கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சாந்தனின் எழுத்துலகம்

Page 1


Page 2

சாந்தனின் எழுத்துலகம்
2006 CHET bU bUT IJ (TBSEEfubljf Un Uffith 41, கல்யாண சுந்தரம் தெரு,
பெரம்பூர், சென்னை - 600 011. தொலைபேசி : 25582552

Page 3
SAANTHAN IN EZHUTHULAGAM
( A r t i C / e s of S a a n th a n )
Auther : Ayyathurai. Santhan (c)
312 pages December 2006 First edition
Typeset : R. Selvas u ndaran
Publisher : Pa. Udhayakannan
A na na i Rajes wari Pathipakam " Old No. 41, Kalya nas un daram Street, Perambur, Chennai - 600 0 1 1. Phone 2558.2552
Printed at : Karunyam Graphics, Chennai - 33.
Price Rs. 130/. Only.

எழுத்தாளர்கள் எஸ்.ஷங்கரநாராயணன், எஏஹெச்.கே.கோரியுடன் சாந்தன்
FFழம் தந்த மகத்துவம் மிக்க படைப்பாளியாக சாந்தனை அனைவரும் அறிந்திருக்கின்றனர். சிறுகதையாகட்டும், குறுநாவல், நாவல் (ஒட்டுமா - அவரது ஒரே நாவல்!), பயணக்கட்டுரை, கவிதைகள் - எதுவாகட்டும். சாந்தனை முக்கியமாக படைப்பு - பாவனை மீறியவராக அடையாளம் காண முடிகிறது. கதை என்றால் இப்படி, அதன் புனைவுவிகிதம் இம்மட்டுக்குள் அல்லது இதற்கதிகம் இல்லை, என்றெல்லாமான கட்டுக்களை அவர் பிடியுருவிக் கொண்டதாகவே கதைப்புலத்தில் சஞ்சாரம் செய்கிறார். தவிரவும் அவர் கதைகளில் கற்பனை என்கிற அம்சத்தைக் கண்டுகொள்ள
முடிகிறதில்லை. பிரமைகளற்ற, பிரமைசாயங்களற்ற எழுத்து அது.
ஆனால் இந்த தன்னிலை தளர்ந்த பரவச படைப்பூக்கம், அது சில கதைகளுக்கு வீர்யம் போதுமானதாக இல்லை. அதுபற்றி சாந்தன் கவலை கொண்டாருமில்லை. ஹைகூ கவிதைகள் போல, அவை தக்க காலத்தில் உணர்வெழுச்சி கொள்ளவல்லவை என அவர் நம்புகிறார். பதிவு செய்ய ஆகவே அவர் தயங்கவில்லை. வறுமைசாந்த ஒவியத்தை எழுத்தில் சுலபமாகவே நகாசு பண்ணிவிட முடியும். இவரும் செய்தேயிருக்கிறார், அதில் அடங்கிவிடாமல் மேலெழுந்து சாந்தன் வந்ததை, இடதுசாரி சிந்தனையாளரை, வரவேற்க வேண்டும்.

Page 4
ஒர் உணர்ச்சித் திவலை, மழைப்பொட்டு என அது உள்ளே விழுந்த கணம் ரசாயன மாற்றம்போல அவர் கை பேனா பிடிக்க உந்துகிறது. பரபரக்கிறது. அதை வெளிப்படுத்துவதிலும் ஆக நேர்மையை அவர் கைக்கொள்ள விழைகிறார். சில சமயம் பாத்திர வார்ப்பே கற்பனையாகக் கூட இருக்கக்கூடும் என்றாலும் அந்த சம்பவத்தில் நிஜத்தின் ஒரு கிரணம் - எப்போதோ புறப்பட்டு அவரை வந்தடைந்த கிரணம் அதில் காணக்கிடைக்கிறதாய் இருக்கிறது. அசோகமித்திரன், சாந்தனின் படைப்புகளில் அவரே கதாபாத்திரம். எனினும் தன்னை முன்னிறுத்தித்தான் அது கதையில் இயங்க வேண்டிய கட்டாயத்தை அவர் கைக்கொள்ளவில்லை என்கிறார். 呜” அது ஒருவகையில் சரிதானோ? - கதையில் அழுத்தம் பெறுவது நாயகர்களே, மருந்துக்குக்கூட நாயகி பாவம் கொண்டாடப்படவே
யில்லையே!
நிஜவாழ்வின் பாதிப்புகளை, அறிந்த விஷயங்களில் இருந்து ஒரு படைப்புத்தளத்தை நிறுவி விவரணைப் படுத்துவது சாந்தனுக்கு உவப்பாய் இருக்கிறது. கதைப்புலமாக யாழ் மண்ணே, அதன் முற்ற முழுதான அடையாளங்களுடன் வருகிறது. அம்மன் கோவிலடி, வேம்படி, காளிகோவில், மிகப்பெரும் ஏரி ஒன்று, அதன் மதகுப்பாலம். இவைகள் திரும்பத் திரும்ப கதை நிகழ்விடங்களாகப் பங்கு பெறுகின்றன. சூழல் பெரும்பாலும் கதையில் மாறுகிறதில்லை. சூழல் என்றுகூட இல்லை, மனைவி வேணி, நண்பர்கள் - ஒரு கண்டக்டர் சிவா, மற்றும் அலுவலக சகாக்கள் எல்லாரும் அதே பெயரிலேயே வெவ்வேறு கதைகளில் θα | - நடமாட்டுவிக்கபடுகிறார்கள்.
ஆ அந்த நேர்மை, வாழ்வில் ஊடாடிய ஒரு கணம். அலுவலக மேலதிகாரி ஒருவர் அவன் எழுத்தைப் பாராட்டுகிறார். வயிற்றுக்கு நான் குமாஸ்தா எனினும் இரத்தசூடு அடிப்படையில் நான் எழுத்தாளன், என உணர்வுமூர்க்கம் கொள்கிறார் சாந்தன், கதையில். இது வாழ்வில் நிகழ்ந்திருக்கலாம். அல்லது ஒரு சாமானிய குமாஸ்தா பாத்திரத்தைக் கதைக்குள் அடையாளப்படுத்த சாந்தன் முனைந்திருக்கலாம். கதைக்கு இரு முடிவுகள் தருகிறார். ஒன்று - வீறுகொண்டு, நான் அலுவலகத்தில் இயங்குகிற அளவிலேயே உனக்குச் சம்பந்தம் உள்ளவன். எனது எழுத்து பற்றி உள்ளே அமர்ந்து
4.

அதிகாரியாக நீ என்னை விமர்சித்தல் அவசியமில்லை, என ஆவேசமாய்ச் சொல்லி வெளியேறும் பாத்திரம், என ஒரு முடிவு. அப்படி வெளியேறாமல், மனசுக்குள்ளேயே சொல்லிக்கொண்டு, அலுவலகச் சூழலை அங்கீகரித்து மெளனமாய்ப் பின்வாங்கும் இன்னொரு முடிவும், கூடவே தருகிறார்.
கதைகளில் ஈழத்தமிழ்ச் சூழல் வருகிறது. ஈழ அரசியல் இல்லையோ? சாமானிய மனிதன் உணரும் நெருக்கடிகள் என்ற
அளவிலேயே விஷயத்தை அணுகிவிட முடியுமா?
கிருஷ்ணன் துTது - என்கிற குறுநாவல். சிறுபொறி தன்னைப்போல பரஸ்பர அவநம்பிக்கையினால் பெரிதாகிவிடுகிறது. இன்னொரு கதையில், ஒரு தமிழன் சிங்களப் பாடலை ரசிக்கிறான். இவையெல்லாம் பார்வைகளே அல்லவா? விஷயத் தீவிரம் சார்ந்த கணிப்புகளாக அவை விவாதத் தளத்தில் உருவவுச்சம் கொள்வதை சாந்தன் தவிர்க்கிறார்.
ஓர் இடதுசாரித் தொழிற்சங்கவாதியாக அறிவித்துக் கொள்ள முன்வருகிறார் சாந்தன். சங்க நடவடிக்கைகள் சார்ந்த கதைகள்
இதில் உள்ளன.
அதிகாரி-பணியாளி கருத்து மோதல்கள் பற்றிய கதைகள் இதில் உள்ளன, என்றாலும் முதலாளி-தொழிலாளி என வர்க்கபேத உரசல்கள் சார்ந்து சாந்தனிடம் குரல் இதில் இல்லை. வாழ்வின் அன்றாடம் சார்ந்து அனுபவிக்கும் நெருக்கடியில், இந்த வர்க்க பேதங்கள் கரைந்துபடுகின்றன போலும். யாழ்ப்பாண
வாழ்க்கைச் சூழலின் தனி அம்சம் இது, அல்லவா?
ஆனால் மிகப் பரந்த அளவில் மானுடத்தின் பிரிய கணங்களை அவர் ஆசுவாசமான நிதானமான அமைதியுடன் காட்சிப்படுத்துகிறார். குழந்தைப் பருவத்திலும், குழந்தைகளிடத்தும் அவர் காட்டுகிற மனசொட்டுதல் வாசிக்க சுகம். யாசகம் கேட்க வந்த பெண்ணின் தோள்க்குழந்தை அவரைப் பார்த்துச் சிரிக்கிறது, என மொழிக்குழைவுடன் அவரால் எழுத முடிகிறது. சோழகம் யாழ்ப்பாணத்தின் முக்கிய அடையாளமாகிறது. நிலா பற்றி, வெளி பற்றி தனி வர்ணனைகளே கிடைக்கின்றன. இவை கதைக்
5

Page 5
கட்டுரைகள் இருக்கும் இடம், வாழும் சூழல் சார்ந்த நேசம் ஒட்டுப்புல் போல வரைவு கண்டிருக்கிறது. சைக்கிள் எங்கள் வாகனம், என்று தோளுக்குமேல் தூக்கிக்காட்டாத குறையாய்க் கொண்டாடும் சாந்தன்,
சணல் பூக்களின் மணம், புகையிலைப் பயிரின் வாசம் எல்லாம் வாசிக்கையில் வாசகருக்கும் நுகர எட்டுகிறது. நிலா வெளிச்ச இரவுகள் மனசை வருடித் தருகின்றன. தனிமை, தனிமைசார்ந்த கட்டுப்பாடற்ற சுதந்திரம், சுதந்திரம் தரும் மன நிம்மதி, அமைதி, ஆனால் அதே அமைதி, ஒரு யுத்த சூழல், நிலவுகிறபோது அதே இடம் எப்படி கலவரப்படுத்தி விடுகிறது. (தலைமேலே பொம்மர். குண்டு துளைக்கும்ப்ோது எப்படி இருக்கும் கடவுளே. பதுங்கிடம் தேடி அந்த அமைதியான வெளியில் ஒடுவது. விநாடிக்குள் நிகழ்ச்சிகள் எப்படி கோர உருக்கொண்டு விடுகின்றன.
"பாத்திரம்’ என ஒரு கதை. கணவனைப் பறிகொடுத்துவிட்டு, வாழிடமும் இன்றித் தவிக்கிற பெண் ஒருத்தி, உதவி கோரி வருவதும், அவள் சொன்ன அகதிமுகாம் விவரம் பொய், என கதாநாயகன் அறிவதும், அதையும் மீறி அவன் அன்னை அவளுக்கு உதவி செய்வதுமாய் ஒரு கதை. பொய் சொல்லிப் பழக்கமில்லாதவள், வீட்டினை விட்டு உதவிகேட்டு வெளியிறங்காதவள், என அம்மா அவளைப் பற்றிச் சொல்கிறாள், யுத்தம் எத்தனை தூரம் வீடுகளில் புகுந்து ஜனங்களை வெளியே வீதிக்கு இழுத்துத் தள்ளி விடுகிறது, என்கிறார் சாந்தன் மிக வருத்தத்துடன்,
உறவென விவரப்படும் பாத்திரங்கள் அருமையானவர்களாக உணர்வொட்டுதலுடன் உலா வருகிறார்கள். சாந்தன் மற்றும் சாந்தனாதி மக்கள்!
மாணவர்களுக்குப் பாடம் சொல்லிக் கொடுக்கிற ஆசிரியர், damp-proof என்பதை விளக்க நேர்கிறது. Proof என்பதற்கு உதாரணமாக, ஒரு மாணவன் சட்டென்று bullet-proof என்கிறான். அந்தச் சிறு வயதிலும் சூழலின் அமைதியின்மை இளைஞர்களுக்கு அறிமுகமான ஒன்றாயிருக்கிறது!
காலரீதியான வரிசை படைப்புகளில் இங்கே கையாளப் பட்டிருக்கிறது. சாந்தனின் எழுத்தில் கதைத்தளத்தின் தேர்வில் உள்ள
6

மாற்றங்களை வாசகர் கவனிக்க இயலும். பிற்காலத்தியவை அநேகமாய் யுத்த சூழலே மீண்டும் மீண்டுமாக அடையாளப்படுவதை அவதானிக்கலாம். இந்தத் தொகுதியை ஒரு யாழ்-தமிழனின் டைரிக் குறிப்பாகக் கூட நினைத்துக் கொள்ளலாம். கதைகளும் சம்பவ
சாத்திய புர்வமானவையே.
ததயபூ
இந்தத் தொகுதியையே வழியாக் கொண்டு சாந்தனின் வீட்டுக்குப் போய்விட என்னால் முடியும்!
தொகுப்பில் நீக்கல்கள் - போன்ற துணிச்சலான கதைகள் வாசகனை ஆசூசர்யப்படுத்த வல்லவை. 'யுகங்கள்’, "எட்டியது. கவலை கதைகள் அபார கலை நேர்த்தியும் கட்டுக்கோப்பும் கொண்டவை. கவித்துவ மென்மையும் அபார நெகிழ்ச்சியுமான "அலுமார் கதை. ‘குழந்தை மாதிரிக் கிடக்கு பார் அந்தத் திருப்புளியை எடு’ என்று கேட்கும் மெக்கானிக், போன்ற கட்டங்கள்
சகாக்களுடன் பகிர்ந்து ரசிக்கத்தக்கவை.
சம்பவங்கள் வழியே உள்ளூடாக அவர் தரும் கருத்தழுத்தம் உய்த்துணர வேண்டியவை. வாசகனுக்கான தளங்களை அவர் விட்டுச் செல்வது, பிற முற்போக்கு எழுத்துகளுக்கு மீறிய, அபூர்வ அம்சம்தான். 'தேடல் குறுநாவல், தலைப்பு முதல், பல பூடக விவரங்களை மெளனமாய் வாசகருக்கு முன்வைக்கிறது.
சில நம்பிக்கைகளுடன் வாழ்க்கை தொடர்ந்தவண்ணமே இருக்கிறது சாந்தனுக்கு. நானே திறந்த புத்தகம், என்னை வாசியுங்கள், என்றார் காந்தி. இதோ சாந்தனின் புத்தகம், நீங்கள் திறக்கக் காத்திருக்கிறது.
எஸ். ஷங்கரநாராயணன்
D

Page 6
சாந்தனின் எழுத்துலகம்
குறுகாவல்கள் 1. கிருஷ்ணன் தூது 2. தேடல் 3. வேலிகளின் கதை
பயணக்கட்டுரைகள்
1. ஒளிசிறந்த நாட்டிலே 2. காட்டு வெளியிடை
கதைகள் - குறுங்கதைகள் பெரிய மனிதன் சிறிய பயனங்கள் ஒரு இருபத்தாறாம் தேதி காலை பிரிப்பு வண்டிகளும் மாடுகளும் நீக்கல்கள் நம்பிக்கைகள் அழியவேண்டியதில்லை மனிதர்கள், மனங்கள், மானங்கள் இரண்டு நிமிட மெளனம்
JGDafGOTLD
பெயர்
13
32
50
71
77
83
88
90
93
96
100
07
III
122
123
124

12.
13.
14.
15.
16.
17.
18.
19.
20.
2.
22.
23.
24.
25.
26.
27.
28.
29.
30.
31.
32.
33.
34.
35.
36.
37.
38.
39.
41.
42.
பொடியன் அந்நியமான உண்மைகள் முளைகள்
வேகம்
ஆறுதல்
புரிதல்
எட்டியது
இழப்பு
அலுமார்
நிரூபணம் 76 ல் ஒரு விடுமுறை நாளில் ஸ்ரீஅனிமோன்
குமிழிகள்
தமிழன்
ஏன்?
தொடர்ச்சி இடையில் ஒரு இருபது வருஷம் பூகோளம்
ஒரு பிடிமண்
மீறல் ஒரு விருந்தின் முடிவு புதிய தரிசனங்கள்
a
d956)/6Ö)Q)
நிழல் இன்னும் உள்ள வண்ணங்கள் அடையாளம்
இடைவெளி
கோலங்கள் இரண்டு கதைகள்
பாத்திரம்
Бloот
125
126
3.
141
144
148
15
155
1.59
16.1
164
167
169
179
185
188
198
203
206
210
23
215
29
222
225
228
229
232
233
235
238

Page 7
43。
44,
45.
46.
47.
4&。
49.
50.
51.
52.
53.
54.
55.
-56 -
57.
58.
வாழ்க்கை
சுரண்டல்
உலகங்கள்
ரிஷ்கா
யுகங்கள் இன்னொரு வெண்ணிரவு அஸ்பெஸ்ரஸ்
உயிர்ப்பு
தலை முறைகள் குயில் வீடு
வீடு
உறுத்தல்
d5/TGR)(5/95677
மூண்டெரியுந் தீயின் மூலப்பொறி பொறி
சனம்
ஆய்வாளர் பார்வையில்.
1. அசோகமித்திரன்
2. பேரா.க.கைலாசபதி
3. கலாநிதி நா. சுப்பிரமணியன்
O
10
25
254
256
260
262
265
267
269
271
274
277
279
281
292
29.3
296
302
303
309

குறுநாவல்கள்

Page 8

1
கிருஷ்ணன் தூது
5Tலையில் வந்து கையெழுத்து வைக்கிறதுக்கு அடுத்த வேலை துடைக்கிறதுதான். லாச்சியைத் திறந்து டஸ்டரை எடுத்து வரைபலகையையும் ட்ராஃப்ரிங் மெஷினை'யும் அழுத்தித் துடைக்க வேண்டியிருக்கும். பியோன்மார் சாட்டுக்குக் கொடுத்து விட்டுப் போயிருக்கக் கூடிய இரண்டு தட்டுதல் போதாது. ஒரு செட்டு ஊத்தை போதும் - படத்தைப் பாழாக்க.
வெள்ளிக்கிழமை உந்த வேலை பார்த்துக் கொண்டிருந்த போதுதான் சேனாதி கூப்பிட்டான். துடைத்து முடித்து வாஷ்பேஸினில் கையையுங் கழுவிவிட்டு சேனாதியடிக்குப் போனபோது, அவன் அதைக் காட்டினான்.
என்ன, உது?
ஒரு அச்சு புறுாஃப். சின்னத்துண்டு. 'நலன் செய் சங்கம்' என்று போட்டு எதிரே கந்தோரின் பெயர் இருந்தது. பிறகு விலாசம், தொலைபேசி எண், கீழே, தலைவர், செயலாளர், பொருளாளர். ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு உப, உப, உப, சேனாதியின் பெயர், உப-செயலாளர் என்பதற்கு எதிரிலிருந்தது. எல்லாம் இரண்டு மொழிகளில் - தமிழில்லை.
சினமாய் வந்தது.
'லெட்டர் ஹெட்தானே?
சேனாதி தலையாட்டினார்.
13

Page 9
சாந்தனின் எழுத்துலகம்
“இங்கிலீஷ்லை போட்டிருக்கிறதைத் தமிழிலை போட்டால் என்ன?”
“என்னவோ அவங்கட வேலை.” 'ஆர் அடிப்பிக்கிறது?” 'காரியதரிசி - லயனல்.”
“கேட்கவா?” - கூப்பிட்டதும் லயனல் எழும்பி வந்தான். "விவே, இதுதான் எங்கட லெற்றர். எப்படியிருக்கு?”
“எந்தப் பிரஸ். மச்சான்.? விவே கேட்டான். லயனல் சொன்ன அச்சுக்கூடம் அதிகமாகத் தமிழ் வேலைசெய்கிற இடம்.
“லயனல். இதிலை தமிழையும் நீங்கள் போட்டிருக்கலாமே?”
“இப்பவே பார். பேப்பரிலை கால்வாசி போச்சு’
"அப்ப அந்த ஆறுபேருடைய பெயரையும் எடுத்திடலாமே?” "அது அவசியம்.” “சின்ன எழுத்தாகப் போடுகிறது?.”
ஒரு கூட்டம் கூடியிருந்தது. இன்னும், காமினி கண்டொஸ், ரஞ்சித், சச்சி. “சரி. இங்கிலீஷை எடுத்திட்டுப் போடுங்களேன்?” சேனாதியிடமிருந்து கண்டொஸ் அந்த புறுாஃபை வாங்கிப் பார்த்துக் கொண்டிருந்தான்.
“இங்கிலீஷா? எத்தினை கொம்பனிகளோட தொடர்பு கொள்ள வேண்டி வரும்? அதை எடுத்திட்டு?.”
“எந்தக் கொம்பனியெண்டாலும், பருத்தித் துறைக்கும் டொன்ட்ராவுக்கும் இடையிலை உள்ளதுதானே?.”
"எண்டாலும்.”
“இங்கிலிஷ், இங்கே எத்தினை பெயருடைய பாஷை? அதை எடுத்திட்டு அங்கத்தவர்களிலை நாற்பது வீதம் பேருடைய பாஷையைப் போட்டா என்ன?’ சச்சி கேட்டான்.
'விவே, இதுக்கு முதல் லெற்றர் ஹெட் இல்லை. றப்பர் ஸ்டாம்ப்தானே
14

சாந்தனின் எழுத்துலகம்
பாவிச்சது?” - என்றான் ரஞ்சித்.
'< é 99
ஒ?.
"அது தனிச் சிங்களத்தில் தானே இருந்தது?’ ஒரு பிடி கிடைத்த மாதிரியும் இருந்தது விவேகானந்தனுக்கு.
"அந்த ஸ்ராம்பிலை தமிழையும் போடு எண்டு நாங்கள் கேட்டிருந்தா. அது நடைமுறை சாத்தியமில்லை. இந்த அளவு. இடது உள்ளங்கையில் வலது சுட்டு விரலால் ஒரு சின்ன வட்டம் போட்டுக் காட்டினான்.
"இந்த அளவு வட்டத்துக்குள்ளை இரண்டு பாஷை போடு. மூண்டு பாஷை போடு - எண்டு நாங்கள் கேட்டிருந்தா, அது முட்டாள்தனம்.”
“இது அப்படியில்லை. வடிவாப் போடலாந்தானே?” “இப்ப என்ன செய்யிறது மச்சான். அடிச்சாச்சோ?” கண்டொஸ் கேட்டான்.
"இல்லை. இது புறுஃப்தான். இப்பவும் வடிவாச் சேர்க்கலாம்.”
பிறகு விவே சொன்னான் :
“மச்சான் இதெல்லாம் நாங்கள் கேட்டு நீங்கள் போடுகிற விஷயமில்லை. நீங்களாகவே உணர்ந்து போடுகிறதுதான் அழகு. இது அரசியலில்லை. குடும்பம் மாதிரி நல்லுறவுக்கும் சிநேகிதத்துக்கும் ஒரு பரஸ்பர மதிப்பு தேவையில்லையா?. இப்படி சின்ன விஷயங்களில் கூட.”
முடிக்க முதல் மிஸ்டர் பெர்னாண்டோ வந்து விட்டார்.
“ஐஸே, இப்ப எத்தினை மணி? என்ன செய்யிறீங்கள் எல்லாரும் இங்கை?”
O
அரசமரம் சலசலத்தது. பென்னாம் பெரிய மரம். கந்தோரின் இந்தளவு பெரிய முற்றத்தில் ஒரு பொட்டு வெய்யில் படவிடாது. காற்றடிக்கிற நேரங்களில் பாடும். இப்போது வைசாகம் முடிந்த கையோடு புதுப்பச்சை இலைகளும் வெள்ளைக் கடதாசிச் சோடனைகளுமாய்ப் பொலிந்து நிற்கிறது.
15

Page 10
சாந்தனின் எழுத்துலகம்
"எண்டாலும், நீர் அப்பிடி அவனோட பேசியிருக்கக் கூடாது.” என்றான் சேனாதிராசா.
“எப்பிடி?”
“அவ்வளவு கடுமையா. சண்டை பிடிக்கிற மாதிரி.”
“கடுமையா? சண்டையா?” - விவே திகைத்துப் போனான்.
"அதை அவன் ஒரு சவாலாக நினைக்கலாம் - இப்படிக் கேட்டுப் போடவோ எண்டு.”
“கேளாமலே போட்டிருந்தால் வடிவுதான்.”
"சச்சி. நீர் கொஞ்சம் பேசாம இரும்.” - சேனாதிக்குக் கோபம் வரப் பார்த்தது.
"நான் அவனை ஏச இல்லை. சிநேகிதன் எண்ட முறையிலை அதைக்கூடச் சொல்லக் கூடாதா?.”
“இல்லை அண்ணை. நீங்கள் பேசினதிலை ஒரு பிழையுமில்லை. இனி என்ன கெஞ்சிறதா? விவேயைப் பார்த்து திரும்பவும் சச்சி சொன்னான்.
"எண்டாலும்.” - மெல்ல ஆறுதலாகத் தொடங்கினான். சித்திரவேல் சேனாதிக்குப் பக்கத்து மேசை. எல்லாம் வடிவாகக் கேட்டுக் கொண்டிருந்தவன்.
“. தெரியாதே - இப்ப உள்ள நிலைமைகளில் நாங்கள் கொஞ்சம் பணிஞ்சுதான் நடக்க வேண்டியிருக்கு.”
வெள்ளைச் சல்லி பெறாத விஷயம் இப்படியாகி விட்டது. வேலையில் மனம் எவமாட்டேன் என்கிறது. அதுவும் முழுக்கக் கல்குலேஷன்கள்.
விசிறி சுழற்றிய காற்றின் வீச்சில் வரைபலகையுடன் பொருத்தியிருந்த
கிளிப்பை மீற முடியாமல் படத்து முனை படபடத்தது. இந்தக் காற்றுப்
பொல்லாதது - என்னதான் இறுக்கிப் பொருத்தியிருந்தாலும் படத்தாளை
அசைத்து விடும். இம்மி அசைந்தாலும் நுணுக்கம் போச்சு - என்ன
செய்வது? புழுக்கந் தாள முடியாது. விசிறிக்கு றெகுலேற்றரும் இல்லை. 16

சாந்தனின் எழுத்துலகம்
ட்ராஃப்ரிங் மெஷினை அரக்கி தாள் கிளம்பாமல் வைத்தான்.
என்னில்தான் பிழையா? - இரண்டு நாளாக இதே யோசனை.
ஆனால், யோசிக்க யோசிக்க. அப்படியில்லை என்று படுகிறது. நேற்றும் அப்படித்தான் பட்டது. சொல்லி முடித்த அடுத்த கணங்கூட ஒரு திருப்திதான் தெரிந்தது. சேனாதியும் சித்திரவேலும் தான் குழப்பிவிட்டார்கள்.
பென்சிலை உருட்டிக் கொண்டிருந்தபோது, சித்திர வேலுவே வந்தான். “எப்பிடி விவே?. அவன் நேரே விஷயத்தில் இறங்கினான்.
"நான் பிறகு. - நேற்றும் முந்தநாளும் - இந்த விஷயத்தை நல்லா யோசிச்சுப் பாத்தன். நீர் சொன்னதிலை ஒரு பிழையுமில்லை எண்டுதான் படுது. சச்சி சொன்னதுபோல. இது கெஞ்சுகிற விசயமில்லைத்தான்.”
பெருத்த ஆறுதலாயிருந்தது.
சித்திரவேலு சொல்லிவிட்டுக் கொஞ்ச நேரம் மெளனமாயிருந்தான். "அப்ப இனி என்ன செய்யலாமெண்டு நினைக்கிறீர்?’ விவே கேட்டான்.
"இனியோ? - இத்தறுதிக்கு அடிச்சி முடிச்சிருப்பாங்களே?”
“இல்லை. அச்சுக் கூடத்திலையிருந்து வாற வெள்ளிக் கிழமைதான் எடுக்கலாம் - இண்டைக்குத் திங்கள் தானே?”
"அப்ப நாங்கள் செயற் குழுவுக்கு ஒரு விண்ணப்பம் எழுதுவம் - அண்டைக்கு சும்மா வாய்ப்பேச்சிலை கதைத்ததை விட வேற
ஒண்டுமில்லைத்தானே?”
"நீங்கள் எப்ப கேட்டனிங்கள்? எண்டு பிறகு கேக்க இடம் வைக்கக்
கூடாது.”
"அது நல்ல யோசனைதான்.”
“எழுதி எல்லா அங்கத்தவர்களும் கையெழுத்து வைச்சுக் கொடுக்கலாம்.”
D
17

Page 11
சாந்தனின் எழுத்துலகம்
'அய்யா நீங்கள் என்ன வேலை செய்திருக்கிறீர்கள்?”
மூர்த்தி கேட்ட விதத்தில் சிவஜோதி கொஞ்சம் பயந்து போய் விட்டார். "ஏன் என்ன? என்ன செய்தனான்?” "பின்னை என்ன? அந்த லெற்றர் ஹெட் 'திருப்தி எண்டு கையெழுத்துப் போட்டுக் குடுத்திருக்கிறீங்களே. அதிலை ஒரு வரி தமிழிலையும் போட்டால் குறைஞ்சா போகும்?” சிவஜோதி திடுக்கிடத்தான் செய்தார்.
“என்ன தம்பி என்ன தம்பி, அதை ஆர் யோசிச்சது?. அவன் உங்கட லயனல்தான் - கொண்டு வந்து சரியா எண்டு கேட்டான். அந்த லே-அவுட் அதுகளைப் பற்றிக் கேட்கிறானாக்கும் எண்டு நான் நினைச்சேன். 6TLGL.
“உங்கட கொமிற்றியிலை அதுகளைப் பற்றி ஒண்டுந் தீர்மானிக்க இல்லையா?.”
"ஒரு ஐந்நூறு லெற்றர் ஹெட் அடிக்கிறது எண்டுதான் முடிவெடுத்த தொழிய விபரம் ஒண்டும் தீர்மானிக்கவில்லை. தீர்மானிக்கிறதெண்டா, நாங்களும் மூண்டு பேர் இருக்கிறமெல்லா? - நான் சேனாதி மணியத்தார்.”
'மணியத்தார் வாறார்” என்றான் கண்டொஸ்,
சுருட்டுப்புகை முன்னால் வந்தது.
'தம்பியவை. இப்படி நீங்கள் மாத்திரம் தனித் தனிக் கூட்டமாக நிண்டு கதையாதயுங்கோடா. மற்றவர்க்கு பார்க்க ஒரு மாதிரியாயிருக்கும்.”
"இனிமேல் ஒரு பிரச்சினையுமிராது. அடுத்து முறையிலையிருந்து தனிய இங்கிலிஷிலைதான் அடிக்கிறது எண்டு நாங்கள் தீர்மானிக்கப் போகிறோம்.”
சுப்பிரமணியம் ஆங்கிலத்தில் சொன்னார்.
'அய்யா. அவங்களிலை சிலபேர் நினைக்கிற மாதிரித் தான் நீங்களும்
18

சாந்தனின் எழுத்துலகம்
நினைக்கிறீர்கள். சிங்களத்தில் போட்டது எங்களுக்குப் பிடிக்கேல்லை எண்டு பிரச்சினை அதில்லை! தமிழிலை போடாமல் விட்டதுதான் எங்கட பிரச்சினை நீங்கள் தனிய இங்கிலிஷை அடிக்க வெளிக்கிட்டா, அதை எதிர்க்கிற முதல் ஆளாக நானிருப்பன். இப்ப பாதிப் பேருக்கு உள்ள நட்டத்தை நீங்கள் முழுப் பேருக்கும் கொண்டு வாறன் எண்டு நிக்கிறியள்.”
O
றொபேட்டைப் பற்றி விவேக்கு நல்ல அபிப்ராயம் இருந்தது. பியோன் வேலைக்கு வந்து சேர்ந்தாலும் படித்தவன். அறிவானவன் என்று அவனுடைய தொழிற் சங்கத்தில் தமிழர்களும் கன பேர் அங்கத்தவர் களாயிருக்கிறார்களாம். அவனோடு ஒரு தரம் தனியாகக் கதைத்துப் பார்க்க வேண்டுமென்றிருந்தது. றொபேட் நலன் செய்சங்கத்திலும் செயற்குழு உறுப்பினன்.
சாப்பிட வெளிக்கிட்டு போனபோது, றொபேட் யாருடனோ பேசிக் கொண்டு நின்றான். அவ்வளவு சீரியஸான பேச்சாகத் தெரியவில்லை.
கிட்டப் போனதும்,
-
“றொபட், வேலையா..? என்று மெல்லக் கேட்டான்.
GG
இல்லை, ஏன்?
GG 99
ஒரு சின்னக் கதை.
தள்ளிப் போனார்கள்.
“இந்த விஷயம் என்ன. குழப்பமாகிப் போச்சு. றொபட் என்ன நினைக்கிறீர்?’
அவன் கொஞ்சம் அசட்டுத்தனம் தெரியச் சிரித்தான். பிறகு சொன்னான். "இடந்தான் பிரச்சினையாம். மூண்டு பாஷையிலும் போட அரைவாசி இடம் போயிடுமே.”
"ஏன் மூண்டு? - இங்கிலீஷை விடலாமே?.” “அதெப்படி? கொம்பனிகளுக்கு.”
19

Page 12
சாந்தனின் எழுத்துலகம்
மத்தியானம் பஸ்சுக்கு நின்றபோதுதான் திடீரென்று அந்த யோசனை வந்தது விவேகானந்தனுக்கு "வேண்டுகோள் கடிதத்தில் தனிய நாங்கள் மட்டும் கையெழுத்து வைக்கக் கூடாது.”
கந்தோருக்கு வந்ததும் முதல் வேலையாக கனக சுந்தரத்தின் ஸெக்ஷனுக்குப் போனான்.
"அது நல்ல யோசனைதான் - அடிப்படையிலை இரண்டு பிரிவாகப் பிரிஞ்சு நடக்கிறதைத் தவிர்க்கத்தான் வேணும்.” கனக்ஸ் சொன்னார்.
"அதுதான் பாருங்கோ - இதிலை இரண்டு விஷயம் ஒண்டு. அப்படியான பிரிவைத் தவிர்க்க வேணும். மற்றது பிரிவைத் தவிர்க்க
வேண்டும் எண்டதற்காக மலிஞ்சு போகக் கூடாது.
"ஏன் நிக்கிறீர்? அவசரமே? இரும், இரும் இருந்து கதைப்பம்.” கனக்ஸ், மேசையில் கிடந்த ஃபைல்களை ஒதுக்கி வைத்தார். விவே
இருந்ததும் அவர் கேட்டார்.
"அதுக்கு ஒரு வழி இருக்கு.”
“6া দুটা দুৱা ?’
“எங்கட மிஸ்டர். பெர்னாண்டோ இருக்கிறரெல்லோ.?”
“உங்கட பொஸ்?”
"அந்தாள் நல்ல மனுஷன். இப்படியான வேற்றுமைகள் பார்க்கிறதில்லை இடதுசாரி எண்டு சொல்லுறவங்கள்.”
"அவர் மாத்திரம் வைச்சாப் போதுமே?”
"அந்நாள் வைச்சா. அதைப் பாத்திட்டு அதுக்காக வைக்கக் கூடிய ஏழெட்டுப் பேர் எங்கட ஸெக்ஷனிலை இருக்கினம்.”
66 99 வணககம. எல்லாள மகாராஜா.
மூர்த்தி, ஆள் பகிடிக்காரன் என்றாலும் இந்தப் பகிடி அவ்வளவு உவப்பாகத் தெரியவில்லை.
20

சாந்தனின் எழுத்துலகம்
'அலம்பாதையடா’ என்றான் விவே கோபமாக,
"நான் என்ன செய்ய? உன்னை அப்பிடித்தான் நினைக்கிறாங்கள் போலிருக்கு.”
"அப்பிடி நினைச்சாலும் ஆச்சரியமில்லை. அது தான் வழக்கம். அப்படிப் பழக்கியிருக்கு.” என்றான் கண்டொஸ்.
"முந்தி சின்னப் பெடியளாயிருந்த காலத்தில் எம்.ஜி.ஆரும் வீரப்பாவும் வாள்ச் சண்டை போடுறதென்று சொல்லி நாங்கள் பூவரசத்தடி கழட்டுற மாதிரி. விவே சிரித்தான்.
“உங்களுக்காவது இந்தியா இருக்கு, நாங்கள் எங்க போறது? எண்டு மிஸ் அத்தபத்து கேட்டா.” கண்டொஸ் சிரிப்பை அடக்கிச் சொன்னான்.
ஆண்டவா இந்தக் குழப்பத்திலும், மன உளைச்சலிலும்கூட நல்ல பகிடிகள் சந்திக்கின்றன!
சிரித்து முடித்தபின் அழுதிருக்க வேண்டுமோ என்று பட்டது விவேக்கு. ‘எப்ப கதைச்சனி? என்னெண்டு இந்தக் கதை வந்தது?.”
'மத்தியானம் சாப்பிட்ட பிறகு கதைச்சுக் கொண்டிருக்கேக்கை.”
"எழுபத்தேழாம் ஆண்டுக் கலவரத்துக்குள்ளை கூட நாங்கள் உங்களை ஒண்டும் செய்யலை. நீங்கள் ஏன் இப்படி நடக்கிறீர்கள். எண்டுங் கேட்டுதுகள்.”
“எல்லாம் அறியாமைத்தன்மை. அதால் வந்த பயம், நாங்கள் விளங்கப்படுத்த வேணும்.” என்றான் தொண்டர்.
“எவ்வளவு காலத்துக்கு என்னத்தையெண்டு விளங்கப் படுத்தப் போறிங்கள்? அதுக்கிடையிலை எங்கடபாடு முடிஞ்சிடும். சச்சி சொன்னான் கோபமும் சிரிப்புமாய்.
“இங்கிலீஷ் போடுற இடத்திலை தமிழைப் போடுறதாலை பாதகமில்லை என்பதை விளங்கப்படுத்த வேண்டியிருக்கு.”
“சரி நாளை செவ்வாய்க்கிழமைக்கிடையிலை எங்கட கடிதத்தைக் குடுத்திட வேணும். இப்ப எத்தனை பேர் கையெழுத்து வைச்சிருக்கு?”
21

Page 13
சாந்தனின் எழுத்துலகம்
"இருபத்தொரு பேர். இன்னும் எட்டுப் பேர் வைக்க இருக்கு.”
“கந்தையா?”
“வைச்சிட்டார். ஆனா, சரியா யோசிக்கிறார். இப்பவே பெர்னாண்டோவுக்குக் கொடுக்கிற மரியாதையிலை பாதியாவது அவங்கள்
தனக்குத் தாறத்தில்லையாம். இதிலை கையெழுத்தும் வைச்சா இன்னும் நல்லாத்தானிருக்கும் எண்டார். எப்படியோ வைச்சுத் தந்திட்டார்.”
"அந்தாள் - பாவம் - அவங்களுக்கும் பயப்பிடுகுது, எங்களுக்கும் பயப்பிடுகுது.” என்றாள் மூர்த்தி
"சேனாதி?”
“பின்னேரம் சொல்லுறன் எண்டார். ஆனா, தான் கொமிற்றிக் கூட்டத்திலை இதைப் பற்றிக் கதைப்பாராம். கதைச்சுத்தான் என்ன நடக்கப் போகுது? கொமிற்றி யிலையுள்ள பதினோரு பேரிலை இவையள் மூண்டுபேர். தலையளை எண்ணிப் பார்க்கிறபோது என்ன செய்யேலும்?”
"சோனாதி. ஏன் இப்பிடிப் பின்னடிக்குது?”
"அந்தாளுக்குப் பயம் - புறுாஃப்பை ஏன் மற்ற ஆட் களுக்குக் காட்டினனி? எண்டு - தன்னைக் கேட்பாங்களோ எண்டு.”
கந்தோரால் வந்து கணவன் தேத்தண்ணி குடித்துக் கொண்டிருக்கும்
போது கமலா கேட்டாள்.
"இன்னும் உங்கட அந்த இது இன்னும் அடிச்சு முடியேல்லையே?”
"அந்த லெற்றர் ஹெட்?” “நீரும் ஒரு பக்கம் இதுக்குள்ளை. சேனாதி சீறினான். “அதிலை இப்ப என்ன காயிதம் எழுதப் போறிரே?”
கமலாவுக்குக் கண்கள் கலங்கிவிட்டன.
“எனக்கென்னத்துக்கப்பா அதை? - ஏதோ உங்கட பேரும் போட்டு
22

சாந்தனின் எழுத்துலகம்
அச்சடிக்கனம் எண்டு சொன்னீங்கள். அதைப் பார்க்கமெண்டுதான்.”
அவள் பலகைத் தடுப்பைத் தாண்டி அடுப்படிக்குப் போனாள்.
D
"மிஸ்டர் பெர்னாண்டோ. இதை ஒருக்காப் பார்க்கிறீங்களா?.”
சுங்கான் புகை மணத்தை ரசித்தவாறு மரியாதையாகக் கேட்டான்
கண்டொஸ்,
“என்ன அது?. நிமிர்ந்து சுங்கானை மேசையில் வைத்தபடி அதை
வாங்கினார் பெர்னாண்டோ,
நீள நீளமாக சுருட்டப்பட்ட பெரிய படங்கள் மேசையில் ஒருபக்கம் முழுவதையும் பிடித்திருந்தன. தடித்த கண்ணாடிக்கடியில் கிடந்த வண்ண வண்ணமான வெளிநாட்டுத் தபால் முத்திரைகளைப் பார்த்துக் கொண்டு நின்றான் கண்டொஸ்.
பெர்னாண்டோ படித்தார்.
"எங்கள் நலன்புரிச் சங்கத்தின் செயற்குழு சங்கத் திற்காகக் கடிதத் தலைப்பு அச்சிடுவதென்று தீர்மானித்து அதற்கான வேலை தொடங்கியிருப்பதாய் அறிகிறோம். குறிப்பிட்ட கடிதத் தலைப்பில் தமிழ் இடம் பெறவில்லை என்பது எங்களை வருந்தச் செய்கிறது.
உறுப்பினர்களுக்கிடையில் நல்லுறவையும், ஒத்து ழைப்பையும் வளர்ப்பதற்கும் சங்கத்தின் சுமூகமான செயற்பாட்டிற்கும் இம்மாதிரியான விஷயங்களில் தமிழுக்கும் உரிய இடங்கொடுப்பது அவசியமென்பதை ஒத்துக்கொள்வீர்கள்.
இது விஷயமாக ஆவன செய்யும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
நன்றி.”
“நல்லது எழுதத்தான் வேணும்?” என்றார் பெர்னாண்டோ வாசித்து முடித்ததும்.
பிறகு பழையபடி சாய்ந்துகொண்டு கண்ணாடியை நெற்றியில் உயர்த்தி விட்டார்.
23

Page 14
சாந்தனின் எழுத்துலகம்
“இது கொஞ்சம் நுணுக்கமான விஷயம். உணர்ச்சி களோடு
சம்பந்தப்பட்ட சங்கதி.” - "ஒமோம்.” என்றான் கன்டொஸ், "ஆனா உங்கட வேண்டுகோளை வடிவா எழுதியிருக்கிறீர்கள். நல்ல மாதிரி.”
கண்டொசுக்கு சந்தோமாயிருந்தது. 'அப்ப, இதிலை நீங்களும் கையெழுத்து வைக்கலாந் தானே?” என்றான்.
"நானா? நான் எதுக்கு?’ அந்தாள் இதை எதிர்பார்க்க வில்லை. "நாங்கள் மட்டுந்தான் இதிலை கையெழுத்து வைக்க வேணுமெண்டில்லையே - இந்தக் கடிதத்திலை உள்ள நியாயத்தை ஒப்புக்கொள்கிற எவரும் வைக்கலாந்தானே.?”
"அதுசரி, அதுசரி’ பெர்னாண்டோ சமாளித்துக் கொண்டு சுங்கானைக் கையில் எடுத்தார்.
"அப்படியெண்டா, மிஸ்டர். கந்தசாமி இதிலை இன்னுங் கொஞ்சம் மாத்தி, இன்னும் வடிவா எழுதி எல்லோரும் கையெழுத்து வைப்பம் - இப்ப கொஞ்சம் வேலையிருக்கு. பிறகு ஆறுதலாகச் செய்வமா?”
கண்டொஸ் சிரித்துக் கொண்டு திரும்பி வந்தான்.
O
கன்ரீன் வழமைபோல் இருண்டு கிடந்தது. பிசுபிசுக்கிற மேசைகள் சிகரட் புகை. கிளாஸ்கள் அடிபடுகிற ஒசை இலையான்கள்.
"நீ இந்தளவுக்கு மாறிப் போவாய் எண்டு நான் நினைச் சி ருக்கேல்லை.”காமினி சொன்னான்.
அந்தக் குரல் எவ்வளவு அந்நியப்பட்டு ஒலிக்கிறது. விவேகானந்த னுக்கு வேதனையாயிருந்தது. ஒரு சின்னச் சிரிப்பும் வந்தது.
தேத்தண்ணிக் கிளாஸை வைத்துவிட்டுக் கேட்டான். "ஏன் அப்படிச் சொல்லுகிறாய் காமினி?”
Y- 24

சாந்தனின் எழுத்துலகம்
“பின்னை என்ன, இண்டைக்கு இவ்வளவு கோளாறும் வந்திருக்கே.
நீ தான் அவ்வளவுக்கும் காரணம்.”
பயங்கரமாய்த் தானிருந்தது. பிறகும் நானா? நானா?
"நீ தான்.” காமினி உறிஞ்சினான்.
"நீ தான், போன வெள்ளிக்கிழமை பகல், லயனல் புறு ஃபைக் கொண்டு போய் காட்டினபோது சரியெண்டு சொன்ன சிவசோதி. சுப்பிரமணியம் எல்லாருங்கூட இண்டைக்கு உங்கடை வேண்டுகோளிலை
கையெழுத்து வைச்சிருக்கோம்.”
"நான் போய் மேசை மேசையா கன்வஸ் பண்ணினேன் எண்டு
நினைக்கிறாயா?”
“அதைப் பிழையெண்டு பேச, நீ முதலிலை புறப்பட்ட பிறகு தான் இவ்வளவும் நடக்குது. இதெல்லாம் என்ன தாக்கத்தை ஏற்படுத்தும் எண்டு நினைச்சுப் பார்த்தீங்களா?.”
“எங்களுக்கு எண்டும் ஒரு அடையாளம் இருக்கொண் டதைக் காட்டினதும் ஏன் இப்படிக் குழம்புகிறீர்கள் மச்சான்?”
"நாங்கள் குழம்பேல்லை. நீதான் குழம்புகிறாய். பார். இண்டைக்கு செவ்வாய்க் கிழமை. வெள்ளிக்கிடையிலை பிரஸ்ஸிலையிருந்து அதுகளை எடுக்க வேணும். அதுக்கிடையிலை இது ஒரு குழப்பம். விவே சிரித்தான்.
D
கதவருகில் நின்று மெல்ல உள்ளே எட்டிப் பார்த்தார்கள், கல்தேராவும் ரஞ்சித்தும், பெர்னாண்டோ தனது இடத்தில் இல்லை. எங்கோ வெளியில் போயிருக்க வேண்டும். ஹோலின் மற்றத் தொங்கலில் கந்தையா இருந்தார். போனைக் காதில் வைத்தபடி
“லெஃற் றைற். லெப்ஃற்றைற். ஆளுக்கொரு நீண்ட படச்சுருளைத் தோளில் துவக்காகச் சார்த்தி, நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு இரண்டு பேரும் டக்டக்”கென்று உள்ளே வந்தார்கள். மேசைகளில் படிந்திருந்த பார்வை களெல்லாம் நிமிர்ந்து அவர்கள் மேல் பதிந்தன.
"லெப்ஃறை றைற். லெப்ஃ. றைற்' அணி நடை நீளப் போனது.
25

Page 15
சாந்தனின் எழுத்துலகம்
“வம் தக். வம் தக்.”
காமினியின் மேசையருகில் போய் காலை உதைத்து அற்றென்ஷனில் நின்றார்கள்.
முறுவலித்தபடி வரை பலகையின் மேலிருந்த படத்தில் மீண்டும் புலனைச் செலுத்தியபோது, சச்சி சொன்னான்.
“பாருங்கோ, அண்ணை. என்ன மாதிரி குழந்தைப் பிள்ளையள் போல் விளையாடி முஸ்ப்பாத்தி பண்ணுறாங்கள். ஆனா இந்த விஷயம் எண்டு வந்தவுடன் எவ்வளவு பிடிவாதமும் முரட்டுத்தனமும்.”
தான் நினைத்ததையே சச்சி கேட்டுவிட்டதை விவே உணர்ந்தான். “ஒவ்வொருத்தன்ர இயல்பு என்ன மாதிரித் தானிருந் தாலும், இந்த உணர்ச்சி எல்லாரிலும் ஊறிப் போயிட்டுது.”
“இதுக்கு அந்த அரசியல்வாதிகள்தான் காரணம் எண்டு எனக்குப் படுகுது. முந்திச் சுகமா அதிகாரத்தைப் பிடிக்கிறதுக்காக சனங்களுக்கு வகுப்பு வாதத்தை ஏத்திச்சினம். அது இப்ப நல்லாச் சுவறி விட்டுது. சொல்லிக் குடுத்தவையே வந்து வகுப்புவாதம் கூடாது. எண்டு சொன்னாலும் அவையளை சனம் தூக்கி எறியிற அளவுக்கு.”
D "இந்த பஸ் பெரிய தலையிடி. என்றான் சச்சி.
'அஞ்சரை மட்டும் இதிலை நிண்டு காயாமல் ஜங்ஷனுக்கு எல்லாரும் முகப்பாத்தியா நடந்து போயிடலாம்.”
நடக்கத் தொடங்கியபோது, பின்னால் யாரோ கூப்பிட்டார்கள். “கனக்ஸ் நானும் வாறன்.” “இந்தாளோட நடந்தா ஜங்ஷனிலை முதல் பஸ் எடுக்கலாம். விடிய.” என்றான் மூர்த்தி.
மரமுகடுகளை வாகையின் மஞ்சளும் காட்டுத்தி மரத்தின் சிவப்பும் மூடியிருந்தன. அந்தக் கூடலுக்குள் போய்விட்டால் இந்தப்பாட்டு வெய்யில் முகத்தைச் சுடாது. நடந்தார்கள்.
26

சாந்தனின் எழுத்துலகம்
“எப்படி. இண்டைக்கு அந்த லெற்றர் குடுத்திட்டீங்களா?. என்றார்
Ց56մIՑ56Ո),
“ஒ. மத்தியானம் குடுத்தாச்சு.” “மற்ற எல்லோரும் கையெழுத்து வைத்திட்டினமே?” "இருபத்தெட்டுப்பேர் இ.இ. சிங்கராயரைவிட அவர் லீவிலை.” “என்ன நடக்குதெண்டு பாப்பம்.” "சீ என்ன நிம்மதியில்லாத சீவியம். கொஞ்ச நாளா கந்தோர் கூட
நெருடலும். அந்தரமுமான இடமா ஆயிட்டுது. போதாக் குறைக்கு இப்ப இதுவும் ஒரு பிரச்சனை.”
"இதுகள் விளங்காம உபதேசம் பண்ணுகிற எங்கடை ஆக்கள்
இன்னும் ஊர்வழிய இருக்கினம். இந்தச் சூடு குளிரிலை ஒரு எப்பனும் அறியாமல் - வெறும் தியறி. உபதேசம்.”
"ஆனா, அவங்கள் புத்திக்காரர்கள் எங்களைப் போலை இந்த இரண்டுங்கெட்டான் அவலச் சீவியம் இல்லை - எப்ப என்ன வருமோ
எண்டு. வடிவா. கதைச்சுக் கொண்டிருக்கலாந்தானே.”
D
தபாற் கந்தோர் எக்கச்சக்கமாக மினைக் கெடுத்தி விட்டது. சாப்பிட்டுவிட்டு, அப்படியே வீட்டுக்கு ஒரு மணி ஒடர் தபாலையும் ரெஜிஸ்ரர் பண்ணிவிட்டு வர, இவ்வளவு நேரமாயிருக்கிறது! இரண்டரை மணி.
அவதி ஒரு பக்கம். வெய்யில் ஒருபக்கமாக வியர்த்து வடிந்தது. விசிறியைத் தட்டிவிட்டுப் போய் மேசையில் குந்தியபோது. சச்சி
சொன்னான்.
“அட இரண்டு வடையை மிஸ் பண்ணிட்டீங்கள். அண்ணை'
“வடையா.?” “கந்தையர் கொண்டந்தது. என்றான் கண்டோஸ் பின்னாலிருந்து. “கந்தையரா? ஏன்? விவே திரும்பிப் பார்த்துக் கேட்டான். இதற்கு
27

Page 16
சாந்தனின் எழுத்துலகம்
மறுமொழி சொல்லாமல் கண்டோஸ் கண்களைச் சிமிட்டிச் சிரித்தான்.
"எல்லோருக்கும் குடுத்தவரா?” "ஓ! ஸெக்ஷன் முழுக்க.” "ஏன்? என்ன விசேஷம்?’ திரும்பவும் கேட்டான்.
"சும்மாதானாம். வீட்டிலை செய்தது எண்டு சொன்னவர். ஆனா, உண்மையிலை அண்டைக்கு அந்த கடிதத்திலை கையெழுத்து வைச்சதுக்குப் பிராயச்சித்தம்.”
இப்போது சச்சியும் சேர்ந்து சிரித்தான்.
D
“உங்கள் கடிதம் செயற்குழுவின் ஆலோசனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. குறிப்பிட்ட கடிதத் தலைப்புகள் இப்போது அச்சிடப்பட்டு விட்டதால், அதுபற்றி ஒன்றும் செய்ய முடியாத நிலையில் உள்ளோம். அச்சிடப்பட்டவை முழுவதும் முடிவடைந்ததும் உங்கள் வேண்டுகோளைப் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்வது என்று செயற்குழு முடிவெடுத்துள்ளது” - இந்தக் கடிதம், புதுக் கடிதத் தலைப்பில் ஆங்கிலத்தில் ரைப் செய்யப் பட்டிருந்தது. கீழே செயற்குழுவுக்காக என்று லயனலின் கையெழுத்து.
பதில் வரப் பிந்தியதால் ஒரளவு எதிர்பார்த்திருந்தது தான்! பிறகு சேனாதி ஆட்கள் மூன்று பேரும் வந்து சொன்ன சேதிதான் என்றாலும், எழுத்தில் அச்சிடப்பட்ட ஒற்றையில் பார்க்கப் பார்க்க கவலையும் கோபமும்
சேர்ந்து படருகின்றன.
'முடிந்ததன் பிறகு, சேர்த்து அடிக்கிறோம். என்றாலும் பரவாயில்லை. முடியமட்டும். எவ்வளவு நாளானாலும் - பொறுக்க நாங்கள் தயார். ஆனால் முடிந்ததன் பிறகு யோசிக்கப் போகினமாம்”
இ.இ. சிங்கராயர் அதைப் படித்து முடித்ததும் கொஞ்ச நேரம் பேசாமலிருந்தார். பிறகு சொன்னார்.
“றிசைன் பண்ணுறது வலு சுகமான வேலை. இப்ப நாங்கள் அதைச் செய்யிறதாலை பிரச்சினை தீர்ந்திடாது. எங்கட வேண்டுகோளும் நிறைவேறாது.”
ኑ 28

சாந்தனின் எழுத்துலகம்
"அப்ப?”
“இன்னொரு சந்தர்ப்பம் குடுத்துப் பார்ப்பம். சில சமயம் உண்மையிலேயே எங்கட வேண்டுகோள் பிந்தியிருக்கலாம்.”
"இன்னொரு சந்தர்ப்பமோ?. விவேயும் கனக்சும் இதை எதிர் பார்க்கவில்லை.
ராஜினாமாக் கடிதத்தில் சிங்கராயரின் கையெழுத்தை வாங்க வராமல் விட்டிருக்கலாம் என்று கனகசுந்தரம் நினைத்தார்.
"உந்த லெற்றரை இப்ப குடுக்காமல், அதுக்கு முதல் இன்னொரு வேண்டுகோள் விட்டுப் பார்ப்பம்."
“எப்படி?”
"திருப்பி அடிக்கச் சொல்லி.”
“உது சரி வராது, சேர். விவே சிரித்தான்.
“காசில்லை எண்டு மறுமொழி சொல்லலாம் - சுகமா”
"அதுக்குத்தான் ஒரு வழி இருக்கு.”
“என்ன?”
“செலவழிச்ச காசை நாங்கள் தாறம் எண்டு சொல்லி.”
இருவரும் குறுக்கிட்டார்கள்.
விவே சொன்னான்.
"வெட்கங் கெட்டவேலை. உதிலும் பார்க்க. தமிழைப் போடச்
சொல்லிக் கேளாமல் இருக்கலாம்.”
சிங்கராயர் நிதானமிழக்கவில்லை.
"பொறும் தம்பி. றிசைன் பண்ணுறதாலை எங்கட வேண்டுகோள் நிறைவேறி விடுமா? - சொல்லும்.”
“நிறைவேறாது - ஆனா வேற வழி இல்லை.”
“கந்தோர் கன்ரினை நடத்துறது ஆர்? இந்தச் சங்கந்தானே?”
29

Page 17
சாந்தனின் எழுத்துலகம்
இவர்களிரண்டு பேரும் தலையாட்டினார்கள்.
"சங்கத்தாலை றிசைன் பண்ணிப் போட்டு, கன்ரீனிலை ஒரு தேத்தண்ணி கூடக் குடிக்கமுடியாது.”
“தேத்தண்ணி பெரிசில்லை. சேர்.” விவேயால் தன்னைக் கட்டுப்படுத்த முடியவில்லை.
"அதுதான்.” என்றார் கனக்சும்.
"அதை நான் பெரிசு எண்டு சொல்லலேல்லை. ஆனா, அதைத் தானும் ஏன் இழக்க வேணும்?. இந்த வேண்டுகோளுக்கு எந்த ஒரு மறுமொழியும் சொல்ல முடியாது. திருப்பி அடிக்கிறதைவிட, ஆனபடியால் தான் இவ்வளவு சொல்லுறன். இதுக்கும் மாட்டோம் என்று சொன்னால், றெஸிக்னேஷன் கடிதத்திலை முதல் கையெழுத்து வைக்கிற ஆளாக நானிருக்கிறன்.”
D
"எங்கள் வேண்டுகோளை செயற்குழு ஆராய்ந்து முடிவை அறிவித்தமைக்கு நன்றி பாராட்டுகிறோம். எனினும், பரஸ்பர நல்லெண்ணத்திற்கும் ஒத்துழைப்பிற்கும் மதிப்பு கொடுக்கும் விதமாக கடிதத்தில் தமிழும் சேர்க்கப்பட வேண்டும் என்பதில் வலியுறுத்திச் சொல்ல விரும்புகிறோம்.
இதன் கீழ் கையொப்பம் இட்டிருக்கும் உறுப்பினர் களாகிய நாம் ஏற்கனவே அச்சிடப்பட்ட கடிதத் தலைப்பிற்கான செலவைச் சங்கத்திற்குத் தந்து அத்தலைப்புகளைப் பெற்றுக் கொள்ளச் சித்தமாய் உள்ளோம். ஆகவே தமிழையும் சேர்த்து புதுக் கடிதத் தலைப்புகளை அச்சிடுமாறு செயற்குழுவை மீண்டும் தயவாகக் கேட்டுக் கொள்கிறோம்.”
D
“உங்கள் வேண்டுகோள், செயற்குழுவின் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அந்த ஆலோசனைக்கு நன்றி தெரிவிக்கிற அதே நேரத்தில் தன் முன்னிலையில் அநேக பொறுப்புகள் இருப்பதால் கடிதத் தலைப்பு விஷயத்தில் இன்னும் சில நாட்களைச் செலவிட முடியாத நிலை
30

சாந்தனின் எழுத்துலகம்
யிருப்பதனை செயற்குழு வருத்தத்துடன் தெரியப் படுத்துகிறது.
முன்னர் அறிவித்ததுபோல. கைவசமுள்ள கடிதத் தலைப்புகள் முடிவடைந்ததும், தமிழையும் சேர்ப்பது பற்றிய உங்கள் வேண்டுகோள் பரிசீலனைக்கெடுத்துக் கொள்ளப் படும் என்பதைக் குறிப்பிட விரும்புகிறோம்.”
D
"தங்கள் பதில், நிரம்பிய துயரத்தையும் திருப்தி யனைத்தையும் எமக்குத் தந்தது. செயற்குழுவின் இத்தீர்மானத் தால் நலன் செய் சங்கத்திலிருந்து விலகுவதைவிட வேறெந்த முடிவுக்கும் வர எம்மால் இயலவில்லை. எமது ராஜினாமாக்களை ஏற்றுக்கொள்ளும்படி வேண்டுகிறோம்.”
- இந்தக் கடிதத்தின் கீழ் இருபத்தொன்பது கையொப்பங்களும் இருந்தன.
1981
31

Page 18
2
தேடல்
ஷோலக்காவுடன் எல்லாம். மீண்டும் ஆரம்பமாகின. அதுவும் எப்படிப்பட்ட நாட்களில்.
காலையில், அநேகமாக எட்டு எட்டரை மணிக்கு எல்லோரும் ஏதேதோ அலுவல்களாய் வெளிக்கிடுகிற போது பிள்ளைகள் எல்லாம் பள்ளிக்கூடத்தில் பிரார்த்தனையில் இருக்கக்கூடிய வேளையில் இரைச்சல் தூரத்தில் கேட்கத் தொடங்கும்.
பிறகு நெருங்கி வரும். அந்த இரைச்சலின் மூலமே ஜனங்களை பதகளிக்கப் பண்ணுகிற விமானங்கள் வந்து சுற்றும். வட்டமாய், நீள் வட்டமாய், கிட்டவும் தூரவும், உயர்ந்தும் பதிந்தும் இரையும் - உறுமும். எந்த இடம் ஒன்றில்லாமல் எங்கும் அவை பறக்கும்.
அண்ணாந்து பார்ப்பவர் கண்களில் வெள்ளி உடம்புகள் மின்னுவது தெரியும். காலைச் சூரிய வெளிச்சம்பட்டு அவை மின்னும், முகில்களில் ஒளித்துப் பின் வெளிக்கும். இருந்தாற்போல் எங்கோ குத்திப் பதிந்து குண்டுகளை வீசும்.
பள்ளிப் பிள்ளைகள், வேலைக்குப் போகிற ஆட்கள், வீட்டிலிக்கிற யாரோ, தெருவால் தாண்டும் எவரோ, வெடித்துச் சிதறும் குண்டோடு தாமும் அடையாளம் தெரியாமலாகி.
உயிரும், உற்சாகமுமாயிருக்கும் ஒரு மனித உடல் அரை நொடியில் வெறும் மாமிசத்துண்டங்களாய் உருச் சிதைந்துவிடும்.
32

சாந்தனின் எழுத்துலகம்
இப்படி ஒவ்வொரு நாளும் நடந்தது. தவறாமல், அநேகமாக இந்த எட்டரை மட்டில், எல்லோரும் எங்கோ புறப்படும்போது என்றாலும் எவரும் தயங்கியதில்லை. எங்கே இருந்தால் என்ன? எந்த இடம்தான் பத்திரம்? எல்லாமே ஒன்றுதான். வீடும் வெளியும் எங்கும் எதுவும் நடக்கலாம்.
பிறகென்ன? எதற்காகக் காத்திருக்க வேண்டும்?
எவரும் எதற்கும் காத்திருக்கவில்லை, அவரவர் அலுவல்களைப் பார்த்தார்கள்.
மரண தேவனின் சுயம்வரம். கண்ணை மூடிக்கொண்டு அவன் சுழற்றியெறிந்த மாலை எவர் மீது விழுந்ததோ அவர்களை அவன் அழைத்துப் போனான். அவனது மாலையைக் கவ்விக்கொண்டு சில நாட்களில் அந்த விமானங்கள் இரண்டாவது தடவைகூட வந்தன. பத்து பத்தரை பதினொன்றுக்கு. இப்படிக் குண்டுகளைப் போட்டுக் கண்டதுதான் என்ன?
போட்டவர்களுக்கே தெரியாது.
ஆனால் யாரும் எதற்காகவும் காத்திருக்கவில்லை. விமானம் மேலே சுற்றினால், அந்தச் சத்தம் சந்தேகத்திற்குரியதாக இருந்தால் - இப்போது சத்தங்களை வைத்தே ஆபத்தை எடை போட ஜனங்கள் அறிந்து கொண்டு விட்டார்கள் - அந்தந்த இடங்களிலேயே விழுந்து படுத்துக் கொண்டார்கள். குப்புறப்படுத்து, முழங்கைகளை ஊன்றி, கைகளில் தலையைத் தாங்கி, காதுகளையும் பொத்தியபடி விழுந்து படுக்கக் கூட அவகாசம் கிடைக்காத துரதிருஷ்டசாலிகளை அல்லது அசட்டை செய்த அலட்சியக்காரர்களை ஆபத்து அளைந்தது.
ரமணனும் எல்லாரையும் போல தினசரி வேலைக்குப் போனான். வழமையான நேரத்திற்கே, வழியில் ஏதும் பிரச்சினை என்றால் சைக்கிளைத் தெருக்கரையோடு போட்டுவிட்டு மற்றவர்களோடு தானும் படுத்துக்கொள்ள வேண்டும். சத்தம் அகன்றதும் சைக்கிளில் ஏறித் தன் வழி போகலாம். ஆக மிஞ்சினால், உடுப்பெல்லாம் ஊத்தையாகும். அவ்வளவுதான். உயிரே போகப்
பார்க்கையில் உடுப்பு ஊத்தையாவதென்பது ஒரு கதையா?
இப்படியான நாட்களிலா ஒருவன் புத்தகங்களைத் தேடி அலைவான்?
D
33

Page 19
சாந்தனின் எழுத்துலகம்
ரமணனிடம் முன்பு நிறையப் புத்தகங்களிருந்தன. சின்ன வயதிலேயே புத்தகங்களைப் படிக்கிறதும் அவற்றைச் சேர்க்கிறதுமான பழக்கம் வந்துவிட்டது. அம்மா, ஐயா, அப்பு, ஒருவருமே அவன் புத்தகங்களோடு மினைக்கெடுவதை அப்போது குறை சொல்லவில்லை.
அப்பு ஒவ்வொரு வெள்ளிக்கிழமை பின்னேரமும் பட்டணம் போகிறபோது கூட்டிப் போய் தம்பித்துரை கடையிலோ, கிருஷ்ணசாமி கடையிலோ வாங்கிக் கொடுப்பார். திரும்பும்போது குறைந்தது இரண்டு புத்தகமாவது கையில் இருக்கும். புத்தம் புதியதாய், அச்சு மையும் கடுதாசியும் மணக்க, கசங்காமல் மடங்காமல் மொட மொடவென்று. இரவு வீட்டுக்கு வர, ஒன்பது பத்து மணி ஆகும். ரமணன் பார்சலை அவிழ்க்கவே மாட்டான். பத்திரமாகப் பெட்டிக்குள் வைத்து விடுவான். பூட்டுப் போட்ட மரப்பெட்டி
அடுத்த நாளும், அதற்கடுத்த நாளும் பள்ளிக்குப் போவதுபோல - அல்லது அதனிலும் அக்கறையாக வேளைக்கே எழும்பி, வேலையெல்லாம் முடித்து எட்டு மணிக்கு முன்னதாகவே பின் திண்ணைக்குப்புத்தகங்களுடன் போய்ப் படுத்துவிட்டால். வழுவழுவென்று குளிர்கிற பச்சைச் சீமேந்தும், அருகில் சம்பு நாவல் மர நிழலும், அந்த நிழலில் கோலம் போடுகிற மஞ்சள் வெயில் பொட்டு களுமாயிருக்கிற அந்தச் சூழலில் பகல் முழுவதும் எத்தனை
உலகங்கள், இல்லை எத்தனை சொர்க்கங்கள் விரியும்,
ஆறாம் வகுப்பில் படிக்கிற காலத்திலேயே ரமணனிடம் நூறுக்குமேல் புத்தகங்கள் சேர்ந்துவிட்டன. எல்லாப் புத்தகங்களுக்கும் உறை போட்டு ஒழுங்காகப் பட்டியல் எழுதி.
முகுந்தன் இதற்கு ரமணன்ஸ் லைப்ரரிஎன்று தானாகவே பெயரும் வைத்துவிட்டான். பட்டியல் ஒழுங்கின்படி இலக்கியங்களை எழுதும்போது பார்த்தால் எல்லாப் புத்தகங்களிலும் முன் ஒற்றைகளில் முகுந்தனின் கையெழுத்தில் ரமணன் லைப்ரரி, ரமணன் லைப்ரரி என்று ஆங்கிலத்தில் அழகாக எழுதியிருந்தது.
ஆளோடு சேர்ந்து, படிப்போடு சேர்ந்து அந்த லைப்ரரியும் வளர்ந்தது.
கொழும்பிலிருந்து மாற்றலாகி யாழ்ப்பாணம் வந்தபோது, பதினைந்து வருஷம் அங்கே வேலை பார்த்து அதில் பாதிக் காலம் அங்கே குடும்பம்
34

சாந்தனின் எழுத்துலகம்
நடத்தியுமாயிற்று. அப்படியிருந்தும், அம்மி, குழவி, கதிரை, மேசை, கட்டில்,
சைக்கிள் என்று எல்லாவற்றையும் சேர்த்தாலும் அவற்றிலும் கூடுதலாய்
இடத்தைப் பிடித்தவை புத்தகப் பெட்டிகள். அப்படி வந்தது எண்பத்தொன்றில்,
இரண்டு வருஷத்திற்குள் எல்லாமே தலைகீழாக மாறிவிட்டன. எண்பத்து மூன்று ஜூலையில் கொழும்பி லிருந்திருந்தால் என்னென்ன அவதிப்பட்டிருக்க வேணுமோ. எத்தனை பேர் உடுக்க உடையில்லாமல், தண்ணிவெண்ணி யில்லாமல், படாதபா டெல்லாம் பட்டுக் கப்பலேறி வந்திறங்கினார்கள். வீடு வாசல், சாமான், சக்கட்டு எல்லாவற்றையும் அந்தந்தப்படியே விட்டுவிட்டு, அந்த அமளியில் புத்தகங்களை நினைத்துக்கூடப் பார்த்திருக்க முடியுமா?
நல்ல காலம். இரண்டு வருடம் முந்தி வந்தது.
இல்லை. அப்படியும் முற்று முழுதாகச் சொல்லிவிட முடியாதிருந்தது.
இலங்கை முழுவதுமே ஊரடங்கு. அதுவும் எத்தனை நாட்கள்? யாழ்ப்பாணத்தில் ராணுவம் வீடு விடாய்த் தேடல் நடத்திற்று.
வேடிக்கை என்னவென்றால், புத்தகங்களை வைத்திருப்பதும் பிரச்சினை என்று கதை வந்தது.
99
"விசர். அதிலையென்ன பிரச்சினை?.
பலரைப்போல ரமணனும் அதை நம்பவில்லை.
ஆனால் அது வெறும் கதையாயில்லை. பிறகு கேள்விப்பட்ட செய்திகள், அந்தக்கதையை நம்பத்தான் வேண்டுமென்றன. ஒன்றில் புத்தகங்களுக்கு ஆபத்து அல்லது வைத்திருந்தவர்களுக்கு ஆபத்து. சில வேளைகளில் இரண்டுக்குமே.
ஒரு முடிவுக்கு வர வேண்டியிருந்தது. அவர்களுக்கு ஆட்சேபமாய் இருக்கக்கூடியவை என்று தெரிகிறவற்றைத் தவிர்க்கலாம். தமிழ், விடுதலை, சுதந்திரம் என்று வருகிறவற்றை தாமஸ் மசாரிக்கிலிருந்து பாரதிதாசன் வரை. ஏன், பாரதி பாடல்கள்?
பிறகு? யாரிடமாவது கொடுக்கலாமா? கொடுப்பதற்கு ஆட்களைத்
35

Page 20
சாந்தனின் எழுத்துலகம்
தேட வேண்டும். அதற்கெல்லாம் அந்த அவதியில் நேரமெங்கே? அத்தோடு இந்தக் கதையைக் கேட்டால் யார்தான் வாங்க முன்வருவார்கள்?
அந்தச் சில முன் இரவுகள்.
எவ்வளவு பாடுபட்டு எங்கெல்லாம் தேடி சம்பளத்தில் பாதியைச் செலவழித்து வாங்கிய புத்தகங்கள். அவற்றில் எத்தனை தகரப் பீப்பாய்க்குள் - சாம்பலைக் காற்றள்ளிச் சிந்தாமலிருக்கப் போட்டு, அயலட்டைக்கும் காகிதமெரிகிற மணம் பரவாமல் பார்த்து, சொக்கப்பனை எரித்த அந்தச் சில முன் இரவுகள். ܝ
கவலையும் கவனமுமாய்ச் செய்ய வேண்டியிருந்த காரியம் அது.
கிடைக்கவே முடியாதவை என்று பட்டவை தலைமறைவாய்ப் போயின. மெய்யான அண்டர் கிரவுண்ட் வாழ்வு முதலில் இரண்டு மூன்றாகச் சின்னச் சின்னப் பாலித்தீன் பைகளில் சுற்றி, பிறகு அவற்றைப் பெரிய பெரிய பிளாஸ்டிக் பையொன்றில் போட்டுக் கட்டி அதைப் பிறகு உரப்
பைக்குள் போட்டு.
மாரி வந்தபோதுகூட நிலைமை மாறவில்லை.
ஆனால் பதிலாக நெருக்கடி கூடியது. இப்போது, தமிழையும், விடுதலையையும் சொன்னவை மட்டுமின்றி, சோஷலிஸம் ரஷ்யா என்று வருகிறவை கூடப் பிரச்சினையைத் தரும் போலிருந்தன. தல்ஸ்தோயையும் தஸ்தயேவ்ஸ்கியையும்கூட வைத்திருக்கப் பயமாயிருந்தது. வருகிறவனுக்குப் புரட்சிக்கு முந்திய ரஷ்யா, பிந்திய ரஷ்யா என்றெல்லாம் விளக்கப்படுத்திக் கொண்டிருக்க முடியாது.
சில புத்தகங்கள் முடிந்தமட்டில் ஒரிஜினல் சட்டைகளைக் கழற்றிவிட்டு சினிமா ஜாக்கெட்டுகளைப் போட்டுக் கொண்டன. மற்றவற்றிற்குப் பழைய வழி இருந்தது. சொக்கப்பனையும் புதையலும் பிறகும் சில நாட்கள் தொடர்ந்தன. நிலைமையும் தொடர்ந்தது. அந்த வருடம் மாரியும் தொடர்வதுபோலவே இருந்தது.
பிறகு எண்பத்து நான்கில் பொங்கலுக்கும் எவ்வளவோ பிறகு தோண்டித்தேடி பைகளை வெளியே எடுத்தால் அழுகைதான் வந்தது.
36

சாந்தனின் எழுத்துலகம்
அதோடு விட்ட ஆசைதான்! பொது நூலகங்களே போதும்.
இல்லை என்பது தெரிவதற்கு ஏழாண்டுகள் ஆயின. ஆசை விட வில்லை. நீறு பூத்திருந்திருக்கிறது. அது மீளவும் மூண்டதுதான் எப்படிப்பட்ட நாட்களில் அந்த நாட்கள் அப்படிப்பட்டவையாக இல்லாதிருந்திருந்தால், அந்த மீளவும் மூண்டமை சாத்தியப்பட்டிராதென்று தெரிகிறது.
இதற்கு முதல் இவ்வளவு காலமும் எத்தனை ரஷ்யப் புத்தகங்களைப் படித்தாயிற்று. ஷோலக்காவுடைய 'கன்னி நிலம், அவன் விதி எல்லாம்கூட ரமணனிடமிருந்தன. ஆனால் அந்த தோன் நதி அமைதியாக ஒடுகிறது மட்டும் எப்படிப் படிக்கவே கிடைக்காமல் போயிற்று? அதிலும் அதிசயம். அது இப்போது இந்த தொண்ணுாற்றின் நடுப்பகுதியில் படித்துப் பார்க்கக் கிடைத்தது.
நாலு பாகம். நாலையுமே ஜெயக்குமார் கொண்டு வந்து தந்திருந்தான். ஜெயக்குமாருக்கு இதிலெல்லாம் ஆர்வம் கிடையாது. ரமணனுக்கு யாரோ தெரிந்தவர்களிடமிருந்து வாங்கி வந்தான். ஒரு வாரத்தில் திருப்பிக் கொடுக்க வேண்டும். ஆனால் அந்த நாட்களில் வாசிப்பதற்கும் நிறைய நேரமிருந்தது. ஊரடங்கு. வேலையில்லை. வெளியே திரிவது வீட்டிலுள்ளவர்களுக்கு நிம்மதி தராது. வெளியில்தான் செய்வதற்கு என்ன இருந்தது? எதையோ - எதற்கோ - காத்துக் கொண்டிருக்கிற நிலையில் - ரயிலுக்குக் காத்துக் கொண்டிருக்கிற வேளையில் படிப்பதில்லையா? அப்படி வாசிக்க நிறைய நேரம் கிடைத்தது. அது எவ்வளவு விசேசமானதொரு நேரப் பொருத்தம் அந்த நாவல் அணுஅணுவாய்ச் சித்திரிக்கிற ஒன்றின் பிறப்பை அதன் இறக்கும் காலம் நெருங்கியதாய் உணர முடிகிற அந்த நேரத்தில் படிக்க நேர்ந்தமை அது மட்டுமில்லை. ரமணனைத் தோன் நதியின்பால் ஈர்த்த இன்னொன்றும் இருந்தது. அதுதான் இன்னும் முக்கியமானது.
தோனின் குளிர் நிரம்பிய காற்றை எங்கள் சோழகத்தில் உணர முடிந்தது. இரண்டுமே வேட்டொலிகளையும் வெடிமருந்தின் மனங்களையும் சுமந்து வந்தவை போர் என்கிற பிரளயம். இருப்புகளை அசைக்கும் அந்த எரிமலைக் குமுறல்! எந்தக் காலமென்றால் என்ன, எந்தத் தேசமென்றால்
6T60T60 T.
கிரிகோரி மெலிக்காவுடன் சேர்ந்து ரமணனும் அந்த நாலு
37

Page 21
சாந்தனின் எழுத்துலகம்
தொகுதிகளையும் வாழ்ந்து முடித்தான். இன்னுமொரு தரமாவது அதில் ஊறிச் சுவற ஆசையாய் இருந்தது. கயிற்றில் நடக்கிற காரியத்தை முடித்த அந்த ஷோலக்காவ், மூலமென்றே மயங்க வைத்த டாக்ளிஷ்,
இரவல் புத்தகங்களை எத்தனை நாளைக்குத்தான் திருப்பிக் கொடுக்காமல் வைத்திருக்க முடியும்? தானே வாங்கிக் கொள்ளத்தான் வேண்டும், எங்கு தேடியென்றாலும்
எங்கு போய்த் தேடுவது? புத்தகங்கள் எங்குதானி ருக்கின்றன? அதுவும் இப்படி அருந்தலான புத்தகங்கள்?
சாப்பாடு, மருந்து, எரிபொருள், மின்சாரம் என்று ஒன்றுமேயில்லாமல், பட்டினியும் நோயும் பழங்கால வாழ்வுமாய் ஜனங்களின் அந்தரம். போர்நிலையைக் காட்டி வந்த பொருளாதாரத் தடை பள்ளிப் பிள்ளைகள் படிக்கிற பாடநூல், எழுதுகிற பென்சில், பேனா, கடுதாசி இதுகளையே வரவிடாதபோது.
இலக்கியம்! அதுவும் இது
வருவதற்கு லட்சத்தில் ஒரு வாய்ப்புக் கூட இல்லை. இந்தப் புத்தகங்களை விற்றுக்கொண்டிருந்த கடையையே மூடியாயிற்று.
குண்டும் ஷெல்லுமாய்ப் பட்டினம் முழுவதையுமே பாழடித்தபோது அந்தக் கடையும் அதனுள்ளிருந்த வையும்கூடப் பாதிக்கப்பட்டதில் பிறகு திறக்கவேயில்லை.
இருக்கும், இருக்கும்; எங்காவது இருக்கும். வந்ததெல்லாம் என்ன கரைந்தா போய்விடும்? யாரிடம் போய் எப்படிக் கேட்பது?. இங்கில்லாவிட்டாலும் கொழும்பில் கட்டாயம் கிடைக்கும். ஆனால் போய் வருவது யார்? அத்தனை கஷ்டங்களுக்குள்ளும் உயிரைப் பணயம் வைத்து, எப்படியோ ஒரு பையும் கையுமாய்க் காட்டையும் கடலையும் தாண்டி - இனி இல்லை என்ற அவசரத்திற்காகப் போய் வருகிறவர்களைப் பார்த்து புத்தகம் வாங்கி வா என்றா கேட்க முடியும்?
இன்ன மொரு அவசரமுமிருந்தது. சோவியத் தேசமே இல்லாமலானால்? இந்தப் புத்தகங்கள் பிறகு வராது. வந்தாலும் முந்திய
38

சாந்தனின் எழுத்துலகம்
மாதிரிக் கிடைக்காது. இப்போது உள்ளதுகூட இனி விலை ஏறும். இல்லாமலும் போகும். தோன் நதி மட்டுமல்ல. கிடைக்கக் கூடிய ரஷ்யப்
புத்தகங்கள் எல்லாவற்றையுமே வாங்கவிடத்தான் வேண்டும்.
எந்த நிமிஷமும் எந்த இடத்திலும் வாங்கிக் கொள்ளலாமென்ற துணிவில், இருந்தவையெல்லா வற்றையும் போட்டெரித்த பைத்தியக்காரத்தனம் இப்போது அப்படித்தான் படுகிறது. ஆனால் அப்போது அந்த அவதியில் வெறென்னதான் செய்திருக்க முடியும்?
ஆழ்வாப்பிள்ளை, ஒய்வு பெற்ற ஆசிரியர். பெரிய மனிதர் என்கிற முகம், ஆறடி உயரமும், அதற்கேற்ற உடம்பும், ஷேவ் ஒழுங்காக எடுக்காததில் துருத்துகிற நரை மயிரடர்ந்த கன்னங்களும், கள்ளின் போதையில் எப்போதும் கிறங்கி கண்ணாடியின் பின்னால் தெரிகிற கண்களுமாயிருந்தார். இடுப்பில் ஒரு சாரம். மேலே வெற்றுடம்பு. கடையில் ஆட்களில்லாதபோது முன்னாலிருக்கிற துணிக்கதிரையில் சாய்ந்திருந்து சுருட்டைச் சுகிக்கிற கோலம்,
பொழுது போகாமல் இந்த வியாபாரத்தைத் தொடங்கியதாகச் சொன்னார். பிள்ளைகளெல்லாம் படித்து வெளிநாடுகளில் நன்றாயிருக்கிறார்கள். அவருக்குப் பென்ஷன் வருகிறது. இரண்டு பேருக்கு வடிவாகப் போதும். ஆனால் ஒரேயடியாக வீட்டிலிருந்து என்ன செய்வது? இதைத் தொடங்கிவிட்டார். பழைய புத்தக வியாபாரம்.
பத்திரிகையின் ஒரு மூலையில் வரி விளம்பரப் பகுதியி லிருந்த அறிவிக்கை பார்த்துவிட்டு நம்பவும் முடியாமல், விடவும் மனமில்லாமல் நப்பாசை துரத்த, ரமணன் வந்திருந்தான். உண்மையாகவே அது இருந்தது - அந்தக் கடை
ஆழ்வாப்பிள்ளை, விலாசத்தை விவரமாகக் கொடுத்திருந்த தேகூட அவர் ஒரு கெட்டிக்காரன் என்பதை நிரூபிப்பதாக இருந்தது.இல்லாவிடில் அந்த இடத்தைக் கண்டுபிடித்தே இருக்க முடியாது. பட்டணத்தின் பெரும் தெரு ஒன்றில் இருந்து பிரிகிற ஒரு சிறிய ஒழுங்கையில், மூன்று நாலு முடக்குத் தாண்டி ஒரு பழைய வீட்டில் அவரது கடை இருந்தது. பழைய பேப்பர்
|39

Page 22
சாந்தனின் எழுத்துலகம்
புத்தகங்கள் வாங்கப்படும் விற்கப்படும் என்று படலையில் அறிவிப்புத் தொங்க விட்டிருந்தார்.
வாங்குவது விற்பது இரண்டுமே கிலோக்கணக்கில்தான். கிலோவுக்கு, தனக்கென ஐந்து ரூபாய் வைத்துக் கொள்கிறார். மற்றபடி அவரது தராசின் முன் பழைய நோட்புக், பாரதக் கதை, சினிமா மஞ்சரி, சிற்றிலக்கியச் சஞ்சிகை எல்லாமே சமம். ஒடும் செம்பொன்னும் ஒக்க நோக்கும் பக்குவம்.
ஆழ்வாப்பிள்ளை எல்லாக் கடுதாசிகளையும் ஒன்று போலவும், எல்லா வாடிக்கையார்களையும் ஒன்று போலவும் நடத்தினார். இது ரமணனுக்கும் பிடித்தது. அவருக்கும் அவனைப் பிடித்துக் கொண்டது. மற்றெந்த வாடிக்கையாளர் களிலும் பார்க்க ஒழுங்காகத் தன் கடைக்கு வருகிறவன், அவனை மாஸ்டர் என்று இரண்டு நாள் கூப்பிட்டார். இப்படிப் புத்தகங்களில் ஆர்வமுடையவர்கள் ஆசிரியர்களாகத் தானிருப்பார்கள் என்ற அந்தக் கால
நம்பிக்கை அவருக்கு.
"நான் மாஸ்டர் இல்லை, மாஸ்டர்” என்றான் ரமணன் மூன்றாம் நாள்.
“அதற்கென்ன மாஸ்டர்? மாஸ்டர் என்டாக் குறைவோ..” என்றார் மாஸ்டர். ஒரு சிரிப்பு வேறு. அதன் பிறகு அவன் ஆட்சேபிப்பதில்லை.
கட்டுக் கட்டாய் குவியல் குவியலாய் கிடப்பவற்றில் தேட வேண்டும், வைக்கோற் போரில் ஊசியைத் தேடுகிற மாதிரி. கடலில் முத்து குளிப்பது போல, தமிழில் வந்த அத்தனை சஞ்சிகைகளையும் ஆண்டு, தேதி ஒழுங்கில்லாமல் அங்கே குவித்துவிட்ட மாதிரி இருந்தது.
கல்வி வெளியீட்டுத் திணைக்களப் பாட நூல்கள் - அரிவரியிலிருந்து ஆண்டு பன்னிரண்டு வரை - எல்லாப் பாடங்களும், பழைய டைஜஸ்டுகள் - கிழிந்தும் கிழியாமலும், இலவசச் சந்தாவில் வந்து சேர்கிற வெளிநாட்டுப் பத்திரிகைகள் அகதா கிறிஸ்ட்டி, அந்தக் காலத்து ஆங்கிலப் பாடப் புத்தகங்கள், மில்ஸ் அண்ட்பூன் வரிசை, சன சமூக நிலையங்களின் வெளியீடுகள். நீத்தார் நினைவுகள், விதவிதமான பதிப்புகளில் விவிலியம். விழித்தெழு! தேவன் வருகிறார் - நீ தயாரா? போன்ற அதட்டல்கள், இடையில் இருந்துவிட்டச் சில சிங்களப் புத்தகங்கள் - அநேகமாய்க் குமாரோதய, குமாரச்சனய, எப்போதோ ஒரு தரம் வருகிற ஒன்றிரண்டு
40

சாந்தனின் எழுத்துலகம்
ஜெர்மன், ப்ரஞ்சுப் புத்தகங்கள், கனத்த ஹரால்ட் ராபின்ஸ் - இவற்றுக்கெல்லாமிடையில் புகுந்து தேட வேண்டியிருந்தது.
இடையில் இன்னும் வரும், ஸிபாஸிம்போஸியம் இன்ஸ்ரிரியூஷன் ஒஃப்ஸ் வெவ்வேறு என்ஜினியரிங்குகள், ஸி.ஐ.எம்.ஏ. வெளியீடுகள் என்று கஞ்சிக்குள் பயறு போல, நல்ல காலம், பழைய கொப்பிகள் தனியாக இருந்தன.
ரமணன் தேடுவது மட்டும் கிடைக்காமலே போய்க் கொண்டிருந்தது. என்றாலும் அவன் விடாது தேடினான். வராமலா போகும். எதுவென்றாலும் நல்லதாய் அதற்குள் எதுவோ? தனக்காகக் காத்திருக்கிறது என்ற உணர்வு. எப்படியோ புத்தகங்களை அளைவதுகூடச் சந்தோஷம்தான். புத்தகப் புழுதிக்குத் தடுமன் வரும் என்று யாரோ சொன்னதுகூடக் காதில் விழவில்லை.
போகிற நாட்களில் வெறுங்கையோடு வரக்கூடாது என்று அரைக்கிலோவோ, ஒரு கிலோவோ வாங்கினான். ஆழ்வாப்பிள்ளையர் வாங்கும் விலை பதினைந்து ரூபா. விற்கும் விலை இருபது ரூபா.கடைக்காரர் மனம் சலிக்கக் கூடாது. தடவைக்கு ஐந்து ரூபா, பத்து ரூபா நட்டம் போனாலும் பரவாயில்லை என்று பட்டது. அதோடு இத்தனை வெளியீடுகளையும் பார்ப்பதற்குக் கொடுக்கிற கட்டணமாகக்கூட அதைக் கருதினாலென்ன? ஒரு புத்தகக் கண்காட்சிக்குப் போவதில்லையா? தவிர, வேறென்ன பொழுதுபோக்கு அல்லது ஈடுபாடுதான் இருந்தது அப்போது?
கிழமைக்கு மூன்று நாட்களாவது ஆழ்வாப் பிள்ளையரின் கடைக்குப் போவது வழமையாகிவிட்டது. அங்கே போய் நின்று மெனக்கெடத் துணிவு தரும் ஒர் அம்சமும் அங்கிருந்தது - பங்கர் - விமானத் தாக்குதலுக்குப் பதுங்கிப் பாதுகாப்புத் தேடக்கூடிய குழி. எந்த நிமிஷம் இரைச்சல் கேட்டாலும் இறங்கிக் கொள்ளலாம்.
ரமணன் போன வேளைகளிலெல்லாம் கடையில் வாங்குகிறவக்ள் என்று கூடியபட்சம் இரண்டுபேர்தான் நின்றார்கள். சில வேளை அதுவுமில்லை. வாங்குகிறவர் களிலும் பார்க்க விற்பவர்களே அவரின் வாடிக்கையாளர் களாக இருக்க வேண்டும்.வீடு வீடாகப் போய் நிறைக்
4".

Page 23
சாந்தனின் எழுத்துலகம்
கணக்கில் வாங்கி இவரிடம் கொண்டு வந்து போட்டுவிட்டுப் போய்விடுகின்றனர் போலும். விற்பனை நடக்கிற விராந்தைக்கருகில் குகைபோல் தெரிந்த ஸ்டோர் ரூம் நிரம்பி வருகிறது.
“என்ன மாஸ்டர், இப்படி நெடுகத் தேடுறியவள்?”
ஆழ்வாப்பிள்ளை ஒரு நாள் கேட்டார். உடனே சொல்ல முடியவில்லை. "இலக்கியப் புத்தகங்கள்.”
ஒரளவு ஒழுங்காக்கப்பட்ட ராக்கையை காட்டினார். "உதல்ல. தற்கால இலக்கியம்.”
ஆழ்வாப்பிள்ளையரின் மெளனம் அவனுக்குச் சங்கடமாயிருந்தது. அவரை ஆறுதல் படுத்துவதுபோல,
“ஏதும் ரஷ்யன் புத்தகங்கள் என்றாலும் பரவாயில்லை.”
அடுத்தமுறை போனபோது அவனுக்காகவே காத்திருந்தது மாதிரி எடுத்துக் கொடுத்தார்.
“இந்தாங்கோ மாஸ்டர். இதைப் பாருங்கோ.”
அட்டை இரண்டுமில்லாமல் பாணப்பூச்சி துளை துளையென்று துளைத்து அரிதட்டு மாதிரி இருந்தது அந்தப் புத்தகம், டாக்டர் ஷிவாகோ. படிக்கக்கூடியதாக இருந்தது. பக்கங்களும் எல்லாம் ஒழுங்காயிருந்தன.
அந்த மூன்று மாதங்களில் இன்னும் இரண்டே இரண்டு புத்தக்ங்கள் தான் கிடைத்தன.
ஃபேர்வெல் டூ ஆம்ஸ், ஹெமிங்வே, கிரேப்ஸ் ஆஃப் ராத்ஸ் ரீன் பெக்,
ஷிவாகோ முன்பு படித்ததுதான். ஒமர்ஷரிப் ஷிவாகோவாக நடித்த படத்தைக்கூட ரமணன் பார்த்திருந்தான். அது கன காலம்.
ஆனால் இப்போது இந்தச் சூழலிலும் தோன்நதியைப் படித்த பிறகும் ஷிவாகோ வேறு மாதிரி இருந்தது. இன்னுமின்னும் தெரிந்த வண்ணங்கள். மாஸ்கோவும் வேரிகினோவுங்கூட இங்கேயே இருந்தன. தோன்நதி தீரத்துக் கொஸாக்கும் மாஸ்கோவின் டாக்டர் ஷிவாகோவும் ஒரே புயலில் அள்ளுண்டு சுழன்ற இரு மனிதர்கள். அவர்கள் இந்த முக்கால் நூற்றாண்டு கழிந்தும்
42

சாந்தனின் எழுத்துலகம்
என்ன மாதிரி உயிரோடு இருக்கிறார்கள்.
இரண்டையும் சேர்த்து இன்னொரு முறை படிக்க வேண்டும். தோன்நதியைத் தேட அவசரம் மிகுந்தது. ஆழ்வாப்பிள்ளையாரின் வழியைப் பின்பற்றிப் பார்த்தால் என்ன? பத்திரிகையில் தேவை பகுதியில் விளம்பரம்
போட்டான்.
கவனத்தை ஈர்க்கவென்றும் பெயர்களைச் சரியாகக் குறிப்பிட வேண்டியும் விளம்பரம் ஆங்கிலத்தில் இருகக நேரிட்டது. தன் பெயரைக் கொடுக்காமல் விளம்பர இலக்கத்திற்கே பதிலளிக்கும்படி, இரண்டு நாட்கள் விளம்பரம் வந்தது.
பதில்களை எதிர்பார்த்து நாலைந்து நாட்கள் பத்திரிகை அலுவலகத்திற்கு அலைந்ததுதான் மிச்சம். ஒரே ஒரு கடிதம் வந்திருந்தது. அது ரமணன் போட்டது. வருகிற பதில்களை ஒழுங்காக வைத்துத் தருகிறார்களா என்று பார்ப்பதற்காகப் போட்டது.
பத்மநாதன் கொழும்பிற்குப் போய் வருகிறாரென்று சொன்னார்கள். கிடைத்த இடைவெளியைப் பயன்படுத்திக் கொண்டு கொழும்பில் போய் ஏதும் வாங்கிக் கொண்டு வந்தால் மற்றவர்களுக்கும் பிரயோசனமாயிருக்கிறது. போய் வருகிறவருக்கும் பிழைப்பாகிறது. உயிரைப் பணயம் வைக்கத்தான் வேணும். அதற்கென்ன? ஊரில், வீட்டில், சும்மா இருந்தால்கூட, மேலே சுற்றுகிற பிளேனோ அல்லது போக்கிடம் தெரியாமல் கூவிச் செல்லும் ஷெல்களோ எங்கள் உயிரைப் பணம் வைக்காமலா விடுகின்றன?
பத்மநாதன் இரண்டு தரம் போய் வந்துவிட்டார். அடுத்த கிழமை மட்டில் மீண்டும் போகிறார்.
ரமணனைப் பார்க்க அவருக்கு வேடிக்கையாக இருந்திருக்கும். ஜனங்கள் மருந்தென்றும் அது இதுவென்றும் ஒடித்திரிகிற காலத்தில் இந்த விசரன் புத்தகத்திற்காக வந்திருக்கிறான். அதுவும் கதைப் புத்தகம்.
இப்படி நினைத்திராவிட்டால் அவரின் பிழை.
“புத்தகம், பாரமான சாமான்தான். ஆனால் நாலே நாலுதான். கணக்க இல்லை. நீங்கள் வாங்கிக் கொண்டு நெஞ்சளவு தண்ணிக்குள்ளேயும்
43

Page 24
சாந்தனின் எழுத்துலகம்
நடந்து வரவேணும் தெரியும். அந்தக் கஷ்டத்துக்கு நீங்கள் கேட்கிறதைச் சந்தோஷமாய் தருவன்.” பெயர் விவரமெழுதிய துண்டையும் காசையும் கொடுத்தான்.
O
GG • 9 ፃ
அரை மைலுக்கு அங்காலை, ஆமியின்ர இடம். கடைக்காரர் சொன்னார்.
“அதுதான் ஜனப்புழக்கம் குறைவாயிருக்கு.”
- அவர் கடைகூட வெளித்துப் போய்தானிருந்தது. நன்றி சொல்லிவிட்டுக் கடைக்காரர் காட்டிய வழியே போனார்கள்.
ஒழுங்கைகளெல்லாம் ஆளரவமின்றிக் கிடந்தன. கொஞ்சதூரம் வயல், பிறகு பனங்காணி, தென்னந்தோட்டம், காண்டைப்பற்றை என்று மாறி மாறி வந்தன. எல்லாவற்றுக்கும் சிக்காராக வேலி அடைத்திருந்தது.
இதற்குள் அவர்கள் வந்து ஒளிந்து நின்றாலும் தெரியாது. நெஞ்சு படபடத்தது.
ஆழ்வாப்பிள்ளை ஒரு விடலைக்குரிய உற்சாகத்தோடு முன்னால் போகிறார். ரமணனுக்குப் புத்தகங்கள் தேடிக்கொடுத்துவிட்ட உசார் தெரிகிறது அவரில்.
முடக்குகளும் வளைவுகளுமாய் நீண்டு கொண்டிருந்தது ஒழுங்கை. அது எப்போதுமே இப்படியாகத் தானிருக்கு மென்று பட்டாலும் இன்றைக்குக் கடைக்காரர் சொன்ன சேதியைக் கேட்டபின் இந்த வெறுமை இன்னவென் றில்லாமல் அந்தரிக்க வைக்கிறது.
“கேட்கிறதுக்கும், ஒருத்தரையும் காணலை மாஸ்டர்.”
“அந்தா, தபால்பெட்டி. இதுதான் இடம், வாங்கோ.”
ஆழ்வாப்பிள்ளை ஒரு இடத்தில் காலை ஊன்றி இறங்கினார். ரமணனும் நின்றான். இடப்பக்கம் இரட்டைக் கேட்டும், அதனோடு சேர்ந்த முகப்புக் கொட்டிலும், கடைக்காரர் சொன்ன மாதிரி, சரிதான், பச்சைப் பெயிண்ற். மாஸ்டர் மணியடித்தார்.
44

சாந்தனின் எழுத்துலகம்
முன் படலைத் திறந்தது. வெள்ளை வேட்டியும் வெறும் மேலில் துண்டுமாய் ஒருவர் வந்தார்.
“பெரியவர், பரியாரியார் வீடு இதுதானோ?”
"ஒமோம், நான்தான்” என்றபடி ஒழுங்கையைக் கடந்து வந்தார்.
“. என்ன அலுவல்? வாங்கோ'
கொட்டிலில் இரண்டு பக்கமும் - நடுவில் பெரிய வழிவிட்டு - சிமிண்ட் திண்ணைகள் இருந்தன. ஒரு பக்கத் திண்ணையில் துவாலையால் தட்டி “இருங்கோ’ என்றவர், எதிர் திண்ணையில் அமர்ந்தார்.
மாஸ்டர் சொன்னதையெல்லாம் கேட்டுவிட்டுப் பெரியவர் மெதுவாகச்
சொன்னார் :
"ஆம், அது என்னுடைய மருமகனுடைய புத்தகங்கள் தான். மகளுடைய புருஷன். உங்களுக்கு வந்து சொன்னவரும் என்னுடைய சகலைதான்.
ஆனால் என்னை மன்னிக்க வேணும்.”
சரிவராது என்று ரமணனுக்குப் பட்டது.
“போன கிழமை வந்த தபாலில் புத்தகங்களை விற்க வேண்டாமென்று எழுதியிருக்கணம்.”
“எடச்சே!” என்றார் மாஸ்டர், தன்னையறியாமல்,
"திரும்பி வர்ற நோக்கமோ, அல்லது ஏதும் லைப்ரரிக்கு அன்பளிப்பாகக் கொடுக்கிற நோக்கமோ, ஒன்றும் விவரம் எழுதவில்லை. விற்க வேண்டாம் என்று மட்டும்தான் எழுதியிருக்கு. நான் அதுக்கு மாறாச் செய்யேலாது”- குரலில் வருத்தம் தெரிந்தது.
"அது சரி, அது சரி.”
'நீங்கள் குறை விளங்கப்படாது' என்றார் பரியாரியார் மீண்டும்.
“ஒரு உதவி செய்வீங்களோ, ஐயா.”
“சொல்லுங்கோ.”
“தற்செயலா இனி அவற்றை விற்கச் சொல்லி எழுதினா, தயவுசெய்து
45

Page 25
சாந்தனின் எழுத்துலகம்
ஒரு தபால் போடுவீங்களோ? விலாசம் தந்திட்டுப் போறேன்.”
"ஓ! அதுக்கென்ன. கட்டாயமா.”
வேறொன்றுமில்லாத மெளனம். குறித்துக் கொடுத்து விட்டு மாஸ்டரைப் பார்த்துத் தலையசைத்தான்.
“GUIT (36) JITLDTT?”
அதைக் கவனியாதவராய், மாஸ்டர் பரியாரியார் பக்கம் திரும்பினார்.
"இன்னொன்று கேட்கலாமோ ஐயா?”
“கேளுங்கோ.”
“இவ்வளவு தூரம் மெனக்கெட்டு வந்திருக்கிறம். தம்பிக்கு ஒருக்கால் அந்தப் புத்தகங்களைக் காட்ட முடியுமோ? முடியாவிட்டால் வேண்டாம்.”
ரமணன் இதை எதிர்பார்க்கவில்லை. மாஸ்டரின் கோரிக்கை அவ்வளவு நாகரிகமாகப்படவில்லை.
பரியாரியார் எழுந்தார். “உள்ள வாங்கோ.” என்று முன்னால் நடந்தார்.
ரமணன் திரும்பும் வழியில் சொன்னான் : "மாஸ்டர், தாங்கள் அதைப் பார்த்தது பிழை.” "ஏன், அது பரவாயில்லை.”
"அத்தனையும் ஒரு அலமாரி முட்டப் பாத்திட்டு, அதிலே ஒண்ணைக்கூட வாங்க முடியாமல் வர்றது எவ்வளவு கவலை தெரியுமா. என்ன அருமையான புத்தகங்கள். நான் எரிச்சதிலை அரைவாசி அங்கிருக்கு”
O
சரியாகப் பத்து ஐந்து. நல்லகாலம். நாராயணன் இன்னும் வரவில்லை. வரட்டும்.
சைக்கிளை விட்டிறங்கி அதை நிறுத்தப்போனபோது திடுக்கிட்டான்.
46

சாந்தனின் எழுத்துலகம்
பின் காரியரிலிருந்த பார்சலைக் காணவில்லை. கட்டிய கயிறு மட்டும் தளர்ந்து
தொங்கியது.
பத்மநாதனிடம் வாங்கி வைத்துக் கட்டிவிட்டு அசைத்துச் சரிபார்த்தது நன்றாக நினைவிருக்கிறது. முதலாவதும் மூன்றாவதுதான் கிடைத்ததாம். மற்ற இரண்டையும் அடுத்த முறை கட்டாயம் தேடிக்கொண்டு வருவதாகச் சொன்னார். நூற்று இருபத்தைந்துப்படி இரண்டும், அவருக்கு இருநூறுமாய் நானூற்றும்பது ரூபா. அவ்வளவும் சரி. நானூற்றம்பது காசாக என்றாலும் காரியமில்லை.
ரமணன். தன்னையறியாமலேயே சைக்கிளை மீண்டும் எடுத்து உந்தி ஏறினான். பெருமாள் கோயிலடியில் வந்தபோதுகூட எதேச்சையாக இடது கையால் தடவிப் பார்க்கையில் பார்சல் இருந்தது. இடையில்தான் எங்கோ விழுந்திருக்க வேண்டும். பாலித்தீன் பையில் வைத்தது பிழை. கட்டியதும் குறுக்கமறுக்காகக் கட்டியிருக்க வேண்டும்.
வந்த வழியே மெல்ல மிதித்தான். இவ்வளவு போக்குவரத்துள்ள இந்த இடத்தில்? சொல்ல முடியாது. ஒருமுறை இப்படித்தான் மோட்டார் சைக்கிளில் மாட்டியிருந்த பை விழுந்துவிட்டதைக் கவனித்துத் திரும்பிப் போனபோது ஆளையும் பைக்கையும் அடையாளம் கண்ட யாரோ கூப்பிட்டு, விழுந்த பையைத் தந்தார்கள்.
பெருமாள் கோயிலடிவரை வந்தாயிற்று. இல்லை, எவரும் கூப்பிடவில்லை. வந்த வழியே திரும்பிப் போனார்கள். பரவாயில்லை. ஒன்றும் மூன்றும்தானே. ஒறுவாயாக. எல்லாமாக என்றால்தான் கவலை.அடுத்த முறை பத்மநாதனை நாலையும் சேர்த்தே பார்க்கச் சொல்லலாம்.
.நாளை ஏதாவது பேப்பரில்,கண்டெடுக்கப்பட்ட பொருட்கள் தலைப்பில் வரக்கூடும். எல்லாப் பேப்பரையும் பார்க்க வேண்டும்.
.பார்த்துவிட்டு இல்லாவிட்டால், தானே கூட ஒரு விளம்பரம் கொடுத்தாலென்ன?. கண்டெடுத்துத் தருபவர் களுக்கு சன்மானம் வழங்கப்படும். இப்போதே நானூற்றைம்பது.
. சில சமயம் ஆழ்வாப்பிள்ளையரின் கடைக்குக்கூட வந்து சேரலாம். ஞாபகமாக அவரிடம் சொல்லி வைக்க வேண்டும்.
47

Page 26
சாந்தனின் எழுத்துலகம்
திரும்பி வரும்போது நாராயணன் சொன்ன இடத்தில் காத்து நிற்பது தெரிந்தது.
“என்னடா பத்தரையாகுது. இப்பத்தான் வாறியா? சரியா அரைமணி நேரத் தியாலம் லேட்." என்று அவன் கத்தினான்.
D
"ஆ. மாஸ்டர், வாங்கோ வாங்கோ.” ஆழ்வாப்பிள்ளை வரவேற்றார். “உங்களுக்கு இரண்டு புத்தகம் வைச்சிருக்கிறேன்.” நினைத்தது சரிதான், கண்டெடுத்தவன் கொண்டு வந்திருக்கிறான். மேசை லாச்சியை இழுத்து எடுத்து நீட்டினார். சப்பென்று போனது. இல்லை இது வேறு. வாங்கிப் புரட்டினான்.
அகதி - எறிக் மாறியா ரிமார்க் நாவலின் தமிழ்மொழி பெயர்ப்பு. மற்றது 'உர் ஒஃப் த சோல்டீஸ் - புதை பொருளாய்வு. மாஸ்டர் பரவாயில்லை!
இதை ஊர் என்றுதான் உச்சரிக்க வேண்டும். கொஞ்ச நாட்களாக இந்த "உர்ரும் 'எலமும் கூட ரமணனைக் கவர்ந்து வருகின்றன. அதுவும் எலம் அல்ல, 'ஈழம்' என்று உச்சரிக்கலாம்.
“எப்படி..” என்றார் மாஸ்டர் பெருமிதத்துடன், நல்லது என்பதற்குள் யாரோ கையிலிருந்தவற்றைப் பறித்தார்கள். ஜெப நாயகம், மூக்கு நுனியில் கண்ணாடி. கையில் ஐந்தாறு நல்ல புத்தகங்கள்.
ரமணனுக்குப் பொறாமையாக இருந்தது. இவன் வாறதுக்கு முந்தி இத்தனை புத்தகம் இங்கே கிடைத்திருக் கிறதா. தன் கையில் இருந்தவற்றைக் கொடுத்து விட்டு, அவனிடமிருந்தவற்றை வாங்கினான். பார்த்ததுமே தான் ஜெயின் மேல் பொறாமைப்பட்டது சரியல்ல என்றிருந்தது. எல்லாமே ஜெ. வழமையாக விநியோகிக்கிற பாவத்தின் சம்பளம் போன்ற இலவச வெளியீடுகள்,
“இது ஏன் உனக்கு. ஜெ. உர்ரைக் காட்டிக் கேட்டான்.
48

சாந்தனின் எழுத்துலகம்
“எனக்குத் தா.”
ரமணன் சிரித்தான்.
"நான் எடுக்கிறேன் ஐயா, இதை” என்றான் ஜெ. மாஸ்டர் பக்கம் திரும்பி அப்போதுதான் சீரியஸாகவே கேட்கிறான் என்று தெரிந்தது.
“பகடி விடாதை. இங்கை தா எனக்குவேணும்.” என்று பறிக்க வேண்டியிருந்தது.
“நான் படிச்சுட்டுத் தாறன்.” விடைபெறும்போது ஜெயை ஆறுதல் படுத்தச் சொன்னான் ரமணன்.
அதுதான் பிழையாய்ப் போய்விட்டது. ஜெ. அதை மறப்பதாயில்லை. காண்கிற வேளைகளிலெல்லாம் ஞாபகமாகக் கேட்டு விடுகிறான். இன்றைக்கு நாலாவது முறை. இனி என்ன சாட்டுச் சொல்லலாமென்றும் தெரியவில்லை.
ஜெ. ஆள் பரவாயில்லைதான். ஆனால் புத்தக விஷயங்களில் யாரை நம்ப முடியும்?
ஜெ.க்கு மட்டுமல்ல, யாருக்குமே புத்தகங்களைக் கொடுக்கவோ வாங்கவோ ரமணன் இப்போது தயாரில்லை. அன்றைக்கு காய் வெட்டுவதற்காகச் சொன்னதை வைத்துக்கொண்டு இவன் கலைக்கிறான். பிழை என்னில்தான்.
“டேய், புத்தகங்களை வைச்சு என்ன செய்யப் போகிறாய்?. ஆர்மி ஊருக்குள்ள வந்தா புத்தகப் பெட்டியைத் தலைல வைச்சுக் கொண்டா ஒடப் போறாய்?” - ஜெ. கேலியாகச் சிரித்தான். அவன் விநியோகிக்கிற புத்தகங்கள் அப்போதும் அவன் கைகளில் இருந்தன.
ரமணனுக்குக் கண்மண் தெரியாமல் கோபம் வந்தது. "ஷட் அப் யுவர். மவுத்.” இவ்வளவு கோபத்தை ஜெ. நிச்சயமாக எதிர்பார்த்திருக்க முடியாது. கூட இருந்தவர்களுக்கும் ஒன்றும் விளங்காமல் இவர்களையே பார்த்தார்கள்.
1994
49

Page 27
3
வேலிகளின் கதை
"சலோ.”- சொன்னவன். இரண்டு எட்டு முன்னால் வைத்துத் திரும்பிப் பார்த்தான். சிங்கர் கிருஷ்ணனைப் பார்த்தார். கிருஷ்ணன் சிங்கரைப் பார்த்தான். முன்னே போங்கள் என்பதுபோல ஆளுக்காள் தலையாட்டினார்கள். அது பயத்தாலல்ல. மரியாதைக்காக என்பது இருவருக்குமே தெரியும். ஒரு கணத் தயக்கத்துக்குப் பிறகு வயதுக்குக் கிருஷ்ணன் கொடுக்கிற மரியாதையை ஒப்புக்கொண்டவராக - சிங்கர் முன்னால் வந்து அந்தச் சிப்பாய்க்கருகில் போய் நின்றார். அவருக்குப் பின்னால் கிருஷ்ணன் போய்ச் சேர்ந்து கொண்டான்.
திரும்பிப் பார்த்தார்கள். அந்தப் பெரிய விறாந்தை முழுவதும் சனமாய் நின்றது. அம்மா. வேணி அக்கா, பிள்ளைகள் - எல்லோருக்கும் முன்னால், கிருஷ்ணனையே பார்த்தபடி நின்றார்கள். உனக்கேன் இந்த இருக்கேலாத வேலை? சாப்பாடெதுக்கு? இங்கே இருக்கிற - இந்த - மற்றவர்களைப் போல, நீயும் நிண்டிருக்கேலாதா? அவனுக்குக் கேட்டது. போய் மினைக்கெடாமல் பத்திரமாய் வந்துவிடு என்று அந்தப் பார்வைகள் சொல்லின. கிருஷ்ணன் இதுக் கென்ன பயம்? என்பதாக அவர்களை உற்சாகப் படுத்துவது போல - ஒரு மெல்லிய முறுவலுடன் த ைசைத்தான்.
"சலோ - சிப்பாய் திரும்பவும் சொன்னபடி தெருவிலிறங்கினான். சிங்கரும் அவரைத் தொடர்ந்து கிருஷ்ணனும் இறங்கினார்கள். படலைக்கு வெளியே நின்ற நாலு ஆட்கள் இரண்டிரண்டு பேராய் முன்னும் பின்னும் சேர்ந்து கொள்ள ஒரு வரிசை உருவானது.
50

சாந்தனின் எழுத்துலகம்
இந்த வீட்டிற்கு முன் வீட்டில் சிப்பாய்கள் நிறையப் பேர் நின்றார்கள். அநேகமாக எல்லோருமே மதிலின் மேலால் இங்கு எட்டிப் பார்த்தபடி, முன்னாலிருந்த காவற் கூட்டுக்குள் நின்றவன் ஏதோ உரத்துச் சொல்லிவிட்டுச் சிரித்தான். நெய்யும் கடலையெண்ணையும் கலந்த வடை
மூக்கிலடித்தது. அவர்களைப் பார்க்காமல் தாண்டிப் போனார்கள்.
மெல்லத்தான் நடக்க வேண்டியிருந்தது. முன்னால் போகிறவன் ஆறுதலாய்ப் போகிறான் போலும். திரும்பி, தாங்களிருந்த வீட்டின் விறாந்தையில் நிற்பவர்களைத் தெரிகிறதா? என்று பார்க்க நினைத்தான். கிருஷ்ணன் வேண்டாம். இவர்கள் ஏதாவது நினைக்கக்கூடும். அதோடு இங்கிருந்து பார்த்தால் மதிலுக்கு மேலால் நிற்கிற - மரங்கள் மறைக்கும்.
சிங்கரின் நெடிய உருவம் முன்னால் கையெட்டும் தூரத்தில் போய்க் கொண்டிருக்கிறது. வேட்டியின் கீழ் - அவரது ஒவ்வொரு அடியெடுப்புக்கும் - அந்தக் கறுத்தத் தோல் செருப்புக்கள் டக்டக்கென்று சீரான ஒலி கிளப்பிக் கொண்டிருக்கின்றன. சிங்கர் வழமையான கோலத்தில்தான் இருக்கிறார். வெள்ளை வேட்டி நஷனல், வெள்ளைச் சால்வை அது கழுத்தைச் சுற்றிப் போடப்பட்டிருந்தது. நரை மயிரடர்ந்த தலை, வழமையாகத் திருநீறும் சந்தனமுந் துலங்குகிற நெற்றியில் இன்று திருநீற்றை மட்டும் பார்த்த ஞாபகம். எப்படியோ ஆள் தொண்ணுாறு விதமாவது வழமையான கோலத்தில்,
கிருஷ்ணன் தன்னைப் பார்த்தான். மண்ணிற பிஜாமா சாரம். ரப்பர்ச் செருப்பு. வெளியே விட்ட வெள்ளை அரைக்கைச் சட்டை வீட்டிலிருக்கிற கோலம். நேற்று மத்தியானம் குளித்துவிட்டுப் போட்ட உடுப்பு.
பரவாயில்லை. போய் இந்தச் சாப்பாட்டு விஷயத்தை ஒழுங்கு பண்ணிவிட்டு வந்து மத்தியானம் குளித்து மாற்றிவிட்டால் சரி. ஆனால் முகாமிலிருக்கிற சனத்தைப் பார்த்தால் மத்தியானமாவது குளிக்க முடியுமோ தெரிய வில்லை. வந்து பார்க்கலாம். எப்படியும் இவ்வளவு பேருக்கும் இந்த மூன்று நாலு நாளைக்கும் சாப்பாட்டை ஒழுங்கு பண்ணிக் கொள்ளத்தான் வேணும். எத்தனை பேர். எத்தனை குஞ்சு குருமன். நாங்கள் போய்க்
கதையாமல் சரிவராதாம்.
தெருக்கரையில் ஆங்காங்கே தேங்கி நிற்கிற வெள்ளத்தை விலக்கி
51

Page 28
சாந்தனின் எழுத்துலகம்
நடக்க வேண்டியிருந்தது. கழுவி விட்ட நிலத்தில் காலை வெய்யில் அழகாய் விழுந்தது. நீண்டு நகரும் நிழல்கள். தடம் படாத தெருக்கரை மண். மழை பெய்தது முந்தநாளிரவு.
எங்கே போகிறோம்? எங்கேயிருக்கிறது செஞ்சிலுவை அலுவலகம்? போனால் உடனே கவனித்து அனுப்பி விடுவார்களென்று பி.கே. சிங் சொன்னான். வேளைக்குத் திரும்பி அம்மன் கோவிலடிப் பக்கம் இருக்கலாம்.
சரிதான். முன்னால் போகிறவன் இடது பக்கமாகத் தான் திரும்பப் போகிறான்.
திரும்பினார்கள்.
என்ன இது?
கிருஷ்ணன் திகைத்தான்.
தெருவின் இருபுறத்து வேலிகளும் எரிந்து, சுதிகால்கள் கருகி. மதில்கள் உடைந்து கதிரேசு கடைப் பலகைகள் கூட.
இதென்ன?
உயிரசைவே இல்லாத வெறுமை உறைத்தது. எங்கோ ஒரு தனிக்காகம் இரண்டு தரம் கத்தியது. ஆட்களை அமுக்குவது போலிருந்த அமைதி இந்தக் கத்தலில் இன்னமும் பெரிதாய்க் கனத்தது.
சிங்கரை நிமிர்ந்து பார்த்தான். அவருக்கும் உறைத்திருக்க வேண்டும் - பார்த்துப் பார்த்து நடப்பதில் புரிகிறது. கதைக்க முடியாதா? இயந்திரங்கள் மேலே முன்னும் பின்னும் கூட வருகிற படை ஆட்கள்.
இவர்கள் ஏனிப்படி எங்களைக் கூட்டிக் கொண்டு போகிறார்கள். ஏதோ கைதிகளைக் கொண்டு செல்வது போல? இரண்டு சிவிலியர்களைக் கூட்டிப் போக ஏன் இவ்வளவு பாதுகாப்பு?. முன்னால் ஒருத்தன் துவக்கோடு - அதை நீட்டிப் பிடிக்கிற விதமும் நடக்கிற நடையும் எச்சரிக்கையாக அடி வைக்கிறான். அங்குமிங்கும் பார்த்தபடி அடுத்தவர்களும் அதே மாதிரி பின்னால் வருகிறார்கள் - அவர்களைத் திரும்பிப் பார்க்க முடியாது - அவர்களும் அப்படித்தான் வருவார்கள்.
52

சாந்தனின் எழுத்துலகம்
எங்கே போகிறோம்? என்னத்துக்கு இப்படி? முட்டாள்தனமாக வந்து மாட்டிக்கொண்டோமா? வேலியாயிருந்த வற்றின் விளிம்போடு படர்ந்திருந்த பச்சைப் புல் வரிசைக்கும். வாரடித்த வெள்ளை மணற் கரைகளுக்கு மிடையில் கரைந்துங் கலைந்துங் கிடக்கிற கரித்திட்டுக்கள். தெருவின் தாரிலும் குறுணிக் கற்களிலும் அவர்களின் முரட்டுச் சப்பாத்துக்கள் நறுநறுக்கிற நடையொலி. அது மட்டுமே கேட்கிற அமைதி. இந்த வெறுமை. இந்தப் பயங்கரம். எங்கள் ஊர்தானா இது?. இல்லை. இது கனவில்லை.
நடந்தபடியிருந்தார்கள். பொன்னையர் வீட்டுப் போட்டிக்கோ கூரையின் மேல் அவர் வளவின் முன்மதில் கல்லெல்லாம் ஏறி, அது ஒரு கொத்தளமாகி, ஒட்டையிலிருந்து ஒரு துவக்கு நீட்டிக் கொண்டிருந்தது.
துரைலிங்கம் வீட்டு வேலை வெட்டி அடிவளவு வரை தெரிகிறது. கார்க் கொட்டிலில் துரையரின் மொறிஸ் மைனர் எரிந்து கருகி வெறுங்கோதாய். இந்தப் பக்கத்துச் சனங்களையெல்லாம் எங்கே கொண்டுபோய் விட்டிருப் பார்கள்? அம்மன் கோவிலிலா? எங்களைப் போல இந்தக் குறிச்சியும் இவர்களிடம் அகப்பட்டுக் கொண்டதா இல்லை, சுற்றி வளைப்பிற்கு முன்பே மாறிவிட்டதா?
மணத்தது.
மணம் நெருங்கி வந்தது. இங்கே எங்கோ கிட்டத்தில்தான்.
அந்தா. குணம் வீட்டு மதிலின் பின், இரண்டு இடங்களில் ஒட்டைகளுக்கூடாக நீட்டிய துவக்குகள், காவற் கூடுகள், குணம் வீட்டுக்கு அந்தப் பக்கமும் அதேபோல் இரண்டு. பாக்கியமக்கா வீடு. பரஞ்சோதியர் வீட்டு மதில்களின் கற்கள்! செல்வத்தின் சைக்கிள் கடையின் முன்னாலிருந்த பத்தியின் தகரங்களையுங் காணவில்லை. அவைதான் போலும். மேலே முழு இடமும் புயலடித்து ஒய்ந்த மாதிரி. இல்லை, இனித்தான் புயலோ?
முன்னால் போனவன் வலதுபுறம் சட்டெனத் திருப்பினான். பரமசிவம் வீட்டுக்குப் போகிற வண்டிப் பாதை திரும்பினார்கள்.
D
இதென்ன? மயிர்க் கொட்டி மொய்த்தது போல? இத்தனை பேர்களா?
53

Page 29
சாந்தனின் எழுத்துலகம்
சிலிர்த்தது.
இதுவுங் கனவில்லை.
இங்கே ஏன் வந்திருக்கிறோம்? இதற்குள் எப்படி நாங்கள் தேடி வந்த இடம் இருக்க முடியும்?. இத்தனை பேரிருந்தும் எவ்வளவு அமைதி இந்த முடக்கினுள் இத்தனை சிப்பாய்கள் இருப்பார்கள் என்று யார் நினைப்பார்கள்?.
வேலிக்கரைகளோடு - வரிசை. வரிசையாய். குந்தியும் சப்பாணி கட்டியும். பீடிகளை உறிஞ்சியபடி நெய் மணத்தையும் மீறி எங்கும் பீடிமணத்தது.
கிருஷ்ணனுக்கு வயிற்றைப் பிசைந்தது. எங்களூரில் இப்படி கூர்க்காக்கள் மொய்ப்பார்களென்று எவராவது எப்போதாவது நினைத்திருக்க முடியுமா?
இவர்களின் வரிசை நடுவால் நடந்தது. இங்கொன்று அங்கொன்றாக, ஆங்கார உறுமல்கள். முணுமுணுப்புக்கள். இருந்தாற்போல் ஒரு சீழ்க்கை எல்லா முகங்களும் ஒரே மாதிரி மரத்துக் கிடந்தன. பார்க்காமல் நடந்தார்கள். திடீரென ஒருவன் தலையை உயர்த்திக் கறுவினான். கத்திய சத்தம் திடுக்கிட வைத்தது. எல்ரிரிஈ என்ற மாதிரிக் கேட்டது? சிரித்தால் என்ன நடக்கும்? இந்த நேரத்திலும் வருகிற சிரிப்பை கிருஷ்ணன் மறைத்துக் கொண்டான்.
பரமசிவம் வீட்டுக்குள் நேரே போனார்கள். கேற்றில் நுழைந்து திரும்பியதும். சிவத்தார் வளவு விரிந்து கிடந்தது மேலே. அடர்ந்த புற்றரையும். இந்த இடத்தில் சந்தடியில்லை. ஆனால், நேரே முன்னால், சற்றுத் தொலைவில். வீட்டின் போர்ட்டிகோ பரபரத்துக் கொண்டிருந்தது.
கொஞ்ச தூரம் போனார்கள். ஒரு தென்னையருகில் வந்ததும் அழைத்து வந்தவன் இவர்களை நிற்கச் சொல்லி கைகாட்டினான். நின்றார்கள். அவன் மட்டும் நேரே போனான்.
இது இவர்களின் இடம். அலுவலகமோ, முகாமோ, எதுவோ, அதிலும் இந்த அமளியைப் பார்த்தால் பரமசிவத்தாரின் பழைய மோட்டார் சைக்கிள் எண்ணெய் சொட்ட நிற்கிற - இந்தப் போர்ட்டிகோதான் அவர்களின் கட்டளை மையமாகத் தெரிகிறது.
முப்பதடிக்கு முன்னால் அந்தப் போர்ட்டிகோ, அங்கு நடக்கிற
54

சாந்தனின் எழுத்துலகம்
தெல்லாவற்றையும் நன்றாகப் பார்க்க முடிகிறது. நடுவில் சோஃபாக் கதிரையில் ஒருவன். அதிகாரி போலும், அவனும் கூர்க்கா. சற்றுத் தள்ளி. ஒரு மேசையின் மேல் தொலை தொடர்புக் கருவிகள். அவற்றின் முன்னால் மூன்று பேர். கதிர்ைகளில் உட்கார்ந்து மாறி மாறிக் கத்திக் கொண்டிருந்தார்கள். வெவ்வேறு இடங்களுக்கு இங்கிருந்து கட்டளைகள் போவது மாதிரி இருந்தது. வயர்லெஸ் காரர்களின் பின்னால், அவர்களின் கதிரைகளில் கையை ஊன்றி வளைந்து ஒரு நெட்டை மனிதன். கட்டளைகள் இட்டபடி அவன் கூர்க்கா அல்ல. நல்ல சிவலை, கறுத்த சீருடை முழுமொட்டையாக மழித்திருந்த தலை,
இவர்களைக் கூட்டிப் போனவன். கூர்க்காவின் முன்னால் போய் நின்று சல்யூட் அடிக்கிறான். ஏதோ சொல்வது தெரிகிறது. திரும்புகிறான்.
அவன் வருவதைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். அருகில் வந்ததும்
ஆவ்.” என்றான்.
முகாமிலிருந்து புறப்பட்ட போது வந்த "சலோ”வுக்குப் பிறகு அவன் வாயிலிருந்து வருகிற அடுத்த வார்த்தை இதுதான்.
D
காலுக்குமேல் காலைப் போட்டுக் கொண்டிருந்த அதிகாரி. இவர்களையே உறுத்துப் பார்த்தபடி இருந்தான். தொப்பி மடியிலிருந்தது.
அங்குமிங்கும் நரையோடிய தலை ஐம்பது வயதிருக்கலாம். அருகில் போனபிறகுதான் அங்கே வேறு கதிரைகளில்லாதது கண்ணில் பட்டது.
கூர்க்கா ஒன்றுமே பேசவில்லை. இவர்களையே இன்னமும் உற்றுப் பார்த்தபடி இருந்தான்.
"குட்மோணிங்” என்றார் சிங்கர்.
அவன் முறைத்தான்.
"வெயிட் தேர்.” உறுக்கியபடி தூணைக் காட்டினான்.
"விக்ரம் சிங்'
அழைத்து வந்தவன் அவசரமாக முன்னால் வந்தான். அதிகாரி
55

Page 30
சாந்தனின் எழுத்துலகம்
சொன்னதை அட்டென்ஷனில் நின்று கேட்டான். சல்யூட் அடித்துத் திரும்பி நடந்தபோது அந்த விக்ரம்சிங்கின் பின்னால், அவனோடு கூடவந்த நாலுபேரும் போனார்கள்.
கிருஷ்ணன் திடுக்கிட்டான். நாங்கள் இங்கே வந்திருக்கவே கூடாது? சாப்பாடாவது. ஒன்றாவது. போகிறவர்கள். பி.கே. சிங்கின் ஆட்கள். இவர்களை கொண்டு வந்து விட்டு விட்டுப் போகிறார்கள்! இனித் திரும்புவது?. இந்தச் சூழலில் தனியே இவ்வளவு தூரமும் அரைமைல் தானென்றாலும்-போகமுடியுமா? இவர்கள் யாராவது கொண்டுபோய் விடுவார்களா?. நடக்கிற நடப்பை பார்த்தால், போகத்தான் முடியுமா? என்பதே சந்தேகமாயிருக்கிறது.
கிருஷ்ணன் புறங்கையால் முகத்தைத் துடைத்துக் கொண்டான். பி.கே.சிங்கின் முகத்தில் பொய்யோ.மெய்யோ புன்சிரிப்பாவது தெரிந்தது. கதிரையிலிருக்கிற இந்தக் கூர்க்கா முகத்தில் அதன் சாயலையே காணவில்லை. பிடித்துத்தின்று விடுகிறவன் மாதிரி, நெஞ்சு படபடத்தது.
வீட்டுக்குள்ளிருந்து ஒருவன் வந்தான்.கையில் வெள்ளித் தட்டு அது நிறைய. வெள்ளையாய்ப் பூக்குவியல் போல.தேங்காய்ச் சொட்டு வந்தவன் கூர்க்காவின் அருகே போய்த் தட்டை நீட்டினான். அவன் கையை மட்டும் நீட்டிப் பிடியாக அள்ளிக் கொண்டதும்.தட்டுக்காரன் மொட்டைத் தலை ஆளின் முன் போய் நின்றான். கிருஷ்ணன் இப்போது தான் கவனித்தான். அந்த ஆளின் தலை முழு மொட்டை யில்லை.உச்சிச் சுழியருகில் மட்டும். விரல்தடிப்பில் நீளமாய் எலிவால் போல ஒரு குடுமி,அம்புலிமாமாப் படங்களில் வருகிற சில ஆட்களின் தலை மாதிரி.
அந்த ஆள். கதிரையில் கிடந்த வெள்ளைத் துவாய் ஒன்றை எடுத்தான். ஒன்றைக் கையால் முகத்தை அழுந்தத் துடைத்தபடி, மற்றக்கையால் சொட்டுகளை எடுத்தான். தட்டுக்காரன் கூர்க்காவின் அருகிலிருந்த சிறியமுக்காலியில் தட்டை வைத்து விட்டு உள்ளே போனான்.
எதிரே இவர்கள் நிற்கிற உணர்வேயில்லாமல் இருவரும் சப்புகிறார்கள். கிருஷ்ணனுக்கு எரிச்சல் மண்டியது. இருக்கக் கூட இடந்தராமல்.சிங்கரைப் பார்க்க வேண்டும் போலிருந்தது. அவர் பக்கத்தில் - தோளோடு தோள் முட்ட நிற்கிறார். ஆனால் எப்படித் திரும்புவது?.
w 56

சாந்தனின் எழுத்துலகம்
கதிரையில் இருக்கிறவனின் பெயர்ப்பட்டி இப்போது வடிவாகத் தெரிகிறது. மேஜர்.பெயரை படிப்பதற்குள் கூர்க்கா கையை அசைத்து விட்டான்.இப்போ தெரிகிறது. பதாவோ, பாதாவோ எப்படி உச்சரிப்பது?
கறுப்புச் சட்டைக்காரரின் பெயரையும் பார்க்க வேண்டும். போலிருந்தது. அவன் நின்ற நிலையிலையே வயர்லெஸ்காரர்களை g. வலதுகையால் வாய்க்குள் சொட்டுக்களைالLلgtLا "ازg[(9ے எறிந்தபடியிருக்கிறான் கப்டன். வன்பர். அதைக்கூடச் சிலவேளை வான்பர்
என்றோ வான்பார் என்றோ உச்சரிக்கவேண்டுமோ?
D
பதா கிருஷ்ணனைக் கூப்பிட்டான். “கம் ஹியர்'
கதிரையில் காலுக்கு மேல் கால்போட்டபடி இருந்து கூப்பிடுகிறான்.
இதுகாலவரை இப்படி எவருந்தன்னைக் கூப்பிட்டதில்லை.
வந்த எரிச்சலுக்கு.
என்னதான் செய்துவிட முடியும்? கையாலாகாத கோபம்.
இரண்டடி எடுத்து வைத்தான்.
"நீ இங்கிலீஷ் பேசுவாயா?”
அது பேசப் போய்த்தானே பி.கே.சிங் - இங்கே அனுப்பியிருக்கிறான்.
"ஓரளவு.”தெரிந்ததாக இவர்களுக்குத் தெரிந்து விட்டது எவ்வளவு பிரச்சனையாகப் போயிற்று
“என்னுடைய கேள்விகளுக்கு ஒழுங்காய்ப் பதில் சொல்ல வேண்டும்.பொய் சொல்லி தப்ப நினைக்கக் கூடாது.”
உறுத்து மிரட்டும் கண்களால் தன் உளஉறுதியைச் சிதறடிக்க முயல்கிறானா இந்த இராணுவத்தான்?
இதுதான் உணவுக்கு ஏற்பாடு செய்கிற வள்ளல்
'நீ ஒரு எல்ரீரியா?”
“இல்லை”
57

Page 31
சாந்தனின் எழுத்துலகம்
“பொய் சொல்லாதே சொன்னால்.”
கிருஷ்ணன் விறைப்பாகச் சொன்னான். "இல்லை.நான் ஒரு ஆசிரியன்.குடும்பக்காரன்.”
"ஆசிரியன் என்கிற முறையில் உண்மைooயச் சொல்லு,
எல்ரிரிஈக்காரர்கள் எங்கே?.இங்கே யார் எல்ரிரிஈ.
“இங்கு ஒருத்தரும் இல்லை.” "நீ ஒரு இளம் ஆள். உனக்குக் கட்டாயம் தொடர்பு இருந்திருக்கும்.” “எனக்கு அவர்களோடு எந்தத் தொடர்பும் கிடையாது.”
ஷட் அப். 'அவன் கதிரையிலிருந்து துள்ளி நிமிர்ந்தான். கன்னத்துத் தசைகள் துடிப்பது வடிவாகத் தெரிந்தது. இமை கொட்டாமல் இவனையே முறைத்தான்.
“எனக்குப் படிப்பிக்க நினையாதே'கன்னத்துத் தசைகள் இன்னமும் துடித்தன.
இதற்கு என்ன சொல்வது? கிருஷ்ணன் பேசாமல் நின்றான்.
“சரி இந்த ஊர் புலிகளின் கோட்டை என்று சொல்லப் படுகிற இடம். நீ இந்த ஊரவன். உனக்கு அவர்களைத் தெரியாது என்கிறாய்! எப்படி நம்புவது?’ அடிக்காதக் குறையாகக் கையை நீட்டி இரைந்தான் மேஜர்.
“இருந்திருக்கலாம்.ஆனால் எனக்குத் தெரியாது.” "அதெப்படி?.” பதா.கோபமாய் உறுமி நக்கல் சிரிப்புச் சிரித்தான். “என்னை முட்டாளாக்கப் பார்க்கிறாயா?” “என்னைச் சொல்ல விடுங்கள்.” வருவது வரட்டும் என்று கிருஷ்ணன் சொன்னான்.
"இப்போது இங்கே நீங்கள் இவ்வளவுபேர் இருக்கிறீர்கள். உங்களை யார். எவர்? யார் அதிகாரி யார் சிப்பாய்? எங்கிருந்து வந்தீர்கள். இனி எங்கே இருக்பீர்கள்? இது ஒன்றுமே எங்களுக்கு தெரியாது. எங்களை பொருத்தளவில் நீங்கள் எங்கே இருந்தீர்கள்-இதைத்தான் நீங்கள்
58

சாந்தனின் எழுத்துலகம்
முடித்தபோது பதற்றமாயிருந்தது.அதிகம் பேசி விட்டேனோ?
பதா.உற்றுப் பார்த்துக் கொண்டேயிருந்தான். வளைந்த புருவங்களின் கீழ் அந்த இடுங்கிய மொங்கோல் கண்கள் இன்னும் சிறிதாகி அவை கிருஷ்ணனைத் துளைக்க முயன்றன.
மார்பின் மேல் கட்டிக்கொண்டிருந்த கைகளை விலக்கி முகத்தைத் துடைத்தான் கிருஷ்ணன்.
அரை நிமிசமிருக்குமா? பதா சொன்னான்!
“இங்கே பார்’
கிருஷ்ணன் பார்த்தான்.
“இப்போ நான் உன்னை ஒடும்படி சொல்ல முடியும். ஆனால் நீ
எவ்வளவு தூரம் ஓடிவிடுவாயென்றும் நான் பார்த்துவிடுவேன்.
அவன் சொன்னது விளங்கச் சில விநாடிகள் பிடித்தன! கிருஷ்ணனுக்கு வியர்த்தது. 'உன்னைச் சுடுவேன்' என்பதை இதைவிட வடிவாக வேறெப்படிச் சொல்லமுடியும்?
என்ன செய்ய நினைக்கிறான் இவன்? - கிருஷ்ணனுக்கு நெஞ்சிடித்தது. சிங்கர் பின்னால் நிற்கிறாரா?.
அந்த மொட்டைத்தலை மனிதன் கழுத்திலொன்றும் கைகளில் இரண்டுமாய் - தொலைபேசிகளுடன் மல்லாடிய படியே இங்குமங்கும் பார்த்துக் கொண்டிருக்கிறான்.
* பின்னால் போ'கூர்க்கா கத்தினான்.
என்ன சொல்கிறான். இவன்? சற்றுமுன் சொன்னது போல் சுடப்போறானா? கடவுளே. அசையவே முடியாதிருந்தது.
"யூ கம் ஹியர்' என்றான். சிங்கரைப் பார்த்து.
59

Page 32
சாந்தனின் எழுத்துலகம்
கிருஷ்ணனுக்கு நம்பமுடியவில்லை. இப்போதைக்கு விட்டிருக்கிறானோ? தன்னையறியாமலே பின்ன்ால் நகர்ந்தான்.
சிங்கர் முன்னால் போனார். தோளில் கிடந்த சால்வையைச் சரியாக இழுத்துவிட்டபடி நின்றார்.
“இப்போது நீ சொல்லலாம்.” பதா உறுமினான். "நான் என்ன சொல்ல வேண்டுமென்கிறீர்கள்?. அந்த குரலும் ஆங்கிலத்தின் சுத்தமும் அவனை ஒரு கணம் அசைத்திருக்க வேண்டும்.
"உண்மையை. உண்மையைச் சொல்லு.” "நாங்கள் இந்தியாவை எங்கள் தாய்நாடாக மதிப்பவர்கள்.” அவரை அவன் முடிக்க விடவில்லை. "உன்னுடைய புலுடாவை நிறுத்து. கத்தினான்.
"இந்தியாவுக்கெதிரானவர்கள் இந்தியாவுக்குள்ளே கூட இருக்கிறார்கள்'
- அந்தப் பெரியவரைத் தன் முன்னால் நிற்கவிட்டு இவன் கதிரையில் கால்மேற்கால் போட்டபடி உட்கார்ந்து கதைக்கிற விதம் அவருடைய படிப்பென்ன பழக்கவழக்க மென்ன, வயதென்ன, மதிப்பென்ன.
இன்று? எங்களை இவர்கள் ஏதோ அடிமைகள் மாதிரி.
இராணுவம் என்கிற திமிர்! ஆயுதங்களும் ஆட்களுக்கு மிருக்கிற அகம்பாவம்
“ஸோ, உனக்கும் ஒருவரையுந் தெரியாது?” “தெரியாது?’
‘போய் நில்!.” பதா கத்தினான். “எக்ஸ்கியூஸ் மி.” சிங்கர், நிதானமாகச் சொன்னார்.
". நீங்கள் எங்களைத் தவறாகப் புரிந்துகொண்டு விட்டீர்கள். காலையில் எங்கள் முகாமைப் பார்க்க வந்த உங்கள் கப்டன் பி.கே. சிங்.
வீடுகளுக்குப் போக நீங்கள் அனுமதிக்கும் வரை ஊரவர் எல்லோரும்
60

சாந்தனின் எழுத்துலகம்
முகாமில் தானிருக்க வேண்டுமென்றார். அதுவரை எங்களுக்கான சாப்பாட்டு ஏற்பாடுகள் பற்றி.”
“ஷட்அப்." - மேஜர் உச்சக் குரலில் இடைமறித்தான். முகம் இரத்தமாய்ச் சிவந்தது. வியர்வையில் பளபளத்தது.
“இரண்டு பேரும்.”அவன் காட்டினான். “. அந்தா அந்த மதிலோடு போய் நில்!”
O
மதிற்கரையோடு மாரிப்புல் மெத்தையாசச் சடைத்தி ருந்தது. சிவத்தார் வீட்டுப் பூ மரங்கள் இந்த மழைக்கு வஞ்சகமில்லாமல் மதாளித்து நின்றன அவன் கனகாலம் தேடித்திரிந்த சரக்கொன்றைக் கன்றுகள். இந்தா - இதில் - கைக்கெட்டும் தூரத்தில் - முளைத்து நிற்கின்றன! என்ன வேடிக்கை யார் செய்கிற வேடிக்கை இது?
சிங்கர் அருகோடு நிற்கிறார். ஆளை ஆள் பார்த்துக் கொண்டார்கள். அவரின் முகமெல்லாம் வியர்த்திருந்தது. கண்ணாடியைக் கழற்றிவிட்டுச் சால்வையால் ஒற்றிக் கொண்டார். கதைக்கவே பயமாயிருந்தது.
“என்ன நினைப்பார்களோ. இப்பிடி வெருட்டினால்? எங்களுக்கென்ன தெரியும்?”
கிருஷ்ணன் திரும்பிப் பார்த்தான்.
எதிரே போர்டிகோ, இங்கே கதைத்தால் கேளாதுதான்.
என்றாலும் பதாவை இப்போது காணவில்லை.
அம்புலிமாமா ஆள் தொலைபேசியுடன் இன்னமும் அமளியாக இருக்கிறான். அவனோடு மட்டும் ஐந்தாறு ஆமிக்காறர். வீட்டின் கோடிப் பக்கத்தில் - சமையல் வேலை நடக்கிறதா? - கிடாரங்கள் வாளிகளின் சத்தங் கேட்டுக் கொண்டிருக்கிறது.
இவர்களின் இடதுபக்கம் கேற் முடக்கின் மறைவில் - அந்தக் கையொழுங்கையில், மொய்த்துக் கொண்டிருந்த ஆட்கள் இன்னமும் அங்கேதானிருக்க வேண்டும்.
61

Page 33
சாந்தனின் எழுத்துலகம்
பீடிப்புகை காற்றெல்லாம் கலந்திருந்தது. இங்கிருந்து ஒன்றுமே தெரியவில்லை.
களைப்பாக இருந்தது. பசியில்லை. ஆனால் தண்ணிர் விடாய்த்தது. காலையில் எழுந்ததற்குப் பச்சைத்தண்ணீர் கூடக் குடிக்கவில்லை.
“இந்தா. பத்து நிமிஷத்தில் பேசிவிட்டு வந்துவிடலா மென்று கூட்டி வந்து. என்ன நயவஞ்சகம்.”
"இதிலை இருப்பம்” என்று சிங்கரைப் பார்த்தான்.
"ம்ம்?.” என்றவர், உடனே,
"ஏதும் சொல்லுவாங்களோ?” என்றார்.
“இருந்து பாப்பம்.” காலால் புற்பரப்பை மெல்லத் தடவிவிட்டுக் குந்தினான். சப்பாணி கட்டிக்கொண்டபோது, காலுக்கு இதமாக இருந்தது.
சிங்கரும் பக்கத்தில் சால்வையைப் போட்டுவிட்டு அமர்ந்தார்.
யாராவது பார்க்கிறார்களா? இல்லை. ஒருவரும் இதைக் கவனித்ததாகத் தெரியவில்லை.
புல்லின் பூக்கம்பொன்றைக் கிள்ளி கிருஷ்ணன் தன்னையறியாமலே
பற்களால் நன்னலானான். என்ன நடக்கும்?
படபடவென்று முறியும் சத்தங்கேட்டுத் திரும்பினார்கள். வளவின் மேற்கு வேலி விழுந்துகொண்டிருந்தது. பென்னாம் பெரிய லொறியொன்று முக்கிய படி உள்ளே வர முயன்று கொண்டிருந்தது. உச்சிக்கியரில் அதன் உறுமல்.
ஒவ்வொரு கதிகாலாக முறிந்தது. அந்த மூரிவேலி - முடியாமல் - வழிவிட்டுக் கொண்டிருந்தது. ஒரேயொரு வாதநாராயணி மட்டும் கொஞ்சம் மொத்தமாக தாக்குப் பிடித்தது. காட்டுக் கத்தியும் கையுமாய் ஒரு சிப்பாய் ஒடி வந்து அதை அடியோடு தறிக்கலானான்.
வெட்டிய வேலிக்கப்பாலால் அடுத்த வளவு. அதுவுந் தென்னங்காணி. முருகேசருடையது. அதையுந் தாண்டி, மதவடி றோட்டுத் தெரிந்தது! முருகேசர் வளவின் றோட்டு வேலி வெட்டித்தான் லொறி இங்கு
62

சாந்தனின் எழுத்துலகம்
வந்திருக்கிறது. இந்த வளவுக்கு வருகிற கையொழுங்கையால் பெரிய வாகனங்கள் வரமுடியாதென்று இந்த வேலை பார்க்கிறார்கள்! இப்போது மதவடிறோட்டிலிருந்து வலுசுகமாக வந்துவிடலாம்.
லொறி தென்னைகளைத் தாண்டி - வளைந்து வளைந்து வந்து கொண்டிருந்தது. இப்போதைக்கு விட்டுப் போகிற நோக்கம் இருப்பதாய்த் தெரியவில்லை.
குறுக்குப் பாதையை ஆட்கள் சீர்படுத்துகிறார்கள். இந்த வளவுக்கு இவ்வளவு கிட்டவா, மதவடித்தெரு இருக்கிறது. தெருவுக்கு அந்தப் பக்கம் பள்ளிக்கூடத்தின் பழைய விளையாட்டு மைதானம்,
தண்ணிர்தான் நன்றாக விடாயத்தது. எங்கே குடிக்கலாம்? அந்தா அந்தத் தகர மறைப்பின் பின்னால் சிவத்தார் வீட்டுக் கிணற்றடி. வேலிக்கப்பாலும் முருகேசர் வளவுத் துலா தெரிகிறது. முழத்திற் கொன்றாய்க் கிணறுகள் மாரிக்கு முட்டி வழிந்தபடி! ஆனால்? நினைக்க நினைக்க.
இப்படியே இந்தப் புல்லில் படுத்துவிட வேண்டும் போல் அசதியாயிருந்தது. தங்களைக் காணாமல் முகாமில் என்ன பாடு படுகிறார்களோ. இதெல்லாவற்றையும் அநுபவிக்கட்டு மென்று தான் இப்படித் தடுத்து வைத்திருக்கிறான்கள்.
என்ஜினை ஒரு தடவை ஓங்கி ஒலித்துவிட்டு லொறி மாவின் கீழ் வந்து மெளனமாய் நின்றது.
ஷக்திமான், சாணிநிற உடம்பில் தூசி - இந்த மாரியிலும் சில்லுகளில் சேறு. ட்றைவர் குதித்தான். வேறெவரும் வந்ததாயில்லை. குதித்தவன் தொப்பியைக் கழற்றியபடியே. முன்னால் நின்ற ஆளிடம் ஏதோ உரத்துச் சொன்னான். பாணி பாணி என்று கேட்டது மற்றவன் பதில் பேசாமல் வீட்டின் பின்னால் போகிறான். ட்றைவர் முகத்தைத் துடைத்தவாறே இவர்கள் பக்கம் பார்ப்பது தெரிந்தது - கிருஷ்ணன். பார்வையைத் திருப்பிக் கொண்டான்.
வெய்யில் ஏறிக் கொண்டிருக்கிறது. முகாமைவிட்டுப் புறப்பட்டு இரண்டரை மணித்தியாலம்.
வீட்டின் பின்னாலிரிருந்து ஒருவன் வருகிறான். ட்றைவருடன்
63

Page 34
சாந்தனின் எழுத்துலகம்
பேசிவிட்டுப் போன அதே ஆள். கையில் பெரியவெள்ளிச் செம்பு, சிவத்தார் வீட்டுச் செம்போ? ட்றைவர் போய் நீட்டுகிறான். ட்றைவர் அண்ணாந்து மடமடவென்று குடிப்பதைப் பார்க்க, கிருஷ்ணனுக்கு இன்னும் விடாய்த்தது.
சிங்கர் காலை நீட்டி நெட்டி முறித்தார்.
“எழும்புவமா?” "ம்ம்.” கிருஷ்ணனும் எழும்பினான்.
எவருமே பார்க்கவில்லை.
தண்ணிர் குடித்தவன் புறங்கையால் வாயைத் துடைத்த வாறே செம்பைக் கொடுக்கிறான். அவன் தங்களைப் பார்க்கிறானோ?. இங்கேதான் வருகிறானோ?.
இரண்டடி முன்னால் வைத்த ட்றைவர். மீண்டும் மற்றவனைக் கூப்பிட்டுச் செம்பை வாங்குவது தெரிகிறது. இவர்களை நோக்கி வருகிறான்.
"தண்ணி குடிக்கிறீங்களா?.” அருகில் வந்ததும் செம்பை ட்டினான். கமிமனா? g தமிழا " اظہ
என்ன செய்யலாம்? சிங்கர் தயங்கியபடி வாங்கினார்.
"நீங்க தமிழ் ஆளா?”
"குடியுங்க.”
“எங்களை ஏன் இப்பிடி நிக்கச் சொல்லியிருக்கு?.” குமுறலுடன் கேட்டான் கிருஷ்ணன்.
“என்ன ஆச்சு?.” சொன்னார்கள்.
“விட்டுருவாங்க.” என்றான் கேட்டுவிட்டு.
'. விசாரிக்கிறாங்க நோ ப்ராப்ளம். குடியுங்க.”
"நீங்கதான் ஒரு ஆள். இவ்வளவு நேரத்துக்கு. இப்பிடி வந்து மனுசத்தன்மையாக் கதைச்சிருக்கிறியள். தண்ணியும் தந்து.”
“என்ன்தா இருந்தாலும் நாம ஒரே ஆளுங்க இல்லியா?”
64
 

சாந்தனின் எழுத்துலகம்
, a o ༡༡ “உங்கட பேரென்ன?. சிங்கர் கேட்டார்.
ᏓᎶ 39
கோபாலன்,
குடித்துவிட்டுச் செம்பை கிருஷ்ணனிடம் நீட்டினார். தண்ணிர் நாக்கு. தொண்டை, நெஞ்செல்லாம் நனைத்து சில்லென்று இறங்கியது.
"நான் மலையாளத்துக்காரன். வர்றேன் சார்.”
- அவன் அவசரமாகச் செம்பை வாங்கிக்கொண்டு திரும்புவதாகப் பட்டது. லொறியை நோக்கி நடந்தான். சிங்கரும் கிருஷ்ணனும் ஆளை ஆள் பார்த்துக் கொண்டார்கள். என்ன நடந்தது இவனுக்கு? எங்களுடன் பேசிக் கொண்டிருந்ததை யாராவது பார்த்துவிட்டார்களா? அல்லது பார்த்துவிட்டால் என்ன பயமா? தான் தமிழன் என்ற ஒப்புக்கொள்ள இவனைத் தடுப்பது எது?
எல்லாமே புதிராக இருந்தது?
"இருப்பம்.”
மீண்டும் புல் சணைப்பில் குந்தினார்கள். புல் மணத்தது.
O
எவ்வளவு நேரம் இருக்க வேண்டும் இன்னும்? என்ன நடக்கப்
போகிறது?. உடலே ஒய்ந்த மாதிரி.
இடதுபுறம் - ஒழுங்கை மறைவில் - அத்தனை பேரும் இருக்கிறார்களென்றே படுகிறது. போர்ட்டிகோவில் அதே ஐந்தாறு பேர்தான். ஆனால் வீட்டிலுள்ளும் பின்னாலும் எத்தனை பேரென்றே தெரியவில்லை.
ஒருவர் கூட இவர்களிடம் வரவே இல்லை - அந்த கோபாலனைத் தவிர. அவன் எங்கே? வேலி வெட்டிய ஆட்களெல்லாம் எங்கே? பீடிப்புகை. நெய்மணம். சமையல்புகை. வாகனங்களின் அருகாமையில் கிளம்பும் L(ஐதியும் பெற்றோலும் கலந்த நெடி, பச்சைப்புல் வாசம் - என்று ஒ வொன்றையும் சுமந்து அலைந்த காற்று. இருந்தாற் போல இரைந்து கடந்தது. தென்னோலைகள் அலையாய் அசைந்தன. திட்டுத் திட்டாய் விழுந்து கிடந்த வெய்யில் ஒடிஒடி. உருமாறி. இந்த மாரியிலும் நல்ல வெக்கை.
65

Page 35
சாந்தனின் எழுத்துலகம்
சிங்கர் கந்தர்சஷ்டி கவசத்தை முடித்துவிட்டு தேவார மொன்றை வாய்க்குள் மெல்ல - மிகமெல்ல - சொல்லிக் கொண்டிருக்கிறார்.
"நாமார்க்குங் குடியல்லோம். நமனை அஞ்சோம்.”
நேரம் பன்னிரெண்டு இரண்டு. கிருஷ்ணன் மணிக் கட்டைப் பார்க்கும் போதே அந்தக் கறுத்தப் பிளாஸ்ரிக் டிஜிற்ரல் கடிகாரத்தில் இரண்டு மூன்றாக மாறிற்று - தோன்றித்தோன்றி மறைகிற புள்ளிகளில் தெரியும். அதன் உயிர்த்துடிப்பு.
இந்தப் பிரச்சினை மட்டும் இல்லையென்றால் இந்த நேரம் உச்சிவேளைப் பூசைக்காக ஒலிக்கிற கோவில் மணிகள் எல்லாப் பக்கமும் கேட்கத் தொடங்கியிருக்கும்.
இருந்தாற் போல சடசடசென்று சூட்டுச் சத்தந்தான் கிழக்கே கேட்டது. கிருஷ்ணன் சிங்கரைப்பார்த்தான். துப்பாக்கிகள் ஆக்ரோஷமாய்க் குரைக்கத் தொடங்கின. கிழக்கேதான் கிட்டவுமில்லை. தூரவுமில்லை.
“சண்டைதான்.”
எங்கள் பாடு? முகாமிலிருக்கிறவர்கள் பாடு?
வேட்டொலிகள் விடாமல் கேட்டன. இருபுறமும் மாறி மாறி கூடியும் குறைந்தும் ஒன்றுக்குள் ஒன்றாய் ஒன்றை மீறி மற்றதாய்.
இனி.? - கிருஷ்ணன் முழங்கால்களில் கைகளைக் கட்டியபடி குனிந்து கொண்டான். மயிர்கலைந்த தலையின் நிழல் முன்னால் விழுந்தது.
வீட்டுப்பக்கம் ஏதோ அசைவு தெரிந்ததில் திரும்பினார்கள் சிப்பாய்கள். வரிசையாக பெரியதொரு பாம்புபோல் சரசரவென்று அந்த வரிசை. சந்தடியில்லாத அந்த வேகம் பயமாயிருந்தது. உருமறைப்புச் சீருடைகள். இரும்புத் தொப்பிகளை மறைத்த பச்சை மிலாறுகள். ஹோல்ஸ்ரரும் தயாராய்ப் பிடித்த துவக்குகளுமாய் முழங்கால்களருகில் உப்பியிருக்கிற பைகளில் கைக்குண்டுகளோ? நிதானமாய்ப் பதியும் கனத்த காலணிகள்.
வரிசை இப்படித்தான் வருகிறது முன்னே வந்தவன் நெருங்குகிறான்.
எழும்பலாமா? - வேண்டாம். இப்போ எழும்பினால் பிரச்சினை. கை கால்களை அசைக்க முடியாத மாதிரியும் இருந்தது. சிங்கரும்
66

சாந்தனின் எழுத்துலகம்
எழும்பவில்லை. எழும்பாமலே யிருந்தார்கள். வந்து கொண்டிருநதவர்களுக்கு இவர்கள் கண்ணிலேயே படவில்லைப்போலும் தம்பாட்டில் கேற்றில் இவர்களைக் கடந்து திரும்பி. அங்கு ஒழுங்கையில் ஏற்கனவே இருந்தவர்கள்.?
வரிசை வந்தபடியேயிருந்தது. எத்தனை ஆட்கள்!
உயரமான ஒரு மெல்லிய சிப்பாய் தும்புக்கட்டு மீசையும் ஆளுமாய் வரிசையில் சேராது அருகோடு வந்தான். முதுகில் வயர்லெஸ். ஒடாக்குறையாகத் தாண்டிப்போனான். ஏரியல் உயரமாய் தென்னங் கீற்றுப்போல் அவன் நடைக்கேற்ப துடித்தசைத்தது.
இப்போது வருகிறவர்கள் இடைக்கிடை இவர்களையும் கவனிக்கிறார்கள். ஒருவன் ஏதோ சொல்லிவிட்டும் போகிறான்.
இருநூறு பேராவது தாண்டியிருப்பார்களா? இன்னமும் வருகிறார்களா..? அடுத்த பக்கத்து வளவுக்குள்ளும் ஆட்களிருக்க வேண்டும்.
அந்த அம்புலிமாமா ஆள். அவன் பெயர் அதற்குள் மறந்துவிட்டது. போர்ட்டிகோவிலிருந்து வெளியே வருகிறான். அதே கறுப்புச் சீருடை. இப்போ தொப்பி அணிந்து கொள்கிறான். அவன் முதுகிலும் ஒரு வயர்லெஸ்.
பின்னால் இரண்டு பேர் தொடர வேகமாக வருகிறான்.
ஆளைப் பார்த்தால் கம்பீரமாய்த்தானிருக்கிறது. இந்திப்பட நடிகனாய்ப் போயிருக்க வேண்டியவன் இல்லை. நடிப்பென்று பார்த்தால் அந்த பி.கே.சிங்கை யாரும் மிஞ்ச முடியாது! என்ன மாதிரிப் பேசி இங்கே அனுப்பினான்!
கப்டன் நெருங்கித் தாண்டியபோது இவர்களைப் பார்த்தான். போகிற போக்கில் சொன்னான்.
'நீங்கள் போகலாம்!”
சொல்லிவிட்டுப் போனான்.
D
ஒன்றுமே விளங்கவில்லை.
இப்போது போகச் சொன்னால் - போகலாமா?. சில வேளை.
67

Page 36
சாந்தனின் எழுத்துலகம்
நினைத்ததும் மீண்டும் நெஞ்சிடித்தது- போகச் சொல்லி விட்டு.? “இப்ப போ எண்டா இதென்ன?’ - சிங்கரும் குழம்புவது தெரிகிறது. "போவம்?’- கிருஷ்ணன் திரும்பிப் பார்த்தான்.
கப்டனைக் காணவில்லை.
“பாப்பம். இவங்கள் போய் முடியட்டும். இப்ப எழும்பினாலும் பிழை.” சரிதான் போகட்டும். வரிசை வந்து கொண்டேயிருந்தது. இவங்களுக்குள் - எங்களால் ஆளை ஆள் வித்தியாசங் கண்டுபிடிக்க முடியுமா? ஒரே சாயல் ஒரே நிறம் ஒரே உயரம்.
தன்னையறியாமலே தான் அவர்களைக் கவனிப்பதைக் கிருஷ்ணன் உணர்ந்தான். வேண்டாம். ஏதாவது நினைத்தாலும். அங்கே பார்க்கக் சடடTது.
வலப்பக்கம் யாரோ ஒடி வருவது மாதிரி.
திரும்பினான்.
ஐந்நூறு பேருக்கப்பால் வருகிற ஒருவன் வரிசையை விட்டு விலகித் தங்களை நோக்கிக் கத்தியபடி ஓடி வருவது தெரிகிறது! நீட்டிய துவக்கு.
என்ன இது? ஏன் மற்றவர்கள் பிடிக்கவில்லை? ஆவேசங் கொண்டு அவன் கத்துவது இந்தியிலா என்று கூடத் தெரியவில்லை.
கடைசிச் சொல் மட்டும் புரிந்தது.". எல்ரிரிஈ'அவன் உறுமியபோது நெற்றியை மறைத்து மயிரும், கொலைவெறி துள்ளும் கண்களுமாய் அவன்
முகம். மூன்றடிக்கு முன்னாலிருந்தது. ஏறிட்டுப் பார்த்த கிருஷ்ணனின் நெஞ்சில் துப்பாக்கி இடித்தது. கண்களை மூடிக் கொண்டான்.
D
தானும் அப்போது மூடிக் கொண்டதாகச் சிங்கர் பிறகு சொன்னார்.
1994

LJJJ 653535 (66) J356ir
69

Page 37

f
ஒளி சிறந்த நாட்டிலே.
61ன் இடப்பக்க ஆசனத்தில் ஒரு சின்ன சஸ்பென்ஸ் இருந்தது. ஒரு சிறிய பிரயாணப்பை மட்டுமே. அது யார்? எந்த தேசம்? எப்படியிருப்பார். பத்துமணி நேரத்திற்கான என் சகபாடி?
நல்ல நிலவெறிக்கும் ஒரிரவின் விமானப் பயணம் பற்றிய சில எதிர்பார்ப்புகள் எனக்கிருந்தன.
'ஏரோஃபுளொத் பிரதி திங்களிலும் வியாழனிலும் கொழும்பிலிருந்து புறப்படுகிறது. என் பயணம் தோதாக ஒரு வியாழனில் வந்தது - புதன் பெளர்ணமி. புறப்படும் நேரம் மாலை ஐந்தரை, நேரங்களையும் வேகங்களையும் கணக்குப் போட்டுப் பார்த்தால் பயணம் நெடுக நிலவுங்கூட வருமென்றே பட்டது. இது கூடிய பட்சம் தெற்கு வடக்கான பயணம். வலப்புற இருக்கையொன்றில் ஜன்னலுக்கருகே இடங்கிடைத்தால் நன்றாயிருக்கும்.
ஆனால், இடப்புறத்தில் வலதுபக்க ஸிற்தான் எனக்குக் கிடைத்தது.
மாஸ்கோ போய்ச் சேரு மட்டும் என்ன செய்யப் போகிறேன் என்ற பிரமிப்பு.
மற்ற வரிசைகளைப் பார்த்தேன். திருப்தியாக இருந்தது. ஆனால் கூடவே
ஒரு மனநோவும், அரைக்கரைவாசி தமிழ் இளைஞர்கள். கூடிய பட்சம்
யாழ்ப்பாணத்திலிருந்து வருகிறவர்கள். தம் வாழ்வின் வசந்தங்களைத்தேடி
ஐரோப்பிய நாடுகளுக்குப் போகிறவர்கள். அவர்களிற் சிலருடன் விமான நிலையத்திலேயே பேச முடிந்திருந்தது.
71

Page 38
சாந்தனின் எழுத்துலகம்
சின்ன நீள் வட்ட ஜன்னலுக்கு வெளியே தூரத்தில் தென்னை
வரிசைகள்.
பக்கத்து இடத்திற்கு யாரோ வந்தது மாதிரி இருந்தது. விலகினேன். அறுபது வயதாவது இருக்கும். வெள்ளைக்காரர் வழுக்கைத் தலையும் கண்ணாடியும். மொத்தமாயிருந்தார். என்னைப் பார்த்துத் தலையசைத்து விட்டு உட்கார்ந்தார்.
தலைக்கு மேலேயிருந்த சின்ன ஒலிக்கருவி கரகரத்தது. கப்டனும் அவர் சகாக்களும் எங்களை வரவேற்றார்கள். இன்ன உயரத்தில் பறக்கப் போகிறோம். இத்தனை பாகை வெப்ப நிலை.
இயந்திரம் சுருதி மாறியது. மெல்ல அசைந்து முன்னே போய், திரும்பி, ஓடி, விரைந்து அந்த இல்-62 மேலே எழும்பியது. தென்னந்தோப்புகளும் கட்டிடமுங் கீழே போயின. வெய்யில் ஒவ்வொருக்கால் முகத்திற்பட்டது. கடல் - மஞ்சள் வெய்யிலில் மின்னுகிற நீலக்கடல், இலங்கையின் கரைகள்.
டக்கென்று மேகமண்டலம் கீழே போய்விட்டது. "மாஸ்கோவுக்கா போகிறீர்கள்?”
பக்கத்திலிருந்த கிழவனார் வினவினார். உப்பிய கன்னங்களுந்
தலையும் ஹிட்ச்கொக்கை நினைவுபடுத்தின.
G, و و
ஆபி.
அவர் - பெயர் மறந்துவிட்டது - பரீஸில் வசிப்பவர். தச்சுவேலை
செய்கிறார். மகன் என்ஜினியர். இலங்கைக்கு சுற்றுலா வந்தார். ஒரு மாதம்
மட்டில் நின்றிருக்கிறார். பல இடங்களும் பார்த்தார். சோக்கான இடம்.
அருமையான மனுசர்கள்.
“யாழ்ப்பாணம் தெரியுமா?”
தெரிந்திருக்கவில்லை. நான் அந்த ஊர் என்று சொன்னேன். வெய்யில் சுவறிய மேகங்கள்தாம் கீழே அடர்ந்து கிடந்தன.
“இந்தியாவுக்கு மேலே போய் கொண்டிருக்கிறோம்.” என்றார் கிழவர்.
த9 "மாஸ்கோவுக்கு படிக்கவா போகிறீர்கள்?
72
 

சாந்தனின் எழுத்துலகம்
“இல்லை; ஒரு கலாச்சார சுற்றுலா - ஒரு மாதம்.”
இலங்கை - சோவியத் நட்புறவுக் கழகத்திற்கு 1982ல் இருபத்தைந்து ஆண்டுகள் நிரம்பின. வெள்ளிவிழாக் கொண்டாட்டத்தில் கட்டுரைப் போட்டிகளையும் நடத்தினார்கள். தமிழிலொன்று, சிங்களத்திலொன்று. ஒவ்வொன்றிலும் முதற்பரிசு சோவியத் யூனியனில் சுற்றுலா, ஆஹாவென்றிருந்தது. ஆனால், இந்த விபரந் தெரியவந்த போது, பத்து நாட்கள் கூட மீதமிருக்கவில்லை முடிவு தேதிக்கு. தந்த தலைப்புகளிலொன்றைத் தெரிவு செய்தேன். 'சோவியத் சமாதான முன் முயற்சிகள் தேவையான தகவல் களைத் திரட்ட வேண்டியிருந்தது. யாழ்ப்பான அபிவிருத்திச் சபையின் எங்கள் வட்டார உபஅலுவலகத்தில் நூலக மொன்றிருக்கிறது- ஆனைக்கோட்டையில், சோவியத் சஞ்சிகைகள் நூல்கள் அங்கு நிறைய. இரண்டோ மூன்று நாட்கள் லீவு போட்டேன். நாலைந்து இரவுகள் கண் விழிக்க நேர்ந்தது. எழுதி முடித்துவிட்டுப் பார்த்தபோது, இருபது பக்கங்கள். அவர்கள் கேட்ட அளவிற்குப் பத்துப் பக்கங்கள் மட்டில்தான் வரும். சரிபாதி கருக்க வேண்டும். அது பிரச்சினையாக இருந்தது. படித்துப்படித்து அடர்த்தியைக் கூட்டினேன். மீண்டும் மீண்டும் எழுத நேர்ந்தது. ஏழெட்டுத் தரம் என்று நினைவு. குடும்பத்தவர்களையும் இரண்டு சகாக்களையும் கொஞ்சம் கொஞ்சம் கஷ்டப்படுத்தினேன். திருப்தியாக எழுதி, தட்டச்சில் பதிப்பித்து முடித்தபோது, முழுசாக மூன்று நாட்கள் மீதியிருந்தன. தபாலிற் போட்ட பின் புதிதாக ஒரு கவலை முளைத்தது; நேரகாலத்திற்குப் போய்ச் சேருமா?
ஒராண்டின் பிறகு, 83 ஜூலையின் முதல் வாரத்தில் சாதாரணமாக வந்த ஒரு தபால், என் வாழ்வின் பெருமகிழ்ச்சிகளிலொன்றைத் தன்னுள்ளே கொண்டிருந்தது. நாட்டு நிலைமைகள் பிறகு அது இது என்று ஒராண்டு.
இந்த ஜுனில் காலம் வந்தது. அதிலும் ஒர் சிக்கல் - என் விடுமுறை, அமைச்சினால் அங்கீகரிக்கப்பட்ட தகவல் வந்து கிடைப்பதில் ஏற்பட்ட தபால் தாமதம். நட்புறவுக்கழகத்தினர் புறப்படக் கேட்டிருந்த திகதிக்கு மூன்று நாட்கள் பிந்தித்தான் அது வந்தது. நான் புறப்பட்டபோது முழுதாக ஒரு வாரம் கடந்து விட்டிருந்தது.
இதைப்பற்றி நட்புறவுக் கழகத்தின் காரியதரிசி திரு. கருணாதிலக்க
73

Page 39
சாந்தனின் எழுத்துலகம்
கொழும்பிலிருந்து விமானநிலையம் வரும் வழியெல்லாம் சொல்லிக்
கொண்டே வந்தார். -
"நீங்கள் அங்கே வருகிற புதிய திகதியை மாஸ்கோவுக்கு
அறிவித்திருக்கிறோம். அந்தத் தகவல் போய்ச் சேர்வதில் தாமதமேற்பட்டால்
உங்களை அழைத்துப்போக யாரும் வர மாட்டார்கள்.”
இலேசாகப் பயமாயிருந்தது.
"பயப்பட வேண்டாம். இது மாஸ்கோ நட்புறவு இல்லத்தின் முகவரி. இது தொலைபேசி எண்.”
“சமாளித்துக் கொள்வேன்.” என்று சொல்லியிருந்தேன்.
இப்போது மீண்டும் மெல்லிய பயம். திரும்பி ஆங்காங்கிருந்த தமிழிளைஞர்களைப் பார்த்தேன். அவர்களின் பயணங் களுடன் பார்க்கும்போது இது எவ்வளவு இலேசானது? வெளியே இன்னும் வெய்யில் தெரிந்தது. எட்டுமணி, இந்த உயரத்திலும் இந்தத் திக்கிற்கும் - நேர வேறுபாட்டோடு - இப்போது வெய்யில் சாத்தியம் என்றே பட்டது. நிலவைக் காணவே முடியாதோ என்றிருந்தது.
உணவு வந்தது. சாப்பிட்டு முடித்த பின்னும் தட்டில் பாதிக்கு மேல் மீதியிருந்தது. அசைவம் என்று தெரிந்தவற்றை யெல்லாம் ஒதுக்கி வைத்ததில் வந்த விளைவு.
“போகிற இடத்தில் கஷ்டப்படப் போகிறீர்கள்.” என்று பிரெஞ்சுக் கிழவர் சிரித்தார்.
சாப்பிட்டவுடன் மெல்லிய தூக்கம் வந்தது. வழியில் அபுதாபி வந்தது. நிலவு மட்டும் வரவில்லை.
அபுதாபியில் பிரயாணிகள் மண்டபம் வலுவடிவா யிருந்தது. நீண்டெழுந்த நடுத்தண்டில் விதானம் விரித்திருந்தது. நீலமாக, உயரமாக, வழுவழுத்த ஒட்டு வேலைப்பாடு எல்லாம். கெமராவைக் கொண்டு வர விட்டிருந்தால் நன்றாயிருந்திருக்கும்.
அங்கிருந்து புறப்பட்ட சிறிது நேரத்தில் சோவியத் யூனியன் பிரதேசத்திற்குள் வந்து விட்டதாகச் சொன்னார்கள். பறத்தலில் கிட்டத்தட்ட
74

சாந்தனின் எழுத்துலகம்
அரைவாசி சோவியத் எல்லைக் குள்ளேயே, மத்திய ஆசியக் குடியரசு களையும், ருஷ்ய சமஷ்டிக் குடியரசின் பெரும் பகுதியையும் தாண்டியே மாஸ்கோ இருக்கிறது.
புதிய நாகரிகமொன்றைப் படைத்துக் காட்டிய பெருமைக் குரிய சோவியத் யூனியன், உலகின் மிகப்பெரிய நாடு.
கிட்டத்தட்ட இரண்டேகால் கோடி சதுரக்கிலோ மீற்றர் பரப்பு இரண்டு கண்டங்களிற் பரந்திருக்கிறது. ஆஸ்திரேலியாவைப்போல் மூன்று மடங்கு. அதன் மேற்குப் பகுதிகளில் இருள் கெளவும்போது கிழக்குப் பிரதேசத்தில் இன்னொரு நாள் விடியுமாம்.
பூகோளத்தின் வேறுபட்ட சீதோஷ்ண நிலைகளையும் இயற்கை அமைப்புகளையும், தாவர விலங்கினங்களையும் தன்னுள் அடக்கியது. அதன் கரைகளைப் பன்னிரெண்டு கடல்கள் வருடுகின்றன.
சனத்தொகையைப் பொறுத்தளவில், சீனா இந்தியாவுக்கு அடுத்ததாக - மூன்றாவது இடத்தில் இருக்கிறது. கிட்டத் தட்ட இருபத்தேழு கோடி, அடர்த்தி போதாது. நூற்றுக்கும் மேற்பட்ட தேசிய இனங்களும், இனக் குழுக்களும் உள்ளன. நாட்டின் சனத்தொகையில் பாதிக்கு மேலான ருஷ்யர் களிலிருந்து, ஆக அறுநூறு பேர்களை மட்டுமே கொண்ட அல்யூத்கள் வரை இதிலடங்குவர்.
சோவியத் ஒன்றியத்தின் உறுப்பினர்கள் இறைமை மிக்க பதினைந்து குடியரசுகள், ஒவ்வொன்றிலும் பல்வேறு சுயாட்சிக் குடியரசுகள், சுயாட்சி மாநிலங்கள், சுயாட்சிப் பிரதேசங்கள் என்பன அடங்கும். இனங்களின் சுதந்திரமான, சுயநிர்ணய உரிமைப் பிரயோக மூலமும் மற்றும் சமதையான குடியரசுகளின் சுய விருப்பின் பேரிலும், 1922-ல் சோவியத் ஒன்றியம் தோற்றம் பெற்றது. ருஷ்ய சமஷ்டி, உக்ரேன், பைலோருஷ்யா, உஸ்பெகிஸ்தான், கஸாக்ஸ்தான், ஜோர்ஜியா, அஸர்பைஜான், லித்துவேனியா, மொல்தேவியா, லத்வியா, கிர்கீஸியா, தஜிக்கிஸ்தான், ஆர்மேனியா, துருக்மேனியா, எஸ்தோனியா - ஆகிய ஒவ்வொரு குடியரசும் அதனதன் தனித் தன்மைக்கேற்றபடி தனி அரசியல் யாப்பினையும், தேசிய கீதம், கொடி, சின்னம், தலை நகரம் மற்றும் ஆட்சிபீடம் யாவற்றையும் கொண்டுள்ளன. ஒன்றியத்திலிருந்து விரும்பினால் விலகிக்கொள்ளும் உரிமையையும் கூட
75

Page 40
சாந்தனின் எழுத்துலகம்
இந்த சமத்துவ சகோதரக் குடியரசுகளில் மூத்தது ருஷ்ய சோவியத் சோஷலிஸ் சமஷ்டிக் குடியரசு. -
ஒலிக்கருவி என்னை விழிப்புறச் செய்தபோது, எல்லோரும் பரபரப்புற்றிருந்தார்கள். முதலில் ருஷ்யனிலும் பிறகு ஆங்கிலத்திலுமாக, மாஸ்கோவை அணுகிக் கொண்டிருக்கிறோமென்று அறிவிப்பு வந்தது. ஐந்தாகிக் கொண்டிருந்தது - இலங்கை நேரம்.
"மாஸ்கோ நேரம் சரியாக ஒன்றரை மணித்தியாலம் பிந்தி." என்று சொன்னார்கள். மாற்றிக் கொண்டேன்.
கீழே ஷெர்மெத்தியேவோ விமான நிலையத்தின் விளக்குகள் நெருங்கி வந்தன. மனம் படபடத்தது. குளிராயிருந்தது. பிரெஞ்சுக்காரரிடம் விடைபெற்றுக் கொண்டு இறங்கினேன்.
குடிவரவு, சுங்கப் பகுதிகளில் சுணக்கமில்லை. இடையில் ட்ரான் ஸிற் பயணிகளான வயதான ஒரு இந்தியத் தம்பதிகளுக்கு எல்லாந் தெரிந்தவன் போலக் கொஞ்ச உதவி செய்ய முடிந்தது. வெளியே வந்தபோது, விமான நிலைய மணிக்கூட்டில் சரியாக நாலுமணி.
1985
76

2
காட்டு வெளியிடை
2003 (8. மாதத்தில் ஒரு வெள்ளிக்கிழமை, மாலை நாலு மணி. வானம் இருண்டு படபடவென்று கனத்த தூறலாய் மழை துமித்துக் கொண்டிருந்தது. அந்த வானத்திலும் பார்க்கக் கறுத்தடர்ந்திருந்த ஆப்பிரிக்கக் காடொன்றின் நடுவே சப்பாத்தின் கீழ் சரளைக் கற்கள் சரசரக்க நடந்து கொண்டிருந்தேன். திடீரென்று எல்லாமே கனவு போலிருந்தது. இருந்தாற் போல யாழ்ப்பாணத்திலிருந்து யாரோ என்னைத் தூக்கி கடல் மட்டத்தின் மேலே 2200 மீற்றர் உயரத்திலிருக்கிற அந்தக் கென்ய மலையின் மழைக் காட்டு இருளில் வீசி விட்ட மாதிரி
அது நடுக்காடு தானென்றாலும நடுவில் ஒரு பாதை போய்க் கொண்டிருந்தது. ஆறடி அகலம் இரண்டு புறமும் கறுத்தப் பெயின்ரோ, சொலிக்னமோ அடித்துக் கன்னங்கரே லென்றிருந்த மரக்குற்றிகளாளான பலமான உயர வேலி, காலடியில் கிடந்த சரளையும் கருங்கல் காடும், வேலிக்கு மேலால் எட்டிப் பார்த்து முகத்தை வருடியது அதன் சுவாசம் குப்பென்று மூக்கிலடித்தது. ஏதேதோ மிருகங்களின் சிணியும் மரங்களின் மணமும் கலந்த சுவாசம். தெஹிவளை மிருகக் காட்சிச்சாலை நினைவு வந்தது. ஆனால் அது நிழல், இது நிஜம் அங்கே மிருகங்கள் கூட்டில், நாங்கள் வெளியில், இங்கே மிருகங்கள் வெளியில், நாங்கள் கூட்டில்,
மலை விடுதியின் பணியாள் ஒருவர் ஓடி வந்து ஆளுக்கொரு குடையைத் தந்தார். பாதை அந்த விடுதியை நோக்கித்தான் போய்க் கொண்டிருந்தது. எங்கள் வான், விடுதிவாசல், வரை வர இயலாமல் எல்லை
77

Page 41
சாந்தனின் எழுத்துலகம்
முகத்திலேயே நின்று விட்டது. பன்னிரண்டரை மணியிலிருந்தே அந்த முகத்தில் எதிர்பார்த்திருந்த விடுதிச் சிப்பந்திகள் கையசைத்த படி விரைந்து வந்தார்கள். நாங்கள் இறங்கியபோது மழை தூறத் தொடங்கியிருக்கவில்லை.
காடும் வானமும் இருள் மண்டியிருந்தன. அந்த ஐந்தாறு பேரும் இறங்கிய எங்களைச் சூழ்ந்து கொண்டார்கள்.
“ஜாம்போ!...” ஒரே குரலில் வரவேற்றார்கள். வானில் வந்த நால்வரைவிட இருந்த வேறு ஆட்கள் அங்கு அப்போது அவர்கள் மட்டும்தான்.
ஆப்பிரிக்கர்களை முன்னர் பல தடவைகள் பார்த்திருக் கிறேன். சில தடவைகள் பழகியுமிருக்கின்றேன். கொழும்பில் கொஞ்சக் காலம்; மொஸ்கோவில் இருந்த போது, எல்லாம் மொஸ்கோ லுமும்பா பல்கலைக்கழகத்தில் அரைக்கரைவாசி ஆப்பிரிக்க மாணவர்கள் தாம் படித்துக் கொண்டிருந்தார்கள். அந்தக் கறுப்பில் தான் எத்தனை வகை பல்கலைக் கழகமிருக்கிற மிக்ளூஹா மக்ளயா தெருவின் அந்தப் பகுதியை மொஸ்கோ வாசிகள் ஆப்பிரிக்கா என்றே வேடிக்கையாகக் குறிப்பிடுவார்கள். அங்கிருந்த ஆறுவார காலத்தில் இரண்டு வாரம் என் அறை சகாவாக இருந்தவர் கூட ஒரு ஆப்பிரிக்கர். கானாவைச் சேர்ந்த கலாநிதி அச்சிம் பொங். ஏன் அவ்வளவு? அந்த அன்று காலையில் நைரோபி விமான நிலையத்தில் இறங்கியதிலிருந்து கண்ணிற்படுகிறவர் களெல்லாம் (அயூப் விதிவிலக்கு) அவர்களே என்றாலும் இப்போது இதென்ன? இந்தக் காட்டு மத்தியில் பளபள வென்று மின்னுகிற கருநிறத்தில், சிரிப்பால் முகத்தில் பளிரிடும் பற்களும் கண்களுமாய் சாம்பல் நிற சீருடையுடன் சூழ நின்று அவர்கள் முகமன் கூறியபோது குறுகுறுத்தது என்ன?
அவர்களிருவரைச் சைகைசெய்து அயூப் வானின் பின் கதவைத் திறந்துவிட்டார். அயூப்புக்கு அவர்களெல்லோரும் மிகவும் பழக்கமானவர்கள் என்றே தெரிந்தது. அடிக்கடி சுற்றுலாப் பயணிகளை அழைத்துக்கொண்டு இங்கு வருவார் போலும்.
பாதை வளைந்து வளைந்து போனது. காட்டிருளும் மந்தாரமும் மாறுவதாயில்லை. மழையின் மெல்லிய இரைச்சல், சரளைக் கற்களின்
78

சாந்தனின் எழுத்துலகம்
சரசரப்பு, காட்டின் மூச்சுக்காற்று, எங்கள் பயணப்பைகள் எங்கே? அந்த இருவர் மாத்திரம் எங்களுக்கு முன்னால் போய்க் கொண்டிருந்தார்கள். அயூப்பைக் கூடக் காணவில்லை. செல்வாவைத் திரும்பிப் பார்த்தேன். எந்தச் சலனமுமில்லாமல் நடந்து கொண்டிருந்தார். அருகே விமுக்தி, அதே மாதிரி இருவர் முகத்தலும் களைப்பு வெளிப்படையாகவே தெரிந்தது. முதல்நாள் வியாழன். அதிகாலை மூன்றரை வெளிக்கிட்ட பயணம் கென்யாவுக்கும் இலங்கைக்குமான நேர வித்தியாசத்தை- இரண்டு மணித்தியாலம் - விட்டு விட்டுக் கணக்குப் பார்த்தால் கூட, முப்பத்தாறு மணித்தியாலத்திற்கும் மேலே ஒன்றரை நாள் அன்றைக்கு மட்டுமல்ல, அதற்குப் பிறகு வந்த அந்த ஒருவாரமுங்கூட அப்படித்தானிருக்கும் என்று அப்போது எங்களுக்குத் தெரிந்திருக்கவில்லை.
இருந்தாற்போல பக்கத்துப் புதரில் சலசலத்தது; ஏதோ பாய்ந்த மாதிரி திடுக்கிட்டு விலகினால், முன்னால் போன இருவரும் திரும்பிப் பார்த்துச் சிரித்தார்கள்.
"பயப்படாதீர்கள்.”
"அது ஒரு காட்டுப்பூனைதான்.”
இருவருமே ஆங்கிலத்தில் சொன்னார்கள். எங்கள் கண்களுக்கு ஒன்றுந் தெரியதாயில்லை. ஒருவர், நின்று சற்றுத் தாமதித்து எங்கள் பின்னால் வர ஆரம்பித்தார்.
பாதை மீண்டும் ஒரு வளையில் திரும்பியபோது, எதிரே திடீரென்று ஒரு கருங்கோட்டை தோன்றிற்று. வானைத் தொடமுயன்ற அந்தப் பெயரறியா மரங்களின் பின்னிருந்து ஏதோ மாயம் போல் வெளிப்பட்டது. அது கோட்டையல்ல. முற்று முழுதும் பெரு மரக்குற்றிகளால் அமைக்கப்பட்ட ஒரு இரு மாடிக் கட்டடம் என்பது புரியச் சில கணங்களாயின.
அந்த நேரம் பார்த்து, சூரியன் வெளிவந்தது. ஆயிரங்கோடி இலைகளும், சொட்டும் சிலிர் நீர்த்துளிகளும் அதனைப் பிரதிபலிக்க முயன்ற அவ்வேளையில் இருளும் ஒளியுமாய், வெயிலும் மழையுமாயிருந்த அப்பின்னணியில் அந்தக் கருங்காட்டுக் கோட்டை ஏதோ மந்திரமாளிகை போல மனதிற் பதிந்து போயிற்று.
79

Page 42
சாந்தனின் எழுத்துலகம்
பாலம்போல - மரப்பலகைகள் பரவியிருந்த - ஒடுங்கிய ஒரு வழியால், எங்கள் காலணிகளெல்லாம் டக்டக்கென்று பெரிதாகவே ஒசையெழுப்ப - பாதுகாப்பிற்காக அப்படிச் சத்தம் வரும் ஒரு அமைப்பை வைத்தார்களோ என்றும் ஒரு எண்ணம் தோன்றி மறைந்தது. நாங்கள் மலை விடுதி வாசலை அடைந்தபோது மழை முற்றாகவே விட்டிருந்தது. பறவைகளும் பல்வேறு பூச்சிகளும் கூடக் குரல் கொடுக்கத் தொடங்கியிருந்தன.
விடுதிவாசலில் அயூப் நின்றிருந்தார். அருகில் எங்கள் பயணப்பைகள் அதிசயமாக இருந்தது. அயூப் சிரித்தபடி காட்டிய திரையில் ஒரு இளம்பென், முகமெல்லாம் மலர்ச்சியும் கையில் ஒரு தட்டுமாய் நின்றிருந்தாள். அவள் பின் ஒரு இளைஞன், அவனுக்குப் பின்னால் ஒரு பெண், அவர்களும் அதே மாதிரி. மூவரின் உடைகளும் சாதாரணமாக - எங்கள் நாளாந்த உடைகளைப் போலவே இருந்தன. மூவர் வாயிலிருந்தும் மீண்டும் ஒரே குரலாய் ஒலித்தது. “ஜாம்போ' முன்னால் போன என்னிடம் முதல் பெண் தனது தட்டை நீட்டினாள். சோளப்பொத்தி அவித்தது மாதிரி வெள்ளையாக ஏதோ மூன்று அதிலிருந்தன. என்னவென்று புரியாமல், என்ன, எது என்று கண்ணால் கூட அயூப்பை விசாரிக்க முடியாத நிர்ப்பந்தத்தில், "ஜாம்போ.” என்று முனகியபடி, மெல்லக் கையை நீட்டி ஒன்றை எடுத்தேன். கதகதவென்று சூடாய், ஈரமாய், புசுபுசுவென்று புரிந்து விட்டது, துருக்கித் துவாய் வெந்நீரில் நனைத்து அழகாக வைத்திருக்கிறார்கள். வந்த விருந்தாளிகள் கைகளை முகத்தைத் துடைத்துக்கொள்ள எடுத்து மெல்லக் கைகளை ஒற்றிக் கொண்டதும், அடுத்து நின்ற இளைஞன் தன் தட்டை மெல்ல நீட்டினான். அது வெறுமையாக இருந்தது. துவாயை அதில் வைத்தேன். பின்னால் வந்த என் நண்பர்களிருவருக்கும் குழப்பங்கள் தீர்ந்திருக்கும். மூன்றாவது தட்டை நோக்கி முன்னேறினேன். அங்கு பிரச்சினையே யில்லை. மூன்று பெரிய கிளாஸ்கள் நிறைய பழச்சாறு
- கென்யப் பயணக் கட்டுரையின் பகுதி. 2004
8O

ចំg[5@g56r
81

Page 43

1.
பெரிய மனிதன்
cu வேளைகளில் இவன் தமிழன்’ என்று மற்றவர் களால் இனங்கண்டு கொள்ளாமல் விடப்படுவதுகூட, மிகவும் வசதியாய்ப் போய் விடுகிறது. எனக்கு அடுத்தாற்போல இருந்தவர் கன்னங்கரேலென்று இருந்தார். வெற்றிலைச் சிவப்பேறிய தடித்த உதடுகள், அந்தக் கறுத்த பகைப்புலனில் பளிச்சென்று பொருந்தின. ஒட்ட வெட்டப்பட்டிருந்த தலைமயிரும், உதட்டுக்கு மேலிருந்த அகன்ற மீசையும் விறைப்பாக நின்று பிரஷ்ஷை நினைவுப்படுத்தின. கண்களில் நாட்டுப்புறத்து அப்பாவித்தனம். நான்கு முழ வேட்டியும், வெள்ளைச் சட்டையும் துண்டுமாயிருந்தார். மலைநாட்டவர் போலத் தெரிந்தது.
"ஏனப்பா? இந்த பஸ் எங்கே போகுது’ - அவருக்கு அடுத்தாற் போலிருந்த பையன் உரத்த குரலில் கேட்டான். ஒரு கொழும்பு பஸ்ஸில், கொழும்பு வாசிகள் பேசிக்கொள்கிற தொனிக்கு மிக மேலாகவே அந்த ஸ்தாயி இருந்தது. குரலிலும் அப்பாவுடன் பேசுகிற தன்மை இல்லை. மச்சானை, அப்பா என்று கூப்பிடுவது போன்ற ஒலிப்பு.
இந்த இரண்டு விசேஷங்களாலும், அந்தப் பையனை ஒரு தரம் பார்க்க வேண்டும் போலிருந்தது. மெல்லத் திரும்பி, அவனது அப்பாவின் தோளுக்கு மேலாகப் பார்த்தேன்.
அப்பாவின் சிறிய உருவம் தலையை மட்டும் முன்பக்கத்தில் நாகரீகமாகப்
பொம்மவிட முயன்றிருந்தான். பத்து வயதளவிலிருந்தாலும், கன்னங்களும்
- 83

Page 44
சாந்தனின் எழுத்துலகம்
வாயும் ஒரு பாட்டா போலிருந்தன. கட்டியிருந்த சாரத்தை மடித்தவாறு ஒற்றைக் காலைத் தூக்கி ஸிற்றின் மேல் போட முயன்றான்.
பஸ் எங்கே போகிறது என்கிற விபரம் அப்பாவுக்குத் தெரிந்திருக்கவில்லை. "மாமாவைக் கேளு” என்று பார்வையைத் திருப்பாமலே பதில் சொன்னார். பாவங்களில்லாத முகம்.
பாரதியார் மீசையும், பட்டணத்துப் பொலிவு தெரிகிற முகமாக - சாரங் கட்டிக்கொண்டிருந்த மாமாவைப் பார்த்து,
“எங்கே மாமா இந்த பஸ் போகுது?’ என்று பையன் திரும்பவும் கேட்டான்.
“புறக் கோட்டைக்குப் போகுதடா - மாமா கல கலப்பாகவே பதிலளித்தார். பையனுக்கு இடது பக்கம் அப்பா. வலது புறம் மாமா.
மாமாவின் பதிலால், பையன் வளமாக மாமா புறமே திரும்பிக் கொண்டான் எனக்கு அவன் பிடரிதான் தெரிந்தது.
ஒன்றையொன்று பார்த்தபடி இரண்டே வரிசைகளில் இருக்கைகள் இருக்கிற பஸ், அது. பையனின் அப்பா, பையன், மாமா, இந்த வரிசை மற்ற இருக்கைகளெல்லாங் காலியாகவே கிடந்தன. எதிர் வரிசையில் எட்டுப்பத்து பேர்கள் இருந்தாலும் இரண்டே இரண்டு தமிழ்ப் பிறவிகள்தான். தூங்கி வழிந்து கொண்டிருந்த ஒரு பொக்கைவாய்க் கிழவியும், அவளருகே ஒரு சிறுமியும். இதனால், இவர்களுக்கு - இந்த மாமாவுக்கும் மருமகனுக்கும் - வேண்டியளவு சுதந்திரம் கிட்டியிருந்தது.
'இதெல்லாம் யாருடா வாங்கிக் கொடுத்தாங்க?’- அவன் கையில் கட்டியிருந்த பொம்மை வாட்ச், ஒரு சிறிய புல்லாங்குழல் - இவற்றைக்காட்டி, மாமா கேட்டார்.
"அயவள்தான் வாங்கித் தந்தது’ - பையனின் குரலில் யாழ்ப்பாணத் தமிழ் கமழ்ந்தது.
யாழ்ப்பாணத்தில் எங்கோ ஒரு வீட்டில் வேலைக்கு நின்றுவிட்டு, கொழும்புக்கு வந்து ஊருக்குத் திரும்புகிற ஒரு எஸ்டேட் பக்கத்துப் பையனாக இருக்க வேண்டும். அப்பாவின் கோலம், பையனை அழைத்துப்
84

சாந்தனின் எழுத்துலகம்
போக வந்தவராகவே தெரிகிறது. மாமாதான் பொருத்தியிருக்கிறார். - இப்படி ஊகித்துக் கொள்ளலாம் போலிருந்தது.
பையனுக்குப் பை அல்லது பெட்டி?
அப்பாவின் கையில், இரண்டு துணிப்பைகள் - பெரிதாக இருந்தன. "பாத்தியா? இதெல்லாம் உனக்கு வாங்கித் தந்திருக்காங்க! நீ திரும்பிப் போக மாட்டேங்கிறியே?’
"சீ இதுகளுக்காகப் போறதோ? நான் மாட்டன்.”
- பையனின் உரத்த குரல், இம்முறை அவன் பக்கம் பலரை ஈர்த்து விட்டது. அதனாலெல்லாம் அவன் பாதிக்கப்படவில்லை. ஆசுவாசமாகச் சாய்ந்து, காலுக்கு மேல் காலைப் போட்டபடி மாமாவுடன் தன் சம்பாஷணையை நடத்திக் கொண்டிருந்தான்.
"ஏன்டா?”
"சீ எனக்கிந்த வேலையே வேண்டாம். ஒவ்வொருத் தரும் ஏதாவது ஒரு வேலை செய்யத்தான் வேணும். ஆனால், எனக்கிந்த மானங்கெட்ட வேலைவேண்டாம்' - மிக உறுதியாக, ஒரு பெரிய மனித தோரணையில் பையன் பேசினான்.
இவனைக் கூறுகுறிப்பாகப் பார்த்து இரசித்தவர்களில், இரண்டுபேர் முக்கியமானவர்கள். 'குறுகுறுவென்ற நாவற்பழ விழிகளுள்ள அந்தச் சிறுமி - கிழவியுடன் இருந்தவள். இவனிலும் சின்னவள். இரட்டைப் பின்னல் போட்டிருந்தாள். மற்றவர். ஒரு நஷனல் போட்ட சிங்களக் கிழவர். முகத்தில் புன்னகை ததும்பப் பார்த்தபடி இருந்தார்.
"அந்த வீட்டுக்கார ஐயா என்ன செய்கிறார்?
"ஸ்ரேஷனில் வேலை.”
“என்ன வேலை?”
"ஸ்ரேஷன் மாஸ்றர்.”
“எத்தனை புள்ளைங்க?. இரண்டா?”
“இரண்டும் பெம்பிளைப் பிள்ளையள்”
85

Page 45
சாந்தனின் எழுத்துலகம்
“மூத்ததுக்கு கல்யாணமாயிருச்சு. என்ன?”
'ളൂ' -
"அவரு என்ன வேலை?”
“தெரியாது”
“இரண்டாவதுக்கு-”
”இன்னும் ஆகேல்லை.”
"உனக்கு அடிப்பாங்களா?”
"நெடுக அதுதானே அவயஞக்கு வேலை”
"உன்னை யாழ்ப்பாணத்திலேருந்து கூட்டியாந்தது ஆரு?"
"அதுதான்.”
9s با «با எது? இரண்டாவதா?
“அவங்க அடிக்கிறதாலேதான் போக மாட்டேங்கிறியா?”
பின்னை? இப்பிடி அடிவாங்கிக் கொண்டு வேலை செய்ய முடியுமா?
“சாப்பாடு ஒழுங்காத் தருவாங்களா?” "அது நல்லாக் கிடைக்கும் ஆனா, இப்பிடி அடிச்சா.?”
“சரி, இந்த வீடு போகுது இன்னொரு இடமிருக்கு.”
"ஐயோ! எனக்கு வேண்டாம்! இனி வீட்டு வேலைகளுக்குப் போக
த9 மாட்டேன்! பையன் கத்தினான்.
மாமா, அப்பா பக்கந்திரும்பி,
'. என்ன இன்னோரு இடமிருக்கு. அங்க விடுவமா? இவனை?”
என்றார்.
"ம்ம்?. - அப்பா, அதே கோலம். மாமாவுக்கு மூட் ஏனோ மாறியிருக்க வேண்டும்.
86

சாந்தனின் எழுத்துலகம்
99 - “ஏண்டா..? - பையனை விளித்தார்.
“দো দুটা দিবো?”
"அந்த இரண்டாவது மக, உனக்கு அடிக்குதுங்கிறியே, நீ அதுக்கு அடிக்கலையா?”
35 - “ச்சீயேய். பையன் உரத்துக் கூவினான்.
". இங்க பாருங்கப்பா, மாமாவை .எத்தினை பேர் சுத்தி வர
இருக்கினம் - இப்பிடிப் பேசுறீங்களே, மாமா? .சீ”
மாமா விடவில்லை.
"அதுக்குத்தான் கல்யாணமாகலேங்கிறியே, நீயே கட்டீறிருக்கலாமே?” பையனுக்கு முகஞ் சிவத்து விட்டது.
“என்ன மாமா, நீங்க? பஸ்ஸிலை இப்பிடியா பேசுறது? எத்தனை பேர்
பாக்கினம்?”
பையனுடைய விசிறிகள் இருவருக்குமே, இதுகள் ஒன்றும் புரியவில்லை.
1973
87

Page 46
2
சிறிய பயணங்கள்
கிழவர் ஒரு சாயலில் பாட்டாவைப் போலவே இருந்தார். உருவத்தைக் கொண்டு எந்த இனமாயிருக்கும் என்று தீர்மானிக்க முடியவில்லை. ரயிலின் ஆட்டத்திற்கேற்ப தலை ஆடிக் கொண்டிருந்தது. யன்னலுக்கு வெளியே வெறித்த பார்வை, பற்களில்லாத பொந்து போன்ற வாய்.
விஜி, உப்புமாவைப் பிடியாகப் பிடித்து நீட்டினாள். கிழவரைப் பார்த்த விழிகளைத் திருப்பி விஜியைப் பார்த்தவன், தலையை ஆட்டினான். பெரிய கூச்சமாக இருந்தது.
"ஏன்?’-காதருகில் சாய்ந்து, விஜி மெல்லக் கேட்டாள். உண்மையைச் சொல்ல முடியவில்லை. சொல்வதற்கேற்ற- சொன்னாலும் மற்றவர்களுக்குத் தன் கனதியை விளக்கக் கூடிய - காரணமாகப் படவில்லை. எனவே, “எனக்கிப்ப வேண்டாம். நீர் சாப்பிடும்” என்றான்.
விஜிக்கும், ஒரு சிறு இதாகப் போய்விட்டிருக்க வேண்டும். "அப்ப, நானும் பிறகு சாப்பிடுறேன்.” என்று சரையை மூட ஆயத்தமானாள்.
"விஜி பாவம் - அவனுக்குப் பாவமாக இருந்தது. ஐந்து நாற்பத்தைந்துக்கு ரயிலைப் பிடிக்கவென்று ஓடிய ஒட்டத்தில், அவள் சாப்பிடக்கூட இல்லை. அந்த நேரத்தில் சாப்பிடவும் முடியாது. “சரி, தாரும்.” சலிப்பைச் சாட்டிட்டுக் கேட்டான்.
பிடிப்பிடியாக உருட்டிக் கையில் வைத்தபடி விஜி இருந்தாள். மாறி மாறி, ஒரு பிடி அவனுக்கு, ஒரு பிடி தனக்கு. கூச்சந்தான் வியாபித்து நின்றது.
w 88
 

சாந்தனின் எழுத்துலகம்
அந்தப் பெட்டியிலேயே இவர்கள்தான் கடைசி. பொல்காவலைக்கும் குருநாகலைக்கும் இடையிலேயே முக்கால்வாசிப்பேர் முடித்து விட்டார்கள். கிழவர் மட்டும், கோட்டையில் ஏறியபடியே உட்கார்ந்தி ருந்தார் -
யன்னல்பக்கந் திரும்பி, வெளியே ஒடவிட்ட பார்வையுடன்.
மூலையிலிருந்தவர் முதலில் தன் சரையை அவிழ்த்ததும், மற்றவர்களும் தர்ம சங்கடங்களைத் தவிர்ப்பதற்கென்றே தொடங்கியிருக்க வேண்டும். இப்படியான இடங்களில், எல்லோரும் ஒருமித்துத் தொடங்குவது வசதியானது; எல்லோரதும் - ஒவ்வொருவரதும் - தர்மசங்கடங்களைத் தீர்ப்பது என உணர்ந்திருந்தாலும், கிழவருக்காக அவன் தாமதிக்க எண்ணி, “கொஞ்சம் பொறுத்து எடுப்பம் என்று விஜியிடம் சொல்லியிருந்தான்.
மாகோ வரைக்கும் கிழவர் அப்படியே தானிருந்தார். தாங்கள் கொண்டு வந்திருந்ததில் சிறிது கொடுத்துப் பார்க்கலாமா என்கிற எண்ணம் தலை நீட்டிற்று. ஏழையாகத் தெரிந்தாலும், கிழவரில் தெரிந்த கம்பீரம் அவனைத் தடுத்தது. பிழையாக எண்ணிச் சண்டைக்கு வந்தாலும் பாதகமில்லை. அவர் மனதைக் கூசப்பண்ணிவிடக் கூடாதே என்பதில் அவனுக்கு மிகுந்த அக்கறை. அதனால் கேட்க வில்லை.
கல்கமுவவை நெருங்குகிற தருணத்தில், விஜி சுருட்டித் தந்த வெறுங்கடதாசியை வெளியே எறிய எழுந்தபோது, கிழவர் தன் காக்கிப் பைக்குள் கையைவிட்டு ஒரு சிறிய பொட்டலத்தை எடுப்பதைக் கண்டான்.
இனந் தெரியாத ஒரு திருப்தி முகிழ்த்தது. நேரே பார்ப்பது அநாகரீகம். பழையபடி தன்னிடத்தில் உட்கார்ந்து, புறப்பார்வைக்குள் கிழவரைக் கொண்டு வந்தான்.
வெற்றிலைப் போடுவதையே கிழவர் ஒரு கலையாகப் பயின்றிருந்தார் போலும் - விரல் நுனியில் சுண்ணாம்பை எடுத்து, காம்பை வார்ந்த வெற்றிலையில் அதைத் தடவி, சுருட்டி, சீவலையும் புகையிலையையும்.
ஏமாற்றமும், இன்னும் எதுவுமோ கெளவியது.
அநுராதபுரத்தில் இவன் எதிர்பாராத விதமாக கிழவர் இறங்கியபோது நிம்மதியடைந்தான்.
1973
89

Page 47
3 ஒரு இருபத்தாறாந் தேதி, காலை
மனதில் ஏதோ சுண்டியிழுத்தது. பச்சாதாபம். 'சே' என்ன நினைத்திருப்பாள்?. நான் கள்ளி என்று நினைக்கிறாரோ என்று அந்தப் பிஞ்சுமணம் நொந்திருக்குமோ? - அவனுக்குத் தன் மேல் கோபங் கோபமாய் வந்தது. . இந்தத் தொழிலுக்கு வந்ததால் இப்படி அனுபவிக்க வேண்டி - இந்தப் பேச்சுக்களைக் கேட்க வேண்டி வந்ததே! என்று மனங்குமுறி யிராதோ?.
எதிரே கிடந்த ஃபைல்களைத் தூக்கிப் போட்டுவிட்டு, கன்ரீனுக்கு ஒட வேண்டும் போலிருந்தது. போய், “நான் முட்டாள்த் தனமாகக் கேட்டுவிட்டேன். கவலைப்படாதே’ என்று அவளிடம் சொல்ல வேண்டும் என்கிற அவதி.
‘போய்ச் சொன்னால், விஷயத்தைப் பெரிதுபடுத்துகிற மாதிரி, இதுவரையில் அதை 'ஸிரியஸ்ஸாக எடுக்கா விட்டாலுங்கூட, இனி எடுத்து விடுவாள்.
தர்ம சங்கடம்.
D
காலையில், அலுவலகத்தற்குப் புறப்பட்டபோதே ஏற்பட்ட குழப்பம் - பஸ் கொண்டக்டருடன் போட்ட சண்டை வேறு, ஆளை இன்னும் குழப்பிவிட்டிருந்தது. அலுவலகத்திற்கு வந்து, கையெழுத்துப் போட்ட
y 90

சாந்தனின் எழுத்துலகம்
கையோடேயே 'கன்ரீனுக்குள் புகுந்தான்.
நேற்று சம்பள நாள்.
இப்போ சாப்பிட்டு முடிந்த போதுதான், 'நேற்றுப் பணங் கொடுக்கும் போது முதலாளி நின்றானா? என்கிற ஐமிச்சம் எழுந்தது. கன்ரீன் மாதாந்தக் கணக்குகளை சம்பள தினத்தன்று தீர்த்து விடுவது.
கையைக் கழுவிக்கொண்டு, முன் மேசையடிக்கு வந்த போது முதலாளி இல்லை. இவன் தான் வழமைபோல் 'கஷியர் ஆயிருந்தாள். இப்ப கேட்டாலொழிய பிறகு மறந்து போய். நேற்று அந்த விசரனும் காசு வாங்கினதை மறந்திருந்தா, இன்னும் முப்பது ரூபாய் அழ வேண்டி வரும். கேட்டுவிடுவோம்'
கேட்டான்.
"ஓ! தந்திட்டீங்களே!. அவள் சிரித்துக் கொண்டே சொன்னாள்.
“நர்ன் காசு தந்தபோது முதலாளி நிண்டாரோ?” “ஒ.” - அவள் கணக்குப் பேரேட்டைப் புரட்டி, இவன் பக்கத்தைக் காட்டினாள்.
". இதிலை சரி போட்டு கையெழுத்து வைச்சிருக்கிறாரே'
அப்பாடி சரிதான்.
'எனக்கெப்படி இது மறந்தது? - நிம்மதியூடே ஒரு திடீர்ப் பொறி.
நான் இப்படி இவளைக் கேட்டிருக்கலாமோ?
முதலாளி நிண்டவரோ என்று தான் கேட்ட போது, அவள் முகங் கன்றியது போல ஒரு ஞாபகம்.
கடதாசியில் கையைத் துடைத்தபடி அலுவலகத்திற்குள் நுழைந்து மேசை முன்னால் அமருகிற வரையில் இதுவே மனதில் புரண்டது.
"அந்த ஃபைல் ஒரு அவசரமான ஸ்கீம் அதை இன்றே முடித்துவிடுவாயா?” - மிஸ்டர். பெர்னாண்டோ அவன் முன் வந்து கேட்டபோது தான் விழித்தான்.
D
91

Page 48
சாந்தனின் எழுத்துலகம்
'எனக்கு ஒரு பைத்தியக்கார மனம், இதுக்கெல்லாம் இப்பிடி யோசிக்கலாமோ? அவள் இதைப் பெரிதாய் எடுத்திருப்பாள் என்று என்ன நிச்சயம்? - இந்த எண்ணம் வேரோட முடியவில்லை, முளையிலேயே கருகிவிட்டது.
எப்படி மனம் ஆறும் என்று புரியவில்லை.
இந்த முதலாளிப் பயல் கூட, அவள் சம்பளத்தை ஒழுங்காகக் கொடுக்கிறானோ தெரியாது. (சண்முகமும் அந்த மற்ற வெள்ளைப்
பெடியனும், இவன் இரண்டு மூன்று மாதமாய்ப்பேய்க்காட்டின தாலைதானே
விட்டிட்டுப் போனாங்கள்). எத்தனை கரைச்சல்களோட இந்த வேலை
செய்யுதோ அந்தப் பிள்ளை? - . நான் வேறை - ஒரு மடையன்.
எப்போதோ சிறு வயதில் இறந்து போன தன் தங்கையொருத்தியின் சாயல்கூட இவளில் இருப்பதாக அடிக்கடி தட்டுப்படுவது வேறு அவனை வாட்டியது.
எழுந்தான். மணி ஒன்பதுகூட ஆகியிருக்கவில்லை. சாப்பிட்டபோது ஏழே முக்கால்.
“என்னடா, இண்டைக்கு வேளைக்கு ரீக்கு போறாய்? - சதா கேட்டான்.
D
கஷியரின் மேசைக்கு அருகாக இருந்த ஒரிடத்தில் உட்கார்ந்து, ஒரு தேநீர் கொண்டுவரும்படி பெடியனிடம் சொல்லிவிட்டு, அவளைப் பார்த்துப்
புன்னகைத்துக் கொண்டிருந்தான்.
1973
92
 

4.
பிரிப்பு
கில்யாண வீட்டிற்குத் தென்னங் குருத்து அலங்காரஞ் செய்யக் கூடாதென்றுதான், பெரியவர்கள் எல்லோரும் வாது பண்ணினார்கள். திரு, அதெல்லாம் முட்டாள்தனம் என்று சண்டைப் போட்டு, பச்சை ஓலைத் தோரணங்கள் கட்ட வழி பார்த்தான். தனது கல்யாணத்திற்கென்றே மினைக்கெட்டு மூன்று நாள் லிவு போட்டுவிட்டுத் தென்னிலங்கையிலிருந்து வந்த தன் கூட்டாளிமாரின் அலங்காரத் திறமையை - யாழ்ப்பாணத்திற்கு அவ்வளவு அறிமுகமில்லாத - சிகரம் போன்று வாசலை, அணைத்து எழுகிற தென்னோலைத் தோரண வாயிலை, இந்தச் சந்தர்ப்பத்தைச் சாட்டி, இங்கு காட்டுவது அவன் ஆசையாயிருந்தது.
பொன் உருக்குவதிலிருந்து கோவிலில் தாலிக்கட்டு முடிந்து, புதுத் தம்பதிகள் வீடு திரும்புவதுவரை விதவிதமான ஃபோட்டோக்கள். திரு தான் அவற்றில் எவ்வளவு கம்பீரமாக நிற்கிறான்! முகங்கொள்ளாத மகிழ்ச்சி. பக்கத்தில் அதேபோலக் கமலாவும்.
கொழும்பிலிருந்து வந்த நண்பர்கள்தான் பந்தலையே பார்த்துக் கொண்டார்கள். தோரணம் பின்னுவதிலிருந்து, காகிதப் பூச்சரங் கட்டுவதுவரை - அவர்கள் கவனித்த எல்லா வேலைகளையும், தம்பி ஒவ்வொன்றாகத் தன் 'கமராவுக்குள் அடக்கியிருந்தான். அந்தப் படங்களும்கூட, இந்தப்படத்தொகுப்பில்-அல்பத்தில் தான் இருக்கின்றன.
D
93

Page 49
சாந்தனின் எழுத்துலகம்
சில்வாவும், அவர் மனைவியும் ஒரு குழந்தையின் ஆர்வம் முகமெல்லாம் வழிய, ஒவ்வொரு படமாக இரசித்துக் கொண்டிருந்தார்கள். படங்களை விளக்குவதற்கு, ஒரு தமிழ்-இந்துத் திருமணத்தின் சடங்குகள், தாற்பரியங்கள் எல்லாவற்றையும் விளக்க வேண்டியிருந்தது திருவுக்கு. சில்வா ஏற்கெனவே ஒரளவு அறிந்து வைத்திருந்தாலும், அவர் மனைவிக்கு இவையெல்லாம் மிகவும் புதிய விஷயங்கள்.
ஏழெட்டு ஆண்டுக்காலக் கொழும்பு வாழ்வைவிட்டு இந்த இடத்திற்கு மாற்றலாகி, திரு வந்தபோது, புதிய அலுவலகத்தில் சில்வாவைச் சந்தித்தான். தன் நண்பர்களின் 'உள்ளுடனை இவரினுள்ளும் அவன் கண்டதானது, இப்புது நட்புக்கு அடிகோலி வேரூன்ற வைத்தது இன்று, இந்த மத்தியான விருந்துக்கு அவர்கள் அழைக்கப்பட்ட வேளையில், அல்பத்தைக்
காட்டுவதும், உபசாரங்களில் ஒன்றாயமைந்தது.
சோடனைகளின்போது மட்டுமல்ல; மாப்பிள்ளை வீட்டின் பலவிதமான சடங்குகளின் போதுங்கூட - இதோ, இந்தத் திருமதி சில்வாவின் ஆர்வத்தையொத்த, அதே துடிப்புடன் - எல்லோருக்கும் முன்னால் துருத்திக்கொண்டு வந்து, மாப்பிள்ளையின் பின்னால் - தோளுக்கு மேலால்
எத்தனை இடங்களில் நிற்கிறார்கள், அவன் நண்பர்கள்.
இவர்களெல்லாம் என் சிங்கள நண்பர்கள் இப்படி அந்தப் படங் களைக் காட்டி, சில்வாவுக்குச் சொன்னால், அவர் வியப்பும், தன்மேல் மதிப்பும்,
மகிழ்வுங் கொள்ளக்கூடும் என்கிற எண்ணம் - ஆசை அவனுள் எழுந்தது.
நண்பர்கள் என்கின்றபோது, சிங்கள நண்பர்கள் என்று சொல்வது எந்தளவு அசட்டுத்தனம் என்கிற உண்மையும் அடுத்த கணத்திற்குள்ளேயே அவனுக்கு உறைத்தது.இதில் பெருமைப்படவோ குறிப்பிட்டுச் சொல்லவோ ஒன்றுமிருக்கக் கூடாது. இந்தக் குட்டி நாட்டுக்குள் இருந்துகொண்டு, பரஸ்பரம் இப்படியான உறவுகளில்லாமல் இருப்பதுதான் புதுமையாக இருக்க வேண்டும். இப்படி இருப்பதையும், அப்படிச் சொல்லிக் காட்டப்போய், அதனால்ேயே அந்தப் பிரிவு அநாவசியமாய் உணர்த்தப் படக்கூடாது.
94.

சாந்தனின் எழுத்துலகம்
தோரணங்களை நண்பர்கள் கட்டுகிற ஒரு படத்தைக் காட்டி 'உங்கள் நண்பர்கள்தான் அலங்காரங்கள் எல்லாம் செய்கிறார்கள் போலிருக்கிறதே?” - என்று சில்வா கேட்ட போது, அவன் மகிழ்ச்சியுடன் புன்முறுவல்
செய்தவாறே, "ஆமாம்” என்று மட்டுந்தான் சொன்னான்.
1974
95

Page 50
5 வண்டிகளும் மாடுகளும்
வீராசாமி, அந்தக் கொழுத்த செங்காரி நாம்பனை வண்டியிலிருந்து அவிழ்த்து, தெருக்கரையோரமாக எதிர்வீட்டு வேலியிற் கட்டிவிட்டு வந்தான்.
“உங்ககிட்டே கோடாலி இருக்குங்களா?” "ஏன்? நீ கொண்டு வரேல்லையா?”
“நம்முது உடஞ்சி போச்சுங்க. - மிகவும் அப்பாவித் தனமாகச் சொன்னான். அந்த அப்பாவித்தனமே, அவனது துரதிருஷ்டத்திற்கும் மேலாக அவன்பால் அநுதாபத்தை ஈர்த்துக் கொடுக்கக் கூடியதாக இருந்தது.
பக்கத்து வீட்டிற் கோடரி வாங்க நான் ஆளனுப்பினேன்.
“இந்த மாட்டுக்குக் கொஞ்ச வைக்கல் போட்டுட்டு வர்றேனுங்க.”- என்றவாறு, அவனும் வெளியே போனான். இன்றைக்கும் இவன் ஏன் இந்த வண்டியைக் கொண்டு வந்தான் - என்கிற கேள்வி இப்போதுதான் எனக்குள் உதித்தது. பிழைப்பு இருக்கிறதோ, இல்லையோ - இந்த வண்டிக்கும் மாட்டுக்கும் நாளொன்றுக்கு வாடகை ஆறுரூபா. இதை அவன்தான் சொல்லியிருப்பான்.
தெருத்தொங்கல் கடையிலிருந்து வாங்கி வந்த இரண்டு கற்றை வைக்கோலில் ஒன்றைச் சாய்த்து நின்ற வண்டிக்குள் போட்டுவிட்டு, மற்றதைப் புரி அவிழ்த்து, மாட்டுக்கெதிரில் உதறினான். படுத்துக்கிடந்த
96

சாந்தனின் எழுத்துலகம்
மாடு, சலங்கைகள் ஒலிக்க சாவதானமாக எழுந்து சாணம் போட்டுவிட்டு, வைக்கோலை மோந்தது. இந்த வைக்கோல் காசும் அந்த ஆறுரூபாயில் அடக்கமா, இல்லை தனியா?
வீராசாமியைக் கேட்டேன்.
நைந்து போய், வியர்வை மணத்த, பொத்தான்களே யில்லாத - பழைய நைலான் சட்டையைக் கழற்றிதலையிலிருந்த மெல்லிய ஒலைத் தொப்பிக்குள் சுருட்டி வைத்தபடியே,
“இது, நம்ம செலவு தானுங்க. அதும் பாவம், வாயில்லாச் சீவனைப் பட்டினி போடக் கூடாதில்லிங்களா?.” - என்று சிரித்தான்.
விறகுக் குவியலில், மொக்குக் கட்டையொன்றைத் தேடி, அகலப்பாட்டில் கிடத்தினான். அசைத்தசைத்துப் பார்த்து, அசையாது என்கிற நிச்சயம் வரும்மட்டும் மண்ணை அசைத்தான். அப்போதுதான் ஞாபகம் வந்திருக்க வேண்டும் - கோடரியை எடுத்து, விரல் நுனியால் உரசிப் பார்த்தான்.
“ரொம்ப மழுங்கலா இருக்குதுங்க. - என்றவாறே, ஒரு கைப்பிடி மணலை அள்ளிக்கொண்டு போய், வாசற்படி விளிம்பில் தூவிப் பரவிவிட்டு, கோடரியைத் தலைகீழாகப் பிடித்து, பிடியை நிலத்தில் தட்டினான். கோடரி மெல்லச் சுழன்றது.
அவன் குனிந்து திட்ட ஆரம்பித்தபோது, மெல்லியதாக நரை பரவத் தொடங்கி, சீப்புக்கடங்காததாய் விரித்துக் கொண்டு கிடக்கிற அவன் தலைமுடி, சிலும், சிலும் என்று ஆடத் தெ டங்கியது.
கோடரியைத் தீட்டி முடித்துப் பிடியை இறுக்கியபோது, வீராசாமியைக் கேட்டேன்:
"இண்டைக்கும் காட்டுக்குப் போறியா?”
"இல்லீங்க.”
"அப்ப ஏன் வண்டில்? தேவையில் ைத்தானே?.”
"அப்படியில்லிங்க. அது எடுத்துத்தங்க ஆவணும்.”
97

Page 51
சாந்தனின் எழுத்துலகம்
“ஒருநாக்கூட விட்டே ஏலாதுங்க, நாம விட்டாக்க வேற யாருக்காவது
குடுத்துடுவாங்க. பிறகு. கெடைக்காது.”
“வேலையில்லாட்டியுங் கூட சும்மாவாவது எடுக்க வேணுமா?” "ஆமாங்க." “சரியான அநியாயமாயிருக்கே. ஆர். வண்டில் முதலாளி?” “நம்மூர் தாங்க.” “எத்தினை வண்டில் வைச்சிருக்கிறார்?” "எல்லாமா, பதினஞ்சு வண்டிங்க.” “ஒவ்வொண்டுக்கும், ஒரு நாளைக்கு ஆறு ரூபா வாடகையா?”
"ஒரு மாட்டுக்கும், ஒரு வண்டிக்கும் - ஜோடியா ஒரு நாளைக்கு ஆறு ரூபாயிங்க."
"எல்லா வண்டிலும் போயிடுமா?’ "ஒ ஒரு நாக்கூட வண்டி கூட மிஞ்சாதுங்க.
O
முந்தாநாள் பின்னேரம், விறகு வண்டிலுடன் வீராசாமி வந்தான். "கொலை, கொலை” என்று காதிற் படுகிற விதமாக, “கொள்ளி, கொள்ளி.” என்று கூவிக்கொண்டே விறகு விற்கிற இவ்வூர் வண்டிக் காரர்களிடையில், சத்தமே போடாமல் விறகு வண்டியுடன் போனான், வீராசாமி.
“விறகு, விற்கிறதுக்கா? - என்று நான்தான் கேட்க வேண்டியிருந்தது.
விறகு பறித்து முடிந்து, காசைக் கொடுக்கும் போது கேட்டேன்:
"உனக்கு, ஒவ்வொரு நாளும் இப்படிப் பத்துரூபா வரும்படி இருக்குமா?”
அவன் சிரித்தான்.
அது எப்படீங்க?. வண்டிக்கே ஆறுரூபா போயிடுமே.”
இது, உன்ர சொந்த வண்டில் இல்லையா?”
98

சாந்தனின் எழுத்துலகம்
"இல்லீங்க. வாடகை வண்டி.”
"உன்னட்டை சொந்தமாக வண்டில் மாடு இல்லையா?”
“இருந்ததுங்க, முந்தி. இப்ப இல்லை.” "ஏன்? வித்திட்டியா?.”
"இல்லீங்க.”-கண்கள் கலங்க, இடையில் நிறுத்தி, மெளனமானான் 6SJTFTL6).
'யாரோ, ஒரு நா' என்னோட மாட்டைக் களவா வெட்டிப்பிட்டாங்க. அதும்பிறகு, வேறமாடு வாங்குறதுக்கும் காசில்லையா, வண்டியையும் வித்துட்டேன்.”
“ஒரு நாளைக்காவது, அவன் அநியாயமாக வண்டி வாடகை கொடுக்காமல், உருப்படியாக சம்பாதிக்கட்டுமே” - என்ற எண்ணத்துடன் :
“இந்த விறகை, நீயே நாளைக்கு வந்து கொத்தித் தாவன்?” என்றேன்.
“சரிங்க; நாளன்னிக்கு, ஞாயித்துக்கிளமை வந்து கொத்தித் தர்றேனுங்க.” என்றான்.
O
அதுதான், வீராசாமி இன்றைக்கு வந்திருந்தான்.
“மெய்யே, வீராசாமி.”
“என்னாங்க?.”
"உன்ர அந்த மாட்டை, ஆர் களவாப்பிடிச்சு வெட்டியிருப்டாங்க எண்டு, உனக்குக் கூடத் தெரியாதா?”
“தெரிஞ்சு என்னாங்க செய்யிறது?. அவங்க, ரொம்பப் பெரிய ஆளுங்க.”
“ஆரது?”
“எனக்கு இந்த வண்டி-மாடு வாடகைக்குத் தர்றாரே, அவரோட ஆளுங்கதான்!”
1974
99

Page 52
6
நீக்கல்கள்
அவனுடைய வீட்டிலிருந்து ஆஸ்பத்திரிக்குப் போவதற்கு பஸ்ஸை நம்பிப் புண்ணியமில்லை. அது சமயத்தைப் பொறுத்தது. சில வேளைகளில் ஆலடிச் சந்திக்குப் போன கையோடேயே பஸ் கிடைத்து, அரை மணித் தியாலத்திற்குள் ஆளைப் பட்டணத்தில் கொண்டு போயும் விட்டுவிடும். இன்னுஞ் சில வேளைகள் - அப்படித்தான் அதிகம் நேர்கிறது. - பஸ்ஸைக் கண்ணிற் காண்பதே பெரிய பாடாகிவிடும். அப்படியான வேளைகளில், பட்டணம் போய்ச் சேர இரண்டல்ல. மூன்று மணித் தியாலமுமாகும். சைக்கிள்தான் நம்பிக்கை. ஆகக் கூடியது. முக்கால் மணித் தியாலத்திற்குள் போய்ச் சேர்ந்து விடலாம். ஆனால் அதுவும்கூட அரும்பொட்டு நேரம்.
வீட்டிலிருந்தே ஸ்பெஸிமனை எடுத்துக் கொண்டு போக முடியாது. கொஞ்சம் முந்திப் பிந்தினால், இவ்வளவு பாடும் வீணாகிவிடும். “எப்படியும், எடுத்து நாற்பத்தைஞ்சு நிமிஷத்துக்குள்ளே குடுத்திட வேணும். . இல்லாட்டி, நிச்சயமா ஒன்றும் சொல்ல ஏலாது” என்று விஜயன் நேற்றைக்கே சொல்லியிருந்தான். விஜயன் இவனுடைய வலுநெருங்கின கூட்டாளி. டொக்டர். பெரிய ஆஸ்பத்திரியில் - பட்டணத்தில் - தான் இப்போது வேலை. அவனுடைய உதவியாலும், அட்வைஸாலும்தான் இந்த விஷயம் சுலபமாக நடக்கப் போகிறது- வீண்மினைக்கேடு, பரபரப்பு ஆட்டபாட்டமில்லாமல்,
சைக்கிளில்தான் போவது என்று தீர்மானிப்பதைத் தவிர வேறு வழியிருக்க முடியாது. 'ஸ்பெஸிமனையும் அங்கு போய்த்தான் எடுத்தாக வேண்டியிருக்கிறது.
100

சாந்தனின் எழுத்துலகம்
'ஸிப் வைத்த காற்சட்டையையும், புஷ்-ஷேர்ட்டையும் முன்னேற்பாடாக - வசதி கருதிப் - போட்டுக் கொண்டான். விஜயன் தந்த ஆஸ்பத்திரிச் சிட்டையை ஞாபகமாக எடுத்துக் கொண்டாயிற்று. சைக்கிளைத் தள்ளிக்கொண்டு புறப்பட்டபோது, அவனுக்குள்ளே சாதுவான கூச்சமாய்த்தானிருந்தது. சும்மா, விஜயனைப் போய்ப் பார்த்துவிட்டு, அப்படியே பட்டனத்திற்குப் போய்விட்டு வருவதாகவே, மனைவியிடம் சொல்லியிருந்தான். அவளுக்கு இப்போது விபரஞ் சொல்லத் தேவையில்லை. இந்த ‘டெஸ்டின் முடிவைப் பார்த்துத் தேவையானதைப்
பேசிக் கொள்ளலாம்.
அவளுக்கும், இவனுக்கும் கல்யாணமாகி, வருகிற சித்திரை இரண்டு வருடம். காதல் கல்யாணம்தான். அந்தக் காதல் காலத்திலேயே, இவன் கனக்கக் கற்பனைகள் பண்ணிக் கொண்ருந்தான். நீண்ட காலத்திட்டங்கள், அழகிய ஓவியங்களாக நெஞ்சிற் பதிந்து உறைந்துபோன, அவள் நிறமும் விழிகளும், தன் தோற்றமும் முடியுமாக, இவனது விந்து இதுவரையில் முளைத்துத் தளிர்த்திருக்க வேண்டுமே - அது நடக்கவில்லை என்பதை அவனாற் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.
திருப்பித் திருப்பிப் பரீட்சை எழுதிக் குண்டடிக்கிற மாணவன் மாதிரி, மாதா மாதம் ரிசல்ட்க்காகக் காத்திருந்து ஆசை அவதியாய் ஏமாற்றத்தில் அடுத்தடுத்து முடிகிறபோது -
‘எங்கே வழுக்குகிறது என்று புரியவில்லை. தானறிந்த மட்டில், தங்களிருவரிலும் எந்தக் கோளாறும் வெளிப்படையாயில்லை என்பது தெரிந்தது. சராசரிக்குக் கொஞ்சம் மேலாயிருந்த உடற்கூற்று அறிவு, விஜயனிடம் போகத் தூண்டவே, போனான். “அதுதான் சரி; இப்பவே ஏதாவது செய்யிறதுதான் புத்தி - வயது போனால், பிறகு என்ன செய்தும் அவ்வளவு பலனிராது - என்று, விஜயன் உற்சாகப்படுத்தினான். வழிமுறைகளும் அவ்வளவு சிக்கலாயில்லை.
முதலிலை, உன்னை ‘டெஸ்ட் பண்ணுவம் அதிலை ஒரு கோளாறுமில்லையெண்டா, பிறகு, அவளை ஒரு லேடி டொக்டரிட்டைக்
கூட்டிக் கொண்டு போ.
தன்னை எப்படிப் பரிசோதித்துக் கொள்ள வேண்டுமென்று அவன்
101

Page 53
சாந்தனின் எழுத்துலகம்
அறிந்தபோது வலு சுகமான டெஸ்ட்- என்று தெரிய வந்தது. எப்படி ஸ்பெஸிமன் எடுக்கிறது என்பது புரியவில்லை. கேட்டான். அதற்கும் ஏதாவது முறை அல்லது கருவிகள் இருக்கக் கூடும்.
"நீதான் எடுத்துக் குடுக்கவேணும். "டெஸ்ட் ரியூப் தருவினம்” விஜயன் பயலின் முகத்தில், குறும்போ, சிரிப்போ மருந்துக்குக் கூட இல்லை!
கவுண்டரின் வெளியே நின்று மெல்லத் தட்டினான். யாரோ ஒருவர் - ஆய்வுக்கூட உதவியாளராய்த் தானிருக்கும் வந்தார். விஜயன் தந்த சிட்டையை நீட்டினான். பெயர், வயது, என்ன பரிசோதனை- எல்லா விபரமும், அந்தத் துண்டில் விஜயன் தானே குறித்துக் கொடுத்திருந்தான்.
‘டெஸ்ட் ரியூப் இல்லை - கிட்டத்தட்ட அதே அளவில், சுத்தமாகக் கழுவி பிளாஸ்டிக் மூடி போட்ட சிறிய போத்தல் ஒன்று கிடைத்தது.
ஏதோ ஒரு வார்ட்டிலிருந்த விஜயனைத் தேடிப் போனான். “எங்கேயிருந்து எடுக்கப் போகிறாய்?. குவார்ட்டஸிலை, என் அறைக்குப் போனா, வசதியாயிருக்கும்.”
"அது சரியில்லை; நீயில்லாத நேரத்திலை, நான் அங்க தனியாய்ப் போறது அவ்வளவு நல்லாயிராது.”
"அப்ப, வேற என்ன செய்யிறது? இங்க உள்ள ஆஸ்பத்திரி லவெட்டிரியளை நம்பி உள்ளுக்குப் போகேலாது.” கொஞ்ச நேர யோசனைக்குப் பிறகு -
- ஒ - "இங்க வா' என்று சொல்லிக் கூட்டிப் போனான்.
ஓரிடத்தில் வரிசையாக நாலைந்து சின்னச்சின்ன அறைகளிருந்தன. தொங்கலிலிருந்த அறைக்கதவை விஜயன் மெல்லத் தள்ளினான். அது கக்கூஸ் அல்ல. ஆஸ்பத்திரி வேலையாட்கள் தட்டுமுட்டுக்களைப் போட்டு வைக்கிற அறை. இந்த வரிசை அறைகள் எல்லாமே அப்படித்தான் போலிருக்கிறது.
விஜயன் அறைக்கதவைத் தள்ளுகிறபோதே, ஒரு வேலையாள் பார்த்து விட்டான். அவசரமாக ஓடி வந்தான் - உடம்பை வளைத்துக் கொண்டு; நின்ற இடத்திலேயே காற்செருப்பைக் கழற்றி விட்டு விட்டு,
102

சாந்தனின் எழுத்துலகம்
"ஐயா? - கேள்வியே வணங்கியது. இவனுக்கு அந்த ஆள் மேல் கோபமாக வந்தது; பரிதாபமாயுமிருந்தது.
"இந்த ஐயா, லாப்பில குடுக்கிறதுக்கு ஏதோ ஸ்பெஸிமன் எடுக்க வேணுமாம். இதுக்குள்ளை துப்புரவாய் இருக்குதுதானே?”
"ஆமாங்க, ஆமாங்க. வடிவாப் போலாமுங்க”
“சரி, நீ போய் அந்தரப்படாம ஆறுதலா எடு. எடுத்து லாப்பிலை குடுத்திட்டு வா - நான் வார்ட்டிலை தானிருப்பன்." - விஜயன் இவனைப் பார்த்துச் சொல்லிவிட்டுத் திரும்பினான்.
"ஐயா பயப்படாமப் போலாமுங்க. உள்ள நல்ல "கிளீனா இருக்கு” அந்த ஆளும் போய் விட்டான்.
கதவைத் தள்ளி உள்ளே போனான், இவன். மிகவுந் துப்புரவாய்த் தானிருந்தது. சிறிய அறை, ஐந்தடி அகலங்கூட இராது. அதில் அரைவாசி இடத்தை, சுவரிலேயே கட்டப்பட்டிருந்த 'றாக்கைகள் பிடித்துக் கொண்டிருந்தன. ஒரு மூலையில் தண்ணீர்க் குழாய் இருந்தது. நல்ல இடந்தான்’ என்று எண்ணிக்கொண்டே கதவை சாத்தினான். பூட்ட முடியாது போலிருந்தது. பூட்டுவதற்காகப் போடப்பட்டிருந்த கட்டை இறுகிக் கிடந்தது. நிலையில் கட்டியிருந்த கயிற்றுத் துண்டை இழுத்து, கதவில் அடித்திருந்த ஆணியில் இறுகச் சுற்றினான். வெளியிலிருந்து தள்ளினாலும் திறவாது என்கிற நிச்சயம் வந்தபின்தான் உள்ளே வந்தான். காற்சட்டைப் பையிலிருந்த போத்தலை எடுத்துத் தட்டின் மேல் வைத்தபோதுதான், யன்னல்
கண்ணில் பட்டது. யன்னற் கதவின் மேல் பாதி, கண்ணாடி!
அருகே போய் நின்று பார்த்தான். தன்னுடைய தலை எப்படியாவது வெளியே தெரியும் போலத்தானிருந்தது, பரவாயில்லை, தலை மட்டும்தானே என்கிற ஒரு நிம்மதி, யன்னலுக்கூடாய்ப் பார்த்தால், ஆஸ்ப்பத்திரியின் மற்ற கட்டிடங்கள் உயர உயரமாய் நின்றன. எதிர்த்த கட்டிடத்தின் மேல் மாடியில், வரிசையாக யன்னல்கள். நல்ல காலமாக அங்கு ஒருவரையுங் காணவில்லை. அந்தக் கூட்டத்திற்கும் இந்த அறைக்கும் நடுவிலிருந்த முற்றத்தில் யாரோ போனார்கள். இந்தப் பக்கம் பார்க்கிறவராக எவருமில்லை.
இரண்டு மூன்று வருடங்களுக்கு மேலாகக் கை விட்டிருந்த பழக்கத்தில்
103

Page 54
சாந்தனின் எழுத்துலகம்
இப்போது கை வைப்பது ஒரு மாதிரியாய்த்தான் இருந்தது. வளம் வராதது போல, சீனி போட்டுக் காப்பிக் குடித்துப் பழகியவனுக்குக் கருப்பட்டியைக் கடித்துக்கொண்டு குடிக்கச் சொல்லிக் கொடுத்தாற் போலவும் இருந்தது. எப்படிச் சரிவரும் எவ்வளவு நேரம் எடுக்கும் என்றுந் தெரியவில்லை.
கடிகாரத்தைப் பார்த்தான். மணி பத்தேகால், முடிந்து பின் எவ்வளவு நேரம் எடுத்திருக்கிறது என்று பார்க்க வேண்டும் என நினைத்துக்
கொண்டான்.
மனம் எங்கெங்கோ ஒடிக் கொண்டிருந்தது. பதட்டம் வேறு. இந்தப் பதட்டத்துடன் மனதை ஒருமுகப்படுத்த முடியாமல், ஒன்றுஞ் செய்ய முடியாது என்பது அவனுக்குத் தெரியும். மனதை நிலைப்படுத்த முயன்றான். திருவிழா நாட்களில் கோவிலுக்குப் போய், சாமியைக் கும்பிட முயல்வதுபோல இருந்தது இந்த முயற்சி. தான் இப்போது செய்து கொண்டிருக்கிற வேலை, மனைவிக்குத் தெரிந்தால் என்ன நினைத்துக் கொள்வாள் என்ற நினைப்பு வந்தது.
பழைய ரெக்னிக்குள் ஒன்றுஞ் சரிவரவில்லை. சீனியுங் கருப்பட்டியுந்தான். முதற்கட்டமே இன்னம் முடியவில்லை. “வெளியே, யாரோ ஆர்ப்பாட்டமாகப் பேசிக் கொண்டு போனார்கள். இந்த அறையைத்தான் திறக்க வருகிறார்களோ என்று, ஒரு நிமிடம் பேசாமல் நின்றான். அந்தப் பரபரப்பில், இவ்வளவு நேரம் பட்ட பாடும் வீணாய்ப் போயிற்று. அவர்கள் இங்கு வரவில்லை. குரல்கள் தாண்டிப்போய் நடைபாதையில் மங்கி மறைந்து போயின.
மீண்டும் முயன்று ஒரு நிலைக்கு வந்தபின் நேரத்தைப் பார்த்தபோது, இப்போதே பத்து நிமிடமாகி விட்டிருந்தது: "கெதியாகச் செய்து முடிக்க வேணும் என்கிற உறுதி மனதை நிலைநிறுத்த உதவியாயிருந்தது.
படிக்கிற காலத்தில், ஒத்த தோழர்களுக்குள் புழங்கிய தன்கையே தனக்குதவி, 'வெள்ளையனே வெளியேறு' - என்கிற வசனங்களெல்லாம் அப்போதைய ரீன்ஏஜ் அர்த்தங்களுடன் இப்போது நினைவில் வந்தன. இந்தப் பரபரப்பிலும் சிரிப்பு வந்தது.
6.
ஐயா. உள்ளேதான் இருக்கிறீங்களா?.” என்கிற கேள்வி.
104.

சாந்தனின் எழுத்துலகம்
இவனைத் திடுக்கிடச் செய்வது போல, இருந்தாற்போல் வெளியிலிருந்து வந்தது. அந்த ஆளாய்த்தானிருக்கும். சட்டென்று பாய்ந்து, கதவை அழுத்திப் பிடித்தபடி "ஒமோம் இன்னம் முடியேல்லை.” என்றான், குரலில் அடைக்க,
“சரிங்க, சரிங்க. ஜயா வெளியே போயிட்டீங்களோன்னு பாத்தேன். நீங்க இருங்க.” - குரல் நகர்ந்தது. அவன் மேல் அசாத்தியக் கோபம் வந்தது, இவனுக்கு.
கதவடியிலிருந்து திரும்பி, மீண்டும் தன் இடத்திற்கு - யன்னலடிக்கு வந்தபோது, எதிர்த்த மாடி யன்னல்களில் ஆள் நடமாட்டந் தெரிந்ததை அவதானித்தான். ஒரே ஆத்திரமாய் வந்தது. யாரோ இரண்டு மூன்றுபேர், அங்கே நின்று ஆறுதலாக பேசிக் கொண்டிருந்தார்கள். இந்தப் பக்கந் திரும்பவில்லைதான்; ஆனால் தற்செயலாகத் திரும்பினால், இவன் கட்டாயம் கண்ணில் படுவான். சுவர்த் தட்டின் ஒரு மூலையில் மடங்கிப்போய்க் கிடந்த கடதாசி மட்டை கண்ணிற் பட்டது. எடுத்துத் தூசு தட்டி, விரித்துப் பார்த்தபோது, யன்னலில் இவன் தலையை மறைக்கிற அளவுக்குச் சரிவரும் போலிருந்தது. வலு பாடுபட்டு, யன்னல் இடுக்குகளில் அதைச் சொருகி மறைக்கப் பார்த்தான். இதை விட்டு, போத்தலையும் வீசி எறிந்து விட்டுப் போய்விட வேண்டுமென்கிற அவதி எழுந்தது. அடக்கிக் கொண்டான்.
கனவுகளின் தோல்வியை இனியும் பொறுக்க முடியாது. இல்லாவிட்டாலும், காரணமாவது தெரிந்தாக வேண்டும். ஒருபடியாக, மட்டையை யன்னலிற் பொருத்தியபோது, அது அந்நேரத்தில் நிற்குமாப் போல நின்றது. ஒரு மூலையில் மட்டும் நீக்கல். பரவாயில்லை. வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு, நிச்சயமாக இவனைத் தெரியாது; ஆனால், இவனுக்கு வெளியே எல்லாந் தெரியும்.
நீக்கல் வழியே பார்த்தான்; அந்த மாடி யன்னல்களருகில் அப்போது நின்றவர்கள் இல்லை. இரண்டு 'நேர்ஸ்மார், அவசரமாக நடந்து வருவது தெரிந்தது. ஒருத்தி, யன்னலை நெருங்கி வந்தாள். கையிலிருந்த ஏதோ காகிதங்களை விரித்து வெளிச்சப்படுகிற மாதிரிப் பிடித்து, அந்த இடத்திலேயே நின்று படிக்கலானாள். இவன் நேரத்தைப் பார்த்தான். இருபது நிமிடமாகிக் கொண்டிருந்தது.
105

Page 55
சாந்தனின் எழுத்துலகம்
வெளியே இருந்தவன், மீண்டுங் குரல் கொடுக்கலாம். விஜயன் கூட தேடி வந்தாலும் வரலாம். -
டக்கென்று முடித்துவிட வேண்டும்’- என்று திரும்பவும் நினைத்துக் கொண்ட போதிலேயே, அதைச் சுலபமாக முடித்துக் கொள்வதற்கான வழியும் அவன் மனதிற் பளிச்சிட்டது.
கடதாசி மட்டை நீக்கலூடாகப் பார்த்தான். அந்த நேர்ஸ் இன்னமும் அங்கேதான் நின்று கொண்டிருந்தாள். அழகு என்ற சொல் கிட்டவும் வராது. சாதாரணம் என்று வேண்டுமானால் - அதுவும் யோசித்து - சொல்லலாம். கறுப்பு இளவயதுதான். உடற்கட்டை நிர்ணயிக்க முடியாதபடி, யூனிஃபார்ம் நின்றது. பாதகமில்லை.
அவள் தானறியாமலே இவனுக்கு உதவலானாள்.
இவன் வலு சுகமாக அவளுடைய யூனிஃபார்ம், தொப்பி
எல்லாவற்றையும் தன் மனதாலேயே கழற்றிவிட்டான்.
கற்பனைகள் கற்பிதங்கள் எல்லாம், அவள் நேருக்கு நேரேயே நின்றதால், நிதர்சனம் போலவே இவனை எழுப்பி, ஊக்கப்பபடுத்தின.
உச்சத்தை நோக்கி விரைந்த கணங்கள்.
எல்லாம் முடிந்தபோது, அப்பாடா என்றிருந்தது. கதவைத் திறந்து கொண்டு வெளியே வந்தபோது, அந்த நேர்ஸ்மீது பச்சாதாபமும் தன்னில் ஆத்திரமும் கொண்டான்.
1974
106

7
நம்பிக்கைகள் அழியவேண்டியதில்லை
கிறிஸ்மஸ்ஸிலிருந்து, இப்படித்தானிருக்கிறது. இன்றைக்கு மூன்றாவது நாள். சில்லென்று. பகல் முழுவதுங் கூடக் குளிர் இடைவிடாத பன்னீர் தெளிப்புப் போன்ற பூந்துமிகள், வெயிலையே காணவில்லை. காரியாலயத்திலும் தெருக்களிலுங் கூட, ஒரு அசாதாரணமான வருட முடிவில் நத்தாரையொட்டிய, வழமையான - ஒய்ச்சல், எல்லாமே மாறிவிட்டது போன்ற ஒரு புதிய அநுபவம். நேற்று மாலைவரையும், சந்திரனால் இவையெல்லாவற்றையும் அநுபவித்து ரசிக்க முடிந்தது. ஏனென்றால் இவையெல்லாவற்றையும் தன்னுள் வாங்கி, செமித்து ரசிக்கக் கூடியதாக மனம் விரிந்து தயாராயிருந்தது.
பிறகு இருந்தாற்போல, எல்லாமே. அல்லது எல்லாவற்றிற்குங் காரணமான மனம் - மாறிவிட்டது எவ்வளவோ நாட்களாக மனதில் கட்டியெழுப்பி வந்த அந்த ஆதர்சம் - அந்த இலட்சிய எதிர்பார்ப்பும், அதன் பயனாகிய கற்பனை (முட்டாள்தனமாகக்கூட இருக்கலாம்)களும் - உடைந்து விட்டதுபோல உணர்கிறான்.
அதனால் வந்த வெறுமையுஞ் சலிப்பும், உற்சாகத்திற்குக் காலாயிருந்த காலநிலையும் சூழலுங்கூட இன்று வெறுமையையுஞ் சலிப்பையும் பெரிதுபடுத்திக் காட்டுகின்றன.
வேற்றுமையில் ஒற்றுமை', 'தேசீயம்' என்கிறவையெல்லாம், வெறும் அலங்கார - அல்லது ஆடம்பர - சொல்லடுக்குகள்தானா என்ற எண்ணம்
107

Page 56
சாந்தனின் எழுத்துலகம்
மிதந்து நிற்கிறது ஒற்றுமை, பரஸ்பர நல்லெண்ணம் இவைகளெல்லாம், நிச்சயமாக ஒரு வழிப் பாதைகளல்ல சமீபத்திய க்டந்த காலங்களில் இதை வலுப்படுத்தக்கூடிய சிறுசிறு நிகழ்ச்சிகள் மனதில் கருக்கூட்டியதை அவன் அலட்சியப்படுத்தியது எப்படி உண்மையோ, அதேபோல், நேற்றைய சங்கதியுடன் அவையெல்லாம் சேர்ந்தபோது, ஒரேயடியாக வெடித்து, அவனைப் பாதித்ததும் உண்மைதான்.
வடக்கு, வடக்குத்தான் - தெற்கு தெற்குத்தான் என்பதைச் சொல்லிக் காட்டுவது போல அவர்களெல்லோருமே நடந்து கொண்டதை அவனால் சகிக்க முடியவல்லை. அவர்கள் எல்லோரிலும் எவ்வளவு நம்பிக்கை - புதிய இலங்கையைப் படைக்க முந்துகிற சக முன்னோடிகள் என்று எவ்வளவு நம்பிக்கை - வைத்திருந்தான்?.
எல்லாமே தூர்ந்து போய்விட, இன்று வெறும் வெறுமை, ஏமாற்றம், எஞ்சி நிற்கிறது.
இப்போதெல்லாம், பஸ் சுலபமாகக் கிடைத்து விடுகிறது கொஞ்ச நாட்களுக்குத்தான் இப்படியிருக்கும். புதுவருடம் பிறந்து, காரியாலயங்களும் பள்ளிகளும் சுறுசுறுப்புடன் மீண்டும் செயற்பட ஆரம்பிக்கிறபோது, காலை வேளைகளிலெல்லாம், பம்பலப்பிட்டி சந்தியில் பஸ்ஸுக்காகக் காத்து நிற்கிற
கியூ கொள்ளுப்பிட்டிப் பக்கமாகத் திரும்ப ஆரம்பித்து விடும்.
சந்திரனுக்கு முன்னால் கியூவில் நின்ற ஜோடிதான் பஸ்ஸிற்குள்ளும் முன் இருக்கைகளில் இருந்தது. இருவரையும் அடிக்கடி பார்த்திருக்கிறான். இந்த வேளைகளில்தான் சந்திரனின் அலுவலகத்திற்கு அருகில்தான் இருவரும் எங்கோ வேலை பார்க்கிறார்கள் போலிருக்கிறது.
"இனிமேல், பின்னேரங்களில் முன்னையப் போல ஒவ்வொரு நாளும் சந்திக்க முடியாது, நிமால்.” - அந்தப் பெண்தான் சொன்னாள், சிங்களத்தில். அவர்கள் பேச்சைக் கவனிக்க வேண்டும் என்ற எண்ணத்தின் எண்ணமே கூட இல்லாமலிருந்த சந்திரனுக்கு, இந்தப் பேச்சு சாதாரணமாகவே காதில் விழுந்தது.
“என்ன இருந்தாற் போல?”
108

சாந்தனின் எழுத்துலகம்
es ஒன்றுமில்லை, ஜனவரியிலிருந்து எங்கள் ஹிந்தி வகுப்புகள் தொடங்குகின்றன. கிழமைக்கு மூன்று நாட்கள்.”
“என்ன வகுப்புகள்?” - அவன் கேளாதவன் போலக் கேட்டான்.
“ஹிந்தி'
“ஹிந்தியா?. அது எதுக்கு?” - அந்த நிமால் கடகட'வென்று சிரித்தான்.
சந்திரனுக்கு அந்தச் சிரிப்பு மிகவும் பிடித்திருந்தது.
"ஏன்?. சும்மாதான் படிக்கிறேன்! எங்கள் கந்தோரிலுள்ள பெண்கள் பத்துப்பேர் சேர்ந்து படிக்கிறோம். ஒரு ரியூஷன் வகுப்பு நடக்கிறது.”
"அதைப் படித்துவிட்டு என்ன செய்யப் போகிறீர்கள்?”
"ஏன்? எத்தனை படங்கள் வருகின்றன.”
அவள் பேசி முடிக்குமுன்பே, நிமால் சிரிக்க ஆரம்பித்தான். முன்னையிலும் பலமான சிரிப்பு
"ஏன்? ஏன் நிமால்?”
“மாலா! உனக்குத் தமிழ் தெரியுமா?’ - நிமால் சிரிப்பை நிறுத்திவிட்டுக் கேட்டான்.
"ம்ஹம்'
“எழுத? படிக்க? பேச?.” “ஒன்றுமே தெரியாது”
"நீ இருக்கிறது இலங்கைதானே?.” - நிமால் கேட்டான் “இந்தியாவுக்கு, வட இந்தியாவுக்கு போகிற எண்ணமோ?” “இல்லை”
“பிறகு என்ன முட்டாள் வேலை பார்க்கிறாய்! இந்த இலங்கையில் இருந்து கொண்டு, எங்கள் பக்கத்து மொழி - சகோதர மொழியான தமிழைப்
109

Page 57
சாந்தனின் எழுத்துலகம்
சிங்களத்தைப் படிக்காமல் ஆங்கிலம் பிடிக்கிற கறுவாக்காட்டு சிங்களவர்களுக்கும், தமிழைப் படிக்காமல் ஹிந்தியைப் படிக்கிற உங்களுக்கும் என்ன வித்தியாசம்?. இப்படியான வேலைகளை இன்றைக்கு எங்கள் நாடு இருக்கிற நிலைமையில் தேசத் துரோகம் என்றுகூடச்
மாலா, சிரித்தாள் :
“கிழமையில் மூன்று நாள் என்னைச் சந்திக்காமல் இருக்க வேண்டுமே என்கிற கவலையில் இப்படிச் சொல்கிறீர்கள் நிமால்'
நிமாலுக்கு குரல் தடித்தது. உறுதியாய்ச் சொன்னான்.
“இல்லை மாலா! நிச்சயமாக அதற்காக இல்லை. நீ தமிழ் படிக்க
வேண்டுமென்று புறப்பட்டு, ஐந்து நாட்கள் உனக்கு வகுப்புகளிலிருந்தாலும்
。 。うう நான் அதற்காகக் கவலைப்பட மாட்டேன்!
பஸ்ஸிலிருந்து இறங்கிய சந்திரனுக்கு, மந்தாரமும் மப்புக் கூட்டித் துமிக்கிற வானமும் மீண்டும் புதிய அனுபவமாகி மனதை வருட ஆரம்பித்தன.
1974
110

மனிதர்கள், மனங்கள், மானங்கள்
இன்னமும் முக்கால் மணி நேரமிருந்தது. பரீட்சைக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மண்டபமும் அதன் சூழலும் நகரின் சந்தடிகளிலிருந்து ஒதுங்கி மிக மனோகரமாக இருக்கவே, அரைமணி நேரமாவது மெல்ல உலவி வரலாம் என்கிற எண்ணம் மனதினை இழுக்க அவன் வெளியே நடந்தான்.
ஒன்பதுக்குத் தொடங்குகிற பரீட்சை முடியப் பன்னிரண்டு மணியாகும். ஒரு மணிக்குள் லலனியின் வீட்டுக்குப் போய் விட முடியுமா? என்கிற குழப்பமும், பஸ் நேரத்திற்குக் கிடைத்தால் உடனேயே போய்விடலாம் - என்கிற ஒரு சமாதானமும்.
காற்சட்டைப் பையைத் தொட்டுப் பார்த்துக்கொண்ட போது, அவளுக்குப் பரிசளிப்பதற்காக வாங்கிய அந்த அழகிய வெல்வெட் கொட்டைப்பெட்டி, கையை ஸ்பரிசித்தது. மெதுவாக வெளியே எடுத்துப் பார்த்தான். இரண்டு பட்டாகச் சுற்றிய கடதாசியும், மேலுறையான ப்ரெளன் பேப்பரும் அவிழாமல் சரை கெட்டியாக இருக்கவே, 'வியர்வையில் ஊறி நசியாது’ என்ற நம்பிக்கை பிறந்தது. அதற்குள்ளே இரண்டு அழகிய பிளாஸ்ரிக் தோடுகளையும் வைத்திருந்தான்.
பரீட்சார்த்திகள் வந்து கொண்டிருந்தார்கள். படிக்கிற நாட்களில் அவன் எழுதிய பரீட்சைகளுக்கும் இதற்கும் வித்தியாசங்களிருந்தன. இளந்துள்ளலும் துடிப்புமாய் - கீரடி நாரடியாய் - அமளிபடுகிற பரீட்சை
111

Page 58
சாந்தனின் எழுத்துலகம்
மண்டபங்கள், ஒத்த வயதுள்ள இளம் மாணவர்கள் இருந்தெழுதிய பரீட்சைகள் அவை, ஐம்பது வயதும் இருபது வயதும் அருகருகே இருந்தெழுதுவதும்; ஹிப்பித்தலையும் வழுக்கை மண்டையும், நஷனல் வேட்டியும் ஹாஃப்ஸ்கேட்டும் முன் பின்னாக இருந்து மண்டையைச் சொறிவதும் இங்கே நடக்கிறது.
வரக்கூடிய கேள்விகளென்று ஒரு மாதமாகவே அலுவலகங்களிலெல்லாம் பேசப்பட்டுப் பழகிப்போன தலைப்புகள் அந்த மாஸ்ரர் சொன்னார், இந்த மாஸ்ரர் சொன்னார், கனகாலமாய் வராத கேள்வி: கரண்ட் ரொப்பிக்ஸ் - என்று எத்தனையோ ஆதாரங்களிலே விளைந்த தலைப்புகள். அவனுக்கு என்னவோ, நவ கார்யால வெலாவபுதிய வேலைநேரம் - தான் வருமென்ற நம்பிக்கை. பொது ஊழியரை நேரடியாகப் பாதிக்கிற விஷயங்களை - மாற்றங்களை - வியாசங்களாகக் கொடுப்பது வழமை என்கிற எண்ணம் உறுதியாயிருந்தாலும், இந்த விஷயம் குறிப்பிடக்கூடிய மாற்றமென்பதாலும் அவன் நம்பியிருந்தான்.
சிங்களம் படிப்பதா, இல்லையா என்ற யோசனைக்கெல்லாம் போகாமல் - அல்லது, அதைத்தாண்டி - அவன் இந்த சோதனை எடுக்க வந்திருந்தான். அந்த மொழியைத் தனக்குள் சுவறச் செய்ய இயல்பாக முடிந்து விட்டது. அந்த மொழியில் ஒரு பிரேமை அவனால் பிரேமிக்கப்படுபவளின் தாய்மொழி என்று லலனியின் மொழியைப் பயில்வதில் ஓர் ஆர்வம். அது அரசகரும் மொழியோ, என்னவோ.
அதனால் - அந்தப் பிரேமை பிரசவித்த ஆர்வத்தால் - விளம்பரப் பலகைகளையும், போஸ்ரர்களையும் எழுத்துக் கூட்டி வாசிக்க ஆரம்பித்து, இன்று பத்திரிகைகள் படிக்கிற அளவில் வந்து நிற்கிறது. இதுக்காக ரியூஷன் எடுக்க எனக்கு நேரமில்லை என்றுதான் ஆரம்பத்தில் சொல்லிக் கொண்டிருந்தான் அவன்.
பிறகு, எப்படியோ ஒரு ரியூஷன் வைத்துக் கொள்ள நேர்ந்தது. மிஸ். பெரேரா கொழும்பில் அவ்வளவு பெயரெடுத்த ஆசிரியை அல்லள். அவளது ஃபீஸும் மிக அதிகம். தவிர தமிழ் ரிக்க ரிக்கத்தான் தெரியுமென்பதால், ஆங்கில மூலமே சொல்லிக் கொடுப்பாள். இதனாலெல்லாம் அவளிடம் அதிகம்பேர் படிக்கப்போவதில்லை. இவனது தோழிகளிலே ஒருத்திக்குத்
112

சாந்தனின் எழுத்துலகம்
தோழியாக இருந்த மிஸ் பேரேராவை அந்தப் பெண் அறிமுகப்படுத்திய போதுதான் அவள் ரியூஷன் கொடுப்பது தெரிய வந்தது. மிஸ், பெரேராவுக்கு வயது இருபத்தைந்திற்கும் முப்பதிற்கும் இடைப்பட்ட எதுவுமாக இருக்கலாம்
நடந்த வண்ணமே நவ கார்யால வெலாவ பற்றி மிஸ், பெரேரா தந்த குறிப்புகளைப் பிரித்து ஒரே மேலோட்டப் பார்வை.
“எக்ஸ்கியூஸ் மி” - குரல் அவனை நிறுத்திய போதுதான். தான்
நடந்தபடி தெருமுனைக்கே வந்திருப்பது தெரிந்தது. திரும்பியபோது, அந்த மனிதர் - அவனை அழைத்தவர் - ஆங்கிலத்தில் கேட்டார் :
“இங்கே எங்கு பரீட்சை நடக்கிறது?”
அவன் சுட்டிக் காட்டினான்.
ஒரு நிமிட இடைவெளிக்குள் "நீங்களும் அந்தப் பரீட்சை எடுக்கி றிர்களா?” என்ற இரண்டாவது கேள்வி ஒரு தோழமைப் பாங்கில் வந்தது.
“ஆம்.” “நானுந்தான் எழுதப் போகிறேன் - பாருங்கள் என்னை” அவன், அப்போதுதான் அவரை சிரத்தையிற் கொண்டான். ஐம்பது வயதிருக்கலாம் - அதற்காகத்தான் சொல்லியிருக்க வேண்டும். தமிழ் முகவாகு இல்லை.
"நீங்கள் முஸ்லிமா? - தமிழிற் கேட்டான். கேட்டபிறகுதான்.தான் அப்படிக் கேட்டிருக்கக்கூடாதென்று தோன்றியது. “இல்லை, நான் ஒரு BURGHER”அவர் முறுவலுடன் ஆங்கிலத்தில்
சொன்னார்.
". ஐ ஆம் ஜோன்ஸ் - வில்லியம் ஜோன்ஸ்.” அவர் நீட்டிய வலக்கரத்தைப் பற்றிக் குலுக்கினான். "ஐ ஆம் தேவன். உங்களைச் சந்தித்ததில் மகிழ்ச்சி.” கல்லூரியை நாடி இருவரும் மெல்ல நடந்தார்கள்.
“உமக்கு எவ்வளவு கால “ஸேவிஸ் ஆகியிருக்கிறது?’ என்றார் ஜோன்ஸ்.
113

Page 59
சாந்தனின் எழுத்துலகம்
“மூன்று வருஷம்.” “தம்பி, எனக்கு முப்பது வருஷம்.”
"ஓ! நான் அப்போதே கேட்க நினைத்தேன்; எங்களுக்கு புதியவர்களுக்குத்தான். வேலை நிரந்தரமாக்கப்பட வேண்டுமென்றால் சிங்களம் தேவை. நீங்கள் ஏன் இந்தப் பரீட்சை எடுக்க வேண்டும்? பழைய
ஊழியராயிற்றே!
அவர் ஒரு நலிந்த சிரிப்புடன் சொன்னார் :
“இனி எக்ஸ்ரென்ஷன்’ கேட்கப் போவதனால் நானும் பாஸ் பண்ணியாக வேண்டுமாம்.”
எட பாவமே என்றிருந்தது.
“என்னைப் பார், நான் பிள்ளைக்குட்டிக்காரன். இந்த வயதில் என்னைப் படிக்கச் சொன்னால் என்ன செய்வேன்?” - அந்த மனிதரின் முகத்தில் கோடிட்டிருந்தது கவலையா வெறுப்பா என்பதை இனங்கண்டு கொள்ள அவனால் முடியவில்லை.
D
சிரசரவென்று கேட்ட ஒலிகள் - நடையொலிகள், பேச்சொலிகள், பேப்பர் ஒலிகள் - எல்லாம் அடங்கி நிசப்தம் நிலவியது. மணி ஒன்பது.
பரீட்சை தொடங்கியாயிற்று.
தனித்தனி வகுப்பறைகள். ஒவ்வொன்றிலும் பதினைந்து பதினாறு பரீட்சார்த்திகள்.
அவன் விகாாத்தாளைப் பார்த்தான். வியாசம் எழுதத் தெரிவுசெய்யப்பட வேண்டிய தலைப்புகளில் நவ கார்யால வெலாவவும் வந்திருந்தது. அவனுள் ஊற்றெடுத்த ஒரு உசார். இது என்ன பரீட்சை? சமாளித்து விடலாம் என்கிற துணிவு. இந்தச் சோதனைக்கா இப்படிப் பயந்து சாகிறான்கள்?
ஏற்கனவே படித்து, நினைவில் மதர்த்து நின்ற குறிப்புகளை
கடகட'வென்று அதே ஒழுங்கில் ஒரு காகிதத்தில் குறித்துக் கொண்டபின்தான் முட்டு நீங்கியது. ஒரு விஷயமும் மறக்கவில்லை -
114

சாந்தனின் எழுத்துலகம்
வசனங்கள்கூட அதே ஒழுங்கில் பீறிட முயன்றன. அவன் எழுத்தில் ஒன்றிப்போனான்.
D
நவ கார்யால வெலாவவை முடித்துவிட்டு நிமிர்ந்த போது மணி பத்து. மிஸ். பெரேராவுக்கு மனதுக்குள்ளேயே ஒரு தாங்ஸ் இரண்டு நிமிஷம் ஒய்வெடுத்துக் கொள்ளலாம் போலிருந்தது. சோம்பல் முறித்து நெட்டி நெருடியபடி சுற்று முற்றும் பார்த்தான்.
சின்ன அறை. நீளப்பாட்டில் நாலு வரிசை மேசைகள், அகலப்பாட்டில் நாலு வரிசை. அவனிருந்த வரிசையில் முதலிடம் காலியாக இருந்தது. யாரோ வரவில்லை. மேற்பார்வையாளரின் இடம் கரும்பலகைக்குக் கீழே. அந்த ஆள், கைகளை மார்பிற் கட்டியபடி குறுக்கும் நெடுக்கும் உலவிக்கொண்டிருந்தது. முப்பத்தைந்து வயதிருக்கலாம். முகத்தில் ஒரு வரட்டு ஆணவப் பார்வை. கவனித்தே தீருவேன்' என்பதுபோல விழிகள் கடகடவென்று ஒவ்வொரு பரீட்சார்த்தி மேலும் மாறி மாறி மேய்ந்தபடி இருந்தன. இந்தச் செயலைப் பார்த்ததும் அவனுக்குச் சிரிப்பு வந்தது.
அடுத்த கேள்வி. தரப்பட்டுள்ள பத்தியை வாசித்து அதன் கீழ் கேட்கப்பட்டுள்ள வினாக்களுக்கு விடை எழுதுதல். அது வலு ஸிம்பிள்.
O
பத்தரைக்கு இரண்டாவது கேள்வி முழுவதும் முடித்தாயிற்று. தான் அதற்கு விடையளிக்கச் சற்று அதிக நேரம் எடுத்து விட்டதாகவே படுகிறது; இனி கடகடவென்று எழுத வேண்டும் என்று எண்ணிக் கொண்டான்.
இன்னும் மூன்று கேள்விகள். அடுத்தது, மொழி பெயர்ப்பு அல்லது சுருக்கம். கடைசி இரண்டும் இலக்கணம்.
சுருக்கம் எழுதுவது சுலபம் என்று தோன்றுகிறது. அதற்கான விசேட விடைத்தாள் தேவை.
மேசையில் பேனாவால் டொக் டொக்கென்று மெதுவாகத் தட்டினான்.
“பிரிஸி பேப்பர்.”
பேப்பரைக் கொடுத்துவிட்டு இடுப்பிற் கையை வைத்தபடி அந்த ஆள்
115

Page 60
சாந்தனின் எழுத்துலகம்
அவன் எழுதியவற்றை வாசிக்க முனைந்தது. நிமிர்ந்து பார்த்தான். அதன் முகத்தில் ஒரு கேலி முறுவல். ஆத்திரமாக வந்தது. -
'எதுக்கு இளிக்கிறான்? - வினாத்தாளை எடுத்து, சட்டென்று எழுதிய தாளின் மேல் வைத்தான் - முகத்திலறைந்தது போல, அது அப்பால் நகர்ந்தது. -
சுருக்கு எழுதலுக்கு ஆயத்தஞ்செய்யும்போது, ஒரு சொல் நினைவில் நெருடியது - 'சத்தெக்கு (ஒர் பிராணி) 'சத்தெக்கு. சுரத்தல் சத்தெக்கு - அவன் முகத்தில் சிரிப்பு மலர்ந்தது. முன்பொரு எக்ஸாமில் சுரத்தல் சத்தெக்கு (ஓர் செல்லப் பிராணி) பற்றி எழுதச் சொன்ன வினாவுக்கு, சுரத்தலி (காதலி) பற்றி விளாசி விட்டு வந்த மாதவனின் நினைவு - பாவிப்பயல் - சுரத்தல் சத்தெக்குவும். சுரத்தலி’யும் ஒன்றென நினைத்ததால் வந்த வினை அந்த விடைத்தாளைத் திருத்தியவன் எப்படிச் சிரித்திருப்பான் - கொடுத்து வைத்தவன்.
சுரத்தலி - அவனுக்கு லலனியின் ஞாபகம் வந்தது. மணியைப் பார்த்தான், பத்து முப்பத்தைந்து. ஒரு மணிக்கு அவள் பார்த்துக் கொண்டிருப்பாளே என்கிற எண்ணம் நெஞ்சில் உறைத்தது.
முடிந்தால் பதினொன்றரைக்கே கொடுத்துவிட்டுப் போய்விட வேண்டும் என்று நினைத்துக் கொண்டான். முந்தாநாளே அவள் கேட்டாள் :
"உங்களுக்கு எக்ஸாம் பன்னிரண்டு மணிக்குத்தான் முடியுமென்றால், சாப்பாட்டை இரண்டு மணிக்கு வைத்துக் கொள்ளலாமே" அவளின் பெற்றோரும் ஆமோதித்தார்கள்.
"ஒவ் புத்தா - எங்களுக்கென்ன அவசரம்? நீ ஆறுதலாக வரலாம்.”
அவன் தான் விடாப்பிடியாக மறுத்து விட்டான்.
சே எதுக்கு அப்பிடி? அங்கிருந்து இங்கு வர ஒரு மணித் தியாலம் போதாதா?’ நான் பன்னிரண்டே முக்காலுக்கே இங்கே நிற்பேன்’
"நீ பிந்தி விடாதே. பிறகு என் சாப்பாடும் போச்சு’ - நிஹால் தோளில் தட்டிச் சிரித்தான்.
என்னால் அவர்கள் மினைக்கெடக் கூடாது - அதுவும் அவளின்
116

சாந்தனின் எழுத்துலகம்
பிறந்த நாளில் - மனதை ஒருமுகப்படுத்தி எழுத முயன்றான்.
சிந்தனையும் அதன் பயனாகிய எழுத்தும், அதிலேயே ஒன்றிப் போனான்.
O
Tெழுதியதைத் திரும்பச் சரிபார்த்துக் கொண்டிருந்தபோது, நிமிர்ந்தான். மணி, பதினொன்று. விடைத்தாள்களைச் சேர்த்துக் கட்டுகிற நூல் துண்டை ஒருவன் கொடுத்துக்கொண்டு போனான். கைகளில் விடைத்தாள்களை வைத்து வாசித்தபடி மேற்பார்வையாள் வெளிப்படையாகவே சிரித்துக் கொண்டிருந்தது. யாரோ வேளைக்கே கொடுத்துவிட்டுப் போயிருக்க வேண்டும்.
இதில் சிரிக்க என்ன இருக்கிறது? - அவனுக்கு அருவருப்பாக இருந்தது.
அவர்களின் விடையை இவன் எப்படி வாசிக்க முடியும்? சரி, வாசித்தாலும் என்ன இளிப்பு? பிழை விட்டால்தான் என்ன? இது அவர்களின் தாய்மொழியா - கூலிக்கு மாரடித்துப் படித்தது; இவ்வளவு எழுதியது கூடப் போதாதோ? கடைசிக் கேள்வியில் புலனைச் செலுத்த முயன்றபோது சிரமமாயிருந்தது. என்ன மனிதர்கள்! லலனியின் குடும்பத்திற்கும் இதுகளுக்கும் துருவ ஒற்றுமை இந்தக் கும்பலின் மற்றப் பிரகிருதிகள்.
அவன் மேலதிகாரி பெர்னாண்டோ, ஏன், மிஸ். பெரேரா
அவன் மேல் அவள் இன்ட்ரெஸ்டட்டாயிருந்தாள் என்பதை அவளே ஒப்புக்கொண்டது உண்மைதான். அவனுக்கு உயிரான ஒரு பெண் இருக்கிறாளென்பதை அவன் மிஸ். பெரேராவிடம் அந்தச் சமயம் சொன்னதைக் கூட, அவள் பெரிதாக மதிக்கவில்லை. அவனுக்கும் பயமாயிருந்தது. லலனியைப் பற்றி - அவள் அண்ணன் நிஹாலுடன் படித்து சிநேகமானதன் மூலம், லலனியின் காதலும் அவர்களது பெற்றோர்களின் அன்பும் காலப்போகில் சித்தித்த கதையைப் பற்றிய போதெல்லாம்,'மோகினி என்ற பெயர் நினைவு வரும். அவளது பெயர் சுமணாவோ, சோமாவோ
117

Page 61
சாந்தனின் எழுத்துலகம்
ஏதோ. ஆனாலும், நெருக்கமான பரிச்சயங்களின் பிறகுங்கூட, மிஸ். பெரேரா என்று அழைத்துக் கொண்டும், 'மோகினி' என்று நினைத்துக் கொண்டும் தானிருந்தானேயொழிய அவளது பெயரே நினைவுக்கு வந்ததில்லை.
மாலையிலெல்லாம் ரியூஷன் ஐந்து மணியிலிருந்து ஏழரை மட்டுமாவது நீளும், வாரத்தில் மூன்று நாட்கள் - ஒரு மணி நேரம் பாடம் என்பது பேச்சு. ஆறு மணிக்குப் பாடம் முடிந்தால் கதை எங்கெல்லாமோ போகும் - அரசியலிலிருந்து ஆயுள்வேதம் வரை.
மிஸ். பெரேராவுக்கு தமிழ் பேசத் தெரியாவிட்டாலும், பேசினால் புரியும். அவள் அபிப்ராயத்தில் தமிழிலும் பார்க்கச் சிங்களம் உயர்ந்தது என்கிற ஒரு எண்ணமும், அதை இடைக்கிடை சொல்லித் திருப்தி கொள்கிற ஒரு முனைப்பும் இருந்தன என்பதை அவன் போகப் போகப் புரிந்து கொள்ள நேர்ந்தது.
ஒருநாள், அடி சந்தித்தது. பீடித்துக் கொண்டாள். வந்த ஆத்திரத்தை அடக்கிக் கொண்டு கேட்டான்.
“சரி, இலங்கையிலிருந்துக்கிற நாங்கள்தான் உங்களிடமிருந்து எடுத்துக் கொண்டோம். இந்தியா, மலேசியா, சிங்கப்பூர் இந்த நாட்டுத் தமிழர்களுக்கெல்லாங்கூட நீங்கள்தான் அந்தச் சொல்லை கொடுத்தீர்களா?”
அவள் பேசவில்லை.
அவளுடைய இன்னொரு ஆசை சமஸ்கிருதம் சம்பந்தப்பட்ட தாய் - அதாவது சம்ஸ்கிருதத்திலிருந்துதான் தமிழ் தோன்றியது என்பதையும் எப்படியாயும் நிறுவிவிட வேண்டுமென்பதாய் இருந்தது. இயந்திரம்' என்ற சொல்லை இன்னொருநாள் இழுத்துக் கொண்டு வந்தாள்.
“பார்த்தீர்களா, மிஸ்டர்? யந்த்ர, என்ற சமஸ்கிருதச் சொல்லிலிருந்து தான் உங்கள் தமிழில் யந்திரம் என்று வந்திருக்கிறது! தமிழ் சமஸ்கிருதத்திலிருந்து வந்தது என்பதற்கு இது ஒர் ஆதாரமல்லவோ?’
“யந்திரம் என்று தமிழில்லை” - அவன் டக்கென்று சொன்னான்.
118

சாந்தனின் எழுத்துலகம்
“என்ன? தமிழில்லையா? உங்களுக்கு உங்கள் பாஷையே சரியாகத் தெரியாது போலிருக்கிறது’ - அவள் சிரித்தாள்.
“இல்லை, தமிழில்லை, நீ சொல்வது போல அது சம்ஸ்கிருதந்தான் - எங்களிடம் வேறு நல்ல சொல்லிருக்கிறது’
“என்ன அது?” - அப்படியொன்று இருக்கவே முடியாது என்கிற தொனி "பொறி” - அவன் அழுத்தந்திருத்தமாய்ச் சொன்னான். 'தமிழைப் படியாத நீ, அதை விமர்சிப்பதை அநுமதிக்க முடியாது! நான் சொல்லலாமே - இதே மாதிரி - சம்ஸ்கிருதமே தமிழிலிருந்து வந்ததென்று?” - அவன் சிரித்துவிட்டு எழுந்து வந்தான்.
D.
யTழ்ப்பாணத்தில், நண்பன் விஜயரத்தினத்திற்குக் கல்யாணம். அலுவலக முகவரிக்கு அழைப்பு அனுப்பியிருந்தான். அதைப் பார்த்துக் கொண்டிருக்கும்போது பெர்னாண்டோ அந்தப் பக்கம் வந்தார்.
“ஒகோ! உனக்கு எப்போதென்று யோசிக்கிறாயோ? யாருடையது அது?’ என்று சிரித்தார்.
அவனும் சிரித்தவாறே அழைப்பிதழை நீட்டினான். வாங்கி வாசித்தவர், விஜயரத்னம் என்று முணுமுணுத்தபடி திருப்பிக் கொடுத்தார்.
“யூ ஸி, இந்த விஜயரத்னம் என்பது, விஜயரத்ன என்ற சிங்களப் பெயரிலிருந்து வந்திருக்க வேண்டும். இல்லையா?”
”இல்லை, மிஸ்டர் பெர்னாண்டோ - அது தமிழுமில்லை, சிங்களமுமில்லை; சம்ஸ்கிருத ஒரிஜின்.”- இப்படிச் சொன்னபோது, தமிழ்ப் பெயர்களின் பின்னாலுள்ள இம்மன்னா'இன்னன்னாக்களை வெட்டிவிட்டு சிங்களப் பெயராக்குகிறார்கள் என்று தமிழர்கள் சொல்வது நினைவு வந்தது.
பிறகு கேட்டான் :
“அழகிய வண்ண, தென்னக்கோன் - என்றெல்லாம் பச்சைத் தமிழ்ப் பெயர்களிருக்கிறதே, உங்களிடம்'
"உனக்கென்ன, பைத்தியமா.-மிஸ்டர்.பெர்னாண்டோ முறைத்தார்.
119

Page 62
சாந்தனின் எழுத்துலகம்
“கந்தையா, நடராசன் போன்ற பெயர்கள்தான் உங்கள் ஒரிஜினல் பெயர்கள். அழகிய வண்ண, தென்னக்கோன் எல்லாம் சிங்களந்தான்!” - அவர் சற்று ஸிரியஸ்ஸாகப் பேச முற்படுவது தெரிந்தது.
மிஸ். பெரேராவுக்குச் சொன்னதுபோல, வெளிநாட்டுத் தமிழர்களைத் துணைக்கிழுத்ததும் பெர்னாண்டோ நிறுத்திக் கொண்டார்.
இரண்டு நாட்களுக்கு முன்பு, இந்தப் பரீட்சைக்கான அநுமதிப் பத்திரத்தில் சான்று ஒப்பத்திற்காக பெர்னாண்டோவிடம் போனான். பார்த்துவிட்டு, "ஓ! நீகூட எடுக்கிறாயா?” என்றார். அப்போதுதான் இந்தப் பரீட்சை எழுத முடிவு கட்டியதற்காக வருத்தம் அவனுக்கு முதன் முறையாகத் தலைகாட்டியது.
O
முழுவதும் எழுதி முடிந்தபோது பதினொன்று நாற்பது. அநேகமாக எல்லோருமே எழுதி முடித்தாயிற்று. முன்வரிசையில் ஒரு பெண்ணும் வலது மூலையிலிருந்த இன்னொருவரும்தான் இன்னமும் எழுதிக் கொண்டிருந்தார்கள்.
விடைத்தாள்களை ஒழுங்காக அடுக்கிக் கட்டி மேசையில் வைத்தபோது, அந்த ஆள் அருகில் வந்தது. அவன் சும்மா இருந்தான்.
"இவறத?”
புரியாதவன் போலக் கேட்டான் : “என்ன?”
“முடிந்ததா?” - மெல்லிய வெருட்டுத் தொனிக்க ஆங்கிலத்தில் கேள்வி வந்தது.
“GJ Gör?”
“தந்திட்டுப் போகலாம்”
“இன்னும் பதினஞ்சு நிமிஷமிருக்கு-நான் திருப்பிப் பார்க்க வேணும்' - நீ எப்படிக் கேட்க முடியும்? என்கின்ற தைரியம். அது தன்பாட்டில் ஏதோ முணுமுணுத்தபடி நகர்ந்தது.
எழுதியவற்றைத் திரும்பி வாசிக்கக்கூட மனம் வரவில்லை.
120

சாந்தனின் எழுத்துலகம்
அவனுக்குத் தன்மேலேயே கோபம் வந்தது. இந்தப் பரீட்சை எடுத்ததே மகா தவறு என்று பட்டது. ஒரு கூச்சம். இதைப் பாஸ் பண்ணாமல் விட்டாலே நல்லதாகிவிடும் என்ற ஒரு தவிப்பு.
அது சுற்றிச் சுற்றி நடந்து கொண்டிருந்தது. அவனைத் தாண்டும்போது உற்றுப் பார்த்தது. பிறகு நின்று, ஒரளவு உரத்த குரலில் வேறெதையோ குறிப்பதான பாவனையில் நூல்காரனுக்குச் சொல்லிற்று:
"பாரேன்'
பாரேன் இந்தப் பரிதாபங்களை - என்று அது தொனித்தது.
அவன் சடாரென்று நாற்காலியைத் தள்ளிவிட்டு எழுந்தான். தான் சொன்னது அவனுக்குப் புரியாது என்று அது நினைத்ததோ இல்லை, புரிய வேண்டுமென்றுதான் அப்படிச் சொல்லிற்றோ - எழுந்த வேகத்தைக் கண்டு திடுக்கிட்டது.அவன் எழுந்து விடைத்தாளை நின்ற நிலையில் நீட்டினான். அருகில் வந்தவுடன்,
“ஒரு நிமிஷம்”- அதன் முன்னால், தன் மேசையில் விடைத்தாள்களை வைத்துவிட்டுப் பேனையைத் திறந்தான்.
கடதாசியின் குறுக்கே கரியகோடு நீண்டு விழுந்தது.
அதன் திகைப்பு மீளுமுன்பே, மூன்று தாள்களிலும் - ஆறு பக்கங்கள் - கோடு விழுந்து விட்டது!
வெட்டப்பட்டு வெறுங்காகிதமாகிவிட்ட தாள்களை அதனிடம் நீட்டினான்.
"ஏன்.” அதற்குப் புரியவில்லை.
அதன் கைகளில் விடைத்தாள்களை வலிந்து திணித்தபடி, காதருகில் சாய்ந்து கூறினான். "வைத்திரு'
அந்தக் குரலில் ஒலித்த கடூரம் அதை உறுத்துமுன்பே அவன் வெளியேறினான்.
லலனி பார்த்திருப்பாள்.
1974
121

Page 63
9
இரண்டு நிமிட மெளனம்
போன ஆண்டு விழாவிற்கு கனகசபை இருந்தார். இம்முறை, ஆளில்லை. விழா தொடங்கியதுமே தலைவர் ஞாபகமாக சபையோர் எல்லோரையும் எழுந்து நின்று இரண்டு நிமிட மெளனம் அனுட்டிக்கும்படி வேண்டிக் கொண்டார்.
சடசடவென்று நாற்காலிகள் தள்ளப்பட்ட ஓசைகள், செருப்பொலிகள் எல்லாம் பட்டென்று ஒய்ந்து, மின்விசிறிகளின் ஓங்காரம் மட்டுமே மண்டபத்தை நிறைத்தது. மெளனம் என்றால், மெளனம் இந்தப் பெரிய மண்டபம், இத்தனை பேருடனும், இப்படி அமைதியாக இருக்க முடியுமா என்று எனக்குப் பிரமிப்பாக இருந்தது.
இந்த இரண்டு நிமிடத்தில், மற்றவர்கள் என்ன செய்வார்கள், என்ன நினைப்பார்கள் என்று, எனக்குப் புரிந்ததில்லை. கடவுள் நம்பிக்கை இருந்தது. நல்லவர்களாகவும் இருந்தால் இறந்து போனவரின் ஆத்ம சாந்திக்குப் பிரார்த்திக்கக் கூடும். மற்றவர்கள் என்ன செய்வார்களென்று யோசித்தேன்.
இரண்டு நிமிடமாகிவிட்டது போலிருக்கிறது. மீண்டும் சடசட ஒலியுடன் எல்லோரும் அமர்ந்தார்கள். இந்த வேளையில் கனகசபையின் முகத்தையாவது ஒரு நிமிடம் நினைவுக்குக் கொண்டு வந்து பார்த்து விட வேண்டும் என்று நினைத்திருந்தும் எனக்கு மறந்து போய்விட்டது.
1975
122

10
பலவீனம்
இரண்டு வினாடி அவகாசங்கூட இருக்கவில்லை நான் அதனைக் கண்டபோது.
அழகான மலர். மஞ்சள் நிறம். இடையிடையே இளஞ் சிவப்புஞ் சேர்ந்திருந்தது மாதிரி. இப்போது என் நினைவுக்கு வருகிறது. அதற்கு முன், எப்போதாவது அப்படி ஒரு மலரைக் கண்டதாக ஞாபகமுமில்லை. அது, என்ன பூவென்றோ, அதன் பெயர் என்னவென்றோ கூட நான் அறிந்திருக்கவில்லை.
என் சைக்கிளின் முன் சில்லு, அந்த இரண்டு வினாடிக்குள் நாலு அடி போவதும், அதன் கீழ் அடிமலர் அகப்பட்டு நசுங்குவதும் நிச்சயம்.
'சடக்கென்று இடது பக்கம் வெட்டினேன். இந்தப் பூ எப்படி இந்த இடத்திற்கு வந்திருக்கும்?
நடைபாதையில் வந்த, யாரோ ஒரு மெலிந்த மனிதர்மீது மோதியதும், ‘ஸொரி என்றவாறு பிரேக் போட்டதும், இன்னமும் நினைவிலிருக்கின்றன.
1975
123

Page 64
பெயர்
கிணபதிப்பிள்ளை ஒரு கடை போட முடிவு செய்தார். வட்டிக்கடை, நல்லதாக ஒரு பெயர் வைக்க வேண்டுமென்று யோசித்தார். கன நாட்களாகியும் ஒன்றும் அகப்படவில்லை.
இம்மாதிரிச் சங்கதிகளில் கெட்டிக்காரரான தன்னுடைய நண்பர் சுப்பிரமணியத்தைக் கேட்டார். மணியத்தார் கொஞ்ச நேரம் யோசித்துவிட்டு,
“மக்கள் வட்டிக்கடை என்று பெயர் வையுங்கோ' என்றார்.
1975
124

12
பொடியன்
அமரசிங்கத்தார் வீட்டுக்கு வந்தபோது, அவருடைய மிஸ்ஸிஸ் அந்த நியூஸைச் சொன்னா, பகல் ஒன்றரை மணிக்கு, ஸி.டப்ளியு. ஈக்குப் போன பொடியனை இன்னமுங் காணேல்லையாம். இப்போது பணி ஐந்து.
“இப்ப என்ன செய்யிறது?’ என்றார் அவர்.
“பொலிசிலை ஒரு என்றி போட்டிட்டு வாங்கோவன்.”
இரண்டு நிமிட யோசனைக்குப் பிறகு, “அவன்ர நேம் என்ன?’ என்றவாறு அமரசிங்கத்தார் எழுந்தார்.
"ஓ! பொடியன். பொடியன்ஸ் நேம்” என்ற மிஸ்ஸிஸ் அமரசிங்கம், தீவிர யோசனையின் பின்னும், பொடியனுக்குப் பெயர் ஒன்று இருக்கத்தான் வேண்டுமென்பது மட்டுந்தான் நினைவுக்கு வந்தவளாக, "பொறுங்கோ, பேபி வரட்டும் கேட்டுச் சொல்லுறன்” என்றா.
மிஸ்டர் அமரசிங்கம், பேபியின் வருகையை எதிர்பார்த்து மீண்டும் நாற்காலியில் அமர்ந்தார்.
1975
125

Page 65
13
அந்நியமான உண்மைகள்
"இங்கயிருந்து யாழ்ப்பாணத்துக்குப் போற முதல்பஸ் எத்தனை மணிக்கு காலையில?” சைக்கிளைக் கையில் பிடித்தபடி தகரக் கூரையின் கீழ்க் குனிந்து, உள்ளே எதையோ எழுதிக்கொண்டிருந்த ஆளிடம் கேட்டான் சிவம்.
அந்த ஆள் - ரைம் கீப்பரோ, யாரோ - இவனை நிமிர்ந்து பார்த்துவிட்டு, வேலையில் மீண்டும் மும்முரமாய் ஈடுபட்டதுபோலக் குனிந்து எழுதலானான். அந்த ஷெட்டுக்குள் அது வெறும் ஷெட் மட்டுமில்லை. திருகோணமலை பஸ்நிலைய காரியாலயம் ரைம் கீப்பர் அலுவலகம், புக்கிங் கந்தோர் எல்லாம் அதுதான் - வேறு யாருமில்லை. எட்டடிக்கு எட்டடி சதுரமான அந்தத் தகரக் கொட்டகையின் கூரை விளிம்பு நிழலில் மட்டும் ஐந்தாறு பேர் ஒண்டிக்கொண்டு இந்தப் பதைபதைக்கிற வெயிலிலிருந்து தப்புகிறதாக எண்ணிக் கொண்டிருந்தார்கள்.
வேலையில் மும்முரமாக ஈடுபட்டிருக்கிற ஆளைக் குழப்பி விசாரிக்க வேண்டிய அவசரம் சிவத்திற்கில்லை. சைக்கிளை மெல்லத் தள்ளிச் சாத்திவிட்டு வந்து, வலைக் கம்பிக்கருகில் ஆறுதலாக நின்றபடி உள்ளே எழுதிக் கொண்டிருந்தவன் வேலையை முடிக்குமட்டும் பார்த்திருந்தான்.
நின்ற இடத்திலேயே தலையைத் திருப்பிப் பின்னால் தெரிந்த சந்தைக் கடைகளைப் பார்த்தபோது, கூரைகளுக்கு மேலே, வலு உயரமாய்த் தெரிந்த மணிக்கூண்டு கோபுரத்தில் பதினோரு மணியாகிக் கொண்டிருந்தது.
126

சாந்தனின் எழுத்துலகம்
கைகளைச் சொடுக்கும் ஒசை கேட்டு சிவம் திரும்பினான். உள்ளே இருந்தவன் பேனாவை மூடி மேசையில் வைத்துவிட்டு இவனைப் பார்த்தான்.
“காலையில யாழ்ப்பாணத்துக்குப் போகிற முதல் பஸ் எத்திணை மணிக்கு?”
அந்த ஆள் சொன்ன பதில் இவனுக்குப் புரியாததால் என்ன செய்வதென்று தெரியாமல் தடுமாறிய அந்த ஒரு கணத்திலேயே அவனுள் ஒர் சினமும் கிளர்ந்தது.
மச்சான்காரனின் வீட்டில் வந்து நின்று, திருகோணமலையைப் பார்க்க அவன் செலவிட்ட இந்த மூன்று நாட்களிலும் அவன் அவதானிக்க நேர்ந்தவற்றிற்கு ஒரு உச்சம் போல இந்த நிகழ்ச்சி அமைவதாக அவன் உணர்ந்தான். அதுவே இந்தச் சினத்தின் பிறப்புக்குக் காலாகவுமிருந்தது. அதை அடக்கிக் கொண்டு மீண்டும் சொன்னான் :
“விடிய யாழ்ப்பாணத்துப் போற முதல் பஸ்ஸில் ஒரு சீட் புக் பண்ண வேணும்.”
இவன் சொன்னது புரியாததாக அவன் முகத்தில் கோலங்காட்டினான். “உங்களுக்கு தமிழ் தெரியாதா?”
தெரியாது’ என்பதுபோலத் தலையாடியது. தெரியாமலிருக்கிறதே என்பதற்காக எந்தவித விநயமும் தென்படாததற்குப்பதில், ஓர் அலட்சியமே அங்கு மிதந்து நின்றது.
ஆத்திரமும் அவதியுமாய்ச் சைக்கிளை எடுத்தான் சிவம்.
O
“என்ன, புக் பண்ணிட்டு வந்திட்டியா?”
“என்னத்தைப் பண்ணுறது? அங்க பஸ் ஸ்டாண்டில் இருக்கிறவனுக்கு நான் சொல்லுறது விளங்கலை; அவன் சொல்றது எனக்கு விளங்கலை. என்னத்தையெண்டு பண்றது?”
“சரி, போகட்டும். நான் பின்னேரம் வரேக்கை புக் பண்ணிக் கொண்டு வறேன்.”
127

Page 66
சாந்தனின் எழுத்துலகம்
மச்சான் போய்விட்டார்.
இருபது வயதுக்கு மேலாகியும் இன்னமும் திருகோணமலை தெரியாமலிருக்கிறேனே” - என்பது வெட்கப்பட வேண்டிய சங்கதியாக சிவத்தை அடிக்கடி உறுத்திக் கொண்டிருந்தது. அதுவும் அவனுடைய சொந்த மச்சான் அங்கேயே வேலை பார்த்துக் கொண்டிருக்கும்போது - போய் நிற்கத் தங்க எல்லா வசதியுமிருந்தும் - தான் ஒருதரம் அந்த ஊரைப் பார்த்துவிட்டு வராதது முட்டாள்தனம் என்று நினைத்தான் சிவம், அநேகமாக இலங்கையின் மற்றப் பாகங்களுக்குப் போகவேண்டி நேர்கையில் தன்னுள் எழுகிற ஒரு கூச்சமும், ஆற்றாமை உணர்வும் இந்தப் பயணத்தில் நேராது என அவன் நம்பினான். தனக்குத் தமிழைவிட வேறுமொழி சரியாகத் தெரியாததும், தான் 'லோங்ஸ் போடாத ஒரு பிரகிருதி என்பதும் தன்னுள் இந்தத் தாழ்வுச் சிக்கலை வளர்த்திருந்ததை ஆய்ந்தறியக்கூடிய அளவிற்குச் சிவம் படித்திருந்தாலும், இவையெல்லாம் தன்னைத் தானே குறைத்து மதிப்பிட ஏற்ற காரணிகளே அல்ல என அவன் நன்றாக உணர்ந்திருந்தாலும், அதை மீற அவனால் முடிந்ததில்லை.
யாழ்ப்பாணத்தில் பிரயாணம் பண்ணுகிற மாதிரியே
திருகோணமலைக்கும் போய் வந்துடலாம் என்று நம்பினான்.
அங்கே, நவராத்திரிக் கடைசிநாளன்றுமானம்பூ என்ற நடக்கிறதைக் காட்டிலும் விசேஷமாக இங்கே இருக்கும். ஆனபடியால் இந்தமுறை கும்பபூசையை அண்டி இங்கே வந்து நிற்க முடியுமானால் தெண்டித்து வரப் பார். என்று போன மச்சான் எழுதியது சிவத்திற்குத் தோதாய் வாய்த்தது.
இங்கே பார்ப்பதற்கு எத்தனையோ இடங்களிருந்தன. இவ்வளவு நாளும் ஒருமுறையாவது இங்கு வராமலிருந்தது என்ன முட்டாள்த்தனம் என்று தோன்றியது. கோணேஸ்வரம், கன்னியா எங்கும் போனான். துறைமுகம் பார்த்தான். இடையில் ஒரு ஞாயிற்றுக்கிழமை, அவனும் மச்சானும் சைக்கிளை எடுத்துக்கொண்டு சீனன் குடாவிற்கும் போய் வந்தார்கள். தாவி முறிகிற அந்த ஏற்றங்களில் சைக்கில் உழக்கியதுகூட சந்தோஷமாயிருந்தது.
ஆனால் எங்கும் அவன் ஓர் ஏமாற்றத்தைச் சந்தித்துக் கொண்டிருக்க
128

சாந்தனின் எழுத்துலகம்
வேண்டியே நேர்ந்தது. அவன் நினைத்து வந்ததுபோல - திருகோணமலை, யாழ்ப்பாணம் போல - இல்லை என்பதுதான் அது.
அவன் படித்திருந்தது, கேள்விப்பட்டிருந்தது இவற்றால் திருகோணமலையைப் பற்றி அவனுள் எந்த ஒரு படம் பதிந்திருந்ததோ அது கொஞ்சம்கூடப் பொருந்தாமல் இருந்ததை இங்கு வந்தபின் அவனால் அவதானிக்க முடிந்தது. போன இடங்களிலெல்லாம் அவன் அதை உணர்ந்தான். அதைப்பற்றி மச்சானிடம் கேட்டபோது,
"உண்மைதான். ஒருபத்துப் பன்னிரெண்டு வருஷத்துக்கு முன் வந்திருந்தால், நீ நினைச்சதுபோலத்தா னிருந்திருக்கும். இப்ப இல்லை.” என்றார்.
"என்னெண்டு அப்பிடி மாறிச்சுது?”
“அது பேசினால் அரசியலாய்ப் போகும். பேசாம வா.” என்றார் மச்சான், “அரசாங்கமே திட்டமிட்டுக் குடியேற்றுது - பிறகென்ன?”
இன்றைக்கு பஸ் ஸ்ராண்டில் தவித்ததுபோல, நேற்றைக்கு சந்தையிலும் தவித்துப் போய்விட்டான் அவன். சந்தையிலிருந்து கடைத்தெருவைச் சுற்றிப் பார்த்தபடி நடந்தபோதும், அந்நியமாகிற ஒரு சூழலைக் கடைத்தெரு தந்தது. அங்கேயிருந்த சில பெயர்ப்பலகைகள்,
கடைக்காரரின் திமிர்த்தனத்தை உணர்த்தின. கன்னியாவிலிருந்து வருகிற போதும், சீனன் குடாவிற்குப் போகிறபோதும்கூட அந்தத் தெருக்களின் இரண்டு பக்கங்களும் இந்த மாறுதலின் நிச்சய சாட்சியங்களாய் விளங்கின. அங்கே எழுந்திருக்க வீடுகளெல்லாம் புதுக்கருக்கு அழியாதவை.
தான் நினைத்திருந்தது, தன் மனத்தில் விழுந்திருந்த படம் எல்லாம் நிதர்சனத்தில் இப்படி மாறி - அல்லது மாற்றப்பட்டு - இருந்ததே பெரிய கொடுமையாக அவனுள் பட்டது.
O
காலை ஐந்தே முக்கால் பஸ் ஆறரைக்குத்தான் புறப்பட்டது. நேற்று இவன் போனபோது கொட்டகைக்குள்ளிருந்தவன்தான் இன்றும் 'புக் பண்ணியவர்களைச் சரி பார்த்தான்.
129

Page 67
சாந்தனின் எழுத்துலகம்
பஸ் ஒரு முழு வட்டமடித்துத் திரும்பியபோது தூரத்தில் கோணேசர் கோயில் தெரிந்தது. அதனருகே, மேலே இரவெல்லாம் செம்புள்ளியாகத் தெரிகிற தொலைத்தொடர்புக் கோபுர விளக்கு அணைந்து போய்க் கம்பிக்கூண்டு மட்டுமே தெரிந்தது.
நகரின் ஒடுங்கிய தெருவில், எதிரே வந்த கார் ஒன்றிற்கு இந்த பஸ் ஒதுங்கி நின்று வழிவிட்டபோது, தெருக்கரைச் சுவரொன்றில் பெரிதாக எழுதப்பட்டிருந்த வாக்கியம் சிவத்தின் கண்களில் பட்டது.
இஸ்ரேலிய ஆக்கிரமிப்பாளர்களே, அரபுப் பிரதேசங்களை விட்டு வெளியேறுங்கள்.”
1975
130

14
முளைகள்
அம்மன் கோயில் குளத்துக்குள்ளிருந்த ஐந்து தலை நாகம், பள்ளிக்கூட விளையாட்டில் தடிக் கொய்யாப்பற்றைக்குள்ளிருந்த முள்ளுப் பன்றி - இவையெல்லாம் இப்போது எங்கே போயினவோ தெரியவில்லை. இவைகளுடன், செல்லர் வளவுப் பாண்கிணற்றடி நெல்லி மரத்தில் ஒரு முனியும் அந்த நாட்களில் இருந்தது. இந்தப் பாண்கிணற்று முனியிலும் பார்க்க, அதற்குள்ளிருந்த பாம்புகள்தான் எங்களை அதிகம் பயமுறுத்தியிருந்தன. பள்ளிக்கூடப்பிள்ளைகளை வாத்தியார், கோயிலுக்கும் விளையாட்டு இடத்துக்கும் என்று தங்களுடன் அழைத்துக்கொண்டு போகிற நேரங்களைத் தவிர்த்து, மற்ற நேரங்களில் - அதிலும் முக்கியமாக மத்தியானம் பன்னிரெண்டு மணிக்குப் பிறகு - மேலே சொன்ன இந்தப் பயங்கரங்களெல்லாம் உலாவ வெளிக்கிட்டு விடுமென்றும் சின்னப் பிள்ளைகளைத்தான் அவை தேடித் திரியுமென்றும் அநேகமாக எங்களெல்லோருக்கும் வீடுகளில் சொல்லியிருந்தார். பள்ளிக்கூடம், மத்தியானம் ஒரு மணிக்குத்தான் அப்போது விடுவது வழக்கம் என்பதை நினைத்துப் பார்க்கையில், இந்தப் பிராணிகளெல்லாம் ஏன் பன்னிரெண்டு மணிக்கும் பிற்பட்ட நேரத்தைத் தமது வாலாய வேலையாகக் கொண்டிருந்தன என்று இப்போது புரிகிறது - என்றாலும் இந்தப் புரிதல் மெல்ல மெல்ல ஆரம்பித்திருக்க வேண்டும்.
எப்படியிருந்தாலும் பெரிய விக்கினி - இரண்டு 'விக்கினிகள் எங்களோடு ஐந்தாம் வகுப்புவரை படித்தார்கள் பெரிய விக்கினி என்ற
131

Page 68
சாந்தனின் எழுத்துலகம்
விக்கினராசாவும், சின்ன விக்கினி' என்ற விக்கினேசுவரனும், துணிச்சல்காரன்தான். மூன்றாம் வகுப்பில் படித்தபோதே, ஒரு நாள், அந்தப் பாண்கிணற்றுக்குள் நீர் மட்டத்தில், சுவர்க்கரையோடு நீந்திக்கொண்டு கிடந்த பெரிய பாம்பு ஒன்றை, நிலத்தில் நின்றே குறிதவறாமல் கல்லால் எறிந்து கொன்றான். அதிலிருந்து எங்களுக்குள் அவனை ஒரு விண்ணனாக நாங்கள் ஒப்புக் கொண்டோம்.
எங்கள் பள்ளிக்கூடத்துப் பெயர், கல்வி கந்தோரிலும், முன்சுவரில் வாசலுக்கு மேலும், 'பாரதி வித்தியாசாலை. ஆனால் அந்தப் பெயரை ஊருக்குள் யாராவது சொல்லி, நான் கேட்டதில்லை.
'தம்பி எங்கே படிக்கிறாய்?’ என்றால், “பொன்னையா பள்ளிக்கூடத்திலே.” என்றுதான் மறுமொழி வரும், பொன்னையர்தான் பாரதி வித்தியாசாலையை நிறுவியவர்; எப்போதோ செத்துப்போய் விட்டவர். எங்கள் ஊர்க்காரர்கள் நன்றி மறவாதவர்களாய் இருந்தார்கள்.
O
இராசலிங்கம் வாத்தியார் சிரித்ததை, அவரிடம் படித்த ஐந்து வருட காலத்திலும், ஒரேயொரு முறைதான் பார்த்ததாக ஞாபகமிருக்கிறது. இதைச் சாதித்தவன் கனகநாதன்.
இராசலிங்க வாத்தியார் நாலாம் வகுப்பில் எங்களுக்கு இங்கிலீஷ் எடுத்தார். ஸ்பெல்லிங் முடிந்து, புத்தகங்கள் வாசிக்கிற கட்டம், வாத்தியார், எங்களின் உச்சரிப்பில் அதிக அக்கறை காட்டினார். ஒருநாள் சொல்லித்தந்த மூன்று வசனங்கள் :
I am a boy
You are a girl
This is my book
- இதை ஒவ்வொருவராக எழுந்து சொல்ல வேண்டும். கலவன்’ பாடசாலையில் கலவன் வகுப்பு. ஆதலால், ஆட்களுக்கேற்றபடி, boyயும் girlயும் முதல் இரண்டு வசனங்களிலும் இடம் மாறும். கனகநாதனின் முறை வந்தபோது, அவன் இவ்வசனங்களை லீலாவதியைப் பார்த்துச் சொல்ல
132

சாந்தனின் எழுத்துலகம்
வேண்டியிருந்தது. கனகநாதன் வண்டுறுட்டி போலக் கட்டைக் கறுத்தப் பொடியன், லீலாவதி நெடுத்த பெரிய பட்டை அவன் பயப்படாமல் எழுந்து நின்று உசாராகச் சொன்னான் :
"I am a boy;
You are my girl.”
- இதற்கு மேல் அவனைச் சொல்ல விடவில்லை. வாத்தியார், ‘போதும். இரடா மடையா' என்றவர். விழுந்து விழுந்து சிரிக்கத் தொடங்கினார். ஒரு சின்னப் பிழை விட்டால்கூட, கையிலுள்ள கொய்யாத்தடியால் வெளுத்து வாங்குகிற இராசலிங்க வாத்தியார் சிரிப்பதைக் கண்ட மகிழ்ச்சியிலேயே அன்று, எங்களில் பலர், பகடி என்னவென்று விளங்காவிட்டாலும்கூட, சேர்ந்து சிரித்தோம் என்று நினைக்கிறேன்.
பள்ளிக்கூடத்தில், இராசலிங்க வாத்தியார் இரண்டாவது பெரியவர். முதல் வாத்தியாருக்கு அடுத்தவராக இருந்தார்.
D
என்றாலும்கூட, இராசலிங்க வாத்தியாரின் அடிக்கொடுமை தாங்காமல் நாங்களெல்லோரும் ஒருநாள் கூடி ஆலோசிக்க நேர்ந்தது, சிங்கமும் முயலும் கதையில் காட்டு மிருகங்கள் கூடி ஆலோசித்தது போல. ஆனால், நாங்கள் பெட்டைகளைச் சேர்க்கவில்லை. அவர்களை நம்பவும் முடியாது. அதோடு இராசலிங்க வாத்தியார் பெட்டைகளுக்குக் கை நீட்டுவதில்லை.
பெரிய விக்கினிதான் ஒரு யோசனை சொன்னான்: "அவருக்கு ஒரு
நல்ல வேலை செய்யலாம்.
“சொல்லேண்டா?”
“கிட்ட வாங்கோ.”
தலைகளை நீட்டினோம்.
“என்ன?”
133

Page 69
சாந்தனின் எழுத்துலகம்
ú é
ஒரு செய்வினை செய்யலாம்.”
செய்வினையோ. எங்களுக்குப் பயம் முளைத்தது.
பயப்படாதையுங்கோடா. என்ற பெரிய விக்கினி எல்லாம்
விளக்கமாகச் சொன்னான்.
வாத்தியாருடைய காலடி மணலைக் கவனமாக அள்ளுவதன் முக்கியமான வேலை. அதை அள்ளி மண் சட்டியொன்றில் போட்டு வறுத்து, அந்த மணலை பாண் கிணற்றொன்றில் கொட்டி விட வேண்டும். அவ்வளவுதான்! அடுத்த நாள் ஆள் பள்ளிக்கு வர இயலாது கால் இரண்டு பாதமும் தோல் வெடிச்சுப் புண்ணாய்ப் போகும்
மணலை இரகசியமாக வறுத்துக்கொண்டு வருவது தன்னால் முடியுமென்று பெரிய விக்கினி சொன்னான். பாண் கிணறு தேடத் தேவையில்லை. அது எங்களருகிலேயே இருக்கிறது. தீர்மானம் ஏகமனதாக நிறைவேறியது.
எங்களுடைய வகுப்பு, அப்போது நாலு பள்ளி கூட்டுகிற முறைதான், செவ்வாய்க்கிழமை, பெட்டைகள் தும்புக் கட்டோடு வகுப்புகளெல்லாம் கூட்டுவார்கள், பெடியள், விளக்குமாறும் கடகமுமாய் முற்றம், பக்கம், கோடி எல்லாம் கூட்டுவோம். பெரிய விக்கினியின் திட்டத்தின் பிறகு, அடுத்த செவ்வாய்க்குக் காத்திருந்தோம்.
வழமைக்கு மாறாக, முற்றத்திலிருந்து கோடிவரை போகாமல் கோடி, பக்கமெல்லாம் முடித்துவிட்டு, பிறகு வாசலுக்கு வந்தோம். இராசலிங்க வாத்தியார் வருகிற நேரத்திற்குக் கொஞ்சம் முன்னால் முற்றம் கூட்டப்பட வேண்டும். பெரிய விக்கினி, ஒரு பெரிய கடுதாசித் துண்டைத் தன் கழுசான் பொக்கற்றுக்குள் ஆயத்தமாய் வைத்திருந்தான்.
நாங்கள் கூட்டிக் குவிக்கவும், வாத்தியார் பள்ளிக்கேற்றடியில் சைக்கிளில் இறங்கவும் சரியாயிருந்தது. பின்னி நெளிந்திருந்த சைக்கிள் சில்லு அடையாளத்தினருகில் செருப்புப் போடாத வாத்தியாரின் காலடிகள் பளிச்சென்று பதித்திருந்தன. பெரிய விக்கினி, ஒன்றுக்கு இரண்டு பாதமாக அள்ளிக்கொண்டான். அள்ளின அடையாளம் தெரியாமல் இருக்க,
தேவராயன் விளக்குமாற்றை அதன்மேல் போட்டு இழுத்தபடி போனான்.
134

சாந்தனின் எழுத்துலகம்
மத்தியானம் பள்ளி விட்டதும் எல்லாப் பொடி பெட்டைகளும் கலையுமட்டும் பேய்க்காட்டிவிட்டு, பெரிய விக்கினி மண்சரை வைத்திருந்த இடத்திற்கு மெல்லப் போனோம்.
'போச்சடா' என்று பெரிய விக்கினி கத்தினான்.
மதில் ஒட்டைக்குள் மறைவாய் அவன் ஒளித்து வைத்திருந்த கரையில், கடுதாசி மட்டும் கிழிந்து ஒட்டையாகிக் கீழே கிடந்தது.
"சனியன் காகம்’
“மூதேசி.”
வயிற்றெரிச்சலுடன் மீண்டும் அடுத்த செவ்வாயை எதிர்ப
ார்க்கலானோம்.
O
முதல் வாத்தியாருடைய அறை எப்போதும் பூட்டிதானிருக்கும். அவர் அந்த அறைக்குள்ளிருப்பது வழக்கமில்லை. மண்டபத்து நடுவில் மேசையைப் போட்டுவிட்டு, எல்லா வகுப்புகளும் - அல்லது ດ ຄິດn வகுப்புகளுக்கும் - கண்ணில் படுகிற மாதிரி இருந்துகொள்வார். அறைக்குள், ஒரு அலமாரி, கால் உடைந்த பெரிய மேசை ஒன்று ஒன்றின் மேலொன்றாய்க் கொஞ்ச வாங்குகள் இப்படிச் சில சாமான்களிருந்தன. மேசையின் மேல் ஒரு பெரிய சரஸ்வதி படமும் இலேசாக மங்கிப்போன ஒரு பூகோள உருண்டையும், அலமாரியின் மேல், தேசப்படமொன்றும், உலகப் படமொன்றும் சுருட்டப்பட்டுக் கிடக்கும். இவைத் தவிர, இன்னொரு கிழிந்துபோன இலங்கைப் படம், சுவரில் தொங்கிக் கொண்டு கிடந்தது. அலமாரிக்குள், சோக்கட்டிப் பெட்டிகள், டாப்பு இப்படி.
இவ்வளவற்றையும் பார்க்கிற சந்தர்ப்பம், அந்த - அறையைத் துப்புரவு செய்யச் சொல்லி எங்களில் கொஞ்சம் பேரை முதல் வாத்தியார் பிடித்து விட்டபோது கிடைத்தது.
பின்பக்கம் போனால், கக்கூஸ் ஒரு பக்கம் பெடியன், மற்றப்பக்கம் பெட்டைகள், பள்ளிக்கூடத்தின் பாதி தாண்ட முதலே, தன் இருப்பை உணர்த்திக் கொள்ள சக்தி வாய்ந்த கக்கூஸ் அது.
135

Page 70
சாந்தனின் எழுத்துலகம்
அதற்கு முன்னால், பெரிய பெரிய இலைகளை விரித்தபடி பரந்து நிற்கும் ஈரப்பலா மரம். ஒவ்வொரு நாளும் காலையில் பள்ளிக்குப் போய், புத்தகங்களை வாங்கி வைத்த கையோடு முதல் காரியமாய் இந்த ஈரப்பலாவடிக்கு ஓடி வந்து, விழுந்து கிடக்கிற பழுத்த இலைகளைப் பொறுக்கிக் காம்பை முறிப்போம். பென்சில் எழுத்தை 'அழிரப்பர் அழிப்பதுபோல, இந்த இலைக்காம்பு சிலேட்டை அழிக்கப் பெரிதும் உதவியாயிருந்ததை, யாரோ ஒரு முன்னோன் எங்களுக்காக கண்டுபிடித்து வைத்திருந்தான்.
ஈரப்பலாவில் இல்லாத நாட்களில், கிணற்றடிப் பள்ளத்து இடுக்கில் சணைத்துக் கொழுத்திருந்த,'தண்ணிப் புல்லு எங்களுக்குப் பயன்பட்டது. இவ்விரண்டும் இருந்தும்கூட, அதிக சிறுவர்களின் சிலேட்டில் எச்சில் மணத்தது.
இந்த இலைக்காம்பு பொறுக்குகிற சண்டையால், மூன்றாம் வகுப்புக் கடைசித் தவணையில் ஒரு நாள், நான் இராசலிங்க வாத்தியாரிடம் அடி வாங்கினேன்.
எங்கள் வீட்டிலிருந்து பள்ளிக்குப் போவதென்றால் ரோட்டுக்குப் போகத் தேவையில்லை. ஒழுங்கையாலேயே போய்விடலாம். மழைக் காலங்களில் வெள்ளம் ஒடி, வாரடிக்கிற வெள்ளை மணல் ஒழுங்கை. வளவுகளும், வடலிகளும் பனங்காணிகளும் பற்றைளும் மாறி மாறி வரும். பற்றைகளுக்குள், ஒன்றில் காண்டை நிற்கும். அல்லது கொய்யா நிற்கும், அல்லது இரண்டுமே நிற்கும். உள்ளே நுழைந்தால், தின்னுவதற்கு எப்போதும் ஏதாவது தரக்கூடிய பற்றைகள், கொய்யாப் பழமோ காண்டைப் பழமோ இல்லாவிட்டால் கொய்யாக் குருத்து அல்லது காண்டைக்காய் இருக்கும். காண்டை, நித்திய கல்யாணி. காய் இல்லாத காலமே கிடையாது.
இந்தக் கொய்யாவுக்கும், காண்டைக்கும் அப்பால் தேவராயன்
இன்னொரு சாமானை எங்களுக்குக் காட்டித் தந்தான். பாக்குவெட்டிச்
செடியின் குருத்தைப் பனங்குருத்தோடு சேர்த்துச் சப்பினால், வெற்றிலை
மாதிரி வாய் சிவக்குமாம். இந்த ஆசையில் பாக்கு வெட்டிக் குருத்து
136

சாந்தனின் எழுத்துலகம்
கிள்ளப்போன கனகநாதனுக்கு ஒருநாள் பிகங்கான் ஒடுவெட்டிப் பருகிய இரத்தம், இன்னமும் நினைவில் சிவப்பாயிருந்தது.
கனகநாதன் ஏழெட்டு நாள் பள்ளிக்குக் கள்ளம் போட்டது பற்றிய விசாரணை, தேவராயன் இராசலிங்க வாத்தியாரிடமும் பிரப்பம்பழம் தின்றதில் முடிவடைந்தது.
காலையில் ஒரு கும்பல் சேரும். என்னோடும் எனக்குக் கீழும் படிக்கிற அயலட்டைக் குஞ்சு குருமனெல்லாம் ஒன்றாகப் போவோம். இந்தப் பட்டாளத்திற்கு நான் பல நாட்கள் தலைவனாயிருந்திருக்கிறேன். நான், கனகநாதன், அவன் தம்பி தருமநாதன், தேவராயன், சிவலிங்கம், ராஜேஸ்வரி, செல்வராணி இப்படி.
போகப் போகப் பட்டாளம் பெருகும். படலைக்குப் படலை கூப்பிடுவதும் உண்டு.
இந்தத் தினசரிப் பயணத்தில் முக்கியம் இடம் வகித்தது கதிரவேலர் வீட்டு நாய். சரியான கடியன். ஒவ்வொரு நாளும் எங்களைத் துரத்தி அதற்கு அலுப்பில்லை. துரத்துவதென்றால், வேலிக்கு அந்தப் பக்கம்தான்.
கதிரவேலர் நல்ல மனுஷன் புத்திக்காரனும், பெடியன் பள்ளிக்குப் போகிற நேரத்தில் தன்னுடைய வீமன் சொறி தேய்க்கும் என்று உணர்த்தியவர். நாயை உள்ளேவிட்டு, படலையைப் பூட்டித்தான் வைப்பார். வேலியின் கீழ் வரிச்சு நல்ல பதிவு. பொட்டுகளும் இல்லை. எனவே நாய்ப்பிள்ளை வெளியே வரமுடியாமல், நாங்கள் ஒழுங்கையால் நடக்கும் போதுதான் வளவுக்குள் குரைத்தபடி வேலி நீளம் ஓடி வரும். 'எப்படி என்றாலும், வெளியாலை வந்ததுண்டா? என்ற பயம் எங்களுக்கு நித்திய கண்டமாயிருந்தது.
நாய்க்குப் பயந்து நாங்கள் பேச்சை நிறுத்தி நடந்தாலும், எங்களோடு
வருகிற பெட்டைகளின் தையல் பெட்டிகள்', 'கிலுக்குக் கிலுக்கென்று
கிலுங்கி எங்கள் வரவை நாய்க்கு அறிவிக்கும். இந்தத் தையல்பெட்டி
இல்லாத பெட்டையை நான் அப்போது கண்டதில்லை. ஒவ்வொருத்தியும் மூடி
நெளிந்த, கிறுக்குப்பட்ட ரொஃபிப் பெட்டி ஒன்று வைத்திருப்பாள். அது
இல்லாதவளிடம் வெறும் பவுடர் ரின்னாவது இருக்கும். இதற்குள், நூல்பந்து,
137

Page 71
சாந்தனின் எழுத்துலகம்
அதில் குத்தப்பட்ட ஒன்றிரண்டு தையல் ஊசி, கிளிப்பர்கள், ஆட்டுப்பிழுக்கைப் பென்சில் துண்டுகள் அழிரப்பர், காப்புகள், முட்டை ஊசிகள், தடிதண்டுகள், காண்டைப் பழங்கள் என்று என்னென்னவோ போட்டு வைத்திருப்பார்கள்.
இவர்களுக்கு, தையல்பாடம் என்று தனியாக ஒரு பாடமிருந்தது. தையலம்மா டீச்சர் ஒரு கதிரையிலிருந்து ஏதோ தைக்க, இதுகளும் சுத்தி நின்று குத்திப்பிடுங்குகிற வேலைகளில், நாங்கள், பெடியன் பன்ன வேலை செய்வோம். தையலம்மாவுக்குப் பெயரே அதுதானோவென்று, கனகாலம் ஐமிச்சப்பட்டேன். ஆனால், பிறகு தையலக்கா என்று இன்னொரு டீச்சர் (கொஞ்சம் வயது குறைவு) வந்ததும் என் ஐயம் தீர்ந்தது.
இரண்டு மூன்று வருடம் படித்த பன்ன வேலையில் உருப்படியாக ஒரு பெட்டிகூட நான் இழைக்கவில்லை. மூலை திருப்புகிற வேலை, எனக்குப் பிடிபடாமலே இருந்தது. இந்தச் சிக்கல் பெரிய விக்கினிக்கும் இருந்தது. எனக்குத் தெரியும். மூன்றாம் வகுப்புக் கடைசியில், வகுப்பேற்றச் சோதனைக்குப் பெரிய விக்கினி மூலை திருப்ப முடியாமல், கனகபூசணி – எப்போதும் ஒரு பெரிய சாம்பல் பூசணிக்காயை நினைவுபடுத்துகிறவள் - கனகநாதனின் தமக்கை, எங்களுக்கு ஒரு வகுப்பு மேலே படித்தவளிடம் இரகசியமாகக் கொடுத்து மூலை திருப்பிக் காட்டத் தெண்டித்த போது, அநியாயமாய் இராசலிங்க வாத்தியாரிடம் அகப்பட்டுக் கொண்டான். சவிள் அடி விழுந்தது.
காலையில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வகுப்புக்குச் சங்கீதம் முற்பாடமாயிருக்கும். தன்னைச் சூழ எல்லோரையும் வட்டமாக நிற்க வைத்து விட்டு, ஐயர் வாத்தியார்,சரிகமபதநிச சொல்லிக் கொடுப்பார். பிந்தி வருகிற வேளைகளில், பள்ளிக்குக் கால்கட்டை தள்ளியிருக்கிற மத வடியில் வரும்போது இந்தச் சங்கீதம் காதில் விழும். நேரம் பிந்தியதை ஞாபகப்படுத்தி, இராசலிங்கம் வாத்தியாரின் கொய்யாத் தடியை நினைவுக்குக் கொண்டு வருவதால், இந்த சரிகமLதநி இன்றும்கூட - சில வேளைகளில் எனக்கு ஒரு பயத்தையும், பதட்டத்தையும் தருகிறது.
கனகநாதன், இந்த விஷயத்தில் பல நாட்கள் இராசலிங்க வாத்தியாரின்
138

சாந்தனின் எழுத்துலகம்
வாடிக்கையாளனாக இருந்தான்.
தனது ஞானத்தை உணர்ந்தோ அல்லது தன் சீடப் பிள்ளைகளின் ஞானத்தை அறிந்தோ, ஐயர் வாத்தியார். இந்த சங்கீதப் பாடத்தை, நல்ல காலமாக சரிகமபதநிசவுக்கு மேலே போகவிடவில்லை. நான்கூட, இரண்டு வருஷம் அவரிடம் இந்தக் கலையைப் பயின்றேன். பள்ளிக்கு நேரத்துக்குப்
போன நாட்களில்,
சரிகமபதநிசவில் நிசவை இழுத்து இழுத்து நி, சா.வாக அழுத்தி, வாத்தியாரைப் பார்த்தபடி ரொம்ப உற்சாகமாக நாங்கள் பாடுவோம்.
D
அணில், ஆடு, இல்லை, ஈ, உறி, ஊசி, எலி, ஏணி, ஐயா, ஒட்டகம், ஒலை, ஒளவை இதுகளெல்லாம் எப்படி இன்னமும் சிலையிலெழுத்தாக இருக்கின்றன?
அ, ஆ படிப்பித்த தையலம்மாவின் முகமும், படம் என்ற பெயரில் புத்தகத்தில் கறுப்புக் கருப்பாக அச்சுமை அப்பிக்கிடந்த திட்டுக்களும்கூட, இன்னமும் இந்த அணில், ஆட்டுடனும்; கொக்கு, சங்கு, பூச்சி, குஞ்சுடனும் நினைவுக்கு வருகின்றன. இதற்குப் பிறகு நெஞ்சில் முளைப்பது, கரடி காட்டு மிருகம். தான். . கண்ணைத் தோண்டும் பொல்லாத மிருகம். என்று கரடி புராணம் முடிகிறபோது, இராசலிங்க வாத்தியார் திரும்பவும் நினைவுக்கு வருகிறார்.
கந்தசாமி நல்ல சிறுவன்’ என்று தொடங்கி, பிள்ளைகளே, நீங்களும் கந்தசாமியைப் போல நல்ல பிள்ளைகளாயிருக்க வேணும் என்று முடிகிற பாடத்தைப் படிப்பித்தவர், முதல் வாத்தியார். அவர் படிப்பதற்கென்றே எழுதப்பட்டது போல அமைந்திருந்த பாடம் அது பிள்ளையன். பெடியள். என்று ஒவ்வொரு தரமும் எங்களை அழைக்கும் முதல் வாத்தியார், ஒரு தடவை அப்படி அழைத்தது இன்னமும் இந்தக் கந்தசாமியைப் போல் நினைவில் நிற்கிறது. அந்த அழைப்புடன் கந்தசாமியும் முதல் வாத்தியாரும் மட்டுமில்லை; இராசலிங்க வாத்தியாரும் பெரிய விக்கினியும்கூட நினைவுக்கு வருகிறார்கள். எல்லோருள்ளும், பெரிய விக்கினிதான், பெரிதாய் நினைவுக்கு வருகிறான்.
139

Page 72
சாந்தனின் எழுத்துலகம்
பிள்ளையள். என்று முதல் வாத்தியார் எங்கள் வகுப்புக்கு வந்து எங்களைக் கூப்பிட்டார். அது அவர் பாடவேளை அல்ல. ஒரு வியாழக்கிழமை, நாங்கள் மண் அள்ளிய செவ்வாயை அடுத்து வந்த வியாழன். முதலாம் பாடம் தேவாரம் முடிந்து, 'அரஹர மஹாதேவா சொல்லி விட்டு, வேரூ இங்கிலீஷ்'ஐயும் இராசலிங்க வாத்தியாரையும் எதிர்பார்த்து நெஞ்சு படபடக்க, மூத்திரம் மூட்ட, அந்தரித்துக் கொண்டிருந்த வேளை.
முதல் வாத்தியார் கூப்பிட்டதும், நிமிர்ந்து பார்த்தோம். இராசலிங்க வாத்தியாருக்குப்பதில் முதல் வாத்தியாரே இங்கிலீஷ் எடுப்பதில் எங்களுக்கு ரொம்ப விருப்பந்தான். ஆனால் அவர் பாடமெடுக்க வரவில்லை. சொன்னார்
“சத்தம் போடாமை இருந்து படியுங்கோ. இன்றைக்கு இராசலிங்க வாத்தியார் வரமாட்டார்.”
எங்களுக்கு அவர் சொன்னது மண்டையில் உறைக்கும் முன்னரே, முதல் வாத்தியார் மிச்சத்தையும் சொன்னார். "நேற்றுப்பின்னேரம் அவரைக் கார் தட்டிப் போட்டுது. தோட்டவெளி ரோட்டிலை சைக்கிளில் போகையில் அவரை யாரோ காரில் அடிச்சுக் கையை முறிச்சுப் போட்டான். வாத்தியாரை இப்ப பெரிய ஆஸ்பத்திரியில் வைச்சிருக்காங்க.”
முதல் வாத்தியார் சொல்லி முடிக்கும் முன்னரே, யாரோ விக்கி விக்கி அழத் தொடங்கிய சத்தம் கேட்டுத் திரும்பிப் பார்த்தோம்.
பெரிய விக்கினி.
1976
140

15
வேகம்
வில் வளைவாய்த் தண்டவாளம் நெளிகிற இடங்களில் இடப்பக்கம் நீல என்ஜினும் வலப்புறம் காட் பெட்டியுமாய், முழு ரயிலுமே தரிசனந் தருகிறது.
எதிர்க்காற்றில் அலை எறியும் பச்சை வயல்கள், பாசியும், அல்லியும் படர்ந்து மறைந்த குளங்கள், ரயிலைக் கண்டதும் முகத்தைத் திருப்பி முதுகைக் காட்டிக்கொண்டு குளிக்கிற பெண்கள் - இந்தக் காட்சிகளெல்லாம் அப்போதே மறைந்தாயிற்று. மணி, மூன்றுக்குமேல். இலைகளைப் பூவாக்கிக் காட்டும் 'முஸண்டாச்செடிகள், இந்தப் பக்கமெல்லாம் பற்றை பிடித்துப் போயிருக்கின்றன. அடியில் நாயுருவியும், இன்னும் ஏதோ பெயர் தெரியாத பரட்டைச் செடிகளும்.
விடாப்பிடியாய், ஒரே சீராய், ஒன்றையொன்று துரத்துகிற ரயில் பெட்டிகளின் நிழல்கள். மேட்டில் ஏறி, பள்ளத்தில் வழிகிற நிழல்கள்.
படாரென்று கதவு வந்து முதுகில் மோதியது. கந்தசாமி திடுக்கிட்டுத் திரும்பினான்.
"மச்சான், இப்பிடி நாங்கள் இருக்கிறது சரியான ஆபத்தடாப்பா. தற்செயலாய்த் தவறி விழுந்தா, அந்திரட்டிக்கு எலும்பு கூட எடுக்கேலாது.”
ரயில் போட்ட சத்தத்தை மீறி, இது கந்தசாமியின் காதில் விழ வேண்டியிருந்ததால், வரதராஜா சத்தம் போட்டுச் சொன்னான்.
“இந்தக் கதவே எங்களை அடிச்சு விழுத்தும் போலைக் கிடக்கு.”
141

Page 73
சாந்தனின் எழுத்துலகம்
இத்தனை நீள ரயிலில், இருப்பதற்கு இரண்டு இடங் கிடைக்காமல், கொம்பாட்மென்ரின் இந்த வாசலில் இருவரும் குந்திக் கொண்டிருந்தார்கள் - படிகளிற் காலைப் போட்டு, கைப்பிடிக் கம்பிகளில் கைகளைச் சுற்றிப் பிடித்து, ஆளை ஆள் இடித்து நெருக்கியபடி
புஃபேக்குக் கூடப் போகப் பயமாயிருக்கிறது. போனால் இந்த இடமும் போய்விடும்.
வேகம், எப்போதுமே, ஓர் உற்சாகத்தை ஏற்படுத்துகிறதுதான் - கரியும் புழுதியுமாய் முகத்தில் மோதி, நீண்ட தலைமயிரைப் பின்னுக்குப் பறக்கச் செய்கிற அந்த வேகமான காற்று, மனதின் சோர்வு கவலையெல்லாவற்றையுங்கூட அடித்துச் செல்வதைப் போல.
"மச்சான், நல்ல உலாஞ்சுது. கவனமா இருந்து கொள்.” என்றான் வரதராஜா மீண்டும். இந்த வேகத்தால் ஏற்படுகிற உலாஞ்சல் உண்மையிலேயே அவனுக்குப் பயத்தைக் கொடுத்தது.
"அந்தப் பெட்டையளைப் பாரடா. என்றான் கந்தசாமி.
ஒலை வேய்ந்த ஒரு வீட்டின் விறாந்தையில், வெள்ளை அரைச் சுவருக்குப் பின்னால் நின்ற இரண்டு மூன்று இளம் பெண்கள், இந்த ரயிலுக்குத்தான் - ஆனால், இன்னொரு பெட்டியை நோக்கிக் கையசைத்துக் காட்டிக் கொண்டிருந்தார்கள்.
'வெங்காயங்கள்.” என்றான் வரதராஜா.
அந்த வீடு ஏதோ ஒரு சிற்றுாரின் தொடக்கம் - அல்லது முடிவு போலிருக்கிறது. அதைத் தாண்டியதும், ஒரு புளிய மரம், கந்தசாமி கம்பியைப் பிடித்திருந்த கையைக் கவனமாகத் தளர்த்தி, கைலேஞ்சியை எடுத்து முகத்தைத் துடைத்துக் கொண்டான்.
புளிய மரத்தை அண்டி மீண்டும் தெல்லுத் தெல்லாக வீடுகள், கல் வீடு, மண் வீடு, ஒலை வீடு, ஒட்டு வீடு - எல்லாமே சின்னதாக
இருந்தாற்போல் வண்டியின் வேகம் குறைய ஆரம்பித்தது. அரைக்கரைவாசி மரங்கள் வட்டுச் சரிந்து பட்டுப் போய்க் கொண்டிருக்கிற ஒரு இளந்தென்னந்தோப்பின் அந்தப்பக்கம், தண்டவாளத்திற்குச்
142

சாந்தனின் எழுத்துலகம்
சமாந்திரமாய்த் தெரிந்த தார்றோட்டில், வேகங்குறைகிற இந்த ரயிலை முந்துவதா முடியாது? என்பதுபோல், பழைய கார் ஒன்று அநாவசிய பதட்டத்துடன் ஒடிக் கொண்டிருக்கிறது.
ரயில் பெட்டி ஜன்னல்களூடே முளைக்கிற முகங்கள். மெல்லமாக இந்த வண்டி நகர்கிற தண்டவாளத்தின் பக்கத்தில், இதற்கு வழிவிட்டு விலகி, அண்ணாந்து பார்த்துக் கொண்டு நிற்கிற கூலியாட்கள் தெரிகிறார்கள். கைகளில் மண்வெட்டி, பிக்கான், சவள்.
“ஏதோ தண்டவாளம் றிப்பெயர் போல இருக்கு. அதுதான் இவ்வளவு மெதுவாகப் போகுது.”
"இன்னும் எவ்வளவு தூரத்துக்கு இப்பிடி ஊரப் போகுதோ?.”
சலித்தபடி கந்தசாமி முன்னால் வளைந்து, என்ஜின் பக்கம் எட்டிப் பார்த்தான். வலதுகால் செருப்பு, நழுவுவது போலிருந்தது. படியோடு சேர்த்துக் காலால் அழுத்திப்பிடிக்க முயலும்போதே, அந்த ஸ்லிப்பர் வழுக்கி விழுந்து விட்டது
தண்டவாள மேட்டின் சரிவில் விழுந்த செருப்பு, உருண்டு கீழே போனது. கையிலிருந்த மண்வெட்டியைப் போட்டுவிட்டு ஒரு தொழிலாளி ஒடி வந்தான்.
"அல்லண்ட மாத்தயா. செருப்பைத் தூக்கி, இவர்களிடம் வீசினான். செருப்பு சரியாகப் பறந்து வந்து, அடுத்த பெட்டியில் மோதித் தெரித்து, மீண்டும் ஒரு ஆமணக்கஞ்செடியின் அடியில் போய் விழுந்தது. அந்த மனிதன் ஆமணக்கிடம் ஓடிவந்தான்.
"மச்சான், ரயில் 'ஸ்பீட் எடுக்குது.” என்றான் வரதராஜா. “ச்சாய்க்.” என்ற கந்தசாமி, சடாரென்று இடது கால் செருப்பைக் கழற்றி, அந்த காட்டாமணக்கஞ் செடியை நோக்கி, பலங்கொண்ட மட்டும்
வீசி எறிந்தான்.
1977
143

Page 74
16
ஆறுதல்
இன்றைக்கும் ஏழரையாகிவிட்டது. சத்தியசீலன் இலையை எறிந்துவிட்டு அவசரமாகக் கையைக் கழுவினான்.
“சேர், ரீ?.”
“வேண்டாம், பில்லைத் தாரும்.”
காசைக் கொடுத்துவிட்டு வெளியே வந்தான்.
அந்த ஏழு முப்பத்தைந்து பஸ்ஸைப் பிடிக்க முடியாது போலிருந்தது. நேற்று-முந்தா நாள் போல, இன்றைக்கும் நின்று தூங்க வேண்டியதுதான். அரை மணித்தியாலம் முக்கால் மணித்தியலங் கூட நிற்க வேண்டியிருக்கிறது. கந்தோருக்குப் போய்ச் சேர எட்டே முக்காலுக்கும் மேலாகிவிடும். எட்டு மணிக்கே தொடங்குகிற அரசாங்கக் கந்தோர்.
ஷெல்ரரே இல்லாத அந்த பஸ்தரிப்பில் முகத்தைப் பொசுக்குகிற மாதிரி அடிக்கிற காலை எதிர்வெயில், குளித்துவிட்டு வந்த உடம்பெல்லாம் எரிந்து நசுநசுக்கும்.
வருகிற பஸ்ஸெல்லாம் நிரப்பி அடைத்துக்கொண்டு வரும். ஃபுற்போட்டில் தொங்குகிற சீவன்கள், தப்பித்தவறி ஏற முடிந்துவிட்டாலும், பிதுங்கித் திணறிக் கொண்டிருக்க வேண்டும். யமகண்டம்.
ஏழு முப்பத்தைந்து பஸ்ஸில் இந்தத் தொல்லைகளில்லை - அது இந்த
144

சாந்தனின் எழுத்துலகம்
இடத்திலிருந்து தான் ஆரம்பிக்கிறது. நெரியாமல் நசுங்காமல் புத்துணர்ச்சியுடனேயே போய் இறங்கிவிடலாம். எட்டேகால், எட்டரை சிவப்புக் கோடுகள் றெஜிஸ்ரறில் விழுந்திராது.
சிலவேளை - எனக்கு லக்கிருந்தால் - அந்த பஸ் அஞ்சு நிமிஷம் பிந்தி வெளிக்கிடாதோ - என்ற எண்ணத்தில் எட்டி நடந்தான்.
தெருவைக் கடக்கப் பார்த்தபோது, எக்கச்சக்கமான ஸ்பீடில் ஒரு கார் வந்து கொண்டிருந்தது. அது போகட்டும் என்று நின்றான். கார், நெருங்கியபோது ட்ரைவரின் இடத்திலிருந்து ஒரு கை மேலெழுந்து இவனை நோக்கி ஆடியது. தன்னையறியாமல் எழுந்த கையை ஆட்டிக் கொண்டே கவனித்தான்.
செல்வலிங்கம்!
இவனைப் பார்த்துச் சிரித்தபடி தலையை அசைத்தது தெரிந்தது. பதிலுக்குச் சிரிக்க முதலே, கார் கடந்து போய்விட்டது.
றோட்டைத்தாண்டி விரைந்து நடந்தான்.
செல்வலிங்கம் எப்போது இந்தக் காரை வாங்கினான்? போனமாதம் கண்டபோதுகூட, அந்த ஸிக்ஸ் பூரீ ட்ராம்ப்'தான் நின்றது. லிஃப்ற் கூடத் தந்தான்.
இது ஸெவ்ன் பூரீ ரொயோட்டாவோ என்னவோ போலத் தெரிகிறது.
சத்தியசீலனுக்கு இரண்டு மூன்று மொடல் கார்களைத்தான் நிச்சயமாகத் தெரியும். ஏஃபோட்டி, மொறிஸ்மைனர், சோமஸெற். மற்றதெல்லாம் ஒன்றுதான் - இப்படி யாராவது தெரி,தவர்களிடம் நின்றாலொழிய,
கிட்டடியில்தான் வாங்கியிருப்பான் போலிருக்கிறது. செல்வலிங்கம் எப்போதுமே நல்ல நண்பன். ஆறாம் வகுப்பிலிருந்து ஜி.ஸி . வரை சேர்ந்து படித்தான். ஜி.ஸி.ஈ. றிஸல்ற்ஸ் வந்த அன்று நடந்த சம்பவந்தான். சத்தியசீலனுக்குச் செல்வலிங்கம் சம்பந்தமாக வருகிற முதல் நினைவு.
தன்னுடைய அறைக்கு முன்னாலிருந்த விறாந்தையில் நின்று,
145

Page 75
சாந்தனின் எழுத்துலகம்
பிரின்ஸிபல் நிஸல்ற்சை வாசித்தார். படபடக்கிற நெஞ்சுடன், வயிற்றில் ஏதோ நெறிய, எல்லோருங் கேட்டார்கள். அது பரீட்சையில் இரண்டாம் முயற்சி. குண்டடித்தால், பள்ளிக்கூடத்திலிருந்து விலக வேண்டிய நிலை. பரவாயில்லை - அநேகமாக எல்லோருக்கும் நல்லதாகவே வந்திருந்தது.
ஐந்து பத்து நிமிஷ அமளிக்குப் பிறகு யாரோ கேட்டான்‘எங்கையடா, செல்வலிங்கத்தைக் காணேல்லை? இப்ப - றிஸல்ற்ஸ் வாசிக்கேக்கை - நிண்டானே.
பாவமடாப்பா. ஆக இரண்டு பாடந்தான் பாஸ்.
நாலைந்து பேராக சைக்கிளில் தேடிக்கொண்டு போனபோது, மக்கிக்கிடங்கடி றோட்டில் செல்வலிங்கம் விம்மிக்கொண்டே விறுவிறென்று வீட்டுக்குப் போய்க் கொண்டிருந்தான். பதினாறு பதினேழு வயதுத் தடியன் தெருவால் அழுதுகொண்டு போனான்.
எல்லோருமாக ஆறுதல் சொல்லி, வீட்டிற்கொண்டு போய் விட்டார்கள். அதற்குப் பிறகு, கனகாலமாய் ஆளையே காணவில்லை. தகப்பனோடு கொழும்பில் பிஸ்நெஸ் செய்கிறானென்று சொன்னார்கள்; முக்கியமாகச் சேலை வியாபாரம்.
படிப்பெல்லாம் முடிந்து, ஒரு உத்தியோகங் கிடைத்து வந்தபோது ஒருநாள், சத்தியசீலன் செல்வலிங்கத்தைச் சந்தித்தான். அதன் பிறகு, அடிக்கடி சந்திக்க நேர்ந்தது. அப்போதெல்லாம், விழுந்தடித்துப் படித்தது முட்டாள்தனம் எனப்படும்.
இப்பொழுதும் அப்படித்தான் படுகிறது. அந்தக்காரும் இந்த பஸ்களும், யாரிலென்று தெரியாமல் கோபம் வந்தது.
பஸ்ஸையும் மணிக்கட்டுக் கம்பியையும் துரத்துகிற வாழ்ககை. முடக்குத் திரும்பியபோது, தூரத்தில் ஏழு முப்பத்தைந்து பஸ் நிற்பது தெரிந்தது. கியூவில் இன்னும் ஐந்தாறு பேர் நின்றார்கள். ஒடினான்.
வெளிக்கிட்ட பஸ்சுக்கு முன்னால் ஒடிக் கையைக் காட்டிவிட்டு, டக்கென்று பாய்ந்து ஏற முடிந்தது. யன்னலோடு உட்கார்ந்தான்.
146

சாந்தனின் எழுத்துலகம்
பஸ் விரைந்து போனபோது, மனதிற்குள் ஒரு பாடல் வந்தது.
வழியில் ஒரு நிறுத்தத்தில் நிற்கையில் கொஞ்சம் முந்திக்கண்ட செல்வலிங்கத்தின் புதுக் கார் பஸ்ஸைத் தாண்டிப் போனது தெரிந்தது.
என்னதானிருந்தாலும் அரசாங்க உத்தியோகம் மாதிரி வருமா என்று
நினைத்துக் கொண்டான்.
1977
147

Page 76
17
புரிதல்
கில்லூரி அலுவலகத்திற்கு வெளியில் நான் காத்துக்கொண்டிருந்த போது, டக் டக்கென்று சப்பாத்துசத்தத்துடன் கைலைநாதன் அங்கு வந்தான்.
“டேய் என்ன மச்சான். இஞ்ச நிக்கறாய்?’ என்று கத்தினான். எனக்கும் அவனைக் கண்டதும் சந்தோஷமாய்த்தானிருந்தது. நாலு வருஷம் என்னோடு இங்கு படித்தவன். 'ஃபைனல் எக்ஸாம் முடிந்து இரண்டு வருஷத்துக்குப் பிறகு, இப்போதுதான் சந்திக்க முடிந்திருக்கிறது.
“இந்த டிப்பொஸிற் திருப்பி எடுக்க வந்தநான், மச்சான்.” என்று சொல்லி விட்டு,
". நீ எங்கே இந்தப் பக்கம்?’ என்று கேட்டேன்.
"ஒரு ரெஸ்ரிமோனியல் ஒண்டு எடுக்க வேண்டியிருக்கு.”
ܕܹ ܟ
"இப்ப, எங்கை?.
“பி.டபிள்யூ.டீ தான். கொழும்பிலை. நீ?”
"இன்னும் ஒண்டுஞ் சரிவரேல்லை.”
பழைய நினைவுகளை மீட்டுக்கொண்டு, கன்ரீனுக்குப் போனோம். கன்ரீன் மிகவும் மாறியிருந்தது. "இப்ப இஞ்ச எல்லாம் நல்ல முன்னேற்றம்.” என்றான், கைலி, "ஒமடாப்பா. புதுசா இரண்டு ப்ளொக்ஸ் கூடக் கட்டியிருக்கிறான்கள்.”
148

சாந்தனின் எழுத்துலகம்
"அது மாத்திரமில்லை; பெடியளுந்தான் - முந்தி நாங்கள் படிக்கிற காலத்திலை எல்லாரும் ஸ்லிப்பரோடதானே திரியற நாங்கள் - இப்ப
என்னடா எண்டா - பார் - ஒருத்தனாவது ஷாஸ் போடாமலில்லை.”
- கைலி, ஏதோ நினைவு வந்தவனாக என் கால்களைப் பார்த்தான். நான் ஸ்லிப்பர் போட்டுக்கொண்டு நின்றேன்.
“இண்டைக்கு ஒரு சாடையான மழைக்குணமிருக்கு.” என்றான் கைலி, பிறகு,
சந்திரன் அந்தக் கேற்றைத் தாண்டிப்போக நேரிட்டது. தெருவின் இடதுபக்கத்தில் ஒரு தென்னை மரத்தையொட்டி அது இருந்தது. இரட்டை கேற். ஐந்தடி ஐந்தடியாகப் பத்தடி இருக்கும். கேற்றின் குறுக்குச் சட்டத்தில் ஏறி நின்று அதன்மேல் வயிற்றை வைத்து, வெளிப்பக்கம் குனிந்து, ஒரு குழந்தை விளையாடிக் கொண்டிருந்தது.
அவன் திடுக்கிட்டான். கேற்றின் மேற்பக்கம் முழுவதும் ஆறங்குலத் திற்கு ஒன்றாக - கூர்கூரான கம்பிகள் நீட்டிக் கொண்டிருந்தன. குறுக்குக் கம்பியில் ஊன்றிக் கொண்டிருந்த குழந்தையின் கால் தற்செயலாகக் கொஞ்சம் வழுக்கினாலும் - வழுக்கும் போலத்தானிருந்தது - போதும்.
அவன் நினைத்துப் பார்க்கக் கஷ்டப்பட்டான்.
குழந்தைக்கு மூன்று வயதிருக்கலாம். தலைமயிர் சுருள் சுருளாக, நீளமாகத் தொங்கிக் கொண்டிருந்தது.
நடைவேகத்தைக் குறைத்து, கேற்றின் உள்ளே பார்த்தான். பழைய வீடு; முற்றம், ஒருவரையுங் காணவில்லை. மதிற் சுவரில், 'ஆர்.ரி. அருமைநாயகம் என்று பெயர்ப்பலகை பொருத்தியிருந்தது. அவனுக்கு, அந்த வீட்டு ஆட்கள் மீது சரியான ஆத்திரம் வந்தது. தெருவிலும் ஆள் நடமாட்டமில்லை; மத்தியான நேரம்.
அப்படியே விட்டு விட்டுப் போக அவனால் முடியாதிருந்தது. திரும்ப கேற்றடிக்குப் போனான். குழந்தை அவனைக் கவனித்ததாகத் தெரியவில்லை. சந்திரன் கவனமாகக் கூப்பிட்டான்.
G6
LLUIT....
149

Page 77
சாந்தனின் எழுத்துலகம்
குழந்தை திடுக்கிட்டு நிமிர்ந்து, பரபரத்து இறங்கியது. அவனுக்குப்
பயமாயிருந்தது. இந்த அவதியில் வழுக்கி விழுமோ..?
ஆனால், குழந்தை கெட்டித்தனமாக இறங்கிக் கொண்டது. “தாத்தா”. என்று கத்திக்கொண்டு உள்ளே ஓடியது.
கோடுபோட்ட சாரங்கட்டி, வெள்ளை பெனியனும் கண்ணாடியும் போட்ட, நரைத்த தலைக்கிழவர் ஒருவர் வந்தார்.
அவர் கேற்றருகே வருமட்டுங் காத்திருந்து, சந்திரன் விஷயத்தைச் சொன்னான்.
அவன் சொல்லி முடித்ததும், கிழவர் அவனை ஒரு மாதிரியாகப் பார்த்துவிட்டு, “தாங்ஸ்.” என்றார்.
1977
150

花3
6TL gull gol
பந்தலின் இந்த மூலையில் ஆட்களில்லை. விரிந்திருந்த புற்பாயில் படுத்து உருள வேணும்போல் ஆசையாயிருந்தது. தண்டுவுக்கு படுத்ததும் பந்தலில் கூரை மேலே போய்விட்டது. கிடுகு ஒட்டையால் வந்த வெளிச்சம். கூரைக்குக் கட்டியிருந்த வெள்ளையில் மஞ்சள் மஞ்சளாக வட்டப் பூக்கோலம் போட்டிருந்தது. தண்டு, வட்டங்களை எண்ணினான். இருபத்தி மூன்றுக்கு வந்தபோது ஆட்கள் பரபரத்துக் கேட்டது. எழுந்து பார்த்தான். மாப்பிள்ளையைப் பந்தலுக்குக் கூட்டிக்கொண்டு வந்து இருத்தினார்கள்.
மாப்பிள்ளையைப் பார்க்க முசுபாத்தியாயிருந்தது. வெள்ளைவேட்டி கட்டி, வெள்ளைத் துண்டால் போர்த்துக்கொண்டு, நிறைகுடம், குத்துவிளக்குக்கு முன்னால், கையில் வெற்றிலைச் சுருளைப் பிடித்தபடி, தலையைக் கொஞ்சம் குனிந்து இருந்தார் தங்கண்ணை. அவரின் தாய் தகப்பனில் தொடங்கி, பெரியாட்கள் ஒவ்வொருவராக, முன்னாலிருந்த அறுகம்புல்லு போட்ட பாலைக்கிள்ளி அவரின் தலையில் வைத்துவிட்டார்கள். நெற்றி, முகம் தோளெல்லாம் பால் வடிந்தது.
பந்தலுக்குள் பன்னீர், சந்தனம், சந்தனக்குச்சி எல்லாம் சேர்ந்து மணத்தன. மாப்பிள்ளையைக் கிணற்றடிக்குக் கூட்டிக்கொண்டு போனதும் தண்டு அடுப்படிப் பக்கமாக இன்னொரு 'றவுண்ட போனான்.
தணிகையனையுங் காணவில்லை.
இன்றைக்கு சமையல் அடுப்படியிலில்லை. பின்னால் பத்தி இறக்கி,
151

Page 78
சாந்தனின் எழுத்துலகம்
பெரிய அடுப்புகள் மூட்டி சமையல் இரவிரவாக நடந்தது. ஆனால், சோறு கறியெல்லாம் அடுப்படிக்குள்தான் வைத்திருந்தார்கள். கிடாரங்கள், அண்டாக்களில் கறி குழம்பு, சொதி, கடகத்தில் அப்பளம், பாயசம் எதிலிருக்கும் என்று தண்டு யோசித்தான்.
இதற்கிடையில் செல்வராசண்ணை வந்து விட்டார்.
"என்ன தண்டபாணி, என்ன செய்யிறாய்?” "ஒண்டுமில்லை.”
"சின்னப் பெடியளெல்லாம் இங்க வரக்கூடாது. அங்கை முன்னுக்குப் போயிருந்து விளையாடு தணிகாசலம் உன்னைத் தேடுகிறான், அங்கை.
உண்மையாகவே தணிகை இப்போது பந்தலுக்குள் இருந்தான். இவனைக் கண்டதும், “எங்கையடா போன நீ?’ என்று கேட்டான்.
அதைக் கவனியாமல் தண்டு சொன்னான். “எப்பிடியாவது முதல் பந்தியிலை இருந்திட வேணும். ஓரிடமும் போயிடாதை."
பின்னை.? பிந்தினா, பாயசம் கிடைக்காது.”
"அதுவும் ரா முழுக்க இருந்து ஏலக்காய், கசுக்கொட்டை உடைச்சுக் கொடுத்த நாங்கள்." - தண்டு இப்போதும் ஞாபகமாகக் கையை மணந்து பார்த்தான்.
"இஞ்ச வா தண்டு.”- ஆரோ கூப்பிட்டார்கள். “இவன் தணிகையும் நீயுமாய்ப் போய், உங்காலை அந்தச் செம்புகளை வாங்கிக்கொண்டு வாங்கோ - சுறுக்கா.”
D
திரும்பி வந்தபோது பந்திக்கு ஆயத்தம். "இதிலை இடமிருக்கு. பெடியளெல்லாம் இப்படி வந்து ஆம்பிளையளோட இரு.” என்று கந்தையா அம்மான் கத்தினார் : அவர் கையில் வாழையிலைக் கட்டு இருந்தது. வேட்டியைச் சண்டிக்கட்டாகக் கட்டியிருந்தார். தலைவாசலுக்குள் ஆம்பிளைச் சபை,
கந்தையாம்மான் கடகடவென்று இலை போட்டுக் கொண்டு போக,
152

சாந்தனின் எழுத்துலகம்
அவருக்குப் பின்னால் செந்துரு அப்பளம் போட்டுக்கொண்டு போனான் செல்வராசண்ணை. மணிய மாமா இரண்டுபேரும் தூக்குச்சட்டிகளில் கறிகளோடு பின்னால் வந்தார்கள்.
தண்டுவுக்கு ஒரு பெரிய தலை வாழையிலை விழுந்திருந்தது. “பார் உன்னிலும், பெரிய வாழையிலை.” என்றார் மணிய மாமா, கறி போடும்போது தண்டுவுக்குப் பக்கத்திலிருந்த விசயாவின் தகப்பன் சிரித்தார்.
"கன சனம், என்னடா?’ என்றான் தணிகை.
s و و
LDD....
கந்தையாம்மான் இலை போட்டு முடித்துவிட்டு, சோற்றுக் கடகத்தைத் தூக்கிக்கொண்டு அடுத்த வட்டம் தொடங்கினார். சோறு வந்தபோது, “கொஞ்சம், கொஞ்சம். அம்மான்.” என்றான் தண்டு.
“கொஞ்சம், கொஞ்சம். அம்மான்.” என்றான் தணிகையும்.
அம்மான், இரண்டு பேரையும் ஒரு தரம் நிமிர்ந்து பார்த்துவிட்டு அடுத்த இலைக்குப் போனார். அவர் போனதும், “நீ ஏன் 'கொஞ்சம், கொஞ்சம்' எண்ட நீ?’ என்று தண்டு கேட்டான்.
"நீ ஏன் சொன்ன நீ?”
“கன சோத்தைப் போட்டா, நாங்கள் சாப்பிட்டு முடிக்கிறதுக்குள்ளேயே பாயசம் வந்திட்டுப் போயிடும்.”
"நானும் அதுக்குத்தான்.”
கடைசி ஆளுக்கும் பயறு போட்டு முடித்ததும், கந்தையாம்மான் நடுவில் வந்து நின்றார்.
"ஆ, சரி. துவங்குங்கோ.”
O
குழம்பு, சரியான உறைப்பு. தண்டுவுக்கு இரண்டாவது தரம் சோறு போடவில்லை என்றாலும் மணிய மாமா குழம்பை அள்ளி ஊற்றிவிட்டுப் போய்விட்டார். முதலிலேயே கறிகள் கூட எல்லாமாகச் சேர்ந்துநாக்கு எரிந்தது.
153

Page 79
சாந்தனின் எழுத்துலகம்
ஏழெட்டு மிடறு தண்ணிர் குடித்தும், உறைப்பு முழுக்க நிற்கவில்லை. வெறும் சோறும் இலையிலில்லை. தண்டு குழையல் சோற்றில் உருளைக்கிழங்குத் துண்டுகளைத் தேடினான்.
வயிற்றுக்குள் தண்ணி கூடிவிட்டது போலிருக்கிறது. லேசாக ஏதோ செய்தது. தண்டு நிமிர்ந்து இருந்தான். உள்ளுக்கு ஏதோ ஓடி விளையாடியது. அவனுக்கு அப்போதுதான் ஞாபகம் வந்தது.
காலைமை, கலியாண வீட்டுக்கு வருகிற அவசரத்தில் பல்லுத் தீட்டி முகங் கழுவிக் குளித்ததோடு சரி, இப்போது தான் வயிற்றை வலிக்கிறது!
செந்துரு விட்டுப் போன சொதி இலையால் வழிய நின்றது.
“இனி, வரப்போகுது.” - தணிகை மிஞ்சியிருந்த எல்லாவற்றையும் இலையில் ஒரு மூலையில் ஒதுக்கினான். தண்டு ஒன்றும் சொல்லவில்லை. அவனுக்கு மேலெல்லாம் வியர்த்தது. குடங்கி இருந்து பார்த்தான். அடக்கமுடியாமல் அந்தரமாயிருந்தது. அழுகை வந்தது.
"என்னடா?.” என்றான் தணிகை பிறகும்.
'வயித்தை வலிக்குது." - தண்டு மெல்லச் சொன்னான்.
"என்ன..” என்று திரும்பினார் விசயாவின் தகப்பன். அவருக்குக் கேட்டிருக்கும். 'எழும்பிப் போ. ஒடு, ஒடு.” என்று சிரித்தார்.
தண்டு, எழும்பி இலையைத் தூக்கினான்.
"அது கிடக்கட்டும். நீ போ.”
தண்டு கெதியாகப் போனான்.
அடுப்படியிலிருந்து பாயச வாளியோடு வந்த செல்வ ராசண்ணை, “எங்கையடா ஒடுறாய், தண்டபாணி?.” என்று கேட்டார்.
1978
154

19
இழப்பு
இப்போதும் நன்றாக ஞாபகமிருக்கிறது - இது ஒரு நல்ல புதிராக இருந்தது, அப்போது, வழுக்கி வழுக்கி மூளையை வலிக்கப் பண்ணிய புதிர். என்றாலும் எப்போதுமே இந்தப் புதிர்கள் இன்பமானவை. அவற்றை அவிழ்த்து ஒன்றைப் படைக்க முடிகிறதும், அப்படி முடிகிறதில் கிடைக்கிற நிறைவும் நிச்சயமென்பது தெரிகிறதால்.
இதில் இன்னொரு விசேஷமுமிருந்தது -
மூன்று நீலப் பிரதிகளையும், அளவு - செலவு மதிப்பீட்டையுங் கொடுத்து விட்டு, உத்தேச மதிப்பில் ஒரு வீதம் கூலி என்று வாங்குகிற காரியமில்லை. நட்புக்கும் பரஸ்பர அன்புக்கும் ஒரு நினைவாய் நிலைத்து விடப் போகிற சின்னம். எத்தனையோ தரம் என் காலால் மிதிபடப் போகிற வாசற்படியும் இருந்து கதைக்கிற நேரமெல்லாம் அந்த உரிமையை நினைவூட்டப்போகிற விறாந்தையும் - என்ற நினைவு, வழமையிலும் பார்க்க அதிகரித்த ஈடுபாட்டையும் உசாரையுங் கொடுத்திருந்தது.
இந்தப் புதிருக்கான விதிகள் வலு இறுக்கமாயிருந்தன. நாற்பத்தைந்தடிக்கு நாற்பத்தெட்டடி காணியில் நண்பன் கேட்டிருந்தவை. ஒரு சராசரி வீட்டின் எதிர்பார்ப்புகள், மூன்று அறை, முன்னால் விறாந்தை, மால், குசினி.
இடம், மாநகரசபை எல்லைக்குள்ளிருந்தது. சுகாதார விதிகள்
155

Page 80
சாந்தனின் எழுத்துலகம்
மறக்கப்பட முடியாதவை. ஒரு பக்கம் தெரு, அது வடக்கு. ஒரு பக்கம் ஒழுங்கை - கிழக்கு. மேற்கிலுந் தெற்கிலும் மற்ற காணித்துண்டுகள். இவற்றில் கட்டிடங்கள் எழும்பும்போது, வெளிச்சமுங் காற்றோட்டமும் இங்கு பாதிக்கப்படக் கூடாது. அந்தரங்கம் இழக்கப்படக் கூடாது.
காணிக்குள் கிணறு வர வேண்டும். அதோடு கக்கூசும், குழிதான். அதற்கும் கிணற்றுக்குமிடையில் ஆகக் குறைந்தது ஐம்பதடியாவது இருக்க வேண்டும் என்பது அடிப்படை விதி. கொஞ்சம் மணற்பாங்கான இடம் இன்னும் கூடுதலாக விட்டாலும் நல்லது.
மொத்தச்செலவு முப்பதினாயிரத்துக்கு மேற்பட வேண்டாம் என்று நண்பன் சொல்லியிருந்தான். எவ்வளவு குறையுமோ அவ்வளவு நல்லதா. கிணறுங் கக்கூசும் இதில் சேர்மதியில்லை.
வழமையான, எட்டடிக்கு ஒரு இஞ்சி என்ற ஸ்கேல். பழைய ப்ளூப்ரிண்ட் ஒன்றின் பின்புறத்தில் பின்னல் வலைகளாய் விழுந்த கோடுகள், சதுரங்கக் கட்டடங்களான வடிவங்கள். கோடுகளை அரக்கினான் - முன்னும் பின்னும், பக்கவாட்டில் ஒன்றாய்த் தொடரும் பிரச்சினைகள். அல்லது ஒன்று சரிவந்தபோது இன்னொன்று தடுக்கியது - இங்கேதான் அது புதிராகியது. கீறுதலும் அழித்தலும் யக்ஞமாய்த் தொடர்ந்தன.
மேசையைத் தாண்டிப் போகிற - அல்லது எதற்காகவோ எழும்பி அவனருகில் வருகிற சகாக்களின் மூளைகளும் அதில் தடங்கள் பதித்தன. அதுதான் ஒரு நயம், கந்தோரில், தப்பித்தவறி விடுகிற பிழைகூட எவனோ ஒருவனின் கண்களிற் பட்டு விடும். நழுவி வழுகி ஓடுகிற ஒருவழி, எதுவோ ஒரு மூளையில் அகப்படும். ஆனாலும் அதில் அபாயம் உண்டு. ஒவ்வொரு ஆலோசனையும் ஒப்புக்கொள்ளப்படுகிற பட்சத்தில், சுவரே இல்லாத வீடும் ஆகலாம்; யோசனைகள் வரவேற்கப்படும். ஆனாலுங் கடைசி முடிவு, அவனவன் பொறுப்பு. அப்படித்தான் இதுவுமிருந்தது.
முடிக்க - முழுதாகப் புதிரை அவிழ்க்க - ஒரு கிழமை பிடித்தது. கந்தோர் வேலைகளுக்கிடையில் மிஞ்சுகிற செம்பாதி நேரங்களின் கணக்கில் ஆறு கதவுகள், எட்டு ஜன்னல்கள் இவற்றுடன் தொளாயிரத்தறுபது சதுர அடி தளப்பரப்பு முப்பது ரூபாப்படி பார்த்தாலும் இருபத்தொட்டாயிரத்துச் சொச்சம்.
156

சாந்தனின் எழுத்துலகம்
கிடைப்படவேலை முடிந்ததும், முன் தோற்றம், வெட்டுமுகம், கட்டுமான விபரம் பக்கத் தோற்றம், அத்திவாரம், காணிப்படம் - எல்லாம் அளவுக்கு அமைவாக, அழகு பார்த்து, ட்றேஸ் பண்ணி, ப்ரின்ட் எடுத்து, அளவு - செலவு கணக்குப் போட்டு.
முதலில் காணியை அளக்கப் ப்ோன போது நண்பன் அதிருஷ்டசாலி என்று பட்டது. தெரு பெருந்தெரு, கரையெல்லாம் சடைவிரித்துச் சரிந்து, பட்டை வெடித்த பூவரசு வரிசைகள். பின்னால் காற்கடைக்கு அப்பால் கடல் தெரிந்தது.
போன பயணம் ஊரில் நிற்கையில், தற்செயலாய் அந்தப் பாதையால் போக நேரிட்டது. அளந்த காணி ஞாபகமாகப் பார்த்தவன் வியப்படைந்தான். அந்தப் பெண்சில் கோடுகளெல்லாம், சீமேந்துச் சுவர்களாயும், சிவப்பு ஒடுகளாயும் எழும்பி நின்றன. முடிகிற கட்டம், சுவர் பூசிக்கொண்டிருந்தார்கள். சட்டென்று சைக்கிளை நிறுத்திப் பூட்டிவிட்டு உள்ளே போனான். மேசனுக்கு என்ன சொன்னதென்று ஞாபகம் இல்லை. அவனும் கேட்டதாய் நினைவில்லை. சுற்றிப் பார்த்தான். குசினிக்குத் தளம் போடவில்லை. பூச்சு வேலையும் மிச்சம். மற்றும்படி நினைத்ததிலும் வடிவாயிருந்தது. மனதில் நிறைவு வந்தது.
வெளியே வந்து சைக்கிளை எடுத்தபோதுதான், இவ்வளவு வேலை முடிந்ததைப் பற்றி நண்பன் சொல்லக்கூட இல்லையே என்று பட்டது. நாலைந்து மாதங்களுக்கொரு முறை சந்திக்க நேர்கிற அந்தக் குறுகிய இடைவெளிகளில், சேர்த்து வைத்திருக்கிற கதைகளின் கனத்தில், இதைச் சொல்ல மறந்திருக்கும் என்று நினைத்தான்.
ஆனால், இப்போது புரிகிறது- அப்போதே ஒரு விரிசலின் கோடு இந்த உறவில் விழுந்திருக்க வேண்டும்.
குடிபுகுதல் முடிந்திருக்குமோ தெரியவில்லை. முதல் அழைப்பு தனக்கென்றிருந்த கொண்டாட்டம்.
இன்று, இந்த லாச்சியில் சேர்ந்து கிடக்கிற படச்சுருள்கள் எல்லாவற்றையும் விரித்து அடுக்கிக் கொண்டிருக்கிற வேளையில் - சிக்கிய அந்த வீட்டுப்பட பிரதி ஒன்று விரிக்க விரிக்க கையில் சுருளுகிற இந்த
157

Page 81
சாந்தனின் எழுத்துலகம்
நேரத்தில் - இழப்பை அடையாளங் காண முடிகிறது.
தன்னிலும் பிழைகளிருந்திருக்கலாம். ஆனால் நிச்சயமாக, அந்த ஆரம்பமும் பொறுப்பும் இல்லை என்று - தள்ளி நின்று பார்த்தும் - திருப்திப்பட்டுக் கொள்ள முடிகிறது, இன்றைக்கும்.
இதையும் விரித்து, பத்தோடு பதினொன்றாக வைத்தான்.
1978
158

20
அலுமார்
சீனிச்சரை சுற்றி வந்த கடதாசி. எடுத்து விரித்துப் பார்த்தான். ஏதோ ஒரு பள்ளிக்கூடத்தின் பரீட்சைத் தாள் போலிருந்தது. சமயபாடம். நாலாம் வகுப்பு. பள்ளிக்கூடத்தின் பெயர் இருந்த இடம் கிழிந்து போக, மூன்றாந் தவணை என்பது பாதி தெரிந்தது. பெயர் என்றிருந்த இடத்தில், க. சிவசுதன் என்று குழந்தை எழுத்துக்கள். வலு அக்கறை எடுத்து எழுதப்பட்டவை.
ஐந்து வயது முடிய முதலாம் வகுப்பிற் சேர்ந்திருந்தாலும், இதை எழுதியபோது அந்தப்பிள்ளைக்குக் கிட்டத்தட்ட ஒன்பது வயதிருந்திருக்கும். ஒன்பது வயதில் ஒரு பிள்ளை எழுதிய பரீட்சையின் விடைத்தாள்.
பெயருக்குப் பக்கத்தில் சிவப்பு வட்டத்திற்குள் ஒரு சிவப்பு முப்பது முழிசிக் கொண்டிருந்தது. கேள்வித்தாளிலேயே விடையும் எழுத வேண்டும். அச்சடித்த கேள்விகள் அருகில் விடை எழுத இடைவெளி. சுருக்கங்களை இழுத்துவிட்டு மேலோட்டமாகப் பார்த்தான். சரிகளிலும் அதிகமான பிழை
அடையாளங்கள்.
முதலாங் கேள்வி, தேவாரம். 'தோடுடைய செவியனை சிவசுதன் சரியாக எழுதியிருந்தான். பத்து மாக்ஸ், பிறகு அநேகமாக எல்லாம் ஒரு சொல் விடைகளாக இருந்தன - கடைசிக் கேள்வியைவிட அதில் திருக்கோவிலில் செய்யத் தகாத ஐந்து குற்றங்களை எழுதும்படி கேட்டு, கீழே ஐந்து வரி விட்டிருந்தார்கள். 'கதைத்தல், துப்புதல் என்று இரண்டு சரி. மற்ற மூன்றும் வெறுமை.
159

Page 82
சாந்தனின் எழுத்துலகம்
இடையில் ஓரிடத்தில் அலுமார் என்றெழுதி, அந்தப் பிள்ளை பிழை வாங்கியிருந்தது. கேள்வியைப் பார்த்த போது - கீழ்க் காணுஞ் சொற்களுக்குப் பொருள் தருக. அந்தணர் - பிராமணர், சரி, அடுத்தது. அமரர் - அதற்குத்தான் அலுமார். அமரருக்கும் அலுமாருக்கும் என்ன ஒற்றுமை அந்த மனதில் பட்டிருக்கும்?
அநுமாரை அலுமார் என்றெழுதிய அந்தப்பிஞ்சை ஒருதரம் பார்த்துக் கொஞ்ச, அவன் ஆவல் கொண்டான்.
1978
160

21
நிரூபணம்
கந்தசாமியும் இன்னும் ஐந்தாறுபேரும் வெளியிலேயே நின்றார்கள். உள்ளுக்கு நல்ல சனமாயிருக்கும்போல இருந்தது. மார்க்கண்டு, சைக்கிளில் வெயில் படாமல் வேலிக்கரை யோரமாக, ஒழுங்கையிலேயே நிறுத்திப் பூட்டினார்.
டாண்டாண், டுட்டுடு. என்று பறை அதிர்ந்து கொண்டிருந்தது. பெண்களின் ஒப்பாரி, பெரிதாக - இரைச்சலாக - ஏறி, இறங்கிக் கேட்டது.
மார்க்கண்டரைக் கண்டதும், “என்ன, அண்ணை இப்பதானே
வாறியள்?’ என்று கேட்டபடி அவரோடு கூடிக்கொண்டு கந்தசாமியும் உள்ளே போனான்.
படலைக்கு இரண்டு பக்கமும் வாழை கட்டியிருந்தது. முத்தையர் வீட்டுத் தலைவாசல் நிரம்பி முற்றத்தலும் ஆட்கள் குழுமி நின்றார்கள்.
கட்டிலும் கட்டிலிற் பெட்டியுந் தெரிந்தன. திண்ணைக்கும் தலைவாசலுக்கு மிடையிலிருந்த முற்றத்தில் பந்தல் போட்டு, வெள்ளை கட்டியிருந்தது.
"உவன் பாவிக்கென்ன, முப்பது வயதிருக்குமே?” என்றார் மார்க்கண்டு. குரல் அநுதாபத்தில் ஊறி வந்தது.
“போன ஐப்பசிதான், முப்பது - என்னிலும் சரியாகப் பத்துவயதுக்கு இளமை.”
"அண்டைக்கும் கோவிலடியிலை கண்டு கதைச்சவன், பாவி -
161

Page 83
சாந்தனின் எழுத்துலகம்
அடிச்சுகவின்த்தினாலும் ஆறுமாதம் செல்லும்.” மார்க்கண்டர், எட்டி வேலியடியில் எச்சிலைத் துப்பிவிட்டுப் பிறகு சொன்னார்:
GG
--- ஆனா, அந்த உடம்புதான் கூடாது”
இப்ப இந்த ஹாட் அற்ராக் தானே ஒண்டு - புதுசா - நிண்ட நிண்டபாட்டிலை எல்லாரையும் விழுத்துது.”
ஒரு சின்னப்பொடியன் சுருட்டுத்தட்டத்தைக் கொண்டு வந்து நீட்டினான்.
“என்னட்டை இஞ்சை கையிலை கிடக்கு. நீ எடு.” என்றார் மார்க்கண்டு.
சுருட்டைப் பத்திக்கொண்டு, நெருப்புப்பெட்டியைத் தட்டத்தில்
போட்டபோது அவர் கேட்டார்.
"மெய்யே, கந்தசாமி. இவனுக்கு இதெப்படி நடந்தது?.”
கந்தசாமி, முத்தையருக்குப் பக்கத்து வீடு, அவன் சொன்னான்.
"நேற்றுச் சனிக்கிழமையெல்லே. இரண்டு மணிக்குக் கடையாலை வந்தவனாம். வந்து, குளிச்சுச் சாப்பிட்டுட்டு பேப்பர் வாசிச்சுக்கொண்டு கிடந்தவன். இருந்தாப்போலை, நெஞ்சுக்கை ஏதோ செய்யுது. கொஞ்சந் தண்ணிதாங்கோ - எண்டு கேட்க, தண்ணியோட தங்கச்சியார் வந்து பாக்கிறதுக்குள்ளை, ஆள் பேச்சுமூச்சில்லை. பிறகென்ன? சும்மா ஒரு மன ஆறுதலுக்குத்தான் ஆஸ்பத்திரிக்குக் கொண்டுபோனது.”
இரண்டுபேரும் பெருமூச்சு விட்டார்கள்.
“என்ன மாதிரி - தங்கக் கம்பிபோலை - பெடியன். மிதிச்ச இடத்துப் புல்லுச் சாகாது. மல்லன் மாதிரி ஒரு பிள்ளையை இந்த வயதிலை தூக்கிக் குறுக்கிறதெண்டா-முத்தையருக்கு இடி விழுந்த மாதிரித்தான் இருக்கும்.”
"பின்னை? தாய்க்காரி நேற்றுக்கிறுதிதூக்கி எறிஞ்சு படுத்தபடுக்கைதான் - இன்னும் எழும்பேல்லை.”
மாமர நிழலில் வெட்டிப் போட்டிருந்த பச்சைத் தென்னோலையில் போய்க் குந்தி, கொஞ்ச நேரத்தின் பிறகு மார்க்கண்டர் கேட்டார்.
162

சாந்தனின் எழுத்துலகம்
“இப்ப எப்பிடி, உன்ர மகனுக்கு?
"அவனுக்கு என்னண்ணை. அந்தக் குறையொண்டைவிட வேறையொரு வித்தியாசமுமில்லை.”
"இப்ப - பத்து வயதாச்சோ?”
"ஒ. நானும் கையெடுக்காத கடவுளில்லை. காட்டாத டாக்குத்தரில்லை. ஆனா, இப்ப தின்னவேலிச் சாத்திரியார் சொல்லியிருக்கிறார்."
- அவன் புது நம்பிக்கையுடன் சொன்னான் :
"பயப்பிடுறதுக்கு ஒண்டுமில்லையாம்; பிள்ளைக்கு பன்னிரண்டு வயது முடிய, எல்லாம் தன்பாட்டிலை சரி வருமாம். அவர், ஆள் வலு கெட்டிக்காரன்.” -
"அப்பிடியே?.” என்றார் மார்க்கண்டர், வெறுமனே.
"இஞ்ச பாருங்கோவன், கண்ணுக்கு முன்னாலை. கந்தசாமி, தலைவாசலுக்கும் பந்தலுக்கும் பின்னால் தெரிந்த திண்ணையைக்
காட்டினான் :
“இவன் பெடியனும் அவரிட்ட தன்ரை சாதகத்தை கிட்டடியிலை ஒருக்காக்கொண்டு போய்க்காட்டினவன். அந்த ஆள் பாத்திட்டுச் சொல்லிப்போட்டுது. "உனக்கு இப்ப ஒண்டும் நான் சொல்ல மாட்டன். முப்பத்தொரு வயது முடியட்டும், வா எண்டு.”
மார்க்கண்டர் கேட்டுக் கொண்டிருந்தார்.
"பாத்தீங்களே?’ என்றான் கந்தசாமி உற்சாகமாக,
1978
163

Page 84
22 76 ல், ஒரு விடுமுறை நாளில்.
கோப்பி குடித்துவிட்டு வெளியே வந்து காசு கொடுத்துக் கொண்டிருக்கும்போது, யோகன் சொன்னான்: “பார்த்தீரா, இதுதான் நான் சொன்னது.”
கடை முகப்பிலிருந்து ஸ்பீக்கர், பிரபலமான ஒரு சிங்கள பொப் பாடலைக் காதடைக்கப் பாடிக் கொண்டிருந்தது. கஷியரின் மேசையருகில் சுழன்று கொண்டிருந்த நேரம் ரேப்.
கடந்த பயணம் யாழ்ப்பாணம் வந்திருந்தபோது, சசி கூட இதை அவதானித்திருந்தான்.
சுவீப் ரிக்கற் வான்களும் விளம்பரச் சேவை ஒலி பெருக்கியுமாய், கடைக்குக் கடை அலறுகிற பாட்டுக்களோடு சேர்ந்து, தெருவில் கார் பஸ் அடிக்கிற ஹோண் சப்தங்களைக் கூடக் காதில் விழாமற் பண்ணிக் கொண்டிருக்கிற அதே பட்டணந்தான், ஆனால்
“. இப்ப, அநேகமான கடைகளிலை இப்பிடித்தான்.” என்றான் யோகன், மீண்டும். -
சைக்கிள்களை எடுத்து உருட்டிக் கொண்டு, தெருவைக் கடந்ததும், "ஏன், அதிலை என்ன பிழை?’ என்று கேட்டான் பூரீநிவாசன். “வெறுமனை ஒரு பாட்டைப் போட்டு ரசிக்கிற சங்கதி மட்டுமில்லை. இது, பூரீநி. வேற சில விஷயங்களையும் யோசிக்க வேண்டியிருக்கு.”
... " 164

சாந்தனின் எழுத்துலகம்
"நீங்கள் மாத்திரம் வெள்ளவத்தையிலை எல்லாம் செய்யலாம்,
என்ன?”
பூரீநிதியின் இந்தக் கேள்வியும் அதன் வேகமும் சசிக்குச் சிரிப்பை மூட்டின.
“இந்த வெங்காயக் கேள்வியை நீரும் கேளாதேயும். அதையும் இதையும் ஒப்பிடவும் ஏலாது. சும்மா கொச்சைத்தனமா எல்லாத்துக்கும் வெள்ளவத்தையை உதாரணத்துக்கு இழுக்காதையுங்கோ.”
"இதெல்லாம் எங்களுடைய தாழ்வு மனப்பான்மையைக் காட்டுகிற விஷயங்களாயிருக்கலாம்.'
“ஒரு நல்லுறவை - உண்டாக்கக் கூடிய விஷயம் உங்களுக்குப் பிடிக்கல்லை.”
"அப்படியில்லை பூரீநிதி. நீர் சொல்லுற நல்லுறவுக்கும் ஒற்றுமைக்கும் நாங்கள் எதிரியில்லை. ஆனா, அந்த நல்லுறவு எண்டதும் ஒருவழிப்பாதை இல்லை. இண்டைய நிலையில் எங்கட பரந்த மனப்பான்மை, விட்டுக் கொடுக்கிற போக்கு, நல்லுறவைக் காடட நாங்கள் எடுக்கிற முயற்சி - இதுகளெல்லாம் எங்கட பலவீனமெண்டுதான் எடுத்துக்கொள்ளப்படுகுது. ஆனபடியா, இப்படிச் சின்ன விஷயங்களிலை கூட - அது தற்செயலோ, என்னவோ - இனி நாங்கள் கொஞ்சம் கவனமா நடக்கிறதுதான் நல்லது போலிருக்கு.”
பூரீநிவாசன் பதில் சொல்லவில்லை. பேசாமல் நடந்தார்கள். திஸ்ஸ பேக்கரியைத் தாண்டும்போது அந்தப்பாட்டுக் காதில் விழுந்தது. பேக்கரிஷோ கேஸின் மேலிருந்த ரேடியோவிலிருந்து வந்த பாட்டு.
"டிக்கிரி மெனிக்கே அம்புல கெனல்லா கொவிரால கொடட்ட அவில்லா.”
கேட்டு எத்தனை நாட்கள்! சசி அப்படியே ஒருகணம் நின்றான்.
இந்தப் பாட்டு இப்படித்தான் - அடிக்கடி கேட்க முடிகிறதில்லை.
எப்போதாவது இருந்துவிட்டு காதில் விழுகிறது. அப்படி விழுவதுதான் நல்லதென்றும் தோன்றுகிறது - அலுத்துப் போகாமல்,
165

Page 85
சாந்தனின் எழுத்துலகம்
இதைக் கேட்கிற போதெல்லாம் அவனக்குப் பச்சைப்புல் வாசனை நினைவுக்கு வருகிறது. எட்டு வருஷங்களுக்கு முன்னால், ஒரு மாணவனாக இருந்தபோது, முதற் தடவையாக இந்தப் பாட்டை அவன் கேட்டான். அப்போதிருந்தே இதைக் கேட்க நேரிடுகிற அந்த எதிர்பாராத சந்தர்ப்பங்கள் எல்லாம் மகிழ்ச்சியைத்தான் தந்திருக்கின்றன.
பச்சைப்புல் வாசனை மட்டுமில்லாமல், கட்டு பெத்தையின் கபூக்தரை, காட்டுச் சூரியகாந்திச் செடிகள், மெஷறிங் ரேப், தியோடலைற், தசநாயக்கவின் வெள்ளைத் தொப்பி - எல்லாங் கூட ஞாபகத்திற்கு வருகின்றன. இன்னும் அந்த டிக்கிரி மெனிக்கா, கமக்காரர்கள் எல்லாம்
எப்படி இருப்பார்களென்ற கற்பனை.”
". டிக்கிரி மெனிக்கே அம்புல கெனல்லா.”
எவ்வித துள்ளாட்டமுமின்றி, மொஹிதீன் பேக்கின் குரலில், அமைதியாக கம்பீரமாக அந்தப் பாடல் வருகிறது. மனதை வருடிக் கொடுப்பதுபோல.
மென்காற்றில் அலைதவழும் நெற்கதிர்களின் அமைதி, இளந்துாற்றல் வெறும் மேலில் தழுவுகிற பரவசம்.
- இந்த மூன்று நிமிஷத்தை அவன் இழக்கக் கூடாது.
"மச்சான், இதிலை கொஞ்சம் நிண்டிட்டுப் போவம்.” என்றான், சசி.
1978
166

23
மீன் காட்சி சாலை கனவுலகமாயிருந்தது. மங்கிய வெளிச்சம் - மிக மங்கிய வெளிச்சம் - கசிந்தபடி, மூச்சு விட்டுக் கொண்டு கடலினடியில் நடக்க முடிந்தது போல உணர்ந்தான். குளிரூட்டியிருந்தார்கள். ஆளுயரத்திற்குப் பென்னம் பெரிய கண்ணாடித் தொட்டிகள், கற்பனை பண்ணிக்கூடப் பார்த்திருக்க முடியாத அழகுகளும் விசித்திரங்களும் விடாமல், சங்கிலித் தொடராய்க் குமிழுதும் ஏரேட்டர்கள்.
வளைந்த பாதைகளில் நடந்து போக, ஒரு தொங்கலில் மற்ற நீர்வாழ் ஜந்துக்களும் இருந்தன. சிங்க இறால், நீர்ப் பாம்பு, நட்சத்திர மீன், அதன் உறவினர்கள்.
ஸி - அனிமோனும் இருந்தது. ஆதிப்படைப்பு. ஆயிரங்கரங்களாற் சூழப்பட்ட ஒரே வாயில் உள்ள உடம்பு, அசைய முடியாது. சதைத்துண்டாய் - சதை என்று அதன் முழு அர்த்தத்தில் சொல்ல முடியாவிட்டாலும் - ஒரே இடத்தில் ஒட்டிக் கொள்கிற உடம்பு.
இங்கே, தொட்டிக்குள் ஒரு கல்லில் ஒட்டிக்கொண்டு, தன் கரங்களை அசைத்துக் கொண்டிருந்தது. முன்னாலுங் கற்கள்.
"இதுகள் செத்த பிறகு, இப்பிடித்தான் கல்லாகிவிடும்.” என்றான் நண்பன்.
“இல்லை; கோறல்ஸ்தான் கல்லை உண்டாக்குகிறது இதுகள் கல்
167

Page 86
சாந்தனின் எழுத்
ஆகிறதில்லை.” என்றான், இவன்.
“இல்லை, நடா - ஸி - அனிமோனும் கல்லாகும்.”
“எவ்வளவு பந்தயம்? கல்லாகாது.”
கூட வந்த புதிய நண்பர் இருவரையும் பார்த்தார்.
வெளியே வந்து, கடற்சிங்கத்தைப் பார்க்கப் போனபோது, இந்த விஷயத்தில் நண்பனுக்குச் சவால் விட்டிருக்கலாமா என்று பட்டது. தான், புகுமுக வகுப்பில் பண்ணிய நட்டா முட்டித் தனங்களால் வழியை மாற்றிக் கொண்டவன். அவன் பல்கலைக் கழகத்தில் கொஞ்சமாவது அதிகம் பிராணியியல் படித்திருப்பான். என்றாலும், கல்லூரி ஆய்வு கூடத்திலிருந்த - போத்தலில் அல்கஹோல் வற்றியதால் சுருங்கி மறைந்த - ஸ்பெஸிமன், நினைவில் கல்லாக நின்றது.
இப்போது நினைக்கிறபோது, என்னதானிருந்தாலும், தான் அவ்வளவு மூர்க்கத்தண்யமாக மறுத்திருக்கக் கூடாது என்றும், தங்களிடையே ஏற்பட்ட
பிரிவு அங்கே முளைவிட்டிருக்கக் கூடும் என்றும் படுகிறது, நடாவுக்கு.
1978
168

24
குமிழிகள்
ஜன்னலுக்கு வெளியே பார்க்கப் பார்க்க எரிச்சலாய் வந்தது. எவ்வளவு நேரந்தான் சரங்கட்டி இறங்குகிற இந்த ஒயா மழையைப் பார்த்திருப்பது?
லீவை இன்னும் இரண்டு நாட்கள் நீடிப்பது என்ற முந்திய யோசனையை விட்டு, நாளைக்கே புறப்பட்டால் நன்றாயிருக்கும் என்ற எண்ணம் வலுத்தது. ஆனால், கூடவே அங்கும் போய்த்தான் என்னத்தைக் கண்டது என்று உணர்ந்தான். அதே இயந்திரமயமாகிப் போன வாழ்வு. பஸ்ஸையுங் கடிகாரத்தையும் துரத்துகிற வாழ்வு, புழுதி, புகை, நெரிசல்,
படியிலிருந்து நீர்க்கோடு இழுத்தபடி திண்ணையில் ஏறி ஊரத்தொடங்கிய அட்டையை, எழுந்து போய்க் காலால் தட்டினான். சுருண்டுபோய் முற்றத்துத் தண்ணீரில் தொளப் பென்று விழுந்தது.
வருஷத்தில் சராசரி மூன்று தடவைகள்தான் யாழ்ப்பாணம் வரச் சாத்தியப்படுகிறது. ஒவ்வொரு முறையும் இரண்டு மூன்று கிழமைக்குக் குறையாமல் நின்று, இந்த மண்ணைத் துளித் துளியாய்ச் சுவைக்கிற வேட்கையோடு வருவான். திரும்ப மனம் வராது. இம்முறை போவதேகூட, அடுத்த பயணம் வருவதற்காகத்தானே என்றிருக்கும்.
கொழும்பில் - அந்தக் கொங்கிறீற் காட்டில் இருக்க நேரிடுகிற நாட்களில் எல்லாம் மகாகவியின் பாடல் நினைவுக்கு வரும்.
இந்நாளெல்லாம் எங்கள் வீட்டுப்
169

Page 87
சாந்தனின் எழுத்துலகம்
பொன்னொச்சிச் செடி பூத்துச் சொரியும்.
போய்ச் சேர்ந்ததிலிருந்து திரும்ப, இன்னும் எத்தனை நாட்கள் என்று மனம் தினசரி கணக்கிடும். அங்கிருந்து யாழ்ப்பாணம் வருகிற ரயில் பயணங்கள் எப்போதுமே இனிய அநுபவங்கள்.
ஊரில் நிற்கிற நாட்களுக்கென்று தனியான வாழ்வு முறை ஒன்றிருக்கும் - கொழும்பில் நிர்ப்பந்திக்கப்பட்ட அவதியையும் பரபரப்பையும் மறக்கிற மாதிரி, காலையில் வளவெல்லாம் சுற்றித்திரிந்து பல்லுத் தீட்டி, அடுப்படியில் குந்தியிருந்து கோப்பி குடித்து-அந்த நாட்கள் வலு ஆறுதலாக ஆரம்பமாகும். கடைக்குப் போய் வருவது, வருகிறவர்களுடன் பேசுவது, தொட்டாட்டு வேலைகள் என்று சாப்பிடப் பத்து மணியாகும். சாப்பிட்டபின் சைக்கிளை எடுத்துக்கொண்டு புறப்பட்டால், ஒரு நாளைக்கு இன்னுமெங்கேயோ என்று போய் வருகிற வேலைகளிலிருக்கும். வந்து முதல் நாளைக்கு காலும் தொடையும் நோகும். பிறகு சரி. முந்தியெல்லாம் விடலைப் பருவத்தில், காத்தி, கலைஞன், விக்கி, விஜயன் என்று கோஷ்டி குலையாதிருந்த நேரத்தில் ஒரு நாளைக்குக் குறைந்த பட்ச சராசரி ஒட்டம் பதினைந்து மைல் என்பது நினைவு வருகிறபோது இந்த நோவு வேதனை தரும், வீடு வர இரண்டு மணியோ, மூன்று மணியோ, அதன் பிறகும் வேலை இருக்கும். இதைத் தூக்கி அதில் போட்டு, அதைத் தூக்கி இதில் போட்டு என்று வி ட்டில் அவன் இந்த வேலைகளைச் செய்ய வேண்டிய தேவையோ எதிர்பார்ப்போ இல்லாதிருந்தாலுங்கூட இவற்றை இழுத்துத் தன்மேல் போட்டுக்கொண்டு செய்வான். இந்த மண்ணின் காற்றைச் சுவாசிக்கிற வெறியோடு, குளித்துச் சாப்பிட ஆறு மணியாகும். நிலாக்கால முன்னிரவுகள் முற்றத்தில் கழியும். நிலா வரா ராக்களில், அன்று பகல் சந்தித்திருக்கக் கூடிய ஒரு புத்தகம் அல்லது அண்டை அயல் பெடியங்களுடன் தாயம். கந்தையாண்ணையின் சின்னவன் கண்ணன் நன்றாகப் பாடுவான்.
சைக்கிள் ஓட்டங்கள் யாழ்ப்பாண வாழ்வில் தான் ஒட்டிக்கொண்ட உணர்வை நிச்சயமாக்கும். சைக்கிள் யாழ்ப்பாணத்தின் தேசிய வாகனம் - இந்த மண்ணின் அடையாளம். ஒரு கிணற்றடிப் பனையில் சைக்கிள் ஒன்றைச் சாத்திவைத்துப் படம் பிடித்தால், அந்தப் படம் யாழ்ப்பாணத்தின்
170

சாந்தனின் எழுத்துலகம்
முழுமையான எலிம்பலாக இருக்கும் என்ற எண்ணம் வரும், சீற்றின் கறுப்பு. வேட்டியில் தேயத் தேய அதன் தலைப்பை இடக்கையால் பிடித்தபடி, தெருத்தாரில் ரயர் ஒட்டிப் பதிய ஒடுகையில் களைப்புத் தெரிவதில்லை. வாயில் வெற்றிலையும், தலையில் யாழ்ப்பான வெய்யிலும் புழுதியும், சைக்கிள், தெரு, காற்று, புழுதி, வியர்வை, மோர், தேத்தணி, சூசியம், வெற்றிலை, புத்தகக் கடைகள் கன நாளைக்குப் பிறகு காண நேர்கிற நண்பர்கள்.
'ஆ எப்ப வந்தது -
வெய்யிலில் காய்ந்து வருகிற அவனைக் காண்கிற அவர்கள் கேட்பார்கள்;
என்ன ஐசே, இந்த வெய்யில் உமக்குச் சுடுகிறதில்யைா?
சுடுவதில்லைதான்.
வெய்யில் தான் என்றில்லை - மழையுங்கூட என்ன குறைந்து போயிற்று? தூறத்தூற முகத்தை நிமிர்த்தி அதில் நனைத்து, தலையைச் சிலுப்பி வழித்து, சைக்கிளை மிதிப்பது சுகம். மழை நின்ற ஐந்து நிமிடங்களில், எதிர்க்காற்றிலோ அல்லது ஒரு தேத்தண்ணி குடிக்கிற நேரத்திலோ, அல்லது ஒரு நண்பனை விசாரித்துவிட்டுப் பார்க்கிற போதோ இந்த ஈரம் காய்ந்து விட்டிருக்கும்.
ஆனால், இப்போது என்னாயிற்று - இந்த மழை தன்னைச் சுற்றிமட்டுமே சினுசினுத்துக் கொண்டு மீதி உலகத்திலிருந்து தனியே வேலியிட்டுப் பிரிப்பது போல?
நேற்றுக் காலை தொடங்கிய இந்த மழை பின்னேரங் கொஞ்சங் குறைந்திருந்த போது, கலைஞன் வீட்டுக்குப் போய் விசாரித்துப் பார்த்தான். கலைஞன் வருவதாகத்தான் இருந்தது; ஆனால் வரவில்லை.
எழுந்து பின் விறாந்தைக்கு வந்தான். தாழ்வாரத்துப் பீலியால் தண்ணிர் பாய்ந்து கொண்டிருந்தது - அருவிபோல. விழுகிற இடத்தில் பள்ளம் விழுத்தி, நுரைத்து வழிகிற தண்ணிர். இந்த நுரைக் குமிழ்களில்
171

Page 88
சாந்தனின் எழுத்துலகம்
இப்போதுங்கூட ஆசை வருகிறது போல இருந்தது. கொப்புளமாய்ப் பொங்கி, அசைந்து ஆடி, ஒன்றன்பின் ஒன்றாய் அல்லது அருகருகாய்ச் சேர்ந்து தழுவிப் பெருத்தும் வெடித்தும் நீரின் வேகமே தம் வேகமாய் அவை நகர்ந்து கொண்டிருந்தன.
இப்படித்தான் ஒரு மழை நாளில் இந்தக் குமிழ்களைப் பிடிக்கப்போய், தாழ்வாரச் சேற்றில் சறுக்கிக் குண்டியடியுண்ண விழுந்தது ஞாபகம் வந்தது. அது நடந்து இருபது இருபத்திரண்டு வருஷங்கள் இருக்கும், இந்த இருபத்தெட்டு வருடகால வாழ்வின் அர்த்தம் என்னவென யோசித்தபடி, வாரடித்து ஒடுகிற வெள்ளத்தைப் பார்த்துக் கொண்டிருந்தான். வெள்ளம், அடிவளவில் சேர்ந்து கொண்டிருந்தது. ஆயிரங்காய்ச்சி மாவடியில் நிற்கிற தண்ணிர் முழங்காடிக்கு வரும். மாட்டுக் குடிலினடியில் மாடுகளிரண்டும் குடங்கியபடி தொட்டிலை நெருங்கி நிற்பது தெரிந்தது.
என்ன செய்வதென்று தெரியாமலேயே அடுப்படிப் பக்கம் போனான். அடுப்படியில் குளிர் தெரியவில்லை. அம்மாவுந் தங்கைகளும் சமையல் மும்முரத்தில் இருந்தார்கள். இந்த மழையாலும் மூட்டங்களாலும் பாதிக்கப்படாதவர்களாக அவர்கள் தெரிந்தார்கள். இப்போதே பகல் சமையல் வேலையைத் தொடங்கிவிட்டார்களா என்ற யோசனை வந்தபோதே, நேரம் பத்துமணிக்கு மேலிருக்கும் என்பதும் நினைவு வந்தது. அடைமழை பிடித்தால் நேரங்கூடத் தெரிகிறதில்லை. காலையில் எழுந்ததிலிருந்து இந்த மூன்று நாலு மணித்தியாலமும், ஒருவேலையும் செய்யாமலே நாசமாய்ப்
போயிருக்கிறது.
தேத்தண்ணி கொஞ்சம் சுடச்சுட வைச்சுத்தரட்டே, அப்பு?’ என்று
அம்மா கேட்டதற்கு,
வேண்டாம் என்றவன், . நாளைக்குப் பகல் நான் திரும்ப
வேணுமெல்லே?" என்று நினைவு படுத்துபவன்போலச் சொன்னான்.
'உனக்கென்ன, பைத்தியமே? இந்த மழையுக் கையோ? . வந்த நீ இன்னும் இரண்டு நாள் லீவைப் போட்டிட்டு நிண்டு ஆறுதலாகப் போறது தானே?
இஞ்சநிண்டுதான் என்ன செய்யிறது?
172

சாந்தனின் எழுத்துலகம்
'ரெயில்கூட ஒடுதோ, தெரியாது.
அது ஒடுதாம். இஞ்சை யாழ்ப்பாணத்திலைதான் வெள்ளம். மற்ற இடங்களில் ஒண்டுமில்லையாம். ரேடியோவிலை சொன்னார்கள்.
என்றபடி, இப்பால் வந்தான்.
கூடத்தில், முத்தையர் வந்து, ஐயாவுடன் பேசிக் கொண்டிருந்தார். ஐம்பது வருஷங்களுக்கு முன் போட்ட பேய் வெள்ளத்தில் நந்தாவிலில் கவிழ்ந்து மூழ்கிய குதிரை வண்டியின் கதையைப் பற்றி.
கலைஞன் பயல் வராமல் விட்டுவிட்டான். அவன் வந்திருந்தால் இந்தப் பயணத்தின் இந்தக் கடைசி நாட்கள் முழுமை கொண்டிருக்கலாம். மற்ற நண்பர்களை விசாரிப்பது தேவையற்றது. அவர்கள் இப்போது வரச் சந்தர்ப்பம் இல்லை என்பது தெரியும்.
எல்லோரையுமே ஊரில் சந்திப்பதானால், அதற்கொரு காலம் இருக்கிறது. வருஷ விடுமுறை. வருஷப்பிறப்பன்றுதான் மருதடியிலுந் தேர். ஊரவன் எல்லாம் வருவான்; எங்கிருந்தாலும் வருவான். வருஷப்பிறப்புக்கு ஒரு கிழமை முந்தித் தொடங்குகிற பண்டிகைக் கோலம், வருஷம் பிறந்து அடுத்து வருகிற ஞாயிறுவரை நீடிக்கும். இந்தக் காலத்தில் இன்னமும் ஒரு விசேஷமிருந்தது.
இப்போதுதான் வசந்தந் தொடங்குகிறது. வேப்பம் பூவும், குயில்களும்.
இந்த மாதிரி அல்லது இதிலும் சிறப்பான காலமும் வேறொன்று இருக்கிறது. அது வைகாசிப் பூரணையை அல்லது ஆனிப் பூரணையை அண்டிவரும், அப்போது அம்மன் கோவில் திருவிழா, சோழகம் தொடங்கி விட்டிருக்கும். ஊர்ப் பனங்கூடல்கள் எல்லாம் ஓவென்று பாடும், ஒயாது, அருகில் எங்கோ சமுத்திரம் மாதிரி. இந்தக் காற்றில் ஏறியும் இறங்கியும் எங்கெருந்தோ ஒலிக்கிற லவுட்ஸ்பீக்கர்கள். அருகில் கேட்கிறபோது அரியண்டமாய் இருக்கிற பாட்டுகள் கூட தூரத்துக் காற்றில் மனதை ஈர்க்கும். போதாக்குறைக்கு மாம்பழ ஸிஸனும்,
இந்த இரண்டு சந்தர்ப்பங்களும் இப்படி இனிக்கும் என்பதால், மற்ற
173 -

Page 89
சாந்தனின் எழுத்துலகம்
சந்தர்ப்பங்கள் கசக்கும் என்றில்லை. ஊருக்கு வருகிற சந்தர்ப்பமுமே கசப்பதில்லை. இனிப்பில்தான் வித்தியாசம்.
ஜனவரி முன்னடியில் பணிக்குளிரும் திருவெம்பாவையும், அரை விழிப்பில் போர்த்துப் புரண்டபடி ரேடியோவில் திருவெம்பாவை கேட்கிற சுகம் - ஒரு மன உறுத்தல் இருந்தாலும் இத்தனை வயதாகியும், எழும்பி முற்றத்திற்கு வந்தவுடன் வாயை விரித்து ஊதி, பனிப்புகை விட்டு ரசிக்கிறது. கொழும்பிலுந்தான் பணி பெய்கிறது.
பிறகு, பொங்கல், புகையிலை இறைப்பு, அக்கம்பக்கத்துத் தேர்ட்டங்களிலெல்லாம் இரவிரவாக - விடிய விடிய - இறைப்பு நடக்கும். மெஷின்களின் ரீங்காரம் தாலாட்டும். பனிப்புகாரில் நீர்த்த நிலவெறிக்கும் இராக்களானால், இன்னும் விசேஷம், அரை விழிப்புடன் புரள்கிற அப்போதும், இன்னொரு குற்ற உணர்வு குறுகுறுக்குந்தான். அம்மா சின்ன வயதில் சொல்கிற கதை ஒன்று நினைவு வரும். ஒரு ராசகுமாரனின் கதை, தகப்பன் ராசாவை அவன் கேட்டுப் பெற்ற போகங்கள்; தங்கமாளிகை, ஏவலர்கள், சாப்பிடப்பாலுந் தேனும், படுக்கப் பஞ்சுமெத்தை, விடியற்காலையில் மெஷின் இறைக்கும் சத்தத்தைக் கேட்டபடி தூங்க வேண்டும். அம்மாவின் கற்பனையும் ரசனை உள்ளமும் இப்போது அதிகபட்சம் புரிகிறது.
இந்த அதிகாலை அரை விழிப்பு சுகங்களில் இன்னும் ஒன்று. ஐப்பசி மாதக் குழை வண்டில்கள், தூரத்தில் எங்கோ குழை வாங்கி வெட்டிக் கட்டிக்கொண்டு விடியற்புறங்களில் வரிசையாகப் போகிற வண்டில்கள், தெருவின் நிசப்தத்தில், சில்லுகளின் லயம் மாறாத கடக், கடக் ஒலி மட்டும் வீடுவரை தாலாட்டும். ஆனால், முழுதாக அயர்ந்துவிடக் கூடாது.
முன்னிரவிலும் ஒன்று உண்டு. கார்த்திகை மட்டில் கெல்லாவில் பனைக்குள் வெள்ளம் சேர்ந்து தெருவரை தளும்புகிற நாட்களில், பொழுதுபடத் தொடங்குகிற கச்சேரி எப்போது முடியும் என்று தெரியாது. தவளைகளும் வேறேதோ பிராணிகளும் போடுகிற இந்தக் கத்தல் கூடக் கவர்ச்சிதான்.
பனங்கிழங்கு, சித்திரைக் கஞ்சி, சித்திரபுத்திர நாயனார் கதை, ஆலம்பழம், கிளிகளும், மைனாக்களும், ஆடிக்கூழ், நல்லூர்த் திருவிழா,
174

சாந்தனின் எழுத்துலகம்
கார்த்திகை விளக்கீடு - இப்படி ஒவ்வொரு மாதத்திற்கும், ஒவ்வொரு நாளுக்கும் ஒவ்வொது அழகு இருந்தது; ஒவ்வொரு சுவை இருந்தது.
ஏன், இந்த அடைமழை நாட்கள் கூட, அர்த்தமும் அழகுங் கொண்டி ருந்தவைதாம். இப்படி வெள்ளம் போட்ட ஒரு போதில் - அறுபத்தேழிலாக இருக்க வேண்டும்-கெல்லாவிலில் மாதக்கணக்கில் வெள்ளம் நின்றபோது, அவன் மூன்று வாரங்களாக மினைக்கெட்டு, ஒரு நாளைக்கு ஒரு வால் பேத்தையாகப் பிடித்து பிறிஸேவ் பண்ணி, தவளையின் வளர்ச்சிச் சரித்திரத்தை உருவாக்கி கல்லூரி ஆய்வு கூடத்திற்குக் கொடுத்தான்.
இன்னொரு வருஷ அடைமழையின் போது அவனும் கலைஞனுமாக கிராமபோன் பெட்டியைத் திருத்தினார்கள். பாட்டா காலத்திய பழைய கிராமபோன் அது பழுதாகிக் கிடந்தது. அக்குவேறு ஆணிவேறாக அதைக் கழற்றி ஸ்பிறிங் பொக்ஸில் மட்டும் பிழையிருக்கவில்லை - திருத்தி, புது வாரினிஷபம் அடித்து, பாட வைத்தார்கள்.
அதற்கு முதல் ஒரு அடைமழை மூடலில்தான் அவன் பாரதக்கதை முழுவதையும் படித்து முடிக்க முடிந்தது. பெரிய எழுத்து பாரதம், தடித்த, சிவத்த மட்டை போட்ட நாலோ, ஐந்தோ பாகம், யாரோ ஒரு நாயக்கர் ஸன்ஸ் வெளியீடு.
அந்த அறுபத்தேழு வெள்ளத்தில் இன்னொரு முக்கியமான வேலையும் நடந்தது. இதே மாதிரி, இந்தக் குறிச்சி முழுவதும் குளங்கட்டித் தேங்கிப் போன வெள்ளத்தை, அவனும் அவன் கூட்டாளிகளுமாகச் சேர்ந்து கான் வெட்டி, கொத்தாவலை நதியில் பாய வைத்தார்கள். கொத்தாவலை நதி, அம்மன் கோவிலடியில் இருந்து வழுக்கையாற்றுக்குப் போகிற வெள்ள வாய்க்கால் ஊர்ப்பெடியன்கள் வாயில் அது நதியாகக் கெளரவம் கொண்டது. கொத்தாவலை அதைத் திறந்து வைத்த பிரமுகரின் பெயர், இந்த வெள்ளத்தை அந்த நதியில் பாயச் செய்யக் கான், வெட்டிய வேலை முழுதாக ஒருநாள் எடுத்தது. கால்மைல் நீளக்கான்.
ஊரோடு இருந்த காலங்களில் ஒவ்வொரு வருஷமும் மழை வெளித்தவுடன் கல்லுண்டாய்ப் பயனந் தப்பாது, வயல் வெள்ளத்தில் வடிவான நிறநிற மீன்களெல்லாம் எங்கிருந்தோ அள்ளுண்டு வரும்.
175

Page 90
சாந்தனின் எழுத்துலகம்
போத்தல்களும் பழந்துணிகளுமாகப் போவார்கள். விஜயன் ஒரு தடவை, ஒரு ஆமையைக்கூடப் பிடித்தான். இந்த வெள்ளத் தப்புகிற ஆசை, சின்ன வயசிலேயே தொட்டது. அம்மன் கோவிலடி வெள்ளம். அப்போது ஆறாம் ஏழாம் வகுப்புப் படித்த காலங்களில் இடுப்பு மட்டும் வரும். மற்றவர்கள் அருவருத்து நிற்கையிலும் கூட, விக்கிப்பயல் புளுகந் தாங்காது, ஒரு தரம் அதற்குள் விழுந்து நீந்தினான். வெள்ளம் கலக்குகிற போது மரத்தடிகளில் வெள்ளம் விளிம்போடு ஒட்டிக்கொண்டு கிடக்கும். நட்டுவக்காலிகளும், நண்டுகளும் மேலெங்கும் குறுகுறுக்கச் செய்யும். வெள்ளத்தில் தவளை கல் எறிகிற சம்பியன், காத்தி.
இந்த இவ்வளவு நாள் வாழ்வு, இந்த வேலைகள் - எல்லாம் அர்த்தமற்ற பைத்தியக்காரத்தனங்கள் என இப்போது படுகின்றன. இனியும் இதே தடத்திலா என்று நினைக்கிறபோது தயக்கமாகவும் இருந்தது. யோசித்தவாறே கிடந்தான்.
D
படலையடி வெள்ளத்தில் கால்களை இழுத்து இழுத்து அலம்பியபடி யாரோ வருகிற சத்தங் கேட்டு விழித்தபோதுதான், அப்படியே சாய்மனைக் கதிரையில் தான் அயர்ந்து போய்விட்டது புரிந்தது. மழை இப்போது நியாயமாகக் குறைந்திருந்தது.
சாக்கால் போர்த்திக் கொண்டு, குடையுடன் பொன்னையாம்மான் வந்தார்.
எப்பிடியடா தம்பி, வெள்ளம் போதுமே?
ஒன்றும் சொல்லாமல் எழுந்து சிரித்தான்.
அங்கை போய்ப் பார், அவன் கந்தையன் வீட்டை - பெரிய பரிதாபம். வீட்டுச்சுவர் ஊறி விழுந்து போச்சு, தலைவாசலுக்கை கிடந்த விதை வெங்காய மெல்லாம் வெள்ளம்.
பாவம் கந்தையாண்ணை, பிள்ளைக்குட்டிக்காரன், தான் இப்போது தூங்கிக் கொண்டிருந்த அதே நேரத்தில், அந்தச் சுவர் அங்கே சரிந்திருக்கும்.
176

சாந்தனின் எழுத்துலகம்
'காத்து எழும்பியிருக்கு, அது பயந்தான், எண்டாலும் மழை இன்னுங் கொஞ்ச நேரத்தில் விட்டிடும். என்றார் அம்மான்.
விட்டா நல்லதுதானே. அந்தச் சுவர் எப்படி பொதபொதவென்று பொறிந்திருக்கும்?
'ஆனா, மழை விட்டாலும் வெள்ளந்தான் பிரச்சினை பண்ணப் போகுது.
'ஏன்? - நல்லகாலம், குழந்தை குஞ்சுகள் அந்தக் கவருக்குள் அகப்படவில்லை.
ஏனோ? இது இவ்வளவும் இஞ்ச பெய்த மழைக்கு வந்த வெள்ளமெண்டே நினைக்கிறாய்? வரத்து வெள்ளமடா. ஆரோ தோட்டப் பக்கத்தாலை வெட்டி இஞ்சை விட்டிருக்கிறாங்கள். பார், செம்பாட்டு வெள்ளம். மழை நிண்டாலும் வெள்ளம் ஏறப்போகுது. திண்ணைச் சாக்கில் ஈரக் கால்களை மாறி மாறித் துடைத்தபடி அம்மான் சொன்னார்.
அப்ப, நாங்களும் கொத்தவாலை நதிப்பக்கம் வெட்டி விடுவம்? பின்னை? வெட்டத்தானே வேணும். அதுதான் வந்தனான்.கொய்யா எங்கை?'அம்மான் கேட்டார். கூட்டிக்கொண்டு உள்ளே போனான்.
சண்டிக்கட்டும் தலைப்பாகையுமாய் ஒரு கையில் குடையைப் பிடித்தபடி, மற்ற கையில் விறகுக் கட்டைச் சுமந்துகொண்டு, ஐயா, கொட்டிலிலிருந்து வந்து கொண்டிருந்தார்.
விறகுக் கொட்டிலுக்குள்ளை வெள்ளம் ஏறிவிட்டுது
இவனிடம் சொன்ன எல்லாக் கதைகளையும் இங்கும் சொன்னார், அம்மான்.
ஐயோ, பாவம். அதுதான் இப்ப முதல் வேலையா, இந்த வெள்ளத்தை வெட்டி விடவேணும். பிறகுதான் மற்றக் கதை.
'ஆர் வெட்டுறது?
முத்தையர், கந்தையாண்ணை என்று ஏழெட்டுப் பேரைச் சொல்லிவிட்டு,
177

Page 91
சாந்தனின் எழுத்துலகம்
பிறகு ஒரு ரோசத்தோடு அம்மான் சொன்னார். 'போன முறை நீங்கள் இளந்தாரியன் வெட்டினாப்போலை எங்களாலை ஏலா தெண்டு நினைச்சிடாதை, இம்முறை நாங்கள் வெட்டிக்காட்டிறம், நாளைப் பொழுதுபட இந்த மூத்தத்திலை ஒரு சொட்டுத் தண்ணி நிக்காது.
அப்ப வெட்டுங்கோவன், நானும் வாறன் உங்களோட. அப்ப நீ நாளைக்குப் போகேல்லையா?. - அம்மாவுக்குச் சந்தோஷமாக இருந்தது.
நிண்டிட்டுப் போறன்’ என்றான். இப்ப துவங்கினா பொழுது படுகிறதுக்குள்ளை அரைவாசியாவது வெட்டி முடிச்சிடலாம். நீ சாப்பிட்டு வருவியா? - அம்மான் கேட்டார்.
'வாறன்.
அம்மான் போனதும் அடுப்படிக்கு வந்தான். அங்கை போய்ப்பார். அண்ணை. மாட்டுக் கொட்டிலை.
போய்ப் பார்த்தபோது, மாடுகளின் காற்குளம்புகளுக்கு மேலாகத் தண்ணிர் நின்றது.
அதுகளை இந்தத் தாழ்வாரத்திலை அவிழ்த்துக் கட்டுவமா? - சாரத்தை உதறி சண்டிக்கட்டைக் கட்டினான்.
நீ அவிட்டுக்கொண்டு வரப்போறியா?
'ஓம்' என்றபடி இறங்கியவனிடம் தங்கச்சி சொன்னாள் "உனக்குப்
பழக்கமில்லாத மாடுகள், இடிக்கும்.
அது சரிதானென்று பட்டது; திரும்பிச் சொன்னான்.
அப்ப, நான் விறகு எடுத்துக்கொண்டு வந்து போடுறன், மாட்டை அவிழ்த்துக் கட்டச் சொல்லி ஜயாவைச் சொல்லுங்கோ.
குடையை வாங்கிக் கொண்டு முற்றத்து வெள்ளத்தில் இறங்கியபோது, உச்சிவரைக்கும் சிலிர் என்றது.
1979
178

25
தமிழன்
குமாரசாமிக்கு நல்ல பசி, மத்தியானம், சாப்பாட்டு நேரத்தில் கோட்டைக்கு ஒரு அலுவலாகப் போனவர், மினைக்கெட்டுப் போனார். நேரே கந்தோருக்கு வந்ததும் இரண்டரை மணியாகிவிட்டது. இனி, வழக்கம்போல கணேஷ் கஃபேக்கு - அங்கேதான் அவருக்கு அக்கெளண்ட் - போய்ச் சாப்பிட்டு விட்டு வருவது முடியாத காரியம்.
இந்த நேரத்திலும் இங்கே கன்ரீனில் சோறு கிடைக்குந்தான். ஆனால் குமாரசாமி சைவம். -
கண்ணாடி அலுமாரிக்குள் பார்த்தார். வடை இல்லை. எள்ளுத் தலகுளி'யையுங் காணவில்லை. மற்றதெல்லாம் நம்ப முடியாது; மச்சமாயிருக்கும்.
தம்பி, மரக்கறியா ஒண்டுமில்லையா?
கன்ரீன் பெடியன் கட்லட் தட்டைத் தூக்கி நிறுத்தினான். இது மரக்கறிதான் மாத்தயா
குமாரசாமி தயங்கினார். பயப்பட வேணாம், இது சைவம். என்றான், அரை குறைத் தமிழில்.
தேத்தண்ணிக் கிளாஸை இடதுகைக்கு மாற்றிக்கொண்டு, ஒரு
179

Page 92
சாந்தனின் எழுத்துலகம்
கட்லட்டை எடுத்தார். நல்லாயிருந்தால் இன்னொன்று எடுக்கலாம் என்ற எண்ணம், திரும்பியபோது வந்தது.
“ஹலோ கும். இங்கே வாருமேன்.” 'ஹலோ. சில்வா இருந்த மேசையடிக்குப் போய், காலால் கதிரையை மெல்ல அரக்கிக்கொண்டு உட்கார்ந்தார்.
இந்தக் கன்ரீன் வர வர மோசம் சில்வா சொன்னார்.
. இங்க பாரும், f எண்டு சொல்லித் தந்தான். சீனி இல்லை, ஒரே சாயம், படு கைச்சல்
உறிஞ்சிய தேநீரை மிடறு விழுங்கியபடியே, குமாரசாமிம்ம். என்றார். தலையை மேலும் கீழுமாட்டிப் புன்னகைத்தார்.
அந்தத் தர்மசங்கடப் புன்னகையை மாறவிடாமலே, கட்லட்டை வாயருகில் கொண்டு போய், முறுகி மொறுமொறுத்த அதன் தோலை எச்சரிக்கையாய் நுனிப் பற்களாற் கடித்துப் பிய்த்தார்.
யன்னல் பக்கத்து மேசையில் என்னவோ, ஒரே ஆரவாரம். டனிபாஸ் கத்திக் கொண்டிருந்தான்.
அங்கே பாரும் என்றார் சில்வா,
'பைப்பிலை தண்ணி இல்லையாம். சாப்பிட்டவன்கள் கைகழுவத் தண்ணியில்லையெண்டால் சத்தம் போடுவான்கள்தானே?
குமாரசாமி திரும்பிப் பார்த்தார். டனிபாஸ் மாத்திரமில்லை, அந்த மேசையிலிருந்த மற்றவர்களும் சேர்ந்து இரைந்து கொண்டிருந்தார்கள். இலையான்கள் மாதிரி, இந்தச் சத்தமும் அரியண்டமாயிருந்தது.
கட்லட்டில் முழுதாய் ஒரு கடி கடிக்கப்போன போதுதான் அது மணத்தது. வெடுக்கு, சரியான் மீன் வெடில், குமாரசாமி துள்ளியெழுந்து வாசலடிக்கு ஓடினார். வயிற்றைப் புரட்டிக்கொண்டு வந்தது. துப்பினார். கையிற் கிடந்ததை எறியப் போனவர், எறியவில்லை.
கைலேஞ்சியால் வாயை அழுத்தித் துடைத்தபோதே, வந்த ஆத்திரத்தையும் துடைத்துக் கொண்டார். திரும்பிக் கணக்கு மேசையடிக்குப் போனபோது,
180

சாந்தனின் எழுத்துலகம்
‘என்ன, என்ன, கும்?. என்று சில்வா கேட்டது அவர் காதில் விழவில்லை. இந்த அமளிகள் யன்னலடி மேசையைச் சுற்றியிருந்தவர்களை இங்கே திரும்பச் செய்ததையும் அவர் கவனிக்கவில்லை.
இந்தா பார், தம்பி. பொடியனிடம் கடித்த கட்லட்டை நீட்டினார். அமைதியாகக் கேட்டார் :
மரக்கறியெண்டு சொன்னாய், இல்லையா? மரக்கறிதான் மாத்தயா?
அவன் அதை வாங்காமலே பிடிவாதமாகச் சொன்னான். இதற்குள் சில்வா எழுந்து வந்து விட்டார். ‘என்ன பிரச்சினை, கும்? இது என்ன பாரும்? வாங்கி முகர்ந்துவிட்டு, வலு சாதாரணமாக, மாலு என்றார் சில்வா. '. ஏன், என்ன அதில்?
சில்வாவுக்கு உடனே நினைவு வந்தது. 'ஓ' கும் நீர் ஒரு வெஜிற்றேரியன் - நான் அதை மறந்தே போனேன்.
இது மீன்தான் பெடியா. மீன்' என்று சில்வா சொன்ன பிறகுதான் கன்ரீன் பெடியன் கையை நீட்டி அதைக் கும்மிடமிருந்து வாங்கினான். விரல்களால் அழுத்திப் பிரித்தான். அதைப் பார்க்கவே அருவருத்தது குமாரசாமிக்கு.
பார்த்தியா? - என்றபோது அவன் பதில் சொல்லாமல் முணு முணுத்தான். வேண்டா வெறுப்பாக ஒப்புக்கொள்ள வேண்டியிருந்தது.
கணக்கு எழுதியாச்சா?’குமாரசாமி கேட்டார்.அவன் தலையாட்டினான். ஐம்பது சதம் வீண்காசு. அந்தக் கணக்கை வெட்டி விடேன். ஒமோம், மாத்தயாவில் பிழை இல்லை, வெட்டிவிடு. என்றார், சில்வாவும்.
தேத்தண்ணியோட சமாளிக்க வேண்டியதுதான் என்று நினைத்தபடி,
181

Page 93
சாந்தனின் எழுத்துலகம்
இன்னொருதரம் சொண்டெல்லாவற்றையும் இறுக்கித் துடைத்தார் குமாரசாமி.
பாருங்க மாத்தயா, வெட்டிறன்-பெடியன் பேனையைத் திறந்தபோது, பின்னாலிருந்து டனிபாஸின் குரல் பலத்துக் கேட்டது.
வேண்டாம், வெட்ட வேண்டாம். இவர்கள் திரும்பிப் பார்த்தபோது அவன் சொன்னாான் வெட்டத் தேவையில்லை.
இவனுக்கென்ன வந்தது இதில்? பைத்தியமா?
ஏன்? - குமாரசாமிக்கு போன கோபமெல்லாம் ஒன்றுக்குப் பத்தாகத் திரும்பி வந்த மாதிரி.
அவன் எச்சிற் கையை வெறும் வட்டிலிற் தட்டிவிட்டு எழும்பி வந்தான்.
கும்மின் கேள்வியைக் கவனியாமலே பெடியனுக்குச் சொன்னான். அது இந்த ஆளுடைய பிழை வாங்கினபோதே பார்த்து வாங்கியிருக்க வேணும்.
இந்த பாஸ் பயல் நல்லாய்க் குடித்துவிட்டுச் சாப்பிட வந்திருக்க வேண்டும் என்று குமாரசாமிக்குப் பட்டது.
'நீ உன்னுடைய வேலையைப் பார். உனக்கும் இதுக்கும் ஒரு சம்பந்தமுமில்லை.
என்ன ஒய் சொல்லுறீர்? யாழ்ப்பாணத்திலிருந்து வந்து, இங்க சண்டித்தனமா விடுகிறீங்கள்?
கும்மின் இடது கன்னத்தில், அவனது எச்சிற்கை அடையாளம் பதித்தது.
காலையில் வந்தவுடன் இந்தக் கதையைக் கேள்விப்பட்டதும் ரமணன் திடுக்கிட்டான். இது நேற்று நடந்திருக்கிறது. நேற்று அவன் லிவு.
இவ்வளவு மட்டுந்தானா நடந்தது?
இன்னும் என்ன நடக்க வேணும்?
இவ்வளவு மட்டுந்தானெண்டா, அவனுக்கேன் அவ்வளவு கோபம்?
182

சாந்தனின் எழுத்துலகம்
கொஞ்ச நாளைக்கு முந்தி அவன் பத்துரூபா கடன் கேட்க இவர் இல்லையெண்டு சொல்லி இருக்கிறார்.
இதைப்பற்றி ஒருத்தருக்கும் றிப்போட் பண்ணேல்லையா?
'ம்ஹும்.
ரமணனுக்கு ஆத்திரமாக வந்தது.
நேரே குமாரசாமியிடம் போனான்.
'ஏன் அண்ணை, ஏன் றிப்போர்ட் பண்ணாமல் விட்டீங்கள்? குமாரசாமி ஒரு நிமிஷம் பேசாமலிருந்தது விட்டுப் பிறகு அவனையே திருப்பிக் கேட்டார் :
அது வீண் பிரச்சினையளைக் கொண்டு வராதா?
என்ன பிரச்சினையள்?
'றிப்போர்ட் பண்ணுறதாலை இந்த விஷயம் ஒரு இனவாத விவாகரமாகத் திரும்பிக் கொண்டால் என்ன செய்யிறது. ஆனபடியாலை இவ்வளவோட விடுகிறது புத்திசாலித்தனம் எண்டு சொல்லுறாங்கள்.
e
ஆர்?
எங்கட ஸெக்ஷன் ஆக்கள்தான்.
மறைமுகமான மிரட்டல்' கூடவே வந்து நின்ற சந்திரன் கசந்து சிரித்தான்.
'. இதிலை இனித் திரும்பிறதுக்கு என்ன இருக்கு?
ரமணன் ஒரு பெருமூச்சுக்குப் பிறகு சொன்னான். 'ஏன் எல்லாத்தையும் இந்த இனக் கண்ணோட்டத்திலைதான் பார்க்கிறார்கள்? எங்கட ஸெக்ஷனைச் சேர்ந்த ஒருத்தனுக்கு - எங்கட தொழிலைச் செய்யிற ஒருத்தனுக்கு - ஒரு பிறத்தியான் அநியாயமாகக் கை நீட்டி விட்டானே எண்டு ஏன் பார்க்க முடியுதில்லை? அண்ணை இது எப்படித் திருப்பினாலும் திரும்பட்டும். அதுக்குப் பயந்து இதெல்லாத்தையும் பொறுத்துக் கொண்டிருக்க வேணுமா?
அதுதானே? என்றான், சந்திரனும்,
183

Page 94
சாந்தனின் எழுத்துலகம்
| பென்சிலை உருட்டியபடியே பேசாமலிருந்தார், குமாரசாமி, | யோசிக்கிறார் போலும்,
ரமணன் தனது இடத்திற்குத் திரும்பிய கொஞ்ச நேரத்தில் அவர் அவனிடம் வந்தார்.
'நீ சொன்னது சரிதான், தம்பி. ஒரு பெருமூச்சுக்குப் பிறகு ஆறுதலாகச் சொன்னார்:
- ஆனா, எனக்கும் இப்ப காலம் சரியில்லை. இந்தக் கிரக மாற்றம் என்ற சாதகபலனின் படிக்கு தேவையில்லாத கோளாறுகளைத் தரக்கூடிய காலமெண்டு சொல்லியிருக்கிறான்கள் - வீண் சண்டை, வம்பு, வழக்கு, கோடு, கச்சேரி எண்டு அலைய இடமிருக்காம் - ஏன் வீண் தொல்லைகளை?
எழுந்து தானும் ஒரு அடி போடலாமா என்றிருந்தது ரமணனுக்கு.
1979
184
 

26
ஏன்?
Lஸ் வருகிற வரத்தில், நிறுத்தத்தின் எந்த இடத்தில் அது நிற்கும் என்பதை ஊகிப்பதில்தான் வெற்றி தங்கியுள்ளது. இதை அநுமானித்து ஏறுதழுவுதல் போல் - லாவகமாகத் தொற்றிக் கொள்வதுதான் கெட்டித்தனம் - எந்த நெரிசலுக்கும் முன்னால் ஏறிவிடலாம். அன்றும், அந்த மத்தியான நேரத்து எதிர்பாராக்கும்பலில் பாமன்கடைச் சந்தியில் இப்படித்தான் முதல் ஆளாக நான் ஏறினேன்.
முழு பஸ்ஸிலும் ஒரேயொரு இடந்தானிருந்தது காலியாக - கடைசிக்கு முதல் வரிசையில், வாசலுக்கு நேரெதிர் இருக்கையில், அதில் உட்கார்ந்து ஐம்பது சதத்திற்கு ஒரு ரிக்கற்றை வாங்கிய பின்தான் - இத்தனை நாட்களுக்குப் பிறகு - நான் திடீரென்று சிவதாசனைக் காண நேர்ந்தது, கொண்டக்டர்தான் சிவதாசன்.
“எப்பிடி?..” என்று நானும், “ஹலோ” என்று அவனும் வியப்பும் மகிழ்ச்சியுமாய்ப் பரஸ்பரம் விசாரித்துக் கொண்டதுடன் நிறுத்திக் கொண்டோம். எனக்குப்பின்னால் இடித்துத் தள்ளிக்கொண்டு ஏறிய கூட்டம் இந்தளவுக்குத்தான் எங்களை அநுமதித்தது. எல்லோருக்கும் குடுத்து முடிச்சிட்டு வரட்டும்' என்று பார்த்துக் கொண்டிருந்தேன்.
சிவா, பிசிறில்லாத உச்சரிப்புடன், அநாயாசமாகச் சிங்களம் பேசினான் - ஆட்களை அதட்டி முன்னே துரத்தினான்; கேட்கப்பட்ட கேள்விகளுக்குத் தானும் பதில் சொன்னான். அதே வேகத்தில் அதே
185

Page 95
சாந்தனின் எழுத்துலகம்
அநாயாசத்துடன் - எனக்கு முன் ஸிற்றில் சாய்ந்து, வாசலைப் பார்த்து நின்றபடி - அவன் இயங்கிக் கொண்டிருந்தான். இந்த நெருக்கல்களின் இடையிடை என்னைப் பார்த்து பழைய நட்புரிமை கலந்த முறுவல்கள். பொறு, முடித்துவிட்டுப் பேச வருகிறேன்' என்கிற கண்கள்.
ஆள், கொஞ்சம் மாறிப் போயிருந்தான். முன் வழுக்கை, இந்த இளம் வயதிலேயே விழுந்திருந்தது. அடர்த்தியாகத் தாடியும் மீசையும் வளர்த்திருந்த முகத்திற்கு, இந்த வழுக்கை கவர்ச்சி கூட்டியது. முன்னையிலும் உயரமாயும் மெலிவாயும் தெரிந்தான். சாதாரண ஷேட்டும் லோங்ஸ்சும், இடுப்பில் அகன்ற பட்டியலில் தொங்கிய சில்லறைப் பைகளில், ஒய்வின்றிச் சுழல்கின்ற மெஷின், அதட்டல் - வெருட்டல்களிலும் பார்க்க அன்பும் பகடியுமே அவன் பேச்சில் அதிகந் தொனிக்க, சிவா, சுமுகமான கொண்டக்டர்கள் என்கிற
சிறுபான்மையைச் சேர்ந்தவனாகத் தன்னை இனங்காட்டினான்.
கண்டு எப்படியும் ஐந்து வருஷமாவது இருக்கும். கடைசியாக - அவன் வேலையாகி வந்த புதிதில் இங்குதான் எங்கோ சந்தித்திருந்தேன். ஊரவன், பாலியகால நண்பன், இருந்தும் அதன்பிறகு இன்றுதான் காண நேர்ந்திருக்கிறது. இப்படித்தான் வயிற்றுப்பாட்டிற்கான ஒட்டங்கள், ஊரையும் உறவுகளையும் எட்டிப்போக வைத்து விடுகின்றன.
பாமன்கடையில் ஏறியவர்களுக்கு ரிக்கற் கொடுத்து முடிப்பதற் கிடையில் நெசவாலை நிறுத்தம் வந்துவிட்டது. இதிலும் நியாயமான சனம் கனத்த பிளாஸ்டிக் கூடையொன்றைத் தூக்கமாட்டாமல் தூக்கிக்கொண்டு
கடைசியாக ஏறிய ஒரு பெடியனைப் பார்த்து,
“மெள்ள ஏறடா, கவனம்.” - என்று கத்தியபடி அவன் பின்னால் தானும் ஒரு கைக்குழந்தையுடன் தடுமாறி வந்த பெண்ணுக்கு என் இடத்தைக் கொடுக்க நேர்ந்தது. எழுந்து நின்றேன். அவர்கள் ஏறி முடியும்வரை நிதானமாகப் பார்த்துத்தான் மணியடித்தான், சிவா. நான் விட்ட ஸிற்றில் உட்கார்ந்தாள். குழந்தையை மடியிலிருத்தி, கூடையினை வாங்கிக் காலடியில் வைத்து பையனை இழுத்துத் தனக்கும் மற்ற ஆளுக்கும் நடுவில் நிற்க வைத்து. இப்படி அந்தப் பெண் நிலை கொண்டதும் அவள் பக்கம் குனிந்து 'கொஹேத?’ என்றான், சிவா.
அவளை இன்னொரு தடவை பார்த்தேன். பெடியனுக்குக்கூட
186

சாந்தனின் எழுத்துலகம்
நெற்றியில் திருநீறு தெரிந்தது.
"அஸ்வாட்டுவட்ட கீயத?”
“பணஹய்.”
ஒன்றரை ரிக்கட் வாங்கிக் கொண்டாள்.
எல்லாவற்றையும் விட இப்போது இதைத்தான் - இதற்கான காரணத்தைத்தான் - முதலில் கேட்கவேண்டும் போலிருந்தது. இதை உணர்ந்தவன்போல, இன்னும் கொஞ்சம் பொறு' என்கிற கண்களால் என்னைப் பார்த்துவிட்டு முன்னே போனான் சிவா.
எட, பிறகு அப்படித்தான் - நெசவாலை நிறுத்தத்தில் ஏறியவர்களைக் கவனித்து முடிப்பதற்கிடையில், திம்பிரிகஸ்யாய, நெருக்கியடித்துக் கொண்டு எங்கள் எதிர்பார்ப்பைத் தகர்க்கிற மாதிரி ஆட்கள் ஏறினார்கள்.
கசக்கிப் பிழிந்து விட்டார்கள், அவனை. பஸ், ஜாவத்தை றோட்டில் திரும்பியபோது அருகில் போய் நின்றாவது பேசுவோமா என் எண்ணம் வந்தது. கூடவே, வேலையைக் குழப்புவது சரியில்ல்ை என்றுமிருந்தது. மற்ற புதினங்களைப் பேசாமல் விட்டாலும் இதைக் கேட்டுவிட வேண்டும். ஆனால், கேட்பது முக்கியம் என்றும் தோன்றவில்லை.
கெப்பிட்டிப்பொல சந்தி தாண்டியபோது, அவன் திம்பிரிகஸ்யாய ஆட்களிற் பாதிப்பேருக்குத் தான் ரிக்கற் கொடுத்து முடித்திருந்தான். போதாக்குறைக்கு, இப்போது பஸ்ஸின் நடுவில் போய் நின்று கொண்டிருந்தான்.
இனி - எப்போதோ? - காண்கிறபோது கேட்போம் என்று நெரிசலைப் பிளக்க ஆரம்பித்தேன் - ரொறிங்ரனில் இறங்கியாக வேண்டும். அதற்கிடையில் சைகையாலாவது சொல்லிக்கொள்ளவும் வேண்டும்.
சிவாவுக்கு, சின்ன வயதில் காது குத்திய ஒட்டை இருந்ததா என்கிற யோசனை - வெக்கையும் வியர்வைப் பிசுக்குமாய்த் திணறிக் கொண்டிருக்கிற இந்த வேளையின் ஒரு கணத்தில் - எனக்கு வந்தது. ஆனால், சரியாக ஞாபகமில்லை.
1979
187

Page 96
27 தொடர்ச்சி
60Lப்பைத் திறந்ததும் புஸ்ஸென்று காற்றுத்தான் வந்தது. நித்திரைப்பாயில் எழுப்பி, கெளரி சொன்னது சரி. தண்ணியில்லை. விடியற்காலையிலேயே தண்ணியில்லை. எதிர்பாராத பிரச்சினை. சிவத்திற்கு ஆத்திரம் ஆத்திரமாய் வந்தது. பயமாயும் இருந்தது.
தகரத் தொட்டிக்குள் பார்த்தான். கிட்டத்தட்டக் கால்வாசிக்குங் கீழே. யாருக்குத் தெரியும்? தெரிந்திருந்தால் ராத்திரியே முழுக்க நிரப்பி வைத்திருக்கலாம். ரேடியோவில் தண்ணிர்வெட்டுப் பற்றி ஏதாவது சொன்னார்களோ தெரியவில்லை. எங்காவது எதிர்பாராமல் குழாய்கள் வெடித்துமிருக்கலாம்.
இன்னும் பல்லுத் தீட்டவில்லை; முகங் கழுவவில்லை; இரண்டு பேருங் குளிக்க வேண்டும். இவ்வளவு தண்ணிருடன் என்ன செய்வது? - குளிக்கிறதைத்தான் பிறகு பார்த்துக் கொள்ளலா மென்றாலும் - கக்கூஸ்?
பக்கத்து வீட்டில் வெறும்வாளிச் சத்தங்கள் கேட்டன. என்ன செய்யப் போகிறார்கள்? குழந்தைகள் இருக்கிற வீடு- யமகண்டமாய்த் தானிருக்கும். கிராமங்களைப் போலில்லை; பட்டினங்களைப் போலில்லை; இது நகரம், மாநகரம், ஒண்டுக் கிருக்கக்கூடத் தண்ணீர் வேண்டியிருக்கிறது. இனி எப்போது வருமோ? இன்றைக்கு முழுவதும் என்ன செய்வது? இதைவிட வேறெங்கு கிடைக்கும் தண்ணிர்?
பைப்பைத் திறந்தபடியே விட்டான். வந்தவுடனேயே நிரம்பத்
188

சாந்தனின் எழுத்துலகம்
தொடங்கட்டும். பல்லைத் தீட்டத் தொடங்கினான்.
திடீரெனப்பட்டது.
சத்திவேலுடைய வழி சிலவேளை உதவக்கூடும். திருகோணமலை வீட்டில் எப்போதுஞ் சரி வந்திருக்கிறது. இது கொழும்பு. இந்த ஊரில், இந்த இடத்தில் வருமோ தெரியாது. என்றாலும் தெண்டித்துப் பார்க்கலாம்.
வெளியே வந்து கெளரியைக் கூப்பிட்டான். “சத்திவேலின்ர வேலையைச் செய்து பார்ப்பம்.”
அவன் திரும்பிப்போய், ஒரு சிறிய சிவப்பு பிளாஸ்ரிக் குழாயுடன் வந்தாள். நாலடி நீளம், பைப்பின் வாய்க்குள் சரியாகப் பொருந்தக் கூடியது. “நல்ல காலமிருந்தா இது சரி வரும்.” கெளரி அதைப் பைப்பில் சொருகினாள்.
வாயிலிருந்த பிரஷை எடுத்துவிட்டு, நுரையைத் துப்பினான். "வடிவாப் பிடிச்சுக் கொள்ளும்.” குளிக்கிற பேணியால் தண்ணீரை மெல்ல அள்ளி, குழாயின் மற்ற முனைக்குள் பத்திரமாக ஊற்றினான்.
ஒரு பேணி, தண்ணீர் ஊற்றியதும் குழாய் நிரம்பியது. பிறகு மெள்ள மெள்ள மட்டம் உள்ளே இறங்கியது.
“ஒழுக விடாதேயும்.” என்றான். மீண்டும் கொஞ்சங் கிள்ளி நிரப்பும்வரை ஊற்றினான். இப்போது, மட்டம் குறையாமல் நின்றது. ஒரு அரை நிமிஷம் பார்த்துக் கொண்டு நின்றார்கள்.
இருந்தாற்போல அவன் “சரி” என்றான். கெளரி டக்கென்று குழாயைப் பிடுங்கினாள். பைப்பிலிருந்து'டுர்ர்றென்று தண்ணீர் ஒழுகியது. கொஞ்சமாக ஆனால், ஒழுங்காக மெல்லியதாரை.
“சரியா?.” அவள் மகிழ்ச்சியுடன் கேட்கும் போதே அது நின்றுவிட்டது.
"ம்ஹாம்.” என்றான்.
"இன்னொருக்காப்பாப்பம்"
"நீங்களே பிடியுங்கோ.” என்றாள் கெளரி.
189

Page 97
சாந்தனின் எழுத்துலகம்
ஐந்தாவது தடவைக்குப் பிறகு அவன் சொன்னான் : “இது இங்க சரிவராது போலயிருக்கு.” "ம்ம். நானும் போக வேணும். அங்கை அடுப்பு மூட்டினபடி’
“உள்ளத்தோட சமாளிக்க வேண்டியதுதான்.” சிவம், மீண்டும் பிரஷை எடுத்து வாயில் வைத்தான்.
சக்திவேல், இரண்டு வருஷம் கூட நின்றவன். இந்தியாவுக்குப் போனால் வாத்தியாரைப் பார்க்கலாமென்று சொன்னவன் பிறகு ஊருக்குப் போய் ஒன்றரை வருஷமாகிறது. இந்தியாவுக்குப் போனது போகாததுந் தெரியாது. தோட்டத்து விலாசத்துக்குப் போட்ட தபால்களுக்கு மறுமொழி இல்லாததால், அந்தக் குடும்பமே இந்தியாவின் ஒரு மூலையில் ஏதோ ஒரு ஊருக்குப் போய்ச் சேர்ந்திருக்கும் என்றுதான் படுகிறது. இனிமேல் அவனைக் காணக்கூட முடியாது என்று எண்ணுவதாலேயே கூடுகிற அந்தரங்கம்.
சின்னதுரை அண்ணை அவனை மஸ்கேலியாவிலிருந்து கூட்டிக்கொண்டு வந்தபோது, பன்னிரண்டு வயது என்று சொன்னார். ஆளைப்பார்த்தால் ஒன்பதுக்கு மிஞ்சி மதிக்க முடியாது போலிருந்தது. ஒரு காக்கிச்சட்டைக் களுசானும் சிவப்புச்சேட்டும் போட்டு ஒற்றைக் கையைக் களுசான் பொக்கற்றுக்குள் விட்டுக்கொண்டு, மற்றக் கையில் ஒரு சின்ன தகர சூட்கேஸைப் பிடித்தபடி, பிரயாணக் களைப்பே தெரியாதவன் போல நின்றான் சத்திவேலு.
தன்னைப் பார்க்க வந்துநின்ற வீட்டு ஆட்களையெல்லாம், புருவங்களை வளைத்து உதட்டைப் பிதுக்கி ஒருபெரிய ஆள்போல, சிரியாமல் பார்த்தான். தன் வீட்டு ஞாபகமாக மூளையை விட்டு நிற்கிறானா என்று பட்டதும் பாவமாக இருந்தது.
G, 99 -
என்ன பேர் மேனை, உனக்கு? - அம்மா கேட்டாள்.
சின்னத்துரை அண்ணையை முந்திக்கொண்டு மறுமொழி சொன்னான்
190

சாந்தனின் எழுத்துலகம்
"அவங்களிரண்டு பேரையும்போல, இவனும் அழுதுகிழுது குழப்படி பண்ணுவானோ?”
அவங்களென்று ஐயா சொன்னது, ரங்கனையும் செல்லத்துரை யையும். சின்னத்துரை அண்ணைதான் வீட்டில் கை உதவிக்கு ஒரு பெடிபெட்டை தேவை என்று கூட்டிக்கொண்டு வந்தார்.
“முட்டுப்பட்ட குடும்பம். இரண்டு பேரையுங் கூட்டிக்கொண்டு போகச் சொல்லி அவங்கள் கரைச்சல் படுத்தினாங்கள். ஆளுக்காள் உதவியாயுமிருக்கும். ஒருத்தன் வீட்டு வேலைக்கும் மற்றவன் தோட்டடி வேலைக்கும் நிக்கட்டும்.”
ஒருத்தனுக்கு மற்றவன் சித்தப்பன். கிட்டத்தட்ட ஒரே வயது இவனிலும் பெரிய பெடியன்களாக இருந்தார்கள்.
ஆனால் சின்னத்துரை அண்ணை அந்தப்பக்கம் போனதுதான் தாமதம், இரண்டு பேரும் வாசற்படியிலேயே குந்திக்கொண்டு அழத் தொடங்கினார்கள்.
"நாங்க வீட்டுக்குப் போகப்போறோம் அய்யா.” ஒருநாள் முழுக்க அவன்களைப் பிராக் காட்டிய வேலை.
அடுத்த நாள் கார்த்திகை விளக்கீடு, மத்தியானத்துக்குப் பிறகு விளக்கீட்டு அமளிகளில் அவர்கள் அழுகையைக் கொஞ்சம் மறந்தார்கள் என்று பட்டது. பொழுது பட்டதும் வீடு வாசலெல்லாம் வரிசையாக ஏற்றி வைத்த சுட்டி விளக்குள் சந்தோஷத்தைக் கொடுத்திருக்க வேண்டும். கிணற்றடிக்கு ஒன்று, மாட்டடிக்கு ஒன்று - என்று சுருட்டி வைத்திருந்த பந்தங்களை எடுத்துக்கொண்டு புறப்பட்டபோது, தாங்களுங் கொழுத்துவதாக இரண்டுபேரும் வந்தார்கள். ஆட்களை உசார்படுத்துவதற்காக ஒரு பந்தத்தைக் கொடுக்கலாமென்று சிவம் நினைத்தான்.
பிறந்ததுக்கு கிணற்றையே கண்டிராமல் வளர்ந்தவன்களை, இருட்டினாற்பிறகு யாழ்ப்பாணத்தின் பாதாளக் கிணற்றடிக்கு அனுப்புவது முட்டாள்தனம். பனம் பத்தியடிக்கு அனுப்புவதிலும் பிரச்சினை இருந்தது.
“தெரியாத்தனமா உழக்கிப் போடுவான்கள்.”
191

Page 98
சாந்தனின் எழுத்துலகம்
படலையடிப் பந்தத்தைக் கொடுத்து, அதை எப்படிக் கொழுத்திக் குத்துவது என்றுஞ் சொல்லிக் காட்டி அனுப்பினான்.
கொஞ்ச நேரத்தில் திரும்பிவந்து, சந்தோஷமாக, “கொளுத்தி யாச்சுங்க.” என்றார்கள்.
கால் மணித்தியாலங் கூடி ஆகியிராது. முன் விட்டிலிருந்து பொன்னரம்மான் ஓடிவந்தார்.
“எடேய் தம்பி. இதென்ன வேலை? ஆரடா, மடலையடியிலை பந்தங்கொளுத்தினது?"
"ஏன் அம்மான் என்ன சங்கதி?” ஓடிப்போய்ப் பார்த்தபோது, படலை வேலி பற்றி எரிந்து கொண்டிருந்தது.
காவோலை, ஆனால் நல்ல காலம் - மழைக் காலமாயிருந்தது, ஒலைகளுங் கொஞ்சம் ஈரமாயிருந்ததால் - நெருப்பு அவ்வளவு பரவவில்லை. ஒரு ஐந்தடி பத்தடி பரவுவதற்குள் எல்லோருமாகத் தண்ணி அள்ளி ஊற்றி, நூர்க்க முடிந்தது.
ரங்கனையும் செல்லத்துரையும், ஒருவரும் ஒன்றும் சொல்லா விட்டாலுங்கூட, இந்தச் சம்பவம் அவன்களைப் பாதித்திருக்க வேண்டும் அதற்கு உற்சாகம் போக, அழுகை மீண்டது. அடுத்தநாள் பின்னேரம், பயணஞ் சொல்லிக்கொண்டு பெடியனையும் பாத்திட்டுப் போக வந்த சின்னத்துரை அண்ணை, அவன்களையும் கூட்டிக்கொண்டே போனார்.
"இவன் அவன்களைப்போல இல்லை. குஞ்சிப்பு. படிச்சவன், நல்ல உசாரான பெடியன்.” என்றார் சின்னத்துரை அண்ணை.
சக்திவேலு, உசாராத்தானிருந்தான். வலு சுறுசுறுப்பு. வேலை சுத்தம்.
அவனைக் கடைக்கு அனுப்புவது மட்டும் ஆபத்தான வேலை யாயிருந்தது. தெருவிலிருந்த பயலுகளுடன் ஒரு நாளும் ஒத்து வரவில்லை.
கிழமைக்கு ஒரு தரம், கே.கே. செல்லமுத்து, இராசாத்தோட்டம், மஸ்கேலியா என்று புளியங்கொட்டை எழுத்தில் விலாசமெழுதி வீட்டுக்குத்
192

சாந்தனின் எழுத்துலகம்
தபால் போடுவான். கே.கே. செல்லமுத்துக்கு முன்னால் திரு போடு என்று சிவம் சொல்லிக் கொடுத்தான். வருகிற பதில் கடிதங்களுடன் உடுப்புகள், சீப்புக்கண்ணாடி, பழைய சவரபிளேட்டுகள், போளைகள், வெட்டியெடுத்த
வாத்தியார்படங்கள் அவனுடைய தகரப்பெட்டிக்குள் இருந்தன.
வீட்டுக்கோடியில் ஒரு தோட்டஞ் செய்தான். ஒரு கொடித்தோடை நெட்டு, இரண்டு மூன்று சோயா அவரைக் கொடிகள், கொஞ்சம் செவ்வந்தி என்று ஒரு பாத்திக்குள். அடுப்படித் தண்ணிர் ஒடுகிற வாய்க்கால் கரையில் முளைத்திருந்த எலுமிச்சங்கன்று ஒன்று இவற்றுடன் பிறகு சேர்ந்து கொண்டது. கடைக்குப் போய் வருகிறபோது வழியில் பச்சையாகச் சந்திக்கிற தடிதண்டெல்லாம் இந்தப் பாத்தியில் இடம்பெறும் முக்கால்வாசி முளைக்காது.
தெருவிலிருந்து சண்டைகள் செடிகள் இவற்றைவிட இன்னொன்றையும் அவன் கொண்டு வந்தான். ஒரு நாய்க்குட்டி. பந்து போலிருந்தது. கறுப்பும் வெள்ளையுமாய்ச் சடை நீலக்கண்கள். குருடாயிருக்குமோ என்று பட்டது. ஆனால் அப்படியில்லை. பேக்கரிக்கு முன்னால் கத்திக்கொண்டு
கிடந்ததாகச் சொன்னான்.
இதன்பிறகு தோட்ட வேலையின் பாதிநேரத்தை நாய்க்குட்டி எடுத்துக்கொண்டது. இரண்டு மொழிந்தால், வாசலடியில் போய்க் குந்தியிருந்து, அன்றன்றையப் பேப்பர்களை எடுத்து வைத்து சினிமா விளம்பரப் பக்கத்தைப் பாதிநேரம், தெருவைப் பாதிநேரம் பார்த்துக் கொண்டிருக்கிற வேலை.
“எடேய், நீ. படிச்ச நீ பேப்பரை வாசிச்சுப் பாரன்? உதேன், உப்பிடிப் படத்தைமாத்திரம் வைச்சுப் பார்த்துக் கொண்டிருக்கிறாய்?’ என்கிற மாதிரி யாராவது ஏதுஞ் சொல்லுமட்டும்.
தோட்டத்துப் பள்ளியில் ஐந்தாவது வகுப்புப் படித்துப் பாஸ் பண்ணியிருந்தாலும், தமிழ் மட்டும் தான் ஓரளவு எழுதப் படிக்க வந்திருந்தது கணக்கில் மூன்றாம் வகுப்பு மட்டம்கூட இல்லை. இங்கிலிஷ் ஏபிஸிடி, கற்றற் மற்ற இங்கிலீஷ் சொல்லிக் கொடுக்க வேண்டுமென்று தீர்மானித்து அதன்பிறகு அதைச் சொல்லிக் கொடுக்கிற நேரம், கணக்குச் சொல்லிக்
193

Page 99
சாந்தனின் எழுத்துலகம்
கொடுத்தாலும் அவனுக்குப் பிரயோசனமாயிருக்கும் என்று முடிவெடுக்கப் பட்டது. நாலாம் வகுப்புக் கணக்குப் புத்தகம்ொன்றும் சிலேற் பென்சிலும் வாங்கிக் கொடுத்து,
“ஒவ்வொரு கணக்காகச் செய்து பார். விளங்காததைக் கேள்” என்று சிவம் சொன்னான்.
இதன் பிறகு இரவில் விளக்குப் போட்டதும் வாசலடியில் போய்க் குந்தும் போது புத்தகம் சிலேற்றையும் எடுத்துக் கொள்வான். ஒன்றிரண்டு கணக்குக் கேட்ட ஞாபகம்.
உஸ்ஸென்று பைப் சீறியது. தண்ணிவரப் போகுதோ? இன்னும் கொஞ்ச சீறலின் பிறகு தண்ணி வந்தது. தண்ணிதான்!
சிவம் பரபரத்து எழுந்து, பேணியில் அதை ஏந்தினான். - கறளும் வரலாம்.
ஆனால் வரவில்லை. சுத்தமான தண்ணி, வழமை போல் வந்தது. பிரச்சனை தீர்ந்த ஆறுதல், எவ்வளவு சந்தோஷம். பைப்பை முழுக்கத் திறந்து விட்டான் நின்றாலும்
நேரம் போனாலும், குளிக்கத்தான் வேணும் என்றிருந்தது.
O
சக்திவேல், நெடுகக் கணக்குப்புத்தகத்தை விரித்து வைத்துக்
கொண்டு அதற்குள்ளே பார்த்தபடியே இருக்கிறான் என்று ஒருநாள் சிவம்
மெள்ளப் பின்பக்கமாகப் போய் எட்டிப்பார்த்தான்.
இடுப்பில் கையை வைத்தபடி, தலையைச் சாய்த்துக் கொண்டு, விரித்த
புத்தகத்துக்கிடையில் வாத்தியார் நின்றார்.
வாத்தியாரைப் பார்ப்பதும், சைக்கிள் ஒடப் பழகுவதும் அவனுடைய
இலட்சியங்கள்.
யாழ்ப்பாணத்திலிருந்து திருகோணமலைக்குப் போனபிறகு, ஒரு நாள்
செல்லமுத்துவிடமிருந்து தபால் வந்தது.
நாங்களெல்லோரும் இந்தியாவுக்குப் போக ஏற்பாடு செய்கிறோம். அது
194

சாந்தனின் எழுத்துலகம்
காரியமாக எல்லாரும் ஒரு தரம் கண்டிக்குப் போய் வர வேண்டியிருந்தது. சக்திவேலுவும் வரவேணும். அனுப்பினால், அந்த வேலையுடன் பொங்கலையும் முடித்துக் கொண்டு, இரண்டு கிழமைக்குள் திரும்பக் கொண்டு வந்து விடலாம்.
செல்ல முத்துவுக்குப் பைத்தியம்' என்று ஏச முடிந்தது என்ன முட்டாள்தனம்? கிடைத்த இலங்கைப் பிரஜா உரிமையை உதறிவிட்டு முன்பின் காணாத ஊருக்குப் போய்விட எவனாவது யோசிப்பானா? - அதுவும் அதற்காக இத்தனை ஆயிரம் பேர் தவங்கிடக்கும் போது?
இப்போது - இந்த இனக் கலவரம் முடிந்து - யோசிக்கையில், செல்லமுத்து செய்ததென்னவோ புத்திசாலித்தனமான காரியமாகத் தெரிகிறது.
மகனைத் திரும்பக் கூட்டிக்கொண்டு வந்த ஆளிடங் கேட்டபோது -
“நமக்குப் பிரஜா உரிமை கிடைச்சு என்னாங்க பிரயோஜனம்? இங்க சொத்து சுகம் ஒண்ணுமில்லிங்களே. தோட்டத்திலேயும் இப்ப ஒழுங்கா வேலை கிடைக்குதில்லை.”
“உங்களுக்கு இருக்க இடமில்லையெண்டா, யாழ்ப்பாணத்துக்கு வாங்கோ - குடியிருக்கிறதுக்கு இரண்டு பரப்புக்காணி தரலாம். அங்கை வடிவா வேலை செய்து பிழைச்சுங் கொள்ளலாம்.”
செல்லமுத்து ஒரு கணம் நிதானித்தார்.
"அது சரிதாங்க. ஆனா, ஊரிலை நமக்கு உறவுக்காரங்க இருக்காங்க. அங்க போய்ட்டா.”
“ஊரா? இந்தியாவிலையா?.”
"ஆமாங்க."- ஏதோ ஒரு ஜில்லா பேரையுங் ஊரையும் சொன்னார்.
“எப்பவாவது இந்தியாவுக்குப் போயிருக்கறிங்களா?.”
"இல்லீங்க. நா ஒரு நாளும் இது வரையிலை போனதில்லிங்க.”
"அப்ப.?
“நம்ம தாத்தா ஊருங்க அது. தாத்தா அங்கேயிருந்துதான் கண்டிக்கு
195

Page 100
சாந்தனின் எழுத்துலகம்
வந்தாரு, அப்புறம் நம்ம தகப்பன் இரண்டு தரம் போய்ப் பாத்துட்டு வந்திருக்காரு.”
“உங்கட தகப்பன் உயிரோட இருக்கிறாரா?” "இல்லீங்க. அவரு செத்து நாலஞ்சு வருஷமாயிட்டுது.”
'எதுக்கும் நல்லா யோசிச்சு முடிவெடுங்கோ. நீங்க எப்ப வாறதெண்டாலும் இடந்தரலாம்.”
இந்தக் கதையின் பிறகு, சக்திவேல் அடிக்கடி, இந்தியா, இந்தியா என்று பேசத் தொடங்கியிருந்தான்.
"இந்தியாவுக்குப் போனால் வாத்தியாரைப் பார்க்கலாம்” என்று அவன்
சொன்னதாக சின்னத் தங்கச்சி சொன்னார்.
சக்திவேலு ஊருக்குப் போய்விட்டு வந்தபோது, ஒரு கட்டு பூஞ்சிடி கொண்டு வந்திருந்தான். டெய்லியாஸ், காணேஷன், பச்சை றோஸ் - என்று இன்னும் என்னென்னவோ, திருகோணமலையின் வெக்கையில் அந்த மலைநாட்டுத்தாவரங்கள் மூச்சைப் பிடித்துக் கொண்டு நின்றன. தாங்க முடியாத கோடைகளில் அந்த ஊர்த் தண்ணிர்க் குழாய்களும் அடிக்கடி வறண்டு போய்விடும்.
இப்படியான ஒரு நாளில், தண்ணிர் ஒரு பிரச்சினையாகித் தத்தளித்த வேளையில் சக்திவேலு ஓடி வந்தான்.
"அண்ணே, அண்ணே. இங்கே வந்து பாருங்களே?.”
சிவம் போய்ப் பார்த்தபோது, இந்த மாதிரி - பைப்பில் சொருகிய பிளாஸ்ரிக் தண்ணிர் வந்து கொண்டிருந்தது.
தண்ணிர் இல்லாத வேளைகளில் குழாயைச் செருகி, வாயால் அதை உறிஞ்சியதற்காக இரண்டு மூன்று தரம் ஏச்சு வாங்கியிருக்கிறான்.
இது எப்படி சாத்தியமாகும்? தெரு மெயின் லைனின் அடியில் நீர் மீந்து தேங்கியிருக்கலாமென்றும், இங்கு ஊற்றுகிற நீர் அதனுடன் போய்ச் சேர்கிற நேரத்தில் தொடர்பு அறாமல் இழுவையை உண்டாக்குவதால் அது உறிஞ்சப் படலாமென்றும் சிவத்துக்குப் பட்டது.
196

சாந்தனின் எழுத்துலகம்
“சக்திவேலு, தண்ணிச் சத்தங்கேட்காம வாளியைத் தள்ளி வை. அக்கம் பக்கத்து வீடுகளிலை கேட்டா யோசிப்பினம்.” என்று பெரிய
தங்கச்சி சொன்னா.
D
எல்லாம் முடித்துக்கொண்டு சிவம் குளிக்கிற அறைக்கதவைத் திறந்து வெளியே வந்தபோது, "நேரம் - ஏழு மணி ஐந்து நிமிடம்” என்று ரேடியோ
சொன்னது.
"கிட்டத்தட்ட முக்கால் மணித்தியாலத்துக்கு மேலை, இதுக்குள்ளை போயிருக்கு என்று உணர்ந்தான். இன்றைக்கும் ஏழரை மணி பஸ்ஸைப்
பிடிக்க முடியாது போலிருந்தது.
1979
197

Page 101
28
இடையில் ஒரு இருபது வருஷம்
அந்த அணில் செத்துப் போய்த் தூக்கில் தொங்கிக் கொண்டிருந்தது. வெள்ளையும் வயலற்றுமாகப் பூச்சுமந்து வளர்ந்து சரிந்து வகுப்புத் தாழ்வாரத்திற்கே வந்திருந்த சீர்மைக் கிழுவங் கொப்புகளில் ஒன்றில் இந்தத் தற்கொலை நிகழ்ந்திருந்தது.
வகுப்பைச் சுற்றி அரைச்சுவர் - நெஞ்சளவு உயரம். மேலே திறந்தபடி, உள்ளே நுழைந்ததும் கண்ணில் படுகிற மாதிரி - வகுப்பில் எங்கிருந்து பார்த்தாலும் தெரியக்கூடிய மாதிரி - அந்த அணில் தொங்கிக் கொண்டு காற்றில் இலேசாக அசைந்தது.
பெரிய அணில், வெண்மையான வயிற்றுப் பாகம் வகுப்பைப் பார்த்துத் திரும்பியிருக்க, குறண்டின பின்னங்கால்களிரண்டிலும் அது ஆண் என்பதற்குப் பெருத்த சாட்சியம் தெரிந்தது. புசுபுசுவென்று சணைத்துத் தொங்கிய வாலில் கட்டியிருந்த கடுதாசித் துண்டில் பெரிதாக மையினாவில் எழுதியிருந்தது. ‘காதலிலே தோல்வியுற்றான் காளையொருவன்’ என்று.
வழக்கம்போல அன்றைக்கும் பெட்டைகள்தான் லாப்பிலிருந்து முதலில் திரும்பி வகுப்புக்கு வந்தார்கள். பிறகு பொடியன்கள்.
எல்லோருக்கும் பின்னால் - கடைசியில் - நல்ல பிள்ளைகளாக வந்து கொண்ருந்த எனக்கும் ஐயருக்கும் வகுப்பில் வெடித்த அமளிகள் வடிவாகக் (335 L60T.
ஆனால், கெட்டகாலம், அடுத்த வகுப்பறையில் பிரின்சிபாலுடைய
198

சாந்தனின் எழுத்துலகம்
பாடவேளையாய் அது இருந்தது.
D.
விசாரணை தொடங்கியபோது, வழமைபோல நியாயமாகவே சந்தேகம் எங்கள் பக்கம் திரும்பியது. நான் முதல் எதிரியாகவும், ஐயர் இரண்டாவது எதிரியாகவும் ஆனோம். பாட்னி சுப்பரின் சாட்சியம் எங்களுக்கு மிகப் பாதகமாய் அமைய நேர்ந்தது. ஆய்வுக்கூட வேலைக்காக, பாட நடுவில், ஸிஸல் ஃபினியா - மயிற்கொன்றைப்பூ தேட எங்களை அனுப்பியதை அவர் சொன்னார்.
அணில் கொன்றையடியில்தான் செத்துக் கிடந்தது.
D -
.6iਪੰ.. சாதாரண வகுப்பிலும்கூட, எங்களுக்கு ஒழுங்கான ஆய்வுக்கூடப் பயிற்சி இருந்தது. பிரின்சிபாலின் மகன் எங்கள் வகுப்பி லிருந்தான் என்பதை இதற்குக் காரணமாக அப்போது சொன்னார்கள். எப்படியோ விஞ்ஞானப் பாடங்கள் நான்கிலும், ஒவ்வொன்றுக்கும்
கிழமையில் ஒருதரம், டபிள் பீரியட் வேளைகளில், ஆய்வுக்கூட வேலை இருக்கவே இருந்தது.
சுந்தரராமன் பிராணியியல் எடுத்தார். ஷேவ் எடுத்த தாடைகள் பச்சையாய்த் தெரியும், நல்ல சிவலை. என்றைக்கும் எங்களால் மறைக்கப்பட முடியாத வலு. அருமையான மனுசன். இந்தியாவில் சொந்த ஊர். படிக்க வந்தவருக்கு யாழ்ப்பாணத்தில் ஏதோ பிடிப்பு ஏற்பட்டு, இங்கேயே தங்கிவிட்டார். அவரும் ஐயர்தான் என்று சொன்னார்கள். இதனால், எனது கூட்டாளி ஐயரை, மற்றெந்த மாஸ்டராலும் முடியாத விதமாக -
‘ஏண்டா, ஷர்மா. என்று கூப்பிட இவரால் முடிந்தது. எங்களைப் பொறுத்தவரையில், சுந்தரராமன் ஒரு விதிவிலக்கு. தவளை, எலி, சுறா, நாக்கிளி, கரப்பொத்தான் எல்லாவற்றையும் அளைந்து டிஸெக்ட் செய்கிற பிராமணர். இந்தச் சங்கடம் எங்கள் ஐயருக்கு அப்போது நேரவில்லை. ஸ்பெசிமன்களைப் பார்த்துக் கீறுகிற வேலை மட்டும்தான் அப்போதைய எங்கள் மட்டத்திற்கு இருந்தது.
D
199

Page 102
சாந்தனின் எழுத்துலகம்
அன்று -அந்த அணில் தொங்கிய அன்று, விசாரணை முடிவில், இரண்டாம் எதிரி விடுதலையானார். 'செத்த அணிலை ஐயர்பொடியன் தொட்டிருக்க மாட்டான்' என்ற முடிவுக்கு பிரின்சிபால் வந்திருந்தார். அது சரி, அணிலின் தலையில் நான் சுருக்குப் போட்டுக் கொடுக்க கயிற்றின் மற்ற நுனியைத்தான் ஐயர் கிழுவங் கொப்பில் கட்டினார்.
ஐந்தாறு வருடங்கள் என் வகுப்பு சகாவாக இருந்து, பிறகு என் நல்ல நண்பனாகவும் இருக்கிற இந்த ஜே.கே. சர்மா என்கிற ஐயர் சம்பந்தமாக என்றைக்கும் எனக்கு முதலில் நினைவுக்கு வருவது, இந்த அணில் விவகாரம்தான். பிறகு, சுந்தரராமன்.
நாக்கிளிப் புழுவுக்கு உடலெங்கும் 'ஸிற்றா இருக்கிறது. ஸிற்றா - பற்ற உதவும் சின்னமுள்ளு நீளமாக இழுபட்ட 'எஸ்' வடிவம். ஸிற்றாவைக் கரும்பலகையில் கீறிக் காட்டி, அதன் செயற்பாட்டையும் சுந்தரராமன் விளக்கிக் கொண்டிருந்தார்.
இட் ஈஸ் எல்லோயிஷ் இன் கலர்.
க்ளுக்' என்று சிரித்தார் ஐயர். அமைதியாக இருந்த வகுப்பில் இது பெரிதாக ஒலித்தது.
சுந்தரராமன் கையிலிருந்த சோக்கட்டியை மேசையில் விசிறிவிட்டுத் திரும்பியபோது, ஐயர் சொண்டைக் கடித்துக் கொண்டு கரும்பலகையிலிருந்த ஸிற்றாவைப் பார்த்து, தனது கொப்பில் வலு ஸிரியஸாகக் கீறிக் கொண்டிருந்தார்.
“ஏண்டா ஷர்மா..?’ சுந்தரராமன் கிட்ட வந்து, ஐயருக்கு முன்னால் நின்று கேட்டார்.
'. ஏன் சிரிச்சே, நீ?”
“ஒன்றுமில்லை சார்.” எழும்பி நின்று, இணக்கமான புன்சிரிப்புடன் சொன்னார், ஐயர். காது நுனிகள் செம்பருத்திப் பூவாய்ச் சிவந்திருந்தன.
"சொல்லு. ஒய் டிட் யூ லாஃப்?”
ஐயரால் இப்போதும் தாங்க முடியவில்லை. அடுத்தாட்டம் கிளுக்கிட்டார்.
200

சாந்தனின் எழுத்துலகம்
சுந்தரராமனுக்கு எப்படி இருக்கும்?
சளாரென்று சன்னத்தில் ஒரு அடியும், பாடம் முடியும் மட்டும் ஐயர் - ஒரு ஜி.ஸி.ஈ. வகுப்பு மாணவன் - முழங்காலில் நின்றதுமாய் இந்தச் சம்பவம் முடிவடைந்தது.
தன்னை மீறி வந்த சிரிப்புகளுக்காக, ஐயர் கனகாலம் கழிவிரக்கப்பட்டுக் கொண்டிருந்ததை நானறிவேன். ஆனாலும் இரண்டு விஷயங்களை நினைத்து, அதனூடே அவர் ஆறுதலும் கொண்டார். ஒன்று, சிரித்த காரணம் சுந்தரராமன் மாஸ்டருக்கு தெரியாமல் போனது; மற்றது தான் வாங்கிய அடி
D
ஐயரை நான் முதலில் சந்தித்தது, ஐம்பதெட்டாம் ஆண்டில், அது வடிவாக நினைவிருக்கும். அப்போது நாங்கள் ஏழாம் வகுப்பு. கப்பலேறிய தமிழர்கள் என்று எங்களால் பிறகு அழைக்கப்படத் தொடங்கிய எட்டுப் பேரில் ஒருவராக இவரும் வந்தார்.
அந்த ஆண்டு கலவரத்தால் கொழும்புப் பள்ளிகளுக்கு முழுக்குப் போட்டுவிட்டு ஊரோடு வந்த இந்த எண்மருக்கும் எங்களுக்கு முக்கியமாக மூன்று வித்தியாசங்களிருந்தன. தமிழில் இங்கிலீஷில், காலில்,
எட்டாம் வகுப்புக்கு வருவதற்குள்ளாகவே ஐயர் என் நெருங்கிய கூட்டாளியாகிப் போனார். எங்களுக்குள் முதலில் ஒத்துப்போனது சாப்பாடு.
தினசரி மத்தியான நேரத்தில் சரைகளையும் சாப்பாட்டுப் பெட்டிகளையும் வாங்குகளில் திறந்து வைத்துக் கொண்டு, பொடியன்கள், வெட்டத் தொடங்குகிற வேளைகளில் எனக்குப் பக்கத்தில்தான் அவரால் பயமில்லாமல் உட்கார்ந்து சாப்பிட முடிந்தது. நான் பிறவி சைவம்.
முந்திப் படித்த பள்ளி பழைய சிநேகிதர்கள், தெஹிவளையில் குடியிருந்த வீடு, தகப்பனின் உத்தியோகம், தங்கள் குடும்பம், கலவர காலத்தில் தங்கள் பட்ட அந்தரம், ரேயல் கல்லூரி அகதி முகாம், கப்பல் பயணத்தில் காய்ச்சலும் சக்தியும் வந்தது, காங்கேசன் துறையில் இறங்கியது என்று எல்லாவற்றையும் அவர் எனக்குப் பரிச்சயமாக்கி விட்டிருந்தார்.
201

Page 103
சாந்தனின் எழுத்துலகம்
குழப்படிகளிலும் சாப்பாட்டிலும் மாத்திரம்தான் என்றில்லை. அந்தச் செத்த அணிலை நாங்கள் அவ்வளவு அலங்கோலம் பண்ணி அவமதித்திருக்கக் கூடாது என்று, அதன் தற்கொலைக்கு அடுத்த நாளில் அதன்பால் இரக்கம் கொண்டதிலும்கூட, நாங்கள் ஒத்தே போனோம். ஜி.ஸி.ஈ.யைத் தாண்டிய பிறகு, எங்கள் வழிகள் பிரிந்தன.
D
இடையில் கொஞ்ச காலம், ஆளை ஆள் சந்திக்கக் கூடவில்லை. பிறகு, ஏழெட்டு வருஷங்களுக்கு முன்பு, ஐயரை மீண்டும் கண்டேன். வேலை மாறிக் கொழும்பிற்கு வந்துவிட்டதாயும், வெள்ளவத்தையில் இருப்பதாயும் சொன்னார். நான் மருதானையில் இருந்தேன்.
நகர வாழ்வின் அவதியில், கதைக்கக்கூட முடியாத அவசரங்களில் ஆளை ஆள் சந்திப்போம். எப்போதாவது, எங்கேயாவது. பஸ்ஸில், ரயிலில்.
இப்போது கீட்டடியில் ஒரு தரம் ரயிலில்தான் சந்தித்தேன். எழுபத்தேழு ஆகஸ்டில் கடைசிப் பகுதி. ஒரு வியாழக்கிழமை,
அந்த நாட்களில் வீசிக்கொண்டிருந்த பெரும் புயலில் - அது தந்த கலக்கத்தில் - எந்த நிமிடம் என்ன ஆகுமோ என்ற அந்தரம் தாங்க முடியாமல், வருவது வரட்டும் என்ற முடிவுடன் நான் கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் புறப்பட்டிருந்தேன்.
கோட்டை ஸ்டேஷனில் ரயிலைப் பார்த்துக் காத்திருந்த கும்பலில் ஜே.கே. சர்மாவும் இருந்தார்.
இம்முறை, அகதி முகாமுக்குப் போகாமலே வந்து விட்டதாகச் சொன்னார்.
1979
2O2

29 பூகோளம்
LTட்டு வெயில் நெருப்பாய் இருந்தது, வலதுபுறத்து முகம் முழுதும் எரிகிற மாதிரி. இரண்டு பேரும் பேசிக்கொண்டே விரைந்து நடந்தார்கள். வழமையான பஸ் இன்று காலை வாரிவிட, பம்பலப்பிட்டி சந்தியில் வந்திறங்கி வேறு பஸ் எடுக்க நேர்ந்திருக்கிறது.
கொழும்பு நடைபாதையில் நடப்பது, இப்போதெல்லாம் பெரிய
தொல்லையான வேலை, ஒருபுறம் கடல், மறுபுறம் தமிழன் என்று துட்டகைமுனு சொன்னதுபோல, இங்கே ஒருபுறம் வேலி, மறுபுறம் வியாபாரிகள். நடக்கிறது எப்படி? - இந்த மாதிரி கிரி ஏதோ சொல்லிக்கொண்டு வந்தான். இவன், கிரிக்குத் தலையாட்டியே, வழி நீளம் விரித்திருந்த கடைகளில் கண்களை மேயவிட்டபடி நடந்தான். இங்கே இருக்கிறதா பார்க்க வேண்டும் - அந்த பூகோளம்.
ஒரு பூகோள உருண்டை வாங்கி, சுதாவுக்குக் கொடுக்க வேண்டும் என்று கனநாளாக நினைவு. நேற்று கேட்டைப் பக்கம் ஒரு அலுவலாகப் போன பொழுது, பூந்தோட்ட வீதி நெடுக அது இருந்தது. சின்னன் - ஒன்றரை இஞ்சிதான் விட்டமிருக்கும். ஆனால் ரொம்ப தெளிவாக, அந்த அளவே ஒரு அழகாக, கோளத்துக்கேற்ற ஸ்டான்ட் வேறு விலையைக் கேட்ட போது எங்கும் எட்டு ரூபா சொல்லி, ஏழரைக்குத் தரலாம் என்றார்கள். வாங்க மனம் வரவில்லை. விட்டுவிட்டு வந்தான். ஏழரை கொஞ்சம் கூடத்தான்.
2O3

Page 104
சாந்தனின் எழுத்துலகம்
“மூன்றரைக்கு வேலைமுடியுது. எல்லா விதத்திலும் நல்லது மச்சான் - இந்த வெயில் ஒன்றைவிட.” என்றான் கிரி.
“அதோ! அதுதான்.” அடுத்தடுத்திருந்த இரண்டு சாப்பாட்டுக் கடைகளுக்கு நடுவில் - இரண்டின் வாசல்களையும் மறைக்காமல் நடுவில் - பரப்பப்பட்டிருந்த அங்காடி நடுவில், இந்தக் கோளங்களிலும் ஐந்தாறு.
“ஒரு நிமிஷம், கிரி.” என்று சொல்லி, அதில் நின்றான்.
“யாரது இங்கே?”
சாப்பாட்டுக் கடைச் சுவரிலிருந்து இறக்கப்பட்டிருந்த சின்னப் பொலித்தீன் பத்திக்குள்ளிருந்து ஒரு சிறுமி எட்டிப் பார்த்தாள்.
“என்ன வேணும் மாத்தயா?”
“இது எவ்வளவு?”
‘ஏழு ஐம்பது.”
"ஏழு ஐம்பதா?” - அவள் அவன் நடக்கத் திரும்பியபோது,
"சரி, ஆறரை தாங்க” என்றாள் அவள் வெளியே வந்து.
"பரவாயில்லை, வேண்டாம்.”
“ஆறு ரூபா தந்திட்டு எடுங்க” - ஒரடி எடுத்து வைத்தவனைப் பின்னால் கூப்பிட்டாள். திரும்பி வந்தான்.
ஒன்பது பத்து வயதிருக்கும் அந்தப் பிள்ளைக்கு, கறுப்பு இரட்டைப் பின்னல். இந்த வெக்கையில் கருகி களைத்திருந்தாள். கொஞ்சம் நீர்க்காவியும், கொஞ்சம் உளத்தையுமாய் வெள்ளை யூனிஃபாம். பள்ளிக்கூடத்திலிருந்து நேரே வியாபாரத்தைக் கவனிக்க வந்திருக்க வேண்டும் என்று பட்டது.
“இந்த விலையை யாராவது பெரிய ஆள் சொல்லியிருந்தால் நல்லாயிருக்குமே” என்ற நினைவுடன்,
"உன் அப்பாவைக் கூப்பிடு.” என்றான்.
"அவர் இங்க இல்லை.”
204

சாந்தனின் எழுத்துலகம்
அரை நிமிடம் நின்றுவிட்டு, அவள் கிட்டப் போய்ச் சொன்னான் :
"தங்கச்சி, எனக்கிப்ப இது வேண்டாம். ஆனா கோட்டைப் பக்கமெல்லாம் இதுக்கு விலை ஏழரை ரூபா சொல்றாங்க. நீ ஆறு ரூபாய்க்குத் தரலாமென்கிறியே. ஏழரைக்குக் குறைய ஒருத்தருக்கும் கொடாதே.”
- இதைச் சொல்லிவிட்டு, “சரி வா’ என்று கிரியின் பக்கம் திரும்பியபோது, அவள் பின்னால் நின்று கீச்சிட்டாள்.
"ஆறு ரூபாவுக்கென்றாலும் இதை வாங்க மனமில்லாம. புத்தி சொல்லிவிட்டுப் பேர்றீங்களே. இன்றைக்கு ஒரு வியாபாரமுமில்லை, மாத்தயா.”
நின்று திரும்பிப் பார்க்க, "ஆறு ரூபா தந்திட்டு எடுத்திட்டுப்போங்க." என்றாள் மீண்டும்.
பொக்கற்றுகளுக்குள் எல்லாமாக, ஏழு முப்பத்தைந்து இருந்தது. இனி, பஸ்சுக்கு முப்பது சதம் போதும், ஏழு ரூபாயை எடுத்து நீட்டி, “சரி, தா.” என்றபோது, அவள் ஒரு கணம் தயங்கினான்.
"அங்கே எல்லாம் ஏழரை ரூபாய்க்கு விக்கிறான்கள் பிடி' என்றான்.
கோழி முட்டையிலும் கொஞ்சம் பெரிசான இந்தப் பூகோள உருண்டையை உருட்டிப் பார்த்துக்கொண்டு நடந்தபோது, சிரி சிரியென்று சிரித்துக்கொண்டு கிரிகூட வந்தான்.
1980
205

Page 105
30 ஒரு பிடி மண்
GG 99 -
போவமா.” காலணிகளை மாட்டிக்கொண்டே ராஜா கேட்டான்.
99 - "ஒ" என்றாள் கல்யாணி.
99
"பை?.
ஒரு முறுவலுடன், தன் கையிலிருந்த நைலான் கூடையைத் திறந்து அதனுள் ஒழுங்காக மடித்து வைக்கப்பட்டிருந்த இரண்டு பெரிய பாலித்தீன் பைகளை எடுத்து விரித்துக் காட்டினாள்.
அவள் வெளியே வந்ததும் கதவைப் பூட்டிக் கொண்டு ராஜா பின்னால் வந்தான்.
அவர்களுடைய அனெக்சுக்கும் வீட்டுச் சொந்தக்காரருக்கும் பொதுவான, ஒடுங்கிய பாதையில் நடந்து தெருவில் இறங்கினார்கள்.
மாலை நேரத்து நெரிசலில் தெருவில் நடப்பதே சிரமமாயிருந்தது. ராஜா முன்னாடியும் கல்யாணி பின்புறமுமாய் காலிவீதியை நோக்கி நடந்தார்கள்.
“போதுமான நேரமிருக்கும்.”அவன் திரும்பி மெல்லச் சொன்னான். "இருட்டவே இன்னும் ஒரு மணி நேரமாகும். அதுக்கு முன்ன அங்க போயி என்ன செய்யிறது?’
"அப்படியே, மோகன் வீட்டுக்குப் போய்விட்டுப் போகச்
2O6

சாந்தனின் எழுத்துலகம்
சரியாயிருக்கும்.” என்ற கல்யாணி,
ማ 9 “. கண்டு எப்ப கிடைக்கும்?' என்று கேட்டாள்.
é - ஒரு "சாடி ஆயத்தமெண்டா, நாளைக்குக்கூட எடுக்கலாம்.
வழமையாக இந்த நேரத்தில் கொழும்பிலிருந்து இரத்மலானைக்கு பஸ்ஸில் போவதை நினைத்துப் பார்க்க முடியாது. ஆனால் இன்றைக்கு ஏதோ அதிசயம் போல, அவர்களுக்கு இருக்கையில் இரண்டு இடம் கிடைத்தது. நெரிபடாமல் போய்விடலாம்.
O
அவர்கள் இப்போதைய அனெக்சுக்கு குடி வந்து மூன்று மாதமாகிறது. புதுக் குடித்தனத்திற்கேற்றதாய், அமைதியாய், தொல்லைகளிலில்லாத இடமாயிருந்தது அது. வாடகைகூட அதிகமென்று சொல்ல முடியாது.
புது இடத்துக்கு வந்ததும், எல்லாவற்றையும் ஒழுங்காக அடுக்கி அழகுபடுத்தினாள் கல்யாணி. ஆனால், யாழ்ப்பாணத்தின் ஒரு கிராமத்தின் விட்டாத் தியான வாழ்விலிருந்து இந்த அனெக்ஸ் சீவியத்திற்குள் புகுந்திருந்தவளுக்கு, வீட்டில் எங்காவது ஒரு பசுமையைக் காண முடிந்தால் நன்றாகயிருக்கும் என்று பட்டது. ஒரேயொரு பூச்சாடியாவது வைக்க முடிந்தால் அந்த இடம் முழுவதுமே தனிக் களை பெற்றுவிடும். வரவேற்பறை யன்னலருகில் காலை வேளைகளில் நல்ல வெயில் பிடிக்கிறது. யன்னல்கூட,
ஒரு சிறிய பூச்சாடி வைக்கக்கூடிய அகலம்.
ராஜா ஒரு செடியைப் பற்றி சொன்னான். பூக்கிறதில்லை. அலங்காரச் செடிதான். நல்ல வடிவு. அவன் அலுவலகத்திற்கருகில் ஒரு பூஞ்செடி விற்பனை நிலையத்தில் கண்டிருக்கிறான். இலைகள் கரும் பச்சையில் வெல்வெட் மாதிரி. இடைக்கிடை வெள்ளைப் பொட்டுக்கள். அவன் அதை விவரித்த விதத்தில் கல்யாணியின் ஆவல் பன்மடங்காகிற்று.
ஒரு நல்ல பூச்சாடி வாங்கிவிட முடியும். ஆனால் அதனோடு மண்ணும் வாங்க முடியுமா என்பது ராஜாவுக்குத் தெரியவில்லை. இவர்களின்
அனெக்ஸ் இருக்கிற காணி முழுவதுமே நிலந்தெரியாமல் சீமேந்து பூசி
வைத்திருக்கிறார்கள் வீட்டுக்காரர்கள்.
2O7

Page 106
சாந்தனின் எழுத்துலகம்
“மோகன் வீட்டிலை கேட்டுப்பாத்தா என்ன?”
“எப்பிடிக் கேட்கிறது?. மோகனும் பிறகு தன்ராஜ் வீட்டுச் சொந்தக்காரரைத்தானே கேட்க வேணும்?”
மண்தான் பிரச்சினையாயிருந்தது. அது மட்டும் கிடைத்திருக்கு மென்றால், இரண்டு கிழமைக்கு முந்தியே செடி வீட்டுக்கு வந்திருக்கும்.
இன்றைய ராஜா அலுவலகத்திருந்து வந்தபோதே ஒரு திட்டத்துடன்தான் வந்திருந்தான்.
D
மோகனுக்கும் அவன் மனைவி பிள்ளைகளுக்கும் இவர்களைக் கண்டது சந்தோஷமாயிருந்தது. இரவு சாப்பிட்டுவிட்டுப் போகலாமென்று வற்புறுத்தினார்கள்.
"இன்னொரு நாள் வாறம். கடைகள் பூட்டுவதற்கு முன் கொஞ்சம் ஷாப்பிங் செய்ய வேண்டியுமிருக்கு.”
சொல்லிக் கொண்டு புறப்பட்டபோது இருட்டத் தொடங்கியிருந்தது. அமைதியாய்க் கிடந்தது.
"அந்தத் தூணடியிலைதான்.”ராஜா காட்டினான் :
"நல்ல மண். விளக்குந் தள்ளியிருக்கு” - நெருங்கினார்கள்.
"பின்னுக்கு ஆரும் வருகினமா பாரும். முன்னாலை ஒருத்தருமில்லை.”
"பின்னாலுமில்லை.”பார்த்துவீட்டு, கூடைக்குள்ளிருந்த பாலித்தீன் பைகளையும் ஒரு பழைய பேணியையும் எடுத்தாள் கல்யாணி,
பேணியைக் கணவனிடம் கொடுத்தாள்.
“ஷ்ஷ். ஒரு சைக்கிள்.”
விளக்கில்லாத ஒரு சைக்கிள் அவர்களை நெருங்கி வந்தது. ராஜா குனிந்து, காலணிகளைச் சரிப்படுத்துகிற பாவனை காட்டினான். சைக்கிள் தாண்டியது.
208

சாந்தனின் எழுத்துலகம்
“சரி. அவன் சொன்னபோது, கல்யாணிக்கு இதயம் படபடத்தது.
ராஜா, குனிந்த குனியிலேயே மண்ணை விறுவிறென்று வறுகத் தொடங்கினான். கல்யாணி பை ஒன்றை விரித்துத் தயாராய் அருகில்
பிடித்துக் கொண்டாள்.
ஒன்று. இரண்டு. மூன்று. நாலு.
எச்சரித்தாள்.
ராஜா சட்டென்று எழும்பித் திரும்பிப் பார்த்தான்.
“இன்னொரு சைக்கிள் பின்னாலை,” பரபரத்துக் கல்யாணி
G. %
அது தூர வருகுது மீண்டும் குனிந்து, குவிந்திருந்தததை அள்ளிப் பையில் போட்டான்.
“போதும், வாங்கோ. கல்யாணி அந்தரப்பட்டாள்.
ராஜா நிமிர்ந்து காலால் நிலத்தை மட்டம் பண்ணினான். "போவம்.” என்றான்.
". அவசரப்படாம ஆறுதலா நடவும்.”
பின்னால் வந்த சைக்கிள் அவர்களை நெருங்கித் தாண்டிப் போனது.
கல்யாணி பெருமூச்சு விட்டாள்.
ராஜா, அவளிடம் இருந்த பைகளை வாங்கி ஒழுங்காக மடித்துத் துடைத்து கூடைக்குள் வைத்தான்.
“வைச்சிரும்.” கூடையைக் கொடுத்துவிட்டுக் கைகளைத் துடைத்தான்.
“பூச்சாடிக் கடை பூட்ட முதல் போய்ச்சேர வேணும்."
"ஒமோம்.” என்றாள் கல்யாணி,
1980
209

Page 107
31
மீறல்
சிடலை மாதிரி, பஸ் ஸ்ராண்டும் ஒரு நல்ல இடம், ஞானம் பிறப்பதற்கு என்று பட்டது. இந்த அவதி, இந்தப் போட்டி, இந்த இடிபாடு நெரிபாடு எல்லாம் எதற்கு? ஒவ்வொரு நாளும் இப்படி விழுந்தடித்துக் கண்டது என்ன? இந்த வேலை, இந்த வாழ்க்கை - எல்லாவற்றிலும் என்ன இருக்கிறது? கண்ட மிச்சம் என்ன?
இந்தக் காலைப்பொழுதுகள் எவ்வளவு அழகானவை. அதிலும் இந்தக் கோடைக்காலக் காலைப்பொழுதுகள். முக்கியமாக இந்த ஏழரை, எட்டரைக் கிடைப்பட்ட நேரம்? இதை எப்போது அநுபவிக்க முடிந்திருக்கிறது? ஒவ்வொரு நாளும் முதல் நாள் அலுப்பில் ஆறு மணிக்குத்தான் எழும்ப முடிகிறது. அதுகூடப் பெரிய பாடு. எழும்பி, ஏழே காலுக்குள் புறப்பட்டுவிட வேண்டும் என்று பறக்கிறது. என்றாலும், வெளிக்கிட எப்படியும் ஏழரையாகி விடும்.
எந்தப் பாடுபட்டு ஓடினாலும் அரைவாசி நாட்களில் ரெஜிஸ்ரர் மூடப்பட்டு விடுகிறது. எட்டரைக் கோடு விழுந்து விடுகிறது. தான் வெளிக்கிடுகிற நேரத்தை ஏழேகால் ஆக்கிப்பார்த்தான். ஏழாக்கினால் கூடப் பலனிராது போலிருந்தது. பஸ்நேரம் அப்படி. ஏழுக்குப் புறப்படுவதற்கும் அதற்கும் வித்தியாசமில்லை - அரை மணி நேரத்தை பஸ் ஸ்ரான்டில் வீணாக்குவதை விட
பழையபடி ஏழரைக்கே வெளிக்கிடத் தொடங்கினான்.
D
210

சாந்தனின் எழுத்துலகம்
ஒரு நாளைக்காவது குளித்த புத்துணர்ச்சி கெடாமல் மற்றவர்களின் வியர்வையையும் எண்ணையும் பூசிக் கொள்ளாமற் போக ஆசையாயிருந்தது.
இன்றைக்கும் ஏழே முக்கால் ஆகிக் கொண்டிருக்கிறது. ஏழு முப்பத்தைந்து பஸ்ஸை இன்னமும் காணவில்லை. கியூ இல்லாமல் கும்பல். கழுத்தை வளைத்து தெருத்தொங்கலைப் பார்த்தபடி நிற்கிற சனங்கள். காலை வெயிலுக்கு எதிராக குடைகள், புத்தகங்கள், கைப்பைகள், கைகள்.
எல்லா பஸ்களும் போய்க்கொண்டிருக்கின்றன. இந்த நம்பரைவிட
இன்றைக்கு எத்தனை மணியானாலும் ஆறுதலாகப் போவோம் என்று திடீரென்று எண்ணம் வந்தது. நெரியாமல், ஆறுதலாக ஒரு யன்னலடி ஸிற்றில் இருந்து எதிர்க்காற்று முகத்திலடிக்க சந்தோஷமாய்ப் போவோம்.
அந்த ஏழு முப்பத்தைந்து பஸ் - இவ்வளவு நேரமும் காத்து நின்றது - வந்தது; வழமைபோல நிரப்பி அடைத்துக்கொண்டு. ஏறாமல் நின்றான். நேரம் ஏழு ஐம்பது. ஆறுதலாகப் போகக்கூடிய பஸ் எத்தனை மணிக்கு வருமென்று தெரியாமலிருந்தது. எங்கிருந்தோ திடீரென்று கணேசன் ஒடி வந்தான். ஒடுகிற ஒட்டத்தில் “ஏன் போகேல்லையா?” என்றொரு கேள்வி. சொல்லுகிற மறுமொழி அவனுக்குத் தேவைப்படாது என்பதாலும், ஒரு புன்சிரிப்புடன் மட்டும் நிறுத்திக்கொண்டான். கணேசன் ஒற்றைக்காலில் தொற்றிக் கொள்ளவும், இவனில்லாமலே அந்த பஸ் புறப்பட்டுப் போனது.
கூட்டம் குறையும் வரை இதிலேயே தாங்கிக் கொண்டு நிற்காமல் ஒரு ரீ குடித்துவிட்டு வரலாம் என்று போனான். கடையிலிருந்தும் பஸ் தரிப்பிடம் தெரிந்தது. இந்தப் போக்கில் ஆறுதலான பஸ் இப்போதைக்கு வராது என்று உணர்ந்தான். தேநீர் ஒரு ரூபா. வெறும் கழனி,
புத்தகக் கடையுடன் கால் மணித்தியாலம் போக்கியபோது ஒரு யோசனை வந்தது. தெருவைக் கடந்து மற்றப் பக்கம் போனான். எதிர்த் திசையில் போகிற அவன் ரூட் பஸ் வந்து நின்றது. ரேமினஸ்ஸுக்கு ஒரு ரிக்கற் ஐம்பது சதம்.
அங்கு போய்ச் சேர்ந்தபோது எட்டேகால். “இது எத்தனை மணிக்குத் திரும்பி வெளிக்கிடும்?” “ஒன்பதுக்கு.” என்றான் கொண்டக்டர்.
211

Page 108
சாந்தனின் எழுத்துலகம்
மீண்டும் அநாவசியமாய் இன்னொரு தேத்தண்ணி, எட்டு ஐம்பத்தைந்துக்கு அதே பஸ்ஸில் ஏறியபோது, ஏற்கனவே இரண்டு பேர்தானிருந்தார்கள். வெய்யில் படாத பக்கமாகப் போய் உட்கார்ந்தான். ரிக்கற் எடுத்தபோது “எல்லாமாக மூன்று ரூபா வீண் என்று மனம் கணக்குப் போட்டது.
கந்தோருக்குப் போய்ச் சேர்ந்தபோது, ஒன்பதே முக்கால். றெஜிஸ்ரர் இன்று அதிசயமாக மூடப்படாமலிருந்தது; எட்டே கால், எட்டரைக் கோடுகளில்லை. அந்த வெங்காயம் லிவாயிருக்க வேணும்.
ஒன்பதே முக்கால் போட்டுக் கையெழுத்து வைத்தான். அரை நாள் லிவு
(GJITL LLIT 6õT.
1980
212

32 ஒரு விருந்தின் முடிவு
தில்லைநாதன் அரபுநாட்டுக்குப் போகிறான். வேலையை றிசைன் பண்ணியாயிற்று. பதினாலு வருஷ ஸேர்விஸ், உதறித் தள்ளிவிட்டுப் போகிறான். இங்கே வரும் முழுக்க மாரடித்தாலும் கிடைக்காத காசு அங்கே ஒரு மாதத்தில் கிடைக்குமாம்.
கந்தோரில் ஒரு நல்ல பிரியாவிடை ஒழுங்கு செய்தார்கள். தில்லை அதற்கு உரியவன்தான் எல்லோருடனும் நன்றாகப் புழங்கியிருந்தான். நல்ல கலகலப்பானவன். பகடிக்காரன். அவன் பிரிவதில் பலருக்கு வருத்தமிருந்தது. ஒருநாள் பின்னேரம் - கந்தோர் முடிந்ததும் - பார்ட்டி நடந்தது. அமைதியான பார்ட்டி. தில்லையைப் பாராட்டிப் பேசவும், அவனுக்கு வாழ்த்துகள் கூறவும் பலபேர் முன்வந்தார்கள். சந்திரசிறி, கந்தவனம், றொட்றிகோ - மூன்று பேருக்கும் பேசும்போதே கண்கலங்கிவிட்டது. குளிர்பானங்கள் மட்டுமே பாவிக்கப்பட்ட இந்தப் பார்ட்டியிலேயே அவர்கள் கண் கலங்கினார்கள்.
பிறகு, ஒரு பேச்சின் சாராம்சம் இப்படி இருக்க நேரிட்டது :
". கடந்த கலவரகாலத்திலே, இந்த ஊரிலேகூட எவ்வளவோ நடந்தும்
எங்கள் கந்தோரிலேயிருந்த வடபகுதி சகோதரர்களுக்கு ஒன்றும் நடவாமல்
விட்டது தில்லைநாதன் போன்ற நண்பர்கள் இங்கிருந்ததை நினைத்துத்தான். அப்படிப்பட்டவர் தில்லை.”
213

Page 109
சாந்தனின் எழுத்துலகம்
அடுத்த ஓரிரண்டு நிமிஷங்களுக்குள்ளேயே, இந்தப் பேச்சு வாபஸ் பெறப்பட்ட வேண்டுமென்ற குரல் எழுந்தது. "கலவரம் என்று வந்தால், அடிக்கிறவர்கள், அடிபட வேண்டியவர்களை - அவர்கள் எங்கிருந்தாலும் என்ன செய்தாலும் - நியாயம் தேவை இருக்கிறதோ இல்லையோ அடிக்க வேண்டியது ஒரு கடமையா, என்ன?. இந்தப் பேச்சு வாபஸ் பெறப்பட வேண்டும்’
இதை ஒட்டியும் வெட்டியும் கருத்துக்கள், ஒரே கசமுசா, பார்ட்டி குழம்பிவிட்டது.
1980
214

33 புதிய தரிசனங்கள்
பிறைசூடி மாஸ்டரை முதலில் அவன் கவனிக்கவில்லை. மாலை வெயிலுக்கு முதுகைக் காட்டி, நிழல்கள் நீண்டு முன்னே படர்ந்து வர, முகங்கள் தெளிவில்லாமல் பேசிக்கொண்டு கோவிலிலிருந்து வந்த அந்த மூன்று பேரில் சூடியர் நடுவில் வந்தார்.
“எடே. தனபாலே, எப்ப வந்த நீ.? கடவுள்தான் இப்ப உன்னைக் கொண்டுவந்து இதிலே நிக்க விட்டிருக்கிறார்.”
- வியப்பும் மகிழ்வும் அவர் குரலில், வாழ்க்கையில் ஒரு இலட்சியத்தை - சிந்திப்பதோ சிந்தியாமலோ - சரியோ, பிழையோ - பற்றிக்கொண்டு அவர்கள் அளவில் ஒரு அர்த்தத்தைக் கண்டு கொண்டு இந்த மூன்று மனிதர்களும். என்று பொதுவாகவே கண்ணோட்டி யோசித்துக் கொண்டிருந்தவன், நிமிர்ந்தான், ஸேர். ரிஃப்ளெக்ஸ் ஆக்ஷன் போல குந்தியிருந்த கல்லிலிருந்து எழும்பினான்.
பிறைசூடி அவரது பட்டமா பெயரா என்று முன்பு படிக்கிற காலத்தில் - அவனைக் குழம்பச் செய்த அதே உத்தூளனமான நீற்றுப் பூச்சு. சந்தன வட்டத்தில் அடங்கிய குங்குமம், காது மடலிலிருந்த வில்வம் எட்டிப் பார்த்தது.
"ஆமாம், ஸேர்' என்றான் மீண்டும்.
அவர் தலைமுழுவதும் நரைத்தாயிற்று. முன்னிலும் உயரமாய் மெலிதாய்த் தெரிந்தார். முகத்தில் புதிதாய்ச் சுருக்கங்கள். வருஷத்தில்
215

Page 110
சாந்தனின் எழுத்துலகம்
இரண்டு மூன்று தடவை பயணத்தில் வருகிறபோது வழி தெருவில்
காண்பதுதான் என்றாலும், இவ்வளவு அருகாக்ப் பார்த்துப் பத்து வருஷங்கள்
இருக்குமா?
'நீங்கள் முன்னால் போங்கோ. நான் இவன் தம்பியோட பேசிக்
கொண்டு வர்றேன்.”
வயலும் வெளியுமாய்க் கோவிலைச் சூழ்ந்து படர்ந்திருந்த அந்த இடத்தில், மாலை மனோகரமாக இருந்தது. பூசை முடித்துக் கதவைச் சாத்துகிற ஐயர் அந்தப் பிரதேசத்தின் அமைதியைக் கிழிக்கிறார்.
"இதில் இருங்கோவன் ஸேர் விலகி, கல்லைக் காட்டி நின்றான். கோயில் முன் மதிலிலிருந்து உடைந்து விழுந்த பாறைக்கல், குருக்கத்தி முளைத்த இடுக்குகளுடன் கறுப்புக்கல், திண்ணை மாதிரி.
99 ܛ 6 வேண்டாம், வா. மெல்ல நடப்பம்.
இந்துக் கல்லூரியில் ஜி.ஸி.ஈ. படித்த அந்த மூன்று வருஷமும் கணிதமும் தமிழும் படிப்பித்தவர். எங்கோ மலைநாட்டுப் பள்ளியிலிருந்து மாற்றலாகி வந்த புதிதில், அவர்களுக்குச் சிரிப்பு மூட்டியவர். வந்த பின்தான் தங்கள் ஊர் ஆள், தூரத்து உறவு என்று தெரிய வந்தது. ஒரு தவணை முடிய முந்தியே சிரிப்பு எல்லாவற்றையும் வியப்பும் மதிப்புமாய் மாற்றினார். கணிதத்தில் மன்னன். சிவப்பழம், அந்த வயதில் இவர்களுக்கு ஒரு நடமாடும்
என்ஸைக்ளோபீடியா.
சைக்கிளை உருட்டிக்கொண்டு சூடியரோடு நடந்தான். சந்தனமும் இன்னும் எதுவுமோ தன்னைச் சூழ்ந்து கமழ, அவர் பேசிக்கொண்டு வந்தார். 'எப்போ திரும்புகிறான். ஏன் அடிக்கடி ஊர்ப்பக்கம் வருவதில்லை. கொழும்பில் வாழ்க்கை நிலைமை, வேறெதும் படிக்கிறானா, இன்னமும் கதைப் புத்தகங்களுடன் மினைக் கெடுவதுண்டா - எல்லாம் கேட்டார். ஜனவரியில் தன் மகன் செளதிக்குப் போனது, தான் சுகமில்லாமல் ஆஸ்பத்திரியிலிருந்து கடைசி மகளுக்கு இப்போ கல்யாணம் பேசுவது
எல்லாம் சொன்னார்.
- ஒரு "அவன் எப்படி உன் கூட்டாளி இப்ப?
9 у ܐ %) LUTT 6m)TT?...
216

சாந்தனின் எழுத்துலகம்
“ஜெயநாதன்?.”
"கொழும்பிலைதான்.”
"அது தெரியும். இப்ப உன்னோட எப்படி? முந்தி இரண்டு பேரும் வலு நெருங்கின சினேகிதம் அல்லவா."
"அதே மாதிரிதான் ஸேர் இன்னும். மெல்லச் சிரித்தான்.
“சரி, நீ என் பிள்ளை மாதிரி. உன்னைத்தான் கேட்க வேண்டும். ஒரு சம்பந்த விஷயம்”- சீரியஸாகக் கேட்டார்.
“ஜெயநாதன் ஆள் எப்படி?”
"உங்களுக்குத் தெரியும்தானே ஸேர். முந்தியைப் போலதான் இப்பவும் - ஒரு கெட்ட பழக்கமும் இல்லாதவன்.
"உன் சிநேகிதன் என்பதுக்காகச் சொல்லாதே." அவர் சிரித்தார். ”. என் மகளுக்குத்தான் இந்தப் பேச்சுக்கால்.” "இல்லை ஸேர், அவனுக்கு ஒரு கெட்டப் பழக்கமும் இல்லை. ஆனா.” “சொல்லு.” “உங்கள் மகளுக்கு என்று சொல்லுறீங்கள், அதுதான்.”
"ஏன்? என்ன?”
“அவன் போக்குகள் உங்களுடைய குடும்பத்துக்கு ஒத்து வருமோ என்றுதான்.”
பிறகும் சிரித்தார்.
“அவன் ஒரு கம்யூனிஸ்ட், நாங்கள் கோயில், குளம் என்று திரிகிற ஆட்கள். அதையே சொல்லுகிறாய்?
தனபால் தலையாட்டினான்.
”. அதெல்லாம் முந்தியே எனக்கு நல்லாத் தெரியும். ஆனா, உன்னை நான் முக்கியமாகக் கேட்க நினைச்சது இதுதான்; அவன் மனப்போக்குகள் எப்படி? தனக்கு வாறவள் கடவுள் நம்பிக்கை உள்ளவளாயிருக்கிறதை ஒப்புக் கொள்வானா? அப்படி வந்தா, அவளின் நம்பிக்கையிலே குறுக்கிடாம
217

Page 111
சாந்தனின் எழுத்துலகம்
போகக்கூடிய ஆளா. இதோ பார், பிறகு பிரச்சினைகளைக் கொண்டு
வரும்.
"இல்லை ஸேர், எனக்குத் தெரிஞ்ச அளவில் அவன் அப்படியான ஆளில்லை - பெண் சாதியாயிருந்தாலும் அவளுடைய சுதந்திரத்தை மதிக்கக்கூடியவன். ஆனா, நான் நினைச்சது உங்களுக்கு ஏதாவது ஆட்சேபனை இருக்குமோ என்றுதான்.”
“எங்களைப் பொறுத்த அளவில் அவன் கம்யூனிஸ்ட் ஆக இருக்கிறதை பிழையாகவோ, பிரச்சினையாகவோ எடுக்கவில்லை. ஏன் என்றால், கடவுள் இல்லையென்று சொன்னாலும், கடவுளுக்கு மிக நெருக்கமானவன் ஒரு நல்ல கம்யூனிஸ்ட்தான்.”
தனபால் ஒருகணம் நின்று, அவரைத் திரும்பிப் பார்த்தான்.
1981
218

34
ᏧᎦᏂ ᎧᏂI ᎧᎧᏛᏱ ᎧᎸᎠ
10காதேவன் விஷயத்தைச் சொல்லியே நாலு நாளாகிவிட்டது. போன புதன்கிழமையிலிருந்து செல்லத்துரையர் ஆஸ்பத்திரியிலாம்!
புதனோடு புதன், இன்று எட்டு நாள் - இன்னும் போய்ப் பார்க்க முடியவில்லை! என்ன மாதிரி மனுசன், எத்தனை உதவிகள் செய்தவர்,
உடனேயே போய்ப் பார்த்திருக்க வேணும்.
கமலம் அவனிடம் காலையிலும் சொன்னாள் : “இண்டைக்காவது அவரை ஒருக்காப் போய்ப் பாத்திட்டு வாங்கோ. அவள் சொல்லாமலே கூட அவன் போகக் கூடியவன்தான்; போக வேண்டியவன்தான். பஸ் காலை வாரி விடாமலிருந்திருந்தால் முந்தநாளே கூட போய்ப் பார்த்திருக்கலாம். நேற்றெல்லாம் தலை தூக்க முடியாமல் வேலை. விஷயத்தைச் சொன்ன மகாதேவன் இரண்டுநாள் முந்திச் சொல்லியிருக்கக் கூடாதா என்றிருந்தது.
இன்றைக்கும் மினைக்கெட்டுவிட்டு வீணாகத் திரும்பத்தான் வேணுமோ என்று சிவநாதன் யோசிக்கிறபோதே, தூரத்தில் பஸ் உறுமிக் கேட்டது.
பஸ் ஸ்ராண்டில் இறங்கி, கால் கிலோ, முந்திரிகைப் பழமும் நல்லதாக ஒரு பிஸ்கோத்துப் பெட்டியும் வாங்கினான். அவர் கட்டாயம் ஏசுவார். "இதல்லாம் ஏன் வாங்கிக் கொண்டு வந்த நீ" என்று. இருந்தாலும் வெறுங்கையோடு வருத்தம் பார்க்கப் போகக் கூடாது - அதுவும் அவரை.
219

Page 112
சாந்தனின் எழுத்துலகம்
சொல்லி வைத்தாற்போல நேரம் சரியாக வந்திருக்கிறது. ஆஸ்பத்திரியடிக்கு வந்தபோது, திறந்த கேற்றின் வழியாக ஆட்கள் நெருக்கியடித்து நுழையத் தொடங்கியிருந்தார்கள். கொஞ்சம் ஒதுங்கிநின்று, நெரிசல் குறைய உள்ளே
போனான்.
விபரமெல்லாம் அன்றைக்கே மகாதேவனிடம் வடிவாகக் கேட்டு அறிந்து வைத்திருந்தான் பதினெட்டாம் வாட், பதினாலாம் கட்டில்,
தன்னைக் கண்டவுடன் செல்லத்துரையர் என்ன கேட்பார் என்று நினைத்துப் பார்த்தான். 'ஆர் சொன்னது உனக்கு?" அல்லது, 'ஏன் அவசரப்பட்டு ஓடி வந்த நீ" - எப்படியிருந்தாலும் தன் அன்பையும் நன்றியையும் இது காட்டும். படியேறி மேலே போனான்.
மூக்கைப் பொத்திக் கொண்டு அந்த நீண்டவழியைக் கடக்க நேர்ந்தது. அவரவர் அநுபவிக்கிற வியாதிக்காக மட்டுமல்லாமல் இந்த நாற்றத்தைச் சகித்துக் கொள்வதாகவும் சேர்த்து அந்த நோயாளிகளில் அநுதாபம் மிகுந்தது. பதினெட்டம் வாட்டில் நுழைந்தான். பதினாலாம் கட்டிலுக்கு நேரே போனான். ஆனால், அதிற் படுத்திருந்தவர் செல்லத்துரையரல்லர். மகாதேவன் நம்பரை மறந்துபோய் மாறிச் சொல்லியிருக்க வேண்டும். ஒவ்வொரு கட்டிலாகப் பார்த்துக் கொண்டே நீள நடந்து திரும்பினான்.
அவரைக் காணவில்லை.
"பதினெட்டாம் வாட்டில் ஏ.பி. எண்டு இரண்டிருக்கு. இது, பி. ஏ.யைப் போய்ப் பாருங்கோ" என்று யாரோ சொன்னார்கள். அதுதானே! - மகாதேவன் ஏ என்று சொல்ல மறந்து விட்டான்.
சிவநாதன் பி யைவிட்டு வெளியேறி, 'ஏ'க்குள் போனான். நாலு - ஏழு - எட்டு - பத்து - பதினாலு படுத்திருந்தவர் போர்த்துக்கொண்டு மறுபுறம் திரும்பிக் கிடந்தார். தன்னைவிட வேறுயாரும் பார்க்க வரவில்லையா? இப்ப பன்னிரண்டு மணிதானே, கொஞ்சம் பிந்தித்தான் வருவார்கள் - அருகே போனான்.
பார்த்ததும் அவனுக்கு மகாதேவன் மேல் ஆத்திரமாக வந்தது- அவரும் செல்லத்துரையரில்லை. திரும்பினான். பதினைந்தாம் கட்டிலில் எழும்பிச் சாய்ந்திருந்தவர், "ஆரைத் தேடுகிறாய், தம்பி?" என்று கேட்டார்.
220

சாந்தனின் எழுத்துலகம்
சொன்னான்.
"எட, அவரோ? உந்தக் கட்டிலிலை தான் இருந்தவர். இப்ப நல்ல சுகம். நேற்று துண்டு வெட்டிக்கொண்டு வீட்டை போயிட்டார்."
"சுகமோ? வீட்டை போய்ட்டாரோ?. அட, சே!" என்றான் சிவநாதன்.
1981
221

Page 113
35
நிழல்
தெரு வரைக்கும் கரண்ட் வந்து இருபது வருஷத்திற்கும் மேலே, இந்த ஒழுங்கைக்கு எடுப்பதற்கு எவ்வளவோநாள் படாதபாடு பட்டார்கள். எல்லோரும் அலுத்து இனிப் பிடிக்க ஒருவருமில்லை என்று ஒயவிட்ட வேளையில் எதிர்பாராமல் அது வந்தது. ஒரு வருஷத்திற்கு முந்த ஒருநாள் ஆட்கள் வந்து தூண் பறித்தார்கள். ஆறு மாதங்களில் நட்டாயிற்று. இன்னும் வயர் தொடுக்கவில்லை. ஆனால், வீட்டு இணைப்புக்காக விண்ணப்பங்களை வாங்குகிறார்களாம். விண்ணப்பங்கள் போட முதல்வீட்டில் வயறிங் முடித்திருக்க வேண்டும்.
கேதீசனுக்கு இது விஷயம் போன கிழமைதான் தெரிய வந்தது. எப்படியும் இப்போதே எடுத்துவிட வேண்டுமென்றிருந்தது. போதாக்குறைக்கு இப்போது தவறவிட்டால் பிறகு கனக்ஷன் எடுப்பது வலு கஷ்டம் என்று LLUIT (GITT சொன்னார்கள்.
ஆளைக் கூட்டிவந்து எஸ்ரிமேட் போட்டுப் பார்த்தான். சுருக்கமாகத்தான், ஒன்பது விளக்கு. ஒரு ப்ளக் பாயிண்ட் - எல்லாமாகப் பத்து. என்றாலும் ஆயிரத்தைந்நூறுக்கு மேல் வரப்பார்த்தது - எவ்வளவு சுருக்கினாலும், சாமான் பட்டியலை வாங்கி வைத்துக் கொண்டான்.
ஆயிரதைந்நூறு பற்றி ஈஸ்வரியுடன் யோசித்தபோது, அவள் பலாவைப் பற்றி சொன்னான். பலா அடிவளவில் நின்றது. குறைந்தது இரண்டு பரப்பிற்காவது நிழல் பரப்பிக்கொண்டு கூடாராம் மாதிரி. அடி மரம், ஆறேழு
222

சாந்தனின் எழுத்துலகம்
அடிக்கு மேல் வரும். சுற்றளவும் அப்படித்தான். அவளது ஆச்சி காலத்து மரமாம். ஆனால் காய்ப்பதை மட்டும் கொஞ்சக் காலமாய் நிறுத்தி விட்டிருந்தது. அதைக் கொடுக்கலாமென்றாள். போன மாதந்தான் தோணிக்காரர் வந்து விலை கேட்டிருந்தார்கள். கேதீசனுக்கு அவ்வளவு மனமில்லை. அவனுக்கும் அந்த மரத்திற்கும் பழக்கமேற்பட்டு பத்து வருஷத்திற்குள்தான். என்றாலும் தோணிக்காரர்களுக்கு முடியாது என்று சொல்லியிருந்தான்.
ஈஸ்வரி இப்போதும் அதைத்தான் சொல்லுகிறாள். கேதீசன் ஆமென்றால், அப்புக்குட்டிக் கிழவன் நாளைக்கே விலை கேட்டவனைக் கூட்டிவந்துவிடும். விலைகூட சரியாய் வரும் - வயரிங் செலவுக்கு
அவ்வளவாய்ப் பிரச்சினை இராது.
கேதீசனுக்கு இப்போது அவ்வளவு சம்மதமில்லை. மொக்குகளும் செம்மஞ்சள் தேமல்களுமான கம்பீரம், காற்றுக்கெல்லாம் பெய்கிற பழுத்தல்கள், வெய்யில் பூக்கும் வெள்ளை மணல், முற்றத்திலிருந்து பார்க்கையில் ஒரு தென்னை உயரத்தில் தெரிகின்ற உச்சிக் கொப்பு - இதெல்லாவற்றையும் தறிக்க வேண்டுமா என்றிருந்தது. எல்லாவற்றுக்கும் மேலாய், கோடை மதியங்களில் அவன் சரணாலயம்.
வேறு வழியில்லாதிருந்தது.
அவனிலும் பார்க்க ஈஸ்வரி ஆர்வமாயிருந்தாள். ஒரே நாளில் கொப்பெல்லாம் தறித்து, அடிமரத்தைச் சுற்றித் தோண்டி, கூம்பாக வெட்டிப்போய் ஒரு ராட்சசனை விழுத்துவது போல் பலாவை வீழ்த்தினார்கள். மரந் தூக்குகிற வண்டியில் இரண்டு வடக்கத்தி மாடுகளுடன் வந்து, இரும்புச் சங்கிலியால் கட்டித் தூக்கிப் போனது.
அடிவளவே வெளித்துவிட்டிருந்தது. வேறு யார் வீட்டிலோ இருப்பது போலிருந்தது. பரவாயில்லை. அந்த இடத்தைக் கொத்தி காய்கறித் தோட்டம் போடலாமென்றாள் ஈஸ்வரி. ஒரு மோட்டார் வாங்கிவிட்டால் இன்னும் நல்லது.
சனிக்கிழமை காலையில் பட்டியலையும் காசையும் கொண்டு பட்டினம் புறப்பட்டான்.
223

Page 114
சாந்தனின் எழுத்துலகம்
சந்தையைத் தாண்டி, பஸ் நிறுத்தத்தை நோக்கி நடந்தபோது, எப்போதும் குங்கிலியம் மணக்கிற அந்த இடத்தில் தட்டி அவிழ்த்து, வேலி திறந்திருந்தது. உள்ளே அவன் வீட்டுப் பலா கிடந்தது.
இதுதான் தோணி செய்கிற இடமென்று இவ்வளவு நாளும் தெரியாதிருந்ததே என்று வியந்தான். ஒரு நாளைக்குப் போய்ப் பார்க்க வேண்டும். ஆனால் இந்தப் பலாவை அறுக்கும்போதல்ல.
1982
224

36
இன்னும் உள்ள வண்ணங்கள்
இந்த இயந்திரத்தின் முதுகில் குந்துகிற போதுகளில் தெருவையே தியானிக்க வேண்டும் என்கிற பாடம்கூட இன்று மறந்து போயிற்று. மறந்தல்ல; நினைக்கக்கூட மனதில் இடமில்லாமல் வேதனையும் ஏமாற்றமும் ரோஷமுமாய்ப் பிரவகித்தன. பட்டணத்தில் ஏறிய ஞாபகமே கூட இல்லாமல், வீடு வந்ததுகூட எப்படி என்று தெரியாமல் - தாவடிச் சந்தியில் எதிரே வந்த சாசு ஒன்றினோடு சருவாமல் திரும்பியதுகூட அரும்பொட்டுத்தான்.
படலையைத் தாண்டி உள்ளே திரும்பியபோது, இன்றைய மாலையை இந்த வேதனையால் இழந்தாயிற்று என்ற எண்ணம் வேறு இன்னும் ஆத்திரத்தை அதிகரித்தது. பிற்பகல் சம்பவத்தை நினைத்தால், இலக்கியக்காரன் என்று எண்ணிக் கொள்வதில், அப்படி சொல்பவர்களோடு உறவு சம்பவிப்பதில் எல்லாங்கூட ஒரு அருவருப்பு உண்டாயிற்று. மனிதத்தனம் இல்லாதவர்களெல்லாம் எப்படி இலக்கியக்காரராக முடியும் என்று பட்டது. எட்டாம் வகுப்பே பாஸ் பண்ணாதவன், எஸ்.எஸ். எல்.ஸி- க்குப் போவது போல - இந்த எக்ஸ் இந்த வேலையைச் செய்யக் கூடும் என்று எண்ணிப் பார்க்கக்கூட இதற்கு முன் முடிந்திருக்குமா?
உடுப்பு மாற்றிவிட்டு வந்தான். குளிக்கப் பஞ்சியாய் இருந்தது. பசிக்கவுமில்லை.
சாப்பிட வாறிங்களா?. என்று கூப்பிட்ட மனைவிக்குப் பதில் சொல்ல முடியாமல் எரிச்சலாயிருந்தது. வேணி முறைத்துக் கொண்டு
225

Page 115
சாந்தனின் எழுத்துலகம்
போனாள். மனமெல்லாம் அதே உளைச்சல் - இந்த எக்ஸ், இப்படி.
ரேடியோ ஒரு விளம்பரத்தை முடித்துவிட்டு, பாரதி நூற்றாண்டைக் கொண்டாடிக் கொண்டிருந்தது.
'உமக்குக் காலை வாரிவிட அப்போது யாரெல்லாம் இருந்தார்களோ? தங்கை வந்து நின்றாள்; அண்ணை.
என்ன?
- கையிலிருந்த எலாம் மணிக்கூட்டைக் காட்டினாள். அது பேச்சு
மூச்சில்லாமல் கிடந்தது.
ஒருக்கால் பார். என்ன, மணிக்கூட்டுக்கடையா? என்று சினந்தான். அவள் சிரித்துவிட்டுக் கெஞ்சினாள் நாளைக்கு விடிய எழும்ப வேணும் எக்ஸாம் வருகுது. படிக்க வேணும்.
- மணிக்கூட்டோடு அவனது சின்ன ற்ரூல் பொக்ஸையும் மெல்ல
மேசையில் வைத்தாள்.
நினைத்ததுதான் நடந்திருக்கிறது. ஹெயர் ஸ்பிறிங் இழுவுண்டு கிடக்க, பலன்ஸ் வீல் வழுவிக் கிடந்தது. சரிப்படுத்தி வைத்தான். ஊசி நுனியால், எண்ணெயைத் தொட்டு விட்டுக் கொண்டே, கீழே போட்டியா என்று கேட்டான். பயந்து கொண்டே தலையாட்டினாள். வெளி ஃபிரேமின் நாலாவது ஸ்க்றுாவையும் இறுக்கிவிட்டு மேசையில் வைத்ததும், அதன் டிக்டிக் துல்லியமான ஒரு சுநாதமாய் ஒலித்தது.
இலக்கியத்தில் ஏற்பட்ட ஈடுபாட்டால்தான் இவர்களோடெல்லாம் தொடர்பு நேர்ந்ததே யொழிய, இவர்களோடு தொடர்பு வந்ததால் இலக்கியத்தைத் தழுவியவனல்லன் நான் - என்கிற உணர்வு மனதிற்கிதமாய் இருந்தது.
வேணி திரும்பவும் வந்தாள். இருட்டப் போகுது. எழும்பேல்லையா?. ம்ம்..” என்றான்.
226

சாந்தனின் எழுத்துலகம்
. நாய்க்குட்டியைப் பாத்தீங்களா? 'ஆ எப்படி இருக்கு? என்று நிமிர்ந்தான். இவ்வளவு நேரமும் எப்படி மறந்து போய் இருந்திருக்கிறான்! அவள் சிரித்தாள்.
வந்து பாருங்கோ.
பின் முற்றத்தில் அந்த உயிருள்ள பஞ்சுருண்டை மீண்டும் துள்ளிக் கொண்டிருந்தது. கிட்டப் போய்க் குந்தி, ச்ச், ச்ச்.?’ என்றான். கையில் இன்னமும் மணிக்கூட்டையே வைத்திருந்த தங்கை, இரண்டு நாளாய்க் கிடந்த நாய்க்குட்டி, காலமை நீ குடுத்த அஞ்சு லட்சத்தோடை எழும்பியிருக்கு வேலையை விட்டிட்டு, நாய் வைத்தியம் செய்யலாம். என்று சிரித்தாள்.
அந்தப் பூக்குட்டியைக் கையிரண்டிலும் ஏந்தி எடுத்தான். முகத்தை மோந்து வாலை ஆட்டியது.
தங்கை கையிலிருந்த மணிக்கூடு டிக்டிக் கென்று கொண்டிருந்தது. நாய்க்குட்டி செல்லமாக அனுங்கியது.
அதை மெள்ள இறக்கிவிட்டபடி, குளிச்சிட்டு வாறன், சாப்பிட. என்றான்.
எக்ஸ் சமன் ஸிரோ.
1982
227

Page 116
37
அடையாளம்
சைலன்ஸரைக் கழற்றிக் கழுவக் கொடுத்துவிட்டு, கார்பரேட்டரைக் கவனிக்க வந்தான் அந்த இளைஞன். எண்ணை படிந்த உடைகள், காலில் வழுக்க வழுக்க ரப்பர் செருப்பு. சுறுசுறுப்பாயிருந்தான். மோட்டார் சைக்கிள்கள் இடைக்கிடை உறுமின, குரைத்தன, கர்ஜித்தன.
பெட்ரோல் குழாய்களைக் கழற்றினான். பிறகு தன் கை உதவிப் பையனிடம் சொன்னான் :
”அந்தப் பெட்டிக்குள்ளை, குழந்தைப்பிள்ளை போல ஒரு ஸ்க்றுாட்றைவர் இருக்கு. அதை எடு.”
நான் வியந்து போய் அவனைப் பார்த்தேன். பெடியனுக்கும் விளங்கவில்லை.
"அதுதான், அந்த மஞ்சள்பிடி போட்ட கட்டை ஸ்குறுாட்றைவர்.”
பெடியன் எடுத்து வந்ததை ஆவலுடன் பார்த்தேன். கார்ப்பரேட்டருக்கான திருப்புளி அது. உலோகப் பகுதி நீளமில்லாமல் ஒன்றிரண்டு இஞ்சிதான். அடியில் தடிப்பான மொத்தப்பிடி குழந்தைப் பிள்ளை போலத்தானிருந்தது.
நண்பன் சத்தியனை நான் முதலிற் சந்தித்தது இப்படித்தான்.
1982
228

38
இடைவெளி
விஜயதசமி காலையில் எல்லோருமாகக் கோயிலுக்குப் போய் அக்காவின் பிள்ளைக்கு ஏடு தொடக்கிக் கொண்டு வந்தார்கள். கோவிலில் வாழைவெட்டு முடிவடைந்தபின், பிள்ளையார் வாசலில் இந்தச் சடங்கு நடைபெற்றது. எல்லாமாக ஐம்பதுக்கு மேல் குழந்தைகள். அந்த அரும்புகளின் முதலாவது வகுப்புபோல அது இருந்தது. அரி ஒம் நம சொல்லி, குரு வாழ்க என்று சொல்லி, குருக்கள் குழந்தையின் கையைப் பிடித்து ஆனா என்ற எழுதுவித்தார்.
இதையொட்டி, மருமகனுக்கு நல்ல பரிசொன்று கொடுக்க வேண்டுமென்றிருந்தது. ஒரு நல்ல சிலேற்றும் பென்சிலும், பார்த்து வாங்கலாமென்று பட்டணம் போனான்.
இரண்டு கடைகளில் இல்லையென்று விட்டார்கள். மூன்றாவது கடைக்காரர் கொஞ்சம் நல்லவராய் இருக்க வேண்டும். கூடுதலாக ஒரு ஒரு விஷயத்தையும் சொன்னார்.
“அதெல்லாம் அந்தக் காலம் தம்பி. இப்ப வாறேல்லை.”
அவனுக்குப் புதிராயிருந்தது - இப்போ பிள்ளைகளெல்லாம் எதில் எழுதி எழுதிப் பழகுகிறார்கள்?
கடைக்காரர் ஆறுதலாயிருப்பது போலப் பட்டது. அவரையே கேட்டான். அவர் சிரித்துவிட்டுச் சொன்னார், “கொப்பித்தான்’.
229

Page 117
சாந்தனின் எழுத்துலகம்
"அப்ப, ஒரிடமும் எடுக்கேலாதோ?”
“கிடைக்காது” என்றார் முதலாளி, உறுதியாக,
D
சிலேற். சிலேற்றும் பென்சிலும், அப்போது புத்தகங்களை வைத்து அடுக்குவதற்கு ஒரு அடிப்படையாயிருந்தது போல, சின்ன வயது நினைவுகளுக்கும் ஒரு பலமான அடிப்படையாகிவிட்ட சிலேற். சின்னது, பெரியது, கறுப்பு, சாம்பல் பூத்தது - என்று எத்தனைவகை, பென்சிலும், சிலேற்றும் அவரவர் லக்கைப் பொறுத்தவை என்ற சின்ன வயது நம்பிக்கை, எவ்வளவுதான் விழுந்தடித்தாலும் உடையாதவை சிலருக்கும். தட்டுப்படமுன் கோழிமுட்டை மாதிரி நொருங்கி விடுபவை சிலருக்கும் வாய்த்தன. இதேபோல், சிலேற்றில் கிறுக்குகிற பென்சில்களும் வாய்த்தன. கல்லிற் தேய்த்தால், ஊசி மாதிரி பென்சில்கள், முளைவிட்ட சண்டியன்களின் முதல் ஆயுதங்கள்.
மரமணம் அடிக்கிறது. சட்டங்கள் இருந்துவிட்டு நாலு துண்டுகளாயின. இதற்காக சில பேர் மூலைகளுக்கு ஆணி தைத்தார்கள். மேற் சட்டத்திலிருந்து துவாரம், பென்சிலைக் கட்டி வைக்கவா என்று இன்னமும் இருக்கிற சந்தேகம். என்ன இருந்தாலும் இந்தச் சட்டங்களில் அழிந்து விடாமல் பெயர் எழுதி வைக்க முடிந்தது. வகுப்பு வேலைக்கு வாத்தியார் கோழி முட்டை போட்டுவிட்டால் வீடு போகுமுன் அதை நைசாக அழிய விடுகிற வசதி சிலேற்றில் இருந்தது. இதேபோல கூடுதலாக வாங்கி விடுகிற நேரங்களில் எப்படியாவது அழிந்துவிடாமல் காப்பாற்றி விடவும் முடிந்தது.
அநேகமான சிலேற்றுகள் - முக்கியமாக சின்ன வகுப்புகளில் - எச்சில் மணத்திருந்தன. சுத்தமான பிள்ளைகள் விரலளவு சீசாக்களில் நீர் கொண்டு வந்தார்கள். கடற்பஞ்சு, தண்ணிர்ப் புல்லு, ஈரப்பலாவிலைக் தாம்பு - இப்படி, முன்னோடிகளாற் கண்டுபிடித்து வைக்கப்பட்டிருந்த புதுமைகள் சில வேறு.
சிலேற் பென்சிலின் ஸ்பரிசத்தில் எப்போதும் முனகுகிற சிலேற். தம்பி, தன்னிலும் பத்து வயது இளையவன் - இப்போது வயது இருபத்தி நாலு படிக்கும்போது கூட, சிலேற் இருந்ததே.
230

சாந்தனின் எழுத்துலகம்
அதற்குப் பிறகு யாரிடமிருந்து என்று நினைத்துப் பார்க்க முயன்றான்.
D
இந்தக் கடைக்காரர் தெரியாமல் சொல்லியிருக்கக் கூடுமென்று பட்டது. கொஞ்சந்தள்ளி இன்னொரு கடையில் நுழைந்தான்.
"சிலேற்றோ?.”முன்னுக்கு நின்ற பெடியன், விளங்காமற் திகைத்துப் பின் சிரித்தான்.
". அதெல்லாம் இல்லை.”
இந்தக் கேள்வியைக் கேட்டதன் மூலம், ஒரு பெருந்தவற்றை இவன் செய்திருக்கிறான் என்பது போல் அந்தப் பெடியன் பார்த்தான்.
தெருவிலிறங்கியபோது, நீண்ட நித்திரையிலிருந்து திடீரென விழித்தது மாதிரி இருந்தது.
1983
231

Page 118
39
60 6
ஒரு ஊரில் ஒரு பெரிய மனிதர் இருந்தார். அவரிடம் மூன்று சால்வைகள் இருந்தன.
ஒன்று சரிகைச் சால்வை,
ஒன்று கதர்ச் சால்வை.
மற்றது சிவப்புச் சால்வை,
1983
232

40
இரண்டு கதைகள்
ஒரு முட்டாளின் கதை
பெரியவர் கூப்பிடுவதாகப் பியோன் வந்து சொன்னார். பென்சிலை வைத்துவிட்டு எழுந்து போனான்.
“வாரும்.” - இ.இ. உற்சாகமாக வரவேற்றார். “. உம்மட கட்டுரை நேற்றுப் பேப்பரிலை பார்த்தன்.”
அவனுக்கு அதிசயமாயிருந்தது. இந்த ஆள் இதெல்லாம் பார்க்குமா? பார்க்கலாம், சரி, படித்திருக்குமா?
“. நல்ல வடிவா எழுதியிருந்தீர். இவ்வளவு நாளும் இப்படி ஆள் என்று உம்மைப் பற்றித் தெரியாது. அதிலை. ஆங்கிலத்தில் அடித்துக்கொண்டு போனார்.
முன்னுக்கு மூன்று கதிரைகள் சும்மா கிடந்தன.
“மன்னிக்கவும் ஐயா.”- விரும்பியபடி அர்த்தங் கொள்ளலாமென்கிற ஒரு முறுவல் செய்தான். ஒருகணந் தயங்கினான்.
“. ரெக்னீஷியன் கண்ணன் தான் இந்தக் கந்தோரில் வேலை செய்கிறவன். எழுதுகிற கண்ணன் அல்ல.”
இதைச் சொல்லிவிட்டு, ஆடுங்கதவைத் தள்ளிக் கொண்டு வெளியே வந்தான்.
1983
233

Page 119
சாந்தனின் எழுத்துலகம்
2. ஒரு கோழையின் கதை
66
. கண்ணன் அல்ல.” இதைச் சொல்லிவிட்டு வரத் துணிவில்லாத தன்மேல் ஆத்திரம் கொண்டான்.
1983
234
 

41 பாத்திரம்
படலைத் திறந்த சத்தம் கேட்டு நிமிர்ந்தான். ஒரு பெண். யாரென்று தெரியவில்லை. திண்ணையை நோக்கி விறுவிறென்று வருவது தெரிந்தது. தோளில் ஒரு பிள்ளை. நெருங்கி வர வர, மனுசியின் முகத்தை எங்கேயும் பார்த்ததில்லை என்பது தெளிவாயிற்று.
கிட்ட வந்தவுடன், கையிலிருந்த பேப்பரை மடித்தவாறே எழுந்து,
“யாரைப் பார்க்கறிங்க?’ என்றான்.
அவள் இன்னும் நெருங்கி வந்தாள். படியில் பிள்ளையை இறக்கிவிட்டு,
"அம்மன் கோயிலடியிலிருந்துவாறேன்.” என்றபோது கண்கள் கலங்கின.
"கலவரத்துக்குள்ளை நாங்கள் தெமட்டக்கொடையிலை இருந்தோம். - சொல்லிட்டு லேசாக விம்மத் தொடங்கினாள்.
இவன் உள்ளே திரும்பி,
"அம்மா." என்றான்.
“எங்கட அவர், அப்பா செத்துப்போனார்.”
““umrri" ?”
“தகப்பன்." - அவள் குழந்தையைச் சுட்டியவாறே கண்களைத்
துடைத்தாள்.
235

Page 120
சாந்தனின் எழுத்துலகம்
பொடியன் இவனை வடிவாகப் பார்த்துக்கொண்டு நின்றது. ஐந்து வயதிருக்கும். உருண்டைக் கண்கள் உருண்டை முகம். அதைப் பார்த்து மெல்லச் சிரித்தான். தாயின் பின்னால் ஒளித்துக்கொண்டது.
“என்னவாம்?.” என்றாள் அம்மா, சொன்ன முழுவதையும் மனுசி திருப்பிச் சொன்னது.
6 é. 99 ஐயோ, பாவம்.
இங்கே, ஊரில், வீடில்லை. காணி மட்டும்தான். அம்மன் கோயிலுக்குக்கிட்ட, அம்பல வாத்தியார் வீட்டடியில் இருக்கிறது. வாத்தியார் சொந்தமில்லை. தெரிந்தவர், ஊரைவிட்டுப் போய்க் கனகாலமென்றாலும் அவரை விசாரித்தால் இவர்களைப் பற்றித் தெரியும். உள்ள காணியில் ஒரு கொட்டிலாவது போடக் காசு தேவை. அதுதான்.
அம்மா உள்ளே திரும்பினாள்.
“தெமட்டக்கொடையிலை எங்கே இருந்தீங்க.”
“வெள்ளவத்தைப் போற ரோட்டிலை.”
“என்னது?’ மீண்டும் கேட்டான்.
"முகாமிலை இருந்தது நீங்களா?”
ஆம்.” தலையாட்டினாள்.
“எந்த முகாம்?”
“வியாங்கொடையிலை.”
"இதென்ன சொல்லுறீங்க.?”
குழந்தை முன்னால் ஓடிவந்து சிரித்தது.
உள்ளே இருந்து வந்த அம்மா, “இந்தா.” என்று கொடுத்தார்.
தாளைக் கும்பிட்டு வாங்கினாள். பிள்ளையைத் தூக்கி இடுப்பில் வைத்தாள். போகப்போக, அது இவனைப் பார்த்துச் சிரித்துக் கொண்டிருந்தது.
236

சாந்தனின் எழுத்துலகம்
"ஏன் குடுத்த நீங்கள்?. சொன்னதெல்லாம் பொய்” - மெல்லிய எரிச்சலுடன் கேட்டதைச் சொன்னான்.
"சீ பாவம். அவள் வீட்டை விட்டு அதிகம் வெளிக்கிடாமலிருந்தி
ருக்கலாம்.” என்றாள் அம்மா.
அப்படித்தானிருக்கும்.
1984
237

Page 121
42
நிலா
பெரிய வெளியாயிருக்கிறது. எங்கே தொடக்கம் எங்கே முடிவென்று தெரியாமல் நிலந்தான்; பூவுலகம். வைக்கோல் பட்டடைகள் போல் பஞ்சு பஞ்சாகக் குவிந்திருக்கின்றது. நிலா எரிக்கிறது. நல்ல நிலா, நல்ல வெளிச்சம். அந்த வெளிச்சம் வர்ணிக்க முடியாதது. நிலா வெளிச்சத்தை வர்ணிக்க எந்த மொழியாலும் முடியாது என்று படுகிறது. அப்படியான நிலவொளியைத்தான் குவித்து வைத்திருக்கிறதா என்று சொல்ல முடியாமலிருக்கிறது. சில வேளை அது ஸ்நோவாகவும் இருக்கலாம்.
ஸ்நோவை இதுவரை கண்டதில்லை. படித்தது, கேள்விப்பட்டது, படத்தில் பார்த்தது, கற்பனை செய்தது என்று கொஞ்ச கொஞ்சமாய்ச் சேர்ந்த ஆதாரங்களில் அது இப்படித்தான் இருக்குமென்று உணர முடிந்திருக்கிறது.
இந்தக் குவியல்கள் மேகங்களாயிருத்தலும் கூடும். எப்படியோ - அது ஸ்நோவோ, பஞ்சோ, நிலவொளியோ, மேகமோ இந்த வெளியெங்கும் ஏராளமாய்க் குவிந்து குவிந்து கிடக்கிறது. அந்த மாய ஒளியில் சுவறிக் கொண்டு ஒவ்வொரு குவியலாக அவன் ஏறி மிதிக்கிறான். ஏறுவது களைப்பாயிருக்கவில்லை. ஏறுவதும், மிதிப்பதும் பிறகு இறங்கி இன்னொன்றில் ஆரோகணிப்பதும் இயல்பாக நடக்கின்றன. எந்த முயற்சியுமில்லாமல்,
இந்த விளையாட்டில் அவன் தனியென்றில்லை. ஆங்காங்கே சிறகு
238

சாந்தனின் எழுத்துலகம்
முளைத்த குழந்தைத் தேவதைகளும், அவையும் நிலவின் நிறமாய் உள்ளன. அவை தேவதைகள்தாமா என்பது சரியாக நினைவில்லை. அழகான
குழந்தைகளாகவும் இருக்கலாம்.
இந்தக் கனவு வலு சின்ன வயதில் வந்தது. நிலாக் கனவுகளின் வரிசையில் இதுவே முதலாவதாக நினைவுக்கு வந்தது.
இதேபோல் இன்னுமொன்றுண்டு. அதிலும் ஸ்நோ வருகிறது. ஒரு மைதானம். நிலவொளியில் குளிக்கிற ஒரு வெளி ஸ்நோ தூவல்கள் அமைதியாகப் படிகின்றன. கூரைகளில் வெண்பனியைச் சுமந்துகொண்டு ஆங்காங்கே வீடுகள், ஊர் அமைதியாக இருக்கிறது. தூரதூர நாய்களின் ஊளைகள் மட்டும் ஒன்று மாறி ஒன்றாகச் சுருதி கூட்டுகின்றன. அவன் தனியே நடந்தபடி இருக்கிறான்.
இந்த அந்நிய சூழல் தன் கனாக்களில் இடம் பிடித்தமை எவ்வாறென்பது இன்னமும் வியப்பாகவே உள்ளது. சின்ன வயதில் இவ்விரு கனாக்களும் கண்ட புதிதில் அப்போது செல்லுபடியாகக் கூடிய
நியாயமொன்றை மனங் கற்பித்திருந்தது. முற்பிறவி ஞாபகமாயிருக்கலாம்.
அப்போது ஆறோ ஏழோ படித்துக் கொண்டிருக்க வேண்டும். ஆறுமுக மாஸ்டர் படிப்பித்த ஆங்கிலப் பாடப் புத்தகத்தில் நல்ல நல்ல தேவதைக் கதைகள் நிறைய இருந்தன.
இவ்விரண்டும்தான் அந்நிய களத்தில் ஜனித்த கனாக்கள், பிறகெல்லாம் அப்படி வரவில்லை. ஏழாம் வகுப்பில் பாடசாலை நூல் நிலையத்தில் சேர முடிந்தது. மொத்த மொத்தப் புத்தகங்களாய் ஐந்து பாகங்களில் அப்போது “பொன்னியின் செல்வன்’ படிக்கக் கிடைத்தது. ஒவ்வொரு பாகமும் ஒழுங்காகக் கிடைத்தது. அதே தியானமாய்ப் படித்து முடித்தான். முடித்த பிறகு வெறுமை தெரிந்தது. இப்போது பிறந்து என்ன பிரயோசனம்? ஆயிரம் வருஷங்களுக்கு முன்பு - சரியாக, தொளாயிரத்துச் சொச்சம் என்று அப்போது கணக்குப் பார்த்த ஞாபகம் - பிறந்திருக்க வேண்டும். அந்த மனிதர்கள் - ஆழ்வார்க்கடியான், தஞ்சை, அனுராதபுரம் எதை நினைத்து ஏங்குவது? இப்போது இந்த இருபதாம் நூற்றாண்டில் வந்து பிறந்ததற்காக தன்னைத் தானே வெறுத்துக் கொண்டான்.
239

Page 122
சாந்தனின் எழுத்துலகம்
இந்த - இப்போது நான் நிற்கிற இடத்தில் வல்லவனாயன் இலங்கை வந்திருந்தபோது மிதித்திருக்கக் கூடும் - எல்லாம் பகல் கனாக்கள்.
ஆனால் அப்போது இரவுக் கனாக்களும் வந்தனதான். முக்கியமாக சொந்தச் சூழலில் கனாக்கள் இடம்பெறத் தொடங்கியதாக நினைவு வருகிற காலம் அதுதான். அதில் வந்த முதற் கனவு இப்படி இருந்தது. காட்டுப்பாதை கொழும்புக்கு ரயிலில் போகிறபோது அநுராதபுரம் பக்கத்தில் வருகிற மாதிரி ஒடுங்கிய நேரான பாதை. எந்த முடக்குமில்லாமல் ஒரே நேர். நல்ல நிலவு, அடர்ந்த மரங்களைத் துளைத்து வருகிற வெளிச்சம். பாதையெல்லாம் பூப்பூவாய்ப் பரவிக் கிடக்கிறது. அவன் குதிரையில் போகிறான். அது நல்ல வேகமாக ஒரே கதியில் போகிறது. செடி கொடிகள் முகத்தில் மோதி விலகுகின்றன. நிலா எட்டி எட்டிப் பார்க்கிறது. எங்கே போனோம் என்று தெரியவில்லை. கணதுரம் போனான். கணநேரம் போனான். பிறகு திரும்பி அதே பாதையில் அதே மாதிரி வருகிறான். குளம்பொலி மட்டும் கேட்கிறது.
இந்த நிலாப் பைத்தியம் எப்போது தொடங்கியதென்று சொல்ல முடியாதிருக்கிறது. சின்ன வயதில் :
நிலா நிலா ஒடி வா
நில்லாமல் ஓடி வா மலைமேல் ஏறி வா
மல்லிகைப் பூ கொண்டுவா
என்று பாடிக்காட்டி அம்மா சோறு தீற்றிய போதா அல்லது அதற்கும் முன்பேயா? அதன் பிறகு அம்மாவிடம் கேட்ட ஆயிரம் நிலாக் கதைகள் வேறு உருவேற்றியிருக்கலாம்.
சின்ன வயதில் அப்பு வளவு முற்றத்தில் கழித்த இராப்பொழுதுகள்கூட இந்த லயிப்பை வளர்ப்பதில் உதவியிருக்க வேண்டும். அது பெரிய முற்றம். ஐம்பதடி சதுரமாவது வரும். இடையில் ஒரு சொட்டு நிழலில்லை. பகலில் புழுங்கல், ஒடியல், புழுக்கொடியல், மருந்துச் சரக்கு, ஒலைச்சார்வு என்று எதையாவது காய வைக்கிற இடம். கிழக்கே இரட்டை கேட் இருந்தது. தெற்கிலும், வடக்கிலும் வாழை பூஞ்செடிகள் தோட்டம். மேற்கில் வடக்கன் மாட்டு வண்டியும் காரும் விடுகிற பெரிய கொட்டில், முற்றத்தின் நாலு பக்கமும்
240

சாந்தனின் எழுத்துலகம்
தடி நட்டு குடைத்துணி துண்டு துண்டாகத் தொங்கவிட்டிருந்தது. காகங்கள் அண்டாமல் பார்த்துக் கொள்ள, இந்த முற்றத்தில் பகலெல்லாம் வெயில் கண்ணை மின்னும், பொழுதுபட காயப்போட்டதெல்லாம் எடுத்துவிட்டு தண்ணிர் தெளித்துக் கூட்டிவிட்டால் அது முழுதாக வேறு இடமாகிவிடும். பெரிய கதிர்ப்பாய் விரித்து பின் நேரம் வெட்டிய பனையோலைகளைப் போட்டு ஆட்கள் கிழிப்பார்கள். சிறகடித்து, சட்டம் வார்ந்து, தும்பாக்கி. தும்பாக்கிய ஒலைக் குவியலின் குளிர்ச்சியில் மல்லாந்து படுத்துப் பார்த்தால் ஆயிரங்கோடி - லட்சக்கோடி வெள்ளிப் பூக்கள். பார்க்கப் பார்க்க புதிது புதிதாய்த் தெரியும். நடுவில் ரோசாப் பூப்போல், இராசாத்தி போல் நிலவு வரும். தென்னை வட்டு, பனம்வட்டு, கொட்டில் கூரை, வேப்பங்குழை எங்கும் பட்டு வழிகிற நிலவு, ஒலைக் குவியலில் கண்ணயர்ந்து அடுத்த நாள் காலையில் படுக்கையில் விழிக்கிறபோது அதிசயமாய் இருக்கும்.
எட்டாம் வகுப்புக்கு வந்தபோது தமிழ்ப்பாடப்புத்தகத்தில் பாரதி பாடல்கள் சில இருந்தன. அவற்றில் இரண்டு படித்த உடனேயே மனதில் பதிந்தன.
“எந்தையும் தாயும் குலவி மகிழ்ந்திருந்தது இந்நாடே அதில் “நிலவினில் ஆடி” என்ற அடிகள் முக்கியமாக மற்றது “காணி நிலம் வேண்டும்.”
“முத்துச் சுடர் போலே நிலவொளி முன்பு வர வேண்டும்.” என்ற வரிகள், பிறகு “பாரதி பாடல்கள் தொகுதியை கிருஷ்ணசாமி கடையில் தேடி வாங்குகிற அளவுக்கு ஆக்கின.
விஞ்ஞானம் ஆறாம் வகுப்பிலிருந்தே கட்டாயப் பாடமாயிருந்தது. மனுவேலோ சாமுவேலோ என்பவர் எழுதிய புத்தகப் பாடநூல். கிரகணங்கள் பற்றியெல்லாம் அதில் இருந்தது. பூமிக்கும் சூரியனுக்குமிடையே சந்திரன் வரும்போது சூரிய கிரகணம் வருகிறது. சந்திரனுக்கும் சூரியனுக்குமிடையே பூமி வரும்போது சந்திர கிரகணம் வருகிறது. பிறகு மேல் வகுப்புகளில் 'அம்ப்ரா', 'பெனம்ரா” எல்லாம் பற்றியும் படித்தாலும் கிரகணம் என்று நினைக்கிற போதில் ராகுவும் கேதுவும் தான் முதலில் மனதில்
தலைகாட்டுகின்றன.
பாம்பு கெளவியதும் கக்கியதுமான ஒரு முழு நாடகத்தை வடிவாகப்
241

Page 123
சாந்தனின் எழுத்துலகம்
பார்க்கிற வாய்ப்பு ஐந்தாறு வயதில் சித்தித்தது. அதன்பிறகு அப்படி வசதியான முன்னிரவு முழு நிலா வேளையில் கிரகணம் வந்த ஞாபகமில்லை. அப்போது இருந்ததெல்லாம் ஒரு பயம்; ஒரு பரிதவிப்புதான். பாம்புகள் சந்திரனை விழுங்குகிறபோது அங்கே மாட்டில் பால் கறந்து கொண்டிருக்கிற ஒளவையார் ஆச்சிக்கு என்ன நடக்கும்? அவ சந்திரனுக்குள்ளே போய்விடுவா என்றும், பாம்புகள் பத்திரமாய்ப் பிறகு அவளையும் சேர்த்துக் கக்கி விடுமென்னும் அம்மா சொன்னதில் ஆறுதல் வந்தது. ஏழாம் எட்டாம் வகுப்பு காலங்களில் என்றுதான் ஞாபகம்.
66
ரஷ்யாக்காரர் ' ஸ்புட்னிக்"கை அனுப்பியது. மாதத்தில் முக்கால் பங்கு
இரவுகளில் நிலவைப் பார்க்க முடியாத ஆதங்கம், அப்போது
பத்திரிக்கைகளெல்லாம் "செயற்கைச் சந்திரன்' 'செயற்கைச் சந்திரன்'
என்றெழுதிய போது மறைந்தது. இனி எல்லா இரவுகளிலும் நிலா வீசும் என்ற எதிர்பார்ப்பு பிறந்தது. அந்தச் செயற்கைச் சந்திரன் வானில் சுற்றுகிற போது எழுந்த “பீப் பீப்” ஒலியை எல்லோருமே ரேடியோ அருகிலிருந்து வலு கவனமாக செவிமடுத்தார்கள். ஆனால் பிறகு பூமியைச் சுற்றுகிற ஒரு பண்பில் மட்டுமே அது சந்திரனாகுமென்பது வெளித்தபோது பெரிய ஏமாற்றமே.
இதேபோல, நிலவும் விஞ்ஞானமும் சந்தித்த சம்பவமொன்று பிறகொரு தடவை நன்றாக மனதில் பதிய நேர்ந்தது அறுபத்தொன்பதிலாயிருக்க வேண்டும். கட்டுப்பெத்தை தொழில் நுட்பக் கல்லூரியில் படித்துகொண்டிருந்த காலம். ஓரிரவு மொரட்டுவை நகரையே ஜனங்கள்
வெடிகளால் அதிர வைத்தார்கள்.
அமெரிக்காக்காரன் சந்திரனில் இறங்கியதை ரேடியோக்கள் அப்போது அஞ்சல் செய்து கொண்டிருந்தன.
ஊரை விட்டுக் கட்டுப்பெத்தைக்குப் புறப்பட முதலில் தவித்த தவிப்பு சொல்ல முடியாதது. வீட்டை விட்டு - ஊரை விட்டு பிரியப் போவது அதுதான் முதல் தடவை. இந்த இயல்பாக சுவறி விட்ட-வாழ்வு தன்னிலிருந்து பிய்தெடுக்கப்படுவது தாங்க முடியாததாயிருந்தது. பெற்றோர், சகோதரர்கள் வீடு, என்பதோடு நண்பர்கள், அவர்களைச் சந்திக்கிற அம்மன் கோவிலடி எல்லாம்பிரிய முடியாதவையாக இருந்தன. அம்மன் கோவில் தேர் முட்டி
242

சாந்தனின் எழுத்துலகம்
அப்போதைய வாழ்வின் மையமாக இருந்தது. நண்பர்களின் சந்திப்பிடம். கனவுகளை வாழ்க்கையை எல்லாம் அவர்கள் பகிர்ந்து கொண்ட இடம். உலக ஞானத்தை வளர்த்த வித்யாசாலை. தேர் முட்டிக்கு அப்போது கூரை இல்லாதிருந்தது. படிப்படியாக ஏறி பன்னிரென்டு பதிமூன்றடி உயறத்திற்கு, வயல் சூழ்ந்த வெளியில் வானத்தை நோக்கியபடி அந்த இடத்தை ஆளும் அரசு கட்டிலாய் அது திகழ்ந்தது.
மாலைப்பூசை முடிந்த கையுடன் உச்சிக்கு ஏறினால், வெயில் தாழ்ந்து, செவ்வானம் பூத்து, பிறகு அதுவும் அந்திக் கருக்கலில் கரைந்து விடுகிற மட்டும்- அர்த்தசாமப் பூசை மணி கேட்கும்வரை பொழுது போவதே தெரியாமலிருக்கும். முன் நிலவு இரவுகளை ஆவலோடு எதிர்பார்த்தார்கள். அமாவாசை கழிந்தால் “நாயலச்சல் தரக்கூடிய நாலாம் பிறையைக் காண்பதிலிருந்து பிறகு பருவத்திற்கு அடுத்த நாள்வரையும் தினசரி இந்த நிலாத் தோயல் வாய்க்கும். தேர்முட்டிக்கு நேர் முன்னால் மகிழமரம் நிற்கிறது. சோழகம் தொடங்குகிற போது மகழ் பூக்கும். பெளர்ணமியன்றைக்கு மகிழின் உச்சிக்கும் அப்பால் வயல் வெளிகளைத் தாண்டி தூரத்தில் நிரைகட்டி
நிற்கிற பனைகளுக்கு மேலே தொடுவானத்தில் அந்த முழு வெண்ணெய்ப் பந்து காலித்து எழுகிற நேரம் உன்னதமானது.
கட்டுப்பத்தை வாழ்வுடன் இந்த விடலைத்தனத்திற்கு விடைதர நேர்ந்தது. தொழில்நுட்பக் கல்லூரிப் படிப்பு, பிறகு அது முடிந்த கையுடனே உத்தியோகமென்று கொழும்பு வாழ்வே நியதியாகிப் போனது.
பொதுவாக சினிமாவும் அவற்றில் வருகிற பாடல்களும் தொண்ணுாறு சதவிகிதம் ஆத்திரமூட்டவே செய்கின்றன. எனினும் சின்ன வயதிலிருந்து மனதோடு பதிந்துவிட்ட சிலதும் இருக்கின்றன தான்.
"வாராயோ வெண்ணி லாவே...'
"ஆகா இன்ப நிலாவினிலே. 罗列
99.
ஒகோ, வெண்ணிலாவே.
66 99
அமுதைப் பொழியும் நிலவே.
மிஸ்ஸியம்மா, மாயா பஜார், பிரேம பாசம், இந்த படங்களெல்லாம் எப்போதோ வந்தவை. இவை எல்லாவற்றையும் அப்போது பார்க்க
243

Page 124
சாந்தனின் எழுத்துலகம்
முடிந்திருக்கிறது. மூன்றும் ஜெமினி, சாவித்திரி நடித்தவை. ஒன்றுவிட்ட அண்ணா ஒருவர் - அந்தக் காலத்தில் ஜெமினி விசிறியாயிருந்தவர் அவர் - புண்ணியத்தில் இவற்றைப் பார்க்கக் கிடைத்தது. மற்ற. நாலாவது பாடல். வருகிற படம் சிவாஜி, யமுனா நடித்ததாயிருக்க வேண்டும். பெயர் ஞாபகமில்லை. எப்போது யாருடன் பார்த்தோம் என்பதும் நினைவில்லை. இவற்றில் அந்த பிரேம பாசம் பாடல் காட்சி அப்போது மனதிலுTட்டிய கிளர்ச்சி இன்னமும்தான் மறக்க முடியவில்லை மிஸ்ஸியம்மாவில் இருவரும் தோட்டத்தில் நின்று நிலவைப் பார்த்து பாடுவது. மாயாபஜாரில் அபிமன்யுவும் அவன் காதலியும் தோணியில் துடுப்பு வலித்தபடி அந்த த்ரில் எல்லாம் அந்தக் காலத்துடன் மறைந்து விட்டாலும், இந்தப் பாட்டுகள் இன்னமுந்தான் எங்கு கேட்டாலும் மனதை வருடச் செய்கின்றன. இதற்கெல்லாம் இந்த நிலவுதான் காரணம் என்று படுகிறது.
அம்மன் கோவில் தேர்முட்டியுடன் திருப்திப் பட்டுவிடாது, நிலா இரவுகளில் வேறு இடங்கள் தேடிப்போன நாட்களுமிருந்தன. தோட்டவெளி ஊருக்கு மற்றப் பக்கத்திலிருந்தது. புன்செய் நிலம்: புகையிலைதான் முக்கியப் பயிர். கார்த்திகையில் நட்டு மாசியில் வெட்டியபின் அநேகமாக வெறும் நிலமாக கிடக்கிற வெளி. ஒன்றிரன்டு பேர் மிளகாய், வெங்காயம் நடலாம். மற்ற நிலங்களில் ஆடு, மாடுகள் மேயும். ஆனி ஆடியில் சோழகம் கிளப்புகிற செம்புழுதியுடன் நெரிஞ்சிமுள் குத்தக் குத்தப் பொடியன்கள் கொடியேற்றுவார்கள். எட்டுமூலை, கொக்கன், பிராந்தன் பாம்பன் எல்லாம் இரவிரவாக விண் கூவும்.
புகையிலை வளர்ந்து சனைத்திருக்கிற வேளைகளில் இடமே மாறிவிடும். அலையடிக்கிற கடல் மாதிரியிருக்கும் நடு ரோட்டில் போகிறபோது கடல் நடுவில் நடக்க முடிகிற மாதிரி.
தோட்ட வெளியில் மாசி பங்குனி ஏற்ற மாதங்களாய் இருந்தன. முக்கியமாக மாசி. பாதை இருமருங்கும் சயனைத்திருக்கும் பயிர்களிடை நிலாப் பொழியும் பணியில் நீர்த்த நிலா. இந்த பனி மூட்டங்கள் நிலவுக்குப் புதுப் பரிமாணங்கள் தருவதாய் படுகிறது. புகையிலையின் பச்சை நெடியும் பனிக் குளிரும் இந்த ஒளியும் ஒர் அற்புத சேர்க்கை. அதை மாசியின் முன்னிலவு இரவுகள் மட்டுமே தர முடியும்.
244

சாந்தனின் எழுத்துலகம்
இந்த இடம் பற்றியும் ஒரு கனவு வந்தது. அதில் தோட்டவெளி பெரிய சமுத்திரமாக மாறியிருந்தது. அலை தளும்புகிற பெரிய சமுத்திரம், நடுவில் தெருமட்டும் போகிறது. கடலிலிருந்து ராட்சத டைனோஸர்கள் எழுந்து வருகின்றன. புது விதமான மரங்கள் தூரத் தூரத் தெரிகின்றன. நிலவு புதுமையான ஒளியொன்றை வீசுகிறது.
கஷரினா கடற்கறைக்குப் பிக்னிக் போய் வந்தபின் தான் அந்த கனவு வந்திருக்க வேண்டும்.
கல்லூரி எழுபத்தைந்தாவது ஆண்டுவிழாச் சமயத்தில் ஏ.எல்.மாணவர்கள் நாடகம் போட்டார்கள். 'வாழ்வெனும் தோணியிலே என்று பெயர். இவன் வில்லன். குகன், விஜயதாசன் இப்படி இன்னும் பல பேர் நடித்தார்கள். பரா, கதை வசனம். கார்த்திகேயன், ஹிரோயின். கனகநாயக மாஸ்டர் டைரக்ட் செய்தார். நன்றாகத்தான் நடந்தது. நல்ல பெயர். இரண்டு நாள் மேடையேற்றினார்கள்.
மூன்றாம்நாள் கனகநாயகத்தார் நாடகக் குழுவை தன் சொந்தச் செலவில் கஷாரினா பீச்சுக்குக் கூட்டிப் போனார். வாடகைக்கு பிடித்த தனி
பஸ் ஐந்து மணிக்கு வந்தது. கடற்கரைக்கு போய்சேர்ந்த போது மைம்மலாகிவிட்டது. அந்தத் தனிமையில், ஒரு புறத்தில் அரணாய் நிற்கிற சவுக்கந்தோப்பின் காற்றும், மறு புறத்தில் கடலுமாய் இரைந்து கொண்டிருந்தன. நீரில் இறங்கியபோது நிலவு காலித்தது. இங்கு வந்தது இதுதான் முதல் தடவை நிலவில் கடலில் நீந்துவதும் இதுதான் முதல் தடவை. நிலவு கடலின் பிரமாண்டத்தை உணர்த்தவே வந்திருந்தது. அது தனியாகப் பதிந்த நிலா.
எருமைகள் போல நீரில் ஊறித் திளைத்தவர்களை கரையேற்றியது கனகரின் கத்தல் மட்டுமல்ல; இன்னொன்றுமிருந்தது- சொறி சலியாக் கடலில் மிதக்கிற ஜன்மம். கூட்டமாய் வருமாம். பயங்கர பிராணி என்றார்கள். மேலில் பட்டால் எரிவும், சுணையும் தாங்கமுடியாதிருக்குமாம். அது காக்கை  ெச ர றி. இரத்தச் சொறி பட்டால் இரத்தம் இரத்தமாய்ச் சத்தியெடுக்குமென்றார்கள். எல்லாம் அங்கே தெல்லுத்தெல்லாக காண நேர்ந்த மீனவர் சொன்னவை. பிராணியியல் ஆசிரியரான கனகர் இன்னும் கனக்கச்சொன்னார். ஃபைலம், கிளாஸ் அது இது என்று அவர்
245

Page 125
சாந்தனின் எழுத்துலகம்
சொன்னவற்றில் இப்போது மனதில் மீதி இருப்பது சொறியின் இங்கிலீஷ்
பெயர் மட்டுந்தான். 'போச்சு கீஸ்மான் ஒஃவ் வார்.
கட்டுப்பெத்தை வாழ்வில் இந்த நிலவு புதிய அறிமுகம் கொண்டது. தென்னஞ் சோலைகளின் சலசலக்கிற கீற்றுக்களில் மின்னித் தெரிகிற நிலவு. தென்னங்கீற்றும் நிலவொளியும் எவ்வளவு அற்புதமாய் இசைவு கொள்கின்றன! பச்சைப்புல் தரைகளில் - வெள்ளை மணல் பரப்புகளில் இந்த நிலவு சுவறுகிறது.
ஒரு நள்ளிரவு. அடர்ந்த சிறிய தென்னந் தோப்பொன்றின் நடுவே அழகிய சிறு குடிசை ஓலைகளும் குரும்பைக் குலைகளும் கைக்கெட்டும் தூரத்தில், ஒலைகளுக்குள்ளால் நிலவு தாச்சி மறிக்கிறது. குடிசையில் ஒரு குடுமிக்கார மனிதனும் அவன் மனைவியும், நடுத்தர வயதினர். இவன் அவர்கள் வீட்டில் விருந்தாளியாக வந்திருக்கிற மாதிரி இருக்கிறது. குடுமிக்கார மனிதன் தென்னிலங்கைக் கிராமவாசி போலவும், தென்பாண்டி மறவர் போலவும் இருக்கிறது. தெளிவாயில்லை. அந்த மனிதனும், மனைவியும் இளநீர் வெட்டித் தந்து அன்பும் மரியாதையுமாய் உபசரிக்கிறார்கள்.
கல்லூரிக்குப் போகிற தெருவில் பாதித்தூரம் தாண்டியதும் இரண்டு பக்கமும் வயல்கள் வந்தன. உண்மையில் கட்டுப்பெத்தையைப் பரிச்சயங் கொண்டதுசுட்ட இந்த இடத்தில்தான். அதுவும் ஒரு நிலவில்தான். அட்மிஷன் கிடைத்து கல்லூரி திறப்பதற்கு முதல்நாள் இடத்தைப் பார்த்து வைக்கலாமென்று பாலாவையும் கூட்டிக்கொண்டு வெள்ளவத்தையிலிருந்து போனான். சந்தியிலிறங்கியபோது இருட்டிவிட்டது. இந்த முக்கால்மைல் தூரமும் பஸ்ஸைப் பாராமல் விரித்துக்கொண்டு நடந்தே போனார்கள். பஞ்சுவையும், சோமுவையும் முதலில் சந்தித்ததுகூட அப்போதுதான். அரவமற்ற தெருவில் வயற்கரை மதகொன்றில் நிலவிலும் நிசப்தத்திலும் லயித்தபடி சிகரெட் குடித்துக்கொண்டிருந்த அந்த இருவருமே கல்லூரிக்கு வழிகாட்டினார்கள். இரண்டு நாட்களுக்குப் பிறகு பஞ்சு இவனைக் கன்ரீனில் அடையாளம் கண்டு விசாரித்தான்.
பிறகு, இந்த வயல்வெளிகள் மனதுக்கு வலு நெருக்கமானவையாக ஆகிவிட்டன. பஞ்சுவையும் சோமுவையும் போலல்லாமல் சைக்கிளில்தான் இவன் அந்த இடத்திற்குப் போக முடிந்தாலும்கூட என்னவென்று தெரியாத
246

சாந்தனின் எழுத்துலகம்
ஒரு பூண்டின் வாசனை, அமைதிக்குக் கனம் சேர்க்கிற தவளைகளின் இரைச்சல், இருந்திருந்துவிட்டு ஒளி மங்கி மறைகிற வாகனங்கள் உருக்கிய வெள்ளியாக மதகின் கீழே பளபளக்கிற வெள்ளம்.
இந்த வெள்ளம் ஊரை நினைவூட்டும். புகையிலை இறைப்புக்கு நேரம் நெருக்கடியாகிறபோது இரவிரவாக நிலவொளியில் இறைப்பார்கள். பெரிய மாமாவின் தோட்டத்திற்கு இதற்காக அடிக்கடி போயிருக்கிறான். வேகமாக வாய்க்காலில் நீர் பாய்ந்தோடும். மெஷின் ரீங்காரம் சுருதி கூட்டும்.
இரவெல்லாம் இறைக்க மாட்டார்களா என்றிருக்கும்.
பெளர்ணமியன்றைக்கு விடுமுறை விடுவது நல்ல விஷயந்தான். இலங்கைதான் பெளர்ணமியை விடுமுறையாக்கிய ஒரே நாடோ? அது இந்துக்களுக்குப் புனித தினம். பெளத்தர்களுக்கும் என்பது முக்கிய விஷயம். வெள்ளை உடை தரித்து மக்கள் புத்தவிகாரைகளுக்குச் சென்று வருவது பார்க்க ரம்மியமாய்த்தா னிருக்கிறது.
ஏழெட்டு வருஷங்களுக்கு முன் கொழும்பிலிருந்து நண்பர்கள் யாழ்ப்பாணம் பார்க்க வந்தார்கள். நயினாதீவுக்குப் போனசமயம் இவர்களது நட்பைப் போல அன்று அதுவும் ஒரு பெளர்ணமியாயிருந்தது. கொழும்பிலிருந்து புறப்பட்டதிலிருந்து திரும்பப் போய்ச் சேர்ந்து இந்தப் பயணம் நிறைவேற்றுகிற வரைக்கும் இந்தக் குழுவின் தலைவனாக அவன்தானிருந்தான். மேற்சட்டையின்றி கோயிலுக்குள் வந்து திருநீறும் சந்தனமுமாய்ப் பூசிக்கொண்டு - யார்தான் அவர்களை அப்போது வேற்று மனிதர் என்று சொல்லியிருக்க முடியும்? - கும்பிட்டு வந்ததும், மடத்தில் அன்றிரவு புதினப் பத்திரிகையையே பாயாய் விரித்து எல்லோருமாய் அவனைச் சூழ்ந்துகொண்டு தூங்கிப் போனதும் விகாரங்களின்
வெண்காவியும், தென்னைகளும், நிலவும் கடலும் நினைவில்.
பார்க்கிற பெண்களை மனதால் அவன் நிர்வாணமாக்கி ரசிப்பதாக யாரோ ஒரு தடவை குற்றம் சொன்னதுண்டு. அது உண்மையல்ல, ஆனால் அது போன்ற ஒரு விஷயம் உண்மையாயிருக்கிறது. பகலில், புதிதாய், வடிவாய்க் காண நேர்கிற ஒவ்வோரிடத்தையும் அது நிலவில் எப்படி இருக்குமென்று கற்பனை செய்கிற வழக்கம். துர்க்கையம்மன் கோயில், சந்நிதி கோயில் கல்லுண்டாய்.
247

Page 126
சாந்தனின் எழுத்துலகம்
இந்த நிலாப்பித்து நினைவறிந்த நாளிலிருந்தே உள்ளதுதான். பிறகு தனக்கென வீடொன்று கட்ட வாய்த்தபோது அது சிறியதாகத்தான் அமைந்தாலும், நடுவில் நிலா முற்றம் வரத்தக்கதாக கஷ்டப்பட்டு வடிவமைத்தான். கட்டிட வடிவமைப்பாளனாயிருந்தது வசதியாய்ப் போயிற்று. புதுமாதிரி வீடென்று பார்த்தவர்கள் பாராட்டினார்கள். ஆனால் அது மறக்கப்பட்டு விட்ட - யாழ்ப்பாணத்தின் பாரம்பரிய - நாற்சார் வீட்டுப்
பாணியே என விளக்கினான்.
நிலவிலும் நீரிலும் ஒன்றாகத் தோய்வது கோடை இரவுகளில்தான்
சாத்தியமாகிறது. தென்னையும், கமுகும் அரண் சூழ்ந்த கிணற்றிலிருந்து அள்ளியள்ளி ஊற்றுவது சொர்க்க அனுபவம்.
கஷரினா பீச்சுக்குப் பிறகு முன்னிலாவைக் கடலுடன் சம்பந்தப்படுத்திக் கழிக்கிற வாய்ப்பு திருகோணமலைக்குப் போனபோது மட்டும் ஒரு தரம் கிட்டியிருக்கிறது - மற்றபடி மேற்குக் கரையான கொழும்பில் எப்படி அது வாய்க்கும்? ஆனால், ஊருக்குப் போவதற்காகக் காலை ரயிலில் புறப்படுகிற நாட்களில் இந்த மேலைக்கரை வித்தியாசமான ஒரு தரிசனம் தந்திருக்கிறது. கோட்டையிலிருந்து ஐந்தே முக்காலுக்குப் புறப்படுகிற ரயிலைப் பிடிக்க நாலரை ஐந்துக்கோ, சில சமயங்களில் அதற்கும் முன்போ, கரையோர ரயிலில் வந்துவிட வேண்டியிருக்கிறது. பம்பலப்பிட்டியில் வெள்ளவத்தையில், அங்குலான விலிருந்தெல்லாம் அந்த விடியலில் ரயிலேறுகிறபோதில் காலிமுகம் வரையிலும் கடலும் கூட வரும். அநேகபோதுகளில் தேய்பிறையின் இனந்தெரியாத சோகத்துடன் பின்னிலா கடலை மினுக்குவதைக் காண நேர்கிறது. உப்புக் காற்று முகத்தில் மோதும்.
எப்போதோ அப்புவுடன் காரில் மறவன்புலவுக்குப் போனது இன்னும் நினைவிருக்கிறது. அரைக்கோளமாய் வானம் கவிழ்ந்து மூடிய அந்த வெளியில் குன்று குன்றெனக் குவிந்திருந்த சூடுகளிடையில் வெள்ளைமணல் மேடிட்டிருந்தது. அந்த மண்ணும் அதன் நிறமும் அப்போதைய வயதில் அந்நியமானவை. வானத்திலிருந்து வழிந்த நிலவே வெளியெல்லாம் மணலாய்ப் பரந்தது மாதிரி இருந்தது. பெரியவர்கள் பேசிக் கொண்டிருக்க, நேரம் போனதே தெரியாமல் மண்ணில் விளையாடியதும், பிறகு புரண்டு அப்படியே தூங்கிப்போனதும்.
248

சாந்தனின் எழுத்துலகம்
கல்லூரி மைதானத்தின் கரையில் நிற்கிற பன்னீர் மரத்தின் கீழே சொரிந்து கிடக்கிற பூக்களும் பச்சைப் புற்களும் சேர்ந்து சமைத்த பாயில் சகாக்கள் புடைசூழ கொலுவேற்பதும் தேவனை ஆஸ்தான வித்துவானாக்கி அவன் குரலும் நிலவும் தரும் போதையில் கிறங்கிப் போவதும்.
ரஷ்ய இலக்கியங்களுடன் பழக்கமேற்பட்டபோது லெனின் கிராத்தையும் அதன் வெண்ணிரவுகளையும் அறிய நேரிட்டது. நிலவிரவுகள் மாதிரி இவையும் சொர்க்கத்தை பூமிக்குக் கொண்டு வருமா எனத் தெரியாதிருந்தது.
மாசியில் மட்டுந்தான் என்றில்லை - வருடத்தின் ஒவ்வொரு மாதத்திலும் நிலவு ஒவ்வொரு பரிமாணம் கொள்ளத்தான் செய்கிறது. பங்குனியில் வளர்கிறது. சித்திரையில் உச்சம் கொள்கிறது. வைகாசி அதற்குத் துணை சேர்க்கிறது. புரட்டாசி ஐப்பசியில் காண நேர்கையில் இரட்டிப்பு மகிழ்வு. கார்த்திகையிலும் அப்படியே எனினும் விளக்கீடு வந்துவிடுகிறது.
சித்திரை நிலவில் பத்திரகாளி கோயில் திருவிழா நடக்கும். வைகாசி விசாகத்தில் அம்மன் கோயில் தேர். பிறகு ஆணிப் பெளர்ணமியில் நயினாதீவில் தேர். ஆவணியில் நல்லூர் உற்சவம் வருகிறது. அநேகமாக நல்லூரில் மஞ்சத் திருவிழா பார்த்துவிட்டு நிலவில் திரும்புகையில் எல்லா வீடுகளிலும் ரேடியோக்கள் கண்டிப் பெரஹராவை அஞ்சல் செய்துகொண்டிருக்கும்.
சோழகமும் நிலவும் சாஸ்வதமாய் இருந்தால் உலகில் எந்தத் துன்பமும் அணுக முடியாது என்று படுகிறது. சித்திரையில் இவை சந்திக்கின்றன. சித்திரா பருவத்தில் இரவு மட்டுமில்லை, பகலும் சந்தோஷமானதுதான். ஊரெல்லாம் ஒவ்வொரு கோயிலிலும் சித்திரைக் கஞ்சி காய்ச்சுவர்கள். சித்திர புத்திர நாயனார் கதை படிப்பார்கள்.
இந்த வருஷம் சித்திரைக் கஞ்சி யாரும் காய்ச்சவில்லை. கதை படிப்புமில்லை. கோவில்களருகில் ஜனம் சேர்வது ஆபத்தானதாயிருந்தது. தவிர, கொண்டாட்ட மனநிலைகூட யாருக்கும் இருக்கவில்லை. பெளர்ணமி வந்தது ஞாயிறன்று. அதற்கு முந்திய ரில் பட்டணத்தில் நடந்த
249

Page 127
சாந்தனின் எழுத்துலகம்
சம்மாரத்தில் இந்த ஊரிலிருந்தே இரண்டுபேர் செத்தார்கள். அன்றிலிருந்து அங்கு ஊரடங்கு, செவ்வாய் அன்று தூரத் தூரக் கேட்ட வெடிச் சத்தங்களும் தாழப் பறந்த விமானங்களுமாய் ஊரே கிலி கொண்டிருந்தது என்னாகுமென்று தெரியாதிருந்தது. புதனன்று ஏதோ அவசர அலுவலாய்ப் போன ஜெயந்தன் பிறகு திரும்பி வரவில்லை என்று சொன்னார்கள். இவை எல்லாவற்றிற்கும் ஒத்திசைவுபோல மூன்று நான்கு நாட்களாக வானம் மேகமூட்டத்துடன் துக்கம் காத்தது.
ஞாயிறிரவு ஏழெட்டுமணிபோல் வெளியே வந்தபோது வானம் வெளுத்து நிலவு தெரிந்தது. “அற்றைத் திங்களவ் வெண்ணிலவில்.”
வரிகள் ஞாபகம் வந்தன.
1984
250

43
வாழ்க்கை
“ஏதோ பிரச்சினை போல இருக்கு.” என்றார் கடைக்காரர். திரும்பி வெளியே பார்த்தான். ஜனங்கள் ஒடிக்கொண்டிருந்தார்கள். எதிர் வரிசைக் கடைகளெல்லாம் மளமளவென்று பூட்டப்படுவது தெரிந்தது. பயமும் பரபரப்பும் சுரந்தன.
“இங்கே வா.” - அவர் சொல்லுமுதலே ஒரு உதவியாள் ஒடி வந்து வாசற் கதவுப் பலகைகளை அடுக்கத் தொடங்கினான்.
"கெதியாத் தாங்கோ.”
"அவசரப்படாம நிண்டு பாத்திட்டுப் போ, தம்பி.”
“இல்லை ஐயா, போயிடலாம்.”
ஒரே ஒரு கதவுப் பலகை மட்டும் போட இருந்தது. ஆளை விலக்கிக்கொண்டு வெளியே வந்தான்.
ஒடுகிறவர்களில் மோதிக்கொள்ளாமல் தெருவைக் கடக்க வேண்டியிருந்தது.
“என்ன பிரச்சினையெண்டு தெரியல்லை. ஆனா ஏதோ இருக்கு.” - போகிற போக்கில் சொல்லிக் கொண்டு போனார். தெருவின் பரபரப்பு பயத்தைக் கூட்டியது. எங்கோ ஏதோ சத்தமும் கேட்டது போலிருந்தது. கடைக்குள்ளேயே நின்றிருக்கலாமா? திரும்பிப் பார்த்தான். இப்போது ஒற்றைக் கதவும் மூடப்பட்டிருந்தது.
251

Page 128
சாந்தனின் எழுத்துலகம்
தன்னையறியா ஒரு விரைவு உந்தியது. முன்னால் தெரிந்த சந்தியில், மினி பஸ்கள் வேகமாகத் திரும்பிப் போய்க் கொண்டிருந்தன. தூரத்தில், ஒன்றை வழியில் நிறுத்தி அவசரமாக ஆட்கள் ஏறினார்கள்.
இப்போது பஸ் ஸ்ராண்டுக்குப் போவதை நினைக்க முடியாது. மற்ற வீதியில் திரும்பி மெல்ல ஒடினான். செருப்பு சங்கடமாயிருந்தது. தான் போகக்கூடிய பஸ் ஏதாவது வருகிறதா என்று திரும்பிப் பார்த்தபடி போனான். எல்லாம் ஏற்கனவே போயிருக்க வேண்டும் அல்லது பாதை மாறியிருக்கலாம். பின்னால், ஜனம் ஜதாகிக்கொண்டு வந்தது. தெருத்தொங்கல் அநேகமாக வெறிச்சிட்டிருந்தது.
வயதாளி ஒருவர் கையில் பாரத்தோடு கஷ்டப்பட்டுக்கொண்டு முன்னால் போனார்.
"அங்காலை பிடியுங்கோ." - தான் ஒரு பக்கத்தைப் பிடித்துக் கொண்டான்.
முன்னால் குளத்தடிச் சந்தியில் ஒரு பஸ் ஆட்களை ஏற்றிக்கொண்டு நிற்பது போலிருந்தது. அதில் போகக்கூடிய மட்டுக்காவது போகலாம். ஒட முயன்றார்கள்.
சந்திக்கு வந்ததும் வேறும் சில பஸ்கள் தெரிந்தன. கொஞ்சம் ஆறுதலாயிருந்தது. இது கொஞ்சம் பாதுகாப்பான தூரமாயிருக்க வேண்டும். பெரியவர் பார்த்து ஒன்றில் ஏறிக்கொண்டார்.
“மெத்த உபகாரம், தம்பி.”
அவன் பஸ்ஸைக் காணவில்லை. கூடிய பட்சம் தன் பாதையில் போகக்கூடிய ஒன்றினருகில் நின்றவர்களுடன் நின்று கொண்டான். சனங்களின் பதற்றம் இந்த இடத்தில் - அல்லது இப்போது - குறைந்திருப்பது மாதிரி இருந்தது. ஆனால் இன்னமும் விவரம் வடிவாகத் தெரியவில்லை.
பத்து நிமிஷமிருக்குமா?
பார்த்துக்கொண்டு நின்றபோது பஸ்காரர்கள் வந்தார்கள்.
252

சாந்தனின் எழுத்துலகம்
"ஏறுங்கோ ஸ்ராண்டுக்குப் போட்டுப் போவம்.”
"ஸ்ராண்டுக்கா?”
“இப்ப ஒண்டுமில்லையாம் அங்கை. பயப்பிடாதையுங்கோ.”
பயமாய்த்தான் இருந்தது. ஆளைப் பார்த்து ஆளும், பஸ்ஸைப் பார்த்து பஸ்சும். வந்த இடத்திற்கே வட்டமடித்து மீண்டும்,
"அது உங்கட போல இருக்குது’ - ஸ்ராண்டுக்கு வந்ததும், கொண்டக்டர் பெடியன் ஏற்கெனவே வந்து நின்ற பஸ்ஸொன்றைக் காட்டிச்
சொன்னான்.
"சீச்சி. காசு வேண்டாமண்ணை.”
அதுதான்.
இறங்கி மற்றதில் ஏறினான். இருக்க இடமிருந்தது.
இப்போது கடைக் கதவுகள் ஒவ்வொன்றாகத் திறபடத் தொடங்கியிருந்தன. எங்கிருந்தென்றில்லாமல் தெருவில் தலைகள் கூடிக்கொண்டு வந்தன. ஒரு பாட்டும் எங்கோ மெல்ல ஆரம்பித்தது.
1985
253

Page 129
44
+] ഞTL ന്റെ
சிந்தைக் கட்டிடத்து விறாந்தையோடு மினி பஸ்கள் அணிவகுத்து நிற்கின்றன. ஒரு விதத்தில் வசதிதான் என்றாலும் நன்றாயில்லை,
நகர அபிவிருத்தி பற்றியெல்லாம் இப்போது கவலைப்பட முயல்வது ஆடம்பரம், பேராசை, முட்டாள்தனம்.
ஜனத்துக்கு வழிவிட்டு தூணோடு ஒதுங்கி ஒரு பக்கமாகத் திரும்பி நின்று கொண்டான். நீளவாட்டில் எல்லாமே பார்வைக்குள் வருகின்றன. இடப்புறம் கடைவரிசை, வலப்பக்கம் பஸ் வரிசை. பட்டணம்
வடிவாய்தானிருக்கிறது இந்தக் கோணத்தில்.
தன்னுடைய பஸ் இனி எந்த நேரமும் வரலாம். "அதுதான் நல்லாயிருக்கு - கீச்சுக் குரல். குழந்தைக் குரல், வலு கிட்டக் கேட்டது. திரும்பினான்.
கடையின் கண்ணாடிச் சுவருக்கு இந்தப் பக்கத்தில் இவர்கள் நின்று கொண்டிருக்கிறார்கள். நாலுக்குமே பத்து வயதுக்குள்தானிருக்கும். பரட்டைத் தலையும் பேணியுமாய் ஐயா ஐயா என்று பஸ் பஸ்ஸாய் ஏறி இறங்குவார்கள். காய்ந்து போய் அழுக்காயிருப்பார்கள், கண்டிருப்பீர்கள்.
“நான் வாங்கினா அதுதான் வாங்குவேன்’ காட்சியறைக்குள்ளிருந்த இன்னொரு துணியைக் காட்டி மற்றப் பிள்ளை சொன்னது.
கடவுளே என்று மனதுக்குள் முனகினான். வேறென்ன செய்யலாம் இப்போதைக்கு?
254

சாந்தனின் எழுத்துலகம்
- அருமையான கதையாய் வாய்க்கும். ஆனால். சே! அந்த நாள் எப்பவோ எழுதிவிட்டார். அவர் எழுதிய கதைகளில் முதலில் நினைவுக்கு வருவது இதுதான். இப்படியான கரு அப்போதே அவருக்குக் கொழும்பு நடைபாதையில் சந்தித்திருக்கிறது. சே!
66 o 9%
அண்ணா, வாங்கோ. வாங்கோ கண்டக்டர் பெடியன் கத்தினான்.
1985
255

Page 130
45
உலகங்கள்
திறந்த கேற்றை மூடிப் போனபோதுதான் அது கண்களில் பட்டது. நாக்கிளிப் புழு. ஒரு கிழ்மையாய்ப் பெய்த மழையில் திளைத்துக் கொழுத்து, மேலே வந்திருந்தது. நெளிந்து நெளிந்து அவஸ்தைப்பட்டது. தெரியாத்தனமாய்க் காலிலோ, எறும்பு வாயிலோ, கோழியின் கண்ணிலோ பட்டாலும் - பாவம். ஒரு குச்சியால் எற்றத் தூக்கியபோது ஒரு யோசனை வந்தது. இது மருமகனுக்குப் பிரயோசனமான விளையாட்டுப் பொருளாய் அமையலாம்.
மீண்டும் உள்ளே போய், ஒரு கடுதாசித் துண்டை எடுத்து வந்தான். அதை மெல்லத் தூக்கிப் போட்டு, நோகாமல் மடித்து சைக்கிள் கூடைக்குள் வைத்தான்.
அக்கா வீட்டிற்கு வந்து சேர்ந்ததும், சரையைக் கையில் வைத்துக்கொண்டு மருமகனைக் கூப்பிட்டான். குடுகுடுவென்று ஒடி வந்த குஞ்சுவுக்கு வியப்பு தாளவில்லை.
"அம்மா, மாமா பாம்புக்குட்டி கொண்டு வந்திருக்கிறார்.” - பரபரப்பு மாறாமல் அதையே ஆச்சிக்கும் திருப்பிச் சொன்னான்.
“பாம்புக்குட்டி இல்லை ராசா, இது நாக்கிளிப் புழு.”
"கொம்மானுக்கும் வேலையில்லை, உனக்கும் வேலையில்லை” என்றபடி அம்மா,
256

சாந்தனின் எழுத்துலகம்
“தம்பி, அத்தான் நேற்றைக்கு வாறதெண்டு சொல்லிப்போட்டுப் போனவர், இன்னுங் காணேல்லை. ஒருக்கா மாமி வீட்டைப் போய்ப் பார்த்துக்கொண்டு வாறியா? - அக்காவின் கண்கள் கலங்குவன போல் தெரிந்தன.
"இண்டைக்கு வந்திடுவர். பயப்பிடாதை."
“வவனியாவிலை முந்தாநாள் ஏதோ பிரச்சினை எண்டும் பேப்பரிலை கிடந்தது.”
"மாமா, மாமா. நாக்கிளிப் புழு வெளியாலை விழப் போகுது.”
"பொறு, வாறன்” - எங்கோ தேடி ஒரு பழைய ஜாம் போர்த்தல் எடுத்துக் கழுவி, தழை உக்கின மண்ணாக நிரப்பிக்கொண்டு வந்தான்.
"ஏன் மாமா, இது?”
“இது இருக்கிறதுக்கு.” “நாக்கிளிப் புழு எங்க இருக்கும்?"
"மண்ணுக்குள்ளை.'
"அப்ப இதை என்னெண்டு பிடிச்ச நீங்கள்?’ “வெளியிலை வந்தது, பிடிச்சன்." "ஏன் வெளியிலை வந்தது?”
“மழைக்கு வந்திருக்கும். என்றபடி புழுவைப் போத்தல் மண்மேற் போட்டான்.
"இனிப் பார், இது துளைச்சுக்கொண்டு உள்ளுக்குப் போகும்."
“எப்பீடி? அதுக்குக் கையிருக்கா."
“இல்லை, தலையாலை துளைக்கும்.”
“அதின்ர கண்ணுக்குள்ளை மண் போகாதே?”
“அதுக்குக் கண்ணில்லை.”
குஞ்சு, போத்தலைத் தூக்கிக் கட்டிலில் வைத்துவிட்டுத் தானும்
257

Page 131
சாந்தனின் எழுத்துலகம்
அதையே பார்த்தபடி பக்கத்தில் குந்திக் கொண்டான்.
அக்கா வந்தாள். "போறதெண்டா, வெயிலுக்கு முன்னம் போட்டுவாவன்?”
& Ꮣ 99
'நேற்றுப் பின்னேரம் அங்கயிருந்து வரப் பிந்தியிருந்தா மாமி வீட்டிலை நிண்டிருப்பர். ஆனா, விடிஞ்சு இவ்வளவு நேரமாச்சே."
அக்காவைப் பார்க்கப் பாவமாயிருந்தது. “வராட்டி, தபால் ஏதும் வந்ததோ எண்டு கேள்.”
"மாமா, துளைக்குது.” "பொறு, தேத்தண்ணி கொண்டு வாறன், குடிச்சிட்டுப் போகலாம்.” “ஹய்யா. போகுது மாமா.”
“போத்திலைத் தட்டாமல் பார்.” தேநீரைக் குடித்துக்கொண்டிருக்கும் போது குஞ்சு கேட்டான். "மாமா, இது எப்பிடிக் கத்தும்?”
GG
அது கத்தறதில்லை ராசா.” “என்ன சாப்பிடும்?” “மண்தான்.” "இஞ்ச பாருங்கோ, எவ்வளவு போட்டுதெண்டு.”
அரைவாசிக்கு மேல். அம்மாவிடமும் அக்காவிடமும் சொல்லிக்கொண்டு புறப்பட்டான். "வடிவா விசாரிச்சுக் கொண்டு வா.” சைக்கிளை எடுத்துக்கொண்டு புறப்பட்டபோது, படலையடியில் மோட்டார் பைக் சத்தம் கேட்டது.
அத்தான்தான்.
258

சாந்தனின் எழுத்துலகம்
உள்ளே திரும்பி, "வந்திட்டார்.” என்றான், அக்காவிடம். "ஏதும் பிரச்சினையோ? ஏன் பிந்தினது?” - என்றபடி முகம் மலர்ந்த அக்கா வந்தா.
"அப்பா. படியேறிக்கொண்டிருந்த அத்தானை நோக்கிச் சந்தோஷமாய்க் கத்தினான், குஞ்சு
“நாக்கிளிப்புழு, முழுக்க உள்ளுக்குப் போட்டுது.”
1986
259

Page 132
46
6. T
அநேகமாக எல்லோரும் அப்படித்தான் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். பிழையான அணுகுமுறை இது, அடிப்படையையே ஆட்டங்காட்டுவதுபோல. எல்லோருக்கும் உணர்ச்சி இருந்தது - அதற்கென்ன குறை? - அது மட்டும் போதாது ஏதாவது செய்தாக வேண்டும் என்கிற தீவிரம் இருக்கிறது. அதனால்தான் இங்கே இப்படிக் கூடியிருக்கிறார்கள். என்றாலும் ஆதார நோக்கத்தைச் சரியாகப் புரிந்துகொண்டதாகத் தெரியவில்லை. அதைப் புரிந்துகொள்ள வேண்டும். சரியாக நடைமுறைப்படுத்த வேண்டும். அப்போதுதான் அர்த்தம் இருக்கும்.
பழக்கப்பட்டுப்போன சொற்றொடர் என்பதாலா? பழகிவிட்ட செய்முறை என்பதாலா? - ஏன் ஒவ்வொரு பிரதிநிதியும் அப்படித் தவறான பெயரையே பாவிக்கிறார்? தலைமை வகித்த தோழர்களைக் கவனித்தான். அவர்கள் இந்தத் தவறான பிரயோகத்தை அவதானித்திருக்காமல் இருக்க முடியாது. ஏன் திருத்தவில்லை? பிறகு சொல்லிக்கொள்ளலாமென்று இருக்கிறார்களா? அல்லது எந்தப் பெயரிட்டு அழைத்தாலென்ன, போராட்டம் சரியான முறையில் முன்னெடுக்கப் பட்டால் சரி என்றிருக்கிறார்களா?
என்றாலும் தன்னால் அப்படி இருக்க முடியவில்லை. இந்த வேற்றுமை - வெறும் சொற்களிலல்ல - செயற்பாட்டின் அடிப்படையிலேயே தங்கியிருக்கின்றது என்பதைக் குறிப்பிடத்தான் வேண்டும். வெகு ஜனங்களின் பிரதிநிதிகளான இவர்கள், போராட்ட வடிவையும் பெயரையும்கூடச் சரியாகப் புரிந்து கொள்ளத்தான் வேண்டும்.
260

சாந்தனின் எழுத்துலகம்
தன்னுடைய முறை வந்தபோது, பேச்சின் ஆரம்பத்திலேயே அதைக் குறிப்பிட்டான்.
". இங்கே பேசிய பெரும்பாலான பிரதிநிதிகள் இதை ஒரு ஹர்த்தால் என்றும், துக்கதினம் என்றும் குறிப்பிட்டார்கள். ஆனால் அது தவறு. நாங்கள் அநுஷ்டிக்கப் போவது எதிர்ப்பு தினம். எங்கள் எதிர்ப்பை - இனப்படுகொலைக்கெதிரான மக்கள் எதிர்ப்பை - அகில உலகிற்கும் எடுத்துக்காட்டப்போகிற தினம் அது. மக்களைப் போராட்டத்திற்காகத் தயார்படுத்துவதன் முதற்படி. ஆகவே, ஜூலை இருபத்தைந்தாம் தேதியை துக்க தினமாக - மன்னிக்கவும் - எதிர்ப்பு தினமாகவே நாங்கள் உலகிற்குக் காட்ட வேண்டும்.”
கூட்டம் முடிந்த பிறகு, விறாந்தையில் யாருடனோ பேசிக் கொண்டிருந்தபோது தணிகாசலம் வந்தார்.
"நீங்கள் சொன்னது சரி' மெல்லச் சிரித்தார்.
". எனக்கு அசோகமித்திரனுடைய கதையொன்று தான் ஞாபகம் வந்தது.”
92
'ரிக்ஷா?. "ஆரிஷ்கா'
1987
261

Page 133
47
யுகங்கள்
அரைக்கோளமாக வானம் கவிந்து கிடக்கிறது. வெள்ளைப் பிசிறில்லாத நீலம், பச்சைக் கம்பளத்தை மூடி, கம்பளத்தின் மேற்பரப்பு மஞ்சள் மயம், இப்படித் தெட்டத் தெளிவாக பட்டைபட்டையாக நிறங்கள் சந்திக்குமா? ஒரளவுக்கு செயற்கைத்தன்மை வந்து விட்டதாகக் கூட இருந்தது இந்த இயற்கைக்கு. பதினொரு மணி வெய்யிலில் இந்த நிற வார்ப்புகள் இப்படியிருந்தன. கோளத்தின் விட்டப் பரப்பின் நடுவில் கறுப்பு நாடாவாகத் தெரு. அதில் கண்ணுக்கெட்டிய தூரத்திற்கு ஒரே ஒரு மனுக்கணமாகத் தான்தான் என்பதுகூட உறைக்காதிருந்தது.
இயந்திரம் சீரான லயத்தில் ஒடிக் கொண்டிருக்கிறது. ஒரு சைக்கிளிலும் சற்று அதிகப்படி வேகம், கிடங்குகளைத் தவிர்க்க வசதி.
சனல் பூவின் இதமான வாசம் துணையாக வந்து கொண்டிருந்தது. காற்று வழித்துணை வரும் நாயைப்போல. கூட வரும். எங்கோ போகும். பிறகும் வரும், கொஞ்ச தூரம் மீண்டும் கூட இப்படி இருந்தாற் போல ஒருக்கால் மக்கிப்புழுதியைச் சுழற்றி முகத்தில் வீசிவிட்டு ஓடியது. இடக்கையால் மூக்கையும் உதடுகளையும் துடைத்துக் கொண்டான். காற்றில்லாமல் வெயில் சுடும் போல இருந்தது. தலையைத் தொட்டுப் பார்த்தான். சுட்டது. ஹெல்மெட் எல்லாம் மறந்தாயிற்று. அதொன்றுதான் இல்லாத குறை.
நீலமும் பச்சையும் சந்திக்கிற வெளிவட்ட விளிம்பில் பனைகள்
262

சாந்தனின் எழுத்துலகம்
நிரைகட்டி நின்றன. இடதுபக்கம் வெகுதொலைவில் அம்மன் கோவிலின் கோபுரமும் தேர்முட்டியும் பொம்மைகளாய்த் தெரிந்தன. ஒட்டித் தெரிந்த சில ஒட்டுக் கூரைகள்.
எதிரே இன்னொரு மோட்டார் சைக்கிள் வந்து கொண்டிருந்தது. இரண்டுபேர் வலுவேகமாக புழுதியையும் புகையையும் மணக்கவிட்டு, விறுக்கெனத் தோன்றி மறைந்தார்கள்.
தெருக்கரையில் பழைய காரொன்றின் கோது கறள்கட்டிக் கிடந்தது. இதை யாராவது இன்னும் ஒரமாகத் தள்ளினால் நல்லது. வலப்பக்கம் குட்டையில் இரண்டு கொக்குகள் மெல்ல மெல்ல நடந்து கொண்டிருந்தன. இன்னும் நீர் இருக்கிறது - இந்த வெயிலிலும்.
புர்ரென்று ஒரு பெரிய கருவண்டு சணல் பூக்காட்டிலிருந்து விடுபட்டு அவன் முகத்தில் மோதுவதுபோல வந்து திரும்பியது. என்ன நினைத்ததோ, கூடவே கொஞ்சத்தூரம் மிதந்து வந்து இன்னொரு வட்டம் போட்டு விலகிப் போனது. ஒரு மடம். அதற்கடுத்தாற்போல வடக்கே ஒரு திட்டி. சாம்பல் மேடு, இன்னுஞ் சற்றுத் தள்ளி சிலுவைப் பாத்தி.
தெரு இப்போது மேடாகியது. கொஞ்ச தூரத்தில் மதகு. பாதையின் சரி பாதித் தூரத்திலிருக்கிற மதகு. பாலமென்றால் இன்னும் பொருத்தம். வலப்புறக் கைப்பிடிச் சுவருக்கப்பால் கட்டுகளும் அணைக்கதவுகளும்
வரிசையாய்த் தெரிந்தன.
கடற்காகமொன்று பாலத்தைத் தாண்டிப் பறந்தது. குறுக்கே தெரியாத
இன்னுமொரு கடற்பறவைக் கூட்டம் மிதப்பதுபோல, சணல் வயல்களைத் தாண்டி சற்றுத் தூரத்தில் சில மாடுகள். இந்த இடத்திலிருந்து வயற்காரர்கள் விதைக்காமல் விட்டிருந்தார்கள். கிடைச்சியும், புல்லும் வரம்புமாக இருந்தது. எதிர்ப் பக்கத்தில் பனைகள் வளர்ந்துகொண்டு வந்தன.
இயந்திரத்தின் ரீங்காரத்தையும் காற்றின் சுருதியையும் மீறி இன்னுமொன்று புலனிற் தட்டியது. எச்சரிக்கையுற்றவனாய் அண்ணாந்து முன்னால் ஒரு வட்டம் பார்த்தான். அது காகம். என்றாலுங் கேட்டது.
பின்னால் திரும்பி.
அந்தா! பின்னால் வலப்புறத்து வான் நடுவில் அது அந்த அழுக்குப்
263

Page 134
சாந்தனின் எழுத்துலகம்
பச்சைத் தும்பி. தன்னை நோக்கித்தான் வருவதுபோல, சத்தம் இப்போது
தெளிவாயிருந்தது. எக்கச்சக்கமாக மாட்டிக் கொண்டாயிற்று.
துளைக்கும்போது எப்படியிருக்கும், கடவுளே.
வேறு வழியில்லை. கைப்பிடியைப் பலமாகத் திருகினான். எதிரே பனங்கூடல் பெரிதாகி வந்தது. முகப்பிலிருந்த சிறு கோவில் தெளிவாகத் தெரிந்தது. இயந்திரத்துக்குப் போட்டியாய் இதயம். பின்னால் சத்தம் பலத்துக்கொண்டு வந்தது.
1987
264

48
இன்னொரு வெண்னிரவு
இரவு ஏழரை மணி வெயிலில் எங்கள் நிழல்கள் நீண்டு விழுந்திருந்தன.
அது, வெண்ணிரவுகளின் காலம். லெனின்கிராத் நகரின் நெவஸ்கி நெடுஞ்சாலையிலிருந்து பிரிந்த ஒரு தெருவில் நாங்கள் நடந்து கொண்டிருந்தோம். நான், அமிதாக்கா, துளசி, மெஹம்மட்
நான், நான்தான். அமிதாக்கா கொழும்புப் பக்கம், சிங்களம் தாய்மொழி. உண்மையில் எனக்கும் துளசிக்கும் ஒர் அக்கா மாதிரியே இருந்தா. துளசிக்கு, தமிழ்நாடு. சென்னை. ஆரம்பத்தில் துளசிக்கும் அமிதாக்காவுக்கும் இடையில் ஒர் இணைப்புக்கண்ணியாக நான் இருந்தேன். ஆனால் என்னையும் மேவி, வலு கெதியில் ஒரு உறவு அவர்களைப் பிணைத்தது எனக்கு ஆச்சரியமாய்ப் போயிற்று. எனக்கு அதிகம் உற்றவர் எவர் என்று தெரியாதிருந்தது. அடுத்து மெஹம்மட் ரோசாப்பூ நிறமும், கறுத்த சுருள்முடியும், பூனைக்கண்ணும், சிவப்பு உதடுகளும் கொண்ட டுனிஷியன். துளசியின் நண்பன். இந்தக் கதைக்கு சம்பந்தமில்லை, என்றாலும் அன்று கூட இருந்தான்.
ஐஸ்கிரீமாகக் குடித்து அலுத்து, தேநீர்த் தவண்டையில் புலோச்னயா ஒன்றுக்குள் நுழைந்து மொறுமொறுக்கிற புதுப்பாண் வாசனையை ரசித்தபடி வரிசையில் நின்று, கறுப்புத் தேநீரும் பானுமாய் மேசையடிக்கு வந்து வேலையை முடிக்குமட்டும் ஒருவரும் பெரிதாக ஒன்றும் பேசவில்லை.
265

Page 135
சாந்தனின் எழுத்துலகம்
பிறகு வெளியே வந்தபின் துளசி சொன்னாள் :
“என்னதானிருந்தாலும் இந்த ஜோர்ஜியத் தேயிலை எல்லாம் எங்கள் தேயிலைக்குக் கிட்ட வர முடியாது.”
"உண்மை.” என்றாள் அமிதாக்கா, “உலகிலேயே இந்தியத் தேயிலைதானே திறந்தேயிலை.”
“என்ன சொல்கிறாய், துளசி.?”நானும் அமிதாக்காவும் ஏககாலத்தில் கேட்டோம்.
1988
266

49
அஸ்பெஸ்ரஸ்
LIலாவிடம் பெரிதாக ஒரு மாற்றமும் தெரியவில்லை. கொஞ்சம் ஊதியிருந்தான்; நிறமும் கொஞ்சம் பெயர்ந்திருந்தது. தமிழை போலவே பேசினான். அவனது மனைவியும்தான்.
“போய்ப் பத்து வருஷமாச்சு. இப்பதான் வர முடிஞ்சுது.”
“போன செப்டம்பரிலும் வெளிக்கிட்டு வர முடியவில்லை.”
வசந்தி சொன்னாள்.
". அது நல்லதாய்ப் போச்சு.”
“நல்லதுதான் வந்திருந்தா, ரொம்ப கஷ்டப்பட்டிருப்பியள்.” என்றான் சிவாவும்.
“எல்லாம் உடனுக்குடனை அங்கை டீ.வி.யிலை பாத்த நாங்கள்.”
“கடவுளே.கடவுளே. என்று உங்கள் எல்லோருக்குமாகக் கும்பிட்டுக் கொண்டிருந்ததைவிட வேறென்ன செய்யணும்?.-என்றாள் வசந்தி,
சிவா புன்னகைத்தான்.
" ஆனாலும், இப்ப எங்களுக்கென்று ஒரு அடையாளம் வந்திருக்கு. இலங்கைத் தீவின் தமிழர்கள் என்று சொல்றதிலே ஒரு பெருமையும் இருக்கு.”
267

Page 136
சாந்தனின் எழுத்துலகம்
-பாலா, இதை ஆங்கிலத்தில் சொன்னான். அந்த மொழியின் சொந்தச் சூழல் அவன் உச்சரிப்பை மாற்றியிருந்தது. இது நல்லது.
“அந்த அடையாளத்திற்கு இங்கே விலை கொடுத்தோம்’-சிவாவும் ஆங்கிலத்திலேயே சொன்னான்.
ஈஸ்வரி தேநீரைக் கொண்டு வந்ததும் அவளை அவர்களுடன் பேசவிட்டு விட்டு, “எக்ஸ்யூஸ்மி.” என்று சிவா ஏதோ அலுவலாக எழுந்து உள்ளே போனான்,
“இது எப்ப கட்டினது? எண்பத்தி மூன்றா?.”
- வசந்தி, கடிதங்களை நன்றாக நினைவில் வைத்திருக்கிறாள்.
“ஏதோ, கட்டி முடிச்சாச்சு. அதுக்குப் பிறகு வெள்ளைகூட அடிக்க முடியேல்லை. ஒவ்வொரு பிரச்சனையா.”
"அஸ்பெஸ்ரஸே போட்டிருக்கீங்க?.”
-பாலா குறுக்கிட்டான்.
* ஷெல்லுக்குக் கொங்கிறீற்கூடத் தாங்காது.” என்றாள் ஈஸ்வரி.
"அதில்லை. இது ஆக்களுக்குக் கூடாது. நுரையீரலைப் பழுதாக்கிக் போடும். அங்கு இதெல்லாம் எப்பவோ தடை செய்தாச்சு போட்டிருந்த இடங்களிலும் கழட்டி மாத்தியாச்சு.”
“என்னது?. -என்றபடி சிவா வெளியே வந்தான்.
“என்னடாப்பா, இதை போய்ப் போட்டிருக்கிறாய்?”
-பாலா கூரையைக் காட்டித் திரும்பவும் சொன்னான்
"எவ்வளவு ஆபத்தான விஷயம்.
வந்த விருந்தினர்கள் என்ன நினைப்பார்களோ என்ற பிரக்ஞைகூட இல்லாதவன் போல, சிவா பலத்துச் சிரிக்க ஆரம்பித்தான்.
1988
268

50
உயிர்ப்பு
சிந்தரத்தைக் கண்டதும், ரவியின் மனைவி அடக்க முடியாமல் அழ ஆரம்பித்தாள். அவனுக்கும் விம்மல் பொருமியது. ரவியின் மக்களிருவரும் விடலைப் பருவம் - சுந்தரத்தின் அருகில் வந்து நின்று கேவினார்கள்.
6. ஒ9 அப்பாவைப் பாத்தீங்களா, மாமா?.
மூத்தவன் உடல் அலங்கரிக்கப்பட்டு, பேழையுள்ளிருந்தது. தூங்குவது போல அந்த முகம். வழமையான முறுவல், அவன் வாழ்க்கை இப்படி முடியுமென்று யார்தான் எதிர்பார்த்தார்கள்? துடிப்பும் துணிச்சலும் நம்பிக்கையுமாய் வாழ்ந்தவன் ரவி. சாவையும் அப்படியே எதிர்கொண்டான் என்பதை இம்முறுவல் நிரூபித்திருக்கிறது.
தலைமாட்டில் குத்துவிளக்கு, சாம்பிரானிவர்த்தியும் வாசனைத் தைலமும் அந்த இடத்தைத் தம் மணங்களால் நிரப்பியிருந்தன. எதிர்பாரா அதிர்ச்சியால் தளர்ந்து போயிருந்த சுந்தரத்திற்கு இச்சூழல் தலைசுற்றச் செய்வதாயிருந்தது.ரவியின் மனைவியையும் மக்களையும் என்ன சொல்லித் தேற்றலாமென்று தெரியவில்லை. எப்படி ஆறுதல் கூற முடியும்?. பையன்களிருவரையும் அணைத்தபடி திரும்பினான்.
உற்றாரும் உறவினருமாய்க் குழுமியிருந்த கூட்டங்களிலிருந்து விடுபட்டு, மூலையிலிருந்த தனிக்கதிரையொன்றிற் போயமர்ந்தான். மூக்கைச் சிந்தி, முகத்தை மீண்டும் துடைத்து.
ரவி அவனுக்கு வெறும் நண்பன் மட்டுமல்ல. உடன்பிறவா சகோதரன்
269

Page 137
சாந்தனின் எழுத்துலகம்
போல. அயல். ஒன்றாகவே பள்ளிக்குப் போகத் தொடங்கி.
படிப்பை முடித்தது, வேலை கிடைத்தது. கல்யாணம் செய்து கொண்டது. எல்லாம் ஏறத்தாழ ஒரே சமயத்திலேயே, ஒத்த பாதையும் ஒத்த அனுபவங்களும் உறவை நெருக்கின.
கடந்த ஒரு வாரமாகக் கொழும்பில் நின்றுவிட்டு, இன்று மத்தியானம் வீட்டுக்குத் திரும்பியபோது இந்த இடிச் செய்தி. கடைசியாக ரவியின் முகத்தையாவது ஒரு தடவை பார்க்க முடிந்ததில் ஒரு மயிரிழை ஆறுதல், உடைகளைக் கூடச் சரியாக மாற்றிக் கொள்ளாமல் இங்கு ஒடி வந்திருக்கிறான்.
குருக்கள் வந்தாயிற்று. கிரியைகளுக்கு ஆயத்தம். தானும் போய்க் கூடமாட ஏதாவது செய்யத்தான் வேண்டும். ஆனால் சுந்தரத்தால் எழவே முடியாத மாதிரியிருந்தது. இருந்த இடத்திலேயே பார்த்துக் கொண்டிருந்தான்.
ரவியின் மக்கள் தோய்ந்து, வேட்டி கட்டி, நெற்றியில் நீறும் மார்பில் பூனூலுமாய்.
ரவிக்கும் சுந்தரத்திற்கும் ஒரேயொரு வித்தியாசம் - கல்யாணமாகிப் பதினைந்து வருஷமாகியும் சுந்தரத்திற்கு இன்னும் பிள்ளைகளில்லை. ரவிக்கு இவர்களிரண்டு பேரும், மூத்தவன், சரியாக ரவி மாதிரி. அதிலும் இங்கிருந்து பார்க்கும்போது ரவியேதான்! ரவிசாகவில்லை.
அந்தா, அது ரவிதான் - அவன் மிகுதி, அல்லது பகுதி. அவர்களில் ரவி இருக்கிறான். தங்கள் தந்தை தந்ததை அடுத்த சந்ததியிடம் அவர்கள் கையளிப்பார்கள்.
அப்படியே உயிர்க்கொடி அவர்களூடு படரும். ரவி நீடு வாழ்வான்.
இருந்தாற்போல சுந்தரம் உணர்ந்தான் - தன் சங்கிலியை யார் தொடர்வார்கள்? அடுத்த கணு?
உயிரெனும் அந்த உந்நதச் சொத்தை அவன் எவரிடம் கையளிப்பான்? தன் மூதாதையர் தனக்களித்ததை?.
அவனுTடு அக்கொடி தொடராது. இறந்தவன் ரவியல்ல, தான் தான்!
1989
270

51
தலைமுறைகள்
Tெதிரிலும் வலத்திலும் கண்ணுக்கெட்டிய தூரம் வயல்வெளி. வருடத்தில் பாதி நாட்கள் வரண்டுப்போய்ப் பாலைவனங்களையும் ஸ்தெப்பிகளையும் கற்பனை பண்ண செளகரியமாய்க் கோலங்காட்டுகிற வெளி.
தொலைவில், வயல் நடுவே, பத்திரகாளியம்மன் கோயிலும் பக்கத்தில் தேர்க்கொட்டகையும், இங்கே இவர்கள் வகுப்பில் செய்கிற மாதிரி உருவங்கள்போல. கோயிலருகே ஒடுகிற தெரு கண்ணில்படாது. ஆனால் இருந்திருந்துவிட்டு அதில் போகிற வாகனங்கள் மட்டும் சவர்க்காரச் செப்புகளாய்த் தெரிகின்றன.வயல்வெளியின் முடிவில், பெருவரம்பாய் மீண்டும் பனைகள்.
கல்லூரி மனதிலோடு சனைத்துப் படர்ந்திருக்கின்ற வேம்பு, மாடி ஜன்னல்வரை வந்திருக்கிறது. எட்டித்தொடலாம் போலக் கொப்புகள்; எப்போதும் காற்றிலசைந்தபடி, காற்று, இங்கே வற்றாது வீசும். எல்லாநாளும் எல்லா வேளையும் ஓயாமல் சிலுசிலுக்கும். வெளிச்சத்திற்குக் கேட்கவேண்டியதில்லை. எந்த மழை மூடலிலும் மின்விளக்கே தேவைப்படாது. வரைதலுக்குக்கூட
இதெல்லாவற்றிலும் முக்கியமானதும் இருந்தது; அமைதி. காற்றிலசையும் கிளைகளுக்கும் இருந்திருந்து விட்டு எங்கோ கரையும் காக்கைகளுக்கும் துணையாய் அவன் குரல்தான் அதனைக் குலைக்கும்.
271

Page 138
சாந்தனின் எழுத்துலகம்
சூழலோடு இசைந்துபோய், அடுத்த வகுப்பிற்கான பாடத்தை இரைமீட்டபடி இருந்தவன், படிகளில் மாணவர் ஏறிவரும் அரவங்கேட்டுத் தயாரானான். முதலாம் ஆண்டுக்கு நிர்மாணத் தொழில்நுட்பம் இப்போது.
பேச்சுக்களும் சிரிப்புக்களும் கரைந்து காலடி ஓசைகளே நெருங்கின. வழமைபோல் ஜெயகுமாரின் தலை முதலில் தெரிந்தது.
“மானிங் ஸார்’
N
"குட்மானிங், உள்ள வாங்க”
எல்லோரும் வந்து அமரும்வரை காத்திருந்தான்.
இந்த மட்டத்தில் வந்து கற்பிப்பதில் இரண்டு சவால்கள். பரீட்சையே குறியாய் இதுவரை பழகியவர்களுக்கு, சுயசிந்தனையே ஆதாரமாய்க் கொள்ளவேண்டிய பரப்புகளைப் பரிச்சயம் பண்ணிவைக்க வேண்டியிருக்கிறது. மற்றது இவ்வளவு நாளும் உயர்தர வகுப்போ சாதாரணதர வகுப்போ வரை- தாய்மொழி மூலம் படித்திருப்பார்கள். இங்கே, இப்போ ஆங்கிலமொழி மூலம்.
எங்கள் நாட்களைப் போலில்லை. இருபதுவருஷத்தில் எவ்வளவு
மாற்றம்.
எவ்வளவுதான் முதலில் அறிமுகப்படுத்தி பின்னர் குளிகைகளாகக் கொடுத்தாலும் மொழியையும் விளக்கி அது சுமந்துவரும் பொருளையும் புரிந்துகொள்வதென்பது இவர்களுக்குக் கொஞ்சம் சிக்கலாய்த்தானிருக்கிறது.ஆரம்பத்தில்,
"தொடங்கலாமா?.” எழுந்து முன்னால் வந்தான், இன்று. 'டாம்ப் புரூஃபிங் கட்டங்களுக்கும் கட்டங்களுக்குள்ளும் ஈரலிப்பு ஏன் பாதகமானது? அது எவ்வெவ்வாறு ஊடுருவும்? எப்படி அவற்றைத் தடுக்கலாம்? மூன்று அடிப்படைகளிலும் விளக்கவேண்டும்.
அதற்கு முதல், ஆங்கிலம்.
"டாம்ப்-என்றால் என்ன?”
"அண்ணக்கட்டு.”
272

சாந்தனின் எழுத்துலகம்
"அது டாம், 'இது டாம்ப்'- இரண்டு சொற்களையும் எழுதிக் காட்டினான்.
“இரண்டாவதுக்கு என்ன அர்த்தம்?"
தானே சொல்ல வேண்டி வந்தது; "ஈரம் ஈரலிப்பு.சரி, புரூஃப் என்றால்? “நிறுவல்.’கடைசி வரிசையிலிருந்து சுரேஷின் குரல். "நல்லது, அது ஒரு கருத்து. ஆனா இங்கே வேறு-தொடர்ந்தான்
-'தடை என்று சொல்லலாம். தடைகாப்பு.சரி, அதுக்கொரு
உதாரணம்?”
-கேள்வியுடன் கைக் கடிகாரத்தைப் பார்த்தான்.
பதில்கூட அங்கே இருந்தது. இருக்கிறது, இருக்கும். அநேகமாக எல்லோர் கைகளிலுமே கடிகாரம், நாலு விநாடிகள்.
“®ດງn?.”
திரும்பினான். தண்ணிரா, அதிர்ச்சியா?
"புல்லட் புரூஃப்
1989
273

Page 139
52 குயில் வீடு
இருந்தாற் போலக்கேட்ட குண்டுச் சத்தத்தில் திடுக்கிட்டான்.
அந்தப் புள்ளிக்குயிலும் திடுக்குற்றுச் சிலிர்த்துக் கொண்டது. தலையை உயர்த்தி, செம்மணிக் கண்களை உருட்டிப் பார்த்துவிட்டு, குழை அர்த்திக்குள் ஊர்ந்து மறைந்தது.
இந்த மரம் பலமாடிக் கட்டிடம் போல் அவனுக்குப் படுகிறது. பறவைகளின் பலமாடி வீடு. அடிமரம் ஒரே நேராய் நெடுத்திருக்க, ஆளுயரத்திலிருந்து கொப்புகள். ஒவ்வொரு கணுவிலும் எல்லாப்பாட்டிலும் கிளைகள், கிடையாக வளர்ந்து பரவி. இதற்கு ஆளுக்கொரு பெயர் சொல்கிறார்கள். பக்கத்து வளவில் மதிலோடு நிற்கிறது. பயன் என்னவோ இந்தப் பக்கம் சித்தப்பா வீட்டுக்குத்தான் அதிகம் என்று படுகிறது. காலை வெயிலில் ஒரு பொட்டுக்கூட இந்தப் போர்ட்டிகோவில் விழ விடுவதில்லை.
சத்தம் மீண்டும் கேட்டது. குண்டல்ல; ஷெல். அடுத்தடுத்து இரண்டு. இன்று வேளைக்கே தொடங்கியாயிற்று. வீட்டைப் பார்க்க வெளிக்கிடவே முடியாதுபோலப் பட்டது.
படியில் உட்கார்ந்தான். இன்னும் கேட்கிறதா?
. இல்லை. பிறகு காணவில்ன்ல. நின்று விட்டதாகத்தான் படுகிறது. பெரிய பிரச்சனை இல்லை போலும். இன்னுங் கொஞ்சம் பார்த்துவிட்டுப்
புறப்படலாம்.
274
 
 

சாந்தனின் எழுத்துலகம்
இந்த மரத்தில் குயில்களைத்தான் அவன் கண்டிருக்கிறான். இரண்டு கருங்குயில்களும் இரண்டு புள்ளிக் குயில்களும் என்றொரு கணிப்பு. அது எவ்வளவு சரியென்று தெரியாது. எங்கோ அவை போகும், வரும். ஆனால் வாசம் இங்குதான். பாம்புகள் போல வளைந்து ஊர்ந்து பழந்தேடி உண்டுவிட்டு, ஒதுங்கிச் சிறகடிக்கும் வீடு இதுதான் அவற்றிற்கு. குயில்களின் இந்த வீடு எவ்வளவு அழகு எவ்வளவு நிம்மதி இரவிலுங்கூட சிலசமயம் சிறகடியும் குரலொலியும் கேட்கும். இந்த மூன்று வாரப் பழக்கமாகிவிட்டது.
சத்தங்கள் கேட்ட திக்கில்லாமல் அவன் வீடு. இப்படிச் சத்தங்கள் கேட்கத் தொடங்கிய இந்த ஒரு மாதத்தில், அவன் அயலில் ஐந்தாறு, வீடுகள் அநியாயமாய்ப் போயின. கிடைத்ததை எடுத்துக்கொண்டு அவனும் குடும்பமும் இங்கே வந்தார்கள். விமானங்கள் ஒரு தடவை வட்டமிட்டுப் போய் அடுத்தாட்டம் திரும்பி வருவதற்குள் அவசர அவசரமாக ஓடி வந்தார்கள்.
வீடு என்ன கதியோ, இப்போது? இடையில் ஒரு தரம் மட்டும் போய்ப் பார்த்துவிட்டு வர முடிந்தது. ஒவ்வொரு நாளும் காலையில், "ஒருக்கால் பாத்திட்டு வாறன்.” என்று புறப்படுவான். மனைவி மக்கள் மறிக்க மறிக்க ஏதோ சொல்லிச் சமாதானம் செய்துவிட்டுப் புறப்பட முடியும். ஆனால், வீட்டடிக்குப் போய்,
"சந்திக்கு அங்காலை போறது புத்தியில்லை; போகாதையுங்கோ.” என்பதைக் கேட்கிற போது, நெஞ்சில் கணக்கிற வேதனையும், சைக்கிள் உழக்கிய களைப்புமாகத் திரும்ப நேரிடும்.
செய்யக் கூடியதைச் செய்துவிட்டு, ஒய்ந்து - அல்லது ஒடிந்து - உட்கார்கிற நேரங்களிலெல்லாம் இந்த மரந்தான் ஒரு உலகாய் அவன்முன் விரிகிறது.
இருந்தாற் போல அந்தச் சத்தம். மீண்டும் இது. வலுகிட்ட இல்லை; இது குண்டுமல்ல, ஷெல்லுமல்ல. மதிலுக்கு அந்தப் பக்கத்தில்.
ஒவ்வொரு ஒலியுடனும் மரம் ஒரு தடவை நடுங்கிக் குலுங்கியது. பழுத்த இலைகள் சொரிந்தன. இந்த மரத்தின் அடியில் விழுகிற கோடரியின் சத்தம் அவன் திகைத்தான். என்ன இது? தறிக்கிறார்களா?. ஏன்? பதுங்கு குழி
275

Page 140
சாந்தனின் எழுத்துலகம்
மூடக்கூட இது உதவாதே?
குயில்கள் எங்கே போயிருக்கும்? இனி எங்கே போகும்?. தாங்க முடியாதிருந்தது.
மதிலால் எட்டி, தறியாதையுங்கோ என்று கூவ வேண்டும் போல அவதி. எழுந்தான்.
திடீரென மீண்டும் படியில் குந்தி விம்மலானான்.
1990
276

53
வீடு
“தேத்தண்ணி ஒன்றும் வேண்டாம்” - சித்தப்பா திடமாகச் சொல்லிவிட்டார் -
ஒ9 ". பனங்கட்டியோட என்றாலும்.
“ஒப்பாசாரம் என்ன, இந்தக் கஷ்ட காலத்தில்?’ - கணேசனும்
மறுத்துவிட்டான்.
“வேணும்னாடா, பச்சைத் தண்ணி கொஞ்சம் கொண்டு வா. நல்ல பானைத் தண்ணி.” என்றார் சித்தப்பா, உரிமையுடன் மீண்டும்.
ஆனந்தம் உள்ளே போனார். அவர், அவனுக்கும் சித்தப்பாவுக்கும் பொதுவான நண்பர் - வெவ்வேறு விதங்களில், கணேசனும் ஆனந்தனும் மூன்று வருஷங்களாகக் கொழும்பில் ஒரே போடிங்கில் இருந்த பழக்கம்; சித்தப்பா ஆனந்தத்துக்கு அயலவர்.
குண்டுக்கும் ஷெல்லுக்கும் பயந்து இடம் பெயர்ந்து சித்தப்பா வீட்டில் தங்கியிருக்கிற இந்த ஒரு மாதத்தில், “இன்றைக்காவது உன்னுடைய கூட்டாளியைப் பார்த்துட்டு வருவோம், வா.” - என்று சித்தப்பாதான் அவனை வற்புறுத்தி அழைத்து வந்திருக்கிறார். ஆனந்தத்தை வந்து பார்ப்பதில் அவனுக்கொன்றும் ஆட்சேபணை இல்லைதான், என்றாலும் இந்த அகதிக் கோலத்தில் இதெல்லாம் ஏன் என்றிருந்தது.
'ஆனந்தம் வீடு, அழகாய் அடக்கமாய் இருக்கிறது வீடு. அவனையறியாமல் பெருமூச்சு வந்தது.
277

Page 141
சாந்தனின் எழுத்துலகம்
- ஆனந்தம், நிறைய பூமரங்கள் வைத்திருக்கிறார். முன் வாசலடியில், முற்றத்தை மறைத்து நிழல் பரப்பும் மாமரம். அதன் கீழ் வேலியருகே பதுங்குங்குழி, நேற்றோ முந்தாநாளோதான் வேலை முடிந்திருக்க வேண்டும் - மேலே குவித்த செம்மண்ணிலும், இடையில் தலை நீட்டும் தென்னங்குற்றியின் வெட்டு விளிம்பிலும் இன்னும் ஈரப்பசை
மாமரத்தின் இந்தப் பக்கம், வீட்டு முன்சுவரை ஒட்டி, உயர்ந்த ஒரு பீடத்தில் துளசிமாடம். அகன்ற அந்தச் சாடியில், அது என்ன கூட, துளசியோடு சேர்ந்து பச்சைப் பசேலென? - திருநீற்றுப்பச்சை!
எழுந்துபோய், இலையைத் தொட்டு முகர வேண்டும்போலக் குறுகுறுப்பு. எத்தனை நாள், எங்கெல்லாம் தேடிய மூலிகை அலுவலகத்தில் அவனோடு கூட வேலைசெய்த அரியராஜ், ஒவ்வொரு மாதமும் செல்வச் சந்நிதியில் அர்ச்சனை செய்வித்துக் கொண்டு வரும் பிரசாதப் பொட்டலத்தை அவிழ்க்க, முன்பே புல்லரிக்க வைக்கும் புனிதம். திருநீற்றோடு, சம்புடத்தில் வைத்தால் வீடெல்லாம் வீசும் வாசம். கணேசனுக்கு இப்போதும் மேலெல்லாம் சிலிர்த்தது.
ஒரு செடியேனும் உண்டாக்கிவிட வேண்டுமென்று எத்தனை நாள் தேடித் திரிந்திருக்கிறான்! வலு பவித்திரமாக வளர்க்க வேண்டிய செடி. என்றுதான் எல்லோரும் சொன்னார்கள்.
ஆனந்தம் வழிகண்டிருக்கிறார் துளசியோடு, கவனமாக,
செம்பும் இரண்டு பேணியுமாக வந்தவரிடம் கேட்டான் :
“அது திருநீற்றுப் பச்சைதானே?” "ஆமாம்” என்றார் பெருமையாக, "அதைத் தேடி நான் உண்டாக்கப்பட்டபாடு”
தண்ணிரை வார்த்து, சித்தப்பாவிடம் கொடுத்து விட்டு, அவன் முன்னால் வந்த ஆனந்தம் கேட்டார்:
"உனக்கு வேணுமா?. மூன்று, நாலு கன்று முளைச்சு நிக்குது. தருகிறேன்.”
1990
278

54
உறுத்தல்
சிந்தையரின் நாளாந்த செயற்பாடுகள் ஒரு ஒழுங்குக்குட் பட்டவை.
காலையில் நாலரைமணிக்கு வைரவர் கோவில் மணிகேட்கும்போது விழித்தாரென்றால், காலைக்கடன், வீட்டு வேலை, மாடு கன்று பார்த்துவிட்டுத் தோய்ந்து கோயிலுக்கு போய் வந்து,பிறகு தோட்டம், சந்தை என்று மத்தியானமாகும். கடைக்குப் போய்விட்டு வரும்போதே அன்றைய பத்திரிகைகளையும் வாங்கி வந்து விடுவார். ஆனால் வாங்கியவுடனேயே மேலாகப் பார்த்து, வர வர நுனிப்புல் மேய்ந்து. என்றெல்லாம் கிடையாது.
கடைக்காரர் கொடுத்தவுடனேயே பத்திரமாக மடித்துப் பைக்குள் போட்டுவிடுவார்; இடையில் எவர் காரர் கண்ணிலும்படாமல்.
வீட்டுக்கு வந்ததும்கூட, அதைப் பிரிக்க மாட்டார்; கடையில் வாங்கியவற்றை மனைவியிடம் கொடுத்துவிட்டு, பேப்பரைப் பத்திரமாக மேசையில் வைத்துவிடுவார்.
பிறகு, அந்த இந்த தொட்டாட்டு வேலை, குளிப்பு, சாப்பாடு என்று ஒன்றரை மணியாகும். சாப்பிட்டு முடித்த கையோடு, வெளித்திண்ணையிலிருக்கும் சாய்மனைக் கதிரையில் துண்டைப் போட்டுக் கொண்டு பேப்பரை மடித்து மனைவியிடம் கொடுத்துவிட்டு, அப்படியே ஒரு அரை மணி நேரம் அயர்வார்.
இந்தப் பேப்பர் படலம் அவரது அன்றாட வாழ்வில் ஒரு முக்கிய
279

Page 142
சாந்தனின் எழுத்துலகம்
இடத்தைப் பிடித்தது. ஒவ்வொரு செய்தியாகப் படித்து. ரசித்து, யோசித்து அது, அவருக்குப் புது அனுபவங்கள் எல்லாம் தரும். அதுஒரு சுகானுபவம்.
இப்போ, இரண்டு கிழமையாக, அநேகமானோரின் நாளாந்த செயல்பாடுகள் எவ்வளவோ பாதிக்கப்பட்டும்கூட, கந்தையரின் இந்த அன்றாட வழக்கங்கள் என்றும் பாதிக்கப்படவில்லை. பேப்பர்கூட, ஒடர்ப் பேப்பர், கதிர்வேலு தன் கடையில் பேப்பர் விற்கத் தொடங்கிய நாளிலிருந்து நடைமுறையிலிருக்கிற ஒடர். ஒரு நாளைக்கு எடுக்க முடியாது போனாலும்கூட அடுத்த நாள் வரை காத்திருக்கும் பேப்பர்.
இன்றைக்கும் சாய்வு நாற்காலியைத் தட்டித் துண்டை விரித்து விட்டு, மூக்குக் கண்ணாடியைப் போட்டுக் கொண்டு பேப்பரும் கையுமாய்ச் சரிந்தார்.
இந்தப் பத்துநாளாக வருகிற சங்கடம் இப்போதும் வந்தது. எங்கும் குண்டு வீச்சும் கொலையுமாக. திருகோணமலையில் ஜனங்கள் பட்ட கஷ்டம், முல்லைத்தீவுக்கு வரப் பட்டபாடு, அங்கிருந்து யாழ்ப்பாணம் வருகை.- கந்தையருக்கு என்னவோ செய்தது.
இதெல்லாம் ரசனைக்குரிய செய்திகளல்ல. இந்த ஜனம் இவ்வளவு பாடுபடுகையில், இருக்க இடமும், உண்ண உணவும், உயிருக்கு உத்திரவாதமும் இல்லாமல் ஓடி வருகையில்,அவர்கள் பற்றிய சேதிகளைஅவர்கள் படும் அவலங்களைதான் இப்படி ஆறுதலாக ஒய்வாகக் கிடந்து படிப்பதே பிழை அது ஒரு பாபமாகக் கூடப்பட்டது.கடவுளே!
கந்தையர் திடுக்கிட்டு எழுந்தார். “என்ன?. என்னவும்?.” என்றாள்,
பக்கத்துக் கதிரையில் பாக்கு வெட்டிக் கொண்டிருந்த மனைவி.
“ஏதோ குத்துது.” என்றார், சுதாரித்துக்கொண்டு.
1990
280

55
காலங்கள்
1963
இருந்தாற்போலக் குளிர்காற்று முகத்திலடித்தது. ஒரு வெளியில் நுழைந்திருந்தார்கள். வெட்டவெளி, பென்னாம் பெரிது. சுற்றிவர, வானம் முழுவதும் வெள்ளிகள் மின்னின.
எங்காவது வீடோ, கடைகளோ தெரிவதாயில்லை. காரின் வெளிச்சம் மட்டும் இருளை வெட்டியபடி முன்னால் ஒடிக்கொண்டிருக்கிறது.
"இந்த இடம் எதெண்டு தெரியுமோ?.”
அவர்களுக்குத் தெரிந்திருக்கவில்லை. “. கல்லுண்டாய்”- அப்பு சொன்னார். அந்தப் பெயர் கண்ணனுக்கு விசித்திரமாகப்பட்டது. ஒருமுறை சொல்லிப் பார்த்தான்.
வெளி போய்க் கொண்டே இருந்தது. காற்றும் வெளிகளும் இடைக்கிடை ஒடும் பற்றைகளும்.
எதிரில் ஒரு வண்டில், தட்டின் அடியில் கட்டியிருக்கிற அரிக்கன் லாம்பு ஆடஆட வருகிறது. வண்டில் நெருங்க கார் விளக்கு பட்டு மாடுகளின் கண்கள் நீலமாய் மின்னுகின்றன.
கார், இடதுபுறம் ஒதுங்கி நின்று பெரிய விளக்குகளை நூர்த்து, வண்டிலுக்கு வழிவிட்டது. தடக்படக்கென்று சில்லுகள் மாட்டு வாடையும், புதுநெல்லின் சுணைமணமும் சேர்ந்து வீசின.
281

Page 143
சாந்தனின் எழுத்துலகம்
அப்போதுதான் கண்ணன் அதைக் கவனித்தான். “நெல்லு மூட்டைக்கு மேலை ஒரு ஆள் படுத்திருக்கு” அவன் கத்திய விதத்தில் தம்பியும், சின்னண்ணையும், நந்தனும் பின்கண்ணாடி வழியாக அவசரமாகப் பார்த்தார்கள்.
“கண்ணா குழப்படி பண்ணாதை. அப்பு சொன்னார்.
கார் ஒடத் தொடங்கியதும், மீண்டும் குளிர்காற்று உள்ளே வீசியது சுகமாயிருந்தது.
கடல் மணம் அடித்தது.
"கடல் வருகுது.”- பெடியன்களுக்கு உற்சாகமாயிருந்தது. “அங்கை
99
அதென்ன விளக்குகள், கடலிலை?.
தூர, வலப்பக்கம், தெல்லுத் தெல்லாக ஒளிப்பொட்டுகள் 'மீன் பிடித்தோணிகள்.”
எத்தனை என்று எண்ண ஆரம்பித்தார்கள்.
நேரே முன்னால் இன்னுந் தொலைவில், இன்னும் வெளிச்சப் புள்ளிகள். கனக்க, வரிசையாக மின்னி மின்னி மறைவது மாதிரி.
"அதுகளும் தோணிகளே?”
"அதுதான் பட்டணம். பட்டணத்து வெளிச்சம் தெரியுது எவ்வளவு வடிவா இருக்கு, பார்த்தீங்களா?” என்றார் அப்பு. “இன்னும் பத்து நிமிஷத்திலே அங்கே போயிடலாம்.”
"இன்னும் பத்து நிமிஷந்தானா?- கண்ணனுக்கு ஏமாற்றமாயிருந்தது இப்படியே போய்க் கொண்டிருக்க வேண்டும் போலிருந்தது.
1973
GG 99.
பாத்தீங்களா?. சொன்னன். - என்றான் நிமலன், பெருமையாக,
ஒழுங்கை இலேசாக வளைகிற இடத்துடன் வளவுகள் முடிந்தன. வெளி, விரிந்து கிடந்தது :
282

சாந்தனின் எழுத்துலகம்
"சோக்கான இடம்.” என்றான் கண்ணன், தன்னையறியாமல்,
வலது பக்கம் ஒரு மடம், பழையது. பொளிகல்லு, அதற்கெதிரில் ஒழுங்கையின் இடதுபுறம் அதேவயதில் ஒரு கேணி, இந்த வெயிலிலும் தண்ணீர்.
“எப்படி?..” என்றான் நிமலன், மீண்டும். “ஸ்ஸ்.” என்று வியந்தார்கள், இவர்கள். “இவ்வளவு மரத்திலும் தேவையான ஸ்பெஸிமன் எடுக்கலாம்.” என்றான் குகன், முன்னால் காட்டி
சாம்பல் பூத்த தடித்த இலைகளும், நீலப்பூக்களுமாய் ஒழுங்கையின் இருபுறமும் வரிசையாய் கண்ணுக்கெட்டிய தூரம்வரை வேலி மாதிரி அடர்ந்திருந்தது எருக்கலை,
பதினோரு மணி வெயில் கொளுத்திக் கொண்டிருந்தது. காற்றிலும் வெக்கை வந்தது, எருக்கம்பால் மனத்துடன். அந்த வரிசைகளுக்கு அப்பாலும் இப்பாலுமாய் அரிவு வெட்டுக்கு ஆயத்தமாக வயல்கள் விரிந்து கிடந்தன.
சைக்கிள்களை பூவரசடியில் விட்டுப்பூட்டிவிட்டு ஒவ்வொரு செடியாகப் பார்க்கத் தொடங்கினார்கள். மெல்லக் கொப்புகளை விலக்கி, இலைஇலையாய் அடிப்பாகங்களைத் துருவத் தொடங்கினார்கள்.
“பயோலஜி படிக்கிறதுக்கு இந்த கல்லுண்டாய் ஒரு பக்கா இடம் எண்டு சுந்தரராமன் மாஸ்ரர் சொல்லியிருக்கிறார்.”
“உண்மைதான். நீங்கள் மாரியிலை வந்து பார்க்க வேணும்.” - நிமலன் சொன்னான்.
"இந்த முதல்ல வண்ணாத்திப்பூச்சியை முடி. பிறகு தவளையைப் பார்க்கலாம்.”- குகன் இடைவெட்டினான்.
“இப்ப, அராலிப் பாலத்தடியிலை மீன் இராதோ?” "இருக்கும். ஆனா அது கலப்பு நீரெல்லோ. வளர்க்க ஏலாது.”
99 "போவமா, அங்கை?
283

Page 144
சாந்தனின் எழுத்துலகம்
"இதை முடிச்சிட்டு அங்கை போவம்.”- குகன் வெளியின் விளிம்பில்
தெரிந்த தென்னந்தோப்பைக் காட்டினான்.
"இளநி அடிக்கேலுமெண்டா அடிச்சிட்டு நேரே. ராலிப் பாலம், பிறகு
உப்பளம். சரியா?”
"மச்சான் ஒடியா. ஒடியா.” கண்ணன் கத்தினான். ஓடினார்கள். "இங்கை பார்.” மிக மெதுவாக ஒரு இலையை விலக்கிக் காட்டினான். பொன்னுருண்டை போல ஒரு கூட்டுப்புழு,
1988
“பயமாயிருக்கா?.” - வசந்தபுரம் சந்தி திரும்பும் போது கண்ணன் கேட்டான்.
“சீ. இதென்ன? இவ்வளவும் கண்டாச்சு. இனி என்ன?’ - சீலன் உசாராகச் சொன்னான்.
"நீங்கள் கூடவாறியள் - இவ்வளவு சனம் போய்வருகுது.”
"இதுகள் இருக்குது”கண்ணன், இரண்டு சைக்கிள்களிலும் முன்னால் சொருகியிருந்த வெள்ளைக் கொடிகளைக் காட்டிச் சிரித்தான், கசந்து.
மெல்ல மிதித்தார்கள். “உதிலை இரண்டாவது இருக்கு. - சீலன் சொல்லும் போதே,
“ஒ. முணக்குது.” என்றான் கண்ணன்.
வீதிப் பரிசோதனை நடக்கிற இடம் இங்கிருந்தே தெரிந்தது. எதிர்ப்பக்கத்திலிருந்து வருபவர்கள் சைக்கிளில் ஏறிக் கொண்டிருக்கிற அதே இடத்தருகில் இவர்களுக்கு முன்னால் போகிறவர்கள் இறங்கி உருட்டத் தொடங்கினார்கள்.
“ஐ.சி. ஆயத்தமா?.”
சட்டைப் பைக்குள் பார்த்தபடி “ஒ.” என்றான் கண்ணன்.
284

சாந்தனின் எழுத்துலகம்
வேகத்தைக் குறைத்து மெல்ல இறங்கி முன்பின்னாக. நெஞ்சு
LILLIL55.
தெருவின் அகலத்தில் முக்கால்வாசியைத் தடுத்துப் போட்டிருந்த பீப்பாய்களைத் தாண்டி. அடுத்து அதே மாதிரி எதிர்ப்பக்கம் கிடந்த மரத்தைத் தாண்டி. இந்த நடைபாதை ஒரு இழுபட்ட 'எஸ்ஸாக இருக்க.
வரிசையைத் தொடர்ந்து அவர்களை அணுகினார்கள்.
வரிசை நகர்ந்தது. அடையாள அட்டையைக் கையில் எடுத்துக்கொண்டபோது, எத்தனை தரந்தான் என்றாலும் பயம் போகாது போலிருந்தது.
கூர்மீசையும் கூர்முழிகளுமாய் நின்ற சிப்பாய், கண்ணனின் சைக்கிள்
கூடையைத் திறந்து வடிவாகப் பார்த்தான்.
இதை இனிக் கழற்றிவைத்து விட வேண்டும் என்று தீர்மானித்தான்
கண்ணன்.
பொக்கற்றுகளைத் தட்டும்போது, கனகாசு கொண்டு
போகாதையுங்கோ. என்று யாரோ சொல்லியிருந்தது நினைவு வந்தது.
“ப்போ.” - சிப்பாய், கண்ணனை விட்டு சீலனிடம் போனான்.
கண்ணன், தன்முன்னே நின்ற மற்றவனிடம் போனான். நீட்டிய கையில் ஐ.சி.யை வைத்தான். மறித்து வைத்திருந்த ஏழெட்டு அப்பாவிகளை - சற்றுத்தள்ளி - இரண்டு சிப்பாய்கள் காவல் பார்த்தபடி நின்றார்கள். நிலத்தில் குந்தியிருந்த மனிதர்களில் ஒரு பெடியன் அறிமுகமானவன், மீன் வியாபாரி, அவனைப் பார்த்துத் தலையசைக்கக்கூட திராணி வராத தன்னில் வெறுப்பாயுமிருந்தது. என்னையும் மறிப்பார்களோ?
95
அட்டையைப் புரட்டிப்புரட்டிப் பார்த்துக் கொண்டிருந்தவனிடமிருந்து கேள்வி வந்தது.
“நோ. ரீச்சர்.” -
இவனுடைய மீசையும் முதலாவது ஆளுடையதைப் போலவே இருக்கிறது. இன்னும் முரடனாகத் தெரிகிறான்
285

Page 145
சாந்தனின் எழுத்துலகம்
சிப்பாய், கண்ணனை ஏறிட்டுப் பார்த்தான். பார்வை சந்தேகத்தில் தோய்ந்திருந்தது. கண்ணனுக்கு வேர்த்தது. “கோ.”
"கடவுளே.” என்று மூச்சு விட்டான். அடையாள அட்டையை வாங்கிப் பத்திரமாகச் சட்டைப் பையில் வைத்தபடி சைக்கிளை உருட்டலானான்.
பின்னால் சீலன் வருகிறானா?
புற்றிசல் போல இவர்கள் இப்படி மொய்த்திருக்க - இடையில் தாங்கள். நினைக்க மயிர்க்கூச்செறிந்தது. திரும்பி வரும்போது மீண்டும் ஒரு தடவை இவர்களையெல்லாம் தாண்ட வேண்டும். இந்தக் கல்லுண்டாய் இப்படியாகுமென்று.
“இரண்டாவது கண்டமுந் தாண்டியாச்சு.” - சீலனின் குரல் பின்னாலிருந்து வந்தது.
சைக்கிளில் ஏறுகிற இடம் வந்ததும் ஏறினார்கள். “அடுத்ததும் கூப்பிடு தொலை தானாம். தென்னந்தோப்பு.”
“இன்னும் எத்தினை. நாலு இடமே?”
“போய் வாறதெண்டால், குறைஞ்சது பத்து இடத்திலை செக்கிங் - இருபது கிலோ மீற்றர் கூட இல்லை.”
D
1989
“உங்கட மோட்டார் சைக்கிள்தானா இப்பிடி ஓடுது?’ பின்னால்
உட்கார்ந்திருந்த ரேகா பகடி விட்டாள்.
“. காத்தாய்ப் பறக்கிற சைக்கிள், இப்ப காத்துப் போனது மாதிரி.”
“ரேகா, இந்த இடத்திலை இறங்கி நடந்து போகவும் நான் தயார்.
எங்கட நிலத்தின்ரை அழகுக்கு, அதின்ரை செழிப்புக்கு, அதையெல்லாம்
பயன்படுத்தாம விட்டிருக்கிற எங்கட முட்டாள் தனத்துக்கு - அல்லது
அதைச் செய்ய முடியாத எங்கட நிலைமைக்கு எல்லாம் இது நல்ல
உதாரணம். இந்த இடத்தை எனக்கு எவ்வளவு பிடிக்கும் எண்டு உனக்குத்
286

சாந்தனின் எழுத்துலகம்
தெரியுமா?.” என்றான் கண்ணன்.
“உங்கட விருப்பத்துக்கேத்தபடிதான் இப்ப ஒவ்வொரு நாளும் இந்தக் கல்லுண்டாய் வெளியாலை இரண்டுதரம் தாண்டக் கிடைச்சிருக்கே.” - அவள் சிரித்தாள்.
". நாங்கள் மனசார விரும்புகிறதெல்ாம் எப்படியோ ஒருநாள் கிடைச்சே தீரும். எனக்கு அதிலை நம்பிக்கை இருக்கு.”
கண்களின் குறும்பும் நாணமும் கலந்து ஒளிர்ந்தன.
D
1990
"இந்த சைக்கிளைக் கண்டுபிடிச்சவனுக்கு ஒருசிலை வைக்க வேணும்.” என்றார், சொலமன்.
"மெய்தான்.” என்றார் மூர்த்தி.
". இதில்லாட்டி எங்கட கதியென்ன, இப்ப?” “முந்தி இப்பிடி ஒடியிருப்பமா, எப்பாலும்?” “பொறுங்கோ. ஏதோ இரையிற மாதிரிக்கிடக்கு” கண்ணன் இடைமறித்தான்.
“சீ. அது காத்து.”
"இல்லை. அந்தா.” - அவன் காட்டிய திசையில், தூர சின்னதாக இரண்டு பொம்மர்கள் வழுகிவருவது தெரிகிறது.
இந்த இடத்தில் இவர்களுக்கு மேலே மந்தாரம் போட்டிருக்கிறது. ஆனால் பொம்மர்கள் தெரிகிற இடத்தில் மெல்லிய நீலமான வானம். வெயிலில் விமானங்கள் மினுங்கின.
"பலாலியிலையிலிருந்து வாறான். கோட்டைக்குத்தானே” என்று
சொலமன் சொன்னார்;
99.
'உம்மட காது இதுகளுக்கு நல்லாய்ப் பழகிவிட்டுது, இப்ப
287

Page 146
சாந்தனின் எழுத்துலகம்
விமான இரைச்சல், இவர்களுக்கு முன்னால் போய்க் கொண்டி ருந்தவர்களுக்கும் கேட்டிருக்க வேண்டும். அவர்கள் சைக்கிள்களும் வேகங் குறைந்து குழம்புவது தெரிகிறது. எதிர்ப்பக்கமிருந்து வந்த சைக்கிள்காரர்கள் வேகத்தை அதிகரிக்கிறார்கள்.
சத்தம் இப்போது தெளிவாகவே கேட்கிறது. இரண்டல்ல, மூன்று. "கோட்டைக்குத்தான்.”
'மாட்டொழுங்கையாலை திரும்புவமா?.” “எங்க மூண்டு பேருக்கும் ஒரு குண்டை வீணாக்கமாட்டான். பயப்பிடாம வாரும்.”
'ஹெலி, கிலி வந்தா?. இந்தக் கல்லுண்டாயிலை ஒதுங்க ஒரு இடமில்லை.”
“வாறதாத் தெரியேல்லை. அதுக்கிடையிலை நாங்கள் தாண்டி விடலாம், வாங்கோ.”
விமானங்கள் கோட்டையைச் சுற்றி வட்டமிடுவது வடிவாகத் தெரிகிறது. “நாளாந்த நிகழ்ச்சியாய்ப் போட்டுது இது. எங்களுக்கு.”
“என்ன வாழ்க்கை இது? இப்பிடித் ஒவ்வொரு நாளும்.” - மூர்த்தி சலித்தார். ". இதுவும் ஒரு வாழ்க்கையா?”
'இதுதான் வாழ்க்கை. மெய்யான வாழ்க்கை இதுதான். வாழ்க்கை என்கிறதுக்கு இப்பதான் அர்த்தமிருக்கு.” - கண்ணன் சொன்னான். நான்தான் இதைச் சொன்னேனா என்றிருந்தது.
“அந்தா, அந்தா. போடப் போறான். போட்டிட்டான்.” - மூர்த்தி பதறினார்.
குத்திப்பதித்த விமானமொன்று மேலெழுவது தெரிகிறது. அது வட்டத்தை தொடரும்போது வட்டமிட்டுக் கொண்டிருந்த கீழே சறுகி, குண்டுகள் வெடிக்கின்றன. இங்கேயே அதிர்கிறது. படம் பார்ப்பது போல இருக்கிறது. ஆனால் இது மெய், தினசரி வேலைக்குப் போய்வரும் போதெல்லாம் இப்படிக் காண எத்தனை பேருக்குக் கொடுத்து 288

சாந்தனின் எழுத்துலகம்
வைத்திருக்கிறது உலகில்?
"பாத்தீங்களா இது என்ன சீனியம்?’ என்றார் மூர்த்தி, மீண்டும். “மூர்த்தி, நீங்கள் கடவுளை நம்புறது உண்மையெண்டால் உப்பிடியெல்லாம் பேசக்கூடாது.” என்றார் சொலமன், உரிமையுடனும், உறுதியுடனும்,
2003
வசந்தபுரம் விளையாட்டு அரங்கலிருந்து கரவொலிகளும் உற்சாகக்
கூச்சல்களும் கேட்கின்றன.
“ ‘ஏஷியா - 2003 போட்டிகள் நடக்குதெல்லே.” அதுதான் தெருவிலும் தெருவிலும் இவ்வளவு சனம். காரின் வேகத்தைக் குறைக்க வேண்டி இருந்தது. கூட்டத்தில் வெளிநாட்டவர்கள் கணிசமாகவே தெரிந்தார்கள்.
ஸ்ரேடியத்திற்கு எதிர்ப்புறம், தெருவுக்குத் தெற்கே கடலேரி பரந்து கிடக்கிறது. இடது பக்கம் நாவாந்துறையிலும் வலதுபக்கம் காக்கைத் தீவிலுமாக மீன்பிடித் துறைமுகங்கள், எதையோ பிடிக்கிற பெருவிரலும் சுண்டுவிரலும்போல கடலுக்குள் நீட்டிக் கொண்டிருப்பது தெரிகிறது.
“கொஞ்சம் ஆழமாக்கிவிட, இந்தக்கடல் எப்பிடியிருக்கு”
கரையின் தூய வெண்மணற் பரப்பிடை, பூம்பாத்திகளும், பூவரசமரங்களின் சீமேந்து இருக்கைகளும் மாறி மாறி.
“முந்தி, இவடத்திலை மூக்கைப்பிடிச்சுக் கொண்டு போற நாங்கள். நினைவிருக்கா?”
“குப்பை கூழம் நாத்தமெல்லாம் பழங்கதை." வீதி முன்னரைப்போல் மூன்று பங்கு அகலமாக மாறியிருக்கிறது. வழுவழுவென்று சுத்தமாக, தார்ப்பாயை விரித்தது போல் நீளமாக,
தெருத் தீவுகளிலும் கரையோர நடைபாதைகளிலும் புளியும், வாகையும்,
289

Page 147
சாந்தனின் எழுத்துலகம்
மலைவேம்பும் ஓங்கிக் கிளைபரப்பத் துடிக்கின்றன.
காக்கைத்தீவுச் சந்தியில் கடைகள் களை கட்டியிருக்கின்றன. கடைத்தெருவின் பின்னால் ஒரு நவீன குடியிருப்பும் அதை அண்டி - ஆனால் இந்தப் பரபரப்புகளிலிருந்து விடுபட்டு - தென்னந்தோப்பும், அடர்ந்து கிடக்கிறது. தோப்பிடை இருந்து அம்மன் கோவில் மாலைப்பூசை மணியோசை கேட்கிறது.
வலப்புறம் வயல்களும் இடப்புறம் தென்னஞ்சோலைகளும், கூடுதல் அடர்த்தியும் அழகும், பசுமையும்.
கடைகளும் கட்டிடங்களும் அடுத்த சந்தியைக் குறிக்கின்றன. முந்திய மாட்டொழுங்கை எவ்வளவு மாறிவிட்டது.
தெற்குப் பக்கம், தென்னந்தோப்பைச் சுற்றிவந்த கடன், இப்போ இங்கே தெருவிலிருந்து கூப்பிடு தொலைக்குள் வந்திருக்கிறது - படகுக்கழகம்’ என்ற பெயரும் மண்டபத்தைத் தாண்டி அலங்காரப் படகுகளும் தெரிகின்றன. அது தாண்டியதும் கடற்கரை மீண்டும் விரிகிறது. தெருவோடு கூடவே வருகிறது.
வண்ணக் குடைகளும், விற்பனை வண்டிகளும், காற்றுவாங்க வந்தவர்களுமாய் அந்த இடம் கலகலவென்று.
இறங்கி வலப்பக்கம் நடந்தார்கள். ஒரு நீள இரட்டை வடமணிமாலை போலத் தெரு.
கோவிலின் பின்புறம் சற்றுத் தள்ளியிருந்த மேட்டில் ஏறினார்கள். மேலே வந்ததும் மறுபுறம் ஏரி தெரிந்தது. இது நன்நீர் ஏரி. குட்டிக் கடல் போல நடுவில் பச்சைப்பசேலென ஒரு குட்டித் தீவு.
"பாலம்வரை போகுது ஏரி. வழுக்கையாத்துத் தண்ணி இப்ப கடலுக்குள்ளை வீணா ஒடுறதில்லை.”
பாலம் இங்கிருந்து வடிவாகத் தெரிந்தது. தெற்கே, சற்றுத் தள்ளி, புது உப்பளம் கட்டிடங்களும், செவ்வானம் பூத்திருந்த பின்னணியில் இவை நிழலுருக்களாய்.
290
 

சாந்தனின் எழுத்துலகம்
ஏரிக்கரையில் நடந்தார்கள். அது ஒரு தெரு அகலமிருந்தது. ஆனால் நடைபாதை மட்டும். உடற்பயிற்சிக்காக விரைநடை நடப்பவர்கள். கல்லூரி
மாணவர் குழுவொன்று சிரிப்பும் கும்மாளமுமாய் வருகிறது.
வெறுமையாயிருந்த சீமேந்து வாங்கொன்றில் போய் அமர்ந்தார்கள். நீர்ப்பரப்பில் மின் விளக்குகளின் ஒளிக்கோடுகள் நெளிகின்றன. தெருவில் போக்குவரத்து அமளியாக இருக்கிறது.-என்றாலும் இந்த இடம் சற்றுத் தள்ளி.
காற்று இப்போது நல்லாகவே வீச ஆரம்பித்தது. வானில் ஒவ்வொன்றாக வெள்ளிகள் சிமிட்டத் தொடங்கின.
1991
291

Page 148
56
மூண்டெரியுந் தீயின் மூலப்பொறி நான் மனிதன்' 'நீ தமிழன்'
நான் மனிதன்'
இல்லை. நீ தமிழன்' நான் மனிதன், நான் மனிதன் 'நீ தமிழன். நீ தமிழன்' சரி நான் தமிழன். நான் தமிழன்.
1992
292

57
பொறி
பெயதைக் காட்டுவது எது? முகமா, கண்களா, உடலா அல்லது ஒருவரின் செயல்களா?
தனக்கு வயது நாற்பதாகி விட்டதென்றும் எல்லோரையும் போல்
இவர்களுந்தான் வியக்கிறார்கள்.
“பகிடி விடுகிறீங்கள், ஸோ.”
தங்களுடன் சமதையாய், சகஜமாய்ப் பழகும் இந்த ஆசிரியருக்கு தங்களிலும் ஒரு பத்துத்தான் கூட இருக்கலாம்.
அவன் வழமை போல் சிரித்தான்.
எல்லோரும் வியப்பதில், அவனும் நினைப்பதுண்டு.
பிரம்மச்சரியமோ, ஒருவேளை?
எதற்கிந்த விரதம்? அந்த இழப்பினை எந்த வகையில் இது ஈடு செய்யும்?
சிரிப்பினூடே அவர்களைப் பார்த்தான். மூன்றாண்டுப் படிப்பின் முதல்வருட மாணவர்கள். இப்போதுதான் இவர்களோடு இந்த வயதுக்கதை வந்திருக்கிறது.
ஒரு மதிய இடைவெளியின் அமைதியில், தென்றலும் வேப்பம்பூ வாசனையும் துணையாய் இருந்தபோதில், எதற்கோ வந்தவர்கள், எப்படியோ
293

Page 149
சாந்தனின் எழுத்துலகம்
தடம் மாறி.
வயதுக் கதையில் வந்து நிற்கிறது.
இவர்களெல்லோருமே தம்மிடை ஒத்த வயதுக்காரர்களாய்த் தானிருக்கிறார்கள்!
- - 99 “சரி, உங்கட வயதுகள் என்ன?.
இருபதிலிருந்து இருபத்திரண்டு. பிறந்த ஆண்டுகள் அறுபத்தொன்பதிலிருந்து எழுபத்தொன்றுக்குள்ளாக. இப்போது ஆசிரியருக்கு ஆச்சரியமாயிருந்தது.
G
“எட!. இப்ப நீங்கள் இங்க இருக்கிற மாதிரி, நான் அப்ப கல்லூரியிலை இருந்த ஆண்டு.”
"அப்ப, உங்கட வயது உண்மைதானா, ஸோ?. ஒருவன் கேட்டான்.
"நீங்களும் நானும் ஒரே மாதிரித்தான். நீங்கள் இந்த வயதிலை இங்கை படிக்கிற மாதிரி, நானும் இதே வயதிலை, இதே படிப்பைப் படித்துக் கொண்டிருந்தன். இடந்தான் வேறை.”
பளிரென ஒரு வலி.
அந்தக் கல்லூரி, அந்த ஊர், அந்தத் தெருக்கள், அந்த வீடு, அந்த அமைதி, அந்தப் பசுமை. அந்த அமைதியும் அந்தப் பசுமையும் அவனுள் படியக் காலான அவள்.
அந்தப் பகல், அந்த விபத்து. இல்லை. அது விபத்தில்லை; அரும்பொட்டில் தப்பியாயிற்று. எதற்கென்றோ இடையில் வர நேர்ந்து, எதிர்பாராது கிட்டிய அந்த வேளையில்.
எதிர்பாராமல்தான் அவள் தாயும் திரும்ப நேரிட்டது. நல்ல காலமா, கெட்ட காலமா, இன்னுந்தான் தெரியவில்லை.
அதனால் தான் திசையே மாறி. அந்த ஆண்டு? அறுபத்தொன்பதா? ஒரு வசந்த வேளை, அன்றைய தென்றல் மட்டும் மகரந்தங்களைச் சுமந்திருந்தால்?
அவன் திடுக்குற்றான்.
294

சாந்தனின் எழுத்துலகம்
இதோ, இவர்கள் போலவே.
இதே மாதிரி, இதே அளவில்
இவ்வளவு விரைவிலா!
அவன் சிலிர்த்தான்.
“நம்ப முடியவில்லையா?. நீங்களெல்லாம் என் பிள்ளைகளாய்க்
காணும்.”அவன் சிரிக்க முயன்றான். இப்போது தான் உணர்ந்த இழப்பின் இரண்டாவது வலியை மீறி.
1993
295

Page 150
58
JF GOT Lfò
இந்த வெளி எப்போதுமே அற்புதமானது. மாரியோ, கோடையோ, இரவோ, பகலோ - எப்போதும். ஆனால் முன்னிரவு வேளைகளில் வலு விசேஷம். தெரு கிழக்கிலிருந்து மேற்கே ஒடுகிறது. ஒரே நேர். அப்படி வருகிறபோது, இருந்தாற்போல ஒரிடத்தில் வேலி அடைத்த வளவுகள் நின்று விடும். இரண்டு பக்கமும் வெளி விரியும், படாரென்று - கட்டொன்றை அவிழ்த்து விட்டதுபோல் - விட்டாத்தியாயிருக்கும். முகத்திலும் படுகிற புதுக்காற்றுபோல மனதிலும் வீசும்.
வெளி தொடங்குகிற இடத்திலிருந்து ஒரு முப்பதடி வந்ததும் தெருவின் தார் கழன்று நீள்வட்டமாய்க் கிடக்கிற அந்தக் கிடங்கைத் தாண்டுகிற கையோடு, இடதுபக்கம் திரும்பி வெளி விளிம்பின் தென்னை நிரைகளுக்கு மேல் பார்த்தால் பத்திரகாளி கோவில் கோபுரம் தெரியும். ஒன்று அல்லது இரண்டு கணந்தான் - மோட்டார் சைக்கிளா, சைக்கிளா என்பதைப் பொறுத்து மரங்களின் இடைவெளி அவ்வளவுதான் காட்டும் இன்றைக்கும். இந்தா மாலை வெயிலில் மஞ்சளாய்.
கால் மைலுக்கும் கூடவரும் வெளியின் நீளம், அகலமும் கிட்டத்தட்ட அவ்வளவு நட்டநடுவில் தெரு பக்கத்துப் பாத்திகளிலும் தெரு உயரம் - புகையிலை வைக்கிற காலங்களில் வெளி நிறைந்து கடல்போலிருக்கும். பயிர் வளர பச்சைக்கடல் உயரும். மற்றைய காலங்களில் அங்கொரு துண்டில் குரக்கன், இங்கொன்றில் மரவள்ளி அவரவருக்கு வாலாயம் போல. வெளிச்சம் இருக்கிற எந்த நேரத்தில் வந்தாலும் எங்கோ ஏதோ செய்து
296

சாந்தனின் எழுத்துலகம்
கொண்டிருக்கிற உயிர்ப்பு.
இந்தத் துண்டில் கண்ணு உழுந்து போட்டிருக்கிறான். உழுந்தா? பயறா? இன்னும் வடிவாய்த் தெரியவில்லை. இவ்விரண்டு இலைகளோடு நிற்கிற பயிர், இன்று இறைத்த ஈரத்துக்கிடையில் மதாளித்துப் படர்ந்திருந்தது பசளிக்கீரை மெல்லிய நீலம் பரவிய பச்சை மடித்தால், இலைகள் டிக்கென்று ஒடியுமென்று இங்கிருந்தே உணர முடிகிறது.
சோழகம், கொஞ்ச நாட்களாகவே இப்படி ஒரு வாடைக் குளிரோடு வீசுகின்றது. எங்காவது மழையா? இங்கென்றால், வானம் வெளித்துக் கிடக்கிறது. மேற்கில் மட்டும் சில சிவப்பு முகில்கள்.
என்ன இது?
ஒருவரையும் காணவில்லை! தெரு நீளம் ஒரு காலக் குருவியும் இல்லை! என்ன சங்கதி? இந்த நேரத்தில் இந்தத் தெருவில் எவ்வளவு சனம் போகும்? என்ன நடந்தது? என்ன நடந்தது?.
தோட்டங்களைத் திரும்பிப் பார்த்தான். வலதுபக்கம் தெருவோடு ஒரு குரக்கன் பாத்தி, அங்கு வெருளி மட்டும் அதன் கையிலிருந்த சவுக்கு நுனி காற்றில் பறக்கிறது. இடது பக்கம் அதுகூட இல்லை. இதென்ன? கொடியேற்றுகிற பெடியள் எல்லாம் எங்கே போனார்கள்? காற்று எவ்வளவு நல்லதாய் அடிக்கிறது அதற்கிடையிலா வலித்துக் கொண்டு போயிருப்பார்கள்? நேற்றுக்கூட இரவிரவாக ஒரு எட்டு மூலை விண்கூவியது.
அசைவேயில்லை. ஒரு வாகனம், வண்டில், சைக்கிள்? நடப்பவர்கள் கூட! என்ன நடந்தது எல்லோருக்கும்? இறைப்பவர்கள், விறகுக்கு அலம்பல் தேடுபவர்கள், எருப்பொறுக்குபவர்கள், எதையோ விதைப்பதற்காகக் கொத்துபவர்கள், புல் பிடுங்குபவர்கள், மாட்டைக்கலைப்பவர்கள், இவர்களோடு கதைப்பவர்கள். சண்டை பிடிப்பவர்கள், வரம்பால் நடந்து தவறனைக்குப் போகிறவர்கள், வரும்போது வரம்பில் தள்ளாடுபவர்கள், குறுக்கே பாயக்கூடிய சிறுவர்கள்.? எல்லாரும் எங்கே? என்ன இது இன்று?
நேரே. வெளிமுடிந்துங்கூட தெரு நேரப் போகிறது. ஒரு முந்நூறு யார் அப்படிப் போய்த்தான் பிறகு டானாவாக வலப்பக்கம் திரும்பும். இங்கிருந்து அந்த முடக்கும் தெரிகிறது. அங்கும் ஒரு மனுக்கணமும் இல்லை! வெளி முடிவில் வருகிற கனகராசா கடை தள்ளியிருக்கிற சலூன்.
297

Page 151
சாந்தனின் எழுத்துலகம்
பிறகு சந்தி. ஒரிடத்திலுமா ஆட்களில்லாது போவார்கள்?
காற்று, தெற்கிலிருந்து வந்து தெருவைத் தாண்டி வடக்கே பறந்தது. பொலித்தீன் பையொன்று பூப்போல், கடற்சொறி போல், பாராசூட் போல். இந்த வெயிலிலும் காற்று குளிராய்த்தானிருந்தது.
என்னாகியிருக்கும் இங்கே? ஏதும் பிரச்சனையா? அப்படி என்ன? சத்தங்கூட கேட்காமல். பயமா இது? பரபரப்பா? சைக்கிளை உழக்கினான்.
பத்து வருஷம் எண்பத்து மூன்று ஜூலை. ஒரு காலை விடிந்த போதே வித்தியாசந் தெரிந்தது.
சக்தி வந்து மெல்லக் கூப்பிட்டான். “சந்தையடியிலே ஏழெட்டுப் பேரை ஆமி சுட்டுப் போட்டிருக்காம்! வாறியா என்னெண்டு பாத்திட்டு வருவம்?”
வழியில் கண்ட எவரோ ஊரடங்காம் என்றார்கள். வடிவாயுந் தெரியவில்லை. ஊரே கெலித்து ஒடுங்கிக் கிடந்தது.
"நேற்றிரவு தின்னவேலியிலை நடந்ததுக்குப் பழிவாங்கலாம் இது”. காற்றோடு கதைகள்.
சந்தையடியில் சிறு கும்பல் நின்றது. நின்றவர்கள் காதுகளையும் கால்களையும் தயாராய் வைத்தபடி நின்றார்கள்.
எப்போது எங்கிருந்து வருவான்களென்று தெரியாத பதகளிப்பு. பூட்டியிருந்த கடைகளின் விறாந்தைகளில் வளர்த்தியிருந்த சடலங்கள். எல்லாம் இளந்தாரிகள். பள்ளிக்குப் போன பெடியன்களும். கடவுளே!
இடது கன்ன மேட்டில் துவாரம் தெளிவாய்த் தெரிய மல்லாந்து கிடந்த முகமொன்று. தாங்க முடியாமல் “வா போவோம்” என்று சக்திதாசனை இழுத்தபடி வெளியே வந்தான்.
எங்காவது ஜிப்போ ட்ரக்கோ இரைகிறதா? என்று புலன்களைக் குவித்தபடி ஒழுங்கைகளூடாகத் திரும்பிக் கொண்டிருந்த போது சக்தி சொன்னான்.
"மச்சான் பதின் மூண்டு சிங்களவர்களைக் கொண்டதெண்டு
298

சாந்தனின் எழுத்துலகம்
சொல்லுவாங்கள். ஆனா இது உண்மையிலேயே இலங்கை இராணுவமாக இருந்திருந்தால்.”
சக்தி "இலங்கை” என்றதை அழுத்திச் சொன்னான். "இந்தப் பதின்மூண்டிலை மூண்டாவது தமிழாக இருந்திருக்குமே” இந்தத் தெருவால் வந்து கே.கே.எஸ். வீதிச் சந்தியையும் பார்க்கலாமென்றான் சக்தி வந்தார்கள். இடையில் ஏதோ இரைந்த மாதிரி ஒரு சத்தம். சோழகமா வாகனமா என்றுகூட யோசிக்க முடியாத அந்தரத்தில் அமத்திக்கொண்டு பறந்தபோதும் இந்த வெளி இப்படித்தானிருந்தது!
O
இன்றாவது பரவாயில்லை. சக்தி கூட வந்தான். ஆனால் ஒரு நாலு வருஷத்திற்குப் பிறகு இந்த இடத்தை அப்படித் தாண்ட நேரிட்டபோது இவன் தனியேதான் வந்தான். சைக்கிள்தான்.
தோட்டவெளியைச் சுற்றி அரண்கட்டி நிற்கிற பனங்கூடலெங்கும் இந்தியன் ஆமி நிற்கக்கூடும். இவன் ஆர், இப்படித் தன்னந்தனியே என்று. ஊரைச் சுற்றி வளைத்தபோது இப்படித்தான் ஏழெட்டுப் பேரை. ஏன் இங்கு வந்தேன்? இருந்ததுபோல் மாமா வீட்டில் இருந்திருக்கலாம். இப்போ வீடு பார்க்க என்ன அவசரம்?
சுற்றி வளைத்து அந்தக் குறிச்சியின் சனமெல்லாவற்றையும் ஒரே வீட்டில் அடைத்து வைத்த அந்த ஒரு கிழமை. அவன்கள் விட்டதும் விடாததுமாய் வீட்டுக்குப் போய் அகப்பட்டதை எடுத்துக் கொண்டு பட்டணத்துக்கு நடந்தே போய் மாமா வீட்டிலிருந்த மூன்று கிழமை - இந்த ஒரு மாதமும் வீடு ஏதோ இருந்திருக்கும்தானே.
முதல்நாள் மகாலிங்கத்தைக் கண்டபோது இரண்டுதரம் போய்த் தனது வீட்டைப் பார்த்துவிட்டு வந்ததாகச் சொன்னான். அவன் கதையைக் கேட்டு வெளிக்கிட்டதும் பிழை. அதுவும் தனியே! அவனோடாவது வந்திருக்கலாம். ஆரும் கூட இருந்திருந்தால் பரவாயில்லை. தடுத்துவைத்த போதுதான் என்னவெல்லாம் செய்தான்கள். ஆனால் ஊரெல்லாம் அப்போது ஒருமிக்க இருந்தது.
மழைக்காலம். எங்கும் பச்சை, பனைமடி மூலையில் மாடுகள் கூட்டமாக
299

Page 152
சாந்தனின் எழுத்துலகம்
மேய்ந்து கொண்டிருந்தன. பசுமாடுகள், வீடுகளை விட்டு வெளிக்கிட்டபோது புத்தியாய் அவிழ்த்து விட்டவர்களின் மாடுகள். பிறகு அவன்களும் கட்டுகளில் நின்றதுகளை அறுத்து விட்டதாய்ப் பறைந்தார்கள். எப்படியோ கட்டைகளில் நின்ற மாடுகள் மந்தையாப் போயின
தடுப்பு முகாமிலிருந்தபோதே இந்த மந்தை உருவாகிவிட்டது. ஒரு பிற்பகல், அந்த வீட்டைத் தாண்டி அது தெருவால் போனது. அவன் வீட்டு மாடும் அதில் கன்னி நாகு, மாடுகள் அந்த வீட்டிலிருந்த மனிதர்களைக் கவனித்ததாய்த் தெரியவில்லை. அவர்கள் கட்டில் நின்றார்கள். அவை சுதந்திரமாய்ப் போயின வீட்டைத் தாண்டியதும், பள்ளமாய்க் கிடந்த தெருக்கரையில் தேங்கி நின்ற வெள்ளத்தை வாய் வைத்து உறிஞ்சின. அதைக் கண்ட கந்தையர் அழுவார் போலிருந்தார். அவைகளுக்கு வித்தியாசமே இல்லை போலும். நல்லகாலம் மாரியாயிருந்தது.
அதே மந்தைதான். அவன் மாடும் அதில் நிற்குமா? ஏதோ தப்பிப் பிழைத்திருக்கும். அதையெல்லாம் பார்க்கிற நிலையில்லை. இது.
வீட்டுக்குப் போனது, பார்த்தது. திரும்பியபோதெல்லாம் வெளி நினைவில் மங்கிப்போயின.
O
இன்றைக்கும் வெளி அதே மாதிரி? முடிவில் வருகிற முதலாவது மின்கம்பம். முதலி வீட்டு வேலியோடு வெளி முடிகிறது. கண்கள் கூர்ந்து முன்னால் தேடின.
கனகராசா கடை திறந்துதான் இருக்கிறது. அதற்கும் சலூனுக்குமிடை யிலிருக்கிற ஓடையில் இரண்டு சைக்கிள்கள். கடையில் ஓர் ஆள். சலூனுக்குள்ளும் கண்ணாடிக் கதவினூடு தெரியும் அசைவுகள்.
இடது பக்கம் திரும்புகிற ஒழுங்கை முகப்பில் வாசிக சாலை திறந்திருந்தது. எட்டுப்பத்துச் சைக்கிள்கள் எதிர்வேலி நிழலோடு நின்றன. சனங்களும் கனபேர். குரல்கள் பெரிதாய் ஒலிக்கின்றன.
சைக்கிளை ஃப்ரீவிலில் விட்டான்.
1993
300

ஆய்வாளர் பார்வையில்.
301

Page 153
1. அசோகமித்திரன்
இந்த இருபதாம் நூற்றாண்டில் மூன்றாம் உலகம் என்று அறியப்படும் நாடுகள் என்பனவற்றில் ஓரளவு படித்துப் பயிற்சி பெற்று ஒரு நடுத்தர வர்க்க வாழ்க்கை நடத்தக்கூடிய நிலை பெற்ற லட்சக்கணக்கான இளைஞர்களின் ஒரு பிரதிநிதியாக சாந்தனைக் காண முடிகிறது. அடுத்தடுத்து அவருடைய படைப்புகளைப் படிக்கும்போது விசாலமான கவனமுடைய, விழிப்புடைய
மனிதனையே திரும்பத் திரும்பக் காண்கிறேன்.
எழுத்தாளர்களுக்குத் தங்கள் படைப்புகளில் தங்களையே கதாநாயகர்களாக அமைப்பது ஒரு தவிர்க்க முடியாத செய்கை, சாந்தன் படைப்புகளிலும் சாந்தன்தான் கதாநாயகன், ஆனால் அவனே எக்காலும் முன்னுரிமை பெறுவதில்லை. பார்க்கப் போனால் பல படைப்புகளில் அவன் இரண்டாமிடத்தையும், மூன்றாமிடத்தையும் தான் வகிக்கிறான். இது ஆசிரியரின் விசேஷப் பக்குவத்தைக் குறிப்பதாகவே நான் நினைக்கிறேன். தான் ஒரு எழுத்தாளன் என்ற உணர்வு ஒரு எழுத்தாளனைச் சதாசர்வ காலமும் அழுத்துமாயின் அவனுடைய படைப்புகள் விசேஷப் பரிமாணங்கள் கொள்வது மிகவும் சிரமம். தன்னை இந்த உலகத்தின் முழுமையாகக் கருதாது இதிலுள்ள கணக்கற்றவரையும் தன்னைப் போல் நினைக்க முடிவதற்குத் தளராத கற்பனை வேண்டும். இக்கற்பனை சாந்தனிடம் மிக வலுவாக உள்ளது.
சாந்தனின் உருவ அமைதிபற்றிக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும்.
302

அவருடைய கதைகள் எங்கு முடிய வேண்டும் என்பதில் அவருக்குள்ள நிர்ணயத்திறன் அபூர்வமானது. இதுவே அவருடைய படைப்புகள் சிறந்த எழுத்துச் சிக்கனத்தோடு விளங்குவதற்குக் காரணமாயுள்ளது. பல படைப்புகளில் இவ்வளவு குறுகிய வடிவத்தில் இவ்வளவு மகத்தான செய்திகளைத் தந்துவிடவும் முடியுமா என்று வியக்கத்தக்க வகையில் சாந்தன் வெற்றியடைந்திருக்கிறார். இந்தச் சிறிய சிறுகதைகள் கதைத் துணுக்குகளாக இல்லாமல் முழுமை பெற்றிருக்கின்றன. புனைகதையில் இது ஒரு விசேஷ சாதனை.
இருபதாண்டுக்காலம் ஒர் எழுத்தாளன் தன் எழுத்தாற்றலையும், கற்பனைத் திறனையும், மேன்மை வேட்கையையும் மழுங்க விடாமல் தீவிரமாக இயங்க இயலுமானால் அது உண்மையான இலக்கிய ஆர்வம் கொண்டவராலேயே முடியும். சாந்தனைப் பற்றி நினைக்கும் போது இதெல்லாம் விலக்க முடியாத எண்ணங்களாக எழுகின்றன. அவருடைய படைப்புகள் எனக்களித்த மகிழ்ச்சியும் மனநிறைவும் இலக்கிய அனுபவமும் எண்ணற்ற வாசகர்களுக்கும் கிடைக்கும் என்று உறுதியாக நம்புகிறேன்.
- இன்னொரு வெண்ணிரவு' தொகுதியின் முன்னுரை "வெண் புறா வெளியீடு - 1988
2
பேரா. க. கைலாசபதி
D
5டந்த கால் நூற்றாண்டுக் காலத்தில் இலக்கிய விமர்சகனாகவும் பத்திரிகையாசிரியனாகவும் பல்கலைக்கழக ஆசிரியனாகவும் இயங்கிவந்த முறைமையில் பல எழுத்தாளர்களைக் கண்டுணரவும் அவர்களுக்கு ஊக்கமளிக்கவும் அவர்களின் நூல்களுக்குக் கருத்துரைகள் வழங்கவும் அவ்வப்பொழுது எனக்கு வாய்ப்பு இருந்து வந்திருக்கிறது. ஆற்றல் மிக்க எழுத்தாளரின் ஆக்கங்களுக்கு முன்னுரை எழுதுகையில் மனநிறைவும் மகிழ்ச்சியும் தோன்றுவது இயல்பே.
303

Page 154
சாந்தனின் எழுத்துலகம்
ஏறத்தாழ ஐம்பதாண்டுகால வரலாற்றினையுடைய ஈழத்துத் தமிழ்ச் சிறுகதையின் வளர்ச்சிக் கிரமத்தையும் செல்நெறிகளையும் ஈழத்து நவீன இலக்கியத்தில் ஆர்வமும் அக்கறையும் உள்ளவர்கள் அறிவர். கல்லூரிகளில் உயர் வகுப்புகளிலும் பல்கலைக்கழகங்களிலும் தமிழிலக்கியத்தை ஒரு பாடமாகப் பயிலும் மாணாக்கர் தமிழ்ச் சிறுகதை வளர்ச்சியை விரிவாகவும் விளக்கமாகவும் அறிந்திருக்கின்றனர். இந்நிலையில் சாந்தன் வெளியிடும் நான்காவது சிறுகதைத் தொகுதிக்குரிய பின்னணியை விரித்துரைக்க வேண்டிய அவசியமில்லை.
1960 களில் எழுதத் துவங்கி எழுபதுகளில் எழுத்துலகின் கவனத்தைத் தன்பால் ஈர்த்துக் கொண்டவர்களில் ஒருவர் சாந்தன். கடந்த பத்தாண்டுக்காலத்தில் இலங்கையிலும் தமிழ்நாட்டிலும் எழுத்தாளராக விளங்குகிறார். ஐம்பதுகளின் பிற்பகுதியில் இலங்கையில் ஊற்றெடுத்துப் பொங்கிப் பிரவகித்த தேசிய - முற்போக்கு - ஜனநாயக வெள்ளம் நமது இலக்கியப் பரப்பிற் பாய்ந்து அதனை வளப்படுத்தியபின் செழித்து வளர்ந்த செடிகளில் ஒன்றாக அவரைக் குறிப்பிடுதல் தவறாகாது.
ஐம்பதுகளிலும் அறுபதுகளிலும் கலை இலக்கிய உலகிலே தேசிய முற்போக்கு ஜனநாயகக் குரல் தன்முனைப்புடனும் வெளிப்படையாகவும் தொடக்க நிலைக்குரிய வீறாப்புடனும் ஓங்கி ஒலித்தது. ஈழத்துத் தமிழ் இலக்கியம் அதனால் பல மாற்றங்களைக் கண்டது. தமது அண்மைக்கால இலக்கியத்தின் தனித்தன்மை அக்காலப் பகுதியிலிருந்தே பலராலும் கணிக்கப்பட்டு வந்துள்ளது. அவ்விலக்கிய இயக்கதின் ஆரம்பகால ஆரவாரங்களும் சண்டவேகமும் சந்தடிக்கும் தணிந்து தெளித்து அடங்கிய
தஸாப்தத்திலே “தனது ஆரோக்கியத்தினாலும் இயல்பான செழிப்பாலும்”
எழுத்துலகில் முன்னுக்கு வந்தவர் சாந்தன். இது வரலாறு.
இனி, இத்தொகுதியிலுள்ள கதைகளைப்பற்றிப் பேசுவோம். இவற்றின் பொதுப் பண்புகளை நோக்கும்போது கதாசிரியரது கூரிய நுண்காட்சித்திறம், சுற்றி வளைக்காமல் நேரடியாகப் பொருளுக்கு வரும் தன்மை, விஷயத்திலிருந்து ஒரளவு விலகி நிற்கும் நடுவுணர்வுநிலை, நுணுக்க விவரத்தில் கடைப்பிடிக்கும் கட்டுப்பாடான சிக்கனம், எளிமை என்பன துலாம்பரமாயுள்ளன. இப்பண்புகளின் கூட்டுச் சேர்க்கை கதைகளின் தனிச்சிறப்பியல்பாக அமைந்துள்ளது.
304

கடந்த ஐந்தாண்டுகளில் சாந்தன் எழுதிய கதைகளிற் சில இத்தொகுப்பில் இடம் பெறுகின்றன. கதைகள் வெளிவந்த வருடம் குறிப்பிடப்பட்டிருத்தல் பயனுடையது. இக்கதைகள் பெரும்பாலும் அளவிற் சிறியன. கடுகு (1976) என்னும் தலைப்பில் இதற்குமுன் ஆசிரியர் வெளியிட்ட குறுங் கதைகளைப் போல மிகச் சிறியவையாக இல்லாவினும் பொதுவாக பேசுமிடத்து இவை உருவகத்தில் சிறியவை என்பதில் தடையில்லை. மேலே குறிப்பிட்ட நுண்மை, நேர்மை, எளிமை, சிக்கனம் முதலிய பண்புகளுக்குக் காரணமாகவும், அவற்றின் காரியமாகவும் இவை அமைந்துள்ளன என்று விவரித்தல் பொருந்தும். சாதாரணமாய்க் கால அடைவை ஒட்டிக் கதை கூறும் பாங்கில் அன்றி, நிகழ்வுகளையும் அவற்றை யொட்டிய மனப் பதிவுகளையும் பல்வண்ணக் காட்சிக் கருவி போன்று சித்தரித்தல் ஆசிரியரின் பிரதான உத்தியாகக் காணப்படுகிறது. சிறு சிறு காட்சிகள் அமைந்து கிடக்கும் முறையில் சில சிந்தனைகளும் உணர்வுகளும் வாசகர்களால் பெறப்படுகின்றன. கதாசிரியரது நெறிப்படுத்தலோ குறிப்புரைகளோ விளக்கவுரைகளோ 'பொன்மொழிகளோ எவையுமின்றி நினைவுத்திவலைகள் தரமாகவே பொருளை உணர்த்தும் உத்தி இது எனலாம். முளைகள்'இடையில் ஒரு இருபது வருஷம், குமிழிகள் ஆகிய கதைகளில் இதனைச் சிறப்பாகக் காணலாம். பொதுவாகப் புதுக் கவிதைகளிற் காணப்பெறும் சொற்செட்டும் அலங்காரமற்ற மொழியாட்சியும் இவரது நடையின் குறிப்பிடத்தக்க குணாம்சங்களாயிருக்கின்றன. அந்த வகையில் பிரக்ஞைபூர்வமான நடைத்திறனுடையவர் என்றும் கூறுதல் மிகையாகாது. பொருளைக் கையாளும் நிதான நெறியின் நேரடியான வெளிப்பாடே நடையின் நயம் என்பது தருக்கத்தின் பாற்படுவதாகும்.
தன்னுணர்ச்சிப்பாடல், சிறுகதை இவற்றைப் படைக்கும் எழுத்தாளர் பலர், தமது இளமைக்கால நினைவுகளைக் கருவாகக் கொண்டு புனைந்துரைத்தல் இலக்கிய உலகம் அறியாததொன்று அன்று. ஆற்றல்மிக்க நாவலாசிரியர் பலர் பாத்திரங்களின் இளமைக்காலத்தை வருணிக்கும்போது தமது அனுபவ நினைவுகளை அதிற் பக்குவமாகப் பயன்படுத்தியிருப்பதை விமர்சகர்கள் சுட்டிக் காட்டியிருக்கின்றனர். நவீன இலக்கியத்தில் யதார்த்தம் நிலவுதற்குரிய மூலங்களில் ஒன்று எழுத்தாளரின் சுய அனுபவமாகும். கால
305

Page 155
சாந்தனின் எழுத்துலகம்
வெள்ளத்தில் அடிபட்டுப் போனவை போக எஞ்சியுள்ள நினைவுகளே ஒருவரை ஆழமாகப் பாதித்தனவாயிருக்கும். அவை குறிப்பிட்ட காலச்சூழலைப் பின்னணியாகக் கொண்டனவாகையால் தூலமாகவும், காலத்தால் வடித்தெடுக்கப்பட்டனவாகையால் பொதுப்பண்புடையனவாகவும் அமைந்துவிடுவதையும் பல இலக்கியங்களிற் காண்கிறோம். பாரதியினுடைய ‘சுயசரிதை இதற்குச் சிறந்த எடுத்துக்காட்டு. தனிநிலை அனுபவம் இலக்கிய ஆக்கப்பட்டறையிலே பொதுநிலை அனுபவமாக மாறும் ரஸவாதம் இவ்வடிப்படையிலேயேயாகும். இத்தொகுதியிலே புதிய தரிசனங்கள என்ற கதையில் வரும் இராசலிங்கம் வாத்தியாரும் கதாசிரியருக்கு நன்கு தெரிந்த மனிதர்களாக இருக்கும் அதே வேளையில் வாசகர்கள் தத்தம் வாழ்க்கையிலும் கற்பனையிலும் இனங்கண்டுகொள்ளக் கூடியவராகவும் வார்க்கப் பட்டிருக்கின்றனர்.
1975-1980 காலப்பகுதியில் வெளிவந்த கதைகள் இவை என்றாலும், இவற்றில் கோலங்காட்டும் நினைவுகள் ஆசிரியரின் இளமைக்காலத்தைப் பற்றி நிற்பன. பள்ளிப் பாலகனாகத் துள்ளித்திரிந்த கால முதல் (முளைகள்), அரசாங்க உத்தியோகத்தில் கொழும்பிலே குடித்தனம் நடத்திய காலம் வரை ('ஆறுதல்), பல்வேறு சம்பவங்களும், நிகழ்வுகள், பாத்திரங்கள் யாவுமே அடிநாதமான வாழ்க்கையின் இயல்பையும் அர்த்தத்தையும் கோடி காட்டுவனவா யிருக்கின்றன. சம்பவங்களையும் அவற்றின் சமூக-வரலாற்று முக்கியத்துவத்தையும் உரத்த குரலில் அழுத்திக் கூறியோ அல்லது பொதுவான அங்கீகரிக்கப்பட்ட வடிவங்களில் வார்க்கவோ முற்படாது, “அவை அவ்வாறுதான் நடந்தன” என்று கருதத் தக்கவாறு விட்டுவிடுகிறார். இம்முறையிலேயே ஆசிரியரது நடுஉணர்வு நிலையும், பற்றற்று நிற்கும் பான்மையும் தெளிவாகப் புலப்படுகின்றன. சிருஷ்டி ஆற்றல் வாய்க்கப் பெற்றவர்களாலேயே இத்தகைய உத்தியை இலாவகமாகக் கையாள இயலும், அனாயாசமாகப் பொருளை உணர்த்தும் கலைத்திறன் சாந்தனிடத்து அபரிதமாய்க் காணப்படுகிறது. "தான் கலந்து” எழுதுதல் இலக்கியத்தில் போற்றத்தக்க பண்பாகக் கருதப்படுவதுண்டு. அம்முறையிலும் அற்புதமான சில ஆக்கங்கள் தோன்றியிருக்கின்றன. ஆனால், கூறப்படும் பொருளோடு உணர்ச்சிபூர்வமாகக் கலந்துவிடாமல் அதனைப் புறநிலையில் வைத்து நோக்கி அதிலே தோன்றும் அவலங்களையும் குறிப்பாக
306

சாந்தனின் எழுத்துலகம்
முரண்களையும் இயற்பண்புடன் சித்திரிப்பதும் ஒர் இலக்கிய முறையியலாகும். இதற்குக் கட்டுப்பாட்டு உணர்வு வேண்டும். இந்நூலிலுள்ள “மனிதர்களும் மனிதர்களும்” என்ற கதையில் இலங்கையில் தமிழ்மக்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட வன்செயல்கள் சிற்சில காட்சிகளினூடாகச் சித்திரிக்கப்படுகிறது. திரைப்படம் ஒன்றுக்கு உகந்த காட்சித் தொகுப்புப் போல உயிர்களை வாய்ந்த ஒவியங்களினாலே நெருக்கடியான நிலைமையொன்றில் சிக்கித் தவிக்கும் மனிதர்களை நம்முன் நிலை நிறுத்துகிறார் சாந்தன். ஆயினும் வன்செயல்களை விவரிப்பதோ, உணர்ச்சிவசப்பட்டு அவற்றைக் கண்டித்துரைப்பதோ கதையின் பிரதான நோக்கமன்று. சித்தரிக்க எடுத்துக்கொண்ட நிலைமையிற் காணும் முரண்களைக் காட்டுவதன் மூலம் பலவற்றைக் கூறாமற் கூறிவிடுகிறார். கதையின் தொடக்கத்திலேயே முரணின் இயல்பு கூறப்பட்டு விடுகிறது. "அந்த அமைதியான அழகிய கிராமத்தின் மக்கள் இப்படி இருப்பார்கள் என்று நினைக்க முடிந்ததில்லை” என்னும் வாக்கியம் கதைக்குரிய தொனியை நிர்ணயித்து விடுகிறது. ஒன்றுக்கு மேற்பட்ட பரிமாணங்கள் கதையில் தோன்றுவதற்கு முரண்களைக் காட்டும் முறை பெரிதும் இயைபுடையதாகும். அகதிகள் போல அச்ச உணர்வுடன் (அகமனப் போராட்டங்களுடனும் தான்) ரெயில் வண்டியிற் பயணஞ் செய்ய முற்படும் அம்மனிதர்களிற் சிலர் 'சொகுசான ஆசனங்களுக்காகச் சண்டை போட்டுக் கொள்வதும் ஆசிரியர் அமைத்துக் காட்டும் காட்சிகளில் ஒன்று. இச்சிறு நுணுக்க விவரம் மனிதர்களும் மனிதர்களும்” என்ற தலைப்பின் அர்த்த பாவத்தைப் புலப்படுத்துகிறது. அநுபவத்தை ஒட்டிய ஒரு கதையில் அகதிகள் மீது அநுதாபத்தை மாத்திரம் சொரிந்துவிடாமல் அவர்கள் மத்தியில் தலைதூக்கும் முரண்களையும் பல்வண்ணக் காட்சித் தொகுப்பில் அடக்கியிருப்பது ஆசிரியரின் அடக்கமான புறநிலை நோக்கிற்குச் சிறந்த உதாரணம், அதே சமயத்தில் இத்தொகுதியிலுள்ள ஏனைய சில கதைகளின் பின்னணியில், கடந்த சில வருடங்களாக இலங்கையில் நடைபெற்று வந்திருக்கும் இனக்கலவரங்கள் இழையோடிக் கொண்டிருப்பதையும் அவதானிக்கலாம். இனக்கலவரங்கள் பற்றிய கட்டுக்குறியீடுகள் இத்தொகுதியில் இடம்பெறும் கதைகளின் காலம் எதுவெனக் கட்டுவதாகவும் கொள்ளலாம். காலம் பற்றிய இக்குறிப்புரைகள் சமகால உணர்வைத் தோற்றுவிக்கின்றன என்று கூறுவதும் பொருந்தும். உணர்ச்சி 307

Page 156
சாந்தனின் எழுத்துலகம்
வசப்படாமல் “வாழ்க்கை இருந்தவாறு’ என்னும் உணர்வை எழுப்பும் இக்கதைகளில் ஆசியரது நுண்நயம் வாய்ந்த் நகைச்சுவை சூட்சுமமான முறையில் உட்கலந்து நின்று சுவைநலம் பயப்பதாயிருக்கிறது.
இத்தனைக்கும் மேலாக, ஆசிரியரையோ, அவரது படைப்புகளையோ தத்துவார்த்த இயக்க எல்லைக்கோடுகளுக்குள் நிறுத்தி, நிறுத்து எடைபோட வேண்டும் என்று எனக்குத்தோன்றவில்லை. சுயபிரகடனஞ் செய்யாத, ஆனால் கனதியான சமூகப்பார்வை ஆசிரியருக்கு இருப்பதனாலேயே இத்தகைய கதைகளை அவரால் எழுத முடிகிறது என்று எண்ணுகிறேன். வெளிப்படையான வாக்குமூலங்களை இத்தகைய ஆக்கங்களில் எதிர்பார்த்தல் நியாயமன்று. எனினும் ஒன்றுகூற விரும்புகிறேன். நகர வாழ்க்கையினடியாகவும் ஒருவிதமான ஆய்வறிவுப் போக்கின் விளைவாகவும் சிற்சில மாந்தர்க்கு ஏற்படும் அன்னிய உணர்வு இரண்டொரு கதைகளில் கையாளப்பட்டிருக்கிறது. அன்னியமாதலை உணரும் பாத்திரங்களை ஆங்காங்கு காண்கிறோம். "விலகிப் போகிறவன்' என்ற கதையில் வரும் விஜயனை உதாரணங் காட்டலாம். சித்திரம் என்ற வகையில் அப்பாத்திரம் இயல்பாகவே உள்ளது. அதனைத் தத்துவ வடிவில் நியாயப்படுத்த அவர் முயலவில்லை. தேடல் என்ற பெயரில் தறிகெட்டு நெறியற்ற வக்கரித்த பாத்திரங்களை இலட்சியப்படுத்தவோ அவற்றுக்கு வக்காலத்து வாங்கவோ முற்படவும் இல்லை. எனினும் கத்தியின் கூர்ப்பாகத்தில் நடக்கும் காரியத்தைச் செய்து முடித்திருக்கிறார். இவ்விஷயத்தில் ஆசிரியர் விழிப்பாயிருத்தல் விரும்பத்தக்கது. "குமிழிகள் என்ற கதை அன்னியமாதலுக்கு மாற்று மருந்துபோல அமைந்திருப்பதும் அவதானிக்கக் கூடியதே.
இன்று தமிழில் குறிப்பிடத்தக்க சிறுகதைகளை எழுதுவோரில் சாந்தனும் ஒருவர் என்பதை வாதிட்டு நிறுவவேண்டிய தேவையில்லை. ஏற்றுக்கொள்ளப்பட்ட செய்திக்கு நிதரிசன பத்திரமாகவே என் உரை அமைகிறது. தமிழ்ச் சிறுகதை வளர்ச்சியில் ஆர்வமுள்ளவர்கள் ஆசிரியரை ஊக்கி உற்சாகப்படுத்தத் தவறமாட்டார்கள் என்றே நம்புகிறேன்.
கதாசிரியருக்கு என் மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.
- "முளைகள் தொகுதி (NCBH, 1975) அணிந்துரை
3O8

3 கலாநிதி நா. சுப்பிரமணியன்
5லை, இலக்கியம் என்பன வாழ்க்கையைப் பற்றிப் பேசுவன. வாழ்வியல் அநுபவங்களின் பிழிசாறாக அமைவன. வாழ்வியல் அநுபவங்களை நிகழ்வுகளாக - சம்பவங்களாக - நோக்கும் போது அவ்விலக்கியம் அல்லது கலை விவரணமாகி விடுகிறது. அந்நிகழ்வுகளின் அடியாக எழும் எண்ணக் கோலங்களையும் உணர்வலைகளையும் தேக்கி நிறுத்தும் நிலையிலேயே கலையும் இலக்கியமும் சிறப்படைகின்றன. கலை இலக்கியம் என்பவற்றின் பிறப்புத் தொடர்பான இந்த அடிநிலை உண்மையை நன்குணர்ந்து கொண்டவர்களுள் குறிப்பிடத்தக்க ஒருவர் - எழுத்தாளர் சாந்தன், “அநாயாசமாகப் பொருளை உணர்த்தும் கலைத்திறன்” வாய்ந்தவராகப் பேரசிரியர் க. கைலாசபதி அவர்களால் (முளைகள் சிறுகதைத் தொகுதி அணிந்துரையில்) மதிப்பிடப் பட்டுள்ள படைப்பாளி இவர்.
சாந்தன் கதைகள் காட்டும் உணர்வு நிலைகள் இருவகையின. ஒன்று சமூக பொருளியல் ஏற்றத்தாழ்வுக்கு எதிரான அறிவுநிலை சார்ந்த உணர்வெழுச்சியாகும். பொதுவான பகுத்தறிவின் வளர்ச்சி மற்றும் பொதுவுடமைச் சிந்தனையின் வரவு என்பன இதனைத் தூண்டி நின்று வழி நடத்தின. முனைப்புப் பெற்ற இன்னோர் உணர்வுநிலை தமிழ் - சிங்கள இன முரண் சார்ந்ததாகும். பெளத்த - சிங்கள பேரினவாதத்தின் விளை பொருளான இந்த இனமுரண்பாட்டுணர்வு இன்று எய்தியுள்ள அதி தீவிர பூதாகரமான நிலை யாவரும் அறிந்ததே. இதனை உரிய கட்டத்தில் உணர்ந்து எழுத்தில் வடிக்க முயன்றவர் இவர்.
பொதுவாக மேற்படி இரு நிலைப்பட்ட உணர்வுத் தளங்களும் சாந்தனின் எழுத்துக்களுக்குப் பகைப்புலன்களாக அமைந்துள்ளன. ஒரு முற்போக்குவாதி - பொதுவுடமைத் தளம்சார் படைப்பாளி-என்ற வகையில் மேற்படி இரண்டாவது உணர்வுத் தளமே - இனமுரண்பாட்டுச் சிந்தனைச் சூழலே - சாந்தனது கதைகள் பலவற்றிலும் முக்கிய பகைப்புலமாக அமைந்துள்ளது.
309

Page 157
சாந்தனின் எழுத்துலகம்
இத் தொகுப்பிலுள்ள கதைகளில் பல இதற்குச் சான்றாக உள. இதில் கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கிய அம்சம் என்னவெனில், முற்போக்குவாதி ஒருவர் இனமுரண் சூழலைக் கவனத்திற் கொள்ளக்கூடாது, என்ற தீண்டாமை உணர்வு நிலவிய வரலாற்றுக் கட்டத்தில் இந்த முற்போக்குவாதி அந்தத் தீண்டாமையைத் தாண்டி வந்தவர் என்பதாகும். அவரது அந்நியமான உண்மைகள் என்ற கதை (மல்லிகை 75 ஜனவரி, காலங்கள், ஒரு பிடிமண் - தொகுதிகள்) இவ்வகையில் வரலாற்று முக்கியத்துவம் பெற்ற படைப்பாகும். அரசியல் மற்றும் இலக்கிய அமைப்புக்களின் எல்லைகட்குள் சாந்தன் என்ற படைப்பாளியின் ஆளுமை
மட்டுப்பட்டு நிற்கவில்லை என்பதை இக்கதை உணர்த்தும்.
சாந்தனின் இனப்பிரச்சினை நோக்கில் ஒரு முக்கிய கட்டம் 1981இல் எழுதப்பட்ட கிருஷ்ணன் தூது சிறுகதை. சிறுகதைக் கட்டமைப்புத் திறனுக்கு எடுத்துக்காட்டாகக் காட்டக் கூடிய முதன்மையான கதையென மேற்படி கிருஷ்ணன் தூது கதையைக் கூறலாம். இனப்பிரச்சினையின் மிகப் பெரிய வரலாற்றுப் பரிமாணத்தை ஓர் அலுவலகத்தின் நிகழ்ச்சிகளுக் கூடாகக் கதை மாந்தரின் குணநலன்களையும் இனப்பிரச்சினையின் வரலாற்றுச் செல்நெறியையும் புலப்படுத்திய திறனும் தமிழ்ச் சிறுகதைகளில் அதற்கொரு தனிச் சிறப்பை - தனி இடத்தைத் தருவன.
ஒன்றுக்கு மேற்பட்ட அநுபவங்கள் இணைத்துக் கதையம்சம் விரிவடைந்து செல்லும் நிலைக்குச் சான்றாக அமைவது ஆரைகள்'. ஆரைகள் குறுநாவலின் பிரதான பகுதி இனக்கொலைச் சூழலின் பின் மீண்டும் கொழும்பிற் பணிபுரியச் சென்ற ஒரு தமிழனின் உணர்வோட்டத்தின் படப்பிடிப்பாகும். சூழ்நிலையின் யதார்த்ததைப் புரிந்து கொண்டு சிங்களவர்களுடன் ஒத்து மேவி வாழமுற்படும் ஒரு சராசரி மனிதனை அக்குறுநாவல் தரிசிக்க வைக்கிறது. தனிமனித நிலையிலான தான் என்ற தளத்தில் நின்று விரிந்து குடும்பம், சமூகம், இனம், வர்க்கம், உலகம், பிரபஞ்சம் என்ற வகையில் பார்வை விரிந்து செல்வதை இதிற் காணலாம். ஒருவனது ஒருநாள் வாழ்வில் நிகழும் பலதளச் செயற்பாடுகளை இணைத்துக் காட்டும் நிலையில் ஆரைகள் செப்பமுற அமைந்துள்ளது.
வெவ்வேறு மட்டங்களில் இனப்பிரச்சினையைத் தொட்டும்
310

சாந்தனின் எழுத்துலகம்
விமர்சித்தும் வந்துள்ள சாந்தன் அப்பிரச்சினையின் வரலாற்றை முழுமையாகத் தொட்டுக் காட்டும் வகையில் 1987ல் எழுதப்பட்ட அத்தியாயங்கள்’ என்ற குறுநாவலை எழுதினார். இதிலே தனது அநுபவங்கள், மனசாட்சி என்பனவற்றின் தளத்தில் நின்று அப்பிரச்சினையின் செல்நெறியை விமர்சிக்கிறார். சிங்களவரிடம்
பேரினவாத நோக்கு படிப்படியாக வளர்ந்த நிலை, தமிழரது
உரிமைப்போராட்ட முயற்சிகள், ஈழக்கோரிக்கை உருவான சூழல், யாழ்ப்பாணப் பிரதேசத்தின் யுத்த சூழல், ஈற்றில் 1987 ஜூலையில் இந்தியாவின் நேரடித் தலையீடு அமைந்த நிலை என்பன நினைவோட்டத்தினூடாகக் கதையாகப் பரிணமிக்கின்றன. சுதுமலை அம்மன் கோவில் முன்றிலில் இந்திய 'ஹெலி வருகையை எதிர்பார்த்து நிற்கும் ஒருவரது சிந்தனையோட்டமாக விரிந்து இக்கதை மேற்படி 'ஹெலி தரையிறங்குவதுடன் நிறைவு பெறுகிறது. தலைப்புக்கேற்ப இனப்பிரச்சினை தொடர்பான நிகழ்வுகள், மேற்கொள்ளப்பட்ட நடைமுறைகள் என்பவற்றின் சுருக்கப் பதிவோடாக - எழுதப்பட்ட அத்தியாயங்களாக - இக்குறுநாவல் அமைந்துள்ளது. இவ்வகையில் சாந்தனது வரலாற்றிலும், இனப்பிரச்சினை இலக்கிய வரலாற்றிலும், மேற்படி ஆக்கம் முக்கிய கவனத்திற்குரியதாகிறது.
மேற்சுட்டிய வகையில் அமைந்த ஆக்கங்கள் யாவற்றிலும் சாந்தன் தன்னை இனங்கடந்த யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற மனப்பாங்குடைய ஒரு பொது மனிதனாகவே புலப்படுத்திக் கொள்கிறார். தமிழன் என்ற சார்பு நிலையில் நின்று இனப்பிரச்சினையை அவர் நோக்கவில்லை. சிங்களவர் - தமிழர் இருசாரரும் மனித நேயத்துடன் ஒன்றிணைந்து வாழ வேண்டும் என்ற கருத்தை முன்வைத்த 1970 - 75 காலகட்டத்திலும் சரி, அதன்பின் சிங்கள பேரினவாதக் கொடுமைகளை இனங்கண்டு விமர்சிக்க முற்பட்டபோதும் சரி அவரது இந்தப் பொதுமனத் தளத்தில் மாற்றம் நிகழவில்லை. எனவே பிரச்சினை தொடர்பான பல்வேறு அம்சங்களையும் இவரால் விருப்பு பொறுப்பின்றி விமர்சிக்க முடிகிறது.
இத்தொகுப்பிலுள்ள ஏனைய கதைகள் மேற்குறிப்பிடப்பட்டவற்றின் தன்மைகளையே ஒத்து நிற்பதுடன் இயல்பான கலை வரலாற்று வளர்ச்சியாயும் அமைவன. தம்மீது திணிக்கப்பட்ட போர்ச்சூழல்
311

Page 158
சாந்தனின் எழுத்துலகம்
நிர்ப்பந்தங்களுக்கு முகங்கொடுத்துத் தாக்குப்பிடிக்கும் மக்களின் வாழ்வியலை கலைப் படைப்பாக்கும் அவரது முனைப்புக்குச் சான்று
பகர்வன இவை.
ஈழத்தின் இனப்பிரச்சினை இலக்கியம் தொடர்பாக நோக்கும்போது, கடந்த 25 ஆண்டு காலப்பகுதியில் இப்பிரச்சினை தொடர்பாகப் பிரக்ஞைபூர்வமாகச் சிந்தித்து தொடர்ந்து எழுதி வந்துள்ள சிறப்பு சாந்தனுக்கு உரியது. இனப்பிரச்சினையை உணர்ச்சி சார்ந்த ஒரு விடயமாக அணுகாமல் அறிவுபூர்வமாகச் சிந்தித்து உணர்வுபூர்வமாக வெளியிட முற்பட்டவர் என்ற வகையில் இவர் தனிக்கவனத்திற்கு உரியவராகின்றார். தேசியவாதம் பேசி நின்ற முற்போக்கு அணியினருள் பேரினவாதத்தின் பாதிப்புக்களை அனுபவங்களுக்கூடாக முன்வைக்கத் தொடங்கிய முதல்வர் என்ற வகையிலும் சாந்தன் வரலாற்று முக்கியத்துவம் உடையவராகிறார்.
பொதுவாக இத்தொகுப்பிலுள்ள கதைகளை வாசிக்கும் வாசகர்கள் சராசரியான தமிழ்ப் படைப்பாளிகளிலிருந்து வேறுபட்ட - சற்று வித்தியாசமான முறையில் அநுபவங்களைத் தொற்றவைக்கும் - ஒரு படைப்பாளியைத் தரிசிப்பார்கள் என்று திடமாகக் கூறமுடியும். வாழ்வியல் அநுபவங்களுக்குள் கலந்து நின்று உண்மையையும் முழுமையையும் தேடும் ஒரு மனிதநேயவாதியையும் கொள்கைப் பிரகடனம் செய்யாமலே தனி மனித - சமூகப் பிரச்சினைகளை நுட்பமாக நுணுகி நோக்கி விமர்சிக்கும் ஒரு முற்போக்குச் சிந்தனையாளனையும் சாந்தனில் அவர்கள் காண்பார்கள் என்பது எனது நம்பிக்கை. இவ்வகையில் இத்தொகுப்பு தமிழ்ப் படைப்பிலக்கியப் பரப்பில் தனிக் கவனத்திற்குரியதொன்று எனலாம்.
- எழுதப்பட்ட அத்தியாயங்கள் கதைத் தொகுதியின் முன்னுரை ("மல்லிகைப் பந்தல்' - 2002).
312


Page 159

彎
ப்பெயர் பிறந்தது 1947 ந்தவர். தமிழிலும்
ழுதி வருகிறார். இவரது மொழியாக்கங்கள் கண்டுள்ளன. இலங்கை அரசில் ۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔ க்கும்,
மற்றும் ஆட் டோகாட் லத் தொழிற்பயிற்சிக்
ாண்டவர் சாந்தன் ம் என்று வேறெங்கும் காலகட்டத்தில் சொந்த
ਸੰ5, களிலும் மட்டுமே.
சாந்தன் - لنابوى ച്ഛങ്ങ്ങ്ഥങ്ങിയെ வீதி சுதுமலை மணிப்பாய்