கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: பெண் 2004 (9.2)

Page 1

குன்னறழுந்ளேன்

Page 2

தொகுதி : 9 இலக்கம் : 2
2004
சூரியா பெண்கள் அபிவிருத்தி நிலையம் மட்டக்களப்பு.

Page 3
பெண்
சூரியா பெண்கள் அபிவிருத்தி நிலையத்தின் சஞ்சிகை இல, 20, டயஸ் வீதி, மட்டக்களப்பு.
தொலைபேசி இல: 065-2223297 Fax NO: O65-2224657 E-mail: SuriyawOslt.ik
THE WOMAN-A Journal Published by Suriya Women's Development Centre,
No:20 Dias Lane, Batticaloa.
ஆசிரியை விஜயலட்சுமி சேகர் அச்சகம் வணகிங்கா பிரிண்டர்ஸ்
விலை f 40/=

2 –665 sõi...........
மற்றுமொரு மடலுடன் வாசகராகிய உங்களைச் சந்திப் பதில் மகிழ்ச்சியடைகிறேன். பால் நிலை சமத்துவத்தை ஏற்படுத் துவதன் மூலம் பெணிகளுக்கெதிரான அடக்கு முறைகளை களைந்து சமூகத்தில் பெண்களின் அபிவிருத்தியில் முன்னேற் றத்தை ஏற்படுத்துவதற்காய் பெண்ணியம் சார் கருத்துக்களை பல்வேறு வடிவங்களில் எமது சஞ்சிகை மக்கள் முனி, கொண்டு செல்கிறது.
பாம்பினர் கால் பாம்பறியும் என்பதுபோல் பெண் களின் பிரச்சனைகளை பெணிகளினி பார்வையில் சொல்லவே முற்படுகிறோம். பாம்பிற்கு கால் இருக்கிறதா இல்லையா என் பது இங்கு வாதம் இல்லை. அவரவர் நிலைகளை அவரவரே விளங்கிக் கொள்வர் என்பதே இதன் உண்மை.
பெண்களின் நிலைகளே பெண்களின் பாதிப்புக்களை, அவர்கள் சந்தோசங்களை, அவர்கள் ஆற்றல்களை, பெண்களே அவர்கள் மொழிக்கூடாக வெளிப்படுத்தும் போது, அவ் வெளிப் பாட்டின் உண்மை உணர்விலும் யதார்த்தத்திலும் காலம்காலமாய் பெண்கள் பற்றிவந்த வெளிப்பூச்சுகளும், சோடனைகளும் மிக மிகக் குறைந்தே விடுகிறது.
பெண்கள், “வெளிச் சொல்லல்’ என குரல் எழுப்பிக் கொண்டிருந்த நிலையில் இருந்து தற்போது அக் குரல்களின் கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையிலான உறுதி, ஆணித் தரம் மிக்கதாக அவர்கள் ஆக்கங்கள் தற்போது வெளிவரத் தொடங்கி விட்டது. தனித்து நிற்கையில் உண்டாகும் அச்சம். சந்தேகம், பின்னடைவு போன்ற பிரச்சனைகள் இச் சஞ்சி கையில் பெண்களின் கூட்டுச் சேர்கையில் அடிபட்டே போகிறது.
இவ்வாறு பெண்களின் ஒன்றிணைப்பை, பெண்ணியம் சார் பார்வையின் ஒன்றிணைவை உருவாக்கும் தளமான எமது பெண் சஞ்சிகையில் மேலும் பல புதிய எழுத்தாளர்களின் வரவை
எதிர் பார்க்கினிறோம்.
ஆசிரியை

Page 4
உள்ளே
பெண்களின் உடைகளைத் தீர்மானிப்பது யார்
13வது பாராளுமன்றத் தேர்தல்
இல்லத்தரசி
புதிய கதைகள்
கட்டத்துள் விளையாட்டு
சோவெனப் பொழியட்டும்.
மண்டுர் மீனா
கருத்தடை
கொடுக்கல் வாங்கல்
மண்ணுக்குள் புதைத்த மாணிக்கம்
பர்தா மீதான பிரான்ஸ் அரசின்.
ஆண்மையின் இலக்கணம்
கடிதம்

பெண்களின் உடைகளைத் தீர்மானிப்பத யார்?
நாகரீக மனித சமூகத்துக்கு உடை என்பது உடலை மறைக் கும் ஒன்றாகும். குளிர், வெப்பம் போன்ற காலநிலைத் தாக்கங் களிலிருந்து தற்காத்துக் கொள்வதற்கும் உடை அவசியமாகும். எனினும் பெண்களைப் பொறுத்தவரையில் உடைஎன்பது இந்த அடிப்படை மானுடத் தேவைகளைக் கடந்து சமூக நியமங்களுக்கு உட்பட்ட ஒன்றாக இருந்து வருகிறது.
குடும்பம், பாடசாலை, மதம், கலாசாரம், ஊடகம், பொருளா தாரம், சாதியம் போன்ற பல்வேறு சமூக நிறுவனங்களும் பெண் களின் உடைகளைத் தீர்மானிப்பதில் ஆதிக்கம் செலுத்துகின்றன.
குறிப்பாக தற்போதைய உலக மயமாதல் முதலாளித்துவப் பொருளாதார முறையானது உலகளாவிய அளவில் பெண்களின் உடைகளைத் தீர்மானிப்பதில் மேலாதிக்கம் செலுத்தி வருகிறது. உலக மயமாதல் முதலாளித்துவ பொருளாதார முறையானது பல்வேறுபட்ட சுயாதீனமான கலாசாரங்களையும் அழித்து தனது பொருளாதார முறையைப் பாதுகாக்கக் கூடிய உலகளாவிய பொதுக் கலாசாரத்தை உருவாக்க முயல்கிறது. இதற்காக மனித உடலை யும் மனிதச் சிந்தனையையும் அது மையமாகக் கொண்டுள்ளது. குறிப்பாக பெண்களின் உடலை மையப்படுத்தி உலகமயமாதல் ஆணாதிக்கக் கலாசாரத்தைப் படைக்க அது எத்தனிக்கிறது. சுருங் கக் கூறின், உலகளாவிய பொதுக் கலாசாரம் எனும் பெயரில் பெண் உடல் உலகமயமாக்கலுக்கு உள்ளாக்கப்படுகிறது. பெண் உடல் உலகளாவிய பொதுப் பாலியல் நுகர் பண்டமாக்கப்படுகிறது. உலக அழகு ராணிப் போட்டிகளையும், சர்வதேச விளையாட்டுப் போட்டிகளையும் இதற்கு மிகச் சிறந்த உதாரணமாகக் கொள்ள (ՄtԳպլb.
பெண்ணுடலை அதிகளவில் வெளிக்காட்டும் ஆடைகளை தயாரிக்கும் பன்னாட்டு ஆடைதயாரிப்பு நிறுவனங்களே உலகில்
-1-

Page 5
முன்னணியில் திகழும் ஆடை தயாரிப்பு நிறுவனங்களாயுள்ளன.
சர்வதேச விளையாட்டுப் போட்டிகளுக்கும் அழகு ராணிப் போட்டி
களுக்குமான உடைகளை வடிவமைப்பதில் அவை தமக்குள்
போட்டி போட்டுக்கொண்டு செயற்படுகின்றன. சர்வதேச விளையாட்
டுப்போட்டிகள், ஒலிம்பிக் போன்ற உலக விளையாட்டுப் போட்டி களில் விளையாட்டு வீராங்கனைகள் அணியும் ஆடைகள் இந்த
ஆடை நிறுவனங்களால் விசேடமாக வடிவமைக்கப்படுகின்றன.
விளையாடுபவரின் உடல், உள செளகரியம் என்பதற்கு அப்பாற்
பட்டு, தேவையற்று பெண்ணுடலை மிகையாக வெளிப்படுத்தும்
வகையில் இவ்வாடைகள் வடிவமைக்கப்படுகின்றன.
(விளையாடுபவர்களுக்கு மாத்திரமல்லாது ஆரவாரப் பெண் களுக்கான திடலின் அருகே இருந்து மலர்க்கொத்துக்களை/ நிறப்பட்டிகளை கைகளில் ஏந்தி ஆடிப்பாடி விளையாடுபவர்களை ஊக்குவிக்கும் பெண்கள் ஆடைகளும் இதே நிறுவனங்களால் வடிவமைக்கப்படுகின்றன.) வீராங்கனைகள் விளையாடுகையில், அவர்களின் குறிப்பான அசைவுகளின்போதும் நிலைகளின்போதும் படப்பிடிப்புக் கருவிகள் வெளித் தெரியும் அவர்களின் உடல் அங் கங்களில் குவிந்து பெண்களின் உடற்பகுதிகளை முழு உலகுக்கும் தொலைக்காட்சியின் வழியாகக் கொண்டு செல்கின்றன.
சர்வதேச தரத்திலான நிகழ்வுகளுக்கான உடைகள் மாத்திரமல்ல அன்றாட வாழ்வில் பெண்கள் அணியும் உடைகளும் இந்நிறுவனங்களால் வடிவமைக்கப்படுபவை அல்லது இந்நிறுவனங் களின் கருத்தியல் செல்வாக்குட்பட்ட பிரிவினரால் தயாரிக்கப்படுவ பையாகும்.
பெண்களின் உடல் அமைப்பை வெளிப்படுத்திக்காட்டும் வகையில் வடிவமைக்கப்படும் இவ் ஆடைகளை அணியும் பெண்கள், ஆண்களின் பாலியல் முனைப்புடன் கூடிய பார்வைக்கு உள்ளாகின்றனர்.
இத்தகைய ஆடைகளின்பால் பெண்களின் ஆர்வத்தைத்
-2-

தூண்டிவிடும் ஊக்கியாக ஊடகங்கள் தொழிற்படுகின்றன. பொரு ளாதாரம், ஊடகம் அடங்கலான ஆணாதிக்க சமூக நிறுவனங்கள் அனைத்தும் ஒன்றிணைந்து (சமூகத்தில் அவற்றின் குறிப்பிட்ட கால கட்டத்திற்குரிய அதிகாரப் படிநிலையாக்கத்துக்கு அமைய) பெண்ணின் உடையைத் தீர்மானிப்பதில் செல்வாக்குச் செலுத்து கின்றன.
பெண்ணின் உடையைத் தீர்மானிப்பது என்பது பெண் உடலின் மீதான அத்துமீறலாகும். பெண் உடல் மீது அதிகாரத்தை நிறுவுவதாகும். அவ்வகையில் இவ் அனைத்துச் சமூக நிறுவனங் களும் வரலாற்று வழிப்பட்ட ஆணாதிக்கத்தைப் பலப்படுத்தி அதற் குப் புத்துயிரளிக்கின்றன.
வரலாற்றைத் திருப்பிப் பார்த்தால் ஒவ்வொரு காலகட்டத் துக்கும், கலாசாரங்களுக்கும் அமைய பெண்களின் உடைவடி வமைக்கப்பட்ட விதத்தையும், இதில் சமூக நிறுவனங்களின் ஆதிக் கத்தையும் காணமுடியும்.
- விக்டோரியா காலத்தைய ஐரோப்பிய சீமாட்டிகள் விசாலமான சுற்றளவுடைய, அடுக்குப்பாவாடைகளை கொண்ட ஆடையை சுமக்க முடியாது சுமந்து திரிந்தனர். பெண்ணின் அசைவியக்கத் தைப் பெரிதும் கட்டுப்படுத்துவதாயும், பெண்ணிடம் நளினத் தன்மையையும், அடங்கிப் போகும் சுபாவத்தையும் ஏற்படுத்தும் வகையில் இவ்வாடைகள் அமைந்திருந்தன.
- புரட்சிக்கு முந்திய சீனாவில் பெண்கள் நீளமான ஆடைகளை அணிந்ததுடன், பெண்களின் பாதங்கள் குறுகலாக இருப்பதற்காக துணியால் இறுக்கிச் சுற்றப்படுவது வழக்கத்தில் இருந்தது. இதனால் பெண்களால் தொடர்ச்சியாக நிற்கவோ, வேகமாகவோ, ஒடவோ முடியாத நிலைமை காணப்பட்டது.
- பண்டைய தமிழ் சமூகத்தில் அரசகுலப் பெண்கள் உடல்
அதிகளவில் வெளித்தெரியும் ஆடைகளை அணிந்தனர்.
-3-

Page 6
- கேரளாவில் ஈழவர் எனும் அடக்கப்பட்ட சாதியப்பிரிவைச் சார்ந்த பெண்கள் மேற்சட்டை அணிவதற்கு தடை விதிக்கப்பட்டி ருந்தது. மீறி அணிந்த பெண்களும் அவர்களது குடுப்பத்தினரும் தண்டிக் கப்பட்டனர்.
- அரபு இஸ்லாமியப் பெண்கள் கறுப்பு துணியால் தமது உடலை முழுமையாக மூடிக்கொள்ளும் நிலைமை காணப்படுகிறது.
- கத்தோலிக்க மதப் பிரிவைச் சார்ந்த பெண் துறவிகள் தலையை துணியால் மூடிக்கொள்வது கட்டாயமானதாகும். எனினும் ஆண் துறவிகளுக்கு அத்தகைய விதி கிடையாது.
காலத்திற்குக் காலம், நாட்டுக்கு நாடு, இடத்திற்கு இடம் பெண்கள் வேறுபட்ட வகையில் உடைகளை அணிந்தாலும், இந்த உடுப்புப் பாணிகள் யாவும் ஆணாதிக்க சமூக அமைப்பின், ஆணா திக்க சமூக நிறுவனங்களினால் தீர்மானிக்கப்பட்டு வடிவமைக்கப் படுகின்றனவையாயுள்ளன.
இலங்கையைப் பொறுத்தவரையில் ஆண்களின் உடை காற்சட்டை எனவும், பெண்களின் உடை சேலை எனவும் அடை யாளப்படுத்தப்பட்டு வருகிறது. காற்சட்டை காலனித்துவ ஆட்சியுடன் அறிமுகப்படுத்தப்பட்ட ஒன்றாகும். எனினும் காற்சட்டை ஆண்க ளுக்கு சமூக ரீதியாக அங்கீகரிக்கப்பட்ட ஒரு உடையாக/கேள் விக்கு அப்பாற்பட்ட ஒரு உடையாக ஆகிவிட்டது. சேலை என்பது தேசிய கலாசாரத்தின் தேசிய பாரம்பரியத்தின் குறியீடாக அடை யாளப்படுத்தப்பட்டுள்ளது. பெண்கள் அதை தொடர்ந்தும் அணி வதன் மூலம் தமது தேசிய கலாசாரத்தையும் பாரம்பரியங்களை யும் பாதுகாப்பதாக அர்த்தங்கற்பிக்கப்படுகிறது.
ஏன் பெண்கள் தேசிய கலாசாரத்தை, பாரம்பரியங்களைப் பாதுகாத் திடும் கலாசாரக் காவிகளாக மாற்றப்பட்டுள்ளனர்?
வரலாற்றைத் திரும்பிப் பார்த்தால் மனித குலத்தின் கலாசாரங்கள், பாரம்பரியங்கள் அனைத்துமே ஆணாதிக்க கலா -4-

சாரங்களாயும் ஆணாதிக்கப் பாரம்பரியங்களாயுமே காணப் படுகின்றன. பெண்ணுடலை கட்டுப்படுத்துவதை பெண்ணுடலின் மீது ஆதிக்கம் செலுத்துவதை மையப்படுத்தியே இக் கலாசாரங் களும் பாரம்பரியங்களும் உருவாக்கப்பட்டுள்ளன. நிலப்பிரபுத்துவ சமூக அமைப்பில் உரிமைகளைப் புரிந்து கொள்ளாது வாழ்ந்த மக்கள், பிரெஞ்சுப் புரட்சி வழங்கிய ஜனநாயக ஒளியைப் பின்பற்றி நவீன தேசங்களாகப் பரிணமித்த பின்னரும் நிலப்பிரபுத்துவகால ஆணாதிக்கத்தின் தொடர்ச்சியானது தேசிய கலாசாரமாக, பாரம் பரியமாக வெளிப்படுகிறது.
புத்தாண்டு பிறக்கையில் பத்திரிகைகளின் முன் பக்கங்களும் கலண்டர்களும் கலாசார உடை அணிந்த பெண்களின் படங்களைப் பிரசுரிக்கின்றன. தொலைக்காட்சியில் தமிழ், சிங்கள, முஸ்லிம் பெண்கள் மூவர் கலாசார உடையில் தோன்றி புத்தாண்டு வாழ்த்து தெரிவிப்பர். இதன் மூலம் நிலப் பிரபுத்துவகால ஆண்ாதிக் கத்தை தொடர்ந்தும் தமது உடையின் மூலமாக சுமந்து திரியும் காவி களாக தமிழ், சிங்கள, முஸ்லிம் பெண்கள் இருக்க வேண்டும் எனும் செய்தி பெண்களுக்கு விடுக்கப்படுகிறது. பெண்கள் பாரம் பரிய கலாசாரத்தை சுமப்பது என்பது காலங்காலமாக தொடர்ந்து வரும் ஆணாதிக்க அடக்குமுறைகளை சுமப்பதாகவே அமைகிறது.
இதன் மறுபுறம், சிறுபான்மை தேசிய இனங்களை மதப்பிரிவு களை சார்ந்த பெண்கள் சிலர் தமது தேசிய மதகலாசார அடை யாளத்தை தாமே விரும்பி அணியும் நிலைமையும் காணப்படு கிறது. தமது சிறுபான்மை கலாசாரத்தைப் பாதுகாப்பது எனும் அர்த்தத்தில் இப் பெண்கள் தமது தேசிய கலாசார அடையாளங் களை அணிகின்றனர். இது பெண்களின் சுய தெரிவினை அடிப்படை யாகக் கொண்டிருப்பதால் ஆணாதிக்கக் காரணிகளுடன் இதை நேரடியாக தொடர்புபடுத்தி - முடியுமா எனும் கேள்வியும் எழுகிறது.
பல்வேறு நாடுகளுக்கும் பாரம்பரிய உடைகள் உண்டு.
உதாரணத்துக்கு ஜப்பானிய பெண்களின் கிமோனா. அதேபோல்
சீனப் பெண்களின் உடை மற்றும் உடை அணியும் பாணி. எனினும்,
இந்நாடுகள் அனைத்துமே இப்பாரம்பரியங்களைக் கடந்து வந்து
-5-

Page 7
விட்டன. இந்நாடுகளில் நடந்தேறிய பாரிய சமூகப் பொருளாதார மாற்றங்கள், பெண்கள் பொருளாதார ரீதியாக சுயாதீனமடைதல் போன்ற காரணிகள் நிலப்பிரபுத்துவ வழிப்பட்ட ஆணாதிக்கப் பிடியி லிருந்து இவர்கள் விடுபடுவதற்கான காரணங்களில் ஒன்றாகும்.
எனினும், இலங்கை, இந்தியா போன்ற சேலைப் பாரம்பரிய முடைய நாடுகளில் பெண்ணின் உடையில் பெரியளவில் மாற்றங் கள் ஏற்படாததற்கு பாரிய பொருளாதார மாற்றங்களுடன் கூடிய சிந்தனை மாற்றங்கள் இச் சமூகங்களில் ஏற்படாமை மற்றும் பெண்ணின் தங்கி வாழும் தன்மை போன்ற காரணமாயிருக்கலாம்.
சேலை என்பது பெண்ணின் உடல் அமைப்பை வெளிப்படுத் தும் ஒரு உடையாகும். எனினும், பெண்ணுக்கு அதிகளவில் கட் டுப்பாட்டை விதிக்கும் இந்தியா, இலங்கை போன்ற சமூகங்களில், பெண் உடல் அமைப்பை அதிகளவில் வெளிப்படுத்தும் உடையான சேலையை பெண்ணுக்கு மரியாதையான உடை” என விதித்திருப் பதன் காரணம் என்ன? இச் சமூகங்களில் நிலப் பிரபுத்துவ கால ஆணாதிக்க அழகியல் இரசனைகளே மேலோங்கி நிற்கின்றன. சேலை எனும் உடையின் பின்னணியிலுள்ள நிலப்பிரபுத்துவகால ஆணாதிக்க பாலியல் முனைப்புடன் கூடிய அழகியல் இரசனை களின் காரணமாகவே இலங்கை, இந்தியா போன்ற சமூகங்களில் சேலை கலாசாரம் தொடர்ந்து நிலவுவதுடன், அது மேலும் ஆபாசத்தன்மையும் பெற்று வருகிறது.
இந்த நிலப்பிரபுத்துவ ஆணாதிக்க இரசனையை தக்க வைத்துக்கொள்வதற்காக "சேலை உடுத்தும் பெண்ணே சமூக மரியாதையைப் பெற்றுக் கொள்பவள்” எனும் கருத்து ஆழமாக ஊன்றப்பட்டுள்ளது. பெண்ணின் ஒழுக்க நெறியுடன் தொடர்புடைய தாக சேலை சித்தரிக்கப்படுவதால் தவிர்க்க முடியாது சேலையை தமது உடையாக வரித்துக்கொள்ளும் நிலைமைக்குப் பெண்கள் தள்ளப்பட்டுள்ளனர். “சேலை உடுத்தும் பெண்ணில் தெய்வீக அழகு காணப்படுகிறது", "தாய்மை அம்சம் நிறைந்துள்ளது", "கையெடுத் துக் கும்பிட வேணும்போல் தோன்றுகிறது" போன்ற கருத்தாக்கங் கள் தாய்மை, பெண்மை, தெய்வீகம் (புனிதம்) ஆகிய “கற்பை"
-6-

மையப்படுத்தி கட்டமைக்கப்பட்டுள்ள ஐதீகங்களுடன் சேலையைப் பிணைத்து வைத்துள்ளன. இதனடிப்படையில் பார்க்கையில், சேலை எனும் உடை சார்ந்த ஐதீகம் சமூகத்தில் நிலவுவதை காணமுடியும்.
இவ்வாறு, பெண்ணின் கற்பு பற்றின ஐதீகத்துடன் சேலையை இணைத்திருப்பதன் மூலம் பெண்களின் உடலின் மீதும், உளவிய லின் மீதும் ஆதிக்கத்தை நிறுவியிருப்பதன் மறுபுறம் ஆணாதிக்க அழகியல் இரசனைகளும் தொடர்ந்தும் பேணப்பட்டு வருகின்றன.
உடை என்பது உடலை மறைப்பதாயும் செளகரியமான தாயும் இருக்க வேண்டும். சேலை அணிவது பெண்களுக்கு செள கரியமாயுள்ளதா என்பது குறித்து பல்வேறு பிரதேசங்களிலுமுள்ள பெண்களுடன் கலந்துரையாடியபோது பின்வரும் கருத்துக்கள் பெண்களிடமிருந்து வெளிப்பட்டன.
- சேலை அணிவதற்கு அதிக நேரமெடுக்கிறது. - சேலை உடுத்திக்கொண்டு நீண்டதூரம் பிரயாணம் செய்வது,
வேலைகளில் ஈடுபடுவது அசெளகரியமாயுள்ளது. - சேலையில் எமது உடல் அமைப்பு வெளித்தெரிகின்றது. - சேலை உடுத்திக்கொண்டு பஸ்சில் குழாயை பிடித்துக்கொண்டு பயணிக்கையில் இடுப்புப்பகுதி வெளித் தெரிகிறது. இது ஆண் களின் பார்வைக்கு உள்ளாவதால் பெரிதும் இம்சைக்குள்ளாக நேர்கிறது. - சைக்கிள் ஓடுவதற்கு, கரடு முரடான மலைப்பாதைகளில் ஏறிச்
செல்வதற்கு சிரமமாயுள்ளது. - மழையில் நனைய நேர்கையில் சேலை உடலோடு ஒட்டிக் கொண்டு
சிரமத்தைத் தருகிறது. - சேலை உடுத்திக்கொண்டு சிறுபிள்ளைகளுக்கு படிப்பிப்பதற்கு
சிரமமாயுள்ளது. - எவ்வளவுதான் இடுப்புப் பகுதி வெளித்தெரியாது சேலை உடுத் தினாலும் கையை உயர்த்தி கரும்பலகையில் எழுதுகையில் உடல் தெரிகிறது. வளர்ந்த ஆண் பிள்ளைகள் சிலர் படிப்பில் கவனம் செலுத்தாது ஆசிரியரின் இடுப்பைப் பார்க்க முயல்வதும் உண்டு.
-7-

Page 8
- சேலை உடுத்துவதிலுள்ள சிரமம் காரணமாக ஆசிரியத் தொழி லுக்கு செல்லவில்லை (இது பட்டதாரி பெண்கள் சிலரின் கருத்து).
இவ்வாறு பெண்கள் தமது அனுபங்களைத் தெரிவித்தனர். மறுபுறம், தனியார் நிறுவனங்களைச் சார்ந்த பெண்கள் சிலர் தாம் குட்டைப் பாவாடைகளை சீருடையாக அணிய நேர்ந்திருப்ப தால் எதிர்கொள்ளும் சிரமங்கள் இம்சைகள் பற்றி தெரிவித்தனர்.
பெண்ணின் உடையைத் தீர்மானிப்பதில் ஆணாதிக்க சமூக நிறுவனங்களின் அழுத்தங்கள் எவ்வாறுள்ளதோ அதற்கு ஈடாக தொழில் வழங்கும் நிறுவனங்களாலும் பெண்களின் உடை தீர்மானிக்கப்படுகிறது. தமது ஆணாதிக்கக் கண்ணோட்டங்களுக்கு அமைய இத் தொழில் வழங்கும் நிறுவகங்கள் பெண்களின் உடை யைத் தீர்மானிக்கின்றன.
இவ்வாறு பெண்கள் அணிய வேண்டிய உடையை பெண்களின் சுய விருப்புக்கு மாறாகத் தீர்மானிப்பதன் மூலம் ஒருங்கே பெண் களின் உடலையும் உளவியலையும் தொழில் நிறுவனங்கள் கட்டுப் படுத்துகின்றன. தமக்கு அசெளகரியமான, தமக்கு விருப்பமற்ற உடையை அணிய நிர்ப்பந்திக்கப்படும் பெண்கள் பெரிதும் உளரீதி யான துன்புறுத்தலுக்கு உள்ளாகின்றனர். இது,
பெண்கள் தமது உடை பற்றிய எரிச்சல் உணர்வுடன் தமது நாளைக் கழிக்கும் சூழலை ஏற்படுத்துகிறது. - தொழிற்தளத்திலும் சமூகத்திலும் பெண்ணின் சுதந்திரமான
செயற்பாட்டைக் கட்டுப்படுத்துகிறது. - பெண்களின் முன்னேற்றத்தை மட்டுப்படுத்தி பெண்களை ஒரே
இடத்தில் சிறைப்படுத்தி வைக்கிறது. - பெண்ணின் ஆளுமை வளர்ச்சியில் பாதிப்பை ஏற்படுத்துகிறது.
இன்று இலங்கை அரசு பெண்களின் உரிமைகளை
உறுதிப்படுத்தும் நோக்குடன் பெண்கள் சாசனத்தை அமுல்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. பெண்களின் ஜனநாயக
-8-

உரிமைகள் பெண்களின் தலைமைத்தும் குறித்து பரந்தளவில் உரையாடப்படுகிறது. இத்தகைய சூழலில் பெண்ணின் உடையைத் தீர்மானிக்கும் அதிகாரத்தை பிரிதொரு தரப்பினர் தமது கையில் வைத்திருப்பது எவ்வகையில் ஜனநாயகமாகும்? பெண்கள் சமூக அளவில் சம பிரஜைகளாக வாழவும், சமூக ரீதியான அனைத்து உரிமைகளையும் அனுபவிக்கவுமான சூழலை உருவாக்குவதற் கான முன்நிபந்தனைகளில் ஒன்றாக பெண்களின் உடை குறித்து தொழில் நிறுவகங்கள் ஜனநாயகமான அணுகுமுறையைக் கடைப் பிடிப்பது அவசியமாகும்.
- ஸ்டெலா விக்டர் -

Page 9
13வத பாராளுமன்றத்தின் பெண் பிரதிநிதிகளைப் பற்றி.
பாராளுமன்றத்தின் ஆயுள் காலம் நிறைவேற்று ஜனாதி பதியால் நிச்சயிக்கப்படும் பட்சத்தில் எல்லாம் தேர்தல் வரும். தேர்தல் சுமையும் வாக்களிக்க வேண்டிய பொறுப்பையும் மக்கள் மீது திணிக்கப்படுவதற்கான அதிகாரத்தை அரசியல் யாப்பு ஜனாதிபதிக்கு கொடுத்துள்ளது. இதனால் குறுகியகால இடை வெளிக்குள் மக்கள் விரும்பியோ விரும்பாமலோ பாராளுமன் றத்தேர்தல்களைச் சந்திக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகின் றார்கள். இவ்வாறே 1947ம் ஆண்டு தொடக்கம் 2004ம் ஆண்டுவரை யிலான காலப்பகுதியில் 13 பாராளுமன்றத் தேர்தல்களை சந்திக்க வேண்டியுள்ளது. இச்சந்தர்ப்பத்தில் பாராளுமன்ற அரசியலில் பெண் களின் பிரதிநிதித்துவம் எவ்வாறிருக்கின்றது. அவர்களது பின்னணி எவ்வாறுள்ளது என்பதையும் கருத்தில் கொள்வதாக இக்கட்டுரை அமைகின்றது.
இற்றைக்கு 75 வருடங்களுக்கு முன்பே வாக்குரிமை வழங் குவது தொடர்பான கேள்வி எழுந்த போதே பெரும்பாலான ஆண்கள் பெண்களுக்கு வாக்குரிமை வழங்கக் கூடாது என்பதில் ஒருமித்த கருத்தைக் கொண்டிருந்தனர். எனினும் அன்றைய பெண்கள் வாக் (g) floodLD& Frisb se60LD5gs (Women Franchise Union) Qugoirs ளுக்கு வாக்குரிமை வழங்கப்பட வேண்டும் என்பதை டொனமூர் ஆணைக்குழு முன்னால் சாட்சியமளித்தனர். அவர்களது உழைப்பும் இன்று நாம் அனுபவிக்கும் சர்வசன வாக்குரிமைக்கான ஒரு கார ணமாகும்.
1931ம் ஆண்டு டொனமூர் ஆணைக் குழுவானது சர்வசன வாக்குரிமைக்கான சிபார்சை செய்ததிலிருந்து இன்றுவரை பெண் களின் பிரதிநிதித்துவம் பற்றி நோக்கினால், 1931இலேயே சட்ட சபைக்கான முதலாவது பெண்பிரதிநிதி தெரிவானார். இவர் றுவான் வெல்ல தேர்தல் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற எட்லின் மொலமூரே என்பவராவர். 1932ம் ஆண்டில் நடைபெற்ற இடைத்தேர்
-10

தலின்போது நேசம் சரவணமுத்து வடகொழும்பு ஆசனத்தைக் கைப்பற்றினார். முதலாவது தமிழ்ப் பெண்பிரதிநிதியான இவர் தனது கணவன் தேர்தலில் போட்டியிட தகுதியிழந்த காரணத்தால் தேர்தலில் போட்டியிட்டார் என்பது கவனிக்கத்தக்கது.
1996ம் ஆண்டில் இலங்கையில் முதலாவது பெண் பிரதமரா கப் பதவியேற்ற சிறிமாவோ பண்டாரநாயக்கா உலகின் முதலாவது பெண்பிரதமர் எனும் பெருமைக்குரியவர். எனினும் இவர் கணவனது இறப்பின் காரணமாகவே அரசியலில் பிரவேசித்தார். 1994ல் நிறைவேற்று ஜனாதிபதியாகப் பதவியேற்ற சந்திரிக்கா பண்டார நாயக்கா குமாரதுங்கவும் இதே குடும்பப் பின்னணியைக் கொண்
L6).T.
தற்போது பெண்களின் பிரதிநிதித்துவம் எவ்வாறு உள்ளது என்பதைப் பார்ப்பதற்கு முன்னர் கடந்த காலங்களில் பெண்களின் பிரதிநிதித்துவம் எவ்வாறு இருந்தது என்பதைப்பார்ப்போம்.
தேர்தல் வருடம் | பிரதிநிதிகளின் பெண் பிரதிநிதிகளின் பெண்களின்
எண்ணிக்கை எண்ணிக்கை வீதாசாரம்
1947 95 O2 2.1% 1947 95 O2 2.1% 1956 95 O3 3.2 1960(1DIा।ांó) 151 O3 1.9 1960(ജ്ഞബ) 151 O2 1.3
1965 151 O4 2.6
1970 151 O6 3.9
1977 168 O8 4.8
1989 225 12 5.3
1994 225 12 5.3
2000 225 O9 5.3
2001 225 12 5.3
2004 225 1. 5
இலங்கை பாராளுமன்ற அரசியலில் இம்முறை பாராளு மன்றத்திற்கு சிங்கள, தமிழ், முஸ்லீம் சமூகத்திலிருந்து பெண்பாரா ளுமன்ற உறுப்பினர்கள் தெரிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்க அம்சமாகும்.
- -

Page 10
பாக மட்டக்களப்பு,
இதில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வடகிழக்கிலிருந்து குறிப் யாழ்ப்பாணத்திலிருந்து பெண்பிரதிநிதிகள்
தெரிவாகியுள்ளனர்.
எனினும் இதுவரை மலையக மக்களிடமிருந்தோ, பறங்கிய
ரிடமிருந்தோ பெண்கள் பாராளுமன்றம் செல்லவில்லை.
13வது பாராளுமன்ற பெண் பிரதிநிதிகள்
அரசியல் கட்சிகள் சிங்களம் தமிழ் முஸ்லிம் மொத்தம்
ஐக்கியசுதந்திர 3 2 5 விடுதலை முன்னணி
ஐக்கிய தேசிய 4. • 4. முன்னணி
இலங்கை
தமிழரசுக் கட்சி ea 2 A. 2
மொத்த எண்ணிக்கை 7 2 2 11
பவித்திரா வன்னியாராச்சி - சமுர்த்திமற்றும் வறுமை ஒழிப்புக் கான அமைச்சர்
. சுமேதா ஜயசேன - பெண்கள் அபிவிருத்தி மற்றும் சமூக நலன்புரி
அமைச்சு. பேரியல் அஸ்ரப் - வீடமைப்பு நிர்மான மற்றும் கிழக்கு மாகாண கல்வி மற்றும் துறைமுக அபிவிருத்தி அமைச்சு. தங்கேஸ்வரி கதிர்காமர் தலதா அத்துக்கோறள (UNRரத்னபுர) பத்மினி சிதம்பரநாதன் சுஜாதா அழககோன் (JVP ழாத்தளை) அமராபியசீலி ரத்நாயக்க (UNP குருநாகல) சந்திராணி பண்டார (UNP அனுராதபுரம்)
10.லெரின் பெரேரா ( UNP புத்தளம்) 11.அஞ்சானும்மா (UNP கம்பகா)
-12

13வது பாராளுமன்றம் தெரிவான 11 பெண்பிரதிநிதிகளில் நால்வர் புதியவர்களாவர். ஏனையோர் ஏற்கனவே அங்கம் வகித்தவர்களாவர்.
புதியவர்கள் 1. பத்மினி சிதம்பரநாதன் (யாழ்ப்பாணம்) 2. தங்கேஸ்வரி கதிர்காமர் (மட்டக்களப்பு) 3. தலதா அத்துக்கோரள (இரத்தினபுரி) 4. சுஜாதா அழககோண் (மாத்தளை)
50 வயதான பத்மினி சிதம்பரநாதன் யாழ்ப்பாண பல்கலைக் கழகத்தில் BA சிறப் புப்பட்டம் பெற்றவராவார் யாழ் சுண்டிக்குளி பெண்கள் பாடசாலையின் பழையமாணவி யான இவர் தொழில் ரீதியாக ஒரு ஆசிரியை யாவார். யாழ்ப்பாணத்தில் இயங்கிவரும் பெண்
‘姜
கள் பண்பாட்டுமையத்தின் தலைவியாக செயற்பட்டு கலையூடாக மக்களை விழிப்புணர்வூட்டும் நிகழ்ச்சிகள் பலவற்றை நிகழ்த்தி யுள்ளார். யாழ். மாவட்ட தமிழரசுக்கட்சி சார்பில் போட்டி யிட்டு 68238 விருப்புவாக்குகளைப் பெற்று மாவட்டத்தில் 2வது இடத்தை பிடித்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்தைப் பிரதி நிதித்துவப்படுத்தும் தங்கேஸ்வரி கதிர்காமர் ஏற்கனவே தனக்கென ஒரு அரசியல் பின்னணியை கொண்டிராதவர். பேராதனை பல்கலைக்கழகத்தில் BA தொல்பொருளியல் ****************** fpůLü Lu'Lg5Trfuumt6JFTff. g6 IUgl 6 Juugi 65. மட்டக்களப்பு மாவட்டத்தில் கலாசார உத்தியோகத்தராகத் தொழில் புரிந்தார். ஒரு வரலாற்று ஆய்வாள ரான இவர் மட்டக்களப்பு பற்றிய வரலாற்று நூல்களை எழுதியுள் ளார். இது வரை 25 புத்தகங்கள் வரை எழுதியுள்ளார். இவரும் தமிழரசுக்கட்சி மூலமாக போட்டியிட்டு பாராளுமன்றம் சென்றவர். விருப்பு அடிப்படையில் தங்கேஸ்வரியும் 2வது இடத்தை பிடித்தார்.
-13

Page 11
சுஜாதா அழகக்கோன் மாத்தளை மாவட்டத்தில் மக்கள் விடுதலை முன்னணி சார்பில் போட்டியிட்டார் மாவட்டத்தில் அதிகப் பெரும்பான்மை விருப்பு வாக்குகளைப் பெற்ற வர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஐக்கிய தேசிய முன்னணி சார்பில் இரத் தினபுரி மாவட்டத்தில் தலதா அத்துக் கோறளை தெரிவானார். தலதா ஒரு சட்டத் தரணியாவர். இவர் பாராளுமன்றத்திற்குப் புதியவர் என்றாலும் இவருக்கு அரசியல் புதிதல்ல. ஏற்கனவே UNPயின் பிரதிதலை வராக இருந்த காமினி அத்துக் கோறளையின்
- இளைய சகோதரி யாவார்.
1994ல் பாராளுமன்றத்தில் தெரிவான பவித்திரா வன்னியாராச்சி இம்முறையும் இரத் தினபுரி மாவட்டத்தில் அதிகூடிய விருப்பு வாக் 'குகளைப் பெற்றார். தொழில் ரீதியாக சட்டத் தரணியான இவர் 1991ல் அரசியலில் புகுந்தார். ஆண்களை அடியொற்றிய அரசியலில் இவரும் f
தந்தையின் பின்னராக அரசி யலுக்கு வந்தார்.
x:
1993ல் சப்பிரமுக மாகாண சபையில் அங்கம் வகித்து 1994ல் பொதுஜன ஐக்கிய முன்னணி அரசியல் பிரதி சுகாதார அமைச் சராகவும் பணியாற்றியுள்ளார்.
திகாமடுள்ள மாவட்டத்தில் ஐக்கிய சுதந்திர முன்னணி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற பேரியல் அஷரப் தனது கணவரான M.H.M. அஷரப் தேர்தல் காலத் தில் அகாலமரண மானபோது அவருக்காக பதிலீடு செய்யப்பட்டவராவார்.
-14
 
 
 
 

தொழில் ரீதியாக ஒரு மருந்தாளர் (Phamasist) ஆன பேரியல் பிறந்தது கண்டி மாவட்டத்திலாகும்.
அஞ்சான் உம்மா கம்பகாமாவட்டத்தி லிருந்து மக்கள் விடுதலை முன்னணி முதல் pää முஸ்லிம் பெண் (JVP)யின் தேசியப்பட்டியல் உறுப்பினராக 2001ல் பாராளுமன்ற உறுப்பினர் என்ற பெருமைக் குரியவராவார். இவர் ஓர் ஆசிரியராவார். JVPயின் மிதவாதக் கொள்கையினுாடே தனது அரசியல் தளத்தில் கால்பதித்த அஞ்சாண் உம்மா 1999ல் நடைபெற்ற உள்ளுராட்சி சபைத் தேர்தலில் மாகாணசபைக்கு தெரிவானவராவார்.
13வது பாராளுமன்றத்தில் தெரிவான அமராபியசீலிரத் நாயக்க பாராளுமன்றத்தில் சிரேஷ்ட உறுப்பினராவார். இவர் 1977ல் குரு நாகலை மாவட் டத்தில், வயம்ப தேர்தல் * தொகுதியிலிருந்து தெரிவான முதலாவது பெண் பிரதிநிதியாவார். ஓர் ஆசிரியையான அமரா பியசீலி தனது கணவர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து அரசியலுக்கு வந்தவரா வார். இவர் மகளிர் விவகார அமைச்சு போக்கு வரத்துசபை பிரதியமைச்சு, மாவட்ட அமைச்சு போன்ற பதவிகளில் பணி யாற்றியுள்ளார்.
புத்தளம் மாவட்டத்திலிருந்து ஐக்கிய தேசியக்கட்சியின் சார்பில் தெரிவான லெரின் பெரேரா முன்னாள் அமைச்சர் பெஸ்டஸ் பெரே ராவின் மனைவியாவார். இவர் 1988ல், வயம்ப மாகாண சபைக்கு தெரிவானவர் என்பதும் குறிப்
பிடத்தக்கது.
அனுராதபுரத்திலிருந்து ஐக்கிய தேசியக்கட்சி சார்பில் தெரிவான சந்திராணி பண்டார, ரஜரட்டை பிரதேசத்திலிருந்து
-15

Page 12
பாராளுமன்றத்தில் வந்த முதலாவது பெண் என்ற பெருமைக்குரியவர். இவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சந்திரா பண்டார வின் மகளாவார்.
மேற்கூறிய தேர்ந்தெடுக்கப்பட்ட பெண் பிரதிநிதிகளை நாம் நோக்குமிடத்து அனேக மான பெண்கள் அரசியல் செல்வாக்குள்ள குடும்பங்களிலிருந்து வந்துள்ளனர் என்பதோடு அவர்களின் தந்தை, கணவன், சகோதரன், போன்ற ஆண் உறுப்பினர்களின் பதிலீடாகவே வந்துள்ளனர் என்பது கவனிக்கத்தக்கது. எனினும் முதல் முறையாக பெண்களை தேர்தலில் நிறுத்திய தமிழரசுக் கட்சி சார்பில் தெரி வான பெண்கள் இருவரும் இவ்வாறான பின்னணியைக் கொண்ட வர்களல்ல என்பதும் குறிப்பிடத்தக்கது.
எது எவ்வாறிருப்பினும் 1995ல் வெளியிடப்பட்ட UNDP இன் அறிக்கை அதனைத் தொடர்ந்து நடைபெற்ற பெய்ஜிங் மாநாட்டின் செயற்பாட்டிற்குரிய விடயங்கள் ஆகியவற்றின்படி பெண்களுக்கு 30% அங்கத்துவம் பெறுவது குறிக்கோளாகும். இதுவே நீண்ட காலத்தில் 50%மாக அமையுமென குறிப்பிடப்பட் டுள்ளது. இவ்விடயங்களை நிறைவேற்றுவது தொடர்பாக அங்கத்துவ நாடுகள் வாக்குறுதியளித்தன. இலங்கையும் அதில் கைச்சாத்திட் டுள்ள போதிலும், இவை தொடர்பான சட்டவாக்க நடவடிக்கைகளில் ஈடுபடவில்லை.
மங்களேஸ்வரி சட்டத்தரணி
صم- بسمات مg---2" l. 5ܝܺܝi h مع Yor area it far1e -Y- اس ہء
T ༥ག་པ་གls པ་ 5۔ e ا»ںeہ سبe... - لہది. ””?*””0” ش?تمـــحه بح۔ تhع منسوب ہسaیہ بھی تو
3F{-f صبحتجويعrf 2 oc V. - جمعیت {5 (بلکہ اس کی۔ حجاب۔۔""ادھ مت جیم جا -| vwo است. ”اجی شختم ٹی- یہ ہو۔ ۔ ۔ ۔ ۔ کہ
* *- ॐ * * * * *
-16
 

இல்லத்தரசி 2.
சந்தைக்குப் போய், சாமானிகள் வாங்கி. சட்டி பானையோடு. தினம் தவம் கிடந்து. சமையல் கட்டை, சொந்தமாக்கி. சளைக்காமல் சமைத்து, அவ்வப்போது. உனக்கும் மெத்தையாகி.
அழுத குழந்தை தேற்றி, அதன் தேவை போக்கி, வேலை முடித்து பாடம் தொடங்கி.
உணர் வேதாந்தங்களுக்கெல்லாம் தலையசைத்து!.
வேண்டுவன வேண்டி. உனக்கு, வேண்டாதன விலக்கி, இரவை நீளமாக்கி. இயந்திரமாய் உழைத்து!
இனினும், எத்தனை எத்தனையோ!!
இவையெல்லாம், நாளாந்தம் எந்தவித எதிர்ப்பில்லாமல்: தொடர்ப் பட்டியலாய். தொடர்ந்து, நடந்தால். நடத்தினால், மட்டுமே,
நான்!
“இல்லத்தரசி”
மாறாக. என் சொல், செயலில். மாற்றங்களும். முனி ஏற்றங்களும், கணிடாலோ . காட்டினாலோ, அதே நானி! “இல்லத்தரக்கி”
பாலையூற்றுமுகைசிரா முகைஉன்.

Page 13
புதிய கதைகள் கவனத்திற்குரியதொரு சிறுகதைத்தொகுப்பு
~செ. யோகராசர
ஏறத்தாழ, தொண்ணுாறுகள் தொடக்கம் ஈழத்துத்தமி ழிலக்கிய உலகில் (விடுதலைப்) போராளிகளான எழுத்தாளர்களின் வரவு இடம்பெறுகின்றமை கவனத்திற்குரிய விடயமே. எனினும், இவர்களது படைப்புகள் விதந்துரைக்கப்படுமளவிற்கு பரிணாமம் கண்டுவருவது அண்மைக்காலமாகவேதான். இவ்விதத்திலே சமீபத்தில் வெளியான பெண்போராளி எழுத்தாளரான மலைமகள் எழுதிய “புதிய கதைகள்” கவனிக்கப்படவேண்டிய சிறுகதைத் தொகுப் பாகும். ஆகவே, ஈழத்துத்தமிழ் இலக்கிய உலகில் இத்தொகுப்பின் முக்கியத்துவம் பற்றிச் சுருக்கமாக எடுத்துரைப்பதே இக்கட்டுை யின் நோக்கமாகிறது.
ஆயினும், அதற்குமுன் வற்புறுத்தவேண்டிய விடயமொன் றுள்ளது. அது, இத்தொகுப்பிற்குரிய புதிய கதைகள் என்ற தலைப் புப்புப் பற்றியதாம்.
பெண் எழுத்தாளர்கள், குறிப்பாக, ஈழத்துப் பெண் எழுத் தாளர்கள் வெளியிட்டு வரும் தொகுப்புகளின் தலைப்புகள் அர்த்த புஷ்டி மிக்கவை ஆழ்ந்த நோக்குடையவை; ஆண்டாண்டு காலமாக அடக்கு முறைக்குட்பட்டு வந்துள்ள பெண்களின் விடுதலை உணர் வின் பாய்ச்சலை வெளிப்படுத்துபவை. தமிழில், பெண்களின் முதற் கவிதைத் தொகுப்பான "சொல்லாத சேதிகள்” தொடக்கம் “மறை யாத மறுபாதி”, “உரத்துப்பேச, "கனல்", "வெளிப்படுதல்", "எல்லை கடத்தல்” “உயிர்வெளி” என்று இப்பட்டியல் நீண்டு செல்வது யாமறிந்ததே. இப் பட்டியலுள் "புதிய கதைகள்” என்ற தலைப்பும் இப்போது சேர்ந்து கொள்கிறது. எனினும், இதுபற்றி தெளிவாக விளங்கிக் கொள்வதற்காக, இன்னொரு விடயம் பற்றி எடுத்துரைக்க வேண்டியுள்ளது.
-18

பெண்கள் என்றவுடன் அவர்களது குடும்பம், அவர்கள் வேலைசெய்யும் அலுவலகம் ஆகிய ஈரிடங்களிலுமான அவர்களது வாழ்க்கை நிலையே எவருக்கும் நினைவு வரும். தமிழ்ச் சூழலில் இதுவே பொதுவான நிலையுமாகும். ஆயினும், ஈழத் தமிழ்ச்சூழலை உன்னிப்பாக அவதானிக்கும்போது விடுதலை இயக்கம் சார்ந்த பெண் போராளிகளின் (அவர்களது எண்ணிக்கை எவ்வாறிருப்பினும்) நிலை பற்றியும் கவனத்திற்கொள்வது அவசியமானது. எனவே, இத்தகைய பெண்களின் போர்க்கள அனுபவங்கள் பற்றிச் சிந்திப்ப தும் தவிர்க்க இயலாததாகிறது. இவ்வாறு போர்க்களப் பெண்கள் அடைகின்ற பன்முக அனுபவங்கள் இதுவரை வெளிப்படுத்தப்படாத - பதிவுசெய்யப்படாத - முற்றிலும் புதிய அனுபவங்களாகவுள்ளன. இவற்றை, பிரக்ஞை பூர்வமாக இந்நூலாசிரியர் உணர்ந்து கொண் டுள்ளார். இதனாலேயே, "சொல்லாத சேதிகள்” என்ற தலைப்பிட்டு, பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்:
"சொல்லாமல் இதுவரை மறைவில் இருந்த செய்தி களைச் சொல்வதற்கு எனக்குக்கிடைத்த வாய்ப்பை எண்ணி மகிழ்கின்றேன். நடைமுறை வாழ்வியல் அசைவியக்கத்தின் அச்சானியாகப் பெண்கள் இருக்கின்றபோதும் அவர்கள் கெளரவிக்கப்படுவதில்லை, அவர்களின் இயல்பு மதிக்கப்படுவதில்லை என்ற கோபம் எனக்கு நிறையவே உண்டு. பெண்கள் என்ற ஒரேயொரு காரணத்துக்காக, விளைவை ஏற்படுத்தவல்ல செயல்களைச் செய்துவிட்டும்பேசாதிருப்ப வர்கள் என்பதற்காக நாலாதிசையும் விரிந்து பரந்திருக்கும் தமிழீழப் பேரரங்கில் ஒய்வெடுக்கவும் நேரமின்றி இப்போதும் விழித்திருக்கும் என்தோழிகள் பேசப்படாத வர்களாகப் போய் விடுவார்களோ என்ற பயத்தினாலேயே நான் எழுத முனைந்தேன்.” (uä. X-XI)
தொடர்ந்தும் எழுதுகின்றார்:
"பார்வைக்குப் படைத்துறை வீரர்களாகத் தோன்றுகின்ற,
-9-

Page 14
செயற்படுகின்ற இவர்களின் ஈரம் நிறைந்த இன்னொரு பக்கத்தை நானறிவேன். முன்னேறிவருகின்ற எதிரிப்படை களை முறியடிப்பவர்களகவும் நிலம் மீட்பவர்களாகவும் மட்டும் இவர்கள் இருக்கவில்லை என்பதையும் நானறிவேன். இவை யாவற்றுக்கும் அப்பால், இவர்கள், நல்ல மனிதர்களாக, மனி தர்களைப் புரிந்து கொள்கின்றவர்களக இளகிய மனதுடன், சிரித்த முகத்துடன் எப்போதும் இருக்கின்றார்கள். எனவே, இவர்களை நான் எழுதத் துணிந்தேன்." (ப. XI) ஆக, மேற்கூறிய நிலைநின்று அவதானிக்கும்போது இத் தொகுப்பின் தனித்துவமும் முக்கியத்துவமும் புலப்படுகின்றன என் பதில் தவறில்லை. எனவே, இத்தொகுப்புக் கதைகள் தருகின்ற, "பொருள் புதிது, சுவை புதிது, சொற்புதிது" என்பனபற்றி அவதானிப் பது அவசியமாகின்றது.
வாசகருக்கு முற்றிலும் புதிய அனுபவமாக அமைகின்ற போர்க்கள-போராட்ட சம்பவங்கள் பற்றி சில சிறுகதைகள் நுணுக்க மாக படம்பிடித்துள்ளன. இவற்றுளொன்றான, "விலை” என்ற சிறு கதையின் ஒருபகுதி, இது: -
"ஷெல் மழை எங்களைக் கடந்து பின்னுக்குநகர்ந் தது. அப்படியென்றால் அண்ணாச்சி எங்களை நெருங்கப் போகிறார் என்று பொருள். ராங்கிகளின் இரைச்சல் யாழ் சாலையில் மட்டுமல்லாமல் வயற்காணிகளுடாகவும் கேட்கத் தொடங்க, பரந்த சண்டைஒன்றுக்குத் தயாரானோம். சுருதி, செல்லை லோட் பண்ணியவாறுராங்க் சத்தத்துக்குக் காதைக் கொடுத்துக் கொண்டிருந்தாள். எங்களின் துப்பாக்கிகளுக்கு வேலையே இருக்கவில்லை. எவனாவது இறங்கி வந்தால் அல்லவா சுடுவதற்கு. சுருதி ஒரு ராங்கைக் கண்டு விட்டாள் போலிருக்கிறது. எனக்குக் கையைக் காட்டிவிட்டு, அடிப் பதற்கு வசதியாகப் பூவரசு வேலியோடு வலப்புறமாக நகர்ந்து தன்னை நிலைப்படுத்தினாள். . இப்போது எனக்கு ஒரு ராங்க் தெரிகிறது. ஒருதரம் இமைவெட்டித் திறப்பதற்கி
-20

டையில் ராங்கின் சுழல் மேடைபறந்தது. சுருதி என்ன செய்கிறாள் என்று திரும்பிப் பார்ப்பதற்கிடையில் அடுத்த ஷெல்லை அவளின் RPG உதவியாளர் லோட்பண்ணி விட்டி ருந்தாள். இரண்டாவது அடியோடு ராங்க் சிதறியது. ஒரே புகைமண்டலம். சுருதி என்னை எட்டிப் பார்த்துவிட்டு லோஞ்சரை உயர்த்தியவாறு ஒருமுறை துள்ளினாள். அவ ளின் கால்கள் நெருங்க, நான் சடாரென்று குப்புறப் படுத்துக் கொண்டேன். செவிப்பறையைக் கிழிக்காத குறையாக இரண்டு ஷெல்கள் தலைக்கு மேலேயே விழுந்தனபோல் வெடிக்க, மண்கட்டிகள், மரக்கொப்புகள் எல்லாம் அளவு கணக்கில் லாமல் என்மேல் கொட்டின. தலையைமட்டும் உயர்த்திப் பார்த்தேன். சுருதிசாய்ந்து நின்ற பூவரசு மரத்தைக் காண வில்லை. புழுதிதான் பறந்து கொண்டிருந்தது. (பக் 54-55)"
மேற்குறித்தவாறான போர்க்களச் சூழலில் போராட்டச்
சூழலில் - பெண்போராளிகளின் விவேகம் அசாதரணதுணிவு, சம யோசித புத்தி, சகபோராளிகளின் மீதான பாசம், சுறுசுறுப்பு, கடின உழைப்பு, திட்டமிடும் ஆற்றல் முதலான இயல்புகள் எவ்வாறு வெளிப்படுகின்றன என்பதையெல்லாம் இச்சிறுகதைகள் நன்றாக வெளிப்படுத்தியுள்ளன.
போராளிகளின் நாளாந்த வாழ்வு வெளியுலகினரால் பெரும்
பாலும் அறியப்படமுடியாதது. அவற்றை, வெகு அநாவசியமாக வெளிப்படுத்தும் சிறு கதைகளும் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. "ஒரு கோப்பை தேநீர்” இவ்விதத்தில் முக்கிய படைப்பு. இக் கதை யின் ஒரு பகுதியை இங்கு தருவது பொருத்தமானது. அது பின்
வருமாறு:
“அலைஓய்ந்திருந்தபோது காலையில் பிட்டும் கறியும், மதியம் சோறும்கறியும், இரவு பிட்டும்கறியும் பரவாயில்லை. பின்னர்.
-21

Page 15
காலையில் பிட்டும் கறியும் மதியமும் இரவும்
சோறும் கறியும்
இதுவும் பரவாயில்லை.
கொஞ்சநாளின் பின்,
மூன்று நேரமுமே சோறும் கறியும், அதுவும் எப்படியென்றால், காலையில் சோறும் கத்தரிக்காய்க் கறியும், மதியம் கத்தரிக்காய் கறியும் சோறும். இரவு சோறும் கத்தரிக்காய்க் கறியும் அதிலும் மதியமே இரவுக் குரிய உணவும் சேர்ந்துவரும். இன்னும் கொஞ்ச நாளின் பின் காலையில் கஞ்சி, மதியமும் இரவும் சோறும் கத்தரிக் காயும், கத்தரிக்காயும் சோறும். “கத்தரிக்காயைக் கண்டு பிடித்தவன் நாசமாய்ப்போக!" “கத்தரித்தோட்டம் வைத்திருப்பவர்கள் தலையில் இடிவிழ!”
என்றெல்லாம் உரத்தகுரலில் சாபமிட்டவாறே
ஒவ்வொரு கவளமாக விழுங்கினோம். நாவிலுள்ள
சுவை மொட்டுக்களுக்கெல்லாம் கட்டாய ஒய்வு கொடுத்தோம் . உணவுவிடயத்தில் ஒருவாறு பற்றற்ற நிலைக்கு வந்த நாம் ஒரு கோப்பை தேநீருடன் திருப்தியடைந்தோம்.
வெளியே உணவு நெருக்கடி அதிகரிக்க, எம் கையிருப் பிலுள்ள சீனியின் அளவு குறையத் தொடங்கியது. தேநீரில் சீனி தொட்டுத்தேநீர் குடிக்கத் தொடங்கி, அதிலும் நெருக்கடி ஏற்பட, கையிலிருந்த சீனியைப் பொரிமாவுடன்
கலந்துவிட்டு, அதனோடு தொட்டுத் தேநீர் குடிக்கத் தொடங்கினோம். தேநீருடன் கொறிப்பதற்கான உப உண வாகச் செய்து வைத்திருந்த பொரிமா கடைசியில் தேநீருக் கான மூலப் பொருட்களுள் ஒன்றானாது வீரைப்பழக் காலங்களில் வீரைப்பழப்பாணியுடனும், பாலைப்பழக் காலங்களில் பாலைப்பழப் பாணியுடனும் சிலநேரம் உலுவிந்தம் பழப்பாணியுடனும் என்று அந்த ஒரு கோப்பை தேநீரை, எங்கள் அபிமானத் தேநீரை விதம் விதமாகக் குடித்தோம்.” (Uä. 17-19)

போரால் - போருக்குரிய ஆயத்தங்களில் - ஈடுபடாத நாட்களின் சில பொழுதுகள் சிலபொழுதுகளின் உணவு வேளைகள் - எவ்வாறு கழிகின்றன என்பதனைக் காட்டும் குறுக்குவெட்டுமுகமாக மேலுள்ள சித்தரிப்பு அமைந்துள்ளதெனலாம். பரந்த வாசிப்புள்ள வாசகரொரு வருக்கு, எழுத்தாளனின் நாளாந்த வாழ்வைப் படம்பிடிக்கின்ற புதுமைப்பித்தனின் “ஒருநாள் கழிந்தது” சிறுகதை ஞாபகத்திற்கு வரவேசெய்யும் மேற்கூறியவாறு கழிகின்ற வேறு பொழுதுகளின் சில, சகபோராளிகளுடன் ஏற்படும் உறவுகள் பற்றி - நட்புப் பற்றிச் சித்தரிப்பனவாக உள்ளன. “எனது மனிதர்கள்1. “எனது மனிதர்கள் - 2” ஆகிய சிறுகதைகள் இவ்வாறு வெளிப்பட்டு, மனதில் நிலைத் துள்ளன.!
போராளிகளுக்கும் அவர்களது வீட்டிலுள்ளவர்களுக்கு மிடையிலான உறவுகள் பற்றிப் பேசுகின்றன சில சிறுகதைகள். இவற்றுள் சில, நினைவலைகளாக வெளிப்படுகின்றன. போராளிக ளுக்கும் வீட்டாருக்குமிடையிலான தொடர்புகளால் ஏற்படும் ஆரோக் கியமான பாதிப்பொன்றினை வெளிப்படுத்துகின்ற “ஆங்கோர் காட்டிடைப் பொந்தில்” குறிப்பிடத்தக்கதொரு படைப்பாகும். அவ்வப் போது படையினரின் சேஷடைகளுக்குள்ளாகும் இரு இளம் மாண விகள், சற்று வளர்ந்தபின் (போராளி சகோதரி தந்த துணிவுகார ணமாக) எவ்வாறு தற்துணிவுபெற்று அவர்களிடம் தங்களது எதிர்ப் பைக் காட்டுகின்றார்கள் என்பதனைச் சுவையாக எடுத்துக் காட்டு கிறது. அப்படைப்பு!
பெண்போராளிகள் தாம் பெண் என்ற நிலைமை காரண மாக அனுபவிக்க நேரிடும் கஷ்டங்களுமுள்ளன. இவை ஆண் போராளிகளாற் கூட உணரமுடியாதவை. இவ்வாறான விடய மொன்று பற்றி வெளிப்படுத்துகின்ற சிறுகதையான முருங்கையை விட்டு இறங்காதவர்கள், சோதனைச்சாவடியில், “Sanitary Pad’ அணிந் துள்ள பெண்போராளிகள் படும் சிரமங்களை கலைத்துவமாக சித்த ரிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
மேற்கூறியவை அனைத்தையும்விட, பெண் நிலைவாதப் பிரக்ஞையுடன் பெண்விடுதலை பற்றிப்பேசும் இத்தொகுப்பிலுள்ள -23

Page 16
ஓரிரு சிறுகதைகள் எமது கவனத்தை இருகாரணங்களால் அதிக ளவு ஈர்த்துள்ளன. பொதுவாக பெண்போராளிகள் பெண் விடுதலை பற்றி எழுதுவதில் அக்கறை கொள்ளாதிருப்பது, அதற்கான ஒருகாரணம். இத்தகைய சூழலில், இவ்வெழுத்தாளரது இத்தகைய சிறுகதைகள் கலைத்துவமான முறையிலும் அமைந்துள்ளமை, மற்றொருகாரணம்:
(சிறந்த எ-டு: கதவுகள் திறந்துதான் உள்ளன").
இறுதியாக இத்தொகுப்புப் பற்றி வற்புறுத்தப்பட வேண்டிய இன்னொரு விடயமொன்றுள்ளது. அதாவது, “போராளிகளது படைப்புகள் பிரச்சாரப்பாங்குடையனவாக அமைவன” என்றொரு குற்றச்சாட்டு விமர்சகரிடமுள்ளது. அது ஏற்கப்படக்கூடியதுதான். மாறாக, இத்தொகுப்பு, மொழி நடை, பாத்திரவார்ப்பு, உரையாடல், செறிவு, உருவஅமைதி முதலான அனைத்திலும் சிறப்புடைய சிறுகதைகளைக் கொண்டமைந்து, கலைத்துவம் மிக்க சிறுகதைகளைக் கொண்ட முதற் தொகுப்பாகவும் காணப்படுவது பாராட்டிற்குரியதெனலாம்.
 

கட்டத்தள் விளையாட்டு
முரண்பட்ட இருமுனைகள் . அதுதான் மழையும் வெயி லும் கூட சல்லாபித்திருந்தது . வீட்டு வேலைகளை முடித்த . சாரதா .. வாசலுக்கு வந்து கதவோரம் சாய்ந்தபடி அமர்கி றாள். முன்னே முற்றத்தே சிறுமியர் கூட்டம் ஒன்று கும்மாளம் போட்டபடி ."ஏ.ஏ.ஹே.ஏ.ஏ.மழைக்கும் வெயிலுக்கும் கல்யாண மாம்.செட்டியார் வீட்டில..” என்னும் பாட்டின் தொடர்ச்சியும் குதுாகலமும் .கட்டங்களைக் கீறி நொண்டி விளையாட்டில் அவர்கள்., அமர்ந்திருந்த சாரதா.,அவள் கண்கள் மட்டும் தொலைத்த எதையோ தேடுவது போல நொண்டிக் கட்டங்களை நோக்கியபடி. சற்றென்று ஏதோ நினைவுக்கு வந்தவளாய் வீட்டி னுள்ளே நுழைகிறாள். நுழைந்தவள் தன் தகர பெட்டகத்தை தூசு தட்டித் திறக்கிறாள்.
அதில் அவள் உழைத்து . ஆசை ஆசையாய் மிக மிக ஆசையாய் வாங்கி சேர்த்த பட்டுப் புடவைகள் வர்ணஜாலங்களை காட்டி நிற்கின்றன. அவற்றிற்கு நோகாதபடிக்கு மெல்ல தடவிய வள் ஏதோ நினைவுக்கு வந்தவளாய் தேடுகிறாள். பெட்டகத்தின் ஓர் ஓரத்தைக் கிண்டுகிறாள் அங்கு அவளது உடைந்த கண்ணாடி வளையல்கள், மற்றைய ஒரத்தையும் கிண்டிப் பார்க்கிறாள். பவுடர்டப்பா. கண்மை பூச்சரம் . சீவி சிங்காரித்து பழக்கப்பட்ட இத்தியாதிகள். ம் ஹிம். அவள் தேடுகிறாள் கிடைக்கவில்லை மறுபக்கத்தையும் கிண்டுகிறாள் கிடைத்தது. தேடியதால் தேடியது கிடைத்தது. அங்கே ஓர் மூலையில். ஓர் வெள்ளி குங்குமச் சிமிள், அதன் அடியில் ஓர் படம். அதுதான் அவள் தேடியது. கைகள் நடுங்க வலிக்காமல் குங்குமச்சிமிளை ஓர் கையிலும் படத்தை மறுகையிலும் மெல்ல எடுத்த அவள் கண்களில் அளவில்லாத கலக்கம் தெரிகிறது.
பூவைத்து பொட்டும் வைத்து பட்டுடுத்தி வளையல் பூண்டு. இவையெல்லாம். கலைக்கப்பட்ட கனவாய். உயிருள்ள உணர் வுகளை ஜடப்பொருட்கள் விழுங்கும் கலாசாரம். உயிருக்கு பதிலாய் அவள் கொடுக்கும் காணிக்கைகள் வெறும் ஜடப்பொருட்
-25

Page 17
கள்தான் ஆனால் அவற்றிற்கு இருக்கும் மதிப்பு அவளுக்கும். அவை களையப்பட்ட அவளுக்கும் இல்லையே. மனதோரம் சிறு குடிசைகட்டி வாழ்கின்ற அவள் உணர்வுகள் பொங்கி எழ. நடுங் கும் அவள் கைகள் குங்குமச்சிமிளின் மூடியை திறந்து நிற்கிறது. அங்கே குங்குமம் நிறைந்துதான் இருந்தது ஆனால். ஆனால். அதை வைக்கும் இடத்தில். சமுதாயத்தால் பிறப்பிக்கப்பட்ட தடை உத்தரவு உத்தரவை மீறினால் சமூக நீதிமன்றம் விசாரிக்கும் சிரிக்கும் தண்டிக்கவும் செய்யும். பயந்து பயந்தே எத்தனையோ உணர்வு மதிப்புக்கள் இந்த ஜடப்பொருள் தான் அவளை அடை யாளப்படுத்தும் என்றால் மற்றவை சும்மா. சும்மா. தான்.
கையில் இருந்த படத்தை பார்க்கிறாள் அவன் நிம்மதியாய் மிகமிக நிம்மதியாய் போய் சேர்ந்து விட்டான். அந்த இழப்புத்துயர் ஆறுமுன் அவள் கோலம் கலைக்கப்பட்டு பழக்கப்படாத கோலத்தில் நெஞ்சை என்னவோ செய்தது. கண்ணாடியில் அவள் முகத்தைப் பார்க்கிறாள் பூரண சந்திரன் தெரிகிறது. ஓலமிட்டபடி ஏ.தோ கேட்கிறது. வலதுகை ஆள்காட்டி விரல் நடுக்கத்துடன் குங்குமத்தில் தோய்ந்து நெற்றியை நோக்கி மெல்லென நகர்கிறது.
"அடியே. ஏ.ஏ.ய் கோட்ட மிதிச்சிட்டாய். கோட்ட மிதிச்சிட்டாய். கட்டத்துக்கு வெளிய கால் வைச்சிட்டாய் அவுட் அவுட் நீ ஆட்டத்தில் அவுட்டடீ தா. தா. தா. எனக்கு. . இனி உன்னால விளையாட முடியாது.” சாரதாவின் கையில் இருந்த குங்குமச் சிமிள் நழுவ, முடியா விளையாட்டு தொடர் கிறது. தரைமகள் குங்குமத்தை சூடிக்கொள்கிறாள். சாரதா வெளியே ஒடுகிறாள். அங்கே. கட்டமும். ஆட்டமும்.கட்டம் போட்டுகட்டம் போட்டு விளையாடச் சொல்லித்தந்து. கட்டத்தை தாண்டிச் சென்றால் ஆட்டத்தில் தள்ளி வைத்து.
ஜெ. பாலறஞ்ஜனி
ஹட்டன்
-26

சோவெனப் பொழியட்டும் மழை.யூ
-சஜீவனி களப்துாரி ஆராச்சி
காலையில் நாங்கள் புறப்படும் போது வானம் தெளிவாக. கரு.நிலமாகக் காட்சியளித்தது. கண்ணுக்கெட்டிய துாரம் வரையில். மழை முகில் முட்டத்தைக்
காணமுடியவில்லை.
நான் நினைத்தனான். இன்டைக்கெண்டா கட்டாயம் அம்மா வருவாரென்று.
எனவே, நாங்கள் எல்லோருமாக வந்தோம்.
ஆயிரக்கணக்கான வாகனங்களிலிருந்து வெளியேறும் புகைமண்டலமும், சக்கரங்களிலிருந்து மேலே கிளம்பும் துாசுப்படலமும்.
அது எனக்கு நன்கு பழக்கப்பட்ட விசயம் தான்.
ஆனால் . சதுரமான வலையினுாடாகத் தோன்றும் அகன்ற உலகம்.?
சது.ரம். சதுரம். சதுரம்.
பாதையில் நடமாடும் மனிதர்களின்.
உ. ரு.வ./ங்.க.ஸ். ம.ர.ம்.செ.டி.கொ.டி.க.ஸ்.
61st...d5.607.sbt...a5.67f...,
கண்ணுக்குத் தென்படும் எல்லாமே சதுரம். சதுரமாக. துண்டம். துண்டமாக.
-27

Page 18
பின்னர் நாம் வந்து சேர்ந்தோம்.
இடுக்கு.முடுக்குகளால்.
வே.கமாக.விர்.ரென்று விரைந்தவாறு.
மெது. வாக.நிறுத்தி.நிறுத்தி. குறுக்கு நெடுக்காக. விரைந்து. கடந்து செல்லும் முச்சக்கர வண்டிகளை முறைத்துப் பார்த்தாற்போல.
பாதையின் இரு மருங்கிலும் முதியவர்களும், சிறியவர்களுமாக.
வாயை ஆவெனப் பிளந்து கொண்டு .
கண்களை அகல விரித்தவாறு.
இதற்கு முன்னர் கண்டிராத விலங்குக் கூட்டமொன்றைப் பார்த்தது போல எம்மையே கண்கொட்டாமல் முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தார்கள்
என்றாலும். நாங்கள் தொடர்ந்தும் பயணித்து ஒருவாறு பம்பலப்பிட்டியை வந்தடைந்தோம்.
படிக்கட்டுகள்.
கால்கள் கடுகடுக்க அவற்றில் ஏறிஏறி.
பம்பலப்பிட்டியிலுள்ள புலால் நாற்றம் வீசும். கூடத்தை நோக்கிச் சென்றோம்.
-28

நான் நினைத்துக் கொண்டனான்.அம்மா கடைசிப் படிக்கட்டில் வழிமேல் விழிவைத்தவராக. அழுதழுது விம்மிப் புடைத்த கண்களுடன் காத்திருப்பாரென்றே நான் நினைத்தனான். எண்டாலும் .அங்க அம்மா இருக்கல.
திடீரென நாலா புறங்களிலும் கருமை படர்ந்தது. நான் வானத்தை அண்ணாந்து பார்த்தேன்.
வானத்தின் நாலாபுறங்களிலுமிருந்தும் முகில்கள் கூட்டம்
கூட்டமாக மிதந்து.மிதந்து.நகர்ந்து வீறுநடை போட்டுக்கொண்டிருந்தன.
நான் திரும்பித் திரும்பி.கீழே கீழே பார்த்தவாறு. கால்கள் தட்டுத்தடுமாறியவாறு மேலேறிச் சென்றேன்.
அம்மா பின்னால வர்றாவாயிருக்கும்.
இல்லயில்ல. அம்மா வந்து கூட்டோட வாயிலருக காத்திருப்பாராக்கும்.!
அம்மா எங்க போயிட்டா.
அம்மா.மேலேயோ.கீழேயோ இருக்கலியே.
படிக்கட்டுகளின் மீதேறும் போது காற்று வேகமாக வீசுவதை உணர்ந்தேன்.
தழுவிச் செல்லும் காற்றின் வேகமோ என்னை அடித்துச் சென்றுவிடும் போலிருந்தது.
வேகமான காற்றுடன் கருக்கொண்ட மழை முகில் கூட்டங்கள் வானத்தில் ஓரிடத்திற்கு ஒன்று திரண்டன.
-29

Page 19
கருமை எங்கும் திடிரென படர்ந்தது.
புலால் நாற்றம் வீசும் கூட்டுக்குள் நான் இழுபட்டுச் சென்றேன்.
அங்கமெல்லாம் .மெய்சிலிர்க்க வைக்கும் குளிர் என்னை அனைத்துக் கொண்டது.
நான் குளிர் தாளாமல் நடுநடுங்கலானேன்.
குளிரைத் தாங்கிக் கொள்வதற்காக கூட்டுக்குள்ளேயே ஒரு சுற்று ஓடினேன். இரண்டு சுற்றுக்கள்.
மூன்றாவது சுற்றும் ஓட ஆரம்பித்தேன்.அவ்வளவுதான்.
ஏய். பிள்ள, கூத்தடிக்காம இங்க வந்து உட்காரும்.
கூட்டுக்குள் கட்டிலொன்று போடப்பட்டிருந்தது.
அதோ சின்னத்தம்பி. ஓ..நீங்க யாருமே அவரு யாரென்று அறியல...இல்ல. அவரோட சித்தப்பா அவரோட காலால பிடிச்சி பூமியில அடிச்சிட்டாரு. அதனால இப்போ அவருரொம்ப நோய்வாய்ப்பட்டிருக்காரு.
காது கேக்கிறதில்ல. கண் பார்வையும் கெட்டுடிச்சி. எழுந்து நடமாட முடியாத நிலை.
என்றாலும் .அவரும் எங்களோடவே வந்துட்டாரு.
இல்ல நாங்க அவரையும் எங்களோட அழைச்சிக்கிட்டே வந்திட்டம்

பொறுப்பேற்க யாராவது வருவாங்களாண்டு பாருங்க. என்னைப்போல.
அவரும் படுக்கையின் மீது துாங்கிக் கொண்டிருந்தார்.
படுக்கையிலேயே அவரு சிறுநீர் கழிச்சிட்டாரு.பாவம் அதன் மேலேயே அவர் துாங்கிக் கொண்டிருந்தார்.
நானும் தம்பிக்கு அருகிலேயே உட்கார்ந்தேன்.
இவனுக்கு குழப்படி செய்ய முடியுமெண்டா..? (ԼՔԼջեւ://15/... (ԼՕկ2Աl/15/.
சத்தம் போட ஆரம்பிச்சானென்டா.கூண்டே அல்லோலகல்லோலப்பட்டிருக்கும்.ஐயையோ.பிள்ள. நான் நல்லாவாங்கிக்கட்டிக்கொள்ள வேண்டியது
தான்.
நான் இவன கூச்சமூட்டட்டா..? அப்படிச் செஞ்சிட்டா கலகலவென்று சிரிப்பான்.
கண்பார்வை இல்லாவிட்டாலும். காது கேட்காவிட்டாலும் . தம்பி. நன்.றாக எதையும் உணரக்கூடியவன். அம்மா எங்க போயிட்டா. இன்னும் வரலியே.
1458 676mb.....
அம்மா எங்க போயிருப்பா.
ஸார். எங்க அம்மா எங்கிருக்காங்க.
என்னால முடியாது.
-31

Page 20
"ம். ஏய்.இஞ்ச வாரும்.!
பிள்ளையோட பெயரு மலரு. பாதுகாவலரோட பெயரு அண்ணலட்சுமி.ழறிகாந்தா.”
"பிள்ளை ஆஜராகியுள்ளார். பாதுகாவலர் ஆஜராகவில்லை.
இவங்களெண்டா. புதுமையானஜன்மங்கள்தான்.”
இன்று முன்றாவது நாள், கனம் நீதிபதி அவர்களே.
நன்நடத்தை அறிக்கை.
ஆமாம். கனம் நீதிபதி அவர்களே, காந்தி சிறுவர் பராமரிப்பு நிலையத்துல சேர்ப்பிப்பதற்கான வாய்ப்பைப் பற்றி
ஆராய்ஞ்சுள்ளோம்.
அங்கே இடவசதி இருக்கிறதாத்தான் சொல்லியிருக்காங்க.
பிள்ளய காந்தி சிறுவர் பராமரிப்பு நிலையத்தில சேர்ப்பிக்கவும். பாடசாலையில சேர்ப்பிச்சு அதிபரோட அறிக்கையை 2008.10.12 அன்றே அனுப்பி வைக்கவும்.
அடுத்த வழக்கு விசாரணை தினம் 2008.10.16அன்று ஆஜராகவும்.
மின்னல் பளிச்சிட்டது. எனது கண்கள் இரண்டும் மருண்டு சொருகின. நான் காதுகள் இரண்டையும் இரு கரங்களாலும் பொத்திப் பிடித்துக் கொண்டேன்.
-32

உடல் அதிரும்படியாக வானத்தில் இடி இடித்தது.
நான் துாக்கியெறியப்பட்டு கூரையின் மீது மோதி. மீண்டும் அதே இடத்தில் வந்து விழுந்தேன்.
அதனுடனே கூழாங்கல் அளவில் மழைத்துளிகள் வந்து விழ ஆரம்பித்தன.
கூடவே நானும் ஓலமிட்டமுதேன். வானத்தின் ஓசையோடு சரிசமமாக.
என்னோடு சேர்ந்து இன்னும் எத்தனை பேர் அழுதார்கள் என நான் அறியவில்லை. எல்லோருமே அழுதிருக்கலாம் என்றே நான் நினைக்கிறேன்.
பெரிய அம்மனி என் தலையைத் தடவிக் கொடுத்தார். பாவம்,எனது தலையிலிருந்த அழுக்கு அம்மணியின் கையில் பட்டிருக்கலாம்.
"பிள்ள.அந்த நிலயத்துக்குப் போனப்புறம் ஸ்கூலுக்குப் போகலாம். இனியென்ன அழுக..? பெரிய அம்மணி அப்படிக்கூறியதால, என்னோட அம்மா, அப்பா,தங்கச்சிய மீண்டும் நான் பார்க்க
(ԼՔկ2ԱՈ75/...
"பிள்ள. உன்னப் பெத்தவங்க உன்ன வச்சி சம்பாதிச்சது தான் மிச்சம்.அதுக்காகத் தான் உன்ன வச்சிருக்காங்க. நீ புள்ள அங்கிருந்து தப்பியதால நீ கொடுத்து வைச்சவள் பிள்ள.
"சவர்க்காரத்த உண்டுட்டு நுரை தள்ளிக்கிட்டு கிழ விழுறதுக்கு.பாட்டுப்பாடி பிச்ச எடுக்கிறதுக்கு.
எல்லாத்துக்குமே இவவுக்கு அப்பா நல்லா நடிக்கப் பழக்கிருந்தாரு.
33

Page 21
இப்போ இங்க அவரு வர்றதேயில்ல.அவரு செய்த குத்தங்க என்னன்னு தெரிஞ்சது தானே.
நான் இல்லாததால இப்போ, தங்கச்சியும் பிச்ச எடுக்கிறதாயிருக்கும்.புற்றுநோய் வருத்தம் கூடியதாலோ என்னவோ அம்மாவ இன்றும் கானல.?
இருக்கவே இருக்காது. அம்மா வந்த வழியில மழைக்கு அகப்பட்டிருப்பா.பஸ் தரிப்பிடத்தில குக்கல் வருத்தத்தோட அவ உட்கார்ந்திருப்பா.
மழை நின்னுட்டா போதும். அம்மா தள்ளாடித் தள்ளாடி குக்கல் வருத்தத்தோட கோர்ட்டுக்கே வந்திடுவா. அந்த நேரமாகும் போது என்னயும் அழைச்சுகிட்டு வந்திருப்பாங்க அப்போ. நெஞ்சில அடித்துக்கொண்டு அம்மா அழுது புலம்புவா.
அம்மாவோட நெஞ்சு வெடிச்சிருமோ தெரியல. ஐயையோ.நினைக்கவே பயமாயிருக்குது. மழை விடாமலே கொட்டிக்கொண்டிருக்குமெண்டால். அம்மாவுக்கு இங்க வரமுடியாது போகுமே.
அம்மாவுக்குப் பொறுக்க முடியாத கவலையாயிருக்கும்.
இல்லாவிட்டால்.
அம்மாவால வர முடியாமல் அமஞ்சாத்தான் நல்லது.
அம்மாவுக்கு வர முடியாமலிருக்க மழை சோவெனப் பொழியட்டும்.!
(சிங்கள மொழி பெயர்ப்புக் கதை)
-34

பெண் எழுத்தாளர் மணி டூர் மீனா
f56OTm,
பட்டென்று ஞாபகத்திற்கு வரும், உங்கள் அனைவருக்கும் தெரிந்த மீனா அல்ல இவர்.
ஞாபகங்களை கோர்வையாக்கி பிரட்டப் பிரட்ட, பிற்பட்ட காலச் சம்பவங்களை முன்னே துாக்கிப் போடும் எழுத்தாளியே மண்டுர் மீனா.
எளிமையான தோற்றம் சிரித்த முகம், புகழாரம் பாடத் தேவையே இல்லை எனும் போக்கு.இருக்கும் வரை நல்லதே செய்ய வேண்டும் அமைதியாக ஆத்மீகமாக எனும் சிந்தனை. இவையே இவரின் பின்புலமாகத் தெரிந்தது எங்களுக்கு.
மண்டூர் மீனா, தன் ஆரம்பக்கல்வியை மண்டுர் இராம கிருஸ்ண மிசன் பாடசாலையில் ஆரம்பித்தார். சிறுவயதில் இருந்தே எழுதுவதில் ஆர்வம் இருப்பினும் வீட்டில் அதற்கான வாய்ப்புகள் இருக்கவில்லை. இறுக்கமான குடும்பம். ஆண் சகோதரர்கள் அதிகம். பாடசாலை முடிந்த ஓய்வு நேரங்களில் தாயாருக்கு உதவியாக சமையலில் ஈடுபட வேண்டியிருந்தது. இறுகிய கற்குவியல்களுக்குள் இருந்து தலை நீட்டும் பச்சைத் துளிராய் பாடசாலையில் தன் கை வன்மையைக் காட்ட தொடங்கியதால் ஆசிரியரின் பாராட்டுதலில் இலைவிடத் தொடங்கியது இவர் பேனா.
வீட்டு வேலை முடிந்து இரவு முழுவதும’குப்பி விளக்கில் வாசிப்பதும் எழுதுவதும். எனினும் தேடிக் கற்றுக்கொள்ள சுதந்திரம் இல்லை. இதனால் வாசிப்புக் குறைவு. இத்தனை தடைக்கிடையிலும் தலை நீட்டி தலை நீட்டி வளர்ந்தவர் தான் மண்டுர் மீனா என்னும் பெண் எழுத்தாளி.
கடந்த 24 வருடங்களாக ஆசிரியர் தொழிலில் ஈடுபட்டு வரும் இவர் தற்போது மட்டக்களப்பு மைக்கல் கல்லுாரியில்
-35

Page 22
கடமை ஆற்றுகிறார். "விதி"எனும் இவரது முதல் சிறுகதை தாய் நாடு பத்திரிகையில் வெளியானது. மற்றும் தினகரன்,வீரகேசரி பத்திரிகைகளிலும் “கலைச்செல்வி’ எனும் ஆண்டுமலரிலும் இவரது கதைகள் வெளியானது. மற்றும் ஆரம்ப காலம் தொட்டே இவரது எழுத்தாற்றலினால் மண்டுரில் சிறுவர் நாடகங்கள் பல அரங்கேற்றப்
6.
தொடர்ந்து கிழக்குக் கரை கருகுகிறது, கருத்தடை, அவள் காத்திருக்கிறாள் போன்ற கதைகளைத் தந்த அவரின் “திருப்பம்" எனும் சிறுகதைத் தொகுதி அண்மையில் சென்னை மகாராஜ பதிப்பகத்தினால் வெளியானது.
இவரது பல கதைகள் இயற்கை அனர்த்தத்தின் போதும் இனப்பிரச்சனையின் போதும் அழிபட்டுப் போனது கவலைக்கிட மான சம்பவங்கள். ஆரம்ப காலத்தில் இவர் எழுதிய கதைகளின் பிரதிகள் பற்றிக் கேட்டபோது
நான் ஒரு எழுத்தாளராக வருவேன் என்ற நினைப்பு எப்போதும் இருந்ததில்லை அவ்வாறு வரவேண்டும் என்ற துடிப்பும் இருந்ததில்லை. என்திறமையை மெச்சும் கொள்கையும் இல்லை. அதுதானோ என்னவோ எழுதியவற்றில் பிரதி எடுத்து வைக்காமல் போனது. மற்றும் அதிக நேரங்களை தியானம்,ஆத்மீகம் இவ்வழி களிலேயே செலுத்துகிறேன்.
நீங்கள் ஓர் ஆசிரியர் என்ற வகையில் தற்போதைய சந்ததியினரின் எழுத்தாற்றல், கலை ஆர்வம் இதன்மீது மாணவர்கள் ஈடுபாடு எவ்வாறு உள்ளத?
தற்போதைய கல்வித்திட்டத்திற்காகவே பிள்ளைகள் வளர்க் கப்படுகிறார்கள். ஏனெனில் சிறந்த எழுத்தாளராகவோ, கதை ஆசிரியராகவோ, நடிகனாகவோ தங்கள் பிள்ளை வர வேண்டும் என பெற்றோர் நினைப்பது இல்லை. பிள்ளைகளின் கலை வளர்ச் சிக்கு பெற்றோர் ஊக்கமளிப்பதில்லை, சந்தர்ப்பம் அளிப்பது மில்லை, ஆகவே பிள்ளைகளின் கலை ஆர்வமும் வளர்ச்சியும் கேள்விக் குறியே.
-36

தங்களின் கதைகளின் கருவலம் பற்றிக் கூறமுடியுமா?
எச்சம்பவம் என் மனதைத் தாக்குகின்றதோ, பாதிக்கின் றதோ அது என் கதையின் கருவூலமாகிறது.
பெண்களின் இன்றைய நிலை பற்றி என்ன நினைக்கிறீர்கள்?. உங்கள் கதைகள் மூலம் அவர்களுக்கு நீங்கள் சொல்ல முனை வத.?
பெண்களின் வாழ்க்கை என்றும் சுமை நிறைந்ததும் தங்கி வாழ்வதும் ஆகும். இதில் கணவன் இறந்தால் வாழ்க்கையே கவலையாகி விடுகிறது. ஆனால் தற்போது இந்நிலையில் ஏற்பட்டு வரும் மாற்றங்கள் சந்தோசம் தருகிறது. ஏனெனில் கணவன் இறந்த பெண்கள் பட்டுசாறி கட்டுவது, பொட்டு வைப்பது சமூகம் ஏற்றுக்கொள்வதென்பது பெண்களின் வாழ்வில் புதுப் பொலிவு ஏற்படுவது போல உள்ளது. என் கதைகளிலும் பெண்களின் பிரச்சனைகள், துயரங்கள், போராட்டங்கள் என பல சம்பவங்களை எழுதி வருகிறேன்.
தற்போது தங்களதர வாசிப்பு நிலைபற்றி.
என்னைத்தெரிந்த எழுத்தாளர் பலரதும், அதாவது பா. பாலேஸ்வரி, க. பூரணி, நெல்லைக. பேரன், செ. யோகநாதன் போன்றோரின் அன்பான வேண்டுதல். நிறைய வாசியுங்கள் என்ப தாகும். இளமைக்காலத்தில் பெரிய குடும்பத்தில் சிறிய அங்கத்த வராக இருந்து பெருஞ்சுமைகளையும். பொறுப்புக்களையும் சந்தித்து அவற்றோடு. மோதியெழுந்த இந்த வாழ்க்கையில். குறைந்த பட்சம் ஒரு உதவி ஆசிரியர். கூடிய பட்சமாக ஒருதியான வழிமுறைவாழ்க்கையோடு இணைந்த பங்களிப்பு. அப்பப்பா. திருப்தி. திருப்தி வாசிப்பதற்கு ஆசை அதிகம் - எல்லோரும் பாடும் முராரியில் எனக்கும் பங்கேற்க விருப்பமில்லை - பெரிதாகத் தேடுவதில்லை. கையில் அகப்படும். துண்டு. துணியோடு தான். அன்றும். இன்றும் மண்டுர் மீனாவில் மாற்றம் ஏற்படாதா என நானும் ஏங்குகிறேன்.
-37

Page 23
தொடர்ந்தும் எழுதுவதற்கான உங்கள் மனநிலை, ஊக்கம், எவ் வாறள்ளது?
எழுதுவதற்கு நிறைய விருப்பமுண்டு ஒருநாளில் எத்த னையோ கதைகளைச்சிதைத்துக் கொண்டிருக்கும் இலக்கியத்தின் அயோக் கியத்தை "நான்” எனக் கூறிக்கொள்வதில் வெட்கப்படுகிறேன். உண்மையில் இவையெல்லாம் வரப்பிரசாதங்கள்- எல்லாவற்றிற்கும் மேலாக குருவின் பிரசாதத்தை உணர்வதனாலோ. என்னவோ. வாழ்க்கை நிறைந்துவிடுகின்றது. இருந்தாலும். அவ்வப்போது மனிதனென்பதனால். மனிதத்துவம். பீறிட்டுக்கொண்டு புறப் படும்போது. அவசரத்தின் மத்தியிலும் எழுதிவிடுவேன்.
எழுத்து பெண்கனின் கருத்தை, பிரச்சினையை வெளிக்கொணர மிகச்சரியான கருவி ஆயுதம் என்று நீங்கள் கருதுகிறீர்களா?
நிட்சயமாக பெண்களது மட்டுமல்ல. ஆண்களது பிரச் சினை கருத்துக்கள் உணர்வுகளை சமூகத்திற்குப் புரிய வைப்பதன் மூலம் யதார்த்தம் புரியும். தேவைகள் புரியவரும் - குறிப்பிட்ட எல்லைக் கோட்டுக்குட்பட்ட மனிதவாழ்வின் அர்த்தங்களைப் புரிந்து கொள்ளாது. என்னமோ. காலத்தை வீணடிக்கக் கூடாது ஒவ் வொரு கணமும் அர்த்தமுள்ளது போல் தோன்று கின்றது. எனவே எழுத்துஎன்னும் "ஆயுதம்” எப்பொழுதும் எல்லோரிடமும் கூர்மை யானதாக இருந்தால். அனியாயங்களையும் அவலங்களையும் வேரறுத்து தர்மத்தை நிலைநாட்டும் சிறந்த இலக்கியக் கருவி யெனக் கருதுகிறேன். - இந்தவகையில்தான். இன்று எம்மத்தியில் வாழும் இலக்கியங்களெல்லாம் !
உங்களின் பெண்ணிலை வாதச்சிந்தனை என்று எதனை வரை
யறுக்கிறீர்கள்?
பெண்ணிலை வாதத்தைச் சந்தைக்கு எடுத்து மலிவு விலையில் விற்பனை செய்தபாரதிக்கு முன்னாலும் சரி. பின்னா லும்சரி எல்லோரும் துரும்புதான்! நானும் அதற்கு விதிவிலக் கல்ல. அடிமைநிலை அடியோடு மறைந்திடா விட்டாலும். சுதந்
-38

திர வேட்கை இன்றைய பெண்களின் குருதியில் உறைந்திருப்ப தனாலும் சமத்துவம் சாகடிக்கப்படுவது இன்று மிகக்குறைவா னாலும். வன்செயல், இனத்துவேசம், அரக்கத்தன்மைகளினால்தான் பெண்மைக்குக்களங்கம் ஏற்படுகின்றது. அறியாமை, மூடக் கொள்கை, ஏமாற்றுதல், வஞ்சகத்தன்மை போன்ற இயல்புகளால். பெண்ணிலை வாதம் மெல்ல. மெல்லச் செத்துக்கொண்டிருப்பது கண்கூடு.
தற்போது கிடைத்தள்ளதாகக் கூறப்படும் கருத்துச் சுதந்திரம் பற்றி உங்கள் கருத்தெண்ன?
கருத்துச் சுதந்திரத்தால் இப்போ. கருத்துக்களே. தலை கீழாகத் தொங்குவதும். அறுந்து விழுவதும். மீண்டும் புரை வதுமாக. உண்மையற்றதன்மையைத் தோற்றுவித்து விட்டதாகத் தோன்றுகின்றது. சுதந்திரத்தைச் சரியான வகையில் பேணா விட்டால். சு. நீங்கலாக தந்திரமாகவே மாறிவிடுவதைக் காணலாம். சுதந்திரத்திற்கும் கட்டுக்கோப்பு, எல்லை கட்டாயம் தேவை. இல்லையேல். பெண்கள் தெருவில் எவ்வாறு இரவில் தனித்துப் போக முடியாதோ. ஆண்களும் தனித்து நிலைக்க முடியாமலாகிவிடும்.
கருத்துச் சுதந்திரத்தைப் பாவிப்பவர்கள் பெண், ஆண் என்ற பேதமைப்படுத்தும் கண்ணாடிகளை அணியாது. “சமூகம்" என்ற செம்மையான புனிதமான கண்ணாடியை அணிந்து நோக்கி னால். கருத்துச் சுதந்திரம் கருத்துச் சுதந்திரமாய் அமையும், கருத்துக்கள் தீர்க்கமான, தெளிவான, சத்தியமான தன்மையைக் கொள்ளாவிட்டால். வீண் வதந்திகளாகி. பலரது வாழ்க்கையை வீணடித்து. சமூகத்தைத் தவறான வழியில் இட்டுச் செல்லக் கூடியதாய் அமையும்.
சந்திப்பு T. உருத்திரா விஜயலக்சுமி சேகர்
-39

Page 24
கருத்தடை
மண்டுர்-மீனா
வானவெளியின் மோன நிலையைக் கலைத்துவிட “றொக்கட்” பறக்கத் தயாரகிக் கொண்டிருக்கும்போது எரிபொருள் எரிவதனால் ஏற்படும் புகையுருப் போன்று அந்த நிசப்தமான நிலையில் நிம்மதியாகப் "பணி" தன் கைங்கரியத்தை எடுத்தியம்பிக் கொண்டிருந்தது. பகலெல்லாம் அக்கினிப் பிழம்பாய் உருவெடுத் திருக்கும் உலகில் நடமாடிடும் அவன் பனியின் கோரப் பிடியில் சிக்கி நடுங்கிக் கொண்டிருந்தான். அவனது நடுக்கத்திற்குப் பணிமட்டும் தான் காரணமாக இருக்கவே முடியாது உடற்பலவீனமும், பயப்பீதி யும் சங்கமமாகும் நிலையிற் கூட நடுக்கத்தைச் சிருஷ்டிக்க முடியும்
அமைதியே உருக்கொண்டிருந்த அந்த வைத்திய சாலை யின் தேற்றம் மயானக் கரையாகவே காட்சி கொடுக்க அவனது சிந்தனைக்குக் கட்டியங்கூறுவது போன்று, ஒதுக்குப்புறமாக அமைந் திருந்த “சவக்காம்பிராவின்” அருகிருக்கும் புளிய மரத்தில் இரண்டு ஆந்தைகள் போட்டியிட்டு அலறிக் கொண்டிருந்தன. வெளவால் கூட் டங்கள் அவன் கண்களைத்தான் தீண்டுவதற்கு வருகின்றவோ எனத் துஞ்சும் வகையில் நெருக்கமாகவே ஒன்றையொன்று துரத்திப் பறந்து கொண்டிருந்தன. “பக்கிள்" கூட்டங்கள் தமது போக்கிலேயே, சத்தமிட்டுக் கொண்டிருந்தன. குடல் நடுங்குமளவிற்கு இருட்கள மாய்க் காட்சி கொடுக்காவிட்டாலும் மின்விளக்குகள் யாவும் சுட லையில் எரிக்கப்படும் ஓர் நொடியுடனெழும் தியாகவே. அவனது உணர்வு வலியுறுத்தியது. பகல்ெலாம் உணவை மறந்து கொண்டு ஊதிக் கட்டிய “பலூன்" போன்றிருக்கும் வயிறு  ைந்துவிட்ட பலூனாய் மாறியிருக்க. அருவருக்கும் மன நெகிழ்வில் அவனுக்குக் குமட்டலுடன் வாந்தியெடுக்க வேண்டும் போன்றிருக்கக் காறிக் காறி உமிழ்ந்தபடி இரண்டு காலில் குந்திக் கொண்டிந்தான்.
பயங்கரச் சூழ்நிலையே போர்வையாகக் கொண்டிருக்கும்
அந்த நிழல் வாகை மரத்தின் கீழ் எத்தனை மணித்தியாலIIள்தான்
இருக்க முடியும்.? நடப்பதும் இருப்பதுமாக. எப்படியோ நான்கு
-40

மணித்தியாலங்களைப் பகை நடுவில் உருளவிட்டான் சிவானந்தன். அந்த நீண்ட இடைக்கணத்தில் மெளன தேவதையின் ஆக்கிரமிப்பில் உள்ள அந்தப் பயங்கர வெளியைக் குறுக்கீடு செய்து கொண்ட இரண்டு யுகங்களின் பின்பு புயலடித்து ஓய்ந்துவிட்ட அமைதி குடி கொண்டிருந்தது.
அவன் அங்கு வந்து அரைமணியே செல்லவில்லை...! அதற்குச் சற்று முன்னதாகவேதான் ரஞ்சிதம் தள்ளு வண்டி மூலம் பரிசோதனை அறையினுள் எடுத்துச் செல்லப்பட்டாள். இமை மூடித் திறக்கவில்லை. உறுமலுடன் வந்து நின்ற மோட்டாரினுள்ளிருந்த இராணுவ வீரனின் சாயலில் பரிசோதனைக் கருவியுடன் வெளியே வந்தவர், அவனது அச்சமான நிலை நாணமாக மாறுவதற்குப் பெரிய டாக்டரின் கையில் பட்டும் அந்தக் குழல் இல்லாதிருந்தால். சிவா வின் குடல்.
"மிஸ்டர் சிவானந்தன். உங்கள் மனைவிக்கு அறுவைச் சிகிச்சை உடனேயே நடத்தியாகனும்! இல்லையோ ஆபத்தென்று பெரிய டாக்டர் சொல்கிறார்! உங்கள் சம்மதம்” நர்ஸின் வருகை கண்டு மலர்ந்துவிட்ட வாடாமலரான சிவாவின் முகம் ஒரு கணம் தீ பட்டுக் கருகிவிட்டாலும் மறுவினாடியே.
அதற்கென்ன எல்லாம் உங்க கையிலேயே ஒப்படைத்து விட்டேன். எப்படியும் ரஞ்சிதத்திற்கு ஆபத்தொன்றுமில்லாமல் “கிடப்பவர்கள் கிடக்கட்டும் என்னையும் கிழவியையும் உள்ளே விடு” என்பது போன்ற பாவனையில் குழைவுடன் பேசிய சிவாவிடம் “சரி ஆபத்தொன்றும் ஏற்படாது. இதில் உங்கள் கையெழுத்தை இடுங்கள்!” பத்திரமொன்றை நீட்டிய நர்ஸ் ஆறுதல் வழங்கவும் மறக்கவில்லை.
அதன்பின்பு.? அந்தப் பயங்கர நிசப்தமே அவனுக்கோர் துளி விஷமாக மாறியிருக்கும்! விதிவிலக்காக விடை காணும் முடிவுடன், குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டேயிருக்கும் கடமைவீரன் வாயிற் காவலனின் துணைப்பலம் அவன் மனதிற்கு சாந்தியையுண்டு பண்ணிற்று.
-41

Page 25
"அவள் நிலைதான் என்னமோ ஏதோவென ஏங்கியபடி வறண்டிருந்த நெஞ்சத்தில் பனியலை மோதியென மெல்லிய இரு மலும் வில்லெடுத்து நாண் தொடுத்து விட்டமை போற் தோன்றி மறைந்தன. ம். என்ற பெருமூச்சுடன் விதியின் மடியில் அமைதி காணத் துடித்துக்கொள்ளும் சிவாவின் எண்ணங்கள் விரிந்து நைந்து “நைலோன்” வலையாக இழுபட்டுக்கொண்டிருந்தன. நினைவுகள் "அப்பலோ"உருப்பெற்று நிற்க முதன் முதற்காலடி யெடுத்து வைத்த. "நீல் ஆம்ஸ்ராங்" என்னும் விண்வெளி வீரனைப் போன்று எந்திரத்தினுள் ஏணிமூலமேறி நுழைந்து கொண்டான் சிவா.
"இந்தாங்க இப்போ என்னதான் செய்வது..? அவளது முகத் தில் அசடு வழிய அவனை நெருக்கமாகவே அணுகியிருந்தபடியே கேட்டாள். "என்ன ரஞ்சிதம் இது. புதிர் போடுகிறாய்! விபரமாகத் தான் சொல்லேன்!” அவளது நெருக்கமே அவனுக்கு உண்மையை விளக்கியிருந்தும் ஏமாளியைப் போல் கேட்டான்.
“இப்போ ஏன் இடிஇடிப்பதுபோன்று கத்துகிறீர்கள் பக்கத்து வீட்டிற்குத்தான் அம்மாவும் போயுள்ளார்! எல்லோர் காதிலும் இது விழுந்து விட்டால் காறி உமிழ மாட்டார்களா அத்தான் நம் முடைய அருவருப்பான மிருகச் செயலை எண்ணி.?" வெறுப்பும் ஏக்கமும் பேயுருப் பெற்ற நிலையில் அவள் மெல்லிய குரலில் கேட்டாள்.
"மாமியார் காறி உமுழும் அவல நிலைக்குக் கேவலமாக எதனை ரஞ்சிதம் நான் செய்துவிட்டேன்?” அப்பாவியாகிய அவன் பேச்சுகள் வெளிவந்தன.
“எத்தனையா? வருடத்திற்கொன்று குறைவில்லாமல் பெறு கின்றோமே? இது உலக சாதனையாக மாறக் கூடாமத்தான்? இனிமேலும் இந்தப் பழிபாவங்களுடன் என்னால் உயிர் வாழவே முடியாது" வேதனையின் உச்சி நிலையிலும்கூட. பகிடி வில்லை களைத் தூவ அவள் மறக்கவில்லை.
-42

“என்ன ரஞ்சிதம் பழிபாவமில்லாமலேயே நிரப்பி விட்டாய்..? அவனது வார்த்தைகள் இறந்த, பிறந்து வந்தது போன்றிருந்தன. “ஒ. பாருங்களேன். பேச்சை. அவர் குற்றம் புரியாமல் நான்தான் நிரப்பினேனாக்கும்! இந்த ஆண்களே இப்படித்தான் செய்வதை யெல்லாம் செய்துவிட்டுப் பெண்கள் தலையில் பழியைக் கட்டி விடுவார்கள்” நான் எதற்காகத்தான் உயிருடன் இருக்க வேண் டும். ஊர் அறிந்தால்?” அவள் விம்மினாள். "ரஞ்சிதம் ஊரெங் கும் கேவலமாகப் பேசிக் கொள்ளும் வகையில் நாமென்ன களவு செய்தோமோ கட்டுப்பட்டோமா? அவன் தீரமான குரலில் கேட்டான்.
*களவு செய்வதும் கட்டுப்படுவதும்தான் இனி செயலென உங்களது எண்ணமாத்தான். ? சமூகத்தின் இவையெல்லாம் நமது செயலுக்கு ஒரு துரும்பு என்பதை நான்கு பெண்களுடன் கலந்துரையாடினால்தான் தெரியவரும் ” ஆவேசமுற்றவளாய் பேசிக் கொண்டிருந்தாள். ரஞ்சிதம் "அப்படியானால்...? அவன் இழுத்துப் பிடித்து நிறுத்தினான் வார்த்தையை. “என்ன அப்படியானால்? சாந்தன் பிறந்து நான்கு மாதங்கள் ஆகவில்லை. மறு குழந்தையின் அவதாரத்தை இரண்டு மாதங்களினுள் மருந்தினால் தடைசெய்து விட்டோமே! அது மடிந்து நான்கு மாதங்கள் செல்லவில்லை. அதற்கிடையில் சீ கேவலமென்றல்லவா நினைப்பார்கள்? அவள் எவ்வளவு கட்டுப்படுத்தியும் விம்மலுடன் சொல்லி முடித்தாள்.
“அதற்காக ஏன் அசடு அழுகின்றாய்? கருத்தடை வில்லை களைக் கையோடு வைத்துக் கொள்ளென்று வாயோயாமல்தான் சொல்லிவந்தேன். நீ கேட்டாயா? இப்போ அனுபவித்துத் தீர வேண்டியதுதான்”
“இந்தாருங்க என்னுடைய எரிச்சலையும், கோபத்தையும் விலை கொடுத்து வாங்காதீங்க! போன கிழமை சொன்னேன். குழிகையெல்லாம் முடிந்து போய்விட்டதென்றும். வாங்கிக் கொண்டு வர மறுக்காதீங்க என்றும் சும்மா கிடக்க விடமாட்டேன்கிறாயே அந்தப் பச்சமண் மூன்றுக்கும் பெட்டிப்பாலின் விலை. இம்மாதம் நூறு ரூபாவுக்கும் மேலாயிட்டு சம்பளம் வரும் வரைக்கும்
-43

Page 26
கொஞ்சம் கண்டிப்பா நடந்து கொள்ள வேண்டுமென்பீங்க எல்லாவற்றையும் மறுநிமிடமே கப்பலேற்றிவிட்டு மறுகணம்" அவள் வார்த்தைகளைத் தடை செய்து கொண்டாள்.
“போதும் ரஞ்சிதம் போதும் என்னைக் கொல்லவுமா துணிந்து விட்டாய்? எவ்வளவு கட்டுப்பாட்டுடனும், உணர்ச்சி வேகத்தையும் தணித்து நடந்து வந்தேன். வேலி பயிரை மேய்ந்து விட்டது ரஞ்சிதம்! பாரமான சுமையுடன் சொல்லிக்கொண்டான் சிவா. "தமிழ் பரியாரியிடம் ஒருக்காப் போய் வந்தாத்தான் எல்லாம் சரியாய் போகுமத்தான்! பழமையைப் புதுமையாக்கும் நினைவில் சொன்னாள். “என்ன ரஞ்சிதம் நீ அன்றைக்குத்தான் முழுகினாற் போல் ஞாபகமுண்டு!” யோசித்த சிவா சந்தேகத்தோடு கேட்டான். * ஏன் அண்டைக்கு, இன்றைக்கும் முழுகினநான்தான் ஈரமும் இன்னமும் உலரவில்லை! கதையைப் பாருங்கான் கதையை வாயினுள் விரல் வைத்தால் கடிக்கத் தெரியாத குழந்தை"
“பரியாரியாரிடமோ..? சும்மா கிட ரஞ்சிதம் நூறு வெற்றி லையில் வைத்துக் கொடுத்தாத்தான் கிழவரின் சாதனை வெற்றி வாகையுடனும் பொக்கை வாய்ச்சிரிப்புடனும் முடியும்! அது இருந்தா. அது இருந்தா பெற்றே வளர்த்திடலாம்!” வெறுப்போடு சொன்னான்.
“தயவு செய்து நஞ்சைக் கொடுத்தாவது என்னைக் கொன்று விடுங்கள்!” மானம் மழையில் உயிரோடு கரையும்போது ஏனத்தான் நான் வாழ வேண்டும்.?” அவளது ஆவேசம் தணியவேயில்லை.
“சரி. சரி. போய்த் தொலையறன் ரஞ்சிதம் இருடிகளும் மலடிகளும் வாழ்வதற்குத்தான் இந்த உலகம் உகந்தது." அவன் சொல்லிக் கொண்டே ஆணியில் மாட்டியிருந்த சட்டையை எடுத்து கொழுவிக் கொண்டு நடந்தான்.
“போகிறீர்கள் சரி. கண்டவர்களிடமெல்லாம் பறையறைந்து விடாதீர்கள்! இரண்டாமவருக்கும் தெரியாமல்." உற்சாகம்
-44

பிறந்தவளாய், அவனது காதோடு தன் வாயாகச் சொன்னாள்.
இருள் வேந்தன் ஆட்சிப் பீடத்தில் அமர்ந்து. மணியொன்று ஆகவில்லை அவன் திரும்பிவிட்டான். காரியம் சரியா. எனக் கேட்பது போன்று அவளது பார்வை அவன் பக்கம் திரும்பியது. "முடியாமலா ரஞ்சிதம் போகும் செட்டிக் கடையில் உள்ள வட்டிப் பணம் கைக்கேறினால் எதனைத்தான் சாதிக்க முடியாது? படுக் கைக்குப் போகும் முன்பு. இந்தக் கள்ளிக் கிழங்கைத் தட்டிப் பிழிந்தெடுத்த சாற்றுடன் போத்தலில் சாராயம் இருக்கிறது அதனும் சாற்றுடன் விட்டுக் கலக்கிவிட்டுக் குடி! மயக்கம் வருமாம்! பரவாயில்லை! நம்முடைய காரியம் நாளைக்கே முடிந்துவிடுமாம்" வைத்தியரிடம் இருந்து பெற்று வந்த அறிக்கையை வாசித்தான் சிவா.
ஊரெல்லாம் ஒடுங்கி நித்திரா தேவிக்கும், காரிருள் வேந்தனுக்கும் அடிபணிந்து நிற்கும்வேளை கரும்பையெண்ண வேண்டியவர்கள் இரும்பையெண்ணியேன் ஏங்குவார்கள். அருவருப்பு குடலைக் குமட் டிக் கொண்டு வந்தாலும் கருத்தடையே அவளுக்கு அவசிய மாகப்பட்டதனால் மட. மட. வென நான்கு முடரில் உள்ளிழுத்துக் கொண்டாள். அதனைக்குடித்து விட்டுத்தான் அவள் பட்ட அவஸ்தை கள்! மயங்கிய நிலையில் தரையில் கிடப்பாள்! அண்டை வீட்ட வர்கள் அறியாமல் அவனே பரிகாரம் தேடிய அந்த இரவுகளை நினைத்தால் இன்றைய நிலையில் மூச்சுத் திணறி விழ வேண்டும் போன்றிருந்தது. மூன்று நாட்கள் முட்கம்பியில் நிற்பவனாய் அவன் பட்ட பாட்டிற்குக் காலையில் கண் திறக்க முடியாத வகையில் அரை மணித்துக்கத்தில் எழுந்து கொண்டே கண்ஜாடையில் கேட்டால் கையை விரிப்பாள், ஏக்கத்துடன் மூன்று வைத்தியரிடம் நான்கு மாதங்கள் வரைக்கும் ஒடியோடி மருந்து செய்தான் சிவா. சே. கத்தரிக்காயில் ஒட்டிக் கொட்டிருக்கும் புழுப்போல் வெளிவர மறுத்து விட்டது.
-45

Page 27
மருந்து செய்வோம் வைத்திய சாலைக்குப் போய் கெற்ப பையை எடுத்துவிடச் சொல்லி டாக்டரின் காலிலாவது விழுவோ மென்று எப்படியெல்லாமோ அவனை அரித்துக் குடித்தாள்! இன்று தான் ரஞ்சிதம் உன் கனவு நனவாகிவிடப் போகின்றது. இனி மேல் தான் எம் இருவருக்கும் விடிவு காலம் நீ மட்டும் ஆபத்தினின்றும் விடுபட்டுவிட ஆண்டவன் அருள் புரியட்டும்! இரவெல்லாம் உன் னைக் கசக்கிப் பிழிவானே சாந்தன்? இப்போ அழுது வடிப்பானோ? மாறி மாறி ஒவ்வொன்றாக அவனது உள்ளத்தைக் குடைந்து குருதிக் கடலில் அலையெழுப்பிக் கொண்டிருந்தான். ம். எத்த னையோ கட்டங்கள் நாடகமாக மாறுந் திரைக்கு முன்னால் தோன்றி மறைந்து விட்டது ஆனால். இப்போ நடந்து கொண் டிருக்கும் பேராபத்தான கட்டத்தினின்றும் விலகிக் கொள்வதை யிட்டுத்தான் அவனது உள்ளம் அழுது வடிகிறது.
ரஞ்சிதம் நெருப்புக் கொள்ளி கொண்டு சொறிந்திருக்கா விட்டால். குழந்தையும் கையுமாக வீட்டில் நிம்மதியாக இருந்திருப் பாள். எட்டுக் குழந்தைகளுக்கு மருந்தையோ பத்தியத்தையோ கண்டறியாத அவள் இந்தப் பத்து மாதங்களிலும்தான் எத்தனை துயரங்களை அனுபவித்துவிட்டாள். நோயில்லாமலும் மருந்தில்லா மலும் இருந்த நாட்களே கிடையாதே!” அவனது இதயத்தில் ஏற்பட்டிருந்த சிரங்கு புரையெடுத்து வலிகொடுத்து சீழ் வடிவதாக இருந்தது. மீண்டும் தன்னை மறந்து பெருமூச்சு மெல்ல எழுந்தான் சிவா.
“கொள்ளிவாய்ப் பிசாசோ என”ஒருவன் அஞ்சும் வகையில் நெருப்பு மனிதனாய் முகபாவனையில் எடுத்தியம்பியபடி இருக்கும் காவற்காரனை நெருங்கவே அவன் மனம் தைரியமற்றிந்தது. “இருந்தாலும்” என்ற உந்தல் அவனைப் பிடித்துத் தள்ள மிகவும் நெருக்கமாகவே காவலாளியை நோக்கிச் சென்று கொண்டிருந்
தான.
"தம்பி இப்போதான் ஒப்பரேசன் தியேட்டரை விட்டு எடுத்துச் சென்றார்கள். இன்னும் அரை மணிக்குள் உனக்குச் செய்தி வரும்" -46

அந்தத் திடீர்க் குரலில்தான் எத்தனை கனிவு.? எத்தனை ஆறுதல்? சேற்றினுள் வைர மணிகள் புதைந்துள்ளன என்பதைச் சிவானந்த னால் இப்போதுதான் உணரமுடிந்தது.
"ஏதாவது ஆபத்துக்கள்.?” அவனது உயிர்நாடி விநாடிக்கு விநாடி அழுத்தப்படுவதை அவன் பேச்சே விளக்கிற்று. "நீயொன்றும் கலைப்பட வேண்டியதில்லை தம்பி! பெரிய டாக்டர் கைகள் எமனு டனும் போராட்டம் நிகழ்த்தும், வலுவிழந்தால்தான் விதிவச மாகி விடுவது தம்பி. இருதயத்தையே மாற்றிவைக்கும் இப்போதைய காலகட்டத்தில் இதுவெல்லாம் ஒரு பெரிய காரியமா?” லஞ்சத்தை எதிர்பார்க்கும் காவற் காரனுக்கு அந்த வேளையில் யாரும் கதைத் துக் கொண்டிருந்தாலே லஞ்சம் போலாகிவிடும் போன்றிருந்தது.
கண் இமைக்காமலே காலத்தைக் கனமாக ஒட்டிய சிவானந் தன் மனைவியின் உடல் நிலை பற்றிய செய்திக்காகக் காத் திருந்தான்
ஆண்டவன் இயற்கையாக வழங்கும் கொடையானாலும் உணர்வுகளுக்குப் பலியாகும் உணர்ச்சிமிக்க ஜடங்களால் சமூக விழுமியங்களைக் கட்டிக்காக்க முடிவதில்லை.
உணர்ச்சிகளின்மூலம் உடல் உளப்பாதிப்புக்களை விளங் கிக் கொள்ளாதவர்களால் குடும்ப நிறைவையும், மனோ வளர்ச்சி யையும் உயர்ச்சியையும் காணமுடிவதில்லை.
தவறுகளை உணர்ந்து கொண்டால் சமூகச் சீர்திருத்தங் களுக்கு வழிபிறக்கும்.
வெள்ளைத் துணியினால் முற்று முழுதாக மூடப்பட்ட நிலையில் தள்ளுவண்டியொன்று “சவக் காம்பரா” நோக்கி இழுத்துச் செல்லப்படுகின்றது.
சிவானந்தனின் நெஞ்சம் திடுக்குற்றது. "நீங்கள் சிவானந்
-47

Page 28
தன்தானே? " நர்ஸ் கேட்டாள்.
"ஏன் எதற்காக?” என்பதுபோல் திகைத்து நின்றான் சிவா.
“சொறி உங்கள் மனைவியைக் காப்பாற்ற முடியவில்லை.”
அவளை மருந்தினால் நீ கொன்றுவிட்டாய். என அவள் கூறாவிட்
டாலும் அவனது இதயம் கூறிக் கொள்கிறது.
குடும்ப உருக்குலைவிற்குக் காரணமாய் அமைந்த உணர்
வுகள் ஒடுங்கி. பனிக்கட்டிகளாய் உறைந்து காற்றின் கசிவினால் கண்ணிராய் உருண்டு திரண்டு அவன் சட்டையை நனைக்கின்றது.
(1969இல் தினகரனில் பிரசுரமானது)
-48
 

கொடுக்கல் வாங்கல் "ஹாலிங் பெல்” சத்தம் கேட்டு, சமையலறைக்குள் ஏதோ வேலையாக இருந்த சாந்தி, எல்லாவற்றையும் அப்படியே வைத்து விட்டு, வந்து “ஹால்" கதவைத் திறந்து யாரென எட்டிப் பார்த்தாள். வாசலில் மனோகரன் நின்றிருந்தார்.
“ஒ. நீங்களா..! வாங்க..!” என்றாள்.
மனோகரன் வாசலிலேயே நிற்கவும், "உள்ள வாங்க இருங்க” என்று சாந்தி மீண்டும் அழைத்தாள்.
"இல்ல. நான் இருக்க வரயில்ல. கணேசன் எங்க? இருக்கிறாரா?” சாந்தியின் கணவன் கணேசனை விசாரித்தான் மனோகரன்.
“காசு விஷயமாகத்தான் மில்லுக்குப் போயிருக்கிறார். இப்ப வந்திருவார்.” முன் தூணில் சாய்ந்து கொண்டு சாந்தி கூறினாள்.
"இப்ப எனக்கு ரெண்டில ஒரு முடிவு வேணும். எங்க போனாலும், மத்தியானச் சாப்பாட்டுக்கு வீட்டுக்கு வருவார்தானே? அதுதான் இந்த நேரத்தில வந்தனான்.” கொஞ்சம் கடுகடுப்பாகக் கூறினார்.
“எப்பிடியும் இண்டைக்கு எல்லாக் காசையும் தாறனெண்டு சொன்னவங்களாம்” என்று கைகளைப் பிசைந்தபடி சொன்னாள் சாந்தி.
“வெள்ளாமை வெட்டித் தாறனெண்டு சொல்லி வாங்கின காசி. வெள்ளாமை வெட்டியும் இப்ப ஒரு மாதமாகப் போகுது. இன்னும் நெல்லுக்குகுடுத்த காசி வாங்கல்ல எண்டு சொன்னா. இது நம்பக் கூடிய கதையா? மற்ற மனிசன் நெல்லுக் குடுக்கல் லியா? காசி வாங்கல்லியா? இவர் என்ன புதினமான ஆளுக்கு
49۔

Page 29
நெல்லுக் குடுத்திருக்கார்? இவர் காச வாங்கிச் செலவழிச்சிப் போட்டு. என்ன நல்லா ஏமாத்திறார் போல,” மனோகரனின் பேச்சில் நையாண்டியும் கோபமும் தொனித்தது.
"அப்பிடி ஒண்டுமில்ல, அவங்க எங்களுக்குத் தரவேண்டிய நெல்லுக்காசி இன்னும் தரயில்ல. இது உண்மை. ஆறு நாளில தாறன். எழு நாளில தாறன். அப்பிடிண்டு சொல்லுறத்தக்கேட்டு நம்பித்தான், உங்களிட்ட அவர் வந்து இன்ன நாளைக்குத் தாற னெண்டு சொல்லுறவர். வேற அவருக்கு உங்கள ஏமாத்திற எண் ம்ை இல்ல!” சாந்தி உண்மை நிலையை விளக்கினாள்.
"நேற்று நாலு மணிக்குத் தாறதாச் சொன்னார். தந்தாரா? இல்லையே. தவணை சொல்லுறதும் எத்தினை தரம்தான். நானெண்டால் நினைக்கயில்ல கணேசன் இந்த மாதிரி மோசமான ஆளாக இருப்பாரெண்டு. இஞ்ச பாரு. இதுக்கும் மேல. என்ன ஏமாத்த வேணாம். எனக்கு இப்ப காசி வேணும். எந்தக் கதையும் கதைக்கப் போடாது. இண்டைக்குப் பொழுது சாயிறதுக்கு முதல் காசி தர வேணும். இல்லாட்டிப் பொலிசுக்குப் போவன்!"
மனோகரன் கதைக்கக் கதைக்க என்ன பேசுவனென்று தெரியாமல், சிலை போல் வாய் அடைத்து நின்றவள் திடீரென, ஏதோ முடிவுக்கு வந்தவள் போல், "சரி, நீங்க போங்க. அவர் வந்ததும் எப்பிடியாவது இண்டைக்கு உங்கட காசைக் கொண்டுவந்து தாறம்" என்று சாந்தி கூறவும்,
"இஞ்ச பார். புருசனிட்ட சொல்லு. இதுதான் கடைசி நாள். என்னத்த வித்தெண்டாலும் சரி காசி வேணும். நாங்க ளெல்லாம் சொன்னாச் சொல்லுத்தான். ஒரு நாக்குத்தான். ஒரு சொல்லுத்தான். மாறமாட்டம். இது என்ன மனிசன், இப்பிடி ஏமாத் திறது, கடன் தர வழியில்லாட்டி, பொண்டாட்டிய வித்தெண்டாலும் தரவேணுமெனக்கு. இல்லாட்டா என்ன நடக்குமெண்டு தெரி யாது."
மளமளவென்று வார்த்தைகளைக் கொட்டிவிட்டு வேகமாகச் சென்று மறைந்தான்.
-50

கனவில் கூட, இப்படியானதொரு சம்பவத்தை நினைத்துப் பாராத சாந்தி, அப்படியே தூணின் அடியிலேயே இருந்து விட்டாள்.
நெருப்பு மழையொன்று பெய்து ஓய்ந்ததுபோல் உடம்பெல் லாம் எரிந்தது. மனோகரனால் உதிர்க்கப்பட்ட ஒவ்வொரு சொற் களும் ஒவ்வொரு பாறாங்கல்லாக அவள் காதுகளில் புகுந்து வந்து இதயத்தில் மோதி நொறுங்கின. தாங்க முடியாமல் அழுதாள்.
இறுதியாகச் சொல்லிய சொற்கள்தான் அவளையே அப்ப டியே கதிகலங்கச் செய்தது. “சே! என்ன மனிசன். பணத்துக்காக இப்படியா பேசுவது?” இப்படிக் கேவலமான பேச்சுக் கேட்க வேண்டி நேர்ந்ததை, அவளால் பொறுத்துக் கொள்ளவே முடியவில்லை.
ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொள்வதில்லையா? உயிரை விடுமளவுக்கு எவ்வளவு கேவலமான வார்த்தைகள். பேசாமல் எதையாவது குடித்துச் செத்து போய்விடலாமா?
இப்படிக்கூட நினைக்கத் தோன்றியது அவளுக்கு. இப்படி யெல்லாம் கேவலமான பேச்சு வாங்க வேண்டியதிற்குத் தன் கணவனும் ஒரு வகையில் காரணமெனக் கணேசனை நினைத்தும் ஆத்திரம் கொண்டாள்.
மனோகரன் சமூகத்தில் ஒரு மாதிரியாகப் பேசப்படுபவர். எனவே, இவரிடம் கடன் வாங்க வேண்டாம் என்று ஏற்கனவே சாந்தி தடுத்தாள். கணேசன்தான் கேட்கவில்லை.
“சே, அப்படியெல்லாம் ஒன்றுமில்லை” என்று சொல்லிவிட்டுப் பணத்தை வாங்கியிருந்தான். அதுவும் சும்மாயில்லை. எட்டுச்சத வட்டிக்கு. இப்போது வட்டியும் கொடுத்து பேச்சும் வாங்கி அவமானப் பட்டதையும் நினைக்க நினைக்க ஆத்திரமும் வேதனையும் மிகுதியாக ஆக.,
“என்னதான் இருந்தாலும் பெண்டாட்டிய வித்துக் குடு என்று கேவலமாய் பேசியிருக்கக் கூடாது. அதைத்தான் என்னால தாங்க -51

Page 30
முடியல்லயே?
இதை அவர் அறிந்தால் எப்படி ஆத்திரப்படுவார்?. எப்படி வேதனைப்படுவார்?. என நினைத்து இப்படிப் பேசியதை கணவரிடம் சொல்வதில்லை என நினைத்தாள்.
அனல் கக்கும் வார்த்தைகளைக் கொட்டிய அந்த வாய்க்குத் தக்க தண்டனை கிடைக்க வேண்டும் என்றபடி கணவன் வரவுக் காகக் காத்திருந்தாள். அந்தக் காத்திருப்பின் இடையே, மனோகர னுக்கு கொடுக்க வேண்டிய பணத்தை தானே கொண்டு சென்று கொடுத்து வர வேண்டும் என்றும் உறுதியாக இருந்தாள்.
*k k >k
சிாந்தியைக் கண்டதும், வாங்க என்று ஹாலுக்குள் அழைத்துச் சென்றாள் மனோகரனின் மனைவி ராணி.
நாற்பத்தி ஐந்து வயதான தன் பெருத்த உடலை, ஈசி செயாருக்குள் திணித்துக்கொண்டு கிடந்த மனோகரன் சாந்தியைக் கண்டதும் உடம்பை நிமிர்த்தி எழுந்து அமர்ந்தார்.
சாந்தி அவரைக் கண்டதும் ஆச்சரியப்பட்டாள். முகத்தில் கன்னத்தின் ஒரு பகுதியோடு, வாயின் ஒரு பகுதியையும் சேர்த்து *யிென்டேஜ்" போயப்பட்டிருந்தது.
“மத்தியானம் வெளியில போனவர். இந்தக் கோலத்தில தான் வந்து சேர்ந்தார், வீட்டுக்குக் கூட்டி வந்தவர்தான், நடந்ததைச் சொன்னார், மாடு ஓடிவந்து மோட்டார் சைக்கிளில் முட்டி விழுந்த தாம். அதை நேரடியாக பார்த்த ஒருவரே, இவரை ஆஸ்பத்திரிக்குக் கொண்டு போய் மருந்து போட்டுக் கொண்டு வந்து வீட்டில் விட் டுப் போனார். ரெண்டு பல்லும் விழுந்து போச்சு. சாப்பிடவுமேலாது, கதைக்கவுமேலாது, ஸ்ரோவாலதான் சோடா, தண்ணியெல்லாம் குடிச்சவர்” என்று, சாந்தியின் என்ன நடந்தது இவருக்கு? என்ற ஆச்சரியக் குேள்விக்குப் பதில் சொன்னாள் மனோகரனின் மனைவி
-52

ராணி, கவலை தோய்ந்த முகத்துடன்.
* அவர் எதுவும் கதைக்கத் தேவையில்ல. எல்லாத்தையும் தான் ஏற்கனவே கதைச்சி முடிச்சிற்றாரே? இனி என்ன இருக்கிறது கதைக்க..?
சாந்தியின் பேச்சைக் கேட்டு நிமிர்ந்து, அவள் முகத்தைப் பார்த்துக் கொண்டார். முயற்சித்தும் தன்னால் கதைக்க முடியாததை அதிக வேதனையின் மூலம் உணர்ந்து, கவலைப்பட்டார் மனோகரன்.
"டீ" எடுத்து வருவதாகக் கூறிய ராணியைத் தான் எதுவும் அருந்துவதில்லை. "வேண்டாம்” என்று மறுத்துவிட்டு, வீட்டிலிருந்து வரும்போதே தான் ஆயத்தமாகக் கொண்டு வந்திருந்த பணக்கற் றைகளைப் பரிசிலித்து எடுத்து மனோகரனிடம் கொடுத்த சாந்தி, “சரியாக இருக்கிறதா என்று எண்ணிப் பார்த்துக் கொள்ளுங்க" என்றாள்.
அவர் அதனை வாங்கி அப்படியே பக்கத்தில் நின்றிருந்த மனைவியிடம் கொடுத்து விட்டு, கதைக்க நினைத்தும் முடியாமல் தவிப்போடு சாந்தியின் முகத்தை நோக்க.
ஒரு கொஞ்சமும் யோசிக்காமல் எண்ட முகத்தில அடிச்ச மாதிரி, என்னமாய் கதைச்சிற்றிங்க? என்ர வாழ்க்கையிலேயே கேட்காத, யாருமே கேட்க விரும்பாத எதிர்பாராத வார்த்தைகள். சீச்சீ என்ன அசிங்கமான வார்த்தைகள்! படபடவெனச் சாந்தி கொட்டிய வார்த்தைகளைப் போலவே கண்களிலிருந்து மளமள வென கண்ணிர் வழிய, அவள் நெஞ்சும் அதிகமாக துடித்துக் கொண்டது.
என்ன நடக்கிறது. என்ன நடந்தது. ஏன் இவள் இப்படிக் கதைக்கிறாள் என்று எதுவும் புரியாமல், ஆச்சரியமுமாய் அறிய ஆவலுமாய் “என்ன நடந்தது" என்று தன் கணவரையும் சாந்தியை யும், மாறி மாறிப் பார்த்தாள் ராணி.
ஏதோ பேச வாயெடுக்க, கடை வாயில் இரத்தம் கசிந்து வேதனையை உண்டாக்க மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல் அப்படியும் இப்படியுமாக நெளிந்தார் மனோகரன்.
-53

Page 31
கைக்குட்டையால் கண்ணைத் துடைத்துக்கொண்ட சாந்தி, ராணியைப் பார்த்து.
“காசி குடுக்க வழியில்லாட்டி, உன்ர பொண்டாட்டிய வித் துப் போட்டுத் தரச் சொல்லு" என்று சொன்னார். நீங்களும் ஒரு பொம்பிளதானே? உங்களிட்ட இந்த மாதிரி யாராவது பேசினால், எப்பிடி இருக்கும் கொஞ்சம் யோசிச்சிப் பாருங்க. பணத்த எப்பிடி யும், எப்பவும், எங்கேயும் தேடலாம். ஆனால், மனிசனத் தேடேலாது. சிந்திய முத்துக்களைப் பொறுக்கலாம். ஆனால், சிந்திய வார்த்தை களை மீண்டும் பொறுக்கி எடுத்துக்கொள்ளவே முடியாது. நீங்க தந்த பணத்த, திரும்ப வாங்கிக் கொண்ட மாதிரி உங்கட வாயால கொட்டின வார்த்தைகளை, எனக்கிட்டருந்து திரும்ப வாங்கிக் கொள் ளவே முடியாது. போலீஸ், கோடு எங்க போனாலும் சரி. கதைச்சது தான். அது ஏன் எடுத்ததற்கெல்லாம் அண்ணாவ, தம்பிய, புருஷன, சித்தப்பாவ, பெரியப்பாவ வித்துத் தா என்று கேளுங்களன். ஏன் தான் இந்தக் கொடுக்கல் வாங்கல் விஷயத்தில பெண்களை விற் பனைப் பொருளாக்கி வேடிக்கை பாக்குதுகளோ தெரியல்ல! இனி மேலாவது யாரைப் பார்த்தும் இப்படிக் கதைக்காதீர்கள்! படபட வெனக் கதைத்துவிட்டு வெளியே வந்த சாந்தி காலில் செருப்பை போட்டுக்கொண்டு வீட்டை நோக்கி நடந்தாள்.
-லோகேஸ்வரி கிருஷ்ணமூர்த்திஅக்கரைப்பற்று

மணர்ணுக்குள் புதைந்த மாணிக்கம்
( உணமைச் சம்பவத்தைத் தழுவிய கட்டுரை.)
"நதிக்கரையினிலே”. கதையைத் தொடர்ந்து வந்த சில சிந்தனைத் துளிகளுடன் அண்மையில் எமது அயலில் நடந்த ஓர் உண்மைச் சம்பவத்தினைத் தொடர்ந்து என் எண்ணங்கள் விரிகின்றன. நமது சமூகத்தில் பெண்கள் படும் அவஸ்தைகள் பல. நான் சந்தித்த பெண்ணுக்கு வயது ஐம்பத்தொன்றுதான். வாழ்க்ைைகயை முழுவதும் அனுபவிக்காமலேயே பயங்கர முடிவைச் சந்தித்த ஒரு பெண் அவள். சில மாதங்களின் முன் மோட்டார் சைக்கிளில் போகும்போது என்னைப் பார்த்து “ஹாய் ரீச்சர்"11 என்று முகமன் கூறிவிட்டுப்போன போது பார்த்த முகம், அப்படியே இருந்தும் களை இழந்து காணப்பட்டது. நிம்மதியான நிரந்தர உறக்கத்தைத் தழுவி விட்டது. ஆம்! அவள் இறுதியில் இறந்து விட்டாள். துக்கம் என் இதயத்துள் கனத்தது.
படித்த குடும்பத்துப்பெண். பெண் சகோதரிகள் அவளுக்கு நால்வர். தனது கல்விக்கேற்றபடி ஒரு தொழிலைத் தேடிக் கொண்டாள். ஒரு கைத்தொழிற்சாலையில் இவள் மேற்பார்வை யாளராகப் பணி புரிந்தாள். தனது சம்பளத்தில் தனக்கு வேண்டிய நகைகள், வீட்டுப் பாவனைப் பொருட்களை வாங்கி வைத்துக் கொண்டாள். திருமணத்தின்போது தேவையெனக் கருதி ஓரளவு பணமும் சம்பாதித்துக் கொண்டாள். தான் இவ்வாறு தா ன் வாழ்க்கையை அமைத்துக்கொள்ளவேண்டுமென்று திட்டமிட்டு முற்போக்காகத் திகழ்ந்தாள். தனது சகோதரிகளையும் நல்ல நிலையில் வாழ வைக்க வேண்டுமென்று எண்ணி அவர்களையும் நல்வழிப்படுத்தி ஒரு உதாரண மங்கையாகத் திகழ்ந்தாள். சமையல் ஆகட்டும், தையல் ஆகட்டும், வீட்டு நிர்வாகமாகட்டும் எந்த வேலைகளிலும் சளைக்காமல் முன் நின்று பொறுப்பாகச் சிறப்பாகச் செய்து முடிக்கும் கெட்டிக்காரி, " வீட்டில் விருந்தா!
-55

Page 32
ரமணியைக் கேளுங்கள்”, என்று பெற்றோரும் உற்றாரும் கூறும் வகையில் அவளே வீட்டின் முதலாளி. ரமணி, நேர் கொண்ட பார்வையும், நிமிர்ந்த நடையும் என்ற இலக்கணங்களுக்கு உரிய வளாக இருந்தாள். வேலைக்குப் போவதற்கென ஒரு மோட்டார் சைக்கிளும் தனது சொந்தப் பணத்திலேயே வாங்கி வைத்திருந்தாள். இதனால் குடும்பத்தாருக்கு மேலும் அவள் உதவினாள் என்று சொல்லலாம். குடும்பத்திற்கென்றால் எது வேண்டுமென்றாலும் செய்வாள். அத்தகையதொரு திடகாத்திரமான பெண் ஆவாள். காலச் சக்கரம் சுழன்றது.
ரமணியுடன் தொழில் பார்த்த சக ஆடவன் ஒருவனுக்கும் ரமணிக்கும் காதல் துளிர்த்தது. அவனும் படித்த குடும்பத்தவன். பண்பாளன். இரக்க குணம் உள்ளவன். ஆனால் ரமணியின் சாதியைச் சேர்ந்தவனல்லன். இதனால் அவர்களது காதலுக்கு வீட்டில் எதிர்ப்பு எழுந்தது. இவர்களது திருமணத்திற்குத் தடையாக இருந்தவர் இவரது பெரியதாயார் ஆவார். பெற்றோர் சம்மதம் இருந்தும், மாமனார் சம்மதம் இருந்தும், பெரியம்மா தடை போட்டு விட்டா. ஏறக்குறையப் பதினைந்து வருடங்களுக்கு முன் எமது சமூக நிலையை இது காட்டுகின்றது. குடும்ப உறவுமுறை, மூத் தோரைக் கனம் பண்ணுதல், அவர்களின் சொல்லுக்கு மதிப் பளித்தல் போன்ற பண்புகளில் எமது சமூகம் திடமாக இருந்தது. இத்தகைய கொள்கைகளினால் காதல் வாழ்க்கை கை கூடவில்லை. இதனால் மனமுடைந்த ரமணி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுக் காப்பாற்றப்பட்டாள். இதன் பின்பு தனது சகோதரிகளின் திருமணங் கள் நடைபெற்றன. அந்த நிகழ்வுகளில் கலந்து தனது கவலைகள் எல்லாவற்றையும் மனத்துள் புதைத்து விட்டு மீண்டும் புதியதொரு பெண்ணாக வாழத் தொடங்கினாள். அவளுக்குத் திருமணங்கள் பல பேசி வந்தும் ஒன்றும் சரிவராமலே போய்க் கொண்டிருந்தது. வயதும் ஏறிக்கொண்டே போயிற்று. பின்பு ஏதோ ஒரு வகையில் திருமணம் நிட்சயமாகித் தன் திருமண வாழ்வில் காலடி எடுத்து வைத்தாள் ரமணி. பெற்றோர், பெரியதாயார் நிம்மதியடைந்தனர் -56

எனலாம். ஆனால், அதன் பின் புதான் அவள் வாழ்வில் பெரும்புயல் வீசத் தொடங்கியது. பாவம் ரமணி கணவனோ குடிகாரன். இரண்டு பிள்ளைகளுக்குத் தாயாகியும் விட்டாள். குடும்பத்தில் பிரச்சனைகள் தலைதூக்கத் தொடங் கியது. தனது காதலை, மனத்துள் புதைத்து விட்டதுபோல நிஜ வாழ்க்கைப் பிரச்சனைகளையும் தனக்குள்ளே போட்டு புதைத்துப் புதைத்துப் புரையோடிய புண்ணாக வெளிவரத் தொடங்கியபோது தான் பெற்றோர், உறவினர் விழித்துக் கொண்டனர். அவளின் கணவனின் கொடுமையோ சொல்லிமாளாது. ஒரு முறைக்கு இருமுறை தனது நகையெல்லாம் அடகுவைத்துத் தனது சீதன வீட்டை ஈடுவைத்துப் பணம் புரட்டித் தன் கணவனை வெளிநாடு அனுப்பிவைத்தாள்.ஆனால் அவனோ வீட்டில் கிடைத்த சுதந்திரம் அங்கு கிடைக்காமல் போகவும், கஷடப்பட்டு உழைக்க விருப்பமில்லாமலும் மீண்டும், மீண்டும் வந்து வீட்டிலேயே நிரந்தர மாகத் தங்கி விட்டான். ரமணியின் இரண்டு பிள்ளைகளுக்கும், குடிகாரக் கணவனுக்கும் சேர்த்து அவளது ஊதியம் போதவில்லை. வெளி நாட்டுக்கு அனுப்பிய கடன் தொல்லைவேறு. இவற்றால் மன முடைந்த ரமணி மீண்டும், மீண்டும் தனது துயரத்தைத் தனக்குள்ளேயே புதைத்தாள். கணவனின் குடித்தொல்லை தாளாமல் தனது சீதன வீட்டைவிற்றுக் கடனை அடைத்து நிம்மதியாக இருப் பதற்காகத் தனது கையொப்பத்தை வைத்துக் கொடுத்தாள். இருந்த வீடும் பறிபோனது. வேலைபார்த்த இடத்தில் இவளுக்குப் பதவி உயர்வு கிடைக்கப்போதிய தராதரம் இல்லாததால் வேலையும் பறிபோய்விட்டது. கணவன் வெளியூரில் வேலை பார்த்திருந்தால் இவளும், நிம்மதியாகத் தனது தொழில் மேற்படிப்பு என படித்துப் பதவி உயர்வுபெற்று நல்லதொருபதவியில் இருந்திருப்பாள். வீட்டுப் பளுவினால் தொழிலில் ஆர்வம் காட்டமுடியவில்லை.
வீடும் பறிபோன நிலையில் மிஞ்சிய ஒருபகுதி பணத்தில்
ஒரு சிறிய காணித் துண்டு வாங்கி அதில் ஒரு குடிசையொன்று
போட்டுக்கொண்டு வாழ்ந்தாள். கைச்செலவிற்காக மோட்டார் சைக்கி
ளையும் வித்தாயிற்று. வீட்டிலேயே முடங்கிக் கிடந்தாள். வெளியில்
வெளிக்கிட்டால் தனது சக ஊழியர்களைக் காணும்போது கூனிக்
-57

Page 33
குறுகிப் போவாள். தனது நிலையை எண்ணி எண்ணி உள்ளுர வேதனைப்படுவதனைத் தவிர அவளது சமூகத்தில் அவளுக்கு உதவுவார் யாரும் இல்லை. பெண் அடக்கு முறை, அடிமைப்பட்ட வாழ்க்கை, ஆண் ஆதிக்கம் ஒழியவேண்டும் என்று போராடும் இக்காலத்திலும், பெண்கள் விழிப்புக்குழுவினர் யாரையும் நாடவு மில்லை, அவளுக்கு உதவ யாரும் முன் வரமுயலவும் இல்லை. அவளது நிலை விபரம் பிறருக்குக் கிடைத்தபோது அது காலம் கடந்த ஒன்றாகப் போய் விட்டது. ஆம்! அவள் நோய்வாய்ப்பட்டுப் படுத்த படுக்கையாகிவிட்டாள் படுக்கைப் புண்ணுக்கும் இரையாகி விட்டாள். அவளை நான் சந்தித்தபோது இறைவனை நோக்கி, “இறைவா! இச் சமூகத்தில் மேலும் மேலும் பிறரின் வசை மொழி களுக்கும், கணவனின் உதாசீனத்திற்கும் ஆளாகாமல் இவளை நீ கூடிய சீக்கிரம் ஏற்றுக்கொள்ளப்பா” என்றே வேண்டினேன். ஆம்! இத்தகைய ரமணிகள், எமது சமூகத்தில் இன்னும் வாழ்ந்து கொண்டுதானிருக்கிறார்கள். பிறரிடம் தம் நிலைகளைச் சொல்லத் தயக்கம், பயம், மானக்கேடு என்ற எண்ணங்களினால் தானே எல்லாவற்றையும் மனத்துள் புதைத்துப் புதைத்துப் புரையோடிப் போன புண்ணாகி இறுதியில் மண்ணோடு மண்ணாகி விட்டாள் ரமணி “பெண்ணே" உனது சமூகத்தில் நீ தலை நிமிர்ந்து ஓர் புரட்சிப்பெண்ணாக வாழ்ந்தும் உனது நிலை இப்படியாகிவிட்டதே!
நறுமணமலர்களும், தென்றல் காற்றும் நிலவும் உல்லாசப் பூங்காவாக உன் வாழ்க்கையை நீ நினைத்திருப்பாய். ஆனால் அது கூரிய கற்களும் அனல் காற்றும் நிறைந்த ஒன்றாக இருந்த தனால் அவற்றின் கொடுமையைத் தாங்க முடியாமல் வெந்து கருகிவிட்டாயம்மா!
உமக்குச் சரியான பாதையைக் காட்ட நானும் தவறிவிட் டேன். நீ என்னை மன்னிப்பாயா? உன்னை இந்த நிலைக்கு ஆளாக்
கிய சமூகமே இன்னும் விழித்துக் கொள்ளவில்லையே? ஏன்?
-ஜயந்திதிஸாநாயக்கா
-58

பர்தா மீதான பிரான்ஸ் அரசின் தடையும் ஒரு பெண்ணிய நோக்கும்
பிரான்சில் எதிர்வரும் ஜூலை மாதம் முஸ்லிம் பெண்கள் பாடசாலைகளிலும் பல்கலைக்கழகங்களிலும் பர்தா அணியக் கூடாது என்ற சட்டம் கொண்டு வரப்படவுள்ளதாகவும், இச் சட்டம் சம்பந்த மான பலதரப்பட்ட விவாதங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. இவ்வேளையில் இச்சட்டத்தை எதிர்த்து ஈராக், ஈரான், கனடா, அமெரிக்கா. இந்தோனேசியா போன்ற நாடுகளிலும், பிரான்சிலும் முஸ்லிம் பெண்கள் தங்களது எதிர்ப்பை காட்டி வருவதுமட்டுமின்றி சீக்கிய, யூத, கிறிஸ்தவ இன மதத்தவர்களும் கூட தங்களது எதிர்ப்பை காட்டி வருகின்றனர். பிரான்ஸ் பாராளுமன்றத்தில் பெரும் பான்மை யான வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுமுள்ளது. இச் சட்டத்தின் வரைவுகளை ஆராய்வதற்காக 140 பிரெஞ்சு பாராளுமன்ற உறுப் பினர்கள் கலந்து ஆராய விருப்பதாகவும் கூறப்படுகிறது.
பிரான்சில் 5 மில்லியன் முஸ்லிம் இனத்தைச் சேர்ந்தவர்கள் வசித்து வருவதாகவும் இங்கு அல்ஜீரிய நாட்டைச் சேர்ந்தவர்களும் துருக்கிய நாட்டைச் சேர்ந்தவர்களும் கூடுதலாக வாழ்வதாகவும் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. பல ஆண்டு காலமாக கட்டப்பட்ட பள்ளிவாசல் ஒன்றும் இருப்பதாக கூறப் படுகிறது. உலகில் அதிக சுதந்திரத்தையும் ஜனநாயகத்தையும் வழங்கியுள்ள நாடுகளில் பிரான்சும் ஒன்று என தெரிவிக்கப்பட்டாலும் இவ்வகை ஜனநாயக மறுப்பு தனிய முஸ்லீம் இனத்தவரை மட்டும் பாதிக்கக் கூடிய தல்ல எனவும் இச் சட்டம் சீக்கிய இனத்தவரை யும், யூத இனத்த வரையும், யூத கிறிஸ்தவ மதத்தவரையும் கூட பாதிக்கக் கூடியது என கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. முஸ்லீம்கள் பர்தாவை அணிவதைப்போல் கிறிஸ்தவர்கள் சிலுவைச் சின்னத் தையும், யூத இனத்தவர்கள் தொப்பி தாடியையும், அதேபோல் சீக்கிய இனத்தவர்கள் அவர்களது தலைப்பாகை யையும் அணிவதற்கு இச்சட்டம் பாதிப்பை ஏற்படுத்தலாம் என அஞ்சப்படு வதுடன் அவ் இனத்தை சேர்ந்த மக்கள் தமது கடும் விசனத்தை ஆர்ப்பாட்டங்கள் மூலம் தெரிவித்தும் வருகின்றனர்.
-59

Page 34
பெண்களின் உரிமைபற்றி ஆர்வம்கொண்டிருக்கும் பெரும் பாலான பெண்ணிய அமைப்புக்கள் பெண்ணியலாளர்கள் பெண்கள் பர்தா அணிவதில் உடன்பாடு கொள்ளவில்லை என்ற போதும், ஜனநாயக உரிமை என்ற அடிப்படையில் இதை சட்டத்தை பிரயோகித்து நிறுத்துவதை எதிர்க்கின்றன. முஸ்லிம் பெண்கள் தாங்களாகவே உணர்ந்து செயற்பட்டு அதனை அகற்றுவார்களேயா னால் வரவேற்கத்தக்கது தான் என்கின்றனர். பெண்கள் தம்மை வெளியாட்களுக்கு காட்டிக்கொள்ளக்கூடாது இது இறைவாக்கு என்று முஸ்லிம் மத அடிப்படையில் விளக்கம் கொடுக்கப்படுகிறது. இப்படித்தான் இதை எடுத்துக்கொண்டாலுமே அந்த வாக்கை ஏற்பது செயற்படுவது என்பது பெண்களின் சுயமான தீர்மானத்தில் நிகழா தபடி ஆணாதிக்கம் அதிகாரத்துவமாகச் செயற்படுகிறது என்பது தான் நிதர்சனமாக இருக்கிறது. இதற்கு முஸ்லிம் நாடுகள் சிலவற் றின் அரசியல் சட்டங்கள்கூட சாட்சியாக இருக்கின்றன. இந்த இறை வாக்கை எப்படி ஆணாதிக்கம் பெண்களின் மேல் திணிக்க முடியாதோ அதே மாதிரித் தான் பெண்கள் நாம் இறைவனின் ஆணைப்படி உடம்பு மூடித்தான் வெளியில் போவோம் என்று கூறுவதையும் மறுக்கமுடியாது. மற்றவர்கள் அவர்கள் மேல் சட்டங்களையும் அதி காரங்களையும் திணிப்பது ஒருவகையில் மனித உரிமையை மீறுவதுமாகும்.
முன்னொரு காலத்தில் அராபியப் பெண்கள் இன்றுள்ளதைக் காட்டிலும் அதிகம் சுதந்திரத்துடன் வாழ்ந்து வந்ததாகவும் கூறப்படு கிறது தாய்வழிச் சமூகமானது தந்தைவழிச் சமூகமாக மாறியதன் விளைவாக பரம்பரைச்சட்டங்கள் இயற்றப்பட்டு பெண்பிள்ளைகளை விட ஆண்பிள்ளைகளுக்கே அதிக ஆதரவு காட்டி வந்தன என்றும் அதனால் இஸ்லாம் உறுதியான மத அடிப்படையின் கீழ் ஆணாதிக் கத்தை நிறுவியது என்றும் கூறப்படுகிறது. இஸ்லாம் குறித்து பெண்கள் கொண்டிருந்த அணுகுமுறைகளில் முரண்பாடுகள் ஏற்பட் டிருந்தன என்றும் அரபுச் சமூகத்தில் பெண்கள் குறித்து சில சாதகமான பார்வைகளும் இருந்ததாகவும் இதற்கு உதாரணமாக சதிகா திருமணமும் அது போலவே பெண் சிசுக்கொலைகளும் தடுக்கப்பட்டுள்ளன என்றும் கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன.
-60

ஆனாலும் முஸ்லிம் ஆணாதிக்க சமூகத்தின் பெண்கள் மீதான அடக்குமுறையின் ஒரு வடிவமே இந்த பர்தா அணியும் முறையென முஸ்லிம் பெண்ணியவாதிகளாலும் மற்றும் - பெண்கள் அமைப்புகளினாலும் கூறப்பட்டு வருவதுடன் அதற்கு எதிராகவும் குரல் எழுப்பியும் வருகின்றனர். அத்துடன் மதம், என்ற போர்வையில் ஏற்படுத்தியுள்ள ஆணாதிக்க அடையாளங்களை பெண்கள் களைய முன் வரவேண்டும் என்றும் பர்தா போன்ற பெண் அடிமைச்சின்னங் களை முஸ்லிம் பெண்கள் தமது போராட்டங்களினுடாகவே ஒழிக்க லாம் என்ற கருத்துகளும் முன்வைக்கப்படுகின்றன. எல்லா மதங்களி லும் பெண்களை அடக்குபவனாகவே உள்ளன. அந்த வகையில் முஸ்லிம் மதமோ பெண்கள் தங்களுடைய அழகை உடம்பை வெளியில் காட்டக்கூடாது என்றும் அப்படி பர்தா அணியாத பெண்கள் ஒழுக் கம் கெட்டவர்கள் என்றும் கண்ணியமான முஸ்லிம் பெண்கள் தங்கள் அலங்காரத்தையும் அழகையும் உடம்பையும் வெளிப்படுத்தமாட் டார்கள் என்ற முஸ்லிம் ஆணாதிக்க கருத்தியலை முஸ்லிம் மதம் உருவாக்கி வைத்திருப்பதாக குற்றம் சாட்டப்படுகிறது. முஸ்லிம் மதமும் மற்றைய மதங்களைப் போல் பெண்களை பிள்ளைகளைப் பெறும் ஒரு இயந்திரமாகவே பார்க்கின்றது என்றும் பெண் பாலியல் நுகர்வுக்கானவள் என்ற கருத்தியல் உட்பட பல பெண்களை திரு மணம் செய்யும் முறையும் அது மதம் என்ற வடிவில் திணிக்கப்படு வதாகவும் கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன. ஆணாதிக்கம் பற்றி கேள்விகள் எழுப்பும் பெண்கள் மதம் என்ற பெயரால் தண் டிக்கப்படுவதாகவும் குற்றச் சாட்டுக்கள் கூறப்படுகின்றன. ஒரு முஸ்லிம் பெண் பாலியல் ரீதியாக தவறு செய்துவிட்டால் அவளை கல்லால் அடித்துக் கொல்வது, பல ஆயிரம் ஆண்கள் பார்த்திருக்க கசையடிகள் வழங்குவது என தொடங்கி மரணதண்டனையும் வழங் கப்பட்டு வருகின்றது.
பர்தா அணிவது ஒரு பெண்ணின் இயல்பான வாழ்க்கையை கூட நசுக்கி ஒடுக்கி விடுகின்றது என்றும் இதற்கு ஆப்கானிஸ்தான் பெண்கள் சிறந்த உதாரணம் என்றும் கூறப்படுகின்றது. முஸ்லிம் மதத்திலும் பெண்கள் மட்டுமே பர்தா அணியவேண்டும் என்று கூறப்பட்டுள்ளதா? இன்றைய "தலாக்” முஸ்லிம் பெண்களைக் கொடுமைப்படுத்துகிறதா? அல்லது மதம் என்ற பெயரில் அவர்களின் -61

Page 35
மேல் திணிக்கப்படுகின்றதா? என்ற கேள்விகள் எழுகின்றன ஆப்காஸ்தானின் உள்ள இஸ்லாமிய மதவாதிகளால் பெண்கள் பர்தாவினால் முகத்தை மூடியபடி வீட்டுக்குள்ளே நசுக்கப்படுவதா கவும் கொடுமைப்படுத்தப்படுவதாகவும் கூறப்படுகிறது. அத்துடன் தலிபான் அரசாலும் இன்றுள்ள அரசாலும்கூட மனித உரிமை மீறல்களும், பெண்களுக்கு எதிரான சட்டங்களும் கொடுமைகளும் தொடர்வதாகவும் கூறப்படுகிறது. இது ஒரு பொருட்டாகவே முஸ் லிம் பெண்களாலும் ஏனைய பெண்கள் அமைப்புக்களாலும் கண்டு கொள்ளப்படாமலே இருந்து வந்துள்ளதாகவும் அப் பெண்களின் உரிமைகளுக்காக ஆர்ப்பாட்டங்களோ ஊர்வலங்களோ நடத்தப்பட வில்லை என்றும் குற்றம் சாட்டப்படுகிறது. இன்றும் ஆப்கானிஸ் தானில் பெண்கள் தொலைக்காட்சிகளில், மேடைகளில் பாடக் கூடாது. கண்முதல் அனைத்து அங்கங்களும் மூடியே பெண்கள் வெளியே செல்லவேண்டும் என்ற நிலை தொடர்கிறது “இத்தா” என்ற பெயரில் பெண்கள் சிறையில் அடைக்கப்படுகிறார்கள். தனியே பெண்கள் பயணம் செய்யக் கூடாது. வேலைக்குப் போகக் கூடாது. கார் சைக்கிள் உட்பட எந்த வாகனமும் ஒட்டக்கூடாது. வீதியால் போகும் யாரும் அவர்களைப் பார்க்காதிருக்க வீட்டு யன்னல்களில் திரைச்சீலை தொங்கவிடப்படவேண்டும். நடக்கும் போது கூட பெண்கள் தங்கள் செருப்புச் சத்தம் கூட கேட்காத அளவுக்கு மெதுவாய் நடக்க வேண்டும். முக்காடு அணியாத பெண் களினால் ஆண்களின் இறை தியானம் குழம்பிவிடும் என்பதினால் வீட்டுக்குள்ளும் பெண்கள் அனுமதிக்கப்படுவதில்லை. அதற்கான காரணமாக பெண்களின் மாதவிடாய் உடற்கூற்றியல் நிகழ்வையே காரணம் காட்டுகிறார்கள். இதனால் பல பெண்களுக்கு கல்வியறிவோ அல்லது சரியான இஸ்லாமிய அறிவோ இல்லை என்றும் இதனால் இஸ்லாம் மதத்தில் கூறியுள்ள உரிமைகளை பெற்றுக்கொள்ளத் தெரியாமல் பல முஸ்லிம் பெண்கள் அவதிப்படுகின்றார்கள் எனவும் கூட கூறப்படுகின்றது.
அனைத்து மதங்களிலும் பெண்களுக்கெதிரான பல
கட்டுப்பாடுகள் உள்ளன. இதே போல் தான் இஸ்லாம் மதத்திலும்
4 வயது நிரம்பிய பெண் குழந்தைகள் கூட பர்தா அணிகிறார்கள் -62

என்றும் அவர்களுக்கு பர்தா அணிவது ஏன் என்ற விளக்கம் தெரியாது என்றும் விமர்சிக்கப்படுகிறது.
எச்சரிக்கை உடலையும் மனத்தையும் மறைத்து அங்கி அணிந்திருக்கும் சதைக் கூட்டமாகிய நாங்கள் பயனற்றவர்கள்
நிறமற்ற, சுவையற்ற
மணமற்ற ஒரு வாழ்வை இழுத்து வரும் வெளவால்கள் நாங்கள் மெகரை முகத்தில் வீசியெறிந்து மனைவிகளை மாற்றிக் கொள்ளக் கூடியவர்கள்தான் எங்கள் தற்காலிகக் கணவர்கள் என்பதை தெரிந்தும் கூட எங்கள் துப்பட்டாக்களை அலங்கரித்துக் கொள்கிறோம் புன்னகைகளால் போலி மணவாழ்க்கையும் மூன்று முறை தலாக் கூறினால் முறிந்துவிடும் என்று தெரிந்தும் கூட மணமகளாவதில் மகிழ்ச்சியடைகிறோம்
ஆண்மையின் பீடத்தில் பலியாவதற்காக கருப்பு மணிகளாக மரபு மலைப்பாம்பை சுற்றியிருக்கிறோம்.
-63

Page 36
அடர்ந்த தாடி, வெள்ளைக் குல்லாய்
பிஜாமா, குர்தா கஷார், நமாஷ அய்யா!
நீங்கள் எல்லாம் அருள்மிக்கவர்கள் புனிதமான மரபுகளைக் காக்கும் கற்கதவுகள் நீங்கள் உங்கள் சந்தோசத்திற்காக பன்னிரெண்டு குழந்தைகளைப் பெற செத்துப் பிழைக்கிறோம் இல்லாவிட்டால் நாங்கள் நகரத்திற்குத்தான் போவோம்! ஏதோ இப்போது நாங்கள் அனுபவிப்பது சொர்க்கம் என்பது போல
பழத்தை பிழிவது போல எங்களைப் பிழிந்து சக்கையாக்கிய பர்தாக்களுக்குள் எங்களை நடைப்பிணங்களாக்கிய குரலற்ற உடல்களாகவும் குழந்தைபெறும் இயந்திரங்களாகவும் எங்களை ஆக்கிய உங்கள் மரபுகளுக்கு முதல் வணக்கம்
கூண்டில் என்னை அடைக்கும் அந்தப் பர்தாவை இப்போதே கிழித்தெறியப் போகிறேன் காபிர் என்று என்னை முத்திரை குத்தினாலும் எனக்கு இனிப் பயமில்லை
உங்கள் காலைப் பிடித்த இந்தக் கைகள் உங்களைக் கட்டியணைத்த இந்தக் கைகள்
-64

இப்போது
முஷ்டிகளாக இறுகிக் கொண்டிருக்கின்றன. மனதார விரும்பாவிட்டாலும் உங்களோடு தொடர்ந்து வாழ்ந்ததற்காக நாங்களும் சிந்திக்கிறோம். கவிதை - ஷாஜகானா - தொகுப்பு: புதிய கையெழுத்து-1
தற்கால தெலுங்குக் கவிதைகள் தமிழில் வெ. கோவிந்தசாமி
இவரைப் போலவே பாத்திமா மெரின்னிசா என்ற பெண் தனது சிறு அனுபவத்தை இப்படிக் கூறுகின்றார். " நான் குழந்தை யாக இருந்தபோது புத்தகங்களை படிப்பதிலும் கேள்விகள் கேட்ப திலும் அதிகநேரம் செலவிட்டேன். எனது தாத்தா என்னைக் கூர்ந்து கவனித்து வந்தார். அத்துடன் அவர் ஒரு பெயர் பெற்ற இஸ்லாமிய மதத்தலைவருமாவார். எனக்கு நல்ல ஆதரவும் தந்து பாராட்டியும் வந்தவர் என்னையும் எனது சகோதரிகளையும் அழைத்து நீங்கள் எல்லோரும் ஆண்களைப்போலவே திறமையுடையவர்கள்தான் ஆனாலும் நீங்கள் அனைவரும் உங்கள் முடியையும், உடலையும் வெளியில் தெரியாமல் மறைத்துக் கொள்ளவேண்டும் என்று கூறி னார் நான் திகைத்துப் போனேன். அதேபோல் நான் பெய்ரூட்டிலும் அமெரிக்காவிலும் உள்ள பல்கலைக்கழகத்தில் படித்து பட்டம் பெற்றாலும் நான் வளர்ந்த பின்னணி, எனது மதம் பெண்கள் மேல் காட்டும் அடிமைத்தனம், அடக்குமுறை என்பன எனக்கு புரியாத புதிராகவே இருந்து வந்தது. குழப்பமும் அடைந்தேன் அதனால் என்னுள் ஒரு பெண்ணிய விழிப்புணர்வை வளர்த்துக் கொண்டேன் என்கிறார். (நன்றி மார்க்சியம்: பெண்ணியம் உறவும் முரணும்)
இதேபோல் மரணப்பிடியில் உரிமைக்குரல் கொடுத்த தஸ்லிமா நஸ்ரீன் தனது நாட்டுப் பெண்களுக்காக உரிமைகோரி யும் மதவாதிகளை எதிர்த்ததற்காகவும் பங்காளதேஷ் முஸ்லிம் மதவாத அரசால் மரண தண்டனை விதிக்கப்பட்டவர். அத்துடன் அவர் லஜ்ஜா(வெட்கம்) என்ற நூலையும் எழுதியுள்ளார். அதில் இஸ்லாமிய தேசமாக பிரகடனப்படுத்தப்பட்ட பங்களாதேஷில் பெண்களின் நிலை மிகவும் பின்தங்கியதாகவே உள்ளதாகவும்
-65

Page 37
மதங்களின் பெயரால் பெண்களை அடக்கி, அவளை எந்தவித மதிப்பும் அற்றவளாக்கி முக்காடு அணிதல், (பர்தா) கல்வி, தொழில், அரசியல் ரீதியான பாகுபாடு என ஒடுக்குமுறைகள் தொடர்கின்றன என்றும் கூறுகிறார். பெண்களுக்கு உடலும் மனமும் உண்டு. பெண்கள் தமது உரிமைகளை அறியாத பட்சத்தில் அவற்றை அவர்களால் பிரயோகிக்க முடியாது என்பதே தஸ்லிமாவின் அபிப்பிராயமாகவும் இருந்ததாக கூறப்படுகிறது. தனது நாட்டுப் பெண்களுக்காக குரல்கொடுத்தபோது தஸ்லிமா அந்நாட்டு மக்களாலும் குறிப்பாக பெண்களாலும் ஏனைய நாட்டு முஸ்லிம் மக்களாலும் அவள் தனித்தவளாய் விடப்பட்டாள் என்பது எந்தள வுக்கு பெண்கள் மீதான ஒடுக்குமுறையை பெண்களே கூட உணர்ந் துகொள்ள முடியாதபடி வைக்கப்பட்டார்கள் என்பதைக் காட்டுகிறது.
வியாபார விளம்பரங்களுக்கு பெண் உடலைப் பயன்படுத் தும் ஆணாதிக்க வித்தையைச் செய்யும் மேற்குலகம் பர்தா அணிவதை பெண் உரிமை மறுப்பாக சித்தரிக்கும் விடயத்திற்குப் பின்னால் முஸ்லிம் இனத்தவருக்கு எதிரான பிரச்சாரமே இருக்கிறது என கூறலாம். இதற்கும் பெண்கள் பலியாக்கப்படுகிறார்கள் என்பதே நிதர்சனம்
றஞ்சி (சுவிஸ்)
-66

ஆணர்மையின் இலக்கணம்
அவன், கற்றுக்கொண்ட வித்தைகள் இன்று நேற்று வந்ததல்ல. தொன்று தொட்டே. தொட்டிலில் இருக்கும் போதே. தொடங்கியாச்சு!
பாட்டன் முப்பாட்டன் காலத்திலிருந்தே, முறையாகக் கற்றவை தானி!
அதனை,
தன் தந்தையிடமிருந்து. மீண்டும். மீண்டும் தரப்படுத்திக் கொண்டான்! இல்லறத்திற்கு இவை இன்றியமையாதது, என தன்னை,
தயார் படுத்தவும் செய்தானி!
தனி மகனுக்கும், ஆண்மையின் இலக்கணத்தை, அறிவிப்பதாய். தினம் தினம் தாரத்துடன் சண்டையிட்டான்!
அவளை,
எட்டிப் பிடித்து, கன்னம் வீங்க கைவிரல் பதித்து. முஸ்டியால் குத்தி,
முட்டி வீழ்த்தி.
கூந்தல் பற்றி.
சுவத்தில் சாத்தி. ஓங்கி அறைந்து ஒரு உதையும் போட்டான்!
-67

Page 38
ஒவ்வொரு“ஸ்டொப்” பாய் ஒயிலாக” ப் பழக்கினான் மகனுக்கும்!
வாழையடி வாழையாயப். வம்சப் பரம்பரையாய். அதே, வழித் தோன்றலில் வந்தவன், ஆணவத்தை ஆளுமையில் கொண்டவன்! ஆர்ப்பரித்தான்.
“ஆணென்று” !
மகனுக்கும், பேதையொன்றைப் பேசி. மணமுடித்து, நாளும் உடைபடும், மருமகள் கணினம் பார்த்து, மகனின் வீரத்தையும், மெச்சிக் கொண்டானர்!
ஒ.இறைவா! அப்படியே.
“பெண்” சாதி. அடங்கிப் போனது! இப்படியே. “இவனி’ சாதி. அலட்டிக் கொண்டது! இதுதான், . ஆண்மையென்று!
பாலையூற்று முகைசிரா முகைஉன்.
-68

ஆசிரியர், சூரியாபெண்கள் அபிவிருத்தி நிலையம் மட்டக்களப்பு.
அன்புடையீர்,
தங்களுடைய நிறுவனத்தில் இருந்து வெளியாகும் பெண் சஞ்சிகை தொகுதி 9:1, 09-06-2004 ஆம் திகதி அன்று எமக்கு கிடைக்கப்பெற்றது என்பதை தெரிவித்துக்கொள்கின்றோம். நாங்கள் சிறுவர்களை மைய மாகக்கொண்டு இயங்குவதால், அவர்களுக்கு பிரயோசனம் தரக்கூடிய சிறுவர் சஞ்சிகைகளையே எதிர்பார்க்கின் றோம். எங்களுக்கு சிறுவர் சஞ்சிகைகள் சில இலவசமாக கிடைக் கப்பெற்றும் இருக்கிறது.
எனவே இச் சஞ்சிகை பிள்ளைகளுக்கு பிரயோசனம் அற்றதாக இருப்பதால், இது தொடர்பாக நீங்களே தீர்மானித்து முடிவு செய்யுங்கள்.
நன்றி காற்றாடி ஆசிரியர்
ஓடி ஆடி விளையாடி ஊர் மெச்ச வளரவேண்டிய சிறுவர்கள் சிறகுகள் பிடுங்கப்பட்ட சிட்டுக்குருவிகளாய் உதிர்ந்துபோகும் அவலம் .
தொடர்ச்சியாய் இடம் பெற்றுவரும் சிறுவர்களுக்கெதிரான வன்முறைகள், துஸ்பிரயோகங்கள்.
இவ்வாறு பாதிக்கப்படும் குழந்தைகளையும் கவனத்திற் கொண்டு செயற்படும் நாம் சிறுவர்களுக்கெதிரான வன்முறைகள், துஷ் பிரயோகங்கள் பற்றி பெற்றோர், பாதுகாவலர், அறியாமல் இருப்பதும் தொடர்ச்சியாக இவ் வன்முறைகள் நடப்பதற்கு முக்கிய காரணமாய் இருப்பதை அறிகிறோம்.
சிறுவர்கள் தம் பாதுகாப்பை தமக்கெதிரான பயங்கரத்தை
-69

Page 39
உணர்ந்து கொள்வதில்லை. ஏனெனில் அவர்கள் சிறுவர்கள். அவர்களின் உலகம் ஆனந்தமானது சமாதானமானது.
ஆகவே சிறுவர்கள் சம்பந்தப்பட்ட விடயங்களை, விழிப் புனர்வை பெரியவர்களாகிய பெற்றோர், பாதுகாவலர், வழிகாட்டிகள் பெற்றிருத்தலே சிறுவர்களின் பாதுகாப்பிற்கு உத்தரவாதமளிப்ப துடன் சிறுவர்களை சிறுவர்களாக வாழச் செய்யும். அதற்காகவே எமது வெளியீடுகளில் சிறுவர் சம்பந்தமான தகவல்களை ஆக்கங் களை வெளியிட்டு வருகிறோம். உதாரணம்:- பெண் 7:1 பக்கம் 53, பெண் 82 பக்கம் - 42, பெண்
9:1 பக்கம் - 58
ஆசிரியை
11-06-2004 ஆசிரியர்-பெண் அன்புடையீர்!வணக்கம்.
தாங்கள் அனுப்பிவரும் “பெண்" சஞ்சிகையை ஆர்வமுடன் வாசித்து வருகிறேன்.
பெண்களின் பேசப்படாத பக்கங்களை, பேசினாலும் பெரிது படுத்தப்படாத விடயங்களைப் பெண் சஞ்சிகை மூலம் சமூகத்தின் பார்வைக்குத் தெளிவாக முன்வைப்பது சிந்தனையைத் துாண்டு வதாக உள்ளது.
சஞ்சிகையில் இடம்பெறும் பெரும்பாலான விடயங்கள் கட்டுரைகள், மொழி பெயர்ப்புகள் விமர்சனங்கள் காத்திரமாக உள்ளன. பாராட்டுக்கள். யாருக்கு யார் காவல்? நேரடிச் சந்திப் புகள் மனதைப் பிசைகிறது.
"அடிமேல் அடி வைத்தால் அம்மியும் நகரும்” என்பார்கள். பெண் சஞ்சிகையின் வீச்சும் தாக்கமும் தடித்துப்போன ஆண் ஆதிக்க சமூகத்தில் நிச்சயம் ஒரு மாற்றத்தைக் கொண்டுவரும். பணி தொடர வாழ்த்துக்கள்!
அன்புடன் மலர்வேந்தன்
-70

வருடாந்த சந்தா - பெனன்
ஐரோப்பா, வட அமெரிக்கா, அவுஸ்திரேலியா
USS 5
இந்தியா
ebLUIT 300.00
இலங்கை
ebusT 100.00
சந்தா விண்ணப்பம் 200. பெண் சஞ்சிகைக்கு சந்தா அனுப்பியுள்ளேன்
பெயர் . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . oooooooooooooooooooooooooooo-oo or rose
விலாசம் : . . . . . . . . . . . . oooo-oooooooooooooooooooooooooooooooooooooooooooo-ero or sever
திகதி . . . . ooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooo-ooooooooooor
இத்துடன் காசோலை / மணி ஒடர் சூரியா பெண்கள் அபிவிருத்தி நிலையத்தின் பெயரில் அனுப்பி வைக்கிறேன்.
சூரியா பெண்கள் அபிவிருத்தி நிலையம் இல:20, டயஸ் வீதி, மட்டக்களப்பு, இலங்கை.
Suriya Women's Development Centre, No:20, Dias Lane, Batticaloa. Sri Lanka

Page 40