கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: பிரவாகினி 2001.06

Page 1
இ பிரவ
WERC
பெண்கள் கல்வி,
குடும்பம் என்னும் தளத்தில் பெண்களுககு எதிரான வன்முறைகள்
குடும்பம் என்பது ஒரு கோவில் போன்றது. நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம். பெண்களே ஒரு குடும்பத்தின் குல விளக்கு போன்றவர்கள், இல்லற ஜோதி அவள். ஒரு பெண் இல்லாத விடு இலட்சுமிகரம் அற்றது எனப் பலவாறாகப் பெண்களைப் புகழ்ந்து பூசிப்பர். ஆனால் அந்த இல்லற ஜோதி எத்தனை இடர்ப்பாடுகள் மத்தியில் துவண்டு துடித்து ஒளி கொடுக்கிறது என்பதை யாரும் அறியமாட்டார்கள். எமது சமூக அமைப்பில் பெண் என்பவளுக்கு பாதுகாப்பு என்று போடப்படும் விலங்காக தகப்பன், கணவன், மகன் ஆகியோர் காணப்படுகிறார்கள். இளவயதில் தந்தையின் அதிகாரத்துள் அடங்குமவள், திருமணமான பின் கணவனின் அதிகாரத்துள் அடங்குமவள், வயோதிபப் பருவத்தில் மகனின் அதிகாரத்துள் அடங்கி மரணிக்கும் போது மட்டுமே அவளது அதிகார விலங்கு அவிழ்க்கப்படுகிறது.
எனவே இக்குடும்ப நிறுவனமானது பெண்களைப் பொறுத்த மட்டில் ஒரு கேள்விக் குறியாகவே இன்றுள்ளது. குடும்பத்தைப் பொறுத்தவரை கணவராலும் ஏனைய குடும்ப ஆண் உறுப்பினர்களாலும் பல வகையில் பெண்கள் வன்முறைக்கும் பலாத்காரத்திற்கும் உள்ளாகி வருகிறார்கள். இலங்கையில் இத்தகைய குடும்ப வன்முறைகள் அதிகரித்துள்ளமை சமீபத்திய ஆய்வுப் புள்ளி விபரங்கள் மூலம் தெரிகிறது. இவ்வகையில் அறுபது சதவீதத்திற்கு மேலான பெண்கள் குடும்ப வன்முறைக்கு உட்பட்டுள்ளமை தெரியவருகிறது.
குடும்ப அமைப்பில் ஆணாதிக்கச் சிந்தனையால் பெண்கள் அடிமைகளாக்கப்பட்டு ஒடுக்கப்பட்டு வன்முறைக்கு உள்ளாக்கப்படுவதனால் உளவியல் ரீதியான தாக்கத்திற்கு உள்ளாக்கப்படுகின்றனர். இது மாத்திரமா சிலவேளைகளில் பெண்பிள்ளைகள் தந்தை, சகோதரராலும் சொல் ரீதியாக வன்முறைக்கு உள்ளாக்கப்படுகிறார்கள். அநேகமாகப் பெண்களின் வாழ்க்கையில் இவ்வக்கிரமான சொற்பிரயோகங்கள் அவர்களை வாட்டி வதைக்கிறது. இவை நடைபெறும்
சந்தர்ப்பங்களை நாம் பின்வருமாறு வகைப்படுத்தலாம். ஆண் தனது விருப்பங்களை சுயநலன்களைப் பெண்

ாகினி
ஆய்வு நிறுவனம்
செய்தி மடல் இதழ் 15 ஆனி 2001
நறைவற்றத் தவறும் இடத்து அவளை வன்சொற்களால் அடக்க முற்படுகின்றான். குடிவெறியின் போதும் தன் சுயநிலை இழந்து இருக்கும் போதும் இந்நிலை உருவாக்கப்படுகிறது. பெண்களின் மீது ஏற்படும் தேவையில்லாத சந்தேகங்கள் இச்சூழ்நிலையை உருவாக்குகிறது. ஆணின் தவறுகளைப் பெண் சுட்டிக்காட்டும் போதும் திருத்த முற்படும் போதும் வன்முறைக்கு உள்ளாக்கப்படுகின்றாள். இத்தகைய சந்தர்ப்பங்களில் அடித்தல், உதைத்தல், வெட்டுதல், தீயினால் சுடுதல், குரல்வளையை நெரித்தல் போன்ற சித்திரவதைக்கு உள்ளாக்கப்படுகிறார்கள். ஆணைவிட பெண் கல்வியிலோ தரத்திலோ உயர்ந்து செல்கின்ற போதும் இந்நிலை ஏற்படுகிறது. பெண் தனது சுதந்திரத்தைப் பேண முற்படும் போது இந்நிலை ஏற்படுகிறது. அதிகமாக வேலைக்குச் செல்லாத
பொருளடக்கம்
ஆ குடும்பம் என்னும் தளத்தில் பெண்களுக்கு
எதிரான வன்முறைகள், இலையும் முள்ளும். உலகளாவியரீதியில் மகளிர் தினமும், நாடுகளும் அமைப்புக்களும் எடுத்துக் கொண்ட கருப்பொருளும், மலையகப் பெண்களின் மகளிர் தினம். கிழக்கு மாகாணத்தில் மகளிர் தினக் கொண்டாட்டங்கள். பெண்களும் அவர்கள் செய்யும் வேலையும், பெண்களும் மதங்களும், பெண் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கான பயிற்சிக்களம், % பெண்கள் கல்வி ஆய்வுநிறுவனம் தற்போது
இரண்டு வகையான செயற்திட்டங்களையும் ஒரு ஆய்வையும் மேற்கொண்டுள்ளது. % சந்தேகம் என்ற பெயரில் கைது பாலியல்
வல்லுறவு பின் சித்திரவதை, % வேலை நீக்கம் செய்யப்பட்ட பெண்
தொழிலாளிகளுக்கு நஷ்ட ஈடும் வேலையும் * குறைந்த வருமானத்தில் விற்கப்படும்
பெண்ணின் உழைப்பு 3. அரச ஊழியர்களாக இருக்கும் பாதுகாப்பு
படையினரால் தொடர்ந்து கொண்டிருக்கும்
ܥܶ
பாலியல் வன்முறை.

Page 2
பெண்கள் தங்கள் உழைப்பு இன்பங்கள் யாவற்றையும்
கணவனுக்கும் குழந்தைகளுக்கும் அர்ப்பணிக்கும் ஒரு தியாகச் சுடராக காணப்படுகிறார்கள். இன்றும் அவளது உழைப்போ அவளது தியாகமோ செல்லாக்
காசாகத் தான் காணப்படுகிறது.
சில வேளைகளில் குடும்பத்தில் ஆண்விடும் தவறுகளைச் சுட்டிக் காட்டி நியாயத்தைக் கூற முற்படும் போது உடல்ரியான தாக்குதலுக்கும் உள்ளாக்கப்படுகின்றாள். இத்தகைய சந்தர்ப்பங்களில் அடித்தல், உதைத்தல், வெட்டுதல், தியினால் சுடுதல், குரல்வளையை நெரித்தல் போன்ற சித்திரவதைக்கு உள்ளாக்கப்படுகிறார்கள்.
சில படித்த அறிவார்ந்த ஆண்களும், இலக்கிய வாதிகளும் கூட பெண்களைச் சொல்லாலும்,
உடம்பாலும் வன்முறைகளுக்கு உட்படுத்துவது மிகவும் விபரீதமாகவேபடுகிறது. "படிப்பது தேவாரம் இடிப்பது
சிவன்கோவில்." படித்து அவர்கள் பெற்ற அறிவுகூட சில சமயங்களில் பயனற்றவையாகவே காணப்படுகின்றன. எப்பொழுதும் ஆதிக்கம் செலுத்தும் ஆணுக்கு அடிபணிந்து போகும் பெண்ணின் நிலையை மாற்ற வேண்டும். நீதி, நியாயங்கள் இரு பகுதியினருக்கும் பொதுவானவையே. பேச்சினாலும், அடியினாலும் பெண்ணின் உரிமைகளை உருக்குலைக்கக் கூடாது. பெண்ணின் அணிகலன் அடக்கம் எனக்கூறி அவளை அடித்து அடக்க முற்படும் ஆணாதிக்க நிலை மாற வேண்டும்.
எவ்வளவு தான் துன்புறுத்தினாலும் பெண் சட்ட நடவடிக் கையை நாடும் போது பெண் களின் குற்றச்சாட்டுக்களை பொலிஸ் அதிகாரிகள் தட்டிக் கழிக்கின்றனர். அது மாத்திரமன்றி ஆணில் தங்கிவாழும் பெண்கள் வருமான பிரச்சினை காரணமாகவும் இவ்வன்முறைகளைத் தம் வாழ்வின் ஒரு அங்கமாகவே ஏற்றுக் கொள்கின்றனர். பிரவாகினி
 

எங்கள் கலாசாரத்தில் கணவனுக்கு அடங்கி வாழ்பவளே மனைவி என்று முத்திரை குத்தப்பட்டுள்ளது. அதைத் தாண்டுபவள் அடங்காப்பிடாரி, ஆண்மூச்சுக்காரி,
இல்லற வாழ்க்கைக்கு லாயக்கற்றவள் எனப் பலவாறு அவள் சமூகத்தில் இழிந்துரைக்கப்படுகிறாள்.
எனவே தொடர்ந்தும் இத்தகைய வன்முறைகளைத் தாங்க முடியாதவளாக தனித்தியங்கும் வல்லமையின்மை
போன்றவற்றால் பலப் பெண்கள் சட்ட நடவடிக்கையை
நாடுவதை விடத் தற்கொலை செய்வதே தமது
முடிவாகக் கொள்கின்றனர்.
இலையும் முள்ளும்
மகளிர் தினத்தை முன்னிட்டு பெண்கள் கல்வி
ஆய்வு நிறுவனம் 2001ம் ஆண்டு பங்குனி மாதம்
23ம் திகதி எங்கள் கருத்தரங்கு மண்டபத்தில் இலையும் முள்ளும் என்ற மலையாளத் திரைப்படம் காண்பிக்கப்பட்டு அது பற்றிய கலந்துரையாடலும் நிகழ்த்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் இருபத்தைந்து அங்கத்தவர்கள் பங்குபற்றினார்கள். ஆணாதிக்கச் சமுதாயத்தின் கீழ்ப் பெண்கள் படும் துயரங்களை இப்படத்தின் இயக்குனர் சிறப்பாக எடுத்துக் காட்டியுள்ளார். தப்புவதற்கே வழியில்லாமல் தவிக்கும் பெண்ணின் அவலம் அழகாகச் சித்தரிக்கப்பட்டுள்ளது. எந்தப் பக்கம் அவள் திரும்பினாலும் அவளை அனுபவிக்கத் துடிக்கும் ஆண்களின் சபலங்களை சாகடிக்கத் துணியும் அத்திரைப்படத்தின் கதாநாயகி இறுதியில் ஆணாதிக்க அலைகளால் அடிக்கப்பட்டு அனைந்து போகும் பரிதாப நிலை அனைவர் உள்ளத்தையும் உருக்கி விட்டது. வாழத் துடிக்கும் அப்பெண் இறுதியில் வழி தெரியாது வாடி வதங்கி விடுகிறாள். இன்றைய சமுதாயத்தில் எத்தனையோ பெண்கள் அனுபவிக்கும் துயரங்களை இப்பெண்ணின்
மூலம் அனைவர் முன்னும் கொண்டு வந்து நிறுத்தி
0

Page 3
வழிதேட வைக்கிறார் இப்படத்தின் இயக்குனர். முள்ளில் இலை பட்டாலும், இலையில் முள் பட்டாலும் இலைக்கே காயம். பெண்ணின் பரிதாபம்
படத்தை பார்த்தோரது சிந்தனையைத் தூண்டுகிறது.
உலகளாவியரீதியில் மகளிர் தினமும், நாடுகளும் அமைப்புக்களும் எடுத்துக் கொண்ட கருப் பொருளும்
கடந்த பங்குனி எட்டாம் திகதி மகளிர் தினம் உலகளாவிய ரீதியில் கொணி டாடப்பட்டது. ஊர்வலங்கள், மகாநாடுகள், கண்காட்சிகள் எனப் பலவகையாக இத்தினத்தை எல்லோரும் கொண்டாடினர். இலங்கை - மகளிர் தினம் தொடர்பாக ஜனாதிபதியின் உரையில் இந்த வருடம் வறுமை நிலையைக் கட்டுப்படுத்தல் என்பது கருப்பொருளாக அமைந்தது.
இந்தியா - பெண்களுக்கு சுகாதார நலன், கல்வி, சமமான வேதனம் என்ற கோரிக்கைகள் முன் வைத்து அழகிய வர்ண வர்ண புடவை அணிந்த பெண்களால் புதுடில்லியில் அணிவகுப்பு ஒன்று நடாத்தப்பட்டது.
துருக்கி - தலைநகரான அங்கரா வில் பெண்கள் பாலியல் ரீதியாக துஷ்பிரயோகப் படுத்துவதற்கு எதிராக அணிவகுப்புக்கள் நடத்தப்பட்டன. அத்துடன் பாலியல் வல்லுறவிற்குட்படுத்தப்பட்ட பெண்களுக்காக ஒரு நிமிட மெளன அஞ்சலியும் அனுஷ்டிக்கப்பட்டது.
மொகதிஷ - ஜனாதிபதியால ஒழுங்கு செய்யப்பட்ட ஆர்ப்பாட்ட பேரணியில் பத்தாயிரத்திற்கு மேற்பட்ட சோமாலியப் பெண்கள் பல வர்ண ஆடைகளை அணிந்து கலந்து கொண்டார்கள். யுத்தத்தின் கொடுரத்தையும் அழிவுகளையும் மட்டுமே பல தசாப்தங்களாகக் கண்டு வந்த அந்த நாட்டில் இது ஒரு புதுவித அனுபவமூட்டும் அற்புத நிகழ்வாக இருந்தது.
மலையகப் பெண்களின் மகளிர் தினம்
மலையகப் பெண்கள் கடந்த நூற்று எழுபத்திரண்டு வருடங்களாகத் தேயிலைத் தோட்டங்களில் அடக்கப்பட்டு ஒடுக்கப்பட்டு சுரண்டப்பட்டவர்களாகவே காணப்படுகிறார்கள். மலையகப் பெண்களில் தொண்ணுறு வீதத்தினர் வேலைக்குச் செல்பவர்களாகக் காணப்படுகின்றனர். ஆனால் இவர்களுடைய விழிப்புணர்ச்சி அற்ற நிலைக்கு மலையகத்தில்
ligaraéla
My

பெண் களின் தலைமைத்துவம் இன்றுவரை தோன்றாமையும் ஒரு காரணமாகும். 1. மலையகப் பெண்கள் ஆண்களை விட சிக்கலான வாழ்க்கையில் வித்தியாசமான பழக்கங்களைக் கொண்டிருந்த போதிலும் கல்வி பொருளாதார சமூக வளர்ச்சியிலிருந்து புறக்கணிக்கப்பட்டுள்ளனர். 2. இவர்கள் பல்வேறு இயக்கங்களுடைய அனுசரணையை நாடியே வாழ வேண்டிய சூழ்நிலையில் உள்ளனர். 3. இவர்களுடைய பல்வேறு சுகாதார பழக்கவழக்கங்கள்
முட்டுக்கட்டையாக அமைந்துள்ளது. 4. குடும்பக்கட்டுப்பாடு, திடீர் மரணங்கள், கருச் சிதைவு, போஷாக்கின்மை என்பன இவர்களுக்கு ஒரு சவாலாக அமைந்துள்ளது. 5. இந்நிலையில் இவர்களை வழிநடத்த எந்த ஒரு தொழிற்சங்கமோ அல்லது அமைப்போ அரசோ முன்வரவில்லை. 6. இதற்கான அடித்தளமும் அமைக்கப்படவில்லை. 7. இவர்களுடைய விழிப்புணர்ச்சிக்கு கல்வி ஒன்றே
உந்துசக்தியாக அமையும். 8. மூன்று சகாப்தங்களாக இலங்கையில் பொருளாதார வளர்ச்சியில் முக்கியத்துவம் பெறுகின்ற மலையகப் பெண்கள் வெளியுலக தொடர்புகளற்று பின்தங்கிய சமூகமாக வாழ்ந்து வருவதைக் காண்கிறோம். இவர்கள் மத்தியில் குறைந்த கல்வி அறிவும் முற்றாக ஆங்கில அறிவும் புகுத்தப்படாமையால் இவர்கள் மிகவும் இக்கட்டான நிலையில் பின்தள்ளப்பட்டுள்ளார்கள். இப்படியான சில
காரணங்கள் இக்கூட்டத்தில் இணைக்கப்பட்டன.
கிழக்கு மாகாணத்தல் மகளிர் தனக் கொண்டாட்டங்கள்
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு கிழக்கில் பல்வேறு அமைப்புக்களும் நிகழ்வுகளை நடாத்தி உள்ளனர். இம்முறை யுத்தத்தை நிறுத்து என்ற கோஷத்துடன் மகளிர் தினம் முன்னெடுக்கப் பட்டுள்ளது கருத்திற் கொள்ளத்தக்கது.
பெண்களும் அவர்கள் செய்யும் வேலையும்
1. பெண்களது தொழிலும் அவர்களது சேவையும்.
2. வீட்டுத் தொழில் புரியும் பெண்கள்.
3. இறப்பர் தோட்டங்களில் வேலைசெய்யும்
பெண்கள்.
4. தேயிலைத் தோட்டங்களில் வேலைசெய்யும்
பெண்கள்.

Page 4
5. கிராமத்தில் சுயாதீனமாகப் பெண்கள் செய்யும்
தொழில்கள்.
6. நெல்வயல்களில் வேலை செய்யும் பெண்கள்.
7. பெண் தொழிலாளர்கள் பற்றிய சட்டங்கள். 8. சுதந்திர வர்த்தக வலயத்தில் வேலை செய்யும்
பெண்கள்.
9. மரபுவழியாகப் பெண் கள் செய்து வந்த
தொழில்களுக்கும் தற்போது ஆற்றிவரும் தொழில்களுக்கும் வேறுபாடுகள் காணப்படுகின்றனவா?
நாம் எமது நிறுவனத்தில் நடத்திய ஒரு
கருத்தரங்கில் இவை யாவும் ஆராயப்பட்டன.
வேலைக்குச் செல்லும் பெண்களின் பல்வேறு
பிரச்சினைகள் இக்கருத்தரங்கு மூலம் முன்கொண்டு வரப்பட்டன. அதற்கான தீர்வுகள் பற்றிய
ஆலோசனைகள் முன் வைக்கப்பட்டன.
பெண்களும் மதங்களும்
மதக்கோட்பாடுகள், தத்துவங்கள், சடங்குகள், ஆசாரங்கள், இவை பற்றிய சமூக மானிடவியல்
நோக்கில் பெண்கள் இவற்றிற்குள் எப்படி அடக்கப்
பிரவாகினி
 
 

பட்டுள்ளார்கள், வெளியேற்றப் பட்டுள்ளார்கள் என்ற
விடயங்களை முன்வைத்து ஒரு கருத்தரங்கு 2002ஆம் ஆண்டு தை மாதம் நடைபெறவுள்ளது. அறிவிப்பு ஒன்று:
இக்கருத்தரங்கில் பங்குபற்றிக் கட்டுரைகள் சமர்ப்பிக்க விரும்புவோர் எங்களுடன் தொடர்பு கொள்ளவும் சிறந்த தரமான கட்டுரைகள்
கருத்தரங்கில் சமர்ப்பிட்பதற்குச் சந்தர்ப்பம் அளிக்கப்படும்.
பெண் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கான பயிற்சிக்களம்
இருபதி தியோனி பது பெண் பொலிஸப் உத்தியோகத்தர்களுக்கான பயிற்சிக்களம் ஒன்று பெண்கள் கல்வி ஆய்வு நிறுவனத்தால் நடாத்தப்பட்டது. இதில் நான்கு வகையான முக்கிய அம்சங்கள் பற்றி அப்பெண் பொலிஎப் உத்தியோகத் தர்களுக்கு
விளக்கப்பட்டது. I, பெண்கள் சட்டம் பற்றி அறிவது, 2. பொலிஸ் நிலையத்திற்கு வரும் துன்புறுத்தப்பட்ட
பெண்களிடம் எப்படி நடந்து கொள்வது?
3. அடிப்படை ஆலோசனைகள் கூறுவது.

Page 5
4. சில வேளைகளில் துன்புறுத்தப்பட்ட பெண் முறைப்பாடு செய்ய பொலிஸ் நிலையத்திற்கு செல்லும்போது அங்கு சில ஆண் பொலிஸ் உத்தியோகத்தர்களால் பாலியல் இம்சைக்கு உட்படுத்தப் படுகிறார். இது "மரத்தால் விழுந்தவனை மாடேறி மிதித்த கதைபோல்"
இருக்கிறது. இப்படியான சந்தர்ப்பங்களில் பெண்
பொலிஸ் உத்தியோகத்தர்கள் இச்செயல்களை
எப்படிக் கையாள்வது?
மூன்று பயிற்சியாளர் இவைபற்றிய விளக்கங்களைக் கொடுத்தார்கள். சட்ட வல்லுனர் சட்டம் பற்றிய விளக்கத்தை அளித்தார்கள். ஏனையோர் அடிப்படை ஆலோசனை வழங்கினர். இப்பயிற்சிக்களத்தின் முக்கிய நோக்கம் பாதுகாப்புப் படையினரால் கைதுசெய்யப்படும் பெண்கள் படும் பாலியல் துன்பங்களை அகற்றி அவர்களுக்குப் பாதுகாப்பு அளிப்பதேயாகும். அண்மையில் பாதுகாப்புப் படையினரால் சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்பட்டு இரு பெண்கள் பாலியல் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டது பலரும் அறிந்த விடயம் ஒன்று. மன்னாரில் நடந்த இச்சம்பவம் கல்லையும் கரைய வைத்துவிடும். இப்படியான சம்பவங்கள் இனி ஒருபோதும் நடக்க விடக்கூடாது என்பதே எமது
நிறுவனத்தின் நோக்கமாகும்.
பெண்கள் கல்வி ஆய்வுநிறுவனம் தற்போது இரண்டு வகையான செயற்திட்டங்களையும் ஒரு ஆய்வையும் மேற்கொண்டுள்ளது 1. போருக்குட்பட்ட கஷ்டப் பிரதேசத்தில்
பெண்களின் நிலை - ஆய்வு
இங்கே போரினால் பாதிக்கப்பட்ட பெண்களின் நிலைகளை நேரில் சென்று அவர்கள் படும் துயரங்களை அறிந்து தகவல் சேகரித்து ஒரு ஆய்வு பிரவாகினி
 

மூலம் உண்மை நிலையை நிறுவுவதே இதன் நோக்கமாகும். மட்டக்களப்பு, அனுராதபுரம் ஆகிய இரு பிரதேசங்களிலும் போரினால் பாதிக்கப்பட்ட பெண்களின் நிலைபற்றிக் கள ஆய்வு செய்யப்பட்டது. இந்த ஆய்வு பெண்கள் விவகார அமைச்சின்
வேண்டுகோளுக்கிணங்க UNDP ஆதரவுடன்
செய்யப்படுகிறது. போரினால் அதிகம் பாதிக்கப்
படுபவர்கள் பெண்களும், குழந்தைகளுமே ஆவர். அவர்கள் படும் துயரங்கள் அளப்பரியன. பட்டினிச்சாவு ஒரு புறம், பாலியல் வன்முறை மறு புறமாக விரக்தியின் விளிம்பில் வாழ்ந்து கொண்டிருக்கும் இப்பெண்களின் நிலை மிகவும் பரிதாபத்திற்குரியது. இப்பரிதாப நிலையிலிருந்து மீட்சி பெறுவதற்கு யார் என்ன செய்யலாம் என்பதை பெண்கள் விவகார அமைச்சும் UNDPயும் ஒருங்கே செயல் திட்டங்களை அமைக் கும் என்பதே
இவ்வாய்வின் இறுதி முடிவாகும்.
2. மாதிரிப்பயிற்சி வடிவங்கள்
பல்வேறு நிலைகளில் பெண்களின் நிலைபற்றிய மாதிரிப்பயிற்சி வடிவங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. 1) பெண்களுக்கு எதிரான வன்செயல். 2) கஷ்டப் பிரதேசங்களில் பெண்களின் நிலை, 3) பெண்களும் கல்வியும், 4) பெண்களும் சட்டமும், 5) கலாசார ரீதியாக பால்பற்றிய விளக்கம், 6) பெண்களும் தொழிலும், 7) பெண்களும் அரசியலும்.
முப்பத்தைந்து அங்கத்தவர்கள் இதில் பங்கு கொண்டனர். முன்றாம் வருட பயிலுனர் ஆசிரியர்கள், உப அதிபர்கள், நூலகர்கள் எனக்
கல்வித் திணைக்களத்தைச் சேர்ந்த பல்வேறு
{6)

Page 6
அங்கத்தவர்கள் பங்குபற்றினார்கள். இப்பயிற்சிக் களத்தின் முக்கிய நோக்கம் கல்வித் திட்டத்தில் பால்பற்றிய விளக்கத்தை அறிமுகப்படுத்துவதே ஆகும். மாணவர்களிடையே பால்பற்றிய விளக்கம் அளிக்கப்படுதல் மூலம் சமுதாயத்தில் காணப்படும் சீர்கேடுகளை மாற்றியமைக்க முடியும். இன்றுவரை பாடத்திட்டத்தில் பால் பற்றிய அறிவு புகுத்தப் படவில்லை. இதனால் இத்தகைய தவறுகளை நிவர்த்தி செய்வதற்காகவே இப்பயிற்சிக்களம் ஒழுங்கு செய்யப்பட்டது.
சந்தேகம் என்ற பெயரில் கைது பாலியல் வல்லுறவு பின் சித்திரவதை
சந்தேகத்தின் பெயரில் விஜிகலா, சிவமணி என்னும் இரு பெண்களும் கைது செய்யப்பட்டனர். கதறக் கதறக் கடற்படையினராலும் பொலிசாரினாலும் பாலியல் வல்லுறவிற்குட்படுத்தி சித்திரவதை
செய்யப்பட்டனர்.
இருபத்திரண்டு வயதான இளம் பெண் விஜிகலா தனது பரிதாப நிலையைக் கூறும்பொழுது இரும்பு இதயம் கூட இளகிவிடும். வேலியே பயிரை மேய்வதா? இப்பெண்ணை நிர்வாணமாக்கி, கண்களைக் கட்டி பாலியல் வல்லுறவுக்குட்படுத்தினார்கள். பின் நிர்வாணக் கோலத்துடன் இப்பெண் சித்திரவதை
செய்யப்பட்டாள்.
சந்தேகத்தின் பெயரில் கைது, பின் பாலியல் வல்லுறவு. இது தமிழ்ப் பெண்களின் சரித்திரமாகி விட்டது. அப்பாவித் தமிழ்ப் பெண்களின் அவல நிலை எப்போ மாறப்போகிறது? எமது சரித்திரத்தை எடுத்துக் கொண்டால் கிருஷாந்தி, ரஜனி, கோணேஸ்வரி, கமலிட்டா என்ற வரலாறு கூறும் வகையில் இன்று விஜிகலா, சிவமணியும் பாலியல் வல்லுறவுக்குட் படுத்தப்பட்டு விட்டார்கள். இவர்கள் தெய்வாதீனமாக உயிர்தப்பிவிட்டார்கள். குற்றமில்லாத இப்பெண்களைக் குதறியவர்கள் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்பட வேண்டும். தண்டிக்கப்பட வேண்டும்.
வேலை நீக்கம் செய்யப்பட்ட பெண் தொழிலாளிகளுக்கு நஷ்ட ஈடும் வேலையும்
ஐம்பது வயதான பெணி தோட்டத் தொழிலாளியை வேலை நீக்கம் செய்த தோட்ட நிர்வாகம் சம்பந்தப்பட்ட பெண் தொழிலாளிக்கு ஐம்பத்தொராயிரத்து எழுநூற்றைம்பது ரூபா நஷ்ட ஈடும் மீண்டும் வேலையும் வழங்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
விந்துவ மெக்டல்ப் தோட்டத்தில் தொழில் புரிந்த பெண் தொழிலாளியான எஸ். செவனம்மா என்ற
பிரவாகினி

பெண்ணே தோட்ட நிர்வாகத்தால் ஓய்வு பெறும் வகையில் வேலைநீக்கம் செய்யப்பட்டவர்.
இதை ஆட்சேபித்து இந்தப் பெண் தொழிலாளி தலவாக்கலை தொழில் நீதிமன்றத்தில் வழக்கொன்றை தாக்கல் செய்திருந்தார். இவ்வழக்கை விசாரணை செய்த தொழில் நீதிமன்ற நீதவான் கே. பாலகுமாரன் மேற்படி தொழிலாளிக்கு நஷ்டஈடும் வேலையும்
வழங்க முற்பட்டார்.
நூலகம் கிராமத்து இதயம் - இலங்கை முஸ்லிம்களின் நாட்டுப்புறப் பாடல்கள் - எஸ். எம். ஜெமீல்
இலங்கை முஸ்லிம்களின் பாரம்பரிய இலக்கிய ஊடகங்கள் கற்றோர் இலக்கிய மரபாக இருப்பது புதினம் அல்ல. இது தொடர்பாக இலங்கை முஸ்லிம்களிடையே காணப்படும் பெருந்தொகையான நாட்டுப்புறப் பாடல்களைச் சேகரித்து ஆய்வுக் குறிப்புகளுடன் நூலாக வெளியிடும் இந்த நல்லதொரு முயற்சியைப் பாராட்ட வேண்டும்.
தோட்டியின் மகன் ஒரு மலையாள நாவல் - தகழி சிவசங்கரப்பிள்ளை தமிழில் சுந்தர ராமசாமி அவர்கள் தோட்டிகளும் தொழிலாளி வர்க்கம்தானே. தோட்டியின் மகன் காதலிப்பவளும் தோட்டிச்சியே. கொடுமையான ஒரு வாழ்க்கையை நேர்த்தியாக மனதில் பதியும்படி சொல்லிவிட்டார் இந்த ஆசிரியர்.
புதிய சகத்திரப்புலர்வின் முன் ஈழச்சிறுகதைகள் புலோலியூர் ஆ. இரத்தினவேலோன்
இத்தொகுப்பில் திறனாய்வு சார்ந்த எழுத்துக்கள் அவர் படைப்பில் மெருகும், ஆழமும், எழுத்து நேர்த்தியும் கொண்டு காணப்படுகிறது. இந்நூலில் இருபத்தாறு ஈழச்சிறுகதைகள் இடம்பெற்றிருக்கின்றன.
தமிழ்ச் சமுதாயமும் நாட்டுப்புறப் பண்பாடும் துளசி ராமசாமி
இந்நூலில் பதின்மூன்று கட்டுரைகள் உள்ளன. இவை பண்பாட்டு வரலாறு, நாட்டுப்புறச் சமுதாயப் பண்பாடு, தெய்வப் பண்பாடு ஆகிய பிரிவுகளில் அடக்கப் பெற்றிருக்கின்றன.
ஈன்ற பொழுதில் (சிறுகதைத் தொகுதி) யோகேஸ்வரி சிவப்பிரகாசம்
எமது சமுதாயத்தை குறிப்பாக யாழ்ப்பாணச் சமுதாயத்தைப் பல வேறு கோணங்களில் இச்சிறுகதைத் தொகுப்பில் பார்க்க முடிகிறது. கதை
●

Page 7
பெருமளலி 5ப் பொள் பாத்திரங்களின் வாயிலாகக் கூறப்படுமவோது அவை மனதைப் பிழிவனவாகவும்
அமைந்துள்ாட
குறைந்த வஞாத்தில் விற்கப்படும் பெண்ணின் 2 lagün
இலகள் உகயின் அந்நிய செலாவணிக்கு உான்றுகோலாக விளங்குபவர்கள் மலையகத் தோட்டத் தொழிலாளர்களே. சுமார் மூன்றரை இலட்சம் தோட்டத் தொழிலாளர்களில் அரைவாசிக்கு அதிகமாக பெண்களே உள்ளனர். 1970ஆம் ஆண்டுகளுக்கு முள் எமது நாட்டின் அந்நிய செலாவணி வருமானத்தில் அதிகமான நிரந்தர வருமானத்தைப் -ெ துக் கொடுத்த தேயிலை உற்பத்தியானது என்பதுகளின் பின் உலகமயமாக்கலுடன் 20 சதவீத நிரந்தர வருமானத்தைப் பெற்றுத்தரும் உற்பத்தித் துறையாகவே இன்னும் உள்ளது. தோட்டத் தொழிலாளப் பெண்களின் வாழ்க்கை நிலையை நோக்கினால் அன்றும் இன்றும் முன்னேற்றம் இல்லாத அவல நிலையாகவே காணப்படுகிறது.
தேயிலை உற்பத்தியில் ஈடுபடுத்தப்படும் பெண் தொழிலாளர்கள் கொழுந்து பறித்தல் மற்றும் சில்லறை வேலைகளில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர். மழை என்றும் குளிர் என்றும் பாராமல் உயரமான மலைகளில் ஏறி இறங்கியும் அது மாத்திரமல்லாமல் பல கிலோ கொழுந்தை தலையில் சுமந்தும் அட்டைகளால் அவர்கள் இரத்தம் உறிஞ்சப்பட்டும் பல தாங்கொணாத் துயரங்களை அனுபவித்தே தமது உழைப்பை அர்ப்பணிக்கிறார்கள்.
காலை 7.30 மணி முதல் மாலை 5.45 மணி வரை அவர்கள் இத்தகைய வேதனைகளையும் சோதனைகளையும் தாங்கிய பின் இருபது நிமிடங்களே அவர்களுக்கு தேனீர் இடைவேளை அளிக்கப்படுகிறது. மதிய உணவிற்கு 1 - 1 1/2 மணி நேரமும் வழங்கப்படுகிறது. ஒரு நாளைக்கு 8 மணித்தியாலங்கள் அவர்கள் இத்தோட்டங்களில் வேலை செய்கிறார்கள். மலையகத் தொழிலாளப் பெண்கள் ஒரு நாளில் அதிகமான நேரத்தை இத்தோட்டத்திற்கு உழைப்பாகவே வழங்குகின்றனர். தொழிலாளியொருவர் ஒரு நாள் சம்பளத்தை இந்த உழைப்பு நேரத்தில் இரண்டு மணி நேரத்தில் பெற்றுக் கொடுத்திடுவார். இப்பெண்களின் ஆறு மணி நேர உழைப்பும் சுரண்டப்படுகிறது.
இவர்களின் சம்பள நிலையை எடுத்து நோக்குவோமானால் ஏனைய பெண் தொழிலாளர்கள்
பிரவாகினி

ஒரு நாளைக்கு 200 - 300 ரூபாவரை சம்பளமாகப் பெறுகின்றனர். ஆனால் தேயிலைத் தோட்டங்களில் வேலை செய்யும் பெண்கள் அடிப்படை வருமானமாக ஒரு நாளைக்கு 101 ரூபாவையே பெறுகின்றனர். எனவே உழைப்பிற்கு ஏற்ற ஊதியம் இவர்களுக்கு வழங்கப்படாமை இவர்களை மேலும் மேலும் வறுமையில் வாடச் செய்கிறது. பொருளாதாரக் கஷ்டம் காரணமாக இப்பெண்கள் கொழுந்து பறித்தலுடன் வேறு வேலைகளையும் செய்ய முற்படுகிறார்கள்.
கொழுந்து அதிகமாக விளையும் காலங்களில் ஒன்றரை நாள் சம்பளம் பெறுவதற்காக ஞாயிறு போயா தினங்களிலும் 20 - 30 கிலோ கொழுந்தும் ஏனைய காலங்களில் 20 கிலோவிற்குக் குறையாமலும் கொழுந்து பறிக்கும்படி உத்தரவிடுகிறது நிர்வாகம். அப்பாவிப் பெண்களைப் பிழிந்தெடுத்த உழைப்பு உலகமே விரும்பி ருசிக்கும் உயர் தேயிலையாக மாறுகிறது. அது மாத்திரம் இல்லாமல் மேலதிக சம்பளம் பெறும் நோக்குடன் ஒரு கிலோ கொழுந்து 4.50 சதத்திற்கு வேலை செய்கின்றனர். ஒய்வு பெற்றவர்களுக்கும் 18 வயதிற்கு உட்பட்டவர்களுக்கும் ஒரு கிலோ கொழுந்து 5 ரூபாவாக்கப்பட்டது. குறிப்பிட்ட நேரத்திற்குள் குறிப்பிட்ட அளவு கொழுந்து பறிக்கத் தவறுவார்களேயானால் அவர்களுக்கு பெயர் வழங்க மறுக்கப்படுகிறது அல்லது அரைநாள் வேலை போன்றன பெண் தொழிலாளர்கள் மீது திணிக்கப்படும் ஒன்றாகும்.
தம் உதிரத்தை உரமாக்கும் இத்தேயிலை தொழிலாளர்களுக்கு கிடைப்பது மிகவும் தரம் குறைந்த லேபர் டஸ்ட் எனப்படும் தேயிலையாகும். இன்று ஒரு கிலோ பி. ஒ. பி தேயிலையின் சராசரி விலை 250 ரூபாவாக உள்ளது. ஒரு கிலோ தேயிலை 2 கிலோ கொழுந்தில் இருந்து பெறப்படுகிறது.
இத்தேயிலை உற்பத்தியில் கூடிய உழைப்பிற்கு குறைந்த வருமானத்தைப் பெறுவதால் ஆண் தொழிலாளர்கள் மாதத்தில் பாதி நாட்களில் வெளியிடங்களில் வேலை செய்வதற்காகச் செல்கிறார்கள். இதனால் பெண்களே குடும்பத்திற்கு நிரந்தர வருமானத்தைப் பெற்றுக் கொடுப்பதில் அதிக பங்கை வகிக்கிறார்கள்.
இதனால் அவர்களின் வேதனையின் வெடிப்பே பலத்த போராட்டமாக மாறியது. பலத்த போராட்டத்தின் பின் இவர்களது நாட் சம்பளம் 121 ரூபாவாக உயர்த்தப்பட்டுள்ளது. இவர்களது ஏழ்மை வாழ்வை
இச்சிறு தொகை மாற்றிவிடுமா என்பது ஐயத்திற்குரிய
ஒன்றாகும்.
●

Page 8
அரச ஊழியர்களாக இருக்கும் பாதுகாப்புப் படையினரால் தொடர்ந்து கொண்டிருக்கும் பாலியல் வன்முறை
கடந்த 26.06.2001 இல் மருதானையிலுள்ள உணவு விடுதி ஒன்றில் பணிபுரிந்து விட்டு வீடு திரும்பும்போது பொலிஸ் சோதனைச் சாவடியில் வைத்து இரணி டு பிள்ளைகளின் தாயான இருபத்தெட்டு வயதுடைய பெண் ஒருவர் சோதனைச் சாவடிக்குள் இழுத்துச் செல்லப்பட்டு மிருகத்தனமான முறையில் பாலியல் வன்செயலுக்கு உட்படுத்தப்பட்டாள். இப்பெண் தனக்கு நேர்ந்த இப்பரிதாபநிலையை மருதானைப் பொலிஸில் முறையீடு செய்ததையிட்டு மூன்று பொலிஸ் உத்தியோகத்தர் கைது
செய்யப்பட்டுள்ளனர்.
கருத்தரங்கு
பெண்கள் கல்வி, ஆய்வு நிறுவனத்தின் கருத்தர கொண்டது. காற்றோட்டமும் இடவசதியும் மிக்க மற்றும் உபகரணங்கள், ஒலிபெருக்கி, வீடியோ உங்களின் அடுத்த கூட்டம், கருத்தரங்கு, செய போன்றவற்றுக்கு உகந்த இடம் இது. உணவு,
தொடர்பு கொள்ளவேண்டிய முகவரி:
பெண்கள் கல்வி,
58, தர்மரா கொழும்
தொலைபேசி இல :
பிரவாகினி

பாதுகாப்புப் படையினர் அரச பாதுகாப்புக் கிடைக்கும் என்ற துணிவிலா அல்லது அரசு நடவடிக்கை எதுவும் எடுக்காமல் விடும் என்ற துணிவிலா இதைச் செய்கிறார்கள். மகளிர் அமைப்புக்கள், தமிழ்க் கட்சிகள் பலரும் குரல் கொடுத்தும் திரும்பத் திரும்ப நடைபெறும் இச்சம்பவம் தடுத்து நிறுத்தப்பட வேண்டும். குற்றமிழைத்தவருக்கு வழங்கும் தகுந்த தண்டனைகள் மூலமே இப்படியான சம்பவங்களைத் தடுத்து நிறுத்த முடியும். பாதுகாப்புப் படையினரால் மேற்கொள்ளப்படும் இப்பாலியல் வன்செயல்கள் தொடரவிடாது தடுத்து நிறுத்த வேண்டியது அரசின் பொறுப்பாகும். அரசு தகுந்த தண்டனைகள் வழங்குவதன் மூலம் இவை தடுத்து நிறுத்தப்படலாம். பாராமுகப் போக்கு இனியும் வேண்டாம்.
།
மண்டபம்
ங்கு மண்டபம் மிகவும் ரம்மியமான சூழலைக் 45 இருக்கை வசதியுடன் கூடியது. தளபாடம் , நவீன சாதனங்கள் பொருத்தப்பட்டுள்ளது. பலமர்வு, படக்காட்சி, விழிப்புணர்வு நிகழ்ச்சி தேநீர் வசதி ஏற்பாடுசெய்து கொடுக்கப்படும்.
ஆய்வு நிறுவனம் "LD 6ğig5, L 06.
595296, 590985.
برس