கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஓலை 2004.02

Page 1
வெள்ளவத்தை
நித்தியகல்யாணி நகை மாளிகையில்
அப்பழுக்கற்ற வைரம்
GLIGüziĝu Liñ (Belgium) சர்வதேச இரத்தினக்கல்லியல் நிறுவனத்தினால் (International Ge III i Folgical Institute) உறுதிப்படுத்தப்பட்டு பரிசோதிக்கப்பட்டு உத்தரவாதமளிக்கப்பட்டு - மாற்றமுடியாதபடி பைகளில் மூடித் தாளிடப்பட்டது.
வெள்ளவத்தை
நித்தியகல்யாணி ஜூவலரி
230 காலி வீதி, கொழும்பு - 06 தொலைபேசி 2333392 23:2427 தொலை நகல் 2504933
Lflör ST.6545ü nith kalg’sltilk
 

ஆசிரியர் செங்கருரோவர்
கொழும்புத் தமிழ்ச்சங்க மாதாந்த மாசிகை
(மாசி) பெப்ரவரி 2004
கொழும்புத் தமிழ்ச் சங்க முன்னாள் தலைவர் (1980-1983)
- - -- ܕ -- -- ܒ -
- A.
அமரர் பொ.சங்கரப்பிள்ளை (18.12.1913 - 1802.1990)
கொழும்புத் தமிழ்ச் சங்கம் 57 வது ஒழுங்கை (உருத்திரா மாவத்தை), கொழும்பு - 06.
தொலைபேசி 011-2338759
வெப் முகவரி WWW. Lejlimhitannilssungarn. Org
இணைய தபால் pab. Garf : icts @ ELITEeka.lk
area is

Page 2

இதயம் திறந்து.
கொழும்புத் தமிழ்ச்சங்கத்தின் முன்னாள் தலைவர் (1980 / 1983) அமரர் பொ.சங்கரப்பிள்ளை அவர்களின் ப்தினான்காவது சிரார்த்த தினம் 18.02.2004 ஆகும். இதனையொட்டி கொழும்புத் தமிழ்ச்சங்கம் 23.02.2004 அன்று நினைவுப் பேருரையொன்றினை ஏற்பாடு செய்துள்ளது. அன்றைய தினம் 'சுவாமி விவேகானந்தரின் ஆளுமை' எனும் தலைப்பிலே கொழும்பு இராமகிருஷ்ண மிஸன், வணக்கத்துக்குரிய சுவாமி ஆத்மகணானந்திஜி அவர்கள் பேருரையாற்றுகிறார்.
அமரர் திரு.பொ.சங்கரப்பிள்ளை அவர்களின் சங்கப்பணிகளை நினைவு கூரும் வகையிலே 'ஒலை'யின் இவ்விதழின் (ஓலை -23) அட்டையை அன்னாரின் திருவுருவப்படம் அலங்கரிக்கின்றது. அத்துடன் அன்னாரைப் பற்றிய கட்டுரையொன்றையும் அவர் காலத்தில் சங்கப் பொதுச்செயலாளராகப் பணியாற்றிய (1975 - 1996) தமிழவேள் இ.க.கந்தசுவாமி அவர்கள் திட்டியுள்ளார். இக்கட்டுரையை எழுத இவரே மிகவும் பொருத்தமானவர்.
அமரர் சங்கரப்பிள்ளை அவர்களின் மனைவி, பிள்ளைகள் அனைவரும் அவரின் மறைவின் பின்னரும் கூட மட்டுமல்ல அமெரிக்கா, அவுஸ்திரேலியா போன்ற வெளிநாடுகளில் வதித்தாலும் கொழும்புத் தமிழ்சங்கத்தின் வளாச்சியிலும், அதன் பணிகளிலும் கொண்டுள்ள ஆர்வம், அக்கறை குறித்து அக்குடும்பத்தினரை 'ஒலை பாராட்டுகிறது. முப்பது இலட்சத்திற்கு மேற்பட்ட தொகையை அன்பளித்து சங்கத்தின் தற்போதைய நூல்நிலையக் கட்டிடம் தலைநகரில் தலைநிமிர்ந்துநிற்க வகை செய்துள்ளனர். இக்குடும்பத்தினரின் முன்மாதிரியைப் பின்பற்றி வெளிநாடுகளில் வதியும் வசதி படைத்த ஏனையவர்களும் கொழும்புத் தமிழ்ச் சங்கத்தின் எதிர்காலத் தேவைகளை நிறைவேற்ற முன் வரவேண்டுமென்று அன்போடு எதிர்பார்க்கின்றோம். நூல் நிலையக் கட்டிடத்தின் இரண்டாது மேல்மாடி நிர்மாணம், தமிழ்ச்சங்கத்திற்கெனத் தனியான அச்சகம், இசைக்கருவிகள், ஒலி/ஒளிபரப்பு உபகரணங்கள் என்பன எதிர்காலத் தேவைகளாகும். சுமார் ஒரு கோடி இலங்கை ரூபாய்கள் இதற்குத் தேவைப்படும் என்பது மதிப்பீடு. தாயகத்தில் நிகழும் தமிழ் வளர்ச்சிப் பணிக்குத் தங்களால் இயன்ற தொகையினை அன்பளிக்கும் படி வெளிநாடுகளில் வதியும் வசதி படைத்தவர்களை 'ஒலை" தயவாய்க் கேட்டுக் கொள்கின்றது.
நன்றி. மீண்டும் மறுமடலில்.
பக்கம் 1 "ஓலை" - 23 (பெப்ரவரி 2004)

Page 3
குறுங்காவியம் 5 செங்கதிரோன் எழுதும்
ளைச்சல்
(கவிஞர் நீலாவணனின் வேளாண்மைக் காவியத்தின் தொடர்ச்சி)
மாப்பிள்ளை வீட்டாரும் பெண் வீடு சென்று வந்தனர்
நல்லதொரு நாளில் பொன்னு நாலய லார்க்கும் சொல்லி பல்வகைப் பலகாரங்கள் பண்ணி யதனோடு மற்ற சொல்லிய யாவும் கொண்டு சொந்தபந்தங்கள் சூழ செல்லனின் வீட்டார் தாமும் சென்று பெண் வீடு வந்தார்.
பஞ்சாங்கம் பார்த்துக் கல்யாண நாள் குறிக்கப்பட்டது.
பஞ்சாங்கம் பார்த்துப் பாணிக் கிரகணநாள் கோயில் ஐயர் குஞ்சிதபாதம் சொல்ல குறித்ததை வைத்துக்கொண்டு எஞ்சிய நாட்களின்னும் இருப்பது சிறிதேயென்று துஞ்சினாள் கனகம் அல்லள், துரிதமாய் அலுவல் பார்த்தாள்.
கல்யாண ஏற்பாடுகள்
வட்டில், சவரக்கால், படிக்கம், வட்டா, குடம், சருவச் சட்டி, விளக்கு, பூச் சாடி, பன்னீர்ச் செம்பு, தட்டம், தாம்பாளம், கிண்ணம் தளிசை, தண்ணீர்ச் செம்பு, எட்டுக்கொள் கிடாரம், இன்னும் ஏனங்கள் என்று நீளும்.!
"ஒலை" - 23 (பெப்ரவரி 2004) பக்கம் 2
 
 

பக்கம் 3
இத்தனை ஏனம் எல்லாம் எலுமிச்சை, சாம்பல், தும்பால் சுத்தமாய்க் க்ழுவி வீட்டுச் சுவர் ஒரம் அடுக்கிக் கையால் குத்திய அரிசி, மா, தூள் கோப்பி, தேன், பயறு, சீனி புத்தம் புதிய பாய்கள் புளி, உப்புப் பொருட்கள் யாவும்,
ஆடியும் கழிந்து போக ஆவணி அடுத்த மாதம் சோடியைச் சேர்த்துக் கன்னி(ச்) சுமையொன்றை இறக்கிவைக்க ஒடித்தான் உருள நாட்கள் ஊணின்றி உறக்கமின்றி ஒடித்தான் கனகம் சேர்த்தாள், உகவினாள் பொன்னும் கூட.
வெள்ளையும் அடித்து வீட்டை வேலியும் பிரித்துக்கட்டி குள்வுமாய் இருந்த கொட்டுக் கிணற்றையும் உயர்த்திச் சற்று வெள்ளைவார் மணலும் ஏற்றி வீட்டுமுற்றத்தில் கொட்டி அள்ளியே இறைத்துக் காசை அழகரும் அலுவல் பார்த்தார்.
கல்முனைக் கடைக்குச் சென்று கல்யாண வேட்டி, கூறை இல்லாத சாமான் வீட்டில் எவையென்று எண்ணிப்பார்த்து சொல்லாத படிக்கு ஊரார் சொட்டைகள் ஏதும்பின்னால்
எல்லாமே வாங்கி வந்தார்;
எடுத்துள்ளே கனகம் வைத்தாள்.
- இன்னும் விளையும்
'ஒலை" - 23 (பெப்ரவரி 2004)

Page 4
1962 ஜனவரியிலிருந்து ஆசிரிய பயிற்சியின் பின், அனுராதபுர கியூலகட முஸ்லிம் வித்தியாலயத்திற்கு எனக்கு மாற்றம் கிடைத்தது. அது மிகக் கஷடப்பிரதேசம். ஆகையால் அவர்களின் அனுசரணையுடன் 1962 மார்ச் முதலாம் திகதியிலிருந்து பதுளை முஸ்லிம் மஹா வித்தியாலயத்திற்கு மாற்றம் பெற்றுக் கொண்டேன். இப்பொழுது இப்பாடசாலையின் பெயர் "அல் அதான் மத்திய மஹா வித்தியாலயம்" என வழங்குகின்றது. "அல்அதான்" என்னும் பெயர் கவிஞர் அப்துல்காதர் லெவ்வை அவர்களின் புனைபெயர். 1962 ஜனவரிக்கு முன்னே பல வருடங்கள் அப்பாடசாலையில் அதிபராகவிருந்த அப்துல் காதர் லெவ்வை அவர்கள் குருத்தலாவை முஸ்லிம் மஹா வித்தியாலயத்திற்கு மாற்றம் பெற்றுச் சென்றுவிட்டார்.
நான் இப்பாடசாலைக்குச் சென்றபோது, பதுளையைச் சேர்ந்த ஏ.ஸி.அப்துல்லாஹ் என்பவரே அதிபராக வந்திருந்தார். இங்கே கற்பித்துக் கொண்டிருந்த அப்துல்காதர் லெவ்வை அவர்களின் மாணவர்கள் அதிபர் அப்துல்லாஹ்வுடன் ஒத்துழைக்கவில்லை. இடையில் நின்று நான் திண்டாடினேன். பாடசாலை முன்னேற்றம், கற்பித்தல் விடயத்தில் அதிபருடன் ஒத்துழைக்காமல் எனக் கிருக்க முடியவில்லை. இதனால், அப்துல் காதர் லெவ்வையின் மாணவர்களான ஆசிரியர்களின் எதிர்ப்பைப் பெறவேண்டியதாயிற்று. இக்காலத்தே தேசியப் பத்திரிகைகளில் எழுதிக் கொண்டிருக்கும் இளம் எழுத்தாளர் எஸ்.ஏ.எச்.ஷரிபுத்தீன் இன்னும் அனேக ஆசிரியர்கள் என்னுடன் சேர்ந்து ஒத்துழைத்தனர். ஜி.ஸி.ஈ.இறுதி வகுப்புக்கு நானே முக்கிய பாடங்கள் பலவற்றைக் கற்பிக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. நல்ல பெறுபேறும் கிடைத்தது. இன்றும் அவர்களில் பலர் ஆசிரியர்களாகவும், பொலிஸ் உயர்தர உத்தியோகத்தவர்களாகவும் பணியாற்றுகிறார்கள். பாடசாலையில் "சிந்தனை" எனும் கையெழுத்துப் பத்திரிகையை ஏற்படுத்தி இலக்கிய வழிக்கு உந்துதல் கொடுத்தேன். மாணவர் மஜ்லிஸ்ஸால் இலக்கியப் போட்டிகள் அநேகம் நடந்தன. அப்துல் காதர் லெவ்வை காலத்தை வீழ்த்தி விடாமல் உயர்த்துவதே எங்கள் எண்ணமாயிருந்தது. வளராமல் வீழ்த்திவிட வேண்டுமென்று எதிர்ப்பவர்கள் நினைத்தனர்.
நான் புதுளை வெலகெதரையில் தங்கியிருந்தேன். பின்னேரம் பெரி.கந்தசாமியின் கடையே இலக்கியச் சந்திப்பின் மத்தியஸ்தானமாக
ஒலை" - 23 (பெப்ரவரி 2004) பக்கம் 4
 

விளங்கியது. அங்கே எம்.சமீம், தமிழோவியன், தெளிவத்தை ஜோஸப், க.இராமசாமி போன்ற இலக்கியக்காரர்களின் சந்திப்பு நடைபெற்றது. அக் காலம் "தமிழோவியன்" தான் அதிகமாகக் கவிதை எழுதிக் கொண்டிருப்பவர் 6ழுத்துலகில் இவரே பிரபல்யம் பெற்றிருந்தார். அப்போது, அதிகம் எழுதிக் கொண்டிருப்பவர்கள் சமீமும் தமிழோவியனும் தான்.
நான் ஆசிரியராக கலாசாலைக்குச் செல்லுமுன் ஹாலி எலயில் கற்பித்துக் கொண்டிருந்தேன். அக்காலம் 1959களில் "மல்லிகைக் காதலன்" என்னைச் சந்திப்பார். அவர் பதுளையில் தன் வசித்தார். அவருக்கு ஒரு பத்திரிகை நடத்த வேண்டுமென்னும் ஆசையும் ஆர்வமும் அதிகமிருந்தன. "முத்துச்சரம்" எனச் சஞ்சிகைக்குப் பெயரும் சூட்டிவிட்டார், அதில் எனது சிறுகதை ஒன்று வரவேண்டுமென என்னை நச்சரித்தார். "அழகு ஆபத்து" என்னும் கதையை எழுதிக் கொடுத்துவிட்டேன். 1960 ஜனவரியில் "முத்துச்சரம்" முதல் இதழ் வெளியானது. அதன்பின், அது வெளியானதாகத் தெரியவில்லை. இதன்பின், 62களில் மல்லிகைக் காதலனை இருந்திருந்து பெரி.கந்தசாமி கடையில் சந்திப்பேன்.
பதுளையில் நான் கற்பிக்கும் காலத்தில் எஸ்.பொன்னுத்துரையும், எம்.ஏறஹற்மானும் இலக்கிய யாத்திரை வந்தனர். பெரி கந்தசாமியின் விருந்தினராக இருந்த இவர்களைக் கொழும்பிலிருந்து வந்த எம்.சமீம் வீட்டுக்கழைத்து விருந்து வைத்தார். இலக்கிய பரிவர்த்தனைகள் பெரி கந்தசாமி வீட்டிலும். எம். சமீம் வீட்டிலும், பசறை இரண்டாம் கட்டை பாரதி கல்லூரியிலும் நடந்தேறின. நான் தங்கியிருக்கும் வெல கெதர வீட்டிற்கும் வந்தனர். முன் வராந்தாவில் இருந்தே கதைத்தோம். என் அறைக்குள் கூட அவர்கள் அடி எடுத்து வைக்கவில்லை. லா.சா.ராமாமிர்தத்தின் "பச்சைக் கனவு" நூலை எஸ்.பொன்னுத்துரை என்னிடமிருந்து வாசித்துத் தருவதாக வாங்கிச் சென்றார். இன்றுவரை அது கிடைக்கவேயில்லை. அக்காலத்தில் அக்கரைப்பற்றுத் தேசிய மத்திய கல்லூரிக்கு இலக்கிய உரையாற்றச் சென்ற எஸ்.பொ. "நான் பதுளை சென்றேன். ஏ.இக்பால் தங்கும் வீடு சென்று அவரது வாசிக சாலையைப் பார்த்துப் பிரமித்தேன். புத்தகங்கள் நிறைந்திருந்தன" என்று "டுப்" விட்டிருக்கிறார்.
பெரி. கந்தசாமி இலக்கிய ரசிகர், நல்ல வாசகர், பத்திரிகை நிருபர். ஆனால், அவரும் ஒரு எழுத்தாளர் என்ற பெரும் நினைப்பு அவருக்குண்டு. ஊடகவியலாளர்களில் படைப்புச் சாராத செய்தி மட்டும் எழுதுபவர்கள் தாங்கள் பெரும் படைப்பிலக்கியவாதிகள் என்ற அசட்டுச் சிந்தனையில் வாழ்வோர் பலர் இன்னுமிருக்கின்றார்கள். அதை இனங்காட்டினால், எதிர்ப்புச் சுழற்சிக்குள் சுழல வேண்டிவரும். பெரி கந்தசாமி அந்த நினைப்பில் இருந்ததால்தான், வீரகேசரி தோட்ட மஞ்சரி மூலம் மலைநாட்டுச் சிறுகதைப் போட்டி ஒன்றை நடத்தும் எத்தனத்தில் முனைந்து வெற்றி பெற்றார். அந்த வெற்றியின் பலன் தெளிவத்தை ஜோஸப் என்னும் படைப்பிலக்கிய வாதியை
பக்கம் 5 ஒலை" - 23 (பெப்ரவரி 2004)

Page 5
மலையகம் வெளியெடுத்து நாடளவிய விதத்தில் பயன் பெற்றது. ஆறுதல் பரிசு பெற்ற மல்லிகைக் காதலன் அக்காலத்தில் இலக்கியம் சம்பந்தமாக என்னுடன் நெருங்கிப் பழகியவர். அவருக்குப் பெரும் எதிர்காலம் ஒன்றுண்டென்று மகிழ்ந்திருந்தேன்.
இவ்விலக்கியச் சந்திப்பில் பசறை வீதி இரண்டாம் கட்டையிலுள்ள பாரதிக் கல்லூரியின் அதிபர் க.இராமசாமியின் தொடர்பு எனக்கதிகரித்தது. அந்த உறவுக்குக் காரணம் இலக்கியமல்ல, கல்விதான். கல்வி கொடுக்க வேண்டுமென்ற உந்துதல் இராமசாமியிடம் எந்நேரமும் ஒட்டிக் கொண்டே யிருந்ததெனலாம். கல்வி இலக்கியம், கவிதை என்பவைபற்றி மனம் திறந்து பேசும் இராமசாமி, பாரதி விழாவில் பாரதி பாடலொன்றை வைத்துப் பாரதிக் கல்லூரியில் பேசும்படி என்னை அழைத்தார். நான் 1962 செப்டம்பரில் ஒருநாள், பாரதிக் கல்லூரியில் "அக்கினிக்குஞ்சு" கவிதையைப் பற்றியும், அதை முழுதாக முன்வைத்தும் பேசினேன். அந்த நிகழ்ச்சியின் புகைப்படச் செய்தி 29.09.62 இல் வீரகேசரியில் வெளிவந்தது. பத்திரிகைப் படத்தை இன்று பார்க்கும் போது, பழைய ஞாபகம் அப்படியே பளிச்சிடுகின்றது.
1963 களில் நான் வேர்வலை மாளிகாஹேன மஹா வித்தியாலயத்திற்கு மாற்றலாகி வந்துவிட்டேன். இங்கு வந்து "மாளிகை" எனும் கையெழுத்துப் பத்திரிகையை மாணவரிடை ஆரம்பித்தேன். அதன் ஆசிரியர்கள் எம்.பி.எம். நெளபர், எம்.எல்.எம். அஃலா. நான் மிகக் கெட்டிக்காரனாக எண்ணிய மாணவர் நெளபர் பிற்காலத்தில் கல்வி உயர்வு பெறாது என்னானாரோ தெரியாது. அஃலா இப்பொழுது பாணந்துறை தொட்டவத்த அல்பஹற்ரியாவில் அதிபராக இருக்கிறார். வர்த்தகம், பொருளியல் சம்பந்தமான கல்விசார் கட்டுரைகள் அதிகமாக எழுதியவர். வேர்வலையில் இப்பாடசாலையில் மிகக் குறுகிய காலம் ஜிஸிஈ.பரீட்சை முடிவை எதிர்பார்த்திருந்த காலம் என்னிடம் கற்றவர் இப்பொழுது தென் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் உபவேந்தராகவிருக்கும் ஹசைன் இஸ்மாயில் என்பவர். இவரது ஜி.ஸி.ஈ பரீட்சை முடிவு நல்ல பெறுபேற்றைத் தந்தது. பரீட்சையின் முடிவு வந்த பின், அவர் என்னைச் சந்தித்து மேற்கொண்டு என்ன செய்யலாம்? எனும் வினாவை விடுத்தார்.
"கொழும்பு ஸாஹிறாவில் எச்.எஸ்.ஸி.வகுப்பு தமிழ் மூலம் ஆரம்பித்திருக்கின்றார்கள். உடனே அதில் சேருங்கள்" எனும் எனதப்பிப்பிராயத்தைக் கூறினேன். அவரது அதிபர் அஸாயிதீன் அவர்களிடம் அபிப்பிராயம் கேட்டிருக்கின்றார். அவர் "எஸ்.எஸ்.ஸி ஆசிரிய நியமனம் கொடுக்கின்றார்கள். அதில் பதிவு செய்யுங்கள்" என்றிருக்கின்றார்கள். எனது அபிப்பிராயத்தையும் அவருக்குச் சொல்லியிருக்கின்றார். அதிபர் அஸாயிதீன் அவர்கள் என்னைச் சந்தித்தபோது, "ஏன் அப்படிக் கூறினீர்கள்? அவரது பொருளாதார நிலை கஷ்டமானது. அதனால், ஆசிரியத் தொழிலில் இறங்குவதே நல்லது" என்றார். "நான அவரைக் கட்டாயப் படுத்தவில்லை.
"ஒலை" - 23 (பெப்ரவரி 2004) பக்கம் 6

எதிர்காலத்தை நோக்கி எனது அபிப்பிராயத்தைச் சொன்னேன்" என்றேன். உசைன் இஸ்மாயில் நான் கூறியபடியே கொழும்பு ஷாகிறா சென்று சித்தியடைந்து பேராதனைப் பல்கலைக்கழகம் சென்று, கல்வித் gol60s.O60)u வரித்து, எவ்வளவோ உயர்வுபெற்று இன்று இந்த இடத்திற்கு வந்திருக்கின். றார். எனது கண்ணுக்குள்ளேயே இவ்வித உயர்வு பெற்று வந்த ஒரு மாணவ. ரைக் காணுதல் மிகச் சிறப்பல்லவா? அந்தப்பூரிப்பில் இன்றும் மகிழ்கின்றேன்.
1965 களில் பாக்கிர் மார்க்கார் எம்பியானாதும், இடதுசாரிச் சிந்தனை. யுள்ள என்னைக் கண்டிப்பக்கம் எடுத்தெறிந்தார். குறுகுத்தலை முஸ்லிம் வித்தியாலயம், பேராதனைத் தமிழ் வித்தியாலயம் எல்லாம் சுற்றினேன். அக் காலம் எனது மச் சான் முறையான இபுறா லெவ்வை பேராதனைப் பல்கலைக்கழகத்திற்கு பட்டப்பின் படிப்பு டிப்ளோமாச் செய்வதற்காக வந்திருந்தார். அவரோடு செந்தூரனும் அங்கிருந்தார். செந்துரனும் அவரும் இந்தியாவில் பல்கலைக்கழகத்தில் ஒன்றாகக் கற்றவர்கள். செந்தூரனின் அறிமுகம் இக்காலத்தில்தான் எனக்குக் கிடைத்தது. இக்காலம் எம்.சமீம் கண்டிக் கல்விக் காரியாலயத்தில் பிரதம கல்வி அதிகாரியாகக் கடமை செய்து கொண்டிருந்தார். கண்டி முஸ்லிம் ஹோட்டல் புத்தகசாலையில் எங்கள் இலக்கியச் சந்திப்பு நடக்கும். இங்கேதான் மலைநாட்டு இலக்கியத்தின் போக்கும் வளர்ச்சியும் பற்றி அறியும் வாய்ப்பு எனக்கேற்பட்டது. மலைநாட்டின் தோட்டத் தொழிலாளி மத்தியில் எழுதும் இலக்கியம், வெள்ளைக்காரத்துரைமார்கள் பாணியில் கங்காணிகளில் பரம்பரை எழுதும் இலக்கியம், வெளியே கிராமங்கள், நகரங்களில் வாழ்வோர் எழுதும் இலக்கியம் தோட்டத்துள் வாழும் மிகச் சிறுபான்மை முஸ்லிம்கள் இலக்கியம், வெளியே கிராமங்கள், நகரங்களில் வாழும் முஸ்லிம்கள் எழுதும் இலக்கியம் என்பனபற்றிய விரிவான அறிவைக் கண்டியில்தான் பெற்றேன். தற்காலம் வரலாறு எழுதும் மலைநாட்டு எழுத்தாளர்கள் இவற்றையெல்லாம் பூரணமாக அறிந்ததாக அவர்கள் எழுத்தில் விளங்கவில்லை. ஆனால், சி.வி.வேலுப்பிள்ளை, கே.கணேஷ், என்.எஸ்.எம்.இராமையா, எம்.ஏ.அப்பாஸ் போன்றோர் மேற்கூறிய விடயங்கள் பற்றித் தெளிவாக அறிந்து எழுதியிருக்கின்றார்கள். இன்று மலைநாட்டு இலக்கியம், கல்விப் பின்னணிகளைத் தெளிவாகத் தரக்கூடியவர்கள் என நான் நினைப்பவர்கள், தேசியக் கல்வி நிறுவனத்தின் தமிழ்ப்பகுதி பணிப்பாளர் டி.தனராஜ், சீடா திட்ட அதிகாரியாயிருந்த ஏ.செல்வேந்திரன், லெனின் மதிவாணன் ஆகியோர்தான். மற்றவர்கள் சளப்புவார்கள். அதுவும் அவர்கள் சார்ந்தோரை மட்டும் மேலெடுப்பார்கள். நான் கூறியவர்கள் படைப்பாளிகளல்ல. சிறந்த வாசகர்கள், நுணுக்கமான பார்வையாளர்கள். தோட்டத்தில் தொழிலாளர் மத்தியில் ஊசலாடியவர்கள். தொழிலாளர் பிள்ளைகள்.
மல்லிகைக் காதலனை நான் மறந்துவிடவில்லை. காலத்தின் வேகத்தால் மல்லிகை சி.குமார்தான் அவர் என எண்ணிக் கொண்டிருந்தேன். மல்லிகைக் காதலன் இறந்துவிட்ட சங்கதியை தெளிவத்தை ஜோஸப்தான் இக்
பக்கம் 7 'ஒலை" -23 --س (பெப்ரவரி 2004)

Page 6
காலம் எனக்குத் தெரிவித்தார். அப்போதுதான் மிக வேதனை அடைந்தேன்.
மலைநாட்டுக் கல்வி வளர்ச்சிக்கு அதிக பங்காற்றியவர்கள் இரா.சிவலிங்கம், செந்தூரன் மிக முக்கியம் பெறுபவர்கள், கொழும்பு இரண்டாம் குறுக்குத் தெருவில் பெரியண்ணன் கடையில் வேலை செய்தவரும், இப்போது நோரிஸ் வீதியில் "சமநல" எனக்கடை வைத்திருப்பவருமான முருகேஸ் ஹற்றன் ஹைலண்டில் கற்றிருக்கின்றார். அவருக்கு விடுகைப் பத்திரம் பிறப்புச் சாட்சிப் பத்திரம், நற்சாட்சிப்பத்திரம் எல்லாம் தேவையாயிருந்தன. என்னிடம் இவற்றை எப்படி எடுப்பது? எனக் கேட்டார். நான் செந்தூரனுக்கு ஒரு கடிதம் கொடுத்தேன் அவர் முருகேசிடம் கூறியிருக்கின்றார். "இக்பால் எனக்கு நன்கு தெரிந்தவர். அவருக்காக நான் இவற்றைத் தரவில்லை. எனது கடமை கேட்டவுடன் தருவது. அதிலும் தோட்ட மக்களுக்காக இதற்கதிகமாக ஏதும் செய்ய வேண்டின் அதையும் செய்வது. நானும் உங்களைச் சேர்ந்தவன்"என்றெல்லாம் கூறியிருக்கின்றார். மனித நிலைமையை மிகவம் உன்ன. தமாக அனுபவித்து அறிந்த மகான்கள் தான் செந்தூரன் போன்றவர்கள்.
தோட்ட மக்களின் துயரைத் துடைப்பதில் எமக்கெதுவும் பங்கில்லை. என்றாலும், அவர்களுக்கேனும் செய்ய முடியாதா? என்ற எண்ணத்துடன் களுத்துறை மாவட்டத்தில் ஒரு தோட்டப்பாடசாலையில் கற்பிக்கச் சென்றேன். அதிபர் தோட்டத்தைச் சேர்ந்தவர். நல்ல குடிகாரர். பாடசாலைக்குப் புதுப்பிள்ளைகளைச் சேர்க்கும் நாள். அந்தப் பொறுப்பை என்னிடந்தான் தந்தார். பிள்ளைகளைப் பெற்றோர் வெற்றிலைச் சுருளுடன் எடுத்து வந்து வரிசையாக நின்றார்கள். அதிபர் வந்து சொன்னார் "எனது அம்மாவுக்கு வெற்றிலை விருப்பம். எனவே, அவற்றைப் பார்சல் செய்து அப்படியே தந்து விடவேண்டும்" என்று. முதலாவது கொண்டு வந்த வெற்றிலைச் சுருள் பிரிந்திருந்தது. அதனுள் ஐம்பது ரூபா நோட்டொன்று தெரிந்தது. நான் அதைப்பிரித்து எடுத்து பணம் பெற்றதற்குரிய பற்றுச் சீட்டைக் கொடுத்தேன். அடுத்தடுத்துப் பிரித்த போது, அவற்றினுள்ளே பண நோட்டுக்கள் இருந்தன. எல்லாவற்றிற்கும் பற்றுச் சீட்டு கொடுத்துவிட்டு. வெற்றிலைகளை ஒரு பொலித் தீன் பையில் திணித்து அதிபரிடம் கொடுத்துவிட்டேன். அடுத்த நாள் வந்த அதிபர் கொதித்தெழுந்தார். இச்செயல் அங்கிருந்து மாற்றம் பெற வழிவகுத்தது. தொழிலாளர் பிள்ளைகளை உறிஞ்சிக் குடித்து வெறிக்கும் தோட்டத் தொழிலாளரிடை எழுந்தவர்கள் இருப்பதை நினைத்துத்தான் பெனடிக்பாலன் இறப்பதற்கு முதன் நாள் "நாசமாய்ப்போக." என்றொரு சிறுகதை வீரகேசரிக்கனுப்பி விட்டே இறந்தார். கதை இறந்த மறுவாரம் பிரசுரமானது. அக்கதையின் கரு இந்த வெற்றிலைக்கதை போல்தான் இருந்தது.
- தொடரும்
SN)
"ஓலை’ - 23 (பெப்ரவரி 2004) பக்கம் 8

பட்டாசின் வெடிப்பினில் அர்த்தம் பலவுண்டு. பட்டாசின் வெடிப்பினில் அனர்த்தம் Uலவுண்டு!
ஆலயத் திருவிழாவில் ரீ வெடித்துக் கொள்வதால் அமைதி எளிமை பக்தி என்பன
கேலிக்குரியதாகக் i ré ré கேளிக்கைக்குரியதாகக்
கேள்விக்குரியதாகப் புதுமனைப்புகு விழாவில் நீ போலியானதாகக் வெழுத்திடும் போது காண்பிக்கின்றாயே!! அறிவிக்கின்றாய் புதுவாழ்வதனை! ***
a மரண ஊர்வலத்தில் நீ
வெடித்துச் சிதறுகையில் பூப்படைந்த மண்ணுலக வாழ்வின் கன்னிக்குப் நிலையாமையினை பூப்புனிதநீராட்டுவிழா மனத் துயரதனை நிகழ்ந்திரும் வேளையில் நீ நினைவூட்டுகின்றாய்! வெடித்துக் கொண்டு மொட்டொன்று 2 i 2. முகையவிழ்த்தனைச் சுட்டி நிற்கின்றாய்! மனங்கள் கலந்து மனமாலை சூடிய *** மணமக்களினது
மணஊர்வலத்தின் போது நீ அமைதியாகப் மகிழ்ச்சியின் உச்சியை பக்தியோடு முட்டிக் கொள்ளுகின்றாய்!
டைபெற வேண்டிய
○ D (8 2 a
பக்கம் 9 "ஓலை" - 23 (பெப்ரவரி 2004)

Page 7
தைப்பொங்கல் காத்திட வேண்டி நீ
சித்திரைப்புத்தாண்டு வெடித்திடும் போது தான்
தீபாவளி உண்சேவை தெளிவு!
நத்தார் முதலாம்
Uண்டிகை நாட்களில் ரீ ***
பூரித்து வெடிப்பதால்
புனிதம் கெட்டுப் Uணத்தின் அருமையைப்
புதினமாவது முண்டே புரியாத மூடர்கள்.
பின்விளைவுகளினை
事峰峰 சிந்திக்காத்துட்டர்கள்.
உனக்குத் தீயிட்டு
அரசியற் தலைவர்களைத் வழிப்போக்கர்களின்
தேர்தலில் வென்றவர்களை காலின் கீழ் எறிந்து
ஊர்வலமாக அவர்களின் அவலத்தைக்
அழைத்துச் சென்றிடும் கண்டு மகிழ்கின்றார்!
வேளையிலே நீ கைகொட்டிச் சிரிக்கின்றார்!
வெடித்துக் கொள்வதால்
வெழப்பதுண்டே. 峰峰毫
விபரீதம்!
விரும்பாத விளைவுகள்! எந்த நிகழ்விலும்
உண்குரல் கேட்கும்!
a எந்த நிகழ்வும்
உண்குரலை ஏற்கும்!!
தோட்டங்களிலே எனவே
வயல்வெளிகளிலே அர்த்தம் பலகொண்ட
விளைந்துள்ள உன்னோசை கேட்டுக்
மிளகாய் Uயறு காரணம் தெளி(ரி)தல்
நெற்கதிர் போன்றவைகளைக் சுலபமா/சொல்நீ!
காகம் கிளி புறா
முதலாம் பறவைகள் முருகு"
அழித்திடா வண்ணம்
"ஓலை" - 23 (பெப்ரவரி 2004) பக்கம் 10

தமிழை வளர்ப்போம். தமிழராய்த் தலைநிமிர்வோம்
- தமிழ்மணி அகளங்கன்
தமிழ் என்றால் இனிமை என்று பொருள் என்பர் அறிஞர். "தமிழுக்கும் அமுதென்று பேர்" என்றார் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன். தமிழ் என்றால் அன்பு என்றும், அழகு என்றும் பொருள் கொள்ளலாம் என்பது இன்னுஞ் சிலர்.
தமிழ் என்பது தனிமைப் பொருள் குறித்த தமி என்னும் வினையடி கொண்ட சொல் என்றும் தமிழறிஞர்கள் கருதுகிறார்கள். தமியன், தமியள் என்ற சொற்கள் தனித்தவன், தனித்தவள் என்று பொருள் கொள்வதை உற்று நோக்கும் போது இது தெற்றெனத் தெளிவாகும். எனவே தமிழ் என்பது தனித்ததொரு செம்மொழி என்பர் அறிஞர்.
'தமி" என்பது தனக்கு ஒப்பில்லாத என்று பொருள் கொள்ளும் வகையிலும் அமைந்து விடுகிறது. அந்த வகையில் பார்க்கும் போது தமிழ் என்பது தனக்கு ஒப்பில்லாத மொழி என்ற பொருளில் அமைந்த சொல்லாகும் என்பர் இன்னும் சில தமிழறிஞர்கள்.
தமிழ் என்ற சொல்லில் வரும் 'ழ'கரம் தமிழுக்கே உரிய சிறப்பெழுத்தாகும். மலையாளம், அரபு ஆகிய மொழிகளிலும் 'ழ'கரம் உண்டு என்பர். இருப்பினும் 'ழ'கரம் அரபுமொழியில், தமிழ் மொழியில் 'ழ'கரம் ஒலிப்பதுபோல ஒலிப்பதில்லை. மலையாளம் தமிழ்த்தாய் ஈன்றெடுத்த குழந்தை என்பதால் மலையாளத்தில் 'ழ'கரம் ஓரளவுக்குத் தமிழில் ஒலிக்கப்படுவது போலவே ஒலிக்கப்படுகிறது என்பர்.
ஆக, தமிழிலுள்ள சிறப்பெழுத்தான 'ழ'கரத்தைக் கொண்ட தமிழ் என்ற சொல்லே தனித்துவம் மிக்கதாக விளங்குவதைக் காணலாம். வேறு மொழி. களில் இத்தகைய சிறப்பைக் காணமுடியாது.
தமிழரின் பாரம்பரிய வாத்தியக் கருவிகளில் தோற்கருவி, துளைக்கருவி, நரம்புக்கருவிகளின் பெயர்கள் 'ழ'கரத்தில் இருப்பதைப் பார்த்து வியந்து நிற்கிறோம்.
முழவு, குழல், யாழ் என்பன முறையே தோல், துளை, நரம்புக் கருவிகள் என்பது யாவரும் அறிந்ததே. இந்த மூன்று பெயர்களிலும் தமிழின் சிறப்பெழுத்தான 'ழ'கரம் இருப்பதால் இக்கருவிகள் தமிழருக்கே சொந்தமான பாரம்பரிய இசைக்கருவிகள் என்று உறுதிபடக் கூறி உவகையடைகின்றோம்.
தமிழிலே ஒரெழுத்தே சொல்லாகவும், வாக்கியமாகவும் வருகின்ற
பக்கம் 11 "ஓலை" - 28 (பெப்ரவரி 2004)

Page 8
அழகையும், வளத்தையும் கண்டு வியக்காதவர்கள் இல்லை. ஆ (பசு), ஈ, கா (சோலை), கை, கு (பூமி) தீ நா. நீ பா, பூ, பை, மா (குதிரை) முதலான பெயர்ச் சொற்கள் ஒரெழுத்துச் சொற்களே. கா (காப்பாறறு), தா, போ, வா, வை, ஈ (கொடு) முதலான வினைச் சொற்கள் ஒரெழுத்தைக் கொண்ட சொற்களாகவும் ஒரெழுத்தில் அமைந்த வாக்கியங்களாகவும் விளங்குவதைப் பார்த்து வியக்காத மொழியியல் அறிஞர்கள் இல்லை எனலாம்.
இவற்றை "ஒரெழுத்தொரு மொழி" என இலக்கணகாரர் கூறினும் வினைச் சொற்களை "ஒரெழுத்தொரு வாக்கியம்" எனவும் அழைக்கலாம்.
நாய் என்ற பெயரை நா தொங்குகின்ற மிருகத்துக்கு வைத்தனர். பன்றி என்ற பெயரை பல் வெளியே தெரியும் மிருகத்திற்கு வைத்தனர். புல்லைத் தின்னாத மிருகத்திற்கு புலி (புல் இலி) என்றும், மார்பினால் ஊர்ந்து செல்லும் பாம்புக்கு உரகம் (மார்பு) என்றும், அளக்க முடியாத நீரைக் கொண்ட நீர் நிலையை அளக்கர் (கடல்) என்றும் அழைத்தனர்.
தம்பின்னால் பிறந்தவனை தம்பின் என்று அழைத்தனர். அது பின்பு தம்பி ஆயிற்று. மூத்தவனை அண்ணா என்றழைத்தனர். அண்ணா என்பது மூத்த, மேலே, உயர்ந்த முதலான பொருள்களைத் தரும் சொல். அண்ணம் என்பது மேலேயுள்ளது என்பதைக் குறிக்கும். அண்ணாந்து என்பது மேலே என்பதைக் குறிக்கும். எனவே அண்ணன் என்றால் மேலேயுள்ளவர் என்று பொருள்.
இப்படியெல்லாம் காரணப் பெயர் வைத்த சிறப்பைவிட இன்னொரு நுட்பமான சிறப்பை இங்கு பார்ப்போம்.
நீர் நிலைகளை அவற்றின் அளவுக்கு ஏற்பவும், பயன்பாட்டுக்கு ஏற்பவும் பல்வேறு பெயர்களால் அழைத்த நுட்பத்தை அறியும் போது மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது.
குளம், ஏரி, ஊருணி, பொய்கை, சுனை, மடு, கேணி, மோட்டை, அள்ளல், கிணறு, துரவு, தடாகம், கயம், சமுத்திரம், அளக்கர், அகழி, அசம்பு எனப் பல பெயர்களை நீர் நிலைகளுக்கு இட்டனர்.
ஏர்த் தொழிலுக்காக (பயிற்செய்கை விவசாயம்) அமைக்கப்பட்டதை ஏரி என்றும், குளிப்பதற்காக அமைக்கப்பட்டதை குளம் என்றும், ஊரவர் உண்ணுவதற்காக (சுத்தமான குடிநீர்த் தேவைக்காக) அமைக்கப்பட்டதை ஊருணி என்றும், ஆழமான நீர் கொண்ட பாதுகாப்பிடங்களை அகழி என்றும், (அகழ்ந்து உருவாக்கப்பட்டது) சிறிதளவு நீருள்ள பள்ளத்தை சுனை என்றும், சேறு பொருந்திய நீர்ப்பள்ளத்தை அள்ளல் என்றும், மலர்கள் நிறைந்த நீர் நிலையை பொய்கை என்றும், அதைவிடச் சற்று விசாலமானதை (தடம் - விசாலம்) தடாகம் என்றும், தோட்டஞ் செய்வதற்காகத் தோண்டப்பட்டதைத் துரவு என்றும், ஆலயத்தில் அமைக்கப்படுவதை கேணி என்றும், ஆழமாக வெட்டிக் கட்டிப் பாதுகாப்பாகப் பயன்படுத்தப்படுவதை கிணறு என்றும் அளக்க முடியாத நீர்நிலையை (கடல்) அளக்கர் என்றும் நுட்பமான வேறுபாடு விளங்கப்
"ஓலை" - 23 (பெப்ரவரி 2004) பக்கம் 12

பெயர் வைத்து அழைத்தனர்.
பூவின் பல்வேறு நிலைகளைத் தமிழர் பெயரிட்டு அழைத்த நுட்பத்தை முத்தமிழ் காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம் அவர்கள் பின்வருமாறு அழகாக எடுத்து விளக்கியுள்ளார்.
அரும்பும், பருவம் அரும்பு, மொக்கு விடும் பருவம் மொட்டு, முகிழ்க்கும் பருவம் முகை, மலரும் பருவம் மலர், மலர்ந்த பருவம் அலர், வாடும் பருவம் வீவதங்கும் பருவம் செம்மல்.
இத்தகைய பல நுட்பங்களைக் கொண்டது நம் தமிழ் மொழி. உரைத்தல், அறைதல், கூறுதல், செப்புதல், இயம்புதல், பிதற்றுதல், விளக்குதல், விள்ளுதல், கழறுதல், புகலுதல், சொல்லுதல், ஏசுதல், பேசுதல், கதைத்தல், அளவளாவுதல், பகருதல், பிழற்றுதல், பன்னுதல், அகவுதல், அலம்புதல், மொழிதல் முதலான பல சொற்கள் நுட்பமான வேறுபாடு கொண்ட சொற்களாக விளங்கியிருக்கின்றன. இன்று இவற்றில் பல சொற்கள் ஒரே கருத்தையே உணர்த்துவனவாக இருக்கின்றன. இது மொழியின் தேய்வையே காட்டுகிறது.
உரைத்தல் என்பது விளக்கமாகச் சொல்லுதல், அறைதல் என்பது யாவரும் அறியும்படி பகிரங்கப் படுத்தல், கூறுதல் என்பது பல கூறுகளாகப் பகுத்துச் சொல்லுதல், செப்புதல் என்பது தெளிவாகச் சொல்லுதல், பன்னுதல் என்பது மீண்டும் மீண்டும் ஒன்றையே சொல்லுதல், அளவளாவுதல் என்பது கலந்து மகிழ்ந்து பேசுதல், விளம்புதல் என்பது விளக்கமாகச் சொல்லுதல், விள்ளுதல் என்பது மெது மெதுவாக விடயத்தைச் சொல்லுதல், கதைத்தல் என்பது கதைகளைச் சொல்லுதல், கழறுதல் என்பது உறுதியாகச் சொல்லுதல், என நுட்பமான பொருள் வேறுபாடுகளை மேற்குறித்த சொற்கள் உணர்த்தின.
இவை மட்டுமன்றி எது ஒன்றையும் துல்லியமாகக் குறிப்பிட தமிழ் மொழியில் சொல் உண்டு. இன்று தாய் என்ற சொல்லை தன்மை, முன்னிலை, படர்க்கை என மூவிடங்களிலும் பயன்படுத்தும் போது, என்னுடைய தாய் உன்னுடைய தாய், அவனுடைய தாய் என்றுதான் சொல்கிறோம்.
ஆனால் முற்காலத்தில் சுருக்கமாக யாய் என்று தன்னுடைய தாயையும் (தன்மை) ஞாய் என்று உன்னுடைய தாயையும் (முன்னிலை), தாய் என்று அவனுடைய தாயையும் (படர்க்கை) குறித்தனர்.
இதேபோல எங்கை, நுங்கை, தங்கை, எம்பி, நும்பி, தம்பி முதலான சொற்கள் பொருளுணர்த்திய நுட்பம் இன்று தமிழ் மொழியில் பாவனையில் இல்லை.
கடல் சார்ந்த நகரத்தைப்பட்டினம் என்றும் கடலில்லா நகரத்தைப்பட்டணம் என்றும் நுட்பமாக அழைத்ததை இன்று நினைத்து தமிழின் வளத்திலே மயங்கிப் பூரித்துப் போகிறோம்.
மிருகங்கள், பறவைகளின் ஒலிகளை வேறுபடுத்தி மயில் அகவும். கிளி
பக்கம் 13 'ஒலை" - 23 (பெப்ரவரி 2004)

Page 9
பேசும், குயில் கூவும், சிங்கம் கர்ச்சிக்கும், புலி உறுமும், பூனை சீறும், வண்டுகள் ரீங்காரம் செய்யும் என்றெல்லாம் மரபுச் சொற்களை வகுத்த தமிழ்ப் புலவர்கள் வாத்தியக் கருவிகளிவிருந்து வரும் ஒலிகளையும் வேறுபடுத்திப் பெயரிட்டு அழைத்தனர்.
குழல் அகவ யாழ் முரல
முழவு அதிர முரசு இயம்ப
விழவு அறா அயல் ஆவணத்து
எனச் சங்க காலத்துப் பத்துப் பாட்டு நூல்களில் ஒன்றான பட்டினப்பாலை, குழலின் ஒலியை அகவல் என்றும் யாழின் ஒலியை முரல்தல் என்றும், முழவின் ஒலியை அதிர்தல் என்றும், முரசின் ஒலியை இயம்பல் என்றும் நுட்பமாகக் குறிப்பிடுகின்றது.
கம்பன் தனது இராமாயணத்தில் அயோத்தியா காண்டத்திலே கைகேசி சூழ்வினைப் படலத்தில்
வங்கியம் பல தேன் விளம்பின
வாணி முந்தின பாணியின்
பங்கி அம்பரம் எங்கும் விம்மின
பம்பை பம்பின பல்வகைப்
பொங்கு இயம் பலவும் கறங்கின
நூபுரங்கள் புலம்ப வெண்
சங்கு இயம்பின கொம்பு அலம்பின
சாம கீதம் நிரந்தவே
(அயோ.கை.சூழ்.1554)
விளம்பின, முந்தின, விம்மின, பம்பின, கறங்கின, புலம்ப, இயம்பின, அலம்பின, நிரந்த எனப் பல்வேறு ஒலி வேறுபாடுகளைக் குறிப்பிடுவதையும் படித்து மகிழாதார் இல்லை.
இது மட்டுமன்றி கம்பன் பாலகாண்டத்தில் நாட்டுப் படலத்தில் சில ஒசைகளை நுட்பமாகப் பின்வருமாறு அழகாகக் காட்டுகிறான்.
ஆறுபாய் அரவம் மள்ளர் ஆலைபாய் அமலை ஆலைச்
சாறுபாய் ஒதை வேலைச் சங்கின்வாய் பொங்கும் ஒசை
ஏறுபாய்தமரம் நீரில் எருமைபாய் துழனி இன்ன
மாறுமாறு ஆகித் தம்மின் மயங்குமாம் மருத வேலி,
(UIT6).dbml. 1)
அரவம், அமலை, ஒதை, ஓசை, தமரம், துழனி என ஒசை வேறுபாடுகளைக் காட்டி, பெயரிட்டு அழைத்த அழகு தமிழ் மொழியின் சொல்வளத்தைக் காட்டுகின்றது.
'ஒலை" - 23 (பெப்ரவரி 2004) பக்கம் 14

பெரிய புராணத்தைப் பாடிய சேக்கிழார் பெருமானும் இத்தகை நுட்பத்தைத் தனது பாட்ல்களிலே காட்டியுள்ளார்.
ஆலை பாய்பவர் ஆர்ப்புறும் ஒலமும்
சோலை வாய்வண்டு இரைத்து எழு சும்மையும்
ஞாலம் ஓங்கிய நான்மறை ஒதையும்
வேலை ஒசையின் மிக்கு விரவுமால்
(பெரிதிருநாட்டுச் சிறப்பு-68)
ஒலம், சும்மை, ஒதை, ஒசை என ஒலி வேறுபாடுகளைப் பாடி ஆரவாரச் சத்தத்தை ஒலம் என்றும், வண்டினம் இரைச்சலோடு எழுகின்ற ஒலியை சும்மை என்றும், வேதமுழக்கத்தை ஒதை என்றும் நுட்பமாகச் சொல்லிச் செல்கிறார் சேக்கிழார் பெருமான்.
இது மட்டுமன்றி மக்களை வாழ்த்துவதை வாழ்த்துதல் என்றும், தெய்வத்தை வாழ்த்துவரை வழுத்துதல் என்றும் கூட நுட்பமான வேறுபாட்டைத் தமிழ்ப் புலவர்கள் கையாண்டு தமிழ் மொழியின் வளத்தை எடுத்துக் காட்டினர்.
"உப்பில்லாப் பண்டம் குப்பையிலே" என்ற பழமொழியைச் சொல்லுகிறோமே இதன் நுட்பத்தை அறிந்து கொண்டா சொல்கிறொம். தேன், பால் முதலியவற்றிலும், பழ வகைகளிலும் உப்பு இல்லை என்று குறை கூறி அவற்றைக் குப்பையிலே கொட்டுகிறோமா. விரும்பிக் குடிக்கிறோமே உண்கிறோமே.
உண்மையில் உப்பு என்று ஒரு சுவையில்லையே. உவர்ப்பு என்பதைத்தான் உப்பு என்று இன்று அழைக்கிறோம். உப்பு என்பதை ஒரு குறித்த சுவையாக்கி வைத்திருக்கிறோம். ஆனால் உப்பு என்பது சுவை என்ற பொருளை மட்டுமே குறிக்கிறது.
புளிப்பு,இனிப்பு, உறைப்பு(கார்ப்பு-காரம்), கசப்பு, துவர்ப்பு, உவர்ப்பு (கரிப்பு) என்று சொல்லப்படுகின்ற அறுவகைச் சுவைகளையும் குறிக்கும் சொற்கள் யாவற்றிலும் உப்பு என்ற ஒலி (ப்பு) இருப்பதை அவதானிக்கலாம். உதாரணமாக புளிப்பு என்றால் புளி ஆகிய சுவை என்றே பொருள் கொள்ள வேண்டும். எனவே உப்பில்லாப் பண்டம் குப்பையிலே" என்ற பழமொழி "சுவையில்லாத பண்டம் குப்பையிலே" என்ற பொருளையே தருகிறது. பண்டம் என்பது பொதுவாக உண்ணும் பொருளைக் குறிக்கிறது. தின் பண்டம் என்ற சொல்லை நோக்க இது விளங்கும். இருப்பினும் திருவள்ளுவரின் காலத்திலேயே உவர்ப்பு என்ற சொல் உப்பாக மருவிட்டதனால் உப்பு என்பது ஒரு சுவையைக் குறிக்கும் சொல்லாக மாறிவிட்டது.
உப்பமைந் தற்றால் புலவி அதுசிறிது
மிக்கற்றால் நீள விடல் (குறள் -1302)
இக்குறளில் ஊடல் என்பது உணவுக்கு உப்பைப் போன்றது என்ற பொருளில் வருவது கவனிக்கத்தக்கது.
பக்கம் 15 ஒலை" - 23 (பெப்ரவரி 2004)

Page 10
வறுமை, செல்வம் ஆகிய இரண்டுமே மனிதனுக்கு நிரந்தரமானவை அல்ல என்ற உண்மையை உலகுக்கு உணர்த்தும் தத்துவ நோக்கில் வறுமையைத் தரித்திரம் (தரித்துஇரம் - தங்கி இருக்க மாட்டோம்) என்றும், செல்வத்தை செல்வம் (செல்வோம்) என்றும் பயன்படுத்திய சொல் நுட்பத்தை யார்தான் வியக்கமாட்டார். யார்தான் இரசிக்க மாட்டார்.
இத்தகைய நுட்பத்தை உலகிலுள்ள வேறெந்த மொழியிலும் காணவே முடியாது. இப்படிப் பல நுட்பங்களை எடுத்துக் காட்டலாம். விரிவஞ்சி விட் டுவிட்டோம். இத்தகைய சிறப்பு தமிழ் மொழிக்கே உரிய பெருஞ்சிறப்பாகும். அதனாற்றான், தமிழே மிகவும் பண்பட்ட மொழி என்றும், தனக்கே உரிய வளம் வாய்ந்த இலக்கியச் செல்வங்களைப் பெற்றிருக்கும் மொழி என்றும் மார்க்ஸ் முல்லர் குறிப்பிட்டார்.
ஆற்றல் மிக்கதாகவும், சொல்ல வந்த பல கருத்துக்களைச் சில சொற்களால் தெளிவுறப் புலப்படுத்த வல்லதாகவும், தமிழ்மொழிபோல் வேறு எம்மொழியும் இல்லை என்றார் பெர்கில் என்ற பாதிரியார்.
உலக அறிவை உணர்த்தும் சிறப்பில் திருக்குறளுக்கு இணையாக இலக்கிய உலகில் வேறு எதுவும் இல்லை என்றார் டாக்டர் அல்பர்ட் சுவைட்சர். தமிழ் மொழியில் அமைந்த அகத்துறை இலக்கியங்கள் போல் உலகிலுள்ள வேறு எந்த மொழியிலும் இல்லை என்று பெஸ்கிப் பாதிரியார் (வீரமாமுனிவர்) கால்டுவெல் போய் முதலியோர் வியந்து சொல்லி வைத்தார்கள்.
தமிழ் மொழியில் உள்ள தொல்காப்பியம் என்னும் மிகப் பழமை வாய்ந்த இலக்கண நூலில் சொல்லப்பட்ட பொருள் இலக்கணம் போல வேறு எந்த மொழியிலும் இல்லை என்று அறிஞர்கள் வியக்கின்றனர்.
இத்தகைய சிறந்த மொழியைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள் நாங்கள். பெரும் புலவர்களையும், சிறந்த இலக்கியங்களையும் கொண்ட உயர்தனிச் செம்மொழியைத் தாய் மொழியாகக் கொண்டவர்கள் நாங்கள். மனித இனம் முதலில் தோன்றிய குமரிக் கண்டத்தில் (லெமூரியாக் கண்டம்) தோன்றி வளர்ந்த மூத்த பழங்குடியினர் நாங்கள்.
கி.மு.10ல் சாலமன் என்ற மன்னனுக்குத் கப்பல்கள் மூலம் மயில்த் தோகை, யானைத்தந்தம், சந்தனம், வாசனைத் திரவியம் முதலியவற்றை நட்புமுறையில் அனுப்பி வைத்தவர்கள் நாங்கள்.
கி.மு.5 ற்கு முன்பே அரிசி, மயில், சந்தனம் முதலானவற்றை பபிலோனியா, பிலிப்பைன்ஸ், சீனா, கிரேக்கம், இந்தோனேசியா முதலான நாடுகளுக்கு அனுப்பி வாணிபஞ் செய்தவர்கள் நாங்கள் என்று பிளினி (கி.பி.24 -79) மெகஸ்தனிஸ் (கி.மு.3) தொலமி (கி.பி.150) முதலானவர்களின் குறிப்புகள் தெரிவிக்கின்றன.
கிறிஸ்துவுக்கு முன்பே சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்து உலகிலேயே ஒரு மொழியின் வளர்ச்சிக்கும், இலக்கியத்தின் வளர்ச்சிக்குமென முதன் முதல் ஓர்
ஒலை" - 23 (பெப்ரவரி 2004) பக்கம் 18

அமைப்பு மூலம் செயற்பட்டவர்கள் தமிழர்களாகிய நாங்கள்.
13ம் லூயி என்ற பிரஞ்சுப் பேரரசன் தன் மொழியைப் பாதுகாக்க 1525ம் gy,6ir(65.j65dié b60)Guódbyabg,6025 blosio, T667. (Royal Acadamy of the french) என்பர் வரலாற்று அறிஞர்.
ஆனால் தமிழ் மொழியை வளர்க்க கி.பி.470ல் வச்சிர நந்தி என்ற சமணத் துறவியால் மதுரையில் அமைக்கப்பட்ட திராவிட சங்கமும் கி.மு.காலத்தில் அமைக்கப்பட்ட முதல், இடை, கடை என்றழைக்கப்படும் முச்சங்கங்களும் தமிழ் மொழியை வளர்ப்பதற்காக அமைக்கப்பட்டதை நினைத்துப் பார்க்கும் பேர்து தமிழ் மொழியை வளர்ப்பதில் தமிழ்ப்புலவர்களும் அரசர்களும் காட்டிய அக்கறை எம்மை வியப்படைய வைக்கிறது.
இன்னோரன்ன பழம் பெருமைகள் பலவற்றைக் கொண்டவர்களாகிய எமது தமிழ் மொழியிலே, உலகுக்கே பண்பாட்டையும், மனித நேயத்தையும், அறிவையும் புகட்டக் கூடிய "யாதும் ஊரே யாவரும் கேளிர்" முதலான சிறந்த கருத்துக்களைக் கொண்ட இலக்கியக் கருவூலங்கள் மிகுந்து கிடக்கின்றன. இவைகளையெல்லாம் அழிய விடலாமா.
தமிழ் மொழி அழிந்து போனால் எமது காவியங்கள் அழிந்து போகும். பிரபந்தங்கள் அழிந்து போகும். புராண, இதிகாசங்கள், பக்திப்பனுவல்கள், அறம் கூறும் பாடல்கள், அகம் கூறும் பாடல்கள் யாவுமே அழிந்து போகும். நமது பண்பாட்டு விழுமியங்கள் யாவும் மண்ணோடு மண்ணாகி விடும்.
ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் தோன்றிய முத்த மொழிகளான சமஸ்கிருதம், இலத்தின் ஆகிய மொழிகள் பேச்சு வழக்கிழந்தும், திரிபுபட்டும் இருக்க, அவற்றிற்கு முன்தோன்றிய மூத்த மொழியாகிய நம் தமிழ் மொழி இன்றும் இலக்கிய, இலக்கணச் செழுமை மிக்க மொழியாக, அன்றாடம் பாவனையில் இருக்கிறதே இது எப்படிச் சாத்தியமாயிற்று.
எமது முன்னோர், மொழியைப் பாதுகாத்தனர். மொழியை வளர்த்தனர். மொழி அழிந்தால் மொழி வழி இனமே அழிந்து போகும் என்பதை உணர்ந்து மொழியைக் காத்தனர்.
மொழி என்பது வெறும் தொடர்பு ஊடகம் மட்டுமல்ல. அதுவே நாகரிகத்தையும், பண்பாட்டையும், கலாசாரத்தையும் வளர்க்கிறது. சிந்தனையையும் அதன் வெளிப்பாட்டையும் வளர்க்கிறது.
மனித குலத்தின் - மானுடத்தின் உச்சக்கட்ட வளர்ச்சி மொழி வழியாகப் பெறப்படும் உயர்ந்த பண்பாட்டிலேயே தங்கியுள்ளது என்பதை எவரும் மறக்க
முடியாது.
எனவே தமிழர்கள், தாங்கள் வாழுகின்ற இடங்களிலெல்லாம் தமிழை வளர்க்கும் பணியைச் செவ்வனே செய்ய வேண்டும். பல்வேறு நாடுகளிலும் வாழ்கின்ற தமிழர்கள் அவ்வந்நாட்டு மொழிகளை அரச தேவைக்காகவும்,
பக்கம் 17 ஒலை" - 23 (பெப்ரவரி 2004)

Page 11
தொடர்புச் சுகத்திற்காகவும், கல்விக்காகவும் கற்றாலும், தாய் மொழியாகிய தமிழ் மொழியைக் கட்டாயம் வீட்டு மொழியாக்கிக் கொள்ள வேண்டும்.
வீடுகளிலே குழந்தைகளுக்குத் தமிழறிவூட்டி, தமிழைப் பேசப்பழக்கி, எழுதப் பழக்கி வைத்தால் அவர்கள் தமிழ் இலக்கியங்களைக் கற்று எமது பாரம்பரிய வாழ்க்கை முறைகளையும், பண்பாட்டு விழுமியங்களையும் அறிந்து கொள்வார்கள். அதன் மூலம் தம் உலகியல் வாழ்க்கையையும், ஆன்மீக வாழ்க்கையையும் செம்மைப் படுத்திக் கொள்வார்கள்.
அறிஞர் மட்டத்திலே எவ்வளவுதான் ஆராய்ந்தாலும், மொழியானது அன்றாடப் பாவனையில் இல்லாது போனால் அது பிரேத பரிசோதனைக்குத்தான் ஒப்பாகும்.
மொழியின் நிலைப்பு என்பது அதனைப் பயன்படுத்துவோரிலேயே தங்கியிருக்கின்றது. சமஸ்கிருத மொழி மிகச் சிறந்த இலக்கியங்களை, இதிகாசங்களை, இலக்கணங்களையெல்லாம் கொண்டிருந்த போதிலும், இன்று பேச்சு வழக்கிழந்து போய் மந்திரங்களோடு மட்டும் நிற்கிறது. இத்தகைய "ஆரியம் போல் உலகவழக்கு அழிந்து ஒழிந்து" சிதைந்து போகும் நிலை தமிழ் மொழிக்கு வரலாமா. இதனை யாவரும் சிந்திக்க வேண்டும்.
"எங்கள் தமிழ் மொழி எங்கள் தமிழ் மொழி என்றென்றும் வாழியவே" என்று தமிழ் மொழி வாழ்த்தைப் பாடினால் மட்டும் தமிழ் மொழி வளர்ந்து விடாது. வாழ்ந்து விடாது. எமது அன்றாடப் பாவனையில் தமிழை வைத்திருந்தால் மட்டுமே தான் தமிழ் வாழும்.
பிள்ளைகளுக்கு நல்ல தமிழ்ப் பெயர்களை வைக்கும் வழக்கம் இங்கே இலங்கையில் வடக்குக் கிழக்கு மாகாணத்திலேயே குறைந்து விட்டதே.
தாய், தந்தையரை மம்மி, டடி, மம், டட் என அழைக்கின்ற மகா கேவலம் எங்கள் மாவீரர்கள் இரத்தஞ் சிந்திய செந்தமிழ்ப் பூமியிலும் இன்று அதிகமாகி வருகின்றதே. மம்மி" என்ற சொல் பழம் பிணத்தைக் குறிக்கும் சொல் என்பது எத்தனை பேருக்குத் தெரியும்.
தமிழிலே கையெழுத்து வைக்கின்ற தமிழர்களின் எண்ணிக்கையை விரல்விட்டு எண்ணினால் விரல்கள் தான் மிஞ்சும் நிலை இங்கேயே இருக்கிறதே. இலட்சக்கணக்கானவர்களைப் பலி கொடுத்தும், கோடிக் கணக்கான சொத்துக்களை இழந்தும், இடம் விட்டு இடம் பெயர்ந்தும், நாடு விட்டு நாடு சென்று அகதியாகியும், சொந்த நாட்டிலே, சொந்தப் பிரதேசத்திலே சொந்தக் கிராமத்திலேயே அகதி வாழ்க்கை வாழும் நிலையடைந்தும், இன்னும் எதற்காக நாம் இவற்றையெல்லாம் இழந்தோம் என்பதை அறியாதவர்களாக இங்கேயே பலர் இருக்கிறார்களே.
எதையும் தாய்மொழியில் கற்றால் தான் சுயமாகச் சிந்திக்கும் ஆற்றல் குழந்தைகளிடம் பெருகுகிறது என்பது உலகம் முழுவதும் மழலைக் கல்கி
'ஒலை" - 23 (பெப்ரவரி 2004) பக்கம் 18

அறிஞர்கள் வலியுறுத்தும் உண்மை. இருப்பினும் எங்கள் பகுதிகளிலேயே பாலர்களை சர்வதேசப் பாடசாலைகளுக்கு (International Schools) ஆங்கிலத்தில் படிக்க அனுப்புகின்ற தமிழர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் பெருகுகிறது.
"யாதும் ஊரே யாவரும் கேளிர்" என இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன் கணியன் பூங்குன்றனார் என்ற புலவர் கூறிய புறநானூற்றுப் பாடல்வரி, உலக சகோதரத்துவத்தை உறுதிப்படுத்தும் உண்மை வரியாகட்டும். பெயரளவிலே தமிழராக வாழாமல் வாழ்வளவிலே தமிழராக வாழ வேண்டும்.
தமிழைத் தமிழர்கள் மதித்துத் தம் அன்றாடப் பாவனையில் வைத்திருந்தால் உலகம் முழுவதும் தமிழ் ஒலிக்கும். இங்கே நாம் இழந்த உயிர்களின் பெறுமதிக்கு அது ஒன்றே கைம்மாறாகும். அதுவே அஞ்சலியுமாகும். எங்களுக்காக உயிர் நீத்தவர்களின் ஆன்ம சாந்திக்கும் அதுவே வழியுமாகும். எனவேதமிழை வளர்ப்போம். தமிழராய் தலை நிமிர்வோம்.
G6D
ஈழத்தில் வெளிவந்த இலக்கியச் சிற்றிதழ்களின் வரிசையில்.
கடந்த காலங்களில் ஈழத்தில் வெளிவந்துநின்று போய்விட்ட ஈழத்து இலக்கியச் சிற்றிதழ்கள் பற்றிய விபரங்களை 'ஒலை இதழ்களில் தர எண்ணியுள்ளோம். அவ்வாறான சிற்றிதழ்கள் வெளிவரத் தொடங்கிய காலம்- வெளியீட்டாளர். அதன் ஆசிரியர் - எப்பிரதேசத்திலிருந்து வெளிவந்தது- எத்தனை இதழ்கள் வெளிவந்தன - எப்போதுநிறுத்தப்பட்டது - நின்றுபோன காரணம், அவ்விதழ்களில் எழுதிய எழுத்தாளர்கள். - அவ்விதழ்களில் வெளிவந்த ஆக்கங்கள். அவ்விதழ்களின் அளவு, பக்கங்கள் பற்றிய விபரம் மற்றும் ஈழத்து இலக்கிய உலகில் அவ்விதழ்கள் ஏற்படுத்திய தாக்கங்கள், பங்களிப்புகள் முதலிய விபரங்களை உள்ளடக்கியதான கட்டுரை ஆக்கங்களை எதிர்பார்க்கின்றோம். 'ஒலையின் ஒவ்வொரு இதழிலும் அவ்வாறான சிற்றிதழ்கள் ஒவ்வொன்றின் விபரமும் தனித்தனியே வெளியிடப்படும். எழுத்தாளர்கள், இலக்கிய ஆர்வலர்கள் உங்களுக்குத் தெரிந்த 'சிற்றிதழ் பற்றி எழுதி அனுப்புங்கள். அத்துடன் அவ்வாறான சிற்றிதழ்களின் பழைய பிரதிகளை ஆவணப்படுத்துமுகமாக விலைகொடுத்து வாங்கவும் தயாராயுள்ளோம். அவ்வாறான பிரதிகள் கைவசமுள்ளவர்கள் 'ஒலையுடன் தொடர்பு கொள்ளுங்கள்.
-ஆசிரியர்
பக்கம் 19 ஒலை" - 23 (பெப்ரவரி 2004)

Page 12
காசி ஆனந்தன் நறுக்குகள்
மனிதன் 65 y
இவன் உன் பசுவின் பாலைக் கோவணம் கறந்தால் அவிழ்க்கப்பட்ட தா!
"பசு பால் தரும்" 96),607 என்கிறான். 605566
வெட்டு.
ᏯlᎢ ᏯtᎠ o .。 இவன் வடையை கெஞ்சி வாங்கி எடுத்தால் கோவனம்
கட்டாதே.
"காகம் d (8 வடையைத் திருடிற்று" g). DLD600TLDT dBG56) என்கிறான். போராடு
இப்படியாக மனிதன்.
இதுகுப்பைத் தொட்டி
குப்பை பொறுக்கி வாழ்கிறவனுக்கு எலும்புக் கைகளால். இது அலுவலகம்.
($) -இன்னும் வரும்- S
'ஒலை" - 23 (பெப்ரவரி 2004) பக்கம் 20
 
 
 
 

e 8
e ge
சங்கப்பலகை
236 வது அறிவோர் ஒன்றுகூடல் 07.01.2004 புதன்கிழமை 5.30 மணிக்கு சங்கத் தலைவர் திரு.பெ.விஜயரத்தினம் அவர்களின் தலைமையில் புராணவித்தகர் மு.தியாகராசா அவர்கள் சிலப்பதிகாரத்தில் 'வடவரைப்புறங்கண்ட செங்குட்டுவன்' எனும் தலைப்பில் உரையாற்றினார்.
தமிழிசையோடு ஒரு மாலைப்பொழுது
09.01.2004 வெள்ளிக்கிழமை மாலை 6.00 மணிக்கு சங்க ஆட்சிக்குழு உறுப்பினர் திரு.வி.ஏ.திருஞானசுந்தரம் (இலக்கியக் குழு உறுப்பினர்) அவர்களின் தலைமையில் நோர்வேயிலிருந்து வருகை தந்திருந்த திருமதி வாசுகி ஜெயபாலன் (கவிஞர் வ.ஐ.ச.ஜெயபாலன் அவர்களின் துணைவியார்) வழங்கிய 'தமிழிசையோடு ஒரு மாலைப் பொழுது (இசை நிகழ்ச்சி) இடம் பெற்றது. திருமதி.கமலினி செல்வராஜன் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார். திரு.ஏ.ரகுநாதன் (மிருதங்கம்), திரு.ரிபாலமுரளி (வயலின்) ஆகியோர் பக்கவாத்தியம் இசைத்தனர். வீரமணி ஐயரின் ரஞ்சனி கொஞ்சிடும் குஞ்சரனே' எனும் பாடலுடன் அன்றைய மாலைப் பொழுதை ஆரம்பித்த வாசுகி ஜெயபாலன் அவர்கள் தொடர்ந்து நாட்டார் பாடல்களை இசை கூட்டிப் பாடி அனைவரினதும் பாராட்டுக்களைப் பெற்றார். நாடுகளின் பொதுமையை உணர்த்தும் வகையில் தாலாட்டு பாடலை தமிழ், சிங்களம், நோர்வேஜியன் மொழிகளில் பாடி அவையை மகிழ்வித்தார். கவிஞர்.வ.ஐ.ச.ஜெயபாலன் அமரர் சில்லையூர் செல்வராஜன் ஆகியோரது பாடல்கள் சிலவற்றையும் இசையோடு பாடினார். இந்நிகழ்வின் போது சிங்கள வாத்தியக் கலைஞர் ஒருவர் கலந்து கொண்டு பல்வகை வாத்தியங்களை மீட்டினார்.
பக்கம் 21 ஒலை" - 23 (பெப்ரவரி 2004)

Page 13
திருவள்ளுவர் தினமும் உழவர் திருநாளும் 16.01.2004 வெள்ளிக்கிழமை மாலை 5.30 மணிக்கு சங்கத்தலைவர் திரு.பெ.விஜயரத்தினம் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. பிரதம விருந்தினராக திருகோணமலை மாவட்ட நீதிபதி திரு.சொ.தியாகேந்திரன் அவர்கள் கலந்து சிறப்பித்தார். முனைவர் கா.பொ.இரத்தினம் அவர்கள் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார். அருள்மொழியரசி வித்துவான் வசந்தா வைத்தியநாதன் அவர்கள் சுழன்றும் ஒர் பின்னதுலகம்' எனும் தலைப்பில் சிறப்புரை நிகழ்த்தினார். தொடர்ந்து பின்வரும் நிகழ்வுகள் இடம் பெற்றன.
விவாதம்
இன்றைய தமிழர் வாழ்க்கை முறைமை எமது இனத்தின் மேம்பாட்டுக்கு ஏற்புடையது / ஏற்புடையதல்ல
நடுவர் திரு.குமாரசாமி சோமசுந்தரம் (துணைத்தலைவர், கொழும்புத் தமிழ்ச்சங்கம்)
ஏற்புடையது ஏற்புடையதல்ல செல்வன்.A.R.வாமலோசனன் செல்வன்.ரமணன் செல்வன்.பார்த்தீபன் செல்விச.காஞ்சனா செல்வன்.கிருபானந் செல்வன்.ரஜீவ் நிர்மலசிங்கம் செல்வன்.பிரசன்னா செல்வன்.பா.காணர்டீபன்
கவியரங்கு
"வள்ளுவன் பால் வார்த்து வளரும் தமிழ்ப் பொங்கல்”
தலைமை செங்கதிரோன்
பங்குபற்றியோர்
பன்மொழிப்புலவர் த.கனகரத்தினம் தசந்தி நிரேகா சிறிலோகேஸ்வரன் கவிஞர் நீர்கொழும்பு நதர்மலிங்கம் எஸ்.விமலாதித்தன்
நன்றியுரை : திரு.கே.கே.உதயகுமார் அவர்கள்
ஒலை" - 23 (பெப்ரவரி 2004) பக்கம் 22

மங்கல விளக்கேற்றும் பிரதம விருந்தினர் திரு.சொ.தியாகேந்திரன் (திருகோணமலை மாவட்ட நீதிபதி) அவர்கள்
முனைவர் கா.பொ.இரத்தினம் அவர்கள் திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவிக்கின்றார்.
பக்கம் 23 'ஒலை" - 23 (பெப்ரவரி 2004)

Page 14
மேடையில் : திரு.கு.சோமசுந்தரம் (துணைத்தலைவர் கொழும்புத் தமிழ்ச்சங்கம்), பிரதம விருந்தினர், திரு.பெ.விஜயரத்தினம் (தலைவர், கொழும்புத் தமிழ்ச் சங்கம்), முனைவர் கா.பொ.இரத்தினம், அருள்மொழியரசி வித்துவான் வசந்தா வைத்தியநாதன்
விவாதத்தைத் தொடக்கி வைக்கும் ஏ.ஆர்.வாமலோசனன்
ஒலை" - 23 (பெப்ரவரி 2004) பக்கம் 24
 
 

விவாத அணி (ஏற்புடையது) கிருபானந், பிரசன்னா, பார்த்திபன்,
வாமலோசனன், கு.சோமசுந்தரம் (நடுவர்)
விவாத அணி (ஏற்புடை யதல்ல) ரமணன், சகாஞ்சனா, ரஜீவ், நிர்மலசிங்கம், பா.காண்டீபன்.
பக்கம் 25 'ஒலை" - 23 (பெப்ரவரி 2004)

Page 15
கவியரங்கைத் தொடக்கிவைக்கும் பன்மொழிப் புலவர்.த.கனகரத்தினம்
கவியரங்கு கவிஞர் நீர்கொழும்பு ந.தர்மலிங்கம், செங்கதிரோன் (தலைமை) எஸ்.விமலாதித்தன், தசந்தி நிரேகா சிறிலோகேஸ்வரன்
"ஓலை’ - 23 (பெப்ரவரி 2004) பக்கம் 26
 
 

297 வது அறிவோர் ஒன்றுகூடல் 21.01.2004 புதன்கிழமை பி.ப.5.30 மணிக்கு சங்கத் துணைத்தலைவர் திரு.இரா.சுந்தரலிங்கம் அவர்களின் தலைமையில் புராணவித்தகர் திரு.மு.தியாகராசா அவர்கள் 'வடவரைப் புறங்கண்ட செங்குட்டுவன் (07.01.2004 அன்றைய தொடர்ச்சி ) எனும் தலைப்பில் சிலப்பதிகாரத் தொடர் சொற்பொழிவை நிகழ்த்தினார்.
தொடர் சொற்பொழிவு ஆரம்பம் 23.01.200 வெள்ளிக்கிழமை பி.ப.5.30 மணிக்கு பண்டிதர் சி.அப்புத்துரை அவர்களின் தொடர் சொற்பொழிவு தமிழ்ப்புலவர் வரிசை -1' சங்கத் துணைத் தலைவர் திரு.மு.கதிர்காமநாதன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
238 வது அறிவோர் ஒன்றுகூடல் 28.01.2004 புதன்கிழமை பி.ப.5.30 மணிக்கு சங்கத் துணைத்தலைவர் திரு.இரா.சுந்தரலிங்கம் அவர்களின் தலைமையில் "கங்கையில் நீர்ப்படை கொண்ட கண்ணகி (சிலப்பதிகாரச் சொற்பொழிவுத் தொடர்) என்ற தலைப்பில் புராணவித்தகர் திரு.மு.தியாகராசா அவர்கள் உரை நிகழ்த்தினார்.
சங்கப்பலகை தயாரிப்பு : சி.சரவணபவன் (துணை நிதிச் செயலாளர்)
பக்கம் 27 'ஒலை" - 23 (பெப்ரவரி 2004)

Page 16
கொழும்புத் தமிழ்ச்சங்கம் நடாத்திய (16.01.2004) திருவள்ளுவர் தினமும் உழவர் திருநாளும் வைபவத்தில் செங்கதிரோன் தலைமையில் நடைபெற்ற "வள்ளுவர் பால் வார்த்து வளரும் தமிழ்ப் பொங்கல்" எனும் தலைப்பிலான கவியரங்கில் பன்மொழிப் புலவர் த.கனகரத்தினம் பாடியது.
வள்ளுவண் பால்வார்த்து வளரும்
தமிழ்ப் பொங்கள் பன்மொழிப்புலவர் - தகனகரத்தினம் (வெண்பா)
1. ஏரின் உழவர் எடுத்தியம்பும் இத்திருநாள்
பாரிற் திருக்குறட் பாவலன்றன் - சீரியநற் சிந்தனையிற் கொண்ட திருநாளாய்க் கொண்டாட வந்தனை செய்வோம் வணங்கு.
2. வள்ளுவன்பால் வார்த்து வளரும் தமிழ்ப்பொங்கல்
உள்ளுங்கால் இன்பம் உவக்காதோ - தெள்ளுதமிழ் நாற்கவிஞர் பாடிவர நாயகமாய்ச் செங்கதிரோன் பாற்கடலின் மேலெழுதல் பார்.
கட்டளைக் கலித்துறை
3. பொங்கலும் வந்தது பொங்கி மகிழ்ந்தனம் புத்தரிசி
செங்கன்னல் சர்க்கரை சேர்ந்த பருப்பொடு பாலிலிட்டு மங்களம் பாடி மகிழ்ந்து மனையதின் முன்றிலிலே செங்கதிர் போற்றித் தமிழர் அமுது படைத்தனரே.
4. முன்றில் இலதாம் முழுமாடி வீடும் முகமலர்ந்தே
குன்றில் குமரன் குடிகொண்ட வாறே குவலயத்தில் நன்றி பெரிதென நல்லுழவர் நாளை மின்அடுப்பின் வென்றி அழுதை விழவிற் படைத்திடும் பல்கனியே
(பார்த்திருப்பே)
5. போரும் உழவும் புதைத்தன எல்லாமே கண்ணிவெடி சீரும் சிறப்பும் சிறந்த வயல்நிலச் சேற்றினிலே பேரும் புகழும் பெருத்த இயந்திரப் பேர்க்கலப்பை ஊரும் பொழுது மிதிக்க வெடித்திடும் ஊனமுமே.
ஒலை" - 23 (பெப்ரவரி 2004) பக்கம் 28

0.
1.
(கொச்சகக் கலிப்பா)
முப்பாலின் பெருமையினை முழுஉலகும் தெளிந்துணர்ந்தார் அப்பாலில் தமிழமுது அடுத்தவரும் படைத்தளித்தார் இப்பாலும் தமிழ்ச்சங்கம் எடுத்துரைத்துப் பருகவைத்தார் எப்பாலும் தலைவரவர் பண்டிதராம் இரத்தினமே.
வள்ளுவரின் பெருமையினை வான்புகழும் வகைசெய்தார் தெள்ளுதமிழ்ப் புலவரெல்லாம் தேசமெங்கும் பரவவைத்தார் கொள்ளையின்பம் பெருகவென்றே கூடிநின்ற கவியரங்கில் துள்ளுகவி படைக்கவென்று தூயதமிழ் பொங்கினரே.
உலகமெலா மெடுத்தேத்தும் உயரியற் குறளினையே அலகில்பல் மொழிகளிலே அறிந்துணரப் பெயர்த்தமைத்துப் பலகலைகள் தொகைவிளங்கும் பலநாட்டார் பயன்கண்டார் நிலவுபுகழ் போப்பையரும் நினைவினிலே நிலைத்தனரே.
உலகிலெழு சமயமெலாம் உரிமையுடன் உவந்தேற்கப் பலவாயில் பாரினிலே பரந்துவாழும் பலவினத்தார் தலையாய திருக்குறளைத் தமதுதம தெனக்கொண்டார் நிலையாய அறநெறியை நெறிப்படுத்தும் குறளரங்கே.
வானோக்கி வளங்காணும் வடஇலங்கைத் தமிழரன்று வானோக்கி வளைபுக்கார்(வங்கர்) வருவழிக்கும் விமானமூரக் காநோக்கிக் கடல்நோக்கிக் கரைகடந்து கலங்கிடினும் ஊனோடொன்றியயிராய்த் திருக்குறளை மறந்திலரே.
அல்லற்புட் டழுதகண்ணிர் அறமுரைக்கு மெனுந்தமிழர் சொல்லொணாத துயர்களெல்லாம் சொல்லியினித் தொலையாதோ நல்லதொரு விடிவினையே நயந்தேத்திப் பொங்கலிட்டார் தொல்லையிலாச் சமாதானம் தொடர்ந்துவரும் துயருமின்றே.
பொங்குதமிழ் எழுச்சிபெறச் சங்கநாதம் முழங்கிவரும் சிங்கமும் செந்தமிழும் சேர்ந்திலங்குத் திருநாட்டில் மங்களமாய் மனைவிளங்க மாதரெல்லாம் அணிதிரளச் செங்கதிரோன் வரவுகண்டு பொங்கிடுமே தாமிழ்ப்பொங்கல்.
Հ>
பக்கம் 29 ஒலை" - 23 (பெப்ரவரி 2004)

Page 17
நாம் வளர்ப்போம் சமாதான நல்லுறவை!
தேனுரான் க. தருமரத்தினம் சாதிமொழி மதமெனினும் வேறுபாட்டால் தனித்துவமாய் வாழ்ந்தாலும் நாங்களெல்லாம் நீதியினால் நெறிமுறையால் ஒன்றேயென்ற நினைப்பென்றும் நெஞ்சினிலே நிலைத்திருக்க சாதனைகள் செய்திடுவோம் தரம்பிரிக்கும் சக்திகளைத் தலைகவிழ்த்து சமத்துவத்தை ஒதிடுவோம் ஒளிதேச மக்களெனினும் உணர்ச்சியிலே ஒற்றுமைக்கு வித்திடுவோம்!
மிக நலிந்து போயிருக்கும் பொருள்வளத்தை மீட்சிபெறச் செய்திடவே யாமுழைத்து பகைமையினைப் போக்கிடுவோம் ஏழைகளின் பசிக்கொடுமை தீர்த்திடுவோம் நிறைவு கொண்டு தகைமையினை யாய்ந்துயர்வு நிறைவு கொண்டு சமூகத்துத் துரோகிகளைச் சங்கரித்தே மகிமையினைச் செய்திடுவோம் மக்களேற்றும் மனநிறைவைக் கண்டிடுவோம் மண்ணில் வாழ்வோம்!
கண்ணென்றும் மணியென்றும் செல்வமென்றும் கனியென்றும் கிளியென்றும் முத்தேயென்றும் எண்ணற்ற குழந்தைகளை வருடமொன்றாய் ஈன்றிங்கு பெருக்குவதைச் சீரமைத்து மண்ணென்ற தாய்வயிற்றில் நெல்மணியும் மரவள்ளி மணிக்கடலை பயறுழுந்து உண்கின்ற உணவு வகை பெருக்குமென்று உணர்வுக்கு உறுத்திமிகை உற்றுய்வோமே.
நாட்டுப்பற்றென்னுமொரு நிலத்தினிலே நல்லெண்ண மென்றபுது விதைவிதைத்து ஊட்டியே பொருள் வளத்தை உரமதாக்கி உழைப்பென்னும் நன்னீரால் பயிர்வளர்த்து நீட்டி வளர் விஷமிகளாம் களைகள் தன்னை நீக்கியே இனபேதப் பூச்சொழித்து நாட்டில் நல்நீதியென்னும் மருந்தழக்க நாம் வளர்ப்போம் சமாதான நல்லுறவை!
ஒலை" - 23 (பெப்ரவரி 2004) பக்கம் 30

உதவும் கரங்கள்
ஒலை ஓங்கி வளர்வதற்காக உதவிக் கரங்கள் வழங்கிய இவர்களுக்கு எமது மனமார்ந்த நன்றிகள்
திரு.என்.செல்வராஜா, லண்டன் 2000.00 திரு.சி.அமிர்தலிங்கம், கொழும்பு 1000.00 திரு.செ.பாலசுப்பிரமணியம், கொழும்பு -12 50.00 திரு.கு.சிவகுமாரன், கொழும்பு -06 500.00 திரு.ந.தனபாலன், கொழும்பு 500.00 திருமதி. கோகிலா மகேந்திரன், சுன்னாகம், 500.00 மு.புஸ்பராஜா, கொழும்பு 500.00 சரஸ்வதி லொட்ஜ் கொழும்பு 500.00 திருமதி.ஆ.சடாட்சரதேவி (குந்தவை), தொண்டமானாறு 400.00 சி.பக்தசிலன், அவிசாவளை 30.00 வி.எம்.இஸ்மாயில், மருதூர்கொத்தன்) மருதமுனை 300.00 மானா.எம்.எம்.மக்கீன், கொழும்பு - 15 300.00 திருமதி.பாலேஸ்வரி நல்லரட்ணசிங்கம், திருகோணமலை 300.00 சி.கணேசானந்தன், கொழும்பு 300.00 ச.இலகுப்பிள்ளை, கொழும்பு 250.00 பேராசிரியர் சோ.சந்திரசேகரன், கொழும்பு 200.00 Dr.எம்.கருணாநிதி, கொழும்பு 200.00 இ.புஸ்பராஜலிங்கம், கொழும்பு 200.00 மு.கயிலாயநாதன், கொழும்பு 200.00 Pதேவகி, நாகர்கோவில், பருத்தித்துறை 200.00 செ.சுதர்ஸன், பேராதெனிய 200.00 ஏ.பி.அரியதாஸ், கொழும்பு 200.00 பி.பி.அந்தோனிப்பிள்ளை, முருங்கன் 200.00 ஏ.எம்.எம்.அன்ஸார், கொச்சிக்கடை 200.00 சு.கருணானந்தன், சாவகச்சேரி, யாழ்ப்பாணம் 200.00 ஏ.எம்.இராஜேந்திரம் 200.00
சு.முருகையா (முருகு) கொழும்புத்துறை, யாழ்ப்பாணம் 200.00
பக்கம் 31 "ஓலை" - 23 (பெப்ரவரி 2004)

Page 18
தமிழறிவோம்
2. சொல்வென்றால் என்ன?
உலகில் நமக்கு அறிமுகமானவர்கள் ஒர் ஐந்நூறு பேர் இருக்கலாம். இந்த ஐந்நூறு பேர்களையும் நாம் எந்த வகையில் அறிந்து வைத்திருப்போம். இவர்கள் ஒவ்வொருவரும் நம் மனத்தில் எந்த அளவில் காட்சியளிக்கின்றனர்.
ஒவ்வொருவரையும் ஏதோவொரு காரணத்தை அல்லது அடையாளத்தை முன்னிட்டு மட்டுமே நினைவில் வைத்திருக்கிறோம். மற்றபடி அவரின் முழுவரலாற்றையும் சேர்த்துப் பார்த்து நினைவில் வைத்துக் கொள்வதில்லை.
சிலரின் உயரம் நினைவு வரும். சிலரின் குரல் நினைவு வரும், சிலரின் நிறம் நினைவு வரும். சிலரின் கல்வி நினைவு வரும். உலகில் உள்ள பொருள்கள் பல்லாயிரம் கோடி, இந்தப் பல்லாயிரம் கோடிப் பொருள்களுக்கும் நமது மொழியில் பெயரில்லை. எந்தெந்தப் பொருள் நம்மோடு உறவு கொண்டனவோ, எந்தெந்தப் பொருளோடு நாம் உறவு கொண்டோமோ அந்தந்தப் பொருள்களுக்கு மட்டுமே நமது மொழியில் பெயர்கள் தோன்றின.
உறவுகொண்ட பொருள்கள் ஒவ்வொன்றிற்கும் கூடப்பலப்பல இயல்புகள் இருக்கின்றன. ஆனால் நாம் அந்தப் பொருளை எப்படி அடையாளப்படுத்திக் கொள்கிறோம். பார்த்த அளவில் பழகிய அளவில் அந்தப் பொருள் நமக்கு என்னவாகப் பட்டதோ அந்த அளவில் மட்டும்தான் நாம் அதனை அறிந்து கொள்கிறோம். பிறகு அதன் வழியாகவே அதனை அடையாளப்படுத்தி அதற்கொரு பெயரும் கொடுக்கின்றோம்.
'எருமை' என்றொரு சொல். எருமை என்றால் நமக்கு என்ன முதலில் நினைவிற்கு வருகிறது. அதன் 'கன்னங்கரேல்' என்ற கருமைத் தோற்றம் தவிர வேறொன்று முதலாவது தலைகாட்ட முடியுமா?
கன்னட மொழியில் எருமையை இருமை' என்று சொல்கின்றனர். தமிழிலும் கூட முதலில் எருமையை இருமை என்றுதான் சொல்லியிருப்பார்கள். இருள்நிறம் உடையதாக இது இருப்பதனாலேயேதான் இதனை இருமை' என்று முதன் முதலில் அழைத்தார்கள்.
நம் சங்கநூல்களில் பலப்பல இடங்களில் எருமை இருள்நிற மை ஆண் என்று சொல்லப்பட்டுள்ளது. மை ஆன்- இருள்நிற மை ஆன் என்ற இந்தத் தொடரைச் சங்கப் புலவன் எப்படி உருவாக்கினான். அவனுக்கும் எருமையைக் கண்டவுடன் உள்ளம் கவர்ந்த முதல் உணர்வு அதன் கருமைதான்.
ஒலை" - 23 (பெப்ரவரி 2004) LijasLib 32

முதன் முதலாக எருமையைக் கண்டவனுக்கு என்ன உணர்வு தோன்றி. யதோ அதே உணர்வுதான் பின்னே வருகின்றவர்களுக்கும் தோன்றுகின்றது. நாளை வருகின்றவர்களுக்கும் இது பொதுவானது.
ஆழமாக இருப்பதால் கடலை 'ஆழி என்றனர். உவர்நீராய் இருப்பதால் 'உவரி என்றனர். அலைகள் திரண்டு திரண்டு வருவதால் திரை' என்றனர். தமிழ்நாட்டின் மூன்று பக்கமும் சூழ்ந்திருப்பதால் முந்நீர்' என்றனர். இப்படி ஒரு பொருளைப் பார்க்கும் போது அதன் இயல்பு எப்படியாக மனத்தில் படுகின்றதோ அதுதான் அந்த அந்தப் பொருளுக்குச் சொல் தோன்றுவதற்கு அடிப்படையாகிறது.
மொழியின் உள்ள சொற்களுக்கும் அந்தச் சொற்கள் உணர்த்தக்கூடிய பொருளுக்கும் உறவில்லை என்று கூடப் பலர் பேசுகிறார்கள். மொழியையும் மாந்த வாழ்வையும் ஆழமாக எண்ணிப் பார்க்காமல் மேலோட்டமாகச் சொல்கின்ற கூற்றே அல்லாமல் அவர்கள் பேச்சில் உண்மை இல்லை.
-இன்னும் அறிவோம் நன்றி : தமிழறிவோம் - முனைவர் கு.அரசேந்திரன்
COD
N
行 •
ஈழத்து எழுத்தாளர்களே!
ஈழத்து எழுத்தாளர்களின் நூல் வெளியீடுகளை ஆவணப்படுத்தும் பொருட்டு பின்வரும் விவரங்களை 'ஒலை'க்கு அறியத்தருமாறு தயவாய்க் கேட்டுக் கொள்கிறோம். முடியுமானால் அவற்றின் ஐந்து பிரதிகளை அனுப்பி வைத்தால் நூல்நயம் காண்போம்' நிகழ்ச்சியில் சேர்த்துக் கொள்ளப்படும். அதில் இரு பிரதிகளைத் தமிழ்ச்சங்க நூல் நிலையத்திற்குப் பெற்றுக் கொண்டு அதற்கான கொடுப்பனவும் வழங்கப்படும்.
நூலின் பெயர் நூலின் வகை
நூலாசிரியர் பெயர் :
நூலாசிரியர் முகவரி : தொலைபேசி
நூல் வெளியீடு நடந்த இடமும் திகதியும்:
வெளியீட்டாளர் / பதிப்பகத்தின் பெயர்:
வெளியீட்டாளர் / பதிப்பகத்தின் முகவரி:
நூலின் விலை :
\\ ク
பக்கம் 33 "ஒலை" - 23 (பெப்ரவரி 2004)

Page 19
ஈழத்துத் தமிழ்ப் பேரறிஞர் பொ.சங்கரப்பிள்ளை
-தமிழவேள் இ.க.கந்தசுவாமி
இலங்கைத் திருநாடு மிக்க தொன்மையும் புராண - இதிகாசங்கள், சங்க இலக்கியங்கள், காவியங்கள் ஆகியவற்றோடு தொடர்பும் உள்ளது. சிறந்த பேரறிஞர்கள் இந்நாட்டிலே தோன்றிப் புகழ் பரப்பியுள்ளனர். அவ்வகைச் சிறப்பு மிக்க இலங்கைத் தமிழ்ப் பேரறிஞர் வரிசையில் வந்தவரே தமிழ்ப் பேரறிஞர் பொ.சங்கரப்பிள்ளை அவர்கள்.
தமிழ்ப் பேரறிஞர் சங்கரப்பிள்ளை அவர்கள் இலங்கையிலுள்ள வரலாற்றுப் புகழ்மிக்க யாழ்ப்பாணத்துமாவிட்டபுரம் என்னும் ஊரில் குமாரர் பொன்னம்பலம் அவர்களுக்கு மூத்த மகனாக 1913ம் ஆண்டு திசெம்பர் 13-ஆம் நாள் பிறந்தார்.
1982 பாரதி நூற்றாண்டுத் தமிழ்ச்சங்கப் பரிசில் வழங்கு விழாவில் சிறுபிரபந்த 2ம் பரிசில் பெற்ற வித்துவான் சி.ஆறுமுகம் அவர்கள் தம் நூலை அரங்கேற்றம் செய்கிறார். மேடையில் : சங்கத்தலைவர் திரு.பொ.சங்கரப்பிள்ளை, மாண்புமிகு சபாநாயகர் அல்ஹாஜ் பாக்கீன் மாக்கார், மாண்புமிகு திரு.செ.இராஜதுரை (பிரதேச அபிவிருத்தி அமைச்சர்)
"ஓலை" - 23 (பெப்ரவரி 2004) பக்கம் 34
 

முதலிற் தெல்லிப்பளை யூனியன் கல்லூரியிலும் பின்பு சுழிபுரம் விக்ரோறியாக் கல்லூரியிலும் கல்விபயின்றார். பின்பு கொழும்புப் பல்கலைக்கழகத்திற் சேர்ந்து பொருளியற் பட்டதாரி ஆனார்.
1937-ஆம் ஆண்டில் எழுதுவினைஞராகக் கொழும்ப அட்டோர்னியெனரல் அலுவலகத்திற் சேர்ந்தார். 1938ம் ஆண்டு மங்கையர்குல மாமணியான மனோன்மணி அம்மையாரைத் திருமணம் செய்தார். பின்னர் பீஎஸ்.சி.எம்.எஸ்.சி. என்னும் அறிவியற் பட்டங்களைப் பெற்றார். பொருளியற் பட்டத் தேர்வில் முதற் பிரிவில் சித்தி பெற்றார். பின்னர் மோட்டார்ப் போக்குவரவுத் திணைக்களத்தில் உதவி ஆணையாளராகப் பணி ஆற்றினார்.
ஒய்வு பெற்ற பின் 19-ஆண்டுகள் இலங்கைத் தேசிய வர்த்தக சம்மேளன. த்தில் நிருவாகச் செயலாளராகக் கடமையாற்றினார். கொழும்பு அக்குவைனாசு உயர்கல்விநிலையத்திலும், கொழும்புவித்தியோதயப் பல்கலைக்கழகத்திலும் பொருளியற்துறைப் பகுதிநேர விரிவுரையாளராகக் கடமையாற்றினார். கல்வி அமைச்சுக் கலைச்சொல் ஆக்கக் குழுவிலும் பணிபுரிந்தார்.
12.03.1983
சென்னைப் பல்கலைக்கழக இணைப்பேராசிரியர் கலாநிதி சு.பாலசுப்பிரமணியம் அவர்களுக்குச் சங்கத்தலைவர் திரு.பொ.சங்கரப்பிள்ளை அவர்கள் பரிசில் நூல்கள் வழங்குகிறார். (சங்க இலக்கியக் குழுத்தலைவர் கலாநிதி கசெநடராசா அவர்களின் 'ஈழத்துத் தமிழ் இலக்கிய வளர்ச்சி நூல் வெளியீட்டு விழாவின் போது)
பக்கம் 35 ஒலை" - 23 (பெப்ரவரி 2004)

Page 20
இவருக்குச் சந்திரமோகன், அசோகன், நாகேந்திரன், மகேந்திரன், மனோகரன் என்னும் புதல்வர் ஐவரும், செயந்தி, மனோகரி என்னும் புதல்வியர் இருவரும் உள்ளனர். புதல்வர்கள் ஐவரும் மருத்துவ கலாநிதிகள் புதல்வர்களும் புதல்வியர்களும் அ.ஐ.நாட்டிலும் அவுஸ்திரேலியாவிலும் உள்ளனர். டாக்டர் பொ.நடராசா அவர்கள் இவரது சகோதரர் ஆவர்.
சுழிபுரம் விக்ரோறியாக் கல்லூரி அதிபராக இருந்த சைவப் பேரறிஞர் சு.சிவபாதசுந்தரம் அவர்களின் தொடர்பினால் இவர் தமிழ்ப் பற்றும் ஆர்வமும் உள்ளவராய் மொழி, சமயம், வரலாறு தொடர்பான பல நூல்களைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் ஆய்வு நோக்கோடு கற்றார். பொருளியல், அறிவியல் ஆகிய இருதுறைகளிலும் பட்டம் பெற்றமை இவரது ஆய்வுகள் சிறப்புப் பெறத் துணையாயின. வானியற் துறையிலும் வல்லுநர் ஆக விளங்கினார்.
கொழும்புத் தமிழ்ச்சங்கத் தலைவராக இருந்த தமிழறிஞர் பொ.சங்கரப்பிள்ளை அவர்கள் அறிவியல் கலைத்துறைப் பட்டதாரியாகி அரச பணிகளில் ஈடுபட்டிருந்த போதிலும், உயர்ந்த தமிழ்ப் பற்றும் தமிழ்ப்புலமையும் சமுதாய உணர்வும் உள்ளவர். இதனால் கொழும்புத் தமிழ்ச்சங்கத்தில் 1950ஆம் ஆண்டு ஆயுள் உறுப்பினராகி இச்சங்கம் இந்நிலத்தை விலையாகப் பெற உதவினார். இத் தொடர்பினால் துணைத் தலைவர்களுள் (1977-79) ஒருவராகச் சங்கப் பணிகளுக்கு உதவினார். பின்பு தலைவரான (1980 - 83) போது சங்க நிருவாகத்தையும் சங்கப் பணிகளையும் நன்கு நெறிப்படுத்தினார். இவர் தலைவராக இருந்த போது சங்கத்தின் கணக்கு வைக்கும் முறையை நன்கு நெறிப்படுத்தினார். சங்கக் கொடுப்பனவுகளைக் காசோலை மூலம் மேற்கொள்ளும்படி செய்தார்.
சங்கப் பணிகளுக்கு நிதி உதவினார். முற்பக்கக் கட்டிட அமைப்புக்கு நிதிசேகரிப்புக்குத் தாமும் ஒருவராகி உதவினார். நிதி சேகரிப்புப் பணிக்குத் தமது சிற்றுந்து ஊர்தியை எப்பொழுதும் தந்து உதவினார். இச்சங்கம் இந்நாட்டில் தமிழ் வளர்ச்சிக்காக மாணவர்க்கும் வளர்ந்தவர்க்கும் நடத்திவந்த பல்வேறு தமிழ்த் தேர்வுகளும் அவற்றிற்கான பரிசில்கள் வழங்குதலும் ஆண்டுதோறும் ஒழுங்காகத் தொடர்ந்து நிகழ்வதற்காக நிதிப்பரிசில் நிதியங்களை வங்கிகளில் நிரந்தர வைப்பாக வைத்தற்கு ஒழுங்கு செய்து இவற்றில் இருந்து ஆண்டுதோறும் வரும் வட்டியை இப்பரிசில்களை வழங்க வழிவகுத்துத் தமது பெயரிலும் தமது மனைவி பெயரிலும் தமது பிள்ளைகள் பெயர்களிலும் நிதியங்களை வழங்கி இதேபோல ஏனைய அறிஞர்களும் இப்பரிசில் நிதியங்களை வழங்க வழிவகுத்து உதவினார். இதனால் இப்போது பதினாறு அறிஞர்களின் பரிசில்நிதியங்கள் இச்சங்கத்தின் பெயரில் வங்கிகளில் உள்ளன. இவர் வகுத்த முறையின்படி பலர் வழங்கிய மூல நிதிகள் வங்கியில் நிரந்த வைப்பில் இட்டு அவைகளில் இருந்து ஆண்டுதோறும் வட்டியாகக்
"ஒலை" - 23 (பெப்ரவரி 2004) பக்கம் 36

கிடைக்கும் பணம் அவ்வத் துறைக்குப் பரிசிலாக வழங்கப் பெறுகிறது. இதனால் நாவன்மை, தமிழ்த்திறன், கவிதை, ஆய்வுக் கட்டுரை, நூலாக்கம் முதலிய பதினைந்து துறைகளுக்கு நிதிப்பரிசில்கள் வழங்கப் பெறுகின்றன. இச்சங்கத்திற்கு உயர்வு தரும் பணிகளுள் ஒன்றாக இப்பரிசில் நிதியங்கள் உள்ளன.
இவரது வதிவிடம் சங்கத்திற்கு அண்மையில் இருந்ததினால் நாள்தோறும் சங்கத்திற்கு வந்து பல மணிநேரம் சங்கத்தில் இருந்து சங்க நிருவாகக் கடமைகளையும், பணிகளையும் பார்வையிட்டும் அறிவுரைகள் வழங்கியும் உதவினார்.
தலைவர் பதவியின் நீங்கி, அ.ஐ.நாட்டில் இருந்த போது சங்கப் பொதுச் செயலாளராகி எம்மோடு தொடர்பு கொண்டு சங்கப் பணிகளை ஊக்குவித்தார். தமக்குப் பின் தமது பிள்ளைகள் சங்கப் பணிகளுக்கு உதவுவர் என எழுதினார்.
இதனால் சங்க முற்பகுதிக் கட்டிட வேலை நிறைவாகியதும் பிற்பகுதிக் கட்டிட வேலைக்கு உதவும்படி இவரது பிள்ளைகளுக்குத் தெரிவித்த போது தாங்கள் நிதி உதவுவதாகவும் இந்நிதியால் அமையும் பகுதிக்குத் தம் தந்தையின் பெயர் இடவேண்டும் எனவும் தெரிவித்தனர். இதற்கு ஆட்சிக்குழு அனுமதி வழங்கியது. எதிர்பார்த்தற்கு மேலாகப் பெரும் நிதியை -30 இலட்சம் ரூபாவுக்கு மேல் - இவர்கள் வழங்கினர். இந்நாட்டில் எவர்களும் இவர்களைப் போல் பெரும் நிதியை இச்சங்கத்திற்கு வழங்கியவர்கள் இலர்.
28.12.1980.
ஆனந்தவிகடன் பொன் விழா நாவல் முதற் பரிசுபெற்ற ஈழத்து எழுத்தாளர் திருகோணமலை க.அருள்சுப்பிரமணியம் உரை தலைமை : திரு.பொ. சங்கரப்பிள்ளை
பக்கம் 37 'ஒலை" - 23 (பெப்ரவரி 2004)

Page 21
இந்நாட்டில் தமிழ்ச்சங்கம் ஒன்றிற்கு இத்துணைப் பெரு நிதியை வழங்கிய பெருமை இவர்களுக்கே உரியது இவர்கள் மருத்துவத்துறைப் பணிபுரிபவர்கள். பெரும் வணிகத்துறைத் தொழில் புரிபவர்கள் அல்லர். இவர்களது தந்தையின் அறிவுறுத்தலும் தமிழ்ச்சங்கத்தில் 2 ஸ்ள பற்றுதலுமே இப்பெருநிதி வழங்கக் காரணங்கள் ஆகும். இவர்களது இப்பெரும் நிதி உதவியால் சங்கக் கட்டிடம் நிறைவு பெற்று விளங்குகிறது. இவர்களது விருப்பத்தின்படி இச்சங்கச் சிறப்பு நூலகம் இப்புதிய கட்டிடத்தில் அமைந்துள்ளது. இவர்களது நிதி உதவியினால் இச்சங்க நூலகம் புதிய தளபாடங்களைப் பெற்று உள்ளது. இவர்களது இப்பெரும் நிதி உதவியால் இச்சங்கக் கட்டிடமும் நூலகமும் நிறைவு பெற்று இந்நாட்டில் உள்ள அனைவர்க்கும் இன்று பெரும் பயன் தருகின்றன. இவர்களுக்கு இச்சங்க ஆட்சிக்குழு வழங்கிய உறுதிமொழியின்படி கட்டிடத்திற்கும் நூலகத்திற்கும் இவர்களது தந்தையார் பெயர் இடப்பெற்றிருக்கின்றது. இத்தமிழ்ப் பேரறிஞரின் பெரிய திருவுருவப்படம் நூலகத்தில் இடம் பெற்றுள்ளது.
பொ.சங்கரப்பிள்ளை அவர்கள் சிறந்த தமிழறிஞர். சிறந்த ஆராய்ச்சி அறிஞர். ஆகவே நாம் தமிழர், சைவ சித்தாந்தம், கல்யாணப் பொருத்தம், மரணத்தின் பின், பொருளாதாரப் பெறுமதிக்கோட்பாடு ஆகிய சிறந்த ஐந்து நூல்களை எழுதியுள்ளார். நாம் தமிழர் கொழும்புத் தமிழ்ச் சங்க வெளியீடாக வந்துள்ளது. ஏனையவை தமிழக வெளியீடுகள். இவர் தம் சிந்தனையாலும், சொல்லாலும் செயலாலும் தமிழுக்கும் தமிழ் இனத்துக்கும் இச்சங்கத்திற்கும் இந்நாட்டுக்கும் பெரும்பணிகள் செய்து இந்நாட்டின் நற் தமிழ்ப் பேரறிஞராக விளங்கும் இவரின் பெயர் இந்நாட்டில் தனித்துவம் பெற்று விளங்கும், இச்சங்கத்தின் கட்டிடத்திற்கும் நூலகத்திற்கும் அமைந்தது பெரும் பேருவகை தருவதாகும்.
இப்பேரறிஞர் 18.2.90ஆம் நாள் அஜநாட்டில் கலிபோர்னியாவில் உலகு நீத்தார். இவரது தகனக் கிரியைகள் முறைப்படி அங்கு நிகழ்ந்தன. இவரது அஸ்தி இந்தியாவில் உள்ள புனித தலங்களில் இடம்பெற்றது. இவரது மனைவியாரும் இளைய மகனும் இதற்காக இந்தியாவுக்கும் இலங்கைக்கும் வந்தனர்.
* இலங்கையிற் கொழும்புத் தமிழ்ச்சங்கத்தில் இவருக்கான நினைவஞ்சலி நிகழ்ச்சி நிகழ்ந்தது. சட்டப் பேரறிஞர் எச்.டபிள்யூ.தம்பையா கியூ.சி.முதுபெரும் எழுத்தாளர் செ.கணேசலிங்கன், புலவர் த.கனகரத்தினம், இலங்கை வர்த்தக சம்மேளன நிருவாகத்தார், பெரும்பான்மை இனத்தவர் ஒருவர். இவரது நண்பர் ஒருவர் ஆகியோர் உரை நிகழ்த்தினர்.
தமிழின் பல துறைகளிலும் ஆன்றவிந்தடங்கிய கொள்கைச் சான்றோராகிய இப்பேரறிஞரின் புகழும் பணிகளும் இவர்தம் நூல்கள் உலகு உள்ளவரை
"ஓலை" - 23 (பெப்ரவரி 2004) பக்கம் 38

நிலைத்து நிற்பன. தமிழ் மொழிக்கும் தமிழினத்திற்கும் நாட்டிற்கும் கல்வித் துறைக்கும் இவர் செய்துள்ள பயனுள்ள பணிகள் பல ஆகும்.
கடல்கொண்ட பழந்தமிழ்ப்பரப்பில் வடபால் எஞ்சிய நிலப்பரப்பே இன்றைய இலங்கை என்பது ஆய்வாளர் பலரது கருத்து. தமிழுக்கும் தமிழ் மக்களுக்கும் உலகில் உயர் சிறப்பும் பழமையும் தருவன பண்டைய தமிழ்ச்சங்கங்களும் அவை தந்த இலக்கியங்களுமேயாம். பண்டைய அச்சங்கங்களின் வழிவந்ததே இன்றைய கொழும்புத் தமிழ்ச்சங்கம்.
திரு.சங்கரப்பிள்ளை அவர்கள் க்ொழும்புத் தமிழ்ச்சங்கத் தலைவராக இருந்த போது நடைபெற்ற 39 வது ஆண்டுப் பொதுக்கூட்டத்தில் (05.12.1981) அவர் நிகழ்த்திய தலைமையுரை இவரின் பெரும் உயர் சிந்தனைகளை வெளிப்படுத்துவதாக அமைந்தது. அத்தலைமையுரையை நூலுருவில் பொ.சங்கரப்பிள்ளை அவர்களின் 88வது பிறந்தநாள் நினைவாக 2001இல் பதிப்பித்து வெளியிட்டேன். அதற்கு முந்திய வருடம் அவரது 87வது பிறந்த தின
4.04.1982
சங்கநாள் விழாவும், பாரதி நூற்றாண்டு விழாவும்
பிரதம அதிதி மாண்புமிகு செள.தொண்டமான் (கிராமியக் கைத்தொழில் அபிவிருத்தி அமைச்சர் /இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் உரை)
மேடையில் சங்கத்தலைவர் திரு.பொ.சங்கரப்பிள்ளை, சட்டத்தரணி இரசிவலிங்கம் (மலையகம்) சங்கப் பொதுச்செயலாளர் க.இ.க.கந்தசாமி
பக்கம் 39 "ஓலை" - 29 (பெப்ரவரி 2004)

Page 22
நினைவாக 'ஈழத்துத் தமிழ்ப் பேரறிஞர் பொ.சங்கரப்பிள்ளை அவர்களின் சிந்தனைகள்" எனும் நூலையும் பதிப்பித்து வெளியிட்டேன். இவ்விரு நூல்களும் அன்னாரது சிந்தனைகளையும், பணிகளையும் எடுத்துக் கூறுவன.
இப்பெரியாரைப் போல இவர் மனைவி திருமதி.மனோன்மணி சங்கரப் பிள்ளை, புதல்வர்கள் டாக்டர் நாகேந்திரன், டாக்டர் அசோகன், டாக்டர் சந்திரமோகன், டாக்டர் மகேந்திரன், டாக்டர் மனோகரன், புதல்விகள் ஜெயந்தி, மனோகரி ஆகிய இவர்கள் அனைவரும் தமிழ்ப் பற்றும் சமயப் பற்றும் சமுதாயப்பற்றும் உள்ளவர்களாவர். புதல்வர்கள் அ.ஐ.நாட்டிலும் புதல்விகள் அவுஸ்திரேலியாவிலும் உள்ளனர். திருமதி சங்கரப்பிள்ளை அவர்கள் பிள்ளைகளுடன் இருக்கிறார். இவர்கள் வெளிநாடுகளில் இருப்பினும் தாம் பிறந்து வளர்ந்த இந்நாட்டினதும் இந்நாட்டிற்குப் பணிபுரியும் இத்தமிழ்ச்சங்கத்தினதும் பற்றினால் இச்சங்க வளர்ச்சிக்கும் உயர்ச்சிக்கும் பெரும்பணி புரிந்துள்ளனர். இதனால் இச்சங்கமும் இந்நாட்டுத் தமிழ்ச்சமூகமும் இவர்களுக்குப் பெரிதும் கடமைப்பட்டுள்ளன. இச்சங்கம் இந்நாட்டிலும் உலகிலும் பெரும் புகழ் பெற்ற அமைப்பாகவும் கற்பகத்தருவாகவும் கலங்கரை விளக்கமாகவும் வருங்காலத்தில் விளங்கும்.
25.07.1998 அன்று அமரர் சங்கரப்பிள்ளை அவர்களின் மகன் நாகேந்திரன் அவர்களால் அடிக்கல் நாட்டப்பெற்று ஆரம்பிக்கப்பட்டுச் சங்கரப்பிள்ளை அவர்களின் குடும்பத்தினரால் ஏறத்தாழ முப்பத்தி மூன்று லட்சம் (நூலகத் தளபாடங்கள் உட்பட) செலவில் அமைக்கப்பட்ட புதிய நூலகம் (சங்கரப்பிள்ளை g5db6).j6i guil660)LDu Jib-Sangarapillai Information & Research Centre) 28.05.2001 அன்று இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் கெளரவ கோபாலகிருஸ்ணகாந்தி அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. சங்கரப்பிள்ளை மண்டபம் எனப் பெயர் சூட்டப்பட்ட இப்புதிய மண்டபத்தின் சமர்ப்பண விழா 29.12.2001 அன்று நடைபெற்றது. இவ்விழாவுக்குச் சங்கரப்பிள்ளை குடும்பத்தினர் வருகை தந்திருந்தனர். சங்கரப்பிள்ளை அவர்களின் பேரப்பிள்ளைகள் செல்விகள் க.நீனா, ஜெ.அஸ்வினி, சு.அபர்ணா, செல்வன்கள். சு.ஜனகன், நா.ஜூலியன் ஆகியோர் நடன, வயலின், மிருதங்கம், புல்லாங்குழல், கவிதை நிகழ்வுகளை நிகழ்த்தினர். சங்கரப்பிள்ளை அவர்களின் வரலாற்றை மகன் Dr.மனோகரன் எடுத்துக் கூறினார். ஏற்புரையை அவரது மற்ற மகன் Dr.சந்திரமோகன் ஆற்றினார். குடும்பமாக வந்திருந்து இவ்விழாவை சிறப்பித்தமை சங்கச் செய்ற்பாடுகளிலும், வளர்ச்சியிலும் அவர்களுக்கிருக்கும் அபரிதமான அக்கறையைக் வெளிப்படுத்துவதாகும்.
'ஒலை" - 23 (பெப்ரவரி 2004) பக்கம் 40

சிறுகதை
வாற வருவரம் பாப்பம்
-பி.பி.அந்தோனிப்பிள்ளை
"நான் சொன்னன் கேட்டியளா?" பட்ட க.னோட கடனாய் போயிருக்கும் இந்த ஒரு ஏக்கர்தானே செய்யிறம். இதையாவது கடன் பட்டு நட்டிருந்தா இப்பிடி வயலெல்லாம் கோரையும் புல்லுமா இருக்குமா?"
'என்னப்பா கதைக்கிறா நீ அட்டியல அடகு வைச்ச காசில உழவுக்கும் குடுத்தது போக நடுகைக்கெண்டு இரண்டாயிரம் வைச்சிருந்தம். பள்ளிக் கூடத்தால டூர் போறாங்க எண்டு பயல் வெளிக்கிட, அவனுக்கு அதில ஆயிரம் ரூபா போச்சு. பள்ளிக்கூட அலுவல நிப்பாட்ட ஏலுமா? ஏ.எல்.படிச்சு விலகிற புள்ளைகளிட பாட்டி' எண்டு முத்தவளுக்கு ஐநூறு போச்சுமிச்சம் ஐநூறில என்ன செய்யிறது. களை மருந்த வாங்கி அடிக்க வேண்டியதுதான்.
"ஏதோ போத்தல்ல கோழிச்சூடன் நெற்சப்பி ஆகிய சகல களைகளையும் அழிக்கும் எண்டு எழுதியிருக்கிறான். இதெல்லாம் எங்க சாகிது. கோர மருந்துக்கு மட்டும் கோரை சாகுது மற்றதெல்லாம் சும்மா ஏமாத்து"
"அதெல்லாம் அந்தந்தக் காலத்துள்ள அடிக் கோணும் அப்பா. மருந்தடிக்கேக்க வயல்ல தண்ணி இருக்கக் கூடாது. அடிச்சு மூணு நாளைக்குப் பிறகு கட்டாயம் தண்ணி பாச்ச வேணும். போன வருஷம் நல்லாத் தண்ணி வடியவிட்டு களை மருந்து அடிச்சம். வக்கடையும் உசத்தித்தான் கட்டி வச்சிருந்தன். ராவோட ராவா செல்வராசா முழு மடையையும் இழுத்து விட்டிட்டான். அது வாய்க்கால் கட்டையெல்லாம் உடைச்சிக்கிண்டு தண்ணி பாய்ஞ்சு விடிஞ்சு பாத்தாக் காணி முழுக்க வெள்ளம். மருந்துக்காசு, மருந்தடிச்ச கூலி எல்லாம் ஆயிரத்து இருநூறு ரூபா மண்ணாப் போச்சு"
வருஷா வருஷம் மரிசால் வெள்ளாமை செய்து முடிய மனுஷி செல்லாச்சிக்கும் அவருக்கும் நடக்கும் வழக்கமான உரையாடல்தான். காணிய விதைச்சுப் போட்டு எப்பிடித்தான் தண்ணிய வடிச் செடுத்தாலும் எவனாவது மடைய ராவில முழுசாத் துறந்து விட்டுத் தண்ணிக் கட்டக் கரைச்சுக்கிண்டு வயலுக்க போயிருது. திரும்பத் தண்ணிய வடிய விட இவருக்காக ஆர் மடைய அடைக்கிறது. இறமரத்தக் கட்டி இவரும் மனுவியுமாக நாள் முழுக்க இறைச்சாலும் தண்ணி பள்ளத்துக்குப் பள்ளம் தங்கித் தொட்டம் தொட்டமாப் பயிர் முளைக்காது. அதோட வளவடித்ததை கோடை முழுக்க மாடடைஞ்சு வயல் முழுக்க மாட்டெரு. மாட்டெருவுக்கு பயிர் செழிப்பா வரும் தான். எருவில கிடக்கிற கோழிச் சூடன் மற்றப் புல்லு விதைகளெல்லாம் முளைச்சு வயல்ல பாதி களைதான் இருக்கும். சரிநாத்து நட்டா இந்தச் சிக்கல் எல்லாம் இல்லத்தானே எண்டு ஒவ்வொரு முறையும் நாத்து நட முயற்சி எடுத்தா நாத்து நட
பக்கம் 41 ஒலை" - 23 (பெப்ரவரி 2004)

Page 23
வைச்சிருக்கிற காசுக்கும் எதாவது செலவு வந்திடுது.
"சரி விடுங்க என்ன பாடுபட்டாலும் என்ன செலவு வந்தாலும் வாற வருஷம் இந்த ஒரு ஏக்கரையும் நடுறதுதான்"
என்று மனைவி தெம்பு கூறவும், கணவனுக்கும் மனைவிக்கும் இடையிலான உரையாடல் முடிவுக்கு வருகிறது. வெள்ளாமைக்கு மருந்தடிச்சுத் தொட்டம் போட்டு பயளை போட்டு வெட்டுக்கட்டிக் கனக்குப் பார்த்தா சாப்பாட்டுக்கு முணு மூடை நெல்லுமிச்சம். புருஷனுக்கும் பென்சாதிக்கும் கூலி போட்டா அதுவுமில்ல
"என்ன புள்ளைக்குக் கடுமையாக்கி ஆசுப்பத்திரியில சேர்த்திருக்கிர: னென்டு பருமகன் எழுதியிருக்கிறார். இப்பதான் கடிதம் வந்திது. இப்பு போனாத்தான் பத்து மணி பஸ்ஸப் புடிக்கலாம். போய்ப் பாத்திற்று வாங்க"
"என்னப்பா நான் போன மாசம் போகேக்க நல்லாத் தானே இருந்தா, "அதுக்கென்ன செய்யிறது வருத்தம் சொல்லிக் கொண்டா வருது" "சரி சரி வேட்டிய எடுத்துத் தா நேரம் போகுது"
மரிசால் பறப்பாங்கண்டல் போய் ஒரு கடிதம் போட்டிருந்தார். பிள்ளைக்குக் கடுமையான மலேரியா எண்டும், ஆசுப்பத்திரியில் ஒரு கிழமை வைத்து மருந்து செய்வதாக எழுதியிருந்தார். அவர் பாலைக் குளிக்கு வந்து சேர ஒரு கிழமையாச்சு. விதைப்பதெல்லாம் முடிவாப் போகுது புருஷன் வந்ததும் வராததுமா.
"என்னப்பா புள்ளைக்கு எப்பிடி இருக்கு"
"புளச்செழும்பினது பெரிய காரியம். நேத்துத்தான் ஆசுப்பத்திரியால கூட்டி வந்தம். பாவம் மருமகனும் நல்லா உடைஞ்சு போனார். வீட்டிலையும் நல்ல கஸ்டம். நல்ல வேள நான் வீட்ட இருந்த காசக் கொண்டு போனதால அந்தரத்துக்கு உதவிச்சிது"
"என்ன செய்யிறது விவசாயக் கடன் பிந்தி வந்தாலும் அவசரத்தேவைக்கு உதவிச்சிது. புள்ள பெரிசா வெள்ளாம பெரிசா, பாப்பம் சீவன் கிடந்தா அடுத்த வருஷம் நடுவம்.
அந்த வருஷமும் நாத்த மேடையோட விலைக்குக் குடுத்துப் போட்டு மரிசால் நெல்ல வாங்கி விதைச்சார். "மூணு காச்சல் காஞ்ச நெல்லு மரிசால் கட்டிப் போட்டுப் பாரு நூத்துக்கு நூறு முளைக் கும்" எண்டு சோமால சொல்லித்தான் மூடை ஆயிரத்தி இருநூறு எண்டு ஒரு மூடை நெல்லக் குடுத்தான். நெல்லக் கொஞ்சங் கட்டிப்போட் டுச் சோதின பாக்கக் காலங் காணாது எண்டு ஒரு மூடையையுங் கட்டிப் போட்டார். நீர் வடியவிட்டு நெல்லச் சொரிஞ்சா மணஞ் சரியில்லை. விதைப்பண்டைக்குக் கிட்டப் போனா ஒரே நாத்தம். நெல்லும் நெடு முளையெறிஞ்சிருக்கு. பலகை அடிக்க ஆளும் வந்திற்றான். என்ன செய்யிறது. வாறது வரட்டும் எண்டு மனதத் தேத்திக் கொண்டு நீரைக் கொடுத்து நெல்ல விதைச்சுப் போட்டார். ஒவ்வொரு நாளும்
'ஒலை" - 23 (பெப்ரவரி 2004) பக்கம் 42

விடிய வெள்ளென எழும்பி வயலப் போய்ப் பாக்கிறார். அங்கொண்டும் இங்கொண்டுமாப் பயிர் தெரியுது.
"என்ன வயல்ல பயிர் தெரியுதா?"
"அவன் சோமாலயிர மண்டையில் தலை மயிர் இருக்கிற மாதிரித்தான் tயிரும் மு56க்சிருக்கு. அவனிட்டையும் போய் ஆரும் நெல்லு வாங்குவானா?
"சரி விடுங்க அடுத்த முறை நல்ல நெல்லா நேரத்துக்கு வாங்கி வைச்சு நாத்துப் போடுவம்"
இந்த முறை வெட்டுக் கட்டக் கூலிக்கு விட்ட ால் கட்டாது எண்ட நிலையில, புருஷனும் பெண் சாதியும் கொஞ்சங் கொஞ்சமா கதிரை அறுத்தெடுத்து மாட்டால உழுக்கி மூணு மூடை நெல்லு வந்திது. அடுத்த கால போகம் நெருங்கி வர மரிசால் நேரத்துக்கே நல்ல விதை நெல் வாங்கி வைச்சிருந்தார். விவசாயக் கடனும் வேளைக்கே வந்திற்றிது. நாத்துக்கு உழுதும் போட்டார். இந்த நேரம் பார்த்து கெல்லாச்சி கிணத்தடியில் வழுக்கி விழ காலொண்டு இழுத்துக் கொண்டது. பரியாரிநல்லதம்பி வாதம் எண்டு சொல்லி உப்பில்லாப்பத்தியத்தில போட்டிட்டார். நடுகைக்கு வைச் சிருந்த காசில அரைவாசி மருந்துக்கும் பரியாரிக்கும் போக மரிசாலுக்கு விதைக்கிறதைத் தவிர வேறு வழியில்ல.
வயல்ல தொட்டமும் சுழியும். கோழி புறக்கினதும் போகக் கிடக்கிற பயிரப் பார்த்துச் சவிரிமுத்து "என்னடா மரிசால் வளவடிகானிய இப்பிடிப் போட்டிட்டா? நட்டுவிட்டா என்னடா?"
"ஒமண்ணன் வாற வருஷம் பாப்பம்" என்று ஆறாவது வருஷமாகச் சொல்லிக் கொண்டு நடக்கிறார் மரிசால். (S)
மறுவோலைக்கு ஒரு மறுப்போலை
9 18வது ஒலையில் எம்.எல்.எம்.அன்ஸார் எழுதிய கடிதம் பற்றி எனது
கருத்து ஏ.இக்பால் எழுதியது கவிதை என்றும் அவர் பிரபலமானவர் என்றும் அன்ஸார் ஏற்றுக் கொண்டமை சரியானதே! என்னைப் பொறுத்தவரை. யில் தமிழ், இலக்கியம், பாவடிவம், செய்யுள் வளர்ச்சி, கவிதை, தற்காலக் கவிதைப் போக்கு என்பவற்றில் அதிக ஆழமுள்ள கருத்துச் செறிவுடையவர் ஏ.இக்பால் என்பதை இலங்கை இலக்கியம் ஏற்றுக் கொள்ளும். ஏன்! தமிழ் நாடுவரை அவரது எழுத்துக்கள் பிரபல்யமானவையே! இதுபற்றி இன்னும் விளக்கத் தேவையில்லை. விளங்காதவர்கள் பொறுக்க மாட்டார்கள். 41. அரபாத் அகம்' வெலிப்பன்னை அத்தாஸ் முஸ்லிம் வீதி, வெலிப்பன்னை 02.01.2004
பக்கம் 43 'ஒலை" - 23 (பெப்ரவரி 2004)

Page 24
பன்மொழிப்புலவர்.த.கனகரத்தினம்
சொற்களின் மூலங்களாகிய அடிகள் வேர்கள் பிற உறுப்புகளுடன் சேர்ந்துநிற்கும். இவற்றின் வேறுபாடுகளை அறியாவிட்டால் சொற் பொருளை உணர்த்த முடியாது. செய்யுள்களில் வரும் சொற்களின் வேறுபாட்டை நன்கு அறிந்தவர்களே சிறந்த உரையாசிரியர்களாக முடியும். இராமாயணம், புராணங்கள் என்பவற்றிற்கு உரை சொல்லும் வழக்கம் இருந்து வந்தது. இவ்வாறு உரை சொல்வதில் யாழ்ப்பாணத்து வித்துவ சிரோமணி பொன்னம்பலபிள்ளை சிறந்த வித்துவானாக விளங்கினார். இவர் நல்லை பூரீலழரீஆறுமுகநாவலர் அவர்களின் மருகர். அவர் ஓரிடத்தில் "கட்டிய என்ற சொல்லுக்கு அருமந்த உரை செய்தார். அதனால் இராமாயணச் செய்யுள் அடியின் கருத்து எல்லாராலும் நயக்கப்பட்டது.
"கொம்புதலை கட்டிய குலக்கரி கடுத்தான்" என்பது கம்பரில் வருவது ஒரு செய்யுள் அடி. கரன் என்பவன்றிராமனை எதிர்க்கின்ற சந்தர்ப்பத்தைக் குறிப்பது இச்செய்யுள் அடி, கரன் தனது துணையாகியதிரிசிரா" துடணன் என்னும் இரண்டு பேரையும் இழந்தான். அதனாற் சினம் மிகுந்தான். தன் உயிரையே வெறுத்தான். காயம் - ஊறுபட்டதொரு யானை போன்று ஹிராமனை எதிர்க்கின்றான். குலக்கரி என்பது நல்ல குலத்து யானை. கொம்பைத் தலையில் கட்டிய குலயானை என்று கம்பராமாயண உரைகாரரும் ரசிகர்களும் உரை கூறிவந்தார்கள். கட்டிய என்ற சொல்லின் (எச்சச் சொல்லின்) அடி "கட்டு" எனக் கொண்டு அக்கருத்தைக் கூறி வந்தார்கள். ஆனால் வித்துவ சிரோமணி பொன்னம்பலப்பிள்ளை அவர்களோ "கட்டிய" என்பதன் பொருள்களைந்த (பிடுங்கிய) என்ற கருத்தைக் கூறினார்கள். கட்டல் - களைதல் = கள் + து+ அல் என்பது கட்டல் எனவரும். கட்கும் என்றால் களையும் என்பது பொருள், களை கட்டல் என்றால் களை பிடுங்குதல் என்பதுதானே பொருள். இனிபாட்டின் அடியில் கட்டிய என்பதற்குப் களைந்த என்ற கருத்தே பொருத்தமாக உள்ளது.
இரு துணைவரை இழந்து கொதிக்கின்ற கரனுக்கு இரு கொம்பையும் களைந்ததொரு குலக்கரியை உவமை செய்ததன் நலம் நயத்தற்பாலது. அதனை எடுத்துக் காட்டிய வித்துவசிரோமணியை இலக்கியக் கலாநிதி பண்டிதமணி சி.கணபதிப்பிள்ளை வாயாரப் புகழ்கின்றார்.
கல்வி, கல்லுதல் என்ற இரு சொற்களை ஆராய்வோம். இரண்டு சொற்களுக்கும் இடி ஒன்றே (கல் - பகுதி) எனக் கூறுதல் பொருந்துமோ?
ஒலை" - 23 (பெப்ரவரி 2004) பக்கம் 44
 

பொருந்தாது.
கள்ளான் என்பதன் அடிகல். கல்லினான் (கிண்டினான்) என்பதன் அடியும் கல், இவை உருவத்தால் ஒன்றுபட்ட அடிகள்.
வைத்தான் என்பதன் அடி வை' வைதான் என்பதன் அடியும் வை. ஆனால், இவையும் உருவத்தால் ஒன்றுபட்ட இருவேறு அடிகள்.
கல்வி பெருகிய இடங்களிலும் பத்திரிகைகளிலும் ஒளிந்தான் என்று ஒரு வினைச்சொல் உபயோகிக்கப்படுகிறது. ஒளிந்தான் என்பது தன்வினையோ எனின் அன்று. ஒடி ஒளிந்தான் என்று வாக்கியத்தில் உபயோகிப்பது பிழை. ஒளிந்தான் என்றே இவ்வாக்கியம் அமைதல் வேண்டும். ஒடி ஒளித்தான் என்று கூறுவதே சரி.
பிறவினையாகப் பயன்படும் போதும் பொருள்களைப் பதுக்கி ஒளித்தான் என்றே உபயோகித்தல் வேண்டும்.
ஒளி என்பது தன்வினைக்கும் பிறவினைக்கும் பொதுவாகிய அடி. இரண்டிலும் ஒளித்தான் என்றே வரும். இதற்கு மேலாக ஒழி என்ற அடியைக் கொண்டு ஒழித்தான் என்று சொல்லைப் போட்டுக் குழப்ப நிலை அடையக் கூடாது. ஏனெனின், அந்த ஒழித்தான் என்பதன் பொருள் இல்லாமற் செய்தலாகும்.
பகைவனை வேரொடு ஒழித்தான் என்று அது அவ்வாக்கியத்தில் -9յ60)ւDեւյԼ0.
சொற்பிறப்பாராய்ச்சியென்ற பெயரில் வரம்பு வாய்க்கால் களை - அதாவது இலக்கண வரம்பு வாய்க்கால் களை அழித்துப் பாய்தல் கூடாது. வேதம் என்ற சொல்லையும் வேய்தல் என்ற சொல்லையும் எடுத்து ஆராய்ந்தார் ஒர் அறிஞர். வேதம் என்ற சொல் தமிழ்மொழியேயாம் என்று நிறுவவேண்டிய தேவை அவருக்கிருந்தது. எனவே வித் என்ற அடியைக் கொண்ட வேதம் என்பதன் அடி வே என்றார். வேய் என்னும் அடியைக் கொண்ட வேய்தல்' என்பதன் அடி வே எனக் கொண்டார். 'வே' என்றால் மூடு - மறை என்பது பொருள். எனவே, வேதம், மறை என்பன ஒரு பொருளன. ஐயமின்றி, வேதம்' தமிழ்ச் சொல்லே என்றார். வே வேறு, வேய் வேறு என்பதை அவர் அறிந்திலர். சொல்வளத்திற்கு அதன் அடி பற்றிய அறிவு மிக முக்கிய மன்றோ!
வினை அடிகள் பற்றி விரிவாகச் சுன்னைக் குமார சுவாமிப்புலவர் அவர்கள் தமதுவினைப்பகுபதம் என்ற நூலில் ஆராய்ந்துள்ளார். இன்றைய கலைச் சொல்லாக்கத்தின் முன்னோடியாக அவர் விளங்குகிறார். அவரது பணியை மேலும் எடுத்துச் சென்று கலைச் சொல்லாக்கத்தில் வெற்றி
ábsT60őT (GUIT DITđ5.
பக்கம் 45 'ஒலை" - 23 (பெப்ரவரி 2004)

Page 25
தங்களால் அனுப்பப்படும் ஒலைகள் கிடைக்கப் பெற்றேன். ஒவ்வொரு தடவையும் ஒலையினைப் பெறும் போதும் பாராட்டுக் கடிதமொன்று எழுதியனுப்ப வேண்டுமென எண்ணுவேன். தொடர்ந்துவரும் வேலைச் சுமையால் அந்த எண்ண்ம் பின்தள்ளிப் போகும். இம்முறை எப்படியும் எழுதியே ஆகவேண்டுமென்ற உத்வேகம் அண்மையில் கிடைத்த 'மஹாகவியின் சிறப்பிதழ் மூலம் தீவிரமாகியதன் விளைவே இக்கடிதம். இது 'ஒலையில் சேர்க்கப்பட வேண்டுமென்பதற்காக நான் எழுதியல்ல. மாறாக இலக்கியத்தின் மீது - குறிப்பாக ஈழத்துத் தமிழ் இலக்கியத்தின் மீது நான் கொண்ட அபரிதமான பற்று, ரசனை என்பனவற்றின் வெளிப்பாட்டுப் பகிர்வு மட்டுமே.
'ஒலை எம் குடும்பச் சொத்தாக இன்று மாறியிருக்கிறது. எனது பிள்ளைகள் (வயது -15, 12) வாசித்த பின்பே அது எங்கள் வைக்குக் கிடைப்பது வழக்கமாகிவிட்டது. அதுபற்றிய விமர்சனங்களைக் கூறுமளவிற்கு அனைவரையும் அது ஆக்கிரமித்திருக்கிறது என்பது உண்மை. இது பற்றி விவரிப்பின் அது தனி ஆய்வாகி விடும். எனினும் ஒரு விடயத்தை மட்டும் கூறியே ஆக வேண்டும்.
'சிறப்பிதழ்களாக வருவனவற்றில் குறித்த எழுத்தாளர் பறறி எமக்குத் தெரியாத அவர்களது பன்முகங்களை அவர்களோடு உறவாடியவர்களின் "வாயால் உயிர்ப்புடன் வெளிக் கொணரும் முயற்சி பாராட்டத்தக்கது.
ஈழத்துத் தமிழ் இலக்கியத்தின் ஆணிவேர்களையும், அதன் வளர்ச்சியினையும், ஆராய முற்படுவோர் 'ஒலையினை நிச்சயமாகப் புறந்தள்ள முடியாது. 'ஒலையின் பணி சிறக்க மனதார வாழ்த்துகின்றேன். அதன் வெளிவரலுக்கு உறுதுணையாக கொழும்புத் தமிழ்ச்சங்கத்தின் அர்ப்பணிப்பு மிக்க தமிழ்ப் பணிக்கும் என் பணிவான வாழ்த்துக்களும், நன்றிகளும்.
84/7B, 9ம் குறுக்குத் தெரு திருமதி:றுாபி வலண்ரீனா பிரான்சிஸ் இருதயபுரம் மேற்கு
மட்டக்களப்பு
12.12.2003
"ஓலை" - 23 (பெப்ரவரி 2004) பக்கம் 48
 

9 மஹாகவி சிறப்பிதழ்" பல புதிய தகவல்களைத் தருகிறது. குறிப்பாக எழில்வேந்தனின் 'மஹாகவி மாமா மஹாகவியின் அகவாழ்க்கையின் அருமையைச் சொல்கிறது.
போஸ்காட் கவிதைகள் ஒவ்வொன்றும் வைரமணிகள். நீலாவணனின் கடிதக் கவிதை ஒவ்வொரு வரியும் நெஞ்சைத் தொட்டது. அதில் உள்ள இரண்டு வரிகள்.
"தென்னிலங்கை போகின்றேன் தேடியங்கும் வாருங்கள்
சொன்னாய் அதிலிருந்த குக்குமத்தை நானறியேன்” நெஞ்சைப் பிழிகிறது.
சாதாரண வார்த்தைகளைத் தங்க வார்த்தைகளாக்கும் வித்தையில் இரு கவிஞர்களுமே விற்பன்னர்கள் தான். ஈடு இணையற்ற கவிச் சக்கரவர்த்திகள்தான். இவ்வாறுதான் மஹாகவி பற்றிய ஏனைய கவிதைகளும் அமைந்துள்ளன.
சோ.தேவராஜா எம்.ஏ.நு.மான், சண்முகம் சிவலிங்கம், முருகையன் கட்டுரைகள் 'மஹாகவி யின் அகவாழ்க்கையை நன்கு படம் பிடித்துக் காட்டுகின்றன.
18. நல்லையா வீதி, இரா.நாகலிங்கம் (அன்புமணி) மட்டக்களப்பு. 24.12.2003
K) ஒலை 17, 18 கிடைக்கப் பெற்றேன். மிக்க மகிழ்ச்சி. படிப்பதற்கு சுவையாகவும், சிந்தைக்கு விருந்தாகவும் அமைகிறது ஒலை. ஒலையின் பக்கங்கள் உணரும் சிறப்புடையன. ஒளி கொண்டாட ஒலையின் உணர்வுகள் அதன் உயர்வுக்கு வரலாறுரைக்கின்றன. ஒன்றல்ல இரண்டல்ல அனைத்துமே தகை கொண்டது. ஆதலால் தேனுாரான் என்ன? அனைவருமே பாதுகாக்க வேண்டிய அறிவுக் களஞ்சியம் இவ் ஒலை ஏடு! வன்னியார் றோட் தேனுரான் கதருமரெத்தினம் களுதாவளை -01, களுவாஞ்சிக்குடி 02.01.2003
{0 (1) ஒலை 18 (ஜூலை) 19 (ஆகஸ்ட்) அண்மையில் கிடைத்தது. செப்டம்பர், ஒக்டோபர், நவம்பர், டிசம்பர் (2003) இதழ்கள் வெளிவந்திருப்பின் அனுப்பி வைக்க வேண்டுகின்றேன்.
பக்கம் 47 'ஒலை" - 23 (பெப்ரவரி 2004)

Page 26
(2) விளைச்சல்' கவித்தொடர் நீலாவணன்'தான் எழுதுகிறாரோ என்று ஐயுறும் வண்ணம் அதே பாணியில் எழுதப்பட்டிருப்பது பாராட்டத் தக்கது. ஆனால் இதழ் 18இல் வெளிவந்தது. இதழ் 19 இல் வெளிவரவில்லை. இட நெருக்கடி காரணமாக இருக்கலாம். ஆனாலும் ஒவ்வொரு இதழிலும் 2 பக்கமாவது ஒதுக்கி, தொடர்ந்து வெளிவரச் செய்வதே பொருத்தமானது.
(3) இதழ் 19 சிவகுருநாதன் நினைவு மலர் அவருக்குச் சிறந்த அஞ்சலியாகவும், ஆவணப்பதிவாகவும் அமைந்துள்ளது.
18, நல்லையா வீதி, இரா.நாகலிங்கம் (அன்புமணி) மட்டக்களப்பு. 8.1.2004
9 தாங்கள் அனுப்பிய 17, 18 வது ஒலை இதழ்கள் கிடைத்தன. நன்றி.
மகிழ்ச்சி. ஒலையின் பணி தொடர வாழ்த்துகின்றேன்.
45. சுவாமியார் வீதி க.முருகையா கொழும்புத்துறை (முருகு) யாழ்ப்பாணம்
10.01.2004
தாங்கள் அனுப்பிய ஒலை இதழ்கள் 17, 18 இதழ்கள் கிடைக்கப் பெற்றேன். மஹாகவி பற்றிய சிறப்பு இதழ் (17வது) அடர்த்தியானது. அக்கறையுடன் தயாரிக்கப்பட்டுள்ளது. பாராட்டுக்கள். எல்லோரும் கவனம் கொள்ளும் வகையிலே வளர்ந்து வரும் 'ஒலைக்கு என் வாழ்த்துக்கள்.
தொண்டைமனாறாறு சடாட்சரதேவி (குந்தவை) 15.01.2004
9 என்மீது மிக்க பேரபிமானம் கொண்டு சிரத்தையுடன் கிரமமாக அனுப்பி வைத்திருந்த ஒலைகள் கிடைக்கப்பெற்றேன். மிகவும் அரிய முயற்சி. ஒவ்வொரு ஏட்டையும் சிறப்பாகக் கொண்டு வருகிறீர்கள். பாதுகாத்து வருகிறேன். -
ஒரு சிறு யோசனை. ஒவ்வொரு மாதமும் இலங்கையில் வெளியாகிக் கொண்டிருக்கும் நூல்களை ஒலையில் பதிவு செய்து வருவீர்களாயின் பிற்காலத்தில் மிகவும் பிரயோசனப்படும். தகவல் அனுப்பும்படி (ஒரு) பிரதியுடன் நூலாசிரியர்களிடமே கோரலாம். B54.1/2 N.H.S.Flats, Colombo -10
மானாமக்கீன் 20.01.2004
ஒலை" - 23 (பெப்ரவரி 2004) பக்கம் 48

家s下 ՜ NՀԱ()-
ܠܓ
及
魏
தமிழ்ச் சங்கத்தின் குரலாய் தரணி எங்கும் ஒலிக்க ஒலை ஒயாமல் வர
வளர எம் இதயம் கனிந்த வாழ்த்துக்கள் !
fläb 5ÜG DJub
உருத்திரா மாவத்தை
sustsmsujeong R தொலைபேசி R 23638 盛 కెNQL ഗ്ര{S