கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஆளுமையற்ற தலைமைத்துவத்தை அப்புறப்படுத்துவோம்

Page 1
「エ
こ)
 


Page 2

Lിങ്ഥിബിf !ഖ്ഥങ്ങ് !ഖീ1
ប្រវិលធំយោបuចាំ ចាយ៉ាំ ព្រហ៉ាសិវ៉ៃ ប្រាំ Lö Üញាប់បុថាចាr முரீ.ல. மு. காங்கிரஸ் கட்சியின் வீரப் போராளிகளே!
அஸ்ஸலாமு அலைக்கும்!
நமது மாபெரும் தலைவர் எம்.எச்.எம். அவஷ்ரப் அவர்களின் மறைவுக்குப் பின்னால் அனாதையாகப் போய்விட்ட ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியினதும், இந்நாட்டில் வாழும் முஸ்லிம் சமுகத்தினதும் எதிர்கால அரசியல் என்பது ஐயங்களுக்குள்ளும் அச்சங்களுக்குள்ளும் ஆட்பட்டுப் போயிருக்கும் இத்தருணத்தில் சில தெளிவுகளையும் விளக்கங்களையும் இச்சிறு பிரசுரம் முன் வைக்குமென்று நம்புகிறோம்.
மாபெரும் தலைவர் அஷ்ரப் அவர்களின் மறைவின் பின்னர் பூரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்குள் நடந்த தலைமைத்துவப் போராட்டங்களில் நயவஞ்சகத்தனமாகவும், சுயலாப அடிப்படையிலும் எவ்வாறெல்லாம் அரசியற் சதுரங்கத்தின் காய்கள் நகர்த்தப்பட்டன என்பதை நாமறிவோம். இலங்கை வாழ் முஸ்லிம் சமுகத்தின் ஒட்டுமொத்த
GOLD)

Page 3
リ。。。 。 நலன்களும் வேரோடு பிடுங்கப்பட்டும்; அச்சமுகத்தின் எதிர்கால @所@
வாழ்வு தீயிட்டுக் கொளுத்தப்ப்ட்டும் நிகழ்ந்திருக்கின்ற தன்னலம் சார்ந்த
செயற்பாடுகளை இலங்கையில் வாழும் ஒவ்வொரு முஸ்லிம் குடிமகனும்
அறிந்து கொள்வதற்குக் கடமைப்பட்டவன் என்பதை மறுத்தலாகாது.
மர்ஹஉம் அவஷ்ரப் அவர்கள் மறைந்த பின்னரும் கூட இந்த நாட்டின் முஸ்லிம் சமுகம் பதினொரு பாராளுமன்ற உறுப்பினர்களை பூரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியிடம் அமானிதமாகக் கையளித்ததையும், அந்த அமானிதம் இன்று கயவர்களால், விஷமிகளாற் துவஷ்பிரயோகம் செய்யப்பட்டதையும் எண்ணி உடம்பெல்லாம் விழிகளாக்கி நாம் குருதிக் கண்ணிர் பொழிய வேண்டிய கட்டத்திலிருக்கிறோம்.
மர்ஹம் அஷ்ரஃப் மறைந்ததன் பின்னர் கூடிய ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அரசியல் உயர்பீடக் கூட்டத்தில், மர்ஹஉம் அஷ்ரப்பின் பாரியாரான 'பேரியல் அஷர.ப் தலைவராக முன்மொழியப்பட்ட போதும், வழிமொழியப்பட்ட போதும் அங்கு சில நிமிடங்களுக்கு எதிர்ப்புக் குரல் எவையுமே கிளர்ந்தெழவில்லை. ஆனால் அந்தச் சில நிமிடங்களின் பின்னர் தலைவர் அஷர..ப் அவர்களின் மையித்தை அடக்கிய கையோடு திட்டமிட்டபடி உட்பிரவேசித்திருந்த றவுபூட்ப் ஹக்கீமின் அந்தரங்கச் செயலாளராகக் கடமையாற்றிய நயிமுல்லா என்பவர் றவுபூட்ப் ஹக்கீமின் பெயரைப் பிரேரிக்க, எம். முர்ஷிதீன் அதை ஆமோதிக்க அந்தக் கணம் தொட்டு இந்த நாட்டின் முஸ்லிம் சமுகத்தின் அரசியல் வள வாழ்வு என்பது அழிவை நோக்கிப் பயணம் செய்ய ஆரம்பித்தது.
இத்தாவுக்குள்ளிருந்த 'பேரியல் அஷர..பின் இணக்கமோ, விருப்போ இல்லாமல் அவரது பெயரைத் தலைமைத்துவத்துக்குத் தெரிவு செய்த முஸ்லிம் காங்கிரஸின் சிரேஷ்ட போராளிகளும் அதியுர் பீட உறுப்பினர்களும் அவருக்குப் போட்டியாக றவு.ப் ஹக்கீமின் பெயர் திடீரென்று கிளம்பியவுடன் விக்கித்துப் போனார்கள்.
 
 
 

|千ーエ
தலைமைத்துவம் என்பது கேட்டுப் பெறுவதல்ல. அது தானாகவே வந்து சேர வேண்டும்' என்ற நவரத்தின நன்மொழியைத் தூக்கித் துர எறிந்து விட்டு, றவூட்ப் ஹக்கீம் ரீல.மு. காங்கிரஸின் தலைமைத்துவம் தனக்கே வேண்டும் என்று பிடிவாதம் பிடித்து நின்றமையானது வரலாற்றைக் களங்கப்படுத்தும் அசிங்கமான செயலாகும்.
என்றாலும் கூட பூரில.மு. காங்கிரஸின் சமாதானமும், கட்டுக்கோப்பும், ஒற்றுமையும் தொடர்ந்தும் நிலவ வேண்டுமென்று விரும்பியோர் றவூப் ஹக்கீமையும், "பேரியலையும் இணைத் தலைவர்களாக ஏகோபித்துத் தெரிவு செய்தனர்.
ஆயினும் பூரீல.மு.காங்கிரஸின் தலைவர் பதவியைத் தான் ஒருவரே கைப்பற்ற வேண்டுமென்று அந்தக் கணத்திலேயே முடிவு செய்து கொண்ட றவு.ப் ஹக்கீம் அதன் பின்னர் அதற்கேற்ற வகையிற் காரியமாற்றத் தொடங்கினார். தன்னை மட்டுமே ரீ.ல.மு. காங்கிரஸின் தலைவராக்குமாறும், "பேரியலை எப்படியாவது கட்சியிலிருந்தே துரத்தி விடுமாறும், அதற்கான அனைத்துச் செயற்பாடுகளையும் துரிதமாக மேற்கொள்ளுமாறும் அவர் தனது நெருங்கிய சகாக்களுக்கு ஆணை பிறப்பித்தார்.
அத்தோடு ஜனாதிபதி சந்திரிகாவிடமும் பேசி பேரியலின் அமைச்சுப் பதவியைப் பறித்தெடுக்குமாறு வேண்டினார் ரவூஃப் ஹக்கீம்.
ரீல.மு. காங்கிரஸின் தோற்றமோ, அல்லது அதன் வளர்ச்சியோ இந்த நாட்டின் பேரினவாதிகளுக்கு மட்டுமன்றி சர்வதேச சியோனிஸ்ட்டுகளுக்கும் பாஸிஸ்ட்டுகளுக்கும் என்றைக்குமே பிடித்ததாக இல்லை என்பது தெளிவானது. இலங்கை வாழ் முஸ்லிம் சமூகத்தையும், அதன் அரசியற் சின்னமான ரீல.மு. காங்கிரஸையும் வேரோடும் வேரடி மண்ணோடும் அழித்துவிடக் கங்கணம் கட்டிக் கொண்டிருக்கும்
(O2)

Page 4
இந்த சியோனிஸவாதிகளும், பாசிசவாதிகளும், யகூதிகளும் றவுஃப் ஹக்கீமுக்குத் தமது மறைமுகமான ஆதரவை வழங்கி, பல ஒப்பந்தங்களும், பொக்கிஷங்களும் கைச்சாத்திடப்பட்டு, கைமாறப்பட்டு பூரீல.மு. காங்கிரஸை எப்படியாவது கூறு போடுமாறு கேட்டுக் கொண்டனர். அவர்கள் பின்னிய சதிவலை புரியாமலும் சில வேளைகளிற் புரிந்தும் றவுஃப் ஹக்கீம் அதற்குள் வசமாக மாட்டிக் கொண்டார். எனவே றி.ல.மு. காங்கிரஸ் மிகக் குறுகிய காலத்திற் குள்ளாகவே பெரும் பிளவைச் சம்பாதித்தது.
பூரீல.மு.காங்கிரஸின் தலைமைப் பதவியை எனக்குத் தாருங்கள் என்று என்றைக்குமே கேட்டிராத "பேரியல் அஷர.ப் அவர்களுக்கு அதன் இணைத் தலைமைத்துவத்தைக் கொடுத்துவிட்டுப் பின்னர் அந்த இணைத் தலைமைத்துவத்திற்கெதிராகப் போர்க் கொடி தூக்கிய றவூ'. ப் ஹக்கீமின் செயலானது வெறுக்கத்தக்கதும் அருவருக்கத்தக்கதுமாகும். இந்தக் கேவலமான செயலைப் புரிவதற்குக் காரணமாக இருந்தது ஹக்கீமுக்கிருந்த தனித் தலைமைப் பதவி ஆசையே தவிர வேறொன்றல்ல.
ஒரு சமயம் இத்தாக் கடமையிலிடுபட்டிருந்த 'பேரியல் அஷர. பைத் தொலைபேசியிற் தொடர்பு கொண்ட றவூ'ப் ஹக்கீம் ‘உன்னைக் கட்சியிலிருந்தே தூக்கி எறிவேன்' என்று மிரட்டினார். இது சத்தியமான உண்மையாகும். அவர் அன்று மிரட்டியது போலவே 'பேரியல் அஷர. பைக் கட்சியிலிருந்து வெளியேற்றினார். இதன் மூலம் பூரீல.மு. காங்கிரஸின் தலைமைத்துவத்தின் மீது ஹக்கீம் எத்துணை வெறியுடன் அலைந்திருக்கிறார் என்பது புரிய வரும்.
'பேரியல் அவஷ்ரப் இத்தாக் கடமையிலிடுபட்டிருந்த நான்கு மாதங்களும் பத்து நாட்களும் றவுஃப் ஹக்கீம் ஆடிய ஆட்டங்களுக்குக் கணக்கு வழக்குக் கிடையாது. நல்லவர்கள், வல்லவர்களின்
Gog)

ஆலோசனைகள் எவற்றையுமே பொருட்படுத்தாது ஒரு சர்வாதிகாரியைப் போற் தான்தோன்றித் தனமாக முடிவுகளை எடுக்கத் தொடங்கினார். அரசியல் அறிவோ, அரசியற் சாணக்கியமோ கிஞ்சித்துமில்லாத றவுபூப் ஹக்கீமின் தன்னிச்சையான போக்கினால் இலங்கையின் முஸ்லிம் சமூகம் பாரிய இழப்புகளுக்கு முகம் கொடுக்கத் தொடங்கியது.
மாபெரும் தலைவர் அஷ்ரஃப் அவர்களின் மறைவின் பின்னர் கூடிய ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அரசியல் அதியுயர் பீடம் சில முக்கியமான தீர்மானங்களை நிறைவேற்றியது. அதிலொன்று, பூரீல.மு. காங்கிரஸின் இணைத் தலைவரான றவுஃப் ஹக்கீம், கட்சித் தவிசாளர் பாறுக், பாராளுமன்ற உறுப்பினர் யூ.எல்.எம். மொஹிடீன், மூத்த துணைத் தலைவர் மருதூர்கனி, கட்சியின் சர்வதேச விவகாரப் பணிப்பாளர் ஹாபிஸ் நஸிர் அகமது, கட்சியின் செயலாளர் டாக்டர் ஹ.ப்ரத், மேலதிக கொள்கை பரப்புச் செயலாளர் மஷர் மெளலானா மற்றும் என்.எம். ஷகீட் ஆகிய எட்டுப் பேரும் ஜனாதிபதியைச் சென்று சந்திப்பது என்பது முதல் முடிவாக இருந்தது.
இரண்டாவது, பாராளுமன்ற அங்கத்தினராகத் தெரிவாகியிருப்போரின் சிரேஷ்ட தன்மையைப் பொறுத்து அவர்களுக்குப் பிரதியமைச்சர் பதவிகளுக்கு சிபாரிசு செய்வதென்ற முடிவு.
ஆனால் இந்த இரண்டு தீர்மானங்களையும் றவுஃப் ஹக்கீம் தனது எதேச்சாதிகாரப் போக்கினால் மீறினார் என்பது இற்றைவரை பலர் அறியாத விடயமாகும்.
முதலாவதாக எடுக்கப்பட்ட முடிவின் படி றவூப் ஹக்கீம் தவிர்ந்த ଶ୍ରତୀu। ஏழு பேரும் ஜனாதிபதியைச் சந்திப்பதற்காக தாருஸ்ஸலாமில் கூடியிருந்தனர். பல மணிநேரம் கடந்தும் றவுஃப் ஹக்கீம் அங்கு வந்தபாடில்லை. காத்துக் கொண்டிருந்த அரசியல் அதியுயர் பீட
€0ঠ>

Page 5
உறுப்பினர்கள் ஏழு பேரும் களைத் துப் போகத் தொடங்கிய நேரத்தில்தான் றவுஃப் ஹக்கீம் மாத்திரம் ஒருவருக்கும் சொல்லாமற் கொள்ளாமல் எல்லோரையும் ஏமாற்றிவிட்டு ஜனாதிபதியைச் சந்திக்கச்
சென்றுவிட்டார் என்ற செய்தி வந்தது.
இந்தக் கபடத்தனம் றவுஃப் ஹக்கீமுக்கு ஏன் ஏற்பட்டது? இத்தகைய நரிப் புத்தியுடன் - வஞ்சகத் தன்மையுடன் அவர் ஏன் நடந்து கொண்டார்?
மறைந்த தலைவர் அஷ்ரப் அவர்கள் பூரீல.மு.காங்கிரஸின் அதியுர் பீட உறுப்பினர்களையும் அழைத்துக் கொண்டு ஜனாதிபதி சந்திரிகாவைச் சந்திக்கச் சென்ற வரலாறுகள் அதிகமதிகம். தனது அரசியல் அதியுயர் பீடத்திற்குத் தெரியாமல் அவர் சந்திரிகாவுடனோ வேறு எவருடனுமோ உயர்மட்டப் பேச்சுவார்த்தைகளை நடாத்தியது கிடையாது. அப்படியிருக்க, இந்த றவுஃப் ஹக்கீம் ஆரம்பத்திலேயே அரசியல் அதியுயர் பீடத்தை அலட்சியப்படுத்தி விட்டு எதேச்சாதிகாரப் போக்கில் நடந்து கொண்டமையானது அவரது சுயலாப அரசியற் சிந்தனையையே கோடிட்டுக் காட்டுகிறது. அதுமட்டுமன்றி, அரசியல் அதியுயர்பீட உறுப்பினர்களுடன் ஜனாதிபதியைச் சந்திக்கச் சென்றால் முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகளுக்கு முன்னுரிமை கொடுத்துப் (8| !g; வேண்டியிருக்கும் என்ற பயமும் அவர் தனியாகச் சென்றதற்கு ஒரு காரணமாகும்.
தான் மட்டுமே ஜனாதிபதியைச் சந்திக்க விரும்பியிருந்தால் அதனை அரசியல் அதியுயர் பீடக் கூட்டத்திலேயே கூறியிருக்கலாமே. அரசியல் அதியுயர் பீடக் கூட்டத்தின் முடிவுக்கு ஒத்து வந்து விட்டு, மறுநாட் காலையே அந்த முடிவுக்கு மாற்றமாகவும், ஏழு அரசியல் அதியுயர் பீட உறுப்பினர்களை ஏய்த்து விட்டும் அவர் தன்னந் தனியாக ஜனாதிபதியைச் சந்திக்கச் சென்றமையானது, தனக்கு மட்டுமான
அமைச்சுப் பதவியுள்ளிட்ட சலுகைகளை ஜனாதிபதியிடம் இரகசியமாகப்
бове

பேசிப் பெற்றுக் கொள்வதற்காகத்தான் என்பது சில நாட்களிலேயே சந்திக்கு வந்து விட்டது. ஆக, முஸ்லிம் சமூகத்தின் ஒட்டுமொத்தமான நலன்களையல்லாமல், தனது சொந்த நலனுக்காக மட்டுமே பேரம் பேசுகின்ற ஹக்கீம் பூரீல.மு. காங்கிரஸின் தலைவராகத் தன்னைப் பிரகடனப்படுத்தியிருப்பதானது கேலிக்குரியதும், வெட்கத்திற்குரியதுமா கும். இந்த உண்மைகள் உண்மையான போராளிகளுக்கு இன்னமும் விளங்காமலிருப்பதுதான் மிகவும் மனவருத்தத்துக்குரிய விடயமாகும்.
இவ்வாறே அரசியல் அதியுயர் பீடம் எடுத்த மற்றுமொரு தீர்மானமான பாராளுமன்ற அங்கத்தினர்களின் சிரேஷ்டத்துவத்தைப் பொறுத்தே அவர்களுக்குப் பிரதியமைச்சர் பதவிகளுக்கான சிபாரிசு வழங்கப்பட வேண்டும் என்ற தீர்மானமும் றவுஃப் ஹக்கீமின் அரசியல் முதிர்ச்சியற்ற
தன்மையினாலும் சுயலாப நோக்கினாலும் அப்பட்டமாக மீறப்பட்டது.
நேர்மையும், நீதியும் நெஞ்சிற் குடி கொண்டிருக்கும் பூரீல.மு. காங்கிரஸின் போராளிகளே! பிரதியமைச்சர்கள் விடயத்தில் றவு.ப் ஹக்கீம் நடந்து கொண்ட விதம் சரிதானா, இல்லையா என்பதை உங்கள் ஒவ்வொருவரினதும் நெஞ்சில் கை வைத்து - அல்லாஹற்வுக்கும்
ரஸஉலுக்கும் பயந்தவர்களாகக் கூறுங்கள், பார்க்கலாம்.
அரசியலில் அரிச்சுவடி கூடத் தெரியாத அதாவுல்லாஹற்வுக்கும், முகைதீன் அப்துல் காதருக்கும், மஷாருக்கும் பிரதியமைச்சர் பதவிகளை றவு.ப் ஹக்கீம் பெற்றுக் கொடுத்ததேன்? சற்று சிந்தியுங்கள்.
நீண்ட காலம் அரசியலில் அனுபவம் பெற்றவரும், சட்டத்தரணியும், மூத்த போராளியுமான யூ.எல்.எம். மொஹிடீனுக்குப் பிரதியமைச்சர் பதவிக்கான சிபார்சை வழங்காமல் மேற்படி மூவரையும் சிபார்சு செய்து
அவர்களைப் பிரதியமைச்சர்களாக்கியது எதற்காக?
‘என்னைப் பிரதியமைச்சராக்காவிட்டால் உன்னைத் தொலைத்து
இ

Page 6
விடுவேன்' என்று அதாவுல் லாஹற் மிரட்டியதாலும் என்னைப் பிரதியமைச்சராக்காவிட்டால் உன்னைப் பற்றிய வண்டவாளங்களை யெல்லாம் அவிழ்த்து விடுவேன்' என்று முகைதீன் அப்துல் காதர் பயங்காட்டியதாலும் என்னைப் பிரதியமைச்சராக்கினால் முப்பது இலட்சம் ரூபா பணம் தருவேன்' என்று நூர்டீன் மஷர் ஆசை வார்த்தைகளை அள்ளி வீசியதாலும் அவற்றுக்கெல்லாம் அடிபணிந்து றவுஃப் ஹக்கீம் அம் மூவருக்கும் பிரதியமைச்சர் பதவிகளைப் பெற்றுக் கொடுத்தார். அப்படியானால், றவு.ப் ஹக்கீமுக்குத் துணிவில்லையா? றவு.ப் ஹக்கீமுக்குப் பணத்தைவிட முஸ்லிம் சமுகம் உயர்வாகத் தெரிய 656D6OD6DU JIT? ് സെന്ധ്ര, காங்கிரஸ் கட்டுக்கோப்பான முறையில், நீதி, நியாய நேர்மையின் அடிப்படையில் வழிநடாத்தப்படுவது முக்கியமாகத் േfuഖിബ്ലെ? என்ற கேள்விகளுக்கு இல்லை; இல்லை; இல்லை! என்றுதான் பதில் கூற வேண்டியுள்ளது. இப்படியான ஒருவரின் தலைமையில் ரீல.மு. காங்கிரஸ் படுகின்ற அவலத்தைச் சற்றே எண்ணிப்
பாருங்கள் சகோதரர்களே!
இது ஒரு பக்கமிருக்க, தேசிய ஐக்கிய முன்னணிக்குக் கிடைத்த ஒரேயொரு தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு இந்த றவுஃப் ஹக்கீம் பஷிர் சேகுதாவூதைத் தெரிவு செய்து, தனது அரசியல் ஞான சூன்யத்தை உலகுக்குப் பறை சாற்றிக் கொண்டமை யானது வேதனையிலும் வேதனையானது மட்டுமன்றி, முஸ்லிம் சமுகத்துக்கு இழைத்த மாபெரும் கொடுமையும் துரோகமுமாகும்.
கடந்த பொதுத் தேர்தலில் போட்டியிட்டு எட்டாயிரம் வாக்குகளைக் கூட ஒழுங்காகப் பெற்றிராத பவரீர் சேகுதாவூதைத் தேசியப் பட்டியல் எம்.பி.யாக்க றவு.ப் ஹக்கீம் அத்துணை அவசரமும், ஆர்வமும் காட்டியதேன்? -
உண்மையில் இந்த பஷிர் சேகுதாவூத் யார்? அவர் பூரீல.மு. காங்கிரஸுக்கு என்ன சேவைகளைச் செய்துள்ளார்? என்பது பற்றி
(OED)

நமது கண்ணியத்துக்குரிய பூரீல.மு. காங்கிரஸின் போராளிகள் நன்கு சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
1989ம் ஆண்டு நடந்த பொதுத் தேர்தலில் ஈரோஸ் என்ற தமிழ்ப் போராட்ட இயக்கத்தின் சார்பாகப் போட்டியிட்டுப் படு தோல்வி கண்டவர்தான் இந்த பஷிர் சேகுதாவூத். அதற்கு முன்னரும், பின்னரும் ஈரோஸ் அமைப்புடன் சேர்ந்து கொண்டு ஏறாவூர் முஸ்லிம்களைக் கருவறுக்கும் கைங்கரியங்களிலும் இந்த பவழீர் சேகுதாவூத் ஈடுபட்டு வந்தார்.
1989ம் ஆண்டுத் தேர்தலிற் தோற்ற பஷர் சேகுதாவூதிற்குத் திடீரென லொத்தர் சீட்டிழுப்பில் ஜாக்பொட் பரிசு கிட்டியதைப் போன்ற ஓர் அதிர்ஷ்டம் கிட்டியது. ஈரோஸின் சார்பாகத் தேர்தலில் போட்டியிட்டுப் பாராளுமன்றத்திற்குத் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்கள் தொடர்ச்சியாகப் பாராளுமன்றத்திற்கு சமூகளிக்காத காரணத்தினாற் படிப்படியாகத் தமது பதவிகளை இழந்துவிட, பட்டியலில் கடைசி இடத்திலிருந்த பஷிரைத் தேர்தல் ஆணையாளர் பாராளுமன்ற உறுப்பினராக அறிவிப்புச் செய்தார். விடுவாரா பவழீர்? ஈரோஸின் வேண்டுகோளைத் தூக்கி ஒரு மூலையில் வீசிவிட்டு, கப்பெனப் பாராளுமன்றப் பதவியில் வந்து உட்கார்ந்து கொண்டார்.
"அற்பனுக்குப் பவுசு வந்தால் அர்த்த ராத்திரியில் குடை பிடிப்பானாம் என்பது போலவே, தனக்குப் பாராளுமன்ற உறுப்பினர் பதவி கிடைத்த பின் பவரீர் சேகுதாவூத் நடந்து கொண்டார். கொழும்பில் பாதுகாப்பாக அமர்ந்து கொண்டு பல்வேறு வழிகளிற் பணம் சம்பாதித்தார். அந்தப் பணத்தைக் கொண்டு பெண்கள் விடயமுட்பட மற்றும் பல ஹராமான விடயங்களில் பவரீர் சேகுதாவூத் ஆடிய ஆட்டங்கள் கணக்கிலடங்
5T560)6\l.
(O)

Page 7
1994ல் திரும்பவும் தேர்தல் வந்தது. அந்தத் தேர்தலிலும் பவரீர் சேகுதாவூத் போட்டியிட்டு படுதோல்வியடைந்து மூக்குடைபட்டார்.
எதிரிகளையும் மன்னித்து உதவி செய்யும் மறைந்த நமது மாபெரும் தலைவர் அஷ்ரஃப் அவர்களிடம் வந்து அழுது, குழறி, கெஞ்சிக் கூத்தாடி உதவி கோரினார் பவரீர் சேகுதாவூத். ஒரு பாராளுமன்ற உறுப்பினராக இருந்து விட்டுத் தன்னிடத்தில் வந்து அழுதபடி உதவி கேட்கும் ஒருவனை நமது கண்ணியமிகு தலைவர் அஷரப் அவர்கள் கைவிட்டுவிடவா செய்வார்கள்? அவர்கள் பவருக்கு ஒரு இணைப்பாளர் பதவியும், பிக்கப் வாகனமும், மாதம் முப்பதாயிரம் பெறக்கூடியதான வருமானத்திற்கான வழியையும் வழங்கினார்கள்.
ஆனால் பவரீர் அத்துடன் திருப்தியடையவில்லை. நமது மறைந்த மாபெரும் தலைவர் அஷ்ரஃப் அவர்களிடம் யார் யாருக்கெல்லாமோ உத்தியோகம் வாங்கிக் கொடுத்து, அந்த உத்தியோகத்திற்குப் பதிலாக நிறைய பணத்தைப் பெற்றுச் சுக போக வாழ்க்கை வாழ்ந்தார். அதுமட்டுமல்லாது, புனர் வாழ்வு புனரமைப்பு அமைச்சில் பலருக்கு நஷ்டஈடு பெற்றுக் கொடுத்து அதில் குறிப்பிட்ட கமிஷனும் பெற்று வந்தார். இதுவும் போதாதென்று எந்தச் சேதமுமடையாத தன்னுடைய வீடு சேதமடைந்ததென்று ஆவணங்கள் தயாரித்து ஏமாற்றுத் தனமாகப் பல இலட்சங்களை நவஷ்டஈடென்ற போர்வையிற் பெற்றுக் கொண்டார். 5ങ്ങബാഖ് கொடுத்த வேலை வாய்ப்புக்களைக்கூட விலை பேசி விற்று,
மற்றய சமூகங்களுக்கே அதிகமான வேலைவாய்ப்புக்களை வழங்கினார்.
இத்தனைக்கும் ஈடாக பவரீர் சேகுதாவூத் பூரீல.மு.காங்கிரஸ்ஸுக்குச் செய்த பங்களிப்புகள்தான் என்ன? ஒன்றுமேயில்லையே! ஆனால், கட்சிக்காக உயிர் துறந்த குடும்பங்களில் எத்தனையோ பேரிருக்க - கட்சிக்காக அல்லும் பகலும் பாடுபட்டோர் ஆயிரமிருக்க - கட்சிக்காகத் தம் சொந்தப் பணத்தை வாரியிறைத்தோர் நூற்றுக் கணக்கில் இருக்க
<0)

இந்த பஷீர் சேகுதாவூதிற்கு அவசர அவசரமாக தேசிய ஐக்கிய முன்னணிக்குக் கிடைத்த ஒரேயொரு தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை றவு.ப் ஹக்கீம் கொடுத்தது ஏன்.?
போராளிகளே இது நியாயமா, இந்தச் செய்கையானது முஸ்லிம் காங்கிரஸ்"க்கும், முஸ்லிம் சமுகத்திற்கும் இழைத்த பெரும் துரோகமல்லவா?
சகோதரர் ஹிஸ் புல் லாஹற் அவர்கள் கட்சிக்காக செய்த தியாகங்களை, சேவைகளை எண் ணிப் பாருங்கள் ஒரு பிரதியமைச்சராகவிருந்து, சில நூற்றுக் கணக்கான வாக்கு வித்தியாசத்தில் கடந்த தேர்தலில் 23,000 வாக்குகள் பெற்றும் கூடத் தோற்றுப்போன ஹிஸ்புல்லாஹற்வுக்கு தேசிய பட்டியல் எம். பி. பதவியைக் கொடுக்காமல், அதே மாவட்டத்தில் போட்டியிட்டு வெறும் 8000 வாக்குகள் பெற்ற பவரீர் சேகுதாவூதுக்கு தேசியப் பட்டியல் எம்.பி. பதவியைக் கொடுத்த றவு.ப் ஹக்கீம் பூரீல.மு. காங்கிரஸின் தலைமைத்துவத்தை கேலிக்கூத்தாக்கி அசிங்கப்படுத்திய இந்த றவு. ப் ஹக்கீமை தகுதியானவர்தானா? என்று நீங்களே முடிவு செய்யுங்கள்!
பூரீல.மு. காங்கிரஸின் ஒற்றுமையையும், கட்டுக்கோப்பையும் சிதைத்து, அதனை ஐ.தே. கட்சியின் காலடியிற் கொண்டு போய்ச் சமர்ப்பிக்க வேண்டும் என்ற எண்ணமே றவூட்ப் ஹக்கீமின் அடி மனதிலிருந்ததை அவரது நடத்தைகளை ஆய்வு செய்பவர் எவரும் எளிதாகப் புரிந்து
(8566ਥ56.
ஆமாம்; அடிப்படையிலேயே ஹக்கீம் ஒரு ஐக்கிய தேசியக் கட்சிக்காரர்தான். அதனால்தான் அவர் தனது சகாக்களாக ஐக்கிய தேசியக் கட்சியினரின் ஒற்றர்களையும், அடிவருடிகளையும் இணைத்துக் கொண்டார் என்பதைத் தெளிவாக நம்பலாம்.
65

Page 8
றவூப் ஹக்கீமுடைய பிரதம ஆலோசகர்களில் ஒருவர் சட்டத்தரணி என். எம். ஷஹீட் இவர் அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணியின் தலைவர். இந்த அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணியானது ஐக்கிய தேசியக் கட்சியினது தத்துப்பிள்ளை. எனவே இந்த முன்னணியோடு ஈடுபாடு கொண்ட இதன் தலைவராகிய என். எம். ஷஹீட் ஐக்கிய தேசியக் கட்சியின் அடிவருவடி என்று சொல்வதற்கு
வேறு ஆதாரங்கள் தேவையில்லை.
என்றாலும் மர்ஹூம் அஷ்ரஃப் அவர்கள் என். எம். ஷஹீட் ஓர் ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவாளன் என்று தெரிந்தும் அவரைத் தன்னோடு வைத்திருப்பது போல் வைத்துக் கொண்டு, ஐ.தே.க. சம்பந்தமான விடயங்களை அவ்வப்போது அறிந்து கொண்டிருந்தார். முஸ்லிம் காங்கிரஸின் இரகசியங்களைத் துப்பறிந்து சொல்ல வேண்டும் என்ற பணிப்பின் பேரில் ஐ.தே. கட்சியால் அனுப்பி வைக்கப்பட்ட ஒற்றன்தான் ஷஹீட் எனத் தெரிந்து கொண்ட மர்ஹஉம் அஷ்ரஃப் அவர்கள், தனது அரசியற் சாணக்கியத்தினால், ஷஹிடுக்குக் கூடத் தெரியாமல் அவரை ரீல.மு. காங்கிரஸின் ஒற்றனாக்கி அவ்வப்போது ஐ.தே. கட்சியின் இரகசியத் திட்டங்களைப் பெற்றுக் கொண்டு வந்தார். ஆனால் , றவு, ப் ஹக் கீம் தலைமைப் பதவியை ஏற்றுக் கொண்டவுடனேயே என். எம். ஷஹீட் என்ற ஒற்றனை - ஐ.தே.கவின் கூலிப்படையின் ஒற்றனைத் தனது பிரதம ஆலோசகராக வைத்துக் கொண்டார். றவூட்ப் ஹக்கீமின் இத்தகைய செயலைப் பார்க்கையில் தான் ரீல.மு. காங்கிரஸின் தலைமைப் பதவியைக் கைப்பற்றிப் பின்னர் ரீல.மு. காங்கிரஸை ஐ.தே.கட்சியிடம் விற்றுவிடத் தீர்மானித்தது தெளிவாகப் புரிகிறது.
அவ்வாறே ஐக்கிய தேசியக் கட்சியிடம் இந்நாட்டின் முஸ்லிம் சமுகத்தை அடகு வைத்துவிடத் திட்டங்கள் தீட்டிச் செயற்பட்டு வரும் பத்திரிகையாளர் என். எம். அமீனுக்குத் தன்னுடைய அமைச்சில் ஊடக
-(e)

இணைப்பாளர் பதவி வழங்குவதற்கு றவுபூட்ப் ஹக்கீம் பகிரதப் பிரயத்தனங்கள் மேற்கொண்டார். எனினும் அது கை கூடவில்லை. என்றாலும் கூட என்.எம். அமீன் எனும் ஐ.தே. கட்சியின் கூலிப்படையின் ஒற்றர் குழுவின் அங்கத்தவர் இன்னமும் றவுஃப் ஹக்கீமின் உத்தியோகப்பற்றற்ற ஆலோசகராகவே இருந்து செயற்படுகின்றார்.
மதிப்புமிக்க ரீல.மு. காங்கிரஸின் போராளிகளே மறைந்த நமது மா தலைவர் அவஷ்ரப் அவர்களை ஐ.தே. கட்சி பதவிக்கு வந்தால் விசாரணைக் கமிஷன் வைத்து விசாரித்துத் தண்டிப்போம் என்று சொல்லிய ஐ.தே. கட்சியுடன் தான் நமது பெறுமதிமிக்க ரீல.மு.காங்கிரஸ்ை இன்று கொண்டு போய் றவுபூப் ஹக்கீம் விற்று விட்டிருக்கிறார். இது நியாயமா? இது நீதியா? இது அந்த அல்லாஹ்வுக்கே அடுக்குமா? சொல்லுங்கள் போராளிகளே!
ஐ.தே. கட்சிக்கு ஆதரவு என்ற பேச்சுக்கே இடமில்லை என்று எப்பொழுதும் தெளிவாகச் சொல்லிவந்தவர் நமது மறைந்த மா தலைவர் அஷ்ரப் அவர்கள். அதிலும் ரணில் விக்கிரமசிங்க ஐ.தே.கட்சியின் தலைவராக இருக்கும் வரை அவருக்குத் தமது ஆதரவை வழங்கப் போவதில்லை என்பதில் அந்த மகான் உறுதியாகவிருந்தார். ஆனால் அந்த மகத்துமிக்க தலைவரின் எண்ணங்களையும், விருப்பங்களையும் குழிதோண்டிப் புதைத்துவிட்டு இன்று றவூ'ப் ஹக்கீம் ஐக்கிய தேசியக் கட்சியுடன் தேனிலவு கொண்டாடிக் கொண்டு திரிவதை நாம் ஏற்றுக் கொள்ளலாமா? அதனை அனுமதிக்கலாமா? உங்கள் மனசாட்சியின்
மையத்தைத் தொட்டுச் சொல்லுங்கள், சகோதரர்களே!
வீரப் போராளிகளே ரீல.மு. காங்கிரஸ் தோன்றிய காலந் தொட்டு அதனை அழிப்பதற்கு முயற்சி செய்பவர்கள் ஐ.தே. கட்சியினரல்லவா! கல்முனை மன்சூர் தொடக்கம் கண்டி காதர் ஹாஜியார் வரை ஐ.தே. கட்சிக்கு அடி கழுவி வயிறு வளர்க்கும் ஏ.எச்.எம். அஸ்வர்
GEO

Page 9
ஹாஜியார் தொடக்கம் இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் வரை நமது மறைந்த மா தலைவர் அஷ்ரப் அவர்களையும் பூரில.மு. காங்கிரஸையும் தூற்றித் தூற்றிப் பேசி, விமர்சனம் செய்து வந்தவர்களல்லவா? ஐ.தே.கட்சியிலிருந்த முஸ்லிம்கள் தான் நமது தலைவருக்கு அநியாயம் செய்தார்களென்றால், பெரும்பான்மையினத்தைச் சேர்ந்த ஐ. தே.கட்சிக்காரர்கள் நமது மா தலைவருக்கும், நமது கட்சிக்கும் புரிந்த அட்டூழியங்கள் எத்தனை அம்பாறை தயாரத்தின நமது தலைவர் மீதும் கட்சியின் மீதும் சமுகத்தின் மீதும் வசவுகளை வாரி வீசவில்லையா? தலைவர் அவர்களையும் கட்சியையும் பூண்டோடு பிடுங்கி வீசுவதற்குச் சதி வேலைகளில் ஈடுபடவில்லையா? சண்டாளர்களை ஏவிவிடவில்லையா? கரையோர மாவட்டம் என்று கதைத்தாலே அதற்கு போர்க்கொடித் தூக்குபவர்தான் தயாரத்தினவும், ஐ.தே.கட்சியும்.
போராளிகளே! இத்தகு இனவாத பேய்கள் கொலுவீற்றிருக்கும் ஐக்கிய தேசியக் கட்சிக் குகைக்குள்ளேயா நமது மகத்துவம் மிக்க கட்சியைக் கொண்டு போய் காணிக்கையாக்குவது?
இந்த அரசாங்கத்தை எப்படியாவது வீழ்த்திவிட்டால் போதும் என்பதற்காகவே ஐக்கிய தேசியக் 函L函 றரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்"க்கு ஆதரவு தருவது போலவும் அனைத்துக் கொள்வது போலவும் நாடகமாடுகிறது என்பதை ஒவ்வொரு போராளியும் புரிந்து கொள்ள வேண்டும். நாளை ஆட்சி பீடம் ஏறுவதற்குத் தேவையான ஆசனங்கள் ஐ.தே.க.வுக்குக் கிடைத்து விட்டால் அதன் பின்னர் றுரீல.மு. காங்கிரஸைத் தூக்கிச் சாக்கடையில் வீசி விடும் என்பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும்.
வீரப் போராளிகளே ! நமது நெஞ்சிற் கையை வைத்து ஓர் உண்மையைச் சொல்வோம். அதாவது நமது மறைந்த மா தலைவர் அஷ்ரஃப் அவர்கள் பொ.ஐ.மு.யினருடன் கூட்டுச் சேர்ந்து, சந்திரிகாவை ஆட்சி பீடமேற்றிய பின்னர் சந்திரிகா அரசினால் முஸ்லிம் சமுகத்திற்கு
645)

இழைக்கப்பட்ட துரோகங்கள் என்ன? பொ.ஐ.மு. அரசினால் முஸ்லிம் சமுதாயத்திற்குச் செய்யப்பட்ட அநியாயங்கள் என்ன? நிதானமாக நின்று சிந்தித்துப் பாருங்கள். உண்மையிலேயே சந்திரிகா அரசினால் முஸ்லிம் காங்கிரஸ்க்கோ, முஸ்லிம் சமுகத்திற்கோ எவ்வித துரோகங்களும், அநியாயங்களும் புரியப்படவில்லை என்ற உண்மை புரிய வரும். அப்படியாயின், சந்திரிகா அரசுக்கு அளித்து வந்த ஆதரவை விலக்கிக் கொள்வதற்கும், ஐ.தே.கட்சியிடம் கொண்டு போய் பூரீல.மு. காங்கிரஸை விற்று விடுவதற்கும் றவுஃப் ஹக்கீம் திரை மறைவிற் திட்டங்கள் தீட்டிச் செயற்பட்டதேன்?
மறைந்த தலைவர் அஷரஃப் அவர்களின் காலத்தில் ஒரு அமைச்சர் பதவியையும், இரு பிரதியமைச்சர் பதவிகளையும் தந்த சந்திரிகா அரசு, அன்னாரின் மறைவிற்குப் பின்னர் இரு அமைச்சர் பதவிகளையும், மூன்று பிரதியமைச்சர் பதவிகளையும் வழங்கவில்லையா? பூரீல.மு. காங்கிரஸின் தவிசாளராக இருந்தவருக்குத் தூதுவர் பதவி வழங்கவில்லையா? அது மாத்திரமல்ல 6 நிறுவனங்களுக்கான தலைவர் பதவிகளையும் சந்திரிக்கா வழங்கவில்லையா?
சந்திரிகா அரசு ஆட்சி பீடமேறிய மிகக் குறுகிய காலத்திற்குள் றவுபூட்ப் ஹக்கீம் ஏராளமான கோரிக்கைகளை முன் வைத்தார்? சரி. அந்தக் கோரிக்கைகளில் எந்தக் கோரிக்கைதான் முஸ்லிம் சமுகத்தின் உய்வுக்கும், உயர்வுக்குமான கோரிக்கை? சொல்லுங்கள் போராளிகளே! நான்கு ஆணைக் குழுக்கள் நூறு நாட்களுக்குள் அமைக்கப்பட வேண்டுமென்று றவூ.ப் ஹக்கீம் சந்திரிகா அரசுக்கு நிபந்தனை போட்டாரே, அந்த நான்கு ஆணைக் குழுக் களில் ஒரு ஆணைக்குழுவாகிலும் இந்நாட்டு முஸ்லிம் சமுகத்திற்கு உடனடித் தேவையா? இல்லையே. ஆணைக் குழுக்களினால் முஸ்லிம் சமூகத்துக்கு எவ்வித பிரயோசனம் கூடக் கிடையாதே. பின்னர் எதற்காக நூறு நாட்களுக்குள் ஆணைக் குழுக்கள் அமைக்க வேண்டுமென்று றவு.ப் ஹக்கீம் நிபந்தனை விதித்தார்?
-இ

Page 10
உண்மையிலேயே இந்த ஆணைக் குழுக் கள் சமாச்சாரம் ஐ.தே.கட்சியினுடையது. அவர்களுக்குத் தான் இவ்வாறான ஆணைக்குழுக்கள் அமைக்கப்பட வேண்டுமென்ற தேவை இருந்தது. அதற்காக அவர்கள் றவுபூட்ப் ஹக்கீமைப் பலிக்கடாவாக்கி வேடிக்கை பார்த்தார்கள். அரசியற் சாணக்கியமோ, அரசியற் தெளிவோ இல்லாத றவூப் ஹக்கீமும் "ஆமாம் சாமி போட்டு முட்டாள்தனமாக நூறு நாட்கள் காலக்கெடு விதித்துக் கடைசியில் மூக்குடைபட்டுக் கொண்டார்.
மறைந்த நமது மா தலைவர் அவர்கள் எத்துணை நிதானமாகவும், துரதிருஷ்டியுடனும் றூரீல.மு. காங்கிரஸை வழி நடத்திச் சென்றார். தன்னைக் கொலை செய்ய முற்பட்டவர்களைக் கூடத் தனது மன்னிக்கும் மனப்பான்மையினாலும், முஸ்லிம் காங்கிரஸின் வளர்ச்சிக்காகவும் தனது கட்சிக்குளேயே உள்வாங்கிக் கட்சியை முன்னேற்றப் பாதையில் இட்டுச் சென்றாரே. அந்த மா தலைவரின் அறிவில் - ஆற்றலில் - சாணக்கியத்தில்-தூரநோக்கில் ஒரு சத வீதமாவது றவுஃப் ஹக்கீமிடம் இருக்கிறதா..? இல்லையே! பின், றவுபூட்ப் ஹக்கீமை எவ்வாறு ரீல.மு. காங்கிரஸின் தலைவராக நாம் ஒப்புக் கொள்வது?
தனக்குப் போட்டியாக வந்து விடுவார் என்ற பயத்தினால்தானே அவர் ஹிஸ்புல்லாஹற்வை ஒரம் கட்டினார். ரீ.ல.மு. காங்கிரஸின் தலைமைப் பதவிக்குத் தனக்குப் போட்டியாக யார் யாரெல்லாம் வரக்கூடுமென்று கணக்குப் போட்டுப் பார்த்த ஹக்கீம் அவர்கள் அத்தனை பேரையும் ஒரமாக்கி, ஒதுக்கிவிடும் வேலையைத்தானே செய்தார்?
கல்முனைக் கரையோர மாவட்டக் கோரிக்கையை முன் வைக்கும் முன்பே, கண்டி முஸ்லிம் மாவட்டக் கோரிக்கையை றவு.ப் ஹக்கீம் முன் வைத்தாரென்றால், அவரது அரசியல் அறிவிலித் தனத்திற்கு வேறு சான்றுகளையும் கூற வேண்டுமா?
முஸ்லிம் சமய கலாசார அமைச்சரான ஹக்கீம் தான் அமைத்த ஹஜ் கமிட்டியில் கலீல் மெளலவியைத் தவிர ஏனைய அனைவரையும்
-GG)

வடகிழக்குக்கு அப்பாலுள்ளவராகத் தேர்ந்தெடுத்து, வடக்கு கிழக்கு முஸ்லிம்களின் முகத்தில் கரியைப் பூசினாரே, ஏன்?
அனுருத்த ரத்வத்தைக்குப் பிரதிப் பாதுகாப்பமைச்சர் பதவி கொடுக்கக் கூடாது என்று கூறிய றவூ'ப் ஹக்கீம், அவ்வாறு கொடுக்கப்பட்டால் அனுருத்த அங்கம் வகிக்கும் அமைச்சரவையில் தான் அமைச்சராக இருக்க மாட்டேன் என்று சொன்னார். ஆனால் நடந்தது என்ன? அனுருத்த ரத்வத்தை பிரதிப் பாதுகாப்பு அமைச் சராக விருந்த அதே அமைச்சரவையில் றவுபூட்ப் ஹக்கீம் தொடர்ந்தும் குப்பை கொட்டிக் கொண்டிருந்தார். இவ்வாறு சொல்லொன்றும் செயலொன்றுமாக முஸ்லிம் காங்கிரஸின் தலைமைத்துவத்துக்கு இழிவை ஏற்படுத்தி காலங் கடத்தும் ஹக்கீமிடமா பூரீல.மு.காங்கிரஸின் தலைமைப் பதவியைக் கொடுப்பது? போராளிகளே. நிதானமாக யோசித்து ஒரு முடிவுக்கு வாருங்கள்.
முஸ்லிம் சமய கலாசார பண்பாட்டலுவல்கள் அமைச்சராகக் கடமையாற்றிய றவூப் ஹக்கீமுக்கு ஒரு பிறைக் குழுவையே ஒழுங்காக அமைக்க முடியாமற் போனதென்பதை அனைவரும் அறிவார்கள். அவர் பதவியேற்ற மிகக் குறுகிய காலத்திற்குள்ளாகவே அகில இலங்கை ஜம் இய்யத்துல் உலமா சபைத் தலைவரும், பிறைக் குழுத் தலைவருமான றியாழ் மெளலவி தாக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இலங்கையில் இரு நாட்கள் பெருநாட்கள் நடந்தன. கேவலம், இந்த ஒரு சிறிய விடயத்திற் கூடத் தனது ஆளுமையை நிரூபிக்க முடியாத ஹக்கீம் எவ்வாறு ரீல.மு.காங்கிரஸுக்குத் தலைவராவது? போராளிகளே. அமைதியாக இருந்து சிந்தித்துப் பாருங்கள். அதன் பின்னர் ஒரு முடிவுக்கு வாருங்கள்.
சிங்கள மகாநாயக்க தேரோக்களுடன் சேர்ந்து இந்த நாட்டில் தேசிய அரசாங்கம் ஒன்றை அமைக்க வேண்டும் என்று சொன்ன அறிவு சூன்யம்தான் ஹகீம். தேசிய அரசாங்கம் அமைக்கப்பட்டால், அதன் பின்னர் அந்த அரசாங்கத்தில் பொ.ஐ.மு.வும், ஐ.தே.கட்சியும், ஜே.வி.பி.யும் மட்டுமே கோலோச்சும் என்பதைக் கூடப் புரியாமல் -
GD)

Page 11
பூரீல.மு.காங்கிரஸ் அரசியல் அநாதையாகப் போய்விடும் என்பதைக் கூட உணராமல் - ஐ.தே.கட்சி சொன்னதை அப்படியே தன் குரலிற் கூறிய றவூட்ப் ஹக்கீமா இந்த நாட்டு முஸ்லிம் சமுகத்தின் முதுசமான ரீல.மு.காங்கிரஸின் தலைவராக இருப்பது? போராளிகளே! தெளிவாகச் சிந்தித்து ஒரு முடிவுக்கு வாருங்கள்
வீர மிகுந்த - தியாக மிகுந்த போராளிகளே! நாம் இலங்கையின் எப்பாகத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் அல்லாஹற், ரஸ்"லுக்குப் பயந்து ஒருண்மையை உறுதியாக ஒப்புக் கொள்ள வேண்டும். அதாவது பூரீல.மு.காங்கிரஸ் என்ற விதையை மறைந்த எமது DT ♔ങ്ങബൈi அஷ்ரப் அவர்கள் கிழக்கு மாகாணத்திலேயே ஊன்றினார். அந்த விதையை விருட்சமாக்குவதற்கு நீரும், உரமும், அதிகமாக இட்டவர்களில் ஏனைய மாகாண மக்களைவிடக் கிழக்கு மாகாண மக்களே அதிகமானவர்கள். ஆக, கிழக்கு மாகாணத்தைப் புறந் தள்ளிய ஒரு பூரீல.மு.காங்கிரஸை நாம் அங்கீகரிக்கவே முடியாது. அந்த வகையிற் பார்க்கப்போனால், றவூப் ஹக்கீம் கிழக்கு மாகாணத்திற்கும் அதன் மக்களுக்கும் வீரப் போராளிகளுக்கும் பெரும் துரோகமிழைத்திருக்கிறார் என்றே கூறவேண்டும்.
உதாரணமாக ஏற்கனவே நாம் கூறியது போல் றவுப் ஹக்கீம் முஸ்லிம் கலாசார அமைச்சரானவுடன் ஏற்படுத்திய ஹஜ் கமிட்டியில் பதினைந்து பேர் இடம் பெற்றார்கள். இந்தப் பதினைந்து பேரில் கலீல் மெளலவி மாத்திரமே கிழக்கிழங்கையைச் சேர்ந்தவள். ஏனைய பதினான்கு பேரும் கிழக்குக்கு வெளியேயுள்ளவர்கள். பின்னர் ஹஜ் கமிட்டியிலிருந்து கலீல் மெளலவியைக் கூட ஹக்கீம் தூக்கி விட்டார். இது எத்துணை பெரிய அநீதி காலாகாலம் கட்சிக்காக உழைத்த புஹாரி மெளலவியைக் கூட அவர் ஹஜ் கமிட்டியில் நியமிக்கவில்லையே. எனவே இன்றும் கூட ஹகீமுக்கு ஆதரவாகக் குரல் கொடுக்கும் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த போராளிகள் தங்கள் மாகாணத்துக்கு இழைக்கப்பட்ட இந்த அநியாயத்தை எண்ணிப் பார்க்க வேண்டும்.
இ

அது மட்டுமல்ல; றவுபூப் ஹக்கீம் தனது அமைச்சர்கள் சார்பாக வழங்கிய உயர் பதவிகளில் கிழக்கு மாகாணப் போராளிகள் எத்தனை பேர் இடம் பெற்றிருந்தார்களென்று யோசித்துப் பாருங்கள். ஹக்கீமின் செயலாளரான ஹஸனலியைத் தவிர (அவரும் அந்தரங்கச் செயலாளர்) வேறு யார் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த போராளியென்று எண்ணிப் பாருங்கள்.
முஸம்மில் ஹாஜியார் கொழும்பைச் சேர்ந்தவர். கடந்த தேர்தலின் போதே முஸ்லிம் காங்கிரஸில் இணைந்தவர். தேர்தலிற் போட்டியிட்டுத் தோற்றுப்போனவர். க.பொ.த பரீட்சையில் இஸ்லாம் உட்பட எட்டுப் பாடங்களிலும் "பெயிலானவர். இவருக்கு றவுஃப் ஹக்கீம் அரச வர்த்தகக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் பதவியை வழங்கினார். ஏன். இப் பதவிக்கு கிழக்கு மாகாணத்திலிருந்து ஒரு தகுதியான பூரீல.மு.காங்கிரஸ் போராளி கிடைக்கவில்லையா?
பலாங்கொடை சியாத் பூரீல.மு.காங்கிரஸிற்கு என்ன சேவைகளைச் செய்து விட்டார்? பலாங்கொடையிற் கல்வி அதிகாரியாகவிருந்து, ஊழல் புரிந்து, வெளியேறிய சியாதுக்குத் தன்னுடைய அமைச் சில் இணைப்பாளர் பதவியை வழங்கினார் ஹக்கீம். ஏன், ஓர் உண்மையான போராளிக்கு இப் பதவியை வழங்கியிருக்கக் கூடாதா?
சல்மான் மாவனல்லையைச் சேர்ந்தவர். புனர்வாழ்வு அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக நமது மறைந்த மா தலைவர் அஷ்ர. பின் காலத்திற் கடமையாற்றிக் கோடிக் கணக்கில் பணம் சேர்த்தவர். ஆனாலும், பூரீல.மு.காங்கிரஸ்"க்காக ஒரு சிறு துளி வியர்வையாவது சிந்தாதவர். அவருக்கு ஏற்றுமதி அபிவிருத்திச் சபையின் தலைவர் பதவியை கொடுத்தார் ஹக்கீம்?
மன்னார் தாஜுதீன் ஒரு முறை வன்னியில் ரீல.மு காங்கிரஸ் சார்பில் தேர்தலிற் போட்டியிட்டு 600 வாக்குகள் மாத்திரம் பெற்றுத் தோல்வியடைந்ததைத் தவிர ரீல.மு.காங்கிரஸ்"க்காக ஒரு துரும்பையும்
KOORD>

Page 12
தூக்கிப் போடாதவர். இவருக்கு கல்முனையைச் சேர்ந்த டொக்டர் உதுமாலெப்பையிடமிருந்து துறைமுக சேவைகள் நிறுவனத்தின் தலைவர் பதவியைப் பறித்தெடுத்துக் கொடுத்தார் ஹக்கீம். இதற்குக் காரணம் "பேரியலுக்கும் ஹக்கீமுக்குமிடையிலான தலைமைப் பிரச்சனையில் அரசியல் அதியுயர் பீட உறுப்பினரான தாஜுதீன் ஹக்கீமுக்கு ஆதரவளித்தது மடடுந்தான். இவை தவிர சுபைதீன் ஹாஜியார் SLECC தலைவராகினார். பாறுக்மஜித் இன்னுமொரு நிறுவனத்தின் தலைவரானார். யூ.டீ.எம். அன்வர். ஹசைன் பைலா, ஷஹிட் போன்ற கிழக்குக்கு வெளியேயுள்ளவர்களைப் பார்த்துப் பார்த்துப் பதவிகளை வழங்கினார் ஹக்கீம்.
வீரமும், விவேகமும் மிகுந்த போராளிகளே கிழக்கு மாகாணத்தின் இரத்தத்தினாலும், கண்ணீராலும், வியர்வையினாலும் விருட்சமான மரத்திலிருந்து அந்த மக்களுக்குக் கிடைக்காத கனிகளை யார் யாருக்கோ பறித்துக் கொடுத்த ஹக்கீமின் ஈனச் செயல் கண்டு நாம் இதயம் வெடித்துப் போகிறோம். இன்னுமா பொறுத்துக் கொண்டிருப்பது?
வீரச் சிங்கங்களே! கடந்த முறை ஹஜ்ஜுக்குச் செல்வதற்கு ஹக்கீமுக்கு 200 விமானப் பிரயாணச் சீட்டுக்கள் இலசவமாகக் கிடைத்தன. ஆனால் அதில் மூன்றே மூன்று டிக் கட்டுக்களை மாத்திரம்தான் கிழக்கு மாகாண மக்களுக்கு வழங்கினார். ஏனைய 197 டிக்கட்டுகளில் அவர் தன் குடும்பத்தினரையும் வேறு பலரையும் அள்ளிக் கொண்டு போனார். இதுவா ஹக்கீமீன் தலைமைத்துவம்? இவரா நமக்குத் தலைமை தாங்குவது?
தான் அமைச்சரானவுடன் தேசிய மீலாத் விழாவை அக்குறணையில் நடத்த வேண்டுமென்று ஹக்கீம் ஆலாய்ப் பறந்தாரே, ஏன்? ஐ.தே.கட்சியின் குதமான - கோட்டையான அக்குறணையிற் கொண்டு போய் 5 கோடியைக் கொட்டவா? உயிர்த் தியாகங்கள் செய்து, உதிரங்கள் சிந்தி, துப்பாக்கிக் குண்டுகளுக்கும் அஞ்சாமல் பூரீல.மு.காங்கிரஸை வளர்த்த தொண்டர்கள் கிழக்கிலும், வடக்கிலும்,
(2D

தெற்கிலும் குவிந்திருக்கையில் அதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல், அடுத்த தேர்தலில் தனது வாக்கு வங்கியைக் காப்பாற்றிக் கொள்ளும் பேராசையினால், சுயநலத்தினால் அல்லவா ஹக்கீம் தேசிய மீலாத்
விழாவை அக்குறணையில் நடாத்த ஆயத்தங்கள் மேற் கொண்டார்.
ஆனால், நீதிமானாகிய அந்த வல்ல அல்லாஹ"த் தஅலா ஹக்கீமின் பேராசையில் மண்ணையள்ளிப் போட்டுவிட்டான்!
வீரமிகுந்த - தியாகமிகுந்த விடுதலை உணர்வு நிறைந்த ரீல.மு.காங்கிரஸின் போராளிகளே!
இன்று றவூட்ப் ஹக்கீமின் நிலை என்ன? அவரது அமைச்சுப் பதவி என்பது அவருடைய ஏகபோக சொத்தல்ல, அவர் நினைத்தவுடன் அதை வீசுவதற்கு அது முஸ்லிம் சமுகம் அவரிடம் கொடுத்த அமானிதம் இன்று அந்த அமானிதம் எங்கே? -
யானை தன் தலையில் தானே மண்ணை வாரிப் போட்டுக் கொள்வதைப் போல அல்லாமல் ஹக்கீம் இன்று தன் தலையில்
மாத்திரமல்லாமல், இந்நாட்டின் முஸ்லிம் சமுகத்தின் தலையிலும்
மண்ணை வாரிப் போட்டுவிட்டார்.
இன்னொரு விடயத்தையும் நாம் எண்ணிப் பார்க்க வேண்டும்.
கடந்த 5.8.2001 ம் திகதி கொழும்பு பொது நூலக கேட்போர் கூடத்தில் நடந்த அம்பாறை மாவட்ட ரீல.மு.காங்கிரஸ் பேராளர் மாநாட்டில் ஹக்கீம் கூறிய கூற்று இந் நாட்டு முஸ்லிம்களை இரத்தக் குளத்திற் தள்ளுவதற்குச் சமமாகும் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.
தமது பாராளுமன்ற உறுப்பினர்களை விலக்குவதற்காக அரசாங்கம் சதி செய்வதாகவும் அவ்வாறு விலக்க முற்பட்டால் விளைவுகள் மிகவும் விபரீதமாக இருக்குமென்றும் கூறிய ஹக்கீம் தமிழர் விடுதலைக் கூட்டணியின் பதினேழு உறுப்பினர்களை ஜே.ஆர்.ஜெயவர்த்தனா
DD

Page 13
நீக்கியதனால் ஏற்பட்ட விளைவுகள் விபரீதமாக அமைந்து விட்டதாகவும், தம்மோடு இருக்கும் பாராளுமன்ற உறுப்பினர்களை நீக்கினால் அதே போன்ற விளைவுகள் ஏற்படுமெனத் தாம் அரசாங்கத்தை எச்சரிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். இச் செய்தி வீரகேசரிப் பத்திரிகையின் 5.8.2001ம் (ஞாயிறு) இதழில் வெளிவந்துள்ளது.
அவருக்கென்ன அவர் சொல்லிவிட்டுக் கண்டியில் போய் பதுங்கிக் கொள்வார். அவற்றால் வரும் விளைவுகளை சந்திக்கப் போகிறவர்கள் வடகிழக்கு முஸ்லிம்கள்தானே.
ஜே. ஆர். தமிழர் விடுதலைக் கூட்டணி எம்பிக்களைப் பதவி நீக்கியதால் ஏற்பட்ட விளைவென றவுஃப் ஹக்கீம் குறிப்பிடுவது, தமிழ் இளைஞர்கள் ஆயுதமேந்திய போராட்டத்திற் குதித்ததைத்தான். அவ்வாறு தமிழ் இளைஞர்கள் ஆயுதப் போராட்டத்திற் குதித்து இன்றைய இருபது வருடங்கள் கடந்தும் அவர்கள் தங்கள் இலக்கை அடைந்துவிட்டார்களா? அதற்குள் தமிழ் மக்கள் சந்தித்த உயிர், உடமை அழிவுகள் தான் எத்தனை? இது மட்டுமன்றி அந்தத் தமிழ் இளைஞர்கள், முதலில் தம் துப்பாக்கிகளுக்கு இரையாக்கியதே தமது தலைவர்களைத்தான் என்பதைக்கூட இந்த ஹக்கீம் ஏன் மறந்து போனார்?
நிம்மதியாக வாழும் வடகிழக்கு முஸ்லிம்களிடையே றவூப் ஹக்கீம் வன்முறையைத் தூண்டிவிடப் பார்க்கிறாரா? வடகிழக்கு முஸ்லிம்களை ஆயுதமேந்திய போராட்டத்திற்கு அழைக்கிறாரா? வடகிழக்கில் இரத்த கங்கைகளை உற்பத்தியாக்குவதற்கு ஹக்கீம் முயலுகிறாரா? வடகிழக்கு அப்பாவி முஸ்லிம் இளைஞர்களை தீவிரவாதத்திற்குப் பலியிடப் போகிறாரா? வடகிழக்கு முஸ்லிம் பெண் களின் கற்பினை கடைச்சரக்காக்கப் பார்க்கிறாரா?
ஒரு சமுகத்தின் தலைவன் எவ்வளவு பொறுப்புணர்ச்சியுடனும் நிதானத்துடனும் தனது வார்த்தைகளை பிரயோகிக்க வேண்டுமென்ற அடிப்படை அறிவு கூட ஹக்கீமுக்கு கிடையாது என்பதை மேற்படி அவரது பேச்சு உணர்த்தி நிற்கிறது.
(2)

எனவே வீரமிகுந்த போராளிகளே! தியாகத்தின் அடிப்படையில் தம் வாழ்வை அமைத்துக் கொள்ளத் துடிக்கும் முஸ்லிம் பெரு மக்களே!
நமது முஸ்லிம் சமுகம் இதுவரை இந்நாட்டில் பெற்றுக் கொண்ட உரிமைகளைத் தக்க வைத்துக்கொள்ளவும், மேலும் உரிமைகளைப் பெற்று நிம்மதியாகவும் பூரண சுதந்திரத்துடனும் வாழவும் நாம் உறுதியாகவும் திடமாகவும் முடிவுகளை உடனடியாக மேற் கொள்ள வேண்டியவர்களாகவுள்ளோம்.
எனவே, அல்லாஹற், ரஸ்சல்(ஸல்) ஆகியோரின் கட்டளைகளுக்குப் பணிந்தவர்களாகவும் பயந்தவர்களாகவும் இந்த நாட்டின் முஸ்லிம் சமுகத்தைப் பேரழிவிலிருந்து பாதுகாக்க ரவூப் ஹக்கீம் என்ற சுயநல அரசியல்வாதியின் தலைமையை அப்புறப்படுத்துவதில் நாம் அனைவரும் ஒன்றுபடுவோம்.
உடல், பொருள், நேரம், சிரமம் எல்லாவற்றையும் இந்தக் கட்சிக்காக தியாகம் பண்ணிவிட்டு இது அழிந்து கொண்டு இருப்பதை பார்க்கப் பொறுக்காமல் துடி துடிக்கும்
ரீல.மு.காங்கிரஸின் ஆரம்பப் போராளிகள்.
தாருஸ்ஸலாம், கொழும்பு - 02.

Page 14