கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஓலை 2003.07

Page 1
கொழும்புத் து 57 வது ஒழுங்கை (உருத்தி հիեր երեւելք:
pain, இணைய தபால் முகவரி  ே
 

リーのエcm_cm "
நூலகக் குழுவின் ஏற்பட் புல் நடைபெற்றுவரும் இலங்கைத் தமிழர் வாழ் வும் வகிபாகமும் என்ற தலைப்பிலான பேருரை தொடரின் ஏழாவது டரயின் முதலாவது அமர்வில் (70) இலங்கைத் தமிழர் வர லாறும் சாசனங்களும்
எனும் பொருளி போதனைப் பல்கலை 。 cm திரு.சி பத்மநாதன் அவர்கள் உரையாற்றுகிறார்
தமிழ்ச் சங்கம் ா மாவத்தை பொழும்பு
O-GEF
IV-Colombo tanisargan og
LI ||
விலை இயன்ற அன்பளிப்பு

Page 2
மாதமொருமுறை மலரும் மாசிகை ஓங்கி வளர்க உயர் தமிழ்ச்சங்கம் மேன்மை பெறுக! மேதினி வாழ்த்துக!
- தமிழன்பன் -
 
 

இதயம் திறந்து.
உலகத் தமிழ் இணைய ஆறாவது மாநாடு அடுத்த மாதம் (ஆகஸ்ட் 2003)22, 23, 24ம் திகதிகளில் சென்னையில் நடைபெறவுள்ளது. தமிழ் இணையப் பல்கலைக்கழகம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்துடன் இணைந்து உத்தமம் (உலகத் தமிழ் இணைய மாமன்றம்) அமைப்பின் ஒத்துழைப்புடன் இம்மாநாட்டை நடத்துகிறது.
உலகத் தமிழ் இணையத்தின் முதலாவது மாநாடு 1997ம் ஆண்டு சிங்கப்பூரிலும், இரண்டாவது மாநாடு 1999ம் ஆண்டு சென்னையிலும், மூன்றாவது மாநாடு 2000ம் ஆண்டு மீண்டும் சிங்கப்பூரிலும், நான்காவது மாநாடு 2001இல் மலேசியாவிலும், ஐந்தாவது மாநாடு 2002இல் சான் பிரான்சிஸ்கோ நகரிலும் நடைபெற்றன.
சர்வதேசரீதியில் தமிழ் மென்பொருட்களின் வளர்ச்சியை உறுதிப் படுத்துவதற்கும், தமிழ் விசைப்பலகை வடிவமைப்புக்களை மேம்படுத்துதற்கும் கடந்தகால மாநாடுகள் பாரிய பங்களிப்புகளை ஆற்றியுள்ளன.
தகவல் தொழில்நுட்பத்தின் வாயிலாகத் தமிழ்க்கல்வி' எனும் தொனிப் பொருளில் நடைபெறவுள்ள எதிர்வரும் இம்மாநாடு எதிர்காலத்தில் தமிழ்த் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியை மக்கள் மயப்படுத்துவதற்கும் முன்னைய மாநாடுகள் மூலமாகத் தரப்படுத்தப்பட்ட தமிழ் எழுத்துத் தரப்பாடு, விசைப்பலகை ஆகியவற்றை அனைவரும் பயன்படுத்தும் வகையில் விழிப்புணர்வை ஏற்படுத்தவும், தமிழ் இணையப் பல்கலைக்கழகத்தின் இணைய வழிக்கல்வியை வெளிநாடுகளில் வாழும் தமிழர்கள் செம்மையாகப் பெற்றுக்கொள்ளவும் வழிவகுக்கும் என நம்பலாம். மொத்தத்தில் தேமதுரத் தமிழோசை உலகமெலாம் மேலும் பரவ இம்மாநாடு வழிவகுக்கும் வகையிலே வெற்றிபெற வேண்டும் என்று 'ஒலை' வாழ்த்துகின்றது. மேலும் ஏழாவது மாநாடு இலங்கையில் நடைபெற ஏற்பாட்டாளர்கள் எண்ணுவார்களாயின் அதுவும் இன்றைய இலங்கைத் தமிழ்ச் சூழலில் | ஏற்புடைத்தே.
நன்றி. மீண்டும் மறுமடலில்.
- ஆசிரியர்
Jத்தம் 1 ፳ ‘ஓலை’ - 18 (யூலை. 2003)

Page 3
விளைச்சலை வாழ்த்தும் தமிழ்ச்சங்க முன்னாள் தலைவர் தமிழ்ச்சங்கம் வெளிக்கொணரும் ஒலை 14ம் இதழில் செங்கதிரோன் ள்முதும் கவிஞர் நீலாவணனின் வேளாண்மைக் காவியத்தின் தொடர்ச்சி. யாக வரும் 'விளைச்சல் மிகச் சிறந்த செய்யுள் நடையில் அமைந்திருப்பதைக் கண்டு உளம்பூரித்தேன். இலகு தமிழில், பேச்சு மொழியே போன்ற நடையில் கவிதை எழுதிய நீலாவணன், மகாகவி இவர்களின் வாரிசாக அதே இலகு நடையில், கவிதை எழுதவல்லவர், இக்காலத் தமிழ்க் கவி. தைக்குப் பெரும் சேவை செய்பவர் என்பதைக் காலம் விளக்கும். புதுப்புது, உதிரியாய் முறிந்த வசனங்களாய் ஆகிவிட்ட கவிதைக் கலையை மீண்டும் செவ்விய நடையில் நடைபயில விட்டிருக்கும் அரும் பெரும் முயற்சியை மனம் திறந்து நிறைவோடு வாழ்த்திப் போற்றுகின்றேன்.
இம்முயற்சி வெற்றி பெறுவதோடு எதிர். காலத்தில் மண்வாசனையோடு கவிதை புனைவோர்க்கு ஒரு கலங்கரை விளக்கமாக அமையவல்லது. வாழ்த்துக்கள்
இலக்கியச் செம்மல் செ.குணரத்தினம் முன்னாள் தலைவர், கொழும்புத் தமிழ்ச்சங்கம்
9/S/2003
ஓங்கி வளரட்டும் ஒலை
கொழும்புத் தமிழ்ச்சங்கத்தின் நல்ல முயற்சி ஒலை. கலை இலக்கிய சேவை மட்டுமல்ல இலக்கிய நெஞ்சங்களை இனங்கண்டு நட்புப் பாலம் அமைப்பதற்கு உதவியாக கலை இலக்கியவாதிகளின் முகவரிகளை ஒலை வெளியிட்டு வருவது சிறந்த சேவையாகும்.
அறிவுப் பசிக்கு விருந்து படைக்கும் ஒலையை, தமிழை நேசிப்போர் படித்துணர வேண்டும். மீண்டும் மீண்டும் படிக்கத் தூண்டும் ஒலை ஓங்கி வளரட்டும். பலப்பிட்டி - அரூஸ் (ஆசிரியர் - ஜும்ஆ)
ಬಜ್ಕಜಿ
56õigộ: grui. (Sri Lanka Muslim Newspaper- Jumma) தென்னிலங்கை வெளியீடு - 4. 2008
‘ஓலை’ - 18 யூலை 2003) Uááci, 2
 
 
 
 

செங்கதிரோன் எழுதும் GOTiffib
(கவிஞர் நீலாவணனின் வேளாண்மைக் காவியத்தின் தொடர்ச்சி)
பெண்வீட்டார் வரவேற்பு
Uá3ú 3
வட்டாவைக் கனகம் நீட்ட
"வாகா வா. மச்சாள்!" என்று தட்டோடு பொன்னு வாங்க தயாராகி நின்ற மற்ற கிட்டடிச் சொந்தக் காரர் கிரமமாய் முன்னே வந்து பெட்டிகள் பெற்றுப் போனார். பிறகென்ன பேச்சுத் தானே!
வாசலில் வந்து நின்று "வா! மச்சான்.!" என்ற கந்தர் பேசத்தான் முயன்றார். அன்புப் பெருக்கில் நா எழவே யில்லை! பாசத்தால் கையைப் பற்றிப் பாயின்மேல் அமரச் செய்து நேசத்தால் நெஞ்சமெல்லாம் நெய்யைப்போல் உருக நின்றார்.
பிரிந்தவர் கூடி நின்றார். பேசவும் வேண்டுமாமோ? இருந்தனர் அழகர், கந்தர் இருவரும் அருகில், கண்டோர் 'விருந்தெலாம் எமக்கு இன்று விமரிசையாய் இருக்கும்' என்று புரிந்தனர் சைகை தம்முள்; பூரித்துப் போனார் கந்தர்.
‘ஓலை’ - 18 யூலை 2003)

Page 4
கல்யாணப் பேச்சுவார்த்தை சுபமாக முடிந்தது
"விருப்பத்தச் சொல்லு மச்சான்! வேண்டிய தெல்லாம் கேளு! மருக்கொழுந் தல்லோ அன்னம் மடிக்குள்ளே வைத்து நாங்கள் பொருப்பத்தி வளர்த்த பெட்டை பொல்லாப்பு வேணாம் பின்னர்" சுருக்கவிழ்த் தழகிப் போடி சுணங்காமல் பேச்செடுத்தார்.
"உள்ளதோ இன்னும் என்ன ஒரு பெட்டைக் குஞ்சு தானே! புள்ளயின் பேரில் தோட்டம், புதுவீடு, வளவும் உண்டு; *பள்ளவெளிக் காணி மொத்தம் பத்தேகால் ஏக்கர் தேறும், உள்ளது முழுதும் அன்னம் ஒருத்திக்குத் தானே!" என்றார்.
"சொல்லையா வேணும் அண்ணா! சொந்தத்துக் குள்ள. எங்கள் செல்லனும் செல்லப் பிள்ளை. சித்திரை கழியச் செய்வம், செல்லனுக் கென்றே அன்னம் சிலையின்மேல் எழுத்துப் போல, பொல்லாப்பு ஒண்டும் இல்ல" பொன்னம்மா விடை பகர்ந்தாள்.
"என்னெண்ணம் வேறா என்ன? இளசுகள் வாழவேணும்! சொன்னால்தான் கொடுப்பாயா?நீ சும்மாதான் விடவா போறாய்! என்னால ஏண்ட தையும் என்மகனுக் கெழுதி வைப்பன்" சொன்னாரே கந்தப் போடி சுபமாக முடித்தும் வைத்தார்.
* பள்ளவெளி - வயற்காணியின் இடப்பெயர். - இன்னும் விளையும்
‘ஓலை’ - 18 யூலை 2008 பக்தம் 4.

அஞ்சவி!
07.06.2003 சனிக்கிழமை லண்டனில் காலமான ஈழத்தின் முதுபெரும் தமிழறிஞரும், கொழும்புத் தமிழ்ச் சங்கத்தின் உறுப்பினருமான அமரர் வித்துவான் க.ந.வேலன் அவர்களுக்கு 'ஒலையின் அஞ்சலி,
வித்துவான் கந.வேலன்
ॐ
அன்னாரின் மறைவையொட்டி 15.06.2003 அன்று நடைபெற்ற சங்க ஆட்சிக்குழுக் கூட்டத்தில் மெளனாஞ்சலி செலுத்தப்பட்டது.
* s s
06.11.1923 - 07062003
வேலன் எனுந்தமிழ் வள்ளல் (கட்டளைக் கலித்துறை)
ஜின்6TITஹற் (துணைத்தலைவர். கொழும்புத் தமிழ்ச்சங்கம்)
வேலினால் நெஞ்சை வகுத்ததார் காதின் வழிதழலின் கோலினை நட்டுக் குடைந்ததார் செம்புனல் கண்வழிதீ மாலையாய்ப் பொங்கி வழிந்திடச் செய்ததார் மணிவிடுத்தே வேலனார் போனார் விதிவழி என்றசொல் வாய்மொழிந்தே.
பூத்தனள் நெஞ்சம் பிறப்பினால் தன்னுயிர் போனதென்றே கோத்தனள் கண்கணிர் தாய்த்தமிழ் செந்தமிழ்க் கோன்பிரிவால் நீத்ததேன் ஐயனே! நின்னுயிர் எம்மையும் நிர்க்கதியாய்ப் பார்த்திட வேண்டியோ பொன்மனச் செம்மலே போனதெங்கே.
வித்துவான் என்றிடில் வேலன்: பொருந்திடா வேறெவர்க்கும் ஒத்தவர் யாருளார் ஒர்ந்திடில் இல்லை உதவிசெயும் சித்த முடையநற் சீரியர் செஞ்சொற் றிறமுடையோர் நித்தியம் செய்நலத் தாற்புகழ் வேலனெண் நாவலர்க்கே.
Jősó 5 ‘ஓலை’ - 18 (யூலை 2003)

Page 5
முத்தமிழ் தம்மின் முழுமையுந் தேர்ந்தநல் மூதறிஞர் வித்தகர் வித்துவான் வேலன்: அவர்வழி வந்துதித்தோர் முத்தமிழ் தம்மின் முழுமையும் மாந்தியோர் முக்கனிசேர் சத்தினை உணர்டவோர் பாங்கவர் தந்த தமிழமுதே.
அளிகொள் நறைநிகர் ஆம்அவர் செந்தமிழ் இன்அமுதின் தெளிவெனிற் சொல்பிழை இல்நுகர்ந் தோர்செவி சான்றுரைக்கும் எளிமை உடை நடை ஏறின் மிடுக்கு இனியகுணம் தெளிவுறு ஞானம் தமிழ்வெறி வேலன் திருவுருவே.
வேங்கையின் சீற்றமாம் வேலன் வெகுண்டிடில் வெந்தழலின் காங்கை நிகர்க்கும் கனன்றிடுஞ் சொல்! பிழை கண்டிடுங்கால் தீங்கிலார் யார்க்கும் துணைநின் றுதவும் தகவுடையோன் ஏங்குதின் றான்றோர் இதயங்கள் வேலன் இழப்பறிந்தே.
ஆற்ற லறிந்திடில் ஆரெவ ரென்றிலா அன்னவர்தம் ஆற்றலைப் போற்றும் அகமுடை நல்லோன்: அவரவர்தம் ஆற்றலுக் கேற்ப அவைமுதல் கொள்ள அறிவுரைப்பார் ஆற்ற லறிவுடை ஆன்றோன் அவரோர் அதிசயரே.
சொல்லுவார் சொல்பிறர் சொல்லவர் சொல்லினைச் சற்றெனினும் வெல்லவல் லாதவா றேற்றம் மிகுந்ததாய்ச் சொல்லினவர் வல்லவர் மன்னிடை வாக்குரைப் போழ்திலும் வாரிதிபோல் சொல்மழை கொட்டிப் பகைவென்று வாகை தாங்குவாரே.
புதுமையென் றின்று புகன்றிழிச் சேர்க்கையால் பணிபு: மொழி சிதைந்திடு வேளையில் சென்றனை யார்சமம் செய்குவரோ விதியிது தானென வாகினும் வேலனே வணிடமிழ்நின் பதியிருந் தோச்சிய பாங்கினை யார்வசம் பார்ப்பதிங்கே.
பிறந்தமணி விட்டுப் பிரிந்தபோழ் துன்றன் பிரிவு: மனம் வறந்திடச் செய்த வகையறி யாய்நீ வருவயென்றே. இருந்தனம் ஐய! பொய் யானதேன் எண்ணம் இகம்விடுத்தே பறந்ததாம் ஆவி நிலைத்தது நின்றன் புகழுடம்பே.
ള് இ ള്
‘ஓலை’ - 18 (யூலை. 2003) Uśøó 6

SIGIÕIGELEGD GGğGjTyös
1. நாறும் சமுதாயம் - நலமேதும் இல்லை' என ஆறு தனைப்பார்த்து ஐந்து சிரிக்கிறது! கூறுபடுவதுவும், கொலைபுரிவதுவுமன்றி வேறுதெரியாத வெறிமனித சமுதாயம்!
2. ஒன்று பலவாகி - ஒன்றை ஒன்று சாப்பிட்டு
வென்றுவருமாப்போல் வீழ்ந்து தொலைகிறது! நன்றென்பதறியாத நா - வாய்ச்சமுதாயம் இன்றோபெருமோசம், இதயமே கிடையாதே!
3. மனித சமுதாயம் மானிலத்துவருமுன்னர்
புனிதமிருந்துளது - பூவுலகில் நல்லமைதி! கனிவு சிறிதுமிலாக் கல்நெஞ்சுச்சமுதாயம் தனிவழியிலேசென்று சாகாமல் சாகிறது!
4. மொழியென்று, மதமென்று, முன்னாள் கலை என்று
அழிந்து தொலைகிறது 'ஆண்டான் - அடிமைகளே! பழிப்பும் -கழிப்புந்தான்! பரிவன்பே கிடையாது! வழியில்லை, எதிர்நாளும் வன்செயலே-செத்தொழிக!
-தாமரைத் தீவான்"
Ltd, Goari Sav: 110001490
ank, வெள்ளவத்தைக்கு அனுப்பலாம்.காசுக்
டளையாயின் "செயலாள
கொழும்புத் தமிழ்ச் சங்கம் என்ற பெயரில் வெள்ளவத்தை தபால் அலுவலகத்தில் மாற்றப்படக்கூடியவாறு அனுப்பமுடியும் கொழும்புத்
தமிழ்ச்சங்க அலுவலகத்தில் நேரடியாகவும் செலுத்த முடியு
U63d 7 ‘ஓலை’ - 18 (யூலை 2003)

Page 6
தெளிவத்தை ஜோசப்
கொழும்புத் தமிழ்ச்சங்கம் வெளியிடும் மாதாந்த மடல் 12 ஆவது இதழ கவிஞர் நீலாவணன் சிறப்பிதழாக வெளிவந்திருக்கிறது.
முன் அட்டையில் இடம்பெற்றுள்ளநீலாவணனின் உருவப்படம் தொடங்கி, ஒலையின் ஆசிரியர் திரு.செங்கதிரோனின் தலையங்கம் ஊடாக முழு இதழுமே கவிஞர் நீலாவணனை உன்னதமாகக் கெளரவம் செய்வதுடன், இளைய தலைமுறையினருக்கு அந்த மாபெரும் கவிஞனை மிக அற்புதமாக அறிமுகம் செய்யும் ஒரு இலக்கியப் பணியினையும் ஆற்றுகிறது இந்த ஒலை.
கவிஞர் நீலாவணனின் வாழ்க்கைக் குறிப்புகள் - மு.ச.நவீனன். எழுதியுள்ள முதற்கட்டுரை அவரது பிறப்பு முதல் இறப்பு வரையிலான குறிப்புகளைத் தருகிறது.
தமிழ்ச்சங்கம் நடத்திய ஈழத்துக் கவிஞர் வாரம் ஈழத்தமிழ் இலக்கியத்தின் ஒரு இன்றியமையாத வரலாற்று நிகழ்வாகும். ஐந்து ஆண்டுகளுக்கு முன் நடந்த நிகழ்வு என்றாலும் கூட அதன் கனமும், களிப்பும், கவனத்திற்குரியன.
நவாலியூர் சோமசுந்தரப் புலவர் கவிஞர் சோ.நடராஜா புலவர் மணி ஆ.மு.ஷரிபுத்தீன் மகாகவி உருத்திரமூர்த்தி கவிஞர் பல்கலை வேந்தர் சில்லையூர் செல்வராசன் கவிஞர் நீலாவணன்
கொழும்புத் தமிழ்ச்சங்கத்தின் இந்தக் கவிஞர் வாரக் கவிஞர்கள் அறுவரும் நம் கெளரவிற்புக்கும், கவனத்துக்கும் உரியவர்களே.
கவிஞர் நீலாவணனுக்கு நினைவிதழ் வெளியிட்டதைப் போலவே மற்ற ஐவருக்கும் சிறப்பிதழ் வெளியிடும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். தமிழ்ச் சங்கம் போன்றதொரு கலை இலக்கிய மேன்மையில் அக்கறை கொண்டுள்ள, இலக்கிய மன பலம் கொண்ட அமைப்பினாலேயே இவ்வகை செயற்பாடுகள் சாத்தியமடையலாம்.
பட்டங்களுக்காக ஆய்வுகளை மேற்கொள்பவர்கள் கவிஞர் நீலாவணனையும் தங்கள் ஆய்வுக்காக எடுத்துக் கொள்ள வேண்டும். ஈழத்து
‘ஓலை’ - 18 (யூலை 2003) பக்கம் 8
 

இலக்கிய உலகிற்கு அது மேலும் உரமூட்டும். அதற்கான ஒரு உந்துதலே இந்த ஒலையின் நீலாவணன் நினைவுச் சிறப்பிதழ் என்னும் செங்கதிரோன் அவர்களின் கூற்று ஆயிரத்தில் ஒரு கூற்று.
அதே உந்துதல் மற்ற மற்றக் கவிஞர்களுக்கும் வழங்கப்பட வேண்டும். குறிப்பாக கவிஞர் வாரத்தில் கனம் பெற்ற கவிஞர்களுக்கு.
ஈழத்து இலக்கிய உலகில் முப்பதுகளை அண்மித்த கால கட்டத்தில் மிகவும் முக்கியமானவராகத் திகழ்ந்த நவாலியூர் சோமசுந்தரப் புலவர் பற்றி பெயரளவில் கேள்விப்பட்டுள்ளோர் சிலர். அவரைப்பற்றி ஏதுமே அறியாதோர் பலர்! நமது இலக்கியத்துக்கு வளமும் செழுமையும் சேர்த்த முன்னோடிகள் பற்றி பின்னால் வரும் இளைய தலைமுறையினருக்கு முறையாக அறிமுகம் செய்கின்ற ஒரு பாரிய பொறுப்பு நமக்குண்டு.
கவிஞர் நீலாவணன் பற்றிய சிறப்புச் சொற்பொழிவினையாற்ற செங்கதி. ரோனை விடவும் சிறப்பும், பொருத்தமும் கொண்ட இன்னொருவர் இருக்க (pliquJHgb.
அவரின் சொற்பொழிவிலிருந்து சில முக்கிய குறிப்புகளை இந்த ஒலை தருகின்றது. மிகச் சிறப்பாகவும் மிகச் சுருக்கமாகவும் கவிஞர் நீலாவணனை இக்குறிப்புக்கள் அறிமுகம் செய்து வைக்கின்றன.
கவிஞர்கள் பாண்டியூரனும், ஜீவா ஜீவரத்தினமும் நீலாவணன் பற்றி எழுதிய ஆனால் ஏடேறாத இருகவிதைகள் இந்த ஒலை மூலம் அச்சேறியிருக்கின்றன.
நீலாவணன் எழுதிய "பசுநெய் விசுவலிங்கம்" என்னும் நகைச்சுவை நடைச்சித்திரம் இந்த நீலாவணன் சிறப்பிதழான ஓலையில் மறுபிரசுரம் கண்டுள்ளது.
அம்மாச்சி ஆறுமுகம் என்னும் புனை பெயரில் அவர் எழுதியவைகளுள் இந்தப் படைப்பும் ஒன்று.
"நீலாவணனின் சமுதாய இலக்கிய அக்கறைகள் பரந்து பட்டனவாக இருந்தன. இந்த அக்கறைகள் அனைத்தையும் பிரசித்தப்படுத்துவதற்குப் பல்வேறு புனைப் பெயர்களிலேயும் புகுந்து விளையாடினார். என்றெழுதுகின்றார் எஸ்.பொ. (நீலாவணன் நினைவுகள் பக்கம் 115.)
கவிஞர் மு.சடாட்சரன், மணிக்கவிராயர், (மணிவாசகன்) மருதூர்க்கனி ஆகியோரின் நீலாவணன் பற்றிய கட்டுரைகள் இவ்விதழை அலங்காரம் செய்கின்றன.
66.
Uá45ай 9 ஓலை’ - 18 யூலை 2003)

Page 7
நீலாவணனின் நூல்களாக இதுவரை வெளிவந்துள்ளவை மூன்று. * வழி 1976 * வேளாண்மை 1982 * ஒத்திகை 2001
வேளாண்மைக் காவியம் முற்றுப் பெறவில்லை. மட்டக்களப்பு மக்களின் பாரம்பரியச் சடங்குகளை வெளிக்காட்டுவதே அவருடைய முக்கிய நோக்கம்.
மட்டக்களப்பு மண்ணுக்கு 'வேளாண்மை' நிகர்த்த ஓர் இலக்கிய 1 முதுசொம் கிடைத்திலது என்று பூரிக்கும் எஸ்.பொ.வும் கூட முற்றுப் பெறாத இக்காவியத்தை முழுமை பெறச் செய்ய முயற்சிகள் மேற்கொண்டவர்தான்.
கவிஞர் நீலாவணனின் வேளாண்மைக் காவியத்தை முழுமை பெறச் செய்ய முனைந்துள்ள செங்கதிரோனின் முயற்சிகள் வெற்றி பெற வாழ்த்துவோம்.
"நீலாவணன் மீது எனக்கிருந்த பிடிப்பின் காரணமாக, சட்டத்தரணி சோ.தேவராசா, நீலாவணனின் மூத்த மகன் எழில்வேந்தன். கவிஞர் ஜின்னாஹற் போன்றோரின், வேண்டுகோள், ஒத்துழைப்பு, தூண்டுதல் ஆகியவற்றுடன் வேளாண்மைக் காவியத்தின் மீதிப் பகுதியை'விளைச்சல்' என்ற பெயரில் எழுதத் துணிந்தேன் என்று குறிப்பிடுகின்றார் செங்கதிரோன். (ஒலை இதழ் நீலாவணன் சிறப்பிதழ்)
ஒலை 13 லிருந்து விளைச்சல் வெளிவருவதாகக் குறிப்புள்ளது. நீலாவணனைப் பற்றி இதுவரை இரண்டு நூல்கள் வெளிவந்திருக்கின்றன.
* கலாநிதி சி.மெளனகுரு எழுதியுள்ள கால ஓட்டத்தினூடே ஒரு கவிஞன்
1994.
* நீலாவணன்- எஸ்.பொ.நினைவுகள் - எழுதியவர்: எஸ்.பொன்னுத்துரை
1994.
சங்கத் தகவல்களையும், சங்கத்தின் செயற்பாடுகள் பற்றிய செய்தி. களையும் இலக்கியக்காரர்களுக்கும் தமிழபிமானிகளுக்கும் அறியத்தரும் நோக்கில் வெளியிடப்பட்ட கொழும்புத் தமிழ்ச்சங்கத்தின் வெளியீடான ஒலை இந்த நீலாவணன் சிறப்பிதழை வெளியிட்டதன் மூலம் ஈழத்துச் சஞ்சிகை வரிசையில் ஒரு வரலாற்று முக்கியத்துவத்தைப் பெறுகின்றது.
ஈழத்து இதழியல் வரலாறு இந்தத் தமிழ்ச்சங்கத்தின் ஒலையை ஒதுக்கிவிட முடியாதவாறு முனைப்புப் பெறுகிறது என்பதே பெருமையானதுதானே. -
நன்றி. வீரகேசரி - கலைக்கேசரி (02052003)
৭২১
‘ஓலை’ - 18 யூலை 2003) பக்தம் 10

Uő5ú 11
ஓராண்டுப் புகழாச்சு. உதயம் கணர்ட ஒப்பற்ற அமைதிக்கு இன்று நாட்டில்! போராலே பெருநாசம் விளைந்த மணிணோ புதிதாகிப் பேரின்பம் காண லாச்சு வேராகி இன்றுான்றும் புரிந்து ணர்வு விருட்சத்தைக் காணத்தான் விரும்ப லாச்சு தீராத பகையுற்றுப் பிரிவு கணிடோர் திருத்தங்கள் பெற்றுத்தான் திரும்ப லாச்சு
குழிவெட்டி மனிதர்க்குக் கொடுமை செய்த கோரந்தான் போரின்று ஓய்ந்திருக்கு பழிபாவந் தாண்பெற்ற வடகிழக்குப் பலநூறு மனிதர்க்கும் மகிழ்வி ருக்கு அழிவேதான் எல்லாமே உற்ற ஈழம் அமைதிக்குப் பணிசெய்யக் காத்திருக்கு இழிவான சண்டையோ இன்ற கன்று இலங்கையும் சமாதானம் கண்டி ருக்கு
ஆண்டொன்று போகட்டும் அமைதி யின்னும் ஆணர்டாணர்டு காலங்கள் வாழ வேண்டும்! மீண்டுந்தான் போருற்றால் மாங்காய்த் தீவு முழுமையாய்த் தீயாகும் இதுஉணர் மையே! வேண்டுந்தான் உரியோர்க்குப் புரிந்து ணர்வு விலக்கத்தான் வேண்டுந்தான் சந்தே கத்தை! துரணர்டத்தான் உள்ளார்கள் சிலபேர் போரை துரத்தித்தான் அடிப்போமே வெறியர் தம்மை!
இன்னுந்தான் இந்நாட்டின் மாந்தர் யாரும் இன்னல்கள் மறக்கத்தான் தீர்வு இல்லை! வண்மங்கள் ஆங்காங்கே வளர்ந்து. தேசம் வாழ்மக்கள் சுமையேதான் அதிக மாச்சு! சின்னாபின் னம்மாச்சு சுதந்திரம்தான் சிறுபான்மை யோர்கையில் விலங்கு முண்டு! என்றேதான் இவையாவும் முழுதாய் நீங்கி இந்நாட்டின் சமாதானம் நிலையா யாகும்?
வருடத்தின் நிறைவையே வாழ்த்துவோம்! நாம் வரவேற்றே அமைதிக்கும் ஆசி சொல்வோம்! ஒருஆண்டு போதாது. பேச்சு வார்த்தை உயிர்பெற்று யுகம்தோறும் அமைதி வேண்டும்! தெருதோறும் குண்டோசை மரண ஒலம் தீயுத்தம் முற்றாக அகல வேண்டும்! பெருவெற்றி இதுவேதான்! சமாதா னத்தின் பேர்சொல்லும் விடியல்தான் இனிமேல் வேண்டும்!
- காத்தான்குடி எம்.எல்.எம்.அன்ஸார்
‘ஓலை’ - 18 (யூலை 2003)

Page 8
நூல் : 'வானலையின் வரிகள். ஆசிரியர் இளையதம்பி தயானந்தா
வெளியீடு : 'யாதும் ஆரபி பதிப்பகம்
இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தைச் சேர்ந்தவரும், கொழும்புத் தமிழ்ச் சங்க உறுப்பினருமான இளையதம்பி தயானந்தாவின் பேட்டிகள் (தொகுப்பு -1) நூலான 'வானலையின் வரிகள். வெளி. யீடு 25.04.2003 வெள்ளிக்கிழமை மாலை 5.00 மணிக்கு கொழும்பு இராமகிருஷ்ண மிஷன் மண்டபத்தில் நடைபெற்றது.
தமிழகத்து எழுத்தாளர்களோடும், கவிஞர்கள் மற்றும் கலைஞர்களோடும் நேர்கண்ட பேட்டிகளின் தொகுப்பு நூல். முற்று முழுதாக வானொலி நேர் காணல்களின் வரிவடிவங்களாக இல்லையாயினும் அவை ஒரு வானொலி சார் ஊடகவியலாளனின் (செவ்விகள்) ஆவணப்படுத்தல் என்ற வகையிலும், இருவரது உரையாடல்கள் காற்றில் கலந்து காணாமல் போய்விடாதவாறு வரி வடிவம் கொடுத்து அச்சேற்றப்பட்டுள்ளன என்பதால் 'வானலையின் வரிகள் ஆகின்றன.
ஆசிரியர் தன் தற்பாயிரத்தில் குறிப்பிடுகின்றார். இது 'தமிழகத்தின் பாயிரம்' என்று. அதனால் ஈழத்தவர்களின் பேட்டிகள் உள்ளடக்கப்படவில்லை. அவை தயானந்தாவிடம் இருக்கும் அடுத்த நூல்களாக எதிர்பார்த்கலாம். (நம்மவர் பேட்டிகள் தொகுக்கப் பெறும் போதும் 'எனது பேட்டியைப் போடவில்லை' என்றும் நம்பிரமுகர்கள் பிரச்சனை எழுப்ப இடம் இருக்கிறது.)
பேட்டிகளின் ஊடாக இரண்டு விடயங்களில் வாசகர் தெளிவு பெற முடிகிறது.
1. எப்படிப் பேட்டி காண்பது?
2. ‘நாம் பற்றி இந்தியப் பிரமுகர்களின் நிலைப்பாடு
1. இன்றைய வெகுஜன ஊடகங்களில் சிலுசிலுப்புக் காட்டுவோர் - காணும் செவ்விகளைக் கேட்கையில் பார்க்கையில் சலிப்பு ஏற்படுகின்றது. அவர்கள் இ.தயானந்தாவின் 'வானலையின் வரிகளைப் படித்துத் திருந்திக் கொள்ள முடியும்.
‘ஓலை’ - 18 (யூலை. 2003) பக்தம் 12
 

வாசகன் தானும் ஒரு செவ்வியாளன் ஆகும் வகையில் கேள்விகள் உள்ளத்தில் எழுவதும் அது அடுத்த கேள்வியாக அமைவதும் தயானந்
தாவின் வெகுஜன ஊடகம் சார்ந்த பல்துறைப் புலமை சார்ந்த ஏற்றத்தைக் குறிக்கின்றன.
பேராசிரியர் கா.சிவத்தம்பி அம் முகவுரையில் குறிப்பிட்டது போன்று செவ்வி காணப்படும் வள ஆளரின் தன்வயம் / தற்புலம் வெளிப்படுவதைக் காண முடிகின்றது. இதுவே ஒரு நேர்காணலின் இயற்தன்மையும் வெற்றியும் ஆகும்.
நேர்காணப்பட்ட ஒவ்வொருவரிடமும் பின்வரும் விடயங்கள் சார்ந்த கேள்விகள் அவரவர் தளங்களில் தயானந்தாவினால் தொகுக்கப்படுகின்றன.
w இலங்கையில் தமிழ் மக்களின் பிரச்சினைகள் பற்றி. 峰 ஈழத்து இலக்கியம், கவிதைகள் தரம் பற்றி. w புலம் பெயர் இலக்கியம், தமிழ் மொழி பற்றி.
இதனுடாக ஒருநாடி பிடித்துப் பார்த்தலை வாசகன் செய்யமுடிகின்றது. ஆங்காங்கே விமர்சனத்துக்கும் விவாதத்துக்கும் உரிய கருத்துக்கள் எழுகின்றன.
அவை அந்த வள ஆளருடன் வாசகன் செய்ய வேண்டிய தொடர் பணி. ஆனால் தயானந்தா அதில் காட்டும் சார்பின்மை வாசகனின் பின்னுரட்டலுக்கு வழி விடுகின்றது.
அழகான அட்டைப்படம், அருமையான நூல் அமைப்பு, அச்சுப்பதிப்பு, பேட்டியாளர்களை கோட்டுரு ஒவியமாகவும், புகைப்படமாகவும் அறி. முகப்ப்டுத்தும் பாங்கு,தயானந்தாவிடம் பிறர் கேட்ட கேள்விகளுக்கு தான்' கொடுத்த பதில்கள் என்று நூலுக்கு செழுமை சேர்க்கும் அம்சங்கள் அனேகம்.
அரசியல், இலக்கியம், சமூகவியல், விஞ்ஞானம், சமயம் என்று பல்துறை சார்ந்த தமிழகப் பிரமுகர்களினது செவ்விகள், பொதுவான துறைசார்ந்த வாசகர்களுக்கு நல்ல ஒரு கை நூலாக அமையத் தக்கது இந்த நூல்.
மேலாக வானொலியின் ஊடு காற்றோடு கலந்து விடும் படைப்புகளை அச்சுருவில் ஆவணப்படுத்தும் முயற்சிகளில் 'வானலையின் வரிகள்' இன்னொரு எல்லையைத் தொடுவதாகும். இ.தயானந்தா தொடர்ந்தும் தனது படைப்புகளை நூலுருவில் தரவேண்டும். 'யாதும்" ஊடாக,
-மாவை வரோதயன்
UőSaó 13 ‘ஓலை’ - 18 (யூலை. 2003)

Page 9
இலக்கிய வாழ்வில் இடறிய சம்பவங்கள்
கலாபூஷணம்.ஏ.இக்பால்
"தேசாபிமானி" வார இதழில் பி.இராமநாதன் ஆசிரியராக இருக்கும் போது "தேசாபிமானி" மலரொன்றுக்கு ஆறுமுக நாவலரையும் சித்தி லெவ்வையையும் ஒப்பு நோக்கி ஒரு கட்டுரை எழுதுமாறு வேண்டினார். ஆறுமுக நாவலரையும், அறிஞர் சித்தி லெவ்வையையும் தேடிப்பிடித்து ஒரு கட்டுரை எழுதினேன். 17.12.1968 தேசாபிமானி மலரொன்றில் "புரட்சி செய்த பேனா வீரர்கள் நாவலரும் சித்திலெவ்வையும்" எனும் தலைப்பில் அக்கட்டுரை வெளிவந்தது.
அன்றிலிருந்து பி.இராமநாதன் சித்திலெவ்வைபற்றி ஒரு நூல் எழுதுமாறு என்னை நச்சரித்துக் கொண்டேயிருந்தார். தகவல்கள் நிறையத் தந்தார். தகவல்கள் பெறும் வழிகளைக் காட்டினார். இலங்கை எழுத்தாளர்கள் அநேகருக்கு பி.இராமநாதன் ஒரு ஏணியாகவேயிருந்தார். இளங்கீரனின் "மரகதம்" சஞ்சிகை வெளிவர இவரே காரணமானார். இரவு பகலாய் அதன் வெளியீட்டிற்காக உழைத்தார். "றெயின்போ" அச்சகத்திலேயே இவ்வேலை நடந்தது. இளங்கிரனையும் இராமநாதனையும் தேடிவரும் எழுத்தாளர்கள் உறவை எம்.ஏறஹற்மான் இக்காலத்தேதான் தேடியணைத்தார். அதுமட்டுமல்ல, "மரகதத்"தின் மரணக்குழியின் மேல் "அரசு பதிப்பகம்" அம்பலமேறியது.
"தமிழ்நாட்டுப் புனைகதைகளின் தோற்றமும் வீழ்ச்சியும்" எனும் தலைப்பில் எம்.எம்.எம். மஹற்ரூப் அவர்கள் 1967 மே 16 தொடக்கம் 1968 மார்ச் 06 வரை 'தினகரன்" வாரமஞ்சரியில் தொடர்ந்தெழுதினார். இந்த ஆய்வுக்காக தமிழ் நாட்டு நாவல்களின் கணிச அளவு தமிழ் நாவல்களை அவருக்குச் சேர்த்துக் கொடுத்தவர்கள் பி.இராமநாதன்,எம்.எஸ்.எம்.இக்பால் இருவருமே. இப்பெருமைமிகு பி.இராமநாதன் முயற்சியின் பயன்தான் "மறுமலர்ச்சித் தந்தை" எனும் சித்தி லெவ்வை பற்றிய எனது புத்தகம். புத்தக்தை அழகிய அச்சில் இந்திய நூல் போல் இர.சந்திரசேகர சர்மா அவர்கள் அவரது"விண்மதி"ப் பதிப்பகம் மூலம் வெளியிட்டார்.
இந்நூல் வெளிவருவதற்கு முன், கையெழுத்துப் பிரதியைப் படித்த பி.இராமநாதனும் எம்.எல்.எம்.இக்பாலும் நிச்சயம் ஸாஹித்திய மண்டலப் பரிசைப் பெறவேண்டும். அதற்குத் தடையாக இருப்பவைகளை இனங்காண வேண்டும் எனச் சிந்தித்தனர். சிந்தனையின் பின், இருவரும் கூறிய விடயம்: "இந்நூல் நிச்சயம் பார்வை செய்வதற்காக எம்.எம். உவைஸ்,
‘ஓலை’ - 18 (யூலை 2003) Uásó 14
 

எஸ்.எம்.கமால்தீன் இருவரிடமே செல்லும். இவர்களிடம் இந்நூல் போகவே கூடாது. அதற்கென்ன செய்யலாம்" என யோசித்தனர்.
இந்த இருவரிடமும் முன்னுரையோ, அணிந்துரையோ, எந்த உரையையாவது எடுக்கும்படி என்னிடம் வேண்டினர். "உவைஸ் அவர்களிடம் வாங்கலாம், எஸ்.எம்.கமால்தீனிடம் வாங்க எனக்கு விருப்பமில்லை" என்று நான் கூறினேன். "அப்படியானால், ஸாஹித்திய மண்டலப் பரிசு கிடைக்காது" என்றனர். சரி, அவரது மனைவி அழுத்கம ஆசிரிய பயிற்சிக் கலாசாலை அதிபராக இருக்கிறார். அவரிடம் பெறுகிறேன் என்றதும், அதையாவது செய்யும் படி என்னை வேண்டினர்.
பாராட்டுரை ஒன்றை எம்.எம்.உவைஸ் அவர்களிடம் பெற்றுவிட்டேன். திருமதி ஹலீமா கமாலுத்தீனிடம் ஒரு மதிப்புரை கேட்டேன். அவர், "இதற்கெல்லாம் எஸ்.எம்.கமால்தீன் தான் பொருத்தமானவர், என்னிடம் ஏன் கேட்கிறீர். கள்?" என விருப்பமற்றுக் கூறினார். நான் உடனே, "நீங்கள் கண்டி மரைக்காருடைய மகள், சித்திலெவ்வை கண்டியைப் பிறப்பிடமாகக் கொண்டவர்" என்றதும் மகிழ்ச்சியுடன் இணங்கி "மதிப்புரை" ஒன்று தந்துவிட்டார். முன்னுரையை நான் விரும்பியபடி சித்திலெவ்வையில் ஈடுபாடு கொண்டு வெளியே மக்கள் மத்தியில் அறிமுகம் செய்த ஏ.எம்.ஏ.அஸிஸ் அவர்களிடமே பெற்றேன். "மறுமலர்ச்சித் தந்தை" நூல் 1971 ஜூன் 11ல் வெளியானது.
இந்நூல் வெளியானதன் பின், நிறைய அநாமேதய விமர்சனங்கள் கடித மூலம் வந்தன. தமிழ்ப்பிழை பிடித்துத் தமிழறியாதோரே வானொலியில் பேசத் தொடங்கினர். இதற்கு நூலிலுள்ள "முதலாவது தலைப்பிள்ளை" எனும் எனது உபயோகம் மிகப் பிழையெனச் சுட்டிக் காட்டி, "முதலாவது பிள்ளை, தலைப்பிள்ளை என்ன குளறுபடி" என வியந்துநின்றனர். எப்படியோ இந்நூலை மட்டந்தட்டுவதில் முனைந்துநின்றமைக்கு காரணமே புரியவில்லை. என்றாலும், யாவற்றிற்கும் துணிந்து பதில் கொடுத்தேன். முஸ்லிம்கள் விதவை மணம் புரிபவர்கள். ஒரு விதவைக்கு இரண்டாம் பிள்ளையாய் இருப்பவர் அவர் தந்தைக்குத் தலைப்பிள்ளையாய் இருப்பார். இரண்டாவது மணம் செய்த ஒருவரது மனைவிக்குத் தலைப்பிள்ளையாய் இருப்பவர் கணவனுக்கு இரண்டாவது பிள்ளையாய் இருப்பார். இந்த மரபை அறியாத மடையருக்குப் புத்தி புகட்டும்நிலை எனக்குநிறைய ஏற்பட்டது. உண்மையில், அந்நூலிலுள்ள தமிழ்ப்பிழைகள் சிலவற்றையும் எடுத்துக்காட்டினேன்.
"மறுமலர்ச்சித் தந்தை" ஸாஹித்திய மண்டலம் சென்றபின், அந்நூலுக்கு நடுவர்களாக க.கைலாசபதி, எம்.எம்.எம்.மஹற்ரூப், லஷ்மண ஐயர் மூவருமே இருந்தனர். இவர்கள், நூலின் தாரதம்மியம் நோக்கி பரிசுக்குத் தேர்ந்தனர். பின்னொரு முறை பேராசிரியர் க.கைலாசபதி அவர்கள் இந்நூல் பற்றி என்னிடம் கூறும்போது, "இந்நூல் சிறப்பு வாய்ந்த நூல் என்று சொல்வதற்கல்ல எனத்தள்ளினாலும், சித்தி லெவ்வையை முன்னிறுத்தி இன்னும் பல நூல்கள்
Uő5ú 15 ‘ஓலை’ - 18 யூலை 2003)

Page 10
விரிவாக வெளிவர வேண்டும் என்பதற்காகவே பரிசுக்குத் தேர்ந்தோம்" என்றார்.
1972இல் கம்பளையில் ஸாஹித்திய மண்டலப்பரிசு பெற்ற கையுடன், ஹேந்தெனிய முஸ்லிம் வித்தியாலயம் ஒரு நாள் முழுதும் எனை அழைத்துச் சென்று வாழ்த்திப் போற்றியது. சித்தலெவ்வை பற்றிய பேச்சே தொனித்துக் கொண்டிருந்த வருடந்தான் அது. சித்திலெவ்வையே அமைத்த கட்டுக்கலை முஸ்லிம் வித்தியாலயத்தின் பெயர் "சித்தி லெவ்வை மஹா வித்தியாலயம்" என இவ்வாண்டுதான் மாற்றம் பெற்றது. அவ்வித்தியாலயத்தில் கண்டி முஸ்லிம் எழுத்தாளர் சங்கம் என்னைப் பாராட்டி விழா எடுத்தது. எஸ்.எம்.கமால்தின் அவர்கள் கூட, இந்நூல் பற்றி விதந்து வானொலி முஸ்லிம் நிகழ்ச்சியில் பேசியதும் பரிசுக்குப் பின்தான். சித்திலெவ்வைக்கு முத்திரை வெளியிடப்பட வேண்டும் எனும் குரலும் இவ்வாண்டுதான் தொனித்தெழுந்தது.
வானொலி தமிழ் நிகழ்ச்சியில் "எழுத்துலகம்" எனும் நிகழ்ச்சியை நடத்தி வந்த பேராசிரியர் க.கைலாசபதி அவர்கள், இந்நூல் பற்றிக் கலந்துரையாட என்னை அழைத்தார். அதன்படி, 10.02.1973 இல் நடந்த ஒலிப்பதிவு 13.02.1973இல் ஒலிபரப்பானது. பத்து நிமிடங்கள் நடந்த இவ்வுரையாடல் இலக்கிய முக்கியம் வாய்ந்த தொன்று. எனது இலக்கிய உயர்வுக்கு இது பொருத்தமாக வாய்ந்ததெனக் கருதுகிறேன்.
ஒரு நூல் தகுதி பெறுவது வேறு. பரிசு பெறுவது வேறு என்பதை இச்சம்பவங்கள் எனக்கு மட்டுமல்ல எல்லோருக்கும் உணர்த்தலாம்.
- தொடரும்
கபளிகரம் சிறுகதைத் தொகுதியில் ஒலைச் சிறுகதைகள்
எழுத்தாளர் நீபி.அருளானந்தம் அவர்களின் 'கபள். கரம்' (சிறுகதைத் தொகுதி) நூல் வெளியீடு பேரா. சிரியர் சோ.சந்திரசேகரம் (கல்விப்பீடம் கொழும்புப் பல்கலைக்கழகம்) அவர்களின் தலைமையில் 15.06.2003, ஞாயிற்றுக்கிழமை மாலை 4.30மணிக்கு கொழும்புத் தமிழ்ச்சங்கம், சங்கரப்பிள்ளை மண்டபத்தில் நடைபெற்றது. இச்சிறுகதைத்தொகுதி நூலில் 'ஒலையில் வெளி. வந்த ஆறாத புண்கள் (ஓலை-9,ஒக்டோபர் 2002): 'வசந்தம் வந்தது' (ஒலை-13, பெப்ரவரி 2003): அவர்களுக்குள்ளும். (ஒலை-15 ஏப்ரல் 2003) ஆகிய அவரது சிறுகதைஞம் சேர்க்கப்பட்டுள்ளன.
ஓலை’ - 18 (யூலை 2003) பக்தம் 16
 
 

"முதியோர்' என்றால் முற்றமும் சலிக்கும்; கேலியும் கிண்டலும் எதிலும் இருக்கும்.
முதியோர்' என்று மூலையில் இருத்தி, 'கதி இதுதான் என்பது போல(க்) கலங்கிடச் செய்வார்.
அறிவுரை போதனை அடுத்துக் கேட்க ஒருவரும் நாடார்: இசையவும் மாட்டார்.
தொல்பொருள் என்று தொட்டதையெல்லாம் பார்வைக்கு வைத்து அழகு பார்க்கும் அதிசய உலகம்!
முதுமை கண்ட மனிதரை என்றும் அழகு பார்த்த அற்புதம் உண்டா?
வீதியில் செல்லும் விருத்தரைச் சீண்டி வேடிக்கை பார்க்கும் வீணர்கள் இன்னும் வாழுகின்றாரே!
பெற்றோரைப் போன்று பெரியோரை எண்ணி மதித்து நடக்கும் காலம் வாராதோ? கனிவு பிறக்காதோ?
பழுத்தோலை கண்டு குருத்தோலை சிரிக்கும்; குருத்தோலை அதுவும் பழுத்தோலை யானால், யாரைப் பார்த்து யாரே நகைப்பார்!
- Firgéotr கையூம்
Uãódì 17
- 18 (qബഞ്ഞു. 2003)

Page 11
சங்கம் வளர்த்த சான்றோர்கள் (கொழும்புத் தமிழ்ச்சங்கத்தை வளர்த்த அறிஞர்கள்)
-இ. க. க
கொழும்புத் தமிழ்க்கழகம் என இருந்ததை பண்டைத் தமிழ்ச்சங்க மரபில் "கொழும்புத் தமிழ்ச்சங்கம்" என மாற்றம் பெற முன்னின்றவர் வித்துவான் க.மு.கனகசுந்தரம் அவர்களே.
கொழும்புத் தமிழ்ச்சங்கத்தின் மூன்றாவது ஆண்டு நிறைவு விழா 12-13.05.1945 ஆகிய இரு தினங்கள் நடைபெற்றது. அப்போது காரியதரிசியாக விளங்கியவர் திரு.மு.கணபதிப்பிள்ளை அவர்கள்.
மேலும், இச்சந்தர்ப்பத்தில் நினைவுகூரப்படவேண்டிய இருவர் உளர். ஒருவர் யாழ்ப்பாணம் ஆரிய திராவிட பாஷாபிவிருத்திச் சங்கத்தாரால் நடாத்தப்படும் பிரதேசபண்டித பரீட்சைக்குக் கழக அங்கத்தவர்களில் விரும்புவோரைக் கற்பிப்பதற்காக கழகத்தால் 04.02.1945 இல் ஆரம்பிக்கப்பட்ட வகுப்புகளுக்கு ஆசிரியராகக் கடமையாற்றிய பண்டிதர் வித்துவான் கா.பொ.இரத்தினம் (பி.ஓ.எல்) அவர்கள்.
மற்றவர், 1943இல் ஒரு சிறிய நூல் நிலையத்தையும் வாசிகசாலையையும் கொழும்புத் தமிழ்க் கழக இல்லத்தில் (292, காலி வீதி, கொழும்பு06) திறந்து வைத்த திரு.க.கனகரத்தினம். (பிரதிக் கணக்காளர் நாயகம்) அவர்களாவர். அவ்வேளை செட்டி நாட்டு அரசர் சேர் அண்ணாமலைச் செட்டியார் 101 ரூபா முதலில் அன்பளித்து வாழ்த்துரை வழங்கினார்.
திரு.அ.சபாரத்தினம் அவர்களின் பின்பு கொழும்புத் தமிழ்ச்சங்கத் தலைமையை ஏற்றவர் திரு.க.ச.அருணந்தி அவர்களாவர். இவர் இலங்கை முழுவதற்கும் கல்வி அதிபராக விளங்கிய பெருமைக்கு உரியவர். அருணந்தி அவர்கள் கவிதை புனைவதிலும் வல்லவர். சங்கத்தின் நான்காவது ஆண்டு விழாவின் தலைமையுரையைக் கவிதையில் நிகழ்த்
‘ஓலை’ - 18 (யூலை. 2003) U55á 18
 
 

தினார். தமிழ்ச் சங்கம் ஆற்றவேண்டிய அவசியமான தமிழ்ப்பணிகளை தமது தலைமையுரையில் குறிப்பிட்டார். சங்கத்தின் எதிர்கால வளர்ச்சியில் இவர் கொண்டிருந்த பெரும் ஆர்வம் இதனால் புலப்படுகின்றது.
இவர் காலத்தில் தமிழகத்தின் புகழ்பெற்ற தமிழறிஞராகவும் எழுத்தாள். ராகவும் விளங்கிய கல்கி ஆசிரியர் யாழ் தமிழ் விழாக் காணவும், தாம், எழுதும் பொன்னியின் செல்வன்' என்னும் வரலாற்றுநாவலுக்கு இலங்கையில் தகவல் சேகரிப்பதற்காகவும் இலங்கை வந்திருந்த போது கொழும்புத் தமிழ்ச்சங்க ஆதரவில் சைவமங்கையர் கழகத்தில் உரை நிகழ்த்தினார். கல்கி அவர்கள் தமிழகம் திரும்பியபின் எழுதிய இலங்கைப் பிரயாணக் கட்டுரையில் கொழும்புத் தமிழ்ச்சங்கம் பற்றியும் அதன் தலைவராக அப்போது விளங்கிய திரு.க.ச.அருணந்தி அவர்களைப் பாராட்டியும் எழுதியுள்ளார். . . . . . . . -
இவர் காலத்திலேயே இப்போதுள்ள சங்கக் காணி விலையாக வாங்கப் பெற்றது. இதற்காக நிதிதிரட்டும் பொருட்டு 1947இல் கொழும்பு 4 கின்றோஸ் அவெனியுவில் 'களியாட்ட விழாவும் பொருட்காட்சியும்" நடாத்தப்பட்டது. இந்தியத் தூதுவர் வி.வி.கிரி, பீசரவணமுத்து, எஸ்.ஜே.வி.செல்வநாயகம், மாநகரமுதல்வர் ஆர்.டி.மெல், திவான் பகதூர். ஐ.எக்ஸ்.பெரேரா ஆகிய பெரியார்கள் இப்பொருட்காட்சியைத் தொடக்கி வைத்தனர். அதே ஆண்டு சங்க நிதிக்காக மருதானை 'எல்பின்ஸ்டன்' அரங்கில் 'மங்கம்மா சபதம்' திரைப்படம் காண்பிக்கப்பட்டது.
சங்கத்திற்குச் சொந்தமாக 42 பேர்ச் நிலம் கொழும்பு -6 இல:7, 57வது ஒழுங்கையில் 1950இல் விலையாக வாங்கப்பட்டது.நிலத்தை வாங்குவதற்கு க.மதியாபரணம் அவர்கள் பணம் கொடுத்து உதவினார்.
சேர்.சிற்றம்பலம் நீதியரசர் ந.நடராசா சேர்கந்தையா
கார்டினர் கியூசி வைத்தியநாதன்
Uéis ó 19 ‘ஓலை’ - 18 யூலை 2003)

Page 12
11.05.1947 இல் சைவ மங்கையர் கழகத்தில் நடைபெற்ற விசேட மகாசபைக் கூட்டத்திலேயே (பொதுச்சபைக் கூட்டம்) சங்கத்தைப் பதிவு செய்வதற்கேற்றவாறு நிருவாகசபையால் திருத்தியமைக்கப்பட்ட சங்க அமைப்பு விதிகள் அங்கீகரிக்கப்பட்டன.
1947 - 1950 மகாசபைக் கூட்டங்கள்
திகதி காப்பாளர் தலைவர் காரியதரிசி தனாதிகாரி இ.புலேந்திரன் 17.03.48 இலிருந்து LITáäbi சி.பொன்னம்பலம்
ଅଞT୩j வித்துவான்
ஆண்டுப் dt.(p. பொதுக் திருஏகார்டினர் கசஅருணந்தி*ந்தரம் ಆnLLtb
25.05. 947
o சேர்.க.
பொதுக் ததியநாதன
கூட்டம்
1.07. 1948
7வது ஆண்டுப் 1 t it T பொதுக் கூட்டம்
17.07. 1949
8வது ஆண்டுப் பொதுக் கூட்டம்
19.02. 1950
சங்கத்தைச் சங்கங்களுக்கான அரசின் சட்டத்தின்படி பதிவு செய்தமை 1950ம் ஆண்டிலாகும்.
-தொடரும்
«S
‘ஓலை’ - 18 (யூலை. 2003) பக்தம் 20

திசை புதிது இதழ் 1 (2003) ஜனவரி -மார்ச் 2003 ஆசிரியர் : கோபி இணையாசிரியர்: க.சசீலன்
தருகை 25/=
தொடர்புகளுக்கு T.Kopinath 90/3, New Chetty Street
Colombo -13 ußgäsarCjjö : thisai-puthithuGyahoo.com இளையவர்களால் இளையவர்களுக்காகத் தொடங்கப்பட்டிருக்கும் புதிய இதழ் இது' எனும் அறிமுகத்துடன் புதிய சிந்தனைகளை புதிய முகங்களை புதிய கருத்துக்களைத் தேடிப் புறப்பட்டிருக்கிறோம்' எனும் இலக்குடன் புறப்பட்டிருக்கிறது 'திசை புதிது"
ஆசிரியர் குழு தொடர்புகட்கு:
அகளங்கள் பொதிகை கந்தையா பூரீ கணேசன் 395/145 அலைகரை வீதி, உதவி: இறம்பைக்குளம். செல்விசிவாஜினி வவுனியா
தொபே024-21310 திரு.ப.முரளிதரன்
90. திருநாவற்குளம் வெளியீடு: வவுனியா.
வவுனியா கலை 0777-589686 இலக்கிய
நண்பர்கள் வட்டம்.
வவுனியா கலை இலக்கிய நண்பர்கள் வட்டத்தின் வெளியீடான 'மாருதம் இதழ் 03 (சித்திரை -2003) அறுபதாம் அகவை காணும் பேராசிரியர் சிமெளனகுரு அவர்களின் அட்டைப்படத்துடன் வெளிவந்துள்ளது.
1997ம் ஆண்டு பெப்ரவரி மாதம் முழுநிலா தினத்தில் (2102.1997) பதினேழு பேருடன் ஆரம்பிக்கப்பட்ட வவுனியா கலை இலக்கிய நண்பர்கள் வட்டம்
எனும் அமைப்பினி ஆறு வருட நிறைவு இதழாகவும் இது பரிமளித்துள்ளது.
Uágú 21 ‘ஓலை’ - 18 (யூலை 2003)

Page 13
மனித யந்திரம்
யோகேஸ். கணேசலிங்கம்
0ெ05யில் பிரிவ்கேஸைத் தூக்கியபடியே தனது புதிய ரொயோடா காரில் இருந்து இறங்கினார் டாக்டர் ஜெயமோகன்.நகரத்தில் பேர் சொல்லும் பிரபலமான டாக்டர் அவர். தான் வேலை பார்க்கும் அரசாங்க ஆஸ்பத்திரியில் வேலை முடித்த பின்னர் மூன்று. நான்கு தனியார் ஆஸ்பத்திரிகளில் நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிப்பவர். −
பாத்த மாத்திரத்தே நோயைக் கண்டுபிடித்துவிடுவார்'அவர் மருந்தை ஒருமுறை போட்டாலே நோய் மாறிவிடும். அவரிடம் சிகிச்சை பெற்றவர்கள் வாயிலிருந்து திருப்தியாக வெளிவரும் வார்த்கைள் இவை.
வெளியே தனக்காகக் காத்திருந்த நோயாளிகளை நோட்டம் விட்டபடியே தனது அறைக்குச் சென்றார் ஜெயமோகன்.
அவருடைய வருகையை அறிந்த நர்ஸ் பத்மா கடமை உணர்வோடு அருகே சென்றாள்.
டாக்டர் இண்டைக்கு நாற்பது பேருக்கு மேலை வந்தவை. முப்பது நம்பருக்கு மேலை குடுக்க வேணாம் எண்டு நீங்கள் சொன்னபடியால் முப்பது நம்பர் தான் குடுத்தனான். மற்றவையளை நாளைக்கு வரச் சொன்னனான்! தான் சொன்னது சரியா என்பது போல டாக்டரின் முகத்தைப் பார்த்தாள்.
ஒன்றும் பேசாது நர்ஸ் சொன்னதைக் கேட்ட ஜெயமோகன் தனது இருக்கையில் இருந்தார். கைக் குட்டையை எடுத்துமுகத்தைத் துடைத்தார். கை, கால்களை எறிந்து, தலையை கதிரையில் சரித்து மேலே இருந்து வந்த மின்விசிறியின் காற்றை அனுபவித்தார்.
களைத்திருந்த அவருடைய உடலுக்கு அந்தக் காற்று இதமாக இருந்தது.
காலையில் எழும்பிய நேரம் தொடக்கம் பம்பரமாகச் சுழன்று கொண்டு இருக்கிறார் டாக்டர்.
இந்தத் தனியார் ஆஸ்பத்திரிக்கு வருவதற்கு முன்னர் வேறொரு தனியார் ஆஸ்பத்திரியில் பதினைந்து நோயாளிகளைப் பார்த்துவிட்டுத் தான் வந்திருக்கிறார்.
‘ஓலை’ - 18 (யூலை. 2003) பக்கம் 22
 

அவருக்குக் களைப்பாக இருந்தது. மேசையில் வைத்திருந்த தண்ணிரைக் குடித்தார். படுக்கையில் சரிந்தாரானால் இப்போதே துரங்கிவிடுவார். அந்த மாதிரிக் களைத்துப் போயிருந்தது அவர் உடம்பு.
பார்ப்பதற்கு எவரையும் கவரும் தோற்றமுடையவர். நோயாளிகளுடன் பழகும் பண்பும் தெரிந்தவர். அவருடைய சிரித்த முகம், ஆதரவாகக் கதை கேட்கும் பண்பு, நோயாளிகளுடன் கதைக்கும் முறை என்பன அவர் செல்வாக்கைக் கூட்டின.
நோயாளிகள் அவரை மொய்ப்பதற்கு அவருடைய திறமை மட்டுமன்றி. அவர் பேசும் விதமும் காரணம் என்பதை அவர் அறிவார்.
டாக்டருடைய தலையசைப்பைப் பார்த்துக் கொண்டிருந்த நர்ஸ் பத்மா அவர் சரி என்று சொன்னதும் முதலாவது நம்பரைக் கூப்பிட்டாள்.
நோயாளிகள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான நோய்கள். வந்திருந்தவர்களில் முக்கால்வாசிப்பேர் நாற்பது வயதைக் கடந்தவர்கள். மனித யந்திரம் வயது போகப் போகப் பழுதுபடுவது இயல்பு. சிலருக்கு மருந்து மாத்திரை மூலம் பழுதைச் சரி செய்ய முடியும். சிலருக்கு சத்திரசிகிச்சை மூலம்தான் பழுது பார்க்க முடியும்.
அவரவர் நோயைக் கண்டறிந்து வேண்டிய வைத்தியம் செய்வதில் நிபுணர் டாக்டர் ஜெயமோகன்.
அவர் ஒரு யந்திரமாகச் செயல்பட்டார். நோயாளிகளைப் பரிசோதிப்பது, மருந்து எழுதுவது என வேகமாகச் செயல்பட்டார். அவர் விரும்பியோ, விரும்பாமலோ நோயாளிகள் சொல்லும் கதைகளைக் கேட்க வேண்டியிருந்தது. தனியார் ஆஸ்பத்திரியில் பார்க்கும் போது ஜெயமோகன் நோயாளிகள் மீது காட்டும் ஆதரவே அதிகம். இருபது நோயாளிகளைப் பார்த்தாகிவிட்டது. அடுத்தவர் மகேசன். இருபத்தியொராவது நம்பர்.
நர்ஸ் இருபத்தியொராம் நம்பர் மகேசனைக் கூப்பிட்டார். மூன்று தடவை கூப்பிட்டும் மகேசன் வரவில்லை.
அடுத்து இருபத்தி இரண்டாம் நம்பரை அழைத்தாள் நர்ஸ். நோயாளி உள்ளே சென்றார். அவரைப் பரிசோதித்து மருந்து எழுதிய பின்னர்அடுத்த நோயாளி உள்ளே சென்றார். படிப்படியாக முப்பது நோயாளிகளையும் பார்த்தாகிவிட்டது. ஜெயமோகனுக்கு உடலெல்லாம் ஒரே களைப்பு. அவர் வயிறு கர், புர் என்ற சத்தத்தை எழுப்பி தனது பசியை அவருக்கு நினைவூட்டியது.
டாக்டரும் ஒரு மனிதர்தானே? பசி, களைப்பு, துக்கம், அசதி எல்லாம் அவருக்கும் உண்டுதானே?
பக்கம் 23 ‘ஓலை’ - 18 (யூலை. 2003)

Page 14
கை நிறையச் சம்பாதித்தாலும் அவரும் ஒரு ஜீவன். அதை அவர் உடல் நினைவூட்டியது.
தனது இருக்கையில் இருந்து எழும்பியவரை நர்ஸ் தயங்கிய படியே டாக்டர் என அழைத்தார்.
என்ன? என்பது போல டாக்டர் நிமிர்ந்து பார்த்தார்.
ஒரு நோயாளிநம்பர் எடுத்துக் கொண்டு போனவர். இப்ப வந்திருக்கிறார். தயங்கியபடியே நர்ஸ் சொன்னாள்.
அவர்தான் இடையே கூப்பிடும் போது தனது இருக்கையில் இல்லாத இருபத்தியொராம் நம்பர் நோயாளி என்பது நர்ஸ்க்குப் புரிந்துவிட்டது. சரி, சரி கெதியிலை உள்ளை அனுப்புங்கோ. ஒரு நோயாளியை ஏமாற்றாமல் பார்த்திட்டு போவம்' டாக்டர் சுறுசுறுப்பாகச் செயல்பட்டார்.
கணவனை மனைவி அக்கறையாகக் கையில் பிடித்தபடியே உள்ளே வந்தாள். ஒரு வயோதிபத் தம்பதியினர். பார்ப்பதற்கு பார்வதி. பரமசிவன் போல இருந்தது. அவர்கள் தோற்றம். அன்பு நிறைந்த தம்பதிகள்.
நல்லவாழ்வு வாழ்ந்திருக்க வேண்டும். இப்போ வயோதிப காலம். நோய்கள் ஒன்றொன்றாக எட்டிப்பார்க்கத் தொடங்கிவிட்டன. அவர்களைப் பார்க்க களைத்திருந்த டாக்டருக்கு உடலில் ஒரு புதிய தென்பு ஏற்பட்டது.
மன்னிச்சுக் கொள்ளுங்கோ டாக்டர். நாங்கள் துண்டு எடுத்திட்டு காத்துக் கொண்டு இருந்தனாங்கள். இவருக்கு நேரத்துக்கு சாப்பாடு குடுக்க வேணும். சாப்பிடப் பிந்தினால் மயக்கம் வந்திடும். அதுதான் ஒட்டோவிலை வீட்டுக்கு போய் சாப்பிட்டிட்டு வந்தனாங்கள். தாங்கள் ஒழுங்காக வராததற்கான காரணத்தைச் சொன்னார் அந்த அம்மையார்.
'எனக்கு சாப்பிடாட்டால் தலையைச் சுத்தும் எண்டு இவ பயப்பிடுகிறா. நான் இருந்திருப்பன் டொக்டர். உங்களுக்கு சிரமம் தராமல் இருந்து காட்டியிருக்கலாம். எல்லாம் என்ரைமனுசியிடை வேலை. கணவன் சொல்லும் போது சற்றுப் பெருமையாகச் சொன்னார்.
இல்லை டொக்டர் இவர் இப்பிடித்தான் சொல்லுவார். ஆனால் சாப்பிடாட்டால் இவருக்கு தலை சுத்தும். அது எனக்குத்தான் தெரியும்'. மனைவி சொல்லும் போதே கணவனுடைய நாடி பிடித்துப் பார்த்த மாதிரி சொன்னா.
சாதாரணமாக இப்படிக் கதைகள் டாக்டர் ஜெயமோகனுக்கு கோபத்தைக் கொடுக்கும். ஆனால் அத் தம்பதிகளின் அன்பும் ஒருத்தர் மீது ஒருத்தர் கொண்ட கரிசனையும், அக்கறையும் அவருக்கு விநோதமாக இருந்தது.
‘ஓலை’ - 18 (யூலை. 2003) (1ங்கம் 24

சிரித்துக் கொண்டே அவர்களைப் பார்த்து மருந்து கொடுத்து அனுப்பினார்.
நன்றி சொல்லிவிட்டு அத்தம்பதிகள் சென்றுவிட்டனர். *"...س
டாக்டர் இருக்கையைவிட்டு எழுந்தார். ரெலிபோன் மணி அடித்தது.
நகரிலுள்ள மருத்துவமனை ஒன்றில் ஐந்து நோயாளிகள் காத்திருப்பதாக நர்ஸ் சொன்னாள்.
களைத்துப் போயிருந்த டாக்டர் தான் வரவில்லை என்று சொல்லும்படி கூறிவிட்டு வெளியே வந்தார்.
அவருக்குக் கொடுக்க வேண்டிய பணத்தைக் காசாளர் கொடுத்தார். அதை வாங்கித் தனது பையில் வைத்துக் கொண்டே தனது காரில் ஏறி வீட்டிற்குச் சென்றார்.
காரில் போகும் போது அவருக்கு பெரும் அசதியாக இருந்தது. ஒரு குளிப்புப் போட்டுவிட்டு, சாப்பிட்டிட்டு படுத்தால் தான் நாளைக்கும் இப்பிடி வேலை செய்யலாம். மனதில் நினைத்துக் கொண்டே வீட்டினுள் சென்றார்.
வீடு அமைதியாக இருந்தது. மனைவியும், பிள்ளைகளும் நிம்மதியாகத் தூங்கிக் கொண்டு இருந்தனர். கார்ச் சத்தத்தைக் கேட்டு வேலைக்காரி எழும்பி வந்தாள். தூங்கி வடிஞ்சபடியே டாக்டருடைய உணவை மேசையில் வைத்துவிட்டு உள்ளே சென்றுவிட்டாள்.
கணவன் வந்ததையோ, குளித்ததையோ, உடை மாற்றியதையோ அறியாது மனைவி துரங்கிக் கொண்டு இருந்தாள். பசி வயிற்றைக் கிண்ட தனது உணவைத் தானே பரிமாறினார் டாக்டர்.
அவர் கண்முன் இருபத்தியோராம் நம்பர் தம்பதிகள் தெரிந்தனர். என்ன அன்பு, என்ன அந்நியோன்யம். கணவன் பசி கிடக்க மாட்டான் என்று மனைவிக்குத் துடிப்பு. இந்தத் தள்ளாத வயதில் இப்படி ஒருவரை ஒருவர் புரிந்து நடப்பவர்கள், இளமையில் எப்படி இருந்திருப்பார்கள்.? சீ. என்ன உழைப்பு? ஆற அமரக் குடும்பமாக இருந்து எப்போது கதைத்திருக்கிறம்?
பிள்ளைகளின் படிப்பு,விளையாட்டு என்று எதனை ரசித்திருக்கிறார்?" மனைவியின் விருப்பு, வெறுப்புகளை எப்போது நிதானமாக நின்று கேட்டிருக்கிறார்?
உழைப்பு, உழைப்பு, உழைப்பு.
அவருக்குத் தன்மீதே கோபம் வந்தது.
டொக்டரின் மனம் கனத்தது. பக்கத்தே அவருடைய பணம் நிரம்பிய பையும் கனமாகக் கிடந்தது. (ID
பக்தம் 25 ‘ஓலை’ - 18 (யூலை. 2003)

Page 15
வேண்டும் மாற்றம்
வழிகாட்டி தன் தம்பிக்கு அடித்த என் மகளைக் கண்டித்தேன் அடித்தல் தவறென்றேன் உங்களிடந்தானே பழகினேன் என்றாள்!
நேற்றுப் போல் இன்றில்லை நாளையும் இன்று போலில்லை தோற்றங்கள் நாளும் மாறும் தோல்வியே வெற்றியாகும் ஏற்றமும் தாழ்வும் வாழ்வில் என்றுமே நிலைப்பதில்லை மாற்றங்கள் வருவதாலே மனதினில் சுவைக்கும் வாழ்க்கை.
விம்பங்கள்
பிள்ளைகள் எங்கள் விம்பங்கள் காலமென்னும் தளவாடியில் காட்டப்படும் நேரடி விம்பங்கள் ஆதலால். அவர்கள் செய்யும் தவறுகளுக்காக தண்டித்தலைத் தவிர்த்து அன்பாய்க் கண்டித்து வளர்ப்போம் அவர்கள் எமது விம்பங்கள்.
-திருமதி கிருபாநிதி சற்குணநாதன் வீஸப்பாடின் ஜேர்மனி
‘ஓலை’ - 18 (யூலை 2003)
பக்தம் 26
 

சங்கப்பலகை |
மே 2ந் திகதியிலிருந்து ந்ே திகதி வரை கொழும்பில் நிகழ்ந்த 2வو" உலக இந்து மாநாட்டையொட்டி நடைபெற்ற இந்து சமய நூல்களின் கண்காட்சியில் கொழும்புத்தமிழ்ச்சங்கம்
மேற்படி மாநாடு கொழும்பிலும் ஏனைய பிரதேசங்களிலும் வெகு விமர்சையாக நடைபெற்றது.
கொழும்பில் நடந்த மாநாட்- O டின் போது வெள்ளவத்தை சம்மாங்கோடு விநாயகர் ஆலய கல்யாண மண்டபத்தில் அரிய, பெரிய இந்து சமய நூல்களின் கண்காட்சியும் நடைபெற்றது. இதை அமைச்சர் கரு ஜெயசூரிய அவர்கள் 2ம் திகதிமாலை மூன்று மணியளவில் மேள தாள வரவேற்புடன் சம்பிரதாயபூர்வமாகத் திறந் み வைத்தார். இந்நூல் கண்காட்சியில் கொழும்புத் தமிழ்ச்சங்கம், இந்து சமய அலுவல்கள் அமைச்சு,யாழ்பல்கலைக்கழகம், இராமகிருஷ்ணமிசன், ஹரே இராம ஹரே கிருஷ்ணா ஸ்தாபனம், பிரம்ம குமாரி இராஜயோக நிலையம் ஆகியவை கலந்து சிறப்பித்தன. மேலும் கொழும்புத் தமிழ்ச் சங்கத்தினால் ஏற்பாடுசெய்யப்பட்ட நூல் கண்காட்சியில் இருநூறுக்கு மேற்பட்ட அரிய, கிடைத்தற்கரிய இந்துசமய நூல்கள் இடம்பெற்றன: இந்நூல் கண்காட்சியினைக் காண வந்தவர்களில் மனத்தையும் சிந்தனையும் கவர்ந்தது குறிப்பிடத்தக்கது. இக்கண்காட்சிமிகவும் சிறப்பாக நடைபெறப்பெரிது i பாடுபட்ட கொழும்புத்தமிழ்ச்சங்கநூலகச் செயலாளர் திரு.கணேசலிங்கம் குமரன், பொதுச் செயலாளர் திரு.ஆ.இரகுபதிபாலழறிதரன்,துணைத்தலைவர் திரு.இரா.சுந் தரலிங்கம், ஆட்சிக்குழு உறுப்பினர்கள் சி.அமிர்தலிங்கம், சி.சரவணபவன், மா.சடாச்சரன், பிரதம நூலகர் திருமதி. யோகேஸ்வரி சண்முகசுந்தரம், நூலகர் திருமதி ஜெயழறி அசோக்குமார், துணை நூலகர் செல்வி.ஜெயமாலா தம்பையா, நூலக பயிலுனர்கள் செல்விகள்.தாரணி துரைராசா, கஸ்தூரி சிவப்பிரகாசம், நிர்வாக அலுவர் திரு.இ.சுந்தரலிங்கம். துணை நிர்வாக அலுவலர் ஜேம்ஸ் அமிர்தபாலன், மற்றும் எமது முன்னாள் நூலகப் பணியாளர் திரு.எஸ்.சிவசண்முக மூர்த்தி ஆகியோர் பாராட்டப்பட வேண்டியவர்களே!.
U6605 27 ‘ஓலை’ - 18 (யூலை 2003)

Page 16
18வது மாதாந்த இசை நிகழ்ச்சி
கொழும்புத் தமிழ்ச்சங்கம் நடாத்திவரும் மாதாந்த இசைநிகழ்ச்சித் தொடரின் 18வது நிகழ்வு 08.05.2003 வியாழக்கிழமை மாலை 6.00 மணிக்குச் சங்கத் துணைத்தலைவர் திரு.பெ.விஜயரத்தினம் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. பின்வருவோர் இசை வழங்கினர்.
திருமாணிக்க யோகேஸ்வரன் (லண்டன்) - பாட்டு திரு.J.N.பாலமுரளி - வயலின் திருNரகுநாதன் - மிருதங்கம் திருTபத்மலதன் - கஞ்சிரா
திரு.மாணிக்க யோகேஸ்வரன் அவர்களால் இராகத்தடன் பாடப்பெற்ற திருக்குறளைக் கொண்ட 25கிறுவட்டுக்கள் (CD) சங்கத்திற்கு அன்பளிக்கப்பட்ட
சிறப்புச் சொற்பொழிவு "அவுஸ்திரேலியாவில் புலம் பெயர்ந்த தமிழர்கள்" --கலாநிதி ஆகந்தையா அவர்கள்
09.05.2003 வெள்ளிக்கிழமை மாலை 5.30 மணிக்கு சங்கத் தலைவர் கலாசூரி இ.சிவகுருநாதன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. விளக்கங்கள் ஒளிப்படங்கள் மூலமும் நிகழ்த்தப்பெற்றன. கலாநிதி.ஆ.கந்தையா அவர்களினால் நூறு (100) அவுஸ்திரேலியன் டொலர் சங்கச் செயற். பாடுகளுக்காக அன்பளிக்கப்பட்டது.
‘ஓலை’ - 18 (யூலை 2003) Uééci 28
 
 
 
 

Etols LDIGIGD (காலாண்டு கவிதா நிகழ்வு -3) கவிஞர் மஹாகவி கவிதைகள்
11.05.2003, ஞாயிற்றுக்கிழமை, மாலை 5.30 'கவிதா மாலை' என்ற மகுடத்தில் 豹 காலாண்டு இடைவெளியில் கொழும்- 8 புத் தமிழ்ச்சங்கம் நடாத்தி வரும் கவிதா நிகழ்வுத் தொடரின் 3வது நிகழ்வு, 11.05.2003 அன்று சங்கத் துணைத்தலைவர் பெ.விஜயரத்தி. னம் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
ܐܕܘ
திருமதி.சுலோசனா பாலசுப்பிரமணி. யத்தின் தமிழ்வாழ்த்தையும் சங்க இலக்கியச் செயலாளர் த.கோபால. தந்தையின் உருவப்படத்திற்ற மலர்மாலை கிருஸ்ணனின் வரவேற்புரையையும், அணிவிக்கும் திருமதிஒளவை விக்னேஸ்வரன் பின் தலைமையுரையையும் தொடர்ந்து அமரர் மஹாகவி அவர்களின் புதல்வி திருமதி.ஒளவை விக்னேஸ்வரன் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்க பின்வரும் கவிஞர்கள் மஹாகவியின் தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகளை மொழிந்தனர்.
கவிஞர்கள் கவிதைத் தலைப்புக்கள் * மாவை வரோதயன் - இதயம் * எழில்வேந்தன் - மீண்டும் தொடங்கும் மிடுக்கு * சோ.தேவராஜா - தேரும் திங்களும்' * ஏ.ஆர்.வாமலோசனன் - தேர்' * செல்வன்.லோ.பிரசன்னா - 'சிறுபுல்'
* செல்வி.துஷயந்தி மோகனதாஸ் - 'வீசாதீர்' * செல்வி.தர்சினி சிவகுமார் - வெள்ளி சிணுங்கி. (பாட்டு) * எஸ்.கே.விக்னேஸ்வரன் - குறும்பா'க்கள் சில. * திருமதி ஒளவை விக்னேஸ்வரன் - 'கூடித் தொழில்கள் முயல்வோம்'
(பாட்டு) * செல்வி.அரசி விக்னேஸ்வரன் - புள்ளி அளவில் ஒரு பூச்சி * செல்வி.அனிச்சா விக்னேஸ்வரன் - சின்னக்குருவி பறக்கிறது"
(சிறுவர் பாடல்)
(Ué9ú 29 ‘ஓலை’ - 18 (யூலை 2003)

Page 17
cores, சோ.தேவராஜா, aciocigarrior ஏ.ஆர்.வாமலோசன எழில் வேந்தன் ஆகியோர்.
செல்விகள் துஸ்யந்தி மோகனதாஸ், அரசிவிக்னேஸ்வரன், தர்சினி சிவகுமார், அனிச்சா விக்னேஸ்வரன்.
{
மாவை வரோதயன்
எஸ்.கே.விக்னேஸ்வரன்
‘ஓலை’ - 18 (யூலை. 2003) பக்தம் 30
 
 
 
 
 
 
 

சோக்கல்லோ சண்முகநாதன், திருமதி.சுலோசனா பாலசுப்பிரமணியம், செல்வி.பிரியா ஜெயந்தி அப்புக்குட்டி, செல்விதுர்க்காயினி பாலசுப்பிரமணியம் ஆகிய கலைஞர்கள் மஹாகவி அவர்களின் 'கண்மணியாள் காதை வில்லுப்பாட்டின் முக்கிய பகுதிகளை இசைத்துக் காட்டினர். 'கவிதா மாலை'யின் முத்தாரமாக 'கண்மணியாள் காதைப் பாடல்கள் அமைந்திருந்தன.
செல்விதுர்க்காயினி பாலசுப்பிரமணியம். திருமதிசுலோசனா பாலசுப்பிரமணியம். சோக்கல்லோ சண்முகநாதன், செல்வியிரியா ஜெயந்தி அப்புக்குட்டி ஆகியோர்.
கொழும்புத் தமிழ்ச்சங்கப் பொதுச்செயலாளர் திரு.ஆ.இரகுபதிபாலழரீதரன் அவர்களின் நன்றியுரையைத் தொடர்ந்து திருமதி சுலோசனா பாலசுப்பிரமணியம் அவர்களின் தமிழ் வாழ்த்துடன் நிகழ்வுகள் நிறைவுற்றன.
சிறப்புச் சொற்பொழிவும், நூல் அறிமுகமும்
முனைவர், சென்னை கிறிஸ்தவக் கல்லூரிப்
பேராசிரியர், மொழி ஆய்வாளர் கு.அர சேந்திரன், தமிழ்நாடு அவர்களின் "உலக முதல் மொழி தமிழ்" தலைப்பில் சிறப்புச் சொற்பொழிவு16.05.2003 வெள்ளிக்கிழமை பி.ப.5.30 மணிக்குச் சங்கத் துணைத் தலைவர் திரு.பெ.விஜயரத்தினம் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. சொற். பொழிவைத் தொடர்ந்து சபையோரின் கேள்விகளுக்கு திரு.கு.அரசேந்திரன் அவர்கள் பதிலளித்து விரிவான கலந்துரையாடல் இடம் பெற்றது. திரு.கு.அரசேந்திரன் அவர். களால் எழுதப்பெற்ற பின்வரும் நூல்கள் அறிமுகம் செய்யப்பட்டன.
(Uá9ú 31 ‘ஓலை’ - 18 (யூலை 2003)

Page 18
&"உலகம் பரவியதமிழின் வேர் -"கல்" >&தமிழ் அறிவோம்
$தமிழ் ஈழம் தந்த தாமோதரனார்
தமிழ்வாழ்த்து - நூல் அறிமுகம் நன்றியுரை முறையே செல்வி. பவித்ரா கிருபானந்தமூர்த்தி இலக்கியச் செயலாளர் திரு.த. கோபாலகிருஸ்ணன், பொதுச் செயலாளர் திரு.ஆ.இரகுபதி பாலழறிதரன் ஆகியோரால் நிகழ்: த்தப் பெற்றன. நூல்களின் சிறப்புப் பிரதிகளை கொழும்புத் தமிழ்ச் சங்க உறுப்பினரும் சமூக சேவையாளருமான திரு.இல குப்பிள்ளை, கொழும்புத் தமிழ்ச்சங்க நூலகத்திற்கென நிதிச்செயலாளர் திரு.தி.கணேசராஜா மற்றும் திரு.V.ரமணா ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.
தமிழகத் தமிழ்ப் பேராசிரியர்களின் சிறப்புச் சொற்பொழிவுகள்
19.05.2003, திங்கட்கிழமை மாலை 5.30 மணிக்கு சங்கத் துணைத்தலைவர் திரு.பெ.விஜயரத்தினம் அவர்களின் தலைமையில் குமாரசாமி விநோதன் கருத்தரங்கக் கூடத்தில் நடைபெற்றது.
திருக்குறட் செம்பொருள்" முனைவர் அருணை பாலறாவாயன் M.A.Ph.D தமிழ்ப் பேராசிரியர், இலயோலா கல்லூரி, சென்னை
தமிழ் இலக்கியங்களில் உரையாடல் திறன்" சி.அ.இராசராசன் எம்.ஏ.எம்பில் தமிழ்ப் பேராசிரியர், இலயோலா கல்லூரி சென்னை
*'. :
‘ஓலை’ - 18 (யூலை 2003) பக்கம் 32
 
 
 
 
 
 
 
 

சொற்பொழிவு - சிலப்பதிகாரம்
23.05.2003 வெள்ளிக்கிழமை மாலை 5.30 மணிக்குச் சங்கத் துணைத்தலைவர் திரு.த.இராஜரட்னம் அவர்களின் தலைமையில் புரானவித்தகர் திரு.மு.தியாகராசா அவர்கள் 'சிலப்பதிகாரம்' பற்றிச் சொற்பொழிவற்றினார்.
சுகாதாரக் கருத்தரங்கு
கொழும்புத் தமிழ்ச்சங்கக் கல்விக்குழுவின் ஏற்பாட்டில் நடாத்தப்பட்டு வரும் சுகாதாரக் கருத்தர்ங்குக் தொடரில் 25.05.2003 ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணிக்குக் கொழும்புத் தமிழ்ச்சங்கப் பொதுச்செயலாளர் திரு.ஆ.இரகுபதி பாலழரீதரன் தலைமையில் 'சலரோக நோயாளர் பராமரிப்பு' சம்பந்தமான கலந்துரையாடல் இடம் பெற்றது.
பின்வருவோர் விடய ஆலோசகர்களாகப் பங்கு பற்றினர்.
டாக்டர்.எம்.யோகவிநாயகன் (சுகாதாரக் கல்விப் பணியகம், சுகாதார அமைச்சு) திருமதி ரி.விநாயகமூர்த்தி (பிரதி அதிபர், தாதிகள் பயிற்சிக் கல்லூரி, யாழ்ப்பாணம்) டாக்டர்.என்.கந்தையா (ஓய்வுபெற்ற வைத்திய அதிகாரி)
திரு.காவைத்தீஸ்வரன் (உளவள ஆலோசகர்)
கலந்துரையாடல்
டென்மார்க்கிலிருந்து வருகை தந்திருந்த டென்மார்க் தமிழ் இலக்கியமன்றத் தலைவர் திரு.த.தர்மகுலசிங்கம் அவர்களுடனான கலந்துரையாடல் 26.05.2003 திங்கட்கிழமை மாலை 6.00 மணிக்குச் சங்கத் துணைத்தலைவர் திரு.த.இராஜரட்னம் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
Uású, 33 ‘ஓலை’ - 18 (யூலை. 2003)

Page 19
தாவீது அடிகளாரின் திருவுருவப்படத் திறப்பு விழாவும் சிறப்புச் சொற்பொழிவும்
31.05.2003 சனிக்கிழமை மாலை 5.30 மணிக்குச் சங்கத் துணைத் தலைவர் திரு.பெ.விஜயரத்தினம் அவர்களின் தலைமையில் குமாரசாமி விநோதன் கருத்தரங்கக் கூடத்தில் நடைபெற்றது. தமிழறிஞர் தாவீது அடிகளாரின் திருவுருவப்படத்தினை அருட் தந்தை பேராசிரியர் நீமரியசேவியர் அவர்கள் திரைநீக்கம் செய்து வைத்தார். செல்வி பைரவி நடராஜா தமிழ் வாழ்த்திசைத்தார். அருட்தந்தை பேராசிரியர் நீ.மரியசேவியர் அடிகள் திரு.ஜே.எஸ்.அல்பிரட் ஆகியோரது சிறப்புச் சொற்பொழிவுகள் இடம் பெற்றன. சங்கத் துணைக்காப்பாளர் பேராசிரியர் சோ.சந்திரசேகரம் அவர்களும் கலந்து கொண்டு சொற்பொழிவாற்றிச் சிறப்பித்தார். தாவீது அடிகளாரின் மரணத்தின் போது யாரோ ஒருவரால் எழுதப்பட்ட (திரு.மா.க.ஈழவேந்தன் அவர்களால் யாழ்ப்பாணத்திலிருந்து அனுப்பி வைக்கப்பட்டிருந்த) கவிதையினை இலக்கியச் செயலாளர் திரு.த.கோபாலகிருஸ்ணன் மொழிந்தார். பொதுச்செயலாளர் திரு.ஆ.இரகுபதி பாலழறீதரன் நன்றி நவின்றார். இந்நிகழ்ச்சியை ஏற்பாடு செய்வதில் சங்கத்தின் முத்த உறுப்பினர் திரு.அருள் மா.இராசேந்திரன் அவர்கள் முன்னின்று உழைத்தவராவார்.
நால்நயம் காண்போம். 05.05.2000இல் ஆரம்பித்து பிரதி வெள்ளிக்கிழமை தோறும் மாலை 5.30மணிக்கு
நடைபெற்று வரும் இந்நிகழ்ச்சியில் இலங்கை எழுத்தாளர்களது நூல்கள் நயம் காணலுக்காக எடுத்தாளப்படுகின்றன.
திகதி நூலின் பெயர் நூலாசிரியர் நயம் கண்டவர்
e
13.06.2003 வசந்த கோலங்கள்
(108) (நாவல்)
புரட்சிபாலன் திரு.க.அருமைநாயகம்
‘ஓலை’ - 18 (யூலை. 2003) பக்தம் 34
 
 
 

நிகழ்த்தியவர்
0705.2003 நாட்டுக்கூத்துக் கலந்துரையாடல் கவிஞர்.பா.
(206) அமிர்தநாயகம் 4.05.2003 சமயமும் வாழ்வும் சைவசித் தாாதத
(207) பணடிதா.கானா.கு.
சிவராஜசர்மா 2.05.2003 சிலப்பதிகாரத்துக் கானல் வரி புராணவித்தகர்.மு.
(208) தியாகராசா " 28.05.2003 சிலப்பதிகாரத்துக் கானல் வரி புராணவித்தகர்.மு. (209) (தொடர்ச்சி) தியாகராசா
04.06.2003 சிலப்பதிகாரத்துக் கானல் வரி புராணவித்தகர்.மு. (210) (Gj5:Ti i j jf) தியாகராசா 18.06.2003 சிலப்பதிகாரத்துக் கானல் வரி புராணவித்தகர்.மு.
(211) (தொடர்ச்சி) தியாகராசா 25.06.2003 r வைத்தியகலாநிதி (212) ஆரோக்கியத்தில் இசையின் பங்கு விக்னேஸ்வரி செல்வநாதன்
சிறப்புச் சொற்பொழிவு
06.06.2003 வெள்ளிக்கிழமை மாலை 5.30 மணிக்கு சங்கத் துணைத் தலைவர் திரு.த.இராஜரட்னம் அவர்களின் தலைமையில் இந்தியாவில் (தமிழ்நாடு) இருந்து வருகை தந்திருந்த விஸ்டம் இராமமூர்த்தி அவர்கள் திருக்குறளும் இசையும்' என்ற பொருளில் சிறப்புச் சொற்பொழிவாற்றினார்.
கலந்துரையாடல் "
சங்கத் துணைத்தலைவர் திரு.பெ.விஜயரட்னம் அவர்களின் தலைமை யில், 11.06.2003 புதன்கிழமை மாலை 5.30 மணிக்கு வீரகேசரி முன்னாள் பிரதம ஆசிரியர் திரு.சிவப்பிரகாசம் அவர்களுடன் 'அமெரிக்க அனு பவங்கள்' என்ற தலைப்பில் கலந்துரையாடல் நடைபெற்றது.
Uếøó 35
‘ஓலை’ - 18 (யூலை. 2003)

Page 20
கூடிப்பயில்வோம்
கொழும்புத் தமிழ்ச் சங்கக் கல்விக் குழுவின் ஏற்பாட்டில் சிறுவர், சிறுமியருக்காக நடாத்தப்பட்டுவரும் 'கூடிப்பயில்வோம்' நிகழ்வின் புதியதொகுதி 14.06.2003 சனிக்கிழமை காலை 10.00 மணிக்கு ஆரம்பித்து வைக்கப்பெற்றது. இந்நிகழ்வினை சங்கத்தின் முன்னாள் தலைவர் / முன்னாள் செயலாளர் சட்டத்தரணி சோ.தேவராஜா அவர்கள் நெறிப்படுத்தினார்.
ஒலை -15 வெளியீடு
கொழும்புத் தமிழ்ச்சங்கத்தின் மாதாந்த மாசிகை ஒலையின் 15வது இதழ் 18.06.2003 புதன்கிழமை மாலை 5.30 மணிக்கு நடைபெற்றது. அறிவோர் ஒன்று கூடல்' நிகழ்வின் போது சங்கத் துணைத்தலைவர் திரு.த.இராஜரட்னம் அவர்களால் வெளியிட்டு வைக்கப் பெற்றது. முதற்பிரதியை சங்க ஆட்சிக்குழு உறுப்பினர் பன்மொழிப் புலவர் திரு.த.கனகரத்தினம் அவர்கள் பெற்றுக் கொண்டார்.
ஒலை- விமர்சனக் கலந்துரையாடல்
20.06.2003 வெள்ளிக்கிழமை மாலை 5.30 மணிக்கு சங்கத் துணைத் தலைவர் திரு.த.இராஜரட்ணம் தலைமையில் 'ஒலை'பற்றிய ஓர் விமர்சனக் கலந்துரையாடல் நடைபெற்றது.
திருவாளர்கள் கனகசபாபதி, நீ.பி.அருளானந்தம் (எழுத்தாளர்), சட்டத்தரணி சோ.தேவராஜா, ஆநடராசா, வேல் அமுதன் (எழுத்தாளர்) தேவதாசன், அமிர்தநாயகம் ஆகியோர் பயனுள்ள விமர்சனங்களையும், ஆலோசனைகளையும் முன்வைத்தனர்.
கலந்துரையாடலின் முடிவில் 'ஒலை' ஆசிரியர் இன்றைய கூட்டத்தில் தெரிவிக்கப்பட்ட ஆலோசனைகளின் அடிப்படையில் சில முன்மொழிவுகளை எதிர்வரும் சங்க ஆண்டுப் பொதுக்கூட்டத்தில் ஆட்சிக்குழுவினுடாக முன்வைக்கவுள்ளதாகவும், பொதுக் கூட்டத் தீர்மானத்திற்கமைய எதிர்காலத்தில் அவை நடைமுறைப்படுத்தப்படும் எனவும் தெரிவித்தார்.
‘ஓலை’ - 18 யூலை 2003) பக்கம் 36

மாதாந்த இசை நிகழ்ச்சி கொழும்புத் தமிழ்ச்சங்கத்தினால் நடாத்தப்பட்டு வரும் மாதாந்த இசை நிகழ்ச்சித் தொடரின் 19வது நிகழ்வு 21.06.2003 சனிக்கிழமை மாலை 6.00 மணிக்கு நடைபெற்றது. இந்நிகழ்ச்சியைப் பொறுப்பேற்று நடாத்திவரும் சங்க ஆட்சிக்குழு உறுப்பினர் திரு.டபிள்யூ.எஸ்.செந்தில்நாதன் அவர்களது அறிமுக உரையுடன் ஆரம்பமாகிய இந்நிகழ்வில் பின்வருவோர் இசை
வழங்கினர்.
திருமதி.ஸ்வர்ணலதா பிரதாபன் - பாட்டு திருTNபாலமுரளி A வயலின் திரு.A.ரகுநாதன் மிருதங்கம்
"ஆரோக்கியத்தில் இசையின் பங்கு கலந்துரையாடல்
25.06.2003 புதன்கிழமை மாலை 5.50க்கு திருடபிள்யூ.எஸ்.செந்தில்நாதன் (ஆட்சிக்குழு உறுப்பினர்) அவர்களின் தலைமையில் நடைபெற்றது. பின்வருமாறு நிகழ்வுகள் அமைந்தன.
வரவேற்புரை - ஆ.இரகுபதிபாலழறிதரன் (பொதுச்செயலாளர்) நெறியாள்கை - வைத்திய கலாநிதிவிக்னேஸ்வரி செல்வநாதன் வயலின் - பூங்கோதை (இசைக்கலை மாமணி,
அணிணாமலைப் பல்கலைக்கழகம்)
"பேருரைத் தொடர்"
கொழும்புத் தமிழ்ச்சங்க நூலகக் குழு ஒழுங்கு செய்து நடாத்திவரும் இலங்கைத் தமிழர் ” வாழ்வும் வகிபாகமும்" என்ற தலைப்பிலான பேருரைத் தொடரின் ஏழாவது உரையின் முதலாவது அமர்வு 27.06.2003 வெள்ளிக்கிழமை திரு.த.இராஜரட்ணம் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் "இலங்கைத் தமிழர் வரலாறும் சாசனங்களும் -1 எனும் பொருளில் சி.பத்மநாதனி (பேராசிரியர், வரலாற்றுத்துறை, பேராதனைப் பல்கலைக்கழகம்) அவர்கள் உரை நிகழ்த்தினார். இந்நிகழ்வில் அறிமுக உரையை திரு.கே.சண்முகலிங்கம் (மேலதிக செயலாளர், கிழக்கு அபிவிருத்தி மற்றும் முஸ்லிம் விவகார அமைச்சு) ஆற்றினார்.
சங்கப்பலகை தயாரிப்பு : சி.சரவணபவன் (ஆட்சிக்குழு உறுப்பினர்)
பக்கம் 37 ‘ஓலை’ - 18 (யூலை 2003)

Page 21
தாங்கள் அனுப்பி வைத்த "ஒலை" 13வது இதழ் கிடைக்கப் பெற்றேன். இதழின் அட்டையை அலங்கரிக்கும் "தான்தோன்றிக் கவிராயார்" சில்லையூர் செல்வராசனின் இளமைத்தோற்றத்திலுள்ள படம் என்னை 1950 களில் "வீரகேசரி"யில் அவருடன் பணியாற்றிய பசுமையான நினைவுகளுக்கு இழுத்துச் சென்றுவிட்டது. கவிஞர் நீலாவணனின் வேளாண்மைக் காவியத்தைப் படித்துச் சுவைத்தேன். இக்காவியத்தின் தொடர்ச்சியையும் படிக்க ஆவலாயுள்ளேன். சிறுகதை, குறுங்கதையாகியவையும் நன்றாகவே இருந்தன. மொத்தத்தில் இதழின் எல்லா விடயங்களும் தரமானவையாக இருந்தன. தொடர்ந்து வரும் இதழ்களையும் அனுப்பும்படி வேண்டுகின்றேன்.
"Kathirkama Villa" கலாபூஷணம் ச.சபாநாயகம்
Mill Lane, Mallakam 30.4.2003
ஒலை-14 பார்த்தேன்.நீலாவணன்நினைவுமலர் வெளியீட்டுநிகழ்வுகளின் புகைப்படங்களை வெளியிட்டிருந்தது சிறந்த பணி. ஏ.இக்பாலின் கவிதையை பிரபலத்துக்காக அல்லது முகத்துதிக்காக பிரசுரித்தது போலிருக்கிறது. சிறுகதையும், உருவகக் கதையும் அற்புதமாக இருந்தன.
79/2, Kaburady Road, M.L.M. ANZAR
Kattankudy-02 07-05.2003
ஒலை இதழ்கள் கிடைக்கின்றன. இதழுக்கு இதழ் முன்னேற்றம் தெரிகின்றது.
வாழ்த்துக்கள். நன்றி.
139/14, யம்பட்டா வீதி, எம்.பாலசிங்கம் கொழும்பு - 13 24-05.2003
‘ஓலை’ - 18 (யூலை. 2003) U646 38
 

illusibGliċitati GOLDTG tiggjub > செயலர், கொழும்புத் தமிழ்ச் சங்கம்
அன்புடையீர்
வணக்கம். நீங்கள் அன்புடன் அனுப்பிய 'ஒலை இதழின் 13, 14 ஆவது வெளியீடுகள் கிடைக்கப் பெற்றேன். நன்றி. படித்து மகிழ்ந்ததுடன் பல்வேறு செய்திகள் தெரிந்து கொண்டேன்.
திரு.கனகசபை சிவகுருநாதன் (கசின்) அவர்களின் மரணம் குறித்து 'ஒலைமூலம் அறிந்தேன். அவர் பற்றிய நினைவுக் கட்டுரை நன்று. 1940 களின் முதல் பாதியில், 'கிராம ஊழியன்'மறுமலர்ச்சி இலக்கிய இதழ் நடந்து கொண்டிருந்த காலகட்டத்தில், 'ஈழகேசரியில்'கசின் கட்டுரைகளை படித்து ரசித்தது உண்டு. அவை பற்றி 'ஈழகேசரி'க்கும் கடிதங்கள் எழுதியதும் உண்டு.
இலக்கிய நண்பர் வ.அ.இராசரத்தினம் அவர்களின் நினைவாக வெளியிடப் பெற்றுள்ள கட்டுரையும் நன்று.
செங்கதிரோன் எழுதும் 'விளைச்சல்' குறுங்காவியம் இனிமையாய், சரளமான நடையில், சுவையாக வளர்க்கப்படுகிறது. அருமை. இதர கதைகள் கட்டுரைகளும் பாராட்டப்பட வேண்டியவை. நண்பர் நீபி.அருளானந்தம் கதை 'வசந்தம் வந்தது' சமூக நோக்கில் உயரிய கருத்தை வெளியிடுகிறது. மூத்த தலைமுறையினரின் ஆணாதிக்கப் போக்கில் குடும்பத்தில் இருந்த கணவன் மனைவி செயல்பாடுகளையும், விழிப்புற்ற இளைய தலைமுறையினரின் குடும்ப வாழ்வில் நிலவுகிற மனைவி - கணவன் 'வாழ்க்கைத் துணை நல' செயல்முறைகளையும் நன்கு சித்திரிக்கிறது கதை.
'ஒலை' -14 நற்பணிகள் புரிந்த சான்றோர்கள் பலர் பற்றி தெரியச் செய்கிறது. 'சிபார்சு" கதை நேர்மை நியாய உணர்வு கொண்ட ஒருவரின் மனிதத்தன்மையை (நற்செயலை) எடுத்தச் சொல்கிறது. பாராட்டுக்கள். கொழும்புத் தமிழ்ச் சங்கத்தின் பன்முகப் பணிகள் போற்றுதலுக்கு உரியவை. 'ஒலை'இதழின் வளர்ச்சி மகிழ்ச்சி தருகிறது. வாழ்த்துக்கள்.
Valikannan
10, Vallalar Flats, New St, Lioyds Rd, அனபு Chennai - 600005 z வல்லிக்கணர்ணன் Tamil Nadu, S.India
16.05.2003
U55ú 39 "двоет" — 18 (щетовт), 2003)

Page 22
ஈழத்தில் வெளிவந்த இலக்கியச் சிற்றிதழ்களின் வரிசையில்.
கடந்த காலங்களில் ஈழத்தில் வெளிவந்துநின்று போய்விட்ட ஈழத்து இலக்கியச் சிற்றிதழ்கள் பற்றிய விபரங்களை 'ஒலை' இதழ்களில் தர எண்ணியுள்ளோம். அவ்வாறான சிற்றிதழ்கள் வெளிவரத் தொடங்கிய காலம்- வெளியீட்டாளர். அதன் ஆசிரியர் - எப்பிரதேசத்திலிருந்து வெளிவந்தது - எத்தனை இதழ்கள் வெளிவந்தன - எப்போதுநிறுத்தப்பட்டது - நின்றுபோன காரணம், அவ்விதழ்களில் எழுதிய எழுத்தாளர்கள்- - அவ்விதழ்களில் வெளிவந்த ஆக்கங்கள். அவ்விதழ்களின் அளவு, பக்கங்கள் பற்றிய விபரம் மற்றும் ஈழத்து இலக்கிய உலகில் அவ்விதழ்கள் ஏற்படுத்திய தாக்கங்கள், பங்களிப்புகள் முதலிய விபரங்களை உள்ளடக்கியதான கட்டுரை ஆக்கங்களை எதிர்பார்க்கின்றோம். 'ஒலையின் ஒவ்வொரு இதழிலும் அவ்வாறான சிற்றிதழ்கள் ஒவ்வொன்றின் விபரமும் தனித்தனியே வெளியிடப்படும். எழுத்தாளர்கள், இலக்கிய ஆர்வலர்கள் உங்களுக்குத் தெரிந்த 'சிற்றிதழ் பற்றி எழுதி அனுப்புங்கள். அத்துடன் அவ்வாறான சிற்றிதழ்களின் பழைய பிரதிகளை ஆவணப்படுத்துமுகமாக விலைகொடுத்து வாங்கவும் தயாராயுள்ளோம். அவ்வாறான பிரதிகள் கைவச
முள்ளவர்கள் 'ஒலையுடன் தொடர்பு கொள்ளுங்கள்.
-ஆசிரியர்
அஞ்சலிக்கின்றோம்
1983ல் கொழும்புத் தமிழ்ச் சங்கத்தில் சிற்றுாழியராகச் சேர்ந்து 2000 வரை பணிபுரிந்து ஓய்வுபெற்ற திரு.விஜயசிங்க மொகொட்டிலாகே பண்டார (பண்டா) (08.04.1927 - 03.07.2003) அவர்களின் மறைவுக்கு "ஒலை"யின் அஞ்சலிகள்
། ངས་ مصر
‘ஓலை’ - 18 யூலை 2003) பக்கம் 40
 

லூதர \خ\)} 2. ỳ&
தமிழ்ச் சங்கத்தின் குரலாய் 2
தரணி எங்கும் ஒலிக்க ஒலை ஒயாமல் வர
வளர எம் இதயம் கனிந்த வாழ்த்துக்கள் !
fil5b 5GiòGill GODGDuub
உருத்திரா மாவத்தை வெள்ளவத்தை
2
R Glgranquefl: 3638 క్వె آس< محصہ Ne
དབྱེ་

Page 23
|L
பெல்ஜியம் சர்வதேச இரத்தின் International Ge உறுதிப்படுத்தப்பட் உத்தரவாதமளிக்கப்ப பைகளில் மூடி
SIGTIG
230 காலி வீதி தொலைபேசி s தொலை 羲 மின்னஞ்சல்
 
 

வத்தை
நகை மாளிகையில்
I DEU
հ (Belgium) க்கல்லியல் நிறுவனத்தினால் mological Institute
- பரிசோதிக்கப்பட்டு
ட்டு - மாற்றமுடியாதபடி
தாளிடப்பட்டது.
TFu击血画
|:|s| eggles
கொழும்பு - 0
■沿邵,362427
#ট0 : 50,4488