கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: இனி வானம் வசப்படும்

Page 1


Page 2


Page 3

? ഓ8 (ഉണ്ണങ്ങ
தியாகராய நகர், சென்னை - 600 017 தொலைபேசி : 24342926 தொலைநகல் 0091-44-24346082 G LÓlcöT -g}(G55G) : manimekalai(G) eth.net SNGO600TUI SGITLb WWW. manimekalaiprasuram.com
மணிமேகலைப் பிரசுரம் & 。 தபால் பெட்டி எண் : 1447, E}} 7 (ப.எ.4), தணிகாசலம் சாலை, 岛 ܒ Է S.
N
S-Ol+35 ○○

Page 4
R
/V)
நூல் தலைப்பு
ஆசிரியர்
மொழி
பதிப்பு ஆண்டு பதிப்பு விவரம்
2 life) to
தாளின் தன்மை நூலின் அளவு
அச்சு எழுத்து அளவு மொத்த பக்கங்கள்
நூலின் விலை
அட்டைப்பட ஓவியம்
லேசர் வடிவமைப்பு
*
.+'" '
அச்சிட்டோர்
நூல் கட்டுமானம்
餾
s
ܒܟ݂> இனி வானம் வசப்படும் ச. முருகானந்தன்
தமிழ்
N 2004 , ' ' முதல் பதிப்பு ' ஆசிரியருக்கு
11.6 &ી.ડી.
கிரெளன் சைஸ் (12%x 18% செ.மீ)
11 புள்ளி
x + 230 - 240 ரூ. 60.00
ஐஸ் கிராஃபிக்ஸ் கிறிஸ்ட் கம்ப்யூட்டர்ஸ் (C) 23725639
ஸ்கிரிப்ட் ஆஃப்ஸெட் சென்னை - 94.
தையல்
கலைஒளி வெளியீடு - 4.
Dr. S. MURUGANANDAN RMO (CEY)
KARANAVAI EAST,
KARAVEDDY - SRI LANKA.
 
 
 
 

பொது சவ துலம்
un arribiu umrerarnih. "
*。(**
எழுபதுகளின் பிற்பகுதியில் எழுத ஆரம்பித்து எண்பதுகளில் பிரகாசிக்கத் தொடங்கி இன்றுவரை ஓயாமல் எழுதிக் கொண்டிருக்கும் டாக்டர் ச. முருகானந்தன் ஈழத்தின் பிரபலமான சிறுகதை எழுத்தாளர்களில் ஒருவர்.
சிறந்த மருத்துவராக யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வன்னி மண்ணில் கடந்த கால் நூற்றாண்டு காலமாக இருந்து மருத்துவப் பணியாற்றி வரும் அரச மருத்துவரான இவர், சமூகத்தின் நாடி பிடித்துப் பார்த்தும் பல காத்திரமான படைப்புகளை எழுத்தில் வடித்து அரசு தேசிய சாகித்திய விருது உட்பட பல பரிசில்களையும் பெற்றுள்ளார்.
தமிழகச் சஞ்சிகைகளான தீபம், கணையாழி, செம் மலர், தாமரை, இதயம், சிகரம் முதலான சஞ்சிகைகளிலும் இவரது படைப்புகள் வெளியாகியுள்ளன. தீபத்தில் வெளியான இவரது மீன் குஞ்சுகள் சிறுகதை சென்னை இலக்கிய சிந்தனைப் பரிசினையும் பெற்றுள்ளது.
போர்க்கால இலக்கியங்களைக் காத்திரமாகப்
படைத்தவர்களில் இவருக்கு முக்கியமான இடமுண்டு.

Page 5
iV
சுனாமிக் கவிதைக்காகவும், மாவீரர் தினக் கவிதைக்காகவும் அண்மையில் பரிசில்கள் பெற்று, தன்னை ஒரு கவிஞராகவும் வெளிப்படுத்தியுள்ளார். இவரது “இரவில் ஒளிரும் சூரியன்’ கவிதை பலராலும் பாராட்டப்பட்டது.
இதுவரை நான்கு நூல்களை வெளியிட்டுள்ள இவரது ஐந்தாவது தொகுதி இதுவாகும். கடந்த மூன்று தசாப்தங்களில் 200 சிறுகதைகள் வரை எழுதியுள்ள இவர் எட்டு குறுநாவல்களையும், ஐம்பது கவிதைகளையும் மற்றும் மருத்துவ, உளவியல், இலக்கிய கட்டுரைகளையும் எழுதியுள்ளார்.
மல்லிகைப் பண்ணையில் வளர்ந்த எழுத்தாளரான இவர் டொமினிக் ஜீவாவைக் குருவாகக் கருதுகிறார்.
ஒரு சிறந்த சிறுகதை எழுத்தாளராக இனம் காணப்பட்டு வாசகர்களாலும் விமர்சகர்களாலும் பாராட்டப்பட்ட இவரது நாலாவது சிறுகதைத் தொகுதியான ‘இனி வானம் வசப்படும் இவரது முன்னைய தொகுதிகளைப் போலவே பெரும் வரவேற்பைப் பெறும் என்பதில் ஐயமில்லை.
கண. மகேஸ்வரன் கரவெட்டி

பொது df (Vorto vokis J. யாழ்ப்பானம்
V
மணிமேகலைப் பிரசுரமாக வெளிவரும் இத்தொகுதி கலை ஒளி வட்டத்தின் ஐந்தாவது வெளியீடு. சிறுகதைக்கான இலங்கை அரசின் தேசிய சாகித்திய விருதினைத் தனது தரைமீன்கள் சிறுகதைத் தொகுதிக்காகப் பெற்ற டாக்டர் ச. முருகானந்தனின் நான்காவது சிறுகதைத் தொகுதியாக 'இனி வானம் வசப்படும்’ என்ற இந்நூல் வெளிவருவதையிட்டு பெரிதும் மகிழ்ச்சியடைகிறேன்.
எழுத்துலக கர்த்தாக்கள் சமூக மேம்பாட்டின் பிரம்மாக்கள். இவர்களின் இலக்கிய பணிகளே கடந்த காலங்களைப் படம் பிடித்துக் காட்டுவதோடு சந்ததிரீதியான சிந்தனை மாற்றங்களுக்கும், வித்துக்களாக அமைகின்றன. சமூக மாற்றங்கள் இலக்கியப் போக்கைப் பாதிக்கும் அதே வேளையில் இலக்கியங்களும் சமூகத்தைப் பிரதிபலிக்கின்றன. அனுபவமும், ஆய்வு நாளும், தெளிந்த சிந்தனையும் கொண்டு படைக்கப்படும் சிறுகதைகள்

Page 6
Vi
சமூகத்தின் போக்கை சரியான திசையில் நெறிப்படுத்த தமது பங்களிப்பைச் செய்கின்றன. சமூகத்தின் முற்போக்கு எண்ணம் கொண்ட நவயுக சிற்பிகளில் ஒருவராக ஆத்ம சுத்தியுடன் தமது படைப்புகளை வடிப்பவர் டாக்டர் ச. முருகானந்தன்.
காலத்தின் கண்ணாடியாக இலக்கியங்களை வெளிப்படுத்தி நிற்கின்ற ச. முருகானந்தனின் இலக்கியபணி மெச்சுத்தக்கது. இவரது ஆக்கங்கள் சமூக விழிப்புணர்வு, மனிதநேயம் என்பவற்றை தாங்கி வருவதுடன் உணர்வுபூர்வமான எழுத்து நடையும் குறிப்பிடத்தக்கது.
ச. முருகானந்தனின் 30 வருட கால இலக்கியப் பணியில் சிறுகதை, கவிதை, குறுநாவல், நாவல், நாடகம், இலக்கிய விமரிசனக் கட்டுரை, மருத்துவக் கட்டுரை எனப் பல்வேறுபட்ட இலக்கிய வடிவங்கள் வெளியான் போதும் நூற்றி ஐம்பதிற்கு மேற்பட்ட இவரது சிறுகதைகள் இவரைச் சிறந்த சிறுகதை எழுத்தாளராக இனங்காட்டியிருப்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை இலக்கிய சிந்தனைப் பரிசு, இலங்கை அரசின் சிறுகதைக்கான சாகித்திய விருது, முத்தமிழ் விழா சிறுகதைப் போட்டியில் முதற்பரிசு, மாவீரர் தின கவிதைப் போட்டியில் முதற்பரிசு உட்பட தேசிய ரீதியில் இருபதிற்கு மேற்பட்ட பரிசினையும், சர்வதேச ரீதியிலான போட்டியில் சிறுகதைக்கான பரிகையும் பெற்றவர் ச. முருகானந்தன்.

Vii
மல்லிகை சிறுகதைத் தொகுதி, தீபம் சிறுகதைத் தொகுதி, கணையாழி சிறுகதைத் தொகுதி, பூபாளராகங்கள் சர்வதேச சிறுகதைத் தொகுதி, ஈழத்து எழுத்தாளர்களின் சிறுகதைத் தொகுதி, கவிதைத் தொகுதி என்பவற்றிலும் இவரது ஆக்கங்கள் இடம் பெற்றுள்ளன.
இவரது ‘புலி’ சிறுகதை இந்திய பிற மொழிகளிலும், “முரண்பாடு’ சிறுகதை சிங்க ளத்திலும் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன.
வாசகர்கள் மத்தியில் பெரும் செல்வாக்கைப் பெற்ற இவர் இதுவரை ஐந்து நூல்களை வெளியிட்டுள்ளார். மனித நேயம் மிக்க மருத்துவரான இவர், தன் மருத்துவ தொழிலுக்கு அப்பாலும் மனித நேயப் பணிகளிலும் ஈடுபடுபவர் இன்னும் பல சாதனைகள் படைக்க இவரை வாழ்த்துகிறோம். கரணவாய் கிழக்கு கரவெட்டி,
- ஈ. தயாரூபன்

Page 7
Viii
3.
இ 6US$56 (UõõÕ
இனி வானம் வசப்படும் . 1 அவன். அவள். அது. 13 Θθί5υιό .................................................................... 26 கலியாணமாம் கலியாணம் . 44 இங்கேயும் சில உறவுகள் . 51 கர்த்தர் மன்னிப்பாரா? . 63 அவள் ஓர் அநாதை . 72 பெண் மனம் . 84 மனக்கதவைத் திறவுங்கள். 99 கண்களின் வார்த்தைகள் தெரியாதோ?. 109 உன்னைச் சரணடையேன். 119 நீங்காத நினைவு. 133 யுகங்கள் மாறிய பின்னரும் . 143 எப்பவோ முடிந்த காரியம் .......... 153 அமீரகாவியம் . 163 தேரில் வந்த ராஜகுமாரன். 172 sigg) it .................................................................. 183 மனதில் உறுதி வேண்டும். 194 யார் இந்த தேவதை? . 208
இங்கேயும் சில மனிதர்கள். 218

எங்கே நாலப் பிரிவு
్యూట్రో
மீன்குஞ்சுகள் - சிறுகதை தரைமீன்கள் - சிறுகதை இது GেT181956া தேசம்
-சிறுகை
நாளை நமதே
- உற்சாக கட்டுரைகள் இனி வானம் வசப்படும்
- சிறுகதை கவிதை
வெளிவர இருப்பவை
1. பாலை நிலவு - நாவல் 2. விழிப்பாய் இருக்கிறோம்
- கவிதைத் தொகுதி 3. முற்றத்து மல்லிகை
- குறுநாவல் தொகுதி 4. நோயற்ற வாழ்வு
- மருத்துவக் கட்டுரைகள்

Page 8

சிந்திராவுக்கு ரொம்பப் படபடப்பாக இருந்தது. இதுநாள் வரைதான் இப்படிக் கோபமாய்க் கத்தியதில்லையே என்ற குற்ற உணர்வு மனதை அரித்தது. எனினும் அவ்வெண்ணம் சட்டென மறைந்து போக மனதிலிருந்த பெண்ணியச் சிந்தனைகள் விஸ்வரூபமெடுத்தன.
‘எல்லாவற்றிலும் பெண்கள் பணிந்துதான் போக வேண்டுமா? நான் கதைத்ததில் என்ன தவறு? இதெல்லாம் சொல்லிக் காட்ட வேண்டியவைதானே? நானும் அவரைப் போலவே வேலைக்குப் போய்க் கொண்டுதானே இருக்கின்றேன்? அத்தோடு வீட்டு வேலைகள் எல்லாம் தலைமேல் சுமந்து செய்து முடிக்கிறேன். இத்தனை வேலைகளையும் செய்கின்றேன் என்ற எண்ணம் கூட இல்லாமல் மாடாக உழைத்திருக்கின்றேனே! மனப் படபடப்பு விழியோரங்களில் ஊற்றெடுக்க புருவங்களைச் சுருக்கிக் கொண்டாள்.

Page 9
2 இனி வானம் வசப்படும்
சுந்தரின் மனதிலும் புயலடித்தது. ‘சந்திராவா பேசினாள்? அதுவும் என்னையா பேசினாள்? திருமண வாழ்வின் இன்ப ரகசியமே விட்டுக் கொடுப்புத்தான் என்பது ஏன் இவளுக்குப் புரியவில்லை? கிராமத்துப் பைங்கிளியாய் அவனைக் கைப்பிடித்து வந்தபோது என்னமாய் இருந்தாள் கணவனே கண்கண்ட தெய்வம் என்ற சிந்தனையை மாற்றியவனே அவன்தானே! காலையில் எழுந்து அவன் பாதங்களைத் தொட்டு வழிபட்டவளை, “சந்திரா, என்ன இது? அன்பு மனதிலே இருந்தால் போதும். இது எல்லாம் வேண்டாமே” என்று தடுத்துரைத்தான். அவளுக்கு நாற்றையும், அவளையும், சினேகிதியையும், மங்கையர் மலரையும் வாங்கிக் கொடுத்து அறிமுகப்படுத்தி பெண்ணியச் சிந்தனைகள் பற்றிய பிரக்ஞையை ஏற்படுத்திய அவனைப் பார்த்தா இன்று முழக்கமிடுகின்றாள்?’
அவனுக்குப் படபடப்பாக இருந்தது. எனினும் மனதை அமைதிப்படுத்திக் கொண்டு அவளருகே வந்தான் சுந்தர்.
“சந்திரா எனக்குப் பசிக்குது. சாப்பிடுவோம் வா.” என்று அழைத்தான்.
“எனக்குப் பசிக்கல. சாப்பாடு எல்லாம் மேசையில எடுத்து வைச்சிருக்கிறேன். சாப்பிடுங்க.” படுக்கையில் இருந்தபடியே கூறிவிட்டு குழந்தையை அணைத்தபடி மறுபக்கம் திரும்பினாள் சந்திரா.
அவனுக்கு முகத்தில் அடித்தது போலிருந்தது.
“இப்ப எதுக்காக என்கூட கோவிக்கிறே? ஏதோ மனதில் பட்டதைச் சொல்லிவிட்டேன். காலையில் இருந்து

ச. முருகானந்தன் 3
நீ ஒன்றுமே சாப்பிடல்ல. ஓய்வில்லாம வேலை செய்து களைச்சிருக்கிறே. கோபத்தில் வயிற்றுக்குத் துரோகம் செய்யாத. வா வந்து சாப்பிடு.’ சுந்தர் இன்னமும் பொறுமை இழக்காமல் கூறிக் கொண்டிருந்தான்.
“இப்ப புரியுதுதானே?. எல்லா வீடுகளிலும் பெண்கள் மாடு மாதிரி உழைக்கிறார்கள். ஆண்கள் அவர்களை ஒரு வேலைக்காரியாக, அடிமையாகத்தான் நினைக்கிறாங்க. இதைத்தான் நான் எனது கட்டுரையில் எழுதினேன்” என்றாள்.
அவன் பதிலேதும் சொல்லவில்லை. இன்றைய பத்திரிகையில் அவள் எழுதியிருந்த கட்டுரையைப் பற்றி ஏற்பட்ட வாதப் பிரதி வாதங்கள்தான் அவர்களது முறுகலுக்குக் காரணம். அவன் பெண்ணியச் சிந்தனைகளை மதிப்பவன்தான். எனினும் தற்போது பெண் விடுதலை பற்றி எழுதுபவர்களும், பேசுவர்களும் ஆண்களைக் கொடியவர்களாகவே எப்போதும் சித்தரிப்பதை அவனால் ஏற்றுக்கொள்ள முடிவதில்லை. ஆணாதிக்கத்திற்கும், ஆணிற்கும் வேறுபாடு தெரியாது எழுதுகிறார்கள்.
காலையில் அவளது கட்டுரையை வாசித்துவிட்டு “பெண் விடுதலை என்றால் என்னவென்று நீ நினைக்கின்றாய்?’ என்று கேட்டான் சுந்தர்.
**6)ւյ6ծor விடுதலை என்கிறது 6) பரிமாணங்களைக் கொண்டது. ஒரு பெண் குடும்பத்திலும், சமூகத்திலும் சுதந்திரமாகவும், சமவுரிமையுடனும், பாதுகாப்பாகவும் வாழுற நிலை என்று சுருக்கமாகக்

Page 10
4 இனி வானம் வசப்படும்
கூறலாம். குடும்பங்களிலை ஆணுக்குப் பெண் சமமாக நடத்தப்படனும். குடும்பப் பொறுப்புகள், வேலைகள் எல்லாம் அவள் மீது முழுமையாகச் சுமத்தக்கூடாது. வேலைப் பளுக்களைப் பகிர்ந்து கொள்ளணும். சுதந்திரமாகத் தீர்மானம் எடுக்கவும், செயற்படவும் உரிமை இருக்கனும்.”
“அப்புறம்?” அவன் சிரித்தான்.
“பால் ரீதியில் பாகுபாடு காட்டாமல், பெண்ணை வெறும் போகப் பொருளாக மட்டும் நினைக்காமல் அவளும் ஆசாபாசங்கள் கொண்ட ஒரு மனிதப் பிறவி என்பது அங்கீகரிக்கப்படனும்.”
“நல்லது. நீ சொல்லுறதில நியாயம் இருக்கு.”
“அது மட்டுமல்ல சமூக ரீதியில் கல்வி, வேலை வாய்ப்பு, சம சம்பளம், அரசியல் சுதந்திரம் எல்லாவற்றிலும் ஆண்களுக்கு சமமாக மதிக்கப்படனும்.’’ என சந்திரா அடுக்கிக்கொண்டு போக, சுந்தர் சிரித்தான்.
“ஏன் சிரிக்கிறீங்க..?’ என்று குறுக்கிட்டாள் சந்திரா. “நீ இப்ப என்னையே மிஞ்சிவிட்டாய்.”
“நீங்க இப்படி பொறாமையாக விமர்சிக்கிறது கூட ஆணாதிக்கச் சிந்தனைதான்.”
“அதை நீ ஏன் இப்படி பார்க்கிறாய்? உண்மையிலேயே என் மனைவிக்கு இவ்வளவு உலக ஞானம் தெரிஞ்சிருக்கே என்று பெருமைப்படுகிறேன்.”

ச. முருகானந்தன் 5
“என்ன கிண்டலா? வாயில்லாப் பூச்சிகளாக இருந்த
பெண்கள் இன்று எல்லாவற்றையும் புரிந்துகொண்டு,
அநீதிகளை தட்டிக் கேட்பது உங்களுக்குப் பிடிக்கவில்லை.”
“இல்லை சந்திரா. நீ பெண்ணியம் பற்றி எழுதுகிற போதும், பெண்ணியக் கருத்தரங்குகளில் கலந்து கொள்ளும்போது எனக்கு எவ்வளவு மகிழ்ச்சி தெரியுமா? நீ எழுதுகிற அழகு, பேசுற அழகு.’ அவன் சொல்லிக் கொண்டு போகும்போதே அவள் இடை மறித்தாள்.
“அழகு என்கிற ஆயுதத்தைப் பாவித்தே ஆண்கள் பெண்களை அடிமையாக்கி விடுகிறார்கள். கவிதையிலும், கதைகளிலும், சினிமாவிலும், ரீவி.யிலும் பெண்களைத் துகிலுரித்து விபச்சாரம் நடத்துகிறார்கள்.”
“அழகாக இருக்கிற ஒரு பெண்ணைப் பார்த்து ரசிக்கிறது, பாராட்டுகிறது கூட தவறு என்கிறாயா? அப்படியானால் ஆண் பெண் உறவுகூட அர்த்தமற்றதாகி விடுமே?’ சுந்தர் தன் மனக் கருத்தைப் பவ்வியமாக எடுத்துரைத்தான்.
“ஆண் பெண் உறவில்கூட பெண்ணடிமைத்தனம் தான் தலை தூக்குது. எத்தனை பாலியல் வன்முறைகள் தினமும் தரிசனமாகுது. வெறும் பாலியல் வல்லுறவுகளையும், பலாத்காரத்தையும் மட்டும் நான் சொல்லவில்லை. தினமும் பயணங்களின் போது கூட எத்தனை பெண்கள் உரசப்படுகிறார்கள். அலுவலகங்களில் எத்தனை மேலதிகாரிகள் பெண் ஊழியர்களில் குளிர் காய நினைக்கிறார்கள். ஏன் எத்தனையோ குடும்பங்களில் கூட மனைவிமார்

Page 11
6 66of 6hIT60TÍD 6hIöFůLI(6ňD
கணவர்களால் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்படுகிறார்கள்.” விவாதம் தொடங்கிவிட்டால் சந்திரா இப்படித்தான். இதனால்தான் மாமியாரும், மைத்துனிமார்களும் அவளை வாய்க்காரி என்று கூறுகிறார்கள்.
இப்போது சுந்தருக்கு கொஞ்சம் கோபம் வந்தது. “இது கொஞ்சம் அபத்தம். ஒரு குடும்பத்தில் கணவன் மனைவியோடு உறவு கொள்ள நினைக்கிறது தவறு என்று சொல்கிறாயா?’ என்றான் கடுப்புடன்.
“உறவு கொள்ள அணுகுவதில் தவறில்லை. ஆனால் அவளுக்கு விருப்பமில்லாத போது வற்புறுத்தி உறவு கொண்டு அவளைத் துன்புற வைப்பதுதான் தவறு.”
சுந்தருக்கு எரிச்சல் ஏற்பட்டது. என்ன ஒரு அதிகப் பிரசங்கித்தனமான கருத்து இது. “சந்திரா. உலகில் இயற்கையின் நியதி அதுதான். மிருகங்களிலும், பறவைகளிலும் எல்லா ஜீவராசிகளிலும்கூட இதுதான் நியதி. ஆண் தான் பெண்ணை உறவுக்கு அழைப்பது. சேவலை, தேனியை. எருதை நீ பார்க்கவில்லையா?”
“மனிதனுக்கு ஆறறிவு என்பதை மறந்து யோசிக்கிறீர்களே. உங்களைச் சொல்லித் தவறில்லை. நீங்கள் கூட அப்படித்தானே? எப்போது என்னைச் சும்மா படுக்கவிட்டீர்கள்?’
“சந்திரா. வாயை மூடு” அவன் கர்ஜித்தான்.
“இப்ப ஏன் அடக்கப் பார்க்கிறீங்க..? பெண்ணுக்கு இந்த யுகத்தலையும் முழுமையான விடுதலை கிடைக்கப்

ச. முருகானந்தன் 7
போவதில்லை என்பதை உங்களது செய்கையே எடுத்தியம்புகிறது.’ என்றாள் சந்திரா.
“பெண் விடுதலை என்கிறது பெண்கள் தன்னிச்சையாக நடக்கிறதுதான் என்று நீதப்பாகப் புரிஞ்சு வைச்சிருக்கிறே. நீ மட்டுமல்ல பெண்ணியம் பற்றி கதைக்கிற பலபேரும் இப்படித்தான்.” அவன் பொரிந்து தள்ளினான். இப்போது அவள் மெளனமாக இருந்தாள். முகம் இன்னும் எரிச்சலுடன் கடுகடுப்பாய் இருந்தது.
“வீட்டோடு பெண்டாட்டியாக இருந்த உனக்கு, நான் வேலை வாங்கித் தந்து வெளியுலகைக் காண்பித்தது என்னுடைய தவறு. அப்படித்தானே?”
“குடும்ப வருமானம் போதாது என்று வேலைக்கு அனுப்பினது நீங்க. நானா கேட்டேன், வேலை வேணும் என்று?. இது மட்டுமல்ல நீங்களா வேலை வாங்கித் தந்தீங்க? நான் படிச்சிருந்தேன். ஏ.எல் பாஸ் பண்ணிய கையோட பதினேழு வயதில உங்களைக் கட்டி வைத்தாங்க. பரீட்சை எழுதி, பாசாகி நேர்முகப் பரீட்சையிலும் தேர்வு பெற்று கிடைத்த வேலை இது. வெறும் விண்ணப்பப் படிவம் மட்டுமே வாங்கித் தந்துவிட்டு வேலை எடுத்து தந்தது என்று சொல்லுறீங்களா?”
அவள் இப்படி கூறியபோது சுந்தருக்கு வாயடைத்துப் போனது. பேச்சை நிறுத்திவிட்டு அவளை முறைத்துப் பார்த்தான். என்னனன்வோ உணர்வுகளில் தவிப்பவன் போல முகம் இருண்டும் கடுப்புடனும் காணப்பட்டது.

Page 12
8 இனி வானம் வசப்படும்
“சரி விடு சந்திரா, நீ சொல்லுறது எல்லாமே சரி. நான்தான் கொடுமைக்காரன். இது எனக்கு வேணும். மூக்கைப் பிடித்தா வாயைத் திறக்கத் தெரியாதிருந்த உன்னை, மகளிர் தினத்தில் தமிழ்ச் சங்கத்தில பேசுற அளவுக்கு முன்னுக்கு கொண்டு வந்தது என்னுடைய பிழை.”
“செய்யுற நல்ல காரியங்களைச் சொல்லிக் காட்டினால் அதன் பெறுமதி அற்றுப் போகும். இதை விட்டு படிக்கிறது தேவாரம். இடிக்கிறது சிவன் கோயில் என்கிற மாதிரி நடக்கக் கூடாது. பெண்ணுரிமை பற்றி எனக்கு பிரக்ஞை ஏற்படுத்தியதே நீங்க. விழிப்புணர்ச்சி பெற்று. குடும்பத்தில் சம உரிமையோடு நடக்க முயன்றால் அது குற்றம் என்கிறீங்க.”
‘சந்திரா நீ புரியாமல் பேசுகிறாய். ஒரு ஒத்தாசையும் உன்னிடமிருந்து இல்லையென்றால் எனக்கு எதுக்கு நீ பெண்டாட்டி? வெறும் உடல் உறவுக்கு மட்டுமா?. இதைவிட கலியாணம் செய்யாமலே இருந்திருக்கலாம். மேற்கு நாடுகளில இரண்டு ஆண் நண்பர்கள் சேர்ந்து வாழுறது போல சந்தோசமாக வாழ்ந்திருக்கலாம்.”
“வேண்டாம்ன்னா சொல்லுங்க. அடுத்த நடவடிக்கை பற்றி யோசிக்கலாம். பெண்களுக்கும் விவாகரத்துக் கோருகிற உரிமை இருக்கு.” நீளமாய்ப் பேச ஆரம்பித்தவளை தடுத்தான் சுந்தர்.
“சந்திரா.’ அவனது குரல் ஓங்கி ஒலித்தது. “எதுக்கு பெரிய பெரிய வார்த்தைகள் எல்லாம் சொல்லி இம்சிக்கிறாய்..?”

ச. முருகானந்தன் 9
“நீங்க மட்டும் என்னவாம்?”
இப்போது ஆவேசமாக அவளை நெருங்கிய சுந்தர் அவளது கன்னத்தில் பளார் என்று அறைந்தான். “பொம்பிளை என்றா பொம்பிளை மாதிரி அடக்கமாக இருந்து பழகு. எடுத்தது எல்லாத்திற்கும் வாய் காட்டாத.”
“இது ஒன்றுதான் குறைச்சலாய் இருந்தது. அதுவும் இன்றோட அரங்கேறிவிட்டது.’ அவள் பேச மீண்டும் அவனது முரட்டுக் கரங்கள் அவள் கன்னத்தைப் பதம் பார்க்கவே அழுது கொண்டு அறைக்குள் சென்று கட்டிலில் விழுந்தாள் சந்திரா. நடந்து முடிந்துவிட்ட சம்பவம் இதுதான்.
பெருந்தன்மையும், பரந்த மனசும், பரஸ்பர விட்டுக் கொடுப்பும் இல்லாததனால் நிகழ்ந்துவிட்ட சண்டைக்காக இப்போது அவன் மனம் வருந்த ஆரம்பித்தான். என்ன இருந்தாலும் நான் அடிச்சிருக்கக் கூடாது. இந்தக் குற்ற உணர்வினால் தான் கடந்த சில நிமிடங்களாக அவனைத் தேற்ற முனைகிறான்.
சந்திராவின் மனது ஆறவில்லை. எவ்வளவு படிச்சு பதவி வகித்தாலும் கூட பெண்கள் ஆண்களுக்குச் சமைச்சுப் போட்டு, உடுப்புத் தோய்ந்து, அவர்களது விருப்பத்திற்கெல்லாம் வளைந்து கொடுத்து எதிலுமே சுதந்திரம் இல்லாத அடிமையாகத்தானே இருக்கவேண்டி யிருக்கு. கடந்த வாரம் நடந்த கருத்தரங்கில்கூட இதை வலியுறுத்தினாங்க. உண்மைதான் பெண்கள் குழந்தை வளர்ப்பு, சமையல், குடும்பத்தவர்களுடைய இதர வேலைகள் என்று எல்லா வேலைகளையும் செய்து சுமக்கிறாங்க.

Page 13
10 இனி வானம் வசப்படும்
ஆனாலும் அதற்கு ஒரு பாராட்டுகூட இல்லை. எல்லாமே அவர்களுடைய கடமை என்றுதான் எல்லோரும் நினைக்கிறார்கள்.
பளுவைச் சுமக்கிற பங்காளிகளாக வர யாரும் நினைக்கிறதில்ல. இப்படியே போனால் இந்த சமூக அமைப்பில் இந்த யுகத்தில் பெண் விடுதலை காண முடியாது. ஆணாதிக்க சமுதாயம் அன்பு, கருணை, பாசம் என்ற போர்வையில் பெண்ணினத்தைச் சுரண்டுது.
சந்திராவின் மனதில் புயலடித்தது. இடி இடித்து கண்களில் மாரி பொழிந்து கொண்டிருந்தது.
குழந்தை சிணுங்கியது. முதுகில் தட்டி உறங்க வைக்க முயன்றாள். மறுபடியும் குழந்தை கொஞ்சம் பெருங்குரல் எடுத்து அழ ஆரம்பித்தது. குழந்தையைத் தன்னுடன் அணைத்து பாலூட்டினாள். தாய்மையின் அரவணைப்பிலும், பசியாறலிலுமாக குழந்தை அழுகையை நிறுத்தியது. படுக்கையை உதறி மீண்டும் குழந்தையைப் படுக்க வைத்துத் தானும் சாய்ந்து கொண்டாள்.
மனவோட்டத்தின் தகிப்பில் எச்சில் கூட்டி விழுங்கி திடப்படுத்திக் கொள்ள முயல்கிறாள்.
அருகே ஆளரவம், கண்களை விழித்தாள். சுந்தர்தான் நின்றிருந்தான். கையிலே தேனிர் கப், முகத்திலே வாஞ்சையான புன்னகை.
“சந்திரா. ரீ குடியம்மா. பசி வயிறு. தாங்காது.”
அன்பாக சுந்தர் கூறவே சந்திரா துரிதமாக எழுந்து உட்கார்ந்தாள்.

ச. முருகானந்தன் 11
“நன்றி” என்றபடி தேனிரை வாங்கினாள்.
“நீங்க..?”
“இருக்கு.’ என்றபடி தனது தேனிரையும் எடுத்து வந்து அவளருகே அமர்ந்து கொண்டான்.
“இதுக்கு நீ நன்றி சொல்வதானால், நான் உனக்குத் தினமும் எத்தனை தரம் நன்றி சொல்ல வேண்டும்.” சுந்தர் சிரித்தான்.
“சாப்பிட்டியளா அத்தான்?’ அவளது குரலில் ஒலித்த மென்மை அவளுக்கே வியப்பையளித்தது.
“நீ சாப்பிடவில்லை. நானும் அதுதான்.”
BTg) 55
“பசிக்கிறது என்று கேட்டீர்களே..?’ அவள் பரிதவிப்போடு கேட்டாள்.
“யார் இல்லை என்றது.? நீ அருகில் இருந்தா உன்னுடைய பரிமாறலிலேயே சாப்பிட்டுப் பழகிவிட்டேன்.”
*அதற்காகப் பசி கிடக்கிறதா? வாங்க சாப்பிடுவோம்.” அவள் எழுந்து சுறுசுறுப்பானாள். இதுவரை இருந்த கோபம் கலைந்து மனது நிதானப்படத் தொடங்கியது.
“சீ. எதற்காக இந்தக் கத்தல் கத்தினேன்? பாவம். அவரது மனதை அநாவசியமாக நோக வைத்துவிட்டேன்’ என எண்ணியபடி உணவைப் பரிமாறினாள்.
“நீயும் இரு சந்திரா. ஒன்றாகச் சாப்பிடுவோம்.” அவன் அன்போடு அழைத்தான். அவளோடு அருகிலே

Page 14
12 இனி வானம் வசப்படும்
அமர்ந்து சாப்பிடுகையில் அவனது நல்லியல்புகள், பெண்ணை மதிக்கும் பண்புகள், அவள் மீது அவனுக்குள்ள கரிசனை என ஒவ்வொன்றாக நினைவுக்கு வர அவனிடம் சற்று முன்னர் நடந்து கொண்டதற்காக வருந்தினாள்.
*பின்னேரம் உனக்கு பெண்கள் ஆய்வு அபிவிருத்தி நிறுவனத்தில் கலந்துரையாடல் இருக்கெல்லே.?’ சுந்தர் ஞாபகமூட்டினான்.
சந்திரா அவனை ஆழமாக நோக்கினாள். “இன்றைக்கு நான் போகல்ல. மாலையில இருவருமா பீச்சுக்குப் போய் வருவோம்.”
ஒருகணம் ஆச்சரியத்துடனும, மகிழ்வுடனும் அவளை நோக்கினான் சுந்தர். இருவர் மனதும் பொங்கிப் பூரித்தது. இனி இன்றைய பொழுது இனிக்கும்.
నైలో
میزہ **

அவன் "லைட் சுவிச்சை ‘ஒப்' பண்ண, அவள் கட்டிலில் சாய்ந்து படுக்கவும், ரெலிபோன் மணி அடித்தது.
பூசை வேளையில் கரடியா?
அவன் சலிப்போடு லைற்றைப் போட்டுவிட்டு ரெலிபோனை எடுத்தான்.
“ஹலோ. அருண் ஹியர்.”
எதிர் முனையில் மனைவி விமலாவின் குரல்.
“என்னங்க. நம்ம வினோத்.”
密 德 密,180435
அருண் வெளியேறுவதை ஏமாற்றத்தோடு பார்த்துக் கொண்டிருந்தாள் திவ்வியா.
77ssとと

Page 15
14 இனி வானம் வசப்படும்
வெண்ணை திரண்டுவரும் வேளையில் தாழி உடைந்த கதை போல.
அருண்.?
நிச்சலனமாக இருந்த அவளது மனது ஏன் இப்படி மாறியது? ரீன் ஏஜ்ஜிலும், இருபதுகளிலும் இல்லாத இந்தக் குழப்பம் முப்பதுகளின் பிற்பகுதியில் ஏன் ஏற்பட்டது?
சலிப்பா? விரக்தியா?
அருண் அவளது அலுவலகத்திற்கு மாற்றலாகி வந்த நாட்களில் இப்படி ஏதும் இருந்ததில்லையே!
ஒரு வருடத்திற்கு முன்னர் அருண்கூட இப்படி இருக்கவில்லையே!
பழகத் தொடங்கிய சில நாட்களிலேயே அவனது பார்வையும், நெருக்கமும் சற்று வித்தியாசமாக இருப்பதை அவதானித்தவள், இதை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும் என்று நினைத்தாள்.
திவ்வியா அந்த அலுவலகத்தில் பதினைந்து வருடங்களுக்கு மேலாகப் பணியாற்றுகிறாள். திருமண வயது கடந்தும் அவள் தனிமரமாக இருந்தபோதிலும், அவளைப்பற்றி ஒருவிதமான கிசுகிசுப்பும் கிடையாது. சொல்லப் போனால் அந்த மாதிரி அவளை நெருங்க யாருக்கும் தைரியமில்லை.
ஆனால் புதிதாக வந்த அருண்.
எப்படிப் பார்த்தாலும் அருணுக்கு அவளைவிட இரண்டு மூன்று வயது குறைவாகத்தானிருக்கும்.

ச. முருகானந்தன் 15
அவனது வாட்டசாட்டமான தோற்றம், வசீகரமான பேச்சு, நீற்றான உடை பெண்களை ஈர்த்ததில் வியப்பில்லை. ஒருவேளை அவன் திருமணமாகாதவனாக இருந்திருந்தால் அவனுக்குப் பலத்த போட்டி இருந்திருக்கும்.
வந்த முதல் நாளிலேயே அவன் திருமணமானவன் என்பதும், அவனுக்கு ஐந்து வயதில் வினோத் என்று மகன் இருக்கிறான் என்பதும் தெரிய வந்தமையினால் அப்படி ஏதும் ஏற்படாமல் போயிற்று.
திவ்வியாவைப் பொறுத்தவரை இனித் தன் வாழ்வில் திருமண வாய்ப்பு கிட்டும் என்ற நம்பிக்கையை இழந்து விட்டாள். ஒரு கன்னியாஸ்திரி போலவே அவள் வாழ்ந்து வருகிறாள்.
வேலை நிமித்தம் அருணோடு ஏற்பட்ட நெருக்கம் அவர்களை நல்ல நண்பர்களாக்கியது. ஆரம்பத்தில் அவர்கள் கண்ணியமாக, எதுவித சலனமுமின்றியே பழகி வந்தார்கள். எனினும் ஓர் ஆணும், ஒரு பெண்ணும் நெருங்கிப் பழகினால் ஈர்ப்பு ஏற்படுவது சகஜம்தான். கூடவே சுற்றமும் தப்பாகக் கணிப்பது இயல்பே.
அலுவலகத்தில் சிலர் மறைமுகமாகவும், சிலர் அருணின் காதுபடவும் இவர்களை இணைத்துப் பேசியபோது, அவன் இதை மனப் பொருமலுடன் திவ்வியாவிடம் கூறி, கவலைப்பட்டான்.
“நீயும் நானும் சரியாகப் பழகுகிறோம். மற்றவர்களின் அபிப்பிராயத்தைக் கண்டு ஏன் சீற்றம் கொள்கிறாய்?’ என்றாள். அவள் சொல்வது சரியாகவே அவனுக்குட்பட்டது.

Page 16
16 660f erard 6J(6D
எனினும் மனங்களில் குழப்பம்.
வீட்டில் அளவுக்கதிகமாக மனைவி விமலா அவனை அதிகாரம் செய்யும்போதும், எதிர்த்து வாதிடும்போதும் ‘பிசாசு என்று மனதில் அவனைச் சபித்துக் கொள்வதுதான் வழக்கம்.
ஆனால் இப்போது சில நாட்களாக அப்படியான நேரங்களில் அவனது மனதில் ஒத்தடம் கொடுப்பது போல திவ்வியாவின் முகம் நினைவில் வரும்.
மனதிலே விமலாவையும், திவ்வியாவையும் ஒப்பிட்டு சில வேளைகளில் ஏக்கப் பெருமூச்சு விடுவான். எனினும் விமலாவை இழக்கவும் அவன் மனது தயாரில்லை. விமலா மனைவி மட்டுமா? அன்பு மகன் வினோத்தின் அம்மாவல்லவா?
கடிவாளமிடாத குதிரைபோல அவன் மனதில் திவ்வியாவின் எண்ணங்கள் சில நாட்களாக ஆக்கிரமிக்க ஆரம்பித்துள்ளமையைக் கண்டு, அருணுக்குத் தன்மீதே வெறுப்பேற்பட்டது.
‘திவ்வியா எவ்வளவு பண்பாகப் பழகுகிறாள்? சீ. இப்படியெல்லாம் நாம் நினைக்கலாமா?’ மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல் தவித்தான் அருண்.
படுக்கையறையில் விமலா முரண்டு பிடித்து நிற்கும் வேளைகளிலும் திவ்வியாவின் முகம் இனிமையான அவன் மனத்திரையில் தோன்றும்போது அவனுக்குக் குழப்பம் அதிகரித்தது.
திவ்வியாவும் ஒருநாள் சொன்னாள், “அருண் உன்னை நேற்று கனவில் கண்டேன்.”

ச. முருகானந்தன் 17
‘அப்படியானால் அவளுக்கும் குழப்பமா?’ என்று அவன் யோசித்தான். ‘ஒரு ஆணும், பெண்ணும் நல்ல நண்பர்களாக இருக்க முடியாதா?’ மனதில் விடைகாண முடியாத கேள்வி அடிக்கடி எழுந்தது.
மனதைப் படம்பிடிக்கும் அறிகுறிகள் இருவரையும் குழப்பியடித்தது. ஒரு நாள் அருண் கேட்டான், “படத்திற்குப் (Sum(86 IITLDIT?'
“goir?”
“sibLDITSIT6ör...”
*சும்மாதானா?” என்று கேட்டு விட்டு அவள் கலகலவென்று சிரித்தபோது அவளை அதிகம் இளமையாக உணர்ந்தான்.
“வேண்டாம்.” இறுக்கமான அவளது பதில்.
“அப்படியானால் சரி. நான் வற்புறுத்தவில்லை.”
இன்னொரு நாள் அவளே சொன்னாள். “உன் விருப்பப்படியே சினிமாவுக்குப் போவோம். ஆனால் நல்ல நண்பர்களாக மட்டும்.”
அவள் சொல்வது போல் முடிகிற காரியமா? என்று அவனால் நிச்சயிக்க முடியவில்லை.
திரையரங்கில் அருகருகே அமர்ந்து படம் பார்க்கையில் மனதில் அவனுக்குப் போராட்டமாக இருந்தாலும், அவள் நிச்சலனமாக இருக்கையில், எல்லை தாண்ட முடியவில்லை. தவறுதலாக கை தட்டுப் பட்டபோது கூட கெளரவமாக விலக்கிக் கொண்டான். நல்ல சில

Page 17
18 இனி வானம் வசப்படும்
காட்சிகளை அவள் அவனோடு உரையாடிப் பகிர்ந்துகொண்டாள். காதல் காட்சிகள் உட்பட
படம் முடிந்து வெளியே வந்த போது திவ்வியா கூறினாள். “இரண்டர்ை மணித்தியாலமும், இருநூறு ரூபாவும் தண்டம்.”
“ஏன்? அவன் வியப்போடு அவளை நோக்கினான். அவள் என்ன சொல்ல வருகிறாள் என்று புரியாத தடுமாற்றம். "ஆண்பிள்ளை நீதானே ஆரம்பிக்க வேண்டும் என்கிறாளா?’
“படமா எடுத்திருக்கிறார்கள். படு போர்.”
அவனால் அவளைப் புரிந்து கொள்ள முடியவில்லை.
இம்முறை அலுவலக விடயமாக இருவரும் கொழும்புக்குச் செல்ல வேண்டி ஏற்பட்டது.
“கொழும்பில் எங்கே தங்குவதாக உத்தேசம்..?”
“உறவினர்கள் வீடுகளில் தங்க முடியாது. லொட்ஜில்தான் தங்க வேண்டும். நீ.?’ அருண் திவ்வியாவை நோக்கிக் கேட்டான். “பொலிசில் பதிய வேண்டி வரும்.”
“லொட்ஜில் தான்.”
உடலெங்கும் மெல்லிய மின்சாரம் பாய்வது போலிருந்தது அவனுக்கு. இவளைப் புரிந்துகொள்ள முடியவில்லையே! பெருங்கடலின் ஆழத்தை அறிந்தாலும்,

ச. முருகானந்தன் 19
பெண் மனதின் ஆழத்தை அறிய முடியாது என்று
தெரியாமலா சொன்னார்கள்?
அவன் எதுவும் மேற்கொண்டு பேசவில்லை. “எந்த ரயிலில் போகிறதாக எண்ணம்?”
“நாளை காலையில்..” என்றான் அருண். “எனக்கும் சேர்த்து ரிக்கெட் ரிசேர்வ் பண்ணிவிடு.” அருகருகே ரயில் பயணம் இனித்தது. தமிழீழ அரசியல், தமிழக அரசியல், உலக அரசியல் என்று ஆரம்பித்த உரையாடல் இலக்கியம், சினிமா என்று தடம்மாறித் தொடர்ந்தது.
கொழும்பில் ரயிலிலிருந்து இறங்கியதும், “நீ எந்த லொட்ஜில் தங்கப் போகிறாய்..?’ என்றான் அருண்.
“அது உன் தெரிவு.”
மீண்டும் உடலில் மின்சாரம்ை.
“ஹோட்டல் வாசலில் வைத்துக் கேட்டான். “சிங்கிள் ரூம்ஸா, டபுள் ரூமா..?”
“அது உன் விருப்பம்.” மீண்டும் பந்து அவனது கைக்கு வந்தது. அவளை ‘போல்ட் ஆக்கவேண்டும்.
'டபுள் ரூம். ரிசப்சனில் திறப்பை வாங்கினான். “சிங்கிள் ரூம்ஸ் எடுப்பாயோ என்று நினைத்தேன்.”

Page 18
20 இனி வானம் வசப்படும்
“எங்களுக்கிடையே ஏன் நடிப்பு? மனதில் உள்ளதைப் பகிர்ந்து கொள்ள ஏன் தயக்கம்?’ என்றான் அருண்.
“உன் மனைவி உன்னைச் சந்தேகிப்பதில்லையா? அறை மூலையில் பாதணிகளைக் கழற்றியபடி கேட்டாள் திவ்வியா.”
“அவள் பிசாசுதான். ஆனாலும் இந்த விடயத்தில் என் மீது அவளுக்கு நம்பிக்கை. ஆழமான நேசிப்பு.’
6 ல் நீ அந்த நம்பிக்கைக்குப் பாத்தி இல்லை. அப்படித்தானே?”
‘நேற்றுவரை நம்பிக்கைக்குப் பாத்திரமானவன் தான்.”
“fல் விடாதே.” “நீ நம்பாவிட்டால் பரவாயில்லை. இது சத்தியம்.” அருண் திவ்வியாவின் தலையில் தொட்டுக் கூறினான்.
9
“உனது இளமையில்.’ கலியாணத்திற்கு
முன்னர்?”
“தேவையில்லாத கேள்வி.” அவன் சிடுசிடுத்தான். “என்னைப் பற்றி நீ கேட்கவில்லையே!” “கேட்டால் உண்மையா சொல்லப் போகிறாய்?”
“அப்படியானால் நீ சொன்ன பதிலும் பொய்யா?” அவள் அவனை மடக்கினாள்.

ச. முருகானந்தன் 21
“உண்மையான பொய்.” சிரித்தான் அருண். அவள் பாத்ரூமில் குளித்துவிட்டு வந்ததும், அவன் அவளைப் பார்த்து “சோ நைஸ்.” என்று கண்களைச் சிமிட்டிவிட்டுச் சென்றான்.
அவன் திரும்பி வந்தபோது அவள் நைற்றியில் நின்றாள், "உனக்கு முப்பத்தியெட்டு வயது என்று யார் சொன்னது.?’ மெதுவாக காதைத் திருகினான்.
“இதுதானே வேண்டாம் என்பது.”
“நமக்குள்ளே ஒளிவு மறைவு வேண்டாம்.”
“இல்லை இத்தனை நாளாக இல்லாத எண்ணம் ஏன் திடீரென்று? நட்பு என்றதெல்லாம் பசுத்தோல் தானா?”
“தனிமை. சந்தர்ப்பம் சூழ்நிலை. திடீரென்று வந்தது என்றில்லை. தயக்கம். அவ்வளவுதான். அதோட உன்னைப் புரிஞ்சு கொள்ளுறது முரளியின் ஸ்பின் போல கொஞ்சம் கஸ்டமாக இருந்தது.” அருண் சிரித்தான்.
“இப்போ பாட் பண்ண முடியுமா? டொன் பிராட்மன் கூட வெற் பிச்சில் ஸ்பினுக்கு ஈடு கொடுத்துப் பாட்பண்ண மாட்டாராமே. நீ எப்படி..” திவ்வியா அவனை நோக்கினாள்.
“வெற் பிச்சா? பாற்றிங் விக்கெட் என்றல்லவா நினைத்தேன்.”
இருவரும் குயீர் என்று சிரித்தார்கள். “மனைவிக்கு ஒரு ‘கோல்’ எடுத்துவிட்டு வருகிறேன். கொஞ்சம் பொறு.”

Page 19
22 இனி வானம் வசப்படும்
‘பிசாசு என்று இப்போது கொஞ்சம் முன்னர்தானே சொன்னாய்? பிசாசுடனா பேசப் போகிறாய்?
“விமலா என்னை உயிருக்குயிராய் நேசிக்கின்ற பிசாசு. என் இனிய இராட்சசி.” அவன் திவ்வியாவைப் பார்த்துச் சிரித்தபடி கண்சிமிட்டிவிட்டு டயல் பண்ணினான்.
அவன் கதைத்து முடித்து அவளருகே வந்து அமர்ந்ததும். “அன்பான ஒரு மனைவியை வைத்துக் கொண்டு இது எல்லாம் தேவையா? உனக்குக் குற்ற உணர்வு இல்லையா?”
“குற்ற உணர்வு இல்லை என்று நான் பொய் சொல்லலை. உனக்குக் குற்ற உணர்வு இல்லையா?.” “நான் தனிமரம். வாழவேண்டிய பருவமெல்லாம் கோட்டை விட்டுட்டு ‘மெனப்போசை நெருங்குகிறேன். எனக்கென்ன குற்ற உணர்வு.?”
“அப்படியானால் உனக்குப் பூரண சம்மதமா?” “நான் சம்மதிக்கமாட்டேன்னு ஏன் நினைத்தாய்? நானும் ஒரு பெண்தானே? திவ்வியா நாணத்தோடு சிரித்தாள்.”
“பெண் என்பதால் தான் குழப்பமாயிருந்தது.” “நட்பு. காதல் இவற்றைப்பற்றி என்ன நினைக்கிறாய்?. நமது பழக்கம் நட்பா? காதலா, அல்லது வேறு ஏதாவதான்னு யோசிக்கலையா?” திவ்வியாவின் புதிய வினா.
“நட்பு என்கிறதில் சந்தேகமில்லை. காதல் என்று சொல்ல முடியுமா?. காதல் என்பதன் சரியான

ச. முருகானந்தன் 23
வரைவிலக்கணம்தான் என்ன?’ அருண் அவளை நோக்கினான்.
“காதல் என்பது திருமண வாழ்வை நோக்கிய ஒருவித நட்புன்னு நான் நினைக்கிறேன். நமது நட்பு அப்படி இல்லை என்கிறாய், அதுதானே? உண்மைதான். ஆனா கலியாணம் என்கிறதுசுவட கட்டிலுக்கு இட்டுச் செல்லுற ஒரு சமாச்சாரம்தானே? மனித நாகரீகம் ஏற்படுத்திய பண்பாட்டுக் கோலங்கள்.” திவ்வியாவின் பதில் புரிவது போலவும் புரியாதது போலவும் இருந்தது.
“இல்லை. பாலியல் ஈர்ப்பு இல்லாத ஆண் பெண் நட்பு இருக்கமுடியாது என்று தோணுது எனக்கு.”
“இருக்கமுடியும். ஐம்பது வயதுக்குப் பிறகு ஐம்பது வயதைக் கடந்திட்டா அந்தப் பெண்ணும் ஆணும் ஒன்றுதான்.” என்று சிரித்தாள் திவ்வியா.
“ஆண்களுக்கு அறுபது. அதற்கு மேலும்.” “முப்பதுகளிலிருந்து கொண்டு ஐம்பது அறுபதுகளைப் பற்றிய ஆய்வு நமக்கு எதற்கு?.”
“ம். நான் ரெடி. நீ ரெடியா?’ அவன் குறும்போடு அவளைப் பார்த்துச் சிரித்தபடி கேட்டான். அவள் மெதுவாக அவன் மார்பில் சாய்ந்தாள்.
“இது உனக்கு முதல் அனுபவமா?”
“அது ஏன் உனக்கு’ என்னைத் திருமணம் செய்யவா போகிறாய்? இந்த நிமிடம், இந்த மார்புக் கேசங்களைத் தடவியபடி இந்த மார்பில் சாய்ந்தபடி இருப்பது

Page 20
24 இனி வானம் வசப்படும்
எப்படி இருக்குத் தெரியுமா? ஆனந்தமாய். சுகமாய், ம். மனதுக்குப் பிடித்தவனுடன் உறவு கொள்வது பேரின்பம். தான்.”
“உண்மைதான். உடம்பின் இயக்கங்களுக்கும் உணர்வுகளுக்கும் மட்டுமான வடிகால் மட்டுமா தாம்பத்திய உறவு? இரண்டு மனது கலந்து உறவாடி சங்கமிக்கணும்.” *அப்படியானால் ஏன் பலர் விபச்சாரிகளை நாடுகிறார்கள்?”
“அங்கே மனப்படிவு இல்லைத்தான். ஆனாலும் அங்கே வருபவரைத் திருப்திப்பட வைக்கும் எண்ணம் இருக்கும். ஐந்து ரூபா கொடுத்தாலென்ன. சினிமா ஸ்டார் தேடி ஐம்பதினாயிரம் கொடுத்தாலென்ன அதில் மனத்தின் பங்கில்லை.”
“நம்மிடையே.?’ அருண் சிரித்தபடி அவளை நோக்கினான்.
திவ்வியா பதில் சொல்லாமல் சிரித்தாள். “ஆயிரம் ரூபாவுக்கு அறையை எடுத்துவிட்டு நேரத்தை வீணடிக்கிறோம் என்று நினைக்கிறேன்.”
“இப்பவாவது புரிஞ்சுகிட்டியா?” “சில ஆண்களுக்கு வாழைப்பழத்தை உரிச்சுக் கொடுத்தாலும் உண்ணத் தெரியாது.”
“சாப்பிட்டுக் காட்டுகிறேன். வெளிச்சமா இருட்டா உனக்கு விருப்பம்?’
“எதற்கெடுத்தாலும் பெண்களிடம் கேட்டுக் கொண்டிருக்காதே. ஆண் பிள்ளையாக நட.”

ச. முருகானந்தன் 25
“பெண்ணுரிமையை மதிக்கிறவன் நான்.” “படுக்கையறையில் மட்டுமா?’ என்று சிரித்தபடி கட்டிலில் சாய்ந்தாள் திவ்வியா.
அருண் லைற்றை அணைக்க ரெலிபோன் மணி அடித்தது. இப்படியான நேரங்களில் செல்போனை ஓப் பண்ணிவைக்கவேண்டும் என்று நினைத்தபடி போனை எடுத்தான்.
பூசை வேளையில் கரடியா?
“ஹலோ. நான் விமலா பேசுறன்.’ எதிர்முனையில் மனைவியின் குரல்.
“என்னங்க. நம்ம வினோத் கிணற்றில் தவறி விழுந்திட்டான். அவசர சிகிச்சைப் பிரிவிலை வச்சிருக்கிறன்.” மனைவி அழுதாள்.
“கடவுளே. வினோத் எப்படி இருக்கிறான்?. நான் உடனே புறப்பட்டு வாறன்.” போனை வைத்த அருணைக் கேள்விக்குறியோடு நோக்கியபடி எழுந்தாள் திவ்வியா.
நடந்ததைச் சொல்லிவிட்டு அவளது பதிலுக்குக் கூடக் காத்திராமல் புறப்பட்டான் அருண்.
அவன் போவதை வியப் போடு பார்த்துக்
கொண்டிருந்தாள் திவ்வியா.

Page 21
26
பிரசவத்திற்குக் காத்திருக்கும் பெண் போல அந்த வயற்பிரதேசம் புதுப் பொலிவோடு காட்சியளித்தது. இன்னமும் இரண்டு வாரம் போனால் அறுவடையை ஆரம்பிக்கலாம்.
தத்தித் தாக்கம் அதிகமாக இருந்ததால், அதைக் கட்டுப்படுத்த, மருதநாயகமும் நண்பர்களும் மருந்தடித்துக் கொண்டிருந்தார்கள்.
வாய்க்கால் கரையோரம் நடந்து வந்து கொண்டிருந்தான் சின்னப்போடி வயலிலே தெளித்த பூச்சிக் கொல்லியின் மணம் காற்றில் மிதந்து வந்தது. ‘ஒ இன்னிக்கு வயலுக்கு மருந்தடிச்சிருக்கிறாங்க போலிருக்கு’ என்று மனதுள் நினைத்தபடி, வாய்க்காலுக்குக் குறுக்காகப் போட்டிருந்த மரப்பாலத்தைக் கடந்து கமத்துள் நுழைந்தான். அவன் பெருவரம்பில் ஏறியபோது வயற்காட்டில் மும்மரமாக வேலை நடந்து கொண்டிருப்பது தெரிந்தது. எப்படியாவது மருதநாயக்கத்தின் கூட்டத்தாரின் நெல்லை அறுவடையின்போது கொள்முதல் செய்யவேண்டும் என்பது அவனது திட்டம். அதைப்
 
 

ச. முருகானந்தன் 27
பட்டணத்தில் கொண்டுபோய் விற்பதன் மூலம் பெருலாபம் சம்பாதிக்க முடியும் என்று மனக்கணக்குப் போட்டிருந்ததால், பகைமையையும் பொருட்படுத்தாமல் மருதநாயகத்தைச் சந்திக்க வந்திருக்கிறான்.
தன் வரவை அறிவிக்கும் முகமாக சின்னப்போடி செருமினான்.
வேலையில் மும்மரமாக ஈடுபட்டுக் கொண்டிருந்த மருதநாயகம் ஒரு கணம் நிமிர்த்து பார்த்தான்.
“என்ன மருந்தடிப்பா?. எல்லாம் முறைப்படிதான் நடக்கிறது போலிருக்கு.’ பெருவரம்பில் நின்றிருந்த சின்னப்போடி சிறிது கிண்டலாகக் கேட்டான். “விளைச்சல் எப்படி?”
“ஏதோ ஆண்டவன் புண்ணியத்தில் பரவாயில்லை. தோட்டமும் நல்லாய் வந்திருக்கு.’ முண்டாசாகக் கட்டியிருந்த சால்வையை அவிழ்த்து முகத்தில் வடியும் வியர்வையைத் துடைத்தபடி பதிலளித்தான் மருதநாயகம். இவன் இப்போ எதற்காக வந்திருக்கிறான்?’ என்று மனதில் எண்ணியபடியே, “உங்களுக்கு விளைச்சல் எப்படி?” என்று ஒப்புக்குக் கேட்டு வைத்தான்.
“அதையேன் கேட்கிறே?. தத்தி விழுந்து எல்லாம் சப்பியாய்ப் போச்சு ஏக்கருக்கு ஐம்பது அறுபது புசல் அடிக்குமோ என்கிறது சந்தேகம்தான்.”
ʻʻ 6fSh 6)I 8F IT uu tib  ைக கொ டு க்க  ைல . . .
வியாபாரத்தையாவது கவனிக்க வேண்டாமா?. அறுத்தடிப்பு முடிஞ்சதும் உன்னுடைய ஆக்களின்ர நெல்லை

Page 22
28 இனி வானம் வசப்படும்
எனக்குத்தான் தரணும். நியாயமான விலைக்குக் கட்டுவேன்.” சின்னப்போடி வேண்டுகோள் விடுத்ததும் மருதநாயகம் கொடுப்புக்குள் சிரித்துக்கொண்டான்.
சின்னப்போடியைத் தெரியாதார் எவரும் ஒதியமலைப் பிரதேசத்தில் இல்லை எனலாம். அவனைப் பெயர் பெற்ற விவசாயி என்று சொல்வதிலும் பார்க்க, பெரிய முதலாளி என்று சொன்னால் மிகையாகாது.
பத்துப் பதினைந்து வருடங்களுக்கு முன்னர் குறுமன்வெளிக் குடியேற்றப் பகுதிக்கு குடிவந்த போது சின்னப்போடி ஓர் அன்றாடம் காய்ச்சிதான். அரசாங்கம் கொடுத்த மூன்றேக்கர் நீர்ப்பாசனக் காணியையும், ஒரு ஏக்கர் மேட்டுக் காணியையும் தவிர அவனிடம் எதுவித மூலதனமும் இருக்கவில்லை. காடுவெட்டிக் களனியாக்கி, மேட்டுப் பகுதியில் தோட்டமும் போட்டு படிப்படியாக முன்னேறினான். ஆரம்பத்தில் உடலுழைப்பை நம்பியிருந்தவன், காலப்போக்கில் எல்லாமே அல்லாவின் கிருபையினால் என்று சொல்லிக்கொண்டு அடுத்தவர்களையும் சுரண்ட ஆரம்பித்தான்.
ஆரம்பக்காலத்தில் யானைக்கும், பாம்புக்கும்; மலேரியா நோய்க்கும் பயந்து வெளியேறிய குடியேற்றவாசிகளின் காணிகளை எல்லாம் குத்தகைக்கு என்று எடுத்து, காலப்போக்கில் காண வேண்டியவர்களைக் கண்டு, கவனிக்க வேண்டியவர்களைக் கவனித்து, எல்லா நிலங்களையுமே தனதாக்கிக் கொண்டான்.
குறுமன் வெளிச்சந்தியில் சின்னப்போடி போட்ட பெட்டிக்கடை நாளாவட்டத்தில் வளர்ந்து பெரிய கடையாக

ச. முருகானந்தன் 29
மாறியது. பலசரக்குச் சாமான்கள், விவசாய உரவகைகள், கிருமிநாசினிகள், பாத்திர பண்டங்கள், ஆடம்பரப்பொருட்கள், ஆடை அணிகள் அனைத்துமே அங்கே கிடைத்தன. பிரயாண வசதி குறைந்த பிரதேசமாதலினால் சின்னப்போடி வைத்ததுதான் விலை.
நாளாவட்டத்தில் அப்பிரதேசத்தில் குடியேற்றமும் அதிகரித்தது. வெகு சீக்கிரத்திலேயே சின்னப்போடி இரண்டு டிரக்ரர்களும், ஒரு வானும் வாங்கினான். உள்ளூர் விவசாயிகளின் உற்பத்திப் பொருட்களை மலிவு விலையில் கொள்முதல் செய்து, நகருக்கு கொண்டு சென்று விற்றுப் பெருமுதல் தேடினான். அவனது பண வலிமையினால் அங்கு அவன் வைத்ததுதான் சட்டம் என்றானது.
எதுவித எதிர்ப்புமின்றி சுரண்டல் வாழ்வில் சுகபோகம் அனுபவித்துக் கொண்டிருந்தவனுக்கு இடைஞ்சலாக அண்மையில் மருதநாயகம் அங்கு வந்து சேர்ந்தான்.
மருதநாயகம் இவ்வூருக்குப் புதியவனல்ல. அவன் பிறந்ததே குறுமன்வெளியில்தான். அவனது தகப்பனார் குறுமன்வெளிக் குடியேற்றப் பிரதேசத்தின் ஆரம்ப கால உறுப்பினர்களில் ஒருவர். சிறந்த உழைப்பாளியான அவர் அற்ப ஆயுளிலேயே அரவம் தீண்டி இறந்து போக அவனது அம்மா இளம் விதவையானாள். அவளது அழகுத் தடாகத்தில் நீச்சலுடிக்க முயன்ற சின்னப்போடி முதலானோர் மூக்குடைபட்டனர்.
தனித்து விடப்பட்ட அபலைப் பெண்ணான அவள் எதிர்ப்புகளைச் சமாளிக்க முடியாமல், சின்னஞ்சிறு

Page 23
30 இனி வானம் வசப்படும்
பையனாக இருந்த மருதநாயகத்துடன் அவ்வூரை விட்டு வெளியேறி, தனது பிறந்த ஊருக்குச் சென்றாள். அங்கு வறுமையுடன் போராடி மகனை வளர்த்து உருவாக்கினாள்.
இருபது வருடங்கள் உருண்டோடின.
நாட்டில் ஏற்பட்ட அரசியல் பொருளாதார மாற்றங்கள் சிறுபான்மை மக்களை நலிவடையச் செய்தன. அவர்களது கிராமத்தில் அத்துமீறிய வெளியார் குடியேற்றங்கள் திட்டமிடப்பட்டுச் செயற்படுத்தப்பட்டன. வைரவர் கோயில் அரசமரத்தருகே விகாரை ஒன்று அமைக்கப்பட்டது.
சிறு சிறு பூசல்கள். மோதல்கள்.
ஒருநாள் ஆயுதபாணிகளக வந்தவர்கள் சோதனை என்ற பெயரில் புரிந்த அராஜகத்தினால் தமிழர் குடிமனைகள் தீக்கிரையாகின. மருதநாயகத்தின் தாயார் குடிசையோடு கருகினாள். எஞ்சியிருந்தவர்கள் காடுமேடு என்று ஓடி அகதிகளாக வெளியேறினர்.
அகதிமுகாமில் சிலகாலம் இருந்துவிட்டு மறுபடியும் தனது ஊருக்குச் சென்ற மருதநாயகம், அங்கு வெளியார் பலர் புதிதாகக் குடியேறியிருப்பதை அவதானித்தான். அங்கிருந்த ஊர்காவற் படையினரிடமிருந்து அவன் தப்பி வந்ததே தெய்வ செயல். என்ன செய்வதென்று தெரியாது. தத்தளித்துக் கொண்டிருந்த மருதநாயகம், போராளி இயக்கமொன்றில் சேர்ந்து செயற்பட எண்ணினான். ஆனால், அவர்களுக்கிடையே ஏற்பட்ட உட்பூசல்கள் அவனது எண்ணத்தை மாற்றியது. அப்போதுதான் தாயார் அடிக்கடி சொல்லும் குறுமன் வெளி நினைவுக்கு வந்தது. உடனே இங்கே வந்து சேர்ந்துவிட்டான்.

ச. முருகானந்தன் 31
ஏற்கெனவே விவசாயத்தில் அனுபவம் பெற்றிருந்த மருதநாயகம் தனது காணியைப் பொன் விளையும் பூமியாக்கினான்.
சிறுபோகம் முடிந்தபின் இடையில் ஒரு மழை பதத்துக்குப் பெய்தால், வயல்களை மறுத்துக் கட்டி உழுது விடுவார்கள். இதனால் புல்லுகள் அழிந்து மண்ணும் பதப்படும். இல்லாவிட்டால் போக் விதைப்பின்போதுதான் உழவு எனவே இடையில் சோம்பல் வ்ாழ்க்கைதான்.
மறுபோக விதைப்பு முடிந்து பயிர் செழித்து வளர ஆரம்பித்த பின்னர் அதிக வேலை கிடையாது. பின்னர் அறுத்தடிக்கும் போதுதான் வேலை. இந்த இடைப்பட்ட காலத்தில் விவசாயிகள் படு கஸ்ட்ம்தான்.
இதைப் பயன்படுத்தி. கோட்டைக் கடன் கொடுக்கும் போடி மார்பாடு கொண்டாட்டம்தான். இதன்னாலேயே கோட்டை கட்டிய போடிகளும் அங்குண்டு.
மருதநாயகம் வருமுன்னர் போடிமாரின் வஞ்சனையில் விழாத விவசாயிகளே அங்கு இல்லை எனலாம்.
"இதை நிரந்தரமாக போக்க என்ன வழி?’ என்று சிந்தித்த மருதநாயகமும் நண்பர்களும், தமது கூட்டத்து ஆட்களுக்கு சும்மா இருக்கும் காலங்களில் ஏதாவது வேலை கிடைக்க வழிவகைகளை ஆராய்ந்தனர்.
காணி உள்ளவர்களின் வேலிகளைச் சிரமதான முறையில் சீர் செய்து உழுந்து, பயறு, எள்ளுப் பயிரிட வாய்ப்பளித்தனர்.

Page 24
32 இனி வானம் வசப்படும்
காணி இல்லாதவர்கள்பாடு?
பலவாறாக யோசித்த மருதநாயகத்திற்கு, ஊருக்குக் கிழக்கே ஆற்றுப் படுக்கையின் மேலக்கரையில் காடு மண்டிக் கிடந்த பிரதேசம் நம்பிக்கையூட்டியது. சில பாரிய பாலை மரங்களும், விழா, முதிரை மரங்களும், நாணல் முட்புதர்களும், நொச்சி தாளைக் கூட்டங்களும், எருக்கலை ஆமணக்குப் பத்தைகளும் சேர்ந்து காடு மண்டிக்கிடந்த அப்பிரதேசத்தில் குரங்கும், உடும்பும், கீரிப் பிள்ளைகளும், காட்டுக் கோழிகளும்தான் வாசம் செய்து வந்தன.
உபயோகமற்றுக் கிடக்கும் இந்த ஆற்றுப் புறம்போக்கு நிலத்தை வெட்டித் திருத்திக் காய்கறித் தோட்டம் போட்டால் என்ன? என்ற எண்ணம் மனதில் வேரூறியதும், இதுபற்றி நண்பர்களோடு கலந்து உரையாடி முடிவுக்கு வந்தான்.
திட்டமிட்டபடியே மறுநாள் காட்டுக்கத்தி, கோடரி, கூடை, மண்வெட்டி சகிதம் புறம்போக்கு நிலத்தில் பலரும் கூடினார்கள். முட்செடிகளை மூட்டோடு வெட்டி முதலில் அடையாள வேலியிட்டனர். வேறு சிலர் பெருமரங்களுக்குத் தீ வைத்தனர். இன்னும் சிலர் தாளை, எருக்கலை, ஊமத்தை தொட்டாவாடி, ஆமணக்கு முதலானவற்றை வெட்டிச் செருக்கிக் குவித்துக் கொளுத்தினார்கள். எரியும் ஜுவாலையின் வெக்கை தாங்காமல் காட்டுக் கோழிகளும், கீரிப் பிள்ளைகளும் எட்டம் கூட்டின. குரங்குக் கூட்டம் கிளை தாவிப் பாய்ந்து கிலி கொண்டு ஒலி எழுப்பின. குறுமண் வெளிக் காணி ஞாபகத்திற்கு வந்தது.
அவன் குறுமன் வெளிக் குடியேற்றப் பிரதேசத்திற்கு மீள வந்தபோது, அவனது காணி சின்னப் போடியின்

ச. முருகானந்தன் 33
ஆக்கிரமிப்பில் இருப்பது தெரிந்தது. அவர்களது காணியைப் பராமரித்து வந்த மலையகத் தொழிலாளி ஒருவனைக் கள்ளத் தோணி’ என்று பயமுறுத்தி வெளியேற்றிவிட்டு சின்னப்போடி அக்காணியை ஆக்கிரமித்திருந்தான். சின்னப்போடியிடம் கேட்டபோது ஈவிரக்கமின்றி காணியைக் கொடுக்க மறுத்துவிட்டான்.
மருதநாயகம், சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மனு செய்தான். எனினும் உடனடி நிவாரணம் எதுவும் கிடைக்கவில்லை. இதனால் மனம் குன்றிய மருதநாயகம் ஒரு விவசாயியின் வீட்டில் தங்கி அவ்வூர் மக்களோடு மக்களாக உழைத்து அவர்களது சுக துக்கங்களில் கலந்து உழைத்தான்.
நீண்ட நெடுங்காலமாக வேதனையை அனுபவித்து வந்த அப்பிரதேச மக்களின் நலனில் அக்கறை கொண்டு செயற்பட்ட மருதநாயகம் வெகு சீக்கிரத்திலேயே அவ்வூர் மக்களின் மனதில் இடம்பிடித்தான். விவசாயத்தில் நவீன விஞ்ஞான முறைகளைப் பயன்படுத்தி அதிக விளைச்சலைப் பெறும் வழிவகைகளை அவ்வூர் விவசாயிகளுக்கு எடுத்துரைத்தான். பலரும் அவனுக்கு நண்பர்களாகினர்.
இதற்கிடையில் தனது காணியில் காலபோக விதைப்பைத்தானே மேற்கொள்ளும் முடிவுக்கு வந்தான் மருதநாயகம். இக்காலப் பகுதியில் மலையகத்திலிருந்து அகதிகளாகப் பலர் ஒதியமலைப் பிரதேசத்துக்கு வந்தனர். குறுமன்வெளிக் குடியேற்றப் பகுதிக்கு வந்த அகதிகளுக்கு அதிக வேலை வாய்ப்பும் இருக்கவில்லை. மருதநாயகமும்

Page 25
34 இனி வானம் வசப்படும்
நண்பர்களும் அவர்களது நலனிலும் அக்கறை கொண்டு செயல்பட்டனர்.
மருதநாயகம் 5 T60 (BLU T5 விதைப்பை ஆரம்பித்தபோது சின்னப்போடி வெகுண்டெழுந்தான். தனது பணபலத்தால் நடவடிக்கைகளில் இறங்கினான். எனினும் இளரத்தங்களின் அசாத்தியத் துணிச்சலின் முன்னே அவனது பாச்சா பலிக்கவில்லை. இறுதியில் அவன் பணிந்து போக நேரிட்டாலும் வஞ்சகப் போக்குடனேயே செயற்பட்டான்.
மேலும் மருதநாயகத்தின் குறுகிய கால வளர்ச்சியை அவனால் ஜீரணிக்க முடியவில்லை. மருதநாயகத்தையும், அவன் தங்கியிருந்த வீட்டுப் பெண்ணையும் சேர்த்துக் கதை கட்டினான். ஆனால் சின்னப்போடி வாரியிறைத்த சேறு மருதநாயகத்தை அழுக்காக்கவில்லை.
தானும் தன் முயற்சியுமாக அயராத உழைத்தான் மருதநாயகம். விவசாய அலுவலர்களைச் சந்தித்து தேவையான ஆலோசனைகளைப் பெற்று முறைப்படி வேளாண்மை செய்தான். அடியுரமிடல், களைக்கொல்லி, கிருமிநாசினி முதலானவற்றைப் பயன்படுத்தல், நாற்று நடும் முறை என பல்வேறு உத்திகளைக் கையாண்டான்.
முதலாவது அறுவடை நல்ல விளைச்சலைத் தந்தது. இதனால் எதிர்காலத்தில் நம்பிக்கை பிறந்தது. உள்ளூர் விவசாயிகள் அனைவரும் அவனுக்கு நன்றி கூறினார்கள்.
“தம்பி வந்த பிறகுதான் இப்படி ஒரு விளைச்சலைக் கண்டிருக்கிறம்.” ரசீத்காக்கா பூரிப்போடு கூறினார்.

ச. முருகானந்தன் 35
“மகன். இப்படியே இருந்து இன்னும் எத்தனை நாளைக்குக் கஸ்டப்படப் போறாய்? காலா காலாத்தில் மனதுக்குப் பிடிச்ச பெட்டையாய்ப் பாத்து முடிக்க வேண்டியதுதானே?. சமையல் சாப்பாட்டுப் பிரச்சினையும் தீந்திடும். வயலிலையும் கூட மாட ஒத்தாசையாய் வேலை வெட்டி செய்யலாம்.” முத்துலிங்கத் தாத்தா தனது பொக்குவாய் சிரிப்புடன் விண்ணப்பித்துக் கொண்டார்.
“அதுவும் நல்லதுதான். வீண் கதைகளுக்கும் இடமிருக்காது மகன்” பாலாச்சி பரிவோடு கூறினாள்.
அவர்களது அன்பு வேண்டு. லில் உள்ள நியாயம் கண்டு அவனும் சம்மதித்தான். விரைவிலேயே திருமணமும் நடந்தது.
அவனுக்கு வாய்த்த லட்சுமியும் அவனைப் போலவே முயற்சியுடன் செயற்பட்ட்தால் வாழ்க்கை இனிதே முன்னேற்றப் பாதையில் நகர்ந்தது. அவன் எள் என்று சொல்ல முன்னரே, அவள் எண்ணையாகச் செயற்பட்டு நிறைவைத் தந்தாள். அவளது அன்பான அரவணைப்பிலும், ஊராரின் ஒத்துழைப்பினாலும் மருதநாயகம் உற்சாகமாகச் செயற்பட்டான். தன்னைச் சார்ந்தவர்கள் நித்திய வறுமையிலும் கடனிலும் மூழ்காமல் இருப்பதற்கு வேண்டிய நடவடிக்கைகளை எடுத்தான். வங்கியில் கடன் பெறுதல், விவசாய இன்சூரன்ஸ் செய்தல் முதலானவற்றை அவர்கள் மத்தியில் அறிமுகப்படுத்தி பயன்பெறச் செய்தான்.
அறுவடை முடிந்த பிறகு அங்கே வயல் வேலைகள் அதிகம் கிடையாது. ஆடிக் கலவரத்தில் அடிபட்டு மலையகப் பகுதிகளிலிருந்து அகதிகளாகி அங்கு பலரும் வந்து சேர்ந்த

Page 26
36 இனி வானம் வசப்படும்
பின் கூலி வேலை கிடைப்பதென்பது குதிரைக் கொம்பாகிவிட்டது.
பொதுவாக அறுவடை முடிந்து, நிலத்தின் ஈரம் காய்ந்து விடுமுன் உழுந்து அல்லது எள்ளுவிதைத்து ஒருழுவு உழுதுவிடுவார்கள். அதுவும் வயற்காடு அடைப்பாக இருக்கும் இடங்களில் மாத்திரம்தான். சாதாரண விவசாயிகளின் காணிகளுக்கு நல்ல வேலி இல்லாததனால் இது சாத்தியப்படுவதில்லை.
காடு மண்டிக் கிடந்த தரையெல்லாம் சில நாட்களுக்குக்குள்ளாகவே துப்பரவாக்கப்பட்டுத் தோட்டக் காணியானது. செடிகொடிகள் சப்புச் சவுகள் எல்லாம் ஒதுங்கிவிட்டன. நான்கு புறமும் சீரான முள்வேலி அமைந்துவிட்டது.
தோட்டம் நிரப்பாகி, பதர்கள் ஒழிந்த பின் தோட்டப் பயிர்ச் செய்கைக்கு ஏற்ற செந்நிற வண்டல் தறையாகக் காட்சியளித்தது.
ஆற்றங்கரையோரம் வந்து பார்த்த பலரும் வியப்போடும் துணிச்சலோடும், பொறாமையோடும் பார்த்துப் பெருமூச்சு விட்டனர்.
ஏற்கெனவே இந்தப் புறம்போக்கு நிலத்தைத் தனதாக்கிக் கொள்ள வேண்டுமென்ற எண்ணம் சின்னப் போடியிடம் இருந்தால் இது அவனுக்குப் பெரும் விசனத்தை ஏற்படுத்தியது. உவன் மருதநாயகம் நம்மளை உருப்பட விடமாட்டான் போலிருக்கே.’ என்று மனதில் கறுவிக் கொண்டான். மருதநாயகத்தைத் தனது பரம வைரியாகவே கருதவும் ஆரம்பித்தான்.

ச. முருகானந்தன் 37
அன்று மாலையே இபுனுப்போடி, கந்தப்போடி, செல்லப்போடி முதலானோரைச் சந்தித்தான் சின்னப்போடி,
“மேலக்கரைப் பக்கம், ஆத்துப்புறம்போக்கை அடைச்சுத் தோட்டம் போடுறானுக இந்தப் பயக செய்யுற அட்டூழியத்தைப் பார்த்துக் கொண்டிருந்தா எப்படி? இனி இப்படியே ஆளுக்கு ஆளு கரையை அடைச்சுத் தோட்டம் போட்டால் ஆறு என்னத்துக்கு ஆகும்?” வெற்றிலையைக் குதப்பியபடி ஆவேசமாகக் கேட்டான்.
“உண்மைதான். ஆனால் அது அரசாங்க நிலம். கேக்கிறதுக்கு நீங்க யாரு என்பான். அதோடை அவனுக தனி ஆளு இல்லை. அறுபது எழுபது பேரு. அதையும் கவனிக்கணும்.” கந்தப்போடி நிதானமாகப் பதிலளித்தான்.
“அரசாங்கம் சரியாக இயங்காமலிருக்கிறதுதான் அவனுகளுக்கு வாசி. எதுக்கும் ஒரு நியாயம் வேண்டாமே?” ன்றான் செல்லப்போடி,
“நாம பொலிசில தகவல் கொடுப்போம்.” செல்லப்போடி கூறினான்.”
“பொலிஸ் இப்ப வெளியில வரமாட்டாங்கள்.’ இபுனுப்போடி நிதர்சனமாகப் பதிலளித்தான். “அதுதானே? பொலிஸ் ஸ்டேனசனிலேயே இருக்கிறது ஆபத்து. பயம். தீவிரவாதிகள் தாக்கலாம்.”
“அவங்களோட கதைத்துப் பார்ப்போம். சீ.ஓ. வையும், ஜீ.எஸ். சையும் கூப்பிட்டுப் பாட்டி வைச்சால் அலுவல் நடக்கும்.”

Page 27
38 இனி வானம் வசப்படும்
கந்தப்போடி சிரித்தான். “காக்கா இது அந்தக் காலமில்லை. அவனைக்கேட்டா அவன் நம்மைத் திருப்பிக் கேட்பன். வெள்ளக் கரைப் புறம்போக்கு நிலத்திலை நீங்க வாழைத் தோட்டம் போடலையா? தென்னங்கன்று நாட்டலையா? என்பான். நமக்கேன் வீண் வம்பு. கஸ்டப்பட்டு வந்தவங்க புழைக்கட்டுமே.”
“அட நீங்க ஒண்ணு. பின்னே இதை இப்படியே விட்டுறச் சொல்லுறியளா?. அவனுக கை ஓங்கிடுமே?” சின்னப் போடி அமைதியடையவில்லை.
எனினும் அவன் மருதநாயகத்துடன் நேரடியாக மோதிக் கொள்ளவில்லை. நீறுபூத்த நெருப்பாகச் சீற்றம் இருந்தாலும் அவனோடு பகைத்துக் கொள்வது புத்திசாலித்தனமில்லை என்பதை உணர்ந்துகொண்டதால் ஓடும் புளியம்பழமுமாகப் பழகிவந்தான் சின்னப்போடி,
இவனது இரட்டை வேடத்தை மருதநாயகம் நன்கு உணர்ந்திருந்தான். எனினும் பேச்சை முறித்துக் கொண்டதில்லை.
எனவேதான் இன்றும் சின்னப்போடி கதை
கேட்டதும் நிதானமாகப் பதிலளித்துக் கொண்டிருக்கிறான்.
“என்ன மருது, எனக்கு ஒரு மறுமொழி சொல்லலையே?’
“மன்னிக்கவேணும் போடியார், இந்த முறை நாங்களாகவே நெல்லைக் கட்டி டிரக்டரிலை கொண்டுபோய் ரவுணில கொடுக்கப் போறம்.”

ச. முருகானந்தன் 39
*அங்க மில்காரர் மடக்கம் விலை சொல்லுவாங்கள்.” சின்னப் போடியார் மடக்கப் பார்த்தார். “டிரக்ரர் கூலி வேற.”
“இல்லைப் போடியார். உங்கட விலையிலும் பார்க்கக் கூட கொடுப்பானுக.”
அவனது பதில் சின்னப்போடிக்கு எரிச்சலை ஏற்படுத்தியது. தனது வியாபாரத்திலும் மண் விழுவதை உணர்ந்து மேலும் சீற்றம் கொண்டான். இவனுக்குச் சரியான பாடம் புகட்டணும். என்று கறுவிக் கொண்டு நடந்தான்.
வழியிலே மருதநாயகத்தின் கூட்டத்தினரின் தோட்டத்தின் செழிப்பையும் பார்த்ததும் சின்னப்போடியின் வயிற்றெரிச்சல் மேலும் அதிகரித்தது.
தோட்டம் போட்டு இரண்டு மாதங்களாகி விட்டதால் மிளகாய்க் கன்றுகள் செழிப்புற வளர்ந்து பிஞ்சு பிடித்திருந்தன. உயரமாக வளர்ந்திருந்த வெண்டி மரங்களில் மஞ்சள் மஞ்சளாய்ப் பூக்கள் கத்தரியிலும் தக்காளியிலும் மொழு மொழு என்று காய்கள்! வெள்ளரியும், பூசணியும் பிஞ்சு பிடித்திருந்தன. முளைக்கீரை விற்பனைக்குத் தயாரான நிலையில் இருந்தது.
பல வருடங்களாகக் காடுமண்டிக் கிடந்த நிலம். போதாக்குறைக்கு அடியுரமுமிட்டிருந்ததால் ஒவ்வொரு பயிரும் செழிப்புற்றிருந்தது.
“காடு மண்டிக்கிடந்த புறம்போக்கு நிலமா இது? என்று ஆச்சரியப்பட்டான் சின்னப்போடி,

Page 28
... O இனி வானம் வசப்படும்
அவன் வீட்டை அடைந்தபோது வானொலியில் செய்தி ஒலிபரப்பாகிக் கொண்டிருந்தது. பயங்கரவாதிகள் பற்றித் தகவல் தருவோருக்கு லட்ச ரூபா சன்மானம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
அன்று முழுவதும் சின்னப்போடி தூக்கமின்றித் தவித்தான்.
அடுத்த சில நாட்களில் குறுமண்வெளிப் பிரதேசம் சுறுசுறுப்பானது. அறுவடை ஆரம்பித்துவிட்டதால் அனைவருக்கும் கூலி வேலை கிடைத்தது.
அறுவடை முடித்ததும் வயல்வெளிகளில் சூடுகள் ஆங்காங்கே உழைப்பின் சின்னங்களாக உயர்ந்து நின்றன.
மருதநாயகத்தின் கூட்டத்தார்க்கு இம்முறை விளைச்சல் எக்கச்சக்கம்! எப்படிப் பார்த்தாலும் ஏக்கருக்கு நாற்பது முடைக்குக் குறையாது என்று கணித்திருந்தார்கள். நிலா காயும் ஒரு இராப்பொழுதில் கட்டடிப்பு வேலைகள் நடைபெற ஆயத்தங்கள் நடந்தன.
மருதநாயகமும் நண்பர்களும் டிரக்ரரில் வந்து இறங்கினார்கள். இரவிரவாகப் பல கடுகள் அடிக்கவேண்டும் என்பது திட்டம். எனவே அறுபது எழுபது பேர்கள் வரையில் வேலையில் ஈடுபட்டிருந்தனர்.
லட்சுமி தேநீர் தயாரித்துக் கொண்டு வந்து அனைவருக்கும் பரிமாறினாள்.
“நெல்லு வித்தவுடனை உனக்கு ஒரு சங்கிலி செய்விக்க வேணும்.” மருதநாயகம் லட்சுமியின் காதோடு கிசுகிசுத்தான்.

ச. முருகானந்தன் 41
“காசைக் கண்டவுடனை செலவளிக்கிற எண்ணம்தான். பிறகு பிள்ளைப் பெறுச் செலவுக்கும் வேணுமெல்லே.” அவள் நாணத்தோடு சிரித்தாள்.
தேநீர் பருகியதும் கட்டடிப்பு வேலைகள் ஆரம்பித்தன.
சூட்டுப் போரைச் சுற்றிய படங்குகள் விரிக்கப்பட்டதும் பருத்து நிமிர்ந்து நின்ற பட்டடையில் ஏறிய மருதநாயகம். கதிர்க்கத்தைகளைப் படங்குகளில் விழுத்த, மற்றவர்கள் அதைப் பரப்பி விசிறினார்கள்.
பகிடிகளுடனும், கேலிப் பேச்சுக்களுடனும் வேலை தொடர்ந்தது.
“முத்தண்ணை எப்ப உங் கட கலியாணம்?”
“அதுக்கெனன அவசரம். இன்னும் நாலைஞ்சு வரிசம் போகட்டுமே. இப்ப முப்பத்தி நாலு வயதுதானே அவருக்கு.”
“இந்த அறுவடையோட ஒண்டை அவிழண்ணை, இல்லாட்டில் இக்கணம் ஒருத்தியும் . לל
‘நேரமாகுது. தேங்காயை உடைச்சுக் கற்பூரத்தைக் கொழுத்திப் போட்டு மிசினை ஸ்ராட் பண்ணுங்கோ.”
அடுத்த சில நிமிடங்களில் ரீங்காரமிடும் வண்டாய், பம்பரம்போல உதறிக் குவித்த நெற்கதிர்களின் மேல்
டிரக்ரர் சுழன்று கொண்டிருந்தது.

Page 29
42 இனி வானம் வசப்படும்
களத்திற்கூடாகச் சுற்றி நடந்து வந்த மருதநாயகத்தின் கால்கள் நெல்மணிகளுக்குள் புதையவே அவனது மனது பொலியை எண்ணிமகிழ்ந்தது.
அடிபட்ட பொலியைத் தடியினால் கிளறி வைக்கோலை வெளியே விசுறுகையில் படங்கில் சொரிந்து கிடந்த நெல்லில் தடி உராய்ந்து சலசலத்தது.
முதலாவது சூடு அடித்து முடிந்ததும் நெல்மணிகளைத் திரட்டி குவியலாக்கினார்கள். அவர்களது வியர்வைத் துளிகள் நெல்மணிகளைத் தழுவிச் சல்லாபித்தன.
அடுத்த சூடு. அடுத்த சூடு அடுத்த சூடு.
டுமீல். டுமில். டுமில்.
திடீரென்று தோன்றிய துப்பாக்கி வேட்டுக்கள்!
203urt elbLDIT... 203urt elbLDm... 22(3um...
எங்குமே மரண ஒலம் கட்டுப் போரெல்லாம் ஜுவாலை விட்டெரிந்தன. சீருடைகள் எக்காளமிட்டுச் சிரித்தன.
“மேக்க அபே ரட்ட. மேக்க அப்பே ரட்ட. கொட்டியாட்ட மெஹறிஇட நக. இது எங்கட நாடு. இது எங்கட நாடு. புலிகளுக்கு இங்கே இடமில்லை’ அட்டகாசமாக விவசாயிகளைச் சுட்டு வீழ்த்தினர். பின்னர் அப்பாவி தமிழ் உடல்களை குவித்து எரியூட்டனர்.
மறு நாள்.

ச. முருகானந்தன் 43
வயற்காட்டில் குவியலாக ஐம்பதறுபது மண்டை ஒடுகள்
உலகத்தின் மூலை முடுக்குகளிலிருந்தெல்லாம் இந்தக் குரூரமான இனப்படுகொலை பற்றிய செய்திகள்
எமது வானொலியும், ரூபவாகினியும் முதலில் மெளனம் தாமதமாக லங்கா புவத்தை ஆதாரம் காட்டி ஒலிபரப்பிய செய்தி - அறுபது பயங்கரவாதிகள் குறுமன்வெளியில் கொல்லப்பட்டனர்!
“இப்படி ஒரு குரூரமான அராஜகத்தை என்ர வாழ்நாளில் கண்டதில்லை. முழுப் பூசனிக்காயைச் சோற்றில் மறைக்கப் பாக்கிறாங்களே. படுபாவிப் பயலுக, ஆக்களையும் கொன்று எங்க எல்லாருடைய சூட்டையும் தீக்கிரையாக்கீட்டாங்க. என்ன அருமந்த பொடியன். அப்பாவிச் சனங்கள்.”
சின்னப் போடியும் மனம் வெதும்பிப் புலம்பிக் கொண்டிருந்தான்.
லட்சுமியை யாராலும் தேற்ற முடியவில்லை. ஊரெல்லாம் செத்த வீடு யாரை யார் தேற்றுவது?
“அத்தான் உங்களையும் நீங்க விதைச்ச பயிரையும் அழிச்சிட்டாங்க. ஆனா நீங்க என்மடியில விதைச்சது பத்திரமாக இருக்கு. அவன் பிறந்து வருவான்.
b....'
மனதில் சபதமெடுத்துக் கொண்டாள் லட்சுமி.

Page 30
பேரின்பநாயகத்தின் மனம் என்றுமில்லாதவாறு குதுாகலமாக இருந்தது. மிக உற்சாகமாக சினிமா பாடலொன்றை விசில் செய்தபடி குளித்துக் கொண்டிருந்தான். அவனது அபரிமிதமான குதூகலத்திற்குக் காரணம் அப்பாவிடமிருந்து வந்த கடிதம்தான் அப்பாடா! இப்போதாவது அப்பாவுக்கு என்னைப்பற்றிய நினைப்பு வந்ததே என்று நிம்மதியடைந்தான்.
"மகனே, இரண்டாம் திகதி கலியாணம் உடனே புறப்பட்டு வா. என்று கடிதம் போட்டிருந்தார். வேலையில்
சேர்ந்து ஐந்து வருடங்கள் கடந்து இருபத்தாறு வயதைத் தாண்டியும் இன்னமும் கலியாணம் செய்து கொள்ளாததில்
 
 

σ. முருகானந்தன் 45
அவனுக்கு நீண்ட நாட்களாகவே கவலை இருந்து வந்தது. ‘அப்பாடா! அந்தக் கவலைக்கும் முடிவு வந்துவிட்டது. அவன் குவழியாக இருந்தான்.
பேரின்பநாயகம் சுந்தரத்தாரின் ஒரே மகன். அவனைப் பெற்றதும் தாயார் இறந்துவிட்டார். அப்போது சுந்தரத்தாருக்கு வயது இருபத்தொன்றுதான். மனைவியைப் பறிகொடுத்த பின்னர் மகனுக்காகவே வாழ்ந்தார் சுந்தரத்தார். அந்த நாட்களில் அவரை மறுமணம் செய்து கொள்ளும்படி பலர் வற்புறுத்தியதுண்டு. ஆனால் அவர் மறுத்துவிட்டார். தனது ஒரே மகன் பேரின்பநாயகத்தின் முன்னேற்றத்திற்காக - அவனை நல்லபடி வளர்ப்பதற்காக இட்சிய வாழ்வு வாழ்ந்தார். சின்ன வயதில் அவனைத் தூக்கிச் சீராட்டித் தாலாட்டிப் பாலூட்டிச் சோறுாட்டிப் பக்குவமாக எதுவித குறையுமின்றி வளர்த்தார். அவனை நல்லமுறையில் படிக்க வைத்து பண்புள்ளவனாக வளர்த்து ஆளாக்கினார். யார் யாருடைய கால்களைப் பிடித்தோ அவனுக்கு உரிய வயதில் வேலையும் வாங்கிக் கொடுத்துவிட்டார்.
வேலையில் சேர்ந்த சில நாட்களிலேயே பேரின்ப நாயகத்திற்குக் கலியான ஆசை தொட்டுவிட்டது. வீட்டிலே பொறுப்புகள் எதுவும் இல்லாததால் தனது அவா கூடிய சீக்கிரமே நிறைவேறும் என்று நம்பியிருந்தான். ஆனால் அவனது எண்ணத்திற்கு மாறாக, அப்பாவோ அவனது கலியாணப் பேச்சையே எடுக்காமல் இருந்துவிட்டார். “எனக்குக் கலியாணம் செய்து வையுங்கள்’ என்று அப்பாவிடம் கேட்க முடியுமா?. அம்மா, அக்கா, தங்கை என்று இருந்தாலும் அவர்கள் மூலமாவது தன்மன

Page 31
46 இனி வானம் வசப்படும்
நிலையைத் தெரிவிக்கலாம். ஆனால் அப்பாவுடன் கதைப்பதே குறைவு. இந்த நிலையில் எப்படித் தன் மனநிலையை அவரிடம் தெரிவிக்க முடியும்.
ஒவ்வொரு தடவையும் அவன் லீவில் ஊருக்கு வருகின்ற போதெல்லாம் ‘அப்பா கலியாணப் பேச்சை எடுக்க மாட்டாரா' என்று அவனது மனது அங்கலாய்க்கும். ஆனால் ஒவ்வொரு தடவையும் ஏமாற்றதுடனேயே திரும்ப வேண்டி இருக்கும்!
தனது மனநிலையை நேராக அப்பாவிடம் சொல்ல முடியாவிட்டாலும் கூட அவர் புரிந்துகொள்கிற மாதிரி பல தடவைகள் கடிதம் எழுதியிருக்கிறான். “இங்கே கடைச் சாப்பாடு சரியில்லை. வருத்தம் வரப்பார்க்கிறது. நாக்கு மரத்து விட்டது. சாம்பாரையும் தோசையையும் எத்தனை நாட்களுக்குத்தான் தின்பது? இப்படியெல்லாம் சூசகமாகப் பல தடவைகள் எழுதியிருக்கிறான். ஆனால் அப்பாவுக்குப் புரிந்தபாடில்லை.
அவன் மனதிலே நினைத்து வைத்திருந்த ஜானகி, யசோதா, மலர் எல்லோருக்குமே கலியாணம் நடந்துவிட்டது. யாரையாவது காதலிக்கவும் அவனுக்குத் தைரியமில்லை. தாய் சகோதரிகளுடன் வளராததால் பெண்கள் என்றாலே பயம்! அவர்கள் ஐந்து யாருக்கு அப்பால் வரும்பொழுதே அவன் தலையை குனிந்து விடுவான். பெண்கள் கதை கேட்டுவிட்டால் இவன் உடலெல்லாம் வியர்த்து போகும். ஆனாலும் கொள்ளை ஆசை யாராவது ஒருத்தியை கலியாணம் செய்து கொண்டு களிப்புடன் வாழவேண்டும் என்பது அவா. கற்பனையில் தமிழ்ப்படக் கதாநாயகர்களைப்

ச. முருகானந்தன் 47
போலப் பெண்களோடு காதல் வலம் வந்திருக்கிறான். கனவுகளில் அவர்களுடன் வாழ்க்கை நடத்தியிருக்கிறான். கனவுகளில் கூடிக் குலாவியிருக்கிறான். ஆனாலும் நிஜத்தில் இன்றுவரை அவன் கற்புள்ள, கறைபடியாத ஆண்மகன்.
இத்தனை நாட்களும் அவன்பட்ட கஷ்டங்களுக்கும் இதோ முடிவு வந்துவிட்டது. இரண்டாம் திகதி - அதாவது இன்னமும் ஐந்து நாட்களில் கலியாணம்.
裘 梁 梁
அப்பா கடிதத்தைச் சுருக்கமாகவே எழுதியிருந்தார். ‘இரண்டாம் திகதி கலியாணம். உடனே வரவும் - அவ்வளவுதான் கடிதம்! “சீ... பெண் யாரென்றாவது எழுதியிருக்கலாம். அவனது மனது அலைபாய்ந்தது. பெண் யாராக இருந்தால்தான் என்ன? அவன் தாலி கட்டத் தயாராக இருந்தான். ஆனாலும் யாரென்று தெரிந்து கொள்வதில் ஓர் ஆர்வம். மேகலாவாக இருக்குமோ..? இராணியாக இருக்குமோ? இல்லையில்லை விஜயலட்சுமியாகத்தான் இருக்கும். அவனது மனது கற்பனைகளில் மிதந்தது.
குளித்துவிட்டுச் சாப்பிட்டபோதும், பஸ் ஏறி அலுவலகத்திற்கு வந்தபோதும் அதன் பின்னரும் அவன் குதுாகலமாகவே இருந்தான். லீவுக்கும், வாறண்ட்டுக்கும் விண்ணப்பித்தபோது விவகாரம் அலுவலகம் முழுவதுக்கும் வெளியானது. நண்பர்கள் எல்லோரும் பார்ட்டி’ G835 LITT 856T. கிண்டல் செய்தார்கள். நமக்கு "இன்விட்டேசன்’ இல்லையா என்று கேட்டார்கள்.

Page 32
@@f 6 ITGOTřD 6DIĞIFIH I(BňD
 

ச. முருகானந்தன் 49
அவர்களெல்லோரையும் சமாளிப்பதில் அவனுக்குப் போதும் போதுமென்றாகிவிட்டது. அன்று அவனுக்கு நூறு ரூபாவுக்கு மேல் செலவு
மாலையில் மெயில் வண்டியில் புறப்பட்டபோது அது அவனுக்கு சொர்க்க யாத்திரையாக இருந்தது. காலையில் வீட்டை அடைந்ததும் பெண் யார் என்று தெரிந்துவிடும். ஆனால் அதுவரை அவனுக்குப் பொறுமையில்லை. இரவு முழுவதும் ரெயிலில் சீட் கிடைத்தும் தூக்கம் வரவில்லை. விஜயலட்சுமியும், மேகலாவும், ஜானகியும் தேவதைகளாக மாறி மாறி அவன் மனக்கண்ணில் நடனமாடினார்கள். "விஜயலட்சுமி சிவப்பி. அவள் என்றால்தான் நல்லது. சொத்து இல்லாவிட்டால் என்ன? என்னிடம்தான் வீடுவாசல் சொத்து எல்லாம் இருக்கிறதே!
வண்டி ஐந்து மணிக்கெல்லாம் கொடிகாமம் வந்துவிட்டது. பஸ் எடுத்து நெல்லியடிக்கு வர ஆறு மணியாகிவிட்டது. பஸ்ஸிலிருந்து இறங்கி ஒழுங்கையில் நடந்து சென்றபோது பொல பொல என்று விடியத் தொடங்கிவிட்டது.
அவன் வேகமாக நடந்தான். ‘மணப் பெண் யார் என்று அறிவதில் அவ்வளவு ஆர்வம்?
உச்சில் அம்மன் கோவிலடி முடக்கில் அவன் திரும்பியபோது நாகப்பர் மண்வெட்டி பட்டை சகிதம் தோட்டத்திற்குப் போய்க் கொண்டிருந்தார். பேரின்ப நாயகத்தைக் கண்டதும் “ட்றெயின் நேரத்துக்கு வந்திட்டுது போல. ஓ - தம்பி கலியாணத்துக்காகவே லீவில் வந்தனிங்கள்?’ என்று கேட்டார். புன்முறுவலால்

Page 33
50 இனி வானம் வசப்படும்
பதிலளித்துவிட்டு அவன் தொடர்ந்து நடந்தான். யார் “பெண்’ என்று இவரிடம் கேட்டு அறிந்திருக்கலாம். ஆனால் மாப்பிள்ளைக்குப் பெண் யார் என்று தெரியாவிட்டால் என்ன நினைப்பார்’ என்பதால் கேட்காமலேயே வந்துவிட்டான்.
அவன் வீட்டுக்கு வந்தபோது அப்பா வேப்பங்குச்சியால் பல் துலக்கிக் கொண்டிருந்தார். அவனைக் கண்டதும் ஏனோ தலையைக் குனிந்து கொண்டார். அவன் அறைக்குள் வந்து சூட்கேசை வைத்து விட்டுக் கிணற்றடிக்குச் சென்று முகம் கால் கழுவிக் கொண்டு வந்தபோது, ஆச்சி தேநீரையும் கருப்பட்டியையும் நீட்டினார்.
‘என்ன ஆச்சி, எப்படிச் சுகங்கள்’ என்று பேச்சை ஆரம்பித்து, “ஆர் பொம்பிளை ஆச்சி?’ என்று மனதிலிருந்த அவாவை அடக்க முடியாமல் கேட்டான்.
“அதையேன் கேட்கிறாய்?. இந்த வயசிலை கொப்பனுக்கு இப்படியொரு ஆசையே. நாற்பத்தைஞ்சு வயசுக்குப் பிறகு ஒரு கண்டறியாத கலியான ஆசை. அதுவும் இருபது வயதுப் பெட்டை ஆச்சி அடுக்கிக் கொண்டே போனார். அதற்குப் பின்னர் அவனுக்கு எதுவுமே
கேட்கவில்லை. அவன் அதிர்ந்து போய் நின்றான்!
(யாவும் கற்பனை)
స్టాసిలో
 

திர நூலகப் 四彌 ερες ή τ βήή βλά リ
":" ': 51
(3LDGeo இரைந்த சத்தம் கேட்டு திடுக்கிட்டு கண்விழித்தாள் ராணி அதிகாலை அமைதியைக் கிழித்துக் கொண்டு பேரிரைச்சலுடன் புக்கார விமானம் ஒன்று தலைக்கு மேலால் பறந்து கொண்டிருந்தது.
ராணி எழுந்து வந்து வானத்தை நோக்கினாள். மனதில் ஏற்பட்ட மெல்லிய பதற்றத்துடன் தொலைவில் பறந்து செல்லும் குண்டு வீச்சு விமானங்களைப் பார்த்தான். ‘எங்கே கொண்டு போய் கொட்டப் போகுதோ, ஆரரைக் கொல்லப் போகுதோ?’ என எண்ணிக் கொண்டிருந்தபோது தொலைவில் குண்டுகள் விழுந்து வெடிக்கும் பெரிய சத்தம் கேட்டது.

Page 34
52 இனி வானம் வசப்படும்
மைமல் பொழுது நீங்கி மெல்ல விடியத் தொடங்கியிருந்தது. குளிர்ந்த உடலைச் சிலிப்பிக் கொண்டு உள்ளே வந்தாள். மாமி கிழிந்த உரப்பையின் மீது ஒடுங்கிக் கிடந்தபடி கொய்து கொய்து இழுத்துக் கொண்டிருந்தாள். இடையிடையே விடாமல் இருமல் வந்து திணறினார்.
இந்தக் காட்டுக்குளிர் அவர்களுக்குப் பழக்கமில்லாதது, உடுப்பிட்டியில் இப்படி குளில்லை. ஊசி ஊசியாய் உடலைத் தாக்கிக்குத்தும் கடும் குளிர். விலகிப் போயிருந்த பழஞ்சேலையை எடுத்து அவரைப் போர்த்தினாள்.
கிழிந்த சேலையைப் போர்த்தபடி சுருண்டு போய்க் கிடக்கும் மாமியைக் கவலையோடு சிறிது நேரம் பார்த்துக் கொண்டிருந்தாள். இடம்பெயர்வுகள் ஏற்பட்டு, ஊர்மாறி ஊராக அலைந்து திரிந்த இந்த ஒரு வருடத்தில் எவ்வளவு ஒடுங்கிப் போய்விட்டார்.
அறுபது வயதிலும், எழுபது வயதைத்தாண்டிய தோற்றம், எலும்புகள் முனைப்பாய்த் தள்ளிக் கொண்டிருக்கும் கன்னங்கள், ஒட்டிய வயிறு, பார்த்துக் கொண்டிருந்த ராணியின் கண்கள் கசிந்தன.
மாமியிலே ராணிக்கு அலாதி பிரியம். மாமிக்கும் அவள் மீது மட்டற்ற பாசம். மற்றைய மாமி மருமகள் போல் கீரியும், பாம்புமாக அல்லாமல், பாலும் தேனுமாய் இருப்பதைப் பார்த்த சிவராசனே பூரித்துப் போவான். படுக்கையறைத் தனிமையில் இதற்காக அவளைப் பாராட்டியும் இருக்கிறான்.

ச. முருகானந்தன் 53
‘அன்பு என்கிறது பரஸ்பரம் கொடுத்துப் பெற்றுக் கொள்ளவேண்டிய ஒன்று. அன்பை விதைத்தால் பல மடங்கு அன்பைப்பெறலாம். அதிகம் படிக்காத ராணியின் விளக்கத்தில் அவன் பூரித்துப் போவான். பரிசாக முத்த மழைகள் மொத்தமாகப் பொழிவான்.
எவ்வளவு காலமாக மாமி இந்தக் குடும்பத்திற்கு ஒத்தாசையாக இருந்தார். பிள்ளைகளை வளர்த்தெடுத்ததில் பெரும்பங்கு அவருக்குத்தான். இப்போது சில நாட்களகத்தான் இந்தத் தொய்வு வருத்தம் வந்து அவரைப் பாடாய்படுத்துகிறது.
ராணி நெடுமூச்செறிந்தாள். இதயத்தை ஏதோ பிசைந்தது. இன்று சொத்திழந்து சுகமிழந்து, அகதி வாழ்வு என்ற சொல்லுக்குப் பின்னேதான் எவ்வளவு துயரங்கள்.
வாடிப்போய், நாளை என்னவென்று, கேள்விக்குறியாகி, பேயறைந்த முகங்களுடன் இந்த வன்னிக்கிராமத்து வாழ்வு ஏதோ ஒரு தேடலில், சூனியமான எதிர்பார்ப்புடன் இன்னும் முற்று முழுதாக அழிந்தொழிந்து போகாத சிறிய நம்பிக்கைக் கீற்றுடன் தொடர்கிறது.
வியாபாரத்திற்கு போன கணவனின் வரவின் தாமதத்தைப் பற்றி ராணி யோசித்தாள். 'பாவம் எவ்வளவு தூரம் சைக்கிள் ஓடுகிறார்!’
அவர் வந்தாலாவது குளிசைகள் கொண்டு வருவார். மாமிக்கு கொடுக்கலாம். ஆஸ்பத்திரியிலும் முட்டுக்குளுசை இல்லை என்று கைவிரித்து விட்டார்கள். பாமசிகளிலும் குதிரை விலை, யானை விலை ராணி தவித்தாள்.

Page 35
54 இனி வானம் வசப்படும்
அவர்கள் இந்த இடத்திற்கு வந்து மூன்று மாதங்கள்தான் ஆகின்றன. தண்ணிருக்குத் திக்காய்க் குளத்தைத்தான் நம்பியிருந்தனர். குளக்கரையில் இருந்த காட்டில் சிறு பகுதியை வெட்டித் துப்புரவாக்கி, யு.என்.எச்.சி.ஆர். தந்த கூடாரத்தினால் கூரையும், அவளது பழைய சேலைகளால் சுற்றி மறைப்பும் கட்டியதுதான் அவர்களது மாளிகை இந்தக் கூடாரப் படங்கும் கிடைத்திருக்காவிட்டால் என்ன பாடுபட்டிருக்க வேண்டியிருக்கும். என்று நினைத்துப் பார்க்கிறாள் ராணி. இந்த ஒரு வருடத்தில் இப்படி ஒரு காட்டுப் பகுதியில் குடியிருப்போம் என கடந்த வருடத்தில் யாரும் கனவுகூட கண்டிருக்க மாட்டார்கள். சொந்த நாட்டில் அதுவும் அரசினால் அகதிகளாக்கப்பட்ட அவலநிலை
ஊரிக்காட்டுக்கு ஆமி வந்திட்டான் என்று கேள்விப்பட்டதும் உயிர் தப்பினால் போதும் என்று இடம்பெயர்ந்த பல்லாயிரக்கணக்கான மக்களோடு சொந்த வீட்டைவிட்டு வெளியேறிய பயணம், தடைதாண்டும் மரதன் ஓட்டமாகி சில மாதங்களுக்கு முன்னர்தான் முடிவுக்கு வந்திருக்கிறது.
சில நாட்கள் சாவகச்சேரியில் தெரிந்தவரின் வீட்டில் தங்கியிருந்தபோது குடாநாட்டின் ஒட்டுமொத்த வெளியேற்றம் நிகழ்ந்தது. கொட்டும் அடை மழையில், குளிருடனும் பசியுடனும் அவலமாய் நடந்த கொடிய இடம்பெயர்வு, சிறுவர்களுடைய அழுகைக் குரல்களும், முட்டி மோதும் சனக்கூட்டத்தின் ஆமை நடையும் இப்போதும் ராணிக்கு அனுபவிப்பது போலிருக்கிறது.

ச. முருகானந்தன் 55
கொட்டும் விமானக் குண்டுகளுக்கு மத்தியிலும், தொடுப்பு வள்ளங்களில் தொத்திக் கடலேரி தாண்டி, உயிர் தப்பி கிளிநொச்சி வந்து அறிமுகமில்லாத நல்ல இதயம் கொண்ட தியாகலிங்கம் ஐயாவீட்டில் சிறுகுடிசையைமைத்து தங்கியிருந்த காலம்வரை மாமி ஒரு சுமைதாங்கியாகத் தானிருந்தார். பின்னர்தான் படிப்படியாக ஆஸ்மா வியாதி அவரைப் பிடிக்க ஆரம்பித்தது.
உருத்திரபுரத்தில் இருந்தபோது வீட்டோடு சிவராசா ஒரு சில்லறைக்கடை போட்டு, அதன் வருமானத்தில் ஓடிக் கொண்டிருந்தபோது ‘சத்ஜெய' நடவடிக்கை விரட்டியது. கிளிநொச்சியை இராணுவத்தினர் பிடிக்க, இருந்த சொற்ப பொருட்களையும் இழந்துவிட்டு வன்னேரிக்குளப் பகுதிக்கு ஓடி வர நேர்ந்தது. இந்தக் காட்டுப்பகுதி அவர்களுக்கு முற்றிலும் பழக்கப்படாதது. யானைகளும், பாம்புகளும் ஒரு பக்கம் கிலிகொள்ளவைக்க, குத்திடும் நுளம்பெல்லாம் மலேரியாவில் விழுத்தி பல உயிர்களைக் காவு கொண்ட வண்ணம் இருந்தது.
செல் வருமோ, ஹெலி வருமோ என்ற பயம் ஒருபுறம், பாம்பு வருமோ, யானை வருமோ என்ற கிலி மறு பக்கம், மொய்த்துக் கடித்துக் குருதி உறிஞ்சும் கொசுக்கள் மறுபக்கம் என தூக்கம் பறிபோனது.
இங்கு வந்தபின் ஏழ்மையும், மனவேதனையும் அதிகரித்தது, எந்தத் தொழிலும் கிடைக்கவில்லை. சிவராசா வவுனியாவுக்குச் சைக்கிளில் சென்று, தொலைதூரம் ஓடி பொருட்களை வாங்கி வந்து விற்றுப் பிழைத்தான். இராணுவக் கெடுபிடிகளின் மத்தியிலும், பாஸ்

Page 36
56 இனி வானம் வசப்படும்
பிரச்சினைகளாலும் அதைக்கூடச் சரியாகச் செய்ய முடியவில்லை.
கைக்காப்பு, கழுத்துச் சங்கிலி என்று இப்போது காதுத்தோடு கூட விற்றாகிவிட்டது. இப்போது மாமியாலும் முடிவதில்லை. எப்பொழுதும் நோயும், பாயும்தான். சுமைதாங்கியாக இருந்தவர், சுகதேசியாக இருந்து தன்னைப் பார்த்தாலும் பரவாயில்லை. இப்போது சுமையாகிவிட்டார்.
இங்கு எல்லாத் தேவைகளும் கஷ்டங்கள் மத்தியில்தான் நிறைவேறுகிறது. காலைக்கடன்களுக்காக காட்டுக்குள் ஒதுங்குவது, குளிப்பது, படுப்பது எல்லாமே ஒரு கேள்விக்குறியாகி விட்டது.
அருகில் உறவினர்கள்கூட இல்லை. ඊග (6 கலைக்கப்பட்ட பின் உறவுகள் அங்கொன்றும் இங்கொன்றுமாய், சிதறிப்போய்விட்டனர். தப்பிப் பிழைத்தவரும், தப்பிப் பிழைக்காதவருமாய் பிரிந்த பின்னர் புதிய அயலில், புதுப்புது உறவுகள் ஒருவருக்கொருவர் உதவிடும் மனமிருந்தும், மடியில் கனதியில்லாமல், யாரிடமும் யாரும் கடன்பட முடியாத நிலை. வீடொன்றாகிவிட்ட கூடார வாழ்வை எண்ணி அழுவதற்கும் நேரம் இன்றி, வரப்போகும் மாரியை எண்ணிப் பயந்தபடி.
மலையக லய வாழ்க்கையைப் பற்றி அவள் கேள்விப்பட்டிருக்கிறாள். சில கதைகளையும் படித்திருக்கிறாள். மகளை மாறி எழுப்பிய தந்தையின் கதைகள் படித்த ஞாபகம்தான் வந்தது. அவள்

ச. முருகானந்தன் 57
கணவனுக்கு அருகில் படுத்து நாளாகிவிட்டது. எப்போதாவது பிள்ளைகள் உறங்கிய பின் வெளியே சென்று காட்டுக் கரையில் ஒதுங்கி. அவளுக்கு வொல்காவிலிருந்து கங்கைவரை என்ற நாவல்தான் நினைவுக்கு வந்தது.
ஆண்களுடன் சேர்ந்து கஷ்டத்துடன் குளத்தில் குளிக்கும் அவலம் மகள் அதிகாலை இருளோடு வந்து குளிக்க இவளை எழுப்புவாள்.
அகல்யா இன்றும் எழுந்துவிட்டாள். ‘அம்மா குளிக்கப் போவம்.” இருள் நீங்கி வெளிக்கும்ோ என்ற அவசரம் அவளிடம். இந்த அதிகாலை நேரம் குளக் கட்டுப் பாதையில் செல்லும் போது பயமாகத்தானிருந்தது.
குளக்கட்டுக்கு அருகே சுற்றிலும் பலர் கூடாரம் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். புதிய இடங்களில் கையிலும் பசையின்றி, வாழ்வை எதிர்கொள்ளும் பிரச்சினைகள் எல்லோர் முகங்களிலும் பிரதிபலித்துக் கொண்டிருந்தது. இந்த முகமிழந்த மனிதர்கள் ஒவ்வொருவர் மீதும் சுமையாக பெரும்பாறை அழுத்துகின்றபோது அவர்களால் எப்படித்தான் சிரித்த முகத்தோடு இருக்கமுடியும்? எண்ணங்கள் ராணியின் நெஞ்சை அழுத்தி வதைத்தன.
அந்த மைமல் பொழுதிலும் குளத்திலும் சனம் கூடிவிட்டது. அவர்கள் ஒரு பக்கமாக நின்று அவசரம் அவசரமாகக் குளித்தனர். இங்கே வந்த புதிதில் பல பேரின் நடுவில் குளிப்பதில் எவ்வளவு அந்தரப்பட்டனர்.

Page 37
58 இனி வானம் வசப்படும்
இப்போது இதுவும் ஏதோ இயல்பானது போல் பழக்கப்பட்டுவிட்டது.
குளித்துவிட்டு வெளியேறி முன்னே நடந்து கொண்டிருந்த அகல்யாவை நோக்கினாள் ராணி. இந்த வறுமையிலும் என்னமாய் செழிப்புடன் வளர்ந்திருக்கிறாள் என்ற பூரிப்புடன் மகளைப் பின் தொடர்ந்தாள்.
இந்த முறை அவள் ஏ.எல். பரீட்சை எடுக்க வேண்டும். யாழ்ப்பாணத்திலிருந்து கட்டிக்காவி வந்த புத்தகங்கள் கூட உருத்திரபுரத்தில் விடுபட்டுப் போயின. எனினும், குப்பி விளக்கில் இரவில் நெடுநேரம் கண்விழித்துப் படிக்கிறாள். ஒரு மேசை, கதிரைகூட இல்லை. உடுப்பிட்டியில் எத்தனை மேசை, கதிரைகளை விட்டு வந்துவிட்டோம், என்பதை நினைத்தபோது ராணிக்கு நெஞ்சை அடைக்கிறது.
எப்படியும், அகல்யா கம்பஸ்” போவாள் என்று ஆசிரியர்களே சொல்கிறார்கள். எதை இழந்தாலும் எங்கள் அழியாச் சொத்து கல்விதானே? கல்வியின் தரப்படுத்துதலில் தொடங்கியதுதானே இந்தப் (3UTgmL'Libi
வீட்டை அடைந்தபோது அடுப்பில் வைத்துவிட்டு வந்த நீர்கொதித்து இருந்தது. தேனிரைத் தயாரித்த ராணி மாமியை எழுப்பினாள். இன்னமும் இருமி இருமி இழுத்துக்கொண்டு இருந்தார் மாமி.
கடான தேநீர் உடலுக்கு தெம்பூட்டியது. எனினும், அவரால் எழும்ப முடியவில்லை. ‘மேன் வந்திட்டானே?.

ச. முருகானந்தன் 59
குளிசை கொண்டு வாறன் எண்டு சொன்னவன்.” என்று மருமகளிடம் கேட்டாள்.
‘இண்டைக்கு வந்திடுவார் மாமி. நேற்றுப் பாதை மூடியிருந்ததாம். குளக்கரையில் கேள்விப்பட்டதை ராணி கூறினாள். ‘மாமி சுடு தண்ணி வைச்சுத்தாரன், வெயில் வர ஒருக்கால் குளிப்பம். இந்த உடுப்புகளையும் கழற்றித்தாங்கோ. தோய்ப்பம்.
“உனக்கேன் கஷ்டம் பிள்ளை. நீ பிள்ளை குட்டியளோடையும், சமையலோடையும் படுற பாடு. ஒத்தாசை செய்ய முடியேல்லையே என்ற கவலை எனக்கு. இனி குளத்தில் தண்ணி அள்ளி வந்து கொதிக்க வைச்சு. ബഖണഖ duplb tിണഞ്ഞുണ്.'
“நான் தண்ணியள்ளிக் கொடுக்கிறன். விறகும் இங்கு தட்டுப்பாடில்லைத்தானே ஆச்சி.?’ என்றாள் ele56,ourt.
மருமகளும், பேத்தியும் அன்பைப் பொழிகையில் அவருக்கு மனது பூரித்தது. ராணி தண்ணிர் கொதிக்க வைக்க ஆயத்தம் செய்தாள்.
மாமியின் ஒவ்வொரு வேலையையும் பார்த்துப் பார்த்துச் செய்ய வேண்டியிருந்தது. எனினும், அவள் முகம் கோணாமல் பணிவிடை செய்தாள். மாமிக்கு ராணியின் சேவை புல்லரிக்க வைத்தது. “பாவம். எவ்வளவு கஷ்டப்படுறாள். சொகுசாக வளர்ந்த பிள்ளை. இப்ப படுற பாடு. இதுக்குள்ள நானும் சுமையாக இருந்து கொண்டு நஞ்சைக் குடிச்சு செத்துப் போகலாம். இனி இருந்தும் ஆருக்கு என்ன பயன்.?”

Page 38
60 இனி வானம் வசப்படும்
“மாலையில் சிவராசா வந்துவிட்டான். எல்லோர் முகங்களிலும் குதூகலம், இன்றுதான் வயிராறச் சாப்பிடலாம். பிள்ளைகள் அப்பாவைச் சுற்றி நின்றனர். அவர்களுக்குத் தின் பண்டங்களை வழங்கியபடி சிவராசா, “இந்தமுறை நட்டமாப் போச்சுது. வெத்திலைக்க மறைச்சுக் கொண்டு வந்த மருந்தைக் கண்டுபிடிச்சிட்டான். எளிய ஆமி நாலைஞ்சு அடியும் போட்டிட்டான்.” என்றான்.
“ஐயோ எங்க அடிச்சவன்?. இஞ்சாருங்கோ. வீக்கம் ஒண்டுமில்லையே. காட்டுங்கோ.’ ராணி பரிதவித்தாள்.
‘பயப்படாதை. லேசான அடிதான்.
நீங்கள் இந்த வவுனியா வியாபாரம் போக வேண்டாம். நான் இங்கே மடியில நெருப்பைக் கட்டிக்
கொண்டு நீங்கள் வரும்வரை தவிக்கிறன். அவளுக்கு அழுகையே வெடித்துவிடும் போலிருந்தது.
ʻʻG3Lu mT 85m LD 6Äo என்னத்தைப் பிடுங்கிச்
சமைக்கிறதப்பா?..”
“இஞ்சாருங்கோ. இங்கே விறகெண்டாலும் வெட்டிச் சீவிக்கலாம். அது சரி குளிசையள் கொண்டு வந்தனிங்களேயப்பா? இரவெல்லாம் கஷ்டப்பட்டவர். மாமி’
“அதுதான் ஆமிக்காரன் பறிச்சுப் போட்டான். ம். மருந்தும் அனுப்பிறான் இல்லை. கொண்டு வரவும் விடுறானுமில்லை தங்கட நாட்டு மனிசரையே கொல்லுறாங்க.”

ச. முருகானந்தன் 61
*அதுதானே தனிநாட்டுக்காகப் பொடியள் போராடுறாங்கள். மாமிக்கு கடையில என்டாலும் குளிசை வாங்கி வாங்கோ. இரவெல்லாம் ‘கறயுற என்று ஒரே இழுப்பும் இருமலும். குளிர் தாங்கேலாமல் குறண்டிப் போய் கிடக்கிறா. ராணி கணவனிடம் கூறினாள்.”
“அம்மா எங்களோட இருந்து கஷ்டப்படுறா. பாவம் படுக்க ஒரு ஆமான பாயுமில்லை, போர்வையுமில்லை.” சிவராசா தவித்தான்.
“இப்படிக் கஷ்டப்படுவேணுமெண்டு எங்கட தலையெழுத்து. மாமிக்கு ஒண்டெண்டா நான் தாங்கமாட்டன்.”
“அதுதான் எனக்கும் கவலை. அம்மாவை முதியோர் இல்லத்தில் சேர்ப்போமா எண்டு யோசிக்கிறன். அங்கே கட்டில், பாய், போர்வை எல்லாம் இருக்கு. மாரிக்கும் ஒழுகாது. மூண்டு நேரமும் சாப்பாடும் கிடைக்கும். யோக சுவாமிகள் திருவடி நிலையம் கஷ்டப்பட்ட முதியவர்களை வைச்சுப் பராமரிக்குது. நல்ல வடிவாக நடத்துகிறார்கள்’ என்று சிவராசா அடுக்கிக்கொண்டே போனபோது, ராணி சீற்றத்துடன் குறுக்கிட்டாள்.
“என்ன சொல்லுறியள் இப்ப?’ சிவராசா திகைப்புடன் அவளை நோக்கினாள்.
“இஞ்சாருங்கோ. மாமியை அங்கே இங்கே விடேலாது. நான் பட்டினி கிடந்தாலும் அவவை முதியோர் இல்லத்திற்கு விடமாட்டன். இப்பவே போய் ஒரு பாயும், போர்வையும் வாங்கிக் கொண்டாங்கோ. இண்டைக்கு

Page 39
62 இனி வானம் வசப்படும்
அடுப்பு புகையாட்டாலும் பரவாயில்லை. மாமி கடைசி வரை எங்களோடதான் இருக்கவேண்டும். சோறும், படுக்கையும் தான் வாழ்க்கை என்றில்லை. கடைசி காலத்தில் அவவுக்கு மனநிறைவு இருக்கவேணும். உங்களைப் பெற்று வளர்ந்து ஆளாக்கினவை, அவவைக் கடைசிவரை வைத்துக் காப்பாற்றுகிறது எங்கட கடமை. தாயில் சிறந்ததொரு கோயிலுமில்லை. உங்கட அம்மா எனக்கும் அம்மாதான்.” இங்கிதமாகச் சொன்ன ராணியின் வார்த்தையில் அவனுக்கு உச்சி குளிர்ந்தது.
வந்த களைப்பையும் பொருட்படுத்தாமல் தாயாருக்கு மருந்து வாங்கப் புறப்பட்டான் சிவராசா. இப்படி ஒரு மனைவி கிடைக்க என்ன புண்ணியம் செய்தேனோ? என்று பூரித்தபடி மருந்துக்கடையை நோக்கி விரைந்தான் சிவராசா.
 

பொதுசன நூலகம் A = -.......... + աt" փնum he Կ. . 63
இத் இசர்க்கைப் பகுதி
LDனுக்குலத்தின் இரட்சகரான யேசுபிரான் உலக மக்கள் துன்பங்களிலிருந்தும், பாவச் சுமைகளிலிருந்தும் ஈடேறி, தம்மைப் புனிதமாக்கிக் கொள்ள வழிகாட்ட, மானிட குலத்தவருக்காக மானிடராக அவதரித்த நன்நாளும் முடிந்து பாலனுக்கு திருநாமம் சூட்டப்பட்ட திருநாளும் நெருங்கியது. ஆம், பாலன் பிறப்பின் எட்டாம் நாள் திருவிழா இது. தேவாலயத்தில் கூட்டம் நிரம்பி வழிந்து கொண்டிருந்தது. ஆராதனைகள் முடிந்த பின்பு பாவமன்னிப்புக் கோர பலரும் காத்து நின்றனர்.
இப்போது பிரியாவின் முறை

Page 40
64 இனி வானம் வசப்படும்
பிரியாவின் முகத்தில் மலர்ச்சியில்லை. எனினும் ஒருவித உறுதியும், தெளிவும் புலப்பட்டது. அவள் செபபீடத்தினருகே சென்று முழந்தாளிட்டு அமர்ந்து செபம் செய்ய ஆரம்பித்தாள். எவ்வளவுதான் செபம் செய்தாலும் மனம் அமைதியடைய மறுத்தது. உணர்ச்சிகள் விம்மிப் பூரித்து நெஞ்சை அடைப்பது போலிருந்தது. மூடியிருந்த இமைகளின் வெடிப்புகளிடையே கண்ணிர்த்துளிகள் பூத்தன.
சுவாமியார் பீடத்திலிருந்து எழுந்து வந்து அவள் முன் நின்று கனிவோடு நோக்கினார்.
அரவம் கேட்டு கண்விழித்தாள் பிரியா.
வெள்ளை உடை, கறுத்தப்பட்டி கருணை சிந்தும் பார்வை; நம்பிக்கையுட்டும் சாந்த முகம்.
நிமிர்ந்து பார்த்த பிரியாவின் மனப்பாரங்கள் எல்லாம் அந்தக் கணமே மறைவது போலிருந்தது.
சுவாமியார் அவளெதிரே பாவசங்கீர்த்தனத் தட்டியில் அமர்ந்துகொண்டு, “சொல் மகளே” என்று கனிவோடு கேட்டார். அன்பும் அமைதியும் நிறைந்த அவரது வார்த்தைகள் அவளுக்குத் தெம்பை அளித்தது. எனினும் மனதில் எழுந்த வார்த்தைகள் தொண்டைக் குழிக்கால் வரமுடியாமல் திணறினாள்.
“நாம் எல்லோரும் ஆண்டவரின் குழந்தைகள். ஆண்டவர் எம்மை இரட்சிப்பார். சொல்லு மகளே. உன் தவறுகளைச் சொல்வதன் மூலம் உன்னுடனிருக்கும் சாத்தானை விரட்டியடிக்க முடியும்.”

ச. முருகானந்தன் 65
“சுவாமி. நான் மகாபாவி. இதுநாள் வரை விபசாரம் செய்து வருகிறேன்.”
“ஏன் மகளே இப்படி தவறான திசையில் சென்றாய்? வறுமையா? அதற்கு வேறு தொழில் செய்திருக்கலாமே?”
“இல்லை சுவாமி. நானும் ஓரளவு வசதியான குடும்பத்தில் பிறந்தவள்தான். ஒரு நாள் தடைமுகாமில் சோதனைக்குள்ளாக்கப்பட்டு, அழைத்துச் செல்லப்பட்டு அனைத்தையும் இழந்தேன். ஒருவனல்ல. நாலைந்து நாய்கள் என்னைக் குதறிவிட்டன.”
“ஒ. இது என்ன கொடுமை.” என்று சுவாமியார்
கலங்கினார்.
*இதன் பின்னர் சமுதாயத்திலும் புறக்கணிக்கப்பட்டேன். கருக்கலைப்புக்காக கொழும்பு வந்து, பின் அதுவே வதிவிடமாகி, விபச்சாரம் எனது தொழிலாகிவிட்டது.” பிரியா குலுங்கிக் குலுங்கி அழுதாள். அவளது உதடுகள் துடித்துக் கொண்டிருந்தன.
“அழாதே மகளே. அப்புறம் என்ன நடந்தது?’ “கார், வீடு, பணம், பொன் எல்லாமே கிடைத்தன. நிம்மதி மட்டும் பறிபோனது. நான் கர்த்தரிடம் மன்னிப்புக்கோரி இத்தொழிலிருந்து விடுபடப் போகிறேன்’ அவளது குரலிலிருந்த உறுதி சுவாமியாருக்கு நம்பிக்கையுடுட்டியது.
“மகளே. கவலையை விடு. எல்லாமே சாத்தானின் ஊழியங்கள்தான். நீ உன் தவறுகளை

Page 41
66 இனி வானம் வசப்படும்
உணர்ந்து பாவமன்னிப்புக் கோரிவிட்டதால் ஆண்டவன் உன்னை மன்னிப்பார்.” என்று கூறிவிட்டு சுவாமியார் மார்பில் சிலுவைக் குறியிட்டு அவளுக்காகப் பிரார்த்தித்தார். அவளும் கண்ணிர் பெருக பிரார்த்தித்தாள்.
செபம் செய்து முடித்துக் கொண்டெழுந்த சுவாமியார் கனிவோடு அவளை நோக்கினார்.
“மகளே நடந்து முடிந்தவற்றை மறந்துவிடு இன்று பக்குவப்பட்டிருப்பது போல என்றுமே சரியான வழியில் செல். அதற்கு வேண்டிய மனோபலத்தை ஆண்டவர் உனக்குக் கொடுத்து இரட்சிப்பாராக.”
மனநிறைவோடு எழுந்து வெளிவாசலை நோக்கி நடந்த பிரியாவுக்கு அதிர்ச்சி! வாசலில் ஜெகன் நின்றிருந்தான். அவள் முகத்தைத் திருப்பிக் கொண்டு நடக்க ஆரம்பித்தாள்.
“பிரியா” என்று சிரித்தபடி அவளை நோக்கி மகிழ்வோடு வந்து கொண்டிருந்தான். 96.6it சிரிக்கவில்லை.
மற்றும் நாட்களிலென்றால் பிரியாவும் தன் சாகசங்களைப் புரிய ஆரம்பித்திருப்பாள். ஆனால் இன்று எதிலும் ஒன்றாமலிருக்கையில் ஜெகனுக்கு என்னவோ போலிருந்தது.
“ஹாய் பிரியா.” என்றபடி கைகளை நீட்டினான். அவள் நிற்காமல் நடந்து கொண்டிருந்தாள்.
பிரியா வெறும் அழகி மட்டுமல்ல. அவளது இளமைக்கும் கட்டான உடலுக்கும் மேலாக,

ச. முருகானந்தன் 67
தொழிலுக்கேற்ற நளினங்களும் சாகசங்களும் அவளிடம் இருந்தன. அவளுடன் ஒரு தடவை பழகிய எவராலும் அவளை மறக்க முடியாது.
ஜெகனும் அவளது கஸ்டமர். இன்றும் அதே எண்ணத்தோடுதான் வந்திருக்கிறான். “பிரியா, உனக்கு என்ன ஆச்சு?”
அவள் பேசாமல் நடந்தாள். “பிரியா. பிளிஸ். உன்னுடன் பேசவேண்டும். ஒரு தேநீர் அருந்தியபடி பேசுவோம்.”
“வேண்டாம் ஜெகன் என்னைப் போகவிடு.”
“பிரியா. உன்னுடைய நல்ல நண்பன் என்ற வகையில் கேட்கிறேன். வா. வந்து காரணத்தைச் சொல்லிவிட்டுப்போ.”
அவள் அவனுடன் சென்று அமர்ந்தாள். “தேநீருக்கு ஒடர் கொடுத்துவிட்டு ஜெகன் அவளை உற்று நோக்கினான். “சொல் பிரியா. உனக்கு என்ன நடந்தது.”
“கடந்த சில நாட்களாக எனக்கு மனசே சரியில்லை. மன நிம்மதியின்மையால் தூக்கம் வரவில்லை. இந்தக் கேவலமான பிழைப்புக்கு முழுக்குப் போட்டுவிட்டு அமைதியாக வாழவேண்டும் என்று முடிவு செய்துவிட்டேன்.”
96) 6T 95 L 35 L என்று சிரித்தான். “2 –6öoISOLDuIIIö56)In?“

Page 42
68 இனி வானம் வசப்படும்
சிப்பத்தி வந்தான். தேநீர்க் கோப்பைகளை வைத்துவிட்டு அவன் திரும்பும் வரையில் இருவரும் பேசிக் கொள்ளவில்லை. அவன் போன பின் ஜெகன் கேட்டான். “உனக்கு என்ன, பைத்தியமா பிடித்துவிட்டது?’
“இல்லை ஜெகன். நான் தொழிலுக்கு முழுக்குப் போட்டுவிட்டேன்.” அவளது குரலில் உறுதி தொனித்தது. “நான் பாவமன்னிப்புப் பெற்றுவிட்டேன். இனிநான் ஒரு விபசாரியல்ல.”
“பாவமன்னிப்புப் பெற்றுவிட்டால் மட்டும் பத்தினியாகிவிட முடியுமா?’ என்று குத்தலாகக் கேட்டான் ஜெகன். அவள் கோபமாகக் குறுக்கிட்டாள். “என்னை யாரும் பத்தினியென்று கூறவேண்டாம். நான் தொடர்ந்தும் சகதியில் சுழல விரும்பவில்லை. இனிமேல் என்னைத் தேடி வராதே?”
ஜெகனின் முகத்தில் ஆச்சரியம். “இவள் உண்மையிலேயே திருந்தி வாழத்தான் போகிறாளா?”
“புறப்படாலாமா ஜெகன்? நான் போகவேண்டும்.” “கொஞ்சம் இரு’ என்றான் ஜெகன். “திருந்தி வாழும் உன் எண்ணம் வரவேற்கத்தக்கதுதான். ஆனால் நல்லவள், திருந்திவிட்டவள் என்ற பெயர் மட்டும் உனக்குச் சோறுபோடுமா? தேவையின் நிமித்தம் மீண்டும் நீ இந்தத் தொழிலுக்கு வரமாட்டாய் என்பது என்ன நிச்சயம்?”
“வேறு வேலை தேடிக்கொண்டால் போகிறது.”
“பிரியா. இதில் கிடைக்கும் வருமானமும், சுக வாழ்வும் சாதாரண வேலையில் கிடைக்காது.

ச. முருகானந்தன் 69
வாழ்க்கைக்குப் பணம்தான் முக்கியம். அது இருந்தால் மற்றவை எல்லாம் கிட்டிவிடும்.?”
பிரியா சிரித்தாள். ‘நிம்மதி.? அதைப் பணம் கொடுத்து வாங்கிட முடியுமா? பணம் இருக்கிறவங்க எல்லாம் நிம்மதியாக இருக்கிறாங்களா?”
“நீ பேசத் தெரிந்தவள் விட்டுத்தள்ளு. அது சரி கர்த்தர் உன்னை மன்னிப்பார் என்பதற்கு என்ன உத்தரவாதம்?’
“கர்த்தர் கருணை வடிவானவர். கிராமமே திரண்டு நின்று விபசாரியைக் கல்லால் அடித்தபோது அபயமளித்தவர். உணர்ந்து மன்னிப்புக் கோரியவர்களை எல்லாம் கர்த்தர் இரட்சிப்பார்.’
“இன்னும் பத்து வருடம் கழித்து, உன் இளமை மெருகு குறைந்த பின் மன்னிப்புக் கேட்டால் போகிறது. கர்த்தர் ஓடியா போய்விடப் போகிறார்?’ என்று ஜெகன் பரிகாசிக்கையில் பிரியா ஆத்திரத்துடன் குறுக்கிட்டாள். “கர்த்தரைப் பரிகசிக்காதே.”
“சரி. நான் எதுவும் சொல்லவில்லை. எனக்கு வேண்டியது நீதான். இன்று இரவை நீ என்னுடன் களிக்கிறாய்.” அவன் உறுதியாக இறைஞ்சினான்.
“ஏன், ஜெகன் இதற்கு கொழும்பில் வேறு பெண்ணா இல்லை? என்னை ஏன் வற்புறுத்துகிறாய்?’
“எந்தப் பெண்ணும் உனக்கு நிகராகுமா பிரியா?” அவன் தன் மன்மதப் பாணத்தைத் தொடுத்தான். “பிளிஸ், பிரியாக்குட்டி. இந்த ஒரு தரம் மட்டும். இல்லையென்று சொல்லாதே குஞ்சு. இந்த ஒரே ஒரு தடவை மட்டும்!”

Page 43
70 இனி வானம் வசப்படும்
அவளது மனதில் ஒரு தடுமாற்றம்.
“பிளிஸ்.” கண்களால் கெஞ்சியபடி ஜெகன் அவளது கைகளைப் பற்றினான். அவள் கிறங்கத்தான் செய்தாள். பாராட்டுக்கு அடிபணியாத பெண்கள் யார்தான் இருக்கிறார்கள்? பல கிழட்டு நரிகளுக்கு மத்தியிலே வந்து போகும் இந்த வாட்டசாட்டமான இளைஞனுடன் பகிர்ந்து கொண்ட சில இரவுகளின் நினைவுகள் அலையலையாக அவள் மனத்திரையில் நீலப் படங்களாயின.
அவளது வைராக்கியம் எல்லாம் மெல்ல மெல்ல கரைந்து போன வேளையிலும், கர்த்தரின் நினைப்பு எழுந்தது.
“கர்த்தரே இந்த ஒரே ஒரு தடவை மட்டும் உனக்குக் கொடுத்த வாக்கை மீறுகிறேன். என்னை மன்னித்துவிடு.” அவள் மனதில் ஒரு திரை
தேநீர் அருந்திவிட்டு வெளியே வந்தபோதும், பின்னர் அவனது காரில் செல்லும் போதும் ஜெகன் கதைத்துக் கொண்டு வந்த எதுவுமே பிரியாவின் காதில் விழவில்லை. ஒரே சுயவெறுப்பு என்றாலும் அவள் பணிந்துதான் போனாள். இந்த இரவு நான் விபச்சாரம் செய்யமாட்டேன். இவனோடு தங்கும் உறவுக்காகப் பணம் பெற்றுக்கொள்ள மாட்டேன் என்று அவள் தனக்குத்தானே சமாதானம் செய்து கொண்டாள்.
அந்த இரவை விருந்தினர் விடுதியில் அவனுடன் பகிர்ந்து கொண்டிருந்த வேளையில் கர்த்தரை மறந்தே போனாள்.

ச. முருகானந்தன் 71
எப்பொழுதுமே ஜெகனோடு களிக்கும் இரவுகள் அவளுக்கு இனிமையானவை. இன்றும் அப்படித்தான். அவள் எல்லையில்லா இன்பத்தில் அவனோடு சங்கமமானாள்.
களைத்து, சோர்ந்து, உடல் வியர்வையாகி, மூச்சுக்களை பெருமூச்சுக்களாக்கி உப்புக்கரித்த அந்த அகால நேரத்தில் அறைக்கதவு தடதட என்று தட்டப்படுகிறது.
விடுதி எங்குமே பரபரப்பு பிரியா திகைத்துப் போனாள். ஆடைகளைச் சீர் செய்து கொண்டு அவள் எழமுன்னரே கதவு பலவந்தமாகத் திறக்கப்படுகிறது.
பொலிஸ்! அவள் அதிர்ந்தாள். இந்த ஐந்தாறு வருட தவறான வாழ்க்கையில் இவ்வாறு ஏற்பட்டதேயில்லை. இதுதான் முதற்தடவை
அவளது கைகளில் விலங்கு ஜெகனும், அவளும் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் அவர்கள் கேட்பதாயில்லை.
“கர்த்தரே, இது என்ன சோதனை?” பிரியா விம்மி வெடித்தாள்.
“இந்த ஒரே ஒரு தடவை மட்டும் தண்டிக்கிறேன்!” கர்த்தர் தேவலோகத்தில் சிரித்துக் கொண்டிருந்தார்.
SHF
ماله مr*

Page 44
72
கிழவிக்குப் பசித்தது. தகரக் குவளையைப் பார்த்தாள், சில்லறை சேர்ந்திருக்கவில்லை. இந்தச் சில்லறைத் தட்டுப்பாடு காலத்தில் யார்தான் சில்லறை நாணயங்களைப் போடப் போகிறார்கள்?
கிழவி பண்டையாவின் கடையைத் திரும்பிப் பார்த்தாள். கடையில் பண்டையா இருக்கவில்லை. பேரன்தான் இருந்தான். காலையிலேயே கிழவியைப் பேசிக் கலைத்தவன், இப்பொழுதும் போனால் பேசித்தான் கலைப்பான்.
கிழவி பிச்சை எடுக்க ஆரம்பித்த நாளிலிருந்தே, தன்னிடம் சேரும் சில்லறை நாணயங்களைப் பண்டையாவின் கடையில் கொடுத்து ஏதாவது வாங்கிச் சாப்பிடுவது வழக்கம்.
கிழவிக்குத் தெரிந்த நாள் முதல் பண்டையாவின் தேநீர்க் கடை எதுவித மாற்றமுமின்றி அதே நிலையில்தான் இருக்கிறது. தகரம் அடிக்கப்பட்ட பழைய
 
 

ச. முருகானந்தன் 73
மேசை, ஆள் அமர்ந்தால் ஆடிக் "கிரீச்சிடும் வாங்கு, கண்ணாடி உடைந்த காட்சிப் பெட்டி. எதிலுமே மாற்றமில்லை, பண்டையாவின் தளர்ந்த உருவத்தைத் தவிர, அந்த நாளில் ஆஜானுபாகுவாக, சுறுசுறுப்பாக இருந்த பண்டையா இன்று தளர்ந்து போயிருந்தான்.
கிழவி மட்டும் என்னவாம்?
வாளிப்பும் கட்டுமாக - கட்டியிருப்பது கந்தலானாலும் கூட பார்ப்போரைக் கவர்ந்திழுக்கக் கூடியவளாக இருந்தவள் இன்று தளர்ந்து போயிருந்தாள். காலம்தான் தனி மனிதனில் எவ்வளவு மாற்றங்களைக் கொண்டு வந்து விடுகின்றது
கிழவி வருவோர் போவோரைக் கெஞ்சலுடன் பார்த்தாள். பாவம் கொஞ்சலுடன் பார்த்த காலம் போய்க் கெஞ்சலுடன் பார்க்கவேண்டிய நிலை.
கிழவிக்கு எதிரேயிருந்த தகரக்குவளை - லக்ஸ்பிரேயோ நெஸ்பிரேயோ வந்த குவளை கறள் கட்டி, கவர்ச்சி இழந்து கிழவியைப் போலவே காட்சியளித்தது. தகரக் குவளை கிழவிக்குச் சொந்தம் - கிழவி அதற்குச் சொந்தம். அந்தக் கறள்பிடித்த குவளையை வேறு யார் தீண்டுவார்கள்?
கிழவியின் ஜீவனமே அந்தக் குவளைதான். உரத்துப் பேசி இரந்து பிச்சை எடுக்க முடியாத இந்தத் தள்ளாத வயதில், குவளையில் சில்லறையைப் போட்டுக் குலுக்குவாள். அந்தச் சகிக்க முடியாத இசைதான் அவள் பிச்சை கேட்கும் ஓசை,

Page 45
74 இனி வானம் வசப்படும்
முன்னர் என்றால் பஸ் நிலையம், சினிமாத்தியேட்டர், மற்றும் ஜனநடமாட்டமுள்ள இடங்களுக்குச் சென்று பிச்சை எடுப்பது அவளது வழக்கம். ஆனால் இப்போதெல்லாம் அவளால் அதிக தூரம் நடக்க முடிவதில்லை. கண்பார்வையும் மங்கல். கடந்த நான்கைந்து வருபங்களக இந்தக் கடைவாசல்தான் அவளுக்கு எல்லாம். பகலில் பிச்சை எடுப்பது. இரவில் படுத்துத் துங்குவது எல்லாம் இங்குதான். மழை, வெயில், குளிர் எல்லாம் அவளுக்குப் பழகிப் போய்விட்டன.
இப்போதெல்லாம் கிழவிக்கு அடிக்கடி இருமல் வரும். சில சமயங்களில் இரண்டு மூன்று நிமிடங்கள் தொடர்ந்து இருமிக் கொண்டிருப்பாள். சளியை அருகே துப்பிவிட்டு மணலால் மூடுவாள். எழுந்து சென்று ஒதுக்கமான இடத்தில் துப்புவதற்கு அவளுக்குத் தோன்றுவதில்லை. முடிந்தால்தானே?
அவளது செய்கையைப் பார்த்தால் அருவருப்பாக இருக்கும், பரிதாபமாகவும் இருக்கும்.
கிழவிக்கு வயது கணிக்க முடியாது. அறுபதுக்கும் எழுபதுக்கும் இடைப்பட்டதாக இருக்கலாம். ஆனால் நிர்ணயமாகச் சொல்ல முடியாத தோற்றம். தலை இன்னமும் முற்றாக நரைத்துவிடவில்லை. ஆனால் கன்னச் சதைகள் சுருங்கி உள்ளே போயிருந்தன. கண்கள் குழிவிழிந்திருந்தன. உடலெங்கும் சுருக்கங்கள் விழுந்து தொள தொளக்கும் சதைகள். இத்தனைக்கும் மேலாகத் தண்ணிர் காணாத உடம்பு - சிறிது நெருங்கினால் வெடுக்கடிக்கும்.

ச. முருகானந்தன் 75
கிழவிக்கு வயிறு புகைந்து கொண்டு வந்தது. சுவரில் சாய்ந்திருந்த நிலையிலேயே இருமத் தொபங்கினாள். பின்னர் செளகரியமாக வளைந்து காறித் துப்பினாள். மணலால் எச்சிலை மூடிவிட்டு மீண்டும் தூணில் சாய்ந்து கொண்டாள்.
மத்தியானம் வரை அதிக சில்லறை சேரவில்லை; பண்டையாவையும் கடையில் காணோம். கிழவிக்கு வயிற்றைக் குமட்டிக் கொண்டு வந்தது. உடல்கூடச் சிறிது சுடுவது போலிருந்தது. பசிக்கும் இதுவரை எதுவும் கிடைக்கவில்லை. அவள் ஒருவித வேதனையில் துடித்தாள்.
பண்டையா நின்றால், கடையில் ஏதாவது கேட்டு 6 Triêut65 enúLeonib. u6õor6oLuum e66fLib கணக்குப் பார்க்க மாட்டான். கிழவியும் அப்படியே சேர்ந்த சில்லறைகளை அவனிடம் கொடுத்து விடுவாள். காசு பற்றாவிட்டால், பண்டையாவின் பேரன் சீறி விழுவான். ஆனால் பண்டையா அவனை அடக்கிவிடுவான்.
“அந்தக்கிழவியோட - ஏன்ரா வாதிடுகிறாய்? ஏதோ குடுத்து ஆளை அனுப்பு.’ - பண்டையாவினுடைய அனுதாபத்தின் பின்னணியில் இருக்கும் இரகசியங்கள் போனுக்குத் தெரிந்திருக்க நியாயமில்லை. தனக்குள் முணுமுணுத்தபடி அடங்கிவிடுவான்.
கிழவிக்குப் பசி அப்படியொன்றும் புதித6ல. பிறந்தது முதல் அது ஒரு தொடர்கதைதான்.
女★女

Page 46
76 இனி வானம் வசப்படும்
அறிவு என்ற ஒன்று தெரிந்த பருவத்தில் மலையகத்தில் ஏதோ ஒரு தேயிலைத் தோட்டத்தில், ஒரு குச்சு லயத்தில், பத்தோடு பதினொன்றாகப் பசியுடன் பட்ட கஷ்டங்கள், முழுமையாக இல்லாவிட்டாலும் அங்கொன்றும் இங்கொன்றுமாகக் கிழவிக்கு ஞாபகமிருக்கின்றன. பெற்ற தாயின் முகம் முழுமையாக ஞாபகமில்லை. அவளுக்குப் பத்து வயது நடக்கும்போது, தகப்பன் அவளைக் கூட்டிச் சென்று ஓர் உத்தியோகத்தரின் வீட்டில் வேலைக்காரியாக விட்டுச் சென்றதாக அவளுக்கு ஞாபகம். அதற்குப் பின்னர் அந்த உறவும் அறுந்துவிட்டது. அதற்குப் பின்னர் தகப்பனை அவள் சந்திக்கவேயில்லை.
அந்த உத்தியோகத்தரின் வீட்டில் வேலைக்காரியாக இருந்த ஏழெட்டு வ்ருடங்களில் அவள் அடிமை போலப் பலவித இன்னல்களை அனுபவித்திருக்கிறாள். வெறும் சோற்றுக்காக வந்துவிட்ட நிலையை எண்ணி அவள் பலமுறை வருந்தினாளெனினும், அந்த வீட்டை விட்டு வெளியேறினால் இந்தப் பரந்த உலகில் அவளைக் காப்பாற்ற எவரும் முன் வரமாட்டார்கள் என்பதை உணர்ந்திருந்தால், பொறுமையுடன், கிடைத்ததுதான் வாழ்க்கை என வாழ்ந்து வந்தாள். அந்த நரக வாழ்க்கையிலிருந்து வெளியேற வேண்டும் என்று அவள் நினைத்தேயில்லை. ஆனாலும் அந்த வாழ்க்கைக்கும் ஒரு முடிவு ஏற்பட்டது.
பக்கத்துக் கிராம மூத்த நாயனார் கோயிலில் திருவிழா நடந்தது. சின்னமேளம், சப்பரம் ‘பொப் இசை என்று ஊரே ஒன்று திரண்டது. ஆனாலும் அவளுக்குப்

ச. முருகானந்தன் 77
போக வாய்ப்பில்லை. குழந்தையைப் பார்த்துக் கொண்டு வீட்டில் இருக்கவேண்டும்.
எஜமானியுடன் சேர்ந்து திருவிழாப் பார்க்கச் சென்ற எஜமானர் சிறிது நேரத்தில் தனியே வீட்டிற்குத் திரும்பி வந்தார். ஒருநாளுமில்லாதவாறு அவளுடன் அன்பொழுகப் பேசினார். நல்லது கெட்டதை இனங்கண்டு கொள்ள முடியாத பருவ வயதில் தெரிந்தோ தெரியாமலோ - தவிர்க்க முடியாத நிர்ப்பந்தத்தின் பேரிலோ எஜமானரின் ஆசை வார்த்தைகளில் மயங்கி, உணர்ச்சிகளுக்கு அடிமையாகிச் சோரம் போனாள்.
அன்றிலிருந்து இதுவும் ஒரு தொடர்கதையானது. எஜமானியம்மாளுக்குத் தெரியாமலிருந்த விஷயம் அவள் குமட்ட ஆரம்பித்ததும் வெளிச்சத்திற்கு வந்தது. விஷயத்தைப் புரிந்து கொண்ட எஜமானியம்மா அவளைத் திட்டித் தீர்த்து வீட்டைவிட்டு வெளியேற்றினாள். எஜமானரோ நல்ல பிள்ளைபோல மெளனம் சாதித்தார்.
அவள் நடுத்தெருவுக்கு வர வேண்டியதாயிற்று. இந்த உலகம், அவள் நினைத்ததிலும் பார்க்கப் பயங்கரமானது என்பதை உணர அவளுக்கு அதிக நாள் பிடிக்கவில்லை.
பயங்கரமான உலகம் அவளைப் படுகுழியில் தள்ளியது. அவள் விபசாரியானாள்.
யார் யாரோ எல்லாம் அவளிடம் வந்து போனார்கள். ஊர்ப் பெரிய மனிதர்கள்கூட வந்து போனார்கள். அவள் கொடிகட்டிப் பறந்தாள். பஸ் நிலையம், தியேட்டர் வாசல்,

Page 47
78 இனி வானம் வசப்படும்
பிரதான சந்திகள் முதலானவை அவளது கேந்திர நிலையங்கள்
சில நாட்களில் அவளுக்குக் குழந்தை பிறந்தது. இடக்கழுத்தில் மச்சத்துடன் பிறந்ததால் அதிர்ஷ்டக் குழந்தை அந்த மச்சம் இருந்ததால்தானோ என்னவோ, அவள் விரும்பாத அந்த ஆண் குழந்தை ஒரு பணக்காரரின் வளர்ப்புப் பிள்ளையாகும் வாய்ப்பைப் பெற்றது.
சில வருடங்கள் அவளிடம் பணம் தாராளமாகப் புரண்டது. ஆனால் இராஜ போகம் நீடிக்கவில்லை. கொடிய வியாதி அவளைப் பற்றிக் கொண்டது. தோல் பிரிவில் சிகிச்சை பெற்ற பின்னர் அவளது உடல் தேறிவிட்ட போதிலும் அவளது உடல் மெருகெல்லாம் போய்விட்டது. தொழிலிலும் வருவாய் குறைத்தது.
இந்த இடைக் காலத்தில்தான் பண்டையாவின் சிநேகிதம் அவளுக்குக் கிடைத்தது.
கிழவியின் மகன் அந்த ஊரிலேயே வளர்ந்து கொண்டிருந்தான். மகனைத் தத்தெடுத்துக் கொண்ட பெரியவரின் வேண்டுகோளுக்கிணங்க, கிழவி எந்தச் சந்தர்ப்பத்திலும் தனது குழந்தையிடம் உரிமை கொண்டாடிக் கொண்டு போகவில்லை. பிள்ளை எங்கிருந்தாலும் நன்றாக வாழட்டும் என்று அவளது தாயுள்ளம் விரும்பியது.
இருபத்தைந்து ஆண்டுகள் எவ்வளவு வேகமாகக் கடந்துவிட்டன. காலச் சக்கரம் சுழல்கையில் எத்தனையோ மாற்றங்கள் ஏற்பட்டுவிட்டன. அவள் உடல் தளர்ந்து தள்ளாத கிழவி போலாகிவிட்டாள்.
 

ச. முருகானந்தன் 79
இந்த இடைக்காலத்தில் அவளது மகன் டாக்டராகி இவ்வூருக்கே பணிபுரிய வந்துவிட்டான். கிழவி உள்ளம் பூரித்தாள். ஆனாலும் அவள் இப்பொழுதும்கூட மகன் என்று உறவு கொண்டாடிக் கொண்டு அவனிடம் ாேகவில்லை.
இப்போது சில நாட்களாக அவளது மனதில் ஓர் ஆசை துளிர்விட ஆரம்பித்திருந்தது. சாவதற்கு முன்னர்

Page 48
80 இனி வானம் வசப்படும்
என்றைக்காவது ஒருநாள் தன் மகனை ஆசை தீரக் கட்டியணைத்து உச்சி முகரவேண்டும் என்ற பொல்லாத ஆசையது
இன்று கிழவிக்கு இருமல் அடிக்கடி வந்து கொண்டிருந்தது.
“இந்த இழவு பிடிச்ச கிழவி ஒரேயடியாய் இருமிக் கொண்டிருக்கு. கசமோ தெரியவில்லை.” பண்டையாவின்
மகன் புறுபுறுத்தான்.
கிழவிக்கு மீண்டும் இருமல் எடுத்தது. இம்முறை நெஞ்சை என்னவோ செய்தது. என்றைக்கும் அவளுக்கு இப்படி இருந்ததில்லை.
“ஏய். கிழவி. இதிலை இருமித் துப்பாதை. எழும்பி எங்கையெண்டாலும் போ...” மீண்டும் பண்டையாவின் மகன் திட்டினான். கிழவியும் சும்மா இருக்கவில்லை. பதிலுக்குத் திட்டினாள்.
“சும்மா கிடவடா. குமரியள் எண்டால் கூட்டி வைச்சுக் கதைப்பியள்.” மீண்டும் கிழவியின் பேச்சிடையே இருமல் குறுக்கிட்டது.
காறித் துப்பிவிட்டு மீண்டும் புறுபுறுத்தபடி கிழவி மெல்ல எழுந்தாள். வழக்கமாக வருத்தம் வரும் போதெல்லாம் தஞ்சம் கொடுக்கும் அரசினர் ஆஸ்பத்திரியை நோக்கி நடந்தாள்.
வெளிநோயாளர் பகுதியில் அவளைப் பரிசோதித்த டாக்டர் சீறி விழுந்தார். “ஏன் கிழவி. சும்மா இங்கே

ச. முருகானந்தன் 81
வந்து எங்கடை உயிரை எடுக்கிறாய்?. சாப்பாட்டுக்கு கஷ்டமென்றவுடன் இங்கே வந்துடுவியள் என்ன?”
அவளைத் திட்டினாலும் வார்டில் நிற்கத் துண்டு எழுதிக் கொடுத்தார் டாக்டர். கிழவி அவரை வணங்கிவிட்டு வாட்டுக்குச் சென்றாள்.
கிழவியின் துண்டை வாங்கிப் பார்த்த வார்ட் கங்காணி, “மூண்டாம் வார்டுக்குப் போ. இங்கே ஏன் வாறாய்?’ என்று சீறி விழுந்தான். நோயுடன் வரும் நோயாளிகள் மீது ஆஸ்பத்திரி ஊழியர்கள் சீறி விழுவது, எமது நாட்டில் அப்படியொன்றும் புதிதல்லவே.
நாலைந்து இபங்களில் ஏச்சு வாங்கி பின்னர் கிழவி சரியான வார்டை அடைந்தாள். அவளை ஏற இறங்கப் பார்த்த தாதி முகத்தைச் சுளித்துவிட்டு, “ஏன் கிழவி, ஒசிச் சாப்பாட்டுக்காக சும்மா இருமிக் காட்டுறியே? உங்களை எல்லாம் ஏன் அட்மிட் பண்ணுகிறார்களோ. ம். சரி சரி இந்தக் குளிசையை விழுங்கிவிட்டு அந்த விறாந்தையிலை போய்ப்படு” என்றாள் கடுகடுப்புடன்.
மருந்தைக் குடித்துவிட்டுக் கிழவி விறாந்தையில் போய்ப்படுத்தாள். வார்டில் சில கட்டில்கள் காலியாக இருந்ததையும் கிழவி கவனிக்கத் தவறவில்லை.
மீண்டும் அந்தப் பயங்கர இருமல்; கிழவிக்கு இந்த உலகமே இருண்டு கொண்டு வந்தது.
“அம்மா என்னாலை தாங்க முடியுதில்லையே. ஐயோ.” கிழவி முனகினாள்.

Page 49
82 இனி வானம் வசப்படும்
கிழவி முனகிக் கொண்டிருந்தபோதே வார்ட் பார்க்கும் டாக்டர் வந்து கொண்டிருந்தார். அந்த டாக்டர் தன் மகன் என்பதைக் கண்டுகொண்ட கிழவியின் முகம் LD6 flyb55).
“மகனே. நான் பெத்த ராசா” என்றபடி டாக்டரை நோக்கினாள் கிழவி. டாக்டரோ அவளை அலட்சியமாகப் பார்த்தபடி உள்ளே நுழைந்தார்.
“ஹெலோ நந்தா! இன்று உனது தோற்றம் வெகு...” என்றபடி தாதியின் எதிரே வந்து அமர்ந்துகொண்டார். “யாராவது புது நோயாளி இருக்கிறார்களோ?’ என்றார் தொடர்ந்து.
தாதி டாக்டரை நோக்கிக் கொஞ்சலோடு புன்னகைத்தான். “இல்லை டாக்டர், ஒரு கிழவிதான். சாப்பாட்டுக் கேஸ்.’
டாக்டரும் சிரிக்கிறார். ‘அந்தக் கிழவிதானே?.”
"SubLDr. 2Guf ib. SilbLDM. S.üb.LDn” தொடர்ந்து கிழவி முனகுகிறான்.
“என்ன, இந்தக் கிழவி சத்தம் போடுது. போய்ப்பார்’ என்று கங்காணியை அனுப்பிவிட்டுத் தாதி டாக்டரை நோக்கிப் புன்னகைக்கிறாள்.
“டாக்டர். எனக்கு வார இறுதி லீவுநாள்” என்கிறாள் தாதி. “சினிமாவுக்குப் போவமா?”
“சரி சரி” என்றுவிட்டுப் பலமாகச் சிரித்தார் டாக்டர்.

ச. முருகானந்தன் 83
கிழவியின் சத்தமோ முனகலோ இப்பொழுது கேட்கவில்லை. கங்காணி திரும்பி வந்தான். “ஆள் அவுட் போல.” என்றான் சந்தேகத்துடன்.
டாக்டரும் தாதியும் எழுந்து சென்று கிழவியைப் பார்த்தார்கள். கைநாடியைப் பிடித்துப் பார்த்த டாக்டர் உதட்டைப் பிதுக்கினார். பின்னர் திரும்பி அறைக்கு வந்து, ‘நோயாளி இறந்துவிட்டார்’ என்று துண்டில் எழுதிவிட்டு உறவினருக்கு அறிவிக்கும்படி தாதியிடம் கூறினார்.
“சொந்தக்காரர் இல்லை” என்றாள் தாதி.
“அநாதைப் பிணமோ?” என்றார் டாக்டர்.
கங்காணி பிரேதத்தைச் சவச்சாலைக்கு எடுத்துச் சென்றான்.

Page 50
கலைக் கதிரவனின் இளங்கதிர்கள் ஜன்னல் வழியாகப் பாய்ந்து கொண்டிருந்தன. வெளியே நோக்கிய கேசவனின் முகத்தில் இளவெயில சுளி என்று அடித்தது. கூடவே இளம் தென்றற் காற்று உடலை இதமாக வருடிச் சென்றது. முன்னைய இரவு பலத்த மழை பெய்திருக்க வேண்டும். தோட்டத்து மரங்களிலிருந்து தண்ணித் துளிகள் சொட்டிக் கொண்டிருந்தன.
'தம்பீ.!” அம்மாதான் அழைத்தாள்.
e) DLDT நீட்டிய சூடான தேநீரை வாங்கிக் குடித்தபடியே சாய்வு நாற்காலியில் வந்து அமர்ந்து
 

ச. முருகானந்தன் 85
கொண்டதும், உடலை அழுத்திக் கொண்டிருந்த சுமை சற்றுக் குறைவது போலிருந்தது.
அவன் தேநீர் அருந்தியவுடன் கோப்பையை எடுத்துச் சென்றுவிடும் பழக்கமுள்ள அம்மா இன்றைக்கு அப்படிச் செய்யவில்லை.
“அவங்களுக்கு உன்னைப் பிடிச்சிருக்காம். எங்கடை பதிலை எதிர்பார்க்கினம். நீ சரி எண்டா ஓம் சொல்லலாம். எங்களுக்கும் அந்த இடம் பிடிச்சிருக்கு. நானும்தான் இரண்டு நாளாய்க் கேட்டுக் கொண்டிருக்கிறன். நீ ஒரு மறுமொழியும் சொல்லுறாயில்லை.”
அம்மாவின் குரலில் அழுத்தம் தொனித்தது. பதில் சொல்லாமல் தட்டிக் கழிக்க முடியாதென்பதை உணர்ந்தான் கேசவன்.
“திரும்பத் திரும்ப ஏனம்மா கேட்கிறாய்? நான்தான் ஏற்கெனவே சொல்லிவிட்டனே, எனக்குக் கலியாணம் வேண்டாமென்று’ உறுதியாகக் கூறினான் கேசவன். அவனது குரலில் சீற்றம் தொனித்தது.
மேகம் மூடிய வானைப்போல் அம்மாவின் முகம் சட்டென்று ஏமாற்றத்தால் சுருங்கியது.
“என்ன தம்பி இது குழந்தைத்தனமாய்ப் பேசுறாய்? உனக்கும் வாறதையோடை முப்பத்தி நாலு வயசாகுது. மாமாவின் பெண்ணைத்தான் வேண்டாம். எண்டு தட்டிக் கழிச்சிட்டாய். இவளுக்கு என்ன குறை? வடிவு, குணம், படிப்பு சொத்து எதிலுமே குறைவில்லையே.”
71.2 Co

Page 51
86 இனி வானம் வசப்படும்
அம்மாவின் அபிலாசையைப் பார்க்கும்போது அவனுக்குப் பரிதாபமாக இருந்தது. அதற்காக அவன் என்ன செய்யமுடியும்?
டாக்டர் கையை விரித்த பிறகு.
“சுகுமாரனுக்கும் வயதாச்சு. அவனும் அவள் ராணியை விரும்புகிறான். நீ கட்டினால்தானே அவனும் கட்டலாம். அவன் என்னடாவென்றால் அண்ணாவுக்குப் பிறகுதான் கலியாணம் செய்வேன் என்கிறான். நீயெண்டா கலியாணம் வேண்டாமெண்டு ஒத்தைக் காலிலை நிக்கிறாய். அவன் சொல்லுறதும் நியாயம்தானே? உங்கடை கலியாணத்தை செய்து வைச்சிட்டா நானும் நிம்மதியாய்க் கண்ணை மூடியிடலாம்” இன்னும் ஏதேதோ சொல்லிக் கொண்டு போனாள் அம்மா.
கேசவனுக்கு எரிச்சல் எரிச்சலாக வந்தது. எனினும் அம்மா மீது கோபிப்பதில் அர்த்தமில்லை என்பதால் மெளனமாக, பேச்சை நீட்ட விரும்பாமல் "ரேடியோவை முடுக்கினான். பி. சுசீலாவின் இனிய குரல் வானொலியில்
ஒலித்தது. ‘சொல்லத்தான் நினைக்கிறேன் முடியவில்லை.
ஏதோ முணுமுணுத்தபடி தேநீர்க் கோப்பையைத் தூக்கிக்கொண்டு அம்மா போய்விட்டாள்.
சிந்தனையில் ஆழ்ந்தான் கேசவன். இனி நீண்ட நேரம் வரை அவனது சிந்தனைகளுக்கு ஓய்வு கிடையாது. அம்மா பத்தி வைத்துவிட்டு போய்விட்டாள். அது அணைவதற்கு நேரம் எடுக்கும். ”அம்மாதான் அறியாமையால் பிடிவாதம் பிடிக்கிறாவெண்டால், இவன்

ச. முருகானந்தன் 87
சுகுமாரன் படிச்ச முட்டாள்!’ கேசவனுக்கு ஆத்திரம் ஆத்திரமாக வந்தது.
அம்மாவுக்காக ஒரு கணம் கேசவனின் மனம் வேதனைப்பட்டது.
டாக்டரே கையை விரித்த பிறகு, ஒரு பெண்ணின் ஆசைகளை, கற்பனைக் கோட்டைகளைக் கானல் நீராக்க அவன் விரும்பவில்லை.
ம். அவனை நாடி வந்ததால் உள்ளங்கள் - அவனுக்குப் பேசி வந்த கலியாணங்கள்.
தனது பத்தொன்பதாவது வயதில் சாதாரண இலிகிதனாக வேலையில் சேர்ந்த கேசவன் தனது விடாமுயற்சியால் படிப்படியாக முன்னேறி, இன்று ஒரு நிறுவனத்தின் பிரதம கணக்காளனாகப் பணியாற்றுகிறான்.
(96.6öT வேலையில் சேர்ந்து ஓரிரு வருடங்களுக்குள்ளாகவே அவனுக்குக் கலியாணப் பேச்சு அடிபடத் தொடங்கியதெனினும் மணப் பருவத்திலிருந்த சகோதரிகளைக் காரணம் காட்டிக் கலியாண பந்தத்திலிருந்து அவனால் தப்பிக்கொள்ள முடிந்தது. சகோதரிகளின் திருமணங்கள் நிறைவேறிய பின் மீண்டும் கலியாணப் பேச்சுகள் அடிபடவே, அவன் நிம்மதியின்றி தவித்தான். கலியாணம் வேண்டாமெனப் பிடிவாதமாகவே மறுத்தானே தவிர, அவனால் உண்மைக் காரணத்தைச் சொல்ல முடியவில்லை.
மகன் தன் பேச்சை மீறமாட்டான் என்ற நம்பிக்கையில் மாமன் மகள் நிர்மலாவை அவனுக்கு

Page 52
88 இனி வானம் வசப்படும்
நிச்சயம் செய்த பின், அவனது பிடிவாதத்தைக் கண்ட தாயார் அதிர்ச்சியும், ஆச்சரியமுற்றதும், கண்ணிர் விட்டழுதும், மாமா குடும்பத்தினர் கோபம்கொண்டதும் முடிந்துபோன கதைகள்.
பேசி வந்த கலியாணங்களையெல்லாம் நிராகரித்தான். ஊரில் அவனைப் பற்றி நாலு பேர் நாலு விதமாகப் பேசியதை அவன் பொருட்படுத்தவில்லை.
ம். டாக்டரே கையை விரித்த பிறக.
சிந்தனையில் ஆழ்ந்திருந்த கேசவன் நெடு மூச்செறிந்தான். மனது உற்சாகமின்றி இருந்ததால் எங்கேயும் போகாது அறையுள் அடைபட்டுக் கிடந்தான். பத்து நாள் லீவில் வந்தவன் பொழுதை எப்படிக் கரைப்பது என்பது புரியாமல் திண்டாடினான். சீ ! அந்த உபத்திரவம் பிடித்த மார்பு வலி இங்கிருக்கும்போது வந்துவிடக் கூடாதே என்று பிரார்த்தித்துக்கொண்டான்.
இருபதாவது வயதில் முதன்முதலாக மார்புவலி வந்தபோது அது இப்படி ஒருபயங்கரமான வியாதியாக இருக்குமென அவன் எதிர்பார்க்கவில்லை.
சுவாசப்பைப் புற்றுநோய்
சுவாசப்பையின் எல்லா அறைகளிலும் நோய் பரவிவிட்டிருந்ததால், ஆபரேசன் கூட சாத்தியமில்லை என டாக்டர்கள் கைவிரித்து விட்டனர். கதிர்முறைச் சிகிச்சைகள் அளித்தனர். எனினும் நோய் பரவுவதை கட்டுப்படுத்த முடியவில்லை. வீட்டிற்குத் தெரிந்தால் கவலைப்படுவார்கள் என்பதால் கேசவன் எதையும் வீட்டிற்குத்

ச. முருகானந்தன் 89
தெரியப்படுத்தவில்லை. வெளியுரில் வேலை பார்த்ததால் மறைப்பதற்குச் செளகரியமாகப் போய்விட்டது.
இந்த தள்ளாத வயதில் அம்மாவை கவலைக்குள்ளாக்க அவன் விரும்பவில்லை.
டாக்டர்கள் ஏகமனதாகக் கூறிவிட்டார்கள். மிஞ்சி மிஞ்சிப் போனால் இன்னுமொரு பத்து பன்னிரண்டு வருஷம் தான் .
இன்றோ நாளையோ என மரணத்தை எதிர்நோக்கும் இந்த நிலையில் கலியாணம் ஒரு கேடா?
ஒவ்வொரு முறையும் மார்பு வலியால் தவிக்கும்போதும், செத்துப் போய் விடுவேனோ என நினைப்பான். வேதனை பொறுக்க முடியாமல் கதறும்போது செத்துப்போய் விட்டால் கூட கரைச்சலில்லை என எண்ணிக் கொள்வான்.
சில சந்தர்ப்பங்களில் தற்கொலை செய்யலாமா என்றுகூட அவன் எண்ணியதுண்டு. தற்கொலை செய்வது முட்டாள்தனம். அம்மா துடித்துப் போவாளே! மீண்டும் நிதானமடைந்துவிடுவான்.
சீ ! என்ன முட்டாள்தனம்ான யோசனை என்று தோன்றும்.
சிகரெட் ஒன்றை எடுத்துப் பற்ற வைத்துக் கொண்டான். டாக்டர்கள் எவ்வளவு எடுத்துக் கூறியும் இந்த அநாவசியமான புகைத்தலை விடமுடியவில்லை. அம்மாவை எட்டிப் பார்த்தான். அம்மா குசினியில்

Page 53
90 இனி வானம் வசப்படும்
மும்முரமாகச் சமையல் வேலையில் மூழ்கியிருந்தாள். அம்மாவுக்கு முன்னால் அவன் சிகரெட் பற்றுவதில்லை எனினும் அவன் புகை பிடிப்பது அம்மாவுக்குத் தெரியும். அதையும் அவன் அறிவான்; ஆனாலும் ஒரு மரியாதை,
பொழுது போகாததால் ‘மு.வ. வின் நெஞ்சில் ஒரு முள்ளை எடுத்து நேற்று விட்ட குறையிலிருந்து வாசிக்கத் தொடங்கினான். உற்சாகம் இல்லாததால் புத்தகத்தில் மனது இலயிக்கவில்லை. புத்தகத்தை மூடி வைத்துவிட்டு, சிகரெட்டின் இறுதிப் பாகத்தை உறிஞ்சி இழுத்து விட்டு வெளியே எறிந்தான். யாரோ பக்கத்தில் வந்து நிற்கிற மாதிரித் தோன்றியது!
சட்டென்று திரும்பிப் பார்த்தான் கேசவன்.
அம்மாதான் நின்றிருந்தாள்.
கேள்விக் குறியோடு நிமிர்ந்து அம்மாவை நோக்கினான். “தம்பி.” ஏதோ சொல்ல வாயெடுத்தும் சொல்ல முடியாது தயங்கியபடி அவனை நோக்கினாள். அது அவளைது சுபாவம்.
“தம்பி உன்ரை மனதிலை ஆரையாவது வைச்சிருந்தா பயப்படாமல் சொல்லு, சாதியோ மதமோ எதைப் பற்றியும் பரவாயில்லை. நீ விரும்பினா சரிதான். நீ சந்தோஷமாயிருந்தாச் சரிதான்’ அம்மாவின் வார்த்தைகளில் இழைந்திருப்பது சோகமா, வற்புறுத்தலா என கேசவனால் இனம் கண்டு கொள்ள முடியவில்லை.
மத்தியானம் சாப்பிடும்போதும் அம்மா கேட்டாள், “தம்பி வாய்க்கு உருசியாய் சமைச்சுப் போட வேண்டாமே?
 

ச. முருகானந்தன் 91
எத்தனை நாளுக்குத்தான் கடைச் சாப்பாட்டை சாப்பிடப் போறாய்?’
“வாழ்க்கை முழுவதும் ஹோட்டல் சாப்பாடுதான்” கொஞ்சமும் பதற்றமில்லாமல் புன்னகையுடன் கேசவன் கூறினான். *
செல்லம்மாவின் கண்கள் குளமாகின. பாவம்,
பெற்ற மனமல்லவா?
“அண்ணா! உண்மையாய்த்தான் கேட்கிறேன். ஏன் இவ்வளவு பிடிவாதம் பிடிக்கிறியள்?’ கேட்கக் கூடாத

Page 54
92 இனி வானம் வசப்படும்
ஒன்றை கேட்டுவிட்டவன் போல, பார்வையை வேறெங்கோ திருப்பினான், சுகுமாரன். அண்ணாவோடு அதிகம் பேசாத சுகுமாறன் எப்படியும் அவனைக் கலியாணத்திற்குச் சம்மதிக்க வைக்கவேண்டுமென்ற ஆதங்கத்தில் கேட்டுவிட்டான்.
பதிலெதுவும் சொல்லாமல் தண்ணிரை எடுத்துக் குடித்தாக் கேசவன்.
“நீங்க கட்டினாப் போலைதான் நான் கட்டுவன். அது வரையிலை நானும் கட்டப் போறதில்லை” இப்பொழுது கொஞ்சம் தைரியமாகவே கூறினான் சுகுமாரன்.
“சுகு சிறு பிள்ளைத்தனமாகப் பேசாதே. அப்பிடியெண்டா நான் செத்.” உதட்டளவில் வந்த வார்த்தையைக் கட்டுப்படுத்தியவனாக, நாக்கைக் கடித்துக் கொண்டான் கேசவன்.
‘இது என்ன கரைச்சலாய்ப் போச்சு’ என எண்ணினான்.
அவனால் தொடர்ந்து சாப்பிட முடியவில்லை. பசி எங்கோ ஓடி ஒளிந்துவிட்டது.
‘மாமி.!” என்றபடியே சாந்தி வந்தாள்.
பெயரளவில் தான் அவள் சாந்தி. அவளுக்கு வாழ்க்கையில் சாந்தி கிடைக்கவில்லை. கஷ்டப்பட்ட குடும்பத்தில் ஏழு பிள்ளைகளுக்கு மூத்தவளாகப் பிறந்த அவளுக்குப் பிறந்த வீட்டிலும் சந்தோஷம் கிடைக்கவில்லை; புகுந்த வீட்டிலும் அப்படியே இருக்கும்போதே குடித்துக்

ச. முருகானந்தன் 93
கஷ்டப்படுத்திய கணவன் ரகு, வருடம் ஒரு பிள்ளையாக ஆறு பிள்ளைகளைக் கொடுத்துவிட்டு, இள வயதிலேயே அவளை விதவையாக்கிவிட்டுப் போய்விட்டான்.
பாவம். சாந்தி
அவளது ஏழ்மைக் கோலத்தைப் பார்த்ததும் “ர் "ம் இரக்கம் வரும்.
அம்மாவிடம் அரிசியோ, சாமானோ ஏதாவது கேட்டு வாங்கத்தான் வந்திருப்பாள். இந்தக் காலத்தில் ஆறு பிள்ளைகளை வளர்க்கிறதென்றால் இலேசுப்பட்ட காரியமில்லையே; சாமான்கள் விற்கிற விலையிலே.
‘இந்த இளம் வயதில் இவளுக்கு இவ்வளவு கொடுமையா?’ என எண்ணியபோது கேசவனின் மனது சிறிது வேதனைபட்டது.
ம். இந்த விதி யாரைத்தான் விட்டது! கேசவனின் கண்கள் பனித்தன. திடீரென்று அவனது மனதில் ஒரு பொறி ! ..ம். இப்படிச் செய்தால் என்ன?
அடுத்த இரண்டு மூன்று தினங்கள் கேசவனின் மனது மிகவும் குழம்பிப் போயிருந்தது. தனிமையில் பலவாறாக யோசித்தான்.
அந்த எண்ணம் வர வர விசுவ ரூபமெடுத்தது.
‘எப்ப கலியாணம்? ஏன் கலியாணம் கட்டாமலிருக்கிறாய்?’ என கேட்கும் நண்பர்களினதும்

Page 55
94 இனி வானம் வசப்படும்
கற்றவர்களினதும் வாயை மூடலாம். அம்மாவுக்கும் ஓரளவு நிம்மதி, தம்பிக்கும் தடையாய் நந்தி போல இருக்கத் தேவையில்லை.
சாந்திக்கும் சற்று ஆறுதல்; அவளுடைய கஷ்டங்களுக்கும் நிவாரணம் . b..... அப்படித்தான் செய்யவேணும்.
அவள் சம்மதிப்பாளோ?
ம். இன்னும் ஒரு வருஷம்மோ, இரண்டு வருஷமோ? பிறகு வாழ்க்கை முழுக்க அவளுக்கு நிறைய பென்ஷன் கிடைக்கும். பிள்ளைகளையும் வளர்க்க அவளுக்கு இது ஓர் ஆறுதல்தானே?
பலவாறாக எண்ணிய கேசவன் ஒரு முடிவுக்கு வந்தான். “அவளைத் தனிமையிலை கேட்டுட்டு, பிறகு அம்மாவிடம் சொல்லுவம்” என எண்ணினான்.
மறுநாளே அவளுடன் தனியாகப் பேசும் வாய்ப்பு கிடைத்தது.
அம்மா சந்தைக்குப் போய்விட்டாள்; தம்பியும் வீட்டிலில்லை. ‘மாமிஈ” என்று அழைத்தபடியே சாந்தி வந்தாள்.
“அம்மா சந்தைக்குப் போயிட்டா. என்ன வேணும்? இப்ப வந்திடுவ’ அவனது வார்த்தைகளில் தடுமாற்றம் தெரிந்தது.
“ஒண்டுமில்லை. அப்ப நான் பிறகு வாறன்’ அவளால் அங்கு நிற்க முடியவில்லை.

ச. முருகானந்தன் 95
யாருக்கும் சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுக்கக் கூடாது என்பது அவள் வாழ்க்கையில் கண்ட அனுபவம்.
ஒரு விதவையோடு பழகும் ஆண்களில் பலர் அப்படித்தானே நடந்து கொள்கிறார்கள்? சாந்தி கேசவனைச் சந்தேகிக்கவில்லைதான். எனினும் தனிமை, சந்தர்ப்பம, சூழ்நிலை. யார் கண்டது?
போவதற்குத் திரும்பிய சாந்தியைக் கேசவனின் அழைப்பு தடுத்து நிறுத்தியது. அவனது அழைப்புக்கு அவ்வளவு சக்தி இருக்கிறதா? அவள் பீதியுடன் அவனைப் பார்த்தாள்.
‘சாந்தி! உங்களோடை ஒரு விஷயம் கதைக்கவேணும்’ சுற்றி வளைத்துப் பேச கேசவனுக்குத் தெரியாததால் நேராகவே விஷயத்திற்கு வந்தான். தனது மனதில் தோன்றிய எல்லாவற்றையும் ஒரே மூச்சில் சொல்லி முடித்தான். எதையுமே அவன் மறைக்கவில்லை.
சாந்தி புன்னகைத்தாள்; வரண்ட புன்னகை அது அவள் பதில் சொல்லாது அவனையே நோக்கியபடி நின்றிருந்தாள்.
சிறிது நேர மெளனம்.
அவள் என்ன சொல்லப் போகிறாள் என்பதை அறியும் ஆவலோடு அவளையே நோக்கினான் கேசவன். அவனது உடல் வியர்த்திருந்தது.
சாந்தி தன் காதுகளையே நம்பமுடியாமல் அவனைப் பார்த்தபடியே அதிர்ந்தவள் போல் நின்றிருந்தாள்.

Page 56
96 இனி வானம் வசப்படும்
அவனது வார்த்தைகள் அவளது மனதைத் தாங்கியிருக்க வேண்டும்.
அவன் அவளைப் பரிதாபமாகப் பார்த்தான்; பிறகு சற்று உறுதியுடன் சொன்னான். “சாந்தி அவசரமில்லை. ஆறுதலாய் யோசிச்சு சொல்லலாம்.”
அவள் அவசரமாக அவனை நிமிர்ந்து பார்த்தாள். அவளது கண்கள் கலங்கியிருந்தன. எண்ண அலைகள் எங்கெல்லாமோ சிறகடித்தன.
சின்ன வயதில் அவனோடு மணல் வீடு கட்டி விளையாடியது. மாங்கொட்டை விளையாடியது. சண்டை போட்டுக்கொள்வது. மறுகணமே அதை மறந்து பேசிக் கலகலப்பாக விளையாடுவது. ஒ எவ்வளவு பசுமையான நினைவுகள்.
அவளது முகத்தில் செம்மை படர்வது போலிருந்தது.
5T600T(3LDIT?
ஒரு கணம்தான்; தன்னைச் சுதாகரித்துக் கொண்டாள்.
GS
ஓ. எவ்வளவு தியாக உள்ளம் இவருக்கு மரணத்திலும் மற்றவர்க்கு உதவி செய்ய விழையும் உள்ளம்” அவளது உள்ளமெங்கும் ஒரு புல்லரிப்பு.
மெளனத்தைச் சாந்திதான் கலைத்தாள். “வேண்டாம்’ நான் இப்படியே இருந்திடுறன். உங்களுடைய வார்த்தைகள் எனக்களித்த சந்தோஷத்தை அளவிட முடியாது. ஆனா.” அவளது குரல் தழதழத்தது.

ச. முருகானந்தன் 97
அவனுக்கு ஏற்பட்ட வியப்பை வெளிக்காட்டிக் கொள்ளாது திக்பிரமை பிடித்தவன்போல் அவளை நோக்கினான் கேசவன்.
“இது வெறும் பச்சாத்தாபத்தினால் ஏற்பட்ட முடியவில்லை. இருவருடைய நன்மைக்குமாய்த்தான் கேட்கிறன். நான் செத்தாப் போலை என்னுடைய பென்சனிலை நீ நிம்மதியாய் சீவிக்கலாம்’ மீண்டும் அழுத்திக் கூறிய கேசவனின் குரல் கரகரத்தது.
“நீங்கள் அப்படி நினைக்கிறியள். என்னுடைய நன்மைக்கு எண்டு நினைக்கிறியள். ஆனா ஆறு பிள்ளையளின் தாயான என்னைத் தன் மகன் காட்டிக்க 9d rñ185 eğ9HıibLDrT 66hobiíbuLDITL"Lm. 59g5I LDL"G6)L66Äb60D6Vo ed6mTñi...?ʼ அவளது இதழோரத்தில் ஓர் இலேசான புன்னகை வெளிப்பட்டது.
“அம்மாவைச் சம்மதிக்க வைக்கிறது என்னுடைய பொறுப்பு. உலகம் இப்ப முந்தின மாதிரியில்லை சாந்தி எதையும் மனிதாபிமானத்தோடு நோக்கிற பண்பு இன்றைய உலகுக்கு இருக்கு, ஒரு விதவை கலியாணம் செய்யுறதை நையாண்டி செய்த காலம் மலையேறிப் போயிட்டது. உலகம் இண்டைக்கு முன்னேறியிருக்கு. செல்வ ரஞ்சினி ரீச்சர் இரண்டாந்தரம் கலியாணம் செய்து இப்ப சந்தோஷமாய்த்தானே இருக்கிறா.”
அவன் சொல்லைக் கேட்டு அவள் புன்னகைத்த போது அவளது கன்னங்களில் குழி விழுந்தது.
“நான் சொல்ல வந்தது வேறு, என்னைக் கட்டின பலன்தான் நீங்கள் செத்ததெண்டு ஊர் சொல்லும், ஏன்

Page 57
  

Page 58
100 இனி வானம் வசப்படும்
“என்ன தடுமாறுகிறீர்கள்? அவள் கூடத்தானே?” கார்த்திகாவின் மனதில் உருண்டு கொண்டிருந்த கோபம், சோகம் முதலான உணர்வலைகளின் வெளிப்பாடாக அவளது குரல் தளதளத்து ஓங்கி ஒலித்தது.
மாதவன் அவளை நிமிர்ந்து பார்த்தான் “உன்னுடைய விசர்க் கேள்விகளுக்கெல்லாம் நான் பதில் சொல்லத் தேவையில்லை.” அவனிடமும் கோபம் எட்டிப் பார்த்தது.
அவள் மீண்டும் அவனை உற்று நோக்கினாள். கண்களை ஊடுருவியபோது அதில் கள்ளம் குடிகொண்டிருப்பதாக உணர்ந்தபோது மனதில் ஒருவித கலக்கமும் சினப்பும் ஏற்பட்டன. ஏக்கப் பெருமூச்சினுாடே நெஞ்சில் வலி எடுப்பதாக உணர்ந்தாள்.
அவனோ எதுவும் கூறாமல் உள்ளே சென்று உடைகளை மாற்றிவிட்டு வந்தான். வழமையாக வரும் தேநீருக்கான அறிகுறி எதுவும் தென்படாமலிருக்கவே மனதில் சிறிது சினப்புற்றான். மெளனத்திரை விலகவில்லை. அவன் பேசாமல் முகம் கழுவ கிணற்றடிக்குச் செல்கையில், அவளது மனது கரைந்து கண்ணிராகியது. இருண்டு வந்து மேகங்கள் தூவிய மழைத்துளி போல் சோபையிழந்திருந்த அவள் முகமும் சிற்றருவியாய் கண்களைத் துளிர வைத்தது.
மீண்டும் அவன் வந்து தலை சீவிவிட்டு அமர்ந்தபோதும் அவள் தேநீர் கொண்டு வராமையினால் சலிப்புற்றான். பகல் முழுவதும் அலுவலகத்தில் அயராது வேலை செய்து களைத்து வந்த அவனுக்கு, கார்த்திகாவின்

ச. முருகானந்தன் 101
இன்றைய வித்தியாசமான போக்கு மனக்குமுறலை ஏற்படுத்தவே, எழுந்து சேட்டை அணிந்து கொண்டு வெளியேறியபோது, “தேத்தண்ணி போடுறன்’ என்ற அவளது வார்த்தையை காதில் வாங்கிக் கொள்ளாமல் வெளியேறினான்.
பொழுது சாய்ந்து கொண்டிருந்தது. நெருங்கி வருகின்ற இன்றைய இரவில் வித்தியாசத்தை உணர்ந்தாள் கார்த்திகா. மனதில் ஒருவித வெறுமையும், தனிமை யுணர்வும் மேலோங்கியது.
நேரம் அகாலமாக, கட்டிலில் போய் விழுந்து, தலையணையில் முகம் புதைத்த போது, ஊற்று நீராக உருவெடுத்த கண்ணித் துளிகள், ஆற்றுப் பிரலாகமாய் ஓட ஆரம்பித்தது. சிறிது நேரம் விசும்பியவள் மீண்டும் விழித்துப் பார்த்தபோது, ஜன்னலினூடே தெரிந்த இருட் திரட்சியான வானத்தில் நிலவு தொலைந்து போயிருந்தது. காற்று மட்டும் தென்னங்கீற்றுக்களைத் தழுவி சோககீதம் ஒலித்துக் கொண்டிருந்தது.
தென்றல் காற்றாய் தழுவி கதை சொல்லும் மாதவன் இன்னமும் வீடு திரும்பவில்லை. அவளது மனதிலே ஒருவித ஏக்கமும், எதிர்பார்ப்பும் எட்டிப் பார்த்தன.
எழுந்து சோம்பல் முறித்தாள். இரவு சமைக்கவில்லை. மதியம் சமைத்தவை அப்படியே இருந்தன. ஏதாவது பொரித்தால் போதும். அவன் வந்தபின் செய்யலாம்.
‘மணி பத்திருக்குமா?’ அவள் யோசித்துக் கொண்டிருந்தபோதே வாசல் மணி ஒலித்தது. திறந்தாள்.

Page 59
102 இனி வானம் வசப்படும்
அவன்தான். புன்னகையோடு அவளை நோக்கியவனைப் பாராது விருட்டென்று அறையுள் சென்று கட்டிலில் குப்புற விழுந்தாள்.
அவளைத் தொடர்ந்து வந்த மாதவன், அவளருகே வந்து கட்டிலில் அமர்ந்தான். “கார்த்திகா. என்ர செல்லம். என்னை ஒருக்கால் பாருமன்.’ ஒரு குழந்தையை வாஞ்சையோடு அழைப்பது போல் முதுகில் தட்டினான். திரும்பி அவனைப் பார்க்க மனம் உஞ்சினாலும், நெஞ்சின் சீற்றமான பகுதி இழுத்து நிறுத்தியது.
இவன் எதிர்பார்த்தவாறு அவள் திரும்பவுமில்லை. சிரிக்கவுமில்லை. இம்மியும் அசையவுமில்லை. ஏமாற்றத்தைச் சகித்துக் கொண்டு, அவள் ஆடைக்குள் மறைக்கப்படாத இடைப்பகுதியை வருடியபடி “கார்த்திக் குட்டி’ என்று செல்லமாக அவள் காதோடு மெதுவே அழைத்தான்.
அவனது மூச்சுக் காற்றின் தசிர்ப்பில் இப்போது அவள் அசைந்தாள். இதைச் சாதகமாக்கிக்கொண்டு அவளைத் தன் அணைப்புக்குள் அடக்க நினைத்த மாதவன் அவள் முகத்தை நோக்கி அசையவே அவள் அவனைத் தள்ளி நிராகரித்தாள். தலையை நிமிர்த்தி அவனை நோக்கியபடி, “ஏன் அவளிடம் போக வேண்டியதுதானே? என காரமாகக் கேட்டாள்.
“கார்த்திகா, இப்போது என்ன நடந்துவிட்டது என்று ஆர்ப்பாரிக்கிறீர்? அவள்கூட வங்கிக்குப் போய், அவள் விண்ணப்பித்த, வீடு கட்டுவதற்கான வங்கிக் கடனுக்குப்

ச. முருகானந்தன் 103
பிணை வைத்தேன். வந்ததும் சொல்ல முன்னரே நீ சண்டைக்கு வந்துவிட்டாய்.”
“இதை நான் நம்ப வேண்டுமா?’ “நம்பாவிட்டாலும் அதுதான் உண்மை.” அவள் இவன் கூற்றை நம்பாமல் சத்தம் போட்டாள். அவன் பொறுக்க முடியாமல் எழுந்து ஹோலில் வந்து அமர்ந்தான்.
“சீ. சியாமளா மாற்றத்தில் இங்கு வந்தது பற்றி இவளிடம் சொல்லாது விட்டிருக்கலாம். கட்டியவளுக்கு இரகசியமாக எதுவும் இருக்கக்கூடாது என்ற நல்லெண்ணம் இப்போது இடைஞ்சலாகிவிட்டதே.”
சியாமளாவும் மாதவனும் கல்லூரியில் படித்தபோது ஒருவரை ஒருவர் விரும்பியவர்கள். சில நினைவுகளை மனதிலிருந்து அகற்ற முடிவதில்லை. திருமணமான புதிதில் மாதவன் தன் மனைவி கார்த்திகாவிடம் சியாமளாவுக்கு காதல் கடிதம் கொடுத்தது பற்றியும், முதலில் அவள் மறுத்து அவனோடு கதைக்காமல் விட்டதையும் பின்னர் தானாக வந்து அவனிடம் சம்மதம் தெரிவித்ததையும் பின்னர் அவர்களது காதல் திருமணத்தில் சங்கமிக்காதது பற்றியும் ஒளிவு மறைவின்றிக் கூறியிருந்தான். அப்போது கார்த்திகா அதைத் தூக்கிப் பிடிக்காது இலேசாக எடுத்துக் கொண்டபோது, புரிந்துணர்வு மிக்க ஒரு மனைவியை அடைந்ததாக மகிழ்ந்தான்.
“அந்தக் கார்த்திகாவா இப்போது இந்த சின்ன விவகாரத்தைப் பெரிதுபடுத்துகிறாள்?’ அவனது மனது கனத்தது.

Page 60
104 இனி வானம் வசப்படும்
பின்னால் ஆளரவம். கார்த்திகாதான்!
“என்ன கேட்டீங்க?’ அவள் கூடப்போனது தப்பா என்றா?. தப்புதான்.”
அதிர்ச்சியுடன் அவளை நோக்கினான் மாதவன். அழகான கார்த்திகாவின் முகமா அது? ஆத்திரம், எரிச்சல், ஆற்றாமை என்று சகலதும் கலந்து எரிமலைப் பிழம்பு போல் அது கனன்று இறுகிப் போயிருந்தது. பற்கள் இறுகியிருந்தன. முகம் இன்னமும் எரிச்சலுடன் கிடுகிடுத்தது.
மாதவன் அவளை ஆழமாகவும், அன்புடனும் நோக்கினான். “கார்த்திகா. நான் என்றைக்குமே உனக்குத் துரோகம் செய்யமாட்டேன். பருவ வயதில் காதல் ஏற்படுவது சகஜம். அதற்காக நான் இப்பவும் அவளை நினைத்து உருகிக் கொண்டிருக்கவில்லை.
“பழக ஆரம்பித்தால் அது ஆரம்பித்த இடத்திலேதான் கொண்டுபோய் விடும்.” காரமாக ஒலித்தது கார்த்திகாவின் குரல்.
மாதவன் பேச்சை நிறுத்தி மீண்டும் மெளனமானான். என்னென்னவோ உணர்ச்சிகளில் சிக்கி தவிப்பது போல் முகம் இருண்டும் கசந்தும் போயிருந்தது. எனினும் அவளைச் சமாதானப்படுத்தும் முயற்சியில் “ஏன்டி இப்போ வீணாகச் சந்தேகப்படுகிறே? உனக்கு முன்னால் அவளென்ன. வேறு உலக அழகி வந்தாலும்கூட கால் தூசி எனக்கு.’ செல்லமாய் அவனது வார்த்தைகள் ஒலித்தன.

ச. முருகானந்தன் 105
“கதை எழுதுறணிங்க. நல்லாய்க் கதை விடுவீங்க.” அவளது குரலின் ஏளனம் அவனைத் தகிர்த்தது.
வாதம், பிரதிவாதம் என்று சமரசம் ஏற்படாத அந்த நீண்ட இரவு முழுவதும் இருவருக்கும் தூக்கம் பறிபோனது.
காலையில் கடமை நிமித்தம் மாதவன் கொழும்புக்குப் புறப்பட்டான். வழமைபோல் அவள் வழியனுப்பி வைக்காதது அவனுக்கு ஏமாற்றமளித்தது.
மாதவன் போனபின் தனிமையில் வீட்டிலிருந்து யோசிக்க யோசிக்க கார்த்திகாவுக்குத் தலையே வெடித்துவிடும் போலிருந்தது. சியாமளாவுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஏசவேண்டும் போலிருந்தாலும் முடியவில்லை. நான்காவது நாள் பிற்பகலில் சியாமளாவுடன் தொடர்பு கொண்டாள்.
“மிசிஸ் கார்த்திகா மாதவன் கதைக்கிறன். உங்க கூட கொஞ்சம் பேசணும், பின்னேரம் வீட்டிற்கு 6NUՓւջպլDIT?”
“ஒ. மிசிஸ் மாதவன். வித் பிளெசர். நான்கூட உங்க வீட்டுக்கு வரணும் என்று பல தடவை நினைச்சன் எங்கே நேரம்?. அலுவலகமும் வீடும் என்று தலைக்கு மேல் வேலை - அதோட புது வீடு கட்டுறம். உங்களைப் பற்றி மாதவன் நிறையவே சொல்லியிருக்கிறார்.”
வரப்போகும் சியாமளாவுடன் என்ன கதைப்பது, எப்படிக் கதைப்பது என்று திட்டமிட்டாள் கார்த்திகா.

Page 61
106 இனி வானம் வசப்படும்
வாசலில் ஒட்டோ வந்து நிற்கும் சத்தம் கேட்டது. கார்த்திகா, நெஞ்சு பட படக்க வந்து சியாமளாவை எதிர் கொண்டாள். இதயம் துடிதுடிக்க, உடல் முழுவதும் கடேறி உள்ளுக்குள் பதட்டம் பரவியது. உதடுகள் சிரிக்க முயன்று தோற்றுப் போயின.
“உள்ளே வாங்க.” குரல் கரகரத்தது.
இருவரும் ஹோலில் வந்து அமர்ந்து கொண்டனர். சியாமளா சினேகமாக அவளருகில் வந்தமர்ந்து கொண்ட விதமே கார்த்திகாவுக்கு நிறைவைத் தந்தது. எனினும் புழுங்கும் மனதின் குமைச்சலினால் அவளால் எதுவும் பேச முடியவில்லை. சியாமளதான் கதைத்தாள்.
“வீட்டை நல்ல வடிவாக வைச்சிருக்கிறீங்க.”
“கட்டின வரை வீட்டோ கட்டி வைச்சிருக்கத் தெரியவில்லையே..” என்று கார்த்திகா கேவிக் கேவி அழ ஆரம்பித்தாள். சியமளாவுக்கு அவளது அழுகையின் அர்த்தம் புரிவது போலிருந்தது. ஒரு கணம் அதிர்ந்தாள். பேச வார்த்தை வராது தொண்டைக் குழிக்குள் நின்றது.
ஒரு மெளன இடைவெளியில் மனங்களில் பிரளயம் ஒருவாறு சியாமளா அவளை நோக்கி “ஏன் அப்படிச் சொல்லுறீங்க?’ என்று கேட்டாள். கேவலும், விம்மலும் அடங்கி தலை நிமிர்ந்த கார்த்திகாவின் கண்களில் மட்டும் நீர்த்தளும்பல்
சியாமளாதான் தொடர்ந்தாள். "நீங்க என்ன நினைத்து கலங்கிறீங்க என்று எனக்குப் புரியது. நீங்க நினைக்கிற மாதிரி எதுவுமே இல்லை.”

ச. முருகானந்தன் 107
கார்த்திகா நம்பிக்கையோடு சியாமளாவை நிமிர்ந்து பார்த்தாள். சியாமளாதான் மீண்டும் பேசினாள்.
“காதல் நிறைவேறவில்லையென்று வாழ்வைத் தொலைச்சிட்டு நிற்பதில் அர்த்தமில்லை. மனதைத் திடப்படுத்திக் கொண்டு கிடைத்த வாழ்க்கையை நம்பிக்கையோடு எதிர்கொண்டேன். வாழ்க்கையில் சில விடயங்களை மறந்துதான் ஆகணும். காதல் என்கிறது எல்லோருக்குமே வெற்றியைத் தருவதில்லை. அதற்காக வாழ்வைத் தொலைச்சிட்டு நிற்பதோ, தற்கொலை செய்யுறதோ இன்றைய நவீன உலகில் முட்டாள்தனம். ம். காதல் வருகிறபோதே அதற்கு எதிர்ப்பும் கூடவே வந்துவிடுகிறது. நானும் மாதவனும் சாதி என்கிற பேதத்தால் பிரிக்கப்பட்டோம். அப்போது இழப்பாக வலித்ததுதான். ஆனால், இப்போது அப்படி இல்லை.”
“எனக்கு ஒரே குழப்பமாக இருக்கு. என்னுடைய வாழ்க்கை தெளிந்த நீரோடையாகத்தானிருந்தது. ஆனால், ஆனா.” கார்த்திகா தொடர்ந்து கதைக்க முடியாமல் அவளது குரல் தளதளத்தது.
“கார்த்திகா. நீங்க ஒன்றைப் புரிஞ்சுக்கணும் காதல் நிறைவேறவில்லையே என்கிறதை நான் மறந்து போயே கனகாலமாயிடுச்சு. இறைவன் எனக்கு ஒரு இனிமையான, அழகான வாழ்க்கையைக் கொடுத்திருக்கிறார். புரிந்துணர்வும், விட்டுக் கொடுப்பும், அன்பும், பாசமும்மிக்க ஒரு கணவன் கிடைச்சிருக்கிறார். பதவி, அழகு எதிலுமே குறைவில்லை. அவர்கூட இரண்டு வருடங்களாக இனிமையான இல்லறத்தை நடத்திறபோது

Page 62
108 இனி வானம் வசப்படும்
பழையவை எல்லாமே மறந்திடுத்து. அவரைத் தவிர வேறு எவருடைய நினைப்பும் எனக்கில்லை. மாதவன் கூட தன்னுடைய நிலையும் அப்படித்தான் என்று கூறியிருக்கிறார். உங்களை மனைவியாக அடைந்ததற்குதான் கொடுத்து வைத்ததாகக் கூறுவார்.’
சியாமளா சொல்லச் சொல்ல கார்த்திகாவின் மனதில் தெளிவு ஏற்பட ஆரம்பித்தது. “நானும் மாதவனும் வாழ்ந்து கொண்டிருக்கிற இந்த அமைதியான ஆரோக்கியமான அன்பு செறிந்த வாழ்க்கைக்கு அர்த்தம் புரியாமல் இருந்து விட்டேனே. அவர் ஆனந்தமாகத்தானே என்கூட வாழ்ந்து கொண்டிருக்கிறார். போயும் போயும் அவரைச் சந்தேகித்தேனே.”
மனதின் தெளிவில் அவள் முகம் பிரகாசித்தது. “இருங்க உங்களுக்குக் குடிக்கக் கூட எதுவும் தர மறந்துவிட்டேனே என்று உற்சாகமாக எழுந்தாள் கார்த்திகா. அவள் தேநீரோடு வந்தபோது வாசல் மணி அடித்தது.
சியாமளா கதவைத் திறந்தாள். வாசலில் மாதவன் பயணத்தால் வந்திருந்தான். இருவரையும் ஒன்றாகக் கண்ட அவனுக்கு இன்பமான அதிர்ச்சி

109
"శ్రీకాస్త్రాత్రాతోూ 'ധൈ',
அன்று சனிக்கிழமை, காலையிலிருந்து மப்பும் மந்தாரமுமாக இருந்தது. கணேசனும், ஜெயமும் காலைச் சிற்றுண்டியை முடித்துக்கொண்டு இனி என்ன செய்வது என்று தோன்றாமல் அறையினுள் வந்து அமர்ந்து கொண்டனர். அன்று விடுமுறை; இல்லாவிட்டால் அலுவலகத்திலாவது பொழுதைப் போக்கியிருக்கலாம். ஜெயமும் கணேசனும் ஒரே அலுவலகத்தில் இலிகிதர்களாகப் பணி புரிபவர்கள். இருவரும் ஒரே வீட்டில்தான் தங்கியிருந்தார்கள். இருவரும் சம வயதினர்; சுமார் இருபத்து மூன்று வயது இருக்கலாம். இருவருக்கும் ஒரே தினத்தில்தான் நியமனம் கிடைத்தது. அன்று முதல் இன்றுவரை கடந்த மூன்று வருடங்களாக அவர்களிடையே ஏற்பட்ட பழக்கம் இன்று இறுகிய நட்பாக மலர்ந்திருந்தது. நண்பர்களிருவருக்கும் இடையில் இப்போது எதுவித

Page 63
110 இனி வானம் வசப்படும்
இரகசியமும் இல்லை. ஒருவரோடு ஒருவர் மனம்விட்டுப் பழகினார்கள்.
மணி எட்டு அடித்தது. இனி என்ன செய்யலாமென நண்பர்கள் யோசித்தனர்.
“மச்சான் காலையிலேயே ‘டல்’ அடிக்க ஆரம்பிச்சிட்டுது. எங்கையாவது வெளிக்கிடலாமென்றால் மழைவரும் போலை கிடக்கு. அறைகுள்ளை அடைபட்டுக் கிடந்து என்ன செய்யிறது? சனி, ஞாயிறு இரண்டு நாளையும் லீவு நாளாக்கினாப்போலை இப்ப சனி. ஞாயிற்றுக் கிழமையளை எப்படிச் களிக்கிறதென்றே தெரியவில்லை. குடும்பகாரருக்கெண்டாப் பரவாயில்லை. எப்படியோ பொழுது போயிடும். எங்களக்கு ‘டல் தான்” கட்டிலில் சாய்ந்திருந்தபடி கணேசன் சலிப்புடன் கூறினான்.
“கொஞ்சம் பொறு மச்சான். இன்னும் கொஞ்ச நேரத்திலை ‘ரியுட்டரிக்கு’ பொடியள் வரத் தொடங்கியிடுங்கள். இப்ப எல்லாம் நல்ல நல்ல வடிவான பெட்டையள் வாறவளவை.” ஜன்னலருகே சாய்வு நாற்காலியில் அமர்ந்திருந்தபடி தெருவைப் பார்த்தபடி கூறினான் ஜெயம்.
சில நாட்களாக அங்கு வரும் மாணவிகளில் ஒருத்தி அவனைக் கவர்ந்திருந்தாள். அவளது வரவையே ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்தான் ஜெயம். கணேசனும் அருகில் வந்து அமர்ந்து கொண்டான்.
“மச்சான் என்ன யோசனை?’ கட்டிலை ஒழுங்குபடுத்தியபடியே கணேசன் கேட்டான்.

ச. முருகானந்தன் 111
“ஒன்றுமில்லை” அசட்டுச் சிரிப்புடன் பதிலளித்தால் ஜெயம்.
“சரி, சரி இப்ப புரியுது” ஜன்னலருகே வந்து கணேசன் வெளியே நின்று கொண்டிருந்த மாணவியரைக் கண்டதும் குறும்போடு ஜெயத்தைப் பார்த்துக் கேட்டான்.
‘மச்சான் இண்டைக்குச் சிவப்புக் கவுனோடை வந்திருக்கிறாள். நல்ல எடுப்பாயிருக்கு, இல்லையா?” தொடர்ந்தான் கணேசன்.
‘இவளுக்கு ‘போய் பிரண்ட்’ யாராவது இருக்காங்களோ தெரியேல்லை” - ஜெயம் பரிதாபமாகக் கூறினான்.
“அதைப்பற்றி உனக்கென்ன? விருப்பமெண்டால் முயன்று பார். உப்படிப் பயந்து பயந்து பார்த்தால் உனக்கு வாழ்க்கையிலை “லவ் ஏற்படாது.” சிகரெட்டைப் பற்ற வைத்தபடியே கணேசன் கூறினான். ஜெயம் வைத்த கண் வாங்காமல் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்.
இதற்குப் பின்னர் வழியிலும், ‘ரியுட்டரி’க்கு அருகிலும் அவளைச் சந்திக்கும் போதெல்லாம் புன்னகை புரிந்து அவளைத் தம்பால் கவர முயன்றனர் நண்பர்கள். ஜெயம் தயங்கும்போதெல்லாம் கணேசன் உற்சாக மூட்டுவான். அநேக நாட்களில் ஜெயமும் கணேசனும் அலுவலகத்திற்குப் போகும்போதும் வீட்டிற்குத் திரும்பும்போதும் அவளையும் அவளது தோழி யொருத்தியையும் வழியில் சந்திப்பார்கள். அறிமுகப் புன்னகையில் ஆரம்பித்தவர்கள் பரஸ்பரம் ‘குட்மார்னிங்’

Page 64
112 இனி வானம் வசப்படும்
சொல்லுமளவிற்குப் பழகிவிட்டார்கள். காலப்போக்கில் ஒருவருக்கொருவர் அறிமுகமானார்கள். அவளது பெயர் வசந்தியென்றும், போஸ்ட் மாஸ்டரின் மகளென்றும் அவளது தோழியின் பெயர் சாந்தா என்றும் தெரிந்து கொண்டார்கள். இப்போதெல்லாம் வசந்தி தினமும் எடுப்பாக அலங்கரித்துக் கொண்டு வருவது வழக்கமாகிவிட்டது. தோழி சந்தாவும் தன்னை அழகாக அலங்கரித்துக் கொண்ட போதும் வசந்தியின் அழகிற்கு அவளால் ஈடு கொடுக்க முடியவில்லை. ஜெயம் தனது மனதை முற்றாக வசந்தியிடம் பறிகொடுத்துவிட்டு, மனதிற்குள்ளேயே புழுங்கினான். ஆனால் தனது அன்பை எப்படித் தெரிவிப்பது என்று புரியாமல் குழம்பினான்.
“மச்சான் என்ன செய்யிறதெண்டே தெரியவில்லை” என்றான் ஜெயம்.
“ந்ல்லாய்த் தெரியுது. அவளும் உன்னிலை லைன்’ தான். கெதியிலை உன்ரை மனதிலை படுறதைச் சொல்லிப் போடு, சொல்ல நினைக்கிறதை தாமதிச்சு சொல்லுறதாலை சிலவேளை விளைவுகள் திசை மாறிப் போயிடும்” கணேசன் நண்பனுக்குப் புத்திமதி கூறினான்.
“சொல்லத்தான் வேணும் மச்சான்! ஆனால் கூச்சமாயிருக்கு” சங்கோசத்துடன் பதிலளித்தான் ஜெயம்.
“இப்படியே சொல்லிக் கொண்டிருந்தால் இதிலையும் உனக்குப் பெயில்தான். சொல்லப்பயமாயிருந்தால் கடிதம் எழுதிக் கொடு.”
 

ச. முருகானந்தன் 113
“கொடுக்கலாம்தான். ஆனால் எப்படிக் கெடுக்கிறது?’ இழுத்தான் ஜெயம்.
“எனக்கு வாற ஆத்திரத்திற்கு. ஒண்டும் தெரியாத
பாப்பா. கையிலை கொடுக்கப் பயமெண்டால் கதைப்
புத்தகத்திலை வைச்சுக்கொடு. கணக்க யோசிச்சாய்
எண்டால் உன்ரை மச்சாள் செல்வரஞ்சினியை
கோட்டைவிட்ட மாதிரித்தான் இவளையும் விடவேண்டி
و و
வரும்.” எச்சரித்தான் கணேசன்.

Page 65
114 இனி வானம் வசப்படும்
இதற்குப் பின் வசந்தியையும் சாந்தாவையும் சந்திக்கும் போதெல்லாம் ஜெயமும் கணேசனும் பகடிகள் விடத் தொபங்கினர்கள். எதிர்த் திசையிலும் எதிர்பார்த்ததற்கு மேலாகவே ‘ரியாக்ஸன்’ இருந்தது. நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக இவர்களது அன்புச் சேட்டைகள் வலுத்தன எனினும் கூச்சமாக இருந்ததால் கடிதம் எழுதுவதென இறுதியில் முடிவெடித்தான் ஜெயம்.
★ 女 ★
காலையில் எழுந்ததிலிருந்தே ஜெயத்தின் மனம் ஒரு நிலையலில்லை. முதல் நாள் இரவு நீண்டநேரம் விழித்திருந்து தன் உள்ளக் கிடக்கைகளையெல்லாம் அழகு தமிழில் வடித்துப் பலமுறை திருத்தி இறுதியாக எழுதி முடித்த காதல் கடிதத்தை வசந்தியிடம் கையளிக்க எண்ணியிருந்தான்.
நண்பர்கள் எதிர்பார்த்திருந்த நேரமும் வந்தது. அலுவலகத்திற்கு இருவருமாகப் புறப்பட்டார்கள்.
எதிரே வசந்தியும் சாந்தாவும் வந்து கொண்டிருந்தனர். வசந்தி அன்று வெகு அழகாக ஜெயத்திற்கு தோற்றமளித்தாள்.
அவர்களை நெருங்கி விட்டார்கள்; வழமையான குறும்புச் சிரிப்புடன் வந்து கொண்டிருந்தார்கள். இவர்களைக் கண்டதும் அவர்களும் நின்றனர்.
“இதோ மு.வ.வின். ‘அந்த நாள் நல்ல புத்தகம் கொண்டு போய் வாசியுங்கள்’ ஒருவாறு

ச. முருகானந்தன் 115
சொல்லிமுடித்தான் ஜெயம். அவனுக்கு உடலெல்லாம் வியர்த்துக் கொட்டியது.
“வசந்தியிடம் முதலில் கொடு’ கணேசன் கூறினான். அவர்களின் முகத்தில் தோன்றும் உணர்ச்சிகளை அவதானிக்க இவர்களுக்குத் தைரியம் ஏற்படவில்லை.
புத்தகத்துள் வைத்துக் கொடுத்த காதல் கடிதத்திற்கு மறுநாளே கட்டாயம் பதில் கிடைக்குமென நண்பர்கள் எதிர்பார்த்த போதிலும் மறுநாள் இவர்களைக் கண்டதும் தோழியர் இருவரும் எதுவும் பேசாமல் மறுபக்கமாகப் பார்த்துக்கொண்டு இவர்களைக் கவனிக்காததுபோல் போனார்கள். நான்கு நாட்கள் இவ்வாறே கடந்தன. இவர்களுக்கும் பேச்சுக் கொடுக்கத் தைரியமேற்படவில்லை. ஐந்தாவது நாள் புத்தகத்தைத் திருப்பிக் கொடுத்துவிட்டு வேகமாக அவ்விடத்தை விட்டகன்றனர் தோழியர். எனினும் அவர்களின் முகத்தில் கோபத்தின் அறிகுறிகள் தென்படவில்லை.
புத்தகம் கிடைத்ததும் உள்ளே கடிதம் இருக்கிறதா என ஜெயம் பரபரப்போடு தேடினான். அவன் எதிர்பார்த்தது வீண் போகவில்லை. கடிதத்தைப் பிரித்துப் படிக்கத் தொடங்கினான். கடிதம் கண்ேசனுக்கு எழுதப்பட்டிருந்தது. அவனுக்கு ஒன்றுமே புரியவில்லை. கடிதத்தைக் கணேசனிடம் கொடுப்பதே சரியென எண்ணி, அவனிடம் கொடுத்தான். கணேசனும் திகைப்புடன் கடிதத்தை வாங்கி வாசித்தான். வசந்திதான் எழுதியிருந்தாள்.

Page 66
116 இனி வானம் வசப்படும்
“அன்புள்ள கணேசன்! உங்கள் நண்பர் ஜெயத்தின் கடிதத்தைப் படித்ததும் ஆச்சரியம் அடைந்தேன்! நான் இதை ஒருபோதும் எதிர்பார்க்கவில்லை. நான் உங்களோடு கலகலப்பாகப் பழகியதற்குக் காரணம் எனக்கு உங்கள் மீது ஏற்பட்ட காதலேயன்றி வேறேதுமில்லை. ஜெயம் உங்கள் நண்பர் என்ற முறையில் அவருடன் பழகியதைத் தவிர வேறு எந்தவிதமான எண்ணமும் எனக்கு இல்லை. காலம் கடக்குமுன் உண்மையைத் தெரிவிப்பது நல்லதல்லவா. காதலிப்பதற்கு எல்லாருக்கும் சுதந்திரம் இருப்பதுபோலவே காதலை ஏற்றுக் கொள்வதற்கும் உண்டு. ஜெயம் நல்லவர்தான்; பழக இனிமையானவரும்கூட ஆனால் என் மனம் ஏனோ அவர்மீது நாட்டம் கொள்ளவில்லை. ஒரு பெண் உண்மையாக ஒருவனைத்தான் காதலிக்க முடியும். நான் விரும்புவது எல்லாம் உங்களைத்தான். என் அன்பை ஆதரிப்பதற்கும் மறுப்பதற்கும் உங்களுக்கு அதிகாரம் உண்டு. தொடர்வதும் விடுவதும் உங்களைப் பொறுத்தவை. என் எண்ணத்தில் மண்ணைப் போட்டுவிடாதீர்கள் - வசந்தி’ கடிதத்தைப் படித்த கணேசனுக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை. நண்பனிடம் கடிதத்தை வாசிக்கும்படி கொடுத்துவிட்டுச் சிந்தனையில் ஆழ்ந்தான் கணேசன்.
கடிதத்தை வாசித்த ஜெயத்திற்கு ஏமாற்றமும் அதிர்ச்சியுமாக இருந்தது. அவனது கண்கள் அவனையறியாமலே கலங்கின. அழுவது ஆண் பிள்ளைக்கு அழகில்லையென மனதைத் திடப்படுத்திக் கொண்டு கண்களைத் துடைத்துக்கொண்டான்.

ச. முருகானந்தன் 117
வாழ்க்கையில் ஏற்பட்ட பழைய தோல்விகளையெல்லாம் எண்ணிக்கொண்டான்.
“மச்சான்! எனக்கும் காதலுக்கும் வெகுதூரம். எதுக்கும் கொடுத்து வைத்திருக்க வேண்டும். வசந்தி உன்னைத்தான் விரும்புகிறாள். உன் மனநிலை எப்படியோ தெரியாது. எனக்காக யோசிக்காதே. அவளது வேண்டுகோளுக்குச் சிந்தித்துப் பதில் சொல்லு. நான் மேற்கொண்டு அவளது பாதையில் குறுக்கிட விரும்பவில்லை” பெருமூச்சுடன் கூறிமுடித்தான் ஜெயம்.
女女女
நாட்கள் நகர்ந்தன. கணேசன் தனது சாதகமான பதிலை வசந்தியிடம் தெரிவித்தான். வசந்தி - கணேசன் காதல் இனிதே வளர்ந்தது. இப்போதெல்லாம் தினமும் பாதையில் சந்திக்கும்போது, கணேசனும் வசந்தியும் சில நிமிடங்களாவது உரையாடுவார்கள். 9ü LuçÜ பேசும்போதெல்லாம் ஜெயமும் சாந்தாவும் ஒதுங்கிக் கொள்வார்கள். அவர்களிருவரும் அந்நேரங்களில் தங்களுக்குள் ஏதாவது பேசிக் கொள்வார்கள்.
“சாந்தா! காதல் என்கிறது இளமையிலே இல்லாவிட்டால் வாழ்க்கை உப்புச் சப்பற்றதாகிவிடும்; ஆனால் என்னுடைய வாழ்க்கையிலை இதுவரையிலை காதலிலை எனக்கு வெற்றி கிடைச்சது இல்லை. நான் விரும்பினவங்க எல்லாம் வேறு யாரையாவதுதான் விரும்புறாங்க காதலிக்கிறதுக்கும் கொடுத்து வைச்சுப் பிறக்கவேணும். என்னுடைய அன்பு உள்ளத்தை யாருமே

Page 67
118 இனி வானம் வசப்படும்
புரிஞ்சு கொள்ளுறாங்க இல்லை’ தாழ்வு உணர்ச்சியில் சலிப்போடு கூறினான் ஜெயம்.
“உண்மைதான். அன்பு செலுத்துகிற உள்ளத்தை மற்றவங்க இலகுவில் புரிஞ்சுகொள்ளுறாங்க இல்லை; நாம விரும்புறவங்க எல்லாம் எங்களை விரும்புறாங்க இல்லை” ஜெயத்தை ஏக்கம் ததும்பும் விழிகளால் நோக்கியபடி உணர்ச்சிவசப்பட்டவளாகச் சாந்தா கூறினாள். அவளது கண்கள் ஆயிரம் கதைகள் பேசின.
சாந்தா கூறியதிலுள்ள அர்த்தத்தை ஜெயம் புரிந்து கொள்ளவில்லை. ஏதோதான் கூறியதை அவள் ஆதரித்துப் பேசுவதாக மட்டும் எண்ணிக்கொண்டு தலையசைத்தான் ஜெயம்.
காதல் உணர்வைத் தெரியப்படுத்தவும், அதைப் புரிந்துகொள்ளவும் எல்லோராலும் முடிவதில்லையே!
("கதாசிரியர் தனது பாடசாலை நாட்களில் எழுதிய இவரது முதலாவது சிறுகதை இது. )
 

119
LDTட்டுப் பட்டியைத் துப்புரவாக்கிக் கொண்டிருந்த தவபாலனின் மேனியைத் தன் நாவால் துப்புரவாக்கியது வெள்ளச்சி, வெள்ளச்சிக்கு மடி இறங்கியிருப்பதைக் கண்டதும், இன்றைக்கோ நாளைக்கோ கண்டுபோடும் என அவனுக்கு தோன்றியது.
தவபாலனின் ஒவ்வொரு மாட்டிற்கும் ஒவ்வொரு பெயருண்டு காரணப்பெயராக அவனால் சூட்டப்பட்டவையே அந்தப்பெயர்கள் மாடுகளின் நிறத்தையோ, அங்க அமைப்பையோ அல்லது குணாதிசயங்களைக் கொண்டோ அப்பெயர்கள் சூட்டப்படும்.
எல்லா மாடுகளுக்கும் தங்கள் பெயர் தெரியும். செங்கரி நில் என்றால் அந்தக் குறிப்பிட்ட மாடு நின்று அவனைத் திரும்பிப் பார்க்கும். மற்ற மாடுகள் தம்பாட்டிற்குப் போய்க் கொண்டிருக்கும். அவன்

Page 68
120 இனி வானம் வசப்படும்
மாடுகளோடு பெயர் சொல்லித்தான் கதைப்பான். அவனது பாசை அவற்றிற்கும் அத்துப்படி
வெள்ளச்சிக்கு இது நாலாவது ஈற்று என்றாலும் இதுவரை ஒரு நாகு கண்டுபோட வில்லையே என்ற குறை தவபாலனுக்கு இருக்கிறது. போன முறை கூட மடிகொள்ளப் பால் சுரந்தது. தடிப்பான பால் காய்ச்சித் தயிராக்கினால் நிறைய வெண்ணெய் திரளும் நெய்யுக்கு நல்ல கிராக்கி இந்த முறையாவது பரவணிக்கு ஒரு பசுக்கண்டு போட வேண்டும் என்று வன்னேரி காட்டு ஜயனாருக்கு வேண்டுதல் செய்திருக்கிறான்.
பட்டியைத் துப்புரவாக்கி, எருவை அள்ளிக்கொண்டு போய் குவித்து விட்டு வந்த தவபாலன் மாடுகளை மேச்சலுக்கு கொண்டு போகவேண்டும் என்பதால் அவற்றை அவிழ்த்து சோடியாகப் பிணைத்தான். அப்படியானால்தான் அவற்றைக் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்க முடியும்.
“செல்வகி, வெள்ளச்சிக்கு மடி நல்லாக இறங்கியிட்டுது. நாளைக்கு அமாவாசை. பட்டியில விட்டுவிட்டுப் போறன் கண்டு ஈணும். பார்த்துக்கொள் என்று மனைவியிடம் கூறிவிட்டுப் புறப்பட்டான்.”
செல்வகி, கடும் உழைப்பாளியான அவனுக்கு ஏற்ற மனைவி. மனம் கோணாமல் எதையும் செய்வாள். அவளைக் காதலித்துக் கைப்பிடித்த இனிய நினைவோடு பட்டியலிருந்த மாடுகளைச் சாய்த்துக் கொண்டு புறப்பட்டான். மனதின் நினைவுகள் இனிக்கத்தான் செய்தது.
செல்வகியைச் சம்மதம் கேட்டதும், அவள் கோபமாகப் போடா” என்று அவனை ஏசி உமிழ்ந்துவிட்டுப்

ச. முருகானந்தன் 121
போனதும், அவனது நெஞ்சு முழுக்க வலித்தது, இரவெல்லாம் உறக்கமின்றி குற்ற உணர்வில் தவித்ததும். அடுத்த நாள் அவன் மாடுகளைச் சாய்த்துக்கொண்டு போனபோது குஞ்சுக்குளக் கோயில் கிணற்றிலிருந்து குடிநீர் அள்ளிக்கொண்டு இடுப்பில் குடத்தைச் சுமந்தபடி செல்வகி வந்து கொண்டிருந்ததைக் கண்டவுடன் தவபாலனுக்கு உடலெல்லாம் பதற்றம் எடுத்தது.
அருகே வந்ததும் அவள் தரித்து நின்றாள். அவன் தடுமாற்றத்துடன் அவளை நோக்கியபோது, அவள் தலை குனிந்து பாதங்களை நோக்கியபடி நின்றாள். ‘என்னிலே GBSTILLDIT?”
“ஏன்.?”
“உங்களைப் போடா என்று பேசிப்போட்டன்.”
“நான் கேட்டதும் பிழை அதாலதானே ஏசினி.”
“பிழையில்லை. ஒரு ஆம்பிளை தன்னுடைய காதலைத் தெரியப்படுத்திறகில ஒரு பிழையுமில்லை. நான் பேசியிருக்கக் கூடாது.” அந்த ஆனந்தமான பொழுது தவபாலனின் மனதில் தேனை அள்ளித் தெளித்தது. “இரவு முழுக்க எனக்கு நித்திரை வரவில்லை.”
“எனக்கும் தான்’ சுற்றவர முற்றுகையிட்டிருந்த மாடுகள் மேய்ப்பான் இன்றி தமது பழக்கப்பட்ட பாதையில் போய்க் கொண்டிருந்தன.
“நான் படிக்காதவன் என்றுதானே உமக்கு என்னில விருப்பம் வரேல்லை.”

Page 69
122 இனி வானம் வசப்படும்
“ஆர்சொன்னது விருப்பமில்லையென்டு.?’
அவள் ஆழமாக அவளது கண்களை நோக்கினாள். 'அம்மா தேடப் போறா. போட்டு வாறன்.” என்று அரும்பிய காதல் மொட்டாய், பூவாய், காயாய்க் கனியாகிக் கலியாணத்தில் முடிந்தது. ஒடிப்போன அவர்களை இருபகுதியினரும் கூட்டி வந்து அரவணைத்தார்கள்.
நினைவுகள் அமுத மழை பொழிந்து கொண்டிருக்க தவபாலன், 'ஏய். ஒவ். என்று மாடுகளைச் சாய்ந்த்துக்கொண்டு புறப்பட்டான்.
ܠܐ.
 
 

ச. முருகானந்தன் 123
விதைப்புத் தொடங்கிவிட்டால் அறுவடை முடியும்வரை மாடுகளை வீடுகளில் வைத்துப் பராமரிப்பது கஸ்டமாதலினால் அநேகமானோர் மாடுகளைப் பட்டிக்கு கொடுத்து விடுவார்கள்.
தனது சொந்த மாடுகளுடன் இரவல் மாடுகளையும் இக்காலங்களில் மேய்ச்சலுக்கு கொண்டு செல்வதால் தவபாலனுக்கு மேலதிக வருமானம் கிடைக்கும்.
நெல்லுப் பயிராகும் காலத்தில் மாடுகள் வயற்பக்கம் போனால் பிடித்து விடுவார்கள். பிடிகாசும், பட்டிக்காசும் கொடுத்துத்தான் அவிழ்க்கவேண்டும். இப்படியான கட்டாக்காலி மாடுகளைப் பிடிப்பதற்கென்றே கமக்குழுவினர் சிலரை நியமித்திருப்பார்கள். கயிறு எறிந்த மாடு பிடிப்பதில் இவர்கள் வலுவிண்ணர்கள். எனவே இந்தக் காலங்களில் தவபாலன் போன்றவர்களிடம் பராமரிப்புக்குக் கொடுத்து விடுவார்கள்.
மாடு பராமரிப்பது அவனுக்கு கைவந்த கலை மேய்ச்சலுக்கு மாடுகளை அவிழ்க்கும்போது,தடவி அவற்றுடன் செல்லம் பொழியும் தவபாலன், அவற்றைப் பாதையால் ஒட்டிச் செல்லும்போது, அவற்றை மிரட்டவும், பூவரசுக் கம்பு கொண்டு வெருட்டவும் தயங்கமாட்டான்.
தவபாலனின் மாடுகள் குஞ்சுக் குளம் பிள்ளையார்
கோயிலடிக்கு வந்தபோது வெயில் சுளிரென்று அடித்தது.
துவாயை எடுத்து தலைப்பாகையாக் கட்டிக்கொண்டு,
மடியிலிருந்த கோண்டாவில் புகையிலையை எடுத்து சுருட்டி
பற்ற வைத்துக்கொண்டு கக்கத்திலிருந்த கம்பை கையுக்கு
* If 3 Cell

Page 70
124 இனி வானம் வசப்படும்
மாற்றிக்கொண்டு புகைவண்டியாக மாடுகளைப் பின் தொடர்ந்தான்.
இப்ப யாழ்ப்பாணம் மூடப்பட்டதோடு எருவுக்கும் மவுசு இல்லாமல்ப் போச்சு கும்பி கும்பியாகச் சேர்ந்திருக்கு. இதை வித்தால் தான் புது வருசத்திற்கு செல்வகிக்கு புடவை வாங்கேலும். சின்னதாயெண்டாலும் ஒரு சங்கிலி செய்து போட வேணும். அவனது மனவானில் ஆயிரம் வண்ணக் கோலங்கள் மின்மினியாய்க் கண்சிமிட்டின. அவள் எதற்கும் ஆசைப்படுபவள் இல்லை. ஆனாலும் அவளை அழகு படுத்திப் பார்ப்பதில் அவனுக்கு ஆசை.
அடிக்கடி அவர்களது வீட்டிற்கு வந்து போகும் போராளியான இலட்சியனுக்கு அவர்களது வறுமையும், அவனது ஆதங்கமும் தெரியும். ‘அக்காவுக்கு இருக்கிற வடிவுக்கு, அவவின்ர புன்னகைக்கு, எதற்கண்ணை பொன்னகை? எங்கட போராளிப் பிள்ளையஸ் நகை நட்டே போடுகினம்?’ என சமாதானம் சொல்வான்.
தவபாலன் குடும்பத்தினருக்கு போராளிகள் என்றால் வலு பட்சம் மாவீரனாகிவிட்ட தனது தம்பியை அவர்களில் காண்பான் தவபாலன், செல்வகியோ களத்தில் போராடும் தனது தங்கையை நினைத்துக் கொள்வாள்.
“தம்பி. இங்க வந்தால் கூச்சப்படாமல் சாப்பிட வேணும். நீங்கள் வேற நாங்கள் வேற இல்லை. எங்கட உறவுகள்தான். நீங்கள் எங்களை வேறுபடுத்திப்
பார்க்காதேயுங்கோ.” அதிகம் படிக்காத தவபாலனின் வார்த்தைகள் போராளிகளை உணர்ச்சி வசப்படச் செய்யும்.

ச. முருகானந்தன் 125
மாடுகள் மேய்ச்சல் தரவையை நெருங்கிக் கொண்டிருந்தன. பருவம் பொய்த்து ஒரு மாதகாலமாய் அவிச்சலும் புழுக்கமுமாய் உறுத்திக் கொண்டிருந்தது. விதைத்த நெல்மணியில் உயித்தெழுந்த பயிர்கள் வாடிப் போய் தண்ணிருக்காய் ஏங்கி வானத்தைப் பார்த்துக் கொண்டிருந்தன. தாகம் வரட்டி எடுக்கவே கிணற்றிலிருந்து தண்ணி அள்ளி ஆசை தீரக் குடித்தான் தவபாலன்.
அவன் பின் தங்கிடவே கலைந்து பாதை மாறிய மாடுகளை ஒவ். ஒவ்.” என்று சாய்த்தபோது எதிரில் இலட்சியன் சயிக்கிளில் வந்து கொண்டிருந்தான்.
“என்ன பாலண்ணை விடிய வெள்ளனையோட வெளிக்கிட்டாச்சு.” என்று அவனிடம் கதை கேட்டு விட்டு பதிலுக்கு காத்திராமல் போய்க் கொண்டிருந்தான்.
இலட்சியனைத் தெரியாத கிராம வாசிகளே இல்லை கொஞ்சக்காலம் பிரச்சார வேலைகளில் ஈடுபட்டிருந்தவன். இப்போது சில நாட்களாக அதிரடியாக கண்ணி வெடிவெடிக்க வைத்து எதிரிப் படையைச் சிதறடிக்கும் பணியில் ஈடுபட்டிருக்கிறான். சுறுசுறுப்பும் துணிச்சலும் மிக்க அவன் எல்லோருடனும் கலகலப்பாகப் பழகுவான் ஊரிலுள்ள இளைஞர்கள் மாத்திரமின்றி பெரியவர்களும் அவன் மீது மதிப்பு வைத்திருந்தனர்.
அவன் இந்தப் பகுதியில் அரசியல் வேலை செய்து கொண்டிருந்த நாட்களில் பல நல்ல காரியங்களைச் செய்து ஊரை மேம்பட வைத்ததனால் அவனை எல்லோருக்கும் பிடிக்கும்.

Page 71
126 இனி வானம் வசப்படும்
இலட்சியன் சிரமதான வேலைக்கு கூப்பிட்டால் எவரும் மறுக்கமாட்டார்கள். பாதையோரங்களையும், பாடசாலை மைதானத்தையும், வைத்தியசாலை வளாகத்தை யும் துப்புரவாக்கும் பணியில் ஈடுபடுத்துவான். அவனது வரவால் அக்கிராமமே புத்தொளி பெற்றது என்றால் அது மிகையாகாது.
“நாச்சங்குடாப் பக்கம் மேய்ச்சலுக்குக் கொண்டு போறன் தம்பி’ என்று கூறிய தவபாலனிடம் “வாறன் அண்ணை’ என்று சொல்லியபடி விரைந்தான் இலட்சியன். குஞ்சுக்குள அலைக்கரையில் தண்ணிர் காட்டிவிட்டு மாடுகளை நாச்சங்குடா தரவைக்கு சாய்த்து சென்ற தவபாலன் அவற்றை மேய விட்டிட்டு பாலை மர நிழலில் ஒதுங்கி செல்வகிதந்துவிட்ட கோதம்ப ரொட்டியை சம்பலோடு ஒரு கைபார்த்தான்.
இந்தப் பக்கம் சனநடமாட்டம் குறைவு. எப்போதாவது யாரும் முக்கொம்பன் காட்டுப் பாதையால் பூநகரிக்குப் போவார்கள். அதுவும் இந்த மாரிகாலத்தில் குறைவுதான் மற்றும்படி மாட்டுக்காரர் மாடுகளை மேய்ச்சலுக்கு சாய்த்துக்கொண்டு வந்தால்தான் உண்டு.
மாரியானாலும் இன்று வெயில் அனலாகக் கொதித்துக் கொண்டிருந்தது. மதியம் வரை அனலாக எரித்துக் கொண்டிருந்த வெயில் மறைய இருந்தாற்போல வானத்தில் மப்புக் கட்டியது வடகிழக்கு மூலையில் கந்தபுரப் பக்கமாக சூல் கொண்ட மேகம் சிறிது சிறிதாக பெருத்து வான் பரப்பை ஆக்கிரமித்தது. வெப்பத்தை வாரி இறைத்துக் கொண்டிருந்த காற்று திடீரெனத் துணிந்து

ச. முருகானந்தன் 127
போய் வடக்கு நோக்கி தென்றலாய் வீசி தவபாலனின் உடலைத் தழுவிச் சென்றது.
தவபாலன் வானத்தைப் பார்த்தான். ஒன்று கூடி மோதும் வான் பரப்பில் மின்னல் கீற்று கண்ணைப் பறிக்க இடியோசை புவியை அதிரவைத்தது. மாடுகளும் மழை வருவதை ஊகித்ததுபோல் முகத்தை மேலே தூக்கி தலையாட்டின விடலைக் காளையொன்று செங்காரிப் பசுவைக் கலைத்துக் கொண்டிருந்தது.
இடியோசை தொடர துளித் துளியாய் மழைத் தூறல்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாக விழவே, மாடுகளை மறுபடியும் பட்டிக்கு கொண்டு செல்ல எழுந்தான் காலையிலிருந்து வயிறு நிறைய மேஞ்சவை. போதும் என நினைத்துக்கொண்டு பூவரசங்கம்பை எடுத்துக் கொண்டு ‘ஏய். ஒவ். ஓ. ஏய்’ என்று விரட்ட ஆரம்பித்தான்.
பெருமழை கொட்டத் தொடங்குவதற்குரிய அத்தனை ஆயத்தங்களும் தெரிந்தது. இதுவரையில் தென்கிழக்குப் பக்கமிருந்து வந்த இடியோசை திடீரென்று மேற்குப் புறமாகக் கேட்டது. தவபாலன் ஒரு கணம் நிதானித்தான். இது இடியோசையல்ல என்பது அனுபவப்பட்ட அவனுக்கு புரிய அதிக நேரம் எடுக்கவில்லை. கடந்த இரு தசாப்தங்களாக கேட்டுக் கேட்டு, செல்லடி எது. கண்ணிவெடி எது. விமானக் குண்டுவீச்சு எது. மழைமேக இடியோசை எது என்று வேறுபடுத்தி உணரக்கூடிய வல்லமைய்ை ஊரவர்கள் பெற்றிருந்தார்கள்.

Page 72
128 இனி வானம் வசப்படும்
‘எங்கேயோ கண்ணி வெடிதான் வெடிச்சிட்டுது. இலட்சியன் வெள்ளன உதால போனவன். அவங்கட செற்றப்பாகத்தான் இருக்கும். சந்தியின் பின்பக்கம் மெயின் றோட்டிலைதான் வெடிச்சிருக்க வேணும். எத்தனை ஆமிசரியோ, என்ன வாகனம் அம்பிட்டுதோ?’ என பலவாறாக எண்ணியபடி மாடுகளைச் சாய்த்தபடி ஊர்மனைப் பகுதிக்குள் நுழைந்தான் தவபாலன்.
திடீரென்று காற்று ஒரு சுற்றுச் சுற்றி குப்பை கூழல்களை எல்லாம் வாரிக்கொண்டோடி வாணவேடிக்கை காட்டியது. வேகவேகமாய்த் திரண்டு வந்த மழை மேகங்கள் ஊரையே மைமல் இருள் கொள்ள வைத்தது.
இருந்தால் போல் பெரு இரைச்சலுடன் கடகட என மழைத்துளிகள் பெரும்கட்டியாக விழுந்து, தவபாலனின் மேனியைச் சிறுகல்கொண்டு தாக்குவதுபோல் நோக வைக்கவே, அவன் அவசரமாக மாடுகளை விரட்ட ஆரம்பித்தான்.
சீறிச் சுழன்றடிக்கும் காற்றோடு சோ எனப்பொழிய ஆரம்பித்த பெருமழை தவபாலனை முழுதாக நனைந்துவிட்டது. அவன் திக்காயக் குள முடக்கால் திரும்பியபோது எதிரே இலட்சியனும், ரங்காவும் சயிக்கிளில் டபிளாக வேகமாய் பறந்தனர். ‘கண்ணி வெடி வச்சிட்டு வேகமாகப் போறங்கள்’ என்று தவபாலன் பெருமிதமாக நினைத்தான். ‘என்னெண்டாலும் பொடியள் வலு வின்னர்தான். ஆனானப்பட்ட இந்திய ஆமிக்கே தண்ணி காட்டினவர்கள், இவை எந்த மூலைக்கு?’ என்று நினைத்துக் கொண்டான்.

ச. முருகானந்தன் 129
சில நிமிடங்கள் மட்டுமே பெய்த மழை, கண்ணாமூச்சி விழையாடி ஓடி ஒழிந்து கொண்டது. பெருமழை கொட்டத் தொடங்குவதற்கானதாகத் தென்பட்ட அத்தனை அறிகுறிக்ளும் மெல்ல மெல்ல மறைய, தாயக விடியலைப் போல் வானம் மெல்ல மெல்ல அசைந்து மறுதிசையில் மறைய, வானம் மெல்லிய நீலப் புடைவை போர்த்தி வழித்துத் துடைத்துவிட்டதுபோல் நிர்மலமாய் நின்றது.
‘இன்னும் கொஞ்ச நேரம் தரவையிலை மேய்ச்சிருக்கலாம்’ என எண்ணிக்கொண்டான் தவபாலன். “கலிமுற்றிப் போச்சு. காலநிலையும் சீரில்லை. மனிசனை மனிசன் கொல்லுற காலம். தன்ரநாட்டு மக்களையே ஈவிரக்கம் இல்லாமல் கொன்று குவித்திட அரசு பிரகடணப்படுத்தியுள்ள சண்டை” தவபாலன் சலித்துக் கொண்டான்.
ஒரு தடவை தரவையில் அவனது மாடுகள் மேய்ந்து கொண்டிருந்த போது அடுத்தடுத்துச் செல் வந்து விழுந்து ஐந்து மாடுகள் கணப்பொழுதில் கண்முன்னே சிதறிப் போனதை தவபாலன் சொல்லி அழுகின்ற போதெல்லாம் “மாடென்ன மனிசரே சிதறிப்போகினம்..” என்று செவ்வகி ஆறுதல் சொல்வாள். ‘ம். இந்தக் கொடிய யுத்தம் எப்பதான் முடியப்போகுதோ?’ என்று அவன் நினைத்துக் கொண்டிருந்த போதே தெருவெங்கும் பரபரப்பு ஏற்பட்டது. ஆங்காங்கே இரும்புத் தொப்பிகள் அணிந்த சிப்பாய்கள் வந்து கொண்டிருந்தனர்.

Page 73
130 இனி வானம் வசப்படும்
“ஊரை ரவுண்டப் பண்ணித் தேடப் போறாங்கள் பொடியள் போய்த் தப்பியிட வேணும்.’ என முனியப்பரை வேண்டிக்கொண்டான் தவபாலன்.
படையினர் வருவோர் போவோர் எல்லோரையும் மறித்து விசாரித்துக் கொண்டிருந்தார்கள். சில இளவட்டங்களுக்கு செம அடி கிடைத்தது. இன்னும் சிலரைத் தம்முடன் தடுத்து வைத்திருந்தார்கள்.
தவபாலன் மாட்டைத் தனது ஒழுங்கைக்குச் சாய்த்துக் கொண்டு போனபோது திருப்பத்தில் இலட்சியனும் ரங்காவும் பதட்டத்துடன் நின்று கொண்டிருந்தனர்.
‘என்ன தம்பியவ திரும்பி பாதை மாறி வாறியள்?’ என தவபாலன் கேட்டதும், “அந்தப் பக்கமும் ஆமி. எல்லாப்பக்கமும் சுற்றி வளைச்சிட்டாங்கள்.’
“இப்ப என்ன செய்யுறது? உங்கட வீட்டிலையும் ஒளிக்கேலாது. வீடு வீடாகத் தேடி வாறாங்கள். எப்படியும் உடைச்சுக்கொண்டு வெளிக்கிட வேணும் தவமண்ணை. கவசவாகனம் சிதறி, பத்துக்குமேற்பட்ட ஆமி செத்த கொதியிலை வறாங்கள்.”
தவபாலன் பலமாக யோசித்தான். திடீரென்று அவனது மனதில் மின்னல் கீற்று
“தம்பியவை நான் சொல்லுறபடி செய்யுங்கோ. உங்கட உடுப்புகளைக் கழற்றி மாத்துங்கோ. என்னுடைய சாரம், தலைப்பாகை எல்லாம் தாறன். சிவம் உங்கட வீட்டிலை பழைய சாரம், துவாய் இருந்தால் எடு.

ச. முருகானந்தன் 131
உடம்பிலையும் கொஞ்சம் சாணி தடவுங்கோ. சாணி நாற்றம் வரட்டும். கெதியாய். ஆமிக்காரன் ஒழுங்கைகளுக்குள்ளையும் இறங்கப்போறான்.”
அடுத்த சில நிமிடங்களில் துரிதமாகச் செயற்பட்ட இரு இளைஞர்களும் மாட்டுக்காரர்களாக மாறினார்கள். ‘அண்ணை இந்தப் பிஸ்ரலை எங்கையாவது புதையுங்கோ.” என்று கூறிவிட்டு மாடுகளைச் சாய்த்துக் கொண்டு மறுவழியால் புறப்பட்டார்கள். கையிலே பூவரசம் தடி. வாயிலே சுருட்டு. தலையிலே முண்டாசு. சேட் இல்லாத வெற்று மேனி. பழைய ஊத்தைச்சாரம். இப்போது யாராலும் அவர்களை இனங்காண முடியாது.
“எய். எய்க். ஓ. ஒவ். மாடுகளைச் சாய்த்தபடி அவர்கள் தைரியமாக நடந்தார்கள். திடீரென்று சூரியனை இருகை கொண்டு மறைத்தாற்போல வானம் இருண்டு கொண்டு வந்தது. 'சோ' என்ற இரைச்சலுடன் மீண்டும் மழை பொழியத்தொடங்கியது.
மாடுகளைச் சாய்த்துக் கொண்டு ஜெயபுரம் சந்திக்கு வந்தபோது இராணுவத்தினர் அவர்களை மறித்தார்கள். அங்கே பல அப்பாவிகள் இருத்தப் பட்டிருந்தார்கள். ஒருவனின் கடவாயில் இரத்தக்கசிவு தெரிந்தது.
கொட்டும் மழையில் அமர்ந்திருந்து தாயக மண்ணுடன் உறவாடிக் கொண்டிருந்தவர்களைப் பார்க்கப் பரிதாபமாக இருந்தது. இதற்கெல்லாம் விரைவில் முடிவு வரும்’ என மனதில் கருவிக் கொண்டான் இலட்சியன்.
“எங்கடா போறது.?’ ஒரு அரும்பு மீசை மிரட்டியது.

Page 74
132 இனி வானம் வசப்படும்
“மாடு கொண்டு போறது.” சுருட்டை வாயிலிருந்து எடுத்து வீசிவிட்டுப் பயப் பாசாங்குடன் கூறினான் இலட்சியன்.
“இலட்சியனைத் தெரியுமா? புலி. பெரிய புலி.”
“தெரியாது.’ இலட்சியன் கூறவே, “தெரியாது?’ என்று கேட்டபடி அவனது கன்னத்தைப் பதம் பார்த்தான் ஆமி.
“தெரியாது சேர். நான் காணயில்லே.”
“இதில் இலட்சியன் இருக்கா?’ அமர்ந்திருந்தவர்களைக் காட்டிக் கேட்டான் சிப்பாய். “இல்லை சேர்.” என்றான் இலட்சியன்.
ஒரு மாடு சாணி போட்டது. இன்னொன்று சலம்விட்டது. 竇
“சரி. சரி. கெதியா மாடு கொண்டு போறது. மிச்சங்கரைச்சல்.’ இராணுவம் வழிவிட்டது.
“ஏய். எய்க். ஒவ்.” மாடுகளைச் சாய்த்தபடி இவர்கள் ஊர்மனையைத் தாண்டினர்.
தவபாலன் தனது வீட்டிற்குச் சென்றபோது செவ்வகி ‘ஓ’ என்று கதறி அழுதாள்.
மழை தொடர்ந்து பேரிரைச்சலுடன் பெய்து கொண்டிருந்தது.
 

இரவு, வார்ட்டிலுள்ள நோயாளிகளைப் பார்த்துவிட்டு வந்து ஆசைதீரக் குளித்தேன். அன்பு மனைவி சந்திரா கொண்டு வந்த தேநீர் வாய்க்கு ருசியாகவும், மனசுக்கு தெம்பாகவும் இருந்தது.
இன்று மனது குவழியாக இருந்தது.
சந்திராவும் சிடு சிடு என்றில்லாமல் மலர்ந்த முகத்துடன், அழகாக ஆடையணிந்து காட்சி தந்தாள். “இன்றைக்கு நீ ரொம்ப அழகாயிருக்கிறே” என்று மன்மத பாணத்தைத் தொடுக்க ஆரம்பித்தேன்.
“இன்றைக்குத்தானா?’ அவள் இடக்கு மட்க்காகக் கேட்டாள். அவளது அதிரடிகளிலிருந்து பல சமயங்களில் என்னைக் காத்துக்கொள்ள வழமையான புன்னகையை அவள் மீது வீசினேன். “எப்பவும் என் இதயராணி அழகுதான். இன்றைக்குத் தனியழகு’ என்றேன்.
“அது யார் இதயராணி? கம்பசில் கூடப் படித்தவள அல்லது வைத்தியசாலை தாதியா?” மீண்டும் கூரிய அம்பு

Page 75
134 இனி வானம் வசப்படும்
“ஐயோ நீதான், நீ தான் என் இதய ராணி’ என்ற கவசத்தால் தடுத்தேன். அவளுக்குத் தெரியும். ஆனாலும் என் வாயால் சொல்ல வைத்துக் கேட்பதில் மகிழ்ச்சி. இடப்பெயர்வின் பின்பு எனக்கு வேலைப்பளு அதிகம். வெளி நோயாளர் பிரிவிலும், வார்ட்டிலும் நோயாளிகள் அதிகம். பெரும்பாலான டாக்டர்கள் சொகுசு தேடி தென் பகுதியில் நிலை கொண்டிருப்பதால் இங்கு வன்னியில் பணிபுரியும் வைத்தியர்கள் பாடு கஷ்டம்தான். வன்னியில் இருப்பவர்கள் கூட பெரிய வைத்தியசாலைதான் வேண்டும் என்று அரைச் சொகுசு தேடிவிடுவதால் தொலை தூர வைத்தியசாலைகளில் பணிபுரியும் டாக்டர்கள் பாடு திண்டாட்டம்தான்.
வேலைப் பளுவினால் இப்போதெல்லாம் இரவு சாப்பிட்டவுடன் தூக்கம் கண்களைத் தழுவும். நான் அடிக்கடி அயர்ந்து தூங்கிப் போவதால் சந்திராவுக்குப் பல நாட்களில் ஏமாற்றமாகிப் போகும். “உங்கள் முதல் மனைவி வைத்தியசாலைதான்’ என்று சந்திரா தனது மனப்புழுக்கத்தையும் ஆதங்கத்தையும் வெளிப்படுத்துவாள். இன்று எப்படியும் சந்தோசமாக இருக்கவேண்டும் என்று காலையிலேயே தீர்மானித்து வைத்திருந்தேன். காலையில் அரும்பி மாலையில் மலர்ந்திருந்த போதுதான் கதவு தட்டப்பட்டது. “பூஜை வேளையில் கரடியா?’ சலிப்போடு அவள் அணைப்பிலிருந்து விடுபட்டு எழுந்து கதவைத் திறந்தேன். வரிப்புலிச் சீருடையில் இரண்டு போராளிகள். “ஐயா எங்கட ஒருவருக்கு வெடிமிட்டு விட்டது. உடனே நீங்கள் வரவேணும்” என்றார்கள். அந்த நாட்களில் அவர்களிடம் அதிக மருத்துவ வசதி இருக்கவில்லை.

ச. முருகானந்தன் 135
இப்படித்தான் அடிக்கடி வந்து கூப்பிடுவார்கள். இராணுவ நடமாட்டம் இருப்பதால் வைத்தியசாலைக்கு வரமாட்டார்கள்.
மனைவியிடம் சொல்லிவிட்டு அவர்களுடன் புறப்பட்டேன். திரும்பி வந்தபோது அதிகாலை நெருங்கிவிட்டது. சந்திரா தூக்கக் கலக்கத்தில் இருந்தாள். எனக்கும் தூக்கம் கண்களைத் தழுவிக் கொண்டிருந்தது. எனவே தொட்ட குறை, விட்ட குறை தொடர முடியாது சட்டென்று ஆழ்ந்து உறங்க ஆரம்பித்தேன்.
ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது மீண்டும் கதவு படபடவென்று தட்டப்பட்டது. கண் விழித்துப் பார்த்தபோது விடிந்து கொண்டிருக்கும் மைமல் பொழுதாக இருந்தது. சினத்துடன் எழுந்து கதவைத் திறந்தேன். இப்போது பச்சைச் சீருடையில் இராணுவம் எனக்குத் திக்கென்றது. “இங்கே இரவு யாராவது காயம்பட்டு சிகிச்சை பெற வந்தார்களா?” வந்த சிப்பாய்களில் ஒருவன் கேட்டான். “இல்லை” என்று மென்று விழுங்கினேன். “நாங்கள் வார்ட்டைச் சோதனையிடப் போகின்றோம்.” என்றபடி என்னையும் அழைத்துக் கொண்டு சென்றார்கள். காய வார்ட்டிலிருந்த ஒவ்வொரு நோயாளியாகத் துருவித் துருவி ஆராய்ந்தார்கள். முன்னர் ஒரு நாள் இப்படி இராணுவம் வந்த போது, எனது குவாட்டேர்ஸில் ஒரு போராளி இருந்து நான்பட்ட பாடு நினைவுக்கு வந்தது. நல்லவேளை, அன்று அவர்கள் குவார்ட்டேர்ஸில் சோதனையிடவில்லை. ஆனால் இன்று வந்தவர்கள் குவாட்டேர்ஸ், ஏனைய வார்ட்டுக்கள் எதையும் விடாமல் சல்லடை போட்டார்கள். நல்ல வேளை எவரும் இல்லாததால் தப்பிக்கொண்டேன். இராணுவம் சோதனையிட்டுக் கொண்டிருந்தபோது எனது இரண்டு வயது

Page 76
136 இனி வானம் வசப்படுப்
மகன், ‘புலி மாமாவா?’ என்று கேட்டான். ஒருவாறு சமாளித்து சிப்பாய்களை அனுப்பி வைத்தேன். அப்பாட என்றிருந்தது.
“உங்களைக் கட்டி நான் படுற பாடு.’ என்று சந்திரா சலித்துக் கொண்டாள்.
“நீதானே டொக்டரர் மாப்பிள்ளை வேணுமெண்டு வந்தனி” என்று அவளது வாயை மூட நினைத்தேன்.
“உங்களை வன்னியிலை இருக்கச் சொல்லிச் சொன்னனானே.? மற்றவர்கள் கார், பங்களா என்று என்ன சொகுசாக வாழுறாங்க. கொழும்பு, கண்டிப் பக்கம் மாற்றத்தில் போவம் என்றாலும் கேட்கிறியளில்லை.” சந்திரா குறை கூறினாள்.
“சந்திரா, எங்கட சனம் இங்கை வைத்தியரின்றிக் கஷ்டப்படும்போது, என்னால மாறிப் போவதை நினைக்கவே முடியேல்ல.’ என்றேன். அவளுக்கும் இது தெரியும். கூடவே விருப்பமும்தான். எனினும் சில வேளைகளில் இடக்கு மடக்காகக் கூறுவாள். சும்மா போட்டிக்குத்தான்!
காலையில் வேலைக்குப் போனதும் மீண்டும் Luburb (3LT6or defiLGBL6ôr. மலேரியாத் தொற்று பெருகியிருந்தமையால் ஒரே கூட்டம். ஓய்வின்றி வேலையில் ஈடுபட்டிருந்தபோது மீண்டும் இராணுவம் மேஜர் என்னை வரும்படி கூறி இராணுவத்தினர் கூட்டிச் சென்றார்கள்.
 

ச. முருகானந்தன் 137
“வெல்க்கம் டொக்டர். ஐ ஆம் மேஜர் ரணவீர' என்று கைகளைக் குலுக்கி வரவேற்று எதிரில் அமர வைத்தார் அந்த மேஜர். "ஐ ஆம் டொக்டர் ஆனந்தன்.” என்று என்னை அறிமுகப்படுத்தினேன்.
அவர் ஆங்கிலத்தில் கதைக்கக் கஷ்டப்படுவதைக் கண்டதும் நான் சிங்களத்தில் கதைக்க ஆரம்பித்தேன். அவரும் சிங்களத்திற்குத் தாவினார்.
‘நேற்று எங்களோட புலிகளுக்கு மோதல் ஏற்பட்டது. ஒரு ஆள் காயப்பட்டான். தூக்கிக்கொண்டு போய் விட்டார்கள். அவர்கள் சிகிச்சைக்காக இங்கேதான் வரவேண்டும்?’ என்று கேட்டார் அவர்.

Page 77
138 இனி வானம் வசப்படும்
அவர்களிடம் மருத்துவப் பிரிவுகூட இருக்கிறது
என்று பவ்வியமாக எடுத்துரைத்தேன்.
“அவர்களது ‘காம்ப்' எங்கே இருக்கிறது?’ “எனக்குத் தெரியாது.” “அவர்களுடைய மெடிக்ஸ் எங்கே இருக்கு?” “தெரியாது.”
*சும்மா கதை விடாதீர்கள் டொக்டர். பயங்கரவாதிகளுக்கு நீங்கள் சிகிச்சையளிப்பதாக எங்களுக்குத் தகவல் வந்திருக்கிறது.”
9.
“பொய் அப்படியில்லை. விழுங்கினேன்.”
என்று நான் மென்று
‘நேற்று இரவுகூட உங்களிடம் தீவிரவாதிகள் மோட்டார் பைக்கில் வந்தார்களாமே?” மேஜரின் குரலில் கடுமை தெரிந்தது. “நீங்கள் சிகிச்சை அளித்திருந்தால் உண்மையைப் பயப்படாமல் சொல்லுங்கள். நான் ஒன்றும் செய்யமாட்டேன். சிகிச்சையளிக்காவிட்டால் அவர்கள் விடமாட்டார்கள்தானே?”
“ஒரு டொக்டர் என்கிற முறையில் நோயாளி வந்தால் மனிதாபிமானத்துடன் சிகிச்சையளித்திருப்பேன். ஆனால் அப்படி யாரும் கொண்டு வரப்படவில்லை” என்று நான் அழுத்திச் சொன்னேன். ஆழமாக என்னை நோக்கிய ரணவீர என்னை நம்புவது போலத் தென்பட்டது. முகத்திலே கடுமை தளர்ந்ததை அவதானித்தேன்.

ச. முருகானந்தன் 139
“உங்கட தமிழ் ஆட்கள்தான் தகவல் சொன்னது.” என்றான். எமது இனத்தின் விடிவைப் பின் தள்ளும் காக்கை வன்னியர்களை மனதில் சபித்துக் கொண்டு “யாராவது என்னில் கோபமுள்ளவர்கள் வீண்பழி சுமத்தியிருக்கலாம்” என்றேன்.
மேஜரிற்கு என் பதிலில் முழுமையான திருப்தியில்லை. சிப்பாய் ஒருவன் போத்தலும், சோடாவும், இரு கிளாஸ்களும் கொண்டு வந்து வைத்தான்.
“நான் மது அருந்துவதில்லை மேஜர்.”
“மெடிக்கல் கொலிஜ் போய்வந்துமா?’ ஆச்சரியத்துடன் என்னை நோக்கியபடி, சிங்களம் நன்றாய் பேசுறிர்களே? என்று கேட்டார்.
“சில காலம் கம்பளையில வேலை செய்தேன்.”
“ஓ. கம்பளையா? டொக்டர் இந்திரசேனவைத் தெரியுமா?’ என்றார் மேஜர்.
என் மனது கம்பளையில் வேலை செய்த கால நினைவுகளில் மூழ்கியது. நினைவுகள் இனித்தன.
இந்திரசேன எனது நல்ல நண்பர். நாம் இருவரும் ஒன்றாக வேலை செய்த நாட்களில் எனக்குத் திருமணமாகவில்லை. இந்திரசேன அடிக்கடி என்னைத் தனது வீட்டுக்குக் கூப்பிட்டு ‘டின்னர் தருவார். அந்த நாட்களில்தான் இந்திரசேனவின் தங்கைக்கும் எனக்கும் நட்பு ஏற்பட்டது. நான் சிங்களம் படித்ததெல்லாம் அவளிடம்தான். சிங்களம் மட்டும்தானா?

Page 78
140 இனி வானம் வசப்படும்
நந்தா நல்ல அழகு. அவள் சிரிக்கும்போது முத்து உதிரும். எடுப்பான செம்மஞ்சள் நிறம்; சுருண்ட நீண்ட கருங்கூந்தல்; எல்லாவற்றையும்விட தாமரை மொட்டுக்கள் போன்ற அவளது மார்பகங்கள் எனது வாலிப வயதை மிகவும் கவர்ந்தன. அவள் வெகு இயல்பாக என்னுடன் பழகினாள். என் மனதில்தான் சபலம். நிச்சயமாக அது காதலில்லை. வெறும் பருவ ஈர்ப்புத்தான். ஆனால் அவளோ மிக நேர்த்தியாக என்னுடன் பழகுவாள்.
எமது இனிய நட்பிற்கு இந்திரசேன வீட்டில் எந்தத் தடையும் இருக்கவில்லை. ‘டாம் விளையாடுவோம். கரம் அடிப்போம். சில மாலை வேளைகளில் பாட்மின்ரன் 6606TurtGBC36irlib.
“ஆனந்த் ஐயே. ஆனந்த் ஐயே’ என்று வெகு உரிமையோடு கூப்பிடுவாள். சலனம் கொண்ட என் மனதில் தான் தடுமாற்றம். முதல் முத்தம் ஒன்றை எதிர்பார்த்துக் கற்பனையில் வாழ்ந்திருந்த காலம்.
கனவிலும் நனவிலும் நந்தா என்னை ஆக்கிரமித்தாள். எப்பொழுதும் அவள் அருகாமையை மனம் நாடியது. ஒரு நாள் இந்திரசேன வீட்டுக்குப் போன போது அவள் தனியே தான் நின்றாள். அன்பாக உபசரித்து இனிய தேநீர் பரிமாறினாள்.
பின்னர் கரம் விளையாட ஆரம்பித்தாள். வானொலியின் மெல்லிய சத்தத்தில், மென்மையான ஆங்கிலப் பாடல் ஒலித்துக் கொண்டிருந்தது. முதன் முதலாக அவள் கரம் பற்றினேன். அவள் கையை விடுவிக்காமல் என்னை ஆழமாக நோக்கினாள்.

ச. முருகானந்தன் 141
எனது முதல் முத்தம் - வாழ்வில் மறக்க முடியாத இனிய முத்தம் தித்திப்பாய்க் கிடைத்தது. எனது கரங்கள் கழுத்திலிருந்து கீழிறங்கியபோது “எப்பா ஐயே. வேண்டாம் ஆனந்த்” என்று தடுத்தான்.
நானும் உணர்ச்சிக் கொந்தளிப்பிலிருந்து விலகினேன். அந்த நேரம் என் மனதிலும் ஒரு இனம் புரியாத மாற்றத்தை உணர்ந்தேன். அதுதான் காதலோ?
“ஏன் இப்படிச் செய்தீர்கள்..?’ என்றபடி மென்மையாகக் கலங்கும் கண்களுடன் நோக்கினாள் நந்தா.
“சொறி நந்தா..” என்றேன்.
“எப்பவோ ஒருநாள் நீங்க இப்படி நடப்பீர்கள் என்று எனக்குத் தெரியும். மனது ஒன்றுபடும்போது இப்படி நடப்பது இயல்புதானே ஆனந்த் ‘ஐ லவ் யூ” ஆனந்த்” என்றாள்.
அந்தக் கணத்தில் எனக்கு ஏற்பட்டது. மகிழ்ச்சியா அதிர்ச்சியா என்று இன்றுவரை எனக்குத் தெரியவில்லை. நானும் ‘ஐ லவ் யூ” சொல்லுவேன் என்ற ஏக்கம் அவள் கண்களில் தெரிந்தது. நான் எதுவுமே பேசாமல் விடைபெற்றேன்.
சீக்கிரமே எனக்கு மாற்றம் வந்தது. இதையறிந்த நந்தா கலங்கினாள். “நான் அண்ணாவுடன் கதைக்கவா..? உங்களுக்கு விருப்பம்தானே?’ என்றாள்.
உண்மையிலேயே என் மனமும் அவளை நாடத் தொடங்கியிருந்ததை உணர்ந்தேன். எனினும் என் பொறுப்புகள் என்னை நிதானப்படுத்தின. 'நந்தா உன்னை

Page 79
142 இனி வானம் வசப்படும்
எனக்குப் பிடிக்கும். ஆனா இப்ப பருவ மயக்கத்தில் நாம் இணைந்தாலும் பிறகு நிறைய கஷ்ரப்பட வேண்டியிருக்கும். மொழி, மதம், பண்பாடு எல்லாவற்றிலும் நாம் வேறுபட்டவர்கள். இப்போது இணைந்தாலும் எமது பிள்ளைகள் பல சிரமங்களை எதிர்கொள்வார்கள்.” என அவளைத் தேற்றி விடைபெற்றேன்.
“என்ன டொக்டர் பலமான யோசனை? மேஜர் கேட்கவே மீண்டும் இவ்வுலகுக்கு வந்தேன்.”
‘இந்திரசேன என்னுடைய நல்ல நண்பர். இருவரும் ஒன்றாக வேலை செய்தோம்.’
“ஓ. எத்தனையோ தமிழர்களும் சிங்களவர்களும் நல்ல நண்பர்களாக இருந்திருக்கிறார்கள். பாடசாலை நாட்களில் எனக்கும் தமிழ் நண்பர்கள் இருந்தார்கள். எல்லாம் இந்தக் கொடிய யுத்தத்தில் மாறிப்போய்விட்டது. இந்த யுத்தத்தை நீங்கள் கைவிடலாமே?”
நான் சிரித்தேன். “நீங்கள்தானே யுத்தத்தை எம்மக்கள் மீது தொடுத்திருக்கிறீர்கள்” என்று சொல்ல நினைத்தேன். முடியவில்லை.
“அது கிடக்கட்டும். இந்திரசேனவுடைய தங்கை நந்தாவைத் தெரியுமா?’ மேஜர் கேட்டதும் என் மனதில் ஜில் என்ற பூக்காடு ‘ஓ. தெரியுமே” என்றேன்.”
‘நந்தாதான் என்னுடைய மனைவி' என்றார் மேஜர் ரணவீர.
 

143
LைDமல் பொழுது கருகலாகி இரவு பயம் காட்ட ஆரம்பித்த போது சந்திராவதி மின் குமிழ்களை ஏற்றவே, கரிய இரவு தோற்கடிக்கப்பட்டு வீடு ஒளி வெள்ளத்தில் மிதந்தது. வீட்டுக்கு விளக்கேற்ற வந்த மகாலட்சுமியாக மனைவியை நோக்கினார் ரகுவரன். மாலை வேளைகளில் இந்தச் சாய்வு நாற்காலிதான் அவருக்குத் தஞ்சம் அழகிய பூங்கா ஒன்றிலே பறந்து சிறகடிக்கின்ற வண்ணத்துப் பூச்சியென துள்ளலும் குதிப்புமாய் பல்கலைக் கழகத்திலிருந்து திரும்பிக் கொண்டிருந்த சரோஜா முன் ஹோலில் பெற்றோரைக் கண்டதும் சாதுப்பிள்ளையாக உள்ளே மெல்ல அடியெடுத்து வைத்தாள். மருத்துவ பீட மாணவியான அவள் இப்போது சில நாட்களாக தாமதமாக வீட்டுக்குத் திரும்புவது ரகுவரனின் மனதை உறுத்தியது.

Page 80
144 இனி வானம் வசப்படும்
“பிள்ளையைப் பொழுதுபடமுன் வந்து சேரச் சொல்லு’ என்று மனைவியிடம் கூறிவிட்டு வானொலியை முடுக்கினார். தமிழீழ சேவையிலே ஒரு இளைஞனது உரையாடல் போய்க் கொண்டிருந்தது.
“தமிழர்களுடைய ஒன்றிணைந்த போராட்டம். இன்று சிங்கள தேசத்தைக் கிலிகொள்ள வைத்ததோடு சர்வதேசத்தையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. எமது சுயநிர்ணய உரிமையை வென்றெடுக்க நாம் சாதி மத பேதங்களையெல்லாம் மறந்து ஒரு கொடியின் கீழ் நின்று போராடுகிறோம். இப்போதுள்ள சமாதான சூழ்நிலையை அரசு தட்டிக் கழிக்குமானால் நாடு பிளவுபடுவது உறுதியாகிவிடும்.”
வானொலி உரையைக் கேட்டுக் கொண்டிருந்த ரகுவரனுக்கு மெய்சிலித்தது. “ஓ! எங்ககள் சமூகம் ஆயுதம் ஏந்தி எவ்வளவோ சாதித்துவிட்டது” என்று நினைத்துக் கொண்டார்.
சாய்மனைக் கதிரையில் அமர்ந்திருந்து வானொலி கேட்டுக் கொண்டிருந்தவரிடம் தேனீர்க் கோப்பையை நீட்டினாள் சந்திராவதி அவளை நிமிர்ந்து பார்த்து புன்னகைத்த ரகுவரன், தனது மனைவி இந்த
நாற்பத்தைந்து வயதில் கூட எவ்வளவு அழகாக
இருக்கிறாள் என்று பெருமிதமாக நினைத்துக் கொண்டார்.
சந்திராவதி ஒரு சிங்களப் பெண் என்று இப்போது யாரும் கூறமாட்டார்கள். ரகுவரனுடனான 25 வருட இல்வாழ்வில் அவள் ஒரு தமிழ்ப் பெண்ணாகவே மாறிவிட்டாள். ரகுவரனை உயிருக்குயிராக நேசித்து, உற்ற
 

ச. முருகானந்தன் 145
邀徽
துணையாக இருந்து இல்லற வாழ்வில் இனிமையை அனுபவித்து வருகிறாள்.
ரகுவரன் சிறுவயதிலிருந்தே கண்டியிலேயே வளர்ந்து வந்தார். இதனால் அவரது இளமைக் காலங்கள் பெரும்பாலும் கண்டியிலேதான்.
அந்த நாட்களில் சிங்கள தமிழ் இனங்களுக்கிடையே சிறுசிறு பேதங்களே இருந்தன. இப்படிப் பிளவுபட்டு எதிரிகளாக இருக்கவில்லை. தமிழரும் சிங்களவரும் நண்பர்களாயிருந்தனர்.
கண்டி பஜாரில் சண்முகம் முதலாளியைத் தெரியாதவர் எவருமில்லை. வர்த்தகச் சங்கத் தலைவராகக்

Page 81
146 இனி வானம் வசப்படும்
கூட இருந்திருக்கின்றார். தேர்தல் காலங்களில் கட்சி பேதமின்றி நிதி வழங்குவார். அப்பாவின் செல்வாக்கினால் ரகுவரனும், தங்கைகளும் பாடசாலையில் பிரபலமாக இருந்தார்கள்.
ரகுவரன் கண்டி திரித்துவக் கல்லூரியில் படித்து பேராதனைப் பல்கலைக் கழகத்திற்கு தெரிவானபோது சந்திராவதியும் கண்டி மகளிர் கல்லூரியிலிருந்து தெரிவாகி வந்தாள். அப்பாவின் நண்பரான அப்புகாமியின் மகள்தான் இந்த சந்திராவதி. சந்திராவதியை ஏற்கனவே ஓரிரு தடவைகள் சந்தித்தமையினால் பல்கலைக்கழகத்தில் சந்தித்தபின் அவர்களிடையே நல்ல நட்பு ஏற்பட்டது. அவர்கள் இருவரும் தமிழ், ஆங்கிலம், சிங்களம் என மூன்று மொழிகளிலும் கதைக்கக்கூடியவர்களாக இருந்தமையினால் அவர்கள் நட்புக்கு மொழி ஒரு தடையாக இருக்கவில்லை.
சந்திராவதி நல்ல அழகி, செவ்விளநீர் நிறம், கட்டான இளமை, மெருகூறிய உடல் வாகு இவை எல்லாவற்றிற்கும் மேலாக எப்பொழுதும் புன்முறுவல் தவழும் வசீகர முகம். அவள் கதைக்கும் போது அவளது முகபாவத்தையும் அங்க அசைவுகளையும் ரகுவரன் பெரிதாக ரசிப்பான்.
அவளுடன் பழக ஆரம்பித்த நாட்களில் நல்ல நட்பு மட்டுமே இருவரிடமும் இருந்தது. சந்திராவதி தன் மனைவியாவாள் என்று அவன் நினைத்திருக்கவில்லை.
அவர்கள் பழக ஆரம்பித்த காலத்தில் இருவரும் மற்றவர்களது வீடுகளுக்குச் சென்று பழகினார்கள். அவனது அம்மாவை தனது தாய்போல் இருப்பதாகக்

ச. முருகானந்தன் 147
கூறுவாள். அவன் அவளது வீட்டிற்குச் சென்றாலும் அப்படித்தான்.
தனது அம்மா அன்போடு உணவு பரிமாறுவது போலவே அவளது அம்மாவும் உணவு பரிமாறுவதாக உணர்வான்.
ஒருநாள் சந்திராவதி அவனிடம் வந்து சோமபால தனக்குக் காதல் கடிதம் தந்ததாகக் கூறினாள்.
‘வாழ்த்துக்கள். சோமபால கெட்டிக்காரன் நல்லவன். அப்புறமென்ன?’ என்று கண்சிமிட்டினான் ரகுவரன். அவளுக்குக் கோபம் வந்துவிட்டது. அப்படி அவள் கோபித்ததை இதற்குமுன் அவன் பார்த்ததில்லை. “உங்களுக்கு விசரா?” என்று கடிந்துகொண்டாள். “நான் உங்களை விரும்புறன்.”
இவன் நம்ப முடியாமல் அவளை நோக்கியபடி “இது நடக்கிற காரியமா சந்திரா?” என்றான்.
“ஏன் நடக்காது.”
“இனம். மதம். மொழி. இவற்றால் வேறுபட்டவர்கள் நாங்கள்.”
“ஆனால் மனதால் ஒன்றுபட்டவர்கள். ஏன், உங்களுக்கு விருப்பமில்லையா?’ அவளது நேரான கேள்வியில் அவன் ஆடிப்போனான்.
அன்று இரவு உறக்கமின்றி இருவரது உறவு பற்றி யோசித்தான். சொன்னால்தான் காதலா? இது காதல்தான் என்று புரிந்தது.

Page 82
148 இனி வானம் வசப்படும்
அவர்களது காதலை இரு தரப்பினரும் முதலில் ஏற்கத் தயங்கியபோதும், பின்னர் சுமுகமாகி ஏற்றுக் கொண்டனர். அவர்களது திருமணம் கண்டியில் சிறப்பாக நடைபெற்றது.
அடுத்தடுத்து ஆணும் பெண்ணுமாக இரு குழந்தைகள் பெற்று அவர்கள் மகிழ்ந்திருந்த போதுதான் 77 கலவரம் வந்தது. எனினும் அவர்களைப் பொறுத்தவரை அது பெரும் பாதிப்பை ஏற்படுத்தவில்லை. தனது இனத்தவரின் வெறித்தனமான செயல்களைக் கண்டித்து அவனோடு உரையாடினாள். ஆனால் 83 கலவரம் பிரளயத்தையே ஏற்படுத்திவிட்டது. அவனது அப்பா கடையோடு தீக்கிரையாக்கப்பட்டார். சந்திராவதியின் வீட்டிற்கு வந்த காடையர்கள் ரகுவரனையும் கொல்ல முயன்றனர். ஆனால் சந்திராவதியின் கண்ணினால் அவன் தப்பிப் பிழைத்தான். அந்தக் கலவரத்தோடு யாழ்ப்பாணம் வந்த ரகுவரனும், சந்திராவதியும் அதற்குப் பின் கண்டி திரும்பவில்லை. பழைய ஞாபகங்களில் மூழ்கியிருந்த ரகுவரனை ‘என்னங்க, பலமான யோசனை?’ என்று கேட்டாள் சந்திராவதி ஒன்றுமில்லை என்று சிரித்தார் ரகுவரன். -
“உங்ககிட்ட ஒரு முக்கியமான விசயம் கதைக்க வேணும்.” என்று பீடிகையோடு ஆரம்பித்த மனைவியைக் கேள்விக்குறியோடு நோக்கினார் ரகுவரன்.
“இல்லைங்க. நம்ம மக்கள் சரோஜா காம்பசில அவக்கூட படிக்கிற ஒருத்தனை விரும்புறா.’ மனைவி கூறியதும் ‘காதலாவது கத்தரிக்காயாவது.” ரகுவரன் சீறினார்.
 

ச. முருகானந்தன் 149
“நீங்க காதலிச்சதை மறந்திட்டீங்களா?” “நான் எங்கே காதலித்தேன். நீதானே காதலித்தாய்.”
“சரி விடுங்க. அவள் எமக்கு ஒரே மகள் அவளது ஆசைக்குக் குறுக்கே நிற்காமல் நிறைவேற்றி வைக்கிறது நம்ம கடமை.”
“சரி. நீ சொல்லுறதும் ஒரு வகையில சரிதான் சீதனப் பிரச்சினையும் தீருது.”
பெற்றோரின் பச்சைக்கொடி சரோஜாவிற்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
மனைவியின் விருப்பப்படியே பையனைப்பற்றி விசாரிக்கச் சென்ற ரகுவரன், கோபத்தோடு திரும்பி வந்தார். “இந்தக் கல்யாணம் நடக்காது. நடக்க விடமாட்டன்.”
“ஏன்?” சந்திரா குழப்பத்தோடு கணவனை நோக்கினாள். ரகுவரன் பற்களை நறநற என்று கடித்தபடி “அவன் கீழ் சாதிப் பையன்’ என்றார்.
“கீழ் சாதியென்றால்..?’ பதில் கேள்வி கேட்ட சந்திராவதியின் கன்னத்தை அவரது கைகள் பதம் பார்த்தன. மகளின் மீது ஏற்பட்ட கோபமே இதற்குக் காரணம். சந்திராவதி கலங்கிப் போனாள். இருபத்தைந்து வருட இல் வாழ்வில் முதல் முறையாகக் கைநீட்டியிருக்கின்றார். அவள் கண்கள் பெருக்கெடுக்க அறையுள் சென்று கட்டிலில் வீழுந்து விசும்பி அழுதாள். ரகுவரனின் வறு செய்த மனம் குறுகுறுத்தது.

Page 83
150 இனி வானம் வசப்படும்
சந்திராவதி அழுவதை அவரால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. இந்த இருபத்தைந்து வருடங்களாக இல்லாமல் இன்று ஏன் இப்படி நடந்துகொண்டேன்.” என்று அவரது மனது தவித்தது.
சந்திராவதி எவ்வளவு நல்ல மனைவியாக இருந்து வருகிறாள் அவரைக் கைப்பிடித்த நாள் முதல் பிரிந்தே வாழ்ந்ததில்லை. எப்பொழுதும் அவரைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருப்பாள். அவரது மனதறிந்து புரிந்துணர்வுடனும், விட்டுக் கொடுப்புடனும் இன்பத்திலும் துன்பத்திலும் பங்கேற்று வருகிறாள்.
அவ்வளவுக்கு அவர் மீது அன்பைச் சொரிந்து அவரது அன்புக்குப் பாத்திரமான சந்திராவதி இன்று முதல் முறையாகக் கலங்கிப்போய் நின்றாள். ரகுவரனால் தாங்க முடியவில்லை. மெல்ல எழுந்து அவளருகில் சென்று கட்டிலில் அமர்ந்தபடி அன்பொழுக “சந்திரா’ என்று அழைத்தார். அந்த அழைப்பில் அவளது விசும்பல் இன்னும் அதிகரித்தது.
“என்னை மன்னிச்சிடு சந்திரா.” சட்டென்று எழுந்த சந்திரா அவரது வாயை தன் கைகளால் மூடினாள்.
“நீங்க மன்னிப்புக் கேட்கக்கூடாது’ என்றாள். அவரது மனது உருகியது.
“சந்திரா மகள் மீது ஏற்பட்ட கோபத்தில உன்னை
அடிச்சிட்டன். அவள் இப்படி ஒருத்தனை விரும்பியிருக்கக் கூடாது.”

ச. முருகானந்தன் 151
“மகள் மேல ஏன் கோவிக்கணும்? அவள் தன் கூடப்பிடிக்கிற, தன்னைப்போலவே டாக்டராக வரப்போகிற ஒருத்தனைத்தான் விரும்புறா. தகுதியில்லை என்று ஏன் நினைக்கிறீங்க?”
“ஆனா அவங்க சாதியில குறைவு. எங்கட அந்தஸ்திற்கு ஏற்ற பகுதியில்லை சந்திரா.”
“என்ன சொல்லுறீங்க?. அவங்களும் தமிழர் என்று நீங்க சிந்திக்கவில்லையா?”
சந்திராவதியின் கேள்வியில் அவரது நெஞ்சு உறைந்தது. சந்திராவதி தான் தொடர்ந்தாள்.
“நான் ஒரு சிங்களத்தியாக இருந்தும் தமிழரான நீங்கள் மனப்பூர்வமாக என்னை ஏற்றுக் கொண்டீர்கள். மனங்கள் ஒன்று சேர்ந்திட்டால் அப்புறம் சாதி, மதம், இனம் எல்லாம் இரண்டாம் பட்சம்தானுங்க.
சரோஜா படித்த பெண் அவள் தன்னுடைய வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுத்ததில் தவறு விட்டிருக்க மாட்டாள்.”
சந்திராவதி சொல்லச் சொல்ல ரகுவரன் மனதில் கூனிக் குறுகினான். எனினும் மனைவிக்குப் பதிலெதுவும் சொல்லாமல் சொல்ல முடியாமல் விக்கித்துப் போய் நிற்கவே அவள்தான் தொடர்ந்தாள்.
“இந்தக் காதலை ஏற்க முடியாத நீங்க தாயக விடுதலைப் போராட்டத்தை ஆதரிக்கிறதை என்னால

Page 84
152 இனி வானம் வசப்படும்
புரிஞ்சுக்கொள்ள முடியவில்லை. மலரப் போகிற சுதந்திர
சமத்துவ தமிழீழம் என்று நீங்க காணுகிற கனவெல்லாம் வெறும் போலி மயக்கம்தானா?”
மனைவி இடித்துரைத்த போது அவரது மனதிலே மெல்ல மெல்ல தெளிவு ஏற்பட ஆரம்பித்தது.
సెలో
 

பொது சன நாலங் und üum voorb
இது நூலகப் பிரி1
I:'ഋ' } ജെ ീഴഅഭ
鬣。
<12ůe C2-21
மேக திட்டுக்கள் வானில் மெல்ல மெல்ல அசைகின்றன. தவழ்ந்து வரும் குளிர்காற்று முகத்தில் உணர்ந்து குளிரை தேகமெங்கும் விதைக்கின்றது. காடு மேடு கல், முள் என்று எதையும் பார்க்காத வேக நடை எமது பின் வாங்கல் தொடர்கிறது. கால்கள் கடுப்பெடுத்தன. பாதங்களிலும் தேகங்களிலும் சிராய்ப்புக்கள் எனினும் அவற்றைப் பொருட்படுத்தவோ தாமதித்து இளைப்பாறவோ இது நேரமில்லை.
நீண்ட தூரம் பயணப்பட்டதால் துப்பாக்கியின் பாரம் தெரிந்தது. அடர்ந்த காட்டுக்குள் வந்துவிட்டோம். இனி எதிரி வரும் வாய்ப்பு இல்லை. கொஞ்ச நேரம் ஓய்வெடுத்தாலென்ன என்று நினைத்ததைக் கூறினேன். சக போராளிகளும் களைத்திருந்தமையால் எனது வேண்டுதலை ஆமோதித்தனர். பொருத்தமான இடம் தென்பட்டது. காட்டின் நடுவே ஒரு குளம், அந்தக் குளத்தைச்

Page 85
154 இனி வானம் வசப்படும்
சுற்றி சிறு வெளி. நீண்ட பயணம் ஏற்படுத்திய களைப்பைப் போக்கிட தண்ணில் இறங்கி கை கால்கள் முகத்தையும் கழுவினோம். களைத்து பிசு பிசுத்த உடலுக்கு ஆறுதலாக இருந்தது. பிரதான பாதையில் வரும் கனரக வாகனம் ஒன்றிற்கு கண்ணிவெடி வைத்துத் தகர்த்தலே எமக்குரிய பணி, கடந்த சில நாட்களாக ஊர் மனையில் பெருத்த அட்டகாசம் புரிந்து வரும் சிப்பாய்களின் மனத்துணிச்சலைச் சீர்குலைக்கும் உபாயமாகவே இத்திடீர் தாக்குதலுக்குத் திட்டமிடப்பட்டிருந்தது.
மூன்று நான்கு நாட்களாக நன்கு திட்டமிடப்படும் வாய்ப்புக் கிட்டவில்லை. இன்றுதான் சந்தர்ப்பம் கிடைத்தது. நாங்கள் நான்கு பேர் இந்தப் பணியில் ஈடுபட்டிருந்தோம். நிலக் கண்ணிவெடியைப் புதைத்துவிட்டு கவச வாகன வரவுக்காகக் காத்துத் தவமிருந்தோம். அபூர்வமாக எமது இலக்குத் தவறுவதுண்டு. இன்றும் அப்படி நிகழ்ந்துவிட்டது. வாகனம் வருவதற்குச் சில நொடிகள் முன்னரே நிலக்கண்ணி வெடி வெடித்துவிட்டதால் அவர்கள் மயிரிளையில் தப்பி விட்டார்கள். இரு தரப்பினரும் துப்பாக்கிப் பிரயோகம் செய்தோம். ஆனாலும் பெரும் எண்ணிக்கையில் வந்திருந்த அவர்களுக்கு எம்மால் ஈடு கொடுக்க முடியவில்லை. மோதலில் எமது போராளி கேதீசனை இழந்தோம். அதன் பின் எமது மனம் சோர்வடைந்தது இனியும் நின்று மோதுவதில் அர்த்தமில்லை என்பதால் பின்வாங்கி காட்டுக்குள் ஓடவேண்டி ஏற்பட்டு விட்டது.
இராணுவமும் காட்டுக்குள் இறங்கி சிறிது நேரம் வேட்டுக்களைத் தீர்த்தது. இவ்வணிக்குத் தலைமை தாங்கி

ச. முருகானந்தன் 155
வந்த எனக்கு பெரும் ஏமாற்றமாகப் போய்விட்டது. எப்பொழுதும் வெற்றிபெற வேண்டும் என்பதே என் எண்ணம். எப்போதாவது தோல்வி வரும்போது அதை ஏற்க முடிவதில்லை.
எனதருகே நிலையெடுத்துத் தாக்குதல் நடத்திக்கொண்டிருந்த கேதீசன் மீது சன்னம் பாய்ந்தது. அவன் இரத்த வெள்ளத்தில் துடி துடித்து ஓய்ந்த போது மனம் திகைத்துப் போனது. வாழ்வின் இறுதிக் கட்டம் நெருங்கிவிட்டதான உணர்வில் தேகம் படபடத்து நடுங்கியது.
இப்போது பின்வாங்கி எம்மைக் காப்பாற்றிக் கொண்டால் மறுபடியும் முயற்சிக்கலாம் என்று தோன்றியதாலேயே பின் வாங்கித் தப்பி வந்தோம்.
நாம் இளைப்பாறிக் கொண்டிருந்தபோதே வானம் இருண்டு கொண்டு வந்தது. ஆதவன் வான எல்லையில் மறையத் தொடங்கினான். இரவு உறங்கிவிட்டு காலையில்தான் காட்டை விட்டு வெளியேற வேண்டும் என முடிவு செய்து கட்டாந்தரையில் கதை பல பேசியபடி படுத்துறங்கினோம். தாயகக் கனவே எமது பேச்சின் கருப் பொருளாயிருந்தது.
நரியின் ஊளையிடுதலுக்கும், கோட்டானின் அலறலுக்கும் மத்தியில் உறங்கிப் போனோம். இடையில் நெஞ்சை உலுக்கும் கனவு கண்டு கண் விழித்தேன். மறுபடியும் உறக்கம் வர மறுத்தது. நேற்று வரை எம்மோடு இருந்து கதை பேசிச் சிரித்து மகிழ்ந்த கேதீசன் இன்றில்லை? கேதீசனின் இழப்பு மனதில் துயரைப் பெருக வைத்தது.

Page 86
156 இனி வானம் வசப்படும்
மனதோடு சேர்ந்து உடலும் வலித்தது. கீறல் காயங்களில் கசிந்த இரத்தம் காய்ந்து போயிருந்தது. சிராய்ப்புப் புண்கள் கொதித்தன. சாய் கொஞ்சம் மிஸ் பண்ணிட்டுது. இல்லாட்டி பத்துப் பன்னிரெண்டு எதிரிகளைச் சாய்த்திருக்கலாம்.
தூக்கம் வராமல் வானத்தைப் பார்த்துக் கொண்டிருந்தேன். ஆயிரக்கணக்கான சிறிய நட்சத்திரங்கள் சூரியக் கடமையில் ஈடுபட்டிருந்தன. வைகறை நாளாக இல்லாமையினால் எங்கும் கருமையாய் படர்ந்திருந்தது. கண் சிமிட்டும் வெள்ளிகளால் பேரொழியைத் தர முடியாதுதானே? வானத்தில் துருவ நட்சத்திரம் தெளிவாகத் தெரிந்தது. அங்கே கேதீசன் கண் சிமிட்டிக் கொண்டிருந்தது போல உணர்ந்தேன். மனது பாறையால் அமுக்குவது போலக் கனத்தது. மாறண்ணை, மாறண்ணை என்று அன்பாக அழைத்த அந்த இனிய குரலை இனிக் கேட்க முடியாது. எமது விடுதலைக்கு வித்தான மாவீரர்களில் அவனும் ஒருவனாகி. நாளை தகவல் போகும்போது அவனது அம்மா கதறுவாள், அக்கா குளறுவாள். அப்பா பொருமி வெடிப்பார். மனதிலே பெருமிதம் இருந்தாலும் பாசப் பிணைப்பு கண்ணிரைப் பெருக வைக்கும்.
“ஒ. இந்தக் கொடிய யுத்தத்தில் எத்தனை போராளி நண்பர்களை இழந்துவிட்டோம்.” மனது கனத்தது. ஆங்காங்கே பறவைகளின் சங்கீதம். இனி விடியும். இன்னும் சில நாளிகைகளில் பொன் மஞ்சள் கதிரெறிந்து சூரியன் மேலெழுவான் விடியலின் வரவால் பூக்கள் மலரும். எமது வாழ்வும் விடியுமா? தாயகம் மலருமா?
 

ச. முருகானந்தன் 157
விடியமுன்னரே அருகிலிருக்கும் கிராமத்திற்குள் போகவேண்டும். விடிந்த பின் இராணுவ ரோந்துகள் ஆரம்பமாகலாம். மதியையும், சீலனையும் எழுப்பிக்கொண்டு
புறப்பட்டேன்.
தொலைவில் போரின் விளைவால் சிதிலமாகிப் போன கிராமத்தின் சுவடுகள் மைமல் பொழுதில் தரிசனமாகின. சிறு குழந்தைகள் கட்டி விளையாடிய மணல் வீடுகள் காற்டில் கலைந்திருப்பது போல இருப்பிடங்கள் எல்லாம் சிதைந்து அரைகுறையாய் காணப்படுகிறது. அனுமார் எரித்த இராவண தேசம் போல் இந்து சமுத்திரத்தின் இதய பூமி காட்சியளித்தது.

Page 87
158 இனி வானம் வசப்படும்
கண்முன்னே வெறிச்சோடிய சமவெளியில் இங்கொன்றும் அங்கொன்றுமாக சில குடிசை வீடுகள் தெரிந்தன. இதில் ஏதாவது ஒரு வீட்டில் போய்த்தான் பசியாறிக் கொண்டு தளத்திற்குப் போகவேண்டும்.
கிராமத்தில் கால் பதித்து அந்த அதிகாலைப் பொழுதில் ஒரு வீட்டின் கதவைத் தட்டினோம். வெளிக்கதவு சற்று பயத்தோடு திறக்கப்பட்டது. சிப்பாய்கள் என்று நினைத்திருக்கலாம். பயத்தோடு கதவைத் திறந்த பெண் ளங்களைக் கண்டதும் முகம் மலர. “வாங்கோ தம்பியவை’ என்று வரவேற்றாள்.
தூங்கி எழுந்த கோலத்திலும் அவள் ரொம்ப அழகாக இருந்தாள். முகத்தில் சோக ரேகைகள். முப்பது வயதுக்குக் குறைவாகத்தானிருக்கும். செளுமையாய் இருந்துவிட்டு இப்போது வறுமையுடன் போராடிக் கொண்டிருப்பது போல உணர்ந்தேன்.
சுடச்சுட தேநீர்கொண்டு வந்தவளிடம், “அக்கா உங்கட பெயர்.?” என்று கேட்டபடி தேநீரை வாங்கினேன். ‘அகல்யா.’ என்றபடி அழகாகச் சிரித்தான். ‘நான் மாறன், இவன் சீலன், அவன் மதி.’ என்று அறிமுகப்படுத்தினேன்.
உங்களுக்கு ஆயிரம் பெயர் இருக்கும். அம்மா அப்பா வைத்த பெயரை நீங்களே மறந்திருப்பிங்க. ஏன், அம்மா அப்பாவையும்தான்.” அகல்யா சிரிப்போடு கூறினாள்.
தாயை மறந்தாலும் தாயகத்தை மறக்க மாட்டம் அக்கா” என்றான் மதி.

ச. முருகானந்தன் 159
“ராத்திரியும் ஒரு நண்பனைப் பறி கொடுத்திட்டுத் தான் வாறம்.?” என்றான் சீலன்,
‘இந்தப் பக்கம் இராணுவ நடமாட்டம் எப்படி?’ என்று அகல்யாவை நோக்கினேன். ‘மெயின் ரோட் பக்கம் தினமும் ரோந்து போவாங்கள். எப்போதாவதுதான் கிராமத்துக்குள்ள வருவாங்கள்.”
‘வீட்டில் வேற ஆர் இருக்கினம்.?’ எனது புலனாய்வு மூளை அடுத்த கேள்வியாய் வெடித்தது.
“நானும் அம்மாவும் தான்.”
*அவர்.?’
‘அவரை ஒரு நாள் விசாரணைக்கென்று கூட்டிக்கொண்டு போனவங்கள். நாலு வரிசமாச்சு. நானும் எவ்வளவோ விசாரிச்சுப் பார்த்திட்டன். தகவல் இல்லை. “அவளது குரல் தளதளத்தது.” இன்று வரையில் நானும் தேடாத காம்ப் இல்லை. வேண்டாத தெய்வமும் இல்லை. அவர் உயிரோட இருக்கிறாரோ இல்லையோ என்றுகூடத் தெரியாது.”
அகல்யாவின் சோகமான கதை எமது வைரம் பாய்ந்த மனதிலும் ஈரத்தை ஏற்படுத்தியது. எப்படி ஆறுதல் சொல்வது என்று தெரியவில்லை.
சிவயோக சுவாமிகள் சொல்வார். ‘எப்பவோ முடிந்த காரியம்’ என்று அகல்யாவின் குரல் கரகரத்து நெடுமூச்செறிந்தாள். அவளது உருக்கமான கதை என் கண்களையும் நீரிட்டு மறைத்தது.

Page 88
16O இனி வானம் வசப்படும்
அகல்யா கட்டுப்படுத்த முடியாமல் கேவிக்கொண்டு உள்ளே சென்றாள். எனக்கு சங்கடமாகப் போய்விட்டது. அவளது மனதில் கொடிய ஞாபகங்களைக் கிளறிவிட்டேனோ?
நாம் எமது காலைக் கடன்களை முடித்துக்கொண்டு வந்தபோது கொஞ்ச நேரத்திற்கு முன்பிருந்த நிலை மாறி வெகு இயல்பாக, ‘சாப்பாடு ரெடி.?’ என்று அழைத்தாள்.
சாப்பாடு சுவையாக இருந்தது. உயசரிப்பு அதைவிட மனதை நிறைவு கொள்ள வைத்தது. “கூச்சப்படாமல் சாப்பிடுங்கோ..?”
“அக்கா குழம்பு நல்லா இருக்கு.
“இப்படி வாய்க்கு ருசியாகச் சாப்பிட்டு கன நாளாச்சு.’
‘முனைக்குப் போயிட்டால் எத்தனை நாள் ஆன சாப்பாடு இல்லாமலிருந்திருக்கிறம்.
ஆள் மாறி ஆள் அகல்யாவின் சமையலைப் பாராட்டினோம். வயிறாரச் சாப்பிட்ட பின் ‘நாங்கள் வெளிக்கிடப் போறம் அக்கா.’ என்றோம்.
‘சரி தம்பியவை. மெயின்ரோட்டிலை விசாரிச்சுப் போங்கோ. பிசாசுகள் ரோந்து வரும்.’
“அக்கா. உங்கட அவர் வந்திடுவார். வரவேணும் என்று வேண்டுறம். இந்தக் கொடுமைக்கெல்லாம் காரணமான எதிரியை விடமாட்டம் அக்கா. வெகு கெதியில எங்கட மண்ணிலையிலிருந்து விரட்டத்தான் போறம்.”

ச. முருகானந்தன் 161
மீண்டும் அகல்யாவின் விசும்பல் “என்ர அவரை ஆமி பிடிச்சுக் கொண்டு போகவில்லை.”
“அப்ப ஆரக்கா..?”
“ஆயுதக்குழு ஒன்று.”
“எந்த இயக்கம்?”
“தெரியாது. எங்கட அவரும் ஒரு போராளியாக இருந்து விலகினவர்தான். அவர் வெளிக்கிட்ட காலத்தில பல இயக்கங்கள் இருந்தன. எது நல்லது, எது கெட்டது என்று யாருக்கும் தெரியாது. அவர் ஒரு அணியிலை இணைந்து விசுவாசமாகப் போராடினார். சுதந்திரதாயகம் தான் அவருடைய இலட்சியாக இருந்தது. காலப்போக்கில் அந்த அணி தவறான வழியில் செல்கிறது என்பதைத் தெரிந்து கொண்டதும் விலகி வந்திட்டார். என்னால ஒன்றை மட்டும் நிச்சயமாகச் சொல்ல முடியும். அவர் என்னைக் கைப்பிடிச்ச பிறகு குடும்பத்துக்காக உழைத்தார். உற்சாகமாகத் தோட்டஞ்செய்து அந்த வருமானத்தில் குறைவின்றி வாழ்ந்து கொண்டிருந்தம். ஆறு மாத வாழ்வு. விசாரிச்சுப் போட்டு விடுறம் என்றவை இன்று வரையில இல்லை. இனி வருவார் என்று நான் நம்பவில்லை.”
அவள் அழுதபடியே கூறினாள். என் நெஞ்சில் முள் குத்தியது.
‘ம். இவ்வளவு வேதனைக்கு மத்தியிலும் நீங்கள் எங்களை உபசரித்து உணவளித்து’ குரல் வராமல் தொண்டையில் கட்டிக் கொண்டது.
அகல்யா தன்னைச் சுதாகரித்துக் கொண்டு கண்களைச் சேலைத் தலைப்பால் ஒற்றிக் கொண்டாள்.

Page 89
162 இனி வானம் வசப்படும்
வறுமையின் அடையாளமாக முந்தானையின் ஓட்டை தெரிந்தது. -
“நானும் ஒரு தமிழீழப் பெண்தான். என்னுடைய கணவரின் உயிரைத்தான் காப்பாற்ற முடியல்லை. இந்த மண்ணில் விடுதலைக்காகப் போராடுற உங்கள் வடிவில நான் என்னுடைய கணவரைத் தரிசிக்கிறேன். அவரும் களத்தில் போயிருந்தால் நானும் ஆறுதல் அடைந்திருப்பன். விடுதலை வேட்கை கொண்ட ஒரு உயிர் இப்படி வீணாகப் போயிட்டுதே.”
அவள் குலுங்கிக் குலங்கி அழுதாள். நாமும் மனதில் அழுது கொண்டிருந்தோம்.
மீண்டும் அகல்யா தன்னைச் சுதாகரித்துக் கொண்டாள். நீங்கள் வெளிக்கிடுங்கோ தம்பியவை. இனி ஆமி உலாவரத் தொடங்கியிடுவான்.
ཉ
‘போய் வருகிறோம் அக்கா. எம்மை அறியாமலே உடைப்பெடுத்தன.
எமது கண்கள்
அகல்யா கையசைத்துபடி விடைகொடுத்தாள்.
‘மக்கள் ஆதரவு இப்படி இருக்கும்வரை எங்களை யாராலும் வெற்றி கொள்ள முடியாது. சுதந்திர தாயகம் மலரப் போகின்ற நாள் வெகு தூரத்திலில்லை. என்ற தெம்புடன் மெயின் ரோட்டை ஊடறுத்து எமது தரிப்பிட முகாம் நோக்கிப் பயணித்தோம்.
నైలో
*y
 

163
துரத்தே கடற்பரப்பில் வேட்டுச் சத்தங்கள் கேட்டு திடுக்கிட்டுக் கண்விழித்தான் அந்தோனிக் கிழவன்.
கடந்த சில ஆண்டுகளாக இது தொடர்கதைதான் என்றாலும், இந்தப் போர் தவிர்ப்புக் காலத்தில் கூட இப்படியென்றால்..? விரக்தியுடன் பார்வையைச் சுழலவிட்டான். உள்ளே மருமகள், எல்லாம் மறந்த நிம்மதியில் உறக்கத்தில் ஆழ்ந்திருக்கும் காட்சி குப்பி விளக்கின் மங்கிய ஒளியில் தெரிகிறது. கிழவனுக்கு மகனின் நினைப்பு, ‘மேரி. கடலுக்கை சத்தம் கேட்குது. காத்தும் பலமாக வீசுது.” என்று மருமகளை எழுப்பினான்.
கண் விழித்த மேரி மலங்க மலங்க விழித்துவிட்டு “அதுக்கு இப்ப என்ன செய்யுறது? பேசாமல் படுங்கோ மாமா.’ என்று கூறிவிட்டு மறுபடியும் உறங்க ஆரம்பித்தாள்.

Page 90
164 இனி வானம் வசப்படும்
அந்தோனிக் கிழவனுக்கு வெறுப்பாக இருந்தது. “கர்த்தரே” என்று துதித்தபடி படலையைத் திறந்து கொண்டு வெளியே வந்து வானத்தைப் பார்த்து நேரத்தைக் கணிக்க முயன்றான். வானம் மப்பும் மந்தாரமுமாக வெள்ளிகள் ஏதுமற்றிருந்தமையினால் நேரத்தைக் கணிக்க முடியவில்லை.
தினமும் அதிகாலைப் பொழுதில் வள்ளங்கள் கரையேறும்போது மைமல் இருட்டுடனேயே கிழவன் கடற்கரைக்கு வந்துவிடுவான். முதுமை காரணமாகக் கடலுக்குப் போக முடியாதபோதிலும் கரையில் வலை இழுத்தல், மீன் பொறுக்குதல், தரம் பிரித்தல் என வேலைகள் செய்வான்.
இன்னும் விடியவில்லை. விடிவதற்கான அறிகுறியாக சேவல் கூவுகிறது. மெல்லிய ஒளிப்படை கீழ்வானத்தில் மினுங்குகிறது. மீண்டும், கடல் மடியில் மீன் பிடிக்கச் சென்ற மகன் கிறிஸ்தோபரின் நினைவு மனதை நெருட, “கர்த்தரே” என்று துதித்தபடி நடந்தான்.
வெறி பிடித்தது போல் கடற்காற்று உக்கிரமாக வீசிக் கொண்டிருந்தது. கரை மணல் காற்றோடு அள்ளுண்டு பறக்கின்றது. இராவணன் மீசைகள் ஓடிப்பிடித்து விளையாடுகின்றன. ஆட்காட்டிக் குருவி ஒன்று கீச்சிட்டுப் பறக்கிறது. சூழலே நெஞ்சை அள்ளும் பயத்தோடு. மறுபடியும் மகனின் நினைப்பு அந்தோனிக்கு.
“ஊய். ஊய். காற்று உடலை தழுவிச் செல்கிறது. உடல் சிலிர்க்கும் குளிர் வேறு காற்றில் கலந்து ஊசியாய்க் குத்துகிறது. குடிசையைத் திரும்பிப் பார்க்கிறான்.

ச. முருகானந்தன் 165
கடலோரம் இருக்கின்ற அவனது குடிசை காற்றில் சரிந்து விடுமோ என மனம் துணுக்குகிறது. உள்ளே மேரி படுத்திருந்தாள். 'பாவம். சின்னப் பெண்.”
சரிந்துவிடுமோ? சே. சே. எத்தனை புயல் கண்டு
நிமிர்ந்து நிற்கிறது. இந்தக் கச்சானுக்கா? கிழவன் சமாதானமடைகிறான்.
விடிந்தும் விடியாத அந்த இரண்டும் கெட்டான் மைமல் பொழுதில் கரையில் நின்று, கடற்தாய் வீசி எறியும் பேரலைகளைப் பார்த்தான். கடும் புயல் இல்லை என்று மனது தேறிடும் அதேவேளையில், அந்தோனியின் நினைப்பு, மகன் கிறிஸ்தோபருக்கு எதுவித ஆபத்தும் ஏற்பட்டிருக்கக் கூடாதே என்று ஏங்கியது. தாயில்லாப் பிள்ளையை ஐந்து வயதிலிருந்து தாலாட்டிச் சீராட்டி வளர்த்து கடல் தாயின் மடியில் ஒரு சிறந்த மீனவனாக உருவாக்கி உலாவவிட்ட அந்தோனியின் பெற்ற உள்ளம் உருகுவது வியப்பில்லைத்தான்.
முன்னர் என்றால் புயலுக்கும், சுழியுக்கும்தான் பயம். இப்போது கடற்படையினரால் அதைவிட அதிக மரணங்கள் நிகழ்கின்றன. கிறிஸ்தோபருக்கு அடுத்தவன் அன்ரன். அவனது பிரசவத்தில் தான் அன்புக்கினிய மனைவி திரேசாவைப் பறிகொடுத்தான் அந்தோனி. இப்போது இவர்களெல்லோரையும் பிரிந்து, தாய் நாட்டின் விடுதலைக்காக தன்னை ஒப்புக் கொடுத்து ஆழ்கடலெங்கும் கடற்புலியாய் ஓடித் திரிகிறான் அன்ரன்.
அந்தோனியின் மனதில் திரேசா தித்திப்பாய் வந்து பேசினாள். மறக்கக்கூடிய உறவா அது? கடற்கரை

Page 91
166 இனி வானம் வசப்படும்
மணலிலே மணல் வீடு கட்டி விளையாடிய காலத்தில் உள்ளம் கவர்ந்த சினேகிதியாக இருந்தவள். கடற்கரையில் கருவாடு காய்ப் போடும் கன்னிப் பருவத்தில் கண்களால் கதை பல பேசி காந்தமாய்க் கவர்ந்திழுத்தவள். காதல் வானில் சிட்டுக்களாய்ப் பறந்தபோது அந்த உணர்வுகள் வெப்பமாகவும், குளிராகவும், தவிப்பாகவும் மனதில் படரவிட்டவள். அவளை நேசிப்பதை சொல்ல முடியாத தவிப்பில் தருணம் பார்த்து காத்திருந்தவன். பின்னர் அவனுக்கே மனைவியாகிக் குட்டி போட்ட பெட்டை நாய் போல் தன் பின்னால் சுற்ற வைத்தான். ஒ. அந்தோனிக் கிழவனின் மனதில் நினைவுகள் கசங்குகின்றன. “ஓ. என்னருமைத் திரேசா'
 
 

ச. முருகானந்தன் 167
திரேசாவோடு உயிரொன்றி வாழ்ந்த ஒவ்வொரு கணமும் நெஞ்சை நிறைத்து, பிரிவு உலுக்குகிறது. ‘ம். சீமாட்டி போய்விட்டாள். மனதின் வெப்பில் பெருமூச்சு வெடிக்கிறது.
இறக்கும்போது திரேசாவுக்கு முப்பதே வயதுதான். கிழவனின் மனதில் இன்றும் கூட அவளது அந்த இளமையான, கட்டான தோற்றம்தான் அரங்கேறுகிறது. ‘போயிட வேணும். அவளிட்டயே, போயிடவேணும்.” இன்றைக்கென்று அந்தோனியைச் சாவின் நினைவுகள் சூழ்கின்றன.
இந்தப் பொழுதில் அவளென்றால், கடற்கரையில் அவனை வரவேற்கவோ, பின் நாளில் அவனை எழுப்பி கடற்கரைக்கு அனுப்பிடவோ எழுந்து தயாராகிவிடுவாள்.
இளமைக் காலம் இரவில் இவன் கடல்படுக்கப் போவான். அப்போதெல்லாம் திரேசா தூங்காத விழிகளுடன் அவனுக்காகக் காத்திருந்து, பிரார்த்தித்து - அவன் கரை திரும்பியதும் தவிப்புடன் தன் துயர் கூறியும் அன்பைப் பொழிவாள்.
புயலடித்த இரவுகளில், கண்ணி விட்டே வற்றிப் போய் அவள் கரையோரம் தவமிருந்த நாட்களை அவன் அறிவான். “ம். சீதேவி போய்விட்டாள்.”
ஆனால் இன்று.? மருமகள் எதையும் பொருட்படுத்தாமல் தூங்கிக் கொண்டிருக்கிறாள். எதுவென்றாலும் அவள் அப்படித்தான். ‘ம். இப்போதைப் பெண்டுகள். ம். காலம் போனபோக்கு.” அந்தோனியின் மனது சலிக்கிறது.

Page 92
168 இனி வானம் வசப்படும்
‘அழுவதற்கே நேரமில்லாமல் போய்விட்ட மரணங்கள் மலிந்த பூமியில், இனி இழப்பதற்கு எதுவுமே இல்லை என்று இன்றைய மக்களின் மனது மரத்துப் போய்விட்டதோ?”
மருமகளை குறையாக நினைக்க கிழவனின் மனம் ஒப்பவில்லை. 'பாவம். சின்னஞ்சிறிசு. அவனோட அன்பாகத்தானே இருக்கிறாள்! படிச்ச பிள்ளையஸ் இப்படித்தானோ?”
கடலிலே ஒரு பெரிய வெடிச் சத்தம் காற்றையும் கிழித்துக் கொண்டு அது கரையை அதிர வைக்கிறது. அந்தோனிக் கிழவன் திடுக்குற்று நிற்கிறான். அவன் பார்வை கடல் தாயின் மடியில் படர்கிறது. எண்ணெய்க்குதமொன்று எரிவது போல தொலைவில் ஒளிப்பிழம்பாய். ‘ஓ. கடலிலை பெரும் சண்டைதான்’ என நினைத்துக் கொண்டான்.
“எங்கட பொடியள் மீன் பிடிக்கிற இடம்தான் ஆருக்கும் ஏதும் இடைஞ்சல் வந்துதோ..? கிறிஸ்தோபர் இடையில் சிக்குப்பட்டானோ..?’ என பலவாறு எண்ணினான்.
கடற்கரையில் இன்னமும் சனநடமாட்டம் இல்லை ‘ஆண்டவரே. கர்த்தரே என்று பிரார்த்தித்தபடி குடிசையை நோக்கி விரைந்தான். யாரிடமாவது தான் கண்ட காட்சியைப் பகிர்ந்து கொள்ள வேண்டும். மருமகளிடமாவது கூறவேண்டும். அவளையும் செபம் செய்ய வைக்கவேண்டும்.

ச. முருகானந்தன் 169
“கடவுளே.’ அவன் வேகமாக, மண்ணில் கால்கள் புதைபட நடக்கிறான். தொலைவிலிருந்து பார்த்தபோது சிறு பொட்டலாகத் தெரிந்த குடிசை, அதிகாலை மெல்லிய ஒளிக்கீற்றில் மெல்ல மெல்ல விசுவரூபமெடுக்கிறது.
“குண்டு வெடித்த சத்தம் கேட்டு மருமகள் எழுந்திருப்பாளா? கடலுக்குச் சென்ற கணவனின் நினைவில் தவித்துக் கொண்டிருப்பாளா? முதலில் அவளைத் தேற்றிட வேண்டும். பாவம் சின்னஞ்சிறிசு. காதலித்துக் கிறிஸ்தோபரைக் கைப்பிடித்தவள். துடியாய்த் துடிப்பாள். ம். கர்த்தர் கருணையுள்ளவர். யாருக்கும் ஒன்றும் நடக்காது. ஆண்டவரே இரட்சித்தருளும்.’ அந்தோனிக் கிழவன் கண்கள் கலங்க குடிசையை அடைகிறான்.
படலையைத் திறந்த கிழவனுக்குப் பேரதிர்ச்சி
மங்கிய குப்பி விளக்கொளியில் மருமகள் மேரி அம்மணமாய். அவளைத் தழுவியபடி சம்மாட்டி மகன் பீற்றர்.
ஒரு கணம்தான். கிழவன் வெறிகொண்டவன் போல் கடலை . நோக்கி ஓடுகிறான். இந்த உலகமே பூகம்பமாய் வெடிக்க, உச்சி மீது வானடிந்து நொருங்க, குதிக்கால் பிடரியடிபட கடலை நோக்கி ஓடுகிறான்.
கச்சான் காற்று இன்னமும் உரமாக வீசிக் கொண்டிருந்தது. சடசட' என்று முறியும் தாழை = மரங்களும், வீசி எறியும் கடல் அலையும் - அவன் கரையில் வந்து அலைகளில் கால்பட கடலை வெறித்தபடி நின்றான்.

Page 93
170 இனி வானம் வசப்படும்
இப்போது விடியலின் ஒளிக்கீற்று, கதிர்களாய் கடற்கரையை ஒளிரவைக்க ஆரம்பிக்கிறது. கடற்கரைத் தொழிலாளர்கள் வந்து கூடத் தொடங்கிவிட்டார்கள். குண்டு வெடிப்பு வேட்டுக்கள் தீர்ந்தமை பற்றி உரையாடியபடி, கடல் நீர் மீது பயணம் போனவர்களை எண்ணி ஏங்கியபடி வள்ளங்களின் வரவுக்காய் காத்திருக்கிறார்கள். அனைவரின் முகங்களிலும் பதட்டம்
தூரத்தே கரும்புள்ளிகளாகத் தானும் வள்ளங்கள் தெரியவில்லை. கடலில் நடந்த அனர்த்தங்களால் திசைமாறிப் போயிருக்க வேண்டும் என்று நினைத்தார்கள்.
வெறுப்பும் விரக்தியுமாக அந்தோனி கடலை வெறித்துப் பார்த்தபடி நின்றான். திரேசா. இந்தக் கிலிசை கேடுகளைக் காணவா என்னை விட்டுவிட்டுப் பிரிந்தாய்? நான் உன்னட்ட வாறன். இப்பவே வாறன்.” நீந்திச் சென்று கடல்தாயின் மடியுள் நிரந்தரமாக உறங்க வேண்டும் போலிருந்தது அவனுக்கு. ஒரு கணம் எதுவுமே அவன் கண்களுக்குப் புலப்படவில்லை.
அவனது காலடியில் ஏதோ தட்டுப்பட, அங்கு நின்றவர்கள் எல்லாம் ஓடிவர, கரையில் ஒதுங்கி வரும் அது அவன் கண்ணில்பட்டது.
... لتلك
ஒரு பிணம்
பிணத்தை அணுகிய ஊரவர் அதை கரையிழுத்துப் புரட்டிப் பார்க்கிறார்கள்.

ச. முருகானந்தன் 171
“அந்தோனியப்பு. அது உங்கட மூத்த மகன்தான். கிறிஸ்தோபர்தான்.”
“ஐயோ ஆண்டவரே. இது என்ன கொடுமை.” என்றபடி கிறிஸ்தோபரின் உடல் மீது விழுந்து கட்டிப்புரண்டு அழுதான் அந்தோனி. ‘ஐயோ... மகனே. என்னைவிட்டுட்டுப் போட்டியே ராசா.”
அவனை யாராலும் தேற்ற முடியவில்லை.
“ஐயோ. என்ர அத்தான். என்னை விட்டுட்டுப் போட்டியளே.’ என்று கதறியபடி மேரி ஓடி வருகிறான்.
ஒரு கணம் நிமிர்ந்து பார்த்த அந்தோனிக்கிழவன் தடார் என்று மகனின் உடல் மேல் சாய்ந்தான்.
அவன் மறுபடி எழுந்திருக்கவேயில்லை.
கடலில் நடந்த உக்கிரமான சமரில் அந்தோனியின் இளைய மகன் அன்ரன், கடற்கரும்புலியாகி கடற்படைக் கலத்தைச் சிதறவைத்து வீரகாவியம் படைத்து, மாவீரனான செய்தியை அறியாமலே அந்தோனிக் கிழவன் நிரந்தரமாகக் கண்ணை மூடிவிட்டான்.
‘ஊய். ஊய்.” என்று கடற்காற்று இன்னமும் பேரொலியுடன் அஞ்சலி செலுத்திக் கொண்டிருக்கிறது.
கீழ் வானத்திலிருந்து எழுந்து வந்த கதிரவனின் பொற்கதிர்கள் விடியும் நேரம் தொலைவில் இல்லை என்று பறைசாற்றுவது போல் உலகுக்கு ஒளியேற்றின.
నైలో
క,

Page 94
172 இனி வானம் வசப்படும்
துறிக் கொண்டிருந்த மழை பெரும்பாட்டமாகப் பெய்ய ஆரம்பித்தது. அங்கும் இங்குமாக லயத்துக் காம்பராக்களில் ஒழுக ஆரம்பித்தது.
ஒழுக்கில் நனைந்த சுப்பையா திடுக்குற்று கண் ܠܝܘ விழித்தான். கண்ணாத்தாள் சேலையை இழுத்து போர்த்தியபடி உறங்கிக் கொண்டிருந்ததைக் கண்டவுடன் அவனது மனது தவித்தது. பாவம் பிள்ளைத்தாச்சி என நினைத்துக்கொண்டான்.
அவளும்தான் தினமும் காலையிலிருந்து எவ்வளவு நேரமாக அயராது உழைக்கிறாள்! கிடுகிடுக்கும் மழைக்குளிலே அதிகாலையில் எழுந்து, தேநீர் வைத்து, அவனுக்கும் பிள்ளைகளுக்கும் தனக்குமாக மதிய போசனத்திற்கும் சேர்த்து ரொட்டி சுட்டு, பிள்ளைகளை எழுப்பி பாடசாலைக்கு வெளிக்கிடுத்தி பம்பரம் போல சுழன்று வேலை செய்வாள்.
 

173
பின்னர் கொழுந்துக் கூடையை எடுத்துக் கொண்டு ஓட்டமும் நடையுமாக மலையேறி, வெயில், மழை, பனி, குளிர் என்று பாராமல் கொழுந்து பறித்து, மாலையில் அதைக் கையளித்து விட்டு லயத்திற்குத் திரும்பினால், அங்கே இரவுச் சமையல் வேலைகள் காத்திருக்கும். சோறும், மரக்கறியும், கருவாட்டுக் குழம்பும் சமைத்து இரவில் தான் வாய்க்கு ருசியாக, வயிறாற உண்ணக் கிடைக்கும்.
மழை விடாமல் பெய்யவே சுப்பையா எழுந்து சில பாத்திரங்களை எடுத்து ஒழுகும் இடங்களுக்கு வைத்தான். இல்லாவிட்டால் ஒழுங்கு நீர் பரவி, நிலம் ஈரமாகி ஒருவருே படுக்க முடியாது போய்விடும்.
மூன்றாம் சாமத்தில் தொடங்கிய மழை பொழுது புலரும்போது அடைமழையாகியது. மழையின் ஓங்கார சத்தமும் கேட்டு திடுக்கிற்று எழுந்த கண்ணாத்தா, புதிசு புதிசாகத் தோன்றும் ஒழுக்குகளுக்கு பாத்திரங்கள் வைத்துக்கொண்டிருக்கும் கணவனை நோக்கினாள்.
ஆக்கிரோசத்துடன் பெய்து கொண்டிருக்கும் மழை பெருமழையாகத் தொடரவே மண்சரிவு பற்றிய பயம் சுப்பையாவின் மனதில் எழுந்தது. தோட்டத்து கான்களும் ஆறுகளும் நிரம்பி வழிந்து பெருக்கெடுத்து ஆங்காங்கே சிற்றருவிகளாக வெள்ளம் பாய ஆரம்பித்தது. போன மழைக்கே மேட்டு லயத்திற்கு பின்புறமாக இருந்த குன்றிலிருந்து மண்சரிவு ஏற்பட்டுவிடுமோ என்ற பயமிருந்தது. இந்த மழையைத் தாக்கு பிடிக்குமா? புதிய இடத்தில் புதிய குடியிருப்புகள் கட்டித் தரும்படி தோட்ட
ー77.3s c cし

Page 95
174 இனி வானம் வசப்படும்
'a.
நிர்வாகத்திடமும், அரசியல்வாதிகளிடமும் கேட்ட கோரிக்கைகள் பயனற்றுப் போயின.
கிழக்கு மலை முகட்டில் தோன்றவிருந்த கதிரவனை முற்று முழுதாக மறைத்துக் கொண்டு வானம் கரும் புகாராகக் காட்சியளித்தது. பெருமழையோடு இப்போது ‘உய்' என்று பெரும் காற்றும் வீசத் தொடங்கியது. லயத்து வாசிகள் எல்லாம் பதற்றம் கொண்டனர்.
வெளிவாசலுக்கு வந்து சுற்று முற்றும் நோக்கினான் si t'i 60 u urt. புலரும் பொழுதில், மழைநீரால் கழுவப்பட்டிருந்த தேயிலைச் செடிகள் அழகிய பச்சைக் கம்பளமாய்க் காட்சியளித்தன. மலை முகட்டில் புகார் படர்ந்து வெள்ளைக் கம்பளமாகவும் மாறியிருந்தது.
 

பொதுசன நூலகம் uur þü u Tani kibo
ச. முருகானந்தன் விசேட சேர்க்கை விகுதி 175
லயத்திற்குப் பின்புறமாக இருந்த குன்றை நோக்கினான். கடந்த மாரியிலிருந்தே, இதோ விழுகிறேன் என்று அச்சுறுத்திக் கொண்டிருந்தது நினைவுக்கு வரவே, இம்முறை மண்சரிவு ஏற்படக்கூடும் என்று பதைபதைப்புடன் நினைத்துக் கொண்டான். பக்கத்து வீட்டு முனியாண்டியுடன் பகிர்ந்து கொண்டபோது, அவனும் அதை ஆமோதித்தான்.
அவர்கள் உரையாடிக் கொண்டிருந்தபோதே காற்றுக்கும், மழைக்கும் முகம் கொடுக்க முடியாமல் கூரைத் தரகங்கள் கிளம்பி ஒலி எழுப்பின.
எதையும் தாங்கும் இதயம் போல் மூன்று நான்கு தலைமுறையினரின் சோகங்களைத் தாங்கிக் கொண்டு, தஞ்சம் கொடுத்த லயமல்லவா? ஒரு நூற்றாண்டு காலத்திற்கு மேலாக மழை, வெயில், புயல் முதலியவற்றைத் தாங்கிக்கொண்டு, சூறையாடல், கல்வீச்சு, தீவைத்தல் முதலான இனவெறித் தாக்குதல்களையும் எதிர்கொண்டு நிலை குலைந்து போய்க் கொண்டிருக்கும் இந்த லயக் காம்பராக்களினால், இந்த மாரி மழைக்குத் தாக்குப் பிடிக்க முடியவில்லை.
மழை சற்று தணிந்து வந்தாலும், வானம் இன்னமும் கருஞ்சேலை போர்த்தியிருப்பதை அவதானித்த சுப்பையா, மழை இன்னுமொரு பாட்டம் பெய்யத்தான் போகிறது என நினைத்துக் கொண்டான்.
பாடசாலையில் தஞ்சமடைவதுதான் புத்திசாலித்தனம் என்று அவனுக்குத் தோன்றிய அபிப்பிராயத்தை அயல் லயங்களிலுள்ளவர்களிடம் கூறியபோது, வேலு, மாதவன், இராமு, கருப்பையா முதலியவர்களும் அதை ஏற்றுக்

Page 96
176 இனி வானம் வசப்படும்
கொண்டனர். தோட்டப் பாடசாலைக் கட்டடம் சிறியதானாலும் உறுதியானது. எனவே அவசரம் அவசரமாக அனைவரும் அவசிய மூட்டை முடிச்சுகளோடு ബൈണിഥേിങ്ങ്.
பாடசாலையை அடைவதற்கு முன்னரே கண்ணாத்தாவுக்கு மூச்சு வாங்கியது. நாலாவது பிள்ளையைப் பெற்றபின் இவளுக்கு இப்படித்தான். இரத்தம் ஏத்தினால் நல்லது என்று ஏற்கனவே தோட்ட மருத்துவர் கூறியிருந்தார். பூச்சிக் குளிசையும், இரத்தக் குளிசையும் வைத்தியரிடமிருந்து வாங்கிப் பாவித்தாள். தினமும் கீரையையும் உணவில் சேர்த்துக் கொண்டாள். எனினும் இரத்தம் ஏற்றிட நகர்புற பெரியாஸ்பத்திருக்கு போகக் கிடைக்காததால் பலவீனமாகவே இருக்கிறாள்.
பாடசாலையில் இடம் போதாது. தஞ்சம் புகுந்த அனைவரும் கை, காலை நீட்டிப் படுக்கவோ, சமைக்கவோ முடியாத அவலம்
வெளியே இன்னமும் அடுத்த பாட்ட மழை விடாமல் பொழிந்து கொண்டிருந்தது. குழந்தைகள் பசியில் அழுதனர். பெரியவர்களும் காலையிலிருந்து வெறு வயிறுதானே? சுப்பையாவின் மனதில் எரிமலை. மாதவனையும், வேலுவையும் இன்னும் சில இளைஞர்களையும் அழைத்துச் சுறுசுறுப்பாக இயங்கினான். எல்லோர் வசமும் இருந்த அரிசி, பருப்பு முதலியவற்றை வாங்கி பொதுவாக சமைக்க ஆரம்பித்தனர். சின்ன வயதிலே கூட்டாஞ்சோறு காய்ச்சி விளையாடியது நினைவுக்கு வநதது.

ச. முருகானந்தன் 177
அவர்கள் சமையலில் ஈடுபட்டிருந்தபோதே, அவர்களது கண் முன்னாலேயே மண் சரிவு மெல்ல மெல்ல அவர்களது லயவீடுகளை விழுங்கிக் கொண்டிருந்த அவல தரிசனத்தினால் பலரும் "ஐயோ’ என்று வாய்விட்டுக் கதறினர். நல்ல வேளை வெளியேறாமலிருந்திருந்தால் அவர்களும் மண்ணோடு மண்ணாகியிருப்பார்கள். உயிர்களைக் காப்பாற்ற முடிந்தபோதும், உடைமைகளை இழந்த சோகம் பரவலாய் ஒலித்தது.
“கவலைப்படாதீங்க. உயிர் தப்பினதே பெரிய காரியம். கையும் காலும் இருக்கு. உழைச்சு சம்பாதிச்சுக்கலாம்.” சுப்பையா பெரும் கவலையின் மத்தியிலும் மற்றவர்களைத் தேற்றினான்.
இரண்டு மூன்று நேரச் சமையோலடு கையிருப்பு கரையவே, அவர்கள் கிளாக்கர் ஊடாக துரையை அணுகினர். முதலில் சற்று பின்னடித்த போதும், நிலைமையை புரிந்து கொண்டு உலர் உணவுப் பொருட்களை வழங்கினார். அதுவும் இன்னமும் இரண்டு நாட்களைத் தாக்குப் பிடிக்க உதவியது.
மீண்டும் பசி பட்டினி. வெள்ளம் பாதித்த பகுதிகளுக்கு உலர் உணவுப் பொருட்களும், சமைத்த உணவும் வழங்கப்படுவதாக வானொலிச் செய்தியில் கேட்டு அனைவரும் மகிழ்ந்தனர்.
அவர்களது மகிழ்ச்சி நீடிக்கவில்லை. அவர்களது தோட்டத்திற்கு உணவு வண்டிகள் ஏதும் வரவில்லை. பெரியவர்கள் சற்று தாங்கினாலும் குழந்தைகளால் பசி கிடப்பதென்பது முடிகிற காரியமா?

Page 97
178 இனி வானம் வசப்படும்
“அம்மா பசிக்குது.”
“சோச்சா தா அம்மா."
“தேத்தா தா அம்மா.”
“பாப்பா தா அம்மா.”
குழந்தைகள் பசியில் சினந்து அழுது ஆர்ப்பாட்டம் செய்யவே மாதவனும், சுப்பையாவும் துரையிடம் சென்றனர். துரை வீட்டு நாய், பிஸ்கட் தின்று கொண்டிருந்தது.
“சாப்பாடு இல்லாமல் குழந்தைகள் எல்லாம் அழுகுது. இனி சமாளிக்க முடியாது. ஏதாவது செய்யுங்க
Bਸ.''
“அரச அதிபருடனும், பிரதேச செயலருடனும் போனில் தொடர்பு கொண்டேன். மூன்று நாளைக்கு முன்னரே அனுப்புகிறதாகச் சொன்னார்கள்.”
“இன்னும் வரலியே. பட்டினியில பிள்ளைகள் செத்து போகும் துரை.”
“உங்கட கஷ்டம் எனக்கு விளங்குது. நான் என்ன செய்யுறது. வேணுமெண்டா ஏ.ஜீ.ஏ.க்கு போன் பண்ணுறன்.”
“நிலைமையை விளக்கிக் கதையுங்க சேர்.”
துரை உள்ளே சென்று தொலைபேசி மூலம் அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டார். வெளியே தொழிலாளர்கள் காத்திருந்தார்கள். வெளியே வந்த துரை ஏமாற்றத்துடன் அவர்களை நோக்கினார்.

ச. முருகானந்தன் 179
“கதைச்சேன். கையிருப்பு இல்லையாம். கொழும்பில இருந்து வரவேணுமாம். கன இடங்கள் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டதால எல்லாம் இடத்திற்கும் அனுப்பி வைக்கிறது சிரமமாக இருக்காம்.”
அவர்களுக்கு துரையின் பதில் ஏமாற்றத்தையும் சீற்றத்தையும் கொடுத்தது.
“நீங்கள்தான் தயவு பண்ணனும் துரை.”
“நான் என்ன செய்யுறது.?”
“நம்ம தோட்டத்து லொறியை விட்டு பிறைவேற் கடையில என்றாலும் அரிசி, மா கொஞ்சம் வாங்கித் தந்தீங்கன்னா பெரிய உதவியாக இருக்கும்.”
துரை தயங்கினாலும் ஆழமாக யோசித்துவிட்டு லொறியை அனுப்பிக் கொள்முதல் பண்ணப் பணித்தார். மாலையில் லொறியில் வந்த பொருட்களைச் சிக்கனமாகப் பாவிக்கும்படி கூறினார்.
எவ்வளவுதான் சிக்கனப்படுத்திய போதும் இரண்டு நாட்களுக்குக் கூட தாக்கு பிடிக்கவில்லை.
மழை சற்று ஓய்ந்து, வெள்ளம் ஓடி வடிய ஆரம்பித்த பின் பத்திரிகை நிருபர்கள் எல்லாம் வந்து மண்சரிவை படம்பிடித்து, அவர்களிடமும் பேட்டி கண்டு சென்றனர். மறுநாள் பத்திரிகையில் முன்பக்கச் செய்தியாக மண்சரிவு பற்றிய சோகக்கதை பிரசுரமாகியிருந்தபோதிலும் இன்னும் அரச நிவாரணங்கள் எதுவும் வந்து சேராததனால் அவர்கள் அனைவரும் மிகவும் சோர்வடைந்து போயினர்.

Page 98
180 இனி வானம் வசப்படும்
சுப்பையா திட்டமிட்டு, குழந்தைகளின் மீது கவனமெடுத்து உணவுப் பொருட்களைச் சிக்கனமாகப் பங்கிட்டான். இதனால் சிலர் அவன் மீது கூட கோபமுற்றனர். சர்வதேச உதவி வழங்கும் நிறுவனங்கள்கூட வரவில்லை. ஒருவாரம் ஓடிவிட்டது. இன்றுவரை சமாளித்தாகிவிட்டது. நாளை என்ன செய்வது? தோட்டத்தில் பயிரிடப்பட்டிருந்த மரக்கறி வகைகள்கூட அதிக மழையினால் அழுகிப் போய்விட்டன. காரட், பீற்றுட் கிழங்குகளையாவது சேகரித்து மரக்கறி சூப் என்றாலும் செய்து வழங்கலாம் என்று யோசித்த சுப்பையாவும் தொழிலாளர்களும் ஏமாற்றத்திற்குள்ளாகினர்.
எல்லோரும் லொறிகள் ஏதாவது மலையேறி வருகின்றதா என்று மலையடிவாரத்தை நோக்கி ஏக்கப் பெருமூச்சுடன் நோக்கினர்.
அவர்களது பார்த்த கண்கள் சோர்ந்ததுதான் மிச்சம். பொருட்கள் எதுவும் வரவில்லை.
*அரசாங்கம் எங்களை கைவிட்டுவிட்டது போலிருக்கு. இனி என்ன செய்யுறது?”
‘துரை எங்கட மந்திரியோட கூடப்போனிலை கதைச்சாராம். அனுப்பி வைக்கப்படும் என்று சொன்னாராம்.”
“ஆனா இன்னும் வரல்லியே!”
“பாதிக்கப்பட்ட சிங்கள கிராமங்களுக்குத்தான் அனுப்புறாங்க போல.” சுப்பையா சலித்துக்கொண்டான்.

ச. முருகானந்தன் 181
“ம். இந்த இனத்துவேச அணுகுமுறை எப்பதான் இந்த நாட்டில் இல்லாமல் போகப்போகுதோ தெரியல்லை’ என்றான் முனியாண்டி
“இது இல்லாமலிருந்தால் இப்ப எங்கட நாடு பொன் விளையும் பூமியாயிருக்குமல்லவா?’ வேலு சிரித்தான். மழை, மண் சரிவினால் பாதிக்கப்பட்ட மலையக மக்களுக்கு கப்பல் மூலம் உணவு அனுப்பி வைக்கப்படுவதாக பல நாடுகளும் தெரிவித்துள்ளதாக வானொலிச் செய்தியில் கூறினார்கள். தொலைக்காட்சியில் உணவுப் பொருட்கள் வருவதைக் காட்டினர். எனினும் இன்றுவரை எதுவித உணவுப் பொருட்களும் கிடைக்காது. இவர்கள் பசியினால் வாடிக் கொண்டிருக்கின்றனர்.
மாலையில் மகிழ்ச்சியான தரிசனம் மலை முகட்டை நோக்கி வளைந்து வரும் வீதிகளில் சில லொறிகள் வந்து கொண்டிருந்ததைக் கண்ட ஐயாத்துரை, “கவுண்மேந்து எங்களைக் கைவிடவில்லை” என்று பூரித்தான்.
லொறிகள் வந்து சேர்ந்ததில் ஏற்பட்ட மகிழ்ச்சி ஒருபுறம். லொறிகளில் உணவு கொண்டு வந்தவர்கள் யார் என்பதை இனம் கண்டு கொண்ட மகிழ்ச்சி மறுபுறமென தொழிலாளர்கள் ஆனந்த மழையில் நனைந்தனர்.
எப்படியும் இந்த உணவுகள் பத்து நாட்களைத் தாக்குப் பிடிக்கும் என மதிப்பிட்டான் சுப்பையா.
“நீங்கதான் முதன்முதலாக உணவு கொண்டு வந்திருக்கீங்க. வேறு யாருமே இன்று வரை திரும்பிப் பார்க்கலை. அரச உதவிகள்கூட இன்னும் வரவில்லை.”

Page 99
182 இனி வானம் வசப்படும்
“என்ன இருந்தாலும் ஒரே இரத்தமல்லா. துடிக்கத்தானே செய்யும். தானாடா விட்டாலும் தசையாடும் என்பார்களே” இப்படி பல அபிப்பிராயங்கள்
எல்லாவற்றையும் பொறுமையாகக் கேட்டுக் கொண்டிருந்த, உணவு லொறிகளைக் கொண்டு வந்த விடுதலைப் புலி இளைஞர்களில் ஒருவன் கூறினான்.
“இந்த உணவுப் பொருட்களை வடபகுதியிலிருக்கிற மக்கள் உங்களுக்காக மனிதநேய அடிப்படையில் சேகரித்து அனுப்பியிருக்காங்க. நாங்க உங்களுக்கு மட்டுமல்ல, மலையடிவாரத்தில் இருக்கிற பாதிக்கப்பட்ட சிங்கள மக்களுக்கும் கொடுத்திருக்கிறம்,’
இளைஞனின் உரையைக் கேட்டுக் கொண்டிருந்த சுப்பையா, “இனிமேல் அவங்களும் உங்களைப் புரிஞ்சு கொள்ளுவாங்க..” என்று பெருமிதத்துடன் கூறினான்.
 

183
'அனுசுயா எனக்குக் கிடைப்பாளா?’ ஆயிரம் தடவைகள் மனதிலே எழுந்த கேள்விக்கு விடை காணமுடியாமல் அவன் தவித்தான்.
'அனுசுயா. அவள் ஒரு தேவதை அவனது நண்பர்கள் சொல்லும்போது அவனுக்கு மகிழ்ச்சியாகவும், அதே நேரம் சீற்றமாகவும் இருக்கும். இவர்கள் என்ன அவளை விமர்சிப்பது?
இத்தனைக்கும் அவன் அவளோடு ஒரு வார்த்தை தானும் பேசியதில்லை. நேரில் முகம் பார்த்துச் சிரித்ததுகூட இல்லை. அனுசுயா அபார அழகி. ரொம்ப ஸ்டைலாக உடை அணிவாள். 'ஜீன்ஸ் அவளுக்கு இன்னும் எடுப்பாக இருக்கும். அவளது வீதி வலம் வாலிபக் கண்களுக்கு ஒரு வசந்தம். * 180435
சில வருடங்களுக்கு முன்னர் - அவள் மகளிர் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த காலத்தில் - அவன் தினமும் இப்புது வசந்தத்தின் இனிய தென்றலில் குளிர்

Page 100
184 இனி வானம் வசப்படுப்
காய்ந்திருந்திருக்கிறான். அவளது தரிசனத்துக்காக ரியூட்டரி வாசலில் தவம் கிடந்திருக்கிறான்.
அவன் மட்டுமா? அவனோடு பிரபா, குகன். ஜெகன் இப்படி எல்லோரும்தான். நண்பர்கள் மத்தியிலே அவளைத் தமதாக்கிக் கொள்வதில் மிகுந்த ஆர்வம் இருந்தது. எல்லாம் இன்று வெறும் காணலாகி.
ஒரு நாள் அவன் சொன்னான்; “அனுசுயா எனக்குத்தான் கிடைப்பாள்.”
ரவி இப்படித் தைரியமாகச் சொன்னதை நண்பர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஒவ்வொருவரும் அவள் எனக்கே என்று கனவிலும், நனவிலும் கற்பனை பண்ணும்போது, ரவி இப்படிக் கூறியதில் உடன்பாடு இருக்கவில்லை.
9)
‘இவர் பெரிய மன்மதக் குஞ்சு.’ ஜெகன் கிண்டலடித்தான்.
“ராசனுக்குச் செருப்படி கிடைத்ததை மறந்துவிட்டாயா?’ - இது பிரபா.
“அவள் கண்ணாலேயே எரித்துவிடுவாள்.” இது குகனின் குரோதமான மிரட்டல்,
எனினும் ரவி தயங்காமல் மறுபடியும் கூறினான்; “அனுசுயா எனக்கு நிச்சயமாகக் கிடைப்பாள்.” “அடடா. குமார் அனுசுயாவுக்கு கடிதம் கொடுத்து என்னாச்சு தெரியுமா?’ ஜெகன் பயமுறுத்தலோடு மறுபடியும் ரவியை எச்சரிப்பது போலக் கேட்டான்.

ச. முருகானந்தன் 185
“செருப்படிதான் கிடைத்தது.” பிரபா உடைத்து வைத்தான். ரவி எல்லோரையும் பார்த்துச் சிரித்தான்.
“டேய் பூல். அனு. யார் தெரியுமா? என்னுடைய Djig-T6...”
நண்பர்கள் முகத்தில் ஈயாடவில்லை. விக்கித்துப் போனார்கள்.
“2D L6icioT6OLDulurTe356) T...”
“என்னுடைய சின்னம்மாவின் மூத்தவள்தான்
99
அனு.
“இதை ஏன் இத்தனை நாளாக எங்ககிட்டச் சொல்லவில்லை’ எனக் கோபமாய்க் கேட்ட குகனைப் பார்த்துச் சிரித்தபடி,

Page 101
186 இனி வானம் வசப்படும்
“ஏன் சொல்லவேண்டும்?’ இறுமாப்புடனும், பெருமிதத்துடனும் கூறினான் ரவி.
“இந்தக் காலத்தில் மச்சாளைக் கட்டுவது பாஷன் இல்லை. மருத்துவ ரீதியிலும் சரியில்லை.” விட்டுக் கொடுக்க மனமின்றி பிரபா வாதிட்டான்.
ரவியும் நண்பர்களும் அனுசுயா பற்றித் தினமும் கதைப்பார்கள். சில வேளைகளில் பின் தொடர்வார்கள். எனினும் ‘ரீஸ்” பண்ணுமளவுக்குக் கூட ஒருவருக்கும் தைரியம் இருக்கவில்லை - ரவி உட்பட
பாடசாலை வாழ்வின் அந்த இறுதி நாட்களில் அனுசுயா ஒரு நாள் காணாமல் போனாள்.
நண்பர்களுக்குப் பெருத்த ஏமாற்றம்.
“விசரி. அவசரப்பட்டுவிட்டாள்.” என்றான் ஜெகன். “இவளுக்குப் பைத்தியம் பிடித்துவிட்டதா என்ன?’ என்று முணுமுணுத்தான் குகன். “பேய்ப் பெட்டை வாழவேண்டிய வயதிலை இப்படி..” என்றான் பிரபா.
விசயம் இதுதான். அனுசுயா போராளியாகப் போய்விட்டாள். நண்பர்களால் இதை ஜீரணிக்க முடியவில்லை. உலகே வெறுத்த நிலையில் நடைப்பிணமாக அலைந்தார்கள்.
“சின்னமாமா எப்படியும் கூட்டி வந்துவிடுவார். செல்வாக்கு இருக்கு.’ ரவி இயலாமையிலும், நம்பிக்கையோடு கூறினான்.

f முருகானந்தன் 187
எனினும், வீடு திரும்ப அனுசுயா மறுத்துவிட்ட செய்தியும் கிடைக்கவே நண்பர்கள் உடைந்து போய்விட்டார்கள்.
மெல்ல மெல்ல அனுசுயாவின் நினைவுகள் நண்பர்கள் மத்தியில் மறைய ஆரம்பித்தன. காலம் அவளை மறக்க வைத்தாலும்கூட, ரவியின் மனதிலே நீறு பூத்த நெருப்புப் போல அனுசுயாவின் நினைவுகள் உள்ளிருந்து தகிர்த்தன.
“நீ அவளை "லவ்” பண்ணுறதைத் தெரிவித்திருந்தால் அவள் இயக்கத்திற்கும் போயிருக்க மாட்டாள்” ரவியின் தங்கை ரதி அண்ணனைக் குற்றம்
റ്റങ്ങണ്.
அனுசுயா போன பின்னர் சின்னமாமி அவனது வீட்டிற்கு வந்து அழுது கூறியதை தினமும் நினைத்துப் பார்ப்பான். நான் இவளை முறைமாப்பிள்ளை ரவிக்குக் காட்டி வைக்க மனக் கோட்டை கட்டி வைச்சிருந்தன். இவள் பாவி அதை மண்கோட்டையாகிவிட்டுப் போய்விட்டாளே.”
“ஓ. அனுசுயா எனக்குக் கிடைத்திருக்க
வேண்டியவள். நான்தான் கோழையாக இருந்திட்டான்.” அவனது மனது அழாதே நாளே இல்லை.
நாட்கள் மாதங்களாகி, வருடங்களாகி.
அவள் நினைவின் சுமையுடனே படித்து, உத்தியோகம் பெற்று இப்போது ஆசிரியராகப் பணியாற்றிக் கொண்டிருக்கிறான் ரவி.

Page 102
188 இனி வானம் வசப்படும்
இப்பொழுதும் அவன் மனதில், “அனுசுயா எனக்குக் கிடைப்பாளா?’ என்ற தாகம் தீராமலேயே இருந்து வந்தது.
அன்று வழமை போல பாடசாலையில் பாடம் நடந்து கொண்டிருந்தது. அதிபர் வகுப்புக்களை நிறுத்திவிட்டு மேல் வகுப்பு மாணவர்களை இயக்க உறுப்பினர்கள் சந்திக்க இருப்பதாகத் தெரிவித்தார்.
பிரச்சாரத்திற்கு வந்திருந்தவர்களில் ஒருத்தி, மாணவர்கள் மத்தியில் வெகு திறமையாக உரையாடிக் கொண்டிருப்பதாக சக ஆசிரியை நளினி ரவியிடம் கூறினாள். ‘ம்.’ என்று விட்டு பேசாமலிருந்தான் ரவி. நளினிக்கு ரவி மீது ஒருவித ஈர்ப்பு இருந்தது. ஆனால் ரவி அதைக் கண்டு கொள்ளாதவன் போலிருந்து வருகிறான்.
“வெண்நிலா என்ற அந்தப் பெண் வலு கெட்டிக்காரி. எப்படியும் பொடியளை இயக்கத்திற்கு கூட்டிக் கொண்டு போயிடுவாளம். ஆளும் நல்ல வடிவு.’ நளினி தொடர்ந்து
கூறினாள்.
“உண்மையாகவே அசத்தும் அழகு. யாராயினும் அவளை ஓரக்கண்ணாலாவது பார்த்த விட்டுத்தான் போவார்கள்.’
ரவிக்கு நளினியின் கதையில் ஈடுபாடு இல்லை. இதற்கிடையில் ஆசிரியர்களைப் பிரசாரப் பிரவினர் சந்திக்க விரும்புவதாகத் தகவல் வரவே அனைவரும் எழுந்து சென்றனர்.

முருகானந்தன் 189
அங்கே தேவதை போல. வெட்டிய தலைமுடியுடன். “சகோதரி வெண்நிலா உங்களுக்குடன் உரையாடுவார்’ என்ற அறிவிப்பைத் தொடர்ந்து அவள் வந்தாள். அவளது அழகும், அதை மிஞ்சும் கம்பீரமும், கணிரென்ற தேன் குரலும் அனைவரையும் ஈர்த்தது.
9ഖണ്. 9ഖണ്.
‘ஓ. வெண்நிலா. வெண்நிலா. அனுசுயாவா? அனு. உனது இயக்கப் பெயர்தான் வெண்நிலாவா?” ரவியின் மனதிலே “சில்' என்ற பூக்காடு கூடவே அவனது மனது தடதடக்கிறது. ஓ. எத்தனை வருடங்கள்
அவள் பேசிய எதுவுமே அவனது காதில் விழவில்லை. அவன் வேறோர் உலகில் சஞ்சரித்துக் கொண்டிருந்தான்.
உரையாடல் முடிந்ததும் அனுசுயா அவனிடம் வந்தாள். அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு எதுவுமே இல்லாத, ஆணுக்கு நிகரான பெண்ணாக அவள் அவனருகில் வந்தாள். வெகு இயல்பாக, “ரவி, இங்கே படிப்பிக்கிறீர்களா?”
அவன் வாயடைத்துப் போய் நின்றான்.
“என்ன ரவி என்னைத் தெரியவில்லையா?”
‘அனு. அணு கனவிலும் நனவிலும் உன்னையே நினைத்திருக்கும் எனக்கு உன்னைத் தெரியாமல் போகுமா?’ அவன் மனதிலே பிரளயம். வாய் வார்த்தைகள் இதழ் பிரித்து வெளிவர மறுத்தன.

Page 103
190 இனி வானம் வசப்படும்
“அனுசுயா.” மனம் ரோசாவாய் மலர்கிறது.
“நீ இப்ப இங்கே.?’
“பிரச்சாரத்திற்கு வந்திருக்கிறேன். இன்னும் சில நாட்கள் இங்குதான் தங்கியிருப்பேன். பிறகு சந்திக்கிறேன்.” தெளிந்த நீரோடை போலக் கூறிவிட்டு விடைபெற்றாள் அனுசுயா.
அனுசுயா போன பின்னர் அவனது மனதிலே ஆயிரம் ஆயிரம் போராட்டங்கள். “அவள் ஒரு போராளி. இனியும் அவளை நான் நினைத்துப் பார்க்க முடியுமா?’ கேள்விகள் மனதில் உருவாகின.
போராளியானாலும் அவளும் ஒரு பெண்தானே என்பதை அடுத்த சில சந்திப்புகளில் அவனால் புரிந்துகொள்ள முடிந்தது. ‘ரீன் ஏஜ்ஜில சொல்ல முடியாமல் தவித்த விடயத்தை ஒருநாள் போட்டுடைத்தான் மிகுந்த ஜாக்கிரதையுடன்.
“அனு. நான் ஸ்கூல் நாட்களில் உன்னைக் காதலித்தேன். உனக்குத் தெரியுமா அனு?”
அவள் கலகல என்று சிரித்தாள். “ஒரு ஆணை ஒரு பெண்ணால் புரிந்துகொள்ள முடியாதா என்ன?”
“அப்போ. நீ. நீயும்.” அவன் தடுமாறினான்.
“அப்படியானால் ஏன் இயக்கத்திற்குப் போனாய்?”
“இது கடமை. எமது நாடு அடிமைப்பட்டு, சின்னாபின்னப்பட்டுக் கொண்டிருந்த போது என்னால் சும்மா பார்த்துக் கொண்டிருக்க முடியவில்லை.”

ச. முருகானந்தன் 191
அவனது மனதிலே அவள் இன்னும் ஒருபடி உயர்ந்தாள். “அவனைக் கோழை என்று சாடுகிறாளா?
அவள் அக்கிராமத்தில் தங்கியிருந்த நாட்களில் இடையிடையே ரவியைச் சந்தித்தாள்.
“நாளை நாங்கள் போகப் போகிறோம்.” அவள் குரலிலும் ஒரு சோகம். இருவரிடையே மெளனம் திரையிட்டது. அந்த மெளனம் ஆயிரம் கதைகள் பேசியது.
“அனு, உன்னுடைய எதிர்காலம்.? இத்தனை வருடங்களாகப் போராட்டத்தில் பங்களித்திருக்கிறாய். இனி வரலாம்தானே?”
“ரவி. அப்படி ஒரு எண்ணம் எனக்கு இல்லை. தொடர்ந்து போராளியாகவே இருப்பேன்.”
“அப்படியானால் உனது திருமணம்?”
9
“போராளியாக இருந்துகொண்டே.’ அவள் நிறுத்தினாள். "உனக்குச் சம்மதமா?’ என்று அவனிடம் கேட்பது போலிருந்தது.
திரையிட்ட மெளனத்தை முடிவுக்குக் கொண்டு வந்து, “நான் போகிறேன்.” என்றாள் அனுசுயா.
“போய்விட்டு வருகிறேன் என்று சொல்லு அனு. நான் உனக்காகக் காத்திருப்பேன்’ அவனது கண்கள் பனித்தன.
“மேலிடத்து அனுமதி பெற்ற பின் சந்திக்கிறேன் ரவி.” அனுசுயா விடைபெற்றாள்.

Page 104
192 இனி வானம் வசப்படும்
சில நாட்களின் பின் அவளிடமிருந்து அவனுக்கு கடிதம் வந்தது.
‘ரவி. மகிழ்ச்சியான செய்தி. பொறுப்பாளர் சம்மதித்துவிட்டார். தலைவரின் அனுமதியும் கிடைத்துவிட்டது. விரைவில் சந்திக்கிறேன். - அனு.
அவன் சொர்க்கத்தில் மிதந்தான்.
அணு எனக்குக் கிடைப்பாளோ?
ஒ. கிடைத்தேவிட்டாள்
பழைய நண்பர்கள் ஜெகன், பிரபா, குகன் எல்லோரிடம் சொல்லிக் குதூகலிக்க வேண்டும் போல் இருந்தது. இன்று ஒவ்வொருவரும் ஒவ்வொரு திக்கில். ஒ. காலம்தான் மனிதர்களை எவ்வளவு அப்பால் கொண்டு சென்று விடுகிறது.
சக ஆசிரியை நளினியுடன் இவ்விடயத்தைப் பகிர்ந்து கொண்ட போது, “அனுசுயா அதிர்ஷ்டக்காரி” என்ற பெருமூச்சுடன் கூறியபடி ரவியை விழுங்குமாய்ப் போலப் பார்த்தாள் நளினி.
அனுசுயா நாளை வருவதாகத் தெரிவித்திருந்தாள். அவள் வரவை அவன் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்தான்.
இரவு அவன் நினைவில் உறங்கவும் முடியாமல், அதையும் மீறி அவன் உறங்கிய வேளை கனவில் வந்து துயிலெழுப்பி.

ச. முருகானந்தன் 193
எப்போது விடியும்?
கா. கா. கா. விடியலின் அறிவிப்பு. அனுசுயாவின் எம்டி 90 வாசலில் அவனது மனதில் பூ
அனுசுயாவின் சக போராளிகள் இருவர் வந்து கொண்டிருந்தார்கள். அவர்களது முகம் வாடியிருந்தது.
“கிளைமோர் தாக்குதலில் வெண்நிலா சிதறி.”
“அனு” ரவி சிதறி சுக்குநூறாகிக் கதறினான்.
அனுசுயாவின் பூதவுடல் மாவீரர் துயிலுமில்லத்தில் விதைக்கப்பட்டது. ரவி நடைப்பிணமானான். சில நாட்களின் பின்.
வித்துக்கள் முளைத்தபோது கையில் துப்பாக்கியுடன் gei!

Page 105
194 இனி வானம் வசப்படும்
coersao
பொழுது சாய்ந்துவிட்டது. இருள் சூழ்ந்து வருகின்ற இந்த இராப்பொழுதில் வித்தியாசம் இருந்தது. இதுவரை வந்துபோன இரவுகள் போன்று அல்லாது மனதிலே ஒருவித பதற்றத்தையும் தவிப்பையும் உணர்ந்தாள் கிருபா,
வீட்டின் சூழ்நிலையும் மிகவும் அசாதாரணமாகவே இருந்தது. இது மாதிரியான ஒரு சூழ்நிலையை அவள் அனுபவித்தது கிடையாது. பெற்றோரின் அரவணைப்பிலும், அன்பு மழையிலும் இத்தனை வயதுவரை இல்லாதிருந்த மாதிரியான இன்றைய இந்த சூழ்நிலையின் அழுத்தத்தில் கொஞ்சம் அதிகமாகவே திணறிப்போய் குழப்பத்துடன் இருக்கிறாள்,
நிலா இல்லாத இந்த இரவில், கிருபா தன் வாழ்வில் ஒளியேற்றப் புறப்படத் தயாராகிக் கொண்டிருக்கிறாள்.
 
 

195
உச்சில் புவனேஸ்வரி அம்மன் ஆலய, குளத்தடி ஆலமரத்தடியில் ஆனந்தன் அவளுக்காகக் காத்து நிற்பான்.
கிருபா கடிகாரத்தைப் பார்த்தாள். தமிழீழ நேரம் ஒன்பதைத் தாண்டிவிட்டது. ஊரே மனித நடமாட்டமற்ற மயான பூமியாகிக் கிடந்தது. போர் நிறுத்த ஒப்பந்தக்காலம் ஆதலினால் சாத்தான்களின் பயம் இல்லை.
நாய்கள் மட்டும் ஆங்காங்கே எப்போதாவது குரைப்பது தொலைவில் கேட்கிறது. அது அவளுக்கு பழக்கப்பட்டுவிட்டதால் அவள் ஒன்றும் அச்சம் கொள்ளவில்லை.
அம்மாவின் துணையும், டோச்சுமின்றி இரவில் வெளியே செல்லப் பயப்படுகின்ற அவள் இன்னும் சிறிது நேரத்தில், ஒருவர் முகத்தை ஒருவர் பார்க்க முடியாது கருமைத்திரை விழுந்திருக்கும் காரிருளில் அம்மன் கோயில் வரை தனியே போகப் போகிறாள். கூப்பிடு தூரம்தான் என்றாலும் இந்த நேரத்தில் பெண்மைக்குரிய பயம் எழவே செய்தது.
ஆனந்தன் அவனது வீட்டு வாசல் வரை வருவதாகக் கூறியபோதும் அவள் தான், யாராவது பார்த்துவிட்டால் ஆபத்து என்று மறுத்துவிட்டாள்.
இப்போது பயமாகத்தானிருந்தது. அவள் தனது அறைக்கு வந்து சத்தமின்றி ஒரு சிறிய பையை எடுத்து, இரண்டொரு மாற்று உடுப்புகளை மட்டும் எடுத்து அதனுள் வைத்தாள்.

Page 106
196 இனி வானம் வசப்படும்
கண்ணாடியில் தன் முகத்தைப் பார்த்தாள். மனதின் இருள் முகத்தில் அப்பிக் கிடந்தது. கிருபாவுக்கு நிமிடங்கள் யுகங்களாகக் கடந்து கொண்டிருந்தன. அப்பாவும் அம்மாவும் எப்போ தூங்குவார்கள் என்று மனது LILLIL-555).
வெளியே வந்து அமர்ந்து ஏதோ ஒரு புத்தகத்தை விரித்தாள். அம்மா சாப்பிட அழைத்தாள். கிருபா இன்னமும் லேசாய் குனிந்த தலையோடு புத்தகத்தில் ஆழ்ந்திருப்பது போல அமர்ந்திருந்தாள். அம்மாவின் அழைப்பு மறுபடியும் இம்முறை திரும்பிப் பார்க்காமலே “பசியில்லை’ என்று கூறினான். “கொஞ்சமா எண்டாலும்
 
 

ச. முருகானந்தன் 197
சாப்பாடு பிள்ளை’ என்று அம்மாவின் அன்பான வேண்டுதலில் மனது புரள்கிறது.
சாப்பிட்டால்தான் அம்மா படுப்பா என்ற எண்ணமும், அம்மாவின் கையால் சாப்பிடப்போகும் கடைசிச் சாப்பாடாக இருக்கலாம் என்ற நினைப்பும் அவளை எழவைத்தன.
உணவு பரிமாறப்படுகிறது. பசி இல்லை. அவளுக்கு அழுகை அழுகையாக வருகிறது. கஷ்டப்பட்டு அடக்கிக்கொண்டு இயல்பாக இருப்பதாகக் காட்ட முயன்றாள்.
“கறி ருசியே பிள்ளை?’ அம்மாவுக்கு தன் சமையலுக்கு எப்போதும் யாராவது சான்று பகரவேண்டும். அம்மாவின் கேள்வியில் எண்ண ஓட்டங்கள் கலைந்து போக, 'ம்' என்றாள் கிருபா, எண்ணக் குமுறலில் சொற்கள் புதையுண்டு போயின.
அவளது ஒவ்வொரு உணர்வலையின் அசைவுகளையும் யாரும் கவனித்துவிடக் கூடாது என்று அவதானமாக இருந்தாள்.
மனதின் பரபரப்பை மறைத்தபடி, மீண்டும் வந்தமர்ந்த கிருபா சாதுப்பிள்ளை போல மீண்டும் புத்தகத்துள் தஞ்சமடைந்தாள். அந்த சூழ்நிலையில் அவளது மனதில் எழக்கூடிய உடைவுகள், சோகங்கள், ஏக்கங்கள் அனைத்தையும் எதிர்க்கும் ஓர் உறைவு அவளிடமிருந்தது.
பின்னால் சற்றுத் தொலைவில் அம்மா அமர்ந்திருப்பதை கிருபாவால் உணரமுடிகிறது. எனினும்

Page 107
198 இனி வானம் வசப்படும்
கடைசி நிமிட தரிசிப்புக்களின் தாக்கங்கள் மனதை உடைத்துவிடக் கூடும் என்பதால் திரும்பிப் பார்க்காதிருந்தாள். வழமைபோல் அம்மாவின் மடியில் தலைவைத்தபடி உரையாட மனதில் உந்துதல்கள் கிளர்ந்தெழுந்தும் கூட மனம் இயல்பிலேயே அவற்றைத் தவிர்க்க விரும்பியது.
女女★
5தல் என்பது பருவத்தில் வருவதுதான், எனினும் அது எப்பொழுதும் சொல்லிக் கொண்டு வருவதில்லை. அவளுக்கு அது மலர்ந்தவேளையில் மனதில் ஆனந்தனே மையப்படுத்தப்பட்டான்.
பல்கலைக்கழகத்தில் தொடங்கிய அறிமுகம், வேலையற்ற பட்டதாரிகளாக நேர்முகத் தேர்வுகளுக்குச் சென்று வருகின்ற போதும் தொடர்ந்து, அது இனிமையானதொரு நட்பாகி பின்னர் அதுவே திசைமாறி காதலாய் உருக்கொண்டது.
அந்த வேளையில்தான் அவன் ஒருநாள் இங்கிதமாக அவளிடம் நேராக அனுகினான். “கிருபா, என்னையும் மீறி என் மனதில் எழுந்துவிட்ட எண்ணத்தை இனியும் உங்களிடம் கூறாமலிருக்க முடியாது. வாழ்க்கைப் பயணத்தில் என் துணையாக உங்களோடு இணைந்து இறுதிவரை வாழ விரும்புகிறேன்.”
அவள் எதிர்பார்த்த ஒன்றுதான்? எனினும் அவன் கேட்டபோது அவளது கண்கள் பனித்தன.

ச. முருகானந்தன் 199
“பதில் எதுவாக இருந்தாலும் சொல்லலாம். உங்கள் மன எண்ணங்களுக்கு மதிப்புக் கொடுப்பேன். இது வெறும் விண்ணப்பம்தான். ஏற்பதும், மறுப்பதும் உங்கள் கையில்தான். என்னை பிடிக்கவில்லையா?”
அவள் அவசரமாகத் தலையாட்டினாள்.
“எந்தப் பெண்ணுக்குத்தான் உங்களைப் பிடிக்காது? சமுதாய விதிகளின் தாக்கங்களைத் தெரிந்திருந்ததால், ஆரம்பத்தில் எனக்கு உங்களைக் காதலிக்கும் எண்ணம் வரவில்லை. சாதி என்னும் சாத்தான் என மனதிலும் பூச்சாண்டி காட்டிக் கொண்டுதான் இருந்தது. உங்களுடன் பழகியபோது, உங்கள் எளிமை, ஆற்றல், சாந்தமான குணம், பிறரை மதிக்கும் மனப்பாங்கு, ஆண்மை எல்லாமே எனக்குப் பிடித்துவிட்டன. நானும் என் மனதை ஏற்கெனவே உங்ககளிடம் இழந்துவிட்டேன்.”
அவளது வார்த்தைகள் தந்த இனிமையில் அந்தக்கணம் சொர்க்கம் காலடியில் தெரிந்தது. அவன் பூரிப்பில் ஒரு கணம் உலகையே மறந்தான்.
“கிருபா முதலில் நான் உங்கள் அழகால் கவரப்பட்டேன். பழகியபோது உங்கள் இயல்பால், பண்பால், அன்பால் கவரப்பட்டேன். ஆனாலும் எமக்கிடையே இருந்த சாதி பேதங்களின் தாழ்வு சிக்கலால் மனதில் தோன்றியதைச் சொல்ல முடியாமல் தவித்தேன். இப்போது எனக்கு எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறது தெரியுடா?”
ஆனந்தனின் வார்த்தைகளில் 966it பிறவிப்பயனை அடைந்துவிட்டதான மகிழ்வில்

Page 108
200 இனி வானம் வசப்படும்
திழைத்தாள். எனினும் சந்தோசம் நீடிக்க முடியாதபடி தடைகள் ஏற்பட்டன.
ஆனந்தன் வறிய குடும்பத்தவன், சாதியிலும் மாறுபட்டவன் என்பதையெல்லாம் புறம் தள்ளிவிட்டு அவள் மனதில் காதல் கனிந்தபோது, அதற்கான எதிர்ப்பு அலைகளும் வீறு கொண்டெழ அவளது காதலின் வேகமும் ஆர்முடுகலடைந்தது.
வீட்டில் விடயம் கசிந்த பின்னர் இப்போதெல்லாம் கிருபா, தனது மனப்பரப்பில் ஒரு கோடையின் வெம்மை இறுகத் தொடங்கியதையும், இடையிடையே தென்றலாக வந்து வீசும் இனிய காதல் நினைவுகள் மனதில் கோலமிட்டு அவ்வெம்மையைத் தணிப்பதையும் உணர்ந்தாள்.
சாண் பிள்ளையானாலும் ஆண்பிள்ளை என்பதால், ஆனந்தனின் வீட்டிலும் அப்படியொன்றும் ஆதரவு அலை வீசவில்லை. எமது குடும்பம் முன்னேற வேண்டுமானால் தமது உறவில்தான் செய்யவேணடும் என அவனது அப்பா தனது நியாயத்தை எடுத்துரைத்தார். இந்தக் காதலின் எதிர்காலம் என்னவாகப் போகிறதோ என்று மனது சஞ்சலப்பட்டுக்கொண்டே இருந்தது. திக்குத் தெரியாத காட்டில் விடப்பட்ட சிறு குழந்தை போல அவள், என்ன செய்வதென்று தெரியாமல் தவித்தாள்.
இதற்கிடையில் பெற்றோர் அவளுக்கு மாப்பிள்ளை பார்க்கத் தொடங்கவே அவள் முழுவதுமாய் உடைய ஆரம்பித்தாள். மேலும் அவள் விரும்பியவனைக் கைப்பிடிக்கவிடாமல் வீட்டில் அவளுக்கு பல உபதேசங்கள் இலவசமாக வாரி வழங்கப்பட்டன. அவளது உறுதியைக்

ச. முருகானந்தன் 201
கண்ணுற்றதும், மிரட்டல்கள், அச்சுறுத்தல்கள் என்று அவள் மனதை உடைய வைத்தார்கள்.
“படிச்சாப்போல என்ன? அவனை இன்னார் என்று அறிந்த பின்னுமா மனம் வைத்தாய்? எங்கட குடும்பத்திற்கும் அவங்கட குடும்பத்திற்கும் ஏணி வைச்சாலும் எட்டாது. நாக்ைகு எந்த முகத்தோட வாழப்போறாய்? உன்னை நடுத்தெருவில் விட்டுட்டுத்தான் போவான்? இப்ப நாங்கள் பேசுற பகுதி நல்ல இடம். நல்ல உத்தியோகம், சம்பளம், வீட்டிலும் பொறுப்பு இல்லை” அம்மா அடுக்கிக்கொண்டே போனாள்.
“தாயக விடுதலைக்குப் போராடுகிற இந்தக் கால கட்டத்தில் கூட எங்களுக்கிடையில் சின்னன் பெரிசு பார்க்கிறது வேடிக்கைதானம்மா. அவருடைய படிப்புக்கு சொந்தத்திலேயே நான் நீ என்று போட்டி போடுகினம். அவருக்குக் கிடைக்க இருக்கிற பெரிய சீதனத்தை எல்லாம் உதறித் தள்ளிவிட்டு காதலிச்சவளையே கைபிடிக்க வேணும் என்று நினைக்கிற பெரிய மனசு அவருக்கு.” கிருபாவும் தனது பக்க வாதத்தை முன் வைத்தாள்.
அவளது பேச்சுக்கள் வீட்டில் எடுபடவில்லை. பிடித்த முயலுக்கு மூன்று கால் என்று நிராகரித்தனர்.
“அம்மா, மனசைப் புரிஞ்ச ஒருவர்கூட வாழுற வாழ்க்கைக்கு நிகராக வேற எதுவும் வராதம்மா’ கிருபா இறைஞ்சினான்.
‘நாங்க பேசுறவர் கூட நல்ல வர்தான். உன்னுடைய மனசைப் புரிஞ்சு நடக்கக் கூடியவர் என்று

Page 109
202 இனி வானம் வசப்படும்
நம்பு பிள்ளை, எங்களையும் மீறி நீ வேற ஏதாவது முடிவு எடுத்தால், எங்களை உயிரோடை காணமாட்டாய்” காலம் காலமாகத் தொடரும் ஆயுதத்தையே அம்மாவும் பிரயோகித்தாள்.
கிருபாவுக்கு ஒரே குழப்பமாக இருந்தது. இப்படித்தான் முடிவு இருக்கப் போகிறது என்று தெரிந்துவிட்டால்கூட, கழும் இறுக்கங்களிலிருந்து ஒரு சுதாகரிப்பு செய்து கொள்ளமுடியும் என்று தோன்றியது. வாழ்க்கையில் எதிர்பாராத சம்பவங்கள் திருப்புமுனையாக மாறி மனித மனசை எப்படி எல்லாமோ மாற்றிவிடுவதுண்டு. மனிதன் நினைப்பதெல்லாம் இலகுவில் நிறைவேறி விடுவதில்லைதானே?
கிருபா ஆனந்தனுக்கு நிலமையை விளக்கி கடிதம் வரைந்தாள். எல்லாக் கட்டுக்களையும் உடைத்துக்கொண்டு வெளியேறிட ஊக்கமளித்த அவனது பதில் கடிதம் வந்தபோது உற்சாகத்தில் அவளது மனது குதூகலித்தது. கடிதத்தைக் கைகள் தொட்டபோது அவனையே தழுவியது போன்ற ஒரு சிலிர்ப்பு அவள் உடலிலும், உள்ளத்திலும் மின்னலைகளாய்ப் பாய்ந்தது.
வாழ்வின் வசந்தம் இனி அவனது திசையில்தான் என்ற உணர்வோடு, எப்படியும் அவனை ஒருமுறை கண்டு தீர்க்கமாக உரையாட வேண்டும் என எண்ணினாள். எடுத்திருக்கும் முடிவானது அவசரமாய் ஒரு தீர்மானத்திற்கு வரக்கூடிய விசயமும் இல்லைதான். நிர்ணயம் செய்வதாய் மட்டுமல்லாமல், பல பரிமாணங்களைக் கொண்டதாய் உணர்ந்தாள்.

ச. முருகானந்தன் 203
நினைக்க நினைக்க விசித்திரங்களாய் பலவித எண்ணங்கள் தோன்றிக் கொண்டிருந்தன. எனினும் அவை நிஜங்கள் என்பதால் ஆனந்தனுடன் கலந்தாலோசித்து ஒரு உசிதமான முடிவை எடுக்கவேண்டும் என மனது உந்தித் தள்ளியது.
மனதில் நிகழ்ந்த போராட்டத்தை எவருடனும் பகிர்ந்து கொள்ள முடியாது அடக்கி வைத்திருந்த நெஞ்சின் வலிகள் குமுறி எழுந்தபோது அவனைச் சந்திக்கும் முயற்சியில் இறங்கி, அதில் இரண்டு நாட்களுக்கு முன்னர் வெற்றியும் கண்டாள்.
கிருபாவும் ஆனந்தனும் பலதரப்பட்ட பிரச்சினைகள் பற்றி எதிர்வுகூறி, ஆராய்ந்து அலசியபோது, அவளது வலிகள் அவனதும் ஆயின. எடுக்கப்போகும் முடிவினால் அவளது குடும்பத்திலும், அவனது குடும்பத்திலும் ஏற்படப்போகின்ற பாதிப்புகளும் தாக்கங்களும் எவ்வாறானவையாக இருக்கக்கூடும் என அவர்களது புத்திஜீவி மனது அசைபோட்டது. ஒரு குடும்பச் சிதைவினைத் தடுக்கும் அம்சங்களாக தம் உயர்வுக்காக ஆனந்தனை முற்று முழுதாக நம்பியிருக்கும் அவனது வறிய பெற்றோர் சகோதரங்களும், கிருபாவின் வீட்டில் இந்த முடிவினால், பின்நாளில் பாதிக்கப்படப்போகின்ற சகோதரிகளின் திருமணமும், குடும்ப கெளரவமும் இவர்களது இணையும் முடிவை, புறமுதுகு காட்டி சீர் குலைக்க முயன்றதெனினும் இந்தச் சமூகம் வகுத்திருக்கும் எந்தப் பாகுபாட்டையும், கட்டுப்பாட்டையும் எடுத்தெறிந்து, இரு தமிழ் உள்ளங்ஸ் ஒன்று சேரும் நோக்கில் சிந்திக்கத் தொடங்கின.

Page 110
204 இனி வானம் வசப்படும்
“என்னதான் முடிவு செய்யலாம்?’ அவள் அவனுடைய பக்கம் பந்தை வீசினாள். இது மாதிரியான ஏதோ ஒரு பொறிக்குள் இப்பிரச்சினை தலையைக் கொடுத்துவிட்டுத் திணறும் என்பது முதலிலேயே எதிர்பார்த்ததுதான். இம்மாதிரியான அசாதாரணமான கணங்களை உடைக்கவல்ல ஒரு பதிவேனும் தன்னிடம் உறுதியாய் இல்லாததை எண்ணிக் கவலையுற்றான். கடந்த இரவு அம்மாவின் கண்ணில் இவன் இதயம் கரைந்து கூழாகிப் போயிருப்பதை இவள் தெரிந்திருக்க நியாயமில்லைதான். கடிதமூலம் பதிலளித்த போதிருந்த வேகம் அமர் முடுகலாகிவிட்டதனால் எழுதிய அத்தனை வார்த்தைகளும் ஏதோ ஒரு கணத்தில் செத்துப் போய்விட்ட பிரமை அவனுள் உண்டாகியது.
இப்போதுதான் கிருபாவுக்கும் ஒரு விடயம் உறைந்தது. தன்னைப்போலவே ஆனந்தனும் பெரும் குழப்பத்தில் இருப்பதாகப்பட்டது. நம்பிக்கை ஒளிர்ந்த முகத்தின் பூச்சுக்களும் மெது மெதுவாக உதிர்ந்து விழுவதாக அவளுக்குட்பட்டது. எனினும் அவனது மெளனம் மரணித்தது “என்கூட ஓடி வாருங்கள் என்று கேட்க நினைத்திருக்கவில்லை. உங்கள் பெற்றோரின் சம்மதத்துடன் திருமணம் செய்யத்தான் விரும்பினேன் கிருபா. ஆனால், உங்கள் பெற்றோர்கள் என்ன சொன்னார்கள்? சாதி குறைந்தவன் என்றார்கள் இல்லையா? அவர்களிலும் தவறில்லை. சமூக விதிகளும் அவர்களும் பயந்தவர்கள்தானே?”
“இப்போது என்னதான் சொல்கிறீர்கள்?’ கிருபா படபடப்புடன் கேட்டாள். தொடர்ந்து நீண்ட நேர பரஸ்பர

ச. முருகானந்தன் 205
உரையாடல்களின் பின்னர் அவன் தீர்க்கமாகச் சொன்னான். “கிருபா கவலைப்படாதீர்கள். எத்தனை தடங்கல் வந்தாலும் நம்முடைய காதலை யாராலும் அழிக்க முடியாது. நாளை மறுதினம் ஊரைவிட்டே போய், என் நண்பன் திருச்செல்வத்தின் உதவியுடன் திருமணம் செய்வோம்.”
இப்போது மறுபடி அவள் தயங்கினாள். ‘என்னவோ ரொம்பப் பயமாக இருக்கு இரு பகுதியினரினதும் உடன்பாடு இல்லாமல் நாம் ஓடிப் போய் பல பிரச்சினைகளை எதிர்கொள்வதா?’ மீண்டும் தொடங்கிய இடத்திற்கே கிருபா வந்தபோது அவன் சினப்புற்றான்.
“இங்க பாருங்க கிருபா நான் உங்களைக் கட்டாயப்படுத்துவதாக நினைக்காதீங்க. ஆனால், ஒரு முடிவை எடுத்தால் அதிலிருந்து பின் வாங்குவதில் அர்த்தமில்லை. நீங்களும் குழம்பி, என்னையும் போட்டுக் குழப்புகிறீர்கள்.”
அவனது தைரியமூட்டலில் அவள் இப்போது திடப்பட்டாள் “சரி ஆனந்தன், நீங்கள் தான் எனக்கு எல்லாம். உங்கள் முடிவை நானும் ஏற்றுக் கொள்கிறேன். நாளை மறு தினம் இரவு பத்தரை மணிக்கு கோயிலுக்கு வருவேன்.” இப்போது அவள் மனதில் தெளிவு விடைபெற்றார்கள்.
எடுத்த முடிவை நிறைவேற்றவே இன்றைய பிரயத்தனம். இப்போது அவள் புறப்படும் எண்ணத்தில் தெளிவாக இருக்கிறாள்.

Page 111
206 இனி வானம் வசப்படும்
அவள் எதிர்பார்த்த நேரம் வந்துவிட்டது. அம்மா படுத்துவிட்டாள். அப்பாவிடமிருந்தும் மெல்லிய குறட்டைச் சத்தம் கேட்கிறது.
நேரம் கடந்துவிட்டது. ‘கெதியில் போக வேண்டும் ஆனந்தன் காத்துக் கொண்டிருப்பார், பாவம்’
மெதுவாக எழுந்தாள் பையை எடுத்து தோளில் மாட்டினாள். மேசையிலே இருந்த அவளது ஆல்பம் கண்ணில்பட்டது. பைக்குள் எடுத்து வைக்க வேண்டுமென்று நினைத்தவளுக்கு ஒருமுறை திறந்து பார்க்கவேண்டும் போலிருந்தது.
புரட்டினாள். அவளது முதலாவது பிறந்த தினத்திற்கு எடுத்த படம். குட்டிப் பாப்பாவாக அவள் அவளைக் கொஞ்சியபடி இருபுறமும் அம்மாவும் அப்பாவும் கண்கள் பனிக்கின்றன. தயக்கத்துடன் கட்டிலில் அமர்ந்து உற்றுப் பார்க்கையில், பனித்த கண்கள் ஊற்றெடுக்க ஆரம்பித்தன.
வரவர, புறப்படும் எண்ணத்தின் அடர்த்தி குறைவதை உணர்ந்தாள். அந்தத் தீவிரக் கணத்தின் அதிர்ச்சியைத் தாங்கிக் கொள்ள முடியாதவளாக, குவிந்த அப்புள்ளியிலிருந்து விலகி கண்களை மூடி கட்டிலில் சாய்ந்தாள்.
மார்பிலே விரித்தபடி ஆல்பம் ஏற்கனவே எப்பவோ தீர்மானிக்கப்பட்டபடிதான் வாழ்வு நகரும் என நினைத்தாள். நினைவுகள் அறுந்து நித்திராதேவி தழுவ, கனவுகள் நிறைந்த தூக்கமும் விழிப்புமாய் விடிகிறது.

ச. முருகானந்தன் 207 அவனை ஏமாற்றிவிட்ட அந்தர மனநிலையில் படுக்கையில் கிருபா தவிக்கும் அதே நேரம், ஆனந்தனும் தனது வீட்டில் படுக்கையிலிருந்து அதே போன்ற மன நிலையில் தவித்துக் கொண்டிருந்தான்.
“இரவு நான் போராடித்தால் கிருபா ஏமாற்றத்துடன் மனமுடைந்து போயிருப்பாள். நான் கோழை.

Page 112
208
படிப்பை முடித்து, உத்தியோகம் கிடைத்த பின் இப்போது சில நாட்களாகத்தான் கொஞ்சம் ஆறுதலாக இருக்க முடிந்தது. கொஞ்சம் நாட்களுக்கு நண்பர்களோடு சேர்ந்து ஜாலியாகக் கும்மாளம் அடிக்கலாம் என்றால் அதற்கிடையில் வீட்டில் கலியானப் பேச்சை ஆரம்பித்துவிட்டார்கள்.
கரும்பு தின்னக் கைகூலியா என்று நீங்கள் கேட்பது என் காதிலும் கேட்கிறது. அவலை நினைத்து அவளைக் கைப்பிடித்து, உரலை இடித்துக் கொண்டிருக்கும்
பலரைக் கண்ட அனுபவம். ஏண்டா கலியாணம் பண்ணிக் கொண்டோம் என்று சலித்துக் கொள்பவர்கள்தான் அதிகம். மேலும் கலியாண
விடயத்தில் எனக்குப் பத்தாம் பசலித்தனங்களில் நம்பிக்கையில்லை. மச்சான், மச்சாள் இப்படி குண்டுச்
 
 

ஆனே நூலகப் பிரிவு . ത= '" ச. முருகானநதன .o 209
சட்டிக்குள் சுற்றிக் கொண்டிருப்பதிலும் எனக்கு விருப்பமில்லை.
எனக்கு ஊரிலே மச்சாள்களுக்கு குறைவில்லை. அவர்களிடமும் படிப்பு, பணம், அழகு, குணம் எதற்கும் குறைவில்லை. குறை, நான் தேடும் அபார அழகு ஒன்றுதான். “அழகு ராணியைத் தேடுகிறாயே, நீ மட்டும் என்ன மன்மதனா? நீங்கள் கேட்கலாம்.
சாண் பிள்ளையானாலும் நான் ஆண்பிள்ளை. படிப்பு இருக்கிறது. பதவி இருக்கிறது. நல்ல குணமான பையன் என்ற பெயர் இருக்கிறது. இதற்கு மேலாக ஓர் ஆண் பிள்ளைக்கு வேறென்ன வேண்டும்? நான் மன்மதனில்லாவிட்டாலும் ரதியைத் தேடலாம். இது ஆணாதிக்க சமூகம் அல்லவா?
சின்ன மாமாவின் இரண்டு பெண்கள், பெரிய மாமாவின் மூன்று பெண்ககள், ஆசை மாமாவின் ஒரே பெண். இன்னும் தூரத்து உறவு மச்சாள்கள் என எல்லோரையும் எனக்கு கலியாணம் பேசிக்களைத்துப் போய்விட்டார்கள். உறவு விட்டுப்போகக் கூடாது என்பது அம்மாவின் விருப்பம். தனது வழி உறவினரில் செய்யவேண்டும் என்பது அப்பாவின் விருப்பம். மாப்பிள்ளையான என் மன விருப்பத்தைப் பற்றி யாருக்கும் அக்கறை இல்லை.
எல்லோரையும் பேசிக் களைத்த அம்மா இப்போது கண்டியிலுள்ள மாமாவின் மகள் தேவியைப் பேசுகிறார். தேவியைச் சின்னவயதில் கண்ட ஞாபகம். யுத்த பூமிக்கு நீண்ட வருடங்களாக அவர்கள் வரவில்லை. இப்போது

Page 113
210 இனி வானம் வசப்படும்
பல் வைத்தியத்துறைக்கு படித்து முடித்து பரீட்சை எழுதிவிட்டு இருக்கிறாளாம். சின்ன வயதில் பார்த்த நினைவை வைத்துப் பார்க்கையில் அப்படியொன்றும் எனது அபிலாசையை நிறைவு செய்யக்கூடிய ரதியாகத் தேவி இருக்கமாட்டாள் என்றே தோன்றுகிறது. எனினும் தங்கை சகுந்தலா அண்மையில் கண்டி சென்று வந்தவள். “அவளுடைய வடிவம், சுறுசுறுப்பும் நீ மயங்கியே போவாய் அண்ணா’ என்று சான்றிதழ் தந்தாள். படம் கேட்டேன் சகுந்தலாவிடம் இருக்கவில்லை. தேவிக்கும் என்னைப்பற்றி நிறையக் கூறியிருப்பதாகச் சொன்னாள்.
போனவாரம் தேவியிடமிருந்து சகுந்தலாவுக்கு கடிதம் வந்திருந்தது. ‘பரீட்சை முடிவு வரும்வரை வீட்டிலிருக்கப் போர் அடிக்கிறது. நீ கேட்டுக்கொண்டபடி அடுத்த திங்கள் அல்லது செவ்வாய் ஊர் வருகிறேன்’ என்று எழுதியிருந்தாள்.
இன்று திங்கட்கிழமை.
பஸ்ஸில் வந்து ரவுனில் நிற்பதாகவும் யாராவது வந்து கூட்டி வரும்படியும் எழுதியிருந்தமையினால், வீட்டில் என்னைப் போகும்படி கூறினார்கள். எனக்கு விருப்பமில்லா விட்டாலும் மறுக்க முடியாமல் மோபைக்கை எடுத்துக்கொண்டு ரவுனுக்குச் சென்றேன்.
வரும்போது அவளை ஏற்றிக்கொண்டு வரவேண்டும். இதுவே வேறு பெண்ணாக, நான் கற்பனை பண்ணும் தேவதையாக இருக்கமானால் எவ்வளவு மகிழ்ச்சியாக இருந்திருக்கும்.

ச. முருகானந்தன் 211
நான் படிக்கும் காலத்தில் ஒரே படிப்பு, படிப்பு என்று இருந்து விட்டேன். அதனால்தான் கல்லூரி வாழ்விலும், பல்கலைக் கழகத்திலும் ரதிகளைக் கோட்டை விட்டுவிட்டேன். படிப்பு முடிந்தபின், கம்பஸ்ஸில் சந்தித்த காந்தா, தர்மா, இந்து, சந்திரா முதலான என் மனசுக்கு நிறைவைத் தந்த ரதிகளில் ஒருத்திக்கு என் விண்ணப்பத்தைக் கொடுக்கலாம் என்ற என் நினைப்பெல்லாம் கலைந்துபோன கனவுகளாகின. ஐயர் வரும்வரை பெளர்ணமி காத்திருக்குமா? சில மிகச் சாதாரண மன்மதர்களே முந்திக்கொண்டு விட்டார்கள்.
இனித்தான் நான் புதிதாக ஒரு ரதியைத் தேடிக் கொள்ளவேண்டும். வேலை கிடைத்த பின் இன்றுவரை எனது மனம் கவர்ந்த ரதி எவருமே தட்டுப்படவில்லை. கனவில் வந்து போகும் முகம் தெரியாத அவள் நனவில் வரமாட்டாளா என்று தினமும் வழியிலும், தெருவிலும் என் கண்கள் அலையும். ஓ. எல்லா ரதிகளையும் கோட்டை விட்டுவிட்டேனோ? கண்ணில் படவேயில்லை.
கண்டி மச்சாளுக்காகக் காத்து நின்றபோது பஸ் நிலையத்திலும் என் ரதிக்காக இதயம் அலைந்தது. கண்களை நாலாபுறமும் அலையவிட்டேன்.
தேகத்தில் மின்சாரம் பாய்ந்தது போன்ற சிலிர்ப்பு என் அலையும் கண்களைக் கட்டி நிறுத்தினாள் ஒரு ரதி
யார் இந்த தேவதை? நினைத்ததைச் சொல்லவில்லை. ஒ எவ்வளவு அழகான கண்கள். புருவ மயிர்கள் இருபுறமும் வில்லாகி, மூக்கின் மேல் சற்று இணைந்து.

Page 114
212 இனி வானம் வசப்படும்
ஓ அந்த மூக்கு மட்டும் என்னவாம்? அழகிய செம்மஞ்கள் நிறத்தில், கடித்துத் தின்னவேண்டும் போல் அந்த ஆப்பிள் கன்னங்கள்.
ஆயிரம் வாற் மின்சாரத்தைக் கண்களில் வீசியபடி அவளும் என்னை நோக்கினாள். முத்துப்போன்ற அவள் பற்கள் மின்னலடித்தன. அணிலேறவிட்ட நாய் போல அவளைப் பார்த்துக்கொண்டு இருப்பதை அவளும் கவனித்து விட்டாள்.
அவளோடு பேச்சுக் கொடுக்க விரும்பினேன். மனதை திடப்படுத்திக்கொண்டு ‘கண்டியிலிருந்து வாற பஸ் வரவில்லையா?’ என்று கேட்டேன். “அது அப்பொழுதே வந்துவிட்டதே.
‘என் மச்சான் தேவி. என்றபடி சுற்றுமுற்றும் பார்த்தேன். இல்லை, வரவில்லைபோலும்,
“உங்கட பெயர்.?’ அவள் அக்கறையோடு கேட்கையில் என் மனது பூரித்தது. ஆனந்தன். சிவில் இஞ்சினியராக வேக் பண்ணுறன்.” அவள் கேட்காத விபரங்களையும் கூறினேன். தொடர்ந்து, “நீங்கள் கலாதானே? உங்க தோழி கூப்பிட்டபோது தெரிந்துகொண்டேன்’ என்றேன். அவள் சிரித்தாள்.
என் மனது குதூகலித்தது. புதியதோர் உலகத்தில் சஞ்சரிப்பது போன்ற நிலை. இதற்கு முன் நான் எப்பொழுதுமே இந்த மாதிரி உணர்ந்ததில்லை. எந்தப் பெண்ணோடு பேசிய போதும் உணர்ந்ததில்லை! இப்போது மட்டும் ஏன் உள்ளம் குதூகலிக்கவேண்டும்? இதற்கு என்ன அர்த்தம் இருக்க முடியும்? என் கண்களால்

ச. முருகானந்தன் 213
நுழைந்த கலா என் இதயத்தில் புகுந்து அதை நிறைத்து 6LT6TIT?
ஒரு பெண் மீது அக்கறை காட்டிக் கதைக்கிறேன். அதுவும் மனதுக்குப் பிடித்துப் போய்விட்ட பெண் என்றதும் எனது வாலிப உள்ளம் துள்ளலாய்க் குதூகலிக்கிறது.
கண்டதும் காதல் என்றால் எந்தப் பெண்தான் ஏற்றுக் கொள்ளப்போகிறாள்? பருத்தித்துறை பஸ் என்று கேட்டாளே, இடம் சரி விலாசத்தை எப்படி அறிவது? மனது தவித்துத் தாளமிடுகிறது.
“நீங்கள் போகவில்லையா?. கேட்டாள்.
و
அவள்தான்
2
“மோபைக் நிற்கிறது.” என்றபடி அடுத்து எப்படி அணுகுவது என்று தெரியாமல் தடுமாறினேன் ‘நெல்லியடிக்குப் போகிறேன்.”
“மோபைக்கா?. அப்படியானால் நானும் வரலாம். பஸ் வரக் காணோம்” என்றாள். துணிச்சலான பெண்தான் என எண்ணிக் கொண்டேன். ‘ஓ. எனது தேவதையா கேட்டாள்? என்னிடமா கேட்டாள்?. கற்பனையில் அவள் பின்னே அமர்ந்திருக்க எனது மோபைக் பயணம் தொடர்கிறது.
“6T6öTGOT (Buuméâěšáổfess6it?... LuuJLDIT?”
“இல்லை நான் நெல்லியடி வரையிலதான்.”
“பரவாயில்லை. அதுவரை வருகிறேன்.” அவள் மீண்டும் சொன்னதும் என் மனதில் ஆயிரம் பூக்கள்

Page 115
214 இனி வானம் வசப்படும்
மலர்ந்தன. பயணம் தொடர்ந்தபோது பாதையிலுள்ள பள்ளங்களை விலக்கி வெகு நேர்த்தியாக செலுத்தினேன். அவளது மனதிலே மதிப்பான ஒரு இடத்தைப் பிடிக்க வேண்டும். பின் காதல் வானில் மிதக்கவேண்டும் என எண்ணிக் கொண்டிருந்த போது எதிர்பாராமல் ஒரு பள்ளத்தில் மோபைக் விழுந்து எழும்பவே அவள் என்னில் மோதி எனது தோள்களைப் பற்றிக் கொண்டாள். என்னைச் சுதாகரித்துக் கொண்டு ‘சொறி” என்று சொல்ல நினைத்து தாங்ஸ்’ என்று உளறிவைத்தேன். அவள் கலகலவென்று சிரித்தாள். நான் கலா கலா என்று மகிழ்ந்தேன். வராமல் விட்ட தேவிக்கும் நன்றி சொன்னேன்.
பள்ளத்தில் விழுந்த மோபைக் சில்லு காற்றுப் போய்விட்டது. சிறிது தூரம் உருட்டிச் சென்று ஒட்டக் கொடுத்தேன். ஓட்டும் வரை அவளோடு உரையாடி மனதை ஒட்டவைக்கும் வாய்ப்பினைத் தேடினேன். நான் எப்பொழுதும் இந்தப் பாடத்தில் கொஞ்சம் வீக்தான். நீ சரியான ரியூப் லைற்’ என்று நண்பன் சிவம் அடிக்கடி கூறுவான். எங்கே தொடங்குவது. எப்படி தொடர்வது என்ற கலைஞானம் கிடையாது.
ஆனால், கலா கொஞ்சம் கெட்டிக்காரியாக இருந்தாள். இதுவரையில் பல சந்தர்ப்பங்களில் தன் மன உணர்வைக் காட்டிவிட்டாள். அதனால்தான் எனக்கும் கொஞ்சம் தைரியம் ஏற்பட்டிருக்கிறது. நீங்க என்ன செய்யுறீங்க..? அவள் எங்கே வேலை செய்கிறாள் என்பதை நோக்குடன் கேட்டேன்.
“யோசித்துக் கொண்டிருக்கிறேன்.” என்றாள்.
“ஜோக் அடிக்கிறீங்களா?”

ச. முருகானந்தன் 215
“இல்லை இல்லை நேரம் போகிறதே. பொழுதும் சாய்ந்து கொண்டு வருகிறது. மழையும் வரும் போலிருக்கிறது.” கலா வானத்தை நோக்கினாள்.
“பரவாயில்லை. பஸ் வந்தால் ஏற்றி விடுகிறேன்.”
“நம்பி வந்தவனை நட்டாற்றில் விடுவேன் என்கிறீர்களா?. பஸ் வராவிட்டால்..?’ நான் திகைப்போடு அவளை நோக்கினேன். மனதில் குழப்பம். இதற்கிடையில் மோபைக் ரெடியாகிவிட்டது. பயணம் தொடர்ந்தது.
“இனி பஸ் வராது.” என்றாள் கலா,
இப்போது என் தோள்களில் அவளது கை. சில்லென்று குளிர்காற்று வீசியது. அவள் சற்று நெருங்கி பட்டும் படாமலும் அமர்ந்திருந்தான்.
நெல்லியடி வந்துவிட்டது. வீடும் நெருங்கிவிட்டது. இனி என்ன செய்யலாம்? என்று யோசித்தேன். நான் யோசித்துக் கொண்டிருக்கும் போதே அவள் சொன்னாள் “இனி போகேலாது மழையும் தொடங்கிவிட்டது. நான் உங்கள் வீட்டில் தங்கிவிட்டு காலையில்.” அவள் முடிக்கவில்லை. “ஐயையோ வேண்டாம்’ என்று குறுக்கிட்டேன்.
“ஏன் உங்கள் வீட்டில் அம்மா, சகோதரிகள் எவரும் இல்லையா?’ என்றாள். நான் தடுமாறிக் கொண்டிருந்தேன்.
பிரியும் நேரம் வந்துவிட்டது. “ஐலவ்யூ சொல்ல வேண்டும்’ தொண்டை வரை வந்தது. வெளியே

Page 116
216 இனி வானம் வசப்படும்
வரவில்லை. அவள் முந்திவிட்டாள். “ஆனந்த். ஐ லவ் யூ.’ என்றாள். என் இதயத்திலும் புது வெள்ளம் பெருக்கெடுத்தது. “ஐ லவ் யூ, கலா.’ என்றேன். வானத்திலிருந்து ஆயிரம் மலர்கள் அபிசேகம் செய்தன.
கலா. இப்ப வீட்டிற்குப் போவது நல்லதல்ல. நான் மழைக்கோட் எடுத்து வருகிறேன். வாசலில் நின்று கொள்ளுங்க” வீட்டு வாசலில் கலாவை நிறுத்திவிட்டு உள்ளே நுழைந்தேன்.
“ஒரு ரீகூடக் கிடையாது?. குளிருது ஆனந்த்.”
“ஐயோ. எங்க அம்மாவைப் பற்றி உங்களுக்குத் தெரியாது நில்லுங்க..” என்று வலியுறுத்திக் கூறிவிட்டு வீட்டிற்குள் சென்றேன்.
“நல்லவேளை. மழை தொடங்கிறதுக்கிடையில் வந்துவிட்டாய். ஏன், தேவி எங்கே..? வரவில்லையா?” ஆர்வமாக கேட்டாள் அம்மா.
“தேவி வரவில்லை. நாளைக்குதான் வருவாள் போல.’ என்றதும் அம்மாவுக்கும் சகுந்தலாவுக்கும் ஏமாற்றமாகிப் போய்விட்டது. இப்போது இவர்களை வெட்டிவிட்டு, மழைகோட் எடுத்துக் கொண்டு போகவேண்டும். எப்படி சமாளிக்கலாம்? மனது குழம்பித் தவித்தது. வெளியில் மழை பொழிய ஆரம்பித்தது.
இதற்கிடையில் “கோலிங் பெல் அடித்தது. சகுந்தலா கதவைத் திறந்தாள். வாசலை நோக்கினேன். தெப்பமாக நனைந்தபடி என் தேவதை கலா; "ஐயோ இவள் ஏன் உள்ளே வந்தாள்?

ச. முருகானந்தன் 217
“வாதேவி.’ என்று அவளது கைகளைப் பற்றியபடி சகுந்தலா உள்ளே வந்தாள்.
“இவ. நீங்க?” தடுமாறினேன்.
“தேவி. கலாதேவி. எங்கட கண்டி மச்சாள்.” என சகுந்தலா அறிமுகப்படுத்தினாள்.
கலா அன்பாக என்னை நோக்கி கொடுப்புக்கள் சிரித்தபடி கண்ககளால் மன்னிப்புக் கோரினாள்.
“தலையைத் துவட்டு பிள்ளை. எப்படி வந்தனி.? இவன் உன்னை ஏற்றப் போய், இப்பதான் தனியே திரும்பினவன்” என்று அம்மா மருமகளை வாஞ்சையுடன் நோக்கினாள்.
*அண்ணா உனக்குக் கண்டி மச்சாளைப் பிடிச்சிருக்கா?’ என்று கேட்டாள் சகுந்தலா.
“அவருக்கு எந்த மச்சாளையும் பிடிக்காதாம். வெளியில “லவ் பண்ணித்தான் முடிப்பாராம். இன்னைக்கு பஸ் நிலையத்தில் ஒரு பெண்ணைக் கண்டாராம். அவளைத்தான் கலியாணம் செய்வாராம். செய்து வையுங்க..” என்றாள் கலாதேவி.
“ஆரடா அது” அம்மா ஆவேசமாகக் குறுக்கிட்டாள். ‘கலா. கலாதேவி. என்னுடைய கண்டி மச்சாள்’ என்றேன்.
எல்லோர் முகங்ககளும் மலர்ந்தன.

Page 117
218
lெயல் வேலைகள் தொடங்கிய பின் நடேசலிங்கம் களத்து மேடும், வீடும் என்று அலைந்தான். ஒவ்வொரு நாளும் வயல் வரப்புகளில் நடந்து பார்வையிடாவிட்டால் அவனுக்குப் பத்தியப்படாது.
மழையிலும், பனியிலும் அவன் ஓடியோடி உழைப்பதைப் பார்த்த விஜயகுமாரிக்கு கணவன் மீது இரக்கமாக இருந்தது. கடுங்குளிரில் காவல் கொட்டிலில், யானையிடமிருந்தும் பன்றியிடமிருந்தும் பயிர்களைக் காப்பதற்காக கண்ணோடு கண் மூடாமல் படுத்துவிட்டு, காலையில் சிறிது நேரம் வயலில் வேலை செய்த பின்னர்தான் வருவான்.
 
 

ச. முருகானந்தன் 219
மூன்றேக்கர் வயல் நிலம் அவனது தந்தையால் அவனுக்கு வழங்கப்பட்டது. தன் விருப்பத்திற்கு மாறாக, தான் விரும்பியவளுடன் மகன் ஓடிப்போய்விட்டபோது அவர் அவன் மீது முதலில் சீற்றம் கொண்டது என்னவோ உண்மைதான். எனினும் காலம் மனதைக் கரையவைக்க, கோபம் தணித்து அவனையும், மருமகளையும் அழைத்து மூன்னேற்றக்கர் வயல்காணியையும் வழங்கி அவர்களை வாழ வழிகாட்டினார்.
நடேசலிங்கம் சிறுவயதிலிருந்தே நல்ல உழைப்பாளி. தந்தையாருடன் வயற்காட்டில் உழைத்த அனுபவம், அவனை ஒரு நல்ல விவசாயியாக்கியிருந்தது. கடந்த வருடம் மழை பொய்த்து விட்டதால் அதிக லாபமீட்ட முடியாமற் போய்விட்டது. இம்முறை பிரயாசையுடன் உழைக்கிறான். வரும் லாபத்தில் மனைவியின் காதைக் கழுத்தை அலங்கரிக்க ஆசை கொண்டிருந்தான்.
இதற்கிடையில் விஜயா வாயும் வயிறுமாகிவிட்டதால் அவன் மகிழ்வில் பூரித்தான். “உன்னைப்போல வடிவான ஒரு பொம்பிளைப்பிள்ளைதான் பெத்துத் தரவேணும்.”
"எனக்கெண்டா உங்களைப் போல ஒரு ஆம்பிளைப்பிள்ளைதான் வேணும்.”
பிறக்கப்போகும் தலைப்பிள்ளையைப் பற்றி இருவரும் கற்பனை பண்ணி உறவாடி மகிழ்வார்கள்.
"அறுவடைக்கு முதல் பெறுகாலம் வருகுது.
கையிலை காசுப் புழக்கமும் இல்லை. அதுதான் எனக்கு யோசனை. போனபோகம் சரி வாராததாலை நாலிடத்திலை

Page 118
220 இனி வானம் வசப்படும்
கடன்பட வேண்டி வந்திட்டுது. இந்த முறை விதைப்புக்கும் கடன்பட்டது. அதுதான் யோசனை.”
“ஒண்டுக்கும் யோசிக்காதையுங்கோ. இராசமணயக்காவிடம் சீட்டுப் பிடிச்சிருக்கிறன். பெறுவுக்கு எப்படியும் வேணுமெண்டு சொல்லி வைச்சிருக்கிறன்.” அவள் கணவனுக்கு ஆறுதல் வார்த்தை கூறினாள்.
“கடவுளே! சுகமாகப் பிறந்திடவேணும். அம்மாளாச்சிக்கு நேர்த்தி வைச்சிருக்கிறன். கிளினிக்குக்கு ஒழுங்காகப் போ பிள்ளை. மிஸி அவை என்ன சொல்லுகினம்?”
“நல்ல சத்தான சாப்பிடட்டாம். இரத்தம் காணாதாம். ஒவ்வொரு நாளும் கீரைக்கறி சாப்பிடச் சொன்னவை. குளிசையாளும் தந்தவை.”
“ஒழுங்காகப் போடுறியே விஜயா..?” “ஓம் அத்தான்.” போடுறன. முட்டை சாப்பிடச் சொன்னவை. பாலும் நல்லதாம்.”
“எனக்குக் கொஞ்சநாளைக்கு முட்டை வேண்டாம். எங்கட கோழி இடுகிற முட்டையை ஒழுங்காக நீ சாப்பிடு. கோடிபபக்கம் அகத்தி மரம் நிக்குது. கறி முருங்கையிலையும் இடைக்கிடை சாப்பிடலாம்.”
“கஷ்டப்பட்டு வேலை செயயிற உங்களுக்கில்லாமல்
நான் முட்டையைச் சாப்பிடட்டே?”
“பிள்ளைத்தாய்ச்சியாக இருக்கிறபோது புருஷனைப் பட்டினி போட்டாலும் பரவாயில்லை. வயிறு நிறையச்சத்தான

ச. முருகானந்தன் 221
சாப்பாடு சாப்பிடவேணும். பரணிலை மூடு பெட்டியுக்கை பிணாட்டு இருக்கு. சாப்பிடு. காட்டுப்பக்கம் போனால் தேன்வதை கிடைக்கும். வயல் வேலை குறையட்டும். ஒரு நாளைக்குக் காட்டுக்குப் போகவேணும். காவல் கொட்டிலிலை இருக்கேக்கை மான், பாண்டி எண்டு ஏதாவது அகப்படும். வெடிவைச்சால் வத்தல் போட்டு வைச்சுச் சாப்பிடலாம்” என்றாள்.
கணவனின் அன்பில் அவள் மனம் பூரித்தாள். அவன் அவளை ஒரு கிளிக்குஞ்சுபோல பக்குவமாக வைத்துப் பார்க்கையில், இவரைக் கணவனாக அடைய என்ன தவம் செய்தேனே என மன மகிழ்ந்தாள்.
காலையில் காவலால் வந்த லிங்கன், மருந்தடிக்கவேணும் என்று கூறிவிட்டு தேத்தண்ணியோடு போய்விட்டான். அவன் வர எப்படியும் பத்துப் பதினொரு மணியாகும். ஒரேயடியாக மத்தியானச் சாப்பாட்டைச் சமைத்து வைக்க வேண்டியதுதான் என நினைத்தபடி
F60LDu66lso RGBUILT6it 6figurt.
பானை சட்டிகளைக் கழுவி எடுத்து வந்து வைத்துவிட்டு நிமிரும்போது வயிற்றில் ஒரு இனம் புரியாத வலி ஏற்பட்டது. நாரிப் பக்கமாக உழைந்து, அடிவயிற்றை நோக்கி ஒருவித சூடு பரவித் துளாவி, வயிற்றில் தசைகளெல்லாம் ஒன்று சேர்ந்து முறுகி உள் வயிற்றில் இறுகி. இறுகி. அவள் “ஆ“ என்று வேதனையில் துடித்தாள்.
ஒரு நிமிடம்தான். இப்போது இறுக்கம் தளர்ந்தது. வேதனையிலிருந்து விடுபட்டு “அப்பாடா” என்று நிமிர்ந்தாள்.

Page 119
222 இனி வானம் வசப்படும்
மரை வத்தல் கறி என்றால் அவனுக்கு அலாதிப் பிரியம். போன மாதத்தில் ஒருநாள் இடியன் மணியத்தோடு சேர்ந்து வேட்டைக்குப் போனபோது பெரிய மரை ஒன்று சிக்கியிருந்தது. பங்கு இறைச்சி நிறையவே கிடைத்ததால், சமைத்தததது போக மிகுதியை கீலம் கீலமாக வெட்டி உப்புத்தூள் தடவி, வெயிலில் காயவைத்து முறுகிப் போனபின் அடுப்புப் புகட்டில் வைத்திருந்து அவ்வப்போது கொஞ்சம் கொஞ்சமாகக் காய்ச்சுவாள். இன்று அதில் ஒரு சொற்பம் எடுத்து சமைக்கும் நோக்குடன் தண்ணீரில் ஊறப் போட்டுவிட்டு, உலையை வைத்து அரிசியைத் துப்புரவாக்கி பானையில் கொதிக்கும் நீரினில் இட்டாள்.
முருங்கையிலைக் கீரையை நுள்ளி சுண்டலுக்குத் தயார் செய்து விட்டு ஊறப் போட்டிருந்த இறைச்சிக் கீலங்களை ஒவ்வொன்றாக எடுத்து ஒரு கனமான குற்றியினால் அடித்து மென்மையாக்கினான். பின்னர் வெளியே சென்று அரிவாளை எடுத்து மரத்தின் கீழிருந்து இறைச்சிக் கீலங்களை சிறு சிறு துண்டாக வெட்டினாள். அவள் முன்னே நாயொன்றும், பூனையொன்றும் நட்புரிமையோடு முகம் பார்த்துத் தவமிருந்தன. மரத்திலிருந்த அண்டங்காக்காவும் சமயம் பார்த்துத் துண்டொன்றைத் தூக்கிப் போகக் காத்திருந்தது.
வெட்டித் துண்டு போட்டு எழுந்த விஜயா மரத்திலிருந்த காகத்தை விரட்டியபடி குசினியுள் நுழைந்தாள். இப்போது மீண்டும் அந்த வயிற்று வலி. “ஆ. அம்மா...” என்று முனகினாள். இரண்டு வருடங்களுக்கு முன்னர் கிபீர் குண்டு வீச்சில் செத்துப்போன

ச. முருகானந்தன் 223
அம்மாவின் நினைப்பு வந்தது. இந்த வேளையில் அவளிருந்திருந்தால் எவ்வளவு ஆறுதலாக இருந்திருக்கும்
மீண்டும் உக்கிரமாய் வயிற்றில் ஏற்பட்ட வலியில் ஒரு கையை நிலத்தில் ஊன்றி, பின் சுவருடன் சாய்ந்து, கண்கள் பனிக்க, பல்லைக் கடித்துக் கொண்டிருக்க, அந்த வலி மெல்ல மெல்லத் தளர்ந்து கரைந்ததது.
இன்றைக்கு அட்டமி. நாள் கணக்குக்கு இரண்டு கிழமை இருந்தாலும், இரண்டு கிழமை முந்திப் பிறக்கலாம் என்று குடும்ப நல உத்தியோகத்தர் கிளினிக்கில் கூறியது அவளுக்கு ஞாபகத்திற்கு வந்தது.
இது பெறுக் குத்தாகத்தானிருக்க வேண்டும் என்று ஊகித்தபடி, பக்கத்து வீட்டு மீனாட்சிப் பாட்டியைக் கூப்பிட்டாள். வந்து பார்த்த பாட்டி “ஓம் பிள்ளை. ஆஸ்பத்திரிக்கு வெளிக்கிட வேணும். எங்கே லிங்கன், வயலுக்கையே? நான் பேரனட்டைச் சொல்லியனுப்பிறன். நீ ஆயத்தமாகு பிள்ளை” என்று புறப்பட்டாள்.
“ஆச்சி உன்னானக் குறை நினைக்காமல் இந்தக் கஞ்சியை ஒருக்கால் வடிச்சு விட்டுட்டுப் போறியெணை?” என்று கெஞ்சலோடு கேட்டாள்.
“அளவாகத் தண்ணிவிட்டு d 6ful விட்டிருக்கலாமே.” என்றபடி பாட்டி கஞ்சி வடித்தாள்.
பாட்டி போனதும், வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லவேண்டிய பொருட்களை ஒவ்வொன்றாக எடுத்தாள். சிறிய சட்டை, சவர்க்காரம், பவுடர், பேணி, சுடுதண்ணிப் போத்தல், கோப்பி, சீனி, கல்லக்காரம், பழந்துணி,

Page 120
224 இனி வானம் வசப்படும்
மாற்றுடுப்புகள் என தேவையான பொருட்கள் ஒவ்வொன்றையும் யோசித்து எடுத்து பழசாகிப் போயிருந்த பிரயாணப் பையில் அடுக்கினாள்.
சோறை இறக்கிவிட்டு அடுப்பிலிருந்த கறிக்கு முதல் பால்விட்டுத் துளாவினாள். மீண்டும் அந்த வலி! நேற்றிருந்த நாரியுளைவும், பிரசவத்திற்கான அறிகுறிதான் என்பது, தலைப்பிள்ளையாதலினால் இப்போதுதான் விஜயாவுக்குப் புரிந்தது.
இதற்கிடையில் வானம் இருண்டு கொண்டு வந்தது. மாரி மழை என்பது சொல்லாமல் கொள்ளாமல் வருவதுதானே, வானம் மின்னி, இடிஇடிக்க மழைத்துளி தெட்டம் தெட்டமாக விழ ஆரம்பித்தது. புயல் எழுந்தது போல் சுழல்காற்று குப்பை கூழங்களை வாரி இறைத்தபடி, பெருமரக் கிளைகளையும் ஆட்டி அசைத்து வீசியது. ‘இந்த நேரம் பார்த்து மழை வருகிறதே’ என்று அவள் பதறினாள்.
வயலுக்கு மருந்தடித்துக் கொண்டு நின்ற லிங்கனும் மழையைக் கண்டு மனம் பதகழித்தான். “மருந்து சுவற முன்னமே மழை கழுவப் போகுது. திடீரென்று கொட்டப் பார்க்குது. காலையிலிருந்து சிரமப்பட்டு அடித்ததெல்லாம் விளலுக்கிறைந்த நீராப்போகுதே!’ எவ்வளவு கஷ்டப்பட்டு, களைத்து வியர்த்து காலையிலிருந்து உழைத்தான். அருகிலே கிணறு கூட இல்லை. வாய்க்கால் நீரை வாளியில் சுமந்து வந்து பழைய சேலைத் துணியில் வடித்து, கிருமிநாசினியுடன் கலந்து, தெளிகருவியை முதுகில் தூக்கி, பட்டியைப் பொருத்தி, இதுவரையில் இரண்டேக்கர் பயிருக்கு மருந்தடித்துவிட்டான்.

ச. முருகானந்தன் 225
கார் மேகத்தை கண்டு சலிப்புற்று, கைகால் சோர வயல் வரப்பில் வந்து அவன் உட்கார்ந்த போதுதான், பாட்டியின் பேரன் அங்கு வந்து சேர்ந்தான்.
“அக்காவுக்கு வயிற்றுக்குத் தாம். ஆஸ்பத்திரிக்குப் போறதுக்கு உங்களை வரட்டாம்.” அவன் சொல்லி முடிப்பதற்குள் லிங்கன் விறுவிறு என்று எழுந்து விரைந்தான்.
அவன் வீட்டை அடைந்த போது அவள் வலியின் வேதனையில் துடித்துக் கொண்டிருந்தாள். அவனைக் கண்டதும் அவளது கண்கள் ஆறாய் பெருக ஆரம்பித்தது. “ஏன் இப்ப அழுகிறீர்..? நல்ல காரியத்துக்குப் போறபோது அபசகுனம் மாதிரி அழக்கூடாது.” அன்பும், கண்டிப்புமாக அவன் கூறியதும் அவள் கண்களைத் துடைத்துக்கொண்டாள்.
“நீங்க முதல்ல சாப்பிடுங்கோ. காலையிலிருந்து வெறுவயிறு.” என்று அவனை நோக்கினாள்.
“சாப்பாடு பிறகு வந்து பார்க்கலாம். மழை வரமுந்தி போகவேணும். எல்லாச் சாமானும் எடுத்திட்டீரோ?” என்று அன்போடு கேட்டான்.
ஆறு கிலோ மீற்றருக்குப் பால் இருக்கும் வைத்தியசாலைக்குப் போக ஒரு கார் பிடிக்க வசதி அவ்வூரில இல்லை. மழைக்காலத்தில் மாட்டு வண்டியிலும் அறுத்தோடி தாண்டிப் போக முடியாது. 약-26의 இயந்திரத்தில்தான் போகலாம். சங்கரப்பிள்ளை யண்ணையின் வீட்டிற்கு ஓடினான். அவரது உழவு இயந்திரம் காத்துப் போய் நின்றது.

Page 121
226 இனி வானம் வசப்படும்
பதற்றத்தோடு திரும்பி வந்த லிங்கன் மனைவி அடிக்கடி வேதனையில் துடிப்பதைப் பார்த்தான்.
‘இனி றக்ரருக்கு ஓடித் தேடச் சரிவராது. சயிக்கிளிலை இருப்பியே..?’ என்று மனைவியிடம் கேட்டான். அவள் சரியென்று தலையசைக்கவே கூரியரில் அவளை ஏற்றிக்கொண்டு தனது பழைய சயிக்கிளில் விரைந்தான்.
கடகட என்று ஒவ்வொரு உழக்கலுக்கும் சத்தம் எழுப்பியபடி மேடு பள்ளம் எல்லாம் விழுந்தெழும்பி சயிக்கிள் விரைந்தபோது மழையும் 'சோ' என்று பெய்யத் தொடங்கவே அவர்கள் இருவரும் தெப்பமாக நனைந்துவிட்டார்கள். வயற்புறம் என்பதால் ஒதுங்குவதற்கும் இடமின்றி அவள் பிரசவ வேதனையில் துடித்துக் கொண்டிருப்பதால் தங்கி நிற்கவும் நேரமின்றி விரைந்து சென்றனர்.
மழையும் விடாப்பிடியாகப் பெய்து கொண்டிருந்தது. விஜயாவுக்கு வலி நெருக்கமாக அடுத்தடுத்து வர ஆரம்பிக்கவே, அவள் சயிக்கிளில் இருக்கமுடியாமல் தவித்தாள். பொருளாதாரத் தடை அமுலில் இருந்ததனால் நீண்ட காலமாக சயிக்கிளையும் திருத்த முடியவில்லை. பாதையும் சில வருடங்களாக திருத்தப்படாமல் இருந்ததால் மிகவும் மோசமாக பழுதடைந்திருந்தது.
ஒரு பள்ளத்தில் விழுந்து எழுந்தபோது பின்ரயரில் ஒட்டை விழுந்து ‘புஸ்’ என்று காற்றுப் போய்விட்டது. காலால் பிறேக் போட்டு சயிக்கிளை நிறுத்தினான் லிங்கன். சயிக்கிளிலிருந்து இறங்கிய விஜயா தாங்க முடியாத பிரசவ

ச. முருகானந்தன் 227
வேதனையில் நாரியைப் பிடித்துக்கொண்டு அழுதாள். அவளால் நிற்க முடியவில்லை. கொட்டும் மழையில் வடிந்தோடும் வெள்ளத்தையும் பொருட்படுத்தாமல் தெருவோரம் உருண்டு புரண்டு துடிதுடிக்கவே, அவன் தவியாய்த் தவித்தான். ஏதாவது வாகனம் வராதா என்று நினைத்தான்.
அந்த வீதியில் வாகனப் போக்குவரத்து மிகக்குறைவு. இடைக்கிடை உழவு இயந்திரங்கள் போகும். எப்போதாவது போராளிகளின் வாகனங்கள் வந்து போவதுண்டு. “கடவுளே பொடியளின்ர வாகனம் ஏதுவம் வந்துதெண்டால் ஏத்திக்கொண்டு போவாங்கள்’ என்று அவன் நினைத்துக் கொண்டிருந்தபோதே, எதிர்த்திசையில் சர்வதேச வலிந்துதவு நிறுவனம் ஒன்றின் வாகனம் வந்து கொண்டிருப்பதைக் கண்டான். மனதிலெழுந்த நிம்மதிப் பெருமூச்சுடன் கடவுளைக் கண்டது போல மகிழ்ந்தான்.
வீதியில் நின்று கைகளைக் காட்டி வாகனத்தை நிறுத்த முயன்றான் லிங்கன். சற்றுத் தூரம் கடந்து சென்ற வாகனம் திடீரென்று பிறேக் போட்டு நின்றபோது அவனுக்கு நெஞ்சில் பாலை வார்த்தது போல் இருந்தது.
ஓடிச்சென்ற லிங்கன் நிலைமையை எடுத்துரைக்கவே வாகனத்தின் சாரதி, அருகிலிருந்த வெள்ளைக்காரனுக்கு அதை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துச் சொல்வதை ஆவலோடு பார்த்துக் கொண்டிருந்தான். சிறிது நேரம் நெற்றியைச் சுருக்கி யோசித்த வெள்ளையன், “நோ மான் டேற். யூ ஸ்ராட் மிஸ்ரர் விஜயன்’ என்று சாரதியிடம் கூறினான்.

Page 122
228 இனி வானம் வசப்படும்
“என்னவாம்?’ என்று மழையில் தோய்ந்தபடி நின்ற லிங்கன் சாரதியிடம் கேட்டான்.
“முடியாது என்று சொல்லுறார்’ என்றான் சாரதி. எனினும், தன் மேலதிகாரியின் நிலைப்பாடு பிடிக்காத விஜயன், வேதனையில் துடித்துக் கொண்டிருக்கும் விஜயாவைச் சுட்டிக்காட்டி, அவனுக்கு விளக்கமளித்துப் பரிந்துரைத்தான்.
வெள்ளைத் தலை இடமும், வலமுமாக ஆடித் தன் மறுப்பை மீண்டும் தெரிவித்தது. “நோ. சொறி.”
இப்போது சலிப்புற்ற சாரதி, தனது மேலாளரின் உத்தரவையும் மீறி வாகனத்தை விட்டு இறங்கினான். பின் கதவைத் திறந்து விஜயாவையும், லிங்கனையும் ஏறும்படி கூறினான்.
அவர்கள் ஏறியபோது வெள்ளையணுக்கு கோபம் தலைக்கு ஏறியது. ஆங்கிலத்தில் மிகக் கடுமையான வார்த்தைகளால் விஜயனைத் திட்டினான். எதையும் காதில் வாங்கிக் கொள்ளாத சாரதி விஜயன், வாகனத்தைத் திருப்பி வைத்தியசாலையை நோக்கி விரைந்தான்.
மேலதிகாரி தொடர்ந்து சத்தமிட்டபடி வந்தான். “ஐ டிஸ்மிஸ் யூ.”
எதையும் பொருட்படுத்தாமல் வைத்தியசாலையை அடைந்த விஜயன் அவர்களை இறக்கி வாட்டில் கொண்டுபோய் சேர்த்துவிட்டுத் திரும்பினான். அவன் திரும்பி வந்தபோது மேலதிகாரியின் முகம் கோபத்தால் சிவந்துபோய் இருந்தது.

ச. முருகானந்தன் 229
விஜயன், லிங்கனிடம் சொல்லிவிட்டு வாகனத்தில் ஏறிய போது, அவன் கையெடுத்துக் கும்பிட்டான். அவனது கண்கள் ஏனோ பனித்தன.
வாகனத்தை ஸ்ராட் செய்த போது வாட்டியிலிருந்து விஜயாவின் அலறலும், அதைத் தொடர்ந்து “குவா. குவா.’ என்ற குழந்தையின் முதல் அழுகையும் கேட்டது.
முகத்தில் புன்னகையுடன் கையசைத்து விடைபெற்ற விஜயனை எண்ணி லிங்கனின் மனம் பூரித்தது. இங்கேயும் சில மனிதர்கள் இருக்கிறார்கள் என்று எண்ணிய அதேவேளையில், பெருந்தொகை சம்பளம் எடுக்கும் அவனது வேலை இதனால் பறிபோகப் போகிறதே என்று லிங்கன் விஜயனுக்காக வருந்தினான்.
கூடவே சர்வதேச வலிந்துதவு நிறுவனங்களில் பணியாற்றுகின்ற சில மனிதாபிமானமற்றவர்களையும் மனதில் சபித்தான்.
‘என்ன பிள்ளை பிறந்திருக்கிறது? விஜயா எப்படி இருந்திருந்திறது? விஜ்ய்ா எப்படி இருக்கிறாள்’ என்ற எண்ணம் மனதில் ஏற்பட அவன் வாட்டுக்கு விரைந்தான். தாயும் சேயும் நலமாயிருப்பதைக் கண்டதும் மனம் பூரித்தது. கடவுளையும் விஜயனையும் நினைத்து வணங்கினான்.
அதே நேரம் மேலதிகாரியை அலுவலகத்தில் விட்டுவிட்டு, வாகனத்தையும் கொடுத்துவிட்டு வெளியேறிய விஜயனின் மனதில் கவலையையும் சீறிய திருப்தி இருந்தது.

Page 123
230 இனி வானம் வசப்படும்
கடந்த வருடம் இதே போன்ற மாரியில் தாமதித்து வைத்தியசாலைக்குச் செல்ல நேரிட்டதால், தாயும் சேயுமாக இறந்துவிட்ட தன் மனைவியையும் குழந்தையையும் இந்தக் கணத்தில் நினைத்தபோது விஜயனுக்கு நெஞ்சையடைத்தது.
இனி இப்படியான மரணங்கள் எங்கேயும் நிகழக்கூடாது என இறைவனை அவனது மனம் வேண்டிக் கொண்டது.
RZలో عع ته


Page 124


Page 125
இந்நூலாகிரியன
கொடிய யுத்த சூழ்நி வன்னிப்பிரதேசத்தில் மருத் அரும்பணியாற்றிக்கொண்டே உடல் நலனில் அக்கறை வந்ததுடன் 9تکH6( அவலங்களையும், உணர்வுச நேரடியாக கற்றுத் ே அவர்களைத் தனது படைட் கருப்பொருளாகவும் கொ உருவாக்கியவர் டாக்டர் ச. மு
யுத்த அவலங்களைய விசாரணைகளையும், இழப்புக | எதிர்கொண்டவர்.
தமிழ் ஈழத்தின் சிறந்த இனம்காணப்பட்ட இவர் சிறு அரசின் தேசிய சாகித்திய தரைமீன்கள் சிறுகதைத் ெ இவரது 'மீன் குஞ்சுகள் சிறுக பரிசு பெற்றது.
இன்று இந்த நாட்டி எழுதிவரும் எழுத்தாளர்களில் குறிப்பிடத்தக்கது.
 
 
 
 
 

ரப் பற்றி. a
லையில்
துவராக
மக்கள் செலுத்தி | Iர்களது ளையும் தர்ந்து,
புகளின் 謚 T ண் GB படைப் 1 ! Ꭶ5 60Ꭷ 61Ꭲ ருகானந்தன்.
பும், கெடுபிடிகளையும், ளையும் தன் வாழ்விலும்
சிறுகதை எழுத்தாளராக கதைக்கான இலங்கை
விருதினையும் தனது தாகுதிக்காக பெற்றவர். தை இலக்கிய சிந்தனைப்
ல் அதிகம் அதிகமாக இவரும் ஒருவர் என்பது
and