கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: இரவின் ராகங்கள்

Page 1


Page 2


Page 3

நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பிரைவேட் லிமிடெட், 41-மி, சிட்கே இண்டஸ்டிரியல் எஸ்டேட்,
சென்னை-600 098.糾 。
| 78 久ち○ ○○し

Page 4
முதற் பதிப்பு: 1987 (மல்லிகைப் பந்தல், யாழ்ப்பாணம்) இரண்டாம் பதிப்பு: நவம்பர், 1990 உரிமை பதிவு.
Code No. A 507
N , *
விலை: ரூ. 14.00
அச்சிட்டோர்:
பாவை பிரிண்டர்ஸ் பிரைவேட் லிமிடெட், சென்னை-600 014.
 
 

ஆசிரியரைப் பற்றி.
மலையகத்தை-நாவலப் பிட்டியைப் பிறப்பிடமாகக் கொண்ட நண்பர் ஆப்டீனின் சிறுகதைத் தொகுதி இதுவாகும். -
நண்பர் ஆப்டீனை இருபது ஆண்டுகளுக்கு முன்னர் நாவலப்பிட்டியில் ஒர் இலக்கியக் கூட்டத்தில் சந்தித்தேன்.
'நந்தி அவர்கள் அவரை எனக்கு முதன் முதலில் அறிமுகப்படுத்தி வைத்தார்.
அன்று தொடக்கம் நான் அவரை நன்கு அறிவேன்.
மானுட நேசிப்பும் இலக்கிய விசுவாசமும் நிரம்பப் பெற்ற இவர் சுபாவமாகவே இனிய தன்மைகள் கொண் டவராவார்.
"மல்லிகைதான் என்னைப் பண்படுத்தியது; செழுமை யுறச் செய்தது' என அடிக்கடி நன்றியுணர்வுடன் நினைவு கூரும் இவரிடம் பல அரிய பழக்க வழக்கங்களைக் காண 6) ITLib.
இலக்கியத்தையும் எழுத்துத் துறையையும் மீறி இவரிடம் முழு அன்பு செலுத்த இவையே காரணமாக அமைந்தன.
ஈழத்து இலக்கிய பரப்பினூடாக இவர் புதிய பரிமா ணங்களைத் தனது சிருஷ்டிகளின் மூலம் எமக்குத் தந்திருக் கின்றார். தமிழ் இலக்கிய நிலத்திற்குப் புதிய பசளையை உரமிடுகின்றார்.

Page 5
*மேமன் கவி'யிடம் எனக்கிருக்கும் விசேஷ பிரிதி, அவரது தாய்மொழி தமிழல்ல, மேமன் பாஷை, இருந்தும் தமிழ் மீது கொண்ட அளவற்ற பேரன்பினால்- அபிமானத் தினால்-அவர் தமிழ் இலக்கியத் துறைக்குள் புகுந்தார். இன்று புதுக் கவிதைத் துறைக்குத் தன்னாலான பங்களிப் பைச் செய்து வருகின்றார்.
அது போலவே நண்பர் ஆப்டீனுடைய தாய்ப் பாஷை யும் தமிழ் அல்ல. அவரது தாய்மொழி மலாய்.
இந்த விவரங்கள் முன்னர் எனக்குத் தெரியவே தெரி யாது. இவர் மலையகத்தைக் சேர்ந்த ஒரு முஸ்லிம் சகோ தரர் என்றே இதுவரை கருதி வந்துள்ளேன். அந்த மனப் பான்மையுடன்தான் நான் நீண்ட காலம் இவருடன் பழகி வந்துள்ளேன். இந்தச் சிறுகதைத் தொகுதியைத் தயாரிக்கும் ஆரம்ப வேலைகளைச் செய்து வரும் வேளையில் தான் தற்செயலாகக் கொழும்பில் இவருடைய தாய் மொழிப் பரம்பரை பற்றித் தெரிய வந்தது.
பிரமித்துப் போய் விட்டேன்.
தாய் மொழியையும் மீறி இப்படியானவர்களுக்குத்
தமிழ் மொழி மீதுள்ள பாசத்தையும் பற்றையும் எண்ணி யெண்ணி எனக்குள் வியந்துள்ளேன்.
அப்படிப்பட்ட அரிய நண்பர் ஒருவருடைய சிறுகதைத்
தொகுதியை மல்லிகைப் பந்தலின் ஐந்தாவது வெளி
யீடாக வெளியிடுவதில் பெரு மகிழ்ச்சியடைகின்றேன்.
டொமினிக் ஜீவா

இது சக "
Р
அறிமுகம்
*அண்ணா! நீ இன்னும் தூங்கலையா?" என்று வெளியி லிருந்து ஒரு குரல் கேட்டது.
“யாரு ஆப்டீனா?' என்று கேட்டவாறு அவனுடைய அறையின் முன் அடைப்பின் ஒரு பலகையை அகற்றினான் மலையப்பன், வாசலில் ஆப்டீன்,சந்தனப்பிச்சை, மகாலிங்கம் முதலியோர் நின்றனர்.
one on a one
ஆப்டீன் சொன்னான்: "அண்ணே நான் ‘மலை
ஒசைக்கு சந்தா நேயராக இருபது பேரைச் சேர்த்து விட்டேன்."
(மலைக்கொழுந்து, அத் 21)
1963 இல் நான் எழுதிய நாவலில் ஆப்டீன் ஒரு சிறு கதாபாத்திரம் இலக்கியத்தில் ஆர்வமுள்ள ஓர் இளைஞன், மேலே குறிப்பிட்ட் மூவரும், சில வேளைகளில் சந்திரசேகர னும், பிரேமசம்புவும் சேர்ந்து, 1959-60 காலத்தில் நாவலப்பிட்டி சென்றல் ஹோட்டலிலும், ஆத்மஜோதி நிலையத்திலும் அடிக்கடி என்னைச் சந்தித்து, அவ்வாரச் சிறு கதைகளைப் பற்றிப் பேசுவார்கள். அப்போது ஆப்டீன் ஒரு நல்ல வாசகனாக எனக்கு அறிமுகமானார். சிறுகதையின் அமைப்பு, பாத்திரங்கள், சமூகச் செய்தி, வசன விசேஷம் ஆகியவற்றை எங்கள் அறிவுக்கு எட்டியவாறு அலசி ஆராய்வோம். கே. டானியல், டொமினிக் ஜீவா, நீர்வை பொன்னைய்ன், காவலூர் ராசதுரை, அ. முத்துலிங்கம் ஆகியோர், சுதந்திரன், தினகரன் மூலம், இந்தக் குழுவை ஈர்த்த எழுத்தாளர்களில் அதிகமாகச் சல்லாபிக்கப்பட்ட வர்கள். இந்த இலக்கிய அன்னியோன்னியம்தான் இவர்
每

Page 6
களை இலக்கியப் பிணக்குள்ள இளைஞராக "மலைக் கொழுந்துவின் ஒரு அத்தியாயத்தில் நடமாட வைத்தது.
எதிர் காலத்திலும் இவர்கள் இலக்கியத்துடன் தொடர்பை நீடித்து, ஏதாவது குறிப்பிடத்தக்க பங்காற்று வார்கள் என்ற உள்ளுணர்வு எனக்கு இருந்திருக்கலாம். ஆப்டீனின் சிறுகதைத் தொகுப்பை இப்போது படிக்கும் போது அந்த நம்பிக்கை திருப்தியுடன் நிறைவேறியதை உணர்ந்து மகிழ்கிறேன்.
கால் நூற்றாண்டு காலமாக ஆப்டீனுக்கும் எனக்கும் நேரடியான தொடர்பு இருக்கவில்லை: அவருடைய ம4லிகைக் கதைகளே தொடர்பு கொண்டன. 1968 இல் *ஊன்றுகோல் மல்லிகையில் பிரசுரமானபோது நல்ல வாசகனான ஆப்டீன் ஒரு பக்குவமான எழுத்தாளனாகப் பரிணமித்ததைப் பார்த்தேன்.
"ஊன்றுகோலும் எழுபதுகளில் எழுதப்பட்ட நான்கு கதைகளும், எண்பதுகளின் ஏழு கதைகளும் இதில் உள்ளன. பல வருடங்கள் வாசக-விமர்சகனாகவும், இலக்கிய மாணவ னாகவும் இருந்தபின், சமுதாயத்தை ஆர ஆராய்ந்து எழுத் தைத் தன் ஆளுமையினால் கையாண்ட ஒருவரின் கதைகள் இவை; எட்டு மல்லிகைக் கதைகள்,
ஆப்டீன் மலை நாட்டில் பிறந்து வளர்ந்து, அனுராத புரம், மட்டக்களப்பு, சிலாபம் ஆகிய பிரதேசங்களில் ஆசிரியராக இருந்ததால், அந்த அனுபவ அடிப்படையில் நவீன தமிழ் இலக்கியத்திற்கு குறிஞ்சி, மருதம், நெய்தல்" நிலங்கள் சார்ந்த வனப்பு மிகுந்த கதைகளைத் தந்திருக்கி றார். ஏழை விவசாயிகள், தேயிலைத் தோட்டத் தொழிலா ளர்கள், மீனவர் ஆகிய குடும்பங்களின் பிரச்சினைகள், சுக துக்கங்கள், சம்பிரதாய சிக்கல்கள் கதைகளுக்கு கருவும் உருவும் ஆகின்றன. ஒன்பது கதைகள் முஸ்லிம் சமூகத் தைப் பற்றியன. இந்தத் தொகுப்பில் என்னை மிகவும் கவர்ந்த கதைகளான ‘நீந்தத் துடிக்கும் மீன் குஞ்சுகள்’, அவர்கள் காத்துக்கொண்டிருக்கிறார்கள்”, “ரபீயுல் அவ்வல் தலைப்பிறை' ஆகியன அவற்றில் அடங்கும். முதல் இரண் டும் போட்டிகளில் முதலாம் பரிசு பெற்றவை. இந்தப்
6

ܓ ܬܨ.
பரிசுக் கதைகளில், முறையே, வரும் பர்ஹானாவும் ஆஷா வும் பள்ளிப் பிள்ளைகள். அவர்கள் மூலம் சமுதாயத்தில் சுட்டிக் காட்ட வேண்டிய சமாசாரத்தை மிக வெற்றிகர மாக ஆப்டீன் காட்டுகிறார். அன்ரன் என்ற சிறுவன் போல், தமிழில் பர்ஹானாவும், ஆஷாவும் இலக்கிய நிலைப்பாடு பெறத் தக்கவர்கள்.
இந்தக் கதைகளின் சமூக சேவை கணிசமானது; அதே வேளையில் அழகியல் அமைதியும் காக்கப்படுகிறது; ஆப்டீ னின் எழுத்தின் அணுகுமுறை எவரையும் அரவணைத்து சிந்திக்கச் செய்வதாகும்; எதிர்க் கட்சிக்குத் தள்ளும் ஆக் கிரமிப்பு இல்லை-ஒரு வித சமாதான நடை, வசனங்கள் நேரடியானவை. தேவையற்ற வர்ணனைகள் இல்லை; இயற் கையின் வனப்பு ஓரிரு கிறுகளில் காட்டப்படுகிறது. நல்ல மலையாள எழுத்தாளரின் கதைகளைப் படிக்கும்போது ஏற் படும் இலக்கிய அனுபவம் ஏற்படுகிறது.
தனித்தனியாக, கதைகளைப் பற்றி எழுதுவதானால், இந்த அறிமுகம் அரைகுறை விமர்சனம் ஆகிவிடும். விமர்ச கருக்கு இந்தக் கதைத் தொகுப்பு பலதரப்பட்ட விருந்து என்பதை மட்டும் குறிப்பிட விரும்புகிறேன்.
சோமகாந்தனின் "ஆகுதி"க்கு அடுத்த சிறுகதைத் தொகுதியாக "மல்லிகைப் பந்தல்" முத்திரையுடன் வெளிவருவதற்கு 'இரவின் ராகங்கள் பல தகுதிகள் பெற்றதாகும்.
-"நந்தி

Page 7

இது
தந்தை: மீரான் பஹார்டீன் தாய்: சித்தி ரெஹான் பஹார்டீன்
ஆகியோருக்கு
சமர்ப்பணம் -

Page 8
நன்றிகள். நன்றிகள். நன்றிகள்.
எனது சிறு கதைகளை வெளியிட்டும் மறு பிரசுரம் செய்தும் ஊக்குவித்த
தமிழின்பம்
மல்லிகை
அஷ்ஷ"ரா
வீரகேசரி சுஊனுல் இஸ்லாம்
மினா பிறைப்பூக்கள் (தொகுப்பு) தினகரன்
ஆகிய வெளியீட்டுக் களங்களின் ஆசிரியர்களுக்கு நன்றிகள்!

என்னுரை
என்னைப் பற்றி அதிகம் கூறி அலட்டிக் கொள்வதற்கோ இப்படி ஒரு தொகுதியை வெளியிட்டதன் மூலம் ஒகோ வென்று பெருமைப் படுவதற்கோ ஒன்றுமில்லை. சமகாலத் தைப் பகைப்புலமாகக் கொண்ட நல்ல சிருஷ்டிகளைப் படைக்க வேண்டும் என்ற எண்ணம் மட்டும் உள்ளத்தில் உறைந்து போய் கிடக்கின்றது. அவை எப்போது செயற் படும் என்று சொல்வதற்கில்லை.
எப்படியோ இது எனது முதலாவது சிறுகதைத் தொகுப்பாக அமைந்து விட்டது. சம்பிரதாய பூர்வமான ‘என்னுரை'யில் இலக்கிய ஆர்வலர்களுடன் சில விடயங் களைப் பற்றி பகிர்ந்து கொள்ள விரும்புகின்றேன்.
சிரேஷ்ட வகுப்புகளில் கல்வி கற்கும் காலத்தில் வட்டார, மாகாணக் கட்டுரைப் போட்டிகளில் முதலாம் பரிசில்கள் கிடைத்த போதே எழுத்தார்வம் பிறந்தது. நண்பர் இர. சந்திரசேகர சர்மா அவர்களது இல்லத்தில் தரமான வாசகர்களை உருவாக்கிய "கலைமகள் படிப்பகம்" மூலம் நிறைய வாசிக்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. ஏனைய "இளம் எழுத்தாளர் சங்க நண்பர்கள் பி. மகாலிங்கம், எஸ். சந்தனப் பிச்சை, வழுத்தூர் ஒளியேந்தி (நூர் முஹம் மது) பெ. இராமானுஜம், காலஞ் சென்ற சு, பிரேமசம்பு போன்றவர்களின் இலக்கியக் கருத்துப் பரிமாறல்கள் எனது இலக்கிய வளர்ச்சிக்கு முக்கிய பங்களிப்பு அளித்துள்ளன. நண்பர் இர. சந்திரசேகரன், எனது கதைகளை ஆழ்ந்து படித்து, திருத்தங்கள் செய்து பெரிதும் உற்சாக மூட்டினார்,
ill

Page 9
1959-60 ஆண்டுகளில் நாவலப்பிட்டியில் சுகாதார வைத்திய அதிகாரியாகக் கடமையாற்றிய டாக்டர் நந்தி யின் தொடர்பு கிடைத்தது. தோட்டத் தொழிலாளர் களின் வாழ்க்கைப் பின்னணியிலும், மலையக முஸ்லிம் பின்னணியிலும் கதைகள் எழுத வேண்டுமென்று ஊக்கு வித்தார். நந்தி அண்ணா அவர்கள் அளித்த வழி காட் டல்கள் என்னைப் பொறுத்த வரையில் ஒரு புதிய சமூகப் பார்வையை எனக்குள் ஏற்படுத்தியது என்று கூறலாம்.
எழுதத் தொடங்கும் ஒருவனுக்கு குறைந்த பட்சம் நல்ல மனமும், மனிதாபிமானத்துடன் மனுக்குலத்தை நேசிக்கும் பண்பும் அமைந்துவிட்டால். அவை ஆக்க இலக்கியத் துறைக்கு உறுதுணையாக இருந்து வெற்றியளிக் கும் என்பதில் ஐயமில்லை.
ஆரம்பத்தில் நான் எழுதிய சில கதைகள் அவசரப் படைப்புகளோ, அல்லது எழுதி முடிந்ததும் குறைந்தது இரு வாரங்களாவது, 'ஊறப்போட்டு பின்னர் மீண்டும் மெருகேற்றி அனுப்பாததாலோ என்னவோ, பத்திரிகை களுக்கு அனுப்பி அவை கிணற்றில் போட்ட கற்களின்" கதைகளாகி விட்டன. பிரதிகள் வைத்துக் கொள்ளாததால் சில நல்ல கதைகளை இழந்து விட்டேன்.
எனது முதலாவது சிறுகதை 1962-ம் ஆண்டு "தமிழின்பம்" என்னும் மாத சஞ்சிகையில் வெளியாகியது. பின்னர் தமிழின்பம் நின்றுவிட்டதும், வேறு சில சஞ்சிகை களுக்கு அனுப்பப்பட்ட கதைகள் தரமில்லையோ என் னவோ, சுவரில் எறிந்த பந்துகள் போல் திரும்பி வந்து விட்டன. இக்கட்டத்தில் தான் "மல்லிகை" என்னும் மாசிகை மலர்ந்து, எனது கதைகளுக்குக் களம் அமைத்துக் கொடுத்தது. மல்லிகை ஆசிரியர் தூண்டுகோலாகவே இருந்து வந்துள்ளார். மல்லிகை தோன்றுவதற்கு முன்பே, டாக்டர் நந்தியின் மூலம் திரு.டொமினிக் ஜீவாவின் அறிமுகம் கிடைத்திருந்தது.
12

( ,
1970-க்குப் பின்பு, எனது சமூகப் பார்வை சற்று விரிவடைந்து, இலக்கியம் ஒடுக்கப்பட்ட மக்களுக்காகப் படைக்கப்பட வேண்டும் என்னும் மகத்தான இலட்சியம் எனது உள்ளத்திலும் வேரூன்றத் தொடங்கியிருந்தது. தேயிலைத் தோட்டங்களில் எழுதுவினைஞனாக இருந்த எனக்கு 1972-ம் ஆண்டு ஆசிரிய நியமனம் கிடைத்த போது, நாட்டின் பல மாவட்டங்களிலும் கடமையாற்ற வாய்ப்புக் கிடைத்தது. இப்புதிய திருப்பம் எனது இலக்கிய முயற்சி களுக்குச் சாதகமாகவே அமைந்தது.
அனுராதபுர மாவட்ட முஸ்லிம் கிராமங்களில் உள்ள பேச்சுவழக்கு தனியானது. வயலிலும் வரம்பிலும் நடந்து அவ்விவசாயிகளின் வாழ்க்கையை ஊன்றிப் படித்திருக்கின் றேன். இத் தொகுப்பில் 'அவர்கள் காத்துக் கொண்டிருக் கிறார்கள்', 'ஒரு கிராமத்தின் புதுக் கதிர்கள்”, “ரபீயுல் அவ்வல் தலைப்பிறை' ஆகிய கதைகள் அக்கிராமங்களையே பிரதிபலிக்கும். 7624
*சுரங்கப் பாதை', 'அந்த வண்டியின் ஒட்டம்' என்னும் இரு கதைகளும் மலையக முஸ்லிம் பின்னணியில் உரு வானவை. "ஊன்றுகோல்', 'புதுப்பட்டிக் கிராமத்திற்கு கடைசி டிக்கட் ஆகியன தேயிலைத் தோட்டத் தொழிலா ளர்களின் கதைகள், கொழும்புத் தெருக்களில் நடமாடும் கதாபாத்திரங்களை “இரவின் ராகங்கள்" என்னும் கதை காட்டுகின்றது. "பந்தல் கட்டும் செக்கு மாடுகள்", ‘மண்ணின் செல்வங்கள்" முதலியன. மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களுக்குரியவை, ‘நீந்தத் துடிக்கும் மீன்குஞ்சுகள்', 'முரண்பாடுகள் இரு கதைகளும் சிலாபம் மீனவக் கிராமங்களைப் பகைப்புலமாகக் கொண்டவை.
பொதுவாக எனது கதைகள் ஒவ்வொரு மாவட்டத்திற் குரிய கிராமங்களை ஆழ்ந்து அவதானித்துப் படித்ததன் விளைவுகளே. தொழில் ரீதியான இடமாற்றங்களால் ஒவ்வொரு புதிய சூழ்நிலையிலும், அவதியுறும் மக்களின் பிரச்சினைகளே மனதில் தாக்கத்தை ஏற்படுத்தி, சிறுகதை
1 3
s T_{
C.
ཙམ་ན་སྐུ།།

Page 10
களின் கருக்கள் அமைய வாய்ப்பளித்திருக்கின்றது. யதார்த்தமாகவும், மண்வாசனையுடனும் படைக்க முயன் றிருக்கிறேன்.
எதிர்காலத்திலும் நான் தரிசிக்காத மாவட்டங் களுக்குச் சென்று மக்கள் வாழ்க்கையை ஆராய்ந்து, ஆக்க இலக்கிய முயற்சிகளில் தேசத்தை முழுமையாகப் படம் பிடித்துக் காட்ட வேண்டும் என்னும் எனது இலட்சியத் திற்குக் காலம் உதவி செய்யும் என்று நம்புகின்றேன்.
எந்த ஒரு சிறுகதைத் தொகுப்பிலும் முழுக்க முழுக்க சமகாலப் பிரச்சினைகளை மையமாக வைத்து புனையப் பட்ட கதைகளை எதிர்பார்க்க இயலாதுதான். ஒரிரு தசாப் தங்களாக எழுதியவற்றின் அறுவடையே ஒரு தொகுப்பு,
சிலாபம் மாவட்டத்தில் கடமையாற்றியபோது பிரபல விமர்சகர் ஜனாப் எஸ். எம். ஜே. பைஸ்தீன் அவர்களின் இலக்கியத் தொடர்புகளும் எனது இலக்கியப் பாதையை மேலும் தெளிவுபடுத்தி செப்பனிட்டிருக்கிறது. அன்னாருக்கு எனது நன்றியை சமர்ப்பிக்கின்றேன்.
இனி
மல்லிகை ஆசிரியர் டொமினிக் ஜீவா, நண்பர் கவிஞர் மேமன் கவி, விவேகானந்தா கல்லூரி அதிபர் திரு. எஸ். மாணிக்கவாசகர், எப்பொழுதும் தாம் முகம் கொடுக்க வேண்டிய பிரதான விடயங்களைப் பி ற் போ ட்டு விட்டு பேருதவிகள் புரிந்து வரும் ஜனாப் பி. து வா ன் பா ரூ க் ஆகியோர் அளித்த உற்சாகத்தின் காரணமாக, இன்று "மல்லிகைப் பந்தலின் வாயிலாக எனது சிறுகதைத் தொகுப்பு வெளிவந்துள்ளது.
இதை மிக அற்புதமாக வெளியிட்ட திரு. டொமினிக் ஜீவா அவர்களுக்கு என்றும் எனது நன்றிகள் உரித்தாகும்.
தமது எத்தனையோ வேலைகளுக்கு மத்தியிலும் இந் நூலுக்கு அரிய அறிமுகம் வழங்கிய அன்பார்ந்த நந்தி அண்ணா அவர்களுக்கு ஆழ்ந்த நன்றிகள்,
14

(
يل الكريم
1983-ம் ஆண்டு கொழுப்பு விவேகானந்தா மகா வித்தி யாலயத்திற்கு இடமாற்றம் கிடைத்ததன்பின் எனது இலக் கியத்துறைக்கு அடிக்கடி உதவிகளும் ஆக்கபூர்வமான ஆலோசனைகளும் வழங்கி வரும் அதிபர் திரு எஸ். மாணிக்க வாசகர் அவர்களுக்கும், திரு. பிரேம்ஜி ஞானசுந்தரம் அவர் களுக்கும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
குறுகிய கால எல்லைக்குள் கதைகளின் கையெழுத்துப் பிரதிகளை அழகுற தட்டச்சுப் பிரதி செய்து உதவிய திருமதி நவநீதம் ஜெயச்சந்திரன் அவர்களுக்கும், போட்டோ கொப்பி எடுத்துதவிய பரீஸ் ஆப்டீன், செல்வி சீனார் ஹலால்டீன் ஆகியோருக்கும், தட்டச்சுப் படிவங்களை ஒப்பிட்டுத் திருத்தங்கள் செய்ததிலிருந்து பல வழிகளிலும் உதவிவரும் கவிஞர் புரோட்வே ஹில்மி, ஆசிரிய நண்பர் வீ.என்.எஸ். உதய சந்திரன் ஆகியோருக்கும், விவே கானந்தா கல்லூரி இலக்கிய வட்டப் பொறுப்பாசிரியர் களான திரு. வ. மகேஸ்வரன், திரு. து. தர்மானந்தசிவம் முதலியோருக்கும், ஆழமாகவும் அற்புதமாகவும் அட்டைப் பட ஓவியம் வரைந்து இந்நூலுக்கு அழகூட்டிய ஓவியர் திரு. பூரீதர் பிச்சையப்பா அவர்களுக்கும், அச்சுத் தொழிலா ளர்களுக்கும் என் இதய பூர்வமான நன்றிகள் உரித்தா கட்டும்.
131/9, தெமட்டகெட் வீதி, ப. ஆப்டீன் கொழும்பு-9

Page 11
| r
இந் நூலில் அடங்கியுள்ள
சிறுகதைகள்
1. ஊன்றுகோல் 2. சுரங்கப் பாதை 3. அந்த வண்டியின் ஓட்டம் 4. அவர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள் 5. பந்தல் கட்டும் செக்குமாடுகள் 6. ஒரு கிராமத்தின் புதுக்கதிர்கள் 7. “ரபீயுல் அவ்வல்?? தலைப்பிறை 8, இரவின் ராகங்கள் 9. புதுப்பட்டிக் கிராமத்திற்கு கடைசி டிக்கட் 10. நீந்தத் துடிக்கும் மீன் குஞ்சுகள் 11. முரண்பாடுகள்
12. மண்ணின் செல்வங்கள்

ஊன்று கோல்
பழைய கடிகாரமொன்று பன்னிரண்டுமுறை அலறி ஓய்ந்தது. அந்தத் தென்னோலைக் குடிசையில் இன்னும் பேச்சுக் குரல். 'இப்படித் தூங் காம ல் ஒரே வேலை வேலேன்று இருந்தா உடம்பு என்னத்துக்கு ஆகும்?? அரைத் தூக்கத்தில் படுத்திருந்த சின்னப்பிள்ளை இருமலுக் கும் முணுகலுக்குமிடையில் கடிந்து கொண்டாள், கரிசனை யோடு.
மண்சுமந்து முடிந்து, இப்போது அதே கொந்தராத்துக் காரன்கிட்டே கல்லுடைக்கும் படலம் ஆரம்பமாகியிருந் தது. பகலெல்லாம் வேலை செய்து களைத்து பாயில் நொந்து கிடந்தாள் புருஷனின் ஒய்வு ஒழிச்சலில்லாத வேதனையில் மனம் இரங்கித்தான்.
'நா என்னமோ சொல்றேன். நீ ஒம்பாட்டுக்கு இருக்கியே."
Li····· முடிஞ்சுப்போச்சு புள்ள, இன்னும் ரண்டு தையல்தான் பாக்கி இருக்கு.அதையும் முடிச்சிட்டா இந்தச் சோடியும் சரி.'
சப்பாத்து தைத்துக் கொண்டிருந்த கருப்பண்ணன் தொண்டையை ஒருமுறை கனைத்து விட்டுப் பேசினான்
'இருக்கட்டும் நாளைக்குச் செய்யேன். 9 p. அவளது பலவீனமான உடம்பு சோர்வடைந்திருந்தது.
A 50 7-2 17

Page 12
அவன் அந்த இரண்டு தையலை முடிக்கும் தீவிரத்தில் சணல் நூலை உள்ளால் போட்டு, ஊசியால் குத்தி இழுக் கும் ஒரு கணநேரத்தில்,
'ஸ்.ஆ.'
“என்ன?' சின்னப்பிள்ளை வாரிச் சுருட்டிக்கொண்டு எழுந்தாள்.
“ஒன்றுமில்லே ஊசி கொஞ்சம் குத்திருச்சி.'
'ஐய்யய்யோ சொன்னா கேட்டாத்தானே? அவளது களைப்பும், நித்திரை மயக்கமும் சுவடு தெரியாமல் மறைந்தன.
தனக்குத் தெரிந்த கைமருந்தொன்றைப் போட்டு, ஆள் காட்டி விரலில் சிறிய கட்டொன்றைப் போட்டாள். அப்பொழுதும் குருதி கசிந்துகொண்டே இருந்தது.
இந்தச் சோடியை மேல் வீட்டுப் பையன் வந்து கேட்டா குடுத்துட்டு ரெண்டு ரூபா வாங்கு, அந்தச் சிவப்பு சிலிப் பருக்கும் ஆள் வரும். ஒன்றரை ரூபா. ' மொத்தமாக நாளைக்கு வரவேண்டியவர்கள் வந்துவிட்டால் ஆறு ரூபா சேரும். அவசர நிமித்தமாக ஒடி வருபவருக்கு சுடச்சுடச் செய்து கொடுப்பதெல்லாம் நம்பிக்கை இல்லாத ஊதியம்.
சிறிது நேரத்திற்குப் பின் கருப்பண்ணனும் சின்னப்
பிள்ளையும் நித்திரைக்குப் போனார்கள்.
உள்ளறையில் அவள் படுத்துக்கொண்டாள். அதிலேயே ஒரு ஒதுக்குப்புறம் சமையலுக்கு என்று, முன்னறைதான் அவனுடையது.
எல்லாம் அப்படியே இருக்க ஓரத்தில் படுக்கை விரிக்கப் பட்டிருந்தது. இரண்டு அறைகள் தாம், களிமண் சுவ ரும், தென்னோலையும் ஏழ்மையை மறைத்துக் கொண்டன.
அவன் புரண்டு கொண்டிருந்தான்.
18

'நீ தூங்கலெ.?' உள்ளேயிருந்து குரல் வந்தது. 'இல்லே. நீ படு புள்ள, எனக்கு ஒண்ணுமில்லே."
"ஒண்ணுமில்லேன்னு வுட்டுடாதே, நாளைக்கி ஆசுப் பத்திரியிலே போய் ஊசி ஒண்னு போட்டுக்க,'
சில நிமிடங்களில் அவள் ஆழ்ந்த துயிலில் மூழ்கி விட் டாள். அவன் சிந்தித்துக் கொண்டிருந்தான்.
ஒரு ஊசி குத்தியதும் இன்னொரு ஊசியைக் குத்தி, ஊசியின் விஷத்தை ஊசியால் வெல்ல முடியும். ஏழாண்டு களுக்கு முன் பட்ட காயத்தை எதனால் குணப்படுத்த முடியும்?
கருப்பண்ணனின் உள்ளத்தில் ஏற்பட்ட வடு வுக் கு கதிரவேலின் உள்ளத்தில் கலக்கப்பட்ட விஷத்தின் தன்மை தான் காரணம். மனத்தின் காயத்தை மனதின் தன்மையால் வெல்ல முடியுமா! விரலில் ஊசிக்காயத்தால் பொசிந்த இரத்தக் கசிவு நினைவுச் சரடுகளை நனைத்து விட்டது. சற்று மனக் கடலில் நீந்திப் பார்த்தான் கருப்பண்ணன்.
(2)
அது ஒரு மார்கழி மாதத்தின் நடுப்பகுதி, தேயிலைத் தோட்டத்தை மூடியிருந்த பனித்திரை, உதய சூரியனின் கதிர்பட்டு மெல்ல மறைந்து கொண்டிருந்தது.
சின்னப்பிள்ளை அதிகாலையிலேயே எழுந்து விட்டாள். வழக்கம்போல் அந்த லயத்துக்குப் பொதுவான குழாயில்
ளுடைய சிநேகிதிகள் கூட அவளை ஒரு மாதிரியாகத்தான் பார்த்தார்கள். 'கேத்தலில்" நீரை ஊற்றி அடுப்பில் ஏற்றிவிட்டுப் பாத்திரங்களைக் கழுவி வீட்டைத் துப்பரவு செய்வதற்குள், 'உஸ்' என்று நீர் கொதித்தது. சாயத் தைக் கலந்து, ஒரு கரண்டி சீனியும் எடுத்துக் கொண்டு
姬9

Page 13
போய், கணவனை உசுப்பினாள். வாயைக் கொப்பளித்துத் துப்பி விட்டு, சீனியைப் போட்டு மொறு மொறுத்து சாயத்தை உறிஞ்சினான். அதே நேரத்தில் சின்னப்பிள்ளை. . "பிளாஸ்டிக் ரெட்டை' இடுப்பில் சுற்றிவிட்டுக் கூடை யைத் தலையில் மாட்டினாள்.
கருப்பண்ணன் அப்பொழுதுதான் திடுக்கிட்டான். V
'ஏ.புள்ள நீ என்ன இன்னைக்கு வேலெக்கிப் போறியா? வினோதமாகக் கேட்டான்.
M
"ஆமா' , *சொல்லுரதே கேளு இண்ணைக்கி @@@බ්ය්ඩ් பேரவாதே."
莒、 'ஒங்க கட்சிக்காரங்க எல்லாம் நிக்குதுன்னா, நம்ம ஆளுங்க எல்லாம் போறாக; நானு போவாம இருந்தா?
"அப்படிக் கேளு சின்னப்புள்ளே."
*ஒங்க வூட்டுக்காரர்கிட்டே நல்லா கேளு."
இருவரும் குரல் வந்த திக்கைப் பார்த்தபோது, முன் வாசலில் நாலைந்து பெண்கள், கூடையும் தலையு மாக வேலைக்குப் போக ஆயத்தமாய், சின்னப்பிள்ளையை எதிர்பார்த்து நின்றார்கள்.
அவள், அவர்களுடன் நடந்து மறைந்தாள். அதுவரை யும் சிலையாய் நின்ற கருப்பண்ணனின் கண்கள் பனித்தன. தன் பேச்சைத் தட்டிவிட்டு வெளியேறி விட்டாளே என்ற ஆத்திரமும் ஆக்ரோசமும் நெஞ்சத்தில் புடைத்து நரம்பு களை முடுக்கியபோது பீறிட்டுக் கொண்டு வந்த ஆவேசத்
தைச் சிரமப்பட்டு அடக்கிக் கொண்டிருந்தான். அடுக் களையிலிருந்த சட்டி முட்டிகளையெல்லாம் எடுத்து வெளியே
20

பொது சக நூலகம் எறிந்து உடைத்துக் கொண்டிருத்தல் இந்தித்தத்
தைக் கேட்டுப் பக்கத்து வீட்டிலிருந்து சின்னக்கண்ணு ஒடி வந்தான். 1.
'கருப்பண்ணே ஒனக்கு என்ன பயித்தியமா. அவளை வுட்டுப்புட்டு சாமான்களைப் போட்டு ஒடக்கிறியே."
அது அவனுக்கு நியாயமாகப் பட்டிருக்க வேண்டும்.
சரி, அவ வரட்டும் எங்கே போவப் போறா? என்றவாறு; சாக்குக் கட்டிலில் படுத்துச் சிந்தித்துக் கொண்டிருந்தான், கோபம் சற்றுத் தணிந்தது. 。
தோட்டத்தில் ஒரே பரபரப்பும் குழப்பங்களும் ஏற் பட்டு, எல்லாரும் வெறிபிடித்து அலைந்து கொண்டிருந் தார்கள்.
கருப்பண்ணனின் கட்சியின் தலைவர் வேறு யாருமில்லை. ஒரு காலத்தில் தான் அனாதரவாக, வேலைக்குத் திரிந்து கொண்டிருந்தபோது 'தம்பி, நம்ம தோட்டத்திலே ஆள் சேர்க்கிறாங்க, நீ வா ஒன்னே சேர்த்து விட்றேன்" என்று அழைத்து அடைக்கலம் கொடுத்த அண்ணன் கதிர
வேலுதான்.
அவன் நாற்பது வயது நிரம்பிய பிரமச்சாரி நெடிது, வளர்ந்து கறுத்து வைரம் போன்றிருப்பான். சுமாராக எழுதப் படிக்கத் தெரியும். தோட்டத் தொழிலாளர்களின் எந்தப் பிரச்சினையையும் அலசி நுணுக்கமாக ஆராய்ந்து அறிந்து கொள்ளும் தனித் திறமையைப் பெற்றுக் கொண்ட அவன், ஒரு நல்ல தலைவனுக்குப் பொருத்தமானவன் எல்லாத் தொழிலாளர்களினதும் அன்பையும் மதிப்பையு ம் பெற்றிருந்தான். வேறு என்ன வேண்டும்!
கருப்பண்ணனும் - கதிரவேலுவுக்கு உறுதுணையாக இருந்தான்.
21.

Page 14
கருப்பண்ணனுக்கும் சி ன் ன ப் பிள்ளை க்கும் உள்ள தொடர்பைப் பற்றிச் சொல்ல எடுத்த முயற்சி தோல்வி தான். கதிரவேல் எதையுமே நம்பாதிருந்தான்.
ஆனால், கருப்பண்ணன் சின்னப்பிள்ளையைத் தன் துணைவியாக ஏற்றுக் கொண்ட போது கதிரவேலுவுக்குப் பொறி கலங்கியது.
முப்பத்தைந்து வயதான கருப்பண்ணன் முப்பது வயது சின்னப்பிள்ளையை கதிரவேலுக்குத் தெரியாமல் மணந்து கொண்டது அவள் எதிக்க்கட்சியைச் சார்ந்தவள் என்ப தற்காகத்தான். திருமணம் என்று ஒரு வார்த்தை சொல்லி யிருந்தால் கதிரவேலு முன்னின்று விமரிசையாக முடித் திருப்பானே! ஆனால், சின்னப்பிள்ளைதான் மணமகளாக வர இடம் கொடுத்திருப்பானா? அதனால்தான் இந்த ஒரு விசயத்தில் கருப்பண்ணன் தன்னிச்சையாக நடந்து கொண்டான்.
கருப்பண்ணன் செய்த தவறு இது ஒன்றுதான்.
நாளடைவில் அவளையும் தன் கட்சியில் சேர்த்துக் கொண்டால் அண்ணனின் மனம் சாந்தியும் சமாதானமும் அடைந்து விடும் என்று நம்பியிருந்தான்.
கதிரவேலுவுக்கும் ஒரு தலைவனுக்குரிய ப ர ந் த மனத்துடன், உத்தியோக பூர்வமாகட்டும் கருப்பண்ண னுடன் பேச்சு வார்த்தை வைத்துக் கொண்டான்.
(3)
இப்போது பல கோரிக்கைகளை முன் வைத்து இந்த வேலை நிறுத்தம் வந்து நின்றது.
நெஞ்சில் பலவகை உணர்ச்சிகள் அலைபாய அவன் மெளனமாக உட்கார்ந்திருந்த போது,
'டேய் கருப்பண்ணா!' என்று குரல் வந்தது. வெளியே கதிரவேலுவும் சிலரும் நின்று கொண்டிருந்தனர்.
22

ܝ ܲܨܝܐ ܝܐ ܝܐ
*சேர்த்துக்கு நாதியத்துச் சப்பாத்துத் துலக்கித் திரிஞ் சிக்கிட்டிருந்த ஒனக்கு உதவி செஞ்சவனுக்குத் தாண்டா செருப்பாலே அடிக்கணும்.'
வெலவெலத்துப்போன கருப்பண்ணனை நோக்கி வெறி பிடித்த கதிரவேலு நெருங்கிக் கொண்டிருந்தான்.
"அண்ணே! ஆத்திரப்படாதே சொல்லுறேன் கேளு,' அவன் தடுமாறினான்.
*டேய், என்னக்கி எதிர் கட்சி காரியோட கை பிடிச்சி அவங்களோட சேர்ந்தியோ அண்ணைலேயிருந்து, நா உனக்கு அண்ணனுமில்லே, நீ எனக்குத் தம்பியுமில்லே, போனா போகட்டும்னு வுட்டுப்புட்டேன். இன்னக்கி என்னடான்னா நீ உன் பொம்பிளையே வேலைக்கி அனுப்பிட்டு நம்ப ஆளுங்களையும் வேலைக்குப் போகத் தூண்டுறியாடா?' கையிலிருந்த 'கழியால் அவனைத் தாக்கினான். கருப்பண்ணனோ சவுக்குமரம் சாய்வது போல் சடாரென்று வீழ்ந்து கிடந்தான். கதிரவேலுவுக்கு வெறி தீரவில்லை. அவன் வெளியேறினான்.
அந்த லயத்தில் யாருமே இருக்கவில்லை. சிலர் வேலைக் குப் போயிருந்தார்கள். வேலை நிறுத்தம் செய்தவர்கள் தோட்டத்தைச் சுற்றிக் கொண்டிருந்தார்கள் பல இடங் களில் கும்பலாகவும் கூட்டமாகவும் இருந்து கோஷம் எழுப் பிக் கொண்டிருந்தார்கள்.
* புருஷன் அடிபட்டுக் கிடக்கிறான்' என்ற செய்தி சங்கின் ஒலிபோல, மலையில் கொழுந்து எடுத்துக் கொண் டிருந்த சின்னப்பிள்ளையின் கா து க ரூ க் கு எட்டியது. கூடையை மலையிலேயே போட்டுவிட்டு, பதறிப்போய் ஓடி வந்தாள். தன் லயத்திற்குள் நுழைந்தபோது
கருப்பண்ணன் மயக்கம் தெளிந்து எழுந்து கொண்டி ருந்தான். அவள் அழுத குரலுடன் நெருங்கியதும் அவனுக் கும் ஒரு தனி தெம்பு பிறந்தது. வலது காலால் எட்டி
23

Page 15
உதைத்தான். அது அவள் தொடையில் பட்டு அவளும் சாய்ந்தாள். அவளது நெற்றியில் ஒரு காயம் இருந்ததை அவன் கவனிக்கவில்லை.
"நாளைக்கு வேலைக்கு வந்தால் இப்படித்தான் கல் எறி வோம்' என்று மலையில் கல்வீச்சு நடந்த போது, ஒருகல் அவள் நெற்றியைத் தாக்கியபோது அவளுக்குத் தலையைச் சுற்றியதெல்லாம் அவனுக்குத் தெரியாது.
அவனால் எழுந்து நடமாட முடியவில்லை. முன் வாசலைச் சாத்திப் படுத்துக் கொண்டான்.
(4)
கருப்பண்ணன் கண் விழித்துப் பார்த்தான் அறையில் இருள் சூழ்ந்திருந்தது. கதவைத் திறந்தான். வெளியிலும் அப்படித்தான். தட்டுத் தடுமாறி விளக்கை ஏற்றினான். அதன் மங்கிய ஒளியில் மனைவியைக் கூர்ந்து கவனித்தான். அவள் நெற்றியில் குருதி கசிந்து உறைந்திருந்தது. அவள் பக்கத்தில் போய் நின்றான். அவன் விழிகளில் நிறைந்த நீர் அவள் கன்னங்களில், ஆளுயரத்திலிருந்து சொட்ட, அவள் மயக்கமும் தூக்கமும் கலைந்தாள். எதிரே கணவன் நின்று கொண்டிருப்பதைக் கண்டதும் அவன் பாதங்களைக் கட்டிப் பிடித்துக் கொண்டாள்.
கணவன் மனைவி இருவருக்கும் மண்டையில் காயம். உடம்பெல்லாம் ஊமைக் காயம். அந்த நேரத்தில் அந்த நிலையில் அவள் தானே அவனுக்குத் துணை, அவன் தானே அவளுக்கு ஆதரவு. A
கடையில் வாங்கிய ரொட்டியை சீனியில் தொட்டுச் சாப்பிட்டு, தேநீரைக் குடித்தார்கள். மீண்டும் படுக்கையில் இருந்து சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்து விட்டு ஒரு முடி
வுக்கு வந்தார்கள். அதை மீண்டும் நிச்சயப் படுத்தினான். அவன், ". ... "
24

'சின்னப்புள்ளே.கதிரவேலண்ணனின் க ட் சி யு ம் இந்த வேலெ நிறுத்தமும் ஞாயமானது. ஒரு சின்ன விச பத்தை மட்டும் பொதுவா யோசிச்சிப்பாரு காலையிலே யிருந்து அந்தி வரைக்கும் உழைச்சிட்டு, “அஞ்சி மணிக் கெழுந்து அது இதுன்னு, ஆறரை மணி வரைக்கும் கஷ் டப்பட்டுக் கிட்டிருந்தா நமக்குன்னு குடும்பம் பிள்ளை குட்டி இல்லாதவங்களா..?
வேலை நிறுத்தத்திற்கு முன் வைத்த எத்தனையோ கார ணங்களுள் இதுவும் ஒன்று.
சின்னப்பிள்ளை மெளனமாக இருந்தாள்,
கருப்பண்ணன் உசாராகப் பேசிக் கொண்டிருந்தான்.
பார்க்கப்போனா இன்னக்கி நடந்தது சின்ன விசயம் குடும்ப விசயம், இதுக்குப் போயி போலீஸ் கோடுன்னு மானத்தே விடக் கூடாது. .
காயங்கள் பட்டால் போட வேண்டும் என்று எப் போதோ ஒரு நாள் தோட்டத்து ஆஸ்பத்திரியில், “மருந்து தார பெருமாள் கிட்டே வாங்கிக் கொண்டு வந்த மருந்துக் குப்பியைத் தேடிப் போட்டுக் கொண்டார்கள். * 以
பேசிக் கொண்டிருந்தவன் எழுந்து வெளியே போய், வெற்றிலை எச்சிலைத் துப்பி, கதவைப் பூட்டி விட்டு வந்தான். மீண்டும் பேச்சுத் தொடர்ந்தது.
**...... புள்ள இப்ப நம்ம இங்க இருக்கிறதாலே ஒரு புரோசனமுமில்லே. அண்ணனுடைய பகையெ சம்பாரிச் சிட்டோம்: ஒரு வேளை அவனுடைய நல்ல காரியங்களெல் லாம் தடைபட்டுப் போகும், நாங்க இல்லாட்டாலும் மற்றவங்களாவது நல்லதைப் பெறணும்னா நாங்க ரெண்டு பேரும் தோட்டத்தை வுட்டுப் போறதே நல்லதுன்னு, எனக்குப் படுது, நீ என்ன சொல்லுறே?"
25。

Page 16
பேச்சு ஒரு கேள்விக் கொக்கியில் நின்ற போது சின்னப் பிள்ளை தலையாட்டி அதற்குச் சம்மதம் என்று தெரிவித்தாள்.
அடுத்த நாள் தோட்டம் பூராவும் விசயம் பரவியது. தோட்டத்து அலுவலகத்தில் 'செக்ரோல் முதலான புத்த கங்களில், கருப்பண்ணன்-சின்னப்பிள்ளை ஆகிய பெயர் களுக்கு எதிரே சிவப்பு மையில் போல்டட்" என்று ஆங் கிலத்தில் எழுதினார்கள்.
கருப்பண்ணனும் சின்னப்பிள்ளையும் நாவல் நகரின் *சேலம் பிரிட்ஜ் பகுதியில் குடியேறினார்கள். அவர்கள் இருந்த அதே தோட்டத்தில் முப்பது வருடங்கள் உழைத்து, கடைசியில் நானூற்றைம்பது ரூபா மட்டுமே 'பென்சன்' என்று முழுதாகப் பெற்று, நீங்காத மனக்காயத்துடன் குடியேறி-“பெட்டிக்கடை டோட்டிருக்கும் பழனியாண்டிக் கிழவனை அவர்களுக்குத் தெரியும். கருப்பண்ணனின் தகப் பனான வீரனுடன் பழகியவன். அவன் அவர்களை வரவேற் நீரீன.
'வித்தியாசமா நினைச்சுக்காதே. கையிலே காசு எவ் வளவு வச்சிருக்கே? பழனியாண்டிக் கிழவன் கேட்டான்.
சின்னப் பிள்ளை மண்ணுக்குள் புதைத்து வைத்திருந்த உண்டியலையும், கழுத்திலுள்ள ஒரு ந  ைக  ைய யு ம் காட்டினாள். கருப்பண்ணனிடம் ஐம்பது ரூபா இருந்தது.
பழனியாண்டிக் கிழவன் சகல ஒத்தாசைகளும் செய் தான். முதலில் ஒரு தனிக் குடிசையை வாடகைக்குப் பேசி முடித்தான். ஒரு வாரத்திற்குப் பின் அவனுடைய தொழில் விசயத்தை அவனிடமே கேட்டான்.
*கரு. ஒங்கண்ணன் தொழிலையே செய்றதாயிருந்தா சொல்லு: டவுனிலே ஒரு கடை இருக்கு முடிச்சிடலாம். ஒரு நாளைக்கு நாலு ரூபாவாவது கூலி வரும்."
2ö

கருப்பண்ணன் அதற்கு பூரண விருப்பத்தைத் தெரி வித்தான். தோட்டத்தில் கூட ஒய்வு நாட்களில் அதால் இரண்டு மூன்று ரூபாய் உழைப்பான். 'கைத் தொழில் தெரிஞ்சா எங்கேயும் இடமிருக்கு. அவன் பீற்றிக்கொள்
ଈlité",
நாவல் நகரின் அழகிய 'சூ பெலஸ்' ஒன்றில் ஒரேயொரு வருடம் வேலை செய்துவிட்டு, பழனியாண்டிக் கிழவன் ஒட்டே அந்த யோசனையைக் கேட்டான். அவன் ‘சரி என்று சொன்ன பிறகு தான், முக்கிய சாமான்களை பெல்லாம் வாங்கி வீட்டிலேயே ஆரம்பித்தான். நகரில் பழகியவர்களெல்லாம் அவனைத் தேடி வீட்டுக்கு வந்தார்கள். கூலியையும் குறைத்துக் கொண்டான், எல்லோரும் அவனுக்குப் பரிச்சயமானார்கள்.
(5)
பொழுது புலர, சற்று நேரத்திற்கு முன்பே சின்னப் பிள்ளை எழுந்து விட்டாள் கருப்பண்ணன் துரங்கிக் கொண்டிருந்தான். அவனுடைய சிந்தனை அந்தக் காயத்தி விருந்து எப்போது கலைந்ததோ தெரியவில்லை. அவள் அவனை எழுப்பவும் மனமில்லாமல் விரலைத் தொட்டு இரவு போட்ட கட்டை அவிழ்த்தாள். இரத்தம் காய்ந்திருந்தது.
வெளியில் அவர்கள் வளர்க்கும் நாய் ஏதோ ஒரு புதுமை யைக் கண்டுவிட்டதுபோல் குரைத்துக் கொண்டிருந்தது. அதன் ஓயாத இரைச்சலால் அவன் எழுந்ததும் எழாதது மாக சின்னப்புள்ளே ஏன் நம்ம ராசாத்தி குலைச்சிக் இட்டே இருக்கா?"
அவன் கதவைத் திறந்து வெளியே போனான். கடையை உடைக்க யாரும் வந்திருப்பார்கள் என்று பழனியாண்டிக் கிழவனும் அந்த மங்கிய கருக்கலில் லாந்தரை எடுத்துக் கொண்டு வந்தான். சற்றுத் தள்ளி ஒரு முனகல் சத்தம்
27

Page 17
கேட்டது. ராசாத்தி அங்கேயிருந்துதான் குரைத்துக் கொண்டிருந்தாள். அவர்கள் விரைந்து பார்த்தபோது
..., ன்பத்தி க்காரனைப் போல் ஒருவன் எதையோ தேடிக்
கெர்ண்டிருந்தான்.
'யாரப்பா நீ, என்ன வேணும். ' பழனியாண்டி கே'டான்.
'ஐயா நானு ஒரு காவில்லாதவன், தொணையா யிருந்த கைக் கம்பு கீழே வுழுந்திருச்சி இருட்டிலே, தேட முடியல்லே.'
"ஏன் இந்த நேரத்தில இங்கே வந்தே?"
"ஐயா இங்கே கருப்பண்ணன் வூடு எதுங்க? என் பேரு கதிரவேலு.'
இப்படிச் சொன்னானோ என்னமோ
கருப்பண்ணனும் கதிரவேலும் கட்டிப்பிடித்துப் புலம்பிய அழுகைப் புலம்பல்-பாசக்குரல்-மனத்தின் காயத்தை மனத்தின் தன்மையால் வெல்ல முடியும் என்பதைப் பிரதி பலித்தது. .
A.
கதிரவேலுவின் மெலிந்த தோற்றமும், கறுத்த தாடி யும், உருவத்தை மாற்றி விட்டிருந்தன. தோட்டக் கலவர மொன்றில் அவன் காலை வெட்டிப் போட்ட சம்பவத்தைச் சொல்லிச் சொல்லி புலம்பிக் கொண்டிருந்தான்.
என்னமோ ஏதோ என்று கம்பு தடிகளுடன் ஓடிவந்த குடிசைக் காரர்கள் பச்சாதாபத்தோடு திரும்பினார்கள். ,
*கதிரவேலுவும் கருப்பண்ணனும் சந்தித்து விட்டார் கள், என்ன இருந்தாலும் அவுக அண்ணன் தம்பிதானே!" பழனியாண்டிக் கிழவன் முணுமுணுத்துக் கொண்டே நடந்தான். (B.
(மல்லிகை-ஜனவரி, 1968

சுரங்கப் பாதை
அந்தக் குதூகலிப்பு இன்னமும் ஓயவில்லை. குழாயடி யில் கூடும் பெண்களின் பேச்சுக்களிலும் அடிப்பட்டது.
* குடைக்காரரின்ட மகனுக்கு வேலை கிடைக்கப் போகுதோ,
“மகளுக்குத்தான் கல்யாணப் பேச்சுகள் ஏதும்' ஒரு வருக்கொருவர் பேசிக் கொண்டார்கள். அயலவரின் பலதரப் பட்ட கருத்துக்கள் அவர்களின் செவிகளுக்கு எட்டியதா? பலர் பலவிதமாகத்தான் பேசுவார்கள் என்று அவர்களும் அசட்டையாக இருந்து விட்டார்களோ?
குடைக்கார முஹம்மது சுறு சுறுப்பாகத்தான் வேலை களைக் கவனித்துக் கொண்டிருந்தார்.
பெனிதுடுமுல்லை றோட்டில் அரபு பாடசாலை மண்ட பத்தின் பின்னால் சூழ்ந்துள்ள முஸ்லிம் குடும்பங்களின் குடிசை வீடுகளில் குடைக்கார முஹம்மதின் மகன் சலீம் நல்ல அதிஷ்டக்காரன் என்றெல்லாம் வியந்து கொண்டிருந் தார்கள்.
முஹம்மதின் வீட்டில் இனி ஒரு நாளைக்கு மூன்றுதரம் அடுப்பு எரியும்.
முஹமதை குடைக்காரர்' என்று சொன்னால்தான் வட்டாரத்தில் எல்லாருக்கும் தெரியும். குடை திருத்தம்
29

Page 18
செய்வதே அவரின் சீவிய ஒட்டத் தொழில். ஒவ்வொரு நாளும் இரவு 11 மணிவரையும் வேலை செய்துவிட்டுக் கண்ணயர்வார்.
அன்றிரவு நெடுநேரத்திற்குப் பின்பும் உறக்கம் வரா மல் தவித்துக் கொண்டிருந்தார். ஞாபக சக்தியை மிகவும் கடிந்து கொண்டவராய் எழுந்து சென்று சிமினி வழியாக புகையைக் கக்கிக் கொண்டிருந்த விளக்கின் பிரகாசத்தைத் குறைத்தார். அப்படியும் சிமினியின் ஒரு பக்கத்தில் புகை அப்பிக் கொண்டிருந்தது. அந்தக் களிப்பு இன்னும் அவர் மனதில் குமிழிட்டுக் கொண்டிருந்தது. தன்னை அறியாம லேயே முணுமுணுத்துக் கொண்டார்.
'கஷ்டப்பட்டுப் படிச்சதனாலே பரீட்சையிலே பாஸ் கிடைச்சது. சும்மாயிருந்தா முடியுமோ” எந்தக் காரியமா னாலும் நம்ம முயற்சி இல்லாம எதுவும் அசையாது.
அவ்வேளை இதைக் கேட்க யாரும் விழித்துக் கொண் டிருக்கவில்லை.
நித்திரைக்குப் பின் எழுந்தபோது வானம் வெளிறித் கொண்டிருந்தது. அவரே மற்றவர்களை எழுப்ப வேண்டி யிருந்தது. நாளாந்தக் கடமைகளுள் அதுவும் ஒன்றாகி விட்டது. வழக்கம்போல் ஒரு கப் பிளேன் டீயுடன் பொழுதைச் சுறு சுறுப்பாக ஒளியேற்றினார்.
*சலீம், இண்டைக்குத்தானே அவர் வாரது என்று
எழுதியிருந்தார் தன் மகனைக் கேட்டார். அவன் தலை
யசைத்தான். அவர் கோட் பையிலிருந்த அந்த அஞ்ச லட்டையை எடுத்து மீண்டும் படித்தார்.
*சலிமின் விசயத்தில் ஒரு புதிய திருப்பம் ஏற்படலாம். அது விசயமாகவே நாளை பகல் 12-15க்கு அங்கு வரும் "டீசலில் வருகிறேன். ஸ்டேசனில் சந்திக்கவும். மற்றவை நேரில்.
30

உள்ளம் பூரித்தது, அவருக்கு உலகத்தில் இரண்டு கவ லைகள் ஒன்றை இறக்கி வைத்தால்தான் மற்றது நீங்க வழி பிறக்கும். ஆனால் இரண்டுமே தன்னைவிட்டு வெகு தூரம் சென்று விட்டதாக எண்ணி ஒரு கண ம் மகிழ்ந் தார். கவலையின் அரிப்பு இல்லாத போதுதான் மனிதன் எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறான்.
வானத்தை அண்ணாந்து பார்த்தார். விசும்பெல்லாம் பார்வையைச் செலுத்தி, எட்டு மணியாயிற்று என்பதை ஊகித்துக் கொண்டார். ‘இன்று நேரம் மெல்லப் போவ தாக எண்ணிக் கொண்டார்.
வீடுகளில் சில்லறை வேலைகள் தேடிப் போகிறவர்களும் புறப்படுகிறார்கள் பெட்டிக் கடை பெரிய முதலாளிகள், கூலிகள், நாட்டாண்மைக்காரர்கள் இப்படி ஒரு சின்னஞ் சிறு பஞ்சையுலகமே தங்கள், தங்கள் காரியங்களில் கண் ணாய், வழக்கமான நேரத்தில்தான் கலைந்து சென்றது. இவர்களுக்காக செங்கதிர் நாவல் நகரெங்கும் அள்ளித் தெளித்துக் கொண்டிருந்தான்.
(34....... டீசல் வண்டி வர இன்னும் நான்கு மணித்தி யாலங்களும் பதினைந்து நிமிடங்களும் உண்டு.
கொஞ்சம் கொஞ்சமாகப் பொறுமையை இழந்து கொண்டிருந்தார் முஹம்மது.
சலீம் குடைகளையெல்லாம் சுருட்டிக் கட்டினான். செப் பனிடும் சிறு ஆயுதங்களை ஒரு துணிப்பையில் போட்டுக் கொண்டதும் இருவரும் கிளம்பினார்கள்.
வாப்பாவும் மகனும் பொறப்பட்டாப்போல, எதிரே வந்த அடுத்த வீட்டுக்காரி ஆப் ஷா ஒரு கேள்வியைக் கேட்டுவிட்டு, பதிலை எதிர்பார்க்காமலே சென்றாள். அவர் களும் முறுவலை மட்டும் மலரவிட்டு நடந்தார்கள்.
தலையை மூடிக் கொண்டிருந்த வெள்ளைத் தொப்பியை சரிசெய்து கொண்டார், அது அவர் மகுடம். மகுடத்தைச்
31

Page 19
சுற்றி எழிலான பூ வேலைப்பாடு, அவை அருமை மகள் மர்ஜினாவின் கைவண்ணம். 2.
f சரியாக 8-10-க்குப் பட்டறையை அடைந்ததும், சலீம் வீட்டுக்குத் திரும்பினான்.
பட்டறை அம்பகமுவா வீதியில், நாகூரா ஒட்டலை ஒட்டினாற்போல இருக்கும் தரையும் சுவரும் ஒ ட்  ைட க் கூரையும்தான்.
போனதும் கோட்டைக் கழற்றி ஆணியில் மாட்டினார். வேலை நெருப்பாக ஆரம்பமாகியது.
நகரில் அவரது தொழிலுக்கு எப்போதும் ஒரு தனி மெளசு மூலைக்கு மூலையாய் எறியப்படும் பழைய குடை களெல்லாம் புதிய உருவமும், புது வாழ்வும் பெற்றுக் கொள்ளும் அவர் கையினால் வருகிறவர்களெல்லாம் அவரு டன் பேரம் பேசுகிறார்கள்.
'இந்த ஊருக்கே இது சனியன் புடிச்ச மழை' என்று சலித்துக் கொள்வார்கள்,
‘இன்னக்கி கடையிலே ஒரு புதிய குடைய வாங்குவ தாக இருந்தா, சும்மாவா? முப்பத்துரெண்டு ரூ பா வேணுமே? ஏக்கப் பெருமூச்சு விட்டுக் கொள்வார்கள்.
வாடிக்கைக்காரர்கள் வந்தார்கள் போனார்கள். பழக்கப்பட்ட கைகள் வேலையில் லயித்திருந்தன. மனம் மட்டும் அலைமோதிக் கொண்டிருந்தது.
நாகூர் ஒட்டலின் வானொலிப்பெட்டி பத்து மணியை அறிவித்தது.
ஒட்டல் சிப்பந்தியான ஜமாலி ஒரு கப் ஸ்ட்ரோங்
டீயை நீட்டினான். இவர் ஒரு சிகரெட்டுக்கும் சேர்த் து சில்லறையைப் பொறுக்கிக் கொடுத்தார். மூன்று நிமிட
g
32

குே ● या या या या या या ।
uurteostub
புகை இன்பத்தில், அந்த அஞ்சலட்டையை ஐந்தாவது முறையாகப் படித்து மகிழ்ந்தார். -
சற்று நேரத்தில், முகமெல்லாம் நம்பிக்கையின் ஒளி படர சலீம் வந்து நின்றான், வெற்றிப்பாதையில் நடக்கப் போகிற சந்தோஷமா அது! அவன் நல்ல அதிஷ்டசாலி என்று அயல் குடிசைக்காரர்கள் ஓயாமல் சொல்கிறார்கள்.
** என்ன..?"
“நான் ஸ்டேசனுக்குப் போகட்டுமா?"
'இல்லே. நீ போய் சாப்பாடு ரெடி பண்ணு."
அவனை அனுப்பினால் மரியாதை இல்லை என்று எண்ணி இருக்கலாம்.
மீண்டும் வேலையில் லயித்தவராய் நேற்று கரீம் ‘கார்ட்” கொடுத்துவிட்டுப் போன குடையில் ஒட்டுப் போட ஆரம் பித்தார்.
'பாவம், அவர் பென்சன்காரர். புதுக்குடை வாங்க எங்கே போவார்' என்று நினைத்தபோது அவரே அங்கு வந்துவிட்டார்.
“வாங்க ஒங்க வேலையெத்தான் செஞ்சிகிட்டு இருக்கி றேன். அப்படியே ஒரு 'ரவுன்" போய் வாங்களேன்."
அவர் போனபின் மனம் குடும்பச் சூழலில் ஒன்றி விட்டது.
சலீம்-இனி ஒரு தொழில் செய்ய வேண்டும்,
LD5, 6T விட்டாள்.
மர்ஜினா தான் எட்டாம் வகுப்போடு நின்று
மனைவி-ஹலீமா-அவளுடைய மகத்தான உழைப் பும் சேர்த்து திறமையான குடும்ப நிர்வாகத்தால்தானே, பசியில்லாமல் காலத்தை ஒட்டிக் கொண்டிருக்கிறார்கள்.
༈ ཚོད་མ་
A 507-3
Li 。 鹉。庾·
_陂一。莒、 ag få

Page 20
அவரைப் பொறுத்த வரையில் சுமாரான வருமானந்தான். பலர் நனையாமலும் காயாமலும் போகிறார்களே என்ற பூரிப்பால் அவர் வள்ளல்.
பொழுது சாயும் போது தனது எட்டு ம ணி நே ர வேலையை முடித்துக் கொண்டு இல்லம் திரும்பினால், எல் லாம் அடுத்த நாள் காலையில்தான்.
அவசர அவசரமாக எழுந்தார்.
"ஜமாலி கொஞ்சம் பட்டறையைப் பார்த்துக்கோ மகனே' இரைந்தவாறு வெளிக் கிளம்பி விரைந்தார். மழை மெல்லிசாகத் தூறிக் கொண்டிருந்தது. பலருக்குக் குடை திருத்தித் தருபவர் தனக்கென ஒரு ஒட்டைக் குடையேனும் இல்லாமல்.
அவரை அரித்துக் கொண்டிருந்த கவலைகளில், ஒன்று மகனின் தொழில்; மற்றது மகளின் திருமணம், இரண்டும் அவர் வாழ்வு ஊசலாடிக் கொண்டிருக்கும் போதே நடந்து விட்டால் மகிழ்ச்சி ஏற்படும். என்ன இரு ந் த ர லு ம் ரஹிம் பெரிய மனிதன்தான். தன் சின்னஞ்சிறு குடும்பத் தின் மீதுதான் எவ்வளவு அக்கறை, என்ன பெருந்தன்மை,
அவரோ அட்டன் வட்டார தேயிலைத் தோட்டமொன் றில் ஒரு பெரிய டீமேக்கர், அவரையும் இவரையும் இணைத் தது எது? இந்தக் குடை செப்பனிடும் தொழில் ஒன்று தானே!
அந்த நட்பு இறுக முன்பே ஜனாப் ரஹீமுக்கு, சொய் சாக்கலையில் அரை ஏக்கர் நிலமும் வீடும் வாங்க ஒத்து ழைத்தாரே குடைக்காரர். -
அப்பொழுதுதான் முதல் முதலாக அவர் குடைக்கார ரின் வீட்டுக்குக் காலடியெடுத்து வைத்தார்.
ரஹீமுக்குத் தான் வேலை செய்யும் எஸ்டேட்டில் தொழிலாளர்களின் "லயங்கள்? ஞாபகத் திரையில் காட்சி
34.

யளித்தன. தனது பதினைந்து வருட தொழிலனுபவத்தில் ஒரு நாள் கூட, ஒரு லயனை மிதித்தது கிடையாது. அந்தச் சந்திப்புக்குப் பின் அவர்களது குடும்பத்தைப் பற்றி இவர்களும், இவர்களைப் பற்றி அவர்களும் அறிந்து Gasri GT LIT rig, 6t.
சலீமின் தொழில் முயற்சியைத் தன்னிடம் விடுமாறு சொன்னபோதுதான் ஹலீமாவும், மகனுக்கு வேலை எடுத் துக் கொடுத்தால் அது பெரிய உதவியாக இருக்கும் என்று
சொன்னாள்.
அதற்குப்பின் ரஹீம் குடிசைக்கு வந்ததே இல்லை. ஆனால் கடைத் தெருவில் சத்திக்க நேர்ந்தது. அப்போ தெல்லாம் குடைக்காரரின் மனதில் அவர் அளித்த அந்த வாக்குறுதி மெல்ல எட்டிப் டார்க்கும். மிகுந்த ஆவலுடன் எதிர் நோக்குவார். ஆனால் ரஹீம் வேறு விசயங்களுக்காகச் சந்திப்பார்.
ஆனால் இன்று
புகைவண்டி நிலையம் 12 மணியைக் குத்திக் காட்டிய போது,
அவர் இவருடைய கவலைக்கு மருந்ததாக வருகிறார்.
குறிப்பிட்ட நேரத்தில் வண்டி வந்தது. திமுதிமுத்த கூட்டத்தில் அந்தச் சந்திப்பு நிகழ்ந்து விட்டது.
இந்தச் சந்திப்புகள் தாம் உலகில் எத்தனை எத்த னையோ சாதித்து விடுகின்றன. பார்க்கப் போனால் அவர் ஒரு எஸ்டேட் அதிகாரி. இவர் குடைக்காரர். மற்றவர்கள் சொல்வது போல், ‘ஏணி வைத்தாலும் எட்டாத உறவு'
- அன்றெல்லாம் அவர்கள் குடிசையிலும் கடைத் தெரு விலும் அப்படி என்னதான் கதைத்துக் கொண்டார்களோ ! சுற்றுப் புறத்தில் ஒரு சலசலப்பு ஏற்பட்டது.
。 ?5

Page 21
'கஷ்டப்பட்டுப் படித்தவர் ரஹீமை சந்தித்தால் வேலை கிடைக்கும்.
ஒரு வருட காலமாக அவரது தேயிலைத் தொழிற்சாலை யில் தொழில் பழகிக் கொண்டிருந்த ஒருவர் போய் விட்டார். அந்த இடத்துக்கு ஒருவர் தேவையாம்.
நூற்றுக் கணக்காகக் குவியும் விண்ணப்பங்களை தோட் டத் துரை தலைமைக் குமாஸ்தாவிடம் ஒப்படைத்து விட்டு, டீமேக்கருடன் கலந்து ஒருவரைத் தேர்ந்தெடுக்குமாறு கூறி, இருந்ததை மட்டும் மறைத்து விட்டார்.
அந்தத் தொழில் நிரந்தரமானதல்ல. பழகி முன்னுக் குப் போகக் கிடைக்கும் அரிய வாய்ப்பு, ஒரு வருடத்திற்கு மட்டும் சிறு சம்பளம். வேறு எந்தவித உரிமையும் இல்லை என்றெல்லாம் விளக்கினார். அதற்கென்றே வந்து அத்தனை மணிநேரம் சுற்றி வளைத்துப் பேசியதெல்லாம் அவை தானோ!
பலர் அவரைப் பிரத்தியேகமாய்ச் சந்தித்து தொல்லை கொடுக்கிறார்களாம்.
அப்படியானால், சலீம் அந்த அரிய வாய்ப்பைத் தவற விடக் கூடாது. அவன் முந்திக் கொள்ள வேண்டும் என் பதுதானே அதன் கருத்து,
அதற்காக அவன் என்ன செய்ய வேண்டும்?
அவர் சொல்லிச் சென்ற அரிய யோசனையின்படி சலீம் தன் சொந்தக் கையெழுத்தில் விண்ணப்பத்தை எழுதி விட்டான்.
இரண்டு நாட்களாகக் குடைக்காரரும் அங்கேயும் இங் கேயும் ஒடித் திரிந்தார். அதிகம் பங்கெடுத்த ஹலீமாவுக்கு உற்சாகம் ஓயவில்லை. அதிகாலையில் நாகூரா ஒட்டலுக்கு அப்பம் சுட்டனுப்பும் தெம்பு பிறந்தது சற்று நேரத்திற் கெல்லாம்.
36

'சலீம், இதை பிரயாணச் செலவுக்கு வைச்சிக்கோ பெற்றவர்கள் மகிழ்ந்துதான் போனார்கள். அவன் உடனே அந்த விண்ணப்பத்தையும் எடுத்துக் கொண்டு புறப் பட்டான்.
அட்டனுக்குப் போனதும், சுரங்கப்பாதை வழியாகத் தான் ரஹீமின் தோட்டத்துக்குப் போக வேண்டும். மெழுகுவர்த்தியையும், தீப்பெட்டியையும் வாங்கிக்கொண்டு போயிருந்தான். சலீமைப் பொறுத்தவரையில் அவனுக்கே உரிய நடையில் எங்கிருந்தோ எதையோ உணர்ந்து கொண் டதைப் போல் ஒரு புதுத் தெம்பும் இருந்தது. அதுவே அவன் பாதைக்குப் பெருந்துணையா?
சுரங்கப்பாதை-நீண்ட இருட்டுக் குகை விரிந்து வழி விடுகிறது. அவனுக்கு அது புதிய பாதையா? இருள் அக லாத அவன் பாதையில், கால ஓட்டம் துரத்திய போது அதன் வேகத்தைச் சகிக்காது ஒடிய காலமும் இருந்தது தான். விழுந்துபட்ட காயங்கள் அவனுக்குப் பக்குவமாக நடை பயிற்றுவித்திருக்கின்றன.
மெழுகுவர்த்தியை உருவி எடுத்து ஒளியேற்றும் பிரயத் தனத்தில் படுதோல்வி, தீக்குச்சிகள் தீய்ந்தன. நடை யெண்ணி நடந்தான், மெழுகுவர்த்தி ஆடி அசைந்து எரி யும்போது, அதன் நிழல் சுரங்கத்தின் மேல் வளைவிலும் பக்கச் சுவர்களிலும் பட்டுத் தெறிக்கும் போது சுரங்கமே தலை கீழாகத் தெரிவது போல் ஒர் உணர்ச்சி. சுரங்கத்தை அமுக்கும் குன்றுகளிலிருந்து சிந்தும் புனல் சுரங்கக் கண் களிலிருந்து துளும் பித் தெறித்த கட்டைகள் ஒவ்வொன் றும் ஊறி பாதசாரிகளின் பாதச் சூட்டுக்காக சில்லிட்டுக் கிடக்கின்றன. நடையெண்ணி நடந்தாலும் ஒவ்வொரு அடியும் வழுக்கும். ஒரு நடைப் போராட்டம்.
'காலியான இடத்துக்கு ஆள் எடுத்தாயிற்று' என்று அங்கு கிடைத்த முடிவு ஆச்சரியமானதல்ல. ஜனாப் ரஹீ அவர்களுக்கு ஒருவர் ஏற்கனவே ஐநூறு ரூபா விலை பேசி
37

Page 22
அந்த அரிய வாய்ப்பைப் பெற்றிருக்கிறார் எனும்
உண்மையை தன் குடிசைக்குச் சொல்ல வேண்டாமோ?
சுற்றுப்புறமும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் அந்த மகத்தான முடிவைத் தெரிந்து கொள்ளும் வரை அந்தக் குதூகலிப்பு அங்கு ஓயாதுதான். அவனது அந்த அதிஷ்டத்
தில் அவர்களுக்கும் பங்கு இல்லையா? -
சலீம் சுரங்கப் பாதையில் நடந்து கொண்டிருக்கிறான்.
O
(மல்லிகை-ஜூன், 1970)

அந்த வண்டியின் ஓட்டம்
அந்த ஒற்றை மாட்டின் கழுத்து மணி கaைர் என்று ஒலிக்கிறது.
சாலையில் நேற்று முளைத்த நாகரிக ஒலிகளுக்கு மத்தி யில், 'கிணுங்-கிணுங்'-அந்த ஆரவாரமற்ற மணி யோசை யாருக்குக் கேட்கப் போகிறது? வண்டி என்ற பேரில் அது மெல்லத்தான் அசைகிறது, அதன் குடை இன் றும் முற்றாகச் சாய்ந்து விடவில்லை. ஆங்காங்கே காய்ந்த தென்னோலைச் இற்றுத் தொங்குகிறது. அதையெல்லாம் திருத்தி அமைக்க வேண்டுமென்றால் நல்ல பாக்குமரப் பட்டை சீவி. ஒலை, கம்பு, பலகை என்றெல்லாம் பெரிய செலவு. மாடும் கிழடு கண்டு விட்டது. அதற்கு வெறும் வண்டியையே இழுக்க முடியவில்லையே. புதிய இளம்மாடு ஒன்று வாங்க வேண்டும் என்று எண்ணிக் கூடப் பார்க்க முடியாதே அவரால்.
வாகனங்கள் வந்து மோதும் நடுச் சந்தியில் வந்து குத்திட்டு நின்று விட்டதும் வண்டியின் உரிமையாளர் முகம்மது ஷாவுக்கு உள்ளூரை ரோசமும், வெட்கமும், அவ மானமும் கனன்று கொண்டு வருகிறது. இறங்கி நின்று மாட்டுப் பாஷையில் கத்துகிறார். அந்த அர்த்தமற்ற சொற்களை அது புரிந்து கொண்டதோ என்னவோ! "அசைய மாட்டேன்' என்கிறது. ஷாவுக்கு வந்த ஆத்திரத் தில், வலது கையிலுள்ள பச்சைப் பிரம்புக்கு உருவேற்றப் படுகிறது. கண் மண் தெரியாமல், அந்த ஒன்றும் அறியாத
39

Page 23
அப்பாவிப் பிராணியின் முதுக்குத் தோலில் ஒரு கணம் நர்த்தனம் ஆடியது எப்போதும் இல்லாமல்,
எசமானோடு ஒட்டிப் பழகிய அந்தக் கிழ மாட்டுக்கு, அவர் ம ன ப் பாங் கு புரிந்திருக்குமோ, அல்லது அடி பொறுக்காமல் தான். அது என்னமாய்க் குதித்து ஒடு கிறது, ஒரு புத்தம் புதிய கன்றுக்குட்டியின் துள்ளலுடன். ஷா அசந்துபோய், பனிக்காலத்தில் நடுங்குவது போல, வண்டியின் வேகம் சகிக்காமல் ஆடிக்கொண்டே, மனம் பூரித்துப் போகிறார்.
அப்போது அவருக்கு.
- அந்தப் பழைய "ஜில்ஜில் ஒட்டத்தை அல்லவா ஒத் திகை காட்டி ஒடுகிறது.
அவருக்குத்தான் மனம் எவ்வளவு இதமாக. இழந்த இளமையெல்லாம் மீண்டும்-அவர் முகத்தில் அப்படி ஒரு ஒளி பிரகாசிக்கிறதே! -
அப்போதெல்லாம் வண்டியின் ஒலியும், மாட்டின் கழுத்து மணியும் பின்னணி இசைக்கக் கம்பீரமாக அவ ருகே உரித்தான மலாய்ப் பாடல் ஒன்றைப் பாட.
ஒட்டத்தையே ஆரம்பித்து வைத்து ஓடிய ஒட்டம் அது!
அந்த இனிய நினைவையெல்லாம் ‘டப்' என்று நிறுத்தி
விட்டதே வண்டி, மாடு மிகவும் களைத்து, ஒரடிகூட எடுத்து
வைக்க முடியாமல், கண்கள் பிதுங்க, ஷாவின் ஆக்கினைக் காக விழித்துக் கொண்டிருக்கிறது.
மனிதனுக்கு வந்த ஆக்ரோஷத்தால் தன்னையே ஒரு கணம் மறந்து விடுகிறார். பாவம் அது வாயில்லா ஜீவன். அதன் உடம்புக் கூட்டுக்குள் அந்த ஜீவன் எப்படிச் சிறைப் பட்டிருக்குமோ! அந்தத் தகாத கூட்டிலிருந்து என்றுதான் விடுதலை கிடைக்கும் என்று ஏங்கிக் கொண்டிருக்குமோ !
40

"..ம்மா' என்று கத்தத் தெரியும். புஸ்.புஸ். என்று மூச்சு விடத் தெரியும். ".
முகம்மது ஷாவுக்கு கைகளும் ஒடவில்லை; கால்களும் ஒடவில்லை.
'இருந்தாப்போல இருந்து இன்று, அதிர்ஷ்டம் குருட்டு வாக்கில் பட்டது. இந்த நேரத்திலே, இப்படிப் பேசி எப்ப போய் இரண்டு ‘ட்றிப்' சாமான் ஏத்தறது.? சே! நாளுக்கு நாள் இந்தப் போராட்டம். மிக மோசமான நிலைக்குத்தான் வந்துவிட்டது. அதனால் அவருக்குக் கஷ்டம், அவரால் அதற்குப் பெருந்துன்பம். அதன் இளமைக் கால சேவையை அவர் மறந்துவிட்டாரா? அவரது இளமைக் காலத்தில் எத்தனை "இளம்' மாடுகளுக்கு அதிபதி. அப்படியானால் அவரைத்தான் இந்தச் சமுதாயம் மறந்து விட்டதோ!
ஒருவாறு முச்சந்தியைக் கடந்து நூறு யார் தூரம் நகர்ந்து, நகர்ந்து போனாரோ என்னவோ
ரோட்டில் பலசரக்கு சாமான்களை அடைத்துக் கொண்டு லொறியொன்று, இழித்துக் கூறி, எள்ளி நகை யாடிக்கொண்டு போயிற்று. அதனால் அவர் மனம்தான் மேலும் புழுங்கிற்று.
நான்கு சில்லுகள் பூட்டிய வண்டியொன்று போனாலே போதும். அது முகம்மது ஷாவின் நெஞ்சக் குமுறலைக் கிளறி சூறாவளியை ஏற்படுத்தத்தான் அப்படிப்போகும்.
கோபக்கனல் சொல்லுருவாய் உதட்டில் நெளிகிறது. *அந்தக் காலத்தில் இவங்க இப்படித்தான் ஓடினாங்க . என்னமோ பெரிய ‘இதே கண்டு பிடிச்சிட்டாங்க போங் கடா அதான் இடமிருக்கே, இன்னும் ஏன் பூம் பூம்.ணு கத்திக் கொல்லப் போறிங்க, துணிச்சல் இருந்தா இந்த முகம்மது ஷாவுடன் மோதிப் பாருங்கடா...'
4】

Page 24
"இன்னும் அரைமைல் தூரம் போக வேண்டியிருப்பதை நிதானித்துக்கொள்கிறார். மார்கழியின் குளிரும், விடாத மழைத் தூறலும் வேறு. மீண்டும் இறங்கி நின்று 'பூசை நிகழ்கிறது. அந்தப் பொல்லாத "மாட்டடி முடிந்ததும் கிழவருக்கே கைகள், மனம், உடம்பு சகலமுமே ஒரு மாதிரி யாகத்தான் இருக்கிறது.
பாவம் அந்தக் காலத்தில் இதுவும் ஒரு நல்ல இளம் மாடு என்று பெயர் எடுத்திருக்கும், கிழமாடுகள் இதனு டன் போட்டிபோட முடியாமல் தவித்திருக்கும், கிழடு களுக்கு வண்டிக்காரர்கள் மாட்டடி அடித்திருப்பார்கள். அப்போது அவை பூமித்தாயை அரவணைத்துக் கொண்டிருக் கும். ஏற்றிச் சென்ற பொதிகள் எல்லாம் சிதறிப் போயி ருக்கும்,
இப்போது வண்டியின் சக்கரங்களும், ஷாவின் நெஞ்ச மும் மெல்ல அசைகிறது.
ஆரம்ப காலத்திலும் அவரிடமிருந்தது ஒரு ஒற்றை மாடும் வண்டியும்தான். எவ்வளவு சுறுசுறுப்பு. நாவல் நகரைச் சுற்றி ஆறுமைல் சுற்று வட்டாரத்தில் அவர்தானே 'முடிசூடா மன்னர்,' எங்கு போக வேண்டுமென்றாலும் ஷாவின் வண்டி. எல்லாவற்றிற்கும் அவரையே சுற்றிச் சுற்றி எவ்வளவு பெருமை.
முகம்மது ஷாவுடைய வண்டியிலே போனால் 'குளு குளு வண்டியில்" போனமாதிரித்தான் அன்று.
எத்தனை எத்தனையோ மாற்றங்கள்
அவைா
அந்த அதிர்ஷ்ட வண்டியின் முதல் மாட்டுக்கு ஈடா குமா? அதுதான் மேடு பள்ளங்களில் எப்படி ஒடிற்று!
42
 

.
முகம்மது ஷாவைப் பார்க்க மழுங்கிய மாநிறமாய்
இருப்பார் வாரத்திற்கொருமுறை “புல் சேவ்" பண்ணிக் கொள்ளும் முகமெல்லாம் நரைமுடி தாறுமாறாக மண்டிக் கிடக்கிறது. மொட்டை அடித்துக்கொள்ளும் தலையா அது!
அழுக்கேறிய “பிஜாமா"சாரம், அதற்கு மேலால் கன மான கமிசை. மழை நேரத்தில் கால்கள் குளிர்ந்து போகா மல், பாதுகாப்புக்கு ஒரு சோடி பழைய தோல் செருப்பு
திருமணமாகிப்போன, அவரது இரு பெண் பிள்ளை களும், நீண்ட காலமாக ஒதுக்கப்பட்டே போயின, தாய், தந்தையின் ஞாபகம் வந்து, திடீரென்று பார்க்க வந்து விட்டால்- -
அவர்களாலேயே இனம் கண்டு கொள்ள முடியாத தோற்றம் அது.
அந்த வயோதிகத் தாய் தான் அறி மு க ப் படுத் த வேண்டியிருக்குமோ! அவளாலும் முடியாது. ஷா ஏதாவது கொண்டுவந்து கொடுத்தால் அன்றைக்கு அடுப்பு புகையும், மற்ற நேரங்களில்-சதா ஏதாவது காரணம் இன்றி ஷாவுடன் “வாய்ச் சண்டை' போடுவாள். பிள்ளைகளைக் காணாத ஏக்கம் என்று அயல் வீட்டுக்காரர்கள் கூறுவார் கள். சில சமயங்களில் “சண்டை' வலுவடைந்து, ஷா ஏதாவது சொல்லிவிட்டார் என்றால், அழுகை ஒலம் கேட் கும், அந்தக் குடிசையில் இது விசித்திரம் ஒன்றும் அல்ல.
**ஆச்சி பேசாமல் ராபியா வீட்டிலே போய் இருங்க” என்று யாரும் இப்போது புத்தி சொல்லப் போவதில்லை.
*அப்ப நீயா கிழவனுக்கு கஞ்சி காய்ச்சிப் போடுவே' என்று எப்போதோ வெடுக்கென்று கூறி அதற்கு முற்றுப் புள்ளி வைத்து விட்டாள். அவள் குடிசையில் ஒரு சமயம் கண்ணிர் பெருகும், ஒலம் கேட்கும். ஒரு காலத்தில் சிரிப் பின் ஒலி இருந்திருக்கும். அயலவருக்கு என்ன? . " : יש
43

Page 25
மூத்தவள் ராபியா எப்போதோ ஒரு ஹஜ்ஜிப் பெரு நாளைக்கு பணமும், உடுப்பும் அனுப்பியிருந்தாள். இளைய வள் பெளசியாவும் ஓயாமல் தாய்க்குக் கடிதம் எழுதிக் கூப்பிடுவாள்தான்.
வயதானபின், பிள்ளைகளின் நிழலில் முடங்கிக் கொள் வதும் ஒரு வாழ்வா? என்று இருவருமே விரும்பவில்லை.
முகம்மது ஷாவுக்கு ஒரு பற்றுக்கோடு பலமாக இருந் திது.
வண்டிகள் பழசாகும்போது புதுப்பிப்பார் மாடுகளின் கால்கள் ஒடியோடித் தளர்ந்து விட்டால் இளயதுகளைக் கொண்டுவந்து கட்டுவார்.
அவரே கிழமாகி, பழசாகி நின்றால்...!
தூறிக்கொண்டிருந்த மழை வா ன த் தி ல் நிகழ்ந்த புரட்சியால் 'சோ 'வென்று கொட்டத் தொடங்குகிறது. வண்டியின் காய்ந்த தென்னங்கீற்றினூடாகப் பெரிய துளி கள் கொட்டுவது போதாதென்று சாரலும் வேறு ஷாவைத் தாக்க ஆரம்பித்து விட்டது.
இந்நேரம் அவரது வீட்டின் கூரையும் ஒழுகும், அவரது வண்டியின் குடையைப் போல. அங்கு கிழவி என்ன பாடு படுவாளோ?
அவசரப்பட்டுத் திரும்பி விட்டால்.
இன்று கிடைத்திருக்கும் ஓர் அதிர்ஷ்ட "பேரம்' என்ன ஆகும்.
அம்பகமுவ வீதி வழியாக ஊர்ந்து கொண்டிருந்தவ ருக்குச் சட்டென்று இடது பக்கத்துக்குத் திருப்பி பின்னால் எடுப்பதற்குள் இ.போ. சகாரன் ஓயாமல் ஊதிவிட்டான். 'மக்கள் வங்கிக்கு' முன் அரசாங்கத் தார் ரோட்டு குறுகி இருப்பதால் எப்போதும் ஒரு நெரிசல் இருக்கும் என்று அவனுக்குத் தெரியாதா? ரோட்டில் தேங்கி நின்ற நீர்ைச்
44
 

"சடா"ரென அறைந்தாற் போல மாட்டுக்கும் வண்டிக்கும் அவருக்குமாக அடித்துவிட்டுப் பறக்கிறானே பாவி,
அப்புறம்.
இன்னொன்று பின்னால் ‘பூம்.பூம்.ணு'.
‘ஹார்ன்' இருக்குன்னு சும்மா வேணும் என்று கத்த றான்களா!
*குருத்து இலை காய்ந்த இலையைப் பார்த்து அப்படி என்ன சிரிப்பு."
ஒற்றை மாட்டு வண்டியின் சொந்தக்காரர் முகம்மது
ஷா மிகுந்த இறுமாப்புடன், ஒரு காலகட்டத்தின் அசலுக் குரிய வேகத்துடன் போகிறார்.
ஆம். பூ பூ, 'நகல்களுக்கு நாலு கால்களே முளைத்து முறைக்
3, ..." (SGLD ''
நேற்று மாலைதான் அவருக்கு அந்த அதிர்ஷ்ட அழைப்பு வந்தது. நகரில் ஒரு பிரபல புள்ளியின் வீட்டு வேலைக்காரப் பையன் வந்து சொன்னான்
ஷேக் முதலாளியின் லொறிகள் இரண்டும் கொழும்புக் குப் போயிருக்கு, நாளைக்குப் பகல் பன்னிரண்டு மணிக்கு முன் உள்ள 'நல்ல நேரத்தில், ரம்புக் பிட்டிய புதிய பங் களாவுக்கு இரண்டு டிறிப்' கொண்டு போனால் போதும், அதுக்குள்ளே லொறி வரும்.'
பேசி முடிந்ததும் அவன் விருட்டென்று ஓடிவிட்டான்.
"உங்க முதலாளி ஏன் டவுன் பக்கத்திலேயிருந்து இப்ப ஒதுங்கிறார்.? கிழவரின் கேள்விக்குப் பதில் சொல் லக்கூட அவன் அங்கு இல்லை. தானே பேசிக் கொண்டிருக் கிறார்
玺5

Page 26
முதலாளிக்கு என்னப்பா, அவர் காரில் போவார்; ஐந்து நிமிடம், நடந்து போனாலும் அரை மணி நேரம் போகாது. அப்ப அப்ப.
மாட்டு வண்டியில் போனால்..?
அவரது ஆத்திரத்தைக் கிளப்பும் கேள்வி அது அடிக் கிறார், துன்புறுத்துகிறார், துரிதப்படுத்துகிறார்.
பரபரப்பும் தவிப்புந்தான்.
“காலையிலே அவிழ்த்து விடப்பட்டிருந்த சனியனை" வண்டியில் பூட்டி வந்த லட்சணம் இப்படியா இருக்கனும்."
முப்பது வருடங்களுக்கு முன்தான் ஒரு புண்ணிய வானுக்கு, நாளாந்தக் கூலிக்கு வண்டி இழுக்கத் துவங்கிய போதுதான்-அது அவர் தலையிலே ஒட்டியிருப்பதாகஅதையே அவர் வாழ்க்கைக்கு ஆதாரமாக்கிக் கொண்டா ராம், பின்பு அவருக்கே வண்டியும் மாடும் சொந்தமாக வாங்க வேண்டுமென்ற ஆசை துளிர்விட்டு, விருட்சமாய் வளர்ந்தது.
"அடேயப்பா நினைவுகள் மட்டும் இன்னும் பழசாகவே இல்லை."
அதோ அந்த பங்களா!
முகம்மது மலைத்து நிற்கிறார்.
Աւb...ւմrrւհ... Աւb
'அட.சீ.இதென்ன?’ அவரது உள்ளம் சுரீரென்று சுட்டுவிட்டது.
கொழும்புக்குப் போன லொறிகள் வந்து இந்த நேரத் திலா கழுத்தறுக்க வேண்டும்.
லொறிகள் பங்களாக் கேட்டுக்குள் நுழையப் பார்க் கின்றன.
46

ஷாவும் தன் வண்டியை சரியாக வாயிலில் நிறுத்திக் கொள்கிறார்.
இனி அவர் அசைத்தால் தான் அவை உள்ளே போக (ԼԲւգ-պւb.
பூம். பூம்.பூம். 'நன்றாக நாக்கைப் பிடுங்கிக் கத்தட்டும்." அவர் வண்டியை அசைக்கவில்லை.
'முடிந்தால் இந்த ஷாவுடன் மோதிப் பாருங்கடா' என்று நினைக்கிறாரோ!
ஹார்ன் சத்தம் வானைப் பிளக்கிறது. யாரோ முதலாளியின் ஆள் ஒடி வருகிறான். *யாரப்பா.என்ன இ தெ ல் லாம் .ஒ வந்து அதுதான் லொறிகள் நேரத்துக்கு வந்திருச்சே.இப்ப என்ன அதுக்கு. உள்ளுக்கு வரட்டும்.'
*அப்ப ரெண்டு ட்றிப் ஏத்த என்னை ஏன் வரச் சொல் லணும்?"
இப்படி திறந்த வெளியில், ஒரு சாதாரண வண்டிக் காரனோடு போர் தொடுப்பது அசிங்கமாகப் பட்டதோ அவருக்கு, முகம்மது ஷாவிடம் ஒரு ஐந்து ரூபா நோட்டை எடுத்து நீட்டுகிறார்.
ஷாவுக்கு இப்போது இரத்தம் நன்றாக சூடேறி விட்டது. துள்ளிக் குதிக்கிறார்.
'உங்களுக்கெல்லாம் மாட்டு வண்டி என்றால் எளப்பமா இருக்கு என்ன?”
'முப்பது வருஷமா இந்த முகம்மது ஷா வண்டி இழுத்து உழைத்துத்தான் சம்பாதிச்சான், இந்த மாதிரி ஐந்துக்கும் பத்துக்கும் அடிமை ஆகிற ஆள் இல்லே.'
47

Page 27
அதற்கு மேல் அவரால் அங்கு நிற்க முடியவில்லை. தன் வண்டியை ஒரு வெட்டு வெட்டித் திருப்பிச் சாலையில்
ஒட்டுகிறார். வெலவெலத்துப் போய், மாடு தன் ‘அசல்'
வேகத்தில் தான் போகிறது.
இப்போது ஷாவின் மன ஆழத்தை என்னவோ குடை கிறது. அவர் அந்த ஒன்றும் அறியாத ஜீவனைக் கூர்ந்து கவனிக்கிறார். அதன் முதுகுத் தோல் மெல்லிசாக உரிந்து குருதி கசிய கண்களும் ஈர்த்து.
அவர் கண்களும் கண்ணிராய்க் கரைந்து ஒடுகிறது. அந்தப் பச்சைப் பிரம்புகளை முறிமுறியென்று முறிக் கிறார்.
அன்றெல்லாம் முதுகுக் காயங்களுக்கு மருந்து போட் டுத் தடவிக் கொடுக்கிறார். d
‘இனி நான் உங்களைப் பிரம்பால் அடிக்க மாட்டேன். சத்தியமாக..' வடிா நெஞ்சம் நொந்து கூறுகிறார். அது பலமாகத் தலையை ஆட்டி "ம்மா’ என்று கத்துகிறது ஷ வுக்குத் தான் புரியுமோ !
O
(மல்லிகை-மார்ச் 1972)

அவர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள்
அடித்தது. பாடசாலையின் திறந்தவெளி மண்ட பத்தில் தடதடவென்று பிள்ளைகள் காலைக் கூட்டத்திற்கு விரைந்தனர். "கிறா அத்" ஒதி காலைக் கீதம் பாடியபின் ஆசிரிய அறிவுரையும் முடிந்தது. மாணவ மாணவிகள் மீண்டும் வகுப்புகளுக்குச் சென்றனர்.
எங்கள் கண்கள் அவர்களைத் தேடுகின்றன. ஹாவியா, காசியம், பீவி இப்படி.
அவர்கள் எங்கே?
இன்று எங்களுக்கு பெரிய ஏமாற்றம்.
ஆராய்ந்ததில் சில பிள்ளைகள் சொன்னார்கள்
'லத்திபா சம்மளங்குளத்துக்கு அவகட காக்காட கல்யாணத்துக்கு போய்ட்டா.
‘ரஹீமா அக்காவோட முழுகப் போனா.' 'நிஜாரா காட்டுக்கு கொள்ளி கொண்டார போனா."
“சேர் துத்துருப்பிட்டி ரோட்டு டோசர் போட்டு வெளிசாக்குறயாம், ஹாவியா அவட வாப்பாவோட செக் ரோல் வேலைக்கு போனா'
*காசிம் பீவி வூடு மொழுக நிக்கிறா,'
塞剑 4 س-0507 A

Page 28
அப்படியென்றால் ஆஷா எங்கே?
சரியாக ஒரு கிழமை பாடசாலைக்கு ‘கட் அத்துக் கொண்டு எங்கே திரிகிறாள்? எதற்காக நிர்ப்பந்திக்கப் படுகிறாளோ?
ஆஷா இல்லாட்டால் பாடசாலையில் சுறுசுறுப்பு இல்லையே!
சரி வரட்டும். இன்று இல்லாவிட்டால் மறுநாள். என்றோ ஒருநாள் வந்துதானே ஆகவேண்டும்.
இந்த முறை இரண்டில் ஒன்றைப் பார்த்துவிட வேண் டும். கைகள் சிவக்க இரண்டு அடி போடவேண்டும். அப் போதுதான் ரோஷம் வரும்.
அவள் இன்றி பாடங்களை எப்படி நடத்துவது?
ஆஷா
பாடசாலை நிர்வாகத்துக்கு சமர்ப்பித்திருக்கும் பிறப்பு அத்தாட்சிப் பத்திரத்தின்படி அவளுக்கு பதின்மூன்று பூர்த்தியாகி விட்டது. ஆனால் வயதுக்கு மீறிய வளர்ச்சி. கிராமத்துக்குச் சொந்தமான அந்த வெகுளிப்பார்வை, பொது நிறம், எந்நேரமும் சுறுசுறுப்புடன் காட்சியளிப்பாள்"
ஆஷா பாடசாலைக்கு வந்துவிட்டால் போதும், ஆயிரம் சண்டைகள், ஒரே கத்தலாக இருக்கும்.
*சேர் ஆஷா அடிக்கிறா' アg 列 42 — (o... C~
A. A.
“சேர் ஆஷா பட்டஞ் சொல்றா'
*சேர் ஆஷா தூசனத்தால் ஏசினா'
வழக்குகளை விசாரித்து தீர்ப்பும் தண்டனையும் வழங் கும் பொறுப்பு மெளலவி ஆசிரியரிடமே, ஆஷாவின் குரல் தான் "கீச் கீச்" என்று ஒலிக்கும் மாலையில் பனை மரங்களில் வந்தடையும் கிளிக் கூட்டத்தின் இரைச்சலைப் போல.
総墓0
 

T uий іішпеartѣ ஆனால் அவள் படிப்பில் கெட்டிக்காரி, அபார ஞபாக சக்தி, அவளுடைய விவேகத்தை நாங்கள் பாராட்டியுள் ளோம். ஆங்கில ஆசிரியர் அவளை ஒரு "ஜீனியஸ்' என்றே
சொல்வார்.
பாடசாலையில் ஆஷாவைப்போல் ஆரிபாவும் ஒருத்தி. அவர்களுக்கு நிகராக முபாரக்கைக் குறிப்பிடலாம். பாட சாலையை விட்டு விலகி மூதூரில் கல்வி கற்கும் ரவூப்தினும் கெட்டிக்காரன். அடுத்து அமீர், சித்தீக் என்று வரிசைக் கிரமமாகக் கூறலாம்.
ஆஷாவுக்கு ஒரு விசயத்தை ஒரு முறை சொன்னால் போதும். பல்கீஸ் போன்றோருக்கு மூன்று நான்கு முறை விளங்கப்படுத்த வேண்டும். திருப்பித் திருப்பிக் கூறி சிறு குறிப்புகளும் கொடுக்க வேண்டியவர்களும் உண்டு. ஆனால் நாங்கள் யாரையும் ஒதுக்கி விடுவது இல்லை. அது ஆசிரி யப் பண்பு ஆகாது. எல்லாரையும் மூளைசாலிகளாக்கி நாட்டுக்குப் பயன் உள்ளவர்களாக்கி அவர்களுக்கு விமோ சனம் அளிப்பதே ஆசிரியக் கடமை.
இங்கு படிப்பு முடிந்ததும் எத்தனை பேர் மகா வித்தி யாலயத்திற்குப் போவீர்கள்? அதற்குப் பின் உங்கள் எதிர் கால விருப்பம் என்ன? இப்படி ஒரு நாள் நாங்கள் புள்ளி விபரம் எடுத்தோம்.
டொக்டர்கள், இன்ஜினியர்கள், ஆசிரியர்கள், விவசர யிகள், லிகிதர்கள்.
"ஆஷா உன் விருப்பம் என்ன? நாங்கள் ஆவலுடன் கேட்டோம்.
அவள் சொன்னாள், சேர் நான் டொக்டராக வந் தால் எங்கட உம்மா, தம்பி. இந்த ஊரிலே எல்லாரும் கன தூரம் ஆஸ்பத்திரிக்கு என்னத்துக்கு சேர் போகனும்,
இந்த ரஜரட்ட பிரதேச முஸ்லிம் கிராமத்தில் பிறந் தவள் ஒரே பெண். அதிஷ்டசாலி என்றார்கள். அவளுக்கு
51

Page 29
மூத்தவர்கள் நான்கு பேரும் ஆண்கள். மூன்று பேருக்கு கல்வி இல்லை. மாடு சாய்க்கிறார்கள் வயல்வேலை, சேனை என்று காலம் ஒட்டும் வேலை இளையவன் பாடசாலைக்கு வருகிறான். அவ ன் தா ன் அமீர், மூத்தவன் தெளபீக் "மொறக்காய் வியாபாரம் செய்து வரும்போது அமீரைப் பார்த்து தகப்பன் சொன்னார், "பார்டா அமீர் தெளபீக் காக்கா யாவாரம் செய்து காசு ஒழைக்கிறான். கெட்டிக் காரன். நீ ஸ்கூல், ஸ்கூல் என்று காலத்தை வீணாக்கி."
பின்பு அமீர் பல நாட்கள் பாடசாலைக்கு வரவில்லை. காக்காவோட மொறக்காய்க்குப் போகிறான் என்று கேள் விப்பட்டு நாங்கள் கண்டித்தோம்.
ஆஷா பிறந்து நாற்பது நாள் கூட முடியவில்லை. உறவுக்காரர்களில் ஒருவர் தன் பிள்ளைக்கு பெண் கேட் LTri.
இப்போது அவளுக்கு பதின்மூன்று பிந்திவிட்டது. இனித்தான் பிரச்சினை.
மழலைப் பருவத்தில் கேட்டது கேட்டபடியே கல்ய்ாணங் கள் நடந்துவிட வேண்டியது கிராமிய மரபு. இல்லா விட்டால் பெரிய கசலியில் வந்து முடியும்.
ஆஷா தவழும் போது ஆஷாட வாப்பாவும் உம்மாவும் அவளின் எதிர்காலத்தை எப்படித் திட்டமிட்டிருப்பார்கள் என்பது எங்களுக்கு இப்போது திட்டவட்டமாகத் தெரியும்.
குழந்தையை நல்ல முறையில் வளர்த்து உரிய காலத் தில் பாடசாலைக்கு அனுப்பி, கல்வி கற்க வாய்ப்பளித்து, உயர் கல்விக்காகவும்.
சே, அப்படி ஒரு சிந்தனை கனவில் கூட அவர்களின் உள்ளத்தில் உதித்திருக்குமா? ஆஷாவுக்கு ஐந்து அல்லது ஆறு வயது ஆகியிருக்கும் போது, அந்தப் பொல்லாத விளையாட்டுப் பருவத்தில் வீட்டில் பெரிய தொல்லை. கட்
葛岛

டுப்படுத்த முடியாது. ஆளுக்காள், வயல், சேனை காடு என்று கலைந்து விடுவார்கள். வீட்டில் யாரும் இல்லை. எல்லாரும் காலையில் போனால் மாலையில் தான் வருவார்கள்.
ஆஷாட வாப்டா சொன்னார்
'ஊரில் ஒரு ஸ்கூல் கெடக்கு, அவவ மாஸ்டிர்மார் கையில பாரஞ் சாட்டினாத்தான் சரி, வூட்டிலே வச்சிருக் கப்படாது. எங்க ஆஷாட உம்மா, அவட உபண்ண சட்டிபிக்கட்? p
ஒரு சிலேட்டும் புத்தகத்தோடும் பாடசாலைக்கு வந்து விட்டாள் ஆஷா. அது அதிஷ்டம் தான் மதிய போசனத் துக்குப் பாடசாலையில் பிஸ்கட்டும் கிணற்றில் தண்ணீரும் இருக்கும். பெரும்பாலும் கிராமத்தின் ஒலைக் குடிசைகளில் மதிய வேளையில் அடுப்புகள் புகையாது. -
இன்று ஆஷா வளர்ந்து கொண்டிருக்கிறாள். ஆசிரியர் களின் முயற்சியினால் படித்துக் கொண்டிருக்கிறாள் அவளு டைய திறமைதான் எல்லாம்.
இதெல்லாம் அவள் பெற்றோருக்குப் புரிவதில்லை அவர்களுடைய சிந்தனை இப்போது திசை மாறுகிறது.
'ஆஷாவ வூட்ட நிப்பாட்டினா சோறு அவிக்க, மத்த
வேலைகளைச் செய்ய, தம்பிய பாத்துக்க ஒதவியா இருக்கும். புள்ளகள பெத்து, அவக தாய் தகப்பனுக்கு ஒதவி இல்லாட்டி என்னத்துக்கு இருந்து' ” 莲
நாங்கள் முடிவாகச் சொன்னோம். ஆஷாவின் கல்வி யில் மட்டும் குறுக்கிடாதீர்கள்.
:ஆஷா எப்பவும் இப்படியே படிக்கமாட்டா. அவவுக்கு வயது வந்து கொண்டிருக்கு. அவ பெரியவ ஆனா, அவ. வுக்கு மாப்பிள்ளை பேசிக்கெடக்கு, அவ குடும்பம் நடத்த வேணும். முறைப்பாடு வேறு. 器、
5、

Page 30
'ஆஷாவின் வளர்ச்சியிலும் நீங்கள் குறுக்கிடாதீங்க. அவளையும் கிணற்றில் தள்ளி விடாதீங்க' இது எங்களது வாதம்,
அவள் பாடசாலைக்கு வந்து கொண்டுதான் இருந்தாள். திடீரென்று ஏன் நின்றாள்?
நெடுக பாடங்கள் தவறவிட்டால் அவளுக்கு மட்டும் தனியாகப் பாடசாலை நடத்த முடியுமா?
பாடசாலைக்கு வராவிட்டால் எல்லாக் கிராமியப் பெண் பிள்ளைகள் சொல்லும் காரணங்களைத்தான் அவர் களும் சொல்வார்கள். -
*சேர் நான் நெல்லு காயவைக்சப் போற'
* “GBroar Gajorig Tig' (BLT60T''
“வந்தா வூட்ட வாப்பா அடிக்கிற; வேலை செய்ய ஆரும் இல்ல'
‘சேர் சூடு பிரிக்கிறவங்களுக்கு தீன் கொண்டு போன."
"ம்மா ஆஸ்பத்திரிக்கு போனா, வூட்ட தம்பிய பாத் துக்க சொன்னா ம்மா'
'சேர் எனக்கு சட்டை இல்ல. சட்டையைக் கழிகி காயப்போட்ட"
இப்படியாக இவர்கள் கூறும் காரணங்களை அ ல சி ஆராய, ஒரு விசாரணை நடத்தினால் பிள்ளைகள் நிரபராதி கள், -
அப்படியென்றால் குற்றவாளிகள்?
இதைப்பற்றி பெற்றார் ஆசிரியர் சங்கக் கூட்டங்களில் விரிவாக எடுத்துரைத்திருக்கிறோம், ஊரில் தனித்தனியாக சந்திக்க நேரும் போதும் காரசாரமாக விவாதித்திருக் கிறோம்.
器套

‘பெற்றார்களாகிய நீங்கள் எல்லாரும் சுயநலவாதி
கள், பிள்ளைகளுக்குக் கல்வி ஊட்ட வேண்டும் என்ற எண்ணம் உங்கள் உள்ளங்களில் உதிப்பதில்லை. படிக்க
வேண்டிய பிஞ்சு வயதில் உங்கள் சொந்த வேலைகளுக்கு
உபயோகிக்கிறீர்கள். இப்போதுள்ள புதிய கல்வியின்
அருமையை கிராமப்புற பெற்றோர்களாகிய நீங்கள்
சுட்டாயம் அறிய வேண்டும்!
இப்படிக் கருத்துப்பட பல கூட்டங்களில் எங்கள் பேச்சுக்கள் நீண்டு கொண்டே போகும். மனஸ்தாபப்பட்டு இன்னும் எங்களுடன் பேசாத பெற்றோரும் இருக்கிறார்கள். அவர்களுடைய குறுகிய மனப்பான்மை, மூட நம்பிக்கை, இவற்றைப்பற்றியும் நாங்கள் எடுத்துக் கூறுகிறோம்.
ஜப்பாருடன் மோதிக் கொண்டது எங்களுக்கு இன் னும் நல்ல ஞாபகம்.
'அல்லா என்டே வாப்போய் இந்த மாஸ்டமாருக்கு புள்ளகாலி வந்தா என்ன வராட்டா என்ன. அரசாங்கம் ஒங்களுக்கு சம்பளம் குடுக்குது. எடுத்துட்டு ஒங்க, ஒங்கட வேலைகளை பார்த்திட்டு இருக்கிறதுதானே?"
ஆஷாவுக்கு மாமா முறை அவன். அவனுடைய மக னுக்குத்தான் ஆஷாவை பேசிக் கிடக்குதாம். ஆஷாவு டைய வீட்டில் அவனுடைய பலவந்தமும் ஓங்கியிருக்க வேண்டும்.
"ஆஷா ஏன் பாடசாலைக்கு வரவில்லை" இந்தக் கேள்வி எங்களைக் குடைந்து கொண்டிருந்தது.
ஆஷாட வாப்பா ரசீதை சந்தித்து விசாரிக்க வேண்டும் என்று இருந்தோம். ஆனால் அவர் லொறியில் மாடு ஏற்றி கொழும்பு அராபியா வீதிக்குப் போயிருப்பதாகவும் திரும்பி வர சில நாட்கள் ஆகும் என்றும் அறிந்தோம் சுற்று வட்டாரத்தில் உள்ள யாராவது ஒரு பிள்ளையிட
55

Page 31
மாவது விசாரிக்க வேண்டும் என்று எண்ணி அடுத்தநாள் காலை ஆஷாவின் பக்கத்து வீட்டு பல்கீஸ் பீவியை தனி யாகக் கூப்பிட்டோம். ". .
அவள் மேசைக்கு அருகே வந்து நின்றாள். *பல்கீஸ், ஆஷா ஏன் பள்ளிக்கூடத்துக்கு வரல்லே?"
A్నూ
அவள் தயங்கித் தயங்கி மெளனமாக இருந்தாள். பருவ மங்கையைப் போல் நாணத்துடன் தலை கவிழ்ந்து, தரையைப் பார்த்துக் நின்றாள்.
பல்ஸ்ே, இதுதானா உன் பதில்?’
9 9
'எது கேட்டாலும் நீ இப்படித்தான்; பேசிப் பழகா விட்டா படிக்க ஏலாது. பல்கீஸ் வாயைத் திறந்து பதில் சொல். ஆஷா ஏன் வரவில்லை?"
நீண்ட பிரயத்தனத்துக்குப் பிறகு'சேர் எனக்குத் தெரியா. * அவள் விருட்டென்று ஓடிவிட்டாள்.
நாங்கள் அதற்கு மேல் அலட்டிக் கொள்ளவில்லை. நாங்கள் பல்கீஸிடம் வினாவியதை உற்றுக் கேட்டுக் கொண் டிருந்த சில துணிச்சலான மாணவிகள் கத்தினர். சேர் ஆஷாவுக்கு சொகமில்லை' கூறிவிட்டுச் சிரித்தனர்.
ஆஷாவும் அவளைப்போல் ஹமீதா, கை ரூன், காசிம் பிவி, நஜீரா ஆகியோரும் ஆண்களில் ரகீம், ஜாயா, சுல் தான், அமீர் இப்படியாக, பாடசாலை இடாப்புகளில் பூஜ் யங்களை நிரப்பும் அந்தத் திறமைசாலிகளின் பட்டியல் விரிந்து கொண்டே போகும், வராததற்கு அவர்கள் கூறும் காரணங்களைப் பரிசீலனை செய்தால், ஆர்வமும் பாடங்கள் பிந்தும் அந்தக் கவலையும் அவர்களுக்கு இருப்பதை' நாங்கள் உணர்ந்திருக்கிறோம். - . . . . . . . . . . . . . ... و
56

இடைவேளையின் போது வகுப்புகளுக்கு பிஸ்கட் பங்கிடப் பட்டது.
நாங்கள் எங்கள் அறைகளுக்குச் சென்று தேநீர் அருந்தி னோம். இடைவேளைக்கு வரும் பிள்ளைகளை நாங்கள் அனுமதிப்பதில்லை. தெரிந்தும் ஒரு புதிய பாடத்தைத் தொடங்கப் போகும் ஆங்கில ஆசிரியருக்கு ஒரு நப்பாசை
**ஆஷா வரமாட்டாளா?"
பாடசாலை விட மணி அடித்ததும் எல்லாரும் எழுந்து நின்று "சலவாத்து' ஒதினார்கள். பின்பு "சலாம்" கூறி வீடு களுக்குச் சென்றனர்.
நர்ங்கள் மீண்டும் பல்கீஸ் பீவியை அழைத்தோம் அவள் எங்கள் முன் வந்து அந்த நாணத்தோடு நின்றாள். “இங்கே பார் பல்கீஸ் பீவி, கொழும்பால ஆஷாட வாப்பா வந்திருந்தா, ஒருக்கா பின்னோத்துக்கு வந்திட்டு போகச் சொல்லு" - அவள் நடந்து கொண்டே ‘ஹா" என்று சம்மதம் கூறினாள்.
மதிய உணவுக்குப் பிறகு நாங்கள் கொஞ்சநேரம் அயர்ந்து நித்திரை செய்து கொண்டிருக்கும் போது
"மாஸ்டர்மார் நித்திரையா?"
፴(፪5 சிம்மக்குரல் முன் வாசலில் கேட்டது. ஆஷாட வாப்பாட குரல்தான் அது . = நாங்கள் நித்திரையை விட்டு எழுந்து விட்டோம்.
'நீங்க.?* * * ஏதோ சொல்ல வேண்டும் போலிருந்தது. ஆனால் சொல்லவில்லை. ". . . . .
57 .

Page 32
'எப்ப வந்தீங்க?"
'இப்பதான், மூன்றரை மணி திருகோணமலை பஸ்ஸில் வந்து வூட்ட போக, பல்கீஸ் ஒடிவந்து சொன்னா.'
‘விசயம் ஒன்றும் இல்ல, ஒங்கட மகள் பள்ளிக்கூடத் துக்கு ஒரு கிழமையா வரல்ல. பாடங்கள் எல்லாம் பிந் திப் போகுது; விசாரிக்கத்தான், ஒங்களையும் இந்தப் பக் கத்துக்கே தெரிபட இல்ல' ή
"மாஸ்டர்மாருக்கு நான் வந்து சொல்லத்தான் இருந்த, ஆஷா இனி பள்ளிக்கூடத்துக்கு வரமாட்டா'
‘இனி பள்ளிக்கூடத்துக்கு வரமாட்டாளா? ஏன்?"
"ஒம் சேர். அவ பக்குவப் பட்டுட்டா...'
எங்களுக்கு ஒரு கணம் என்ன சொல்வதென்றே தெரிய வில்லை. இருப்பினும் எங்கள் முயற்சியை நாங்கள் விட்டுக் கொடுக்கவில்லை.
- *அப்ப ஆஷா தொடர்ந்து படிக்கக் கூடதா?"
'மறுகா வாயில மண், ஊருல, உலகத்தில இருந்த பாடில்லை. குமருப்புள்ள படிச்சிதான் என்ன கிடக்கு?'
ஒரு நாள் மாலை பாடசாலைக் கிணற்றில் தண்ணிர் அள்ளி சட்டிபானை பாத்திரங்கள் கழுவிக் கொண்டிருந் தாள் ஆஷா , ஓர் அழுக்குச் சேலை அவள் உடம்பைச் சுற் றிக் கொண்டிருந்தது. அந்தச் சேலைதான் அவள்ை ஒரு பெரிய மனுஷியாக்கிக் கொண்டிருந்தது.
ஆஷா பெரிய பெண்ணாகி விட்டதும், முக்காடு போட் டிருந்தாள். எங்களைக் கண்டதும் போட்டிருந்த முக் காட்டை இன்னும் இழுத்து முகத்தை மறைத்துக் கொண் Listair. -
58
 

ஆஷா இனி பாடசாலைக்கு வரமாட்டா, அவளுக்கு மட்டுந்தானா அந்த நிலை?
கிராமத்தில் ஆரிபா, சித்தி, கைருன், பல்கீஸ், ஷமீதா இப்படியாக அவர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.
O
(மல்லி ை4-டுபப்ரவரி 1976)
էլ: Ի մ) եւ /* ht: 4.
விசேட சேர்க்கப் பகுதி

Page 33
பந்தல் கட்டும் செக்கு மாடுகள்
வெள்ளாமை வெட்டி சூடு அடித்த கையில் இரண்டு காசு புழங்கியதும் அவர்களுக்கு உசார்தான்.
ஊர் மரைக்கார், கச்சி முஹம்மது, காசிம் முதலாளி. பள்ளி மெளலவி, பள்ளிவாசல் கமிட்டி மற்றும் ஊருக்குப் பெரியவர்களான அபூபக்கர்,ஒமர் விதானை இப்படிப் பலர்
அஹ்மது லெவ்வை அவர்களது அழைப்பை ஏற்று அவரது வளவை நோக்கி வந்து கொண்டிருக்கிறார்கள்,
அவர்களையே எதிர்பார்த்துக் கொண்டிருந்த அஹ்மது
லெவ்வை, "அஸ்ஸலாமு அலைக்கும் கூறி இன்முகத்துடன் வரவேற்கிறார்.
பென்னாம் பெரிய கல்வீட்டின் முன் கூடத்தில் பாய்கள் விரிக்கப் பட்டிருக்கின்றன. சூரியன் அஸ்தமித்த மாலை வேளை. இருந்தும் கோடையின் புழுக்கம் தாங்க முடிய வில்லை.
தொடர்ந்து புதுப் பாய்களையெல்லாம் முற்றத்தில் விரிக்கிறாள் அஹ்மது லெவ்வையின் இளைய மகள் அஷ்ரப.
கச்சான் காற்றின் வீச்சு ஒரளவு இதமாக இருக்கிறது அவர்களுக்கு. எல்லாரும் வட்டமாக இருக்கை கொள் கிறார்கள்.
60

சற்று நேரத்தில் அழகாகச் சோடிக்கப்பட்ட வெற்றிலைத் தட்டத்தை அஹ்மது லெவ்வை அவர்கள் மிகவும் மரியாதையாக, மரைக்காரின் கையில் சமர்ப்பிக் கிறார். அதன் அர்த்தத்தை சபையோர் புரிந்து கொள் கின்றனர். s*(.*),\; "";
முற்றத்தின் ஒரு கோடியில் நெல்லு தூத்திக் கொண் டிருக்கும் சீனி முஹம்மதுவுக்கு இந்த வரவேற்பு அரு வருப்பையும் ஆத்திரத்தையும் கொடுக்கிறது. அவரது மனைவி லைலத்தும்மாவும் மகள் சரீபாவும் முற்றத்தின் மறுகோடி யில் நெல்லுக் குத்திக் கொண்டிருந்தனர். உலக்கையால் ஓங்கி ஓங்கிக் குத்தும்போது அவர்களது மனத்தில் மலர்ந்த அபிலாசைகளும், திட்டங்களும் எதிர்காலமும் எல்லாமு மாய் இடிந்து போய்.
மூவரும் ஸ்தம்பித நிலையில் சபையைக் கவனிக்கின்றனர்
‘அப்ப வெற்றிலைத் தட்டுக் கொடுத்திருக்காக, ஊர் ஜமாத் கூ டி யி ரு ப் ப து உங்களுக்குத் தெரியுந்தானே. அஹ்மது லெவ்வை அவர்களின் மூத்த மகள் ஜெய்லாவை, காசிம் முதலாளியின் மகன் சுல்தானுக்குப் பேசிக் கெடக்கு. ஓங்களுக்கெல்லாம் சம்மதமா?' மரைக்கார் சம்பிரதாயக் கேள்வியை உதிர்க்கிறார்.
சட்டென்று சரீபாவின் பார்வை குசினிப்பக்கம் அலைந்து ஜெய்லாவின் மீது நிலைக்கிறது. அவளது வதனத்தில் நெளியும் அந்த மலர்ச்சியைப் பார்க்க முடியாமல் மறை கிறது கண்ணிர்த் திவலைகள்
மரைக்காரின் பிரேரணைக்கு ஊர் பிரதிநிதிகளிடமிருந்து எவ்வித மறுப்பும் இல்லை. முப்பது நாற்பது குடும்பமாக வாழும் ஒரு சிறு கிராமத்தில் எல்லாரும் ஒன்றுக்கொன்று சொந்தம்,
அஷ்ரபா பெரிய கோப்பையில் தண்ணீர் கொண்டு வந்துவைக்கிறாள்.பலகாரமும் தேநீரும்பரிமாறப்படுகின்றன.
6

Page 34
சிகரட்டுகள் சாம்பராகின்றன. சபை கலகலப்பாக களை கட்டுகிறது.
"சீதனம் கீதனம் இருக்கா..?" இது ஒமர் விதானை யின் முக்கிய கேள்வி. -
ஐந்து ஏக்கர் நெற்காணி, பசுமாடுகள், கல்வீடு ஒன்று, பணம் இரண்டாயிரம், நகை உடுபிடவைகள். ஊர் வழக் கப்படி திருமணத்திற்குப் பின் தம்பதிகள் முதலாம் ஆண்டு பெண்ணின் தகப்பனின் வீட்டிலேயே வாழ்க்கை ஆரம்பம். எல்லாச் செலவுகளுக்கும் பெண்ணின் தகப்பனே பொறுப்பு. அஹ்மது லெவ்வை இவற்றையெல்லாம் பெருமையோடு ஏற்கிறார்.
‘வெள்ளாமையை எதிர்பார்த்துக் காரியம் பார்க்க ஏலாது, எப்படியோ இருக்கிற மாதிரி ஒப்பேத்த வேண்டி யதுதான்.'
‘ஓ அதுதான் நல்லது. மாப்பிள்ளைப் பகுதியாரும் சொந்தத்தில ஊருக்குள்ள. அவகட நிலமையும் அப்படித்
தான்' என்கிறார் அபூபக்கர்,
* மஹரை'ப் பற்றிய பேச்சு வார்த்தை முடிந்தது. அஹ்மது லெவ்வை சொல்கிறார்
‘இனி பேசுறதுக்கு ஒண்டும் இல்ல, பொறக்கிற மாசத் தில நல்ல நாள் கெடக்குதானே மெளலவி.
பந்தல் வைக்கிறதைப் பற்றிய பிரச்சினை எழுந்தது.
'மறுஹா. இவ்வளவும் செஞ்சி, கல்யாணம் பந்தல் இல்லாமலா? ஆட் டு க் க டா ய் அறுத்து சாப்பாடு போடாட்டி ஊரவன் பழிப்பானே. அத்தோட ஜெயிலாட உம்மா சொல்றா பீக்கர் எடுக்கணுமாம்,'
62

"பீக்கர் எடுக்கிறது சரிதான்- இரு பகுதியாரும் ஒத்து, ஒரே எடத்தில் வைக்கிறது நல்லம். ஊருக்குள்ள இரண்டு பீக்கர் போடப் படாது."
“இந்த ஊருல பள்ளி வரி குடுக்காதவன் முக்கால் வாசிப்பேர், எப்படி கல்யாண சபைக்கு வாரது?"
'நெருக்கினால் அறவாக்கிப் போடலாம் மரைக்கார், ஊரவன்ட கையில காசு பொழங்குது.'
மெளலவியின் கருத்துப்படி ரபீயுல் அவ்வல் மாதம் முதலாம் ஞாயிற்றுக்கிழமை பகலைக்கு கூட்டம்கூடி திங்கட் கிழமை இரவுக்கு காவின் எழுதத் தீர்மானிக்கப் பட்டது. ஊர் வழக்கப்படி ஊரவருக்கு மட்டும் வெற்றிலை கொடுத்து சொன்னால் போதும். வெளியாருக்கு "காட் அடித்து அனுப்பவும் முடிவு செய்யப்பட்டது.
அஸருக்குப் பின் கூடிய கூட்டம் மஃறிப் நெருங்கும் போது-மெளலவியின் பாத்திஹா துவாவுடன் கலைந்தது.
யாவற்றையும் கசப்பாக அவதானித்த சீனி முஹம்மது குடும்பத்தினரின் உள்ளப்புயல் கச்சான் காற்றின் வீச்சைப் போல்-அதிகரித்துக் கொண்டிருந்தது. சபை கலைந்தாலும் கமிட்டித் தலைவர் இன்னும் பாயில் குந்திக் கொண்டு தானிருந்தார். அவரது வலது காலில் ஒரு கட்டு, மஃறிப் தொழுகைக்குப் போகவேண்டிய அவசரம் அவருக்கு இன்று இல்லை. அஹ்மது லெவ்வை பள்ளிவாசலுக்குப் போக கேத்தல் நிரம்ப தண்ணீர் கொண்டுவந்து வுழு எடுத்துக் கொண்டிருந்தார்.
“என்ன மரைக்கார் நம்மட ஊருக்கு மழை பெய்யப் படாதென்று சட்டமா?. ஹராம் ஒரு. ஒழுங்கா ஒரு மழை புழுதி அடங்கப் பெய்த மழையால வெள்ளாமை செய்ய ஏலுமா?. சே! பாரதூரமான நட்டம் பாருங்க"
63

Page 35
'வுழு"வோடு நின்றவர் கொஞ்சமும் கூசாமல் செப்பிய வார்த்தைகள்; சீனி முஹம்மதின் செவிகளில் கிழாச் செடி முள் குத்துவதுபோல் இருக்கட்டும் என்பதுதான் அவரது உட்கிடக்கை."
‘நம்மட ஊருக்கு எப்பவும் இருக்கிற கொறைபாடு தானே, எல்லாம் அல்லாஹ் நாடினால்தான்."
மரைக்காரின் கருத்து அஹ்மது லெவ்வையின் உட் கிடக்கைக்கு பால் வார்க்கிறது. இருவரும் கடப்பலைத் தாண்டி ரோட்டில் நடக்கின்றனர்.
2
சீனி முஹம்மது குடும்பத்தினர் அன்று மாலை, வழக்கம் போல் நன்றாக இருள் சூழ்ந்து வரும் நேரத்தில் தம் குடிசையை நோக்கி நடக்கின்றனர்.
“கேட்டீங்களா. அவகட கதய.?"
சீனி முஹம்மது சில வருடங்களுக்கு முன் தமது சொந்த இடமான கல்முனை முஸ்லிம் குறிச்சி ஒன்றில்-அதுவும் காணிப்பிரச்சினைதான்-உறவினர்களோடு மனக்கசப்பு ஏற்பட்டு, இங்கு வேலை தேடி வந்தார்.
இராத் தங்கலுக்கு ஊரிலுள்ள பாடசாலை மண்டபத் தையே தரிசித்தார்.
விடிய சுபஹோடு பள்ளிவாசலில் ஊரவர் சந்திப்பில் சீனி முஹம்மதின் அ ட க் க ம |ான குணமும், அப்பாவித் தன்மையும், நடுத்தர வயதும்தான் அன்று அஹ்மது லெவ் வைக்குப் பிடித்திருந்தன.
“இந்த காலத்தில எளந்தாரிமார வேலக்கி அமர்த்தினா பிரச்சனை!"
64

ஒரு வாரத்திற்குள் அஹ்மது லெவ்வைக்கு காடு வெட்ட வும், இரவில் அவரது வயல் குடிலில் காவல் காக்கவும் இருந்ததில் அஹ்மது லெவ்வையின் நம்பிக்கைக்கு பாத்திர மாகி விட்டார் சீனி முஹம்மது.
“சீனி முஹம்மது, உண்ட குடும்பத்த இங்க கொண்டு வந்தா என்ன? அதுகள் அங்க கஷ்டப்படத் தேவை இல்ல தானே."
“எனக்கும் அந்த யோசினதான் முதலாளி'
அஹ்மது லெவ்வைக்கு வேலை செய்வதோடு, ஒய்வு நேரங்களில் இந்த முறை இரண்டு ஏக்கர் காடு வெட்டி வெள்ளாமை செய்தால் போதும். அடுத்தடுத்த வருடங் களில் பார்த்துக் கொள்ளலாம் என்பது சீனி முஹம்மதின் உள்ளத்தின் அடித்தளத்தில் உறைந்துபோய் கிடக்கிற திட் டம், ஆனால் சீனி முஹம்மது இங்கு வந்துவிட்டால் அடிக்கடி ஊருக்குப்போய் காலத்தை வீணாக்க வேண்டி யிருக்காது. முழு நேர உழைப்பையும் எடுத்துவிடலாம் என்பது அஹ்மது லெவ்வையின் எதிர்பார்ப்பு.
முதலாளி ஒரு புதுக் குடிசை கட்ட ஓலையும் கம்புத்தடி களும் தாராளமாகக் கொடுத்தார். ஒரு வாரத்திற்குள் சீனி முஹம்மதின் குடும்பம் குடியேறியது.
சீனி முஹம்மது உழைப்பை உழைப்பென்றே எண்ண வில்லை. அஹ்மது லெவ்வை முதலாளிக்கு காடு வெட்டுவதி லிருந்து முழு விவசாயத்திற்கும் இயந்திரமாக மாறிக் கொண்டிருந்தார்.
மனைவி லைலத்தும்மா, மூத்த மகள் சரீபா, இளைய மகள் கலிமா, சிறியதுகள் சலீம், அபூபக்கர்.சீனி முஹம் மதின் குடும்பமே அஹ்மது லெவ்வையின் வீட்டில் அந்த இயந்திரத்தோடு ஒட்டிய பாகங்களாயினர்.
65 5 سے A507
ζ το
丁蓋鲁
○○
ཡོད་ཚད་༡|

Page 36
நெல்லுக் குத்த, பானை பாத்திரங்கள் கழுவ, கிணற் றில் ஊறும் நீரையெல்லாம் குடங்களாகக் கொண்டுவர. அஹ்மது லெவ்வையின் குடும்பத்தார் கிணற்றடிக்கு முழுகப் பானால் வாளிவாளியாக நீர் அள்ளிக் கொடுக்க, அரிசி ஊறப்போட்டு விட்டால் குத்தி மாவாக்குவதிலிருந்து. எத்தனை எத்தனையோ வேலைகள் நாளாந்தம்.
இதுவரைக்கும் சம்பளம் என்று ஒன்று பேசிக்கொள்ள வில்லை. குடும்பத்தில் செலவு என்று ஒன்று வந்துவிட்டால் உடனே நிவர்த்தி செய்யப்படும். ஒவ்வொரு நாளும் இரண்டு வேளைச் சாப்பாடு கிடைக்கும். வேண்டிய நேரத்திற்கு “கஹட்ட" தாராளமாகக் குடிக்கலாம்.
குடும்பத் தலைவனான சீனி முஹம்மதிற்கு உரிய முறைப் படி வேதனம் கிடைக்கும்.
லைலத்தும்மாவும், சரீபாவும் தத்தம் உணவுப் பங்கு களை உடனுக்குடன் வீட்டுக்கு எடுத்துச்சென்று சிறியது களுடன் பகிர்ந்து உண்பர். சீனி முஹம்மதுவுக்கு வேளா வேளைக்கு ஒரு மரக்கறியும் சோறும் அல்லது ரொட்டியும் சம்பலும் மாறி மாறி அவர் எங்கு வேலை செய்வாரோ அங்கு அனுப்பி வைக்கப்படும் சாப்பாடு என்ற பெயரில்.
மாலை மங்கி இருள் சூழ்ந்துவரும் வேளையில் எல்லாரும் வீட்டில் இருப்பார்கள். சரீபா வீட்டுக்கு வந்ததும் குப்பி விளக்கை ஏற்றி பற்றாக்குறைக்கு ஒரு சுண்டு அரிசியை அரிச்சி உலை ஏற்றி விடுவாள். ー。 。
சீனி முஹம்மதின் உள்ளத்தில் உறைந்து கிடந்த திட்டம் மெல்லத் தலைதூக்கியது. ". . . . அன்றொருநாள் ஊர் 'மாய்மைக்கு” உட்பட்ட காடு என்று நிச்சயித்துக்கொண்ட பின் சுயேச்சையாக செயல் பட்த் தொடங்கினார்.
66 r x = 2
Y.
 

சிலநாட்கள் கழித்து, சந்தேகத்தின் பேரில் யூசுப் கேட் டான்: "சீனி முஹம்மது ஆருக்கு காடு வெட்டுறீங்க?"
"ஏன் எனக்குத்தான்." 'நீங்க வெட்டப் படாது." 'ஏன்? நீங்க ஆர் சட்டம் போட?' 'வெள்ளிக்கெளம ஜம்மாவுக்குப் பொறகு பள்ளிக் கமிட்டியால விசாரணை கெடக்கு."
பின்பு கிராமத்தில் இது பெரும் பிரச்சினையாகப் போய் விட்டது.
*வார வாரவங்க இங்க இடம் புடிக்கப்படாது' என்று வாதாடினார் ஒரு சாரார்.
'நல்லா கெடக்கு உங்கட ஞாயம், ஊர் எல்லைக்குள்ள குணசோம புடிச்சிட்டானாம். சீனி முஹம்மது மாறு ஜாதிக் காரனல்லவே, அவன் ரெண்டு ஏக்கர் வெட்டினாத்தான் ஓங்களுக்கு. மறுஹா நாம என்னத்த சொல்லக் கெடக்கு, "இப்படியும் ஒரு சாரார் கருத்துத் தெரிவித்தனர். அஹ்மது லெவ்வை தலையிட்டு ஒரு முடிவு சொன்னார். 'சீனி முஹம்மது எண்ட வேலை ஆள். அவனுக்கு காடு வெட்ட வேண்டிய அவசியமில்லை. அந்த விசயத்த விடுங்க நா கவனிச்சிக்கிறன்.'
அவருக்கு உள்ளூர ஆத்திரமும் கோபமும், ‘எங்கிருந்தோ வேலை தேடி வந்தவன், அவ்ருல் பொழங்கி சரி சமமாக நிக்கப் பாக்கிறானே.” : , ,
அன்று சீனி முஹம்மதுக்கு அவர் அளித்த உறுதி இது தான்- ... ' ',
உன்னுடைய பிரச்சனையை பாத்துக்க நா இருக்கிறன் நீ ஒண்டுக்கும் யோசிக்க வேண்டியதில்லை. வாற பூெரு
67

Page 37
| ||
சம் வெள்ளாமை வெட்டி சூடு அடிச்ச கையோட என்ட மகள் ஜெய்லாவுக்கு கல்யாணம் நடக்கும்; அதே பந்தலில் உண்ட மகள்ட கல்யாணத்தையும் நடத்திப் போடுவம், எப்படி எண்ட யோசின? அதோட உண்ட மகளுக்கு சீதனமா குடுக்க ஒரு ஏக்கர் வயல் காணிய 'உறுதி எழுதித் தாரன், அஹ்மது லெல்வை அடுக்கிக் கொண்டே Guitariri.
'மூத்தவளின் கல்யாணத்தையும் நடத்தி, ஒரு ஏக்கர் விவசாய நெலமும் தாரதாயிருந்தா. சீனி முஹம்மதின் குடும்பமே அஹ்மது லெவ்வையின் வயல்களில் செக்கு மாடுகளாயினர்.
வயலெல்லாம் பச்சைப் பசேலென காட்சியளித்தபோது சீனி முஹம்மது, லைலத்தும்மா, சரீபா ஆகியோரின் உள்ளங் களும் பசுமை பசுமையாக இருந்தன. மழை ஒழுங்காகப் பெய்யாத ஒரே ஒரு காரணத்தால் ஆங்காங்கே 'கதிர்கள்' வரண்டன. ஆனால் யானையின் அட்டகாசங்களுக்கு இலக் காகவில்லை. கிளி குருவிகள் கூட ஒரு மணி நெல்லைத் தீண்ட இந்த முறை சந்தர்ப்பம் இல்லை. சீனி முஹம்மதின் வயல் 'காவல்' அவ்வளவு விழிப்பாக இருந்தது.
இதற்கிடையில் கிராமத்தில் ஒரு சலசலப்பு,
படித்த வாலிபன் நூஹ"தீன் சரீபாவில் கவரப்பட்டு சீனி முஹம்மதின் குடும்பத்தில் சம்மந்தம் செய்துகொள்ள விரும்புகிறானாம்,
லைலத்தும்மா இராப்பகலாக யோசித்தாள். தகுந்த தருணம் வரும்போது புருஷனுக்கு உணர்த்தினாள்
“இனி நாம கல்முனைக்குப் போய் மாப்பிள பேசறது
இருக்கட்டும். நூஹ" நல்ல பொடியன். அவன பல இடங் களிலிருந்து மாப்பிள கேக்கிறாங்களாம்."
68

ஊர் இரண்டுபட்டு பிரச்சனைகள் கிளம்பும், அத்தோடு நூஹ"தீன் குடும்பம் அஹ்மது லெவ்வைக்கு சொந்தக்காரர் கள் என்ற சிக்கல்கள்தான் சீனி முஹம்மதை பின்னடையச் செய்தன.
இந்தச் சம்பந்தத்தால் சீனி முஹம்மது ஊரவருள் ஒருவ ராக மாறுவது ஒருபக்கம்.கிட்டத்து சொந்தக்காரனாக. Ffflg LDLOFTG.
அஹ்மது லெவ்வையால் இதை அனுமதிக்க முடியாது. அவர் வெள்ளாமை வெட்டி சூடு அடித்து ஒய்ந்ததும் தன் கருத்தை வெளிப்படையாகச் சொல்லிவிட்டார்.
'ஒரே பந்தலில் ரெண்டு கல்யாணத்தை நடத்த ஏலாது, மழை தண்ணி இல்லாததால வெள்ளாமையில பெருவாரி நட்டம். அதோட அந்த புஹாரியின்ட மகன் நூஹ" உன்ட மகளுக்கு மாப்பிள்ளயா வாரது எனக்கு விருப்ப
ឆ្នាំឆ្នាំ)ឆ្នាy.**
லைலத்தும்மா தன் புருசனோடு பேச்சுக் கொடுக்கிறாள், அவருடைய செவிப் பறைகளோ செத்துவிட்டன. பொறி கலங்கிய நிலை நடைப்பினமாய் நடக்கிறார். உதடுகள் உலர்ந்து தலை விண் விண்ணென்று குத்த நெஞ்சு லேசாக வலி; வெப்ப மூச்சுக்கள் வெளியாகின்றன. யாழ்ப்பாணச் சுருட்டு, பிடிக்குக்கூட காணாமல் குறுகி அணைந்து விரல் களுக்கிடையில் நசுங்கிக் கிடக்கிறது.
சீனி முஹம்மது, லைலத்தும்மா, சரீபா முதலியோர் தம் குடிசைக்கு வந்தபோது சின்னஞ் சிறுசுகள் பசியோடு உறங்கி விட்டிருந்தனர். முன் விறாந்தையில் நூஹாவோட வாப்பா புஹாரி அவர்களுக்காக காத்திருந்தார்.
*கன நேரமா வந்து?
'இல்லை இப்பதான்.'
'அஹ்மது லெவ்வை கழுத்தறுத்துப் போட்டாரே.'
69

Page 38
‘எல்லாம் கேள்விப்பட்டன். இனி எல்லாத்தையும் விட்டுப்போட்டு, காடு வெட்டத் தொடங்கின நீங்க அடுத்த மொறைக்கி காட்ட வெட்டுங்க. ஒரு காலத் தி ல குணசோமா நம்மட ஊருல காடு வெட்டப்போய், அவன் ஊர புடிச்சிட்டான் எண்டு பகை. முஸ்லிம் ஊருதானே எண்டு நம்பி வந்த நீங்க பக்கத்தில அவனிட்ட போய் வேல செஞ்சிருந்தாலும் இந்த நேரம் உங்களுக்கு ரெண்டு ஏக்கர் நெலம் தந்திருப்பான். இப்பவும் அவன ஒருக்கா புடிச்சா தம்மட ஊருக்காரனெண்டு அதக்கூட ‘மாய்மயில* பிரச் சனையா கெடக்கிற, அந்த ஆத்தோர ரெண்டு ஏக்கர் அருமையான நீர்ப்பாசன காணிய, கிராமசேவகர் மூலமா ஒங்களுக்கு எடுத்துத் தருவான்.'
நீண்ட இடைவெளிக்குப் பின், தெளிவும் உற்சாகமும் பெற்ற சீனி முஹம்மது புஹாரியுடன் குணசோமாவைச் சந்தித்து விவரித்தனர். கிராமசேவகரிடம் போனார்கள். சீனி முஹம்மது ஐந்து ஏக்கர் நிலம் கேட்டு விண்ணப்பித் 5 ПгТ.
விசாரணைக்குப்பின், முடிவாக பகுதி டீ, ஆர். ஒ , கூறினார்
"சீனி முஹம்மது எங்கு பிறந்திருந்தாலும் அவர் இந்த முஸ்லிம் கிராமத்தில் குடியேறி பல காலமாகிறது. நல்ல உழைப்பாளி, காணி இல்லாதவருக்கு காணி வழங்கி உற் புத்தியைப் பெருக்க வேண்டிய காலகட்டத்தில் அவருக்கு காணி இல்லை என்று அறியும் போது விந்தையாக இருக் கிறது. பிரச்சினை காரணமாக குணசோமாவின் மேற் பார்வையில் இருந்த ஆத்தோரக் காணியை முஸ்லிம் கிராமத்திற்கே சேர்த்து, சீனி முஹம்மது அவர்களுக்குச் சொந்தமாக அளிக்கிறோம். விரைவில் அவர் அவற்றிற்குரிய *உறுதியை பெற்றுக் கொள்வார்.'
அத்தோடு அவருக்கு விவசாயக் கடனும் கிடைத்தது.
70

வெகுவிரைவில் புதிய வீட்டுக்கு குடியேறுவார். இந்த வருடம் வெள்ளாமை வெட்டியதும் அவருக்கும் 'உசார்" பிறக்கும். புஹாரியின் மகன் நூஹ"தீனும் சீனி முஹம்மதின் மகள் சரீபாவுக்கும் திருமணம் நிச்சயிக்கப் பட்டிருக்கு, பந்தல் போட வேண்டும், "பீக்கர் எடுக்க வேண்டும் ஊரவ ருக்கு ஆட்டுக் கடாய் அறுத்து சாப்பாடு போட வேண்டும்’ என்பதெல்லாம் லைலத்தும்மாவின் மனத்தை ஆட்கொண்ட விருப்பமாகும்.
O
(மல்லிகை-செப்டெம்பர்-ஒக்டோபர் 1977)

Page 39
ஒரு கிராமத்தின் புதுக் கதிர்கள்
iெப்போ. მეწყ* *
**வாப்போ. 61 * * தூரத்தேயிருந்த சிறார்கள் பிஞ்சுக் குரல்கள் பிணைந்து, எதிரே மலைபோன்ற கற்பாறையில் மோதி எதிரொலித்த போது
புல் வெளியெனக் காட்சிதந்த புதுக் கதிர்களுக்கு அவன் உரமூட்டிக் கொண்டிருந்தான்.
'கிடைக்கிறதே கொஞ்ச நஞ்ச நீர். அதிலதானே கதிர்கள் உயிர் வாழனும் ஒரு துளி நீரையேனும் விரய மாக்கினா என்ன ஆகும்?'
போன வருடம் மண் கவ்வின ஞாபகம் உறுத்தியது. முந்தின வருடம் மட்டும் என்னத்த அள்ளிக் கட்டியது. அதுக்கு முந்தியும்.
“ஒரு பக்கம் இப்பிடி, மறுபக்கத்தால சத்துராதி மிருக ஜாதிகளோட."
இம்முறை முஸ்லிமீன் மிக்க கவனமாகக் கதிர்களுக்கு ஊக்கமும் உற்சாகமும் ஊட்டி ஆவணசெய்து கொண்டிருந்த போதுதான் அவனது இரு மழலைச் செல்வங்களின் அந்தப் பிஞ்சுக் குரல்கள்
72

அவன் செவிகளைச் சிலிர்க்க வைத்தது.
அவன் தூரத்தே வரப்பின்மேல் நின்று கொண்டி ருந்தார்கள்.
அவர்களது ஏன் வருகிறார்கள்?
மனம் குழம்பியது.
ஒரு வேளை-பொங்கி வரும் ஆவலை அவனால் இனி யும் பொறுத்துக் கொண்டிருக்க முடியவில்லை.
'என்ன புள்ளகள் எங்க வந்த ஆ?'
“பள்ளியால காய்தம் வந்து கெடக்கு ஒன்ன வரட்
罗拿
LITLÈ),
பட்டென்று பேச்சுக்குரல் ‘கட்டாகி விட்டது. செய் தியை அறிவித்த களிப்பில் மகனும் மகளும் குதூகலத் துடன் திரும்பிக் கொண்டிருக்கின்றனர்.
'நெனச்சன் அராபாப் போவான்கள் எழுதுவான்கள்
岑 赠
என்று.
பள்ளிவாசல் நிர்வாக சபையினரால் ஒரு நிருபம்
வந்திருக்கிறதென்றால் வேறு என்னவாக இருக்கும். 'பள்ளி
வாசல் கடிதம்' எல்லாருக்கும் புரிந்து போன ஒன்று.
ஒருவர் நிர்வாக சபையின் சட்ட திட்டங்களுக்கு மாறாக நடந்துள்ளான் என்பதுதானே அதன் உள்ளடக்க மாயிருக்கும்.
இனி அதுபற்றி விசாரணை செய்ய வேண்டும். தீர்ப்பு வழங்க வேண்டும். பத்வா கொடுக்க வேண்டும்.
݂ ݂
நிர்வாக சபையைப் புறக்கணித்தவர்கள் என்னென்ன தண்டனைகள் பெறுவார்கள் என்பது, கிராமியப் பிள்ளைகள் இரண்டாம் வாய்ப்பாடு ஒப்புவிப்பது போல் மனப்பாடம்.
73

Page 40
ஊரிலிருந்து புறக்கணிக்கப் படுவார்கள். ஒதுக்கப்படு வார்கள், ஊர் ஜமாத் வராது.
மார்க்கக் கடமைகளுக்கு= அனுஷ்டானங்களுக்கு, ஊர் கதீப் சமூகமளிக்க மாட்டா ர். அந்தச் சந்தர்ப்பங்களில் அவர் அசல் வெளிநாட்டுப் டபொம்மை. பிறகு 'காவின்' என்று ஒன்று எழுதுவதாய் இ= ருந்தாலும், மையத்’ என்று ஒன்று விழுந்துவிட்டாலும் பெண் ரிய வில்லங்கம்.
“பள்ளியால" கடிதம் வர -வும், விசாரணை நடத்தவும் தண்டனை வழங்கவும், அவன்= முஸ்லிமீன் என்ன செய்து விட்டான்?
நேற்று முந்தநாள் நடந்த நிகழ்ச்சி அவன் கண்முன்னே விரிகிறது.
பொழுது புலர்ந்தபோது வந்த மாட்டுக்காலி, மழைத் துளிகள் கூடப் படாமல் வரண் டு போய்க் கிடக்கிற வெட்ட வெளியில் மேய்ச்சலுக்கு வந்திருக்கின்றன.
காய்ந்த சருகுகள், இலை குழைகள், வயல் வரம்புகள், எப்போதோ சூடடித்துப் பே டாட்ட ஒன்றுக்கும் உதவாத வைக்கோல் சிதறல்கள், இவற்றைத் தவிர என்றோ வெட் டிப் போட்ட மரங்கள், குப்பை கூளங்கள்.
“மேய்ச்சலுக்கு என்ன கெட டக்கு?’
குளத்திலிருந்து நீர்ப்பாசன==ாம் பெறும் வயல்களில் மட் டும், நெற்பயிர்கள் 'ஊசிப்பட–பிராகி ஒரெலைப் பயிராகி விரிந்து இப்போது உப்பட்டிட்டப் பருவத்தை-கத்தை கத் தையாக தொங்கப் போகும் புது-துக்கதிர்களாக.
நாளெண்ணிக் கொண்டிரு =க்கின்றன. அவை புதுக் கதிர் களாகச் செழிக்கத்தான் எத் தனை எத்தனை தடைகளும்
சோதனைகளும்,
7全国三
 

முஸ்லிமீனுக்கு அந்தப் பரிணாம வளர்ச்சியைப் பார்க் கும் போதுதான் எவ்வளவு பெருமிதம்.
யானைக் கூட்டம் வந்து அட்டகாசம் செய்யும், பன்றி கள் வயிறு புடைக்கத் தின்று குழிபறிக்கும். கீச் கீச் என்று எத்தனை வகையான பறவைக் கூட்டங்கள்.
வேலி ஒழுங்காகப் போட்டிருந்தாலும் ஊரிலுள்ள மாடுகள் எல்லாம் நாக்கிலிருந்து நீர் சொட்டச் சொட்ட அவற்றையே சுற்றிச் சுற்றி, வேட்கை தணிவதில்லை. முட் கம்பி வேலியையும், வயற்காவலையும் மீறிப்போக தருணம் பார்த்துக் கொண்டுதாணிருக்கும்.
‘முஸ்லிமீன் என்னத்த ற ஸ் டி காய்தம் அனுப்பிக் கெடக்காம்?' என்ற ஆக்ரோசமான கேள்விக் குரலால் சிந்தனையிலிருந்து விடுபட்ட முஸ்லிமீனைச் சூழ்ந்து கொண் டது இளம் கூட்டமொன்று.
அவனே இன்னும் அம்மடலின் உள்ளடக்கத்தை அறிந்து கொள்ளவில்லை.
'வூட்ட போங்க, முழுகிட்டு வார' என்றவாறு அவர் களை அனுப்பிவிட்டு, வானத்தைப் பார்த்து மாலை ஐந்தரை என்பதை ஊகித்துக் கொண்டவனாய், மண்வெட்டியைத் தோளில் சாய்த்துப் பிடித்து, மறுகையில் ஒமலையும், சேர்ட் டையும் எடுத்துக் கொண்டு சற்றுத் தொலைவில் நடந்து, மெல்லியதாக சலசலப்பே இன்றி, ஊர்ந்து செ ல் லும் ஆற்றில் இறங்கினான்.
'ஒரடி கூடத் தண்ணிய காணமே!'
'ஜயசிங்க, ஜயசிங்க. ப னிட் டு வ பொட்டத் தெனவாத?"
அக்குறணையான் காணியில வேலை செய்யும் ஜயசிங் வின் வாளியைக் கொண்டு வந்து இரண்டை அள்ளி ஊற்
75

Page 41
றிக் கொண்டான். நீருடன் குறுமணலும் வரத் தொடங் கின. உடம்பில் உள்ள மண் புழு தி யு ம் வியர்வையும் போனால் போதும், மறுஹா நாளக்கி பள்ளிக்கொடத்துக் கிணற்றில் நல்லாய் முழுகி ஜும் ஆவுக்கும் விசாரணைக்கும் போறதுதானே.
ஒமல், சேர்ட் இத்தியாதிகளுடன், ஈரக் சாரனிலிருந்து நீர் சொட்டச் சொட்ட நடந்து சென்றான்.
அவனுடைய எட்டு மாடுகளும் பசுவும் கன்றும் காத் திருந்தன. அவன் வந்ததும் வராததுமாய் “காள காள" என்று அதட்டி பின்னால் வந்து கொண்டிருந்த மாட்டின் பிருஷ்ட பாகத்தில் 'பளிர்" என்று "கெவிட்டியால் மெல்ல அடி அடித்ததும்தான் சுறுசுறுப்பாக நடக்க ஆரம்பித்தன. அவன் ஆகப் பின்னால் வந்து கொண்டிருந்தான்.
*சே! மாடுகள் எவ்வளவு சோர்வாக நடக்கின்றன? ஆனால் அன்று இவை இப்படியா போயின.
அன்று இருள் வெளிச்சத்தை விழுங்கிக் கொண்டிருந்து நேரம், யதேச்சையாக முஸ்லிமீனின் பார்வை கால்நடை களின் தள்ளிய வயிறுகளில் குத்திட்டு நின்றதும் அவன் வெவெலத்துப் போய்விட்டான். தன்னை அறியாமலேயே கூவினான்.
“என்னத்த இப்படி வயிறு முட்டத் திண்டதென்று இப்படி சந்தோஷமா நடக்கிறீங்க."
அவை என்றைக்கும் இல்லாமல் வயிறு நிறைந்து மகிழ்ச்சியாகத் துள்ளு நடை போடும்போது, அவனுக்கும் அதில் பங்குண்டு என்பது போல் களிப்பில் ஆழ்ந்து போனான்.
'இப்ப பெரிய பலாய் ஒண்டு வரப்போகுது.'
இரண்டு வருடங்களுக்கு முன் மாட்டையும் பசுவையும் பக்கத்துக் கிராமத்திலிருந்து வாங்கிக் கொண்டு வந்தான்
76

ஆனால் இப்படி வயிறாற ஆனந்தமாக இருந்ததை அவன் பார்த்ததில்லை.
சிந்தனைச் சுமையோடு வந்தவன், கையோடு மாடுகளை பட்டியில் கட்டிவிட்டுத் திரும்புகையில், வீட்டு முன்றில் லாந்தர்' விளக்குகளுடன் கூட்டமாக மஃறிப் பிந்திய இருட்டு, உணர்ச்சி வசப்பட்டு கசமுசத்துக் கொண்டிருந் தார்கள்,
“என்ன முஸ்லிமீன் ஊரு குழம்பிக் கிடக்கு."
இவன்களுக்கு ஒழுங்கா நடத்தத் தெரியாட்டி சபையைக் கலச்சிப் போடட்டுமே,'
“சின்னச் சின்ன விசயங்களுக்குச் சபைக் கூட்டுறதும், விசாரிக்கிறதும்.'
*ரோசம் கெட்டவங்கள் மாண்டுடுவான்கள்' இப்படி யாக மனதில் உள்ள வெறுப்பைக் கொட்டித் தீர்த்தார்கள்.
“அவசரப்பட்டு ஆத்திரப்பட வேண்டியதில்லை. எங்கட ஞாயங்கள் விசாரணையில சொல்லுவம்."
முஸ்லிமீன் அப்படிக் கூறினாலும் அவர்கள் அதிருப்தி யுடன் திரும்பினர்.
சித்தீக்கும் இரண்டொரு இளைஞர்களும் மிஞ்சி இருந் $୍tit',
சித்தீக் எப்ப வந்த.?"
“காலையிலதான், நீ வயலுக்குப் போயிருக்காய் எண்டு உண்ட மனுஷி சொன்னா. எப்படி ஊரவர் நல்ல முன்னேற் றம்; எங்கள இப்பதான் புரிஞ்சிருக்காங்க."
"ஒ இன்னும் காலம் கெடக்கு."
77

Page 42
"அது சரி படிப்பு எந்த மட்டில?"
'முடிஞ்ச பருவத்திலதான், இன்னும் மூன்று மாதத் தால சட்டத்தரணி இறுதிச் சோதனை."
"அப்ப அடுத்த வருஷம் எங்கட ஊரும் புதுப் பொலி வைக் காணப் போகுது, ஒ, ரெண்டொரு வாத்தியாரைப் கண்ட ஊரு, ஒரு சட்டத்தரணியையும், ரெண்டு கலைக் பட்டதாரிகளையும், ஒரு விவசாயப் பட்டதாரியையும் இந்த அனுராதபுர மாவட்டத்துக்கே பெருமைதான்.
இரவு நெடுநேரம் வரை கருத்துக்களைப் பரிமாறிவிட்டுப் பிரிந்தனர். நாளை பள்ளி வாசலில் விசாரணைக்காகக் கூடுவார்கள்,
ஊரிலும் ஒரே பேச்சாய் இருந்தது. 'பள்ளியில ஒரு மோதல் நடக்குமாம்,'
வழக்கமாக 'ஜும்மாவுக்கு வராதவர்களும் பிரசன்ன மாயிருந்தார்கள்.
“ஊரைத் திருத்துறிங்க, திருத்துறிங்க எண்டு நாச
LDITji ங்க ??
குறி
முஸ்லிமீனுக்கும் அவனைச் சார்ந்தவர்களுக்கும் ஒன்றும்
புரியவில்லை.
“முறைப்பாட்டுக்காரர் மரைக்காருடைய வயலில் ம்ாடுகளை விட்டு அருமந்த கதிர்களை அழிச்சிப் போட்டிங் களே, இப்ப இருக்கிற கஷ்ட காலத்துக்கு இது பெரிய நட்டம். இன்னொரு பக்கத்தால் மன்னிக்க முடியாத குற்றம்.
*ஆர்ட குற்றம்? நீங்க வேண்டுமெண்டு சுமத்தர பழி தான் குற்றம், புதுக் கதிர்களை அழிக்கிற நோக்கம்.: அது எங்களுக்கு இல்ல.' * ,
78

ങേ ങേ ങ്ങ shåll . . . . . b ஒவ்வொருவரும் இப்படி ஒவ்விெர்ன்ன்றக் 'கேட்க, கூட்டம், விசாரணை ஒழுங்கு இல்லாமல் குய்யோ முறையோ வென்று குழம்பியது.
மரைக்கார் படுகோபத்தில் கத்துகிறார். ‘நா இருபத் தஞ்சி வருஷமா வெள்ளாமை செய்யிறவன்."
'நீங்க அம்பது வருஷமா வெள்ளாமை செஞ்சாலும் எங்களுக்கு ஒண்டும் இல்ல. ஊர் மாடு வெள்ளாமை அழிச்சதெண்டு விசாரணை-அப்ப காட்டிலிருந்து யானை களும், பன்றிகளும், கரடிகளும் வந்து அழிச்சிட்டு போகுது, அதுக்கு என்ன ஞாயம்? இப்படியாகத் திரண்டு வந்தவர் களிடமிருந்து வாங்கிக் கட்டிக் கொண்டனர்.
கிட்டத்தட்ட முழுக் கிராமமும் முஸ்லிமீனுக்குச் சார் பாக இருந்தது.
“இந்த ரஸ்டி போர்ட் நிருவாகம் அர்த்தம் இல்லா இயங்குது கலச்சிப் போடுங்க."
“தண்டம் தண்டமென்று அறவிடுகிற காசு எல்லாம் யாரிட்ட கணக்கு வழக்கு கெடக்கு?"
ஒவ்வொருவரும் தங்கட தங்கட இஸ்டம்போல காசு சேக்கப்போற, இருந்தாப்போல ஒன்றைச் சாட்டாகக் கொண்டு ஆ.ஆ எண்டு கத்தினா அதோட சரி. அதுக் கெல்லாம் கணக்கு வழக்கு விசாரணை ஒண்டும் இல்ல, அதுக்குப் பொறகு ஒரு புதுத் தனாதிகாரி'
‘அசர்ா" கும் வரை சத்தங்கள் ஓயவில்லை. *அல்லாஹ" அக்பர், அல்லாஹ" அக்பர்.'
பாங்கொலி மூலம் நிசப்தம் நிலவியது. - அசர் தொழுகைக்குப் பின், தலைவர், செயலாளர், பொருளாளர் போன்றோர் அசடு வழியப் போய்க் கொண் டிருந்தார்கள். .
79
: * IF ܚܝ, ܕ ܨ . . . . . .. ' ' ' ' ' ';': '.' =

Page 43
“இப்ப எல்லாத்துக்கும் க ண க் கு வ ழ க் கு எண்டு நிக்கிறான்கள்.'
சில நாட்களுக்குப் பின் வாசகசாலையில் சித்தீக், முஸ் லிமீன், றபாய்தீன் ஆகியோர் கிராமத்தின் குறைபாடு களைத் தொகுத்து, தேசிய சபை உறுப்பினருக்கு ஒரு மகஜர் தயாரித்துக் கொண்டிருந்த போது
'வாப்போய்.வரப்போய்' அதைத் தொடர்ந்து சாலிஹீனின் கூவல்.
'அந்தா உண்ட வயலெல்லாம் யார் யார்ரேயோ மாடு புகுந்தாம். ஜயசிங்கன் மட்டும் தனியத் திரத்திக் கொண்டிருக்கிற, வாங்க எல்லாருமா போவம்."
சாலிஹினின் அந்தக் கு ர லில் ஒரு புதுவகையான உணர்ச்சி இழையோடுவதைக் கண்டார்கள், முஸ்லிமீனும், சித்தீக்கும்.
"அல்லாவே எண்ட வயலை மாடு திண்டு போட்டுதா" என்று அவன் அலறவில்லை. மாறாக அவனுடைய வதனத் தில் மகிழ்ச்சிதான் மலரத் தொடங்கியது.
- ஜயசிங்கன் தனியே திரத்திக் கொண்டிருக்கிறான்.
ஒரு சிலர் கேள்விப்பட்டவுடனே போய்விட்டனர்.
மற்றும் சிலர் பதறியடித்துக் கொண்டு ஓடுகிறார்கள்.
சாலிஹீனும் வேறு சிலரும் விசயத்தை வயல் உடை யக் காரனுக்கு அறிவித்து விட்டு விரைகிறார்கள்.
ஆனால் அந்த 'உடையக் காரனும் அவனது சகாக் களும் எவ்விதப் பதட்டமும் இல்லாமல், ஒருவகைத் தெளி வுடன் இறுதியாகப் போகிறார்கள். அவர்களுக்குப் பின்னால் *வாப்போவ்,வாப்போவ். முஸ்லிமீனின் சிறிசுகள், ()
(மல்லிகை-ஜூலை 1980)

ரபீயுல் அவ்வல் தலைப்பிறை
மஃறிப் தொழுகை முடிந்ததிலிருந்தே, பள்ளிவாச லில் இருந்து சிதறிய கூட்டம் பலவாறாகப் பிரிந்து சென் றனர், நடுத்தர வயதினர் சிலரும், வேண்டியவர்களும்தான் ஹாஜியார் வீட்டுப் பக்கம் விரைந்தனர்.
- அப்துல் காதர் லெவ்வை, மெல்ல மெல்லமாக ஊன்று கோலின் துணையுடன் தமது இல்லம் நோக்கி நடந்து கொண்டிருந்தார். உடல் நலமில்லா விட்டாலும் "ஜமாத் தொழுகை'யை அவர் விடமாட்டார். இளைஞர் சிலரும் அவருக்கு உதவியாகச் சென்று கொண்டிருந்தனர்.
மஃறிப் தொழுகைக்குப் பின் யூசுப் ஹாஜியார் வீட்டுக் சுந்தூரி வைபவம், களைக்ட்டத் தொடங்கியிருந்தது. ஒரு நாளும் இல்லாத திருநாளாய்.
ஒ! ஐந்து ரபீயுல் அவ்வல் தலைப்பிறைகளுக்குப் பின் மீண்டும் 'மெளலூத் ஒதலுக்குப் பின் அ ன் ன தா ன ம் வழங்கும் வைபவம் மூன்று ஆண்டுகள் தொடர்ச்சியாக மழை தண்ணி இல்லாததன் காரணமாக வயல் வரம் பெல்லாம் இறுகி, வரட்சியால் ஊரெங்கும் வறுமை ஆட் கொண்டிருந்தது.
கந்தூரி வீட்டில் உள்ளூர்வாசிகளைவிட, வெளியூர்க் காரர்களே கலகலப்பூட்டிக் கொண்டிருந்தனர். கிராமத்தின்
A 507-6 81

Page 44
பெரிய புள்ளிகளும், 'எடுபிடி'களும் ஒட்டமும் நடையுமாக உதவி ஒத்தாசை செய்து கொண்டிருந்தார்கள்.
ரபீயுல் அவ்வல் தலைப்பிறை-ஹாஜியாருக்கு பரவா யில்லை முதலில் வெளியிலிருந்து வந்த பிரமுகர்களுக்கு "சாப்பாடு வைக்க, தடபுடலான ஏற்பாடுகள், ‘கந்தூரி" என்ற பெயரில் ஹஜியாரின் 'பிஸ்னஸ் நண்பர்களுக்கும் புரியாணி,
இரண்டு மணித்தியாலங்களாக ஹாஜியார் வீட்டு வள வையும், ரோட்டையும் ஆக்கிரமித்துக் கொண்டிருந்த மோட்டார் வாகனங்கள், சுமார் ஒன்பது மணியளவில் ஒவ்வொன்றாக மறையத் தொடங்கின. அன்று மாலை ஐந்தரை மணிக்கே கேற் பூட்டப் பட்டிருந்தது. சல்மா மன்ஸிலின் பரந்த முன்றலில் சனம் வந்து புகுந்து விடாமல் வாகனங்கள் ஒதுக்குவதற்காக கூட்டிப் பெருக்கி பளிச்சென்று வைக்கப் பட்டிருந்தது. இப்பொழுது அவை சென்று மறைந்து விட்டன. மணி ஒன்பது பிந்தி, ஒன்பதரையை அண்மித் துக் கொண்டிருந்தது.
‘இனி ஊர் ஜமாத்தாருக்குத்தான்."
யூசுப் ஹாஜியார் குரல் கொடுத்தார்.
*வாங்க, வந்திருங்க.நேரம் போகுது.'
ஊர் ஜமாத்தார் என்றால் ஹாஜியாரின் பரிபாஷையில் தனது அந்தஸ்துக்கு நெருக்கமானவர்களும் பள்ளிவாசல் பரிபாலனக் குழுவினரும், உறவினர்களும், ஒதல் மஜ்லிசை அலங்கரித்ததற்காக லெப்பை முஅத்தின் ஆகியோரையும், இந்த அரங்கிலேயே அடக்கிவிட வேண்டியது தவிர்க்க முடியாத கடமை நிர்ப்பந்தம்.
ஒரு சுற்றுச் சுற்றி வந்து மீண்டும் அழைக்கிறார்.
*ரவுtது மச்சான். ஆக்கள் வந்தா எண்டு பாத்து, இருக்க வையுங்க."
82

முதலாம் தரம் முடிந்து, விருந்தாளிகள் போய்விட் டார்கள். இரண்டாந் தரத்திற்குத்தான் இந்தக் கூப்பாடு, ஹாஜியாரோடு நெருங்கிய, ரஷீது மச்சானுக்குத்தான் இந்தத் தராதரங்கள் எல்லாம் புரியும். எவருடைய மன மும் இம்மியளவாவது நோகாமல் காரியம் பார்ப்பதில் சமர்த்து.
இந்த முறை அந்தச் சாணக்கியமும் தோற்றுவிட்டது.
ஐந்து நீண்ட ஆண்டுகளுக்குப் பிறகு இந்த முறை தானே ஆகாயத்தில் கார்முகில் தோன்றி, வரண்ட இதயங்களில் பால் வார்த்துள்ளது.
பருவமழை பொழியோ பொழியென்று பொழிந்து. விவசாய உள்ளங்கள் சந்தோஷப் பெருக்கடங்க, வயல்கள் எங்கும் பசுமை! புதுமை! அறுவடை சூடு மிதிப்பு!
வசதி படைத்தவர்கள் அனுபவித்தார்கள். தலைப்பிறை யில் யூசுப் ஹாஜியார் வீட்டு கந்தூரி என்றால், முன்பெல் லாம் அதற்கு ஒரு தனித்துவம், ஊர் மக்களின் கெளரவம் பொருளாளர் ரஷீது அவர்களின் உள்ளமும் பூரித்துப் போகும்.
இப்பொழுதெல்லாம் அது நடைபெற முடியாத காரி யம், புதிய தலைமுறையினர் விழிப்படைந்துள்ளனர். ஒரு வேளைச் சோறு என்றதும், ஒடோடிச் சென்று அடிபணிந்து நிற்கும் பஞ்சை விவசாயிகள் இல்லை. “ரபீயுல் அவ்வல் தலைப்பிறை ஒரு சிலருக்கு மட்டுமல்ல, அது ஒவ்வொரு வருக்கும்தான்’ என்ற புதிய விழிப்புணர்வு வேர் பாய்ச்சி யிருக்கிறது.
மூன்றாம் பந்திக்கு என்று அறிவிக்கப் பட்டது.
‘எங்கடப்பா ஊரவங்கள் போனாங்க" என்ற கேள்வியின் உந்துதலினால் ஹாஜியார் ஒரு பக்கமும் ரஷீது மறுகோணத்
83
-- ܕ ܕ , 217.ܘ.

Page 45
திலும், ஒணானைப்போல் தலையை நிமிர்த்தி நிமிர்த்தி பார்வையால் கூட்டத்தை அளக்கிறார்கள்.
சிறுவர்கள், பெரியவர்கள், இளைஞர்கள் என்று எல்லா ரையும் நன்கு அறிபவர் தனாதிகாரி ஒருவர்தானே!
“அரைவாசிப்பேர் மெளத்து" என்று புலம்பிக் கொள் கிறார்கள். அங்கும் இங்கும் அலைந்து தேடுதல் முயற்சி படுதோல்வி, -
“...... ம் . காணமே . p
'யார்? யாராக்கள் . ' குரல்கள், மன்சிலில் ஒரு சலசலப்பு,
வந்தவர்களின் கண்கள் நான்கு பக்கங்களுக்கும் சுழல் கின்றன.
முன்னர் இப்படி ஒரு விசேஷம் என்றால் சகல விவசாய உள்ளங்களிலும் ஒரு குதூகலிப்பு இழையோடும். அக்கம் பக்கத்துக் கிராமங்களில் இருந்தும்.வருவார்கள்.
முகத்தைப் பார்த்து வாங்க' என்று ஒரு வார்த்தை அழைப்பு இல்லாமல், பள்ளிவாசல் திண்ணையிலிருந்து ஒரு பொது அறிவித்தலை ஏற்றுச் செல்லும் காலம் மாறிவிட்டது. வந்தவர்களுக்குப் பன்னீர் தெளித்து, வரவேற்று இருக்கச் செய்து கொண்டிருந்த யூசுப் ஹாஜியாருக்கு கைகால் ஒடவில்லை.
"யார் மச்சான் வராத ஆக்கள்?" ஒரு வாய்ப்பாட்டையே ஒப்புவித்து நம்மட அத்துல் காதர் லெப்பை . என்று முடித்தார். -
சபையிலிருந்து கணைகள் சரமாரியாக எழுகின்றன். சில் உறவினர்களும், பெரும்பாலும் ஹாஜியாரின் வயல் களில் வேலை செய்பவர்களுக்கும்தான் சமூகமளித்திருக்
έ 84

கின்றனர். எவருக்கும் அழைப்பிதழ் கொடுக்கப்படவில்லை என்பதுதான் உண்மை.
'அந்த மனிசன் நோயாளி, எங்க வரப்போரா.'
அவருக்கு ஊரில் எப்போதும் ஒரு தனி மதிப்பு. ஒரு காலத்தில் நன்றாய் வாழ்ந்தவர், பலருக்கு "ஏர்" ஆகவும் ‘ஏணியாகவும் இருந்தவர்.
ஊரிலிருந்த ஒருவர் சமூகமளிக்கா விட்டால், அதற்குக் காரணம் 'பிரச்சினைப்பட்டு, ஒதுக்கப்பட்டவர்" என்ற வரிசையில் இடம் பெற்றவராக இருக்க வேண்டும்.
“பள்ளிவாசல் வரி கட்டாதவர், அல்லது எல்லாருக்கும் போல சொல்லிக் கெடக்கா எண்டு கேளுங்க. நாங்க தான் ஒன்றுக்குள் ஒன்று காட்" தேவைப்படாது ஆனால் .பொறத்தி மணிசர்?
இந்த முறைதான் அழைப்பிதழ் அஞ்சலட்டையை விட சிறிய அளவில் அழகாக அச்சிடப்பட்டு, உரிய காலத்தில் தூரத்து பிரமுகர்களுக்கும், நண்பர்களுக்கும் அனு ப் பி வைக்கப் பட்டிருந்ததாம். ஊர் புள்ளிகளுக்கும் விநியோகிக் கப்பட்டிருக்கிறது. அஞ்சலில் அனுப்பினாலும் சில வேளை களில் தவறிப் போகும் அல்லது பிந்திக் கிடைக்கும்.
ஹாஜியாரின் குரலோசை கிணற்றின் அடியிலிருந்து வந்தது.
*காசீம், காசீம். டேய் காசீம், எங்கே.இவன் ..! ஹரபாப் போங்க. இங்க வாயன்டா, என்னை தின்னத் தான் போறிங்க.'
ஹாஜியாருக்கு ஒன்றும் விளங்கவில்லை. அமர்க்களப் படுத்துவதற்கு இது பள்ளிவாசல் விசாரணையா? அல்லது ஒரு புனிதமான மஜ்லிசா?
& 5

Page 46
பகிர்ந்து கொண்டிருந்த, கைரூனின் இளைய சகோதரன் காசீம் என்னவோ ஏதோவென்று ஓடிவந்து நிற்கின்றான்.
*காசீம் நீ அப்துல் காதர் வூட்டபோய் “காட்" குடுத்து சொல்லலியா?"
பட்டியலில் அப்படியொரு பெயர்.?
அப்படியாயிருந்தால் அவருக்கு எழுதின அழைப்பு.?
சிலையாகி நின்றவன் சற்று நேரம் யோசித்துக் கொண் டிருந்தான்.
‘என்னடா யாதத்துப் போச்சா, வாயத் திறந்து
சொல்லேண்டா...'
இதுவரைக்கும் ஹாஜியாருக்கு இப்படி ஒரு சங்கடமான நிலைமை ஏற்பட்டதில்லை, ரபீயுல் அவ்வல் தலைப்பிறை இப்படித் தலையிடியைத் தரும் என்று சற்றும் எதிர்பார்க்க வில்லை. எல்லாமே வெற்றிகரமாகத்தான் நடந்துள்ளன. எல்லாருடைய கண்களும் காசிமின் வாயை மொய்த்துக் கொண்டிருந்தன.
யோசித்துக் கொண்டிருந்த காசீம், ஹாஜியார் எதிர் பார்த்தபடி, தயக்கத்தோடு சொற்களைப் செப்பி விழுங்கி விட்டான்,
இல்ல மச்சான், சொல்ல மறந்திட்டன்' என்று அற்புதமாகச் சொல்லி விட்டான்.
இந்த வார்த்தைகளால் யூசுப் ஹாஜியாருக்கு 'உசார்’ பிறந்ததும் "ஓஹோ'வென்றிருந்தது.
'அப்துல் காதர் லெப்பை ஜமாத்திலிருந்து ஒதுக்கப் பட்ட ஆளா?'
'ஏழை எளியதுகள் என்று மறந்திருப்பார் போலிருக்கு."
*எல்லாம் புகழுக்குச் செய்யிறது தானே!"
86
 

*தொலைவிலிருந்து வந்த மணிசரெல்லாம் போயிட்டாக, பாவம் ஊர்ல உள்ள "மிஸ்கீன்" ஒரு கையும். காலும் வளமில்லாத நோயாளி, பாரிசவாயு ஏற்பட்டதிலிருந்து மணிசன் நாட்டு வைத்தியத்திலேயே வாழ்ந்து கொண் டிருக்கா, '
“ஒதிப் படிச்ச மனிசன், ஊர் முழுக்க லெப்பை" என்ற பட்டம்; ஏழை எண்டாப்போல கழிவா?'
‘நல்லாக் கெடக்கு ஞாயம் தனக்குத்தான் 'மார்க்கம்’ தெரியும் என்பதைக் காட்ட விரும்பிய ஒருவர் பக்கத்தில் உட்கார்ந்திருந்த மெளலவியைச் சுரண்டினார்.
'மெளலவி நீங்க ஒரு ஆலிம் தானே, கந்தூரி கொடுக் கிறது யாருக்கு?
'.ஆ. தெரியாமத்தான் கேக்கிறன்.'
இப்படியாகத் திசைமாறிச் சென்ற சலசலப்புக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க நினைத்த பிரகிருதி
'டேய் யாராவது போய் அப்துல் காதர் லெப்பைய கையோடு கூட்டிக் கொண்டு வாங்கடா, சபைக்கு முக் கியமான ஆள்.'
ஆனால் அது எடுபடவில்லை.
ஊர்ப் பாடசாலையில் இருந்து வந்த மன்சூர் மாஸ்டர் கெளரவப் பிரச்சினையைக் கிளப்பினார்.
‘இந்த சபையில ஞாயம் கேட்கிறது முறையல்ல; நாங்கள் எல்லாரும் யூசுப் ஹாஜியார் அவர்களுடைய முகத்துக்காக மஜ்லிசை சிறப்பிக்க வந்த விருந்தாளிகள் "ஊர் நிர்வாகத்தை பாதிக்கும் குற்றம் குறை இருந்தா, பள்ளிவாசல் சபைக்கு அறிவித்து, விசாரணைய ஏற்படுத்தி ஞாயம் பேசுங்க, மற்றது இந்த நோரத்தில அப்துல் காதர் லெப்பைய ஆள் அனுப்பி எடுப்பிக்கிறது. அது அவருக்கும்
87

Page 47
மரியாத இல்ல, மறதியாக ஒரு தவறு நடந்தது உண்மை. மறந்து இந்த கூட்டத்_த சிறப்பிக்கிறதுதான நல்லது.'
ஆசிரியருக்கு ஓர் அர்த்தமுள்ள பிரசங்கமே நடத்தி விட்ட திருப்தியால் உச்சி குளிர்ந்திருந்தது. ஊரவருக்கும் அந்த உரையில் ஒரு நியாயம் இருப்பதுபோல் பட்டிருக்க வேண்டும்.
சலசலப்பு அடங்கி விட்டது. மூன்று பந்திகளோடு உடசாரம் முற்றுப் பெற்றது. விருந்தாளிகள் வெளியேறி விட்டார்கள்.
நான்காவதாக இருந்தவர்கள், உதவி ஒத்தாசை செய் தவர்களும், இல்லத்தவர்களும் தான்.
மன்சூர் மாஸ்டர் மட்டும் நீண்ட நேரம் ஹாஜியாரோடு உறவாடிக் கொண்டிருந்தார்.
காசிம் ரஷீது, இன்னும் பகிர்வதற்கு உதவியாய் நின்ற வர்கள் அனைவரும் போய் விட்டார்கள்.
முன் அறையில் ஆழ்ந்த அமைதியில் சிந்தித்துக் கொண் டிருந்தார் ஹாஜியார்,
கடந்த ஐந்து ஆண்டுகளாக ஆண் ட வனு  ைடய ரஹ்மத் பெய்யவில்லை. வறுமையின் உக்கிரம் நீடித்திருந் தாலும் சனங்களின் மனங்கள் எவ்வளவு தூரம் மாறிப் போயிருக்கிறது என்பதை இந்த நிகழ்வு ஹாஜியாருக்குப் புதிய பாடம் புகட்டியிருக்கி_றது. நீர்ப்பாசனத் திட்டம் இங்காலப் பக்கம் வந்தா கரியம், நம்மட வயல்ல வேலை செய்ய ஆக்களுக்குப் பஞ்சம்) தான் வரும். எ ல் ல | ரு ம் வயல் வயலெண்டு ஒடுவான்கள்ை. மறுஹா'.
முன்பெல்லாம் நிறப்பமா நடந்தது. இப்ப இதுகள் ஞாயம் கேக்குதுகள். வெதத்திலையில காட் வைத்து அழைச்சாத்தானாம் அப்துல் காதர் லெப்பை வருவார். அவருக்கு ஒரு லெப்பை படட்டம், இரண்டெழுத்து ஓதத்

தெரிஞ்சாப்ல ஒரு "லெப்பை பட்டம்.இப்ப அவருக்கு ஒரு கோஷ்டி, ஊர் முன்னேத்தத்துக்கு புறப்பட்டிருக்கு. நாங்களே கலப்பை பிடிக்க வேண்டி வரும். சிறிசுகளும் புதுவிதமாக யோசிச்சி வேலை செய்யத் திட்டம். மன்சூர் மாஸ்டர் சொல்றதிலேயும் ஞாயம் இருக்கு
பசித்தவனுக்குச் சாப்பாடு இல்லாட்டி. வயல் விளைஞ் சித்தான் என்னத்துக்கு. எண்டு பொடியன்கள் யோசிக் கத் தொடங்கி இருக்கிறாங்களாம்.
யூசுப் ஹாஜியாரின் மனம் சீறிக் கொண்டிருந்தது. அப்துல் காதர் லெப்பை அவர்களின் பழைய கல்வீடு. ஊர் எல்லையில் அமைந்திருந்தது. அன்று இரவு அ வ ர து குடும்பம் இன்னும் உறங்கவில்லை.
அவர்களுடைய உரையாடல்களும் ரபீயுல் அவ்வல் தலைப்பிறை பற்றியதாகத்தான் இருந்தன
'மரியம் அடுத்த வருஷம் எங்கட ஊடுகளிலும் தலைப் பிறை கொண்டாடுவம்,'
அப்துல் காதர் லெப்பை அவர்களுடைய குரலில் தெளி வும் தீர்க்கதரிசனமும் இழையோடின.
"மரியம் புள்ளகள் படுத்துட்டுதுகளா?' 'ഉ'
'தீன் திண்டாங்களா?" தேங்காய்ச் ச ம் பலே T ட ரொட்டி திண்டுதுகள் முபாரக் இன்னும் ஊர் சுத்திட்டு வரல்ல."
'அவன ஒண்டும் சொல்லாத, அவன் போர வழி எங்கட ஊர் முன்னேற்றத்துக்குத்தான்.எங்கட கா லத் தி ல செய்ய முடியாத காரியத்த அவங்க செய்யறாங்க. நாங்க ஒதவியா இருப்பது தான் புத்தி."
89

Page 48
மரியம் 'குப்பி விளக்கை அணைத்துவிட்டு நித்திரைக்குப் போக ஆயத்தம்
முன் கதவு தட்டும் ஒசை.
6 "யாரது? p
'முபாரக்'
'சர்'ரென்று தீக்குச்சியைக் கீறி, விளக்கேற்றி கதவைத் திறந்தாள்.
முபாரக், நண்பர்களுடன் பிரவேசித்தான். காசிம், அபூ, இபுராஹிம், ஜாபிர்,ஹியாழ்தீன்,
கிராம முன்னேறறச் சங்க உத்தியோகத்தர்கள்.
விடிந்தால்
ஐந்து முப்பது பஸ் ஏற வேண்டும்.
அரசாங்க அதிபர் காரியாலயத்தில் முக்கிய அலுவலர் நடைமுறைப் படுத்தப் போகும் சில விடயங்கள் சம்பந்த மாக ஒரு சந்திப்பு. கருத்துக்களைச் சமர்ப்பிக்குமாறு பணிக்கப் பட்டிருக்கிறார்கள். -
மகஜர் (பெட்டிசம்) ஒன்றைத் தயாரிக்க முன் இராச்
சாப்பாட்டை முடித்துக் கொள்ள ஆயத்தம். இன்று முழு நாளும் கிராமசேவகர் போன்றவர்களைக் காணச் சென்ற தில் அலைச்சல் அதிகம். மூன்றுநாள் நித்திரையின்றி வேட் டைக்குச் சென்று வந்ததைப் போன்று களைப்பும் |5566ՓՄ պth.
முபாரக் பாண் கொண்டு வந்திருந்தான்.
"மாமா ஒங்களுக்கு விசயம் தெரியுமா? இந்த முறை, யூசுப் ஹஜியார் வீட்டு கந்தூரியில் மூண்டாம் பந்திக்கு ஆக்கள் இல்லயாம். சபையில ஒரே கசிலி.'
90
 

ஜாபிர், அப்துல் காதர் லெப்பையிடம் கூறிய போது எல்லோரும் சிரித்தனர்.
வருடத்திற்கு ஒரு முறை யூசுப் ஹாஜியார் வீட்டுக்குச் சென்று மூன்றாம் பந்திக்கு நிற்பதிலும் பார்க்க ஒவ்வொரு விவசாயியின் இல்லத்திலும் ஒவ்வொரு வேளைச் சோறு பொங்கப் போகிறது மேலல்லவா
ஆரம்ப வேலையாககுளக்கட்டைத் திருத்தப் போகிறார்கள். தண்ணீர் கிடைக்கப் போகிறது-பாடசாலைப் பிள்  ைள களு க் கு பஸ்வண்டி ஒழுங்கு செய்யப் பட்டிருக்கிறது-பாதைகள் திருத்தப் படுகின்றன.
பருவ மழையையே நம்பிக் கொண்டிருந்த காலம் அடுத்த கச்சான் காற்றோடு போய் விடும்.
வரப்போகும் ரபியூல் அவ்வல் தலைப்பிறை மிகக் கோலாகலமாக.
இளைஞர்கள் மகஜர் எழுத உட்கார்ந்தனர்.
(மல்லிகை-ஜூலை, 1982)

Page 49
இரவின்
ராகங்கள்
இரைச்சல்கள் ஓய்ந்ததும் இருள் கவிந்தது.
மருதானையின் பிரதான வீதி ஒன்று மாளிகாவத்தை மையவாடியைப் போல் அமைதியில் ஆழ்ந்து போன அந்த வேளையில் யாருமே அக்கறைப்படாத ஓர் உலகம்
விழித்துக் கொண்டது.
விபத்துக்களில் தம் சுகத்தை இழந்தபின் அவர் களுக்கு எல்லாமே.
இரவுகள் தான்.
வாழ்க்கை இனிக் குருடு,
வாழ்க்கை இனி ஊனம்.
வாழ்க்கை இனி.?
இப்படி எத்தனையோ,
அன்றும் பின்னிரவு நடமாட்டம் உச்சத்தை அடைந் ತಿತ್ತಿ! நீண்ட நாட்களுக்குப் பின் நவாஸும் வந்திருந்தார். அவனுக்கு இயற்கையிலேயே கலை நெஞ்சு நல்ல சாரீரம் ,
'மர்சூக்நானா, இப்ப நவாஸ்ட பாடு மோசமில்ல. பகல் 'ஐந்து லாம்பு சந்தியில இஸ்லாமிய கீதம். ஆ.
92

ঢািফক্ট அசந்து போயிட்டன், ஜிப்ரி சொன்னான், ஜிப்ரி ஓர் ஹாபர் தொழிலாளி, மோட்டார் விபத்தில் ஒரு காலை இழந்தபின் அவனுக்குக் கிடைத்த பட்டமும், கெளரவமும் 'நொண்டி ஜிப்ரி,
'அப்படியா? அல்லாஹ் ரஹ்மத் செய்யட்டும்."
மர்சூக்நானா, கபூர், பாரூக், நஸிம், அஸிஸ், ஹனி போன், முஹம்மது, அப்துல்லா..?
இன்னும் அவனைக் காணவில்லையே!
அவர்கள் எல்லோரும் உழைத்து ஒடிந்தவர்கள் ஒரு சிலர் இன்னும் உழைக்கக் கூடியவர்கள்: இருபது வருடங் களுக்கு முன்பே வாழ்க்கையைச் சிதறடித்தவர்கள். அப் போதே அனாதைகள் இப்போது..?
' இரவு வரமுன்-கூணாகி, குருடாகி, ஊமையாகிப் போன பிரகிருதிகள் யாசகத்துக்குப் போய்த் திரும்பியிருந் தனர்.
மர்குக்நானாவும் வேறு சிலரும் உழைப்பாளிகள்; வீட் டுக்கு வீடு சில்லறை வேலைகள் செய்யவும், சுமை தூக்க வும், பேமென்ட்டில் சிறு 'பிஸ்னஸ் என்று ஆளுக்கொரு வேலையாய்ப் போய்ச் செய்து வந்தாயிற்று.
நியதியின் பிரகாரம் இரவாகிய பின்னும் இரவு நீள்
கிறது.
எங்கிருந்தோ மோப்பம் பிடித்து, மருதானை போலிஸ் ஜீப் வண்டியொன்று. is , , , ,
பொலிசாருக்கு அவர்களைப் பற்றித் தெரியும் இருப் பினும்- *リ。
*மொனவாத பங்மேவேலாவ ரெஸ்வீம?"
93

Page 50
"அநே சேர் மே பலன்ட அபராத அபி நிதரம நிதா கன்ன தென்வல கடகாரயோ வத்துர தாவா,'
மர்சூக்நானாவின் குரல் கணிரென்றிருந்தது.
“கூட்டம் போடாம வேறிடமாகப் பார்த்துப் போங்க?? என்று சிங்கள மொழியில் சர்வ சாதாரணமாக இரைந்து விட்டு ஜீப் மறைந்தது.
"மச்சான் நேத்து ராவு இங்ஙனக்கி கச்சால் பெய்த் திரிக்கி. அதான் யாரையும் படுக்க உடாம.' அலுத் துக் கொண்டான் பேமென்ட் யாவாரி பாரூக்,
'அப்துல்லாவை இன்னும் காணலியே"
நூர் முஹம்மது அங்கலாய்த்துக் கொண்டான்.
ஹாஜியார் வீட்டு மாடுகளுக்கு, பேலியகொட பகுதி யில் அவரது தோட்டத்தில் புல் அறுக்கப்போய், அன்றும் வலது காலில் அட்டை உறிஞ்சி வலியெடுத்தது அவனுக்கு. ஒரு துண்டு புகையிலையில் எச்சிலைத் தடவி, தானே சிகிச்சை செய்து கொண்டான் நூர் முஹம்மது.
“ஹ ஹ ஹ அப்துல்லமீத் க  ைட யி ல களவு  ெப ய் த் தி ரி க் க 7 ம் நல்லது போகட்டும், நாசமாப் போகட்டும்.'
கபூரின் உள்ளக் குமுறல் வார்த்தைகளால் வெடித்தது.
குழிவிழுந்த கண்களில் ஒளி மங்கியும், எலும்பு தள்ளிய மார்பும் தோலுமாக, நடமாடும் “மியூசியம் போல காட்சி அளித்தார்கள் அவர்கள்.
*கபூர், நீ என்னத்துக்கோய் சல்லிக்காரன ஏசின?? மர்சூக்நானாவுக்குக் கோபம்.
.
ஒ. இலக்சன் டைம்ல, உங்களுக்கு அஞ்ச பதத்."
94

'போடா மடையன். அவன்தான் அப்படி என்டா, நீயும் அல்லாஹ்வ மறந்து பேசரே, எங்களுக்கு இடமில் லாட்டி மத்தவங்கள ஏசி வேல இல்ல." -
"நாங்க ஒலகத்திலே கஷ்டப்படுகிற கூட்டம். எங்களுக்கு இங்க இடம் இல்ல. ஆனா சொர்க்கத்தில நல்ல இடம் கிடைக்கும்; ஆண்டவனால் மிச்சம் விரும்பப்படுகிற கூட் டம் ஒலகத்திலே வெறுக்கப்படும்.'
அந்த விளக்கம் நியாயமாகப் பட்டிருக்குமோ? மர்குக் நானாவின் நீண்ட விளக்கத்தால் கபூரின் ஆவேசம் அடங் கியது.
பகலெல்லாம் தெருவில் திரிந்த இரண்டொரு மாடு களும் தூரத்தே, மசாங்கா மரத்தடியில் படுத்து விட்டன. தெரு நாய்களுக்கும் எங்கோ மூலையில் இடமிருக்கிறதென்று ஊளையிடுகின்றன.
இறைவனின் பிரதிநிதிகளான மனிதனுக்கு.
ஊமைமயமான இரவு நீண்டு கொண்டே, இப்படி எத்தனையோ இரவுகள்
'மர்சூக்நானா, எனக்கு ஒரு இடம் இருக்கு." கபூர் சொன்னான்.
சிரிப்பு மயான அமைதியைப் பிளந்தது.
அவனுக்கு ஒர் இடமா? எங்கே?
சந்தியில் நடந்து கொண்டிருந்த எல்லாரும் மீண்டும் நக்கலாகச் சிரித்து சற்று நின்றார்கள்.
*எக்சிடன்ட்ல மெளத்தாப்போன நூர்தீன் அப்பா இருந்த இடம்."
மீண்டும் அவர்களால் சிரிக்க முடியவில்லை.
95

Page 51
நூர்தீன் அப்பா காலமாகி இன்னும் ஒரு வருடம் பூர்த்தியாகவில்லை.
மர்குக் நானா மிகுந்த கவலையுடன்
'மத்தவர்கள பத்தி ஒனக்கு கவலை இல்லடா கபூர்.
நூர் முகம்மது பாவம், மனுசனுக்கு அந்த இடத்த."
எல்லோருக்கும் பின்னால் கூன் முதுகுடன் எவ்வி எவ்வி வந்து கொண்டிருந்தவன் நன்றியுடன் அந்த இடத்துக்கு நகர்ந்தான். - .== ''
இப்பொழுது மர்குக் நானா, ஜிப்ரி, கபூர், நவாஸ் போன்றோர் மட்டுமே பின் இரவில் நடந்து கொண்டிருந் தார்கள். கால் இயலாத ஜிப்ரிக்குத்தான் அடுத்த இடம்.
. 'அப்துல்லாவை இன்னும் காணல்லியே' என்ற ஏக்கம்
அவர்களது இதயங்களை வாட்டியபோதுதான்.--
நூர்தீன் அப்பாவின் பிரிவும் அவர்களது உள்ளங்களை நெகிழச் செய்து விட்டது. அவரைப்பற்றி ஏன் பேசினோம் என்றிருந்தது கபூருக்கு.
'மர்சூக்நானா ஏன் பேசாம போறிங்க' க பூரி ன் குரல் ஒலித்தது.
மர்குக்கின் கண்களிலிருந்து நீர் முத்துக்கள் பொலக் பொலவென்று
சேர்ட் பொக்கட்டிலிருந்து துழாவி அந்தப் பத்திரிகைத் துண்டை எடுத்து விரித்தார் மர்சூக்நானா, சந்தியின் பின் நிலவில் பளிச் என்றிருந்தது. சூழ்ந்து கொண்டு மங்கிய
பார்வையை உன்னிப்பாக மேயவிட்டனர்.
நூர்தீன் அப்பாவின் படம் பிரசுரிக்கப் பட்டிருந்தது.
t. .
நூர்தீன் அப்பாவுக்கு சூனியமாக இருந்த இரவுகள், அன்புடன் உதவிய சகாக்கள் ஆகியவற்றுடன் இணைந்து
96
 

இருந்த சங்கிலித் தொடர்பு அறுந்து போன ஞாபகச் சின்னம் அந்த 'குறுப் போட்டோ" ஒன்றுதான்.
வழி தவறும்போது "குர்ஆன் ஆயத்துக் களையும், ஹதீஸ் விளக்கங்களையும் எடுத்துக்கூற இனி யார் இருக் கிறார்கள்?
வாழ்க்கை பூராவும் இரவாகி விட்டது போல உணர்ந் தார்கள்.
'நானா இப்ப என்ன செய்றது?"
பகலெல்லாம் திரிந்து இரவிற்கு வந்தால் இப்படி
காலையிலிருந்து மாலை வரை வயிற்றுப்பாட்டுக்கு இரப் பதும் இரவில் கொஞ்சம் ஒதுங்கி நித்திரை கொள்ள லாமென்று பேமென்டில் இடம் கிடைக்கும் என்று வந்தால்
இடம் இருந்த இடத்தில் கடைச் சொந்தக்காரனின் மனம் இரங்குமா? அதுவும் இந்தப் பொல்லாத கொழும்பு மாநகரில் மனிதனை மனிதன் மதிக்கிறதும், நம்புவதும் சேச்சே, மாலை ஆறரை மணிக்கே வாளி வாளியாகத் தண் னிரை ஊற்றி வைக்கிறார்களே,
வருஷா வருஷம் தவறாது ஹஜ்ஜுக்குப் போகிறவர்கள்.
"இந்தா, ஏய் நானா, இங்கல்லாம் தங்க இடமில்ல. பள்ளிவாசல் பக்கம் போங்க."
பொட்டலங்களைத் தூக்கிக் கொண்டு அலைந்து எங்கா வது மறைந்த பின் இடம் பிடிக்கும் பிரயத்தனம் தனி.
விரட்டி தண்ணீர் ஊற்றியவருக்கும் அயர்வும் உறக்க மும் வரும்.
பாரூக் சொன்னான்
*நானா போன வெள்ளிக்கிழம கொத்துபா பிரசங்கம் நல்லாயிருந்தது.'
A 507-7 9 76
விசேட சேர்க்கப் பகுதி

Page 52
|
நாயகத்தின் காலத்தில பள்ளிவாசல்கள் இருபத்து நாலு மணி நேரமும் சமுதாயப் பிரச்சினைகளோட இயங்கி, சகலவற்றிற்கும் அடைக்கலம் தந்து, மனிதனையும் பள்ளி வாசலையும் பிரிக்க முடியாமல் இணைத்தது.
எதையோ நினைத்தவராக மர்குக் நானா சப்தமிட்டுச் சிரித்தார்.
என்ன என்று கேட்கும் பாவனையில் எல்லோரும் அவ ரைப் பார்த்தனர்.
'நாங்கள் எண்டாலும் இப்படி. ஆனா அந்தக் கூட்டம் அல்லாவே , '
“எந்தக் கூட்டம்?"
*எந்தக் கூட்டம், ஐ சம்மா முடிஞ்சி வெளி கேட் கிட்ட பாருங்கள். எத்தனை பாத்திமாக்கள், நம்மட தங்கச்சிகள்.
நீண்ட மெளனம் நிலவியது. "நம்மட சமுதாயம்.?" “இப்ப நாங்க நாலு பேர்தானே இருக்கோம்.' *ஸ்டேசன் பக்கம் போவமா?*
"தொரே எந்த ஊருக்கு கோச்சி ஏறப் போறாரோ? *கட்டாயம் ஒதை கிடைக்கும்.'
"எங்க இன்னும் அப்துல்லாவைக் காணலையே?" மீண்டும் கபூர்,
நால்வரும் எல்லா வீதிகளிலும் அலைந்து இடம் கிடைக் காததால், கூட்டுறவுக் கடை பேமென்டுக்கே நடந்தார்கள். அது அரசாங்கக் கட்டடம், பலர் அங்கேதான் வழக்கமாக "கேம்ப்' அடிப்பார்கள். ஆட்கள் கூடி பொலிஸ் வராமல் இருக்க வேண்டும்.
98.
 

Sua efe raio36. 1111 шілді сүтті, எதிர்பாராத விதத்தில் அங்கே ஒருவரும் இருக்கவில்லை. பேருவளை கந்தூரிக்குப் போய் இருக்கக் கூடும்.
தரையைத் துடைத்துவிட்டு பொட்டலங்களை அவிழ்த்து உறங்குவதற்காகப் பேப்பர் விரிப்பை விரித்தார்கள். பழைய ரேஸ் பேப்பர்களால் ஒட்டப்பட்ட விரிப்பு அது. கபூரின் தயாரிப்பு.
அதைக் கண்டவுடன் பாரூத் கத்தினான்
'இந்தக் குப்பைகளை விரித்து எங்கட மானத்த வாங் காதே கபூர், சொல்லிட்டன் நாளக்கி நெருப்பு வைப்பன்."
பாரூக் மச்சான், கோவிக்காதீங்க இப்பவே நெருப்பு வைப்பம்,
அது மர்குக் நானாவுக்கு சந்தோஷமாயிருந்தது.
‘எங்கட சமுதாய அழிவுக்கு “றேஸ"ம்" ஒரு காரணம்."
பசித்த வயிறுகள் உணவு உட்கொள்ளத் தொடங்கின. பள்ளிவாசலில் "மிஸ்கீன் களுக்கு "பார்சல் வழங்கியிருந் தார்கள்.
அவர்களுக்கு கைகால்கள் உளைச்சல், தூக்க மயக்கம்,
மர்குக் நானாவும் கபூரும் உரையாடிக் கொண்டிருந்த போது மற்றவர்கள் குறட்டை விட்டனர்.
மர்குக் நானா சொன்னார்
'ஐந்துபேர் ஒத்துமையா இருந்தா முடியும், ஒரு வீட்ட கூலிக்கு எடுக்க ஏலும்,'
"பிளட் ஆடT.?' "மண்ணாங்கட்டி.இருபத்தஞ்சு ரூபாக்குள் குடிசை வூட்ட எடுக்கலாம். ஒரு பானை சோறு பொங்கவும் படுத்
துக் கொள்ள இடமும் இருக்கும்தானே?"
99

Page 53
*குடிச ஒண்டு கட்ட இடம் இருந்தாலும் போதுமே” பாரூக் தூக்கத்தில் பேசவில்லை.
அப்போது ஈனமான ஒரு முனகல் ஒலி கேட்டு விரைந் தனர்.
ஒரு மூலையில் அப்துல்லா சுருண்டு கிடந்தார்.
நெருப்புப் போல காய்ச்சல், வாந்திபேதி மோசமான நிலை,
உடனே அரசினர் மருத்துவமனையில் சேர்க்க வேண்டும். மர்சூக் நானாவும் மற்றவர்களும் 'ஒட்டோ’ பிடித்து அவனைச் சேர்த்து விட்டார்கள்.
திரும்பி இருப்பிடத்திற்கு வந்து கண்ணயர்ந்தார்களா?
ஒலி பெருக்கியில் ஸ"சபஹ" தொழுகைக்கு பாங்கு ஒலித்துக் கொண்டிருந்தது.
"அஸ்ஸலாத்து ஹைரும் மினன் நவும்.'
அதைத் தொடர்ந்து தெருச் சந்தடிகள் மெல்ல மெல்ல எழுந்தன. விடிவெள்ளி யாருக்காகவோ தே ர ன் றி க் கொண்டிருந்தது.
*அட இவ்வளவு சுறுக்கா வெள்ளவெளேரென்று." அப்துல்லா விடியற்காலையில் மண்டையைப் போட்டு விட்ட செய்தி பேமெண்ட் எங்கும் பரவி, எங்கோ குளி ரூட்டப்பட்ட கண்ணாடி அறைக்குள் "டெலிபோன் மணி யும் அலறியிருக்க வேண்டும். -
'ஒரு முஸ்லீம் மையத் நாறிப் போகக் கூடாதாம். ,
மையத்தை எடுக்க இயக்கங்களும் சங்கங்களும் மோதிக் கொண்டன.
ア32z。\。ー 100 ܬܐ -
 

எப்படியோ அந்த மரண ஊர்வலம் மாளிகாவத்தை மையவாடியை நோக்கிப் போய்க் கொண்டிருந்தது.
ஊர்வலத்தில் மர்குக் நானாவும் உற்ற நண்டர்களும் போய்க் கொண்டிருந்தனர்.
நேற்றுவரையும் நம்மோடு அனாதையாக இருந்தானே :) என்று நண்பர்கள் பெருமூச்சு விட்டார்கள். C :
| | LG மாலை மங்கி விட்டது. ܓ݂ܔ ̄܊
மீண்டும் இரவு-இரவுகள் அவர்களுடைய ராகங்கள் ஒலித்துக் கொண்டுதான் இருந்தது.
நவாஸ் சந்தி, சந்தியாகக் கீதங்கள் பாடி இரக்கிறான். அவனுடைய உடைந்த ஹார்மோனியப் பெட்டியிலிருந்து வரும் உயரிய இராகங்கள் தன் உலகின் அடிநாதம்
தான்ே. , ' ' ' O (அஷ்ஷ"ரா-ஜூலை-ஆகஸ்ட் 1983)

Page 54
புதுப்பட்டிக் கிராமத்திற்கு கடைசி டிக்கட்
"போய்த்தான் ஆகணும், ஆபீஸ்ல சொல்லிட்டாக .நாளைக்கு காலையிலேயே காம்பராவைப் பூட்டி, சாவிய தலைவர்கிட்டே ஒப்படைச்சிடனும், பெரிய தொரெ கிளாக்கர் ஐயா மூலமா தெரிவிச்சுட்டாரு.'
'போகல்லேனா இவங்க என்ன செஞ்சிப்புடுவாங்க
ளாம் வேணும்னு “பை போஸா லயக் காம்பராவ எடுத் துக்குவாங்க. எடு.'
சிந்தனை வயப்பட்ட சி ன்  ைன ய |ா, தோட்ட அலுவலகத்திலிருந்து குறுக்குப் பாதை வழியாக இறங்கிக் கொண்டிருந்தான்.
*அதுக்கு முந்தி இன்னக்கே தோட்டக்கத்தி, மம்பெட்டி சாமான் இருந்தா, ஆயுதக்காரர்கிட்டே குடுத்துடு.'
"அப்புறம் எனக்கு என்னத்துக்கு ஐயா அந்த தேஞ்ச கத்தியும் மம்பெட்டியும்; அதான் எங்கள உசுரோட வெட்டிக் குழி தோண்டிப் புதைச்சிட்டியே.ம்.'
குறுக்குப் பாதை வழியாக இறங்கிய சின்னையாவுக்கு கால்கள் உளைச்சல் எடுத்தன - மனமும் தான். வயதும் ஐம்பத்தைந்து பிந்தியிட்டது. அரசாங்கத் தொழிலாளியாக
02
 

இருந்தா பென்சனுக்கு எழுதிப் போட்டுச் செவனேண்டு விட்டுல கெடப்பானுக.
இறங்கியவன் ‘அகஸ்மாத்தாக ஒரு தடவை வந்த வழியை அண்ணாந்து பார்த்தான்.
‘இனி நாம எப்ப இதெல்லாம் பார்க்கப் போறோம்."
மேகம் சூழ்ந்த அந்தப் பெரிய மலையே அமுங்குவது போல்-உள்ளம் கனத்துப் போயிருந்தது.
வழி நெடுகச் சந்திப்புகள், விசாரிப்புகள்
'ஆபிஸ்ல ஒனக்கு என்ன சொன்னாங்க."
"கேள்வி கேட்டுக் கேட்டு உசுர எடுத்துட்டாங்க.
அவனுக்கும் சொல்லிச் சொல்லி அலுத்துப்போய் நடந்தது என்னமோ இதுதான்
} } ! Vi ki:
அந்தச் சின்னையாவ ஆபிசுக்கு வரச் சொல்லுங்க; அவன் விசயத்த முடிச்சுடனும்!"
பெரிய கிளாக்கர் ஐயா, பீல்ட் ஆபிசருக்கு உத்தியோக பூர்வமாக டெலிபோன் பண்ணியிருக்கிறார். அவரும், சம் பிரதாயச் சுவடு மாறாமல் “லேபர் டயறியில் முதல் ஆளாக அவன் பெயர் காரணம் எல்லாம் எழுதி அனுப்பி விட்டார். அதன் பிரகாரம் இன்று
". "திங்கட்கிழமை-லேபர் டே."
. தோட்டப் பிரட்டு சின்னையா
“இப்ப எதையும் பேசிப் பிரயோசனம் இல்ல, ஒன்றும் பலிக்காது.' என்று அவனுக்குத் தெரியும். இருந்தாலும் "நடிப்பாசை யாரை விட்டது.
‘என்னதான் சொல்லப் போறாங்கன்னு பாப்பமே!’
10.3

Page 55
மாலை மூன்று மணிக்கே, முதல் ஆளாக தோட்ட அலுவலக முன்றிலில் உள்ள மா மர நிழலில் வந்து நின்றான். அந்த நிழலில் நிற்பதில் அவனுக்கு ஒரு பெருமை. அது எத்தனையோ வருடங்களுக்கு முன்--இளமை வேகத்தில் அவன் கைபட நாட்டிய மரம்தான். அதை வளைத்துச் செல் லும் தார் ரோட்டின் இருமருங்கிலும் வானைத் தொட்டு புதுப்பட்டி கிராமத்திற்கு ஒரு புதுச்செய்தியை சொல்லப் போவது போல், உயரச் செல்லும் சடைசவுக்கு மரத்தடி யிலும் ஒவ்வொருவராக வந்து சேரத் தொடங்கினர். ஆட்கள் வந்து சேரச் சேர அங்கு நிலவிய அமைதி சோர் வடைந்தது. -
வாரத்தில் முதல்நாள்-திங்கள் மாலை தோட்டத் தொழிலாளர் துரையோடு தத்தம் பிரச்சினைகளை மனம் விட்டுப் பேச ஒரு சிறு சந்தர்ப்பம்.
சின்னையா தோட்டத்திற்கு பழைய ஆள், கால தாமதம் செய்யாமல் அவருடைய விவகாரத்தை "சட்புட்" டென்று முடித்து விட்டு எவ்வளவு சீக்கிரத்தில் அனுப்ப முடியுமோ அவ்வளவு விரைவாக அனுப்பிவிட வேண்டும் என்ற கங்கண்மோ!
**ஆமா மரியாதயா புதுப்பட்டிக்குப் போன்னு சொல்லி விட்டாங்க.இந்தப் புதுப்பட்டிக் கிராமம் இந்தியாவில் எங்கே இருக்கு? அதுதான் சொந்த ஊருன்னு கேள்விப் பட்டிருக்கேன்.ஆனால் இலங்கைக்கு எப்ப வந்தேன்? தலைமுறை வழிவாரம் ஒன்றும் தெரியலியே.'
‘தொரெ வந்ததும் மர நிழலில் சவடா லாய் பம்மிக் கிடந்தவங்க எல்லாம் எழுந்து ராஜ மரியாதை-என்னப் பார்த்து சிரிச்சிக்கிட்டே உள்ளே போனார் தொரெ.
*அப்புறம் பெரிய கிளாக்கர் ஐயா பம்பரம் போல ஆடினார். ஜன்னல்கள் திறக்கப்பட்டதும் போய் நின்றோம். எடுத்த எடுப்பிலேயே தோட்டப்பிரட்டு சின்னையா வர லாம்."
04
 

'பெரிய தொரே டெலிபோனை அணச்சி ஒறயாடிக் கிட்டே இருந்தார்.'
பெரிய கிளாக்கர் ஐயாவின் அடித் தொண்டையிலிருந்து பீரங்கி வெடித்தது.
"அட சின்னையா விசயந்தான் எல்லாருக்கும் தெரியுமே, அவன் தலை விதியத்தான் சட்டம் நிர்ணயிச்சிருக்கே, அப்புறம் விசயமில்லாம வந்து ஆபீஸ்ல மாநாடு போடாம. சின்னையாகிட்ட ஏதும் பேச இருந்தா லயத்தில போய் (BLGigay Tibi " '
கூட்டம் சிதறியது
ஆபீஸ் விசயம் சீராக நடந்தன.
கொடுக்க வேண்டியபற்றுச் சீட்டு இதர தஸ்தாவேஜ" கள் கையொப்பங்கள் சகலதுக்கும் பத்து நிமிடங்கள்.
தொரெ கைக் கடிகாரத்தைப் பார்த்தார். றக்கர் விளையாட அவுட்" ஆகிவிடலாம். -
சின்னையாவுக்கு துரை வாழ்த்தினார். 'விஸ் யூ ஆல் தி பெஸ்ட்"
சின்னையாவும் கம்பீரமாக நிமிர்ந்து, சிப்பாயைப்போல -சலாமுங்க!-இறுதி "ச லு ட் அடித்துவிட்டு குறுக்குப் பாதை வழியாக நடந்து வந்தான்.
எதிரே தான் சார்ந்த யூ னி ய ன் பிரநிதிதி ஒருவர் சின்னையாவைச் சந்திப்பதற்காகவே வந்தவர்
‘ என்னப்பா நடந்தது; அவ்வளவு சுருக்கமா ஆபீஸ்ல ருந்து வந்துட்டியாப்பா என்ன விசயம்?*
*அப்புறம் என்ன சொல்லக் கெடக்குது.'
05

Page 56
சின்னையா நடந்ததை ஒன்றும் விடாமல் சொல்லி அனுப்பினான்.
“பெரிய கிளாக்கர் ஐயா வீட்டு வேலைக்காரன் செல்வ ராஜ்' எதிரே வந்து கொண்டிருந்தான்.
டேய் செல்வராஜ் மாப்பிள, என்னடா அது சாக்குல கொண்டு போரே???
,%酱
பூனை". பெரிய தொல்லையாயிருக்குண்ணு, பத்துக் கட்டைக்கி அங்கால விட்டாலும் மோப்பம் புடிச்சி வந்துடு துங்க, ஐயா சொன்னாருங்க. சாக்குல கட்டிக் கொண்டு போய் நம்ப ஆத்துக்கு அக்கரையில விட்டுட்டுவர சொன் னாருங்க. பூனையைக் கொல்லக் கூடாதாம், பாவம்.”
'ஆ. அப்படியா..!"
* சின்னையா ஒரு பெரிய சிரிப்பு சிரித்தான். அது நீண்ட நிமிடங்களாயின. அப்பொழுதும் முற்றாக ஒயவில்லை.
'ஹ ஹ ஹ ஹி ஹி ஹி.." 'அப்படியா சங்கதி, அப்படீனா நாளைக்கி காலையில இந்தியாவுக்குப் போறேன். வேனும்னா அதுக்கும் சேர்த்து புதுப்பட்டி கிராமத்துக்கு ஒரு டிக்கட் எடுக்கிறேன்.'
* , , , செல்வராஜ் சிரித்து மறைந்து விட்டான்.
'அவனுக்கு அடுத்த தையில கல்யாணமாம், அப்புறம் அவனுக்கு ஒரு லயக்காம்பரா வேணும்.அதுக்குத்தான் ஐயா நம்ப லயத்துக்கு "பிளான்” பண்ணிட்டாரே. பாவம் பெர்ள்ச்சிட்டு போறான். பய. '.
அந்தப் பூனைய கொல்லக் கூடாதாம். பூனைப்பாவம் ப்ெரும்பாவமாம். அப்ப அதக் கொண்டு போய் ஆற்றுக்கு அக்கரையில விட்டுட்டா, அங்க வீடுவாசல் இல்ல, மியா மியான்னு மலைப்பிரதேசத்தில அலைஞ்சி திரியுமே. அது பாவமில்லையா..? .
I 0.6
 

சின்னையாவுக்கு தலை வெடிக்கிற மாதிரி ஒரு
CYKLIMT F GOOGST.
புதுப்பட்டி?
சரி சரி லயத்துக்குபோய்-புதுப்பட்டி ஆளுங்க இங்கே இருக்கிறாங்கதானே! பூரா விசாரிச்சா போகுது. இல்லாட்டி கண்ணக்கட்டி காட்டுல வுட்டா நா எங்கே பே ா ற து? யார சந்திக்கிறது? என்ன செய்யிறது? 鲨·
பொறந்த ஊராம் அப்படின்னா கொழந்தயா இருக்கும் போது வந்திருப்பேனோ? அப்பா, ஆயா தோள்ல ஏறித் தான் வந்திருப்பேனோ? அப்பாவும் ஆயாவும் இங்கயே உசுர உட்டுட்டாங்க. அப்புறம் கட்டிக்கிட்ட பெஞ்சாதி முதல் பிரசவத்திலேயே தாயும் புள்ளயுமா."
"ஐயோ. எல்லோரும் இந்த மண்ணுக்குத்தானே உரமானாங்க. அப்புறம் தூரத்து உறவுக்காரங்க புதுப் பட்டியிலதானா இருக்காங்க. நா மட்டும் என் 'கடசி மூச்ச அங்கதானாம் வுடனும்." . . . . . .
அக்கரை மலையில அந்தப் பூனை மியாவ் மியாவ்ணு அழுகிற சத்தம் பரிதாபமாகக் கேட்குதே!"
லயம் லயம்னு சாகப்போறாங்க, நா ஒண்டிக்கட்டயா இந்த லயத்தில இருக்கிறது, பெரிய பங்களாவில இருக்கிற ம திரி யா ம்; எல்லார் கண்ணிலயும் இப்ப அதுதான் குத்துது!" . .
லயத்துக்கு வந்து சேர்ந்தபோது மாலை இருளாக ஆயத்தம்,
'அட, சின்னையா ஆபிசிலிருந்து வந்துட்டாருடா, என்ன ஆச்சோ தெரியாது. வாங்கடா போய்க் கேப்ப்ேர்ம்."
" "இனி, அக்கம் பக்கத்தவர்கள் காம்பராவுக்குப் படை யெடுக்க ஆரம்பம். ..
107

Page 57
சின்னையாவுக்கு ஒரு பக்கம் வெறுப்பும், சலிப்பும் சஞ்சலமும், அதன் மறுபக்கம் அன்புத்தொல்லை.
தோட்டத்தின் அறுநூறு சொச்சம் பேரும் தரிசிக்கத் தான் போகிறார்கள்.
அந்தப் படையெடுப்புக்கு முன்அவன் அவசரப்படுகிறான்-வந்ததும் வராததுமாக,
'ஏ பாப்பம்மா. வாளிய அடுப்பில வச்சிட்டு, தண்ணி மொண்டு ஊத்துவியா புள்ள.'
அவன் குரலில் என்றுமில்லாத சோகம் கவிந்திருப்பதை அந்தப் பதின்மூன்று வயதுப் பாப்பாவுக்கு என்ன தெரியப் போகிறது. அவள் வாய்க்கு வந்த வார்த்தைகளைக் கொட்டுகிறாள்.
"ஊத்துவியான்னா நீ மட்டும் இங்கே ராஜா மாதிரி குந்திக்கிட்டு இருக்கே, தண்ணி சுடவைக்க, தேத்தண்ணி ஊத்த. அப்பப்பா எல்லாத்துக்கும் பாப்பம்மாதானே ஒனக்கு வேலைக்காரி, கொஞ்சநேரம் சும்மா இருக்க விடுவியா??
உடம்பெல்லாம் துளிர்த்த வியர்வையில் ஒட்டிக் கொண் டிருந்த செம்மண் புழுதியைக் கழுவி, இந்த மண்ணுக்கே இறைத்துவிட எண்ணினான். -
"அட கோவிச்சுக்காத புள்ள, இன்னிக்கு மட்டுந்தானே, உன்னோட தங்கக் கையினால தண்ணி சுடவைச்சி குளிக்கப் போறேன். அப்புறம்.'
நெஞ்சம் விம்மி, கண்களில் நீர் முட்டியது.
அவனால் பேச முடியவில்லை. தொண்டையை அடைத் துக்கொண்டது. சிரமப்பட்டுச் சொன்னான்
08

'பாப்பம்மா காலங்காத்தாலே புதுப்பட்டிக்கு பொறப் படப்போறேன்." -
சின்னையாவின் தேம்பிய சொற்கள் அவன் மீது பாப் பம்மாவின் இள மனதில் வளர்ந்திருந்த காரணமில்லாத வெறுப்பைத் தகர்த்துவிட்டன.
‘பாப்பம்மா நானும் ஊருக்குப் போகப் போறேன்" இந்த நான்கு சொற்கள், அவள் கண்களையும் பொல பொல வென்று பனிக்கச் செய்து விட்டன. அவள் காட்டிக் கொள்ள வில்லை.
‘பாப்பு என்ன இன்னும் நின்னுகிட்டு இருக்கேசட்டுபுட்டுன்னு போய் ரெண்டு கட்டையை எடுத்து வச் சிட்டு, மண்டி எண்ணையே ஊத்தி எரிச்சிவிடு, நல்லா தண்ணி சுடட்டும். நா இன்னும் கொஞ்சம் மாறு பொறுக்கிக்கிட்டு வாறேன்."
"அடி பாப்பம்மா அங்க என்னடி, தாத்தர்வோட
வாய் குடுத்துக்கிட்டு இருக்கே..?"
அவளின் தாய் தனலெட்சுமி திண்ணையில் இருந்து கொண்டே இரைகிறாள்
அவளுக்கு இன்னும் விசயம் எட்டவில்லையோ!
சின்னையாவின் லயத்துக்கு வலப்பக்கம் மூன்றாவது காம்பராவில் குடியிருக்கும் கார்மேகனின் மகள்தான்
_DT,
சின்னையாவுக்கு அங்கேதான் சாப்பாடு, தண்ணி வெண்ணி எல்லாம், காசு, “ரேஷன் சாமான் எல்லாம் கொடுப்பான்.
"சின்னையாவுக்கு அவர்கள் கிட்டத்திலோ தூரத்திலோ உறவுக்காரர்கள் அல்ல. அதைவிட தொழிலாளர்கள் என்ற
109

Page 58
அடிப்படையில் ஒன்றிணைந்தவர்கள். அந்தப் பலம் வாய்ந்த இணைப்பில், ஒருவருக்கொருவர் பரஸ்பர ஒற்றுமையுடைய வர்கள்.
இரவு ஆக்கிரமித்துக் கொண்டிருந்ததைப்போல அடுப் பில் ஏற்றிய நீரும் சூடேறிக் கொண்டிருந்தது. புகைசூழ, அவன் அள்ளி அள்ளி ஊற்றிக் கொண்டான்.
குளிப்பு முடிந்துவிட்டது.
உடம்பெல்லாம் ஒருவகைக்கூதல், சுள் சுள் என்று குத்த, கருங் கம்பளியால் போர்த்துக் கொண்டான். அப்படியும் உதடுகள் கிளாக்கர் ஐயா ‘டைப்' அடிப்பதுபோல் இருந்தது. ஒரு நிமிடத்தில் மூன்று சொற்கள்
இனிமே. எங்கே.குளிக்கிறது.
திண்ணையில் ஒரு மூலையில், முதுகைச் சுவரில் சாய்த்து சிந்தனையில் மூழ்கிக் கிடந்தான்.
தொழிலாளர் வருவதும் போவதும் விசாரிப்பது دارای ملی மாக இருந்தார்கள்.
சின்னையா இந்தியாவுக்குப் போகப் போகிறான் என்னும் தீ தோட்டமெங்கும் பரவி அதன் ஜ சவாலை இனிய நெஞ்சங்களைச் சுட்டுக் கொண்டிருந்தது.
இந்த லயம் நாளைக்கோ மறுநாளைக்கோ செல்வராஜ் பயலுக்கு சொந்தமாகப் போகுது. அவனை நினைக்கும்போது கூடவே அந்தப் பூனையின் நெனப்பும் வருகுதே.பாவம் அது இந்த நேரம் அக்கரை மலைக் காட்டில் என்ன பாடு படுமோ அல்லது திரும்பவும்.
சென்ற சில வருடங்களுக்கு முன், இனி எஞ்சியுள்ள வாழ்க்கைப் போராட்டம் இலங்கையிலா! இந்தியாவிலா?
110

cm cm リ*
| , TLD என்ற பிரச்சினை அவன் வாழ்க்கையிலும் புகுந்து ஊஞ்சலா டிக் கொண்டிருந்தது. நடுவிலே மனிதனைப் பிரிக்கும் ஆழ நீலக்கடல்.
இங்கேயே? அங்கேயா? அவன் ஒரு முடிவு செய்யாமலே இருந்துவிட்டான்.
ஊஞ்சலும் ஆடி ஆடி அறுந்துவிடும் நிலைக்கு வந்து விட் -El. '
கார்மேகன் வீட்டில் இராப் போசன விருந்துக்கு ஏற் பாடாகி இருந்தது. கோழிக்கறியும் சோறும். எப்போதும் போல் மேல் வருத்தத்துக்கு என்று அளவோடு எடுக்கும் மருந்து பரிமாறப்பட்டதும் சின்னையாவின் குளிர் பறந்து விட்டது.
தலைவர் நல்லையாவின் தலைமையில் சின்னையாவின் சகாக்கள் கூடியிருந்தார்கள்.
புதுப்பட்டிக் கிராமத்தைப் பற்றி ஒரு மகாநாடு நடந்து முடிந்து விட்டது.
சின்னையாவுக்குச் சொந்தமாயிருந்த ஒரேயொரு ‘டிறங் குப் பெட்டி, அதைத் தூக்கிக் கொண்டு போக சிரமம். அதை பாப்பம்மாவுக்கு அன்பளிப்பாகக் கொடுத்துவிட்டு ஒரு அளவான கைப்பை, அற்புதமாக இருந்தது. ஒரு கன மான காகித உறையில் பிரயாணத்தின்போது தேவைப் படும் முக்கிய தஸ்தாவேஜ சகள்-திறந்ததும் எடுக்குமாப் போல.
நான்கு வயதில் இலங்கைக்கு வந்திருந்தாலும் ஐம்பத் தொரு வருடங்களுக்குப் பின் பழக்கமே இல்லாத ஊருக்குப் போகும்போது உழைத்துக் கொண்டுபோகும் சொத்தெல் லாம் ஒரு சிறு கைப்பைக்குள்தானே அடங்கும்.
சொல்ல வேண்டியவர்களுக்கு எல்லாம் சொல்லியா யிற்று. கறுப்புக்கோட், சட்டை, வேட்டி உடுத்து பிரயா
I

Page 59
னத்துக்கு வாங்கி வைத்திருந்த புது செருப்பையும் மாட் டிக்கொண்டு, கைப்பையையும் தோளில் தொங்கவிட்டுக் கொண்டு, காம்பரா சாவியை தலைவரிடம் ஒப்படைத் தாயிற்று.
அப்புறம் இந்த மண்ணுக்கும் அவனுக்கும் எந்த பந்த மும் இல்லை.
‘புதுப்பட்டி கிராமத்தில்தான் போய் சாகணும்னு, மரண தண்டனையா?"
ஆறரை மணிக்கு பயணம் சொல்லியனுப்ப ஒரு கூட் டம், பஸ்ஸில் ஏறியதும் அதில் கால்வாசிப்பேர் ஸ்டேசன் வரைக்கும் வர்றோம்னு ஏறினாங்க. அப்புறம் நாவலப் பிட்டி ஸ்டேசனில் அவுகளும் நின்னுட்டாக
'தலைமன்னாருக்கு போக-கோச்சி ரெண்டு மணிநேரம்
6.
'அப்படியா.அதுவும் நல்லதுக்குதான், அப்ப நீங்கள் ளாம் இங்க நிண்டு ஒங்க வேலைவெட்டிகள கெடுக்காம எல்லோரும் போங்க. கோச்சி வந்ததும் நா ஏறிக்குவேன். gិgorT.**
வழியனுப்ப வந்து நின்று கொண்டிருப்பவர்களுக்கும், அதுதான் சரியாகப் பட்டது.
அவர்கள் அனைவரும்
*அப்ப போய்ட்டு வாங்க, போய்ட்டு வாங்க' என்று அன்பு கனிந்து, கையசைத்து விடை பெற்று, சென்று மறைந்தனர்.
போறதாவது. வாறதாவது. அப்புறம் போயிட்டு வரணுமாக்கும். கோச்சே போறதுக்கு சொனங்குதாம். நா மட்டும் சொனங்கினா என்ன? ரெண்டு மணி நேர சொணக்கம் என்ன! எத்தனை வருஷம் சொனங்கினாலும்
2

செர்னங்கட்டுமே, கண்காணாத புதுப்பட்டிக் கிராமத்துக்கு கடசி ஆளா இருந்துவிட்டுப் போறனே. என் ஒருத்தனால யாருக்கும் குறைஞ்சிடப் போவுதா.
காலச் சக்கர ஓட்டத்தில், ஒரு நாள் காலைப்பொழுது, தோட்டமெங்கும் ஒரே பரபரப்பு. 'லயக் காட்டில உள்ள புதிய தலைமுறையினர் புதினம் பார்க்க ஓடோடி வந்தனர்
யாரோ ஒரு புள்ள புடிக்கிற சாமியார் வந்திருக்கா ராம், போய்ப் பார்ப்போம்.
கற்றை கற்றையாக நீண்ட வெள்ளைத்தாடி, புழுதி படிந்ததால் நிறம் மாறி கசங்கிப் போன கோட், வெண்மை வெளுத்துப்போன வேட்டி சகிதம்.
**து நியூர் நீங்க யாரு?" ଜt୍ଣ୍ଣ ଶୟ୍ଯ கேட்டாலும் ஒர் ஊமைச் சிரிப்பு.
'இந்த ஆள் அக்கரை காட்டிலிருந்து வாரத கண்டிருக் கேன் ?
சாமியார் பாப்பம்மா லயப்பக்கம் எட்டி எட்டிப் பாக்கிறத பாத்திருக்கேன்."
*செல்வராஜ் லயத்தையே உத்துப் பாத்துக்கிட்டு இருப் பாரு."
ஆபிசுக்கு முன்னால மா மர நிழலிலும் குந்திக்கிட்டு இருப்பாரு."
'யாரோ எவரோ ஆள் இந்தப் பக்கத்துக்கு புதுசு. புள்ள குட்டிங்க கண்ட மாதிரி ஒடித் திரியாதீங்க.அக்கரை மலைக்கு அப்பால பாலம் கட்டுராங்களாம். அப்புறம் சாமியார் பெலி குடுக்க புடிச்சிட்டுப் போயிடுவாரு!”
குழந்தைகள் எல்லாம் மிரண்டு ஒடி ஒளிந்து கொள் கின்றனர்.
A 507-8 13

Page 60
'அட ராமு, லதா, பாண்டியா சொல்றது கேக்குதா எல்லாம் உள்ளுக்கு வந்து விளையாடுங்க புள்ளகளா.."
பாப்பம்மா தன் அன்புக் குஞ்சுகளை அரவணைத்துக்
கொள்கிறாள்.
அதற்குப் பின்னர் நடந்த சம்பவங்களால் மனம் புண் பட்டுப் போனவனுக்கு மண்ணின் மீதே வெறுப்பேற் பட்டிருக்க வேண்டும்.
கொஞ்ச நாளாக
‘சாமியார் தலைமன்னார் கோச்சியில ஏறினார்' என்று
ஒரு புதுச் செய்தி அடிபட்டு ஒய்ந்தது. O
(வீரகேசரி-மே, 1984)

நீந்தத் துடிக்கும் மீன் குஞ்சுகள்
"சாச்சி, ..ம்மா எப்ப வருவாங்க. இண்டக்கி நானும் ஸ்கூலுக்குப் போகவா?'
எத்தனையோ நாட்களாக மனதில் ஊறப்போட்டு வைத்திருந்த அந்த மகத்தான கேள்வியை,ஒரு வகை துணிச்ச லோடு கேட்டு விட்டாள் பர்ஹானா . ஆனால் அது நஜிமா சாச்சியின் நெஞ்சைத் துளைத்து கோபத்தை மூட்டிவிடும் என்று அந்தப் பிஞ்சு மனம் சற்றும் எதிர்பார்க்கவில்லை.
முதலாம் வகுப்புப் படிக்கும் தனது மகன் பைரோஸ் சீருடையணிந்து தயாராக நிற்கிறான். சின்னமகள் சகிலா வுக்கு காலை உணவு ஊட்டி, வெளுத்த வெள்ளை கவுன், கழுத்துப்பட்டி அணிவித்து, அழகாகத் தலைவாரி, புத்தகப் பையுடன் பாடசாலைக்கு அனுப்ப ஆயத்தப்படுத்திக் கொண் டிருந்த நல்ல நேரத்தில்தான்
ஒருவேளை சாச்சியின் காதுகளுக்குக் கேட்டிருக்காதோ என்றெண்ணிய பர்ஹானா மீண்டும் குரல் எழுப்பினாள்.
'நஜிமா சாச்சி. உம்மா எப்ப வருவாங்க, நானும் ஸ்கூலுக்குப் போகவா?"
நஜிமாவோ சூறாவளி காலத்துக் கடலையும் மிஞ்சி விட்டாள்.
夏五莎

Page 61
*அல்லாஹ். சாச்சி அடிக்காதீங்க, அடிக்காதீங்க' துடித்தாள் துவண்டாள்.
சாச்சிக்குக் கோபம் வந்தால் பெண்மைக்குரிய அடக் ம் பறிபோய் கண்கள் துள்ளும். முகம் சிவக்கும். உதடு கள் படபடக்கும்.
‘அடியே மூதேவி ஒனக்கு எத்தனை முறை சொல்லி யிருக்கு, புள்ளகள ஸ்கூலுக்கு அனுப்பும் போது முன்னுக்கு வந்து நிக்காத எண்டு. தரித்திரம், ஒங்க உம்மா கட்டுக் ஆட்ட சம்பாரிச்சி வச்சீக்காடி நாயே, ராத்தாட புள்ள பாவ மென்டு சோறு போட்டா அப்படித்தான். ரோடு வழிய ஒரழிஞ்சி பிச்ச எடுக்க வுட்டுருக்கோணும்."
சூறாவளி ஆர்ப்பரித்து எப்போது ஒய்ந்ததோபர்ஹானா துரையை நோக்கிப் பிந்தி வந்து கொண்டிருந்த ஒரு வள் ளத்துக்கு விரட்டப்பட்டதும், சிணுங் கி க் கொண்டே நடத்தாள்.
சாச்சிகிட்ட அடிபட்டு, அடிபட்டு மேலெல்லாம் ஒரே வலிம்மா, நீங்க எப்ப வருவீங்க?"
அந்த நேரத்தில் வஞ்சகமில்லாத கடற் காற்றுத்தான் அவளது உள்ளத்திற்கும் உடலுக்கும் இதமாக இருந்தது. 'ஏ கடற்காற்றே! என் நிலையைப்போய் aris, short கிட்ட சொல்ல மாட்டியா நீ என்று இடித்துச் சொல் வது போலிருந்தது அவளது ஏக்கம்.
இறுதியாகப் பாடசாலைக்குப் போன ஞாபகம் வந்து விட்டது அவளுக்கு ' ' '
'அன்று மழையும் கச்சான் காற்றும் கண் கட்டி ஒ4 விளையாடிய பருவகாலம்.
பாடசாலை நிர்வாகத்திலும் சிறு சலனத்தை ஏற்படுத் தியது. தூவானத்தால் பிள்ளைகள் நனைவதால், ச்ஹ்று
116

நேர்த்தோடு விட்டு விடுவதற்கு ஆயத்தப்படுத்திக் கொண் டிருந்த போதுதான், கடலில் மீண்டும் வெறியாட்டம்,
கரையோரம் நின்ற தென்னை மரங்கள் என்ன மாப் போர் தொடுத்தன. புயலின் வேகம் தணிந்த போது பாட சாலை மணி ஒலித்தது. பிள்ளைகள் குய்யோ முறையோ வென்று வீடுகள் நோக்கிப் படையெடுத்தனர். அடுத்த சில நிமிடங்களில் மீண்டும்.இந்த முறை கச்சான் காற் றுக்கு பொல்லாத கோபம்.
பர்ஹானாவின் நடையிலும் போராட்டம் தாக்குப் பிடிக்க முடியாத அந்த ஒல்லியாய்ப் போன மரம் சாய்ந்து விட்டது. . . . .
'அல்லாஹ் உம்மா."
ለù - - பர்ஹானா வீரிட்டாள்.
பக்கத்திலிருந்த அவளது குடிசை சுழற்சிக்குப் பலி யாகி விட்டது, יו: : י , , , ,
நல்ல வேளையாக முன்னெச்சரிக்கையுடன் அவள் உம் மாவோடு, உம்மாவின் தங்கை நஜீமா சாச்சியின் கல்வீட் டுக்கு, தற்காலிகமாகக் குடியேறியிருந்தார்கள். குடை சாய்ந்து விட்ட செய்தியை உம்மாவுக்குச் சொல்ல வேண்டும் என்று பர்ஹானா நடையின் வேகத்தைக் கூட்ட முயன் றாள். ஏனோ தளர்ந்து விட்டது. முகத்திலும் வாட்டம், காலையில் பாடசாலைக்குச் செல்லும் போது வெறுந் தேநீர், காலையுணவு பூஜ்யந்தான் அது புதுமையில்லையே! அப்படி யானால் அந்த இனம் புரியாத நடைச் சோர்வும், வாட்ட மும், இடைவேளை மணியடித்ததும் இலவச பிஸ்கட் சாப் பிட்டு கிணற்றுத் தண்ணீரைக் குடித்ததுதானே. மகிழ்ச்சி யால் மனம் தாளம் இசைக்கும் இடைவேளையை அன்றும் அனுபவித்தவள்தானே பர்ஹானா
வீடு நெருங்கியதும் வேகத்தைக் கூட்டி "பிரேக்" இல் லாமல் மீன் பெட்டிகளைச் சுமக்கும் சைக்கிள் வண்டியை ப்
I 1 7

Page 62
போல் ஓட்டத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் தள்ளுப் பட்டு வந்து சாச்சியின் வீட்டு வாசலில் வி ழு ந் தா ள், சிலேட்டும் புத்தகமும் வாசலில் போடப்பட்டிருந்த கல்லில் பட்டுச் சிதறின. சிலேட் இரண்டு துண்டுகளாகின.
பாடப்புத்தகத்தைப் பார்த்து வெறுமனே பிரதி பண் ணாமல் அன்றுதான் முதன் முதலில் அம்மா என்று குண்டு குண்டான எழுத்துக்களைக் கூட்டி எழுதியிருந்தாள்.
'அப்பா அம்மா." நீண்டகால பிரயத்தனத்திற்குப் பின் எழுத்துக்கள் எண்ணி எழுதிய சாதனையை உம்மாவுக்குக் காட்ட வேண்
டாமா? கவனமாகப் பாதுகாத்துக் கொண்டு வந்தவள் தான் ,
கொப்பி வாங்கப் பணம் இல்லையென்று அவளது அபி ம்ான வர்ணம் டீச்சர்தான் அந்தச் சிலேட்டை அன்ப ளிப்பாகக் கொடுத்திருந்தாள். அதன் தலைவிதிதான் இன்று இப்படியாகி விட்டதே.
*அப்பா, அம்மா'
சிலேட் உடைந்து, கடற்கரை மண்ணில் சிதறிச் சிலம் பிக் கிடந்தன.
வாசலில் விழுந்த அரவம் கேட்டு, தூக்கிவிட உம்மா ஓடி வரவில்லை.
ஊர் மரைக்கார் அப்துல் வாஹித், நஜிமா சாச்சியின் வீட்டிலிருந்து வெளியேறியவர், விழுந்துவிட்ட பிள்ளையைத் தூக்கிவிட எத்தனித்த அதே வேளையில்தான்
நஜீமா சாச்சியும், சுலைஹா என்ற பெண்ணும் வந்து பர்ஹானா வை எடுத்துச் சென்றார்கள். மேசைமேல் இருந்த
கிளாசில் உம்மாவுக்காகக் கொண்டு வந்திருந்த பால்
II 8

ஆறிக்கிடந்தது. அதை பர்ஹானாவுக்குப் பருக்கினார்கள். சன நடமாட்டம் வேறு.
இத்தனைக்கும் உம்மாவின் பேச்சு மூச்சே இல்லை.
கட்டிலில் கிடத்தி, வெள்ளைப் புடவையால் போர்த் தப்பட்டு, சாம்பிராணி ஊதுவத்தியின் மணம் கமழ்ந்து கொண்டிருந்தது.
பர்ஹானா வுக்கு ஒன்றும் புரியவில்லை.
'உம்மா. உம்மா. உம்மா." என்று கத்தினாள். உம்மா பேசவே இல்லை.
நேரம் சுணக்காமல் முன்னேற்பாட்டின்படி, எல்லாம் முடிய மட்டும் பர்ஹானா சுலைஹாவின் வீட்டுக்குக் கொண்டு செல்லப்பட்டாள்.
மூன்றாம் கத்தத்திற்குப் பிறகுதான் பர்ஹானா மீண் டும் வந்ததும்
'நஜீமா சாச்சி உம்மா எங்க? உம்மா எங்க?' என்று நச்சரித்தாள்.
'உம்மா அல்லாஹ்யிடம் போயிருக்கிறாள்.'
தயாராக வைத்திருந்த ஒரே பதிலைத்தான் எல்லாரும் சொன்னார்கள்.
பர்ஹானாவுக்கு ஒன்றும் புரியவில்லை. வாப்பா கடலுக்குப் போயிருக்கிறார். உம்மா அல்லாஹ்யிடம் போயிருக்கிறாள். ஒரு வருடத்திற்கு முன் கடல் எச்சரித்ததையும் பொருட்படுத்தாமல், கடலுக்குப் போன முஸ்தபா திரும்ப வில்லை. இன்னும் வரவே இல்லை.
I 19

Page 63
வாப்பாவின் ஞாபகம் வந்து கேட்கும் போதெல்லாம், வருவார் வருவார் என்று ஆறுதல் கூற உம்மா இருந் தாள். இப்போது உம்மாவும் போன பிறகு.?
நஜீமா சாச்சியைப் பொறுத்தவரையில் நாற்பதாம் நாள் முடிந்த பிறகு துக்கம் பறந்துவிட்டது.
ஆனால் பர்ஹானா? அவள் இழந்திருப்பது ஒரு விளையாட்டுப் பொம்மை இல்லையே.
இனி அவளுக்கு வாழ்க்கை ஆறாத்துயர் தானோ? ‘அடியேய் பர்ஹானா இங்க வாடி,' முதல் முறையாக நஜீமா சாச்சியின் உறுமலைக் கேட்டு அவள் அதிர்ந்து போய் நின்றாள்.
'டீயேய் இப்படியே இருந்தா உம்மா வந்திருவாடி? போய் அதுகளோட சேர்ந்து ஒரு வேலையைச் செய், அப் பத்தானே மனத்துக்கு சந்தோஷம் வரும். அங்க பார் மீன் கழுவி எவ்வளவு நேரம்; எல்லாம் வெய்யில்ல காயப் போட்டி,"
இப்படியாகத் தொடங்கி, படிப்படியாகப் பக்குவப் பட்டு.
வைகறையில் கடற்கரைக்குச் செல்வா ள். வள்ளத்திலிருந்து துடிக்கத் தெறிக்கும் மீன்களைக் கூடை யில் பொறுக்கிப் போடுவாள்.
ஏலத்தில் எடுக்கும் மீன்களோடு, தலையில் சுமந்து கொண்டு போய் வீட்டில் சேர்ப்பாள்.
மீனின் குடலைப் பிடுங்கி உப்புப் போடுவாள்.
மறுநாள் அவற்றை மீண்டும் கழுவி வெய்யிலில்
காய வைப்பாள்.
120

பல நாட்களாக அவை காய்ந்து, காய்ந்த கருவாடாகி விடும்.
அந்த அளவுக்கு அவள் ஒரு பிஞ்சுத் தொழிலாளி.
மனத்திற்கு மட்டும் கவலைகளை மறக்கும் சக்தி, அல் லது எதையும் தாங்கும் சக்தியை இறைவன் கொடுத்திருக்கா விட்டால் அவளும் கருவாடாகி இருப்பாள்.
இப்போதெல்லாம் சுரப்பதற்கு அவள் கண்களில் நீர் இல்லை ஆனால் 'உம்மா எப்போ வருவாள்?' என்ற தவிப்பு மட்டும் மாறவில்லை.
நஜீமா சாச்சி வீட்டில் "சாச்சி, சாச்சி அடிக்காதீங்க” கதறல்கள் கேட்கும் போதெல்லாம் அக்கம் பக்கத்துச் சனங்கள் எட்டிப் பார்ப்பதோடு சரி.
ஒவ்வொரு மழலைத் தவறுகளுக்கும், 'உம்மா வர மாட்டா, உம்மா வர மாட்டா" என்று போடும் அடி, உதை பிரம்புத் தழும்புகள்.
ஊர் மக்களால் என்ன சொல்ல முடியும்? அல்லது நெஞ்சங்கள் நெகிழ்ந்து விடும் என்பதற்காகவா அவர்கள் வருவதில்லை? ''
நஜீமா சாச்சியின் பிள்ளைகள் அளைந்து ஒதுக்கும் மிச் சம் மிஞ்சியதுகளும், பழையதுகளும் தானே அவளுக்குப் பிரதான உணவு, சமையற் கட்டில் உறங்குவதற்காக அவ ளுக்குப் பழைய பன்பாய் இருக்கிறது. உடைமைகள் என்று இரு கவுன்களும், இரண்டாக உடைந்த சிலேட் துண்டு களும் கிடக்கின்றன. சிலேட்டில் அன்று சாதித்த அப்பா, அம்மா எழுத்தோவியங்கள் மனதில் மட்டும் அழியாத சித்திரங்கள் ஆகிவிட்டன.
ஒவ்வொரு நாளும் வைகறையில் கடற்கரைக்குப் போவதும் பள்ளிக்கூடப் பழக்கத்தை நித்தியமாக்கிக் கொண்
I 2

Page 64
ட்ாள். போனதும் மணற்பரப்பில், நின்று கடலை விரக்தி யுடன் பார்த்தவாறே
*அகிலம் ஆளும் ஆண்டவா. உன் அருளைத் தேடி.'
கீதம் பாடி மணற் பரப்பில், ஆள்காட்டி விரலை அழுத்தி, அழுத்தி 'அப்பா, அம்மா' எழுதி முடித்த பிறகு தான் மீன் எடுக்கப் போவாள்.
அன்று கடற்தொழில் இல்லை.
அத்தகைய நாட்களில் தூரத்து அலுவல்களைப் பார்ப் பதற்காக கிராமத்தவர்கள் காலையிலேயே போய் விடுவார் கள், பெரும்பாலும் நடுத்தர வயது ஆண்கள் குடில்களில் ஒய்வெடுப்பார்கள்.
நஜிமா சாச்சி பிள்ளைகள் சகிதம் பளிச்சென்று உடுத்தி பயணம் கிளம்பி விட்டார்கள். பர்ஹானா மட்டும் வீட்டுக் காவல்,
எப்போதும் இல்லாமல் அன்று பர்ஹானாவின் உள்ளத் தில் உறைந்து போயிருந்த ஒர் ஆசை உயிர் பெற்றுக் கொண்டது.
எப்படியாவது சகீலாவின் கொப்பி புத்தகங்களை எடுத் துப் பார்க்க வேண்டும்.
சகீலாவின் எழுத்துக்கள் எவ்வளவு அழகாக இருக்கின் றின.
சிரமப்பட்டு எழுத்துக்களைச் சேர்த்து, படிக்க முயற்சி படுதோல்வி.
'அல்லாஹ் மிகப் பெரியவன், அவன் அருள்'
1 22
 

title 氨量
ஒரு கொப்பியிலிருந்து தாளைக் கிழித்து, எழுதும் பிர யத்தனத்தில் நேரம் வஞ்சித்து விட்டது.
வீட்டார் பிரவேசித்து, கையும் மெய்யுமாகப் பிடி பட்டு
*டியேய் கள்ளி, எத்தனை நாளடி இந்தக் கூத்து"
பர்ஹானாவின் ஒலம் கடலைப் பிளந்தது.
இந்த முறை ஊரவர் ஒரு தீர்மானத்துடன்தான் ஆக் ரோசத்துடன் வந்தார்களோ!
பர்ஹானாவின் கையில் நெருப்புக் கொள்ளியால் சூடு போடப் பட்டிருந்தது.
நடந்தவற்றை எல்லாம் உரிய முறைப்படி ஊர் மரைக் காருக்கு முறைப்பாடு செய்யப்பட்டது.
ஊர் மரைக்கார் அப்துல் வாஹித் ஒய்வு பெற்ற தமிழாசிரியர், சலசலப்பின்றி சமூக சேவை செய்யும் கன வான், ஊர் குடும்பங்களில் எழும் பிரச்சினைகளுக்கு முடிந்த அளவில் நிவாரணம் அளிப்பதில் ஆர்வமுடையவர். முறைப் பாடு கொடுத்த கையோடு அன்னாரை நஜிமாவின் வீட் டுக்கு அழைத்து வந்து காட்டி விட்டார்கள் ஊரவர்கள்.
நஜீமாவுக்கோ பேரதிர்ச்சி.
மரைக்கார் முதலில் காயத்தைப் பார்வையிட்டு சிகிச் சைக்கான ஏற்பாட்டைச் செய்தார்.
தந்தைக்குப் பின் தாயும் மெளத்தான பிறகு, பர்ஹா னாவின் நிலையை அவர் அறிந்திருந்தார். அதற்கு ஒரு பரி காரத்தை அவர் யோசிக்காமல் இருக்கவில்லை.
'நஜீமா, ஊர் ஜமாத் மொறப்பாடு கொடுத்திருக் காங்க, அப்படி ஒண்டு வந்தாக்கரியம் நாங்க விசாரிக்கி
123

Page 65
றது கடமை, மரைக்கார் என்ற மொறையில் நான் சில ஒழுங்குகளை செய்ய வேண்டியிருக்கு. எதுக்கும் ஒரு கிழ மைக்குப் பொறகு என்னை வந்து கண்டு கொள்ளுங்க?"
ஒரு வாரம் கழிந்தது. மீண்டும் மரைக்கார் அவசர அழைப்பு விடுத்திருந்தார்.
நஜீமா குமுறினாள். உறவினள் சுலைஹாவை அழைத்தாள். வாடீ, போய் கேப்பம், எண்ட பிள்ளையெண்டா என்ன, ராத்தாட பிள்ளையெண்டா என்ன? நான் அடிப் பன், வெட்டுவன், சுடுவன். - போனதும் மரைக்காரின் மனைவி மரியத்தின் இதமான "அஸ்ஸலாமு அலைக்கும் காத்திருந்தது. * , , "வாங்க நஜீமா, இது யாரு சுலைஹாவா? வாங்க" மரைக்கார் பேசினார்- . . . . *நான் சொல்றத நல்லா கேட்கணும். நஜீமா நீங்க உங்கட ராத்தாட புள்ள பர்ஹானாவுக்குச் செய்த கொடு மைகளை பக்கம் பக்கமா எழுதி, இத விசாரிக்கனும் எண்டு ஐம்பது பேருக்கு மேல் ஒப்பம் போட்டுக் கொடுத்திருக்கி றாங்க.'
‘பர்ஹானா எனக்கு மகள், நா அவள அடிச்சிதான் வளப்பேன். அதக்கேக்க ஊரவங்க யாரு?"
நீங்க பர்ஹானாவ வளர்க்கிற லச்சணம் முழு ஊருக்கும் தெரியும் எப்பவாவது ஒரு மொறப்பாடு வரும் என்றும் எனக்கு நல்லாத் தெரியும்.'
மரைக்கார் தொடர்ந்தார்“இங்க பாருங்க நஜீமா, பர்ஹானாவ நீங்க மகள் எண்டு நெச்சா, நீங்க அப்படி செய்ய மாட்டீங்க. இப்ப அவளுக்குப் பாதுகாப்பு இல்ல."
124
 

‘அப்ப நீங்க அவள என்னிடமிருந்து பிரிக்கவா போநீங்க. அப்ப நா கோர்ட்ல வழக்கு தாக்கல் செய்றன். பொலிஸ் கோர்ட் தீர்மானிக்கட்டும்.'
‘ஸ் நஜிமா அவசரப்படாம, ஆத்திரப்படாம முழு தயும் கேளுங்க."
*என்னப் பொறுத்தளவில ஒரு பெண்ண விசாரணைக்கே இழுத்து அலையவைக்க விரும்பல்ல. நீங்களோ பொலிசு, கோர்ட் என்று பேசுறிங்க, சரி, நான் கொழும்புக்கு போனாப்பில,ஒரு நல்ல முடிவுக்கு வந்திருக்கன் 8 நாங்க பள்ளியில விசாரிச்சி, உலமாகிட்ட ‘பத்வா' வாங்கி தண்டனை கொடுத்து யாருக்கு என்ன லாபம்? அதவிட நீங்களே விரும்பினா இறைவனுக்காக.
பர்ஹானாவுக்கு நல்ல நசீபு இருக்கு. நீங்க கோர்ட் டுக்கு இழுத்து எங்கட சமூகத்த கீறிக்காட்டினா, ஊர் மக்கள் பர்ஹானாவுக்குத்தான் முழுக்க முழுக்க நியாயம் பேசும். .
a *至 * * - *******
நான் இதப்பத்தி முந்தியே யோசிச்சன் அவர்
கொழும்பில ஒரு நல்ல ஹாஜியார், சொத்துப் பத்துள்ள
மணிசன், அவர் ஒரு அனாதை ஆசிரமம் நடத்துகிறார். பேயர்தான் அப்படி, ஆனா அதுக்குள்ள எல்லாரும் சொந் தப் பிள்ளைகள்தான். நல்ல உணவு, உடை, கல்வி, உயர் கல்வி, மார்க்கக் கல்வி எல்லாம். リ
பர்ஹானாவுக்கு அதில இடம் கிடைச்சது ஆண்டவனு டைய நாட்டம்தான். எங்கட பகுதியில எத்தனை கிரா மங்கள் இருக்கு, ஆலங்குடா, முகத்துவாரம், டச்பே' திகழி, கண்டக்குழி, கண்டக்குடா பர்ஹானாவுக்கு மட்டுந் தான் இடம். மிகக் கஷ்டப்படுகிற அனாதை பிள்ளைகளுக்கு அதுவும் ஒரு பத்து, பன்னிரண்டு பேர் மட்டுந்தான். அந்த
ਲੁਰ 6 鹭°、。 sif: ]"=" + pیم.-...ر****a

Page 66
வகையில எங்கட ஊருக்கு பெருமை. நஜிமா என்ன சொல் நீங்க. நீங்க விரும்பினா அங்க போய் புள்ளைய பாத்திட் வரலாம்தானே!
நாங்க ஐந்து நேரமும் தொழுறவங்க. ஈமான் கொண் டிருக்கிறோம். நாங்க செய்த நன்மை தீமைக்கு விசாரணை , தீர்ப்பு நாளில் தண்டனை இருக்கு.
இதைக் கேட்டதும் நஜீமாவின் உள்ளத்தைப் பிழிந் தெடுப்பது போல் ஏதோ ஒன்று.
அவளுக்கும் ஓர் இதயம். அவ்விதய வாசலுக்கு போடப் பட்டிருந்த வரம்புகளை உடைத்துக் கொண்டு, அங்கு மணி தாபிமானம் விழித்துக் கொண்டு குமுறி
மரைக்காரை ஒரு கை பார்க்க வேண்டும் என்று போனவளின் கண்களிலிருந்து அலை அலையாக பொங்கு கிறது.
மரைக்கார் மெளனத்தைக் கலைத்தார்.
நஜீமா இனி யோசிச்சி ஒரு முடிவுக்கு வாங்க, மரத்தில உள்ள காயை அடிச்சி கணிய வைக்கிறத விட, தானாகக் கணியனும், ஒரு அனாதைப் பிள்ளைக்கு நல்ல வாழ்க்கை அமைச்சிக் கொடுக்கிறதால, ஹாஜியாருக்கு என்ன லாபம் என்று யோசிக்கிறீங்களா? அனாதைகளைப் பராமரிப்பவங்க
சொர்க்கத்தில அண்ணல் நபிகளாரோடு நெருங்கி இருப் Luntij5”
"ஆயா நஜீமா, அனாதைகளுக்கு உணவு கொடுப்பவர் களை, ஆண்டவன் நிச்சயமாக சுவனத்தில் நுழைய வைப் பான்' - கூறிவிட்டு மரைக்கார் அலுவலாய் உள்ளே போனார்.
26

அதற்கு மேலும் நஜீமாவால் அவ்விடத்தில் ஒரு நிமி டம் கூட நிற்க முடியவில்லை. விருட்டென்று நடந்து விட் டார்கள்,
அப்பொழுது தேநீர்க் கோப்பைகளுடன் வந்த மரியமும், மரைக்காரும் வியப்புடன் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
நஜீமாவின் நடையில் புதுமையும் தாய்மையும் பளிச் சிட்டது.
பர்ஹானாவைக் கெளவிப் பிடித்துக் கொண்டிருந்த தூண்டில் அறுந்து விட்டது போலும்,
நஜீமா போகிற போக்கைப் பார்த்தால் பர்ஹா னாவையும் தனது சொந்தப் பிள்ளைகளைப் போல், O
(சுஊனுல் இஸ்லாம்-ஜனவரி, மார்ச் 1984)
贾27

Page 67
முரண்பாடுகள்.
கிராமத்திற்கு நிறைகுடம் போல், அமைதியாக
ஆனால் மிகத் தெளிவாக வரட்சிகளைக் கண்டு வற்றிப்
போகாத அந்தப் பெரிய குளத்தை நோக்கி அவன் நடந்து கொண்டிருக்கிறான்,
நேற்று நடந்து முடிந்த சம்பவம் அவன் நெஞ்சைப் பிளந்து தலைகுனியச் செய்து விட்டது. கடந்த காலங்களில் இப்படி எத்தனையோ தலைகுனிவுகளை எதிர்நோக்க வேண்டியிருந்தாலும் படித்த கூட்டத்திலிருந்து அவன் இதைச் சற்றும் எதிர் பார்க்கவில்லை. கல்விமான்களுக்கு முன்னால் தலை நிமிர்ந்து நிற்கலாம்; அவர்களும் தலை நிமிர்ந்து நோக்குவார்கள் என்றுதான் அவன் எதிர் பார்த்தான். இப்படி வரண்ட வெறுங்குடமாகி" நிற்பார்கள் என்று.
ஒரு பெரிய துணிமூட்டை முதுகை அழுத்திக் கொண் டிருக்கிறது. கூனிக்குறுகி நடக்கிறான். பொதி அழுத்து கிறதே என்பதற்காக அல்ல. அது பழக்கப்பட்ட தொழில், அவனுக்கு பெரும் சுமை அல்ல.
துணிகளில் உள்ள அழுக்கைப் போக்கி உலர்த்தி, காயவைத்து, தேய்த்து மடித்து பளிச்சென்று எடுத்துக் காட்டுவது அவனுக்குக் கைவந்த கலை, வாழ்க்கை ஒட்டத் திற்காக எடுத்துக்கொண்ட புனிதமான தொழில், கற்றுக் கொண்ட தொழில் நுட்பங்களால் ஒவ்வொரு முறையும் புத்தம் புதியதுபோல் அழகு காட்டும். அணிகலன்களை அணிந்து கண்ணாடிக்கு முன்னால் அழகு பார்த்து ரசித்து
28
 
 

நடை பயிலும் கூட்டத்தைக் கண்டால், ஒருபுறம் கோபம், மறுபுறம் மனம் பூரிக்கும். தன் தொழிலின் வனப்பை அவன் மற்றவர்களிடத்திலிருந்துதானே கண்டு ரசிக்க வேண்டும்.
ஆனால் அவனை அவர்கள் எப்படி நோக்குகிறார்கள்.
அவன் மனத்தைப் பிழிந்தெடுக்கும் அப்பிரச்சினையை அவனாலும் அவனது திறமையை உபயோகித்து ரசிக்கும் அவர்களாலும் முரண்பாடுகளைக் களைந்தெறிய முடியாமல் இருப்பது ஒரு சாபக்கேடா? அல்லது அந்தப் பலப்பரீட் சையில் "நாங்களும் இப்படித்தான்" என்று காட்டி விட்டார்களா?
அதுவும் இந்த கற்பிக்கும் அல்லது வழிகாட்டும் சமூ கத்தாலும் கூட.
அதுதான் அவனுக்கு குத்தும் மனவேதனை.
“என்னப்பா சங்கன். ஒன எங்கெல்லாம் தேடியது. என்னெண்டா சந்திரகலாவும் தாயும் மூக்கைச் சிந்திக் கிட்டு இருந்தா, கலாவ பாலனோட அனுப்பிட்டுத்தான் வாறேன். நடந்தது ஏதோ நடந்து முடிஞ்சிது. இப்ப வருத்தப்பட்டு என்ன ஆகப்போகுது. மூட்டையை நான் தூக்கிக்கிறேன். வெய்யில் ஏற முத்தி வா நடப்போம்.”
ஐம்பதைத் தாண்டி இரண்டொரு வருடங்கள் என்று ஊகித்தாலும், வைரம் போன்ற ஆரோக்கிய உடம்பு வயதை மூடி மறைத்தாலும், காவி நிறச் சாரத்திற்கு மேலால் விடப்பட்டிருக்கும் முழுக்கை வெள்ளை பனியன் "வயசாளி தோற்றத்தைக் கொடுக்கிறது. கண்களின் ஊடாகவே அந்த நல்ல உள்ளத்தை ஊடுருவிப் பார்க்கலாம்.
நண்பன் முத்து பொதியைச் சுமக்க, அவனது சுவடு களைப் பின்தொடர்ந்து அவன் நடக்கிறான். தன் மனச் சுமையை யார் சுமப்பது?
A 507-9 129

Page 68
|
|
'மகள் சந்திரகலா இன்னக்கி ஸ்கூலுக்கு போக மாட் டாள்' என்றுதான் அவன் நினைத்தான். ஆனால் முத்து எப்படியோ சமாதானப்படுத்தி பாலனோடு அனுப்பி விட்டான். அதில் அவனுக்கு ஒரு திருப்தி,
'சந்திரகலாவுக்கு வயது வந்துவிட்டது' என்று அறி வித்திருந்தாலும், ஏழெட்டு நாட்களுக்குப் பிறகு நேற்றுக் காலை அவன் அவளைப் பாடசாலைக்கு அழைத்துக் கொண்டு போயிருந்தான்.
“என்ன இதெல்லாம்.' என்று தொடங்கிய அதிபர், புன்முறுவலை வரவழைத்துக்கொண்டு சம்பிரதாயத்திற்காக சில வார்த்தைகளை உதிர்த்து முடிப்பதற்குள், அவன் தான் கொண்டு வந்த பெரிய தாம்பாளத் தட்டை மேசை மீது இறக்கி வைத்தான்.
அவன் சற்று நேரம் விறாந்தையில் ஒதுங்கி இருந்து விட்டு.
"எப்படியோ மகள் சந்திரகலாவும் தன் அண்ணன் பாலனைப்போலவே அரசாங்க சோதனையில் பாஸ் பண்ணி விட்டால் நல்லம், கலாவும் பாலனைப் போல திறமைசாலி தான், சந்தேகமில்லை. பாலன் முதற் தடவையிலேயே மூன்று திறமை சித்திகளுடன் அட்வான்ஸ் லெவல் சித்தி யடைந்தவன்தான். இருபது வயதிலேயே மத்திய கிழக்கு நாடுகளின் உத்தியோக மோகம் அவனையும் பீடித்திருந்தது. ஆங்கில மொழியில் கூடுதலான அறிவை ஆங்கில ஆசிரியை யிடம் வளர்த்துக் கொண்டிருந்தான். ஒரு டியூட்டறியில் ஆங்கில “டைப்பிங்" பயிற்சி வேறு. அவன் எப்படியும் கடல் கடந்து போகத்தான்.'
தட்டத்தை இறக்கி வைத்து, நீண்ட நேரம் பலதும் பத்தும் யோசித்துக் கொண்டிருந்து போய்விட்டான். தட் டத்தைக் கொண்டு வந்திருந்தபோது இருந்த உற்சாகம் இப்பொழுது அவனை அறியாமலே பறந்து விட்டது.
I 30

தலைமையாசிரியருக்கு தர்ம சங்கடமாகப் போய்விட் டது. ஒரு புத்திசாலித்தனமான யுக்தியைக் கையாண்டு. அந்தப் பெரிய தட்டத்தை ஒரு மூலையில், வெறுமனே இருக்கிற மேசைக்கு, இரு பெரிய வகுப்பு மாணவர்களைக் கொண்டு 'தண்டனை" இடமாற்றம் செய்தார். அப்புறம் வேண்டியதொன்று நடக்கட்டும். என்ற மனோபாவத் தில்-'சந்திரகலாவின் வீட்டிலிருந்து பண்டங்கள் வந்து கிடக்குது என்று ஆசிரியர்களுக்கு வாய்மூலம் சுற்று நிருபம் அனுப்பிவிட்டு மெல்ல நழுவி விட்டார். ‘இனி ஆசிரிய குழாத்தார் பாடுதான்.
ஒவ்வொரு நாற்பது நிமிட மணியோசையைத் தொடர்ந்து வகுப்பறைகளில் பாடங்கள் சூடு பிடிக்கின்றன. நான்காவது பாட வேளைக்குப் பிறகு இடைவேளை வந்து விட்டது.
கவலைகளை சுமந்து சென்றவன், தான் கொண்டுவந்த பண்டங்கள் காலியான பிறகு, வெறுந் தட்டத்தை திருப்பி எடுப்பதற்காக மீண்டும் மெளனமாக வந்து கூர்ந்து அவ தானிக்கிறான்.
ஆசிரியர்கள் கூடிக் கூடிப் பேசிக் கொள்கின்றனர்: அதி பர் உட்படத்தான். 'என்ன இருந்தாலும் விருந்து கொண்டு வந்து படைக்கும் அளவுக்கு அவனுக்கு என்ன திமிர்." ஆசிரியர்களுக்காகத் தேநீர் தயாரிப்பு நடக்கிறது. இரண்டு சிறுமிகளுக்கு மும்முரமான வேலை கண்டீன் வசதியோ. அருகில் தேநீர்க் கடைகளோ இல்லை."
பாலர் வகுப்பு மிஸ் பையனை கடைக்கு அனுப்புகிறாள்.
மாமரத்து நிழலில் மறைந்து கொண்டிருந்தவன் கடைக்கு ஒடும் பையனிடம் ' எங்கேடா தம்பி போறே." என்று கேட்க, மிஸ்ஸுக்கு பாண் வாங்கப் போறன்’ என்று அவன் தெளிவாகச் சொன்னதற்குப் பிறகு தான் அவனுக்குப் புரிய ஆரம்பித்தது. அவர்களும் கிராமத்தில் உள்ள எல் லாரையும் போலத்தான்."
13 1.

Page 69
அவன் இரண்டு நாட்களுக்கு முன் வெளுத்து அனுப்பி யிருந்த “றோஸ்" நிறச் சேலையைத் தான் பாலர் வகுப்பு மிஸ் பளிரென்று அணிந்திருந்தாள்.
வழக்கம் போல் சில ஆசிரியர்கள் பேசிக் கொண்டிருக் கின்றனர். சிலர் நாளாந்தப் பத்திரிகைகளில் மூழ்கி இருக் கின்றனர்.
பதினைந்து நிமிடங்களில் இடைவேளை முடிந்து மீண்டும் வகுப்புகள் களை கட்டுகின்றன.
வித்தியாலயத்தில் பத்து வரை வகுப்புகள் இருக்கின்றன. ஆங்கிலம், தமிழ், கணிதம், வர்த்தகம், விஞ்ஞானம், சிங்க ளம் என்று ஒவ்வொரு பாடத்திற்கும் விசேட ஆசிரியர்கள் உட்பட சுமார் இருபத்தைந்து பேர் கடமை புரிகின்றார்கள்? அவன் காலையில் வைத்துவிட்டுப் போன தட்டு தீண்டு வாரற்று இடைவேளைக்குப் பிறகு நான்காவது முறை யாக உள்ளறைக்கு நகர்த்தப்பட்ட பண்டங்களுக்கு என்ன வாயிற்று? எவரும் அக்கறை காட்டுவதாக இல்லை.
'இஸ்லாம் என்பது ஒரு மதம் அல்ல, அது மனிதனை மனிதனாக வாழ வழி காட்டும் மார்க்கம்' என்று பேசும் மஃறுப் மாஸ்டர் கூட அன்று பேசாமடந்தை,
திடீரென்று அதிபர் கைக் கடிகாரத்தைப் பார்த்தார்.
கீழ்ப்பிரிவுப் பிள்ளைகளை விடுவிக்கும் நேரம் சரி. அதிப ருக்கு ஒர் அற்புதமான யோசனை தோன்றியது.
கீழ் வகுப்புப் பிள்ளைகளுக்கு கொஞ்சத்தைப் பங்கிட்டு விட்டால் என்ன?
அந்த முயற்சியும் படுதோல்வி, சக ஆசிரியர்கள் எல்லாம் வாளாவிருக்கிறார்கள். இந்த "அதிபர் பதவியின் மீதே அவ ருக்கு வெறுப்புத் தட்டியது.
薰品2
 

'இன்றைக்கு ஸ்கூல்ல பழம், பால்சோறெல்லாம் கொடுப்பாங்க. அடுதான்னத்தையும் தொடக் கூடாது. வயிற்றுவலி வந்து விடும். எதையும் தின்ன வேணாம்."
இப்படி பெற்றார் பிள்ளைகளுக்கு அறிவுறுத்தித் தான் அனுப்பியிருப்பார்கள். இன்று வரவும் மோசம் இதெல்லாம் அதிபருக்கு புதிதல்ல.
தனது வகுப்பறையிலிருந்து ஆவலோடு அவதானித்துக் கொண்டிருந்த சந்திரகலாவுக்கு ஒன்று புரிந்து விட்டது.
'தட்டத்திலுள்ள பண்டங்களை எவரும் தீண்ட வில்லை; நம் சாதிக்காரர்கள் கொடுத்ததை இவங்க சாப்பிட LDIITL "LL IT Iš5... ” ”
அவளுடைய முகம் குளக்கரையில் உச்சி வெய்யிலில் வாடும் மலரைப் போல் காட்சியளிக்கிறது.
ஆசிரியர்களைக் கெளரவிக்க வேண்டும் என்பது சங்கனின் நீண்டநாள் ஆசை, இப்படி ஒரு சந்தர்ப்பம் கிட்டியதை நன்கு பயன்படுத்திக் கொண்டான்.
வெளியில் அடுப்பு மூட்டி, புதுப் பானையில், அதி விசேடமாகத் தயாரித்த வகைவகையான உணவுகள்.
செலவைப் பற்றி அவன் யோசிக்கவில்லை. அவனுடைய வருமானத்தைப் பொறுத்த வரையில் சற்று அதிகம் தான். இதற்காக செலவழித்ததை ஒதுக்கியிருந்தாலும் ஒரு பண் டிகையைக் குடும்பத்தோடும், உறவினர்களோடும் விமரிசை யாகக் கொண்டாடியிருக்கலாம். பின்தங்கிய கிராமங்களில் ஆசிரியர்களுக்கு மரியாதை செய்வது மரபு அவர்களுக்கு மந்திரிமாரின் கெளரவமும் மதிப்பும் அதற்காகத்தான் அவனும்.
பாடசாலை முடிய பதினைந்து நிமிடங்கள் இருக்கும் போது வழக்கமாக வியாபிக்கும் அந்த இரைச்சலுக்கும்
1 ፵ 8

Page 70
பரபரப்புக்கும் மத்தியில், தட்டத்தில் பரத்திக் கிடந்தவை மர்மமாக மறைந்து விட்டன. இரண்டு பழைய "பிஸ்கட்" பெட்டிக்குள் அவை அடக்கம் செய்யப்பட்டு விட்டதை எவரும் கவனிக்கவில்லை,
அவனுக்கு ஒரே குழப்பமாகவும் புரியாத புதிராகவும் இருந்தது. அதற்கு மேல் அவன் அங்கு நிற்கவில்லை.
பாடசாலை விட்டு எல்லாரும் கலைந்து சென்ற பின்னர், அதிபர் திருப்பிக் கொடுத்த வெறுந் தட்டத்தோடு சந்திர கலா வீடு வந்து சேர்ந்தாள்.
முத்து சுமையை இறக்கி விட்டான்.
"அப்ப நீ சுறுக்கா வேலையை ஆரம்பி. நான் டவு னுக்குப் போய் பன்னிரண்டு மணிக்கு முன்னால வந்திடுவேன்.'
தென்னந் தோப்புக்குள் நெளியும் ஓர் ஒற்றையடிப் பாதையில் விறுவிறென்று நடக்கிறான். தூரத்தே ரயில் பாதையை ஊடறுக்கும் தார்ரோடு கருப்பாக மின்னுகிறது; அவ்விடத்திலிருந்து பஸ் வண்டி அல்லது 'பிரைவேட் கோச் எடுத்தால், பதினைந்து நிமிடங்களில், மீன்பிடியைப் பிரதானமாகக் கொண்ட பிரதேசத்தின் பிரபலமான முத்துப் புரத்தை ஆடைந்து விடலாம்.
நகரைச் சுற்றி ஏழெட்டு மைல்கள் சுற்று வட்டத்தில் உள்ள எல்லா கிராமவாசிகளின் அன்றாடத் தேவைகளுக்கு நகரத்திற்குத்தான் வந்தாக வேண்டும். முத்துப்பந்தி என் னும் இக்கிராமத்தில் இந்துக்கள் செறிந்து வாழ்கின்றனர். பரந்த தென்னந் தோப்புகளும் வயல்களும் அணி செய்கின் றன. கள் இறக்குவோர், விவசாயிகள், அரசு ஊழியர்கள் என்று பலதரப்பட்டவர்கள் வாழ்கிறார்கள். நாட்டின் நாலா பக்கங்களிலும் கடமை புரிபவர்களை விடுமுறை நாட்
34
 

களில் தான் காண முடியும் கிராமத்திலுள்ள இந்துக் கோயில் சரித்திரத்தில் இடம் பெற்றிருப்பது ஊருக்குப் பெருமை தான்.
சங்கன் மூட்டையை அவிழ்த்து, தண்ணிரில் துணிகளை ஒவ்வொன்றாக எடுத்து ஊறப்போடும் இடத்திலிருந்து பத்துப் பன்னிரண்டு அடி கீழே குளித்துக் கொண்டிருந்த பாலர் வகுப்பு மிஸ்ஸுக்கு வந்தது கோபம். 'அழுக்கு நீரையா அள்ளிக் குளிக்கிறேன்.சீ. சனியன் சற்று மேலே போய் தொடர்கிறாள்.
அவனது இதழ் கடையோரத்தில் ஊமைச் சிரிப்பொன்று நெளிந்து மறைகின்றது. ஒடும் தண்ணீரும், இந்தப் பெரிய குளத்துத் தண்ணிரும் சுத்தமானது" என்பது தெரியாதா?
துணிகளைச் சோப்புப் போட்டுத் தேய்த்து துவைப்ப தற்காக அருகில் உள்ள கல்லின் மேல் குவிக்கின்றான். அவன் அப்படிச் செய்யும் லாவகத்திலேயே அவை சுத்தமாகி விடுகின்றன. பார்க்கிறவர்களுக்கு இதிலே என்ன அருவருப்பு ஒட்டிக் கிடக்கிறது என்று கேட்கத் தோன்றும்.
ஆசிரியை அவசரமாகக் குளித்து விட்டு ஒட்டமும் நடையுமாகச் சென்று மறைகிறாள். நேரம் பிந்தினால், பாடசாலையில் சிவப்புக் கோட்டுக்குக் கீழே ஒப்பமிட நேர்ந்து விடும். விரைவில் 'பென்சனில் போகவிருப்பதால் ஒவ்வொரு விடயத்திலும் மிகக் கவனம்,
எல்லாவற்றையும் துவைத்து, மீண்டும் மூட்டையைக் கட்டி எடுப்பதற்குள் அவன் உடம்பெல்லாம் வியர்வையில்
தோய்ந்து விட்டது.
டவுனுக்குப் போன முத்துவும் வந்து விட்டான்.
அவனோடு "டைப்ரைட்டிங் கிளாஸ்" முடிந் பாலனும்
வருகிறான்.
'நம்ம பாலன் மட்டும் சவூதிக்குப் பெய்த்திட்டா. எல்லாத்துக்கும் ஒரு முழுக்குப் போட்டிடலாம்,' முத்து
வின் எதிர்பார்ப்பு.
6 6 u 1. i 1 % 11 .
áGöL G前。 "●露

Page 71
மூவரும் சேரியை நோக்கி நடக்கிறார்கள். இடைக் கிடை முத்துவும் பாலனும் ஏதேதோ கதைத்துக் கொண்டு முன்னால் செல்கிறார்கள். சங்கன் அமைதியாக நடக் கிறான். ஈரத்துணிகளின் பாரம் இரு மடங்காகி முதுகைக் குத்துகிறது. சற்று நேரத்திற்குப் பிறகு பாலன் சுமக்கிறான். அவன் இளைஞன்தானே!
நடந்து சென்றவர்கள் மூன்று ஒற்றையடிப் பாதைகள் பிரியும் சந்தியில் சற்று நிற்கிறார்கள். ஒன்றரை மணி பிந்தி விட்டதால், எதிரே சாலையில், இருநூறு யார் தூரத் தில் உள்ள வித்தியாலயம் வெறிச்சோடிக் கிடக்கும்.
மாணவர்களுக்கு அரசு இலவசமாகக் கொடுக்கும் கெயர் பிஸ்கட்" சிதறல்களைப் பொறுக்கத்தான் காகங்கள் பாடசாலைச் சுற்றாடலில் பறந்து திரிவது வழக்கம்.
ஆனால் அந்த இயல்பான நிகழ்ச்சியில் இன்று ஒரு மாற்றம்,
காகக் கூட்டம் பல்கிப் பெருகி அங்கும் இங்கும் வட்ட மிடும் புதினம் என்ன?
ஒரு வேளை விலங்குகள் எவையும் செத்துக் கிடக்கின்ற னவோ? ஏதோ ஒன்று மடிந்து நாறிக் கிடக்கிறதோ என் பதைத் துல்லியமாக உலகுக்கு பறை சாற்றுகின்ற காகக் கூட்டம்.
பாடசாலை வழியாகச் சென்றவர்களுக்கு அதைப் பார்த்ததும் விசயம் விளங்கி விட்டது. கிராமப் புறங்களில் ஒரு கோடியில் சேவல் கூவினாலும் அது யாருடையது என்று பட்டென்று இனங்கண்டு கொள்ள முடியும் தானே!
விடயம் பரவியதும்
136

துணிப் பொதியை ஒரு மரத்தடியில் இறக்கி வைத்து விட்டு, சங்கன், பாலன், முத்து முதலியோருடன் விரைந் தான். அவர்கள் ஒட்டமும் நடையுமாக சென்று பார்த்த போது
மனிதரால் நிராகரிக்கப்பட்ட ‘பாற்சோறு, பலகாரங் கள், பழங்கள் யாவும் அப்படியே குப்பைக் குழியில் கொட்டிக் கிடக்கின்றன.
நாயொன்று பாற்சோற்றைச் சுவைக்கின்றது. காகங் கள் காலால் கிளறிக் கொத்தித் தின் கின்றன. இடைக்கிடை நாய் உறுமிக் குலரத்து காகங்களை விரட்டுகின்றது. போராட்டத்திற்கு மத்தியில் இரண்டுக்கும் உணவாகிக் கொண்டிருக்கிறது. @
(மல்லிகை-ஒக்டோபர், 198 6)
I 37

Page 72
ம ண் ணி ன் செல்வங்கள்
கந்தோரில் தன்னையும் அழைத்திருக்கிறார்கள் என்ற செய்தி ஒரு சாதாரண விவசாயி, அப்துல் ஜப்பாரின் செவி களில் நுழைந்ததும் ஒரு கணம் அப்படியே ஸ்தம்பித்து நின்றான்.
கனவா? நனவா? கண்களைக் கசக்கிவிட்டுப் பரீட்சித் துப் பார்த்தார்; ஒரு பொல்லா அசட்டுச் சிரிப்பைச் சிரித் தார். ஒரேயொரு கணம்தான்.
மகிழ்ச்சி, துன்பம், ஏக்கம், விருப்பு, வெறுப்பு அத்த னையும் கலந்து இழையோடியது, மறுகணம் அதை ஆட் கொள்வது போல் ‘கர் முர்’ என்று ஆரவாரித்துப் படை யெடுத்தது ஒர் இருமல் படலம்.
தன்னைச் சமநிலைப் படுத்திக் கொண்டு, ஒரு கல்லின் மேல் உட்கார்ந்தவர், பார்வையை நாலா பக்கமும் சுழல
என்ன அற்புதமான காட்சிகள், வயலும் வயலைச் சார்ந்த நிலங்களும், பிறந்த மண்ணின் பசுமையான செளந்தர்யம் அவர் நெஞ்சை அள்ளியது.
ஏரோடும், எந்திரத்தோடும் உழைத்து, உழைத்து ஓடாய்ப்போன அவருக்கு அன்று சூழவின் இயற்கை
1 38
 
 

செயற்கை வினோதங்களைக் கண்குளிரப் பார்க்கப் பார்க்க சர்வாங்கமும் புல்லரித்துப் போய்விட்டது.
மண்ணிலும் வியர்வையிலும் தோய்ந்து போன அந்த அழுக்குப் படிந்த கந்தல் சேர்ட், நிறம் மாறிப்போன சாரம், தலையை மறைத்துச் சுற்றியுள்ள துவாய்.
இவைதான் மழையிலும் வெய்யிலிலும் அவருக்குப் பாதுகாப்பளிக்கும் கவசங்கள்.
வயலிலிருந்து வரும் வழியில் மஜீத் காக்காவின் கடை யில் சாம் பிராணி, ஊதுவத்தி வாங்கப் போய், ஒரு கட்டு யாழ்ப்பாணச் சுருட்டும் கையோடு வாங்கி வந்திருந்தார்.
'பீடி குடிச்சத்தினாலதான் இந்த பலாய்ப் பிடிச்ச இருமல்' என்று மனைவி ஒயாது ஏச, இப்பொழுதெல்லாம் சுருட்டில் நாட்டம், ஒன்றை இழுத்தெடுத்து, குச்சி1ை க் கீறி துண்டுக் காகிதத்தைப் பற்றவைத்து அதிலிருந்து நெருப்பு மூட்டினார்.
*கந்தோருக்கு என்னையுமா அழைச்சிருக்கு?
இப்படி எத்தனை தரம் தன்னைக் கேட்டுக் கொண் டாரோ? தனக்கு உரித்தான விவசாய காணிக்கு எத் தனை முறை உரிமை கோரியிருக்கிறான் என்பது மாத்திரம் அவருக்குத் தெரியும்.
ஒரு முறை அப்படித்தான், தனது அருமை மகள் கதீஜாவின் கல்யாணத்திற்காகச் சீட்டுப்போட்டுச் சேமித்து வைத்திருந்த ரூபா ஐநூறையும் அப்படியே வாரிக்கொடுத்து விட்டுப் பேச்சு மூச்சற்றுக் கிடந்தார். அட்டாளைச் சேனை யில் மணம் முடித்து குடும்பமாய் வாழும் மூத்த மகன் சுலைமான் வந்து ஏசிவிட்டுப் போயிருந்தான்.
இதுபோன்று எத்தனையோ சம்பவங்கள் வயல்களில் நெற்றி வியர்வையைச் சிந்தி, அறுவடையைத் தரும் பரம் பரையில் தோன்றிய அவர், தனக்கென ஒரு துண்டு நிலத்
139

Page 73
திற்கு உரிமை பெற எடுத்துக்கொண்ட முயற்சிகள் அனைத் தும், விளைச்சலுக்குப் பொருத்தமில்லாத மண்ணுக்கு இறைத்த நீராயிற்று.
புதிதாக ஏற்படுத்தப்பட்ட குடியேற்றத் திட்டத்தின் கீழ் அவருக்கு கொடுக்கப்பட்டிருந்த இடம் கமத் தொழி லுக்கோ, சேனை தெரத்தவோ, வேறு தேவைக்கோ, நீர்த் துளியேனும் கிடைக்காத பாலைவனம்,
கொத்திப் பார்த்தும், ஆழக் இனறு தோண்டியும் பூமித் தாயின் இதயத்தில் ஈரம் சுரக்கவில்லை.
ஒரு நீண்ட பெருமூச்சைத் தொடர்ந்து எழுந்தவர் மெல்ல நடையைத் தொடர்ந்தார்.
இருமலோடு சேர்ந்த மார்பு நோவு அவரைப் பிய்த்துத் தின்றது. நின்று நின்று நடந்தார். குறைச் சுருட்டை எறிந்துவிட்டு,
B5_ii( 'G ഒന്ത്ര വേഴ്പ്, சுறுசுறுப்பும் எங் கிருந்து தான் வந்தனவோ, ஆண்டுகள் அறுபதை எட்ட, இன்னும் சில நாட்கள் பூதாதாரமாகக் காத்திருக்கின்றன. மாட்டுக் கொட்டில் போல் காட்சிதரும் ஒலை வீட்டின் வாசலில் மனைவி சுலைஹா வழிமேல் விழியாய்க் காத்துக் கொண்டிருந்தாள்
வழக்கத்திற்கு ம τοτε, அப்துல் ஜப்பாரின் முகத்தில் மகிழ்ச்சிக்களை மலர்ந்திருப்பதைக் கண்ணுற்ற அவளுக்கும் தாங்க முடியாத களிப்பும் திசைப்பும் உள்ளத்தில் முட்டி மோதிக் கொண்டன.
* புள்ள செளஹம்மோ, உனக்குத் தெரியுமா? கந்தோ ருக்கு என்னையும் கூப்பிட்டு இருக்கு."
அவளுக்கு விளங்கி, அவள் மலரவிடும் புன்னகையை ரசித்தார்.
1 40
 

குளித்துவிட்டு, கொண்டு வந்திருந்த ஈச்சம் பழம், சாம்பிராணி முதலியவற்றை எடுத்துக்கொண்டு, தக்கியாப்" பள்ளிவாசலுக்குக் கிளம்பினார். வாரத்துக்கு ஒரு முறை "பாத்திஹா' ஒதுவது வழக்கம்.
கிராமவாசிகளின் தேவைக்காக ஒரு சிறு பள்ளி கட்டி யிருந்தார்கள். வெள்ளிக்கிழமை “ஜாசம் ஆ தொழுகைக்கு? மட்டும், பெரிய பள்ளிக்கு செல்ல வேண்டும்,
தக்கியாப் பள்ளி கிராமத்தின் மத்தியில் இருக்கிறது. ஒவ்வொரு நாளும் மாலையில் பார்த்தால் அங்கே, ஒரு மின் விளக்கு மின்மினியைப் போல் எரிந்து கொண்டிருப்பது கிராமத்தின் எந்தப் பகுதியிலிருந்து பார்த்தாலும் நன்றாகத் தெரியும் .
பள்ளிவாசலுக்குப் பக்கத்தில் ஒதுங்கி பரந்திருப்பது மைய வாடி அந்தக் கிராமிய மண்ணில் பிறந்து வளர்ந்து, வாழ்ந்து மடிந்த பின்னர் அடக்கம் செய்யப்பட வேண்டிய இடம் அது.
பள்ளியில் மீறிப் தொழுகைக்கு அழைப்பு மெல்லி தாக எதிரொலித்தது, தொழுகை முடிந்ததும்
'யா அல்லாஹ் இந்த மொறையாவது எங்கட நிலம் கிடைச்சிடனும் வாப்பா, அல்லாஹ்ட உதவிதான். மனம் நெகிழ்ந்து, கண்களில் நீர் துளிர்க்க அருட் பிச்சை கேட்டார் அப்துல் ஜப் ஈர்.
பள்ளியில் இருந்து கமழ்ந்த ஒரு வகை புனிதமான திவ்விய மணம் நாசியினுள் உரிமையுடன் நுழைந்து பக்திப் பரவசத்தை உண்டாக்கியிருக்க வேண்டும் அப்துல் ஜப்பார் பக்தியுடன் மனப்பூர்வமான "துவா பிரார்த்தனையில் ஆழ்ந்திருந்தார்.
星4星

Page 74
பிரார்த்தனைகளை முடித்துக் கொண்டு திரும்பிக் கொண்டிருந்த போது நன்றாக இருட்டி விட்டது. ஆனால் ஒவ்வொரு நாளும் நடக்கும் குறுமணற் பாதை அவருக்குத் தண்ணிர் பட்டபாடு. கருமை சூழ்ந்து விட்டால் என்ன! அவர் வாழ்க்கையில் மூண்ட அந்தகாரம் அகன்று விட்டால் போதும் போதுமென்றிருந்தது அவருக்கு.
மளமளவென்று நடந்து இல்லத்தை அடைந்தார்.
'நாளை விடிஞ்சதும் கந்தோருக்குப் போகணும்.' மெல்ல அவர் வாய் முணுமுணுத்தது. சற்று நேரம் சிந்த னையில் ஆழ்ந்தார், மனத்திற்கு இதமாக இருந்தது.
'சோறு தின்ன வாங்களன் வாப்பா.' மங்கைப் பரு வத்து கதீஜா அன்புடன் அழைத்தாள், அவருக்குப் பிள்ளைச் செல்வங்கள் நான்கு, மூத்தவன் தான் சுலைமான், இரண் டாவது வாரிசு ஊரிலேயே குடும்பமாய் ஒதுங்கி விட்டான். ஒரளவு படித்தவன். நிரந்தர தொழில் ஒன்றும் இல்லை, மாமனாரின் வயல்கள் அவனது பொறுப்பில் விடப் பட்டுள் ளன. மூன்றாவது பெண் பதினாறு வயதில் வலிப்பு நோயால் இறந்து போனாள். கதீஜா கடைசிக் கொழுந்து, எளிய இராப்போசனம் மனைவி மக்களுடன் முடிந்தது. வயிறு நிறைந்ததைப் போல மனமும் இனிமையான நினைவு களினால் நிறைந்தது.
உணவுக்குப் பின் அப்துல் ஜப்பாரின் குடும்பம், அலுவ லகத்தில், காணிப் பத்திரங்கள் கொடுப்பதற்கு முன் கேட் கப்படும் சில மயக்கமான கேள்விகளுக்கெல்லாம், எப்படிப் பதில் பகர வேண்டுமென்று சுவாரஸ்யமாகக் கதைத்துக் கொண்டிருந்து விட்டு, இரவின் அமைதியைக் கெடுக்காமல் உறங்கி விட்டது.
அப்துல் ஜப்பார் மட்டும் உறங்காமல் புரண்டு கொண் டிருந்தார். ‘கந்தோரில் என்னையும் கூப்பிட்டிருக்காங்க. என்ற வினா அவர் உள்ளத்தில் குமிழிட்டுக் கொண்டே இருந்தது.
夏42
 

"ராஜ்யசேவை" முத்திரை குத்தப்பட்ட நிருபங்களுடன் பல பகுதிகளிலிருந்து உழவர்கள்-அலுவல வெளிப்பரப் பில் சங்கமமாகி இருந்தனர். விதவையானோரும் கணவன் மாருக்கு வரமுடியாத நிலை ஏற்பட்டதன் காரணமாக, சில பெண்கள் இடுப்பிலொன்றும் கையிலொன்றுமாகக் குழந்தைகளைச் சுமந்து கொண்டும் வந்திருந்து தத்தம் கிராம விவகாரங்களைக் கலந்துறவாடிக் கொண்டிருக் கின்றனர்.
ஒருவகை மென் இரைச்சல் அங்கே பரவிக் கிடக்கிறது.
அப்துல் ஜப்பாருக்குத் தெரிந்த முகங்களான கலந்தர் லெப்பை, காதர் மொஹிதீன், ஆதம்பாவா போன்றோர் ஒரு குழுவாக இருந்து கருத்துக்கள் பரிமாறுகின்றனர்.
ஆதம்பாவாவின் நியாயமான கேள்வி இது
'நம்மட பகுதியிலயும் புதிசா ஆக்கள குடியேத்துரயாம் எண்டு சொன்னாங்களே, எத்துன பேரு கடிதம் கொடுத் தாங்கோ ? தெரியுமா?"
நகருக்குப் பக்கத்தில் உள்ள இடங்களில் எல்லாம் விரும் பியபடி புதிசா குடியமர்த்தினா? அல்லது சும்மா வந்திருந் தாங்களா?'
காதர் மொஹிதீன் சந்தேகத்திற்கு பதில் இல்லை.
பலரும் கூடி, தாம் அறிந்து வைத்துள்ள விடயங்களை முன் வைத்த போது தான் அப்துல் ஜப்பாருக்கு ஒவ்வொன் றாகப் புரிய வந்தது. தமது பிரதேசத்தில் தாம் பிறந்த கிராமங்களுக்கு அருகே, போக்கு வரத்து. நீர், கல்வி முத லான வசதிகள் ஏற்படுத்தப்பட்ட இடங்களில் காணிகள் பகிரப்பட்டிருந்தால்.பாரம்பரிய கலாச்சாரக் கட்டுக்கோப் புகள் சிதையாமல் இருக்குமே என்று அவருக்கு ஒர் ஆதங்கம், உள் ளத்  ைத ச் சுட்டு, கொந்தளிப்பையே ஏற்படுத்தியது.
1蟹引

Page 75
அழைக்கப்படுபவர்கள் அலுவலகத்திற்குள் போவதும் வருவதுமாக இருந்தனர். எதிர்பார்ப்புகளுடன் செல்பவர் கள் திரும்பும் போது ‘பேயறைந்து காணப்படுகின்றனர். அங்கு குமிழியிருந்த ஏனையோர், அவர்களைப் பற்றி அக்கறை கொள்ளவில்லை. முழுக் கவனமும் தத்தம் பெயர் களை அழைக்கிறார்களா என்று செவிகளைத் தீட்டிக் கொண் டிருக்கும் போது தான், அந்தச் சுபவேளை வந்தது
'அப்துல் ஜப்பார்." என்ற குரல் வந்ததும், அவ ருக்கு வியர்த்து விட்டது. உயிரான ‘உரிமை கிடைத்து விட்டதுபோல் ஒரு வகை உணர்ச்சி, நப்பாசை.
உள்ளே அழைக்கப்பட்டவருக்கு "கேள்வி-பதில் 'தர்பார் நடந்து முடிந்தது.
'சரி நீங்கள் போகலாம், நாங்கள் அறிவிப்போம்." சற்றும் எதிர்பாராத இந்தப் பதில் அவரைக் கலக்கியது. தலையைச் சுற்றுவது போலிருந்தது. ஆத்திரம் பொங்கி எழுந்தது. எதையோ உருக்கமாகச் சொல்ல முயல்கிறார். ஆனால் அந்தப் பொல்லாத கணத்தில் வார்த்தைகள் தொண்டையை அடைத்து விட்டது. அவருடைய உணர்ச்சி பாவங்களை ஒருசிலர் வினோதமாகப் பார்க்கின்றனர்.
அப்துல் ஜப்பார் அலுவலகத்திலிருந்து வெளியேறினார். அவரை வதைக்கும் பொல்லாத இருமல் படலம் மீண்டும் படையெடுக்க, இருமி இருமியே புழுவாய்த் துடித்தார்.
மானுட நேசர் ஒருவர், தண்ணிர் கொண்டு வந்து கொடுத்தார். இடுப்பைத் தடவி செருகி வைத்திருந்த இரண்டு வில்லைகளை எடுத்து வாயில் போட்டு நீரைப் பருகினார்.
வெளித் திடலை ஒட்டிய தார்ரோட்டில் "மினிபஸ் வந்து நின்றிருந்தது. சில கிராம வாசிகள் அமர்ந்திருந்தனர். அப்துல் ஜப்பார் ஏறிய சிறிது நேரத்தில் இரைச்சலை எழுப் பிக் கொண்டு ஒடத் தொடங்கியது.
夏4参
 

அடுத்த நாள் அப்துல் ஜப்பார் வயலுக்குச் சென்றார்: மனம் உடைந்து எரிந்து கொண்டிருந்ததைப் போல் அவர் உடலும் கொதியாய் கொதித்துக் கொண்டிருந்தது. அவரால் வேலை செய்ய முடியவில்லை. போத்தலில் கொண்டு வரப் பட்ட தேநீரைக் குடிக்க முயன்றார். அது கசந்தது.
உச்சி வேளையானதும் பகல் போசனத்திற்காக, கமக் காரர்கள் அங்கும் இங்கும் நடந்து கொண்டிருந்தனர். அரு கருகே வீடுகள் உள்ளவர்களுக்கு உணவு கொண்டு வந்திருந் தார்கள். -
பெரிய வேப்பமர நிழலில் உட்கார்ந்து உணவுப் பொட் டலங்களைப் பிரிக்க வந்த சிலர், அங்கு அப்துல் ஜப்பார் நெஞ்சைப் பிடித்துக் கொண்டிருந்ததைக் கண்டார்கள்: பரிதாபத்துடன் தாங்கிப் பிடித்து அழைத்துச் சென்றனர். நடைப்பினமாய் நடந்தார்.
அந்தச் சிறிய 'பசாரைத் தாண்டிக் கொண்டிருந்த போது அவரது பார்வை ஒரு கடைக்கு முன்னால் நிலைக் குத்தி நின்றது.
இருவர் ‘டாம் இழுத்துக் கொண்டிருந்தனர்.
ஒருவர் ஒரேயொரு காயை'த் தான் நகர்த்தினார். மறு கணம் எதிராக இருந்தவர் நான்கைந்து காய்களை
வெட்டி" தோல்வியுறச் செய்தார்.
அனைவருக்கும் அது ஒரு சாதாரண காட்சியாகத் தான் தென்பட்டது. ஆனால் அவருக்கு மட்டும் அது ஒர் ஆழமான உண்மையை உணர்த்துவது போல் தோன்றியது. "எங்கட வாழ்க்கையும் ஒருவகை டாம் இழுப்புத்தான்." என்று அவர் முணுமுணுத்தார். அது மற்றவர்களுக்குப் புரிய வில்லை. "காய்ச்சலால் வாய் உழறுதல்" என்று கருதிக் கொண்டனர். "இந்த மண்ணின் செல்வங்கள்." என்று
A 507-10 ο 145

Page 76
豊エ} CNA C3
~പ്പേ མང་བ་ཡོད་མ་
குறிப்பிட்டு எதையோ சொல்ல முயன்றார். மீண்டும் இருமல் வந்து தணிக்கை செய்து விட்டது.
முன்பு ஒரு முறை, கரும்புச் செய்கைக்காக வளம்மிக்க தனது இரண்டு ஏக்கர் நிலத்தை இழக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அதன் பின்பு தான் தூரந் தொலைவில், தனது பிரதேசத்துக்கப்பால்-கொடுக்கப்பட்ட பாலையைக் கிளறி பிரயோசனம் இல்லாமல் சொந்தக் கிராமத்துக்கே திரும்ப வேண்டியதாயிற்று.
குறுகிய கால எல்லைக்குள் அங்கு நீர்ப்பாசனம் வந்ததும் அவர்கள் ஏமாளிகளாய் நின்றனர். அவர்கள் விட்டு விட்டு வந்த இடங்களைப் புதியவர்கள் எப்படித் தான் ஆக்கிரமித் துக் கொண்டனரோ அவருடைய காணிக்காகத் தான் போராட்டம் நடத்திக் கொண்டிருந்தார்.
வீட்டின் அறையினுள்ளே, பன்பாயில் அப்துல் ஜப் பாரை இருத்தினர். என்னவோ ஏதோவென்று விழுந் தடித்துக் கொண்டு வந்த, சுலைஹாவும், கதீஜாவும் அலறி விட்டார்கள்,
"பரிசாரிட சகாய மருந்தொண்டுக்கும் கேட்கலியே."
சுலைஹாவின் ஒலத்தைக் கேட்டு அயலவர்கள் கூடுகி றார்கள்
அரசினரின் பெரியாஸ் பத்திரிக்கு எடுத்துச் செல்ல ஆயத் தங்கள் நடக்கின்றன.
எனவே அன்று காலையில், அலுவலகத்திலிருந்து வந்த தந்திச் செய்தியைப் பற்றி யாரும் கவலை கொள்ளவில்லை
‘பரம்பரை பரம்பரையாக இந்த மண்ணின் உரித்தாளி கள் என்ற காரணத்தால். உங்களுக்குரிய காணிப் பத் திரம் வழங்கப் படுகிறது" என்று காலந் தாழ்த்தி வந்த செய்தியை திருப்பித் திருப்பிச் சொன்னாலும் அப்துல் ஜப் பாரின் காதில் ஏறவா போகிறது.
146

காலங் காலமாக ஏமாற்றமடைந்ததன் எதிரொலி தான் அவரை அவ்வாறு செயலிழக்கச் செய்தது.
அவரை ஏற்றிக்கொண்டு, அந்த 'மினிவான்" இருபத் தைந்து மைல் வேகத்தில் மருத்துவ மனையை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது.
ア5% *、*
T6 68D
リ。。。
is . . . As r.
|- பகுதி

Page 77


Page 78
Dde No. A 507
எமது சிறந்த நூல்
சு. சமுத்திரம்
ஏவாத Ꭶ6ᎧᎧᏈ0ᎢᏯᎭ,Ꭷir பிணம் பின்னும் சாஸ்திரங் மானுடத்தின் நாணயங்கள்
எஸ். அகஸ்தியர்
மேய்ப்பர்கள்
ஜோதிர்லதா கிரிஜா
நான் ஒன்னும் நளாயினி இ
கொ. மா. கோதண்டம்
வெடிக்கத் துடிக்கும் வேர்ப்
அறந்தை காராயணன்
காதலுக்காக
பூ செஞ்சுரி புக் ஹவுஸ் பிரைவே 41-பி, சிட்கோ இண்டஸ்டிரியல்
சென்னை-600 098