கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஆட்சி அதிகாரப் பகிர்வில் முஸ்லிம்களுக்கு நீதி வேண்டும்

Page 1
د هرچا په · · 3^ނޯރ st リエ Sエ
R: ,
 

S鹭 L患NK、
இழக்கு மாகாணம் - 389 சதுர  ை
51ിട്ട് - 42% = 4 。 45
= #6 2ー。○リLC5、 முஸ்லிம்கள் - 3' 6" "
= 67 శ్రీ ఫర్) LCతో 壓歷一25%一 243.3う。
6ll سالا بیٹھے . مجھے 60 g سے۔

Page 2
· · | м. м. м. коокUL HAGU
EDITOR OF AL HUTHA يب MANROADلكليـ9 قتلا
 

S

Page 3
காயிதே மில்லத் டாக்டர் அல்ஹாஜ் பதியுத்தீன் மஹ்மூத்
அல்ஹாஜ் அல்ஹாஜ் எம். ஐ. எம். முஹியத்தீன் அப்துல் டப்ளியு. எம். அமீர்
ஜ் ஜஞப் ஏ. எல். ஜவாத் ஜஞப் எஸ். ஏ. சாஹிர் மெளலான
கிழக்கிலங்கை முஸ்லிம்கள் சார்பாக சென்னை சென்று, பேச்சு வார்த்தை நடத்தியவர்கள்.
 
 
 

எங்களிடமிருந்து ஒரு வேண்டுகோள்
அன்புடையீர்,
அஸ்ஸலாமு அலைக்கும்
வடக்கு = கிழக்கு இலங்கையில் வாழும் முஸ்லிம்கள் மிகவும் சிக்கலான அபாயகரமான ஒரு நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பதனை நாம் அனைவரும் மிக நன்முக அறிவோம். கடந்த பல வருடங் களாக எமது தாய் நாட்டை நிலைகுலையச் செய்த தமிழ் மக்களின் போராட்டங்களுக்கு நியாயமான ஒரு முடிவினைக் காண்பதற்காக எடுக்கப்பட்ட சகல முயற்சிகளுக்கும் இலங்கை முஸ்லிம்கள் மனப் பூர்வமாகத் தமது ஒத்துழைப்பைத் தந்ததுடன் தமது பங்களிப் பினையும் தாராளமாகச் செய்துள்ளனர்.
ஆனலும், தமிழ் மக்களின் பிரச்சினைக்கு நியாயமான ஒரு பரிகாரம் காணப்பட வேண்டும் என்பதனை வலியுறுத்தி வந்த அதே வேளையில் அந்தப் பரிகாரங்கள் முஸ்லிம்களது உரிமைகளை யும் அக்கறைகளையும் பாதிப்பனவாக அமைந்துவிடக்கூடாது என்
பதிலும் முஸ்லிம்கள் மிகுந்த கரிசனை கொண்டுள்ளார்கள்.
இனப் பிரச்சினைக்கான தீர்வொன்று காணப்பட்டு, வடக் கிலும் கிழக்கிலும் வாழும் தமிழர்கள் நிம்மதியாக வாழக்கூடிய சூழ்நிலைகளை உருவாக்கும் வகையில் ஆட்சியும் அதிகாரங்களும் அவர்களுக்குப் பகிர்ந்தளிக்கப்படும் போது வடக்குக் கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம்கள் கெளரவத்துடனும், சுதந்திரபாகவும், அச்சமற்றும் வாழ்வதற்குச் சிறந்ததும், பொருத்தமானதுமான ஒரு ஒழுங்கு தனியான ஒரு முஸ்லிம் மாகாணத்தை அமைத்துத் தருவதுவேயாகும் என்பதே இலங்கை முஸ்லிம்கள் கொண்டிருந்த ஏகோபித்த முடிவாகும். முஸ்லிம்களின் இந்தக் கோரிக்கை சகல இன மக்களுக்கும், இலங்கை அரசுக்கும் எதுவித சந்தேகமுமில்லா மல் தெளிவாக எடுத்துக் கூறப்பட்டது.
கடந்த 29-07-87ல் செய்து கொள்ளப்பட்ட இலங்க்ை - இந் திய உடன்படிக்கை மூலமாக இலங்கைத் தமிழர் பிரச்சினைக்குக் கொள்கையளவான தீர்வு காணப்பட்டுவிட்டது. இந்த உடன் படிக்கை காரணமாக இலங்கையில் வாழும் தமிழ் மக்கள் கெளர வமாக வாழக்கூடிய நிலைமை ஏற்படுவதுடன் இலங்கையின் ஒரு மைப்பாடும் பேணப்படுவதனல் இலங்கை முஸ்லிம்கள் மிக மகிழ்ச் சியடைந்தார்கள். ஆனல் முஸ்லிம்களது நியாயமானதும், பிறரு க்கு எந்தவிதக் குந்தகமும் விளைவிக்காததுமான கோரிக்கையினைக்
V/

Page 4
கருத்திற் கொண்ட எந்த ஒரு வாசகமும் இந்த ஒப்பந்தத்தில் இடம் பெருமற் போனது எமக்குப் பெரும் ஏமாற்றத்தை ஏற்ப டுத்தியது. போதாததற்கு, முஸ்லிம்கள் இன்னும் ஒருபடி கீழே தள் ளப்பட்டு மேலும் சிறுபான்மையினராக் மாற்றப்பட்டுள்ளனர். இலங்கை-இந்திய ஒப்பந்தம் முஸ்லிம்களின் கோரிக்கையைப் பிரதிபலிக்க மறுத்துவிட்டது. மாண்புமிகு ஜனதிபதியவர்கள் முஸ்லிம்களின் நலனைப் பேணுவதாகக் கூறிய வாக்குறுதிகள் எது வும் நிறைவேற்றப்படவில்லை. முஸ்லிம் மாகாணம் என்ற அமைப்பு காரணம் எதுவுமின்றியே நிராகரிக்கப்பட்டுவிட்டது. ஆனல் ஒப்பந்தத்தின் கீழ் ஏற்படுத்தப்படவிருக்கும் இணைந்த மாகாண சபை அமைப்பில் முஸ்லிம்களுக்குக் கெளரவமான ஒரு அந்தஸ்தினை வழங்குவதில் இலங்கை அரசும், தமிழ் மக்களும், இந்திய அரசும் நிச்சயமாக அக்கறை காட்டுவார்கள் என்ற நம் பிக்கை இந்த நாட்டு முஸ்லிம்களுக்கு இருக்கிறது. அவ்வகையில், முஸ்லிம்கள் எதிர்நோக்கும் தவிர்க்க முடியாத உடனடி நிலைமை களை மையமாகக் கொண்டு, வடக்குக் கிழக்கு மாநிலத்தில் வாழும் முஸ்லிம்கள் சார்பில் 22 அம்சங்களை உள்ளடக்கிய பத்திரம் ஒன்று எமது மாண்புமிகு ஜனதிபதியிடம் சமர்ப்பிக்கப்படுவதற் காகக் கிழக்கிலங்கை முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களிட மும், தமிழ்த் தலைவர்களிடமும், இந்திய அரசிடமும் சமர்ப்பிக்கப் பட்டது. 藻
அவ்வாறு சமர்ப்பிக்கப்பட்ட கேர்ரிக்கைகளையும், அக்கோரிக் கைகளை நியாயப்படுத்தும் வலுவான காரணங்களையும், உள்ள டக்கிய 'முஸ்லிம்களுக்கு நீதி வேண்டும்' என்னும் பிரசுரம் உங்களுக்கு இவ்விஷயம் பற்றிய நல்ல விளக்கத்தைக் கொடுக் கும் என்பது எமது பூரண நம்பிக்கை.
இலங்கை-இந்திய உடன்படிக்கையினைப் பூரணமாக அமுல் செய் வதற்கு வகை செய்வதற்கான அரசியல் யாப்புத் திருத்தங்களும், மாகாண சபை மசோதாவும் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட் டுள்ளன. முஸ்லிம்கள் முற்ருகவே புறக்கணிக்கப்பட்டுவிட்டனர் என்பதனை இவை இறுதியாகவும் உறுதியாகவும் எடுத்துக் காட்டி விட்டன. யாப்புக்கான திருத்தங்களிலும், மாகாணசபை மசோதா விலும் வடக்கு, கிழக்கு முஸ்லிம்களின் உரிமைகளை, நலன்களைப் பேணும் ஒரு சரத்துக்கூடச் சேர்க்கப்படவில்லை.
இந்த மசோதாக்கள் விரைவிலேயே பாராளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்டு, சட்டமாக்கப்பட்டுவிடும். ஆன காரணத்தின லேதான் இப்பிரசுரத்தை மிக அவசரமாக உங்கள் கவனத்திற்கு அனுப்பி வைக்கின்ருேம்.
Vi
 
 
 

மிக மிக நெருக்கடியான இக்கால கட்டத்தில் புத்தி ஜீவியான உங்களது பங்களிப்பு எமது சமூகத்துக்கு வெகுவாகத் தேவைப் படுகின்றது. சமுதாயத்தின் சார்பில் முன்வைக்கப்படும் இந்தக் கோரிக்கைகளை வென்றெடுக்க வேண்டிய மிக முக்கிய பொறுப்பு உங்க்ளுக்கும் உண்டு. எங்களால் முன்வைக்கப்பட்டுள்ள கோரிக் கைகள் மிக உத்தமமானவை என்ருே மிகப் பொருத்தமானவை என்ருே நீங்கள் ஒரு வேளை ஒப்புக்கொள்ள மறுக்கக்கூடும். ஆயி னும், ஆழ்ந்து சிந்தித்துப் பார்ட்பீர்களேயாயின், நாம் சந்திக்கப் பலவந்தப்படுத்தப்பட்டவலுக்கட்டாயமான சூழலில் முன் வைத் திருக்கப்படக்கூடிய, அதிகூடிய சாத்தியமான பொருத்தமான கோரிக்கை இவைகளே என்பதனை ஏற்கவே செய்வீர்கள் என்பது எங்களது பணிவான நம்பிக்கையாகும்.
எனவே யாப்புத் திருத்தங்களும், மாகாண சபை ப சோதா வும் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுவிட முன்னர், எமது கோரிக்கைகளம் பொருத்தபான முறைகளில் அவற்றில் உட் படுத்தப்பட்டு சட்ட ரீதியான வலுவைப் பெறுவதற்கு உங்களால் இயன்ற அத்தனை முயற்சிகளையும் உடனடியாகச் செய்ய முன் வரு மாறு எமது சமூகத்தின் எதிர்கால சந்ததியினரின் சார்பில் உங் களை வேண்டிக்சொள்கின்ருேம். −
உங்களது முயற்சிகள் யாவும் சாத்வீகமானவையாக அமை யட்டும். ஜனநாயக ரீதியில் உருப்பெறட்டும். எக்காரணங் கொண்டும் எமது இளைஞர்களின் உணர்ச்சிகளைத் தூண்டிவிட்டு இறுதியில் அவர்களையே பலியாக ஆக்கிவிடும் பரிதாப நிலை எமக்கு ஏற்பட்டுவிடவேண்டாம்.
உங்களது கருத்துக்களை அறிவதற்கும். உங்களுடன் தொடர்பு கொள்ளுவதற்கும் ராங்கள் மிக ஆர்வமாக உள்ளோம் நாம் சமர்ப்பித்துள்ள கோரிக்கைகளை விட சிறப்பான கோரிக்கை களும், அவற்றை வென்றெடுப்பதற்கு சாத்வீகமான வழி முறைகளும் உள்ளனவென எடுத்துக்காட்டி உங்களால் முன் னெடுத்துச் செல்ல முடியுமானுல் எங்களது பரிபூரண ஒத்துழை ப்பை உங்களுக்கு வழங்க ஆயத்தமாக உள்ளோம் என்பத யும் தெரிவித்துக்கொள்கின்ருேம்.
நன்றி
கலாநிதி பதியுத்தீன் மஹ்மூத்,
அப்துல் டப்ளியு. எம். அமீர்,
எம். ஐ. எம். முஹியத்தீன்,
ஏ. எல். ஜவாத்,
எஸ். ஏ. சாஹிர் மெளலான, கிழக்கிழங்கை முஸ்லிம் ஸ் சார்பாகச் சென்னை சென்று இலங்கை தமிழர் விடுதலைக் கூட்டணியினரோடு 1987-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 16:17ம் திகதிகளில் பேச்சுவார்த்தை நடத்தியவர்கள்.
Vii

Page 5
முன்னுரை
இலங்கை முஸ்லிம்களின் (சோனகரின்) இன உரிமைகளுக்கு தகுந்த பாதுகாப்பு ஏற்படவ்ேண்டுமானல், கிழக்கிலங்கை முஸ் லிம்கள் அரசியல் ரீதியாக ஒன்றிணைந்து ஆக்கபூர்வமான திட்டத் தோடு செயற்படவேண்டியது மிக மிக அவசியம். இப்போதுள்ள இக்கட்டான நிலையில் எமக்குள் பிளவுகளை உண்டுபண்ணக்கூடிய கட்சிகளை ஏற்படுத்தி முஸ்லிம்களின் ஒன்றிணைந்த அரசியல் பலத்தை உடைப்பது பெருந் துரோகம், முஸ்லிம்களுக்கு ஒரு அரசியல் கட்சி தேவைதான். அதற்காகத் தென்படுவதையெல் லாம் ஆதரிப்பது ஆபத்தான செய்கை.எந்தவித திட்டமும் இல்லா மல் முஸ்லிம் பாமர மக்களின், குறிப்பாக இளைஞர்களின் இன உணர்வுகளைச் சந்தர்ப்பத்துக்கு ஏற்றவாறு தூண்டிவிட்டு அரசியல் இலாபத்துக்காக அங்கும் இங்கும் அலைந்து திரிபவர்கள் பற்றிக் கிழக்கிலங்கை முஸ்லிம்கள் மிக மிக ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.
சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த இக்காலகட்டத்தில் கிழக்கிலங்கை முஸ்லிம்கள் சந்தர்ப்பத்தைத் தவறவிடக்கூடாது என்பதற்காகவும், எமது முஸ்லிம் பாராளுமன்றப் பிரதிநிதிகள் எமக்குச் செய்யவேண்டிய முக்கிய கடமையைத் தவ்ருது செய் வதற்கு ஒரு தூண்டுதலாக இருப்பதற்காகவும், முக்கியமான இச் சந்தர்ப்பத்தில் நாம் என்ன நடவடிக்கை எடுத்துள்ளோம் என் பதனை எமது எதிர்காலச் சந்ததியினர் அறிந்து கொள்வதற்காக வுமே இச்சிறிய நூலைத் தயாரித்து உங்கள் முன் பணிவன்போடு சமர்ப்பிக்கின்றேன். -
இப்பணிக்கு என்னை ஊக்குவித்த இலங்கை முஸ்லிம் தலைவர் கலாநிதி பதியுத்தீன் மஹ்மூத், இந்திய முஸ்லிம் லீக் தலைவர் சிருஜ-சல் மில்லத் அல்ஹாஜ் ஏ.கே.ஏ. அப்துஸ்ஸமது, முஸ்லிம் பரோபகாரி அப்துல் டப்ளியு.எம். அமீர் ஆகியோருக் கும். இவ்வாக்கத்துக்கு உதவி ஒத்தாசை புரிந்து சகல அலுவல் களிலும் சம பங்கு கொண்ட எமது கிழக்கிலங்கைச் சகோதரர் களான ஜனப் ஏ.எல்.ஜவாத் 8.A. (Hons) L.L.B. ஜனப் எஸ்.ஏ. ஸாஹிர் மெளலான ஆகியோருக்கும் எனது மனமார்ந்த நன்றி.
எம்.ஐ.எம். முஹியத்தீன் அக்கரைப்பற்று 57 நொறிஸ் கனல் ருேட், கிழக்குமாகாணம் கொழும்பு 10, இலங்கை, 1710-1987 இலங்கை,

இலங்கை-இந்திய ஒப்பந்தமும் இலங்கை முஸ்லிம்களும்
இலங்கை, பல இன, பல மொழி, பல மத மக்கள் வாழும் பன்முக சமூக அமைப்பைக் கொண்ட நாடு என் பதை உறுதிப்படுத்தி, அதில் எல்லா இன மக்களும், சமத்துவம், பாதுகாப்பு, செளஜன்யம் ஆகியவற்றுடன் அவரவர் இன அபிலாஷைகளைப் பூர்த்தி செய்து வளமாக வாழ வேண்டும் என்பதைக் கருத்தில் கொண்டு 29-07-1987ல் செய்யப்பட்டுள்ள இலங்கை-இந்திய ஒப்பந்தத்தைக் கொள்கையளவில் நாம் வரவேற்கிருேம். சரித்திர முக்கியத்துவமும், உலக நாடுகளின் பேரா தரவையும் பெற்றுள்ள இந்தச் சமாதான உடன்படிக் கையில் முன்மொழியப்பட்டுள்ள உன்னத நோக்கங்களை வரவேற்கும் அதேவேளையில், இலங்கையில் சிறுபான்மை இனத்தவருக்கு ஆட்சி அதிகாரங்கள் பகிர்வு சம்பந்தப் பட்ட அதிமுக்கியமான விஷயத்தில் முஸ்லிம் (சோனக) இனத்தவர் முற்ருகப் புறக்கணிக்கப்பட்டிருப்பதனை நாம் மிகுந்த வேதனையோடு சுட்டிக்காட்டாமல் இருக்க முடி Այո Ց/.
"இலங்கைப் பிரஜைகளின் முக்கிய இனப் பிரிவுகள், அவர்களின் வரலாற்று வசிப்பிடம், பாஷை, கலாசாரம், மதங்கள் என்பன ஏற்றுக்கொள்ளப்பட்டு, சகல இனத்த வரும் சம அந்தஸ்துடன் பாதுகாப்பான வகையில் அவர வர் அபிலாஷைகளை அடைந்து சீரும் சிறப்புடனும் வாழ வேண்டும்' என்று அக்கறையோடு கூறிவிட்டு, இனப் பிரச்சினைத் தீர்வுக்கான ஆட்சி அதிகாரப் பரவலாக்க லின் அடிப்படையாய் அமையும் ஆட்சி மன்றங்களை முஸ் லிம்கள் அதிகப்படியாக இல்லாத பிரிவான மாகாண மட்டத்தில் ஏற்படுத்தி, முஸ்லிம் (சோனக) இனத்த வரைப் புறக்கணித்திருப்பது இந்த இலங்கை-இந்திய உடன்படிக்கையில் எமக்கிழைக்கப்பட்டிருக்கும் பெரும் அநீதி என்று கூறினல் அது மிகையாகாது.

Page 6
சிங்களப் பிரதேசத்தில் உள்ள ஏழு (7) மாகாணத் தில் உள்ள மக்களுக்கு, தேர்தல் நடைபெற்று தனித் தனி மாகாண சபைகள் ஏற்படுத்தப்பட்டுச் செயற் படத் தொடங்கிய பின்னர் ஒன்றிணைப்பால் ஏற்படக் கூடிய நன்மை தீமைகளை நன்கு ஆராய்ந்து சர்வஜன வாக்கெடுப்பு மூலம் கருத்தைத் தெரிவித்து தங்கள் மாகாண சபைகளை ஒன்றிணைக்கும் உரிமை வழங்கப்பட் டுள்ளது ஆணுல் தமிழ் பேசும் மாநிலத்தில் உள்ள இரு (2) மாகாணங்களில் வாழும் மக்களுக்கு இப்படி யான உரிமை மறுக்கப்பட்டுள்ளது. வடமாகாணத்தி லும், கிழக்கு மாகாணத்திலும் தேர்தல் நடைபெற்ற வுடன் அவை இரண்டும் சுயமாகவே ஒன்றிணைக்கப் பட்டு ஒரு தனி மாகாண சபையாக, ஒரு ஆளுனர், ஒரு முதல் மந்திரி, ஒரு மந்திரி சபை என்ற அமைப் பில் செயற்படும். ஒரு தனியான அரசியற் சாச னத்தையும் ஒற்றையாட்சி அமைப்பையும் கொண் டுள்ள இலங்கையில், மாகாண சபைகள் ஒன்றி ணைப்பு விஷயத்தில் நாட்டின் எல்லாப் பகுதிகளையும் போன்று அல்லாது, சிங்களப் பிரதேசத்தில் ஒரு முறை யும், தமிழ் பிரதேசத்தில் வேறு முறையும் நடைமுறைப் படுத்தப்படவிருப்பது வேறுபட்ட இருநாடுகளில் நடை பெறும் சம்பவம் போன்று தென்படுவதோடு இலங்கை யின் ஒற்றையாட்சிக்கும் இறைமைக்கும் குந்தகம் ஏற் படுத்தக்கூடிய செய்கையெனச் சந்தேகிக்கக் கூடியதாக வும் இருக்கிறது. இப்படியான செய்கையால் கிழக்கு மாகாணத்தில் வாழும் 33% முஸ்லிம்களின் இன உரி மைக்கு எதுவித பாதுகாப்புமின்றி, எமது கருத்தைத் தெரிவிக்கும் உரி ைமயை நிராகரித்து 70% தமிழர் அதி கப்படி ஆட்சி அதிகாரமுள்ள ஒன்றிணைந்த மாகாண சபைக்குள் முஸ்லிம்கள் பலவந்தமாகத் தள்ளப்பட்டு பாதுகாப்பற்ற சமூகமாகவும் அரசியல் அடிமைகளாக வும் ஆக்கப்பட்டுள்ளனர்.
இலங்கைக்குச் சுதந்திரங் கிடைத்தபோது, பிரித் தானிய ஆட்சியாளர் சுதந்திர இலங்கையின் ஆட்சி அதி
10
 
 

காரத்தை அன்று சிங்களவர் 70% பெரும்பான்மையாக விருந்த அரசாங்கத்திடமே ஒப்படைத்தனர். அதன் பின்னர் ஏற்பட்ட அநீதியையும், அட்டூழியங்களையும் கடந்த 40 வருடங்களாக அனுபவித்த சிறுபான்மை இனத்தவராகிய தமிழரும் முஸ்லிம்களும் நன்கு அறிவர். சிறுபான்மை இனத்தவரின் மொழி, பாரம்பரிய வசிப் பிடம், நிலபுலன், அரசியற் பிரதிநிதித்துவம், பாது காப்பு என்பவற்றிற்கு தொடர்ந்து வந்த 70% சிங்கள வர் பெரும்பான்மை ஆட்சிகளில் எந்தவிதப் பாது காப்பும் கொடுக்கப்படவில்லை.
இலங்கை-இந்திய, ஒப்பந்தப்படி கிழக்கு மாகாண முஸ்லிம் இனத்தவரின் உரிமைகள் புறக்கணிக்கப்பட்டு, தமிழர் 70% பெரும்பான்மையாக வரக்கூடிய வடக்குக் கிழக்கு மாகாணங்கள் ஒன்றிணைந்த மாநில மாகாண சபைக்கு ஆட்சி அதிகாரங்கள் பரவக்லாகப்படும்போது சுதந்திர இலங்கையில் 40 ஆண்டு காலமாக 18% தமிழ ருக்கு ஏற்பட்ட கதிதான் தமிழ் பேசும் மாநிலத்தில் உள்ள 18% முஸ்லிம்களுக்கு எதிர்காலத்தில் ஏற்படும்.
வடக்குக் கிழக்கு மாகாணங்களில் உள்ள ஏறக் குறைய ஐந்து இலட்சம் முஸ்லிம்களின் பீதியைத் தணிப் பதற்கான ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் மேற் கொள்ளப்படாவிட்டால் வடக்குக் கிழக்கு மாகாணங் களின் ஒன்றிணைப்பு நிரந்தரமாவதும், சமாதான சக வாழ்வு உறுதியாவதும் ஒருக்காலும் சாத்தியமாகாது.

Page 7
கிழக்கிலங்கை முஸ்லிம்கள் அரசியல் ரீதியாக ஒன்றிணைய வேண்டும்
சிங்களப் பேரின ஆட்சியாளர்களும், அவர்களின்
அடிவருடிகளும் இலங்கை முஸ்லிம்களின் இன உரிமை களைத் திட்டமிட்டு நிராகரித்து, எமது விருப்பத்துக்கு மாருக ஒன்றிணைந்த மாநில சபைக்குள் எம்மை ஒதுக் கித் தள்ளிவிட்டு 'ஒன்றிணைப்புக்கு முஸ்லிம்கள் ஆத ரவா?' என்று கேட்கின்றனர். எமக்கு விருப்பம் இல்
கூறுகின்றனர். சர்வஜன வாக்கெடுப்பு எப்போது வரும் என்று நிச்சயமாகக் கூற முடியாது. ஒரு வருடத்தின்பின் வரலாம். ஒத்திப் போடப்பட்டு விடலாம், நடைபெரு மல் போகலாம். அல்லது நடைபெற்று இணைப்பு உறு தியாக நிலைபெறச் சாதகமாகவும் வாக்குக் கொடுபட லாம். இவ்வாறன நிலையில் உடனடியாக ஏற்பட விருக்கும் ஒன்றிணைந்த மாகாண சபையில் முஸ்லிம் களின் நிலை என்ன? முஸ்லிம்களின் உயிர் உடமைகளுக்கு என்ன உத்தரவாதம்?
நாமும் ஆட்சி அதிகாரத்தில் சம பங்கு கொள்
வதற்காக முஸ்லிம்கள் அதிகப்படியாக உள்ள ஒரு மாகாண சபை ஏற்படுத்தப்படவேண்டும் என்பதே எமது கோரிக்கையாகும். ஒன்றிணைக்கப்பட்டுள்ள வடக் குக் கிழக்கு மாகாண சபையை உடைக்க இங்குள்ள முஸ்லிம்கள் சம்மத வாக்குக்கொடுப்பதால் எமது கோரி க்கைப்படி முஸ்லிம் மாகாணசபையை ஏற்படுத்த அர சாங்கம் ஆயத்தமாக இருக்கிறதா? இல்லவே இல்லை. ஆனல் உண்மை என்னவெனில் தமிழர் கண்ணீரும் செந் நீரும் சிந்திப் பல உயிர்த்தியாகங்கள் செய்து நடாத்திய உரிமைப் போராட்டத்தின் பயனுகப் பெற்றெடுத்த ஒன்றிணைந்த மாநிலத்தை இரண்டு துண்டாக உடைத்து விட முஸ்லிம்களைப் பாவித்து, வட கிழக்கில் வாழும் தமி
12
லாவிட்டால் ஒன்றிணைப்பை உடைத்துவிடச் சர்வஜன வாக்கெடுப்பு வரும்போது வாக்குப் போடுங்கள் எனக்
 

ழருக்கும் முஸ்லிம்களுக்குமிடையில் நிரந்தரமான பகை மையை ஏற்படுத்துவதே சிங்கள அரசாங்கத்தின் வஞ்ச கத் திட்டம். இத்திட்டம் வெற்றி பெற்றவுடன் முஸ்லிம் களின் வரலாற்று வசிப்பிடங்களுக்கூடாக உடனடியா
கச் சிங்களவரைக் குடியேற்றிக் கிழக்கு மாகாணத்தை
முற்ருக அபகரித்துக்கொள்வதே பேரின ஆட்சியாளரின் அடுத்த நடவடிக்கை. இப்போதுள்ளவாறு கிழக்கு மாகா ணம் தொடர்ந்து தனித்து நிற்குமாயின் சிங்கள ஆட் சியாளர் செய்து வந்த அடாவடித்தனமான செய்கை கள் யாவும் மேலும் தொடர்ந்து நடைபெறும். அதைத் தடுத்து நிறுத்த அரசாங்கத்திலுள்ள முஸ்லிம் பிரதிநிதி களால் முடியவே முடியாது. அடிமட்டத்தில், பிரதேச
சபைகள் அமைத்தபோதுகூட இவர்களால் முஸ்லிம்
களின் உரிமைகளைப் பெற்றெடுக்க முடியவில்லை. முஸ்லிம்
எம்.பி.களின் அரசியல் சாணக்கியத்திற்கும் சாதனைக்
கும் தகுந்த உரைகல் அம்பாரை மாவட்ட முஸ்லிம்
களின் இன்றைய அவலநிலை. தங்கள் 'பம்பரம் இதற்கு
மேல் ஆடாது' என்று அவர்களே பகிரங்கமாகக் கூறிய
தன் பின்னரும் இவர்களிடம் கிழக்கு மாகாண முஸ்
லிம்களின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் பொறுப்பை
முற்ருகவிட்டு வைப்பது மிகமிக ஆபத்தானதாகும். முஸ்லிம்களின் தனித்துவம், இன உரிமைகள், வரலாற்று
வசிப்பிடம், அரசியல் பிரதிநிதித்துவம், மதம், கல்வி,
கலாசாரம், பொருளாதாரம் போன்றவற்றிற்கு உடனடி
யாகப் பாதுகாப்பு அவசியமாக விருப்பதால், வடகிழக்கு
முஸ்லிம்கள் அனைவருக்கும், கட்சி பேதமின்றி அரசியல்
ரீதியாக ஒன்றிணைந்து ஆக்கபூர்வமான திட்டத்தோடு
செயலாற்ற முன்வர வேண்டும்.
13

Page 8
முஸ்லிம்களின் இன உரிமை பற்றித் தமிழருக்குள்ள அக்கறை
முஸ்லிம்களின் தனித்துவத்தையும், நலனையும் போதியளவு பாதுகாப்பதற்கென வடகிழக்குப் பிராந் தியத்தில் செயற்படுத்தக் கூடியதான ஏற்பாடுகள் குறித்து முஸ்லிம் குழுக்களுக்கும் தமிழர் குழுக்களுக்கு மிடையில் பல்வேருண பேச்சுக்கள் அண்மைக் காலத் தில் நடைபெற்றுள்ளன. இதன் பயனுக இருதரப்பின ரும் பின்வரும் விஷயங்களில் அக்கறையுள்ளவர்களாக இருக்கின்றனர்.
முஸ்லிம்களின் தனியானதும், வேறுபட்டதுமான இன, மத, கலாச்சாரத் தனித்துவம் பேணிப்பாதுகாக் கப்படவேண்டும்.
தமிழ் பேசும் மக்களின் வரலாற்று வசிப்பிட மென அங்கீகரிக்கப்பட்டுள்ள வடக்கு கிழக்கு மாநிலத் தில் தமிழ்பேசும் முஸ்லிம்களினது வரலாற்று வசிப் பிடங்கள் தனித்தனியாக அரசியல், நிருவாகப் பிரிவு களாக அடையாளம் காணப்படவேண்டும்.
முஸ்லிம்களுக்கு விகிதாசார முறைப்படி உரித் தான காணிகளில் வேறு இனத்தவர் எவரும் குடி யேறுவது தவிர்க்கப்படவேண்டும்.
மாகாண சபைகளுக்குட்பட்ட பிரதிநிதித்துவத் தில் முஸ்லிம்கள் ஆக்கமான அரசியல் அதிகாரமும் ஆதிக்கமும் அனுபவிப்பதனையும் பிரயோகிப்பதனையும் உறுதிப்படுத்தும் வகையில் போதிய ஏற்பாடுகள் செய் யப்பட வேண்டும்.
முஸ்லிம் பகுதிகளில் சட்டம் ஒழுங்கு ஆகியவை சம்பந்தமான நிறைவேற்று அதிகாரம் முஸ்லிம்கள் கைவசம் இருக்க வேண்டும்.
l4
 

வேலைவாய்ப்பு, காணிப் பகிர்வு, பொருளாதார அபிவிருத்தித் திட்டங்கள், முதலீடு சம்பந்தமானவற் றில் முஸ்லிம்களின் வரலாற்று வசிப்பிடங்sளுக்கு நியாய மான பங்கு கொடுபடவேண்டும்.
பிராந்தியத்தில் தனித்தனி நிருவநிப் பிரிவு களையும் அரசியற் பிரிவுகளையும் உருவாக்கும் வகையில் வடக்குக் கிழக்கு மாகாணங்களில் முஸ்லிம் பெரும் பான்மை உப அரசாங்க அதிபர்கள் பிரிவுகள்-பிரதேச சபைகள் என்பன ஏற்படுத்தப்பட்டு அவைகளை நிரு வாக ரீதியில் ஒன்றிணைப்பதற்கான ஏற்பாடுகள் செய் யப்படவேண்டும்.
மேற்கூறிய எல்லா அம்சங்களிலும் முஸ்லிம்களின் நீதியான, சட்டபூர்வமான அபிலாஷைகளைத் திருப்திப் படுத்தும் வகையில் எல்லா முயற்சிகளையும் எடுப்பதாக முஸ்லிம்களுக்கு தமிழ் அரசியல் தலைவர்கள் திரும்பத் திரும்ப உறுதியளித்து வந்துள்ளனர்.
வடக்குக் கிழக்கு மாகாண ஒன்றிணைப்பு விவகாரத்
தில் உத்தேச சர்வஜன வாக்கெடுப்பு அல்லது வேறு இத் தகைய நடவடிக்கைக்குரிய ஒரு ஆதரவை எடுர்பார்த்து
அந்த உறுதி மொழி அளிக்கப்படவில்லை என்றும்
வடக்குக் கிழக்கு மாநிலத்திற்குட்பட்ட பெரும்பான் மைச் சமுதாயத்தின் மீது தமிழ் பேசும் முஸ்லிம் சிறுபான்மையினரின் அபிலாஷைகளை அங்கீகரித்து மதிக்க வேண்டிய ஒரு கடப்பாடு உண்டு என்ற தார்மீக அடிப்படையிலேயே அது அளிக்கப்பட்டது என்றும் தமிழ் அரசியல் தலைமைத்துவம் அழுத்தம் திருத்தமாகக் கூறியுள்ளது. இருப்பினும் தமிழ் பேசும் முஸ்லிம் இனத் தவரின் உரிமைகளை மதித்துப் பாதுகாக்க ஒரு நியாய மான ஏற்பாட்டுக்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் போது அத்தகைய நடவடிக்கைகளால் அரசியல், நிரு வாக தேவைகளுக்காக ஒன்றுபட்ட மாநிலத்தின் ஒரு மைப்பாடு பாரதூரமாக குந்தகப்படுத்தப்படவோ அல்
I

Page 9
லது குலைக்கப்படவோ கூடாது. மிகத் துரிதமாகச் சம்பவங்கள் நிகழ்ந்துகொண்டிருப்பதால் மாகாண சபை களுக்கான சட்டங்கள் இறுதியாக அங்கீகரிக்கப்பட்டு அமுல் செய்யப்படுவதற்கு முன்பதாக இந்த அம்சங்கள் குறித்துத் தீவிரமாகவும் அவசரமாகவும் தமிழர், முஸ் லிம்கள் இரு சாராரும் பரிசீலனை செய்து எமது முடிவை ஆட்சியாளருக்கு உடனே தெரிவிக்கவேண்டும். தாமத மாவதால் முஸ்லிம்களது நலனே பாதிப்புக்குள்ளாக்கப் படவிருப்பதால், கூடுதல் தூண்டுதல் முஸ்லிம்களது பக்கம் இருந்தே வரவேண்டியுள்ளதையும் கவனிக்க வேண்டும்.
76
 
 
 

ஜனுதிபதியின் பிரேரணை அடிப்படையில் முஸ்லிம்களுக்குப் பாதுகாப்பு ஏற்படுத்த முடியும்
முஸ்லிம்களின் தனித்துவத்தையும் உரிமைகளையும் பாதுகாப்பதற்கு மேற்கொள்ளப்பட வேண்டிய ஏற் பாடுகள் குறித்து எவரும்பின்னடையத் தேவையில்லை. இலங்கை இந்திய ஒப்பந்தத்தில் 15வது பந்தியில் கூறப் பட்ட காலத்துக்குள் ஏற்றுக்கொள்ளப்பட்ட யோசனை களில் 1986 ஜூன் மாதம் 25 ஆம் திகதி மேன்மை தங்கிய ஜனதிபதியால் அறிவிக்கப்பட்ட மாகாண சபைகளுக்குரிய அதிகாரப்பரவலாக்கல் சம்பந்தமான பிரேரணைகள் இதற்குப் போதிய வாய்ப்பு அளிக்கின் றன. இந்தப் பிரேரணையில் 12, 16வது பந்திகளில் பின்வருமாறு கூறப்பட்டுள்ளது.
'12. மாகாண சபைகளுக்கான தேர்தல்கள் ஒவ் வொரு மாகாணத்திலும், நிருவாக மாவட்ட அடிப் படையில் விகிதாசாரத் தேர்தல் முறைப்படி நடை பெறும். மாகாணசபைகளுக்குத் தெரிவாக வேண்டிய அங்கத்தவர்கள் எண்ணிக்கை, அந்தந்த மாகாணத்தில் உள்ள ஒவ்வொரு மாவட்டத்தினதும் சனத்தொகை, அதன் விஸ்தீரணம் ஆகியவற்றைப் பொறுத்தே நிரு ணயிக்கப்படும்.
16. இனங்களுக்கிடையே உள்ள பீதியைத் தணிப் பதற்காக பின்வரும் மேலதிக ஆலோசனைகளையும் அர சாங்கம் கவனத்துக்கு எடுத்துக் கொள்ளத்தயாராக இருக்கிறது;
(1) இலங்கைத் தீவில் உள்ள மாகாணசபைகள் தமக்குள் பொதுப்படையான அக்கறையுள்ள அலுவல் களில் ஒன்ருேடொன்று கலந்து ஆலோசித்து, ஒன்றி ணைந்து செயற்படக்கூடிய தகுதிவாய்ந்த நிறுவன அமைப் புகளை ஏற்படுத்தல்.
17

Page 10
(2) ஒவ்வொரு மாகாணத்திலும் உள்ள இனக் குழுக்கள் மாகாண ஆட்சியில் பங்கு கொள்ளக்கூடிய வகையில் தகுதிவாய்ந்த சட்ட ரீதியிலான நிறுவனங் களை ஏற்படுத்தல். -
(3) இனக்குழுக்களுக்கு மாகாண ஆட்சியின் கட் டுப்பாட்டின் கீழ் கூடியளவு உள்ளூர் சுய ஆட்சியைக் கொடுக்கக் கூடிய வகையில் பின்வரும் நிறுவனங்களை ஏற்படுத்தல்,
(a) சமூகரீதியிலான உப அரசாங்க அதிபர்கள் பிரிவு. (b) உப அரசாங்க அதிபர்கள் பிரிவில் பிரதேச சபைகள்.
(c) வேறு எந்தவித உள்ளுர் சுய ஆட்சி அமைப் புகள்.
ls

வடக்கு கிழக்கு முஸ்லிம்கள் சார்பாக முன்வைக் கப்பட்ட பிரேரணைகள்
மாண்புமிகு ஜனதிபதி ஜே.ஆர். ஜயவர்தன அவர் களின் ஆலோசனைக்கும் அண்மையில் கைச்சாத்திடப் பட்ட இலங்கை-இந்திய உடன்படிக்கைக்கும் அமை வாக, வடக்கு கிழக்கு ஒன்றிணைந்த தமிழ் பேசும் மாநில சபையின் கட்டுப்பாட்டின்கீழ் தமிழ் பேசும் தமிழரைப் போன்று தமிழ் பேசும் முஸ்லிம்களும், நீதி
நியாயப்படி ஆட்சி அதிகாரங்களைப் பகிர்ந்து கொள்
ளும் வாய்ப்பினைக் கொடுக்கக்கூடிய இலங்கை முஸ்லிம் களின் (சோனகரின்) வரலாற்று வசிப்பிடங்களை உள் ளடக்கிய உப ஆட்சி, அரசியல், நிருவாக அமைப்புகள் ஏற்படுத்தப்படுவது முக்கிய உடனடித் தேவையாகும்.
1. அம்பாரைமாவட்டத்தில் முஸ்லிம்கள் பெரும் பான்மையாக இருக்கும் பழைய D.R.O. பிரிவுகளான பாணமைப்பற்று, அக்கரைப்பற்று, சம்மாந்துறைப் பற்று, கரவாகு-நிந்தவூர்ப்பற்று ஆகிய பகுதிகளோடு கல்ஒயா ஆற்றின் தென்பகுதிப் பிரதேசமான இன்றுள்ள வேகம்பத்து தென்பகுதியும், கிராம சேவை யாளர் இலக்கம் 28, 27, 27A, பாடாகொடை, தமண ஹிங்குருனை ஆகிய பகுதிகளையும் சேர்த்து, 1981ஆம் ஆண்டுக் கணக்குப்படி இப்பகுதியில் வாழும் முஸ்லிம் கள், தமிழர், சிங்களவர் சனத்தொகை விகிதாசாரத் திற்கேற்ப, அம்பாரை மாவட்டத்தில் உள்ள காணிப் பிரதேசத்தை உள்ளடக்கி முஸ்லிம்களை அதிகப்படியாகக் கொண்ட ஒரு மாவட்டத்தை ஏற்படுத்துதல், சனத் தொகைக்கேற்ப பற்ருக்குறை ஏற்படும் நிலப்பரப்புக்கு ஊவா மாகாணத்தில் உள்ள சேனநாயக்க சமுத்திரத் தின் நீர் ஏந்தும் பகுதிகளையும் இந்த உத்தேச மாவட் டத்துடன் சேர்க்கவேண்டும். அப்படிச் சேர்க்கப்படும் ஊவா மாகாண பிரதேசத்திற்குச் சமமான நிலப்பரப் பைக் கிழக்கு மாகாணத்தில் உள்ள பிந்தனைப்பற்றுப்
19

Page 11
பகுதியில் இருந்து எடுத்து ஊவா மாகாணத்தோடு சேர்த்துக்கொள்ளலாம்.
2. காத்தான்குடி, ஏருவூர், ஒட்டமாவடி, வாழைச் சேனை ஆகிய இடங்களில் மட்டக்களப்பு மாவட்டத் தில் உள்ள 24% வரலாற்று வசிப்பிடங்கள், நில புலன்கள், இயற்கை வளங்கள், விவசாயக்காணிகள், தொழிற்றுறைகளை உள்ளடக்கிய, முஸ்லிம்களை அதிகப் படியாகக்கொண்ட உப அரசாங்க அதிபர்கள் பிரிவு களையும்-பிரதேச சபைகளையும் ஏற்படுத்தல்.
3. மூதூர், கிண்ணியா, தம்பலகாமம் ஆகிய இடங்களில் திருகோணமலை மாவட்டத்தில் உள்ள 29% வரலாற்று வசிப்பிடங்கள், நிலபுலன்கள், இயற்கை வளங்கள், விவசாயக்காணிகள், தொழிற்றுறைகளை உள்ளடக்கிய, முஸ்லிம்களை அதிகப்படியாகக்கொண்ட உப அரசாங்க அதிபர்கள் பிரிவுகளையும் பிரதேச-சபை களையும் ஏற்படுத்தல்.
4. முசலி, எருக்கலம்பிட்டி ஆகிய இடங்களில் மன் ஞர் மாவட்டத்தில்உள்ள 27% வரலாற்று வசிப்பிடங் கள், நிலபுலன்கள், இயற்கை வளங்கள், விவசாயக் காணிகள், தொழிற்றுறைகளை உள்ளடக்கிய, முஸ்லிம் களை அதிகப்படியாகக்கொண்ட உப அரசாங்க அதி பர்கள் ரிபிவுகளையும், பிரதேச சபைகளையும் ஏற் படுத்தல்.
5. சம்மாந்துறை, காத்தான்குடி, கிண்ணியா ஆகிய இடங்களில் நகர சபைகளை (Urban Councils) ஏற்படுத்தல், நகரசபைகள் ஏற்படுத்தும்போது இப்பகு திகளில் உள்ள எஞ்சிய பிரதேச சபையிலும் முஸ்லிம் களின் பெரும்பான்மை நிலைத்திருக்கக்கூடிய ஒழுங்கு செய்யப்பட வேண்டும்.
6. கல்முனையில் ஒரு மாநகரசபை ஏற்படுத்தல். மாநகர சபை ஏற்படும்போது இப்பகுதியில் உள்ள எஞ்சிய பிரதேச சபையிலும் முஸ்லிம்களின் பெரும்
20
 

பான்மை நிலைத்திருக்கக்கூடிய ஒழுங்கு செய்யப்பட வேண்டும்.
7. மட்டக்களப்பு, திருகோணமலை, மன்னர் மாவட் டங்களிலுள்ள முஸ்லிம்களை அதிகப்படியாகக்கொண்ட உப அரசாங்க அதிபர்கள் பிரிவுகளை நிருவாக ரீதியில் ஒன்றிணைத்து அந்தந்த மாவட்டங்களில் தனித்தனி முஸ் லிம் நிர்வாக மாவட்டங்கள் அமைக்கப்பட வேண்டும்.
8 வடக்குக் கிழக்கு மாகாணங்களில் ஏற்படுத்தப் படும் முஸ்லிம் நிருவாக மாவட்டங்கள் யாவும் மாகாண சபை தேர்தலுக்கான தேர்தல் மாவட்டங்களாக அங்கீகரிக்கப்பட வேண்டும். விகிதாசாரத் தேர்தல் முறைப்படி தேர்தல் நடைபெறும்போது முஸ்லிம் களால் முஸ்லிம் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்கக்கூடிய வாய்ப்பைப் பெறுவதற்கான ஒரேயொரு வழி இதுவே ιI JΠΘ, LD.
9. கிழக்கு மாகாணத்திலிருந்து பாராளுமன்றத் துக்கான இனரீதியிலான பிரதிநிதித்துவம் பற்றித் தீர் மானிக்கப்பட்டபோது 1976 ம் வருடத் தேர்தல் தொகு திகள் ஆணைக்குழு தமிழருக்கு 5 ஆசனங்களும், முஸ் லிம்களுக்கு 5 ஆசனங்களும், சிங்களவருக்கு 2 ஆசனங் களும் கொடுக்கப்பட வேண்டும் எனச் செய்த சிபாரிசு அன்றையப் பாராளுமன்றத்தால் ஏற்றுக்கொள் ளப்பட்டுத் தொகுதிகளும் பிரிக்கப்பட்டுத் தேர்தல் நடைபெற்றுள்ளது. அதன் பிரகாரமே இன்றைய கிழக்கு மாகாணப் பிரதிநிதிகள் பாராளுமன்றத்தில் உள்ள னர். ஆகவே மாகாண சபைக்கான இனரீதியிலான அங்கத்தவர் எண்ணிக்கையும் இதன் பிரகாரமே நிர்ண யிக்கப்பட வேண்டும். கிழக்கு மாகாணத்தில் தமிழருக்கு 42 %, முஸ்லிம்களுக்கு 42%, சிங்களவருக்கு 16% என்ற ரீதியில் அங்கத்தவர் எண்ணிக்கை நிர்ணயிக்கப்பட வேண்டும்.
10. கேந்திர முக்கியத்துவம், இயற்கை வளம், மகாவலி அபிவிருத்தித்திட்டம் காரணமாக விரைவில்
21

Page 12
ஏற்படக்கூடிய குடிசன அதிகரிப்பு ஆகியவற்றைக் கருத் தில் கொண்டு, கிழக்கு மாகாணத்துக்குக் கூடுதலான பிரதிநிதித்துவம் கொடுக்கப்படவேண்டும். மேலும் கிழக்கு மாகாணம் 1,100 சதுரக் கிலோமீட்டர் கூடு தலான விஸ்தீரணமும் கொண்டதாக இருக்கிறது அத் தோடு ஒன்றிணைந்த மாகாணசபைக்காகக் கிழக்கு மாகாண மக்களே தங்கள் மாகாணத்துக்கான ஒரு தனி மாகாண சபையை விட்டுக்கொடுக்கவும் வேண் டியிருக்கிறது. ஆகவே ஒன்றிணைந்த மாகாணசபைக்கு அங்கத்தவர் தெரிவாகும்போது கூடுதலான அங்கத்துவம் வடக்கைவிடக் கிழக்குமாகாணத்துக்கே கொடுக்கப்பட வேண்டும்.
. வடகிழக்கு ஒன்றிணைந்த மாகாணசபைக் குத் தெரிவாகும் பிரதிநிதிகளில் குறைந்த பட்சம் 30% பிரதிநிதிகள் முஸ்லிம்களாகத் தெரிவாவதற்கான வாய்ப்பு ஏற்படுத்தப்படவேண்டும்.
12. வடக்கு, கிழக்கு ஒன்றிணைந்த தமிழ் பேசும் மாகாணசபையில் சம அந்தஸ்துள்ள இனரீதியிலான இரு (2) உப மாநில சபைகள்-தமிழ் பேசும் தமிழ ருக்கு ஒன்றும் (1) தமிழ் பேசும் முஸ்லிம்களுக்கு ஒன் றும் (1), அதிகாரங்களைப் பகிர்ந்து கொள்ளக்கூடிய வகையில் ஏற்படுத்தப்படவேண்டும்.
13, சட்டமும் ஒழுங்கும் சம்பந்தப்பட்ட விஷயங் களில் தமிழருக்கான சபைக்குப் பகிர்ந்தளிக்கப்படும் எல்லா அதிகாரங்களும் முஸ்லிம்களுக்கான (சோனகருக் கான) சபைக்குப்பகிர்ந்து கொடுக்கப்படவேண்டும்.
14. வடகிழக்கு ஒன்றிணைந்த மாகாண சபைக்கான மந்திரிசபையில் குறைந்த பட்சம் 30% முக்கிய மந்திரி கள் முஸ்லிம் (சோனகர்) இன உப மாநிலசபை அங் கத்தவர்களிலிருந்து தெரிவு செய்யப்படவேண்டும்.
15. தமிழரின் இன உப மாநிலசபை தலைமை மந் திரியும், முஸ்லிம் (சோனகர்) இன உபமாநிலசபைத்
22
 
 
 

தலைமை மந்திரியும் முறையே ஒன்றிணைந்த மாகாண சபையின் முதல் மந்திரியாகவும், பதில் முதல் மந்திரி யாகவும் நியமிக்கப்படவேண்டும்.
16. முஸ்லிம் (சோனகர்) இனத்தவருக்கு ஒன்றி ணைந்த மாநிலசபையில்-முஸ்லிம் (சோனக) இன உப மாநில சபையின்கீழ்-ஆரம்ப பாடசாலை தொடக்கம் சர்வகலாசாலைவரை தனிப்பட்ட கல்வி வசதிகள் செய்து கொடுக்கப்படவேண்டும்.
17. ஒன்றிணைந்த மாகாண சபைக்குட்பட்ட அர சாங்க காணிகளில் முஸ்லிம்களுக்கு கிழக்கு மாகாணத் தில் 35%க்கு குறைவில்லாததும், மன்னர் மாவட்டத் தில் 30%க்கு குறைவில்லாததும், வடமாகாணத்தில் உள்ள ஏனைய மாவட்டங்களில் 10%க்கும் குறைவில் லாததுமான பங்கு காணிகள் ஒதுக்கப்படவேண்டும். 18. ஒன்றிணைந்த மாகாணசபைக்குட்பட்ட வேலை வாய்ப்புகளில் முஸ்லிம்களுக்கு குறைந்தபட்சம் 30% குறையாத பங்கு ஒதுக்கப்பட வேண்டும்.
19. முஸ்லிம் இனத்தவருக்கான அரசியல் நிருவாக அதிகாரங்களையும், நடைமுறைகளையும் கட்டுப்படுத்தக்
கூடிய அல்லது பாதிக்கக் கூடியவகையான எந்தவித
சட்டங்களும், நிருவாகக் கட்டளைகளும், முஸ்லிம் இனத் தவரின் பிரதிநிதிகள் கொண்ட உப மாநில சபையின் நான்கில் மூன்று பங்கு ஆதரவில்லாமல் நிறைவேற் றவோ நடைமுறைப்படுத்தவோ கூடாது.
20. முஸ்லிம் (சோனக) இனத்தவரின் உரிமைகளைப் பாதுகாக்கவும், ஆட்சி அதிகாரங்களை நியாயமான முறையில் பகிர்ந்து கொள்ளவும் கூடிய ஏற்பாடுகளைச் செய்யும்போது அத்தகைய நடவடிக்கைகளால் அரசி யல் நிருவாக தேவைகளுக்காக ஒன்றுபட்ட வடகிழக்கு மாநிலத்தின் ஒருமைப்பாட்டுக்கு பாரதூரமான குந்த
கம் எதுவும் ஏற்படக்கூடாது.
2?

Page 13
N
21. நாம் முன்வைக்கும் மேற்கூறப்பட்ட பிரேரணை கள், மாண்புமிகு ஜனதிபதி அவர்களால் மாகாண சபைகளுக்கு அதிகாரங்கள் பரவலாக்கலுக்கான பிரே ரணைகளுக்கும் அண்மையில் (29-07-87ல்) கைச்சாத்திடப் பட்ட இலங்கை-இந்திய ஒப்பந்தத்திற்கும் அமைவான தாகவே உள்ளன.
22. அரசியல் நிர்வாகத் தேவைகளுக்காக ஒன்றி ணைந்த வடகிழக்கு மாகாணங்களை ஒரு தனி மாநில மாக நிலைபெறச் செய்வதற்கும், முஸ்லிம் (சோனக) இனத்தவரும் சமத்துவம், பாதுகாப்பு, செளஜன்யம் ஆகியவற்றுடன் தமது இன அபிலாஷைகளையும் பூர்த்தி செய்து தமிழ் பேசும் தமிழர்கள் போன்று, வளமாக வடகிழக்கு ஒன்றிணைந்த மாநிலத்தில் வாழவும் வேண்டு மானுல் மேற்கூறப்பட்ட ஆலோசனைகளை நடைமுறைப்
படுத்த வேண்டியது அவசியம். இந்த ஆலோசனைகளில் கூறப்பட்ட பாதுகாப்புகளும், உத்தரவாதங்களும் தமிழர்களால் ஏற்றுக் கொள்ளப்படுவதுடன் அரசாங்கத் தின் அங்கீகாரமும், இந்தியாவின் உத்தரவாதமும் கொடுக்கப்படவும் வேண்டும். இல்லாவிட்டால் வடக்கு கிழக்கு மாகாணங்கள் ஒன்றிணைந்த மாநிலத்தில் வாழும் முஸ்லிம்கள் எதிர்காலத்தில் பெரிதும் ஏமாற்றப்பட்ட வர்களாவார்கள் என்பதில் எதுவித சந்தேகமும் இல்லை.
2套
 

தமிழர் விடுதலைக் கூட்டணியினரால் முஸ்லிம்களுக்கு சென்னைப் பேச்சுவார்த்தையின் போது கொடுக்கப்பட்டி பிரேரணைகள்
இந்திய-பூரீலங்கா உடன்பாட்டில் வடமாகாணமும் கிழக்கு மாகாணமும் தமிழ்பேசும் மக்களின் வர லாற்று வாழ்விடங்கள் என அங்கீகரிக்கப்பட்டுள்ளது. தமிழர் விடுதலைக் கூட்டணி முஸ்லிம்களின் பிரத்தி யேகமான தனித்துவத்தை (Identity) அங்கீகரிக்கின்றது.
முஸ்லிம்கள் நாடுமுழுவதிலும் மட்டுமன்றி, வடக்கு கிழக்கு மாகாணத்திலும் சிறுபான்மையினராகவே உள் ளனர். இதை உணர்ந்து தமிழர் விடுதலைக் கூட்டணி பின்வருவனவற்றை விதந்துரைக்கின்றது.
l. காத்தான்குடி, ஏருவூர், ஒட்டமாவடி, வாழைச் சேனை, கிண்ணியா, தம்பலகாமம் (முள்ளிப்பொத்தான) எருக்கலம்பிட்டி, முசலி ஆகிய ஒவ்வோர் இடங்களுக்கும் முஸ்லிம்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட உப அரசாங்க அதிபர் பிரதேச சபைகளை-பிரிவுகளை ஏற்படுத் துதல். ஒவ்வொரு பிரிவிலும் எவ்வெப் பிரதேசங்கள் உட்படுத்தப்பட வேண்டும் என்பது பாரம்பரிய வாழ் விடங்கள், நிலம், மூலவளங்கள் என்பவற்றின் அடிப் படையில் மேலும் கலந்துரையாடல்கள் நடாத்தி முடிவு செய்யப்படும்.
2. கல்முனையில் ஒரு மாநகர சபை ஏற்படுத்துவது டன் சம்மாந்துறை, காத்தான்குடி, கிண்ணியா, ஆகிய இடங்களில் நகர சபைகளை நிறுவுதல். இச்சபைகளின் ஆள்புல எல்லைகள் எவை என்பது கலந்துரையாடி முடிவுசெய்யப்படும்.
3. தமிழர் விடுதலை கூட்டணி முஸ்லிம்களினுடைய பிரதிநிதித்துவத்தை உத்தரவாதப் படுத்துவதற்காக, மாகாணசபைக்கான அங்கத்தவர்களின் தெரிவு ஆள் புல ரீதியான தேர்தல் தொகுதிகளினடிப்படையில் (Territorial Constituencies) egyaologg56) GalgörGG)LC6ör
25

Page 14
அதன் ஆ லோ ச னை களி ல் வித ந் து ரை த் திருந் தது. மேலும் மா கா ன ச  ைபக் கா ன அங்கத் தவர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு 1000 சதுரகிலோ மீட்டருக்கு ஒரு அங்கத்தவரும் ஒவ்வொரு 30,000 மக்கள் தொகைக்கு ஒரு அங்கத்தவரும் என்ற அடிப் ப ைட யி லு ம் நிர்ணயிக்கப்படவேண்டும் எனவும் கேட்டிருந்தோம். ஆனல் அரசாங்கத்தின் பிரேரணை அங்கத்துவத் தெரிவு விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறை யினடிப்படையிலேயே அமைதல் வேண்டும் எனவும் மேலும் அது நிலப்பரப்பினடிப்படையிலும், ஒவ்வொரு 40,000 மக்கள் தொகைக்கு ஒரு அங்கத்தவர் என்ற அடிப்படையிலும் அமைதல் வேண்டும் எனவும் கூறியது. இந்த அடிப்படையில் வடக்கு - கிழக்கு மாகாண சபை 7.1 அங்கத்தவர்களைக் கொண்டதாக அமையும்; அதா வது வட மாகாணத்துக்கு 36 அங்கத்தவர்களும் கிழக்கு மாகாணத்துக்கு 3) அங்கத்தவர்களும் இருப்பர்.
முஸ்லிம்கள் கிழக்கு மாகாணத்தில் 32, 27% மும் வடக்கு மாகாணத்தில் 4.73% மாகவும் உள்ளனர். த. வி. கூட்டணி, முஸ்லிம் தூதுக் குழுவினருடன் விரிவாக விவாதித்த பின்னர் கிழக்கு மாகாணத்தில் 12க்குக் குறைவில்லாத முஸ்லிம் அங்கத்தவர்களும், வட மாகா ணத்தில் 5க்குக் குறைவில்லாத முஸ்லிம் அங்கத்தவர் களும் மாகாண சபைக்குத் தேர்ந்தெடுக்கப்படுவதை உறுதி செய்யும் வகையிலான சட்ட ஏற்பாடுகள் செய் யப்படவேண்டும் என்பதனை ஏற்றுக் கொள்கின்றது.
4. வடக்கு- கிழக்கு மாகாண சபையின் முதலமைச் சராக ஒரு முஸ்லிம் முறையாக நியமிக்கப்பட்டிருந் தாலன்றி, குறித்த மாகாண சபையின் பிரதி முதலமைச் சராக ஒரு முஸ்லிம் நியமிக்கப்படுவதை உறுதி செய்யும் வகையில் சட்ட ஏற்பாடுகள் செய்யப்படுதல் வேண்டும். முஸ்லிம் விவகாரங்களுக்கான ஒரு அமைச்சர் உட்பட அமைச்சர்கள் சபையில் 25% துக்குக் குறைவில்லாத அமைச்சர்கள் முஸ்லிம்களாக இருப்பதற்கு வகை செய் யும் விதத்தில் சட்ட ஏற்பாடுகள் செய்யப்படவேண்டும்.
26
 

5. வருங்கால அரச காணிப்பங்கீடுகளில் முஸ்லிம் களுக்கு உரித்துடைய காணிப்பங்கு விகிதம் கிழக்கு மாகாணத்தில் 35%க்குக் குறைவில்லாமலும், மன்னர் மாவட்டத்தில் 30%க்குக் குறைவில்லாமலும், வட மாகாணத்தின் ஏனைய பகுதிகளில் 10%க்குக் குறை வில்லாமலும் இருத்தல் வேண்டும்.
6. வடக்குக் கிழக்கு மாகாணத்தின் ஒவ்வொரு மாவட்டத்திலும் வாழும் முஸ்லிம்களின் விகிதாசாரத் திற்குக் குறைவில்லாத விகிதாசாரத்தின்படி பொதுத் துறை வேலைவாய்ப்புக்களுக்கான உரிமையை முஸ்லிம் கள் கொண்டிருப்பர்.
7. பல்கலைக்கழக மட்டம் வரையிலான பிரத்தியே கக்கல்வி வசதிகள் முஸ்லிம்களுக்காக ஏற்படுத்தப்படும்.
பல்கலைக்கழகங்களுக்கான அனுமதியின்போது கல்வித்
துறையில் பின்தங்கியுள்ள குழுக்கள், பிரதேசங்கள், பாடசாலைகள் என்பனவற்றிற்கு விசேட கவனிப்பு செலுத்தப்படும்.
8. முஸ்லிம்களது உரிமைகளை அக்கறைகளைப்,பாதிக் கக்கூடிய எதுவித சட்டவாக்கங்களும் அவற்றிற்கு முஸ் லிம் பிரதிநிதிகளில் பெரும்பான்மையினர் சார்பாக வாக்களித்தாலன்றி, வடக்கு கிழக்கு மாகாணசபை யினுல் நிறைவேற்றப்படலாகாது.
9. முஸ்லிம்களால் சமர்ப்பிக்கப்பட்ட மகஜரில் உட்படுத்தப்பட்டிருந்த ஏனைய விடயங்கள் தொடர்பில் எமது கருத்துக்களை நாம் தெரிவித்துள்ளோம். இவ் விடயங்கள் இருபகுதியினராலும் மேலும் பரிசீலிக்கப் படவேண்டியவைகளாக இருக்கின்றன.
ஒப்பம் ? ஒப்பம் M. சிவசிதம்பரம் A, அமிர்தலிங்கம் தலைவர்: செயலாளர் நாயகம் த. வி. - தி வி. a.
இப்பிரேரணைகளின் பிரதிகள் கிலங்கிலங்கை முஸ்லிம்
பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும், இந்திய உயர் ஸ்தா ணிகருக்கும் 1987 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 28ஆம் திகதி கையளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
27

Page 15
ணைந்த மாநிலத்தில் முஸ்லிம்கள் கோருவது போன்ற
நீதியான தீர்ப்புக்குத் தேவையான அணுகு முறைகள்
"அந்நிய ஆட்சியின் கீழ் பெரிதும் புறக்கணிக்கப் பட்ட இனத்தவர் சிங்களவர். இலங்கையின் சுதந்திரத் திற்குப் போராடியவர்களும் சிங்களவர்கள்தான். அந் நியர் ஆட்சிக்காலத்தில் தமிழர்கள் தங்கள் இன விகிதாசாரத்தைவிடப் பன்மடங்கு கூடுதலான சலு கைகளைப் பெற்றிருந்தனர்' இப்படிக் கூறித் திட்ட மிட்டு தமிழரின் நியாயமான இன உரிமைகளைப் பெரும் பான்மைச் சிங்கள ஆட்சியாளர், சுதந்திரத்தின் பின் புறக்கணித்தனர். இதனை ஏற்காத தமிழர் சத்தியாக் கிரகம், சமஷ்டி ஆட்சி,தனிநாட்டுப் பிரிவினை என்றவாறு
40 வருடமாக உரிமைப் போராட்டம் நடத்தினர். இப்
போது அதில் ஒரளவு வெற்றியும் கண்டுள்ளனர். அன்று சிங்களவர் கூறியதுபோல் இன்று தமிழர்கள் 'முஸ் லிம்கள் சிங்களவர் ஆட்சியில் பல சலுகைகளைப் பெற் றவர்கள், வடக்கு கிழக்கு ஒன்றிணைந்த மாநில அமைப்பு தமிழர்களின் போராட்டத்தாலும், தியாகங் களாலும் கிடைத்தது' என்று கூறி, முஸ்லிம்களின் இன உரிமைகளை நிராகரித்தால் அல்லது மறுத்தால் தமிழர் தமது இன உரிமைகளைப் பெற என்னென்ன செய்தார்களோ முஸ்லிம்களும் அத்தனையும், அதைவிடக் கூடுதலாகவும் எதிர்காலத்தில் செய்யப்போவது நிச்
(FLO
இலங்கை-இந்திய ஒப்பந்தத்தில் வடக்குக் கிழக்கு மாகாணங்கள் தமிழ் பேசும் மக்களின் வரலாற்று வசிப் பிடம் என்று பிரதானமாகக் கூறப்பட்டிருப்பதாலும், சிங்களவர்களுக்கு இலங்கையில் ஆட்சி அதிகாரங்களைப் பகிர்ந்துகொள்வதற்கு வேறு ஏழு (7) மாகாண சபை
களும், சிங்களவரே 74% அதிகப்படியான மத்திய அர
சாங்கமும் இருப்பதாலும் வடக்குக் கிழக்கு ஒன்றி
28
 
 

உரிமைப் பங்கினை சிங்களவர் கோர முடியாது. கோருவதும் நியாயமல்ல. அப்படியில்லாமல் ‘முஸ்லிம்கள் கோருபவைகளைக் கொடுத்தால், முஸ்லிம் கள் கோரிக்கை போன்ற சிங்களவர் கோரிக்கைகளை யும் கொடுக்க வேண்டிவரும். ஆகவே முஸ்லிம்களின் கோரிக்கைகளை நிறைவேற்றமுடியாது' என்று 70% தமி ழர்கள் கூறுவார்களேயானல், அது வடக்கு கிழக்கு இணைப்பை விரும்பாத 74% சிங்கள ஆட்சியாளர்கள் கிழக்கு மாகாண முஸ்லிம்கள் ஒன்றிணைப்புக்கு எதிர்ப்பு எனக் கூறித் தமிழர் கோரிக்கையை நிராகரிக்க முற் பட்ட கதையைத்தான் ஒத்திருக்கும். இக்கதையைத் தமிழர் எப்படி ஏற்க மறுத்தனரோ அவ்வாறே முஸ் லிம்களும் தமிழர் கூறுவதை ஏற்க மறுப்பார்கள். சிங்களவர் செய்த தவறைத் தமிழர்கள் செய்யக் di.LITgl.
ஆட்சி அதிகாரப்பகிர்வுக்காக மாகாண சபை களை ஏற்படுத்தும்போது தமிழர் கோரிக்கையை நிறை வேற்ற மற்றைய ஏழு (7) சிங்கள மாகாணங்களிலும் இல்லாதவாறு தமிழ் பேசும் இரு (2) மாகாணங்களில் மாத்திரம் விஷேடமான, பிரத்தியேக ஏற்பாடுகள் செய்வதற்காக அரசியல் சாசனத்தில் திருத்தமும், மாகாண மசோதாவில் சட்டமும் ஏற்படுத்தி தேர்தல் நடைபெறவிருக்கின்றது.
வடக்கு-கிழக்கு உடனடி ஒன்றிணைப்பு. கிழக்கு மாகாணத்தின் வரலாற்று வம்சாவழியினரான கணிச மான அளவு முஸ்லிம்களின் விருப்பு வெறுப்பு அறியா மல் பாராளுமன்றத்தின் தனிப்பட்ட அங்கீகாரத்தால் செய்யப்படவிருக்கும் ஒரு விசேட ஏற்பாடு. இந்த விசேட ஏற்பாட்டால் முஸ்லிம்களின் இன உரிமை களும் தனித்துவமும் பெரிதும் பாதிக்கப்படுவது நிச்
Fulb.
தபால் தந்தித் தொடர்பு பிரதி அச்ைசரும் சம் மாந்துறைத் தொகுதிப் பாராளுமன்றப் பிரதிநிதியு
29

Page 16
மான ஜனப் அப்துல் மஜீத் அவர்கள் 11-10-87இல் தினகரன் பத்திரிகைக்களித்த பேட்டியில் “கிழக்கு, தனி மாகாணமாகத் திகழவேண்டும் என்பதே மக்கள் எமக்கு அளித்த ஆணை’ என்று கூறியுள்ளார். ஆகவே கிழக்கு மாகாணத்தில் சர்வஜன வாக்கெடுப்புக்கு முன் பதாக ஏற்படும் ஒன்றிணைப்பு மக்கள் கொடுத்த ஆணைக்கு முற்றும் முரணுனதாகும். இப்படியான இணைப்பை ஏற்படுத்தும் அரசியற் சாசனத் திருத்தத்திற் கும் மாகாணசபை மசோதா சட்டத்திற்கும் கிழக் கிலங்கை முஸ்லிம் பாராளுமன்றப் பிரதிநிதிகள் ஆதர
வளித்தால் முஸ்லிம்களை ஏமாற்றிய பாவத்திற்கும்
பழிக்கும் ஆளாவார்கள்.
மாகாணசபை ஏற்பட்டு, கிழக்கு மாகாணத் தில் சர்வஜனவாக்கெடுப்பு நடைபெறும் வரையில் உள்ள இடைக்காலத்தில், ஆட்சி அதிகாரத்தைக் கொண்டுள்ள 70% தமிழர் அதிகப்படியாகவுள்ள, ஒன்றிணைந்த
மாகாண ஆட்சியில் முஸ்லிம்களின் இன உரிமைகளுக்
குத் தகுந்த பாதுகாப்பும், நியாயப்படி ஆட்சி அதி காரத்தைப் பகிர்ந்து கொள்ளக்கூடிய விசேட ஏற்பாடு
களும் செய்யவேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பு. இந்தப் பொறுப்பை நடைமுறைப்படுத்த வேண்
டியது கிழக்கிலங்கை முஸ்லிம் பிரதிநிதிகளின் தலையாய 5L-60 tp.
தமிழர் கோரிக்கையை நிறைவேற்ற விஷேட ஏற்பாடுகளை அரசியல் சாசனத்திலும், மாகாணசபை
மசோதாவிலும் பாராளுமன்றம் நிறைவேற்றுவது
激 போன்று, முஸ்லிம்களின் இன உரிமை, ஆட்சி அதி
காரப் பகிர்வுக்கான ஏற்பாடுகளும் அரசியல் சாசனத் திலும், மாகாணசபை மசோதாவிலும் விஷேடமாக
பாராளுமன்றத்தால் ஏற்படுத்தப்படவேண்டும்.
இந்திய இலங்கை உடன்படிக்கைப்படி அரசியல் சாசன திருத்தமும், மாகாணசபை மசோதாவும் பாராளுமன்றத்தில் விவாதத்திற்கு எடுத்துக் கொள்
30
 
 
 

ளப்படும்போது, முஸ்லிம்களின் இன உரிமைப் பாது காப்புக்கும், ஆட்சி அதிகாரத்தில் நீதி நியாயப்படி யான பங்கிற்கும் உத்தரவாதம் கொடுக்கக்கூடிய விசேட சட்டங்களை அரசியல் சாசனத்திலும், மாகாணச் சபைச்சட்டங்களிலும் சேர்த்துச் சட்டமாக்கிக் கொள் ளக் கிழக்கு மாகாண முஸ்லிம் பிரதிநிதிகள் ஐவரும் உடனடியாகத் தகுந்த திருத்தப் பிரேரணைகளைப் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும். திருத்தப்
பிரேரணைகளின் விபரமும் இப்பிரேரணைகள் பற்றித்
தமிழர்கள் எமக்கு எழுத்து மூலம் கொடுத்த வாக்குறுதி யும், சம்பந்தப்பட்ட விசயங்கள் பற்றிய விரிவான விளக் கங்கள் யாவும் சுருக்கமாக இச்சிறிய நூலில் முன்வைக் கப்பட்டிருக்கின்றன. வடக்கு-கிழக்கு ஒன்றிணைந்த மாநில ஆட்சியில் தமிழர்கள் போன்று முஸ்லிம்களும் தலை நிமிர்ந்து வாழக் கூடியவகையில் ஆட்சி அதிகாரப் பகிர்வு நடைபெறவேண்டும். எக்காரணங் கொண்டும் கிழக்கிலங்கை முஸ்லிம்களின் கோரிக்கைகள் நிறை வேருவிட்டால் முஸ்லிம்களை ஏமாற்றிய பழிக்கும் பாவத்திற்கும் இன்றைய ஐந்து முஸ்லிம் பாராளுமன்றப் பிரதிநிதிகளே எல்லாப் பொறுப்புகளையும் ஏற்க வேண்டிவரும்.
3.

Page 17
இ மாகாணசபைத் தேர்தல் தில் உள்ள 33% முஸ்லிம்களின் இ காப்பும் இன்றி வடக்கு கிழக்கு ஒ குப் பெரும் அநீதி ஏற்படக்கூடிய மன்ற அங்கீகார்த்துக்கு வரப்போ
இ கிழக்கிலங்கை பாதுகாப்புத்தரக் த்தில் உடனடியாகக் சமர்ப்பிக்க வேண்டும்
ஒன்றிணைக்கக்கூடிய ம
மாகாண முஸ்லிம் எ கொடுத்தாலோ ஆல் வழுகிவிட்டாலோ, வடக் இலட்சம் முஸ்லிம்களின்
: வரலாற்று வசிப்பிடம்
றைகள், மதம், கல்வி ~~ ழிந்துபோய் முஸ்லிம்கள் மை: டுவார்கள். ஆனல் ஐ நிச்சயம் காப்பாற்றப்படும் ஆகு லிம்களின் துரோகிகள் என்ற க பெற்றுவிடும்.
எமது முஸ்லிம் பிரதிநிதிகள் : களுக்கு விசுவாசமுள்ளவர்களாக கிருேம். அப்படிப்பட்டவர்களுக் ఐణాG్య క్లేవ్లో
17.10.1987 {
அச்ேெடார் டிவலோபிரிண்ட்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ன் உரிமைகளுக்கு எதுவித பாது ன்றிணைக்கப்பட்டு முஸ்லிம்களுக் சட்டம் விரைவில் பாராளு Dత్రిప్స్టన్లే * இன உரிமைகளுக்குத் தகுந்த ச் சட்டங்களை பாராளுமன்ற காண முஸ்லிம் எம். பி.க்கள்
நடந்தவுடன் கிழக்கு மாகாணத்
ம்ேகளின் அரசாங்கச் சிம்ப
துகளும் போய்விடும் ஆனல் களின் நிரந்த்
குப் பாதுகாப்பு ஏதும்
க்கு கிழக்கு மாகாணங்களை சட்டத்தை கிழக்கு --> ஆதரித்து வாக்குக் டுப்பில் கலந்து கொள்ளாமல் குே மாகாணத்தில் உள்ள ஐந்து உரிமை - அரசியல் சுய நிரு
சுதந்திரமான பொருளாதாரத்
கலாச்சாரம் ஆகிய அனைத்து క్లే
இலங்கையில் தமிழருக் 夔 ஐந்து எம். பி.களின் பதவிகள் ஏல் இவர்கள் கிழக்கிலங்கை முஸ் ருத்து மேலும் வலுவாகி நிலை
என்றும், எப்பொழுதும் முஸ்லிம் இருப்பதையே நாம் விரும்பு கு எமது ஆதரவு எப்போதும்
எம்.ஐ.எம். முஹியத்தீன்
శ్రీడిషGufస్త్థ్రో கிழக்கிலங்கை முஸ்லிம் முன்னணி
33 எல்பியன் லேன் கொழும்பு 9