கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஜிஹாத் தவிர்ந்த வழியுண்டா

Page 1


Page 2

༽ ༡ རྒྱ༧༩༽
ஜிஹாத் தவிர்ந்த
l[i][ÌLII i
雪
*DSP NO” 15
பூரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்
"தாருஸ்ஸலாம்” வெளியீட்டகம் வோக்ஷோல் லேன், கொழும்பு-02.

Page 3
முகவுரை
1992 ஜூலை மாதம் 23ஆந் திகதியன்று ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் சிரேஷ்ட சட்டத்தரணியுமான சகோதரர் அல்-ஹாஜ் எம். எச். எம். அஷரப் அவர்கள் பொதுசனப் பாதுகாப்புப் பிரகடன விவாதத்தில் கலந்து கொண்டாற்றிய உரையின் தமிழாக்கத்ததை வாசகர்கள் முன்னிலையில் சமர்ப்பிக்கின்றோம்.
(ஹன்சாட் தொகுதி 79 இலக்கம் 14)
இவ்வுரையில் பலமுக்கியமான விஷயங்கள் விபரிக்கப்பட்டுள்ளன. வடக்கு கிழக்கு முஸ்லிம்களின் பாதுகாப்பும், அதில் நுழைந்துள்ள தளர்ச்சியும் அதனால் ஏற்பட்டுக் கொண்டிருக்கும் உயிர்ச்சேதங்களும், இவற்றைத் தவிர்த்துக்கொள்ளக் கூடிய ஆலோசனைகளும் கூறப்பட்டுள்ளன.
எல்லோரும் வாசித்து, சிந்தித்துப் பயன்பெறக் கூடிய ஓர் அரிய சொற்பொழிவு
சிரேஷ்ட பணிப்பாளர் மு.ப. அப்துல் மஜீது ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் வெளியீட்டுப் பிரிவு. 'groori)606) Tib' ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் செயலகம் கொழும்பு - 02 31. O7, 92.
 
 

பிஸ்மில்லாஹிர் ரஹற்மானிர் ரஹீம் அல்ஹம்து லில்லாஹற்; வஸ்ஸலாத்து வஸ்ஸலாமு அலா ரசூலில்லாஹற்!
கெளரவ பிரதிச் சபாநாயகர் அவர்களே!
இறுதித் தினமாகவும் இருக்கலாம்?
அவசரகாலச் சட்ட நீடிப்பு விவாதம் இன்று நடைபெறுகிறது. இதுவரை அவசரகால நீடிப்பு விவாதங்களில்அரசாங்கத்திற்கு சாதகமாக வாக்களித்துவந்த ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் இதன்பின்பும் இவ்வாறு நடந்துகொள்ளுமா அல்லது, இதுதான் கடைசித் தினமா என்ற ஓர் ஐயப்பாடு எனக்கு ஏற்பட்டுள்ளது.
எதைச் சாதித்தோம்
மக்களைப் பாதுகாப்பதற்காக அரசாங்கத்திற்கு மேலதிகத் தத்துவங்களை வழங்குவது அவசரகாலச் சட்டத்தின் ஒரு முக்கிய குறிக்கோளாகும். காலஞ்சென்ற ரஞ்சன் விஜேரத்ன அவர்கள் பாதுகாப்பு மந்திரியாகக் கடமையாற்றியபோது, 'ஜே. வீ. பியின் பிரச்சினை தீர்ந்துவிட்டது; வடக்கிற்கும் கிழக்கிற்கும் தான் இனி அவசரகாலச் சட்டம் தேவைப்படுகிறது" என்று கூறினார். ஆனால் இன்றுள்ள நிலைமை என்ன? கோடான கோடிப் பணத்தையும் வாரி இறைத்துவிட்டு நமது படைவீரர்களையும் நூற்றுக்கணக்கில் இழந்துவிட்டு நிற்கின்றோம். நாம் எதையேனுஞ் சாதித்திருக்கின்றோமா? அல்லது, நமது காலத்தை வீணாக்கிக் கொண்டிருக்கின்றோமா? என்பதைப் பற்றி இவ்வரசாங்கம் சிந்திக்க வேண்டும். இரண்டு தினங்களுக்கு முன் தந்திரிமலையில் பெளத்த மதகுரு ஒருவர் குண்டுக்குப் பலியானார். இந்த இடம், ஆயுதப்படையினரால் சூழப்பட்டு அவர்களின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்தது. எனினும் மரணத்தை தவிர்க்க முடியவில்லை.
தொடரும் முஸ்லிம் படுகொலைகள்!
மட்டக்களப்பு மாவட்டத்தில் அண்மைக் காலமாக அங்கே நடந்து கொண்டிருக்கும் அசம்பாவிதங்களைக் கண்டு ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அதிர்ச்சியடைந்துள்ளது. மட்டக்களப்பு, கல்முனை வீதியில் பயணஞ்செய்து கொண்டிருந்த ஒரு வாகனத்தை கிரான் குளத்தில் நிறுத்தி 19 பயணிகள் பக்கத்திலுள்ள பற்றைக் காட்டிற்குள் இழுத்துச் செல்லப்பட்டுக் கொலைசெய்யப்பட்டனர். சடலங்கள் காத்தான்குடி மெத்தைப் பள்ளிவாயிலில் அடக்கஞ்செய்யப்ட்டன.
புலிகள் மீது சந்தேகமானாலும்.
இவ்விதமான அசம்பாவிதங்கள் யாவும் விடுதலைப் புலிகளாலேயே செய்யப்படுகின்றதாக பொதுவான ஊகம் யாரிடத்தும் உண்டு. ஆனால் தற்போது பூரீ லங்கா முஸ்லிம்
03

Page 4
காங்கிரஸ் தமது நிலைப்பாட்டிலிருந்து சற்று விலகி, விடுதலைப் புலிகளைப் பற்றி ஊகங்கள் இருந்தபோதிலும், இதில் வேறு யாரேனும் சம்பந்தப்பட்டுள்ளனரா? அல்லது பின்னணியில் நிற்கின்றனரா? என்பதை ஆராய்வதற்காக ஒரு குழுவை இவ்வரசாங்கம் நியமிக்கவேண்டுமென்ற நிலைப்பாட்டுக்கு வந்துள்ளோம். எடுத்ததெற்கெல்லாம், ஜே. வீ. பீ. மீது, பாரம் பழிகளைச் சுமத்தியது போன்று. இப்போது விடுதலைப் புலிகள் மீது பழியைச் சுமத்துவதும், இக்கேள்விக்கு விடையாகாது.
புலிகளுக்குப் பின்னால் மொஸாட்
ஒவ்வொரு சம்பவமும் தனித்தனியே விசாரிக்கப்பட்டு முடிவு காணப்பட வேண்டும். எனது கைக்குத் தற்போது, "எழுச்சிக்குரல்" என்னும் ஒரு வாரமஞ்சரி கிடைத்துள்ளது. இப்பத்திரிகை பொதுவாக தமிழ்ப் பேசும் மக்களால் விஷேசமாக முஸ்லிம் மக்களால் வாசிக்கப்பட்டு வருகின்றது. இதன் கடைசிப் பக்கத்தில் பின்வருமாறு கூறப்பட்டிருக்கிறது;
'புலிகள் முஸ்லிம்களைக் கொல்ல இஸ்ரேல் நிதி உதவி. இந்த உண்மையை புலி உறுப்பினர்கள் பாரிஸில் அம்பலமாக்கினார்கள்” பாரிஸ் நகரில் நடந்த ஒரு விருந்து வைபவத்தில், இந்நாட்டு முஸ்லிம்களைக் கொலை செய்வதற்காகவே விடுதலைப் புலிகளுக்கு மொசாட் உளவு ஸ்தாபனம் ஒழுங்காகப் பணம் கொடுத்து வருவதாக புலிகளின் பிரமுகர் ஒருவர் கூறியதாக இச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கு இது சம்பந்தமாக எப்போதும் சந்தேகமிருந்தே வந்திருக்கிறது. ஏனெனில், கிழக்கு மாகாணத்தில் மட்டுமல்ல, வடக்கிலும்கூட, முஸ்லிம்களும் தமிழரும் பன்னெடுங்காலமாக நட்பாக அந்நியோன்யமாக வாழ்ந்துள்ளனர்.
இந்நாட்டின் ஏனைய பகுதிகளிலுள்ள சிங்கள மக்களுடனும் முஸ்லிம்கள் அவ்வாறே ஒற்றுமையாக வாழ்ந்து வந்துள்ளனர். ஆனால், திடீரென 1983- 1984 இவ்விரு சமூகங்களுக்கிடையே பிளவு ஏற்பட்டுள்ளது. சில சந்தர்ப்பங்களில் கலாசார விஷயங்களிலும் கூட ஒற்றுமையுடன் வாழ்ந்து வந்த மக்களிடையே திடீரென பிளவு ஏற்பட்டு ஒருவரை ஒருவர் கழுத்தை நெரிக்கும் நிலை ஏற்படத் தொடங்கியது. இந்த நிலைமை திடீரென ஏற்பட்டதல்ல என நாம் எப்போதும் சந்தேகித்து வந்திருக்கின்றோம். 'இஸ்ரேல் நலன் காக்கும் பிரிவு” திறக்கப்பட்டதிலிருந்து இவ்விரு சமூகங்களுக்குமிடையே கசப்பு முற்றி பிளவு விரிவடைந்து கொண்டே வந்தது. ஆகையால் "மொசாட் டின் முகவர்களாக விடுதலைப் புலிகள் மட்டுமல்ல, வேறு எவரேனும் இருக்கலாம் என நாம் நம்புவதற்கும் இடமுண்டு. ஏனையவர்களுள் ஏன் மொசாட் முகவர்கள் இருக்க முடியாது? ஆயுதம் தாங்கித் திரிகின்றவர்களுக்கு இத்தகைய மொசாட் முகவர்கள் இருக்கலாமல்லவா?
பாதுகாப்பற்ற முஸ்லிம்கள்!
சண்டையிட்டுக் கொண்டிருக்கும் சிங்களத் தேசாபிமானிகளுக்கும் தமிழ்த் தேசாபிமானிகளுக்கும் இடையே நிராயுதபாணிகளாக பாதுகாப்பு எதுவுமின்றித் தத்தளித்துத் தவித்துக் கொண்டிருக்கும் முஸ்லிம்களின் அவலநிலை பற்றி கெளரவ அமைச்சர்
அவர்களும் அரசாங்கமும் சிரத்தையுடன் சிந்திக்க வேண்டும். இந்தப் போரில் அகப்பட்டு
4.

| | | ,
அழிவது ஏழை முஸ்லிம்கள் தான். இந்த முஸ்லிம்கள் செய்த தவறு என்ன? தனிநாடு கேட்டார்களா? தீவிரவாதத்தை ஆதரித்தார்களா? இல்லவே இல்லை. ஆகையால் தான், வடக்கு கிழக்கு முஸ்லிம்களுக்கு விஷேசமான பாதுகாப்பளிக்கும் பொருட்டு
இந்த அரசாங்கம் தீர்க்கமான பயனுள்ள நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
வடக்கு முஸ்லிம்களின் எதிர்காலம் என்ன?
வடக்கிலுள்ள முஸ்லிம்களின் பரிதாபத்தை கொஞ்சம் கவனியுங்கள். வடக்கில் இன்று
முஸ்லிம்கள் அறவே இல்லை. வன்னி மாவட்டத்திலும் யாழ்ப்பாண நகரிலிருந்தும்
15,000 குடும்பங்கள் அதாவது, ஏறக்குறைய 75,000 முஸ்லிம்கள் துரத்தப்பட்டனர்.
யாழ்நகரில் சோனகத் தெருவில் இருந்தவர்கள் தங்கள் இல்லங்களை விட்டு
வெளியேறுவதற்கு இரண்டு மணிநேர அவகாசங் கொடுக்கப்பட்டது. உள்ளது உரியதையெல்லாம் விட்டுவிட்டு வெறுங்கையோடு அணிந்திருந்த ஆடைகளுடன் மட்டும் ஓடிவந்தார்கள். அண்மையில் நடந்த ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் பேராளர் மகாநாட்டில் 2000 பேர் கலந்து கொண்டார்கள். அதில், யாழ்ப்பாணத்திலிருந்து வந்து கலந்து கொண்ட நஜிமுத்தீன் எனும் சகோதரர் யாழ்ப்பாணத்தில் அன்று நடந்த சில சம்பவங்களைப் பற்றி விபரிக்கும்போது, ஒரு தையற்காரன், தன்கையில் ஒரு கத்தரிக்கோல் கொண்டு வந்ததைக் கூட அனுமதிக்க மனமில்லாத புலிகள், அதையும் பறித்தெடுத்துக் கொண்டனர் என்று குறிப்பிட்டார். 40, 50, 70 மைல்தூரம் அடர்ந்த காடுகளினூடாக நடந்துவந்தனர். சிலர் வழியில் மரணமடைந்தனர், முஸ்லிம் கர்ப்பிணிச் சகோதரிகள், பச்சிளங் குழந்தைகளை இக்காடுகளில் பிரசவிக்க நேர்ந்தது. முஸ்லிம் சகோதரன்
ஒருவன் நடந்து வரும்போது, மரணித்து மண்ணில் வீழ்ந்தான். அவனுடைய மனைவியும்
மக்களும் பிரேதத்தை தோளில் சுமந்து கொண்டு 12 மைல் தூரம் நடந்து சென்று ஒா அடக்கஸ்தலத்தை வந்தடைந்து பிரேதத்தை நல்லடக்கஞ் செய்தார்கள். இந்தச் சந்தர்ப்ப சூழல்களை நாம் மறந்துவிட முடியாது.
கிரான்குள படுகொலைக்கு பின்னணி யார்?
கிரான்குள விவகாரத்தை ஆராயும்போது, அரசு இந்தப் பின்னணிகளை மனதில் உறுத்தி நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும. இதனால்தான், இந்தக் கேள்வி எழுகின்றது. வடக்கிலும், கிழக்கிலும், குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் விடுதலைப் புலிகளிடம் மாத்திரம் தான் ஆயுதமிருக்கிறதென்று முடிவுக்கு நாம் வரக்கூடாது. இன்னும் எத்தனையோ குழுக்களிடமும் ஆயுதம் உண்டு. அவர்கள் ஜனநாயகப் பாதைக்குள் சேர்ந்திருக்கலாம். ஆனால், விடுதலைப் புலிகளை எதிர்த்துப் போராடுவதற்காக, டெலோ, புளொட், ஈ. பி. டி. பி. போன்ற இதர தீவிரவாதக் குழுக்களுக்கும் அரசாங்கம் ஆயுதம் வழங்கியுள்ளது. நாங்கள் இதை ஆட்சேபிக்கவில் ண் ல. அவர்களுடைய பாதுகாப்புக்காகயிருந்தால் நீங்கள் ஆயுதம் வழங்கலாம். தங்களைப் பாதுகாத்துக் கொள்ள அவர்களால் முடியும். அரசாங்கப் படைகளுமுண்டு.
05

Page 5
முஸ்லிம்களைப் பாதுகாப்பதில் பாரபட்சம் ஏன்?
ஆனால் முஸ்லிம் சமுதாயத்திற்கு இன்று ஏற்பட்டிருக்கம் அவலநிலையில் அவர்களின் பாதுகாப்புக்காக என்ன ஒழுங்குகளைச் செய்துள்ளீர்கள்? என்று கேட்டறிந்து கொள்ள விரும்புகின்றேன். முஸ்லிம் சமுதாயத்தின் பாதுகாப்பு என்றவுடன் ஏதோ ஒரு வகையான பாரபட்சங் காட்டப்படுகின்றதென்று மிகவும் மனவேதனையோடு இங்கு கூறிக் கொள்கிறேன். முஸ்லிம்களின் பாதுகாப்புக்கென திருப்தியளிக்கக்கூடிய நடவடிக்கைகள் எதுவுமே மேற்கொள்ளப்படவில்லை என்று திட்டவட்டமாகக் கூறுவேன். அன்றைய தினம் காத்தான்குடியில் காலையில் வழமைபோல் கிராம மக்கள் தத்தம் வேலைகளுக்குப் புறப்பட்டுச் சென்றார்கள். சில மணிநேரங்கழித்து 19 பிரேதங்கள் வந்திருப்பதாக தகவல் கிடைத்தது. அந்தக் கிராம மக்கள் என்ன செய்வார்கள்? என்ன எதிர்பார்க்கலாம்? இயல்பாகவே அவர்கள் வீடுகளை விட்டு தெருவுக்கு வந்து தங்கள் சொந்தக் காரர். நண்பர், எவரேனும் இதில் இருக்கிறார்களா? என்று, அறிந்துகொள்ள முற்படுவது இயல்பான செயலாகும். இது அவர்களுடைய குற்றமா? அங்கு சென்ற அமைச்சர்களும் இதை அறிவார்கள்.
மக்களைத் தாக்க பொலிஸாருக்க உரிமை இல்லை!
ஆனால் பிரேதங்களைப் பார்க்கச் சென்ற மக்களுக்கு என்ன வரவேற்புக் கிடைத்தது? பொலிஸ் படையினருக்கு விரோதமாக நான் குற்றஞ்சாட்டவில்லை. (IGP) பொலிஸ் மா அதிபர் என் நண்பர். நான் அவரை நன்கு மதிக்கிறேன். பொலிஸ் இலாகாவிலும் பல உயர் மட்டங்களிலும் மிகவும் நல்ல அதிகாரிகள் இருக்கிறார்கள். காத்தான்குடியில் ஒரு பொலிஸ் நிலையமுண்டு. அன்றைய தினம் சற்றேனும் பொறுப்பற்ற முறையில், மக்களின் மனநிலையை அறியாதவர்களாக, மனித உணர்ச்சியைப் புரியாதவர்களாக நடந்து மக்களைத் தாக்க முற்பட்டனர்.
மக்களுக்கு உரிமையில்லையா? -
இது நடந்ததும் மக்கள் என்ன செய்தார்கள்? திரும்பிவிட்டனர். கடைக்காரர் தம்
கடைகளை மூடினார்கள். ஆனால் பொலிஸ்காரர் அங்கே சென்று அவர்களைத்
தாக்கினார்கள். காத்தான்குடியில் மாத்திரமல்ல, காவத்துமுனை சம்பவத்தின் பிறகு
ஓட்டமாவடியிலும், பொலிசார் நடந்து கொண்ட முறை விரும்பத்தக்கதல்ல. ஜனநாயக
ரீதியாக ஆட்சேபிப்பதற்காக கடைகளை மூடினார்கள். பொலிஸ் என்ன செய்தது? அங்கே சென்று அந்த மக்களை நன்றாக நையப்புடைத்தார்கள். கடைகளைத் திறக்கும்படி
வற்புறுத்தி பலாத்காரம் செய்தார்கள் ஜனநாயக ரீதியாக தமது எதிர்ப்பைக் காட்டுவதற்கு மக்களுக்கு உரிமையில்ைைலயா? என நான் கேட்கிறேன். வீதிகளுக்கு வந்து மக்கள்
பலாத்காரத்தில் ஈடுபட்டால் பொலிசார் தலையிடலாம். ஆனால் வியாபாரிகள் தங்கள்
கடைகளைப் பூட்டி வைத்துவிட்டு, பொலிசாரின் நடவடிக்கைகளுக்கு அமைதியான
முறையில் தங்கள் ஆட்சேபனையை, வெறுப்பைத் தெரிவிக்க அவர்களுக்கு உரிமை
இல்லையா? இந்தப் பிரச்சனைகள் ஆராயப்பட வேண்டும்.
06
 

வேண்டுகோளை ஜனாதிபதி உடனே ஏற்றார்
இது நடைபெற்ற அடுத்ததினம் நூறீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஜனாதிபதி அவர்களுக்கு ஒரு பகிரங்க வேண்டுகோள் விடுத்து, விவகாரத்தை விசாரிக்க ஒரு விஷேட குழு நியமிக்கும்படி கேட்டோம். காலம் தாமதிக்காமல் உடனடியாக நடவடிக்கை எடுத்து விசாரணைக் குழுவொன்றை நியமித்த மேதகு ஜனாதிபதிக்கும் பாதுகாப்பு இலாகா செயலாளர் ஜெனரல் ரணதுங்க அவர்களுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். -
பாதுகாப்புப் படைகளின் பொறுப்பற்ற கவனயீனம்!
பாதுகாப்பு விஷயங்களில் ஏற்பட்டிருக்கும் சில குறைகளையும் ஒட்டை உடைசல்களையும்
இச்சம்பவம் வெளிக்கொணர்கின்றது. வீதியில் ஒரு பாதுகாப்புத் தடை இருக்கின்றது.
பாதுகாப்பு பொறுப்பதிகாரிகள் இந்த இடத்தைத் தாண்டிச் செல்ல அனுமதி கொடுப்பதில்லை. ஆனால் குறிப்பிட்ட ஒரு வாகனம் வீதித்தடையைத் தாண்டிச் செல்ல
அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்த வாகனம் அந்த வழியில் போவதற்கு யார்? எப்படி?
ஹஜ்ஜாஜிகள் படுகொலை *
ஏன்? அனுமதித்தார்கள்? என்னும் வினாக்களை நாம் கேட்க வேண்டியிருக்கிறது.
கல்முனையிலிருந்து காத்தான்குடிக்குச் சென்று கொண்டிருந்த ஹஜ் யாத்ரீகர்களை
வழிமறித்து, தாழங்குடாவுக்கு அருகாமையில், இதே பற்றைக் காட்டில் 160 பேரை
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு படுகொலை செய்தனர்.
வீதித்தடையிருந்து என்னபயன்?
நான் அம்பாறை மாவட்டத்திலுள்ள ஒரு பாராளுமன்ற உறுப்பினர். பொலிஸ் பாதுகாப்புடன்
நாங்கள் இந்த வீதிகளில் பிரயாணஞ் செய்யும்போது, வீதித்தடையை நீக்குவதற்கு முன்னர், அந்த இடங்களை வந்தடைந்தோமானால் 'மன்னிக்க வேண்டும் சேர். நீங்கள்
இப்போது போக முடியாது' என்று கூறி, குறிப்பிட்ட நேரமும் கட்டளையும் கிடைக்கும் வரை எங்களை நிறுத்தி வைப்பார்கள் எவருக்கும் விதிவிலக்கு இல்லை.
அமைச்சர்களுக்கும் இதே விதிதான். ஆனால் இந்தக் குறிப்பிட்ட விஷயத்தில் ஏன்
மட்டக்களப்பு மாவட்டத்தில் விதிவிலக்களிக்கப்பட்டது? வீதித்தடையிருந்தால் ஒரு வாகனம் நேரத்திற்கு முன் அங்கே வந்தால், அதை நிறுத்திவைத்திருக்க வேண்டும் தடையைத் தாண்டிப் போவதற்கு அனுமதிக்கக் கூடாது.
தமிழர் மட்டும் விதியை மீறுவதா?
தமிழ்ப் பிரயாணிகளைக் கொண்ட வாகனங்களை குறிப்பிட்ட நேரத்திற்கு முன்பே செல்ல அனுமதி அளிப்பது வழமை என்னும் நிலைப்பாட்டை எடுத்துக் கொண்டதாக
நான் அறிகின்றேன்.
07

Page 6
இந்த நிலைப்பாட்டை நீங்கள் ஒப்புக்கொண்டால், இந் நாட்டிலுள்ள ஒவ்வொரு தமிழனும்
புலி என்பதை ஒப்புக் கொள்வதாகும். 100 வீதம் தமிழர் அடங்கிய வாகனம் பாதுகாப்பு
விதித்தடை நேரங்களுக்கு முன்னரும் பின்னரும் போகலாம் என்றால் அதன் அர்த்தமென்ன?
எந்த ஒரு தமிழனும் தான் விரும்பியபடி பிரயாணம் செய்யலாம் என்பதும், தமிழர்கள் எல்லோரும் விடுதலைப் புலிகள் அல்லது, ஆதரவாளர்கள் என்பதும் ஒன்றுதான். அதுதானா உங்கள் நிலைப்பாடு? தமிழரோ, சிங்களவரோ, முஸ்லிமோ யாருக்கும்
விதிவிலக்களித்து அனுமதி வழங்கப்பட்டிருக்கக் கூடாது. இது கவனமாக ஆராயப்பட
வேண்டிய விஷயம். பிரிகேடியர் வீட்டுக்கு அனுப்பப்பட்டாரே!
வவுனியாவில் இருந்து பெற்றோல் கொண்டு செல்ல அனுமதி வழங்குவதில் சம்பந்தப் பட்டிருந்ததாக ஒரு இராணுவ உயர் அதிகாரிக்கு (பிரிகேடியருக்கு) விரோதமாக சாட்சியங் கிடைத்தபடியால் இவ்வரசாங்கத்தால் அவர் வீட்டுக்குத் திருப்பி அனுப்பப்பட்ட கதையையும் நாம் மறந்து விடக் கூடாது. இது அண்மையில் நடந்த விஷயம். ஆகையால், நாம் சந்தர்ப்ப சூழ்நிலைகளைக் கவனிக்காமல் கண்ணை மூடிக் கொண்டிருக்கக் கூடாது. கண்ணை மூடிக் கொண்டு பால்குடிக்கும் பூனையைப் போல், அல்லது தீக்கோழியைப் போல நடிக்கக் கூடாது. "சர்வமும் சுபமயம்” என நினைத்துக் கொண்டு தூங்கவும்
கூடாது. விடுதலைப் புலிகள் செல்வாக்கு செலுத்தக் கூடிய இடங்களும் மக்களும்
இன்னும் உண்டா? என்னும், விஷயம் பற்றி நாம் நன்றாக சிந்திக்க வேண்டும். ஆராய வேண்டும்.
கால் நடைக் கொள்ளை!
சில தினங்களுக்கு முன், இச்சம்பவம் கிரான்குளத்தில் நடந்தது. பிறகு, என்ன
நடந்தது? காத்தான்குடியில் பொது மக்களுக்கும் பொலிஸாருக்குமிடையே கசப்பு ஏற்பட்டது. யுத்தகளம் இப்போது மாறி காவத்துமுனைக்குச் செல்கின்றது. காவத்துமுனை மக்கள் என்ன குற்றஞ் செய்தார்கள்? ஒட்டமாவடி மக்களிடம் சில கால்நடைகள் இருந்தன. கால்நடைகளைப் பற்றிப் பேசும்போது, கிழக்கு மாகாணத்தில் கோடான கோடி ரூபாய் பெறுமதியான கால்நடைகளை முஸ்லிம்கள் இழந்துள்ளனர் என்பதை இச்சபையினருக்கு அறியத் தருகின்றேன். இக்கால் நடைகளில் ஒரு பகுதி ஆயுதமேந்திய தமிழ் தீவிரவாதிகளால் கொண்டு செல்லப்பட்டது. மற்றுமொரு பகுதி, யுத்தநிலை காரணமாக காட்டுக்கு ஓடிவிட்டன. இப்போது, விடுதலைப் புலிகளும் அரச தரப்புப் படையினரும் நேரடியாகக் காட்டுப் புறங்களில் மோதுவதால், கால்நடைகள் சில நாட்டுப் புறங்களுக்கு திரும்புவது போல் தோன்றுகிறது. கால்நடைகளை இழந்தவர்கள் அவற்றினை மீண்டும் பெற்றுக் கொள்ள முனைவது இயல்பானதாகும். இதில், தமிழருக்குச் சொந்தமான சில கால்நடைகளும் இருக்கலாம்.
நீதிமன்றம் எதற்கிருக்கிறது?
சொந்தம் பாராட்டுவதில் தகராறு ஏற்பட்டால் அதைத் தீர்த்து வைப்பதற்கான வழிவகைகள் பொலிஸாரின் கையிலுண்டு. பொலிசார் வினவ வேண்டும்; விசாரிக்க வேண்டும்.
08

நீதிமன்றங்கள் செயல்படுகின்றன. சம்பந்தப்பட்டவர்களை நீதிமன்றத்திற்கு கொண்டு
போகலாம். கால்நடைகளைக் கொண்டு வரும்படி பணிக்கலாம். இவ்வாறெல்லாம் செய்யாமல், ஒரு பொலிஸ் ஜீப்வண்டி ஒட்டமாவடிக்குள் பிரவேசித்துள்ளது. முஸ்லிம் ஊர்காவற் படையினர் நின்ற ஒரு காவல் நிலையத்தின் ஊடாக இந்த ஜீப் வண்டி வந்தபோது அதை ஊர்காவற் படையினர் தடைசெய்தனர்.
புலிகளை ஏற்றிச் சென்ற ஜீப்பையே தடைசெய்தனர்!
ஒவ்வொரு நாளும் அந்த வழியில் செல்லுகின்ற ஜீப் வண்டியை நிறுத்தாமல், தடைசெய்யாமல் செல்வதற்கு அனுமதித்தவர்கள், இன்று ஏன் தடைசெய்தார்கள்? 'நீங்கள் விடுதலைப் புலிகளை இந்த வாகனத்தில் ஏற்றிச் செல்கின்றீர்கள். இதனால் தான் தடைசெய்கின்றோம்" என்று முஸ்லிம் ஊர்காவற்படையினர் கூறியிருக்க வேண்டும். விடுதலைப் புலிகளுடன் மிகவும் நெருங்கிய தொடர்புள்ளவர்களை நீங்கள் ஜீப் வண்டிக்குள் வைத்திருக்கின்றீர்கள். அவர்களை இறக்கிவிட்டு, நீங்கள் சென்று அவர்களுடைய கால்நடைகள் அங்கு நிற்கின்றனவா என்று பாருங்கள்” என்று காவல் படையினர் கூறியது பொலிசாருக்குப் பிடிக்கவில்லை.
பொலிஸ் ஊர்காவற்படை மோதல்!
அதனால் அந்தப் பொலிசார் என்ன செய்தார்கள்? அந்தப் பகுதியிலிருந்த சில முஸ்லிம்
பொலிஸ்காரரைச் சேர்த்து எடுத்துக் கொண்டு போய் குறிப்பிட்ட அந்த முஸ்லிம் ஊர்காவற்
படையினரைத் தாக்கினார்கள். முஸ்லிம் பொலிசாரும், முஸ்லிம் ஊாகாவற்படையினரும்
மோதினார்கள். கடைசியில் 7 முஸ்லிம் ஊர்காவற்படையினர் கைது செய்யப்பட்டனர். இராணுவப்படையினர் வந்து சேர்ந்தனர். பொலிசுக்கும் இராணுவத்துக்குமிடையே மோதல் நடந்தது. ஊரடங்குச் சட்டம் பிரகடனப்படுத்தப்பட்டது. இதற்கெல்லாம் அர்த்தம் என்ன?
அடையாளம் காட்ட முன்வர மாட்டார்கள்!
இன்றுள்ள நிலைமையைக் கவனித்தால், விடுதலைப் புலிகளைப் பிடிக்க வேண்டுமானால், யாராவது அடையாளம் காட்ட வேண்டும். குற்றமொன்றுஞ் செய்யாத அப்பாவித் தமிழர் எல்லோரையும் விடுதலைப் புலி என்று தீர்மானித்து விடலாமா? வடகிழக்கில் தற்போதுள்ள இராணுவப் படையினருக்கு அங்குள்ள மக்களையும் தனித்தனியாக அடையாளந் தெரியாது; அந்தப் பிரதேசத்தின் நில அமைப்பும் ஒழுங்காகத் தெரியாது. ஒரு சாமான்ய தமிழன் வந்து “இவன் விடுதலைப் புலி" என்று அடையாளங் காட்ட முன்வர மாட்டான்.
ஊர்காவல் படையினர் முன்வருவார்கள்!
ஆனால், முஸ்லிம் ஊர்காவற் படையினரைப் பொறுத்தமட்டில், விடுதலைப் புலிகளை அவர்கள், அடையாளங் காட்டக் கூடியவர்களாயிருக்கின்றார்கள். இந்திய
ரீ லங்கா ஒப்பந்தம் கைச் சாத்திடுவதற்கு முன்னரும் பின்னரும் இந்த
ஊர்காவற்படையினருக்கு விடுதலைப் புலிகளைத் தெரியும். புலிகள் ஒளித்துக்

Page 7
கொண்டிருந்த போதும், எங்கள் கிராமங்களுட் புகுந்து ஆயுதங்களுடன் அடாவடித்தனம் செய்த போதும் இந்த ஊர் காவற் படையினர் இவர்களை அறிவார்கள்.
பொலிஸார் தண்டிக்கக் கூடாது!
முஸ்லிம் ஊர்காவற்படையினர் பொலிஸ் அதிகாரிகளைப் போன்று கல்வி கற்கவில்லை என்பது உண்மை. ஆனால் பாதுகாப்பை ஸ்திரப்படுத்தி நிலைபெறச் செய்யவேண்டுமானால் பாதுகாப்பில் சம்பந்தப்பட்ட அனைவருக்குமிடையில் ஒற்றுமை, இசைவு இருக்கவேண்டியது மிக அவசியம். பாதுகாப்புத் துறையின் ஒரு பிரிவினரைப் பிடித்து வைத்து மக்கள் முன்னிலையில் தண்டிப்பது தகாத செயலாகும். மக்கள் எவ்வாறு வரவேற்பார்கள்? பிரதித்தாக்கம் எவ்வாறாய் அமையும்? தங்களுடைய காவலர்கள் என முஸ்லிம் சமுதாயம் நம்பிக் கொண்டிருக்கும் ஊர்காவற் படையினரை, அவர்கள் கண்முன்னாலேயே தாக்கினால், அவர்கள் சும்மா பார்த்துக் கொண்டு வாளாதிருப்பார்களா? வெளியில் வர, தெருவிற்கு வர மக்களுக்கு உரிமையுண்டு. ஆகவே, அரசாங்கம் இவ்விஷயத்தையும் அலசி ஆராய வேண்டும். -
பாதையிலோ, புகைவண்டிக்கோ பாதுகாப்பிருக்கவில்லை! ஏன்?
இதற்கு இரண்டு தினங்களுக்குப் பின் புகையிரதச் FibLIGIL) நடந்தது. அன்று ஏறாவூர்
புகையிரத நிலையத்தில் மட்டும் முஸ்லிம்களுக்கு 165 பிரயாணச் சீட்டுக்கள் விற்கப்பட்டன.
அன்றைய தினம் இருநூற்றுக்கு மேற்பட்ட முஸ்லிம்கள் அந்தப் புகைவண்டியில் பிரயாணஞ் செய்திருக்கின்றனர். இப்புகைவண்டி ஒவ்வொரு நாளும் ஓடுவதில்லை. விசேஷ பாதுகாப்பிருக்கும் தினங்களில் மட்டுமே இப்புகைவண்டி ஒடும் என்பது எல்லோருக்குந் தெரியும் குறிப்பிட்ட இத்தினத்தில் இப்புகைவண்டியில் ஒரு ஆயுதம் தாங்கிய இராணுவ வீரனும் பிரயாணஞ் செய்யவில்லை. புகையிரதப் பாதையிலேனும் பாதுகாவலர்
ஒருவருமில்லை. இவ்வாறெல்லாமிருந்தும் அப்புகைவண்டி பிரயாணத்தை மேற்கொண்டது
ஏன்? என்று இன்று கேட்பதற்கு மிகவும் ஆதங்கமாகவும் அசூசையாகவும் இருக்கிறது! முஸ்லிம்களின் உயிர்கள் புலிகளுக்கு சமர்ப்பணமா?
நாம் என்ன எதிர்பார்க்கலாம்? அப்பாவி முஸ்லிம்களின் உயிரை ஒரு தட்டத்தில் வைத்து பயங்கரவாதப் புலிகளிடம் சமர்ப்பிக்கின்றீர்களா? இதெல்லாம் மட்டக்களப்பு மாவட்டத்தில் நடக்கின்றன. அங்குள்ள பாதுகாப்பில் ஏற்பட்டிருக்கும் குறை நிறைகளை, வெற்றிடங்களை, ஒட்டை ஒடிசல்களை மிகவும் நிதானமாய் பொறுப்புணர்ச்சியுடன் ஆராய்வது மிகவும் இன்றியமையாததாகும்.
0.
 

ஏன் இருவகைப் பாதுகாப்பு?
பிரதிச் சபாநாயகர் அவர்களே!
அம்பாறை மாவட்டத்தில் பாதுகாப்பு முறை எவ்வாறு அமைந்துள்ளது என்று நான் குறிப்பிட்டேன். பஸ் வண்டிகள் கொழும்பிலிருந்து மகியங்கனை ஊடாக அம்பாறைக்குச் செல்கின்றன. இவ்வண்டிகள் பதியத்தலாவைக்கு அதிகாலை 2 அல்லது 3 மணிக்கு வந்துசேரும் காலை 9.00 மணிவரை இந்த வண்டிகள் பதியத்தலாவையிலே தங்கிநிற்கும். அதுவரை ஒரு வாகனமும் செல்ல அனுமதிக்கப்படுவதில்லை. மட்டக்களப்பு மாவட்டத்திற்கு ஒருவகையான பாதுகாப்பு ஒழுங்கும் அம்பாறை மாவட்டத்திற்கு வேறு வகையான பாதுகாப்பு ஒழுங்கும் இருப்பது ஏன்? பாதுகாப்பு ஒழுங்குகளை செயற்படுத்துவதில் ஏன் இருமுகப்பட்ட வழிகள் கடைப்பிடிக்கப்படுகின்றன? இந்த அடிப்படை அம்சங்களை நாம் நன்கு பரிசீலிக்க வேண்டும்.
இணைப்பும் பாதுகாப்பும்!
அடுத்ததாக, கெளரவ ஹலீம் இஷாக் அவர்களின் உரையாடலை எனது அறையிலிருந்து கேட்டேன். சென்ற சனிக்கிழமை கொழும்பில் நடந்த ஒரு கூட்டத்தில், வடக்கு, கிழக்கு நிரந்தர இணைப்புப் பற்றி முஸ்லிம் சமுதாயத்தின் சார்பாக இக்கூட்ட அழைப்பினர்கள் எவ்வாறான நிலைப்பாட்டை மேற்கொள்ளவேண்டுமென்று (ஆணை) அதிகாரங் கொடுக்கப்பட்டதாகக் கூறினார். வடக்கு கிழக்கு பாதுகாப்பு விவகாரங்களுடன் ஒன்றிப் பிணைந்து நிற்கின்றது. இணைப்புப் பிரச்சினையும், ஒன்றை விட்டு ஒன்றைப் பிரிக்க முடியாதவாறு பின்னிக்கிடக்கின்றன. கிழக்கைத் தனிப்படுத்த வேண்டுமென்று எனது கெளரவ நண்பர் கூறினார். வடக்கும் கிழக்கும் இணைந்திருக்க வேண்டுமென்று சில தமிழ் அரசியல் கட்சிகள் கூறுகின்றன. வடக்கும், கிழக்கும் இணைந்திருந்தாலும் அது தங்களுக்குத் திருப்தியில்லை, ஈழமே வேண்டும் என்று விடுதலைப் புலிகள் கூறலாம். இந்த நிலைமையில்தான் நாம் இப்பிரச்சினையை நோக்க வேண்டியிருக்கிறது.
தீர்வுக்கு தமிழ் - முஸ்லிம் ஒற்றுமையே அடிப்படை!
சட்டத்தில் நடைமுறை ஒழுங்குச் சாட்சியம் (System evidence) என ஒன்று இருக்கிறது. இந்த விவகாரங்களிலும் நடைமுறை ஒழுங்கு தொருக்கின்றது. இரண்டு சமுதாயங்களைப் பிரித்து மூன்றாவது சமுதாயத்தை வளர்க்கக் கூடாது என்பது, றுரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் கொள்கையாகும். இந்த நாட்டில் மூன்று பெரிய சமுதாயங்களுண்டு. பறங்கியரையும் சேர்த்தால் நான்காகும். அவர்களும் சமமாக நடத்தப்பட வேண்டும். அமைதி, ஒற்றுமை, சிநேகம் என்பவை பரஸ்பரம் எல்லோரிடத்தும் இருக்க வேண்டும். எங்களுடைய கொள்கை அதுவே - தங்களுடைய சுய நன்மைக்காக இரு சமுதாயங்களைப் பிரித்து வைக்க நினக்கும் எந்தச் சக்தியுடனும் எதிர்த்து நின்று போராட எங்கள் கடைசி மூச்சுவரை நாங்கள் தயங்க மாட்டோம் இத்தகைய நிலைமையிற் தான் வடக்கு-கிழக்குப் பிரச்சினைக்கு தீர்வுகாண முயலவேண்டும்.
11.

Page 8
இனப்பிரச்சினைக்கு, ஹலீம் இஷாக்கிடம் (ரீலங்கா சுதந்திரக் கட்சியிடம்) தீர்வு இருக்கிறதா?
முழு முஸ்லிம் சமுதாயமும் இதை எதிர்க்கின்றதென்று கெளரவ ஹலீம் இஷாக் கூறியது பதிவாகி இருக்கிறது. ஐயா, நான் அவரிடம் ஒரே ஒரு கேள்வி கேட்க விரும்புகிறேன். அதாவது, இந்தப் பிரச்சனைக்கு அவர் என்ன தீர்வு வைத்துக் கொண்டிருகின்றார்? ரீ லங்கா சுதந்திரக் கட்சி, அல்லது, வடக்கு கிழக்கைப் பிரிக்க வேண்டும் என்பதை ஆதரிக்கும் யாராவது, வடக்கிலிருந்து விடுதலைப் புலிகளால் துரத்தப்பட்ட 75,000 முஸ்லிம்களின் எதிர்காலத்திற்கும் ஆயிரக்கணக்கான சிங்கள மக்களின் எதிர்காலத்திற்கும், என்ன வழிவகைகளை வகுத்து வைத்திருக்கிறார்கள்? வடக்குடன் கிழக்கை இணைக்க வேண்டுமா அல்லவா என்பதல்ல பிரச்சினை. இணைப்பு நடந்துவிட்டது! நான் பேசிக்கொண்டிருக்கும்போது கெளரவ சபாநாயகர் அவர்கள் இங்கில்ைைலயே என வருந்துகிறேன்.
பிரேதங்களை காணவில்லையே!
இந்திய - இலங்கை ஒப்பந்தம் கைச்சாத்திட முன்னரும் இதே சர்ச்சை இருந்தது.
ஒப்பந்தம் கைச்சாத்திடப்படுமுன், இந்த வாதம் அர்த்தமுள்ளதாய் இருந்தது. அப்போது வடக்கு கிழக்கு இணைக்கப்படவில்லை. வடமாகாணம் வேறு; கிழக்கு மாகாணம் வேறாக இருந்தது. நமது கெளரவ சபாநாயகர் அவர்கள் அச்சமயத்தில் ஒரு அமைச்சராயிருந்தார்கள். கிழக்கு மாகாணத்திலிருந்து தேர்தல் மூலம் ஐந்து முஸ்லிம் பிரதிநிதிகள் மக்கள் ஆட்சி மன்றத்தில் பிரதிநிதியாகியிருந்தார்கள். எக்காரணம் கொண்டும் வடக்கும் கிழக்கும் இணைக்கப்படமாட்டாதென முன்னாள் ஜனாதிபதி உத்தரவாதமளித்துள்ளதாக எங்கள் முஸ்லிம் பிரதிநிதிகள் எல்லோரும் கூறியிருந்தார்கள் கடைசியில் என்ன நடந்தது? இந்த வாக்குறுதியும் உத்தரவாதமும் என்னவாயிற்று? எங்களுடைய பிரேதங்கள் மீதுதான் வடக்கும் கிழக்கும் இணைக்கப்படும்” என்று முஸ்லிம் தலைவர்கள் சிலர் கூறினார்கள் என்ன நடந்தது? வடக்கும் கிழக்கும் இணைக்கப் பட்டுவிட்டது. அதை அவர்களால் தவிர்க்க முடியவில்லை. "வடக்கும், கிழக்கும் தங்கள் பிரதேசங்களின் மீதுதான் இணைக்கப்படும்' என்று சவால்விட்ட தலைவர்களின் பிரேதங்களை நாங்கள் காணவில்லை! எனவே தான் யதார்த்தத்தை உணராமல், அதற்கு மாறாகப் பேசுவதை நாம் தவிர்த்துக் கொள்ள வேண்டும் இந்தப் பிரச்சினையை அரசியல் ரீதியாகத்தீர்த்துக் கொள்ளக்கூடிய வழிவகைகளைப் பற்றிப் பேசுவோமாக
கோமாளித் தலைமையும் ஒதுக்கப்பட்டவர்களின் கொழும்பு கூட்டமும்!
2.3LT,
கொழும்பில் கடந்த சனிக்கிழமை 200 பேரைக் கொண்ட கூட்டமொன்று நடைபெற்றதாக கெளரவ உறுப்பினர் ஹலீம் இஷாக் அவர்கள் குறிப்பிட்டார்கள். இக்கூட்டத்தில்
12
 

பிரதிநிதித்துவம் இருக்கவில்லை. ஜனாப் இஷாக் அவர்கள், சில பெயர்களைக் குறிப்பிட்டார்கள். ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் அரசியல் உயர் பீடத்தின் அங்கத்தவரும், எனது நல்ல நண்பருமான ஜனாப் யூ. எல். எம். முகைதீன் அவர்களின் பெயரும் பிரஸ்தாபிக்கப்பட்டது. கூட்டத்தினரின் கொள்கை தவறானதென்று ஜனாப் முகைதீன் எடுத்துரைத்தார். இக்கூட்டத்தை ஏற்படுத்தியவர்களை மக்கள் சிரத்தை பண்ணுவதில்லை. அதில் அதிகமானவர்கள், மக்களால் தேர்தலில் புறக்கணித்து ஒதுக்கப்பட்டவர்கள்.
பிரதிச் சபாநாயகர் அவர்களே! சுமுகமான தீர்மானம் எடுப்பது எப்படி?
இந்நாட்டிலுள்ள முஸ்லிம்கள் சார்பாக முஸ்லிம் சமுதாயம் சார்பாக ஒரு சுமுகமான பொதுவான தீர்மானம் எடுக்கவேண்டுமென்றிருந்தால் பல தரப்பட்டவர்களையும் இந்தக் கூட்டத்திற்கு அழைத்திருக்க வேண்டும் என்பது நியாயமானதல்லவா? ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ்காரர் இதை விரும்பாமல் இருக்கலாம். அது வேறு விஷயம். சிலர் முஸ்லிம் காங்கிரஸை விரும்பாமலிருக்கலாம். அதைப்பற்றி நாங்கள் கவலைப்படவில்லை. ஆனால் ஒரு பாரிய உண்மை இருக்கிறது.
மூன்று லட்சம் வாக்குகளைப் பெற்ற மூன்றாவது பெரும் சக்தி
கடந்த பொதுத் தேர்தலின் பிறகு, இந்தச் சின்னஞ்சிறிய அரசியல் கட்சி, இந்தச் சபையில் நான்கு அங்கத்தவர்களை மட்டும் பெற்றிருந்த போதிலும், எங்களுக்குக் கிடைத்த மொத்த வாக்குகளின் எண்ணிக்கைப் பிரகாரம் நாங்கள் அரசியற் கட்சிகளில் மூன்றாவது ஸ்தானத்தைப் பெற்றுள்ளோம். முதலாம் இடம் ஐக்கிய தேசியக் கட்சிக்கும், இரண்டாம் இடம் ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கும், மூன்றாம் இடம் ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ்"க்கும் கிடைத்துள்ளது. தேர்தல் ஆணையாளரின் அறிக்கையைப் பாருங்கள். சிலர் விரும்பலாம். அல்லது வெறுக்கலாம். அதைப்பற்றி எங்களுக்கு அகறையில்லை. ஆனால் சுமார் 300,000 முஸ்லிம் வாக்குகள் எங்களுக்குக் கிடைத்துள்ளன. எனினும் இக்கூட்டத்திற்கு எங்களுக்கு அழைப்பில்லை. ஆனால், இது மக்களின் தீர்ப்பு என்று. எவ்வாறு ஜனாப் ஹலீம் இஷாக் இந்தச் சபையில் வந்து பிரஸ்தாபிக்கின்றார் என்பது எனக்கு விளங்கவில்லை,
60 பேரின் தீர்மானம்!?
கூட்டத்தில் இத்தீர்மானம் நிறைவேற்றப்படும் போது, சுமார் 60 பேர்கூட அங்கிருக்கவில்லை. இத்தகையதோர் பாரதூரமான விஷயத்தைப் பற்றி 60 பேர் தீர்மானித்து முடிவுகட்டிவிடலாமா?
இக்கட்டத்தில் திரு. பி. ஏ. ஜினதாக நியத்திபால, குறுக்கிட்டு ஜனாப் ஹலீம் இஷாக் ஒரு முஸ்லிமில்லையா? என வினவினார்.
13

Page 9
சொன்னது? (மேலும் குறுக்கீடுகள்) நான் அவ்வாறு சொல்லவில்லை. நான் கூறுவதை நீங்கள் தயவுசெய்து விளங்கிக் கொள்ள வேண்டும். நானே தீர்மானிக்க வேண்டுமென்று நான் அறவே கூறவில்லை. முஸ்லிம் சமுதாயத்தின் சார்பில் ஏதேனும் ஒரு தீர்மானம் எடுக்க வேண்டுமேயானால், முஸ்லிம் சமுதாயத்தின் பல்வேறு பிரிவுகளும் கட்சிகளும் அழைக்கப்பட வேண்டும் என்பதைத் தான் நான் வலியுறுத்திக் கூறிக் கொண்டிருக்கிறேன். இந்தக் கூற்றை எல்லோரும் ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும். 50, 60 பேர் இரகசியமாக ஒரு இடத்தில் கூடி முழுச் சமுதாயத்தின் சார்பாக ஒரு முடிவு கட்டக்கூடாது. இது மிகவும் பாரதூரமானதும், முக்கியத்துவம் வாய்ந்த விஷயமுமாகும்.
ஆதரித்து ஆவது என்ன? முஸ்லிம் படுகொலைகள் தொடர்கின்றதே!
மீண்டும் இரத்த ஆறு ஓடுகின்ற மட்டக்களப்பு களத்துக்கு வருவோம்!
மாண்புமிகு பிரதிச் சபாநாயகர் அவர்களே! இச்சபையின் நிகழ்ச்சியில் மிக முக்கியமான இடத்தைப் பெற் வேண்டிய விஷயமிது. அவசர காலச்சட்ட நீடிப்பு விவாதத்தில் அரசாங்கத்துடன் சேர்ந்து வாக்களிப்பது இதுவே கடைசி முறையாக இருக்கப்படாதென நான் பிரார்த்திக்கின்றேன் என்று கூறியதன் காரணம் இதுதான்! ஒவ்வொரு மாதமும் அவசர காலச்சட்ட நீடிப்பு விவாதத்தில் அரசாங்கத்தை ஆதரித்து வாக்களிக்கின்றீர்களே, ஆனால் இடைப்பட்ட ஒரு மாதத்திற்குள், முஸ்லிம்கள் கொலை செய்யப்படுகின்றார்கள். இதன் கருத்து என்ன? முஸ்லிம்களின் பாதுகாப்பு நிலைமை என்ன” என்று மக்கள் சதா வினவிக் கொண்டே இருக்கின்றார்கள்.
(குறுக்கீடுகள்) : இந்த விவாதத்தில் வாக்களிக்கின்ற விசயத்திலும் நீங்கள் சரியான முடிவை எடுக்க வேண்டும்.
எந்தத் தீர்வு எடுக்கப்பட்டாலும்.
உங்கள் வலையில் நான் விழுந்துவிடமாட்டேன். குறிப்பிட்ட சமய சந்தர்ப்பத்தில் நாங்கள் சரியான முடிவை எடுப்போம். உள்ள கஷ்டங்களை நாங்கள் புரிந்து கொண்டுள்ளோம். ஆனால், விஷயத்தை விட்டுத் திசைமாறாமல் நாம் இருப்போமாக! எனவே கடைசியில் என்ன தீர்வு எடுக்கப்பட்டாலும், முஸ்லிம்களின் எதிர்காலம் - கிழக்கு மாகாணத்திலுள்ள சிறுபான்மை முஸ்லிம்களை மட்டுமல்ல, அம்பாறை மாவட்டம், ஏறாவூர், காத்தான்குடி, ஒட்டமாவடி, கிண்ணியா, மூதூர் தம்பலகாமம் முதலிய பகுதிகளிலும், மன்னார், முசலி, வவுனியா ஆகிய பகுதிகளிலும் யாழ்ப்பாணம், முல்லைத்தீவு ஆகிய பட்டினங்களிலிருந்தும் விடுதலைப் புலிகளால் துரத்தியடிக்கப்பட்ட முஸ்லிம்கள் சகலரின் எதிர்காலத்தையும் பாதுகாப்பையும் ஊர்ஜிதப்படுத்த வேண்டும் என்பதில், நாங்கள் மிகவும் அக்கறையாக இருக்கின்றோம். V
14
 
 
 

இன்று காலையில் ஜனாப் பஷிர் சேகுதாவூது அவர்கள் இச்சபையில் கூறிய யோசனையை நானும் ஆதரிக்கிறேன் என்று இச்சபையில் கூற விரும்புகிறேன். விடுதலைப் புலிகளை
எதிர்த்துப் போராட இராணுவத்தில் ஒரு விஷேட முஸ்லிம் பிரிவு ஸ்தாபிப்பதைப் பற்றி அவர் பேசினார். முஸ்லிம்களைப் பொறுத்தமட்டில் இதைச் சற்று தெளிவாக்க விரும்புகின்றேன். நாங்கள் முஸ்லிம்களாயிருக்கின்றோம். லாஇலாஹ இல்லல்லாஹற்
அவனுடைய தூதர்) என்னும் கலிமாச் சொல்லிய அந்த நம்பிக்கைக்காக அந்த ஒரே காரணத்துக்காக விடுதலைப் புலிகள் எங்களைக் கொலைசெய்தால், எங்கள் இல்லங்களை
விட்டு எங்களை விரட்டியடித்தால் அந்த நம்பிக்கை ஒன்றே காரணமாயிருந்தால்
குர்ஆனின் கட்டளைப்படி விடுதலைப் புலிகளுக்கு எதிராக நாங்கள் 'ஜிஹாத்' யுத்தம் தொடர வேண்டியவர்களாக இருக்கின்றோம் பிரபாகரன் உட்பட சகல விடுதலைப்
புலிகளையும் கொல்ல நாங்கள் தயங்க மாட்டோம் தனிப்பட்ட முறையில் கூறுவதானால்
ஒரு யுத்தத்தில் பிரபாகரனின் கழுத்தை அறுத்துக் கொண்டிருக்கும்போது தான் மரணிக்க நேர்ந்தாலும் அதற்காக நான் மகிழ்ச்சியடைவேன். இதுதான் எங்கள் உணர்வாகும்.
பிரத்தியேக படைப்பிரிவு வேண்டும்!
அரசியல் யாப்பின் பிரகாரம், ஒரு சிறுபான்மைச் சமூகத்தார், தங்கள் மதக்கோட்பாடுகளை கடைப்பிடித்தொழுக அரசாங்கம் அனுமதிக்க வேண்டும் என்பதை ஒரு சட்டத்தரணி என்ற முறையில் நான் கட்டிக்காட்ட விரும்புகிறேன். விடுதலைப்புலிகளுடன் 'ஜிஹாத்' யுத்தம் செய்து, நாங்கள் மரணமடையவேண்டும் என்பது எங்கள் நம்பிக்கையாக இருந்தால், அரசாங்கம் எங்களை ஊக்குவிக்க கடமை பூண்டுள்ளது. மாறாக எங்களை நிராயுதபாணிகளாக்கி தற்காப்பற்றவர்களாக்கி விடக்கூடாது. நாங்கள் இந்த உலக
வாழ்க்கையை மட்டும் நம்புபவர்களல்ல! இது நிரந்தரமற்ற உலகம்.
நபிகள் நாயகம் முஹம்மது (ஸல்) அவர்களின் கூற்றுப்படி இந்த உலகத்தை ஒரு பஸ் தரிப்பு நிலையத்திற்கு ஒப்பிடலாம். இந்த நிலையத்தில் பஸ்வண்டி வரும்வரை காத்திருப்போம் மரணம் என்னும் பஸ்வண்டி வரும்வரை ஒரு முஸ்லிம் அங்கே தங்கி நிற்பான். நித்திய வாழ்வளிக்கும் சுவர்க்கத்திற்கு சீட்டுப் பெறுவது இங்கே தான். பெளத்தர்களாகிய நீங்கள், புத்தபிரான் போதித்த 'அநித்திய” என்னும் கோட்பாட்டை ஒப்புக்கொண்டுள்ளீர்கள். அதே 'அநித்தியத்தை" முஸ்லிம்களாகிய நாமும் நம்புகிறோம். 100 ஆண்டு வாழவேண்டுமென நாங்கள் ஆசைப்படவில்லை. இந்த நாட்டில் நாங்கள், மானம், மரியாதையுடன் கெளரவமாக வாழவிரும்புகிறோம். ஆகையால்தான், நாங்கள் பிரத்தியேகமான ஒரு படைப்பிரிவு நிர்மாணிக்க வேண்டும் என்று கோருகிறோம்.
ബLuിൽ, 356oT EFTIU Lò (3. GODT6 uplu î6ð60) Go (Buu!
இராணுவப்படைகளை விட்டு ஒளித்தோடியவர்களை மீண்டும் இராணுவத்தில் சேர்த்துக் கொள்ள அரசாங்கம் முற்பட்டிருப்பதை அறிந்து நான் வருந்துகிறேன். முஸ்லிம்கள் சிலரும் ஓடிவிட்டனர் என அறிந்து துக்கப்படுகிறேன். இராணுவ முகாம்களில் உணவுப்
முஹம்மதுர் றஸலுல்லாஹ் (வணக்கத்துக்குரியவன் அல்லாஹ் முஹம்மது நபி (ஸல்)

Page 10
பிரச்சினை பற்றி ஜனாப் அபூபக்கர் பலமுறை இங்கே பிரஸ்தாபித்துள்ளார். "பன்றி இறைச்சியை உண்ணும்படி அவர்கள் வற்புறுத்தப்பட்டிருக்கின்றனர். இதனால், சிலர் இராணுவத்தை விட்டும் விலகி ஓடியிருக்கின்றனர். முஸ்லிம்களுக்கு மதுபானங்களும் விலக்கப்பட்டுள்ளன. ஆனால் இராணுவத்திலிருந்தால் பன்றி இறைச்சியை உண்ணவேண்டுமென்றோ அல்லது மதுபானம் அருந்த வேண்டுமென்றோ ஒரு நியதியில்லை. சட்டம் இல்லை. இந்திய இராணுவத்தைப் பாருங்கள். தாடியும் வளர்த்து தலைப்பாகையும் அணிந்த சீக்கியர் இல்லையா? முகச்சவரம் செய்யாதவர்கள் மட்டும் தான் யுத்தம் செய்யலாம் என்று ஒரு நியதி உண்டா? நான் கூறுவதென்னவென்றால், விடுதலைப் புலிகளுடன் சமர்புரிய முஸ்லிம்கள் தயாராயிருக்கின்றனர் என்பது தான். ஆனால், முஸ்லிம்கள் தமிழர்களுடன் யுத்தம் செய்ய வேண்டுமென்பது கருத்தல்ல. தமிழர்களுக்குஅமைதியும், சமாதானமும் நிலவ வேண்டுமென்பது எங்கள் விருப்பம். ஏனெனில், முஸ்லிம்கள் தமிழ் சமுதாயத்துடன் நீடுழி காலமாக ஒற்றுமையாய் வாழ்ந்து வந்திருக்கிறார்கள்.
புலிகளை எதிர்க்க தமிழ் மக்கள் தயாராகின்றனர்!
அண்மைக்காலத்தில், நடந்த இரண்டு சம்பவங்களினால், இந்த இரு சமூகங்களிடையே சில காலமாக இருந்து வந்த கசப்பு நீங்கி, நல்லெண்ணம் பரவ ஆரம்பித்தது. ஐந்து வாரங்களுக்கு முன் அக்கரைப்பற்று பொத்துவில் வீதியில் கோமாரிக்கிராமத்தில் விடுதலைப் புலிகள் ஒரு வாகனத்தை நிறுத்தி, முஸ்லிம் பிரயாணிகளை இறங்கும்படிகட்டளையிட்டனர். இதில் 13 முஸ்லிம்களும், ஒரு சிங்கள பொலிஸ்காரரும், ஒரு சிங்கள டிரைவரும் இருந்தனர். கிராம அபிவிருத்தி உத்தியோகத்தரான இராச குலேந்திரன் என்னும் ஒரு இளம் தமிழரைத் தவிர ஏனைய தமிழர்கள் எல்லோரும் ஓடிவிட்டனர். அவர் எழுந்து நின்று "நீங்கள் இந்த முஸ்லிம்களைக் கொல்வதாயிருந்தால் என்னை முதலில் கொல்லுங்கள்” என்று சொன்னார். அந்த இளைஞரான இராகுலேந்திரனுக்கு நான் அஞ்சலி செலுத்துகிறேன். விடுதலைப் புலிகள் இவரைச் சுட்டுக்கொன்ற பின்னர்தான் அங்கு நின்ற முஸ்லிம்களையும் சிங்களவர்களையும் கொன்றனர். அதேபோல், சத்துருக்கொண்டான் என்னும் ஊரில் புகையிரத வண்டியை விடுதலைப் புலிகள் நிறுத்தியபோது அந்தக் கிராமத்து மக்கள் சூழ்ந்து கொண்டு புலிகளைத் துரத்திவிட்டனர். இவ்வாறு நல்லெண்ணம் உருவாகிக் கொண்டிருக்கையில் மேல்மட்ட அரசியல் தலைவர்கள் தமிழ் கட்சிகளுடன் பேச்சு வார்த்தைகளை நடத்திக் கொண்டிருக்கும்போது, இவ்விரு சமூகங்களும் ஏன் மோத வேண்டும? ஆகையால் இவ்விஷயம் பற்றிக் கவனஞ் செலுத்தவேண்டுமென நாங்கள் இவ்வரசாங்கத்தை மிகவும் வினயமாகக் கேட்டுக் கொள்கின்றோம்.
வடக்கு முஸ்லிம்களின் அழிவுபற்றி ஒரு மதிப்பீடு!
ബങ്ങg| ഉ_ങ്ങjങ്ങu] முடிப்பதற்கு இன்னும் ஐந்து நிமிடமே உண்டு. ஆகையால் வன்னி மாவட்டத்தின் நிலைமை பற்றியும், வடக்கிலிருந்து விடுதலைப்புலிகளால் விரட்டியடிக்கப்பட்ட முஸ்லிம்களின் அவல நிலைபற்றியும் சில குறிப்புக்களைக் கூறி எனதுரையை முடிக்க
விரும்புகிறேன். அங்கே நடந்த அடாவடித்தனங்களையும் சேதங்களையும் மன வேதனை
„r- நடநத 2.25 ܦܨܢ
16

தரும் தீமைகளையும் பற்றி நீண்டகாலமாக இந்தச் சபையில் பிரஸ்தாபித்து வந்துள்ளோம். ஆனால், இதைப்பற்றி ஆக்கபூர்வமான எந்த கவனமும் செலுத்தப்படவில்லை. 1990ம் ஆண்டு ஒக்டோபர் மாதத்தில் வட மாகாணத்திலிருந்து விரட்டியக்கப்பட்ட முஸ்லிம்களின் அசைவற்ற, அசைவுள்ள ஆதனங்களையும் விளைவித்த நஷ்டங்களுமடங்கிய பட்டியல் ஒன்றை இச்சபையில் சமர்ப்பிக்கின்றேன். இது முதலாம் பாகம். டாக்டர் சாகுல். எச். ஹஸ்புல்லா, (பி. எச். டி) என்ற பிரபல கல்விமான இதைத் தயாரித்துள்ளார். டாக்டர் எம். ஏ. லத்தீப், ஜனாப் ஆர். றைஹான், ஜனாப் எஸ். எம். ஏ நியாஸ், ஜனாப் எம். ஐ . அசதுல்லாஹ் ஆகிய கல்விமான்களும் இக்கோவைக்கு உதவிபுரிந்துள்ளார்கள். வடமாகாண முஸ்லிம்களின் செல்வத்திற்கு ஏற்பட்ட சேதங்களையும், நஷ்டங்களையும் சேகரித்துக் கணக்கிட்டு விளக்கப்படுகின்றது. தங்கள் வாசஸ்தலங்களையும் வியாபார ஸ்தலங்களையும் விட்டு துப்பாக்கி முனையில், வெளியேறுவதற்கு 48 மணிநேர அவகாசம் கொடுக்கப்பட்டது. 145 பக்கங்களைக் கொண்ட இவ்வறிக்கையில் சுமார் 3000 முஸ்லிம் குடும்பங்களின் துன்பதுயரங்களும் பொருள் நஷ்டங்களும் கணக்கிட்டுக் காட்டப்பட்டுள்ளது. 1500 பில்லியன் ரூபாய் பெறுமதியான பொருள் நஷ்டம் இம்மக்களுக்கேற்பட்டுள்ளதெனக் கூறப்படுகிறது. அத்துடன் 150 பள்ளிவாசல் ( மஸ்ஜிது) களும் மத்ரசாக்களும் வடமாகாணத்தில் மூடப்பட்டிருக்கின்றன.
வியாபாரம், கைத்தொழில் பாதிப்பு!
மேலும் மூன்று பக்கங்களடங்கிய இரண்டு ஆவணங்களுண்டு முதலாவது அட்டவணையில், வடமாகாண முஸ்லிம்களின் சொந்தமான வியாபார ஸ்தாபனங்களும் கைத்தொழில் நிறுவனங்களும் விபரிக்கப்பட்டுள்ளன. இரண்டாவது, மாவட்ட ரீதியாகவும், உதவி அரசாங்கப் பரிவு ரீதியாகவும், கிராம ரீதியாகவும் குறிக்கப்பட்டுள்ளன. இவை 3 பக்கங்களைக் கொண்டுள்ள படியால், இதையும் நமது பதிவேட்டில் சேர்த்துக் கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறேன். டாக்டர், ஹஸ்புல்லாஹ் அவர்களின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இவ்வாவணத்திலிருந்து ஒரிரு பந்திகளை வாசித்துக்காட்ட விரும்புகிறேன். கிழக்கு மாகாணத்திற்கும் இத்தகையதோர் ஆராய்ச்சியை மேற்கொள்ளவிருப்பதாகவும்
அதையும் கூடிய விரைவில் முடித்துவிடுவதாகவும் அவர் எனக்கு உத்தரவாதமளித்துள்ளார்.
இந்த ஆவணத்திலிருந்து சில பகுதிகள்.
'வடமாகாண முஸ்லிம்களின் சரித்திரம், இப்பிராந்தியத்தில் குடியமர்வு ஆரம்பித்த காலத்திலிருந்தே தொடங்குகின்றது. இப்பகுதி முஸ்லிம்களுக்கும் தமிழருக்குமிடையே எப்போதும் பரஸ்பர நட்பும் அன்னியோன்னியமும் இருந்து வந்துள்ளது. இவ்விரு சமூகத்தாருக்குமிடையிலுள்ள தொடர்புகள் அடிப்படையில் பரஸ்பரம் மரியாதை உடையதாகவும் இருந்து வந்தன.
'கடந்த பல வருடங்களாக இரு பெரிய இனத்தவருக்கிடையே - சிங்களவருக்கும், مح۔ தமிழருக்குமிடையே கருத்து வேற்றுமை அதிகரித்துக் கொண்டே வந்தது. வடக்கு கிழக்கு மாகாணங்களில் யுத்தம் மூண்டதும் அப்பிராந்தியங்களில் பலாத்காரம் தலையெடுக்கத் தொடங்கியது. யுத்தத்தின் காரணமாக அங்குள்ள முஸ்லிம்களும்
17

Page 11
பாதிக்கப்பட்டனர். எவ்வாறாயிருந்த போதும், இரு பெருஞ் சமூகங்களுக்குமிடையிலுள்ள போராட்டத்தில் முஸ்லிம்கள் ஒரு பக்கமுஞ் சார்ந்து நிற்கவில்லை. இத்தகைய நடுநிலைமை வகிப்பதை, போரில் ஈடுபட்டிருந்த இரு இனத்தவரும் புரிந்து கொண்டு மதிப்பளித்தார்கள் "1990 ஒக்டோபர் 24ம் திகதியளவில் யாருக்கும் தெரியாமல் திடீரென எதிர்பாராதவிதமாக வடக்கிலுள்ள முஸ்லிம் பிராந்தியங்களிலெல்லாம், ஒலிபெருகக்கிகள் மூலம் முஸ்லிம்கள் பட்டினங்களையும் கிராமங்களையும் விட்டு வெளியேறிவிடும்படியும், வீடுவாசல்களையும் சொத்து உடைமைகளையும் ஆங்காங்கே வைத்துவிட்டுப் போகும்படியும்" விடுதலைப் புலிகள் கட்டளையிட்டனர். "தவறினால் பயங்கரவாதிகளால் உயிரிழக்க வேண்டிவரும்" என்றும், எச்சரிக்கப்பட்டனர். இதற்கு 48 மணிநேர அவகாசங் கொடுக்கப்பட்டது.
முஸ்லிம்கள் நிர்க்கதியானார்கள். அங்குள்ள தமிழ் மக்கள், விடுதலைப் புலிகளின், முஸ்லிம்களை வெளியேற்றும் தீர்மானத்தை வெறுத்தபோதிலும் அவர்களால் ஒன்றுஞ் செய்ய முடியவில்லை. அப்போது விடுதலைப் புலிகளுடன் போர் புரிந்து கொண்டிருந்த அரசாங்கத் துருப்புக்கள் வேறு பகுதிகளில் தொலைதூரத்தில் நின்றனர். இதனால் முஸ்லிம்கள் சென்ற வழிகளில் சந்திகளிளெல்லாம் பரிசோதிக்கப்பட்டார்கள். ஏதேனும் பொருள் பண்டங்களை எடுத்துச் செல்வதைத் தடுப்பதற்காக இந்தச் சோதனை நடந்தது. உதாரணமாக, மன்னார் தீவிலிருந்து வந்த முஸ்லிம்கள் தெற்கு முகத்துவாரத்தில் சோதிக்கப்பட்டனர். அதேபோன்று, மன்னார் தரையாக வந்த முஸ்லிம்கள், மடுவிலும், வவுனியா, முல்லைத்தீவு, கிளிநொச்சி முஸ்லிம்கள் வவுனியாவிலும் சோதிக்கப்பட்டனர். யாழ்ப்பாண நகரிலிருந்து 15, 000 முஸ்லிம்கள் வெளியேறுவதற்கு 2 மணிநேர அவகாசமே கொடுக்கப்பட்டது. புலிகள், அவர்களை வாகனங்களில் ஏற்றிச்சென்று வடமாகாண எல்லையில் இறக்கிவிட்டனர். எனவே, வடமாகாண முஸ்லிம் அகதிகள் அவர்களிடமிருந்த பொருட்பண்டங்கள் சொத்துச் சுதந்திரம் முழுவதையும் இழந்தனர்"
பிறந்த ഥങ്ങിഥേ இறக்கத் தயார்!!
'தமிழரின் புராதன பூமி என்று வடக்கைக் கோரிக்கொள்வதை வ்லுவூட்டுவதற்காக, முஸ்லிம்களை வெளியேற்றிவிட வேண்டுமென்பது அவர்களின் நோக்கமாயிருக்கலாம். வடக்கிலிருந்த முஸ்லிம்களை வெளியேற்றியது எல்லோரும் அறிந்த விஷயமாகும். ரீ லங்காவின் பொதுசனத் தொடர்பு சாதனங்களிலும் வெளிநாடுகளிலும் இது பரவலாக விளம்பரம் பெற்றுள்ளது"
வடக்கிலிருந்த முஸ்லிம்களை விடுதலைப் புலிகள் வெளியேற்றுவதில் வெற்றி பெற்றிருக்கலாம். ஆனால் கிழக்கு மாகாண முஸ்லிம்களை வெறியேற்ற முற்பட்டால்
அவர்கள் தோல்வியடைந்து விடுவார்கள் என்று கூறிவைக்க விரும்புகிறேன். நாங்கள் பிறந்த மண்ணிலேயே இறக்கத் தயாராயிருக்கின்றோம்.
- நன்றி -
18


Page 12