கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: நோக்கு 1970.04

Page 1
நோக்கு
பாவினில் புதுமை செய்யவல்ல பாவலரை அழைக்கின் ருேம் செய்யுட் களத்தில் சேர்ந்து பணியாற்றுங்கள். புதியன படைத்து 'நோக் கிற்கு அளியுங்கள். ஈழத்தில் புதியதொரு பாமரபைப் பரிசோதனை முறையில் ஏற்றி அமைத்து நிறுவ எல்
லோரும் முயல்வோம். கூறும் பொருள் என்னவாயமையினும்
பாநலத்தைப் பெருநலமாகக் கொண்டு உழைக்கும் ஒர் அணியி னர் நம்மிடை தோன்ற வேண்டும். தோன்றின் எடுத்த பொருள்
இன்னும் நலம் பெறுமல்லவா ?
அமைப்பது எம் நோக்கம், இத்தொண்டிற்கு உங்களின் அடுத்த
நோக்கு இதழை ஈழப் பாவலர் ' சொற்பணி" யாக
சொற்பணியை நல்குங்கள்.
செய்யுட்களம் 149/3 காலி வீதி, கொழும்பு-4.
செய்யுட்களத்துக்காக 129, செட்டித்தெருவில் வசிக்கும் ஆதி, கறுப்பையா
அவர்களால், ஆனந்தா அச்சகம் 82/3. ஆட்டுப்பட்டித் தெரு, கொழும்பு-13ல் அச்சிடப்பெற்று வெளியிடப்பட்டது.
 
 

Tij;ಡಾ.
1513)ii) LT JS
.
. . . . . . .

Page 2
செய்யுட்களத்தின் புதுமைப் பா ஏடு
இதழ் அவை
அப்துல் காதர் லெப்பை, இ. அம்பிகையான் | g. இக்பால், வி. கி. இராஜதுரை, வி. எம். இஸ்மாயில், எஸ். ஏரம்பமூர்த்தி, கு. கணபதிப் பிள்ளை, கே. கணேஷ், செ. கதிர்காமநாதன், சி. கனகசூரியம், சி. குமரன், வே. குமாரசாமி, மு. சடாட்சரன், பா. சத்தியசீலன், க. இ சரவணமுத்து, சரவண சிதம்பரநாதன், தி. சிவசாமி, இ. சிவானந்தன், மு. க. சூரியன், சில்லையூர் செல்வராசன், Fl JT Goggu TFT, செ. து. தெட்சணுமூர்த்தி, நீலாவணன், எம். ஏ. நுஃமான், சக்தீ பாலையா, அ. வி. மயில்
வாகனன், மஹாகவி, எம். ஏ. யூ. லெப்பை, ஆ. லோகேஸ்வரன், சி. விநாசித்தம்பி, என். வீரமணி ஐயர், செ. வேலாயுதபிள்ளை.
தொகுப்பாளர் :
இ. இரத்தினம் - இ. முருகையன்
தனிப்பிரதி: விலை ரூபா. 1-25.
rublished by
SEYYUD KALAM
149/3, Galle Road, Colombo-4.

நோக்கு ,
1970.
நோக்கு என்ற புதுமைப்பா ஏட்டை மீண்டும் தொடங்கி
நடத்துவதற்கு முன்வந்துள்ளோம் சென்ற கால அனுபவப் படிப்பினைகள் சரியான நெறியிற் செல்வதில் நமக்குத் துணை நிற்கும்.
கவிதை என்பது ஒரு சிலரின் ஈடுபாட்டுக்கு மட்டுமே உரியது என்று பலர் நினைக்கிருர்கள். அவ்வாறு நினைப்பதற்கு இடமளிப்பது எமது இன்றைய பண்பாட்டுச் சூழ்நிலை. இந்தச் சூழ்நிலை மாறல் வேண்டும். பாவைப் படைப்பதும், பாவை நயப் பதும் பரந்துபட்டதொரு செயற்பாடாக விரிதல் ஒரு சமுதாயத் தின் மனநலத்துக்கு இன்றியமையாதது; மனநலத்தின்-சால் பின்-எடுத்துக்காட்டும் அதுதான்.
女 2. 事
இன்று நம்மிடையே பல்வேறுபட்ட கவிஞர்களைப்
பார்க்கின்ருேம்.
எழுதத் தொடங்கி, முயன்று முன்னேறிக் கொண்டிருக் கும் கவிஞர் ஒரு வகை.
அவ்வாறு முன்னேறி, ஒரு குறிப்பிட்ட தரத்தினை எய்தி விட்டோம் என்ற திருப்தியோடு இடையிடையே கவிதைகளை எழுதியும், வெளியிட்டும் வருவோர் மற்ருெரு வகையினர்.
ஈழம், தமிழகம், உலகம் என விரிந்து செல்லும் நோக்கு விசாலத்துடன், கவிதைக் கலையின் எல்லைகளைத் தொட்டு அப் பாற் செல்ல முனையும் கலைமுகத்து முனைவர்கள் வேறும் சிலர்.
இவ்வாறன சகலரையும் அரவணைத்து, முன்செல்லும் நோக்கமுடையது நமது பா ஏடு, இவ்விதழில் வந்துள்ள பாக்க
ளைப் படிப்பவர்கள் இவ்வுண்மையை நன்கு உணர்வர்.
முருகையன்.

Page 3
வாழ்க்கை யாத்திரை
தேனுறு பாயுந் தேவருலகென்றேத்தி
நானுச்சிறப்பும் நவின் றுரைத்த சேனதிராயன் பாத தூளிபதிந்து
தானத்தமிழிசைக்குங் கோவைதனில், ஆனவென் றெழுத்தறி விச்சைதந்த -
ஆசான் அல்வாய்க் கணபதிதன் பேனமுனை மரபு வந்த பேதையேனும்
புன்பாப் பாடலுற்றேன்.
நிறக்குழம்புந் தூரிகையு நீரழையும் பாலர் இறையளவு மிசையாத கோடிழுக்குமியல்பால் பறப்பனவு மூர்வனவும் பரமன்றன் படைப்பேபோல் கறந்திட நாடினுங் கடிவரோ கனிவுடையோரே.
ஆதலா லியாண்டு மழிவிலாத் தமிழில் ஏதமி லின்மொழி ஏற்கு நற்பாவால் பாதமாமலரினைப் பரவி யேத் திடுமோர் காதலாற் பாடலுற்றேன் கடைக் கணிப்பீரையா,
காரேறு முதூரும் கழனியின் சூழலும் கண்ணுறு யார்க்குங் கவருங் காட்சியும் நல்லை நாவலன் நாட்டு புகழினில் நனிநிலைத் தோங்கிய நலம்பெறு கழகம் ஏட்டுடன் வருமகார் பாட்டினில் படிப்பினுஞ் சாட்டைப் புளியங் கம்புடைக் கிழவர் மிதியடியேறி யூன்றுகோல் தாங்கிக் கொய்தேயுடுத்த வெண்டுகி லலைய நல்லூர் வேலனில் நற்கதிபோகிய கதிரை வேலரின் கடுநடைக் காட்சியும், பின்னர்,
பாதிரிப் பள்ளியில் பயின்ற காலையில் இயேசுவடியான் இளையதம்பி யாசான் அலகினிற் சாடிப் பலமுறை புகட்டிய இலக்கணச் சுருக்கமு மிலக்கியத் தென்றலும் உறுதியிற் படிதலின் உரங்கொண்டேகி,
سسے 2 سسست

சென்று சம்யோன் சீர்சால் கழக மன்றினிற் சீவரத்தின மவன் பின் அகலா அன்புடை ஆசா னவன்முன் கடவுள் சுப்பிர மணியனுங் கருத்தொடு தமிழினையூட்டிய தகவுடைக் காட்சியும், அதன்பின் அறிவியற் கணிதமும் அதனே டுளவியல் பாலுஞ் சின்னுட் பிரிந்து இலக்கிய வழியின் இன்பங் காண்பான் பண்டித மணிபாற் பல்லிரவெல்லாங் கரந்து கற்ற சிரந்தாழ் காட்சியும், ஆண்டுகள் அகன்றபின் ஆழ் கலை மரபின் அழக சுந்தர தேகிகன் மலரடி சேர்ந்து கற்றும் கலாநிதி யாசான் கணபதிப் பிள்ளையின் கருத்திலெழுந்தே உற்ற நாடகம் உணர்வுடனுடியும், கருணுலய பாண்டியனர் கழகம் அருளோ டிருந்தே யறம் பல கற்றும் இருணிங்கிய காலை இலங்கை விட்டேகி, சென்னை சென் றடைந்து சேதுப்பிள்ளையும் வையா புரியுந் தேபோமீயும் வரதராசரும் வளமுடைப் பெரியோர் வளர்த்த வளம்பெறு தமிழ்ச்சுனையாடி ஈராண்டானபின் இலங்கையின் றலைநகர்ப் பேர்சால் சங்கம் பெரிய தம்பிப்பேரான் தலைவனுகவும் தவத்திரு சுவாமிகள் காப்பினில் நண்பன் சோவுமியானும் தொடக்கியாற்றிய தோமறு காட்சியும்
மூன்ருண்டாக மூண்ட நல்லார்வம் தூண்டிய வழியே உருேயல் விட்டுப் புத்தளஞ் சிலாபம் பொலநறு வையென எட்டாக் காடும் மட்டுமா நகரும் அலைந்துலைந் தாடினும் ஆவல் மீதூர அருந்தமிழ்ப் பாப்பல ஆர்வுடன் சேர்த்தே ஆங்கொரு சங்கத் தளித்தநற் காட்சியும்
பின்னர்,
சுதந்திர நாட்டில் சுயமொழிக்கலையே
உவந்ததென்ருேதி உத்தமக் கலைஞர் வித்தைகள் எவையும் விரைவில் அமைந்திடல்
- 3 -

Page 4
அவற்றிற்காய அருஞ்சொற் கோவைகள் ஆங்கிலத் திருந்தே அரிதிற் பெற்றுப் பல்கலை யிலக்கியம் பைந்தமிழாக்கியும் சரவை தூக்கியும் சார்புநூ லெழுதியும் புதியசொல்லாக்கமும் பொன்னைய வள்ளல் புகுதுணையாகப் பெற்றவதனல் பள்ளி தொடக்கம் பல்கலைக் கழக மாணவ ரியாவரும் மகிழ்ந்து பற்றிடப் படைப்புப் பலப்பல படைத்தநற் பாங்கும், அதா அன்று, பொறியியல் மருத்துவம் பொதுளிய கலைநூல் அறிமுறை செய்முறை யாவையு மறிந்தாங் கழகிய ஆட்சிகள் இசைவுறவமைய உயர்துறையிலக்கியம் உணர்த்து முறையும் பாடநூல் யாவும் பாலரும் பயில இயற்றி யதன் பின் இலங்கையிற் கல்வி நூற்ருண்டாயதும் அதற்கொரு மலரும் இதம்பட இயற்றிய அமைச்சிற்குதவியே வேலாயுதனெடு வெளியிட்டனமால்,
இனி,
எற்றிற் கிவையென வெமக்கோ ரெண்ணம் இற்றைச் சின்னுள் எழுந்து மோதுமால் அகிம்சாமூர்த்தியின் அறிவுரை அலைகளும் அணுக் கதிர் வீச்சில் எழுந்தடி அலைகளும் தம்முள் தாமுற வெம்வயின் மோதி எமக்கெழுமலைப்பில் இலைக்கா காகறின் தசுக்கோ வாவொடு தீன்சிங் கிலேரியும் ஆம் சுருேங் கத்திரின் அவரொடுகொலின்சும் கோளயாத்தின்ர கொண்டவிப் புதுயுகம் ஆக்கச் சொல்லுடன் அமைதலு முண்டுகொல், யாண்டு செல்கின்ருேம் ஆண்டவனருளே! ஆதலால், அறிதுயிலயரும் முறையறி பெரியோய் அரிதிற் பெற்ற அமலனின் படைப்பிது வறிதே விரயம் சிறிதெனுமாற்ருது, ஒல்லையில் விரைக வெல்லுக பெரிதே.
- "கோவைவாணன் ?
ܚ- 4 ܡ=ܗܝ

சுவாமி விவேகானந்தர்
பாரதஞ் செய்தவொரு மாபெருந் தவமதாற் பகருங் கல் கத்தா வினில் பண்பொழுகு புகழ்விசுவ தாததத் தருமவரின் பாரிபுவ னேசு வரியும் தூரணஞ் செய்தவொரு தூய்மைசெறி நற்றவஞ் சூழ்ந்தமிகு பேற்றின் விளைவால் துன்னுமா யிரத்தெணுாற் றறுபத்து மூன்றினிற் சொன்ன தை பன்னி ரண்டில் தாரண னெனத்தகும் நரேந்திரன் நாம்மார் நாயகன் விவேகா னந்தர் நாடுமிரு ள கலவொரு நவிலொளி யிலங்கவே நல்லவொரு பரிதி யெனவே பாரதத் தைப்பற்றி நின்றதளை யன்றறப் பண்பற்ற இழிவு குறையப் பயனற்ற சாதிமத பாகுபா டுகள்கெடப் பாங்குடன் தோன்றி ஞரே!
சிறுவயதி லிறைவேட்கை கொண்டவோர் பத்தனய்ச் சீரார்பல் கலைகள் கற்றுத் திகழ்கின்ற நூற்கடலி னழந்த னைக் காஒணச் சிந்தித்த கர்ம யோகி; சிறிராம கிருஷ்ணபர மஹம்சரின் சீரான சீடன யமைந்த சீலன்; திருநிறையும் மேனடு கள்சென்று பிரசங்கத் தித்திக்கச் செய்த சிங்கம்: M உறுமிவரு மெதிரிகளை வாதங்க ளால் வென்ற உலகவித யத்தி னுெளியாய் உற்றவிடு தலைக்கென்ற உயரியநன் னேக்குடன் உரியவித் திட்ட யோகி; மறுவற்ற பாரதத் தின் பெருமை மலிசின்னம்; மாசற்ற மலைவி ளக்காம்; மாட்சியுறு நம்விவே கானந்த சுவாமியை மாண்பினே டுன்னு வோமே!
- முருகசூரியன்

Page 5
விந்தை
அளப்பரிதா யகண்ட்மா யகில மெல்லாம் ஆட்டிவைக்கு மருட்சக்தி யான நீதான் வளப்பமுட னுலகமெல்லாம் மன்னி யோங்க வழங்குதலால் மக்களொரு கோடி தோன்றக் கிளத்துமவர் சமுதாயத் தாற்ற லெல்லாங் கிஞ்சித்தும் போதாமை யதனுல் நீருமுன் வளர்த்தருளுஞ் சிற்றுயிர்க டாமு மாற்றல் வழங்கினவா லுலகியங்கி வாழ்தற் கென்றே.
இவ்வாறே யுலகதனி லெவற்றி னுக்கும் எவ்வகைய சிற்றுயிருஞ் சமமே யாக
எவ்வாறு நீபடைத்தா til @N) Gn 35 o ugrrr! என்பதனை யெண்ணிடுங்கா லிதுவோர் விந்தை அவ்வாறு நீபடைக்கு முலக மீதில் ஆங்கொருவ னெத்தகைநல் லறிஞ னேனும் ஒவ்வாத அலைகடலில் துரும்பு போல ஒன்றுமே செயற்கியலா திதுவோர் விந்தை.
இத்தகைய விந்தைகனியியற்றி யாட்டும் இவ்வுலகிற் பலவுளவா லிவற்றி லெல்லாம் அத்த 1 என்னை மிகப்பெரிய விந்தை யொன்றிங் கதிசயத்தி லாழ்த்தியதா லதையுஞ் சொல்வேன் தத்துதிரை சூழ்கின்ற தரணி முற்றுந் தம்மாலே யியங்குமென வெண்ணி யிங்கே எத்தகைய மனிதர்களு மிறுமாப் புற்ருர் என்ன சொல்வே னிதுபெரிய விந்தைதானே.
- செ. து. தெட்சணுமூர்த்தி.

உழைப் பாளி
மட்டு மலை நிலத்தின் காட்டு நிலை யழித்துத் தோட்டம் வயல் தோப்புக் கண்டான்-பொருள் தேட்டம் தரும் உழைப்புக் கொண்டான்-தன் கூட்டம் முழுதும் மிக வாட்டம் அடைவதிந்த நாட்டின் வளம் கருதி என்ருன்-தாய் நாட்டின் வறுமையினைக் கொன்ருன்
காலைக் கருக்கலில் தன் வேலை நினைத் தெழுந்து சாலை வழி நட்ந்து போவான்-அந்த மாலைக் கருக்கல் வரை நோவான்-இங்கு காலம் விடிவதிந்த ஞாலம் படைப்பவனின் கோலவிழி திறந்த பின்னல்-வாழ்வில் சில வழி படைத்தான் முன்னல்
வெள்ளப் பெருக்கெனத் தன் உள்ளப் பலம் பெருக்கி வள்ளல் 'குலக் கொழுந்தாய் வந்தான்-வேகத் துள்ளல் நடை பழக்கித் தந்தான்-இங்கு குள்ளத் தனம் படிந்த
கள்ளக் குடியி னரைக் கிள்ளிக் களைந் தெறிந் தொழித்தான்-செல்வம் அள்ளிக் கொணர்ந் தவனே கொழித்தான்
திட்டம் வகுத்தவர்கள் சட்டம் படித்தவர்கள் பட்டம் எடுத்த தெல்லாம் ஏனே-வெறுங் கொட்டம் அடித் தலையத் தானே-இவன் எட்டி இருந்து கொண்டு வெட்டிச் சரித்துப் பொருள் கொட்டிப் பெருக்கிக் கொடுக் கின்முன்-ஒரு குட்டிச் சுவர் ஆகி நின்றன்

Page 6
உழைக்கும் வழி அறிந்தும் பிழைக்கும் வழி அறிந்து தழைக்கும் வழி அறிய வில்லை-பெரு மழைக்கும் இடிக்கும்பய மில்லை-பணி இழைக்கும் குளிரினிலும் அழைக்கும் குரலுடனே உழைக்கும் மலை ஏற வேண்டும்-இவன் உழைப்பே உயிர் நாடி யாண்டும்.
ட குமரன்.
பேரின் பம்
மின்னி மினுக்கியே மண்ணில் முகிழ்த்தெழு மின்பங்கள், கண்ணை மயக்கிடு கானல் எனப்படர் துன்பங்கள்! உன்னு மனத்திடை உண்மை வளர்க்கும் உணர்வோடே பின்னி இருப்பது . பிறவி முடிப்பது . பேரின்பம்;
வையம் அணைத்திடு பொய்ம்மை அறுத்தெறி வாளாகி, மெய்யை நிறைத்திடு துய்ய குணத்திலே சூலாகி . பைய வளர்ந்து சிறந்து நடந்திடு காலாகி . உய்ய வழிக்களை ஒட்டும் உயிர்த்துணை பேரின்பம்;
கால அழற்சியின் ஒலம் ஒழித்திடு காப்பாகி, சீல நுகர்ச்சிகள் சால வளர்த்திடு தோப்பாகி வாழும் உயிர்க்குயர் வாசம் அளித்திடு பூப்பாகி ஊழை முடித்தடை உய்தி கொடுப்பது பேரின்பம் !
வே று
ஆராத அன்பென்னும் அழகு தளிர் ஈன்று, அழியாநல் அறமென்னும் பசியதழை பொதுளி. நூராத வாய்மையெனும் ஒளிக்கிளைகள் ஒச்சி, நுடங்காப் பைந் தருவென்ன மனம் வளருமானல்;
- 8 -

வீடெல்லாம் முறையாக விருந்தோம்பி வாழும், விறலுற்ற சமதர்ம நெறி கொற்றம் ஆளும், நாடெல்லாம் பொதுமையெனும் நல்லுணர்வு நீளும், நலியாத பேரின்பம் தானுகச் சூழும்;
நிம்மதியைப் போசிக்கும் நெடுவாடை வீசும், நிறைசாந்திப் பிரவாகம் தருமாரி தூறும், இம்மையுடன் அம்மையெனும் இருமையிலுஞ் சhரும் இணையற்ற பேரின்பம் எம்மிடையே சேரும்.
- வி. கி. இராசதுரை
உலக மனிதர்கள்
இன்றைய மனிதன் எல்லாம் அறிந்தவன் பண்டைய மனிதன் வாழ்முறை நலங்குறை ஒன்றுவிடாமல் ஒர்ந்து உணர்ந்தவன் அன்றைய இலக்கியம் நீதியுணர்த்திடும் பன்முறை நூல்களைப் படித்து முடித்தவன் இன்றைய நிலைமை நாளைய வழிகள் வென்று இயற்கையை வழிகொளும் திறமை எல்லாம் சார்ந்த உயர்வுகள் பெற்றவன்.
மாணிதம் தார்மீகம் மனித உணர்வுகள் ஆணித்தரமாய் அடித்துக் கூறுவான் பேணிடும் நீதித் திருக்குறள் பேரிறை இலக்கியத் திருக்குர்ஆன் வேணவாக் கொள்ளும் பைபிள், கீதை யாவையும் உயர்த்தும் சிந்தனையாளனய் ஊரெலாம் பரவி உலகெலாம் உலவும் உலகமனிதர்கள் உயர்ந்தவ ரென்ருல்.
- 9 -

Page 7
துருபெரும் உலக யுத்தங்களாலே இறந்தவர் மனிதனுற் கொல்லப்பட்டவர் கொரியா யுத்தம், கொன்று குவித்திடும் வியட்னும் போரினும் முடிவுறவில்லை எல்லைச் சண்டைகள் சீனு இந்தியா சீன ருஷ்யா, இந்தியா பாகிஸ்தான் யெமன் அரேபியா இப்படி எத்தனை? காந்திய இந்தியா அஹ்மதாபாத்திலும் . இந்து முஸ்லிம் கலவரவழிவு எண்ணிடமுடியா மனிதனுக்கிகழ்வு செக்கோ நாட்டின் மனித சுதந்திரம் பொசுக்கப்பட்டு ருஷ்ய ஆதிக்கம் புகுந்து அடக்கிப் பொறுப்பிலா நடந்ததும் மத்திய கிழக்கில் அமைதி அழிந்ததும் மனிதனின் தன்மையை மதித்திடவல்லது உலக மனிதர்கள் உயர்ந்தவர்தானே!
- ஏ. இக்பால்,
தாண்டிற்காரி
வீசுங்கள் தூண்டிலை, வீசிக்கொண் டேயிருங்கள்; பாவம்மீன் குஞ்சுகள், அதனுலே என்ன? கிடக்கட் டுமவை.
தொடரட்டும் நும்பணி.
- “மட்டுவிலான்'

குயிற் பாட்டு
வேலைப்பொருட்டாய் வரும் மாந்தர் செல்லுமெழிற் காலைப் பொழுதின் கதைகதைப்பு வேளையிலே கீழை வானத்துக் கிளரும் விசும் பொளியின் நீலக் கதிரெறிந்து நிழல் காட்டும் மரக்கிளையில் மோனத் தவமியற்றி முழுசித் தலை சாய்த்த கானக் குயிலொன்று கண்விழித்துப் பேசியது .
ஞாலவிழிப்பின் நயங் காணத் தாம் முயன்று வேலை பலநோக்கி விரல் மீட்டிக் கரந்தாழ்த்த நீளவேர் பாய்ச்சி நிலத்துள் அவை போக்கி காரை மரம் ஒன்றுநின்று கழனியிலே சத்துறிஞ்சும்! பாடு பயனற்றுப் பயனெல்லாம் பழங்கதையாய்ப் போன கதி காணப் பொழுதும் விடியாது.
தூணுக்குள் வைத்திழைத்த சித்திரங்கள் போலுழைப்பை ஆருக்கோ விட்டுவிட்ட அக்கழனி நெற்பயிராய் வீணுக்குழைத்த விதம்போக்கி இதங் காணகானகத்தை விட்டுக் கழனிக்கு நான் வந்தேன்! சின்னத் துடிப்பிதயம் தீப்பிழம்பின் கொதிப்பாக எண்ணிக் குயில் கூவும்! அந்த மாங்கொப்பிருந்தே!
கோகிலத்தின் ஓசை குரல் மணியாய்த் துயிலெழுப்ப மாமரத்துச் சோலைஇது மாங்குயிலின் காலமெனக் கூறுகின்ற தாய்தன் குழந்தைக்கு விரல் காட்ட வானைப்போல் வளர்கதிர்போல் வரைகின்ற சித்திரம்போல் ஆணைப்போல் பெண்ணைப்போல் அலசடித்துக் குரலெழுப்பி கூவியது! கூவியது! குயிலெழுந்து மாந்தோப்பில்!
- சபா ஜெயராசா.
سست 11 -۔ --س۔

Page 8
புகழ் நாட்டுவாய்!
அன்பை வளர்த்துநல் லருளாக்குவாய்-கெட்ட
அகந்தையைச் செருக்கினைவிரைந் தோட்டுவாய்,
உன்பால் நற்பண்பைநீ! உருவாக்குவாய்-உயர்
உண்மையை இறைவனென்றே போற்றுவாய்!
சான்ருே?ரை ஏமாற்றிப் பழிசேர்ப்பதும்-தீய
சந்ததியை உருவாக்க வழிபார்ப்பதும்; நானென்ற ஆணவம் நீகொள்வதும்-என்ன
நலம்சேர்க்குமோ ? வாழ்வை வளமாக்குமோ ?
நட்புக்கோர் இலக்கணமாய் வாழுவாய்-செய்
நன்றியை மறவாது . காப் பாற்றுவாய்; * உட்பகை ஆறையும் புறத் தோட்டுவாய்-மன
உறுதியை, நீதியை நிலை நாட்டுவாய்!
சினமெனும் தீமூட்டிப் பகை கொள்வதும்-சினத்
தீயிலே . நீவீழ்ந்து நிதம் மாழ்வதும்;
வனவிலங்கின் பண்பினைக் கைக் கொள்வதும்-நல்ல
வாழ்வாகுமோ ? மனித வாழ்வாகுமோ ?
இனியநல் லின் சொல்லை நிதம் பேசுவாய்-கெட்ட
இன்னுத சொல்சொல்ல நீ கூசுவாய்;
புனிதமாய் இல் வாழ்வு நீ வாழுவாய்-இரு
பாலார்க்கும் பொதுகற்பு கைக் கொள்ளுவாய்.
உழவுக்கும் தொழிலுக்கும் உயர் வூட்டுவாய்-அறி வுடைமைக்குத் தலைதாழ்த்தி மதிப்பூட்டுவாய்;
விழலுக்கு நீர்பாச்சி நீ மாய்வதோ?-உன்
விவேகமும் ஞானமும் பறி போவதோ ?
அறிவிலே செறிவுற்றே அயர் வற்றுவாழ்-உள் ளன்பாலே உலகத்தில் நல்லாட்சிசெய்;
குறிக்கோளொன் றினை நோக்கிச் சலியா துழை-மூடக்
கொள்கைகளே விட்டுப் . புதுமையைச் செய்.
வாக்கிலே வாய்மையை நிலைநாட்டுவாய்-நல்
வாழ்வுக்கோர் எடுத்துக் காட் டாய் வாழ்வாய்; ஊக்கத்தால் உயர்செல்வ வாழ் வுற்றுநீ!-இவ்
வுலகத்தில் அழியாத. " புகழ் நாட்டுவாய். "
* உட்பகை ஆறு--காமம், குரோதம், லோபம், மோகம், மதம்; மாச்சரியம்,
- திமிலைக் கண்ணன்.
- 12 -

அதிகாரம்
அதிகார மென்பது குருடு - அதன் ஆக்கமாம் சட்டங்கள் யாவுமே குருடு சதிகாரர் தோன்றுவ தெதனல் - அதைச் சகிக்க முடியாது தவிக்கின்ற நிலையால்,
மக்களை மடையராய்ச் செய்யும் - அவர் மனங்களை இருளாக்கிச் சோம்பிடச் செய்யும் திக் கற்ற சீவன்கள் போன்று - பல திசையெல்லாம் அவர்களை யலைந்திடச் செய்யும்,
அடிமையாய் மக்களை மாற்றும் - அவர் ஆகங்க ளைக்கொன்று விலங்குக ளாக்கும் யிடிமையை யூக்கி விதிமேல் - பற்று
மேலிடச் செய்துரமைக் கூட்டங்க ளாக்கும்,
நீதிக் கிடமில்லை யங்கே - எந்த நேர்மைக்கு மங்கே இடமில்லை யப்பா போதிக்கும் ஞானங்க ளெல்லாம் - அதன் பொம்மைக ளாகமுன் ஆடிப் பணியும்,
பொய்யைக் கலையென்று சொல்லும் - பெரும் புளுகையும் நம்பிடச் செய்துண்மை" கொல்லும் ஐயகோ மக்கள் புழுவாய் - அதன் அனலிற் குருடராய் வீழ்ந்து மடிவர்,
அதிகாரம் மமதை கொண் டிடுமேல் - அதன் ஆட்டங்கள் பாட்டங்க ளநந்த மநந்தம் துதிபாடிச் சாவது துன்பம் - மீறித் துள்ளி யெதிர்த்துயிர் மாய்வதே இன்பம்.
- அப்துல் காதர் லெப்பை.
ہی۔ 13 ہس۔

Page 9
கவிதை நோக்கு!
போக்கு வேண்டும் நோக்கில் - உண்மை நுழைந்தி ருக்க வேண்டும்; பார்க்குள் ளிந்த நோக்கு - அன்பைப் பரப்பி வைக்க வேண்டும்; யார்க்கு மேற்ற வாறு - நோக்கின் இயல்பி ருக்க வேண்டும்; தூக்க முற்ற நெஞ்சை - நோக்குத் துயிலெ முப்ப வேண்டும்!
இன்ப நோக்கு வேண்டும் - வாழ்வுக்கு) இசைந்த நோக்கு வேண்டும்; துன்ப நீக்கி யாக - நோக்குத் துணையி ருக்க வேண்டும்; பண்பு நோக்கு வேண்டும் - யார்க்கும் பயன்கொ டுக்க வேண்டும்; திண்மை யற்ற நெஞ்சை - நோக்குத் திருத்தி வைக்க வேண்டும்!
ஆக்க வேண்டும் " நோக் 'கில் - உண்மை, அழகு, செம்மை மிக்க பாக்கள்: ஓசை கொஞ்ச - நன்கு படைக்க வேண்டும்; பல்கிப் பூக்க வேண்டும் காந்தி - அண்ணல் புகழைப் போல நூல்கள்; காக்க வேண்டும் அன்பர் - ஆர்வம்; கவிதை நோக்கு "ம் வாழ்க !
- * சாரதா

வழிப் போக்கன்
கோள்பாரந் தனேச்சுமந்து கூன் பாய்ந்தவளைமுதுகின் தோள்தாங்கும் துணிப்பொதியைத் தூண்தாங்கும் தளருளமும்
கையிலொரு நெடுங்கோலும் காலிடறத் தேய்செருப்பும் மையிருளைக் கிழித்தோட்ட வாகுெழியும் சீர்விளக்கும்
மேல்தாங்கிக் கீழ்நோக்கி
வேகத்தைத் தான்குறுக்கி கால்போக்கித் தானேகும்
காலத்தின் தேய்பிறையில்
ஞாலமெலாந் தூங்கிடுமிந் நள்ளிரவு வேளையிலே சாலைவழி ஊர்ந்திடுமித் தனிவழியே ஏகுவதேன் ?
உற்றவர்கள் உம்முதுமை உணர்ந்ததுங்கை விட்டனரோ பெற்றபொருள் தாமிழந்து பெருந்துயரில் வந்தவரோ?
மின்விளக்கு தம்மிலத்தில் மிக்கிருந்தும் தம்முளத்தில் இன்னெளியின் இம்மியதும் இன்றியிருள் கொண்டவரின்
ஊர்விட்டே இவ்வழியில் உள்வலியூைத் தான்தேக்கி பேர்ந்திங்திந்கும்மிருட்டில் பேரொளியைக் காண்போக்கில்
தூங்காது தூங்குவிக்கும் துரியநிலை தனநாடி போங்காலம் ஆகிடவும் புறப்படுதும் இதுபோழ்து

Page 10
நான்செலுநல் லூரதனில் நயவஞ்சப் பேய்களிலை தானெனதென் றேபொருளைத் தமக்குள்கொள் வார்களிலை
மோனத் தனித்திருந்து முன்னவனின் தண்ணளியாம் ஞானப் பெரும்பொருளின் நல்லடியைக் கண்டிடவோ
போகுந் தொலைபெரிதே புதர்முட்கள் நிறைந்திடினும் ஏகும் இலக்கினையே எதிர்கொள்ளின் துயர்சிறிது
சுற்றம்பகை வெம்போர்கள் சூழ்ச்சிகளோ யாதுமிலை கற்றவரே உற்றேர்கள் காணுமொரு ஞாயமிலை
வெட்டவெளி மேடையிலே விசைமறைவோ ஏதுமிலை சட்டவழி வேலியுளே சதுரரங்க சூதுமிலை
குன்றுமுனை தனிலேறிக் கோள்நிறையாம் வான் கலந்தே
ஒன்றிரண்டு ளொன்ருக உன்விடைதா யான்செலவே!
- கே. கணேஷ்,

அழைத்துச் செல்லும்!
கானகத்தில் ஆடையின்றிக் காய்கனியை
உண்டுலகில் காலம் ஒட மானமுடன் வாழ்ந்தவன்தன் மதியென்ற
முனையதனைத் தீட்டி நல்ல ஞானவொளி காட்டுமொரு சுடர்விளக்கை
ஞாலமதில் ஏற்றி மற்ருேர் வானுலக மெனுமாறிவ் வையமிதை வனப்புமிக மாற்ற லாஞன்.
மண்ணுரடி ருந்தன்று மனமென்ற
ரதமேறிக் கவிதை யாலே விண்ணுரடே விரைந்தோடி நொடிப்பொழுதில்
வெண்ணிலவின் பெண்ணைக் கண்டோன் கண்மூடித் திறப்பதற்குள் காதலியைக் கையோடே அழைத்துச் செல்லும் விண்ணுடி ஆகிவிட்டான் விளைவறிவின் விரிவதிலே வெற்றி கண்டும்.
பழம்பெருமை பேசுவதில் கழிக்கின்ருேம் பயணின்றிப் போலிப் போக்குள் விழுகின்ருேம் இன்றைக்கும் வாயில்லாப்
பூச்சிகளாய், அறிவுத் தாகம் எழுகின்ற இவ்வேளை எல்லோர்க்கும்
நல்வாழ்வைக் காட்டு கின்ற முழுதான புதியதோர் உலகமைக்க
முன்னின்றே உழைப்போம் வாரும்.
ட நிரம்பவழகியான்"

Page 11
அரிக்கன் லாம்பு
நேற்றுவரை முற்றத்தில் நிலாவீசி வாழையிலே நெய்யைப் பூச, மாற்றுநொடி போட்டந்த மங்கையினை விளையாடி மடக்கி வந்தேன். ஏற்றுகிற விளக்கெல்லாம் எரியாமல் நூர்கிறதே, இன்றைக் கிந்தக் காற்றுவெகு வீருப்பாய்க் கலகலத்து வீசியெனக் கலக்கு திங்கே !
காற்றடிக்கும் வேகத்தால் கடிகார வேகமதோ கணக்க வில்லை! நேற்றடித்த தென்றலிலும் நிலாவீச்சுச் சோதியிலும் நிற்க வில்லை! ஏற்றுகிற விள்க்கெல்லாம் எரியாமல் நூர்கிறதே! எண்ணெய்ப் போத்தல் மாற்றமெதும் செய்யாமல் வார்க்கிறது விளக்கின்வாய் வழியு மட்டும் !
* அரிக்கன்லாம் பொன்றிங்கே அவசியமே, தகரவிளக் கணைந்து போகும். எரிகின்ற வேளையிலே எதிர் காற்றைக் கண்ணுடிச் சிம்னி யெற்றும்; மரியாதை யதற்குண்டு! மனைவாசல் இருள்போக்கும் மாற்றம் கண்டேன். சரியாது சுடர் என்று சரியாகப் புலனின்று சாற்று தண்ணே.
ட "பாண்டியூரன்'

எங்கள் சாதி
திருவா ரூரிலே தேர்விழா நடந்த நாள் பல பேர் அதனைப் பார்க்கக் கூடினர், மொய் மொய் என்று மொய்த்தனர் மக்கள் மக்களின் கூட்டம் மலைப்பைத் தந்தது. தலைகள் அலைகளாய்ச் சமுத்திரம் மக்களாய்க் கலகலப்புடனே கம்பலை மிகுத்தது. கம்பலை மாக்களைக் கற்பனை வலிமையால் திரட்டி எடுத்தொரு சிற்றுருவாக்கினேன்.
ஒற்றை மானிட உடலம், கொடுத்தேன். ஒற்றையன் என்னை உற்றுப் பார்த்தான் சற்று நில்லடா தம்பி என்று மெல்ல அவனை வியப்புடன் பார்த்தேன். வியப்பதற்குரிய விந்தையன் அல்லேன் *ஒருவன்’ என்பேர்என உணர்த்தினன் ஒற்றையன் "ஒருவனே! இரு", என உரைத்தேன். 'வருகிறேன் நான்”என வணங்கிப் போயினன்.
எழுநூ ருண்டின் முன்னரே நடந்த பழைய கதைஇது, பலர் இதை அறியார். அனைவரும் இதனை அறிந்துகொள் ளட்டும் என்ற ஆசையால் இதனைச் சொல்கிறேன். திருவாரூரில் என் செய்கையாற் பிறந்த ஒருவனின் கதையை நான் உங்களின்பொருட்டாய்த் தொடர்ந்து சொல்லுவேன் கேட்பீர் தயவு செய்து சத்தம் இல்லாமலே.
ஒருவன் கலைகள் பலவும் அறிந்தான் உலகின் மருமம் துருவ முனைந்தான் படரும், பரவும், எரியும் கனலின் பதமும், குணமும், செயலும் அளந்தான். எலியின் குடலுள் நுழைந்து புகுந்தான் எதிலும் பொருவும் அதிர்வை உணர்ந்தான். புவியின் வயிறும் அகழ்ந்து பிளந்தான் புனலும், வெளியும், புரந்து கறந்தான்

Page 12
நெருப்பினது செயல் வலிமை உணர்ந்ததாலே நீராவி எஞ்சின்கள் அமைத்துத் தந்தான் பொருப்பை நிகர் கப்பல்கள் புதிதாய்ச் செய்தான் பொடிப்பொடியாய்ச் சில ஊரைப் பொசுக்கத்தக்க பெருப்பம் உள்ள சூழ்ச்சியங்கள் இயற்றிவிட்டான் பிறகென்ன ? " நான் இறைவன்" - என்ற எண்ணம் கருப்பமுற்று வளர்ந்து வர “ஒருவன்’தானே கடவுள் என்ற எண்ணத்தைப் பழகிக்கொண்டான்
ஆனலும் இது பூமி சிறியதன்ருே ? அவதான நிலையத்துக் குழாய்க் கண்ணுடி வானேரின் உலகத்து விபரம் காட்ட மனிதகுல ஒருவனுக்கும் " ஆசை தோன்றும் போஞலும் போவேன் நான் என்று நாடிப் போடுகிருன் நுண்கணிதச் சமன்பாடெல்லாம் பேணுவால் வரைந்ததல்ல; உலோகத் தாலும் பெரிய சில ருெக்கெற்றுக் கட்டி விட்டான்.
பரவெளியை அளப்பேன் நான்; பசைந்துநாறும் பழஞ்சகதி மண்பூமி, புழு, பாம்போடி அரைவதன்ருே இக்கரிய பற்றை மொய்த்த அருவருக்கத் தக்க நிலம் 1 பாறை, சூரை மொருமொரென்ற முட்புதர்கள், தீக்குழம்பாய் மொடுமொடுக்கும் எரிமலைகன் அகன்று, மேலே உருவி விண்ணைக் கடப்பேன்நான் என்றுசொன்ஞன் உடனே நான் திங்களுக்குப் போவேன் என்ருன்,
திங்களுக்குப் போவதஞல் என்ன லாபம்? சில பேர்கள் கேட்டார்கள்; "ஐயா நாங்கள் அங்கொளிர்ந்து காட்டுகிற திங்கள் மண்ணை அடைந்தாலே போதாதோ ? லாபம் அன்ருே?" பொங்குகிற் ஆர்வமுடன் "ஒருவன்" சொன்னுன் போய் இறங்கிப் பலதடவை மீண்டு விட்டான் சங்கதியை நாம் அறிவோம்; நாளைக்கெல்லாம் சந்திரனின் திடல் மனித ஆடற்கூடம்.
-س- 20 حسسه

*சந்திரனில் இறங்கிவிட்டேன்; இனி நான் அப்பால் சார்ந்திருக்கும் மீன்களுக்கும் போவேன்" என் முன் அந்தரத்திற் கறங்குகிருன், அகில முற்றும் அதற்கென்ன? செய்யட்டும்; வாழ்க அன்னேன். இந்தளவில் ஒருவனை நாம் தொடர்ந்து சென்ற இக்கதையும் ஒருவாழுய் நிறைவை எய்தும் வந்து பின்னர்; நம்நிலத்தில் இறங்குகின்மூன் வான் சுழன்ற ஒருவன்’ என்ற திருவன் வாழி
"ஒருவன்" கீழே இறங்கினன் முழங்கினன் உலகுகள் பலப்பல உடையதாய் விரிந்த அகில வெளியின் அமைப்பினைப் பற்றி அறிவேன் மிகமிக முயல்வேன் இனி, இனி இப்படிக் கூவினன். இன்னும் சொல்லுவான்: "இயற்கையை அலசுவேன்; இயலுமா றெல்லாம் அறிவினை விரிப்பேன்; அகிலமும் என்வசம் , ஆகா தென்பதை அறிவேன் ஆயினும் முயற்சியால் என்னிடம் முகிழ்க்கும் ஓர் பெருமிதம்” மானிட ஆற்றலின் மகத்துவம் முழுவதும் உணர்ந்த கிறுக்களுய் ஒருவன்’ நிமிர்கிருன் "ஒருவன உற்றுப் பார்த்தேன் தம்பி, நீ! யார் எனத் தட்டிக் கேட்டேன்.
*ஒருவன்' என்னை உணர்ந்ததும் குழைந்தான் முந்திய பெருமித முறுக்கும் சிறிதே குன்றிய தேபோற் குலையலாயினன் தம்பிஉன் தளர்ச்சியைத் தள்ளடா என்றேன் எழுநூருண்டின் முன்னுல் ஒரு நாள் திருவா ரூரிலே தேர்விழாப் பொழுதில் மொய்த்த சனங்களின் திரட்சியே இந்த ஒற்றைய ஞகிய ஒருவளும் தான் என மீண்டும் நினைத்தான், மெய்யுணர் வடைந்தான் ஒருவனே பலராய் மறுபடி பிரிந்தனர். வையகத்தினிலே மக்களாய்ப் பரந்தனர். பரந்த மக்களே நீங்களும், நாங்களும் அவர்களும் உவர்களும் அப்படியேதான்.
நாலாம் தெருவின் நல்ல தம்பியும், நயாகரா வீழச்சியின் நதானியேல் ஃபிலிப்சும், குற்ருலத்துக் குமார் ஜெய் சிங்கும், எஸ்கிமோ சாதியான் எனிப்படும் ஜோவும் அவர்களும் இவர்களும் எவர்களும் *ஒருவனின்" சாதியார் உணர்கவே ! உணர்கவே.
-முருகையன்.
- 21 -

Page 13
ஊமை விளக்கம்
அணைக்கவா வருகின் முய்நீ
அழகிய பெண்ணே, அன்பன் அணைத்ததை விளக்கி யார்க்கும்
அடியனேன் இயம்ப மாட்டேன் அணைக்கவா ஊது கின்ருய்
ஐயையோ; நீங்கள் கட்டில்; அணைப்பினி லிருந்து கொஞ்சி
V அளந்ததைச் சொல்வே னென்ருே ?
உங்களின் பருவக் கூத்துக்
கொருப்ெருந் துணையாய் நின்றுங் கங்குலை விரட்டிக் கண்ணுய்க்
காத்துயான் இருந்தேன் அன்றே: உங்களி னரட்டை கேட்டு
மெர்ருவர்க்கும் உரைக்கேன் நீயேன் சங்கட்ப் படுகின்ருய் ஆம்
சரி சரி புரிந்து கொண்டேன்.
உன் இதழ் வெளுமை கண்டிவ்
வூரவர் உணர்ந்து கொள்வார் பொன்னுடல் வெளுறல் பார்த்துன் புரட்டுகள் புரிந்து கொள்வார் மின்விழி அலரிப் பூவாய்
மிளிர்வதால் மிச்ச மெல்லாம் பின்னெரு வர்தான் சொல்லப்
பிறர் தேரிவாரோ சொல்வாய்.
ஊமை இவ் விளக்கின் வாழ்வை
யுணர்ந்தெவர் விளக்க வல்லார் தீமைகள் செய்ய எண்ணுத்
திருமணங் காணு மாற்றல் ஊமைக்கு முளதாம், ஆணுல்;
உலகிதை அறிவ தில்லை காமுறும் மனிதர்க் கேற்பக்
கருவியாய் ஆவேன் உண்மை.
- 22 -

சொல்லவே முடிய வில்லை
ஒருசுடர் நீயி ருந்தே மெல்லமாய் அணைக்க வந்தால்
மெல்லவும், விழுங்கவும், யான் சொல்லவும் மாட்டா ஊமை;
சொல்லவு மிதையு னக்கே வல்லவன் அல்ல; அந்தோ
வாய்விடுங் காற்றைப் பூட்டு,
- வே. குமாரசாமி
கவிஞர் பெருமானே!
கவிதை சமைக்கவெனக் கச்சைகட்டுங் கவிஞரெலாம் கருவில் உரமேற்றிக் கவிதை வளர்க்காமல் அமுதைப் பொழிந்ததிலே அழுந்திக் கிடப்பாரேல் எருமைக்கும் எம் கவிக்கும் ஏதேனும் பேதமுண்டோ?
சொத்து மிகுந்தசிலர் சுரண்டி உழைப்புறிஞ்சல், சற்றும் உதவாத சாதி அடக்குமுறை, - செத்தபின்னர் சிவலோகம் செல்லவழி தேடுபவர், முத்திநெறி காட்டுமொரு முன்னேடி தாங்களெனப் பம்மாத்துக் காட்டுகிற பாசாங்குப் பேர்வழிகள், விதியே வருகவென விரதம் இருப்பு வர்கள் உயர்சாதி எனச்சொல்லும் உல்லாசப் போக்கிரிகள் அவராள முற்பட்டு அடங்காத மக்களினம்.
இவற்றைப் பற்றி, இப்புவியில் இந்நாட்டில் இன்றுள்ள பிரச்சினைகள் கத்திமுனைக் கருவாகக் கைக்கொண்டு புதுவளங்கள் முத்துமுத்தாய்ச் சிந்தனையில் மூட்டிடுமெய்ப் புலமையினல் சத்துமிக நவநவமாய்ச் சமைத்திடுவோம் நற்கவிதை,
- சிந்தன்'

Page 14
தாரத்து மின்னல்
பூவாணம்போல் என்னுள் புத்துணர்வு சீறியது ஒர்கணம்தான், மீண்டும் உன்புறத்திற் பார்த்தேன் நான். தார்வீதியில் எழும்பும் சந்தடியைப் பார்த்தபடி நின்றிருந்தாய்
தேற்றின் சிறு நீக்கலுக்குள்,
சைக்கிளிலே என்றும்போல் சென்ற எனது விழிகளிலே உன்தோற்றம் தற்செயலாய் மோதி உலுப்பியதும் பூவாணம்போல் என்னுள் புத்துணர்வு சீறியது.
நீதான முன்பும்இங்கு நிற்கும் இளம்சிறுமி ? ஏதோஒர் நாட்காலை வெய்யில் எறிக்கையில்; இக்
கேற்றடியில் கையில் கிளிசெறியாக் கம்பெடுத்துஒர் ஆட்டைத் துரத்திய அச்சிறுமி நீதான ?
நீதான் அவள், அந்த
நீண்ட கருவிழிகள் ஆதார மாக அதை எனக்குக் கூறின !
ஆம் அப்போது நீயோர் அரும்பு !
அடிக்கடி நான் இப்பக்கம் சைக்கிளிலே ஏறிவருகையில், நீ நிற்பதனைக் கண்டுள்ளேன். நேரம் பொழுதின்றி எப்போதும் இந்த இடத்தில் இரைச்சலுடன் வாகனங்கள் போகையில்நீ வந்துநிற்கக் கண்டுள்ளேன்.
ஆனலும் பின்னர் உனை அவ்விடத்தில் காணவில்லை. எப்போதும் நிற்கும் இடத்தில்,
பலநாளாய் இப்பக்கம் சைக்கிளில் நான் ஏறிவருகையில், நீ
24

நில்லா திருந்த நினைவே எனக்கில்லை. எல்லோரும் போல எனக்கும் பலநூறு தொல்லைகள்தான் !
இன்ருே
தொலைவில் திடீரென்ருேர் மின்னல் அடித்ததுபோல் உன் விழியைக் கண்டேன் நான்.
நீதான் அவள் !
அந்த நீண்ட கருவிழிகள் ஆதாரமாக அதை எனக்குக் கூறின.
ஆம்
கேற்றடியில் கையில் கிளிசெறியாக் கம்பெடுத்தோர் ஆட்டைத் துரத்திய
அச்சிறுமி நீயேதான்.
இப்போது நீ யோர் இளைய புதியமலர்.
முக்காட்டு நெற்றிஇக் கேற்றின் சிறுமுடுக்கால் எப்போ தெனினும் எனக்கு இனித்தெரியும்.
ட எம். நுஃமான்.
حس 5 2

Page 15
நான் காத்திருக்கின்றேன்
பின்னர் அவர் அந்தப் பென்னம் பெருமனிதர் என்னைத்தான் கூப்பிடுவார் என்றெண்ணிக்
கொண்டிருந்தேன். அன்னவரின் தாடி அழகும், திருமுகத்தில் மின்னும் பொலிவும், விழியின் தவனழிலும், கன்னற் சுவைபோற் கதைபேசும் நற்குணமும் சொன்னவர்கள் நூரும். அதனுல் நான் அன்னவரைக் கண்டு மகிழ்ந்தே கதைக்கப் பெரும்ஆசை கொண்டங்கே சென்றேன் குவலயத்திற் சத்தியத்தைப் பேணி நடக்கும் பெரிய மனிதன் நான். வீணுய் எதிலும் விழுந்தே கெடமாட்டேன். டென்னம் பெரிய மனிதர்கள் மத்தியிலும் என்னை மதிப்பவர்கள் எவ்வளவோ பேர் அதனல் எல்லோ ரினும்முன்னல் என்னை அவரழைத்து நல்லாசி நூறு நலமாய் வழங்கிடுவார் என்றே நான் இங்கே எதிர்பார்த்தல் தீதாமோ என்ருலும் அன்னர் எனஇன்னும் பார்க்கவிலை இன்னும் அவர்இந்த ஏழைச் சனத்திடத்தில் என்னத்தைக் காண முயல்கின்றர் அப்பப்பா ! என்பின்னே வந்தவரும் எத்தனைபேர் சென்றுவிட்டார் என்னை இவர் எண்ணுத(து) ஏனுே பெரும் புதுமை !
உங்களைத்தான் ஐயா நீர் உள்ளேதான் போறிரோ ? நன்று.
அவர்க்குச் சொல்லிவிடும் "நான் இங்(கு) இருப்பதன.
- சி. கனகசூரியம்
مس - 26 -تسته

தலைவன் :
தலைவி:
தலைவன் :
தலைவி :
தலைவன் :
மலை ஏறல்
சிவந்த சிறிய அடிகள் உடையாளே, சிறந்த நினைவு பலவும் உறுவோயே குவிந்து மலர்கள் அணையும் இருளுடே குரங்கு களென நுனியை அடைவானேன் ? அவிந்த தெனது துணிவு, மலைஏருது அகன்று பிறிதை மகிழின் , அமையாதோ ?
எழுந்து விரைவில் உயரும் மதியாலே இருண்ட நிலைமை அகலும் இது போதே; பளிங்கில் இறைவ னுடைய இருபாதம் பதிந்த புதுமை யதனில் விழியோமோ ? அழுந்த இடர்கள் வரினும், அதனலே அழிந்து, முடிவு சிதறல் அறமாமோ ?
விளம்பு கிறது மிகவும் எளிதாகும். விலங்கு வழியில் உறைதல் அறியாய் நீ. அழுங்கை அனைய பிடியை அவிழாயோ ? அறுந்த அலுவல் தொடரல் மறவாயோ ! கிளம்பி யது மெய்; எனினும் இளையாதோ ? கிடந்து சில புரிவது சுவையாதோ ?
முனைந்த செயலை இடையில் விடலாமோ? முடிந்த வரையில் விரைவில் உயரோமோ ? நினைந்த படிவி ளைவுற உழையோமேல், நிமிர்ந்தும் உலவல் பிறகு நகையாமே. நனைந்து வியர்வை உடலில் வழியாதோ ? நடந்த பயணம் முடிவு பெறல் தீதோ ?
அளந்த அளவி னுடனும் அமராமல், அகன்ற அகில முழுதும் அலைவோமோ பிழிந்து நிதமும் உயிரை வதையோமேல், பிறந்த பெரிய பயனும் இலையாமோ ! விழுந்து முடிய வரினும், இனியாளே, விரைந்து நட, தொடருவன் இனி யானே.
- மஹாகவி

Page 16
ஊர் பாடியது
நெல்லுக்கும் புல்லுக்கும் பேதம் காணு நெருப்பு வெறி களைபிடுங்கும் கைகளுக்கு! பல்லுக்கும் சொண்டுக்கும் சிவப்பைப் பூசி பரிமளிக்கும் வெற்றிலைக்கு வாயைத் தந்து கல்லுக்கும் மண்ணுக்கும் களைப்பைத் தந்து கலப்பைக்கும் மாட்டுக்கும் உழைப்பைத் தந்து தொல்லேக்கும் கதிருக்கும் தோளைத் தந்த கொண்டர்குடி வாழும்இடம் அல்லைப்பிட்டி !
களைகூடத் தெரியாத பயிர் என்றில்லை ! கணக்கான பயிரேதான் முளைக்கும் போதும் மழைகூடத் தெரியாத வெய்யிற் சூட்டு மணல் கூடத் தெரிகின்ற அல்லையூரில் இளையோரும் முதியோரும் உழைக்கின் ருர்கள் இயல்பாகத் துலா ஏறி மிதிக்கின்ருர்கள் குழையாலே இளங்கன்றை மறைக்கின்ருர்கள் குருத்துகளை ஒரு விதமாய் அழைக்கின்ருர்கள்.
எருவேற்ற 'வன்னிக்’கே ஏகல் வேண்டும் இஞ்சின் இலா வள்ளங்கள் இரவல் வேண்டும் எருஅள்ள இருநாளை இழத்தல் வேண்டும் ! இறக்கியதைக் கும்பிகளாய்க் குவித்தல் mேண்டும் தெருப்போலத் தெரிகின்ற ஒழுங்கையா லே தெண்டித்து வண்டில்களில் இழுத்தல் வேண்டும் கருக்கில்லா ஒலைகளை "அதரிற் போட்டுக் கருக்கோடே ‘தறை கொத்தி முடித்தல் வேண்டும்.
கொத்தியதைச் சாறித்தான் முடித்தல் வேண்டும் கோடடித்துக் தான் கன்றை நடுதல் வேண்டும் பத்தினிபோற் பாசத்தை வளர்த்தல் வேண்டும் பால்போலத் தண்ணீரைப் 'பனுக்கல்" வேண்டும் அத்தனைக்கும் குழைகுத்தி ஆகல் வேண்டும்! அதற்கென்றே வேம்புகளும் ஏறல் வேண்டும் ! இத்தனைக்கும் கையோடே காசும் வேண்டும் ! * எம்மூருப் போயிலைக்கு மானம் கூட " !
- 2.8 -

"புகை போட்டுச் "சிப்பத்தை"க் கட்டிவிட்டால் போட்டபணம் ‘போயிலையால் வருதல் இல்லை ! நகைபோட்ட பத்தினியை வெறிதாய் விட்டு நாலைந்து 'அடைவுகளும் வைத்து விட்டும், தொகைகேட்டு வருகின்ற தரகர் மாரின் தொண்டுக்கும் உண்டப்பா பெரிய மானம் ! பகைபோட்டுப் பயன் என்ன ‘யாவாரி'க்குப் பயனுள்ள வழியாக விலையும் உண்டு !
கள்ளுக்குப் பேர்போன ஊராம் கண்டீர் ! கள்ளிறக்கித் தருவோர்கள் கணக்க உள்ளார்! பள்ளத்தைப் பார்த்து அன்று பயிரைச் செய்தோர் பனைகளிலே இன்றுஏறி வாழ்கின்றர்கள் ! வெள்ளத்தை மாரியிலே நீர்கண்டாலும் வெள்ளமிலாக் கள்ளைத்தான் விற்கின்றர்கள்! பள்ளத்தைச் சுவையாக நிரப்பிக் கொள்ளப் பனங்கள்ளைப் போல் வெள்ளம் இல்லை என்பார் !
இல்லை என்று சொல்லாதே கள்ளை ஈவார் என்ருலும் காசுகளை வாங்கிக் கொள்வார் ! இல்லை என்று சொல்லுகிற இருவர் கூட இருக்கத்தான் முடியாதாம் அல்லையூரில்! பல்லே ஒன்றும் காட்டுதற்குத் தேவை இல்லை! படிப்புக்கும் கொடுப்பதற்கு வேலை இல்லை! எல்லைகளிற் பனங்காய்க்குச் சண்டை உண்டே
என்ருலும் இருவர்க்கும் உயிர்மீது ஆசை !
மாரியிலே மழைபெய்ய வெள்ளம் போட மணல் மேவிப் பாய்கின்ற வெள்ளம் எல்லாம் ஏரியிலே இருக்கின்ற நீரைப் போல இருக்காதாம் ! கடல் அன்னை இழுத்தே கொள்வாள்! வாருகிற தண்ணீரை வைத்துக் கொண்டு வருகின்ற கடலாளி வர்க்கத் துக்குப் 'பாரை, சூரு, திரளி, கயமின்" என்று எண்ணிப் பாராதே கடல் அன்னை கருணை செய்வாள்!
"வீச்சுவலைக் காய் வருமே மண்டைதீவு ! ‘விடுவலை'க்கு வரும் நாவாந் துறையார் தோணி "பாச்சிவலை’க்காய் அந்தப் பாசையூரும் பட்டிவலை சிறகுவலை கட்டிப்போக காச்சுகிற வெய்யிலிலும் கரையூராரும் *களந்தொட்டுக் கயம்மட்டும் கலக்குவாரால் மூச்செடுக்க முடியாமல் அல்லைப்பிட்டி முத்தெடுத்துக் கொடுக்கிறது கொண்டே போவார்!
- 29 -

Page 17
காசுக்கு வழியில்லா ஏழைமக்கள் கரையூரார் ‘தூள்மீனுக்கு ஆசைப்பட்டால் ஆசைக்குத் தோதான பொருட்கள் கொண்டே அதிகாலை ஓலையுடன் ஒடிச் செல்வார் ! மீசைக்குத் தோதான மனவல் வந்து மிளகாய்க்குத் தோதான மீனைத் தந்தான் ! சூசைக்குப் பாய்மீது ஓர் ஆசைஎன்ருல் சோமற்றை கூழாசை நிறைவேறும்மே !
மாதாவின் கோயிலிலே மணி அடித்தால் மனவலுடன் ஏரம்பருக்கும் கேட்கும் ! வாதாபிக் கணபதிக்குப் பூசை செய்தால் வல்லிக்கும் லில்லிக்கும் சங்கம் கேட்கும் ! தீதாக இருக்காது பொங்கற் புக்கை 'தின்னப்பா' என்கிறவர் உடையார் தானே ! "தாதா' என்று ஒலமிடும் ஆசையோடே * தமிழற்றை புக்கை"யினை மரியார் உண்பார் !
அல்லைப்பிட்டிச் சந்தியில் ! இறுப்பிட்டி பண்ணைக்குச் சென்றிருக்கும் இதற்கும்முன் சரவணையும் சேர்ந்திருக்கும் புறப்பட்ட குறிகாட்டு வானும் கூட போய்; நின்று, யாழ்ப்பாணம் கண்டிருக்கும் ! சிறுப்பிட்டியான எமது அல்லைப்பிட்டிச் சிறப்பெட்டும் 'சந்தி’யிலே வெறுப்பை எட்டி 'அறுப்பாற்றை வசு’ என்றே மண்ணைக் கொட்டி அல்லைப்பிட்டி மட்டும் நின்றிருக்கும் !
கிராமக் கோடு
அந்தோனி என்கிறவர் கோட்டுச் சிங்கம் ! "அவரோடை மசுக்குட்டி வழக்குப் பேசப் பிந்ததொத யாக்கோப்புச் சவிரிமுத்தர் பிந்தாமற் போகின்றர் கிராமக் கோடு ! குந்தாத இடமெல்லாம் குந்திப், பின்னர்
கொளுவாத ஆளோடே கொளுவி இங்ங்ண் அந்தாதித் தொடைபோலே வழக்கும் நீளும் அழகான அல்லையூர்க் கிராமக் கோடே!
* களம்-ஆழமற்ற நீர்ப்பரப்பு, கயம்-ஆழமான நீர்ப்பரப்பு
ட "சத்தியசீலன்’

கயிற்றரவு
பண்டை உலகியற் பாலவர் நனவினில் ஒண்பொருளாகிப் புவன மளந்த வண்ணமே சொல்க !
அகரமாய் என்னகம் புகுந்து நின்ருட்டி அளவிலாக் கனவுகள் விளைத்தெனைத் துரும்பென விளையாட வைக்குமோர் பிழம்பே ! இளமையில் முளைத்து வளர்வொடு வளர்ந்தும் தெளிவுற உன்றன் அழகுரு ஒரவும் முழுமையில் புணரவும் உருவெனக் களியாப் போதமே ! உன்னியல் பறிந்திலன் உருமுழுத் தேர்ந்திலன் எனினும், என் உணர் அணுஅணு நுழைந்தென் அறிவாய் ஒன்றும் ஆதியே! உலகெலாம் உன்னுெளி பாய்ச்சி இலங்கு பேரொளி தன்னைப் பாஎன வடித்திட விழைந்தஎன் நெஞ்சினை நீஅறிவாய் !
உலகினில் எதனை ஒர்ந்து பாடுதல் உயர்ந்தது என்ற உண்மை தேர்ந்திடாப் புல்லன் நான் இதுவும்நீ அறிவாய். எழில்வளர் ஞாயிறு திங்கள் பெருஞ்சுடர் இவைதமை ஏத்தவோ ? இல்லை; மாதரார் ஏற்றிடும் காதலை,
கவிவிழி வெறிநகை கொல்நடை இவற்றெடு புணையவோ ; பாப்பொருள் ஆக இன்னவை அமையுமோ !
வெறிஇனமொழிமத வெகுளியில் உலகு கரிந்து தீயெனப் பொடிவதை, மனிதனும் தனித்தனி பகைஅழுக் காற்றினல் மடிவதைப்
ču GB6r ?
திறந்த பெருவீதியில் கொழுஊன் மாந்தர் பறப்பதை ; நடைபாதையில் நடையும் இன்றி அழுகுஊனெடு இரப்பவர் ஏங்கலைப் பாடவோ !

Page 18
தொழிலகங்களில் கொடுங்கோன்மையும் மடிபணிவும் ஒருங்குறைவதை ; குறுவழி ஒடித் திரவியம் குவித்த பின் கோயிலை எழுப்பிக் கழுவாய் செய்வதை, சாதியைக் கடிந்து சமரசம் பேசிப் பதவியை மரபைப் புகழ்தலை , வெளியில் பொதுவாம் உடைமை என்றென விளம்பி மனையிலே அளப்பல குவிப்பதை, எதனைநான் இயம்புவன் ! மல்லிகை மொட்டொடு என்புச் சாம்பல்கள் நன்கலப் பேறுடன் கருச்சிதைவுகள் கலந்ததைக் கூறவோ ! குருதி சிந்துளமும் குழந்தை யுள்ளமும் கன்னியர் வெண்மையும் காமுகச் சுவாலையும் குழைவதை மொழியவோ ! பசி கண்டுருகும் கசிவுள்ளமொடு பாம்பு புற்றெடுத்த பாழிதயங்கள் மண்டியிடுவதைப் பாடவோ ! ஊன்மகுடிக்கெழு பரதநடத்தொடு ஒரவிழுக்கு நடமிடும் என்புக் கூடுகள் சேர்ந்த விந்தையைச் சொல்லவோ ? எதனை நான் சொல்லுவன், ! தாரணி கரையப் பிரளயம் தோன்றலை, கடலைக் கிழித்தொரு எரிமலை பீறலை, வானிலோர் சுடுகாடு நிமிர்ந்து நிற்பதை. இன்னும், தாரக்ை பொடிபடத் தாண்டவம் எழுவதை, அண்டம் வெடித்துப் பேரொலி சீறலை, எண்டிசை திரிந்து இடமும் காலமும் மாறலை, முகிழ்விடச் சிறுவித்து வெடிப்பதை, அருள் முகிலெனத் தெளிபுனல் மண்ணைத் தழுவலை, வெம்பசித் தீயினை வேம்பசுந் தீ தணிப்பதை, எதனை ! போதவிழ் தென்றலை, காதலார் மன்றலை கசிபவர் கரவாது அளிப்பதை, ஏற்றலை தேடி மிடிகளை வாழ்வு சிலரிடம் கூடலை, எதனை? என்னுடல் புன்துளை எல்லாம் புகுந்திவை உணர்வு நாரினில் மின்னணுப் பாய்ந்தென மயக்குதல் பொறுக்கிலன் ; என்ன பண்பிணைப் பாடுவன் ! இந்நிலை தனிலெனக்கு எங்கிருந்து வரும் சொற்கள்; இத் துணை கண்டபின் வேண்டுமோ மாநிலத் தொரு மானுடப் பிறவியும்.
- இ. இரத்தினம்
- 82 -

புதுத்தெம்பு
என்றன் உயிர்க்கொழுந்தே இன் பத்தின் வார்ப்படமே 1 அன்பு தழைக்கவந்த ஆசைக் கணியமுதே 1.
ஏய்த்துப் பிழைப்போர்கள் ஏற்றம் பெறுமுலகில் தேய்பிறைபோல் வாழ்ந்தின்பம் தேடும் எமதுநிலை எண்ணி அழுதாயோ என் செல்வக் கண்மணியே 1.
கண்ணைக் கசக்கியிரு காலடித்தென் நெஞ்சுமிகப் புண்ணுகப் பாயில் புரண்டழுத தேன் மகனே ?.
மண்ணை உழுது மகத்துவங்கள் செய்யும், உன் தந்தை பொழுதெல்லாம் தன்னுடலைச் சாருய்ப் பிழிந்தும் எமைவாட்டும் பீடை அகலாது அழிப்பதே ன் என்றே அழுதுவடித் தாய்மகனே ?.
நாள்முழுதும் பாடுபட்டும் நம்மை வருத்துகின்ற ஏழ்மையேன் போ கவிலை என்ருே அழுதாய்நீ?.
நீண்டநாள் பாவலரின் நெஞ்சில் குடிபுகுந்து வேண்டும் பொழுது வெளிவந்த பாவினைப்போல் நெஞ்சம் இனிக்க நிலத்தில் பிறந்தவனே வஞ்சம் புரிவோர்கள் வாழ்கின்ற காலத்தில் நீண்ட துயிலில் நிலைகுலைந்து வீழாமல் தோன்றுமிட மெங்கும் துயர்களை வாய் என் மகனே!
நேசத்தை ஊட்டுமெழில் நித்திலமே என்னுடைய டாசக் கொடியே படுத்துறங்கு தொட்டிலிலே 1. நாளே உனது கரம் நல்ல வலுப் பெற்றவுடன் ஏழைபணக் காரரெனும் பேதத்தைக் கொல் மகனே!.
எத்தனைநாள் இன்னும் இடரில் தவிப்பது நாம் ? . மெத்தப் பணக்காரர் மேல்மா டி செல்வமெலாம் முன்னைப் பழவினையால் மூண்டதெனச் சொல்கின்ற பென்னம் பெரும்பொய்யைப் பிய்த்தெறிவாய் என்மகனே!
ஆசை மொழி தந்திரங்கள் ஆயுதமும் கொண்டுன்னை நாசம் புரிவோர் நடுவழியில் சூழ்ந்தாலும் வேசமிடு வாரா விடிவுக்கே பாடுபடும் ஆசை உடை யோரென் றயரா துழைமகனே!. போராடும் வேளை புதுத்தெம்பு வேண்டுமடா நேராய்ச் சிறியதுயில் நீகொள்வாய் இப்போது !.
என்றன் உயிர்க்கொழுந்தே ஏற்றம் தரும் சுடரே ! அன்பு தழைக் கவந்த ஆசைக் கணியமுதே போராடும் வேளை புதுத்தெம்பு வேண்டுமடா! நேராய்ச் சிறியதுயில் நீகொள்வாய் என்மகனே !
--மு. சடாட்சரன்,