கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: பூபாளம் 1983.01

Page 1

புரிகள் கூடியதோர் வட்டம்
க்கிறது கவிதைமணிப் பட்டம் Pழுதும் மலர்தூவி க்துகிருேம் வானளந்து பெறலே கவிஞரவர் திட்டம்
དWWW \S.
January Rs. 5-00
ر
 ̄ܘܼܝ
ܒܠܠ ܝܐ

Page 2
Venus Printers
| 07/ 8, Bandaranayaka Mawatha, Colombo-2.

சுவரம் 1 P00BAALAM இராகம் 2
ஜனவரி 1983 January
'ஒசை முதல எழுத்தெலாம் ஏகணவன் நேசம் முதற்றே உலகு."
பூபாளம் இருளில்தான் பிறக்கிறது. அதனுல்தான அது > ஒளியுடன் வாழ வைக்கிறது! பூபாளம் ஒலித்தும் சோம்பேறி அன்னங்கள் சிறகிருட்டையே விரும்புகின்றன. மற்றவை மயக்கொழிந்தன. அடுத்தவனின் ஒளியில் பொருமை இருள் படர்ந்த சில குட்டிச் சைததான்கள்இருளால் ஒலியை மூடுகின்றன. பூபாளம் புன்னகைக்கிறது. அதற்கு ஒலிக்கத்தான் தெரியும்
சிஷ்ட பரிபாலன வீணையொலியும் துஷ்ட நிக்ரஹ இடி யொலியும் பூபாளத்தின் இரு பிறவிகள்!. கச்சேரிக்கு வந்தவர்களே! s உங்கள் புலன் நாக்களுக்குத் தேனே விருந்தாகும்! தேளாக மாருதீர்கள்! கவிஞர்களே, ஒரு சொல்: பூபாளத்தைக் கேட்டும் அன்னப்பறவை ஆகின்றீர்களே! பள்ளி எழுங்கள்! பாலையும் நீரையும் பகுத்து வையுங்கள்,
பூபாளம் 1

Page 3
பூபாளம் கவிதைப் போட்டி - 1
முடிெ
வந்த கவிதைகளுள் வாய்த்த கவியிதற்குத் தந்தோம் பரிசைத் தனித்து: ' 'பாடும் பறவைகளிற் பண்ணர் குயிலினையும் ஈடில்லா வீணை உருவினையும் - தேடியே
பூபாள முத்திரைக்குப் பூட்டும் திறனுலகப் பாவாணர்க் கேற்ற பரிசு.”*
-அ. கெளரிதாசன்,
ಖನ್ತ
கிண்ணியா, 枣
பூபாளம் 本 w YY 命。 * கவிதைப் போட்டி 2 பாசு ரூபா 本、 50
பூபா ளம், காம் போதி, பைரவி, மோகனம், சிவரஞ் சனி, ஆ திபைரவி, சுத்ததன் யாசி, ஹரஹரப் பிரியா, நீலாம் பரியெனும் நின்ற ஒன்பான் இராகம் நாளின் இன்செயற் பாட்டில் பரவித் திகழும் பாங்கைக் கவியில் அமைத்தெம் முத்திரை இணைத்தெமக் கணுப்புக, சுவையும் பொருளும் சிறந்து முதலாய் உறுமேல் ரூபாய் ஐம்பதைப் பெறுமே! கவியீர்! பெற்றிடு வீரே!
முடிவுத் திகதி: 28.02.'83
எக்கருத்து யார்வாய் எழுந்ததுவோ அவ்வவரே அக்கருத்துக் குள்ளார்யாம் அன்று ஆர்.
, umamo 2 *

弹
அசை
எ ன் ம ன தில் கரு வாக அசைவாகி, என் பேணுவின் அசைவில் கருவாகிய ஒர் உன்னதப் படைப்பாகக் கவி ஞர் மு. மேத்தாவின் "தேச பிதா வுக்கு ஒரு தெருப்பாடகனின்அஞ் சலி’ எனும் கவிதை அமைகிறது. இக்கவிதை, பல வருஷங்களுக்கு முன்பு ‘தீபம்’ எனும் இலக்கிய இதழில் முதன்முதலாக வெளி வந்தது.
இன்றுவரை பலமுறை படித் தும், படிக்கும் ஒவ்வொரு முறை யும் இக்கவிதை பாரத தேசத் தின் சமூக - பொருளாதாரச் சீர ழிவுகளின் சமகாலப் படப்பிடிப் புப் பாங்கான, அர்த்தங்கள் நிறைந்த வார்த்தைகளின் ஊர் வலம் என்றுதான் எண்ணுகி றேன். இக்கவிதை, ஒரு தெருப் பாடகன், மகாத்மா காந்தியை நோக்கி அ ஞ் சலி செலுத்தும் வகையில் அமைந்துள்ளது. அந் தக் சவிதையின் வரிகளிடையே நிலவும் உறவு, பிரிக்க முடியாத அம்சமாகத் திகழ்ந்தபொழுதும், என் அசைவின் திரையில் மின்ன லாக மின்னிய சில வரிகளைச் சுட் டிக்காட்டி முழுக் கவிதையையும், கொடுப்பதன்மூலம் நான் பெற்ற கலா ர ச னை யை ப் பகிர்ந்து கொண்ட திருப்தியை நான் அடையலாமல்லவா?
கவிதையின் தொ ட க் க மே பாரத தேசத் தி ன் மக்களின்
மேமன்கவி
வாழ்க் கை போல வினக் குறி யோடு தொடங்குகிறது:
*உன்னுடைய படங்கள்
ஊர்வலம் போகின்றன;
நீயேன்
நடுத் தெருவில்
தலை குனிந்தவடி
நிற்கிருய்?" என்று தொடங்கும் கவிதையில் புனித பாரத பூமியில் இன்று நில வும் அவலங்களை ஒரு தெருப் பாடகனின் நிலையில் நின்று மிக வும் அழகாக ச் சித்தரிக்கிருர்
மேத்தா.
பல பாரிய தி யாக ங் கள், போராட்டங்களின் மத்தியில்
மகாத்மா காந்தியின் தலைமை
-யில் சுதந்திரம் வாங்கிய பாரத
தேசம், அன்று இருந்த நிலையை விடப் படுமோசமான நிலையை இன்றைய போலி அரசியல் வாதிகளின் சுயலாபத்தினுல் எவ் வாறு அடைந்துள்ளது என்பதை யும், மக்கள் எவ்வாறு ஏமாற்றப் படுகி ருர்கள் என்பதையும் பின் வரும் மேத்தாவின் கவிதைவரி கள் சுருக்கமாகவும் அழகாகவும்
சொல்கின்றன. பாருங்சள்:
**அமுத சுரபியைத்தான் நீ தந்து சென்ருய்!.
இப்பொழுதுஎங்கள் கைகளில் இருப்பதே பிச்சைப் பாத்திரம்'
பூபாளம் 3

Page 4
இங்கே வளமிக்க பாரதபூமியை அமுத சுரபி என்று உருவகிப்பது ஒர் உயர்ந்த கற்பனை ஆகும். அந்த அமுத சுரபியை சுரண்டல் எலிகள் பிச்சைப் பாத்திரமாய் மாற்றிவிட்டதைக் கண்ட மேத் தாவின் கோபம் கவிதை வரிக ளாய்க் கண்ணிர் வடிக்கிறது. அந்தக் கணணிரின் வெப்பத்தால் அவரது கவிதை முழுழை பெரு மலே முடிந்து விடுவதை மேத் தாவே கவிதை வரிகளாக்கியுள் ளார்! அத்தோடு எ வர் களின் தலைவர்கள் என்று தங்களைக் கூறி அந்தஸ்தை வளர்த்துக் கொண் டார்களோ அந்த ம க் களை மறந்து, சமூக மாற்றத்தைக் கொண்டு வருகி ருே ம் என்று கூறித் தேசத்தின் வளத்தைச் சுரண்டும் அரசியல் வாதிகளால் மக்கள் வாழ் வு இருண்டுகிடக் கிறது என்பதை மேத்தா பின்வரு மாறு கூறுகிருர்:
"எங்கள் வயிற்றைப் புறக்கணித்துவிட்டுக் காம்புகளை நேசிக்கிருர்கள். எங்கள் வாழ்க்கை
இருளோடு இல்லறம் நடத்துகிறது’.
இப்படியாய்ப் பாரததேசத்துச் சோகங்கள் மேத்தாவின்பேனவில் சிறந்த கவிதைவரிகளாய்ப் பரிண மித்து நிற்பதை தாம் காண லாம். நான் கண் ட அந்த உயர்ந்த அனுபவத்தைப் பின் வரும் முழுக் கவிதையைப் படித்த பின்னர் நீங்களும் அடைவீர்கள் என்பதால் என் ‘ஆசை பூர ணத்துவம் பெற்றுவிடுகிறது.
உன்னுடைய படங்கள் ஊர்வலம் போகின்றன. நீயேன் தலை குனிந்தபடி நடுத்தெருவில் நிற்கிருய்? வெளுத்துப் போய்விட்ட தேசப் படத்துக்குப் புதுச்சாயம் பூசும் புண்ணிய தினத்தில் புத்திர தேசத்துக்காக நீ புலம்புவது என் காதில் விழுகிறது! எங்கள் தேச பிதாவே! அமைதி கொலுவிருக்கும் உன் சிலைகளைப்பார்க்கும்
போதெல்லாம் நான் அழுது விடுகிறேன். கண்ணிரின் வெப்பத்தால் என் கவிதை முழுமை பெருமலே முடிந்து விடுகிறது. தேசப்படத்திலுள்ள கோடுகள் விடுதலைக்குப் போராடிய வீரத் தியாகிகளின் விலா எலும்புக் கூடுகள்! அழிக்க முடியாத கல்லெறி படாத அந்த நினைவுச் சின்னத்தின் மூலமே அவர்களுக்கு நாங்கள் அஞ்சலி செலுத்தி விடுகிருேம்! கண்ணிர்க் கடலில் கலங்கள் மூழ்கிய பிறகு அடைக்கலம் தேடிய ஆபுத்திரனே! அமுத சுரபியைத்தான் நீ தந்து சென்ருய் இப்போது எங்கள் கைகளில் இருப்பதோ பிச்சைப் பாத்திரம்! இந்த மாற்றத்தை நிகழ்த்திய மந்திரவாதிகள் யார்?
பூபாளம் 4

நிழலுக்குள் மறைந்திருக்கும் நிழலை யார் அம்பலப்படுத்துவது? சரித்திர மாளிகையில் அஹிம்சைப் பேரொளியில் பகத்சிங்குகள் மறைக்கப் பட்டதால்தான சுதந்திர மாளிகையை எலிகள் சுரண்டுகின்றன? மயிலுக்குப்போர்வை தந்தவனின் மரபிலே வந்தவர்கள் எங்கள் மேனியில் கிடக்கும் கந்தல் சட்டையையும் கழற்றிக்கொண்டு போகிருர்கள்! ஆடுகளை உனக்காக வளர்த்தோம்; தாளடைவில் நாங்களே மந்தை ஆடுகளாய் மாறிப்போனுேம்! எங்கள் வயிற்றைப் புறக்கணித்துவிட்டுக் காம்புகளை நேசிக்கிருர்கள். எங்களுக்குத் தீவனம் கிடைக்கா விட்டாலும் மேய்ப்பவர்களுக்கு மட்டும் எப்படியோ இனம் கிடைத்து விடுகிறது! கண்ணீரின் வெப்பத்தால் என் கவிதை முழுமை பெருமலே முடிந்து விடுகிறது சட்டக் கட்டிடங்களில் ஒட்டைகள் விழுந்துவிட்டன, வயதாகிப் போனதால் தர்ம ஸ்தூபிகள் தள்ளாடுகின்றன. எங்கள் வாழ்க்கை இருட்டேர்டு இல்லறம்
நடத்துகிறது! பாவத்தைத் தனித்தனியே செய்துவிட்டு மொத்தமாகத் தீர்த்துக்கொள்ளப் போதுமான அளவு புண்ணிய ஸ்தலங்கள் இருப்பதால் எங்கள் பாரத புத்திரர்கள்
அதுரசு படாமல் தூய்மையாகவே இருக்கிருர்கள்! ராஜதானியில் மலர்க்கி ரீடங்கள் சூட்டப்படுகிறபோது சேரிக் குழந்தைகளின் சின்ன விழிச்செடியில் உப்பு மலர்கள் உதிர்ந்து விழுகின்றன. நீ கண்டுபிடித்த சுதேசிய ஆயுதமாம்
கைராட்டையைச் சுற்றிய சிலர்
தற்போது தங்கநூல் நூற்கிருர்களாம். எங்களுக்கோ '
வெள்ளியும் தங்கமும்
விழாக்களின் பெயரில்தான் வருகின்றன. ஒரே ஒரு விஷயத்தில் மட்டும் இந்த நாட்டு மக்கள் உன்னை அப்படியே பின்பற்றுகிருர்கள்!
அரை குறையாகத்தான்
உடுத்துகிருர்கிள். தேசம் போகிற போக்கைப் பார்த்தால் பிறந்தநாள் உடையே எங்கள் தேசிய உடையாகிவிடும் இருக்கிறது. போல் எங்கள் தலைவர்கள் வறுமையை எப்படியாவது வெளியேற்றிவிட வேணடுமென்று மேடையில் தான் மைக்கின் முன்னல் பேச்சுத்தவம் செய்கிருர்கள்! இருபத்தைந் தாண்டுகளில் தேசத்தில் மாற்றமே நிகழவில்லை என்று யார் சொன்னது? கண்ணிர்க் கடலில் கலங்கள் மூழ்கிய பிறகு
பூபாளம் 5

Page 5
அடைக்கலம் தேடிய ஆபுத்திரனே! அமுத சுரபியைத்தான் நீ தந்து சென்ருய். இப்போது எங்கள் கைகளிலிருப்பதோ பிச்சைப் பாத்திரம்! அணைக்கட்டுகளில் திறக்கப்படும் தண்ணிர் பள்ளங்களை ஏமாற்றிவிட்டு மேட்டை நோக்கியே பாய்கிறது. சேரிகளில் மட்டுமே நீ யாத்திரை செய்வாய் என்பதைத் தெரிந்துகொண்டதால் உன்னை நேசித்தவர்கள் தேசத்தையே V− சேரியாக மாற்றிவிட்டார்கள். இந்த மாற்றங்களை நிகழ்த்திய மந்திரவாதிகளின் கருத்துக்கு நாங்கள் மாலை சூட்டுகிருேம்! உன்னுடைய படங்கள் ஊர்வலம் போகின்றன. நீயேன் தலைகுனிந்தபடி நடுத்தெருவில் நிற்கிருய்? புத்திர தேசத்துக்காக நீ புலம்புவது என் காதில் விழுகிறது. அமைதி கொலுவிருக்கும் உன் சிலைகளைப் பார்க்கும் போதெல்லாம் நான் அழுது வடிகிறேன். கண்ணீரின் வெப்பத்தால் என் கவிதை முழுமை பெருமலே
தமிழகத் தாவல்கள்.
14-10-182ல், கொழும்பு 14, யூனிநாராயணகுரு மண்டபத்தில் நடைபெற்ற புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் சிறப்பு விழாவில் சிறப்புரையாற்றிய மதுரை தமி ழரசன் பி. ஏ. பி. எட். அவர்கள் தமது பேச்சினிடையில் இப்படிச் செருகினர்:
'இலங்கைக்கு வந்த நான், இங்கே பாரதி நூற் ரு ண்டு விழ 1ா வா என ஆச்சரியப்பட் டேன்! ...”*
ஐயா,உங்கள் நாட்டில் எங்கே, எப்போது, என்னென்ன நடக் கின்றன எ ன் று ஓரளவாவது அறிந்திருக்கும் எம்மத்தியில், இப் படியாக நீங்கள் உங்கள் அறியா மையைப் பறைசாற்றிக் கொள் ளலாமா? எமது சஞ்சிகைகள், வானெலிப் பேச்சுக்கள் என்பன உங்களுக்கு அவ்வளவு தூரம்
இளக்காரமாகிப் போனதால் எங்
கள் நடவடிக்கை களை ப் பற்றி அறிந்துகொள்ள உங்களுக்கு வாய்ப்பிருக்க முடியாதது விந் தையல்லவே!
எதற்காகவோ வருகிறீர்கள்; எதையோ புகுத்தத் துடிக்கிறீர் கள்; எதையோ சம்பாதித்துக் கொண்டு பறந்து அல்லதுமிதந்து
முடிந்து விடுகிறது. போய் விடுகிறீர்கள்! 兴兴
கூறியன கூறேல்; குவியலாய்ச் சொல்லடுக்கேல்; தேறுவன கற்கண்டுத் தேம்பாக்கள்! -தீரத் திருத்திக் குறுக்கிச் சிறப்பாக அச்சில் பொரித்தல் எமதுரிமைப் போக்கு. ஆ-ர்,
цитатto 6

மரபுக் கவிதைகள்
பாரதி பாடியதுபோல் இசை யோடு பாடக்கூடியதாகக் கவி
இயற்றவாம்! பாரதி யாப்பிலக்
கணத்தைப் பின்பற்ற வில் லை யாம்!- கவிதைகளைப்பற்றிய அறி வுச் சூன்யத்தை இவ் வாறு வெளிக்காட்டிக் கொள்ளலாமா அந்தப் பேச்சாளர்?
யாப்பிலக்கணத்தை உயிர் நாடியாகக் கொண்டே பாடினன் என்று நாம் சொல்லப் போக, அவர் அதை மறுக்க1. சேச்சே! இதென்ன இலக்கிய உலகம் இப்படி நாறுகிறது?
塞
Kyr
怒発
எதுகை மோனை
** பிற கோட்பாடுகளைப் புறக் கணித்தாலும், எதுகை மோனை களையாவது சிறிது கவனியுங்கள்! அதுவே கவிதை மனதில் நிற்கும் வழி! அதுவே கவிதையின் ஜீவ நாடி! கண்களையும் காதுகளையும்
அறுத்துவிடுவதால் நம் உருவம்
நிலைநிற்கப் போவதில்லையே!...”*
Gபூபாளம் வெளியீட்டு விழாவில்
கவிஞர் அன்பு முகையதின்.
திருத்தம்
கடந்த இதழில்
“செம்மாங்கனி? குறிப்பெழு
தியவர் கவிஞர் கலா விஸ்வ நாதன். * சிற்பியில்
Geylon Teacher's College GT6ir u605 Ceylon Technical College எனவும், “தமிழ் ஒளி' என்பதைத் ‘தமிழ் ஒலி எனவும் திருத்திக் கொள்ளவும், ஆ-ர்.
பாரதி
கண்டிருந்த வான்கோழி
கவிதை என்ற போர்வையில், க வி ைத யுணர்வே இல்லாதவர் கூட இது தமிழா?’ என்று வின வுமளவுக்குக் கேவலமாக எழுதும் சில கவிதா ஐ. ஆர். சீ.க்காரர் களை இனங்கண்டுகொள்ளுங்கள். சில பத்திரிகைகள் இவர்களின் இந்த அற்பத்தனங்களைப் பிர சுரிப்பதன் மூலமாகக் கப்பம் செலுத்து பவை யா கி ன் ற ன. கவிதை உணர்வுள்ளவர்களே, தாம் பணியாற்றும் பத்திரிகை களில், கவிதைகளைத் தேர்ந் தெடுப்பவர்களாக அமர் த ல் அவசியம்.
**கானமயிலாட. 景景
மலையகக் கவிஞர்கள்
*பத்திரிகைகளை மாத்திரம் நம்பிக்கொண்டிராமல், ‘கவிதா வட்டம் போன்ற களங்களை ஏற் படுத்துவதன் மூலமாக மலையகத் தில் கவிஞர்கள் செயற்படுவதன் அவசியத்தை உணர்தல் வேண் டும்.”* W
S -ஏ. பி. வி. கோமஸ் புதுக்கவிதை
விறகை முறிப்பதைப்போல் வசனங்களை முறித்து வைப்பதால் புதுக்கவிதை பிறந்துவிடாது. படி
மங்கள் சரியாக அமையுமாகின்
புதுக்கவிதையை எ ல் லா ரு ம் விரும்புவர். அக்டோபர் ‘பூபா ளம்’ இதழில் வெளியான, கவி ஞர் மேமன் கவியின் நஞ்சாகும் நாளைகளில் ஒரு பகுதியைப் படி மத்துக்குரிய ஒர் உதாரணமாகத் தருகிருேம்.
பூபாளம் 7

Page 6
இளைஞர்கள், சபலத்தின் கார ணமாக மயங்கிச் சீரழிய நினைக் கிருர்கள். இதைக் கவிஞர், அடுப்படியில் திருட்டுத்தனமா கப் பால் குடிக்கத் துடிக்கும் பூனைக்கு ஒப்பிடுகிறர். உடனே, படிமம் நன்ருக அமைந்த சில வரிகள் அவருக்குக் கிடைத்து விடுகின்றன. -
* இளமைப் பூனை அடிக்கடிசபல அடுப்படியில் மயக்கப்பால் குடிக்கத்
துடிக்கும்!”*
兴景 தளைதட்டுதல்
மரபுக் கவிதைகளில் , தனிச்
சொல் வருமிடங்களைத் தவிர்த்து வேறெங்கும் ஒரசைச் சீர்கள் வாரா. வெண்பாவின் ஈற்றில் வரும். ஆணுல், கவிஞர்களுள் பல ரும் இதைக் கவனிக்க மறந்து விடுகிருர்கள்
“வந்து இருந்தான்’ என எழுதி விட்டு இவை இரண்டு சீர்கள் என்கிருர்கள். 'வந்திருந்தான்" என அவை புணரும்போது, கூவிளங்காயாகி ஒரு சீராவதை அவதானித்தல் வேண்டும்.வெண் பாக்களைக்கூட இப்படிப் பலர்
இயற்றுகிருர்கள். சீத்தலைச் சாத்
தனுர் இலர் என்ற எண்ணமாக இருக்குமோ? 求率
செம்மாங்கனி
அவலம் பெருந்தெருவின் ஓரமாக எழுப்பிவிட . . நிலைக்கிறது நெடுங்கல்லாய் நினைவுச்சிலை × அதன் பாதங்களில் பொதிந்த அட்சர புஷ்பங்கள், பாசியாலும் தூசாலும் சிலையைவர்ணிக்க மறுத்தன! சிலையை-- இரசிப்பவர் பலர்;
அவலத்தைக்
கழுவுபவர் இலர்!. .
9 ஐ. சிவகுமாரன், பசிப்பயிர்
எங்கள் உடம்பின் அழுக்குகளைப் போக்கச் சவர்க்காரத்திற்கே வெட்கமாம்! இந்நிலையில்- კი உடைகளையும் உடுத்து அவற்றையும் அழுக்காக்க நாங்கள் விரும்புவதில்லை! அங்கே நீங்கள் கள் அருந்தும் சிரட்டைகள்இங்கேசில்லறைகளைக் காணச் சிலந்தி வளைகளோடு காட்சி
தருகின்றன! எங்கள்கண்ணீர் அருவிகள் சங்கமிக்கும் இடத்திலாவது பயிர்கள் வளர்ந்து எம்பசி தீர்க்காவோ?
கு இப்னு அஸமேத்
அழகுதாசன் மாங்கனியின் கொட்டை அவர்வரவும் செலவுகளும் பட்டை அக்கரைக்குச் சென்றுவிட்டார்;
ஆறுமாதம் ஆகியதே,
அன்னுர்க்குப் பஞ்சமஞ்சல் அட்டை!
பூபாளம் 8

யாப்பு கற்போம்
உறுப்பியல்
நேரசை, நி ரை யசை யெ ன அசை இரண்டாகும்.
நேரசை:
1 நெடில் முதல்வரின் அது நேரசை உ-ம் பானை. இதில் ‘பா’ நெடில் ‘னை'யும் நெடில்,எனவே பானை என்ற சொல், நேர், நேர் எனப்படும். "நீ என்ற ஓரெழுத் துச் சொல்லும் நேரசைதான்.
2 குறில் தனித்துவரின் அது வும் நேரசையே. உ-ம் கல். இதில் "க" தனியே வருவதால் அது நேரசை, “ஸ்” மெய்யெழுத்தா கையால் அது எண்ணப்படுவ தில்லை. அன்பு என்ற சொல்லில், 'அ'வும் 'பு'வும் நேரசை, நேரசை எனப்படும்.
நேரசை உதாரணங்கள்:
நீ - நேர்.
நீர் - நேர்.
கல் - நேர்.
கற்பார் - நேர், நேர்.
அன்பு - நேர், நேர்.
குற்றெழுத்தோ நெட்டெழுத் தோ தனியே வரினும், குற்றெ ழுத்தோ நேட்டெழுத்தோ ஒற் றடுத்துவரினும் நேரசையே.
நிரையசை
குற்றெழுத்தில் ஆரம்பிக்கும்
சொல் அடுத்த எழுத்து குறிலா கினும் நெடிலாகினும் நிரையசை
யாகும்.
2 அசை
உ-ம்.
கடை - நிரை
சிறு - நிரை சிறுகடை - நிரை, நிரை. குடில் - நிரை. பழங்குடி - நிரை, நிரை. பழங்குடில் - நிரை, நிரை. இரு குறில்கள் இணைந்துவரி
னும் குறிலும் நெடிலும் இணைந்து
வரினும், குறில் கள் இரண்
டிணைந்து ஒற்றடுத்துவரினும் குறி
லும் நெடிலும் இணைந்து ஒற்ற டுத்துவரினும் நிரையசையே.
இப்போது கவனிக்கவும்: மழை - நிர்ை. நனைந் தான் - நிரை, நேர்.
அடை யாறு - நிரை, நேர்,
ነ - நேர். ஆலம் விழுது - நேர், நேர், நிரை, நேர்.
本本本本本本本本本本本本 உயரப் போகும் பாப்பா!
அழ. பகிரதன் சின்னச் சின்னப் பாப்பா சிவந்த நல்ல பாப்பா! கண்ணைச் சிமிட்டி என்னைக் கவரும் நல்ல பாப்பா! பஞ்சைப் போன்ற உடலால் நெஞ்சைக் கவரும் பாப்பா! கொஞ்சச் சொல்லி என்னைத் தஞ்சம் அடையும் பாப்பா! பாவம் என்பது அறியாப் பச்சை உள்ளப் பாப்பா
கோபம் ஆசை குரோதம் கொள்ளா நல்ல பாப்பா
பூபாளம் 9

Page 7
நவீன சாத்தனர் 妹轮奸书港书妹举族势港书
என்னைத் தெரியாதா ஈழக் கவிஞர்காள்? முன்னைத் தமிழ்நாட்டில் மூத்திருந்தேன் - பண்ணிவரும் பேத்தல் கவியால் பெரிதாய்த் தலைகுத்திச் சீத்தலையான் ஆனேன் ஜெகத்து!
பூபாளத் தேட்டுக்காய்ப் பூண்டு படையெடுத்த ஆபாசப் பாடல்களை யானறிவேன்! - கோபத்தால் மீண்டும் தலைகுத்தி மேன்மேலும் புண்ணுக்கிக் காண்டீபம் கொண்டேனென் கை!
தமிழே புரியாமல் தம்பட்டம் மாட்டிக் கவிஞன் எனப்புளுகிக் கத்தும் - சவம்போன்ற பல்லோர் பெருகிப் படுத்துகிற பாட்டாலே
சொல்லேர் உழவனுக்கும் சூடு!
வத்திரிகைக் காரர் பலகாலம் உன்னுடைய சொத்தைக் கவிதைகளில் சொல்திருத்தி - அச்சிட்டு வந்தத்ால் நீயும் வரும்பிழைகள் நோக்காயோ?
சந்தி சிரிக்கிறது; சா!
தமிழை முதலில் தரமாய்ப் படித்துத் தமிழில் கவியெழுதத் தாவு - கவிதையது உன்வீட்டுச் சாமானென் றுள்ளத்தே கொள்ளாதே!
என்கைக்காண் டீபம் எதிர்
மலேயகத் தொழிலாளர்கள்
ஏக்கம் சுமந்த எண்ணப் பறவைகளின் - கூடுகள்! தூக்கத்தை மறந்த துன்பக் கல்லறையின்மேல் உருகும மெழுகு வர்த்திகள்! தேயிலையோடு - அதன் மிலார்களாக உருமாறிவிட்டன, எங்கள் - உழைக்கும் கரங்கள். கொதிக்கும்
பூபாளம்
G சாத்தன்
கொப்பரைக்குள் விழும் கொல்லனின் - முகத்து வியர்வைத் துளிகளே எங்கள் ஆசைகள்!
பருந்துகளைக் கண்ட
கோழிக் குஞ்சுகளாய்ப்
பதுங்குவனவே எங்கள் உரிமைக் குரல்கள்! நாங்கள் - பொருளாதாரக் *கொங்கிரீட்”டுக்குள் மறைந்துள்ள இரும்புக் கம்பிகள்!
S Cs. JTibg உலகநாதன் 10

ل00A؟
bT ÚJLAT...
D டாக்டர். தாவ8ம் அஹமது
உணவும் மருந்தும்
உணவும் மருந்தும் ஒன்ரு யிருந்த உதாரணந் தன்னை ஒருமுறை நோக்கின். தேனுெரு மருந்து தித்திப் புள்ள அதையே உணவாய் ஆதி மனிதன் வேட்டை யாடிய விலங்கின் சதையுடன் சேர்த்துண் டுடலின் திடமே பெற்ருன்! தேனை உணவாய்ச் சேர்த்துண் கையில் மருந்தாய் உடலில் மாற்றம் செய்தது. இன்றைய ஆய்வுகள் எமக்குக் கூறும் தேனில் சிறந்த பிணிகள் நீக்கும் சேர்வைகள் இயல்பாய்ச் சேர்ந்தே யுளவாம்! எல்லாம் இன்று ரசாயனக் கலப்பாம்! பொல்லா நோய்கள் போக்கும் மருந்திலும் தினமும் அருந்தும் உணவிலும் ரசாயனம் இரண்டறக் கலந்து இருப்பதால் புதுப்புதுப் பிணிகள் மேலும் பெருகி வருவதை மருத்துவ ஆய்வுக் குறிப்புகள் விளக்கும்.
பாவேந்தர்கள்
பிறர்பாட்டில் பிழைகாணும் வேந்து பிழைவிடுவார்; நாம்கேட்டால் சாந்து! பித்தலாட்டம் செய்வதிலும் பிறர்குறையால் வாழ்வதிலும் பெருங்கவிஞர்! அவர்தொழிலோ “ரோந்து!"
பூபாளம் 11

Page 8
பயிர்கள் செழிக்கப் பயன்படும் பசளைகள் அனைத்தும் ரசாயன அமைப்பா யிருப்பதால் உண்ணும் உணவிலும் செயற்கை ரசாயனம் சேர்ந்து வருவதை அறிவியல் நிபுணர்கள் கூர்ந்து நோக்கிக் குழம்பி நிற்கிருர்!. விண்ணின் வீழும் மழைநீ ரதிலும் காற்றிலும் ரசாயனக் கலப்பே உள்ளது; கதிரி னியக்கத் த க்கமும் சூழலைத் தாக்கியே வருதலால் இயற்கைச் சூழல் செயற்கையாய் மாறிட இன்னுெரு கோளம் சென்றுமே வாழச் சிந்தனை செய்யும் விந்தை மனிதர்காள்! வியப்புகள் பலவே! சோவியத் மண்ணில் சுகமாய் வாழும் முதியவர் ஒருவரின் முறையாம் வாழ்க்கைப் புதிரைக் கேட்டால் புரியும் உண்மைகள்! மருந்தே இன்றி வாழும் அவர்கள் நீண்டோர் ஆயுளும் நிறைந்த சுகமும் பூண்டு வாழும் புதுமைதான் என்னவோ? தானிய உணவைத் தரையிலே உண்டு வானில் பறக்கும் வண்ணப் பறவைகள் அன்று தொட்டு இன்று வரைக்கும் ஆனந்த மாக வாழ்வைக் கழிக்கும் அழகைப் பாராய்! அழகைப் பாராய்! மானுடன் காணும் மகத்துவ மிக்க முன்னேற் பாடிலா முயற்சிகள் மண்ணின் வாழ்க்கை மகிழ்வைக் கெடுக்குமே!
கண்ணதாசன் சிலை
சிலைவைக்கும் எண்ணங்கை விட்டார்; சிந்தனையில் பெருமாற்றம் பெற்ருர், சிலகவிதை நூல்களினைச் சிறப்பாகப் பிரசுரிக்கச் சிலையெண்ணம் தமிழுலகில் நட்டார்.
இலக்கியக் கப்பம்,
எங்" கவிதைச் சோலையிலோர் அப்பர்; ஏந்திக்கை திரிவதிலே ‘சுப்பர்!’ எத்தனையோ அவசரங்கள்; எவர் "பர்ஸ் ம்ே அவர்தனங்கள் இலக்கியத்தைக் கொள்ளையிடும் அற்பர்!
பூபாளம் 12

1)
2)
3)
4)
5)
6)
7)
8)
9)
3 இறையச்சம்
அல்லாஹ்வின் கூடாம் அகிலத்தை நீயுவப்பின் அல்லாஹ் உவப்பான் உன. W
நீபாரா விட்டாலும் நேசனுனைப் பார்ப்பதனல்
நேர்நிற்ப தாய்த்தொழுவ தாற்று.
நல்லவழிப் போதனையே நன்மார்க்கம்; மானிடருள் நல்லவனும் நற்குணத் தான்.
மெய்ப்பொருளின் நன்மை மிகப்பெறவே என்றென்றும் கைப்பெனினும் உண்மை கழல்
தம்மையே விற்றுத் தடுப்பர் நரகத்தை; தம்மை அழிப்பர் சிலர். V
இரண்டு விரலுக் கிடைவைத்தான் உள்ளம் புரளும் அவன்விருப்பம் போல்.
அல்லாஹ்வுக் கஞ்சி அருஞ்ஜகாத்தும் ஈபவரே பள்ளிபரி பாலிப் பவர்.
வானவர்கள் தம்நெற்றி வைத்துப் பணியாது
வானகத்தில் இல்லை இடம்.
அச்சத்தோ டெச்சரிக்கை ஆற்றுகிறேன் வேதனையின் உச்சங்கள் பற்றி உமக்கு.
10) இருகைக்குள் வானும் இரும்புவியும் தேக்கிப்
பெருமைகொள் வான்மறுமை நாள்.
பூபாளம் 13

Page 9
1)
2) நாயகனின் நல்லகரம் நற்கூட்டத் தாரூக்கோ
நாயினுக்கே ஒராடு நம்பு. - 3) அதிகம் தரூத்சலவாத் ஆற்றிடுநீ; மேலாம்
கதியைக் கியாமத்தில் காண். 4) ஊன முறுவீட்டை ஒப்பான் உயர் குர்ஆன்
ஞான மிலானென்று நாடு. & 5) ஈமான் பழைமையுறும்; ஏகனிடம் நீயிறைஞ்சி
ஈமான் புதுப்பித்தல் ஈடு,
6) நாவின் இறுதிமொழி லாயிலாஹ இல்லல்லாஹ்
ஆகின் அவர்சுவனத் தார்.
7) உள்ளம் புரட்டுவோனே! உன்மார்க்கத் தேயெனது
உள்ளம் நிலையாக ஊக்கு! -- 8) அம்மையில் என்பரிவு லாயிலாஹ இல்லல்லாஹ்
என்பார்க்குத் தானென் றியம்பு.
9) நாற்பத்து நான்கினையும் நாற்பதில்முன் மூன்றினையும்
ஆயத்துல் குர்ஸியையும் ஆற்று. m
10) நாற்பத்து நான்கோது; நல்லெழுப தாயிரவர்
4 இறைஞ்சல்
விழுமிய தூய்மை விரும்பும் இறையைத் தொழுகாலை மாலை தொடர்ந்து.
கேட்பருனக் காய்மன்னிப் பே.
தமிழ்மாறன்
பாரதிதா ஸன்விழாவைச் செய்தார் பாரதியை வாய்நாற வைதார்! பாரதிக்கும் இலங்கையிலே பரம்பரையா என்ருெருவர் பாமரத்தை நாமறியப் பெய்தார்!
கவிஞன் தான் உணர்ந்தவற்றை சொல்லாட்சித் திறனும் உணர்த் தும் பாங்கும் அமைய வெளிப்
படுத்தும் இலக்கிய வடிவமே கவி
தையாகும்.
கவிதையின் உருவம், உள்ளடக் கம் ஆகியவற்றைவிட உணர்த்
தும் முறையே கவிதையின்
தரத்தை உயர்த்த வல்லதாகும்.
-மு. வரதராசன். (கலா. வி.) -க. ப. அறவாணன்,
Lu TomTLD
14

துரிகைத் துது
பாண்டியூரன், "அமுதம் பாண்டிருப்பு -1 கல்முனை தா. மா. செல்லத்தம்பி மந்துவில் கொடிகாமம் பொன். சிவானந்தம் 2ம் குறிச்சி காரைதீவு (கி. மா) க. ப. லிங்கதாசன் 5, சேர்குலர் வீதி அட்டன் மா. பஞ்சலோகரஞ்சன் வளலாய் அச்சுவேலி, கே. எம். ஏ. அஸிஸ் கல்யாண முேடு சாய்ந்தமருது 4 அ. சூெளரிதாசன் வள்ளுவன் வீதி ஆலங்கேணி 1 எஸ். எச். நிஹ்மத் எருக்கலம்பிட்டி 4 மன்னர் என். டி. குணரத்தினம் 8ம் வட்டாரம் களுவாஞ்சிக்குடி (கி, மா) க. த. ஞானப்பிரகாசம் "ராணி மனை அல்வாய் / J நா. சச்சிதானந்தன் அல்லைப்பட்டி யாழ்ப்பாணம் இ. முருகையன் நீர்வேலி தெற்கு நீர்வேலி யாழ்ப்பாணம் கல்வாதி கலீல் சோனகத் தெரு மன்னர் அன்பு ஜவஹர்ஷா "ஜான்பி மன்ஸில் லேக் ருேடு மன்னர் எஸ் முருகையன் (முருகு) பிரதேச உள்ளூராட்சி அலுவலகம் மன்னர் அன்பு முகையதின் ‘அன்பகம் கல்முனை ஆர். எம். நெளஷாத் 503, மெயின் வீதி சாய்ந்தமருது சோலைக்கிளி 374, செய்லான் ருேடு கல்முனை U. L. ஆதம்பாவா 399 செய்லான் ருேடு கல்முனை கே. எஸ். மனேகரன் தபால் கந்தோர் வீதி ம்ஸ்கெலியா கலைக்கமல் 75/45 அப்துல் ஹமீது வீதி கொழும்பு 12 கொக்கூர்கிழான் 21 ரைபில் வீதி கொழும்பு 2 இரா. செல்வராஜன் ஏ. ஜே. மில்டன் (லங்கா) லிமிட்டெட்
ஐ. பி. இஸட். கட்டுநாயக்கா
ஈழவாணன் 33 லோரிஸ் ரோட் கொழும்பு 4 எம். ஏ. நுஹ்மான் தமிழ்த்துறை, யாழ். பல்கலைக்கழகம்
திருநெல்வேலி யாழ்ப்பாணம்
கவிதைப் போட்டி
இந்துமகா நாட்டிலொரு போட்டி இதுகவிதைக் காகுமெனக் காட்டி
*இதுவரைக்கும் ஒன்றுமிலை! என்ன வதற் காகியதோ? - இதைச்சொன்னல் போட்டிக்கோர் ஏட்டி!
பூபாளம் 15

Page 10
கருதது
வேற்றுமை அரபிமூலம்:- தமிழில்:-
அலீய்யுல் ஜுன்தி ஏ. அவSஸ் நிஸாருத்தீன்
ஆழ்ந்தஅறிவும் அதனெடு புத்தியும் அடிப்படை மறந்து பேசிய தொருநாள். அகிலத்தில் சிறப்பை அடைந்ததுயாரென அறியும் பேச்சே அது அறிவு தன்னையுயர் தூக்கி அழகுடன் மொழிந்தது இப்படியே:- *அதையான் பெற்றேன் முடிவுவரை ஆகவே யான்தான் சிறப்புடையேன்! அதிலே ஐயம் ஒன்றுமில்லை!" அதனைக்கேட்ட புத்திக்கு அழுகை வராததுதான் குறையாம். அதற்குப்புத்தியு மொருபேச்சை அலட்சியமாய்ச் சொன்னதுவே:
அண்டத்தின் கர்த்தா அல்லாஹ்வை அறிவது மானிடர் என்னலே! ஆக யான்தான் சிறப்புடையேன்! அடித்துக் கூறுவேன் தரையினிலே’. அதனல் அழகுடன்கூறிடப்புத்திக்கு ஆரம்பித்தது அறிவு தன்னை: **அண்ட சராசரப்படைபபாளன அவனது திருக்குர்ஆன் தனிலே அழகெனப்பண்பாயெனைக் கொண்டு அனைத்தையும் அறிந்தவன் அவனென்று அறிமுகம் செய்கின்ருனே’’, என அதிகம் தன்னை மேம்படுத்தி அறிவு தெளிவாய்க்கூறியதே அகத்தெளி வடைந்த புத்திமட்டும் ஆடிடாமல் அசையாமலே அமைதியாக நின்றதுவே அறிந்தது புத்தி அறிவுதன:- அறிவு புத்தியின் தலைவனென்று அடிப்படைச்சிறப்பை யறிந்தபுத்தி அன்பொடு கலந்த முத்தத்தை அறிவின் தலைக்குக்கொடுத்துவிட்டு அமைதி யாகச்சென்றதுவே!
umromTúe 16
W
喀
སྤྱི་
Վ.
i

அருள்வாக்கி அப்துல் காதிர்
புலவர் (1866 - 1918)
GTsi). ஐ. நாகூர் கனி
* வீரபுரி எனப்படும் தெல் தொட்டை, கண்டிக்கருகில் உள் ளது. இங்கு வாழ்ந்த ஆ. பி. அல் லாப்பிச்சை ராவுத்தர்-ஹவ்வா உம்மா தம்பதியரின் அருந்தவப் புதல்வராக பிறந்தவர்தான் அப்துல்காதர் புலவர் என்பவராவர்.
இப்போதைய கண்டி *டிரினிட் டி யில் (முன்னுள் "ராணி கல் லூரி) தமிழ்ையும்-ஆங்கிலத்தை யும் துறை போகக் கற்ற புலவர வர்கள், பின்ன ர் தமிழகம் சென்று திருப்பத்தூர்த் தமிழ்ப் பாடசாலையில் தலைமை யாசா ஞய் விளங்கிய வித்துவ சிரோன் ம்ணி மஹ்மூத் முத்துவாப்பாப் புலவரிடம் தமிழிலக்கண - இலக்
கியங்களைக் கற்றுத் திரும்பினர்
ST.
இப்புலவரின் பதினேராவது வயதில் ஓர் அருட்சாட்சி கிடைத்
தபின் புலமைத்துவம் மிகுந்து தாமாகவே பாப்புனையும் பக்குவம் பெற்ருர் எனக் கூறப்படுகிறது. சின்னஞ் சிறிய காலத்திலேயே
1866ம் ஆண்டிலே -
கிற பட்டம்
பிறர் விதந்துரைக்கும் வண்ணம் வித்துவம் பெற்றுத் திகழ்ந்த இப் புலவர், தன் பதினருவது வய திலே கவியரங்குகளில் பங்கேற்று, *யாழ்ப்பாண சங்கன்", "மெய்ஞ் ஞான அருள்வாக்கி’ எனும் சிறப் புப்பெயர்களைப் பெறலாஞர்.
1912ம் ஆண்டில் இப்பாவல ருக்கு அசனுல்ெப்பைப் புலவர் தலைமையில் “வித்துவ தீபம்’ என் வழங்கப்பட்டது. அக்காலத்தில் யாழ்ப்பாணத் திலே சீருப்புராணம், இராமாய ணம் ஆகியவை தொடர்பாக ஆற்றிய விரிவுரைகளின் விழுப் பத்தினை உற்றுணர்ந்தே இப்பட்
டம் வழங்கப்பட்டது. m
வித்துவதீபம் அருள்வாக்கி அப்
துல்காதர் புலவரவர்கள், இஸ்
லாமிய ரீதியிலான பக்தி ப் பாடல் பாடுவதிலும், தீராத பிணிகளைத் தீர்த்து வைப்பதி,
லும் சிறந்து விளங்கினர் என
r கின்றது. அறியப் முடி (24ம் பக்கம் பார்க்க)
பூபாளம் 17

Page 11
சங்கமம் III
. * ‘புல்வெட்டித்துறைப் புலவர்' *
*வணக்கம் மகாகவியே! வாழி! இலங்கை மணித்திரு நாட்டிலுள்க: மையல் தமிழர்யாம் தங்கள்நூற் ருண்டைத் தணியாத ஆவலுடன் எங்கனுமே கொண்டாடி இன்புற் றிருக்கின்ருேம். போட்டி மிகமலிந்த போதினிலே தங்களது பேட்டி கிடைக்குமெனப் பேரவாக் கொண்டு வந்தேன்!” வைரம் ஒருஜோடி வாய்ந்த விழிவிசி(ப்) பைரவியின் நாமம் பறக் கின்ற வாய்திறந்து, புன்னகையோ பூந்தமிழோ போந்தது முன்என் 'னப் பென்னம் பெரிதாகப் பேரூர் விசாரித்து(ச்) , 'சந்தோஷம்! யாவுமடா சக்தி செயலேதான்! தந்தையர் நாட்டுளரும் தாயாம் மொழியினரும் இப்படியும் என்றனுக்கு இன்விழாச் செய்வரெனச் சொப்பனத்தி லேகூடச் சுப்பையன் எண்ணவில்லை! நந்தமிழன் கண் விழித்தான்! நல்வேளை விற்கவில்லை!. செந்தமிழும் வாழுமினி! சிங்களத்தில் எப்படியோ?" என்று மகிழ்வோ டெனப்பார்த்தான் பாரதியும். W "குன்றில் பிறந்ததமிழ் கோநாட்டிற் போலெங்கள் நாட்டிலும் நன்முறையில் தாற்புறத்தும் வாசத்துப் பாட்டாற் புகழ்நாடும் பைங் கவிஞர் வாழ்வித்தே ஏற்ற மடைகிறது!’ என்றேன் சிரித்திட்டான்! 'கீற்றுத் தமிழ்தெரிந்தால் கீழோன், தமிழ்வளர்ப்ப தாகப் புளுகு மிந்த அண்டத்தில் நும்போன்ருேர் சாகா வரம்பெற்ற தாயின் தரமறிவீர்! நானும் தமிழ்வளர்த்த நற்கவிஞன் என்கின்ருர்! நானே தமிழாலே நல்வளர்ச்சி யுற்றேன்! தமிழைச் சிறிதாய்த் தமிழவனே நோக்கும் திமிரை ஒழித்திடுவீர்!. தீவின் கவிமணிகள் என்ன எழுது கின்ருர்?’ என்று வினவலுற்ருன். ۔۔۔۔۔۔ "முன்னர் சிலகாலம் மோதகத்தைச், சீதனத்தைக், காதற் கனைப் புகளைக், கண்டறியா நூலிடையை ஊதற் பொருளாக்கி ஓய்ந்தார்! இதுபோழ்து பாரதிநீர் ஈழத்தில் பாடப் பிறந்திடவும் பாரிடையே மீண்டும் பிறவா மற் போய்விடவும் கட்சி இரண்டுபட்டுக் காட்சிபல வேய்கின்ருர் உட்சிந் தனையென்ன உங்களுக்கு?’ என்றேன்யான். சாத்தியக் கூறில்லை தாரணிக்கு மீண்டுவர பாத்தியதை நான்பிறந்த பாரதத்து மண்ணுக்கு மட்டுமல்ல; மண்ணுக்கே! மண் மாறி நான் பிறந்து விட்டகுறை தொட்டெடுக்க விட்டகுறை ஏதுமில்லை! பாட்டுக் கொருபுலவன் பாரதிநான் மட்டுமல்லன்! வீட்டுக் கொருபுலவன்
9 og fr பாரதியுடன் செவ்வி
பூபாளம் 18

வேண்டும்; அதுநடக்கும் நாற்பத்ற்குள் வந்துவிட்டேன், நல்ல பணி முடித்து. ஏற்பாட்டை மீறி இனியோர் பிறப்பெடுத்தல் மாகாளி அன்னைக்கு மாரு அவமாகும்1'- - “ஆகாது மண்ணில் அருங்கவிக்கு வாழ்வென்று முன்வாழ்ந்த வாழ்க்கை முழுதும் மனதுபட அன்பிழந்து விட்டீரோ ஆங்குப் பிறந்துவர?’’- *அல்ல! அதுவல்ல! ஆயிரந்தான் வந்தாலும் சொல்லோர் தமிழானல் சோகாப்பான் யானல்லேன்'- 'வேழப் பகையதனுல் வீணுய் இறந் தீர்கள்! ஈழந் தணில்வேழம் எண்ணற் றிருப்பதனல் அஞ்சிப் பிறப் பதற்கிங் காகா தெனலாமோ?'- பஞ்சுக் குவியலெனப் பாரதியைப் பார்த்தே அடியேன் இதுகூற, ‘அச்சமிலே!" என்று இடியாய் வெடித்தானே . என்சொல்வேன்; என்சொல்வேன்! எங்கே இதைச்சவாலாய் ஏற்றுநம் மீழத்தில் சிங்கச் செறுவினணுய்ச் சேர்வானே என்றிருந்தேன். மெல்லப் புயல்நீங்கி, மேன்மீசை நட்டமது செல்லப் பயம்போக்கிச் சேவித் துரைதொடர்ந்தேன்: ‘நூற்ருண்டுக் கொண்டாட்டம், நூறு கவியரங்கு, போற்றியே பாரதியைப் போட்டி பலவென்று நாங்கள் விழவெடுக்கும் நல்ல தொழில்பற்றித் தாங்கள் மொழிகுவது தாளும்’’ எனமொழிந்தேன். V ‘வாழ்க கவியரங்கு, வாழ்க கவிக்கோட்டை, மூழ்க இழிநோக்கம் மூளட்டும் போட்டி சதக விழாவென்ருல் சாதகந்தான் ஆஞல் அதற்குப் பொருளென்ன? யாரேனும் நற்புலவர் இன்னெருவர் இன்னும் இலரென்றே ஆகிறது! என்னுெருவன் வேண்டித்தான் இந்த விழவென்ருல்- சாதிமத பேதங்கள், தாய்ப்பெண்டிர் துன்பங் கள், நீதிவழி கோடல், நெடிய அடிமைத்வம் யாவுமே இன்னும் அழியவில்லை போலுமப்பா!. பூவுலகில் நானும் புதுவாழ்வு வேண் டித்தான் அக்கினிக் குஞ்சை அழகாய் வளர்த்துவிட்டேன்! தக்கத் தரிகிடதோம் தாளம் தவறியதே!...”* ஏனே கவிமன்னன் இப்படியாய்ச் சொன்னவுடன் மேனுேக் கியலிழி கள் மெல்லெனவே மூடினவே1. நோக்கி அவனுருவை நீள்நேரம் நானிருந்தேன். ஏக்கப் பெருமூச்சில் எண்ணில் விழித்தான்! தொடர்ந்திட்டேன் நானுடனே: r
‘தங்கள் விழாவை நடத்தும் உரிமையினை நாங்கள் பெறவிலையா?" -
* பெற்றீர்! மிகப்பெற்றீர்!- பேருலகில் சாதியினைப் பற்றிப் பிடித் திழுக்கும் பண்டாரம் என்னெதிரி; நாஸ்திகன் என்னெதிரி; நாசகாரன் பேரெதிரி; மண்ணை மதியாதான் மன்னிப் பிலாஎதிரி; இத்தனைக்கும் கீழாய் இருக்கின்ற நாடதனைக் கொத்திப் பிளப் பவனே கூடாக் கொடுமெதிரி1. தேசீய ஒற்றுமையைத் தேடியவன்
(22ம் பக்கம்)
பூபாளம் 19

Page 12
treets inters நூல் விமரிசனம்
பலஸ்தீனக் கவிதைகள்
தொகுப்பு: கவிஞர். எம். ஏ. நுஃமான்
மொழிபெயர்ப்பு: கவிஞர்கள் எம். ஏ. நுஃமான், இ. முருகையன்
வெளியீடு: வாச வெளியீடு 11,
கல்முனை-6. alfarw 15uT | O VM 今非效妹妹妹妹妹 *非畔朱今非涉非分丰津
தாமரை விருதுபெற்ற கவிஞர் மஹ்மூட் தர்வி வின் 8 கவிதைகளும், பெளஸி அல் அஸ்மாரின் 2 கவி தைகளும், றஹீட் ஹாசைனின் 3 கவிதைகளும், சலீம் ஆ"ப்ருனின் 2 கவிதைகளும், நசறத் மாநகரசபை மேயராகத் த்ெரிவுசெய்யப்பட்ட (1975) தெளபீக் சையத்தின் 2 கவிதைகளும், அந்தொய்னே ஜபாழுவின் 1 கவிதையும், மோஷே டயானுல்,"இவரின் ஒரு கவிதை 20 கமாண்டோக்களுக்குச் சமம்" என ஆச்சரியம் விதைக்கிப்பட்ட பெண் கவிஞரான பத்வா துகானின் 3 கவிதைகளும், சமீஹ் அல் காசீமின் 7 கவிதைகளும், மூயின் பசைசோவின் 2 கவிதைகளுமாக மொத்தம் 30 கவிதைகளின் (ஆங்கிலத்திலிருந்து) மொழிபெயர்ப் பாகும் இந்தப் “பாலஸ்தீனக் கவிதைகள்'
அரபி மூலக் கவிதைகளின் ஆணிவேர், இந்த மூன் ரும் பிறப்பிலும் ஆழமாக நிலை கொண்டிருக்கிறது. பாரதியின் சுதந்திரதாகத்தைவிட இந்தப் பாலஸ்தீ னியக் கவிஞர்களின் தாகம், பாலைவனத்துத்தாக மாகவே இருக்கிறது. உதாரணத்துக்குச் சில வரிகள்:
*பட்டினி வருத்தும் போதிலோ
என்னைக் கொள்ளையடித்தவன் தசையினைப் புசிப்பேன்" - மஹ்மூட் தர்வீஷ் 'காய்ந்துபோன ஒரு கோதுமைக் கதிரின் விதைகள்
பூபாளம் 20
i
i
v
l
டு

கோடிக்கணக்கான பேசிய கதிர்களால்
சமவெளியை நிரப்பும்"- மற்றமுட் தரிவிஷ்
*எனது நண்பனே! எனது சொந்த நாட்டினை விட்டுப் போகுமாறு ༣ நீ என்னைக் கேட்க முடியாது!’’-
பெளஸி அல் அஸ்மார்
“எதிர்ப்படும் ஒவ்வொரு கையையும் நக்கும் ஒருவனை எப்படி நாங்கள் எம்மிடை வைக்கலாம்!” -றஷிட் ஹூசைன்
* புளிக்க வைக்கும் நொதியம்போல எமது குறிக்கோள் கணியும் வரைக்கும்.”*
-தெளபீக் சையத்
* திராட்சைகளைப் பராமரிப்பவர்
w w s . ', '(. வாரிசுகளைக் கொன்று விட்டனர்'- பதிவாதுகான்
**சித்தர்கள் பலரின் மத்தியில் இருந்தேன். இன்று நான் - இந்த இருபதாம் நூற்ருண்டில் புரட்சி வெடிக்கும் எரிமலை ஆயினேன்?
- சமீyற அல் காசிம்
புதுக்கவிதைகளாலான இம் மொழி பெயர்ப்பு, நமது புதுக்கவிதையாளர்க்கு - பொதுவில் கவிஞர் கட்கு-ஓர் அருமையான சிந்தனை விளக்காகும்,
*சமுதாய விடுதலை கோரிப் பேசும், எழுதும் இந் திக்கும் அனைவரும் இந்தக் கவிதை நூலின்சாரத்தை உணர்ந்து கொண்டார்களானல், 'ஈழத்துச் சிந்தின் கள் என்று ஒர் அரிய பொக்கிஷத்தை நாமும் படைக் கலாம்’ என்று கூறுவதன்மூலம், நாம் அதிகப் பிர சங்கி என்ற பட்டத்தைப் பெறுவதுகூட நம்மிடையே சாத்தியம். -விருச்சிகன்
பூபாணம் 21
s
器婴 楼 羲′至 俄 རྒྱུ་ཞ༈ 翡器。影 " ་ 商 $ 岳 S) 因 等 ཟ6 S 敏 器)朗 s द्वै ९ C - S. 鳕。源 德寸宝 每 総 己 を གླུ་ཉི་ ༥ སྤྱི་ སྡེ་ SS હ S માં YS 3 |
བ ལྕེ་ Gs
淡盟
ト b6 Yr~0
·链 黑篮 凯 བུ། བྱེ་ هb es S.
ܘܘ S (இ

Page 13
(19ம் பக்கத் தொடர்ச்சி) பாரதிநான்! கூசுகிறேன் இப்பகைவர் கொண்டாட என்பெயரை! என்னை இகழத்தான் இம்மனிதர்க் குண்டுரிமை என்னைப் புகழவெனில் என்நண்பர்க் காகுமது”. என்ற கருத்தொன்ருல் என்னை மடக்கியதும், * இன்றெல்லாம் எங்கள் இலங்கைப் பரப்பில் கவிதை உலகமது கண்ணயர்ந்து தூங்கும்! நிவர்த்தி செயவுமொரு நேர்வழிதான் என்’னென்றேன். * நாட்டில் பலருக்கும் நற்கவிதை ஞானமில்லை; ஏட்டில் வருதற்கோ ஏடுகளும் போதவில்லை; ஏடுசில உண்டெனினும் ஏற்ற இடமில்லை; பாடுகிற சில்லோரும் பன்னுள் ஒரேபொருளை மாவரைத் தேய்க் கின்ரு: ; மாற்றம் சிறிதுமிலை! ஆவலுடன் யாப்பணியை ஆள்வோர் மிகச் சிலரே! பாவில் இனம்பலவாம்; பாடும் கவிஞரவர் நாவில் அவை நின்று நட்ட மிடவேண்டும் வெண்பா ஒருவர் விருத்தம் ஒருவரென்று பண்புக் கொருவராய்ப் பல்லோர் மிளிர்க! நமக்குத் தொழில்கவிதை நாட்டினிலே என்றே இமைக்கும் பொழுதெல்லாம் எண்ணிற் கவிவளரும் தேவைப் படும்பொருளே தேடிப் புனைந்திடுக! கோவைப் படுத்தற்குக் கோச்செந் தமிழ்கொள்க! தீப்பிடித்த சூடு திகழட்டும் அத்தமிழில்! யாப்பாம் படிகொண்டே யாவும் அளந்திடுக பாவலம் ஓங்குநற் பத்திரிகை வேண்டுமினி; தேவை கவியரங்கு திண்ணை தெருவெல்லாம்! போட்டிக் கவிபாடும் பொற்காலம் வேண் டியதே! நாட்டில் பணக்காரர் நல்லுதவி முன்வேண்டும் நாடகங்கள், வானெலி, நாதப் படங்களெல்லாம் பாடல் களுக்கென்றும் பாவல ரைத் தேடவேண்டும் சின்னஞ் சிறுகோட்டுள் செல்லும் கவிஞ ரெலாம் நன்னெஞ் சுடையாராய் நண்ணில் கவிவளரும்!" என்றவனை நான் நோக்கி, ‘எங்களது நாட்டினிலே குன்ருய்க் குவிந்து வரும் கொம்புப் புதுக்கவிதை தம்மால் மரபுப்பா தாழ்ந்து மடிகிற தாய்ச் செம்மரபுப் பாவலர்கள் செப்புவது பற்றி?* யென்றேன். * எம்மரபும் சாவதிலை, இன்னென்றின் ஆக்கத்தால் யாப்புப் பிழைத் திருந்தால் யான்மரபைக் கொன்ருெழித்தோன். யாப்புக் கவிவேறு; வேரும் புதுக்கவிதை! யாமும் வசனத்தால் ஓர் பிரிவு செய்துள்ளோம் ஊமை வசனங்கள் ஓங்கிக் குவிந்தால் புதுக்கவிதை ஆவதில்லை போதுறவே தேடிப் படிமம், குறியீடு பாங்காகக் கூட்டிப் புதுக் கவிதை ஆக்கப் பொலிந்திடுமே. வாழ்க, நிதம்செய்க, காலம் நிருணயிக்கும்’ என்ருன். 'கிடைக்குஞ்சன் மானம் குறைவென்ற தாலே படைப்புக்கள் குன்றிப் பலன்குன்றும் என்றெம் கவிஞருட் சில்லோர் கதையளப்பர் என்றேன். V 'அவப்போலிக் காரணங்கள் ஆகா கவிஞர்க்கு. சன்மானம் தேடு பவன் தன்மானப் பாவலன? தன்மான்ம் உள்ள தமிழன் கவிஞர்க்குப்
espazianae
பூபாளம் 22

பொன்னடை போர்த்திப் புகழுவது வேருகும் "மன்னன் கவிக்கழகு ம்ாற்ருன் பணம்மறந்து எந்தச் சிறையுமின்றி ஏற்ற கருநின்று மூழ்கித் தமிழெடுத்துச் சாதனையை முன்னேக்கிச் சார்பலனைப் பின்னக்கி யாதெனினும் அஞ்சாது யாத்துக் குவித்திடுதல். வள்ளுவன், கம்பன், வழிசொல் லிளங்கோவின் உள்ளத்தே வேருென் றுதிக்கவிலை யே’’ என்ருன் 'பாவலருக் கீற்ருய்ப் பகருவது மென்?'னென்றேன்.
‘தீவகத்தா ருக்குச் சிறப்பாக ஏதுமிலை. எல்லாமே முன்னர் இனிது படக் கூறியுள்ளேன். வெல்லும் கலையானல் வேற்றுமொழி போற்றி நிற்கும். இல்லையேல் நீவிர் இயற்ரு தொழிந்திடுக. தொல்லையேல் என்னைத் துதிப்பதையும் விட்டொழிக!'- மாகவியின் பேட்டி மலர்வித்த நோக்கத்தில் ஏகலைவ ஞனேன்
குகரவரிசை குடியும் குதிரையும் கூத்தியும் யாண்டும் குடியைக் கெடுக்குமென் றேர்.
இனிமை
(மயங்கிசைக் கொச்சகம்)
இலையசைத்துக் கொடியசைத்து இனியமண மலரசைத்துக் குலைகுலையாய்த் தொங்குகிற கொழுங்கனிகள் தழுவியழக் கிளமங்கை கலையுயர்த்திக் கவினழகு தனிைத்தழுவித் தழுவுமுடல் இளந்தென்றல் தருமினிமைக் கிணையேதோ,
9p(5
(மயங்கிசைக் கொச்சகம்)
கதிரவனின் ஒளிதழுவ மினுமினுக்கும் கடலழகும்' முதிராத இளமகளிர் முற்றியநன் முலையழகும் குதிகுதித்து மலையிலிருந் திழிந்துவரு நதியழகும் மதிதலமும் முகிலழகும் மாநிலத்தின் அழகலவோ,
“கொக்கூர் கிழான்’
கவிஞன் காலத்தின் கண்ணுடியாக மட்டும் இருந்தால் Gಲ್ಲ್ವ.: காலத்தின் கருத்தாகவும் அவன் துலங்குதல் வேண்டும் சி'க் தான் "அவன் படைக்கும் இலக்கியம்'பூந்தோட்டமாக மடு இராமல், காய்கறித் தோட்டம்ாகவும் இருந்து பயன்தர சிே" . (கலா வி.) -Li islf 3. லசுப்பிரமணியன்
பூயாளம் 23

Page 14
(17ம் பக்கத் தொடர்) 1918-செப்டம்பர் - 18ம் திகதி
மறைந்த இப்புலவர் இயற்றிய
நூல்கள் பல.
கண்டிக் கலம்பகம், கண்டிப்
பதிற்றுப்பத்தந்தாதி, கண் டி
நகர்ப்பதிகம், சலவாத்துப் பதி கம், தேவாரப்பதிகம், பதாயிகுப் பதிகம், பிரான்மலைப் பதிகம், திருப்பகுதாதந்தாதி, மெய்ஞ்ஞா னக் குறவஞ்சி, மெய்ஞ்ஞானக் கோவை, கோட்டாற்றுப் புரா ணம், உமரொலியுல்லாஹ் பிள் ஆளத் தமிழ், காரணப் பிள்ளைத் தமிழ், சித்திரக் கவிப்புஞ்சம், பிர பந்த புஞ்சம், ஆரிபு மாலை பேரின்ப ரஞ்சிதமாலை, ஞானப் பிரகாசமாலை, புதுமொழி மாலை திருமதீனத்துமாலை, வினுேதபத மஞ்சரி, நவமணித்தீபம், சந்தத் திருப்புகழ் முதலாய பல நூல்களை இப்புலவர் இயற்றியுள்ளார் என் முல், படிப்போர் மூக்கின்மீது விரலை வைப்பர்.
இத்தகைய நூல்களுள் எத்தனை இன்று கிடைக்கின்றன? இன்
றைய இளந்தலைமுறை இலக்கிய கர்த்தாக்கள் எத்தனைப்பேருக்கு இத்தகு பனுவல்கள் பற்றிய தக வல்கள் தெரியும்? இந்த வினக் களுக்கு அளிக்கும் பதில்கள் கசப்
பாகவே இருக்கும். காரணம், சம்
பந்தப்பட்ட இஸ்லாமிய சமயப் பெரியார்களும், சமுதாய நலன் பேணும் அமைப்புவழித் தலைவர் களும் , தமிழ் இலக்கியப் பிரமாக் களும் இத்துறையில் போதிய கவ னஞ் செலுத்தவில்லை என்பதுமட் டுமல்ல, எதிர்கால இலக்கிய உல கிற்கு மேற்படி தகவல்களை இருட் டடிப்புச் செய்து துரோகமிழைத்
தும்விட்ட பழியும் சம்பந்தப்பட் டோரைச் சாரும்.
முன்பு இப்பாவலருக்கு முத் திரை வெளியிடும் கோஷம் எழுப் பப்பட்டுத் தொடவேண்டிய செவி களைத் தொடாமலேயே ஓய்ந்துவிட்டது. முத்திரை வெனி யிடும் எண்ணம் புறம்பட்டுப் போகட்டும். அவரின்நூல்களை
அச்சுவாகனமேற்றி, இன்றைய
தலைமுறையினரும் படித்தின்புறச் சம்பந்தப்பட்டோர் வழிவகுக் கட்டுமே!
*****జ్ఞ9999999 அறிவராயவெளியீடாக
கொக்கூர்கிழான் ST, 696) . இரத்தினசிங்கத்தின் ó . و ... م eaa ribut யாப்பியல் ""
(அணிந்துரை:
புலவர்மணி அல்ஹாஜ் ஆ. மு. ஷரிபுதீன் ஜே.பி.
GGGGGGG兴兴兴兴兴兴讼
கவிதை என்பது வாழ்க்கையை ஒரு தனித்தமுறையில் சித்தரிப் பதே. வாழ்க்கையின் சிறப்பை யும் போராட்டத்தையும் துணி வாய் நோக்கினல் கவிதை பெரு கும். * .
-ன்மர்சன்
காலம் கவிஞனைக் கொன்றுவிடும் அவன் கவிதை காலத்தை வென் றுவிடும்.
(கலா. வி.) -ஜெயகாந்தன்
பூபாளம் 24

1982-ல் வலம்புரிக்கவிதா வட்டம் நடத்திய கவிதைப் போட் டியில் வெற்றி நிலைக்குத் தெரிவு செய்யப்பட்ட பதினறு கவிதைகளை யும், வகவத்தின் அனுமதியுடன் இவ்விதழிற் பிரசுரிக்கிருேம்.
மூலப்பிரதிகளில் உள்ளன போலவே இக்கவிதைகள் பிரசுரிக் கப்படுவதால், எழுத்து, சொல், பொருள், யாப்பிலக்கணப் பிழை
பூபாளம் 25
களுக்குப் "பூபாள மோ ‘வகவமோ பொறுப்பல்ல- <敦一T、
வலம்புரி விருது பெறும் முதற் பரிசுக் கவிதை
] Տ O .ܪܶܗܿ
༔ ༔ மேட்டு வட்டை இத்
SS3 šoši * பாண்டியூரன் ! : :S G š GS
Tiqy, 书 šš§ SSS is 窗楞 号 倭岛壁瀑 வாத்தியார் ஐயா வணக்கம். நெடுநாளாய்ச் 捷酋德溪 சாத்திரம் பார்க்கவும் சந்தித் துரையாடி 健尋 நேர்த்தியாய் நாட்டு நிலைமை யறித்ற்கும் Si காத்திர மான கடிதமொன்றை நும்கையாற் štį கோர்த்து எழுதவும் காத்திருந்தோம்; சந்தர்ப்பம் | RGS கைகூடிற் றின்று, பலனும்கை மேல்என்போம். སྤྱི་སྤྱི་ | 堡霍器引 கைலாயர், காதர், கரோலிஸ், கலந்தர்லெவ்வை, | । ई S) is விக்டர், வயிரர், விஞசி, சுதுபண்டா, 徽 ؟ ܬܸܒs •
e a. . 0. 堡宠 @或 புள்ளயான், தம்பியப்பா, புஞ்சி நிலமையென்போர்த் 5 ல் 's எல்லோருங் கூடி இதனையா லோசித்தோம். 号 iss மேட்டுவட்டை எங்கள் விளைபூமி பாய்ச்சலின்றி, 3. 8. 'மாட்டுவட்டை யாகி மலடாய்க் கிடக்கிறது! s 墨髓 " : : - பொன்விளை பூமியிது பொக்கிஷமே யூருக்கு. སྤྱི་ እ፰ ፍ፣ தின்பார்க்குத் தேனளிக்குந் தெய்வீக வாவி |誉奖 பெரியகுளம், சின்னக்குளம், ஒட்டன்குளம், மற்றும் བྱུ་ き営器 நரிக்குளம், வட்டிக் குளமுதலாய்ப், பிள்ளை s $a崇 வளத்தான் குளமும், நபியான் குளமும் s s+ இழவாகி எத்தனை ஆண்டுகள் எத்தனையோ!. 3ā சித்திரைப் புத்தாண்டு பத்துக்கு மேல்,ஐயா! wo
SGS

Page 15
முத்தக்காச் சிக்கோரை, மூதேவிப் புல்வாழை, சண்டியன் பற்றை சடைத்த பசைமுள்ளி, விப்பிரி, சாப்பை, விறைத்த அறுவகைத் தப்பிலிகள் ஆளுந் தறையாகி விட்டதையா கிட்டங்கி யாற்றைக் கிழித்து "மெஷின்"பூட்டி திட்டப் படியே திறந்து நீர் பாய்ச்சநெடு வாய்க்கா லமைத்தார் வருஷங்கள் ஏழாச்சு பாய்ச்சலும் இல்லை. பலகா ரமும்இல்லே குளங்க ளுடைந்தும் குண்டுகுழி தேய்ந்தும் கிழவன் வாய்போல இழவாய்க் கிடக்க விடிவா உழவர்க்கு? விண்ணப்பம் ஒன்று வடிவா யெழுதி உதவுங்கள் வாத்தியார்! சள்ளற் குழிவயல். சந்திப்புப் பள்ளவயல் முல்லமுத் தட்டு, முதுசொக் களப்பூமி, சேற்றுக் குட்ாவல்லை, சின்னன் புரம்வெளி ஆற்றுவாய்ப் பூமி, அரசடிக் கீற்றென்ற பொன்விளை பூமியின்று பொட்டல், வெறுந் திட்டல் என்னையா குட்டல்..? எழுதி உதவுங்கள் ஒப்பமிட்டு நாங்கள் உசக்க அனுப்புகிருேம் தப்பாது உங்கள் தமிழ்செய்யுங் கைராசி இன்னும் ஒருபகடி என்னவென்று கேளுங்கள் சொன்னுற் சிரிப்பு, சுவையான சம்பவம். கிட்டங்கி தொட்டுக் கிடந்த துறைநீலன் கட்டை உயர்த்திக் கணஞ்செய்ய, ஒவ்வோர் வருஷமும் மாரி வருஞ்"சீசன்" பார்த்து தெருவில் மண் கொட்டித் தீர்க்கின்ருர்! அன்னர் பொறியியல் நுட்பப் பொறிவையென் சொல்ல!. அறிவுத் திறனுல் அரசபணம் ஆற்ருேடே! கூட்டங்கள் போட்டார்; குழுவுந் தெரிந்தெடுத்தார்: நாட்டின் விளைவுதனை நாட்டல் கடனென்ருர், கேட்டு ரசித்துக் கிழநரி பின்சென்ற ஆட்டுக்கு நேர்ந்த அவலந்தான் ஈற்றினிலே மாடுகன்று விற்றும், மனவாசல் தாலி நகை ஈடுவைத்தும். எங்கள் இடுப்பொடிந்து ஏங்குகிருேம் மாரியும் பொய்த்து மழையும் மறுகிவிட ஊரார் பழிச்சொல் ஒருகொள்ளை யெங்களுக்கு மோடியாய் வேளாண்மை செய்ய முனைந்தக்கால். போடிமார் நாங்கள் புதுப்பணக் காரராம், வேளாண்மை யென்ரூல் விருந்தாம், களவட்டி
பூபாளம் 26
i
i

பாழாவ தெல்லாம் “பவருணி போக்காலாம்! ஏழை எளியோர்க்கு எள்ளுந் தெறியாமல் நாளைவா வென்று நறுக்காய்த் தறிப்போமாம்! கூலிக்கா ரர்க்குக் கொடுப்பனவு செய்கையிலே போலி மரக்கால் பொருத்தி அளப்போமாம்! பட்டடை நெல்லிற் பதர்கலந்து விற்பதொடு கட்டும் வயலிற் கதிர்பொறுக்குங் கைதிருகி உப்பட்டி யில் போட்டு ஒட அடிப்போமாம்! எப்படிச் சங்கதி.? எல்லாம் எவர்சல்லி வாத்தியார் ஐயா! வடிவா யெழுதுங்கள் நேர்த்திக் கடன்வேணு மென்ருலும்
நாங்கொடுப்போம் மேட்டுவட்டைப் பூமியிது மீண்டும் பொலிவுபெறக் காட்டுக தங்கள் கடமை நெறியஃதால், பாய்ச்சல் வடிச்சல் பணிசெப்ப மாகவும், காய்ந்த குளங்கள் கனிந்து வளம்பெறவும், ஏப்பம் விடாமல் இதற்கான சல்லிகளைச் செப்பமாய் ஓர்ந்து செயற்படுத்த வேண்டுமென்று கட்டாய மான கவனத்தை ஈர்த்தற்கு வட்டை விதானையார் ஊடாக..மேலே கருணை பொழியும் கனந்தங்கி யுள்ள வருணனுக்கோர் ஆழ்ந்த மடல்.
I அன்பு மகளே 2தி
ஆS அபிராம
1982 V \y (2) செ. குணரத்தினம்
அன்புமகளே அபிராமி, உன்னுடைய இன்ப வதனத்தை எழுத்துகளில் கண்டேன்நான்! அழகான ெையழுத்தில் அம்மாவைப் போல்நீயும் பிழையின்றி எழுதுகிருய் பெருமையாய் இருக்குதடி! ஆயிரம்தான் படித்தாலும் ஆசையுடன் நாம்பேசும்
guratib 27

Page 16
தாயிலும் மேலான தமிழை மறக்காதே! நோய்பிடித்து நான்பாயில் நொந்து படுத்தாலும் நீபேசும் தமிழ்க்கேட்டால் நிச்சயமாய் நான் பிழைப்பேன் அன்புமகளே அபிராமி, நான் இங்கே! அம்மாவும் நீயும் அங்கே இருந்தாலும் எப்போதும் உங்கள் இருவரையும், நம்நாட்டில் கற்பை உயிராகக் காக்கும் தமிழ்ப் பெண்கள் அத்தனை பேரையும்தான் அன்ருடம் நினைக்கின்றேன் எத்தனை சமாதானம் எவர்சொல்லிப் போனலும் அன்று தமிழ்மக்கள் அடைந்த கொடுமைகளை என்றும் மறக்க இயலுமா சொல்மகளே! நாளைக்கும் அதுபோல நடக்கலாம் ஆனதினல் கோழைகளாய் வீட்டுக் கொல்லைப் புறமோடி கற்பைப் பறிகொடுத்துக் கண்ணீர் விடவேண்டாம்! அற்பர்களின் முன்னுல் அனலள்ளி வீசுங்கள் கற்பின் மகிமையினைக் காட்டிப் படமெடுத்து சர்ப்பமாய்ச் சீறிச் சாகுங்கள் அதுபோதும்! அன்பும்களே, ஆத்திரத்தில் ஏதேதோ! .- முன்நடந்த சம்பவங்கள் மூண்டபெரும் நெருப்பாய் நெஞ்சில் கிடந்து நினைவை உருக்கியதால் கொஞ்சம் உணர்ச்சிக் கொதிப்பால் எழுதிவிட்டேன்! ஈழத்தில் வாழும் இருஇனமும் ஒன்ருக கால்மெல்லாம் சேர்ந்து களிக்கின்ற புதுவருடம் போலென்றும்வாழ, பொதுவுடமைக்கோட்பாடு ஆல்போல் தளைத்து அறுகுபோல் வேரூன்ற இனவெறியும், மொழிவெறியும் இல்லாமல் ஓடிவிட மனதிலெண்ணி வாழுகின்ற மக்களிங்கே இருஇனத்தின் மத்தியில்ே வாழ்ந்தாலும் மாடுகளாய்ச் சிலர்தங்கள் புத்தியில்லாக் காரணத்தால் போக்கற்றுத் தங்கள்
சுயஇச்சைத் தனத்தாலே சூழ்ச்சிகளால், போட்டிகளால் பயம்காட்ட, நம்நாட்டில் படுகொலைகள் தீவைப்பு பாதகச் செயல்களெல்லாம் பரவியிங்கே வாழுகின்ற பாவிகளாம் எங்களைப்போல பலமக்கள் உத்தரிக்கும் வ்ேதனையை நினைக்கையிலே வேக்காடு எனது நெஞ்சை வேகவைக்க நான்கொஞ்சம் வேட்கையினல்
بر எழுதிவிட்டேன்! நல்லது இப்போது நீகேட்ட வினுக்களுக்கு
பூபாளம் 28
i
-

மெல்ல வருகின்றேன்; மெய்தான் அபிராமி, ‘பாரதிக்குவிழாவெடுத்துப் பாராட்டி வீதியெல்லாம் 1 ஊர்கூட்டிப் புகழ்ந்தாலும் உலுத்தர்களின் நெஞ்சுக்குள் : வாழுகின்ற சாதி வருத்தங்கள் Lost Og! ஆளுக்காள் மோதும் அவலங்கள் தீராது! காட்டிக் கொடுக்கும் கயமைகள் போகாது! போட்டி பொருமைப் பூசல்கள் ஓயாது! சுயநலங்கள் எல்லாம் சுட்டாலும் சாகாது! அயல்நாட்டு மோகங்கள் அவித்தாலும் வேகாது! பழையகதை பேசும் பண்டிதப் பழக்கங்கள், உழைக்காமல் முன்னேறும் இதோஉபதேசங்கள் தலைகுனிந்து வாழும் தாழ்வு மனப்பான்மை கலைகளிலே நாட்டம் காட்டாத அறியாமை எல்லாமே வாழுமப்பா எதுவுமே அழியாது! சொல்வார்கள் மேடையிலே செய்பவர்கள் யாருமில்லை! இப்படி மனிதரிங்கே இருக்கையில் பாரதிக்கு எப்படி விழாவெடுத்து ஏற்றம்நாம் காணுவது?’’ என்றெல்லாம் கேள்விபல என்னிடத்தில் கேட்டிருக்கும் அன்பு மகளே அபிராமி, உன்னுடைய கேள்வியிலே அர்த்தங்கள் கிளம்பி வெடிக்கிறது! பாழ்பட்ட சமூகத்தின் பழக்கங்கள் மாறிடவே பாரதியார் அன்று பாடுபட்டார் என்பதுமெய்! பாரெல்லாம் இன்று படுமோசம்தான் மகளே!, மாருத தலைவிதிபோல் மாருத வாழ்க்கையினை ஆறுகடல் பொங்கிவந்து அழிக்கட்டும் சாபமிடு ஆனலும் பாரதிக்கு நூற்ருண்டு விழாவெடுத்து தேனுன அவன்கவிதை தினமோதிப் பாடுவதால் தானக உருவெடுக்கும் தமிழுணர்வு, பேடியையும் ஆனனப் பட்ட எட்டப்பர் மூளையையும், தட்டித்திருத்தி தமிழ்வாழப் பாடுபட கட்டுப் படுத்திக் களத்திற்கு இழுத்துவரும்! என்பதனல்மகளே இதுபோல தமிழ்விழாக்கள் என்றும் நடக்கட்டும்; எதிர்காலம் பூக்கட்டும்! என்றெழுதிக் கடிதத்தை இத்தோடு முடிக்கின்றேன். உன்பதிலைக் கண்டால்தான் உறக்கம் வருமெனக்கு! இப்படிக்கு உன்னை என்றும் நினைத்திருக்கும்
சுப்பிரமணியப் பாரதியின் சொந்தக்காரன்!
பூபாளம் 29
:
i

Page 17
*\%ՋԱ5 C S.
1982
நீ எழுவாய்
(3) 5T. D. செலலத்தம்பி
காவியம் யாத்திடும் கைகளுக்கோர்பணி
காத்துக் கிடக்குதடா தம்பி ஊதியம் பெற்றுக் களித்திடுவோர். தமை
உழைக்கப் பணித்திடவா. ஏழை இரப்பிணி என்னும்பிரிவுகள்
மாந்தரில் ஏதுக்கடா தம்பி கூழைக்குடிப்பவன் நாழுமுழைத்து-ல்
நைந்து மடிந்திடவோ, கூழைக்குடித்துக் குவலய பாரத்தை நாளும் சுமப்பவரை தம்பி ஏழை களாக்கி இரந்தி டச்செய்தவர்
ஈனத்தை வீழ்த்திடவா. வர்க்கப்பிரிவுகள் தம்மைவகுத்திங்கு வைத்தவன் வாழுகின்ருன் வர்க்கத்தின் தாக்கத்தால் தன்னை இழந்தவன்
வாழ்வில் கதறுகின்றன். அன்பின் மகத்துவம் பேசிடுவார்தினம் ஆக்கத்திலாங் கதைகொள்வதில்லை துன்பத்தில்மானிடர் வீழ்ந்துவிட்டால் தம்பி தோள்கொடுக்காது விதியுரைப்பார். சாத்திரம் ஊழ்வினை சாட்சி கொள்வாரிவர்
ஆக்கிய தத்துவப் பாதையது கோத்திரம் சூத்திரம் சாற்றிவைத்து மக்கள் சேர்க்கையில் நூறு பிரிவுரைப்பார் சாதிப் பிரிவுகளால் வரும்கேடுகள்
கொஞ்சமல்லக்கோடி தம்பி ஆதியில் மானிடர் யாவருமொன்றென
ஓதி உணர்த்தி விடு.
பூபாளம் 30

சாதிக் கொடுமைகள் மோதுமிடங்கலை
நீதியின் பக்கமதாய் நின்று மோதி அழித்துச் சிதைத்தெழுவாய் தம்பி
இந்தப் பூமி சிறக்குமடா. கிாடு மல்கள் கடல்களெலாமிங்கு
ஆற்றுந் தொழில் பயில்வாய்தம்பி ஆடும் பிரபஞ்ச சூத்திரம் யாவையும்
கற்றுத் தெளிந்தளிப்பாய். போரி இன வென்முகவேண்டும் மண்ணில்
மானிடர் வாழ்வு சிறந்திட தம்பி பாரினில் மேன்மைகள் செய்தாலுயர்
பண்பில் மிளிருமிவ்வையம் குண்டுகள் மண்டிக் கிடந்திடும் நாட்டினை பூண்டோ டொழித்துவிடு தம்பி
தொண்டென வேருெரு மார்க்கமில்லை இது
சத்திய மென்றறிவாய். குந்தி இருக்கக் குடிநிலமற்றவர் வீதியில் தூங்குகிருர் தம்பி சந்ததியாய்த் தொடரிம்முறை கேடுகள்
போக்கிட நீ எழுவாய். சந்திதெருவெங்கும் சத்திரம்கட்டி
சோம்பல் வளர்த்திடவேண்டாம் தம்பி சிந்தனையாற் தொழிற்சாலைகள் வைத்தே
செல்வமிகுதொழில் கற்றிடசெய்வாய் செய்தொழில் ஒன்றில்லையானல் பஞ்சம்
மஞ்சமமைத்திடும் தம்பி உய்யும் வழிஎன நம்பி இதை
ஏற்றிடச் செய்திடவேண்டும். எல்லோர்க்குமெல்லாமும் ஆனல்இங்கு
ஏற்றத்தாழ்வென்பது மேனே தம்பி நல்லோர்கள் எண்ணமிதாகும் என நானிலமீதிலுரைத்திடு நன்ருய். பட்டம் பதவியைவைத்தே பணம் பண்ணநினைப்பதுதீதுதம்பி திட்டம்வகுத்து முன்னேறசெயல்
ஒன்ைறமுன்வைத்து நீவாராய். ஒண்ணில் வளம்பலஉண்டு ஆசை
தீயில்பொசுக்கி விடாமல்தம்பி
y, L FTOHTíb 31
i
割
གྷི་
i
i
;

Page 18
எண்ணித்துணிந்திடில் ஏற்றம்உன்தன்
காலடியில் சரண்ஆகும்: பெண்ணெனில் நிடைஎனப்பகரும்றுெ
பித்தருக்கே உரைப்பாய் தம்பி மண்ணின்மகத்துவம் பெண்ணிடம்தானெனும்
ண்மை உணர்த்திவிடு. பெண்கள் விடுதலைதான் பெறுவாரெனில்
பேதமைதூங்கிக் திடந்திடுமாதம்பி கண்ணினைக்குத்திக் கெடுத்துவிட்டேஉயர் வாகிய மண்ணெனல்தான் தகுமா? மண்ணைச்சிறையிடும் மாளிகைவாசிகள்
ண்ணத்தை மாற்றிவிடு தம்பி இபண்ணைச்சிறையிடும் பித்தருக்கும் உயர்
போதம் அளித்திடவே எழுவாய். மண்ணில்மனிதரைப் போலுயர்வாயொரு
இன்பப்பிறவி உண்டோ தம்பி எண்ணத்திலே இடராகிய வண்ணங்கள்
பூத்திட்ல்தான் தகுமா?, ஆற்றல்மிகுந்தவர் மானிடர்தாமெனும்
2ண்மை"அறிந்தெழுவாய் தம்பி ஏற்றமெல்லா Sங்கள் கைகளிலே என
வீறுகொண்டே எழுவாய். ஆதிக்கபோதையில் மீறித்தினமிங்கு
ஈனம்புரிப்வரை தம்பி மோதி அழித்துச் சிதைத்துவிடுஇந்த மேதினி எங்கும் அமைதியுறும் மானிடம் வாழ்ந்திடவேண்டுமென்றே இங்கு
சங்கம் முழங்கிடுவாய் தம்பி : மானிடம் வாழ்ந்திட வில்ல்ையெனில் இந்த
மண்ணை அழித்துவிடு. ஆற்றல் மிகுந்த நின்கைகளிலே
புவிப்பாரம் கிடக்குதடா தம்பி ஏற்றமிகுந்திட்ட மானிலமாயிதை
மாற்றிட நீ எழுவாய். நர்மதா வெளியீடாக மேமன் கவி'யின்
ஹிரோஷிமாவின் ஹீரோக்கள்
(புதுக்கவிதைத் தொகுதி) விலை ரூபா 18
உதடு தெறித்த வார்த்தைப் பாடல்கள் மரணிக்கும்" அணிந்துரை:
கவிஞர் மு. மேத்தா
ബത്ത
பூபாளம் 32
i
o
G
歇
Գ

*%Էմի மஞ்சு முட்டாத %倉、劉
áð မှီပြဲ` முகடுகள்
1982, (4) N ם இரா. சடகோபன் E
காலம் யுகங்கலெல்லாம் காற்ருேடு பாட்டிசைக்கும் தேனின் இனிமையெல்லாம் வாழ்வில் துலக்கமிடும் பூவின் இதழ்களைப்போல் புதிய வாழ்வொன்று படைத்தற்காய் காத்திருந்தோம். ' காத்திருந்தோம்.காத்திருந்தோம்.
வசந்தம் ஒன்றைத் தேடிவந்து வான்முகட்டைப் பார்த்திருந்தோம் வான்முகட்டைப் பார்த்திருந்து வீண்கோசம் போட்டிருந்தோம் வெண்மதியை நாடிவந்து துன்மதியை அடைந்துவிட்டோம் துன்மதியை அடைந்ததனல் துயரங்களைத் தொடர்கின்ருேம், தங்கத்தேரொன்றை தேடி இழுக்க வந்தோம் தேடி இழுக்க வந்து தேடாமல் நின்றுவிட்டோம் வெண்கொற்றக் குடையின்கீழ் வேழம் ஏறிவந்தோம் வேழம் ஏறிவந்து வேதனையைத் தானடைந்தோம் பூமியிலே புதுவரசு புதிதாய்ப் படைக்கவந்தோம் புதிதாய்ப் படைக்கவந்து பூமியின்றித் தவிக்கின்ருேம். அத்தாணிமண்டபத்தை அசுரர்களால் அலங்கரித்தோம் அசுரர்களால் அலங்கரித்து அவதிகளைத் தானடைந்தோம் பித்தர்களைப் பிடித்துவந்து பேயோட்டக் கூறிவைத்தோம் பேயோட்ட வந்தவர்கள் பேய்பிடித்துப் போஞர்கள் உன்னதங்கள் எம்வாழ்வில் ஊமைகளாய் இருப்பதனல் சன்னதங்கள் எல்லாமே தலைகீழாய் மாறினவோ? பொருள்தேடி புகழ்படைக்க பூமியிலே பிறந்தோம் பிறந்துவிட்டகாரணத்தால் பிச்சைக்காய் அலைந்தோம் மண்ணுழுது பொன்படைக்க மாடுகளாய் உழைத்தோம் மாடுகளாய் உழைத்ததனல் மனம்நொந்து செத்தோம். சதைரத்தம் எலும்பெல்லாம் வியர்வையாய் வடித்தோம்
பூபாளம் 33

Page 19
வியர்வையாய் வடித்துவிட்டு வீண்துன்பம் அடைந்தோம் காலக்கண்ணிரை மாலைவரை வடித்தோம் மாலைவரை வடித்தபின்பும் மனத்துயர்தான் அடைந்தோம்
உலகெங்கும் உன்னதங்கள் பொங்கிவரும் இந்நாளில் தாமிங்கே உரிமைக்காய் கடுஞ்சமர்தான் புரிகின்ருேம் மேற்கே வளருகின்ற மேன்மைக் கலைகளை நாம் வியக்கின்முேம் அவர்வியக்க நாமிங்கு அரிசியைத்தான் தின்கின்ருேம் பார்தனிலே பழமைக்கும் பழிதீர்க்கும் மடமைக்கும் முடிவுகட்டி தொழிலுக்கும் தோழமைக்கும் சிறப்புநல்கி தொடர்ந்த பெருஇன்ப மெங்கும் பாய்ச்சல் வேண்டும். எங்கள் உரிமைகளை நாங்கள் பெறுவதற்கே எண்ணற்ற சிக்கல்கள் சிக்கல்களே போராட்டசிந்தனைக்கு முதல்படிகள் தம்முள்ளே உணர்ச்சிகளைத் தணித்தற்காய் போராடி போராட்ட சாகரத்தில் புரையோடிப் புண்கண்டோர் புண்கண்ட காரணத்தின் தாற்பரியம் புரிந்துகொண்டு புதியதொரு வெற்றிதனை நமதாக்கிக்கொள்ளல்
வேண்டும். தலைகீழாய் மாறியதோ இந்தநாடு தகைமைக்கு இடமில்லை கொஞ்சம்கூட தலைமேல்தான் ஏறிவிட்டார் தருக்கர்தாமே தனமறந்து வாழுகின்ருர் தமிழர்தாமே அலைமேல்தான் சிறுதுரும்பை எறிந்துவிட்டால் அதனைப்பின் காண்பதென்ருல் அரிதோ அரிது மலைமேல்தான் அமைந்துவிட்ட விளக்காய்நின்று மதிகெட்ட நமைஎறிந்தார் அலையின் மீதே. உம்மவர்கள் எம்மவர்கள் அனைவருமே பேதைகள்தான் தம்முள்ளே ஆயிரமாம் பேதமையை உள்வைத்து தம்மினத்தின் விடுதலைக்காய் தவிப்பாகத் தவிக்கின்ருர்கள் மலைமுகட்டில் இருந்துவிழும் ஓரளுவி மண்ணில் வீழ்வதனல் நோகுமே என நினைத்தால் தினத்தததனல் மாத்திரமே வீழாமல் இருந்திடுமா? இந்த மனிதர்களும் இப்படித்தான் பிழையான முடிவுகளில் முட்டிக் கொள்வதனல்
பூயாளம் 34

முட்டியதால் மாத்திரமே நொந்தவர்கள் ஆவார்கள்.
நெல்லுக்கிரைத்த நீரால் புல்லினங்கள் வாழ்ந்திடலாம் புல்லினங்கள் வாழ்ந்திடவா நெல்லுக்கு நீரிரைத்தோம். அந்தகாரம் எம்வாழ்வில் சூழ்ந்துவிட்டபின் நீண்ட மெளனங்களும். பெருமூச்சுக்களுமே எங்கள் ஜீவத்துடிப்பினை பிரகடனப்படுத்துகின்றன. புதிய காலையின் "புலர்வு" என்பது அமைதியான வாழ்வின் "விடிவாக இல்லாமல் அபாய அறிவிப்பின் ஆரம்பமாகவே உள்ளது. என்றெமது தலைவர்களின் வழிகாட்டல் தவறியதோ அன்றே நம்வாழ்வின் வசந்தங்கள் மறைந்துவிட போராட்டவக்கிரங்கள் ஆர்ப்பரித்தல் தொடங்கியது மனிதரது மனநிலைகள் கீழ்நிலைக்கு வழிகாட்ட இன்றுநாம் சீரழிவின் உச்சநிலை வந்துவிட்டோம் மனிதர்கள் வாழுகின்ற சூழ்நிலையே இங்கில்லை மனிதரது மனநிலைகள் மகிழ்ச்சியின்றித் தவிப்பதனல் மாற்ருரின் உரிமைகளில் மண்போட வந்துவிட்டார் மனநிலைகள் மாறும்வரை பொறுத்திருத்தல் முடியாது உணர்ச்சிகளின் போராட்ட எல்லைவரை வந்துவிட்டோம்.
வளர்கின்ற வறுமைக்குக் குறைவேயில்லை வாய்த்ததோர் துன்பத்துக்களவேயில்லை. தளர்கின்ற உரிமைக்குத் தரமேயில்லை. அக்கினிகள் வருணனுக்கு அடிபணிய மறுத்திருப்பின் அவைன்ம்முள் வெளிப்பட்டு உழுத்தர்களைப் பொசுக்கட்டும்.
அஞ்சலி க. கைலாசபதி இலக்கிய நதியில் இறங்கிக் களித்து முழக்கிய ஒலியால் முந்தைப் பயனென தமிழ்வளர் உலகின் தரத்தினர் பலரும் திமுதிமு வெனவே தீர்த்த மளைந்து Lumrpurg) ஆண்டில் ப ர வ ச த் து . நீர்பிளந் தாடி நீந்தி டும் பொழுதி ல்,
ஐயோ, கைலாஸ் அமிழ்ந்து தெய்வம் தேடித் தேரிவர்த் தனையே!
-பூபாளம்
பூபாளம் 35

Page 20
§%քվի பஞ்சங்கள் போக்கிக்
G/*§ கொஞ்சவந்தாள்
భ புத்தாண்டுப் பெண்
1982落 (5)
சோல்கள் தோறுந் துவண்ட கிளையெலாம்,
மாஜலகள்", "காப்புகள்", "தோடுகள்', 'மூக்குத்தி ஒட்டியா னங்கள்", *சரடுகள்', 'தண்டைகள்", கட்டியே தொங்கின.:வைரமும் முத்தும், பவள்மும் பொன்னும் பனிச்சென மின்னித் தவழ இழைத்துப் பொருத்தின “ளன்னை”. இயற்கை துரிதமா யின்முக ‘நயங்கள்" கரங்களில் நட்போ டொளிர்ந்தன.
தந்தையாஞ் சூரியன் தன்கதிர் விச்சினைச் சுந்தரத் தேரொடுஞ் சோடித்தும் பாய்ச்சினுன். ஞாலத் திருளெலாம் நக்கப் ‘படுத்தன! ஆலயின் சக்கர ஆசையில் உயிர்க்குலம். கால மலரது கற்போ டுதிர்த்துங் கோல விதழ்கள்ாய் நாட்களும் பட்டன" அன்பு மிரக்கமு மின்பமு மூட்டிய - "பொன்மகள் தீயின் கொழுந்தாய்த் தும்மியே பார்வையை வீசினுள். பாசம் அறுந்ததோ..? வேர்வை ஒழுகி விசிறியின் காம்புகள் தேய்ந்து முறிந்து சிலும்பிக் கிடந்தன. காய்ந்த சருகுகள் காந்துங் கனலினுல், தீய்ந்து நொருங்கிச் சிதறிப் பறந்தன. ஆய்ந்து அழகா யடுக்கிய வீரை"யின் செங்கணித் தட்டமாய்க் கால்கள் வலித்தன. கொங்கைகள் "வேர்க்குரு முட்களால் நொந்தன. "ஏனிது இப்படிச் சுட்டொளி காலுது..? மானிட மெல்லாம் மயக்கம் பொதிந்ததேன்.? 'துர்மதி யென்னும் மடமைக் கொழுந்தனின் துர்மதிப் பிள்ளைகள் பன்னிரண் டானதில் செத்தவை யிப்போ பதினென் றிறுதியாம் புத்திரி பூமியில் வாழ்ந்து வத்ங்கிய
பொன் சிவானந்தம் *
பூபாளம் 36
i
ದಿ
حا•

*பங்குனிப் பெண்ணுள்’ ‘பழுத்த தலையுடன்
எங்குநான் போவேனென் றெங்களைக் கேட்டn ல்,
அணைக்கவா செய்வோம்.? அதனுற் பொருமி நீ அணைக்க முடியுமா எங்கள் விளக்கெலாம்.? "தீமதிப் பெண்ணே.1 திறமையின் கோடுகள் தாமதிக் காமல் வரைந்தே பழகிய w *தோழர்கள் நாங்கள்’. , பரம்பரை சந்தியாப் பாழிடங் காட்டினிர் பாதை விரசமே.! பொன்னுய் விளைந்து பொலியும் வயலெலாம், பன்னுள் மழையொறுத் தெம்விவ சாயிகள் மென்மனம் மண்ணுெடு வெம்பவைத் தீரடீ ! இன்னமும் "மின்னேர் பிடிக்க எழவிலை. ! பாடையி லுன்னையும் பயண மனுப்பிய வாடையி லேதான் வடிவுகள் தென்படும், மாய்க்கு மIலத்துச் சிந்தை யுமக்கடி.! காய் வயிறுகள் கண்டீர் நடந்தவை.! உன்னப்பன், நாமத்துக் கேற்ற நடிப்புக ளும்மிடம் சாமத்துக் கொன்ருய் வளர்ந்ததுங் கண்டுளோம். விண்ணில் வலம்வருங் கோள்களா “மொன்பதை , "மண்ணினைத் தொலைக்க” மடக்கியே ‘யோர்வழிக் கோட்டிற் கொணர்ந்தீர்’ கொடுமையும் வாழுமா..? நாட்டிற் பலபிணி நாட்டிய நங்கையீர்..! எத்தனை பெண்க ளுமைப்போற் பிறப்பினும் இத்தகு செய்கைக ளெண்ணவு மஞ்சுவர். என்ன மனுஷிநீ, ! இன்னமு முன்மனை தண்ணென வெண்ணித் தகிக்கவா சொல்கிருய்.? மேலுந் தரிக்க விநாடி எமக்கில. "பாலருந்தி வில்லேந்திப் பாதகங்கள் சாடவென வேழந் தனிலுார்ந்து வீறு விரிவடைந்து *நாளம் முறுக்கேறி நன்மைப் பயிர்செழிக்க ஆய்க்கினை தந்த இலையுதிர் மாய்வோடே தீய்ந்து 'அமாவாசை தோசையாய் வீச வசந்தமாந் தோகைகள் வாய்ப்பை விரிக்கத் திசையெலாஞ் செந்நெற் குவைமலிந் தோங்கிட துந்துபிகள் நாதந். தெருவெலாஞ் சோடித்துத் * துந்துபியும் வந்தான் துலங்கி எமைவாழ்த்திச் *செந்தா மரைக்கன்னி சீர்வழங்கப் பெற்றவணுய், மந்தாரை முல்லை மணக்க வருகின்றன். -
பூபாளம் 37

Page 21
"கும்பமென்ற ராசியிலே குருவு மிடமொன்பான் லக்கினத்தை நோக்க நடைபயின்று வாறதனுல் இக்க லகலுஞ் சமாதானஞ் செஞ்செழிக்கும் துந்துபியின் *செல்வி சித்திரையாள் வான்மகளாய்ச் சிந்தை மகிழ்வோடுஞ் சிரித்த முகத்தோடும் எங்களைக் கண்டே ‘ எளிமை யகற்ற வெனுஞ்
ங்கையினைப் பூண்டாளாய்ச் “சாதிக் கதை" யொழிக்க மங்கையரின் வாணுதல்கள் "குங்குமத்தை"
யேந்தவைக்க ங்ெகளவர் முஸ்லீம் தமிழரின மொன்றென்ற சிந்தனைகள் வேரூன்றிச் சிக்கலில்லா வாழ்வளிக்க பந்துகளாய்த் தன்னேர் இளையார் ‘பதினெருபெண்” கூட்டி வருகின்ருள் கோலம் வரைந்து வைப்போம். பாட்டிசைத்துப் பண்ணுெழுக்கிற் பால்மண்ங்கள்
தேன்சுவைக்க வாழ்வு மமைப்பாள் வழக்கி லிருந்துவந்த தாழ்வு மனங்கள் தறிகெட் டறிவுமிழும், சீதனங்கள், ஆதனங்கள், பாதகங்கள், குதுகளும் வாதம் பிடித்து வலது செயலிழந்தே சாகும். இனிமலருஞ் சந்ததிகள் சித்திரையா ளாகி வசந்த்த்தின் வாசனைகள் மொட்டவிழ்ந்தே மேகத்துச் செய்கை மிளிர்ந்து வளங்கொழித்துத் தாக மனத்து மடங்கித் தளிரோடே வெண்பட்டுப் போர்த்துள்ள * மாவிலங்கை
வாழ்வுபெற்றுப் பண்பட்டு வாலிபங்கள் பச்சைப் புரட்சியிலே பஞ்சம் பறக்கவைத்துப் பல்சுவையும் தந்தெம்பைக் கொஞ்சவந்தாள் புத்தாண்டுப் பெண். * மாவிலங்கை - இது ஒரு மரம், வசந்தத்தின்போது தளிரீன்று கிளைகள் நிரம்பப் பூத்துப்பொலிந்து அழகளிப்பது.
தமிழகத்துப் புதுக்கவிதைகளை விடத் தரமான, பொரு
ளடக்கமுள்ள புதுக்கவிதைகள் இலங்கை யி ல் வெளி வருகின்றன. G எம். ஏ. நுஃமான்
s
es'
i
சோற்றுக்காகக் கவிதைபாட மன்னர்களையும் வட்டமிட்ட காலம் ஒன்று ஒருகாலத்தில் இருந்தது. இன்று சோற்றுக்காக
அல்ல, நாட்டுக்காக, பாடும் பாவல்லார், வட்டம் அமைத்துள்ளனர். பெருவெள்ளமாகி வருகிறது நானும் ஒருவன்.
பூபாளம் 38
நாட்டுமக்கள் வளத்துக்காகக் கவிதை
சிறுதுளி
கண்டு மகிழ்ந்து பூரிப்போருள்
எம். எய்ச். எம்.ஷ்ம்ஸ்.

MŠåĝiJD &Sނި
3d65
1982
செய்வோம்
(6)
புத்துல கொன்றைப் படைத்திட நன்றே
புறப்படும் புனிதப் படையொன்று-எழும் புத்துணர் வாலுளம் பொங்குவதாலே
புதுமைகள் பொழிந்திடப் போகுதுபார்! - உன் சித்தந் தெளிந்திடச் சிந்தனை விரிந்திடச்
சீரிய கற்பனைச் சிறகடித்தே - அப் புத்தம் புதிய பொன்னுலகைத் தேடிப்
போவதற். கென்றே புறப்படடா!
இன்றே விரைவாய் நீயும் யுனக்கே என்ருேது! - மடமை அகத்தே அகிலத் தெங்கும் அடக்கி யொடுக்கும் அவலந்தீர்! - அடிமை ஒழித்தெழு! உந்தன் ஒயா உழைப்பால்
உயர்ந்தெழு! வாழ்வின் ஒளிபெறவே! - முகஞ் செழித்தெழு! சிந்தை குளிர்ந்திடச் சேவை
செய்தெழு! செகமிது தழைத்திடவே!
விழித்தெழு! வெற்றி அழித்தெழு!
முற்போக் குள்ள முன்னணி வீரர்தம்
மூல மந்திர சக்தியினுல் - கெடும் பிற்போக் குள்ள பேதமை யெல்லாம்
பெருங் குழிவீழச் செய்திடவா! - நீ கற்போ ருள்ளங் காணும் தேசியக்
கதி ரொளிவிசக் கண்டறிந்தே - வீண் சொற்போ குள்ளஞ் சுமக்கும் இருளறச்
சுதந் திரவாழ்வினைப் பெற்றிடவா!
பூபாளம் 39
སྒོ་
புதியதோர் உலகம்
* க. ப. லிங்கதாசன் *
בי

Page 22
இனவா தமெனும் இன்ன்ல் இழைக்கும் இழிகுறை தீரச் செய்தேக் - ஓர் இனமாய் வாழும் இன்பப் பெருநிலை
எய்திட ஐக்கியம் காத்திடவா! - பெருந் தனவா னென்னுந் தருக்கில் வளர்ந்த தனிஏ காதிபத்தி யத்தின் - தலைக் கனமாம் அதுஇனி தலைதுாக் காமலே
தவிடு பொடியாகச் செய்திடவா!
கூட்டுற வால் இந் நாட்டின் வளமது
டிேப் ப்ெருகிட் வழியமைத்துப் - பெருந்
தேட்டத் தருநற் பாட்டாளி மக்கள்
கேம்பி யழுங்குரல் போக்கிடவா! - நீ
திட்டும் அறிவின் திறத்தா லென்றும்
திகைக் கும்ஏழைக் குடிகட்கும் - வழி
காட்டும் ஒளிவிளக் காவாய் நீயும்
காலப் புதுமைகள் செய்திடவா!
வேலை யிலயென வேகும் நெஞ்சொடு
வீணே காலங் கழிப்பதுவும் - போய் நாளை வருமிந் நாட்டு மன்னர்தம்
நல்வள மோங்கச் செய்திடவா! - இளங் காலைக் கதிரோன் காட்சி நிகர்த்த
கவலை யிலாநற் ருெழிலாலே - எம் காளைய ரெங்குங் களிப்பொடு வாழக்
காட்டும் வழியினைத் தீட்டிடவா!
பஞ்சம் பறக்கப் பயிர்கள் செழிக்கப்
பாடுபட் டுழைக்கத் தவருதே! - இனி கஞ்சிக் கிலையெனக் கையேந் தும்நிலை
காணதே யுன் வாழ்வினிலே - நீ அஞ்சித் திரிந்தே அறிவை யொடுக்கும்
அறியா மைதனை யழித்திடவே - உன் நெஞ்சம் நிமிர்த்தி நினைப்பன முடிக்க நீயெழுந் தேஇனி வந்திடடா!
சாதி சமயச் சண்டை யெலாமினி
சாவினைத் தேடிப் போகட்டுமே! - நீ ஓதி உணர்த்தி உண்மை நிலைத்திட
ஒருவழி தேடியேமுந்தியெழு! - நந் நீதி நெறிமுறை நிலைத்திட வேகொடும்
நீசரின் கெடுபிடி போயகல - நற் சேதி களுணர்த்திச் சிறுமை யொழித்திடச்
சீக்கிரம் எழுத்தே வந்திடடா!
sssr*Y
பூபாளம் 40
i
R
i
i
ee
虚
i i

இத்திய அழவைத்தால் % S என்ன ஆகும்?
*兖 リ -
1982
7) ரி. பரமலிங்கம்
நாங்களிப்ப சிரிப்பதையும் மறந்துவிட்டோம் நாளும்பொழுது சாயும்வரை உழைத்துவந்தும் தேங்குகின்ற குட்டை நீராய் தரித்தல் இன்றி தேடுகின்ற சிறுதொகையும் கரைந்து போகும் வாங்கிவரும் தானியங்கள் நெருப்பில் இட்டு வாய்க்குருசி செய்தெடுத்துப் பங்கு போட ஏங்கிவிடும் பெருமூச்சாம் எங்க ளுக்குள் ஏராளம் எதிரொலிக்கும் நாளும் உண்மை!
கூலியாளின் ஊதியத்தில் குடும்பம் வாழின் கூக்குரல்தான் மிச்சமாகும் குடிசை யுள்ளே காலியாகக் கிடக்கின்ற பானை நோக்கின் காலியாகும் வயிறுகளும் எங்க ளுக்குள் சோலியின்றிச் சோருக்கி உண்ட காலம் சோர்வடையும் இந்நிலையில் தோன்றிடினே தாலிவிற்றுச் சாப்பிடற்கு எண்ணந் தோன்றும் தாலியென்ன இற்றவரை மிஞ்சி உண்டா?
மணித்தியா லங்கள்பன்னி ரெண்டின் மேலும் மருந்துக்கும் ஓய்வின்றி உழைக்கு கின்ருேம் துணிமணிகள் வகையாக எங்களுக் கில்லை துவைப்பதனல் கந்தலான வற்றை நாளும் அணிந்துமானம் காக்கின்ற விதியில் மாற்றம் அடையாமல் சுற்றிச்சுற்றி எங்க ளுக்கு பணித்துவிட்ட ஒன்றெனவாம் வையம் தன்னில் பழிவாங்கிக் கொண்டிருக்க வாழுகின்ருேம் "
குடிசையிலே ஏற்றுதற்கு விளக்கு மில்ல குளிர்வந்தால் போர்ப்பதற்கு துணியும் இல்லை அடித்துவரும் காற்றதனில் நுழைவ தற்கு அதற்கான யன்னலெனும் வசதி இல்ல
பூபாளம் 41
s
翡
i
s
S.
iši
* w
t
州
•ls韬
i
『ー
i

Page 23
டித்துஅழும் சிறுபின் பசியைப் போக்க : சுரப்பதில்லை தாயின் பாலும் தடித்தளத்தைக் குடிசையதில் போக்கு கின்ற குடிமக்கள் வாழ்வதணில் என்ன உண்டு?
இந்தமண்ணில் எங்களுக்கும் உரிமை உண்டு என்றறிவோம் ஆனலும் நாங்கள் வாழும் ஐந்துகுழிநிலமதுவும் சொந்தம் இல் அயலதனில் மாடிவிடு கட்டிக் கொண்டு முந்திழுந்தி எம்மவரின் உழைப்பு மிஞ் முழுதுந்தன் பரம்பரைக்குச் சேர்த்துக்கொண்டே தொந்திநீள வாழுகின்ற ஒரா ளுக்கே சொந்தமென்ற உண்மைதனைக்கூற வேண்டும்!
படுத்துறங்கப் பாயில்லைத் தலையண இல்ல பணிவிலுள்ள நிலமதுவும் தறையா இல்லை உடுத்ததுணி யோடுதுயில் கொள்ளு கின்ற உண்மைநிலை யால்நிலத்துப் புழுதி எல்லாம் படுத்தெழும்ப உடல்முழுதும் படிந்தி ருக்கும்! பணிவிலுள்ள நிலத்தினது புழுதி மேவும்: உடுத்திருக்கும் உடையதனில் "பீத்தல்'தைத்து உள்ளஇடம் அதிகமுண்டு காணுகின்றீர்!
நாட்கூலி மூன்றுரூபா என்றி ருந்த நாட்களிலும் இந்தநிலை இருந்த துண்டு நாட்வோக, நாட்போக உயர்ந்து கொண்ட நான்குரூபா, எட்டுரூபா கிடைத்த போதும் கூட்டிவில் விற்பதஞல் பொருட்க ளெலாம் கூடவில்லை எங்களது வாழ்க்கை என்ற நாட்பொழுதில் உண்பவற்றும் உடுப்பவற்றும் தாங்களின்னும் கரண்டப்படும் நிலையிலுள்ளோம்!
சீானென்று ஏறமுளம் சறுக்கு கின்ற சால்பதுதான் எங்களது வாழ்க்கை என்றும் "பாண"தனைத் தின்று'வுடல் சாயு கின்ற பாங்கதனில் இன்னுமுயிர்பிடித்து வைத்து அாண்களாக நிமிர்ந்துநின்று மாச்ச லாலே அாக்குகின்ற பாரமதைக் கூட்டிக்கொண்டே காண்பதற்கு யானையுண்ட விளாம்பழத்தை காட்டிற்கோது பத்தியுயிர் வாழு கின்முேம்!
uumorú a
i
i

நாமுழைக்கும் நிலமதனின் உரிமை யாளன் நாளும்புது வேட்டிசட்டை போட்டுக் தாமுழைக்க என்ருெருநாள் எங் ளோடு
கால்களையும் வயற்ச் சேற்றில் காமுறுவார் விதியென்ன வீட்டி லெங்கும்
கால்பநியார் செருப்பின்றி பொழுது எல்லாம் நாமுழைக்க கார்செலுத்திப் பறந்து கொள்ள நாளிலுள்ள பொழுதுகூட அவர்க்குப் பத்தா
உண்டக்களப் பாற்றிக்கொள விசிறி முன்னல் உறங்கிவிழித் தெழும்புகின்ற மாடி வீட்டில் கண்டநேரம் உண்டிகொள்ள கறியும்சோறும் கப்பல்பழம், வாய்க்குருசி கொடுக்கும் இன்ப உண்டிகளும் மெத்தவுண்டு தேனீர் வேளை உல்லாச மாய்த்திரியும் நேரம் என்று க்ண்டபடி கிழிக்கின்ற பொழுதும் கனதியாக மேனிதேற வாய்ப்பு முண்டு
உடுபிட்வை ஒருவருக்கு வகைகள் நூறு ஊதுகின்ற காற்றுச்செல வீட்டில் உள்ள நடுஅறைக்கும் பொருத்தியுள யன்னல்" உண்டு நல்லநிக்லயிலுள்ளமின் விளக்கு ஏற்ற - நடுச்சாமம் என்றபோதும் வசதி கூடும் நகைநட்டு தளபாட வகைகள்மெத்த படுத்தெழும்ப உள்ள்கட்டில் மெத்தை யோடு
படுக்கைமேலும் நுளம்புவலை பாதுகாக்கும்
உழைக்கின்ற எமதுபிள்ளை உண்ணஇல்லை உடுப்பதற்கு வகையான துணிகள் இல்லை உழைக்காத இன்னெருவன் பிள் உண்ணும் துெகின்ற"துணிமணிகள் மெத்த த்ெத இழைக்கின்ற கொடுமைகளே அவனிடத்து
இத்தனையாம் வசதிகளும் சேர்த்த துண்மை
உழைக்கின்ற நாமினியும் மடைய ராக உருக்குலையத் தேவையில்லை விழித்துக்கொண்டால்:
*இது பொறுப்பதில்லை தம்பி எரிதழல்கொண்டு Gaurr” » என்ற பாரதியின் கவிதா உணர்வுகள் உங்களிடம் பிறக்கட்டும்.
-அந்தனி gait.
பூபாளம் 43
க் கொள்வான்
i

Page 24
சமன்
செய்வோம்
(8 ) பி. எம். பஞ்சலோகரஞ்சன்
உழைக்கும் மக்களின் இன்னல்களை - கண்டு
உள்ளம் வருந்தாதோர் யாருமுண்டோ? S母 母 உழைப்பால் உலகத்தை இயக்கிடுவார் - அந்த 国 உயர்ந்த பணிசெய்தும் பேருமுண்டோ? 添 வானத்துலவிடும் தண்மதிபோல் - இந்த క్లి 墨 வையந் தனிலென்றும் அவர் உழைப்பார் ہے . مگ ஈனக்குலத்தவர் என்று தள்ளி - அவர்
இயற்றும் சுகங்களில் சிலர் திழைப்பார்.
கண்ணின் மணியெனத் தம்மனையை - தினம் காக்க உழைப்பெனும் செயல் புரிவார் மண்ல்Eன் மாதிவள் மீதினில்ே - முத்து மணிகளை ஒத்திடும் நீர் சொரிவார்.
வாழப்பிறந்தவர் பூமியிலே - உடல் வருந்தி உழைக்கலாம் என்று சொல்வார் கூழைக் குடித்துமே கூலிபெற - ஒன்று கூடி உழைத்தபின் வீடு செல்வார்.
སྤྱི་
கண்ட துயர்பிணி கோடியன்றே - கரை is காணு வறுமைக்குப் பஞ்சமில்லை கொண்ட உழைப்பெனும் குறி தவருர் - பெறும் கூவியதைவிடத் தஞ்சமில்லை. d கஞ்சிக் கலயமே சொந்தமன்ருே - வேறு i காசுபணமேதும் மீதமில்லை ܣܛܐ S. S. நெஞ்சில் கபடம்பொய் நினைவுமில்லை - துயர் |量 器雪翡 நீண்ட வாழ்க்கையில் பேதமில்லை. SS s 号 ஒட்டைக்குடிசையுள் வாழ்வினிலே - செல்வ SS སྒྲི ஒங்கி வளர்ப்பதில் நாட்டமில்லை ! ලි භූ ලි, ts, ed
நாட்டுக்குழைப்பதைப் போலினிமை இல்லை நாளும் உழைக்கிருர் தேட்டமில்லை.
guiramio 44
 


Page 25
இந்தத் தொழில்முறைப் பேதங்களால்-சாதி என்னும் கயமையும் வளர்ந்ததன்ருே - நீடா சிந்தத் தொழில்புரி மேலவரை வீணே சிறியோர் என்பதும் மலர்ந்ததன்ருே
ஒருவர் உழைப்பினில் ஒருவர்தங்கி - வாழும் ஊழல் ஒழித்திட வேண்டுமென்ருே செருவாய் உழைப்பது மாறிடவே-ஒன்று சேரின் கீழ்மைகள் தாண்டுமன்ருே.
பூமித்தாயிவள் மேனியிலே - செல்வம் பூட்டிக் கிடந்திடல் புன்மையன்றே W சேமித்திருப்பவர் செல்வமெல்லாம் - சமன் செய்து பகிர்ந்திடல் நன்மையன்ருே.
பண்டைக்குலமுைறப் பிரிவுகளால் - அந்தப் பாடும்குயில்களைப் பழித்திடுவார் - பூஞ் செண்டைப் பழித்திடும் மூடரெனும் வெறும் செய்கையின்றிக்கண் விழித்திடு வார்.
வாழப்பிறந்திட்ட மாந்தரெல்லாம் - உயர் வண்மை நலமுடன் வாழ்ந்திடவே ஏழைக்குலத்தவர் என்றுபலர் - இன்னும் இருக்கும் நிலைகளும் வீழ்ந்திட்வே
மின்னும் சமத்துவப் பொன்னெளியே - புவி மீதில் ஒளிர்ந்திடு நில அமைப்போம்
பொன்னும் மணிவகை செல்வங்களும் - யார்க்கும்
பொதுவாய்ப் பிரந்திடவழி சமைப்போம்.
காலங் கடந்தது வீணினிலே - இனி காத்துக்கிடப்பது மடமையன்ருே ஞாலந்தனில் வாழும் மாந்தரெல்லாம் - சுகம் யாவும் பெறல்சம உடமையன்ருே.
ஈன்த்தியல்புகள் யாவையுமே - புவி எங்கும் மறைத்திடல் வண்மையன்ருே உவினைத்துளைத்திடும் செய்கைகளை - புவி உணரின் உயர்வது உண்மையன்ருே.
மனிதர் அனைவரும் ஒன்றெனவே - உயர் மாண்புகள் யாவையும் பெற்றிடுவோம் புனிதம் வளர்ந்திட வாழ்வினிலே -எழில் பொங்கும் சமத்துவம் உற்றிடுவோம்
பூபாளம்: 46
ལ་
i
ལོ་
i
s
ཆུ་
༣
GEN
b
t
་་

லுதலும் யார்க்குத்
‘நமக்குத் தொழில்கவிதை, நாட்டுக் குழைத்தல், 1.
இமைப்பொழுதும் சோரrதிருத்தல்,' எனமொழிந்த பாரதியின் கூற்றுப் படியாய் வினவுகின்றேன்: யார்க்குத் தொழில்க்விதை? யாதாம் : கவியஃது? நாட்டில் உலவுகின்ற நல்ல கவியாரோ? ஏட்டில் தனதுபெயர் ஈர்க்க எழுதுபவன், எங்கோ படித்தவரி ஏய்த்தே எழுதுபவன், பங்கப் படுதமிழைப் பாய்ச்சி எழுதுபவன், ஊனப் பிரிவதற்காய் ஓங்கி எழுதுபவன் ஈன வெறுப்பதனை ஏற்றி எழுதுபவன், வேளைக்காய் ஒன்றென்று வெற்ருய் எழுதுபவன், ஆளைத் துதிபாடி ஆயா தெழுதுபவன், கற்பனையே இன்றிக் கவிக்கோர் அணியின்றிட பற்பலவும் இட்டுப் பணத்தால் எழுதுபவன்; சன்மானம் வேண்டிச் சரிந்திட் டெழுதுபவன், பண்பாடு கூறப் பழித்தே எழுதுபவன்இப்படியோர் கூட்டம் எழுதியே தள்ளுவதால் எப்படித்தான் நாமவரை எம் கவிஞர் என்போம்? எவருக்கு நன்மை? இவர்கருத்தும் என்ன? . இவர்தம் கவிதைகள் எம்மனத்தில் உண்டு? இவர்க்கா தொழில்கவிதை? இஃதா கவிதை? தவறே கவியானல் தங்கக் கவியேது? சோம்பிப் புலம்புமிவர் சொல்லே கவியானல், யாம்பெற்ற இன்பமிதை யாரும் பெருதொழிக்!-
யார்க்குத் தொழில் கவிதை? யாப்பை அறிந்தார்க்கா? யார்க்குமே யாப்பெளிது! அந்தமிழ் வல்லார்க்கா? 'I
வல்லாரே பல்லோரும்! வாட்டம் அழிப்பார்க்கா? நல்லசில பண்டிதர்க்கா? நாக ரிகத்தார்க்கா? அல்லவெனில் பத்திரிகை ஆக்கி நட்த்துவார்க்கா?
செல்லத் தொழிலென்று சொந்த முரைப்பார்க்கா? !
கவிதைப் பெருமையைக் கண்ணுற்றே ஏங்கி அவற்றைச் செயுமறிவு அற்றுப்ப்ோய் விட்ட
பூபாளம் 47
தொழில் கவிதை?
i
i
i
i
(9) எல் அசோமட் 薔

Page 26
விதத்தை மறைத்து விதம்பலவாய் வார்த்துப் புதுக்கவிதை பண்ணுகிற புற்றீசல் பெற் றியர்க்கா?- செம்பங்குச் சேவை செறிகவிக்குச் செய்திட்ட கம்பன், இளங்கோவும் காளமேகம், வள்ளுவனும்
ல், புகழேந்தி, கீரன், அதிவீரன். சாத்தனுடன் ஒளவையும் சீருமறு பிள்ளை, விபுலானந் தர்,குரவோர் வேருேரும் இன்று அபிமானம் மிக்க அரும்பா ரதியவனும் செங்கோல் பிடிக்கின்ற செம்மைக் கவித்திறமை எங்கே எமக்குள்ளே? ஏன்பின் கவித்தொழிலும் ஏனிவர் வாழுகின்ருர்? என்னதான் பாடிவிட்டார்? ஞானமொன்றில் மட்டுமல்ல நான்கும்
(அறிந்திருந்தார்;
கூழுக்குப் பாடினலும் கொத்தடிமை ஆகவில்லை; ஊழின் தரித்திரத்தும் ஓம்பினுள் தன்மானம்; தேசியம் கட்ட்லன்றித் தேசிக்காய் வெட்டவில்லை; ஒணியின் தேவை கலந்துமுன் வைத்திட்டார் பக்தி, பெருவீரம், பண்பு, பகுத்தறிவு: யுக்தி, யுகசாந்தி, யோகம், நிலப்பற்று என்று பலவாருய் இன்றும் உலகுக்கு நின்று மதிகூறும் நேரிய்நல் காவியங்கள் ஏனின்று நம்மால் இயற்றத் தெரியவில்லை? ஏனின்று யாரும் இயற்றத் துணியவில்லை? யாப்பை விலங்கென்று ஏனே விலக்குகின்ருர்! யாப்பால் கடுந் தமிழே ஆட்சி புரியுமென்பார். யாப்புக்கவியிதுவாம்! யார்க்கு விளங்கவில்லை?
தோப்புத் தமிழ்க்காவில் தோண்டத்தான் தேனூறும்!
பாரதியும் தேசிகரும் பண்பருது பாடவில்லை? ஓரறிவுப் பாவலரே! ஒர்ந்தினிமேல் பாடிடுக! சின்னதோர் வட்டமிட்டச் சக்கரமே வீடெனுது முன்னேர் பெருமை முழங்குவது மட்டுமின்றி அன்னர் வழிபற்றி ஆய்ந்தோர்ந் தவசியத்தைப் பண்ணுர் பசுந்தமிழிற்பாடுவதே பாவாகும். யார்க்குத் தொழில்கவிதை ஆராய்ந்து
:சொல்லுகிருன் ` - . يوه யார்க்கும் லிளங்குவதாய் யாமறியும் பாங்கில்; ‘நமக்குத் தொழில்கவிதை, நாட்டுக் குழைத்தல், இமைப்பொழுதும் சோரா திருத்தல்! *-இமையளவும் சோராது நிற்றலும், சார்ந்துதன் நாட்டுக்குத் தீரா துழைத்தலும், தீங்கவிதை செய்தலுமாய்
survey -
i
i

முத்தொழில் வல்லமையா?-மூன்றும் தனித்தொழிலா? முத்திரை குத்திவிட்டான்; மூன்றும் ஒரு தொழிற்கே! "சிந்தையே இம்மூன்றும் செய்,"யெனச் சொன்னதனுல் சிந்திக்க, ஆங்கே சிறப்பு: கவித்தொழிற்கே! நாட்டுக் குழைப்பதாயும் ஞாலத் திமைப்பொழுதும் நாட்டம் குறையாமல் நாடிப் பலராலும் போற்றற் கரிதாயும் பொற்றேர்க் கவித்தொழில் ஆற்றற் குரியார்க்கே ஆகும் தொழில்கவிதைமுந்நூற் றறுபத்து நாலேகால் நாட்செல்ல முன்னல் வரும்நாளாம் மூடருக்குப் புத்தாண்டு. செய்யும் தொழிலஞ்சிச் செய்வார் தமக்கந்தச் செய்கை பலன்தந்த சீர்நாளே புத்தாண்டாம்! வெண்பாப் புளிமாங்காய், வேய்குறள் கூவிளம், கம்பன் விருத்தக் கனிதேமா, காராம் வசையிசைக் கூவிளங்காய் வந்தாலே யன்றி இசையுடன் புத்தாண்டு எங்கட்கோ என்றுமில்லை! வாழும் கவிசெய்து வாகை தனைச்சூடும் நாளை மனத்தெண்ணி நாடிக் கவித்தொழிலைப் பூண்டு சபதம் புறப்படுவோம்! நம்வழியோ நீண்ட நெடும்பயண நேரற்ற சோலை : வடக்கு, கிழக்கு, மலைநாடு, தெற்கு, இடக்கு, முடக்கென்று ஏதுமொரு பேதமின்றி நாட்டுநலம் முன்வைத்து நம்பலினை நாடாமல் தீட்டிக் கவிதைகள் தேம்பா வணிசெய்வோம்! சித்திரையாள் வந்த சிறப்பில் சிறப்பெடுத்து எத்தரையும் போற்றவென இன்ருேர் பிறப்பை அமைப்போம்; அடர்ந்தெழுவோம்;
ஆக்கிடுவோம்; வாரீர்! நமக்கே தொழில்கவிதை நாடு. v. `
i
துயில் நீக்கிச், சுகானுபவம் தரும் இராகமே "பூபாளம்". பூபாளத்தின் எழுச்சி எமது கவிஞர்களின் உறக்கத்தைப் போக்கியுள்ளது. ஆயினும் உறக்கத்திலிருந்து விழித்தவர்களிற் சிலர் "கன்னபின்ஞ" வென்று உளற ஆரம்பித்தால். எப்படி? கவிதைகளில் வேகம் தேவைதான்! ஆஞல் நிதானமும் தேவை! பெரும்பாலான புதுக்கவிதைகளில் புதுக் கவிதைக்குரிய மரபு (?) ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை. வெறும் சுலோகங்களும் சொற்களுமே காணப்படுகின்றன். மரபுக் கவிதை களிலும் போதிய ஆழம் இல்லை. அட்டையில் கூடிங் கிவனம் தேவை. அடுத்த இதழ்கள் சிறப்பாய் அமையும் என்று திம்ப இடமுண்டு. என் வாழ்த்துக்கள். , ". . . .
மன்னர் வாசகர் வட்டம் கல்வாதிகலில்
பூபாளம் 49

Page 27
(10
குயிலே ஒகூவாயோ? இக் கொடுமையைக் கூருயோ? நீ அடர்தரு சோல் உள்ளே அழகுற விற்றிருந்து இடர் இலா ஏகாந் தத்தில் இன்பமாய் இசை முழக்கும் குயிலே ஓ கூவாயோ? இக் கொடுமிையைக் கூருயோ? நீ நாஞேர் மனிதன்
நானிலத்தில் பிறந்தவன்தான்
என்னைப்போல் இங்கு ஏராளம் பேர் உள்ளார் என்ருலும் எந்தன் இதயத் தீடா கத்துள் சீறி யெழும்பும் சினப்புக்கள் அத்தனையும் கூறிக் குத்ற இக் குவலயத்தில் ஆளில்&ல அதனல் உன்னை அழைத்தேன் ஓ ஒரு வார்த்தை கேட்பாயா? சின்னக் குயிலே என் சினத்தை நீ தீர்ப்பாயா? அதேர்த்ெரிகிறகே அதுத்ான் என் இல்லம் புச்சிமனே; அதனுன் புகுந்தால் இருள் , உச்சி வேயில்
:ளும் ஏழைப்பிறவி என்ருலும் என் இதயம் இருளல்ல
) கே. எம். ஏ. அவஸ்ே
ஜாதிகள் இரண்டன்றி வேறில்லை என்று நீதிகள் பல நெறி நின்று ஒதியவர் பாதையில் என்னைப்
பார்க்காது செல்கின்றர்
ஏனென்றல்
நானேர் ஏழை நலிவுற்று நிற்கின்றேன். seasoey என்னை ஒருக்கால் எடைபோட்டுப் பார்க்கின்றேன் எனக்கும் அவர்க்கும்
அவர்க்கும் எனக்குமாய் என்ன வேற்றுமை?
இறைவன் வகுத்தான் அற்பத்துளியால் ஆனவர்
நாங்கள் அனைவர் உருவின் அச்சும் ஒன்றே சிந்தும் ரத்தம் சிவப்புத்தானே வெள்ளை, கறுப்பு வேற்றுமை
இலையே பகுத்தறிவின் பரிசை ஏந்தி பக்குவமாக வந்தவர் நாங்கள்
எங்களுக்குள்ளே எத்தனை
வேற்றுமை குலம் இனம் நிறம் மொழி பணம் பதவி படாடோபம் கத்திச் சண்டை கழுத்தறுப்பு
பூபாளம் 50 نسبيشمس
 

குத்துக் கரணம் கோடு ஏறுதல் இப்படியாக சொல்லப்போனல் இதயம் எரி மலையாய் மாறும் உங்கள் உள்ளும் ஓட்டை i
உடைசல் உள்ளதாமோ? உரைப்பாய்
குயிலே, சத்தியமாக இல்லை இல்லை சங்கதி அதனை நாமும் அறிவோம் எங்கும் சென்று இரையைத் தேடி பொங்கும் மகிழ்வால் புவியில் வாழ்கிறீர். போட்டியில்லை பொருமை
யில்லை ܖ பொருதும் சண்டை சச்சரவில்லை வாட்டும் கொடிய வேற்றுமை
: : " : ۷ . . . ونند இல்லை வாழ்வில் எந்த வருத்தமும்
- இல்லை
அறிவேன் குயிலே அதனல்தானே
குறியாய் உன்னைக் கூப்பிட்
டழைத்தேன். எந்தன் தூதை எங்கள் நாட்டின் மனிதர் வாழும் இடங்களில்
சென்று சிந்தை குளிர சிறப்பாய்க் கூறு உங்கள் வாழ்வின் ஒற்றுமை W தன்ன்ை ஊனம் கொண்டோர் .
எல்லோரும் இந் நாட்டு மன்ன்ர்
என்ற தத்துவம் எடுத்துக் கூறு
புச்சிக் குடிலில் புழுவாய் ஒருவன் புலம்பிய கதையைப் புகட்டுக
s குயிலே
உந்தன் தூதால் எங்கள் ஈழம்
உணர்ச்சி பெற்று ஒளிரக் கூவு.
வகவ நிர்வாகிகள்
தலைவர்
டாக்டர் தாஸிம் அஹமது துணைத்தலைவர்: அல் அஸ்ஸூமத்
செயலாளர் நாயகம்: கவின் கமல்
துணைச் செயலாளர்;
ஏ. அஸிஸ் நிசாருத்தீன்
விழா அமைப்புக் காரியாதிகாரி: எஸ். ஐ. நாகூர் கணி.
உதவி: எம். பாலகிருஷ்ணன்
கவியரங்கக் காரியாதிகாரி: ஈழகணேஷ் உதவி எம். சாம். நஜ்முல் ஹ"செய்ன் பிரசாரக் குழுக் காரியாதிகாரி, மேமன்கவி உதவி: சோ. ஆனந்தமுருகன், கலாவிஸ்வநாதன்,
கலையன்பன் ரஃபீக்
வெளியீட்டுக் காரியாதிகாரி, வேம்பை ரீமுருகன்
உதவி
ழறிதர் பிச்சையப்பா, பொன் தமிழ்நேசன்,
பாத்திமா மைந்தன் இலக்கிய ஆலோசகர் கொக்கூர்கிழான்,
பூபாளம்
51

Page 28
பாலம் அமைப்போம் 兴兴求景兴兴景兴 G G 诺普景景景兴兴景兴
ஜலப்பொழுதில் தெற்கில்போல் வடக்கிலும் கதிரவன்
எழுந்திடுவான்; மாலைப்பொழுதில் பொன் வெள்ளித்தாரகைக்ள் வரிசையில் வந்திடும்; இங்கள் பொழியும் தினங்களில் இனிமைக் கதிர்க்குவியல் தெங்கில் போலவே பனையுச்சியிலும் பட்டுத்தெறித்திடும்.
தனிச்சுகம் தரும் புராதன சுவை அங்குக்கிடைத்திடும் நானுேர் மாற்ருன் வீட்டில் என்றுணரும் பழக்கமில்லை. எந்நேரமும் உள்ள கொந்தளிப்பு நிலையாலே அறிந்துகொண்டேன் மனிதக் கண்களின் ஈரத்தன்மையை: வியர்வை சிந்துவோர் வேதனைக்குள் விழுந்திருப்பது . வடக்கிலும் தெற்கைப்போல் எங்குமே இருக்கின்றனர். வினவிப் பார்க்கிறேன் அவர்களின் இதய நிலையை ' கருங்கல்லென்ன இரும்பென்ன? உருகிடும் மெழுகாய்விடும். பூட்டியவர் முன் நிற்க விழும் நிலையாய்
விலங்கு காற்சதங்கையாய்மானிடரைத்தெற்கில் போல் வடக்கிலும் காணும்போது உணர்வில் மறந்திடும் நாளைய நாள் எனக்கு! மனிதனிலிருந்து மனிதனைப்பிரித்திடும் நோக்கில் மானிடர் சிலரால் கட்டப்பட்டிருக்கும் அடிப்படைச் சுவரைத் தகர்த்தே எறிந்து அங்கு நிரம்பும் மண்ணுல் பாலம் அமைத்திடுவோம் ஒர்தாள், வடக்கை நோக்கியே! ஒருமணி நேரத்தில் சந்திக்கும் இடைவெளியுள்ள இவ் வீரிடங்களை எங்கும் உள்ளனரோ எவரும் பிரித்திட முடிந்தவர்? இந்த வடக்கே சுற்றும் சுருட்டினில் இணைந்தது போல் பேதங்கள் எரிந்தே போய் இணையட்டும் , தெற்கு! சிங்களமூலம்: "கேயஸ் தமிழாக்கம்: எம். பாலகிருஷ்ணன்.
கவிதைக்கோர் தனியிதழாய்க் காலாண்டுக் கொருமுறையில் புவிமீது மலர்ந்துநறுங் கவிபலவுந் தருவதற்கு முயல்கின்ற பூபாளம் முழுவாழ்வு பெறல்வேண்டும் முயற்சிதிரு வினையாக்கு முளமார வாழ்த்துகிறேன் கொழும்பு - 12. கா. வை. இரத்தினசிங்கம்
குறிப்பு: வகவம் பரிசளிக்கும் ஏனைய ஆறு கவிதைகளும் பாரிஸ்-பாரதி நூற்ருண்டு விழாப் பரிசுக் கவிதைகள் மூன்றும், சிற்பி", "மீட்டாத வீணையின் மெல்லிய நாதம்” போன்ற வழக்கமான அம்சங்களும் அடுத்த இதழில் இடம்பெறும். -gງອົງທີ່uຕໍ່:
பூபாளம் 52

SPRINGS
MACHINERY COMPONENTS
GRILLE WORKS
STEEL FURNITURE Etc.
Q9isit le
TET EH E EL A N K A SPRING INDUSTRIES
730, NE Go MBO R 0 AD,
MATHUM A GALA,
RA GAMA.

Page 29
பெறுமதிமிக்க உங் நம்பிக்கையே
உத்தரவா
திடுத்தி தலைநகரிலே
4, oveR HEAD BRIDGE, M.
இ) இப்பத்திரிகை, இல; 730 ராகமையிலுள்ள ஆசிரியர் அல்கவின்கமல் அகியோரால், கெ மாவத்தை, 107/18-இல் உள்ள வீல் 1983 ஜனவரி மாதம் வெளியிட
 

பகள் கடிகாரங்களை ாடும் தகுந்த தத்தோடும் க்கொள்ளத் சிறந்த இடம் à
ம் சென்டர்
*ళ
ARADANA, COLOMBO: 0
நீர்கொழும்பு வீதி, மத்துமகல -அஸ்விமத், துணை ஆசிரியர் ாழும்பு-12, பண்டாரநாயகித னஸ் அச்சக்த்தில் அச்சிடப்பக் ப்பட்டது.