கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: கவிஞன் 1969.07

Page 1
வாசகர் சங்க வெளியீடு
 
 

ஜிவா ஜிவரெத்தினம்
மருதூர்க்கொத்தன்
சி. மெளனகுரு
аңғТіптілі
சண்முகம் சிவலிங்கம்
ஏ. இக்பால்
மு. பொன்னம்பலம்
ரஷ்ஷிபக் கவி
ஊநெசன்ஸ்கி
தொகுப்பாளர்
எம். ஏ. நுஃமான்
ஜூலை 1989, ரூ. 1.25,

Page 2
KAVIGNAN Vol. II.
Edited by M. A. Nuhman, For Readers Association, Kalmunai Ceylon.

கவிஞன் காலாண்டுக் கவிதை இதழ்.
ாறி மன்ஸில், ல்முனை - 6
லங்கை.
கவிஞன் முதலாவது இதழுக்குக் கிடைத்த வரவேற்பைக் கண்டு எனக்குப் பெருமகிழ்ச்சி. கவிதை இலக்கியத்தில் ஒரு புதிய நம்பிக்கையையும் எழு ச் சி யை யும் தோற்றுவிப்பதற்கு கவிஞனை ஒரு சாதன மாகப் பயன்படுத்தமுடியும் என்ற எண்ணம் அதன் மூலம் என்னுள் வலுப்பெறுகின்றது.
கலையாக்கத்திலும் சமூகப் பெறுமா னத்திலும் வாசகர் தொகையிலும் நமது கவிதையின் இன்றைய எல்லைகளை நாம் விரிவு படுத்த வேண்டும்.
கவிதை எழுதுவதும் அதை அச்சிலே கண்டு சந்தோசப்படுவதும் கவிஞனின் குறிக் கோள் அல்ல. ஒரு கவிஞனின் செயலூக்கம் கவிதை எழுதுவதுடன் மட்டும் நின்று விடுவ தில்லை. ஆனல் துரதிஷ்ட வசமாக எமது பெரும்பாலான கவிஞர்கள் இப்படித்தான் இருக்கின்ருர்கள். இந்த நிலை மாறவேண்டும்; நமது கவிஞர்கள் தங்கள் செயலூக்கத்தை சமூகத்தின்பால் திருப்ப வேண்டும் என்ற கோரிக்கையுடன் கவிஞன் இரண்டாவது இதழ் வெளிவருகின்றது.

Page 3
இந்த இதழில் பல்வகைப்பட்ட கவிதை கள் பிரசுரமாகி உள்ளன. எமது கவிஞர் களின் பல்முனைக் கவிதைப் போக்குகளின் சில பண்புகளை இவற்றில் இனம் காணலாம். இவை பற்றிய கருத்துக்களை வாச க ர் கள் எழுதவேண்டும்.
கவிஞனில் பிரசுரிப்பதற்கு மொழி பெயர்ப்புக் கவிதைகள் தேவைப்படுகின்றன. சமகால வாழ்க்கையைப் பிரதிபலிக்கின்ற மேலைத்தேய கீழைத்தேய கவிதைப் பெயர்ப் புக்கள் நமது வாசகர்களுக்கும் கவிஞர்களுக் கும் உபயோகப்படும். இறந்த காலத்தை விட நிகழ்காலத்தின் முக்கியத்துவம் அதிக மானது. ஆகையால் இன்றைய மனிதர், இன் றைய வாழ்க்கை, இன்றைய நடைமுறைக ளைப் பிரதிபலிக்கக்கூடிய பிறமொழிக் கவி தைகளை மொழிபெயர்த்து அவற்றின் மூலத் துடன் அனுப்பி உதவுமாறு கேட்டுக்கொள் கிறேன். М
கவிஞன் வெளியீடுபற்றி ஆக்கபூர்வ மான ஆலோசனைகளும் அபிப்பிராயங்களும் சொன்னவர்கள் பலர். அவர்களுக்கும் கவிஞன் முதல் பிரதி வாங்கி அன்பளிப்புச் செய்த கல்முனை சாஹிருக் கல்லூரி அதிபர் ஜனப். எஸ். எச். எம். ஜெமீல் அவர்களுக் கும் எனது நன்றி.
- தொகுப்பாளர்.

ஜீவா ஜிவரெத்தினம்
பக்க் பேதம்
இசைத்தட்டாய் உன்றன் இதயத்தில் ஏறி அசைகின்றேன்; உன் தூய அன்பென்னும் ஊசியினுல் என்னுட் புதைந்த இசையைக் கிளறுகிருய்!
உன்னிற் கலந்தே உயிர்நாதம் மீட்டுதற்காய்ப் பெற்ற பிறவியிது;
பேரின்பம் நல்குமொரு சிற்றின்பப் பூங்காவின் தேமதுரப் பண்குழைத்தே உன்னை மகிழ்விக்கும் உயர் கீதம் பாடும் நான் பெண்ணே,
உனது பிச கொன்ருல் இம்போது துன்பியலின் கீதச் சுவையைச் சொரிகின்றேன்; என்பும் உருகி இருகண் சொரிகின்ருய்!
உன் இதயக் கோயிலுள்ளே உண்மை இறைவனென என்னை இருத்தி - இரவு பகல் பூஜிக்கும் பக்தை, உனக்கருளே பாலிக்க எண்ணுகிறேன் புத்துலகிற் குன்னேடு போகத் துடிக்கின்றேன்!
எண்ணத்தை
என்துடிப்பை
எல்லாம் அறிந்திருந்தும் பண்ணுர் இசைத்தட்டின் பக்கம் புரியாமல் ஊசி பொருத்திவிட்டாய்! உள்ளே பதிவான தூசி படித்த துயர வரலாற்றின் கீதம் ஒலிக்கிறது:
கேட்டுத் துடிக்கின்ரு ய்!
ஆதலினல் அன்பே;
அதை நீ கிளருமல் பக்கத்தை மாற்றிப் பதிந்த இசை கேட்டுச் சொர்க்கத்தை இங்கே சுகி!

Page 4
மருதூர்க்கொத்தன்
எங்கள் கந்தோர்ச் சிற்றுண்டிச்சாலையில் .
எங்கள் கந்தோர்ச் சிற்றுண்டிச் சாலைக் கதவுகள் விரியத் திறந்தே உள்ளன. கதவுகள் விரியத் திறந்தே இருப்பது வருகை தருவோர் வசதிக் காகவே!
வருகை தருவோர் வசதியே, எங்கள் குறிக்கோள் என்பதைக் கூறி வைப்பதும், தனியே அவரைச் சலிக்க விடோமெனும் உறுதி உரையை அளிப்பதும் என்கடன்.
சாதியில் உயர்ந்தவர், இழிசனர் என்றே, பணக்கா ரர்கள், ஏழைகள், என்ருே, பேதம் பாராப் பெருமன துடனே பகலெலாம் இங்கு வருபவர் தம்மொடு அருகமர்ந் திருந்து, அழகுறப் பேசி, தோழமை செய்ய எம் துரைமார் போல யாருளர் இங்கு! யாருளர் இங்கு!
எங்களது கந்தோர்த் துரைமார் பொழுதெலாம் கன்ரீன், கந்தோர் இரண்டையும் இணைத்து ஊடுபா ஒடி அலைவது எல்லாம் வருகை தருவோர் வசதிக்காகவே.
எங்களது கந்தோர்ச் சிற்றுண்டிச் சாலைக் கதவுகள் விரியத் திறந்தே உள்ளன.

எனக்கு முன்னே இந்தப் பதவியைத் தனக்குநேர் இன்றித் திறம்படச் செய்த பையனே சுத்தப் பைத்தியக் காரன்.
எல்லோரும் இந்நாட்டு மன்னரே என்று வெல்லமாய் இனிக்க விதந்திடும் மக்கள் ஆட்சியின் உட்பொருள் அறியாச் சிறுவன்.
ஏழை வாத்தியார் ஒருவரும், எங்களது ஐயா ஒருவரும், ஸ்க்கிறீன் மறைப்பு மேசையின் அருகில் அமர்ந்த வண்ணம் உண்டி அருந்தி இருக்கும் வேளையில் வாத்தியார் சற்றே ஆத்திரமாகப் பேசி ஐயாவைப் புடைக்கப் போனர்.
பையன் இடையே பாயா திருந்தால் அமளி துமளி அதிகரித் திருக்கும்.
வாத்தியார் அடிக்கடி வருவதும், துரையொடு கதைத்து வேதனை கவிந்து பிரிவதும், பார்த்துச் சலித்த பையன், மாஸ்டர் பால் பரிந்து ஏதோ துரையிடம் பகர்ந்தனன்.
பரிந்தே அவனும் பகர்ந்த போது சடக்கென அவரின் இடக்கை நீண்டதால் பையனின் கன்னம் ஒய்யெனச் சிவந்தது. அவனது சீட்டு அடுத்தநாள் கிழிய வாய்ப்போ எனக்கு வந்து குதிர்ந்தது.

Page 5
அப்பன் இறந்தோ ஐந்து வருஷம். அம்மா இருக்கிருள் அவள் நோயாளி! மருந்தே உணவாய் மாந்திடும் அன்னையைப் பேணவும், வீட்டில் அணிவகுத் திருக்கும் தம்பி தங்கையர் வயிற்றைக் கழுவவும், வேலை தேடி அலைந்த வேளையில்
மடைபோட் டழைத்த மந்திர வாதிமுன் கடலென முழங்கிக் காட்சி தந்த பேயினைப் போலத் தரிசனந் தந்தார் எங்கள் ஐயா! அவர் பெயர் வாழ்க!
அம்மா கழுத்தை அகன்று பெட்டியில் சும்மா கிடந்த தாலியின் அடைவாய், அறுபது வாங்கி ஐயா கையில் ஐம்பதைப் படைத்து, அடுத்த பத்தில், எங்களது கந்தோர்ச் சிற்றுண்டிச் சாலையின் மூலையில் ஸ்க்கிறீன் மேசையைச் சுற்றி துரையும் நானும் சிற்றுண்டி சுவைத்த மூன்று தடவையும் போனது போக முப்பது சதங்கள் முழு சாய் மிஞ்சின.
முப்பது ரூபாய் சம்பளம் நல்கும் உத்தி யோகமும் வந்து சேர்ந்தது.
எங்கள் கந்தோர்ச் சிற்றுண்டிச் சாலைக் கதவுகள் விரியத் திறந்தே இருப்பது வருகை தருவோர் வசதிக் காகவே!

சி. மெளனகுரு
நிலவே உனைப்பாட
நேரம் இல்லை
பனிப்படலம் போல வெளிர் பட்டாடை நீக்கி எனப்பார்த்து முன்போல ஏன் சிரித்தாய் நிலவே! உனப் பார்த்து முன் போல உணர்ச்சியுடன் பாட இனிப்பான நினை வேதும் என் நெஞ்சில் இலையே.
வாழ்வோடு போராடி வாடுகிற ஏழை மாழ்கின்ற நிலை போக வழியேதும் இலையா? சூழுதடி துயர் நெஞ்சில் மீறி வான் நோக்கி ஆழ்கின்ற உனைப் பாட ஆர்வமிங் கிலையே.
வளிபோன டயர் போல மடிகின்ற வயிறும் சளி வழியும் மூக்கோடு குழி கொண்ட கண்ணும் ஒளி அற்ற வாழ் வோடு உண வற்றநிலையும் வெளியுள்ள பிரபஞ்ச விண்ணுணக் காட்சி.

Page 6
ஒரு நேரச் சோற் றேடு உயிர் என்ற கிளியை உரமற்ற உடற் கூட்டில் அடைக்கின்ற நிலை ஏன்? சருமத்தின் தோல் ஆடை தண்ணிரே வியர்வை பெருமூச்சு! பெரு மூச்சு! பிற மூச்சு இலை ஏன்?
எனச் சூழ வாழ்கின்ற ஏழையர்தம் நிலைமை தனைத் தீர்க்கும் வழியில் நான் நடக்கின்றே னிங்கே உனைப் பார்த்தே இந்நிலையில் உணர்வு தனை இழக்க நினைவில்லை நெஞ்சத்தில்; நில்லாதே ஒடு.

அண்ணல்
விந்தை தெரிந்தால்.
காற்றே யுனக்குக் கலக்கத் தெரியும்;
களைத்தவுடல் ஆற்றத் தெரியும்; ஆதனல்
அடியேன் அறைகின்றேன் கூற்றைப் பயந்து குலைந்தேன்
தொடர்ந்து கூடிடவே நேற்றை வரைக்கும்
நெருங்கி நிமிர்ந்து வருகின்றன்.
* ஒட்டம் எனக்கு மட்டும்
என்ரு நினைக் கின்ற ய்?
உலகம் ஒடும் உலகிலுள்ள
ஒவ்வொன்றும்
பாட்டைத் தெரிந்தும் தெரியா வகையில்
திசை கெட்டும்
நீட்டிப் போடும் கால்கள்
நீயும் அப்படியோ?
ஒன்றில் ஒன்று ஒழிந்து
ஒன்றில் ஒரு கோடி என்றிவ் வாருய் இறங்கி இறங்கி
இச்சைகளை வென்றி கொள்ள விரும்பி விளைந்து
வீணுகி நின்ற போதும் நில்லாப் போதும்
வருகின்ரு ன்.

Page 7
புலரிப் பொழுதின் பவனிக் கேற்ற
எழில் வண்ணம் உலரா முன்னம் ஆகா இன்பம்
ஒரு கோடி! நிலவைப் பிழிந்து தரமுன்
அந்தி நிறைந்துள்ள கலவை கண்டால் கருத்தோ
உணர்ச்சிக் கடலாகும்.
வெட்டி எடுத்த வைரத் தூறல் வான் வெள்ளி,
செட்டை ஒதுக்கித்
தூங்கும் பறவை வெண் மேகம்,
வெட்டி மின்னும் மின்னற் கீற்று;
மழை மேகம்,
இட்டவான் வில்
இதய மள்ளும் எழிற்காட்சி
ஓங்கு மலைகள், ஒழுகும் அருவி,
நதிபாடும் பாங்கில் வண்ண மலர்கள்,
பாடும் வண்டினங்கள், ஏங்கும் உள்ளம் இனிய பசுமைக்கு
இவையெல்லாம் தாங்கா இந்தக் கூற்றன்
துரத்தி வருகின்றன்.

நீலக்கடலும் நெறியும் அலையும்
நுரைப் பஞ்சும்
சோலைக்குளிரும் தளிரும் நிழலும்
சுவைக்கனியும்
வாழத் தூண்டும்
வறுத்த கானல் நீரென்பார்
ஆழங்காண வருவாய் என்றே கூற்றலறும்.
ஒடி ஒடிக் களைத்தேன் காற்றே
உனக் கயர்வைத் தேடிப் போக்கத் தெரிந்தால் வருவாய்
தினைப் புனத்தில் பாடித் திரிந்தாய் பாவை மொழிக்குள்
பதுங்கு கிருய் ஒடி அலுக்கும் எனக்கு
உதவ வருவாயா?
பஞ்ச பூதச் சேர்க்கை வனைந்த
பரிணுமக் குஞ்சு பறக்கப் பயின்றும்
கூற்றுப் பருந்துக்கு அஞ்சா திருக்க அறியேன்
துணிவும் பெறவில்லை நெஞ்சம் வரள
நீண்ட ஒட்டம் எடுக்கின்றேன்.
அழுக்கில் அமிழ்ந்தும் அழைந்தும் நுகர்ந்தும் அணைவாயேல் விலக்கும் எனது மனதே
சோலை மலராடிக் கலக்கில் வருவாய் காற்றே
கூற்றின் கைப்பிடிக்குள் விழமுன் வருவாய்
வித்தை தெரிந்தால் புதுக்கிடுவாய்.

Page 8
சண்முகம் சிவலிங்கம்
காற்றிடையே
இன்னும் வெளியில் இடை யிடையே பின்நிலவில்,
தென்னைகளின் ஒலை திடீர் என்று சலசலக்கும் பின் அவைகள் ஒயப், பிறகும் - சலார் என்று
வீசி எழுந்து விரைகின்ற வெள்வாடைக் காற்றிடையே,
துரரக் Հ கடல் இரைந்து கேட்கிறது.
உள்ளறையில் கண்ணுள் உறங்குகிருள் பக்கத்தில், பிள்ளைகளைப் போட்டுள்ளாள். பின்னும் ஒரு முறை, எம் சின்ன மகன் இருமித் தீர்த்துச் சிணுங்கலிடை கண்ணயர்ந்து போகையிலே. மீண்டும் கடும் இருமல்,
“எத்தனை நாள் வந்த இருமல்!.
இதற்குமுன் சத்தியும் காச்சலும் சளியன்
39
நமக்கேதான் இத்தனை நோய். என்றே எழாது படுத்தபடி நித்திரை பாதி, நினைவுகளும் பாதிஎண் "இச்சுச்சு சொல்லி
இதமாய் மகன் தோளைத் தட்டிக் கொடுத்துச் சரி செய்தாள் கண்மணியாள். விட்டு விட்டு இன்னுமந்த வெள்வாடை மேய்கிறது.
IO

கொஞ்சம் அமைதி. . பிறகும் அதே குக்கல். இந்த முறை லேசில் இளகவில்லை. சங்கிலிபோல், நெஞ்சு பிளந்து நிறுத்தலின்றித் தொண்டையின்-அப் பிஞ்சுச் சதையெல்லாம் பிய்த்து வருகிறது.
என்ன செய்வோம்?
ஏதறிவோம்?
எவ்வாறிதைத் தீர்ப்போம்?- அஞ்சிப் பதறும் அவளுக்கோர் ஆறுதல் நான்!-
**தெஞ்சைத் தடவு. முதுகை நிமிர்த்தாதே . கொஞ்சம் சுடுநீர் கொடுப்போமா?. என்றிவைகள்
சொல்வி, மகனை என் தோள்மீது போட்டுலாவி மெல்ல அவன் துயிலும் போது மெதுவாக மெத்தையில் சேர்த்து விளக்கைத் தணித்தபின் ベ சத்தம் எழாமல் கதவினையும் சார்த்திவிட்டு மண்டபத்தில் வந்தேன்.
மணி இரண்டு!.
சாய்மனையில்
குந்துகிறேன் மீண்டும் குழந்தை இருமுகிருன்.
இன்னும் வெளியில் இடையிடையே பின்நிலவில் தென்னைகளின் ஒலை திடீர் என்று சலசலக்கும். பின்னவைகள் ஒயப் பிறகும் சலார் என்று வீசி எழுந்து விரைகின்ற வெள்வாடைக் காற்றிடையே
இன்னும்
கடல் இரைந்து கேட்கிறது.

Page 9
சண்முகம் சிவலிங்கம்
ஒரு ஞாயிற்றுக்கிழமை
I
இன்னும் விடியவில்லை. இருள் மூடிக் கிடக்கிறது.
அன்னை எழுப்புகிருள், அவசரமாய் அவசரமாய் . . தின்னும் பனிக்கூதல்! சிறிதின்னும் கண்ணயர்ந்தால் என்னசு கம், என்னசுகம்!
இவள் ஏன் எழு ப்புகிருள்?
மண்ணுகிப் போன அந்த ‘மணியோசை கேட்கிறது.
இன்னும் விடியாத இரவின் குளிர் அறுத்துத் தூரத்தில் பனிக்குளிரில் தொங்குவது போல் மிதந்தும் வீரித்தே என் காதில் வீழுவதைப் போல் இடித்தும்
மண்ணுகிப் போன அந்த மணியோசை கேட்கிறது.
கண்கள் அரிக்கிறது. கடும் குளிரும் தைக்கிறது. அன்னை எழுப்புகிருள் அவசரமாய், அவசரமாய் இன்னும் விடியவில்லை இருள் மூடிக் கிடக்கிறது இன்னும் சிறிதிங்கே இனிய துயில் கொண்டால் என்ன சுகம், என்ன சுகம் . .
இவள் ஏன் எழுப்புகிருள்? .
2

பின்னல் குலைந்த இருள் பிரிகிறது. ,. கரும் நூலில் இன்னும் சில இழைகள் இழுத்தது போல மங்கல் . இன்னும் கலங்கிறது இன்னும் தெளிகிறது.
பின்னல் குலைந்த இருள் பிரிகிறது. வேலிகளில் சின்ன மணிகளைப் போல் செவ்வரத்தை பூக்கிறது இன்னும் அலர்கிறது இன்னும் தெளிகிறது.
பின்னல் குலைந்த இருள் பிரிகிறது. மென்மேலும் சின்ன மணிகளைப் போல் செல்வரத்தை பூக்கிறது அன்னை நடக்கின்ருள் அவளைத் தொடர்கின்றேன் அன்னை நடக்கின்ருள் அவளைத் தொடர்கின்றேன்.
II
எம் முன் பலபேர்கள் செல்கின்ருர். எம் போல முன்னே எழுந் திருந்து முகம் கழுவி உடையணிந்து வந்தவர்தான் நிரை நிரையாய் வழிநெடுகச் செல்கின்றர்.
13

Page 10
எங்கிவர்கள் செல்கின்ருர் - ஒ! எங்கே இவர் செல்கின்றர்.
மெல்ல நடந் திவர்கள் விடியும் குளிர் தாங்கி என்ன சுகம் பெறவோ
இந்நேரம் செல்கின்ருர்?
என்ன சுகம் பெறவோ
இந்நேரம் செல்கின்றர்?
மண்ணுகிப் போன அந்த மணியோசை மீண்டெழுந்து என்ன அவசர மோ
இரைந்து பொழிகிறது!
என்ன அவசர மோ
இரைந்து பொழிகிறது.
IV
அன்னை முன் செல்கின்ருள். அவள் துயரைத் தீர்ப்பதற்கு என்ன வழியுமில்லை . ஆகையினல் முந்துகிருள் . . 伞 மண்ணுகிப் போன அந்த மணியோசை ஓய்கிறது.
ዘ4..

கன்னிமரி ஈன்றெடுத்த கர்த்தரின் கோயிலிலே அன்னை முழந்தாளில்
иштейт ஒருத்தன் மூலையிலே, a a
என்ன சுகம் என்ன சுகம்
இன்னும் துயின்றிருந்தால்!
V
அன்னைபோல் அன்னையர்கள் அநேகம்பேர் அங்கிருந்தார். எல்லோரும் முக்காடு. எல்லோரும் கரம்கூப்பி, எல்லோரும் முழந்தாளில்.
எல்லோரின் கண்களிலும் துன்புத்தை யார் விதைத்தார்?
துயரத்தில் இதழ்வெருவி இன்பத்துக்கேங்குகின்ற தயத்தின் நெடுமூச்சை ஆங்கவற்கு யார் ஈந்தார்?
அவர்கள் இந்த வாழ்க்கையிலே புண்பட்ட வெண்புருக்கள். புதர்களிலே வீழ்ந்துள்ளார்.
துன்பத்தின் கேணி என்று வாழ்க்கையினைச் சொன்னவர்கள் இன்பத்தை எங்கு வைத்தார்? எட்டாத சொர்க்கமதில்!
இன்பத்தை எங்கு வைத்தார்? எட்டாத சொர்க்கமதில்!
15

Page 11
அந்த ஒன்றையே நம்பி அவர்கள் இங்கு வாழ்கின்ருர். அந்த ஒன்றுக்காகவே அவர்கள் இந்த வாழ்க்கை யெனும் *கண்ணிர்க் கணவாயில் கதறிப் புலம்புகிருர்,
அந்த ஒன்றைச் சொன்னவர்கள் அதிமேதை! ஏனென்ருல், அந்த ஒன்றைத் தள்ளி விடின் இந்த மக்கள் இவ் வாருே கண்ணிர்க் கணவாயில் கதறிப் புலம்பிடுவார்? . .
துன்பத்தை ஏற்றுழன்று துவஞம் இவர் விழிகள் துன்பத்தை மறுப்பதற்குத் தொடங்கி விடின் பின்னங்கே கண்ணிர்க் கணவாயில் கதறுபவர் யார் கொல்லோ?
கண்ணிர்க் கணவாயில் கதறிப் புலம்புவதால், துன்பத்தின் ஒடையிலே துளிகள் சொரிவதினுல் இன்பத்துக்காக ஏங்கி நிதம் வாடுவதால் எங்கள் வழிபாடோர்
இனியதுயர்க் காவியமாம்!
I6

எங்கள் பிரச்சினைகள் இவ்வுலகில் தீராவோ? எங்கள் பிரச்சினைகள் இவ்வுலகிற் தீர்வதற்கு எங்கள் இறைவன் அதை இயற்றித் தரவிலையாம்.
எங்களுக்கு அரிசி இல்லை எங்களுக்கு வேலையில்லை.
நேற்றுப்பகல் சோளம். நேற்றிரவு தண்ணீர்.
இன்று பகல் எதுவோ? இறைவனவன் சித்தம்!
VI
பூசை முடிகிறது - அப் பூசை முடிவினிலே ஆசிர் வதித்தார் குரு. யாவரும் தொழுதேற்ருேம்.
வீதியிலே இறங்குகிருேம். விதியிலே இந்த வையம் சேர்தியிலே கலந்து மிகத் துரிதமாய் இயங்கிற்று.
சைக்கிளும் கார்களும் சனங்களும் ஓடோடி எத்தனை காரியங்கள் இயற்றுகின்ருர் இயற்றுகின்ருர்!
17

Page 12
எத்தனை வாகனங்கள்! எத்தனை கூக்குரல்கள்! இத்தனை சந்தடியில்; இத்தனை நெருக்கடியில்.
சுமையினை இறக்கி வைத்த சுகமுடன் பதுமை யென அமைதியில் கனிந்த முக அன்னையர் செல்கின்றர்கள்.
சுமையினை இறக்கி வைத்த சுகமுடன் விழி மலர்ந்து அமைதியாய்க் கனிந்த முக ஆண்களும் செல்கின்ருர்கள்.
இன்று முடிந்து போகின்றர். இனியும் நாளை வருவார்கள். இன்றும் இழந்த துயில் மீண்டும். இழத்தல் நேரும். இதுபோல மங்கற் போதில் வேலிகளில் மலர்தல் கூடும் செவ்வரத்தை. அங்கு கேட்கும் மணியோசை அவர்கள் காலில் சுவை கூட்டும். இன்று சொரிந்த துயர்க்கவிதை இனியும் கொண்டு வருவார்கள். இன்று முடிந்து போகின்றர் இனியும் நாளை வருவார்கள்!
*கண்ணிர்க்கணவாய் :
O 8 o o do 8 ta o u பரதேசியாய் இருக்கின்ற நாங்கள் ஏவையின் மக்கள் உம்மைப் பார்த்து கூப்பிடுகின்ருேம். இந்தக் கண்ணிர்க் கணவாயிலே நின்று பிரலாபித்து உம்மையே
நோக்கி பெருமூச்சுவிடுகின்ருேம்.
- கிருபைதயாபத்து மந்திரம்.
8

ஏ. இக்பால்
கலக்கம்.
தெளிந்த நீர்த்தேக்கம் அண்டித் திண்மைக் கண் கூர்மை கொண்டு நெளிந்தவை கூற வந்தேன் நேரில் வந்திறங்கி நின்றேர்,
கலக்கியே நீருள் ஏனே கண்களை விரித்துப் பார்த்து அலட்சியம் செய்தார் என்ன; அங்கொன்றும் இல்லை யென்றர்.
இலக்கினைக் காண வொண்ணு இடரினில் அலைவதாற்ருன் விலக்கிட எண்ணும் இந்த வீணவர் சற்று நின்று,
இலக்கியம் காணும் பேறு இயங்கிடா தாற்றலாலே வலையொரு துண்டெடுத்து வடித்தனர் நீரையெல்லாம்!
நிலைப்புடன் குளிர்ந் தழகாம் நீருயிர்ச் சல்லடைகள் குலைப்பினுல் உயிரேயற்றுக் குவிந்தன தேக்கம் சூழ்ந்து.
கலக்கினர் மீண்டும்; மீண்டும் கண்களுக் கவலமாக விளக்கினர் அழகொழிந்து விளங்கின தேக்கமங்கு!
I9

Page 13
எம். ஏ. நுஃமான்
நாங்கள் கோபமுற் றெழும்போது உன் வதனத்தில் புன்னகை மலர்க.
எங்கள் அடுப்பில் எரியா நெருப்பு எங்கள் வயிற்றில் எரிந்துகொண் டுள்ளதை நீயறியாயா?
நிதமும் நிதமும் எங்கள் வயிற்றில் எரியும் நெருப்புத் தணலில்; நாங்கள் சாம்ப ராவதை நீயறியாயா?
நீர்ப்பாத்திரத்தை ஏந்திய இவர்கள் எம்மைக் கடந்து பாராதது போல் தூரம் செல்வதை நீ காண்கிலையா?
நிதமும்,
அவர்கள் நீர்ப்பாத் திரத்துள் நீர் நிறைப்பதையும் எங்கள் வயிற்றில் எரியும் தெருப்போ கொழுந்துவிட் டெரிந்து கொண்டிருப்பதையும் அழும்போ தெமது கண்ணிர்த் துளிகள் பழுக்கக் காய்ச்சிய
விழிகளில் இருந்து வென்னீர்த் துளிகளாய் வீழுகின்றதையும் நிதமும் நிதமும்
š surrum?
ஆயினும் ஏன் நீ அமைதியோ டுள்ளாய்...?
வசந்த காலப் பசும் நினைவுகளை வைகறைப் பொழுதில் மலரும் உணர்வினை மாலைப் போதின் கோலச் செறிவை மெல்லிராப் போதின் வேட்கையை. எல்லாம் • ஏந்தி வரும் உன் இன்னறும் தென்றல் எங்கள் நெருப்பை
அணைப்பதே இல்லை.
2Ο

வானில் பூத்த மீன் மலர் தானும் தண்ணுெளி தெளிக்கும் வெண்ணிலா தானும் மிதந்து செல்லும் வெண்முகில் தானும் எங்கள் நெருப்பை அணைப்பதே இல்லை!
எரியும் நெருப்புள் இருந்து கொண்டே இசைக்காய்த் தலையை அசைத்தல் கூடுமா?
எங்கள் சொந்தம் இல்லாப் பூமியில் எங்கள் சொந்தம் இல்லா ஆலையில் எங்கள் வேர்வை பொங்கி வழிகையில் பொங்கிய எங்கள்
வேர்வை நீரும்
எங்கள் நெருப்பை அணைப்பதே இல்லை!
எங்கள் வயிற்றில் எரியும் நெருப்போ நெய்யுண் டதுபோல் நீண்டெரிகின்றது. ஆயினும் ஏன் நீ அமைதியோ டுள்ளாய்?
நெருப்பை அணைக்கும் நீர்ப்பாத் திரத்தை ஏந்திய இவர்கள் எம்மைக் கடந்து பாராததுபோல் தூரச் செல்கையில் நாய்கள் போல நாக்குத் தொங்க தாம் அவர் பின்னல் நடந்து செல்வதா?
2

Page 14
எங்கள் வயிற்றில் நெருப்பே எரிகையில் அங்கே அவர்கள்
அமைதி யாகக் காலைப் பானம் பருகிக் களிப்பதா?
இந்த உலகின்
இந்த வளங்களைச் சந்தோ ஷிக்கும் சொந்தக் காரர் அவர்கள் மட்டுமா?
"ஆம்" எனில்
நாங்கள் திருப்தி கொள்ளோம்! தீயின் நாக்குகள் எரிக்கும் வரைநாம் திருப்தியே கொள்ளோம்!
எங்கள் நீசச் செயல்களுக் கெல்லாம் எங்கள் வாழ்க்கைக் குறைகளுக் கெல்லாம் எங்கள் வயிற்றில் எரியும் நெருப்புத் தணியும் போதுதான் விடிவுண் டாகும்!
ஆகையால், நாங்கள் அமைதி கொள்ளோம்! எங்கள் வயிற்றில் எரியும் நெருப்பில் எங்கள் பொறுமை எரிந்துபோய் விட்டது! நெருப்பை அணைக்கும் நீர்ப்பாத் திரத்தை ஏந்திய இவர்கள்
எம்மைக் கடந்து பாராதது போல் தூரச் செல்கையில் எங்கள் பொறுமை
எரிந்தே விட்டது!
22

ஆகையால் எங்கள் கோபப் பார்வையால்
உன் வதனத்தில் புன்னகை மலர்க!
எங்கள் வயிற்றில் எரியும் நெருப்பு கண்களின் ஊடே கனன்று வருக!
எங்கள் பார்வையில் எதிர்ப்படும் போதில் அவர்கள் பொசுங்கி அழிந்தே விடுக!
நெருப்பை அணைக்கும் நீர்ப்பாத் திரங்கள் எங்கள் வயிற்றில்
பொங்கும் தீயை
அணைத்தே விடுக...!
அந்த நாளில் கலகக் காரர் யாம் எனும் கடிய குற்றச் சாட்டைக் கூறவே மாட்டாய்
மற்றுயிர் எல்லாம் மலர்வதற் காக இரத்தப் பசளையே இடநேரிடின்
f கூடா தென்றதைக் கூறவே மாட்டாய்!
உன் வதனத்தில் புன்னகை மலரும் நாளும் அந்த நாளேயாகும்!
23

Page 15
மு. பொன்னம்பலம்
நானும் அவையும்
கையிருந்து தோலைக் கடித்த கொசுவொன்றை மெய்நசுங்கச் செய்தேன் மிளிச்சென்றே ஒடிற்றென் ரத்தம், உலகம் எனக்குள்ளே கூடிற்றே ஞானக் கொசு
வீட்டின் வளையிடுக்கில் வீழ்ந்தாடும் வெளவாலை ஓட்டத் தடியெடுத் தோச்சினேன் - கீச்சென்ற ஒசை 'அடமனிதா நீயும் பகல் குருடோ?” பாசை அதையுணர்ந்தேன் பின்
வீரென்று வானில் விரையும் கிளிக்குஞ்சை ஒர் கூட்டில் பூட்டி உணவளித்தேன் - 'ஆர் நீயோ?" கேள்வியொன்றை மெல்லக் கிளியெறியும், நான்போட்ட வாழ்வறுக்க வைத்த வெடி
இருட்டில் அறியாமல் என்கால் அழுத்தியதால் நெருட்டென்று பல்லால் நறும்பிற்று - சுருட்டையது! ஆவென்று கத்தி அதைக்கொன்றேன், தள்ளியெனப் போவென்ற பேச்சுணராப் பேய்
சோலைவனத்தில் சுதந்திரமாய் கூடமைத்து வேலையினில் ஈக்கள் விளைந்திருக்க - கோலெடுத்து கூட்டைக் கலைத்தொழுகும் தேன்குடித்தேன், நானந்தப் பாட்டாளி மாருள் பதர்
கொத்தித் திரிந்து குறையாது முட்டைகளை இட்டெனக்குப் பேருதவி ஈந்ததை - கத்திக்கு இரையாக்கி உண்டொருநாள் இன்புற்றேன், என்ன விந்த முறை? யார்க்கிடுமோ முறை?
'Y_' 2A

ரஷ்ஷியக் கவி அன்றெப் ஊநெசன்ஸ்கியின் இரு கவிதைகள்.
இலை உதிர் காலம்
வாத்துகள் தம் சிறகடிக்கும். மலர்க்காவில் உள்ள,
வழியெல்லாம் பூஞ்சணம்போல் சிலந்தி வலை மின்னும். நேற்றல்ல, அதற்குமுன்னர் கடைசியாய் ஓர் நாளில் நெருண்ட சைக்கிள் தடம்கூட மாருது காணும். பார்த்திவற்றின் பொருள் தேடி மாய்கிறயோ? அங்கே,
y Trif -
அந்த
மூலையிலே, அக்கடைசி வீட்டில் வாழ்க்கையினை ஓர் பெண்ணுள் நடத்துகிருள் கணவன் வரவை அவள் எதிர்பார்த்தே இருப்பதில்லை உண்ண.
எனக்காக அவள் கதவைத் திறக்கின்ருள்.
பின்னர், எனதுடையில் தனை அழுத்தி உரசுகிருள்.
சிரித்தே,
தனது இதழ் தருகின்ருள்.
பின் சடுதி யாக
சகலதுமே விளங்கியொரு தளர் நிலையில் ஆவாள்:
வயல்களிலே இலைஉதிரும் காலத்தின் வரவும்,
வருங்காற்றில்,
விதை சிதறிப் பரம்புவதும்,
குடும்பம்
அயல்களிலே உடைகிறதும்,.
யாவும் அவள் அறிவாள்.
அவள் இன்னும் இளமையுடன் குளிரினிலே உறைவாள்;
25

Page 16
அப்பிள் மரம் பழங்களுடன் குலுங்குவதைத் காண்பாள், அச்செவலைப் பசுவும் ஒரு கன்றதனை ஈனும் எப்பொழுதும்,
ஒக் மரத்தின் புதர்களிலே,
அந்த
இடையருத புல்வெளியில்,
வீடுகளில்,
காற்றுச் சத்தமிடும் வனங்களிலும் உயிர் ததும்பி நெருளும். தானியங்கள் பழுத்து வரும்; சேவல்களும் புணரும்.
இத்தனையும் - அவள் பார்த்துப் பெருமூச்சே எறிவாள், இரங்கி மன ஆசையிலே நோயுற்றே அழுவாள்.
"என்னுடைய மென் முலையால் எனக்கென்ன லாபம்? என திரண்டு கரங்களுமே
ஏன் துயரில் வேகும்?
எந் நேரமும் இந்த
அடுப்பதனை மூட்டி என்றும் போல் அன்ருட வேலைகளைச் செய்து, என்ன பயன்?”
என்றழுவாள்.
நான் அவளை அணைப்பேன். எனினுமதன் பொருள் எனக்கும் விளங்குவதே இல்லை. வெண்பனியின் முதற்துளிகள் வெளியினிலே வீழும். விரிந்தவயல் முழுதும், - ஒரு - அலுமினியம் பூசும்.
அங்கதிலே
என் கரிய காற்சுவடு
தோயும்.
அவை -
ரயில்வே நிலையத்தை
அடையும் வரை -
நீளும்!
26

பனிப்புகார் வீதி
எங்கும் புழுவின் இறக்கையின் வெண்மை நிறம்
மீன் வலையில் தொங்கும் மிதப்பினைப் போன்ருேர் போலீஸ் நடந்துபோ கின்றன். புகார்க் காலம். .
எந்த நூற் ருண்டோ? இதென்ன யுகமோ? எனக்கு மறதி. .
இரவுத் துயிலமுக்கம்
போல முழுதும் நொறுங்கிப் புரள்கிறது.
ஒட்டுக் கழன்று மக்கள் உருளுகிருர்; ஒன்றும் இறுக்கமாய் இல்லை; உதிரிகளே.
நானே இடறித் தடவி நடக்கின்றேன். ஆமாம் பருத்தியின் பஞ்சில் விழுகின்றேன்.
முட்டுகிறேன். கார் வெளிச்சம்; முன்னே பதக்கமெல்லாம் மின்னி ஒளிர்கிறது; பின்னர் மறைகிறது.
எல்லாம் கலக்கமே, மாய விளக்குகளின் காட்சிபோல் எல்லாம் கலக்கமே. உம்முடைய தொப்பி சரியா? தலையைத் தவருகக் கொண்டு நடத்தல் குணமில்லை யேதுரையே!
எல்லாம், இதழை இறுகச் சுவைத்தீந்த பெண்ணின் நினைவு பெருமணல்போல் தூருவதும்,
பின்னர் நினைவு பிறந்து வருந்துவதும்,- இப்போது காதல் இழந்துபெறும் கைம்மையதும்என்ருலும் நம்முடைய தென்பதனைப் போலும்எனினும் பின் நம்முடைய தில்லை எனல் போலும்.!
27

Page 17
யாரது? வீனஸா?- இல்லை - ஒர் ஐஸ்கிறீம்காரன்!
வழியில் பதிந்த அக் கற்களில்
மோதுகிறேன்;
முன்வரும் மக்களிலும் மோதுகிறேன். யார் அவர்கள் நண்பர்களா? நான் வியப்புக் கொள்கிறேன். வீட்டுப் பிராணி 'இயாகோஸ்"! மறைப்புகளைக் காட்டுகின்றீர்! எத்தகைய கள்ளர் நீர் - கள்ளர்!
அது நீயா? என் அன்பே, ஏன் குளிரில் தனியே நடுங்குகிருய்? என்ன நலக்குறைவோ?
p6ör SDJ GOD) L-ULU மேலங்கி நீளம்; மிகப் பெரிதே; என் அன்பே ஏன் இந்த மீசை எதற்கு வளர்க்கின்ருய் காதில் படியும் பணித் தூவல் கண்டனையோ?
நான் நகரும், நான் இடறும், நான் தொடரும்.
வான் முழுதும், ஓர் பெரிய வெள்இருளே!. ஒன்றும் தெரியவில்லை! யாருடைய கன்னம் உரச நான் இப்புகார்ப் பாதையிலே தத்திப் பயிலுகிறேன்? யாரதுவோ?
யாருடைய சத்தமும் இந்தச் சடம் நிறைந்த காற்றிலே ஒடிக் கலவாது. இப்புகார் நீங்கும் பொழுது நிகழும் பெருந்தெளிவைக் காண்பதே ஒர் அருமை தான்.
ஆங்கில மொழிபெயர்ப்பிலிருந்து-சசி.
2

எம். ஏ. நுஃமான்
கவியரங்கக் கவிதைகள்,
மாதங்களின் முன் நான் கலந்துகொண்ட கவியரங்கில் رملا ஒரு நிகழ்ச்சி நடந்தது. ஒரு கவிஞர் தன் நீண்ட கவிதையை வாசித் துக்கொண்டிருந்தார். இடைக்கிடை பாடியும் காட்டினர். சபையில் பெரும் பா லோர் தம் பாட்டில் கதைத்துக்கொண்டிருந்தார்கள். இடைக்கிடை அனுமதேயமான கேலிக் குரல்களும் கேட்டன. இடை யில் தலைவரிடம் ஒரு குறிப்பு அனுப்பப்பட்டது: "தலைவா, கவிதை கசக்கிறது" என்று அந்தத் துண்டில் எழுதப்பட்டிருந்ததாகப் பின்னர் அறிந்தேன்.
அன்றையக் கவியரங்கில் மட்டுமல்ல நான் கலந்துகொண்ட பல கவியரங்க அநுபவங்களைத் திரட்டிப்பார்க்கும் போது எனக்கு ஒர் உண்மை புலப்படுகின்றது. கவிதையைக் கேட்பதில் இரு ந் து சபையோரின் கவனம் சிதைவதற்கும் அவர்கள் வேறு செய்திகள் பற் றிக் கதைக்கத் தொடங்குவதற்கும் சபையை விட்டும் நெளிநடப்புச் செய்வதற்கும் காரணம் சபையோரின் ரசனைக் குறைபாடு அல்ல என் பதுதான் அந்த உண்மை. சபையை ஆட்சிப் படுத்தக்கூடியதிராணி கவிஞரிடம் இல்லாததும் சபையைக் கவரக்கூடியதாக அவர்களின் கவிதை இல்லை என்பதும் அதன் காரணங்களாகும்.
ஆனல் பல கவிஞர்கள் இதுபற்றி வேறுவிதமாக நினைக்கின் றர்கள். இவர்களுக்கு என்ன கவிதை” இந்தச் சனங்களுக்குக் கவி தையைப் பற்றி என்ன தெரியும்? கவிதை உயர்ந்தவர்களுக்கு உரிய கலை என்பது அவர்கள் கணிப்பு. ஆனல் இந்தக் கூற்றிலே உண்மை இல்லை. இது அவர்களின் ஆற்ருமையின் புலம்பல் என்றுதான் சொல்ல வேண்டும். ஏனெனில் நல்ல கவிதைகள் சபையில் அமைதியையும் மகிழ்ச்சி ஆரவாரத்தையும் ஏற்படுத்தியதைப் பல முறை நான் கண் டுள்ளேன்.
எமது கவியரங்குகளில் கலந்துகொள்ளும் மிகப்பெரும்பாலான கவிஞர்கள் சபையோருக்குக் கவிதை வாசித்துக்காட்டுவதில்லை என் பதை நாம் ஒப்புக்கொள்ள வேண்டும். கவிதை வாசிப்பதற்குப் பதி லாக அவர்கள் செய்யுட் சொற்பொழிவு நிகழ்த்துவதில் சமர்த்தர்களாக 26T6TTT956.
ஒரு விழாவை ஏற்பாடு செய்பவர்கள்; உரையரங்கு, கவிய rங்கு என்று நிகழ்ச்சிகளை ஒழுங்கு பண்ணுவது இப்போதெல்லாம்
29

Page 18
(5 மரபாகவே போய்விட்டது. உரையரங்கில் பங்குபற்றும் சொற் பொழிவாளர் ஒரு தலைப்பில் தனது கருத்துக்களைச் சராமாரியாகப் பொழிந்து தள்ளுவார். பெரும்பாலும் இந்த விழாமேடைகளில் உபயோகமில்லாத புளித்துப்போன செய்திகள்தான் மீண்டும் மீண் டும் சொல்லப்படும். அதிலே மக்களுக்கு எந்தக்கவர்ச்சியும் இருப்ப தில்லை. பெரும்பாலும் அதை அடுத்தே கவியரங்கு நிகழும். பங்கு பற்றும் கவிஞரோ தனக்குக் கொடுக்கப்படும் தலைப்பில், த ன து கருத்துக்களை - சொற்பொழிவாளர் பேச்சு மொழியில் சொல்லியது போலல்லாமல் - செய்யுள் நடையில் பொழிந்து தள்ளுவார். அரசி யல் மேடைகளில் பேசுவதுபோல குரலுயர்த்தி மிகவும் ஆக்ரோச மாகச் சத்தம்டுபவர்களும் உண்டு. (கவி முழக்கம் என்பது அதுதான் போலும்.)
உரையாளர்களின் கருத்துச்சுமையினல் சலித்துப்போய் இருப் பவர்களுக்கு கவியரங்கில் எனினும் ஒரு கலை அநுபவம் கிடைக்கக் கூடாதா? பாவம், அவர்கள் கவிஞரின் செய்யுட் சொற்பொழிவின் கருத்துக்களைக் கிரகித்துக்கொள்ளமுடியாமல் அலுப்புற்று வேறு கதை களில் இறங்கிவிடுகிறர்கள்.
இந்த நிலையில் குறறம் சுமத்தப்படவேண்டியவர்கள் கவிஞர் களே. ஏனெனில் அவர்கள் தங்கள் கடமையைச் சரிவரச் செய்ய வில்லை. கருத்துக்களைச் செய்யுள் நடையில் எழுதுவதுதான் கவிதை என்ற நம்பிக்கை எமது கவிஞர்கள் பலரிடம் இருக்கின்றது. ஆகை யினுல்தான் செய்யுள் நடையில் ஒரு கட்டுரையை அல்லது சொற் பொழிவை நிகழ்த்தி விட்டு தாங்கள் கருத்துச் செறிவுள்ள கவிதை இயற்றிவிட்டதாக நம்பிக்கொள்கிருர்கள். ஆனல் கருத்து நிலையில் இருந்து கட்டுரை எழுத முடியுமே தவிர கவிதை எழுத முடியாது என்பது அவர்களுக்குத் தெரிவதில்லை. ஏனெனில் கவிதை ஒரு கலை. கலை சிருஷ்டியாவது அநுபவ உணர்வு தொழிற்படும் போதுதான்.
எங்களுடைய மிகப் பெரும்பாலான கவிஞர்கள் இந்த உண் மையை விளங்கிக்கொள்ள முயல்வதில்லை. அ த ஞ ல் அவர்களால் கவிதையைச் கிருஷ்டிக்க முடிவதில்லை. எதுகை மோனையுடன் செய்யுள் எழுதும் திறமையே கவித்துவம் என்பது அவர்களது கருத்து. அத ஞல் கவிதை எழுதுவது என்பது அவர்களுக்கு மிகச்சுலபமான ஒரு வேலையாக இருக்கின்றது. இதற்கு நான் பல உதாரணங்கள் காட்ட முடியும்.
கவியரங்க மண்டபத்துள் வந்த பிறகும் நான் இன்னும் கவிதை எழுதவில்லை. இனித்தான் ஏதும் எழுத வேண்டும் என்று சொல்லும்
3O

பல கவிஞர்களை நான் சந்தித்துள்ளேன். கவியரங்கம் ஆரம்பித்த பிறகும் தலைவரிடம் வந்து, "என் பெயரைக் கடைசியில் போடுங்கள் நான் இன்னும் எழுதி முடிக்கவில்லை என்று சொன்ன கவிஞர்களையும் நான் கண்டிருக்கிறேன். இப்போதுதான் பஸ்ஸில் வரும்போது எழு திக்கொண்டுவந்தேன் என்று சொன்னவர்களையும் நான் பார்த்துள் ளேன். சமீபத்தில் மலைநாட்டில் ஒரு கவியரங்கில் கலந்துகொள்ளச் சென்றபோது மூன்று கவிஞர்கள் ‘நான் இன்னும் ஒன்றும் எழுத வில்லை" என்று ஒரே மாதிரி என்னிடம் சொன்னர்கள். இதில் ஆச் சரியம் என்னவென்ருல் அவர்கள் எல்லாரும் மிகத்தூரத்தில் இருந்து கவியரங்கில் கலந்துகொள்வதற்கென்றே வந்தவர்கள் என்பதுதான். அவர்கள் அப்படிச்சொன்னது மட்டுமன்றி, உரை அரங்க மண்டபத் தில்; பேச்சைக்கேட்டுக்கொண்டே பத்திரிகை நிருபர் குறிப்பெழுதிக் கொள்வதுபோல க வி  ைத எழுதிக்கொண்டிருப்பதாகவும் காட்டிக் கொண்டார்கள். இத்தகையவர்களைப் பொறுத்தமட்டில் கவிதை ஒரு றெடிமேட் பண்டமாக இருப்பதை நான் கண்டேன். இம்மென்னும் முன்னே இருநூறும் முந்நூறும் அம்மென்ருல் ஆயிரமும் பாடும் அசகாய குரர்கள் தாங்கள் என்ற அசட்டுத்தனமான - கவிதைப் படைப்புக்குப் புறம்பான - எண்ணம் அவர்களிடம் இருப்பதையே அது காட்டுகின்றது. s
எனினும் இவ்வாறு எழுதப்படும் செய்யுட் சொற்பொழிவு களைக் கொண்டே சபையைக் கவரும் இரண்டொரு கவிஞர்களை நாம் சில கவியரங்குகளில் சந்திக்கின்ருேம். அது கவிஞருடைய கவிதை வாசிக்கும் சாமர்த்தியத்தையும் அவர் செய்யுட் பொருளை நெறிப் படுத்தும் முறையையும் அவர் விடும் விக்டத் துணுக்கு களை யும் பொறுத்தது. ஆனல் அத்தகைய செய்யுட் சொற்பொழிவுகள் பின் னர் பத்திரிகையிலோ புத்தகத்திலோ பிரசுரிக்கப்பட்டால் அவற்றின் கவிதைப்பண்பற்ற போலித்தனத்தை நாம் கண்டு கொள்ளலாம்.
தமிழ் நாட்டில் திருச்சிற்றம்பலக் கவிராயர் கவியரங்குகளில் வெற்றி பெறுவதாகச் சொல்லிக்கொள்ளப்படுகின்றது. ஆனல் அவரது கவியரங்கக் கவிதைகளை அவரது தொகுதிகளில் படிக்கும்போது நான் மேலே சொன்னதன் உண்மையை வாசகர்களே அவதானிக்கலாம். அவை செய்யுள் உருவத்தில் எழுதப்பட்ட கட்டுரைகளாக அல்லது சொற்பொழிவுகளாகவே இருக்கின்றன. கவிதைப்படைப்பின் எந்தப் பண்பையும் நாம் அவற்றில் கண்டுபிடிக்கமுடியாது-முற்போக்கான கருத்துக்களைத்தவிர. 2
கவியரங்குகளில் வாசிக்கப்படும் இத்தகைய கவிதைகளால் ஏற்படும் முக்கிய விளைவுகள் மூன்று
31

Page 19
1. கவிதை தனது ஆக்கத்திறனை அதாவது கலைப்பண்பை இழந்து சடத்தன்மை பெறுகின்றது.
2. கவிதை அமைப்பிலே உள்ள இச்சடத்தன்மையின் வெறுமை அது எவ்வளவு உயர்ந்த கருத்துக்களைக்கொண்டிருந்தபோதிலும் மக் கள் உணர்வில் ஓர் ஆழமான பாதிப்பை ஏற்படுத்துவதில்லை. அத ணுல் கவிதை தனது வலிமையை இழந்து போகின்றது.
3. பொதுமக்கள் கவிதை பற்றிய ஒரு தரக்குறைவான கருத் தைப்பெறுகிருர்கள். கவிதை என்பது தங்கள் வாழ்க்கையோடு தங் கள் உணர்வோடு நேரடியான தொடர்பு உடையதல்ல; அது தங்க' ளுக்கு வெளியே நின்று தங்களை நோக்கிக்கூறப்படும் உபதேசம் என்ற அபிப்பிராயம் அவர்களுள் வலிமை பெறுகின்றது. உபதேசத்தை மக் கள் எப்பொழுதுமே விரும்பி ஏற்றுக்கொள்வதில்லை. அதனுல் பொது வாக கவிதைத் துறையையே மக்கள் ஒர் அந்நிய மனப்பான்மையுடன் நோக்கவும் வாய்ப்புண்டாகின்றது.
இவை விரும்பத்தக்க விலைவுகள் அல்ல. ஆகையினல் நாம் நமது கவிதையைத் திருத்தி அமைக்க வேண்டும்.
3
இன்றையக் கவியரங்குகளில் வாசிக்கப்படும் பெரும்பாலான கவிதைகளால் ஏற்படும் விரும்பத்தகாத விளைவுகளை நீக்குவதற்கும் எமது கவிதையை மக்கள் விரும்பி ஏற்கும் கலையாக மாற்றி அமைப் பதற்கும் நாம் என்ன செய்யவேண்டும்?
முதலாவதாக கவியரங்குகளில் செய்யுட் சொற்பொழிவுகள் முற்முகக் கைவிடப்படவேண்டும். அது கைவிடப்படவேண்டுமானல் செய்யுளுக்கும் கவிதைக்கும் இடையில் உள்ள வித்தியாசத்தை நமது கவிஞர்கள் விளங்கிக்கொள்ள வேண்டும். இவை இரண்டுக்கும் இடை யிலான வேறுபாடுகள் பற்றி நான் இங்கு விரிவாக எழுதமுடியாது. அது தனித்த ஒரு கட்டுரையாக பின்னர் எழுதப்படவேண்டியது.
ஆனல் சுருக்கமாக நாம் இதை அறிந்துகொள்ள வேண்டும். வசனம் எவ்வாறு ஒரு மொழி ஊடகமோ அவ்வாறே செய்யுளும் ஒரு மொழி ஊடகமாகும். இன்று வசனம் எல்லாமாக இருப்பது போல் ஒரு காலத்தில் செய்யுளே எல்லாமாக இருந்தது. கவிதை காவியம் என்பன மட்டுமன்றி இலக்கணம். தத்துவம், சமயம், வைத் தியம், என்பனவும் செய்யுளிலேயே எழுதப்பட்டன.
32

உரை நடையில் எழுதப்பட்டபோதிலும் ஒரு கட்டுரைக்கும் சிறுகதைக்கும் எவ்வளவு வேறுபாடு உள்ளனவோ அவ்வளவு வேறு பாடு செய்யுளில் எழுதப்பட்டபோதிலும் ஒரு கவிதைக்கும் வாகடத் துக்கும் இடையிலும் உண்டு. ஏனையவற்றில் இருந்து கவிதையை வேறு பிரித்துக்காட்டுவது அதன் செய்யுள் வடிவம் மட்டும் அல்ல. இந்த நீண்ட கட்டுரையைக் கூட வெண்பாயாப்பில் அல்லது அகவல் யாப்பில் நான் எழுதமுடியும். அவ்வாறு எழுதிவிட்டால் அது கவிதை யாகி விடுமா? இல்லை. கருத்துக்களின் செய்யுள் வடிவம் ஒருபோதும் கவிதையாகிவிடாது. ஆகையினல் கவிதையின் கலையாக்கம்பற்றிய பல்வேறு கூறுகளையும் நமது கவிஞர்கள் கற்றுக்கொள்ளவேண்டும். கவிதை அறிவு பூர்வமானதாக இல்லாமல் அநுபவ பூர்வமானதாக உணர்வு பூர்வமானதாக இருக்கவேண்டும். நாங்கள் எதை எழுத வேண்டும் என்பது எவ்வளவு முக்கியமோ அதை எப்படி எழுதவேண் டும் என்பதும் அவ்வளவு முக்கியமானதாகும்.
கவிதை அநுபவபூர்மானதாக அமைக்கப்பட்டபோதிலும் அது இலகுவானதாகவும் சுலபமா கப்புரிந்து கொள்ளக்கூடியதாகவும் இருக்கவேண்டும். கவிதையின் இலகுத்தன்மை அதன் புறவடிவமாகிய செய்யுள் நடையின் எழிமையில் மட்டும் தங்கி இருக்கவில்லை. அதன் அகவடிவமான பொருள் அமைப்பிலும் தங்கி உள்ளது. செய்யுளின் புறவடிவ இலகுத்தன்மைபற்றி முதல் இதழில் பிரசுரமான “பேச்சு மொழியும் கவிதையும்" என்ற கட்டுரையில் எழுதிஇருந்தேன். இங்கு கவிதையின் பொருள் அமைப்புபற்றி சிறிது குறிப்பிடவேண்டும்.
சிறு கதை, நாவல், நாடகம் போன்று கவிதையும் ஒரு தனிப் பட்ட இலக்கிய வடிவம். ஏனைய இலக்கிய வடிவங்களைப்போன்று க வி ைத யும் ஒரு மையப்பொருளை அதாவது தொனிப்பொருளை உடையதாக இருக்கும். சங்ககாலப்பாணியில் சொல்வதானுல் அதை உரிப்பொருள் என்போம். இந்த உரிப்பொருள்; கருப்பொருளின் இயக்கத்தினுல் வெளிப்படுத்தப்படும். எந்தப்படைப்பிலக்கிய வடிவத் திலும் இந்த இரண்டுமே முக்கிய அம்சமாகும். இந்த இரண்டு அம் சங்களையும் கொண்டு இயங்கும் போதே கவிதை கலை வடிவம் பெறும்.
கலை வடிவம்பெறும் கவிதையில் கருப்பொருள் உரிப்பொரு ளைத் தன்மயப்படுத்திக்கொள்ளும். ஆனல் அவ்வாறு தன்மயப்படுத் தும்பொழுது கருப்பொருள் வெறுமே குறியீடுகளாகவும் படி மங்களா கவும் மட்டும் இருக்குமானுல் கவிதையின் உரிப்பொருள் இன்னது தான் என்று விளங்கிக்கொள்வதில் பல கோளாறுகள் ஏற்படும் அப் போது கவிதை தன் இலகுத்தன்மையையும் இழந்துவிடும். இத்த கைய கவிதைகள் கேட்போருக்கு மட்டுமன்றி அச்சிலே படிப்போருக்
33

Page 20
கும் புரியாத புதிராக இருக்கும். ஆனல் பொருள் அமைப்பிலும் மொழி அமைப்பிலும் இலகுத்தன்மை பெற்ற கவிதைகள் கவியரங்கு களில் பெரிய பாதிப்பை ஏற்படுத்துவதை நாம் அவதானிக்க முடி யும். உதாரணத்துக்கு சென்ற இதழில் பிரசுரமான "பாவம் வாத் தியார்’ என்ற கவிதையை எடுத்துக்கொள்வோம். இரண்டு கவியரங்கு களில் வாசிக்கப்பட்ட அந்தக்கவிதை சனங்கள் மத்தியில் ஒரு சல சலப்பை ஏற்படுத்தியதை நான் அறிவேன். அந்தக் கவிதையின் தொனிப்பொருள் என்ன? புதிய சிந்தனையாளர்களையும் சீர்திருத்தக் காரர்களையும் மக்களைச்சுரண்டி வாழும் கும்பல் எவ்வாறு முறியடிக்க முனைகின்றது என்பதை அம்பலப்படுத்துவதே அது. இந்த நோக்கம் அக்கவிதையில் செயற்படுத்தப்பட்டுள்ள் முறை கலாபூர்வமானது. அறிவு பூர்வமாக அல்லாது அநுபவமாக அது வளர்க்கப்பட்டுள்ளது. வாசகனின் அல்லது கேட்பவனின் அநுபவத்துடன் அது ஒன்றினை கின்றது. தரமான கவியரங்கக் கவிதைக்கு அதை ஒர் உதாரணமா கக்காட்டுவது பொருத்தமானதே. ** 。
4
அடுத்துநாம் கவனிக்க வேண்டியது கவியரங்கத் தலைப்புகள் பற்றியதாகும், கவியரங்கக் கவிதைகள் பெரும் பாலும் செய்யுட் சொற்பொழிவாக இருப்பதற்கு ஒர் முக்கிய காரணம் கவிஞர்களுக்கு வழங்கப்படும் தலைப்புகளாகும். சொற்பொழிவுக்கு அல்லது கட்டுரை எழுதுவதற்குக் கொடுக்கும் தலைப்புகளை எல்லாம் கவிதை எழுதுவதற் குக் கொடுக்கிறர்கள்! இலங்கையை விட இந்தத் தலைப்பு வறுமை தமிழ் நாட்டிலே அதிகம். தமிழ் நாட்டுக் கவியரங்கக் கவிதைகளைக் கேட்ட அல்லது படித்தவர்களுக்கு இது தெரியும். உதாரணத்துக்கு ரகுநாதன் கவிதைகள் என்ற புத்தகத்தில் உள்ள கவியரங்கங் கவி தைகளை நோக்கலாம். காற்று, கடல், மலை, ஆறு என்ற தலைப்பு களில் கூட அவர்கள் கவியரங்கு நடத்தி இருக்கிருர்கள். புவியியல் மாணவர்கள் கட்டுரை எழுதுவதற்கு உரிய தலைப்புக்கள் அல்லவா இவை? இந்தத் தலைப்பிலே கவிஞனை எழுதச் சொன்னல் அவன் என்ன செய்வான்? கவிதை பற்றித் தெரிந்த ஒரு கவிஞன் என்ருல் அவர்கள் முகத்தில் அறைந்ததுபோல் பதில் சொல்லி அனுப்புவான். ஆனல் ரகுநாதன் காற்றின் புகழ்பாடி ஒரு செய்யுட் பேச்சு நிகழ்த்தி இருக் கிழுர், பாரத நாட்டுக் கலை" என்ற தலைப்பில் அவர் வானெலியில் நிகழ்த்திய ஒரு செய்யுட் சொற்பொழிவும் வைகாசி மாதத் தாமரை யில் பிரசுரமாகி உள்ளது. அதை ஒரு கட்டுரையாக எழுதி இருந் தால் இன்னும் சிறப்பாக அமைந்திருக்கும்.
இலங்கையர்கள் தலைப்புக் கொடுப்பதில் தமிழ் நாட்டினரை விடச் சற்றுத் திருத்தம் என்ருலும் இந்தத் தலைப்புக்களில் நல்ல
3A.

கவிதைகள் உருவாகுவது அபூர்வமாகவே இருந்து வந்திருக்கின்றது. ஆகையினுல் கவியரங்குகளை ஏற்பாடு செய்பவர்கள் ஒரு குறிப்பிட்ட தலைப்புக் கொடுக்காமல் இருப்பது நல்லது. வள்ளுவர் தினத்தில் பாரதி தினத்தில், அல்லது கம்பன் விழாவில் இவர்களைப்பற்றிய சங்கதிகளைச் செக்குச் சுற்றிக் கொண்டிருக்காமல் கவிஞர்கள் தங்கள் சொந்த, ஆக்கங்களை வாசித்துக் காட்டுவது உபயோகமாக இருக்கும்.
பிறநாடுகளில் கவிஞர்கள் தங்கள் சொந்த உணர்வுகளினல் உந்தப்பட்டு வேறு வேறு சந்தர்ப்பங்களில் எழுதிய கவிதைகளை மக் களுக்குப் படித்துக் காட்டுவதற்காகத்தான் கவியரங்குகளை ஏற்பாடு செய்கிறர்கள் என்று கேள்விப்பட்டுள்ளேன். அந்த நிலையை நாங்கள் இங்கும் உருவாக்க வேண்டும். விழாக்களிலே கவியரங்குகளும் ஒர் ஐட்டமாக இருப்பதற்குப் பதிலாக கவிதைக் ஆகவே கவியரங்குகள் நடத்தப்பட வேண்டும். அப்போது இந்தத் தலைப்புச் சிக்கல்கள் இல் லாமல் போகும், அல்லது அவர்கள் கொடுக்கும் தலைப்பைப்பொருட் படுத்தாமல் கவிஞன் தான் எழுதிய ஒரு கவிதையைக் கொண்டு போய் வாசிக்க வேண்டும். தொடக்கத்தையும் முடிவையும் புதிதாக எழுதிச் சேர்த்துக் கொண்டால் போதும் என்னைப் பொறுத்த வரை கவியரங்கக் கவிதைகளுக்கும் ஏனைய கவிதைகளுக்கும் தொடக்கம். முடிவு என்பவை தவிர வேறு எந்த வித்தியாசமும் இல்லை.
5
கவியரங்கக் கவிதைகள்பற்றிச் சொல்லவேண்டிய இன்னும் ஒரு விசயம் கவிதை வாசிப்பு முறைபற்றியதாகும். கவிதையைப் படிப் பதா அல்லது பாடுவதா என்பது இப்போது ஒரு பிரச்சினைக்குரிய விசயம் இல்லை. பாடலைப் பாடுவது; கவிதையைப்படிப்பது என்பது தீர்க்கப்பட்டுப்போன ஒரு சங்கதி. இரண்டொருவர்தான் தங்கள் கவிதையை ராகத்தோடு பாடுகின்றர்கள். ஆனல் அவர்கள் பாடும் போது கவிதை சபையில் எந்தப்பொருள் உணர்வுத்தாக்கத்தையும் ஏற்படுத்துவதில்லை என்பது கண்கூடு. கவிதை இசைத் தமிழ் அல்ல இயற்றமிழ்தான் என்பதை அவர்கள் ஒப்புக் கொள்ள மறுத்தால் நாம் ஒன்றும்சொல்ல முடியாது. ,
ஆனல் கவிதையை வாசிப்பவர்கள் கூட தங்கள் வாசிப்புக் குறை பாட்டினல்-தெளிவின்மையினல் தங்கள் நல்ல கவிதைகளைக் கூட சபையோர் ஈடுபாட்டோடு கேட்கமுடியாதவர்களாகச் செய்து விடுகின்றர்கள். அது பயிற்சியினலேயே சரிவரமுடியும். அந்த வகை யில் முருகையன், மஹாகவி, நீலாவணன், தான்தோன்றிக் கவிரா யர், சத்தியசீலன் ஆகியோர் திறமைமிக்கவர் எனலாம்.
35

Page 21
ஆனல் நாம் நமது எல்லாக் கவிஞர்களிடமும் காணக்கூடிய ஒரு குறை இவர்கள் எல்லோரும் (நான் உட்பட) தங்கள் கவிதை களைப் பார்த்து வாசிக்கின்றர்கள் என்பதுதான். இதனுல் சபையோ ருக்கும் கவிஞருக்கும் இடையே உள்ள நேரடித் தொடர்பில் ஒரு திரை விழுகின்றது என்ற பொருள்பட ஒரு முறை கலாநிதி கைலாச் பதி கூறினர். அதிலே உண்மை இருக்கின்றது. எழுதிய தாளைப் பார்க்காது சபையை நேரேபார்த்துக்கொண்டு கவிதை சொல்வதற்கு நினைவாற்றல் துணை செய்யுமானல் அதில் பல செளகரியங்கள் இருக் கவே செய்கின்றன. கவிதையை முழுப்பொருள் உணர்வோடு சொல் வதற்கு அது வாய்ப்பாக இருக்கும். நினைவுத் தொடர்பை ஏற்படுத் திக்கொள்வதற்காகக் கைப்பிரதியை அப்போதைக்கப்போது பார்த் துக்கொண்டால் போதும் என்ற அளவுக்கெனினும் கவிதை மனன மாக இருப்புது நன்று. இதுபற்றி கவிஞர்கள் கவனம் செலுத்து வது நல்லது.
6
நான் கடைசியாக இதைத்தான் சொல்ல முடியும். கவியரங்கு என்பது கவிஞர்களுக்கு ஒரு வாய்ப்பான சாதனம் ஆகும். பொது மக்கள் மத்தியில் தங்கள் கவிதையைக்கொண்டு போவதற்கும் பொது மக்களின் உணர்வு நிலையை அளந்தறிவதற்கும் அதைத் தூண்டி விடு வதற்கும் அது ஒரு சிறந்த களமாகும். இந்த வாய்ப்பான களத் தைக் கவிஞன் எவ்வாறு பயன்படுத்துகிருன் என்பதிலேயே கவியரங் கின் வெற்றியும் கவிதையின் வெற்றியும் தங்கி இருக்கின்றது. ஆளுல் நடைமுறையில் பெரும்பாலும் எ மது கவியரங்குகள் செய்யுட் சொற்பொழிவுக்களமாகவே இருக்கின்றன. எமது கவியரங்குகளில் வாசிக்கப்படும் கவிதைகளை நோக்குமிடத்து எமது கவிஞர்கள் கவி யரங்கைச் சரியாகப் பயன்படுத்தவில்லை என்பது மட்டும் அன்றி கவி தைபற்றிக்கற்றுக்கொள்ள வேண்டியவையும் நிறைய இருக்கின்றன என்பதும் தெளிவாகின்றது. அதனுல்தான் இதை எழுத வேண்டும் என்று நினைத்தன்ே. இதுபற்றி நமது கவிஞர்கள் சிந்திப்பார்களாக!
36.

சிறுவருக்கான
விநோதப் பொருட்கள்
TLG(26) உபகரணங்கள்
தேவை எதுவோ
அவைகளுக்கெல்லாம்
இன்றே வருக
பென்ஸி ஹவுஸ் Goulsior Gd5, கல்முனை.

Page 22
லத்திபா ஃபுட் வெயர் இல. 4, பிரதான வீதி,
56 (p26).
 

உங்களுக்குத் தேவையான
உத்தரவாதமுள்ள
தங்க நகைகளுக்கு
சொர்ணம் மாளிகைக்கு
விஜயம் செய்யுங்கள்.
நம்பிக்கை நாணயத்திற்கு சிறந்த இடம்
女
சொர்ணம் மாளிகை
214, பிரதான வீதி, கல்முனை,

Page 23
வாசகர்களுடன் சி:
விற்பனேக்காகக்
இடத்தில் எழுதி இரு தம் கவிஞன் ஒரு கு ருக்குள் மட்டும் உல நல்ல.
வாசகருக்கும் வா கும் வாசகருக்கும், க கும் இடையே ஒரு ே ரீதியான தொடர்ன் வாசகர் வட்டமுறை என்ருதஞதைாஅைன்
கவிஞன் வாசகர் கவிதை இலக்கியத்தை உள்ளதாக, சமூக எழு தாக, சமுதாய உந்து களின் இயக்கம், கவிஞ பரிவர்த்தனேக்களம். வாகவேண்டும் என்பே
ஆகையால் - களி கடமை கவிஞனே வா
கவிதை பற்றிய ஆ கருத்தை பரஸ்பரம் பு
இயன்ற அளவு த ஞன் வாசகர் வட்ட வதும் அவர்கள் கடன்
கவிஞன் பொருள் = வெளி வருவதற்காக உரிய பெறுமதியை உதவுவதும் அவர்க
1
Printed by Rev. Brey, aseph B. M. 18, Cetral Road, Fatticala a End P LLLLLL S LLLLt L tt LLta S HH L LL LLL u S T LL
 
 
 

ல வார்த்தைகள்.
ਈ என்று முன்பு இதே 鬣,、 நிப்பிட்ட தொகையின் வினுள் போதும் என்ப
சகருக்கும் கவிஞருக் விஞருக்கும் கவிஞருக்
|- ப ஏற்படுத்துவதற்கு சாதகமாக அமையும் ாைறு எழுதினேன்.
வட்டம் ஓர் இயக்கம். ந சமூகப் பெறுமதி ச்சிகளேப் பிரதிபலிப்ப சக்தியாகக்கருதுபவர் நன் இதழ் அவர்களின் என்ற ஒரு நிலே உரு தே எமது விருப்பம்,
ஞன் வாசகர்களின் சிப்பது மட்டும் அல்ல. க்கபூர்வமான தங்கள் பரிமாறிக்கொள்வதும்
மது நண்பர்களே கவி மறுப்பினராக்க முயல்
LDLITELD
நெருக்க இன்றி ஒவ்வோர் இதழுக்கும் தாமதிக்காது அனுப்பி
கடமையாகும்
-தொகுப்பாளர்
LTTEly 5, 5... at the Catholic Press. blished by A. IT. M. Meer alebbe for படி - ,ே Leylan, 2.டR,