கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: கவிஞன் 1969.03

Page 1
'56íÎ6}6üI' 6uffữöff 6]][Lü
விற்பனைக்காகக் கவிஞன் கடைகளில் தொங்கவிடப்பட மாட்டாது. ஆகையால், கவிஞன் வாசகர் வட்டம்" என்ற ஓர் அமைப்பை உருவாக்கி உள்ளோம். அதற் காக நாடு முழுவதில் இருந்தும் உறுப்பினர் சேர்த்துக்கொள்ளப் பட்டிருக்கிருர்கள். கவி தையில் விருப்புடைய யாரும் அதில் சேர லாம்; உறுப்பினர்களின் தொகைக்கேற் பவே இதழ் அச்சிடப்படுகின்றது. உறுப் பினர் எவ்வித முற்பணமோ சந்தாவோ செலுத்தவேண்டியதில்லை.
இத்திட்டத்தை கவிதை அன்பர்கள் மகிழ்வுடன் ஏற்றுக்கொள்வார்கள் என்றே நம்புகின்றேன். உறுப்பினர் தொகை அதி கரிப்பது மகிழ்ச்சிக்குரியதாகும்.
கவிஞர் கள் இதில் விசேட கவனம் செலுத்துவார்கள் என்று எதிர்பார்க்கிறேன். கவிதையில் தரம் ஒன்றே எமது குறியாகும். சிறந்த படைப்புகள் மகிழ்வுடன் ஏற்றுக் கொள்ளப்படும். அவற்ருல் பயன் அடையும் ரசிகர்களை இனம் கண்டு தருவதிலும் கவிஞர் களின் துணை பெரிதும் வேண்டப்படுகின்றது.
- தொகுப்பாளர்
Printed by Rev. Bro. Joseph B. Murray S. S. J. at the Catholic Press, 18, Central Road, Batticaloa, and Published by A. H. M. Meeralebbe for
Readers Association, Noori Manzil, Kalmunai - 6, Ceylon.
 

முருகையன். நீலாவணன். பஸில் காரியப்பர். பாண்டியூரன். அன்பு முகையதின் மஹாகவி, மு. சடாட்சரன். மருதூர்க்கணி. ஜேர்மன் கவி - ஹான்ஸ் மெக்னெஸ் என்சன் ஸ்டூபதர்
Θ. Επέστη μποπri : எம். ஏ நூஃமான் *エ エリ Gausfuf@。
சண்முகம் சிவலிங்கம்.
山齒鼩ó 1969
画。重-25

Page 2
KAVIGNAN Vol. I.
Edited by M. A. Nubman, For Readers Association, Kalmunai Ceylon.

கவிஞன் காலாண்டுக் கவிதை இதழ்.
நூறிமன்ஸில், கல்முனை - 6
இலங்கை.
இன்றையத் தமிழ்க்கவிதை பல புதிய பரிணுமங்களுடன் வளர்ச்சி யடைந்து வருவதை நம்மால் அவதா னிக்க முடிகின்றது. எனினும் எமது கவிதைகளுக்குப் போதிய வெளியீட்டு வசதிகள் இல்லை. விசேட மலர்களி லும் வாரந்தப் பதிப்புக்களில் எங்கோ ஒரு மூலையிலுமே இன்று கவிதைக்கு இடம் அளிக்கப்படுகின்றது. அதனல் எமது கவிதை சரியாக அறிந்து கொள் ளப்படவில்லை. தமிழ்க் கவிதை பற் றிய ஒரு சரியான மதிப்பீட்டுக்கும் இது வழிகோலவில்லை.
ஆகையால்,
கலைமதிப்புடைய தமிழ்க் கவிதைகளை இனங்காண்பதற்காக, எமது கவிதை களுக்கு நிலை யா ன - வாசக மதிப்பு டைய ஒரு வெளியீட்டுக் களத்தை உருவாக்கும் நோக்குடன் கவிஞன் வெளிவருகின்றது.
விரிந்துவரும் தமிழ்க் கவிதைப் பரப் பின் சகல புதிய அம்சங்களுக்கும் பக்கச்சார்பற்ற ஒரு வெளியீட்டுக் கள மாக இருப்பதில் கவிஞன் என்றும் பின்னிற்காது. கவிதை பற்றிய விமர் சன நோக்கை வளர்ப்பதிலும் சம காலத்துச் சர்வதேசக் கவிதைகளைத் தமிழுக்கு அறிமுகம் செய்துவைப்ப திலும் கவிஞன் கவனம் செலுத்தும்.
-தொகுப்பாளர்.

Page 3
சந்தியிலே நிற்கிறேன்.
சண்முகம் சிவலிங்கம்.
சந்தியிலே நிற்கிறேன்; பகல் சாய்கிறது.
மங்கல் இனி வந்துவிடும் அதைத் தொடர்ந்து வரும் விடிவு.
அதுவரையில், இந்த மக்கள் போய்த் துயில்வர்.
இருளகன்று விடிகையிலே, முந்திடுவார்; வேலை செய்வார்; முறுவலிப்பார்; பின்னிரவு வந்துவிடும் போய்த் துயில் வார். .
மறுதினமும் எழுந்திருந்து “இன்று மட்டும்இனித்துன்பம் இல்லை” என்பார் போய் உழைப்பார்.
சந்தியிலே நிற்கிறேன்; பகல் சாய்கிறது.
வயிரண்ணன் வண்டியிலே சம்மாளம். மாடிரண்டும், தளர் நடையில் சென்ற தடம் செல்லும்
ஆங்கே, திடீரென்று அவர் விழித்து “இந்தா படித்தா” என் றிரைகிருர்,

எனினும் அந்த, நொந்தலுத்த மாடுகளோ நோவறியா
ஆதலினல், வந்த நடையே தொடரும் வயிரண்ணனும் அயர்வார்.
சந்தியிலே நிற்கிறேன்; பகல் சாய்கிறது.
என் இனிய சுந்தரக் கனவுகள் - வான்
தொடர்கிறது . . .
சுமந்த மக்கள், வெந்தெழுவார் சமர் செய்வார் வில் நிமிர்த்தும் துரியர் படை வென்றிடுவார் நல்லபல விதி செய்வார் அது வரையில்,
இந்த மக்கள் போய்த் துயில்வார்
இருள் அகன்று விடிகையிலே, முத்திடுவார்; வேலை செய்வார் முறுவலிப்பார்
அவ்வளவே!

Page 4
அகிலத்தின் மையங்கள்.
முருகையன்.
தனிமையில் நின்றேன், வயல் வெளி நடுவில்: என்னைச் சூழ எழுந்து வீசிய காற்றில் நெல் மணம் கமழ்ந்து கொண்டிருந்தது. நாலு திசையிலும் பார்வையை ஒட்டினேன். எட்டுத் திக்கும் என் கட்புலம் புகுந்தன. நிலத்தையும் நோக்கினேன்; நீல வானையும் என் கண் கூர்மை எட்ட முயன்றது. அடிவான் எனது பார்வையில் விழுந்தது.
மண்டலமிட்டு வளைந்த கோட்டிலே அடுத்த சிற்றுார்ப் பனைகள் தெரிந்தன. கண்ணுக் கெட்டிய துரரம் வரையும் ஓவென விரிந்த ஒரு வெளி ஆகையால், வடக்கிலே இரண்டொரு மருதங்கன்றுகள் தனித்து நின்று தலையசைத்து ஏங்கின. பிள்ளையார் கோயில் மணி அசை கோபுரம் மெள்ள ஒன்றியாய் மிளிர்ந்து கொண்டிருந்தது.
மேற்கிலே சூரியன் விழுந்து கொண்டிருக்கிருன் மண்டலமிட்டு வளைந்தது தொடுவான். இருள் மெதுவாக இறங்கவும் வெள்ளிகள் கண்களை விழிக்கத் தொடங்கின.
அண்ணுந்து பார்த்தேன் - அது ஒரு கரிய பிரமாண்டமான பெரிய கிண்ணியே! வெள்ளிகள் கண்களை விழித்துச் சிமிட்டின. பாதிக் கோளக் கவிழ்ப்பே வானமாம். நான் அக்கவிழ்ப்பின் நடுவிலே இருந்தேன். தரை ஒரு வட்டத் தட்டம்; அத்தட்டின் மையம் என் கால்களில் வந்து விழுந்தது. தொடுவான் மண்டல வட்டமும் கூட நடுவிலே என்னையே நாட்டி வைத்தது.

எனக்குப் புலப்படும் அகிலம் முழுவதும் என்னையே மையமாய்க் கொண்டு திகழ்ந்தது. நானே மன்னன்! முதல்வன் நானே இறைவன் என்று நம்பினேன்.
நாலாம் தெருவின் நல்ல தம்பியும், நயாகரா வீழ்ச்சியின் நதானியேல் பிலிப்சும், குற்ரு லத்துக் குமார் ஜெய்சிங்கும் எஸ்கிமோ இனத்தவனகிய ஜோவும், நானே மன்னன்; நானே முதல்வன் நானே இறைவன் என்று கூ வினர்.
ஏனையோர் இதனை அறியார் போலும்! நானே அகில நடுவில் இருப்பவன்.
நானே அகில நடுவில் இருப்பவன்.
இப்படி யாவரும் எண்ணலாயினர். தமிழகத்தாரோ தாம் நடு என்றனர். இலங்கையர் எனிலோ யாம் நடு என்றனர். மற்ருெரு சிற்றுார் வயோதிபர் - குருக்கள் சர்வமும் தனது தலையிலே எனவும் எண்ண லாயினர், இறுமாப்புடனே!
திருவாரூரிலே தேர் விழா நடந்தது. ஒவ்வொரு நாணினை’ உள்ளே வைத்த தலை பல ஆயிரம் சார்ந்தன ஒருங்கே. அகில மையங்கள் ஆயிரம், ஆயிரம் அங்கே கூடி அமர்க்களப் பட்டன. எனக்குப் புலப்படும் எனது பேருலகின் அண்ட சராசர மையம் நான் ஆயினும், அகில மையங்களோ அனந்தமாம் என்பதைத் தேர் விழா செப்பமாய் எனக்குப் போதனை செய்து புரிய வைத்ததே.

Page 5
புகைவண்டிக்காகக்
காத்திருக்கையில் . .
எம். ஏ. நுஃமான்.
வண்டி இன்னும் வரவே இல்லை. கைகளிற் சுமையுடன் காத்திருக் கின்றேன் வண்டி இன்னும் வரவே இல்லை.
கோட்டைப் புகைவண்டி நிலையம் கூட்டமோ எங்கணும் அலையும். பெட்டிகள்
படுக்கைகள் பிறபொருட் சுமைகள் அங்கும் இங்கும் ஆட்களோ அதிகம்.
வாயில் இருந்து புகைவிடும் வண்டிகள் வாயில் இருந்து புகைவிடும் மனிதர்கள். சப்பாத் தோசை
. என்னும் ... . . . . با رنگ .....-اق எப்புறம் திரும்பினும் இரைச்சலே கேட்கும். கதைப்பும் சிரிப்பும் காதிலே மேதும். சாமான் வண்டியின்
தடதடச் சத்தம் இடைக்கிடை பெரிதாய் என்னைக் கடக்கும்.

வண்டி இன்னும் வரவே இல்லை. இத்தனை பேரின்
மத்தியில் - தனியே கைகளில் சுமையுடன் காத்திருக் கின்றேன், வண்டி இன்னும்
வரவே இல்லை.
எத்தனை மனிதர் இங்கிருக் கின்ருர்! இருந்தும் என்ன? இருந்தும் என்ன? சிறுநீர் கழிக்கச் செல்லலாம் என்ருல் யாரிடம் எனது கைச்சுமை கொடுப்பேன்.?
உடறட்ட மெனிக்கா .
உத்தர தேவி . ஒவ்வொன் முக ஒடிச் சென்றது. எனது வண்டியை இன்னும் காணேன். இத்தனை மனிதர்
மத்தியில்,
தனியே கைகளில் சுமையுடன் காத்திருக் கின்றேன், வண்டி இன்னும்
வரவே இல்லை.

Page 6
பாவம் வாத்தியார் !
یاڑ
நீலாவணன்.
வாழத் தெரியாமல் வம்புகளில் போய்மாட்டும் ஏழைப் புலவர் பெருமானே, என்ன இது! கையிலே மூட்டை முடிச்சும் கவலைகளோர் பையிலுமாய் நிற்கின்றீர்! "பஸ் சுக்கோ? நீண்டதொலை தூரப்பயணம் போல் தொந்தரவே!-எங்களது ஊரார் உமையிந்த ஊரைவிட்டே ஒட்டுதற்காய்.
கல்முனைக்குப் போயலைந்து காசும் கொடுத்து "ரைப்பிங்" செல்லையா' அண்ணரது சிந்தனையைப் போட்டுடைத்து, வெல்ல முடியாது சோடித்த பிட்டிசத்தில்சொல்ல வெட்கமே; எனினும் சொல்லாமலும் போக ஒண்ணு திருக்கிறது! ஒம் அந்தப் பிட்டிசத்தில் உன்னுணை நானுமொரு கையொப்பம் போட்டதுண்மை! ஏனென்பீர்? ஏதும் எனக்கோ தெரியாது ..! நானுமிந்த ஊரில்நெடு நாளாக வாழ்கிறவன் . போடென்ருர் போட்டேன்! நான் போடாதுவிட்டிருந்தால்ஓடென்றுமையேபோல் ஊரை விட்டே ஓட்டிவிட்டடால்..?
ஊரையே கூழாக்கி ஊதிக் குடிக்கும் கைக் காரரிவர்! கை நிறையக் காசும், எடுபிடியாள், ஏராளமான இனசனமும் உள்ளவர்கள்! ஆரவரைக் கேட்பவர்கள்? ஆலயங்கள் - கூப்பன் கடைகள் அரசாங்க நன்கொடைக் காசு கிடைக்கின்ற சங்கங்கள் எத்தனையோ .அத்தனையும் ஆண்டே அனுபவிக்கும் ஆகப் பெரியவர்கள்! வேண்டியவர்! - உம்மை விளங்காமல் வைக்கவில்லை!
நீர் இந்த ஊர்க்கு நியமனம் பெற்றுவந்த நேரத்தில், இவ்வூர் இருந்த நிலைமைகளும், ஆறே ழே ஆண்டில் அடைந்த வளர்ச்சியையும், ஊரோடு கூட உணர்வேன் யான்; உண்மையில் நீர் வாழத் தெரியாத வாத்தியார் தான் அண்ணே!

ஏழேழ் தலைமுறையாய் எம்மூரின் கோயில் மதிலாய் உயர்ந்து நிற்கும் மாபெரிய காடு! அதிலே உமக்கென்ன அக்கறையோ? பள்ளிச் சிறுவரை விட்டுச் சிரைத்து நிலவேர் அறுத்துப், பிடுங்கி, அகற்றி, அம்மன் வீதியினை வெட்டை வெளியாக்கி வெள்ளை மணல் கொட்டிவைத்தீர்! புற்றுடைத்துப் பாம்புகளும் போக விடைகொடுத்தீர்! மாரியம்மன் நேர்த்தி மதுவாக ஆண்டுதொறும் சாராயம் கொண்டு தருவார்கள், சான்றேர்கள் ஆனபக்தி மான்கள்! அவற்றையெலாம் - பூசாரி ஆணையிடக் கொண்டுபோய் 'அம்மன் பரிகலங்கள்" எல்லாம் மதுவெடுக்க என்றிருந்த காட்டையெலாம் தொல்லைமிகப் பட்டுவெட்டித் துப்புரவு செய்தீரா.! அம்மாள் உமது செயலை ஒரு பொழுதும் சம்மதியாள் என்பதையூர்ச் சான்றேர்கள் நன்கறிவார்! அம்மட்டுந் தான.? அவசரக்காரன் நீர்! சும்மா கிடவாமல் சோலிக்குள் மாட்டுகிறீர்!
கூப்பன் கடையோர் குடும்ப நிருவாகக் காப்பில் இருப்பதையும், கல்லாவூர்ப் பாமரர்க்கு உள்ளபடி பண்டம் உதவா துறவினர்க்கே கள்ளத் தனமாய்க் கடத்தலையும் - கண்டித்துப் பேசி, அதைப்பெரிதாய்ப் பேப்பரிலும் போடுவித்தீர்! வாசித்துக் கேட்டவர்கள் வாழ்த்தினர்! வாய் திறந்து பேசினல்...அன்றுமது வீட்டிற் பொழிந்த கற்கள் *வேசி மகன்’ என்ற வெறிச் சொற்கள். பாய்ந்துவந்தே எங்கள் மனைக்கும் எரியூட்டி வீணுகச் சங்கை குறைத்திந்தச் சந்தியிலே விட்டிருக்கும்!
பள்ளிக்கூடத்தில் பகலிரவாய்ப் பாடுபட்டுச் சொல்லிக் கொடுத்துச், சுணையேற்றிக், கல்வியிலே நாட்டத்தைக் கூட்டி நயம்பலவும் துய்க்க வைத்தீர்! வீட்டுக்கு வீடு பிள்ளை வீசிப் பிடித்தீரே! பெற்றர் தினங்கள்-விளையாட்டுப்போட்டி-மற்றும் சுற்றுலா என்றெல்லாம் சொல்லிக் கொடுத்தீரா!.

Page 7
வாசிக சாலை, வளர்ந்தோர் வகுப்புவைத்தீர்! காசு விளையாட்டுக் காவாலிக் காளைகளை ஏசி, விவசாயம் - ஏற்ற தொழில் செய்ய வைத்தீர்! கூசும் படியாம் குணக்கேட்டைக் கொல்லுகிறீர்! 'நாடகங்கள் போட்டுரை நையாண்டி செய்கின்ருன்! வாடா வெளியாலே வாத்தியுனைப் பல்லுடைப்போம்!" என்ருர் சினந்தார் எழுந்தார்கள் போடிமக்கள், என்ன புதினம்! - இளந்தாரிக் கூட்டமென்று. பாலன், அழகையா, பார்த்தன், சிவம், சாமி வேலன் வயித்தி உங்கள் முன்னைநாள் மாணுக்கர் கூட்டத் திருந்து குதித்து வெளியேறி வீட்டிலிருந்து கொம்பும் வீரர்களைக் கூப்பிட்டே .
"உண்மைகளை ஊரில் உறையும் சிறுமைகளை, ! சொன்னல் உமக்குச் சுருக்கென்று தைப்பானேன்? பிள்ளையார் கோயில் பெயரில் பிறவூர் வாழ் வள்ளல்கள், தானம் வழங்கும் வயல் நிலங்கள் பெற்றுவந்த கோயில் பிராமணனைத் தன்னுடைய கற்பால் வளைந்து கலியாணம் செய்தவளின் சொத்தாமோ?. கோயிற் சுதந்திரமோ? குஞ்சியப்பன் அத்தானும் மாமாவும் அண்ணுவும் தம்பியுமாய்ச் சாப்பிடவா கூட்டுறவுச் சங்கக் கடை? சனத்தை ஏய்ப்பதற்கா? இல்லையது எல்லோர்க்கும் உள்ளதுவோ? சாக்குவிற்ற காசெங்கே? சாராய மாயிற்றே? போக்கணம் கெட்டவரோ போடிமக்கள்? - சங்கத்துக் கட்டிடம் கட்டவென்று காசுபெற்றீர் ஆட்சியிடம்: எட்டு வருடங்கள்! எங்கேயோய். கட்டிடம்? கல்வீடு - உழவுமெஷின் - கார் - காணி - கையிருப்பு எல்லாம் உமக்குமட்டும் எவ்வகையாய் எய்தினவோ! ஏதிவைகள்? ஏதிவைகள்? எல்லாம் பகற் கொள்ளை! சாதுக்கள் போன்றே சனத்துள் நடிக்கின்றீர்! எல்லாம் எமக்கும் புரிகிறது! கள்ளர்களே! [கிறீர்? 'பல்லுடைப்போம் என்றெவரைப் பண்புகெட்டுப் பேசு

என்றுரத்துக் கேட்டார் இளைஞர், எதிர்த்தவரை; ஒன்றும் விளங்காமல் ஊர்ப்பெரியார் யோசித்தார்! அன்றிரவே பிட்டிசத்தை அச்சடித்தார்! - உம்மீதில் ஒன்றிரண்டா குற்றங்கள்!- ஊரைக் கெடுக்கின்றீர்!, சாராயம் போடுவதே சத்தமிடக் காரணமாம்!, ஆரோ ஒருத்தி தொடுப்பு! அவள்பேர் பூரணமாம்!, ஆரையும் கண்டால் அரசியலே பேசுகிறீர்!, காரணம் நீர்.ஆள் பெரிய "கம்யூனிஸ்ட் காரணும்!, மாணவர்க்கும் அந்த மனப்பான்மை ஏற்படுத்தி மானம் கெடுக்கின்றீர். மாபெரிய போடிகளை !
"ஏன்? என்றிவற்றை விசாரித்து - இங்கிருந்தும் ஏன் இவரை மாற்றல் இயலாது?’ என்று அமைச்சு முதல் கல்வி ஆலோச கர் வரை
உமக்கு நடவடிக்கை . ஓம்! உடனே வேண்டுமென "இங்கிலிஷில் நன்ரு ய் இயற்றி இருந்தார்கள்! சங்கிலிப்போடி குற்றச் சாட்டர்;. அதைத்தொடர்ந்துபத்தாண்டின் முன்பு செத்த பல்லன் கணபதியன், வத்தவக் காயன், வழுக்க மொட்டை மூத்ததம்பி, பத்தினியன், குஞ்சன், பனையான், பலாக்கொட்டை, பொத்துவிலான் பொன்னன், பொருக்கன், நரைச்சீனி, கண்டாரை வாலாட்டிக் கந்தன் முதலானுேர் கண்டபடி யாகவெல்லாம் கையொப்பம் போட்டிருந்தார்!
நானெருவன் மட்டுமுமை நண்பரே ஆதரித்தல் ..? வீனென் றுணர்ந்தேன்; விதி யென்றே ஒப்பமிட்டேன்!
மாற்றம் தொலைக்கோ? மனிதருள்ள ஊர்தானே? ஆற்றைக் கடக்கும் அவதிகளும் உண்டாமோ? பள்ளி தளபாடம் உள்ள நல்ல கட்டிடமோ? பிள்ளைகளும் ஆங்கு படிக்க வருவாரோ? போக்கு வரவு பொருந்தும் இடமிலையேல் ஆக்கினைதான் ஐயோ!. அதற்கென்ன போய்வாரும்?
1 O

Page 8
நீதியைப் பற்றி நினைவார்க்கு நேர்வதிதே! சாதிக்கு மட்டுமே சங்கைசெய்யும் எங்களின் ஊர்! நீர் உமது வார்த்தைகளால் நீதித் தீ மூட்டுகிறீர் ஆர்செய்வான் நீரோர். அரசாங்க. ஊழியன்!
வாழப் பழகுங்கள் வாத்தியார் வையகத்தில்ஆள்வோர் சிலபேரும் ஆளப்படுபவர்கள் கோடிக் கணக்கும் குவிந்து, தமை இழந்து, பேடிகளாய்ப் - பேயாய்ப் - பிணமாய்க் - குருடா கிச், சாராயத் துள்ளிகளில் சத்தியத்தைப் பூசிப்பார்! ஆராண்டால் என்ன? அந்த ஆள்வோர் திருப்புகழைப் பாடி, நான் என்னுடைய பங்கைப் பெறுகின்றேன். கூடினல் நல்ல குடி - விருந்து கொண்டாட்டம்! எல்லாம் கிடைக்கும் எனக்கு! - உமக்குமவர் இல்லையென்ற சொன்னுர்கள்? ஏனிந்தப் பொல்லாப்போ!
ஆராரோ அக்கினியை அள்ளி விழுங்குகிருன்! ஊரை ச், சுளையிருக்க உள்ளால் உறிஞ்சுகிருன்! காணுமலா ஊரார்? கண்டாலும். பேசாமல் . மானமாய் வாழ மனத்தைப் பழக்கிவிட்டார்! நானும் அவர் வழியில் நாணயமாய் வாழ்பவன்! நீர், வீணுக வம்பை விலைகொடுத்து வாங்கிவிட்டீர்!
என்ன சிரிக்கின்றீர்? எங்கிருந்தால் என்ன கற்ருர்! என்ருே?. சரிதான் நீர் எப்பொழுதும் கூறுவதே!:- *ஆளுமே அன்றி, அறியாமைக் கீழ்ப்படிந்து ஆளப் படுமோ அறிவு? அதோ. பஸ்தான்! ஏறுங்கள் உள்ளே இடமும் இருக்கிறது; வாருங்கள் ஐயா! வணக்கம், போய் வாருங்கள்!
፫ !

உயிர்ப்பு.
பவலீல் காரியப்பர்.
விழியின் ஒளி, தன் விகர்சிப் பிருளில் வீணேபோல்.
வழியும் உணர்வை வகையாய்ப் பகிரும் வாய்ப்பின்றேல் பழிசேர் உலகப் பயணம் எவர்க்கும் பாழாமே! அழியும் பழமைக் கணிசெய்திடவோ கருதிட்டாய் ..?
அறுபத்தோராம் ஆண்டின் ஆவணி-அன்ருெருநாள் இருளும் நிலவும் இணையும் பொழுதில் என்விழிகள்
பருகும் அழகைப் பரிசாய் மடியிற் பரிமாறி
“வருவேன்!
இணைவோம்! வாழ்வோம்’ என்ரு ய், வந்தாயா..?
வருவாய், வருவாய். எனளன் விழிகள் வாடியபின் ஒருநாள் கடிதம் ஒன்றைப் பிரித்தேன். ஓ! உனதே! ஒருவாறுயிர் என் உடலைத் தழுவல் உணர்கையிலே அறுபத்தெட்டாம் ஆண்டென் றறிந்தேன் - அஞ்சலினுல்!
2

Page 9
* கடிதில் வருவேன்" எனும் உன் கடிதம் காண்வரையும் இடையில் உலகம் எவ்வாறெல்லாம் இயங்கியதோ..? கடமை, சுற்றம் கலைகள், பிறவும் கனவிடையே படியும் நினைவாய்ப் பணியுள் உருவாய்ப் பார்க்கின்றேன்!
தனிமைப் பிணியும் தணியும், இனி, உன் தழுவலினல், பணிபோல் மனதின் பழுவும் அகலும்;
68 put it
கனியும் உண்ர்வைக் கவியாய்த் தருவேன் - கலந்து வழித் gå00 u JIT u வருவாய்
தொடர்வோம் பயணம் தூ! துன்பம்
3

“பாண்டியூரன்’
பத்துமுறை பிறந்தாலும்.
பாட்டெழுதும் ஆசையெனக் கில்லையன்பே பாவலனு யாதற்கும் படிக்கவில்லை மீட்டலெதோ நிகழ்கிறதிப் பிறவியில் நான் வினைகெட்ட வேலையெதும் விழைந்தே னில்லை ஒட்டையிசைத் தட்டைப்போல் ஓரிடத்தின் ஒலியினையே மீட்டுவதா யுளரு மல் நீள் காட்டுமலர் பூப்பதுபோற் கவிதையுள்ளம் கனல்கிறதால் இப்பணியோர் கடமை யன்பே
உன்னுடனே யுறவாடி ஒன்றுசேர உலகத்திற் பிறந்தேனே யன்றி; யெந்த நன்மையுமே கருதியுனை நாடவில்லை நம் சேர்க்கை இன்பத்தின் நாதவீணை ! பின்னேர மாயரும்பும் பெரிய நோயில் பிள்ளைகளைப் பெறுவோமென் றெண்ணினுேமா? பொன்மேனி பூமுத்தைப் புணரும்போது பொழுதேனே புலர்ந்ததெனப் பொருமினேமே!
முத்துகளைப் பிறப்பித்தற் கென்றே ஆழி மூண்டதடி யுலகத்தில் முழங்கால் மட்டில் கத்துகடற் கரையெங்கும் முத்துப் பூத்தால் கவனிப்பா ரற்றகிளிஞ்சல் ஆகாதோ? பத்துமுறை பிறந்தாலும் பவளம் போன்ற பயனுள்ள நெருப்பாகும் பாக்யம் பெற்றேன்! முத்தமிடும் வேளையிலும் முயங்கும் போதும் மூள்கிற தீ யேறுகிற திரியானே னே.
ዘ4

Page 10
என்னெளியால் உன்னிதயம் புண்ணுகாமல் எரிந்தாலே போதுமடி, அன்பருக்கும் என்னுலே இடரொன்றும் ஏற்படாமல் இன்ப மழை பெய்தாலே யெழும் பசுமை. மன்னுதி மன்னரென வாழ்த்த வேண்டாம் மண்குடிசை வாசியுளம் மகிழ்ந்தாற் போதும் பொன்னரசி; பேழையில் நீ வார்க்கும் தேனைப் புசித்தன்பர் இதயத்தும் பூட்டி வைப்பேன்.
இன்னுமென சொல்லுவதற் கிருக்கு தன்பே இன்றென்னைப் புரிந்தாயோ? ஏற்றமென்னும் நன்னயப்பே ராசையினல் நடிகனென்று நானேயென் நெற்றியிலே நாமஞ்சூட்டேன். முன்னரெதும் பட்டறையில் விதையிருந்தால் மூண்டெழுமென் பணியாலே முளை யெறிந்து உன்வயிற்றுப் பசிதீர்க்கும் உழவனகி உயிர்போலக் காத்திடுவேன் உறுதியன்பே

ஒருகணநேரச் சந்திப்பு.
அன்பு முகையதின்.
உன்னைநான் வாழ்வில் ஒருகணம்தான் சந்தித்தேன் இன்னும் நீ என்றன் இதயத்து வீணையினை மீட்டுகின்ரு ய் . உன்னைநான் வாழ்வில் ஒருகணம்தான் சந்தித்தேன்
உறங்கிக் கிடந்தஎன்றன் உள்ளுணர்வின் தந்திகளை சிறக்கணித்த உன்பார்வை சிலிர்ப் பி இசை மீட்டியது.
உறங்காஎன் நெஞ்சில் ஒவ்வோர் சிறுகணமும்
பிறந்து வரும் உணர்வின்
பின்னணியாய் உள்ளாய் நீ!
உன்னைநான் வாழ்வில் ஒருகணம்தான் சந்தித்தேன் என் நினைவில் இன்னும் இனிக்கிறதே உன் உருவம்.
என்றே ஒருநாளில் இனியும் நாம் சந்திப்போம் என்றஒரு நம்பிக்கை எனக்குண்டு - எப்போதோ?
உன்னைநான் வாழ்வில் ஒருகணம்தான் சந்தித்தேன் இன்னும்நீ என்றன் இதயத்து வீணையினை மீட்டுகிருய்
உன்னைநான் வாழ்வில் ஒருகணம்தான் சந்தித்தேன் -
16

Page 11
அகலிகை
மஹாகவி.
இந்திரன் இறங்கி வந்தான் இமயத்தின் அழிவா ரத்தே. சந்தனம் கமழும் மார்புச் சால்வையிற், சரிகை மீதில் பிந்திவந் தெறிக்கும் தேய்ந்த பிறையின் செந் நிலவு பட்டுச் சிந்திற்று, மரண்டங்கே ஓர் சிள்வண்டு வாய் மூடிற்ரும்.
கற்களிற் படாத காலில்
கழல் ஒலி கிளம்ப வில்லை நிற்கவும் இல்லைத், தோள்கள் நிமிர்ந்தவன் நடந்து சென்று புற்றரை அடைந்த போது பாதத்தைப் பொறுக்க வைத்தான். சிற்றற்றின் அரவம் கேட்டுச் செல்கின்ருன் அதனை நாடி.
பாதையில், விடியும் போது பகல்போல விரியப் போகும் போதினைப் பிடுங்கி, கைக்குள் பொத்தினன், மோந்து பார்த்தான். ஆதலும் வாழ்ந்தோர் நாளில் அழிதலு மான இந்த மேதினிச் சிறப்பைக் கண்டு வெறுத்தாலும் கவர்ச்சி கொண்டான்.
7

கையினில் நீரை அள்ளக் குனிந்தவன் களைப்பைத் தீர்த்தான். ஐய, எச் சுவையும் அற்றும் தேவரின் அமுதை வென்றி செய்ததைச் சிந்தித்தானே? சிரித்தனன் சிறிது, முன்னர் கொய்தபூக் கீழே வீசிக் குகை ஒன்றைக் குறுக லுற்றன்.
முத்தினுல் நிறைந்த வான முடி, இந்த நிலத்தில் உள்ள அத்தனை பட்டும் ஒவ்வா அழகிய நிறமேலாடை, கத்தி, காற்செருப்புக் காப்புக் கழற்றி, ஓர் ஒதுக்குத் தேடி வைத்துப்பின் திரும்பிப் பள்ள வழியினைத் தொடர லாஞன்.
இருட்டிலும் நுழைய வல்ல இந்திர நோக்கிலே, அம் முரட்டுவான் மரங்கள் சூழ்ந்து முதிர்ந்த காட்டிடை நீர் ஓடும் புறத்திலே, கமுகும் தெங்கும் புலப்பட, இரண்டு கண்கள் உருட்டினன் ஊன்றி நோக்கி உள்ளதோர் குடிலும் கண்டான்.
18

Page 12
வேலியில், முள் இல்லாத வெண்டியை மெல்லத் தாண்டக் கோழிகள் விழித்துக் கொண்டு குசுகுசுத்தன மாங்கொப்பில். ஒலையோ டிழைத்த தட்டி ஒட்டையில் நாட்டம் வைத்து மாலுண்ட வானக்கா ரன்
மறுகினுன் நோக்கி நோக்கி.
அகலிகை தளிர்க்கை கொஞ்சம் அசைந்தும், அருகில் தூங்கும் மிகுதியாய் நரைத்த நெஞ்சுக் கோதமர் மேற்படர்ந்து புக, இவர் விழித்துப் பார்த்துப் பொழுதாயிற் றென்ப தெண்ணி அகன்றதும் ஆனயாவும் அவன் அங்கு நின்று கண்டான்.
ஆதரவு அயலிற் தேடி அலைந்த கை விரல்கள் மீண்டு பாதிமூடாமென் மார்பிற் பதிந்தன. நெளிந்த வாயின் மீது, புன் முறுவல் மீண்டும் விஜௗத்தனள், முயன்று பின்னர் மாது குப்புறப் புரண்டு
ஜனயினை அணைக்க லானள்.
ዘ9

கோதமர் நடந்து சென்று குந்திய கல்லின் மீது சாதலே நிகர்க்க ஏதோ தவம்புரிந் திருந்தார்; வீட்டில் காதலின் பிடிப்பிற் சிக்கிக் கலங்கினுளது கால் மாட்டில் நீதிகள் நினையா ஞகி நெடும்பிழை இழைப்பான் நின் முன்.
காட்டுக்குள் அமைந்தும், அந்தக் கடும்தவ முனிவர் செய்த வீட்டுக்குள், இன்று மட்டும் விலங்குகள் நுழைந்த தில்லை. பாட்டுக்கோர் உருப்போல்வாளைப் பச்சையாய்க் கண்ட போதை ஈட்டிபோல் இதயத் தேற இந்திரன் எதுசெய் தானே?
துடித்தனள், எனினும் பட்ட துன்பினுள் , வலியோன் கைக்குள் பிடித்தது பிடித்ததால், அப் பிடிபிடி கொடுத்தாள், வந்த அடுத்தவன் அழுத்த மாக ஆசைகள் புதைக்கக் கண்கள் எடுத்துநோக்காது சோர்ந்தும் உலகையே இழக்க லானுள்,
2Ο

Page 13
பித்தம் கொண்டவனப் போலப் பிதுங்கிய விழியிற் , காதல் அர்த்தங்கள் சிதறிப் பாய அவள் உடல் தனதேயாக்கி முத்தங்கள் பறித்தான் அன்னுள் முகம் முழுவதுமே, இன்பிற் கத்துங்கால் மாது சற்றே கண்ணிமை திறந்து போகப்.
பார்த்ததும்; துவண்டு மேனி படபடத்திட மேலெல்லாம் வேர்த்தது. வேர்த்த போதே விறைத்தது; விறைப்பு மூச்சை நூர்த்தது, நூர்ந்து போஞள். நொடியிலே நொடிந்து, கண்கள் பார்த்ததே பார்த்த பாங்கிற் பாவை கல்ல்ாகி விட்டாள்.
அந்தரத் தவர்கள் வேந்தன் ஆயிரம் உளைவை நெஞ்சிற் தந்தவள் நிலையைக் கண்டு தான்மிகக குறுகிப் போனன். வந்தவர் முனிவர், நேர்ந்த வகையினை அறிந்து கொண்டு தம் தொழில் பிறிதென்பார்போல் தாடியை வருடி மீண்டார்.
நில்லாமல் நழுவியோடி நீங்காத வாழ்விலே, தன் பொலாமை நெடுக நோண்டப் புண்ணுண்டான் தேவராசன். எல்லாம் போய்க் கல் ஒன்ருக எஞ்சிய பாழிடத்தே நல்லார்கள் மிதிக்கத் தக்க நாள்வரை கிடந்தாள் நங்கை.
2 Ι

உயரவேண்டும்!
மு. சடாட்சரன்.
காலையிலே மணியடிக்கக் கண்து ைடத்தே யோடி கந்தோரில் பேர்கொடுத்துப் பாலெடுக்கச் செல்வோம்! காலிரண்டிற் சதங்கையென அட்டையெலாம் கூடிக் கடித்துவிழ ஒடுரத்தம் கழனிநலம் சேர்க்கும்.
மாலையிலே விறகெடுத்து மனச்சுமைகள் பொங்க மந்தைவழி வந்துநாங்கள் மக்கள் நலம் சேர்ப்போம்! நீல வண்ண மேகமெங்கள் நிலையதனைக் கண்டு நெஞ்சுருகிச் சிந்துகண்ணிர் வெள்ளமெனப் பாயும்!
கல்வியின் றி மக்களெலாம் கால்நடையைப் போலே, கவலையுற்றுத் தரித்திரராய் மாழுகிருர் இங்கே! அல்லும் பகல் மெய் வருந்தி உழைத்தெடுக்கும் செல்வம் ஆடிவரும் குடிவெறியில் மலை நீராய்ப் போகும்!
எல்லோரும் இதயமொன்ரு ய் ஒரு வீட்டில் கூடி இனிப்பருந்தி மகிழ்வுறும்நாள் என்றுவந்து சேரும்? வல்லவனே எங்கள் நிலை பார்த்திரங்க வேண்டும் வளம் நிறைந்த மலைநாட்டின் நிலை உயர வேண்டும்!
22

Page 14
பயணம் !
மருதூர்க்கனி,
ஆழக்கடலில் போகிறேன்! அழகுப்பயணம் தொடர்கிறேன்! ஊழிக்காலம் வரையிலும் ஒளியில் ஒடம் விடுகிறேன்!!
கச்சான் பெயர்கிறது!
கடலும் இரைகிறது!! அஞ்சாமல் என்னுடைய
அழதோடம் போகிறது! சூறை எழுகிறது!
சுழற்றி அடிக்கிறது! பாறைகளில் மோதாமல்
பக்குவமாய்ப் போகிறது! ஆழக்கடலில் போகிறேன்! அழகுப்பயணம் தொடர்கிறேன்.
வானம் இடிக்கிறது!
வையம் அதிர்கிறது!! தானம் தவருது
தடம்மீதே போகிறது! முகில்கள் கறுக்கிறது!
மழையும் பொழிகிறது! ககனத் திடையேமின்
கீற்றும் தெறிக்கிறது! ஆழக்கடலில் போகிறேன்! அழகுப்பயணம் தொடர்கிறேன்.
23

வேளாமீன் சீறி
வெறியோ டெழுகிறது! வாளால் எனைவீசி வீழ்த்திடவே பாய்கிறது!! வெண்ணெய்ச் சுருஎவ்வி
வாயைப் பிளக்கிறது! எண்ணம் தடுமாறி
என்னை அலைக்கிறது ஆழக்கடலில் போகிறேன்! அழகுப்பயணம் தொடர்கிறேன்.
விடிவின் இதழ்களிலே
வேதம் ஒலிக்கிறது! முடிவில் முழுமை எனும்
மேகம் பொழிகிறது! இரத்தக் களரியிலே
இருள்கள் மடிகிறது! வருத்தத் துடனேதான்
வாய்மை மலர்கிறது!!
ஆழக்கடலில் போகிறேன் அழகுப்பயணம் தொடர்கிறேன்! ஊழிக் காலம் வரையிலும் ஒளியில் ஒடம் விடுகிறேன்!
24

Page 15
ஹான்ஸ் மாக்னஸ் என்சன்ஸ்பேகர் எழுதிய மூன்று புதிய கவிதைகள்.
தூரத்து வீடு
விழிக்கிறேன்
வீடு அமைதியாய் உள்ளது. பறவைகள் செய்யும் ஒலிமட்டும் கேட்கிறது. சன்னலின் ஊடே ஒருவரையும் காணவில்லை. ஒரு ருேட்டும் இந்த இடத்தைக் கடக்கவில்லை. வானத்தில் கம்பித் தொடுப்புகள் ஒன்றுமில்லை. பூமியிலும் அந்தத் தொடுப்புகள் ஒன்றுமில்லை. கோடரியின் கீழே
உயிர்கள்
மெதுவாய்க் கிடக்கின்றன.
நீரைக் கொதிக்க இடுகின்றேன்; ரொட்டியை வெட்டுகிறேன்; உள்ளம் அமைதியில்லை. அச்சிறிய
ராண்சிஸ்டரின் சிவந்த பொத்தான் அழுத்துகிறேன்:
“கர்பியன் பூசல். 8 . . . . . . படைகள் பறப்பதற்கு ஆயத்தம். மூன்ருவது கட்டம்.
அவ்வாறே உன்னிடமும் அன்பு செலுத்துகிறேன். எஃகுக் கலப்பின் சரக்கு முதல் மீண்டும் நியமப் பெறுமானம்.”
25

கோடரியைக் கையில் எடுக்கவில்லை. அந்த இயந்திரத்தை மோதி உடைக்கவில்லை. பீதி முழங்குகின்ற அக்குரல்கள் என்னை அமைதியாக்கும். இன்னும் உயிரோடு உள்ளோம் நாம் என்றே உரைக்கும்.
வீடு அமைதியாய் உள்ளது. இந்தக் கடைசித் தகடும் துருப்பிடிக்கும் போது வேறு பொறிகள் அமைப்பதற்கோ, கோடரிகள் கல்லில் குடைந்து பொழிவதற்கோ, ஏதும் அறியேன் இனி.
UL (3 J &asuo
இன்று பின்னேரம் வெறிதே இருக்கையில், வீட்டில் திறந்த குசினிக் கதவூடே பால் கோப்பை, வெட்டும் பலகையுடன் பூனையின் ஓர் பீங்கானும் காண்கிறேன். ஒர் தந்தி மேசையிலே உள்ளது அதை நான் இன்னும் உடைக்கவில்லை.
26

Page 16
அம்ஸ்ரடாம் நூதனச்சாலையிலே உள்ள பழம் படம் ஒன்றில் திறந்த குசினிக் கதவூடே பால் கோப்பை,
t_Hreðr gra 6ð).-- பூனையின் ஒர் பீங்கானும் கண்டேன். கடிதமொன்று மேசையிலே உள்ளது அதை நான் இன்னும் உடைக்கவில்லை.
மொஸ்க்வாவின் டக்காவில் சென்ற சில வாரத்தின் முன்னர் திறந்த குசினிக் கதவூடே பாண் கூடை, வெட்டும் பலகையுடன் பூனையின் ஓர்
பீங்கானும் கண்டேன்; பிறகந்த மேசையிலே பத்திரிகை உள்ளது இன்னும் படிக்கவில்லை.
திறந்த குசினிக் கதவூடே சிந்தியபால், முப்பது ஆண்டுப் போர், வெட்டும் பலகையில் கண்ணிர், எதிர் ஏவும் ஏவுகணை, i itTadar asot ,
வர்க்கப் போர்
காண்கிறேன். அங்கந்தக் கீழ் இடது மூலையிலே பூனையினுேர் பீங்கானும் காண்கிறேன்.
2ア

வரலாற்றுப்போக்கு,
குடா உறைந்து உள்ளது. மீன் பிடிக்கும் சின்னப் படகினை வெண்பனிக் கட்டிகள் மூடும்.
அதனுலே என்ன?
உனக்கு விடுதலை.
நீ போய்ப் படுக்கலாம்
நீ பின் எழலாம் உனது பெயர் பற்றி இங்கு பொருட்டில்லை. நீ போய் மறையலாம் நீ திரும்பிச் சேரலாம்
அஃது இயலும்,
சண்டையிடும் விமானம் தீவின் குறுக்கே உறுமிப் பறக்கிறது. ஒருவர் மரணித்துப் போனதன் பின்னும் அவருக்குக் காகிதங்கள் இன்னும் வருகின்றன. இழக்க அல்லது தடுக்க இங்கு அதிகம் இல்லை. நீ துயில்க,
அஃது இயலும்.
இங்கு பனிக்கட்டி கொத்திகள் காலை வரும் அப்போது இப்படகும் ஏகும். அவை செல்லும் கால்வாய் ஒடுங்கியது. காலையில் மீண்டும் அது உறைந்து போகும். அதனுலே என்ன? உனது பெயர் பற்றி இங்கு பொருட்டில்லை.
28

Page 17
பேச்சு மொழியும் கவிதையும்.
எம். ஏ. நுஃமான்
* கூடியவரை பேசுவதுபோல் எழுதுவதுதான் உத்தமம் என் பது என்னுடைய கட்சி. எந்த ஒரு விசயம் எழுதின லும் சரி. ஒரு கதை, அல்லது தர்க்கம், ஒரு சாஸ்த்திரம், பத்திரிகை விசயம் எதை எழுதினுலும் வார்த்தை சொல்கிற மாதிரியாகவே அமைந்து விட்டால் நல்லது.
இவ்வளவும் பாரதி வசன நடையைப்பற்றி ஒரு சந்தர்ப்பத்தில் எழுதிய வார்த்தைகள், கதை, கட்டுரைக்கு மட்டுமல்ல கவிதைக் கும். இது பொருந்தும் என்பதுதான் எனது கருத்து.
பேசுவதுபோல் எழுதுவது என்ருல் பேச்சை எழுவது அல்ல என்பதை நாம் இங்கே தெளிவுபடுத்திக்கொள்வது அவசியம். ஒரு சிறு கதையில் அல்லது நாவலில் சிலவேளை கவிதைகளில் நாம் பாத் திரங்களின் பேச்சை அப்படியே எழுதவேண்டி இருக்கின்றது. பாத் திரங்களின் இயல்பான தன்மை விகாரப்படாதிருப்பதற்காக, பாத் திரத்தின் பிரதேசம், தொழில், வாழ்க்கை முறை என்பவைகளைக் கொண்டு அதன் பேச்சில் சொற்கள் அடையும் மாறுதல்களை அப் படியே எழுத்தில் கொண்டு வருகின்ருேம். சென்னைத் தமிழ், யாழ்ப் பாணத் தமிழ், மட்டக்களப்புத் தமிழ் , என்று தமிழ் வேறுபடுவது இந்த உச்சரிப்புக் கொச்சைகள் மூலமும் சில வட்டார வழக்குகளி னலும்தான். அந்த உச்சரிப்புக்கொச்சையை எழுத்தில் கொண்டு வருவதைத் தான் நாம் பேச்சை எழுதுவது என்கின்ருேம். 'இந்த நாசமத்துப் போவான்களால கரச்சலாக் கிடக்கு." என்று ஒருத்தி சொல்வதை அப்படியே எழுதுகின்ருேமே அதைத்தான் பேச் சை எழுதுவது என்போம். கொத்தமங்கலம் சுப்பு அவர்களின் கவிதை கள் அதற்கு நல்ல உதாரணங்களாகும். “என்னச்சாமி சும்மா இங்கே இளிச்சுக்கிட்டு நிக்கிறே.’’ என்பதுபோல் அவர் எழுதும் கவிதைகள் கவிதையைக் கொச்சைப்படுத்துவது மட்டுமன்றி கொச்சைப் பேச்சின் சாதாரண தன்மையையும் ஓசை கூட்டி வேறுபடுத்துகின்றன. ஆனல் பேசுவதுபோல் எழுதுவது என்பது இவற்றை அல்ல.
அது பேச்சுத் தோரணையை அதாவது பேச்சின் அகப்பண்பு களைக் குறிக்கும். எமது எண்ணங்கள் எவ்வாறு எழுகின்றனவோ அவ்வாறே எமது பேச்சும் அமைகின்றது. எண்ணங்கள் ஒருபோதும் நீண்ட பெரும் தொடர்களாக எழுவதில்லை. அதுபோல் எமது பேச் சும் நீண்ட த்ொடர்களாக இருப்பதில்லை. எப்போதும் சிறு சிறு
29

தொடர்களேக்கொண்டதாகவே எமது பேச்சு அமையும். ஒரு சொற் ருெடரைக் கொண்டுகூட்டு முறையிலும் நாம் பாவிப்பதில்லை. தெளி வாகவும் வார்த்தை ஜாலங்கள் அற்றும் பேச்சு இயல்பாக இருக் கின்றது. ஒசைக்காகவோ, வெறும் அலங்கார மிகைப்படுத்தலுக்கா கவோ தேவையற்ற அடைமொழிகள் எமது பேச்சில் இடம் பெறுவ தில்லை. பேச்சில் எப்போதும் வழக்கில் உள்ள சொற்களே இடம் பெறும். எமது சொல்வளத்தை மற்றவருக்குக்காட்டும் நோக்குடன் நாம் ஒருபோதும் சொற்களை எடுத்தாள்வதில்லை. இவ்வாறு பேச்சின் அகப்பண்புகள் பலவகைப்படும் எனினும் எங்கள் தேவைக்காக அவற் றைப் பின்வருமாறு வகுத்துக்கொள்ளலாம்.
1. சிறு சிறு வாக்கிய அமைப்பு.
கருத்துக்களின் தொடர்பான ஒழுங்கமைப்பு
3. இயல்பான சொற் சேர்ப்பு. (ஒசைத் தேவைகளுக்காக வலிந்து கையாளும் சொற்களும் - அடைமொழிகளும் வன்மையான சொற் புணர்ச்சிகளும் இல்லாமை)
பழைய உரையாசிரியர்களின் வசன நடையில் இருந்து இன் றைய வசன நடை உருவாகி வளர்ந்தது பேச்சின் இந்த முக்கிய அகப்பண்புகளை ஏற்று மாற்றமடைந்ததனுல்தான் வசனத்தில் எளிமை எளிமை என்கின்றேமே அந்த எளிமை இந்தப் பண்புகளை ஏற்றுக் கொண்டதனுல்தான் எமக்குக் கிடைத்துள்ளது.
இனி கவிதைக்கு வருவோம். கவிதை என்று இங்கு நான் குறிப்பிடுவது அதன் புறவடிமாகிய செய்யுளைத்தான். ஒரு படைப் பின் உள்ளீடும் அதன் புற வடிவமும் ஒன்றுடன் ஒன்று பிணைந்திருக் கின்றன என்பது உண்மை. எனினும் ஓர் உள்ளிட்டைச் சொல்லும் முறையே அதன் புறவடிவமாக அமைவதனுலும் புறவடிவே உள்ளிட் டின் கலை மதிப்பை உயரச் செய்கின்றது என்பதுணுலுமே கவிதையின் புற வடிவமாக இருந்து வரும் செய்யுள் இங்கு ஆய்வுக்கு எடுக்கப் படுகின்றது, கவிதை செய்யுளில் மட்டும்தான் அமைய வேண்டுமா? என்பது வேறு விஷயம். இங்கு நாம் கவனிக்கவேண்டி இருப்பது ஆதி தொட்டுக் கவிதையின் ஊடகமாக இருந்துவரும் செய்யுளுக்கும் இந் தப் பேச்சுமொழிப் பண்புகளுக்கும் இடையே உள்ள தொடர்பைப் பற்றியே.
II
"ஒரு மொழியில் முதல் முதலாகச் செய்யுள் தோன்றும் போது அது பேச்சு வழக்கில் உள்ள மொழி நடையினையும் ஒசைப்பண்பினை யும் தழுவியே தோன்றுகின்றது." என்று பேராசிரியர், வி. செல்வ
3Ο

Page 18
நாயகம் அவர்கள் எழுதி இருக்கிருர்கள். சங்கக் கவிதைகளை எடுத்து நோக்கினல் இதன் உண்மையை நாம் அறியலாம். சங்கக் கவிதை களில் பெரும்பான்மையன; பேச்சுத் தோரணையின் சில பண்புகளை யேனும் கொண்டுள்ளன.
"யாயே, கண்ணினும் கடுங்கா தலளே!
எந்தையும் நிலன் உறப் பொரு அன்; சீறடி சிவப்ப எவன்இல, குறுமகள்! இயங்குதி என்னும் யாமே பிரிவு இன்று இயைந்த துவரா நட்பின் இருதலைப் புள்ளின் ஒர் உயிர் அம்மே”
என்ற பழம்பாடலை நாம் உதாரணமாகக் காணலாம். இன் றைய எமது நவீன கவிதைகளின் பண்புகளை கபிலரின் இந்த அகப் பாட்டிலும் காணலாம். இருந்த போதிலும் இன்றைய நவீன கவி தைகளின் புறவடிவுடன் ஒப்பு நோக்குகையில் சங்கப் பாடல்களில் பல வேறுபாடுகள் காண்ப்படுகின்றன. பெரும்பாலான சங்கக்கவிதை கள் மிக நீண்ட தொடர்களைக் கொண்டனவாக உள்ளன. முதலில் இருந்து கடைசி வரை ஒரே தொடராக உள்ள நீண்ட கவிதைகளும் தொகை நூல்களில் உண்டு. ' குறிஞ்சிப் பாட்டில் முப்பது வரிகளைக் கொண்ட தொடர்களை நாம் காணலாம். அவ்வாரு ன சந்தர்ப்பங் களில் கவிதையைச் சிறு சிறு துண்டுகளாக்கியே அதன் முழுப் பொரு ளையும் கிரகிக்க வேண்டி இருக்கும். உரையாசிரியர்கள் கூட அப் படிக் கூறுபோட்டுத்தான் உரை எழுதி உள்ளார்கள்.
இன்றுகூட நீண்ட தொடர்களாகக் கவிதை எழுதுபவர்கள் இருக்கிறர்கள். ஓர் எண்சீர் விருத்தத்தின் முப்பத்திரெண்டு சீரும் ஒரே வாக்கியத் தொடராக இப்போதும் எழுதப்படுகின்றது. ஒரு தொடர் ஒரு செய்யுளில் முடியாமல் அடுத்த செய்யுளில் சென்று முடியும் குளக முறையும் இன்னும் புழக்கத்தில் இருப்பதாகத் தெரி கின்றது. மரபு ரீதியான உருவங்களில் மட்டுமன்றி இன்றைய வசன கவிதைக்காரர்களின் பெரும்பாலான கவிதைகளிலும் உடைத்து எழு" தப்பட்ட மிக நீண்ட தொடர்கள் இருப்பதை நாம் அவதானிக்க லாம். தொடர்களின் இந்த நீளம் கவிதையின் பேச்சுத் தொனிக்கு ஊறு செய்யும் முதலாவது அம்சமாகும். எச்சச் சொற் களை ப் பாவித்து ஆயிரம் வரிகளைக் கூட ஒரே தொடராக அமைத்து எழுதும் வலிமை தமிழுக்கு உண்டு என்பது உண்மை. ஆனல் செய்யுளிலோ வசனத்திலோ இனியும் அது நிலை நிற்பது ஒரு குறைபாடு என்ற அளவுக்கு தமிழ் மாறி வளர்ந்திருக்கின்றது என்பதும் உண்மை.
3.

கவிதையின் பேச்சு மொழிப் பண்புக்கு ஊறு செய்யும் இரண் டாவது அம்சம் கருத்துக்களின் தொடர்பான ஒழுங்கமைப்பு இன் மையாகும். எதுகை மோனைக் கட்டுப்பாட்டை லா வக மாக க் கையாள முடியாமல் திணறும் போதே இது நிகழ்கின்றது. கொண்டு கூட்டல் முறையில் கவிதை எழுதப்படுவதன் காரணம் அதுதான். கொண்டுகூட்டல் முறையில் பொருள் காண வேண்டிய கவிதைகள் தமிழ்க் கவிதைப் பரப்பில் ஏராளம் உண்டு. உதாரணத்துக்குப் புகழேந்தியின் இந்த வெண்பாவைக் கவனியுங்கள்.
நின்று புயல்வானம் பொழிந்த நெடுந்தாரை என்றும் அகில்கமழும் என்பரால் - தென்றல் அலர்த்தும் கொடிமாடத் தாயிழையார் ஐம்பால் புலர்த்தும் புகைவான் புகுந்து.
இந்தச் செய்யுளை முதன்முதலாகப் படிக்கும் ஒருவர் உடனே இதன் முழுப் பொருளையும் கிரகித்துக் கொள்ளமாட்டார்கள். அவ் வளவுக்கும் இதில் ஐம்பால் என்ற ஒரு சொல்லைத் தவிர புழக்கத் தில் இல்லாத ஒரு சொல்கூட இல்லை. இருந்தும் படித்த உடனே இதன் பொருள் விளங்குவதில்லை. எதுகை மோனைக்காக கருத்துக் களின் தொடர்பான ஒழுங்கமைப்பு இதில் சிதறடிக்கப்பட்டுள்ளது. இதன் பொருளைக் காண்பதற்கு சொற்களை நாம் கொண்டு கூட்டிப் டார்க்க வேண்டும்.
**தென்றல் கொடி அலர்த்தும் மாடத்து
ஆயிழையார் ஐம்பால் புலந்த்தும் புகை
வான்புகுந்து நின்று
புயல்வானம் பொழிந்த நெடுந்தாரை
என்றும் அகில்கமழும் என்பர்’ இப்படிப் பொருள் காண்பது மிகச் சிரமமே! ஒரு கவிதை பேச்சுத் தோரணையை இழக் கும் போது அது இவ்வாறு இயல்பில்லாத தன்மைகளையே அடையும்.
ஓசை மிகைப்பும் கவிதையின் பேச்சு பொழிப்பண்பை அகற்றி விடுவதில் முக்கிய இடம் வகிக்கின்றது. சங்க காலக் கவிதைகள் ஒசை மிகைப்பற்றவை என்பதை நாம் இங்குமனம் கொள்ள வேண் டும். பிற்காலத்தில், சங்க காலத்தில் இல்லாத அளவில் எதுகை மோனைக் கட்டுப்பாடுகள் அதிகரித்தன. அதனல் செய்யுளில் பேச் சுத் தோரணை குறைந்து ஒசைப்பண்பு முக்கியத் துவம் பெறத் தொடங்கியது. பக்தி இயக்கம் வலுப் பெற்று வளர்ந்த காலத் தில் கவிதையில் இசைவந்து புகுந்தது. அதனல் ஓசை அடைவு மிக்க புதிய செய்யுள் உருவங்கள் பல தோன்றத் தொடங்கின.
32

Page 19
பிறகு ஒசையே கவிதையின் சிறப்பம்சமாகக் கருதப்பட்டது. அத
ல்ை காதுக்கு இன்பம் தருவன கவிதைகள் என்ற கருத்து வளரத்
தொடங்கியது "காதைகள் சொரிவன செவிநுகர் கனிகள்' என்று கம்பனும் அதைப் பாராட்டத்தொடங்கினன். இயலும் இசையும்
ஒன்றுடன் ஒன்று கலப்புற்று விட்டதனுல்; பண்ணுேடு பாடப்படும் பண்ணத்திகளும் (இசைப் பாக்கள்) தாளக்கட்டுமிகுந்த சந்தப் பாடல் களும் ராக ஆலாபனைக்கு உட்படும் கீர்த்தனைகளும் போல கவிதை களிலும் இசைமிகைப்பு ஏற்பட்டது. இன்றுகூட அந்நிலை முற்ருக்” மாறிவிடவில்லை. பாடசாலைகளிலும் கவியரங்குகளிலும் கவிதை
ராகத்தோடு பாடப்படுவதை நாம் காண்கின்ருேம். “பழங்காலத்
திலேயே பாட்டுக்கலை இசை எனவும் இயல் எனவும் கிளை கொண்
டதாயினும், தமிழைப் பொறுத்தமட்டில் இந்த இருமைப் பண்பு
இன்று வரைக்கும் தெளிவான திட்டவட்டமான பகுப்புகளாக இறு கிக் கொள்ளவில்லை என்றுதான் சொல்லவேண்டும்” என்று முருகை
யனும் இதைக் குறிப்பிட்டுக் காட்டியுள்ளார்.
இவ்வாறு கவிதையின் இயற்பண்பின் இடத்தில் இசைப்பண்பு மிக்கதனுல் வேறுபல விளைவுகளும் ஏற்பட்டன. ஒசைக்காகப் பொரு ளற்ற சொற்கள் கவிதையில் புகுத்தப்பட்டன . "சீர்பூத்த கதிர்நாட் டின் கண் திறல்பூத்த வேளநாட்டுப் படைகள்' போன்றனவும் நீரூறு புவி, கூரேறு பண்டிதன் போன்றனவுமான வேண்டாத அடைமொழி கள் கவிதையில் வந்து சேர்ந்தன. மாதோ, ஆல், அரோ, அம்மா போன்ற பொருளற்ற ஒசை நிரப்பி அசைநிலைகள் மிகுந்து செய்யுள் மரத்துப்போன, நிறைவற்ற - செயற்கைத்தன்மை மிகுந்த ஒரு மொழி ஊடகமாக தோற்றம் கொடுக்கத் தொடங்கியது.
III
ஆனல் கவிதையின் பேச்சு பொழிப்பண்புக்கு முரணுன எல் லாவற்றையும் தவிர்த்து பேச்சின் சகல அகப்பண்புகளையும் செங் யுளில் கொண்டு வரும்போது அது மிகுந்த எளிமையும் புதுமையும், பெறுகின்றதை நாம் காணலாம். சங்க காலத்தில் இருந்து இன்று வரை பேச்சு மொழிப் பண்பு மிக்க கவிதைகள் தோன்றியே வந் திருக்கின்றன.
நீக்க மின்றி நிமிர்ந்த நிலாக்கதிர் தாக்க, வெந்து தளர்ந்து சரிந்தனள். சேக்கையாகி மலர்ந்த செந்தாமரைப் பூக்கள் பட்டதப் பூவையும் பட்டனள்
33

என்ற கம்பனின் கலி விருத்தத்திலும் 'நாராய்! நாராய்! செங்கால் நாராய்.” என்ற சத்திமுத்துப் புலவரின் அகவலிலும் பேச்சு மொழிப்பண்பின் சில தன்மைகளை நாம் இனம் காணலாம். ஆயினும் இன்றைய எமது கவிதைகள்; இன்றையக் கால கட்டத்தின் போக்குக்கும் தேவைக்கும் ஏற்ப பேச்சு மொழியின் சகல பண்புகளை யும் ஏற்று வளர்ந்துள்ளது என்பதும் அதுவே கவிதையின் இயற் பண்பை வலுப்படுத்துகின்றது என்பதும் உண்மை. உதாரணத்துக்குப் பின்வரும் கவிதை வரிகளைக் கவனியுங்கள்.
1. “வீதியிலே சென்றேன், வியர்த்துக் கிடந்த உடல்
மீதினிற் காற்று விசிறிற்று - போதும் நகரத்துக் காற்றே; உன் நாற்றம் பொறுக்கேன்; அகல்!" என்று சொன்னேன் அதற்கு!”
2. கோயில் மணியோசை கேட்டது; ஒர் ஆட்டிடையன்
வாயிலே சீட்டி வளர்த்தினன். மந்தை எல்லாம் அந்தி கழிந்தால் இரவு வந்திடும் என்றே நினைந்து அந்த இடையன் அயல் வந்து கூடின.
3. மரணித்துப் போன எங்கள் மானகப் போடிப்
பெரியப்பா, நீர் ஓர் பெரிய மனிதர் தான்!
4. மாரி கால மழைப்பொழு தாதலால்
மண்ணிறைந்தது பச்சை நிறம்; நிலம் ஈரமாக இருந்தது; வானிலே எங்கணும் முகில் தொங்கி இருந்தது.
ஒரு செய்யுளுக்குரிய எதுகை மோனை, சீர்தளைக்கட்டுப்பாடுகளை இழிக்காமலேயே பேச்சோசையின் சகல பண்புகளையும் இவைகொண் டுள்ளன. வசனத்தைப்போல் நிறுத்தக் குறிகளைப்பெற்று, சிறுதொடர் அமைப்புக்களைக்கொண்டு அமைந்துள்ள செய்யுள் இசையின் ஆதிக் கத்தை விட்டும் நீங்கி உள்ளதை நாம் இங்கு காண்கின்ருேம். மரபு ரீதியான எல்லாச் செய்யுள் உருவங்களிலும் குறிப்பாக வெண்பா, கட்டளைக்கலிப்பா, கட்டளைக்கலித்துறை, கலி விருத்தம் போன்ற வரையறுப்புக்கள் மிகுந்த வடிவங்களிலும் இன்றைய எமது நவீன கவிஞர்கள் இந்தப் பேச்சுமொழிப்பண்பைச் செயற்படுத்தி இருக்கின் ருர்கள். இன்றைய ஈழ த் துத் தமிழ் க் கவிதை இலக்கியத்துடன் தொடர்பு கொண்டவர்களுக்கு அது தெரியும்.
இவ்வாறு கவிதை பேச்சோசையைப் பெற்று வரும்போது, கவி தையின் ஒரு முக்கிய பண்பு நமக்குத் தெளிவாகின்றது. கவிதை
34

Page 20
வாசிப்புக்கு மட்டும் உரியது என்பதுதான் அது. கவிதை என்பது இயற்றமிழே யாகும். சிறுகதை, நாவல் போன்று கவிதையும் இயற் றமிழ் ஆகையால்; தாள, ராக, ஆலாபனைகளுக்கும் கவிதைக்கும் எவ்வித தொடர்பும் இல்லை. ஆனல் சிறுகதைக்கும், நாவலுக்கும் இல்லாத ஒரு விசேட பண்பு கவிதைக்கு உண்டு. அதுதான் அதன் ஒத்திசைப்பு. சித்திரத்திலும் சிற்பத்திலும் நாட்டியத்திலும் உள்ள ஒத்திசைப்புத்தான் அது. அதுவே ஆங்கிலத்தில் றிதும் (Rhythm) எனப்படுகின்றது, அது சொற்களின் அளவான சேர்க்கையினுலும் ஆற்றெழுக்கான பொருட் போக்காலும் ஏற்படுவது. ஓசை நயம் உள்ள கவிதை என்பது இந்த ஒத்திசைப்பைக் குறிக்குமே தவிர இசை யோடு வாய்விட்டுப் பாடுவதை அல்ல. கவிதை பாடுவதற்குரிய தல்ல. மெளன வாசிப்பிலேயே அதன் ஒத்திசைப்புமனதைத் தடவிக் கொண்டு செல்லும். சங்கத் தமிழ்க் கவிதை எல்லாம் அவ்வாறு வாசிப்புக்கு உரியனவே. இன்றையக் கவிதை சங்க காலக் கவிதை களின் வளர்ச்சியே யாகும். இந்தப் புதியவளர்ச்சியின் கோட்டை இன்னும் ஆழமாகக் கீறுவதற்கு எமது கவிஞர்கள் ஆற்றல் வாய்ந்தவர்களாகவே உள்ளார்கள்.
கவிஞன் முதல் இதழ் பற்றிய விமர்சனக் கட்டுரைகள் எதிர்பார்க்கப்படுகின்றன. கட் டுரைகள் சுருக்கமாக இருப்பது விரும்பத் தக்கது.
35

கல்முனையில் உதயமாகவிருக்கும் நவீன புகைப்பட நிலையம்
V
13 வருட காலமாக கவர்ச்சி மிகுந்த புகைப்படம் பிடிப்பதில் புகழ் பல பெற்ற புகைப்படக் கலைஞர் நிறுவ இருக்கும்
6 () O y
சிங்கம்ஸ் புகைப்பட நிலையம்
ஆரம்பதினம் அண்மையில் உள்ளது.