கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: முஸ்லிம்களின் அரசியல் அபிலாஷைகளும் மாற்று அரசியல் சிந்தனைக்கான தேவையும்

Page 1


Page 2

அரசியல் விழிப்பூட்டலுக்கான வெளியீடு - 01
முஸ்லிம்களின் அரசியல் அபிலாசைகளும் மாற்று அரசியல் சிந்தனைக்கான தேவையும்
முஸ்லிம் மக்கள் செயலனி
இல, 20, இனிசியம் வீதி, தெஹிவளை. E-mail: mpaf slG)yahoo.com

Page 3

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்
உங்களுடன் சில வார்த்தைகள்
அன்பார்ந்த முஸ்லிம்களே! அஸ்ஸலாமு அலைக்கும்
மக்களைப் பிரதிநிதித்துவம் செய்ய வேண்டிய அரசாங்கமோ அல்லது அரசியல் கட்சிகளோ தமது பொறுப்பினை சரி வர நிறைவேற்றத் தவறும்போது, சிவில் சமூகம் (Civil Society) விழித்துக் கொள்கின்றது. தனது பொறுப்பினை உணர்ந்து செயலாற்றத் தொடங்குகின்றது. ஆரம்பக் கட்டத்தில் அங்குமிங்குமாக உணர்ச்சிக் கொந்தளிப்பில் வெளிப்படும் சிவில் சமூக செயற்பாடுகள், நாளடைவில் ஒன்றிணைக்கப்பட்டு செயல் வடிவம் பெறுகின்றன. மக்களை அரசியல் விழிப்புணர்வூட்டி, பொது இலக்கு நோக்கி நெருக்கமாக இணைத்து செயலில் ஈடுபடுத்துகின்றன.
ஆயுத பலத்தினால் தூக்கியெறிய முடியாத மக்கள் விரோத அரசாங்கங்கள் சிவில் சமூகச் செயற்பாடுகளால் தூக்கியெறியப்படுகின்றன. மக்களுக்குப் பயன்படாத அரசியல் தலைமைகளையும் அரசியல் கட்சிகளையும் சிவில் சமூக எழுச்சியின் காரணமாக வீட்டுக்கு அனுப்பி வைக்கும் நிகழ்வுகள் உலகெங்கும் நடைபெற்று வருகின்றன.
தற்போது நமது அரசியல் சூழலும் கூட சிவில் சமூகத்தின் தீவிர செயற்பாட்டினை வேண்டி நிற்கின்றது. நமது மக்கள் மத்தியில் செயற்படுகின்ற சமூக, சமய,
பண்பாட்டு, கலாசார நிறுவனங்கள் அனைத்தும் தமது பங்களிப்புக்களை ஆற்றவும்
03

Page 4
பல்வேறு வழிகளில் செயற்படவும் புதிய அரசியல் சிந்தனைகளையும் அரசியல் வடிவங்களையும் உருவாக்கவும் இப்போது நேரம் நெருங்கி விட்டது.
இக்கட்டத்தில் சிவில் சமூகத்தின் பாத்திரமும் அதன் அரசியல் முக்கியத்துவமும் முதலில் நமது மக்களுக்குத் தெளிவாக்கப்படல் வேண்டும். இதன் ஒரு பகுதியாகவே முஸ்லிம் மக்கள் செயலணி கடந்த கால அனுபவங்களை உள்வாங்கி தன் செயற்பாட்டைத் தொடக்கி வைக் கின்றது. மக்களை புதிய அரசியல் சிந்தனைகளுக்கும் செயற்பாடுகளுக்கும் தயார் செய்யும் தன் வேலைத்திட்டத்தின் முதலாவது வெளிப்பாடாக இச் சிறு கையேட்டின் ஊடாக மக்களுடன் உரையாடுகின்றது. நமது மக்களின் பலத்துடனும் இறைவனின் உதவியுடனும் நமது செயற்பாடுகள் இன்ஷா அல்லாஹ் பல்வேறு தளங்களிலும் தொடர்ந்து நடைபெறும்.
முக்கியமான அரசியல் வர்லாற்று மாற்றங்களை ஏற்படுத்துவதில் சிவில் சமூகச் செயற்பாடுகள் பிரதானமான பாத்திரத்தை ஆற்றுகின்றன. இவ்வாறான சிவில் சமூகச் செயற்பாடுகள் தாக்கமாக அமைந்து உரிய இலக்குகளை அடைய வேண்டும் எனின் இச் செயற்பாடுகள் அமைப்பு ரீதியில் திட்டமிடப்பட்டும் ஒன்றிணைக்கப்பட்டும் மேற்கொள்ளப்படல் வேண்டும். இதன் மூலம் மேற்படி சிவில் சமூக செயற்பாடுகளை வீரியமாக முன்னெடுப்பதற்கு அவசியமான சிந்தனை மற்றும் செயற்பாட்டுக்கு களம் அமைக்கப்பட வேண்டும்.
முஸ்லிம் மக்கள் செயலனி.
இல, 20 இனிசியம் வீதி
தெஹிவளை. 15.LDITF, 2004
E-mail: mpaf slQyahoo.com
04

1.
முக்கியத்துவம் மிக்க ஏப்ரல் 2004 பொதுத் தேர்தல்
இலங்கையின் சகல சமூகங்களின் எதிர்காலத்தையும் நிர்ணயிக்கக் கூடிய ஒரு பொதுத் தேர்தலை ஏப்ரல் 02 இல் சந்திக்கவுள்ளோம். இத் தேர்தலை நமது மக்களின் அபிலாசைகளை வென்றெடுக்கும் விதத்தில் பயன்படுத்த வேண்டிய கட்டாயத்தில் நாம் உள்ளோம். இந் நோக்கத்தை அடைவதற்காக சிவில் சமூகத்தின் செயற்பாடுகள் ஒழுங்கமைக்கப்பட வேண்டியுள்ளது. அதற்கு முன்னோடியாக பல்வேறு விடயங்கள் குறித்தும் இத்தேர்தலின் முக்கியத்துவம் குறித்தும் முதலில் தெளிவினைப் பெறுவோம்.
நிர்ணயிக்கப்பட்ட கால ஒழுங்கினை மீறி அடிக்கடி பொதுத் தேர்தல்கள் நடைபெறுகின்றன. இது இலங்கையின் அரசியல் ஸ்திரத்தன்மை நெருக்கடிக்குள் இருப்பதைக் காட்டுகின்றது. இருந்தபோதிலும் தற்போதைய தேர்தல் எல்லா சமூகங்களுக்கும் முக்கியத்துவமுடையதாக அமைந்துள்ளது. சர்வதேச பிராந்திய அரசுகளும் இத் தேர்தலின் முடிவுகளை உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டிருக்கின்றன. உள்நாட்டில் அரசியல் கட்சிகளுக்கு இடையில் புதியவகை அரசியல் கூட்டுக்கள் இடம்பெற்றுள்ளன.
தேர்தல் முடிவுகளும் அதன் பின்னான விளைவுகளும் நாட்டின் மீதும் சமூகங்கள் மீதும் நீண்டகால தாக்கத்தினை ஏற்படுத்தும் என்பது அனைவராலும் உணரப்படுகின்றது. விடுதலைப் புலிகள் நேரடியாக இத் தேர்தலில் செல்வாக்கைச் செலுத்துகின்றார்கள். தமிழ் மக்கள் அனைவரையும் கொள்கைக்கு மாத்திரம் வாக்களிக்குமாறு கோரும் நிலைப்பாட்டினை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எடுத்துள்ளது.
O5

Page 5
இதுவரை நடைபெற்ற பொதுத் தேர்தல்கள் ஆட்சியை யார் கைப்பற்றுவது என்பதை மாத்திரம் இலக்காகக் கொண்டிருந்தன. இத் தேர்தலைப் பொறுத்தவரையில் ஆட்சியமைப்போர் யார் என்பதை விடவும். தேசிய இனப்பிரச்சனையை யார் எப்படித் தீர்க்கப் போகின்றனர் என்பதே மையப் பொருளாக அமைகின்றது. தேசிய இனப்பிரச்சினைத் தீர்வில் முஸ்லிம்களாகிய நாம் பிரிக்க முடியாத அங்கமாக அமைகின்றோம் என்ற வகையில் நமக்கும் இத் தேர்தல் மிக முக்கியத்துவம் உடையதாகின்றது.
1994, 2000ம் ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தல்களில் பேரம் பேசும் சக்தியாகவும் ஆட்சியினைத் தீர்மானிப்போராகவும் நாம் இருந்துள்ளோம். 2001ம் ஆண்டு திடீர் ஆட்சி மாற்றம் ஏற்படுவதற்கும் நாம் காரணமாக இருந்திருக்கிறோம். இந்த அரசியல் பலத்தினை தற்போது இழந்து வருகின்றோம். இதற்கான முழுப் பொறுப்பினையும் முஸ்லிம் அரசியல் தலைமைகளே ஏற்றுக் கொள்ள வேண்டும்.
நாம் கொண்டிருந்த அரசியல் பலத்தினை மீளப்பெறுவதற்கான வழிமுறைகள் பற்றி தீவிரமாக சிந்திக்க வேண்டியுள்ளது. நமது 15 வருடகால தனித்துவமான முஸ்லிம் தேசிய அரசியல் செயற்பாடுகள் உள்நாட்டிலும் ஓரளவிற்கு சர்வதேச அளவிலும் முஸ்லிம்களுக்கு அரசியல் அந்தஸ்த்தினைப் பெற்றுத் தந்துள்ளது. இந்த 15 வருடகால அரசியல் அனுபவத்தின் அடிப்படையில், இத் தேர்தலை எப்படிப் பயன்படுத்தப் போகின்றோம் என்பதை உணர்ந்து சரியான முடிவுகளை எடுக்க வேண்டிய கட்டத்தை நமது மக்கள் அடைந்துள்ளனர்.
புரிந்துணர்வு உடன்படிக்கை, யுத்தநிறுத்தம் என்பவற்றிற்குப் பின்னர் கடந்த இரண்டு வருட காலத்தில் நாம் மோசமான பாதிப்புக்களையும் இழப்புக்களையும் சந்தித்துள்ளோம். அரசியல் அவமானங்களுக்கு ஆளாக்கப்பட்டுள்ளோம். இவை யாவும் நமது மக்கள் மத்தியில் தீவிர அரசியல் விழிப்புணர்வு ஏற்படவும் எழுச்சிகள் வெடிக்கவும் வழிவகுத்தன. நமது தேசிய மீள் எழுச்சியின் உண்மையான தாக்கம் இத்தேர்தலில் வெளிப்படவுள்ளது.
அந்தவகையில், புதிய அரசியல் சூழலில், நமது மக்களின் தேசியத் தனித்துவத்தையும் தேசிய உரிமைகளையும் தெளிவாகப் பிரகடனப்படுத்தக் கூடிய முதலாவது தேர்தலாக இது அமைகின்றது. பிரதானமாக, கடந்த வருடம் ஜனவரி 29 இல் ஒலுவிலில் மேற்கொள்ளப்பட்ட முஸ்லிம் தேசப் பிரகடனத்தின் அரசியல் இலக்குகளை உணர்ச்சிபூர்வமாக வெளிப்படுத்த வேண்டிய ஒரு தேர்தலாகவும் வரவிருக்கும் பொதுத் தேர்தல் விளங்குகின்றது.
06

உள்நாட்டிலும் சர்வதேச அளவிலும். முக்கியத்துவம் பெற்றுள்ள இப் பொதுத் தேர்தலை தெளிவான புரிதலுடனும் வலிமையான ஐக்கியத்துடனும் எதிர்கொள்ள வேண்டிய மகத்தான வரலாற்றுப் பொறுப்பு வடக்கு கிழக்கு முஸ்லிம்களாகிய நம் அனைவரிடமும் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இப் பொறுப்பை நாம் சரியாக நிறைவேற்றுவதற்கு இன்று நம் மத்தியில் உருவாகியுள்ள அரசியல் யதார்த்த நிலை பற்றிய மதிப்பீடு நமக்கு அவசியமாகின்றது.
முஸ்லிம் அரசியல் தலைமைகளின் தவறான போக்குகள்
முதலில் நமது அரசியல் தலைமைகளினதும் அரசியல்வாதிகளினதும் நிலைப்பாடுகளை நாம் மதிப்பிட வேண்டியுள்ளது. இவர்கள் மத்தியில் ஆழமான பிளவுகளும் சில புதிய கூட்டுகளும் இடம் பெற்றிருக்கின்றன. இவர்கள் அனைவரையும் ஒரே அணியில் இணைப்பதற்காக, நமது சமூகத் தலைவர்களும் உலமாக்களும் மேற்கொண்ட முயற்சிகள் எதிர்பார்த்த விளைவினைத் தரவில்லை. சில இடங்களில் நமது அரசியல்வாதிகளை ஒரனியில் இணைக்க முடிந்த போதிலும், வேறு சில இடங்களில் இது சாத்தியப்படவில்லை.
இதற்குப் பல காரணங்கள் உள்ளன.
1. நமது அரசியல் தலைமைகளுக்கு இடையில் நிலவும் கொள்கை
வேறுபாடுகள்.
2. அவர்களின் மாறுபட்ட அரசியல் போக்குகள்.
3. அதிகாரப் போட்டிகள்
4. தமது வெற்றியை மாத்திரம் உறுதிப்படுத்திக் கொள்வதிலுள்ள தீவிர
சுயநலம்.
5. ரொக்கப்பணப் பரிமாற்றம்.
6. வருமானம் தரும் நிறுவனங்களில் பங்குதாரர்களாக மாறுவது.
போன்ற பல்வேறுபட்ட அம்சங்கள் இவர்களுக்கிடையிலான பிளவிற்கும் இணைவிற்கும் காரணங்களாக அமைந்துள்ளன.
தேர்தல் வெற்றிகளை மாத்திரம் நோக்காகக் கொண்டு இடம் பெற்றுள்ள இத்தகைய கூட்டின் மூலமாகவோ அல்லது இவர்களுக்கிடையிலான பிளவுகளினாலோ நமது
O7

Page 6
பிரதான தேசிய இயக்கப் போக்கில் பாரிய முன்னேற்றங்களோ அல்லது பின்னடைவுகளோ ஏற்படப் போவதில்லை என்ற உண்மையை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
பொதுத் தேர்தல் காலங்களிலும் அரசியல் கொந்தளிப்பும் அரசியல் மாற்றங்களும் இடம் பெறக் கூடிய காலங்களிலும், சிவில் சமூகச் செயற்பாடுகளின் அவசியம் குறித்த புரிதல் நம் மத்தியில் குறைவாகவே இருந்து வந்துள்ளது. இந்தப் போக்கு கடந்த இருவருட காலங்களில் ஓரளவு மாற்றம் கண்டு வருகின்றது. இது வரவேற்கத்தக்க மாற்றம் என்றாலும் இன்னும் சில பற்றாக் குறைகள் காணப்படுகின்றன.
1. தொடர்ச்சியான செயற்பாடின்மை.
2. நீண்டகாலத் திட்டமிடல் இன்மை.
S. அடையப்பட்ட முன்னேற்றங்கள் திடப்படுத்தப்பட்டு கட்டங் கட்டமாக
அடுத்த படிக்கு எடுத்துச் செல்லப்படாமை.
4. சிவில் சக்திகளின் அர்ப்பணிப்புடனான பங்களிப்புகள் போதாமை.
போன்ற குறைபாடுகள் அண்மைக்காலமாக அடையாளங் காணப்பட்டுள்ளன. இக்குறைபாடுகளை கடந்து செல்வதற்கு நம் அனைவருக்கும் மாற்று அரசியல் சிந்தனைகளும் செயற்பாட்டு வடிவங்களும் தேவைப்படுகின்றன. இந்த அனுபவத்தின் வெளிப்பாடாகவே சிவில் சமூகச் செயற்பாடுகளை முறைப்படுத்தி தீவிரப்படுத்த வேண்டியுள்ளது.
சிவில் சமூகத்தின் செயற்பாடுகளை ஆக்கபூர்வமாக முன்னெடுப்பதற்கு நமது
சமூகத்தினை நேரடியாகவும் மறைமுகமாகவும் பாதிக்கின்ற அக புறப் பிரச்சினைகளை நாம் முதலில் அடையாளங்காண வேண்டியுள்ளோம்.
08

2.
முஸ்லிம்களுக்கு வெளி நெருக்கடிகளால்
ஏற்படுகின்ற பிரச்சினைகள்
அரசியல் அதிகாரம் இன்மை:
வடக்கு கிழக்கில் உறுதியான அரசியல் இருப்பினையும் சமூக இருப்பினையும் கொண்டுள்ள நமது மக்களுக்கும் அவர்களின் பிரதிநிதிகளுக்கும் சமத்துவமான அரசியல் அதிகாரங்களும் நிர்வாக அதிகாரங்களும் மறுக்கப்பட்டுள்ளன. இந்த மறுப் பின் விளைவாக நமக்கான வளங்கள் உரிய முறையில் உறுதிப்படுத்தப்படவில்லை.
கிழக்கிலுள்ள இரண்டு மாவட்டங்களில் நாம் பெரும்பான்மையாக உள்ளோம். கணிசமான நாடாளுமன்ற உறுப்பினர்களையும் கொண்டிருக்கின்றோம். ஆயினும், யதார்த்தத்தில் நம்மிடம் அரசியல் அதிகாரம் இல்லாத நிலையே காணப்படுகின்றது. உதாரணமாக மாவட்ட மட்டத்தில் தீர்மானம் எடுக்கும் அதிகாரமுடைய மாவட்ட அரச அதிபர் பொறுப்பில் ஒரு முஸ்லிமையேனும் அம்பாறையிலோ திருகோணமலையிலோ அமர்த்த முடியவில்லை. சட்டம் ஒழுங்குகளுக்குப் பொறுப்பான துறைகளில் முஸ்லிம்கள் முக்கிய பொறுப்புகளுக்கு நியமிக்கப்படுவதில்லை. நியாயமான காரணங்கள் இருந்தும் கரையோர நிர்வாக மாவட்டத்தை உருவாக்க முடியவில்லை. உண்மையான அரசியல் அதிகாரம் நமது கைகளில் இருக்கும் எனின் நிர்வாகத் துறையில் இப்படியான பாகுபாடுகள் இருக்கமுடியாது. எனவே ஒரு சில அமைச்சுப் பதவிகளையும் பிரதி அமைச்சுப் பதவிகளையும் வைத்துக் கொண்டு அரசியல் அதிகாரம் நம்மிடம் உள்ளதாகக் கருதுவது அரசியல்அப்பாவித்தனமாகும்.
09

Page 7
வள ஒதுக்கீடுகளில் பாகுபாடுகளும் பாரபட்சங்களும் :
வடக்கு கிழக்கிலுள்ள ஒவ்வொரு மாவட்டத்தில் வாழும் முஸ்லிம்களின் சனத்தொகை விகிதாசாரத்திற்கு ஏற்ப, குடியிருப்புக் காணிகளும் பயிர்ச்செய்கை நிலங்களும் மேய்ச்சல் தரைகளும் ஒதுக்கப்படாத குறைபாடு நீண்டகாலமாக நிலவுகின்றது. முதலில் அரசின் திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்கள் காரணமாகவும். பின்னர் புலிகளது மேலாதிக்கம் காரணமாகவும் நமது உரிமைகளும், வளங்களும் பறிக்கப்பட்டு வந்துள்ளன. கட்டுப்பாட்டுப் பிரதேசங்கள் என்ற பெயரில் காணி, கடல், காட்டு வளங்கள் என்பன நம்மிடம் இருந்து இருதரப்பினராலும் பறிக்கப்பட்டுள்ளன.
எனவே நியாயமான வீதத்தில் காணி, கடல் வளங்களின் மீள் விநியோகம் நடைபெற வேண்டும் என்பது நமது உறுதியான கோரிக்கையாக இருக்க வேண்டும். ஏற்கனவே நிதி கல்வி பாதைகள் திறப்பு, புனர்வாழ்வு, புனரமைப்பு வேலை வாய்ப்பு போன்ற விடயங்களில் வடக்கு கிழக்கிலுள்ள முஸ்லிம்களுக்கு பாரிய அளவில் பாரபட்சங்களும், அநீதியும் இழைக்கப்பட்டு வருகின்றன. இந்த விபரங்கள் அண்மைக்காலமாக சில முஸ்லிம் அமைப்புகளால் புள்ளி விபரரீதியாக அம்பலப்படுத்தப்பட்டு வருகின்றன.
முஸ்லிம்களுக்குப் பாதுகாப்பு இன்மை:
இலங்கை முஸ்லிம்களுக்கும் - குறிப்பாக வடக்கு கிழக்கு முஸ்லிம்களுக்கும் ஏற்பட்டுள்ள பாதுகாப்புப் பிரச்சினைகள் மற்றும் பாதிப்புகள் குறித்து கரிசனை கொள்ள இலங்கை அரசாங்கமும் சர்வதேச சமூகமும் முற்றாகத் தவறியுள்ளன. இதன் காரணமாக இப்பிரச்சினை அன்றாடம் தொடர்ந்தும் நமது மக்களைப் பாதித்து வருகின்றது. சட்ட ஏற்பாடுகளாலும் பாதிப்புகள் ஏற்படுகின்றன. ஆயுத ரீதியான அடக்குமுறைகள் நம்மைச் சூழ உள்ளன. இப்பாதிப்புகள் அரசாங்கம், விடுதலைப் புலிகள் என்ற இரு முனைகளில் இருந்தும் நம்மை நசுக்குகின்றன. இரு தரப்பிடம் மாத்திரம் ஆயுதங்கள் உள்ளமை நம் மீதான பாதுகாப்பு நெருக்கடிகளை மேலும் கடுமையாக்குகின்றது.
இந்தப் பாதிப்புக்களை நாம் ஓரளவிற்கேனும் ஈடுசெய்வதற்கு நம் மத்தியில் அரசியல் ஒருமைப்பாடு, தீவிர வெகுஜனப் போராட்டங்கள் என்பன அவசியமாகும். நமது பிரச்சினைகள் உடனுக்குடன் சர்வதேசமயப்படுத்தப்படல் வேண்டும். முஸ்லிம்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகள் இழப்புகள் பற்றிய ஆதாரங்கள் அணி மைக் காலங்களில் முஸ்லிம் ஊடகங்களில் விலா வாரியாக வெளியிடப்பட்டுள்ளன. இவற்றை நாம் முறைப்படுத்திப் பயன்படுத்த வேண்டும்.
1O

சுதந்தர நடமாட்ட உரிமை மற்றும் தொழில் செய்யும் உரிமை மறுக்கப்பட்டுள்ளமை:
இதனால் ஏற்படும் நேரடி மறைமுகப் பாதிப்புகள், குறிப்பிட்ட சில பிரதேச முஸ்லிம்களைப் பொறுத்தவரையில் மிகவும் பாரதுாரமானவை. ஏற்கனவே வாய்ப்புகள் வளங்கள் மறுக்கப்பட்டமையினால் பாதிப்புக்குள்ளான நமது மக்களின் மீது புலிகளால் மேற்கொள்ளப்பட்டு வரும் கப்பம், வரி வசூல், பறிமுதல், மறைமுக பொருளாதாரத் தடைகள் ஆகியன இயல்பு வாழ்க்கையை சகிக்க முடியாத அளவிற்கு முடக்கி வைத்துள்ளன. சமூக, பொருளாதார அபிவிருத்தி செயற்பாடுகள் பாரியளவு தடைப்பட்டுள்ளன. கடல் வளம், காட்டுவளம் போன்றவற்றில் பெரும்பகுதி நம்மக்களிடம் இருந்து பறிக்கப்பட்டுள்ளன.
இதன் மூலமாக ஒரு சமூகத்தின் இயல்பான வளர்ச்சி தடுக்கப்படுகின்றது. தற்போது இடைக்கால தன்னாட்சி அதிகாரம் என்ற பெயரில் (முடிக்குரிய காணிகள் என்று கூறப்படும்) பொதுக்காணிகள் அனைத்தையும் விடுதலைப் புலிகள் தம்வசப்படுத்தும் நீண்டகாலத் திட்டம் வெளிப்பட்டுள்ளது.
மீளத் திரும்பும் உரிமை (Right to return) மறுக்கப்பட்டுள்ளமை:
முஸ்லிம்கள் தமது பாரம்பரியக் கிராமங்கள் பலவற்றில் இருந்து விடுதலைப் புலிகளால் வெளியேற்றப்பட்டுள்ளனர். குறிப்பாக வடமாகாண முஸ்லிம்கள் பலவந்தமாக வெளியேற்றப்பட்டுள்ளனர். இப்பிரச்சினை அடிப்படை மனித உரிமை மீறலாகவும் இனப்பிரச்சினையின் பிரிக்க முடியாத ஒரு அம்சமாகவும் நமது அரசியல்வாதிகளால் கூட கவனத்தில் எடுக்கப்படுவதில்லை. மீளத் திரும்பும் உரிமை மறுக் கப்பட்டமையின் அரசியல் பாதிப்புக் குறித்தும் எவரும் கவலைப்படுவதாகவும் இல்லை. இது குறிப்பிட்ட சமூகத்தின் சனச் செறிவு, அதன் பிரதிநிதித்துவம் என்பவற்றைப் பாதிக்கின்றது.
சொந்தப் பாதுகாப்புக்களை உத்தரவாதம் செய்து கொள்ளல், ஒன்று திரண்டு தமது அபிலாசைகளை வெளிப்படுத்தல், இழப்பீடுகளைப் பெற்றுக்கொள்ளல் போன்ற விடயங்களையும் இது பாதிக்கின்றது. இவ்விடயத்தில் சர்வதேச சமூகத்தின் கவனத்தையும் மனிதஉரிமை அமைப்புக்களின் கவனத்தையும் ஈர்க்கும் பணிகள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்படல் வேண்டும்.
11

Page 8
அந்நிய சக்திகளின் தலையீடுகள்:
அண்மைக்காலமாக நமது நாட்டு உள்விவகாரங்களில் - குறிப்பாக அமெரிக்க இந்திய ஆதிக்க சக்திகளின் தலையீடுகள் அதிகரித்து வருகின்றன. இதைத்தவிர பல்வேறு அரசுகள் நமது நலன்களை உறுதிப்படுத்திக் கொள்ளப் போட்டிபோடும் களமாக இலங்கையின் தேசிய இன நெருக்கடி மாறியுள்ளது. பல்வேறு அந்நியத் தலையீடுகளும் அதிகரித்து வருவதன் காணரமாக தீர்வு முயற்சிகள் தொடர்ந்தும் தாமதமடைவது இனப் பிரச்சனையை மேலும் சிக்கலானதாக்குகின்றது.
இந்த ஆதிக்கப் போட்டா போட்டிக்குள் சம்பந்தப்படும் அரசுகளுடன் நமது முஸ்லிம் தலைமைகள் ஒரு தெளிவான நிகழ்ச்சி நிரல் இன்றி, நெருக்கங்களை வளர்த்துக் கொள்வது கடைசியில் நமது மக்களுக்குப் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தும். இப்படியான உறவுகளை ஏற்படுத்தும்போது, நமது முஸ்லிம் அரசியல் தலைமைகள் சொந்த மக்களுடன் திறந்த தன்மையைப் பேண மறுப்பது ஒரு பாரதூரமான தவறாகும்.
12

வடக்கு - கிழக்கு முஸ்லிம்கள் தம்மளவில்
கொண்டுள்ள பிரச்சினைகள்
பூரணத்துவமான இஸ்லாமிய வாழ்க்கை முறை பற்றிய தெளிவின்மை:
நமது தேசியக் கட்சியாகத் தோற்றம் பெற்ற முஸ்லிம் கொங்கிரஸ் குர்ஆன், ஹதீஸ் வழிகாட்டலில் செயற்படுவதாகவே தனது அரசியல் வேலைத்திட்டத்தை ஆரம்பித்தது. மக்களின் பரந்தளவு ஆதரவினையும் பெற்றுக் கொண்டது. எனினும், விரைவில் இந்தப் பாதையை விட்டு மீட்டெடுக்க முடியாத அளவிற்கு இக்கட்சி விலகிச் சென்றுவிட்டது.
இஸ்லாம் நமது வாழ்க்கைக்கான பூரண வழிகாட்டி என்பதை நாம் இன்னும் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை. மத அனுஷ்டானங்களாக மாத்திரமே இஸ்லாமிய வாழ்வுமுறையைக் குறுக்கிக் கொண்டுள்ளோம். இதன் பாதிப்பு நமது சமூக வாழ்விலும் அரசியல் மற்றும் பொருளாதாரச் செயற்பாடுகளிலும் வெளிப்படையாகவே தெரிகிறது. இஸ்லாமிய சமத்துவம், சகோதரத்துவம் சிதைந்து சின்னாபின்னமாகிக் கிடப்பதும், சீதன முறை போன்றவை நமது வாழ்வின் விழுமியங்களை அரித்துக் கொண்டிருப்பதும் இஸ்லாமிய வாழ்வுமுறை பற்றிய தெளிவின்மையினால் ஆகும்.
நாம் வாழும் சூழல் நம்மைச் சூழ்ந்து ஆட்டிப்படைக்கும் ஆட்சி முறை, நமது மக்களின் அன்றாட சமூக, பொருளாதார செயற்பாடுகள் என்பன இஸ்லாமிய வாழ்வுமுறைக்கு மாறுபட்டுக் காணப்படுகின்றன. அவற்றின் தாக்கம் நமது மக்களைக் கடுமையாகப் பாதித்து வருகின்றது. சிந்தனைக் குழப்பங்களையும் ஏற்படுத்துகின்றது.
இஸ்லாமிய வாழ்வுமுறையானது சமூக, பொருளாதார, அரசியல் தளங்களில்
13
, "فرہ : 'ا

Page 9
தெளிவாக விஸ்தரிக்கப்படாமல் உள்ளது. இதனால் பிரதேசவாதம் குழு மனப்பான்மை, தனிமனித வழிபாடு போன்ற பிற்போக்கான சிந்தனைகளும் செயற்பாடுகளும் நமது மக்களைப் பிடித்து ஆட்டுகின்றது. குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் தொடர்ச்சியாக வழிகாட்டப்படாது விடப்பட்டதனால், நமது அரசியல் தலைமைகள் தொடர்ந்தும் தவறான வழியில் செயற்படுகின்றன. சமூக, அரசியல் மற்றும் இஸ்லாமிய நிறுவனங்கள் இணைந்து தொடர்ச்சியான கூட்டுச் செயற்பாடுகளை முன்னெடுப்பதன் மூலமே நாம் இவற்றிலிருந்து மீள முடியும்.
பிரதேசவாதம் மற்றும் குழு மனப்பான்மைகள். தனிநபர் வழிபாடு போன்றவற்றை அரசியல் தளத்தில் தன்னலம் கொண்ட அரசியல்வாதிகள் திட்டமிட்டு வளர்த்து வருகின்றார்கள். தமது அதிகாரங்களையும் பதவிகளையும் அனுபவிப்பதற்காக மக்கள் மத்தியில் வேறுபாடுகளைத் தூண்டி விடுகிறார்கள். இதனை முறியடிப்பதற்கு உணர்வுபூர்வமான செயற்பாடுகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட வேண்டும். சமூக, சமய, கலாசாரத் தளங்களில் இவற்றை மேற்கொள்வதன் ஊடாக இஸ்லாமிய விழுமியங்களை மீள் எழுச்சி பெறச் செய்ய வேண்டும்.
வலுவான சிவில் அமைப்புகளைக் கொண்டிராமை :
செழிப்பான ஜனநாயக முறையை உறுதிப்படுத்தவும், மக்கள் அரசியல் விழிப்புணர்வு பெறவும் சிவில் அமைப்புகளின் செயற்பாடு அத்தியாவசியமாகும். பிரதிநிதித்துவ முறையில் வெறுமனே தனிநபர்களைத் தெரிந்தெடுத்து அனுப்பி வைத்துவிட்டு மக்கள் செயலற்று, தமது பிரதிநிதிகளை மட்டும் நம்பியிருக்கும் முறை தோல்வியடைந்து விட்டது. அரசியல் தலைமைகளையும் பிரதிநிதிகளையும் கண்காணிக்கவும் நெறிப்படுத்தவும் வேண்டிய அவசியம் எழுந்துள்ளது.
நமது மக்கள் மத்தியில் சிவில் சமூகத்தின் செயற்பாடுகள் குறித்த அறிவும் அறிமுகமும் நீண்டகாலமாக பயன்பாட்டில் இல்லை. இதன் காரணமாக மேற்படி குறைபாடுகள் நமது சூழலில் அதிகமாகவே காணப் படுகின்றன. அண்மைக்காலமாக ஆரோக்கியமான முன்னேற்றங்கள் தென்படுகின்றன. ஆயினும், திட்டமிடல், தொடர்ச்சியான செயல்பாடு, கண்காணிப்பு என்பன பேணப்படாததன் காரணமாக ஏற்பட்ட பின்னடைவுகள் நம்மை மறுபரிசீலனைக்கு இட்டுச் சென்றுள்ளது. இதில் பெற்ற படிப்பினைகளில் இருந்து அடுத்த கட்ட முன்னேற்றம் நோக்கி நகர்வதற்கான வழிமுறைகள் இனங்காணப்பட்டுள்ளன. காத்திரமாகச் செயற்படுவதெனவும் உறுதி எடுக்கப்பட்டாக வேண்டும்.
14

பலமான செய்தி ஒளடகங்கள் இன்மை:
செய்தி ஊடகங்களைப் பொறுத்தவரையில் நமது சமூகம் மற்றைய சமூகங்களுடன் ஒப்பிடுகையில் மிகவும் பின்னடைந்துள்ளமை யாவரும் அறிந்ததே. அச்சு ஊடகம் ஒன்றை மாத்திரம் நாம் நம்பியிருக்க முடியாது. அவ் அச்சு ஊடகங்கள் கூட போதிய ஆற்றல் மிக்க சக்திகளைக் கொண்டனவாக இல்லை. நமது மக்களிடம் வளங்கள் இருந்தும் இத்துறையில் வளங்களைப் பயன்படுத்துவதற்கான சிந்தனைகள் அண்மைக்காலத்தில்தான் ஏற்பட்டுள்ளன.
இலத்திரனியல் ஊடகங்கள்ை உருவாக்கி, அவற்றை இஸ்லாமியப் பாரம்பரியங்களுக்கு உட்படுத்த வேண்டும். அதேவேளை இவற்றை வர்த்தக ரீதியில் வெற்றி பெறச் செய்வதில் உள்ள கடினங்களையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும். வலுவானதும் சமூக உணர்வு மிக்கதுமான கூட்டு முயற்சி ஒன்றின் மூலமே இப்பிரச்சினைக்குத் தீர்வு காண முடியும்.
சமுக, அரசியல் செயற்பாடுகளில் ஒளக்கம் போதாமை:
நம் மத்தியில் அரசியல், சமூக விழிப்புணர்வு கொண்டவர்களுக்கு பாரிய பற்றாக்குறை நிலவுகிறது. அதேநேரம் அங்கொன்றும் இங்கொன்றுமாக மேற்கொள்ளப்படும் சிவில் சமூக செயற்பாடுகள் ஒருமுகப்படுத்தப்பட்டு முன்னெடுக்கப்படுவதில்லை. நீண்டகால நோக்கிலான திட்டமிடலும் போதாமல் உள்ளது. இதனால் வளங்களின் விரயம் போதியளவிற்கு தாக்கம் ஏற்படுத்த முடியாமை போன்ற குறைபாடுகள் தொடர்ந்தும் இருந்து வருகின்றன.
நமது சமூகம் தன்னளவில் இக்குறைபாட்டினைக் களைந்து முன்னேறுவதற்கான பிரத்தியேக முயற்சிகள் மேற்கொள்ளப்படல் வேண்டும். உதாரணமாக, முகாமைத்துவ, தலைமைத்துவ பயிற்சிப் பட்டறைகள் நடாத்தப்படுவது ஒரு பிரதான சமூகச் செயற்பாடாக இருக்க வேண்டும். துறைசார் ஆற்றல் மிக்க சக்திகளின் பற்றாக்குறையை நிவர்த்திக்க அவசியமான ஒழுங்குகள் மற்றும் வழிகாட்டல் முறைகள் பல்கலைக்கழக மட்டத்தில் இருந்து தாபிக்கப்படல் வேண்டும்.
முஸ்லிம்களின் அரசியல் பிரச்சினை சர்வதேச மயப்படுத்தப்படாமை:
நமது மக்களுக்கு கடந்த இருபது வருடகாலமாக ஏற்பட்டு வந்துள்ள உயிர் உடமை இழப்புகளை மனித உரிமை பிரச்சினையாக எடுத்துக் காட்டத் தவறியுள்ளோம். மனித உரிமைப் பிரச்சினை இன்று சர்வதேச சமூகம் மிகுந்த அக்கறையுடன் நோக்கும் ஒரு விடயமாகி விட்டது. அரசியல் தலைமைகளின்
15

Page 10
செயற்பாடின்மை, லொபி (Lobby) பண்ணுவதில் நம்மிடமுள்ள குறைபாடு ஆகியன நமது பிரச்சினைகள் சர்வதேச மயப்படுத்தப்பட முடியாமல் போனமைக்கான காரணங்களாகும்.
சர்வதேச மனித உரிமை நிறுவனங்கள் மற்றும் வெளிநாட்டு இராஜதந்திர மட்டங்களைப் பயன்படுத்துவது என்பன அதிகம் தொடப்படாத விடயங்களாகவே இருந்து வருகின்றன. குறிப்பாக நமது பிரச்சினைகள் முஸ்லிம் நாடுகளுக்கு கொண்டு செல்லப்பட்டு, அந்நாடுகள் மூலமாக இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுக்கப்படல் வேண்டும். நமது அரசியல் தலைமைஞக்கு இவ்விடயத்தில் தொடர்ச்சியான அழுத்தம் கொடுப்பதுடன், சிவில் அமைப்புகளும் இதில் ஒன்றிணைந்து செயற்படுவதற்கான வாய்ப்புக்கள் உருவாக்கப்படல் வேண்டும். தற்போது இந்த விடயங்களில் படிப்படியே முன்னேற்றம் ஏற்பட்டு வருவது நமக்கு உற்சாகத்தைத் தருகின்றது.
தேர்தல்கால உணர்வுகள்:
தேர்தல் காலங்களில் நம் மத்தியில் தோன்றுகின்ற வெவ்வேறு உணர்வுகள் குறித்தும் மதிப்பீடுகளைச் செய்ய வேண்டியுள்ளோம். இக்காலங்களில் சமூக உணர்வுடன் கூடவே தனிநபர், குடும்பம், பிரதேசம், கட்சி என்ற ரீதியில் தனிப்பட்ட விருப்புகளும் நமக்குள் மேலோங்குகின்றன. சமூக உணர்வானது முஸ்லிம்களின் தேசிய அரசியல் இயக்கத்திற்கு ஆதரவாகச் செயற்படும் அதேநேரம் தனிப்பட்ட உணர்வானது தனிநபர், குடும்பம், பிரதேசம் என்ற குறுகிய எல்லைக்குள் செயற்படுகின்றது. நன்கு ஆராய்ந்து பார்த்தால் இந்த தனிப்பட்ட உணர்வானது முக்கியமான காலகட்டங்களில் நமது சமூக உணர்வையும் தேசிய எழுச்சியினையும் பலவீனப்படுத்துகின்றது. எனவே தனிப்பட்ட உணர்வுகளை ஒதுக்கிவிட்டு, சமூக மற்றும் தேசிய உணர்வுகளுக்கு முன்னுரிமை அளிப்பது அத்தியாவசியமாகும். நமது சமூகத்தின் அரசியல் இருப்பினைத் தீர்மானிக்கும் முக்கியமான காலகட்டங்களில் சமூக, தேசிய உணர்வுகளுக்கே எப்போதும் நாம் முன்னுரிமை கொடுக்க வேண்டும்.
தென்னிலங்கை முஸ்லிம்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளும் தீர்வுகளும
எண்ணிக்கையில் தென்னிலங்கை முஸ்லிம்கள் வடக்கு கிழக்கு முஸ்லிம்களை விட அதிகமாக உள்ளனர். இந்த நாட்டின் அரசியல், பொருளாதார வளர்ச்சிக்கு தமது பங்கினை வழங்கி வருகின்றனர். இருந்தபோதிலும் அவர்களுக்கான அரசியல் உரிமைகளும் அரசியல் அதிகாரங்களும் உறுதிப்படுத்தப்படவில்லை. ஒரு சில
16

அமைச்சர்களையும் எம்பிக்களையும் பெயருக்குத் தந்துவிடுவது உண்மையான அரசியல் அதிகாரங்களை நம் மக்களுக்கு வழங்குவதாக அமையாது.
தென்னிலங்கையில் முஸ்லிம்கள் செறிவாக இருக்கும் இடங்களில் தமது வாழ்வியல் தேவைகளுக்கு ஏற்ப பிரதேசசெயலகப் பிரிவுகளையும் கிராம சேவகர் பிரிவுகளையும் உருவாக்குவதும், உள்ளூர் மட்டங்களில் அரசியல் அதிகாரங்களை நமது மக்கள் பயன்படுத்துவதும் நன்கு திட்டமிடப்பட்ட அடிப்படையில் சிங்கள ஆதிக்க சக்திகளால் தடுக்கப்பட்டு வருகின்றது. இதற்குப் பல உதாரணங்களைக் காட்ட முடியும்.
தென்னிலங்கை முஸ்லிம்கள் சிங்கள இன மேலாதிக்கப் போக்கினால் நீண்டகாலமாகப் பாதிக்கப்பட்டு வருகின்றனர். புத்தளம் தொடங்கி மாளிகாவத்தை வரையான சம்பவங்கள். நிலமைகள் மோசமடைந்து செல்வதையே காட்டுகின்றன. அணி மைக் காலங்களில் மேற் கொள்ளப் பட்ட தாக்குதல் கள் நன்கு திட்டமிடப்பட்டனவாக அமைந்துள்ளன. இது எதிர்காலத்தின் பயங்கரத்தை நமக்கு உணர்த்துகின்றது. மாறி மாறி வரும் பேரினவாத அரசுகள் முஸ்லிம்களைக் கைவிட்டு, வெறும் பார்வையாளர்களாக மாற்றியுள்ளன.
எனவே அரசியல் பேச்சுவார்த்தை மூலமாக அடையப் பெறும் நியாயமான தீர்வுகளும் அதன் பலாபலன்களும் வடக்குக் கிழக்கிலுள்ள மக்களுடன் மாத்திரம் மட்டுப்படுத்தப்படக் கூடாது. கூடவே தென்னிலங்கை முஸ்லிம்களின் அரசியல் உரிமைகளும் எய்தப்பட வேண்டும். அத்தோடு அவர்களது சமூக, பொருளாதார கலாசார உரிமைகளும் அடிப்படை, மனித உரிமைகளும் பாதுகாப்பும் உறுதிப்படுத்தப்பட வேண்டும். இந்த நோக்கத்தினை அடைவதற்கு வடக்கு கிழக்கு முஸ்லிம்களும் தென்னிலங்கை முஸ்லிம்களும் நீண்டகால வேலைத்திட்டத்தின் அடிப்படையில் அமைப்பு ரீதியில் ஒருங்கிணைந்து செயற்படுவதும் அவசியமாகும்.
வெறும் பொருளாதார வளங்கள் மாத்திரம் நமக்குப் போதாது. ஒரு சமூகத்தின் இருப்பிற்கும் அதன் முன்னேற்றத்திற்கும் அரசியல் அதிகாரம் அவசியம் என்ற விழிப்புணர்வு தென்னிலங்கை முஸ்லிம்கள் மத்தியில் ஏற்படுத்தப்படல் வேண்டும். அங்கு சிதறுண்டநிலையில் சமூக அக்கறையோடு இயங்குபவர்களை இவ்வாறான பொது இலக்குகளை நோக்கி ஒன்றிணைப்பது இப்போதும் எதிர்காலத்திலும் மிக அவசியமாகும்.
மேலே பரிசீலிக்கப்பட்ட விடயங்களில் இருந்து சிவில் சமூகச் செயற்பாட்டின் அவசியத்தை நாம் தீவிரமாக உணர்கின்றோம் சில செயற்பாடுகளில்
17

Page 11
அங்குமிங்குமாக ஈடுபட்ட அனுபவங்களும் படிப்பினைகளும் நமக்கு உள்ளது. இந்தப் பின்னணியில் அனைவரும் இணைந்து மாற்று அரசியல் சிந்தனைகளையும் அதன் அடிப்படையிலான செயற்பாடுகளையும் நமது மக்கள் மத்தியில் கொண்டு செல்வதற்காக உறுதி கொள்வோம். ஒவ்வொருவரும் தம்மால் இயன்ற சிறு சிறு
பங்களிப்புகளைச் செய்யும்போது விளைவுகள் அல்லாஹ்வின் உதவியுடன் பாரிய அளவில் கிடைக்கும்.
18

நமது புதிய சிந்தனைகளும் செயற்பாடுகளும் எவ்வாறு அமைய வேண்டும்?
முஸ்லிம்களை ஒன்றிணைத்து தெளிவானதும் உறுதியானதுமான கொள்கையின் அடிப்படையில் வழி நடாத்திச் செல்லக் கூடிய துணிச்சலான அரசியல் தலைமை தேவைப்படுகின்றது. இவ்வாறான தலைமை இல்லாததனால் தனிப்பட்ட நலன்சாாந்த ஊர்வாத குழு அரசியலுக்குள் நாம் இழுத்துச் செல்லப்படுகின்றோம். இந்த வெற்றிடத்தை கட்டம் கட்டமான செயற்பாடுகள் மூலமாகவே நாம் நிரப்ப முடியும். இதற்கு முன்னோடியாக நாம் மக்கள் மத்தியில் புதிய மாற்றுச் சிந்தனைகளையும், செயற்பாடுகளையும் முன்னெடுக்க வேண்டும். முதற்கட்டமாக மக்கள் மத்தியில் அரசியல் விழிப்பூட்டல் செய்யப்படல் வேண்டும்.
முஸ்லிம்களின் கடந்த 15 வருடகால
அரசியல் வரலாற்றின் முக்கியத்துவம்:
கடந்த 15 வருட கால கட்டத்தில் தனித்துவமான அரசியல் நம் மக்கள் மத்தியில் தீவிரம் பெற்றதும் மக்களின் முஸ்லிம் தேசிய உணர்வு வலுப்பெற்றதும் உக்கிரமாக நடைபெற்றுள்ளது. இப்பின்னணியில்தான் தனித்துவமான கட்சியொன்று நமக்கென்று வளர்த்தெடுக்கப்பட்டது. உயிர்களும் உடமைகளும் கடின உழைப்பும் இக்கட்சியின் வளர்ச் சிக்கு உரமாக்கப்பட்டது. எனினும் எந்த நோக்கத்திற்காகவும் இலட்சியங்களுக்காகவும் முஸ்லிம் தனித்துவக் கட்சி உருவாக்கப்பட்டதோ அந்த நோக்கங்களும் இலட்சியங்களும் இன்னமும் அடையப்படவில்லை. இந்த இலட்சியங்களை வென்றெடுப்பதற்கு மக்கள் எப்போதுமே தயாராக இருந்த போதிலும் நமது அரசியல் தலைமைகள் விடுதலைக்காகப் போராட வேண்டிய ஒரு கட்சியை வெறும் பாராளுமன்றக் கதிரைகளுக்கான கட்சியாக மாற்றி விட்டன ஈற்றில் இக்கட்சியை துண்டு துண்டாக்கியும் விட்டார்கள்
19

Page 12
இந்தப் 15 வருட காலத்திலும் பரந்துபட்ட முஸ்லிம்களைப் பொறுத்தவரையில் தமது அரசியல் அபிலாசைகள் குறித்து உறுதியான நிலைப்பாட்டினைக் கொண்டிருந்தது மாத்திரமல்ல. தேவை ஏற்படும் போது தன்னியல்பாக அணி திரண்டு போராட்டங்கள் மூலமாக தமது அபிலாசைகளை வெளிப்படுத்தியும் வந்துள்ளார்கள். நமது மக்களினதும் சிவில் அமைப்புகளினதும் இவ் வெளிப்பாடுகள் தளராத அழுத்தங்கள் காரணமாக நமது அரசியலும் நமது அடிப் படைக் கோரிக் கைகளும் இன்று குறிப் பிட்டளவிற்கு சர்வதேசமயப்பட்டுள்ளதை எவரும் மறுக்க முடியாது.
அரசு-புலிகள் புரிந்துணர்வு உடன்படிக்கையும்
முஸ்லிம்களின் நிலைமையும்:
யுத்தநிறுத்தம், சமாதானப் பேச்சுவார்த்தை, அரசியல் தீர்வு ஒப்பந்தம் என்பவை நடைமுறைக்கு வரும்போதெல்லாம் வடக்கு கிழக்கு முஸ்லிம்கள் மோசமான உயிர் உடமை மற்றும் அரசியல் பாதிப்புக்களுக்கு ஆளாகின்றனர். 1987-1990 காலங்களில் இந்திய-இலங்கை ஒப்பந்தத்தில் நாம் முற்றாகப் புறக்கணிக்கப்பட்டோம். தமிழ் ஆயுத குழுக்களின் குறிப்பாக விடுதலைப் புலிகளின் அடக்குமுறைகளுக்கும் படுகொலைகளுக்கும் நாம் ஆளாக்கப்பட்டோம்.
இன்று 15 வருடங்கள் கடந்து விட்டன. அதிக உயிர் இழப்புக்களை இவ் இடைப்பட்ட காலத்தில் நாம் சந்தித்துள்ளோம். கோடிக்கணக்கில் சொத்துக்கள், உடமைகளை இழந்துள்ளோம். கிழக்கில் பல்லாயிரம் ஏக்கர் காணிகளை பறி கொடுத்துள்ளோம் கடல் வளங்களைப் பயன்படுத்த முடியாது முடக்கப்பட்டுள்ளோம். ஒரு இலட்சத்திற்கும் அதிகமான வடக்கு முஸ்லிம்கள் நம் தாயகத்தில் இருந்து வெறுங்கையுடன் வேரோடு பிடுங்கி வீசப்பட்டுள்ளோம்.
இப்படியான ஒரு சந்தர்ப்பத்தில் மீண்டும் ஒரு பேச்சுவார்த்தை யுத்த நிறுத்தம், புரிந்துணர்வு உடன்படிக்கை என்பன முஸ்லிம்கள் மீது 2002 இல் திணிக்கப்பட்டது. மேற்படி 15 வருட கசப்பான அனுபவங்களை சுமந்துள்ள முஸ்லிம் கொங்கிரஸ் கட்சியும் அதன் தலைமையும் நமது மக்களின் சார்பில் மிகுந்த எச்சரிக்கையுடன் கூடிய முன்னேற்பாடுகளுடன் நடந்து கொண்டிருக்க வேண்டும். முஸ்லிம்களின் வாக்குகளினால் பெற்ற அரசியல் அதிகாரத்தின் மூலமாக ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்தை பதவிக்கு கொண்டு வந்த பங்காளிக் கட்சி என்ற வகையில், மிகவும் பொறுப்புணர்வுடன் நடந்து கொண்டிருக்க வேண்டும். ஆனால் உண்மையில் நடந்தது என்ன?
2O

இனப்பிரச்சினையினாலும் யுத்தத்தினாலும் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருந்த முஸ்லிம்கள் இனப்பிரச்சினையின் தவிர்க்க முடியாத ஒரு அங்கமாக கணக்கில் கொள்ளப்படவில்லை. இனப்பிரச்சனையுடன் நேரடியாக சம்பந்தப்படாத ஒரு குழு' என புரிந்துணர்வு உடன்படிக்கையில் குறிப்பிடப்பட்டதன் மூலம் நமக்குரிய இடம் முற்றாகப் புறக்கணிக்கப்பட்டது. அரசியல் பேச்சுக்களில் தனித்தரப்பாகக் கலந்து கொள்வது நிராகரிக்கப்பட்டு. நமது அரசியல் அந்தஸ்த்து மறுக்கப்பட்டது. இப்படியான நிலைமை நமக்கு ஏற்படாது தடுப்பதற்கான முழுமையான தார்மீக அரசியல் பலம் இருந்தும் கூட முஸ்லிம் கொங்கிரஸ் தலைமை மெளனமாக இருந்தது.
புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்திடப்படுவதற்கு முன்னர் அதில் தலையிட்டு முஸ்லிம்களின் நலன்களை உள்ளடக்கவும். பாதுகாப்பினை உறுதிப்படுத்தவும் போதிய அவகாசம் இருந்தும் முஸ்லிம் கொங்கிரஸ் தலைமை எதுவும் செய்யவில்லை. அரசியல் அனுபவம் கொண்ட பலரும் முஸ்லிம் அமைப்புகளும் இந்த விடயங்களில் தமது சந்தேகங்களை பலமாக வெளிப்படுத்திய பின்பும். முஸ்லிம் கொங்கிரஸ் தலைமை மெளனம் சாதித்தது. புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் நகலில் எந்தவித திருத்தங்களையும் செய்ய முயற்சிக்கவும் இல்லை. அரசுக்கு அழுத்தம் கொடுக்கவும் இல்லை. மாற்று யோசனைகளைச் சமர்ப்பிக்கவும் இல்லை.
மக்களின் வாக்குகளால் பெற்ற அரசியல் அதிகாரத்தையும் பேரம் பேசும் ஆற்றலையும் வைத்துக் கொண்டு அரசின் பங்காளிக் கட்சி வேறு என்னதான் சாதித்தது? என்ற கேள்வி எழுகின்றது. இதன் காரணமாக இன்று வரையிலும், நமக்குரிய அரசியல் இடத்தை நாம் பெற்றுக் கொள்ளப் போராட வேண்டியவர்களாக உள்ளோம். அரசியல் உரிமைகளைப் பெறுவதற்குப் பொருத்தமான நேரத்தில் அந்த வாய்ப்புக்களைத் தவறவிடுவோம் எனின் அவ்வாறான வாய்ப்புக்கள் நமக்கு மீண்டும் இலகுவில் கிடைக்காது என்பதை நமக்கு ஏற்பட்ட நிலமை நன்கு எடுத்துக் காட்டுகின்றது.
2001 தொடக்கம் 2003 வரைக்கும் முஸ்லிம்களுக்கு எதிரான 200க்கு மேற்பட்ட வன்முறைச் சம்பவங்களும் மனித உரிமை மீறல்களும் பதிவு செய்யப்பட்டுள்ளன. 30க்கும் அதிகமானோர் கொலை செய்யப்பட்டுள்ளனர். 14 பேர் கடத்தப்பட்டுள்ளனர். 12 இற்கு மேற்பட்ட முஸ்லிம் கிராமங்கள் ஆயுதமேந்தியவர்களால் தாக்கப்பட்டுள்ளன. மூதூரில் பல கிராமங்கள் குறுகிய காலத்துள் இரு தடவை தாக்கப்பட்டுள்ளன. வாழைச்சேனை கொழுத்தப்பட்டு, சூறையாடப்பட்டது. இரண்டு ஜனாஸாக்கள் கண்காணிப்புக்குழு மற்றும் நீதிபதி பொலிசார் முன்னிலையில் எரிக்கப்பட்டன. இவ்வளவும் நமது கட்சியினால் ஆட்சிக்குக் கொண்டு வரப்பட்ட அரசாங்கம் ஆட்சி அதிகாரத்தில் இருக்கும்போதே நடைபெற்றது.
21

Page 13
பொதுசன ஐக்கிய முன்னணி அரசின் பங்காளிக்கட்சியாக இருந்த காலத்தில் மாவனல்லை வன்முறையையும். தமக்கு ஏற்பட்ட அரசியல் அவமானங்களையும் காரணம் காட்டி சந்திரிகா அரசினைக் கவிழ்க்க முஸ்லிம் கொங்கிரஸ் தலைவர்களால் முடியுமாயின், ஐக்கிய தேசிய முன்னணி ஆட்சிக் காலத்தில் மேற்படி கொடுமை நடந்தபோதிலும் இவர்கள் மெளனம் சாதித்த மர்மம்தான் என்ன?
மேற் கண் ட அநியாயங்கள் நடைபெற்ற பின் னணியில் அரசியல் பேச்சுவார்த்தையில் முஸ்லிம் தலைமை தனித்தரப்பாக மாத்திரம் கலந்து கொள்ள வேண்டும் எனவும், அரசுத்தரப்பாக போக வேண்டாம் எனவும். தனித்தரப்பு வாய்ப்பு மறுக்கப்படும் எனின் அப் பேச்சுக்களைப் புறக்கணிக்குமாறும் நமது மக்களும் முஸ்லிம் முக்கியஸ்தர்களும், உலமாக்களும் வற்புறுத்தியிருந்தார்கள். இவற்றை முஸ்லிம் தலைமைகள் புறந்தள்ளின. சமஷ்டி முறைத் தீர்வு பற்றிய முக்கிய விடயம் ஒஸ்லோ மாநாட்டில் ஆராயப்பட்டபோது, அதில் நமது மக்களின் நிலையை உறுதிப்படுத்துவதைக் கைவிட்டு, உட்கட்சிப் பிரச்சினையை முதன்மைப்படுத்தி இங்கு ஓடிவந்த அனுபவமும் நமக்கு உள்ளது.
உப-குழுக்கள் ஒவ்வொன்றிலும் முஸ்லிம்கள் இருவரை முஸ்லிம் கொங்கிரஸ் நியமிக்கலாம் என அரசு, புலிகள் உடன்பட்டபோதும், பொருத்தமானவர்களை நியமித்து அவர்களை நெறிப்படுத்தாது, உட்கட்சிப் போட்டிகளில் காலத்தை விரயமாக்கினர். கடைசியாக முஸ்லிம் பிரதேசங்களில் நடைபெற வேண்டிய புனர்வாழ்வு நடவடிக்கைகள் பற்றிய எவ்வித மதிப்பீடும் வேலைத்திட்டமும் சமர்ப்பிக்கப்படாத நிலையில் டோக்கியோ மாநாடு முடிவுற்றது.
இவை எல்லாவற்றையும் பார்க்கும்போது இவர்களுக்கு மக்கள் நலன் என்பதை விட தமது பதவிகள், சலுகைகள்தான் பெரிதாக உள்ளது என்பது தெளிவாகின்றது. இப்படிப்பட்ட தலைமை இப்போது தனித்தரப்பு என்பது தனது உயிர்மூச்சு என்றும் மக்களுக்காக மரணத்தைச் சந்திக்கவும் தயாராக இருப்பதாகவும் சூளுரைத்துக் கொண்டிருக்கின்றது.
இப்படிப்பட்ட தலைமையுடன் ஒன்றாக இருந்தவர்கள். கடைசியாக தாம் எதுவும் தெரியாத அப் பாவிகள் என்பதுபோல, குற்றப் பத்திரிகை சமர்ப்பித்து வெளியேறிவிட்டு, நமது இலட்சியங்களை வென்றெடுக்கப் போவதாகச் சொல்லி தனிக் கட்சியையும் ஆரம்பித்தார்கள். ஆனாலும் இவர்கள் தொடர்ந்தும் அமைச்சராகவும், அரசாங்கத்தின் பங்காளிகளாகவும் கிடைக்கும் சலுகைகளை அனுபவித்துக் கொண்டு பாராளுமன்றம் கலைக்கப்படும் வரை இருந்தனர்.
22

முஸ்லிம் களின் அரசியல் சமத்துவம் தனித் தரப் பாக அரசியல் பேச்சுவார்த்தையில் கலந்து கொள்வது போன்ற நமது அரசியல் கோரிக்கைகள் விடுதலைப் புலிகளாலும் ரணில் அரசாங்கத்தினாலும், நோர்வே தரப்பினாலும் நிராகரிக்கப்பட்டபோது, நமது அடிப்படைக் கோரிக்கைகளுக்கு ஆதரவாக நாடாளுமன்றத்தின் அங்கீகாரத்தை பெறுவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட தினத்தில் மாற்று அணியினர் வீதி திறப்பு விழா நடாத்திக் கொண்டிருந்தார்கள். எந்த இலட்சியத் தை முன் னிறுத் தி முஸ்லிம் கொங் கிரசை விட்டு வெளியேறினார்களோ அதே இலட்சியங்களின் ஒரு பகுதிக்கு எதிராகவே இவர்கள் செயற்பட்டுள்ளார்கள். இந்த வகையில் மேலே விவரிக்கப்பட்ட அத்தனை துரோகத்தனங்களுக்கும் மாற்று அணியைச் சேர்ந்த இந்த அரசியல் தலைவர்களும் பொறுப்பாளிகளே.
நுஆ என்ற பெயரில் செயற்பட்டு வரும் முஸ்லிம் தலைமைகள், முஸ்லிம்களுக்கு ஏற்பட்ட பிரச்சினைகள் அனைத்திற்கும் காரணம் முஸ்லிம் கொங்கிரஸ் என வசைபாடுவதில் காலம் தள்ளினார்கள். எதிர்க்கட்சி ஆளும் கட்சியை விமர்சிப்பது போல குற்றச் சாட்டுக்களை அடுக்கிக் கொண்டிருந்தார்களே ஒழிய, மக்களை ஒன்று திரட்டி எதிர்ப்புக்களையும் போராட்டங்களையும் நடாத்தவில்லை. மனிதவுரிமை மீறல்களை சர்வதேச மயப்படுத்தி அழுத்தங்களை ஏற்படுத்த முயற்சிக்கவும் இல்லை. மாறாக, முஸ்லிம், தமிழ் மக்களுக்கு அடிப்படை அரசியல் உரிமைகள் கிடைப்பதற்கு எதிராகச் செயற்படும் நோக்குடன் உருவாக்கப்பட்ட நாட்டுப் பற்று முன்னணி மேற்கொண்ட கண்டனக் கூட்டங்கள். ஆர்ப்பாட்டங்கள் என்பவற்றில் இந்த நுஆ தலைமைகள் தவறாது கலந்து கொண்டன.
மேலும், விடுதலைப் புலிகளால் குரங்குபாஞ்சான் பள்ளிவாசல் அழிக்கப்பட்ட போதும், முஸ்லிம்களின் பாரம்பரியக் காணிகள் பறிக்கப்பட்டபோதும் ரணிலையும் அவரது பாதுகாப்பு அமைச்சையும் கண்டனங்கள் செய்த இதே நுஆப் பிரிவினர். பாதுகாப்பு அமைச்சினை சந்திரிகா பொறுப்பேற்ற பின் கிண்ணியாவில் பல நாட்கள் முஸ்லிம்களுக்கு எதிராக வன்முறைகள், படுகொலைகள் நடைபெற்றபோது சந்திரிகா தரப்பினைக் கண்டனம் செய்யாதது மாத்திரமல்ல, அவரை நியாயப்படுத்தவும் தவறவில்லை. ஆக இதற்கு முந்திய காலங்களில் நடைபெற்ற வன்முறைகளைக் கண்டித்து இவர்கள் குரல் எழுப்பியது ரணிலுக்கு எதிரான சந்திரிகாவின் அரசியலுக்கு சேகவம் செய்யவே தவிர, முஸ்லிம் நலன்களைப் பாதுகாக்க அல்ல.
புரிந்துணர்வு உடன்படிக்கையில் (MOU) முஸ்லிம்களின் பாதுகாப்பு மற்றும்
நலன்களை உறுதிப்படுத்தும் விதத்தில் பிரத்தியேகமான சரத்துகள் சேர்க்கப்படாது விட்டால் ஜனாதிபதி சந்திரிகாவினால் மாத்திரம் அல்ல. முஸ்லிம்களின் பாதுகாப்புக்
23

Page 14
குறித்து வேறு எவராலும் எதுவும் செய்ய முடியாது. சர்வதேச சமூகம் கூட பொறுப்பில் இருந்து இலகுவாக நழுவி விடும் என்பது தெளிவாகின்றது.
ஆக, நமது முஸ்லிம் தலைமைகள் அனைவருமே முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட சகல கொடுமைகளுக்கும் துரோகத்தனங்களுக்கும் சம பொறுப்புக்களை ஏற்க வேண்டும்.
ஒட்டுமொத்தத்தில் மேற்படி முஸ்லிம் தலைவர்கள் எவருக்கும் தமது சொந்த சமூகத்தில் உண்மையான பற்றுக் கிடையாது. பட்டம் பதவிகளில்தான் இவர்களுக்கு குறி என்ற உண்மையை இவர்கள் இத் தேர்தலின் போது மேற்கொண்ட தேர்தல் கூட்டுகள் சரணடைவுகளில் இருந்து மக்கள் தெளிவாக இனங்காண முடிந்தது. பேரம் பேசும் அரசியல் பலம் மூலமாக முஸ்லிம் நலன்களைப் பெற்றுக் கொள்ள வேண்டுமாயின், இவர்கள் அனைவரும் தனித்துவமாக ஓரணி நின்று வெற்றி பெற்று அதன் பின்பு அவ் வெற்றியின் பலத்தில் நின்று பேரம் பேச வேண்டும்.
தமக்குள் பிளவுபட்டு இரண்டு பெரிய சிங்களக் கட்சிகளிடம் சரணடைவது என்பது. நமது பேரம் பேசும் வலிமையை என்றென்றைக்கும் இழந்து பெரிய கட்சிகளின் காலடிகளில் மண்டியிடும் நிலைக்கு இட்டுச் சென்றுள்ளது. இவ்வாறு சிங்களக் கட்சிகளுடன் இணைந்து பாராளுமன்ற உறுப்பினர் எண்ணிக்கையை அதிகமாகப் பெற்றுக் கொண்டாலும் கூட அவற்றை முஸ்லிம் தலைவர்கள் நமது மக்களின் நலன்களுக்காகப் பயன்படுத்தும் அதிகாரத்தை முற்றாக இழந்து விடுகின்றார்கள்.
இவ்வளவு அநியாயங்கள் முஸ்லிம்களுக்கு இழைக்கப்பட்டபோதும், சகல மக்களையும் சமமான குடிமக்களாக ஏற்று பொறுப்புச் சொல்ல வேண்டிய அரசாங்கம், முஸ்லிம்களை மாத்திரம் முற்றாகக் கைவிட்டது. அரசும் விடுதலைப் புலிகளும் இணைந்து பேச்சுவார்த்தைகளில் முஸ்லிம்களின் பாத்திரம் தொடர்பாக கபடத்தனமான நிலைப்பாட்டையே எடுத்தன.
பரபரப்பாகச் செய்து கொள்ளப்பட்ட பிரபாகரன்-ஹக்கீம் கூட்டறிக்கையில் முஸ்லிம் தலைமை மோசமான அரசியல் தவறுகளை விட்டது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முஸ்லிம் தலைவர்களில் ஒரு பிரிவினைப் புறக்கணித்து. வெறுமனே தமது கட்சி நலன்களை உயர்த்த இந்த வாய்ப்பினைப் பயன்படுத்தினர். இதனால் இங்கு முஸ்லிம்களைப் பிரதிநிதித்துவப்படுத்திய தலைமைகள் அரசியல் சமத்துவமாக நடாத்தப்படவில்லை என்பதை இட்டு இவர்கள் அக்கறை கொள்ளவில்லை.
24

கூட்டறிக்கையின் உள்ளடக்கங்களில் பாரதுாரமான தவறுகள் இருந்ததையிட்டு அக்கறை கொள்ளவில்லை. உதாரணமாக, வடக்கு முஸ்லிம்கள் தாமாகவே இடம்பெயர்ந்ததாகக் குறிப்பிடும் அரசியல் கபடனத்தனம். கிழக்கில் வரி, கப்பம் நிறுத்தப்படும் என்று அறிக்கையில் குறிப்பிட்டு வடக்கு முஸ்லிம்களை விடுதலைப் புலிகளின் ஆதிக்கத்திற்கு தாரை வார்த்த தவறுகளைக் குறிப்பிடலாம்.
மிக முக்கியமாக சர்வதேச சமூகம், நோர்வே அனுசரணையாளர்கள் எவரது பிரசன்னமும் இன்றி உடன்படிக்கையில் கையொப்பம் இட்ட விடயத்தில் மோசமான அரசியல் தவறு இழைக்கப்பட்டது. நமது மக்களின் அரசியல் அந்தஸ்த்து செல்லாக்காசாக்கப்பட்டது. இதன் பாரதுாரமான விளைவுதான் மேற்படி ஹக்கீம்பிரபா கூட்டறிக்கை புலிகளால் ஒருதலைப்பட்சமாக தூக்கி வீசப்பட்டமையாகும். அத்துடன் கூட்டறிக் கையின் உள்ளடக் கங்கள் எதுவுமே நடைமுறைப்படுத்தப்படவும் இல்லை.
முஸ்லிம்கள் இக்காலத்தில் மிகமோசமாகப் பாதிக்கப்பட்டனர். பேச்சுவார்த்தை மேசையில் அவ்வப்போது முஸ்லிம்களின் பிரச்சினைகள் எழுப்பப்பட்டபோது, அரசாங்கத் தரப்பும் விடுதலைப் புலிகள் தரப்பும் அவ்விடயங்களை திட்டமிட்டு மழுங்கடித்தன. இப்படியான தொடர் நிகழ்வுகள் பேச்சுவார்த்தையின் நோக்கங்கள் குறித்து நமது மக்களுக்கு கடுமையான சந்தேகங்களை ஏற்படுத்தின. நமது பிரச்சினைகளைப் பேசுவதற்கு மேற்கொள்ளப்ட்ட எல்லா முயற்சிகளும் அரசாங்கம், புலிகள் தரப்பினரால் தட்டிக்கழிக்கப்பட்டதன் விளைவாக மக்கள் வீதிக்கு இறங்கிக் குரல் எழுப்பினர். மறியல் போராட்டங்களை மேற்கொண்டனர். அரசியல் பேச்சுவார்த்தையில் தனித்தரப்பாகவும் அரசியல் சமத்துவத்துடனும் கலந்து கொள்ள வேண்டும் என்ற கோரிக்கை மக்கள் மத்தியில் மேலும் வலுப்பெற்றது.
முஸ்லிம் கிராமங்கள் தோறும் அரசியல் விழிப்புணர்வுக் கலந்துரையாடல்களும், நாம் ஓரங்கட்டப்படுவதற்கு எதிரான கண்டனக் குரல்களும் ஓங்கி ஒலித்தன. சிறுபத்திரிகைகள், பிரசுரங்கள் பரவலாக வெளியிடப்பட்டன. முஸ்லிம் தலைமை மீதும், அரசாங்கம் மீதும் அதிருப்தியுள்ள சில முஸ்லிம் தலைவர்கள் பாதயாத்திரை மூலம் தமது அதிருப்தியை வெளிப்படுத்தினர்.
புரிந்துணர்வு உடன்படிக்கை, அரசியல் பேச்சுவார்த்தை என்ற பெயரில் முஸ்லிம்கள் அதிகம் பாதிக்கப்பட்டதும், தமக்கு இழைக்கப்பட்ட அரசியல் அநீதிக்கும் கொடுமைகளுக்கும் எதிராக முஸ்லிம்கள் பரந்தளவில் வெகுசன ரீதியாக தீவிரமாகச் செயற்பட்டதும் இக்காலகட்டத்தில்தான் எனலாம்.
25

Page 15
முஸ்லிம்களின் அரசியல் வரலாற்றில் சிவில் சமூகம் இக்காலகட்டத்தில் முக்கிய பாத்திரத்தை ஆற்றியமை இங்கு குறிப்பிடத்தக்கது. இவ்வாறான அரசியல் எழுச்சிகளின் ஒரு திரட்சியாகவே பல்லாயிரக்காணக்கான மக்கள் தீவிரமாகப் பங்கேற்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒலுவில் பிரகடனம் வெற்றிகரமாக நடந்து முடிந்தது.
கடந்த இரு வருடங்களாக மக்களாகிய நாமே நமது அரசியலைத் தீர்மானித்து வந்துள்ளோம். நமது அரசியல் எழுச்சிகளும் விட்டுக் கொடாத அரசியல் போராட்டங்களும் நமது தேசப் பிரகடனமும் நமது அரசியலை ஒரு புதிய பாதைக்கு இப்போது இட்டுச் சென்றுள்ளது. இவற்றின் தாக்கமும் கூர்மையும் ஊசலாட்டப் பேர்வழிகளான முஸ்லிம் அரசியல் தலைமைகளைக் கட்டுப்படுத்தியுள்ளது.
நமது அபிலாசைகளுக்கும் உணர்வுகளுக்கும் கோரிக்கைகளுக்கும் எதிராகச் செயற்பட முடியாத அழுத்தத்தை நாம் முஸ்லிம் அரசியல் தலைமைகள் மீது பிரயோகித்துள்ளோம். இவை அனைத்திற்கும் அடிப்படையாக அமைந்ததது நம் மத்தியில் திரண்டுள்ள சமூக, தேசிய உணர்வுதான். இதனை மீண்டும் ஒருதடவை உறுதியாக வெளிப்படுத்துவதன் மூலமாக நமது அரசியல் ஐக்கியத்தை மீள் உறுதி செய்து கொள்வோம்.
சமகால அரசியல் சூழல்
சமகால அரசியல் சூழலை மதிப்பிடுவோம் எனின், இலங்கை ஒரு தேசியம் என்ற காலகட்டம் முடிவிற்கு வந்து விட்டது. இப்போது வெவ்வேறு அரசியல் சமூகங்களாகவும் வெவ்வேறு தேசியங்களாகவும் தனித்தனியாகக் களமிறங்கிதத்தமது அபிலாசைகளை முன்வைக்கும் கட்டத்திற்குள் இன்றைய அரசியல் புகுந்துள்ளது. சிங்கள மேலாதிக்கப் போக்கு புதிய பண்பில் வலுப்பெற்று வருகின்றது. தமிழ் அரசியல் இலங்கையின் மைய அரசியல் போக்குகளைத் தீர்மானிக்கும் நிலைக்குப் பலம் பெற்றுள்ளது. எனினும் முஸ்லிம்களின் அரசியலோ, இருந்த சொற்ப தனித்துவப் பண்பினையும் இழந்து பிரதான சிங்கள அரசியல் கட்சிகளின் காலடியில் முற்றாகச் சரணடையும் நிலைக்குச் சென்று விட்டது. இருப்பினும் மக்கள் தமது அபிலாசைகளிலும் கோரிக்கைகளிலும் தொடர்ந்தும் உறுதியாக நிற்கின்றனர்.
முஸ்லிம் அரசியல் தலைமைகள் முஸ்லிம்களின் அரசியல் அபிலாசைகளுக்கு முதன்மை அளித்து ஓரணியில் செயற்பட வேண்டும். சம்பந்தப்பட்ட தரப்புக்கள் இதனைச் சாத்தியமாக்கத் தேவையான விட்டுக் கொடுப்புக்களைச் செய்ய வேண்டும் என நமது மக்களும் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்திய சிவில் சமூக
26

நிறுவனங்களும் மிகுந்த அரசியல் விழிப்புணர்வுடன் செயற்பட்டன. ஆனாலும் இந்த அரசியல் முயற்சிகள் யாவும் முஸ்லிம் அரசியல் தலைவர்களின் அதிகார வேட்கை காரணமாக பயனற்றதாக்கப்பட்டுள்ளது. அவர்களின் அரசியல் சரணடைவு தடுத்து நிறுத்த முடியாத எல்லைக்குச் சென்று விட்டது. எனினும் மக்களாகிய நாம் சோர்ந்து விடத் தேவையில்லை. புதிய வழிமுறைகள், புதிய வியூகங்களை வகுத்துக் கொண்டு தொடர்ந்தும் இலட்சியப் போக்கில் செயற்படுவோம். இன்ஷா அல்லாஹ் நமது நிய்யத்துக்களை அல்லாஹ் விரைவில் நிறைவேற்றி வைப்பான்.
வருங்கால அரசியல் நிலைமைகளை எதிர்வு கூறலும் தீர்வுகளும்:
இப்படிப்பட்ட மோசமான நிலையிலும் கூட நாம் உறுதியுடன் செயற்படல் வேண்டும். இதுவரை காலமும் நமது மக்கள் வெளிப்படுத்தி வந்துள்ள அரசியல் அபிலாசைகளை ஒருபோதும் விட்டுக் கொடுக்க முடியாது. நமது தனித்துவமான அரசியல் பிரதிநிதித்துவம், முஸ்லிம் தலைவர்களின் செயற்பாடுகள் காரணமாக இழக்கப்படப் போவது உறுதியாகி விட்டது. எனவே இவர்கள் நமது மக்களின் அரசியல் அபிலாசைகளுக்காக விட்டுக் கொடுக்காது போராடுவார்கள் என்று நாம் நம்பிக் கொண்டிருக்கத் தேவையில்லை. இப்படிப்பட்ட ஆபத்தான ஒரு நிலையில் மக்களாகிய நாம் முஸ்லிம் சிவில் சமூக அமைப்புக்களுடன் இணைந்து திட்டமிட்டுச் செயற்பட்டு, நமது உரிமைகளை வென்றெடுக்க வேண்டியுள்ளோம். -
இதற்கு முன்னோடியாக, நடைபெறப் போகும் தேர்தலில் நாம் வாக்களிப்பது எந்தவொரு தனிநபருக்காகவும் அல்ல. நமது அரசியல் அபிலாசைகளுக்காகவும், நமது பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்துவதற்காகவுமே என்பதை நிரூபிக்க வேண்டியுள்ளோம். இந்த வகையில் நமது இலக்குகளை அடைந்து கொள்வதற்காக சிவில் சமூக அமைப்புக் கள் மக்களுடன் இணைந்து நெருக்கமாகச் செயற்படவேண்டியுள்ளன. நமது மக்களின் அரசியல் அபிலாசைகளை ஒன்று திரட்டி பரவலாக்கி அவற்றுக்கே வாக்களிக்கப் போவதாக அறைகூவல் விடுப்போம். நமது ஆணை தனிநபர்களுக்கும் அல்ல. தலைவர்களுக்கும் அல்ல - மக்களின் அரசியல் அபிலாசைகளுக்கே என்பதை வலியுறுத்துவோம்.
புதிய மாற்று அரசியல் சிந்தனைகளுக்கும் மக்கள் நலன் சார்ந்த செயற்பாடுகளுக்கும் முன்னுரிமை அளிக்கும் அரசியல் அமைப்பு வடிவங்களை நோக்கி முன்னேறுவோம். கட்சிகளும் தலைவர்களும் மக்களின் நலன்களுக்காகவே மக்களை மறக்கும் கட்சிகளையும் தலைமைகளையும் நிராகரிப்போம். வரலாற்றைப் படைப்பவர்கள் மக்களே. இறுதியில் அல்லாஹ்வின் உதவியுடன் நாமே நமது அரசியலை நிறுவுவோம்.
27

Page 16
அன்பார்ந்த முஸ்லிம்களே!
பல்லாயிரக்கணக்கான முஸ்லிம்கள் ஒலுவில் தென்கிழக்கு பல்கலைக்கழக மைதானத்தில் ஒன்று திரண்டு நமது அரசியல் அபிலாசைகளைப் பிரகடனம் செய்தோம். நமது தேசியக் கோரிக்கைகளை ஒன்று திரட்டி முழங்கினோம். இதனை இங்கு நினைவுபடுத்துவது அவசியமாகும்.
நமது அரசியல் முடிவுகளும் அசைக்க முடியாத அரசியல் அபிலாசைகளும்
1. உலகளாவிய முஸ்லிம் "உம்மா" வின் பிரிக்க முடியாத கூறாக இலங்கை
முஸ்லிம்களும் அமைகின்றோம்.
2. இலங்கை முஸ்லிம்கள் சமய, பண்பாட்டு, கலாசார அம்சங்களில் தனித்துவமானவர்களாகவும் தனியான இனத்துவப் பண்பு
கொண்டவர்களாகவும் வரலாற்று ரீதியில் நிலைபெற்று வருகின்றோம்.
5. வடக்கு-கிழக்கு முஸ்லிம்கள் தனியான அரசியல் சமூகம், தனியான தேசிய
gaOT b gigiag (355th (Distinct Nationality or Nation)
4. வடக்கு - கிழக்கு பிரதேசம் முஸ்லிம்களினதும் பாரம்பரியத் தாயகமாகும்.
5. வடக்கு-கிழக்கு முஸ்லிம்கள் தமது அரசியல் தலைவிதியினை தாமே
தீர்மானித்துக் கொள்ளும் சுயநிர்ணய உரிமை கொண்டவர்களாவர்.
6. வடக்கு-கிழக்கு முஸ்லிம்கள் செறிவாக வாழும் பிரதேசங்களை ஆள்புல எல்லையாகக் கொண்டதும் அரசியல் ரீதியில் சமத்துவமானதுமான ஒரு சுயாட்சி அரசியல் அதிகார அலகு அரசியல் தீர்வில் எமக்கு உறுதிப்படுத்தப்படல் வேண்டும்.
7. தென்னிலங்கையில் வாழும் எமது சகோதர முஸ்லிம் மக்களது அரசியல்.
சமூக, பொருளாதார மற்றும் கலாசார உரிமைகள் உறுதிப்படுத்தப்படல்
வேண்டும்.
28

மேற்படி அடிப்படையான விடயங்களுடன் பின்வரும் அபிலாசைகளும் நமது உடனடிக் கோரிக்கைகளாக முன்வைக்கப்பட்டு ஏற்றுக் கொள்ளப்பட்டன.
米。 சமஷ்டிமுறைத் தீர்வில் முஸ்லிம்களின் சுயாட்சி பிரகடனப்படுத்தப்படல்
வேண்டும்.
*. வடக்கு - கிழக்கு அபிவிருத்தி, புனர்வாழ்வு மீள்குடியேற்றத்திற்கு வெளிநாடுகளில் இருந்து பெறப்படும் நிதி நியாயமான முறையில் முஸ்லிம்களுக்கும் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும்.
*. பிளவுபட்டிருக்கும் முஸ்லிம் அரசியல் தலைமைத்துவங்கள் முஸ்லிம் சமூக நலனைக் கருத்தில் கொண்டு ஒன்றுசேர வேண்டும்.
*. வடக்கு கிழக்கு முஸ்லிம்களின் அரசியல் அபிலாசைகளை, சமத்துவத்துடன் தனித்தரப்பாக வெளிப்படுத்துவதற்கு சமாதானப் பேச்சுவார்த்தையின் ஒவ்வொரு கட்டத்திலும் இடமளிக்கப்படல் வேண்டும்.
*. இறுதித் தீர்வானது முஸ்லிம்களின் உடன்பாட்டுடன் எட்டப்படல் வேண்டும்.
இப்போது நமது மக்களின் அரசியல் அறைகூவல் இவைதான்.
முஸ்லிம் அரசியல் தலைவர்கள். அவர்கள் எந்த அரசியல் கூட்டணிக்குள் இருந்தாலும் அல்லது தனியாக தேர்தலில் பங்கு கொண்டாலும் அந்தந்த ஊர்களிலுள்ள அல்லாஹ்வின் இல்லமான மஸ்ஜித்களில் புனித ஜூம்ஆ தொழுகைக்குப் பின்னர் நமது மக்களின் முன் இப் பொதுத் தேர்தலில் முஸ்லிம்களின் வாக்குகளின் அடிப்படையில் கிடைக்கும் அரசியல் அதிகாரத்தை நமது மக்களின் கீழ்வரும் அரசியல் அபிலாசைகளையும் நலன்களையும் வென்றெடுப்பதற்கு மாத்திரம் பயன்படுத்துவோம்' என 'பைஅத்' செய்து உறுதி செய்ய வேண்டும். மேலும், தத்தமது தேர்தல் விஞ்ஞாபனங்களில் முஸ்லிம் தலைமைகள் இவ் அபிலாசைகளை உள்ளடக்க வேண்டும். இவற்றையே தேர்தல் கால பிரச்சார விடயங்களாக்க வேண்டும். இத் தேர்தலில் இவ் அபிலாசைகளுக்கான நமது மக்களின் ஆணையைப் பெறுவதே தங்களது பிரதான நோக்கம் என்பதை உறுதி செய்ய வேண்டும்.
தேர்தலில் முஸ்லிம் அரசியல் தலைவர்கள் 'பைஅத்' செய்து நிறைவேற்றியாக வேண்டிய நமது அரசியல் அபிலாசைகளாவன
29

Page 17
1. முஸ்லிம் களின் அரசியல் தனித்துவம் சமத்துவம் உட்பட இனப்பிரச்சனையில் முஸ்லிம்களும் பிரிக்கமுடியாத அங்கமாக அமைகின்ற விதத்தில் சமாதான செயல்முறையின் அனைத்து அம்சங்களையும் மாற்றி அமைக்கப் போராடுவோம்! எனவும்
2. முஸ்லிம்களின் அரசியல் உரிமைகள் மற்றும் பாதுகாப்பு போன்றவற்றுக்கு ஏற்படக் கூடிய பாதிப்புக்களை நீக்கும் விதத்தில் புரிந்துணர்வு உடன்படிக்கையில் அவசியமான சரத்துக்கள் சேர்க்கப்படப் போராடுவோம்! எனவும்
3. அரசியல் பேச்சுவார்த்தையின் ஒவ்வொரு கட்டத்திலும், ஒவ்வொரு சுற்றிலும் ஒவ்வொரு குழுச் செயற்பாடுகளிலும் முஸ்லிம்கள் சமத்துவமான தனித்தரப்பாக இடம் பெறுவதை உறுதி செய்வோம்! எனவும்
4. ஏற்படப் போகும் எல்லா விதமான தீர்வு ஏற்பாடுகளிலும் முஸ்லிம்களின் தேசிய அடையாளம், நியாயமான வளப் பங்கீடு, அரசியல் அதிகாரம் என்பவற்றை உறுதிப்படுத்துவோம்! எனவும்
5. வடக்கு மாகாணத்திலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களின் இயல்பு வாழ்க்கை, மீள்குடியேற்றம், புனர்வாழ்வு போன்ற விடயங்களை அரசாங்கம் உடனடி முதன்மைப் பிரச்சினையாகக் கவனத்தில் எடுத்து நிறைவேற்ற தொடர்ச்சியாகப் பாடுபடுவோம்! எனவும்
6. இலங்கையிலுள்ள அனைத்து சமூகங்களுடனும் முஸ்லிம்களாகிய நாம் சமத்துவம், தனித்துவத்துடன் கூடிய நல்லுறவினை ஏற்படுத்தவும் சகவாழ்வு வாழவும் பாடுபடுவோம்! எனவும் உறுதிய கூறவேண்டும்.
இப் பொதுத் தேர்தலில் நமது வாக்குகளைப் பெற்று. மக்களின் அரசியல் பிரதிநிதிகளாக வரும் முஸ்லிம் தலைவர்கள் மேற்குறிப்பிட்ட ஆறு அம்சங்களிலும் தாம் பைஅத் செய்து ஏற்றுக் கொண்ட அரசியல் கடமைகளை நிறைவேற்றியாக வேண்டும். இது தொடர்பான இவர்களின் அரசியல் செயற்பாடுகள் அனைத்தும் தொடர்ச்சியாக மக்களாலும் சிவில் அமைப்புக்களாலும் கண்காணிக்கப்பட வேண்டும்.
மக்களின் ஆணை பெற்ற இந்த அபிலாசைகளை நிறைவேற்றத் தவறும் அரசியல் தலைவர்களை, அல்லது தயக்கம் காட்டி மக்களைத் திசை திருப்ப முயலும் தலைவர்களை நாம் உடனடியாக அம்பலப்படுத்த வேண்டும். மக்கள் இவர்களை அரசியல் அரங்கிலிருந்து நிரந்தரமாகத் தூக்கியெறிய வேண்டும். இது மக்களாகிய
30

நம்முடையதும், சிவில் அமைப்புகளினதும் அந்தந்தக் கட்சி ஆதரவாளர்களினதும் அரசியல் கடமையாகும். தவறான அரசியல் சக்திகளின் பிடியில் இருந்து நமது சமூகத்தை நிரந்தரமாக மீட்டெடுப்பதற்கு இதுவொன்றே வழியாகும்.
இப்படிப்பட்ட அரசியல்வாதிகள் மீது ஆரம்பத்தில் மக்களாகிய நாம் நம்பிக்கை வைத்து பல்வேறு இழப்புகளின் ஊடாகவே இவர்களை அரசியல் அதிகாரத்திற்குக் கொண்டு வருகின்றோம். இலட்சியங்களை நிறைவேற்ற உயிரையும் விடத் தயார் என்று வாக்குறுதி அளித்து அதிகாரத்தைப் பெற்றுக் கொள்ளும் இவர்கள். பின்னர் தாம் ஏற்றுக் கொண்ட கொள்கைக்கும் மக்களுக்கும் துரோகம் இழைக்கின்றார்கள்.
ஆனால் இதே அரசியல்வாதிகளை தொடர்ந்தும் பலதடவை ஒவ்வொரு தேர்தலின் போதும் அதிகாரத்திற்குக் கொண்டு வரும் தவறை மக்களாகிய நாம் செய்து வருகின்றோம். இதுபோன்ற அரசியல் தவறுகளை இப்போதும் இனிவருங் காலங்களிலும் செய்ய மாட்டோம் என மக்களாகிய நாமும் பைஅத் செய்து கொள்வோம்.
"மனிதர்கள் தங்களை மாற்றிக் கொள்ளாத வரையில், நிச்சயமாக அல்லாஹ்வும் அவர்களை மாற்றிவிடுவதில்லை." (அர்-ரஃத் - 1) என்ற அல்குர்ஆன் வசனத்தை மனதில் கொண்டு அல்லாஹ்வை முன்னிறுத்தி செயற்படுவோம்.
வஸ்ஸலாம்
31

Page 18
இறுதியாக சில
முஸ்லிம்களின் தேசிய அடையாளத்தை வென்றெடுக்கவும் பாதுகாப்பினை உ தலைமைகள் அனைவரும் ஓரணியில் செ உலமாக்களும் ஏனைய சிவில் அமை முயற்சிகளையும் முஸ்லிம் அரசியல் தை முக்கியத்துவம் வாய்ந்த பொதுத் தேர்தல்
மக்களாகிய நாம் சிவில் அமைப்புளு அபிலாசைகளை அடைவதற்கு சொந்த ( வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம் முயற்சிகளுக்கும் அனுபவங்களுக்கும் தொடர்ச்சியாகச் செயற்பட வேண்டும் என்ற தனது முதல் முயற்சியாக இப் பிரசுரத்தை ச
இப்பிரசுரத்தை அனைவரும் கலந்து கொண்டு வருவதுடன், சக முஸ்லிம் ச( கிடைப்பதற்கு ஒத்துழைக்குமாறு வேண்டு மக்களின் முழுமையான ஆதரவுடன் : முஸ்லிம்களின் இலட்சியங்கள் வெற்றிெ உறுதியளிக்கின்றோம். அல்ஹம்து லில்ல
-முஸ்லிம் மக்க

வார்த்தைகள்
நிலைநாட்டவும் அரசியல் உரிமைகளை றுதிப்படுத்தவும் முஸ்லிம் அரசியல் யற்பட வேண்டும் என நமது மக்களும். ப்புகளும் மேற்கொண்ட அனைத்து லமைகள் புறமொதுக்கிய ஒரு சூழலில்,
ஒன்றை நாம் எதிர்பார்த்துள்ளோம்.
டன் இணைந்து நமது உண்மையான வழிமுறைகளை உருவாக்கிப் போராட இதன் ஒரு வடிவமாக பல்வேறு பின்னர், ஒரு அமைப்பு வடிவில் ற புரிதலுடன் முஸ்லிம் மக்கள் செயலணி" காலத்தின் தேவையாக வெளியிட்டுள்ளது.
ரைடாலுக்கு எடுத்து நடைமுறைக்குக் கோதர சகோதரிகளுக்கும் இப்பிரசுரம் டுகின்றோம். இன்ஷா அல்லாஹற்! நமது ஒரு சிவில் நிறுவனம் என்ற வகையில் பற தொடர்ச்சியாக உழைப்போம் என ாஹற்!
கள் செயலனி