கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சிறகுகள் 2003.01

Page 1
彦拳彦
விடுதலை வேண்டும் கவிஞர்களே எமக்கு விடுதலை வேண்டும்.
வர்ணனை வாத்தைகளால் வசீகரித்து வலுவிழக்கச்செய்து ஆனாதிக்க சிறை வைத்து-எமை வஞ்சித்தது போதும்
கவிஞர்களே எங்களையெல்லாம் நீங்கள் நிலவென்று தேயவைத்தி. நிலவிழியென்று சொல்வி நித்தம் நித்தம் நிவரச் செய்தின் கோல் மயிலென்று கோதை எம்3 ஆட்டுவித்தி துள்ளும் மான் என்று துவண்டு விழச்செய்தி. மல்லிகை என்றுரைத்து LOETL GUILSDSi
நாம்தாம் கொழு கொம்பென்றி நாடியே வந்த எம் கொடியிடைதான் உடைத்தி கூவும் குயிலென்று வாய்ப் பூட்டு பூட்டிவைத்தி கொஞ்சும் கிளியென்று வீட்டுச் சிறையில் அடைத் து வைத்தி.
கவிஞர்கள் கவனத்திற்கு
=தேவகி
ஆனால் ஆடங்.ே சிம்மக் குரலோன் என்றி. சிறுத்தையின் சிற்றம் என்றி! காளையின் கம்பிரம் என்றின்
குதிரையின் வேகம் என்றீர்! பானையின் நடை என்றி. |- தேக்கு மரம் போல் உடலென்றி!
ஆனும் பென்னும் சமம் என்றுரைக்கும் போலி சமத்துவக் கவிஞர்களே இன்னும் ஏன் இந்த ஒரவஞ்சகம்?
பெண்களை மென்மையாகவும் ஆண்களை வன்மையாகவும் எழுத்தில் ஏன் படைத்தின்
ஆடவர்கள் எம்மை அடக்கியான அரிவையர் நாம் அடங்கி போக வேண்டும் என்பதாலா?
கவிஞர்களே 3G LLE ARTLT இந்தக் கொடுமை!
அரிவையர் நாமும்
ஆணாதிக்கம் இல்லா ஆனந்த வாழ்வு வாழ வழி சமையுங்கள் இல்லையேல் வழி விட்டு ஓரமாகுங்கள்
 
 
 
 

லக்கிய சஞ்சிகை)
配 - 유 현
உயர்வு
EDUDUL
DLif LLDI

Page 2
வாசக நெஞ்சங்களே. ഖങ്ങbbb
புரிந்துணர்வு ஒப்பந்த சமாதான சூழ்நிலையில் மலரும் இந்த புத்தாண்டில் (2003 இல்) சகல மக்களுக்குமான நிரந்தர சமாதானமும், சாந்தியும் கிடைக்க வேண்டுமென்பது சிறகின் பிரார்த்தனையும் பேரவாவுமாகும்.
வளரும் படைப்பாளிகளின் ஆக்கங்களுக்கான காத்திருப்பில் இருமாத காலம் கரைந்தோடி விட்டது. சிறகின் ஐந்தாவது இதழின் தாமதத்திற்கும் இதுவே காரணம். வளரும் படைப்பாளிகளுக்கு களமமைத்து கொடுப்பதற்காக விரிந்த சிறகின் பக்கம் புதிய படைப்பாளிகளின் பார்வை பாராமுகமாகவே இருந்து வருகின்றது. வாசிப்பு, எழுத்தார்வம், இலக்கிய ஆர்வம் தவிர்ந்த வேறு விடயங்களால் அவர்கள் ஆக்கிரமிக்கப்பட்டிருப்பது இந்த இலக்கிய பற்றற்ற நிலைக்கு காரணமாக இருக்கலாம். புதிய படைப்பாளிகளின் பாராமுகம் கவலை தருவதாக இருந்தாலும் தொடர்ந்தும் புதிய படைப்பாளிகளுக்கு ஊக்கம் கொடுத்து உயர்த்தி விட வேண்டும் என்ற எண்ணமே சிறகிற்கு மேலோங்கி நிற்கின்றது.
மாணவர் பொது அறிவுப் போட்டி போன்ற அம்சங்களுக்கு மாணவர்களின் பங்களிப்பு போதாமையால் அவற்றை தவிர்க்க வேண்டியுள்ளது.
தொடர்ந்தும் சிறகுகள் வெளிவர வேண்டும் என்ற அவசியத்தாலும் அவாவினாலும் ஏலவே உங்களுக்கு அறிமுகமான படைப்பாளிகளின் படைப்பிலக்கியங்கள் சிறகின் அதிகமான பக்கங்களை அலங்கரிக்கின்றன.
அதே விலையில் அதிக பக்கங்களுடன் சிறகு 05 வெளிவருவது உங்களுக்கும் மகிழ்ச்சிதானே. சிறகுகளில் வளர்ச்சி உயர்ந்தோங்க அனைவரதும் ஒத்துழைப்பும் அரவணைப்பும் அவசியமாகியது.
நன்றி அன்புடன்
ஆசிரியர் குழு
“சிறகுகள்' சஞ்சிகை விற்பனை மூலம் பெறப்படும் A. நிதி வறிய மாணவ உங்கள் ஆக்கங்களுக்கு மாணவிகளின் கல்வி வளர்ச்சிக்காக நீங்களே பயன்படுத்தப்படும் என்பதையும் பேருவகை பொறுப்பாளிகள். யுடன் அறியத்தருகிறோம்.
-2-
 

நீரளவே ஆகுமாம் நீராம்பல்
தான் கற்ற நூலளவே ஆகுமாம் நுண்ணறிவு
ஆசிரியர் குழு க. ஜீவா (ஓவியர்) அ. ஜனனி பொ. கோணேஸ்வரன் செ. செல்வக்குமார் க. விக்னேஸ்வரானந்தன் க. வாசுதேவன் மா.பிரபாகரன்
9J, sol Llió (335|TLJIT65
கணினி அமைப்பு
ரெயின்போ மினிலாப் 026-23454,23078,024-22932
தொடர்புகளுக்கு. சிறகுகள் ஆசிரியர் குழு,
514, மின்சார நிலைய வீதி,
திருக்கோணமலை.
திருக்கோணமலை ஐக் கரிய மருத்துவர் சிகையலங் கரிப்பாளர்
சங்கத்தின் ஆதரவுடன்
சிறகுகள் சஞ்சிகை வெளியிடப்படுகிறது.
நல்ல விளை நிலமும்
நல்ல கவிதையும் -04
எஸ். இன்னாசித்தம்பி -08
உடனே வேண்டும் (கவிதை) -10 அகங்காரம் (உருவகக் கதை) -11
பகிடிவதை
இனி வேண்டாம் (கவிதை) -13
மானுடத்தின் தமிழ்க்கூடல் -1
மறுப்பதில் என்ன பயம் -18
பணமும் பலமும் (கவிதை) -19
நூல் மதிப்பீடும் அறிமுகமும் 230
காணி நிலம் வேண்டும் (சிறுகதை) -21
நாங்களும் நீங்களுமாய்
கருத்தாள்வோம் -28
குறுக்கெழுத்துப் போட்டி -SO
வாசகர் நோக்கு -31
ノ ܢܠ / ཡོད།༽
புதிய வரவின் முன் அறிவித்தல் திருக்கோணமலை இலக்கிய ஒன்றியத்தின் வெளியீடான "இலங்கை எழுத்தாளர்களின் இருபத்தாறு சிறுகதைகள்’ தொகுப்பு, திருக்கோணமலை இலக்கிய ஒன்றியத்தின் செயலாளர் திரு. எஸ். செல்வகுமார் அவர்களால் தொகுக்கப்பட்டு தமிழ்நாடு சென்னை மணிமேகலைப் பிரசுரத்தில் பதிப்பிக் கப்பட்டு வெகுவிரைவில் வெளியீட்டு விழாக் காணவுள்ளதனை எமது வாசக நெஞ்சங் களிற்கு
மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றோம்.
D لر
م-3-

Page 3
நல்ல விளை நிலமும் நல்ல கவிதையும்.
சு.வில்வரெத்தினம்
(1) கவிதை என்பது தன்னியல்பின் வெளிப்பாடு எளிமையின் இயல்பில் அல்லது இயல்பின் எளிமையில் அது குடித்தனம் செய்கிறது. தன்னியல்பு என்பது தன் நிறைவு. தன் நிறைவற்ற தளம்பல் வெறும் குலுங்கல். அதனாலே தான் ஒளியை நோக்கி செடிகள் நீள்வதுபோல் தன் நிறைவின் ஒளிர்வாயுள்ள நிரந்தர அழகை நோக்கி கவிமணம் ஈர்ப்புக் கொள்கிறது. சூரியனையும், நிலவையும், சுடரொளி மீன்களையும், மீண்டும் மீண்டும் பாடப்பாடச் சலிப்பதேயில்லை. நிறைவுடைய எல்லாவற்றினுள்ளும் கவிதை ததும்புகிறது. நாமும் தன் நிறைவுடையவரானால், அல்லது நிறைவுடைமை நோக்கி நெகிழ்ச்சியான இயக்கமுற்றிருந்தால் எமக்குள்ளும் கவிதை ததும்பும். தளம்பல் இல்லாத, குலுங்கல் இல்லாத தண் ணென்ற அமைதியுடைய கவிதை.
(2)
கவி என்றால் வடமொழியில் தரிசி என்றும் பொருள். தரிசனம் என்பது நிறைவுடைய பார்வை அல்லது பூரண நோக்கு எனவும் பொருள் கொண்டு விரியும் மெய்ப் பொருள் காண்பவன் எனவும் பொருள் விரியலாம். சங்க இலக்கியக் கவிஞர்கள் சான்றோர் என்றழைக்கப்பட்டதிலும்
س-4-

இதே போலவே தான் பொருள் விரிவிற்கு இடமுண்டு. சான்றோன் என்றால் சான்றான்மை உடையவன் எனப் பொருள். சாட்சியாயுள்ளவன், உதாரண குணங்கள் நிறைந்தவன் என்றெல்லாம் சான்றோனுக்கு பொருள் விரிப்புச் செய்து கொண்டே போகலாம். ஆக இரு மொழிகளிலும் கவி, சான்றோன் என்பவற்றின் பொருள், மெய்மை நிலை நோக்குடைய தரிசனம் என்பதை அழுத்தி நிற்கிறது. துண்டு, துணிக்கைகளான சொற்களைக் கோப்பவனாகவோ, அவ்வப்போதைய நிகழ்வுகளின் துாண்டலுக்கு உருவம் கொடுப்பவனாகவோ இல்லாமல், எந்த நிகழ்வையும் ஒரு முழுமையான தரிசனத்தில் பதித்து, மெய்யனுபவச் சுவை பொதிய உணர்த்துபவனே உண்மைக் கவிஞன் ஆவான். அல்லாமல் வெற்றுச் சொல் வித்தகமோ, சுற்று வட்டத்துள் தொடர்ந்தும் செக்கு வலிப்பதோ, உணர்ச்சிச் சுழலுக்குள் சிக்குண்டு கிடப்பனவோ கவிதை ஆகா. அதை எழுதுபவனும் கவிஞனும் ஆகான். கவிதை என்பது ஒரு ஆழ் புலம். அதனை ஆழ உழுது, மறுத்தழுது, விதைத்து, உரம்பெய்து அறுவடை செய்பவனே உண்மைக் கவிஞன்.
(3)
கவிதை என்பது இன்று இத்தகைய ஆழமான நோக்கினோடு படைக்கப்படுவதாயில்லை. என்றால் ஆழமான நோக்குடைய கவிஞர்கள் இல்லை என்பது அர்த்தமாகிறது? அவரவர் தாம் தாம் காணுகின்ற அரைகுறை நோக்குகளையே கவிதை என்கின்ற ஆழ்ந்தகன்ற நுண்ணிய பரப்பைக் குறித்து முன் வைக்கிறார்கள். அரைகுறை நோக்குகளின் அரைகுறைப் பிரசவங்கள் யாவும் கவிதை எனக் கொள்ளப்படுகின்ற அவலம் மிகுந்தகுழல். போர் என்றால் போரைப் பற்றிக் கவிதை செய்வோர். பின்னர் சமாதானம் வந்தால் சமாதானத்திற்குக் கொடிபிடிப்பர். இவ்வாறு கொடியேறுகின்ற கோயில்களுக்கெல்லாம் கும்பிடு போடுவதனால், கோஷம் போடும் பக்தர்களுக்கும் கவிஞர்களுக்கும் வேறுபாடு காண முடிவதில்லை. பொங்கல், தீபாவளி, கிறிஸ்மஸ், புதுவருடம் என்று விழாக்காலங்களிற்கு வெடி முழங்குபவர்கள் போல கவிமுழங்கும் மரபு இப்போது போருக்கு, சமாதானத்திற்கு, பெண்கள் தினத்திற்கு, முதியோர் தினத்திற்கு, குழந்தைகள் தினத்திற்கு, காதலர் தினத்திற்கு என்றெல்லாம் விஸ்தரிக்கப்பட்டுவிட்டது. விழாக்காலங்களில் வீட்டுக்கு வருபவர்க்கு பணியாரம், பலகாரம், வழங்குவது போல ஏடுகள், இதழ்களிலெல்லாம் கவியாரம் வழங்குவது மரபாகி விட்டது. கவிதை என்பது ஒரு
-5-

Page 4
மெய்யனுபவத்தின் வெளிப்பாடு; அழகியல் வெளிப்பாடு; வாழ்வனுபவத்தின் பரிமாறல் என்பது எவராலும் உணரப்படுவதில்லை. ஒரு பழத்தின் சிறு கீற்றை உண்டாலும் முழுப்பழத்தின் சுவை உணரப்படுவது போல வாழ்வனுபவத்தின் ஒரு கீற்றை அழகிய கவிதையாய் வழங்கினாலும் அதிலே வாழ்வனுபவத்தின் ஒளிக்கிற்று பரிமாறப்பட வேண்டும். வாசகனின் எங்கோ ஒரு இருண்ட மூலைக்குள் அது சிறு வாணம்போல் பாய்ந்து ஒளி மூட்டவேண்டும். அந்த ஒளிக்கிற்றில் வெளி வானம் தரிசனமாக வேண்டும். அதாவது இது காறும் ஒருவனால் இனங்காணப்படாதிருந்த வாழ்வனுபவப் பரப்பு புலப்படுத்தப்படல் வேண்டும். இதுவே கவிதை. இது சிறுகதை உள்ளிட்ட சகல படைப்பாக்க வடிவங்களுக்கும் பொருந்தும். ஆயினும் கவிதையில் அதன் கட்டுக்கோப்பும் நேர்த்தியும் கொண்ட கச்சித வடிவமைப் பால் இத்தகைய ஒளிப் பாய்விற்கு வாய்ப்பு அதிகம்.
(4)
வர்ணம் பூசிய தெல்லாம் ஓவியம் அல்ல. வார்த்தைகளின் பூச்செல்லாம் கவிதையென்று மயங்கக்கூடாது. வர்ணங்களாலானதை விட கறுப்பின் துல்லியமான 'வாழ்வின் கோடுகள் நல்லோவியங்களாகி விடும். வர்ணம் என்பது குணாம்சங்களை வெளிப்படுத்துவதற்கே அன்றி வர்ணப் பூச்சுக்களுக்காகவோ ரசிகர்களை கவர்வதற்காகவோ அல்ல. வார்த்தை அலங்காரங்கள், உவமைகள், குறியீடுகள், படிமங்கள் என்றெல்லாம் சிக்கல்களின் அடுக்குமானங்களாக இன்றைய கவிதைகளும் மாறிவிட்டன. கஞ்சிக்குள் பயறு போலவே இவை அமைய வேண்டுமேயன்றி கல்லறுத்து அடுக்குவதுபோல அச்சு வார்ப்புப் பரிமாணங்களில் கவிதைகள் அடுக்கக் கூடாது. அவன் கவிதைக் கட்டடக்காரனாக இருப்பானே அல்லாமல் கவிஞனாக மாட்டான். அந்தக் கட்டடம் கவிதையும் ஆகாது. கவிதை என்பது சிக்கலில்லாத எளிமையின் இயல்பாலமைந்த வாழ்வனுபவக் கீற்றுகளால் வேய்ந்த ஒரு குடிசை. இயல்பாயமைந்த இந்தக் குடிசைக்குள் ஏழைக் குடியானவனும் இருக்கலாம். ‘ஏமாற்றும் எளிமைக்குள் ஒளிவீசும் தவசியும் இருக்கலாம். அங்கே அவரவர் வாழ்வனுபவத்தின் ஒளி வீசல் வேண்டும். ஒளியுடையது தான் கவிதை. உண்மையின் ஒளி அல்லது உள் மெய் அனுபவத்தின் ஒளிதான் வாக்கினிலே வெளிப்படும். அதைத்தான் பாரதி " உள்ளத்தில் உண்மை ஒளியுண்டாயின் வாக்கினிலே ஒளியுண்டாகும் ” எனத் தெளிவு படச் சொன்னான். ஒளியும் தெளிவும் இல்லாதார் கவிதை எனச் செய்வதெல்லாம் சொற்களினாலான செய்கை அல்லது செயற்கை.
مس6ـ

(5)
ஒளியுடையது கவிதை. கவிஞர்களே ஒளியுடையோராகுங்கள் உங்கள் கவிதை ஒளியுடையதாகும்.
தெளிவுடையது கவிதை. கவிஞர்களே தெளிவுடையோராகுங்கள் சிந்தனையிருந்தால் தெளிவுடையதாயி ருந்தால் உங்கள் கவிதை தெளிவுடைய வையாகும்.
உள்ளத்து விளக்கே விளக்கு. ஊருக்கு விளக்கேற்றி வைப்பதன் முன்பாக உள்ளத்தில் விளக்கேற்றி வையுங்கள் அது உங்களின் ஒவ்வோர் சொல்லிற்கும் ஒளி பெய்து உலகுக்கே வெளிச்சம் தரும்.
அதோ வீட்டுக்கு விளக்கேற்றுகிற பெண்ணாளின் செவ்விளந்தளிர்க் கையின் இரேகைகள் தீக்குச்சி வெளிச்சத்தில் தெளிவாகத் தெரிகிறது. அதேபோல உட் சோதி விளக்கின் ஒளியில் நெஞ்சின் மூலைக்குள் ஒடுங்கியிருந்து முணுமுணுத்துக் கொண்டிருந்த சொற்கள் யாவும் எந்த நேர் கோட்டில் வந்தமர வேண்டுமோ அங்கங்கு மந்திரச் சொல்லின்பங்களாய் சோதியுற வந்தமரும்.
இதைத்தான் 'சோதிமிக்க நவகவிதை' என்றான் பாரதி விதைத்தான் வீரியமிக்க தானியங்களை. அவன் வீட்டுச் சிட்டுக் குருவிகள் மட்டுமாபொறுக்கின? இன்று வரை நாமும் தான் பொறுக்கிக் கொண்டிருக்கிறோம் நல்லுயிர் மணிகளாய். நல்ல தரிசனம் ஒரு நல்ல விளைநிலம் அங்கு சொல் மணிகள் விதைத்தால் சுடர்மிகும் கவிதைகள் அறுவடை ஆகும்.

Page 5
எஸ். இன்னாசித்தம்பி
தமிழ்மணி ந.பாலேஸ்வரி
திரு. எஸ். இன்னாசித் தம்பி திருக்கோணமலையைச் சேர்ந்த ஒரு எழுத்தாளர். 1891ம் ஆண்டு பிரசுரமான இவரது ஊசோன் பாலந்தை கதையைத்தான் ஈழத்தின் முதல் நாவல் என்று கொள்வாரும் உண்டு. ஆயினும் இது 'Orson Valantine' என்ற போர்த்துக்கேய நாட்டு நாவல் ஒன்றைத் தழுவியே இக்கதை எழுதப்பட்டிருக்கலாம் என்று கருதுவாரும் உண்டு. ஆகவே இத்தழுவல் நூல் ஈழத்தின் முதலாவது நாவலாக இருக்க முடியாது என்று கூறுவாரும் உண்டு.
இந்நாவலை முதலிற் பதிப்பித்தவர் எஸ். தம்பிமுத்து பிள்ளை என்று அறிய முடிகிறது.
மேகவர்ணன் தாமோதரன் இரத்தின சிங்கம் என்ற நூல்களைப் பதித்தவரும் இவரே என்று கூறுவாரும் உண்டு.
"ஊசோன் பாலந்தை கதை அதன் முதற் பதிப்பில் ஆயிரத்து ஐந்நுாறு பிரதிகளாக வெளிவந்தன. அரை கிறவுன் அளவில் சிறிய எழுத்தில் தொண்ணுாறு பக்கங்கள் வரும் வண்ணம் அச்சிடப்பட்ட இந்நூல் 50 சத விலைக்கு வெளியாகிற்று என்றும் தெரிகிறது. பின்பு 1924ல் இந்நூலின் இரண்டாம் பதிப்பு வெளிவந்தது இந்தப் பதிப்பு யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஞானப்பிரகாச அச்சியந்திர சாலையில் அச்சாயிற்று என்றும் கூறப்படுகிறது. வண சுவாமி ஞானப்பிரகாச சுவாமி இந்த இரண்டாம் பதிப்பைப் பரிசோதித்து வெளியிட்டார் என்றும் அறிய முடிகிறது.
திரு. எஸ். இன்னசித்தம்பி கத்தோலிக்க மதத்தை சேர்ந்தவர் என்றும் தெரிகிறது. அந்நாளில் பிரசித்தி பெற்றிருந்த அந்தோனிக் குட்டி அண்ணாவியாரின் "கிறீஸ்து சமய கீர்த்தனைகள்’ என்ற நூலை தமது நாவல் வெளியான அதே 1891ம் ஆண்டு டிசெம்பர் மாதத்தில் பதிப்பித்து வெளியிட்ட சின்னாசித்தம்பி தமது சமயத்தில் அதிக ஈடுபாடு கொண்டவர் என்பதை 'ஊசோன் பாலந்தை கதையும் புலப்படுத்துவதாக அறிய முடிகிறது.
உலகின் கண்ணே உயர்வுற விளங்கும் அலுவான்ய என்னும் பொலிவுறு தேசத்தில் அரசகுலத்தில் அதிக சங்கை போந்த பெற்றோருக்கு அலெக்சாந்தள் என்பர் பிறந்து சிறுவயதில் அவரது அன்னை தந்தை மரணமடைந்தபின் பல சிற்றரசர்களைத் தமக்குக் கீழாக கொண்ட பெரிய அரசர் என்ற கருத்துள்ள 'எம்பரதோர்’ என்னும் உத்தியோகம் பெற்று அவ்வூரை அரசாட்சி செய்து வந்தார்.

கதை இவ்வாறு ஆரம்பமாகிறது. அலெக்சாந்தர் எம்பரதோருக்கு தொன்வொச்சாந் தென்கிற ராஜகுமாரிக்கு பிறந்த ஊசோன், பாலந்தை, என்கிற சகோதரர்களைப் பற்றிய கதை சந்தர்ப்ப வசத்தால் வனத்தில் பிறந்து பெற்றோரைப்பிரிந்து தனித்துப் போன இச்சகோதரர்களில் உளசோன் ஒரு கரடியால் வளர்க்கப்பட்டு ஒரு பயங்கர காட்டு மனிதனாகி மக்களைத் துன்புறுத்தப் பாலந்தை ஒரு அரச மாளிகையில் வளர்ந்து தனகர்த்தனாகித் தன் சகோதரனையே மடக்கி வெல்வதும் நூலில் சித்தரிக்கப் பட்டுள்ளதாக அறிய முடிகிறது.
பல சம்பவங்கள் நடந்த பின் இவர்கள் திருமணம் செய்வதும் இறுதியில் ஊசோன் தன் தந்தையைப் போரிற் கொல்வதும் அதை அறிந்த பின் அதற்காக வருந்தி தவமிருந்து மரித்தலுந்தான் இக்கதையின் 3FMJD.
(எளில் இன்னாசி தம்பி அவர்களை பற்றி நான் அறிந்தவற்றை தொகுத்தளித்திருக்கின்றேன். இவரை பற்றி மேலும் தகவல் அறிந்தவர்கள் தகவல்களை அறிய தந்தால் இலக்கிய உலகத்துக்கு பேருதவி செய்தவர்களாவார்கள்.)
தருகி கோண மலை ரிரதேச செயலக (பட் டணமும் , சூழலும் ) சாகித்திய விழா 2002 இற்கான திறந்த சிறுகதைப் போட்டியில் பிரபல எழுத்தாளர் திருமலை வீ.என்.சந்திரகாந்தி அவர்களுக்க முதலாவது பரிசு கிடைத்துள்ளது. அதே சமயம் திருக் கோணமலை மாவ1 இலக்கிய விழா 2002 இலும் சிறு கதைக்கான முதலாவது பரிசினை இவர் 浣,苓.乏 சுவீகரித்துள்ளார். சாதியத்தையும் பெண் அடிமை மனப்போக்கையும் ஒருங்கே தகர்த்தெறியும் மலரத்துடிக்கும் மொட்டு என்ற இவரது சிறுகதைக்கே இவ்விரு பரிசுகளும் கிடைத்துள்ள160
19-11-2002ல் இவரது 'ஸ்திரீ இலட்சணம்' என்ற பெரில: சிறந்த சிறுகதைத் தொகுப்பு ஒன்று ஈழத்து இலக்கிய சோலை வெளியீடாக வெளிவந்துள்ளது.
29-11-2002 ல் பதவிசிறிபுரவில் நடை பெற்ற மாவட்ட இலக்கிய விழா 2002 ல் திருக்கோணமலை அரசாங்க அதிபரும் ம1வ ச் செயலாளருமான திரு என்.ரீ.கே நெலுந்தெனிய இவருக்கான பரிசினை | பாராட்டுப் பத்திரத்தினையும் வழங்குவதைப் படத்தில் கானலாம்.
-9-

Page 6
உடனே வேண்டும்!
கவிஞர் தாமரைத் தீவான்
1. 'சிறகுகள் இருக்கு மானால்
தெருவானில் செல்ல லாகும்!
உறவுகள் நெருங்க லாகும்!
ஒருமணிக் காலம் போதும்!
திறமைகள் தெரிய லாகும்!
சிறுசிறு மோதல் நேரா!
பறவைகளோடு சேர்ந்தே
பாடலாம் - ஆடலாமே!
2. நம் கையும் சிறகாய் ஆனால்
நமதுலா விரைவாய்ப் போகும்!
எம் வழி இடையூ றின்றி
எப்போதும் திறந்திருக்கும்!
இம்முழு வண்டிக்கூட்டும்
எம்மிடம் நெருங்கமாட்டா!
தம்வழி தாம்போய் மோதிச்
சங்கடப்படுதல் காண்போம்!
3. சிறகுகள் சுதந்திரத்தின்
சின்னமாய் உள்ளதாலே,
இறகுகள் ஒன்று சேர்ந்து
இயங்கிடும் தன்மையாலே
பறவைகள்போல - வானம் பாடிகள் போல நாமும்
திறம்படப் பாடி உச்சம்
சென்றுமே மீளலாமே!
4. இரு சிறகெமக்கு வேண்டும்!
இறையிடம் கேட்கவேண்டும்!
அருளவன் தாராவிட்டால்
அருந்தவம் புரிதல்வேண்டும்!
உருவுகண் டெள்ளுவோர்கள்
ஒருகாலில் நிற்க வேண்டும்! / N
ஒருசிறு மாற்றம் வேண்டும்! བརྒྱ་(
உயர் சிற குடனே வேண்டும்!
-10
 
 
 

நல்லையா சித்திரவேல்
அகங்காரம்
அடக்கமாக, அமைதியாக இருந்த அந்தக் கிணற்றைப் பார்த்து நீர்க்குளாய் எக்காளமிட்டுச் சிரித்தது.
“என்ன சிரிக்கிறாய். ၇• கிணற்றின் கேள்வியை நீர்க்குளாய் சட்டை செய்யவில்லை அது தொடர்ந்தும் சிரித்துக் கொண்டேயிருந்தது. குளாயிலிருந்து நீர், தொட்டியைநிரப்பிக் கொண்டிருக்க, சிறுவர்கள் அதை அள்ளி அளந்து ஆனந்தமாக விளையாடிக் கொண்டிருந்தனர்.
“இல்லை இப்போது உன் பரிதாப நிலையை நினைக்க எனக்குச் சிரிப்பாக வருகிறது. என்னை விட்டால் இங்கு யார் இருக்கிறார்கள் என்ற திமிரில் இதுவரை தனிக்காட்டு ராஜாவாக பெருமைப்பட்டுக் கொண்டிருந்தாயல்லவா. ? நான் வந்த பின் உன்னை யாராவது எட்டிக் கூடப்பார்க்கிறார்களா..? ஒரு சொட்டு நீருக்குக் கூட என்னிடம் தான் ஓடி வருகிறார்கள். இந்தப் பெருமையை எப்படி நான் அடக்கி வைக்கமுடியும்.”
நீரால் நிரம்பி விட்டிருந்த அந்தக்கிணறு, குளாயின் பதிலைச் செவிமடுக்கவில்லை. அது மீண்டும் மெளனமாகிவிட்டது.
ஆனால், புதிய நீர்க்குளாய் தொடர்ந்தும் அதைச் சீண்டிக் கொண்டேயிருந்தது.
"இந்த வீட்டின் தேவைகளுக்கு நான் எவ்வளவு வசதியாக இருக்கிறேனென்று உனக்குத் தெரியுமா? வீட்டின் உள்ளேயும், வெளியேயும், ஏன் மூலை முடுக்கெல்லாம் எனது சேவை தொடர்ந்து கொண்டேயிருக்கிறது. ஒரே இடத்தில் தூங்கிக் கொண்டு சோம்பேறியாக இருக்கின்ற உனக்கெங்கே தெரியப் பேகிறது இதுவெல்லாம்? பழம் பெருமை பேசித் திரிகின்ற இந்த வீட்டுப் பெரியவர் கூட இப்போது, எனது காலடியில் தான்” கூறிவிட்டு மீண்டும் சிரிக்கத் தொடங்கியது நீர்க் குளாய்.
இதே வேளை, வீதியால் சென்று கொண் டிருந்த வாகனமொன்றிலிருந்து ஒலிபெருக்கி அறிவித்தல் காதில் அலைமோதியது. “பொதுமக்களுக்கோர் அறிவித்தல். நேற்றைய எமது முன்னறிவித்தலின்படி இன்று காலையிலிருந்து, தொடர்ந்து இருபத்து நான்கு மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் துண்டிக்கப் பட்டிருக்கும். குளத்தின் நீர்மட்டம் வெகுவாகக் குறைந்துள்ளதால் மறு அறிவித்தல்
-11

Page 7
வரை தொடர்ந்தும் ஒரு நாளைக்கு மூன்று மணித்தியாலங்கள் மட்டுமே நீர் விநியோகம் நடைபெறும் என்பதையும், நீரைச் சிக்கனமாகப் விக்குமாறும் பாவனையாளர்களைத் தயவாய்க் கேட்டுக்கொள்கிறோம். நன்றி.”
அந்த அறிவித்தல் முடியுமுன்னரே இதுவரை கலகலத்து ஓடிக்கொண்டிருந்த நீரின் ஒட்டம். சொல்லி வைத்தாற்போல் திடீரென நின்றது. நீ க் குளாயின் பக்கமிருந்து எதுவித சத்தத்ததையும் கானவில்லை. வாயடைத்து மெளனமாகிவிட்ட குளாயிலிருந்து இப்போது நீர், சொட்டுச் சொட்டாகவே தான் விழுந்து கொண்டிருந்தது. கிணற்றிற்கு அதைப் பார்க்க குளாய், கண்ணி விடுவது போலிருந்தது.
" 6l6Ꮌl60l ................ அழுகிறாற்போல் தெரிகிறது? நன்றாக அழு. மேலே பாய்ந்தால், கீழேதான் விழவேண்டும்.”
நீர்க் குளாயின் மெளனம் கலையவேயில்லை. விழுந்து கென்டிருந்த நீத்துளிகளும் நின்றுவிட, வெறும் காற்றுமட்டுமே அந்த நீக்குளாயிலிருந்து அதன் பெருமூச்சாக வெளியேறிக் கொண்டிருந்தது. அதனருகில் யாருமில்லை.
ஆனால் கிணறு. இப்போதும் கூடச் சிரிக்கவில்லை.
ஒருவர்:- வாழ்க்கையில் விட்டுக்
கொடுத்து வாழ்வதில் ஒரு சுகம் இருக்குங்க.
மற்றவர்:- ஓமோம், நான் மானம்,
மரியாதை, சூடு, சொரணை எல்லாத்தையும் விட்டுக் கொடுத்து தான் வாழுறன்
ஒருவர்:- என்னuய்யா அவர் பேப்பர் படிக்கிறார். பக்கத்தில்
ஏன் இன்னும் ஒருவர் குந்திக்கொண்டிருக்கிறார். மற்றவர்:- அவள் தான் பேப்பருக்குச் சொந்தக்காரன்.
போலிஸ்காரர்:- என்னயயா திரு, திரு
என முழிக்கிறாய் என்ன பேர்? என்ன தொழில்,
மற்றவள்:- என் பேரு கோடீஸ்வரன்,
பிச்சை எடுக்கிறது என் தொழில்
-12
 
 

பகிழவதை இனி வேண்டாம்.
வி. சுஜி
பள்ளி செல்லும் வேளையிலே பல இன்னல் எம்மவர்க்கு பாஸ் காட்டிப் போவதற்குள் பல நெருடல் நெஞ்சுக்குள்ளே ஆனாலும் பட்டம் பெற பல ஆசை மனசுக்குள்ளே அதற்காகப் படிக்கிறேன் திடமான துணிவுடனே.
ஒலைக் குடிசைதனில் சிறு விளக்கு ஒளிதனிலே ஒரமாய் நானிருந்து சிரமத்துடன் படிக்கையிலே ஊர்நாய்கள் எல்லாம் ஆமி வரும் செய்தியினை ஒன்றாகக் கூடி உணர்த்தின எந்தனுக்கு
கையிலுள்ள ஏடுதனை கரைதனிலே வைத்துவிட்டு எரிந்த விளக்கதனை விரைவாய் அணைத்துவிட்டு தலையிலே கைவைத்து தலைவிதியை எண்ணுகையில் தயை கொண்ட இறைமனது என்பக்கம் திரும்பியது.
வந்த ஆமி ஏனோ வீதிவழி சென்றுவிட குலைத்து நின்ற நாய்களும் களைத்து கண்ணயர நான் மட்டும் எழுந்து சென்று விளக்கினை ஏற்றி விரிக்கின்றேன் புத்தகத்தை
படிக்கும் வேளைதனில் பயம் தான் வருகிறது போனவங்கள் திரும்பி வந்தால். என்றுமணம் நினைக்கிறது ஆனாலும் படிப்பினிலே என் மனது லயிக்கிறது. அதனாலே பல்கலைக்கழகம் இன்றென்னை அழைக்கிறது.
அங்கு பகிடிவதை என்றொன்று என் மனதை வாட்டுகிறது அக்கொடுமைதனை எண்ணி இன்று என்மனமோ வாடுறது பாவம் நாமெல்லாம் பயத்தால் வருந்துகிறோம். பல்கலை மாணவரே! பகிடிவதை எனி வேண்டாம்.
வரம் கேட்டுப் பெற்ற பிள்ளை வரப்பிரகாஸ் அண்ணா வைத்தியராய் நாட்டினிலே புகழ் தேட விரும்பி பல்கலையில் கற்கையிலே பலியான சம்பவத்தை பார்த்த என் சோதரரே, பகிடிவதை இனி வேண்டாம்.
-13

Page 8
மானுடத்தின் தமிழ்க்சுடடல் 2002
(விடுதலை புலிகள் கலை பண்பாட்டு கழகத்தின் அழைப்பின் நிமித்தம் அண்மையில் யாழ்ப்பாணத்தில் நடந்த இலக்கிய மகா நாட்டில் திருக்கோணமலையில் இருந்து கலந்து கொண்ட எழுத்தாளர் டாக்டர் இராஜ. தள்மராஜா அவர்களிடம் தகவல்களை அறிய விரும்பினோம். அவரோடு பேசியவைகளில் இருந்து பெறப்பட்ட தகவல்களை இனி படியுங்கள்.)
விடுதலைப் புலிகளின் கலை, பண்பாட்டுக் கழகம்,நிதர்சனம் நிறுவனத்துடனும், தமிழ்த்தாய் வெளியீட்டகத்துடனும் இணைந்து நடாத்தும் மானுடத்தின் தமிழ்க் கூடல் நிகழ்வில் பங்குக்கொள்ளுமாறு கலை, பண்பாட்டுக்கழக பொறுப்பாளர் திரு. புதுவை இரத்தினதுரை அழைப்பு விடுத்திருந்தார்.
அந்த அழைப்பை ஏற்று இங்கு நாம் செயற்பட்டு பலகலை, இலக்கிய ஆர்வலர்களுடன் தொடர்பு கொண்டு மாநாட்டுக்கு செல்வதற்காக ஆயத்தம் ஆகினோம்.
எமக்கு செல்வதற்கு திருக்கோணமலையில் ஒரு பளில் ஒழுங்கு செய்யப்பட்டது. அதில் நாம் யாழ்ப்பாணம் சென்றடைந்தோம்.
அங்கு எமக்கு நல்வரவேற்புடன் தங்குவதற்கு ஒரு விடுதியும் ஒழுங்கு செய்து தரப்பட்டது.
மாநாடு ஒக்டோபர் 19, 20, 21, 22 ஆக நான்கு நாட்களுக்கு ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.
நாம் ஒக்டோபர் 18ம் திகதி வெள்ளிக்கிழமை மாலை யாழ்ப்பாணம் சென்று அடைந்து விட்டோம். 19ம் திகதி சனிக்கிழமை
-14
 

காலை மானுடத்தின் தமிழ்க் கூடல் 2002 மாநாடு யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் கோலாகலமாக ஆரம்பமாகியது.
மாநாட்டிற்காக யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபம் புதுப் பொலிவு பெற்று விளங்கியது. போரினால் அழிவுற்ற இடமாக இல்லாது அழகு பொங்கி திகழ்ந்தது எங்களை வியப்பில் ஆழ்த்தியது.
மாநாட்டிற்காக பல்வேறு இடங்களில் இருந்து கலை, இலக்கிய ஆர்வலாகள் நிறையவே வந்திருந்தார்கள். மட்டக்களப்பு, கொழும்பு கண்டி வவுனியா, மன்னார், கிளிநொச்சி முல்லைத்தீவு என பல்வேறு இடங்களில் இருந்தும் ஆர்வலர்களும், எழுத்தாளர்களும் வந்து இருந்தனர்.
உண்மையில் பல ஆண்டுகளுக்கு பின்னர் கலை, இலக்கிய ஆர்வலர்கள் இப்படி தொகை ஆக கலந்து கொண்ட ஒன்று கூடல் இதுவாகத்தான் இருக்கும். பழம் பெரும் கலை இலக்கிய ஆர்வலர்களும், புதிய கலை, இலக்கிய ஆர்வலர்களும் ஒன்று கூடலில் ஆர்வமாக கலந்து கொண்ட நிகழ்வு உண்மையில் ஒரு அதிசயம் தான்.
எல்லோர் முகத்திலும் மகிழ்வு தாண்டவமாடியது. பலகால இடை வெளிக்குப் பின்பு கண்ட சந்தோசத்தில் யாவரும் ஒருவரை ஒருவர் கட்டித் தழுவி மகிழ்வை தெரிவித்துக் கொண்டனர். சந்தோசத்துடன் கூடிக் கூலாவி கதைத்து மகிழ்ந்தனர். இந்த இன்ரிய ஒன்று கூடலை சாதித்த பெருமை மானுடத்தின் தமிழ்க்கூடல் 2002 க்கே சாரும்.
முதலாம் நாள் நிகழ்வு ஆரம்பம் அன்று தேசியக் கொடியை அரசியல் துறை பிரமுகர் திரு. கி. பாப்பா அவர்கள் ஏற்றி வைத்தார்கள். அதனை தொடர்ந்து ஈகைச்சுடர் ஏற்றப்பட்டது. விழாச் சுடர் திரு. அ. விநாயக மூர்த்தி (யாழ். பாராளுமன்ற உறுப்பினர்) திரு. கு. கவியழகன் என்போரால் ஏற்றப்பட்டது.
வரவேற்புரையை யாழ் மாவட்ட அரசியல் துறை பொறுப்பாளர் திரு. சி. இளம் பரிதி நிகழ்த்தினார். பொது அமைப்புக்களின் ஒன்றியத் தலைவர் திரு. சி.வி. கே. சிவஞானம் தலைமை உரையை நிகழ்த்தினார்.
தொடக்கவுரையை பேராசிரியர் கா. சிவத்தம்பி அவர்கள்
நிகழ்த்தினார்.
-15

Page 9
போர் இலக்கியம் எனும் கருப் பொருளில் திரு. நிலாந்தன் சிறப்புரை நிகழ்த்தினார்.
இதனைத் தொடர்ந்து இலக்கிய அமர்வுகள் தொடங்கியது. முதல் நாள் கவிதை, சிறுகதை, குழந்தை இலக்கியம் ஆகிய அமர்வுகள் நடைபெற்றன. நான் சிறுகதை அமர்வில் விடுதலை நோக்கிய ஈழத்துச் சிறுகதை இலக்கியம் எனும் பொருளில் கட்டுரை வாசித்தேன்.
இறுதியில் கவிஞர் இன்குலாப் தமிழ்த்தேசியமும் தமிழ்க் கவிதையும் எனும் சிறப்புரை நிகழ்த்தினார். நிறைவுரையை விடுதலைப் புலிகளின் மகளிர் அரசியல் துறைப் பொறுப்பாளர் தமிழினி நிகழ்த்தினார்.
இறுதியாக கலை நிகழ்வாக புதுவை அன் பனின் நெறியாள்கையில் கரை தேடும் ஒடங்கள் எனும் நாடகம் நடைபெற்றது.
இப்படியாக ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிகழ்வுகள் நடைபெற்றன. நாவல், அரங்கு, மொழி பெயர்ப்பு திரைப்படம் பொது அமர்வு, காண்பியக் கலைகள், ஊடகம் போன்ற அமர்வுகள் நடைபெற்றன. அந்த அந்த துறைகளில் ஈடுபாடு உள்ளவர்கள் கட்டுரைகளை வாசித்தனர். இதில் தென்பகுதியில் இருந்து வந்த சிங்கள அறிஞர்களும் பலர் கலந்து கொண்டனர். நிகழ்வுகள் சிங்கள மொழியிலும் மொழி பெயர்ந்து உரை செய்யப்பட்டது மேலும் சிறப்பூட்டியது.
இதில் கலந்து கொள்ளவென இந்தியாவில் இருந்தும் சிறப்பு விருந்தினர் வந்திருந்தனர். கவிஞர் இன்குலாப் சிறுகதையாசிரியர் திரு. பா. ஜெயப்பிரகாசம் ஓவியர் ட்ராஸ்கி மருது, இயக்குநர் புகழேந்தி தங்கராஜ் இவர் காற்றுக்கு என்ன வேலி எனும் சிறந்த திரைப்படத்தை தந்தவர். திரு. இரா. திருமாவளவன் இவர் தமிழ் நாடு விடுதலை சிறுத்தைகள் அமைப்பின் தலைவரும் தமிழ் நாடு சட்ட மன்ற உறுப்பினரும் ஆவார்.
இதனை விட புலம் பெயர்ந்த எழுத்தாளர்களும் வெளிநாடுகளில் இருந்து வந்து கலந்து கொண்டனர். நான்கு நாட்கள் எப்படி போனது என்றே தெரியாமல் கழிந்து விட்டன. இன்னும் நடக்காதா, உரையாட நாட்கள் காணாதே? என்ற ஏக்கத்தில் பலர் தவித்ததை காணக் கூடியதாக இருந்தது. இப்படி ஒரு மானுடத்தின் ஒன்று கூடலை இனி எப்போ
-16

காண்பது? என்ற ஏக்கம் எல்லார் மனதிலும் இருந்தது.
நான்கு நாட்களில் இரண்டு நாள் நாடகம் இரண்டு நாள் பாரம்பரிய நாட்டுக் கூத்துக்கள் நடைபெற்றன.
இறுதி நாள் நிறைவுரையை கலை, பண்பாட்டுக் கழக பொறுப்பாளர் திரு. புதுவை இரத்தினதுரை நிகழ்த்தினார். அவர் இந்த ஒன்று கூடலின் நன்மையாக தமிழர் மையம் ஒன்றை பரந்து பட்டதாக கட்ட வேண்டிய தேவையை வலியுறுத்தி கூறினார்.
ஒன்று கூடல் நான்கு நாட்கள் நடந்து முடிந்த பின்பு, ஐந்தாம் நாள் பல்வேறு இடங்களில் இருந்து வந்தவர்கள் அனைவரையும் யாழ் வீரசிங்க மண்டபத்துக்கு அழைத்து பிரிவுபசாரம் கூறி மகிழ்வுடன் அனுப்பி வைத்தார்கள்.
ஆறுநாட்கள் எங்களுக்கு தங்குவதற்கு வசதியான இடங்களை
தந்தார்கள். காலை, மதிய, இரவு உணவுகள் இடையில் சிற்றுண்டி
தேநீர் என நன்கு உபசரித்தார்கள். சகோதரர்கள் போல் எங்களை
ஆறுநாளும் உபசரித்து எந்த வித குறையும் ஏற்படாது பார்த்துக்
கொண்டார்கள். ஆறாம் நாள் இனிய நிகழ்வுகளை மறக்க முடியாமல்
யாழ் நகர் விட்டு புறப்பட்டு திருக்கோணமலை வந்து சேர்ந்தோம். -சந்திப்பு சி.சுந்தரலிங்கம்
நாம் மாணவர்கள்
வி.ராஜினி
மாணவர் நாம் பள்ளியிலே ஆளுமைத் திறனுடனே மகிழ்ந்திருக்கும் காலமதில் நுண்ணறிவும் வளர்ந்திடவே கசடறவே கல்விதனை குழு வேலை நிகழ்வுகளில் கருத்துடனே கற்றிடணும் ஊக்கமுடன் இணைந்திடனும்
அன்னை தந்தையை மட்டுமன்றி ஆசான் எமைப் புகழ அறியாமை இருள் அகற்றும் அன்னை தந்தை பாராட்ட ஆசானையும் நாங்கள் சமூகத்தின் முன் மாதிரியாய் அருமையாய் மதிக்க வேணும் வாழ்ந்து வழிகாட்டிடணும்
-17

Page 10
உணர்வலைகள் - 1 - மறுப்பதில் என்ன பயம்?
திருமலை சுந்தா
என்னால் எதையும் மறுக்கமுடியாது. முடியாது போனாலும் என்னை வருத்தி கேட்பவருக்கு அவர் திருப்திப்படி ஏதாவது செய்து விடுவேன்.
வந்தவர் பலன் பெற்று வாழ்த்தி போய் விடுவார். அந்த ‘வாழ்த்து என்ற முருங்கமரக் கொப்பில் நான் ஊஞ்சல் ஆடுவேன். கொப்பு உடையும். இது எனக்கு தெரியும். தெரிந்தாலும் இதை ஏன் செய்கின்றேன்?
பல தடவைகள் இது பற்றி யோசித்துப் பார்த்திருக்கின்றேன். என்னால் எந்த முடிவுக்கும் வரமுடியவில்லை. இது ஏன்?
'உதவி செய் உபத்திரவம் கொடாதே' என் தந்தை எனக்கு போதித்த பாடம் இது. ஆனால் உதவி செய்து உபத்திரவமும் எனக்கே ஏற்பட்டால்.
மறுக் காது உதவி பெற்றவர்கள் என்னை பலருக்கு அறிமுகப்படுத்தி விடுவார்கள். வருவோர் தொகை கூடிக் கொண்டே போகின்றது. என்னால் தாங்கிக்கொள்ள முடியாது விட்டாலும் மறுக்க மட்டும் மனம் வரவில்லையே.
இது ஏன். ஒன்றை மட்டும் சொல்கின்றேன். இது சத்திய வாக்கு. தலையோடு வருவது தலைப்பாகையோடு போய் விடும் என்பார்களே அதே போல். என்னைச் சுற்றி என்னால் ஜீரணிக்க முடியாத எத்தனை, எத்தனையோ பயங்கரங்கள் எல்லாம் எப்படி விழகிப்போயின. எனக்கே அதிசயம். என்னால் என்னையே நம்பமுடியவில்லை.
என்னை நான் குளிப்பாட்டி, அழுக்கு தேய்த்து கழுவிப் பார்க்கின்றேன். உடல் சுத்தத்தை அல்ல, உள்ள சுத்தத்தைத்தான் குறிப்பிடுகின்றேன். என்னை சுயவிமர்சனத்துக்கு நாளாந்தம் உள்ளாக்கிப் பார்க்கின்றேன்.
என்னையே நம்பமுடியவில்லை. முடிவெடுக்கும் சக்தி என்னிடம் இல்லை என்பது உண்மைதானோ?
மறுப்பதில் எனக்கு விருப்பமில்லை அதனால் பயமில்லாது வாழ்கின்றேன்.
(தொடர்வேன்) -18

U600 cDb U60cDb......
கவிஞர்- சிகண்டிதாசன்
பறவைகள் போல பறந்து திரிய பலருக்கு ஆசை இருந்தாலும் சிறகுகளின்றி சிந்தனை மட்டும் செயல் வடிவம் பெற முடிந்திடுமா?
ஆழம் நிறைந்த ஆற்றைக் கடக்கும் அவசர தேவை இருந்தாலும் பாலம் படகு இல்லாமல் நாங்கள் பயணம் போக முடிற்திடுமா?
நெருப்பு அடுப்பு பாத்திரத்தோடு நன்னீர் நிறைய இருந்தாலும் இருப்பில் அரிசி பண்டங்களின்றி உணவு செய்ய முடிந்திடுமா?
நாளும் பொழும் நல்லதை ஆக்க நற்பணி முயற்சி செய்தாலும் காலம் நேரம் கூடி வராமல் காரியங்கள்தான் முடிந்திடுமா?
தினமும் நல்ல சிந்தனையோடு
செயல்திறன் காட்ட விளைந்தாலும்
பணமும் பலமும் இல்லாமலெந்த
படைப்பையும் உயர்த்த முடிந்திடுமா?
-19

Page 11
哆
大大大一五TT五一大大大 நூல் மதிப்பீடும் அறிமுகமும்
கூடில்லா குருவிகள். ஒலுவில் அமுதன்.
சூரியன்
‘கூடில்லா குருவிகள்' 'ஒலுவில் அமுதன்' அவர்களால் சிறுவர்களுக்கென எழுதிய கதைகளின் தொகுப்பாகும். மனக்கோலம், (கவிதைத் தொகுதி) மரணம் வரும் வரைக்கும் (கவிதைத் தொகுதி) கலையாத மேகங்கள் (சிறுகதைத் தொகுதி) நாம் ஒன்று நினைக்க (நாவல்) மனங்களிலே நிறங்கள் (சிறுகதைத் தொகுதி) கரையைத் தொடாத அலைகள் (நாவல்) போன்ற நூல்களின் ஆசிரியர் இவர்.
வீரகேசரி, நவமணி, தினக்குரல், தினக்கதிர், இடி, மூன்றாவது மனிதன், கலைமுத்து, சமாதானம், தினகரன் போன்ற பத்திரிகைகளிலும், சஞ்சிகைகளிலும் எழுதிய சிறுவர்கதைகளைத் தொகுத்து கூடில்லா குருவிகளை பறக்க விட்டிருக்கின்றார்.
எண்பத்தெட்டு பக்கத்தில் அழகான அட்டையுடன் விலை நுாறுரூபாய்க்கு ரக்ஷானா வெளியீட்டகம்" ஊடாக இந்நூல் தற்போது விற்பனைக்கு வந்துள்ளது.
சிறுவர்கள் விழங்கிக் கொள்ளும் அழகு தமிழில் அற்புதமாக எழுதியுள்ளார். சிறுவர்கள் விரும்பிப்படிக்க ஏற்ற கதைப் புத்தகம் இது. கதைகளுக்கு அழகான படங்களும் காணக்கூடியதாக உள்ளது. உங்கள் பிள்ளைகள் விரும்பிப்படிக்க பெற்றோர்கள் இந்நூலை வாங்கி கொடுக்கலாம்.
இந்நூலை - ரக்ஷானா வெளியீட்டகம்' அக்கரைப்பற்று - 05 என்ற முகவரியில் பெற்றுக் கொள்ளலாம். இச்சிறுவர் இலக்கியம் தந்த அன்பர் ‘ஒலுவில் அமுதன் அவர்களுக்கு எமது வாழ்த்துக்கள்.
நூல் மதிப்பீடும், அறிமுகமும் உங்கள் நூல்களுக்கு தேவையாயின் சிறகுகள்’ இதழுக்கு இரு பிரதிகளை அனுப்பி வையுங்கள். ஒரு பிரதி மாத்திரம் அனுப்பி வைத்தால் “கிடைக்கப் பெற்றவை' பகுதியில் நூல் விபரம் மட்டும் பிரசுரமாகும்.
-20

W சிறுகதை "dbr600 bl60UD 66)I600 buD’ ’ Gorpuazioko
எஸ். செல்வகுமார்
அமைதியாக மிக அமைதியாக திருக்கோணமலை நகரத்தின் அன்றைய காலைப் பொழுது புலரவாரம்பித்தது. ஆரவாரமில்லாமல், நிதானமாக சோம்பல் முறித்து, கொட்டாவி விட்டு. விடியல் தன் தூக்கத்தைக் கலைத்து நின்றது. மெல்லிய காற்று வெற்றிடங்களில் ஒடிச்சென்று உட்கார்ந்து கொண்டது. பறவை இனங்கள் கூட அதிகமாக ஆர்ப்பரிக்கவில்லை அவைகளுக்கும் கூடத் தெரிந்திருக்கும் இது சமாதானத்தின் நேரம் அமைதிக்கே இடம் ஆர்ப்பாட்டத்திற்கல்ல பரபரப்புத் தேவை இல்லை. அடையாள அட்டை ജൂൺങ്ങ6. "செக்டொயின்ற் இல்லை. ரவுண்டப் தொல்லை இல்லை. காளிகோயிலின் பெரிய காண்டாமணியின் ஒசை மட்டும் அந்த அமைதியினைக் கலைத்து, பின்பு ஒய்ந்து கொண்டது. அன்று ஞாயிற்றுக்கிழமை.
அரிய நாயகம் சற்று சோம்பலுடன் எழுந்து படுக்கையில் அமர்ந்தார். அரிய நாயகத்திற்கு ஐம்பத்தைந்து வயதை நெருங்கும் பருவம் ஏறுநெற்றியில் ஒரு தொகுதி கேசம் நரைவிழுந்திருந்தது. உயரமான உருவம் முன்னுக்கு எட்டிப் பார்த்தபடி சற்றுக் கூடுதலாகவே தொப்பை போட்டிருந்தது. தலையை நிமிர்த்தி எதிரே சுவற்றில் மாட்டியிருந்த கடிகாரத்தை நோக்கி விழிகளை வீசினார். “மணி அஞ்சாயிட்டுதோ”?.
தனக்குத்தானே சொல்லிக் கொண்டவராக. எழுந்து கை, கால்களை உதறி தூக்கத்தை விரட்டிவிட்டு, கொடியில் கிடந்த துண்டை எடுத்துத் தோளில போட்டுக் கொண்டே கதவை திறந்து வெளிமுற்றத்திற்கு வந்த போது குளிர்ந்த காற்று வேகமாய் ஓடிவந்து ஒட்டிக்கொண்டு சில்லிடவைத்தது.
வாசலில் மடித்து வைத்திருந்த சாய்வுநாற்காலியை எடுத்து மாமரத்தின் கீழ் போட்டு நீட்டி நிமிர்ந்து வசதியாக அமர்ந்து கொண்டார். அப் படியே மெதுவாக கணி களை மூடியபோது எங்கோ தொலைவிலிருந்து. காற்றோடு கலந்து. GoLD6O160) Du Jill b........... இனிமையாக வந்து காதில் நுழைந்தது அந்தப்பாடல். ”காணி நிலம் வேண்டும். பராசக்தி காணிநிலம் வேண்டும்.”
கண்களை மூடி தன்னை மறந்த நிலையில் இருந்த அரியநாயகம் சூடு பட்டவராகத் திடுக்கிட்டு விழித்துக் கொண்டார். அந்தப்பாடல் தொடர்ந்தது.
-21

Page 12
"பத்துப் பன்னிரண்டு தென்னைமரம் பக்கத்திலே வேணும். நல்ல முத்துச்சுடர்போல - நிலாவொளி முன்பு வரவேணும்.”
அரியநாகம் மீண்டும் கண்களை இறுக மூடினார். கடந்த மாதம் நடந்து முடிந்த.மனதை அழுத்தும் ------ (1) அந்ச்சம்பவம் மனதில் 9lԳԱlՖl.......
“இஞ்ச அடியாதையுங்கோப்பா.தயவு செய்து நான் சொல்றதக் கேளுங்கோ. அடியாதையுங்கோ. இப்ப.சொல்லச் சொல்லக் கேட்காம அடிச்சிப்போட்டு பிறகு வருத்தப்படுவியள்.”
அரியநாயகம் சினத்துடன் மனைவியை ஏறிட்டார்.
“என்ன சொல்ல வந்தனியெண்டு கெதியா சொல்லிப்போட்டு போ. எனக்கு வேலைகிடக்கு."
"அதான் அப்பா அடியாதையுங்கோ.”
அரியநாகம் பொறுமையிழந்தவராக மனைவியை முறைத்தார். இந்தா.என் பொறுமையைச் சோதிக்காம என்னன்டு சொல்லு.ஏன் அடிக்கக் கூடாது..?
"வேண்டாமப்பா. இப்பதான் இங்க வந்திருக்கோம் திரும்பவும் ஒட ஏலாது நடுத்தெருவிலதான் நிக்கவேணும்.”
"என்ர விசரக்கிளப்பாம. என்ன ஏதுன்னு சொல்லித்தான் தொலையன் அடிக்காம எப்படி மாட்டறது. 9 :
"இஞ்ச. நேத்துப்பின்னேரம் வீட்டுச்சொந்தக்காரம்மா வந்தவ மரத்தில கிடந்து விழுந்த தேங்காயை எடுத்திட்டுப் போக வந்த மனுசி. சுவத்தில ஆணி அடிச்சி படம் மாட்டினதைப் பார்த்துப் போட்டு. சத்தம் போட்டவ"
*9'y
“என்னவாம்.
'வீட்டை வாடகைக்குத் தந்தது இருந்திட்டுப் போரதுக்கு மட்டும் தானாம். இப்படி ஆணி அடிச்சி பழுதாக்கிறதுக்கு இல்லை எண்டு கத்துது மனுசி
‘போகேக்க எல்லாம் அடைச் சிக் கொடுத்திட்டுப் போவமெண்டு சொல்லியிருக்கலாம் தானே? ஆணி அடிக்காம. இத்தனை படங்களையும் எப்படி மாட்டறது? சாமிப் படங்களெல்லே.சும்மா தூக்கி ஒரு மூலையில்
-22

போட்டுட முடியுமா? அவையள் அப்படித்தான் சொல்லுவினம். வீட்டுக்காரர் எண்டா கொஞ்சம் அதிகாரமாத்தான் கதைப்பினம். இருந்தாலும் நாம நம்மட வசதிக்குச் சிலசில மாற்றங்களைச் செய்யத்தான் வேணும். ஒரு லட்சம் அட்வான்சும் ரண்டாயிரம் வாடகையும் குடுத்துத்தானே எடுத்திருக்கிறோம் நாங்கள் ஏன் பயப்பட வேணும்.”
"இஞ்ச சத்தம் போட்டுக் கதைக்காதிங்கோ. அயலுக்குள்ள கேட்டுப் போய்ச்சொல்லிடப் போயினம். பிரச்சனைப்பட்டுப்போட்டு இருக்க ஏலுமே..? எல்லாம் இன்னும் கொஞ்ச நாளைக்குத்தானே? சமாளிச்சிக் கொண்டு போவம்.”
என்னத்த சமாளிக்கிறது?. இந்த ஓட்ட வீட்டுக்கு குடுத்திருக்கிற அட்வான்சும் வாடகையும் அதிகம். இதுல ஆயிரத்தி எட்டு கண்டிஷன் வேற போடுகினம். இப்படித்தான் அண்டைக்கு 'அன்டனா'வை கழட்டி கொஞ்சம் உயத்திக் கட்டவெண்டு பெடியனை ஏத்திப் போட்டு நிக்கிறன், வாடகை வாங்க வந்த வீட்டுக்காரப் பெடியன் நக்கலாச் சொல்லிட்டுப் போறான். “தொடர்ந்து இருக்கிற எண்ணம் இல்லையோ.அப்பா பார்த்தாரன்டால் கத்துவார் ஒட்டுக்கு மேல ஏறின ஆளை இறக்குங்கோ.நீங்க இருந்திட்டு போயிடுவியள் கூரையில ஒழுக்கு கிழுக்கு ஏதுமெண்டால் எங்களுக்குதானே செலவு ’ எண்டு.
y
ஏதோ இந்தக் கலவரத்தால பாதிக்கப்பட்டுப் போனம். வாடகை வீட்டுல வாழனும் எண்டு தலையெழுத்து இருக்கேக்க யாரால மாற்ற ஏலும்? முந்தி எல்லாமே இருந்தது தானே? பதினஞ்சி பேர்ச்ல இதே சின்னக்கடையில காணியும் பார்த்துப் பார்த்து கட்டினவிடும். எங்களுக்கெண்டு சொந்தமா இருந்தது தானே. எவ்வளவு பிரயாசைப்பட்டு உருவாக்கின தென்னை,மா,பலா, கொய்யா. இதையெல்லாம் இந்தப் பாளாப் போன யுத்தத்துக்குக் குடுத்திட்டு இன்டைக்கு நிரந்தரமா ஒரு விலாசம் இல்லாம இங்கயும் அங்கயுமா அல்லல்பட்டுக் கொண்டு திரியிறம்..” என்ற மனைவி மரகதத்தை கவலையுடன் பார்த்தார் அரிய நாயகம்.
“மரகதம் நாம அன்றைக்கு இருந்த நிலைமைல இந்த உடமைகளை இழந்தது சாதாரணவிடயம். இல்லாட்டிப் போனா.எண்பத்திமூணு இனக் கலவரத்தில உயிர் ப் பலியாகியிருப்போம் நாமளாவது பரவாயில்லை.நம்ம பிள்ளைகள் நாலையும் இழந்திருக்க வேண்டிவந்திருக்கும். அன்றைக்கு நடந்தது சாதாரண கலவரமா? தமிழன் இருக்கும் இடங்களைத் தேடி வந்து வெட்டினாங்கள். சிங்களக் காடையர்கள் எத்தனை வீடுகள் சொத்துக்கள்.தீக்குப் பலியானது?

Page 13
எத்தனை குடும்பங்கள் கணவனையும், மனைவியையும் பிள்ளைகளையும், பலிகொடுத்திட்டு நடுத்தெருவுக்கு வந்தது? என் தங்கச்சி புருஷன் லொறியில சாமான் கொண்டு போகேக்க மங்கிபிறிஜில வெச்சி வெட்டிக் கொன்றாங்கள். ஏன் பிறிமாவுக்கு வேலைக்குப் போய்ட்டு பஸ்ஸில திரும்பி வந்த அத்தனை பேரையும் நாலாம் கட்டையில மறிச்சி வெட்டிக் கொன்றாங்கள். டயரைப் போட்டு எரிச்சாங்கள்.செத்தது அத்தனையும் அறிஞ்ச தெரிஞ்ச சனம்தானே.? இதுக்குப் பயந்துதானே மரகதம் அன்றைக்கு நாங்க, எங்கட சொந்த மண்ணைவிட்டு, சொந்த வீடுவாசலை விட்டு அகதியா மட்டக்களப்புக்குப் போனோம். நாலு பெடிப் பிள்ளைகளையும் உன்னையும் இழுத்துக்கொண்டு மட்டக்களப்புக்குப் போயும் நிம்மதியா இருக்க முடிஞ்சுதா.?”
"ஒமப்பா.அது ஆகப்பயங்கரம்.! இங்கிருந்து ஒடிப்போய் உங்கட மச்சான் வீட்டுல இருந்து கொண்டு கையிலிருந்த கொஞ்சநஞ்ச நகைகளை வித்து சின்னதா ஒரு சில்லறைக்கடை போட்டு வியாபாரம் நல்லா சூடு பிடிச்சுக் கொண்டு வரேக்க. தொடங்கிட்டுது. பிரச்சனை அப்படி அப்படியே கடையை போட்டபடி போட்டுட்டு, இரவோடு இரவா திருட்டுக் கும்பலைப்போல நம்ம குடும்பம் கொழும்புக்குப் போய்ச் சேர்ந்தது பயங்கர அனுபவம்” “அன்றைக்கு இரவு நாங்கள் வெளிக்கிட்டதால தப்பினம் அடுத்த நாள் காலையில வந்த ஆமிக்காரங்கள் ஊரை
எரிச்சி சுடுகாடாக்கிட்டுப் போனது மட்டுமில்லாம. நூற்றுக்கணக்கான சனத்தையும் சுட்டும் எரிச்சும் வெறியாட்டம் நடத்தினாங்கள்.ஒரேடியா கொன்று போட்டால் பரவாயில்லையே மரகதம். இந்தப் "பூசா’ எண்டு
ஒரு சித்ரவதைக் கூடம் இருந்ததே.அது படுபயங்கரம்.
கொழும்பில் பட்டது சாதாரணகஷ்டமா? ஏதோ உன்ர அக்காவோட உதவியாலையும் ஒத் துழைப் பாலையும் . வாடகைக் கு ஒரு 6f(6b........ தனியார் கம்பனில ஒரு வேலையும் கிடைச்சது. அந்தப் பிடிமானத்தைப் பற்றிக் கொண்டு நான் மனிதனாக இல்லாமல் இயந்திரமா உழைச்சேனே மரகதம்.”
”அத மறக்கத்தான் ஏலுமா? நீங்க கொண்டு வந்து தர்ற அந்த
குறைச் சலான மாத சம்பளத்தில் வீட்டு வாடகை, தண்ணியில்,
கரண்ட்பில்லு, பிள்ளைகள் படிப்பு. டியூசன் செலவு. நம்ம சாப்பாடு.
உடுதுணி. அப்பப்பா. நினைச்சாலே தலை சுத்துது கொழும்புல
வாழ்ந்த அந்தப் பதினைஞ்சி வருஷ வாழ்க்கை மிகப் பயங்கர அனுபவம்.
இருந்தாலும் கெளரவமாவும். பிள்ளைகளை நல்ல பழக்க -24

வழக்கங்களோடயும் வளர்த்து ஆளாக்க முடிஞ்சதுக்கு இறைவனுக்கு நன்றி சொல்லனுங்க.”
"கொழும்புல வாழ்ந்த இயந்திரவாழ்க்கை சலிச்சுப் போய்.என்ர சொந்த பந்தங்களோட பேச்சை நம்பி கொழும்பு வேலையை விட்டுட்டு பிள்ளைகளைக் கூட்டிக் கொண்டு திரும்ப இங்க வந்து இறங்க.சொல்லி வெச் சமாதிரி என்ர சொந்தமெல்லாம் என்னை நடுத்தெருவில விட்டுட்டுதுகளே மரகதம்.”
"இந்த இக்கட்டான சூழ்நிலைலையும் நாம கண்ணுக்கண்ணாக காத்து வளர் தி து நம் மட பரிள்ளைகள் நம் மள கைவிடலைப் பார்த்திங்களா. உங்கட உறவுசனம் செய்த துரோகத்தை எங்கடபிள்ளைகள் சவாலா எடுத்துக் கொண்டு கொஞ்சக் காலத்திலையே ராப் பகலா உழைச்சி இண்டைக்கு நல்ல நிலையில இருக்குதுகள். அதுகள்ர உழைப்பைப் பார்த்துத் தானேங்க வெளிநாட்டுச் சம்பந்தங்கள் தேடிவந்தது.”
“எப்படியோ மூணு பிள்ளைகளை வெளில அனுப்பிப் போட்டோம். நானும் நீயும் சிவாவும் மருமகளுமா நாலே பேர்தான் நம்ம குடும்பம் இப்ப. இருக்கிறதுக்கு ஒரு நிரந்தர வீடு இல்லை. கொழும்பை விட்டுவந்த இந்த எழு வருஷத்தில் நாலுவீடு மாறியாச்சி. ஒரு இடத்தில தண்ணிப்பிரச்சனை. ஒரு இடத்தில் கரண்ட் பிரச்சனை. இன்னெரு இடத்தில வீட்டுக்காரன் குடிகாரன். இப்ப இங்க ஆயிரம் கண்டிஷன். இந்த அவமானங்களையும், கேவலங்களையும் இனியும் பொறுக்க என்னால ஏலாது. கொழும்பில நான் வாடகைக்கு இருந்த நேரத்தில என்ர சகோதரங்களுக்கெல்லாம் கட்டணம் இல்லாத லொட்ஐாக இருந்தது என்ர வீடு. ஆனால் என்னைக் கைவிட்டுட்டாங்கள் மரகதம் பரவாயில்லை.
66
இஞ்ச.கணக்க யோசியாதைங்கோ.உங்களுக்குப் பிரஷர் வேற இருக்குது. இன்னும் கொஞ்ச நாளைக்குத்தான் இந்த அலைச்சல் பிள்ளைகள் வெளில போட்டினம் தானே..?
சின்னவன் சொல்லிக் கொண்டுதான் இருக்கிறான். கொஞ்ச நாள் பொறுத்துக் காசு அனுப்பிறன் காணி வாங்கி வீட்டை கட்டுங்கோ எண்டு.”
"இந்த வயசான காலத்தில இனியும் ஒத்துவாரப்பட என்னால ஏலாது. -25

Page 14
மரகதம் நாளைக்கே நான் விசாரிக்கப் போறன். ஒரு ஆறு பேர்ச்ல சின்னதா ஒரு துண்டு காணிய.எப்படியாவது வாங்கி.ஒரு கொட்டிலைப் போட்டுட்டு நிரந்தரமா ஒரு இடத்தில.மானம் மரியாதயோட வாழவேணும்.
“என்னப்பா சொல்லுறியள்.? இப்ப காணிவாங்கிறதெண்டால் கனக்ககாசெல்லே வேணும்?
“இந்த வீட்டுல அட்வான்ஸ் காசு ஒரு லட்சம் கிடக்கு வங்கியிலையும் கொஞ்சம் கிடக்குதுதானே..? உன்ர நகைகளையும் அடவுல வைப்போம். காணி உறுதிய வங்கில குடுத்தி’ "ாஞ்சம் காசு வாங்கலாம்.! நான் தீர்மானிச்சிட்டன் மரகதம். க்கே நல்ல இடமாப் பார்க்கப்போறன்.”
அரியநாயகம் முயற்சியை கைவிடாமல் நாலு இடம் ஏறி இறங்கினார். பல நபர்களின் தொடர்புகள் மூலம், உவர்மலை மட்டிக்கழி வீதியில் ஒரு வெறும் காணி, சிங்காரவேலன் மாஸ்டரின் பொறுப்பில இருப்பதை அறிந்து, அவரை அணுகியபோது, விபரம் தெரிந்தது. "பத்துப் பேர்ச் இருக்குது. காணிக்குச் சொந்தக்காரன் என்ற மச்சான் முறையானவன். அவன் கொழும்புலதான் இருக்கிறான். அங்க அவங்களுக்கு இரண்டு வீடு இருக்கிறதாலயம்.அவன்ர பிள்ளையல் கொழும்புச் சூழல்ல வாழ்ந்து பழகினதாலையும் இந்தக் காணி என்ர பொறுப்பில கனகாலமா கிடக்குது. விக்கத்தான் பார்க்கிறோம். உங்களுக்குப் பார்த்துப் பிடிச்சுப் போனதுன்னா பேசிமுடிச்சிடலாம்.” என்ற சிங்காரவேலன் மாஸ்டரை நம்பிக்கையுடன் பார்த்தார் அரியநாயகம்.
அரியநாயகமும் அவருடைய மூன்றுவது மகன் சிவாவும் துரிதமாகச் செயல்பட்டனர். சிவா.தன் மனைவியின் நகைகளையும் தாயின் நகைகளையும் வங்கியில அடவு வைத்துப் பணம் பெற்றுக் கொண்டுவர. அரியநாயகம் தன் இ.பி.எவ்.பணத்தை வங்கிக் கணக்கிலிருந்து நிறைவு செய்து வந்திருந்தார்.
அதேவாரத்தில் ஒரு நல்ல நாள் பார்த்து சிங்காரவேலன் மாஸ்டரிடம் காணிப்பெறு மதியின் அரைவாசிப் பணத்தை முற்பணமாகச் செலுத்தி.மீதிப்பணத்திற்கு மூன்றுமாதத் தவணை பெற்றுக் கொண்டு.அரிநாயகமும்.மகன் சிவாவும். நம்பிக்கையுடன் வீடு திரும்பினர்.
-26

"மரகதம் எல்லாம் நல்லபடியா முடிஞ்சுது. மூன்றே மாதத்தில மீதிப் பணத்தை எப்படியாவது குடுத்திடலாம். பிறகு நாங்களும் பத்துப் பேர்ச் காணிக்குச் சொந்தக்காரங்கள். முதல்ல ஒரு வீட்டைக் கட்டிக் கொள்ளலாம் தானே..? வர்ற வழியில நம்மட வீட்க்காரனையும் பெஞ்சாதியையும் கண்டனான். சொல்லிப் போட்டுத்தான் வாரன். வேற ஆகும் இளிச்ச ஆக்கள் இருந்தாப் பாருங்கோ.நாங்கள் காணிவாங்கிக் கொண்டு போகப்பேறாம். மூன்றே மாதத்தில வீட்டை காலிபண்ணிப் போடுவோம். அட்வான்சை ரெடி பண்ணுங்கோ எண்டு. மனுசன்ர முகத்தில ஈ ஆடலை. மனுசி இஞ்சி தின்ற குரங்காட்டம் என்னைப் பார்த்துக் கொண்டு நிற்குது. நானும் ஒரு கம்பீரத்தோட தான் கதைச்சனான். இனி நாங்களும் வீட்டைக் கட்டி வாடகைக்கும் விடலாம்.”
"மாஸ்டர் என்ன இப்படித் திடீரென்று மாத்திக் கதைக்கிறியள்.?” “என்னை மன்னிச்சுப் போடுங்கோ. அரியநாயகம்.என்ர மச்சானுக்கு யாரோ நல்லா ஆசை காட்டிப்போட்டினம். இப்ப யுத்தம் நிண்டு சமாதானச் சூழல் நிலவுறதால எங்கண்ட ஊருக்கு நிறைய சுற்றுலா வாசிகள் வருகினம். அதனால இந்தக் காணியில என்ர மச்சான் ஒரு விடுதி கட்டுறத்துக்கு விரும்பறான். அதனால காணிய விற்க மாட்டானாம். என்னை மன்னிச்சிடுங்க. இந்தாங்க நீங்கள் தந்த முற்பணம். நான் வாறன்.”
காணி நிலம் வேண்டும் - பராசக்தி காணி நிலம் வேண்டும் . அங்கு தூணில் அழகியதாய் - நன் மாடங்கள் துய்ய நிறத்தினதாய் - அந்தக் காணிநிலத்திடையே ஓர்மாளிகை கட்டிதரவேண்டும்”
அரிய நாயகம் அந்த சம்பவத்திலிருந்து மீண்டு மெல்லக் கண்களைத் திறந்தார். விழி ஓரங்களில் துளிர்த்திருந்த நீர்த்திவலைகளைத் துடைத்தார். அவர் மனம் முடிவுக்கு வந்திருந்தது. முதல் வேலையாக இன்று வாடகைப் பணத்தை நேரில் சென்று வீட்டுக்காரரிடம் கொடுத்துவிட்டு பக்குவமாய் பேசி. மன்னிப்பு கேட்டேனும் மேலும் சில காலம் தொடர்ந்து வீட்டில் குடியிருப்பதற்கு அனுமதி பெறவேண்டும் . sy
பொழுது நன்றாகப் புலர்ந்து விட்டது- அரியநாயகம் மெல்ல எழுந்தார்.
-27

Page 15
ந0ல்களும் நீங்களும9ம் கருத்தாள்வோம்
ഴ്ച്- -
மனிதர்களாகப் பிறந்து விட்ட நாங்கள் ஒவ்வொருவரும் எங்கள் ஆறாவது அறிவுக்கு ஊடாக, குறிப்பிட்ட ஒரு விடயம் சார்பாக பலதரப்பட்ட கருத்துக்களை எங்களுக்குள் வைத்துக் கொண்டிருக்கிறோம்.
ஏன்?. வளர்த்துக் கொண்டுமே இருக்கிறோம். அது வரவேற்கத்தக்கது.
ஆனால், அந்த குறிப்பிட்ட விடயம் சார்பாக எங்களுடைய கருத்துக்களை நாங்கள் எவ்வளவு தூரம் வெளிப்படுத்துகிறோம் என்பதில் தான், எங்களுடைய சிந்தனைகளுக்கும் அதனூடாகத் தோற்றம் பெறுகிற கருத்துக்களுக்கு மான வெற்றி தங்கியிருக்கிறது.
எங்களுடைய கருத்துக்களை நாங்கள் தெரியப்படுத்த வேண்டும். அதனைத் தெளிவுபடுத்த வேண்டும்.
அதற்கூடாக எங்களுடைய கருத்துக்களை எதிர்த்துவரும் எல்லாக் கருத்துக்களையுமன்றி ஏற்கக் கூடியவற்றை ஏற்று தெளிவுபடவும் முடியும்.
குறித்த ஒரு விடயம் சார்பாக நான் என்னுடைய கருத்துக்களைச் சொல்லுகிற போது, என்னுடைய எல்லாக் கருத்துக்களையும் எல்லோரும் ஏற்றுக் கொள்வார்கள் என்று நான் எதிர்பார்க்கக் கூடாது. எதிர்பார்க்கவும் (plguusig).
என்னுடைய கருத்துக்களைத் தங்கள் கருத்துக்களுடன் சம்பந்தப்படுத்தி, அதனை அங்கீகரிப்பவர்களும் இருப்பார்கள். அதனை எதிர்ப்பவர்களும் இருப்பார்கள்.
அதற்கு நாங்கள் எங்கள் கருத்துக்களை வெளிப்படுத்தியாக வேண்டும். பலருக்கிடையில் பரிமாறிக் கொள்ள வேண்டும்.
-28

கருத்துக்களைப் பரிமாறிக் கொள்வதன் மூலம் ஒரு குறித்த விடயம் சார்பான பலதரப்பட்ட கருத்துக்களை, பல்வேறுப்பட்ட தரப்பிலிருந்தும் நாம் பெற்றுக் கொள்ளக் கூடியதாக இருக்கும்.
(கருத்துக்களை நாங்கள் கவனத்தில் எடுக்கின்ற போது வயதை ஒரு பொருட்டாக எவரும் கொள்ளக் கூடாது,
நீ சிறியவன் / சிறியவள் என்று சொல்லியே எத்தனையோ நல்ல கருத்துக்களை எங்களவர்கள் சிதைத்திருக்கிறார்கள்.)
அந்த குறித்த விடயத்திற்கும் எங்கள் ஒவ்வொருவருடைய கருத்துக்களுக்குமிடையேயான தொடர்புகளை நாங்கள் ஆராய வேண்டும்.
என்னுடைய கருத்துக்களை ஒருவர், இல்லை. இல்லை ஒவ்வொருவரும் விமர்சிக்க வேண்டும்.
அதேபோல் ஒவ்வொருவருடைய கருத்துக்களையும் ஒவ்வொருவரும் விமர்சித்தாக வேண்டும்.
விசனத்திற்காகவன்றி, தனக்கு ஏற்புடையதல்லாத கருத்துக்களை விமர்சிக்கலாம்.
அதற்கூடாக, அந்த குறித்த விடயம் சார்பான ஓர் தெளிவான விளக்கத்தினையும் அந்த விடயம் சார்பாக மேலும் ஆராயக் கூடிய போதிய அறிவும் எமக்குக் கிடைக்கும் என்பதில் சந்தேகமில்லை.
ஒவ்வொரு விடயம் பற்றியதான என்னுடைய கருத்துக்களுக்கூடாக நான் உங்களுடன் கதைக்கப் போகிறேன். என்னுடன் நீங்களும் கதைத்தாக வேண்டும்.
ச(சி)ந்திப்போம்.
(இக் கருத்துகளுக்கு நீங்கள் உடன்படாவிடின் விமர்சிக்கும் உரிமை உங்களுக்கு உண்டு -சிறகுகள்-)
-29-.

Page 16
குறுக்கெழுத்துப் போட்டி இல-05
இடமிருந்து வலம் (1) சாத்திரம் (8) நீர்த்தாவரம் (திரும்பியுள்ளது) (11) 6Tulb (17) மனதை ஒருநிலைப்படுத்த
இது உதவும் (22) முக்கனிகளில் ஒரு
கனிதரும் மரமொன்று (25) பொட்டு (29) தாளவாத்தியம் (38) கணவன் (41) செவிலித்தாய்(திரும்பியுள்ளது) (44) இணக்கம் (குழம்பியுள்ளது)
மேலிருந்து கீழ் (1) வாழ்த்து (2) இலங்கையின் நாணயம் (4) இதற்கு மெழுகுவர்த்தி
உதாரணம் (தலைகீழ்) (6) ஒரு புலவர் (தலைகீழ்) (12) சஞ்சலம் (தலைகீழ்) (22) ஒரு நோய் (23) பெட்டி (தலைகீழ்) (28) விடாய் (தலைகீழ்) (31) SibsTu utb (39) அறிவு (தலைகீழ்) (41) சூழ்ச்சி (தலைகீழ்) போட்டி முடிவுத் திகதி -30-01-2008
குறுக்கெழுத்துப் போட்டி 03 இற்கான விடைகள்
இடமிருந்து வலம் மேலிருந்துகீழ் 01).சகவாசம் 01).சவால் 08).வாசல் 02).கசகசா 15).கல் 03).வால் 18).துவேசம் 05).வேகம் 23). FTub 07).கராம்பு 27).புலி 18).தும்பிக்கை 36).மைக்கல் 20).சலிப்பு 41).புகை 29).பல்லி 43).பசை 37).கசை 46).கைதி 42).சிகை
சிறகுகள் குறுக்கெழுத்துப்போட்டி 03 இற்கான பணப் பரிசை பெறுபவர் ப.பனோச்கியான் மசூதி வீதி, திருக்கோணமலை.
பாராட்டை பரிசாகப் பெறுபவர்கள்
தங்கராசா சோபிதா, பாடசாலை வீதி நிலாவெளி, திருக்கோணமலை. கெ.நித்தியா, 245, நீதிமன்ற வீதி, திருமலை. தெ.தர்சினி, ஆஸ்பத்திரி வீதி, திருமலை இ.ஜெனா, இல 36 ஒழுங்கை,வெள்ளவத்தை. க.ஆறுமுகம், சித்திரைமேனி, இழவாலை. அ.சர்மிளா, கோயிற்புதுக்குளம், வவுனியா. பெனாஸிரா ஏ.பாபு, 36/20 தக்கியா றோட் திருக்கோணமலை. ஆ. சத்தியசீலன், இ.து.அ.சபை, திருமலை. ந.அனுசாந்தன், மசூதி வீதி, திருமலை.
இப்போட்டியில் பங்கு பற்ற விரும்புபவர்கள் கீழே உள்ள விலாசத்தை வெட்டி ஒட்டி அனுப்பி வைக்கவும் வேண்டும்.
01.
02.
03.
0.
05.
06.
07.
08.
09.
சிறகுகள் குறுக்கெழுத்து போட்டி - இல.05 சிறகுகள் சஞ்சிகை 514, மின்சார நிலைய வீதி, திருக்கோணமலை.
-30
 

6đi dòs (GBBTđô (ÖB. அன்புடன் சிறகிற்கு.
வளரும் படைப்பாளிகளுக்கு களமமைத்து கொடுக்கும் சிறகின் சேவை அள்வற்றதும் பாராட்டுக்குரியதாகும். சிறகு தனது பாணியில் ஆக்கங்களை தொகுத்து தருவது அருமை. சிறகிற்கு அன்பான வேண்டுகோள் யாதெனில், “கலை இலக்கிய என்ற வரையரையை விஸ்தரித்து சமூக கலை இலக்கிய சஞ்சிகை என்ற வரைபினுள் சமூக அவலங்களையும் சித்தரிக்கலாம் தானே?
சிறகின் தொடர் வாசகி வீஜெயந்தா, தோணிக்கல், வவுனியா.
சிறகுகள் ஆசிரியர் குழுவிற்கு வந்தனம் பலகோடி.
இலைமறை காய் போல உறங்கிக் கிடந்த உள்ளங்களை ஊக்குவித்து ஆக்கங்களை தாங்கி வரும் "சிறகே நீ வாழ்க’ சிறகுகள் இதழ்கள் அனைத்தும் தொடராகப் படித்து வருகின்றேன். நான்காவது இதழ் புதுப் பொலிவுடன் விளங்கியது. குறுக்கெழுத்துப் போட்டியும் அறிவுக்கு விருந்தாகின்றது. குறுக்கெழுத்துப் போட்டியில் சில தவறுகள் (இலக்கப் பிழைகள்) தென்படுகின்றது. அவை நிறுத்தப்படல் வேண்டும். சிறகு திக்கெங்கும் பரந்து பவனி வர வேண்டும். என்பதே என் பேரவா. நன்றி. எஸ்.வான்மதி
பாலையூற்று, திருக்கோணமலை,
ஆசிரியர்களுக்கு
சிறகை தொடர்ச்சியாக படித்து வருகின்றேன். ஒவ்வொரு சிறகும் புதுப்புது அம்சங்களைத் தாங்கி வருகின்றது. அத்துடன் படிப்படியான முன்னேற்றமும் காணப்படுகின்றது. அட்டைப்படத்தில் கவனம் செலுத்துங்கள். சிறகுகள் இன்னுமின்னும் உயர பறந் தட வாழ்த்துகின்றேன். நன்றி. அ. பிரசாத்
திருக்கோணமலை.
பற்றிய ஆக்கபூர்வமான ஆலோசனைகளையும் ளையும் எதிர்பார்க்கின்றோம். உங்கள் கருத்துக்கள் வாசகர் பகுதியை அலங்கரிக்கும். ಫ್ಲಿ: ಕ್ಲಿ
ள பிரயோகிக்க வேண்டாம்.
ப்பெயர், சரியான முகவரி ஆகியவற்றை மறக்காமல் குறிப்பிட விரும்பினால் புனைப்பெயரையும் எழுதி அனுப்பலாம்.
-31