கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: கிழக்கில் நிலவும் பதற்ற நிலை: ஜனாதிபதிக்கு ஒரு கடிதம்

Page 1
Glausinան6: 4
கிழக்கில் நிலவ
ஜனுதிபதி
፵(Ü5
கடிதம்
பூனிலங்கா முஸ்
375/2, L
கொழு

பும் பதற்ற நிலை
ܔ
லிம் காங்கிரஸ்
-ாம் வீதி,
ம்பு-12,

Page 2
- 9 - 1987
மாண்புமிகு ஜனுதிபதி அவர்களுக்கு!
கிழக்கில் நிலவும் பதற்ற நிலை!
கல்முனையில் நேற்றுக்காலை 9-30 அளவில் வெடித்த வன் செயலின் விளைவாகப் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. நிலைமை யைச் சாதகமாக்கிக்கொண்ட விஷமிகள் பாரிய கொள்ளைச் சம்பவங்களை மேற்கொண்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது. கல் முனை வைத்தியசாலை வளவில் அமைந்திருந்த பள்ளிவாசலும் நேற்றிரவு தாக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கல்முனையில் நடந்த சம்பவங்களைச் சிறிதாகக் கருதி இலே சாக அலட்சியம் செய்துவிட முடியாது. கடந்த சில தினங்களாக பொத்துவில், மூதூர், ஒட்டமாவடி மற்றும் கல்முனே போன்ற இடங்களில் நடைபெற்றுவரும் பல்வேறு சம்பவங்களைக் கூர்ந்து நோக்கும் வல்லமையுடையவர்கள் இச்சம்பவங்களின் பின்னல், தீய சக்திகள் செயல்படுவதை உணரத் தவறமாட்டார்கள்.
எம்மைப் பொறுத்தவரை, தொடர்ச்சியான இந்தச் சம் பவங்கள் ஒரு பொதுவான வடிவத்தையும் நோக்கத்தையும் கொண்டதாகவே விளங்குகின்றன.
எனவே ஜனநாயக ரீதியாகத் தாபிக்கப்பட்ட அரசியற் கட்சி ஒன்றின் தலைவர் என்ற அடிப்படையில் இந்த விடயத்தை உங்களது உடனடிக் கவனத்துக்குக் கொண்டுவருவது எனது கடமையாகும்.
இந்த சந்தர்ப்பத்தில் உடனடி நடவடிக்கைகள் எடுக்கப் படாத பட்சத்தில், கிழக்கிலங்கை முழுவதும் முஸ்லிம் - 5Լճյի இனக் கலவரமொன்றின் கோரப்பிடியில் சிக்கிவிடுவது தவி++ முடியாததாகிவிடும். அத்தகையதொரு கலவரம் ஏற்பட்டால்


Page 3
அது இந்த மாகாணத்தின் இரு கண்களான தமிழ் முஸ்லிம் சமூகங்களை நிரந்தரமாகவே பிளவுபடுத்தி விடலாம்.
தமிழ் முஸ்லிம் கசப்புணர்வை ஏற்படுத்தி இத்தகைய விரும்பத்தகாத நோக்கத்தை அடையத் தீய சக்திகள் முயற் சித்து வருவதை நாமறிவோம். இருந்தாலும், இந்த இரு சமூ கங்களும் தமக்குள்ளேயே மோதிக்கொள்வதை எந்தச் சந்தர்ப் பத்திலும் அனுமதிக்க முடியாது என்பதே எமது திட்டவட்ட மான நிலைப்பாடாகும்.
நேற்று எம்மால் மேற்கொள்ளப்பட்ட பாரபட்சமற்ற புலன் விசாரணையிலிருந்து தெரிவது இதுதான் கல்முனைப் பொலிஸார் மட்டும் தக்க தருணத்தில் தலையிட்டிருந்தால் அங்கு ஏற்பட்ட அசாதாரண சம்பவங்களையும், கோடிக்கணக்கான பெறுமதியான சொத்திழப்புக்களையும் நிச்சயமாகத் தடுத்திருக்கலாம் என்றே நாம் நம்புகிருேம். முதலாவது தீவைப்பு, கல்வீச்சுச் சம்பவம் கல்முனை பொலிஸ் நிலையத்திலிருந்து 50 யார் தூரத்துக்கு அப்பால்தான் ஆரம்பித்திருக்கிறது. அவ்வாறு ஆரம்பித்த சம் பவங்கள் தொடர்ந்து பரவிக் கொண்டே இருந்தன. இரு மணி நேரம் கழித்துத்தான் கல்முனே பொலிஸ் தனது ஆழ்ந்த உறக் கத்திலிருந்து விழித்தெழுந்தது. கல்முனை பொலிஸின் இந்த மந்தநிலை, இயங்காமை, செயற்பாடின்மை என்பன மன்னிக்கவே முடியாதவையாகும். இது கல்முனை பொலிஸின் திறமையின் மையையும் அவர்கள் வேண்டுமென்றே தமது கடமையிலிருந்து தவறியதையுமே காட்டுகிறது என்பது எமது கருத்தாகும்.
நேற்று பிற்பகல் 1-30 மணியளவில் உங்களது சிரேஷ்ட செயலாளர் திரு எஸ். எம். சமரக்கோனின் பணிப்பின் பேரில், ஜெனரல் சேபால ஆட்டிகலையை - நான் தொலைபேசியில் தொடர்பு கொண்டு சம்பவங்களை விளக்கியதோடு, ஏன் கல்முனை பொலிஸ் உடனடி நடவடிக்கை எடுக்கவில்லை? என்று வினவி னேன். இந்திய-இலங்கை சமாதான ஒப்பந்தம் கைச்சாத்தான தன் பின்னர் உள்ளூர் பொலிஸ் இலங்கையில் நிலைகொண்டுள்ள இந்திய சமாதானப் படையுடன் இணைந்து செயற்படாது தனித்து சுதந்திரமாகச் செயற்படலாமா? என்ற விடயத்தில் தனக்குத் தெளிவில்லை! என்று திரு ஆட்டிகலே தெரிவித்தார். இந்திய சமாதானப் படை ஸ்தலத்துக்கு வரத் தாமதித்தமையே
2

கல்முனை பொலிஸ் உடனடி நடவடிக்கை எடுக்கத் தவறிய மைக்குக் காரணமாயிருந்திருக்கலாம் என்பதே அவரது யூக மாயிருந்தது.
ஒரு வழக்கறிஞர் என்ற முறையில் ஜெனரல் ஆட்டிகலையின் விளக்கத்தை என்னுல் ஏற்கமுடியவில்லை. ஏனென்ருல் வட கிழக்கில் சமாதானத்துக்குச் சவால்விடும் சந்தர்ப்பங்களில் தலை யிட் உள்ளூர் பொலிஸுக்குள்ள அதிகாரங்களுக்குச் சமாதான உடன்படிக்கை சமாதி கட்டவில்லையே!
ஜெனரல் ஆட்டிகலேயின் பதிலால் குழப்பமடைந்த நாம், இந்திய உயர்ஸ்தானிகர் திரு. ஜே. என். தி க் ஸித்துடன் தொடர்பு கொண்டு அவரது அலுவலகத்தில் சம்பவங்கள் தொடர்பாக அவருடன் சுமார் ஒரு மணிநேரம் உரையாடி னுேம், உள்ளூரில் சமாதானத்தையும், சட்டத்தையும், ஒழுங் கையும் நிலைநாட்டுவதற்கும் இந்திய சமாதானப் படைக்கும் எவ்வித சம்பந்தமுமில்லை என்று திரு திக்ஸித் திட்டவட்டமான முறையில் தெளிவுபடுத்தினர். வட கிழக்கில் சட்டம், ஒழுங் கைச் சரிவர நிலைநாட்ட முடியாத தமது திறமையின்மைக்கும், இயலாமைக்குமான குற்றச்சாட்டை, இலங்கை அரசு எம்மீது சுமத்தக் கூடாது என்பதையே என்னேப் பொறுத்தவரை இந்தியத் தூதுவரது நிலைப்பாடு தெரிவிக்கின்றது.
இந்த விளக்கத்தின் அடிப்படையில் பார்த்தால் கிழக்கில் வாழும் அப்பாவித் தமிழர் முஸ்லிம்களது பாதுகாப்புக்கான உத்தரவாதத்தை உங்களிடம் நேரடியாகக் கோருவதைத் தவிர எமக்கு மாற்றுவழியில்லை. யாருடைய உயிர் உடமை இழக்கப், படுகிறது என்பது முக்கியமல்ல. ஆனல் எந்த சந்தர்ப்பத்திலும் எந்தவொரு பிரசையினதும் அப்பாவியினதும் உயிரும், உடமையும் பறிபோகக் கூடாது என்பதே முக்கியமானதாகும். சமாதானம், சட்டம், ஒழுங்கு என்பன நிலைநாட்டப்பட வேண்டியதே தற் போது அவசரமும் அவசியமுமானதாகும்.
மாண்புமிகு ஜனதிபதி அவர்களே! இந்தப் பிரதேச முஸ்லிம் கள் கலவரமடைந்துள்ளார்கள். நேற்றிரவு அவர்கள் அச்சத்தின்
காரணமாக இரவைப் பகலாக்கி விழித்திருந்தார்கள். இங்குள்ள

Page 4
அப்பாவித் தமிழ் மக்களால் கூட அமைதியாக வாழ முடிய வில்லை என்பதைச் சுட்டிக்காட்டவேண்டியது எம் கடமையாகும்.
இந்த இரு சமூகங்களிலுமுள்ள சமாதானத்தை நேசிக்கும் சக்திகளிடையே எழுந்துள்ள கேள்வி இதுதான். "நேற்றைய வன்செயல்களின் உச்சக்கட்டத்தில் கல்முனை பொலிஸ் ஏன் வாளாவிருந்தது! மெளனம் சாதித்தது!! இயங்க மறுத்தது!!! இந் தக் கேள்விக்குத் திருப்திகரமான பதிலொன்று இல்லாததால் நாம் பின்வரும் முடிவுகளுக்கு வரவேண்டியுள்ளது. இதற்காக நீங்கள் எம்மை மன்னிக்கவேண்டும்.”
1. தக்க சமயத்தில் தலையிட்டுச் சூழ்நிலையைக் கட்டுப்பாட்டுக் குள் கொண்டுவர கல்முனை பொலிஸ் செயற்படாததன் பின்னணியில் ஒரு திட்டமிட்ட சதியொன்று உள்ளது. கிழக்கு வாழ் தமிழ் முஸ்லிம் மக்களிடையே நிரந்தரமான பிளவொன்றை ஏற்படுத்த வேண்டும் என்பதே இந்தச் சதி யின் நோக்கமாகும் என்று நாம் நம்புகிருேம் அப்போது தான் சமாதான உடன்படிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள உத்தேச சர்வசன வாக்கெடுப்பின் போது சிழக்கு முஸ்லிம் கள் தமிழ் மக்களுக்கு விரோதமான நிலைப்பாட்டை எடுப் பார்கள் என்று எதிர்பார்த்தே இந்தத் திட்டமிட்ட சதி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
2. நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குக் கொண்டுவர மேலதிகாரி களால் எந்த உத்தரவும் கொடுக்கப்படவில்லை. அல்லது (அப்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டும் கூட) கல்முனை பொலிஸ் வேண்டுமென்றே அத்தகைய உத்தரவுகளைச் செயற்படுத்த மறுத்துள்ளது.
கல்முனையில் நடைபெற்ற சம்பவங்களே முற்றிலும் தொடர் பற்ற ஒரு தனியான சம்பவமாகக் கருதி அலட்சியம் செய்து விட முடியாது என்பதை நாம் மீண்டும் வலியுறுத்த விரும்பு கிருேம். திருமலை, மட்டக்களப்பு மா வட்டங் களி ல் சம காலத்தில் நடைபெற்று வரும் இதே சாயலை ஒத்த சம்பவங் களையும் ஒப்பிட்டு நோக்கும்போது கல்முனைச் சம்பவங்களின் பாரதூரமான தன்மை நன்கு புலனுகும். இவை அனைத்தும் கிழக்கில் நிலவும் முஸ்லிம் தமிழ் நல்லுறவை நிரந்தரமாக
4.

நீக்கிவிடுவதற்காகத் திட்டமிட்டே முடுக்கிவிடப்பட்டுள்ளவை என்பது நன்கு தெளிவாகிறது.
ஆளும் ஐ. தே. கட்சியைச் சேர்ந்த 5 முஸ்லிம் எம். பிக்கள் இருந்தும் ஆன பலன் எதுவுமில்லையே என்று மக்கள் அங்கலாய்க் கின்றர்கள்; அழுகிறர்கள். ஆட்சி அதிகாரத்தைக் கொண்ட அரசைச் சார்ந்த எம். பிக்கள் எமக்கிருந்தும் எமது உயிர்கள் உடமைகளுக்கு உரிய பாதுகாப்போ, உத்தரவாதமோ இல்லையே என்று கைசேதப்படுகிருர்கள்.
உங்கள் அரசாங்கத்தினதும் அதனைச் சார்ந்த கிழக்கு எம். பிக்களினதும் அசாதாரணமான, அலட்சியமான நடத் தையை நாம் வன்மையாகக் கண்டிக்கிருேம். சட்டத்தையும், ஒழுங்கையும் உரிய வேளையில், உடனடியாக நிலைநாட்டத் தவறி விட்டீர்கள் உயிர்களும், உடமைகளும் இழந்தபின்னர் சட்டம், ஒழுங்கு, சமாதானம் என்பவற்றை எப்படி நிலைநாட்டுவது என்று ஆலோசிப்பதிலோ ஆங்காங்கு கலந்துரையாடுவதிலோ அர்த்தமேயில்லை. கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரமா? கறந்த பால்தான் முலையில் ஏறுமா? அழிவின் பின் சுடலை ஞானம் வந்து சுற்றுப் பேச்சுவார்த்தை நடத்துவது பெறுமதியற்றது. இத்த கைய சம்பவங்கள் இனியும் இடம்பெருமல் எவ்வாறு தடுக்க லாம் என்பதே இப்போதைய அவசரத் தேவையாகும்.
பூரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் சகல சமூகங்களுக்குமிடை யில் இன ஐக்கியத்தையும், புரிந்துணர்வையும் வளர்த்து சமா தானம், அமைதியை நிலைநாட்டத் திட சங்கற்பம் பூண்டுள்ளது. எமது இந்தத் திட சங்கற்பமே அவற்றை அடையப் பின்வரும் வழிவகைகளே முன்வைக்கிறது:
1. சமாதான உடன்படிக்கை கைச்சாத்தானதன் பின்னர் கிழக்கில் ஏற்பட்ட வன்செயல்கள் பற்றி பாரபட்ச் மற்ற துரித விசாரணை மேற்கொள்ள மூவர்கொண்ட விசாரணை ஆனைக்குழுவை நியமிக்க வேண்டும். இந்த ஆனைக்குழுவின் அங்கத்தவர்களாக ஒரு முஸ்லிமும், ஒரு தமிழரும், தனது பாரபட்சமின்மைக்குப் பிரபல்யம் பெற்ற இளைப்பாறிய உயர் நீதிமன்ற நீதியரசர் ஒருவரும் நியமிங்கப்படவேண்டும்
கிழக்குப் பிராந்திய உதவிப் பொலிஸ் மா அதிபரின் நேரடிக் கண்காணிப்பின் கீழ் கிழக்குப் பிராந்தியத்துக்கு

Page 5
ஒரு தமிழ் பொலிஸ் அத் அத்தியட்சகரும் நியமிக்க
3. கிழக்கிலுள்ள மூன்று
மாவட்டத்திற்கும் இரு ே யட்சகர்கள் நியமிக்கப்பட தமிழராகவும், மற்றவர்
4. தமிழ்ப் பெரும்பான்மை
பொறுப்பதிகாரியாகத் து நியமிக்கப்படவேண்டும். பொலிஸ் இன்ஸ்பெக்டர்
அதேபோல முஸ்லிம் பெ நிலையப் பொறுப்பதிகாரிய பெக்டர் நியமிக்கப்படே தமிழ் பொலிஸ் இன்ஸ்ெ வேண்டும். 5. 10-09-1987 இல் கல்முனைய போது கல்முனையில் செய வரும் அங்கிருந்து உடனடி தோடு அவர்களுக்குப் பதி நியமிக்கப்படவேண்டும். 6. கலகங்களுட்பட்ட இடங்க உடனடியாக விஷேட அ! கப்படவேண்டும். இவர்கள் ருடன் இணைந்து சமாதா கப்படவேண்டும்.
இந்தக் கடிதத்தின் உள் கவனத்தை ஈர்க்கும் என்றும் எடுக்கப்படும் என்றும் நாம் உ
இப்படிக்கு உங்கள் உண்மையுள்ள ஒப்பம். எம். எச். எம். அஷ்ரஃ தலைவர்
ரீலங்கா முஸ்லிம் காங்கிரீஸ்
6

தியட்சகரும், முஸ்லிம் பொலிஸ் படவேண்டும்.
மாவட்டங்களிலும், ஒவ்வொரு மலதிக உதவி பொலிஸ் அத்தி வேண்டும். அவ்விருவரில் ஒருவர் முஸ்லிமாகவும் இருக்கவேண்டும். பிரதேச பொலிஸ் நிலையப் மிழ் பொலிஸ் இன்ஸ்பெக்டர் அவருக்கு உதவியாக முஸ்லிம் ஒருவரும் நியமிக்கப்படவேண்டும்.
ரும்பான்மைப் பிரதேச பொலிஸ் ாக முஸ்லிம் பொலிஸ் இன்ஸ் வண்டும். அவருக்கு உதவியாக பக்டர் ஒருவரும் நியமிக்கப்பட
பில் நடைபெற்ற சம்பவங்களின் ற்படாதிருந்த பொலிஸார் அனை யாக இடமாற்றம் செய்யப்படுவ
லாக வேறு பொலிஸ் அதிகாரிகள்
ளைப் பாதுகாக்கும் பொறுப்பு திரடிப்படையினரிடம் ஒப்படைக் இந்திய சமாதானப் படையின னத்தை நிலைநாட்டும்படி பணிக்
rளடக்கம் யாவும் உங்களின்
தகுந்த நடவடிக்கை தங்களால்
றுதியாக நம்புகிருேம். s'