கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: திருப்பம் 1998.05

Page 1
Of..A. 8%Bنج/ (/ർക്ത zല്ല?
custom House Cleuring figents
(Regd. No. D/ - ష్ర Reliable Sérvice t s
YA (sinçe
2" క్లిష్టన్లో
ప్లే శిక్షిశ్లేష్ట_
1Πg సో Specialized in Container Clearnaces
Tel: 449371, 324615. Fax: 335673 A. G. 3, San Chi Arach Chi Garden, Colombo - 12.
 


Page 2
தமிழ்மாறன் கட்டுரைகள்
-விரிதமிழ்மாறன் தேசிய இனங்களின் விடுதலைப் போராட்டங்கள்
-விரி.தமிழ்மாறன் அபிவிருத்தியும் கல்வியும்
-பேராசிரியர் சோ. சந்திரசேகரம் கல்விச் செயற்பாட்டில் புதிய செல்நெறிகள்
-பேராசிரியர் சோ. சந்திரசேகரம்
கல்வியும் உளவியலும் (பகுதி- 11)
-கலாநிதி ச. முத்துலிங்கம்
சிறுவர் பக்திக் கதைகள்
-த, துரைசிங்கம் பாட்டுப் பாடுவோம்
-த. துரைசிங்கம்
பிரதிகளுக்கு : லங்கா புத்தகசாலை, FL - 1. 14, Luanj (26a76n, குணசிங்கபுர, கொழும்பு - 12 தொ.பேசி : 341942
 

முனை : 01
18 , 1998 இதழ் : 02
நிர்வாக ஆசிரியர்: த. துரைசிங்கம்
ஆசிரியர் குழு:
பேராசிரியர் சோ. சந்திரசேகரம்
வி. ரி. தமிழ்மாறன்
எம். ஏ. றஸ்வி
கணனி அமைப்பு:
மதுரி மாறன்
அச்சுப்பதிவு:
Perfect Printers, 130, Dias Place,
Lanka Book Depot.,
F.L.1.14, Dias Place, Colombo-12
T.P.:341942
நெஞ்சோடு நெஞ்சம்..!
வாசக நெஞ்சங்களுக்கு வணக்கம். சொன்ன தேதியில் கொண்டு வந்துவிட வேண்டும் என்ற அவசரத்தில் முதல் இதழை அரங்கேற்றியாயிற்று. வரவேற்புக்கு நன்றி!
போதிய விளம்பரமில்லையே, பல்கலைக்கழகங்கள் விடுமுறையில் இருப்பதால் மாணவர் கைகளுக்கு எட்டாமல் போய்விடுமா?, ஆசிரிய பயிற்சிக் கல்லூரிக்கு நூறு பிரதிகளுடன் நேரிலேயே வந்துவிட்டுப் போங்களேன், அட்டையில் புதுக் கலை வடிவங்களைப் போடுங்கள், சஞ்சிகையின் அளவை மாற்ற மாட்டீர்களா?, ஆசிரியரை ஊகிப்பதே பெரும்பாடாயிற்று
இப்படி ஏராளமான அன்பு வாசகங்கள் தொலைபேசியிலும் நேரடியாகவும் காதுகளுக்குத் தேன் வார்த்தன. ஒரே பதில் - பொறுத்திருந்து பாருங்கள் என்பதே! வாசகர் - கேள்வி பதிலை மட்டும் இப்போதைக்குத் தொடங்க முடியவில்லை. காரணம் தெரியுந்தானே. தபால் ஊழியரின் தொழிற்சங்கப் போராட்டம், நாங்களே கேள்வி - நாங்களே பதில் என்று எழுதுவதில் எமக்கு உடன்பாடில்லை. எனவே ஒத்திவைத்து விட்டோம். ஒவ்வொரு இதழையுஞ் சேர்த்து வைக்கவும் தொகுக்கவும் வசதியாக இம்முறை புதுப்பொலிவுடனும் அதிக பக்கங்களுடன் உங்களை நம்பி வருகின்றது திருப்பம்!
இது இலாபநோக்கு வெளியீடல்ல. மனிதத்தை நேசிக்க- நீங்கள் வாசிக்க ஏதாவது தரவேண்டும் என்பதே இதன் விருப்பம்! எல்லாக் கருத்துக்களுக்கும் இடமுண்டு இங்கே. ஏனெனில் நீங்களே உங்களுக்கு நீதிபதிகள்.
இது மே மாதம். உலகுக்கு மேதினம். இலங்கையில் அத்துடன் வெசாக் தினமும் வரும் மாதமல்லவா. இவைபற்றியுஞ் சிந்திப்போமா?
அன்புடன்
ஆசிரியர்
/ / /

Page 3
அடுத்த இதழில். களம் இன்னும் விரிகிறது! வழமையான அம்சங்களுடன்
யாழ்ப்பாண சமூகமும் சீதனப்
பிரச்சனையும்- ஒரு மாற்று நோக்கு
* எழுத்தும் வாழ்வும் ஒரே பாதையிலா?
எழுத்தாளர்களது சொந்த வாழ்வு விமர்சனத்துக்கு அப்பாற்பட்டதா?
* "நேருக்கு நேர்
* இந்திய அரசியலமைப்பின் 356ஆம்
பிரிவு- மாநில அரசொன்றை எப்போது கலைக்கலாம்?
-சிசெரோவின் சட்ட நோக்கு
* பேராசிரியர் கா. சிவத்தம்பியின்
கட்டுரைத் தொடர்
விரைவில் ஆரம்பமாகிறது! சிசெரோவின் கைவண்ணத்தில்
பாலஸ்தீன விடுதலை இயக்கம்
(முழுமையான வரலாற்று ஆய்வு)
பத்திரப்படுத்த வேண்டிய கட்டுரைத் தொடர் காத்திருங்கள்.
 

திருப்பத்தினுள்ளே.ண
01. சிந்திப்போமா சில கணங்கள் 04
” இளங்கோவன் 02. முஸ்லிம்கள்: அரசியல் வேலைத்
திட்டத்திற்கான தேவை 05
விராஜ் மஷ்ஹுர் , 03. சுதந்திரம் கெட்ட நாட்களின் மீது
கவிகிறது சாபம் 08
சு.வில்வரெத்தினம் 04. தேசிய விடுதலைக் கோட்பாடும்
பெண்களின் சமத்துவமின்மையும் 16
கலாநிதி செல்வி திருச்சந்திரன் 05. பிரமதேவன் பென்ஷன் எடுக்கிறான் 22
மதுரி மாறன் 06. வன்முறையும் குடியியற் சமூகமும் 26
வி. ரி. தமிழ்மாறன் O7. இன்றைய கல்விமுறைமையின்
தராதரம் குறைந்து விட்டதா? 3?
பேராசிரியர் சோ. சந்திரசேகரம் 08. இது புதியதோர் உலகு. தொலைக்காட்சித்
தொடர்புகள் தரும் சமூகமாற்றங்கள். 37
ஆ.சிவநேசச்செல்வன் 09. றெஜி சிறிவர்த்தனாவின் நாவலும்
தேசிய இனப்பிரச்சினையும் 42
மு. பொன்னம்பலம் 10. ஆக்கத்திறன் அமுங்கிப் போவதேன் 46
சாந்தமணாள் 11. நேருக்கு நேர் 49
ஜோசப் பரராசசிங்கம் எம். பி. 12. திருப்பம் ஒரு பார்வை: விமர்சன நோக்கு 55
கைதையூரான் ܖ 13. பெண்களின் கல்விப் பாய்ச்சல் 56
த. துரைசிங்கம் 14. ஐரோப்பாவை பிடித்த பேய் 60
அம்சா ஆனந்தன் 15. ஐன்ஸ்டீன் கண்ட காதல் 62
அநேகன் சம்பந்தன் 16. பெளத்தமும் இந்து மதமும் 64
(சுவாமி விவேகானந்தர் சிந்தனைகள்)

Page 4
சிந்திக்கும் மனிதன் என்பவன் நிகழ்வுகளின் (facts) அடிப்படையிலும் வழிகாட்ட லுடனும் அநீத நிகழ்வுகளுடன் அவன் எவ்வளவு தூரத்துக்கு உடன்படாவிடினும் அவன் கவலைப்படுவதில்லை.
செயற்படுபவனி ,
உணர்ச்சிகளினால் ஆளப்படுபவன் பெரும்பாலும் தனது இலக்கை அடைய முன்னர் வீழ்ந்து விடுகின்றான்.
சரியான வழி என்பதும் தனக்கு அனுகூலமான வழி என்பதும் எப்போதும் ஒன்றாகவே இருக்க என்பதில்லை என்பதைச் சிந்திக்கும் மனிதன்
வேணி டுமி
உணர்ந்து வைத்திருக்கின்றான்.
குறுக்கு வழிகளை நாடுபவன் அதற்குக் கொடுக்கும் விலை நேரம், சிரமம் அத்துடன் மனச்சாட்சியுந்தான்.
சிந்திக்கும் மனிதன் மற்றவர்களின் தவறுகளிலிருந்து பாடம் படிக்கின்றானே தவிர அத்தவறுகளையிட்டு உள்ளூரக் குதூகலிப்பதில்லை.
தவறுகளைக் கணிடுபிடிப்பவனி அதிலிருந்து பாடம் படிக்காதபோது அவனே மற்றவர்களின் தவறுகளைத் திரும்பவும் இழைக்க முற்படுவான்.
சிந்திக்கும் மனிதன் ஒரு பிரச்சனைக்குத் தீர்வு காண முற்படும்போது மற்றைய
வர்களின் ஆளுமைகளையும் உணர்வு
களையும் கூடுதல் சிரத்தையுடன் கவனத்தில் எடுக்கின்றான்.
உணர்வுகளை மதிக்காதவன் கோட்பாட் டளவில் சரியாகச் செழற்படுபவனாக இருக்கலாம். ஆனால் நடைமுறைக்குப் பொருத்தமற்றவன்.
சிந்திக்கும் மனிதன் தான் எப்போது பேசவேண்டும் எப்போது மெளனமாக இருக்க வேணடும் அறிந்திருக்கின்றர்னி. அங் நுனமே செயற்படுதல், வாளாவிருத்தல், காத்திருத்தல் என்பதையும் அறிவான். - .
என்பதை
சிந்திக்கும் மனிதன் மற்றையவர்களிடமும்
அறிவுள்ளது என்பதை முதலில் ஒப்புக் கொள்கின்றான்.
சிந்திக்கும் மனிதனிடம் வார்த்தைகள் அளந்து அளந்து வெளிப்படும்.
கவனமற்றுப் பேசுபவன் சுலோகங்கள், நாமங்கள், அரைகுறை அபிப்பிராயங்கள் என்பவற்றிலேயே தங்கியிருப்பான்.
* எல்லாவற்றுக்கும் மேலாக, சிந்திக்கும்
மனிதன் தனது சொந்த அனுபவங்களின் ஒட்டு மொத்தத்தைவிட யதார்த்த நிலை என்பது உயர்ந்தது என்பதை ஒப்புக் கொள்கின்றான்.
米米米米米
 
 

ஏற்கனவே வடிவமைக்கப்பட்ட அரசியல்
போக்கொன்றை இலங்கை முஸ்லிம்கள் எதிர்கொள்ள வேண்டியிருப்பது ஒரு தற்செயல் நிகழ்வா? அல்லது அதுவே நன்கு ஸ்தாபிதமடைந்த ஒரு யதார்த்தமா? முஸ்லிம் அரசியல், ஒரு நீண்ட மாற்று வேலைத்திட்டத்திற்கான எதிர்பார்ப்புகளோடு உள்ள ஒரு காலகட்டத்தில் நாம் உள்ளோம். மிக இருண்ட அரசியல் எதிர்காலம் பற்றிய அச்சம் சிந்திக்கத் தெரிந்த ஒவ்வொரு முஸ்லிம் தனிமனிதனிலும் மிகக்
கடுமையாக உறைத்திருக்கும் இந்தச் சூழ்நிலையில் நமது பணிகளும் பொறுப்புகளும் மேலும் அதிகரித்துள்ளன.
முஸ்லிம் தலைமை பற்றி 80 களின் பிற்பகுதியில் இருந்த பிரமிப்புகளும் சிலிர்ப்புகளும் அப்பட்ட்மான பொய்களே என்பதை வரலாற்றின் இயங்கு விதிகள் நமக்கு நன்குணர்த்தி விட்டன. இன்று களத்திலுள்ள முஸ்லிம் காங்கிரஸ் என்ற சக்தி நமது அரசியலைத் தீர்மானிப்பதில் கையாளும் அணுகுமுறைகள், சிந்தனைப் போக்குகள் குறித்து நமக்கு மிகக் காரசாரமான எதிர்வினைகள் உள்ளன.
தனிக்கட்சி அரசியலில் நாம் பயணித்து ஒரு தசாப்தமாகி விட்டது. ஆயினும், நாம் மீண்டும் ஆரம்பித்த இடத்துக்கே வந்து நிற்க வேண்டியதாகி
விட்டது. முஸ்லிம் அரசியல் வேண்டிநின்ற சக்தி மிக்க, வினைத்திறனுள்ள ஒரு சட்டகத்தை வடிவமைக்கும் ஆற்றலை முஸ்லிம் இழந்து வெகுநாளாயிற்று. அது அறிமுகப்படுத்திய "கோஷ அரசியல்" நமக்கு மிகக் கடுமையாகச் சலித்து விட்டது.
காங் கிரஸ்
அரசியல் கட்சியொன்றின் முதுகில் ஒரு சமூகத்தின் தலைவிதியை ஏற்றிவிட்டு நாம் ஒதுங்கிவிட முனைவது எந்தளவு துTரம் அபாயகரமானது என்று நாம் சிந்திக்க வேண்டியுள்ளது. நமது எதிர்பார்ப்புகளும் தேவைகளும் மிக விரிந்ததாய் உள்ளன. அதை ஒரு அரசியல் கட்சியினூடாக
வீரியமிழநி த
மட்டுமே அடைந்து விட முடியுமா என்பதையும் நாம் கவனமாக மறு பரிசீலனை செய்ய வேண்டும்.
எண்பதுகளின் பிற்பகுதியில் மிகத் தீவிர முஸ்லிம் காங்கிரஸ் அபிமானிகளாக இருந்த பலர் இன்று அதனது தீவிர எதிரிகளாக உள்ளனர். முஸ்லிம் காங்கிரஸ் என்ற சக்தி தந்த ஏமாற்றங்களும் தோல்விகளும் அவர்களை, ஐ.தே.க. தான் இப் போதுள்ள சூழி நிலையில் முஸ்லிம்களுக்கு மிகச் சிறந்த மாற்று எனறு சிந்திக்க வைத்துள்ளது. முஸ்லிம் காங்கிரஸ் செய்த மிகப் பெரும் தவறு

Page 5
இதுதான். அக்கட்சி என்ன நோக்கத்திற்காக ஆரம்பிக்கப்பட்டதோ, அந்த நோக்கத்தை நிறைவேற்றும் ஆற்றல் அதற்கு இல்லை என்று கண்ட பலரை மீண்டும் பேரினவாதக் கட்சிகளின் ஒடுக்குமுறை அரசியல் முகாம்களுக்குத் திருப்பி அனுப்பியதன் மூலம் முஸ்லிம் அரசியலை மீண்டும் சிங்கள பெளத்த பேரினவாதத்தின் முன் சரணாகதி அடைய வைக்கும் ஒரு தர்க்க ரீதியான விளைவுக்கே அது இட்டுச் சென்றது.
மீண்டும் ஆரம்பித்த இடத்திற்கே திரும்பிச் செல்வதை விடவும் இது
• ஏனெனில், முஸ்லிம்களுக்கு தனிக்கட்சி தேவை என்ற யதார்த்தத்தையே மறுக்கும் ஒரு சூழ்நிலையை இது ஏற்படுத்தியுள்ளது.
மோசமானது. LJ 6u) Î
காங் கிரஸ்ரினி தோல்வியானது, எதிர்காலத்தில் மாற்று
முஸ்லிம்
அரசியல் பரிசோதனை முயற்சிகளுக்குக் கிடைக்க வேண்டிய பரவலான ஆதரவுத் தளத்தைக் கணிசமாகக் குறைத்துள்ளது. முகா. என்ற பரிசோதனை முயற்சி முஸ்லிம் அரசியல் தலைமைகளின் பாரம்பரிய இயல்பான சந்தர்ப்பவாத அரசியலுக்குப் பலியாகும் போக்கிலிருந்து விலகிய ஒன்றர்க இல்லாமல்போன இந்த ஏமாற்றம் மாற்று அரசியலுக்கான தேடல் கொண்ட முற்போக்கு ஜனநாயக சக்திகளுக்கு பலத்த ஏமாற்றத்தையே அளித்தது.
நன்கு கட்டமைக்கப்பட்ட அரசியல் கட்சியாக முஸ்லிம் காங்கிரஸ்
இயங்கவில்லை. கட்சிக்கான ஒரு
நிலையான கொள்கையை வகுப்பதில் அவர்களிடையே எந்தத் தெளிவான
பார்வைகளுமே இல்லை. தீர்க்கமான
கொள்கைகளினூடாக வழிநடாத்தப்பட வேண்டிய கட்சி, அவ்வப்போது தோன்றும் தனது கொள்கையைத் தீர்மானிக்க முயல்கிறது.
சூழ்நிலைகளாலேயே
முஸ்லிமீ சமூகதி திணி
முதன்மையான பிரச்சினைகள் எவை?
அவற்றை அடைவதற்கான படிமுறைகளை எவ்வாறு வகுப்பது?
முஸ்லிமீ களது பிரச்சினைகளை
மக்களிடையே கொண்டு செல்வதற்கான
வேலைத்திட்டங்கள் என்ன? என்பன பற்றி முஸ்லிம் காங்கிரஸ”ள் ஆழமான விவாதங்கள் நிகழவில்லை. குறைந்தபட்சம்
முஸ்லிம் புத்திஜீவிகள் தங்களது
பிரச்சினைகள் பற்றி என்ன நினைக்கின்றனர் என்பது பற்றிய ஆழ்ந்த அறிவாவது
முஸ்லிம் காங்கிரஸுக்கு இல்லை.
அஷ்ரப் என்ற தனிமனிதரைச் சுற்றி நிகழும் குறுகிய அரசியல் சந்தர்ப்பவாதம் ஒரு சமூகத்தை சகல ஒடுக்குமுறைகளிலிருந்தும் விடுதலை பெறச் செய்யும் என்று அப்பாவித்தனமாக நம்புவதற்கு தறி போது தயாராயில்லை. ஆயினும், எவர் என்ன
பலரும்
சொன்னாலும் பரவாயில்லை நாங்கள் எங்கள்ை மாற்றிக் கொள்ளத் தயாராயில்லை என்ற மனோபாவத்திலேயே தலைவரும் அவரது தொண்டரடிப் பொடிகளும் இயங்கி வருகின்றனர். ஒரு சமூகத்தின் விடுதலைப் போராட்டத்தை கொந்தறாத்து வேலைகளாக மாற்றிய வரலாற்றுக் கைங்கரியத்தை அவர்கள் செய்து கொண்டிருக்கின்றனர்.
 

கட்சிக்குள் தனிமனித வழிபாடு மிகக் கடுமையாகப் பின்பற்றப்படுகிறது. அஷ்ரபைப் புகழ்வதன் மூலம் தங்களது சொந்த வேலைகளைச் செய்து முடிப்பதில் பலருக்குள்ள ஆர்வம் அருவருப்பூட்டு மளவுக்கு வளர்ந்துள்ளது. அஷ்ரபைச் சுற்றியுள்ள அவரது கொள்கை வகுப்பாளர்கள் (இப்படி அழைப்பது பொருத்தமில்லாத போதிலும்) தங்களது நலன்கள் மீது காட்டும் ஆர்வத்தில் சிறிதளவேனும் சமூகம் சார்ந்த விடயங்களில் காட்டுகிறார்களில்லை.
சிந்தனா ரீதியான போராட்டம் குறித்து முஸ்லிம் காங்கிரஸ் மிக அப்பாவித்தன்மான கருத்துகளோடேயே இயங்கி வருகிறது. குறைப் பிரசவங்களாக அவ்வப்போது தலையைக் காட்டும் கட்சிப் பத்திரிகை கூட தலைவரின் புகழ்பாடும் சாதனமாகவே இருக்கிறது. முஸ்லிம்களது பிரச்சினைகள் தொடர்பான ஆய்வுகளை வெளியிடுவதற்கோ அது பற்றிய கருத்தாடல்களையும், ஆய்வுப் பட்டறைகளையும் ஏற்பாடு செய்வதற்கோ அவர்கள் சிறிதளவும் தயாரில்லாத
நிலையிலேயே உள்ளனர். குறைந்தபட்சம்
இது தொடர்பாக ஏற்கனவே வெளிவந்த தரமான நூல்களை மறுபிரசுரம் செய்வதிலாவது அவர்களுக்கு ஆர்வம் இல்லை. உருவாகி கப்பட்ட
காங் கிரஸ் நோக் கதி தில் குறைந்தபட்சம் இந்தப் பங்களிப்பையாவது அவர்கள் செய்யாது போனால் அவர்களை
முஸ்லிமீ
யாரும் மன்னிக்கப் போவதில்லை.
முஸ்லிம் அளிக்கப்பட்ட ஆணை வெறுமனே ஒரு
காங் கிரஸ்" க்கு
தலைமைத்துவக் கையளிப்பு மட்டுமல்ல, அது ஒரு சமூகத்தின் அரசியல் போராட்டதி தை முனி னெடுத்துச்
செல்வதற்கான அங்கீகாரமுமாகும். அது தோல்வியில் போய் முடிந்தாலும், அந்தத்
தேவை இன்னமும் மாறாமல் இருக்கிறது. சரியாகச் சொன்னால் அது மேலும்
அதிகரித்துள்ளது என்றுதான் சொல்ல
வேண்டும். இந்த சூழ்நிலையில் ஒரு பலமான மாற்று அரசியல் வேலைத்திட்டம் (Alternative Political Agenda) ubbuyi,
அது ஓர் அமுக்கக் குழுவாகவாவது
(Pressure Group) இயங்குவது பற்றியும் முஸ்லிம் புத்திஜீவிகளும், முற்போக்காகச் சிந்திப்பவர்களும் மிகக் கடுமையாகச்
சிந்திக்க வேண்டியுள்ளது.
ஆக்கங்கள், வாசகர் கேள்விகள், கருத்துக்கள் மற்றும் விபரங்களுக்கு தயங்காது எழுதுங்கள்.
நிர்வாக ஆசிரியர், 'திருப்பம் 215, F/2/6, Park Road, Colombo-5

Page 6
தண்டோரா முழங்குகிறது. இன்னும் 50 நாட்களே உள்ளன எதற்கு சுதந்திரப் பொன்விழாவிற்குத்தான் அட பொன்விழாவிற்கா? என்னுள்ளே பதுங்குகிற வார்த்தைகளில் சுரத்தற்று முணுமுணுக்கிறேன். "மோசமான திரைப்படம் ஒன்றின் வெள்ளிவிழாப் போலத்தான் இதுவும் -சுதந்திரம் பற்றியும், பொன்விழாப் பற்றியும் வானொலி, தொலைக்காட்சி, பத்திரிகைகள் யாவும் புனைந்து புனைந்து வனைகின்ற போலிவார்ப்புகளுள் நிரம்பப் பொய்மை இருந்தது. சுதந்திரமோ இல் பொருளாயிற்று. இல்லாத சுதந்திரம் எங்கிருந்து எமக்குச் சுவறும்? வாழ்க்கையில் இல்லாதது வார்த்தைகளில் வார்க்கப்படுகிறது. வெறும் வார்த்தைகள் விடுதலையாகுமா? உயிர் வாழ்விற்கே
உத்தரவாதமில்லாத என்னைக் கடந்து
செல்கின்றன விடுதலையிற் காலூன்றாத நாட்கள்.
★ ★ ★ தண்டோரா முழங்குகிறது. 'பொன்விழாவிற்கு இன்னும் 40 நாட்களே உள்ளன ஓ நாட்கள் நெருங்கி வருகின்றன -நெருங்கி வருகின்ற நாட்கள் புதிதாய் நமக்கு எதைக் கொண்டு தரப் போகின்றன
- நாளை மற்றுமொரு நாளாய், உயிர்
ஈரும் வாளாய் இருதி த லண்றி? இருபத்தோராம் நூற்றாண்டிற்கும் தான் நாட்கள் நெருங்குகின்றன. ஏல விற்பனையாளன் போலக் கூவினால் பொன் விழா நாட்கள் பொழிகின்ற குணடுகளுக்குப் பதிலாகப் பொன்முட்டைகளையா இடப் போகின்றன? காயம்பட்ட நாட்களின் ஞாபகங்கள் இன்னும் கண் திறந்திருக்கும் புண்களாய். கைவசம் உள்ள நாட்களும் குருதி வழிகின்றனவாய்." இனிவரும் நாட்கள் எமக்கென்ன ஈனும்? நாணி சலிதீதுக் கொள்கிறேன். வெறுஞ்சலிப்பல்ல. விடுதலை கெட்டு
நொந்தவன் சலிப்பு.
இது தேசத்தின் சுதந்திரப் பொன்விழாக் காலம் கவனிக்கவும்
எனினும்
தண்டோராக்காரன்.
'அதனால் என்ன? புணர்ணுணி ட தேகத்துக்குப் பொன்னாடையும், புண்பட்ட தேசத்துக்குப் பொன்விழாவும் நல்ல மருந்தென்கிறாயா? சிலுவையிலறைபட்ட நாட்களின் கொடுமுடியில் நீ சூட்டிய முள்முடியை நீக்கிவிடுவாயா? முலாம் பூசி பொன்முடியென்று அதற்குப் பெயரிடுவாய். எனக் கல்லவா தெரியும் முட்களின் உறுத்தல். கைவிலங்கைப் பொன்விலங் கென்பாய். கைவீசி நடக்கும் சுதந்திரமிழந்த எனக்கல்லவா தெரியும் அதன் தளை
உறுத்தல். Vy
 
 

மட்டிட முனைகிறேனா? மட்டிடுதற்கான
தருணங்களை விழுங்கி வீங்கிப் புடைத்து வெடிக்கும் நிலையில் எனதுயிர். என் வாழ்வின் மிகவும் மோசமான கணங்கள். கணங்களின் வாய் பிளந்து எழுகிற ஊளை ஒலி. மயான ஊளை. சாக்காட்டு நரிகளின் மரண ஊளை. மரண ஊளையின் ஒலி விகாரத்துள் உறைந்து போய் விட்டதாய் என் உயிர். உறைதல். இடம் வலம் தெரியாத உறைதல். நான் எங்கிருக்கிறேன். யாரோ உலுப்புகிறார்கள்.
துவக்கு முனையால் குத்துகிறார்கள். சப்பாத்துக் காலால் உழக்குகிறார்கள். நெஞ்சாங் கட்டையை உதறி எழுந்து உட்கார்ந்த பிணம் போல் நான் திமிறி விழிக் கிறேன். பார்வையினூடே காக்கி உடைகளின்
கணி மங்கலிட்ட
நிழலாட்டம். கண்களைக் கசக்கி விட்டுப் பார்க்கிறேன். பொலிஸ் நிலையம். என் முன்னே தெரிந்த விளம்பரப் பலகையில் ஒட்டியிருந்த பொன்விழா முகத்தில் வழிகிறது இரத்தம். கீழே பிணங்கள். ஒன்றன் பக்கலில் ஒன்றாக, ஒன்று, ரெண்டு, elpg), 559, asses. இளங்குருத்துகளான, இனிய வாலிபங்களான எட்டுப் பிணங்கள். எனக்குத் தெரிந்த அயலவர் பிள்ளைகள். ஏன்? ஏனிவர்க்ள் கொல்லப்பட்டார்கள்? தமிழச்சியின் பிள்ள்ைகள் என்பதால்தானே. அப்படியானால் நான் மட்டும் எப்படித் தப்பினேன்?
- இப்போது நான் என்னைப் பார்க்கிறேன். என்னை நானே அடையாளம் காண முயல்கிறேன். ஆனால் என் பார்வையில்
ஓர் அந்நியம் தொற்றிக் கொள்கிறது. நானே
எனக்கு அந்நியமாக, என்னிலிருந்து கிளை
கொள்கிறது ஒரு பிணப் பார்வ்ை, என்னை நானே ஒரு விறைத்த பிணமாய்க் காணும் வேண்டாப் புரார்வை. இந்தப் பார்வையில் நான் யார்? தமிழனா? சிங்களனா? மனிதனேதானா எதுவுமேயில்லை. நான் கட்டைப் பிணத்திலிருந்து கழன்ற ஒரு பிணப் பூச்சி. சாக் காட்டுப் பூச்சி. அப்படிதீ தானா? என்னை நானே கேட்கிறேன். என்னை நானே கேட்ட கேள்விக்கு எனினருகில் நின்ற சப்பாத் தொன்று தன் உதையினால் சொன்னது நீ ஒரு உதைபடும் ஜந்து. நானே அதை ஸ்னக்குள் வாங்கி என்னுள் சொல்லிக் கொணி டு எதிர்ப்படும் சுவரொட்டியைப் பார்க்கிறேன். முகமெங்கும் ரத்தம் வழிய இம்முறை அது என்னைப் பார்த்து மிகவும் பரிதாபத்தோடே சொன்னது நீ சுதந்திரன் அல்லன்.
இதோ அதற்கான ரத்த சாட்சிகளாய் எட்டுப் பிணங்கள். சுதந்திரப் வேட்டையாடிய மனிதப் பிணங்கள் - சுவரொட்டி இம்முறை குரலெடுத்துப் பேசியது யாருமே சொல்லிக் கொடுக்காதது. யாருக்குமே சொல்லாதது. யாரோடும் நான் பேசும் வலுவிழந்த நிலையில் சுவரொட்டி. அதுவும் பொலிஸ் நிலைய விளம்பரப் இருந்தும் பேசியது. உணர்மையிலது சுவரொட்டியினி
பொன் விழா
பலகையில்
குரல்தானா? எனக்கு ஐயம் தோன்றியது. இடம் மாறி ஒலிக்கிறதே! என் ஐயம் தெளிவாகியது நொடிப்பொழுதில். அது அதன் மீது வழிந்த இரத்தத்தின் குரல். இரத்த சாட்சிகளின் குரல்.

Page 7
செட்டைகளிலிருந்து வெளிப்படும் ஒரு
நெடில் போல இந்தச் சுவரொட்டி
களிலுமிருந்து என்னைப் பயமுறுத்தும்
வகையிலான வெடிலின் வெளிப்பாடு. நான் முகத்தைத் திருப்பிக் கொள்கிறேன்.
- அகப்பட்ட சுவர்களையெல்லாம்
ஆக்கிரமித்துள்ள இந்தச் சுவரொட்டிகள் எதையோ மறைக்க முயல்கின்றன. எதை? இ ல’ பெ ா ரு ள |ா கபி வ ட ட சுதந்திரத்தையேதானா? இந்தத் தேசம் பட்ட காயங்களையா? போலி அரசியலையா? பொய்யான சமாதானத்தையா? என்னைப் பிய்த்துப் பிறாண்டவிருக்கும் உள்மறைந்த குரூரத்தையா? சுவரொட்டிகளில் பதிகின்ற என் பார்வையை உரித்து உள்முகமாய்த் திருப்புகிறேன். மனசோ மீளவும் இன்னும் எத்தனை நாட்கள் - கணக்குப் போடத் தொடங்குகிறது.
இன்னும் பத்து நாட்கள். இன்னும் ஒன்பது நாடகள. விரல்கள்ை மடிக்கிறேன். என் பாம்பு விரலையும் தான். இன்னும் எட்டு நாட்கள். நாட்கள் நெருங்குகின்றன. தவறுநெருக்குகின்றன. நெருக்குவாரத்தினிடைப்பட்டு நெளிகிறேன். பாம்பின் நெளிதல். அடிபட்ட பாம்பினது போல அரக்கி அரக்கி. நாட்களே! வேகமாய் நகர்ந்து கழிக’ எனப் பணிக்க நான் யார்? பொன்விழாவைக் கண்டியிலிருந்து கொழும்பிற்குப் பொன் மூக்குடைந்தபடி போவெனப் பணிக்கும்
வல்லமை போல் எனக்கில்லை. நாட்கள் அடிபட்ட பாம்பாக அரக்கி அரக்கி,
சலித்துச் சலித்து, அச்சத்தில் ஊர்ந்து ஊர்ந்து நகர்கின்றன.
-இந்தத் தேசம், எனக்கான, என்னுடைய, நாட்களை, எனக்கு வழங்கியிருந்தால், எனக்கான திறந்த வெளியில், கோயில் கொடியேறக் குதூகலிக்கும் என் சிறுவயசுக் காலம் போலத் துள்ளிக் குதித்திருப்பேன். எனினுடைய சுதந்திர கொடியேறலும் அனுமதிக்கப்பட்டிருந்தால் இந்தச் சுதந்திரப் பொன்விழா எனக்கும் ஒரு உற்சவ கால்ம் போல் கழியும்.
வாழி வினி
-மாறாக என்ன நடந்தது?
என் வாழ்வு சிறுமைப்படுத்தப்பட்டது. இந்தத் தேசத்தின் கொடி எனக்கு நிழல் தர மறுத்தது. விாளேந்தி மிரட்டியது. இதன் தேசீய கீதம் எனது இதய ஒலியோடு ஒத்திசைக்கவில்லை. எனது தேவை தேசீய கீதத்தின் மொழிபெயர்ப்பும், இசைப்பும் எனது சுதந்திரதி தை மறுதலிக்காமை.
அல்ல.
-மாறாக என்ன நடந்தது? என்னுடைய சுதந்திரத்தை நீ மறுதலித்தாய். நான் உன்னுடைய சுதந்திர தினத்தைப் புறக்கணித்தேன். கறுப்புக் கொடிகள் கட்டினேன். எதிர்ப்புக் கொடி இன்னுமொரு தேசீயக் கொடிக்கு வித்திட்டது. வாளேந்திய சிங்கம் துவக்கேந்திய புலியை ஈன்றது.
விளைவு? எதிரெதிர்க் கச்சை
கட்டலாகி,
 

மல்லொன்று நேர்ந்து மணிசர் கொலையுண்டு.
大 ★ 大 உண்மையிலேயே நான் வருந்துகிறேன். ஒரு சிறிய தேசத்தில் உடனொத்த சுதந்திரராய் நாமும் வாழச் சம்மதிக்காத சிங்காசனமே f உனைக் குறித்தும்தான் வருந்துகிறேன் எம்மைச் சிறுமைப்படுத்துவதால் நீ எய்தும் பெருமை என்ன? சீறிச் சினநீது காயப்படுத்துகிறாய்? இன்றைய நாட்களை ஏன் இரத்தத்தில் தோயவைக்கிறாய்?
எமின்ம ஏணி
பொன்விழா முகத்தைப் பொலிவுறுத்தும் பொருட்டாக எம்மையெல்லாம் ஏனிப்படி அச்சுறுத்துகிறாய்?
எப்படித்தான் பூசி மினுக்கினாலும் எனக்குத் தெரிவது உன் கோரமுகம்தான். நான் அஞ்சுகிறேன், வெளியில் நடமாட அஞ்சுகிறேன்.
அஞ்சுதல் என் தொழிலாகிவிட்டது. அச்சுறுத்துதல் அரசின் தொழிலானபோது அமுங்குதல் என் வழக்கமாயிற்று.
செத்துப் போய்க் கிடக்கும் வீதிகளில் என்னைத் தொலைத்துவிட நாணி விரும்பவில்லை. தயவு செய்து என்னை யாரும் தேடாதீர்கள். வீட்டிற்குள் என் .முடக்கம். வீடு எனக்கு விடுபட்டிருக்கும் இடமல்ல; என் பதுங்கு குழி. விடுதலை கெட்ட மனிதர்களே வீடுகளுள் முடங்கிக் கிடப்போம் வாருங்கள். இந்தத் தேசம் முடவர்களுக்கானது. சுதந்திரத்தில் காலூன்றாதவர்களுக்கானது. w
- பொன்விழாச் சாமி வலம்வரப்போகுது
டுண் டுண் டுண் வீதிகளெல்லாம் தடைபடலானது டுண் டுண் டுண் பிரெஞ்சுக் குதிரைகள் முன்னே வருகுது டுண் டுண் டுண் குண்டு துளைக்காத கார்கள் தொடருது
டுண் டுண் டுண் எல்லாமுண்டு பொன்விழாவில் ஒன்றைத் தவிர அது என்ன? அதுதான் சுதந்திரம்.
ஆதலால் வாருங்கள் மானிடரே நாம் முடக்கம் எய்துவோம். அவரவர் வீடுகளுக்குள் குழி பறித்துக் கிடப்போம். சுதந்திர முடக்கம் எய்திக் கிடப்போம்.
- கிடந்தோம். அசையாமல் கிடந்தோம். சுதந்திரமும் எம்மோடே முடங்கிக் கிடந்தது.
எண்ணிக் கணக்கிடும் நாட்கள் எம்மேல்
அச்சமெனும் பாம்பாய் ஊர்ந்து செல்கிறது.
கூண்பாண்டியராய்க் குறுகிக் கிடந்தோம் ; யாருடைய சோலி தொந்தரவுக்கும் போகாமல், வானொலி கேட்டாலும் " மெதுவாய்த்தான். பீ. வி. போட்டாலும் தணிச்சுத்தான். கதவைச் சாத்தித் தாழ்ப்பாள் இட்டாலும் சத்தம் கேளாமல் தான். மெலிதாய்க் கதவு கிறீச்சிட்டாலும் எங்களின் இதயப் பிணைச்சல் விடுபடுமாப் போலப் பயப்பட்டோம். தாழ்ப்பாளிடுதல் இன்றைய நாளில் ஒரு தடுப்பல்ல. ஆனாலும் மனதுக்கு ஒரு ஆறுதல். ஆறுதல் என்ன ஆறுதல். மனக் கதவு எந்த நேரமும் சாதி திறதும் திறக்கிறதுமாக கீ கிறீச்சிட்டபடிதான்.

Page 8
- கதவு தட்டப்படுகிறதா? இல்லை! அது மனப் பிரமையாய்த்தானிருக்கும். அப்படியே இருக்குமாறு மனசு பிரார்த்திக்கிறது. எதிர்பார்ப்புப் பொய்யாக மீண்டும் தட்டப்படுகிறது கதவு. தட்டுகிற கை பொற்கைப் பாண்டியனுடையது அல்ல என்பது ஒசையின் உள்ளே உதைக்கிற அதிகாரத்தில் புரிகிறது. இப்பொழுது தட்டுதலில்லை. உதைத்தல். சப்பாத்துக் காலால் ஓங்கி உதைத்தல் தயங்கித் தயங்கி மெதுவாய்த் திறக்கையில் உதை என்மீது விழுகிறது.
- சப்பாத்து உதை, வேற்றுமொழித் தூஷணை, துப்பாக்கிலமுனை யாவுமே ஒரே மொழியில் என்னை அடையாளம் கேட்டன. அடையாள அட்டையைக் கொடுக்கிறேன். எனக்குத் தெரிகிறது இது வெறும் சம்பிரதாயந்தான். முற்கூட்டியே ஏதோ தீர்மானத்தோடு வந்திருப்பவர்களுக்கு அடையாள அட்டையைப் பரிசீலிக்க வேண்டிய தேவையில்லை. ஏற்கனவே அவர்களினி கைகளில் கசங் கிகி கொண்டிருக்கும் அடையாளங்களில் இப்பொழுது என்னதும் ஒன்றாயிற்று.
இனி எனதுயிரும் கசங்கப் போகிறது
என்பதும் தெளிவாகிறது. புறமுதுகில் குத்துகிற துவக் குமுனை எனது அடையாளத்தைக் குறி வைத்தது
என்பதும் தெரிகிறது. பொலிஸ் நிலையம்
நோக்கி நடக்கச் சொனினார்கள். சொன்னார்களென்ன துவக்கு முனையால் உந்தித் தள்ளினார்கள். எனது நடை பின்னுகிறது. எனது நடையைப் பின்னிப்
பின்னி பின்னிழுப்பது எது? பாம்புதான். அச்சமெனும் பாம்பு.
- இரவு நான் கண்ட கனவு ஞாபகத்தில் படம் விரிக்கிறது. பாம்பொன்று, அதுவும் மனிதக் கணிகள் கொண்ட பாம்பு என்னைத் துரத்துகிறது. நான் அஞ்சி ஒடுகிறேன். பாம்பு விடவில்லை. கால்களில்
வந்து பின்னிக் கொள்கிறது. இரு
கால்களிலும் விலங்கு போலச் சுற்றிக் கொள்கிறது. நான் விடுபடத் துடிக்கிறேன். போராடுகிறேன்.
நீண்ட "போராட்டத்தின் பின்னர் அது தன் பிடியை விடுத்து, விலகிப் போய் ஒரு
மரத்தின் மீது ஏறிக்கொள்கிறது. நஞ்சூறிய
மனிதக் கணிகளால், வைத்த கணி வாங்காமல் வழி மேல் விழி வைத்துக் காத்துக் கொண்டிருக்கிறது. பாம்பு விட்டு விலகிய பின்னாலும் பாதை தடைபடுகிறது. என் கால்கள் பின்னிக் கொள்கின்றன. இந்தக் கணத்திலும் அந்தப் பாம்பின் மனிதக் கண்கள்தான் என்னைப் பயமுறுத்து கின்றதா? எனது கால்களில் விலங்காய்ப்
பினி னலிடுகின்றதா? கால கள்
அசையவேயில்லை. விழுகிறது ஒரு
உதை. முகங்குப்புற விழுந்ததில் பல்லுடைந்து, சொண்டு வீங்கிப் புடைத்து இரத்தம் சொட்டச் சொட்ட நடந்து செல்கிறேன்.
- எனது மனம் எதையோ எண்ணிக் கொண்டிருக்கிறது. இறைவனின் நாம ஜபமா? எஞ்சியிருக்கும் மணித்துளிகளைக் கணக்கிடுதலா? எனது இதய ஒலி பறை
ஒலியாக மாறி ஒலிக்குமாப் போல அதை
 

மட்டிட முனைகிறேனா? மட்டிடுதற்கான தருணங்களை விழுங்கி வீங்கிப் புடைத்து வெடிக்கும் நிலையில் எனதுயிர். என் வாழ்வின் மிகவும் மோசமான கணங்கள். கணங்களின் வாய் பிளந்து எழுகிற ஊளை ஒலி. மயான ஊளை. சாக்காட்டு நரிகளின் மரண ஊளை, மரண ஊளையின் ஒலி விகாரத்துள் உறைந்து போய் விட்டதாய் என் உயிர். உறைதல். இடம் வலம் தெரியாத உறைதல். நான் எங்கிருக்கிறேன். யாரோ உலுப்புகிறார்கள்.
துவக்கு முனையால் குத்துகிறார்க்ள். சப்பாத்துக் காலால் உழக்குகிறார்கள். நெஞ்சாங் கட்டையை உதறி எழுந்து உட்கார்ந்த பிணம் போல் நான் திமிறி விழிக்கிறேன். பார்வையினூடே காக்கி உடைகளின்
கணி மங்கலிட்ட
நிழலாட்டம். கண்களைக் கசக்கி விட்டுப் பார்க்கிறேன். பொலிஸ் நிலையம். என் முன்னே தெரிந்த விளம்பரப் பலகையில் ஒட்டியிருந்த பொன்விழா முகத்தில் வழிகிறது இரத்தம். கீழே பிணங்கள். ஒன்றன் பக்கலில் ஒன்றாக, ஒன்று, ரெண்டு,
மூணு, நாலு, . இளங்குருத்துகளான,
இனிய வாலிபங்களான எட்டுப் பிணங்கள். எனக்குத் தெரிந்த அயலவர் பிள்ளைகள். ஏன்? ஏனிவர்கள் கொல்லப்பட்டார்கள்? தமிழச்சியின் பிள்ளைகள் என்பதால்தானே. அப்படியானால் நான் மட்டும் எப்படித் தப்பினேன்?
- இப்போது நான் என்னைப் பார்க்கிறேன். என்னை நானே அடையாளம் காண முயல்கிறேன். ஆனால் என் பார்வையில்
ஓர் அந்நியம் தொற்றிக் கொள்கிறது. நானே
எனக்கு அந்நியமாக, என்னிலிருந்து கிளை கொள்கிறது ஒரு பிணப் பார்வை. என்னை நானே ஒரு விறைத்த பிணமாய்க் காணும் வேண்டாப் புர்வை. இந்தப் பார்வையில் நான் யார்? தமிழனா? சிங்களனா? மனிதனேதானா எதுவுமேயில்லை. நான் கட்டைப் பிணத்திலிருந்து கழன்ற ஒரு பிணப் பூச்சி. சாக்காட்டுப் பூச்சி. அப்படித்தானா? என்னை நானே கேட்கிறேன். என்னை நானே கேட்ட கேள்விக்கு எனினருகில் நினிற சப்பாத் தொன்று தன் உதையினால் சொன்னது நீ ஒரு உதைபடும் ஜந்து, நானே அதை எனக்குள் வாங்கி என்னுள் சொல்லிக் கொண்டு எதிர்ப்படும் சுவரொட்டியைப் பார்க்கிறேன். முகமெங்கும் ரத்தம் வழிய இம்முறை அது என்னைப் பார்த்து மிகவும் பரிதாபத்தோடே சொன்னது நீ சுதந்திரன் அல்லன்.
இதோ அதற்கான ரத்த சாட்சிகளாய் எட்டுப் பிணங்கள். சுதந்திரப் பொன் விழா வேட்டையாடிய மனிதப் பிணங்கள் - சுவரொட்டி இம்முறை குரலெடுத்துப் பேசியது யாருமே சொல்லிக் கொடுக்காதது.
யாருக்குமே சொல்லாதது. யாரோடும் நான்
பேசும் வலுவிழந்த நிலையில் சுவரொட்டி. அதுவும் பொலிஸ் நிலைய விளம்பரப் பலகையில் இருந்தும் பேசியது. உணமையிலது சுவரொட்டியின் குரல்தானா? எனக்கு ஐயம் தோன்றியது. இடம் மாறி ஒலிக்கிறதே! என் ஐயம்
தெளிவாகியது நொடிப்பொழுதில். அது அதன் மீது வழிந்த இரத்தத்தின் குரல். இரத்த சாட்சிகளின் குரல்.

Page 9
- சரி. நான் எப்படித் தப்பினேன் இரத்த
சாட்சிகளில் ஒன்றாகாதவாறு? சீருடை
தரித்தவருள்ளிருந்தும் நீண்ட ஒரு கருணையின் கரத்தாலா? இல்லை
யென்றும் நான் மறுத்தல் இயலாது. எனினும்
என் பார்வை இரத்த சாட்சிகளின் மீது ஊர்ந்து திரும்புகையில் உச்சியிலடித்தாற் போல் ஓர் உண்மை உறைத்தது. ஓ என் மூப்பு முடியின் நரையோடல் அதுதான் என் உயிர்தடுப்புக் கவசமாயிருந்ததா - இருக்கலாம் என்ற நினைப்பே, இந்தக் கணத்தில் எண்மீதே எனக்குள் திரண்ட வெறுப்பாக மாறியது. ஓர் இளங்குருத்தை வாழ விட்டு இநீதகி காவோலை விழுந்திருக்கலாகாதா? எனக்குள்ளே நோகி காடு, தக்க வைதீது கி கொண்டிருக்கும் உயிரின் மீது, உயிர் வாழ்வின் மீது இன்னமும் எனக்கொரு காதல் உண்டாயின் அதன் மீது நான்
காறித்துப்புகிறேன். எச்சில் ஊற ஊறக் காறித்
துப்பிக் கொண்டேயிருப்பேன். தூ.
- என்னுடையவும் நாட்களே! இளமையின் கனிவுகளை காவு கொள்ளும் நாட்களே! சுதந்திரம் என்பதொரு கெட்ட கனவாய்ப் போகும் நாட்களே! உம்மீதும்தான்.
- எம்மை முடமாக்கி விட்ட சுதந்திரம் கெட்ட தேசத்தின் மூளிப்பட்ட முகமே உன் மீதும்தான்.
- முகம் உனக்கேது முகம் முக்காடிட்டு உலகை வலம்வரும் உனது சமாதான முகமூடிகளை, மனித உரிமை மீறல்களை கிழித்துக் காட்டும் ரத்த சாட்சிகளில் ஒன்றாய் மாறாமல், எஞ்சியிருந்து என் உயிர்
கழிக்கும் நாள் வரையிலும் நான் உன் மீதான சாபத் தீட்டாயிருப்பேன்.
- நான் மிகவும் வெறுப்போடுள்ளேன். ஐம்பதுகளின் பிணப்பாரம் அழுத்த அழுத்த
எனக்குள் வெறுப்பும், வெம்மையுமே
விளை பொருளாயின. வெறுப்பும், வெம்மையும் சாபத் தீயாய், வடவைக் கனலாய் மூண்டபடி உள்ளன. சாபங்களின் மொத்தக் கொள்வனவாகிவிட்ட தேசத்தின் பீடமே வெறுப்பை விதைத்து விட்டு வேறெதை நீ அறுவடை செய்வாய்? இதோ தீயுமிழ்வனவாய் உனை நோக்கித் திரும்பிக் கொண்டிருக்கின்றன எம்மைத் தீண்டிய சாய நாட்களின் சர்ப்ப நாக்குகள்.
- பொன் விழாக் படமெடுத்தாடும் பேரினவாதப் பாம்பின் வாலென பின் நீளும் ஆண்டுகள் யாவற்றையும் கணக்கெடுத்துப் பார். உன் விஷமீ பாய் ச் சலிலிருநீதுமி விலக்களிக்கப்பட்ட ஆணி டெது? விமோசனமளிப்பதாய்ச் சொன்ன சமாதான ஆண்டும் கூடத் தப்பவில்லை. இந்தப் பொன்விழா ஆண்டிலும் இதோ இந்தப் பொக்குறுணிக் கிராமத்தின் ரத்த சாட்சியம்.
காலம் வரையும்
- அங்கே கொழும்பில், மக்களில்லாப்
பாலையில், உன் பொன்விழா அணிவகுப்பு - இங்கே தமிழ் மண்ணின்,
பொக்குறுணியில் இரத்த சாட்சியங்களின் அணிவகுப்பு - அங்கேயுன் தேசீயக் கொடிகளின்
ஏற்றம் ? - இங்கே அவை இறக்கப்பட்ட
கம்பங்களில் கறுப்புக் கொடியேற்றம்
 

- பொன் விழாத் தனியே பொது
மக்களோ அங்கே தொலைக் காட்சிப் பெட்டிகளின் முன்னே
- இங்கேயோ பிரேதப் பெட்டிகளின்
முன்னேயும் பின்னேயும் அணிதிரண்ட தமிழ்
மக்கள்.
ஏன் இந்தப் பொன்விழா இருமுகம் கொண்டது? இருவேறு திசைகளில் ஒருபுறம் சமாதானக் கோஷம் , மறுபுறம் அதையே தின்கின்ற யுத்தம். இது நல்ல இரட்டை வேஷம், எவரெவர்க்கோ இந்த நாடகம் உவப்பாகலாம்; இந்தத் தேசத்திற்கு இது அவமானம் இல்லையா - உனது போர்முகமும், பொன்விழா முகமும் நாம்
இரு வேறு பயணங்கள்.
கண்டு கொண்டோம். நீ கண்டுகொள்.
- ஐம்பதுகளின் பொல்லாமைகள் யாவும் சர்ப்ப நீட்சியாய் உன்னை எதிர்முகம் கொள்கின்றன’ சாப மூச்சுமிழ்கின்றன. இதோ அவற்றின் திரட்சி. மண்ணில் கிட்ந்து புரண்டு அழுகின்ற தாய்மார்கள்
மண் அள்ளித் தூற்றுகிறார்கள். அவை
அனலினி துண்டுகள். கனல் கொள் வெக்கைகள். வெறும் புழுதி வாரித் தூற்றுதல் அல்ல. இருள் மூடலென்ன உன் தேசத்தின் மீதே கவிகினிற பொக்குறுணிக் கிராமத்தின் புதல்வர்களைப் போர்த்து மூடிய கறுப்புத் துணிகளின் இன்னொரு விரிவாய் எழுந்து கவிகின்றது
கரிய கணி டுகொள் ;
வெறும் துகள் க்ளல்ல.
சாபப் பெரும் புயல் .
சாபம் - எல்லாவற்றிற்கும் விலை கொடுத்தாக வேண்டும். எமக்கு மறுதலிக்கப்பட்ட
எல்லாவற்றிற்குமே.
கேட்டிருப்பாய்! வட்டமிட்டு வரும் பறவையின் பாடல் காற்றை விலக்க எழும் சிறகோசை அதன் கட்டற்ற புறப்பை எவ்விதம் அனுமதிக்க முடியும்
சுடு,
மென்கரமூன்றிப் புன்னகைத்துத் தவழிந்து வருவது குழந்தையே விரயமுறும் எரிபொருள் இரையும் டாங்கி
குழும் புகை மத்தியில் உனது குழப்பம் மழலையா? உறுமலா? விசையை அழுத்து.
அழகாய்ப் பூத்துள்ளது மலர் எரிச்சல் தரும் அதன் மெண்மை
விழிகளை உறுத்தும் அழகு
அடிக்கும் உனது சப்பாத்து உருகும் தார்மீது திருகியெறிந்து மிதி
மழைக்காலம் நிமிர்ந்தெழும் பசிய தளிர்கள் உண்ணை மகிழ்விக்க முடியாத சோலையின் வருகை நஞர்குட்டிய கத்தி கொணடு
- مpLL
9ളffം Mളffം நீ வீரன்
கடிகார முட்கள் சுழலும் மையத்திண்மீதும் ஒரு வேட்டுவை காலமும் சிதறட்டும்.
-எம். • கெ ஜபார்

Page 10
தேசிய விடுதலைக் கோட்பாடும் பெண்களின் சமத்துவமின்மையும்
(சென்ற இதழ் தொடர்ச்சி)
தேசிய விடுதலைப் போராட்ட
காலத்திலும் பெண்கள் பிரச்சினை ஒரு
வகையான சந்தேக நோக்குக்குரிய தீர்க்கப்படாத ஊசலாட்டத்துக்குரிய ஒன்றாகவே இருந்தது. சாதிப் பாகுபாடு, ஆண் பெண் ஏற்றத்தாழ்வுகள் பற்றி தேசியப் போராட்ட இயக்கங்கள் கவனமெடுத்த போதும் தனிப்பட்ட குடும்பச்சட்டங்கள் சம்பந்தமான மாற்றங்கள் பற்றி அவர்கள் விடாப்பிடியாக பழைய போக்கையே கைக் கொண்டனர். தனிப்பட்ட குடும்பத்தோடு சம்பந்தப்படாத பொதுவான விஷயங்களில் பெண்களுக்கு உரிமை வழங்குவதற்கு இவர்கள் மிகுந்த உற்சாகம் காட்டினர். உதாரணமாக பெண்களுக்கு வாக்குரிமை வழங்குவதில் இவர்கள் முற்போக்காக இயங்கினர். காரணம் இது
இவர்களின் அரசியல் ஆதிக்கத்துக்கு பெரிய
அளவில் உதவும் என்பதால். ஆனால் அதே நேரத்தில் அகில இந்திய பெண்கள் மாநாடு, பெண்களின் விவாகரத்து சம்பந்தப்பட்ட இந்து மதச் சட்டங்களை மாற்ற வேண்டும் என்று கோரியபோது இவர்கள் அதற்கு ஆதரவு காட்டவில்லை. எங்கெங்கு குடும்ப சம்பந்தப்பட்ட விஷயங்களில் ஆண்களின் ஆதிக்கம் பாதிக்கப்பட்டதோ அங்கெல்லாம் இவர்கள் பெண்கள் உரிமைகளை வழங்கத் தயாராய் இருக்கவில்லை. மாறாக கல்வி, உத்தியோகம், வாக்குரிமை போன்ற பொது விஷயங்களில் அவர்களுடைய
i
ஆதரவு அமோகமாய் இருந்தது. ஆனால் குடும்பம் சம்பந்தப்பட்ட சட்டங்களில் பெண்கள் மாற்றம் கோரியபோது பெண்கள் மேற்கத்தைய ஏகாதிபத்தியச் செல்வாக்கால் பாதிக்கப்பட்டு தேசியப் பற்றில்லாமல் நடந்து கொள்கிறார்கள் என்று முன்னுக்குப்பின் முரணாய் வாதாடினர்.
6δ) Η -
பெணிகள் பிரச்சினையில் தென்னிந்திய திராவிட இயக்கங்கள் ஏனைய இநீதிய தேசிய இயக் கங்களினி போக்கிலிருந்து முற்றாக மாறுபட்டவை யாய் ஓர் முன்மாதிரியான போக்கைக் இநீதியாவின் சுதந்திரத்திற்குப் பின்னர் எழுச்சி கொண்ட
கடைப் பிடிதி தன.
இவ்வியக்கம், காலங்காலமாக இருந்து வந்த சாதி அமைப்பு முறை, மத மூடநம்பிக்கைகள், சமூக ஏற்றத்தாழ்வுகள்
போன்றவற்றுக்கெதிராகப் போராட
முன்வந்ததோடு பெண்களுக்கெதிராக இழைக்கப்பட்ட அநீதிகளுக்கெதிராகவும் போராடுவதில் தமது முக்கிய நேரத்தைச் செலவழித்தனர். பெண்களின் பால்யத் திருமணம், விதவை மறுமணத்துக் கெதிரான சட்டம், சீதனக் கொடுமை போன்றவற்றுக்கெதிராக இவை போராடின.
இவி வியக் கங்கள்
தமது போராட்டத்தை எழுத்தில் மட்டுமல்லாது செயலிலும் காட்டியதே அடுத்த முக்கிய
 
 
 

அம்சமாகும். இவ்வியக்கங்களின் தலைவர்கள் மேடைகளில் இவற்றுக் கெதிராக முழங்கியதோடு ஊர் ஊராகச் சென்று தமது தலைமைகளில் பலவித சீர்திருத்த திருமணங்களையும் சாதிப் போராட்டங்களையும் நடத்திக் காட்டினர். மேலும் தமிழ் மக்களைப் பிடித்திருந்த இம்மூடப் பழக்க வழக்கங்கள் "ஆரிய மாயை' என்றும் பிராமணரால் திட்டமிட்டுச் செய்யப்பட்ட ஆரியமயப்படுத்தல் என்றும் வாதாடினர். சமஸ்கிருத மனுசாஸ்திரங்கள், ராமாயணம், புராணங்கள் இன்னோரன்ன யாவும் ஆரிய மயப்படுத்தலின் வெளிப்பாடு என்றும் பெண்களின் அடிமை நிலைக்கு இவையும்
ஒரு காரணம் என்றும் வாதாடினர். எது
எப்படியாய் இருந்தாலும் இவற்றின் பின்னணியை வைத்துக் கொண்டு பார்க்கும்போது ஒரு தேசத்தின் கலாசாரம் எப்பொழுது மீள்கட்டமைப்புக்கும் புனருத் தாரணத்துக்கும் உள்படுத்தப்படுகிறதோ, அப்பொழுதெல்லாம் பெண்களும் அங்கு ஆண்களிலிருந்து ஒரு வித்தியாசமான பிம்பத்தோடு சமத்துவமான நிலையிலோ ஒடுக்கப்பட்ட நிலையிலோ பங்கெடுத்துக் கொள்கின்றனர். புதுமறுமலர்ச்சிக்கான அளவுகோல்களாய் அவர்களே நிற்கின்றனர் என்பதும் உண்மை.
மதமும் பெண்களும்
மொழி, இனரீதியான தேசிய எழுச்சிக்கு உந்துசக்தியாக இருந்த மதம் பெணிகள் விஷயத்தில் மிகுந்த பிற்போக்குத்தனத்தையே உருவாக்கிற்று. தேசிய எழுச்சியின் போது கலாசார ரீதியான அடையாளத்தைப் பேணுவது என்பது
மகாபாரதம் போன்ற
பெண்களுக்குப் பாதகமான விளைவு களையே ஏற்படுத்திற்று. 1891ல் பெண்களின் திருமண வயது சம்பந்தமான சட்டவாக்கம் (age of consent bill - 1891) ubiu பிரச்சினையின் போது இந்திய தேசியப் போராட்ட முன்னணித் தலைவர்களில்
ஒருவரான திலகர்கூட அதற்கு எதிராகவே
Systö GlessTTGIšsirit (Yogendra Singh 197374) என்றால் நிலைமையை விளங்கிக் கொள்ளலாம். ஆங்கிலேயர் இந்தியக் கலாசார மரபுகளில் தலையிடக்கூடாதென்பதே அவர்களினி வாதமாயிருந்தது. இக்காலத்தில்தான் வங்காளத்தில் 14% வீதமும் பம்பாயில் 10% வீதமும் சென்னையில் 4.5% வீதமும் என்று இந்துப் பெண்கள் பத்து வயதுக்குள் திருமணம் செய்யப்பட்டோ விதவைக ளாக்கப்பட்டோ இருந்தனர்.
இவ்வாறே முஸ்லிம் பெண்களும் மதச்சட்டங்களைத் துணையாகக் கொண்டு அடங்கி ஒடுக்கப்பட்டிருந்தனர். கணவனால் கைவிடப்பட்ட ஒரு முஸ்லிம் பெண் தனது கணவனிடம் ஜீவனாம் ச பணங்கோருவது இஸ்லாம் மதத்துக்கு விரோதமான அபச்சாரமாகக் கருதப்பட்டது. FraprurGoT (Shao-Banoa) Tsiigits முஸ்லிம் பெண்மணிக்குச் சார்பாக ஜீவனாம்ச பணம் வழங்கும் தீர்ப்பை நீதிமன்றம் பிரகடனப்படுத்தியபோது, இதற்கு முஸ்லீம் அடிப்படை வாதிகள் பலத்த எதிர்ப்பைக் காட்டினர். முஸ்லிம்களின் தனிப்பட்ட சட்டங்கள் இறைவனால் உண்டாக்கப்பட்டவை என்றும் அவற்றை மனிதர் மாற்ற முடியாதென்றும் எதிர்ப்புகள் கிளம்பின. இஸ்லாம் மதத்துக்கு ஆபத்து

Page 11
என்று சுலோகங்கள் எழுப்பி பம்பாவில் ஊாவலங்கள் நிகழ்த்தப்பட்டன. சம்பந்தப் பட்ட விஷயங்களில் சட்ட மாற்றங்களைப் புகுத்துவது பல உணர்ச்சிகரமான எதிர்ப்புகளை விளைவித்தது.
ஆகவே பெண்களின் நிலை இந்தியா, இலங்கை போன்ற கிழக்கத்தேய நாடுகளில் பழைய நிலையிலேயே தொடர்ந்தது. ஆண பெணிகள் இருபாலரும் சமமானவர்களே என்று அரசியல் சட்டம் கூறியபோதும் மதங்களின் பேரில் காலங்காலமாக வந்த நம்பிக்கைகள் பெண்களை ஆண்களின் ஆதிக்கத் துக்குள் கட்டுப்படுத்தியே வைத்தன. மேலும் பெணிகளுக்கென்று ஒரு பொதுவான எங்கும் சமமான சலுகைகள் உரிமைகள் உள்ளன. ஒரு சட்டவாக் கத்தை உருவாக்குவதும் சாத்தியப்பட வில்லை. ஒரு பொதுவான
பெண்களுக்கான சட்டவாக்கத்தை இந்தியப்
Gusoid, of GarfuGursili (Report of The Status of Women in 1975) og நிறைவேற்றப்படவில்லை. காரணம் மதரீதியாக ஒவ்வொரு மதத்துக்கும் உரிய சம்பந்தப்பட்ட சம்பிரதாயங்கள், சடங்குகள், சட்டங்கள் இதற்கு தீ தடையாக இருக்கின்றபடியால் அது நிறைவேற்றப் படவில்லை. இதனால் பெணிகள் பெரும்பாலும் பாதிக்கப்பட்டனர். ஆனால் இப்படிப் பாதிக்கப்பட்ட பெணிகள் சம்பந்தமாக அபிப்பிராயங்கள் அறியப்பட முயற்சிகள் எடுக்கப்படவில்லை. காரணம் ஆட்சியில் இருந்தவர்கள் நடைமுறையில் காணப்பட்ட போக்கை குழப்ப விரும்பவில்லை. ஆட்சியிலுள்ளோர்
இவற்றில் தலையிட்டு மாற்றங்களை கொண்டு வருவதன் மூலம் தீவிரவாத மதக்கோட்பாட்டாளர்களின் பகைமையையும்
அதனால் அவர்கள் தமது அரசியல்
அதிகாரங்களையும் இழக்க விரும்ப வில்லை. அதனால் ஒருவரின் கலாசாரம் எத்தகைய பின்தங்கியதாகவோ பழைமை வாய்ந்ததாகவோ இருந்தபோதும் அவை பேணப்பட
வேணி டும் எனிறே
கூறப்பட்டது. ஏனெனில் அதுவே எமது
தேசியத்துக் குரியது. அதில் விளைவிக்கும் மாற்றங்கள் நமது தேசியதி தை அந்நியப்படுதீதி விடும் எனவும் கூறப்பட்டது.
தேசிய விடுதலைப்
போராட்டமும் அதனால்
பாதிக்கப்படும் பெண்களும்
நவீனத்துவம் எல்லாமி மேற்கத்தைய மயப்படுத்தல் எனக்கூறப்பட்டு நிர்ாகரிக்கப்படும் ஒரு போக்கு எழத் தொடங்கிற் று. மேற்கத்தைய கலாசாரத்துக்கு எதிராக ஒருவர் தனது g56)T(FTU அம்சங்களைத் தூக்கிப் பிடிக்கும் நிலை ஏற்பட்டதால் எமது கலாசாரத்திற்கு காணப்பட்ட அடக்குமுறைச் சட்டங்களை அகற்றுவதற்குரிய வாய்ப்பில்லாமல் போயிற்று. இது பெண்களையே அதிகம் பாதித்தது. குடியேற்ற நாடுகளில் எஞ்சிநின்ற மேற்கத்தைய பழக்கவழக்கங்களுக்கு எதிராக பழைய கிழக்கத்தேயக் கலாசாரப் பண்புகள், வேதமரபுகள் மீட்டெடுக்கப் பட்டன. உடை, உணவு, பேச்சு, மொழி யாவற்றிலும் மேற்கத்தையப் பண்புகள் கைவிடப்பட்டு பழைய கலாசார சமய மரபுகள் வரவேற்கப்பட்டன. முஸ்லிம்

பெண்கள் தங்களை முஸ்லிம்களாகவும் இந்தியப் பெண்கள் தம்மை இந்துப் பெண்களாகவும் இலங்கையில் சிங்களப் பெண்கள் பெளத்த கலாசாரத்தைக் காட்டும் சிங்களப் பெண்களாகவும் காட்டிக் கொள்ளும் நடையுடை பாவனைகள் மீட்டெடுக்கப்பட்டன. வேதகாலமே
பெண்களின் பொற்காலம் எனக் குறிப்பிட்ட
வேதமரபும் தமிழர்களிடையே சங்ககாலப் பெண்களை நினைவூட்டும் போக்கும் போற்றப்பட்டன.
இதேகாலத்தில் சில ஆசிய நாடுகளில் பெண்ணிலைவாதம் என்பது மேற்கத்தையக் கருத்தாகவும் கிழக்கத்தைய கலாசாரத்துக்கு ஒத்துவராததாகவும் கூறப்பட்டது. இத்தகைய ஒரு குறுகிய பார்வை பல தேசிய விடுதலைப் போராட்டங்களின் உள்ளூறிய அம்சமாகக் காணப்பட்டது. இலங்கையின் வட கிழக்கில் தமிழ் பேசும் இனத்தவரின்
விடுதலைப் போராட்டம் நடைபெற்றுக்
கொண்டிருக்கும் இச்சந்தர்ப்பத்தில்தான் இந்நூல் (1988) எழுதப்பட்டது. தமிழ் பேசுமி இந்துக்கள், கத்தோலிக்கர், முஸ்லீம்கள் ஆகிய சகலரும் ஒரு தமிழ்த் தேசியத்துக்காக ஐக்கியப்பட்டுள்ளனர். இப்போராட்டமானது சாதி, வர்க்கம், சமூக ஏற்றத்தாழ்வு போன்றவற்றின் அடிப்படை மாற்றத்தை இலக்காக கி கொணடுள்ளது.
இப்போராட்டத்தில் பெண்களின் பங்கும் கணிசமாக உள்ளதால் அது பற்றிய ஆய்வு இக்கட்டுரைப் பொருளுக்கு அப்பாற்பட்ட ஒன்றல்ல. ஆனால் இதுபற்றிய தரவுகளின் பற்றாக்குறையும் இப்போராட்டத்தில்
எச்சரிக்கை"
கிறிஸ்தவர்,
ஈடுபட்ட பெண்களோடு தொடர்பு கொள்ள முடியாமையும் இம் முயற்சியை என்னை ஒத்திப் போடச் செய்துள்ளது.
இன்று இலங்கையின் தமிழ்ப் பகுதிகளில் இலங்கை ராணுவத்திற்கும் போராளிகளுக்கும் இடையில் நடைபெறும் போராட்டம் பல அழிவுகளையும்
அனர்த்தங்களையும் ஏற்படுத்தியுள்ளது.
எல்லாவித பாரம்பரிய பழக்கங்கள் முறைமைகள் யாவும் தடம் புரண்டு போவதாகக் காணப்பட்டது. பெண்களின் போராட்ட முனைப்பும் பலவித மரபு மீறல்களும் இடம் பெற்றன. இதைப் பார்த்த பழைமைவாதிகள் இவை சமூகத்துக்கு உகந்தவையல்ல என முணுமுணுத்தனர். இக்காலத்தில் "தமிழ் பெண்களுக்கோர் என்ற தலைப்பில் நலன் விரும்பிகள் என்போரால் ஒரு துண்டுப் பிரசுரம் வெளியிடப்பட்டது. இது எப்படி வயது வந்த பெண்கள் உடையணிய வேண்டும் என்றும் அவர்கள் கணவன்மார்களோடு அன்றி, தனியாக சைக்கிள்களில் போகக்கூடாதென்றும் தனியிடங்களில் திரியக் கூடாதென்றும் அப்படிச் செய்தால் அவர்கள் நையப் புடைக்கப்பட வேணிடும் என்றும் பாமரத்தனமாக பெணிகளைக்
கீழ்மைப்படுத்தும் ஒரு பழமொழியோடு
அதை வெளியிட்டிருந்தது. பத்துக்கு
மிஞ்சிய பத்தினி இல்லை என்ற பழமொழி முடிவுரையாக இருந்தது.
இந்த துண்டுப் பிரசுரத்தை வெளியிட்ட நலன் விரும்பிகள் தேசிய விடுதலைப் போராட்டத்தில் இருந்த

Page 12
பழமைவாதிகளா அல்லது அவற்றில் பங்குபற்றாத வெளியார்களா என்பது தெரியாது. ஆனாலும் இந்த நலன் விரும்பிகள் தமிழிக் கலாசாரம் பேணப்படவேண்டுமானால் பெண்கள் தமது உடை, நடத்தை, ஒழுக்கம் போன்றவற்றில் கவனமாக
இருக்கவேண்டும் என்று எச்சரித்தனர்.
ஆனால் இந்த நலன் விரும்பிகளுக்கோ ஆணர்கள் எந்தவித மேற்கத்தைய உடைகள் உடுத்தபோதும் பழக்க வழக்கங்களைக் கைக்கொண்ட போதும்
பிரச்சினைக்குரியதாய் இருக்கவில்லை. மேலும் பெண்களின் ஒழுக்கக் கேட்டுக்கு
ஆண்களே பொறுப்பு என்பது இந்த நலன் விரும்பிகளுக்குத் தெரியாமல் போனதே ஆச்சரியம்.
சொத்தாகக் கருதப்படும் பெண்கள்
இத்தனைக்கும் காரணமாய் இருப்பது பெணிகள் ஆணிகளின் சொத்தாகக் கருதப்பட்டு வநீத மனோபாவத்தின் விளைவே. ஆண்களுக்கு பெணிகள் மனைவியாக மகளாக சகோதரிகளாகப் பார்க்கப்பட்டதன் ஒரு வடிவமே இது. யுத்தங்கள் நிலங்களையும் எல்லைகளையும் மீட்பதற்காக மட்டும் நடத்தப்படவில்லை. தமது பெண்களையும் கெளரவத்தையும் மீட்டெடுப்பதற்காகவும் நடைபெற்றன. இதே மனோபாவந்தான் ஓர் இனத்தின் மேலான வெற்றியைக் காட்டும் நேரங்களில் அந்நாட்டுப் பெண்களின் கற்புச் சூறையாடப்படுதலுக்கும் காரணமாய் இருக்கிறது. இதுவே பழிவாங்கலின் உச்சக்கட்டமாகும். சமாதானத்துக்கான
நாட்டை
பெண்களின் அணி (Women for Peace in Sri Lanka) ggi up53, Japsodifiab இலங்கை ராணுவத்தால் தமிழ்ப் பெண்கள் பலாதிகாரத்துக்குள்ளாக்கப்பட்டதன் காரணம் அவர்களின் பிள்ளைகளே போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் என்ற
பழிவாங்கல் மனோபாவமே, இனக்
கலவரத்தின் போதும் பெண்களே குறிவைக்கப்பட்டு கற்பழிக்கப் பட்டனர். பெண்கள் கற்புச் சூறையாடப் படுவது யுத்தத்தின் ஓர் பக்க விளைவாகும்.
வீரமும் தேசப்பற்றும் மிக்க
குமரர்களின் தாய்மாராக
பெண்கள்
வீரம் தோய்ந்த போர்ப்பாடல்கள்
பழைய இனக் கூட்டத்தினதோ
ஆதிசமூகத்தினதோ செயலாக மட்டும்
இருக்கவில்லை. பழைய புராண இதிகாசங்களுக்குரியவையாக மட்டும் நின்று விடவில்லை. இனிறுமி அது செயற்பாடுடையதாகவே உள்ளது. தாய்மார் வீரம்மிக்க தேசப்பற்றுமிக்க புத்திரர்களை காப்பதற்கு உற்பத்தி செய்பவர்களாகப் போற்றப்படுகின்றனர். தாய்நாடும் தன்னை காக்கும் புத்திரர்களை தருவதாக மாறுகிறது. இலங்கையில் அத்தகைய போர்ப் பாடல்கள் War Song
நாட்டைக்
றணகீ என்ற தலைப்பில் வெளிவந்துள்ளன. இலங்கை ராணுவவீரர்களை தங்கள் காக் குமி பணிக்கு ஆற்றுப்படுத்துவதாக அப்பாடல்கள் அமைந்துள்ளன.
தாய்மையின் பேரிலும் தேசப்பற்றின்
பேரிலும் போரினை f ழகத்துவப்படுத்தும்
 
 
 
 
 

ராணுவ கலாசாரத்தை மேன்மைப்படுத்தும் விதத்தில் இவை அமைந்துள்ளன. "நான்
எனது இரத்தத்தை பாலாக்கித் தந்தேன்
என்று ஒரு தாய் கூறுவதாக வரும் ஒரு பாடலில் பால் இரதீத தீ தோடு சமத்துவப்படுத்தப்படுகிறது.
புரட்சியின் நடைமுறையும் அதன் பெறுபேறும்
எனது ஆய்வின் இந்த இறுதிப்
பகுதியில் தேறிய விடுதலைப் போராட்டங்களில் பங்குகொண்ட பெண்கள் தமது அனுபவத்தில் கண்ட இன்னொரு முரண்பாடு இங்கு விபரிப்பதற்குத் தக்கது. போராட்ட காலங்களில் பெண்கள் தமது
வீடுகளை விட்டு வெளிவந்து போராடும்படி
கேட்கப்படுவார்கள். மனைவியாக தாயாக குடும்பத்தை தாங்கிய பாத்திரத்தை எல்லாம்
உதறிவிட்டு போராட்டத்தில் அவர்கள்.
குதித்து கையிலே ஆயுதம் தாங்கி ஆண்களுக்கு சமதையாக போராட்டத்தில் ஈடுபடுவார்கள். ஆனால் போராட்டமும் புரட்சியும் முடிந்ததும் அவர்கள் தமது பழைய வாழ்க்கைக் குத் திருப்பி அனுப்பப்படுவதோடு மீண்டும் ஆண் ஆதிக்கத்துக்குட்பட்ட சாரமற்ற
வாழ்க்கையிலீடுபடுகிறார்கள். இதற்கு பல. காரணங்கள் இருந்தாலும் முக்கிய காரணம்
சந்தர்ப்பத்துக்கு ஏற்றவாறு உபயோகிக்கப் படுகிறார்கள். ஒரு கருத்தியலை அடிப்படையாக வைத்து பெண்ணுரிமை
வாதம் மேலோங்கியது என்று நாம்
இந்நிகழ்வைக் கூறமுடியாது. இன்றைய நிலையில் பெண்கள் தமக்குரிய சுதந்திர அமைப்பின் வழியில் பெண்ணிலைவாத
நோக்கில் போராட்டத்தில் ஈடுபடும் பட்சத்தில் எதிர்காலத்தில் புதிய நிலைமை உருவாகலாம்.
எப்பொழுதும் தாய்நாடு தேசியக் கணிணோட்ட அழுத்தங்களோடு பெண்ணாக குறியீட்டு முறையில் குறிக்கப் படுவது வழக்கம். ஜெரூசலம் (பழைய ஏற்பாட்டினி படி) அழைக்கப்பட்டது டீகோல் பிரான்சு நாட்டை "இளவரசியாக" அழைத்தார். இந்தியாவை அன்னை இந்தியா என அழைத்தும் வந்தேமாதரம் எனவும் வணங்கினர் பூஜித்தனர். இது இந்திய தேசிய கீதத்தில் உச்ச வெளிப்பாடு கண்டது எனலாம். ஒரு நாடு எதிரியால் சூறையாடப்படும் போது அந் நாடு கற்பழிக்கப்பட்டதாகவே இலக்கிய நடையில் கூறுவதுணி டு. அதேவேள்ை பிற கலாசாரங்களை ஒரு நாடு உள்வாங்கும் போதும் சரி எதிரியோடு உறவாடும்போதும் சரி அது விபச்சாரத்துக்கு ஒப்பதாகவே வர்ணிக்கப்படுவதுண்டு. இது பெண்களே ?@ கலாசாரத்தின் பொது காவலராகவும் அதன் குறியீடாகவும் இருக்கவேண்டும் என எதிர்பார்க்கும் ஒரு கருத்தியலின் விளைவே. நாடும் ஒரு கற்புள்ள பெண்ணைப்போல் இருந்து தனது
'கணினி' என
கலாசாரத்தை மாசுபடாது பார்த்துக் கொள்ளவேண்டும் என்பதன் தாற்பரியமே
இது. இத்தனைக்கும். ஆண்கள் இதில்
சம்பந்தப்படாதவர்களாய் வெளியேதான்
நிற்கிறார்கள். காரணம் சொத்தாக கற்பும் நல்லொழுக்கமும் பெண்களுக்கு மாத்திரமே எதிர்பார்க்கப்படுவதால் ஆண்கள் அதில் அடக்கப்படுவதில்லை.

Page 13
பிரம்மதேவன். (ിര
'ஆறு மணிக்கு முநீதி வேலையை முடிச்சிடவேணும். ஆறுக்குப் பிந்தித்தானே பொழுதுபடுகுது. நேரமுந் தெரியாமக் கிடக்கு" - வாச்சியைப் பிடித்தபடி குனிந்த தலை நிமிராமல் கூறிய έσλι ύ πιο 6οί வேலையையும் துரிதமாக்குகிறான். அவன் பேச்சுக்குத் தாளமிடுவதைப் போலப் பக்கத் தில் மணியத்தின் கைகளிலிருந்து உளி ஒலியெழுப்பிக் கொண்டிருந்தது. ஆறு மணிக்கு வேலையை முடித்தால்தான் அரசடிக் கடையில் ஓர் அரை மணித்தியாலஞ் செலவிட்டு ஏழு மணிக்கு
வீடு போய்ச் சேரலாம். இது அவர்களது
நாளாந்தக் கணிப்பு. ஆனால் இன்று சிவராமனி துரிதப்படுத்துவதற்கும்
வழமையான கணிப்பிற்கும் வித்தியாசமில்லாமலில்லை.
அரசடிக்கடையில் ஒரு நாலு ரூபாவுக்கு - ஆளுக்கு இரண்டு டிராம்
நாக்கை நனைச்சாத்தான் அவர்களுக்கு
அன்றைய அலுப்புக்கு மருந்து கிடைச்ச மாதிரி வானுலக ஆச்சார்யர்கள் களைப்பைப் போக்கிடச் சோமபாணம் உதவுதல் போல் இந்த ஆசாரிகளுக்கு அலுப்புப் போக்கிட இரண்டு "டிராம்" செய்யிறவேலைக்கு இதுவும் இல்லாட்டி விடிய எழும்ப ஏலுமே - அவர்கள் செலவிடும் நாலு ரூபாவும்
நியாயமான செலவு என்பதற்கு ஊரார் இப்படி, அத்தாட்சி கொடுப்பதில் பின்னிற்பதில்லை.
வழமைக்கு மாறான வேகம் சிவராமன் கைகளில் தெரிகிறது. இன்றுடன் அவன் பொறுப்பேற்ற அந்த வீட்டு வேலை
முடிகின்றது. நேற்றோடு முடிந்தமாதிரி.
இன்றைக்குச் சீர்செய்யும் வேலை மட்டும்தான். எனவேதான் மணியம் மட்டும் உதவிக்கு வந்திருக்கிறான். மற்றும்படி ஐந்தாறுபேர் அவன் தலைமையில் அந்த வீட்டு வேலையைச் செய்திருக்கிறார்கள். சீர் வேலை என்றாலும் ஆறு மணி வரை இழுத்துவிட்டது பொருத்தமாக எடுத்துச் செய்யும் வேலையல்லவா! "நாளைக்கு இன்னும் நாலு பேர் நம்மைக் கூப்பிடுகிற
மாதிரி வேலை இருக்க வேணும்" - தன்
சகாக்களை அடிக்கடி இப்படிக் கூறி வழிப்படுத்தும் அவன் அநீதகீ கவனத்துடனேயே வேலையைக் கவனிக்கின்றான். இணிடைக்குக் கடைசிதானே ஒரு குறையுமிருக்கக் கூடாது சுற்றிச் சுற்றிச் சரி பார்க்கின்றான்
வீட்டை,
இன்றைக்கென்னமோ- அவன்
வலு சுறுசுறுப்பு. வேலை ஒப்பேறின
சந்தோஷமோ- ஏதோ! கூட வேலை
 

செய்கின்ற மணியத்திற்கே காரணம் தெரியவில்லை என்றால் வீட்டுக்கார மாஸ்டருக்கு எப்படிப் புரியும் அவன் வேகம்? "ஓகோ! சொன்னபடி ஒப்பேற்றிற்ர - மிச்சம் நல்லது. காலையில
வநீதையிணி டா- கணக்கை
முடிச்சிடலாமே. "ஓம் மாஸ்டர். நேரமும்
போயிட்டுது விடியப் பாப்பம். நாளைக்குப் பாக்கியையும் கொடுத்துக் கணக்கைத் தீர்த்திட்டால் பின்பு குடியூரலோடு கரைச்சல்
இருக்காது. மாஸ்டரின் மனம் இப்படி
எணர்ணமிட்டது. "இருக்கிற எட்டு
ரூபாவோட மாஸ் டற்ற இரணிடு தேறினாலும் பத்தாயிடும். ஐப்பசிக் கடைசி நாளுக்கு இன்னும் 5 நாள்தானே இருக்கு. பிள்ளை திலகதி தின ர எழுதி தை முடிச் சிட்டா முடிந்தமாதிரி - தான் உழைப்பதின் ஒரே நோக்கத்தைச் செயலாக்குவதில்தான் அவனுக்கு எதி துணை அவா - நாளைக்குக் காலையில் தன் கைகளுக்குக் கிடைக்கப் போகின்ற மொத்தத்திற்கு அவன் கணக்குச் சரி செய்கிறான்.
அரசடிக்கடை அவசரத்தில் மணியம் தனது ஆயுதங்களைத் துண்டுச் சாக்கில் சுற்றித் தோளில் எடுத்து வைத்துக் கொள்கின்றான். சிவராமனின் ஆயுதங்கள் நாளைக் காலை கணக்கு முடிக்கும் வரைக்குமாக மாஸ்டர் வீட்டிலேயே
இருக்கின்றன. தொழிலில் ஒரு நேர்மை அவன் கடைப்பிடிப்பது வேலை
முடியுமட்டும் ஆயுதங்களை அகற்றக் கூடாது. அவனுக்கும் அரசடிக்கடை ஞாபகம் அந்த நேரத்திற்கு வராமலா போய்விடுகிறது!
இணி டைக்கு
தையில் கல்யாணம்
'எணி டாலும் கொஞ சம் வெள்ளன தீ தோட வநீதிட்டமி’ அரசடிக்கடையில் வழமையான அரட்டை அடிக்காமல் வந்த கவலையை மணியம் பகிர்ந்து கொள்கிறான். "பரவாயில்லைவழக்கம் போல - வேலையுமில்லைத் தானே” - இது சிவராமன். மணியம் விடை பெறுகிறான். மாஸ்டரிடம் அன்றைய தினம் வாங்கிய முப்பது ரூபாவில் பதினைந்து ரூபாவில் பதினைந்து ரூபாவுக்குரிய மணியம் அரசடிக்கடையில் நாலு ரூபாயைக் கழித்துப் பதினொரு ரூபாயுடன் சென்று கொண்டிருக்கின்றான். சிவராமனின் உடம்பில் என்றுமில்லாதமாதிரி ஒரு புத்துணர்வு. அவன் பட்ட பாடுகள்
நோவுகள் எல்லாம் இந்த ஐப்பசி நாளோட
அகல்வது மாதிரி அவனுக்கு ஒரு தெம்பு.
கிணற்றடியில் குளித்துக் கொண்டிருக்கும்போதே திலகத்தின் கல்யாண எழுத்து அவன் நெஞ்சினில் குளிர்ந்து கொண்டிருக்கின்றது. "அப்பப்ப செலவுக்கு நான் மாஸ்டரிட்ட வாங்கிப்
பங்குகளைக் கொடுத்திட்டன். ஈஸ்வரித் தாயே எப்பிடியும் இரணி டாயிரம்
தேறீடவேணும் அவன் கடந்த ஆறு மாதமாக உழைத்த உழைப்பல்லவா! மாஸ்டர் வீட்டு யன்னல்கள் கதவுநிலைகள்
அவனி செய்யப்பட்டவைதான். முற்றத்து "வேப்பமரம் நூறு வயசிருக்கும்- மேற்கு வேலியோடே நின்ற அந்த மற்ற வேம்புசாமியறைக்குத் தனிய அதிலதானே கதவு போட்டனாங்க" இவை மட்டுமல்லவளவில் நின்ற பனை மரங்கள் எல்லாம்
எல்லாமே கைப்படச்

Page 14
தறித்து இப்போது வீட்டில் பொருத்தப்பட்டு விட்டன. இவ்வளவுஞ் செய்யாவிட்டால் அவனுக்கு இரண டாயிரம் தேற இடமிருந்திருக்காது. காலையில் கிடைக்கப்போகின்ற பணம் அவன் உதிரத்தால் உருக்கொடுத்தவை.
இரணடாயிரத்து இருநூறு ரூபாவையும் மாஸ்டர் சிவராமனின் கைகளில் திணித்தபோது அவன் தன்னையே மெச்சிக்கொண்டான். அவன் கைபட்ட மரங்களெல்லாம் ஒரு முறை எழுந்து பின்பு சரிவதைப் போல் அவன் கண்களுக்குத் தெரிகின்றது.
வீட்டை ஒருமுறை நிமிர்ந்து பார்க்கிறான் அவன் பெருமையுடன். மரங்களை மறைத்து ஒடுகள் வேகமாக அடுக்கப்படுகின்றன. 'என்ன எல்லாம் சரிதானே! சந்தோசமெல்லாம் குடிபூரலோடதான்? மாஸ்டரின் இந்தக் குரல் கேட்டு அவன் தன்னைச் சுதரித்துக் கொணி டான். குடிபுகு விழாவோடு எப்படியும் அவனுக்குக் கோடி உடுப்புகள், ஒரு பசுக்கன்று, சந்தோஷப் பணம் எல்லாம் கிடைக்கும்தான். ஆனாலும் அவன் அந்த நேரத்தில் அவற்றையா நினைத்தான்; அவன் கன்று திலகம் அவள் பெற்றெடுத்துக் கொடுக்கப்போகின்ற அந்தப் பேரக்குழந்தைஅதன் மழலை இன்பம்.
இந்தா செல்லம் பிள்ளையைக் கூப்பிடு தனது மகளைச் செல்லம் கூப்பிட்டுத் தகப்பன் முன் நிறுத்துகிறாள். செல்லத்துக்கும் தெரியும் எந்த வகையிலாவது ஐப்பசி முடிவதற்குள்
எழுதிப்போடவேணும் என்பதிலை சிவராமன் வெற்றி பெற்றுத்தான் தீருவான் என்பது. அதற்கேற்ற முறையில் உழைத்து ஒறுத்துச் சேர்த்த பணம் கணக்குச்
சரியாகவும் வந்துவிட்டது.
'பிள்ளை, கணக்கில் கவனம் வேணும். பத்தையும் வேறையா எண்ணி வைச்சிட்டுத்தான் எழுத்துச் செலவெல்லாம் ஓமெனை, அப்பு. கணக்குச் சரியாகத்தான் இருக்கு தேவையில்லாமல் அதில் ஏன் கையை வைக்கப்போறம் திலகத்தின் பதிலில் தந்தைக்குப் பரம திருப்தி மாப்பிள்ளை மரக் காலை முதலாளி. அதுவும் மற்றவர்களைப் போலில்லாமல் சொந்தமாக உழைத்துப் பெரிசாக வந்தவன் பொடியன் பிரயாசைக்காரன். ஒரு வருசத்தில் பத்தை இருபதாக்கிடுவான்.
அவனுக்குக் குடுத்தாலும் தகுந்தானே - மாப்பிள்ளை கைலாசத்தைப் பற்றிச் சிவராமன் இப்போதே போட்டு வைத்துள்ள
படம் - இப்படி எண்ணச் செய்தது.
'கல்யாணத்துக்குப் பிறகு நீங்களும் இங்கதான் வேலை செய்ய வேணும் - கைலாசமே இப்படிக் கூறியிருந்ததை நினைக்கையில் அவனுக்குத் தைமாதம் முதல் ‘பென்சன் கிடைக்கிறமாதிரிச் சந்தோஷம். கவனம் பிள்ள! நீ ஆகிறதைக் கவனி. நான் ஒருக்கா றிசிஸ்டாரிட்டப்
போயிட்டு வாறன். வெள்ளிக்கிழமை
கணக்க ஊருக்க நடக்கும். அவருக்கு ஞாபகப்படுத்தவேணும் சிவராமன் வீட்டைவிட்டுப் புறப்பட்டுச் செல்கிறான்.
'பிள்ளையைக் கன்னிதானம்
 

செய்து கொடுப்பதைப் போல ஒரு புண்ணியம் தந்தைக்கு வேறு கிடையாது. அயல் அட்டத்துக் கல்யாண வீடுகளின் போது தாலி கட்டும் நேரத்தில் ஐயர் கூறுகின்ற, இந்த வார்த்தை- அவன் கைகளில் கோடரி, வாச்சி, வாள், உளி ஏந்தி வேலை செய்யும் போதெல்லாம் அந்த ஆயுதங்களோடு போட்டி போட்டுக்கொண்டு மரங்களைப் பிளந்தெறிந்திருக்கின்றது. அதுவும் திலகம் பிறந்த இருபது வருடங்களாக- அவன் ஊர் மெச்சுகின்ற ஆசாரியாக-உழைப்பால் உயர்ந்தமைக்குஐயர் கூறுகின்ற அந்த வார்த்தைதான் பரிசளிக்க வேண்டும். அந்தப் பரிசு நாள் அவனுக்கு ஓய்வு கொடுத்த நாளாக இருக்கும். திலகத்தின் கல்யாணத்திற்குப் பின்பு அவன் உழைத்தாலும் முந்திய .அந்தப் பிரம்மதேவனாகவா இருக்கப்
போகின்றான்?
சிவராமு, சிவராமு - படலையில் யாரோ பலமாக அழைப்பது கேட்கிறது. "ஒ இன்றைக்கு எழுத்தல்லே - அவன் துள்ளியெழுகின்றான். சிவராமு, மானம் போயிட்டுது, மானம் போயிட்டுது! உன்ர பெட்டை மரக்காலைப் பொடியனோட ஓடிப்போயிட்டாள் றோட்டு வீட்டுக்காரச் சுப்பர் புலம்பினார். நாலு மணிபோல அந்தப் பட்டணத்துப் பொடியனோட காரில போயிட்டாளாம் 'சந்தைக்கு வெளிக்கிட்ட வங்கள் வந்து என்னை எழுப்பிச் சொன்னாங்கள். கைலாசம் வீட்டை ஆள் போயிருக்கு சுப்பர் தொடர்கிறார். சிவராமன் அறைக்குள்ளே ஓடினான். திலகித்தின் படுக்கை விரித்தபடியே கிடந்தது.
அந்தப் பெட்டி பத்தாயிரம்
ரூபாவையும் பாதுகாத்த பெட்டி அவள்
படுக்கையில் தலைகவிழ்ந்து கிடக்கிறது. பத்தாயிரமும்? அவன் படுக்கையைப் பார்க்கிறான். ஒமெணை அப்பு கணக்குச் சரியாகத்தான் இருக்கு. தேவையில்லாம அதில ஏன் கையை வைக்கப்போறம் - இந்த வேண்டுமென்றே வருடிப்பார்த்தன அவன் தன் ஆயுதப் பெட்டியை நோக்கி ஓடுகிறான்.
வார்தி தைகள் அவனை
யார்- அந்தச் சடை வளர்த்த பொடியனே?
ஓ அவன்தான். கைலாசத்தின்ர மரக்காலையில வேலைக்கு நின்றவன். அவனிட்டத் திண்டிட்டு அவனுக்கே அள்ளி வைச்சிட்டான். அவைக்குள்ள பல நாள் சிநேகிதம் இருந்திருக்கவேணும். இது பாவமி. உழை, உழையெணிடு உழைச்சதுதான் மிச்சம். படலையடியில் பல குரல்கள் இவ்வாறு மாறி மாறி ஒலிக்கின்றன. யாவரையும் விலக்கியபடி கைலாசம் படலையைத் திறந்து உள்ளே ஓடி வருகிறான். அவன் காலடியில்சிவராமனின் கையிலிருந்த சீவுளி கிடந்தது;
அந்த உடலைத் துக்கி நிறுத்துகிறான் கைலாசம் அவன் கொடுக்க இருந்த பென்சனுக்குப் பதில். அருகில் கிடந்த சீவுளி மட்டும் சிரிப்பதுபோல் அவனைப் பார்த்துப் பளபளத்தது. இவன் பென்சன் எடுத்திட்டாலும் படைப்புகள் நிற்கப்போவதில்லையே: என்று அந்தச்
சிரிப்புக்கு அர்த்தம் போலும்
(யாவும் கற்பனை)

Page 15
வன்முறையும் குடியியற் சமூகமும் (Violence and Civil Society) இலங்கையின் அனுபவம்
"உரிமைகள், மற்றும் அறவியலர் சம்பந்தமான நூல்களைத் திறந்து பார்க்கரினிறேன, பேராசிரியர்களும் சட'டவாளர்களும் சொலவதைச் செவிமடுத்தேன். அதனால் எனது மனது அவர்களது மருட்டல் கோட்பாடுகளினால் நிறைந்து கிடக்கின்றது. சட்ட ஒழுங்கினால் ஸ்தாபிக்கப்பட்டிருக்கும் அமைதியும் நீதியும் கண்டு வியக்கின்றேன். எமது அரசியல் நிறுவனங்களது ஞானம் கணடு பிரமிக்கின்றேன். நானொரு பிரசை எண்பதை
அறிவேன் எண்பதால் நானொரு மனிதனி
எண்று புலம்புவதை விட்டுவிடுகின்றேன். எனது கடமைகள், சந்தோஷம என்பதெல்லாம் குறித்து விலாவாரியாக அறிவுறுத்தப்பட்டிருந்த போதிலும், நான் புத்தகத்தை மூடுகின்றேன்; விரிவுரை மண்டபத்துக்கு வெளியே வருகின்றேன்; எண்ணைச் சுற்றிலும் பார்க்கின்றேன். இரும்பாலான நுகத்தடியின் கீழ்கிடந்து முனகும் இரங்கத்தகு நிலையிலுள்ள தேசங்களையே காணிகிறேன். மானிடம் ஒரு சில அடககுமுறையாளரால தரைமட்டமாககப்பட்டிருப்பதைப் Lrifasá76vo. Ulgolfiugyuó el Litos
களாலும் தேய்ந்து அவதிப்படும் ஒரு
கூட்டத்தைப் பார்க்கும் அதேவேளை செல்வந்தர்கள் தங்களால் பலிகொள்ளப் பட்டவர்களின இரத்தததையும் கணணிரையும் தங்கள் விருப்பப்படி அருந்துவதையும் காண கிறேன. பலவீனமாணவனுக்கு எதிராகப் பலமானவன்
சட்டத்தின் பயங்கர அதிகாரங்களுடன்
நிற்பதையே எண்ணைச் சுற்றிய ஒவ்வொரு பக்கத்திலும் காணிகிறேன்"
(Jean-Jacques Rousseau, Fragments of an Essay on the State of War (writ
ten circa 1752)
ஆங்கிலத்தில் மூதுரை ஒன்று JigGirid,6ir- "If it bleeds, it leads' 6Tsiig). இதன் பொருள் இரத்தஞ் சிந்தாமல் எதுவுமே நடக்காது என்பதுதான். இதனைக் 'கத்தியின்றி இரத்தமின்றி என்று. எதிர்மறையாக மாற்றி அஹிம்சை வழியைக் கையாண்டிருக்கிறார்கள் இந்தியா போன்ற
ஒரு சில நாடுகளில் . ஆனால்
வன்முறையையும் யுத்தத்தையும் ஆதரித்த 19 ஆம் நூற்றாண்டு மேற்கத்தைய அறிஞர்கள் சிலர் இந்த மூதுரை கொண்டு வணி முறையை நியாயப் படுத்த தீ தவறவில்லை.
ஆனால், போன இதழ்க் கட்டுரையில் நான் குறிப்பிட்டதைப்போல் ஐரோப்பாவில் அரசுகள் ஆள்புல எல்லைகளை மறந்துவிட்டு சந்தை வளர்ச்சி, பொதுவின பிராந்தியச் சட்டம் பொது நாணயம் (Currency) என்பவற்றை முன்னிலைப்படுத்துகின்றன. நாட்டுமக்களது இறைமை என்ற விடயம் தூக்கிப் பிடிக்கப்படவில்லை. இங்கேதான், அரசியல் ரீதியிலும் அன்றாட வாழ்விலும் 'உலக சமூகம்' என்ற எண்ணக்கரு மீளுதயமாகி வருகின்றது எனலாம். ஸ்பானிய இறையியலாளர்களும் சட்டப் பேராசிரியர்களும் குறிப்பிட்ட அனைவர். Gurg.J6IATGOT FLuis (jus gentium intra se) என்பதன் மீள் வருகையாகவும் இதனைக் குறிப்பிட முடியும். இதன் மூலம் ஏற்படுவது- எங்கு அநியாயம் நடந்தாலும் அதைத் தட்டிக்
 
 

கேட்கும் அறஞ்சார் கடப்பாடு உள்ளது
என்பதாகும். இந்த அடிப்படையிலேயே ஒரு
நாட்டில் மனித உரிமைகள் மீறப்பட்டால் ஏனைய நாடுகள் அதைப்பற்றி அக்கறை தெரிவிக்கவும் கண்டனஞ் செய்யவும் இன்று முற்படுகின்றன. தனிநபர் வன்முறைகளும் நிரந்தரமான உள்நாட்டுப் போர்களும் இன்று தொற்றுநோயாகி விட்டன. இவற்றைக் கட்டுப்படுத்துவதற்கு வன்முறை பாவிக்கப்படலாமா? வன்முறையின் காரணங்கள், விளைவுகள், ஒழுக்கஅரசியற் சிக்கல்கள் என்பவற்றைச் சமகால அரசியற் கோட்பாடுகள் ஆராய்ந்து பதிற் செயற்பாடுகளில் ஈடுபடுவதில் பாரிய தேக்கநிலை காணப்படுவதை அறிய முடிகின்றது.
நடைபெற்ற
சிலுவை யுத்தம்
காலத்திலிருந்தே சிலர் நீதியான யுத்தம் (just
War) என்ற கோட்பாட்டைச் சிலர் ஆதரித்து
வந்துள்ளனர். கீதையிலே கண்ணன்
கூறினான் என நாங்கள் அமைதி கொள்வதுமுண்டு. அதர்மத்தை ஒழித்து தர்மத்தை நிலைநாட்ட நான் அவ்வப்போது அவதரிக்கின்றேன் என்று கண்ணன் கூறுவதிலிருந்து நீதிக்கான யுத்தம் என்று வரும்போது வன்முறை நியாயமானதே என்று எமக்குள்ளும் பதிவுகள் செய்யப்பட்டேயுள்ளன.
உண்மையில், கார்ல் மாக்ஸ் ஒவ்வொரு பழைய சமூகமும் புதியதொன்றின் பிரசவத்தை எதிர்நோக்குகையில் வன்முறை என்பதே மருத்துவத் தாதியாகச் செயற்படுகின்றது எனக் கூறுவதும் ;
லெனின் "முட்டையை உடைக்காமல்
ஒம்லெட் செய்ய முடியாது" எனப் பிற்காலத்தில் கூறியதும் ; அதற்கும் பிந்தி
மாசே துங் "துப்பாக்கிக் குழாயிலிருந்தே அரசியலதிகாரம் பிறக்கின்றது" எனக் கூறியிருப்பதும் மேலே சொன்ன நீதியான யுத்தம் என்ற கோட்பாட்டை மதச் சார்பற்ற கோட்பாடாக மாற்றிக் கூறியிருப்பது மட்டுமே என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும். ஆக, மனிதனுடைய அன்றாட வாழ்வில் அது தனிப்பட்ட அல்லது அரசியல் வாழ்வாக இருப்பினும் வன்முறை என்பது தவிர்க்க முடியாதது என்றே நிரூபிக்கப்பட்டு வந்துள்ளது.
வன்முறை என்பது எப்போதும் ஒரு கருவியாகவே இருக்கவேண்டும். குறித்த ஒரு நல்ல முடிவை எட்டுவதற்கான வழிமுறையாக இது பயன்பட வேண்டும்.
ജൂിഴ്ച (് ഖ 'நியாயத் தனிமையை வன்முறைக்கு வழங்குகின்றது என்று கடந்த நூற் றாணிடு 6Ꮒl 6ᏈᎠ Ꮨ
உண்மையாகவே நம்பப்பட்டு வந்தது. ஆனால் இதற்கு எதிரான நிலைப்பாட்டைக் கொண்டவர்கள் இருந்துள்ளனர். இவர்களது கருத்தும் நவீனமானதே. இக் கருத்தும் ஆரம்பத்தில் மதச் சார்பானதாக இருந்த போதிலும் பின்பு அது மானிடத்தை முன்னிலைப்படுத்தி வணி முறையை அடியோடு வெறுப்பதாயிற்று. உதாரணமாகக் காந்தி
அஹிம்சையைக் கடைப்பிடிப்பதற்கு
மதநம்பிக்கையே அடிப்படையாயிற்று. ஆனால் இன்று மனித உரிமைகளில் நம்பிக்கை வைத்துச் செயற்படுவோர் பலரும் தமது இந்த நம்பிக்கையில் மதச்சார்பின்மையை மிக முக்கியமான கொள்கையொன்றாகக் கொண்டிருப்பதை அவதானிக்க முடியும்,
வன்முறையை மனிதனது கண்களுக்கு

Page 16
எட்டாதவாறு இயன்றளவில் தூரத்தே வைக்க வேண்டும் என்று சமாதானப் பிரியர்கள் பாடுபடுகின்றார்கள். வேறு சிலர்முன்னேறிய சமூகங்களைப் பொறுத்தளவில்
அவை வன்முறை விடயம் பற்றி பலமாக'
அலட்டிக் கொள்ள வேண்டியதேயில்லைஏனெனில் தனது நியாயப்பாட்டினை அடியோடு இழ்ந்து வருகின்றது என்ற தீவிரக் கருத்தினையும் கொண்டுள்ளனர். இங்கேதான் குடியியற் சமூகத்தின் பிரசவம் நிகழ்கின்றது.
குடியியற் சமூகம் என்றால் என்ன?
குடியியற் சமூகம் என்ற சொல் தற்போது இலங்கை அரசியலில் அடிபடுகின்ற
சொல்லாகப் போய்விட்டது. அதுவுமே ஒரு
முன்னேற்றம் என்றே கூறலாம். ஆனால்
இதன் வரைவிலக்கணம் என்ன? இதற்கும்
ஜனநாயகத்துக்கும் என்ன தொடர்பு? அல்லது எவி விதத்தில் இது வன்முறைக்கு நேர்
தெரியவில்லை. எனவேதான் இங்கு வரைவிலக் கணந்தர முயற்சிக்கப் படுகின்றது.
குடியியற் சமூகம் இடைநிலைக் குழுக் களதுமி தன்னார்வச் சேவை நிறுவனங்களதும் ஒன்று சேர்வும் அவை ஆரம்ப முனையான குடும்பத்துக்கும் இறுதி முனையான அரசுக்கும் இடையே அமைந்து செயற்படுவதுதான் என Nancy Bermeo இத்தாலிய அறிஞர் கூறுகிறார். இவரது கருத்தில்
இக்கோட்பாடு 1750 இல் பிறந்து 1850
எதிராளியாகச் செயற்படவேண்டியுள்ளது என்பதை எத்தனைபேர் நன்கு விளங்கி- உணர்ந்து
கொண்டு செயற்படுகின்றார்கள் என்பது s
எதேச்சாதிகார,
என்றால்,
க்குள் பழுத்துவிட்ட ஒரு கோட்பாடு
என்றே கூறப்படுகின்றது. தற்போது உலகின்
எல்லாப் பாகத்திலும் இது பலமாக
உச்சரிக்கப்படுவதற்கு வன்முறையின் புது
வடிவங்களே காரணம் என்று தயங்காது கூறலாம். Civil என்பதற்கு பணிவான,
தாழ்மையான, அகங்காரமற்ற, இராணுவஞ்
சாராத் என்றெல்லாம் பொருள்
š, pljuGálip 5. Charles Taylor
குடியியற் சமூகத்தின் மாதிரிகள் என்பது
(5.5 is 6Tygji Gungl (Modes of Civil
| Society Publi Culture vol. 3/1 Fali.90)
சுயாட்சியின் சுவையையும் பழக்க் வழக்கங்களையும் தருகின்றதான ஓர் இடப்பரப்பே குடியியற் சமூகமாகிறது 6Tsidings. Edward Shils 6T(pg|605tf65 The Virtues of Civil Society, Government and Opposition, vol.26 (1990)] நாகரீகப் பண்புகளைக் கற்று, எதிர்ப்பினைக் காழ்ப்புணர்வின்றி நோக்கப் பிரசைகளைப் பயிற்றுவிக்கும் இடமென்று குடியியற் சமூகத்தைக் கூறுகின்றார். Philippe
குடியியற்
கொடுங்கோன்மைச்
சமூகம்
செயலுக்குப் போடப்படும் தடைகள் சந்திக்கும் இடமாகும் என்கிறார் (Some Propositions About Civil Society and the Consolidation of Democracy).
u 35? J Aisi 35gö ğ5 6of 60)LD (openneSS), வன்முறையற்றது, சகோதரத்துவ உணர்வு, நியாயம் என்பவற்றை எவை நேரடியாக முரண்படுத்தும்ோ அவை யாவுமி குடியியற் சமூகத்துக்கு ஒவ்வாதவை என்று அடையாளங் காணப்படும்.
 

"Conditions of Liberty: Civil Society and its Rivals" (1994) 6Tsip BITsSos Ernest Gelner சமூக, அரசறிவியற் துறைகளில் சம்காலத்து அடிப்படைப் பொருத்தமான அரசு - குடியியற் சமூகம் பற்றிய சுருக்கமொன்றைத் தந்துள்ளார். அவர் கூறுகிறார் குடியியற் சமூகம் என்பது ஒரு தொகையான அரசாங்க சார்பற்ற நிறுவனங்கள் (NGOS) - ஆனால் அவை தமக்குள் பல்வேறு வேறுபாடுகளைக் கொண்டிருக்கலாம்- ஒன்று சேர்ந்து அரசினை எதிர்த்து நிற்கக் கூடிய பலம் கொண்டவையாகச் செயற்பாட்டிலிருத் தலாகும். அரசானது சமாதானத்தைப் பேணுதல், பாரிய நலனிகளுக்கிடையில் நடுவராகச் செயற்படுதல் (மாநில/ பிராந்தியங்களிடையே
போட்டிகள் என்றும் நீட்டிக்கலாம்) போன்ற
பாத்திரங்களை வகிப்பதைக் குடியியற் சமூகம் தடைசெய்ய முயலாது. ஆயினும், சமூகத்தை மேலாதிக்கஞ் செய்தல் (dominating) glauntigb55b (atomizing) என்பவற்றை அரசு மேற்கொள்வதைக் குடியியற் சமூகம் தடுத்தே நிற்கும் என்றும் கூறலாம். அரசினை சமூக மற்றும் பொருளாதார மாற்றங்களுக்கான ஒரு முகவராகப் பார்க்கும் நிலையிலிருந்து பொதுமை மயப் படுத்தப்பட்ட நிலையினின்றும் தள்ளி நின்று சமூகத்தைப் பார்ப்பது என்ற எண்ணக் கருவும், தற்கால
பொதுஜன ஊடகங்களின் பெருக்கமுமே
குடியியற் சமூகத்தின் புத்துயிர்ப்பு அளித்த இரு காரணிகள் எனலாம்.
இந்தியாவிலோ அல்லது இந்தோனே சியாவிலோ இன்று நடந்து கொண்டிருப்பது இதைத்தான் காட்டுகின்றது. இங்கு குடியியற் சமூகம் ஒரு VouberZone ஆக இயங்க வேண்டியிருக்கும்.
போட்டியான
அரசும் குடியியற் சமுகமும்
இந்த இரண்டு பற்றிய பதப்பிரயோகங்கள் அண்மையிலெனின் 1960 களில்தான் முனைப்புற்றன எனக் கூறவேண்டும். இதனை ஜப்பானில் இக்காலப்பகுதியில்
அவதானிக்கக் கூடியதாக இருந்தது. இதன்.பின்னரே ஐரோப்பா, வட அமெரிக்கா,
லத்தீன் அமெரிக்க நாடுகள், தெற்கு, கிழக்கு ஆசியாவின் சில பகுதிகளில் பேசப்படத் தொடங்கின.
அரசுக்கும் குடும்பத்துக்குமிடையே
என்றிருந்தது நாளடைவில் அரசுக்கும் மக்களுக்குமிடையில் என்றவாறாகப் பரந்துபட்ட பொருள் கொள்ளப்படலாயிற்று.
அதாவது குடியியல் சமூகமென்பது ஓர்
உத்தரவாதக்காரன் (Guarantor) போல் இயங்க வேண்டும். அதாவது அரசு என்ற அருவத்தின் அத்துமீறல்களுக்கு எதிரான கூட்டு நடவடிக்கை- இந்தக் கூட்டு வேற்றுமைகளுக்கு மத்தியில் காணப்பட்ட
ஒற்றுமை. எனவே இந்த ஒற்றுமையைச்
சிதறடிப்பது அப்படியொன்றும் அரசுக்குக் கஷ்டமான தொழிலல்ல. ஏனெனில் குடியியற் சமூகம் தன்னளவிலேயே பல்வேறு பிரிவுகளை அடிப்படையில் உள்ளடக்கியது என்பதைப் பார்த்தோம். இவற்றின் உணர்வுகளைத் தட்டி எழுப்புதலும் ஒப்புதலும் கடினமான கைகரியங்களல்ல இங்கே. குடியியற் சமூகம் எப்போதும் சர்வாதிகாரம் என்பதற்கு முற்றிலும் விரோதமானதாகும். 'சோசலிஸம் பேசிய நாடுகளில் அரசியல், சித்தாந்த, பொருளாதார உச்சதி தானங்கள் முற்றாக
ஒன்றிணைக்கப்படுவதன் மூலம் குடியியற் சமூகம் அமுக்கப்பட்டு சர்வாதிகாரத்துக்கு

Page 17
வித்திடப்படுவதாகவே மேற்கு நாடுகளால் கருதப்பட்டு வந்தது. எனவேதான் கருத்துச் சுதந்திரத்தை கட்டவிழ்ப்பதில் மேற்கு நாடுகள் முதலில் அக்கறை காட்டின. மறுபுறத்தில், சர்வாதிகளும் கொடுங்கோலர்களும் குடியியற் சமூகம் எதிரியின் எடுபிடியாகி விட்டது என்று குற்றஞ்சாட்டி மக்களைக் குறுகிய வழிகளில் கட்டியெழுப்ப முயற்சிக்கும். இதனாலி நிறையவே அனுபவப் பாடங்களைப் பெற்றதன் பின்னரே 1989 இல் இந்த நூற்றாண்டின் மற்றொரு புரட்சியாக அரசுகள் மாறின என்று கூறலாம். குடியியற் சமூகத்தின் பிறப்பும் வளர்ச்சியும்
மக்களுக்கு ஆற்றலை வளர்க்கும்,
தனித்துவத்தை முன்னெடுக்கும், தெரிவுரிமையைக் கொடுக்கும்.
குடியியற் சமூக தி தை அரசு அமுக் கிவிடுகின்றபோது எதையும் சந்தேகப்பட்டுப்பார்க்கின்றவர்கள், இரட்டை நாக்கில் பேசுகின்றவர்கள், எவ்வித வாய்ப்புமற்ற தனிநபர் திறமைகள் என மலிந்துகொண்டே போகும். Gelner இன் பொருளாதார, சமூக வாழ்வினின்றும் குடிமக்களை வேறாக்கி- அவர்கள்மீது அதிகார வர்க்கத்தின் மேலாதிக்கம் திணிக்கப்படுவதை எதிர்த்து நிற்கவே குடியியற் சமூகம் ஒன்று அவசியமானது. குறிப்பாக, இது, ஆட்சியாளர், அவர்களது ஆதரவாளர்,
என்பவர்களிடமிருந்து தூரவிலகி இருக்க வேணடும். இதனி மூலம் அது தன்னம்பிக்கையும் பிரசைகளைச் சுயமாற்றத்துக்குட்படும் சக்தியும் பெற்றதாக வளரமுடியும்.
அடி வருடிகள்
குடியியற் சமுகமும் ஜனநாயகமும்
ஜனநாயகத்துக்கான அவசிய தேவை அல்லது நிபந்தனையாகவும் அமைகின்றது குடியியற் சமூகம் . இதீத கைய சமூகமொன்று இல்லாதவிடத்தில் தமது
அடையாளங்கள் உரித்துக்கள், கடமைகள்
என்பவற்றை குறிப்பிட்டதொரு அரசியல்சட்ட கட்டமைவுக்குள் தெரிந்தெடுக்கும் தகுதி கொண்ட பிரசைகள் இருக்க வாய்ப்பில்லை. பிரசைகளின் சுதந்திரம் இதன்
மூலம் முன்னேற்றப்படும். 1752 இல் Adam
Simith இனால் ஆற்றப்பட்ட விரிவுரைகளினால் கவரப்பட்ட Adam Ferguson 1767 goi) 'An Essay on the History of Civil Society' 6Tsip BITS06) எழுதினார். இதில் அவர் Civilization என்பதை முரட்டுத்தனத்திலிருந்து பண்படுத்தலை நோக்கிய முன்னேற்றம் என்றே கூறுகிறார்.
இதனைச் சமகால ஜனநாயகத்தில் நாகரீகமான, பண்படுத்தப்பட்ட வடிவிலான சமூகமென்றும் இங்கு ஒழுங்காக
அமைக்கப்படும் அரசாங்கம் இருக்கும் என்பது தெரியும். அத்துடன் அரசியல்
சீர்ப்படிவும் இருக்கும் எனலாம்.
அண்மைக்காலத்தைய அறிஞர்கள் பலரும் குடியியற் சமூகம் என்பதனை நியாயமானதும் பயன்வலுக் கொண்டது மான அரசாங்கம் என்பதுடனேயே அடையாளங்காண விரும்புகின்றனர்.
வெற்றிகரமான ஆளுகைக்குச் சவாலாக அமையக்கூடிய விடயங்களில் தீர்வு காண்பதற்குரிய பிரதான பாத்திரத்தை
வகிக்கத்தக்க அளவில் கூடுதலானதும்
 

ஒன்று திரட்டப்பட்டதுமான, நம்பகரமான, நடவடிக்கைக்குரிய தகவல்களையும் வழங்குவது குடியியற் சமூகமே என Schmitter, Joshua Cohen, Joel Rogers போன்றோர் அடித்துக் கூறுகின்றனர் (Secondary Associations and Democratic Governance; Politics and Society, Special issue Vol.20/4(1992)). Jissor(ld, பலம் வாய்ந்த குடியியற் சமூகமென்பது கூடுதலான சமூக, பொருளாதார்ச்
சமத்துவத்தை நோக்கிய முன்னேற்றத்தை
ஊக்குவிக்கும் எனவும் கருதப்படுகின்றது. Robert Putnam S. Gigi Li 9(5ugமேலேபோய் இந்தப் பலமிக்க குடியியற் சமூகங்கள் சிறந்த அரசாங்கத்தையே எதிர்பார்க்கின்றன என்றும் முயற்சித்தல் (Making Democracy Work, 1993) பெற்றுவிடுகின்றன என்றும் கூறுகிறார்.
நாம் எங்கே நிற்கிறோம்?
இந்தப் பின்னணிகளை வைத்துக் கொண்டு இலங்கை அனுபவத்தைப் பார்த்தால் பாரிய இடைவெளியொன்று இருந்து வந்திருப்பதைக் காணமுடியும்.
குடியியற் சமூகம் என்பதே வேற்றுமையில் ஒற்றுமை கண்டு செயற்படுவதுதான். ஆனால் இலங்கையில் அடுத்தடுத்து வந்த
அரசாங்கங்கள் இங்ங்னம் ஒற்றுமை
ஏற்படாத விதத்தில் தடைபோடுவதில் வெற்றிகண்டுவிட்டன. ஆளுங்கட்சியும் எதிர்க் கட்சியும் லாபமீட்டுவதற்காகப் பாவித்த கோஷங்களே நாட்டை இன்று பிளவுபடுத்தி நிற்கின்றன என்பது உண்மையாயினும் குடியியற் சமூகம் என்று ஒன்று விழிப்புடன் செயற்பட்டிருந்தால் இந்தப் பிளவு தவிர்க்கப்பட்டிருக்கலாம்.
பரஸ்பரம்
மாறாக, எதிர்த்திசையில் வாக்காளர்களை நீண்ட தூரங் கொண்டு சென்றாயிற்று. இனிக் குடியியற் சமூகம் ஒன்று ஆர்ப்பரித்து எழுந்து தனது வீரியத்தை நிலைநாட்டுமா என்பது சந்தேகமே. ஏனெனில் அர்சாங்கம் இன்று தனது எல்லாத் தவறுகைகளுக்கும் (failures) புலிப்பிரச்சனையை ஒரு சாட்டாகக் கைக்கொள்கின்றது.
வேலைநிறுத்தம், லஞ்சம், ஊழல், குடும்ப ஆட்சி, அடிப்படை உரிமைகள் மறுப்பு என்று எதை எடுத்தாலும் இதை எதிர்த்து எவரேனும் குரல் கொடுத்தால் அவர் பயங்கரவாதத்துக்குத் துணைப்போகிறார் என்று அரசாங் கமீ நாக் கூசாமல் கூறுகின்றது. இக் குற்றச் சாட்டு எதிர்க்கட்சித் தலைவரைக்கூட விட்டு வைக்கவில்லை என்றார்கள் மற்றவர்கள் எம்மாத்திரம்?
ஜனநாயகம் என்றால் கட்சி அரசியல் என்று சிலர் நினைக்கின்றார்கள். பெரும்பான்மை இனத்தினி ஆட்சி என்று சிலர் நினைக்கிறார்கள்.
தேர்தலில் வாக்களிப்பதோடு முடிந்துவிடுகிறது என வேறுசிலர் நினைக்கிறார்கள். (1982 இல் தேர்தலே தேவையில்லை என்று கூடப் பலர் வாக்களித்த பெருமையுமுணர்டு). இவையெல்லாவற்றுக்கும் மேலாக, ஜனநாயகம் என்பது விழுமியங்களின் ஆட்சி, விழுமியங்களின் இரட்சிப்பு, விழுமியங்களின் வழிகாட்டல் என்ற நிலை ஏற்படுவதற்குக் குடியியற் சமூகம் உயிர் பிழைக்க வேண்டும். பிழைக்குமா என்பதில் நாளாந்தம் சந்தேகமே பெருகுகின்றது.

Page 18
இன்றைய கல்விமுறையின் தராதரம் குறைந்து விட்டதா?
இலங்கை, இந்தியா உட்படப் பல நாடுகளில் பல மட்டங்களில் இன்றைய கல்வி முறையினி தராதரம் , காலப்பகுதியுடன் ஒப்பிடும் போது பெரிதும் குறைந்து விட்டது என்ற கருத்து உலாவுகின்றது. முக்கியமாக, கல்வி கற்ற மூதி த தலைமுறையினர் பல்வேறு காரணங்களால் தாம் தமது இளமைக் காலத்தில் பெற்றதே சிறந்த கல்வி என்றும்
முனினைய
அக்காலத்தில் பாடசாலை மாணவர்கள்
போதிய கீழ்ப்படிவு உடையவர்களாகவும் கூடிய வாசிப்பு ஆர்வம் நிறைந்தவர் களாகவும் பொது அறிவு நிறைந்தவராகவும் இருந்தனர் என்றும் வாதிடுவர். மற்றொரு கட்டத்தில் அக்காலப் பாடசாலையில் உயர்நிலைக் கல்வி, தற்போதைய பட்டப் படிப்புக்குக் குறைந்ததல்லவென்றும் அக்காலத்தில் ஐந்தாம் அல்லது ஏழாம் வகுப்புப் படித்தவர்கள் தாம் பிற்காலத்தில் சிறந்த நிர்வாகிகளாகவும் கூடிய ஆங்கில மொழிப் புலமையுள்ளவர்களாகவும் விளங்கினர் என்ற கருத்தும் முன் வைக்கப்படுகின்றது. இன்றைய கல்வி முறையின் மீது விடுக்கப்படும் பலத்த கண்டனங்கள், கல்வி
முறையை மாற்றியமைக்க மேற்கொள்ளப்பட்ட
தொடர்ச்சியான முயற்சிகள், பொதுமக்களும் அரசியல்வாதிகளும் கல்விமான்களும்
தொழிற்சங்கங்களும் ம்க்கள் தாபனங்களும்
அரசியற் கட்சிகளும் கல்வித்துறையில் இன்று"
செலுத்தி வரும் அக்கறையும் அவதானமும்
பற்றிய மேற்கூறிய எதிர்மறைக் கருத்தை மேலும் வலுப்பெறச் செய்தன.
இலங்கையில் சுதந்திரத்தின் பின் மேற்கொள்ளப்பட்ட தொடர்ச்சியான கல்விச் சீர்திருத்தங்களும் அவை தொடர்பான கல்வி ஆணைக்குழுக்களின் அறிக்கை களும் வெள்ளை அறிக்கைகளும் (1961, 1964, 1966, 1972, 1981, 1994) கல்வி முறையில் காணப்பட்ட குறைபாடுகளைத் தெளிவுபடுத்தியது உண்மையே ஆயினும் இக்கல்வி அறிக்கைகள், அவை முன் வைத்த சீர்திருத்தங்கள் ஆதியன கல்வி முறையினால் வழங்கப்பட்ட கல்வியின் தராதரங்கள் குறைந்துவிட்டன என்ப்தை விட வழங்கப்பட்ட கல்வி, நாட்டின் நடைமுறைத் பொருத்தமற்றது என்பதையே பெரிதும் வலியுறுத்தின. பாட ஏற்பாடு பெருமளவுக்கு ஏட்டுக் கல்வியையே
தேவைகளுக்குப்
வழங்கி வந்தமையினால் விவசாய
பொருளாதார முறைக்குப் பொருத்தமான திறன்களும் ஆற்றல்களும் கல்வி முறையால் வழங்கப் படவில்லை ள்ன்றும் பாட ஏற்பாட்டில் தொழில்சார் அம்சங்களுக்கு முக்கிய இடமளிக்கப்படல் வேண்டும் என்றும் கருத்து தீ தெரிவிக்கப்பட்டது. இதனடிப்படையிலேயே பாடசாலைகளில் வேலை அனுபவம் (1968), தொழில் முன்னிலைப் பாடம் (1972), வாழ்க்கைத் திறன்கள் (1981) மற்றும் தொழில் நுட்ப
 
 
 
 

பாடங்கள் போன்றன அறிமுகம் செய்யப்பட்டன.
v கடந்த ஐம்பதாணிடு காலப் பகுதியின் கல்விச் சீர்திருத்தங்கள் கல்வித்
தராதர வீழ்ச்சி எனும் குறைபாட்டைக்
கருத்திற் கொள்ளாது கல்வி வாய்ப்புகளைச் சகல பிரிவினருக்கும் விரிவு செய்யும் முக்கிய முயற்சிகளில் ஈடுபட்டன. அரசாங்க சபைக் காலத்தில் (1931-1947) இலவசக் கல்வி (1945) மத்திய பாடசாலைகள் போன்ற புதிய திட்டங்களும் சுதந்திரத்தின் பின்னர் பாடசாலைகளை அரசு பொறுப்பேற்றமை, சுய
மொழிகள் போதனா மொழியாக்கப் பட்டமை,
இலவச பாடநூல் விநியோகம், இலவச
சீருடை போன்ற நடவடிக்கைகள் பின்தங்கிய W
வகுப்பினரைக் கல்வி பெறச் செய்ய மேற்கொள்ளப் பட்டவையாகும். இவற்றின் விளைவாக இன்று பாடசாலை வயதினரில் 85 வீதமான மாணவர்கள் பாடசாலைகளில் சேர்ந்து பயிலுவதைக் காணமுடிகின்றது. பாடசாலை செல்லாத ஏனைய 15 வீதமான பிள்ளைகளைக் கல்வி பயிலச் செய்யக் கட்டாயக் கல்வி ஏற்பாடுகளும் இன்று
நடைமுறைப் படுத்தப்படும் நிலை காணப்படுகின்றது.
எவ்வாறாயினும் 'கல்வியின்
தராதரங்கள் வீழ்ச்சியடைந்துவிட்டன; அன்றைய நிலை இன்றில்லை என்ற விமரிசனம் குறைந்தபாடில்லை. கல்வி முறை மீது விடுக்கப்படும் பல்வேறு கண்டனங்கள் காரணமாக, இத் தராதரங்களின் வீழ்ச்சி பற்றிய கணிடனம் மேலோட்டமாக ஏற்றுக் கொள்ளப்பட்ட தொன்றாகவும் அதிகம் ஆராயப் படாத தொன்றாகவும் காணப்படுகின்றது. எனவே இக்கண்டனம் எவ்வாறு விடுக்கப் படுகின்றது என்பது பற்றி
மேலும் சற்று விளக்குதல் வேண்டும்.
1) இன்றைய பாடசாலை Loftsorghui களுக்கும் பல்கலைக்கழகப் பட்டதாரி களுக்கும் போதிய ஆங்கில அறிவில்லை. அக்காலத்தில் ஆரம்பக் கல்வி பயின்றவர்கள் கூட இன்று அம்மொழியை இலக்கண சுத்தமாகப் பேசுகின்றனர்.
2) இன்று படித்தவர்கள் என்று சொல்லப்படுகின்றவர்களுக்குப் பொது அறிவு என்பதேயில்லை. நாட்டு நடப்பு, உலக விவகாரம் என்பன எதுவுமே தெரியாது.
3) இனி றைய கறிறோர் எதி தொழிலையும் செய்யும் ஆற்றல்களும் திறன்களும் அற்றவர்கள். குறிப்பாக க.பொ.த. உ/நி பயின்றவர்களும் பட்டதாரிகளும் வேலைக்கு , அமர்த்தப் படப் Gurbisinföpsissir (unemployable) - என்ற முறையில் இவ்விமரிசனம் நீண்டு செல்கின்றது.
இத்தகைய கல்வித் தராதர வீழ்ச்சி பற்றிய கணிடனம் எந்த அளவுக்கு நியாயமானது? இதற்கு மாற்றுக் கருத்துக்கள் எவையேனும் உணர்டா? என்பதை ஆராய்வது பயனுடையதாகும். குறைந்த பட்சம் அதற்கான சில அடிப்படைத் R கருத்துக்களையும் இவ்விடத்து நோக்குதல் வேண்டும்.
தகவல்களையும்
1) முன்னைய காலப்பகுதிகளுடன்
(உதாரணமாக 1940கள், 1950கள்) இன்றைய
கல்வி முறையை ஒப்பிட்டு தராதரங்கள் வீழ்ச்சியடைந்து விட்டன என்று கூறும்போது அக்காலத்தில் கல்வி பெற்றவர்களின் தொகை,

Page 19
அவர்களுடைய சமூகப் பின்னணி என்பன பற்றிய சிந்தனை தேவை. 19401950 காலப்பகுதியில் கல்வி வாய்ப்புகள் இன்று போல் விரிவடைந்திருக்கவில்லை. மட்டுமே
உயர்தரமான ஆங்கிலக் கல்வியை வழங்கிய
வசதிபடைத்த வகுப்பினர்
பாடசாலைகளுக்குச் செல்ல முடிந்தது. ஆங்கிலப் உயர்தரமான இடைநிலைக் கல்வியை
பாடசாலைகள் மட்டுமே
வழங்கின. ஆனால் பாடசாலை சென்ற பிள்ளைகளில் 10-15 வீதமானவர்கள் மட்டுமே இக்கல்வி வசதிகளைப் பெற்றிருந்தனர். ஏனைய 85-90 வீதமான மாணவர்கள் 19401950 காலப்பகுதியில் சுயமொழிகளில் ஆரம்பக் கல்வியை மட்டுமே பயின்றனர்.
இன்றைய ஒப்பீட்டு முயற்சியில் பல குறைபாடுகள் உள்ளன. இன்று 10,500 பாடசாலைகளில் சுயமொழிகளில் க.பொ.த. சா /த கல்வி பயில வாய்ப்புப் பெற்றுள்ள பல்வேறு சமூக வகுப்புகளைச் சேர்ந்த மாணவர்களை (உதாரணம்: பெருந்தோட்ட மாணவர்கள், கொழும்பின் சேரிப்புற, வசதி குறைந்த மாணவர்கள்) அப்போதைய ஆங்கிலப் பாடசாலை மாணவருடன் ஒப்பிட்டுத் தராதர வீழ்ச்சி பற்றிப் பேசுவதில் தருக்கம், நியாயம் எவையுமில்லை. இன்று பின்தங்கிய விவசாய, தொழிலாளர் பிரிவுகளைச் சேர்ந்தவர்கள் உயர் பள்ளிக் கல்வியையும் (க.பொ.த. உ/நி) பல்கலைக்கழகக் கல்வியையுமீ பெற பெற்றிருக் கிறார்கள் என்றால் இது இலங்கையின் கல்வித்துறையில் ஏற்பட்ட ஒரு முக்கிய முன்னேற்றமாகவே கொள்ளல் வேண்டும். இதனை நிரூபிக்கப் 6) சான்றாதாரங்கள் உண்டு. 12-13 ஆண்டு காலக் கல்வியைப் பாடசாலைகளில்
வாய்ப்புப்
முடித்துப் பல்கலைக் கல்வி பெறச் சேர்ந்துள்ளவர்களில் (பல்கலைக்கழக மாணவரின் மொத்த தொகை இன்று 32000) கணிசமானவர்கள் சாதாரண 66), FTu, தொழிலாள மற்றும் கீழ் மத்திய வகுப்பினைச் சார்ந்தவர்கள். அவ்வாறே இன்று க.பொ.த. உ/நி பரீட்சைக்கு அமரும் 160,000 மாணவர்களில் கணிசமானவர்கள் இப்பின்தங்கிய வகுப்புகளைச் சார்ந்தவர்கள். இதற்குப் பல ஆய்வுச் சான்றாதரங்கள் உண்டு. இலங்கையின் கல்வி முறையைப் பொறுத்த வரையில், பின்தங்கிய பிரிவினர் இந்த முன்னேற்றம் பெற்றிருக்கும்போது 'கல்வித் தராதர வீழ்ச்சி பற்றிய கண்டனம் சரியானதா
அளவுக்குக் கல்வித்துறையில்
என்ற ஒரு அடிப்படை வினா எழுகின்றது 1940 களிலும் 1950 களிலும், கல்வித் தராதரம் உயர்ந்திருந்ததாகக் கூறப்படும் காலப் பகுதியில் கல்வி வாய்ப்புகளையும் பெற்றிராத பின்தங்கிய வகுப்பினர் இன்று கல்வி வாய்ப்புகளைப் பரவலாகப் பெற்றுள்ளனர் என்ற உண்மையை மனங்கொளல் வேண்டும்.
2) 'கல்வித் தராதரங்களின் வீழ்ச்சி பற்றி
வாதிடுவோர் அதனால் எதனைக் கருதுகின்றார்கள் என்பதும் தெளிவாக இல்லை. பாடசாலைகளில் பயன்படுத்தப்படும் பாட ஏற்பாட்டின் தரம் குறைந்து விட்டதா அல்லது அதனைக் கற்கும் மாணவர்களின் தராதரம் குறைந்து விட்டதா என்பது தெளிவுபடுத்தப்படு வதில்லை.
நிச்சயமாக இன்றைய பாட ஏற்பாடு முன்னைய பாட ஏற்பாடுகளை விடத் தரத்தில் குறைவானது என்ற கருத்தை ஏற்றுக் கொள்ள முடியாது. 1940-1960 காலப் பகுதியில் இருந்ததைவிட் இன்று விஞ்ஞானம்,
 

தொழில் நுட்பம், சமூக விஞ்ஞானங்கள் போன்றன பெரிதும் முன்னேறிவிட்டன. இவை பற்றிய ஆராய்ச்சிகள் பல்கிப் பெருகி அறிவு வெள்ளம் பிரவாகம் எடுத்து ஓடுகின்ற காலப்பகுதி இது ; நவீன யுகம் அறிவு soidu usii (knowledge based era)
எனப்படுகின்றது. இன்றைய அறிவுப்
பெருக்கம் அல்லது நவீன அறிவுத் தொகுதி நிச்சயமாகப் பாடசாலை, பல்கலைக்கழகப் பாட ஏற்பாட்டில் பிரதிபலிக் கத் தான் செய்கின்றது.
பாடசாலைப் பாட ஏற்பாட்டில் கடந்த கால் நூற்றாண்டு காலத்தில் செய்யப்பட்ட பல சீர்திருத்தங்கள் தராதர மேம்பாட்டுக்கு உதவின.
- ஆரம்பப் பாடசாலை #@န္႕း தனித்தனிப் பாடங்கள் கைவிடப்பட்டு ஒன்றிணைக்கப்பட்ட பாட செயற்பாட்டுக் கற்பித்தல் முறை அறிமுகம் செய்யப்பட்டமை. J
- இடைநிலைக் கல்விப் பாட் ஏற்பாட்டில் சகல மாணவர்களும் 11 ஆம் ஆண்டு வரை கணிதம், விஞ்ஞானம், சமூகக் கல்வி முதலிய பாடங்களைப் பயிலும் வகையில் செய்யப்பட்ட மாற்றம் எண்கணிதம் கைவிடப்பட்டு கணிதம் அறிமுகம் செய்யப்பட்டமை.
பாடசாலைப் பாடங்கள் ஒவ் வொன்றிலும்
இவ்வாறு ஏராளமான மாற்றங்கள்
செய்யப்பட்டன. உயர் இடைநிலையில் வர்த்தவியல் கணக்கியல், முகாமைத் துவம், புள்ளிவிபரவியல் என்பவற்றுடன் எதிர்காலத்தில் கலை, விஞ்ஞானம் என்பவற்றுடன் புதிய
தொழில் நுட்பப் பாடப் பிரிவு ஒன்றும்
துறைகளைக்
மட்டும் சுட்டிக்காட்டலாம்.
அறிமுகம் செய்யப் படவுள்ளது.
பல்கலைக்கழகப் பாட ஏற்பாட்டில் எத்தனையோ புத்தாக்கங்கள் நிகழ்ந்து விட்டன. 1940-1950 காலப்பகுதியின் பாட ஏற்பாட்டுடன் ஒப்பிடும்போது தற்கால பாட ஏற்பாடு ஏராளமான நவீன அறிவுத் கொணி டிருப்பது குறிப்பிடத்தக்கது. ஒரு உதாரணத்தை இன்று விஞ்ஞானம், கலை, கல்வி, விவசாயம் பிரயோக விஞ்ஞானம், சனத்தொகையியல், அழகியல், உண்ணாட்டு மருத்துவம் கம்ப்யூட்டர் கல்வி திொழிலாளர் கல்வி போன்ற துறைகளுக்கான பட்ட மேற்படிப்பு நிறுவனங்களும் தனியான
உயர்கல்வி நிறுவனங்களும் பல்கலைக்கழக
அமைப்புக்குள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. தொழில் நுட்பத்திற்கென்றே ஒரு தனியான பல்கலைக்கழகம் உள்ளது. உயர் கல்வி நிலையில் தொலைக்கல்வி பயிலும் 20,000 மாணவர்களைக் கொணிட திறந்த பல கலைக் கழகம் ஒன்று இயங்கி வருகின்றது. இவற்றை விட எழுந்தமானமாக விஞ்ஞானம், மருத்துவம், சட்டம் என்ற ஏதாவதொரு துறையின் பாட ஏற்பாட்டை ஆராய்ந்தால் அது 1950 களின் பாட ஏற்பாட்டை விட எந்த அளவுக்கு நவீனகால முன்னேற்றங்களை உள்ளடக்கி உள்ளது என்பது விளங்கும். இவை யாவும் கல்வித் தராதர வீழ்ச்சி பற்றிய விமரிசனம் மேலோட்டமானது என்பதையே விளக்கும்.
3) 1940-1960 காலப்பகுதியிலிருந்த ஆங்கில அறிவு இன்று வீழ்ச்சியடைந்துள்ளமையும் கல்வித் தராதரங்களில் ஏற்பட்ட வீழ்ச்சியாக வியாக்கியானம் செய்யப்படுகின்றது. அக் காலத்தில் பாடசாலை சென்ற

Page 20
மாணவர்களில் 10 வீதமானவர் மட்டுமே
ஆங்கிலப் பாடசாலைகளில் ஆங்கில மொழி மூலம் பயின்றனர். முழுநாட்டிலும் 7 வீதமானவர்களே ஆங்கில மொழியில் தேர்ச்சி பெற்றிருந்தனர். அத்துடன், ஆங்கில மொழித் தேர்ச்சி என்பது கல்வியில் பெற்றுள்ள உயர்ந்த தேர்ச்சியைக் குறிக்காது. ஆங்கிலத்தில் சரளமாகப் பேசத் தெரிந்த 20 கோடி அமெரிக்கர்களும் பெரிய கல்வித் தேர்ச்சி பெற்றவர்கள் என்று கூற முடியாது. பாடசாலை மாணவர்கள் யாவருமே சுயமொழிகளில் கற்க வேண்டும் என்ற விதியை ஏற்படுத்தி விட்ட பின்னர் ஆங்கிலத் தேர்ச்சிக் குறைவு பற்றி முறையிடுவதும் அதனால் கல்வித் தேர்ச்சி குறைந்து விட்டது என வாதிடுவதும் ஏற்றுக் முடியாதது.
கொள்ளப்பட
4) அக்காலத்தில் சிறு வகுப்புகளில் படித்தவர்கள் பிற்கால்த்தில் பெரிய நிர்வாகிகளாகவும் கூடிய பொது அறிவுடையவராகவும் இன்றைய உயர்கல்வி கற்றவர்களைவிட பல படிகள் மேலானவர்கள் வாதமும் முற்றிலும் மேலோட்டமானதேயாகும். உதாரணமாக,
எனிற
அன்றைய 6 ஆம் 7 ஆம் வகுப்பில் பயின்று சித்தி எய்திய 12-13 வயது மாணவன் அவ்வயதில் அத்தனை அறிவையும் திறமையையும் பெற்றிருந்தான் எனக் கொள்ள முடியுமா? அவ்வாறு 8ஆம் 7ஆம் வகுப்பில் சித்தியெய்திய அத்தனை மாணவர்களும்
கல்வி, கேள்விகளில் சிறந்து விளங்கினார்களா?
அதே காலப் பகுதியில் இலங்கையிலிருந்த பின் தங்கிய பாடசாலைகளிலிருந்து சுயமொழிகளில் பயின்று வெளியோரின் தராதரங்கள் என்ன? இவற்றுக்கெல்லாம்
எதிர்மறை விடைகளே உள்ளன என்பது
வெளிப்படை. அவையே மேற்கணிட
வாதத்தை மறுத்துரைக்கப் போதியன.
5) அன்றைய கல்வி தரமுயர்ந்தது, இன்றைய கல்வியின் தராதரம் வீழ்ச்சியடைந்து விட்டது என்று வாதிடுவோரின் கருத்து உண்மையில் ஆராயப்பட முடியாததொன்று. ஏனெனில் இன்றைய 18 வயதுப் பாடசாலை மாணவனின் கல்வித் தராதரங்களை அன்றைய (1940-1960) 18 வயதுப் பாடசாலை
மாணவனுடன் ஒப்பிட்டுப் பார்ப்பது இன்று
முற்றிலும் முடியாததொன்று. எனவே இம்முறைப் பாட்டிற்கு சான்றாதாரம் எதுவுமில்லை என ஒதுக்கி விட முடியும்.
அரசியல், பொருளாதாரம். சமூகம் என்பன பற்றி உலகில் ஏராளமான நிரூபிக்கப்படாத தகவல்கள் அல்லது 'உண்மைகள் நிலவுவ்து போன்று கல்வித் துறையிலும் பல தகவல்கள் உள்ளன. அவற்றில் ஒன்றே இங்கு ஆராயப்பட்டதொன்று. அன்றைய கல்விய்ை விட இன்றைய கல்வி தராதரத்தில் வீழ்ச்சியடைந்தது என்ற வாதமும் இவ்வாறு ஆராயப்பட்டு, நிரூபிக்கப்படாததொன்றே! எவ்வாறா னும் ஏதோ முற்றிலும் சரியான கூற்றாக இதனை ஏற்றுக் கொள்ளும் போக்கு தெரிகிறது.
எக்கூற்றும் நன்கு ஆராயப்பட்டே சரியானது என முடிவு செய்யப்படல்
வேண்டும் என்பது யாவரும் அறிந்ததே.
இங்கே தரப்பட் டுள்ள கருத்துக்கள் இவ்விடயம் பற்றிய விவாதத்திற்கு ஒரு அளவுக்கே உதவமுடியும். உண்மையில் இக்கருத்து மேலும் விரிவாக ஆராயப்பட்டு உண்மைநிலை மேலும் தெளிவு படுத்தப்படல் வேண்டும்.
 

V− இது புதியதோர் പ്രെ
தொலைக் காட்சித் தொடர்புகள் தரும்"
afospas for Jpoporasases
மக்களின் மனோபாவங்கள் வேகமாக மாறிக்கொண்டிருக்கின்றன. கண்மூடி முழிக்க முன்னர் நடைபெறும் மாற்றங்கள் அசைபோட்டுப் பார்க்க முயலும் போது எத்தனையோ பு விடயங்கள் நடந்தேறி விடுவதைப் பார்க்கின்றோம். இவற்ற்ை மாற்றங்கள் என்றோ சமுதாயப் புரட்சி என்றோ கூறி அமைதியடைந்து விடமுடியாது. இந்த மாற்றங்களை யார், எவை மூலம், யாரிடம், எவற்றை, என்ன விளைவுகளுடன் பதிய வைக்கின்றனர் என்பதைத் துருவிப் பார்க்கும்போது உணர்ந்து முடியும் . மனிதனுடைய கருத்துப் பரிமாற்றத்தின் வரலாறும், அதன் சர்வ வியாபகமும் தனியானதொரு ஆய்வுத்துறையாக வளம் பெற்றுள் ளது. தகவல் தொடர்புத் துறையின் இடைவிடாத செய்திப்பரம்பல், செய்திப் பரிமாற்றமும் அதன் வழி உருவாகும் தெளிவும் உலகத்தை ஒன்றுபடுத்தி ஒரு குடும்பமாக்கியுள்ளது.
கொள்ள
இருபதாம் நூற்றாண்டு வேகமாக ஓடிவிட்டது. இந் நூற் றாணி டின் கடைக்கூறில் வாழும் மக்கள் பத்திரிகைகள், வானொலி, தொலைக்காட்சி, திரைப்படங்கள் என்ற வரிசையில் உள்ள தொடர்பு
சாதனங்களால் இணையும் வாய்ப்புகள் பெருகியுள்ளன. தொலைபேசித் தொடர்புகள், கம்பியில்லாத் தந்தி என்று பேசிய காலம் போய் செய்மதித் தொடர்புகள் உலகத்து மக்களை இணைத்தது மட்டுமன்றி அறிவியல் வளர்ச்சியையும் புரட்சியையும் உருவாக்கியுள்ளது. இவற்றோடு மின் கணணி எனப்படும் கம்ப்யூட்டர் யுகமும் இணைந்த நிலையில் மனித சமுதாயம் பாரதி கனவு கண்ட "கிருத யுகத்தை
நோக்கி வீறு நடை போடுகின்றது.
சமூக தி தை வேகமாக ஆக்கிரமிக்கும் உந்துசக்தியாக வெகுஜன தொடர்பு சாதனங்கள் உருவெடுத் துள்ளமையை இன்றைய காலகட்டத்தில் சமூகவியலாளர்கள் அவதானித்து
கலாசாரங்களை இனங்காணிபதற்கும் உருவாக்குவதற்கும் மூலாதாரமாகத் தகவலி தொடர்புக் கருவிகள்
நிதானமாக வருகின்றனர்.
செயற்படுவதை பலரும் வெளிப்படையாக
உணருவதில்லை. சற்றுக் கூர்மையாக அவதானிதி தாலி சமுதாயத்தில் விழிப் போடு வாழத் தகுதியுடையவர்களாக்குபவையாகச் சக்தி வாய்ந்த தகவல் தொடர்புச் சாதனங்கள்
தனிமனிதனைச்

Page 21
நிகழ்கால விளிம்பின் நிழல்கனாக மனிதனைப் பின் தொடர்கின்றன.
"அல்லும் பகலும் என்பதை அறிவை அறிவால் அறிந்து சொல்லும் உரை மறந்து தூங்குவது எக்காலம் எனப் பத்திரகிரியார் என்ற சித்தர் பாடினார். அறிவை அறிவால் அறிந்து சொல்லும் நிலைமை ஒரு புறமும், உரை மறந்து தூங்கும் நிலை மறுபுறமும் என அல்லும் பகலும் நிகழ்வனவற்றை இத்தொடர் விளக்குகின்றது. உரை மறந்து தூங்கும் மெய்ஞான நிலை ஒரு புறமிருக்க உரைகளை நினைவூட்டியும் உணர்த்தியும் வாழ்விப்பதை இன்றைய வெகுஜன தொடர்புச் சாதனங்கள் தமது கரும வினையாகக் கொண்டு அல்லும் பகலும் செயற்படுகின்றன.
வெகுஜனத் தொடர்புச் சாதனங்கள் தனிமனிதனையும், சமூகத்தையும் "உலகத்தோடு ஒட்ட வைக்கும் நிதர்சன உலகிற்கு ஈர்த்து வரும் சக்திகளாக எழுச்சி பெற்றுள்ளமையை விழிப்போடு அவதானிக்க வேண்டும். மனித சமூகத்தின் சகல நாடி நரம்புகளிலும் வெகுசனத் தொடர்புத் துறை வேரூன்றி அனைத்து முறைமைகளையும் உள்ளும் புறமும் வழிப்படுத்தும் ஆக்க சக்தியாக எழுச்சி பெற்றுள்ளமை நவீன நாகரீக வளர்ச்சியின் புதியதொரு பரிமாணமாகும்.
ஒரு குழந்தை பிறந்து மொழி பயிலும் காலம் முதலாக வாழ்வின் ஒவ்வொரு அம்சத்தையும் கண்டு கேட்டு உயர்ந்து உணர்ந்து அறிகின்றது.
வெகுஜன தொடர்பு சாதனங்கள் தணிமனிதனைக் குடும்பங்களினூடாகச் சமுதாயமாக்குவது பல்வேறு நிலைகளில் நடைபெற்று வருகின்றது. தாய் தந்தையர், ஆசிரியர், பாடசாலைகள் என்ற வரிசையில் பல சக்திகள் மனிதனுடைய ஆளுமையை உருப்படுத்துகின்றன. இவற்றிற்கெல்லாம் புறநடையாக வெகுஜனத் தொடர்பு சாதனங்கள் தனிமனிதனுக்கும் சமுதாயத்திற்கும் முறைசாராக்கல்வியை வழங்குகின்றன. தொடர்புக் கருவிகளும் அவற்றின் செயற்பாடுகளும் நேர்முக மாகவோ அன்றி மறைமுகமாகவோ சர்வ வல்லமையும் ஆளுமையும் நிரம்பிய சக்திகளாக இயங்கித் தனிமனிதனையும் சமூகத்தையும் புரிந்துணர்வுடன் வாழ வழிவகுக்கின்றன.
சமயத்தரில்
ஒரே வீட்டு
வாசற்படியைத் தாண்டி உலகளாவிய
பண்பாட்டுக் கருஆலங்களை வெகுஜனத் தொடர்பு சாதனங்கள் உள்வீட்டிற்குக் கொண்டு வருகின்றன. நாகரிகம், பண்பாடு, கலாசாரம் என்பவை வெறும் சொல்லலங்காரமாகப் போகும் வகையில் அனைத்துலகப் பொதுமையை தொடர்புகளினூடாக வெகுஜனத் தொடர்பு சாதனங்கள் வழங்குகின்றன. கலாசாரம் என்பது உருவாக்கப்படுவது என்ற நிதர்சன உண்மையை வெகுஜன தொடர்பு சாதனங்கள் புத்திபூர்வமாக இனங் காட்டுகின்றன. "புதியதோர் உலகு செய்வோம்" என்ற மகாகவி பாரதியரின் கனவு இன்று புதியதொரு கோணத்தில் நனவாகி வருகின்றது.
 

புதிய சிந்தனைகள், புதிய செயற்பாடுகள், புத்தாக்கங்கள், பிறநாட்டுப் பண்பாட்டுத் தாக்கங்கள் உலகளாவிய நிலையில் பலம் வேறு
சமுகங்களிலும் இனங்களிலும் வேரூன்றி
வேகமாக
வருகின்றது. புவழியாக வேரூன்றியுள்ள சமுதாய ம களும், ஒழுக்கங்களும் சிதைந்து புக் கலாசாரம் உருவாகி
வருவதற்கு வெகுஜனத் தொடர்பு சாதனங்கள் பக்கபலமாகியுள்ளன. குறுகிய வட்டத்துள் வாழ்ந்த மக்களை திடீரென வெளியுலகிற்கு அழைத்து வரும் வேகம் சமுதாய நிறுவனங்களையும், குழந்தை களைக் கட்டுப்படுத்தும் அவசியம் பெற்றோரையும் பாடாய்ப்படுத்துகிறது.
இன்றைய காலகட்டத்தில் குடும்பத்தோடு திரைப்படம் பார்க்கச் செல்வது நின்றுவிட்டது. வார இறுதியில் திரையரங்குகளில் குறைந்துவிட்டது. திரைப்படம் என்றதும் குடும்பத்தோடு கின்னத் திரையின் முன்னால் குந்துவது வாராந்தர வழக்கமாகி வருகின்றது. வானொலியில் திரையிசைப்
மக்கள் தொகை
பாடல்கள் ஒலிபரப்பப்பட்டது போல தொலைக்காட்சியில் திரையிசைப் பாடல்கள் ஒளிபரப்பப்படுகின்றன. இதன் காரணமாக நேரங்கெட்ட நேரங்களில் எல்லாம் தொலைக்காட்சிப் பெட்டியின் முன்னால் அமரும் நிலை உருவாகியுள்ளது.
தொலைக் காட்சிப் பார்வை
யாளர்களின் உணர்வுகள், தேவைகள், பாதிப்புகள் பற்றிய கணிப்பீடு எவையும் எம்மைப் பொறுத்த வரையில்
ஆய்வுபூர்வமாக இதுவரை மேற்கொள்ளப்
படவில்லை. நாளாந்த வாழ்க்கையில் சராசரியாக ஏழு மணித்தியாலத்திற்கு மேல் தொலைக்காட்சிப் பெட்டியின் முன்னர் அமர்ந்திருக்கும் நிலை உருவாகியுள்ளது. பாடசாலையில் கழிக்கும் நேரத்திலும் அதிகமாக தொலைக்காட்சிப் பெட்டியின் முன்னால் அமர்ந்திருப்பது நாளாந்த வாழ்க்கையாக மாறியுள்ளது.
ஈர்ள். எம்பீரீ. தொலைக்காட்சிச் சேவை மூலம் உலகச் செய்திகளை அவதானிக்கும் பழக்கம் பெருகி வருகின்றது. பி.பி.ஸி. சி.என்.என். எப்கை நியூஸ் போன்ற சேவைகளின் வருகை உலகளாவிய நிகழ்ச்சித் தொகுப்புகளை இருபதி தி நாணி கு மணிநேரமும் ஒளிபரப்புவது இலங்கையில் செய்தித் தகவல் தொடர்பு முறையில் ஒரு புதிய பரிமாணத்தை உருவாக்கியுள்ளது. பத்திரிகை மூலமாகவும், வானொலி மூலமாகவும் அறிந்த உலகச் செய்திகளை நேருக்கு நேர் பார்க்கும் நிலைமை ஒரு பாரிய விழிப்பைத் தொடர்புத் துறையில் உருவாக்கியுள்ளது.
தகவல் தொடர்புத்துறையின் கூர்நுதிக் கோபுரமாக எழுச்சி பெற்றுள்ள தொலைத் தொடர்பு சாதனங்கள் முறையாகப் பயன்படுத்துவது பற்றி விரிவான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும். தொலைக் காட்சியைப் பார்த்தல் என்ற நாளாந்த நிகழ்வு இலங்கை போன்ற ஒரு வளர்முக சமுதாயத்தில் எவ்வகை விளைவுகளை உருவாக்குகின்றன?
திறந்தவெளிப் பொருளாதாரம் போலத் தகவல் தொடர்புக் கதவுகளும்

Page 22
திடீரென திறந்து விடப்பட்டுள்ளன.
வீட்டுக்கு வீடு தொலைக் காட்சிப் பெட்டியின் வருகையோடு உருவாகி வரும் சமுதாய மாற்றம்
விளைவுகளை ஏற்படுத்தி வருவதை சரிவர அலசி ஆய்வு செய்ய முன்வர வேண்டும்.
பாரிய
தொலைக்காட்சி ஒரு வலுவுள்ள
தொடர்பு சாதனம் தொலைக்காட்சிச்
சேவைகளின் தாக்கம் பற்றிய ஆய்வுகளைச் சரிவர மேற்கொள்வதன் மூலமாகப் புதிய சமுதாயத்தை உருவாக்க முடியும் என்பதை அதனை வழிப்படுத்துபவர்கள் உணர வேண்டும்.
தொலைக் காட்சிச் சேவை அறிமுகம் இன்று தகவல் தொடர்பு இடைவெளியை நீக்குவதற்குப் பயன்படுத்தப்படுகின்றதா? அல்லது செய்தி உற்பத்தியாளர்கள் அல்லது விளம்பர வியாபார கலாசாரத்தின் பலிபீடமாக மாறியுள்ளதா என்பதைப் பற்றி எவரும் அக்கறைப்படுவதாகத் தெரியவில்லை.
"ஒரு கத்தியைக் கொண்டு பழங்களையும் வெட்டலாம் மனிதர்களையும் அழிக்கலாம். கத்தியைப் பயன்படுத்துவது பயன்படுத்துவோரின் கைகளில் உள்ளது. தொலைக்காட்சிச் சேவையின் விவாக்கமும் விளைவுகளும் செய்திகளையும் கருத்துக் களையும் பரப்புகின்றன.
மக்களிடமி
இவை வழங்கும் செய்திகள் உண்மையானவை என்ற நம்பிக்கை
மக்கள் மனங்களில் வேரூன்றியுள்ளது. இதன் காரணமாக தகவல் தொடர்புக் கருவிகளை அல்லது சாதனங்களை
செம்மையான முறையில் வழிப் படுத்துவதும், பயன்படுத்துவதும் அவசியமானது.
தொடர்பு சாதனங்களின் மூல விசை பொறுப்புடைமையாகும். மக்கள் நலனையும், அரவணைப்பு ரீதியில் தேசிய உணர்வையும் வலுப்படுத்தும் பணி தகவல் தொடர்பு சாதனங்களைச் சார்ந்ததே. வாசகர்களைக் கவருதல் தொடர்பு சாதனங்களின் பிரதான நோக்கம். கவருவதற்கும், செல்வாக்கிற்காகவும் பொதுமக்கள்
வாசகர்களை கி
நலனைப் பாதிக்கும் உள்ளடக்கத்தை முதன்மைப் படுத்தக்கூடாது.
வெகுசனத் தொடர்புத் துறையின்
ஜீவநாடியாக இருப்பது சுதந்திரமான
செயற்பாடு. கருத்துச் சுதந்திரமும், விமர்சிக்கும் திறனும் பொது நலனைப் பாதிப்பதாக இருக்கக் பொதுநலனுக் குதி உள்ளவற்றைச்
கூடாது.
த டையாக சமநிலையோடும் சுயகட்டுப்பாட்டுடனும் வெளியிடும் போக்கு முதன்மைப் படும்போதுதான் வெகுஜன தொடர்புத் துறையில் முழுமையான சுதந்திரம் உருவாகும். ۔۔۔۔۔۔
அரசாங்கத்தின் அதிகாரக் கைகள் ஒரு புறமும், தனியார் நிறுவனமாயின் உரிமையாளர்களின் கருத்துக்கள், அவர்கள் சார்ந்துள்ள அரசியல் கருத்துக்களின் வெளிப்பாடு மறுபுறமும் சிெயற்படும் போது
 

வெகுசனத் தொடர்புத் துறையின் சுதந்திரம் நசிந்து போகின்றது. தகவல் தொடர்புத் துறையாளர்கள் அதிகாரம், தலையீடுகள் போன்ற கட்டுப்பாடுகள் இன்றிச் சட்டத்திற்கு முரணாக செல்லாது சமூக நலன், தேசிய நலனை மேற்கொண்டு செயற்படும் நிலைமையும், பயமில்லாது கருத்துக்களை வெளியிடும் நிலைமையும் சரியான ஆய்வுகள் மூ ல மி நெறிப்படுத்தப்பட வேண்டும். -ܗܝ
உள்ளடக்க
பண்பாட்டையும் நாகரிகத்தையும் கொச்சைகளுக்கு இடமளிக்காது, உண்மைத் தன்மையைப் பேணியும், நடு நிலைமை தவறாதும், நேர்மை பிறழாதும் தொடர்புத் துறை செயற்படுதல் அவசியமானது.
தகவல் தொடர்புத் துறையில் இன்று இமயமாக தொலைக்காட்சிச் சேவையின் பாரிய செல்வாக்கின் பின்னணியில் மேலே வலியுறுத்திய வெகுசனத் தொடர்புத் துறை நெறிப்படுத்தலுக்கு இன்றியமையாத உள்ளடக்கப் பகுப்பாய்வும், பொதுவான தொடர்புத்துறை நியமங்களும் சிந்திக்கப்பட வேண்டியவை.
தொலைக் காட்சிச் சேவை தொல்லை தரும் காட்சிச் சேவையாக மாறாதிருப்பது பரந்த அடிப்படையில் வெகுஜன தொடர்பு சாதனங்களின் செய் நெறியைப் புரிந்து கொள்வதிலும் அதற்கேற்ப சம்பநீ தப்பட்டோர்
பொறுப்புடைமையுடன் செயற்படுவதிலும் தங்கியுள்ளது எனலாம்.
வளர்ந்துள்ள
இறந்தகாலத்தை உன்னால் மாற்றிய மைக்க முடியாது. ஆனால் மிகச்சிறந்த நிகழ்காலத்தைப் பாழடிப்பதற்காக எதிர்காலத்தைப் பற்றிக் கவலைப்பட்டுக் கொண்டே இருக்கலாம்.
-யாரோ
LIIIsg)Ell
மீன்களும் வலைவீசுமா? ஏனில்லை! அவள் கடைக்கண்
பட்டதில்லையா உன்மீது?
-அருண் சிவா
GLITEVEllisi)
ஏழு கட்சிகளின் கூட்டணி அரசாங்கம்
கொஞ்ச நேரத்துக்கேதான்.
-ஒவியா
உன்னுடைய முதலாவது ஆசையை
அடக்குதல் என்பது அதைத் தொடர்ந்து வரும் ஏராளமானவற்றைத் திருப்திப் படுத்துதலை விட
இலகுவானதா இல்லையா என்று
யோசித்துப் பாருங்கள்.
-பெஞ்சமின் ஃபிராங்ளின்

Page 23
றெஜிசிறிவர்த்தனாவின்நாவலும் Bjöflugmúlyffmmuh
இன்று ஈழத்து தமிழ் இலக்கியம் பலவித நவீன மாற்றங்களைப் பெற்று
முன்னேறி வருவதாகக் கூறப்படுகிறது.
இருந்தும் இம்மாற்றங்களுக்கெல்லாம் மறைமுகக் காரணியாக நிற்கும் தமிழ்மக்களின் உரிமைப் போராட்டம் பற்றிய தெளிந்த கருத்தியல் ரீதியான நோக்கோடு எந்தப் படைப்பும் அணிமையில் வெளிவரவில்லை என்று துணிந்து கூறலாம்.
முப்பது வருடங்களுக்கு முன்னர் எழுதப்பட்டு முதளையசிங்கத்தின் ஒரு தனிவீடு, அதன் பின்னர் பதினைந்து வருடங்களுக்கு முன்னர் வெளிவந்த அருளின் "லங்கா ராணி போன்ற படைப்புகளுக்குப் பின்னர் இது பற்றிய பிரக்ஞையோடு எந்தச் சிறந்த
படைப்பும் வரவில்லை. இதற்கான
காரணங்கள் பல. ஆனால் நாம் இங்கு
குறிப்பிட வருவது இவற்றைப் பற்றியல்ல.
- தமிழராகிய நாம் எமது அண்மைக் காலப் படைப்புகளில் தொடாத இனப்பிரச்சினை சம்பந்தப்பட்ட விஷயத்தை,
ஆங்கிலத்தில் எழுதும் சிங்கள இனத்தைச் சேர்ந்த எழுத்தாளரும் விமர்சகரும்
கவிஞருமான றெஜி சிறிவர்த்தனா அவர்கள் தனது, ! எனது ஞாபகச் fisi GOTŠIGEAš filsMLGui (Among My Sou! venirs) என்னும் நாவலில் வெளிக் கொணர்ந்துள்ளார்.
வெளிவந்த
இது இன்றைய இனப்போராட்டம் சம்பந்தப்பட்ட கதையல்ல. ஆனால் இவ் இனப்போராட்டமானது ஆரம்பமாவதற்கு துணைபோன சக்திகளையும் அவை கொண்டு வந்த பேரினவாதக் கூறுகளையும் இன்று அவை எவ்வாறு பாரிய இனப் போராட்டமாக மாறுவதற்கு காரணமாய் இருந்தனவென்பதையும் வரலாற்றுக் கணி கொணிடு கூறும் நாவலாகும். இந்நாவலின் அறிமுகமாக அதன் பின்னட்டையில், "1936 இல் இருந்து 1958 வரையிலான காலப்பகுதியை உள்ளடக்கி, அக்காலத்திய சமூகப் பிரிவுகளாலும் அரசியல் போக்குகளாலும் பாதிக்கப்பட்ட பாத்திரங்கள் பற்றி விபரித்துச் செல்கிறது இந்நாவல்
என்று கூறப்படுவது முற்றிலும் சரியே.
ஆசிரியர் கூற்றாக தன்மையில் எழுதப்பட்டுள்ள இந்நாவல், சுயசரிதை நாவலாகத் தோற்றினும் ஆசிரியர் அதை மறுக்கிறார். தன் சொந்த அனுபவங்களோடு ஆழமாகச் சில அணுகுவதற்கு இவ்வுத்தி வாய்ப்பாக அமையலாமி என்பதால் இது கையாளப்பட்டிருக்கலாம். இத்தனைக்கும் கதை பெரிய சிக்கலான ஒன்றல்ல. ஆனால் கதை அழுத்தும் கருத்து முக்கியமான ஒன்றாகும். அதாவது காலனித்துவ ஆட்சியின் காலந்தொட்டு, காலனித்துவ ஆட்சியாளர்களை அடியொற்றி, அவர்களது மொழிகற்று அவர்களை அபிநயித்து
விஷயங்களை
 
 
 

வாழ்ந்த மேட்டுக் குடிச் சிங்களச் சிறுபான்மை
விதத்திலும் வேறுபட்டு, தாழ்வுற்று சிங்கள மொழி மட்டுமே தெரிநீதிருநீத பெரும்பான்மைச் சிங்கள சமூகத்துக்கும் இடையே இருந்துவந்த பரிய வேறுபாடே அது. இவ்வேறுபாடானது எத்தகைய அழுத்தம் மிக்கதாக இருந்ததென்பதை இந்நாவலை விமர்சித்த ஏ. ஜே. கனகரத்தினாவின் கூற்றிலிருந்து அறியலாம். ஒரே இனத்துக்குள் இருந்த சமூக ஏற்றத்தாழ்வு சம்பந்தப்பட்ட வேறுபாடாக இது தெரியாமல் இரு இனங்களுக்கிடையே
(two nations) issusilu 66 g/LITLITY,661.
இது இருந்தது என்கிறார் அவர்.
இங்கு இன்னோர் முக்கியமான விஷயத்தைக் கவனிக்க வேண்டும்.
அதாவது காலனித்துவ ஆட்சியாளர்களை
அடியொற்றி வாழ்ந்த மேட்டுக்குடி சிங்களவர்களுக்கும் மேட்டுக் குடி தமிழர்களுக்கும் இடையே எந்தவித வேற்றுமையும் நிலவவில்லை என்பதையும் நாவல் சுட்டுகிறது. மேலைத்தேச நாகரிக மோகமும் ஆங்கில மொழிப் பயிற்சியும் இவர்களை ஒரே இனமாகவே மாற்றி இருந்தது. ஆனால் இந்தப் போக்கு 1958 இன் வருகையோடு முற்றுப் பெறுகிறது. மேட்டுக்குடி சிங்களச் சமூகத்தில் தோன்றிய சிங்கள அரசியல்வாதிகள், தமக்கெதிராகக் கோபம் கொண்டிருந்த தாழ்வுற்ற பெரும்பான்மைச் சிங்களச் சமூகத்தை திசை திருப்புவதற்கு பேரினவாதத்தை ஓர் உபாயமாகக் கையாணி டனர். (இக்கருத்தையும் ஏ. ஜே. கனகரத்தினாவே
சமூகத்துக்கும் அவர்களிலிருந்து முற்றாகச் சகல
திருப்புதல்களினி
"இருதிசை திருப்புதல்களின் இணைவு = இனப்பிரச்சனை" என்ற பிறிதோர் குறிப்பிடுகிறார். இக்கட்டுரையில் அவர் மேட்டுக்குடி தமிழ்
கட்டுரையில்
அரசியல்வாதிகள் தம் சமூகத்துக்கெதிராகக் கோபம் கொண்டிருந்த தாழ்த்தப்பட்ட
தமிழ்ச் சமூகத்தை திசை திருப்புவதற்கு இனப் பிரச்சனையைப் பாவித்தனர் என்று ம்ேலும் கூறி இதையே "இருதிசை இணைவு க இனப்பிரச்சனை" என்று கூறுவதையும் இச்சந்தர்ப்பத்தில் நினைவுபடுத்துதல் நன்று).
இந்நாவல், டேவிட் ஷெல்ரன் குணவர்த்தனா என்பவரின் கூற்றாக நகர்த்தப்பட்டுச் செல்கிறது. மேட்டுக்குடி சமூக சிங்களவரான ஷெலி ரனி குணவர்த்தனா தனது பாடசாலைக்
காலங்களையும் பின்னர் தனது
பல்கலைக்கழக (வாசிற்றி) கால வாழ்க்கையையும் அதன் பின்னர்
பத்திரிகைத் துறையில் தனக்கேற்பட்ட அனுபவங்களையும் ஒவ்வொரு காலகட்டமாகப் பிரித்து கூறிக் கொண்டு வருவதே நாவலாக உருவெடுக்கிறது. கூடவே இதுவே அண்மைக்கால சமூக அரசியல் வரலாற்ாகவும் காட்டப்படுகிறது.
ஷெல்ரன் குணவர்த்தனாவின் நெருங்கிய நண்பனாக பாடசாலைக் காலத்திலிருந்து பல்கலைக்கழகக் காலம்
வரை இருந்துவந்த மார்க் என்பவன்
அக்காலத்திய காலனித்துவ அரசாங்கத்தில்
பெருஞ்செல்வாக்குப் பெற்றிருந்த ஒரு
தமிழ்க் குடும்பத்தைச் சேர்ந்தவன். இவன்

Page 24
பல்கலைக்கழகப் படிப்பை முடித்துவிட்டு உயர் பட்டப்படிப்பிற்காக இங்கிலாந்து செல்கிறான். இவனைப் போலவே கேர்லி என்னும் ஏழைச் சிங்களப் பெண்ணைக் காதலித்து கலியாணம் செய்யும் பிறேமசிறி என்பவனும் இவனது பள்ளிக்கால - பல்கலைக்கழக நண்பனாக இருந்ததோடு பத்திரிகைத்துறையிலும் இவனோடு பணியாற்றுகிறான். ஆனால் ஒரு வித்தியாசம். அதுவே முக்கிய வித்தியாசம். பிறேமசிறி, நான் ஆரம்பத்தில் குறிப்பிட்ட மேட்டுக் குடி சிங்கள சமூகத் தோடு ஒட்டுறவு கொள்ள முடியாத, Lu M.) வித தீதிலும் தாழிவுற்ற சிங் களப் பெரும்பான்மைச் சமூகத்தைச் சேர்ந்தவன். தீவிர இடதுசாரியாக மாறி புரட்சிகர வேலைகளில்
இவன் பல்கலைக்கழகத்தில்
ஈடுபடுகிறான். இதனால், இவனுக்கு
வழங்கப்பட்ட புலமைப் பரிசிலி
கொடுப்பனவு (இப்புலமைப் பரிசில் கொடுப்பனவை வழங்கியவர் மார்க் என்னும்
தமிழ் மாணவனின் தந்தையார்) ரத்தாவதால் படிப்பைத் தொடர முடியாமல் போகிறது. பிறகு சிறை செல்லவும் நேர்கிறது. இவன் சிறை சென்று நிர்கதியனாக இருந்த காலத்தில் இவனுக்கு கைகொடுப்பவளாக இருப்பவள் இவனது காதலி கேர்லி தான். அவளையே அவன் சிறையைவிட்டு வெளிவந்ததும் மணந்து கொள்கிறான்.
பல்கலைக்கழகத்தில் பிறேமசிறி போன்றவர்களுக்கு இடதுசாரிப் போதம்
ஏற்படுத்திய சிங்கள மேட்டுக்குடியைச்
சேர்ந்த தொழில் அதிபரின் மகன் எவ்வாறு ‘விட்டு
வெளியேறியதும் தன் கொள்கைகளைக்
பல கலைக் கழக தி தை
கைவிட்டு முதலாளித்துவத்திற்கு தோள்
கொடுப்பவனாக மாறுவதோடு
ஷெல்ரனையும் பிறேமசிறியையும் தனது
கம்பனி நடத்திய பத்திரிகைகளுக்கு ஆசிரியர்களாக்கி பயன்படுத்திக் கொள்கிறான் என்பதும் அழகாகக் காட்டப்படுகிறது. ஷெல்ரன் இக்கம்பனியின் ஆங்கிலப் பத்திரிகையிலும் பிறேமசிறி சிங்களப் பத்திரிகையிலும் வேலை செய்கின்றனர். இக்கம்பனியின் சகோதர இதழாக தமிழ்ப் பத்திரிகை ஒன்றும் வெளிவருகிறது. இனப்பிரச்சினை தீவிரம் அடைந்த காலத்தில், மாறும் அரசாங்கங்களுக்கு ஏற்ப எவ்வாறு பத்திரிகைகள் தமிழர்களுக்கு ஒரு செய்தியும் சிங்களவர்களுக்கு ஒரு செய்தியும் ஆங்கிலம் படித்தவர்களுக்கொரு செய்தியுமாக மாறி மாறி பச்சோந்தி வேலை பார்க்கின்றன என்பதையும் பத்திரிகை
ஆசிரியர்களாகக் கடமையாற்றும்
ஷெல்ரனும் பிறேமசிறியும் தாம் விரும்பாத
செயல் ஒன்றை செய்வது தொடர்பாக தம்மிலேயே வெறுப்புற்றாலும் ஜீவனோபாயப் பிரச்சினைகளின் பிடியினால் இதிலிருந்து விடுபடமுடியாமல் இருப்பதையும் நாவலாசிரியர் அழகாகக் காட்டுகிறார். லேக் ஹவுஸ் பத்திரிகை நிறுவனத்தின் நடத்தையே இங்கு ஆசிரியரின் தாக்குதலுக்கு இலக்காவது போல் படுகிறது.
இக் காலத்தில் தான் உயர் பட்டப்படிப்பிற்காக இங்கிலாந்து சென்றிருந்த திருமி பி வர உத்தேசிக்கிறான். அங்கு தனது படிப்பை முடித்துவிட்டு ஆத்ம விசாரத்தில் ஈடுபட்டு ஐரோப்பா எங்கும் சுற்றித் திரிந்துவிட்டு
மார்க் இலங்கை
 

ஒரு துறவியின் பக்குவத்தோடு மார்க் இலங்கை திரும்புகிறான். இவன் இலங்கைக்கு திரும்ப உத்தேசித்த காலம் 1957 இனப் பிரச்சனை தீவிரம் அடைந்திருந்த காலம். இவன் இலங்கை திரும்புவதற்கு முன்னர் நண பணி ஷெலிரனுக்கு எழுதிய கடிதம் முக்கியமானது. "ஒருவேளை நான் இலங்கைக்கு திரும்பி வரும்போது, அங்கு இனப்பிரச்சினை தீவிரம் அடைந்து நான் இருக்கும் எங்காவது ஒரு இடத்தில் இனக்கலவரம் வெடித்து அதற்கு நான் தமிழன் என்ற காரணத்திற்காக (எனக்கு தமிழன் என்றோ, சிங்களவன் என்றோ, எஸ்கிமோவன் என்றோ வித்தியாசம் இல்லாவிட்டாலும்) கொல்ல்ப்படலாம்.
இக் கடிதம் மார்கிற்கு இலங்கையில் நடைபெறப் போவதை எதிர்வு கூறுவதாகவே இருந்தது.
மேல்நாட்டிலிருந்து திரும்பிய தனது வசதி படைத்த உறவினர்களிடமிருந்து விலகி, "ஒரு துறவிபோல் வாழ முற்படுகிறான். அவனுக்கு கொழும்பில் பாமன்கடைப்
பகுதியில் ‘வாழ்ந்த பிறேமசிறியும் அவன் மனைவியும் தங்கள் வீட்டில் தங்க இடம் கொடுக்கின்றனர்.
மார்க் ,
அப்பொழுது கொழும்பில் 1958 இனக்கலவரம் வெடிக்கிறது.
காலையில் பாண் வாங்குவதற்கு எதிர்க்கடைக்குச் சென்ற மார்க்கை காடையர்கள் சுற்றி வளைக்கின்றனர். "நீ தமிழன்தானே?" என்ற அவர்கள் கேள்விக்கு அவன் சவால் விடுவதுபோல் "ஆம் நான்
தமிழன்தான்" என்கிறான். அவன் சுபாவமே
அப்படிப்பட்டதுதான். உடனே அவன் தாக்கப்பட்டு அவர்களால்
கொல்லப்படுகிறான். காடையர்களின் மத்தியில்
அகப்பட்ட மார்க்கை கண்டு அவனைக் காப்பாற்றும் நோக்கத்தோடு காடையர்கள் மத்தியில் பாய்ந்த பிறேமசிறியின் மனைவி
கேர்லியையும் காடையர்கள் தமிழ்ப் பெண்
என நினைத்து அடித்துக்
கொல்லுகின்றனர்.
இனவாதம் போடும் பேயாட்டமும் அதன் கோர உருவமும் காட்சிப்
படுத்தப்பட்டுக் கதை முடிகிறது.
கதை நேர்த்தியான முறையில் எழுதப்பட்டுள்ளது என்பதை விமர்சகர்கள் ஒப்புக் கொள்கின்றனர். ஆயினும் பாதி திரங்களினி தனிப் பட்ட அனுபவங்களுக்கும் அரசியல் நிகழ்வுகளுக்குமிடையே ஓர் இணைவை
ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்து
இருப்பதை - ஆசிரியர் ஏற்படுத்தவில்லை என்பதே இதை விமர்சித்த அஜித் சமறநாயக்க, ஏ. ஜே. கனகரத்னா போன்றவர்களின் குற்றச்சாட்டாகும். இதில்
நிரம்பிய உண்மை உண்டென்பதை
நாவலை வாசிப் போர் உணர்ந்து கொள்ளலாம். மார்க்சீயப் பார்வையுடைய றெஜி போன்றோர் இதைக் கவனத்தில் எடுக் காதது அதிசயமே. எது எவ்வாறாயினும் இன்று இனப்பிரச்சனை தீவிரம் அடைந்துள்ள இந்நேரத்தில் பெரும்பான்மை இனத்தவரிடம் இருந்து
வெளிவந்துள்ள இத்தகைய படைப்பு நம்
தமிழ் எழுத்தாளர்களின் சிந்தனையை பலவிதத்திலும் தூண்டிவிடும் என்பதில்
ஐயமில்லை.

Page 25
பாடசாலைகளில் புதிதாக அனுமதி பெறும் பிள்ளைகள் முக்கியமாக கற்பனாவளத்துடனும் ஆக்கத் திறனுடனும் வருகின்றார்கள். ஆனால் பாடசாலையில்
கல்வி பயிலும் காலத்தில் அவர்கள் இவற்றை இழந்துபோக நேரிடுகின்றது. பாடசாலை முறைமையில் இத்தகைய கற்பனாவளம், ஆக்கத்திறன் போன்ற முக்கிய பண்புகளுக்குப் பொதுவாகவே வரவேற்பில்லை. பாடசாலையின் ஒழுங்கு விதிகள், ஏற்கனவே தீாமானிக்கப்பட்ட பாட ஏற்பாடு போன்றவற்றுடன் மாணவர்களி னுடைய இச்சீரிய இயல்புகள் ஒத்தியங்க முடியாது. அவை விருத்தியுறவும் பாடசாலைகளில் வாய்ப்புகள் வழங்கப் படுவதில்லை. சில ஆசிரியர்கள் மத்தியில் இவ்வியல்புகளை ஒடுக்கும் மனப் பாங்குகளும் உண்டு.
பிள்ளை வளர்ச்சி, உளநூல்
போன்ற துறைகளைச் சார்ந்த நிபுணர்கள் பாடசாலைகளும் வீட்டுச் சூழலும் பிள்ளை களின் ஆக்கத் திறனுக்குத் தடையாகவே விளங்குகின்றன என வலியுறுத்துகின்றனர். அவர்களுடைய கருத்தின்படி பிள்ளைகள் பாடசாலைகளில் அனுமதி பெறும்போது மிகுந்த ஆக்கத் திறனுடன் விளங்கு கின்றார்கள்; எதுவித தடையுமின்றிப் பேசுகின்றார்கள்; செயற்படுகின்றார்கள்.
ஆனால் உயர்கல்வி பயிலச் செல்லும்போது
இந்நிலை நீடிப்பதில்லை. அவர்களுடைய
ஆக்கத் திறனும் கற்பனாவளமும் இல்லா தொழிகின்றது.
கற்பனாவளம் கற்றல் பணியின் வெற்றிக்கு முக்கியமானது. புதிய அறிவு உருவாவதற்கு கற்பனாவளம் துணை புரிகின்றது. அத்துடன் பழைய அறிவைப்
பேணவும் பயன்படுகின்றது.
இன்றைய தொழில்நுட்ப யுகத்தில் பொதுத் தொடர்பு சாதனங்கள் மிகுந்த முக்கியத்துவம் பெற்று விட்டன. ஆயினும் அவை தனிச் சிறப்பான ஒரு அனுபவத் தைச் சராசரி அனுபவமாக மாற்றி விடுகின்றன. மனித நாகரிக வரலாற்றில் கருவிகள் கண்டுபிடிக்கப்பட்ட பின்னர் உடல் வலுவின் முக்கியத்துவம் குறைந்து விட்டது. இனிறைய கம்ப்யூட்டர்கள் மனித மூளைக்கு இருந்து வந்த சமூக முக்கியத்துவத்தைக் குறைத்துவிட்டன. இன்று மனிதனில்
தேவைப்படுவது அவனுடைய சமூக, கலா
பூர்வமான ஆக்கத்திறனும் மனித நேய உணர்வுகளேயாம்.
பிள்ளைகளின் கற்பனாவளம் விருத்தியுற பிள்ளைகளின் சுற்றாடலில்
 
 
 

உள்ள நிகழ்வுகளும் நிலைமைகளும் ஆளுமை மிக்க மனிதர்களும் முக்கியமானவையாகும்.
ஆனால் இன்று பல புதுப்புதுச் சாதனங்கள் சுற்றாடலை மாற்றி வருகின்றன. இல்லங்களில் தொலைக்காட்சி
தொடர்ந்து இயங்கிக் கொண்டே
இருக்கின்றது. கடந்த காலங்களில் பண்டிகைகள் மக்களின் சமூக ரீதியான சந்திப்புகளுக்குப் ப்ல வாய்ப்புகளை
வழங்கின. இச்சந்திப்புகள் பல புதிய
அனுபவங்களை வழங்கின. இன்று இதற்கெல்லாம் வாய்ப்புகள் இல்லை. இன்று தொலைக்காட்சிக்கு அருகே அமர்ந்து நிகழ்ச்சிகளைப் பார்த்துக் கொண்டிருப்பது ஒரு இலகுவான பணியாகிவிட்டது. இதனைச் செய்ய எந்தவித மனித முயற்சியும் தேவையில்லை. மேலும் இன்றைய நவீன மின்சார, இலத்திரன் சாதனங்கள், "நவீன விரைவுப் போக்கு வரத்துச் சாதனங்கள் போன்றன மனிதனில்
ஓர் அவசர உணர்வினை ஏற்படுத்தி
விட்டது. இன்று ஒரு பணி சிறப்பாகச் செய்யப்படுவதைவிடத் துரிதமாகச்
செய்யப்படல் வேண்டும் என்பதற்கே
முன்னுரிமை வழங்கப்படுகின்றது.
எமது கல்வி முறையில் இன்று பரீட்சைப் பெறுபேறுகளுக்கே பெரும் முக்கியம் வழங்கப்படுகின்றது. அவற்றைப் பெறுவதற்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளைப் பற்றி யாரும் சிந்திப்பதில்லை. இங்கே, பாடசாலை நிர்ணயிக்கும் கல்வித்
தேர்ச்சி நிபந்தனைகளைப் பூர்த்தி செய்யச்
சிரமப்பட்ட விஞஞானி அல்பர்ட்
ஐன்ஸ்டைன் போன்ற மகா மனிதர்களே நினைவுக்கு வருகின்றார்கள்.
சகல பாடசாலைகளும் பிள்ளை களின் முன்னேற்றத்தை மதிப்பிட பீட்சைகளையே சிறந்த வழிமுறையாகக் கொள்ளுகின்றன. 'உண்மையில் பரீட்சை முறையே நடைமுறை சாத்தியமானது. அதில் ஒரு ஒழுங்கு முறையும் உண்டு. ஆயினும் கற்பனாவளத்தை விருத்தி செய்ய பரீட்சைகள் உதவுவதில்லை. பிள்ளைகள் விடய அறிவைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதே முக்கியத்துவம் பெறுகின்றது. பரீட்சைகளில் சித்தியெய்
தினால் மட்டுமே அவர்கள் இன்றைய சமூகத்தில் வாழத் தகுதியுள்ளவர்கள் என்ற
நிலை தோன்றிவிட்டது.
பிள்ளைகளின் கற்பனாவள விருத்தியில் அக்கறை செலுத்தும் ஆசிரியர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். ஆனால் இவர்கள் பெரும்பாலும் சக ஆசிரியர்களினதும் பெற்றோர்களினதும் விமர்சனத்துக்கு உள்ளாகின்றார்கள். சமூகமும் கல்வியும் வியாபார மயப்படுத்தப் பட்ட முறையில் கற்பனாவளம் பற்றிப் பேசும் ஆசிரியர்கள் மற்றவர்களால் கேலி செய்யப் படுகின்றார்கள். இதனால் கற்பனாவளம்மிக்க பிள்ளைகளும் ஊக்கமிழந்து சோர்வடை கின்றார்கள். பரீட்சைகளில் கிடைக்கும்
சித்தியே முக்கியமானது என அவர்களுக்கு அறிவுறுத்தப்படுகின்றது.
வர்த்தகத்தினால் பல நன்மைகள்
உண்டு என்பது உண்மையே. அவற்றை நிராகரிப்பது மடமையாகும். ஆயினும்

Page 26
வர்த்தக நலன்கள் எமது வாழ்க்கைப் பெறுமானங்களைச் சீரழிக்க இடமளிக்கக் கூடாது. கற்பனாவளத்தின் விருத்திக்கு எதிரான சிந்தனைகளையும் செயற்பாடு களையும் ஏற்றுக் கொள்ளக் கூடாது. இவ்விடத்து நாம் பொருளாதார ரீதியான வாழ்க்கைத் தர மேம்பாடு பற்றிப் பேச வில்லை. ஆக்கத்திறனைப் பயன்படுத்தவும் நூல்களை வாசிக்கவும் இசையைக் கேட்கவும் சுற்றாடலை ஆராயவும் புதிய நணி பர்களை உருவாக்கவும் புதிய நிலைமைகளைப் புரிந்து கொள்ளவும் கிடைக்கக் கூடிய வாய்ப்புகளைப் பற்றியே பேசுகின்றோம்.
இன்றைய சமூகம் கற்பனா
வளத்தைப் பற்றிச் சிநீதிக்காது
பொருளாதார நன்மைகளையே நாடுகின்றது.
பிள்ளைகளை நடமாடும் கம்ப்யூட்டர்கள் என்றும் அவர்களை நிபுணர்களாக உருவாக்கிவிடலாம் என்று கருதுவதை முதலில் கைவிட வேண்டும். அவர்கள் புதியனவற்றைப் படைக்கவும் சுற்றாடலைத் துருவி ஆராயவும் தேவையான வாய்ப்புகளைக் கல்விச் செயற்பாடு வழங்குதல் வேண்டும். பிள்ளைகளின் கற்பனாவளத்தைப் பெருக்க உதவுவதும் அதனால் பிள்ளைகள் சிறந்த அனுபவத்தைப் பெறச் செய்வதும் எமது கடமையாகும்.
அமெரிக்காவின் வறுமையைப்
புகைப்படங்களின் மூலம் காட்டும்
"American Pictures"
என்ற நூலின ஆசிரியரான டென்மார்க்கைச் சேர்ந்த மடாக் உடன திருப்பம் ஆசிரிய பீடத்தைச் சேர்ந்த வி ரி. தமிழ்மாறன் காணப்படுகின்றார். இந்நூலின் வெளியீடு ஜேர்மனியில் கடந்தாண்டு வெளியிடப்பட்டgi/.
அமெரிக்காவில் பெரும் சர்ச்சையைக் கிளப்பிய இந்நூலில் இருந்து திருப்பம் அடுத்த மாத இதழில் பிரசுரிக்க உள்ளது.
சில படங்களை
 
 
 
 
 
 
 

0 தருப்பத்தரின் இரண் டாவது இதழிலேயே "நேருக்கு நேர் பேட்டியில்
உங்களைச் சந்தப்பதையிட்டு
மகிழ்ச்சி. இதுவே எமது முதலாவது பேட்டியுமாகின்றது.
சி) இதையிட்டு நானும் மகிழ்ச்சி அடைகின்றேன். தங்கள் திருப்பம் இதழ் பத்திரிகைத் துறையிலும் ஒரு திருப்பத்தை ஏற்படுத்த வேண்டும் என்றும் அது மென்மேலும் வளர்ச்சி அடைய வேண்டும் என்றும் வாழ்த்துகின்றேன்.
0 தமிழ்ப் பேசும் மக்களைப் பொறுத்தளவில் இன்று தலைமை இடைவெளி உள்ளதாகக் கூறப்படு கின்றது. இருப்பினும் இன்று ள்ளவர்களில் massappeal உள்ளவர் நீங்கள் என்று இலகுவில் அடையாளம் காண முடிகின்றது. இது தங்களி டமிருந்து கூடிய எதிர்பார்ப் பினையும் ஏற்படுத்தியிருக்கின்ற தல்லவா?
ஜனரஞ்சகப் பாடகன் விடுதலைப் புவியே!
ஏனைய தமிழ்க் கட்சிகள் பக்கவாத்தியக்காரர்களே"
மட்டக்களப்பு மாவட்ட பா. உ. ஜோசப் பரராசசிங்கத்துடனான
நேருக்கு நேர் சந்திப்பு.
A) தமிழ் மக்களின் தனித்துவத் தலைவன் தந்தை செல்வா என்பதைத் தமிழ் மக்கள் எல்லோரும் ஏற்றிருந்தார்கள். அவரது மறைவுக்குப் பின்பு அவரது கட்சியின் வழியில் தலைமை வகித்தவர்களைத் தமிழர்கள் ஆதரித்தார்கள் எனினும் 1979 ஆம் ஆண்டிற்குப் பின்பு தமிழ் இளைஞர்கள் மதிதியில் ஏற்பட்ட அதிருப்தி, அதைத் தொடர்ந்து ஆரம்பமான தமிழ் இளைஞர்களின் ஆயுதப் போராட்டம் 1983 ஆம் ஆண்டின் நடுப்பகுதிக்குப் பின்பு ஜனநாயக, பாராளுமன்ற வழியில் ஏற்பட்ட வெற்றிடம் போன்றவற்றால் தமிழர்களின் தலைமைத்துவத்தில் இடைவெளி ஏற்பட்டுள்ளதை எவரும் மறுக்க முடியாது.
1987 ஆம் ஆண்டுக்குப் பின்பு ஆயுதம் ஏந்திப் போராடிய பல இளைஞர்

Page 27
அமைப்புக்கள் ஜனநாயக நீரோட்டத்தில் சங்கமமான போதிலும் இந்த இளைஞர்கள் அமைப்புக்களுள் ஒன்றான விடுதலைப் புலிகள் தொடர்ந்தும் தனித்து நின்று களத்தில் போராடிக்கொண்டே வருகின்றனர். அதுவும் 1977 ஆம் ஆண்டுத் தேர்தலில் த.வி. கூட்டணி எந்த முக்கிய ஜீவாதாரக் கொள்கையை முன்வைத்து மக்களின் ஆணையைப் பெற்றதோ அந்தக் கொள்கையை முன்வைத்தே போராடி வருகின்றனர். ஜனநாயகம் என்று கூறும் போது தேர்தல்கள் ஓர் அளவுகோலாக வைத்தே ஒரு கட்சியின் செல்வாக்கை எடைபோட முடியும். அப்படி ஒரு ஜனநாயகத் தேர்தலில் பங்குபற்றும் வாய்ப்பு தமிழ் ஈழ விடுதலைப் புலிகளுக்குக் கிடைக்கவில்லை. ஏனைய தமிழ் இளைஞர் அமைப்புக்கள் ஜனநாயக வழிக்குத் திரும்பி தேர்தல்களில் போட்டியிட்ட போதிலும் 1956 ஆம் ஆண்டு தமிழ் மக்கள் தமிழரசுக் கட்சிக்கோ அல்லது 1977 ஆம் ஆண்டு த.வி.கூட்டணிக்கோ கொடுத்த மகத்தான ஆதரவை எந்தத் தமிழ்க் கட்சிக்கும் தமிழ் மக்கள் இதுவரை வழங்க முன்வரவில்லை.
1994 ஆம் ஆணி டு LITUTG15LDsippi தேர்தலில் வட-கிழக்கு தமிழ் மக்கள் ஓரளவாகுதல் ஆதரவளித்துள்ள கட்சி த.வி. கூட்டணியேயாகும். அதுவும்
எமது கட்சிக்கு கிடைத்த மொத்த
57% மாவட்டத்தில் கிடைத்த வாக்குகளேயாகும்.
வாக்குகளில் மட்டக் களப்பு
எனவே இந்தத் தெளிவற்ற நிலையை
வைதீது தமிழ் மக்கள் எங்கள் தலைமையை ஏற்றுக் கொண்டுள்ளார்கள் என்று கூறிவிட முடியாது.
ஆகவே தமிழர்கள் தங்களுக்கு ஒரு தலைவனை தேர்ந்தெடுக்கக்கூடிய சூழ்நிலை விடுதலைப் ஜனநாயகத் தேர்தலைச் சந்தித்த பிற்பாடுதான் சாதிதியமாகுமே அன்றி அதுவரை அதை ஒரு வெற்றிடமாகவே ஜனநாயக
புலிகளும்
வழியில் கருத வேண்டும். அதுவரை கிடைக்கின்ற mass appeal அல்லது செல்வாக்கு ஒருவரின்
செயற்பாட்டுகி கு மக்கள்
போனி றவை
அளிக்கின்ற ஆதரவேயாகும்.
O நேரடியாகவே கேட்கிறேன். இன்றைய நிலையில், அரசாங்கம் முன்வைத்துள்ள யோசனை கள் செயலுருப்பெறும் ன்ன உண்மையிலேயே நம்புகின்றீர்களா? அப்படிச் செயலுருப் பெற்றாலும்
இவை இனப் பிரச்சனையைத்
தீர்த்துவிடும் என எதிர்பார்க்
கின்றீர்களா?
இற தற்போதுள்ள சூழ்நிலையில் அரசாங்கம் முனி வைத்துள்ள யோசனைகள் செயலுருப்பெறுமா என்பது கேள்விக் குறியே. அரசு- எதிர்க்கட்சி ஒத்துழை யாமை இதற்கு முக்கிய முட்டுக் கட்டையாகும். இவ்விரு பெரும்பான்மைக்
கட்சிகளும் கீரியும் பாம்பும் போலச்
 
 

செயற்படும்வரை இது சாத்தியமற்றதே. தமிழ் மக்களின் பிரச்சனை சம்பந்தமாக இந்த பெரும்பான்மைக் கட்சிகள் இரண்டும் இதுவரை நடந்துகொண்ட விதத்தை வரலாற்று நோகி கில் ஆராய்நீது பார்ப்பவர்களுக்கு இது முழுமையாகத் தெரிந்துவிடும். எனவே நேரடியாகப் பதில் சொல்வதாக இருந்தால் அப்படிச் செயலுருப்பெற முடியாத கேள்விக்குறியுள்ள யோசனைகள் மூலம் எப்படி இனப்பிரச்சனை தீர்ந்துவிடும் என எதிர்பார்க்க முடியும்?
0 இனப்பிரச்சனைத் தீர்வுக்கென இந்த யோசனைகளிலுள்ள முக்கிய அம்சங்கள் எவையெனக் கூறு கின்றீர்கள்?
2) இலங்கை அரசியல் அமைப்பில் ஒற்றை ஆட்சி முறை இருக்கும் வரை எந்த ஒரு தீர்வும் சாத்தியமற்றதென்றும் சமஷ்டி அமைப்பின் மூலமே தமிழ் மக்களின் பிரச்சனைகளை தீர்க்க முடியும் என்பதனை தந்தை செல்வா அவர்கள் 1949 ஆம் ஆண்டு தமிழரசுக் கட்சியை ஆரம்பித்த காலம் முதல் கூறி வந்துள்ளார். 1972 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட அரசியல் அமைப்பு பின்பு 1978 ஆம் ஆண்டு
கொண்டு வரப்பட்டு தற்போது அமுலில்
உள்ள அரசியல் அமைப்பு ஆகியவற்றிலும் ஒற்றையாட்சி முறையே வலியுறுத் தப்பட்டுள்ளது. எனினும் அரசின் புதிய யோசனையில் ஒற்றை ஆட்சி முறை
அகற்றப்பட்டு ஓரளவு சமஷ்டி சாயலுடைய
முறை முன்வைக்கப்பட்டுள்ளது. இதனை ஒரு திருப்பு முனையாக மட்டுமே கருத
முடிகின்றது. இதை விட
இநீத
யோசனைகளில் பெரிதாக எதனையும்
என்னால் காண முடியவில்லை. ஏனைய
விஷயங்கள் எல்லாம் பழைய கில்டில் தங்க முலாம் பூசியது போன்றதுதான்.
0 சரி, இந்த யோசனைகளை அமுல்படுத்துவதென்பது விடுதலைப் புலிகளின் பங்குபற்றல் இல்லாமல் சாத்தியமாகுமா?
A விடுதலைப் புலிகள் பங்குபற்றாத எந்த ஒரு தீர்வும் மண்ணிலே வேர் பிடிக்க முடியாத மரம் போல் காய்ந்து விழுந்துவிடும். இதுதான் உண்மையான யதார்த்த நிலை. இதை எல்லோரும் புரிந்து கொள்ள வேண்டும்.
0 அவர்கள் பங்குபற்றும் போது மாற்றுயோசனைகளை முன்வைக் காமல் தற்போதுள்ளதை அப்படியே ஏற்றுக் கொள்ளவா போகின்றார்கள்? தற்போதைய யோசனைகளை விழுந்தடித்து ஆதரிப் போரின் நிலைப்பாடு என்னாகும்?
é9Hıi u Lg uu ITur 6öi
2 அரசின் யோசனைகளை விடுதலைப் புலிகள் ஏற்கனவே நிராகரித்து விட்டார்கள். அப்படி இருக்கும் பொழுது தற்போதுள்ளதை எப்படி அவர்கள் ஏற்றுக் கொள்வார்கள். அப்படியானால் களத்தில் இதுவரை காலமும் அவர்கள் சிந்திய
இரத்தத்திற்கு என்ன பயன்? இந்த
உண்மை நிலையை சகலரும் உணர்ந்து
கொள்ள முன்வரவேண்டும். ஒரு பாட்டுக் கச்சேரிக்கு பாட கணினி திறமை

Page 28
காரணமாகவே ஜனத்திரள் கூடுகின்றதே அன்றி பக்கவாத்தியங்களுக்காக அல்ல. எனவே இனப்பிரச்சனை சம்பந்தமான கச்சேரியில் சகலரும் எதிர்பார்க்கும் ஜனரஞ்சிதமான பாடகன்
மேடைகி
விடுதலைப் புலியேயாகும். எனவே அவன் பங்குபற்றாத கச்சேரியை எவர்தான் ரசிப்பார்கள். எனவே முக்கிய ஜனரஞ்சித மேடைப்பாடகனான "விடுதலைப் புலிகள் பங்குபற்றாது பக்கவாத்தியங்களான ஏனைய தமிழ் கட்சிகளும், எனது கட்சியான தமிழர் விடுதலைக் கூட்டணியும் பங்கு பற்றும் தாளக் கச்சேரியை யார்தான் ரசிப்பார்கள்.
0 உங்களுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் கூடிய நெருக்கம் உண்டென்று கூறப்படுவது 9-660)LDust?
தீ வட-கிழக்கு சம்பந்தமான உண்மை நிலையை நான் எடுத்துக் கூறும்பொழுது
அப்படி ஒரு நிலை உருவாகின்றது.
அதை நெருக்கம் என்று கூறினாலும் சரி, ஆதரவு என்று கூறினாலும் சரி அன்த நான் ஏற்றுக் கொள்கின்றேன்.
0புலிகள் இன்றிய தீர்வை ஆதரிக்கும் சிலர் இருப்பதாகவும் அதனால் நீங்கள் மனந்தளர்ந்து செயற்படுவதாகவும் கூறப்படுவதில் ஏதேனும் உண்மை யுள்ளதா?
உங்கள் கட்சிக் குள்
2 ஜனநாயக மரபில் கட்சி என்பது மக்களின் கூட்டமைப்பே. எனவ்ே கட்சியை ஆதரிக்கும் தமிழ் மக்கள் விடுதலைப்
புலிகள் அடங்கிய தீர்வையே முழுமையாக ஆதரிக்கும் பொழுது அதற்கு மாற்றுக் கருத்து கட்சிக்குள் இருக்க முடியாது. அப்படி பெரும்பான்மை முடிவை எவரும் மீறுவார்களேயானால் அவர்களை உண்மையின் கொள்கைவாதிகள் என்று கருத முடியாது. அப்படியான ஒரு சூழ்நிலை தற்போது எமது கட்சிக்குள் கிடையாது என்றே நான் கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.
0 கட்சியின் தலைமைப் பீடத்துடன்
தங்களுக்கு ஏதேனும் முரண்பாடுகள்
உள்ளனவா?
z) எமது கட்சி தந்தை செல்வா வழியில் வந்த ஒரு ஜனநாயகக் கட்சியாகும். எனவே ஒரு ஜனநாயகக் கட்சிக்குள் முரண்பாடான
கருத்துக்கள் இருப்பது சகஜம். ஆனால்
இவற்றில் முக்கியம் என்னவென்றால் வேற்றுமையில் ஒற்றுமை காண்பதே யாகும். எனவே இந்த வகையில் எனக்கும் கட்சித் தலைமைப் பீடத்திற்கும் பெரிதாக எதுவித முரண்பாடும் கிடையாது.
0 இன்னுமொரு விடயம். தமிழரசுக் கட்சியின் தலைமைப் பீடம் முன்பு கொழும் பிலிருந்தபோதும் கட்சி பின்னடைவைச் சந்தித்தது. எது எப்படியிருப்பினும், கூட்டணிச் செயலதி பராக காலஞ்சென்ற அமிர்தலிங்கம் இருந்தபோது மண்ணோடு ஒட்டியதாக வைத்திருந் தார். கட்சி எழுச்சி கண்டது. இப் போது மீண்டும் கொழும்புக்குக் கைமாறிவிட்டதாகக்
தலைமையை
தலைமை
 
 

கூறப்படுகின்றதே. இது வீழ்ச்சியின் அறிகுறி .
என்ன சொல்கிறீர்கள்?
என்கிறார்களே. நீங்கள்
2) தமிழரசுக் கட்சியின் தலைமைப்பீடம் எந்த ஒரு காலகட்டத்திலும் கொழும்பில் செயல்பட்டதி \லை. தலைமை அலுவலகம் யாழ்ப்பாணத் ல் இயங்கியது. முக்கிய செயற்குழு ரசியற் குழு, பொதுக் குழுக் கூட்டங்கள் யாவும் யாழ்ப்பாணத்திலேயே நடைபெற்றது. தலைவர் அமிர்தலிங்கம் அவர்கள் கூட்டணிச்
காலஞ்சென்ற
செயலதிபராக இருந்தபோது தலைமையை மணி ணோடு ஒட்டியதாக வைத் திருநீ தார் என்பது உண்மையே. எனினும் நான் முன்பு கூறியது போன்று 1983 ஆம் ஆண்டு நடுப்பகுதிக்கு பின்பு இந்த நிலையில் பெரும் இடைவெளி ஏற்பட்டுள்ளது என்பதை எவரும் மறுக்க முடியாது. அதற்குக் காரணம் 1983 ஆம் ஆண்டிற்கு பிற்பாடு அரசியல் மாற்றங்களேயாகும். இந்த மாற்றங்கள்
35 sTJ 60öTLDfT 35
ஏற்பட்ட
கட்சித் தலைவர்கள் (திருஅமிர்தலிங்கம் உட்பட) மக்களோடு மக்களாக மக்களோடு இருந்து செயல்படக் கூடிய நிலைமை பின்பு இருக்கவில்லை. இதனால் கட்சித் தலைமைப் பீடத்தால் அதனது தலைமையை மண்ணோடு வைத்திருக்க முடியாமற் போய்விட்டது. உதாரணத்திற்கு 1989 ஆம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் எந்த ஒரு ஆசனத்தையும் எமது கட்சியினால் பெறமுடியாமறி
போய் விட்டது.
இக்காலகட்டத்தில் ஏற்பட்ட அரசியல் மாற்றங்கள், ஆயுதப் போன்றவற்றால் மக்கள் நிலைப்பாடு வேறுவிதமாக மாறிவிட்டது. இருந்த போதிலும் 1994 ஆம் ஆண்டு தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் மூன்று
போராட்டம்
உறுப்பினர்களையும், திருகோணமலை மாவட்டத்தில் ஒரு உறுப்பினரையும் மக்கள் தேர்ந்தெடுத்துள்ளனர். அதுவும் மட்டக்களப்பு தொகுதியில் எனது தொகுதி மக்கள் எனக்கு அவர்களது தனிவிருப்பு வாக்காக 43,400 வாக்குகள் அளித்துள்ளனர். எனவே மக்களோடு மக்களாக அவர்களோடு இருந்து அவர்கள் பிரச்சனைகளை அணுகும்பொழுது க்கள் அவர்கள் மேல் நம்பிக்கை வைப்பார்கள் என்பதை இது உதாரணமாக காட்டுகின்றது.
கிெழக்கில் பூரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுடனான தங்களின் உறவு எப்படியிருக்கின்றது?
* கிழக்கு மாகாணத்தில் தமிழ் முஸ்லிம் மக்கள் ஏறத்தாள 300 ஆண்டுகளுக்கு மேலாக ஒன்றாகக் கலந்து வாழ்பவர் களாகும். எனவே தமிழ்-முஸ்லிம் மக்கள் உறவு என்றும் சகோதர உறவு "போல் இருந்து வந்துள்ளது - வருகின்றது. இடையிடையே சில பிரச்சனைகள் ஏற்பட்டாலும் அது ஒரு குடும்பப் பிரச்சனை போன்று பின்பு மீண்டும் ஒற்றுமை உறவு வலுப்பெறுகின்றது. முஸ்லிம் காங்கிரசுடனான எமது உறவு என்றும் ஆரோக்கியமானதாகும்.

Page 29
0 அரசாங்கத் தன் தயவில் தங்கியிருந்துகொண்டு தமிழ்க்கட்சிகள் தற்போது அரசியல் நடாத் து வதாகவும் இந்நிலையில் இவற்றுக்குப் பேரம்பேசும் ஆற்றல் எங்கிருந்து வரும் எனவும் கேட்கப்படுகின்றதே? தமிழ்க்கட்சிகள் ஒன்றுபட்டு இயங்கும் சாத்தியமேதும் உள்ளதா?
* தமிழ் கட்சிகளில் பல முன்பு ஆயுத இயக்கங்களாக இருந்து பின்பு ஜனநாயக நீரோட்டத்தில் ஒன்றிணைந்த கட்சிகளாகும். எனினும் இக்கட்சிகள் தொடர்ந்தும் ஆயுதங்கனை
மட்டுமன்றி சில படைகளுடனர் சேர்ந்து போராடியும் வருகின்றன. எனவே மக்கள் மத்தியில்
வைதி திருப்பவை கட்சிகள் அரச
இவர்களின் செயல்பாடுகள் சம்பந்தமான
சந்தேகங்கள் எழுகின்றது. அதே வேளை தமிழர் விடுதலைக் கூட்டணி ஒரு கட்சியாகும். இந்நிலையில் ஏனைய தமிழ் கட்சிகளோடு ஒற்றுமைப்படுவது அவ்வளவு சாத்தியமான
ஜனநாயக மிதவாதக்
விஷயமாக கருத முடியாது.
0 கொழும் பில் நடைபெற்ற, நடைபெற்றுவரும் கண்முடித்தனமான கைதுகள் தொடர்பாகப் பாராளு மன்றத்தில் கவன:ஈர்ப்புப் பிரேரனை கொண்டு வந்தர்களே. அதனால் ஏற்பட்ட
ԼւբLգեւկIDIT *
பயன் யாதெனக் கூற
* ஓரளவு தற்பொழுது கொழும்பில் கைதுகள் குறைந்துள்ளது. எமது கட்சியால் கொண்டுவரப்பட்ட கவனFர்ப்பு
பிரேரணை விவாதத்தின் முடிவில் அமைச்சர் பீரிஸ் அவர்கள் அரசாங்கத்தின் சார்பில் ஒரு அறிக்கையை பாராளுமன்றில் சமர்ப்பித்தார். இவ் அறிக்கையில் கூறியது போன்று முழுமையாக செயற்பட்டால் கைதுகள் முழுமையாக நிறுத்தப்படக் கூடிய சாத்தியங்கள் உண்டு.
எனினும் எனது கடந்த எட்டாண்டு காஸ் பாராளுமன்ற அனுபவத்தின் மூலம் நான் கண்ட உண்மை என்னவென்றால் இந்த அரசும் சரி முன்னைய அரசும் சரி இதுபோன்ற எதிர்ப்புக்கள் வலுப்பெறும் பொழுது இது போன்ற வாக்குறுதிகள் வழங்குவது சகஜம். அவ்வாக்குறுதிகள் 4-5 மாதங்களுக்கு காப்பாற்றப்படும். பின்பு மீண்டும் வேதானம் முருங்கை மரம் ஏறிய அந்நிலைதான் அரசின் இவ்வாக்குறுதிகளுக்கும் ஏற்படலாம் என்பது எனது கருத்தாகும். என்னைப் பொறுத்தவரை இது போன்ற கைதுகள் முழுமையாக் நிறுத்தப்பட வேண்டுமானால் நாட்டில் முழுமையான சமாதானம் ஏற்பட வேண்டும்.
கதைதான்.
முழுமையான சமாதானம் ஏற்படுவதென்றால் போரில் ஈடுபட்டுள்ள அரசு படைகளும் - விடுதலைப் புலிகளும் அர்த்தமுள்ள போர்நிறுத்தம் ஒன்றை மேற்கொள்ள முன்வரவேண்டும்.
அதன் பின்பு இரு தரப்பினரும் மூன்றாம் தரப்பு ஆரோகி கரியமான
மதிதியளிப்துடனர் அர்த்த மு எர்ன
பேச்சுவார்த்தைகளில் ஈடுபட வேண்டும். தவிர்த்து மேற்கொள்ளப்படும் எந்த ஒரு தீர்வும் இனப்பிரச்சனை தீர்வாக அமையவும்
விடுதலைப் புலிகளைத்
 

முடியாது. அதேவேளை அவர்களை தவிர்த்து இந்நாட்டில் முழுமையான சமாதானமும் ஏற்பட வழியில்லை. இதுதான் உண்மை நிலையும், யதார்த்த நிலையுமாகும். இவற்றை உணர்ந்து
அரசு செயலில் டுபட முன்வர வேண்டும்.
0 இன்றை நிலையில் நீங்கள் தமிழ்ப்பேசும மக்களுக்குக் கூறும் சிறிவுரை யாது?
* தமிழ் மக்கள் ஒரு இக்கட்டான கட்டத்தில் நிற்கிறார்கள். எனவே நாம் இரட்டிப்புக் கவனத்துடன் செயற்பட வேண்டும். தமிழ் மக்கள் என்றுமே சமாதானத் தீர்வையே விரும்புகிறார்கள். ஆனால் அரசின் இருமுனைக் கொள்கை அவர்களுக்கு ஏமாற்றமாக இருக்கின்றது. யுத்தமும் சமாதானமும் என்ற கொள்கை ரு நிரந்தரத் தீர்வைத் தராது. தமிழ் மக்களின் இனப்பிரச்சனை ஓர் அரசியல் பிரச்சனையாகும். இப்பிரச்சனைக்கு அரசியல் ரீதியாக அணுகப்பட வேண்டும்.
இராணுவத் தீர்வு தமிழ் மக்களை மீணி டும் அடிமைப் படுத்தும் நோக்கத்துடன் கூடியது. இப்படியான ஒரு திட்டத்துக்கு எந்த ஒரு தமிழ் மகனும் அடிபணியப் போவதில்லை. இவ்விடயத்தில் தமிழ் மக்களின் உறுதி பேணப்பட வேண்டும். பிரச்சனையின் தன்மையை உணர்ந்து ஓர் அரசியல் தீர்வைக் காணும் முயற்சியில் நாம் மனந்தளரக் கூடாது என்பதையே எமது மக்களுக்குக் கூறிவைக்க விரும்புகிறேன்.
öldüUli Jü Urfa) sı
நீண்ட காலத்தின் பின்பு ஒரு செழுமையான மாத மலர் கண்டேன். மகிழ்ச்சி. “கனமான, காரமான, தரமான, வனமான கருத்துக்களின் சங்கமமாக இது அமைய வேண்டும் என்று ஆசிரியர் முதல் இதழிலேயே பட்டிருக்கும் ஆதங் சும் மலரை மென் மேலும் சிறப்புள்ளதாக்கும் என்பதில் ஐயமில்ல்ை. ஓர் உயிரோட்டமான சிறுகதை என்னை எனது சொந்த ஊரான கைதடிக்கே அழைத்துச் சென்று விட்டது. இயற்கை அப்படியே படம் பிடிக்கப்பட்டிருக்கின்றது.
பேராசிரியர் சந்திரசேகரனின் கட்டுரையும் விரி, தமிழ்மாறனின் கட்டுரையும் ஆழமாகச் சிந்திக்கத் துண்ைடின என்பது மட்டுமன்றி இவை சிங்களத்திலும் ஆங்கிலத்திலும் வெளியிடப்பட வேணர் டும் என்ற ஆர்வத்தையும் என்னுள் ஏற்படுத்திவிட்டன. ஆனால் பேராசிரியர் சிவத் தம்பியின் சுட்டுரையினி மொழிநடை பெருந்த ஏமாற்றத்தைத் தருகின்றது. ஏன் இவர் இப்படி எழுதுகிறார் என்பதை என்னால் விளங்கிக் கொள்ள முடியவில்லை.
மு.பொவின் அக்கினிக்குஞ்சு விமர்சனத்தை யிட்டும் எனக்கு நிறையவே விமர்சனமுண்டு. ஆனால் களம் இன்னும் பரந்துபடும் வரை காத்திருப்போம்.
மனிதநேயர் சார் ஓர் எம் அபேசேகராவை நினைவு கூர்ந்து அஞ்சலித் திருப்பது திருப்பத்துக்கு பெருமை சேர்க்கின்றது.
இதழியல் துறையிலும் ஒரு திருப்பத்தை இந்த இதழ் ஏற்படுத்த வாழ்த்துகிறேன்
கைதைழான் நல்லையா குமரகுருபரணி

Page 30
பெண்பள்ளைகளின் கல்விப்பாய்ச்சல்
பிரிட்டிஷ் அரசாங்கத்தின் கல்வித் துறையினரை ஆச்சரியத்திலாழ்த்தும் அறிக்கை ஒன்று அணி மையில் வெளியாகியுள்ளது. இதுவரை வெறுஞ் சந்தேகமாகவே இருந்துவந்த ஒரு விடயத்தை அவ்வறிக்கை உறுதிப் படுத்தியுள்ளது. fன்ஏஜ் பெண்பிள்ளைகள் ஆபாடசாலைகளில் ஆண்பிள்ளைகளைவிட ஏறக்குறைய எல்லாத் துறைகளிலும் கிடுகிடுவென முன்னேறிப்பாய்கிறார்கள் என்ற விடயதீதையே அறிக்கை புள்ளி விபரங்களுடன் வெளியிட்டிருக்கிறது. அதாவது எதிர்காலம் என்பது பெண்களதே என்பதே இதன் பொருளாகும்.
பிரிட்டனில் கடந்த வருடம் (1997 Summer) கோடைகாலப் பரீட்சையில்
முதன்முறையாக 50 வீதமான 16 வயதுப்
பெண் பிள்ளைகள் திறமைச்சித்தியை (C grade) ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட பாடங்களில் இடைநிலைக் கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையில் (GCSE) பெற்றிருக்கிறார்கள். பையன்களின் பெறுபேறு இந்த விடயத்தில் 40.5 வீதத்துடன் நின்றுவிட்டது. ஆக, உடற்கல்வியில் மட்டுமே ஆண்சக்தியினால்
பெண் சக்தி தோற்கடிக்கப்பட்டுள்ளது. அதிலும் வித்தியாசம் வெறுமனே 2 வீதம்
மட்டுமேயாகும். இங்ங்னமே உயர்தர
பத்திரப் பரீட்சையிலும் இருபாலாருக்கும்
இடையிலான பெறுபேற்று இடைவெளி அதிகரித்துள்ளதாகதி தகவல்கள் கூறுகின்றன.
என்றும்
"நாங்கள் எதிர்நோக்கும் முக்கிய
பிரச்சனைகளுள் ஒன்றிது” என்று
பாடசாலைகளுக்கான பிரதான கல்வியதிகாரி
குறிப்பிட்டிருப்பதுடன் பையன்களது பெறுபேற்று வீழிச் சி குறிப்பாக வெள்ளையினத் தொழிலாளர் குடும்பங்களிலேயே ஏற்பட்டிருக்கின்றது சுட்டிக் காட்டியுள்ளார். பாடசாலைகளின் தராதரங்களுக்குப் பொறுப்பான அமைச்சர் எஸ்ரெலே மொரிஸ் புள்ளி விபரங்களை வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து தேசிய ஆசிரியர்கள் FIElgift (National Union of Teachers)
பொதுச் செயலாளரான டக் மக்அவொய்
தனது அதிர்ச்சியைத் தெரிவித்திருப்பதுடன் இதற்கான 'சமூக, 、 நிருவாகக் காரணங்களைக்" கண்டறி வதற்கான அவசர ஆராய்ச்சி ஒன்றையும் 'வலியுறுத்தி யிருக்கின்றார்.
இலண்டன் பல்கலைக்கழகத்தின்
கல்வித்துறை நிறுவனத்தைச் சேர்ந்த
பேராசிரியை பாம் சிம்மன்ஸ் கருத்துரைக் கையில் "ஆரம்பப் பள்ளியில் சிறுமிகளின் பெறுபேறு சிறுவர்களதைவிடச் சிறந்ததாக இருந்து வந்தமைக்குச் சான்றுள்ளது. குறிப்பாக, வாசிப்பிலும் வாய் மூல
நியாயப்படுத்தலிலும் சிறுமிகளே முன்னணி
வகித்தனர். அண்மைக்காலம் வரை
பையன்களே இடைநிலைக் கல்விச்
சாலைகளில் கல்விப் பொதுத் தராதர
 
 

உயர்தரப் பரீட்சைகளில் யுவதிகளைவிடச் சிறப்பாகச் செய்துவந்திருந்தனர்.
ஆயின், தற்போதைய நிலையில்
பெண பிள்ளைகளினி ஆற்றல்கள் உயர்ந்துவிட்டன என்று கருதப்பட வேணி டுமெனி பதல்ல. ஆனால் அவர்களுடைய எதிர்பார்ப்புக்கள் மாறிவிட்டன. ஒரே சீர்த்தன்மைய தேசிய பாடவிதானம் அறிமுகப்பட்டமை அவர்களுக்குச் சமவாய்ப்புக்களைப் பெற உதவியிருக்கின்றது. அவர்கள் இப்போது
15 வயதில் பரீட்சைக்குத் தோற்ற
தயாராகிவிடுகின்றார்கள்.
"இருப்பினும், பையன்களது பெறுபேறுகள் வீழ்ச்சியடைந்துவிட்டன என்பதற்குத் திடமான ஆதாரமெதுவு மில்லை. ஆனால் அவர்கள் செயலூக்கம் அற்றுப் போய்விட்டார்களா என்ற வினாவை நாம் எழுப்பவேண்டி இருக்கிறது. வெள்ளையின தொழிலாளர்களைப் பொறுத்தளவில் பையன்கள் என்றால் கல்விக்கு எதிரான கலாசாரம் என்று ஒன்றே வளர்ந்து வருகின்றது. இது பேராசிரியை சிம்மன்ஸின் கருத்தாகும்.
அங்குள்ள தேசிய பாடவிதான ஆசிரியர்களால் செய்யப்பட்ட மதிப்பீடு களின்படி 14 வயது மாணவர்களின் புள்ளிவிபரங்கள் எடுக்கப்பட்டன. இதில், ஆங்கிலம், கணிதம், விஞ்ஞானம் என்பன தவிர்ந்த பாடங்களில் இருபாலாருக்கும் இடையிலான இடைவெளி மிக அதிகமாக இருப்பது அவதானிக்கப்பட்டது. நவீன Gudryssa,6ss (Modern Languages)
பெண்கள் 67 வீதமும் ஆண்கள் 51 வீதமும் எதிர்பார்த்த தராதரத்தை அடைந்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
வரலாற்றுப் பாட்த்தில், ஆண்கள் 54 வீதமும் பெண்கள் 62 வீதமும் திறமைச் சித்தி பெற்றுள்ளனர். தகவற் தொழில் IBJ'uiggllis (Information Technology) பெண்கள் 53 வீதமும் பையன்கள் 47 வீதமு மாகவே சித்திபெற முடிந்துள்ளது. இப்பாடம் இதுவரை 'பையன்களது பாடம் என்றே கருதப்பட்டு வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. எனினும் இப்பாடத்தில் ஒட்டுமொத்தமான ஆற்றுகை வீழ்ச்சி யடைந்திருப்பதாகவும் அவதானிக்கப் பட்டுள்ளது.
பிரிட்டனின் கல்வித்துறை இலாகாவிலுள்ள தராதரங்கள் மற்றும் மதிப்பீட்டு அதிகாரசபை (QAA) விரைவில் வழிகாட்டுதல் திரட்டுகளைப் பாடசாலைகளுக்கு அனுப்பி வைக்கப்போகிறதாம். இதில் தகவற் தொழில்நுட்பப் பாடத்தில் முன்னேற்றம் ஏற்படுத்துவது எப்படி? பையன்களது வீழ்ச்சிக்குக் காரணம் என்ன? போன்ற விடயங்கள் ஆராயப்பட்டு விளக்கமளிக்கப் ப்ட்டிருக்கும் எனக் கூறப்படுகின்றது.
கவலையேறி படுத் துவது எதுவென அதிகாரிகள் கருதுகின்றார்கள் என்றால், மாணவர்களுக்குக் கற்கின்ற ஆர்வம் இல்லாதபோது எத்தகைய கற்பித்தலுமே வெற்றியடைய முடியாது என்பதேயாகும். சமூக வகுப்புப் பிரிவும் சுற்றுப்புறச் சூழலும் கல்விப் பெறுபேற்றின்

Page 31
வீழ்ச்சிக்குப் பெரும்பாலும்
காரணமாகின்றன. உதாரணமாக, அண்மைக்காலம் வரை, பிரிட்டனில் வசிக்கும் பங்களாதேஷ் நாாட்டவரும் கரிபியன் தீவுகளைச் சேர்ந்தவர்களும் கல்விச் சாதனைப் படிக் கட்டுகளில் அடிமட்டத்திலேயே நின்றனர். மாறாக, எல்லோரும் அறிந்திருப்பதைப் போலவே
இந்தியர்களும் சீனர்களும் முன்னேற்றப்
படிகளில் முதல்வரிசையில் நின்றமையையும்
அவர்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.
ஆனால் இன்று இந்தப் போக்கும் மாற்றமடைகின்றது. முன்பு சமூக, குடும்ப அழுத்தங்கள் காரணமாகப் பின்தங்கியிருந்த பங்களாதேஷ் பெண்பிள்ளைகள் துணைக் கண்டத்திலிருந்து வந்துள்ள ஏனையவர் களைப்போலத் தங்களாலும் சாதிக்க முடியும் என்று நிரூபிக்கத் தொடங்கியிருக்கிறார்கள். கரிபியன் நாட்டவர்களைப் பொறுத்த வரையில் ஆண்களது நடத்தைப் பாங்கு வேலை கொள்வோரால் அவ்வளவாக விரும்பப் படாததாகவே இன்னும் இருந்து வருகையில் பெண்கள் பாரம்பரிய கலாசாரத் தடைகளை உதறித் தள்ளிவிட்டுப் பாடசாலைகளிலும் பல்கலைக்கழகங்களிலும்
முன்னேறத் தொடங்கிவிட்டனர் என்பதற்கு
ஆதாரமான புள்ளி விபரங்கள்
பெறப்பட்டுள்ளன.
இந்தக் கல்விக் காட்சிப் பரிமாணம் ஓர் அபாய அறிவிப்பா? வெள்ளை யினத்தினரில் தொழிலாளர் வகுப்பில் - பலரும் நீண்டகாலமாக வேலையற்றிருந் திருக்கிறார்கள். இதனால் அரசாங்க சமூகநலக் கொடுப்பனவில் இவர்கள்
காலங் கழிக்க வேணி டியிருந்தது. பெற்றோர்கள் இங்ங்ணம் அரசாங்கப் பணத்தில் தங்கியிருந்தமை பிள்ளைகள் மீதான அவர்களது அதிகாரத்தையும் க டட் டு பட் ப ா டட்  ைட யு ம பலவீனப்படுத்திவிட்டதா? இங்கே, மூன்று திருமணங்களில் ஒன்று விவாகரத்தில் முடிவடைகிறது.
இதனால் இழகிப் குடும்பப் பிணைப்புகள் கட்டுப்பாட்டை ஏற்படுத்துவதற்கு வழியில் லாமல் செய்துவிட்டனவா? புதிய அரசாங்கம்
போகும்
அணிமையில் கடும் நடவடிக்கை எடுத்திருந்த ஒரு விடயம் பால்யவயதுக் குற்றங்களாகும். கார் , திருட்டு, நாசவேலைகள் என்பன பையன்களிடையே தொற்று நோயாகவே பரவியிருந்தன. பிரிட்டிஷ் அதிகாரிகள் இப்போது
மண்டையைப்போட்டுக் குடைகின்றார்கள்.
'குடும் பங்களில் இனிப் பையன்களால் பிரயோசனமில்லை என்று எவரும் நினைக்கத் தேவையில்லை. பெரும்பாலான பையன்கள் இன்னும் தமது குடும்பங்களின் சிறந்த சொத்துக்களாகவே கருதப்படுகின்றனர் என்றாலும் நங்கைகளின் வேகத்துக்கு அவர்களால் தாக்குப்பிடிக்க முடியவில்லை என்பதே உண்மையாகும். இவ்வாறு அதிகாரிகள் தொடர்ந்தும் ஊக்கமளிக்க வேண்டியுள்ளது.
பெண்பிள்ளைகள் எப்போதும் LDiệfø65ẩIủ (Role Models) đkiLị006),6bü பிரியமுடையவர்கள். இந்த வகையில்
அவர்களுக்குக் கடைசியாக கி
 

கிடைத்திருப்பவர் பிரதமர் ரொனி பிளெயரின் மனைவி - பரிஸ்டர் செரி பிளெயராவார். பிரதம பொலிஸ் கானிஸ் டபிளாக உள்ளவரும் பெண்ணே. நகரில் கூடிய ஊதியம் பெறுபவர்களுள் நிறையவே பதி திரிகை ஆசிரியைகள், தொலைக்காட்சி நிகழ்ச்சித் தயாரிப்பாளர்கள், புதிதாக அணிதிரளும் அரசியல்வாதிகள் என்று நிறையவே
பெணிகளுமுள்ளனர்.
உதாரண புருஷிகள் வரிசை. இப்போ தெல்லாம் வெள்ளை நிறத்தவரல்லாதோரை அலுவலகங்களில் அதியுயர் பதவிகளில் காண்பது சகஜமாகிவிட்டதல்லவா.
அதைப் போன்றே பெண்களின்
இனி இத்தகைய இடங்களில் சந்திப்பதும் தவிர்க்க
'தலைகளையே
முடியாததாகி வருகின்றது. பெண்ணிலை வாதிகள் சந்தோஷப்படுவதில் தவறில்லை. ஆனால், பையன்களது வீழ்ச்சியையிட்டுப் பொதுவான கவலை கொள்ளாமலி ருப்பதற்கு எவராலும் முடியாது என்ற அங்கலாய்ப்பு அங்கு மேலோங்குகின்றது.
கல்வியிலிருந்து ஒதுங்குதல் என்பதன் பொருள் குறிப்பிட்டதொரு வகுப்பு - கல்வியறிவற்றதாக உருவாகி வருகின்றது என்பதுதானே. இது ஏற்கனவே தொடங்கிவிட்ட விடயம். தற்போதைய போக்குத் தொடர்ந்தால் - மிக வேகமாகப் புதிய வகுப்பொன்று நிதியமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையின் படி அபிவிருத்தி தேக்கமடையும் என்றுள்ளது.
உருவாகிவிடும் .
அப்படியாயின் பிரிட்டனில் வேலையின்மை
அதிகரிக்கும். எனவே மிகச்சிறந்த தராதரமுடையோருக்கு மட்டுமே வேலைகிட்டும்.
பெற்றோரது கட்டுப்பாடு, கண்டிப்புக்குப் பதிலாக இன்று சகபாடிகளின் 3(listi (Peer Pressure) 6TGiu65 கூடுதல் பயன் வலுக் கொண்டதாகச் செயற்படுகின்றது. ஏனெனில் பெற்றோருக்கே இன்று சில தகவீனங்கள் இருக்கின்றன. இது சகபாடிகளுக்கு இருப்பதில்லை.
இந்தக் கலாசாரம் வளர்த்தெடுக்கப்பட
வேண்டும். அதாவது சகமாணவர்களது தூண்டுதல் களுக்கு வலுச் சேர்க்கப்பட வேணடும் என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.
பிரிட்டிஷ் - இந்திய சகபாடிகளின் ஊக்கத்துக்கு இணையாக வெள்ளையின தொழிலாளர் வகுப்பு மாணவர்களையும் - அதாவது ஊக்கப்படுத்துவதற்குப் பிரதமர் பிளெயர் கூடுதல் முயற்சி எடுக்க வேண்டியிருக்கும் 6T6ips 6TCygidspirits, 6i. East, West, School's best stop gi& J. Gourdsii பிரிட்டனுக்குத் தேவைப்படுகின்றது. அத்துடன் பெண்பிள்ளைகளைக் கவர்
ஆணி பிள்ளைகளை
வேண்டுமானால் அவர்களைப் போலவே தாங்களும் புத்திசாலிகள் என்பதை எதிர்காலத்தில் ஆண்பிள்ளைகள் நிறுவ இதையும் அவர்களுக்குச் சகபாடிகள் ஞாபகப்படுத்த வேண்டியது இன்றைய பிரிட்டனுக்கு
வேணி டியிருக்கும்.
அவசியமாகிப் போய்விட்டது.
- g5 Tylis: Naville Stack.

Page 32
உலக வரலாற்றில் இடத்தைப் பிடித்த பல பெரியோர்களில் குறிப்பிடத்தக்கவர் கார்ல் மார்க்ஸ். 1818 ஆம் வருடம் மே மாதம் ஐந்தாம் தேதி ஜெர்மனியில் ஒரு யூதக் குடும்பத்தில் பிறந்த
நீங்காத
இவர், பினர் ஐரானிஸ் தனது கொள்கைகளுக்காக தாய் நாட்டை விட்டே வெளியேற்றப்பட்டார். பல நாடுகளிலும் சுற்றித் திரிந்து இறுதியாக இங்கிலாந்தில் குடியேறி அங்கேயே இறுதிக் காலம் வரை வாழ்ந்தார்.
இவரைப் பல கோணங்களி லிருந்து என னற்ற வரலாற்று இயலாளர்கள் மதிப்பீடு செய்திருக்கின்றனர். ஆனால் எல்லோரும் மார்க்ஸ் ஒரு தலைசிறந்த தத்தவ ஞானி, சிந்தனாவாதி என்பதை முழு மனதுடன் ஒப்புக் கொண்டனர். இவருக்கு முன்பு சில சிறந்த அறிஞர்கள் இருந்திருக்கிறார்கள். ஆனால் இவருக்கும் மற்றெல்லா தத்துவ ஞானிகளுக்கும் ஒரே ஒரு அம்சத்தில் விதி தியாசம் இருந்தது. மற்ற அறிஞர்களெல்லாம் இந்தப் பிரபஞ்சத்தை வெறும் வியாக்கியானம் செய்ததோடு நின்றுவிட்டனர். மார்க்ஸ் ஒருவர் மட்டும் தான் பிரபஞ்சத்தை ஏன் மாற்ற வேண்டும், எப்படி மாற்ற வேண்டும் என்று சிந்தித்து வழி காட்டினார். அதுவரை எழுதப்பட்ட உலகத்தின் வரலாறு என்பது உண்மையில் உலக அளவில் நடந்தேறிய வர்க்கப்
போராட்டங்களின் வரலாறே என்று மார்க்ஸ் வரலாற்றுச் சான்றுகளுடன் நிரூபித்துக் காட்டினார்.
கார்ல் மார்க் எம் பலருக்கு கம்யூனிஸ்ட் பிதாமகன். சிலருக்கோ அவர் மாமேதை. இன்னும் சிலருக்கோ அவர் ஒரு மாமுனி, ஆனால் உண்மையில் அவர் மிகச் சிறந்த மனிதாபிமானி, மனிதனை மனிதன் எதன் பெயராலும் சுரண்டும் கொடுமைக்கு முடிவு கட்ட மார்க்ளப் தர்மாவேசத்துடன் செயல்பட்டது. சதா சர்வ காலம் மனிதகுல மேம்பாட்டிற்காகச் சிந்தித்தது இவை எல்லாவற்றிற்கும் அடிப்படைக் காரணம் அவர் மனிதனை நேசித்தார், மனித நேயத்தை சுவாசித்தார்
என்பது தான்.
இங்கிலாந்தில் நீராவி எந்திரங்கள் கண்டுபிடிக்கப்பட்டு தொழில் புரட்சித் துவங்கிய காலத்தில் நசிந்து போன கைத் தொழிலையே நம்பி வாழ்க்கையை நடத்தி வந்த கைவினைஞர்கள் தவறுதலாக எந்திரங்களைத் தமது எதிரியாக நினைத்துக் கொணிடு அவர் றை
உடைத்து நொறுக்கத் துவங்கினர். ஆனால் அந்தத் துயரமான சூழலிலும் கூட மார்க்ஸ் நிலைகுலையாது நம்பிக்கையின் ஊற்றுக் கண்ணாய் மாறி நிலப் பிரபுத்துவ சமூகத்தின் அழிவிலிருந்து எழுந்திருக்கும் புதிய முதலாளித்துவ சமுதாயம் தனக்கு
 
 

சவக்குழியை வெட்டக்கூடிய தொழிலாளி வர்க்கத்தையும் கூடவே பிரசவித் திருக்கிறது" என்று நம்பிக்கையுடன் சொன்னார், ஆது வீண் போகவில்லை. 1817 இல் ருஷ்ய நாட்டில் ஏற்பட்ட புரட்சியைத் தொடர்ந்து . கத்தின் மூன்றில் ፵J5 பங்கு நிலப்பரப் ஃ மார்க்ளின் கொள்கைகள் ஆட்சி அதி, ஓர் செய்தன.
கிறிஸ்தவ மதத்தின் வேதநூலான 'பைபினை’ விட
என Efகி கையில்
புத்தகங்கள் என்று புள்ளி விவரங்கள் சொல்லுகின்றன. ஆனால் இந்தத் தகுதியை அடைய அவர் உழைத்த கடுமையும், செய்திட்ட தியாகமும் கணக்கிலடங்கா,
அதிகமான விற் றவை - படிக்கப்பட்டவை கார்ல் மார்க்வின்
லண்டன் மாநகர மைய நூலகத்திற்குள் காலையில் நுழைந்துவிட்டால் காவல்காரர் நூலகத்தைப் பூட்டுவதற்காக இவரை
எழுப்பி வெளியேற்றும் வரை ஓயாமல்
மார்க்ஸ் படித்த புத்தகங்கள்தான் எத்தனை? இப்படிப் பல வருடங்கள் தீவிர ஆய்வு செய்த பிறகுதான் இவரது மூலதனம் நூல் வெளிவந்தது. உலகத்தாரின் கவனத்தை ஒருமித்துப் பெற்றது. பொருளாதாரத் தத்துவத்தில் மார் கி ஸ்ரினி அரிய கண்டுபிடிப்பான "உபரி மதிப்பு" (Surpus Value) இனறும் போற்றிப் பாராட்டப்படுகிறது.
கார்ல் மார்க்ளப் இந்தியாவிலிருந்து பல ஆயிரம் மைல்களுக்கு அப்பால் இருந்துகொண்டு - ஒரே ஒரு தடவை கூட இந்தியாவுக்குப் பயணம் செய்யாமல் - அவர் இந்திய நாட்டைப் பற்றி அதன்
திருப்பம் I ::"II. |
மக்கள் குறித்து, சமுதாய வாழ்வியல் பற்றியெல்லாம் மிகவும் துல்லியமாகத் தெரிந்து வைத்திருந்தார் என்பதை அறியும் பொழுது வியக்காதவர் எவரும் இருக்க மாட்டார். 1857 இல் பிட்டிஷ் ராணுவ அதிகாரிகளுக்கு எதிராக இந்திய சிப்பாய்கள் நடத்திய 'சீப்பாய்க் கலகத்தை மிகச் சரியாகப் புரிந்து கொணிடு அதை இந்திய விடுதலைப் போரின் துவக்கம் என அப்போதே கணித்தவர் கார்ல் மார்க்ளப் ஒருவர் மட்டுமே, கார்ல் மார்க்ஸ் ஒரு தீர்க்கதரிசி என்பது வெறும் வார்த்தை ஜாலமல்ல,
ஆருயிர்த் தோழன் ஃபிரெடரிக் ஏங்கெல் எU"டன் இணைந்து தனது முப்பதாவது வயதில் 'கம்யூனினப்ட் --All; SIMF (CorT T Lumist Manifesto) என்றதொரு ஒரு சிறு பிரசுரத்தை 1848 இல் மார்க்ளப் வெளியிட்டார். இந்தச் சிறு பிரசுரம்தான் 150 ஆண்டுகள் கழிந்த பின்பு இன்றும் கூட விடுதலைக்காக ஏங்கும் கோடி கீ கனகி கான மக்களுக்கு விடிவெள்ளியாக விளங்குகிறது. தனக்கே உரித்தான நகைச்சுவை உணர்வுடன் மார்க்ஸ், ஐரோப்பாவை கம்யூனிஸ்ட் என்கிற பேய் பிடித்துக்கொண்டு ஆட்டுகிறது" எனக் கம்யூனிஸ்ட் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். பட்டினிப் பேய், மதவெறிப் பேய், மொழிவெறிப் பேய், கல்லாமைப் பேய், சாதிவெறிப் பேய், லஞ்சலாவணர் யப் பேய்களிடமிருந்து நம்மையும் நாட்டையும் காப்பாற்ற மார்க்ஸ் போன்ற ஞானிகள் தோணிறமாட்டார்களா எழத்தானே செய்கிறது?
Aa:
என்ற ஏக்கம்

Page 33
镰 ஐன்ஸ்டீன் கனட காதல்
அநேகன் சம்பந்தன்
நாம் கட்டுக்கதை, புராணம் என்று ஒதுக்கிவிடும் விஷயங்கள் உண்மையிலேயே விஞ்ஞானதி தை அடிப்படையாய்க் கொண்டதுதான். அதனால்தான் சமய அறிவு இல்லாத விஞ்ஞானம் நொண்டி விஞ்ஞான அறிவு இல்லாத சமயம் குருடு என்ற பழமொழி ஆயிற்று. இதற்கு ஓர் உதாரணம். ஒரு நாள் ஜனக மகாராஜா பகல் உணவு முடிந்த பின் நந்தவனத்தில் சிறிது நேரம் தூங்கி விட்டார். அப்பொழுது ஒரு கனவு. அவர் பஞ சம் ஏற்பட்டது. உணவின்றி, அருந்த நீரின்றி மக்களும் மாக்களும் மடிந்தனர். ஜனகருக்கே உணவு இல்லாமல் ஒரு வாரம் ஆகிவிட்டது. இன்று உணவு இல்லையெனில் உயிர் பிரியும் என்ற நிலை. அங்கே மரத்தடியில் ஒரு பிணம், ஒரு காய்ந்த ரொட்டியைப் பிடித்தபடி கிடந்தது. இதைக் கண்ட ஜனகருக்குச் சற்று உயிர் வந்தது. பின்பு அந்த ரொட்டியைப் பிணத்தினி கையிலிருந்து பிடுங்கி வாய்க்குள் போடும் முன் அந்த மரத்தின் மேல் பசியோடு இருந்த காகம் ஒன்று அதைக் கொத்தி எடுத்துக் கொண்டு பறந்து போய் விட்டது. திகிலடைந்தார்.
நாட்டில்
பட்டுப்போன ஒரு
ஜனகர் கிடைத்த உணவும் பறிபோய் விட்டது என்ற பயத்தில், "ஐயோ" என்று அலறினார். இந்த அலறல் கேட்டு அருகிலிருந்த பணிப்பெண்கள் அரண்மனையில் கூடி விட்டனர். ஜனகர்
விழித்தார். இது கனவுதான் என்பதை உணர்ந்தார். ஆனால் ஒரு சந்தேகம், எது கனவு, எது நிஜம் என்றொரு குழப்பம். ரொட்டிக்கு அவதிப்பட்டது நிஜமா அல்லது இங்கு அரசனாக இருப்பது நிஜமா என்ற சந்தேகம் வந்து விட்டது. அன்று மாலை அவைப் பணிடிதர்களைக் கேட்க அழ்ைட வக்ர முனிவர் விளக்கமளித்தார். இரண்டுமே உண்மை - இரண்டுமே உண்மை அல்ல. அதாவது அந்தந்தக் நிலையில் அது இருந்தது. கனவு நிலையில் பஞ்சம் உண்மை. விழித்த நிலையில் அரசனாய் இருப்பது உண்மை என்று சார்பு நிலை உண்மையை விளக்கினார். என்வளவோ ஆயிரமாணர்டுகளுக்கு முனி அஷ்ட வக்ரர் விளக்கிய இந்தப் பேருண்மை இந்த நவீன காலத்தில் ஐன்ஸ்டீன் என்ற விஞ்ஞானியால் விளக்கப்பட்டது. இந்த ஐன்ஸ்டின் யார்?
፵፱ Iülህ
உர்ை மையாய்
இவரது தாயகம் ஜெர்மனி, அந்நாட்டில் உள்ள அல்ம் என்ற ஊரில் யூத வகுப்பில் 1879 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 14 ஆந் தேதி பிறந்தார். சிறு வயதில் மக்கு என்று பெயர் பெற்றவர் பின்னாளில் உலகமே போற்றும் கணித மேதை ஆனார். இவர் இளம் பருவம் தொட்டே இயற்கையின் விந்தைகளில் ஆழ்ந்தார். பள்ளிப் படிப்பில் விருப்பம் கிடையாது. கோணநூல் (Geometry),
بارليتا البيوض .. థ్రోప్లే لين.""
திருப்பம்' 82
轟 . .
 

கிராஎப்மேன்,
பிற்கால
Calculus முத 1யவர்றைத் தாமே
கற்றுத் தேனிநதார். மேலும் இளம்
பருவத்திலேயே லத்தீன், கிரேக்கம், ஜெர்மன் இநீக்கியங்களையும் கற்றார். இவருக்கு ரூவனம் எ8
இவற்றைக் கற்பித்தவர்
ஆசிரியர்.
மிங்கோள்ளப்கி
மார்ஸஸ்
:ர்மன் ஆகியோரிட :ன்ஸ்டின் கற்ற கல்வி ஆராய்ச்சிக்குப் பெரிதும் உதவியது. இவர் தமது 21 ஆம் வயதில் ஒரு பள்ளியில் ஆசிரியர் பணி
ஏற்றார். சிறிது காலமே பணியாற்றினார்.
.
ஐண் எம் டீன
பினர் பு பெர்னி எனற இடத்தில் தொழிலகங்களுக்கு உரிமைச் சீட்டு வழங்கும் அலுவலகத்தில் வேலைக்கு அமர்ந்தார்.
1900 ஆம் ஆண்டில் மாக்ஸ் பினாங்க் என்ற அறிஞர் கண்டுபிடித்த குவாண்டம் கொள்கை' என்ற கற்றைக் கொள்கையை மற்ற அறிஞர்கள் மறுக்க ஐன்ஸ்டின் அக்கொள்கையை ஏற்று தக்க சான்றுகளுடன் நிரூபித்தார். பொருளின் மின் அணுக்களும் மற்ற சிற்றணுக்களும் ஒரு அலைகளால் தொடரப்படுகின்றன என்ற Sibisůj gTL Lj My Tisů (Louis de Broglie) 1920 இல் வெளியிட்டார். இதனைப் பல அறிஞர்கள் ஏற்கவில்லை. ஐன்எப்டின் இதனைத் தக்க சான்றுகளுடன் நிறுவி பிராக்வியின்
எனி பவர்
கருத்துகளைச் சம்மதிக்க வைத்து
பெரும் பேறு பெற்றார். அடுத்து F. Sasi J Relativity என்னும் சார்புக் கொள்கை. இவரது அறிவுக்கும் , ஆற்றலுக்கும் ,
பெருமைக்கும் மங்காத ஒளி தந்து ஒளிர்வது இக் பொருள்களுக்கு நீளம், அகலம், உயரம் என மூன்று அளவைகளே அறிஞர்கள் முனர்பு கண்டனர். அவைகளிைனி உணர்மைத் தன்மையை அளந்தறிய
கொள்கையாகும்.
காலம் என்ற நான்காவது அளவே
இனறியமையாதது எனபதை உண்ர்தி துவதே இச் சார்புக் கொள்கையாகும். பொருளுக்கோ, சக்திக்கோ ஒரு நாளும் அழிவு
கிடையாது என்பது வெகு நாளாக விஞ்ஞானிகளுக்குத் தெரியும். ஆனால் பொருளை சக்தியாக மாற்றலாம். அதே மாதிரி சக்தியை பொருளாக மாற்றலாம் என்று ஐன்ஸ்டின் சித்தாந்தத்திலிருந்து வெளிப் பட ட இரு வகையான இம்மாற்றங்கள் இனி றைய அணு வளர்ச்சிக்கு வித்தாக அமைந்துள்ளன.
ஒரு தடவை ஐன்ஸ்டீன் சார்புக் கொள்கையை இவ்வாறு வினக்கினார். ஒருவன் தன் அன்பிற்குரிய காதலியோடு இரண்டு மணி நேரம் அமர்ந்திருந்தாலும் அது ஒரு நிமிடம் போலவே அவனுக்குத் தோன்றுகிறது. ஆனால் அவனே மிகவும் சூடேறிய அடுப்பு மீது ஒரு நிமிடம் இருப்பினும் அது அவனுக்கு இரண்டு மணி நேரமாகத்
தோன்றுகிறது. இதுவே சார்புக் கொள்கை.
ஐன எம் டினினி புகழ்
உலகெங் கும் பரவியது. | / ՖԱ பல கலைக் கழகங்கள்
ஆர்வமுடன் வேரவேற்று
3ᎸᎢ 8il Ꭶ85h [Ꭲ
'கலாநிதி"
|' தி திருப்பம் 83

Page 34
பட்டம் கொடுத்து கெளரவித்தன. 1921 ஆம் ஆண்டு அவருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது.
ஜெர்மனியின் நாஜி ஆட்சி யாளர்கள் அவரது குடியுரிமையையும், சொத்துகளையும் பறித்துக்கொண்டு அவமானப்படுத்தினர். காரணம், அவர் யூத வகுப்பைச் சார்ந்தவர். மற்றும் அவருடைய அரசியல் கொள்கைகள் நாஜி ஆட்சியாளர்களுக்கு முரணி பட்டவை. எனவே இவர் நாஜிக்களின் வெறுப்புக்கும், அவமதிப்புக்கும் உள்ளானார். அவருடைய பேரறிவு உரிமையை நாடியது. நாடுகளில் இருந்து அழைப்பு வந்தது. அமெரிக்கா அவரை வரவேற்று பிரிண்ஸ் டன்
பல வேறு
கணிதத் துறையில் பொறுப்பு கொடுத்து கெளரவப்படுத்தியது. அவர் இறுதியாக
மேற்கொண்ட ஆராய்ச்சி மின் சக்தியும், காந்த சக்தியும் ஒத்தவை என்பது
பற்றியேயாகும்.
ஐன்ஸி டீன் எப்பொழுதும் இருப்பார். அதற்குக் காரணம் என்ன? அவரே கூறுகிறார்:
உற்சாகமாக
"நான் எப்பொழுதும் உற்சாகத்துடன் இருப்பதற்குக் காரணம் யாரிடமிருந்தும் எதையும் விரும்பாததுதான்"
பெர்னாட் ஷா கூறுகிறார்: "உலகிலேயே பெரிய மனிதர்கள் மூவர் இருக்கின்றனர். ஒருவர் கணிதமேதை ஐன்ஸ்டீன், மற்றொருவர் ருஷ்யத் தலைவர் ஸ்டாலின். இன்னுமொருவர் Odopped நாணம் என்னைத் தடுக்கிறது!"
பல்கலைக்கழகத்தில்
பெளத்தமும் இந்துமதமும்
நீரோடை ஒன்றில் நீர் எப்போதும் ஓடிக்கொண்டேயிருக்கும். நீரோடையை ஒரே நீர் என்று எப்படி எம்மால் கூறமுடியும்? இங்ஙனமே பெளத்தர்கள் இந்த ஒன்று என்பதை மறுதலித்து அதனைப் பலது என்கிறார்கள். இந்துக்கள் இதனை ஒன்று எனக் கூறி பலது என்பதை மறுதலிக்கிறார்கள். பெளத்தர்கள் கர்மா என்று கூறுவதை இந்துக்கள் ஆன்மா' என்கிறார்கள். பெளத்தத்தின்படி மனிதன் என்பவன் அலைகளின் ஒரு தொடர். ஒவ்வொரு அலையும் இறக்கின்றது. ஆனாலும் அது எப்படியோ இரண்டாவது அலை ஒன்று பிறப்பதற்குக் \காரணமாகிவ்டுகின்றது. முதலாவதும் இரண்டாவதும் ஒரே மாதிரியானதெனக் கூறுதல் மாயையாகும். இந்த மாயையை ஒழிக்க காமா அவசியமாகின்றது. பெளத்தர்கள் இவ்வுலகுக்கு அப்பால் எதையும் அடிப்படையாகக் கொள்வதில்லை. துன்பம் என்று ஒன்று இருப்பதை அவர்கள் ஏற்றுக் கொள்கின்றார்கள். இத்துக்கத்தைக் கடந்தால்
போதுமென்கிறது பெளத்தம். ஆனால்
இன்பம் பெறுவோமா இல்லையா என்பதை அது கூறவில்லை.
** * * * * * * * چ
இரண்டு மதங்களுக்கும் இடையிலான முக்கிய வேறுபாடு யாதெனில் இவை எல்லாவற்றையும் மாயை எண்று உணர்ந்து கொள்' என்கிறது பெளத்தம். அந்த மாயைக்குள்ளும் உண்மையான தொன்று உள்ளது'என்கிறது இந்துமதம்.
- சுவாமி விவேகானந்தா
 
 
 

ஐரோப்பாவில் எமது விற்பனை முகவர்
ஐரோப்பாவின் மிகப்பெரிய
தமிழ்ப் புத்தகசாலை
தமிழாலயம்
大 ஈழத்துச் செய்திப் பத்திரிகைகள் அனைத்தும்
(தமிழ், ஆங்கிலம்) 安 இந்திய பத்திரிகைகள், சஞ்சிகைகள்
விற்பனைக்கும் தொடர்புகளுக்கும்:
தமிழாலயம் 39, Bld. de la Chapple 75010 Paris
FRANCE. . . T.P.: 331 42 051858