறைகளும் பற்றி இத்துறைகளில் அனுபவம்மிக்க விரிவுரையாளர்களால் பயிற்சி அளிக்கப்பட்டது.

Page 6
ஆப்கானில் பெண்க
14 அடிச் சுவர்களின் பின்னால், குண்டுத் தாக்குதல் ஏற்படுமோ என்ற அச்சத்தின் மத்தியில், கனவன்மாரின் அனுமதியின்றி, 31 ஆப்கானியப் பெண்கள், தலிபான் நகரின் முக்கிய பகுதியில் தமது வாழ்க்கை சிறப்புற அமைய வேண்டுமென்பதற்காக உயிராபத்தான சூழ்நிலையையும் மீறிக்கொண்டு ஒன்று கூடினர்.
“பெண்கள் அடிமைகளாக விற்கப்படக் கூடாது. யாரைத் திருமணம் முடிப்பதென்பதைத் தீர்மானிக்கும் உரிமை பெண்களுக்கு வேண்டும். பெண்களுக்குக் கல்வி வாய்ப் பளிக்கப்பட வேண்டும்'என்பவையே அந்த ஒன்றுகூடலில் கலந்து கொண்ட பெண்களில் உளமார்ந்த உறுதிப்பாடான கோரிக்கைகள்
ஆனால் பெண்கள் தலையிலிருந்து கால்வரை கறுப்பு உடையால் மூடிக்கொள்ளாவிடில், மிகமோசமான தாக்குதலுக்கு உள்ளாக்கப்படக்கூடிய ஆப்கானிய சமுதாயத்தில், இவர்களின் கோரிக்கைகள் புரட்சிகரமானவைகளென்றே கருதப்படுகிறது.
“மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு நாம் பல தியாகங்களைப் புரிய வேண்டும். எமது தந்தைமாரின் பெயர்களுக்கு இழுக்கு ஏற்படுத்திவிட்டார்கள் என எம்மைச் சனங்கள் கூறுவார்கள்."வேசிகள்" நெறிதவறியவர்கள் எனத் திட்டுவார்கள். அவர்கள் திட்டட்டும். எமது உரிமைக்காக நாம் போராடாவிட்டால் வேறுயார் போராடுவது?" என அதில் கலந்து கொண்ட பாஹிமா வோர்கெட்ஸ் என்ற பெண்மணி ஆக்ரோஷமாகக் கருத்துத் தெரிவித்தார்.
அங்கேயுள்ள கடைவீதிகள், மசூதிகளில் அலைந்து கொண்டிருக்கும் தலிபான் மற்றும் அல்குவைதா இயக்க ஆதரவாளர்கள், குண்டுத்தாக்குதல் நடத்தலாம் என்ற
பெண்களின் உரிமைகள் பற்றி
 

ளின் உரிமைக்குரல்!
அச்சத்தின் காரணமாக இப்பெண்களின் சந்திப்பு ஒர் இரகசியமான இடத்திலே நடைபெற்றது. "பெண்கள் வீட்டுக்குள்ளே அடங்கியிருந்து குழந்தைகளைப் பாாமரிப்பதற் கென்றே படைக்கப்பட்டவர்கள். ஆண்கள் சம்பாதித்து உணவுக்குத் தேவையானவற்றைப் பெற்றுக் கொடுப்பதால், பெண்கள் வெளியே செல்லவோ, தொழில் பார்க்கவோ வேண்டிய தேவையில்லை” என்பது அங்குள்ள ஆண்களின் நிலைப்பாடு.
ஆப்கானிஸ்தான் பெண்களில் 95 வீதமானோருக்கு எழுத்தறிவில்லை. வெகு சிலர் மட்டுமே ஒரு கடைத் தெருவைக் கண்டிருப்பர். திருமணமானதன் பின்னர் பலர் விட்டுக்கு வெளியே வந்ததேயில்லை, அங்கு திருமணம் என்பது ஆண் பாலார் தீர்மானிக்கும் விஷயம் தனக்கு விருப்பமான பெண்ணை ஒரு ஆண் விலைக்கு வாங்கலாம், விற்கலாம் அல்லது மற்றொருவனுக்குத் தனது மனனவியைக் கொடுத்து அவனின் மனைவியைப் பரிமாற்றம் செய்து
கொள்ளலாம்.
இச் சந்திப்பின் ஏற்பாட்டாளர்களில் ஒருவரான மசூதா சுல்தான் அந்நாட்டுப் பெண்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கு, காபூல் போன்ற நகரங்களிலும் பார்க்க, பின்னடைந்த பிற்போக்கான பகுதிகளில் இவ்வாறான நிகழ்ச்சிகளை எதிர்காலத்தில் நடத்த வேண்டும் என்றும், வீடுகளுள் அடைபட்டுக் கிடக்கும் பெண்களையும், பாடசாலைக்குப் போகாமல் தடுக்கப்பட்டிருக்கும் பெண்களையும் இவ்வாறான நிகழ்ச்சிகளுக்கு அழைத்துவரப் போவதாகவும் உறுதியாகத் தெரிவித்தார்.
த் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்
பெண்கள் கல்வி ஆய்வு நிறுவனம் சிடாவின் உதவியோடு தொசிைக்காட்சி நிகழ்ச்சிகள்
மூலமாகப் பெண்களுக்குள்ள உரிமைகள், சமூகத்தில் கலாசாரத்தில், இலக்கிபத்தில் பெண்கள்ைப் பற்றிய சித்தரிப்பு, ஊழியமும், உாதியமும், கட்டாயக் கரு அழிப்பு மற்றும் வன்முறைகள் முதலியவற்றை விளக்குவதற்கான திட்டமொன்றினை மேற்கொண்டுள்ளது. இது பற்றிய நிகழ்ச்சிகளை நடத்தவுள்ள குழுவினருடனான சந்திப்புகள் பெ. க. ஆ. நி. கேட்போர் கூடத்தில் நடைபெற்றன.
பிளாகினி)

Page 7
சூரிச் நகரில் பெண்கள் சந்திப்பு
மாற்று இலக்கியக் கலாச்சாரம் ஒன்றைப் புகலிட மண்ணில் நிறுவுவதற்கான முயற்சிகளில் சென்ற 13 வருடங்களாக ஈடுபட்டு வரும் புகலிட பெண்கள் சந்திப்பு தனது 22ஆவது ஒன்று கூடவே சென்ற 11.10.2003 அன்று சூரிச் நகரில் நடத்தியது. சொந்த மண்ணில் கலாசார இறுக்கங்களைக் காத்து வரும் ஆணாதிக்கக் கருத்தியல்களைக் கேள்விக்கு உட்படுத்துவதும், புகலிடத்தில் புதிதாக எதிர் கொள்ளும் வாழ் நிலைச்சிக்கல்கள் குறித்து கருத்துக்களைப் பரிமாறிக் கொள்ளும் ஒரு களமாக இச்சந்திப்பு செயற்பட்டு வருகிறது. புலம் பெயர்ந்த போதிலும், மதமும் சாதியும் சீதனமும் திருமணங்களில் பல தாக்கங்களை ஏற்படுத்தி வருகின்றன. புலம் பெயர்ந்த தமிழர்களிடையே இயங்கிவரும் வானொலி, தொலைக்காட்சி, பத்திரிகைகள் ஆகிய ஊடகங்கள் ஆனாதிக்கக் கருத்தியல்களையே தொடர்ந்தும் அழுத்தி வருகின்றன. எனினும் புகவிடப் பெண்களில் அறிவியலாய்வாளர்களான குறிப்பிட்ட எண்ணிக்கையான பெண்களே தம்மைச் சூழ்ந்துள்ள மோசமான சமூக அமைப்புக்கு எதிராக இவ்வாறான சந்திப்புகளில் குரல் எழுப்பி வருகின்றனர். இச்சந்திப்பில், ஜெர்மனி, பிரான்ஸ், லண்டன், சுவிட்சர்லாந்து ஆகிய இடங்களில் வாழும் முற்போக்குச் சிந்தனை கொண்ட பல பெண்கள் பங்குபற்றி உரையாடல்களை நடத்தினர். பெண்ணியக் கருத்துக்களைக் கொண்ட குறும் படங்களும் திரையிடப்பட்டு விமர்சிக்கப்பட்டன. பத்து ஆண்டுகளுக்கும் மோகப் பெண்ணியச் செயற்பாடுகளில் ஈடுபட்டு வரும் சுவிட்சர்லாந்தில் வாழும் றஞ்சி இச் சந்திப்பை இம்முறை எற்பாடு செய்திருந்தார்.
ஹெடகப் பெண்கள் அழைப்பு உருவாகியது
தமிழ் ஊடகங்களில் பணியாற்றும் பெண்கள் தமது ஆற்றல்களை வளர்த்தெடுக்கவும், அவர்களை எதிர் கொள்ளும் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண்பதற்குமென அண்மையில் "ஊடறு' என்னும் அமைப்பைத் தோற்று வித்துள்ளனர். இதன் தொடக்க வைபவம் ஹோட்டல் "ரேணுகா கருத்தரங்கு மண்டபத்தில் தேசிய சமாதானப் பேரவையின் அனுசரனையுடன் நடைபெற்றது. பிரதான உரைகளைக் கலாநிதி செல்வி திருச்சந்திரன், ஷாமினி பொயில், மதுசூதனன், சாந்தி சச்சிதானந்தன் முதலியோர்
நிகழ்த்தினர். இதன் தலைவராகப் பத்மா சோமகாந்தன் செயலாளராக எம். தேவகெளரி, பொருளாளராக விஜிதா மற்றும் செயற்குழு உறுப்பினர்களும் தெரிவு செய்யப்பட்டனர்.
 

تئینی
பெண்கள் கல்வி ஆய்வு நிறுவனத்தின்
ரே ாக்கம்
נח! பால்நிலைச் சமத்துவத்தை எய்து வதற்கு முயற்சிகளை எடுத்தல்,
எங்களுடைய பணித்திட்டமும் குறிக்கோளும் மூன்று கருத்தியலை உள்ளடக்கும் :
1. பெண்கள் சகல துறைகளிலும் சமத்துவ அந்தஸ்தை எய்துவதற்கு வழிகோலல்.
2. மதச் சார்பற்று பல்லின வேறு பாடுகளை மதிப்பதும் ஏற்று நடப்பதும்,
3 ஜனநாயகப் பண்புகளுக்கு மதிப்புக் கொடுத்து அவற்றை நடைமுறைத் தத்துவங்களாக ஏற்றுக் கொள்வது.
எமது நூலகம்
எமது நூலகத்தில் சமூகவியல், பெண்ணியம், அரசியல், மனித உரிமைகள், மதம், தகவலூடகங்கள் சம்பந்தமான நூல்கள், பருவ இதழ்கள், வீடியோ நாடாக்கள் முதலியவற்றுடன், தமிழ், சிங்கள, ஆங்கிலத் தினசரிப் பத்திரிகைகளின் செய்தி நறுக்குகளும் வகைப்படுத்தப்பட்டு ஆவணப்படுத்தப் பட்டுள்ளன.
ஆய்வாளர்கள், விரிவுரையாளர்கள், மானவர்கள், சமூகவியலாளர்கள், பத்திரிகையாளர்களுக்கு இவை மிகவும் பயனுள்ளவை. ஆவணங்களைப் போட்
டோப் பிரதிசெய்யும் வசதியும் உண்டு.
தொடர்புகட்கு :
பெண்கள் கல்வி ஆய்வு நிறுவனம், 58, தர்மராம வீதி, கொழும்பு - 06 தொலைபேசி : 2595296, 2596826
s
----
7 )

Page 8
ஊடக வம்ை
தொடரும் பாலிய வல்லுறவு உள்நாட்டில்
* எல்பிட்டிய பிட்டிகல எனும் கிராமத்தைச் சேர்ந்த சாந்தினி குமாரி என்னும் 14வயதுச் சிறுமியை அவரது சிறிய தந்தை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய பின் கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளான். இச்சிறுமியின் தாய் வெளிநாடொன்றில் வேலை புரிவதற்காகச் சென் றுள்ளதால், உறவுக்காரப் பெண்ணொருவருடன் இவள் வசித்து வந்தாள்.
* கலேவெல பொலிஸ் பிரிவில், சிறுமி ஒருத்தியைப் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய ஒருவன், சில நாட்களின் பின் வெளிநாட்டுக்கு வேலை தேடிச் சென்று விட்டான். சிறுமியின் தந்தை மரணமடைந்த பின் சிறுமியின் தாயார் வெளிநாட்டுக்கு வேலை புரியச் சென்று விட்டதால் சிறுமி ஓர் உறவினர் வீட்டில் தங்கியிருந்த போதே வல்லுறவுக்கு உட்பட்டிருக்கிறாள். அவளுக்கு வயிற்றில் தாங்கமுடியாத வலியேற்பட்டதால் மருத்துவரிடம் சிகிச்சைக்காகச் சென்றபோது அச்சிறுமி 4மாத கர்ப்பமாக இருப்பது தெரிய வந்தது.
* வவுனியா சூடுவெந்த பிலவுக் கிராமத்தில், பெற்றோர் களால் கைவிடப் பெற்ற 14வயதான சிறுமியை, நடுத்தர வயதுள்ள இரு பிள்ளைகளின் தந்தையொருவர் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கியுள்ளார். இச்சிறுமி மீது பாலியல் குற்றம் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வந்ததாக இவரை மருத்துவ பரிசோதனை செய்த அனுராதபுரம் சட்ட வைத்திய அதிகாரி நீதிமன்றத்தில் அறிக்கை சமர்பித்துள்ளார்.
※
நோர்வூட் பகுதிப் பாடசாலையொன்றில் கல்லிபயிலும் ஏழுவயதுச் சிறுமியொருவரை அவர் பாடசாலையில் இருந்து வீட்டுக்குத் திரும்பிக்கொண்டிருக்கும் வழியில், இரண்டு பிள்ளைகளின் தந்தையொருவர் அருகிலுள்ள விடுதியொன்றிற்குக் கூட்டிச் சென்று வல்லுறவு புரிய முயற்சித்துள்ளான்.
※
கல்முனையில் காமவெறிபிடித்தலையும் காடையர் கும்பல் ஒன்று இளம் பெண்கள் வேலைத்தலங்களுக்கும் பாடசாலைகளுக்கும் செல்லும் வழியில் இப்பெண்களை நோக்கி ஆபாசவார்த்தைகளைப் பிரயோகிப்பதும், புகைப்படம் எடுக்க முயற்சிப்பதும், பஸ்களில் பயணிக்கும் போது சேட்டை புரிவதுமான இழிசெயல்களில் ஈடு பட்டிருப்பதனால், இளம் பெண்களும் அவர்களின் பெற்றோரும் பெரும் பீதியடைந்துள்ளனர்.
* மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த பெண் நோயாளி ஒருவரைப் பராமரிக்கத் தங்கியிருந்த இளம் பெண்ணை அந்த வைத்தியசாலையில் தங்கியிருந்த ஒருவர் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்த எத்தனித்துள்ளார்.

ல்வதால்லைகள் வதைகள்
వడ
MŠN
N ※
入爱夕 ※
\፻፶፭ ※
பண்டாரவளையைச் சேர்ந்த பிரொட்டன் தோட்டத்தைச் சேர்ந்த 21 வயதான வாசுகிக்கும் அவளின் கணவனுக்கும் இடையே ஏற்பட்டுள்ள குடும்பப் பிணக்கினால், மனைவி மீது மண்ணெண்ணெயை ஊற்றித் தீமூட்டி கணவன் கொலை புரிந்துள்ளான்.
மாவனல்ல குருமிய பகுதியில் ஒரு பெளத்த பிக்குவினால் நிர்வகிக்கப்படும் ஆயுர்வேத நிலையத்தில் கல்விகற்று வந்த 22வயது யுவதி பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப் பட்டதால் கழுத்தில் சுருக்கிட்டுத் தற்கொலை புரிந்து கொண்டாள். மேற்படி பெளத்தபிக்கு இந்த யுவதியை அச்சுறுத்தித் தனது ஆசைக்கு இணங்குமாறு வற்புறுத்தியபோது, அதற்கு அவள் சம்மதிக்காததால், பலவந்தப்படுத்தி பாலியல் வல்லுறவு புரிந்தார்.
கந்தானை கனேகொடையைச் சேர்ந்த 10வயதுச் சிறுமி மீது 28 வயது வாலிபர் பாலியல் வலோற்காரம் புரிந்துள்ளார். அதனை எவருக்கும் தெரிவிக்கக் கூடாது எனவும் அப்படித் தெரிவித்தால், அச்சிறுமியின் தந்தையைக் கொலை செய்து விடுவதாகவும் அச் சிறுமி அச்சுறுத்தப்பட்டுள்ளாள்.
வடக்குக் கிழக்கில் 5 வயது முதல் 18 வயதிற்குட்பட்ட 94 ஆயிரம் சிறுவர்கள் பாடசாலை செல்வதை இடைநடுவில் கைவிட்டுள்ளனர் என வடக்கு கிழக்கு மாகாணக் கல்வி அலுவலக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. பாடசாலை செல்லாத சிறுவர்கள் பற்றி ஆராய்வதற்கான கருத்தரங்கொன்றில் இத்தகவல்வெளியிடப்பட்டிருக்கிறது.
சட்ட விரோத கருக்கலைப்பு தடைசெய்யப்பட்டுள்ள போதிலும் நாளாந்தம் நூற்றுக்கு மேற்பட்ட சட்ட விரோத கருக்கலைப்புகள் நடைபெற்று வருகின்றன. கருக் கலைப்புச் சட்டத்தைத் திருத்தி நெகிழ்வுபடுத்துமாறு பெண்கள் அமைப்புகள் பல காலமாக வலியுறுத்தி வந்ததன் பயனாக, அத்தியாவசியமான நிலைமைகளில் கருக்கலைப்புக்கு அனுமதி வழங்க நீதி அமைச்சர் தீர்மானித்துள்ளதாக அறியப்படுகின்றது.
யாழ்ப்பாணக் குடா நாட்டில் அரசியல் பணியை மேற் கொள்வதைத் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு ஆரம்பித்து 20 மாத காலத்தில் தாம் அங்கு வருவதற்கு முன்னர் இடம் பெற்ற பாதிப்புகள் பற்றித் தமக்கு 2883 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக யாழ் மாவட்ட அரசியல் துறைப் பொறுப்பாளர் சி. இளம்பரிதி தெரிவித்துள்ளார். பெண்களுக்கு எதிராக மேற் கொள்ளப்படும் வன் முறைகள், சித்திர வதைகள் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டிய அவசியம் எழுந்துள்ளதாகவும் அவர் கூறினார்.
பிரவாகினி)

Page 9
வெளிநாட்டில்
NM ※
தமிழ் நாட்டின் கோயம்புத்தூரில் 5 ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்து கொண்ட கீதாஞ்சலி - சீனிவாசன் ஆகியோருக்கு ஒரு பெண் குழந்தையும் உள்ளாள். கணவன் ஒய்வு பெறும் போது நிர்வாகம் ஒரு இலட்சத்து 50 ஆயிரம் ரூபாவை பணிக்கொடையாக அளிக்கத் தீர்மானித்தது. அப்பணத்தைத் தனக்குத் தருமாறு கீதாஞ்சலி நிர்வாகத்துக்குக் கடிதம் எழுதியதால், தம்பதியளிடம் சச்சரவு மூண்டு, மனைவி விவாகரத்துக் கோரிய நிலையில், ஒரிரவு கீதாஞ்சலி, அவளின் குழந்தை, கீதாஞ்சலியின் தாய் அமிர்தம் ஆகிய மூவரும் தடியால் தாக்கப்பட்டு, கழுத்து வெட்டப்பட்டுக் கொலையுண்டனர்.
பஞ்சாப் மாநிலத்தின் ஜலந்தர் மாவட்டத்திலுள்ள போதிப்பூர் கிராமத்தைச் சேர்ந்த ஜஸ்பீர்சிங் என்ற
இளைஞரும் சுனிதா என்ற இளம் பெண்ணும் ஒருவரை
ஒருவர் உயிருக்குயிராக காதலித்தனர். சுனிதாவின் பெற்றோர் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். சுனிதாவைப் பார்க்க அவளின் காதலன் சென்றபோது, இருவரையும் கட்டி வைத்து அவளின் பெற்றோர் அவர்களை இரும்புக் கம்பிகளால் அடித்துக் கொலை செய்தனர்.
ஒரிசா மாநிலத்திலுள்ள தென் கனல் மாவட்டத்திலிருக்கும் சுந்தார் படா கிராமத்தில் வசித்து வந்த தீபேந்திர பேக்ரா என்பவர் தனது மனைவி பெண் குழந்தையைப் பிரசவித்ததனால் குழந்தையைப் பார்த்து வெறுப் படைந்தார். தாயின் கையிலிருந்த குழந்தையைப் பறித்தெடுத்து மாடியிலிருந்து தூக்கி எறிந்தான். பிறந்து ஒரே நாளான ஏதும் அறியாப்பிஞ்சு உடல் சிதறிப் பரிதாபமாகப் பலியாகியது.
ஆக்ராவிலுள்ள தாஜ்மஹாலைப்பார்வையிட வந்த மூன்று தென் கொரியப் பெண்களை, சென்ற நவம்பர் மாத முற்பகுதியில் வனத்துறை அதிகாரிகள் இருவர் தமது இச்சைகளுக்குப் பலியாக்கினர். இப்பெண்கள், இச் சம்பவம் பற்றி ஆக்ரா பொலிசில் முறைபாடு செய்த போதிலும், அதனை ஏற்கப்பொலிஸ் அதிகாரி மறுத்ததால் தென் கொரியத் தூதரகத்தில் முறையிட்டுள்ளனர். சென்ற ஒக்டோபர் மாதம் சுவிஸ்நாட்டுப் பெண் இராஜதந்திரி புதுடில்லியில் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டார். அதற்குச் சில வாரங்களின் முன் இந்திய ஜனாதிபதியின் பாதுகாப்புப் பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள் சிலர் மாணவியொருவரைப் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தினர்.
இந்தியாவின் பல பகுதிகளிலும் கருவிலேயே பெண் குழந்தைகள் கொல்லப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. கடந்த 10 ஆண்டுகளில் 15 லட்சத்துக்கு மேற்பட்ட பெண் சிசுக்கள் கருவிலேயே கொல்லப் பட்டுள்ளன. வரதட்சணைக் கொடுமை, கருவிலேயே பெண் சிசுக்கள் கொல்லப்படுவது போன்ற பெண்களுக் கெதிரான சம்பவங்கள் இலைமறைகாயாக நிகழ்ந்தபடி உள்ளன.
(பிரவாகினி

* அமெரிக்காவில் இருந்து வெளிவரும் 'இகொனமிஸ்ட்
செய்தித்தாள் ஒரு விசித்திரமான செய்தியை வெளியிட்டுள்ளது. விவாகரத்துப் பெற்ற ஆண் அல்லது பெண் மறுமணம் செய்து கொள்ள விரும்பினால் அவளுக்கோ அவனுக்கோ ஆண் குழந்தை இருந்தால் மாத்திரமே அவர்கள் மறுதிருமணம் செய்ய முன் வரும் நடைமுறை அமெரிக்காவில் ஏற்பட்டுள்ளதாகவும் பெண்பிள்ளைகளை வளர்ப்பதில் அதிகளவு பணத்தைச் செலவழிக்க வேண்டியிருப்பதனாலேயே அமெரிக்க ஆண்களின் மனோநிலையில் இவ்வாறு மாற்றம் ஏற்பட்டிருப்பதாயும் 'இகொனமிஸ்ட் தெரிவித்துள்ளது.
* நியூயோர்க் நகரைச் சேர்ந்த ஸ்பென்ஸர் ரியுனிக்ஸ் என்பவர் சென்ற ஒக்டோபர் மாத இறுதியில் கிராண்ட் ரேமினல் வளாகத்தில் அதிகாலை 3 மணி முதல் இரவு 8மணி வரை 450 பெண்களை நிர்வாணமாக பல வித கோலங்களில் நிற்க வைத்து அவர்களின் உடல்களை சிலைகள் கட்டடங்கள் போன்ற உருவங்களாக ஒருங்கமைத்து ஒளிப்பதிவுசெய்துள்ளார். இவர் ஏற்கனவே நிர்வாணப் பெண்களைக் கலைவடிவங்களாக்கிப் படம் பிடித்ததனால் பல தடவைகள் பொலிஸாரிடம் மாட்டுப் பட்டவர். எனினும் இவர் தன் தொழிலைத் தொடர்ந்த வண்ணமுள்ளார். இதுவரை இவர் 3500 பெண்களை நிர்வாணக் கோலத்தில் கலை வடிவங்களாக்கியுள்ளார். இவரின் ஒளிப்பதிவு நாடாக்கள் விரைவில் வெளியிடப் படவுள்ளன.
* ஈரான் நாட்டில் இஸ்லாமியக் கோட்பாடுகளை மீறிய குற்றத்துக்காக (?) 7 பெண்களுக்கு 50 கசையடித் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. தென் மேற்கு நகரான ஷிராசில் உள்ள குடியிருப்பொன்றில் வாழும் இப்பெண்கள் ரம்ழான் காலத்தில் அழகாக உடையணிந்து பாடல்களை இசைத்தமைக்காகத்தான் இத்தண்டனை வழங்கப்பட்டது.
அபுதாபியில் அடுத்தடுத்துப் பாலியல் வல்லுறவுக்குள்ளான பணிப் லயன்
இலங்கையைச் சேர்ந்த ஒரு பெண் அபுதாபியில் உள்ள வீடொன்றில் பணிப் பெண்ணாகத் தொழில் புரியச் சென்றிருந்தாள். மூன்று மாதங்களுக்குள் அவள் பணிபுரியும் வீட்டு எஜமானன் புரிந்த கொடுமைகள் அடி உதைகளைத் தாங்க முடியாமல் அவள் தன்னை அங்கு அனுப்பி வைத்த வேலைவாய்ப்பு நிறுவனத்தின் அபுதாபி அலுவலகத்தில் முறையிட்டபோது, அங்குள்ள இலங்கைத் தூதரகத்தை நாடுமாறு அவர்கள் தெரிவித்தனர்.
இலங்கைத் தூதரகத்துக்குச் சென்றபோது வழியில் தனியான ஓரிடத்தில் அவளைக் கூட்டிச் சென்று அங்கு ஒரு நாள் முழுவதும் இரு வெளிநாட்டவர்கள் மாறிமாறி அவளை வல்லுறவுக்குட்படுத்தினர். மறுநாள் அவள் தூதரகத்துக்குச் சென்று தனது பரிதாப நிலையை கூறியபோது, தூதரகம் துரிதமாக செயற்பட்டதால் குற்றவாளிகளைப் பொலிஸ் கைது செய்து நீதிமன்றத்தில் நிறுத்தியது.
9 D

Page 10
நீதிமன்றின் தீர்ப்பை எதிர்பார்த்து, தூதரகத்தில் அப்பெண் தங்கியிருந்த காலத்தில், தூதரகத்தில் பணியாற்றும் இலங்கை அதிகாரி ஒருவரே அவளை மாறி மாறிப் பாலியல் வல்லுறவு புரிந்துள்ளார். தூதரக அதிகாரி புரிந்துள்ள வல்லுறவு பற்றிய விபரங்களை எழுத்து மூலமாகத் தூதுவரிடம் சமர்பிக்க முற்பட்டபோது, மற்றொரு அதிகாரி அதனைத் தடுத்து விட்டார், தமது சகாவைப் தப்பவைப்பதற்காக!
இலங்கைத் தூதுவரின் செயலாளர் தனது வீட்டிற்கு இப் பெண்ணைக் கூட்டிச் சென்று ஒரு வாரம் வைத்திருந்து வேலை வாங்கினாள். செயலாளராகிய பெண் அலுவலகம் போன பிறகு, அவளின் கணவன் தினமும் இப் பெண்னை வல்லுறவு புரிந்துள்ளான். அபுதாபியிலுள்ள இலங்கைத் தூதரக அதிகாரிகளால், தூதுவரகத்துக்குத் தஞ்சம் கோரிச் செல்லும் இலங்கைப் பெண்கள் பலர் தன்னைப் போலவே பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்படுவதாக இப் பெண் கூறுகிறாள்.
நீதிமன்றத் தீர்ப்பு ஓராண்டு கழித்து வெளிவந்த போது அவளுக்கு 20 லட்சம் ரூபா நட்ட ஈடாக வழங்க வேண்டுமென நீதி மன்றம் தீர்ப்பளித்தது. எனினும் சுமார் ஒராண்டு காலமாக நீதிமன்றத் தீர்ப்பை எதிர்பார்த்து அவள் அங்கு தங்கியிருந்த போதிலும் நட்டஈட்டை அவள் பெற்று கொள்ள முடியாமல், இலங்கைத் தூதரகம் அவளை நிர்ப்பந்தமாக இலங்கைக்குத் திருப்பி அனுப்பிவிட்டது. செயலாளரின் கணவன் புரிந்த வல்லுறவு பற்றித் தூதுவரிடம் இப்பெண் முறைப்பாடு புரிந்த காரணத்துக்காகவே அவளைத் திருப்பி அனுப்பியது.
தான் அனுபவித்த கொடுமைகளைப் பற்றி விசாரணை நடத்துமாறும், தனக்கு கிடைக்க வேண்டிய நட்டஈட்டைப் பெற்றுத் தர உரிய நடவடிக்கை எடுக்குமாறும் இப் பெண் தொழிலமைச்சரிடம் விண்ணப்பித்திருப்பதாகச் சென்ற ஒக்டோபர் 12ந் திகதி திவயின’ பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
எமது குறிப்பு :
மேலே வெளியிடப் பெற்றுள்ள தகவல்கள் யாவும் அவ்வப்போது ஊடகங்களின் ஊடாக வெளிவந்த செய்திகள். வெளிவராமல் மூடி மறைந்து கிடப்பவை எத்தனை எத்தனையோ
இவ்வாறாகப் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள், வதைகள், வல்லுறவு, பெண்களைக் கொலை செய்தல் முதலிய செய்திகள் அடிக்கடி பத்திரிகைகளின் வாயிலாக வெளிச்சத்துக்குக் கொண்டு வரப்பட்டதன் விளைவாக, பொதுமக்களின் கவனத்தை ஈர்த்து, இவ்விடயத்தில் சமூகம் கரிசனை காட்டும் சூழ்நிலை உருவாகி உள்ளது. பெண்களுக்கு எதிராக இழைக்கப்படும் இவ்வாறான வன்முறைகளுக்கு எதிராகச் சர்வதேச மட்டத்திலும், உள்நாட்டு மட்டத்திலும், பெண்ணிலைவாத அமைப்புகள் தீவிர செயற்பாடுகளை மேற்கொள்ளவும், இக்குற்றங்கள் கிரிமினல் குற்றங்களாகச் சட்டக் கோவையில் சேர்க்கப்படவும் பத்திரிகைச் செய்திகள் தூண்டுகோலாக அமைந்தன.
CO

பெண்களுக்கு எதிரான வன்முறைகள் முக்கியமாகப் பாலியல் வன்முறையும், வீட்டு வன்முறையும் சர்வதேசமனித உரிமைகள் சட்டம், நடைமுறை என்பவற்றின்கீழ் மனித உரிமைகளாக அங்கீகரிக்கப்பட்டு, இவ்வுரிமைகளைப் பாதுகாப்பதை உறுதிப்படுத்தும் பொறுப்பை அரசாங்கங்கள் கொண்டுள்ளன.
1993ல் ஐ.நா. மனித உரிமைகள் மாநாட்டில், பெண்களின் உரிமைகளும் மனித உரிமைகளே எனப் பிரகடனப் படுத்தப்பட்டுள்ளது. இப்பிரகடனத்தில் பாலியல் வல்லுறவு, கொலை, தாக்குதல், வீட்டில் பெண்கள் மீது மேற்கொள்ளப்படும் வன்முறைகள், பாலியல் துஷ்பிரயோகம், பாலியல் தொல்லை முதலியவற்றைத் தடுப்பதற்கும், குற்றம் புரிபவர்களைத் தண்டிப்பதற்கும் அதிதீவிர அக்கறை எடுக்குமாறு அரசாங்கங்கள் கேட்கப்பட்டுள்ளன.
பெண்களுக்கெதிரான வன்முறைக் குற்றச் செயல்களைப் புரிவோரைத் தண்டிப்பதற்கான குற்றவியல் சட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளபோதிலும், அவை பல சந்தர்ப்பங்களில் கறாராகச் செயற்படுத்தப்படுவதில்லை. பாதிக்கப்பட்ட பெண்கள் பொலிசில் முறைப்பாடு செய்வதற்கு கூச்சமின்றிச் செல்லக் கூடிய சூழ்நிலையை அரசாங்கம் ஏற்படுத்த வேண்டும். ஒவ்வொரு பொலிஸ் நிலையத்திலும் பெண்பொலிசார் இதற்கென நியமிக்கப்பட வேண்டும். நீதிமன்றில் வழக்கு விசாரணைக்கு வரும்போது, வழக்கறிஞர்கள் அவமானத்துக் குரிய சங்கதிகளைக் கிளறி, பாதிக்கப்பட்ட பெண்களின் மனங்களை மேலும் புண்படச் செய்வார்கள் என்ற அச்சம் வன்முறைக்காளாகும். பெண்களின் மனங்களில் ஏற்படக்கூடிய காரணிகள் தவிர்க்கப்பட வேண்டும். விசாரணைகள், மருத்துவச் சோதனைகள் இழுத்தடிக்கப்படாமல், துரிதகதியில் நடைபெற வேண்டும். விசாரணைக்கு வந்து போகும் வழியிலும் வசிப்பிடத்திலும் பாதிக்கப்பட்ட எதிராளியிடமிருந்து அச்சுறுத்தல் ஏற்படாமல் குற்றவாளிகள் செல்வாக்கு, அந்தஸ்து போன்ற காரணங்களின்ால் தப்பிக் கொள்ள முடியாதவாறு சட்டத்தையும் நீதியையும் நடைமுறைப்படுத்துபவர்கள் கண்காணிப்புடன் செயற்பட வேண்டும்.
இவற்றை முழுமையாக மேற்கொண்டாலன்றி பெண்களுக்கு எதிரான கொடுமைகள், வன்முறைகளைக் கட்டுப்படுத்துவதென்பது, அவற்றுக்கான சட்டங்களிருந்த போதிலும், வெறும் ஏட்டுச் சுரைக்காய்களாகவே இருக்கும். பெண்களுக்கெதிரான பாலியல் குற்றங்களும் வன்முறைகளும் தொடர்ந்து அதிகரித்த வண்ணமே இருக்கும்.
இந்நிலையை முற்றாக உடனடியாக ஒழிக்க முடியாவிட்டாலும் கட்டுப்படுத்துவதற்காகவாவது சட்டங்களும் நீதித்துறையும் சுறுசுறுப்பாகக் கருமமாற்றுமாறு வலியுறுத்து வதிலும் கண்காணிப்பதிலும் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஆலோசனைகளும் உதவிகளும் வழங்குவதிலும் பெண்கள் அமைப்புகளும், பெண்களின் உரிமைகளும் மனித உரிமைகளே என்பதை மதிக்கும் முற்போக்கு எண்ணங்கொண்ட ஆண்களும் மிகத் தீவிரமாகச் செயலாற்ற முன்வரவேண்டும்.
பிரவாகினி)

Page 11
மனவளர்ச்சியற்ற லியன்களை வல்லுறவு புரிந்தால் உச்ச தண்டனை
மனவளர்ச்சிபாதிக்கப்பட்ட பெண்ணொருவரைப் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய இந்தியாவிலுள்ள கோவாவைச் சேர்ந்த துளசிதாஸ் என்பவருக்குக் கீழ் நீதிமன்றம் 7 ஆண்டு சிறைத்தண்டனை விதித்ததைச் சரி எனப் புதுடில்லி உச்ச நீதிமன்றத்தின் இரு நீதியரசர்களைக் கொண்ட குழு தீர்ப்பளித்துள்ளது.
மனவளர்ச்சி பாதிக்கப்பட்ட இப்பெண்ணுக்கு 21 வயது. எனினும் மனதளவில் அவள் 12 வயதுச் சிறுமியாகவே இருக்கிறாள். தன்னைப் பாதுகாக்கத் தெரியாமல் பரிதவிக்கும் மனவளர்ச்சியற்ற பெண்ணைப் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்துவது உடல் ரீதியான வன்முறை மட்டுமன்றி, அந்த அப்பாவிப் பெண்ணின் உள்ளத்தைச் சிதைக்கும் செயலே என நீதிபதிகள் கருத்துத் தெரிவித்துத் தீர்ப்பளித்ததுடன் மனவளர்ச்சியில்லாத பெண்கள் மீது வல்லுறவு புரிபவர்களுக்கு அதிக பட்ச தண்டனை வழங்கக் கூடியதாக சம்பந்தப்பட்ட சட்டத்தில் திருத்தம் கொண்டுவருமாறு இந்தியப் பாராளுமன்றத்துக்குப் பரிந்துரையும் செய்துள்ளனர்.
&IC"Gone" &DeFastgj &DJ60Ueb Desofluj
கொலம்பியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விடுதலைக்காகவும் ஐரோப்பிய கிழக்கு நாடுகளைப் குரல் எழுப்பிவந்த எட் காரணமாகச் சென்ற செப்
பாலத்தீனம் பிரித்தால் வயதினனான செய்த்துட பெயர்ந்தனர். அங்கே கல் புலமை மிக்கவரானார்.
படிக்கும் காலத்தி6ே பங்களிப்புகளில் ஈடுபட்டு
இவர் பல நூல்களி (கீழைத்தேய வாதம்) என் ஏற்படுத்தியது. கீழை நாடுக கொடுங்கோன்மையுள்ள, பார்வையை அதிகார பூ நிறுவினார். மேற்குக்கும் கிழக்குக்கும் உள்ள உறவு என அழுத்தந்திருத்தமாக வெளிப்படுத்தியவர் செய்த்
(பிரவாகினி
 
 

பெண்கள் கல்வி ஆய்வுநிறுவனம்) தயாரித்துள்ள வீடியோ ஒளிநாடாக்கள்
பெண்களும் சட்டமும், பெண்களின் தொழில்சார் விடயங்கள். பெண்களும் வன்முறையும். தூ - நாடகம். ஊடகங்களில் பெண்களின் பிரதிபலிப்பு ஐ.நா.சபை சாசனங்களும் பெண்களும். பெண்களும் அரசியலும். குடும்பம் என்ற நிறுவனம். மலையகப் பெண்களின் பிரச்சனைகள், பெண்களின் இலக்கியமும் இலக்கியத்தில் பெண்களும்,
உளவியலும் பெண்களும். தூ - தூ நாடகம். பெண்களது உழைப்பு - பாரமுறி விளையாட்டு. (நாடகம்)
※ 米※※
※ ※※
முதலிய தலைப்புகளில், நிபுணத்துவம் பெற்ற பல பெண்ணிய ஆய்வறிவாளர்கள், பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் பங்குபற்றிய கலந்துரையாடல்களின் வீடியோ ஒளி நாடாக்களை, கருத்தரங்குகள், பயிற்சிப் பட்டறைகளின்போது காண்பிக்க விரும்பும் நிறுவனங்கள் இரவலாகப் பெற்றுக் கொள்ளலாம்.
தொடர்புகட்கு:
பெண்கள் கல்வி ஆய்வு நிறுவனம் 58 தர்மபாலா வீதி கொழும்பு - 6
தொலைபேசி: 2595296, 2596826 لـ - ܬ
(EDWARD SAID) 1ծյjծ5ծiձ եւ ձilցքՃՃլ.
பேரறிஞரும் இலக்கிய விமர்சகரும், பாலஸ்தீன பற்றிய தாழ்வான கருத்துக்களுக்கு எதிராகவும் ஓங்கிக் வர்ட் செய்த் (Edward Said) இரத்தப் புற்றுநோய் டம்பர் 26ந் திகதி நியுயோர்க் நகரில் காலமானார். ரியர்களின் ஆளுகையின் கீழ் இருந்த காலத்தில், இளம் ன் அவரின் பெற்றோர் அமெரிக்காவுக்குப் புலம் விகற்ற செய்த் ஆங்கிலத்திலும் அரபு மொழியிலும்
யே மத்திய கிழக்குப் பிரச்சினை பற்றிய விவாதப் பாலத்தீனத் தேசத்துக்காகக் குரல் கொடுத்தவர்.
ா ஆசிரியர். எனினும் இவரின் 'ஒறியண்டலிசம்' ) நூல் பலராலும் அறியப்பட்டு, பெரியதாக்கத்தை ள் புலன்களுக்கு அடிமையான, சோம்பேறித்தனமான, பின்தங்கிய சமூகம் ள்ன்ற ஐரோப்பியர்களின் தவறான வமாக இந்நூலில் செய்த் நிராகரித்து நியாயத்தை திகாரத்தைப் பற்றியது; ஆதிக்க முறைமை பற்றியது
D

Page 12
இளமிuறnயக் குற்றவாளி
●
சிறு குற்றங்களைப் புரிந்த இளம்பராயத்தினரும் அந இல்லங்களில் அவர்கள் பலவிதமான கஷ்டங்களை எதிர்ெ பாதுகாப்புப் பொறுப்பில் வைக்கப்பட்டுள்ள இவர்களில் ஒவ் வைக்கப்பட்டுள்ளனர். குடும்பத்திலுள்ளவர்களினால் பல்வி பாதுகாப்பான வீட்டுச் சூழல் மறுக்கப்பட்டிருக்கிறது. கெ காரணங்களுக்காக இவர்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்க இல்லாமையால் இவர்கள் அனைவரும் ஒரே இடத்திலேயே தங் குறைந்தளவு வசதிகள் கூட இல்லாத நிலையில் சிறுவர்கள் பணவசதியில்லாமைதான் இதற்கான காரணமென அறியப் இவர்களுக்குக் கிடைப்பதில்லை. அவர்கள் தடுத்து மட்டுப்படுத்தப்பட்டுள்ளன. இவ்வாறான வாழ்க்கை நிலைமை
மனித உரிமை நிறுவனம் என்ற தொண்டர் அமைப்பு இ சென்றிருந்தபோது அங்குள்ள இளம்பராயத்தினர் மோசமானநி வாகனங்களில் இச்சிறுவர்கள் நீதிமன்றத்துக்கு அழைத்துச்செ6 வைக்கப்படும் நிமாண்ட் சிறைகளில் இவர்களும் இரவில் அை இவர்கள்துஷ்பிரயோகத்துக்குள்ளாகின்றனர். சிறைச்சாலைநி1 செய்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதில்லை. இச்சி அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர். இவர்களுக்கு உளவியல் ரீதியா வைக்கப்பட்டுள்ள இவ்இளம்பராயத்தவர்களிற் பெரும்பாலோரி அவர்களுக்கு வசதிகளில்லை. களவு போன்ற சிறுகுற்றச் செய பிணையில் செல்வதற்குப் பணவசதியும் இவர்களிடம் இல்லை.
வாழ்க்கை பாதிக்கப்பட்ட இச்சிறார்களுக்கு பொருத்தமான பற்றி மனித உரிமைகள் நிறுவனம் தீவிர கவனஞ் செலுத்தி வ
If undelivered,
Pl. return to : Women's Education & Research Centre, 58, Dharmarama Road,
Colombo - 06.
(2

の○所 அனுபவிக்கும் அவலங்கள்
ாதைச் சிறுவர்களும் தடுத்து வைக்கப்பட்டுப் பராமரிக்கும் காள்கின்றனர். தென்னிலங்கையிலுள்ள இவ்வில்லங்களில் வொரு பிரிவினரும் பல்வேறு காரணங்களுக்காகத் தடுத்து கையான துஷ்பிரயோகங்களை அனுபவித்த இவர்களுக்கு, ாலை புரிந்தமை முதல் சிறுகுற்றங்கள் புரிந்தமை போன்ற 5ல் செய்யப்பட்டுள்ளது. வளங்களும் தங்குமிட வசதிகளும் க வைக்கப்பட்டுள்ளனர். வாழ்க்கைத் தேவைக்கு அவசியமான இங்கே வைக்கப்பட்டுள்ளனர் பராமரிப்புக்குத் தேவையான படுகிறது. கல்வி சுகாதாரக்கவனிப்பு மருத்துவ வசதிகள் வைக்கப்பட்டுள்ள இடத்திலேயே நடமாடும் வசதிகள் அவர்களின் இளமைப் பருவத்தையே பறித்து விட்டது.
வ்வில்லங்களிலுள்ளோரின் நிலைமைகளை மதிப்பிடுவதற்குச் லைக்கு ஆளாகியுள்ளதை அவதானிக்க முடிந்தது. சிறைச்சாலை ல்லப்படுகின்றனர். நீதிமன்றங்களில் வளர்ந்தவர்களை அடைத்து டத்து வைக்கப்படுவதால், உடல் ரீதியாகவும் பால் ரீதியாகவும் வாகத்துக்குமுறையிட்ட போதிலும் இந்நடைமுறையில் திருத்தஞ் றுவர்களின் அடிப்படை உரிமைகள் மறுக்கப்படுவதனால்இவர்கள் க ஆலோசனை உதவி அவசரமாகத் தேவைப்படுகிறது. தடுத்து ன்சார்பில் நீதிமன்றில் வாதிட சட்டத்தரணிகளை ஏற்பாடு செய்ய ல்களுக்காகவே இவர்களிற் பலர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்
尊
r வகையில் உதவிகளைப்புரிவதற்கான ஏற்பாடுகளைச் செய்வது
ருகின்றது.
பிரவாகினி)