கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: இலங்கையின் இனப்பிரச்சினையும் பலவந்தமாக வெளியேற்றப்பட்ட வடமாகாண முஸ்லிம்களும் 6

Page 1
  

Page 2
இலங்கையின் இன பலவந்தமாக வெ6 வடமாகாண மு
தொகுதி
மாந்தை-நானாட்ட
យលrទាំញ៉ា លែ. Tចំ
வடக்கு முஸ்லிம்களின் உ

ப்பிரச்சினையும் ரியேற்றப்பட்ட ஸ்லிம்களும்
缸6
ான் முஸ்லிம்கள்
. ប្រាញថាបែបុបចោល
மைக்கான அமைப்பு

Page 3
ETHNIC CON FLICT IN SRI LANKA AND THE FORCBLY EVICTED MUSLIMS OF
NORTHERN PROVINCE
Vol. 6: Manthai-Nanaddan Muslims
By S.H. Hasbullah, M.A. Ph.D Department of Geography, University of Peradeniya, Sri Lanka.
First Edition, 1997
Published by The Northern Muslims' Rights Organization 15A, Rohini Road, Colombo - 6, Sri Lanka.
Copy Right (O Author
ISBN 955-94.45-06-5
Printed by Unie Arts (Pvt) Limited No: 48 B, Bloemend hal Road, Colombo-13.

பொருளடக்கம்
அட்டவணைகள்
படங்கள்
என்னுரை
அணிந்துரை
நன்றியுரை
1. அறிமுகம்
2. மாந்தை - நானாட்டான் பிரதேசம்
2.1 அறிமுகம் 22 புவியியலும், பொருளாதாரமும் 23 குடிசனம் 24 முஸ்லிம் குடியிருப்புகள்
3. மாந்தை-நானாட்டான் முஸ்லிம்கள்
3.1 வரலாறு 32 முஸ்லிம்களின் வரலாறு 3.3 அண்மைகால குடிசனமாற்றங்கள்
3.4 கலையும் கலாசாரமும்
4. முஸ்லிம்களின் வாழ்வும் வளமும்
4.1 விடத்தல் தீவு-பெரியமடுப் பிரதேசம்
4.1.1 விடத்தல் தீவு 4.12 பெரியமடு
4.2 கட்டுக்கரைக் குளத்திற்குட்பட்ட மாந்தைப் பிரதேசம்
42.1 முஸ்லிம் குடியிருப்புகள் 42.2 வரலாறும், கலாசாரமும் 42.3 தமிழ்-முஸ்லிம் உறவு 4.2.4 பொருளாதார, சமூக அடிப்படைகள் 425 முஸ்லிம் கிராமங்கள்
4.3 கட்டுக்கரைக் குளத்திற்குட்பட்ட நானாட்டான் பிரதேசம்
43.1 முஸ்லிம் கிராமங்கள்
Vi
Vii
ix
Xiv
33
33
34
46
52
52
55
56
56
58
66
68

Page 4
5. இனப்பிரச்சினையும் மாந்தை-நானாட்டான் முஸ்லிம்களும்
5.1 அறிமுகம் 5.2 மாந்தை-நானாட்டான் பிரதேசத்தின் இனப்பிரச்சினை 53 முஸ்லிம்-தமிழ் உறவு 5.4 வெளியேற்ற அறிவித்தலுக்கு முன்னர் 55 முஸ்லிம்களின் வெளியேற்றம் பற்றிய அறிவித்தல் 5.6 வெளியேற்றம்
5.7
பொருளாதார இழப்பு
6. அகதி வாழ்க்கை
6.1
6.2
6.3
6.4
6.5
6.6
அறிமுகம் அகதி வாழ்க்கைக்கான அமைவிடம் தீர்மானிக்கப்பட்டமுறை அகதிகள் பராமரிக்கப் படுதல் முகாம் வாழ்க்கை அகதிகளின் அனுபவம் அகதிகள் எதிர்நோக்கிய பிரச்சினைகள்
7. அகதி வாழ்கையின் அண்மைக்கால மாற்றங்கள்
7.
7.2
7.3
7.4
7.5
7.6
8. எதிர்காலம்
8.
8.2
உறவினர்களை நோக்கிய இடப் பெயர்வு புதிய இடத்தில் ஒன்றாக வாழும் முயற்சி சொந்தக் குடியேற்றம் மீளமைவு முகாம்களும், அகதி இடப்பெயர்வும் அரசின் மீள் குடியேற்றத் திட்டம் மக்களின் சொந்தக் குடியேற்றமும், அரசின் மீள் குடியேற்றமும்
நீடித்து நிலைத்திருக்கக் கூடிய தீர்வு உடனடியாக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள்
விபரம் தந்தவர்கள்
உசாத்துணை நூல்கள்
பின்னிணைப்பு
1. மாந்தை-நானாட்டான் பிரதேச கிராம
மட்டத்தில் முஸ்லிம் சனத்தொகை, 1921
2. கிராமியக் கவிதைகள்
3. முஸ்லிம் ஆத்மஞானிகளின் அடக்கஸ்தலங்கள்
75
75
75
77 79
80
81 86
90
90
91.
94
96
99
100
102 103 103 104 105 106
107
1 10
11 120
123
125
131
131
133
140

O
அட்டவணைகள்
சமய ரீதியாக மாந்தை-நானாட்டான் பிரதேச
குடிசனம், 1981.
: 1921ஆம் ஆண்டில் உடையார் பிரிவு
மட்டத்தில் மாந்தை-நானாட்டான் முஸ்லிம் சனத்தொகை.
மாந்தை-நானாட்டான் பிரதேச முஸ்லிம்களின்
தொழில் அமைப்புகள், 1990.
விடத்தல் தீவு முஸ்லிம்களின் விவசாயக்
காணிகளும், அவற்றின் பரிமாணங்களும், 1990.
: விடத்தல் தீவு முஸ்லிம்களின் விவசாயக்
காணிகளுக்குரிய நீர்ப்பாசனக் குளங்களும் அவற்றின் பரிமாணங்களும், 1990
கட்டுக்கரைக் குளத்திற்குட்பட்ட மாந்தைப்
பிரதேச முஸ்லிம் களினி விவசாயக காணிகளும், அவற்றின் பரிமாணமும், 1990
சமய ரீதியாக நானாட்டான் பிரதேச குடிசனம்,
1981.
: இழப்பு விபரம் பற்றிய சுருக்க அட்டவணை.
மாந்தை-நானாட்டான் பிரதேச முஸ்லிம்களின்
பலவந்த வெளியேற்றத்துடன் தொடர்புடைய நிகழ்வுகள்.
விடத்தல்தீவு-பெரியமடு பிரதேச எதிர்கால
அபிவிருத்தித் திட்டம்.
22
25
40
4.
43
54
67
88
93
18

Page 5
10 :
11 :
2 :
1.3 :
படங்கள்
வடமாகாணமும் அதன் நிருவாக மாவட்டங்களும்
மன்னார் மாவட்ட உதவி அரசாங்க நிருவாகப்
பிரிவுகள், 1990
மன்னார் மாவட்ட சனத்தொகை அடர்த்தி வேறுபாடு, 1981
1901 இல் சமய ரீதியாக கிராமங்களின் பரம்பல்
விடத்தல்தீவு
விடத தல தீவு - பெரியமடு பிரதேச முஸ்லிம் களின் விவசாயப் பொருளாதார அடிப்படைகள், 1990
கட்டுக்கரைக் குளத்திற்குட்பட்ட பிரதேசத்தில் முஸ்லிம்கள் செறிவாக வாழ்ந்த கிராமங்கள், 1990
கட்டுக் கரைக் குளத்திற்குட்பட்ட பிரதேச முஸ்லிம்களின் விவசாக் காணிகள், 1990
மாந்தை-நானாட்டானி பிரதேச முஸ்லிம் அகதிகளின் வெளியேற்றப் பாதை, 25-30 ஒக்டோபர், 1990 மாந்தை-நானாட்டான் பிரதேச முஸ்லிம் அகதிகள் வாழும் முகாம்களின் பரம்பல், 1995
விருதோடை அகதி முகாம்கள், 1994
விடத்தல் தீவு - பெரியமடு பிரதேச எதிர்கால விவசாயப் பொருளாதார அபிவிருத்திக்கான திட்டம்.
சியா ரங் களின (ஆத மஞானிகளின அடக்கஸ்தலம்) பரம்பல், 1990
12
15
36
42
53
57
83
95
98
119
141

என்னுரை
முஸ்லிம்கள் தமது பூர்வீக இடமான வட மாகாணத்திற்கு மீளச் சென்று தமிழ் மக்களுடன் இன ஐக்கியத்தோடு வாழ விரும்புகின்றார்கள். பல நுாற்றாண்டுகள் தமிழ் மக்களோடு முஸ்லிம் எவ்வாறு சமாதானமாகவும் இனப்புரிந்துணர்வுடனும் வாழ்ந்தார்களோ அவ்வாறே மீண்டும் அவர்கள் இப்பிரதேசத்தில் வாழ விரும்புகின்றார்கள்.
முஸ்லிம்கள் வட மாகாணத்திற்கு மீளத் திரும்ப வேண்டியதன் அவசியத்தை தமிழ்-முஸ்லிம் உறவை உதாரணமாகக் கொண்டு இங்கு வற்புறுத்த விரும்புகின்றேன்.
வடமாகாண மாந்தைப் பிரதேசத்தில் விடத்தல் தீவு என்ற கிராமம் காணப்படுகிறது. இங்கு கிறிஸ்தவ, இந்து, முஸ்லிம் மக்கள் நீண்ட காலமாக வாழ்ந்து வந்தார்கள். மூன்று சமய மக்களினதும் சங்கமமாகக் இக் கிராமம் காணப்பட்டது. ஒரு புறத்தில் சமய, இனத் தனித்துவமும், மறுபுறத்தில் பரஸ்பர புரிந்துணர்வும், விடத்தல் தீவின் இரு கண்களாக காணப்பட்டன.
கிராமத்தில் தெற்காக முஸ்லிம்கள் வாழ்ந்தார்கள். முஸ்லிம்களின் குடியிருப்புக்கள், சமய ஸப்தாபனங்கள், கலாசார நிலையங்கள் போன்றன் இக் கிராமத்தின் முஸ்லிம் பகுதியில் காணப்பட்டன. இஸ்லாமிய தனித்துவத்தின் மையமாக முஸ்லிம்கள் வாழும் விடத்தல் தீவுப் பகுதி காணப்பட்டது. அதேநேரத்தில் இக்கிராமத்தில் முஸ்லிம்களோடு தோளோடு தோள் உராயும் துாரத்தில் இந்துக்களும், கிறிஸ்தவர்களும் வாழ்ந்தார்கள். முஸ்லிம்களைப்போல் கிறிஸ்தவ, இந்து சமய-கலாசார தனித்துவத்தை பிரதிபலிக்கும் நிறுவனங்கள் அவரவர் வாழும் பகுதியில் காணப்பட்டன. பாங்கொலியும, ஆலய மணியும், தேவார ஓசையும் இக் கிராமத்தின் இதய நாதங்களாக பன்னெடுங்காலம் காணப்பட்டன. மும் மதத்தவர்களது சமய-கலாசாரத் தனித் துவங்கள் முரண்பாடுகளை ஏற்படுத்தவில்லை. மாறாக இவை இம்மக்களுக்கிடையில் புரிந்துணர்வை பெருக்கி இன ஐக்கியத்தை வளர்க்கக் காரணமாக இருந்தன. மும்மதத்தைச் சேர்ந்த மக்களும் சகோதரர்களைப் போல் இக் கிராமத்தில் வாழ்ந்தார்கள். இம்மக்கள் இன்பத்தையும், துன்பத்தையும் ஒருவருக்கொருவர் பகிர்ந்து வாழ்ந்து வந்தார்கள். இன்நூலின் இட்டைப்படம் விடத்தல் தீவின்
சமயக் கூட்டுறவைக் காட்டுக் காட்டுகிறது.
vii

Page 6
விடத்தல் தீவுக் கிராமத்தின் தமிழ்-முஸ்லிம் உறவின் ஆழத்தை எத்தனையோ உதாரணங்களைக் கொண்டு நிரூபிக்க முடியும். அதில் ஒன்று, முஸ்லிம்கள் 1990ஆம் ஆண்டு ஒக்டோபர் தமது பூர்வீக இடத்தைவிட்டு வெளியேறியது கண்டு விடத்தல்தீவில் வாழ்ந்த தமிழ் மக்கள் மிகவும் மனத்துயரம் அடைந்தார்கள். முஸ்லிம்களின் வெளியேற்றத்தைத் தடுத்து நிறுத்துவதற்கு விடத்தல்தீவு இந்து, கிறிஸ்தவ மக்கள் பெரும் முயற்சி எடுத்தார்கள். இதற்காக தமிழ் மக்கள் பட்ட கஷ்டங்கள் முஸ்லிம்களின் மனதில் என்றும் பசுமையாக
இருக்கின்றன.
விடத்தல் தீவுக்கு ஒப்பான தமிழ்-முஸ்லிம் மக்கள் ஐக்கியமாக வாழ்ந்தற்கான உதாரணங்கள் வடமாகாணம் முழுவதும் பரவலாகக் காணப்பட்டன. இத்தகையதொரு இன ஐக்கிய சூழ்நிலையில் வாழ்ந்த முஸ்லிம்கள் இன்று அநாதைகளைப் போல அகதிகளாக வாழ்வது வருந்தத் தக்கதாகும். கடந்த ஏழு வருடங்களாக நீடிக்கும் இவ் அகதி வாழ்க்கையிலிருந்து முஸ்லிம்களுக்கு விடிவு எப்போது? தமது சொந்த இடங்களுக்கு மீளத் திரும்பித் தமது பழைய வாழ்க்கையை மீண்டும் தொடர்வது வடக்கு முஸ்லிம்களின் அபிலாசையாகும். இன ஐக்கியத்திற்கும் புரிந்துணர்வுக்குமான அடிப்படைகள் இம்மக்களின் மனதில் மிக ஆழமாக வேரூன்றிக் காணப்படுகின்றன.
அரசியல் அதிகாரமும் செல்வாக்கும் அற்ற இவ்வகதி முஸ்லிம்கள் தமது அபிலாசையை நிறைவேற்றிக் கொள்ள தம் மாலான எலி லா நடவடிக்கைகளையும் இதுவரை செய்து விட்டார்கள். அதில் முக்கியமாக முஸ்லிம்கள் மீண்டும் இன ஐக்கியத்தோடும், சுயகெளரவத் தோடும் வடக்கில் வாழ விரும்புவது பற்றியும் தெளிவாகக் குறிப்பிட்டிருக்கின்றார்கள்.
இதற்குப் பகரமாக தமிழ் மக்களும், தமிழ் மக்கள் சார்ந்த அமைப்புக்களும் முஸ்லிம்களை மீண்டும் அவர்களது சொந்த இடம் வர பொருத்தமான நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமாகும். வடக்கில் தமிழ்-முஸ்லிம் உறவை மீண்டும் கட்டியெழுப்பி சம்மந்தப்பட்ட எல்லோரும் உதவ வேண்டியது அவர்களது தார்மீக பொறுப்பாகும்.
Viii

அணிந்துரை
நம்நாட்டு இனப் பிரச்சினையின் துரதிஷ்டவசமான விளைவுகளுள் ஒன்றே வடபுலத்து முஸ்லிம்களின் வெளியேற்றம். கடந்த 1990 ஐப்பசியில் வட புலத்தில் வாழ்ந்த முஸ்லிம்கள் அனைவரும் தம் சொந்த இடங்களிலிருந்து வெளியேற நேர்ந்த போதும் வடபுலமே அவர்களது தாயகம் என்பதற்கு மாற்றுக் கருத்து இருக்க முடியாது. போர்த்துக்கேயரின் வருகைக்கு முன்பே திரைகடலோடித் திரவியம் தேடக் கீழைத்தேச நாடுகளை நோக்கி வந்த அராபிய முஸ்லிம்கள் இலங்கையில் திரவியம் தேடியதோடு, திருமணங்களும் செய்து இலங்கையின் பல்வேறு பாகங்களிலும் குடியேறினர். அவர்களைத் தொடர்ந்து இந்திய முஸ்லிம்களும் இலங்கையில் குடியிருப்புக்களை அமைத்தனர். நகரவாசிகளான முஸ்லிம்கள் வியாபாரத்தில் ஈடுபட்டனர். கிராமங்களை அமைத்தனர். குளங்களைக் கட்டி வயல்நிலங்களைப் பெருக்கி வளம் தேடினர். இவர்களின் வழித் தோன்றல்களே இன்றைய வடபுலத்து முஸ்லிம் சமுதாயம் ஆகும்.
மன்னார் மாவட்டத்தின் பெரும் பிரிவுகளான மாந்தை-நானாட்டான் பகுதிகளில் பல முஸ்லிம் கிராமங்கள் உண்டு. மாந்தை மேற்கில் அமைந்துள்ள விடத்தல்தீவும், பெரியமடுவும் சனத்தொகை கூடிய பெரிய கிராமங்கள் ஆகும். இக்கிராமங்களில் வாழும் முஸ்லிம்களும், இந்து, சிறிஸ்தவ இனச் சகோரர்களும் மிக அந்நியோன்னியமாகவும் ஒற்றுமையாகவும் வாழ்ந்து இன ஐக்கியத்துக்கு உதாரணமாக விளங்கினர்.
மாந்தைப் பகுதியின் முக்கியமான ஏனைய கிராமங்களான விளாங்குளி, கட்டைக்காடு, மினுக்கன், அடம்பன், சொர்ணபுரி, மருதோண்றிவான் வேளாகுளம், நெடுவரம்பு, இசங்கன்குளம், ஆண்டாங்குளம், பள்ளிவாசல்பிட்டி, வட்டக்கண்டல் ஆகியவற்றில் முஸ்லிம்கள் தனித்துவமாக வாழ்ந்தனர். இங்குள்ள முஸ்லிம்களும் அயலவர்களான இந்து கிறிஸ்தவ மக்களைத் தம் சகோதரர்களாக மதித்து வாழ்ந்து இன ஒற்றுமைக்கு உதாரணமாக விளங்கினர் எனலாம்.
இது போலவே நானாட்டான் பகுதியிலும் இரசூல் புதுவெளி, இலந்தைமோட்டை அளவக்ககை, ஹிஜ்ராபுராம், பூவரசன்குளம் ஆகிய
கிராமங்களில் முஸ்லிம்கள் சிறப்பாக வாழ்ந்தார்கள். இக்கிராம மக்கள் தமது
ix

Page 7
பிரதேச சூழலில் மாற்று இனச் சகோதரர்களுடன் ஒற்றுமை பேணி இன ஐக்கியம் காத்து வாழ்ந்து வந்தார்கள்.
மாந்தை மேற்கில் உள்ள சுலுத்தான்குளம், இலவ்வைகுளம் முதலிய குளங்களும், சுல்த்தான்கமம், இலவகுளக்கமம், அசன்தரை, மரைக்காயர் புயவு, துலுக்காச்சாபுலவு கற்புடையார் பள்ளிவாசல் முதலிய வயற்கண்டங்கள் முஸ்லிம் பெயர் தாங்கி முஸ்லிம்களின் உடமையாக விளங்குவதும் இவை முஸ்லிம்களால் அமைக்கப்பட்டமைக்குச் சான்றாகும். இன்னும் புதுக்கமம், புதுப்புலவு, புலியாகுளம், புலவெளி, புலக்காடு முதலிய பல நுாறு ஏக்கர் வயல்நிலங்கள் முஸ்லிம்களின் தனியுடமையாக விளங்குவதும் இப்பகுதியில் முஸ்லிம்களின் தொன்மைக்கு எடுத்துக்காட்டெனலாம்.
நானாட்டானி பகுதியில் உள்ள இரசூல் புது வெளியும் , இலந்தைமோட்டையும் பெரிய முஸ்லிம் கிராமங்கள். "இரசூல்புதுவெளி’ என்னும் முஸ்லிம் பெயர் தாங்கி நிற்கும் இக்கிராமம் முஸ்லிம்களால் அமைக்கப்பட்டது என்பதை எடுத்துக்காட்டும்.
மன்னார் மாவட்டத்தின் வரப்பிரசாதமான இராட்சதக்குளத்தின் கீழுள்ள 15 ஆயிரம் ஏக்கர் வயல் நிலங்களில் கணிசமான பகுதி மாந்தை-நானாட்டான் மன்னார் முஸ்லிம்களின் உடமையாக இருப்பதையும் அவதானிக்கலாம். இவையனைத்தும் வட பகுதியில் முஸ்லிம்களின் தொன்மை வரலாற்றுக்கும் தாயகக் கோட்பாட்டுக்கும் சான்று பகிர்வனவாகும்.
பொதுவாகவே வட புலத்து முஸ்லிம்கள் “இஸ்லாம் எங்கள் இனிய மதம், இன்பத்தமிழ் எங்கள் இனிய மொழி’ என்ற கோட்பாட்டுடன் இந்து, கிறிஸ்தவர்களுடன் இணைந்து வாழ்ந்து இன ஐக்கியம் காத்தவர்களே.
எனினும் ஏழு ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்த வரலாற்றுக் கறை படிந்த இடப்பெயர்வு முஸ்லிம்களின் வடபுலத் தொடர்புகளை நீக்கிவிட முடியாது. முஸ்லிம்களின் இடப்பெயர்வு பல்லாண்டு நீடிக்குமாயின் “வடபுலம் நமது தாயகம் தானா?” எனப் பிற்கால சந்ததியினர் சந்தேகிக்கும் நிலை ஏற்பட்டாலும் ஆச்சரியமில்லை.
எனவே வட புலத்து முஸ்லிம்களுக்கு அங்குள்ள உரிமைகளை, உடமைகளை, சரித்திரச் சான்றுகளை ஆவணப்படுத்துவது இன்றியமையாத ஒரு கைங்கரியமாகும். எனவேதான் வடபுல முஸ்லிம்களின் வரலாறு வசிப்பிடங்கள், உடமைகள், தொழில்கள், கல்வி, கலாசார விழுமியங்கள் பற்றி
விரிவான ஆய்வுகளை மேற்கொண்டு அவற்றைத் தொகுதி, தொகுதியாக

நூலுருவில் தருகின்றார் இந்நூலாசிரியர். இந்நூல் காலத்தின் கட்டாயத் தேவை எனலாம்.
“என்று மலரும் எங்கள் தாயகவாழ்வு, அன்றே மடியும் இந்த அகதியின் சோகம்” என ஏங்கித் தவிக்கும் வடபுலத்து முஸ்லிம்கள் தமது பழைய பசுமையான நினைவுகளை மீட்டுப் பார்க்கவும் பொருத்தமான சூழ்நிலை ஏற்படும் போது தாயகம் திரும்பவும், அதற்கான செயற்பாடுகளை மேற்கொள்ளவும் இந்நூல் உந்து சக்தியாக விளங்கும் எனலாம்.
இந்த இமாலய முயற்சியைத் தொடங்கி ஆய்வுகளை நடாத்தி நுாலுருவில் தரும் நூலாசிரியர் அவர்களுக்கு வடபுல முஸ்லிமகளின் பாராட்டுக்கள் உரியதாகும். மாந்தை-நானாட்டான் பகுதிக்கான நுாலை ஆக்கியமைக்காக இப்பகுதி முஸ்லிம் பொது மக்கள் சார்பில் மனமுவந்த நன்றிகளைச் சமர்ப்பிக்கின்றோம். இடம்பெயர்ந்த ஒவ்வொரு குடும்பமும் ஒரு நூலைப் பெற்றுப் பயனடைய விரும்புகின்றோம். இவ்வித ஆய்வுகளை மென்மேலும் ஆசிரியர் மேற்கொள்ள இறைவன் அருள் புரிவானாக!
மாந்தை-நானாட்டான் கிராம முஸ்லிம் பிரமுகர்கள்
Χί

Page 8
அணிந்துரை வழங்கிய மாந்தை நானாட்டான் பிரதேச முஸ்லிம்
பிரமுகர்களின் பெயர் விபரம்
கே. கலீல் றகுமான் (அதிபர்) றசூல் புதுவெளி தற்போது வாழும் இடம்: மஸ்ஜித் றோட் புத்தளம் நகரம்
வி.எம். காசிம் (ஆசிரியர்) விடத்தல்தீவு தற்போது வாழும் இடம் தில்லையடி, புத்தளம்
எ.சி.எம். மஹ்ரூப் ( ஆசிரியர்) விடத்தல்தீவு தற்போது வாழும் இடம்: தில்லையடி, புத்தளம்
எம்.எம். ஏ. முனாப்
ஆண்டான் குளம் தற்போது வாழும் இடம்: ஹுசைனியாபுரம் புத்தளம்
கே.எம்.அஜ்மீர்கான்
வட்டக்கண்டல் தற்போது வாழும் இடம்: ஹுசைனியாபுரம் புத்தளம்
கே.எம். சாகுல் ஹமீது ஆண்டான்குளம் தற்போது வாழும் இடம்: தில்லையடி, புத்தளம்
ஜ.எம்.ஜின்னா (47)
பெரியமடு தற்போது வாழும் இடம் உளுக்காப்பள்ளம் புத்தளம்
எ.நெய்னா முகம்மது (73) பெரியமடு
Χii

தற்போது வாழும் இடம், உளுக்காப்பள்ளம் புத்தளம்
கே.எம்.ஏ.சுக்கூர் (41)
பெரியமடு தற்போது வாழும் இடம், உளுக்காப்பள்ளம் புத்தளம்
எஸ்.பக்கீர் மொஹிடீன் (72)
பெரியமடு தற்போது வாழும் இடம், உளுக்காப்பள்ளம் புத்தளம்
எஸ்.அப்துல் வஹாப் (41) நொச்சிக்குளம் தற்போது வாழும் இடம்: ஆலங்குடா புத்தளம்
பி.எம்.முஸ்தகீன் (26) நொச்சிக்குளம் தற்போது வாழும் இடம்: ஆலங்குடா புத்தளம்
எம்.செய்னுலாப்தீன் (53) நொச்சிக்குளம் தற்போது வாழும் இடம் கொய்யாவாடி புத்தளம்
எம்.எஸ். செய்யது முகம்மது (50) அளவக்கை தற்போது வாழும் இடம் சஞ்சிதாவத்தை புத்தளம்
xiii
3.P
○ ***み
, γν 吕 '%',
డ్రాy_3 .
;er#&;(( وޛުޞ، މަގ **
ന്ന് ബ

Page 9
Iffiu៣]
இந்நூலின் ஆக்கத்திற்கு ஏ. சி. நெளபீல், எம். லயீர், எம். நஜ்முதீன், பி. எம். ஐன்சாத் ஆகிய பல்கலைக்கழக மாணவர்களும் வட்டக்கண்டலைச்
சேர்ந்த அஜ்மீர்கான் அவர்களும் உதவி செய்தார்கள்.
கிராம மட்டத்தில் விபரந்திரட்டல் மேற்கொள்ளப் பட்டபோது பலர் ஆர்வத்துடன் விபரங்களைத் தந்தனர். அவர்களின் பெயர் விபரம் இந்நூலின் இறுதியில் இணைக்கப்பட்டுள்ளது. இந்நூலுக்கான இறுதிக்கட்ட வெளிக்கள ஆய்வில் ஏ. ஜி. அனிஸ் உதவினார்.
இந்நூலின் ஆக்கத்திற்கு என்னோடு உறுதுணையாக இருந்து உதவியவர் விடத்தல் தீவைச் சேர்ந்த எம். தமீம் ஆவார். இந்நூலுக்கான படங்களும், ஏனைய கட்டமைப்பு உதவிகளும் எம். தெளபீக்கால் செய்யப்பட்டன.
இந்நூலைப் பூரணப்படுத்துவதற்கு எனது நண்பர்கள் கலாநிதி லத்தீப், கலாநிதி எம். ஏ. நுஃமான், ஜனாப் எம். நெளபர் ஆகியோர் உதவி செய்தனர். இந்நூலை அச்சிடுவதற்கான முற்பணம் பெரியமடுவைச் சேர்ந்த எம். எம். அமீனி அவர்களினால் வழங்கப்பட்டது. இனி நூலின் ஆக்கத்திற்கு ஆரம்பத்திலிருந்து எல்லாவகையிலும் ஜமாஅதே இஸ்லாமி உதவி செய்து வந்தது.
இந்நூல் எனது மனைவி சுஆதாவினால் கனணிப் படுத்தப்பட்டது. எனது உறவினர்கள் பி. சுக்ரி, செல்விகள் எம். ஐ. வாபிகா, பி. சாஜிதா, எம். ஐ. முர்சிதா, ஆகியோர் இந்நூலின் ஆக்கத்திற்கு தொடர்ச்சியாக உதவி செய்தார்கள்.
இந்நுால் 1996 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 11ஆம் திகதி உளுக்காப்பள்ளத்தில் ஒரு விரிவுரையாகச் சமர்ப்பிக்கப்பட்டது. அக்கூட்டத்தில் பங்கு பற்றிய பெரியமடு, விடத்தல் தீவு, இலந்தைமோட்டை போன்ற கிராம முஸ்லிம்கள் இந்நுாலை மேலும் விருத்தி செய்வதற்கான ஆலோசனைகளை வழங்கினர்.
இந்நூால் யுனி ஆட்ஸ் பிரைவேட் லிமிட்டட் அச்சகத்தினரால் அச்சிடப்பட்டது. இவ்வாறு எல்லாவகையிலும் இந்நூலின் ஆக்கத்திற்கு உதவியளித்த யாவருக்கும் எனது நன்றிகளைக் கூறுவதில் மகிழ்ச்சியடைகின்றேன்.
எஸ். எச். ஹளப்புல்லா,
Χίν

1. அறிமுகம்
இந்நூல் மாந்தை-நானாட்டான் பிரதேசத்தில் வாழ்ந்த முஸ்லிம்கள் பற்றிதாகும். இப்பிரதேசம் இலங்கையின் வடமேற்கில் அமைந்துள்ள மன்னார் மாவட்டத்தின் இரண்டு நிர்வாகப் பிரிவுகளை உள்ளடக்குகின்றது. வரலாற்று ரீதியாகவும், சமூக-கலாசார ரீதியாகவும் பொருளாதார அடிப்படையிலும் இவ்விரு பிரதேசங்களும் பல ஒத்த பண்புளைக் கொண்டிருக்கின்றன (படம்-1).
மாந்தை, வரலாற்றுநூல்களில் மாதோட்டம் என்றும், மகாதித்த என்றும் அழைக்கப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிகு பிரதேசமாகும். இம்மாதோட்டத்தின் பின்னணி நிலமாக நானாட்டான் பிரதேசம் காணப்பட்டது. இவ்விரண்டு பிரதேசங்களினதும் பொருளாதார அடிப்படையாக இராட்சத வாவி அல்லது கட்டுக்கரைக்குளம் என்று அழைக்கப்படுகின்ற பெரிய நீர்ப்பாசனக் குளம் காணப்படுகின்றது.
தனித்துவமான வரலாற்றையும் , பொதுப் பொருளாதார அடிப்படைகளையும் கொண்ட இப்பிரதேசத்தில் தமிழ்-முஸ்லிம் மக்கள் மிக நீண்ட காலமாக இன ஐக்கியத்தோடு வாழ்ந்து வந்தார்கள். இவ்விரு மக்களினதும் இன ஐக்கியத்தின் சிறப்பியல்புகளை எடுத்தியம்புவதே இந்நூலின் பிரதான நோக்கமாகும்.
இப்பிரதேசத்தில் தமிழ்-முஸ்லிம் இன ஐக்கியத்தின் மறுமலர்ச்சி இந்நூலில் வலியுறுத்தப்பட்டுள்ளது. மாந்தை-நானாட்டான் பிரதேசத்தில் தமிழ் பெரும்பான்மை மக்களோடு ஒட்டி உறவாடி வாழ்ந்த முஸ்லிம் மக்கள் இன்று அவர்களில் இருந்து பிரிக்கப்பட்டு தொலை துாரத்தில் அகதிகளாக வாழ்கின்றார்கள். 1990 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாத இறுதி வாரத்தில் இப்பிரதேசத்தில் வாழ்ந்த முஸ்லிம் சிறுபான்மையினர் அனைவரும் விடுதலைப் புலிகளால் ஆயுத முனையில் தமது சொந்த இடங்களை விட்டு வெளியேற்றப்பட்டார்கள். இது யாவரும் அறிந்த ஒரு வரலாற்று உண்மையாகும். இந்நூல் மாந்தை-நானாட்டான் பிரதேச முஸ்லிம்களின் பலவந்த வெளியேற்ற நிகழ்வுகளை முக்கியப்படுத்தும் நோக்கில் எழுதப்படவில்லை. மாறாகப் பலவந்த வெளியேற்றமாகிய ஒரு வரலாற்று நிகழ்வால் தமது

Page 10
படம் வடமாகாணமும் அதன் மாவட்டங்களும்
கிளிநொச்சி மாவட்டம்
இந் ந்திரம் முல்லைத்தீவு மாவட்டம்
நது சமுத தரம
மூலம்: இலங்கையினர் நிருவாக அறிக்கை
 
 
 

பாரம்பரியப் பூமியில் இருந்து பிரித்தெடுக்கப்பட்ட இம்மக்களை திரும்பவும் இவர்களது தாயகப் பூமியில் தமிழ் மக்களோடு வழமைபோல் இன ஐக்கியத்தோடு வாழ்வதற்கான அடிப்படை விபரங்களை வழங்கும் நோக்கத்தில் எழுதப்பட்டிருக்கின்றது.
மாந்தை-நானாட்டான் முஸ்லிம்கள் தமது பாரம்பரிய பூமிக்குத் திரும்பவும் செல்வதன் வரலாற்றுத் தேவையை உலகத்திற்கு உணர்த்துவதற்காகவும் இந்நூல் எழுதப்பட்டிருக்கின்றது. மாந்தைநானாட்டான் பிரதேசத்தில் வாழ்ந்த முஸ்லிம்கள் தமிழ் மக்களோடு ஒப்பிடுகின்ற போது எண்ணிக்கையில் குறைவாகக் காணப்பட்டார்கள். அதுமட்டுமன்றி இங்கு குறித்த ஒரு பிரதேசத்தில் முஸ்லிம்கள் செறிந்து வாழாமல் மாந்தைநானாட்டானில் பரவலாக சிறிய, பெரிய குடியிருப்புக்களில் சிதறி வாழ்ந்தார்கள். ஒரு கண்ணோட்டத்தில் மாந்தை-நானாட்டான் பிரதேச முஸ்லிம் மக்களின் மேற்குறிப்பிட்ட குடிப்பரம்பல் அம்சம் இம்மக்களின் சமய கலாசாரத் தனித்துவத்தைப் பாதுகாத்து வளர்ச்சியடையச் செய்வதற்குப் பொருத்தமாக இருக்க முடியாது என்று கருத இடமுண்டு. இதற்கு எதிர்மாறாக இப்பிரதேசத்தில் வாழ்ந்த முஸ்லிம்கள் தமது சமய-கலாசாரத் தனித்துவத்தைப் பாதுகாக்கக் கூடிய ஒரு சமூக, இன சூழல் இப்பிரதேசத்தில் காணப்பட்டது. இனங்களுக்கிடையிலான ஐக்கியம் பற்றிய கண்ணோட்டத்தில் மாந்தைநானாட்டான் பிரதேச இன ஐக்கியம் நல்லதொரு உதாரணமாகப் பயன்படுத்தக் கூடியதொன்றாகும். இந்த உண்மையை வெளிக்கொணரும் நோக்கத்திலும் இந்நூல் எழுதப்பட்டிருக்கின்றது.
எண்ணிக்கையில் சிறுபான்மையினராக இப்பிரதேசமெங்கிலும் சிதறி வாழ்ந்த மாந்தை-நானாட்டான் பிரதேச முஸ்லிம்கள் தாம் சிறுபான்மையினர் என்றோ, தமது சமய கலாசாரத் தனித்துவம் பலவீனமான பரந்து பட்ட குடிப்பரம்பலால் பாதிக்கப்படலாம் என்றோ கிஞ்சித்தும் சிந்திக்கவில்லை. மாறாக இஸ்லாமிய சமய வழிவந்த கலாசாரத் தனித்துவம் மாந்தை-நானாட்டான் பிரதேசம் முழுவதிலும் கிளைவிட்டு வளர்ந்து காணப்பட்டது.
இப்பிரதேசத்தில் தமிழ்-முஸ்லிம் கூட்டு வாழ்க்கை எவ்வாறு சாத்தியமாயிற்று என்பதை விளக்கும் நோக்கத்தில் இந் நுால் எழுதப்பட்டிருக்கின்றது. இந்நூலின் மூலமாக மாந்தை-நானாட்டான் பிரதேச சமூக, இன சூழல் முஸ்லிம்-தமிழ் உறவுக்கு வாய்ப்பாகக் காணப்பட்டது என்ற அம்சம் விளங்கப்படுத்தப்படுகின்றது. ஒரு புறத்தில் முஸ்லிம்

Page 11
சிறுபான்மையினர் தமிழ் பெரும்பான்மையினரோடு இன ஐக்கியத்துடன் இப்பிரதேசத்தில் வாழும் சிறப்பியல்புகளை தன்னகத்தே கொண்டிருந்தார்கள் என்பதை இந்நூல் விளக்குகின்றது. அதே நேரத்தில் தமிழ் பெரும்பான்மை மக்கள் முஸ்லிம் மக்களின் எண்ணிக்கையைவிட அவர்களின் சமய-கலாசாரத் தனித்துவத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து அதை மதித்து வாழ்ந்த வாழ்க்கையின் பிரதிபலனே இப்பிரதேச தமிழ்- முஸ்லிம் கூட்டுறவு வாழ்க்கை என்பதைத் தெளிவு படுத்த இந்நூல் முயல்கிறது.
அதே நேரத்தில் பல நூற்றாண்டு காலம் ஒரே பிரதேசத்தில் ஒன்றாக தமிழ் மக்களோடு ஒற்றுமையாக வாழ்ந்து வந்த முஸ்லிம் மக்கள் சந்தர்ப்ப சூழ்நிலையால் கடந்த ஏழுவருடங்களாகத் தமிழ் மக்களில் இருந்தும் மாந்தைநானாட்டான் பிரதேசத்தில் இருந்தும் பிரிக்கப்பட்டு அதன் விளைவாக அல்லல் பட்டு அகதிகளாக வாழ்கின்றார்கள் என்பதை எடுத்துக் கூறித் திரும்பவும் மாந்தை-நானாட்டானில் தமிழ்-முஸ்லிம் மக்கள் ஒன்றாக வாழ்வதற்கான வழி முறைகளை விளக்கும் நோக்கத்திலும் இந்நூல் எழுதப்பட்டிருக்கின்றது.
மேற் கூறிய நோக்கங்களைக் கொண்ட இந்நூால் எட்டு அத்தியாயங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. முதல் நான்கு அத்தியாயங்களில் மாந்தை-நானாட்டான் பிரதேசம் பற்றியும் அப்பிரதேசப் புவியியல் பொருளாதார, சமூகச் சூழல் பற்றியும் இப்பிரதேசத்தின் வரலாற்றுச் சிறப்புப் பற்றியும் இவ்வரலாற்றுச் சிறப்பில் முஸ்லிம்களின் பங்கு பற்றியும் வரலாற்றுத் தொடர்ச்சியினைக் கொண்ட இப்பிரதேச முஸ்லிம்களின் இன்றைய பொருளாதார, சமூக, குடியிருப்புப் பற்றியும் விளக்கப்பட்டுள்ளது.
அத்தியாயம் 5 இல் மாந்தை-நானாட்டான் பிரதேச முஸ்லிம்களின் துரதிஷ்டவசமான பலவந்த வெளியேற்ற நிகழ்வு பற்றியும், இவ்வெளியேற்றத்தின் பாதிப்புகள் பற்றியும் விளக்கப்படுகின்றது. அத்தியாயம் 6 இல் பலவந்த வெளியேற்றத்திற்குட்பட்ட முஸ்லிம் அகதிகளின் வாழ்க்கை பற்றியும், அத்தியாயம் 7 இல் அகதிகளின் வாழ்க்கையில் அண்மைக்காலத்தில் ஏற்பட்டு வரும் மாற்றம் பற்றியும் விளக்கப்படுகின்றது.
இந்நூல் பல ஆய்வு ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டிருக்கின்றது. மாந்தை-நானாட்டான் பிரதேச முஸ்லிம்கள் பற்றிய ஆய்வொன்றிற்கான அடித்தளம் இந்நூலாசிரியரால் 1989ஆம் ஆண்டு இடப்பட்டது. இது முஸ்லிம்கள் வெளியேற்றப்படுவதற்கு முந்திய காலமாகும். இக்காலத்தில் மாந்தை-நானாட்டான் பிரதேசத்திற்கு நேரடியாக விஜயம் செய்து இப்பிரதேச பொருளாதார, சமூக விபரங்களை எடுக்கக் கூடிய வாய்ப்பு ஆசிரியருக்குக் கிடைத்தது.

1990ஆம் ஆண்டு மாந்தை-நானாட்டான் முஸ்லிம்கள் தமது சொந்த இடங்களை விட்டு வெளியேறி அகதிகளாக வாழ்ந்து வருகின்ற போது இம்மக்களின் அகதி நிலை பற்றிய ஆய்வு ஒன்று இந்நூலாசிரியர் தலைமையில் பேராதனைப் பல்கலைக்கழக ஆய்வுக்குழுவொன்றால் மேற்கொள்ளப்பட்டது. இந்நூலுக்கு அவ்வாய்வில் இருந்து தேவையான விபரங்கள் பெறப்பட்டன.
கடந்த 6 வருடங்களாக வட மாகாண முஸ்லிம் அகதிகள் பற்றிய ஆய்வில் இந்நூலாசிரியர் தொடர்ச்சியாக ஈடுபட்டுள்ளார். 1992 ஆம் ஆண்டிலும், 1994 ஆம் ஆண்டிலும் இவ்வகதிகள் பற்றிய தெளிவான ஆய்வு விபரங்கள் இந் நூலாசிரியரால் திரட்டப்பட்டன. 1996 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வட மாகாண முஸ்லிம் அகதிகளுக்கான இருநாள் செயலமர்வு ஒன்றும் ஆசிரியரின் தலைமையில் நடத்தப்பட்டது. மாந்தை-நானட்டான் முஸ்லிம்கள் பற்றிய இந்நூலுக்குப் பொருத்தமான விபரங்கள் மேற்குறித்த செயலமர்வில் இருந்து பெறப்பட்டன.
மாந்தை-நானாட்டான் பிரதேசம் பற்றிய வரலாற்று விபரங்கள் புள்ளி விபரங்கள், வரலாற்று நூல்கள், நிலஅளவீட்டுப்படங்கள் போன்றவற்றில் இருந்து பெறப்பட்டன. இதைவிட மாந்தை-நானாட்டான் பிரதேசத்தைச் சேர்ந்த அறிவும், அனுபவமும் மதிப்பும் மிக்க 25 முஸ்லிம் பிரமுகர்களிடமிருந்து இப்பிரதேச மக்கள், அவர்களின் பழக்கவழக்கம், வரலாறு, கலாசாரம் போன்ற விபரங்கள் பெறப்பட்டன. இவை இந்நூலை மேலும் வளம் படுத்துவதற்கு உதவியாக இருந்தன.

Page 12
2. மாந்தை-நானாட்டான் பிரதேசம்
2.1 அறிமுகம்
“மாந்தை” “நானாட்டான்' ஆகியவை மன்னார் மாவட்டத்தின் இரண்டு பிரதேசங்களைக் குறித்துக் காட்டும் பெயர்களாகும். இவை இரண்டும் இம் மாவட்டத்திற்குட்பட்ட நிருவாகப் பிரதேசங்களாகக் கொள்ளப்படுகின்றன (படம்-2). காலனித்துவ காலத்தில் இருந்து இவ்விரு பிரதேசங்களும் இரு தனித்துவமான பிரதேசங்களாக நிர்வகிக்கப்பட்டு வந்திருக்கின்றன (Administrative Reports, Verious Years).
இவ்விரண்டு பிரதேசங்களும் நிர்வாக ரீதியாக பிரிக்கப்பட்டிருந்தாலும் இவை ஒரே நிலத் தொடர்ச்சியைக் கொண்டவையகும். மன்னார் மாவட்டத்தின் ஆகக் கூடுதலான நிலப் பரப்பைக் கொண்ட இவ்விரண்டு பிரதேசங்களும் இம்மாவட்டத்தின் பிரதான நிலத்திணிவின் கிழக்கு எல்லையாக அமைந்துள்ளன. பரப்பில் நானாட்டான் பிரதேசத்தை விட மாந்தைப் பிரதேசம் பெரியது. மாந்தை-நானாட்டான் ஆகிய இரு பிரதேசங்களும் கூட்டாக 1290 சதுர கிலோ மீற்றர் பரப்பளவினைக் கொண்டவை. மன்னார் மாவட்டத்தின் மொத்தப் பரப்பில் 65 சதவீத நிலப் பரப்பை உள்ளடக்குகின்றன.
மாந்தை-நானாட்டான் பிரதேசங்கள் நிலத் தொடர்ச்சியோடு வேறு பல அம்சங்களிலும் பொதுமைத் தன்மை கொண்ட பிரதேசங்களாகக் காணப்படுகின்றன. இப்பிரதேசப் பொதுமைத் தன்மைகளில் தரைத்தோற்றம், காலநிலை, மண்வளம், பொருளாதார நடவடிக்கைகள், குடிசனப் பரம்பல் ஆகியவை முக்கியமானவையாகும். புவியியல், பொருளாதார, குடிசன பொதுமைத் தன்மைகளைக் கருத்திற் கொண்டு இவ்விரு நிருவாகப் பிரதேசங்களையும் ஒரு பிரதேசமாகக் கொண்டு ஆராயலாம்.
அதுமட்டுமன்றி மாந்தை-நானாட்டான் பிரதேசத்திற்குள் வாழ்ந்த முஸ்லிம்களின் குடிசன, பொருளாதார, கலாசார அம்சங்களிலும் பல பொதுமைத் தன்மைகளை அவதானிக்கக் கூடியதாக உள்ளது. முக்கியமான பொதுப்
பண்புகளில் ஒன்று எண்ணிக்கையில் சிறுபான்மையினராக மட்டுமல்லாமல்
6

படம் 2 : மன்னார் மாவட்ட உதவி அரசாங்க நிருவாகப் பிரிவுகள், 1990
O 10.8
மூலம்: இலங்கையின் நிருவாக அறிக்கை, 1990

Page 13
புவியியற் தொடர்பற்ற குடியிருப்புக்களிலும் முஸ்லிம்கள் வாழ்ந்தமையாகும். இது பல கண்ணோட்டங்களில் தனித்துவப் பண்பாக நோக்கக் கூடியது. மன்னார் மாவட்டத்தில் ஏனைய பிரதேச முஸ்லிம் செறிவுகளோடு ஒப்பிடும் போது மேற்குறிப்பிட்ட முஸ்லிம் குடிசனப் பரம்பல் சமய-இன அபிவிருத்தி நோக்கில் சில சாதகமற்ற அம்சங்களையும், அதே நேரத்தில் பல சிறப்புப் பண்புகளையும் கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
மேற்குறித்த காரணங்களால் வட மாகாண முஸ்லிம்கள் பற்றிய இந்நூல் தொடரில் மாந்தை-நானாட்டான் பிரதேச முஸ்லிம்கள் பற்றிய அம்சம் தனித்து நோக்கப்படுகின்றது.
2.2 புவியியலும் பொருளாதாரமும்
இலங்கையின் வடமேற்குப் பகுதியில் மாந்தை-நானாட்டான் பிரதேசம் அமைந்துள்ளது. காலநிலை ரீதியாக வரண்ட வலயத்திற்குட்ப்ட்ட பிரதேசமாக இது காணப்படுகின்றது. இப்பிரதேசத்தின் வருடாந்த மொத்த மழை வீழ்ச்சி 50 அங்குலத்திற்குக் குறைவாகும். வடகீழ்ப் பருவப் பெயர்ச்சிக் காற்றே இப்பிரதேசத்திற்கு மழையைக் கொடுக்கும் பிரதான காரணியாகும். ஒக்டோபர், நவம்பர், டிசெம்பர் ஆகிய மாதங்களே இப்பிரதேசத்தின் மழைவீழ்ச்சிக் காலமாகும்.
இப்பிரதேசத்தின் சராசரி வெப்பநிலை 80 பாகை பரனைற்றுக்கும் அதிகமாகக் காணப்படுவதோடு அதி கூடிய சாரீரப்பதனையும் கொண்ட காலநிலைத் தன்மைகளையுடையதாகக் காணப்படுகின்றது.
குறைவான வருடாந்த சராசரி மழைவீழ்ச்சியும், உயர்ந்த வெப்பநிலையும் இப்பிரதேசத்தின் நெல் விவசாய நடவடிக்கைகளுக்குச் சாதகமான காலநிலை அம்சங்கள் அல்ல. இப்பிரதேசத்தில் கிடைக்கப் பெறுகின்ற மழைவீழ்ச்சியைப் பயன்படுத்தி வானம்பார்த்த நெற்செய்கையும், சேனைப்பயிர்ச் செய்கையுமே செய்ய முடியும். இப்பிரதேசத்தில் நெல் விவசாயத்தை வெற்றிகரமாக்க நீர்தேக்கங்களை உருவாக்கி மழைகால நீரைத் தேக்கி வைத்து நெல் விவசாயம் செய்வது வழமையாகக் காணப்பட்டது. இந்நோக்கங்களுக்காக இப்பிரதேசத்தின் முன்னோர்கள் பல பெரிய சிறிய குளங்களை உருவாக்கி நெல் விவசாயம் செய்தார்கள். இப்பிரதேசத்தை ஊடறுத்துச் செல்லும் ஆறுகள் பலவற்றிலிருந்து நீர்ப்பாசனக் குளங்களுக்குத் தேவையான நீரைப் பெறுகின்ற வழமை காணப்பட்டது. மேற்குறிப்பிட்ட நீர்ப்பாசன முறைகள் இப்பிரதேசத்தின்
ஒருபருவ நெற் செய்கையைக் கருத்திற் கொண்டு ஏற்படுத்தப்பட்டன.

ஒருபருவ நெற்செய்கையின் அறுவடையை உறுதிப்படுத்தவும், மறுபருவத்தில் விவசாய நடவடிக்கைகளைத் தொடர்வதற்காகவும் நீர்ப்பாசன முறைகளை அபிவிருத்தி செய்வதற்கான முயற்சி வரலாற்றுக் காலத்தில் இருந்து இப்பிரதேசத்தில் எடுக்கப்பட்டு வந்திருக்கின்றது. இம்முயற்சிகளில் முக்கியமானதொன்றாக கி. மு. நான்காம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாக நம்பப்படும் இப்பிரதேசத்தில் அமைந்துள்ள கட்டுக்கரைக் குளத்தைக் குறிப்பிடலாம் (De Silva, 1981), இக்குளம் 4550 ஏக்கர் மொத்த நீர்தாங்கு பரப்பைக் கொண்டதாகக் காணப்படுகின்றது. பரப்பு ரீதியாக பெரிய நீர்தாங்கு பிரதேசத்தைக் கொண்ட கட்டுக்கரைக் குளம், இப்பிரதேசப் பருவகால மழை நீரைப் பாதுகாப்பாகத் தேக்கி வைத்துக் கொள்ளக் கூடிய பெரிய குளமாகும். பருவ காலத்தில் கட்டுக்கரைக் குளத்தில் தேக்கி வைக்கப்படும் மழை நீரை, நெல் விவசாய காலத்தில் பயிர்களுக்கு வழங்கக் கூடிய முறையான நீர்ப்பாசனத் திட்டம் ஒன்றும் இதனை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப் பட்டிருந்தது.
இலங்கையின் பெரிய நீர்ப்பாசனத் திட்டங்களில் கட்டுக்கரைக் குளமும் ஒன்றாகும். இக்குளத்தில் மிகவும் திட்டமிட்ட அடிப்படையில் பெரிய நீர்ப்பாசனக் கால்வாய்கள் மூலமாக இப்பிரதேசத்தில் பரவலாகக் காணப்படுகின்ற சிறிய நீர்ப்பாசனக் குளங்களுக்கு நீரை வழங்குவதற்கு ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. கிராமியக் குளங்களில் இருந்து நீர்ப்பாசன நீர் சிறு நீர்ப்பாசன முறை மூலமாகத் திட்டமிட்ட அடிப்படையில் நெல் நிலங்களுக்கு வழங்குவதற்கும் ஒழுங்குகள் செய்யப்பட்டிருந்தன.
கட்டுக்கரைக்குள நீர்ப்பாசனத்திட்டம் மிக வெற்றிகரமாகக் காணப்பட்டமைக்கு இப்பிரதேசத்தின் தரைத்தோற்ற அமைப்பும் காரணமாக இருந்தது. உயர வேறுபாடுகள் குறைவான இப்பிரதேசம் கடல்மட்டத்தை நோக்கி படிப்படியாக சரிந்து செல்லும் போக்கினைக் கொண்டதாகக் காணப்பட்டது. சாதகமான இத்தரைத்தோற்றத் தன்மையைப் பயன்படுத்திக் கட்டுக்கரைக்குள நீர் கிராமக் குளங்கள் மூலமாக இப்பிரதேச நெல்நிலங்களுக்கு
கட்டம் கட்டமாக வழங்கும் முறை இங்கு காணப்பட்டது.
இப்பிரதேசத்தின் நீர்ப்பாசனச் சிறப்புக் களில் மற்றுமொன்று ܨܦ கட்டுக்கரைக்குளம் இப்பிரதேசத்தின் பிரதான நதியான அருவியாற்றோடு நீாப்பாசனக் கால்வாயொன்றின் மூலமாக இணைக்கப் பட்டிருந்தமையாகும்.
அருவியாறு இலங்கையின் நீண்ட நதிகளில் ஒன்றாகும். இந்நதி மத்திய

Page 14
மலைநாட்டின் வடக்கேயுள்ள மாத்தளைக் குன்றுகளில் இருந்து வருகின்ற கிளை நதிகளோடு வட மத்திய மாகாண நீர்ப்பாசனக் குளங்கள் மூலமாக இணைக்கப்பட்டுள்ளது. வடமத்திய மாகாணக் குளங்களின் மேலதிக நீரும், பருவகால மழைவீழ்ச்சி நீரும் அருவியாறு நீர் பெறும் மூலங்களாகக் காணப்படுகின்றன.
அருவியாறு மேற்கு நோக்கிய தனது ஓட்டத்தில் முருங்கனுக்கு அண்மையில் “தேக்கம்” என்ற இடத்தில் ஒரு அணை மூலமாகத் தடுக்கப்பட்டு அங்கிருந்து ஆற்றின் வலது கரையோர நீர்ப்பாசனக் கால்வாய் மூலமாக கட்டுக்கரைக் குளத்தோடு இணைக்கப்பட்டுள்ளது. அருவியாற்று நீர் கட்டுக்கரைக் குளத்திற்கு ஒரு வரப் பிரசாதமாகும். மாந்தை-நானாட்டான் பிரதேச நெல் விவசாய வெற்றிக்கு மிக அடிப்படையான ஒன்றாக அருவியாற்றின் மேலதிக நீர் பயன்படுத்தப்படுகின்றது. இந்நீரைக் கொண்டு கட்டுக்கரைக்குளம் காலபோகத்திலும் (ஜனவரி, பெப்ரவரி மாதங்கள்) சிறுபோகத்திலும் (ஏப்பிரல், மே மாதங்கள்) நெல் விவசாயச் செய்கைக்கும் நீாப்பாசனம் செய்யக் கூடியதாகவுள்ளது.
மாந்தை-நானாட்டான் புவியியல்-பொருளாதாரச் சிறப்புக்களில் மற்றொரு அம்சம் இப்பிரதேசத்தின் கரையோரமும் கடல் வளப் பொருளாதார நடவடிக்கைகளுமாகும். இப்பிரதேசம் ஏறக்குறைய 30 கிலோ மீற்றர் கடற்கரையைக் கொண்டுள்ளது. இப்பிரதேசம் சார்ந்த கடற் பகுதி ஆழம் குறைந்ததாகவும், மீன் பிடித் தொழிலுக்கு வருடம் முழுவதும் பொருத்தமானதாகவும் உள்ளது. இப்பிரதேசத்தின் கரையோரக் கிராமங்களில் வாழ்ந்த மக்கள் மீன்பிடியைத் தமது முழுநேரத் தொழிலாகக் கொண்டிருந்தனர். கரையோர மீன்பிடியோடு, ஆழ்கடல் மீன்பிடியும் இங்கு முக்கியத்துவம்
பெற்றிருந்தது.
ஆழம் குறைந்த இப்பிரதேசத்தில் சங்கு குளித்தல், கடலட்டை எடுத்தல் போன்ற கடல் வளப் பொருளாதார நடவடிக் க ைகள்
முக்கியமானவையாகக் காணப்படுகின்றன. இப்பிரதேசத்தில் நவம்பர், டிசெம்பர் மாதங்களில் சங்கு குளித்தலும், டிசெம்பர், ஜனவரி மாதங்களில் அட்டை எடுத்தலும் நடை பெறுகின்றன. இப் பொருளாதார நடவடிக்கைகள் இங்கு சிறப்பாக அமைவதற்கு இப்பிரதேசத்தின் சாதகமான புவியியற் தன்மைகளே
காரணமாகும்.
10

இலங்கையின் ஏனைய பிரதேசங்களோடு ஒப்பிடுகின்ற போது மன்னார் மாவட்டமும், அதே நேரத்தில் மன்னாரின் மாந்தை-நானாட்டான் பிரதேசமும் பொருளாதார ரீதியாகப் பின்தங்கிய பிரதேசமாகக் கணிக்கப்பட்டு வந்தது. விவசாய, மீன்பிடி வளங்கள் தாராளமாக இப்பிரதேசத்தில் காணப்பட்ட போதும் பொருளாதார ரீதியாகப் பின்தங்கியிருந்தமைக்குப் பல காரணங்களைக் குறிப்பிடலாம். அதில் மிக முக்கியமானது அரசியல் புறக்கணிப்பாகும். காலனித்துவ காலத்தில் ஏற்றுமதி வர்த்தகத்திற்குப் பொருத்தமற்றதாகக் காணப்பட்ட இப்பிரதேசத்தின் பொருளாதாரத்தை விருத்தி செய்வதற்கு முயற்சிகள் எடுக்கப்படவில்லை. சுதந்திர காலத்திற்குப் பின்னரும் கூட சிறுபான்மை மக்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட இப்பிரதேசம் மத்திய அரசாங்கத்தின்
பொருளாதாரப் புறக்கணிப்புக்கு உள்ளாயிற்று.
2.3 குடிசனம்
பரந்த மாந்தை-நானாட்டான் பிரதேசத்தில் மிக அதிகமான பகுதி குடிச் செறிவற்றுக் காணப்படுகின்றது. இப்பிரதேசத்தின் விவசாயப் பொருாளாதரத்தின் அடிப்படையான கட்டுக்கரைக் குளத்தைச் சூழ்ந்த பிரதேசத்தில் ஒப்பீட்டு ரீதியாக குடிச் செறிவு கூடுதலாகக் காணப்படுகின்றது. இங்கும் கூட குள நீர்ப்பாசனத்தை அண்டிய பிரதேசங்களில் விவசாயக் கிராமங்கள் அமைவுற்றுள்ளன. அதனால் இப்பிரதேசத்தின் விவசாயத்திற்கு வாய்ப்பான கிராமியக் குடியிருப்புக்களில் மக்கள் பரந்து வாழ்ந்தார்கள்.
1981ஆம் ஆண்டு குடிசனக் கணிப்பீட்டின்படி மாந்தை-நானாட்டான் பிரதேச மொத்த சனத்தொகை 43,782 பேராகும். மன்னார் மாவட்டத்தின் மொத்த சனத்தொகையோடு ஒப்பிடுகின்றபோது இது 41 சதவீதமாகும். இவர்களில் மிகப் பெரும்பான்மையினர் கட்டுக்கரைக்குளத்தின் சூழல் பிரதேசங்களில் வாழ்ந்தார்கள். ஏனைய பிரதேசங்களில் குடிசனம் மிகவும் சிதறிக் காணப்பட்டது. மாந்தை-நானாட்டான் ஆகிய இரு நிர்வாகப் பிரதேசத்தையும் ஒப்பிடும் போது நானாட்டான் பிரதேசக் குடிச்செறிவு கூடுதலாகும் (படம் -3).
இப்பிரதேசத்தில் பல சமயங்களையும் சேர்ந்த மக்கள் வாழ்ந்தார்கள். சமய ரீதியாக இந்துக்களும், ரோமன் கத்தோலிக்கர்களும் ஏறக்குறைய சமமான
எண்ணிக்கையில் காணப்பட்டார்கள். இன ரீதியாக இந்துக்களும், ரோமன்
11

Page 15
தொகை
10 கிமீ
N
O
甄邯 調나, 活 小
s= –' . 위:: |-위 3 35的 s. 斑鬣 亦正 圆 B} E#
& 200 > E3 aso - 1 oo [II] 25 - 5o 圆a°<
குடிசனக் கணிப்ரு, 1987
Сурвиргib г
12
 
 
 
 

கத்தோலிக்கர்களும் தமிழர்களாவர். இங்கு இஸ்லாம் சமயத்தைப் பின்பற்றும் முஸ்லிம்களும் வாழ்ந்தார்கள். இப்பிரதேசத்தின் மொத்த சனத்தொகையில் முஸ்லிம்கள் 16 சதவீதத்தினராகக் காணப்பட்டார்கள். முஸ்லிம்கள் இப்பிரதேசத்தில் இன ரீதியான முதலாவது சிறுபான்மையினராக அடையாளம் காணப்பட்டனர். மாந்தை-நானாட்டான் பிரதேச சமய ரீதியான குடிசனப் பரம்பலை அட்டவணை-1 காட்டுகின்றது.
இப்பிரதேச சமய-இன ரீதியான குடிசனப் பரம்பலின் தனித்துவப் பண்புகள் சிலவற்றை அடையாளம் காணக் கூடியதாக இருக்கின்றது. இப்பிரதேசத்தின் தென் பகுதியில் கிறிஸ்தவ மக்கள் செறிவாகவும், வட பகுதியில் இந்துக்கள் பெரும் பான்மையாக பரந்தும் வாழ்ந்தார்கள். முஸ்லிம் மக்களைப் பொறுத்தவரையில் தெற்காக கிறிஸ்தவ மக்களின் குடியிருப்புக்களோடு கலந்தும் அத்துடன் வடபகுதியில் இந்து மக்களின் செறிவுக்குத் தெற்காக விடத்தல்தீவு, பெரியமடு, விளாங்குளி ஆகிய கிராமங்களிலும் வாழ்ந்தார்கள்.
2.4 முஸ்லிம் குடியிருப்புகள்
இப்பிரதேச முஸ்லிம் மக்களினதும், அவர்களின் குடியிருப்புக்களினதும் பரம்பல், தனித்துவத் தன்மைகளுக்கு முக்கிய கவனம் கொடுக்கப்பட்டு இந்நூலில் ஆராயப்படுகின்றது. அந்த வகையில் இப்பிரதேச முஸ்லிம்களினதும், அவர்களின் குடியிருப்புக்களினதும் சிறப்புப் பண்புகளைக் கவனமாகப் பரிசீலிக்க வேண்டியுள்ளது.
இஸ்லாமிய சமயத்தைப் பின்பற்றுகின்ற மக்களே முஸ்லிம்கள் என்று அழைக்கப்படுகின்றனர். மாந்தை-நானாட்டான் பிரதேச முஸ்லிம் மக்களின் மொழி இப்பிரதேசத்தில் வாழ்கின்ற ஏனைய இந்து, கிறிஸ்தவ மக்கள் பேசுகின்ற மொழியான தமிழேயாகும். மொழி ரீதியாக இப்பிரதேசத்தின் ஏனைய மக்கள் குழுக்களோடு பொதுமைத் தன்மையை முஸ்லிம்கள் கொண்டிருந்தாலும் இன ரீதியாகத் தாம் தமிழ் பேசும் இந்து, கிறிஸ்தவ மக்களில் இருந்தும் தனித்துவமானவர்கள் என்று அடையாளப் படுத்தப்படுத்திக் கொள்ள விரும்பினார்கள்.
மாந்தை-நானாட்டான் பிரதேசத்தில் மாத்திரமல்லாமல் இலங்கையில் வாழ்ந்த இஸ்லாமிய சமயத்தைப் பின்பற்றுகின்ற மிகப் பெரும்பான்மையான
மக்கள் வழமையில் "சோனகர்’ (Moors) என்ற இனப் பெயரைக் கொண்டு
13

Page 16
அழைக்கப்பட்டனர். இவர்கள் அரச ஆவணங்களிலும் அவ்வாறே குறிப்பிடப் பட்டுள்ளனர். ஆய்வுக்குட்பட்ட பிரதேசத்தில் வாழ்ந்த முஸ்லிம்களும் சமய, கலாசார அடிப்படையில் தம்மை ஏனைய மக்களில் இருந்து வேறுபடுத்தித் தனித்துவமாக நோக்குகின்ற வழமையும் காணப்பட்டது.
இவ்வாறு முஸ்லிம் மக்கள் செறிவாக வாழ்ந்த பிரதேசங்கள் முஸ்லிம் கிராமங்கள் என்று அழைக்கப்பட்டன. இக்கிராமங்கள் இஸ்லாமிய சமயத்தோடு சம்மந்தப்பட்ட பள்ளிவாயில், அரபு மதுரசா, பாடசாலைகள் போன்ற பல சமய நிலையங்களைக் கொண்டு காணப்பட்டன. இந் நிலையங்கள் அக்குடியிருப்பில் வாழ்ந்த மக்களின் இஸ்லாமிய வழிவந்த பொதுமைப் படுத்தப்பட்ட சமய, கலாசார அபிவிருத்திக்குக் காரணமாய் அமைந்தன. இஸ்லாமியர் மத்தியில் நடைபெற்ற திருமணங்கள், குடும்ப, சமூக உறவுகளை சமய-கலாசார வட்டத்திற்குள் வைத்திருக்கக் காரணமாயிற்று. இவை இணைந்த அடிப்படையிலான அம்சங்கள் ஒரு கிராமிய சமுதாயம் தம்மை இஸ்லாமிய தனித்துவத்தைக் கொண்ட மக்களாக அடையாளப் படுத்துபவையாகக் அமைந்தன.
மாந்தை-நானாட்டான் பிரதேசத்தில் இத்தகைய முஸ்லிம் குடியிருப்புகள் அல்லது கிராமங்களை அடையாளம் காணக்கூடியதாக இருக்கின்றது. இப்பிரதேசத்தில் சமய ரீதியான குடியிருப்புகளின் பரம்பலை படம்-4 காட்டுகின்றது. இதில் நாம் ஏற்கனவே அடையாளம் கண்ட இந்து, கிறிஸ்தவ, முஸ்லிம் குடியிருப்புக்களின் தனித்துவப் பண்புகளைத் தெளிவாக அவதானிக்கக் கூடியதாக இருக்கின்றது.
மாந்தை-நானாட்டான் பிரதேச முஸ்லிம் குடியிருப்புகளில் சிறப்புத் தன்மைகள் காணப்படுகின்றன. ஏற்கனவே குறிப்பிட்டது போல இக்குடியிருப்புகள் இப்பிரதேசத்தில் பரவலாகக் காணப்படுகின்றமை ஒரு சிறப்பம்சமாகும். பரந்த ரீதியில் முஸ்லிம்கள் இப்பிரதேசத்தில் வாழ்கின்ற தன்மையை 1921 ஆம் ஆண்டு குடிசனக் கணிப்பீடு எடுத்துக் காட்டுகின்றது. மாந்தை-நானாட்டான் பிரதேசத்தில் அக்காலத்தில் காணப்பட்ட 8 உடையார் பிரிவுகளுக்குள் 58 கிராமங்களில் முஸ்லிம்கள் சிலவற்றில் செறிவாகவும் பலவற்றில் சிறிய தொகையிலும் வாழ்ந்திருக்கின்றார்கள் என்று அறியக் கூடியதாக இருக்கின்றது. 1921 இல் முஸ்லிம்கள் வாழ்ந்த கிராமங்களையும் அக்கிராமங்களின் குடிசன விபரங்களையும் பின்னிணைப்பு-1 தருகின்றது.
14

محصے
படம் 4 : 1901 இல் சமய ரீதியாக கிராமங்களின்
பரம்பல்
ஐ கிறிஸ்தவ கிராமம் ஐ இந்து கிராமம் இமுஸ்லிம் கிராமம்
6.
N ༄། ། VA O 5 éluß M -— V wa
V ܠܐ صے سے ہے۔ . . . . ۔ یہی ہے “۔ குறிப்பு : கிறிஸ்தவ இந்து மக்கள் L--" நுாறு பேருக்கு அதிகமாக வாழ்ந்த صے கிராமங்கள் மாத்திரம் இங்கு காட்டப்பட்டுள்ளன.
Cypavő : Delhan, 1906.
15

Page 17
1990 ஆம் ஆண்டில், மாந்தை-நானாட்டான் பிரதேசத்தில் பெரிதும், சிறிதுமான 12 குடியிருப்புக்களில் முஸ்லிம் மக்கள் வாழ்ந்தார்கள். இப்பிரதேசத்தில் முஸ்லிம்கள் வாழ்ந்த முக்கியமான குடியிருப்புகளாவன விடத்தல்தீவு, பெரியமடு, வட்டக்கண்டல், விளாங்குளி, ரசூல்புதுவெளி, இலந்தைமோட்டை, பூவரசங்குளம், நொச்சிகுளம் போன்றவையாகும். மேலும் பல கிராமங்களிலும் முஸ்லிம்கள் கிறிஸ்தவ, இந்து மக்களோடு கலந்து வாழ்ந்தார்கள். முஸ்லிம் குடியிருப்புகளில் மிகப் பெரும்பான்மையானவை இந்து, கிறிஸ்தவ சமயக் குடியிருப்புகளால் சூழப்பட்டுக் காணப்பட்டன. முஸ்லிம்கள் செறிந்து வாழ்ந்த விடத்தல்தீவுக் கிராமத்திலும் கூட இந்து கிறிஸ்தவ மக்கள் சேர்ந்து வாழ்ந்த இனப்பரம்பல் தன்மையை அவதானிக்கக் கூடியதாக இருந்தது. அதே நேரத்தில் ஆண்டான்குளம், முருங்கன், அடம்பன், உயிலங்குளம் போன்ற குடியிருப்புகளில் முஸ்லிம்கள் எண்ணிக்கையில் சிறியளவில் வாழ்ந்தார்கள்.
மாந்தை-நானாட்டான் பிரதேச முஸ்லிம் மக்களினதும், அவர்களின் வாழ்க்கை முறைகளினது தனித்துவங்களை மேலும் விளங்கிக் கொள்ள இப்பிரதேச முஸ்லிம் குடியிருப்புகளை மூன்று செறிவுகளாக வகைப்படுத்தி நோக்குவது பொருத்தமானதாகக் காணப்படுகின்றது. அம் மூன்று குடியிருப்புச் செறிவுகளாவன :
1. விடத்தல்தீவு-பெரியமடுப் பிரதேசம் 2. கட்டுக்கரைக்குளத்திற்குட்பட்ட மாந்தைப் பிரதேசம்
3. கட்டுக்கரைக்குளத்திற்குட்பட்ட நானாட்டான் பிரதேசம்
மேலே அடையாளப்படுத்தப்பட்ட முஸ்லிம் செறிவுகள் இந்நூலின் அத்தியாயம் 4இல் விரிவாக ஆராயப்பகின்றன.
16

3. மாந்தை-நானாட்டான் முஸ்லிம்கள்
3.1 வரலாறு
வெளிநாடுகளில் முதன் முதலாக அறியப்பட்ட இலங்கைப் பிரதேசம் மன்னார் என்று நம்பப்படுகின்றது. வெளி நாடுகளுடன் இலகுவாகத் தொடர்பு கொள்ளக் கூடிய ஆழமற்ற கடற் பிரதேசத்தை மன்னார் கொண்டிருந்தமையே இதற்கு முக்கியமான காரணமாகும். அது மட்டுமன்றி வரலாற்றுக் காலத்தில் அநுராதபுரத்தை விரைவாக அடையக் கூடிய இறங்கு துறையையும் மன்னார் கொண்டிருந்தது (Perera, 1951), இலங்கை வரலாற்றின் “மிக ஆரம்ப காலத்தில் அறியப்பட்ட குடியிருப்புக்கள் எல்லாம் அநுராதபுரம், மன்னார், புத்தளம் ஆகிய முக்கோணப் பிரதேசத்திலேயே காணப்பட்டன” என்று வரலாற்று நூல்கள் குறிப்பிடுகின்றன (Hocart, 1924), இவ்வாறு இலங்கையின் வரலாற்றில் ஒரு முக்கியமான பிரதேசமாக மன்னார் காணப்பட்டிருக்கின்றது.
மன்னாரின் வரலாற்றில் மாந்தைப் பிரதேசம் தனித்துவமான இடத்தைப் பெற்றிருக்கின்றது. இப்பிரதேசம் மாந்தை என்று பெயர் பெற்றமைக்குப் பல சிறப்பான வரலாற்றுக் காரணங்கள் காணப்படுகின்றன. அவற்றில் இப்பிரதேசம் வரலாற்றுக் கால வர்த்தக மையமாகக் காணப்பட்டமை மிக முக்கியமான காரணமாகும். செனவிரட்ன மாந்தையின் வரலாற்று முக்கியத்துவத்தைப் பற்றிக் குறிப்பிடும் போது பின்வருமாறு குறிப்பிடுகின்றார். “மாந்தை இன்று ஒரு கைவிடப்பட்ட நகரமாகக் காணப்படலாம். ஆனால் ஆயிரக்கணக்கான வருடங்களாக உலகின் பல்வேறு பிரதேச மக்கள் வந்து சென்ற பிரதேசமாக இது காணப்பட்டது' (Senaviratna, 1979), இப்பிரதேசம் வரலாற்றுக் காலத்தில் உலகின் வர்த்தக மையங்களில் ஒன்றாகக் காணப்பட்டது என்பதற்கு நிறைய ஆதாரங்கள் உள்ளன.
மாந்தைப் பிரதேசத்தின் மற்றுமொரு வரலாற்றுக் காலச சிறப்பு, இப்பிரதேசத்தின் பின்னணி நிலத்தில் அமைக்கப்பட்டிருந்த கட்டுக்கரைக்குளமென அழைக்கப்படும் நீர்ப்பாசனக் குளமாகும். இக்குளம் தாதுசேன மன்னனால் சிறிஸ்துவுக்குப் பின் 457-477 காலத்தில் கட்டப்பட்டதென நம்பப்படுகின்றது (De Silva, 1981), சிங்கள வரலாற்று நூல்களில் இக்குளம் “யோதவெவ'
17

Page 18
என்று அழைக்கப்பட்டது. வரலாற்றுக் காலத்தில் இருந்து இன்று வரை இப்பிரதேச விவசாயப் பொருளாதாரத்தின் அடிப்படை மூலமாக கட்டுக்கரைக் குளம் இருந்து வந்திருக்கின்றது.
மாந்தையின் வரலாற்றுச் சிறப்புக்கான மற்றுமொரு காரணம் திருக்கேதீஸ்வர இந்துக் கோவிலாகும். இந்து சமயப் பக்தர்களின் புனிதப் பிரதேசமாக இது வரலாற்றுக் காலத்திலிருந்து வந்திருக்கின்றது (Sithambakam, 1992). இக்கோவில் புகழ்பெற்ற தலங்களில் ஒன்றாகும்.
*
3.2 முஸ்லிம்களின் வரலாறு
மாந்தையின் வரலாற்றுப் பெருமையில் சிங்களவர், தமிழர், முஸ்லிம்கள் ஆகிய மூவின மக்களுக்கும் பங்குண்டு. இப்பிரதேசத்தின் வர்த்தக, விவசாயப் பொருளாதரச் சிறப்புக்கள் தமிழ், சிங்கள மன்னர்களை இப்பிரதேசத்தின் ஆதிக்கத்தில் அக்கறை செலுத்த வைத்தது. தமிழ் மக்கள் இப்பிரதேசத்தின் பாரம்பரியக் குடிகளாகக் கொள்ளப்பட்டாலும், சிங்கள மொழி, கலாசாரத் தொடர்புகளும் வரலாற்றுக் காலத்தில் இப்பிரதேசத்தில் இல்லாமல் இல்லை.
இப் பிரதேசத்துடனான முஸ்லிம்களின் தொடர்பு மிகவும் தனித்துவமானதாகும். இப்பிரதேசத்தின் நீண்ட வரலாற்றில் சில சந்தர்ப்பங்களில் படையெடுப்பாளர்களாக முஸ்லிம்கள் அறியப்பட்டிருந்தாலும் (Mudaiyar, 1930), எஞ்சிய காலமெல்லாம் இவர்கள் வர்த்தகர்களாக முத்து, சங்கு ஆகிய கடல் திரவியங்களோடு தொடர்புடைய தொழில்களில் ஈடுபடுபவர்களாக இப்பிரதேசத்துடன் தம்மை இணைத்துக் கொண்டார்கள். 'அண்மைக்கால தொல் பொருள் ஆய்வுச் சான்றுகளின்படி மாந்தையின் வரலாற்றுகால மகாதிட்ட (மாதோட்டம்) துறைமுகமானது பாரசீக குடா துறைமுகங்களுடன் வர்த்தக ரீதியாக மிகச் சிறந்த முறையில் இணைக்கப் பட்டிருந்தது’ (Kiribamune, 1986).
அராபிய முஸ்லிம்கள் வர்த்தகர்களாக மாந்தைத் துறைமுகத்துடன் மிக நீண்ட காலமாகத் தொடர்புகளை வைத்திருந்தார்கள் என்று வரலாற்று நூல்கள் எடுத்தியம்புகின்றன. செனவிரட்ன என்ற வரலாற்று ஆசிரியர் மாந்தையுடனான முஸ்லிம்களின் வரலாற்றுக் கால வர்த்தகத் தொடர்புகளைப் பின்வருமாறு குறிப்பிடுகின்றார்.
"மாதோட்ட துறைமுக நகரத்தில் இஸ்லாமிய சமயத்தைத் தழுவிய அராபிய முஸ்லிம் வர்த்தகர்களின் சந்ததியினர் மிக
18

நீண்ட காலமாக வாழ்ந்தார்கள். இவர்களின் வீடுகள் டமஸ்கஸ், பக்தாத் ஆகிய நகரங்களில் காணப்பட்ட வீடுகளுக்கு ஒப்பான கட்டிடக் கலை யைக் கொண்டவையாகக் காணப்பட்டன. இவர்கள் மிகவும் வசதியான வர்த்தகர்களாக இருந்தார்கள். இவர்களின் வீடுகள் மாடி அமைப்பினையும், கூரைகள் தட்டையானதாகவும், காற் றோட்டம் கொண ட உப் பரிகை களைக் கொண்டவையாகவும் இருந்தன” (Seneviratne, 1979)
முஸ்லிம் வர்த்தகர்கள் மாதோட்டத் துறைமுகத்தினையும் அதன் சூழற் பிரதேசத்தையும் தமது உள்நாட்டு வர்த்தக நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தினார்கள். இந்து சமுத்திரத்தினுடாக வர்த்தகத்தில் அராபிய முஸ்லிம்கள் முன்னணி வகித்த 12-15 ஆம் நுாற்றாண்டு காலத்தில் இப்பிரதேசத்துடனான முஸ்லிம்களின் தொடர்பு பன்மடங்காகியது. சேர் அலெக்சாந்தர் ஜோன்சனின் கருத்துப் படி இக்காலக் கட்ட மன்னார்ப் பிரதேசம் முஸ்லிம்களின் வர்த்தக மையமாகக் (Emporium of Trade) காணப்பட்டது (John Ston, 1827). மாதோட்டத் துறைமுகம் இவர்களின் கப்பல் இறங்கு துறையாகவும், வர்த்தகப் பண்டக சாலையாகவும் காணப்பட்டது. முஸ்லிம்களால் இலங்கையின் உள்நாட்டு, வெளிநாட்டு வர்த்தகமும் ஓங்கி வளர்ந்தது.
மன்னாருடனான முஸ்லிம்களின் வரலாற்றுக் காலத் தொடர்பு ஏற்றுமதி இறக்குமதி வர்த்தகத்தோடு மட்டுமல்லாமால் முத்துக்குளித்தல், சங்கு எடுத்தல் போன்ற நடவடிக்கைகளுடனும் தொடர்புபட்டதாகக் காணப்பட்டது. முஸ்லிம்கள் மன்னாரின் தெற்குக் கரையோரமாக முத்துக்குளித்தல் நடவடிக்கைகளில் சுழியோடிகளாகவும், படகோட்டிகளாகவும், வர்த்தகர்களாகவும் தம்மை ஈடுபடுத்தியிருந்தார்கள் (Van, 1888 and Steuart, 1843), ஏறக்குறைய இதேபோன்ற நடவடிக்கைகளில் மன்னாரின் வட புறமான மாந்தைப் பிரதேசத்தில் முஸ்லிம்கள் ஈடுபட்டார்கள். இப்பிரதேசக் கடல் வலயத்தில் முஸ்லிம்களின் வரலாற்றுக் கால ஈடுபாடு சங்கு குளித்தலாகக் காணப்பட்டது. உலகின் மிக முக்கியமான சங்கு, சிப்பிகளின் இருப்பிடமாக மாந்தைப் பிரதேசம் சார்ந்த கடல் வலயம் காணப்பட்டது. இப்பிரதேசத்தின் சங்குத் தொழில் பற்றி துவினம் என்ற வரலாற்று ஆசிரியர் பின்வருமாறு குறிப்பிடுகின்றார்.
“மன்னாரின் வட பிரதேசம் சங்கு குளிப்பதற்கு மிகவும்
பிரபல்யமாகக் காணப்பட்டது. அராபியாவில் இருந்தும்,
19

Page 19
|
கீழைக்கரையில் இருந்தும் வந்த முகம்மதிய சுழியோடிகள் இத்தொழிலில் மிகக் கூடுதலாக ஈடுபட்டார்கள். பின்னர் இப்பிரதேசத்தில் இவர்கள் குடியேறினார்கள்’ (Twynan, 1902)
மேற்குறித்த சில வரலாற்று ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்டு நோக்குகின்ற போது முஸ்லிம்கள் மாந்தைப் பிரதேசத்துடன் மிக நீண்ட காலத் தொடர்பு கொண்டவர்களாக, இப்பிரதேசத்தின் வரலாற்றோடு பின்னிப் பிணைத்தவர்களாக இருந்தார்கள் என்றும் அறியக் கூடியதாக இருக்கின்றது. இப்பிரதேசத்துடனான முஸ்லிம்களின் தொடர்ச்சியான வரலாற்றுத் தொடர்பு இலங்கையுடனான காலனித்துவ ஆட்சியாளர்களின் தொடர்பால் வெகுவாகக் குறையத் தொடங்கியது. போத்துக்கேய, ஒல்லாந்த காலனித்துவ ஆட்சியாளர்கள் இப் பிரதேச முஸ்லிம்களுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கைகளை எடுத்தனர். முஸ்லிம்களின் வர்த்தக நடவடிக்கைகளை மட்டுப்படுத்தினர். அவர்களின் சமய, கலாசார வளர்ச்சிக்குப் பாதகமாக இருந்தனர். காலனித்துவ ஆட்சியாளர்களினால் முஸ்லிம்களுக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் முஸ்லிம்களை இப்பிரதேசத்தின் கரையோரங்களில் இருந்து உள்நாடு நோக்கி இடம் பெயரச் செய்தது.
ஆனால் மன்னார்க் கரையோரம் சார்ந்த பிரதேசங்களில் முஸ்லிம்களின் வரலாற்றுத் தொடர்ச்சி எல்லாக் காலங்களிலும் காணப்பட்டது என்பதற்கான ஆதாரங்கள் எமக்குக் கிடைக்கின்றன. முஸ்லிம்களைத் தமது வர்த்தக, சமய எதிரிகளாகக் கொண்ட போத்துக்கேய, ஒல்லாந்தர் ஆட்சிக் காலக் கட்டத்திலும் கூட மன்னார்ப் பிரதேசக் கரையோர வலயங்களில் முஸ்லிம்கள் தொடர்ச்சியாக வாழ்ந்து வந்தமைக்கு போத்துக்கேய, ஒல்லாந்த அறிக்கைகளிலே சான்றுகளைப் பெறக் கூடியதாக இருக்கின்றது. உதாரணமாக, ஒல்லாந்தர் கால அரசாங்க அறிக்கைகளின் படி மன்னார்ப் பிரதேச கரையோரக் குடியிருப்புக்களில் வாழ்ந்த முஸ்லிம்கள் காலனித்துவ ஆட்சியாளர்களினால் முத்துக்குளித்தலிலும், சங்குகுளித்தலிலும் ஈடுபடுத்தப் பட்டார்கள் என்பதற்கான (5.5i Li, of 91.5gh 3, T600T LIG discip50T (The Duch Record of the Ceylon Government, 1972).
இவ்வாறாக முஸ்லிம்களை மேற்குறிப்பிட்ட தொழில்களில் காலனித்துவ ஆட்சியாளர்கள் ஈடுபட அனுமதித்தமைக்குக் காரணம் இத்தொழில்த் துறை சார்ந்த இம்மக்களின் தேர்ச்சியேயாகும். மேற்குறித்த ஆதாரங்கள் எமக்கு மன்னார் மாவட்டத்திலும், மாந்தைப் பிரதேசத்திலும் முஸ்லிம்களது வரலாற்றுத் தொடர்ச்சி தங்கு தடையற்றுக் காணப்பட்டது என்பதைத் தெளிவாகக் காட்டுகின்றன.

எவ்வாறாயினும் “16ஆம், 17ஆம் நூற்றாண்டுகால இலங்கை முஸ்லிம்கள் பற்றிய ஆய்வு இரண்டு பிரச்சினைகளை எதிர் கோள்ளவேண்டியிருக்கிறது. அதில் ஒன்று சிங்களவர்களுக்கு மாகாவம்சமும், சூழவம்சமும், ராஜவல்லியும் தமிழர்களுக்கு யாழ்ப்பாண வைபவ மாலையும் தமது வரலாற்றைக் கூற இருக்கின்றபோது இலங்கை முஸ்லிம்களுக்கு இவர்களின் வரலாற்றை கூறும் நூல்கள் இல்லாதிருப்பதாகும். இரண்டாவது முஸ்லிம்கள் பற்றிய வரலாற்று விபரங்களெல்லாம் போத்துகீச, ஒல்லாந்து ஆட்சியாளர்களால் அழித்தொழிக்கப்பட்டு விட்டமையாகும்’ (Abeyasinghe, 1986).
3.3 அண்மைக்கால குடிசன மாற்றம்
பிரித்தானிய காலனித்துவ ஆட்சிக் காலமான 18ஆம் நூற்றாண்டில் இருந்து இப்பிரதேச முஸ்லிம்கள் பற்றிய தெளிவான விளக்கங்கள் கிடைக்கக் கூடியதாக இருக்கின்றன. இவ்விபரங்களில் இருந்து மாந்தைப் பிரதேசத்தில் வாழ்ந்த முஸ்லிம்கள் சங்கு குளித்தல் போன்ற கடல்வளப் பொருளாதார நடவடிக்கைகளிலும், நெல், புகையிலை போன்ற விவசாய நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வந்திருக்கின்றார்கள் என அறியக் கூடியதாக இருக்கின்றது. மாந்தைநானாட்டான் பிரதேசத்தில் கரையோர முஸ்லிம் செறிவுகள் இக்காலக் கட்டத்தில் குறைவடைந்து விவசாயத்தை அடிப்படையாகக் கொண்ட குடியிருப்புக்கள் உள்நாட்டில் வளர்ச்சி பெற ஆரம்பித்தன.
பிரித்தானியர் கால மாந்தை-நானாட்டான் பிரதேசக் குடிசன வரலாற்றை அறிந்து கொள்ளக் கூடிய ஒரு முக்கியமான ஆவணம் Denham என்பவரால் எழுதப்பட்ட Mannar GeSeteer என்ற நூலாகும். இந்த நூல் 19ஆம் நுாற்றாண்டின் இறுதிக் காலக் கட்ட குடிசனக் கணிப்பீடுகளையும், அரசாங்க நிர்வாக அறிக்கைகளையும் ஆதாரமாகக் கொண்டு தயாரிக்கப்பட்டது. கிராம மட்டத்தில் இன அடிப்படையிலான குடிசன விபரங்களைத் தருவது இந்நூலின் சிறப்பான அம்சமாகும். இந்நூலில் தரப்பட்டுள்ள விபரங்களைக் கொண்டு 19ஆம் நூற்றாண்டின் மாந்தை-நானாட்டான் பிரதேசம் பற்றிச் சற்றுத் தெளிவாக அறியக் கூடியதாக இருக்கின்றது.
Denham (1902) கூறுகின்றபடி அக்காலத்தில் மன்னார் மாவட்டத்தில் குறிப்பிடத்தக்க அளவு முஸ்லிம் செறிவைக் கொண்ட 29 குடியிருப்புகள் காணப்பட்டன. இதில் 11 செறிவுகள் மாந்தை-நானாட்டான் பிரதேசத்தில்
காணப்பட்டன. அவற்றுள் மாந்தை-நானாட்டானின் முக்கியமாக முஸ்லிம்கள்
21

Page 20
அட்டவணை - 1
சமய ரீதியாக மாந்தை-நானாட்டான் பிரதேச குடிசனம், 1981.
g-IDU ilib மொத்தம் வீதம்
பெளத்தம் 664 1. இந்து 16,877 39 முஸ்லிம் 6,846 16 கிறீஸ்தவம் 601 1. றோகத்தோலிக்கம் 18,794 43
முலம் : குடிசனக்கணிப்பு (1981).
22
 

செறிந்து வாழ்கின்ற விடத்தல்தீவு, விளாங்குளி, வட்டக்கண்டல் ஆகிய கிராமங்களும் உள்ளடங்குகின்றன.
Denham மின் 19ஆம் நூற்றாண்டுக் குடிசனப் பரம்பல் விபரங்களை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட மாந்தை-நானாட்டான் பிரதேச மக்களின் பரம்பல் படம் 4இல் காட்டப்பட்டுள்ளது. மாந்தை-நானாட்ட்ான் பிரதேசத்தின் முஸ்லிம் கிராமங்கள் கத்தோலிக்க அல்லது இந்து சமய மக்கள் பெரும்பான்மையாக வாழும் சூழலில் அமையப் பெற்றுள்ளமை தெளிவாகின்றது. ஏற்கனவே எடுத்துக் காட்டியதைப் போல் முஸ்லிம் கிராமங்கள் ஒன்றோடொன்று புவியியல் ரீதியாகத் தொடர்பற்ற தன்மைகளைக் கொண்டிருக்கின்றமையை அவதானிக்கக் கூடியதாக இருக்கின்றது.
மாந்தை-நானாட்டான் பிரதேச முஸ்லிம் குடியிருப்புப் பரம்பலின் தனித்துவத் தன்மைக்குப் பல காரணங்களைக் குறிப்பிடலாம். முதலில் காலனித்துவக் காலத்தில் கரையோரப் பிரதேசங்களில் இருந்து புதிய பொருளாதார வாயப்ப்புக்களுக்காக உள்நாடு நோக்கி முஸ்லிம்கள் நகர்ந்தமை முன்னர் எடுத்துக்காட்டப்பட்டது. கரையோர முஸ்லிம் செறிவுகளில் இருந்து மக்கள் உள்நாடு நோக்கி இடம் பெயர குடிசன வளர்ச்சியினால் எற்பட்ட நிலமின்மை, வேலையின்மைப் பிரச்சினைகளும் காரணமாக இருந்தன எனலாம். அது மட்டுமன்றி இயற்கைப் பாதிப்புக்களால் பாதிக்கப்பட்ட கரையோரக் குடியிருப்புக்களில் வாழ்ந்த மக்கள் தமது குடியிருப்புக்களைக் கைவிட்டு உள்நாடு நோக்கி இடம் பெயர்ந்ததற்கும் ஆதாரங்கள் காணப்படுகின்றன. உதாரணமாக பெரும்புயலால் பாதிக்கப்பட்ட விளாங்குளி முஸ்லிம்கள் மினுக்கனில் குடியேறினார்கள். வேட்டைமுறிப்பு, பொக்கர்வன்னி, சிராட்டிக்குளம் போன்ற பழைய முஸ்லிம் குடியிருப்புக்கள் காலநிலை சீர்கேட்டால் கைவிடப்பட்டன. அங்கு வாழ்ந்த மக்கள் மாந்தை-நானாட்டான் பிரதேசத்தில் வேறு இடங்களில் தமது வாழ்க்கையைப் புதிய குடியேற்றம் மூலமாக ஆரம்பித்தார்கள்.
மேற்குறித்த மாற்றங்கள் எதுவும் மாந்தை-நானாட்டான் முஸ்லிம்களின் வரலாற்றுத் தொடர்ச்சியைப் பாதிக்கவில்லை. இப்பிரதேசத்தில் பல பரம்பரைகள், பாரம்பரியங்களைக் கொண்ட மக்களாக இவர்கள் வாழ்ந்து வந்தார்கள்.
மாந்தை-நானாட்டான் பிரதேசத்தில் சிதறி வாழ்ந்த முஸ்லிம்கள் எவ்வாறு தமது சமய, கலாசார தனித்துவத்தை பேணிப்பாதுகாத்துக் கொண்டார்கள் என்ற அம்சம் ஆழமாக ஆராயப்பட வேண்டியதொன்றாகும். இவ்வாய்வில் முஸ்லிம்கள் இப்பிரதேசத்தில் புவியியல் ரீதியாக தனிப்படுத்தப் பட்டிருந்தாலும் சமய, கலாசார, குடும்ப ரீதியாக வைத்திருந்த தொடர்ச்சியான
23

Page 21
தொடர்புகளின் தாக்கங்கள் குறிப்பாக நோக்கப்பட வேண்டியதொன்றாகும். இப்பிரதேச மக்களுக்கிடையில் காணப்பட்ட தங்குதடையற்ற சமய, சமூக, கலாசார வளர்ச்சியின் மேற்குறிப்பிட்ட தனித்துவத்தை அடையாளப்படுத்தும் அம்சங்கள் முக்கிய பங்கினை செலுத்துகின்றன என்று அறியக்கூடியதாக இருக்கின்றது. இப்பிரதேச முஸ்லிம்களின் சமய, கலாசார வளர்ச்சிக்கு இப்பிரதேசத்திற்கப்பால் காணப்பட்ட மன்னார்தீவு, முசலி, யாழ்ப்பாணம், வவுனியா பிரதேச முஸ்லிம் செறிவுகளுடனான தொடர்புகளும் மேலும் வளமூட்டுபவையாக இருந்தன என்பதில் ஐயமில்லை.
மாந்தை-நானாட்டான் பிரதேசத்தில் முஸ்லிம்களின் வரலாற்றுத் தொடர்ச்சியை உறுதிப்படுத்தும் மற்றுமொரு புள்ளிவபரத் தகவல் 1921ஆம் ஆண்டு சனத் தொகைக் கணக்கெடுப்பாகும். அக்காலத்தில் இப்பிரதேசத்தில் 8 உடையார் பிரிவுகள் காணப்பட்டன. இவ் 8 பிரிவுகளிலும் முஸ்லிம்கள் வாழ்ந்தார்கள். இப்பிரதேசத்தின் மொத்த சனத் தொகையில் 14 சதவீதமாக முஸ்லிம்கள் வாழ்ந்தார்கள். அதிலும் குறிப்பாக பெருங்காணிப்பற்று, மேற்கு முனை ஆகிய உடையார் பிரிவுகளில் முஸ்லிம்களின் வீகிதாசாரம் 40 இற்கும் அதிகமாகக் காணப்பட்டதை 1921 ஆம் ஆண்டுப் புள்ளிவிபரங்கள் தெளிவாகக் காட்டுகின்றன (அட்டவணை-2).
இக்காலக்கட்ட இன, சமய, குடிசனப் பலம்பலை இப்பிரதேச கிராம மட்டத்திலும் அறியக் கூடிய வாய்ப்புக்கள் காணப்படுகின்றன. இந்த விபரங்களை அட்டவணை 3 எமக்குத் தெளிவாகத் தருகின்றது. கிராம மட்டத்திலான மேற்குறித்த 1921ஆம் ஆண்டு குடிசன விபரங்கள், 1980 ஆம் ஆண்டு கால குடிசனப் பரம்பல் அமைப்பிற்கு ஒப்பாகக் காணப்படுகின்றன என்பதை அண்மைக்காலக் குடிசனப் புள்ளிவிபரங்கள் எடுத்துக் காட்டுகின்றன (Department of Census and Statistics, 1986).
இச்சந்தர்ப்பத்தில் நாம் சற்று முன்னர் எழுப்பிய வினாவான தமிழ்ப் பெரும்பான்மை மக்களால் சூழப்பட்ட நிலையிலும், தமது வரலாற்றுத் தொடர்ச்சியையும், இன, சமயத் தனித்துவத்தையும் மாந்தை-நானாட்டான் முஸ்லிம்கள் எவ்வாறு பாதுகாத்துக் கொண்டார்கள் என்பதற்கு மேலும் விளக்கங்கள் தேவைப்படுகின்றன. முஸ்லிம்களின் சமய, இனத் தனித்துவங்கள் பாதுகாக்கப்படக் கூடியதான குடும்ப, சமய, கலாசாரத் தொடர்புகள் புவியியல் தொடர்ச்சியில்லாத முஸ்லிம் குடியிருப்புக்களுக்கு இடையில் காணப்பட்டமை முக்கிய காரணமாகக் குறிப்பிடக்கூடியதொன்றாகும். அதைவிட இப்பிரதேசத்தின் மிகப் பெரும்பான்மையினராக வாழ்ந்த கிறிஸ்தவ, இந்து தமிழ்ப் பெரும்பான்மை
24

அட்டவணை - 2
1921 ஆம் ஆண்டில் உடையார் பிரிவு மட்டத்தில் மாந்தை-நானாட்டான் முஸ்லிம் சனத்தொகை.
உடையார் பிரிவு மொத்த முஸ்லிம் மொத்த
சனத்தொகை சனத்தொகை சனத்தொகையில்
முஸ்லிம்களின் வீதம்
மாந்தை வடக்கு 2 111 297 14 மாந்தை தெற்கு 2139 80 04 பெருங்களிப்பற்று 1444 670 46 மேற்கு மூலை 381 154 40 இலுப்பைக்கடவை 952 69 O7
பனங்காமம் 375 O2 O1 நானாட்டான் மேற்கு 3019 319 11 நானாட்டான் கிழக்கு 1711 134 O8
முலம் : 1921 ஆம் ஆண்டு குடிசனக் கணிப்பீடு.
25

Page 22
மக்களுக்கும் முஸ்லிம் சிறுபான்மையினருக்கும் மிக நீண்ட காலமாக நீடித்து இருந்த இன உறவும் அதற்குக் காரணமாக இருந்தது. இத் தமிழ்முஸ்லிம் இன உறவின் ஆழத்தையும் அதன் பிரதிபலன்கள் பற்றியும் பின்னர் விளக்குவோம்.
பிரதேச மட்டத்தில் விகிதாசார ரீதியாக சிறுபான்மையினராகக் காணப்பட்ட முஸ்லிம்கள் எவ்வாறு தமது இனத்தனித்துவத்தைப் பேணிக்கொள்ளக்கூடியதாக இருந்தது என்பது இங்கு சற்று ஆழமாக நோக்கப்பட வேண்டிய ஒன்றாகும். மன்னார் மாவட்டத்தில் மாந்தை நானாட்டான் முஸ்லிம்கள் புவியியல் ரீதியாக தனிப்படுத்தப் பட்டிருந்தாலும் திருமண, சமய, கலாசார தொடர்புகள் வெவ்வேறு பிரதேச முஸ்லிம்களுக்கிடையில் தாராளமாகக் காணப்பட்டன. இவை சமய, சமூக, கலாசார பரிமாற்றங்கள் இம்மக்களுக்கிடையில் தங்குதடையின்றி வளர்ச்சியடைய வாய்ப்பாக இருந்தன. மாந்தை, நானாட்டான், முசலி, மன்னார்தீவு முஸ்லிம்களுக்கிடையில் தொடர்ச்சியான தொடர்புகளின் வெளிப்பாடு இஸ்லாமிய சமய ரீதியான இனத்தனித்துவத்தை இப்பிரதேச முஸ்லிம்களுக்கு அளிப்பதற்குக் காரணமாக இருந்தது. இவ்வுண்மையின் அடிப்படையில் மாந்தை-நானாட்டான் பிரதேச முஸ்லிம்களின் இவ் வம்சங்கள் சற்று ஆழமாக நோக்கப்படுவது பொருத்தமானதாகும்.
3.4 கலையும் கலாசாரமும்
மாந்தை-நானாட்டான் பிரதேசத்தில் வாழ்ந்த முஸ்லிம்கள் பல தனித்துவப் பண்புகளைக் கொண்டிருந்தார்கள் என்று முன்னர் குறிப்பிட்டோம். இப்பணி புகளில் இம்மக்களின் கலை, கலாசாரப் பாரம்பரியங்களும் உள்ளடங்குகின்றன. முஸ்லிம்களின் கலை, கலாசாரப் பாரம்பரியங்களில் ஏனைய இனக் கலாசாரச் செல்வாக்குகள் காணப்பட்டாலும் இஸ்லாமிய சமய நம்பிக்கையினதும், வழிபாட்டினதும் தனித்துவம் குறிப்பிடும் அளவு முக்கியம் பெற்றும் காணப்படுவதை அவதானிக்கக் கூடியதாக இருக்கின்றது. அதுமட்டுமன்றி இஸ்லாமிய சமய மறுமலர்ச்சிக்கு ஏற்ப முஸ்லிம்களின் கலை, கலாசார நடவடிக்கைகளிலும் ஒரு தன்னியக்கமான மாற்றங்கள் ஏற்படுகின்ற தன்மையும் குறிப்பிடத்தக்கதாகும்.
இப்பகுதியில் மாந்தை-நானாட்டான் பிரதேசத்தில் மிக நீண்ட காலமாக
வழமையில் இருந்து வந்த கலை, கலாசார அம்சங்களும் அவற்றில் பிற்காலத்தில்
26

ஏற்பட்ட மாற்றங்கள் பற்றியும் விளக்கப்படுகின்றது. பின்னிணைப்பு 1 இப்பிரதேச மக்கள் மத்தியில் வழமையில் இருந்த கலை, கலாசார அம்சங்கள் பற்றி
மேலதிக விபரங்களைத் தருகின்றது.
கலைகள்
கலை நிகழ்ச்சிகள் ஆரம்ப காலந்தொட்டு முஸ்லிம் கிராமங்களில் வழக்கில் இருந்து வந்தன. கலை நிகழ்ச்சிகளில் பாடல்களும், கைவினைப் பொருட்களும் முக்கியம் வாய்ந்தன. இப்பிரதேசத்தில் வழமையில் இருந்து வந்த கலை நிகழ்வு கும்மி நடனம் ஆகும். இதனைக் கோலாட்டம் என்றும் கழிகம்பு என்றும் அழைப்பதுண்டு. இக்கும்மி நடனம் வட மாகாண முஸ்லிம்கள் மத்தியில் பரவலாக இருந்து வந்த ஒரு நடன முறையாகும். கும்மி நடனம் முஸ்லிம் கிராமங்களில் ஆண்களினால் ஆடப்படும். மங்களகரமான நிகழ்ச்சிகளின் போதும், விழாக்காலங்களிலும் இக்கும்மி நடனங்கள் ஆடப்படுவதுண்டு.
கவிதைகள்
மாந்தை-நானாட்டான் முஸ்லிம்கள் கவித்திறன் மிக்கவர்களாகக் காணப்பட்டார்கள். ஆசைக்கவி, ஊஞ்சலாட்டம், தாலாட்டு என்பன இம்மக்கள் மத்தியில் இருந்து வந்த கவிதைகளாகும். இப்பகுதியில் வழமையில் இருந்து வந்த ஆசைக்கவியின் சில அடிகளை இங்கு உதாரணமாகக் குறிப்பிடுவோம்.
ஆண்,பெண் இணைந்து:
நகமும் சதையும் போல நாமிருந்த நேசத்திற்கு நகத்திற்கும் சதைக்கும் இப்ப நஞ்சு கலந்ததென்ன?
பெண்
மாமி மகள் இருக்க மாலைஇடப் பெண் இருக்க
ஊரார் மகளுக்கு ஒம்பட்டுப் போறியளே
27

Page 23
ஆண்
மாமி மகளே மனமுள்ள மச்சியாரே கொஞ்சும் கிளியே உன்னைக்கொள்வது நிச்சயம்தான்.
ஆண்
கொஞ்சும் மானே அதில் வரும் புள்ளிமானே அத்தனை மானிலும் எந்த மான் நல்ல மான்
பெண்
கோடைக்கு ஒதுங்கி கொண்டலுக்கு நேர்காட்டி வாடைக்கு ஒதுங்கி வாறமான் நல்ல மான்
(விபரம்: மு. அ. கா. சாகுல் கமீது)
ஆசைக் கவிகள் இம்மக்களின் கவி நயத்தையும், கவிதை ரசனையையும் வெளிப்படுத்துகின்றன. பெண்களுடன் தொடர்புடைய மங்களகரமான நிகழ்வுகள், பெருநாள் கொண்டாட்டங்களில் இங்கு வழமையில் இருந்து வந்த ஆசைக் கவிதைகளைப் படித்து மக்கள் களிப்படைவதுண்டு.
ஆசைக்கவிகளைப் போல திருமணத்தின்போது மாப்பிள்ளை பெண் வீட்டுக்கு அழைத்துச் செல்லும் போது பாடப்படும் கவியும், தாலாட்டு, ஊஞ்சல்பாட்டு, கப்பல் பாட்டு ஆகியவைகளும் இம்மக்கள் மத்தியில் வழக்கில் இருந்தன.
மாந்தை-நானாட்டான் பிரதேசத்தில் பல பிறவிக்கவிஞர்கள் வாழ்ந்தார்கள். இவர்களில் விடத்தல்தீவைப் பிறப்பிடமாகக் கொண்ட முகம்மது காசிம் புலவரைக் குறிப்பிடலாம். இப்புலவரின் கவித் திறனை வெளிக்காட்டுகின்ற பாடல்கள் அதிகம் காணப்படுகிறன.
விளையாட்டுக்கள்
இப்பிரதேச முஸ்லிம் கிராமங்களில் பலவகையான பாரம்பரிய விளையாட்டுக்கள் வழமையில் இருந்து வந்தன. இக்கிராமிய விளையாட்டுக்களில்
28

சிறுகம்புகளைக் கொண்டு ஆடப்படும் களிகம்பு நடனம், தற்பாதுகாப்பு விளையாட்டாகப் பயிலப்படும் சிலம்படி, வாரோட்டம், கோலாட்டம், மற்றும் புலிவேடம், கிளித்தட்டு, சித்தாடை, தொண்டியடித்தல் ஆகியவைகள் குறிப்பிடத்தக்கவைகளாகும். இப்பிரதேசத்தில் வழமையில் இருந்த விளையாட்டுக்கள் பற்றி சாகுல் ஹமீது, முகம்மது அப்துல்காதர், மீராசாஹிபு ஆகிய பெரியார்கள் பின்வரும் விபரங்களைத் தந்நதார்கள்.
தொண்டியடித்தல் நிலாக்காலங்களில் சிறுவர்களால் விளையாடப் படுவதுண்டு. மாலை நேரங்களில் சித்தாடை என்ற விளையாட்டை விளையாடுவர். ஆண்களால் விளையாடப்படும் மற்றுமொரு விளையாட்டு கிளித்தட்டாகும். இது போலவே வாரோட்டம், கோலாட்டம், புலிவேடம் ஆகியவைகளும் பாரம்பரியமாக இப்பிரதேசத்தின் விளையாட்டுக்களாக விளையாடப்பட்டன.
யாழ்ப்பாண முஸ்லிம்களால் இப்பிரதேசத்தில் அறிமுகப்படுத்தப் பட்ட மற்றுமொரு கிராமிய விளையாட்டு பந்து சுற்றி விளையாடுதல் ஆகும். இது ஏறக்குறைய சீனடி, சிலம்படி விளையாட்டைப் போன்றது. ஆனால் இவ்விளையாட்டுக்குப் பயன்படுத்தும் கம்பின் நுனியில் நெருப்பைக் கட்டி பந்து சுற்றி விளையாடப் படுவதுண்டு.
கலாசாரம்
கலாசாரம் ஒரு சமூகத்தின் தனித்துவமான வாழ்க்கைமுறை, பழக்க வழக்கங்களைக் குறிக்கின்றது. முஸ்லிம்கள் தமது சுற்றுச் சூழலில் வாழ்ந்த ஏனைய மக்கள் குழுக்களில் இருந்து தம்மை தனித்துவப்படுத்திக் காட்டக் கூடிய பல வகையான பழக்க வழக்கங்களையும் வாழ்க்கை முறைகளையும் கொண்டிருந்தர்கள். இவற்றில் இம்மக்களின் தனித்துவமான மொழிப் பிரயோகம், உடைகள், ஆபரணங்கள், உணவு வகைகள், பழக்க வழக்கங்களைக் குறிப்பிடலாம்.
மாந்தை-நானாட்டான் பிரதேச முஸ்லிம்களின் பேச்சுவழக்கில் அரபு மொழிப் பிரயோகம் அதிகம் காணப்பட்டது. இம்மக்கள் அரபு மொழியினை வாசிக்கும் ஆற்றல் கொண்டவர்களாகக் காணப்பட்டதோடு தமது நாளாந்த வாழ்க்கையில் அரபுச் சொற்களை மிக அதிகமாகத் தமிழோடு கலந்து பேசுகின்ற
வழமையும் காணப்பட்டது.
29

Page 24
முஸ்லிம்களை அவர்களின் உடைகளைக் கொண்டு வேறுபடுத்திக் காணக் கூடியதாக இருந்தது. ஆண்கள் தொப்பி அணிவதும், பெண்கள் முக்காடு போடுவதும் இப்பிரதேசத்தின் இஸ்லாமிய தனித்துவத்திற்கான எடுத்துக்காட்டுக்களாகும்.
உணவு வகைகளிலும், உணவு தயாரிப்பதிலும், உணவு உண்கின்ற முறையிலும் முஸ்லிம்கள் மத்தியில் தனித்துவமான நடைமுறைகள் காணப்பட்டன. இது போலவே ஏனைய நாளாந்த நடை முறையிலும் இனத் தனித்துவத்தைப் பிரதிபலிக்கின்ற பழக்க வழக்கங்கள் இப்பிரதேச முஸ்லிம்களின்
பாரம்பரியக் கலாசாரமாகக் காணப்பட்டன.
விழாக்களும் சடங்குகளும்
பலவகையான சடங்குகளும், விழாக்களும் இப்பிரதேச முஸ்லிம்கள் மத்தியில் வழமையில் இருந்து வந்தன. இச் சடங்குகளுக்கும், விழாக்களுக்களுக்கும் ஒப்பான நிகழ்வுகள் தமிழ் மக்கள் மத்தியிலும் காணப்பட்டன. ஆனால் அவ்வாறான நிகழ்வுகள் இஸ்லாமிய முறைக்கு அமையப்பெற்று முஸ்லிம்களின் தனித்துவத்தைக் கொடுக்கக் கூடியதான முறையில் மாற்றப்பட்டு முஸ்லிம்கள் மத்தியில் நடைமுறையில் இருந்தன.
முஸ்லிம்கள் மத்தியில் இருந்த சடங்குகளில் விருத்த சேதனம் என்று அழைக்கப்படும் 'கத்னா’ வைபவமும் ஒன்றாகும். இது முஸ்லிம் ஆண்களுக்கு சிறு பராயத்தில் செய்யப்படும் மார்க்கச் சடங்காகும். விடத்தல் தீவைச் சேர்ந்த கச்சுமுகம்மது என்பவரின் கூற்றுப்படி நெல்அறுவடையைத் தொடர்ந்த காலத்தில் இச்சடங்கு இப்பிரதேசத்தில் நடை பெற்று வந்தது. இன்றும் வழமையில் இச்சடங்கு நடைபெறுவதற்கு முன்னர் நெய்னாமூசாஅப்பா பைத்தும், மெளலூது பைத்தும் தக்பீரும் இசைக்கப்பட்ட பின்னர் கத்னா வைபவம் நடைபெறும் என்று குறிப்பிடப்படுகின்றது. கத்னாவுக்குச் சமமான பெண்கள் பராயமடைதலுடன் தொடர்புடைய சடங்குகளும் இப்பிரதேசத்தில் மங்களகரமான நிகழ்வாகச் செய்யப்படும் வழமை முன்னொரு காலத்தில் காணப்பட்டது.
பலவகையான விழாக்களும் முஸ்லிம்களால் இப்பிரதேசத்தில் எடுக்கப்பட்டு வந்தன. இவைகளில் கர்பலா தினத்தை நினைவுபடுத்தும் தைக்கால் என்றழைக்கப்படும் நிகழ்ச்சியும் ஒன்றாகும். கர்பலா நிகழ்ச்சி என்பது இஸ்லாமிய வரலாற்றில் முகம்மது நபி (ஸல்) அவர்களின் பேரர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட யுத்தத்தை நினைவுபடுத்தும் நிகழ்ச்சியாகும். இவ்வாறான
30

கர்பலா நிகழ்வை ஞாபகப்படுத்தும் நிகழ்ச்சிகள் இலங்கையின் ஏனைய பாகங்களிலும் நடைமுறையில் இருந்து வந்தன.
விடத்தல்தீவைச் சேர்ந்த கச்சுமுகம்மது என்பவர் தரும் விபரப்படி கர்பலா என்ற தைக்கால் நிகழ்ச்சி மாந்தைப் பிரதேசத்தில் இஸ்லாமிய முஹர்ரம் மாதத்தில் ஆசுரா தினத்தில் நடைபெறும். இக்காலத்தில் முஸ்லிம்கள் தமது நோய்கள் குணமடையவும், இதர தேவைகளுக்கும் நேர்ச்சைகள் வைப்பார்கள். நாருசா என்று அழைக்கப்படும் விசேடமாகத் தயாரிக்கப்பட்ட உணவு இந்நிகழ்ச்சிகளின் போது மக்களுக்கு விநியோகிக்கப்படும். இரவில் நடைபெறும் இந்நிகழ்வில் முக்கியமாக இப்பிரதேச பள்ளி பேஷ் இமாம் கர்பலா போர்க்களத்தில் முகம்மது நபி (ஸல்) அவர்களின் பேரர்கள் அனுபவித்த துன்பத்தைப் பற்றிய உரையை நிகழ்த்துவார்கள்.
முஸ்லிம்கள் மத்தியில் வழமையில் இருந்து வந்த மற்றுமொரு விழா நிகழ்ச்சி சீராப்புராண விரிவுரைகளாகும். இது இந்நூற்றாண்டின் ஆரம்ப காலத்தில் இருந்து மாந்தை-நானாட்டான் பிரதேசக் கிராமங்கள் பலவற்றில் நடைமுறையில் இருந்து வந்தது. சீராப்புராணம் என்பது இஸ்லாமியப் பெரும்புலவரான உமறுப் புலவரால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாற்றைப் பற்றி எழுதப்பட்ட கவியாகும். புராணங்களை விரிவுரை செய்யும் ஆற்றல் கொண்ட முஸ்லிம்கள் மூலம் இக்காவியம் விரிவுரை செய்யப்படும் வைபவத்தை இந்நிகழ்ச்சி குறிக்கின்றது. இவ்விரிவுரை பல நாட்களுக்கு நடாத்தப்பட்டது. சீராப்புராண விரிவரை ஒரு கிராமத்தில் நடைபெறுகின்ற போது ஏனைய கிராமத்தவர்களும் வந்து கலந்து சிறப்பிக்கும் வழமை இக்கிராமத்தில் காணப்பட்டது.
மற்றுமொரு விழா நிகழ்வு கொடியெடுத்தலாகும். நெய்னா முகம்மது ஒலியுல்லாஹ் என்ற மார்க்கப் பெரியாரின் இஸ்லாமியச் சிறப்பை கொடியெடுத்து ஊர்வலமாக வந்து பாடல் பாடி இப்பிரதேச மக்கள் கொண்டாடுவது இங்கு வழமையில் இருந்து வந்தது. விடத்தல்தீவைச் சேர்ந்த முகம்மது அப்துல் காதர், கச்சுமுகம்மது ஆகியோரின் விபரப்படி இக்கொடியெடுத்தல் நிகழ்ச்சிக்காக பச்சை நிறத்திலான ஒரு கொடி தயாரிக்கப்படும் கொடிப்பாட்டு என்ற கவிதையை கலை ரசனையுடன் ஒரு குழுவினர் பாடி ஊர்வலமாக வருவர். பள்ளிவாயிலுக்காகக் கொடுக்கப்படும் காணிக்கைகள் இக்கொடிப்பாட்டு ஊர்வலத்தில் சேகரிக்கப்படுவதுண்டு. காணிக்கைக்காக சேகரிக்கப்பட்ட பணத்தில்
இருந்து கந்துாரி வைக்கப்படும். இக்கந்துாரியின் சிறப்புக்களில் ஒன்று
31

Page 25
இதற் கென வேட்டையாடப்பட்ட மிருகங்கள் இறைச் சிக் காகப்
பயன்படுத்தப்படுவதாகும்.
இஸ்லாமிய மறுமலர்ச்சியும் மாந்தை-நானாட்டான் முஸ்லிம்களும்
இஸ்லாம் முஸ்லிம்களின் வாழ்வு, கலை, கலாசாரத்தை தன்னிச்சையாக மாற்றும் ஆற்றலைக் கொண்டிருந்தது. இஸ்லாமிய வளர்ச்சி தளர்ச்சி பெற்ற காலத்தில் பிற கலாசார, கலை அம்சங்கள் இம்மக்கள் மத்தியில் மேலோங்கிக் காணப்பட்டன. எனினும் இஸ்லாமிய மறுமலர்ச்சியினுாடாக அவை புனரமைக்கப்பட்டு புதுமைப்படுத்தப்பட்டன. இஸ்லாமிய சமய நம்பிக்கைக்கு முரணான கலை, கலாசார நம்பிக்கைகள் மக்களால் கைவிடப்பட்டன.
இவ்வம்சத்தை மாந்தை-நானாட்டான் பிரதேச முஸ்லிம்கள் மத்தியிலும் அவதானிக்கக் கூடியதாக இருக்கின்றது. இதனால் இப்பிரதேச முஸ்லிம்கள் மத்தியில் இருந்து வந்த கலை, கலாசாரப் பழக்க வழக்கங்கள் புதிய விளக்கங்களோடு வெளிவந்த இஸ்லாமிய சமய நம்பிக்கைகளுக்கு முரணானவை என்று கருதப்பட்டமையால் இப்பிரதேச மக்கள் மத்தியில் இருந்து அவை படிப்படியாகக் கைவிடப்படும் நிலைமை காணப்பட்டது. இவற்றில் கத்னா நிகழ்ச்சி தொடர்பான சடங்குகள், பெண்பராயமடைதல் சடங்குகள், கொடிப்பாட்டு, சீராப்புராண விரிவுரைகள் போன்றவற்றைக் குறிப்பிடலாம்.
இஸ்லாம் பற்றிய புதிய சிந்தனையை இப்பிரதேசத்தில் உருவாக்கியதில் இலங்கையின் தப்லீக் ஜமாஅத்தின் பணி முக்கியமானது. தப்லீக் ஜமாஅத் இப்பிரதேசத்தில் 1952ஆம் ஆண்டில் அறிமுகமாகியது. விடத்தல்தீவைச் சேர்ந்த கச்சுமுகம்மது, நெய்னாமீரா சாகிப் போன்றவர்கள் இதன் மூலமாக இப்பிரதேசத்தில் இஸ்லாமிய மறுமலர்ச்சியை ஏற்படுத்தப் பாடுபட்டார்கள். 1955 ஆம் ஆண்டளவில் க. காதர் மொஹிதீன், நுார்முகம்மது, அப்துல் கரீம், மீ. அப்துல் காதர் ஆகியோர் இதில் தொடர்ந்து உழைத்தார்கள். இக்காலத்தில் ஏனைய இஸ்லாமிய அமைப்புக்களும் மாந்தை-நானாட்டான் முஸ்லிம்கள் மத்தியில் சமய மறுமலர்ச்சியை ஏற்படுத்தப் பாடுபட்டன.
மாந்தை-நானாட்டான் முஸ்லிம்கள் மத்தியில் இஸ்லாமிய நம்பிக்கை நடைமுறைகள் பற்றிக் கொடுக்கப்பட்ட புதிய விளக்கங்கள் இம்மக்கள் மத்தியில்
இஸ்லாமிய அடிப்படையிலான வாழ்க்கை முறையினை நெறிப்படுத்த உதவின.
32

4. முஸ்லிம்களின் வாழ்வும் வளமும்
மாந்தை-நானாட்டான் பிரதேச முஸ்லிம் குடியிருப்புக்களின் பரம்பல் தனித்துவத்தை முன்னர் பார்த்தோம். இப்பிரதேசத்தின் 12 முஸ்லிம் குடியிருப்புக் களையும் 3 வலயங்களாகப் பிரித்து ஆராய்வது இக்குடியிருப்புகளைப் பற்றி மேலும் தெளிவைப் பெற உதவும் என்றும் குறிப்பிட்டோம். இவ்வத்தியாயத்தில் 3 குடியிருப்புப் பரம்பல் வலயத்தையும் அவ்வலயத்தில் அமைந்துள்ள முஸ்லிம்களின் வாழ்க்கை முறையையும் தெளிவாக நோக்குவோம். இவ்வாறு மாந்தை-நானாட்டான் முஸ்லிம்களின் வாழ்க்கை வளங்களைக் கிராம மட்டத்திலும், வலய மட்டத்திலும் நோக்குவதன் மூலம் இம்மக்கள் பற்றி மேலும் தெளிவைப் பெறக் கூடியதாக இருக்கும்.
மாந்தை-நானாட்டான் பிரதேசத்தில் அடையாளம் காணப்பட்ட 3
குடியிருப்பு வலயங்களாவன:
1. விடத்தல்தீவு-பெரியமடுப் பிரதேசம் 2. கட்டுக்கரைக் குளத்திற்குட்பட்ட மாந்தைப் பிரதேசம் 3. கட்டுக்கரைக் குளத்திற்குட்பட்ட நானாட்டான் பிரதேசம்
4.1 விடத்தல்தீவு-பெரியமடுப் பிரதேசம்
இப்பிரதேசம் மாந்தை-நானாட்டானின் வட புறமாக அமைந்துள்ளது. இப்பிரதேசத்தில் பல கிராமங்களில் முஸ்லிம்கள் வாழ்ந்தார்கள். அவற்றுள் இப்பிரதேசத்தின் மேற்காகக் காணப்பட்ட விடத்தல் தீவும், கிழக்காக அமைவுற்றிருந்த பெரியமடுவும் முக்கியமானவையாகும். கிழக்கு மேற்கு அந்தங்களில் அமைந்திருந்த மேற்குறிப்பிட்ட 2 கிராமங்களையும் உள்ளடக்கியதான ஒரு தொடர்ச்சியான நிலப்பரப்புக்குள் முஸ்லிம்களும், அவர்களின் பொருளாதார, சமூக, கலாசார நலன்களும் காணப்பட்டன. (படம் 6)
விடத்தல்தீவும், பெரியமடுவும் புவியியல் ரீதியாக இப்பிரதேசத்தின் இரு அந்தங்களில் காணப்பட்டாலும் குடும்ப, சமூக, கலாசார, பொருளாதார ரீதியாக மிக நெருங்கிய தொடர்புகளைக் கொண்ட கிராமங்களாகக் காணப்பட்டன. வரலாற்று ரீதியாக பெரியமடுக் கிராமம் விடத்தல் தீவு சந்ததியினரால் உருவாக்கப்பட்டதாகும். 1956ஆம் ஆண்டு பெரியமடு நீர்ப்பாசனக் குளத்தை
33

Page 26
அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட ஒரு விவசாயக் குடியேற்றத் திட்டத்தில் விடத்தல்தீவைச் சேர்ந்த நிலமற்ற விவசாயிகள் குடியேற்றப்பட்டார்கள். இக்குடியிருப்பாளர்களில் மிகப் பெரும்பான்மையினர் முஸ்லிம்கள் ஆவர். இவ்விரு முஸ்லிம் கிராமத்தவர்களுக்கிடையிலும் மிக நெருங்கிய, அத்துடன்
சமூக, சமய, கலாசாரத் தொடர்புகள் தொடர்ச்சியாகக் காணப்பட்டன.
4.1.1 விடத்தல்தீவு
விடத்தல்தீவு, மாந்தை மேற்கு உதவி அரசாங்க அதிபர் பிரிவில் அமைந்திருந்த சனச்செறிவு மிக்க கிராமமாகும். இக்கிராமம் மன்னார் நகரத்துடன் பிரதான வீதியால் இணைக்கப்பட்டிருந்தது. பெயரில் இக்கிராமம் தீவு எனக் கொள்ளப்பட்டாலும் இது பிரதான நிலத்திணிவின் ஒரு பகுதியில் அமைவுற்றிருந்த குடியிருப்பேயாகும். ஆனால் ஒரு தீவைப்போன்ற தோற்றத்தைத் தரக் கூடிய புவியியல் சூழலைக் கொண்டதாக இக்கிராமம் காணப்பட்டது.
மின்னியறிஞ்சான், முதலைக்கிடங்கு ஆகிய இரு சிறிய பருவ கால ஆறுகளின் கழி முகத்தில் விடத்தல்தீவு அமைந்திருந்தது. இக்கிராமத்தின் மேற்கு எல்லை ஆழமற்ற கடற்பரப்பையும், ஏனைய நிலப்பகுதி தாழ் உவர் நிலத்தினாலும் எல்லையிடப்பட்டுக் காணப்பட்டமை இக்கிராமம் ஒரு தீவைப் போன்ற தோற்றத்தைத் தரக் காரணமாயிற்று. விடத்தல்தீவுக் கிராமத்தின் ஒரு பகுதித் தோற்றம் படம்-5 இல் தரப்பட்டுள்ளது.
விடத்தல்தீவு பல சிறப்புக்களைக் கொண்ட ஒரு குடியிருப்பாகும். அவற்றுள் மிக முக்கியமானது இக்கிராமத்தில் முஸ்லிம்கள், இந்துக்கள், கத்தோலிக்கர்கள் ஆகிய மூன்று இன மக்களும் ஒன்றாக ஒற்றுமையாக வாழ்ந்தமையாகும். இம்மூன்று சமய மக்களும் தமிழைத் தமது தாய் மொழியாகக் கொண்டிருந்தார்கள். தமிழ் இம்மூவின மக்களினதும் பொது மொழியாகக் காணப்பட்டமையும், அடிப்படையில் இச்சமயக் குழுக்களுக்கு இடையில் பரஸ்பர புரிந்துணர்வும், இணக்கப்பாடும் காணப்பட்டமையும் இக்கிராமத்தின் நீடித்த இன நல்லுறவுக்குக் காரணங்ளாக இருந்தன.
விடத்தல்தீவின் சிறப்புக்களில் மற்றுமொன்று இக்கிராமத்தில் முஸ்லிம், இந்து, கிறிஸ்தவ குடியிருப்பு வாழ்விட அமைவிடங்களும், அதன்மூலமான இனத் தொடர்புகளுமாகும். ஏறக்குறைய 220 ஏக்கர் பரப்பினைக் கொண்ட
34

விடத்தல்தீவுக் கிராமத்தின் குடியிருப்புப் பகுதியை மேற்குறிப்பிட்ட மூன்று சமய மக்களும் தமது தாயகமாகக் கொண்டு வாழ்ந்து வந்தார்கள். இதன் நிதரிசனத் தன்மையை படம்-5 எமக்குத் தெளிவாகக் காட்டுகின்றது.
விடத்தல்தீவின் கிழக்குப் பிரதேசத்தில் முஸ்லிம்கள் வாழ்ந்தார்கள். இவர்கள் வாழ்ந்த மொத்தப் பகுதி 125 ஏக்கர் பிரதேசமாகும். முஸ்லிம் குடியிருப்புப் பகுதிக்குள் முஸ்லிம்களின் வாழ்விடங்களும், வர்த்தக நிலையங்களும், சமய ஸ்தாபனங்களும், பாடசாலை போன்ற கல்வி பொது ஸப்தாபனங்களும் அமைவுற்றிருந்தன. முஸ் லிம் களில் மிகப் பெரும்பான்மையானோர் விவசாயத்திலும், வர்த்தகத்திலும், அரசாங்க உத்தியோகத்திலும் ஈடுபட்டிருந்தார்கள். இம்மக்களின் பொருளாதார, சமய, கலாசார நடவடிக்கைகளுக்குப் பொருத்தமான வகையில் வாழ்விடம் இக்கிராமத்தில் அமைவுற்றிருந்தது. படம்-5 இதனைக் காட்டுகின்றது.
கிறிஸ்தவ மக்களின் பிராதான தொழில் மீன்பிடியாகும். இவர்கள் விடத்தல்தீவின் மேற்கு கரையோரமாக வாழ்ந்து வந்தார்கள். இம்மக்களின் குடியிருப்புப் பகுதிகள், சமய, கலாசார, சமூக நிறுவனங்கள் கிறிஸ்தவக் குடியிருப்புப் பகுதிக்குள் பொருத்தமான முறையில் அமைவுற்றிருந்தன. மிகச் சொற்ப தொகையினரான இந்துக் கள் முளப் லிம் , கிறிஸ்தவக் குடியிருப்புக்களுக்கிடையில் வாழ்ந்து வந்தார்கள்.
விடத்தல்தீவுக் கிராமம் இன ஒற்றுமைக்கு மிகச் சிறந்ததொரு உதாரணமாகும். இம்மக்களுக்கிடையில் இனப் புரிந்துணர்வையும், ஒற்றுமையையும் ஏற்படுத்திய அடிப்படை அம்சம் இவர்களின் நற் பண்புகளாகும். அத்தோடு சமய, இன தனித்துவத்தைப் பாதுகாக்கக் கூடிய முறையிலான இனப்பரம்பல் அம்சங்களும், முரண்பாடற்ற இன உறவை வளர்க்கக் காரணமாக இருந்தன. “தனித்துவம் மதிக்கப்படாத அடிப்படையிலான இன ஒற்றுமை’ என்ற தத்துவத்துக்கு உதாரணமாக விடத்தல் தீவுக் கிராமம் காணப்பட்டதென்பதில் ஐயமில்லை.
பின்வரும் பகுதிகளில் விடத்தல்தீவு முஸ்லிம்களின் வாழ்வும் வளமும் விபரிக்கப்படுகின்றது.
வரலாறு
விடத்தல்தீவுக் கிராம முஸ்லிம்களின் ஆரம்பம் அராபிய, இந்திய,
யாழ்ப்பாண முஸ்லிம்களின் தொடர்பால் உருவானது என நம்பப்படுகின்றது.
35

Page 27
உlர்த்தாங்கி கோல்நடை
கூட்டுறவுச்சங்கம் 10, பாடசாலை
Y1. பேக்கரி
தபாற் கந்தோர்
அரிசி ஆலை
இந்துக்கோவில் கிறிஸ்தவ ஆலயம்
கிராம சேவையாளர் அலுவலகம்
கிராமோதய கட்டிடம்
(அலிகார் ம.வி)
12. LIITUJT63) ou (ரோமன்.க.ம.வி)
N 13. மீன்பிடிக் கூட்டுத்தாபனம் விவசாய சேவை நிலைப் 14. மதுரசா
மன்னார்
\ ܬ . 6763)3TT U JITI "(, SM மைதானம்
w ふ in Ly---
gp6. In
வெளிக்கவர ஆர்வு 1996,
36
 
 
 
 

வரலாற்றுக் கால மாந்தையில் அராபிய, இந்திய முஸ்லிம்களின் வர்த்தகத் தொடர்பையும், சிறப்பையும் பற்றி முன்னர் குறிப்பிட்டோம். முத்துக் குளித்தலுடனும், சங்கு குளித்தலுடனும் தொடர்பான முஸ்லிம்கள் மிக ஆரம்ப காலத்தில் இருந்து மாந்தைப் பிரதேசத்துடன் தொடர்புடையவர்கள் என்பதையும் கண்டோம். விடத்தல்தீவுக் கிராமத்துடன் சங்கு குளித்தல் தொழிலுடனும், ஏற்றுமதி இறக்குமதி வர்த்தகத்துடனும் முஸ்லிம்களின் தொடர்பு மிக நீண்டகாலமாக இருந்திருக்க வேண்டிய வாய்ப்புக்கள் காணப்படுகின்றன. ஆனால் துரதிஷ்டவசமாக அதற்கான சான்றுகள் பற்றி ஆய்வுகள் இல்லை. அதனால் விடத்தல்தீவில் வாழ்ந்த முஸ்லிம்களின் பழைய வரலாறு பற்றித் தெளிவாக அறிய முடியாத நிலை காணப்படுகின்றது.
யாழ்ப்பாண முஸ்லிம்களின் வரலாற்றை எழுதிய றஹீம் (1979). இன்றைய விடத்தல் தீவு முஸ்லிம்கள் யாழ்ப்பாண முஸ்லிம்களின் வழித்தோன்றல்களாக இருக்கலாம் என்று குறிப்பிடுகின்றார். இவ்வாசிரியர் போர்த்துக்கேயராட்சிக் காலத்தில் மீரா என்ற பெயருடைய முஸ்லிம் ஒருவர் யாழ்ப்பாணத்தை விட்டு வெளியேறி இன்றைய விடத்தல்தீவுக் கிராமத்தில் குடியேறியதன் மூலமாக உருவாகிய கிராமமே விடத்தல்தீவு என்கின்றார். ஆரம்பத்தில் விடத்தல்தீவில் குடியேறிய முஸ்லிம்கள் கடலுடன் தொடர்புடைய சங்கு குளித்தல், படகோட்டுதல் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டார்கள் என்று கூறப்படுகின்றது.
யாழ்ப்பாண முஸ்லிம்களுக்கு விடத்தல்தீவுக் கிராமத்தோடு ஏற்பட்ட மற்றுமொரு தொடர்பு விவசாய நடவடிக்கையாகும். விடத்தல்தீவில் குடியேறிய யாழ் முஸ்லிம்களில் ஒரு பகுதியினர் இக்கிராமச் சூழலில் புகையிலைச் செய்கையில் ஈடுபட்டனர். அத்துடன் புகையிலை வர்த்தகத்துடனும் தொடர்புடையவர்களாக இருந்தார்கள் என்று பிரித்தானியர் கால அரசாங்க அறிக்கைகளும், நூல்களும் குறிப்பிடுகின்றன (Denham, 1906 and Boake, 1888). யாழ்ப்பாண முஸ்லிம்களின் வாழ்க்கையோடு விடத்தல்தீவின் தரை, கடல் போக்குவரத்தும் விருத்தியடையத் தொடங்கியது. பல பிரதேசங்களில் இருந்தும் வர்த்தகர்களும், மீனவர்களும், சங்கு குளிப்பவர்களும் விடத்தல்தீவுக் கிராம அபிவிருத்தியால் கவரப்பட்டார்கள். வர்த்தக நோக்கத்தில் யாழ்ப்பாணத்தில் இருந்து கடந்த நூற்றாண்டில் விடத்தல்தீவில் குடியேறிய சு. மீ. முகம்மது முகிதீன் கைவண்டி முகம்மது கான், செய்னுல் ஆப்தீன், முகம்மது அப்பா போன்ற பெரியார்கள் பற்றிய விபரங்கள் எமக்குக் கிடைக்கின்றன.
37

Page 28
இக்கிராமத்துடன் இந்திய முஸ்லிம்களுக்கும் அதிக தொடர்புகள் இருந்தன. இந்தியாவின் கீழைக்கரை, தொண்டி போன்ற இடங்களில் இருந்து இஸ் லாமிய மார்க்கப் பெரியார்கள் இக் கிராமத்துக்கு வந்து குடியேறியிருக்கின்றார்கள். இதில் குறிப்பாக விடத்தல்தீவு முகைதீன் ஜும்ஆப் பள்ளியில் அடங்கப் பெற்றுள்ள மெளலானா அப்பா அவர்களும் ஒருவர் ஆவார். இவருடன் மெளலானா அப்பாவின் சீடர்களான அப்துர் ரஹ்மான், கான்முகம்மது, கப்புடையார் அப்பா, செய்யதுக் குட்டி அப்பா, கவ்னியா அப்பா, ஆகிய பெரியார்கள் இந்தியாவில் இருந்து விடத்தல்தீவுக்கு வந்து இக்கிராமத்தைத் தமது வாழ்விடமாக ஆக்கிக் கொண்ட இஸ்லாமிய மார்க்க ஞானிகளாவர்.
மன்னார் மாவட்டத்தின் ஏனைய முஸ்லிம் செறிவுகளான முசலி, மன்னார்தீவு, நானாட்டான் போன்ற பிரதேசங்களுக்கும், விடத்தல்தீவுக்கும் இடையே குடும்ப உறவுகளும், ஏனைய தொடர்புகளும் மிக நீண்ட காலமாக
இருந்து வந்துள்ளன என்பதுவும் இங்கு குறிப்பிடத்தக்கது.
பொருளாதாரம்
விடத்தல்தீவு முஸ்லிம்களின் பொருளாதார நடவடிக்கைகள் வரலாற்றுக் காலத்தில் பல மாற்றங்களுக்கு உள்ளாயின. விடத்தல்தீவு பிரித்தானியர் காலத்தில் புகையிலைச் செய்கையிலும் வர்த்தகத்திலும் முன்னணி வகித்தது. பின்னர் இதன் முக்கியத்துவம் முற்றாக மறைந்துவிட்டது. இந்நூற்றாண்டின் ஆரம்பத்தில் இருந்து நெற்செய்கையும் கால்நடை வளர்ப்பும் இம்மக்கள் மத்தியில் பிரபல்யம் அடைய ஆரம்பித்தன.
விவசாயம்
இக்கிராம முஸ்லிம்களில் 75 சதவீதமானவர்களின் முழுநேரத் தொழிலாக விவசாயம் காணப்பட்டது. ஏறக்குறைய 3500 ஏக்கர் நெற்காணிகள் இக்கிராம மக்களுக்கு உரியனவாக இருந்தன. விடத்தல்தீவு முஸ்லிம்களுக்கு உரிமையாக இருந்த விவசாயக் காணிகளை படம்-6 காட்டுகின்றது. இக்காணிகளில் மிகப் பெரும்பான்மையானவை பள்ளமடு-பெரியமடு பிரதான வீதியின் இரு
புறத்திலும் பரந்து காணப்படுகின்றன. முஸ்லிம்களின் விவசாயக் காணிகளில்
38

பல உள்ளூர் பெயர்களைக் கொண்டு அழைக்கப்பட்டன (படம்-6). இக்காணிகளின் பரிமாணத்தை அட்டவணை-3 தருகின்றது. இந்நெற்காணிகள் பருவகால மழைநீரிலும் உள்ளுர் குள நீர்ப்பாசனத்திலும் தங்கி இருந்தன. விடத்தல்தீவு முஸ்லிம் மக்களின் விவசாயக் காணிகள் நீர்ப்பாசனத்துக்காகத் தங்கியிருந்த குளங்களின் பெயர்களும், அவற்றின் பரிமாணங்களும் அட்டவணை-4 இல் தரப்பட்டுள்ளன. இவ்விபரங்களைத் தொகுத்து நோக்குகின்றபோது விடத்தல்தீவு முஸ்லிம்களின் நெல் விவசாயத்திலான பொருளாதார ஈடுபாடும் முக்கியத்துவமும் தெளிவாகின்றன.
விடத்தல்தீவு முஸ்லிம்களுக்குச் சொந்தமான விவசாயக் காணிகள் படத்தில் காட்டப்பட்ட பகுதிக்கு வெளியிலும் இருந்தன என்பதைச் சுட்டிக்காட்ட வேண்டும். குறிப்பாக மாதோட்டப்பகுதியிலும் விடத்தல்தீவு முஸ்லிம் மக்களுக்கு சொந்தமான நுாற்றுக்கணக்கான ஏக்கர் நெற்காணிகளும் ஏறக்குறைய 1000 ஏக்கர் அளவான மேட்டுநிலக் காணிகளும் இருந்தன.
விடத்தல்தீவு முஸ்லிம்களின் பொருளாதார முக்கியத்துவத்தை அதன் நீர்ப்பாசன வசதிகளோடு தொடர்புபடுத்தி நோக்க வேண்டியது அவசியமாகும். படம்-6 இல் காட்டப்பட்டது போல் இப்பிரதேச நீர்ப்பாசனக் குளங்களில் இருந்து நேரடியாகவும், மழைவீழ்ச்சி மூலமும் நீரைப் பெறுகின்றன. படம்6 இல் காட்டப்பட்டது போல் இப்பிரதேச நீர்ப்பாசனக் குளங்கள் பருவகால மழையில் மாத்திரம் தங்கியிராமல் ஆற்று நீரையும் பெறுகின்ற தன்மை இங்கு காணப்பட்டது. இதில் குறிப்பாக நாயாறு, அதில் இருந்து பிரிந்து வரும் உயிலந்துண்டி ஆறு (மின்னினிறஞ்சான்) செங்கனிஓடை, கருக்குவச்சி ஆறு போன்றவற்றையும் இடைமறித்து குளங்களுக்கு நீர்ப்பாசனம் செய்யப்பட்டு வந்தது. 1925ஆம் ஆண்டு காலப்பகுதியில் வெளிமதுரமடு அல்லது சன்னார் என்ற குளத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு நீர்ப்பாசனத் திட்டமும் அறிமுகப்படுத்தப்பட்டு வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தப்படும் சூழ்நிலைகளும் இங்கு காணப்பட்டன.
விடத்தல்தீவு விவசாயிகள் வடகீழ் பருவகால மழையைத் தொடர்ந்து நெற்செய்கையில் காலபோகமும், குளங்களில் சேமித்த நீர் போதுமானதாக இருந்தால் ஜூன் ஏப்ரல் காலப்பகுதியில் சிறுபோகமும் செய்து வந்தனர். புழுதி விதைப்பு, சேற்று விதைப்பு போன்ற விவசாய முறைகள் கால போகத்திலும் சேற்று விதைப்பு, நடுகை முறை போன்ற விசாயமுறைகள் சிறுபோகத்திலும் இப்பிரதேச விவசாய முறைகளாக வழமையில் இருந்து வந்தன. காலபோகச் செய்கையில் ஏறக்குறைய சராசரி ஏக்கருக்கு 60 புசல் விளைச்சலும், சிறு போகத்தில் 90 புசல் விளைச்சலும் நெற்செய்கையில் பெறப்பட்டன.
39

Page 29
அட்டவணை
- 3
மாந்தை - நானாட்டான் பிரதேச முஸ்லிம்களின் தொழில்
அமைப்புகள், 1991
தொழில்வகை LDITBGO)5 வீதம் நானாட்டான் வீதம்
எண்ணிக்கை எண்ணிக்கை
விவசாயிகள் 459 64 263 68
மீனவர்கள் 29 04 07 O2
வர்த்தக கைத்தொழில்
துறையைச் சார்ந்தவர்கள் 93 13 61 16
அரசாங்க சார்ந்தவர்கள் 43 O6 09 O2
ஏனையோர்கள் 54 08 38 10
விபரம்தராதோர் 35 05 07 02
முலம் : அகதி வெளிக்கள ஆய்வு, 1991.
40
 

அட்டவணை - 4
விடத்தல்திவு முஸ்லிம்களின் விவசாயக் காணிகளும் அவற்றின் பரிமாணங்களும், 1990
விவசாயக் காணிகள் பரிமாணம் (ஏக்கரில்)
1. சுல்தான்கமம் 3OO 2. பெரிய புலவுவெளி 150 3. சிறியவெளி 150 4. புதுக்கமம் 250 5. புலக்காடு 3OO 6. மயிலப்பணிக்கன் தறை 50 7. பட்டாணிகட்டு 20 8. நண்டுமோட்டை 25 9. காட்டட மந்தா 50 10. கிழவி கமம் 50 11. முல்லப்பெருமாள் கட்டு 50 12. கொக்குமடு 75 13. காரைமோட்டைக்குளம் 150 14. திமிலாகுளம் 250 15. கட்டக்காடு 250 16. கப்புடையாப்பள்ளிவாசல் 8O 17. குஞ்சிக்குளம் 30 18. புளியாகுளம் 300 19. மதுரமடு 100 20. ராமன் குளம் IOO 21. மரைக்கார் புலவு IO 22. ஊளிகட்டு O 23. தேத்தாச்சோலை 15O 24. மருதோண்டி கமம் 25 25. U616TLDG 150 26. தட்டாம்பிட்டி 1 OO 27. பெரியசவரி குளம் 100 28. கோவாலிகட்டு 25 29. மின்னினிறஞ்சான் OO 30. உவர்குளம் 90
4.

Page 30
S 活 5)
(1. - 크 ། “ቦk
($onos, sons))\,
wae,". . |-% gloo suksissae
O66 I osgoooTictorısıtıİGo suosiuuoo (ITU) sırnı orto se spogueoqigoquefi) o£9ísı @@ımın sırılɛ-lɩ99Ệą9€gs-Tyto o 9 gr’ırı
. :석
こ%
g@eu恩Q町*
ta니연년918u忠3
Už
ș| 267 777 osou,7€ zozno soos o nooogoo gaso così��nimųnɛ ɔ0%@Togosur-Tin J }心0001冯us@gu员资s q001que@gosO (š*ッ05001@gloo, e001守니5gmu「니1% N Š必0īquaesonsumo z008:sortsetsune, w め01�Togounsloo x091novouoooooooo !
09密r藏強anu*X01SDT*동%國집 >
09\suononossosoofi) wa01hønshuo'offersom f.
- -- - £?.tisusuopo), a092鱷|
~(::-:_;sz「os-TkoosOgswilsoņon H
( . )Ĵo.:: -い「os니nkr&mu%08鱷}001轉:D
..' - ( 7|-·09nơnoistofil001on0력用明日그 운 ganyBE心i ,09*05%que@uros, 3
|×*...23=日난=外門TT.00£@uo pash o08ņool rusųo on sum-neohro G – — ·- -09:2GDu**그니ns C -ź00£que@umųoh si ~ ~ ?00£gono soloạso y
soos possogollo som Jorvoso
(
42
 
 
 
 
 
 
 

அட்டவணை - 5
விடத்தல்தீவு முஸ்லிம்களின் விவசாயக் காணிகளுக்குரிய நீர்ப்பாசனக் குளங்களும் அவற்றின் பரிமாணங்களும், 1990
விவசாயக் குளங்கள் பரிமாணம் (ஏக்கரில்)
1. சுல்தான் குளம் 05 2. திமிலா குளம் 50 3. புளியா குளம் 150 4. மதுரமடுக் குளம் 15 5. பெரிய குளம் 50 6. பெரிய சவரிகுளம் 10 7. வெலிமருதமடுக் குளம் 300
(சன்னார் குளம்)
முலம்: இலங்கை ஓரங்குலப் படம், 1957லும் வெளிக்கள ஆய்வும், 1998.
43

Page 31
இப்பிரதேசத்தில் பயிரிடப்பட்ட பொதுவான நெல் வர்க்கங்கள் H4, BG11-11, BG400-1, BG276-5 என்பனவாகும். விடத்தல்தீவு முஸ்லிம்களின் விவசாயம் நீர்ப்பற்றாக்குறையாலும் வன விலங்காலும் பல பிரச்சினைகளை எதிர்நோக்கியது. மூலப் பொருட்களைப் பெறுவதிலும், உற்பத்திப் பொருட்களை விற்பதிலும், போக்குவரத்து வசதியின்மையினாலும் இவ்விவசாயிகள் பல பிரச்சினைகளை எதிர்நோக்கினர். இதுமட்டுமன்றி முஸ்லிம்களின் மத்தியில் அதிகரித்த சனத்தொகை விவசாயத்தில் நிலமின்மை, வேலையின்மை போன்ற பிரச்சினைகள் அதிகரிக்க காரணமாக இருந்தது.
மீன்பிடி
ஏறக் குறைய 10 சதவீதமான விடத்தல் தீவு முஸ்லிம்கள் மீன்பிடித்தொழிலில் ஈடுபட்டனர். இவர்கள் கரையோர, ஆழ்கடல் மீன்பிடியையும் நன்னீர் மீன்பிடியையும் சங்குகுளித்தல், அட்டை குளித்தல் ஆகிய கடல்வளத் தொழில்களையும் தமது முழுநேரத் தொழில்களாகக் கொண்டிருந்தனர். முஸ்லிம் மீனவ குடும்பங்களில் பலர் தமது வருமானப் பிரச்சினை காரணமாகப் பல பகுதிநேரத் தொழில்களிலும் ஈடுபட்டனர்.
அரசாங்கத் தொழில்
கல்வி முன்னேற்றம் மூலமாக அரசாங்கத்தொழில்களில் தம்மை ஈடுபடுத்தும் வழமை இக்கிராமத்தில் பரவலாகக் காணப்பட்டது. 1990ஆம் ஆண்டு கிடைக்கப்பெற்ற புள்ளிவிபரங்களின்படி 102 விடத்தல்தீவு முஸ்லிம்கள் அரசாங்கத் தொழில் செய்தனர் என அறியக்கூடியதாக இருகின்றது. இவர்களில் 72 பேர் பாடசாலை ஆசிரியர்களாக இருந்தார்கள். ஏனையவர்களும் நல்ல கெளரவமான அரசாங்கத் தொழில்களில் ஈடுபட்டனர். இக்கிராம முஸ்லிம்களின் அரசாங்கத் தொழில்களிலான ஈடுபாட்டில் ஒரு சிறப்பம்சம் முஸ்லிம் பெண்கள் ஆண்களுக்கு சமஅளவில் ஈடுபட்டு வந்தமையாகும்.
கல்வி
விடத்தல்தீவு முஸ்லிம்கள் கல்வி வளர்ச்சியில் ஆர்வம் மிக்கவர்கள்.
இம்மக்களின் கல்வி ஆர்வத்தை இக்கிராமத்தின் கல்வி வரலாற்றில் இருந்து தெளிவாக அறிந்து கொள்ளக் கூடியதாக இருக்கின்றது.
44

இந்நூற்றாண்டின் ஆரம்பத்தில் இக்கிராமத்தில் முஸ்லிம்களுக்கு என தனியான கல்வி வசதிகள் இருக்கவில்லை. அக்காலத்தில் இக்கிராமத்தில் காணப்பட்ட கிறிஸ்தவ கல்வி நிறுவனங்களில் முஸ்லிம்கள் கல்வி கற்று வந்தார்கள். 1930 ஆம் ஆண்டளவில் அரசினர் பாடசாலை ஒன்று விடத்தல்தீவில் ஆரம்பிக்கப்பட்டது. இப்பாடசாலை முஸ்லிம்கள் வாழும் பிரதேசத்தில் அமைக்கப்பட்டது. இப்பாடசாலையில் ஐந்தாம் ஆண்டு வரை கல்வி கற்கும் வசதிகள் காணப்பட்டன. இக்காலத்தில் யாழ்ப்பாணத்தில் இருந்து ஆசிரியர்கள் வந்து இங்கு கல்வி போதித்தார்கள். மிக நீண்ட காலம் ஐந்தாம் ஆண்டுவரையான கல்வி முறை இக்கிராமத்தில் நீடித்திருந்தது. பின்னர் மன்னார் அடம்பனைச் சேர்ந்த செபமாலை அவர்கள் அதிபராக இருந்த காலத்தில் இப்பாடசாலை 8ஆம் ஆண்டு வரைக்கும் (அதாவது "JSC" கல்வி தரம் அளவு) தரமுயர்த்தப்பட்டது. பின்னர் 1950ஆம் ஆண்டளவில் 10 ஆம் வகுப்புவரை (SSC) கல்வி கற்பித்தற்கான வசதிகள் அளிக்கப்பட்டன.
விடத்தல்தீவு அரசினர் பாடசாலையின் வளர்ச்சி இக்கிராமத்தின் குறிப்பாக முஸ்லிம்களின் கல்வி வளர்ச்சிக்கு காரணமாக இருந்தது. முஸ்லிம் ஆண்களும், பெண்களும் 10 ஆம் வகுப்புவரை கல்வி கற்கக்கூடிய வாய்ப்பை தமது கிராம சூழலில் பெற்றார்கள். இவ்வாய்ப்பை ஏற்படுத்தியவர் அதிபராகக் கடமையாற்றிய எல். வி. சின்னத்தம்பியாவார். இவர் காலத்திலேயே ஆரம்பப் பாடசாலையாக இருந்த இப்பாடசாலை கணிஷட பாடசாலையாகத் தரமுயர்த்தப்பட்டது. இப்பாடசாலையின் கல்வி வளர்ச்சிக்கு எம். எம். எல். மரைக்கார், எம். முகம்மதலி எம். ஏ. சி. மரைக்கார் ஆகிய ஆசிரியர்கள் முன்னோடிகளாகக் காணப்பட்டனர். மேலும் இப்பாடசாலையின் அதிபர்களாகக் கடமையாற்றிய ஏ. எம். அகமத், எம். என். ஐயூப், எம், எஸ். ஏ. றகீம் ஆகியோரும் இதன் வளர்ச்சிக்கு அருந்தொண்டாற்றியுள்ளனர்.
1956ஆம் ஆண்டில் விடத்தல்தீவு முஸ்லிம் பாடசாலை சேர் ராசிக்பரீத் அவர்களின் உதவியால் முஸ்லிம் மகா வித்தியாலயமாகத் தரம் உயர்த்தப்பட்டது. இக்காலத்தில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த எம்.எம்.ஏ. காதர் அவர்கள் அதிபராகக் கடமையாற்றினார். இவரது காலத்தில் இப்பாடசாலை அலிகார் மகா வித்தியாலயம் என்று பெயர் சூட்டப்பட்டது. இக்காலத்தில் விடத்தல்தீவைச் சேர்ந்த எம்.எல்.எம். சரிபு அவர்களின் முயற்சியின் பயனாக உயர்தர விஞ்ஞான கற்கை நெறியும் இப்பாடசாலையில் அறிமுகப்படுத்தப்பட்டது. இன்னும் எம்.ஐ. அமீன் அவர்களும் தற்போதைய மன்னார் மாவட்ட கல்விப் பணிப்பாளரான ஜனாப் அப்துல் ஹக்
45

Page 32
அவர்களும் இப்பாடசாலையில் கடமையாற்றிய அதிபர்களாவார்கள். முஸ்லிம்களின் வெளியேற்றத்திற்கு முன்னர் மு.கா. அன்சாரி அவர்களும் இப்பாடசாலையின் அதிபராக கடமையாற்றினார்.
விடத்தல்தீவு அலிகார் மகாவித்தியாலயம் தமது வரலாற்றில் பல பெரிய கல்விமான்கள், சமூகத்தொண்டர்கள், சமய விற்பன்னர்களை உருவாக்கித்
தந்துள்ளது என்பது நினைவு கூரத்தக்கதாகும்.
4.1.2 பெரியமடு
மன்னார் மாவட்டத்தில் மாந்தை உதவி அரசாங்க அதிபர் பிரிவில் பெரியமடு குடியேற்றத்திட்டம் அமைந்துள்ளது. இக் குடியிருப்பு விடத்தல் தீவிலிருந்து தென்கிழக்காக 8 மைல் துாரத்திலும் பாலம்பிட்டியிலிருந்து வடமேற்காக 7 மைல் துாரத்திலும் அமைந்துள்ளது. இக் குடியேற்றத் திட்டத்தின் மொத்தப் பரப்பளவு 850 ஏக்கராகும். இதன் மொத்த சனத் தொகை 1971ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட குடிசன மதிப்பீட்டின்படி 127 பேர் ஆகும். இக் குடியேற்றத்திட்டத்தில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாகவும் (87 வீதம்), இந்துக்களும், கிறிஸ்தவர்களும் சிறுபான்மையினராக காணப்பட்டனர்.
இக் குடியேற்றத் திட்டத்தின் மண்வளம் நெற் செய்கைக்கும், உப உணவுப் பயிர்ச்செய்கைக்கும் தென்னை, மா, பலா, வாழை போன்ற பல்லாண்டுப் பழப்பயிர்ச் செய்கைக்கும் பொருத்தமானதாகக் காணப்படுகின்றது. குடியேற்றத் திட்டத்தின் மொத்த நெற் செய்கை நிலமாகக் காணப்படும் 1500 ஏக்கரினதும் மண் வளம் மணற்றன்மை கொண்ட இருவாட்டி மண்ணாகும். மேட்டு நிலமாகக் காணப்படும் மொத்தம் 750 ஏக்கரினதும் மண் வளம் செம்மணன் அமைப்புக் கொண்ட இறுக்கமான மண்ணாகக் காணப்படுகிறது. இக் கிராமத்தின் மண் வளம் பற்றிய ஆராய்ச்சியாளர்களினதும், விவசாய உத்தியோகத்தர்களினதும் ஆராய்வுகளின்படி இது நெற்செய்கையைவிட உப உணவுப் பயிர்ச் செய்கைக்கும், பழப்பயிர்ச் செய்கைக்கும் மிகவும் பொருத்தமானதாகும்.
இத்திட்டத்தின் வெற்றி தோல்வியை நிர்ணயிப்பனவாக நீர்ப்பாசன அமைப்பு முறைகள் காணப்படுகின்றன. நீர்ப்பாசன வசதிகள்
குடியேற்றத்திட்டத்தின் கிழக்குப் புறமாக அமைந்துள்ள 750 சதுர ஏக்கர்
46

பரப்பைக் கொண்ட பெரியமடுக் குளத்தினால் மேற்கொள்ளப்படுகின்றது. இக் குளத்தின் மொத்தக் கொள்ளளவு 4478 ஏக்கரடியாகும். மறுவார்த்தையில் கூறுவதானால் இக்குளம் 20 அடி ஆழ நீரைக் கொள்ளக்கூடியதாகக் காணப்பட்டபோதிலும் 15 அடி நீரை மட்டுமே சேமிக்கக்கூடியதாக மாறியமையால், பெரும்பான்மையான சந்தர்ப்பங்களில் ஒருபோக நெற்செய்கையை மட்டுமே மேற்கொள்ளக்கூடிய நிலைமை காணப்படுகின்றது. ஏப்ரல், மே மாதங்களில் பெய்யும் தென்மேல் பருவப் பெயர்ச்சி மழை இப்பகுதியில் ஓரளவுக்குக் கிடைக்குமாயின் சிறுபோக அதாவது கோடைகால நெற்செய்கையையும் மேற்கொள்ளக்கூடியதாக இருக்கும். எனவே, பெரியமடு குடியேற்றத் திட்டத்தின் பயிர்ச்செய்கை நடவடிக்கைகளின் வெற்றி தோல்வியை நிர்ணயிப்பதாக பருவகால
மழைவீழ்ச்சியும் முக்கியம் பெற்றுக் காணப்படுகின்றது.
வரலாறு
விடத்தல் தீவு மன்னார் மாவட்டத்தில் மாந்தை உதவி அரசாங்க அதிபர் பிரிவிலுள்ள ஒரு தீபகற்பக அமைப்பைக் கொண்ட கிராமமாகும். பெருகிவரும் மக்கள் தொகைக்கு இக் கிராமத்தின் இருப்பிட நிலவசதிகள் மிகவும் மட்டுப்படுத்தப்பட்டதாகக் காணப்பட்டன.
இந்நிலையில் 1956ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் விடத்தல் தீவுக்கு விஜயம் செய்த அப்போதைய பிரதம அமைச்சர் திரு. டி.எஸ். சேனநாயக்கா அவர்களிடம் விடத்தல் தீவு பொது மக்கள் பெரியமடுவில் ஒரு குடியேற்றத் திட்டத்தை அமைத்துத் தரும்படி மகஜர் ஒன்றை சமர்ப்பித்தனர் இவ்வேண்டுகோளுக்கு இணக்கம் தெரிவித்த அமைச்சர் அவர்கள் ஒரு குடியேற்ற திட்டத்தை ஆரம்பிக்கும்படி விவசாய அமைச்சருக்கு அறிவித்தார். அப்போதைய விவசாய அமைச்சராக இருந்த திரு. டட்லி சேனநாயக்கா திட்டம் ஆரம்பிக்கப்படுவதற்கான சகல நடவடிக்கைகளையும் மேற்கொண்டார். இதன் பிரதிபலனே பெரியமடு குடியேற்றத்திட்டமாகும்.
பெரியமடுக் குடியேற்றத்திட்டம் 1956ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஆரம்பிக்கப்பட்டது. இத்திட்டத்தின்படி ஒரு குடியிருப்பாளருக்கு மூன்று ஏக்கர் நெற்செய்கைக் காணியும் இரண்டு ஏக்கர் மேட்டுநிலக் காணியும் வழங்கப்பட்டன. மேட்டுநிலக் காணியில் இரு அறைகளையும் இரு சிறிய
மண்டபங்களையும் கொண்ட வீடுகள் ஒவ்வொரு குடியிருப்பாளர்களுக்கும்
47

Page 33
கட்டிக் கொடுக்கப்பட்டன. இத் திட்டத்தில் 300 குடியிருப்பாளர்களுக்கு வீடுகளும், காணிகளும் வழங்கப்பட வேண்டுமென திட்டமிடப்பட்டிருந்தது. 1956ஆம் ஆண்டளவில் அதாவது குடியேற்றத்தின் ஆரம்பத்தில் எல்லா வீடுகளும் கட்டிமுடிக்கப்படாமையினால் ஆரம்பத்தில் 100 குடியிருப்பாளர்கள் மாத்திரம் குடியேற்றப்பட்டனர். 1957ஆம் ஆண்டு மேலும் 100 குடியிருப்பாளர்கள் குடியேற்றப்பட்டனர். இக் குடியிருப்பாளர்கள் முஸ்லிம், இந்து, கிறிஸ்தவ இனங்களைாச் சேர்ந்தகர்களாவர். இவர்கள் விடத்தல் தீவுக் கிராமத்திலிருந்தே தெரிவு செய்யப்பட்டனர்.
இத் திட்டத்தின் மூலகர்த்தாக்களாக பின்வருவோரைக் குறிப்பிட வேண்டியுள்ளது. அப்போதைய உத்தியோகத்தர்களான திரு. டி. எஸ். சேனநாயக்கா பிரதமர், திரு. டட்லி சேனநாயக்கா விவசாய அமைச்சர், திரு. சிற்றம்பலம் மன்னார் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர், திரு. பத்திரண மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர், திரு. ஆறுமுகம் மன்னார் மாவட்ட நீர்பாசன பொறியியளாளர் ஆகியோர்களாவர்.
1956ஆம் ஆண டை அடுத்து வந்த காலப் பகுதியில் குடியேறியவர்களுக்கு அரசாங்கம் அவசர தேவைகளையும் உதவிகளையும் ஓரளவாயினும் செய்து கொடுத்ததென்பதைத் திட்ட வரலாற்று உண்மைகள் காட்டுகின்றன. குடியேற்றப்பட்ட நாளிலிருந்து தொடர்ந்து 6 மாதங்களுக்கு ஒரு குடியேற்ற வாசிக்கு ஒரு நாளுக்கு 30 ரூபா வீதம் மானியமாக பணம் வழங்கப்பட்டது. மேலும் பயிர்ச்செய்கை நிலங்களுக்காக அரசாங்கம் காடுகளை வெட்டித் துப்பரவு செய்து கொடுத்ததுமட்டுமன்றி காணிகளிலுள்ள புற்றுக்களை வெட்டவும், கட்டைகனை பிடுங்கவும், வரம்புகளை அமைக்கவும் பண உதவிகளை குடியிருப்பாளருக்கு வழங்கியது. இது தவிர விவசாயிகளுக்கான விதையினங்களும், நாற்றுக்களும் காலத்திற்குக் காலம் இலவசமாக வழங்கப்பட்டன. மேட்டுநிலப் பயிர்ச்செய்கையை துரிதப்படுத்துமுகமாக தென்னங்கன்றுகளும், மா, பலா, வாழை, மரமுந்திரிகை, எலுமிச்சை, தோடை, கொய்யா போன்ற நாற்றுக்களும் குடியேற்ற திட்டம் ஆரம்பித்து 10 வருடங்களுக்கு மேல் தொடர்ந்து இலவசமாக வழங்கப்பட்டன.
மக்கள் குடியேற்றப்பட்டு ஒரு வருடத்தில் அதாவது 1957ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் 25ஆம் திகதி ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் காரணமாக பெரியமடு குளத்தின் அணைக்கட்டு உடைந்து தேக்கி வைத்த நீர் வெளியேறி
48

பல துன்பங்களை ஏற்படுத்தியது. குளத்தின் அணை உடைந்தமையால் சுமார் 60 ஏக்கர் நெற் காணி பயிரிடமுடியாத மணல் மேடாகியது. மக்களுக்கு குடிக்கவும் நீரில்லாமல் போனது. மலேரியா, வயிற்றுழைவு போன்ற நோய்களின் தாக்கம் அதிகரித்தது. திட்டமிட்ட நீர்ப்பாசன வசதிகள் மூலம் தொழில் முயற்சிகளைப் பெருக்கி பலனை அனுபவித்து வந்த குடியிருப்பாளர்களுக்கு ஒரு வருட முடிவிற்குள் ஏற்பட்ட இவ்வனுபவம் பீதியையும், தோல்வியையும் ஏற்படுத்தி இக்குடியேற்றத் திட்டத்தை விட்டு குடிபெயர்ந்து செல்லும் நிலைமைகளையும் உருவாக்கியது. இதனால் சுமார் 15 சதவீதமான குடியிருப்பாளர்கள் தனது தாய்க்கிராமமான விடத்தல்தீவுக்கு குடிபெயர்தனர். கஷ்டங்களைப் பொருட்படுத்தாது, மிகுதிக் குடியிருப்பாளர்கள் குளத்தின் அணையை சீர்படுத்தும் முயற்சியில் இறங்கினர். சிரமதான முயற்சிகளுடன் அரசாங்க உதவிகளையும் நாடினர். இது சம்பந்தமாக குடியிருப்பாளர்களைக் கொண்டதொரு துாதுக்குழு அப்போதைய பிரதமர் எஸ். டபிள்யூ ஆர். டி. பண்டாரநாயக்கா, அப்போதைய நீர்பாசன அமைச்சர் திரு. சி. பி. டி. சில்வாவையும் மன்னாளில் பொதுத் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர் ஜனாப். எஸ். எச். முஹம்மட் அவர்களின் தலைமையில் சந்தித்ததன் பயனாக குளத்தின் சீர்திருத்த வேலைகள் ஒரு வருடத்திற்குள் பூர்த்தியாகின. இந்நிகழ்வு இக் குடியேற்றத்திட்டத்தின் வரலாற்று முக்கியத்துவம் பெற்றதாக இன்னும் கருதப்படுகின்றது. குளத்தின் சீர்திருத்த வேலைகள் முடிவடைந்து நீர்ப்பாசன வடிகாலமைப்பு வேலைகள் செப்பனிடப்பட்டதும் 1960 ஆம் ஆண்டு நெற்செய்கையை மேற்கொள்ளக்கூடியதாக இருந்தது. மேலும் பெரியமடு பிரதான நீர்த்தேக்கத்தை விட செம்மல் சரிவு, ஈனிச்சை, பாக்வெட்டியெடுத்தான் ஆகிய சிறிய நீர்ப்பாசனக் குளங்களும் மேலதிக நீரைச் சேமிப்பதற்காக அமைக்கப்பட்டன. இக்குளங்கள் பெரும்பாலும் மிளகாய், மரக்கறி போன்ற உப உணவுப் பயிர்ச் செய்கைக்கே நீரினை வழங்கி வந்தன. இவற்றைவிட இன்னும் சில சிறிய குளங்கள் பெரியமடுச் சூழலில் காணப்பட்ட போதும் இக்கிராம விவசாய
நீர்ப்பாசனப் பிரச்சினை இறுதிவரை தீர்க்கப்படாத ஒன்றாகவே காணப்பட்டது.
சமூக பொருளாதார மாற்றங்கள்
இக்குடியேற்றவாசிகள் சங்கங்கள், இயக்கங்கள் மூலம் தமது
உரிமைகளையும் கடமைகளையும் பேணுவதில் முனி னணியில
49

Page 34
இருந்துள்ளனரென்பதையும் இங்கு ஆரம்பம் தொட்டு உருவாக்கப்பட்ட சங்கங்களின் வளர்ச்சி எடுத்துக்காட்டுகின்றன. தத்தமது மதக்கிரிகைளையும் கலாசாரப் பாரம்பரியங்களையும் பேணுவதிலுள்ள பக்தி நிலைமைகளை வணக்க ஸ்தாபனங்களின் ஆரம்பங்களும் வளர்ச்சியும் எடுத்துக்காட்டுகின்றன. இக் கிராமத்தின் கூட்டுறவுச்சங்க நடவடிக்கை 1957ஆம் ஆண்டுப் பகுதியிலேயே ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதில் முக்கியமானது பொது மக்களுக்கு நுகர்ப் பொருட்களை மலிவாக வழங்கியமையும், உற்பத்திக்கான உள்ளீடுகளை மலிவாக பெற்றுக் கொடுப்பதில் ஆர்வம் காட்டியமையுமாகும். ஒவ்வொரு குடியிருப்பாளரிடமிருந்தும் சராசரியாக 12 ரூபாவை பங்குப் பணமாகப் பெற்று முதலில் ஐக்கிய பண்டகசாலையொன்று நிறுவப்பட்டது. பொதுமக்களின் செளகரியங்களைக் கருதி மேலும் ஒரு பண்டகசாலை 1962ஆம் ஆண்டு கிராமத்தின் கிழக்குப் பகுதியில் நிறுவப்பட்டது. இக்கூட்டுறவுச் சங்கத்தினால் விவசாயிகளுக்கான விவசாயக் கடன், பசளை விநியோகம், விவசாயிகளின் விளைபொருட்களை உத்தரவாத விலைத்திட்டத்திற் கொள்வனவு செய்தல், விவசாயிகளுக்கும் கூட்டுறவு அமைப்பிற்குமான பண்டமாற்று நடவடிக்கைகள் என்பன விஸ்தரிக்கப்பட்டன. இந்நிலைமை கூட்டுறவு அமைப்பின் வளர்ச்சியில் கிராமத்தவர்களின் பங்கை எடுத்துக்காட்டுவனவாகவுள்ளன.
1957ஆம் ஆண டளவில் கிராம அபிவிருதி திச் சங்கம் ஆரம்பிக்கப்பட்டது. இது கிராம அபிவிருத்தியை குறிக்கோளாகக் கொண்டு இயங்கியது. இதேயாண்டில் கிராமத்தின் கிழக்குப் பகுதியில் ஒரு முஸ்லிம் பள்ளிவாயிலும் அமைக்கப்பட்டது. இதனைப் பரிபாலிக்க பரிபாலன சபையும் அமைக்கப்பட்டது.
மேலும் ஒரு பள்ளிவாயிலும் கட்டப்பட்டது. இங்கு வாழும் மற்றைய இனத்தவர்கள் மிகவும் சிறுபான்மையினராகக் காணப்பட்டமையால், நிதி நெருக்கடியின் காரணமாக ஆரம்பத்தில் தேவாலயங்களை அமைக்க முடியாது இருந்தபோதும் 1970ஆம் ஆண்டளவில் கிறிஸ்தவர்கள் கிறிஸ்தவ தேவாலயம் ஒன்றையும், 1972ஆம் ஆண்டளவில் இந்துக்கள் இந்துக் கோவிலொன்றையும் அமைத்து தத்தமது வழிபாடுகளை மேற்கொண்டு வந்தனர். குடியேற்றத் திட்டம் ஆரம்பமாகிய 1957ஆம் ஆண்டிலேயே ஆரம்பப் பாடசாலை, தபால் நிலையம் என்பன அமைக்கப்பட்டதுடன். இதே ஆண்டில் நடமாடும் வைத்தியசாலையும் மத்திய மருந்தகமாகத் தரமுயர்த்தப்பட்டு தனியானதொரு உதவி வைத்திய அதிகாரியும் நியமிக்கப்பட்டார்.
1964ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் 25ஆம் திகதி இலங்கையில் ஏற்பட்ட சூறாவளியின் தாக்கத்தினால் இக் கிராமத்தின் வீடுகளில்
50

பெரும்பான்மையானவை சேதத்திற்குள்ளாகின. இவை அரசாங்க உதவியுடன் இரண்டு வருடங்களில் திருத்தியமைக்கப்பட்டு முன்பு தகரங்களினால் கூரையைக் கொண்டிருந்த வீடுகள், சூறாவளியின் பின் ஒடுகளைக் கொண்ட கூரையாகக் காட்சியளித்தன. இது மக்களின் சுகாதார செளகரியங்களை அதிகரித்தாகக் காணப்பட்டது.
இக்குடியேற்றத்திட்டத்தின் முழு இலக்கையும் அடையமுடியாதவாறு அதன் அபிவிருத்திக் குறிக்கோள்களுக்குப் பெரிதும் முட்டுக்கட்டையாக இருந்தது போக்குவரத்து செப்பனிடப்படாமையாகும். இக் கிராமத்தை மன்னார் பட்டினத்துடனும், மன்னார்-வவுனியா பிரதான வீதியுடனும் இணைக்கும் வகையில் இரு வண்டிற் பாதைகள் காணப்பட்டபோதிலும் அவையிரண்டுமே இன்று வரை அபிவிருத்தி செய்யப்படாது காணப்படுகின்றமை கவலைக்குரியதாகும். வீதிப் பிரச்சினையைத் தீர்ப்தற்காக இவ்விரு வண்டிற் பாதைகளுக்கும் பொதுவாக நேரான ஒரு வீதி பெரியமடு கிராமமக்களால் சிரமதானம் மூலம் 1967இல் அமைக்கப்பட்டது. இதன் தொடர் 50% அரச உதவியுடன் சிரமதான அடிப்படையில் மேலும் 8 மைல் நீளத்திற்கு அமைக்கப்பட்ட பின்பே மிக மோசமாக இருந்த போக்குவரத்துப் பிரச்சினை குறைக்கப்பட்டு பஸ் சேவையும் ஆரம்பிக்ப்பட்டது.
போக்குவரத்து வசதியின்மை விவசாய முயற்சிக்கான உள்ளீடுகளையும் வெளியீடுகளையும் கொண்டு செல்வதிற் பாரிய தடையாகக் காணப்பட்டதுடன் சந்தைப்படுத்தும் பிரச்சினையையும் ஏற்படுத்தியது.
எதிர் காலத்தில் இம்மக்கள் தமது சொந்த இடம் மீளும் போது மேற்குறிப்பட்ட குறைபாடுகள் களையப்பட்ட அடிப்படையிலான அபிவிருத்தித் திட்டம் செயற்படுத்தப்படுவது அவசியமாகும் (பார்க்க அத்தியாயம்-8).
51

Page 35
4.2. கட்டுக்கரைக் குளத்திற்குட்பட்ட மாந்தைப் பிரதேசம்
மன்னார் மாவட்ட விவசயாப் பொருளாதாரத்தில் கட்டுக்கரைக்குள நீர்ப்பாசனம் மிக முக்கியமான இடத்தினை வகிக்கின்றது. வரலாற்றுக்கால சிறப்பு மிக்க இந்நீர்ப்பாசனத் திட்டம் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலத்திற்கு நீர்ப்பாசனத்தை அளிக்கின்றது. அது போல இக்குள நீர் இப்பிரதேச மேட்டுநிலப் பயிர்ச்செய்கைக்குப் பயன்படுவதோடு மக்களின் நாளாந்த நீர்த்தேவைகளையும் நிறைவு செய்கின்றது. அந்த அடிப்படையில் கட்டுக்கரைக்குளம் இப்பிரதேச மக்களின் நாளாந்த வாழ்க்கையோடும் பின்னிப் பிணைந்த ஒன்றாகக் காணப்படுகின்றது.
பருமட்டாகக் கட்டுக்கரைக்குள நீர்ப்பாசனத்தினால் பயன்பெறும் பிரதேசங்களை இரண்டு நிர்வாகப் பிரதேசங்களுக்குள் உட்படுத்தி நோக்கக் கூடியதாக இருக்கின்றது. அதில் ஒன்று இந்நீர்ப்பாசனத் திற்குட்பட்ட மாந்தைப் பிரதேசமாகும். இப்பகுதியில் இப்பிரதேசத்தில் வாழ்ந்த முஸ்லிம்களின் வாழ்வு, வளம் பற்றி நோக்கப்படுகின்றது.
4.2.1 முஸ்லிம் குடியிருப்புக்கள்
கட்டுக்கரைக் குளத்திற்குட்பட்ட மாந்தைப் பிரதேசத்தில் சிறிதும் பெரிதுமாக 1 குடியிருப்புக்களில் முஸ்லிம்கள் வாழ்ந்தார்கள். அவற்றில் முக்கியமானவை விளாங்குளி, மினுக்கன், கட்டைக்காடு, பள்ளிவாசல்பிட்டி, அடம்பன், வேளாகுளம், பறையகுளம் (சொர்ணபுரி), வட்டக்கணிடல் ஆகியனவாகும். இக்குடியிருப்புகளின் புவியியற் பரம்பலை படம் 7 காட்டுகின்றது.
முஸ்லிம் குடியிருப்புகளில் பெரும்பாலானவை கட்டுக்கரைக்குளத்திற்கு வட மேற்காக அமைந்திருந்தன. முஸ்லிம் குடியிருப்புகள் புவியியல் ரீதியான தொடர்ச்சியினைக் கொண்டிருக்காவிட்டாலும், ஒன்றோடொன்று அண்மித்த துரத்தில் அமைவுற்றிருந்தன. இதன்மூலமாக தமக்கிடையில் குடும்ப, சமய, கலாசாரத் தொடர்புகளைத் தொடர்ச்சியாக வைத்திருக்கக் கூடிய வாய்ப்பினைப்
பெற்றிருந்தன.
52

Lo 7 : கட்டுக்கரைக்குளத்திற்குட்பட்ட பிரதேசத்தில் முஸ்லிம்கள் செறிவாக வாழ்ந்த கிராமங்கள், 1990
6.
-— விளாங்குளி لأهمي கடல் . فراہم
العلم
கேட்டைக்காடு
- மினுக்கன்
១១ឃុំ பேள்ளிவாசல்பிட்டி R அடம்பன்
რი. ᏞᏝᏱfᎢIᏏ6ᏡᎠgᏏ -
* 2 டான குளம
ب: پیقت
● இசண்கள் குளம் பறையகுளம் 穆
422.2%
வட்டக்கண்டல்
உயிலங்குளம்
இலந்த மோட்டை
●
e ܟܸܡܓܵ நானாட்டான் றசூல்புதுவெளி
േ?
aა/რ முருங்கன்" பூவரசன்குளம்
15 ஜி8
த நொச்சிக்குளம்
O
மூலம் : Brolier, 1937 இலங்கை ஒரங்குலப்படம், 19 ア3
53

Page 36
அட்டவணை - 6
கட்டுக்கரைக் குளத்திற்குட்பட்ட மாந்தைப் பிரதேச முஸ்லிம்களின் விவசாயக் காணிகளும் அவற்றின் பரிமாணமும், 1990.
விவசாயக் காணிகள் பரிமாணம் (ஏக்கரில்)
அடம்பன் 15 ஆண்டான் குளம் 3OO பள்ளிவாசல்பிட்டி (நெடுவரம்பு) 8O மருதோன்றிவான் வேளாகுளம் OO இலவங்குளம் 1OO வேப்பங்குளம் 50
வட்டக்கண்டல் 75 நெடுங்கண்டல் 150 வண்ணாகுளம் 2O குமானையன்குளம் 15 செட்டியார்மகன் கட்டைக்காடு 2OO ஏனைய பிரதேசம் LOO
முலம் ஓரங்குலப்படம், 1957 இலிருந்தும் இப்பிரதேசக் கிராம முஸ்லிம்களிடமிருந்து
வாய்முலமாகவும், 1998 பெற்றுக்கொள்ளப்பட்டது.
54
 

4.2.2 வரலாறும் கலாசாரமும்
விடத்தல்தீவு, பெரியமடுவுக்குச் சமனான கலாசாரப் பாரம்பரியத்தை இப்பிரதேசத்தில் வாழ்ந்த மக்கள் கொண்டிருந்தனர். இதற்கு இப்பிரதேசத்தில் அமைந்திருந்த பெரிய கிராமங்கள் மிகப் பழைய வரலாற்றைக் கொண்டிருந்தமையும் இப்பழைய கிராமங்களுக்கும் விடத்தல்தீவு, பெரியமடுக் கிராமங்களுக்கிடையில் மிக ஆரம்ப காலத்திலிருந்து தொடர்புகள் காணப்பட்டமையும் காரணமாகும்.
உண்மையில் இப்பிரதேசத்தின் மிகப்பழைய கிராமம் விளாங்குளியாகும். இக்கிராமம் இப்பிரதேசத்தின் கடற்கரையோரமாக அமைந்திருந்ததனால் முஸ்லிம்களின் மிகப் பழைய கடல்வள நடவடிக்கைகளின் மையமாகவும் இது விளங்கியது. அதுமட்டுமன்றி, பருவகால விவசாயமும் இப்பிரதேசத்தில் செய்கை பண்ணப்பட்டது. விடத்தல்தீவுக்குச் சமனான வரலாற்றினையும், பொருளாதார வளத்தினையும் கொண்ட விளாங்குளி விடத்தல்தீவுடன் இணைந்த அடிப்படையில் மாந்தைப் பிரதேச விவசாயக் குடியிருப்புகளின் ஆரம்பங்களுக்குக் காரணமாக அமைந்தது.
விடத்தல்தீவு-விளாங்குளிக் கிராமங்களிலிருந்தே ஆண்டான்குளம், நெடுவரம்பு, வேளாகுளம் போன்ற பல புதிய கிராமங்கள் உருவாகின. அதே நேரத்தில் வேட்டையாமுறிப்பு, சிராட்டிக்குளம் போன்ற இப்பிரதேசப் பழைய முஸ்லிம் கிராமங்கள் காலநிலை சீர்கேட்டினால் அழிவடைந்தன. மேற்குறித்த வரலாற்றுப் பின்னணியின் பிரதிபலனாகவே விடத்தல்தீவு-விளாங்குளிப் பிரதேச கலாசாரச் செல்வாக்கு இப்பிரதேசத்தில் உருவாகியது. விடத்தல்தீவு-பெரியமடுப் பிரதேசத்தில் அடையாளம் கண்ட சீறாப்புராண விரிவுரைகள், கொடியெடுத்தல், கந்துாரிகள் போன்ற இஸ்லாமிய சமயவழிமுறை வந்த வைபவங்களும் கும்மி, சிலம்படி போன்ற விழாக்கால விளையாட்டுக்களும், ஆசைக்கவி, தாலாட்டு போன்ற கவிதை அம்சங்களும் இப்பிரதேசத்தில் வேரூன்றி வளரக் காரணமாயிற்று. இஸ்லாமிய சமய நம்பிக்கைகளும் வழிமுறைகளும் இப்பிரதேசத்தில் சிறப்பாகக் காணப்பட்டன. எல்லா முஸ்லிம் கிராமங்களிலும் பள்ளிவாயில்கள் இருந்தன. செறிவாக முஸ்லிம்கள் வாழும் பிரதேசங்களில் ஜும்ஆத் தொழுகை நடைபெற்றது. பக்கத்தில் உள்ள சிறிய கிராம முஸ்லிம்கள் பெரிய கிராமங்களின் ஜும்ஆப் பள்ளியில் ஒன்று கூடிப் பிரதேச மட்டத்தில் தமது இஸ்லாமிய ஒற்றுமையை வாரம்தோறும் புதுப்பித்துக் கொள்வார்கள். இதைவிட
55

Page 37
இப்பிரதேசத்தில் காணப்பட்ட முஸ்லிம் பாடசாலைகள், மதுரசாக்கள், இஸ்லாமிய நிலையங்கள் என்பன இம்மக்களின் இஸ்லாமிய அறிவையும், வழிமுறையையும்
மேலும் விருத்தியாக்கும் சாதனங்களாகக் காணப்பட்டன.
4.2.3 தமிழ்-முஸ்லிம் உறவு
இப்பிரதேசத்தில் தமிழ்-முஸ்லிம் உறவு மிகச் சிறப்பாகக் காணப்பட்டது. இவ்வுறவின் அடிப்படைகள் பற்றி முன்னர் விளக்கினோம். ஆனால் கட்டுக்கரைக் குளத்திற்குட்பட்ட மாந்தை முஸ்லிம் குடியிருப்புக்களில் எவ்வகையான தமிழ்-முஸ்லிம் உறவு காணப்பட்டதென்பதை சில குறிப்பான உதாரணங்களைக் கொண்டு நோக்குவோம்.
இப்பிரதேசத்தில் முஸ்லிம்கள் எண்ணிக்கையில் குறைவானவர்களாககக் காணப்பட்டாலும் சமய, கலாசார ரீதயாகத் தமிழ், கத்தோலிக்கக் கலாசாரப் பிரதேசத்தில் தனித்துவமாக அடையாளப்படுத்தக் கூடியவர்களாக வாழ்ந்து வந்தார்கள். நாளாந்த வாழ்க்கையில் இப்பிரதேசத்தில் முஸ்லிம்களும், தமிழர்களும் அதிக தொடர்புகளை வைத்திருந்தார்கள். வயல் வேலைகளில் இவ்விரு இன மக்களும் பரஸ்பரம் உதவி செய்து வந்தார்கள். கொடுக்கல் வாங்கல்களில் மிகவும் கெளரவமாக நடந்து கொண்டதோடு பிணக்குகளின் போது பிரச்சினை முற்றிவிடாமல் அப்பிரச்சினையை சமூக மட்டத்தில் தீர்த்துக் கொள்ளக் கூடிய நடைமுறை வழிகளையும் இம்மக்கள் கொண்டிருந்தார்கள். ஒருவரது சுக துக்கங்களில் மற்றவர்கள் மிகச் சரளமாகப் பங்குபற்றினார்கள். மச்சான், அண்ணன், காக்கா, மாமா போன்ற உறவுப் பதங்களைக் கொண்டு ஒருவரையொருவர் அழைத்துக் கொண்டார்கள். ஒரு சமயத்தவரின் விரும்தோம்பலில் மற்றவர் எவ்வித சங்கடமும்மின்றி பங்கேற்கின்ற வழமை இப்பிரதேசத்தில் காணப்பட்டது.
4.2.4 பொருளாதார, சமூக அடிப்படைகள்
கட்டுக்கரைக்குள நீர்ப்பாசனமே இப்பிரதேசப் பொருளாதாரத்தின் அடிப்படையாகும். கட்டுக்கரைக் குளத்திலிருந்து ஒரு பருவ நீர்ப்பாசனம் இப்பிரதேசத்தின் நிச்சயதன்மையை கொண்டதாக இருந்தது. ஆனால் வட்டக்கண்டல், நெடுவரம்பு, வேளாகுளம், ஆண்டாங்குளம் போன்ற முஸ்லிம் கிராமங்கள் இரு பருவத்திலும் நீர்ப்பாசன நீரை நெல் விவசாயத்திற்கு அல்லது மேட்டு நிலப் பயிர்ச் செய்கைக்குப் பெற்றுப் பயன்பெற்றன.
56

ம் 8 : கட் க்கரைக்குளத்திற்குட்பட்ட I – D முஸ்லிம்களின் விவசாயக் - காணிகள், 1990
செட்டி யார்மகன் கட்டக்காடு
பள்ளிவாசல்பிட்டி
மருதோன்றிாைன் வேளாகுளம்
அடம்பன்
இசங்கன்குளம்
x_ ஆண்டாங்குளம் வேப்பன்குளம்
வண்ணாகுளம்
மாந்தைப் பிரதேசம்
வட்டக்கணிடல்
இலந்த மோட்டை
றசூல்புதுவெளி
பூவரசன்குளழ்
நரண்ாட்டான் பிரதேகும் உ~ கால்வாய்
)ே குளம்
நொச்சிக்குளம் BM அணைக்கட்டு
மூலம் வெளிக்கள ஆய்வு, 1996 இலங்கை இடவிளக்கப்படம் 1972
57

Page 38
கட்டுக்கரைக் குளத்திற்குட்பட்ட மாந்தைப் பிரதேசத்தில் ஏறக்குறைய 1205 ஏக்கர் நெற்காணிகள் முஸ்லிம்களுக்குச் சொந்தமாக இருந்தது என்று மதிப்பிடக் கூடியதாக இருக்கின்றது. இவற்றில் மிகப் பெரும்பான்மையானவை ஆண்டான்குளம், செட்டியார் மகன் கட்டைக்காடு, நெடுங்கண்டல், மருதோன்றிவான், வேளாகுளம், இசங்கன் குளம் ஆகிய பிரதேசங்களில் காணப்பட்டன. இப்பிரதேசத்தில் முஸ்லிம்களுக்குரிமையாவிருந்த காணிகளின் கிராம ரீதியான பரிமாணத்தை ஏக்கர் அளவுகளில் அட்டவணை 6 தருகின்றது. முஸ்லிம்களுக்குச் சொந்தமான இக்காணிகளில் ஒரு குறிப்பிட்ட அளவான பகுதி மன்னார் தீவுப் பிரதேச முஸ்லிம் கிராமத்தவர்களுக்கும் (மன்னார்க்குடியிருப்பு, தாராபுரம், எருக்கலம்பிட்டி) உரிமையாக இருந்தன என்றும் அறியக்கூடியதாக இருக்கின்றது.
கட்டுக்கரைக் குளத்திற்குட்பட்ட மாந்தைப் பிரதேச முஸ்லிமகளில் மிகப் பெரும்பான்மையானவர்கள் விவசாயிகளாவர். அடம்பனில் வர்த்தகத்திலும் கணிமான முஸ்லிம்கள் ஈடுபட்டமையும் இங்கு குறிப்பிடத்தக்கது. விளாங்குளிக் கிராம முஸ்லிம்கள் முன்னொரு காலத்தில் கடல்வளத் தொழில்களில் ஈடுபட்டது பற்றி முன்பு குறிப்பிட்டோம் ஆனால் பிற்காலத்தில் இதன் முக்கியத்துவம் வெகுவாகக் குறைந்து விட்டது. இப்பிரதேச முஸ்லிம்களின் தொழில் முறைப் பரம்பல் பற்றி அட்டவணை 3 தெளிவாகத் தருகின்றது.
4.2.5 முஸ்லிம் கிராமங்கள்
விளாங்குளி
விளாங்குளி கட்டுக்கரைக்குளத்திற்கு வட மேற்கில் அமைந்துள்ளது. பூனகரி-மன்னார் பிரதான வீதியில் இருந்து ஒரு மைல் வடக்காக இக்கிராமம் காணப்படுகின்றது. இப்பிரதேசத்தில் மிகப் பழைய முஸ்லிம் கிராமம் இதுவாகும். இக்கிராமத்தின் தோற்றம் பற்றிய விபரங்கள் கிடைக்கக் கூடியதாக இல்லை. கவ்விலான் செல்லப்பன், கதாபி மரைக்கார் என்பவர் அறியப்பட்ட மிகப் பழைய மூதாதையராவார். இவர், 6-7 தலைமுறைக்கு முந்தியவர் என்று நம்பப்படுகின்றது. இவரின் மகன் முத்துமரைக்கர் என்றும் கூறப்படுகின்றது. மேற்குறிப்பிட்ட பெரியார்களின் பரம்பரையினரே இன்றைய விளாங்குளி முஸ்லிம்களாவர் என்று கூறப்படுகின்றது.
இக்கிராமத்தில் ஒரு நீர்ப்பாசனக் குளம் காணப்பட்டது. இக்குளத்திற்கு மேற்கே காணப்பட்ட குடியிருப்புப் பகுதி பெரிய விளாங்குளி என்றும், கிழக்கே
58

காணப்பட்ட பகுதி சிறிய விளாங்குளி என்றும் அழைக்கப்பட்டன. ஆங்கிலேயர் காலத்திற்கு முந்திய மன்னார் பூனகிரிப் பாதை இக்கிராமத்தின் மத்தியினூடாகவே சென்றது. இது இக்கிராமத்தின் சிறப்பபைக் குறிப்பதாக மட்டுமல்லாமல் அக்காலகட்டப் பொருளாதார கலாசார முக்கியத்துவத்தையும் சுட்டிக் காட்டுகின்றது.
கடல் வள நடவடிக் கையே மிக ஆரம்ப கால முக்கிய நடவடிக்கையாகும். அதில் குறிப்பாக படகோட்டமும், சங்கு குழித்தலும் பிரதான பொருளாதார நடவடிக்கையாகக் காணப்பட்டது. இக்கிராமம் மிகப் பழைய காலத்தில் மன்னார்த் தீவையும், விடத்தல்தீவையும் இணைக்கும் முக்கோணக் கடல் வலயத்தில் காணப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது. சில வேளைகளில் மாந்தைப் பிரதேச வரலாற்றுக் கால முஸ்லிம்களின் வர்த்தக, கடல் தேட்ட நடவடிக்கைகளின் தொடர்ச்சியாக விளாங்குளிக் குடியிருப்பு அமைவுற்றிருக்கலாம்.
பிற்காலத்தில் கடல்வளத் தேட்டப் பொருளாதார நடவடிக்கைகளின் முக்கியத்துவம் குறைந்து, விவசாயம் முக்கியத்துவம் பெறத் தொடங்கியது. பயிர்ச்செய்கை, கால்நடைவளர்ப்பு என்பன பொதுவான பொருளாதார நடவடிக்கைகளாக இக் கிராமத்தில் காணப்பட்டன. பிரித்தானியர் கால ஆண்டறிக்ககைளின் படி காலனித்துவ காலத்தில் இக்கிராமச் சூழலில் புகையிலைச் செய்கையும் முக்கியத்துவம் பெற்றிருந்தது.
இந்நூற்றாண்டின் ஆரம்பத்தில் கிராமமும், கிராம மக்களும் பல இயற்கை அனர்த்தங்ங்களுக்கு உடபட்டனர். 1931ஆம் ஆண்டு இப்பிரதேசம் பெரும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து பஞ்சமும் நிலவியது. 1964 ஆம் ஆண்டு பெரும் புயலினால் இக்கிராமம் முற்றாக அழிக்கப்பட்டது. அதில் குறிப்பாக விளாங்குளிக் குளமும், அதன் சூழலில் காணப்பட்ட விவசாய நிலங்களும் பாதிப்புகுள்ளாயின. குறிப்பாகக் கடல்நீர் குளத்தையும், விவசாய நிலங்களையும் அழித்தது. தவிர்க்க முடியாத காரணத்தினால் இக்கிராம முஸ்லிம்கள் விளாங்குளியை விட்டு வெளியேறிக் கட்டுக்கரைக் குளத்திற்குட்பட்ட வேறு கிராமங்களில் குடியேறினார்கள். விளாங்குளி முஸ்லிம்களின் வரலாற்றுத் தொடர்ச்சி இப்பிரதேச மினுக்கன், கிராமத்தில் ஆரம்பிக்கின்றது. இது பற்றிப் பின்னர் விளக்கப்படும்.
விளாங்குளி முஸ்லிம்கள் கலை, கலாசாரத்தில் சிறப்புற்று விளங்கினர். மாந்தை-நானாட்டான் பிரதேசத்தில் முதன்முதல் சீறாப்புராண விரிவுரைகள்
59

Page 39
விளாங்குளியிலேயே ஆரம்பித்திருக்க வேண்டும் என நம்பப் படுகின்றது. கிடைக்கப் பெற்ற விபரங்களின் படி 1938 ஆம் ஆண்டிலேயே சீறாப்புராண விரிவுரைகளை நடாத்தும் வழமை இக்கிராமத்தில் காணப்பட்டது.
சீறாப்புராண விரிவுரைகள் ஏறக்குறைய 12 நாட்கள் இக்கிராமத்தில் நடைபெறும். ஆனி (ஜூன்) ஆடி(ஜூலை) மாத நிலாக் காலங்களில் வருடத்திற்கொரு முறை சீறாப்புராண விரிவுரைகள் இக் கிராமத்தில் நிகழ்த்தப்பட்டன. மாந்தைப் பிரதேச முஸ்லிம் கிராமங்களில் இருந்து இவ் விரிவுரைகளுக்கு மக்கள் பெருந்திரளாக வந்து பங்கு பற்றுவர். இக்கிராம சீறாப்புராண விரிவுரைகள் ஏனைய மதத்தினரையும் கவர்ந்திருந்தது. இவ்விரிவுரையின் போது இப்பிரதேச முஸ்லிம்-தமிழ் மக்களின் நலனுக்காகவும் உயர் வாழ்க்கைக்காகவும் பிரார்த்தனை செய்யும் வழமை இருந்தது. இதைவிட நெய்னாமூசா அப்பா பெயரில் கொடியெடுத்து கந்துாரி நடாத்துதலும் இங்கு வழமையில் இருந்தது. விளாங்குளி ஜும்ஆப் பள்ளிவாயில் வளவில் மதுரையடி ஒலியுல்லாஹ் என்ற ஆத்ம ஞானியின் அடக்கஸ்தலம் (சியாரம்) ஒன்று காணப்பட்டது.
விளாங்குளி முஸ்லிம்கள் மொத்தமாக 250 ஏக்கர் நெல் நிலத்திற்கு உரிமைபெற்று இருந்தார்கள் என்று மதிப்பிடப்படுகின்றது. மாந்தையில் 5 இடங்களில் இக்கிராமத்தவர்களின் நெல்நிலங்கள் செறிவாகக் காணப்பட்டன. அதில் கிளவனார்கட்டில் 50 ஏக்கர், அகத்திக்குளம் 25 ஏக்கர், சின்ன விளாங்குளி 40 ஏக்கர், ஒட்டுப்பள்ளத்தில் 20 ஏக்கர், பெரிய விளாங்குளி 75 ஏக்கர் என்பன குறிப்பிடத்தக்க நெல்நிலங்களாகும்.
மினுக்கன்
மினுக்கன் அடம்பனிலிருந்து வடக்காக அரை மைல் துரத்தில் அமைந்துள்ளது. இக்கிராமம் 1964 ஆம் ஆண்டு வெள்ளத்தால் இடம்பெயர்ந்த விளாங்குளி அகதிகளுக்காக ஏற்படுத்தப்பட்ட குடியேற்றத் திட்டமாகும். அக்காலத்தில் மன்னார் உதவி அரசாங்க அதிபராக இருந்த திரு. வாமதேவன் அவர்கள் இக்குடியேற்றத் திட்டத்திற்குப் பின்னணியில் இருந்த ஒருவராவார். இன்றைய மினுக்கன் பிரதேசத்தில் விளாங்குளி வெள்ள அகதிகளுக்காக 35
வீடுகள் அப்போது கட்டிக் கொடுக்கப்பட்டன. இவ்வீடுகளை அமைக்க CARE
60

என்ற அரச சார்பற்ற நிறுவனம் உதவியது. ஒவ்வொரு வீடும் 21 X 21 அடி நீள அகலத்தில் அமைக்கப்பட்டது. வீட்டுடன் சேர்ந்து அரை எக்கர் மேட்டுநிலம் குடியிருப்பாளர்களுக்கு வழங்கப்பட்டது. இக்கிராம வீடமைப்பின் கட்டிட வேலைகள் சிரமதானம் மூலமாகச் செய்யப்பட்டன.
1990ஆம் ஆண்டில் ஏறக்குறைய 150 குடும்பங்கள் இங்கு வாழ்ந்தன. முகம்மது யாகூப், முகைதீன் கப்புடையார் போன்ற பெரியார்களின் பரம்பரையினரே மினுக்கன் மக்களாவர். மேற்குறிப்பிட்ட பெரியார்கள் விளாங்குளியிலிருந்து வந்தவர்களாவர். இதைத்தவிர விடத்தல்தீவு, மன்னார் மூர்வீதி, எருக்கலம்பிட்டி, வட்டக்கண்டல் போன்ற முஸ்லிம் கிராமங்களிலிருந்தும் வந்து மக்கள் குடியேறினர்.
மினுக்கன் நெற்செய்கைக்கும், மேட்டுநிலப் பயிர்ச் செய்கைக்கும், கால்நடை வளர்ப்பிற்கும் உகந்ததாகக் காணப்பட்டது. முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்ட போது இங்கு ஒரு ஜும்ஆப் பள்ளிவாயிலும் 5ஆம் வகுப்பு வரையான பாடசாலையும் இருந்தன. ஏறக்குறைய 200 மாணவர்கள் அங்கு கல்வி கற்றார்கள். மினுக்கன் முஸ்லிம்களில் பெரும்பான்மையானோர் தற்போது அநுராதபுர மாவட்ட நெல்லயாகமவில் பல வருடங்களாக அகதிகளாக வாழ்ந்து
வருகிறார்கள்.
வட்டக்கண்டல்
இப்பிரதேசத்தில் முஸ்லிம்கள் செறிந்து வாழ்கின்ற கிராமங்களில் வட்டக்கண்டலும் ஒன்றாகும். இங்கு ஏறக்குறைய 200 முஸ்லிம் குடும்பங்கள் வாழ்ந்தன. இக்கிராமம் கட்டுக்கரைக் குளத்திலிருந்து செல்லும் முதலாவது பிரதான கால் வாயில் ஒரு மைல் தொலைவில் அமைந்திருந்தது. உயிலங்குளத்திலிருந்து வரும் ஜூப்லி என்ற பாதை வட்டக்கண்டலைத் தெற்காக இணைக்கின்றது. 1902 ஆம் ஆண்டு கட்டுக்கரைக்குள திருத்த வேலைகள் செய்யப்படுவதற்கு முன்னர் இக்குளத்தின் புலவுப் பகுதியில் இக்கிராமம் அமைந்திருந்தது. பின்னர் நீர்ப்பாசனப் புனரமைப்போடு தற்போதைய இடத்தில் குடியமர்த்தப்பட்டார்கள். அதன் பின் 1912, 1914 காலப் பகுதிகளில் இப்பிரதேசச் சூழலில் அரசாங்கம் ஏலத்தில் காணிகளை விற்றபோது முஸ்லிம்களும் குறிப்பாக மதாரு சாஹிபு செல்லமரைக்கார் என்னும் தனவந்தர்
வட்டக்கண்டல், மணிப்புல்குளம், பறங்கிச் சாளம்பன், காயாமோட்டை, பாலையடிப்
61

Page 40
புதுக்குளம் ஆகிய இடங்களில் நுாற்றுக்கு மேற்பட்ட ஏக்கர் காணிகளை வாங்கி உடமையாக்கினர். இக்காணிகளில் பயிர்ச்செய்கை நடவடிக்கைகளுக்காக யாழ்ப்பாண, இந்திய மக்கள் இங்கு வந்து குடியேறினர்.
வட்டக்கண்டலுக்குப் பல முஸ்லிம் கிராமங்களிலிருந்தும் மக்கள் வந்து குடியேறியிருக்கின்றார்கள். அதில் இந்தியாவிலிருந்து வந்து குடியேறிய முகம்மது அலியார் என்பவரும் ஒருவராவார். இவர் இந்தியாவின் தொண்டியைச் சேர்ந்தவர். இக்கிராமச் சூழலில் காணப்படும் கேணி அல்லது நீர்த்தடாகம் ஒன்றிற்கு முகம்மது அலியார் கேணி என்று இப்பிரதேச மக்களால் அழைக்கப்படும் வழமை இதுவரை காணப்பட்டது. பிற்காலத்தில் விடத்தல்தீவு, விளாங்குளி, புதுவெளி போன்ற கிராமங்களிலிருந்து மக்கள் இங்கு வந்து குடியேறியிருக்கின்றார்கள்.
வட்டக்கண்டல் கிராமச்சூழலில் காணப்பட்ட நுாற்றுக்கணக்கான ஏக்கர் நெல்நிலம் இக்கிராமத்தவர்களுக்கு உரிமையாக இருந்தது. இதைவிட பறங்கி காலம், பாலப்பெருமாள்கட்டு போன்ற இடங்களிலும் முஸ்லிம்களுக்குச் சொந்தமான நெற்காணிகள் இருந்தன. பயிர்ச்செய்கைக்குப் பொருத்தமான வளமான நிலம், நீர்ப்பாசனம், காலவாய் அமைப்புக்கள், போக்குவரத்து போன்ற எல்லா வசதிகளையும் சிறப்பாகக் கொண்டிருந்த இக்கிராமம் சமய, கலாசார ரீதியாகவும் மேலோங்கிக் காணப்பட்டது. ஆரம்பத்திலிருந்தே சிறப்பான பஸ் போக்குவரத்தை இக்கிராமம் கொண்டிருந்ததோடு உப தபால் அலுவலகம், சனசமூக நிலையம், 500 பேர் தொழக்கூடிய ஜும்ஆப் பள்ளிவாசல், பாடசாலை, கூட்டுறவுச் சங்கம் போன்ற மத, கலாசார நிலையங்களையும் கொண்டிருந்தது. இவ்வசதி வாய்ப்புக்களால் இக்கிராம மக்கள் கல்வி, கேள்விகளிலும் சிறந்து விளங்கினர். பட்டதாரிகள், ஆசிரியர்கள், தபாலதிபர், மெளலவிகள் எனப் பல அரச உத்தியோகத்தர்களும் காணப்பட்டனர்.
இஸ்லாமிய கலாசாரத்தின் உறைவிடமாகக் காணப்பட்ட வட்டக்கண்டல் முஸ்லிம் கிராமத்தில் சீறாப்புராண விரிவுரைகள், கந்துாரி வைபவங்கள், கொடியெடுத்தல் போன்ற கலாசார அம்சங்கள் சிறப்பாகக் காணப்பட்டன. இப்பிரதேசத்தில் முஸ்லிம்-தமிழ் உறவு மிகச் சிறப்பாகக் காணப்பட்டதாக அறிய முடிகின்றது.
ஆண்டான்குளம்
ஆன்டாங்குளம் ஒரு தமிழ்-முஸ்லிம் கிராமமாகும். இக்கிராமத்தில் விடத்தல்தீவு, மன்னார்மூர்வீதி, எருக்கலம்பிட்டி, நெடுவரம்பு போன்ற முஸ்லிம்
62

கிராமங்களிலிருந்து மக்கள் வந்து குடியேறினார்கள். சமய கலாசார நடவடிக்கைகளுக்கு இக் கிராமத்திற்கு அணிமையில் அமைந்திருந்த பள்ளிவாசல்பிட்டிப் பள்ளிவாயிலைப் பயன்படுத்தி வந்தனர். ஆண்டாங்குள முஸ்லிம் அகதிகள் தற்போது அக் கரவெளியில் வாழ்கின்றார்கள். ஆண்டாங்குளத்தில் முஸ்லிம்கள் சிறு தொகையாகத் தமிழ் மக்களோடு கலந்து வாழ்ந்தாலும் மிகக் கெளரவமாக மதிக்கப்பட்டு வந்தார்கள் என்பதற்குப் பல
ஆதாரங்கள் உள்ளன.
பள்ளிவாசல்பிட்டி
இக் கிராமம் நெடுவரம்பு, மரதோன்றிவாள் ஆகிய முஸ்லிம் கிராமங்களுக்கருகாமையில் காணப்பட்டது. 1984ஆம் ஆண்டில் இக்கிராமம் முஸ்லிம் கிராமமாகத் தோற்றம் பெற்றது. அக்காலத்தில் நெடுவரம்பு என்ற பழைய முஸ்லிம் கிராமத்தில் வாழ்ந்துவந்த முஸ்லிம்கள் விவசாயத் தொழில் வாய்ப்புக் காரணமாக இக்கிராமத்திற்கு இடம் பெயர்ந்து பள்ளிவாசல்பிட்டி என்ற பெயரையும் இக்கிராமத்திற்கு இட்டனர்.
சொர்ணபுரி (பறையகுளம்)
இக்கிராமம் அடம்பனிலிருந்து தெற்காக உயிலங்குளப் பாதையில் 2மைல் தொலைவில் அமைந்திருந்தது. இது முன்னர் பறைய குளம் என்று அழைக்கப்பட்டது. இது ஒரு குளப்பெயரைக்கொண்டு அழைக்கப்பட்டது. 1962 இல் இக்கிராம மக்கள் இதன் பெயரை சொர்ணபுரி என்று மாற்றிமைத்தனர். இக்கிராமத்தின் ஆரம்பம் பற்றிய ஒரு வரலாறு உண்டு. 1928ஆம் ஆண்டு விளாங்குளியைச் சேர்ந்த சகோதரர்களான சின்ன மரைக்கார், முகம்மது மீராசாகிபு ஆகிய இருவரும் தமது குடும்ப சகிதம் பறையகுளத்தில் வந்து குடியேறினார்கள் என்று கூறப்படுகின்றது. அக்காலத்தில் இவ்விரு சகோதரர்களும் ஆரோக்கியம் என்பவரிடமிருந்து 6 ஏக்கர் காணியை விலைக்கு வாங்கி விவசாயம் செய்து வந்தனர். 1953 ஆம் ஆண்டு உயிலங்குள 11 ஆம் கட்டையைச் சேர்ந்த சகோதரர்களான நாசர்பிச்சை, இஸ்மாயில், சேகுதாவுது ஆகிய மூவரும் குடும்ப சகிதம் இங்கு வந்து குடியேறினார்கள். இவ்வாறு
பல கிராமங்களைச் சேர்ந்த மக்களால் உருவாக்கப்பட்டதே பறைய குளமாகும்.
63

Page 41
சொர்ணபுரி முஸ்லிம்களுக்கு அண்மைக் கிராமமாகன பீக்குளத்திலும் ஏறக்குறைய 60 ஏக்கர் நெற்காணியும், கள்ளிக்குளத்தில் ஏறக்குறைய 40 ஏக்கர் நெற்காணியும் காணப்பட்டன. இக்கிராம மக்களுக்கு 200 ஏக்கருக்கு மேற்பட்ட காணிகள் சொந்தமாக இருந்தன.
இக்கிராமத்தில் ஒரு பழைய பள்ளிவாசல் காணப்பட்டது. இது 1956 ஆம் ஆண்டில் ஜும்ஆப் பள்ளிவாயிலாக மாற்றப்பட்டது. 1970 ஆம் ஆண்டிலிருந்து 8ஆம் ஆண்டு வரையான வகுப்புக்களைக் கொண்ட பாடசாலையொன்று ஆரம்பிக்கப்பட்டது. 180 மாணவர்கள் அக்காலத்தில் இப்பாடசாலையில் கல்வி கற்றார்கள். சொர்ணபுரி முஸ்லிம்கள் இப்போது
நெல்லியாகமவிலும், புத்தளப் பிரதேசங்களிலும் வாழ்கின்றார்கள்.
அடம்பன்
அடம்பனில் ஆரம்பத்தில் குடியேறியவர்கள் மட்டக் களப்பைச் சேர்ந்த முஸ்தபா ஹாஜியார், எருக்கலம் பிட்டியைச் சேர்ந்த காதர் சாஹிபு, மன்னர் குடியிருப்பைச் சேர்ந்த சாகுல் ஹமீது அவர்களின் தம்பி கஜின், வட்டக் கண்டலில் இருந்து வந்த கரீம்பிச்சை என்பவர்களைக் குறிப்பிடலாம்.
அடம்பனில் 1945ஆம் ஆண்டே பள்ளிவாயில் கட்டப்பட்டது. இதற்குரிய காணியை முஸ்தபா ஹாஜியார் அரசாங்கத்திடமிருந்து பெற்றுத் தந்தார். அடம்பன் பகுதியில் காணப்பட்ட ஏறத்தாழ 95 வீதமான கடைகள் முஸ்லிம்களுக்குரியது. மேலும் அயற்புறங்களில் 50 ஏக்கர் நெல் நிலங்களும் இவர்களின் உடமையாக இருந்தன. 1990 ஆம் ஆண்டு அகதியாக வெளியேறும் போது இங்கு 20 முஸ்லிம் குடும்பங்கள் வாழ்ந்தன.
இசங்கன் குளம்
இது ஒரு சிறிய முஸ்லிம் கிராமமாகும். ஏறக்குறைய 15 முஸ்லிம் குடும் பங்கள் இங்கு வாழ்ந்தன. இவர்களில் பெரும்பான்மையினர் விடத்தல்தீவிலிருந்து வந்து குடியேறியவர்களாவர். முதன்முதலில் 1902ஆம் ஆண்டளவில் சின்னமரைக்கார் குளத்தாரும், அவரது மனைவி நெய்னா உம்மாவும் இங்கு வந்து குடியேறினார்கள். சின்னமரைக்கார் குளத்தன்
நெடுவரம்பைச் சேர்ந்தவர் என்று நம்பப்படுகின்றது. இவர் பெரிய காணிச்
64

சொந்தக்காரராகக் காணப்பட்டார். கட்டுக்கரைக் குளத்திலிருந்து பெரிய உடைப்பு வாய்க்கால் மூலமாக இசங்கன் குளத்திற்கு நீர் வந்தது.
கட்டைக்காடு
இக்கிராமம் செட்டியார் மகன் கட்டைக்காடு என்றும் முள்ளிக்கண்டல் என்றும் அழைக்கப்படுவதுண்டு. இது மினுக்கனுக்கு வடக்கே 2 மைல் துாரத்தில் காணபப்பட்டது. விடத்தல்தீவிலிருந்து முஸ்லிம்கள் இங்கு வந்து குடியேறினார்கள். 1928 ஆம் ஆண்டுக்கு முன்னர் கலீபா சாஹிப் என்பவர் இங்கு வந்து குடியேறினார். இவரின் மக்களான சேகுல் ஆப்தீன், முகம்மது நாசர் பிச்சை, உமர் ஆகியோரின் பரம்பரையில் வந்தவர்களே கட்டைக்காடு முஸ்லிம்களாவர். 1957 ஆம் ஆண்டு கட்டுக்கரைக்குளம் உடைந்து வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதால் கட்டைக்காடுக் குடியிருப்புப் பாதிக்கப்பட்டது. இம்மக்கள் ஏறக்குறைய கால் மைல் தூரத்திலுள்ள மேட்டுநிலக் காணியில் தமது குடியிருப்புக்களை அமைத்துக் கொண்டனர். அதனை முள்ளிக்கண்டல் என்று அழைத்தனர். இங்கு காணப்பட்ட பழைய பள்ளிவாயில் ஒன்று 1986 இல் ஜும்ஆப் பள்ளியாக மாற்றப்பட்டது. இக்கிராமம் கால்நடை வளர்ப்பிற்குப் பிரபல்யமாக இருந்ததோடு இக்கிராம முஸ்லிம்கள் பெருமளவு மந்தைகளை உடமையாக வைத்திருந்தனர்.
இக்கிராமத்தில் பக்கீர் வம்சத்தைச் சேர்ந்த முஸ்லிம்களும் வாழ்ந்தார்கள். கற்பிட்டியிலிருந்து விடத்தல் தீவுக்குச் சென்று குடியேறிய மக்கள் கட்டைக்காட்டைப் பின்னர் தமது குடியிருப்பாக்கிக் கொண்டனர். இவர்களின்
பிரதான தொழில் விவசாயமாகும்.
65

Page 42
4.3 கட்டுக்கரைக் குளத்திற்குட்பட்ட நானாட்டான் பிரதேசம்
நானாட்டான் நிர்வாகப் பிரதேசம் கட்டுக்கரைக் குளத்திற்குத் தெற்காகவும் மேற்காகவும் பரந்து காணப்படுகின்றது. மாவட்ட நிர்வாகத்தை இலகுபடுத்துகின்ற நோக்கத்திலேயே இப்பிரதேசம் உருவாக்கப்பட்டது. இன்னொரு வகையில் நானாட்டான் மன்னாரின் பழைய வரலாற்றோடு பின்னிப் பிணைந்த பிரதேசமாகவும் காணப்படுகின்றது. கட்டுக்கரைக்குள நீர்ப்பாசனத்தால் பயன் பெறும் ஒரு பிரதேசமாகவும் இது காணப்படுகின்றது. இப்பிரதேசத்தின் புவியியல் எல்லையாக வடக்கே மன்னார் -மதவாச்சி பிரதான வீதியும் தெற்கே அருவியாறும் காணப்படுகின்றன. இது நில, நீர், மண் வளத்தினைச் சிறப்பாகக் கொண்ட பிரதேசமாகும். நானாட்டானின் மொத்த சனத் தொகை 1981 ஆம் ஆண்டு குடிசனக் கணிப்பீட்டின் படி 19796 ஆகக் காணப்பட்டது (அட்டவணை 7), இந்நூற்றாண்டின் ஆரம்ப காலத்தில் இப்பிரதேசம் நானாட்டான் மேற்கு உடையார் பிரிவு என்றும், நானாட்டான் கிழக்கு உடையார் பிரிவு என்றும் பிரிக்கப்பட்டிருந்தது.
சமய ரீதியாக உரோமன் கத்தோலிக்க சமயத்தைச் சேர்ந்த மக்கள் இங்கு பெரும்பான்மையாகக் காணப்பட்டார்கள். இந்துக்களுக்கு அடுத்த சிறுபான்மையினராக முஸ்லிம்கள் காணப்பட்டார்கள். இப்பிரதேசத்தின் மொத்த சனத் தொகையில் ஏறக்குறைய 9 சதவீதமானவர்கள் முஸ்லிம்களாவர்.
நானாட்டானில் பெரிதும், சிறிதுமாக 6 முஸ்லிம் கிராமங்கள் காணப்பட்டன. அவற்றில் ரசூல் புதுவெளி, இலந்தை மோட்டை, பூவரசன்குளம் ஆகியவை முக்கியமானவையாகும். இவற்றைவிட உயிலங்குளம், முருங்கன் போன்ற குடியிருப்புக்களிலும் முஸ்லிம்கள் வாழ்ந்தார்கள்.
இப்பிரதேச முஸ்லிம்களின் வரலாறு பல தனித்துவங்களைக் கொண்டது. அதில் ஒன்று இக்கிராம மக்கள் நீண்ட வரலாற்றினைக் கொண்டிருந்தமையும், அடுத்தது இஸ்லாமிய சமயமும், கலாசாரமும் நன்கு வளர்ச்சியுற்றுக் காணப்பட்டமையாகும். முஸ்லிம்கள் சென்ற நுாற்றாண்டில் இப்பிரதேசத்தில் செறிவாக வாழ்ந்தமைக்கான ஆதாரங்கள் காணப்படுகின்றன. நானாட்டானின் ஆரம்ப காலக் குடியிருப்புக்கள் மன்னார் மாவட்டத்தின் ஏனைய பிரதேசங்களில் இருந்து ஏற்பட்டன. காலனித்துவ காலத்தில் முஸ்லிம்கள் தொழில் வாய்ப்புக்காகவும், சமய புறக்கணிப்பினாலும் உள்நாடு
நோக்கி இடம் பெயர்ந்தார்கள். நானாட்டான் முஸ்லிம் குடியிருப்புக்களில்
66

அட்டவணை - 7
சமய ரீதியாக நானாட்டான் பிரதேச குடிசனம், 1981
FLDU Itö மொத்தம் வீதம்
பெளத்தம் 494 2.5
இந்து 6368 32.2
முஸ்லிம் 1736 8.8
கிறிஸ்தவம் 553 2.8
றோ.கத்தோலிக்கம் 10645 53.7
முலம் : குடிசனக் கணிப்பீடு, 1981.
67

Page 43
மிகப் பெரும்பான்மையானவை முசலிப் பிரதேச முஸ்லிம் குடியிருப்புக்களின் வடபுறத் தொடர்ச்சியாகக் காணப்படுகின்றன. அதே நேரத்தில் தொழில் வாய்ப்புகளுக்காக அம்பாறை மாவட்டத்தில் இருந்தும் இங்கு முஸ்லிம்கள் வந்து குடியேறியிருக்கின்றார்கள்.
மாந்தைப் பிரதேசத்தில் அடையாளம் கண்ட இஸ்லாமிய சமய வழிவந்த கலாசார அம்சங்களுக்கொப்பான வைபவங்கள், கலை, கவிதைகள் போன்றன இப்பிரதேசத்திலும் காணப்பட்டன. அதே போல மாந்தையைப் போலவே தமிழ்முஸ்லிம் உறவும் இப்பிரதேசத்திலும் மிகவும் சிறப்பாகக் காணப்பட்டது. இச்சிறப்பம்சங்கள் பின்வரும் பகுதியில் கிராம மட்டத்தில் மேலும் தெளிவாக்கப்படுகின்றன.
4.3.1 முஸ்லிம் கிராமங்கள்
முஸ்லிம் குடியிருப்புக்கள் இப்பிரதேசத்தில் பரவலாகக் காணப்பட்டன. சில குடியிருப்புக்களில் முஸ்லிம்கள் தமிழ் மக்களோடு கலந்தும் வேறு பல இடங்களில் தனியாகவும் வாழ்ந்து வந்தார்கள். நானாட்டான் பிரதேச முஸ்லிம்களின் தனித்துவத்தை கிராம மட்டத்தில் பின்வரும் பகுதியில் நோக்குவோம்.
புதுவெளி
புதுவெளி என்பது இக்கிராமத்தின் பெயராகும். 'ரசூல்” என்ற அடை மொழிப் பதமும் இதனோடு சேர்த்து அழைக்கப்பட்டது. ரசூல் என்பது இஸ்லாத்தின் தாபகர் முகம்மது நபியின் சிறப்புப் பெயராகும். நினைவு படுத்தும் வகையில் இக்கிராமம் ரசூல் புதுவெளி என்று அழைக்கப்பட்டது, இக்கிராமம் கட்டுக்கரைக் குளத்திற்குத் தெற்காகக் காணப்பட்டது.
இது ஒரு விவசாயக் கிராமமாகும். ஏறக்குறைய 150 முஸ்லிம் குடம்பங்கள் இங்கு வாழ்ந்தன. கட்டுக்கரைக் குளத்திலிருந்து 11ஆம், 12ஆம், 13ஆம் கட்டை கால்வாய்களினுாடாக ரசூல் புதுவெளியின் நெல்நிலங்களுக்கு நீர்ப்பாசனம் கிடைக்கின்றது. இங்கு பெரும்போகத்திலும், சிறு போகத்திலும் நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டது. இங்குள்ள முஸ்லிம்களுக்குச் சொந்தமான
68

நெல்நிலங்கள் மரைக்கார் கமம், அசனார்கமம் கணக்கப் பிள்ளை கமம் என்ற காணிப் பெயர்களைக் கொண்டு அழைக்கப்பட்டன. இக்காணிகள் அசனார், கணக்கப்பிள்ளையார் யூசுப் போன்ற தனியார்களுக்கு உரிமையாக இருந்தன. ரசூல் புதுவெளி முஸ்லிம்களுக்கு செம்மணி தீவிலும், மடுக்குளத்திலும், 12ஆம் கட்டையிலும் யானைத் தீவிலும் நெற்காணிகள் இருந்தன.
சமய ரீதியாக ரசூல்புதுவெளி இப்பிரதேசத்தின் முக்கிய நிலையமாகக் காணப்பட்டது. இங்கு ஒரு ஜும்மாப் பள்ளி காணப்பட்டது. அத்துடன் அரபு உயர்கல்வி கற்பிக்கப்படும் றசூலிய்யா அரபுக் கல்லூரியும் காணப்பட்டது. இதன் அதிபராக மிக நீண்ட காலமாக மெளலவி அப்துல்கரீம் அவர்கள் பணியாற்றினார்கள். பலராலும் பெரிதும் மதிக்கப்படும் மெளலவி அப்துல்கர்ம் அவர்கள் இஸ்லாமியப் பணியில் தம்மை அர்ப்பணித்திருந்தாகள். நானாட்டான் முசலிப் பிரதேச முஸ்லிம்களுக்கு மார்க்க விளக்கம் (பத்வா) கொடுக்கும் அளவு ஞானம் பெற்றவராக இவர் விளங்கினார். இவர் ரசூல் புதுவெளி முஸ்லிம்களின் பலவந்த வெளியேற்றத்திற்கு முன்னர் வபாத்தானார்.
அரபுக் கல்வியில் மாத்திரமல்லாமல் பாடசாலைக் கல்வியிலும் இக்கிராம மக்கள் ஆர்வம் காட்டி வந்தனர். இங்கு காணப்பட்ட பாடசாலை க.பொ.த சாதாரண தரம் வரையிலும் கல்வி கற்கும் வாய்ப்பினைக் கொண்டிருந்தது. ஏறக் குறைய 350 மாணவர்கள் இப்பாடகாலையில் கல்வி கற்றனர். வெளியேற்றத்தின் போது ஜனாப் கே. கலீல் ரகுமான் அதிபராக இருந்தார்.
இக்கிராமத்தின் கல்வி வளர்ச்சி இம்மக்களின் எழுத்தறிவு ஆற்றலை விருத்தியாக்கியது. பல இளைஞர்கள் ஆசிரியத் தொழிலிலும் எனைய அரச தொழில்களிலும் ஈடுபட்டு வந்தனர். தற்போது இங்கு ஏறக்குறைய 10 பேர் மெளலவிகளாகக் காணப்படுகின்றனர். இங்கு சுமார் 20 அரச ஊழியர்களும் உள்ளனர்.
இஸ்லாமிய கலாசாரத் தனித்துவம் மிக்க கிராமங்களில் ஒன்றாக இது காணப்பட்டது. மீலாத் விழாவுடன் தொடர்புடைய நிகழ்வுகள் மிகச் சிறப்பாக இங்கு நடைபெறுவதுண்டு மீலாத் விழாக்களில் பிரபல்யமான உலமாக்கள் மூலம் மார்க்க விளக்கங்களும், மாணவர்களுக்கான போட்டி நிகழ்வுகளும் நடை பெற்று வந்தன.
களிகம்பு, தீப்பந்தமாடல். சிலம்படி போன்ற கலை நிகழ்ச்சிகளும் இங்கு காணப்பட்டன. பொது வைபவங்களிலும், திருமண வைபவங்களிலும் களிகம்பு ஆடப்படும். இந்நிகழ்ச்சிகளில் தமிழ் மக்களும் மிக ஆர்வத்துடன் கலந்து கொள்வதுண்டு. தமிழ் முஸ்லிம் உறவு இப்பிரதேசத்தில் மிகச்
69

Page 44
சிறப்பாகக் காணப்பட்டது. இவ்விரு இன மக்களும் சகோரர்களைப் போல வாழ்ந்து வந்தனர். ரசூல் புதுவெளி முஸ்லிம்களில் மிகப் பெரும்பான்மையினர் தற்போது கல்கமுவ அகதி முகாம்களில் வாழ்கின்றனர்.
இலந்தைமோட்டை
இக்கிராமம் 1940 ஆம் ஆண்டில் உருவாகியது. அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த முஸ்லிம்கள் விவசாயத் தொழில் நோக்கத்தில் இங்கு வந்து குடியேறினார்கள். இக்கிராம உருவாக்கத்திற்கு முன்னரும் அம்பாறைப் பிரதேசத்திலிருந்து விவசாயத் தொழிலுக்காகப் பருவ காலங்களில் முஸ்லிம்கள் வந்து சென்றிருந்தாலும் இப்பிரதேச நிரந்தரக் குடிகளாக இவர்கள் மாறியிருக்கவில்லை.
1940 ஆம் ஆண்டளவில் இப்பிரதேசத்திலேயே நிரந்தரமாகக் குடியேற இம்மக்கள் முடிவெடுத்தார்கள். இக்குடியிருப்பின் உருவாக்கத்திற்கு அண்ணாமலை விதானையார் என்பவர் மிகவும் உதவியாக இருந்தாரென்று கூறப்படுகின்றது. இலந்தைமோட்டையில் சம்மாந்துறையைச் சேர்ந்த அகமது லெப்பை சீனிமருத்துப் பிள்ளை என்பவரும், பொத்துவில்லைச் சேர்ந்த மீராஉம்மா என்பவரும் முதலில் குடியேறினர். இவர்களைத் தொடர்ந்து சாய்ந்த மருதைச் சேர்ந்த உதுமான் கண்டு என்பவரும் இக்கிராமத்தைத் தமது இருப்பிடமாக்கிக் கொண்டனர். மேற்குறித்த அம்பாறை மாவட்ட முஸ்லிம் குடியிருப்பாளர் பரம்பரையில் வந்தவர்களே இன்றைய இலந்தைமோட்டை முஸ்லிம்களாவர். இலந்தைமோட்டைக் கிராமத்தவர்களை அதன் சூழலில் வாழ்ந்த மக்கள் சின்ன மட்டக்களப்பான் என்று அழைப்பதுண்டு. இக்கிராமத்தில் ஏறக்குறைய 100 மாணவர்கள் கல்வி கற்ற பாடசாலை ஒன்று இருந்தது.
அளவக்கை
1957ஆம் ஆண்டு இப்பிரதேசத்தில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கின் காரணமாக ஏறக்குறைய 10 குடும்பங்கள் ரசூல்புதுவெளியில் இருந்து சென்று அளவக்கையில் குடியேறி வெளியேற்றத்தின் போது ஏறக்குறைய 35 குடம்பங்கள் இக் கிராமத்தில் வாழ்ந்தன. விவசாயம், கால்நடை வளர்ப்பு என்பன இக்கிராமத்தவரின் முக்கிய தொழில்களாகக் காணப்பட்டன. மிளகாய், வாழை போன்ற பயிர்கள் வீட்டுத் தோட்ட அடிப்படையில் இக்கிராம மக்களால் செய்கை பண்ணப்பட்டன. இக்கிராமக் குளம் கட்டுக்கரைக் குளத்திலிருந்து வரும்
70

கால்வாய் ஒன்றினால் இணைக்கப்பட்டுள்ளது. இக்கால்வாய் பள்ளங் கால்வாய் என அழைக்கப்பட்டது. அளவக் கை முஸ்லிம்களின் நெல்நிலங்கள் பூவரசன்குளம், புத்திரகண்டன், செட்டிவெளி ஆகிய இடங்களிலும் இருந்தன. இக்கிராமத்தில் வாழ்ந்த நிலச் சொந்தக்காார்களில் முக்கியமானவர்களாகக் கே. கச்சுமரைக்கார், அல்லாபிச்சை, நாகூர்பிச்சை, மீராசாஹிபு கப்பநெய்னா ஆகியவர்கள் குறிப்பிடத்தக்கவர்களாவர். இக்கிராமத்தில் தைக்காப்பள்ளி ஒன்றும் இருந்தது. ஜும்ஆவுக்கு இக்கிராம மக்கள் ரசூல்புதுவெளிக்குச் சென்று வந்தனர். சிறுவர்கள் அண்மையில் உள்ள கிறிஸ்தவப் பாசாலையில் கல்வி கற்றனர். சிலர் ரசூல்புதுவெளிக்கும், ஏனைய அயலிலுள்ள பாடசாலைகளுக்கும் சென்றனர். இக்கிராமத்தில் 5 பலசரக்குக் கடைகள் 2 தேனீர்க் கடைகள், ! சைக்கிள் உபகரணக்கடை, 1 அரிசியாலை என்பன காணப்பட்டன. உளவு இயந்திரம் மோட்டார் சைக்கிள் போன்ற வாகனங்கள் பயன்படுத்தப்பட்டன.
இக்கிராமத்தில் மீலாதுன்னபி விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. இவ்விழாவின்போது பெரிய பந்தல் இட்டு அங்கு ஹதீஸ் விளக்கங்கள், பல்வேறு போட்டிகள் என்பன இடம் பெறும். இப்போட்டிகளுக்கான பரிசில்களும் வழங்கப்படும். சோறு சமைத்து விருந்து கொடுக்கப்படும். மி.ராஜ் தினமும் சிறப்பாகக் கொண்டாடப்படுவதுண்டு. ஏனைய பிரதேச முஸ்லிம் கிராமங்களில் காணப்பட்ட கலை, கலாசார அம்சங்கள் இங்கும் வழக்கில் இருந்தன. அது போலவே முஸ்லிம்-தமிழ் உறவிலும் எவ்வித களங்கமும் காணப்படவில்லை. இப்பிரதேசத்தில் ஆயுதக்குழுக்கள் செல்வாக்குப் பெற்றிருந்த காலகட்டத்தில் முஸ்லிம் இளைஞர்களும் அதில் சேர்ந்திருந்தார்கள். ஆயுதக்குழுவினரும் நல்லுறவுடன் இக்கிராம மக்களுடன் பழகி வந்தனர். துரதிஷ்ட வசமாக அளவக்கைப் பள்ளிவாசலில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டுச்சம்பவத்தில் அல்லாபிச்சை அப்துல் கரீம் (55வயது), அல்லாபிச்சை செய்னுலாப்தீன் (50), நாகூர்பிச்சை அப்துஸ்ஸலாம் (50) ஆகிய மூவரும் உயிரிழந்தனர். அத்துடன் நாகூர்பிச்சை அப்துஸ்ஸலாம் என்ற இறந்தவரின் மகன் அஜ்வது (24) என்பவரும், கேஅபுல்ஹுதா (45) என்பவரும் கடத்திச் செல்லப்பட்டனர். பின்னர் சுடப்பட்டு
கொலை செய்யப்பட்ட நிலையில் அஜ்வதின் உடல் கிடைத்தது.
நொச்சிக்குளம் (ஹிஜ்ராபுரம்)
இங்கு ஏறக்குறைய 40 முஸ்லிம் குடம்பங்கள் வாழ்ந்தன. ஒரு ஜும்ஆப் பள்ளிவாசல் காணப்பட்டது. இதன் சூழலில் இருந்த சிறு
71

Page 45
கிராமங்களைச் சேர்ந்த முஸ்லிம்களும் இங்குதான் ஜும்ஆவுக்கு வருவர். இக்கிராமம் முசலியின் வட புறக் கிராமத்தில் இருந்து வந்து குடியேறிய முஸ்லிம்களால் உருவாக்கப்பட்டது. பண்டாரவெளிக்கும், நொச்சிகுளத்திற்கும் இடையில் மிக நெருங்கிய தொடர்புகள் காணப்படுகின்றன.
விவசாயம் இக்கிராமத்தின் பிரதான தொழிலாகும். முஸ்லிம்களுக்குச் சொந்தமான விவசாயக் காணிகள் பூப்பூத்தான் குளம், புதுக்குளம், நொச்சிக்குளம், பொரணன்டுவெளி ஆகிய பகுதிகளில் இருந்தன. இக்குளங்களுக்கு கட்டுக்கரைக் குளத்திலிருந்து வரும் புத்திரகண்டான் கால்வாய் வழியாக நீா கிடைத்தது. இக்கால்வாயின் இரு புறங்களிலும் மக்கள் வாழ்ந்தார்கள். ஏறக்கறைய 150 ஏக்கர் காணி நொச்சிக்குள முஸ்லிம்களுக்குச் சொந்தமாக இருந்தது. இக்காணிகள் அபூபக்கர் கமம், கிணற்றடிப் பள்ளம், புதுக்கமம், மீராசாடகாணி, ஹமீதுடைய காணி, பிச்சையார்காணி என்ற பெர்களைக் கொண்டு அழைக்கப்பட்டன.
அறுவடையின் பின்பு குளம் வற்றத் தொடங்கும் காலத்தில் நன்னீர் மீன்பிடி இப்பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்டது. துாண்டில், பாய்ச்சு வலை, கரப்படைத்தல் போன்ற முறைகளில் இங்கு மீன்பிடிக்கப்பட்டது. காற்றுக் குறைவான காலங்களில் சிலாவத்துறைக் கடலுக்கும் இக்கிராம மக்கள் மீன்பிடிக்க செல்வார்கள். இதைவிட ஆடு, மாடு வளர்த்தலும், கால்நடை வியாபாரமும் இக்கிராமத்தில் வழமையில் இருந்த மற்றுமொரு தொழிலாகும். நொச்சிக்குளத்தில் 2 பலசரக்குக் கடைகளும், 2 தேனீர்க்கடைகளும், ஒரு பேக்கரியும் இருந்தன. இக்கிராமத்தில் ஒரு பாடசாலையும் காணப்பட்டது. இது அல்ஹிஜ்ரா மகாவித்தியாலயம் என்று அழைக்கப்பட்டது. இப்பாடசாலையில் ஏறக்குறைய 250 பிள்ளைகள் கல்வி கற்றனர். இவர்களில் 50 பேர் பள்ளங்கோட்டை, ஆவரங்காடு ஆகிய தமிழ்க் கிராம மாணவர்களாவர். இக்கிராமத்தில் கல்வி கேள்விகளில் சிறப்பு மிக்க முகைதீன் சாகிபு புலவர் என்பவர் வாழ்ந்து வந்தார். இவர் 1968 ஆம் ஆண்டு காலமானார். மீலாத் விழா, பாடசாலைப் பிள்ளைகளுக்கான போட்டி, கத்னா வைபவங்கள் போன்றன இக்கிராம விழாக்களாகக் காணப்பட்டன.
இனப் பிரச்சினைக் காலத்தில் நொச்சிக்குள முஸ்லிம்கள் அதிகமாகப் பாதிக்கப்பட்டார்கள். இந்திய இராணுவத்தினருக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையில் நடைபெற்ற யுத்தங்களின் போது நொச்சிகுள மக்கள் விடுதலைப்
72

புலிகளுக்கு ஆதரவளித்தார்கள் என்ற காரணத்திற்காக இக்கிராம மக்கள் பலர் இந்திய இராணுவத்தினால் பிடித்துச் செல்லப்பட்டு அவர்களில் சிலர் ஏறக்குறைய 6 மாதங்களுக்குப் பின்னரே விடுதலை செய்யப்பட்டனர்.
1980 ஆம் முதல் ஆண்டு நொச்சிகுளம் ஹிஜ்ராபுரம் என்றும் அழைக்கப்பட்டது.
பூவரசன்குளம்
இங்கு 58 முஸ்லிம் குடும்பங்கள் வாழ்ந்தன. ஒரு ஜும்ஆப் பள்ளிவாசல் காணப்பட்டது. உதுமாநெய்னா அவர்களுடைய பாட்டனாரும், முகம்மதுக் காசிம் அவர்களுடைய பாட்டனாரும் ஆரம்பத்தில் இக்கிராமத்திற்குக் குடியேறியவர்கள் என்று நம்பப்படுகின்றது.
இக்கிராமம் வளமான வலயத்தில் அமைந்துள்ளது. ஏறக்குறைய 400 ஏக்கர் காணிகளில் விவசாயம் செய்யப்பட்டது. பெரும் போகத்தில் நெல்லும், சிறு போகத்தில் மிளகாயுடன் சில உள்ளூர் மரக்கறிகளும் பயிரிடப்பட்டன. இப்பிரதேசத்தில் முஸ்லிம்களுக்குச் சொந்தமான காணிகள் இலுப்பையத்தறை, பாளையடித்தறை, களித்தறை, ஆலையடித்தறை போன்ற பெர்களைக் கொண்டு அழைக்கப்பட்டன. கே. மீராசாஹிப், எம். அசநெய்னா, எம். அப்துல் ஹசன், என். உச நெய்னா போன்றவர்கள் இக்கிராமத்தின் முக்கியமான காணிச் சொந்தக்காரர்களாவர். முஸ்லிம்களுக்குச் சொந்தமான காணிகள் இக்கிராமச் சூழலிலும், இக்கிராமத்திற்கு ஒன்றரை மைலுக்கு அப்பாலுள்ள தமிழ்க் கிராமங்களிலும் காணப்பட்டன.
கட்டுக்கரைக் குளத்திலிருந்து 14 ஆம் கட்டை மதகினுாடாக கற்கட்டிக் குளத்திற்கு நீர் வந்து அங்கிருந்து பெரும் பரப்புக் கால்வாயின் மூலமாக பூவரசன் குளத்திற்கு நீர் கிடைத்தது. பூவரசன் குளத்திற்கு மேற்காக உள்ள காணிகளுக்கு பெரும்பரப்புக் கால்வாயிலிருந்து நேரடியாக நீர் கிடைத்தது. இப்பிரதேசத்தில் நீர்ப் பற்றாக்குறை இருந்ததில்லை.
இக்கிராமத்தில் முஸ்லிம் பாடசாலை இல்லாவிட்டாலும் ஆரம்பப் பாடசாலையொன்று இருந்தது. உயர் வகுப்பு மாணவர்கள் மாவிலங்கேணி ரோமன் கத்தோலிக்கப் பாடசாலைக்குச் சென்று கல்வி கற்றனர். இக்கிராமத்தவர்களில்
4 பேர் ஆசிரியர்களாகவும், 4 பேர் மெளலவிகளாகவும் காணப்படுகின்றனர்.
73

Page 46
இங்கு 4 பலசரக்குக் கடைகளும், 2 தேனீர்க்கடைகளும், 2 அரிசி ஆலைகளும் முஸ்லிம்களுக்குச் சொந்தமாக இருந்தன. உளவு இயந்திரங்கள் பல இருந்தன.
மீலாதுன்நபிவிழா கதீஸ் விளக்கத்துடன் நடைபெறும். குர்ஆன் மனனப் போட்டிகள் இஸ்லாமியப் போட்டி நிகழ்ச்சிகள் மாணவர்கள் மத்தியில் இக்காலத்தில் நடை பெறுவதுண்டு. திருமணம், கத்னா நிகழ்ச்சிகளின் போது களிகம்பு விளையாடப்படும். ஆண்டியாபுளியங்குளம், ரசூல்புதுவெளி ஆகிய பிரதேசங்களிலிருந்தும் முஸ்லிம்கள் இங்கு வந்து களிகம்பு விளையாடுவர்.
இக்கிராமத்தில் 4 தமிழ்க் குடும்பங்களும் வாழ்ந்தன. பொது நிகழ்ச்சிகளில் திருமணம், மரணம், கத்னா வைபவங்கள், பெருநாட்கள் போன்றவற்றில் தமிழ் மக்களும் கலந்து சிறப்பிப்பர். பெருநாட் காலங்களில் இக்கிராமங்களில் ஒழுங்கு செய்யப்படும் கரப்பந்தாட்டப் போட்டிகளில் தமிழ் மக்களும் கலந்து சிறப்பிப்பர். தமிழ்-முஸ்லிம் மக்களிடையே கொடுக்கல் வாங்கல்கள் அதிகம் இடம்பெறுவதுண்டு. அத்துடன் இவர்கள் பங்காக விவசாயம் செய்துள்ளார்கள். முருங்கனில் வர்த்தக நிலையங்களில் முஸ்லிம்களும் தமிழர்களும் பங்காளிகளாகவும் இருந்தனர். தமிழ்-முஸ்லிம் தொழிலாளர்கள் ஒன்று சேர்ந்து ஒப்பந்த அடிப்படையில் அறுவடை செய்து பணத்தைப் பிரித்தெடுக்கும் வழமை இங்கு காணப்பட்டது.
ஆயுதக்குழுக்கள் இப்பிரதேசத்தில் செல்வாக்கு வகித்து வந்த காலத்தில் எவ்விதப் பிரச்சினையும் முஸ்லிம்களுக்கு இருக்கவில்லை. இந்திய அமைதி காக்கும் படையாலேயே முஸ்லிம்கள் விடுதலைப் புலிகளுக்கு
உதவியளித்தனர் எனக் கூறி கைது செய்யப்பட்டுள்ளனர்.
74

5. இனப் பிரச்சினையும் மாந்தை-நானாட்டான் முஸ்லிம்களும்
5.1 அறிமுகம்
இலங்கையின் இனப்பிரச்சினை பல்லாயிரக்கணக்கான மக்களின் உயிரை பலி கொண்டுள்ளது. இலட்சக்கணக்கான மக்கள் தமது வாழிடத்தை இழந்து அநாதரவானார்கள். இனப்பிரச்சினையின் தாக்கம் குறிப்பாக உணரப்பட்ட வட கிழக்குப் பிரதேசத்தில் பொருளாதார இழப்புக்களும் ஏனைய சமூக, உளவியல் தாக்கங்களும் எண்ணிலடங்காதவை.
இனப்பிரச்சினையால் பாதிக்கப்பட்ட மக்களில் வட மாகாண முஸ்லிம்களும் அடங்குகின்றனர். இப்பிரதேசத்தில் வாழ்ந்த முஸ்லிம்களுக்கு ஏற்பட்ட உயிரிழப்பு, பொருள் சேதம் என்பன ஒரு புறம் இருக்க இம்மக்கள் அனைவரும் 1990 ஆம் ஆண டு வட மாகாணத் தை விட்டு வெளியேற்றப்பட்டமை மிகப் பாரதுாரமாக இம்மக்களின் வாழ்க்கையைப் பாதிக்தது.
வடமாகாண முஸ்லிம்களின் வெளியேற்றத்தில் மாந்தை-நானாட்டான் முஸ்லிம்களின் வெளியேற்றமும் உள்ளடங்குகின்றது. வட மாகாணத்தில் இருந்து முஸ்லிம்களின் வெளியேற்றம் பற்றிய சில பொதுமைப் படுத்தப்பட்ட விளக்கங்கள் கொடுக்கப்பட்டாலும், அது பிரதேசத்துக்குப் பிரதேசம், கிராமத்துக்குக் கிராமம் சில குறிப்பிட்ட அம்சங்களில் வேறுபட்டதாகக் காணப்படுகின்றது.
இவ்வத்தியாயத்தில் மாந்தை-நானாட்டான் பிரதேசத்தைச் சேர்ந்த முஸ்லிம்கள் இக்காலகட்ட சூழ்நிலையில் தமது சொந்தப் பிரதேசத்தை விட்டு எவ்வாறு வெளியேற்றப்பட்டார்கள் என்ற அம்சம் விபரமாக நோக்கப்படுகின்றது.
5.2 மாந்தை-நானாட்டான் பிரதேசத்தின் இனப் பிரச்சினை
முன்னர் குறிப்பிட்டது போல மாந்தை-நானாட்டான் ஒரு பரந்த
பிரதேசமாகும். இப்பிரதேசத்தில் சனத் தொகை குறைவாகக் காணப்பட்டாலும் இராணுவ ரீதியாக முக்கியமான நிலையை இப்பிரதேசம் கொண்டிருந்தது.
75

Page 47
மன்னாரை இணைக்கும் மதவாச்சி, பூனகரி பிரதான வீதிகள் இப்பிரதேசத்தை ஊடறுத்துச் செல்கின்றன. இலங்கை இராணுவம் இப்பாதைகளுடாகவே மன்னார் பெரு நிலத்திணிவிலும், மன்னர்தீவிலும் உள்ள தமது இராணுவ நிலைகளைப் பலப்படுத்தி வந்தது. இலங்கையில் இந்திய இராணுவப் படைகள் இருந்த காலத்தில் இந்திய இராணுவ முகாம்கள் நிறைந்த வீதியாக இப்பிரதான வீதிகள் காணப்பட்டன.
மறுபக்கத்தில் இப்பிரதான வீதிக்களுக்கு கிழக்கான பரந்த பற்றைக் காடுகளைக் கொண்ட பிரதேசம் தமிழ் ஆயுதக் குழுக்களின் பாசறையாகக் காணப்பட்டது. பிரதான வீதிக்குத் தெற்காகக் காணப்பட்ட தமிழ் ஆயுதக் குழுக்களின் நிலையங்களோடு தொடர்ச்சியான தொடர்புகள் இருந்தன.
இதனால் மன்னார் மாவட்டத்தின் பெரு நிலப் பரப்பு இலங்கை இராணுவம், தமிழ் ஆயுதக் குழுக்களின் யுத்த களமாகக் காணப்பட்டது. மன்னார்-மதவாச்சி பிரதான வீதியிலும் மன்னார்–பூனகரி பிரதான வீதியிலும் அரச இராணுவ நிலைகள் ஸ்திரப்படுத்த முயற்சிக்கப்படுவதும் அதற்கு எதிரான கெரில்லா நடவடிக்கைகளில் தமிழ் ஆயுதக் குழுக்கள் ஈடுபடுவதும் இப்பிரதேசத்தில் வழமையாகக் காணப்பட்டன.
1983ஆம் ஆண்டிலிருந்து உக்கிரமடையத் தொடங்கிய உள்நாட்டு யுத்தத்தின் பிரதிபலிப்புக்கள் மாந்தை-நானாட்டான் பிரதேசத்தில் மிகத் தெளிவாக அவதானிக்கக் கூடியவையாக இருந்தன. இலங்கை இராணுவத்தின் நடவடிக்கைகள் பொது மக்களை அதிகமாகப் பாதித்தன. உதாரணமாக 1984ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் 4 ஆம் திகதி மாந்தை-நானாட்டான் பிரதேச முருங்கன் வீதியில் இடம் பெற்ற நிலக்கண்ணி வெடிப்பைத் தொடர்ந்து இப்பிரதான வீதியில் பயணம் செய்த நுாற்றுக் கணக்கான அப்பாவி மக்கள் படுகொலை செய்யப்பட்டார்கள். முருங்கன் நிகழ்வுகளைப் போன்று இலங்கை இராணுவத்தால் பல படுகொலைகள் செய்யப்பட்டன. இதனால் தமிழர்களும், முஸ்லிம்களும் அதிகம் பாதிக்கப்பட்டார்கள். உயிர்க் கொலைகளும், பொருட் சேதங்களும் அதிகம் ஏற்பட்டன.
இராணுவத்தின் இந்த அடாவடித்தனமான நடவடிக்கைகள் தமிழ் மக்கள் மத்தியில் இராணுவ செயற்பாடுகளுக்கு எதிரான நடவடிக்கைகளை தீவிரப்படுத்தக் காரணமாக இருந்தன. தமிழ் ஆயுதக் குழுக்கள் இக்காலகட்டத்தில் எண்ணிக்கை ரீதியாகவும், ஆயுத பல ரீதியாகவும் வளர்ச்சி
76

பெற்றன. இந்த அடிப்படையில் மாந்தை-நானாட்டான் பிரதேசத்தில் பல இடங்களில் விடுதலைப் புலிகளின் தளங்களும், புளட் இயக்கத்தின் தளங்களும் காணப்பட்டன. மேற்குறிப்பிட்ட தளங்களில் தம்மை ஸ்திரப்படுத்திக் கொண்ட ஆயுதக் குழுக்கள் சுற்றுச் சூழலில் உள்ள தமிழ் முஸ்லிம் கிராமங்களில் தமது ஆயுதச் செல்வாக்கைப் பிரயோகித்தார்கள்.
இனப் பிரச்சினையால் தமிழ் மக்களுக்கு ஏற்பட்ட இழப்புக்கள் சொல்லில் அடங்காது என்ற அம்சம் முன்னர் கூறப்பட்டது. தமிழ் மக்களுக்கு ஏற்பட்ட பாதிப்புக் கள் ஆய்வு நுால் களிலும், அறிக் கைகளிலும் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. ஆனால் துரதிஷ்டவசமாக அப்பாதிப்புக்களுக்குப் பொருத்தமான நிவாரண நடவடிக்கைகள் அரசாலோ அல்லது சர்வதேச அமைப்புக்களாலோ ஏற்படுத்திக் கொடுக்கப்படவில்லை என்பது உண்மையாகும்.
இச்சந்தர்ப்பத்தில் இனப்பிரச்சினையால் முஸ்லிம் மக்களுக்கு ஏற்பட்ட உயிர் இழப்புக்களையும் பொருட் சேதங்களையும் நினைவுகூர வேண்டியது அவசியமாகும். எமக்குக் கிடைக்கப் பெற்ற விபரங்களின்படி விடத்தல்தீவைச் சேர்ந்த மீரா சாகிபு கலீல், மகுமூது அபூபக்கர், மு. முகம்மது அப்துல் காதர், நாகூர் பிச்சை மாலிக், அப்துல் கரீம் சம்சுதீன் போன்றவர்கள் இந்த உள்நாட்டு யுத்தத்தின் விளைவாக உயிர் இழந்தவர்களாவர். இது போல அடம்பனைச் சேர்ந்த ஜமால்தீன் ஐயூப்கான், மீ. முகம்மது ரசீத் என்போரும், பள்ளிவாசல்பிட்டியைச் சேர்ந்த மீராமுகைதீன் சகீத், எம். காலித் என்போரும் உயிர் இழந்தவர்களின் வரிசையில் உள்ளடக்கப்படுவர். இது போல விபரம் தரப்படாத வேறுபலரும் உள் நாட்டு யுத்தத்தால் கொல்லப்பட்டு அல்லது காணாமல் போய் அல்லது ஊனமுற்று இருக்கலாம் என்றும் அறியக் கூடியதாக இருக்கின்றது.
5.3 முஸ்லிம்-தமிழ் உறவு
உள்நாட்டு யுத்தத்தால் மாந்தை-நானாட்டான் பிரதேசம் அல்லோலகல்லோலப் பட்டுக் கொண்டிருக்கும் சூழ்நிலையிலும் இப்பிரதேச தமிழ் முஸ்லிம் உறவு மிகவும் இணக்கப்பாடுடையதாகக் காணப்பட்டது. முஸ்லிம் மக்கள் கிறிஸ்தவ, இந்து மக்களின் இன்ப துன்பங்களில் இணைந்து வாழ்ந்து வந்தார்கள். தமிழ் மக்கள் முஸ்லிம்களை கண்ணியத்துடன்
கெளரவித்து வந்தார்கள்.
77

Page 48
முஸ்லிம் மக்கள் சுதந்திரமாக தமது கலை, கலாசார நிகழ்ச்சிகளை இப்பிரதேசத்தில் நடத்தக் கூடியதாக இருந்தது. முஸ்லிம்களின் இவ்வாறான நிகழ்ச்சிகளுக்குத் தமிழ் மக்களிடம் இருந்து எவ்விதமான தடையும் இருக்கவில்லை. மாறாகத் தமிழ் மக்களும் முஸ்லிம்களின் நிகழச்சிகளில் பங்கு கொண்டு அவர்களைக் கெளரவப்படுத்தினர். முஸ்லிம்கள் தமிழ் மக்களின் திருமணம், ஈமக்கிரியைகள் என்பவற்றில் பங்குபற்றித் தமது நட்பை வெளிப்படுத்தினார்கள்.
இவ்விரு இன மக்களுக்குமிடையில் பொருளாதார ரீதியாகவும் பல தொடர்புகள் இருந்தன. விடத்தல்தீவில் வாழ்ந்த தமிழ் முஸ்லிம்களுக்கிடையில் பொருளாதார ரீதியான பரிமாற்றங்களும் கொடுக்கல் வாங்கல்களும் அதிகம் காணப்பட்டன. இதுபோலவே கட்டுக்கரைக்குளச் சூழலிலிருந்த கிராமங்களிலும்
35/T6ÕÕTLUL ULL 6ÖT.
மாந்தை நானாட்டான் பிரதேசத் தமிழ் உறவின் தாற்பரியம் பற்றி வட்டக்கண்டல் முஸ்லிம் கிராமத்ததைச் சேர்ந்த ஒரு பிரமுகர் பின்வருமாறு குறிப்பிடுகின்றார்.
“எமது பிரதேசத்தில் முஸ்லிம்களும் தமிழர்களும் மிக ஐக்கியமாக வாழ்ந்து சகோதரர்களைப் போன்று பழகிக் கொண்டோம். தமிழ் நண்பர்களும் எமது விருந்தோம்பலுக்கு அடிக்கடி வருவார்கள். அது போல நாமும் செல்வோம். நாம் எமது கிராமத்தை விட்டு வெளியேறும்வரை எமது உறவு மிகவும் இணக்கப்பாட்டுடன் காணப்பட்டது” (Refugee Family Information, 1994).
"கிழக்கு மாகாணத்தில் இருந்து வேளாண்மை அறுவடைக்கு வந்த முஸ்லிம்கள் வட்டக்கண்டல் பிரதேச முஸ்லிம்-தமிழ் உறவினைக் கண்டு ஆச்சரியப்பட்டனர்” என்றும் குறிப்பிட்டார்.
முஸ்லிம் தமிழ் மக்களுக்கிடையிலான உறவு இனப்பிரச்சினை உச்சக் கட்டத்தை அடைந்த காலக்கட்டத்திலும் கூட எவ்வித பாதிப்புக்கும் உட்படாத நிலையில் காணப்பட்டது. தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை முஸ்லிம் மக்கள் மதித்தார்கள். அது மட்டுமன்றி மாந்தை-நானாட்டான் பிரதேசத்தைச் சேர்ந்த முஸ்லிம் இளைஞர்கள் பலர் ஆயுதப் போராட்டத்தில் தமிழ் குழுக்களுடன் இணைந்து செயல்பட்டார்கள்.
78

முஸ்லிம்களின் பலவந்த வெளியேற்றத்தைத் தமிழ் மக்கள் விரும்பவில்லை என்பதை முஸ்லிம் மக்கள் நன்கு அறிவார்கள். அவ்வாறானதொரு வெளியேற்றம் எவ்வாறு இடம் பெற்றது என்பதை சற்று
விரிவாக நோக்குவோம்.
5.4. வெளியேற்ற அறிவித்தலுக்கு முன்னர்
1990ஆம் ஆண்டு ஜூன் மாதம் 5ஆம் திகதி இரண்டாவது ஈழப் போர் ஆரம்பமாகியது. வட-கிழக்கு மாகாணங்களில் இலங்கை இராணுவத்திற்கும் விடுதலைப் புலிகளுக்குமிடையில் கடுமையான சமர் பரவலாக ஏற்பட்டது. இலட்சக் கணக்கான மக்கள் இவ் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டார்கள். கிழக்கு மாகாணத்தோடு ஒப்பிடுகின்ற போது வட மாகாணத்தில் யுத்த சூழ் நிலை குறைவாகக் காணப்பட்டது. விடுதலைப் புலிகளின் கை வடக்கில் மேலோங்கிக் காணப்பட்டது. வடக்கின் குறிப்பிடத்தக்க பிரதேசத்தை விடுதலைப் புலிகள் தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தார்கள்.
விடுதலைப் புலிகளின் ஆயுதக் கட்டுப்பாட்டுக்குக் கீழ் இருந்த பிரதேசங்களில் மாந்தை-நானாட்டான் பிரதேசமும் ஒன்றாகும். இக்காலக் கட்டத்தில் இப்பிரதேசத்தில் தமிழ் முஸ்லிம் உறவு என்றும் போல் சீராகக் காணப்பட்டது.
இச்சந்தர்ப்பத்தில் 1990 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 22ஆம் திகதி மன்னார்த் தீவின் சில முஸ்லிம் கிராமங்களில் விடுதலைப் புலிகள் உள் நுழைந்து பணம், நகைகள் போன்றவற்றை அபகரித்துச் சென்றார்கள். இந்நிகழ்வு மன்னார்ப் பிரதேசத்தில் வாழ்ந்த தமிழ், முஸ்லிம்களுக்குப் பெரும் அதிர்ச்சியைக் கொடுத்தது. விடுதலைப் புலிகளின் வழமையான நடவடிக்கைகயாக இது கொள்ளப்படவில்லை.
மன்னார்ப் பிரதேச மக்கள் 22 ஆம் திகதி இரவு நிகழ்ச்சியின் அதிர்ச்சியில் இருந்து விடுபடுவதற்கு முன்னர் மற்றுமொரு அதிர்ச்சியொன்று 23ஆம் திகதி அவர்களுக்காகக் காத்திருந்தது. அன்று காலை 10 மணியளவில் விடுதலைப் புலிகளால் மன்னார்த் தீவின் முஸ்லிம் கிராமங்களில் கட்டாய வெளியேற்றம் பற்றிய அறிவித்தல் செய்யப்பட்டது. இக்காலக் கட்டத்தில் மாந்தை-நானாட்டான் பிரதேசத்தில் பரவலாக தனித்திருந்த முஸ்லிம் கிராமங்கள்
79

Page 49
எவ்வித சலனமுமற்ற நிலையில் காணப்பட்டன. மன்னார்த் தீவின் 22 ஆம் திகதி நிகழ்வால் அதிர்ச்சி அடைந்த முஸ்லிம்கள் சிலர் விடத்தல்தீவு வழியாக மன்னாரை விட்டு வெளியேறிக் கொண்டிருந்த சூழ்நிலையிலும், விடத்தல்தீவு, பெரியமடு போன்ற மாந்தைப் பிரதேச முஸ்லிம் கிராமங்கள் வழமையான நிலையில் காணப்பட்டன. இப்பிரதேசங்களில் வாழ்ந்த முஸ்லிம்கள் தீவு முஸ்லிம்களின் கட்டாய வெளியேற்றம் பற்றி விடுதலைப் புலிகளிடம் விசாரித்த போதும் கூட அவ்வாறான நிகழ்வுகள் இப்பிரதேச முஸ்லிம்களுக்கு ஏற்படாது என்றவாறான வாக்குறுதிகள் பிரதேச மட்ட விடுதலைப்புலி உறுப்பினர்களால் அளிக்கப்பட்டன.
அதே நேரத்தில் விடத்தல்தீவு, பெரியமடுப் பிரதேச முஸ்லிம்கள் விடுதலைப் புலிகளால் வேறொரு வகையான வற்புறுத்தலுக்கு உள்ளானார்கள். 23 ஆம் திகதி காலை விடத்தல்தீவு முஸ்லிம்கள் தம்மிடமுள்ள பெறுமதியான பொருட்கள் பற்றிய விபரங்களை எழுத்தில் தரும்படி கேட்கப்பட்டார்கள். 24 ஆம் திகதி அவ்வாறு எழுதிக் கொடுக்கப்பட்ட பொருட்களை விடத்தல்தீவு விடுதலைப் புலிகளின் தலைமையகத்தில் சமர்ப்பித்துப் பற்றுச்சீட்டுப் பெற்றுக் கொள்ளும்படி பணிக்கப்பட்டார்கள். இவ்வாறு விடுதலைப் புலிகளிடம் சமர்ப்பிக்கப்படும் பொருட்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருக்கும் என்ற உறுதிமொழியும் முஸ்லிம்களுக்குக் கூறப்பட்டது. இதற்குச் சமமான நிகழ்வுகள் பெரியமடுவிலும், மாந்தை-நானாட்டானின் வேறுபல கிராமங்களிலும் நடை
பெற்றன என்று கூறப்படுகின்றது.
5.5 முஸ்லிம்களின் வெளியேற்றம் பற்றிய அறிவித்தல்
இறுதியில் மன்னார்த் தீவு முஸ்லிம்களுக்கும், முசலி முஸ்லிம்களுக்கும் அளிக் கப்பட்டது போல மாந்தை-நானாட்டானி முளப் லிம்களின் வெளியேற்றத்துக்கும் 48 மணித்தியால அவகாசம் விடுதலைப் புலிகளால் கொடுக்கப்பட்டது.
விடுதலைப் புலிகளின் வெளியேற்ற உத்தரவும், அதனைத் தொடர்ந்த முஸ்லிம்களின் வெளியேற்றமும் பரந்ததும், அத்துடன் தனிமைப்படுத்தப் பட்டதுமான இப்பிரதேச முஸ்லிம் கிராமங்களில் வெவ்வேறு விதமாக இடம் பெற்றன. அதனால் முஸ்லிம்களின் வெளியேற்றத்தை முதலில் தனித்தனிக் கிராமங்களாகவும் பின்னர் அதனைத் தொகுத்தும் நோக்கலாம்.
8O

இப்பிரதேசத்தின் மிகப் பெரிய கிராமமான விடத்தல்தீவில் முஸ்லிம்களின் வெளியேற்றம் பற்றிய அறிவித்தல் ஒக்டோபர் மாதம் 24ஆம் திகதி செய்யப்பட்டது. பெரியமடுவிலும், மினுக்கன், வட்டக்கண்டல் ஆகிய கிராமங்களிலும் இதே காலக்கட்டத்தில் முஸ்லிம்களின் வெளியேற்ற உத்தரவு விடுதலைப் புலிகளால் அறிவிக்கப்பட்டது. இவ்வெளியேற்ற அறிவித்தலைப் பற்றி இப்பிரதேசக் கிராம முஸ்லிம்களால் இவ்வாய்வுக்குத் தரப்பட்ட வாக்கு மூலங்களிலிருந்து நன்கு அறிந்து கொள்ளக் கூடியதாக இருக்கின்றது (Refugee Family Information, 1994).
5.6 வெளியேற்றம்
விடுதலைப் புலிகளினால் குறுகிய கால அவகாசம் கொடுக்கப்பட்ட வெளியேற்ற உத்தரவு இப்பிரதேச முஸ்லிம்களை அதிர்ச்சியடையச் செய்தது. இவ்வெளியேற்ற உத்தரவைக் கேட்ட தமிழ் மக்களும் ஆச்சரியப்பட்டார்கள். வெளியேற்ற உத்தரவில் முஸ்லிம்களுக்குச் சாதகமான பதிலை விடுதலைப் புலிகளிடம் இருந்து எடுக்க முஸ்லிம்கள், தமிழர்கள் எல்லோரும் எல்லா மட்டத்திலும் முயற்சித்தனர். தமிழ் மக்களைச் சார்ந்த சங்கங்களும், அமைப்புக்களும் தத்தமது வழிகளில் முஸ்லிம்களின் வெளியேற்றத்தைத் தடுப்பதற்கான முயற்சிகளை எடுத்தன. மாந்தை-நானாட்டான் பிரதேசம் முழுவதிலும் இவ்வாறான முயற்சிகளுக்கு உதாரணங்கள் பல காணப்படுகின்றன. உதாரணமாக விடத்தல்தீவைச் சேர்ந்த கிறிஸ்தவ பாதிரிமார்களால் முஸ்லிம்களின் வெளியேற்றத்தைத் தடுக்க எடுக்கப்பட்ட முயற்சிகள் மிகவும் போற்றத்தக்கதாகும். துரதிஷ்டவசமாக இவ் வேணி டுகோள்களை விடுதலைப் புலிகள் ஏற்றுக்கொள்ளவில்லை.
விரக்தியுற்ற மாந்தை-நானாட்டான் முஸ்லிம்கள் தமது சொந்த இடங்களை விட்டு வெளியேற முடிவெடுத்தார்கள். இவ்வாறான முடிவுகள் சில கிராமங்களில் குழுக்களாகவும், மற்றும் சில கிராமங்களில் கிராமம் முழுவதாகவும் எடுக்கப்பட்டன. முஸ்லிம்களின் பலவந்த வெளியேற்றத்தின் போது விடுதலைப் புலிகளால் இன்னும் பல நிபந்தனைகள் விதிக்கப்பட்டன. வெளியேறும் முஸ்லிம்கள் பணம், நகை போன்ற பெறுமதியான சொத்துக்களைக் கொண்டு செல்லக் கூடாது. முஸ்லிம்களுக்குச் சொந்தமான சொத்துக்களை தமிழ் மக்களுக்குக் கைமாற்றவும் கூடாது. தமது பிரயாணச்
81

Page 50
செலவுகளுக்காக வெளியேறும் முஸ்லிம்கள் ஒரு சொற்ப தொகைப் பணத்தையும் சில உடுபுடவைகளையும் மாத்திரமே எடுத்துச் செல்ல முடியும் என்ற நிபந்தனைகளோடு விடுதலைப் புலிகளால் அடையாளப் படுத்தப்பட்ட பாதைகளால் மட்டுமே வெளியேற வேண்டும் என்றும் முஸ்லிம்கள் வற்புறுத்தப் பட்டார்கள். வெளியேறவேண்டும் என்ற முடிவுக்குத் தள்ளப்பட்ட முஸ்லிம்கள் தமக்குக் கிடைத்த பாதைகளின் மூலம் தமது பிரதேசத்தை விட்டு வெளியேறத் தொடங்கினார்கள். இந்த வகையில் ஒவ்வொரு கிராம மக்களினது அனுபவமும் தனித்தனியாகக் காணப்பட்டது.
விடத்தல்தீவு முஸ்லிம்கள் ஒக்டோபர் மாதம் 26ஆம் திகதியிலிருந்து கூட்டம் கூட்டமாக தமது கிராமத்தை விட்டு வெளியேறினர். அக்காலத்தில் இவர்கள் வெளியேறுவதற்கு வசதியாகக் காணப்பட்ட பாதை பெரியமடு, பாலம்பிட்டி வழியான மடுப் பாதையாகும். விடத்தல்தீவு முஸ்லிம்கள் தமது ஊரில் இருந்து ஏறக்குறைய 18 மைல்கள் கால்நடையாக வந்து மடுவை அடைந்தார்கள். 27 ஆந் திகதி இரவு மடுக் கோவிலில் தங்கி மறுநாள் கால்நடையாகப் பூந்தோட்டம் வழியாக வவுனியாவை அடைந்தார்கள். வவுனியா நகரில் அன்று அவர்களுக்கு ஒரு பாடசாலையில் தஞ்சம் கொடுக்கப்பட்டது. அங்கிருந்து அனுராதபுரத்தில் நொச்சியாகமக் கிராமத்திற்கு வந்து பின்னர் புத்தளம் மாவட்டத்திற்கும், ஏனைய இடங்களுக்கும் அகதிகளாக அபயம் தேடிச் சென்றார்கள்.
பெரியமடு முஸ்லிம்கள் மடு, பண்டிவிரிச்சான் வழியாக வவுனியாவை அடைந்தார்கள் பண்டிவிரிச்சானில் வைத்து விடுதலைப் புலிகளால் தாம் அனுமதிக்காத ஏதாவது பொருட்களை எடுத்துச் செல்கின்றார்களா என்று பரீட்சிக்கப்பட்டார்கள். பெரியமடு முஸ்லிம்களில் அநேகர் வவுனியாவில் அரசாங்கப் பாடசாலையொன்றில் 7 நாட்கள் தங்கிவிட்டு நிரந்தர அகதித் தளங்களை நோக்கிச் சென்றார்கள் (படம்-9).
வட்டக்கண்டல் முஸ்லிம்கள் 26 ஆந்திகதி தமது சொத்து சுகங்களை விட்டு விட்டு மடு வழியாக வெளியேறினார்கள். மூன்று நாட்கள் வவுனியாவில் தங்கியிருந்து கெக்கிராவை GPS அகதி முகாமுக்கும், புத்தளப் பிரதேச அகதி முகாம்களுக்கும் சென்றார்கள். மினுக்கன், ஆண்டான்குளம், விளாங்குளி, பள்ளிவாசல்பிட்டி ஆகிய கிராமங்களின் அனுபவங்களும் இதே போலக்
காணப்பட்டன.
82

படம் 9 மாந்தை-நானாட்டான்
பிரதேச முஸ்லிம் அகதிகளின் வெளியேற்றப்பாதை, 25-30 ஒக்டோபர், 1990
... இ
އަހަp
கடல் Loco
C. CO
விடத்தஸ்தீவு
ଘ।।।।।।।।।।।।।।।।।।୩।।।।।।।।।।।।।।।।।।hr() :
விளாங்குவி
நெடுவரம்பு
ஆன்ைடாங்குளம்
மன்ன்ார் மாவட்டம்
இலந்தமோட்டை நகுல் புதுவெளி
பூவிரசத் குள8
நொச்சிக்குளம்
(T)
கடல்
ܓ
- J O 1 0 4.8
اسسسسسسسدسطا
மூலம் வெளிக்கள ஆய்வு, 1996, இலங்கை வீதிப்படம் 1994
83

Page 51
மாந்தைப் பகுதி, சொர்ணபுரி (பறையகுளம்) கிராம வாசிகளின் அனுபவம் பின்வருமாறு காணப்படுகின்றது.
"ஒக்டோபர் 26 ஆம் திகதி விடுதலைப் புலிகள் எமது சொத்துக்களைப் பறித்தார்கள். நாம் உணவும் நீரும் இன்றிக் கால்நடையாகப் பண்டிவிரிச்சானுக்கு வந்தோம். அங்கும் நாங்கள் திரும்பவும் பரிசோதனை செய்யப்பட்டோம். எமது பெண்கள் அணிந்திருந்த நகைகள் பறிக்கப்பட்டன. அங்கிருந்து கால்நடையாக வவுனியா வந்தோம். அங்கே நண்பகல்நேரம் இலங்கை இராணுவம் எங்களைப் பரிசோதனை செய்தது. பின்னர் அவர்கள் எங்களை வவுனியா அகதி முகாமுக்கு அழைத்துச் சென்றார்கள். மறுநாள் நாங்கள் தனியார் வாகனம் மூலம் அநுராதபுரம் வந்தோம். ஒக்டோபர் 30ஆம் திகதி அநராதபுரத்திலிருந்து நெல்லியாகமவிற்கு வந்தோம். அக்கிராம மக்களின் உதவியுடன் சிறு குடிசைகளை அமைத்து மிகவும் கஷ்டத்துடன் வாழ்ந்து வருகின்றோம்” (Refugee Femily Information, 1994).
மேலே குறிப்பிட்ட மாந்தைப் பிரதேச முஸ்லிம் கிராமங்களின் வெளியேற்றத்திற்கு ஒப்பான நிகழ்வுகள் நானாட்டான் பிரதேச முஸ்லிம் கிராமங்களிலும் நடை பெற்றன. உதாரணமாக நானாட்டான் பிரதேச முஸ்லிம் கிராமங்களில் ஒன்றான இலந்தைமோட்டைக்கு ஒக்டோபர் 23 ஆம் திகதி வந்த விடுதலைப் புலிகள் இம்மக்களுக்குச் சொந்தமான சகலவிதமான பொருட்களையும் விடுதலைப் புலிகளிடம் ஒப்படைத்து விட்டு, 48 மணித்தியாலத்திற்குள் தமது சொந்தப் பிரதேசங்களை விட்டு வெளியேறும் படி உத்தரவிடப்பட்டார்கள். இவ்வுத்தரவையிட்ட விடுதலைப் புலிகளின் ஆயுதக்குழு தலைவராக அக்கிராம மக்களால் நன்கறியப்பட்ட பாரதி என்பவர் இருந்தார் என்று அறியக் கூடியதாக இருந்தது.
விடுதலைப் புலிகளின் கட்டளையின் உறுதிப்பாட்டையும், அக்கட்டளை மீறப்பட்டால் நிகழக் கூடிய பிரதிபலன்களையும் நன்கு தெரிந்திருந்த இலந்தை மோட்டை முஸ்லிம்கள் அவசர அவசரமாக 24 ஆம் திகதி தமது கிராமத்தை விட்டு வெளியேறினார்கள். இலந்தைமோட்டை முஸ்லிம்களும்,
எனைய முஸ்லிம் கிராமத்தவர்களும் மன்னர் பிரதான வீதியூடாக
84.

மடுவையடைந்து அங்கிருந்து மாந்தை முஸ்லிம்களைப் போல பண்டிவிரிச்சான் ஊடாக வெளியேறினார்கள் (படம்-9). மேற்குறிப்பிட்ட பாதை மூலமாக வந்த எல்லாக் கிராம முஸ்லிம்களும் பண்டிவிரிச்சானில் விடுதலைப் புலிகளால் பரிசோதனைக்கு உட்படுத்தப் பட்டார்கள்.
தமது வெளியேற்றம் பற்றி இலந்தைமோட்டை முஸ்லிம் ஒருவர் பின்வறுமாறு கூறுகின்றார்.
"ஒக்டோபர் 23 ஆம் திகதி நாம் வெளியேறும்படி விடுதலைப் புலிகளால் வேண்டப்பட்டோம். 24ஆம் திகதி மாலை 3 மணிக்கு ஊரைவிட்டு வெளியேறத் தொடங்கினோம். வீடு, கடைகள் என்பன பூட்டப்பட்டு திறவுகோல்கள் விடுதலைப் புலிகளிடம் கையளிக்கப்பட்டன. பின்னர் தமிழ் மக்களுக்குச் சொந்தமான உழவு இயந்திரங்களில் பிரயாணம் செய்தோம். நாங்கள் இலந்தைமோட்டையில் இருந்து உய்த்தராசன்குளம் வந்து அங்கிருந்து 11ஆம் கட்டை வந்து பின்னர் மடு வழியாக மடுக் கோயிலை அடைந்தபோது இரவு 830 ஆகிவிட்டது. கடும் மழைபெய்தபடியால் இரவைக் கோவிலில் கழிக்க வேண்டியதாயிற்று. இரவு, காலை உணவுகளை மடுக்கோவிலில் பாதிரிமார்களே இலவசமாக வழங்கினார். 25அம் திகதி காலை செஞ்சிலுவைச் சங்க லொறிகள் மூலம் பணி டிவிலரிச்சான், தம்பணிணை, பூந்தோட்டம் வழியாக வவுனியாவை அடைந்தோம். பண்டிவிரிச்சானில் விடுதலைப் புலிகளால் ஆண்களும் பெண்களும் வேவ்வேறாக பரிசோதிக்கப்பட்டனர். வவுனியா வந்தடைந்த எங்களை இராணுவத்தினரும் பரிசோதித்தனர். பின்னர் வவுனியாவில் உள்ள ஒரு பெரிய வீடொன்றில் தங்க வைத்தனர். அன்று இரவும், காலையும் இராணுவத்தால் உணவு தரப்பட்டது. 26 ஆம் திகதி காலை 11 மணிக்கு ஒரு தனியார் லொறி மூலம் அநுராதபுர சாகிராக் கல்லூரியை அடைந்தோம். அங்கிருந்து நாங்கள் நாச்சியாதீவுக்கு
6) II; (35 TL. (Refugee Femily Information, 1994).
85

Page 52
நானாட்டான் பிரதேச முஸ்லிம் கிராமங்களில் நொச்சிக்குளம் (ஹிஜ்ராபுரம்) மக்கள் தமது வெளியேற்றத்திற்கு சிலாவத்துறைப் பாதையைப் பயன்படுத்தினார்கள். காரணம் நொச்சிக்குளம் முசலிப் பிரதேச முஸ்லிம் கிராமச் செறிவுக்கு அண்மையில் அமைந்திருந்தமையால், முசலி முஸ்லிம்களின் வெளியேற்றத்தோடு தம்மையும் இணைத்துக் கொண்டார்கள். நொச்சிக்குளம் முஸ்லிம்கள் சிலாவத்துறை கடல் வழியாக இப்பிரதேசத்தை விட்டு வெளியேறினார்கள்.
5.7 பொருளாதார இழப்பு
சொந்த இடத்திலிருந்து பலவந்தமாக வெளியேற்றப்பட்டமை மாந்தைநானாட்டான் முஸ்லிம்களைப் பல்வேறு வகையிலும் பாதித்தது. இப்பாதிப்புக்களை சமூக, கலாசார, பொருளாதார, உளவியல் என்ற அடிப்படையில் வகைப்படுத்தி நோக்க முடியும். இவ்வாய்வில் பொருளாதார இழப்புக்கள் பற்றி விளக்கப்படுகின்றது.
பொருளாதார இழப்பில் சொத்துக்களின் இழப்பு முக்கியமானதாகும். ஒரு குடும்பத்திற்குச் சொந்தமான உடமைகளை அசையும் சொத்துக்கள், அசையாச் சொத்துக்கள் என இரு வகைப்படுத்தலாம். புவியியல் ரீதியாக இடம் மாற்றக் கூடிய பணம், ஆபரணங்கள், பொருட்கள், மிருகங்கள் என்பன அசையும் சொத்துக்கள் (Movable Assets) எனப்படும். புவியியல் ரீதியாக இடம் மாற்றம் செய்ய முடியாத வீடுகள், காணிகள், தொழில், சேவை நிலையங்கள் போன்றன அசையாச் சொத்துக்கள் (Immovable Assets) எனப்படும்.
பலவந்த வெளியேற்றத்தால் மாந்தை-நானாட்டான் பிரதேச முஸ்லிம்களின் அசையும், அசையாச் சொத்துக்களுக்குப் பாதிப்புக்கள் ஏற்பட்டன. பலவந்த வெளியேற்றத்தின் போது மாந்தை-நானாட்டானில் மொத்தமாக ஏறக்குறைய 2000 குடும்பங்கள் வாழ்ந்தன. இவர்களில் பொருளாதார ரீதியாக பல மட்டத்தைச் சேர்ந்தவர்கள் காணப்பட்டார்கள். இவர்களுக்கு வீடுகள், தளபாடங்கள், விவசாயக் காணிகள், கால்நடைகள், வர்த்தக நிலையங்கள், கைத்தொழில் நிலையங்கள், வாகனங்கள். மீன்பிடி உபகரணங்கள், பணம், நகைகள் போன்றவை உடமைகளாக இருந்தன.
இவர்களுக்குச் சொந்தமான மொத்தச் சொத்துக்கள் பற்றிய விபரங்கள்
கிடைக்கக் கூடியதாக இல்லை. ஆனால் 1991 ஆம் அண்டு அகதிகள் பற்றி
86

செய்யப்பட்ட வெளிக்கள ஆய்வின் மூலமாக ஆய்வுக்குட்பட்ட பிரதேச முஸ்லிம்களின் குடும்ப இழப்புக்கள் பற்றிய விபரங்கள் பெறப்பட்டன. இந்த ஆய்வில் பெறப்பட்ட விபரத்தை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட அட்டவணையொன்று இங்கு தரப்பட்டுள்ளது.
அட்டவணை-9 இன்படி மாந்தை-நானாட்டானைச் சேர்ந்த 1059 குடும்பங்களின் இழப்பு விபரங்கள் ஆய்வில் பெறப்பட்டன. இது 1990ஆம் ஆண்டு இப்பிரதேசத்தில் வாழ்ந்த மொத்த சனத்தொகையில் ஏறத்தாழ 70சதவீதமாகும். ஆய்வுக்குட்பட்ட குடும்பங்களுக்கு ஏற்பட்ட இழப்புக்களில் சில அட்டவணையில் தரப்பட்டுள்ளன. இவ்விபரங்களின்படி மாந்தை-நானாட்டான் முஸ்லிம் குடும்பமொன்றிற்குச் சாராசரியாக 5.6 பவுண் நகையும், 55 ஏக்கர் காணியும் உடமைகளாகக் காணப்பட்டன. மேலும் கால்நடைகளில் மாந்தைநானாட்டானைச் சேர்ந்த முஸ்லிம்களுக்கு மொத்தமாக 13,240 மாடுகள், 5777 ஆடுகள் 12,391 கோழிகள் என்பன உடமைகளாக இருந்தன. மேற்குறித்த முஸ்லிம் குடும்பங்களுக்கு 480,407 ரூபா பெறுமதியான வீட்டுத் தளபாடங்களும் உடமைகளாகக் காணப்பட்டன எனவும் இழப்பறிக்கையிலிந்து அறியக்கூடியதாக இருந்தது.
உண்மையில் இங்கு குறிப்பிடப்பட்டிருப்பது ஒரு குடும்பத்திற்குச் சொந்தமாகவிருந்த உடமைகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு சில பொருட்களின் இழப்பு விபரங்களேயாகும். உண்மையில் இம்மக்களுக்கு உரித்தாகவிருந்த ஏனைய சொத்து விபரங்கள் இவ்வட்டவணையில் உள்ளடக்கப்படவில்லை. அதுமட்டுமன்றி இவ்விழப்பு விபரங்கள் 1991ஆம் ஆண்டு பணப் பெறுமதி அடிப்படையிலேயே தரப்பட்டுள்ளன. எனின் இவ்வட்டவணை பலவந்த வெளியேற்றத்தினால் மாந்தை-நானாட்டான் முஸ்லிம்களுக்கு கிராம அடிப்படையில் ஏற்பட்ட இழப்புப் பற்றி ஒரு கண்ணோட்டத்தையே எமக்குத் தருகின்றது.
இதைவிட இப்பிரதேச மக்களின் இழப்புப்பற்றிய மேலதிக விபரங்கள் ( A Report on the LOSS of Movable and Immovable Assets of People Ousted from the Northern Province). (6).JL LOT3, T600Tig565 (3)(Big) வெளியேற்றப்பட்ட மக்களின் அசையும், அசையாச் சொத்துக்களின் இழப்பு அறிக்கை) என்ற ஆய்வு நூலில் தரப்பட்டுள்ளன.
மேலே அடையாளம் காணப்பட்ட சொத்துக் களை விட
வேறுவகையான பொருளாதார இழப்புக்களுக்கும் முஸ்லிம்கள் உள்ளானார்கள்
87

Page 53
அட்டவணை
8
இழப்பு விபரம் பற்றிய சுருக்க அட்டவணை
மாந்தை நானாட்டான்
குடும்ப அங்கத்தவர்கள் 712 347
மொத்த குடிசனம் 3306 1766
ஆபரணம் (சராசரி பவுன்) 4.7 7.6
நிலம் (சராசரி ஏக்கரில்) 5.5 5.4
மொத்த மாடுகள் 8445 4795
மொத்த ஆடுகள் 3533 2244
மொத்த கோழிகள் 6447 5944
தளபாடங்களின் பெறுமதி 2271790 2.53228O
முலம் : அகதி வெளிக்கள ஆய்வு, 1991.
88

அவ்வாறான இழப்புக்களில் ஒன்று விவசாயப் பிரதேசமான மாந்தைநானாட்டானில் பலவந்த வெளியேற்றத்தின் போது கைவிடப்பட்ட அறுவடைக்குத் தயாராக இருந்த நெற்செய்கையாகும். ஆயிரக்கணக்கான ஏக்கர் நெல்நில அறுவடைகள் இதனால் பறிபோயின.
இதுவரையில் தனிப்பட்டவர்களுக்கும் குடும்பங்களுக்கும் ஏற்பட்ட இழப்புப் பற்றி விளக்கப்பட்டது. இப்பிரதேசத்தில் காணப்பட்ட முஸ்லிம் கிராமங்களின் பொதுச் சொத்துக்களான சமூக, கலாசார ஸ்தாபனங்களுக்குச் சொந்தமான கட்டிடம், காணி, சொத்துக்கள், தளபாடம் போன்றவற்றையும் நீர்ப்பாசனக் குளங்கள், கால்வாய்கள், கடல் வளங்கள், காட்டு வளங்கள் போன்றவற்றையும் பலவந்த வெளியேற்றத்தில் இழக்கப் பட்டதாகவே கருத வேண்டும்.
இனப் பிரச்சினைக்கான ஒரு பொருத்தமான தீர்வு ஏற்படுகின்ற போது மாந்தை-நானாட்டான் முஸ்லிம்களுக்கு 1990 ஆம் ஆண்டு பலவந்த வெளியேற்றத்தால் ஏற்பட்ட பொருளாதார இழப்புக்களுக்குப் பொருத்தமன நட்டஈடுகளும் மாற்றுத் திட்டங்களும் முன்வைக்கப்பட வேண்டியது அவசியமானதாகும்.
89

Page 54
6. அகதி வாழ்க்கை
6.1 அறிமுகம்
1990ஆம் ஆண்டு ஒக்டோபர் கடைசி வாரம் வவுனியா நகரம் அகதி மக்களால் நிறைந்து வழிந்தது. இக்காலகட்டத்தில் வட மாகாணத்தில் இருந்து பலவந்தமாக வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களின் எண்ணிக்கையே மிகக் கூடுதலாகக் காணப்பட்டது. ஒக்டோபர் இறுதி வாரத்தில் ஏறக்குறைய 40000 வட மாகாண முஸ்லிம்கள் வவுனியா நகரினுாடாகத் தெற்கு நோக்கி இடம் பெயர்ந்து கொண்டிருந்தார்கள். இவர்களுள் யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, வவுனியா, மன்னார் மாவட்ட முஸ்லிம்களும் அடங்குவர். இந்த அகதி வெள்ளத்தில் ஒரு அங்கமாக மாந்தை-நானாட்டான் பிரதேச முஸ்லிம்களும் வவுனியாவூடாக தென் மாகாணங்களை நோக்கி இடம் பெயர்ந்து கொண்டிருந்தார்கள்.
ஏற்கனவே குறிப்பிட்டது போல் பரந்து பட்ட மாந்தை-நானாட்டான் பகுதியில் சிதறி வாழ்ந்த 12 கிராம முஸ்லிம் மக்களும் தத்தமக்குக் கிடைத்த பாதைகளைப் பயன்படுத்தி மடுக்கோவிலுக்கு வந்து அங்கிருந்து பண்டிவிரிச்சான் ஊடாக வவுனியாவைத் தாண்டிச் சென்றார்கள் என்று கண்டோம். இவ்வாறு மடுவில் இருந்து ஒரே வழியாக மாந்தை-நானாட்டான் முஸ்லிம்கள் வெளியேறினாலும் இவர்கள் ஒன்றாக, ஒரே நேரத்தில் வெளியேறவில்லை. மாறாக விடுதலைப் புலிகளின் அச்சுறுத்தலால் அதிர்ச்சியுற்ற முஸ்லிம்கள் குடும்பம் குடும்பமாகவும், குழுக்கள் குழுக்களாகவும் அவசர அவசரமாக தமது உயிரைப் பாதுகாத்துக்கொள்ள தமது பிரதேசத்தை விட்டு வெளியேறினார்கள்.
ஒக்டோபர் 27ஆம் திகதியில் இருந்து 30ஆம் திகதிக்கு இடைப்பட்ட 4 நாட்களில் ஏறக்குறைய 50க்கு மேற்பட்ட குழுக்களாக மாந்தை-நானாட்டான் முஸ்லிம்கள் தமது சொந்த இடத்தைவிட்டு வெளியேறினார்கள். இவ்வாறாக மாந்தை முஸ்லிம்கள் குழுக்கள் குழுக்களாக அபயம் தேடிச் சென்றதன் பிரதிபலிப்பை இம்மக்களின் பிற்கால அகதிப் பரம்பலிலும் காணக் கூடியதாக
9 O

இருந்தது. தமது சொந்தப் பிரதேசங்களில் புவியியல் ரீதியில் தொடர்பற்று ஏற்கனவே வாழ்ந்த மக்கள், அகதிகளானபின் உற்றார் உறவினர்களைக் கூட பிரிந்து வாழ வேண்டிய நிர்ப்பந்தத்துக்கு உள்ளானார்கள்.
அகதி நிலையாலும், அங்கு கிடைத்த மட்டுப்படுத்தப்பட்ட வசதிகளாலும் இம்மக்கள் அனுபவித்த துன்பத்தோடு புதிய சூழ்நிலையில் தமது கஷ்டமான அகதி வாழ்க்கையை கடத்த வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார்கள்.
இவ்வத்தியாயத்தில் இம் மக்களின் அகதி வாழ்க் கையின் துன்பதுயரங்களும் எதிர்பார்புகளும் எடுத்துக் காட்டப்படுகின்றது.
6.2 அகதி வாழ்க்கைக்கான அமைவிடம் தீர்மானிக்கப்பட்ட
(LD60) D
மாந்தை-நானாட்டான் முஸ்லிம்கள் எவ்வாறு சிதறி அகதியாக வாழ வேண்டிய சூழ்நிலைக்கு உள்ளானார்கள் என்பதை சற்று விபரமாக அறிய வேண்டியது அவசியமாகும். அவ்வகையில் மாந்தை-நானாட்டான் பிரதேசத்தில் ஒவ்வொரு முஸ்லிம் கிராமத்தையும் எடுத்து நோக்குவது பொருத்தமானதாகும்.
விடத்தல்தீவு அகதிகள்
இப்பிரதேசத்தின் மிகப் பெரிய கிராமம் விடத்தல்தீவாகும். விடத்தல்தீவு முஸ்லிம்கள் ஒக்டோபர் 25 ஆம் திகதி தமது கிராமத்தை விட்டு வெளியேறி, பண்டிவிரிச்சானுாடாக 27 ஆம் திகதி வவுனியாவை அடைந்தார்கள். வவுனியாவில் இரு நாட்கள் தங்கிய பிறகு அநுராதபுர மாவட்ட நொச்சியாகமத்துக்கு வந்து ஏறக்குறைய ஒரு வார காலம் அங்கு தங்கியிருந்தார்கள். அங்கிருந்து திக்குத் திக்காக எங்கு அபயம் கிடைத்ததோ அங்கெல்லாம் இம்மக்கள் இடம் பெயர்ந்து சென்றார்கள்.
விடத்தல்தீவு முஸ்லிம்களில் மிகப் பெரும்பான்மையோர் (70 சதவீதம்) புத்தளம் நகருக்கு வந்தார்கள். ஆரம்பத்தில் இவர்களுக்குப் புத்தளம் நகரத்தின் சாகிராக்கல்லூரியில் அபயம் கொடுக்கப்பட்டது. ஏறக்குறைய 69(Ib வாரத்திற்குப் பின்னர் இவர்களில் ஒரு பகுதியினர் கரம்பைக்கும், வேறு சிலர் கொத்தாந் தீவுக்கும், மற்றும் சிலர் நுரைச்சோலைக்கும் செல்ல, வேறு சிலர் புத்தளம் நகரத்திலேயே தங்கத் தீர்மானித்தார்கள்.
91

Page 55
நொச்சியாகமத்தில் இருந்து வெளியேறிய விடத்தல்தீவு முஸ்லிம்களில் பலர் குருநாகல், பாணந்துறை, கண்டி போன்ற இடங்களுக்கும் சென்றார்கள். இதில் குருநாகலில் கெசூனுகொல்ல, சியம்பலாகஸ்கொடுவ போன்ற முஸ்லிம் கிராமங்களுக்கு வந்து சேர்ந்த விடத்தல்தீவு முஸ்லிம்கள் அங்குள்ள பாடசாலைகளிலும், பள்ளிவாயில்களுக்குச் சொந்தமான காணிகளிலும் தற்காலிகமாகக் குடியமர்த்தப் பட்டார்கள்.
மேற்குறிப்பிட்ட இடங்களைவிட கண்டிக்குச் சென்றவர்கள் கட்டுகளிப்தோட்டையிலும், பாணந்துறைக்குச் சென்றவர்கள் ஹேனமுல்லையிலும்
அகதிகளாக வாழ்ந்தார்கள்.
பெரியமடு அகதிகள்
பெரியமடு முஸ்லிம் அகதிகள் 27 ஆம் திகதி தமது கிராமத்தை விட்டு வெளியேறி மடு-பணி டிவிரிச் சான் வழியாக வவுனியாவை வந்தடைந்தார்கள். வவுனியாவில் அரசாங்கப் பாடசாலையொன்றில் 3லிருந்து 7 நாட்கள் தங்கினர். இதன் பின்னர் தங்களுக்குத் தென்பட்ட திக்குகளில் எல்லாம் சென்று குடியமர ஆரம்பித்தார்கள். இதில் புத்தளம், குருநாகல், அநுராதபுரம் ஆகிய மாவட்டங்கள் உள்ளடங்கும். புத் தளத்தில் பாடசாலையொன்றில் ஒரு கிழமை தங்கிவிட்டு, பின்னர் புத்தளம் நகரம், விருதோடை, கரம்பை, பூலாச்சேனை, கனமூலை, கொத்தாந்தீவு, புளிச்சாக்குளம் போன்ற இடங்களில் அமைக்கப்பட்ட அகதி முகாம்களில் வாழச் சென்றார்கள். இது போல குருநாகல் மாவட்டத்தில் சியாம்பலாகஸ்கொட்டுவ, மெல்சிரிபுர ஆகிய இடங்களிலும், அநுராதபுர மாவட்டத்தில் கலாவெவ என்ற இடத்திலும் அகதிகளாகக் குடியேறினார்கள்.
வட்டக்கண்டல் அகதிகள்
26ஆம் திகதி தமது கிராமத்தை விட்டு வெளியேறிய இவ்வகதிகள் தாம் வந்த பாதையில் விடுதலைப் புலிகளினாலும், வவுனியாவில் புளட் இயக்கத்தினராலும் சோதனைக்கு உற்படுத்தப்பட்டார்கள். வவுனியாவில் 4 நாட்களை அகதிகளாகக் கழித்து விட்டு 30ஆம் திகதி மதவாச்சியூடாக கெக்கிராவைக்கு வந்தார்கள். கெக்கிராவையில் GPS இல் அமைக்கப்பட்ட அகதி முகாமில் அகதியாக வாழ்ந்தார்கள்.
92

அட்டவணை - 9
மாந்தை-நானாட்டான் பிரதேச முஸ்லிம்களின் பலவந்த
வெளியேற்றத்துடன் தொடர்புடைய நிகழ்வுகள்.
திகதி நிகழ்வு
22. 10. 1990
செவ்வாய் இப்பிரதேசம் வழமைபோல் காணப்பட்டது. முஸ்லிம்களின் வெளியேற்றத்துக்கான அறிகுறிகள் எதுவுமில்லை. அன்று இரவு மன்னார்தீவு முஸ்லிம் கிராமங்களில் கொள்ளையிடப்பட்டன.
23: 1.O. 1990
புதன் நண்பகல் விடத்தல்தீவு முஸ்லிம்களை தமது சொத்துக்களைப்
பதிவு செய்யும் படி விடுதலைப் புலிகளால் கேட்கப்பட்டனர். சம நேரத்தில் மன்னார்த்தீவில் 48 மணித்தியால அவகாசத்தில் முஸ்லிம்கள் வெளியேறும்படி உத்தரவிடப்பட்டார்கள்.
24. O. 90
வியாழன் மாந்தை-நானாட்டான் முஸ்லிம் கிராமங்களுக்கும் 48
மணித்தியால வெளியேற்ற அவகாசம். வித்தல் தீவில் கிறிஸ்தவ பாதிரி மார் முஸ்லிம் களின் வெளியேற்றத்தைத் தடுக்க முயற்சி எடுத்தனர். இலந்தை மோட்டை முஸ்லிம்கள் அவசர அவசரமாக வெளியேற்றம்.
25. O. 90.
G66 6 முஸ்லிம்கள் வெளியேறுவது என்ற முடிவு.
வட்டக்கண்டல், மினுக்கன் போன்ற கிராம முஸ்லிம்கள் மடு-பண்டிவிரிச்சான் வழியாக வெளியேற்றம். பண்டிவிரிச்சானில் விடுதலைப் புலிகளால் பரிசோதனை.
26. 10. 90
சனி விடத்தல்தீவு முஸ்லிம்கள் பெருமளவில் வெளியேற்றம்.
ஏனைய சிறிய கிராம முஸ்லிம்களும் வெளியேற்றம்
27. O. 90
ஞாயிறு மாந்தை-நானாட்டானில் எஞ்சியிருந்த
முஸ்லிம்களும் பகுதி பகுதியாக வெளியேற்றம்.
28. O. 90
திங்கள் கடைசியாக பெரியமடு முஸ்லிம்களும் வெளியேற்றம்.
வவுனியா நகரம் முஸ்லிம் அகதிகளால் நிறைந்து வழிந்தது.
29. O. 90 மாந்தை-நானாட்டான் முஸ்லிம்களற்ற பிரதேசமாகியது.
செவ்வாய்
முலம் வெளிக்கள ஆய்வு, 1991.
93

Page 56
ஏனைய கிராம முஸ்லிம் அகதிகள்
நொச்சிகுள முஸ்லிம்களைத் தவிர மாந்தை நானாட்டானைச் சேர்ந்த ஏனைய கிராம முஸ்லிம்கள் மேலே காட்டப்பட்ட பாதையினுாடாக வடக்கில் இருந்து வெளியேறினார்கள். இவர்கள் வவுனியாவூடாக இலங்கையின் தென் மாகாணங்கள் பலவற்றிற்கு அகதியாகச் சென்றார்கள். இதில் இலந்தை மோட்டை முஸ்லிம்கள் கரம்பை மீளமைவுக் குடியேற்றத்திலும், நாச்சியாதீவிலும், ஆண்டான்குள முஸ்லிம்கள் அக்கரைவெளி, உளுக்காப்பள்ளம், றகுமத் புரம் ஆகிய இடங்களிலும், ரசூல்புதுவெளி முஸ்லிம்கள் கல்கமுவவிலும், நொச்சிக்குள முஸ்லிம்கள் நுரைச்சோலையில் கொய்யாவாடி சொந்தக் குடியேற்றத் திட்டத்திலும், சொர்ணபுரி முஸ்லிம்கள் நெல்லியாகம, கோறாப்பலை ஆகிய கெக்கிராவைப் பிரதேச முகாம்களிலும் அகதிகளாக வாழ்ந்து வருகின்றனர்.
6.3 அகதிகள் பராமரிக்கப்படுதல்
1991ஆம் ஆண்டு பெப்ரவரி மாதமளவில் முஸ்லிம்களின் அகதி வாழ்க்கை முகாம் முறையில் ஒழுங்கு செய்யப்பட்டது. மாந்தை-நானாட்டான் முஸ்லிம் அகதிகள் சில முகாம்களில் கிராம உறவினர்களுடன் கூட்டாகவும், தனியாக்கப்பட்டு வேறு பல கிராம, பிரதேச, மாவட்ட முஸ்லிம் அகதிகளுடன் சேர்ந்தும் தமது முகாம் வாழ்க்கையைத் தொடங்கினார்கள்.
மாந்தை-நானாட்டான் முஸ்லிம்களின் அகதி வாழ்க்கையில் இவர்களுக்கு மிகவும் கரிசனையோடு உதவி செய்த பலர் நினைவு கூரத்தக்கவர்களாவர். முதலில் அபயம் தேடி வந்தடைந்த கிராம மக்களின் அனுதாபமும், உதவியும் முக்கியமானதாகும். விடத்தல்தீவு, பெரியமடு முஸ்லிம்கள் குருநாகல் மாவட்டத்திற்கு அகதியாக வந்த போது சியாம்பலாகஸ்கொட்டுவ, கெகுனு கொல்ல முஸ்லிம்கள் இவர்களுக்கு உணவளித்து, உறைவிடமளித்து, ஆறுதல் கூறி இம்மக் களை அரவணைத்தார்கள். இதற்குச் சமமான நிகழ்ச்சிகள் புத்தளம் மாவட்ட விருதோடை நுரைச்சோலை, மற்றும் முஸ்லிம் அகதிகள் சென்றடைந்த இடங்களிலும் காணப்பட்டதென்பது குறிப்பிடத்தக்கதாகும்.
மாந்தை-நானாட்டான் மக்கள் இனப்பிரச்சினையால் இடம் பெயர்ந்தவர்கள் என்று அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட காலத்தில் இருந்து அரச, அரச சார்பற்ற அகதிகளுக்கு உதவி புரியும் நிறுவனங்களின் பராமரிப்பின் கீழ் இவர்கள் கொண்டு வரப்பட்டார்கள்.
94.

6)
படம் 10 : மாந்தை-நானாட்டான் பிரதேச முஸ்லிம் அகதிகள் வாழும் f முகாம்களின் பரம்பல், 1995
-- A
@
- - இக்கிரிகொல்லா *ر d ல் ܐ
مر
அநுராதபு Ls)[767] L L L MY
意
V 魔 。
V நாசசதுைை - - ". இ/த nே/') முசல் பிட் இந்த மோட்)
it ಅಲ್ಲಿಲ್ಲ ஏககரிசொர்ண்/ரி ஆலங்கு θηπα ήέρν, οιητή கெர் கிராைை
- t - நுரைச்சோலை 2 ம் கட்டை ༽ ། -\'
62ławska Aranĝo om zzoni, 7” *, *േ
莓 *T
புத்தளம் நகரம் கலாவெவ
ஈபிடத்தப்தி) 3. 60//////лү59
W gy حبكة 850LE)6CL LI556rilf, LDIT6)ILLLif Y வித்தப்கிை /**
مير இ விருதோடை
(23 ushu nin(6) வி-க்கல்கி/ 粤 -دچمس @ V ്
A- سمبه கனமூலை محصحه و விடக்கசீப்தி பெரி/மடு f 邨
w - Y. மெல்சிரிபுர YA ,• 6} flifiku min@ நிகரைட்டிய fiftin(3 ge ༣ سم»ر
5-6) *
Ꮺ*
; * கெ குனு கொல்ல t
விடத்தகர்தி) ெ rifluense *
,.。@, சிபாம்பலாகஸ்கொட்டுவ
ஈபிடதகர்கீ) பெரி/ாடு
༣༽
hw
斯
O 粤 لتحسسسسسسسسا
അ
اسمبر M ܨ
ra - جه محصے * سر ہو ۔ کلا سمجھیلی *۔--سید == حیثیت ملے
மூலம்: வெளிக்கள ஆய்வு, 1996, இலங்கை வீதிப்படம் 1994
95

Page 57
அகதிகளுக்கான தற்காலிக குடிசைகள் அமைப்பதற்கும், அகதி முகாமில் வாழ்ந்த மக்களுக்கு நீர், மலசலசுட்ட வசதிகளை ஏற்படுத்துவதற்கும் அரசாங்கமும், அரசசார்பற்ற நிறுவனங்களும் உதவி செய்தன. இவ்வுதவிகள் அக்காலகட்டத்தில் அகதிகளுக்கு மிக அத்தியவசியமானவையாக இருந்தன. அரசினதும், அரச சார்பற்ற அமைப்புக்களினதும் மேற்குறிப்பிட்ட உதவிகளினால் அகதி முகாமில் வாழ்வதற்கான சூழ்நிலையை முஸ்லிம் அகதிகள் பெற்றுக் கொண்டாலும் கூட பல முகாம்கள் போதிய நீர், மலசலசுடட வசதிகளைப் பெற்றிருக்கவில்லை. உரிய காலத்தில் பொருத்தமான குடிசை கட்டும் பொருட்கள் வழங்கப்படாமையினாலும் பல பாரிய கஷ்டங்களுக்கு உள்ளாயினர். உதாரணமாக பெரியமடு மக்கள் வாழ்ந்த விருதோடை அகதி முகாம்களில் போதிய கிடுகு, தளபாடங்கள் கிடைக்காமையால் ஒரு ஒலைக் குடிசையில் ஒன்றுக்கு மேற்பட்ட குடும்பங்கள் நெருக்கமாக வாழ வேண்டிய நிலையிலும் ஒரு மலசலகூடத்தினை நுாற்றுக்கணக்கானவர்கள் பாவிக்க வேண்டிய நிலையிலும் இருந்தார்கள்.
அகதிகளைப் பராமரிக்கும் நோக்கில் உணவு நிவாரணம் அரசால் வழங்கப்பட்டது. அரசாங்கம் 5 அல்லது அதற்கு மேற்பட்ட அகதிக் குடும்பம் ஒன்றிற்கு மாதாந்தம் 1000 ரூபா பெறுமதியான உலர் உணவு நிவாரணத்தை வழங்கியது. உண்மையில் இவ்வுணவு நிவாரணம் அகதிகளைப் பட்டினியில் இருந்து பாதுகாத்தாலும் பற்றாக்குறையான ஊட்டச்சத்துள்ள உணவு வழங்கலால் போசாக்கின்மை, நோய்கள் என்பவற்றில் இருந்து அகதிகளைப்
பாதுகாக்க முடியாது போயிற்று.
6.4 முகாம் வாழ்க்கை
பலவந்த வெளியேற்றத்தினால் அகதியாக்கப்பட்ட முஸ்லிம்களில் மிகப் பெரும்பான்மையானோர் புத்தளம், குருநாகல், அநுராதபுரம் ஆகிய மாவட்டங்களில் தஞ்சம் அடைந்தார்கள். 1991ஆம் ஆண்டுக் காலகட்டத்தில் இம்மூன்று மாவட்டங்களிலும் அமைக்கப்பட்ட ஏறக்குறைய 200 அகதி முகாம்களில் வடமாகாண முஸ்லிம் அகதிகள் வாழ்ந்ததார்கள். இதில் புத்தளம் மாவட்டத்தில் 150 க்கு மேற்பட்ட முகாம்கள் காணப்பட்டன. முஸ்லிம்களின் அகதி வாழ்க்கையைப் பற்றி சரியாக அறிந்து கொள்ள இம்மக்கள் வாழ்ந்த முகாம்கள் பற்றியும், அதன் வசதிகள் பற்றியும் அறிய வேண்டியது அவசியமாகும். இந்த அடிப்படையில் மாந்தை-நானாட்டான் முஸ்லிம்கள்
வாழ்ந்த அகதி முகாம்களை எடுத்து விளக்குவோம்.
96

அகதி முகாம் என்பது இனப் பிரச்சினையால் பாதிக்கப்பட்டு சொந்த இடங்களை விட்டு வெளியேறிய மக்களுக்கு அரச, அரச சார்பற்ற நிறுவனங்களினால் தற்காலிகமாக அமைத்துக் கொடுக்கப்படும் வாழ்விடத்தைக் குறிக்கும். அகதி முகாம்களாக தனியார், அரச காணிகளில் அகதிக் குடும்பங்களுக்கு குடிசைகள் அமைத்துக் கொடுக்கப்பட்டன. அத்துடன் அம்மக்களின் ஏனைய நலன்களும் பராமரிக்கப்பட்டன. மாந்தை-நானாட்டான் முஸ்லிம்கள் வாழ்ந்த பல முகாம்கள் இடப் பற்றாக்குறையால் பொருத்தமான குடியிருப்புக்கான நிலமின்மையால் நெருக்கமாகவும், பொருத்தமற்ற வாழ்விடச் சூழலிலும் அமைக்கப் பட்டிருந்தன. அகதி முகாம்கள் பொருத்தமற்ற சுற்றுச் சூழலாலும் நெருக்கமான குடிசைகளைக் கொண்டிருந்தமையாலும் அதிகமாகப் பாதிக்கப்பட்டன. இப்பாதிப்புக்களில் அகதி மக்கள் உடல் ஆரோக்கிய ரீதியாகவும், உளவியல் ரீதயாகவும் மிகவும் பாதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
மாந்தை-நானாட்டான் முஸ்லிம்கள் வாழ்ந்த ஏறக்குறைய 50க்கு மேற்பட்ட முகாம்களில் பெரியமடு, விடத்தல்தீவு முஸ்லிம்கள் வாழ்ந்த முந்தல் பிரதேச முகாம்களை இங்கு உதாரணமாக எடுப்போம். 1991ஆம் ஆண்டிலிருந்து 1995 ஆம் ஆண்டு வரை புத்தளம் மாவட்ட முந்தல் பிரதேசத்தில் 44 சிறிய, பெரிய முகாம்கள் காணப்பட்டன. இவற்றில் விருதோடைப் பகுதியில் 12 முகாம்கள் அமைவுற்றிருந்தன. விருதோடையில் அக்காலத்தில் ஏறக்குறைய 600 குடும்பங்கள் அகதிகளாக வாழ்ந்தன. இப்பிரதேசத்தில் காணப்பட்ட அகதி முகாம்கள் சூழற் பிரச்சினை, கல்விப் பிரச்சினைகளினால் அதிகமாகப் பாதிப்புக்கு உட்பட்டிருந்தன.
படம் 11 விருதோடையில் அமைவுற்றிருந்த AI முகாமையும், B முகாமையும் காட்டுகின்றது. AI முகாமில் ஏறக்குறைய 30 குடும்பங்களும் B முகாமில் ஏறக்குறைய 70 குடும்பங்களும் வாழ்ந்தன. இம்முகாம்களில் பெரியமடு, விடத்தல்தீவைச் சேர்ந்த மக்கள் அகதியாக்கப் பட்டதிலிருந்து ஏறக்குறைய 6 வருடங்களாக வாழ்ந்து வந்தார்கள்.
இம்முகாமைச் சுற்றிக் காணப்பட்ட சமூகச் சூழல் அகதிகளுக்கு உறுதுணையாக இருந்தது. இச்சூழலில் வாழ்ந்த உள்ளூர் மக்கள் அகதிகளின் நலனில் அக்கறை காட்டினர். தங்களுடைய பள்ளிவாயில், மதரசா போன்ற சமய நிலையங்களிலும், பாடசாலை, சனசமூக நிலையங்கள் போன்ற பொதுக்கட்டிடங்களிலும் அகதி முஸ்லிம்களுக்குச் சமஉரிமை கொடுத்துக் கெளரவித்தார்கள்.
எனினும் துரதிஷ்டவசமாக இம்முகாமின் பெளதீகச் சூழல் மக்கள் வாழ்க்கைக்குப் பொருத்தமானதாக அமைக்கப்படவில்லை. தாழ்நிலமான
97

Page 58
படம்-11 விருதோடை அகதி முகாம்கள், 1994
T f * TT
t f f f நீர் தேங்கும்
f
台 f 的 f
( ' குடிசை f
. . . . 盛 /h - سے۔ f of t f 代
O
98.
 
 
 

இம்முகாமின் கிழக்கெல்லையாக உவர்நீரோடை காணப்பட்டது. இதனால் மழை காலங்களில் நீரோட்டம் அதிகரிக்கும் போதும், நீர் மட்டம் அதிகரிக்கும் போதும் இம்முகாமில் பெரும்பாலான குடிசைகள் வெள்ளத்துள் ஆழ்ந்தன. வெள்ள நீர் மட்டம் அதிகம் உயராதபோது நிலக்கசிவினாலும் சுற்றுப்புறப் பள்ளங்கள், கேணிகளில் நீர் தேங்கி நிற்பதாலும் வதிவிடப் பிரச்சினைகள் இக்காலங்களில் அதிகரித்தன. இது அகதியிலும், அகதி நிலைக்குக் காரணமாகியது. இதைவிட இக்காலங்களில் மலேரியா, வயிற்றுளைவு போன்ற நோய்களும் அதிகரித்துக் காணப்பட்டன. இதற்கு நுளம்புகளின் சடுதியான அதிகரிப்புக் காரணமாக இருந்தது.
6.5 அகதிகளின் அனுபவம்
அகதி வாழ்க்கைக் காலகட்டத்தில் தனிப்பட்டவர்களும் குடும்பங்களும் அடைந்த துன்பங்கள் எண்ணிலடங்கா. இச்சந்தர்ப்பத்தில் மாந்தை-நானாட்டான் முஸ்லிம்களின் அகதி அனுபவங்கள் சிலவற்றை எடுத்துக் கூறி இம்மக்களின் அகதி நிலை இங்கு விளக்கப்படுகின்றது.
நானாட்டானில் சிறந்த பொரளாதார நிலையில் வாழ்ந்த 55 வயதுடைய ஒரு முஸ்லிம் அகதியாக வாழும் காலத்தில் தனது அனுபவத்தைப் பின்வருமாறு கூறுகின்றார்.
"நாங்கள் அநுராதபுரத்திற்கு வந்த போது முஸ்லிம் மக்களும் சிங்கள மக்களும் எங்கள் மீது அனுதாபம் காட்டிச் சில பொருட்களைத் தந்துதவினர். எமக்கு இப்பொழுது கிடைக்கும் நிவாரணங்கள் மிகவும் பற்றாக்குறையானதாகும். நாம் எமது கிராமத்தில் மிக நல்ல நிலையில் வாழ்ந்தோம். இன்று எமது குழந்தைகளுக்குத் தேவையான உபகரணங்கள், சீருடைகள் போன்றவற்றைக் கூடப் Gup(uplgungjoir(66IITLE. (Refugee Femily Information, 1994).
சின்னப்புங்கன்தாழ்வு என்ற இடத்தில் இருந்து வந்த 35 வயதுடைய ஒருவர் தனது அனுபவத்தைப் பின்வருமாறு கூறுகின்றார்.
"எல்லோருக்கும் கொடுத்துப் பழக்கப்பட்ட நான் எனது குடும்பத்தையே கவனிக்க முடியாத நிலையில் உள்ளேன்.
fra

Page 59
நான் யாரிடமும் கையேந்த முதல் இறைவன் எனக்கு வழிகாட்ட மாட்டானா என்பதுதான் எனது நிலை” (Refugee
Femily Information, 1994).
இதே கிராமத்தைச் சேர்ந்த மற்றுமொருவர் கூறுவதாவது
"இப்பொழுது நானும் எனது குடும்பத்தினரும் சாப்பாட்டுக்கு வழியில்லாமலும் செலவுக்குப் பணமில்லாமில்லாமலும் மிகவும் கஷ்டமான நிலையில் இருக்கின்றோம். எமக்கு அரசாங்கத்தால் வழங்கப்படும் 1260 ரூபா பெறுமதியான சாமான்கள் கிடைக்கின்றன. இந்தச் சாமான் வாழ்க்கைக்குப் போதுமானதாக இல்லை. எனக்கு 4 பெண் பிள்ளைகள் இருக்கின்றார்கள். இவர்கள் பாடசாலை செல்வதற்கான பொருட்கள் வாங்குவதற்கு வசதியில்லாமல் இருக்கின்றது. இப்போது மிகவும் கஷ்ட நிலையில் இருக்கின்றோம். இருப்பிட வசதியும் இல்லை.” என்கின்றார். (Refugee Femily Information, 1994).
6.6 அகதிகள் எதிர்நோக்கிய பிரச்சினைகள்
அகதிகள் முகாம் வாழ்க்கையில் பற்றாக்குறையான நிவாரணத்தினாலும், தொழிலின்மையாலும் பல விதமான பொருளாதார, கல்வி, உளவியல் பாதிப்புகளுக்கு உள்ளானார்கள். போஷாக்கின்மை அகதிகள் மத்தியில் காணப்பட்ட ஒரு பொதுவான பிரச்சினையாகும். இதனால் குழந்தைகளும், கற்பிணித்தாய்மார்களும், வயோதிபர்களும் பெரிதும் பாதிக்கப்பட்டார்கள். பொருத்தமான கல்வியின்மை மற்றுமொரு பிரச்சினையாகும். கரம்பை, மெல்சிரிபுர, பூலாச்சேனை போன்ற பிரதேசங்களில் வாழ்ந்த மாந்தை-நானாட்டான் அகதிகள் இதனால் அதிகம் பாதிக்கப்பட்டார்கள். அதனுடன் மட்டுமன்றி அகதிகள் வாழ்கின்ற இடங்களுக்கு அருகில் காணப்பட்ட உள்ளூர்
பாடசாலைகளில் அகதி மாணவர்களை கட்டிட தளபாட ஆசிரியர்
1OO

பற்றாக்குறையினால் அனுமதிக்கத் தயங்கினர். இதனால் அகதி மாணவர்களின் கல்வி மிகவும் பாதிக்கப்பட்டது. மாந்தை-நானாட்டான் முஸ்லிம் அகதிகள் வாழ்ந்த விருதோடை, புத்தளம் நகரம், கொத்தான்தீவு போன்ற பாடசாலைகளில் இடவசதியின்மையினால் அகதி மாணவர்களுக்கான பாடசாலை 2.00 மணியிலிருந்து 500 மணிவரை மாலை நேரத்தில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.
அகதி மாணவர்களுக்கான இம் மாலைநேர வகுப்புக்களால் கல்வி கற்கும் நேரம் மாத்திரமல்லாது கல்வித்தரமும் பாதிக்கப்பட்டது. அது மட்டுமன்றி விடத்தல்தீவு பெரியமடு போன்ற கிராமங்களில் உயர் கல்வியில்
உள்ள ஆர்வமானது இத்தகைய வசதியின்மையால் பாதிக்கப்பட்டது.
101

Page 60
7. அகதி வாழ்க்கையின் அண்மைக்கால
மாற்றங்கள்
அகதி வாழ்க்கை மிகவும் துன்பகரமானது. வடக்கு முஸ்லிம்களின் அகதி வாழ்க்கை ஒரு நாள் இரு நாளாகி, இருநாள் மாதங்களாகி, மாதங்கள் வருடங்களாகி இன்று ஏழு வருடங்களையும் தாண்டிவிட்டது. இம்மக்கள் அகதியாக்கப்பட்ட போது இவர்களின் பிரச்சினை ஒரு தற்காலிகப் பிரச்சினை எனக் கருதப்பட்டது. அந்த அடிப்படையில் குறுங்கால அகதி வாழ்க்கைக்குப் போதுமானது எனக் கருதப்பட்ட தற்காலிக நிவாரண வசதிகள் வழங்கப்பட்டன. இத்தற்காலிக அகதி நிவாரண ஒழுங்குகள் அகதிகளின் பிரச்சினைகளுக்கு முழுமையான தீர்வாக அமையவில்லை. மாறாகப் பல பக்க விளைவுகளை ஏற்படுத்தியது. அகதி வாழ்க்கையின் போது இவர்கள் சமூக, ஆரோக்கிய, கலாசார ரீதியாக வெகுவாகப் பாதிக்கப்பட்டார்கள். பலவந்தமாக வெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள் அகதி வாழ்க்கைக் காலத்தில் அனுபவித்த துன்பங்களையும், துயரங்களையும் பற்றி வேறு நூல்களில் ஆசிரியரால் விளக்கப்பட்டிருக்கின்றன. (Hasbulla, 1993 and 1996b) அவைகள் மாந்தைநானாட்டான் முஸ்லிம் அகதிகளுக்கும் பொருத்தமானவையாகும்.
அகதிகள் தமது உற்றார் உறவினர், ஊரவர்களிடமிருந்து பிரிக்கப்பட்டு புதிய சூழலில் வாழ்ந்தமையானது, இவர்கள் அகதி வாழ்க்கையின் போது அனுபவித்த துன்பங்களிலெல்லாம் சிகரம் போன்று காணப்பட்டது. வட மாகாண ஏனைய பிரதேச முஸ்லிம்களைப் போல் மாந்தை-நானாட்டான் முஸ்லிம்களும் இத்துன்பத்தை அனுபவித்தார்கள்.
சொந்த இடத்தில் சிறு எண்ணிக்கையில் மிகக் கூட்டுறவுடன் வாழ்ந்த இப்பிரதேச முஸ்லிம்கள் தொடர்பற்ற 50க்கும் மேற்பட்ட முகாம்களில் உற்றார், உறவினர், ஊரவர் துணையின்றி வாழும் நிலைக்குத் தள்ளப்பட்டனர் என்பதை முன்னர் பார்த்தோம். அவ்வாறு இருந்தும் பல சிரமங்களுக்கு மத்தியில் இம்மக்கள் மேற் கூறியோரின் இன்பங்களிலும், துன்பங்களிலும் பங்கு பற்றி வந்தார்கள். தொடர்ச்சியாகத் தமது சொந்தப் பிரதேசத்தில் காணப்பட்ட சமூக சூழல் கவர்ச்சி இவர்களை ஈர்த்துக் கொண்டே இருந்தது.
102

7.1 உறவினர்களை நோக்கிய இடப்பெயர்வு
அகதியாக்கப்பட்டு தற்காலிக வாழ்விடம் கிடைக்கப்பெற்ற காலத்தில் இருந்து அகதிகள் தமக்குப் பொருத்தமான சமூக வாழ்விட சூழலை நோக்கி இடம் பெயர்ந்து வாழ முயற்சித்து வந்தார்கள். இவ்வாறான இடப்பெயர்வு முயற்சியில் உறவினர்கள் வாழ்ந்த இடத்தினை நோக்கி இடம் பெயர்ந்து செல்ல வேண்டும் என்ற ஆர்வம் அகதிகள் மத்தியில் காணப்பட்டது.
ஆனால் துரதிஷ்டவசமாக அகதிகளின் அவ்வாறான சுதந்திரமான இடப்பெயர்வை நேரடியாகவும், மறைமுகமாகவும் அரசு கட்டுப்படுத்தி வந்தது. ஒரு முகாமில் இருந்து மற்றொரு முகாமுக்கு இடம் பெயரும் ஒருவர் அரச நிவாரண உதவிகளை உடனடியாகப் பெற முடியாத சூழலை ஏற்படுத்தி அரசாங்கம் அகதிகளின் முகாம்களுக்கிடையிலான இடப்பெயர்வை மட்டுப்படுத்தி வந்தது. அரசாங்கத்தின் உணவு நிவாரணத்தை முழுமையாக நம்பி வந்த அகதிகள் அவ்வாறான இடப்பெயர்வுக்கு உட்பட்டு சிரமங்களுக்குள்ளாவதைத் தவிர்க்க விரும்பினர்.
இச்சூழ்நிலையிலும் மாந்தை-நானாட்டான் பிரதேசத்தைச் சேர்ந்த பல கிராமத்தவர்கள் பொருத்தமான வாழ்விடம் தேடி, தொடர்ச்சியாக இடம் பெயர்ந்து கொண்டிருந்தனர். இவ்வாறான இடப்பெயர்ச்சிகள் புத்தள மாவட்டத்தை நோக்கியும், புத்தள மாவட்டத்திற்குள்ளும் இடம் பெற்றன. உதாரணமாக குருநாகல் மாவட்ட மெல்சிரி புர, கெகுனுகொல்ல கிராமங்களில் வாழ்ந்த விடத்தல் தீவைச் சேர்ந்த முஸ்லிம் அகதிகள் புத் தளம் மாவட்ட உளுக்காப்பள்ளத்திற்கு இடம் பெயர்ந்து வந்தனர்.
7.2 புதிய இடத்தில் ஒன்றாக வாழும் முயற்சி
முகாம்களுக்கிடையிலான அகதிகளின் இடப்பெயர்ச்சியால் பல நடைமுறைச் சிக்கல்கள் காணப்பட்டன. முகாம்கள் அவை அமைக்கப்பட்ட போது இடமின்மைப் பிரச்சினையை எதிர்நோக்கி மிக நெருக்கமாகக் குடிசைகள் அமைவுற்ற நிலையில் காணப்பட்டன. இம்முகாம்களில் நீர், மலசலகூட, மற்றும் ஏனைய அடிப்படை வசதிகள் மட்டுப்படுத்தப்பட்டவையாக இருந்தன. இச்சூழ்நிலையில் புதிய அகதிகளின் வருகை ஏற்கனவே அங்கு வாழ்ந்தவர்களால் வரவேற்கப்படவில்லை. உறவினர்களுடன் ஒன்றாக வாழ விரும்பி இடம்பெயர்ந்துவர நினைத்த அகதிக் குடும்பங்களுக்கு இது ஒரு பெரும் பிரச்சினையாகக் காணப்பட்டது. இப்பிரச்சினை தனியொரு பிரச்சினையாகவல்லாமல் குடும்பப் பிரச்சினையாகவும் காணப்பட்டது.
103

Page 61
இப்பிரச்சினைக்குத் தீர்வு காண மாந்தை-நானாட்டானைச் சேர்ந்த குடும்பங்கள் மற்றொரு வகையில் முயற்சித்தன. அம்முயற்சிகளில் ஒன்று உறவினர், குடும்பங்கள் ஒன்று சேர்ந்து புதிய காணியொன்றைத் தேடி, அங்கு ஒரு சிறிய முகாமை அமைத்து உற்றார் உறவினர் சூழலில் கெளரவமாக வாழ்வதாகும். இந்த வகையில் பல புதிய முகாம்கள் உருவாகத் தொடங்கின. இதற்கு உதாரணமாக தில்லையடியிலுள்ள A1 அமைவிட முகாமைக் குறிப்பிடலாம்.
அதே நேரத்தில் பெரியமடுக் கிராம மக்கள் ஒன்றாக ஒரு இடத்தில் வாழ்வதற்கான சாத்தியங்களையும் பார்த்து வந்தார்கள். இவர்களின் இவ்வாறான முயற்சி அகதியாக்கப்பட்ட ஆரம்ப காலத்தில் இருந்தே எடுக்கப்பட்டு வந்தது. 1995 ஆம் ஆண்டு அநுராதபுரப் பிரதேசத்தில் சொந்தக் காணி வாங்கி கிராம மக்கள் ஒன்றாக வாழும் முயற்சி ஒன்று மேற்கொள்ளப்பட்டது. ஆனால் நடைமுறைப் பிரச்சினைகள் பலவற்றால் இத்திட்டம் கைவிடப்பட்டது. ஆயினும் அம்மக்கள் தமது முயற்சியைக் கைவிடவில்லை.
7.3 சொந்தக் குடியேற்றம்
1995ஆம் ஆண்டுக் காலகட்டம் மாந்தை-நானாட்டான் முஸ்லிம் அகதிகளைப் பொறுத்தளவில் முக்கியமானதொரு காலக் கட்டமாகும். இக்காலத்தில் பல குடியிருப்பு மாற்றங்கள் இம்மக்கள் மத்தியில் ஏற்பட்டன. அதில் முக்கியமானது புதிய இடத்தில் சொந்தமாகக் காணி வாங்கி உற்றார், உறவினர், ஊரவரோடு வாழ்வதற்கு இம்மக்கள் எடுத்த முயற்சியாகும்.
இம்முயற்சியின் பிரதிபலனாகப் புத்தளம் மாவட்டத்தில் உளுக்காப்பள்ளம் என்ற இடத்தில் சொந்தக் குடியேற்றமொன்றைப் பெரியமடு, விடத்தல்தீவுக் கிராம மக்கள் ஏற்படுத்த முயற்சித்தார்கள். இம்முயற்சி 1995ஆம் ஆண்டு பெப்ரவரி மாதமளவில் எடுக்கப்பட்டது. பாலாவி-கற்பிட்டி பிரதான பாதையில் பாலாவிச் சந்தியில் இருந்து கிட்டத்தட்ட 2 மைல் தொலைவில் உளுக்காப்பள்ளம் அமைந்துள்ளது. இங்கு ஏறக்குறைய 40 ஏக்கர் காணியை இம்மக்கள் சொந்தமாக வாங்கி ஒரு குடும்பத்திற்கு 20 பேர்ச்சு என்ற அடிப்படையில் பிரித்துக் கொடுத்து அங்கு தமது அகதி வாழ்க்கையைத் தொடர முயற்சி எடுத்தார்கள்.
அதே காலகட்டத்தில் இவ் உளுக்காப்பள்ளக் காணியுடன் தொடர்ச்சியாகக் காணப்பட்ட ஏறக்குறைய 25 ஏக்கர் காணியை விடத்தல்தீவு முஸ்லிம்கள் சொந்தமாக வாங்கி அவற்றைத் தமது உற்றார், ஊரவர் மத்தியில் பங்கிட்டுத் தமது சொந்தக் குடியேற்றத்தை அமைத்துக் கொண்டார்கள்.
104

இதே போல புத்தளம் நகருக்குத் தெற்காகத் தில்லையடி என்ற பிரதேசத்தில் சிறிய அளவில் மாந்தை-நானாட்டான் பிரதேச முஸ்லிம்களால் சொந்தக் குடியேற்றம் அமைக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது.
மேற்குறிப்பிட்ட சொந்தக் குடியேற்றங்களுக்குள் சிதறி வாழ்ந்த மாந்தைநானாட்டான் முஸ்லிம்கள் இடம் பெயர்ந்து வந்தார்கள். இதில் உளுக்காப்பள்ள சொந்தக் குடியேற்றத்தை எடுத்துக் கொள்கின்ற போது புத்தள நகரம், கனமூலை, பூலாச்சேனை, கரம்பை, புளிச்சாக்குளம் ஆகிய இடங்களில் வாழ்ந்த பெரியமடு முஸ்லிம்கள் பெருமளவில் இச்சொந்தக் குடியேற்றத்திற்கு இடம் பெயர்ந்தார்கள். இது போல குருநாகல் மாவட்ட சியம்பலாகஸ்கொட்டுவ, மெல்சிரிபுர ஆகிய முகாம்களில் வாழ்ந்த பெரியமடு மக்களும் அநுராதபுர மாவட்டத்தில் கலாவெவ பிரதேசத்தில் வாழ்ந்த பெரியமடு முஸ்லிம்களும் உளுக்காப்பள்ள சொந்தக் குடியேற்றத்திற்கு இடம் பெயர்ந்து சென்றார்கள்.
விடத்தல்தீவு முஸ்லிம்கள் உளுக்காப்பள்ளம், தில்லையடி போன்ற பிரதேசங்களில் அமையப் பெற்ற சொந்த குடியேற்றங்களுக்கு இடம் பெயர்ந்தனர். கொத்தான் தீவு, விரு தோடையில் வாழ்ந்த விடத்தல் தீவு முஸ்லிம்கள் தில்லையடிக்கும், கரம்பை, பூலாச்சேனையில் வாழ்ந்த விடத்தல்தீவு முஸ்லிம்கள் உளுக்காப்பள்ளத்திற்கும் அதே போல குருநாகல், சியம்பளாகஸ்கொட்டுவ, கெகுனு கொல்ல மக்கள் உளுக்காப்பள்ளத்திற்கும், பாணந்துறை, கொழும்பு ஆகிய இடங்களில் வாழ்ந்த விடத்தல்தீவு முஸ்லிம்கள் உளுக்காப்பள்ளத்திற்கும் இடம் பெயர்ந்தனர்.
7.4 மீளமைவு முகாம்களும் அகதி இடப்பெயர்வும்
அகதி முகாம்களில் அநேகமானவை 1991ஆம் ஆண்டு அமைக்கப்பட்டிருந்தன. உணவு நிவாரணம் தொடர்ச்சியாக அகதிகளுக்குக் கொடுக்கப்பட்டுவந்தாலும் முகாம் வசதிகளில் பெரும் மாற்றங்கள் எதுவும் செய்யப்படவில்லை. அகதிகளின் தொடர்ச்சியான பயன்பாட்டினால் தற்காலிகமாக ஏற்படுத்தப்பட்ட நீர், மலசலகூட வசதிகள் பயன்படுத்தப்பட முடியாத நிலைக்குச் சென்றன. 6 வருடங்களுக்கு முன்னர் வேயப்பட்ட ஒலைகளும், கட்டப்பட்ட தடிகளும் உக்கி உருக்குலைந்த நிலையில் காணப்பட்டன. அகதி வாழ்க்கையின் ஆறாவது வருடத்திலாவது முகாம்களை புனரமைக்க வேண்டிய சூழ்நிலை
உருவானது.
அதுமட்டுமன்றி முகாம் கள் பல தனியார் காணிகளில் அமைக்கப்பட்டிருந்தன. காணிச் சொந்தக்காரர்கள் முகாம்களை இடமாற்றும்படி
105

Page 62
அரசாங்கத்தை வற்புறுத்தி வந்தார்கள். வேறும் பல முகாம்கள் வாழ்க்கைக்குப் பொருத்தமற்ற சூழலில் காணப்பட்டன. அம்முகாம்கள் புதிய இடங்களில் மீளமைக்கப்பட வேண்டிய கட்டாய நிலைமையும் காணப்பட்டது.
இச்சந்தர்ப்பத்தில் அரசாங்கம் முகாம்களைப் புதிய இடங்களில் மீளமைப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டது. இதற்காக புத்தளம் மாவட்டத்தில் கரம்பை, தம்பபன்னி போன்ற அரசாங்கக் காணிகள் தேர்ந்தெடுக்கப்பட்டன. இம்மீளமைவு அகதி முகாமில் குடியிருக்க அகதிகள் தூண்டப்பட்டார்கள்.
மாந்தை-நானாட்டானைச் சேர்ந்த பல கிராம முஸ்லிம்கள் இச்சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திப் புதிய சூழலில் வந்து தம் ஊரவர்களுடன் வாழ நினைத்தார்கள். கரம்பை மீளமர்வு முகாமில், இலந்தைமோட்டை, விடத்தல்தீவு முஸ்லிம்கள் காணிகள் பெற்று ஒன்றாக வாழ்ந்தனர்.
7.5 அரசின் மீள்குடியேற்றத்திட்டம்
அகதி முஸ்லிம்களின் அண்மைக்கால மாற்றங்களை அறிந்து கொண்ட அரசு அகதியாக்கப்பட்ட ஆறு வருடங்களுக்குப் பின்னர் முஸ்லிம் அகதிகளின் அகதி வாழ்க்கைக்கு மாற்றுத் திட்டமொன்றை நடைமுறைப்படுத்த முற்பட்டது. இத்திட்டத்தின் மூலம் வட மாகாணத்திலிருந்து பலவந்தமாக வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களை அவர்கள் அகதிகளாக வாழ்கின்ற பிரதேசங்களில் நிரந்தரமாகக் குடியேற்றும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இவ்வாறு இம்மக்களை அவ்வப்பிரதேசங்களில் நிரந்தரமாகக் குடியேற்றுவதன் மூலம் இம்மக்களின் அகதிப் பிரச்சனையை முடிவுக்குக் கொண்டு வருவது அரசின் நோக்கமாகக் 3, T600T'LL Lig) (Ministry of Shipping, Ports, Rehabilitation and Reconstruction, 1996).
புதிய நிரந்தர மீள்குடியேற்றத்திட்டம் அகதிக் குடும்பங்கள் தமக்கென சொந்தக் காணிகளை தனியாக அல்லது கூட்டாக வாங்கக் கூடியதாக இருந்தால் அச்சொந்தக் காணிகளில் இவ்வகதிகளுக்கு வீடுகளைக் கட்டிக்கொள்ளப் பண ரீதியான கொடுப்பனவுகள் வழங்குவதை நோக்கமாகக் கொண்டிருந்தது.
அந்தக் குடியேற்றத் திட்டத்திற்கான இப்பணக் கொடுப்பனவு கொடுக்கப்பட்டதில் இருந்து 6 மாதத்தில் அகதிகளுக்குக் கொடுக்கப்பட்டு வரும் உலர் உணவுப் பொருட்கள் நிறுத்தப்படும் (Hasbullah, 1996b) அதாவது இம்மக்களுக்கு இடப்பெயர்வால் ஏற்பட்ட பிரச்சினைகளை மேற்குறிப்பிட்ட குடியேற்றத்திட்டத்தால் முடிவுகக்குக் கொண்டுவரலாம் எனக் கருதப்பட்டது.
106

பலவந்த வெளியேற்றத்திற்குட்பட்ட வடமாகாண முஸ்லிம்களுக்குப் பொருத்தமானது அகதியாக வாழுமிடத்தில் நிரந்தரக் குடியேற்றமா? அல்லது அகதி வாழ்க்கையில் திருப்பதியான மாற்றங்களை ஏற்படுத்த அரசால் எடுக்கப்பட வேண்டிய முயற்சிகள் என்ன? என்ற அம்சங்கள் மிகக் கவனமாகப் பரிசீலிக்கப்பட வேண்டும். இவ்வம்சம் பற்றி ஏற்கனவே பல இடங்களில் விளக்கப்பட்டிருப்பதால் (Hasbulla, and 1997b) இங்கு அவைபற்றி விதந்துரைக்க வேண்டியது அவசியமில்லை. ஆனால் மாந்தை-நானாட்டான் முஸ்லிம்களின் சொந்தக் குடியேற்ற முயற்சியோடு அரசின் அகதியாக வாழும் இடத்திலான மீள்குடியேற்றத் திட்டம் எந்த வகையில் தொடர்புடையது என்று நோக்குவது பொருத்தமானதாகும்.
7.6 மக்களின் சொந்தக் குடியேற்றமும், அரசின்
மீள்குடியேற்றமும்
மாந்தை-நானாட்டான் முஸ்லிம்கள் தமது சொந்தப் பணத்தில் தமது சொந்தப் பிரயாசைகளில், தமது சிந்தனையில் உருவாக்கிய அகதி வாழ்க்கைக்குள் ஒரு கெளரவமான மாற்று வழியை அடையாளம் கண்ட சொந்தக் குடியேற்றத்தை அரசு தனது மீள்குடியேற்றக் கொள்கைக்கு ஆதாரமாகப் பயன்படுத்த முயற்சித்தது. சொந்தக் குடியேற்றங்களில் சில மேலதிக வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்து இம்மக்களின் அகதி வாழ்க்கைக்கு முற்றுப் புள்ளி வைக்க அரசாங்கம் முயற்சிப்பது மிகத் தெளிவாகத் தெரிகின்றது.
பூர்வீக இடங்களிலிருந்து இனப்பிரச்சினை காரணமாக பாதுகாப்புக்காக வெளியேறிய மக்கள் தமது சொந்த இடம் திரும்பும் வரையும் அம்மக்கள் இடம் பெயர்ந்தவர்கள் என்று வரைவிலக்கணப் படுத்தப்படுகின்றார்கள். வட மாகாண முஸ்லிம்களைப் பொறுத்தவரையில் அவர்கள் சொந்த இடத்திலிருந்து பாதுகாப்புக் காரணத்திற்காக வெளியேறியவர்கள் அல்ல, வெளியேற்றப்பட்டவர்கள். முஸ்லிம்களின் பலவந்த வெளியேற்றத்தின் பின்னணியில் இன, அரசியல் காரணிகள் பின்னிப் பிணைந்து காணப்படுவதை யாவரும் அறிவர். பாதுகாப்புக் காரணம் கருதி மீண்டும் தமது சொந்த இடம் செல்ல முடியாத மக்கள் சர்வ தேச வரைவிலக்கணப்படி அகதிகள் எனப்படுகின்றார்கள். வட மாகாண முஸ்லிம்கள் சர்வதேச அகதி வரைவிலக்கணத்திற்கு உட்படக் கூடியவர்கள் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை.
இவ்வாறிருக்க இலங்கை அரசு முஸ்லிம்களை அகதிகளாக வாழும் இடங்களில் மிள்குடியேற்ற முயற்சிக்கின்றது. இம்மக்கள் அகதிகளாக வாழும்
107

Page 63
இடத்தில் மீள்குடியேற்றும் அரசின் திட்டத்திற்கு ஒரு புதிய வரைவிலக்கணத்தையும் அரசு கொடுக்க முற்பட்டது. அவ்வரைவிலக்கணப்படி பாதுகாப்புக் காரணம் கருதி தமது சொந்த இடம் மீள முடியாதவர்கள் பிற இடங்களில் சொந்தக் காணிகளுக்கு உரிமையாளர்களாக இருந்தால் அங்கு இம்மக்களுக்கான சொந்த இடத்திற்குச் சமனான ஒரு மீள்குடியேற்றத் திட்டம் 1560)L(p60psi UGS-55 LILGUIL (Ministry of Shipping Ports And Rehhabilitation and Reconstruction) 6T650)) (5.5III (Sdiscipg5).
பல கண்ணோட்டங்களில் அரசின் இம்மீள்குடியேற்றம் என்ற வரைவிலக்கணம் முரண்பாடுகளைக் கொண்டதாகவும் அதே நேரத்தில் பலவந்த வெளியேற்றத்திற்குட்பட்ட மக்களின் தற்போதைய வாழ்விட நலன்களையும் சொந்த இடத்திலான பொருளாதார, சமூக, கலாசார, அரசியல் நலன்களையும் பாதிக்கக் கூடியவைகளாகவும் உள்ளது.
இந்தக் கண்ணோட்டத்தில் அகதியாக வாழும் பிரதேசத்தில் அகதி முஸ்லிம்களால் தமது சொந்தச் சிந்தனையில் உருவாகிய அகதி மக்களால் உருவாக்கப்பட்ட சொந்தக் குடியேற்றத்தை மீள்குடியேற்றம் என்று அரசாங்கம் பிரகடனப் படுத்தினால் மாந்தை-நானாட்டான் பிரதேச முஸ்லிம்களின் நலன்கள் எவ்வாறு பாதிக்கப்பட இருக்கின்றன என்பதை சற்று விளக்குவோம்.
மாந்தை-நானாட்டான் முஸ்லிம்களால் ஏற்படுத்தப்பட்ட சொந்தக் குடியேற்றங்களில் முக்கியமானதொன்று உளுக்காப்பள்ளச் சொந்தக் குடியேற்றமாகும். இக்குடியேற்றத் திட்டத்தில் ஏறக்குறைய 2000 மக்கள் குடியிருப்பு அடிப்படை அற்ற நிலையில் தற்போது வாழ்ந்து வருகின்றார்கள். இப்பிரதேச சூழலில் தொழில் வாய்ப்பு இம்மக்களுக்கு இல்லை. குடியிருப்புக் காணிகளும் ஏற்கனவே தமது சந்ததியினருக்குப் பங்கு போடப்பட்டு சனநெரிசல் மிக்கதாக மாறி வருகின்றது. ஆகக் கூடியது இன்னும் 5 வருடங்களுக்கப்பால் இக்குடியிருப்பு பல சமூக, பொருளாதாரப் பிரச்சினைகளை எதிர்நோக்கக் கூடிய நிலையில் காணப்படுகின்றது. இத்திட்டம் இம்மக்களின் நீண்ட கால மாற்று வாழ்க்கைத் திட்டம் என்ற அடிப்படையிலும் கொள்ள முடியாது.
உளுக்காப்பள்ளக் குடியிருப்பை விட வசதிகள் குறைந்த நிலையில் தில்லையடி, கரம்பை, றகுமத்புரம் ஆகிய மாந்தை-நானாட்டான் முஸ்லிம்களின் சொந்தக் குடியேற்றங்களும் காணப்படுகின்றன. இதைவிட இலந்தை மோட்டை
வட்டக்கண்டல், ரசூல்புதுவெளி நொச்சிக்குளம், பூவரசன்குளம் சொர்ணபுரி,
108

ஆண்டான்குளம், கட்டைக்காடு, மினுக்கன், விளாங்குளி போன்ற மாந்தைநானாட்டான் முஸ்லிம் கிராமங்களின் முஸ்லிம்கள் தொடர்ந்தும் அகதி முகாம்களில் வாழ்கின்றார்கள் என்பதையும், சொந்த முயற்சியிலும் ஒரு மாற்று வாழ்க் கைமுறையை ஏற்படுத் திக் கொள்ள முடியாத நிலையில் காணப்படுகின்றார்கள் என்பதையும் நோக்கினால் மாந்தை-நானாட்டான் முஸ்லிம்களுக்கான அரசின் மீள்குடியேற்றத் திட்டத்தின் பலவீனத்தை அறிந்து கொள்ள முடியும்.
அதே நேரத்தில் மாந்தை-நானாட்டான் முஸ்லிம்களின் வீடு, காணி, பூமி, ஏனைய உடமைகள், கிராமங்கள், பள்ளிவாயில்கள், பொதுச் சொத்துக்கள், வாழ்விட உரிமை அரசியல் உரிமை இவை யாவும் கவனிப்பாரற்றுக் காணப்படுகின்றன என்பதையும் அகதியாக வாழும் இடத்திலான மீள்குடியேற்றம் பற்றிய அரசின் திட்டத்தில் இம்மக்களின் மேற்குறித்த நலன்களுக்கு எவ்வித முக்கியத்துவமும் கொடுக்கப்பட வில்லை என்பதையும் இங்கு சுட்டிக்காட்ட வேண்டியது அவசியமாகும். அதே நேரத்தில் எமக்குக் கடைசியாகக் கிடைக்கப் பெற்ற விபரங்களின் படி சொந்தக் குடியேற்றத்தை அமைக்கும் முஸ்லிம்களின் அகதி நலன்களை முற்றாகத் தடை செய்யும் முயற்சியை அரசு மேற்கொண்டு வருகின்றது என்பதையும் அறியக் கூடியதாக இருக்கின்றது.
109

Page 64
8. எதிர் காலம்
இனப்பிரச்சினையால் பாதிக்கப்பட்டு அகதியான மாந்தை-நானாட்டான் பிரதேச முஸ்லிம்களின் எதிர்காலம் பற்றி இவ்வத்தியாயத்தில் ஆராயப்படுகின்றது. கடந்த கால நிகழ்வுகளின் பிரதிபலிப்புக்கள் எதிர்காலத்தைத் தீர்மானிக்கின்றன. கடந்த கால நிகழ்வுகளை மீளாய்வு செய்து எதிர்காலத்தை எதிர்வுகூறும்போது இம்மக்கள் அகதியாக்கப்படுவதற்கு முந்திய காலமும், அகதியாக்கப்பட்டதற்குப் பிந்திய காலமும் தனித்தனியாக நோக்கப்படவேண்டியது அவசியமாகும்.
முன்னைய அத்தியாயங்களில் கூறப்பட்டது போல் பலவந்த வெளியேற்றத்திற்கு முன்னர் இம்மக்கள் தமது பாரம்பரியப் பிரதேசங்களில் மிகச் சிறப்பான வாழ்க்கை வாழ்ந்து வந்தார்கள். பொருளாதார ரீதியாகவும், சமூக, கலாசாரத் தனித்துவ அடிப்படையிலும், இன ஐக்கிய அடிப்படையிலும் தெளிவான, முன்னேற்றகரமான எதிர்காலம் ஒன்று அன்று இம்மக்களுக்குக் காணப்பட்டது. துரதிஷ்டவசமாக இனப் பிரச்சினையின் விளைவாக இப்பொன்னான எதிர்கால வாய்ப்புகள் சிதைந்து சுக்குநூறாகியன.
பலவந்த வெளியேற்றமும், அதனைத்தொடர்ந்த அகதி வாழ்க்கையும் இம்மக்களின் கடந்த ஏழு வருட கால அனுபவங்களாக உள்ளன. இவ்அகதி அனுபவம் ஒரு புறத்தில் இம்மக்களின் வாழ்க்கையில் நிரந்தரமான வடுக்களை ஏற்படுத்தியுள்ளது. மறுபுறத்தில் இவ்வகதி வாழ்க்கைச் சூழலுக்கேற்பத் தம்மைப் பழக்கப்படுத்தித் தமது எதிர்காலத்தைப் பற்றிச் சிந்தித்துச் செயலாற்ற வேண்டிய கட்டாய சூழ்நிலைக்கும் இம்மக்களை உள்ளாக்கியுள்ளது.
இத்தகையதொரு காலகட்டத்தில் மாந்தை-நானாட்டான் முஸ்லிம்களின் எதிர்காலமானது பலவந்த வெளியேற்றத்திற்கு முந்திய சூழ்நிலையோடு தொடர்புபடுத்தப்பட்ட அடிப்படையில் எவ்வாறு அமையலாம் என்பது பற்றி இவ்வத்தியாயத்தில் ஆராயப்படுகின்றது. இங்கு மாந்தை-நானாட்டான் முஸ்லிம்கள் பொருத்தமான ஒரு சூழ்நிலை ஏற்படுகின்ற போது தமது சொந்தப் பிரதேசங்களில் மீண்டும் குடியேறித் தமது பழைய வாழ்க்கையைக் கொண்டு செல்வார்கள் என்ற நோக்குடன் அதற்குப் பொருத்தமான ஆலோசனைகளை முன்வைக்கின்றது. அதே நேரத்தில், சொந்த இடத்திலான மீள்குடியேற்றம் என்பது உடனடியாக சாத்தியம் இல்லையென்பதை கருத்தில் கொண்டு அவ்வாறான சூழ்நிலையில் எவ்வாறான ஒரு எதிர்காலத்திற்காக
110

இம்மக்கள் திட்டமிட்டு செயலாற்ற வேண்டும் என்பது பற்றியும் இவ்வத்தியாயத்தில் ஆராயப்படுகின்றது.
எதிர்காலம் பற்றிய நீண்டகால, குறுங்காலத் திட்டங்கள் இம்மக்களின் எதிர்கால நலநோக்கு அடிப்படையில் நோக்கப்பட வேண்டியவை என்பதனையும் நாம் மறத்தலாகாது. இன்று நிதரிசனமாக விளங்கும் அகதியாக வாழ்கின்ற பிரதேசச் சூழ்நிலையுடன் தொடர்புடைய எதிர்காலத் திட்டங்கள் எந்த அளவு முக்கியமோ அதைவிடக் கூடுதலாக நீண்ட காலத்தில் நீடித்து நிலைத்திருக்கக் கூடிய ஸ்திரமான அடிப்படைகள் இடப்பட வேண்டியதும் அவசியமானது.
அந்த அடிப்படையில் நீண்ட காலத் தீர்வொன்றுக்கு எவ்வாறான அத்திவாரம் இடப்பட வேண்டும் என்பதும், அதே நேரத்தில் குறுங்காலத் தேவைகளை கருத்தில் கொண்டு என்ன செய்யப்படவேண்டும் என்பதும் இங்கு நோக்கப்படுகின்றன.
8.1 நீடித்து நிலைத்திருக்கக் கூடிய தீர்வு
இலங்கையில் இன்றய இனப்பிரச்சினை, இனப்பரம்பல், அதிகாரப்பகிர்வு என்ற அம்சங்களைக் கருத்திற் கொண்டு நோக்குகின்ற போது மாந்தைநானாட்டான் முஸ்லிம்களுக்கான நீடித்து நிலைத்திருக்கக் கூடிய எதிர்காலம் அவர்களது சொந்தப் பிரதேசங்களிலேயே ஏற்பட முடியும் என்று கருதலாம். இந்த எடுகோளின் அடிப்படையில் சொந்த இடத்திலான தமது எதிர்காலத்தை எவ்வாறு அடையலாம் என்பதுடன் தொடர்புடைய அம்சங்களைப் பார்போம்.
பின்னணிக் காரணிகள்
ஆய்வுக்குட்பட்ட மக்களின் எதிர்காலம் பற்றிய இக்கலந்துரையாடலில் இம்மக்களின் பலவந்த வெளியேற்றத்துக்கு முற்பட்ட கால நிகழ்வுகளுக்கும் முக்கியம் கொடுத்து நோக்கப்படவேண்டும் என்று குறிப்பிட்டோம். அதேபோல முன்னைய அத்தியாயங்களில் மாந்தை-நானாட்டான் பிரதேசத்தில் வாழ்ந்த முஸ்லிம் மக்களின் வரலாற்றுப் பொருளாதார, சமூக, கலாசாரச் சூழ்நிலைகள் தெளிவாக விளக்கப்பட்டன. இம்மக்கள் அங்கு வாழ்ந்த காலத்தில் வாழ்க்கை வளத்திற்குச் சாதகமாக இருந்த காரணிகளும் பாதகமாக இருந்த காரணிகளும் எடுத்துக் கூறப்பட்டன.
அவ்வாறு எடுத்துக் கூறப்பட்ட போது பிரதேசமெங்கிலும் சிதறி சிறுபான்மையினராக வாழ்ந்த முஸ்லிம் மக்கள் தன்மானத் தோடும்,
111

Page 65
சுயகெளரவத்துடனும், சுதந்திரத்துடனும் வாழ்வதற்கு இப்பிரதேசத்தின் சமூகச் சூழல், இன ஐக்கிய சூழ்நிலை என்பன காரணமாக இருந்ததென்பது தெளிவாக விளக்கப்பட்டது. பலவந்த வெளியேற்றம் என்றதொரு துரதிஷ்டவசமான நிகழ்வு ஏற்பட்டிராவிட்டால் இன்னும் பல நூற்றாண்டு காலம் மாந்தை-நானாட்டான் பிரதேசத்தில் முஸ்லிம்கள் வாழ்ந்து வளம் காணி பார்கள் என்பதும் நிறுவப்பட்டது.
எவ்வாறாயினும் பலவந்த வெளியேற்றமும் அதனைத் தொடர்ந்த அகதி வாழ்க்கையும் யதார்தமானதொன்றாகும். மாந்தை-நானாட்டான் முஸ்லிம்களின் எதிர்காலம் இந்த யதார்த்தத்தைச் சரியாகப் புரிந்து கொண்ட அடிப்படையில் உருவாக்கப்பட வேண்டியதொன்றாகும். பலவந்த வெளியேற்றத்தோடு தொடர்புடைய யதார்த்தத்தில் இருந்து அறிந்து கொள்ள வேண்டிய அம்சங்களில் முக்கியமானது மாந்தை-நானாட்டானில் பலவந்த வெளியேற்றத்திற்கு முன்பு இருந்த பொருளாதார, சமூக சூழ்நிலையொன்று முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்திற்காக மீண்டும் ஒரு முறை மீளமைக்கப்பட வேண்டியது அவசியம் என்பதாகும்.
இவ்வாறு குறிப்பிடுகின்றபோது பூர்வீகப் பிரதேசங்களில் கடந்த ஏழுவருடங்களாகக் கைவிடப்பட்ட நிலையில் காணப்படும் முஸ்லிம்களின் பொருளாதார, குடியிருப்பு, சமூக வசதிகளை முளப் லிம்களின் மீள்குடியேற்றத்திற்குத் தயார்படுத்துகின்ற அதே சந்தர்ப்பத்தில் மீண்டும் ஒரு முறை மாந்தை-நானாட்டானில் சுதந்திரமாக இன ஐக்கியத்தோடு, சமயக் கலாசாரத் தனித்துவத்தைப் பேணி அச்சமின்றி வாழமுடியும் என்ற மனத் தைரியத்தை முஸ்லிம்கள் மத்தியில் ஏற்படுத்த வேண்டியதும் அவசியமானதாகக் காணப்படுகின்றது.
மேற் குறித்த மாநி  ைத - நானாட்டானி முஸ் லிமி களை மீள்குடியேற்றத்திற்காகத் தயார்படுத்தல் என்ற அம்சமும், அதே போல இம்மக்களின் பொருளாதார, சமூக குடியிருப்புச் சூழலை புனர்நிர்மாணித்தல் என்ற அம்சமும் நினைத்த நேரத்தில் நடத்தி முடிக்கக் கூடியவையல்ல. இவை கட்டங் கட்டமாகத் திட்டமிட்ட அடிப்படையில் மிகப் பொறுமையோடு செய்யப்பட வேண்டிய காரியங்களாகும். அவ்வாறான ஒரு திட்டத்தை நடைமுறைப்படுத்துவதால் முதலில் மாந்தை-நானாட்டான் பிரதேச முஸ்லிம்களினதும், வட மகாணத் தமிழ் மக்களினதும் தேசிய சர்வதேச சமாதான சக்திகளினதும் கடுமையான உழைப்பும் விடா முயற்சியும் அவசியமானதாகும்.
112

இச்சந்தர்ப்பத்தில் மாந்தை-நானாட்டான் முஸ்லிம்களின் நீடித்து நிலைத்திருக்கக் கூடிய ஒரு எதிர்காலத்திற்காக மேலே அடையாளம் கண்ட மூன்று சாராரின் பங்களிப்புக்கள் எந்த அடிப்படையில் இருக்க வேண்டும் என்பதனை சற்று விரிவாக நோக்குவோம்.
தமிழ் மக்கள்
மாந்தை-நானாட்டான் பிரதேசத்தில் மீண்டும் முஸ்லிம்கள் வந்து வாழ்வதற்கான அடிப்படைகளை வகுக்க வேண்டிய பொறுப்பு தமிழ் மக்கள் சார்பான அரசியல் கட்சிகளையும், அமைப்புகளையும் சார்ந்ததாகும்.
மாந்தை-நானாட்டான் முஸ்லிம்கள் தமிழ் மக்களோடு ஒட்டுறவுடன் வாழ்ந்தவர்கள் என்பதனை யாவரும் அறிவர். அதில் குறிப்பாக் தமிழ் மக்கள் முஸ்லிம் மக்களின் பண்புகள் பற்றி அறிவர். முஸ்லிம்கள் மீண்டும் தமது சொந்த இடங்களுக்கு வருகின்ற போது பல நூற்றாண்டு கால இன, உறவு அடிப்படைகளைத் தொடரக் கூடிய மனப்பாங்கினைக் கொண்டவர்களாக இம்மக்கள் இருக்கின்றார்கள் என்பதையும் இங்கு சுட்டிகாட்டவேண்டும்.
ஆனால், மாந்தை-நானாட்டான் பிரதேசம் முழுவதும் சிதறி வாழ்ந்த முஸ்லிம்கள் இன்றைய அரசியல், யுத்த, இனப்பிரச்சினை சூழ்நிலையில் ஒன்றாக ஒரு சந்தர்ப்பத்தில் சொந்த முயற்சியின் மூலமாக மீளவந்து குடியேறுவார்கள் என்று யாரும் எதிர்பார்க்க முடியாது. அதனால் இம்மக்களின் அபிலாசையான தமது சொந்த இடங்களில் மீளக் குடியேறி வாழலாம் என்ற நம்பிக்கையை இம்மக்கள் மனதில் ஏற்படுத்துவதற்கான பொருத்தமான ஏற்பாடுகளை தமிழ் மக்கள் சார்ந்த குழுக்கள் கால தாமதமின்றி எடுக்க வேண்டும்.
எவ்வாறான முன்னாயத்தங்களை தமிழ் மக்களும், அரசும், சர்வதேச சமாதான சக்கிகளும் வடமாகாண முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்திற்கு எடுக்க வேண்டும் என்ற அம்சம் வேறுபல நூல்களில் தெளிவாக விளக்கப்பட்டுள்ளது. மாந்தை-நானாட்டான் பிரதேச முஸ்லிம்களை குறிப்பாக நோக்குகின்றபோது இம்மக்களின் சொந்த இடம் மீள்வது தொடர்பான தனது சாதகமான நிலைப் பாட்டை விடுதலைப் புலிகள் உடனடியாக வெளிப்படுத்துவதோடு அம்மக்களை மீள தமது சொந்தப் பிரதேசதில் குடியேறுவதற்கு பொருத்தமான நடவடிக்கைகளை இவர்கள் தொடர்ச்சியாக எடுக்க வேண்டும். அதே நேரத்தில், இம்மக்களின் அரசியல் நலன்கள் பாதுகாக்கப்படுவதற்கான யாப்பு ரீதியான உத்தரவாதங்களை தமிழ் அரசியல் கட்சிகள் பாரளுமன்றத்தில் முன்வைக்க வேண்டும், இறுதியாக மாந்தைநானாட்டானில் கைவிடப்பட்ட நிலையில் காணப்படும் முஸ்லிம்களின் வீடுகள்,
113

Page 66
கடைகள், பள்ளிவாயில்கள், பாடசாலைகள் போன்ற சமூக, பொருளாதார நலன்களை இம்மக்கள் திரும்பி வரும்வரை இப்பிரதேசத்தில் வாழ்கின்ற தமிழ் மக்கள் பாதுகாத்துக் கொடுக்க வேண்டியதும் தமிழ் மக்களது கடமையாகும்.
அகதி முஸ்லிம்கள்
தமது சொந்தப் பிரதேசம் மீள்வது தொடர்பாக மாந்தை-நானாட்டான் முஸ்லிம்கள் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் பல உள்ளன. அகதி வாழ்க்கையின் நாளாந்த சவால்கள் நீண்ட கால நலனில் இம்மக்களுக்கு இருக்க வேண்டிய அக்கறையை மறைத்து விட இடமளிக்கக் கூடாது. இம்மக்களின் இன்றைய நிதரிசனம் அகதிநிலைக்குட்பட்ட வாழ்க்கைப் போராட்டமானதாகக் காணப்பட்டாலும், நீண்ட காலத்தில் தமது வாழ்க்கையை ஸ்திரப்படுத்திக்கொள்ள இம்மக்கள் எடுக்கவேண்டிய நடவடிக்கைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படவேண்டியதும் அவசியமாகும்.
அந்த அடிப்படையில் நோக்குகின்ற போது தமது எதிர்கால வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்புவதற்குத் தமது பூர்வீகப் பிரதேசங்களில் கைவிடப்பட்ட நிலையில் காணப்படுகின்ற வீடு, நிலம் போன்ற பொருளாதார, கலாசார, சமூக அடிப்படைகள் ஏதோ 62(T5 வகையில் இம்மக்களுக்கு அவசியமானதாகக் காணப்படுகின்றன. இம்மக்களின் சொந்த இடத்திலான பொருளாதார, சமூக நலன்களை இழந்துவிடாது இருப்பதற்கான எல்லா நடவடிக்கைகளையும் இம்மக்கள் எடுத் தேயாக வேண்டும். இந்த நடவடிக்கைகளில் பூர்வீக இடத்துடனான தமது தொடர்பை, உறவை, உரிமையைப் பாதுகாத்து வைத்திருக்க வேண்டியதும் உள்ளடங்கும். அதற்குத் தாம் தற்போது வாழ்கின்ற பிரதேசங்களில் அகதி அந்தஸ்தோடு வாழ வேண்டிய தேவையொன்று காணப்படுகிறது. ஏனென்றால் இவ்வகதி அந்தஸ்து இம்மக்களின் பலவந்த வெளியேற்றத்தை தேசிய, சர்வதேச மட்டத்தில் நினைவு படுத்தக் கூடியதும் பலவந்த வெளியேற்றத்துக்கு முந்திய இம்மக்களின் சமூக, பொருளாதார, பாரம்பரிய உரிமைகளை இம்மக்களுக்கு உறுதிப்படுத்தக் கூடியதுமாகும்.
அதே நேரத்தில் மாந்தை-நானாட்டான் முஸ்லிம்கள் தமது இலட்சியத்தை அடைய கிராமங்கள் இணைந்த அடிப்படையில் கூட்டு முயற்சி அவசியமாகும். தனிப்பட்ட முறையிலான முயற்சிகள் பரந்த ரீதியான தாக்கத்தினை எற்படுத்த முடியாது. மாந்தை-நானாட்டான் பிரதேசத்தில்
114

வாழ்ந்த 20 க்கு மேற்பட்ட முஸ்லிம் குடியிருப்புக்களைச் சேர்ந்த மக்கள் தமது சொந்தப் பிரதேசத்திலான நலன்களை மீளப் பெறுவதற்காகக் கூட்டாக முயற்சி எடுக்க வேண்டும். அது நல்ல பிரதிபலன்களை பிற்காலத்தில் இம்மக்களுக்குக் கொண்வரக்கூடியதாகும்.
தேசிய சர்வதேச சமூகங்கள்
மாந்தை-நானாட்டான் முஸ்லிம்களின் சொந்த இடத்திலான மீள்குடியேற்றத்தில் தேசிய, சர்வதேச சக்திகளின் பங்கு பலவழிகளில் முக்கியமானதாகக் காணப்படுகின்றது. முதலில் மீள்குடியேற்றப்பட வேண்டிய முஸ்லிம்கள் பலவந்தத்திற்கு உட்பட்டு வெளியேற்றப்பட்டவர்களாகவும் அதே நேரத்தில் இம் மக்கள் வாழ்ந்த பிரதேசத்தில் எணணிக்கையில் சிறுபான்மையினராகவும் இருந்தார்கள் என்ற அடிப்படையிலும் இம்மக்களின் அபிலாசைகளைப் பூர்த்தி செய்ய தேசிய, சர்வதேச சமூகத்தின் நடவடிக்கைகள் அவசியமானவையாகக் காணப்படுகின்றன. தேசிய, சர்வதேச சமூகங்களே இலங்கையின் இனங்களுக்கிடையில் இணக்கப்பாட்டை ஏற்படுத்தி இனப்பிரச்சினைக்குத் தீர்வை ஏற்படுத்தச் கூடிய ஆற்றல் கொண்டவைகளாகக் காணப்படுகின்றன. இந்த அடிப்படையில் அப்பாவிகளான மாந்தை-நானாட்டான் முஸ்லிம்களின் நலன்களுக்குப் பொருத்தமான நடவடிக்கைகளை எடுத்து
இம்மக்களின் நீண்ட கால வேண்டுகோளான சொந்த இடத்தில் மீளக் குடியேறும்
அபிலாசைகளைத் தீர்க்க தேசிய, சர்வதேச அரசுகள், அமைப்புக்கள் முன்வரவேண்டும்.
மேற்குறிப்பிட்டவாறான முயற்சிகளின் மூலமாக மாந்தை-நானாட்டான் முஸ்லிம்களைப் பூர்வீக இடத்தில் வெற்றிகரமாகக் குடியேற்றுவது சாத்தியமானது என்ற எடுகோளின் அடிப்படையில் அவ்வாறான ஒரு மீள்குடியேற்றத்தின் போது எவ்வாறான பிரதேச அபிவிருத்தி முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதை பின்வரும் பகுதி விளக்குகின்றது.
புனர்நிர்மானமும், புனர்வாழ்வும்
யுத்த அழிவுகளுக்கு உட்பட்ட மாந்தை-நானாட்டான் பிரதேசத்தில் புனர்நிர்மாணத்திற்கான பொருத்தமான எல்லா முயற்சிகளும் எடுக்கப்பட வேண்டியது அவசிமானதாகும். பிரதேச அபிவிருத்தி பற்றிய பொதுவான ஒரு திட்டம் நிச்சயமாக அப்பிரதேசத்தில் வாழப் போகும் தமிழ்-முஸ்லிம் மக்களுக்கும் பயனுடையதாக அமையும் என்பதில் ஐயமில்லை.
115

Page 67
என்றாலும் முஸ்லிம் சிறுபான்மையினரின் சொந்த இடத்திலான மீள்குடியேற்றத்தோடு எடுக்கப்பட வேண்டிய குறிப்பான அபிவிருத்தி முயற்சிகள் பற்றி சற்று விரிவாக நோக்கவேண்டும். முஸ்லிம்களுக்கான அவ்வாறான ஒரு பிரதேச புனரமைப்பு முயற்சியானது இரு பிரிவுகளாக நோக்கப்படக்
கூடியது.
1. பிரதேசமெங்கிலும் சிதறிக் காணப்படுகின்ற முஸ்லிம் குடியிருப்புகளின்
பொருளாதார, சமய, சமூக சூழலை மீளமைத்தல், 2. விடத்தல்தீவு-பெரியமடுப் பிரதேச அபிவிருத்தி.
குடியிருப்புகளை மீளமைத்தல்
கிராமிய விவசாயச் சூழலைக் கொண்ட வீடுகள் ஏனைய நிரந்தரக் கட்டிடங்கள் கவனிப்பாரற்ற நிலையில் இலகுவில் அழிந்துவிடக் கூடியவைகளாகும். முஸ்லிம்களின் வெளியேற்றத்தின் பிறகு மேற்குறித்த முஸ்லிம் கிராமங்களில் குடியிருப்புச் சூழல்கள் எவ்வாறு காணப்படுகின்றன என்பது பற்றி ஆதாரபூர்வமான விபரங்கள் எமக்குக் கிடைக்கப் பெறாது இருந்தாலும் கூட, இம்மக்களின் வாழ்விடச் சூழல்கள் இயற்கை காரணிகளினால் சிதைக்கப்பட்டிருக்கக் கூடும் என ஊகிக்கக் கூடியதாக இருக்கின்றது. இவ்வனுமானம் உண்மையானால் முஸ்லிம்கள் தமது சொந்தப் பிரதேசத்தில் மீளக்குடியேற இம்மக்களின் குடியிருப்புச் சூழலை மீளமைத்துக் கொடுக்க வேண்டியது அரசினதும் சர்வதேச சமூகத்தினதும் பொறுப்பாகும் குடியிருப்கள் புனரமைப்புச் செய்யப்படுகின்ற போது முஸ்லிம் கிராமங்களின் நீர்ப்பாசனக் குளங்களும், விவசாய நிலங்களும் அது போல பள்ளிவாயில், மதரசா போன்ற சமய நிறுவனங்களும் புனரமைக்கப்பட வேண்டியது அவசியமானதாகும். மேற்குறித்த முயற்சிகளால் முஸ்லிங்களுக்கான ஒரு வெற்றிகரமான மீள்குடியேற்றத்தை உத்தரவாதப்படுத்த முடியும்.
விடத்தல்தீவு-பெரியமடு அபிவிருத்தித் திட்டம்
விடத்தல்தீவுக்கும் பெரியமடுவுக்கும் இடைப்பட்ட ஏறக்குறைய 50 சதுரமைல் (32,000 ஏக்கர்கள்) பிரதேசத்தில் முஸ்லிம்களின் எண்ணிக்கையும்,
பொருளாதார நலன்களும், நடவடிக்கைகளும் செறிவாகக் காணப்பட்டன.
116

இப்பிரதேச மக்களின் எதிர்கால நலன்கருதி ஒரு பொருத்தமான அபிவிருத்தித் திட்டத்தை முன்வைக்க வேண்டியது அவசியமானதாதும். அவ்வாறான அபிவிருத்தித் திட்டம் ஒன்று பின்வரும் பகுதியில் விளக்கப்படுகின்றது.
பிரதேச அபிவிருத்திக்காகத் திட்டமிடப்பட்ட பெரியமடு-விடத்தல்தீவுப் பிரதேசம் படம்-12 இல் காட்டப்பட்டுள்ளது. இதன் மேற்கெல்லையாகக் கரையோரப் பிரதேசமும், கிழக்கெல்லையாகப் பெரியமடுக் குளமும் அமைந்துள்ளன. இதற்கு இடைப்பட்ட பிரதேசத்தில் ஏறக்குறைய 12,000 ஏக்கர் விடத்தல்தீவு-பெரியமடுவின் பயன்பாட்டுக்குட்பட்ட பிரதேசமாகவும் ஏனைய பிரதேசத்தில் விவசாயம் சார்ந்த நீர்ப்பாசனக்குள, பயிர்ச்செய்கை அபிவிருத்திகளும், கால்நடை வளர்ப்பும், சேனைச்செய்கை, மேட்டுநிலப்பயிர்ச் செய்கையும் அது போல மீன்பிடித் தொழிலும் கைத்தொழிலும் அபிவிருத்தி செய்யக் கூடிய வாய்ப்புகள் காணப்படுகின்றன.
படம்-12 மேற்குறிப்பிட்ட பொருளாதார அபிவிருத்திக்கு வாய்ப்பான பிரதேசங்களையும் அதன் பரப்பளவுகளையும் தெளிவாகக் காட்டுகின்றது. விவசாயம், மீன்பிடி கைத்தொழில் ஆகிய மூன்று பொருளாதார அபிவிருத்தியை இப்பிரதேசத்தில் ஏற்படுத்தக் கூடிய போக்குவரத்து அபிவிருத்தியும் இணைந்த முறையில் செயற்படுத்தப்பட்டால் இப் பிரதேசத்தின் உற்பத்தி, சந்தைப்படுத்தல் போன்றன துரித அபிவிருத்தி ஏற்படக் கூடிய வாய்ப்புக்கள் காணப்படுகின்றன. அட்டவணை-10 இப்பிரதேச அபிவிருத்தியின் கீழ் கொண்டுவரக் கூடிய காணிகளின் பரப்பைக் காட்டுகின்றது. இங்கு முன்வைக்கப்படுகின்ற எதிர்கால அபிவிருத்தித் திட்டங்களோடு இப்பிரதேசத்தில் ஏற்கனவே காணப்பட்ட விவசாயப் பொருளாதார அடிப்படைகளைச் சீரமைப்பதும் முக்கியமானதாகும். வெட்டியெடுத்தான், புத்தடிமோட்டை போன்ற சரியாகச் சீரமைக்கப்படாதிருந்த குளங்களும் அவ்வாறு பெரியமடுக் கிராமத்தில் காணப்பட்ட செம்மல்சரிவு, ஈனிச்சை, பாக்றின் கீழ் கணிசமான அளவுகளில் காணப்பட்ட நெற்செய்கை மேற்கொள்ளத்தக்க நிலங்களும், மேட்டுநிலப் பயிர்ச் செய்கைக்குப் பொருத்தமான நிலங்களும் திருதி தியமைக் கப்பட்டு பயிர்ச் செய்கை சரியாக மேற்கொள்ளப்படுமாயின் இக்கிராமம் விவசாயப் பொருளாதார விருத்தியின் மூலம் செழித்தோங்குவதற்கான சாத்தியங்கள் காணப்படுகின்றன.
மேலும் இப்பிரதேச நீர்ப்பற்றாக்குறையைத் தீர்ப்பதற்காக ஏற்கனவே
முன்வைக்கப்பட்டு அரசியற் காரணங்களால் கைவிடப்பட்ட பாரிய ஏற்று
廿7

Page 68
அட்டவணை - 10
விடத்தல்திவு-பெரியமடு பிரதேச எதிர்கால அபிவிருத்தித் திட்டம்.
திட்டங்கள் பரிமாணம் (ஏக்கரில்)
நெற்செய்கை -
வெலிமதுரமடுக் குளத்திற்கு மேற்பகுதியில் 1,250 வெலிமதுரமடுக் குளத்திற்கு கீழ்ப்பகுதியில் 1,750 மேட்டு நிலப் பயிர்ச் செய்கை 2,000
கால்நடை வளர்ப்பு 2,500
சேனைப் பயிர்ச் செய்கை - 2,000 விடத்தல்தீவு - பெரியமடு பாதைக்கு வடக்கே 1,500 விடத்தல்தீவு - பெரியமடு பாதைக்கு தெற்கே 1,000
கைத் தொழில் அபிவிருத்தி 4,000 குடியேற்றம் போக்குவரத் து 500 ஏனையவற்றிற்கு 3,000
முலம்: வெளிக்கள ஆய்வும் ஓரங்குல இடவிளக்கப் படங்களும்,
118
 

ș| 2,7 g/~ogaeto-, ooooooo !! !! loog, og nog? 鹤内 Š//홍─어zz-zz「녀3%) "% Šowosoɛ #ựgırı skogso)īgo|-[−) r=rsgs பிஜி - 역% I0Ķgo sous (g. No
sí los puriņs No. quo@oksouriņțg E 영義 통용역·용道學3||환
/*해 어영역「3「녀7%)
| hsiyens -icossono
(NoT-7717-797-7-7'g) ocoņos') ?!!!!}\riņosco??
/**니zz덕역어했%) /**니7z,「역녀였%)gingo mișĦ
Hņņisso -ikosovo
qIı, ışỂ
1991 oposso) senio sığılıyo@ırslo „un no to, ņřňaesteğe saolo sočio pospúñ ”Ü Zoo",
@qinn sínto-seosq9oĝĝ-1,9 · 21 gr’ırı
119

Page 69
நீர்ப்பாசனத் திட்டம், பறங்கியாற்று நீர்ப்பாசனத் திட்டம் என்பனவும் செயற்படுத்தப்படுமாயின் நீர்ப்பற்றாக்குறை தீர்க்கப்படும். இவற்றோடு கால்நடை அபிவிருத்தி நோக்கிலான புற்றரை அபிவிருத்தித் திட்டமும் செயற்படுத்தப்பட
வேண்டும்.
8.2 உடனடியாக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள்
இலங்கையின் இனப்பிரச்சினைக்கு நிரந்தரமான ஒரு தீர்வு இதுவரை காணப்படாத ஒரு சூழ்நிலையிலும் தாம் பாரம்பரியமாக வாழ்ந்து வந்த பிரதேசங்கள் தொடர்ந்தும் யுத்த களமாக இருந்து வரும் நிலையிலும் தமது எதிர்காலத்தை எவ்வாறு அமைத்துக் கொள்வது என்பதில் தெளிவற்ற நிலையில் இம்மக்கள் இருந்து கொண்டிருக்கின்றார்கள். தமது கட்டுப்பாட்டுக்கு அப்பால் காணப்படும் அரசியல் ஆயுத மற்றும் ஏனைய புறக் காரணிகளின் தாக்கத்தினால் தமது எதிர்காலமானது ஆற்றில் விழுந்த சிறு துரும்பைப் போல் சென்று கொண்டிருப்பதை இம்மக்கள் அறிவார்கள்.
அதனால் அகதி முஸ்லிம்கள் தமது நாளாந்தப் பிரச்சினைகளில் அதிக கவனம் செலுத்தி வருவது நியாயமானதொன்றே. இன்று மாந்தைநானாட்டான் முஸ்லிம்கள் தமது நாளாந்த உணவு நிவாரணம் தடைப்பட்டு விடுமோ என்ற அச்சத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். இதற்குக் காரணம் இம்மக்களின் பிரச்சினை பலவந்த வெளியேற்றத்துடன் தொடர்புடைய அரசியல் பிரச்சினையாக நோக்கப்படாது. இனப் பிரச்சினையின் விளைவாக தற்காலிகமாக இடம் பெயர்ந்தோர் பிரச்சினையாக அரசாலும், அரசசார்பற்ர நிறுவனங்களாலும் இதுவரை நோக்கப்பட்டு வந்ததேயாகும்.
முன் அத்தியாயத்தில் அரசினதும், அரசசார்பற்ற நிறுவனங்களினதும் தவறான மதிப்பீட்டால் அண்மைக்காலத்தில் அறிமுகம் செய்யப்பட்ட அகதிகளுக்கான அகதிகளாக வாழும் பிரதேசத்திலான மீள்குடியேற்றத் திட்டம் பற்றியும் அதன் பிரதிபலன் பற்றியும் நோக்கினோம். உண்மையில் தமது அகதிப் பிரச்சினைக்கு ஒரு தற்காலிகத் தீர்வாக அகதி மக்களால் முன்வைக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டதே சொந்தக் குடியேற்றங்களாகும். இச்சொந்தக் குடியேற்றங்கள் தமது நீண்ட கால இலக்கு அல்ல என்பதை
120

அகதி முஸ்லிம்கள் அறிவார்கள். இந்நாட்டில் நிலமற்ற விவசாயிகளின் நீண்ட கால அபிவிருத்திக்காகப் பல கோடி ரூபா செலவில் உருவாக்கப்பட்ட வரண்ட வலயக் குடியேற்றத் திட்டங்கள் ஏன் தோல்வியில் முடிந்தன என்ற அம்சம் குறுங்காலத்தில் உருவாக்கப்பட்ட சொந்தக் குடியேற்றத்துடன் ஒப்பிட்டுப் பார்த்துத் தெளிவு பெற வேண்டியது அவசியமானதாகும்.
உதாரணமாக மாந்தை-நானாட்டான் பிரதேசத்தின் சில கிராம முஸ்லிம்கள் தமது குறுங்காலத் தேவைகளுக்காக ஏற்படுத்திக் கொண்ட உளுக்காப்பள்ளக் குடியிருப்பை இங்கு உதாரணத்துக்கு எடுத்துக் கொள்வது பொருத்தமானதாகும். உளுக்காப்பள்ள சொந்தக் குடியேற்றம் முகாம் வாழ்க்கைக்கு ஒரு மாற்றுத் திட்டமேயாகும். மாறாக இது அகதி முஸ்லிம்களின் நீண்ட கால நிரந்தரத் தீர்வுக்கான ஒரு திட்டமல்ல என்பது இக்குடியிருப்பில் வழங்கப்பட்டுள்ள காணிகளின் அளவுகளைக் கொண்டும் அடிப்படை வசதிகளைக் கொண்டும் எதிர்காலத் தொழில் வாய்ப்புச் சாத்தியங்களைக்
கொண்டும் விளங்கிக் கொள்ளக் கூடியதொன்றாகும்.
எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள்
இச்சந்தர்ப்பத்தில் மாந்தை-நானாட்டான் முஸ்லிம்களின் எதிர்கால நலன்கருதி மிக அவசரமாக எடுக்கப்பட வேண்டிய உளண்டி நடவடிக்கைகள் பல காணப்படுகின்றன. அவற்றில் முதன்மையானது இம்மக்களின் பலவந்த வெளியேற்றத்துக்கும் அதன் பிரதிபலனாக தொடரும் அகதி வாழ்க்கைக்கும் உரிய முக்கியத்துவம் கொடுத்து இம் மக்களுக்குப் பொருத்தமான தீர்வு ஒன்றிற்கான முயற்சி அரசு மட்டத்தில் எடுப்பதாகும். அவ்வாறான ஒரு முயற்சி வெற்றியடைந்து இம்மக்களின் பிரச்சினைக்கு ஒரு உறுதியான தீர்வு பெறப்படும் வரை இம்மக்கள் இனப்பிரச்சினையால் இடம் பெயர்ந்த மக்களாகக் கருதப்பட்டு இம்மக்களின் நலன்கள் பாதுகாக்கப்படுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டியது அவசியமாகும். இந்த அடிப்படையில் இம்மக்களின் அகதி அந்தஸ்தும் உணவு நிவாரணமும் தொடர்ந்தும் வழங்க
வேண்டியது மிக அவசியமானதாகும்.
121

Page 70
அதே நேரத்தில் முஸ்லிம் மக்கள் தமது சொந்த முயற்சியால் ஏற்படுத்தி வருகின்ற தமது சொந்தக் குடியேற்றங்களை அகதி வாழ்க்கையின் ஒரு அம்சமாக எடுத்து இடம் பெயர்ந்த மக்களுக்கு வழங்கப்பட்டு வருகின்ற குடியிருப்புக்கான அடிப்படை கொடுப்பனவுகளைத் தொடர்ந்து வழங்க வேண்டிய தேவையும் காணப்படுகின்றது.
இந்தக் கண்ணோட்டத்தில் மாந்தை-நானாட்டான் முஸ்லிம்கள் செறிந்து வாழ்கின்ற உளுக்காப்பள்ள-கரம்பைப் பிரதேசச் சொந்தக் குடியேற்றம் அத்துடன் மீளமைவு முகாம் இணைத்த அடிப்படையில் ஒரு மாதிரி அகதி வலயம் (Model Refugees Zone) ஒன்றை ஏற்படுத்தி அகதி மக்களின் நலன்களைத் தொடர்ந்தும் அரசும் அரச சார்பற்ற நிறுவனங்களும் கவனித்து வருவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படுவதனால் அகதிகளின் வாழ்க்கைத் தரம் குடியிருப்பு வசதிகள் மேலும் அபிவிருத்தியடையக் கூடிய சாத்தியக் கூறுகள்
காணப்படுகின்றன.
122

விபரம் தந்தவர்கள்
முகம்மது அப்துல் காதர் (வயது 81)
பூர்வீக இடம்: விடத்தல்தீவு. தற்போது வாழும் இடம்: உழுக்காப்பள்ளம், புத்தளம்.
எம். எம். அமீன் (வயது 39)
பூர்வீக இடம்: பெரியமடு, தற்போது வாழும் இடம்: அஞத்கம.
கச்சு முகம்மது (வயது 72)
பூர்வீக இடம்: விடத்தல்தீவு. தற்போது வாழும் இடம்: சியம்பளாகஸ்கொட்டுவ, பகமுன. குருநாகல்.
நவ்பீல் (வயது 27)
பூர்வீக இடம்: பெரியமடு
தற்போது வாழும் இடம்: உழுக்காப்பள்ளம், புத்தளம்.
மு.அ.க.சாகுல் மீது (வயது 58)
பூர்வீக இடம்: விடத்தல்தீவு. தற்போது வாழும் இடம்: கரம்பை, பாலாவி, புத்தளம்.
. எஸ்.எம்.அஜிமீர்கான் (வயது 41)
பூர்வீக இடம்: வட்டக்கண்டல். தற்போது வாழும் இடம்: உழுக்காப்பள்ளம், பாலாவி, புத்தளம்.
எஸ்.ஏ.முபாரக். (வயது 40)
பூர்வீக இடம்: மினுக்கன். தற்போது வாழும் இடம்: உழுக்காப்பள்ளம், பாலாவி, புத்தளம்.
எம். எம். மீராசாகிபு (வயது 55)
பூர்வீக இடம்: விடத்தல்தீவு. தற்போது வாழும் இடம்: உழுக்காப்பள்ளம், பாலாவி, புத்தளம்.
க.மு. ஆமினா உம்மா, (வயது 50)
பூர்வீக இடம்: விடத்தல்தீவு. தற்போது வாழும் இடம்: பகமுன, சியம்பளாகஸ்கொட்டுவ, குருநாகல்.
123

Page 71
10.
11.
12.
13.
14.
15.
16.
17.
18.
19.
எம்றி. சித்தி (வயது 40)
பூர்வீக இடம்: விடத்தல்தீவு.
தற்போது வாழும் இடம்: பகமுன, சியம்பளாகஸ்கொட்டுவ,
குருநாகல்,
அபூபக்கர் (வயது 73)
பூர்வீக இடம்: விடத்தல்தீவு. தற்போது வாழும் இடம்: உழுக்காப்பள்ளம்,
சா. கசீனா உம்மா, (வயது 35)
பூர்வீக இடம்: விடத்தல்தீவு. தற்போது வாழும் இடம்: உழுக்காப்பள்ளம்,
ஆ. அப்துல்லாஹ் (வயது 68)
பூர்வீக இடம்: விடத்தல்தீவு. தற்போது வாழும் இடம்: உழுக்காப்பள்ளம்,
எம்.எல்.எம்.சர்பு (வயது 55)
பூர்வீக இடம்: விடத்தல்தீவு. தற்போது வாழும் இடம்: உழுக்காப்பள்ளம்,
எம். நஜ்முதீன் (வயது 32)
பூர்வீக இடம்: விடத்தல்தீவு தற்போது வாழும் இடம்: உழுக்காப்பள்ளம்,
மஜீத். (வயது 75)
பூர்வீக இடம்: விளாங்குளி தற்போதைய இடம்: அநுராதபுரம்.
முகம்மது சுல்தான் (வயது 57)
பூர்வீக இடம்: விளாங்குளி
பாலாவி, புத்தளம்.
பாலாவி, புத்தளம்.
பாலாவி, புத்தளம்.
பாலாவி, புத்தளம்.
பாலாவி, புத்தளம்.
தற்போதைய இடம்: கோறாப்பொல, கெக்கிறாவ.
எம். வதுாது (வயது 33)
பூர்வீக இடம்: சொர்ணபுரி தற்போதைய இடம்: கண்டக்குளி, புத்தளம்.
எஸ். ஏ. சதகத்துல்லாஹ் (வயது 48) பூர்வீக இடம் சொர்ணபுரி
தற்போதைய இடம்: குறிஞ்சிப்பிட்டி, புத்தளம்.
124

உசாத்துணை நூல்கள்
Abeyasinghe, T.B.H., 1986. "Muslims in Sri Lanka in Sixteenth and Seventeenth Centuries in Muslims of Sri Lanka. Avenues to Antiquity Edited by M.A.M Shukri Colombo: Jamiah Naleemiya Institute.
Ameen, M.M., 1979. Periyamadu Colonization Scheme: A Socio-economic Survey An Undergraduate (B.A. Hons. Degree) Dissertation Submitted to the University of Kelaniya.
Arumugam, S., 1969. Water Resources of Ceylon. Its Utilization and Development Colombo: Water Resource Board Publication.
Boake, W.J.S., 1888. Mannar. A Monograph Colombo: G.J. A. Skeen Government Printer.
Brohier, R.L., 1934. Ancient Irrigation Works in Ceylon, Part II. Colombo: Government Press (Reprinted in 1979).
1929. Notes on Ancient Habitation Near Kudiramalai Journal of Ceylon Branch of the Royal Asiatic Society XXXII (82): 388–397.
Cannon, Teresa and Peter Davis, 1995. Aliva: Stories of Elephants of Sri Lanka Melbourn Aravata Press.
Chitty, C.S., 1834. The Ceylon Gazetteer Colombo: Cotta Church Mission PreSS.
Codrington, H.W., 1925. "Mediaeval Topography Ceylon Historical ASSOciation Leaflet (4) Deng, Francis, 1993.
125

Page 72
Protecting the Internally Displaced: A Challenge for the United Nations A Paper Presented at the Conferenue on Displacement and Democracy. On 18th and 19th August 1993 in Colombo.
Denham, 1902. Mannar Gazetteer Colombo: Government PreSS.
Department of Census and Statistics, Various Years. Censuses of Sri Lanka, 1953, 1963, 1971 and 1981 Colombo: Department of Census and Statistics.
Department of Census and Statistics, 1984.
Sri Lanka Census of Population and Housing, 1981. Volume - 1, Part XIII Mullaitivu District Report Colombo: Department of Census and Statistics.
De Silva, C.R., 1977. "The Portuguese and Pearl Fishery Off South India' Ceylon Studies Seminar 1976/77, No. 6, Serial No. 67.
Government of Ceylon, Various Years, Censuses of Ceylon, 1871, 1881, 1891, 1901, 1911, 1921, 1931 and 1946 Colombo: Government Printers.
Hasbullah, S.H., 1991.
The Political Future of the Northern Province Muslims of Sri Lanka A Paper Presented at Colombo Islamic Centre of Sri Lanka. On 10th December 1991.
—, 1992. A Report on the LOSS Of Movable and Immovable ASSets of Muslims Ousted from the Northern Province in 1990. A Report Submitted to the Parliament of Sri Lanka in May 1992. Hansard Vol 79, No. 14.
– 1993. "A Preliminary Report on the Conditions of the Muslim Refugees' A Paper
126

Presented at the Conference on Displacement and Democracy. Organized by the University of Colombo and on 18th and 19th August 1993 in
Colombo.
- 1994. "Refugee Migration" A Paper Presented at National Geographical Conference held at the Department of Geography, University of Peradeniya, 7–9 August 1992.
—, 1996а. We Want to Go Home (Presidential Address Delivered at the Public Meeting) Colombo: The Northern Muslims' Rights Organization.
- 1996b.
Refugees are People: Proceedings of the Workshop on the Resettlement
Program for the Forcibly Evicted Muslims of the Northern Province Colombo: The Northern Muslims' Rights Organization.
- 1996c. "Recent Refugee Migration in Sri Lanka" A paper presented at the Seminar on Migration, Organized under UGC/UNFPA Project held at the University of Kelaniya (23–24 August 1996).
- 1996d. . "Ethnic Conflict and Displacement in Sri Éanka” A paper presented at the
International Workshop On Causes of Conflict and Conflict Resolution held in Kandy (15-17 July 1996).
—, 1997a. .م'';
Ethnic Conflict in Sri Lanka and the FOcibly Evicted Muslims of the Northern Province: Mullaitivu Muslims Colombo: The Northern Muslims'
Rights Organization.
127

Page 73
- 1997b.
Ethnic Conflict in Sri Lanka and the Focibly Evicted Muslims of the Northern Province: Musali Muslims Colombo: The Northern Muslims
Rights Organization.
IRDP, 1980.
Integrated Rural De Velopment PrOgram. Mannar District RepOrt Unpublished.
Jayewardene, Jayantha, 1994. Elephants in Sri Lanka Colombo: Mortalake PreSS.
Kiribahuna, Sirima, 1986. "Muslims and Trade of the Arabian Sea with Special refernce to Sri Lanka from Birth of Islam to Fifteenth Century' in Muslims of Sri Lanka. Avenues to Antiquity Edited by M.A.M. Shukri Colombo. Jamiah Naleemiya Institute.
Lewis, J.P., 1993. A Manual of the Vanni District, Ceylon Colombo: Lake House Book Shop.
Ministry of Shipping, Ports, Rehabilitation and Reconstruction, 1996. Performance, Policy, Strategies and Programme Colombo: Ministry.
Muthaliyar, R.C.Proctor, 1930. "The Invasion of Ceylon by Muslims' Journal of Ceylon Branch of Royal Asiatic Society XXXII (83): 583–585.
Muthar, Hari Mohan, 1995. "Introduction' in Development, Displacement and Resettlement edited by Hari Mohan Muthar with the Collaboration of Michael M. Corea Delhi: Vikas Publishing House.
128

Nicholas, C.W., 1963. "Historical Topography of Ancient and Medieval Ceylon Journal of Ceylon Branch of Royal Asiatic Society (New Series, Special Number)7
North-East Provincial Council, 1996. Statistical Information of the North-East Province Trincomalee: NEPC.
Perera, B.J., 1951/52. "The Ports of Ancient Ceylon' CHJI (2).
Raheem, M.S., 1979. History and Culture of Jaffna Muslims Jaffna. Mamakal Printers.
Rajeratnam, VN, 1971.
Administration Report of the Director of Irrigation for the Financial Year 1968/69. Colombo: Department of Irrigation.
Refugee Family Information, 1994. The Family Information Of the Muslim Refugees Ousted from the Northern Province in October, 1990 Volume 1 - 23 (A Compilation of the Refugee Family Information of 9000 Families by S.H. Hasbullah and Others) Colombo: Jama'ath-e-Islami (Colombo).
Sene Viratne, MOureen, 1979. Some Mahavamsa Places Colombo: Lake House Investment Ltd.
Sitrambalam, S.K., 1992. Kingdom of Jaffna. Thirunelvely: University of Jaffna Publication.
—, 1993.
Jaffna Ancient History. Thirunelvely: University of Jaffna Publication. Stevart, James, 1843.
An ACCount Of the Pearl Fisheries of Ceylon Colombo: Cotta, Church Mission PreSS.
129

Page 74
Survey Department, 1936. Murunkan One-Inch Map Colombo. Survey Department
Twynam, W.C. 1902. Report. On the Ceylon Pearl Fisheries Colombo: H.C. Cotte, Government Printers.
United Nations, 1994. Internally Displaced Persons (E/CN.4/1994/44) Geneva: UN.
US Committee for Refugees, 1991.
ISSue Paper. Sri Lanka, Island of Refugees October, Washington, D.C.: American Council for Nationalities Service.
Van, G., 1888. "The Pearl Fisheries of Ceylon' The Journal of the Ceylon Branch of the Royal Asiatic Society, 1887 X(34): 14-40.
130

பின்னிணைப்பு
l
மாந்தை-நானாட்டான் பிரதேச கிராம மட்டத்தில் முஸ்லிம்
சனத்தொகை, 1921
கிராமம் மொத்தம் முஸ்லிம்கள் முஸ்லிம் % மாந்தைப் பிரிவு இலுப்பைக்கடவை. உ.பி. 952 67 7.0 மந்தம்பிட்டி 236 52 22.0 குருந்தன்குளம் 2O 3 150 கன்னாட்டி 26 5 19.2 கட்டடிவயல் 67 7 10.5 மேற்கு மூலை 38 154 40.4 இரணைஇலுப்பங்குளம் 34 4. 11.8 காக்கையன்குளம் 99 97 98.0 பொக்கர் வன்னி 53 52 99.0
பெருங்களிப்பற்று. உ.பி 1444 670 46.4 விடத்தல் தீவு 1145 669 58.4
மாந்தைவடக்கு. உ.பி 2 111 297 14.1
சிறுவிளாங்குளி 91 54 59.3 பெருவிளாங்குளி 28 28 100.0 அடம்பன் பறையகுளம் 155 5 3.6 கருங்கண்டல் 68 3 4.4 அடம்பன் தாழ்வு 84 2 2.4 பள்ளியடிக்குளம் 43 2 4.7 வட்டக்கண்டல் 95 58 61.1 பறங்கிச் சாளம்பன் 33 28 84.9 ஆக்காட்டிவெளி 35 3. 8.6
- - 45 14 31. 9,6) bl (356TLD காத்தான் 190 23 12.1
தான குளம
- 29 29 100.0 நெடுவரம்பு
- - 40 37 92.5 மருதோன்றிவான்
SSSS 15 O 66.7 செட்டியார் மகன் கட்டைக்காடு
மாந்தை தெற்கு. உ பி 239 80 3.7 மணக்குளம் 33 3 9. முதற்கண்ணட்டி 43 2 4.7 உயிலங்குளம் 155 2 1.3
131

Page 75
கல்மோட்டை 5O 19 38.0 புங்கன் தாழ்வு 53 14 26.4 பரப்பான்கண்டல், பெரியகுளம் 242 3 1.2 ஊத்தைவாயன்குளம் 147 17 11.6 ஆட்டுக்கால் மோட்டை 65 7 10.8 வன்ைனாமோட்டை 98 10 10.2 பெரியவண்ணாகுளம் 3O2 2 0.7
gól JTLDL) மொத்தம் முஸ்லிம்கள் முஸ்லிம் % நானாட்டான் பிரிவு
நானாட்டான் மேற்கு உபி 3019 319 10.6 வண்ணாகுளம் 90 19 21.1 புதுவெளி 54 54 100.0 காட்டுக்குடியிருப்பு 19 17 89.5 மாலையிட்டான் 81 79 97.5 ஆத்திக்குளி 60 13 21.7 குயவன்குளி 29 23 79.3 கோட்டைக்குளம் மாவிலங்குளம் 102 5 4.9 புத்திரர்கண்டான் 25 24 98.0 சிறுசம்பன்கட்டைக்காடு 101 12 II9 நொச்சிக்குளம் 49 41 83.7 356) LDL60T 48 5 10.4 வெள்ளாளகட்டு 10 7 7O.O 12ஆம்கட்டை 89 4. 4.5 நானாட்டான் 114 4. 3.5 ஒல்லிமடு 47 3 6.4 உமநரி 26 7 26.9
நானாட்டான் கிழக்கு உ.பி 1713 134 7.8 மனங்காவெளி 43 4. 9.3 பொந்திகண்டல் 114 13 11.4 பூவரசன்குளம் 26 23 88.5 முருங்கன் 264 16 6.1 கன்னாட்டி 71 8 11.3 பச்சைக்குளம் 99 18 18.2 நளவன்குளம் 56 14 25.0 கற்கிடந்தான்குளம் 147 2 1.4 புளியடியிறக்கம் 108 20 18.5
செட்டியார் மகள் கட்டையடம்பன்
முலம் : குடித்தொகை கணிப்பீடு, 1921.
132

பின்னிணைப்பு - 2
கிராமியக் கவிதைகள்
மாந்தை-நானாட்டான் முஸ்லிம்கள் மத்தியில் கவிப்புலமை பரவலாகக் காணப்பட்டது. தமது கவித்திறனைப் பல்வேறு வழிகளில் இம்மக்கள் வெளிக் கொணர்ந்தார்கள். இங்கு இம்மக்கள் மத்தியில் பலவகையான கவிதைகள் வழக்கில் இருந்தன. இம்மக்களின் கவிப்புலமைத்துவத்தைப் பிற்கால சமூகத்திற்கும் எடுத்துக்காட்ட அக்கவிதைகள் முறைப்படி தொகுக்கப்பட வேண்டியது அவசியமாகும். அவற்றுள் சில இங்கு தரப்படுகின்றன.
1. கொடிப்பாட்டு
நெய்னாமுகம்மது ஒலியுல்லா, ஆத்மஞானி அவர்களின் ஆத்ம ஞானச்சிறப்பைக் கொண்டாடும் வைபவ நிகழ்ச்சியின் போது கொடிப்பாட்டு பாடப்படும். இவ் வாத்ம ஞானியின் பக்தர்கள் தமது தேவைகளை நிறைவேற்றித்தரும்படியும் ஊர் செழிப்படையவும் நோய்கள் இல்லாமற் செய்யவும் வேண்டி பக்தியுடன் பாடல் பாடி ஊர்வலமாக வருவர். இவ்வூர்வலத்தில் பச்சை,வெள்ளை நிறத்திலான கொடிகளையும் தாங்கிச் செல்வர். பெரியவர்களும், சிறார்களும் இதில் பங்கு பற்றுவர். இவ்வூர்வலத்தில் கிராமப் பள்ளிவாசலின் தர்மகர்த்தாக்கள் தலைமைதாங்கி வருவர். வேற்று இனத்தவர்களும் கூட இவ்வூர்வலத்தினருக்கு காணிக்கைகள் வழங்குவர். காணிக்கைப் பொருட்களாக பணம், உணவுவகைகள் போன்றன வழங்கப்படும். இது முஹர்ரம் மாதம் பிறை 4 இல் இடம்பெற்றுவந்தது. இதைத்தொடர்ந்து 10 அல்லது 15 நாட்களின் பின்னர் காணிக்கையாகக் கிடைத்த பணம், உணவுப்பொருட்களைக் கொண்டு கந்துTரி (விருந்து வைபவம்) நடைபெறுவதுடன் இக்கொடியெடுத்தல் விழா முடிவடையும்.
இது மாந்தை முஸ்லிம்கள் மத்தியில் வழக்கிலிந்து வந்த சமய கலாசார நிகழ்ச்சியாகும். இந்நிகழ்ச்சியின் போது பாடப்படும் பாடலின் ஒரு பகுதி கீழே தரப்படுகின்றது. இது விடத்தல்தீவு முஸ்லிம் கிராமத்தில் பாடப்பட்ட பாடலாகும்.
133

Page 76
காப்பு:
நல்லோர் வாழ்த்தும் நெய்னா முகம்மது ஒலியுல்லாவை வேண்டி இன்னிசை ஒத எல்லாப் படைப்பிற் திகழ்ந்து ଦ୍ରୁ (୭ பார்வைக்கு மெட்டா
கடைப்படுத்தங் காவல் செய்யக்கான்
பைத்து:
அல்ஹம்து லில்லாஹ்! அரிய சலவாத்து சலாம், செல்வம்தகும் நபிமேல் சேர்ந்தோர் சிநேகிதர்மேல் சொல் விந்தை புகழ்ந்து சுந்தரனும் தாட்டுனக்கே -நல்ல வந்தனந் தருவோம் நெய்னாமுகம்மது ஒலியுல்லாஹ் ஆதியில் தோன்றும் அகிலமெல்லாம் தானாகி ஜோதியாய் நின்றிலங்கும் தூய இறையோன் அருளில்லாது-மொழி கோட்டை நகர் ராவுத்தர்ஷாஹிபு ஒலிநாத மதவாய் விளங்கும் நெய்னாமுகம்மது ஒலி (விபரம் தந்தவர்: மு.அ.கா.சாகுல் ஹமீது)
2. கும்மிப்பாடல்
கும்மி ஒரு நடனமாகும். இதனை கோலாட்டம் என்றும், களிகம்பு என்றும் அழைப்பதுண்டு. கும்மி முஸ்லிம்கள் மத்தியில் பிரபல்யமான நடனக் கலையாகும். வடமாகாணத்தில் முஸ்லிம் கிராமங்களில் இது பரவலாகக் காணப்பட்டது (பார்க்க முல்லைத்தீவு முஸ்லிம்கள் பக்கம் 41). கும்மி நடனத்தில் ஆண்கள் மாத்திரம் ஈடுபடுவர். நடன அடிப்படையில் கும்மி பல கட்டங்களையும் பல பாடல்களையும் கொண்டுள்ளது. இக்கும்மி நடனத்தில் பாடப்படும் பாடல்களும் இடத்திற்கிடம் வேறுபடுகின்றன. விடத்தல்தீவுக் கிராமத்தில் வழமையில் இருந்த கும்மிப்பாடல்கள் இரண்டு இங்கு உதாரணத்திற்குத் தரப்பட்டுள்ளன. இதனைத் தந்தவர் இக்கிராமத்தைச் சேர்ந்த மு.அ. கா. சாகுல் ஹமீத் என்பவராவார்.
134

கும்மிப்பாட்டு கோலாட்ட, களிகம்பு பாட்டு என்றும் அழைக்கப்படும். இப்பாட்டு கும்மி நடனத்துடன் சேர்த்துப்பாடப்படுவதாகும். உதாரணம் -1. முதலாவது பாடல் மஸ்தான் சாகிபு புலவரால் பாடப்பட்ட புலம்பற்
பாடற் தொகுதியின் ஒரு பகுதியாகும்.
ஆதிமுன்னிற்கவே அகது உகது வாகிதத் தந்தனது நிற்கவே அஸ்துவித வஸ்து முன் நிற்கவே அறிவகன் ஆகார முன் நிற்கவே ஒத முன் நிற்கவே போத மனு காதபரி பூரண முன் நிற்கவே பொங்கு சிவ ஞானம் முன் நிற்கவே வானாதி பூதலையாம் முன் நிற்கவே நாதனருள் பெற்ற நபி முன் நிற்கவே அடியேன் உம்மை நம்பினேன்
நன்மை தந்தருள் நாதற்கே
இரண்டாவது பாடல், விடத்தல்தீவு மீ. முகம்மது காசிம் புலவரால் இப்பிரதேசத்தில் புதிதாக ஆரம்பித்து வைக்கப்பட்ட சன்னார் குளம் அல்லது வெலிமருதமடு என்ற நீர்பாசனக் குளத் திறப்பு விழாவின் போது பாடப்
பட்டதாகும்.
வானம் அடையும் கானகத்தில் நல் தானமதாய் ஜெகநாதன் பண்ணை ஈனமகற்றி உழவுப்பயிர் செய்ய மன்னார் எம். பீ றகீம் திறந்து வைத்தார் கரடி புலி யானை மற்றுமுள்ள கொடிய மிருகங்கள் உலவி வரும் கொடியவனத்திலே ஜெகநாதன் பண்ணை கனிகுலுங்கும் பசும்பயிர் செய்திடுவோம்
கும்மி நடனம் முஸ்லிம்கள் மத்தியில் விழாக்காலங்களிலும் மங்களகரமான நிகழ்ச்சியின் போதும் நிகழ்த்துவதாகும். இக்கும்மி நடனத்தில்
பல்வேறு வகையான பாடல்கள் பாடப்படுவதுண்டு. இப்பாடல்கள் இஸ்லாமிய
135

Page 77
சமய கலாசார பாரம்பரியங்கள் பற்றியும், மக்களின் பிரதேசத் தனித் தன்மையைப்பற்றியும் பாடப்பட்டிருக்கின்றது. இக்கும்மி முறை கடந்த சில 10 ஆண்டுகளில் பல்வேறு காரணங்களினால் இப்பிரதேச மக்களின் வழக்கத்தில் இருந்து மறைந்து வருகின்றது.
3. ஆசைக்கவி
ஆசைக்கவி மக்களின் கவிரசனையையும் மனோபாவத்தையும் வெளிப்படுத்தும் ஒன்றாகும். இவ்வாசைக்கவி மகிழ்ச்சிகரமான குடும்ப நிகழ்ச்சிகளின்போதும், கிராம விழாக்களின் போதும் பாடப்படும். இப்பாடல்களில் ஒன்று இங்கு தரப்படுகிறது.
கடவுள் வாழ்த்து (ஆண்,பெண் இணைந்து) சிந்து கவிபாடி சின்னக்கிளியாரை முத்தமிட்டு காதல் கொள்ள முன்னவனே நீகாப்பு தயவு கொண்டு என்னை வளர்க்கும் சரசுவதி என்தாயே சிற்றடியே பாடும் கவி சிந்திக்க வேண்டுமம்மா
கவி: (ஆண்,பெண் இணைந்து) நகமும் சதையும் போல நாமிருந்த நேசத்திற்கு நகத்திற்கும் சதைக்கும் இப்ப நஞ்சு கலந்ததென்ன?
பென்:
மாமி மகள் இருக்க மாலைஇடப் பெண் இருக்க ஊரார் மகளுக்கு ஒம்பட்டுப் போறியளே ஆண்:
மாமி மகளே
மனமுள்ள மச்சியாரே கொஞ்சும் கிளியே உன்னைக்கொள்வது நிச்சயம்தான்.
136

ஆண்
கொஞ்சும் மானே அதில் வரும் புள்ளிமானே அத்தனை மானிலும்
எந்த மான் நல்ல மான்
பெண்
கோடைக்கு ஒதுங்கி கொண்டலுக்கு நேர்காட்டி வாடைக்கு ஒதுங்கி வாறமான் நல்ல LDIT60t
(விபரம் தந்தவர்: மு.அ.கா.சாகுல் ஹமீது)
இது கடவுள் வாழ்த்து அறிமுகம் என்ற கவிதைப்பகுதியைத் தொடர்ந்து ஆணும் பெண்ணும் மாறிமாறி கவிநயத்தோடு கலந்துரையாடும் அமைப்பைக் கொண்டதாகும்.
மாந்தைப்பிரதேசத்தில் முஸ்லிம்கள் மத்தியில் வழக்கிலிருந்த மற்றுமொரு ஆசைக்கவி பின்வருமாறு
ஆண் : ஆத்தியடி வேளாண்மை
அரைஅளவு நெற்பயிரு கண்டுக்கிட்டேன் பொன்மயிலே
காவலுக்கும் போவேனோ
பெண் : கடலும் இரையாதோ
கானலும் பூக்காதோ நிலவும் வீசாதோ நீலவண்டு நிற்குமிடம்
(விபரம் தந்தவர்; காதர் முகைதீன்)
இதுபோன்ற பல ஆசைக்கவிகள் இப்பிரதேச மக்கள் மத்தியில் காணப்பட்டன. இதனை மனனம் செய்த பலர் இம்மக்கள் மத்தியில் இன்னும் வாழ்ந்து வருகின்றார்கள். இவ்வாசைக்கவிகள் முறைப்படி தொகுக்கப்பட வேண்டியது அவசியமாகும்.
137

Page 78
4. விருத்தம்
மாந்தைப்பிரதேச முஸ்லிம்கள் மத்தியில் வழக்கிலிருந்த மற்றுமொரு கவிதை கல்யாண விருத்தமாகும். இவ்விருத்தம் திருமணத்தின் போது மாப்பிள்ளை தனது வீட்டை விட்டு பெண் வீட்டை நோக்கி செல்லுகையில்
பாதை வழியே பொது மக்களால் பாடப்பட்டு வந்த பாடலாகும்.
தனிஒருவர்
அண்ட கோடிகளும் ஓர் பந்தெனக்கைக்குள் விளையாட வல்லீர் எல்லோரும்
ஆமோம்! தனிஒருவர்
அகில மோர் ஏளினையும் ஆகும் கரங்கள் போல் ஆக்கி விளையாட வல்லீர் எல்லோரும்
ஆமோம் ! (விபரம் தந்தவர்: ஆமினாஉம்மா)
5. தாலாட்டு
கீழே தரப்படுவது தாலாட்டுப் பாடலாகும். மாந்தை முஸ்லிம்
பிரதேசத்தில் நெடுநாளாக வழக்கில் இருந்த தாலாட்டுப் பாடல்களில் இதுவும் ஒன்றாகும்.
குச் சூச்சு ஆராரோ
ஆராரோ ஆரிவரோ
கண்ணே மணிஉறங்கு
கற்பகத்து வண்டுறங்கு
செடியில் புல்லுறங்கு
செல்வமகள் நித்திரைசெய்
நித்திரைக்கோ நீ அழுதாய்
138

சித்திரப்பூத் தொட்டிலிலே
தொட்டிலுமோ பொன்னாலே
தொடுகயிறு முத்தாலே
முத்து முத்துச் செவ்விளன்ர்
முத்தமெல்லாம் கொத்தமல்லி
கொத்தமல்லிப் பூப்பூக்க
கொடிமிளகு பிஞ்சுவிட
வாடாமல் சோடாமல்
வளர்த்துத்தாங்க வல்லவரே
(விபரம் தந்தவர்: சித்தி முகம்மது றிபாய்)
6. ஊஞ்சற் பாட்டு
முஸ்லிம்கள் பெருநாள் காலங்களில் கூட்டாக ஊஞ்சல் ஆடுவதை ஒரு கலை நிகழ்ச்சியாகச் செய்வதுண்டு. அவ்வாறான சந்தர்ப்பங்களில் பாடப்பட்ட பாடல்ஒன்று தரப்படுகின்றது. இது இறைவனை துதிபாடுவதுடன் தங்கள் சந்தோசத்தை பகிர்ந்து கொள்வதாகவும் கானப்படுகிறது.
அல்லாஹ் உன்வாசம் ஆலமெங்கும் அணுவுக்குள் அணுவாய் அமைந்தவனே எல்லா உயிருக்கும் உய்தமானவனே ஒகோனே யாரப்பல் ஆலமீனே குன்றாத ஒருநாளும் குறைவில்லாதவனே எண்ணால் எழுத்தால் வரிகள் காட்டி ஏதேனும் கானேனாத் தம்பிரானே அர்ரஹற்மானே நிறைந்தவனே நீயே நாவில் துதி செய்பவனே.
(விபரம் தந்தவர்: மு. அ. கா சாகுல் ஹமீது)
139

Page 79
பின்னிணைப்பு - 3
முஸ்லிம் ஆத்ம ஞானிகளின் அடக்கஸ்தலங்கள்
இஸ்லாமிய சமய ரீதியாக முக்கியம் பெற்றவர்களின் அடக்கஸ்தலங்கள் “சியாரம்’ என்றும் “கபுறடி’ என்றும் அழைக்கப்படும். இலங்கையில் முஸ்லிம்களின் வரலாற்றை எடுத்துக்கூறும் ஆதாரங்களில் ஒன்றாக முஸ்லிம் ஆத்ம ஞானிகளின் அடக்கஸ்தலங்கள் காணப்படுகின்றன. மன்னார் மாவட்டத்தில் இவ்வாறான பல அடக்கஸ்தாலங்கள் இன்று அடையாளம் காணக்கூடியதாக இருக்கின்றன. இது ஒரு வகையில் இம்மாவட்ட முஸ்லிம்களின் நீண்டகால வரலாற்றையும், முஸ்லிம்களின் சமயத் தனித்துவத்தையும் காட்டிநிற்கின்றது.
இந்த அடிப்படையில் 1990இல் மன்னார் மாவட்டத்தில் அடையாளப் படுத்தக்கூயதாக இருந்த மார்க்க அறிஞர்களின் அடக்கஸ்தலங்களை படம்13 காட்டுகிறது. ஆத்மஞானிகளின் அடக்கஸ்தலங்கள் கடந்த காலங்களில் மக்களால் கெளரவிக்கப்பட்டு வந்தன. இவை மாவட்டம் முழுவதும் பரவலாகக் காணப்பட்டன. மாந்தைப் பிரதேசத்தில் மாத்திரம் இவ்வாறான ஏறக்குறைய பத்து அடக்கஸ்தலங்கள் காணப்பட்டன. வரலாற்று கண்ணோக்கில், மாந்தைப் பிரதேசத்தில் அடையாளம் காணப்பட்ட இவ்வடக்கஸ்தலங்களின் காலகட்ட முக்கியத்துவம் பின் வரும் பகுதிகளில் விளக்கப்படுகின்றது.
1. மெளலானா அப்பா கபுறடி
இவ்வடக்கஸ்தலம் விடத்தல்தீவு முகைதீன் ஜூம்மாப் பள்ளவாயிலின் வளவினுள் காணப்படுகின்றது. இக்கபுறடியில் அடக்கப்பட்டவர் மெளலானா அப்பா என்று அழைக்கப்படும் முஸ்லிம் ஆத்ம ஞானியாவார். இக்கபுறடியை இந்நூற்றாண்டின் நடுப்பகுதியில் திருத்தி அதனை மேலும் முக்கியம் பெறச்செய்தவர் டாக்டர் இ. அப்துல்லாஹ்வின் தந்தை அ.முகம்மது இஸ்மாயில் என்பவராவார். மெளலானா அப்பா என்பவர் விடத்தல்தீவு முஸ்லிம்களில் ஆரம்ப மார்க்கப் பிரச்சார பெரியார்களில் முதன்மையானவர் எனக் கருதப்படுகின்றார். இவர் மார்க்க அறிவை மக்களுக்கு புகட்டியவர். இவரின் கீழ் கல்வி பெற்றவர்களாக இக்கிராமத்தின் மூதாதையர்களான அப்துல் றஹற்மான், நூறுமுகம்மது என்பவர்கள் கருதப்படுகின்றனர். அப்துல் றஹ்மான் பரம்பரையில் வந்தவர் பிரபல்யமான கபூர் விதானையாவார். நூறுமுகம்மது பரம்பரையில்
140

U LIñ 13 : JjFLINTIT, frC - யார ளின்(ஆத்மஞானிகளின் அடக்கஸ்தல) பரம்பல், 1990
ヘで
- \ 6.
3. ープ ov4 - محی 2
' // I (3 g O 12エリツへで
- - - 1 - 6υ ○ மாநதை ܗ - -- - ܚܝ ܝ ܓ །
V
C
நானாடடான் .ارس
۳۔ مس۔ - ܘ ܥ- ܓ- ܓ - ¬ f 8
9. A முசலி 3 f ܓܝ p ما 21 26 22 2O \ .
W
w
N
v \^س سے a - ܓܗ
། ། ། ། ། --། ཁ །
O 10 fluß 23 25 ܐܝܚ-ܚܬ
4. )
- - - י
பொலானா அப்பா (եւ IIIյ1գ .11 א א ר
n 12. கப்புடையார் அப்பா கரடி
- 13. விரவனியப்பா தர்ற
11. OVIII17, (b), I DIM II atyna i 5. itp:5)guiqui" z głogi 16. ராபாத்து கூப்பு ைபார்ப்பா “፣-፤ ህህtq 1, புதுப்பள்ளிவாசல் அப்பா தர்வுறு 7. IIGA piir . 2. விதானையப்பா தர்வுறா 13. பஞ்சக்குளத்துப் பள்ளிவாசல் கரடி 1. இலவசப்பா (மீராலெப்பை) கர்வா 19. நெருங்குளத்தப்பா சுறடி
•i. (pakes I aqg Juliur grisur 20. பொற்கேணி தர்வுறா 5. காட்டுமா கடறடி 21. சிலவத்துறை தர்வுறு 6. தங்கமலை சாஹிபு தர்வுறா 22. கொக்குப்படையான் வியபடி தவறா 7. மீனராவடி ரைப்பா கபுராடி 23. கரடிக்குளி தர்வுறா 8. கப்பலொளி சாஹிபு தர்ஹா 31. ரிச்சுக்கட்டி தர்வுறா '. நூறுமுகம்மது அவ்லிபா தர்வுறா 25. i III som huvi.gr, auf sooriai ir ru gy, niran 10. மன்னார் பெரிய பள்ளி தர்வுறா 26. வாலஸ்தான் தர்ஷா
மூலம்: அகதி வெளிக்கள ஆய்வு, 1990.
141

Page 80
வந்தவர் அபுல் ஹைர் ஆசிரியர் ஆவார். இப்பெரியார் வாழ்நாளில் தனது தேவைகளை இறைபக்தி மூலம் நிவர்த்தி செய்து கொண்டார். அத்துடன் மக்களுக்கும் அவ்வுதவிகளை வழங்கி உள்ளார். இப்பெரியாரின் பொருட்டினால் இறைவனிடத்தில் தங்கள் தேவைகள் நிறைவேற்றிக் கொள்வதற்காக முஸ்லிம்களால் பிரார்த்தனைகள் செய்யப்பட்டு வந்திருக்கின்றன.
2. கப்புடையார் அப்பா கபுறடி
இக்கபுறுஸ்தானம் விடத்தல்தீவுக்கு கிழக்கே ஒருமைலுக்கு அப்பால் கப்புடையா பள்ளிவாசல் எனும் விவசாய நிலப்பரப்பில் காணப்படுகின்றது. இதில் கப்புடையார் அப்பா என்பவர் அடங்கப்பட்டிருக்கிள்றார். இப்பெரியார் மெளலானா அப்பாவைத்தொடர்ந்து விடத்தல்தீவுக்கு மார்க்க பிரசங்கத்துக்கு வந்தவராகக் கருதப்படுகின்றார். இவரின் பொருட்டால் இறைவனிடத்தில் மழை வேண்டிப் பிரார்த்தனை செய்யும் சமய வழிபாடு முஸ்லிம்களின் மத்தியில் நடைபெற்று வந்திருக்கின்றது. அத்துடன் வேறு தேவைகளுக்காகவும் பிரார்த்தனை செய்யப்பட்டு வந்திருக்கின்றது. அதே வேளை வேற்று மதத்தவர்களும் தங்களின் சில தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்காகவும் இக்கபுறு ஸ்தானத்தில் பிரார்த்தனை செய்து வந்துள்ளனர்.
3. கவ்னியா அப்பா கபுறடி
இக்கபுறடி விடத்தல்தீவிற்கு கிழக்கே சுமார் 4 மைல்களுக்கு அப்பால் கிழவிகமம் என்ற விவசாயக்காணியில் காணப்படுகின்றது. இது கவ்னி அப்பா வணக்கம் செய்து வந்த இடமாகவும் பின்னர் முஸ்லிம் மக்களினால் இப்பெரியார் சார்பாக பிரார்த்தனை செய்யும் இடமாகவும் கருதப்பட்டு வந்ததொன்றாகும். அத்தோடு வேற்று மதத்தவர்களினாலும் தங்களின் தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்காக இவ்விடத்தில் பிரார்த்தனை செய்யப்பட்டு வந்திருக்கின்றது.
4. நாயாத்துக்கப்புடையார் அப்பா கபுறடி
இக்கபுறடி விடத்ததல்தீவில் இருந்து தென்கிழக்காக 2 மைல்களுக்கு அப்பால் நாயாற்றிற்கு அருகில் காணப்படுகின்றது. இவ்விடத்தில் கவ்னி அப்பாவின் தம்பியான கப்புடையார் அப்பா அடக்கம் செய்யப்பட்டதாக அறியக்கிடைக்கிறது. இப்பெரியாரின் பொருட்டால் தங்களின் சில தேவைகளை
142

நிறைவேற்றிக்கொள்வதற்காக முஸ்லிம்களினால் பிரார்த்தனை செய்யப்பட்டு வந்திருக்கின்றது. அத்தோடு வேற்று சமய மக்களினாலும் தங்களின் சில தேவைகளை நிறைவேற்றிக்கொள்வதற்காக பிரார்த்தனைகள் செய்யப்பட்டுள்ளன.
5. செய்யதுக்குட்டி அப்பா கபுறடி
இக்கபுறடி பள்ளமடுக் குளத்திற்கு அருகே அதற்குத் தெற்குப் புறமாக கோட்டைக் காட்டுப் புட்டி என்னும் இடத்தில் காணப்படுகின்றது. இதில் செய்யதுக்குட்டியப்பா என்னும் மார்க்கப் பெரியார் அடங்கப்பட்டிருக்கிறார்.
இது பிரார்த்தனை இடமாக முஸ்லிம்களால் பேணப்பட்டு வந்திருக்கின்றது .
6. மதுரையடி ஒலியுல்லாஹற் கபுறடி
இக்கபுறடி விளாங்குளி பள்ளிவாசலில் காணப்படுகின்றது. இக்கபுறடியில் மதுரையடி ஒலியுல்லாஹ் என்னும் மார்க்க ஞானி அடக்கம் செய்யப்பட்டிருப்பதை அறியக்கூடியதாக இருக்கின்றது. இங்கு முஸ்லிம்கள் தங்களின் சில தேவைகளை நிவர்த்தி செய்வதற்காக இவரின் பெயரால் பிரார்த்தனை செய்து வந்தனர்.
கபுறடி வழிபாட்டுமுறை முக்கியத்துவம் 1970 ஆம் ஆண்டு காலத்திலிருந்து குறையத் தொடங்கியது. 1980 ஆம் ஆண்டுகளில் இக்கபுறடி வழிபாட்டுமுறையிலான முக்கியத்துவம் முஸ்லிம்கள் மத்தியில் வெகுவாகக் குறைவடைந்தது. இதற்கு முக்கிய காரணம் சம காலத்தில் இப்பிரதேச மக்கள் மத்தியில் ஏற்பட்டு வந்த சமய மறுமலர்ச்சியாகும். குறிப்பாக விடத்தல்தீவில் 1950 ஆம் ஆண்டுகளில் அறிமுகப்படுத்தப்பட்டு 1970 ஆம் ஆண்டுகளுக்குப் பிற்பட்ட பகுதிகளில் முஸ்லிம்கள் மத்தியில் பிரபல்யம் அடைந்த தப்லீக் என்ற சமயப் பிரச்சார இயக்கம் கபுறடி முறையிலான வணக்க முறையை இஸ்லாமிய சமய வழிபாட்டு முறைக்கு முரண்பட்டது என்று பிரச்சாரம் செய்து வந்தது. கபுறடி வணக்கம் இறைவனுக்கு இணைவைப்பது என்ற உண்மை மக்களுக்கு விளக்கப்பட்டது.
இதனால் சியாரங்கள் முக்கியம் இழக்கத் தொடங்கின. ஆயினும் சியாரங்கள் ஒரு முஸ்லிம்களின் வரலாற்றுச் சான்றாகக் கொள்ளப்பட்டு
இறுதிவரை பாதுகாக்கப்பட்டு வந்தன.
143

Page 81
இலங்கையின் இனப்
வெளியேற்றப் பட்ட 6L
இப்பொதுத்தலைப்பில் ெ
தொகுதி தொகுதி தொகுதி தொகுதி தொகுதி தொகுதி தொகுதி
அறிமுகம்.
யாழ்ப்பாண முஸ்6 முல்லைத்தீவு மு மன்னார் தீவு மு முசலி முஸ்லிம்க மாந்தை-நானாட்ட வவுனியா முஸ்லி

ரச் சினையும் பலவந்தமாக LID NT 3.5 T 600T முஸ்லிம் களும்
பளிவரவுள்ள நூல் தொகுதிகள்
ம்ெகளும் கிளிநொச்சி முஸ்லிம்களும். ஸ்லிம்கள்
ஸ்லிம்கள்
ள்
டான் முஸ்லிம்கள்
ம்கள்

Page 82
名N ޙަޤީ
”
༦༽ ། பாடசாலை
} (அலிகார் ம.வி)
\\
عمير
مر
பள்ளிவாயில்
 

Ya en
விளையாட்டு \
V.
மைதானம்
ISBN 955-94.45-06-5
D BY UNIE ARTS (PVT) LTD
PRINTE