கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மக்களின் தீர்ப்புக்கு ஹக்கீம் மீதான குற்றச்சாட்டுக்கள் 37

Page 1
ിഖബി
ரீலங்கா முஸ்ல 53, வொக்வு (35ff (LDLbL HATHIsuiteriuirHa" * AM, AMAM. NYCIORULAMAGU J.P DipLOMAN MASS MEDIA FREELANCE JOURNALSY & WR
4298, OSMAN ROAt), at A at sa a at Agas it i i ng
 


Page 2

29th November 2002
தவிசாளர், செயலாளர் நாயகம், ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்
விஷேட - அவசர அதியுயர் பீடக் at Lib.
பூரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஜனாப் றவுபூப் ஹக்கீம் அவர்களுக்கெதிரான நமது மக்களின் நலன் குறித்த சில குற்றச்சாட்டுக்களை அவைகளின் கீழ் கையொப்பமிடும் அரசியல் அதியுயர் பீட உறுப்பினர்களாகிய நாம் முன் வைக்க வேண்டியுள்ளது.
குற்றச்சாட்டுக்களின் மீதுள்ள நியாயத்தினையும் உண்மை யினையும் உணர்ந்து நடவடிக்கை எடுப்பதற்காக விஷேட/ அவசர அதியுயர்பீடக் கூட்டமொன்றினை கூட்டுமாறு தயவாய் வேண்டுகின்றோம்.
இன்றைய சமகால நிலையில் தொடர்ந்தும் மோசமான அழிவு நிலைக்கு நமது கட்சியை இட்டுச் செல்வதன் மூலம் நமது மக்களை அரசியல் ரீதியாக பலவீனப் படுத்தும் கைங்கரியத்தை அனுமதிக்க முடியாது என்ற நிலைப் பாட்டிலிருந்தே இக்குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. பூரீல.மு.காங் கிரஸாகிய நமது கட்சி நமது மக்களின் அரசியல் உரிமைகளை போராடிப்பெற்றுக்கொள்வதையே அதன் இலட்சியமாக வரித்துக் கொண்டுள்ளது. இவ்விலட்சியத்தினை நம்பியே பல்லாயிரக் கணக்கான நமது மக்கள் நமது கட்சியாகிய ரீல.மு.காவுக்கு அரசியல் ஆணையினை வழங்கியுள்ளனர்.
முஸ்லிம் மக்களின் அரசியல் உரிமைகளையும், தீர்வினை யும்,நாட்டு மக்களின் பாதுகாப்பையும் உத்தரவாதப்படுத்த வேண்டிய மிக முக்கியமான கால கட்டத்தில் நாம் தொடர்ந்தும்
1

Page 3
மெளனமாக இருக்க முடியாது. கட்சியின் அதியுயர் பீடத்தினால் எடுக்கப்படும் கணிசமான முடிவுகள் கட்சித் தலைமையினால் தொடர்ந்தும் உதாசீனப்படுத்தப்பட்டு வருகின்றமை எமக்கு மிகுந்த வேதனையைத் தருகிறது. இதனால் கட்சி பிளவுபடும் நிலைமையும் பல சந்தர்ப்பங்களில் உணரக் கூடியதாகவிருந்தது. இந்நிலையில் கட்சியின் அரசியல் அதியுயர்பீட உறுப் பினர்களாகிய நாம், நமது கட்சி மக்களின் நம்பிக்கையினை தொடர்ந்தும் பெற்றிருப்பதற்காகவும், இது சிதறடிக்கப்படாமல் பலப்படுத்தப்படவேண்டும் என்பதற்காகவும் எமது மக்களின் நலன்நின்று உழைக்கவேண்டியுள்ளது.
எனவேதான் கீழ் வரும் குற்றச்சாட்டுக்களை அதியுயர்பீடத்தின் முன் சமர்ப்பிக்க விரும்புகின்றோம். இக்குற்றச்சாட்டுக்களின் மூலம் ஜனாப் றவுப் ஹக்கீம் அவர்கள் நமது யாப்பினையும் ஒழுக்கக்கோவையினையும் மீறியது தெளிவாகின்றது. இந்த துர்நடவடிக்கைகள் மூலம் ஜனாப் றவுப் ஹக்கீம் அவர்கள் குற்றவாளியாக்கப்பட்டு (Guilty of Misconduct) தலைமைத் துவத்திலிருந்தும், கட்சி அங்கத்துவத்திலிருந்தும் நீக்கப்பட வேண்டுமென உயர்பீடத்தினை தயவாய் வேண்டுகின்றோம்.
குற்றச்சாட்டுக்கள்.
01 குர்ஆனையும், ஹதீஸையும் உள்ளடக்கியதான நமது கட்சியின் யாப்பில், முடிவெடுப்பது மசூறா அடிப்படையிலாக இருப்பதனால் அல்லாஹற்வுக்கும், றசூலுக்கும் பயந்து சமூகத்தின் முன்னேற்றத்திற்காக 'மசூறா முறைப்படி முடிவுகள் எடுக் கப்படாமல் தன்னிச்சையாக முடிவுகளை எடுத்தமை.
02 தாய் பேச்சின் இரண்டாம் கட்டப் பேச்சுவார்த்தைக்கு முன்னர் நடைபெற்ற அதியுயர் பீடக் கூட்டத்தின் போதும் ’பிரதம மந்திரியையோ அரசையோ நம்பத்தேவையில்லை தனியலகை அவர் தரமாட்டார் அவரால் தரமுடியாது’ என்றும் "என்னையும் பிரபாகரனையும் நம்புங்கள்” என்றும் யதார்த்தத்திற்கு முரணாக உயர்பீட உறுப்பினர்களைத் திணித்தமை. இதன் மூலம் நாட்டின் இறைமை பாதிக்கப்படும் வகையில் கருத்து வெளியிட்டமை.
2

03 அதே உயர்பீடக் கூட்டத்தில் 'என்னிடம் அறிா இருக்கிறது நான் நினைத் ததையே செய்வேன் பாராளுமன் உறுப்பினர்களையோ அமைப்பாளர்களையோ கல பேசவேண்டிய அவசியமில்லை” என்று சர்வாதிகாரியாகக் நமது கட்சியின் குறிக்கோளுக்கு மாற்றமாக நடந்தமை
04 புலிகள் இயக்கத்தின் கிழக்குக் காரியாலயமான கொக்கொட்டிச்சோலைக்கு நமது பாராளுமன்ற உறுப்பினர் எவரும் செல்லத் தேவையில்லை என வட கிழக்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் எல்லோரும் ஆலோசனை கூறியிருந்தும், பாராளுமன்ற உறுப்பினர் அன்வர் இஸ்மாயில் அவர்களை அதியுயர் பீடத்தையும் கலந்து ஆலோசிக்காமல் தன்னிச்சை யாக முடிவெடுத்து, கொக்கட்டிச்சோலைக்கு அனுப்பியமை,
05 இந்த விடயம் தொடர்பாக உயர் பீடம் கூடியபோது, இத்தருணத்தில் தலைவருடைய பிழைகள் சுட்டிக்காட்டப்பட்டு, இனிமேல் வடக்கு கிழக்கு இனப்பிரச்சினை தொடர்பான விவகாரங்களில் அவர் தன்னிச்சையாக முடிவெடுக்கக் கூடாதென்றும் தீர்மானித்து, ஐவரைக் கொண்ட குழுவும் நியமிக்கப்பட்டு, அக்குழுவே தீர்மானங்களை மேற்கொள்ள வேண்டுமென்றும் முடிவெடுக்கப்பட்டும், இன்று வரை அது நிறைவேற்றப்படாமை.
06 வடக்கு கிழக்கில் முஸ்லிம்களுக்கெதிராகவும் நாட்டின் இறைமைக்கு பங்கம் ஏற்படும் வகையிலும் நடந்து கொண்டிருக் கும் செயற்பாடுகள் எமக்கு பீதியை ஏற்படுத்துகின்றன. இதே சமயம் அண்மைக் காலமாக ஜனாப் றவுப் ஹக்கீம் அவர்களுடைய கருத்துக்களும் செயற்பாடுகளும் இவைகளுக்கு ஏதுவாக இருந்து ரீலங்கா முஸ்லிம் காங்கிரசுக்கும் அதனுடைய உயர்பீடத்துக்கும் ஏற்படுத்தப்படுவதற்கு அவர் காரணமாக இருந்தமை
07 தலைவரின் நடவடிக்கைகளில் அதிருப்தி கொண்டு அக்குறைபாடு முஸ்லிம் சமூகத்தின் அபிலாஷைகளைத் தோற்கடிக்கக்கூடாது என்பதற்காக வடக்கு கிழக்கு மக்களின் எதிர்பார்ப்புகளை முன்வைத்து அப் பிரதேச பாராளுமன்ற உறுப்பினர்கள் பகிஷ்கரிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தன

Page 4
/ーエ
பதைமைக்கு கால்கோலியமை.
அவ்வேளை அதனுடைய யதார்த்தத்தினை உயர்பீடத்துக்கு சரியாக விளக்காமல் பிழையாக வழி நடத்தியமை.
08 வடக்கு கிழக்கு நிரந்தரமாக இணைக்கப்படுமானால் அங்கு முஸ்லிம்களுக்கு ஒரு அதிகார அலகு வேண்டும் என்று பகிஷ்கரிப்பில் ஈடுபட்டு உத்தரவாத மொன்றினை பிரதமர் அவர்களிடம் பெறுவதற்கு முன்பு, பகிஷ்கரிப்பை கைவிட்டு விடுமாறு முஸ்லிம் சமுதாயத்தின் அபிலாஷைகளுக்கு
மாற்றமாகத் தொழிற்பட்டமை.
09 வடக்கு கிழக்கு முழு முஸ்லிம் மக்களையும் திருப்திப்படுத்தக்கூடியதான ஒரு அதிகார அலகினைப் பெறும் நோக்கில் பகிஷ்கரிப்பில் ஈடுபட்ட பாராளுமன்ற உறுப்பினர்களின் நடவடிக்கையைக் கொச்சைப்படுத்தும் முயற்சியில்” அம்பா றைக்கு மாத்திரம் தனியலகு கொடுத்தால் மட்டக்களப்பு, திருமலை முஸ்லிம்களை என்னால் கைவிட முடியாது’ என்ற பிழையான கருத்தினை மக்களின் மத்தியில் வெளியிட்டு அம்பாறை மக்களோடு ஏனைய இரு மாவட்ட மக்களினதும்
10 கட்சியின் சிரேஷ்ட அங்கத்தினர்கள், உயர் பீட அதி யுயர்பீடங்களில் கருத்துகள் வெளியிடும்போது, தனக்கு யாப்பின் மூலம் வழங்கப்பட்டிருக்கும் அதிகாரங்களை வைத்துக்கொண்டு, அக் கருத்து வெளியிடுகின்றவர்களை கட்சியிலிருந்து வெளியேற்றுவதாக கூறி ஆணவத்தோடு நடந்து கொண்டமை.
11 கடந்த பொதுத் தேர்தலின்போது ஐக்கிய தேசிய முன் னணியை ஆட்சிக்குக் கொண்டுவருவதற்காக, அக்கட்சியோடு நமது ரீல.மு.கா கட்சி செய்து கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தம், அவ்விடயத்தில் அதியுயர் பீடத்தினால் கலந்தாலோசிக் கப்படாமலும், குறைந்த பட்சம் செயலாளர் நாயகம், தவிசாளர் போன்றோருடனோ கலந்து கொள்ளப்படாமலும் தலைவர் தன்னிச்சையாக செயற்பட்டமை.
12 கலந்தாலோசிக்கப்படாமல் செய்யப்பட்ட இவ் ஒப்பந்தத்தினை அதியுயர் பீடத்தின் முன்பு சமர்ப்பிக்குமாறு அதியுயர் பீடம் பலமுறை வேண்டுகோள் விடுத்திருந்தும் அதனை சமர்ப்பிக்கத் தவறியமை,
4
\ \
 

13 புதிய ஆட்சி கொண்டுவரப்பட்டதன் பின்பு, நியமன பாராளுமன்ற உறுப்புரிமை, அமைச்சு பகிர்ந்து கொள்ளல் போன்ற விடயங்களில் அதியுயர்பீடத்தை கலந்துகொள்ளாமல் தனது சொந்த விருப்பு வெறுப்புகளின் அடிப்படையில் தன்னிச் சையாக இயங்கியமை,
14 2001ம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலின் போது ஓய்வூதியம் பெறுவதைக் காரணம் காட்டி, ஆறு மாதங்களுக்கு மட்டுமே பாராளுமன்ற உறுப்பினர் பதவியை வகிப்பதற்கு கோரிய ஜனாப் பவரீர் சேகுதாவூதை இம்முறையும் தேசியப்பட்டியலில் பாராளுமன்ற உறுப்பினராக்கி பிரதியமைச் சராக்கியதன் மூலம், திருகோணமலை மாவட்ட முஸ்லிம் மக்களுக்கு துரோகம் செய்தமை.
15 கட்சியின் பிரதிநிதிகளையும் மக்களையும் தேர்தல் காலத்தின் போது மோசமாக ஏமாற்றும் அரசியல் தந்திரோபாயமாக, தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவிகளைத் தருவதாக அரசியல் அதியுயர் பீடத்தின் ஒப்புதலின்றி கட்சிப் பிரதிநிதிகளுக்கு தன்னிச்சையாக பொய்யான வாக்குறுதிகளை வழங்கியமை.
16 நமது மக்களின் ஆணையினால் கிடைக்கப்பெற்ற அரசியல் அதிகாரங்களைக் கொண்டு பெறப்பட்ட உயர் பதவிகளை, கட்சியின் வளர்ச்சிக்கு உறுதுணையாக நின்றவர்களுக்கு வழங்காது, அதியுயர் பீடத்தின் அனுமதியில் லாமல் தன்னிச்சையாக வழங்க நடவடிக்கை எடுத்துக் கொண்டமை.
17 வடக்கு கிழக்கு பிரதேசங்களில் முஸ்லிம்களின் எழுச்சியினைக் காட்டுவதற்கு எழுச்சிக் கூட்டம் நடாத்தி பிரகடனங்கள் செய்யப்பட வேண்டுமென்று அதியுயர்பீடம் தீர்மானித்திருந்த போதும், பிரபாகரனை சந்திப்பதற்காக அதிஉயர்பீட அனுமதியின்றி அதனை நிறுத்தி விட்டமை.
19 சமகால அரசியல் நிலையில் இனப்பிரச்சினைத் தீர்விலும், முஸ்லிம் மக்களின் பாதுகாப்பிலும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமை மேற்கூறப்பட்ட அம்சங்களை அடிப்படையாகக் கொண்டு முஸ்லிம் காங்கிரஸ் தலைமையுடன் ஒரு புரிந்து ணர்வு உடன்படிக்கையை மேற்கொள்ளவில்லை என்பதை
5 -

Page 5
அரசியல் நிகழ்வுகள் வெளிப்படையாக சான்றாதாரப்படுத்துகின்ற நிலையில், இத்தகைய உண்மை நிலையை மூடி மறைத்து, நமது மக்களையும் அரசியல் அதியுயர் பீடத்தையும் தவறாக வழி நடத்தியமை.
20 வடக்கு கிழக்கு முஸ்லிம்களுக்கும் தாயகம் என்கின்ற அடிப்படையில் இனத் தீர்வுக்கான பேச்சுவார்த்தை அமையப்பெற வேண்டும் என பூரீல.மு.கா அதி உயர்பீடம் தீர்மானித்து, இது தொடர்பாக பத்திரிகைகளில் அறிக்கை வரவேண்டும் என்று கூறியிருந்தும், இது பலமுறை சுட்டிக்காட்டப்பட்டும் அது நிறைவேற்றப்படாமை.
21 நமது பாராளுமன்ற உறுப்பினர்களின் குழுக்கூட்டம் முறைப்படி நடாத்தப்படாமையினால் உறுப்பினர்கள் இதனைச் சுட்டிக்காட்டியிருந்தும் இற்றைவரை ஒன்றையேனும் நடத்தத் தவறியமை,
22 வடக்கு கிழக்கு இனப்பிரச்சினை தீர்வு தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர்களோடும் புத்திஜீவிகளோடும் காத்திரமான கலந்தாலோசனைகள் செய்யத்தவறியமை.
23 அம்பாறை மாவட்ட முஸ்லிம் காங்கிரஸ் குழுவினை உயர்பீடத்தின் அனுமதியின்றி தன்னிச்சையாகக் கலைத்து அவர்கள் நீதிமன்றம் செல்வதற்கு வழிவகுத்தமை.
24 தாய்லாந்தில் நடைபெறும் அரசியல் பேச்சுவார்த்தை மேசையில் முஸ்லிம்களின் அரசியல் தலைமை என்ற அடிப்படையில் ரீல.மு.கா தலைமை சமதரப்பாகக் கலந்து கொள்ள வேண்டும் என்றும் , அங்கு முஸ்லிம்களின் தனித்துவமும் பிரச்சினைகளுக்கு முன்னுரிமையும் அளிக்கப்படவேண்டும் என்ற நமது மக்களின் அரசியல் நிலைப்பாட்டினையும் தொடர்ச்சியாக உதாசீனப்படுத்தி வருகின்றமை.
25 முன்னுக்குப் பின் முரணான அறிக்கைகளை பகிரங்கமாக
விடுவதன் மூலம் முஸ்லிம் சமூகமும் மற்றையவர்களும் கட்சியின் மீது நம்பிக்கை இழக்கச்செய்தமை.
6
 
 

26 வடக்கு கிழக்கு முஸ்லிம்களின் அபிலாஷையான அதிகார அலகினை கேட்பதற்கு இது தருணமல்ல என்று கட்சியின் மீது மக்கள் நம்பித்கை இழக்குமளவிற்கு அறிக்கை விட்டமை. -イエ ്ടു. "ஸ்டிட 27 உள்ளுராட்சி தேர்தலை அரசாங்கம் தமிழ் கட்சிகளின் ஒப்பந்தத்தினால் வடக்கு கிழக்கில் தொடர்ந்து நடத்த முன்வராத நிலைமையை அனுமதிக்க முடியாது என்ற அதியுயர் பீடத்தின் முடிவினை, உதாசீனப்படுத்தியதுடன் அரசு இதனை நடத்தாது போனால் அரசுக்கான தமது ஆதரவினை மறுபரிசீலனை செய்வதாக பகிரங்கமாகத் தெரிவித்த அவர், தொடர்ந்தும் அரசின் செயற்பாட்டிற்கு மெளனப் பங்காளியாக இருந்து நமது மக்களின் அடிப்படை அரசியல் ஜனநாயக உரிமையை அரசாங்கம் மீறுவதற்கு அனுமதித்து, அரசியல் அதியுயர் பீடத்தின் முடிவினை உதாசீனப்படுத்தியமை.
Ts.
一て「、、。
தாய்லாந்துப் பேச்சு வார்த்தைக்கு முன்பு முஸ்லிம்கள் \ தொடர்பான முடிவினை பிரதமர் அறிவித்தேயாக வேண்டும் என்று கிண்ணியாவில் பகிரங்கமாக முழங்கிவிட்டு எதுவித உத்தரவாதங்களும் இல்லாமல் பேச்சு வார்த்தையில் கலந்து っエ一下 ー一丁 "سسسسسسع| 29 தாய்லாந்தில் முதலாவது, இரண்டாவது சுற்றுப் பேச்சுக்களின்
போது அதற்கான நிகழ்ச்சி நிரல் ஏற்கனவே தெரிந்திருந்தும் அது தொடர்பாக உயர்பீடத்தின் அல்லது பாராளுமன்ற உறுப் பினர் களின் ஆலோசனைகள் பெறப்படாமல் பேச்சுவார்த்தைகளில் கலந்து கொண்டு, செயலனிக்குழு(JTF) உபகுழு தொடர்பான விடயங்களில் முஸ்லிம்களுக்கென ஒன்றை தனித்து பெற முயற்சிக்காது, முஸ்லிம்களினதும் கட்சியினதும் அபிலாஷைகளுக்கு மாற்றமாக தொழிற்பட்டமை.
30 அரசியல் அதியுயர் பீடத்தினால் எடுக்கப்பட்ட முடிவுகளை நடைமுறைப் படுத்தாமல், குறிப்பாக வெளிநாட்டு தூதுவர்களாக நியமிக்கப்படுபவர் தெரிவில் அதியுயர் பீடம் தீர்மானித்த நபர்களுக்கு அப் பதவிகளை வழங்காது, அதற்கு மாற்றமானவர்களை சிபாரிசு செய்ததுடன், குறிப்பாக அதியுயர் பீடத்தில் தீர்மானிக்கப்பட்ட மசூர் மெளலானா அவர்களுக்கு தூதுவர் பதவி கிடைக்காமல் செய்தமை.
7

Page 6
31 கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த நமது கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர் பதவி வழங்கப்பட வேண்டுமென்று அதியுயர் பீடம் ஏகமனதாகத் தீர்மானித்திருந்தும், இதனை நிறைவேற்றுவதாக தலைவர் பரிபூரணமாகப் பொறுப்பெடுத்திருந்தும், இதனை நிறைவேற்றத் தவறியமை.
32 19வது திருத்தச் சட்டம் முஸ்லிம் மக்களின் அடிப்படை அரசியல் நலன்களை மிக மோசமாகப் பாதிப்பதற்கான சட்டவலுவைக் கொண்டிருந்த போதும், முஸ்லிம் காங்கிரஸின் பலமும் இதனால் குறைந்து போகின்ற நிலை இருந்த போதும், அத் திருத்தச் சட்டத் தினைக் கொண்டு வருவதற்கு அமைச்சரவையில் ஆதரவு தெரிவித்தமை.
33 மாவனல்லை கலவரச் சம்பவத்தின் பின்பும், மூதூர், ஓட்டமாவடி, வாழைச்சேனை, மாளிகாவத்தை எனக் கலவரங்கள் தொடந்த போதிலும், இவை தொடர்பாக தகுந்த அரசியல் அழுத்தத்தையோ, இவைகளுக்கான உண்மை நிலைகளைக் கண்டறிவதற்கான முயற்சிகளையோ எடுக்கத் தவறியதுடன், பாதிக்கப்பட்ட நமது மக்களுக்கு உரிய இழப்பீடுகளைப் பெற்றுத்தரவும் முன்வராமை.
34 மக்களுக்கு உண்மை நிலையினை சொல்லாமல், குர்ஆன் ஹதீஸஸுக்கு மாற்றமாக சந்தர்ப்பத்திற்கேற்றவாறு பொய்களைக் கூறி சூழ்நிலையைத் தமக்குச் சாதகமாக கையாண்டமை.
35 பாராளுமன்றத் தேர்தல் நியமன காலகட்டத்தில், மேல்மாகாண சபைக்கு நமது பிரதிநிதி ஒருவரை நியமிப்பதற்கு அரசினால் (ஐ.தே.மு) வழங்கப்பட்ட வாக்குறுதியினை நிறைவேற்றாமை,
36 மட்டக்களப்பு மாவட்டத்தில் ஜனாப் பவரீர் சேகுதாவூத் அவர்களின் முறைகேடுகளும் ஒழுங்கீனங்களும் பற்றி விசாரித்து ஒழுக்காற்று நடவடிக்கையினை மேற்கொள்வதற்கு கட்சித் தலைவர் அவர்களால் ஒரு குழு நியமிக்கப்பட்டு, அக்குழுவில் கட்சியின் பொதுச் செயலாளர் டாக்டர் ஹப்ரத், மூத்த பிரதித் தலைவர் டாக்டர் உதுமாலெப்பை, கட்சியின் அதியுயர் பீட உறுப் பினர் மசூர் மெளலானா ஆகியோர் அங்கம்
8
 

வகித்திருந்தனர். அக்குழு மட்டக்களப்பு மாவட்டத்திற்குச் சென்று நேரடியான விசாரணையை மேற்கொண்டு சேகு தாவூத் மீதான குற்றச் சாட்டுக்களை நிரூபணம் செய்து அவைகளை அறிக்கை வடிவில் தலைவருக்கு சமர்ப்பித்தது. சமர்ப்பிக்கப்பட்ட அவ்
அறிக்கையை தலைமைத்துவம் உதாசீனம் செய்து, தவறான
நபர்களை தொடர்ந்தும் ஊக்குவிப்பதற்கு காலாக இருந்தமை.
37 பகிஷ்கரிப்பில் ஈடுபட்ட பாராளுமன்ற உறுப்பினர்களைச் சந்தித்து, கட்சித் தலைமையோடு சுமூக நிலைக்குக் கொண்டு வருவதற்காகக் குழுவொன்று உயர்பீடத்தினால் நியமிக்
கப் பட்டது. அக் குழு, உறுப் பினர்களைச் சந்தித்து
நடவடிக்கைகளை மேற்கொள்ள எத்தனித்தபோது, இக்குழுவின் மூலமாக தனது குட்டுக்கள் அம்பலமாகப் போகிறது என நினைத்து அதற்கிடையில் பாராளுமன்ற உறுப்பினர்களை எப்படியாயினும் தனித்தனியே வாக்குறுதிகளைக் கொடுத்து கட்டுவதன் மூலம் தனது குட்டுக்கள் அம்பலமாவதைத் தடுத்துக் கொள்ளலாம் என எண்ணி, அக்குழுவை பாராளுமன்ற உறுப்பினர்களை சந்திக்க வேண்டாம் என்று தடுத்தமை.
இங்கு முன்வைக்கப்பட்டிருக்கும் குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில், இக்குற்றங்கள் உண்மைக்கு புறம்பானவையா, அல்லது ஹக்கீமின் தலைமைக்கு எதிரானவையாக என்பதை மக்கள் கருத்தில் கொண்டு, முஸ்லிம் மக்களாகிய நமது எதிர்காலம் எப்படி இருக்கும் என்பதை தீர்மானிக்கும் பொறுப்பை, நாம் போராளிகளாகிய உங்களிடமே விடுகின்றோம்.
66)6m)6OTL).
என்றும் மக்கள் பணியில் உறுதியுடனும், உண்மையுடனும் உழைக்கும்
ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அதியுயர்பீட உறுப்பினர்கள்.

Page 7