கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: பிரவாகினி 2006.12

Page 1
3 броул
WERC
மார்கழி 2006
லிபண்நிலைவாத
பெண் நிலைவாதிகளினால் மேற்கொள்ளப்படும் பன்மைத்துவ நோக்கின் ஒரு பாங்காக இருப்பது அவர்களது தீவிர ஆய்வுப் புலமை. பெண்நிலைவாத இயக்கத்தின் பல்வேறு அனுபவத்தளங்கள் உலகளாவிய ரீதியில் அவர்களுக்கு ஏற்பட்ட பரிமாற்றங்கள் போன்ற காரணங்களை அடிப்படையாகக் கொண்டு ஒரு அகழ்ந்த, ஆழ்ந்த பக்குவநிலை ஏற்பட்டுள்ளது. இதன் வெளிப்பாடாக அவர்கள் ஒரு புலமைத் தளத்தில் இயங்க முற்பட்டனர். அரசியல்,
பொருளாதார சமூக இலக்கிய சமயநிலைகளில் ஒன்றியுள்ள பெண்மையை பலகோணங்களில்
அவர்கள் பிரித்தொழித்துக் கொண்டனர். இவற்றின் பரிமாணங்கள் செய்கை நிலை, ஆய்வுநிலை, செயலூக்கம், சட்டமாற்றங்கள் போன்றவற்றில் வெளிப்படத் தொடங்கின. இதன் பெறுபேறாக பல பிரகடனங்கள் துண்டுப் பிரசுரங்கள் சட்டவியல் மாற்றங்கள் ஆய்வுகளை மையமாகக் கொண்ட நூல்கள் அவர்களால் வெளிக்கொணரப்
பட்டன.
இவற்றுள் உண்மையில் பெண் நிலைவாதிகளின் புலமைப் பணிகளின் மிகச் சிறப்பான அம்சமமென்னவெனில் அவை வெளிப்படையாகவே அரசியல் தன்மையைக் கொண்டிருந்தமையாகும்
பொருட்கூறிலிருந்து சமூக மாற்றம்
வரையான பல்வேறு வகையான பெண்நிலைவாதத்தின் இத்தகைய ஈடுபாடானது தனிநபருக்கும்
அரசியலுக்கும் இடையில் மரபுரீதியான எல்லைகளை மாற்றியமைப்பதில் முக்கிய
பங்கினைக் கொண்டிருந்தது.
இன்று கோட்பாடானது இ தத்துவவியல், உள6 சமூகவியல் போ6 கற்கை விட நெறிப் மாற்ற மடைந்துள் மற்றும் அரசிய பிடியினையும் கெ uT 6o 6606u (Gend கல்விசார் LD | கற்கைநெறியாக ஐரோப்பிய ஆ கழகங்களில் மக்க ஆய்வுத்துறையாகப அத்துடன் சிறிய டெ நிறுவனங்களுக்கு கல்விசார் துறையி விடயப் பெற்றுள்ளது.
பொரு
இவ்வாய்வுத்து வேளையில், குறி அல்லது பால்நி:ை பல்வேறு வகைகளி இவ்வாய்வுத்துறை வடஅமெரிக்கா ஐரோப்பாவில் பிரதி இன மத்தியதர வ ஆதிக்கமே அதி இப்போது இந்நி ஏற்பட்டு கிழக்கா போன்ற பிராந்திய நெறி ஏற்றுக் கொள்
பகுதிகளில் பெண்
Liberal மாக்சிய களினூடாக பார்க்க
nism, Marxist Femi
nism எனப்

கினி
பெண்கள் கல்வி ஆய்வு நிறுவனம்
செய்தி மடல்
இதழ் 24
ஆய்வுப் புலமை
பெண்நிலைவாதக் லக்கியம், வரலாறு, வியல், மானிடவியல் ன்ற துறையிடைக் பண்பு கொண்டதாக
‘ளது. அது சமூக ல் இறுக்கமான ாண்டிருக்கின்றது. er) என்பது ஒரு ற்றும் சமூகக் ஐக்கிய அமெரிக்க, சிய பல்கலைக்
ளின் விருப்புக்குரிய ாற்றமடைந்துள்ளது. ரிய அரச அரசுசாரா இடையில் உள்ள ல் ஒரு முக்கியமான
6ΤΠΕΕ தோற்றம்
றை வளர்ச்சி பெற்ற ப்ெபாக பெண்கள் R ஆய்வுகள் எனப் ல் அழைக்கப்படும். யில் முதலில்
மற்றும் மேற்கு நானமாக வெள்ளை குப்புப் பெண்களின் கம் காணப்பட்டது. லையில் மாற்றம் சியா தெற்காசியா ங்களில் இக்கற்கை rளப்பட்டு உலகில் பல நிலைவாதம் என்பது அரசியல் கொள்கை tuG Liberal Femi
nism, Socialist Femi
பலபிரிவுகளையும்
தன்னகத்தே கொண்டுள்ளது. இந்தப் பிரிவுகளை மையமாக வைத்து ஆய்வு முறைகளும் வேறுபட்டு நிற்கின்றன. வர்க்கம், சாதி போன்ற பிரிவுகளை பெருநோக்காகக் கொண்டும் ஆய்வு செய்யப்பட்டுள்ளன. தலித்பெண்நிலை வாதம், தலித்இலக்கியம் போன்றன தோற்றம் பெற்றுள்ளன. இனத்துவ சமய வேறுபாடுகளையும் அளவு கோல்களாக கொண்டு மேலும் ஆய்வுகள் மேற் கொள்ளப்பட்டுள்ளன. இலங்கையிலும் பல நிறுவனங்கள் கொழும்பு, கிழக்குப் பேராதனைப் பல்கலைக் கழகங்கள் (UT 6T (060T Women's Studies 6T6óT p) கற்கை நெறியை தங்கள் பாடத்திலும் புகுத்தியுள்ளன. சமூகத்தில் பெண்ணின் நோக்குவது அல்லது ஆணாதிக்கச் சமூகக் கட்டமைப்பில்
நிலையை
பெண்ணைப் பற்றிய படிமங்கள் எவ்வாறு உருவாக்கப்பட்டுள்ளது என்பதை நோக்குவதற்காகவே இதன் அடிப்படை ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. எங்கள் நிறுவனமானது பெண்கள் கற்கைநெறி என்னும் வகுப்புக்களை நடாத்துவதன் மூலம் சமூகத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது.
இந்த இதழில்.
பெண்நிலைவாத ஆய்வு சமாதானம்
சிறுவர் பாலியல் துஷ்பிரயோகம்
சட்டங்கள்
எமது நூலகம்
எமது நிறுவன செயற்பாடுகள்

Page 2
10னித வாழ்வின் இன்றியமையாத அம்சங்களில் சமாதான சுகவாழ்வே முதன்மை இடம் வகிக்கின்றது. சமாதானம் இல்லாமல் எத்துறையிலும் வளர்ச்சியைக் காணமுடியாது என்பது யதார்த்தமான ஒன்று. அந்த வகையில் ஒரு நாடோ அந்த நாட்டு மக்களோ அமைதியாகவும் நிம்மதியாகவும், சுதந்திரமாகவும், மேம்பாடுடனும், எதிர்பார்ப்புடனும் வாழ்வதற்கு சமாதானம் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதல்ல.
உலகின் பல நாடுகள் இன்று சமாதானத்தையே வேண்டி நிற்கின்றன. ஒரு பக்கம் அடக்கு முறையும் அந்த அடக்கு முறைக்கு எதிரான போராட்டங்களும், அது தொடர்பான அரசாங்க பயங்கரவாதமும், அந்த பயங்கரவாதத்திற்கெதிரான பயங்கரவாதமும் தலைதூக்கியிருக்கும் காரணத்தால் சமாதானம் கேள்விக்குறியாகவே இருப்பதை அவதானிக்க முடிகின்றது.
ஒரு நாட்டில் இன, மத, மொழிரீதியாக அங்கு வாழும் மக்கள் ஒற்றுமையாக வாழ்வதற்கு சமாதானம் நிலவ வேண்டியது அவசியமாகின்றது. மதங்கள் எல்லாம் அன்பு, கருணை, சாந்தி, சமாதானத்தையும் போதித்துக் கொண்டிருக்கின்ற போதிலும் மக்கள் மனங்களில் அவை வேரூன்றி நிலைபெற அரசியல் வாதிகளும், இனத்து வேசிகளும் தடைக்கல்லாக இருந்து செயற்பட்டுக் கொண்டு இருக்கின்றார்கள். அரசியல் வாதிகளின் சுயநலச் செயற்பாடுகள் நாட்டை சீரழித்துக் கொண்டிருக்கின்றது. மேலும் உற்பத்திச் செயற்பாடுகள் மந்த நிலையை அடைந்து விட்டன. நாட்டின் பொருளாதாரம் பின்தள்ளப் பட்டுள்ளது. வெளிநாடுகளிடம் கையேந்தும் நிலை ஏற்பட்டுள்ளது. நாட்டில் மதுபானப் பாவனை, போதவஸ்துப்பாவனை அதிகரிப்பால் கொலை, கொள்ளை, பாலியல் வல்லுறவு, சிறுவர் துஷ்பிரயோகம் என்பன அன்றாடம் சர்வசாதாரண நிகழ்வாகிவிட்டது. மக்களுக்கு குறிப்பாகப் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லாத நிலை தோன்றியிருக்கின்றன.
2005 ஆம் ஆண்டுக்கா சாதனைப் ெ
அம்பை என்னும் பெண் ஆற்றிய பணிகள் அதிகம், நாடகம், கட்டுரை, சிறுகதை என்று பல தளங்களில் முப்பதாண்டுகளுக்கும் மேலாக இயங்கி வருபவர் அம்பை,
இவரின் இம்முப்பதாண்டு கால இலக்கிய பங்களிப்பைக் கணக்கில் கொண்டு அமெரிக்காவில் வாழும் தமிழ் இலக்கிய ஆர்வலர்களின் அமைப்பான விளக்கு நிறுவனத்தின் புதுமைப்பித்தன் இலக்கிய விருது இவ்வாண்டு எழுத்தாளர் அம்பைக்கு வழங்கப்படுகிறது. இவர் ஸ்பேரோ’ என்ற அமைப்பையும் நடத்தி வருகிறார். இதல் இந்தியா முழுவதுமுள்ள வெளிச்சத்துக்கு வராத பல பெண்களின் வாழ்க்கைச்
 

ானம்
ஆயுதம் ஏந்தப்பட்ட மோதல்களால் அல்லல்பட்டு பாதிக்கப்பட்டோர் குடிமக்களே. அதிலும் குறிப்பாக எண்ணிக்கையில் பெரும்பான்மையானோர் பெண்களாகவும் சிறார்களாகவும் இருப்பது கவனத்திற் கொள்ளப்படவேண்டிய விடயமாகும். அகதிகளாக உள்நாட்டில் இடம்பெயர்ந்துள்ளோர் இராணுவத்தினராலும் ஆயுதம் எந்தியோர்களாலும் அதிகளவில் குறிவைக்கப்படுவது கவலைக்குரியதாகும். L
இவையனைத்தையும் கவனத்தில் கொண்டே 2000 ஆம் ஆண்டு ஒக்டோபர் 31ஆம் திகதியன்று பாதுகாப்புச் சபையால் அதன் 4213வது கூட்டத்தின்போது நிறைவேற்றப்பட்டது.
இந்தப் பிரேரணையானது போர்க்காலச் சூழலிலும் போர் நிறுத்தத்தின் பின்னரான மறுசீரமைப்புக் காலப்பகுதியிலும் பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் வழங்கப்படவேண்டிய முக்கியத்துவத்தை வலியுறுத்துகின்றது.
கண்ணிவெடிகள் அகற்றல், கண்ணிவெடிகள் பற்றிய விழிப்புணர்வுச் செயற்றிட்டங்களில் பெண்களினதும் பிள்ளைகளினதும் விசேட தேவைகள் கருத்திற்கொள்ளப்பட வேண்டியதையும், அமைதிக்கான செயற்பாடுகளில் பால்நிலைக் கண்ணோட்டம் ஒர் பிரதான போக்காக வெளிப்படுத்தப்பட வேண்டியதன் முக்கியத்துவத்தையும் வலியுறுத்துகின்றது.
இப்பிரேரணையானது பெண்கள், பிள்ளைகள் மீது ஆயுதம் ஏந்திய மோதல் ஏற்படுத்தும் தாக்கம் பற்றிய தரவு விபரங்கள் ஒன்றுசேர்க்கப்பட வேண்டியதன் அவசியம் பற்றிக் குறிப்பாகக் கவனிக்கின்றது. இப்பிரேரணையானது எமது நாட்டிலும் சமாதானப் பேச்சுவார்த்தைகளின்போதும், மறுசீரமைப்பு நடவடிக்கைகளின்போதும் கவனத்திற்கொள்ளப்பட வேண்டு மென்று எமது நிறுவனமும் பெண்கள் அமைப்புக்களும் வலியுறுத்தி வருகின்றன.
ன விளக்கு விருது பெற்ற பண் அம்பை
சிக்கல்களை வாய் வழிப்பதிவு செய்து வெளியிடுகிறார். மும்பையில் வசிக்கும் இவர் அல்லலுறும் இந்தி பெண்களுக் கென ஒரு எழுத்து இயக்கம் நடத்தி வருகிறார்.
இவர் படைப்புகளில் பெண்சார் மரபார்ந்த பார்வை களையும் பிம்பங்களையும் தொடர்ந்து கேள்விக்குட்படுத்தியும் தோலுரித்துக் காட்டியும் வந்திருப்பவர் அம்பை. மற்றும் குடும்பத்தில் வாழும் பெண்ணின் இடத்தை இலக்கியத்தில் துணிவுடனும் உண்மையாகவும் சிறு கதைகளின் மூலம் பதிவு செய்தும் வருகிறார்.
தொடர்ச்சி 10ம் பக்கத்தை பார்க்கவும்
பிரவாகினி மார்கழி 2006 இதழ் 24

Page 3
1565\) «Ə6odyCom6Oöb 546v) 66GocO(6Otto
*பிரஜ்வாலா" இதற்கு அமரஜோத் என்று பொருள். பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான செக்ஸ் வன்முறைகளை எதிர்த்து இந்த சமூக அமைப்பை நிறுவியவர் 34 வயதாகும் சுனிதா கிருஷ்ணன். இவர் கூறுகிறார் “பதினைந்து வயதில் ஒரு காம வெறியனால் பாதிக்கப்பட்டேன். அந்த அவமானத்தால் நான் முடங்கிப் போவேன் என்று அக்கம் பக்கத்தினர் நினைத்தார்கள். தென்றலாக இருந்தால் தான் தண்டிப்பார்கள். புயலாக சீறினால் சீண்டமாட்டார்கள் என்பதை உணர்ந்தேன். என்னை மாற்றிக் கொண்டேன்” என்கிறார் சுனிதா.
அன்று தொடங்கிய புரட்சிப்பாதை இன்று அமெரிக்கா இவருக்கு மனித உரிமைகளுக்கான சர்வதேச விருதை வழங்கியுள்ளது. கேரளாவில் பிறந்த இவர் திருமணமாகி ஆந்திராவில் வசிக்கிறார். வியாபாரம், திருமணம், வேலை வாய்ப்பு, உயர்கல்வி, சினிமா வாய்ப்பு என்ற பெயரில் பெண்களுக்கு எதிராக நடக்கும் வன்முறைகளைத் தடுத்து நிறுத்தி கொடுமைகளில் இருந்து மீட்டு மறுவாழ்வுக்கு வழிகாட்டுவதே பிரஜ்வாலாவின் முக்கிய பணி. இந்த அமைப்பை ஆரம்பித்த போது ஏராளமான எதிர்ப்புகளுக்கு முகம் கொடுக்க வேண்டியிருந்தது. இருந்தாலும் சுனிதா மாதிரி பாதிக்கப்பட்ட பெண்களின் ஆதரவால் ஒரு கூட்டாக செயல்பட ஆரம்பித்தார். ஆந்திராவில் மட்டும் 15 கிளைகள் அமைத்திருக்கிறார்கள். தமிழ்நாடு, கர்நாடகா, மகாராஷ்டிரா, மேற்குவங்காளம், உத்திரபிரதேசம் மற்றும் டெல்லியிலும் கிளைகள் இயங்குகின்றன. முழு அர்ப்பணிப்புடன் செயல் படுகிறார்கள். குழந்தை திருமணத்தை தடுத்து நிறுத்துகிறார்கள், ஹைதராபத்தில் இவர்களே ரெய்டு நடத்தினார்கள். விலை மாதர்களை மீட்டு அவர்களுக்கு அரசு உதவியுடன் மறு வாழ்க்கை ஏற்படுத்தியிருக்கிறார்கள்.
இந்த அமைப்பின் மூலம் பெண்களின் நிலை உயருமா என்ற தங்கள் கேள்விக்கு அவரின் பதில் “ஆணாதிக்க சமூகத்தில் தங்கள் சம உரிமைகளை பெண்களே தாங்களே எடுத்துக் கொள்ள வேண்டும். எமக்கு யாரும் கொடுப்பார்கள் என்று எதிர்பார்க்கமுடியாது சம உரிமை அவர்களின் உரிமையை வீழ்த்துவது அல்ல சகல உரிமைகளுடனும் வாழ்வதுதான் உரிய இடங்களில் தங்கள் பாதிப்புப்பற்றி தெரிவித்து நீதியைப் பெற தயங்கக்கூடாது. நாங்கள் பயந்தாங் கொள்ளியாய் முடங்கிக் கிடக்கக் கூடாது. எங்களை தவரான முறையில் மீறினால் நாலுவார்த்தை கேட்பதற்கும் தயங்கக் கூடாது. தேங்கிப் போய்விடுவோம் என்கிறார் சுனிதா. இவருடைய சேவையை இந்தியா பாராட்டியுள்ளது. அதே சமயம் அமெரிக்காவில் உள்ள பெரிடிட்டா ஹாஸ்டன் அமைப்பு வாஷிங்டனில் நடந்த விழாவில் மனித உரிமைகளுக்கான சர்வதேச விருதை இவருக்கு வழங்கியுள்ளது.
“தாய் நாட்டில் மட்டுமல்ல உலகம் முழுவதிலுமுள்ள பாதிக்கப்பட்ட பெண்களுக்கு மறுவாழ்வு அளிப்பதே என் லட்சியம் அதுதான் என் வாழ்க்கைப் பாதை” என்கிறார் இந்த
சமூக சேவகி
நன்றி: குங்குமம்
பிரவாகினி மார்கழி 2006 இதழ் 24
 

பெண் ஒவியர்
சென்னை ஸ்ரெலா மேரிஸ் கல்லூரியின் கலைப்பிரிவு மாணவியான சந்தியா பெண்நிலை சிந்தனைகளை ஒவியமாக்கியுள்ளார். “மாத்ருபூமி” என்ற திரைப்படத்தை பார்த்த பின்பு தான் பார்க்கும் காட்சிகள் அனைத்தும் பெண்நிலை நோக்கிலேயே பதிவாகிறது எனவும் எனது ஒவியங்களில் பெண்களின் அழுகையும் கோபமும் அவர்கள் மீது திணிக்கப்பட்டுள்ள வன்முறைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. பெண்களை தியாகத்தின் வடிவமாக மட்டுமே பார்க்க முடியும். இதை “ஃ பிளவரிங் தார்ன்ஸ்” (Flowering Thorns) என்கிற ஒவியம் கூறுகின்றது. ஒரு பெண்ணின் பிறப்பு, வளர்ப்பு, மரணம், வாழ்க்கை என்பதை யாரோ முடிவு செய்கிறார்கள். அவர்களது உரிமைகள் யாவும் மறுக்கப்பட்டு வெறும் குழந்தைகளைப் பெற்றெடுக்கும் இயந்திரமாக இருக்கிறாள் அதுவும் ஆண்பிள்ளை இல்லையெனில் அழித்து விடுவார்கள். இத்தகய உணர்வுகளை வெளிப்படுத்தும் ஒவியத்தை “பேபி மேக்கர்’(Baby Maker) என்னும் தலைப்பில் வடித்திருக்கிறார்.
காமதேனுவைப்போல் இவ்வுலகம் அவளைப் பயன்படுத்திக் கொள்கிறது. “லைப் ஒசக்ஷன்'(life-0-Suction) என்ற ஒவியமும் பக்தி மூட நம்பிக்கைகளில் சிக்குண்டு மீளாதிருப்பதை “பின்ட்டவுண்’(Pinned-down) ஒவியம் சித்தரிக்கின்றது.
சுதந்திரம் எப்படிப்பட்டது என்பதை ஒவ்வொரு பெண்ணும் உணரும் பொழுது எல்லா உரிமைகளும் கிடைக்கின்ற பொழுது தான் உலகம் பிரகாசமானதாய் உண்மையானதாய் இருக்கும் என்கிறார் இந்த பெண்ணிய ஓவியர்.
# -*
ஆண்டவன் வசந்த காலத்து தி \ GJITBITLDSVEDIJ USDLjğai. LDGÜSÖGDEÄ ä Ö DETTjGDj DSTILLGJI TG, ܬ̈ܐ[ 滋 தேன்சிட்டுக்கு ஒரு பாடலைத் தந்தான் மூங்கில் குழாய்க்குள்ளே பண்ணை வைத்தான்(N மாங்கனிக்குள்ளே தீஞ்சுவை சொட்ட செய்தான். jabóóLGülü 56DGaITGMGDL UTilffia Tür. தோகை மயிலுக்கு வண்ணப்பட்டாடை உடுத்தினான். வேங்கைப் புலியின் கண்ணில் தனலை வைத்தான். இறுதியில் படைப்புக்கு ஒரு முத்தாய்ப்பு வைத்தான். ஓர் அன்னையின் அருமாந்த உள்ளத்தை படைத்த போது LISDLÛÉÂåŭ dirisJúb ĜILDAULDITü 9 ULIñjiĝ555j.
நன்றி - அலமேலு அருணாசலம்
> ‘அற்புதமான இசையின் நறுமணத்தை உள்ளடக்கிய குணம்
கொண்டவள் தாய்” (காளிதாஸ் சைான்னது)
> “அம்மா என்பவன் சாய்ந்து அழுவதற்குத் தோள் கொடுப்பவள்
sTTTTTS SsLsTT TLLT GYLLL LLTLLLLLLL LTTTLLLL TT TT TTTS
னன்றைாரு பைான்மைாழி
> இதனால் அவள் ஒடுக்கப்படுவது தான் கேள்வி கேடு
bottonpäibbul (86 Igb(6b

Page 4
fDI6)Í IT6luI6) J.162 JDOIG
யனிசெவ் நிறுவனம் இலங்கை சுற்றுலா சபையுடன் இணைந்து சிறுவர் பாலியத்துஷ்பிரயோகத்திற்கு எதிரான 8 வருடத்துக்கான செயற்றிட்டமொன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் அறிக்கையில் தெரியப்பட்டிருப்பதாவது. இலங்கையில் ஆயிரக்கணக்கான சிறுவர்கள் பாலியல் தொழிலாளர்களாக உள்ளனர். வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகளாலேயே பெருமளவு சிறுவர்கள் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப் படுகிறார்கள். இத்திட்டத்தின் முதற்கட்டமாக இளம் பிராயத்தினர் அவர்கள் குடும்பத்தினர். சமூகத்தலைவர்கள், உல்லாசவிடுதிகள், ஊடகவியலாளர்கள் ஆகியோருக்கு சுற்றுலாத்துறையின் மூலம் சிறுவர் துஷ்பிரயோகத்துள்ளாதல் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளார்கள்.
தொலைக்காட்சி, வானொலி மற்றும் பத்திரிகைகளிலும் விளிப்புணர்ச்சிவூட்டப்படும் உலகளாவிய ரீதியில் 2 மில்லியன் சிறுவர்கள் பாலியல் சுரண்டல்களுக்கும் துஷ்பிரயோகத் திற்கும் உள்ளாக்கப் படுகின்றார்கள். பெரும்பாலும் பொருளாதாரப் பின்னடைவான நாடுகளில் வறுமை காரணமாகவே பெருமளவான சிறுவர்கள் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு இலக்காகின்றனர். இது வளர்ச்சி யடைந்தே வருகிறது. இதை ஒரு எச்சரிக்கையாகவே கருதி செயற்படவேண்டியுள்ளது. சிறுவர் பாலியல் துஷ்பிரயோகத் திற்கு
W O O
நாம் இழந் ஆளுமை மிக்க ஏ.ஜே என்னும்
ஏ.ஜே. கனகரட்ன
ஏ.ஜே. கனகரட்ன தனது 74 வயதில் தமிழ் இலக்கிய உலகைவிட்டு சென்ற அக்டோபர் மாதம் தனது சிந்தனையை நிறுத்திக் கொண்டார். தமிழ் இலக்கிய உலகில் ஏ.ஜே.யின் பிரசன்னம் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது. அவர் ஆங்கில தமிழ் படைப்புகளை இடையறாது வாசிக்கும் முதிர்ச்சி பெற்ற முழுமையான வாசகனாக அவர் என்றுமிருந்தார். பன்முக தன்மை வாய்ந்த ஆளுமை கொண்டவர் ஏ.ஜே.திவிரவாசகத் தன்மையும் ஆழ்ந்த அங்கில அறிவும் அவரைத் தனித்துக் காட்டின. பெண்கள் கல்வி ஆய்வு நிறுவனத்துக்கு மிகுந்த அக்கறையுடன் எங்களுடன் மிகவும் இலக்கிய நெருக்கம் கொண்டவராக இருந்தார். சிறந்த மொழிப்பெயர்ப்பாளரான ஏ.ஜே. எங்கள் ஆய்வு படைப்புகளை மொழி மாற்றம் செம்மையான முறையில் செய்து ஏற்ற நேரத்தில் உதவி வந்தார். மத்து, மார்க்சியமும் இலக்கியமும் சில நோக்குகள், இன்னும் சில நூல்களை வெளியிட்டிருந்தார். யாழ் பல்கலைக்கழகத்தில் ஆங்கில போதனாசிரியராக பணிபுரிந்தார்.டெயிலி நியூஸ், கோப்பறேற்றர், சட்டடே ரிவியு ஆகியவற்றில் ஆசிரியராக, துணை ஆசிரியராக,ஆலோசகராகவும் பணியாற்றியுள்ளார்.
இவரின் நூல்கள் நிலைத்திருக்கும் வரை அமரர் ஏ.ஜே.யின் நினைவும் வாழும் என்று அவரிற்கு எங்கள் கல்வி ஆய்வு நிறுவனத்தின் இறுதி அஞ்சலியை செலுத்துகிறோம்.
இவரின் உறவினர் மற்றும் இலக்கிய நண்பர்கள் அனைவருக்கும் எங்கள் ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக்கொள்கிறோம்.
 

iTGIIT5 - 60f GJG) DT6)
எதிரான செயற்றிட்டநடைமுறைப்படுத்தப்படும் தெற்காசியாவின் முதல் நாடு இலங்கை என்பது குறிப்பிடத்தக்கது.
இப்பொழுது அரசு தொலைக்காட்சி, வானொலி, பத்திரிகை சுவரொட்டிகள் மூலமாக சிறுவர் பாலியல் துஷ்பிரயோகம் விளைவுகள் தொடர்பான விளம்பரங்களை அறிவூட்ட முனைகிறது நல்லதோர் முயற்சியாகும். ஐ. நா. வினது சிறுவர் பாதுகாப்பு நிதியம் இலங்கையில் மேற்கொண்ட ஆய்வின் மூலம்பல ஆயிரக்கணக்கான சிறுவர்கள் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகி இருக்கின்றமை கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.கடற்கரை ஒரங்களில் உள்ள ஏழை சிறுவர்களே இந்த பாலியல் வலைக்குள் வீழ்ந்து விடுகின்றனர். பெற்றோருக்கு பணம் கொடுப்பதன் மூலமாக பிள்ளைகளை விபசாரத்துக்கு தெரிந்தே பெற்றோர் அனுப்பி வைக்கின்றனர். இலங்கையில் எப்பணமே இருந்து வரும் சிறுபிள்ளைகள் பாலியல் வியாபாரம் தொடர்பாக இப்பொழுது கொத்சம கரிசனை காட்ட அரசு ஆரம்பித்திருக்கிறது. இது தொடர்பாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதார அமைச்சர் தெரிவித்திருக்கிறார். ஹோட்டல்களில் தங்கி இருக்கும் வெள்ளைக்காரருக்கு சிறுவர்களை அனுப்பி வைக்கும் பல ஏஜண்டுகள் இருப்பதாக அறிய வருகிறது. இந்த ஏஜண்டுகள் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து காரியத்தை சாதித்து விடுகின்றனர். இதன் காரணமாக பெருந்தொகை பணத்தையும் உல்லாசப் பயணிகளிடமிருந்து கறந்து விடுகின்றனர்.
து விட்டோம்
கண்ணிர் அஞ்சலி
பேர்னடீன் சில்வா - எமது நிறுவனத்தின் இயக்குனர் சபை உறுப்பினராகவும் ஆலோசனை சுடறும் நிபுணராகவும் விளங்கிய 6 тLngj] சகோதரி பேர்ண டீன்
இy சில்வாவின் மறைவு எமக்கு என்றுமே
* ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும்.
மனித உரிமைகள் பேணல் இனங்களுக் கிடையிலான நட்புறவுகள், மற்றும் சமாதானம் என்பனவற்றுக்காக அர்ப்பணிப்புடன் செயல்பட்டவர். ஒதுக்கப்பட்ட சமூகத்திற்காக எப்போதும் ஆதரவளித்து தனது கடமைகளில் பொறுப்புணர்வுடனும் மிகுந்த ஈடுபாட்டுடனும் செயற்பட்டு வந்தார்.
எமது நிறுவனத்தின் ஒவ்வொரு செயற்பாடுகளிலும் தோளோடு தோள்நின்று வந்த சகோதரியும் ஆதரவாளருமாவார் பேர்ணடீனின் பிரிவால் துயருறும் உறவினர்கள் நண்பர்கள் அனைவருக்கும் எமது நிறுவனத்தின் சார்பாக ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கிறோம்.
பிரவாகினி மார்கழி 2006 இதழ் 24

Page 5
பாகிஸ்தான் சட்டம்
UIலியல் வல்லுறவுக் குள்ளான பெண்கள் தொடர்பாக பாகிஸ்தானில் உள்ள இஸ்லாமிய சட்டத்தை திருத்துவதற்கு
2SS$X22**-3 ° MXXX மேற்கொள்ளப் படும் முயற்சிக ற்கு இஸ்லாமிய அடிப்படை வாதிகள் கடும் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளனர். இவ் எதிர்ப்புக்கு பாகிஸ்தான் மற்றும் வெளிநாடுகளில் உள்ள பல்வேறு பெண்கள் அமைப்புக்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
அண்மையில் 24 வயதுப் பெண் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டதை மருத்துவமனையில் உறுதி செய்யப்பட்ட பின்னரும் இஸ்லாமிய சட்டத்தின்படி "அப் பெண் பாலியல் வல்லுறவிற்கு உட்படுத்தப்பட்டதற்கு 4 ஆண்கள் சாட்சியமளித்து உறுதிப்படுத்த வேண்டும்” இந்நிலையில் இப்பெண் 4 சாட்சிகளை நீதிமன்றத்திற்கு வழங்கத் தவறின் பாலியல் நடத்தைக் குற்றச்சாட்டின் பெயரில் சிறையில் அடைபடலாம். இவ்வாண்டில் 55 பாலியல் வல்லுறவு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும் பெண்கள் சமூக நிலை, அச்சம் போன்ற பல காரணங்களுக்காக தங்கள் வழக்குகளை பதிவு செய்யாதிருப்பதாகவும் பதிவு செய்யப்படும் வழக்குகளில் ஆண்களுக்கு சார்பாகவே தீர்ப்பு வழங்கப்படுவதாகவும் ஏனையவை சொல்லுபடியற்றதாகவும் தெரிவிக்கப்படுகிறது. எனவே இச்சட்டங்களை சீர்திருத்த முயன்ற அரசானது மருத்துவச் சான்று ஒன்றே போதுமானது என சட்டத்தை சீர்திருத்த தீர்மானித்த போதும் பாகிஸ்தானின் சில கட்சிகளும் மதவாத அமைப்புகளும் கடுமையாக எதிர்ப்பைத் தெரிவித்தன.
ஒரு முற்போக்கான வித்தியாசமான நீதிமன்ற உத்தரவு
வுெனியா பூவரசங் குளத்தைச் சேர்ந்த ப. சிவயோகராணி தனது பெண் குழந்தைக்கு அப்பகுதிகளில் கடமையாற்றிய உதவி பொலிஸ் இன்ஸ்பெக்டரே தந்தை என்று தெரிவித்து வவுனியா நீதிவான் நீதிமன்றத்தில் தாபரிப்புக்கான கோரிக்கை மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். இப்பெண்ணின் கணவரும் இரண்டு சகோதரர்களும் சில ஆண்டுகளின் முன்னர் குரூரமாக கொலை செய்யப்பட்டார்கள். இதற்கு பின் தன் சொந்த கிராமத்தை விட்டு வெளியேறி பூவரசங்குள பகுதியில் தனது 14 வயது மகனுடன் வாழ்ந்து வந்தார். அவரது தனிமையையும் ஏழ்மையையும் தனக்கு சாதகமாக பயன்படுத்தி குறிப்பிட்ட உதவி பொலிஸ் இன்ஸ்பெக்டர் அவளுடன் உடலுறவு கொண்டதன் விளைவாக பெண் குழந்தை பிறந்ததாக வழக்கு விசாரணையில் வெளிப்பட்டது. ஆனால் உதவிப் பொலிஸ் அதிகாரி அதை மறுத்துவிட்டார்.
தந்தையார் என்று கண்டறிவதற்காக மரபணுப் பரிசோதனைக்கு நீதிவான் எதிரியிடம் கோரப்பட்ட போது
பிரவாகினி மார்கழி 2006 இதழ் 24
 

அதனை ஏற்பதற்கு அவர் மறுத்தமை அவருடைய குற்றமுள்ள மனதைக் காட்டுகின்றது என விசாரணையின் முடிவில் மேல் நீதிமன்ற நீதிபதி ஜே. விஸ்வநாதன் முன்னைய தீர்ப்புக்களை இதற்கு ஆதாரமாக தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.
குழந்தையொன்றின் தந்தை யார் என்பதை சந்தேகத்திற்கு இடமின்றி கண்டறிவதற்குரிய வாய்ப்பான மரபணுப் பரிசோதனை இத்தகைய வழக்குகளில் மிகவும் முக்கியம் என்பதை வலியுறுத்தினார் நீதிபதி இங்கிலாந்து, இந்தியா, ஐக்கிய அமெரிக்கா போன்ற நாட்டு நீதிமன்றங்கள் இதையே ஆதாரமாக கொண்டுள்ளார்கள்.
மேலும் பெண் என்ற ஒரே காரணத்திற்காக வழக்காளியின் சாட்சியம் நிராகரிக்கப்படுவது நியாயமாகாது என்றும், முன்னேற்றமடைந்துள்ள நாடுகளில் பேணப்படும் பால்நிலை சமத்துவம் இங்கும் சரியான முறையில் பேணப்பட வேண்டும் என்றும் நீதிபதி வலியுறுத்தியுள்ளார்.
இந்த வழக்கு தொடர்பில் ஆரம்பம் முதலே வவுனியாவில் உள்ள பெண்கள் அமைப்புக்காக ஆர்வமும் அக்கறையும் காட்டி வந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
பெண் கடத்தல்
நேபாளத்திலிருந்து நேபாளப் பெண்களை இந்தியாவுக்குக் கடத்திக் கொண்டுவந்து இந்திய பாதாள உலகக்குற்றவாளிகள் அவர்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவ்வாறு மாதமொன்றுக்குக் கடத்தப்படும் பெண்களின் எண்ணிக்கை 5 ஆயிரம் என்று கூறப்படுகிறது. அதே போல் சிங்கப்பூரில் வீட்டுப் பணிப்பெண் வேலைக்கு அனுப்புவதாகக் கூறி விலை மாதர் விடுதியொன்றுக்கு அனுப்பி வைக்கப்பட்ட இரு இலங்கை பெண்கள் அங்கிருந்து தப்பி வந்துள்ளனர்.
இவர்களை விமான நிலையத்தில் கடத்திச் சென்று வல்லுறவு கொண்டதாகக் கூறப்படும் ஐந்து நபர்களையும் அதற்கு உதவிய இரு பெண்களையும் பெண்கள் பொலிஸ் மற்றும் சிறுவர் பணியகம் கைது செய்து நீதிமன்றில் ஆஜர் செய்ததையடுத்து அவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
அனுராதபுரத்திலுள்ள வேலை வாய்ப்பு முகவர் நிலையமொன்றின் மூலம் கொழும்பு பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரின் நண்பர் மூலமே மேற்படி பெண்கள் இருவரும் சிங்கப்பூரில் வேலை வாய்ப்பு பெற்றுச் சென்றுள்ளனர். தாம் விலைமாதர் விடுதியொன்றுக்கு வந்திருப்பதை தெரிந்து கொண்ட அவ்விருவரும் அங்கிருந்து தப்பி இலங்கை தூதுவராலயத்தை அடைந்துள்ளனர். பின்னர் இலங்கைத் தூதுவராலயம் இவர்களை இலங்கைக்கு அனுப்பி வைத்துள்ளது. அவர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததும் அங்கிருந்த சில நபர்களால் அவர்கள் கடத்தப்பட்டனர்.
நன்றி-லங்காதீய

Page 6
H.I.V 6Tu56io 1Jibu
1988ച്ചു ஆண்டில் எயிட்ஸ் தினம் பிரகடனப்படுத்தப் பட்டு வருடா வருடம் நினைவுகூரப்பட்டு டிசம்பர் முதலாம் திகதி உலக எயிட்ஸ் தினமாக்கப்பட்டது. எயிட்ஸ் ஒரு பால்வினை GBITLUT5th. Aids (acquired Immune Deficiency Syndrome) D60fg உடலில் நோய் ஏற்படாதவாறு தடுப்பதற்கென இயல்பாக அமைந்துள்ள காப்பு முறைமையை முறியடிக்கும் வைரஸை (HIV) தேடிக் கொண்டதால் விளைந்த பயனாகும்.
தற்போது இந்நோயைப் பூரணமாகக் குணப்படுத்த தடுப்பு ஊசி பாவனையில் இல்லை போன்ற காரணங்களால் எச்.ஐ.வி. தொற்றைத் தடுக்கும் விடயத்திற்கு அதி உயர் முன்னுரிமை வழங்கப்படுகிறது.
இந்த நோயிலிருந்து மக்களை காப்பாற்றுவதற்கான முயற்சியில் உலக சுகாதார நிறுவனம் (WHO) உட்பட பல்வேறுபட்ட சர்வதேச / உள்ளூர் நிறுவனங்கள் முக்கிய பங்கினை வகிக்கின்றன. இருந்த போதிலும் இந்த நோய் வருடாவருடம் அதிகரித்த போக்கிலேயே உள்ளது. எனினும் உடலில் உள்ள வைரஸின் அளவைக் குறைப்பதற்கு இலங்கையில் தற்போது மருந்துகள் உள்ளன. இதன் கருத்தாவது எச்.ஐ.வி. எயிட்ஸ் தொற்றொடு வாழ்வோர் எந்தவித அறிகுறியுமின்றி நீண்டகாலம் ஆரோக்கியமாக வாழ்ந்து தங்களின் சமுதாயங்களுக்கும் குடும்பங்களுக்கும் ஆதாரமாகத் தொடர்ந்து பணிபுரிய முடியும் என்பதாகும். உரிய சிகிச்சை வழங்கப்படின் ஏயிட்ஸ் இனியும் ஓர் ஆட்கொல்லி நோயாக இருக்கப் போவதில்லை.
எச்.ஐ.வி பரவும் வழிகள் கறை படிந்த இரத்தம் மற்றும் இரத்தம் சார்ந்த பொருட்களை சிறிது மாற்றல் அல்லது ஊசி போன்ற உபகரணம் அல்லது அலகு மூலம் உட்புகுதல் புணர்ச்சிச் செயற்பாடுகளில் ஈடுபடுவது. இதனால்
> இலங்கையின் சனத்தொகையில் 49 வீதம் பெண்கள்
51 வீதம் ஆண்கள்.
> பெண்களில் எழுதப்படிக்கத் தெரிந்தவர்கள் 83.8 வீதம்
இதற்கொப்ப ஆண்களின் வீதம் 90.
> பெண்களில் வேலை செய்வோர் 33.5 வீதம். இது
ஆண்களின் வீதமான 65.3இல் அரைப்பங்கு.
> வேலை செய்யும் ஆண்களின் 35.4 வீதம் விவசாயத்திலும் அதனைச் சேர்ந்த துறைகளிலும் வேலை செய்கிறார்கள். பெண்களில் இந்த விகிதம் 415
> பெண்கள் விவசாய உற்பத்தி, வீட்டுப் பொருள் உற்பத்தியென், இரட்டைப் பொறுப்புகளுக்கான கூடுதலான வேலைப்பழுவைச் சுமக்கிறார்கள்.
> ஆண்கள் காசைக் கொடுக்கக் கூடிய விளைச்சல்களில் கூடுதலாக ஈடுபடுவதால் பெண்களின் வீட்டுப்

dé91g1Ü1J6Oo1 gbD 6öT6Oo1Da56ir
பாதிக்கப்பட்ட ஒரு பெண் கர்ப்ப காலத்தில் பிரசவத்தின் போது மற்றும் பாலூட்டும் காலத்தில் அவரின் குழந்தைக்கு அதனைத் தொற்றச் செய்து விடுவது வருந்தத்தக்க விடயமாகும்.
பின்வரும் செயற்பாடுகளால் தொற்றுவதில்லை; கைகுலுக்கள், கட்டியனைத்தல், முத்தம் கொடுத்தல், இருமுதல் அல்லது தும்முதல் போன்ற பொதுவான தொகை நிகழ்வுகளால், உணவு, பாத்திரங்கள், கோப்பைகள், நீர் அருந்தும் கிளாஸ்கள், கழிவறைகள், குளியலறைகள் தொலைபேசிகள் அல்லது நீச்சம் தொட்டிகள் என்பனவற்றைப் பகிர்ந்து கொள்வதால் அவர்களோடு சேர்ந்து வாழ்தல், தொழில் புரிதல் என்பனவற்றால், வழமையாக எச்.ஐ.வி தொற்றுள்ள நபர் எவ்வித குணங்குறிகளையும் காட்டுவதில்லை இரத்த சோதனை மூலமாக எச்.ஐ.வி.யை கண்டுபிடிக்கலாம் அதன் மூலம் எச்.ஐ.வி. தொற்றுள்ளதா? என அறியலாம்.
1981ல் முதல் தடவையாக இந்த நோய் தலைகாட்டியது தொடக்கம் 2005 செப்ரெம்பர் இதுவரை 712 பேர் பாதிக்கப் பட்டிருப்பது பரிசோதனை மூலம் உறுதி செய்யப் பட்டிருக்கிறது 151 பேர் பலியாகியுள்ளனர். எனினும் தற்போது 450 பேர்வரை HIV பாதிப்புக்குள்ளாகியிருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
இன்றைய இளைஞர்கள் நாளைய தலைவர்கள் எதிர்காலம் கேள்விக்குறியாக தடுப்பது நலம்
இந்தியாவில் அங்கு ஆறு மில்லியன் மக்கள் எச்.ஐ.வி. எயிட்ஸ் நோயினால் பீடிக்கப்பட்டிருக்கிறார்கள்.
வெள்ளம் வரும் முன்னே அணை கட்ட வேண்டும் அதாவது எயிட்ஸ் அணுகாத முறையில் எம் பண்பாட்டினைப் பேணிக்காக்க வேண்டும்.
பராமரிப்பு, வீட்டுத் தேவைகளின் உற்பத்தியின் பொறுப்புகள் கூடுதலாகின்றது.
> விவசாயத்தில் வேலை செய்யும் பெண்களில் கிட்டத்தட்ட 68 வீதம் தோட்டங்களில் வேலை செய்கிறார்கள், கிராமத்துப் பெண்களில் 70 சதவீதமானோர் அன்றாட வாழ்க்கைக்குத் தேவையான உற்பத்தியில் ஈடுபட்டிருக்கிறார்.
> பெண்கள் கால் நடை வளர்த்தல், காடுகளிலிருந்து பெரும் வருமானங்கள், மீன்களைப் பதனிடுதல் போன்ற வேலைகளின் முக்கிய பங்கையும் கூடுதலான ஈடுபாட்டையும் கொண்டிருக்கிறார்கள்.
> வீட்டு வருமானத்தில் பாரிய பங்கை, விவசாய மூலமும் மற்றைய வேலைகள் செய்தும், வெளிநாட்டில் சேவை செய்தும் கொடுக்கிறார்கள்.
> பெண்களின் குடும்ப வேலைகளின் பெறுமதி
குறைவாகவே மதிக்கப்படுகிறது.
நன்றி - டெயிலி மிரர்
பிரவாகினி uprirasp 2006 Babј 24

Page 7
வீட்டு வேலைக்கு வேண்டாமே சிறார்கள்
(Dலையக சிறுவர் சிறுமியர்களை வீட்டு வேலைகளில் ஈடுபடுத்துவதற்காக செயற்பட்டுவரும் தரகர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். டிக்கோயா மாணிக்கவத்தை தோட்டத்தை சேர்ந்த 14 வயதுடைய சிறுமி ஒருவர் கொழும்பில் வேலை செய்த வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.
இவ்வாறான சம்பவங்கள் மாதாந்தம் நடைபெற்று வருகிறது. மலையகப் பெற்றோர்கள் அவர்களது பிள்ளைகளை வீட்டு வேலைக்கு அனுப்புவதில்லை என்ற முடிவை எடுக்க வேண்டும். வீட்டு வேலைகளுக்கு செல்வோர் பலவிதமான அடக்குமுறைகளுக்கும், துஷ்பிரயோகங்களுக்கும் உள்ளாகின்றனர். அதிகமான வேலை நேரம், கடினமான வாழ்க்கை நிலை அடிப்படை வசதிகளற்ற தூங்குமிடம், கழிப்பறை வசதி போன்ற பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகிறார்கள். சிலர் பிணமாக வீடுகளுக்கு அனுப்பப் படுகின்றனர். அவ்வாறு அனுப்பப்படுகிறவர்களின் மரணத்திற்கான உண்மையான காரணங்கள் வெளி வருவதில்லை. அம்மரணங்களுக்கு காரணமானவர்களும் சட்டத்தின் பிடியிலிருந்து மிகவும் நாசூக்காகத் தப்பித்துக் கொள்கின்றனர்.
14 வயதிற்குட்பட்ட சிறுவர் சிறுமியர்களை வேலைக்கு அமர்த்துறை சட்டத்திற்கு விரோதமான செயலாகும். 18 வயதிற்குட்பட்ட சிறுவர் சிறுமிகளுக்கு பழுவான வேலை கொடுப்பதும் சட்டப்படி குற்றமாகும் என்பது தெளிவாக வலியுறுத்தப்படவேண்டிய விடயமாகும்.
● d ● Φ Κ) d Kd 8 . . . . YLSS YLSS YLSSYLLASYLLLLLLSS SLLSS SYLLLLSYLLLLS SYLLASYLSYLLLLSYLLLSLLLSiSYLLLLSYL
சிலை வடிவில் , வாக்கிய வடிவில், எழுத்து வ மனிதனின் சிந்தனையில் கடவுள் இருக்கின் அண்ட சராசரத்தைப் படைத்தது யார்? பிரபஞ்சத்தை ஆதரித்து வழிநடத்துவது யார்? நட்சத்திரங்களை இயக்குவது யார்? கால்நடைகளைச் சுவாசிக்கச் செய்வது யார்? மனிதனை அசைய வைப்பது யார்? வடிவத்தின் இருப்பாகவும், இருப்பின் வடிவம யார் படைத்திருந்தால் என்ன! ஆறுதலுக்காக அவர் படைத்தார் எனலாம். சிலையாக வீதியில் செல்லும் அந்த ஆண்டவ பிரபஞ்சத்தின் ஆரம்பத்தையும், முடிவையும், து அதன் நடப்பை வாழ்வின் மர்மத்தில் தேடுகிறே மரணம் என்பது மாபெரும் மர்மமாகத் தோன்ற எல்லையானது இப்போது நினைவுக்கு வருகி புரிந்தவை போதும், மற்றவை புரியாதவையாக இப்படியாக என்னுடைய மானுடம் உடைந்து ( அறியாமையே பொதுச்சொத்தாகிறது. மதங்கள்
ΚΧ ΚΣ ΚΧ ΚΣ Ο O Κ Ο KM) Κ -X--X--X--X--X--X--X--X--X--X--X--X--X-X-X
பிரவாகினி மார்கழி 2006 இதழ் 24

அத்துடன் ஆசை வார்த்தைகளைக் காட்டி நயவஞ்சகமாக மலையகத்திலிருந்து வீட்டு வேலைக்காக சிறுவர் சிறுமியர் களை கூட்டிச் செல்லும் தரகர்களுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இத்தரகர்களும் தோட்டங்களில் வாழ்பவர்களே. இவர்கள் சகலவிதத்திலும் சீரழிந்த நிலையில் இருப்பதுடன் மலையக இளம் தலை முறையினரையும் சீரழிக்கும் வேலைகளை செய்து வருகின்றனர். இவர்கள் சமூகத் துரோகிகள். இவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
லண்டனில் ஐந்து இளம் பெண்கள் படுகொலை
ஐந்து இளம் பெண்கள் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து லண்டன் பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
பிரிட்டன் தலைநகர் லண்டனின் கிழக்கு துறைமுக நகரான இம்ஸ்விச்சின் வெவ்வேறு பகுதிகளில் இவ் ஐந்து பெண்களின் சடலங்களும் நிர்வாணமான நிலையில் கண்டு பிடிக்கப்பட்டது. இவர்கள் அனைவருமே பாலியல் உறவு மேற்கொண்டதன் பின்னரே கொலை செய்யப்பட்டுள்ளதாக இக்கொலையை விசாரித்து வரும் பிரதம புலனாய்வு அதிகாரி தெரிவித்துள்ளார்.
கொலையின் பின்னணி, கொலையாளியின் நோக்கம் மற்றும் இப்பெண்கள் அணிந்திருந்த உடைகள் தொடர்பாகவே தாம் ஆய்வு செய்து வருவதாக புலனாய்வு அதிகாரி மேலும் தெரிவித்தார்.
●
● Ο ● O Κ KD Ο ● ● →一一※一一※一一令一一※一一※一※一一※一※一一※一一※一一※一一※一一※一一※一一※一一令一
டிவில், சிந்தனை வடிவில் DIrfr.
ாகவும் ஒரு கேள்வி
r.
துடிதுடிப்பையும், என்னுள்ளேயே தேடியபிறகு 60.
யெபோது, ஆறுதல் மனிதனின்
OğJ.
வே நீடிக்கட்டும்.
B IIT&pg).
ர் கண்காணிக்கின்றன.
அரவிந் அப்பாத்துரை சலம்பகம்
KM) Ο
Κ Ο ● O Ο Ο Kd ΚΧ O 冷 ص---
-X-X-X-X-X-X-X-X-X-X-X-X-X-X-X-X-X-

Page 8
ஆங்ரான் சுகியின் விடுதலை எப்போது?
மி யான் மர் 15 IT ly 6b
என்பதற்காக அகிம்சா வழியில் போராடியவர் ஆங்சான் சூகி. அந்நாட்டின் தலைசிறந்த அஹிம்சா வாதியும். சர்வதேச லீக் ஃபார்
*. *x டெமாக்ரசி கட்சித் தலைவியுமான 60 வயதுடைய இவர் கடந்த 16 வருடங்களாக வீட்டுக்காவலில் இருப்பது யாவரும் அறிந்ததே. 1990ல் நடைபெற்ற தேர்தலில் பெரும்பான்மை பலத்தோடு வெற்றி பெற்றது இருப்பினும் அவரிடம் ஆட்சிப் பொறுப்பை கொடுக்க மறுத்து தொடர்ந்தும் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
1991ம் ஆண்டு சமாதானத்திற்கான நோபல்ப் பரிசைப் பெற்றவர் உலக நாடுகளின் தலைவர் பலர் அவரை விடுவிக்கும் படி கேட்டுக் கொண்ட போதும் அவரது தண்டனைக் காலம் மேலும் ஒருவருடம் நீடிக்கப்பட்டதே அன்றி குறைக்கப்பட வில்லை. யாருடனும் அவர் தொடர்பு கொள்ள முடியாதபடி தொடர்புகள் uLu T6nih துண்டிக்கப்பட்டுள்ளது. பல்லாண்டுகளாக எல்லா நாடுகளின் மனதையும் புன்படுத்திக் கொண்டிருக்கும் ஒரே கேள்வி ஆங்ரான் சூகியின் விடுதலை எப்போது?
அங்கிலிக்கன் திருச்சபைக்கு பெண் ஆயர்கள் தெளிவு
இலங்கையில் முதல் தடைவையாக 3 பெண்களுக்கு குருத்துவப்பட்டம் (Anglican) அங்கிலிக்கன் திருச்சபையினரால் வழங்கப்பட்டது. அருட்திரு மாலினி தேவானந்தா, அருட்திரு குலோறி ஜெயராஜ், அருட்திரு சந்திரிகா மயூராவதி இவர்களுக்கு கொழும்பு ஆயர் குருத்துவப்பட்டத்தை வழங்கினார்.
பெண் ஆயர்களையும் நியமிக்க வேண்டுமென்று பிரேரனை குறித்து பரிசீலிக்க வேண்டிய நிர்ப்பந்தத்துக்கு இங்கிலாந்து திருச்சபை உள்ளாகியிருந்தது. ஆயர்சபையே மாற்றத்துக்கான பிரேரணையை கொண்டுவந்துள்ளது. பெண்கள் நியமிக்கப்பட வேண்டும் என்றும் இச்சபை பரிந்துரை செய்துள்ளது. இங்கிலாந்தில் நியமனங்களை அங்கீகரிக்கும் உரிமை அரசநியமன ஆணைக் குழுவுக்கே உண்டு.
 
 
 

வறுமையினால் பெண் குழந்தைகளை கொலை Gharuüациф Ghaѣяr(Brф
கோபால், மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்த பிந்த் மாவட்டத்திலுள்ள 5 கிராமங்களில் கடந்த 30 ஆண்டுகளாக பெண் குழந்தைகளே இல்லையென்ற திடுக்கிடும் தகவலொன்று வெளியாகியுள்ளது.
இம்மாவட்டத்திலுள்ள கருவா, கனாதன், சைனா, இதைனா, கத்வா குஜ்ஜார் ஆகிய ஐந்து கிராமங்களிலேயே கடந்த 5 ஆண்டுகாலமாக எந்தவொரு வீட்டிலும் பெண் குழந்தை இல்லாதிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அவ்வாறு பெண் குழந்தை பிறந்ததும் அதை கொன்றுவிடும் வழக்கம் அங்குள்ள மக்களிடையே இருந்து வரும் திடுக்கிடும் தகவல் ஒன்றும் வெளியாகியுள்ளது. இதற்கு காரணம் வறுமை எனக் கூறப்படுகிறது.
பெண் குழந்தைகளை வளர்த்து ஆளாக்கினால் திருமணத்தின் போது வரதட்சணை கொடுக்க வேண்டும் என்பதற்காக பிறந்த உடனேயே அவற்றை கொன்று விடுகிறார்களாம். இந்த திடுக்கிடும் தகவலை மாநில பெண்கள் நல ஆணைக்குழு உறுப்பினர் கிருஷ்ணகாந்த் தோமர் தெரிவித்தார்.
அந்த கிராமங்களில் பெண்குழந்தைகளை பாதுகாக்க வேண்டியதன் அவசியம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் முயற்சியில் தற்போது தாம் ஈடுபட்டு இருப்பதாகவும் அவர் கூறினார்.
இதே போல் உத்திர பிரதேச மாநிலத்தை சேர்ந்த ஹமிபூர் என்னும் கிராமத்தில் 2 நாள் பெண் குழந்தையை ஒரு கிடங்குக்குள் கிடந்து எடுத்ததாக வயலில் வேலை பார்க்கும் பெண் கூறியுள்ளார். யார் குழந்தையின் பெற்றோர்? இன்னும் தேடுகிறார்களாம் தான் ஏற்ற சமயத்தில் காணதிருந்தால் குழந்தை இறந்திருக்கும். இது ஏழாவது சம்பவமாக இந்த கிராமத்தில் நடந்திருக்கிறதாம். பொலிஸ் இப்படிப்பட்ட சம்பவங்களை பதிவு செய்வதில்லை. ஏனெனில் இவ்வாறான கொலைகள் அநேகம், பெண் குழந்தைகளை கொன்று புதைப்பது வழக்கம். பிள்ளையை பராமரிக்க முடியாவிடில் கொன்றுவிடும் வழக்கமாகின்றது.
பிரவாகினி மார்கழி 2006 இதழ் 24

Page 9
முற்போக்கு இலக்கியத்தில் கவிதைச் சுவடுகள் தொகுப்பு : முற்போக்கு கலை இலக்கியப் பேரவை
泛 இந்த திறனாய்வு நூல் தமிழ் இலக்கிய வரலாற்றில் ஒரு புதுப் பொலிவை ஏற்படுத்துவதாக அமையும். ஆறு படைப்பாளிகளினதும் அவர்களுடைய
படைப்பாளுமையை பல கோணங்களில் நின்று திறனாய்வு செய்த ஆறு ஆய்வாளர்களின் ஆற்றல்களை அறிவதற்கு இந்நூல் பெரு உதவியாக இருக்கும் மேலும், நவீன இலக்கியம் கற்கும் பல்கலைக்கழக மாணவர்களுக்கும் ஆய்வு மேற்கொள்ளும் இலக்கிய ஆய்வாளர்களுக்கும் இந்நூல் பயன்படும் என்பது இதன் சிறப்பாகும்.
அம்மாயிக் கல்லு ஆசிரியர் : மாலதி பாலேந்திரன்
மூன்று தலை முறைகளுக்கு முன் இலங்கையில் தேயிலை விவசாயிகளின் வாழ்க்கை எப்படி இருந்தது என்பதை அம்மாயிகல்லு கூறுகிறது.
இப்பொழுது எவ்வளவு முன்னேற்றம் அடைந்திருக்கிறது என்று இளைய தலைமுறையினருக்கு தெரிவிக்கும் விதத்தில் ஆசிரியை எழுதியிருக்கின்றார் மனித உறவுகளினால் ஏற்படும் மகிழ்ச்சியையும் நெகிழ்ச்சியையும் பழைய ஞாபகங்களையும் மனக்கண் முன் கொண்டு வருகிறது இக்கதை ஆசிரியை ஏற்கனவே “சிகரம்” என்னும் நூலை எழுதியிருக்கிறார் இவர் வசிப்பது மலையக தமிழர்களின் மத்தியில் தான் ஆகையால் மலையகத் தமிழர்களின் வாழ்க்கையை தனது கதைகளில் கருவாகக் கொண்டுள்ளார்.
பெண்மொழி
ஆசிரியர் : மா (ஏ. எஸ். பத்மாவதி)
மா, கண்ணமா, மானசி, நந்தினி, ஊசா என்ற பெயர்களில் எழுதிவரும் ஏ. எஸ். பத்மாவதி கடந்த 13 ஆண்டுகளாக பெண்கள் வாழ்க்கை பற்றிய தன்
பார்வையை 6) வடிவங்களாக
பத்திரிகைகளில் எழுதி வந்திருக்கிறார். குழந்தைகளின தேவைகளை பற்றி பேசும்
பிரவாகினி மார்கழி 2008 இதழ் 24
 
 
 
 
 
 
 

பொழுது பெண்களின் பிரச்சினைகளைப் பற்றி வெளிப்படுத்துகிறது இந்நூல்
பெண்ணிய குரலதிர்வும் தலித் பெண்ணிய உடல்மொழியும் ஆசிரியர் : முனைவர் அரங்க மல்லிகா
இந்நூலில் பெண்ணிய வரலாற்றின் மூன்று அவை நிலைகளையும் விவாதிப்பதில் தொடங்கி படைப்பு ரீதியில் கவிதை, புதினம் போன்றவற்றில் பெண் மொழியின் செயல்பாடுகளையும் தலித் பெண்நிலையையும் அரசியலையும் அலசிப் பார்க்கின்றது.
ஈழத்துத் தமிழ் அரங்கில் பெண் ஆசிரியர் : ஜெயரஞ்சினி இராசதுரை 8ళ్ల தமிழ் மரபில் பெண்நிலைவாதம்
எவ்வாறு உள்வாங்கப்பட்டுள்ளது அதன் * தோற்றம் வளர்ச்சி எவ்வகையில் அமைந்துள்ளது என்பன பற்றியும் தமிழ் அரங்கில் பெண் எவ்வகையில் பார்க்கப்பட்டு வந்துள்ளாள். நாடக பாடங்களை துணைகொண்டு தமிழ் * அரங்கில் பெண்ணிற்கான இடத்தை NN அறிந்து கொள்ளல் என்பனவும் பெண்நிலைவாத அரங்க முறைமையையும் அதனை உருவாக்கும் போது எழுகின்ற சவால்களையும் அதற்கான வளர்ச்சியையும் மதிப்பீடு செய்வதுமே இந்நூலின் நோக்கமாகும்.
நெருப்பு மலர்கள் ஆசிரியர் : ஞானி
விடுதலைப் போராட்டம் எழுச்சி அடைந்த காலத்தில் கூடவே பெண்களின் சம உரிமைக்கான விழிப்புணர்வும் வளர்ச்சி அடைந்து வந்திருக்கிறது. அடிப்படை உரிமைகளைப் பெறுவதற்கு எண்ணற்ற இன்னல்களைச் சந்தித்த பெண்களின் பெயர்களை வரலாற்றைத் தேடிக் கண்டுபிடித்து தீவிரமாக ஆராச்சி செய்து எமக்கு தந்திருக்கிறார் ஆசிரியர் ஞானி.

Page 10
எமது நிறுவன
affa/62
அதிகரித்து வரும் பாலியல் வன்முறைகளை எதிர்க்கும் ே சுவரொட்டிகள் வெளியிடப்பட்டு பேருந்துகளில் ஓட்டப்பட்ட அனுசரனையுடன் பலவண்ணச் சுவரொட்டிகளும் வெளியிடப்பட்டு வன்முறைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. அச்சுவரெ நடவடிக்கைகளை எடுக்க முடியும் என்பது பற்றி தெளிவாக விள
IE3וויוולין
බීබීසීඩීඨ පීඝ්‍රර්‍ර්‍ර්‍ර්‍ද්‍රිස්
பாலியல்தவறுகள் தித்
2ப் பக்க தொடர்ச்சி
எமது நிறுவனத்தினால் நடாத்தப்பட்ட ஆய்வரங்கொன்றிற் காக இலங்கை வந்தபோது அவர் எமது ஆய்வு கூடத்தில் நடாத்திய பேச்சில் அவரது "சிறகுகள் முறியும்' என்ற சிறுகதைத் தொகுப்பு இலக்கியச் சூழலில் மிகுந்த கவனத்தையும் விவாதத்தையும் உருவாக்கியது. இவரது கதைகள் ஆங்கிலம், இந்தி மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது. பெண்கள் ஒடுக்கப்பட்டு வருவதை இவர் முகத்தில் அறைவது போல் வெளிப்படுத்துவார். இவரது ஆக்கங்கள் யாவும் பெண்களது உணர்வுகளையே வெளிப்படுத்துகின்றன. எமது வெளியீடான பால்நிலைச்
 
 

செயற்பாடு
gfrtiէ2
நோக்குடன் எமது நிறுவனத்தினால் கடந்த மார்ச் 8 ஆம் திகதி து. மீண்டும் கனடிய சர்வதேச அபிவிருத்தி நிறுவனத்தின் கண்டி, கொழும்பு. காலி ஆகிய இடங்களில் ஒட்டப்பட்டு பாலியல்
ாட்டியில் துன்புறுத்தல்களுக்கு எதிராக நாம் எவ்வாறான
க்கப்பட்டுள்ளது.
சஞ்சிகையாகிய "நிவேதிணிக்கு தமது ஒத்துழைப்பை தொடர்ந்தும் வழங்கி வருகின்றார். பெண்கள் தங்கள் எழுத்துக்களையும் செயற்பாடுகளையும் மற்றவர்களின் விமர்சனத்துக்கு முகம் கொடாமல் பேனா முனையில் பெண்களுக்காக போராடி வரும் அம்பையை நினைத்து பெருமை கொள்வோம்.
ஆwருக்த ஓர் இrழ்த்துக்கன்
பிரவாகினி மார்கழி 2008 இதழ் 24

Page 11
O கருதத
சமாதானக் கற்கை நெறிக் கருத்தரங்கு
சிமாதானத்திற்கான பாதையை நோக்கி செல்லும் நமது நாட்டை கட்டியெழுப்ப வேண்டியது நம் ஒவ்வொருவரதும் கடமையாகும். எனவே நிறுவனத்தினால் சமாதானம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் இக் கற்கைநெறியானது மும்மொழிகளிலும் நடாத்தப்பட்டு சான்றிதழ்களும் வழங்கப்பட்டு வருகிறது. இக்கற்கை நெறியில் பலரும் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் பங்குபற்றி வருகின்றமை குறிப்பிடத் தக்கது.
சமாதானத்தை நோக்கி என்னும் நூற்தொகுப்பானது மும்மொழிகளிலும் எமது நிறுவனத்தினால் வெளியிடப் பட்டுள்ளது. இதில் 5 நூல்கள் அடங்கிய தொகுப்பாக காணப்படுகிறது.
1. சமாதான முயற்சிகளில் பால்நிலை பிரதிநிதித்துவம்.
2. அமைதியான இலங்கைக்கு சமஷ்டி முறையின் மூலம்
இனப்பிரச்சினைக்குத் தீர்வு. இலங்கையின் இன உறவுகள் சமூக வரலாற்று சூழமைவு பெறுபேற்ற யுத்தமும் அதில் மனித இழப்புகளும்,
5. மதச் சார்பற்ற அரசியலமைப்பு சமாதானத்திற்கு
இன்றியமையாதது.
இந்நூல்களைப் பெற்றுக் கொள்ள விரும்புவோர் எமது
நிறுவனத்தில் பெற்றுக் கொள்ளலாம். நூல்கள் அரசு, அரசசார்பற்ற நிறுவனங்களிற்கு எமது நிறுவனத்தினால் தபால் மூலம் அனுப்பிவைக்கப்பட்டு வருகின்றது.
பிரவாகினி மார்கழி 2006 இதழ் 24
 

பால்நிலைக் கற்கை நெறி
UIல்நிலைச் சமத்துவத்தை உணர்த்தும் நோக்கில் எமது நிர்வனத்தினால் 15 பால்நிலை அசமத்துவக் கருத்தரங்குகள் பல்வேறு மட்டங்களிலும் நடுத்தப்பட்டன. இவை சிங்களம் தமிழ் மொழிகளில் தேர்ச்சி பெற்ற விரிவுரையாளர்களினால் நடாத்தப்பட்டன. இதில் பெண்களும் ஊடகங்களும் பால்நிலைச் சமத்துவம், பெண்களும் வன்முறையும் பெண்களும் அரசியலும் மேலும் பல்வேறு தலைப்புக்களிலும் விரிவுரைகள் கலந்துரையாடல்கள் நடைபெற்றன. இவ்வாறான கருத்தரங்குகள் பலரது பாராட்டுகள் பெற்று தொடர்ந்தும் நடத்தப்பட்டு வருகிறது.
11

Page 12
Cluorg Cluuitru GrögldsGOGIIás கொண்ட பெண்கள் கல்வி 9,ufvogblgol6Or Cost GUI fi g6) Ulth
பெண்கள் கல்வி ஆய்வு நிறுவனத்தினது கருத்தரங்கு மண்டபம் 50 சொகுசு இருக்கைகளைக் கொண்டது. மற்றும் சமகால மொழி பெயர்ப்புக் கருவிகளுடன் புதுப்பிக்கப்பட்டுள்ளது. உணவு, தேநீர் வசதி செய்து கொடுக்கப்படும். உங்கள் கூட்டம், கருத்தரங்கு, செயலமர்வு, படக் காட்சி, விழிப்புணர்வு நிகழ்ச்சிகளுக்குத் தகுந்த வசதிகள் வழங்கப்படும்
WERC
Auditorium Charges Hall Charges A/C Non A/C o Full Day (8 hours) 5,000/-. 4,500/- o For Two Hours 2,000/- 1,500/- O Every Additional
One Hour 400/- 250/-
蟾移狩
Facilities f Television 400/- VCR 300/- Overhead Projector 300MultiMedia Projector 5000/- Mikes (each) 75/- Simultaneous Translation Unit 2000/- Head Phones (each) 300/-
Service charges 10% of the total amount
O Catering can be arranged
Maximum seating capacity 50
Ample Parking Space
ܢܠ
மேல்மாடி வீடு வாடகைக்கு
كمن
படுக்கையறிை சமையலறை, இருக்கையறை
37 .ܢܗ2 ޗެ/ கொண்ட விசாலமான இடவசதியுடைய மாடி இருப்பிடம் ஜனவரி 2007 முதல் வாடகைக்கு விடப்படும். ஆ மேலதிக விபரங்க
மாலதி பவானந்தன்
Women's Education er Research Centre
58, Dharmarama Road,
Colombo - 06,
Sri Lanka.
T. P. : 259.5296, 2590985 Fax 25963 13
E-mail womedreGSltnet. lik
12
 
 
 

/ N பால்நிலை அசமத்துவக் கருத்தரங்கு
எமது நிறுவனத்தினால் பால் நிலைச் சமத்துவத்தைப் பேணும் நோக்கில் இக்கற்கை நெறியானது மும்மொழிகளிலும் நடாத்தப்பட்டு சான்றிதழ்களும் வழங்கப்பட்டு வருகின்றது.
பாடசாலை மாணவர்கள், அரச, அரசசார்பற்ற நிறுவனங்களில் பணிபுரிவோரிடையே நடாத்தப்படும். இக்கற்கை நெறியில் பங்குபற்ற விரும்புவோர் தங்களது நிறுவனத்தினூடாக எம்முடன் தொடர்பு கொள்ளலாம்.
மேலதிக விபரங்களுக்கு :
மாலதி பவானந்தன் - 2595296
الصـ ܢܠ
༽
சமாதானக் கற்கை நெறி
சமாதானத்திற்கான கற்கை நெறியானது 2006 மார்ச் மாதம் முதல் வார இறுதி நாட்களில் மும்மொழிகளிலும் நடாத்தப்பட்டு வருகிறது. இலங்கையின் வரலாறும் சமூக இனத்துவ உறவுகளும், அதிகாரப் பிரிவும் சமஷ்டி முறையின் அவசியமும், அரசியல் முறைமையில் மதச்சார்பின்மை யின் அத்தியாவசியம் போன்ற பல விடயங்கள் விரிவுரைகளில் உள்ளடக்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு துறையிலும் தேர்ச்சி பெற்ற கல்வியாளர்களாலும். புலமை பெற்றவர்களாலும் விரிவுரைகள் நடாத்தப்பட்டு சான்றிதழ்கள் வழங்கப் படுகின்றன. வெளி மாவட்டத்தைச் சேர்ந்தவர் களுக்கு பிரயாணச் செலவும் தங்குமிட வசதியும் வழங்கப்படும். இக்கற்கை நெறியினை தொடர விரும்புவோர் எமது தொலைபேசி இலக்கத்திற்கு
தொடர்பு கொள்ளவும் : 2595296
பெண்கள் கல்வி ஆய்வு நிறுவனம் 58 தர்மராம வீதி, கொழும்பு 06 தொலைபேசி : 2595296, 2590985 தொலைநகல் : 2596313
<
TO :
பிரவாகினி மார்கழி 2008 இதழ் 24