கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஓலை 2004.05

Page 1
வெள்ளவத்தை
நித்தியகல்யாணி நகை மாளிகையில்
அப்பழுக்கற்ற வைரம்
Gusögu Lis (Belgium) சர்வதேச இரத்தினக்கல்லியல் நிறுவனத்தினால் (International Genmological Institute உறுதிப்படுத்தப்பட்டு - பரிசோதிக்கப்பட்டு உத்தரவாதமளிக்கப்பட்டு - மாற்றமுடியாதபடி பைகளில் மூடித் தாளிடப்பட்டது.
வெள்ளவத்தை
நித்தியகல்யாணி ஜூவலரி
230 காலி வீதி, கொழும்பு - 06
தொலைபேசி 2363392 2362427
தொலை நகல் 2504933 ے மின்னஞ்சல் nithkaஇslt.lk
 
 

_
پيلي
디 p
ஆசிரியர் ; ിfilട്ടBITി
:
丁。
'கே'
திருவள்ளுவர் ஆண்டு திபி 2033 |၏ ၈၊
貴
2 ---- &&&
泛
31E
珪
கொழும்புத் தமிழ்ச் சங்கம்
7, 57 வது ஒழுங்கை (உருத்திரா
தொலைபேசி 011-233759
வெப் முகவரி இணைய தபால் முகவரி
மாவத்தை), கொழும்பு - 0.
www.colombo, tiamilsa nga III.Org
cts getireka.k.

Page 2

இதயம் திறந்து.
கடந்த ஏப்ரல் 2004 உடன் 'ஒலை'இருபத்தைந்து இதழ்களை விரித்துள்ளது. இப்போது உங்கள் கரங்களில் உள்ளது gyᎮ60Ꭰ6u - 26. முதலிலிருந்து இருபத்தியோராவது இதழ்வரை எழுத்தாளர்களுக்கும் இலக்கிய ஆர்வலர்களுக்கும் இலவசமாகவே 'ஒலை இதழ்களை அனுப்பி வந்தோம். இவ்வருடம் ஜனவரியிலிருந்து அதாவது 'ஒலையின் இருபத்தியிரண்டாவது இதழிலிருந்து விலை குறித்து சந்தாதாரர்களுக்கு மட்டுமே அனுப்பி வருகின்றோம். ஈழத்து இலக்கியச் சூழலில் இலக்கியச் சிற்றிதழ் ஒன்றினை இலவசமாக வெளியிடுவதும் - இலக்கியச் சிற்றிதழ் ஒன்று இருபத்தைந்து இதழ்களை விரிப்பதும் கூட ஒரு கடினமான முயற்சிதான் என்றாலும் கூட இந்த இலக்கிய வேள்வியில் நாம் மனம் தளர்ந்துவிடவில்லை. கொழும்புத் தமிழ்ச்சங்கத்தின் நிறுவனரீதியான பலமான பகைப்புலத்திலும் கூட பணமுடை 'ஒலையை விட்டுவைக்கவில்லை. இக்கட்டத்தில் ஓர் இதயம் திறந்த வேண்டுகோள்.
எழுத்தாளர்களே! இலக்கிய ஆர்வலர்களே!
இதுவரை 'ஒலை'யின் சந்தாதாரர்கள் ஆகாத எமது வழமையான வாசகர்களுக்கு ஒலையின் 22, 23, 24, 25, 26ம் இதழ்களைப் ஒரு பொதியாகவும் மொத்தம் ஐந்து இதழ்களையும் அதனுடன் சேர்த்துச் சந்தாப்படிவமொன்றையும் இத்துடன் அனுப்பி வைக்கின்றோம். இவற்றைப் பெற்றுக் கொண்டவுடன் மேலும் தாமதியாது, சந்தாப் படிவத்தை நிரப்பி ஒருவருடச் சந்தாய்பணத்துடன் அனுப்பி உதவுங்கள்.
இந்த முயற்சிகளுக்கு நீங்கள் ஒவ்வொருவரும் அளிக்கின்ற சிறுதுளி ஈற்றில் பெருவெள்ளமாகிப் பிரவாகிக்கட்டும்.
நன்றி. மீண்டும் மறுமடலில்.
- ஆசிரியர்
பக்கம் 1 “බ්‍රවරග6p” - 26 C (3up 2OO4...)

Page 3
1954, 1955 களில் அக்கரைப்பற்று ஆர்.ஸி.எம்.பாடசாலையில் எஸ்.எஸ்.ஸி. படித்துக் கொண்டிருந்தேன். அக்காலம், அட்டாளைச் சேனை ஆசிரிய பயிற்சிக் கலாசாலையிலிருந்து பயிற்சிக்காக எங்கள் பாடசாலை வந்த எம்.வை.எம்.முஸ்லிம், அ.ஸ.அப்துஸ்ஸமது, வி.எம்.இஸ்மாயில் இன்றைய இலக்கிய உலகின் பிரபல்யங்கள். எம்.வை.எம்.முஸ்லிம் அவர்கள், எங்கள் பாடசாலையில் தூர்ந்து போயிருந்த கையெழுத்துப் பத்திரிகை "கலாவல்லி"யை உயிர்ப்பித்து என்னை அதன் ஆசிரியராக்கினார். அதனால் ஏற்பட்ட வாசிப்புப் பழக்கம் என்னையும் இலக்கியக்காரனாக்கிவிட்டது. அக்காலம் மரபு ரீதியாக இலக்கியத்தில் ஆழ்ந்து கொள்ள எங்கள் பாடசாலை தலைமையாசிரியர் முத்துலிங்கம் எனும் ஞானப்பிரகாசம் அவர்கள் ஆதர்சமாகவிருந்தார். "கந்த புராணக் காட்சிகள்" என ஆழ்ந்த இலக்கியக் கட்டுரையை அக்காலம் எஸ்.எஸ்.ஸி. வகுப்பில் கற்றுக் கொண்டிருந்த ஸஹிதா அலியார் எழுதினார் என்றால், எங்கள் இலக்கிய அறிவு, மரபு ரீதியாக அப்போது எப்படியிருந்ததென்று விளங்கும்.
பாடசாலையைவிட்டு எஸ்.எஸ்.வி. சித்தியுடன் வெளியான காலம் 1956 களில் அஸ்.அப்துஸ்ஸமது அவர்களின் தூண்டுதலால் எச்செம்பி முஹிதீன் அவர்கள் இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் கிளையான மட்டக்களப்புத் தெற்கு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தை அங்குரார்ப்பணம் செய்தார். அங்குரார்ப்பணக் கூட்டம் ஸஹிதா அலியார் அவர்களின் வீட்டில்தான் நடந்தது. இக்கூட்டத்தில் எம்.எஸ்.அபுல்ஹஸன், வி.சிவப்பிரகாசம், ஏ.ஆர்.எம்.ஸ்லிம், பி.எஸ்.மீரா, அஸ்.அப்துஸ்ஸமது, எம்.ஐ.ஜுனைதீன், வ.மாணிக்கம், தெய்வானைப்பிள்ளை, எம்.ஏ.முகைதீன், முஹிதீன்பாவா, எம்.ஏ.கபூர் என்னும் யுவன், கே.சாந்தலிங்கம், எஸ். தாமோதரம்பிள்ளை, பஸில்காரியப்பர், வை.பி.அகமதுலெவ்வை, எம்.ஏ.யூலெவ்வை இன்னும் பலர் சமுகமளித்தனர். இவர்களெல்லாம் எழுத்துத் துறையில் அக் காலம் காலூன்றினர். ஆனால் தொடர்ந்து எல்லோரும் எழுதவில்லை. சிறந்த இலக்கிய வாசகர்களாக இன்றும் மிளிர்கின்றனர். எழுத்துத் துறையில் தொடர்ந்து ஈடுபட்டவர்கள் அ.ஸ்.அப்துஸ்ஸமது, ஊடகத் துறையில், வி.பி.சிவப்பிரகாசம், வ.மாணிக்கம், ஏ.ஆர்.எம்.ஸ்லிம் போன்றவர்கள்தான். பி.எஸ்.மீரா அவர்கள் அப்போது, அக்கரைப்பற்றைப் பற்றிப் பாடிய பாடலின்முற்பகுதி இன்றும் என் நெஞ்சில் ஊறிநிற்கிறது.
"(ഞണ്' - ഉ6 (D ഉ00| ') பக்கம் 2
 

"இலங்கைக் கெழுதிசை
வங்கக்குடாக் கடல்
தங்குமந் நீர்க்கரையில் -அங்கு
பொங்கிடும் ஆழியில்
முத்தெடுத்தே அணி
போட்டு மகிழ்வள் எம்தாய்
எங்கள் தாய்"
மட்.தெற்கு.முற்போக்கு.எ.சங்கத்தின் தலைவர் அ.ஸ்.அப்துஸ்ஸமது, நான் செயலாளராகவிருந்தேன். முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் தொடர்பு மரபுரீதியாகப் படித்து வந்த இலக்கியத்துடன் தற்கால மரபுமாறும் இலக்கியத்தையும் அறியும் வாய்ப்பைத் தந்தது.
மட்.முற்.எ.சங்கம் விஞ்ஞானப் பொருட்காட்சி ஒன்றை, இலக்கிய
உணர்வுடன் 1958களில் பிரமாண்டமாக இருநாட்கள் ஆர்.ஸி.எம். பாடசாலையில் நடத்தியது. இவ் விஞ்ஞானப் பொருட்காட்சியை நடத்திய முக்கியஸ்தர்கள் எம்.ஜ.ஜுனைதின், எம்.ஏ.கபூர் எனும் யுவன் இருவருமே. இவர்கள் அங்கே காட்சியாக அமைத்த "தாமரை மகளிர்" எனும் நூதன காட்சி பிரசித்தம் பெற்றது. அறிவியலுடன் இணைந்த மரபு மாற்ற இலக்கிய நூல்கள் பலவும் இக்காட்சியில் இருந்தன. இரண்டாம் ஆண்டு விழாவில் "சிற்பியின் வஞ்சம்" எனும் அமரத்துவ நாடகத்தை கே.சாந்தலிங்கம் அவர்கள் தயாரித்து வசனமமைத்து டைரக்ஷன் செய்து மேடையேற்றினார். நான்காம் ஆண்டு விழாக் காலத்தில் "வீரன் நாதிர்ஷா" நாடகத்தை டாக்டர் ஏ.எல்.எம்.இஸ்மாயில் அவர்கள் தயாரித்து மேடையேற்றி வெற்றி கண்டார். இவரது முயற்சிக்கு சங்கம் அதிக உறுதுணை செய்தது. அதன் கதாநாயகனான எம்.எஸ்.எம்.அபுஹஸன், எம்.ஐ.ஜுனைதீன், முகிதரீன்பாவா இன்னும் பலர் சங்க அங்கத்தவர்களே.
கவிதைச்சமர் - சான்றோர், இழிசனர் நீதிமன்றக் கவிதா நாடகம் சொக்கன், சில்லையூர் செல்வராசன், முருகையன் நடித்து மேடையேற்றி இலங்கையில் பிரசித்தம் பெற்றது. அந்நாடகத்தை அக்கரைப்பற்றிலும் எங்கள் சங்கம் அவர்களை அழைத்து மேடையேற்றிக் காண்பித்தது. சங்கத்தின் ஏடான "எழுத்தாளன்" சஞ்சிகையில் அதன் ஆசிரியர் யுவன்' அவர்கள் இவற்றையெல்லாம் எழுத்து மூலம் பறைசாற்றினார்.
1963 ஒகஸ்ட் 11 இல் ஒன்பதாவது ஆண்டு விழாவை பேராதனை ஷர்புனிஸா, எஸ்.எம்.ஏ.ஹஸன் ஆகிய பேச்சாளர்களை மலைநாட்டிலிருந்து அழைத்துச் சிறப்பாக நடத்தினோம். "ஈழத்து முஸ்லிம் புலவர்கள்" தந்த ஏ.ஆர்.எம்.ஸ்லீம், பல பரிசுகள் பெற்ற பளில்காரியப்பர், எஸ்.முத்துமீரான், எம்.ஏ.யூலெவ்வை, அக்கரை மாணிக்கம் இவ்விழாவில் கெளரவிக்கப்பட்டனர்.
பக்கம் 3 “ඩ්‍රරග60° - 26 C ශීup ඉOO4 D

Page 4
ஏ.ஆர்.எம்.ஸ்லிமின் "ஈழத்துமுஸ்லிம் புலவர்கள்" நூலுக்கு ஸாஹித்திய மண்டலப் பரிசு 1963இல் கிடைத்தது. இப்பரிசைப் பெற அவர் யாழ்ப்பாணத்தில் நடக்கவிருக்கும் ஸாஹித்திய விழாவுக்குச் செல்லவிருந்தார். அதனால், நானும் அவ்விழாவுக்குச் செல்வதென முடிவெடுத்து தர்கா நகரிலிருந்து வெளியேறினேன். 1963 செப்டம்பர் 08இல் யாழ்ப்பாணத்தில் சேர்ந்துவிட்டேன். இங்கே அநேகரின் தொடர்புகள் விரைவில் கிடைத்துவிட்டன. முஹம்மத் நிஸார், றஊய் இவர்களுடன் தான் அதிகமாகக் கூடித்திரிந்தேன். மறுநாள் விழா நடக்கும் இந்துக்கல்லூரிக்குச் சென்றுவிட்டேன். அங்கே எழுத்தாளர் தொடர்பை ஏற்படுத்துவதிலேயே அதிகம் கவனம் செலுத்தினேன். எனது பருவம் அதற்குரியதாகவே அன்றிருந்தது. டானியேல், சில்லையூர் செல்வராசன், ஸாஹித்திய மண்டல அங்கத்தவர் சமீம் போன்ற பலர் முற்போக்கு எழுத்தாளர் சங்க அங்கத்தவர்களாக பிரசன்னமாயிருந்தனர். சமீம் மண்டலத்தின் ஒரு பிரதிநிதியாகவிருந்தும், அவர் முற்போக்காளர் காரணமாக அவருக்கு அவர்கள் அழைப்பனுப்பவில்லை. அந்தளவு அக்காலம் முறுகல் இறுகிப் போயிருந்தது.
மரபுப்பக்கமாக வித்துவான் வேலனார், பேராசிரியர் சதாசிவம், எப்.எக்ஸ்.ஸி.நடராசா இன்னும் பலரும் ஸாஹித்திய மண்டலச் செயற்பாட்டுக்குரிய சிங்களவர்களும் மும்முரமாக இயங்கினர். செனட்டர் சு.நடேசன் அவ்விழாவுக்குத் தலைமை வகித்தார். தொடக்கத்திலேயே மரபு பேணுவோர் சான்றோராகவும், மரபு மீறுவோர் இழிசனராகவும் உருமாறிநின்று சொற்போர் நிகழ்த்தினர். சமீம் உறுப்பினர் உரிமையைப் பாவித்துத் தன்னை அழைக்காததுபற்றியும், இலக்கியம்பற்றியும் மேடையில்பேசினார். பிரேம்ஜியும் தொடர்ந்து பேசுவதற்கு மேடைக்குப் போனார். இந்த நேரம் நிஸார் என்னை அழைத்துக் கொண்டு வெளியே சென்றார். அங்கே ஒரு கடையில் முட்டையொன்று வாங்கினார். அது நல்ல முட்டை. கூழல்ல. நாங்கள் உள் நுழையும் போது, மேடைக்கு அழையாமல் யாரும் வரக்கூடாது' என முழங்கிய போது, கூட்டம் சற்று அசைந்தது. அப்போதுதான் கூழ் முட்டையென்று கூறி மேடைக்கு நிஸாரின் முட்டை பறந்தது. நாலா பக்கமும் இன்னும் பல முட்டைகள் மேடையை நோக்கி விரைந்தன. வேலனார் ஏதோ பதில் கூறிக் கத்திக் கொண்டே சுழன்றார். "வேலா! உனக்கென்ன வேலை" எனும் கோஷம் சில்லையூர் செல்வராசன் தலைமையில் கிளம்பி ஓசையைப் பெருக்கியது. "ஐயா, இக்கூட்டத்தில் நீங்கள் சேரவே கூடாது" எனும் உரத்த ஒசையுடன் தலைமை வகித்த சுநடேசனை கதிரையுடன் துக்கி வெளிக் கொணர்ந்தனர்.
சொக்கன், சிவத்தம்பி போன்ற இன்னும் பல பிரபல்யங்கள் சும்மா பார்வையாளர்களாக அசைந்தனரே ஒழிய வேறெதிலும் கலந்து கொள்ளவில்லை. கூட்டம் அப்படியே கலைந்தது. அதன்பின், ஆரிய குளத்தடியில் இருந்த சனசமூக நிலையத்தில் கூட்டம் கூடி முற்போக்காளர்கள் பேசிக்
“බූ6E6p” – 26 (ෆිp 2OO4.9 பக்கம் 4

கலைந்தனர். இந்துக்கல்லூரியில் பரிசு கொடுத்தவுடன் விழா ஒய்ந்தது. என்னைப் பொறுத்தளவில் இலங்கைத் தமிழ் இலக்கிய வளர்ச்சிப்பாதையில் வரலாற்று ரீதியாக ஏற்பட்ட பல திட்டுக்களில் முட்டை எறிந்த நிகழ்ச்சியும் ஒன்றென்பதில் வலிமையான கருத்துடையவன்.
ஆனால், பேராசிரியர் கா.சிவத்தம்பி அவர்கள் தற்காலம் ஒரு நேர்காணலில், "முட்டை அடித்த விடயம் மிகப்பாரதூரமான தாக்கத்தை ஏற்படுத்தியது. முற்போக்கு இலக்கிய இயக்கம் யானை தன்னுடைய தலையிலே தானே மண்ணை அள்ளிப் போடுகிற மாதிரி தன்னைத் தானே மாசுபடுத்திக் கொண்டதற்கு முக்கிய காரணம் அந்த முட்டை அடி. ஆனால், இழிசனர் என்று சொல்லுதற்கு என்றும் விடவும் தயாரில்லை. முட்டை அடித்ததென்பதுநாங்கள் செய்த மிகப்பெரிய மோசமான தவறு. முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தை அது மோசமாகப் பாதித்தது" என்று கூறிய கருத்தை இலக்கிய வரலாறு ஏற்காது.
பாரதியை எழும்ப விடாமல், "கல்கி" போன்றோர்நின்றநிலை. பாரதியின் "செந்தமிழ் நாடெனும் போதினிலே." கவிதைக்குப் பரிசு கிடைக்காமை, இவ்விதப் போராட்டங்களில் ஈடுபட்டு வெற்றி பெற்றவன் பாரதி. பேராசிரியர் சுவாமி விபுலானந்தரின் உயரிய கண்டுபிடிப்பு மகாகவி பாரதி. இறுதியில் எதிர்த்தோரெல்லாம் அவரை மகாகவி' என்றனர். இவ்விதமாகவே சான்றோர், இழிசனர் எனத் தமிழ் இலக்கிய வளர்ச்சியை மாசுபடுத்த எத்தனித்த மரபுக் கும்பலை வழிப்படுத்திய செயலுக்கு முட்டை எறி மிக முன்னிற்கும் ஒரு சாதனை. இதைப்போய் பலவீனமாகப் பயந்து அடங்கி அலுத்துக் கொள்கிறார் பேராசிரியர் கா.சிவத்தம்பி அவர்கள்.
"சாதியக்காப்புணர்வுகளும் தாமே தமிழுக்குத் தனிப்பிரதிநிதிகள் என முடிவு செய்து கொண்டு தமிழில் முறை கொண்டு வந்த ஆக்க இலக்கியத்தைக் கடுமையாகச் சாடிய முறைகளும் நிச்சயம் கண்டிப்பதற்குரியனவே" என்பது இலக்கிய மேன்மையாளர் சொக்கன் அவர்களின் கருத்து. இக்கருத்துக்கியையவே முட்டை எறி செம்மையாக நடந்தேறியது.
முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தைப் பாதித்தவை வேறு. இச்சங்கத்தில் இருந்த மார்க்ஸிஸ்டுகள் அரசியல் ரீதியில் சித்தாந்தப் பிளவுள் அகப்பட்டமை, ஆயுட்காலச் செயலாளர் பிரேம்ஜி என நினைக்குமளவுக்கு செயலாளர் பதவியை விட்டுக் கொடாமல் பிடித்திருந்தமை. இவ்விதச் சில்லறைப் போக்கினால், இலக்கியத்தைத் தரிசித்தோர் தன்வழி திரும்பி முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தைப் பாராமல் நின்றனர். இப்பாதிப்புக்கள் தான், முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தை இப்போது 'லெட்டர் ஹெட்ஸ்' மட்டுடன் வைத்திருப்பதை உணர வேண்டும். உண்மையில் இலக்கிய உணர்வையும் பரப்பையும் துல்லியமாக அறிய, முற்போக்கு எழுத்தாளர்
பக்கம் 5 “gp606p” - 26 C (Buo 9ooq )

Page 5
சங்கம் அங்கத்தவர்களுக்கு, தமிழ் பயிலுனருக்கு அதிக பயனை அளித்" திருக்கின்றது என்பதை மறுத்திட யாரும் முன்வரார். முன்வருவதாக இருந்தாலும், இதில் பெற்ற முதிர்ச்சி தான் உந்துதல் செய்யும். இளங்கீரன் எழுதிய "இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்க வரலாற்றில் மட்.தெற்கு மு.போ.எ.சங்கங்கிளை, மட்.வடக்கு. மு.எ.சங்கங்கிளை பற்றி எதையும் குறிப்பிட்டில்லை. எச்செம்பி பற்றி எதுவுமே இல்லை. இந்த மாறுபாடுகளும் சங்கத்தைச் சிதைத்ததெனலாம். இவை, மிக ஆழமாகத் தெரிந்தோரில் பேராசிரியர் கா.சிவத்தம்பியும் ஒருவர்.
அக்காலத்தில் புதியன புகுதலை மிகவும் எதிர்த்து நின்றவர்களான பேராசிரியர் ஆ.சதாசிவம், சோ.நடராசன், எப்.எக்ஸ்.ஸி.நடராசா போன்றோர்களை இளைஞர்களே பகிடிவதை செய்தனர். அமெரிக்காவில் புலமைப்பரிசில் கற்கைக்குச் சென்ற பேராசிரியர் புகையிரதத்தில் செல்லும் போது, (p66T60TTg 601gsg565 (Bibgs 9/GLDiféisabGJIT(b6) if "I am Suffering from stomach ache" என்று வேதனைப்பட்டாராம். உடனே, பேராசிரியர் எழுந்து "I am Sathasivam from Ceylon" என்றாராம். அக்காலத்தில் ஆங்கிலம் தெரிந்தால் தான் வெளிநாடு செல்லலாம் என்ற பக்குவம் இருந்தது. உண்மையில் பேராசிரியருக்கு ஆங்கிலம் தெரியும். அவர் ஆங்கிலத்தைப் பிந்திய காலம் பெற்றதால், அவருக்குத் தெரியாது என்ற எண்ணம் நிலவியது. மரபு ரீதியாக ஏனா இப்பன்னா, ஏனா இக்கன்னா இஸ்ஸயன்னா ஸினா, என்பதை அவ்விதமே வாசிக்காமல் ஆங்கிலத்தில் சொல்வது மரபா? என்றெல்லாம் இன்னும் பல பகிடிகளை முற்போக்கு இளைஞர்கள் விடலாகினர். அக்காலத்தில் "தினகரனில்" செய்தி ஆசிரியராக இருந்தவர் முற்போக்காளர். "முட்டை எறிக்குழப்பத்தை எவ்விதம் அடக்கினேன்" எனப்பத்திரிகைக்கு வித்துவான் வேலனார் எழுதிய கடிதத்திற்கு "குழப்பத்தில் எனது பங்கு" எனத் தலைப்புக் கொடுத்த கதையுமுண்டு. இவ்வித ஈர்ப்புக்கள், மக்கள் இலக்கியங்கள் என்பன முற்போக்கு எழுத்தாளர் சங்கத்திற்கு மக்கள் மத்தியில் மதிப்பை ஏற்படுத்தி அக்காலம் இருந்தது. வரலாறு இதைத் தெளிவாக்கும்.
இலங்கைத் தமிழ் இலக்கிய வரலாற்றில் தமிழிலக்கிய மரபையும் மரபு மீறலையும் "புதியன புகுந்து" விளைந்த இலக்கியப்பரப்பையும் இன்றும் நின்று நோக்கி ஆய்வதற்கு இலங்.முற்.எழு.சங்கத்தின் பங்களிப்பு இமாலய சாதனை எனின் அது மிகையல்ல. தேசிய இலக்கிய உணர்வையும், காலனித்துவ இலக்கியச் சிந்தனையிலிருந்து மாறுபட்டுத் தேசிய இலக்கியத்துள் புகுந்தமையும் பற்றிய ஆய்வுக்குத்தடமாக அமைவது முற்போக்கு எழுத்தாள சங்கத்தில் செயற்பாடுகள் தான் என்பதையும் துணியலாம்.
- தொடரும்
&
‘ஓலை’ - 26 (மே 2004) பக்கம் 6

மருதூர்வாணனின் மறுவோலை
இலக்கிய வாழ்வில் இடறிய சம்பவங்கள் எழுதிவரும் கலாபூஷணம் ஏ.இக்பால் அவர்களின் கட்டுரையை ஒலை இதழ்களில் தொடர்ந்து வாசித்து வருகிறேன்.
இக்பால் அவர்களை 1961 இல் ஆசிரியப் பயிற்சிக் கலாசாலை, அட்டாளைச்சேனையில் பயிற்சி மாணவக் காலத்தில் சந்திக்கும் வாய்ப்புக் கிட்டியது. பின்னர் 1977 ல் தர்ஹாடவுனில் இருந்த காலம் முஸ்லிம் எழுத்தாளர் சங்கத்திலே தில்லுமுல்லுப்பட்டு திக்வல்லை ஷம்ஸ், எம்.ஏ.நுஃமான் போன்றவர்களை எதிர்த்தும் என்னையும் முஸ்லிம் எழுத்தாளர் சங்கச் சார்பில் எழுதும்படியும் தட்டச்சுக்கடிதம் அனுப்பிய தொடர்புகளும் தொடர்ந்தனதான்.
இக்பாலின் "இடறிய சம்பவங்"களில் மிகவும் பாரதூரமானவை இரண்டை நானிங்கு குறிப்பிடல் கடமைப்பாடு.
'களம்' சஞ்சிகை அக்கரைப்பற்றில் ஆலையடி வேம்புப் பிரதேசத்தில் வெளிவந்தவையில் 1.3.1997 இல் மலரும் நினைவுகள்' எனும் கட்டுரையில் ஏ.இக்பால் எழுதியதற்கு 15.03.97 இல் எதிர்ப்புக் கடிதம் எழுதினேன். களத்தினில் எனது கண்டனத்தைப் பிரசுரிக்கவில்லை. இதை எனது 'மத்தியகிழக்கிலே சிறுகதைத் தொகுதி உள்ளட்டையில் 06.07.97 இல் பிரசுரித்தேன். இத்துடனுள்ளது பார்க்கலாம்.
శో.
மலரும் நினைவுகள்
భ, ####భీ, 籌 $ శభఃఖా ఖజ•,
ఓఖ#శిక్షణా ఈ ** ** **###? భr * * *$, శిఖిభ్ర* 8*** هs, భఒ్మఖ, ? ఈ * ** ** #ಓಟ್ವಿಭೆ' (Fಣಿ ಬೆಟ$೫ ಜೆ&೬...& 态t-毒*荔 & எழுதியுள்ளார். இது த&து அது 3லது கூட்டர். தானும் போக்குத்தேன்
195ர, தலைதோன்பு:இனம் திகதி நீ&ணலில் xல. భ###భిణీ, ஆ.மு. சரீபுத்தீன் (எனது:சமா) அ<&னது பழையலிட்டில் (x.ை ఖ####rళఇు, థఓ********* *** * 1914**ణి}} ఊజీg* Tek keLzk Te S T e ee000Tee Tee SZe eSe0LSJ ee SMSeeeMeTMLLTtlLTTTM S eLLeeS TY OYYkSzk0S LLL eeeT ee S ek ee eeee eke SeeeLeeAS AS S tLLeLe eT LeeeL ekLSLLS ekk TeS SS00 YST YSYYcL SJzekekSYYe eeeeSLeS eJSS eeLLS ke YYS ATLTTteL00ekttLS0eS STeL S kkeee eeTe SeLSS LLLS TLTLLLLL M. Y. M. నీళళబీసీ £8 *. *ష###భ్రఫీ, M, h. ht, జిడి , 0; శిణ ఇశఊఈ శీ4ణీశ శీఓ74.4##fజేు శ్రీ##ఓణీ జక్ష్మ
šasisi tuđa istis ...
மிகநெருங்கிய நண்பர்கன். “தய பி இசைவாணன்,
#క్షి? spirit gestii 8 asyś ఊఓ.(శశిఖrు. žfešti
பக்கம் 7 "ge606' - 26 C (5up 2004)

Page 6
tళీళ్ళ ఈ థ ఉత్కళ జిf భfశ జిళ ఊ** ** *్మణ ఖ#}ఈజీ జి ఓసభ2ణీ శ 3. శీఓ ఓ ... శ? ఖతః శf, జిషు శీ నీ శుభకి ఖ}; " ఓ భ
ళ్ల ఈāx *. ఈ: {
-9{2}{4్వ? b 2 జీ శీ శి; (3 * ఓ ఓ ఓ ఓ ఓ ఒత్తి, భజ శఓధ్రుళ్ళతళ, , , జోజో ఓ'నీ ** *. ఒభణి ### ಓ&#ಣಿ &ಃ, ೩೫ & ೩ಜ್ಜಿ ಫ್ರೀ 4 ಟ್ರೀ, 8 ೩.೫ ಓ#$ ೬ಃ ಓ&#.f &&&& #ఖ ఖగోళ గోళ్ల గో, భ, శీ ఓ##ళ, ఓడ శ8* ** *慈念爺a奔,多發8 >> 莎簽*證鑫》*慈卷球為Ja 終慈為慈懿* Tee Seeke ekk Se A SSzS SeekekTe00S S YeSk eke G SZeSekekSYSY OtM 玛政莎**...。...召 ဒြို
భట్టి వ4:1 -్యక్టీఖ f స్లో భ
}, భ?#**, శ్రీ4ణిజీ వీణి ఖి నీ శ్రీశ్రీ భళశీల్లో ఉ##ష#;
జభుణుడా ఓణీ ఉడrశ• 9 f Q తs * * 2) శ్రీడ *? అబీజీ * usagås" & S&K &å&s 麥泰多容父*-燈絲素 發後。零 భః భ్రభ్ళ atarsa i ti i se gadie, Miški, J.: “... * * * lie. களுடன் வத்தலர். இக்பால் கதுவது
0S TTsLLS S SttLLLLLLL L0LS SSSS LLS Te0 TZS
a err, t్యఃt&####ణశf, &#### கைை மூதலில் கெகோசனம் என லால கொச்சைப் படுத்த எழுதிபுன்னா *கனல்’ அல்கைக்கு 1893 - 97ல் இக்கு
நானும் நீலாவணனும் 1960 இல் நோன்புதினம் ஆ.மு.வடிரிபுத்தீன் வீட்டிலேயே 'கல்முனை எழுத்தாளர் சங்கம்' அமைத்தோம். இக்பால், அப்துல்ஸமதும் வந்தனர்.
1963ல், பிறைப்பண்ணை வெளியீட்டாளர் அ.ஸ.அப்துல்ஸமது இலங்கை முஸ்லிம் கல்விமான்களைப்பற்றி இக்பாலை எழுதித்தருமாறு கேட்டதாகவும் செப்டம்பர் 2003 'ஒலை' (20) இலும் வாசித்தேன்.
ஒலுவில் பல்கலைக்கழகத்தில் 2000ம் ஆண்டில் கிழக்கிலங்கையில் தடம் பதித்த எழுத்தாளர்கள் பற்றி புத்தகக் கண்காட்சி -ஆய்வரங்கத்தில் நுஃமான் தலைமையில் இக்பால் பேசிய வேளை அப்துல்ஸமது இலக்கிய மந்தர், தன்னை ஒரங்கட்டிப் பகைத்து எழுதிய பொறாமைக்காரன், அவர். இவர் கதைகளை வாசித்த உணர்வில் சாம்பார் எழுத்தாளர் என்று பேசியவர். அதே காலம் மீள்பார்வை, ஆதவன் ஏடுகளிலும் எழுதியவர். அப்துல்ஸமது காலமாகி அடுத்த கணமே 2002இல் அப்துல்ஸமதை உச்சியில் வைத்து எழுதியவர். தினகரனில் இவரின் கட்டுரை அஸ்.நினைவு மலரில் ஒருபக்கம் தணிக்கை செய்யப்பட்டது. ஏனென்று அவரின் மக்களிடம் கேட்டேன். இல்லாத புளுகெல்லாம் இக்பால் எழுதியுள்ளார் என்று சொன்னார்கள்.
- கலாபூஷணம் மரு தூர்வாணன் 19.03.2004 மருதமுனை
'ളഞ്ഞബ്' - ഉ6 (5ഥ ഉ00!) பக்கம் 8
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

இக்பாலின் மறுப்போலை
1960ம் ஆண்டின் கல்முனை எ.சங்கம் பற்றி எனக்கு எதுவுமே தெரியாது. மருதமுனையில் ஆ.மு.ஷரிபுத்தின் வீட்டிற்கு நான் ஒருநாளும் சென்றதே. யில்லை. மருதுர்வாணன் மழுப்புகிறார் என நினைக்கிறேன். மருதூர் வாண. னுக்கும் எனக்கும் எவ்வித இலக்கியத் தொடர்புமில்லை. அவரது பத்திரிகைகள் சிலவற்றை அனுப்பிப் பணம் கேட்டார். நான் அனுப்பவேயில்லை.
நீலாவணன் வீட்டில் நடந்த கூட்டம்' பற்றி எழுதினேன். அது நடந்தது 1962 பெப்ருவரி 07ம் திகதி புதன் கிழமை. நான் முக்கிய விடயங்களை டயறியில் பதிந்துள்ளேன். இக்கூட்டம் நடந்தமைக்குரிய சாட்சிகள் : 1.பேராசிரியர் எம்.ஏ.நு.மான் அவர்கள். கூட்டம் கலைந்ததும் அவர் தனது சைக்கிளில் கல்முனை வரை என்னை எடுத்துச் சென்றார். 2. இப்போதும் நீதிபதியாக இருக்கும் யூ.எல்.ஏ.மஜீத். 3. பஸில் காரியப்பர். இவர்களிடம் இவ்விடயத்தைக் கேட்டறியலாம். இந்தக் கூட்டத்திற்கு மருதூர்வாணன் வந்ததேயில்லை. அவர் அக்காலம் இலக்கிய அநாமதேயந்தான்.
நான் எஸ்.எஸ்.ஸி. படிக்கும் காலம் தொடக்கம் இன்று வரை வீட்டு வாசிகசாலை ஒன்றை நிர்வகிப்பவன். இன்று தேடி எடுக்க முடியாதளவு 4580 நூல்களைக் கட்டிக் காக்கின்றேன். என்னிடம் பல மாணவர்கள் தொடக்கம் சில பேராசிரியர்கள் வரை புத்தகங்கள் வாங்கிச் செல்வர். இதனால், நான் மிகப் பெருமையடைகிறேன். இந்த வழியில் தான் நீலாவணனும் புதுமைப்பித்தன் (சென்.ஸ்டார் பிரசுரம்) நூல்கள் வாங்கிச் சென்றார். இதில் என்ன கொச்சை இருக்கிறது. அக்காலம் மருதூர் வாணன் புதுமைப்பித்தன் பற்றி தெரிந்திருப்பாரோ தெரியவில்லை.
அ.ஸ்.அப்துல்ஸமது மலரில் எனது கட்டுரையில் ஓர் எழுத்துக்கூட அகற்றப்படவில்லை. அஸ்.வின் பலம், பலவீனம் பற்றியும் எழுதியிருக்கிறேன். அம்மலரைத் தயாரித்தவர் அக்கரைப்பற்றில் தேசிய பாடசாலை (மத்திய கல்லூரி) முன்னாள் அதிபர் எம்.ஏ.யூலெவ்வை (ஸமத்) அவர்கள். அவர்களை உசாவியறியலாம். பைத்தியர்களுக்கு நான்பதில் கொடுப்பதுமில்லை. ஒலை' கேட்டதினால் எழுகிறேன்.
ஏ. இக்பால் றிபாயா மன்ஸில் 10.04.2004 தர்கா நகர் -12090
பக்கம் 9 'ge606 - 26 C (5up sooq)

Page 7
f (Iി நறுக்குகள்
திமிர்
வேலைக்காரன் மேல் பாய்ந்தார்.
நாயே! பீட்டரை ya கவனித்தாயா? S
இவர் வீட்டில்
பீட்டர்' என்றால்
நாய்.
நாய்' என்றால் மனிதன்.
பட்டிமன்றத்தின்
அறுவடை 'விடுதலை நாங்கள்.
ஆவாரா சிறையில் இரண்டு இருந்து lát5đ5(pD என் கை தட்டுவோம்.
கணவர்?
குறட்டை சோதிடம் துயிலெழுப்பு கேட்கிறாள். சேவலை, கூண்டுக் கிளியிடம்,
சேவலே தூங்கிவிட்டது.
“ඉ60)60' - 26 (ÖÜp 2OO4 D
 
 
 
 
 

மண்
கொலை ######၏ ஒருநாள் 660 D60 6R வாழ்க்கை 6Obġħġbġ5T u J... Ա6)յժ535....
பகைவனே! விரியுமுன்பே . . பறித்து 660 மணனை / இறைவனுக்கு 6.55 - as
e9lfᎢᏑéj-6Ꮱ06ᏡᎢ புதைப்பாய்? செய்கிறான்.
நூறாண்டு குடு குடு வாழ்க்கை நல்ல காலம் வேண்டி வருகுது 守6芯)6ö円 தனக்கு. நல்ல காலம் வருகுது. பாட வைத்தே
குருடனுக்கு தெருவிலேயே d5T போ டும் நிற்கிறான். தொடர்வண்டிப்
பயணிகள்.
குடுகுடுப்பைக்காரன்.
விளையாட்டுக் காட்டியே 8 செவிடனுக்கு உறுததல O HA V இரவெல்லாம் தி திTட்டும் விழித்திருந்து கிரிக்கட் வாரியம்.
மாந்த நேயத்தின் برا சி ఢ :* கல்லறையில் $3 பனைப்பாய்.
ரசனை.
- இன்னும் வரும்
பக்கம் 11 “ඹුරනරඹා” - ඉ6 (ශීup 2004 D

Page 8
பயனில் கடன்!
1. கேடு கெட்ட உடலதால்,
கெஞ்சும் போக்கு மில்லையால்,
பாடு பட்ட தில்லை யால்,
பணமும் கையில் இல்லையால்,
வாடுகின்ற உட்ள்ளமே!
வரளுகின்ற எண்ணமே!
கூடு விட்டு நீங்குமோ,
குடியிருக்கும் ஆவியே?
2. பேய்கள் இல்லை ஆதலால்,
பிறவி ஒன்று தானதால்,
நோய்கள் மூத்துப் போனதால்,
நொடியும் பொன்னின் மேலதால்,
தேய்ந்த வண்ண முள்ளதால்,
திறமை ஓங்கல் இல்லையால்,
பாய் இருப்பைத் தேடியே
படுத்துறங்கல் மட்டுமோ?
3. காலை செய்தி கேட்டுமே
கண்திறந்து செய்திடும்
வேலை (இ)ரண்டு: கற்றிடல்
வெள்ளைத்தாளில் எழுதிடல்
பாலைப் போன்று தமிழிலே
படையல் இட்ட போதிலும்,
நாலைச்சேர்த்துப் பழகியோர்
நாடி ஒன்றைச் சேர்வரோ?
4. எழுதிவைத்துப் படிக்கிறேன்!
எடுத்தெடுத்துப் பார்க்கிறேன்! புழுதி தட்டி வைக்கிறேன்!
போதும் இந்தப் பணிகளே! பொழுது பட்டுப் போனபின்
புலரி அற்ற இருளெனில் பழுதுபட்டுப் போகுமேல்,
பயன்பெறாத கடமையே!
-தாமரைத் தீவான்"
“බූ6HöÜ” – 26 (ශීup 2OO4...) பக்கம் 12

அஞ்சலி * கொழும்புத் தமிழ்ச்சங்கப் பொதுச் செயலாளர் திரு. ஆழ்வாய்பிள்ளை கந்தசாமி அவர்களின் தாயார் திருமதி.ஆ.முத்தம்மா அவர்கள் 15.04.04 அன்று மட்டக்களப்பில் காலமானார். * கொழும்புத் தமிழ்ச்சங்க முன்னாள் ஆட்சிக்குழு உறுப்பினர் திரு.டபிள்யூ.எஸ்.செந்தில்நாதன் அவர்களின் மகன் திரு.செ. பிரகலாதன் அவர்கள் 11.04.04 அன்று அமெரிக்காவில் காலமானார்.
* கொழும்புத் தமிழ்ச்சங்க முன்னாள் நூலகச் செயலாளரும் தற்போதைய ஆட்சிக்குழு உறுப்பினருமான திரு.க.குமரன் அவர்களின் தாயார் திருமதி.க.மீனாம்பாள் அவர்கள் 25.04.04 அன்று கொழும்பில் காலமானார்.
* கொழும்புத் தமிழ்ச்சங்கப் பொதுச்செயலாளர் திரு.ஆழ்வாய்பிள்ளை கந்தசாமி அவர்களின் மாமானார் திரு.மீனாட்சி சுந்தரம் அவர்கள் 27.04.04 அன்று கொழும்பில் காலமானார்.
* கொழும்புத் தமிழ்ச்சங்க ஆட்சிக்குழு உறுப்பினர் திரு.இ.சட கோபனின் தந்தையார் திரு.க.இராமையா அவர்கள் 28.04.04 அன்று நாவலப்பிட்டியில் காலமானார்.
இவர்களுக்கு ஒலை தனது அஞ்சலியைச் செலுத்துகின்றது. 18.04.04, 16.05.04 ஆகிய தினங்களில் இடம் பெற்ற கொழும்புத் தமிழ்ச்சங்க ஆட்சிக்குழுக் கூட்டத்தில் இவர்களுக்கு மெளனாஞ்சலி செலுத்தப்பட்டது.
பக்கம் 13 ‘ஓலை’. 26 (மே 2004)

Page 9
৯
š ANANANA W ડ્ઝ
S N
SSSR
எமது மக்களிடையே பொதுவான ஒரு கருத்துண்டு. அதாவது எல்லாவற்றிலும் தரம் இப்போது குறைந்து கொண்டு போகின்றது. முன்பு இருந்த தரம் இப்போது இல்லை. இது படிப்பு, சாப்பாடு, சினிமா என எல்லாவற்றிக்கும் பொதுவானது. இதுபற்றிச் சற்று உள்நோக்கிப் பார்ப்பதே இக்கட்டுரையின் நோக்கம்.
படிப்பு. கல்வி முறை பற்றி முதலில் பார்ப்போம். "பதிலும் கொடுத்துக் கேள்வியும் கேட்கின்ற பரீட்சையில் சித்தியடைந்து வருகின்ற இப்போதைய பிள்ளைகளுக்கு நாலு வரியில் ஒரு ஒழுங்கான வசனம் எழுதத் தெரியாது. இப்போதுDegree முடித்து வருபவர்களால் அப்போதையMetriculation paSS பண்ணியவர்களுக்குக் கிட்ட நிற்க முடியாது." இது தற்போதைய முதியவர். களின் தீர்க்கமான முடிவு. ஆம் இவர்களைப் பொறுத்த வரை தற்போதைய கல்வியின் தரம் மிகவும் குறைந்து விட்டது.
இப்போது பாடசாலை செல்லும் பாலர்கள் 5-6 வயது மட்டும் வட்டமாக அமர்ந்து விளையாடுவதும், படம் கீறுவதுமாகவே காலத்தைக் கழிக்கின்றனர். ஆசிரியர்கள் ஏதாவது படிப்பிக்க முயல்வதோ அல்லது ஏதாவது காரணத்திற்காக பிரம்புதுக்குவதோ கிடையாது. இதே வயதுப்பிள்ளைகள் அந்தக் காலத்தில் அ, ஆ, இ. முடித்தது மட்டுமல்லாது கூட்டல் கழித்தலும் படித்து முடித்திருப்பார்கள். அத்துடன் கவனக்குறைவு என்ற பேரில் உடம்பில் எத்தனையோ விழுப்புண்களையும் தாங்கி இருப்பார்கள். இது கூட சில பெற்றோருக்குத் தரக் குறைவாகவே தெரிகின்றது. ஆனால் இது மனோதத்துவ நிபுணர்களின் பதிந்துரைகளுக்கு ஏற்ப ஏற்பட்டது என்பது இவர்களுக்கு எப்படித் தெரியப் போகின்றது.
இனி இந்தப் பெரியவர்கள் கூறுகின்ற, பதிலும் கொடுத்துக் கேள்வியும் கேட்கின்ற அதாவது multiple choice பரீட்சைமுறை பற்றியும் உயர்கல்வி
‘ஓலை’ - 26 (மே 2004) பக்கம் 14
 
 
 
 
 
 

பற்றியும் பார்ப்போமாயின் கம்யூட்டர் யுகத்தில் வாழும் இன்றைய உலகத்திற்கு 8 பக்கத்தில் கட்டுரை எழுதும் திறமை எதற்கு? அத்தோடு ஒரு போட்டிப் பரீட்சையில் multiple choice போல மாணாக்கர்களின் திறமையை வேறுபடுத்தி அறிய வேறு ஒரு நுட்பமான முறை கிடையாதென்பதைக் கல்வி வல்லுனர்கள் நன்கறிவர். அத்தோடு பெரிய கட்டுரைகளுக்குப்புள்ளி போடும் போது ஆசிரியர்களின் விருப்பு வெறுப்போடு அவரின் திறமையும் அதனைப் பாதிக்கும். போட்டி மிகக்கூடி ரியூசன் முறை உருவாகி அங்கு விடைகள் உரித்த வாழைப்பழம் போல் கொடுக்கப்படுவதால், சொந்த முயற்சியினால் பிரச்சினைக்குத் தீர்வுகாணும் திறன் சற்றுப் பாதிக்கப்பட்டிருக்கின்றது என்பது உண்மையே. எனினும் அவர்களின் படிப்பு, தகைமை என்பவற்றின் தரம் முன்போடு ஒப்பிடும் போது கூடி இருக்கின்றது என்பதுதான் உண்மை.
எல்லோரையும் பொதுவாகப் பாதிக்கின்ற சினிமாப் பாடல் என்பவற்றை இப்போது பார்ப்போமாயின் அறுபதுகளில் விஸ்வநாதன் - ராமமூர்த்தியின் இசையில் ரி.எம்.எஸ், பி.சுசீலா பாடிய பொன்னான பாடல்கள் வந்த காலத்திலேயே "இது என்ன பாட்டு?அந்தக் காலத்தில் தியாகராஜ பாகவதர், பி.யு.சின்னப்பா பாட்டெல்லவோ பாட்டு" என்ற விமர்சனங்கள் பொதுவாகக் கேட்கக் கூடியதொன்று. அந்தக் காலம் போய் இளையராஜா பாலசுப்பிரமணியம் சித்திரா யுகம் வந்த போதும் அதே பல்லவிதான். ஆனால் இப்போது ஒப்பிட்டது விஸ்வநாதன், ரி.எம்.எஸ். ஆனால் பின்பு வந்தவர்கள் தேசிய அளவில் கூடிய பிரபல்யமும் விருதுகளும் பெற்றார்கள் என்பதுதான் உண்மை.
ஏ.ஆர்.ரகுமான் வந்த போது "இவர் கம்யூட்டரை வைத்துக் கொண்டு மியூஸிக் போடுகிறார் கனகாலம் நிலைக்கமாட்டார்" என்று பலபல விமர்சனங்கள். ஆனால் பத்து வருடங்களுக்கு மேலாக இந்தித் திரைப்படம் உட்பட அகில இந்திய இசையமைப்பாளராக இவர் வெற்றி நடை போடுவது யாவரும் அறிந்த விடயம். உலகளாவியரீதியிலும் இவர் சில குறிப்பிடத்தக்க நிகழ்ச்சிகளை நடத்துகின்றார் என்பது பெருமைப்பட வேண்டிய விடயம். எனவே சினிமாப் பாட்டு விடயத்திலும் இவர்களின் கருத்து அடிபட்டுப் போகிறது. ·
சினிமாவை எடுத்துக் கொண்டால் தொழில்நுட்ப உதவியுடன் சினிமாப் பட உலகம் மிகவும் முன்னேறியுள்ளது. ஒரு வருடத்திற்கு பத்துப் பதினைந்து படங்கள் வெளிவந்த அந்தக் காலத்துடன் ஒப்பிடுகையில் நூற்றியைம்பது இருநூறு படங்கள் இப்போது வெளிவருவதாலும், பணம் சம்பாதிக்க இது ஒரு இலகுவான முறை என எண்ணிப் பத்து பதினைந்து இலட்சங்களுடன் சிலர் படம் தயாரிக்க வந்து விடுவதாலும் சில மோசமான படங்கள் வருவது
பக்கம் 15 “ක්‍රීවරුන6p” - ඉ6 C (8up 2OO4 D

Page 10
உண்மையேயெனினும் பொதுவாகத் தமிழ்த் திரைப்பட உலகம் முன்னேறி. யுள்ளது. முன்னைய காலத்தில் நல்ல கதையம்சம் உள்ள படங்கள் வெளிவந்தன என்பது உண்மையே எனினும் ஒரு படத்தின் தரம் நடிகன் நடிகைகளைக் கொண்டே எடை போடப்பட்டது. ஆனால் இப்போது இயக்குநர் முக்கிய இடத்தைப் பெறுவது குறிப்பிடத்தக்கது. தொழில்நுட்பம் சினிமா வளர்ச்சிக்கு குறிப்பாக ஒளிப்பதிவிற்கும் நல்ல துணை புரிந்துள்ளது. பாலசந்தர், கமலகாசன், மணிரத்தினம், ஏ.ஆர்.ரகுமான் போன்றவர்களின் வருகை அகில இந்தியாவிலேயே தமிழ்த் திரைப்பட உலகை ஒரு உன்னதமான இடத்திற்கு இட்டுச் சென்றுள்ளது.
எழுபது எண்பதுகளில் சிறப்பு மிக்க கர்நாடக சங்கீதத்தை ரசிப்பவர்களின் தொகை குறைந்து இருந்தது. சினிமா பொப் இசையிலேயே அவர்களின் மோகம் அப்போதிருந்தது. சென்னையில் மார்கழி மாதம் நடைபெறும் இசைவிழாவில் காலி நாற்காலிகள் நிரம்பியிருக்கும். ஆனால் தொண்ணுறுக்குப் பின் இந்நிலை மாறி இத்துறை புத்துயிர் பெற்றுள்ளது. பல இளைஞர்கள் இத்துறையில் பிரபல்யம் பெற்றதோடு, இதனை ஆர்வத்தோடு ரசிப்பவர்கள் தொகை மிகவும் கூடிவிட்டது. ஐம்பத்திரண்டு சபாக்களில் இசைவிழா இப்போது இடம்பெற்றாலும் எல்லா இடமும் இப்போது நிரம்பி வழியும். முன் வரிசையில் இருந்து இளைஞர்கள் ரசிப்பதைச் சர்வசாதாரணமாகக் காணலாம். இதற்கு ஒரு சில துக்கடாக்கள் போலில்லாமல் இப்போது பெரும்பாலும் தமிழிலேயே இசைவிழா இடம்பெறுவதும் ஒரு காரணமாக இருக்கலாம். எப்படியாயினும் பெரும் வளர்ச்சியடைந்து வருவது மகிழ்ச்சியான விடயம்.
இனி இப்போது தயாரிக்கப்படும் பொருட்களின் தரம் பற்றிச் சற்றுப் பார்ப்போம். "முன்னைய தயாரிப்புகளெல்லாம் மிகவும் தரமிக்கவை. நின்று உழைக்கக கூடியன. இப்போதெல்லாம் அப்படியில்லை. தரம் மிகவும் குறைந்து விட்டது"இது இவர்களின் குற்றச்சாட்டு. இப்போதைய பொருட்கள் முன்பு போல அதிக நாட்கள் நீடித்து உழைப்பதில்லை என்பது உண்மைதான் எனினும் இது தரக்குறைவு ஆகாது. ஏனெனில் இது வேண்டுமென்றே ஒரு சில காரணங்களுக்காக அறிமுகப்படுத்தப்பட்டது. தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஈடுகொடுக்கவேண்டி உள்ளது. தொழிலாளர்களின் வேலைவாய்ப்பு போன்றவையே அவற்றில் சில. கம்யூட்டர்கள் இதற்குச் சிறந்த உதாரணம் கூறலாம். வாகனம் போன்றவற்றை எடுத்துக் கொண்டால் இருபது முப்பது வருடங்கள் அவை நின்று உழைக்குமானால் புதுப்புது மொடல்களில் இப்போது வருவது போல நீங்கள் பவனி வருவதுதான் எங்ங்னம்? இதில் ஈடுபட்டிருக்கும் தொழிலாளர்களின் வேலை வாய்ப்புத்தான் என்னாவது?
βρ6O)6υ - 96 ((5ιρ9Oος ) பக்கம் 16

இனி உணர்ச்சிபூர்வமான சமையலைப்பற்றிப் பார்ப்போம். அம்மாவின் சமையல் போல் உனது சமையல் நன்றாக இல்லை. என மனைவியிடம் கூறி அவளின் கோபத்துக்கு ஆளாகி இரண்டு நாள் சாப்பாடில்லாமல் எத்தனை பேர் தவித்தார்களோ நாமறியோம். ஆனால் அந்தக் கலந்துரையாடலிலும் கதைக் கப்படும் சாதாரண விடயம் இது. கவலையற்ற இனிமையான இளமைப்பருவத்தில் தாயின் சாதாரண சாப்பாடும் இனிமையாகத் தெரிவதும் குடும்பப் பாரம், வேலை, பதட்டம் என நரக வாழ்க்கை நடத்தும் குடும்பத் தலைவனுக்கு மனைவியின் சாப்பாடும் இளப்பமாகத் தெரிவதும் ஆச்சரியமான விடயம் இல்லைத்தான். இல்லை உண்மையிலேயே அந்த நாளைய சாப்பாடு இப்போதைய சாப்பாட்டை விட நல்லதுதான் என அவர்கள் வாதாடுவது எமக்குக் கேட்கின்றது. அது உண்மையாயின் அது கூட மண் சட்டி, பானை, விறகுச் சமையல் வீட்டில் தயாரிக்கப்பட்ட சரக்குத்துள் வகைகள், Fresh ஆகவே கிடைக்கும் இறைச்சி, மீன் மற்றும் செயற்கை உரம் போடாமல் உருவாக்கிய மரக்கறி போன்றவற்றிலேயே ஒழிய மனைவியின் திறமையினாலல்ல என உறுதியாகக் கூறலாம்.
இதுபோல் ஒழுக்கம், கட்டுப்பாடு, பணிவு போன்ற பல உதாரணங்களை எடுத்து எம்மால் ஆராய முடியும். கட்டுரை மிக நீண்டு வருமென்பதால் இத்துடன் இதை நிறுத்திக் கொள்வோம்.
எல்லாவற்றிலும் தரம் குறைந்துவிட்டது எனக் கூறுபவர்களைப் போல் எல்லாவற்றிலும் தரம் கூடிவிட்டது என்று கூறுவதுதான் இக்கட்டுரையின் நோக்கம் அல்ல. மாறாக உலகம் தொடங்கிய நாளிலிருந்தே அதில் ஏதோவொரு சமநிலை இருந்து வருகின்றது. அந்தச் சமநிலையில் ஒன்று கூடும் போது மற்றையது குறையுமே தவிர ஒட்டுமொத்தமாக எல்லாவற்றிலும் தாம் குறைந்த விடாத என்று தான் கூற விரும்புகின்றேன். இப்போது நாம் காணும் காட்சிகளும் சந்திக்கும் சம்பவங்களும் அதிவேக விஞ்ஞான வளர்ச்சிகளின் விளைவுகளே, நல்லது கெட்டதுநாம் பார்க்கும் பார்வையிலும் தங்கியுள்ளது. புதியன மட்டுமே நல்லது என்ற வாதமோ அல்லது புதியன எல்லாம் படு மோசம் என்ற ஒலமோ உள்ளதை உள்ளபடி பார்க்கும் தன்மையை மறுக்கும் செயல்களாகும். உலகிலே உள்ளதை உள்ளபடி
அறியும் தன்மையே அதிமுக்கியமானதாகும்.
- குணா
e
VI
t
பக்கம் 17 “ඉරාන60' - ඉර ( ශීup 2OO49

Page 11
தமிழறிவோம்
5. IgL - LITLib
புலவர் ஒருவர் நூறு பாடல்கள் எழுதினார். அந்த நூறு பாடல்களையும் பெரும்புலவர் ஒருவரிடம் கொடுத்து மதிப்புரை ஒன்று வேண்டும் என்றார்.
புலவரின் நூறு பாடல்களையும் பெரும்புலவர் ஒரே மூச்சில் படித்துவிட்டார். பெரும்புலவரின் பாராட்டு தமக்குக் கிடைக்கப் போகின்றதெனப் பாடல்கள் எழுதிய புலவர் காத்திருந்தார்.
ஆனால், பெரும்புலவர் பேசியது புலவர்க்கு அதிர்ச்சியாக இருந்தது. இந்த நூறு பாடல்களையும் நானே எழுதினேன். எப்படி உமக்கு இப்பாடல்கள் கிடைத்தன? என்று பெரும்புலவர் கூறினார். அது மட்டும் அல்லாமல் அந்த நூறு பாடல்களையும் அப்படியே சொல்லியும் காட்டிவிட்டார்.
புலவர் எழுதிய நூறு பாடல்களையும் படிக்கும்போதே பெரும்புலவர் மனப்பாடம் செய்துவிட்டார். இதுதான் இங்கு நடந்த குழப்பத்திற்குக் காரணம்.
ஒரே நேரத்தில் பல வேலைகளைக் கவனிக்கக் கூடிய வல்லமை உடையவர்கள் நம்மிடையே உள்ளனர். இவர்களைப் பதின் கவனர்கள் என்றும் நூற்றுக் கவனர்கள் என்றும் அவர்கள் ஒரே நேரத்தில் கவனிக்கக்கூடிய எண்ணிக்கையை வைத்துப் புகழ்வர்.
நூறு பாடல்களை ஒருமுறை படித்த அளவிலேயே மனத்தில் பதித்துக் கொண்டவரும் ஒரே நேரத்தில் நூறு செயல்களில் மனத்தைச் செலுத்திக் கவனித்துக் கொண்டவர்களும் வியப்பிற்குரியவர்களாக நம் கண்ணில் தோன்றுகின்றனர்.
பள்ளிப் பாடல்களை மாணவர்கள் விழுந்து விழுந்து படித்துக் கொண்டிருக்கின்ற காலம் இது. சிலர் குறைந்த நேரம் படித்தே அதிக மதிப்பெண்கள் பெற்று விடுகின்றனர். சிலர் நெடுநேரம் படித்தும் குறைந்த மதிப்பெண்களே பெறுகின்றனர். இவற்றிற்கு என்ன காரணம்?
படிப்பு என்பது படிதல்' என்னும் வினைவழிப் பிறந்தது. ஆற்றிலே மணல் படிகிறது. மலைமேலே முகில்கள் படிகின்றன. மரம் செடி கொடிகளில் புழுதி படிகின்றது.
படிதல்' என்றால் ஒரு பொருள் அப்படியே பிறிதொரு பொருள்மேல் முற்று
'ളഞ്ഞബ്' - ഉ6 (BD ഉoo! ) பக்கம் 18

முழுதாக ஒன்றி விடுவதையே குறிக்கும். 'படிப்பு' என்பதும் அப்படியே ஒன்றித்து நின்று சேர்ந்து கற்பதையே குறிக்கும்.
வயலில் விளைந்த புகையிலையை வெட்டியெடுத்த உழவர்கள் அதன்மீது எடை வைத்துப்படியவைப்பர். இதனைப்படம் பண்ணுதல்' என்றும் பாடம் பண்ணுதல்' என்றும் கூறுவர்.
வளைந்து நெளிந்து இருந்த புகையிலை சமமாகப் படமானதுபோல் அல்லது பாடமானது போல் படிக்கின்ற படிப்பு மனத்தில் படிகிறது. இதுவே மனப்பாடம் என்பது.
மனம் பேராற்றலின் களஞ்சியம். அதற்குரிய கொள்ளளவு இவ்வளவுதான் என்று யாராலும் சொல்ல முடியாது. விருப்பத்துடன் படிக்கப் படிக்க அங்கு படிவது தொடர்ந்து கொண்டே இருக்கும்.
படி, படிப்பு, படம், பாடம் என்பன யாவும் நமக்கு ஆழ்ந்த படிப்பினை தரும் சொற்கள். இந்தச் சொற்களுக்குரிய ஆழ்ந்த பொருளை நாம் உணர்ந்து விட்டால் நாம் பாடம் படிப்பது மிக எளிது. அதனுடன் நம்மால் எல்லோருக்கும் பாடம் புகட்டவும் முடியும்.
-இன்னும் அறிவோம் நன்றி : தமிழறிவோம்' - முனைவர் கு.அரசேந்திரன்
பக்கம் 19 "ളഞ്ഞുണ്' - ഉ6 (ഥ ഉOOl )

Page 12
சங்கப்பலகை
சுகாதாரக் கருத்தரங்கு
25.04.04 ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணிக்கு சங்கரப்பிள்ளை மண்டபத்தில் கல்விக்குழு செயலாளர் திரு.த.சிவஞானரஞ்சன் அவர்களது அறிமுக உரையுடன் சலரோக நோயாளர் பராமரிப்புத் தொடர்பான கருத்தரங்கு நடைபெற்றது. இந்நிகழ்வில் * சலரோகமும் இந்நோய் தொடர்பான சிக்கல்களும்
டாக்டர்.எம்.யோகவிநாயகம்
(சுகாதாரப் பணியகம், கொழும்பு) * நோயாளர் பராமரிப்பு - திரு.கா.வைத்தீஸ்வரன்
(சுகநலக் கல்வியாளர்) * நோயைக்கட்டுப்படுத்துவதில் உணவின் பங்கு
திரு.ஏ.செல்லையா (எஸ்.பி.ஏச்.ஐ) ஆகியோரது கருத்துரையும், சபையோர் கலந்துரையாடலும் இடம் பெற்றது.
திகதி விடயம் நிகழ்த்தியவர்
07.04.2004 'வரம் தரும் பத்தினித் புராணவித்தகர் மு.தியாகராசா
(243) தெய்வம்'
14.04.2004 பதிகமும் உரைபெறு
புராணவித்தகர் மு.தியாகராசா (244) கட்டுரையும்
21.04.2004 கண்ணகி தன் மணவிழாவும்
புராணவித்தகர் மு.தியாகராசா (245) மனையறமும
28.04.2004 உள ஆரோக்கியத்தைத்
(246) | தூண்டும் காரணிகள் திரு.ஆ.இரகுபதிபாலழரீதரன்
‘ஓலை’ - 26 (மே 2004) பக்கம் 20
 

நால்நயம் காண்போம். 05.05.2000இல் ஆரம்பித்து பிரதி வெள்ளிக்கிழமை தோறும் மாலை 5.30மணிக்கு
நடைபெற்று வரும் இந்நிகழ்ச்சியில் இலங்கை எழுத்தாளர்களது நூல்கள் நயம் காணலுக்காக எடுத்தாளப்படுகின்றன.
திகதி விடயம் நிகழ்த்தியவர்
09.04.2004 இலக்கியம் காட்டும் திருமதிசெல்வராணி (131) இலக்கணம் வேதநாயகம்
1ಣ್ಣೂರು அன்பின் பெருமை திருமதி.அ.புவனேஸ்வரி
23.04.2004 உளஆ ரோக்கியத்தில் திரு.கா.வைத்தீஸ்வரன்
(133) உறவுகளின் பங்கு
30.04.2004
(134) தமிழ்ப்புலவர் வரிசை -IV பண்டிதர் சி.அப்புத்துரை
சங்கப்பலகை தயாரிப்பு : சி.சரவணபவன் (துணை நிதிச்செயலாளர்) 竹 =ད།
ஈழத்து எழுத்தாளர்களே! ஈழத்து எழுத்தாளர்களின் நூல் வெளியீடுகளை ஆவணப்படுத்தும் பொருட்டு பின்வரும் விவரங்களை 'ஒலைக்கு அறியத்தருமாறு தயவாய்க் கேட்டுக் கொள்கிறோம். முடியுமானால் அவற்றின் ஐந்து பிரதிகளை அனுப்பி வைத்தால் நூல் நயம் காண்போம்' நிகழ்ச்சியில் சேர்த்துக் கொள்ளப்படும். அதில் இரு பிரதிகளைத் தமிழ்ச்சங்க நூல் நிலையத்திற்குப் பெற்றுக் கொண்டு அதற்கான கொடுப்பனவும் வழங்கப்படும்.
நூலின் பெயர் : நூலின் வகை நூலாசிரியர் பெயர் : நூலாசிரியர் முகவரி: தொலைபேசி
நூல் வெளியீடு நடந்த இடமும் திகதியும்: வெளியீட்டாளர் / பதிப்பகத்தின் பெயர்:
வெளியீட்டாளர் / பதிப்பகத்தின் முகவரி: *= நூலின் விலை : =ل
பக்கம் 21 ‘ஓலை’ 26 (மே 2004)

Page 13
வித்துவான். தமிழ் ஒளி கசெபரத்தினம், B.A.Dip.in.Ed
திமிழ் மொழியானது, உலகிலுள்ள மொழிகளுள் தொன்மையும், செம்மையும், செழுமையும், இனிமையும் கொண்ட மொழியென மொழியியலறிஞர்களால் கொள்ளப்படுகிறது. 'தமிழ்' என்னும் பெயரில் வரும், தமி" என்னும் சொல், தனிமை என்னும் பொருளைக் கொண்டது. அச்சொல் 'ழ்' என்னும் இடையின எழுத்துடன் சேர்ந்து 'தமிழ்' என்றாகி, வேறொரு மொழியிலிருந்தும் தோன்றாமல், தனித்துத் தோன்றிய தொன்மையினைக் கொண்டதென்னும் பொருளைத் தருவதைக் காண்கிறோம்.
இவ்வாறு பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளின் முன் தோன்றிய தமிழ் மொழியை, அறிவிற் சிறந்த சான்றோர்கள் பலர் ஒன்று கூடி ஆராய்ந்து, செம்மையும், செழுமையும், இனிமையும் கொண்ட மொழியாகச் செப்பஞ் செய்துள்ளனர். புலவர்கள் ஒன்று கூடிய கூட்டமானது, 'கூடல்', 'சங்கம்' என்னும் காரணப் பெயர்களால் அழைக்கப்படலாயிற்று. புலவர்களின் 'கூடல்' அல்லது சங்கம் அமைத்த இடம் பாண்டி நாட்டின் மதுரையாகும். மதுரை என்பதற்கு இனிமையான ஊர் என்பது பொருளாகும்.
"முத்தமிழ் தெய்வ சங்கப் பாவலர் வீற்றிருக்கும், பாண்டி நன்னாடு போற்றி" என்றும், "உயர் மதிற் கூடலில் ஆய்ந்த ஒண்திந் தமிழ்" என்றும் கூறப்படும் கூற்றுக்கள் கருத்திற் கொள்ளத்தக்கவை.
சங்கம் இருந்து தமிழாராய்ந்த நல்லியலறிஞர்கள், இனிக்கும் கருத்துக்களைத் தேர்ந்தெடுத்து, இனிக்கும் அழகுகளை அவற்றிற் சேர்த்து, இனிக்கும் சொற்கள் மூலம் படைத்தவையே சங்க இலக்கியங்களெனப் போற்றப்படுகின்றன. இனியவையாகச் சுவைக்கப்படுகின்றன.
தமிழ் மொழியின் தீஞ்சுவையானது. பால், தெளிதேன், பாகு, பருப்பு ஆகியவற்றைக் கலந்து, கிளறி எடுக்கும் போது பெறப்படும் தீஞ்சுவையினை விஞ்சி நிற்பதாக ஒளவைப் பிராட்டியார் கூறியுள்ளார். மாணிக்கவாசக சுவாமிகள் ஒண்தீந்தமிழ்' என்றும், குமர குருபர சுவாமிகள் நறை பழுத்த துறைத் தீந்தமிழின் ஒழுகு நறுஞ் சுவையே" என்றும், தேசிக விநாயகம்பிள்ளை அவர்கள். "தேனிலே ஊறிய செந்தமிழ்' என்றும்,
"3606)' - 26 (8.0 2004) பக்கம் 22
 

சுப்பிரமணிய பாரதியார். தேமதுரத் தமிழ்' என்றும், கரந்தைக் கவியரசு வேங்கடாசலம்பிள்ளை, 'காணார்ந்த தேனே! கற்கண்டே' என்றும், பாரதிதாசன் அவர்கள், தமிழுக்கும் அமுதென்று பேர் என்றும் கூறித்தங்கள் ஆராமையை வெளிப்படுத்தியுள்ளமையையும் காண்கிறோம்.
தமிழ் மொழியின் இனிமையைத் தமிழ்ச் சான்றோர்கள் மட்டுமல்ல ஐரோப்பியச் சான்றோர்கள் பலரும் சுவைத்து மகிழ்ந்ததோடு, தமிழ் வளர்ச்சிப் பணியில் தம்மையும் இணைத்துக் கொண்டதையும் அறிகிறோம். அவர்களுள், தமிழ் -போர்த்துக்கீச அகராதி உட்பட 18 தமிழ் நூல்களின் ஆசிரியரான, தத்துவப் போதகர் என அழைக்கப்பட்ட ராபர்ட் டி நோபிலி, தமிழ்நாட்டில் அச்சிடும் பணியை முதன் முதலில் ஆரம்பித்து வைத்ததோடு, தமிழ் - இலத்தீன் இலக்கணம், தமிழ்-இலத்தீன் அகராதி முதலிய நூல்களை ஆக்கியுதவிய சீசன் பால்கு ஐயர், தமிழ் அகராதி, தமிழ் உரை நடை ஆகியவற்றின் தந்தை எனப் போற்றப்படுபவரும் ஐந்திலக்கணத்தை அழகுற விளக்கும் "தொன்னுரல் விளக்கம்" என்னும் இலக்கண நூலினதும், தேம்பாவணி என்னும் சிறந்ததொரு காவியத்தினதும் ஆசிரியராய் விளங்குபவருமான வீரமாமுனிவர், சங்க நூல்கள், சமய நூல்கள், காவியங்கள், புராணங்கள் முதலியவற்றின் துணை கொண்டு, திருக்குறளுக்கு விளக்கமான விரிவுரை ஒன்றினை ஆங்கிலத்தில் எழுதிய எல்லீஸர், திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்' என்னும் அரியதொரு நூலை ஆக்கி, தமிழ் மொழியானது தொன்மையும், செம்மையும் வாய்ந்த ஓர் உயர்தரச் செம்மொழி என உறுதியுடன் நிலை நாட்டிய கால்ட்டுவெல் ஐயர், திருவாசகம், திருக்குறள், நாலடியார் ஆகிய நூல்களை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து தம்மைத் தமிழ் மாணாக்கன் எனக் கூறிக் கொள்ளுவதில் பெருமையடைந்த போப் ஐயர், புகழ்பெற்ற தமிழ் - ஆங்கில அகராதியைப் பதிப்பித்து வெளியிட்ட உவின்ஸ் லோபாதிரியார் ஆகியோர் குறிப்பிட்டுச் சொல்லப்பட வேண்டியவர்கள்.
சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்த முடியுடை மூவேந்தர்களின் ஆட்சியானது வீழ்ச்சியடைந்து, அந்நியரின் ஆட்சி ஏற்பட்டதால் ஒரளவுபாதிப்படைந்திருந்த தமிழ் வளர்ச்சியானது, பின்னரெழுந்த சோழப் பேரரசர்கள் காலத்திலும், அதனைத் தொடர்ந்துஎழுச்சி பெற்ற பாண்டியப் பேரரசர்களின் காலத்திலும், திரும்பவும் உயர்நிலையடையலாயிற்று. பேரரசர்களின் அவைக்களங்கள் கம்பர், புகழேந்தி, ஒட்டக்கூத்தர் முதலிய புலவர் பெருமக்களின் சங்கங்களாகவும் திகழ்ந்ததால், இலக்கிய, இலக்கண, சமய புராண நூல்களும் காவியங்களும் ஆக்கப்பட்டு தமிழுக்கு சுவையும், வளமும் சேர்க்கப்படலாயின.
தமிழ் நாட்டில் தமிழ் அரசுகள் வீழ்ச்சியடைந்ததைத் தொடர்ந்து, சிங்கை ஆரியச் சக்கரவர்த்திகள் எனும் பட்டப் பெயர் சூடிய அரசர்களால், யாழ்ப்பாணத்தில் நிறுவப்பட்ட தமிழ் அரசு. தமிழ் மொழியைப் பேணி
பக்கம் 23 ‘ஓலை’ - 26 (மே 2004)

Page 14
வளர்க்கும் பணியினைக் கையேற்றமையைக் காண்கிறோம்.பரராசசேகரன், செகராசசேகரன் என்னும் அரசர்கள் கல்வி கேள்விகளிற் சிறந்தவர்களாகவும், புலவர்களை ஆதரித்த புரவலர்களாகவும் விளங்கினர். 'மஞ்சும் அஞ்சும் கைப்பரராசசேகரன்' எனவும், தூயநூல் பன்னு செஞ்சொற் பரராச சேகர மன்னன்' எனவும், இலங்கை வேந்தர் சீரிய பொன் திறையளக்கச் செங்கோலோச்சும் செகராசசேகரன்' எனவும், முத்தமிழ் சேர் செகராசசேகர மன்னன்' எனவும், இவ்விரு மன்னர்களும் போற்றப்படுகின்றனர்.
தமிழ்நாட்டில் நிறுவப்பட்டிருந்த, தமிழ்ச்சங்களுக்குநிகரான தமிழ்ச்சங்கமொன்று மேற்படி மன்னர்களின் காலத்தில் நல்லூருக்கு அணித்தாயுள்ள நாயன்மார்கட்டு என்னும் இடத்தில் அமைக்கப்படலாயிற்று. ஈழத்துப் புலவர். களும், தமிழகத்துப் புலவர்களும் அச்சங்கத்தில் வீற்றிருந்து தமிழாய்ந்தனர். வானநூல், மருத்துவம், அறிவியல், தத்துவம் இலக்கியம், புராணம், பிரபந்தம் ஆகிய துறைகளில் நூல்கள் பல அப்புலவர்களால் ஆக்கப்பட்டதோடு வடமொழி நூல்களும் தமிழாக்கம் செய்யப்பட்டன. அந்நூல்களையும், அரிய பல பழைய நூல்களையும், ஏராளமான ஏட்டுச் சுவடிகளையும் பேணி. வைப்பதற்காக 'சரசுவதிமகாலயம்' என்னும் பெயரில் நூல் நிலையம் ஒன்றும் தமிழ்ச்சங்கம் அமைந்திருந்த மாடிக்கட்டிடத்தில் நிறுவப்பட்டது.
ஆங்கிலேயரின் ஆட்சிக்காலத்திலே, தமிழ்க் கல்வியை ஊக்குவிப்பதற்கும், தமிழ் மொழியைப் பலதுறைகளிலும் வளர்த்துச் செல்லுவதற்கும் தமிழ்ச்சங்கமொன்று நிறுவப்பட வேண்டுமென ஆறுமுக நாவலரவர்கள் விரும்பியிருந்தார். அவருடைய கனவை நனவாக்கிட விழைந்த, நாவலரவர்களின் தமையனார் மகனாரான, திரு.த.கைலாசபிள்ளை அவர்கள் தமிழறிஞர் சிலரின் உதவியுடன் யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கத்தை" 1898 இல் நிறுவினார். இலக்கியம், இலக்கணம், தருக்கம், சமயசாத்திரம், வைத்தியம், சோதிடம், சிற்பம் முதலிய பல துறைகளிலும் தமிழ் மாணாக்கர் பாண்டித்தியம் பெறும் நோக்குடன் பயிற்சி கொடுத்து, பரீட்சைகள் நடத்தி அவர்களுக்கு பாலபண்டிதன், பாரதி, பண்டிதன், புலவன், ஆசிரியன், வித்துவான், கவிராசன், நாவலன் முதலிய பட்டங்களும், விருது முத்திரைகளும், பரிசில்களும் வழங்கப்பட்டன. நாவலரவர்களால் 1858 இல் நிறுவப்பட்ட வித்தியானுபாலன அச்சியந்திரசாலை, மாணாக்கரின் உயர்கல்விக்குரிய பாடநூல்களையும் ஆராய்ச்சிக்குரிய நூல்களையும் அச்சிட்டு உதவி வந்தது.
தமிழ் நாட்டிலே தமிழ் மொழியை உரிய முறையில் வளர்க்க வேண்டு. மென விழைந்த, பாலவனத்தம் ஜமீந்தார் பாண்டித்துரைத் தேவரவர்கள், சான்றோர்கள் சிலரின் துணையுடன் யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கத்தின் வழியிலே நாலாம் தமிழ்ச்சங்கத்தை 1901ஆம் ஆண்டில் மதுரையில் நிறுவினார். அச்சங்கமானது செந்தமிழ்க் கல்லூரி, பாண்டியன் புத்தகசாலை, நூலாராய்ச்சித்துறை, அச்சகம் ஆகிய அங்கங்களைக் கொண்டிருந்தது.
“ඩ්‍රරග60° - 26 (5(D 2OO4...) பக்கம் 24

அச்சங்கம், பண்டிதர், வித்துவான், புலவர், தேர்வுகளை நடத்தி வந்ததோடு, தமிழாராய்ச்சியையும், நூல் வெளியீட்டையும் மேற்கொண்டிருந்தது. 1904இல் வெளிவரத் தொடங்கிய 'செந்தமிழ்' என்னும் சங்க ஏடானது, தமிழக அறிஞர்களதும் ஈழத்து அறிஞர்களதும், ஆராய்ச்சிக் கட்டுரைகளைத் தாங்கிவந்தது. செந்தமிழ் இதழில் வெளிவந்த விபுலாநந்த அடிகளாரின் தொடர் கட்டுரைகள், தொகுக்கப்பட்டு 'மதங்கசூளாமணி என்னும் பெயர் கொண்ட நாடகத் தமிழ் நூலாக மதுரைத் தமிழ்ச்சங்கத்தால் அதன் 51ஆம் பிரசுரமாக 1921ஆம் ஆண்டு வெளியிடப்பட்டமை இங்கு குறிப்பிடத்தக்கது.
மதுரைத் தமிழ்ச்சங்கத்தின் செயற்பாட்டினால் உந்தப்பட்ட தமிழறி. ஞர்கள் சிலர், தஞ்சாவூரிலுள்ள கரந்தை என்னும் இடத்தில் 1911இல் தமிழ்ச்சங்கமொன்றை நிறுவினர். நூல் வெளியீடு, நூலாராய்ச்சி, தமிழ்க்கல்வி முதலிய துறைகளை ஊக்குவித்து வந்த கரந்தைத் தமிழ்ச்சங்கமானது, "தமிழ்ப்பொழில்" என்னும் இதழையும் வெளியிட்டு வந்தது. தமிழ்ப் பொழிலிலும் தமிழ் நாட்டு அறிஞர்களின் ஆராய்ச்சிக் கட்டுரைகளுடன், ஈழத்து அறிஞர்களின் ஆக்கங்களும் வெளிவந்தன. விபுலாநந்த அடிகளா. ரின் யாழ்நூல், கரந்தைத் தமிழ்ச்சங்க வெளியீடாக 1947இல் வெளியிடப்பட்டமை இங்கு குறிப்பிடத்தக்கது.
மரபுவழிக் கல்வியை அரச அங்கீகாரத்துடன் முன்னெடுத்துச் செல்ல விரும்பிய, சுன்னாகம் தி.சதாசிவ ஐயர், சுன்னாகம் அ.குமாரசுவாமிப் புலவர், வித்துவசிரோமணி சி.கணேசையர், சுவாமி ஞானப்பிரகாசர், சுவாமி விபுலாநந்தர் முதலிய ஈழத்துத் தமிழறிஞர்கள், யாழ்ப்பாண ஆரிய திராவிட பாஷாபிவிருத்திச் சங்கத்தை 1921இல் நிறுவினர். இச்சங்கமானது தமிழ் மொழிக் கல்வியை மட்டுமல்ல, வடமொழிக் கல்வியையும் ஊக்குவிக்கும் நோக்குடன், இருமொழிகளிலும் பண்டித வகுப்புகளை நடத்தி பட்டங்களையும் வழங்கி வந்தது. தமிழ் விழாக்களை நடத்தி வந்த மேற்படி சங்கமானது, அறிஞர் பெருமக்களைப் பெருமைப்படுத்தும் முகமாக பட்டமளிப்பு விழாக்களையும் நடத்தி வந்தது. சங்கத்தால் வெளியிடப்பட்ட 'கலாநிதி என்னும் இதழில் அறிஞர்களின் ஆக்கங்கள் சிறப்பிடம் பெற்றன.
தமிழ் மொழியின் இனிமையை, இலங்கை மக்கள் அனைவரையும் சுவைத்து மகிழச் செய்யவும், தமிழ் மொழியின் வளர்ச்சியை ஊக்கப்படுத் தவும் விரும்பிய தமிழறிஞர்களின் பெருமுயற்சியினால், இலங்கையின் தலைநகரான கொழும்பில் தமிழ்ச்சங்கமொன்று 1942இல் ஆரம்பிக்கப்படலாயிற்று. தமிழ் மொழித்திறன், தமிழ் மொழி வளர்ச்சி, நூல் வெளியீடு, நூலாராய்ச்சி ஆகிய துறைகளை ஊக்குவித்துவரும், கொழும்புத் தமிழ்ச்சங்க" மானது இலக்கியவிழாக்கள், பெரியார்களின் நினைவுதின விழாக்கள், பட்டிமன்றங்கள், கவியரங்குகள், இயல், இசை, நாடகம் சார்ந்த போட்டிகள்எனப் பல்வேறு செயற்பாடுகள் மூலம் தமிழ்ப் பணியாற்றி வருகிறது.
பக்கம் 25 “3606' - 26 C (8.0 2004)

Page 15
சங்கத்தின் ஓர் அங்கமான நூல் நிலையமானது தமிழ் மொழி அறிவை மேம்படுத்த முனையும் மாணாக்கருக்கும், பல்வேறு துறைகளில் ஆராய்ச்சி மேற்கொண்டு நூல் வெளியீட்டில் ஈடுபடும் அறிஞர்களுக்கும், பயன்தரு நூல்கள் பலவற்றையும் கொண்டுள்ளமை வரவேற்புக்குரிய ஓர் அம்சமாகும்.
கொழும்புத் தமிழ்ச்சங்கம் வெளியிட்டுதவியுள்ள நூல்களுள்ள இரண்டு நூல்களையிட்டு இங்கு குறிப்பிடுவது பொருத்தமானது. சங்கம் ஆற்றிவரும் தமிழ்ப்பணிகளை விளக்கும் பதச் சோறாக அமையுமென நினைக்கிறேன்.
புத்தளம் கற்பிட்டியைச் சேர்ந்த சைமன் - காசிச்செட்டி என்னும் அறிஞரால் ஆங்கில மொழியில் எழுதப்பட்டு 1859 இல் வெளியிடப்பட்ட தமிழ் புளுட்டாக்" என்னும் நூலே, தமிழ்ப் புலவர் வரலாறு தொடர்பாக இலங்கையில் எழுந்த முதல் நூலாகும். 202 தமிழ்ப் புலவர்களின் வரலாற்றைச் சுருக்கமாக விளக்கும் மேற்படி நூலைத் தழுவியும், புதுக்கியும், விரித்தும் யாழ்ப்பாணம் - நவாலியைச் சேர்ந்த ஆர்ணல்ட் - சதாசிவம் பிள்ளை என்னும் அறிஞா தமிழில் எழுதிய "பாவலர் சரித்திர தீபகம்' என்னும் நூல், தமிழ்ப்புலவர் வரலாற்றைக் கூறுவதற்காக இலங்கையில் வெளியிடப்பட்ட முதலாவது தமிழ் நூலாகக் கொள்ளப்படுகிறது. 1886 இல் வெளியிடப்பட்ட மேற்படி நூலில் 411 தமிழ்ப் புலவர்களின் வரலாறு கூறப்படுகிறது. சிறப்புமிக்க மேற்படி நூலானது தற்போது கிடைத்தற்கரிதாகி விட்டதால், அதனை, கலாநிதி பொபூலோகசிங்கம் அவர்களது. பயனும் விரிவுங் கொண்ட ஆராய்ச்சிக் குறிப்புகளுடன் மீள்பதிப்புச் செய்து, பாகம் பாகமாக வெளியிடவிழைந்த கொழும்புத் தமிழ்ச்சங்கமானது, இரண்டு பாகங்களை வெளியிட்டுள்ளது. முதலாம் பாகம் 1975ஆம் ஆண்டிலும், இரண்டாம் பாகம் 1979ஆம் ஆண்டிலும் வெளியிடப்பட்டுள்ளமை, கொழும்புத் தமிழ்ச்சங்கம் தமிழ் மொழிக்கு காலத்தினாற் செய்த நன்றியாகவே கொள்ளப்படுகிறது.
அவ்வாறே, புலவர்மணி இலக்கியக்கலாநிதி ஏ.பெரியதம்பிப்பிள்ளை அவர்களின் நூற்றாண்டு தொடர்பாக, "தமிழ் தந்த புலவர் மணி" என்னும் அரிய தொருநூலை, புலவர் மணி அவர்களின் மகனாரும், தமிழ்ச்சங்கத் துணைத்தலைவர்களில் ஒருவருமான, பெ.விஜயரத்தினம் அவர்களைக் கொண்டு, 1998 இல் தொகுத்து வெளியிட்டுள்ள கொழும்புத் தமிழ்ச்சங்கத்தின் பணியும், பாராட்டுக்குரியதே.
தமிழ் மொழியைப் பலதுறைகளிலும் வளர்த்தெடுக்கும் சீரிய பணியில், கடந்த அறுபது ஆண்டுகளாக அயராது உழைத்துவரும் தமிழ்ச்சங்கம், தனது வைரவிழாவைக் கொண்டாடும் இவ்வேளையில் அதனை மனம் நிறைய வாழ்த்துவோமாக, தமிழ் மொழிக்கு வளஞ்சேர்க்கும் அதன் பணி மென்மேலும் விரிவடைந்து சிறந்திட இறையருளை இறைஞ்சுவோமாக.
&
“ஓலை’ - 26 (மே 2004) பக்கம் 26

எஸ்.செல்வகுமார், திருகோணமலை.
குளிர்காற்று வேகமாய் வந்தவன் முகத்தில் நச்'சென்று மோதிச் செல்கிறது. அவன் கரையில் இழுத்துவிடப்பட்டிருந்த உடைந்த படகொன்றின் மீது படுத்தபடி, நீண்டு விரிந்து கிடந்த வான் பரப்பை உற்று நோக்கிக் கொண்டிருந்தான். வானம் அவனது மனதைப் போல வெறுமையாய் காட்சி தந்தது. சூனியமான அந்த வான் பரப்பில் எதையோ தொலைத்தவன் போல் தேடிக் கொண்டிருந்தான். வெறுமையும் வெறுமையும் ஒன்றுடன் ஒன்று நீண்ட நேரமாக மோதிக் கொண்டிருந்தன.
கடல் அலைகள் ஒன்றன்பின் ஒன்றாக கரையைத் தழுவிச் செல்வதும் விலகி ஓடுவதும் மீண்டும் ஒடோடி வந்து தழுவிச் செல்வதுமாய்.
மெல்ல மெல்ல. அவனைச் சுற்றி புறச்சூழலெங்கும் இருள்வந்து ஒட்டிக் கொள்ளவாரம்பிக்கிறது.
அவன் சலனமற்றுக்கிடந்தான்.
அவனது உள்ளடக்கிடக்கையில் கொட்டித் தீர்த்து விடமுடியாமல் நெஞ்சுக் குழிக்குள் சிக்கிக் கொண்டு, மூளைப் பிரதேசமெங்கும் ரீங்காரமிட்டுக் கொண்டிருந்தது அந்தச் செய்தி.
குட்டி செத்துப் போய்விட்டானாம்.
நம்பவே முடியவில்லை!
அவன் இல்லாத தடத்தை நினைத்துக் கூடப் பார்க்க இயலவில்லை.
இந்த உடைந்த படகும், காளிகோயில் வளாக மணற்பரப்பும், மட்டிக்கழி வீதியில் கடற்கரை அருகேகிடக்கும் தென்னை மரக்குற்றியும், கள்ளுவிக்கும் தவறணையின் முன்னாலுள்ள புற்தரையும் இன்னும் பல தடங்களும் அவனை நினைப்பூட்டிக் கொண்டிருந்தன.
குட்டி நீயும் போய்விட்டாயா?
அவன் உள்ளத்துக்குள் கசப்பான அந்த யதார்த்தத்தை ஜீரணிக்க முடியாது தவித்துக் கொண்டிருந்தான்; * :
அவனது சிந்தனைகள் சுற்றிச் சுற்றி ஏதோ ஒரு ஆரம்பத்தைத் தேடிக் கொண்டிருந்தன.
Udébb 27 “ge606)' - 26 C (5up 2004)

Page 16
இனி, குட்டி வரமாட்டான் என்பது முடிவு. அவனுக்குள் அதை ஏற்றுக் கொள்ளும் தருணத்தை இயலாமை பிடுங்கித் தின்று கொண்டிருந்தது.
வான மண்டலத்தை தாண்டி எங்கோ தொலைதூரத்தில் சலனங்களற்ற ஒரு புள்ளியில் விண்மீன்களின் ஒளிப்பிழம்பில் நின்று கொண்டு குட்டி சிரிக்கிறான். அவன் அம்மா, அப்பா, தம்பி, தங்கைகளுக்கு மத்தியில் நின்று கொண்டு குட்டி சிரிக்கிறான்.
இவனது விழியோரங்களில் கண்ணிர் மெல்லிய கோடிழுத்திருந்தது. அது கன்னப் பரப்பல் உருண்டோடி உதடுவரை வந்தும்.
அவனுக்கு உப்புக் கரிக்கவே இல்லை. அந்த உணர்வுகளையும் கடந்தவனாக படகிலிருந்து வெடித்து விரிசல் கண்டிருந்த பலகையில் ஒன்றாக இப்போது இவன். தொண்ணுறாம் ஆண்டில் வெடித்த கோர யுத்தத்தால் வீடு வாசல், தோட்டம், துறவு, சொத்துக்களை இழந்து உயிர் தப்பினால் போதுமென்று இடம் பெயர்ந்து, ஒடி ஒளிந்து, அகதிமுகாம்களில் நெரிசல் பட்டு, கால்வயிறும் அரை வயிறுமாய் அல்லாடி, பாடசாலைகளிலும் கோயில்களிலும் கிடந்தும் எழும்பியுமாக ஆதாரமற்ற வாழ்க்கை வாழுகையில், வயிற்றோட்டமும் வாந்திபேதியும் வாவென்று - அழைத்த போது, 'வரமாட்டேன் போவென்று காலனை விரட்டிவிட்டு கஸ்ரப்பட்டு இழுத்துப்பிடித்த அந்த ஆறு உயிர்களும், அகதிகளாய் தமிழகம் செல்ல படகேறி இடைவழியில் பாரம் கூடியதால் படகு கடலில் தாண்டிட உயிர் நீத்தனவே.
உன் அப்பா, அம்மா, தம்பி, தங்கைகளை காவு கொடுத்திற்று ஒற்றைப் பனைமரமாய் வந்து நின்றாயேடா குட்டி.
இப்ப நீயுமா? பத்து வருட நட்பில் பல தருணங்கள் இருவருக்கிடையிலும் விளக்கம் சொல்லத் தெரியாத ஏதோ ஒரு தூரத்து உறவுக் காரர் குட்டிக்குத் தங்குவதற்கு இடம் தர, இவன் தான் தன்வீட்டிலிருந்து உணவு கொடுத்து பசி போக்கியவன். உருக்குலைந்து மெலிந்த மேனியை மெல்ல மெல்ல இவன் தானே நகர்த்தினான்.
குட்டிக்குத் திருகோணமலையினை அடையாளப்படுத்தியவன் இவன். உள்ளுர் சந்து பொந்துகளையெல்லாம் தெரியப்படுத்தியவன் இவன். உடுக்க ஆடைகளை இரவல் தந்தவன் இவன். அவன் இங்கு தடம் பதிக்க ஆதாரமாகவும் மெல்ல மெல்ல பூமியைப் பிளந்து வேரூன்றவும், ஆகாயம் நோக்கி கிளை பரப்பவும் தட்டிக் கொடுத்தவன் இவன். குட்டிக்காகவும் பரிந்து பேச நாலு நல்ல சனங்களை இனங்காட்டியவன்.
‘ஓலை’. ஒ6 (மே 2004) பக்கம் 28

கோயில் திருவிழாவென்றாலும் சரி முகமூடி தலையாட்டும் ரவுண்டப்பாணாலும் சரி கைகோர்த்தபடி முன்னின்ற தருணங்கள்.
ஆமி அடையாள அட்டை மாற்றம் பெற்ற போது, ஜே.பியையும் "ஜி.எஸ்"சையும் பிடித்து அவனுக்கும் அடையாள அட்டை பெற்றுத் தந்த தருணங்கள்.
துரோகிகளை மண்டையில் போடும் காலங்களில் ஆத்திரம் கொண்ட இராணுவம் . தங்கள் பலவீனத்தை சனங்கள் மீது காட்டிய சந்தர்ப்பத்தில்ெலாம் தெரிந்த சிங்களத்தில் கதைத்து குட்டி மீது சிறு துரும்புகூட படாமல் காத்த தருணங்கள்.
ஆள்கடத்தும் வெள்ளைவேனும், அநியாயமாய்ப் பெடியங்களைப் பிடித்துச் செல்லும் நீல பஸ்சும் ஒடும் காலங்களில், தூக்கம் தொலைந்த இரவுகளில் தங்களுக்கான நிரந்தர விடியல் பற்றி ஏக்கத்துடன் கதைத்த தருணங்கள்.
"வீட்டைப் பொறுப்பா கவனியாது ஊரார் வேலையெல்லாம் செய்து திரிகிறான்" என்று அப்பாவிடம் அயலார் அண்டிவிட குட்டிக்காக இவன் தன் அப்பாவிடம் அடிவாங்கிய தருணங்கள்.
"டேய் மச்சான் அவள் என்னைப்பார்க்கிறாளாடா" "ஆரடா..சரசோ?" "இல்லடா மச்சான். அங்க நடுவில வர்ற பெட்டையடா" "அடேய் உனக்கு விசறேடா? அவங்கள் வேதக்காரர் தெரியுந்தானே? கோப்பரேசன்ல வேலை செய்யிற செபஸ்தியான்ர மகள். அந்தாள் ஒரு பயங்கரக் குடிகாரன்"
"மச்சான் அவளை எனக்குப் பிடிச்சிப் போச்சுதடா. எனக்கு அந்த பிலோமினா தான் வேணும். ஏதாவது வழி சொல்லுடா..?
"கொஞ்சம் அவசரப்படாமநான் சொல்றதக் கேளு. இந்தப் பெட்டையின்ர தாய் செத்துப் போய்ட்டா, அப்பன்காரன் இரண்டாங் கல்யாணம் செய்துக்கிட்டான். அதுக்குப் பிறந்தது மூனும் பெட்டச்சிகள். நாளைக்கு எல்லாப் பொறுப்பும் சுமையும் உன்ர தலைக்குத்தான். அவசரப்படாதடா."
"டேய் எனக்குத்தான் சொந்தமென்று ஒரு நாதியும் கிடையாது. இப்படி என்றாலும் நாலு புது உறவு வரட்டும்டா."
என்று சொன்ன குட்டி, ஒருநாள் இவனுக்கு மட்டும் சொல்லிவிட்டு அவளைக் கூட்டிக் கொண்டோடி விட.
இவன்தான் பெட்டையின் ஆட்களுடன் கதைத்து சேர்த்து வைத்தான்
அதன்பின் குட்டி அவள் வீட்டிலே ஏற்றுக்கொள்ளப்பட்டான்.
பக்கம் 29 “ളഞ്ഞുണ്' - ഉ6 ( 3ഥ ഉOO(l)

Page 17
புது மனைவி, புது உறவுகள். இப்போது குட்டி புது மனிதனானான். இவனைவிட ஒல்லியாய் இருந்த குட்டி, திடுதிப்பென்று உடம்புபிடித்து கன்னங்கள் உப்பி. லட்சணமானான்.
குட்டி கலகலப்பானான். இதுநாள் வரை எங்கோ தொலைத்துவிட்டுத் தேடியலைந்த ஏதோ ஒன்றை மீண்டும் கைப்பற்றி விட்டவ்ன் போல்.
குட்டி மாறிவிட்டான். இப்போது அவன் குடும்பஸ் தன். சிகரட் பிடிப்பதையும், சாராயம் குடிப்பதையும் நிறுத்திக் கொண்டான்.
காளிகோயில் மணல்பரப்பில் ஒரு மாலை நேரத்தில் சந்தித்த வேளையில் குட்டி சொன்னான்
"மச்சான் நான் நல்லாருக்கேன்டா. இப்ப எனக்கென்று ஒரு குடும்பம் இருக்கு. எனக்காக சிரிக்க, எனக்காக அழ. ஒரு அழகான பொஞ்சாதி இருக்கா. இன்னும் கொஞ்ச நாள்ல என்ர வாரிசும் இந்த உலகத்துக்கு வந்திடுவான். மச்சான் எனக்குப் பிறக்கிற பிள்ளைக்கு உன்ர பேரத்தான்டா வைப்பன்."
ஆனால் குட்டிக்கு அடுத்தடுத்துப் பிறந்தது இரண்டும் பெண் குழந்தைகள்.
இவனுடைய இன்பதுன்பங்களிலும், ஏக்கத்திலும், கனவிலும் ஒன்றிப் போயிருந்த குட்டி. ஒருநாள் சொன்னான்.
"மச்சான் நான் ஒருவழியா வாழ்க்கையில செட்டில் ஆயிற்றன். ஆனால் நீ இன்னும் அப்படியே தான்ரா இருக்கே. உன்ர வீட்டில என்னால உனக்கும் கெட்ட பெயர். போன கிழமை உன்ர கொப்பர் என்னைச் சந்திச்சவர். உன்னை வெளில சவுதிக்கு எங்கனையோ அனுப்பக் கேட்டவராமே.நிதான் மாட்டன் எண்டு போட்டியாம். மச்சான் எனக்குத் தெரியும் நீ என்னை விட்டுப் பிரிய ஏலாமத்தான் மறுத்தனியெண்டு. இஞ்ச பார் ரெண்டு வருஷம் தானே. கண்மூடித் திறக்கிறதுக்குள்ள ஒடிப் போயிடும். உன்ர எதிர்காலத்தை நினைச்சிச் சொல்றன். நீ உன்ர அப்பா சொல்றதைக் கேளு."
அன்றைக்குக் குட்டியின் வற்புறுத்தலினால் மனதைக் கல்லாக்கிக் கொண்டு இவன் தன் தகப்பனிடம் சம்மதமாய் தலையசைக்க, அவர் எங்கெங்கோ ஓடி, ஏதேதோ செய்து இரண்டே மாதத்தில் இவனை மத்திய கிழக்கிற்கு விமானம் ஏற்றினார்.
அன்றைக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து வழியனுப்ப வந்தவனை கடைசி கடைசியாய்ப் பார்த்ததுதான். அதன் பின் இவன் குட்டியை பார்க்கவே இல்லை.
‘ஓலை’ - 26 (மே 2004) பக்கம் 30

ஊர் நினைப்புடன் மத்திய கிழக்கில் தொழில் செய்கையில் மாதம் ஒருமுறை தவறாது குட்டி மடல் வரைந்தான். அவனுடைய கிறுக்கல்களில் இவன் ஊர்ப்புதினங்களைத் தெரிந்து கொண்டான். தனக்கு மூன்றாவதாயும் பெண்குழந்தை பிறந்துள்ளதாக எழுதியிருந்தான். இவன் சந்தோஷமாகக் கொஞ்சக் காசு அனுப்பி வைத்தான்.
இப்படியே நகன்ற கடிதத் தொடர்பில் திடீரென்று விரிசல், சில மாதங்களாகக் குட்டியிடமிருந்து கடிதம் இல்லை. இவனும் இரண்டு மூன்று கடிதங்கள். போட்ட பின் நிறுத்திக் கொண்டான். நாடு திரும்பியதும் பேசிக் கொள்ளலாமென்று மூன்று மாதங்கள் விடுமுறை பெற்றுக் கொண்டு மூன்று வருடங்களின் பின் வீடு திரும்பியவனுக்கு அந்த அதிர்ச்சித் தகவல் காத்திருந்தது.
குட்டி செத்துப் போயிட்டானாம். ஊரில் நடந்த ஹர்த்தாலின் போது ஆத்திரம் கொண்ட பொலிசார் ஆநியாயமாய்ச் சுட்டதில் இடையில் அகப்பட்டுக் குட்டி செத்துவிட்டாேெவூறும் இவன் வீட்டில் சொன்னார்கள்.
துடிதுடித்துப் போனான். யாரைக. காணவேண்டுமென்று ஆவலோடு ஓடிவந்தானோ, யாரிடம் தன் மத்திய கிழக்கு அனுபவங்களை, அங்கு அவன் எதிர்கொண்ட கஷ்டங்களையெல்லாம் கொட்டித்தீர்த்து நிம்மதி கொள்ள வேண்டுமென்று நினைத்திருந்தானோ அவன் உயிருடன் இல்லை.
குட்டி செத்துவிட்டான். அவன் சும்மா போய்விடவில்லை. தன் அழகான மனைவியையும் அன்பான மூன்று பெண்குழந்தைகளையும் நட்டாற்றில் விட்டுத்தான் போயிருந்தான்.
குட்டியின் குடிகார மாமனார் குடித்துக் குடித்தே மாண்டு போய்விட்டார். மைத்துணிகள் மூவரும் தாங்களே விரும்பிய வழியில் திருமணம் முடித்துக் கொண்டு ஒதுங்கிக் கொள்ள குட்டியின் விதவை மாமியாரும் மனைவி பிள்ளைகளும் சாப்பாட்டிற்கே வழியற்ற நிலையில் மிகவும் வறுமையான சூழலில் வாழுவதாக சில உதிரித் தகவல்களை அறிந்து கொண்டான்.
யுத்தம் ஒரு குடும்பத்தையே அழித்ததுமட்டுமல்லாமல், பற்றிக் கொண்டு படருவதற்கு எந்தப் பிடிமாணமும் இல்லாத நிலைமையில் ஒரு குடும்பத்தையே தத்தளிக்க விட்டுள்ளது.
ஒன்றா..? இந்த இருபத்தைந்து ஆண்டுகால உரிமைப் போராட்டத்தில் எத்தனையோ விதவைகள். எத்தனையோ அநாதைகள், எத்தனையோ ஊனமுற்றோர். எத்தனையோ நிரந்தர ஏழைகள்.
யுத்தத்தின் எச்சங்களாக இன்னும் பல தடங்கள்.
பக்கம் 31 “ஓலை’ - ஒ6 (மே 2004)

Page 18
புரிந்துணர்வு ஒப்பந்தமும், சமாதான பேச்சுவார்த்தைகளும் குட்டியின் உயிருக்கு உத்தரவாதத்தைத் தரவில்லையே! இந்த நிலை குட்டியுடன் மாறவேண்டும். ஒரு வேளைச் சோற்றுக்கே வழியற்ற நிலையில் எப்பவுமே ஒரு கேள்விக்குறியாக குடும்பத்தை நிர்க்கதிக்குள் விட்டுச் சென்ற குட்டியின் நிலை இனியும் தொடரவே கூடாது. இந்த உயிர்ப்பலியின் கடைசி மனிதனாக குட்டி இருக்க வேண்டும்.
விழியோரங்களில் கண்ணிர்த் துளிகள் உற்பத்தியாகிக் கன்னப்பரப்பில் வழிந்தோடி உதடுவரை சென்று விழுகிறது.
சட்டைப் பொக்கற்றிலிருந்து சிகரட் ஒன்றை எடுத்து உதட்டில் பொருத்தி ஆழமாக இழுத்துநிகோடின் புகையினை உள்வாங்கினான். அது அடிவயிறுவரை சென்று மீளுகையில் ஜிவ்வென்று சூடான ரத்தம் உடலெங்கும் பாய்ந்தோடுவதாய் உணர்கிறான்.
முப்பத்து மூன்று வயதாகிவிட்டது. இவனுடன் ஒத்த பெடியன்களெல்லாம் ஊருக்குள் திருமணம் செய்து கொண்டு இரண்டு மூன்று பிள்ளைகளைப் பெத்துக் கொண்டு இல்லற வாழ்வில் இணைந்து விட்ட நிலையில் இனியும் இவனை விட்டுவைக்க ஏலாதென்று வீட்டில் பெண்பார்த்து விடுமுறையில் வந்தவனுக்குத் திருமண ஒழுங்குகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
இங்கே இவன் தனிமையில். வான மண்டலத்தைத் தாண்டி எங்கோ தொலை தூரத்தில் சலனங்களற்ற ஒரு புள்ளியில் நட்சத்திரங்களின் ஒளிப்பிழம்பில் நின்று கொண்டு குட்டி சிரிக்கிறான். அந்த சிரிப்பில் நம்பிக்கை தெரிகிறது.
பற்றிப் பிடிக்க எந்தப் பிடிமானமும் இல்லாமல் தன் இனிய குடும்பத்தை தவிக்கவிட்டுச் சென்றிருந்தாலும். தனக்கு அடைக்கலம் தந்ததன் நண்பன் தன் குடும்பத்தை கைவிட மாட்டான். அந்த மூன்று துளிர்களும் தளைத்து பெருவிருட்சமாக வளர்ந்து கிளைபரப்பும் வரை இவன் காவலாக இருப்பான் என்ற நம்பிக்கையில் குட்டி சிரிப்பதாகவே நினைக்கிறான்.
தன்னை மறந்து இழுத்து இழுத்து ஊதி ஊதி அவன் விரல்களுக்கு இடையே இதுவரை சிக்குண்டிருந்த அந்தப் புகையிலை சமாச்சாரம் கடைசி கடைசியாய் தன் உயிர்மூச்சை நிறுத்திக் கொள்ள.
இவன் மனம் ஒரு தீர்மானத்திற்கு வந்திருந்தது. எழுந்து நடக்கிறான். தன் வீட்டில் நடைபெறும் திருமண ஒழுங்கை நிறுத்திவிட்டு தன் நண்பன் குட்டியின் குடும்பத்திற்குக் காவலாக பற்றிப்படர ஒரு பிடிமானமாகத் தன்னை ஏற்றுக் கொண்டு நிறைந்த மனதுடன் நடக்கிறான்.
(முற்றும்)
“බ්‍රවරH60' - 26 (5up ඉOO4...) பக்கம் 32

பன்மொழிப்புலவர்.த.கனகரத்தினம்
தமிழின் நெடுங்கணக்கு (albhabets) விநோதமானது. தமிழ் நெடுங்கணக்கில்
உயிர் எழுத்துக்கள் 12. மெய்யெழுத்துக்கள் 18. ஆய்தம் 1. இந்த முப்பத்தொரு எழுத்துக்களும் தமிழின் முதலெழுத்துக்களாம். இவற்றுள் ற,ழ,ன என்ற மூன்றும் தமிழ் மொழியின் சிறப்பெழுத்தென்பர். தமிழின் வழிமொழிகளல்லாத பிறமொழிகளின் கண்ணே இவ்வெழுத்துக்கள் இல்லை. தமிழ் எழுத்துக்கள் முப்பத்தொன்றோயெனினும் தமிழ் ஒலிகள் அவற்றினும் மிக்கு நிற்கின்றன.
அங்கு, பஞ்சு, வண்டு பந்து, பம்பு அன்று என்ற சொற்களை உச்சரித்துப் பாருங்கள், ங், ஞ், ண்,ந்,ம்,ன் என்ற மெல்லெழுத்துக்களுக்குப்பின்னே வந்த கு, சு, டு, து, பு, று என்பவற்றிலுள்ள வல்லெழுத்துக்களெல்லாம். தம் வல்லோசையிழந்து தாமும் மெல்லோசை பெறுகின்றன. காகம், பசித்தான், பதிவு செய்பவன் என்ற சொற்களில் வரும் க, ச,த, பக்கள் தம் ஒசையில் வேறுபடுகின்றன. இதன் காரணமாகத் தமிழின் கண் 40 ஒலிகள் இருக்க அவற்றை வரிவடிவிற் குறிக்க 31 எழுத்துக்களே உளவெனக் கூறுவர். இது தமிழ் மொழிக்கு ஏற்பட்ட ஒரு குறையெனக் கொள்வதும் இல்லை.
தமிழ் உச்சாரணம் - உச்சரிப்புப் பற்றிச் சிந்திப்போமாயின் உச்சாரண பேதங்கள் மூன்றாகும். அவையாவன: எடுத்தல், படுத்தல், நலிதல் என்பனவாம். தமிழ்ச் சொற்களை உச்சரிக்கும் போது பொருள் சிறந்து நிற்கும் பாகத்தின் எழுத்துக்களை எடுத்து உச்சரித்தல் வேண்டும். அயல் எழுத்தைப் படுத்து உச்சரித்தல் வேண்டும். மற்றையவற்றை நலிந்து உச்சரித்தல் வேண்டும். தமிழர்களின் உச்சாரண முறை நாளுக்கு நாள் சிறிது சிறிதாக வேறுபடுவதைக் காண்கின்றோம். ஒலிபரப்புதுறை, ஒளிபரப்புத்துறை, சினிமாத்துறை சார்ந்தவர்கள் விசேட கவனமெடுக்காவிடில் தமிழெழுத்துக்களின் பிறப்பிடங்களும் வேறுபட்டுவிடும். ஆங்கில மொழியில் உச்சரிப்பிற்கு எவ்வளவு கவனம் செலுத்துகிறார்கள் என்பதை நாமும் அறியாமலா இருக்கின்றோம்.
பக்கம் 33 “ge606'-96 C (8.0 2004)

Page 19
மறதி காரணமாகவும் சோம்பல் காரணமாகவும் மக்கள் சொற்களைத் தக்கவாறு உச்சரிக்கத் தவறுகின்றனர். அதன் காரணமாகச் சொற்கள் முன்னையுருவங் குலைந்து சிதைகின்றன. ஐந்து உய்ந்தனன் என்ற சொற்களை உச்சரிக்கையில் சிறிதளவு கஷ்டமிருப்பதால் அவற்றை அஞ்சு, உஞ்சனன் என்று வழங்க முனைகின்றனர்.
இரண்டாவதாகத் தெளிவு கருதியும் உச்சரிப்பு நலம் கருதியும் சில சொற்களை மாற்றி வழங்கியுள்ளனர். உதாரணமாகப் பெண் என்பதைப் பெண்டு என்று ஒர் எழுத்துக் கூட்டியும் நிலம் என்பதை நிலன் என்றும் கலம் என்பதைக் கலன் என்று ஒரெழுத்தைப் பிறிதோர் எழுத்தாக மாற்றியும் உச்சரிக்கின்றனர். இத்தகைய வேறுபாடு அவசியமெனக் கண்டநன்னூலார் இவற்றை மொழியிறுதிப் போலி என இலக்கணம் செய்தனர்.
"மகர விறுதி யறிணைப் பெயரின்
னகரமோ டுறழா நடப்பன வுளவே" எனச் சூத்திரமும் செய்தனர். தெளிவு கருதிச் சில சொற்கள் 'அர் ஏற்றி உச்சரிக்கப்படுகின்றன. உதாரணமாக வண்டு என்பதை 'வண்டர்' எனவும் சுரும்பு என்பதைச் 'சுரும்பர் எனவும் சிறகு என்பதைச் சிறகர் எனவும் உச்சரிக்கின்றனர். அழகு நோக்கியும் பிழைபடக் கருத்துக் கொள்ளாமை நோக்கியும் தமிழ் மக்கள் சொற்களை மாற்றி வழங்குவர். இவை வழக்காறும் பெற்று நிற்கின்றன. இவற்றை ஆராய்ந்தால் இலக்கணம் இல்லை. ஆயினும், இலக்கணமுடையது போல் அடிபட்ட சான்றோரால் தொன்று தொட்டு வழங்கப்பட்டு வருகின்றன. இவற்றையும் இலக்கணப் போலியென இலக்கணகாரர் இலக்கணம் செய்து வைத்துள்ளார்கள். இல் முன் வீட்டின் (முற்பக்கம்), என்பதை எவ்வாறு வழங்குகின்றோம். முன்றில் (முன் + இல்) என்றல்லவா வழங்குகின்றோம். மா + நுனி என்பதை (மரத்தின் நுனி) நுனிமரம் என் வழங்குகின்றோம். நகர் + புறம் என்பதைப் புறநகர் என்கின்றோம். கோட்டை+ புறம் (Pettah) என்பதைப் புறக்கோட்டை என்கின்றோம்.
தமிழ் மக்களது நாகரிக நிலைக்கேற்பத் தமிழும் பண்பாட்டில் முதிர்ச்சி பெற்றுள்ளது. இலக்கணத்தில் வரும் இடக்கரடக்கல், மங்கலம் என்னும் வழக்குகள் தமிழில் நாகரிக நிலை முதிர்ச்சியைக் காட்டுகின்றன. மலங்கழுவி வருதல்-மலவிமோசனம் என்பதைக் கால்கழுவி வருதல் என்றும் பீ என்பதைப் பகரவீ - பவ்வீ என்றும் இடக்கரடக்கலாகப் பேசுகின்றோம். ஆப்பீயை (சாணம்) ஆப்பி என்பதும் இடக்கரடக்கல், செத்தாரைத் துஞ்சினார் என்பதும், ஒலையைத் திருமுகம் என்பதும், இடுகாட்டை நன்காடு என்பதும்,
கறுத்த ஆட்டை வெள்ளாடு என்பதும் மங்கல வழக்காகும்.
&
"ളഞ്ഞുണ്' - ഉ6 (3D ഉ00| ') பக்கம் 34

பத்திரிகையாளரின் தந்தை மறைவு
பிரபல எழுத்தாளரும், பத்திரிகையாளரும் விஜய் சிறுவர் பத்திரிகையின் ஆசிரியருமான சட்டத்தரணி இரா.சடகோபனின் தந்தை இராமன் கதிர்வேல் இராமையா அவர்கள் 28.042004 அதிகாலை காலமானார். இவர்
இறக்கும் போது இவருக்கு வயது 93 ஆகும். அணி னாரின் பூதவுடல பொதுமக்கள் அஞ்சலிக்காக 140/43, சின்னப்புதெனிய, கரஹந்துங்கல, நாவலப்பிட்டியிலுள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டு இன்று (29.04.2004) 11 மணிக்கு நாவலப்பிட்டி பொது மயானத்தில் நல்லடக்கம்
செய்யப்பட்டது. அணினார் தனி மனைவியையும், பத்து பிள்ளைகளையும் விட்டுப் பிரிந்து சென்றுள்ளார்.
த ன் நண்பர்கள், ஆர்வலர்கள் மத்தியில் ஆர்.கே.ஆர். என்று அன்புடன் பேசப்பட்ட ராமன் கதிர்வேல் ராமையா அவர்கள் 1950ஆம் 1960ஆம் தசாப்தங்களில் அவர் வாழ்ந்திருந்த பகுதிகளான நோர்வுட், அதன் பின்னர் நாவலப்பிட்டிக்கு அருகாமையிலுள்ள தொள்ளப்பாகை, மாசிவலைத் தோட்டம் (மொஸ்வில்ல) ஆகிய பகுதிகளில் அவர் செய்த கலைப் பணிகள் காரணமாக நன்கு அறியப்பட்டவராக இருந்தார்.
1940களை அடுத்து வந்த தசாப்தங்களிலேயே மலையகத் தோட்டங்களில் தொழிற்சங்கப்பணிகளும், பிரித்தானிய ஏகாதிபத்தியத்துக்கெதிரான நடவடிக்கைகளும் தீவிரம் அடைந்திருந்தன. நன்கு இறுக்கமாக மூடப்பட்ட இராணுவ முகாம்கள் போல் அமைக்கப்பட்டிருந்த மலையகத் தோட்டங்களுக்குள் வெளியாரும், தொழிற்சங்க பிரதிநிதிகளும் ஊடுருவிச் செல்வது கடினமான செயலாக இருந்தது. ஆதலால் கலை முயற்சிகள், நாடகங்கள். கதாப்பிரசங்கங்கள், கூத்துக்கள் பாட்டுப் பாடுதல் வாயிலாகவே இவற்றுக்கான பிரசாரங்கள் நடைபெற்றன. இத்தகைய பிரசார நடவடிக்கைகளிலும், கலை நிகழ்ச்சிகளை நடத்துவதிலும் திரு.ஆர்.ஜே.ராமையா தீவிரமாக பங்கெடுத்துக் கொண்டார்.
Uக்கம் 35 ‘ஓலை’ - 26 (மே 2004)

Page 20
வெறுமனே கலை நிகழ்ச்சிகளை நிகழ்த்துவது என்பதில் மாத்திரம் நின்று விடாமல் இத்தகைய கலைஞர்களை ஊக்குவித்தல், அரவணைத்து ஆதரவளித்தல் என்பவற்றிலும் மிகுந்த திருப்தியும் உற்சாகமும் கொண்டிருந்தார். அக்காலத்தில் நாடகக் குழுவினர். காமன் கூத்துக்குழுவினர். கதாப்பிரசங்கம் செய்பவர்கள், புராணக்கதைகளை பாராணம் செய்பவர்கள், பாட்டுக்காரர்கள், கவிஞர்கள் முதலானோர் இந்தியாவில் இருந்தே வந்தார்கள். இவ்விதம் வருபவர்கள் தோட்டங்களில் வாரக்கணக்கில் தங்கியிருந்தே தமது கலை நிகழ்ச்சிகளை நடாத்துவார்கள். இவர்களுக்கு தங்குமிட வசதி செய்து கொடுத்து விருந்தளித்து உபசரிப்பதில் பெரிதும் இன்பம் கண்டார் திரு.ஆர்.கே.ராமையா.
இவை தவிர உள்ளுர்க் கலைஞர்களை இணைத்து பாட்டுக் கச்சேரிகள் நடத்துதல், வருடாந்த காமன் விழாவின் போது காமன் கூத்து நடத்துதல் கோயில் திருவிழா, மார்கழிப் பஜனை நிகழ்ச்சி முதலானவற்றை நடத்தியும் ஊக்குவித்தும் வந்தார். ஒய்வு நாட்களில் மாலைப் பொழுதுகளில் இவர் வீட்டிலேயே ஊரார் கூடி பல்வேறு பொது விவகாரங்களின் தொடர்பிலும் விவாதித்து முடிவுகளினை மேற் கொள்வார்கள். அத்தகைய கூட்டங்களின் இறுதியில் கலை நிகழ்ச்சிகள், பாட்டுக் கச்சேரிகளுடனே நிறைவுறும். அக்காலத்தில் பிரசித்தி பெற்ற தென்னிந்திய பாடகராக இருந்த அமரர் வி.சடகோபனின் பாடல்களில் கவரப்பட்டவராக இருந்த திரு.இராமையா கூட்டங்களில் அப்பாடல்களை பாடி ஏனையோரை மகிழ்விக்கவும் தவறுவதில்லை.
1950 களின் பிற்பகுதியிலும், 1960 களிலும் பெருந்தோட்டப் பகுதிகளில் அம்மக்களின் அரசியலுரிமைகளான பிரஜா உரிமையும், வாக்குரிமையும் பறிக்கப்பட்டதன் விளைவாக பல்வேறு இன்னல்களை அனுபவிக்க நேர்ந்தது. அரசியல் நடவடிக்கைகள் மழுங்கடிக்கப்பட்டு தொழிற்சங்க நடவடிக்கைகளே பெரிதும் மேலோங்கியிருந்தன. இ.தொ.கா., செங்கொடிச் சங்கம், தொழிலாளர் தேசிய சங்கம், ஜனநாயக தொழிலாளர் காங்கிரஸ் முதலான தொழிற்சங்கங்கள் போட்டா போட்டியில் தொழிற்சங்க வளர்ப்பிலும், ஆட்சேர்ப்பிலும், மற்றும் தொழிற்சங்க நடவடிக்கைகளிலும் ஈடுபட்டன. திரு.ஆர்.கே.ராமையாவும் இவ்விதம் தொழிற் சங்க நடவடிக்கைகளின் போது தன் காத்திரமான பங்களிப்பைச் செய்யத் தவறவில்லை.
தகவல்: இரா.சடகோபன்.
*ଡ଼60pରd' - ୭6 ($(d ୭୦୦4 ) பக்கம் 36

இலங்கையின் தமிழ் நூல் வெளியீட்டு முயற்சிகள்
கலா விநோதன் கலாபூஷணம் த.சித்தி அமரசிங்கம்
இலங்கையின் தமிழ் நூல் வெளியீட்டு முயற்சிகள் ஒரு நீண்ட வரலாற்றைக் கொண்டதாக இருக்கின்றது. இலங்கையின் தமிழ் நூல் வெளியீட்டு முயற்சிகளை ஆராயப் புகுமுன் தமிழ் நூல் வெளியீட்டு முயற்சியின் தோற்றம் பற்றி நாம் சிறிது அறியவேண்டியது அவசியமென உணர்கிறேன். என்று ஏட்டுச் சுவடிகள் அச்சுவாகனம் ஏறத் தொடங்கியதோ அன்றே இலக்கியப் பரப்பில் நூல் வெளியீட்டு முயற்சியும் முளையிடத் தொடங்கியது.
அச்சு இயந்திரம் கண்டுபிடிக்கப்பட்ட பிறகுதான் உலகத்தின் முதலாவது பத்திரிகை ஐரோப்பாவில் தோன்றியது. அதற்குமுன் காகிதத்தில் சில செய்திகள் கையால் எழுதப்பட்டு சில சமயம் வெளியிடப்பட்டது. உலகத்தின் முதல் பத்திரிகை 1605 ஆம் ஆண்டில் அஸ்திரியாவில் வெளிவந்தது. (உலகப் பத்திரிகையின் தோற்றமும் வளர்ச்சியும். மணிமேகலைப் பிரசுரம்) ஆனால் இந்த ஆண்டிற்கு முன்பே தமிழ் அச்சேறியது.
1958ஆம் ஆண்டுகல்கி தீபாவளிமலரில் தவத்திரு தனிநாயகம் அடிகளார் எழுதிய கட்டுரையில்.
"1554ஆம் ஆண்டு போத்துக்கல் தலைநகரமாகிய லிஸ்பன் மாநகரிலே முதல் தமிழ் நூல் அச்சேறியது. இந்நூலில் தமிழ் ஒலிவடிவைக் குறிப்பதற்கு தமிழ் வரிவடிவைக் கையாளாது உரோம எழுத்துக்களே கையாளப்பட்டுள்ளது. இந்நூல் மூன்றாவது சுவாம் என்னும் போத்துக்கல் மன்னனின் ஆணைப்படி அச்சிடப்பட்டது.
இந்திய நாட்டில் முதலில் அச்சுக் கண்ட தமிழ் நூல் 1577 ஆம் ஆண்டு கொல்லத்தில் அச்சிடப்பெற்றது. இந்நூல் 16 பக்கங்களைக் கொண்ட "தம்பிரான் வணக்கம்" என்னும் தலைப்பைப் பெற்றதாகும். இந்நூலை இயற்றியவர்கள் போர்த்துக்கல் நாட்டைச் சேர்ந்த சுவாமி என்றிக்ஸ் என்பவரும் தமிழ்நாட்டைச் சேர்ந்த சுவாமி மனுவேல் என்பவருமாவார்.
தென் இந்தியாவில் முதல் முதல் அச்சிடப் பெற்ற நூல் "பிலசந்தோரும்" (Flos Sanctoram) என்னும் நூலாகும். இது 1586 ஆம் ஆண்டு அச்சிடப்பட்டது. (கலைமுகம் ஆடி, புரட்டாதி 95)
பக்கம் 37 ‘ஓலை’ - 26 (மே 2004)

Page 21
இந்திய மொழிகளிலே முதல் அச்சுக் கண்ட மொழியாகும் பெருமை தமிழ் மொழிக்கே உரியதாகும்.
தமிழகத்தில் கி.பி.பதினாறாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தமிழ் நூல் அச்சு ஏறியபோதும் ஈழநாட்டிலே கி.பி.பதினெட்டாம் நூற்றாண்டின் நடுப்பகுதியிலேதான் தமிழ் மொழி அச்சேறியதென்பது அறியக்கிடக்கின்றது.
தமிழ் மொழிக்கும் இலக்கியத்திற்கும் அச்சியந்திரம் ஆற்றிய தொண்டு மதிப்பிடற்கரியது.
ஈழத்தின் இலக்கிய பரப்பை பலர் பலவாறாகப் பிரித்தபோதும் ஈழத்தின் தமிழ் இலக்கிய வளர்ச்சி பற்றி எழுதிய கலாநிதி.க.செ.நடராசா அவர்கள் இலக்கியம் எழுந்த 14ஆம் 18ஆம் நூற்றாண்டு காலகட்டத்தை ஆரியச் சக்கரவர்த்தி காலம் (கி.பி. 1250-1621) போர்த்துக்கேயர் காலம் (கி.பி.1621- 1658) ஒல்லாந்தர் காலம் (கி.பி. 1658-1786) என மூன்று பிரிவாகப் பிரித்துள்ளார். இந்தக் காலகட்டத்தில் வெளிவந்த நூல்கள் அனைத்தும் செய்யுள் வடிவமைக்கப்பட்ட சோதிட வைத்திய வரலாற்று நூல்களாகவே உள்ளன.
1310 ஆம் ஆண்டுக்கு முன் இலக்கியங்கள் பற்றிக் கூறப்படாமை அக்காலங்களில் இலக்கியங்கள் தோன்றவில்லை என்பதல்ல. அன்று தோன்றிய இலக்கியங்கள் ஏதோவொரு காரணநிமித்தம் ஆய்வுக்குக் கிடைக்கவில்லை என்பதே காரணம்.
பதின்னான்காம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இருந்து ஆரம்பித்த ஈழத்தின் இலக்கிய நூல்களின் எழுச்சியின் வளர்ச்சி 17ம் 19ம் நூற்றாண்டுகளிலே அன்னிய பிரவேசத்தால் அவர்கள் ஆட்சி வலுப்பெற்றிருந்த நிலையிலும் கூட, குறைந்திடவில்லை. மங்கிடவில்லை. அந்தக் காலகட்டத்திலே தமிழ் மொழியின் மேல் பற்றுக் கொண்ட பாவலராலும் புலவர்களின் முயற்சியாலும் மேலும் வளர்ந்ததேயன்றிக் குறைந்துவிடவில்லை. அன்னியர் ஆட்சிக் காலத்தில்தான் மற்றைய காலங்களை விட பிரபந்தவகை இலக்கியங்கள் வளர்ச்சிகண்டுள்ளன.
பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதிப்பகுதியில்தான் இந்தப் போக்கில் மாற்றம் காணப்பட்டது. இந்த மாற்றத்தை உண்டாக்கியது ஈழத்தின் முதல் நாவல் என்று கருதப்படும் காவலப்பன் கதையும், சித்திலெப்பையின் அசன்பே என்ற நாவலும், எஸ்.இன்னாசித்தம்பியின் ஊசோன் பாலந்தைக் கதையுமாகும். இந்த நாவல்கள் கூட இலங்கையை மையமாகக் கொண்டவையல்ல. அன்னியதேசத்தின் கதைகளைத் தழுவியனவாகவே காணப்படுகின்றன.
பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதிப்பகுதிவரை பெரிய அளவில் தமிழ் நூல்கள் வந்ததாக அறியமுடியவில்லை. இந்தக் காலத்தின் பின்பே தமிழ் நூல்கள் எழுதும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாகத் தெரியவருகின்றது.
''ඉ6GöÜ” – 26 (ශීup 2OO4 D பக்கம் 38

ஈழமண்ணைக் களமாகக் கொண்ட முதல் நாவல் என்ற சிறப்பு 1902இல் இன்பவதிக்கே உரியது. இதனை அடுத்து 1904இல் கமலாவதி 1905ஆம் ஆண்டில் வெளிவந்த வீரயசிங்கன் கதை அல்லது சன்மார்க்க ஐயம் 1914ஆம் ஆண்டில் மங்களநாயகம் தம்மையாவின் நொறுங்குண்ட இதயம் ஆகும். இதன்பின் நாட்டின் பலபாகங்களில் இருந்தும் நூல்கள் வெளிவரத் தொடங்கின.
இதுவரை ஈழத்தின் நூல் வெளியீட்டில் வெளிவந்த நூல்களையும் அதன் காலப்பகுதிகளையும் நூல்களின் தன்மையையும் முழுமையாகப் பார்க்க முடியாவிட்டாலும் முடிந்த வரை தந்துள்ளேன். இனி இந்நூல்களின் வெளியீட்டில் முனைவர்களையும் நூல் சந்தைப்படுத்தலில் உள்ள சங்கடங்களையும் எழுத்தாளர்களை ஊக்குவிப்பதாகக் கூறும் போலிகளையும் அரசதிணைக்களங்களின் அசமந்தப் போக்குகளையும் சிறிது ஆராய்வோமாயின் எமது கட்டுரையின் நோக்கம் பூர்த்தியடையும் எனக் கருதுகின்றேன்.
பதின்னான்காம் நூற்றாண்டில் இருந்து பதினெட்டாம் நூற்றாண்டுவரை அதற்கும் மேலும் 19ஆம் நூற்றாண்டின் அன்னிய பிரவேசத்தின் போதும் நூல்கள் வெளியீடு பற்றியும் முன்பு கூறியிருந்தேன். இதன் நடுப்பகுதியில் இருந்து நூல் வெளியீட்டு முயற்சியில் அச்சகங்கள் முன்னின்று உழைத்தன. உதாரணமாக ஆசீர்வாத அச்சகம், பூரீலங்காபுத்தகசாலை, சுப்பிரமணியம்புத்தகசாலை, குகன் அச்சகம், மெய்கண்டான் அச்சகம் இப்படிப் பலவற்றைக் குறிப்பிடலாம்.
இதையடுத்து அரசியல் கட்சிகளின் செயற்பாட்டு விளக்க வெளியீடுகள் சினிமா மெட்டிலான கட்சிப்பாடல்கள் என்பன அவ்வவ் கட்சியால் வெளியிடப்பட்டன. இயக்க வளர்ச்சியின் வெளிப்பாடுகள் இயக்கங்களால் வெளியிடப்பட்டன. சமயம் சார்ந்த நூல்கள் சமய நிறுவனங்களால் வெளியிடப்பட்டன. இதற்கு மத்தியில் தனிப்பட்ட வெளியீட்டு நிறுவனங்கள் உதாரணமாக உதயன் வெளியீடுகள், ஈழத்து இலக்கியச்சோலை, வரதர் பதிப்பகம், அகிலம் பதிப்பகம், ஞானம் பதிப்பகம், அன்பு வெளியீட்டகம், ரக்ஷானா வெளியீட்டகம், மீரா பதிப்பகம், நந்திப்பதிப்பகம், சிவகாமி அம்மாள் பதிப்பகம், மூன்றாவது மனிதன் பதிப்பகம், அருள் வெளியீட்டகம், அம்மா பதிப்பகம், நிலாப்பதிப்பகம் இப்படி இன்னும் பல பதிப்பகங்களைக் கூறலாம். கட்டுரையின் பக்கங்கள் கருதி இத்துடன் இதை நிறுத்திக் கொள்கின்றேன்.
இதுவரை நாம் நூல் வெளியீட்டு முயற்சியில் 14ஆம் நூற்றாண்டில் இருந்து 18ஆம் நூற்றாண்டின் இடைப்பட்ட காலத்தில் தோன்றிய நூல்களான பிரபந்த வகைகள் பற்றியும் 19ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் எழுந்த நாவல்கள் பற்றியும் அதன் தொடர்பான வெளியீடுகள் பற்றியும் அதோடு ஒத்த வெளியீடான சிறுகதைத் தொகுப்புகளையும் பார்த்தோம். இதனை அடுத்து இந்த நூல் வெளியீட்டில் முன்னின்று உழைத்தோரைப்பற்றியும் வெளியீட்டாளரைப்பற்றியும் பார்த்தோம். இதில் ஒன்றை ஆராய மறந்துவிட்டோம்.
பக்கம் 39 ‘ஓலை’ - 26 (மே 2004)

Page 22
அன்றைய பாடசாலை மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு மிகவும் உறுதுணையாக இருந்த வெளியீடுகளை நாம் மறந்தோம். சிந்திக்கவில்லை. இலங்கை சுதந்திரம் அடையும் வரை அதன் பின் சிலகாலங்கள் கூட எம் மாணவர்களின் கல்வி வளர்ச்சியில் பிற நாட்டு நூல்களே வழக்கில் இருந்தன. தமிழ் நூல்களைப் பொறுத்தவரை இந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டில் இருந்து வந்த நூல்களும் ஆங்கில நூல்களை நோக்கும்போது அமெரிக்கா இங்கிலாந்து இந்தியா போன்றநாடுகளில் இருந்துவந்த நூல்களுமே அரசோச்சின. இருபதாம் நூற்றாண்டின் நடுப்பகுதியிலேயே இந்த நிலை மாறத் தொடங்கியது.
இந்த நிலைமாற்றத்திற்கு முன் நின்று உழைத்த அச்சகத்தாரையும் வெளியீட்டாளரையும் நாம் நன்றியுடன் நினைவுகூருவது அவசியமே. முற்று முழுக்க கூறமுடியாவிட்டாலும் எமக்குக் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் சிலவற்றையாவதுநினைவுகூருவது நாம் அன்னாருக்குச் செய்யும் கைமாறாகக் கருதுகின்றேன்.
1946 ஆம் ஆண்டில் இருந்தே இந்த தேசிய நூல் வெளியீடு ஆரம்பமாகியிருக்க வேண்டும் என எண்ணவேண்டியுள்ளது.
இந்த ஆண்டில் தான் யாழ்ப்பாணம் சைவ பரிபாலன சபை பிரசுரமாக பாலபாடம் புத்தகத்தை வெளியிட்டது. ஒவ்வொரு வகுப்பிற்கும் முதலாம் பாடம் இரண்டாம் பாடம் மூன்றாம் பாடம் என்று வெளியிடப்பட்டது. எமக்குக் கிடைத்த ஐந்தாம் பால பாடம் பதினெட்டாம் பதிப்பாகும் இது சைவப்பிரகாச யந்திரசாலையில் அச்சிடப்பட்டது.
இதையடுத்து சுதர்சன் வெளியீட்டினுடாக பல வெளியீடுகள் வெளிவந்திருக்கின்றன. 1948ஆம் ஆண்டு சுதர்சன் வெளியீடாக ஒளவையார் அருளிய வாக்குண்டாம் வெளியிடப்பட்டது. இதில் ஒரு விசேசம் என்னவென்றால் இதன் காரியாலயம் திருவனந்தபுரத்திலும் யாழ்ப்பாணத்திலும் அமைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
1951இல் கொழும்பு கோட்டை குமாரவிதியில் அமைந்திருந்த கொழும்பு அப்போதிக்கரீஸ் கம்பெனி லிமிற்றட் பிரசுரித்து வெளியிட்ட "புதிய சரித்திர வாசகம்" இதன் ஆங்கில நூலாசிரியர் கொழும்பு அரசினர் ஆசிரியர் பயிற்சிக் கழக அதிபர் எஸ்.எவ்.த.சில்வா பீ.ஏ.அவர்கள். இதனைத் தமிழாக்கம் செய்தவர் இலங்கைக் கல்விப் பகுதித் தமிழ்ப் பாட நூல் மொழிபெயர்ப்பாளர் முக.கணபதிப்பிள்ளை ஆவார்.
1952இல் தெல்லிப்பளையில் இருந்து அமெரிக்கன் சிலோன் மிசன் அச்சகத்தால் வெளியிடப்பட்ட நூல் தமிழ்வாசகம். இது எட்டாம் பதிப்பு. 4000 பிரதிகள் மொத்தம் வெளியிடப்பட்ட பிரதிகள் 22500. இது The Union Series of School text Book என்ற தொடரில் வெளிவந்த மூன்றாவது புத்தகம் இது இலங்கைப் பாடப்புத்தகக் குழுவால் அங்கீகரிக்கப்பட்டது.
'66ు' - 26 (Bup 2004) பக்கம் 40

இதே ஆண்டில் ஏப்பிரல் மாதம் கொழும்பு டாம் தெரு 111ஆம் இலக்கத்தில் இருந்த பூரிலங்கா பப்ளிஷிங் கொம்பனி அரசினர் பயிற்சிக் கல்லூரி அதிபர் எஸ்.எவ்.டி சில்வா எழுதிய "இலங்கை சரித்திரமும் உலக சரித்திரமும் என்ற நூலை வெளியிட்டது. இதில் முதலாம் பாகம் இலங்கை சரித்திரம் 224 பக்கங்கள். இரண்டாம் பாகம் உலகசரித்திரம் 304 பக்கங்கள். இதன் விலை ரூபா 3.00
1953இல் முன்பு குறிப்பிடப்பட்ட கொழும்பு அப்போதிக்கரீஸ் கம்பெனி லிமிற்றட் பேராசிரியர் எஸ்.ஏ.பேக்மன் M.A.Fr.His ஜிஸி மென்டிஸி BA Phd ஆகியோர் எழுதிய "நம் முன்னோரளித்த அருஞ்செல்வம்."முதலாம் இரண்டாம் பாகம். இதனை மொழிபெயர்த்தவர் நவாலியூர் சோ.நடராஜன்.
சென்னை முத்தியாலுப் பேட்டை உயர்கலாசாலை தமிழாசிரியர் வித்துவான் மா.இராசமாணிக்கம் B.OL அவர்களால் எழுதப்பட்ட "பொற்காலத் தமிழ் இலக்கணம் என்ற நூல் 1954இல் யாழ்ப்பாணம் ம.வஸ்தியாம்பிள்ளை அன் சன்ஸ் நிறுவனத்தால் வெளியிடப்பட்டது. ஆனால் இது ஆரம்பத்தில் "சென்னை கே.பளனியாண்டிப் பிள்ளை அன் கோ" வால் 1932 இல் அச்சிடப்பட்டது அதன் பின் இது பதினான்கு பதிப்புகளைக் கண்டுள்ளது.
இதுபோன்று இன்னும் பல அமைப்புகள் இத்துறையில் பங்குகொண்டுள்ளன. எனவே இதை இத்துடன் நிறுத்தி இலங்கை நூல் வெளியீட்டில் தனியார் முயற்சியில் ஏற்படும் இடற்பாடுகள் குறித்து சிறிது பார்த்து கட்டுரையை முடிவு செய்வது நலம் எனக் கருதுகின்றேன்.
ஒரு அச்சகத்தாரின் ஒத்துழைப்பின்றி ஒரு நூலை வெளியீடு செய்வதென்பது முடியாத காரியம். பொதுவாக ஒரு அச்சகத்தாருக்கு ஒரு நூலை வெளியிட்டு வரும் லாபத்தை விட துண்டுப்பிரசுரங்களையும் மரண அறிவித்தல்களையும் அச்சடிப்பதில் அதிக லாபம் மட்டுமன்றி அந்த வேலை முடிந்த மறுவினாடியே கையில் காசு. ஆனால் ஒரு நூலை வெளியீடு செய்வதில் பொருள் செலவு அதிகமாவது மட்டுமன்றி விரயம் அதிகமாவதும் பலநாட்கள் கடினமாக உழைக்க வேண்டியும் இருக்கும். சிலசமயங்களில் எவ்வளவோ சிரமமெடுத்து ஒரு நூலை அச்சடித்துக் கொடுத்த போதும் அந்த நூலுக்குரிய பணம் முழுமையாகக் கிடைக்க பல மாதங்கள் ஏன் சில சமயங்களில் வருடங்கள் கூட ஆகலாம். சில வேளை பதிப்பாளர் பிரசுரிப்பாளரை வலைபோட்டுத் தேடிப்பிடிக்க வேண்டியும் ஏற்படலாம்.
அதே நேரம் சில படைப்பாளிகளும் சில அச்சகத்தாரிடம் வசமாக மாட்டிவிட்டால் அந்த அச்சகத்தாரிடமிருந்து அந்த நூலை அச்சடித்து எடுப்பதில் போதும் போதும் என்றாகிவிடும். அப்படியொரு அனுபவம் எனக்கு ஏற்பட்டது. ஒரு நூலை அச்சகத்தாரிடம் கொடுத்துவிட்டு அதை வெளிக்கொணர சரியாக ஒருவருடம் எடுத்தது.
பக்கம் 41 ‘ஓலை’ - 26 (மே 2004)

Page 23
எனவே இருதரப்பாரும் ஒருவரை ஒருவர் புரிந்து அது அதற்குக் கொடுக்கவேண்டிய மதிப்பையும் மரியாதையும் கொடுக்கும் போதுதான் ஒரு சுமூகமான வெளியீட்டை செய்து கொள்ளலாம்.
வெளியீட்டின் போது அந்த நிகழ்வுக்காக அழைக்கப்பட்ட பிரதம விருந்தினர்கள் அதிதிகள் ஆகியோரின் ஏனோ தானோய் போக்காலும் நேரம் தாழ்த்தி சமூகம் அளிப்பதினாலும் வெளியீட்டாளர்கள் மட்டுமன்றி இலக்கிய இரசிகர்களின் இலக்கிய ஆர்வத்தையும் வெகுவாகப் பாதித்து விடுகின்றது. இதை கெளரவ இலக்கியப் பெருந்தலைகள் சிறிதளவிலேனும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
இலங்கை எழுத்தாளர்களையும் படைப்புகளையும் ஊக்கிவிப்பதாகக் கூறிவந்த கல்வி அமைச்சுக்களும் கலாச்சார அமைச்சுக்களும் அண்மைக் காலங்களில் எதிர்மாறாகவே செயல்பட்டு வருவதனைக் காணக்கூடியதாக இருக்கிறது.
கல்வி அமைச்சுக்களில் ஒரு காலத்தில் ஈழத்து எழுத்தாளர்களின் நூல்களை போதிய அளவு வாங்கி ஊக்கிவித்ததை நாம் மறக்க முடியாது. ஆனால் இன்று கதிரை மாறும் போது ஈழத்து எழுத்தாளர்களின் நூல்கள் வாங்கப் பணம் மிகவும் குறைவாகவே இருப்பதாகக் கூறிக்கொண்டு இந்திய நூல்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வாங்கிக் குவிக்கின்றார்கள். இந்தச் செயற்பாட்டால் பாதிக்கப்படுபவர்கள் யார், என் இந்த அதிகார திமிர். சோளியன் குடுமி சும்மா ஆடாதென்பார்கள்.
ஒருகாலத்தில் எந்தவித கழிவுமின்றி நூல்களைக் கொள்வனவு செய்து உள்ளூர்ப் படைப்பாளிகளுக்கு உறுதுணையாய் இருந்த இந்துக்கலாச்சார அமைச்சு அண்மைக்காலமாக நூல் கொள்வனவில் எந்தப் படைப்பாளிகளை ஊக்குவித்ததோ அதே படைப்பாளிகளின் உதிரத்தை கழிவு என்ற போர்வையில் உறிஞ்சத் தொடங்கியது. அரசாங்கத்துக்கு இந்தக் கழிவுவிடயங்கள் தெரிய வேண்டிய அவசியம் இருந்திருக்காது. ஆனால் அரசாங்கத்துக்கு மிச்சம் பிடித்துக்காட்டுவதாக முனைந்த முகவர்களே இதற்குக் காரணமாக இருக்க வேண்டும் என்று எண்ணத் தோன்றுகின்றது.
மொத்தத்தில் நம்மவரே நமக்கு விரோதிகள். கடைகளுக்குக் கழிவோடு சந்தைப்படுத்தக் கொடுக்கும் நூல்களோ விற்பனையின்றித் துரங்கிக் கிடப்பதைக் காண வேதனைதான். ஒருமுறை ஒரு வெளியீட்டாளர் என்னோடு உரையாடும் போது ஒரு பதிப்பில் 350 பிரதிகளுக்கு மேல் விற்பது கடினமாகவே இருப்பதாகக் கூறியிருந்தார்.
இதனால்தானோ என்னவோ சிலவெளியீட்டாளர்கள் தங்கள் வெளியீடுகளை 250 அல்லது 300 பிரதிகளோடு நிறுத்திக் கொள்கின்றார்கள்.
''බූ60)60' - ඉ6 ((Bup ඉOO4 ) பக்கம் 42

விடுதலையைப் பற்றியும் சுதந்திரத்தைப் பற்றியும் பேசும் நம்மவர் சுதந்திரத்தை தட்டில் வைத்துக் கொடுத்தாலும் சுதந்திரமாக வாழவேமாட்டார்கள். அவர்களுக்கு அந்நியோன்ய மோகத்தை விட மனமே இல்லை. உடையில், உரையாடலில், வாசிப்பில் உணவில் இப்படி எல்லாவற்றிலுமே அடிமைகளாகவே இருக்கிறார்கள். காலம் காலமாக இந்தியக் குப்பைகளை வாசித்துப் பார்த்துப் பழகிய இவர்கள் இலகுவில் அதில் இருந்து மீள்வதென்பது கடினம்தான்.
இவ்வளவு போராட்டத்துக்கு மத்தியிலும் ஒரு சிலர் துணிந்து செயலாற்றுவது போற்றக்கூடியது மட்டுமன்றி அவர்களை உற்சாகப்படுத்தி உறுதுணையாக நிற்கவேண்டியது எமது ஒவ்வொரு இலக்கிய வாசகர்களின் கடமையாகும். இந்த சூழலில்நமது இலக்கிய பணியை நாம் எப்படி முன் எடுத்துச் செல்வது என்று சிறிது சிந்தித்தோமானால் அது வருங்கால இலக்கிய வளர்ச்சிக்கு உதவியாக இருக்கும் என எண்ணுகின்றேன்.
அகில இலங்கை ரீதியாக உள்ள படைப்பாளிகள் நூறு பேர் தங்களுக்குள் ஒற்றுமையின் அடிப்டையில் ஏற்றத்தாழ்வு மனப்பான்மை மறந்து தங்கள் நூல்களைப் பரிமாற்றம் செய்யும் போது சந்தைப்படுத்தும் சிக்கலில் இருந்து விடுபடுவது மட்டுமன்றி நூல்கள் பரவலாக்கப்படுவதற்கும் வாய்ப்பு உருவாகும் என்பது நிச்சயம்.
ஒரு வெளியீட்டாளர் தனது படைப்பில் பத்துப்பிரதிகளை மற்றய பிரதேச படைப்பாளிகளுக்கு அனுப்பி அதன் பெறுமதிக்கு அனுப்பியவர்களிடமிருந்து அவர்களது நூல்களைப் பெறுவாரேயானால் இதனுடாக அவரது ஆதரவாளர் ஒருவருக்கு அவரின் நூலின் பத்துப் பிரதிகளை விற்கும் வாய்ப்பு உண்டாக்கிக் கொள்கின்றார். அந்த வகையில் எங்களுக்கு ஒரு இருநூறு ஆதவராளர்கள் இருந்தால் போதுமானதே. இவர்களை முதலாகக் கொண்டே எமது சகல வெளியீடுகளையும் நாம் சந்தைப்படுத்திக் கொள்ளலாம். அதுமட்டுமன்றி எமது சந்தைப்படுத்தலில் நாம் எந்தப் புத்தகக் கடைகளையும் எதிர்பார்க்கவேண்டியதில்லை. விரும்பின் அவர்கள் எங்கள் படைப்புக்களை முற்பணம் கொடுத்து வாங்கி விற்பனை செய்யட்டும்.
இதில் ஒரு சிக்கல் உண்டு. பரிமாற்றம் செய்யப்படும் போது கழிவு பெறுவதிலும் வழங்குவதிலும் பரஸ்பர ஒருமைப்பாடு இருக்கவேண்டும்.
முடிந்தவரை என் அனுபவங்கள் கற்றுத் தந்தவற்றை வெளிப்படையாகக் கூறியுள்ளேன்.
S
பக்கம் 43 “ge,06)' - 26 C (5up 2004)

Page 24
> தவறாமல் எனக்கு "ஓலை" கிடைக்கச் செய்து வருவது குறித்து மிகவும் நன்றியுடையேன். ஒலையின் படிப்படியான வளர்ச்சியினை என்னால் நன்கு உணரமுடிகிறது. தங்கள் சீரிய பணி தொடர நல்ல இதயங்களின் ஆதரவு தொடர்ந்து கிடைக்குமென்பதில் சிறிதும் ஐயமில்லை.
மென்மேலும் "ஒலை" வளர்ந்து ஒரு சிறந்த கலை, இலக்கிய சமூக இதழாக வளம் பெற எனது உளம் நிறைந்த வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்.
சேனையூர்-06 அ.அச்சுதன்
முதுரர் 23.04.2004
> ஒலை 23ல் தமிழ்மணி அகளங்கன் எழுதியுள்ள தமிழை வளர்ப்போம் தமிழராய்த் தலைநிமிர்வோம்' என்னும் கட்டுரை மிகப் பயனுள்ளதொரு கட்டுரை. தமிழ் மொழியின் சிறப்பியல்புகளை அற்புதமாக எடுத்துக் காட்டியுள்ளார். தமிழ் கற்கும் மாணவர்களுக்கு பெரிதும் பயன் அளிக்கக் கூடியவகையில் அமைந்துள்ளது. 6J 6060Tu மொழிகளிளல்லாத பல சிறப்புகள் துல்லியமாக காட்டப்பட்டுள்ளன. ஒலையில் இடம்பெறும் சகல விடயங்களும் மிக அருமையாகவுள்ளன. 'விளைச்சல்'குறுங்காவியம் மட்டக்களப்புப் பேச்சு வழக்கின் சிறப்பைக் காட்டி நிற்கின்றது. ஆசிரியருக்கும் பாராட்டுக்கள். ஒலை மேலும் செழித்து வளர வாழ்த்துக்கள்.
22, திசவீரசிங்கம் சதுக்கம் எஸ்.எதிர்மன்னசிங்கம் எல்லை வீதி, மட்டக்களப்பு
தொ. 065/2226357
27.04.2004
‘ஓலை’. 26 (மே 2004) பக்கம் 44
 

தமிழ்ச் சங்கத்தின் குரலாய் தரணி எங்கும் ஒலிக்க
ஒலை ஓயாமல் 6) III
வளர எம் இதயம் கனிந்த வாழ்த்துக்கள் !
Filöih 566 enGuilh
உருத்திரா மாவத்தை
வெள்ளவத்தை y R Signanapuf: 2361381 座 57)\\ ഗു{്ട