கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: நோக்கு 1964 (3)

Page 1
எழுச்சிமிகு தாபகத்தில்
துறைகள் தோறும்
இயக்கங்கள் பல வேண்டும்;
முயற்சி வேண்டும்
உழைப்பினது பழுத்த பயன்
கடல் கடந்தெம்
உயர் நலத்தின் அடிநிலமாப்
அமைய வேண்டும்"
இந்தமிழ்
நட் இடம் நல்கியோர்
டு கிருஷ்ணு கோப்பரேஷன் fift GL'
.ெ எண் 1286
இன்மொழி எடுத்துக்காட்
岳·
ཡོད། ta E II ԱքLԸ} |-
ஜெயம் அச்சகம், ச்ே & !ே ਜੋ
. அச்சிட்டு, சு, செல்வராஜா , ஐந்தாவது ஒழுங்கை கொழும்பு-1, அவர்களால் வெளியிடப்பட்டது.
 
 

ஒவ்வொரு பாட்டும் (EAEի ՏծTց)
ஒவ்வொரு பாட்டும் காதலின்
அமைதியாம்
ஒவ்வோர் உடுவும் காலத்தின் அமைதியாம்
காலத்தின் முடிச்சு
ஒவ்வொரு நெடுமூச்சும்
அமைதியாம்
| դեր էլ էիլլեր
பனிமுறை ஆசிரியர் இ. இரத்தினம், இ. முருகையன்
வி ரூபா 1

Page 2
நோக்கு பணிமுறை ஆசிரியர். இ. இரத்தினம், இ. முருகையன்
கார், 1964. எண். 3. முத்திங்களிதழ். செய்யுட்கள வெளியீடு. செய்யுட்கள அலுவலர்: த ஆல வர்: புவவர் சிவன் கருணுலய பாண்டியனுர்; துணைத்தலைவர்: அ. வி. மயில் வாகனம், ம. முருகேசபிள்ளை; செயலாளர்; இ. இரத்தினம், துணைச்செயலாளர்; இ. முருகையன், பொருளாளர், ஆதி கருப்பையா செயலகம்-149/3, காலி வீதி, கொழும்பு-4. ஆண்டுக் கட்டணம், ரூடா 3-50. பணம் அனுப்பவேண்டிய விலாசம்: செய்யுட்களம் 149/3, காலி வீதி, கொழும்பு-4.
உறவும் பிரிவும் 1 எம். ஏ. நுஃமான்
முல்லையும் பூத்தியோ 2 இராஜபாரதி
புன்னகை நெகிழ்தர 3 திமிலைத்துமிலன்
வேட்கை 4. நீலாவணன்
தீயிலே இட்டீர் தெரிந்து 5 சி. கனகசூரியம்
ஒரு பகிடி 6 சத்திய சீலன்
வளர்ந்தோர்க்கு மட்டும் 7 ஜீவா ஜீவரத்தினம்
இருள் கவிகிறதா 8 மஹாகவி
ஒயில் போன சக்கை 9 மருதூர்க் கொத்தன்
முல்லை சான்ற கற்பு 10 கா. சிவத்தம்பி
லோலா 12 லோகா
அழகிய நூற்றைம்பது 13 புலவர் பாண்டியனுர்
மாதுளை 14 லோகா
தலைமொழி 15 ஆசிரியர்
முல்லைப் பாட்டு 16 லோகா
லோகா 17 g@fluຕໍ
நூல் நோக்கு 18 முருகையன், சித்தமழகியான்
இகநேசியோ சஞ்சேசு 22 "லோகr

 ைகதை நறும்பூக் கமழ்மணம் பரப்பும் நெய்தல் கண்டு நின்ற என் நினைவை அளைந்து மெல்லென அசைந்தது தென்றல் தளிர்ந்தே இன்பம் ததைந்தது நெஞ்சுள் பள்ளித் தோழிகள் பலர்புடை சூழ மெள்ள நடந்து விழிவலை சழற்றி திருகு கள்ளியின் சிறுமுகை நிமிர்த்திக் குருகு வெள்ளைக் குறுநகை உதிர்த்தி, பாங்கிய ருடனே மாங்காய் கடித்துத் தீங்குர லெழுப்பிச் சென்றமர்ந் திருந்து கிளிஞ்சல் பொறுக்க நீள்விரல் விடுத்து விழியின்தணலை மேனியிற் செலுத்திக் குறுமண லுடலென் குருதியும் பிழிந்து குறும்புகள் புரிந்த கோதாய்; அன்றே அடம்பன் கொடியாய் நெஞ்சினுள் மிடைந்தனை அதனல் வேகுமென் நெஞ்சே!
நினைவெனும் கழுவினில் நெரிபடும் மனதினை இனியெனும் குறுநகைப் புனலிடை முழுகிட விடுதியோ? செழுமையின் விளைவெனும் தளிரினை சுடுமணல் கருக்கிடும் துயர்சிறு கடுகோ? ஆதுரம் தணிக்க வேதனை கொடுக்கும் போதுகள் வளைத்த பூங்கொம் பென்றெனை அணைத்ததும் கனவென அகன்றது கொல்லோ? பிணக்கம் நீங்கிப் பெருமனம் கொண்டு சுணங்கு போக்கத் துணை செய்; அன்றேல். சுரியுழல் எருமைகள் முளரியின் மிருதுவை அளவிடும் விதமிகக் கொடிதே!
எம். ஏ. நுஃமான்

Page 3
முல்லையும் பூத்தியோ?
பழுத்த பனைகாட்டும் பாரம் சுமந்த இழைக்குஞ் சிறுத்த இடையாள்-வெளுத்த முறுவல் வெளிக்காட்டும் மூதூரில் முல்லைத் தருவே, நீ பூத்த துன் தப்பு. ’
அவ்வித்தென் நெஞ்சை அலைத்து வருத்திய பின் கவ்விக் கணிய வைக்குங் கண்ணுளின்-கொவ்வைக் கனியிதழில் ஊர்கின்ற கள்ளச் சிரிப்புத் தனவெல்லப் பூத்த துன் தப்பு.
காட்டினிலே பூத்துக் கமகமக்கும் முல்லாய்! என் வீட்டினிலே பூத்து விரை கமழும் - நாட்டின் கொடியோடு மல்லாடல் கூடா தினிமேல் அடியோடு பூக்கா திரு.
காற்ருட்ட நீயாடுங் காட்சி கவின் ஆமோ? நேற்ருட்டம் போட்டாளென் நேரிழையாள்-பார்த்தாற்ருன் பண்பு தெரியும்; படர்முல்லாய்! என் சொல்லை நம்பு, பூத் தாடல் நவை.
கோடிபெறும் பெண்ணுள் குறும்புச் சிரிப்புடன் போர் ஆடி மிக வாடி வதங்குவையேல்-பாரிவேள் மீண்டும் பிறப்பானே..? மென்முல்லாய் வீண்போட்டி வேண்டாம், நீ பூத்தல் விடு.
கருங் கூந்தற் காட்டின் கதம்பத்தோ டொன்றி வருஞ் சந்தர்ப் பத்தினிலும் வம்பாய்-அரும்பை அலர்த்தாதே, ஐயோ! அவள் சிரித்தால் ஆவி பிழைக்காய் நீ பூத்தல் பிழை.
இளம் பருவக் கோளாற்ருல் என்புலமை நெஞ்சம் விழும், துள்ளும், கள்ளுவெறி கொள்ளும்-செழுந் தெங்கின் பாளை நகை வெட்கும் பாவை அவள் சிரிப்பால், ஏழை நீ பூத்தல் எதற்கு?
வெண்தரளம் இன்றும் விரிகடலின் ஆழ்மடியில் புன்சிறைகொள் சேதி புரிகிறதா-முன்பிறவி என்னர் உயிராள் எழிற்சிரிப்புக் கண்டன்றே: இன்னும் நீ பூப்ப திழுக்கு. དཀའ་

புன்னகை நெகிழ்தர
மலையிடைப் பிறந்து வானகத் தெழுந்து கலைவளர் மதியக் கங்குலிற் றவழ்ந்து சுரும்பிமிர் பொதும்பர் விரும்பிவந் திவர்ந்தே அரும்பவிழ் தேறல் நசைஇக் குழுமிய வரிவண் டலமரக் கதுமெனப் புகுந்து விரிதெண் டாதவிழ் முருகுகண் டன்ஸ் எனை வந் தண்மிய தென்றலே கேணின் துணைவந் தமையின் உய்வேன் அல்லது சாதலும் கூடுமாம் காதலிக் கொருமொழி ஒதல் வல்லையோ பேதெழா முல்லையும் முருந்தும் முத்தும் நிரைந்தன்ன நகையாள் மருந்தும் வேண்டுமோ வென் நோய்க் கவள் கண் அருந்தும் இன்னுயிர் அவண்முக மதியத்து விரிந்த குவளைக்கு விழிமை புனைந்திலள் பவளப் பணியிதழ் சாயம் தோய்ந்தில தவளப் பொடியினைச் சந்தனத் திழைத்து முற்றத்து வனைந்த சித்திரக் கோலத்துப் பெற்றத்தாற் சிவந்த பிஞ்சு விரலினள் அசுவத்து வாலும் ஆமைக் கொண்டையும் இசையவைத் தறியா இருந்தார்க் குழன் மிசை மல்லிகை அரும்பின் வண்ணம் காண்பாய் வில்லிற் குனிநுதற் றிலகம் காண்பாய் பட்டினைப் புனையாள் பஞ்சுக் காழகம் கட்டி ஒல்கிய காணு நுசுப்பினள் நான்மாடக் கூடல் மகளிலள் சிறுகுடில் தேனிமிர் காவிற் புணர்ந்து செல்தொறும் மரகதச் செந்நெல் வயன்மிசைப் படிந்து புரிபு புரிபு புகுவையேல் அவண்கண் மீன் பூத்து வியப்பாள் கேண்மோ தென்றல் ஏணிப் பராமுகம் எதனை நுனைகர்ந்த பொங்கல் அமுதப் புதுமண மதுவா திங்கண் முகத்தாள் சித்திரைப் பொங்கல் தீம்பா லரிசியும் செந்தேறல் கரும்பும் மாம்பழம் கதவி வரிக்கனும் பிசைந்து பைங்கொடி அட்ட பாகுனக் கீவாள்
அதனல் s என்மொழி உரைப்பல் அயர்வையோ விரங்கி என்துயர் அறிந்தனை போதியோ போனல் உன்னக முணருமே யவளின் புன்னகை நெகிழ்தரப் பூக்குமென் னுயிரே!

Page 4
வேட்கை
- நீலாவணன் -
மாசி மாத மழைப்பனி. மண்மகள் மரக தத்தினில் நித்திலம் கொட்டியும் தூசு நீவிய மெத்தெனும் போர்வையுள் துயில் கிருள் வெகு தூரத்தே, தாய்மையின் பாசம் முற்றிக் கனிந்து குழைந்த ஓர் பசுதன், கன்றை "இம். மா" என் றழைக்குது. கூசி நின்ற குமர், இருட் கன்னியின் கொய்ய கத்தினை வெய்யவன் பற்றினன்.
கொஞ்ச மேனும் குளிர்பயம் இன்றியே குளித்த கூந்தல் பனிப்புகை பூட்டி மை மஞ்சள் தோய்ந்து பருவ எழிலிடை மாயம் கூட்ட மதர்த்து மலர்ந்து போய் வஞ்சி நீ, என்ற வாசலில் நிற்கிருய் வார்த்தை யாடின், ‘நான் வம்பன் அணைத்துனைக் கொஞ்சுவேன்’ என்று கூறிய கோளர் யார்? குற்ற மன்று; கடைக் கண் திரும்புவாய். மையல் முற்றிப் பயித்திய மாகி, யுன் மனதின் போக்கினை மட்டிடல் வேண்டி, மென் கைகள் பற்ற முனைகையில், கற்பெனும் கத்தி கொண்டெனைக் குத்திப் பிடுங்கினய்! பொய்மை நெஞ்சினில் வாய்மையின் பொன்மொழி போய்ப் புகுந்து குடைந்து புண்ணுக்கல் போல் கையெலாங் கடுங் காயம்! உன் பற்களின் காதல் முத்திரை யாயவை ஏந்தினேன்.
பொய்மை கண்டுளம் பொங்கிப் பொருமுவோர் புலவர்; நீயவர் பாதையில்! நல்லதே. மையை வெல்லு மிருட்டு நிறைந்ததோர் மட்டமான சிறுகுடில் வாழ்பவன் “பொய்யன்’ என்ற புறக்கணிப்போ? பொன்னும் பொய்த்த நின்முகம் சற்றுக் கறுக்கிருய். ஐயமில்லை என் உள்ளம் பெருக்கிய ஆழ்ந்த அன்பின் சுடரை அவிக்கிருய்,
உண்மை ஞான ஒளியில் உணர்வினை ஒன்றி நிற்கும் இலட்சியப் பாவையே, எண்ணிலாத நலங்களுன் வாழ்விலே இருக்கலா மவை எய்த லென் ஆசை. முன மண்ணிலே மலர்ந்தாலும், உன் சூழலில் மதிப்பற்றே மடிந்தாலும் நெருஞ்சியே விண்ணின் சோதியுள் உன்னைக் கலந்திடும் வேட்கை நெய்யில் விளக்கினை ஏற்றுவாய், எரித்த தீபம் அணைந்திடில் மீண்டுமிங் கேற்றி வைத்துத் தொழுவதற்காக, நாம் அறிந்திராத புதியர் அபூர்வமாய் ஆண்டு தோறும் அவனியிற் தோன்றினும், புரிந்து கொள்ளப் படாமலும் போகலாம்! போற்றவும் படலாம் சில வேளையில். அறிந்து கொண்டனையோ விந்த உண்மையை? ஆதலால் மடி கின்றனஐயகோ!

தீயிலே இட்டீர் தெரிந்து
- சி. கனகசூரியம் -
கல்லோடு முள்ளும் கலந்தஇகப் பாதையிலே எல்லை இலாத இடும்பை அனுபவித்து நித்தம் நடந்து நினைவற்றேன் ஆதலினல் பத்திரமாய்க் கட்டியெனப் பாடை தனில் ஏற்றி மெல்ல நடக் கின்றீர் மிகவும் கருணையுளிர்; தொல்லையுறும் நாளில் துணைவாரா விட்டாலும் இன்றேனும் வந்தீர் இதயம் நிறைநன்றி. குன்றுபோற் பாரமெனக் கூறும் பெரியோரே பாரம் சுமந்து பழகிட்ட வல்லுடலம் பாரமாய் மாறிற்றே? பாவம் நடவுங்கள்.
என்னங்(கு) அழுகுரலா? இல்லை இசைமாரி இன்னும் சற் றந்த இனிமை தனரசிக்க என்னை அனுமதிக்கா(து) ஏகின்றீர், ஏகுங்கள் பொன்னப்பா நேரம்; புரிந்திட்டீர் உண்மையினை.
நானுங்கள் தோள்மேல் நலமாய் இருக்கின்றேன் காணுச் சுகமெல்லாம் காண்கின்றேன் நும்மாலே ஊரான்தோள் மேலிருத்தல் உண்மை மகிழ்ச்சியென நேராகக் காண்கின்றேன் நின் தோளில் நானிருந்து. இன்றிங்கே உள்ள பலர் ஈதை அறிந்ததினுல் என்றன்தோள் மேல்முன்னம் ஏறி மகிழ்ந்தார்கள் இன்றுபழி தீர்த்தே இருக்கின்றேன் நும் மேலே.
என்றனையேன் இங்கே இறக் குகிறீர்? மேன்மேலும் கட்டைகளை என்மேற் கவிழ்க்கின்றீர், நெய்யூற்றி இட்டீர் நெருப்பும் எனைவிட்டுச் செல்கின்றீர் பக்கத்தில் நிற்கப் பயமென்ருே ஒடுகிறீர்? துக்கமெனக் கில்லைத் துயரென்னும் செந்தீயில் எந்நாளும் வாடி எனக்குப் பழக்கமுண்டு இன்னல் அளித்திடுமோ இத்தீ? இருந்தாலும் ஊரான்தோள் ஏறி உயர்வோன் கடைசியிலே நீரு கிப் போவான் நெருப்பிலெனும் உண்மையினை எல்லோரும் காண எனைவிட்டுச் செல்கின்றீர் வல்லவரே உங்களுக்கென் வாழ்த்து.

Page 5
ஒரு பகிடி
- சத்தியசீலன் -
அப்பா இறைவனே, அன்றுன் தனிவாழ்க்கை உப்பாய் உவர்த்த துணருகிருேம், அப்போது பஞ்சி முறித்தாய்; பகிடி பழுதாக அஞ்சினையோ இன்றைக்? கலறு!
செந்தீயின் பந்திற் சீலீர் என்று நீர் தெளித்த அந்த வினை ஒன்றை ஆர் போற்ருர்? வந்தங்கே ஆதாமோ டேனே அரிவை கலந் தாடினளாம்? தோதாக? இன்று துடி!
பா வாய் அருவி, பனிமலரில் வண்டாடல் "ஆ" வாய் அரிமா அவர்காவில்; “கூவாய் குயிலே நீ’ என்ரு ய், "குளிர் நீரிற் துள்ளு கயலே, நீ" என்ரு ய் களித்து
பாய்ந்தானவ் வாதாம்; பளிங்குச் சுனை கண்டான்; சாய்ந்தான்; எழுந் தான்; சலிப்படைந்தான்; ஏய்ந்தவளைத் தொட்டான்; சுவைத்தான்; துவண்டாள்! துடக்குண்டார்! விட்டார் பகிடி விழைந்து!
கண்ணைத் திறந்தாய்; கலங்கினையோ, கண்டு கொண்டு? மண்ணை நிறைக்கும் மனுக்கூட்டம்! விண்ணர் புணர்வார்கள்: ஆமாம், புதுப்பகிடி செய்வார். உணர்வாயோ இன்றுன் தவறு?
அன்னைக்கன் றப்பா ஒர் அஞ்சல் அனுப்பியதும் பொன்னிக்கு நான் புதிது போட்டதுவும், சின்னமகன் ஊர்விட்டே ஓடியதும் எல்லாம் ஒரே பகிடி ஆர்விட்டார் அஃதை? அழு!

வளர்ந்தோர்க்கு மட்டும்
- ஜீவா. ஜீவரத்தினம் -
இன்றிரவு மட்டும்தான் இவ்வூரில் ‘ஒடுவதால்”, சென்று வருதல் சிறப்பு.
X
வானமழை யிந்த வளரும் வரிசைக்கோர் ஆன சரக்கா? அதிசயமா?
J60T 1 IT. பள்ளிப் பொடியனெல்லாம் பாய்ந்தடித்துக் கொண்டுவந்தால் தள்ளாமல் துண்டு தருவதேன்?
கிள்ளி எறியாமல் இந்த இழிவை வளர்த் திட்டால் பறிபோகா தோ எம் பழமை; *வெறி செத்த பாட்டனர் என்ன பதுங்குவது? வாருங்கள்; பூட்டுகிருர்; உள்ளே புகுவோம்,
Y.
இத்தாலி தேச எழிலே ஒருங்கான சித்திரமா அங்கே சிரிக்கிறது?
சுற்றியுள்ள ஆடைகளை நீக்கும் அழகுக்குத் தானென்ன ஈடுண்டு? மேலும், எழிலாள், தன்
சூடென்னும் கும்பங்கள் காட்டக் குறிபார்க்கும் வேளையிலே.
நம்பிக்கை மோசம்! நறுக்கிவிட்டான்!!
வெம்பியழும் உள்ளத்தைத் தேற்ற ஒருத்தி வருகின்ருள்; கொள்ளக் கிடையாத கொம்புத்தேன்! மெல்ல மெல்ல க், கட்டி இருக்கும் கலிங்கம் நெகிழ்த்தினளோ? வெட்டிச் சரித்தனளோ வேற்றுயிரை?
ஒட்டி இடையோ டிருக்கும் இறுதியும் போம் நேரம். . .
மடையன், ஏன் சொர்க்கம் மறைத்தான்?
மண்டபத்துள் தீப வரிசை மறுபடியும்-- கண்டார் முகங்கள் கடுகு பொரிக்கு மெனில் "சண்டாளர் செய்த சதி!

Page 6
கறுத்த முகில்களின்
இருள் கவிகிறதா?
- ஒரு பாடல்
“மஹாகவி’
கறுத்த முகில்களின் இருள் கவி கிறதா? கலக்கம் உறுவது பிழை; கழ னிகளில் இறுக்கம் அடைகிற தரையினை இனிதாய் இளக்க வருகிற மழை அவை தருமே; பொறுத்து விழும், எழு கவலையுள்; ஒரு கால், புழுக்கம் அகல்கிற புயல்கள் விளையலாம்! உறுத்து வனபல; எனினும் அவைகளால் உவப்பு முழுவதும் அழிதல் இயலுமா?
பெருத்த மலை முடி உடையவும், இது போய்ப், பிணைத்த இரு விர லொடு குடிசையிலே ஒருத்தர் ஒருவரை உவகையில் உறவைத் தொழுக்கம் உயர்கிற அவரையும் இடறும்! வருத்தம் அடைவது வறியது; வருமுன் வகுத்த வழி இடர் தவிர்வதுவகையாம்; சிரிக்க முயல்வது சிரமம்! எனிலுமே சீனத்தல் விடுவது செயலிடை உதவும்
‘நடத்தும் அவன்’ ஒரு சிறி தயர் கையிலே நடுச் கம் இட நம தழகிய உலகு, நெடுத்த பலதள மனை நகர், திரிகை நெரித்த தென உடல் தகர்தல் நிகழலாம்; துடித்தல் தகும் ஒரு பொழுது; விழியினைத் துடைத்தல் தகும் ஒரு பொழுது, துணியினல்! படுத்தல், படுதுயர் பறைதல் பெரியதா? பலத்த துணிவொடு புதிதில் முனைவதா?
தகர்த்த பொருளிடை மறுபடி உதவத் தனித்த தகுதிகள் உடையவை ஒரு பால் நகர்த்தும்; மிகுதியை எறிதல் கடலிலே! நடத்தும் அலுவலை; நுமது கனவையே நிகர்த்த புதுமைகள் பல பல பிறகும் நிறைக்க வலிமைகள் நித நிதம் அணையும்; நகத்தை இடைவெகு சிறியவர் உமிவார்நமக்கும் அது சுவை தரும் எனல் நகையே.
சிறக்கும் எதெனிலும், அதனை நும் வழியே செலுத்த மனதினில் உறுதிகொள் ஞவிரேல்; சறுக்கும் இடம் நிலை சரிக, நிமிரலாம்; சலிப்பை உறுவது சவமெனில், உறலாம்! பறக்கும் எதிர்கிற படர்வகை; பிறரைப் பகைத்தல் ஒழிகிற பலம் உள தெனில் ஆம், நிறக்கும் இருள்; இதை விடிவது தொடரும்; நினைத்த படி நில நிலைமைகள் சுழலும்!

ஒயில் போன சக்கை
காயத்தை ஆற்றுங் கருத்தில், கடற்காற்றின் நேயத்தால், பச்சரிசி நீளப் பரப்பியதாம் வேலைக் கரையினிலே வீற்றிருந்தென் எண்ணமெனும் நூலால் வலைபின்ன நேர்ந்த பொழுதினிலே, நீலம் சிகப்பும் நிரைந்து குழைந்த நற் கோலங் கிடந்து குலவிச் சிரிக்கின்ற பூவாள் அடம்பை, புளகத்தைத் தந்திட்டாள். மோவாமல் அன்னவளின் முன்னே இருப்பதுவோ? வன்ன அழகி; வடிவத்தில் வானரம்பை, நண்ணும் நறுமன்றல் நங்கை திரவியமாய்க் கொண்டிருந்தாள் அன்னுள் குவலயத்துக் கோமாட்டி. பண்டிருந்த வேரிப் பதநீரை வண்டார் உறுஞ்சிப் பிரிய ஒயில் போன சக்கை. நெருஞ்சியின் காய்கள் நெருடும் மனத்தணுய், நின்றவளைப் பார்த்தேன்; நெடிதாய்த் தனிமையிலே ஒன்றுவதில் காமம் உடையாள்; எதிலும் நிறைவு குடைபிடிக்க நேர்மை விளக்கம் குறைவின்றி ஆட்சி கொலு விருக்கும் பேரழகைப் பார்க்க முனைந்து பயன்காணு துள்ளத்தால் பார்க்கின்ருள் ஒற்றைப் பனை!

Page 7
IO
முல்லை சான்ற கற்பு கா. சிவத்தம்பி எம். ஏ. சமகால மொழிபெயர்ப்பாளர் பிரதிநிதிகள் சபை, கொழும்பு (தை இதழின் தொடர்ச்சி)
மிருக வளர்ப்பின் ஆரம்பகாலத்தில் கூட்டு முயற்சியடிப்படையி லேயே இச்சமூகம் இயங்கிற்றெனினும், விவசாய வளர்ச்சி காரணமாகச் சொத் துரிமை ஆரம்பமாகின்றது. இச்சொத்துரிமையுணர்வு, தனிப்பட்ட வீடுகள் தோன்றுவதிலேயே முதன் முதலில் காணப்படும். கூட்டு முயற் சியின் பலன்களைக் கூட்டாக அனுபவிக்கும் குறிஞ்சி நிலையிலிருந்து கூட்டு முயற்சியின் பலன்களைத் தனிப்பட்டவகையில் அனுபவிக்க ஆரம்பிக்கும் நிலை முல்லையில் தோன்றுகின்றது. முதன் முதலில் மிருக வளர்ப்புக் கார ணமாக கூட்டத்தவர்க்கான சொத்துரிமை தோன்றும். அது பின்னர் விவ சாய நிலையில் தனிப்பட்டவர்களிடமும் சொத்துரிமையை ஏற்படுத்தும். 1 முதலில் கூட்டு உடைமையாக இருந்து, பின்னர் தனிப்பட்டார் உரிமை தோன்றும். இன்றும் தமிழ் மக்களிடையே வழக்கிலுள்ள 'மாடு மனை' எனும் தொடர் இச்சொத்துரிமையின் ஆரம்பநிலையினை எடுத்துக் காட்டுகின்றது. இப்படியான ஒரு சமுதாயத்திலே தான் அடிமைகளும் தோன்றுவர். 2 மிருக வளர்ப்புக் கூட்டு அடிப்படையிலிருந்து விடுபட்டு தனிப்பட்ட முறையிற் செய்யப்படும் பொழுது மிருகங்களை வளர்ப் பதற்கு ஏவல் மக்கள், வினை வலர் அத்தியாவசியமாகின்றனர். முல்லைநில நாகரிகத்தில், உயர்ந்த நிலையிலேயே அடிமைகள் தோன்றுவர். எனவே தான் காலத்தாற் பிந்திய கலித்தொகையில் வரும் முல்லைக் கலியில் உள்ள பாடல்களில் "பிறர் ஏவிய தொழிலைச் செய்யவல்ல அகப்புறத் தலைவன், தலைவி வினவலபாங்கிற்றலைவன் வினவலபாங்கிற்றலைவி என்ற குறிப்புக்கள் இடம் பெறுகின்றன. 9
முல்லைநில வாழ்வுக் காலத்திற்ருன் கூட்டமாக வாழும் மக்கட் கூட் டத்தினர் பிறரிடமிருந்து தம்மைப் பாதுகாத்துக் கொள்ளவேண்டிய தேவையும், தமக்குள்ளே தக்க ஒழுங்குகளை வகுக்க வேண்டிய அவசிய மும் தோன்றுகின்றன. நிறுவனமுறை ஆட்சிக்கு வித்தாக அமைபவை இவையே. தமிழ் நாட்டில் நட்புக்குத் தலைவனுக இருக்கும் ஆட்சியாளன் முல்லைநில நாகரிகக் காலத்திலேயே தோன்றினன் என்பது ஆராய்ச்சி யாளர் முடிபு. " ஓர் ஆயர் குழுவினரிடமிருந்து இன்னெரு ஆயர் குழு வினர் ஆடு மாடுகளைப் பறித்துச் செல்ல முனைவர். இதுவே ஆரம்ப காலத்தில் போருக்கான காரணமாகவும், பின்னர் போர் தொடங்கு வதற்கான கரணமாகவும் அமைந்தது. எனவே, ஆயர் நிலைவாழ்வின் ஆரம்பகாலத்தில் அம்மக்கட் கூட்டத்தினரிற் சிலர். குடியிருப்புக்கும் மேய்ச்சல் நிலத்திற்கும் அப்பாலுள்ள காட்டுப் பகுதியில் தங்கியிருந்து காவல் புரிந்து வருவர். இதுவே பாசறையமைத்துக் காத்திருக்கும் வஞ் சியாகப் பிற்காலத்தில் வளர்ந்தது. காவலுக்காக மாத்திரமல்லாது காட்டு மிருகங்களைப் பிடிப்பதற்கும் ஆண்கள் புற விற்குச் செல்வது வழக் கம். காட்டினுட் சென்று தக்கதருணம் பார்த்து மிருகங்களைப் பிடித்தல் மரபு. அது மாத்திரமல்லாது மிருகங்களை மேய்ப்பதற்காக மேய்ச்சல் Orgin of the Family. Private property and the state by Engels. ibid. கலித்தொகை. கழகப்பதிப்பு. பக். 346. தமிழர் சால்பு - சு. வித்தியானந்தன். பக். 41.

11
நிலங்களைத் தேடிச் சென்று தக்க இடங்களில் மேய விட்டு, பழக்கப்பட்ட மிருகங்களின் உதவி கொண்டு காட்டு மிருகங்களைப் பிடித்துப் பழக்கு தலுமுண்டு. மிருக வளர்ப்புக் காலத்தின் ஆரம்பத்தில் இம்முறையே இருந்திருக்கவேண்டும் இதற்குப் பின்னரே முன்னர் குறிப்பிட்ட முறை யில் களவாட வருபவர்க்கெதிராகக் காவல் காத்திருக்கவேண்டும்.
சிறுகுடிகள் குடியிருப்புக்களாக வளர்ந்து, விவசாயத்தில் முன்னே றிய காலத்திலேயே, ஊர்ப்புறக்காவல் அரசியல் தேவையாக அமையும், முல்லைத்திணை பற்றி வரும் பாடல்கள் பெரும்பாலும் வேந்தன் காரியம் முடித்து வரும் தலைவர் கூற்ருக அமைவதற்கான காரணத்தையும் நாம் இதிலிருந்து அறிந்து கொள்ளலாம்.
இவ்வாறு ஆண்கள் பிரிந்து சென்ற காலங்களில் பெண்கள் அவ்வப் பகுதிகளிலேயே வாழ்வர். ஆண்கள் வெளியே இருக்கும் காலத்தில் பெண்கள் குடியிருப்புக்களில் இருத் தலவசியமாகும். வளர்ந்து வரும் முல்லை நிலப் பொருளாதார அமைப்பினைக் காத்து வளர்ப்பவர்கள் பெண்களே. முல்லை நிலத்துப் பெண்கள், ஆண்கள் சென்ற பின்பும் ஆங் கிருத்தல் அவசியமென்பதை,
"வேறுபட்டு இரீஇய காலை இரியின் பெரிய அல்லவோ பெரியவர் நிலையே’ 2 எனும் பாடல் மூலம் நாம் அறிந்து கொள்ள முடிகின்றது.
வேட்டுவ நிலையிலிருந்து மாறி, மிருகங்களை வளர்ப்போராக மாறும் பொழுது, ஆண்களே மிருகங்களை வளர்க்கும் அக் கடினமான வேலையில் ஈடு பட்டனர். பெண்கள் மட்பாண்டம் வனவர்; பெட்டி கடகம், செய் வர். சிறு மண்வெட்டி கொண்டும் களைக்கொட்டுக் கொண்டும் பயிரிடுவர். 3 'இந்தியாவில் தாய் வழியுரிமை பற்றியாராய்ந்த பேராசிரியர் எரென் பல்சு அவர்கள் பெண்களே முதன் முதலில் விவசாயிகளாக இருந்தனர் என்றும், அந்த அடிப்படையிலேயே சில இந்தியக் குடிகள் இப்பொழுதும் தாய்வழி உரிமை பாராட்டுகின்றன என்றும் தெளிவாகக் காட்டியுள் ளார். * மிருக வளர்ப்புக் காலத்தில் தோன்றிய சிறு விவசாயம் (கொல் லைச் செய்கை) முதன் முதலில் பெண்களினலேயே செய்யப்பட்டு வந்த தும், மாடு பூட்டிய கலப்பை தோன்றிய பின்னர் அது ஆண்களின் தொழிலாக மாறிற்று என்றும் தொம்சன் கறுவர்; முல்லேநிலப் பொரு ளாதார அமைப்பின் தோற்றத்திற்கும் ஆரம்ப கால வளர்ச்சிக்கும் பெண் களே காரண கர்த்தர்களாக விளங்கினர். அதனுல், இந்நில நாகரிகத்திற் குப் பெண்கள் 'இருத்தல் முக்கியமாகின்றது.
1. புளியங்குளத்திற் கருகாமையிலுள்ள தண்டுவான் என்னும் கிரா மப் பகுதியில் சமீப காலம்வரை இவ்வாறு ஆண்கள் காவலுக் குப் போவது வழக்கம். காவலுக்குப் போவோர் மூன்று அல்லது நாலு மாத காலத்திற்குக் குடியிருப்புக்கு வராதிருப்பர். 2. நற். 266, 3. Instoduction to the Stndy of Indian History - Kosambi. 22. 4. Mother. Right in India - O. R. Ehrenfels. 5. Studies in Ancient Gre2k Society,

Page 8
2
ஆரம்பகாலத்தில் அவ்வாறிருந்த பெண்கள் சொத்துரிமை வளர்ச்சி யின் பின்னரும், அரசியலாட்சி வளர்ச்சியின் பின்னரும், தொடர்ந்து இல்லில் இருக்க வேண்டிய அவசியமேற்படுகின்றது. ஊர் காவலுக்காக ஆண்கள் சென்ற பின்னர், மிருகங்களைப் பராமரித்தற்கும், வினவலர்க ளைக் கட்டுப்படுத்துவதற்கும் பெண்கள் இருக்கவேண்டி யிருக்கிறது. எனவே தான் முல்லை நில்த்தலைவியை மனைவி என்றழைத்தனர். வீட்டிற் குரியவளாக விளங்கும் அவளே கணவன் பிரிந்த காலத்தில் வேண்டிய காரியங்களைச் செய்தாள்.
பிள்ளைப் பேறு போன்ற பெண்களுக்கே உரிய சிறப்புப் பண்புகள் காரணமாகவும் அவள் குடியிருப்பில் தங்கவேண்டியிருந்தது. முல்லை நிலத்தலைவி தலைவனைப் பிரிந்திருக்கும் காலத்தில் குழந்தைகளை வளர்ப் பதில் தனது கவனத்தைச் செலுத்தினள். சான்ரு கப் பல முல்லைத் திணைப் பாடல்கள் உள. 1 சொத்துரிமையும் அதனல் குடும்ப நிறுவனமும் வள ரும் முல்லை நில நாகரிகக் காலத்தில், குடும்பத்தை ஓம்புதல் பொருளா தார முக்கியத்துவமுடைய ஒரு செயலாகும்.
சொத்துரிமை, குடும்பம் முதலியன வளரும்பொழுது சுகாதார வழக்கம் தோன்றும். இக்குடும்பங்களில் ஆணே அதிகாரமுடையவனுக இருப்பான். 2 பிறக்கும் குழந்தைகள் ஒரே கணவன் மனைவியருடைய னவாகவே இ ல் லா தி ரு க் கு மே யா னு ல் சொத்துரிமை அ ற் று ப் போய் வி டு ம். த னி ம னி த சொத் துரி மை யை அடிப்படையாகப் கொண்ட சமுதாயத்திற்கு பெண்ணின் கற்பு மிக முக் கியமானதாகும். கற்பு என்பது ஏகதாரக் குடும்ப முறைமையின் இன்றி யமையாத்தன்மையாகவே வளரும். இன்னும், வருடத்தில் பெரும் பகுதி ஊருக்கு வெளியிலேயே ஆண்கள் தம் காலத்தைக் கழிக்க வேண்டியிருந் தமையால் பெண்களது கற்பு நிலையை வலியுறுத்த வேண்டிய தேவையு மிருந்தது. எனவே தான் முல்லை சான்ற கற்பாயிற்று. முற்றும்.
1. அகம். 184, நற். 162; 357 பெரும்பாண். 184-191.
2. Orgin of the Family. Private Property and the State.
லோலா
(Lola)
தோடை மரத்தின் கீழ் பருத்தித் துணித்தூளி தப்புகிருள் பச்சை அவள் விழிகள் ஊதா அவள் குரலே .
ஓ! காதல், தோடை மரக்கீழ்ப் பூத்தது. நீர்க்காலில் வெயில் ஒழுகும் நிற்கும் சிற் “ருெ லிவில் ஒரு சிட்டுக் குருவி மிழற்றும்.
ஓ! காதல், தோடை மரக்கீழ்ப் பூத்தது. பிறகு, லோலா தனது சவர்க்கா ரத்தை முடித்த பின் ஏறு தழுவும் இளைஞர்கள் வந்திடுவார். ஓ! காதல், தோடை மரக்கீழ்ப் பூத்தது. --லோகா

3
அழகிய நூற்றைம்பது
சிவன் கருணுலய பாண்டியனுர் முற்ருெடர்
97 எழுத்துக் கழகுதனித்தமி ழாட்சி
வழுத்துந் தமிழ்க்கழகு முப்பால்-பழுத்துக் கனியுதிர்ந்தாற் போலுயிர் காட்சி நனிமுதிர்ந்தார் பற்றற்ருன் ருட்படுதல் பண்பு.
98 ஒவிய மின்னிசை கூத்துப் புனைப்பொடு
பாவியற் பாட்டென் றிவை கவினுங்-கோவிய லாட்சி வளணு மமைதியு மெய்து பு காட்சிக் கினிய புலத்து.
99 திருமறு மார்பன் செழும்பரிமேற் போந்த
திருவழகு காண்டலுஞ் செம்பொன்-றிருடுங் கொடியவனுங் கொல்லாது கோனருளே பாடு மடியவனு மாயுய்ந்தா னன்று.
OO ஐம்பொறியு மார வமர்பொழுதோ டொன்றிய
ஐம்புலத் தோற்றத் தழகுநுகர்ந்-திம்பருளார்க் குள்ளக் கவலை யொழியு முழப்பயர்வு விள்ளப் பெறுமுவகை மேம்.
101 அழகே நயக்குமவர்க் காருயிர் மாட் டெல்லாம்
அழகே யறந்தருமன் பாக்கும்-அழகே யொருமுனைப்பாட் டுள்ளந்தந் துண்மை யுணர்வீன் ருெருநிலை வீ டார்விக்கு முய்த்து.
102 அன்பு நா ணுெப்புரவு கண்ணுேட்டம் வாய்மையொடு பொன்புரையுங் கல்விப் புலனுடைமை-வன்புகொடு முட்டாற்று வார்த் முனிவஞ்சா வாண்மையிவை யுட்டோற் றுயிர்க்கழகு மற்று.
OB பிணியின்மை செல்வம் விளைவின்ப மேமம்
அணியென்ப நாட்டிற்கிவ் வைந்து-பணிபுரிவா ரெல்லாரு மாகி யவர்க்கெல்லா மொப்பவவை யில்லாமை யில்லா குக
104 தன்னைத்தா னன்கு கற் ருய்ந்து தெளிந்ததற்
பின்னைத்தான் பெட்ப செயினுமற் - றென்னது உஞ் செய்யா தொழியினுந் தீர்தலின் ருமாலப்
பொய்யாப் புலமையே பொற்பு.
105 பண்டு தமிழ்ப்பொருநன் பைந்தலைமேற் பூச்சூடி
மண்டு செருச்செய் மரபினன்-பெண்டு துயர்ந்த துயரை மறப்பிக்குங் கோலம் உயர்ந்த உயிரினு மேல்.

Page 9
14
DIgill
நறுஞ்சுவை மாதுளை அதனுள் துறக்கம் கனிந்தமை வுற்றது போலும் ஒவ்வோர் வித்திலும் ஒருடு ஒளிர் பெற செழும்படல் தன்னுள் மடிந்தது எற்படை வலைவழி தோய்ந்து வீழுயிர்க் குருதி பிலிற்றும் சிறிய தேனடை போலும். என்னை!
மாதர் வாயொடு நறுங்கனி முத்தம் ஊதித் தொடுத்தது அறுபதம் வித்து; மாதுளை வெடிக்க ஆயிரம் இதழ்கள் சேதார் ஊனிடைச் சொரிந்தன நகைகள். பாசிலை ஆகத்துப் பாது காக்குமோர் வீசு செங்கதிர் வீங்கு செல்வமும் கூசு பொற்கலம் கொள்ஒளிர் மணிநிறை ஒடமும் மாதுளை என்பதும் ஓர் க.
மாதுளை அதனில் புண்ணிய துறக்கப் பொல்லாக் குருதி கதிர்த்திடும். நீர்தான் தன் நதிக் கூர்நுனி கொண்டு பீறிடும் பாரின் குருதியும் அதுவே: தாம்நிதம் நடுக்கும் வன்மலை யடுக்கின் விரைந்தெழு ஆர்வளிக் குருதியும் அதுவே: திரை ஒய் கடலின் துயிலின் குருதி, ஆரமர் கண்படு ஏரியின் குருதி; மனிதக் குருதியின் முன்வர லாறே மாதுளை, பிளந்திடில் பாதியின் அமைந்த தீது சேர் கோளம், இதயம் கபாலம்
இரண்டின் மறையையும் தெரிந்து நிற்குமே.
-காசியா லோகா. ,

15
நோக்கு முத்திங்கள் வெளியீடு.
LT எடுத்த பொருள், அகநோக்கினதாயினும் பொருள் நோக்கினதாயி னும் அதனை நேரான முறையில் கையாள்க.
கூறவேண்டிய பொருளிற்கு எது விதத்தினும் பயன் அளிக்காத சொற்களைப் பயன் படுத்த வேண்டாம் (பயனில் சொல் பாராட்டற்க).
வண்ணம் சொற்ருெடரிசைக்கியைய அன்றி அசையுருவிற்கியைய யாத்தல் வேண்டாம்.
பல இடங்களில் விடுகவிதைகளும் (வசன கவிதை) வெறும் சொற் வியல்களாகி விடுகின்றன. விடுகவிதைகளில் கூட யாதோ ஒரு : நிரப்ப வைக்கப்பட்ட தென்ற காரணமின்றிச் சொற்கள் சேர்க் கப் பட்டு விடுகின்றன. சொற்ருெடர் ஒசை நயம் (இசை) உடையதோ என்பது வாசகர் வல்லமையில் (எஃகு செவியிலும் நுண்ணுணர்விலும்) உள்ளது.
விமரிசம் என்பது ஓர் முற்றுகையுமன்று தடைகளுமன்று, விமரிசம். என்பதில் விதிக்கு விலக்குகளுண்டு. விழிப்பில்லாத வாசகருக்கு அது அதிர்ச்சிதரல் வேண்டும்.
சில விலக்குகள் பிழம்பு (அகவுரு) என்பது ஒரு கணப் பொழுதில் ஒரு நுழைபுல உணர்ச்சிமுறைக் கோட்டத்தின (சிக்கல்) அளிப்பதாம். இக்கோட்டம் என்னும் பதம் உளநூலார் கருத்தோடொப்பது (நுழைபுலத்தால் ளந்த பலவற்றையும் திரட்டி, வளர்த்தாது, ஒரு கணப் பொழுதில் ஒரு சால்லில் சொல்ல வல்லது பிழம்பு, என்பது இதன் பொருள்)
இத்தகைய ஒரு கோட்டம் தன்வயமாக எழுகின்ற பொழுது ஒரு விடுதலை உணர்ச்சி உண்டாகின்றது. அதில் இட எல்லை கால எல்லை ஆகிய
ரண்டினின்றும் கட்டவிழ்த்த ஒரு சுதந்தர உணர்ச்சி தோன்றுகிறது டீரென வளர்ந்த அந்த உணர்ச்சியே பெருங்கலைகளில் நாம் அனுபவிப்பது.
ஒருவர் தம் வாழ் நாளில் ஏராளமான பல படைப்புக்களைக் குவிப்ப பதிலும் ஒரு பிழம்பினை அளிப்பது மேலானதாம்.
பாவில் மூன்று விதிகளை நாம் வகுத்துக் கொள்வோம். நேர்முறைக் கையாளல், சொற்சிக்கனம், சொற்ருெட  ைச ஒழுங்கு என்பவை அவை, இவை நியமங்களல்ல. ஆயின் நீள் நினைவின் பெறு பேறுகள், பிறருடைய வையாயினும் கருத்திற்குரியவை
மொழி மிகைச் சொல் ஒன்றும் பெய்யற்க புதியது கூரு த அடைமொழி வேண்டாம். "தொல்லை அமைதிப் பெருநிலம் என்பதைப் போன்ற சொற்ருெடர்களை ஆளற்க. அது பிழம்பினை மழுங்கச் செய்து விடும். இது பருப்பொருள் ஒன்றுடன் அருவுணர்வைக் கலந்து விடுகிறது. என்றும் இயற்கைப் பொருள் ஓர் உவந்த குறிப்பீடமாகும்.
அருவுருக்களை அஞ்ச வேண்டும் நல்ல உரைநடையில் சொல்லப் Aட்ட ஒன்றை சாதாரண கவிதையில் சொல்ல முயலற்க. நல்ல வசன நடையில் சொல்ல முடியாமல் வரி நீளங்களில் ஒரு பொருளை மடக்குவது அறிவுடைமையன்று.

Page 10
6
கற்றவர் இன்று கடிவதை மக்கள். நாளை கடிவர் செய்யுட்கலை இசைக்கலையைப் போன்றது. இசைக்கலைக்கு வேண்டிய நேரம் செய்யுட் கலைக்கும் வேண்டும்.
பல கலைஞர் உம்மை ஊக்குக, அதை ஒத்துக் கொள்க; அல்லது மறைக்க முயல் க. அது பண்புடைமை.
-நல்ல அணி கொள்க; இல்லையேல் கொள்ளற்க.
எசுரா பவுண்ட். 1918 சமூகவியல் மெய்ப்பாடு
முளிதயிர் பிசைந்த காந்தள் மெல்விரல் கழுவுறு கலிங்கம் கழாஅ துடீஇக் குவளை யுண்கண் குய்ப்புகை கமழத் தான்றுழந் தட்ட தீம்புளிப் பாக
னிதெனக் கணவ னுண்டவி னுண்ணிதின் மகிழ்ந்தன் ருெண்ணுதன் முகனே, குறுந்- 167. இஃது உலகியலே வந்தது. (உலகியல்-Realism)
புனைந்துரை வகையாற் கூறுப வென்றலிற் புலவர் இல்லனவுங் கூறு பவாலோ எனின், உலகத்தோர்க்கு நன்மை பயத்தற்கு நல்லோர்க்குள் ளனவற்றை ஒழிந்தோர் அறிந்தொழுகுதல் அறமெனக் கருதி அந்நல் லோர்க் குள்ளனவற்றிற் சிறிது இல்லனவுங் கூறுதலன்றி யாண்டும் எஞ்
(GİT Gör gp ub gav av GOT Sn, (g? ii (Socialist Realism?)
-தொல்-அகம்-இணியா.
d( .4 ܕܘ - ܀ முல்லேப் பாட்டு
( லோப் டி வேகாவுக்குக் காணிக்கை )
(Serenata) ஆற்றின் கரை நெடுக இரவு தான் தன்னில் ஊறும் லொலிதாவின் மார்பகத்துட் கிளைகள் காதலரற் சாகும். கிளைகள் காதலாற் சாகும், பங்குனிப் பால மீதில் இரவோ அம்மணமாய்ப் பாடும். லொலிதா, உவர் நீரும் குமிழ்ரோசும் கொண்டுடலம் குளிப்பாட்டும். கிளைகள் காதலாற் சாகும். கூரைகளின் மேலாலே வெள்ளி இரவும் கள்ளும் * ஒளிரும் சிற்றற்றின், கண்ணுடியின் வெள்ளை-உன் வெள்ளைத் தொடைகளாம் கள்ளு கிளைகள் காதலாற் சாகும்.
* கள்ளுக்குப் பதிலாக, மூலத்திற் சொல்லப்பட்டது, அனிசு எனப் படும் சுபானிய மது.

17
பெடரிக்கோ காசியா லோகா
பெடரிக்கோ காசியா லோகா சிறந்த ஓர் சுபானிய நாட்டுப் புல வர். தற்காலத்து சுபானியப் புலவர்களுள் இவரைப் போல உலகப் புகழ் பெற்றவர் கிடையாது.
இவர் சுபானிய நாட்டில் புவன்றிவக்குரோசு என்னும் ஊரில் 1898 யூன் மாதம் 5-ஆம் நாள் பிறந்தார். இவர் சுபானிய உள் நாட்டுக் கல கத்தின் போது 1938 யூலை மா த்தில் கொல்லப்பட்டார். இந்த விபரீத மான சாவினுல் இவருக்குப் புகழ் கிடைத்தது என்று சிலர் கருதலாம், அது அவ்வாறில்லை. உண்மையான பாவலமே இவர்க்குப் புகழ் அளித்தது.
ஆரம்பகாலத்தில் இவர் போற்றத்தக்க ஆற்றல் கொண்டவராக விளங்கவில்லை. தாயாரிடமே ஆரம்பக் கல்வி பெற்ருர், தந்தையார் ஒரு கமத்தவர். இளவயதில் கிராம வாழ்வில் மகிழ்வோடு காலம் கழித் தார்; பேச முந்தியே பாடல் வ்ல்லவராக இவர் விளங்கினர்; வயது வந் ததும் இவர் கிரானடா என்னும் நகரிற்குச் சென்று கல்லூரிக் கல்வி பெற்ருர். பின் பல்கலைக் கழகத்திலும் சேர்ந்து கற்ருர், பின்னர் தொட்ர்ந்து கல்வி கற்க விருப்பில்லாமல் ஊர் சுற்றி வந்தார். நாடோடி யாகத் திரிந்து நாட்டின் இயல்பை நன்கு உணர்ந்து கொண்டார்.
இவர் கற்றதெல்லாம் பல்கலைக் கழகத்துக்குப் புறத்தேயாம். இவர் நண்பர்களிற் பலர் சிற்பியர் ஒவியர், இசைவலார் முதலியோர் ஆவர். கிரானடாவில் இருக்கும் பொழுதே இவர் தம் முதல் வசன நூலை வெளி யிட்டார். இதன் பின்னர் இவர் மற்றிது எனும் நகரிற்குச் சென்ருர், இங்கு இவர்க்குப் பல நண்பர்கள் கிடைத்தனர். இங்கு இவர் ஒவியத் தில் ஈடுபட்டார்; பியானே கற்ருர்; நாடகங்கள் தயாரித்தளித்தார்.
இக்காலத்தில் ஐரோப்பாவிலிருந்த பல கலையூக்குகள் சுபெயினையும். பாதித்தன. லோகாவும் இதற்கு விதிவிலக்காமையவில்லை. எனினும் இவ்வூக்குகளால் இவர் தம் தனிமையை இழக்கவில்லை. மீமெய்ம்மை (Surrealism) எனும் இலக்கிய நோக்கு இவரையும் கவர்ந்தது. இந் நோக்கு இவீர் நியுயோக்கிற்குச் சென்ற பொழுது இவரை ஆட்கொண்டு நின்றது புறத்து நின்று என்ன ஊக்கை இவர் பெற்ற ரேனும் அதைத் தன்வய மாக்கித் தம். நாட்டுவயமாக்கும் ஆற்றல் அவர்க்கிருந்தது.
இன்று கேட்ட ஒரு சொல், ஒரு தொடர், ஒரு வசனம் நாளை ஒரு பா அவரிடம் மலரும். இது இயல்பாக மலரும் அவர் கலையின் ஓர் அமிசம்,
இவரின் முதற் பாநூல் 1921 இல் வெளியாகியது, அதனல் அவர்க் குப் பெரும் புகழ் ஏற்படவில்லை. "அடுத்து அவர் வெளியிட்ட பாநூல் 1927 இல் வெளியாகியது. இந்நூல் மற்றைப் புலவர்களையும் ஊக்கு மளவிற்கு உயர்ந்ததாய் விளங்கியது. அவர் தம் பாக்களைத் தாமே ஒத விரும்பினர். ஏனெனில் பாடல் என்பது அதன் விளக்கத்திற்கு ஒர் வாழ் உடலை வேண்டி நிற்கும் என்பது அவர் கருத்து. பா எழுத்திலும் பா ஒத தலாலேயே அவர் பெரும் புகழீட்டினர்.
(20-ம் பக்கம் பார்க்க)

Page 11
I 8
நூல் நோக்கு இளந்திரையன் கவிதைகள்
யுனிவர்ஸல் பப்ளிஷர்ஸ் 155-156, அங்கப்ப நாயக்கன் தெரு, சென்னை-1.
விலை ரூபா. 3-25.
தில்லிப் பல்கலைக் கழகத்தைச்சேர்ந்த கவிஞர் சாலை இளந்திரையன் அவர்களின் கவிதைகளை அவ்வப்போது படித்துச் சுவைத்தவர்கள், அவற்றுட் பலவற்றை ஒருங்கு வைத்து. நோக்க வசதியாக இத் தொகுதி வந்திருக்கிறது. 123 தலைப்புக்களில், 231 பக்கங்களில் அமை யும் இக்கவிதைகள் பழகு தமிழிலே எழுதப்பட்டவை. பளிச்சென்று பொருள் விளங்குபவை. குளிர்ந்த சொற்கள் கொண்டு கோக்கப் பட் டவை. பொதுவாக இக்காலத்து மக்கள் ஏற்றுக் கொள்ளக் கூடிய கருத் துக்கள் கொண்டு மிளிர்கின்றன. பழுதுபடா யாப்பிலே பண்ணப் பட்டுள்ளன.
இளந்திரையன் கவிதைகளில் இத்தனை பண்புகள் இருந்தும் ஏதோ ஒன்று குறைவதாக உணர்கிருேம். அது என்ன என்று கண்டு பிடிப்பது, “உயர்ந்த கவிதைக்கு உயிர் தருவது எது?’ என்ற கேள்விக்கு ஏற்ற விடை தரும் எனலாம்.
கவிஞன் ஒரு படைப்புக் கலைஞன். அதனல் அவன் எழுதும் ஒவ் வொரு சொல்லிலும் ‘உலகம் யாவையும் தாம் உள’ ஆக்குகின்ற பிர மனின் படைப்புப் பெருமிதம் பிரகாசிக்க வேண்டும். பழைய கூறுகளின் புதுவிதச் சேர்க்கை நயம், இல்லாத ஒன்று இயற்றப்பட்டு விட்டது என்ற ஒருவகைப் பிரமையை-மயக்கத்தை உண்டுபண்ண வேண்டும். சமைப்பதற்கே உதவும் சாதாரண பானை வனையும் குயவனுக்கும், அதே களிமண் கொண்டு சிற்பங்கள் செய்யும் சிற்பிக்கும் உள்ள வேறு பாடு மேற் சொன்ன ‘இயற்றும் ஆற்றல்" என்பதைப் பொறுத்த ஒன்று தான்,
அந்த "இயற்றும் ஆற்றலின் முழுமையான வெளிப்பாட்டை எதிர் பார்த்துக் கொண்டு இளந் திரையன் கவிதைகளை அணுக ஏமாற்றம் உண் டாகிறது என்று ஒப்புக் கொள்ளத்தான் வேண்டியிருக்கிறது.
வழமையான கருத்துக்கள். வழமையான சொற்கள் வழமையான பா வடிவம், வழமையான போக்கு-இவையெல்லாம் கொண்ட ஒர் அமைதியான சராசரித் தன்மையோடு கூடிய கவிதைகள் இத்தொகுதி யிலுள்ளன. தமிழகத்தில் இன்று வெளிவரும் கவிதைகளோடு தோளோடு தோள் சோடை போகாது சமானமாக நிற்க வல்லவை இளந்திரையன் கவிதைகள்.
-முருகையன்.

19
பொம்மை வண்டி
நவாலியூர் சோ. நடராசன். கலைவாணி அச்சகம், 10, மெயின் வீதி,
யாழ்ப்பாணம்.
விலை ரூட
ஈழத்து மொழிபெயர்ப்பு இலக்கியப் பரப்பை நோக்கும் போ நவாலியூர் சோ. நடராசன் செய்திருக்கும் தொண்டின் பங்கு மேலோங் நிற்கிறது. அவர் இதுவரை வெளியிட்டுள்ள கீதாஞ்சலி, மேகதூத பூவைவிடு தூது, இதோபதேசம், பஞ்சதந்திரம், சாகுந்தலம் ஆகி யாவுமே மொழிபெயர்ப்பு நூல்கள் என்பது கவனிக்கத்தக்கது. −
இப்போது வெளிவந்திருக்கும் பொம்மை வண்டி என்ற இந்த நூலு வடமொழி நாடகம் ஒன்றின் மொழிபெயர்ப்பே. குத்திரகர் என்பா இயற்றிய மிருச்சகடிகம் என்ற நாடகம் தான் தமிழிலே “பொம்பை வண்டி’ என்ற உருவத்தைப் பெற்றிருக்கிறது. வடமொழி வசனங்களைL பெயர்க்கும் போது மூலத்தை அப்படியே அச்சொட்டாக, நூற்றுக்கு நூறு பின்பற்ருது ஓரளவு சுதந்திரமாக நடந்து சென்றுள்ளார் நடரா சன். ஆனல் அந்த விலகல், இக்கால நாடக மேடைகளின் தேவைகளுக் காக மூல நாடகத்தை இசைவிப்பது என்ற நோக்கங் கருதித்தான் செய் யப்பட்டதா என்பது தெளிவாகவில்லை.
தமிழ் நாடகங்களை நடிப்பதற்கு அபிமானிகள் பலர் விரும்பினுலும் அவ்விருப்பத் ை ப் பூர்த்தி செய்வதற்குத் தரமான நாடகப் பிரதிக கிடைப்பது அருமை. நல்ல நாடக எழுத்து அருகியுள்ள நமது சூழலில் நாடகாசிரியராக வளர்ச்சி பெறும் ஆர்வம் உடையோர், பல்வேறு பணி பாட்டுச் சூழல் பிறப்பித்து விட்ட நாடகப் பேராசான்களின் பாலி களேயும், போக்குகளையும், உத்திகளையும் அறிந்து கொள்வது மிக்க பய தரும். அந்த முறையிலே நடராசனின் இம்முயற்சி விதந்து பாராட வேண்டியது என்பதில் ஐயமில்லை. நல்ல தமிழ் நாடக ஆசிரியர் தோ6 சிதற்கு ஒரு மறைமுக ஊக்காக நடராசனின் “பொம்மை வண்டி' அ ை யும் என்று எதிர்பார்ப்போமாக. w
-சித்தமழகியான்,

Page 12
20
இவர் பல நாடகங்களும் எழுதினர். இலங்கையிலும் இவர் நாடகங் கள் ஆங்கிலத்தில் நடிக்கப் பட்டுள. இவர் நாடகங்கள் உணர்ச்சிப் பிழம்புகள்; பா இடையிடையிட்ட உரை நடை நாடகங்கள். இவர் பாவ லமும் நாடகவலமும்ஒருங்கே வளர்ந்தன. "நாடகமே பாவிற் கேற்ற இலட்சிய ஊடகம்; பா சமுதாயத்திற்கு நேரே பயன்படக் கூடிய சாத னம் என்பது அவர் கருத்து.
1928 இல் ரோமன் சரோ கிதானே என்ற பாநூலை இவர் வெளியிட்
டார். இது சுபானியா மொழி பேசும் நாடெங்கும் ஈடில்லாப் புகழை இவருக்குத் தேடிக் கொடுத்தது. நூல் முழுவதும் சிந்துகளாலானவை. நாடோடிகளின் பொருள்களே பாடற் பொருள்களாக அமைந்தன. ஒர் காட்டு.
இரவின் அமைவில்
சிறுவர் பாடினர்
'தெள்ளிய ஆறே
தண்ணிய சுனையே’
சிறுவர்
மகிழுநின் தெய்வ அகங்கொள் வதென்ன?
நான் (ஆறு)
பனிதனில் மறைந்த மணிகளின் நாதம்
இப்பாடல்களில் இவரின் உணர்ச்சி, புலநூகர்வு, நாடோடிக் கதைகள், மரணத்தின் எண்ணம், வியத்தகு உருவங்கள் எல்லாம் மலிந்து கிடந்தன.
லோகா ஒரு பொழுதும் ஒரு சிறுபான்மையோருக்காகக் கவிதை எழுதவில்லை, என்பாத்திரங்கள் தம்மைத் தாம் புரிந்து கொள்ளக் கூடிய மொழியிலேயே நான் எழுதுவேன்" என்று அவர் சொல்லிக் கொள்வார்.
அவருடைய மிகப் பெரிய பாடல் அவர் நண்பரான இகநேசியோ சஞ்சேசு மெசயாசு இறந்த பொழுது பாடப் பெற்றதாகும். இவர் எருது களோடு போர் செய்த ஒரு வீரர். அத்தகைய ஒரு போரிலேயே இவர் இறந்தார் இப்பாடல் உலகப் புகழ் பெற்ற பாடலாகும் இவர் இதை நாலு பகுதிகளாக நாலு யாப்பில் பாடினர்.
இதற்குப் பிந்திய காலம் இவர்க்குத் துயர் நிறைந்த காலமாகவே விளங்கியது. "நாளங்களைத் திறந்து பாடவேண்டிய பாடல்களை, மெய்ம் மைக்கு அடிமையாகாத பாடல்களை நான் பாடுகிறேன்" என்று அவர் சொன்னுர்.
பின்னர் அமெரிக்காவிற்குப் போகும் தருணம் இவருக்குக் கிடைத்
தது. நியூயோக்கிற்கு இவர் சென்ருர். இந்நகர் இவர்க்கு மனிதாதீதச் சிற்பியலும் வெஞ்சின வண்ணமும் கவலையும் தோய்ந்த நகராக விளங்

l
கியது. இங்கு இவர் தம் உணர்ச்சிச் சிக்கல்களைப் பாட மீமெய்ம்மை உருவகங்கள் மிக உதவியாயிருந்தன. அவ்வாறே அவர் பல பாடல்கள் பாடினர். ‘நியூயோக்கின் பாவலன்' எனும் அவர் நூல் மிகப் புகழ் பெற்
Ogil.
வானகம் தடிந்த ஒன்றே, அரவுரு அவாவும் உருவம் பளிங்குரு விழையும் உருவம் ஆயிடை என்மயிர் வளர்க.
இது தம்மைக் குறித்து இவர் பாடிய ஒரு பாவின் பகுதி. அரவின் உருவினை அவாவுகின்ற இயல்பு, பளிங்காக விழைகின்ற இயல்பு இரண் டிற்குமிடையில் இவர் தாம் படும் இடரை இங்கு கூறுகிருர்,
இவர் மீமெய்ம்மையைக் கையாண்டாராயினும் மற்றை மீமெய்ம் மையாளர் போலல்லாது திண்ணிய மெய்ம்மையில் (யதார்த்தம்) அசையாத பற்றுடையவராக விளங்கினர்! ஆயினும் கற்பனை உருவங் களில் உள்ள பற்றையும் துறந்தவரல்லர் அவர்,
நியுயோக்கிலிருந்து எரிசுடர்ப் பரிதியின் எழில்மிகு தீவாகிய கியு பாவிற்குச் சென்று பின் தாயகம் திரும்பினர்! இதன் பின்னரும் இவர் பல நாடகங்கள் எழுதினர் நாடகச் சபைகள் அமைத்து அரசினர் உதவியுடன் பல நாடகங்கள் எழுதித் தயாரித்தளித்தார். இவற்றுள் *குருதி மணம்’ என்பது மிக்க புகழ் பெற்றது.
அவர் தம் கடைசி நாடகத்தை எழுதி முடிக்கும் காலத்தில் சுபெ பினில் உள் நாட்டுக் கலகம் தொடங்கியது. அக்காலத்தில் இவர் கொலை செய்யப்பட்டார்
9. G. G. T 6f
ஈழத்தின் விஞ்ஞான மாத ஏடு. மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும்
பொதுமக்களுக்கும் பயன்படும் சிறந்த
கட்டுரைகளைத் தாங்கி வெளிவரும்
செந்தமிழ்ச் சஞ்சிகை 24 தெளிவான விளக்கப்படங்களோடு
திங்கள் தோறும் வெளிவருகிறது. இப்பொழுது விற்பனையாகிறது.
வாங்கிப் படியுங்கள் - விலை சதம் 60/- விலாசம் :-
399, யோசேப்பு ஒழுங்கை கொழும்பு-4.

Page 13
இகநேசியோ சஞ்சேசு மெசயாசு இறந்தமைக்குப் புலம்பியது
(Lament for Ignacie Sanchez Mejias) - காசியா லோகா - கொசிடாவும் சாவும்
மாலை ஐந்துமணி வேளை சரியாக மாலை ஐந்துமணி வேளை வெண்துண் டொன்றைக் கொணர்ந்தான் பையன் மாலை ஐந்துமணி வேளை முன்னரே மெல்லிய சுண்ணம் குழைந்தது மாலை ஐந்து மணி வேளை 岛P应点 எஞ்சியது துஞ்சல் துஞ்சலே மாலை ஐந்துமணி வேளை
பருத்தி நெய்யரி பறந்தது காற்றில் மாலை ஐந்துமணி வேளை பளிங்கு நிக்கலாய் பறந்தது ஒட்சைட்டு மாலை ஐந்து மணி வேளை சிறுத்தை பொருதது புறவொடு முரண்டு மாலை ஐந்துமணி வேளை துடையொடு உடன்றது கொடிய கொம்பு மாலை ஐந்துமணி வேளை இசை பொலி ஒளிதான் எழுந்தது விண்ணில் மாலை ஐந்துமணி வேளை பாடண ஆவி பாடின மணியென
மாலை ஐந்துமணி வேளை
கோணத்து மூலையில் மோனக் குழுக்கள் மாலை ஐந்துமணி வேளை காளைக்கு மட்டும் களிக்கும் உள்ளம் மாலை ஐந்துமணி வேளை நுரைபனி வியர்வை திரைந்தெழு காலை, மாலை ஐந்து மணி வேளை புண்ணிலே மரணம் போட்டது முட்டை மாலை ஐந்துமணி வேளை, மாலை ஐந்துமணி வேளை, சரியாக மாலை ஐந்துமணிவேளை.
சில்லூர் பிணப்பெட்டி அவன்துயில் படுக்கை மாலை ஐந்துமணி வேலை எலும் பொடு குழல்கள் அவன் செவி ஒலிக்கும் மாலை ஐந்துமணி வேளை ஏலவே காலை அவன்தலை உறுமிடும் மாலை ஐந்துமணி வேளை

23
தொலைநின்று ஊழுன் மெல்ல வந்தணைந்தது மாலை ஐந்துமணி வேளை பச்குள் இடுக்கில் பசுங்குழன் போல; மாலை ஐந்துமணி வேளை மன்பதை நொறுக்கினர் யன்னல் யாவையும் மாலை ஐந்துமணி வேளை பொல்லா மாலை ஐந்துமணி வேளை, மணிமுகம் எல்லாம் மணிஐந்து காட்டின மாலை வீழ் நிழலில் மணிஐந்து காட்டின
குருதி சிந்தல்
கண்ணெடுத்து நானுேக்கேன்! விண்மதியை இவண்வரச்சொல் நண்பன்இக நேசியோவின் மண்குருதி கண்கொள்ளேன். கண் ணெடுத்து நானுேக்கேன். மோன முகில் ஊரும்பரி; நீள் கனவின் காளைவட்டம்; 2 சூழ்வில்லோக் 3 காட்டரணின் வாய்விரித்த வான்மதியின் ஞாபகம்தான் வாட்டுமென ஆதலினல் பாதிவெண்ணிற போதுமல்லிகை தமைக் கூவுக,
கண்ணெடுத்து நானேக்கேன்,
பண்டை உலகின் பசுவொன்று மண்மிசை சிந்திய குருதியின் முகத்தில் தன் துயர் நாக்கினைப் புகுத்தவும் கி சந்திதோக் 1 காளைகள் பாதிகல், பாதி இறந்தாங்கு மேதினி இருநூறு வாழ்ந்து களைத்தன போலக் கதறின.
இல்லை,
கண்ணெடுத்து நானுேக்கேன்.
இகநேசி யோதன் தோள்களில் சாவு யாவையும் காவியே படிக்கட் டேறுதல் காண்க. விடியல் காண விழைந்தனன் விடியல் விடிந்தது மில்லையே. தனது முடிந்த முகவரை நினைந்து தேடினன் யாண்டும், கனவொன் றவனைப் பொய்த்ததே. அழகிய தன்னின் உடலினை
1 Sangrene 2 Bullring 3 Willow 4 g? ři apar řř..

Page 14
盛4
l Leather
குழைவுடன் எங்கும் தேடினன், கட்டில் தனது குருதியை மட்டுமே எங்கும் கண்டனன் கண் கொள என்னை வினவற்க குருதியின் ஒவ்வோர் தாரையும் அருகிய விசையில் வீழ்வதை ஒரு கணம் ஆயினும் தரித்திடேன் இருக்கை வரிசையை ஒளிர்த்து பருகும் ஆர்வ மக்களின், தோற்பதம் கோடுரோய் 2 தம்மில் ஊற்றுச் சொரியும் தாரையை யாரெனைப் பாரென கூவுவார்? பார்த்திடக் கூறுதல் வேண்டாம்! அண்மையில் கொம்பினைக் கண்டதும் கண்களை மூடிலன் அன்னவன்; ஆயின் மருண்ட தாயரோ, சிரங்கள் நீதஃ. தொழுக்களி லிருந்து கிளர்ந்தது மறைபெரு மூச்சு வெண்பனிப் பண்ணைத் தலையோர் விண் வளர் நந்திகள் தம்மை கண்ணி யழைத்த தம்மூச்சு. அவனை ஒவ்வும் இளங்கோ செவிலில் 3 ஆயினும் இல்லை; அவனின் విశే அண்ணும்' வேறு வாளும் இல்லை, வீறு ஒன்றும் இல்லை; அரிமா அருவி புரையும் அரிய அவனின் ஆண்மை வெண்பளிங் கமைந்த உடலம் நுணுகி அவன் கொள் கவனம்; புத்தியும் விறலும் பூத்த வெட்டிவேர் அவனின் புன்னகை; வட்டத்துக் காளைப் போரில் எத்துணைப் பெரிய வீரன்! அடுக்கத்து மலைகிழவோருள் எடுப்பொடு ஈடில்லாதோன்!
கோதுமைக் கதிரெனில் குழைவோன்,
குதிமுன் என்னில் கனல் வோன்; பனியெனில் கனியும் பாங்கினன், விழாத்தனில் விளங்கும் ஒளியோன்; பாயிருள் முட்கொடி சாய்ப்பதில் வல்லோன்; ஆயினென்; அவன்தான் ஈறிலி ஆழ்துயில் அடங்கினன் அடங்கவும் பாசிகள் புற்கள் தம் தெளிவிரல் வீசிக் கபாலம் போழ்ந்தன;
o forduroy , , 3 Gorf ஊர்.

போழ அன்னவன் குருதி ஏழிசை ஒலிக்கப் பாய்ந்தது; வெளியகல் சதுப்பெலாம் ஒலித்து கனிவறு கொம்பரில் சறுக்கி, பணியிடை உயிரின்றி யலைந்துதன் குழம்புகள் ஆயிரம் இடறி, நள்ளிருள் நீள்துயர் நாவென தெளிபுனல் குவாடல் குவிவர் தீரமோர் துன்பத் தடாகம் ஆர அமைத்திடும் காறும், ஏழிசை ஒலிக்கப் பாய்ந்தது. சுபெயின் வெண்ணிறச் சுவரே! எரிதுயர்க் காரிருள் காளையே! வரிப்பரும் இகநேசி குருதியே! நாளத்து நத்தம் பாடியே! ?
நாக்கேன். நோக்கேன் நான் கண்ணெடுத்து கலந்தான் அதனைக் கொள்ளுமோ, குருவிதான் அதனைப் பருகுமோ, ஒளியார் பனிப்படல் குளிர்க்குமோ, இலில்லிப் பெருக்கமோ, பாடலோ, வெள்ளியில் மறைக்க ஆடியோ, இல்லை. நோக்கேன். நோக்கேன் நான் கண்ணெடுத்து
1. குவாடல் குவிவர், ஒர் ஊர்: 2. நத்தாம்பாடி, Nightingale
-தொடரும்
பாண்டியன் பரிசு
பாண்டியன் பரிசுப் போட்டிக்காக வந்த கவி
தைகளை நீதிபதிகள் பரிசீலனை செய்து கொண்டி
ருக்கிறர்கள். போட்டியின் முடிவுகள்
கூதிர் இதழில் வெளியாகும்.
-செயலாளர்,
செய்யுட்களம்.
நோக்கின்'