கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: முஸ்லிம் தேசிய எழுச்சியும் அரசியல் அபிலாஷைகளும்

Page 1
முஸ்லிம் தே அரசியல் அட்
ஒலுவில்
தென்கிழக்குப் பல்கலைக்கழக மா
29.01.2003 அன்று, பல்கலைக்
இடம்பெற்ற முஸ்லிம் தேசிய 6
மக்கள்

சிய எழுச்சியும்
பிலாஷைகளும்
பிரகடனம்
ணவர் சமுகத்தின் அனுசரணையுடன் கழக ஒலுவில் வளாக முன்றலில் எழுச்சியின்போது வெளியிடப்பட்ட பிரகடனம்.

Page 2

வடக்கு கிழக்கு முஸ்லிம்களின் அரசியல் அபிலாஷைகளை அரசியல் தீர்வு ஏற்பாடுகளில் உறுதிப்படுத்துவதற்கான தேசிய எழுச்சியும் அரசியல் பிரகடனமும்
முன்னுரை:
அம்பாறை மாவட்டத்தின் பொத்துவிலில் தொடங்கி, கிழக்குக் கரையோரமாக வடக்கு நோக்கி நீண்டு பரந்து, யாழ்ப்பாணம் வரை பாரம்பரியமாக வாழ்ந்து வரும் நாம் பொதுவான சமய, பண்பாட்டு, கலாசார அம்சங்களை உள்ளடக்கியதாக இலங்கை முஸ்லிம்கள் 6T66TD 9601556) -3LDU 960)LUIT615605ub (Ethno-Religious Identity), அதேசமயம் குறிப்பாக ‘வடக்கு கிழக்கு முஸ்லிம்கள் என்ற அரசியல் LDropb (3.55u 960) Lust 6Tg5605ub (Political and National Identity)
கொண்டுள்ளோம்.
தேசிய முரண்பாடுகளுக்கு அரசியல் பேச்சுவார்த்தைகள் மூலமாகத் தீர்வுகளைக் காண முயற்சிகள் எடுக்கப்படும் தற்போதைய காலகட்டத்தில்- சமூக, பொருளாதார, அரசியல் தளங்களில் சிங்கள இனவாதம், தமிழ் மேலாதிக்கம் ஆகிய இரட்டை அடக்குமுறைகளுக்குத் தொடர்ச்சியாக ஆளாக்கப்பட்டவர்கள் நாங்கள் என்ற வகையில், நமது தீவிர அரசியற் செயற்பாடுகள் முன்னெப்போதையும் விட தற்போது முக்கியத்துவம் பெற்று வருகின்றன.
சக தேசிய இனங்களுக்கும் அவற்றைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் சக்திகளுக்கும் நமது பிரச்சினைகளையும் நமது அரசியல் அபிலாஷைகளையும் விளக்குவதற்கு முன்னர், நமக்குள் அவற்றை ஒருமுகப்படுத்தி பொதுக் கருத்தினை எட்டுவதில் நிலவும் குறைபாடு, நமது அரசியல் இலக்குகளை எய்துவதற்கு நீண்டகாலமாகவே தடையாக இருந்து வருகின்றது.
O1

Page 3
நமது அரசியல் அபிலாஷைகளை அரசியல் குறிக்கோள்களாக வகுத்துப் பிரகடனம் செய்வதற்காகவும், அக்குறிக்கோள்களை அடைவதற்காக நமது வளங்களையும் சக்தியையும் திரட்டிச் செயற்படுவதற்கும் அனைவரும் ஓரணி திரள வேண்டியுள்ளோம். இவற்றை உடனடியாகச் செய்ய வேண்டிய தீர்க்கமான காலகட்டத்தில் நிற்கின்றோம். இந்த வரலாற்றுத் தேவையை நிறைவு செய்யும் இரண்டாவது முயற்சியாக, முஸ்லிம் தேசிய இயக்கத்தின் ஒரு கூறாக அமைகின்ற தென்கிழக்குப் பல்கலைக்கழக மாணவர் சமூகம், வடக்கு கிழக்கு முஸ்லிம்கள் மத்தியிலுள்ள அனைத்து அரசியல் மற்றும் சமூக சக்திகளையும் ஒன்றிணைப்பதை தனது கடப்பாடாகக் கொண்டுள்ளது. இதன் முதற்கட்ட நடவடிக்கையாக 02.01.2003ஆம் திகதியன்று, அரசியல் விழிப்புணர்வூட்டும் வீதிமறியல் போராட்டம் ஒன்றை அனைவரது ஒத்துழைப்புடனும் நடாத்தியிருந்தோம்.
அறிமுகம்:
நமக்குரிய சுயாட்சி முறையானது நமக்கென அரசியல் அதிகாரத்தை- அதாவது நமக்கான சுயாட்சி அதிகார எல்லைக்குள் நாமே நமக்கான சட்டதிட்டங்களை ஆக்கிக் கொள்வதற்கும், நீதி மற்றும் நிறைவேற்று அதிகாரங்களை சுயாதீனமாகப் பயன்படுத்திக் கொள்வதற்குமான ஏற்பாடுகளைக் கொண்டிருக்க வேண்டும் என்று உறுதியாகக் கோரும் அளவிற்கு நமது தேசிய அபிலாஷைகள் இன்று கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருக்கின்றன.
அரசாங்கமும் விடுதலைப் புலிகள் அடங்கலாகத் தமிழ்த்தரப்பும்,
கட்டம் கட்டமாக அரசியல் பேச்சுவார்த்தைகளிலும் தீர்வு முயற்சிகளிலும்
முஸ்லிம்களை ஒரங்கட்டிச் செல்வதானது, நமது மக்களின் வெகுசனப்
போராட்டங்கள் தீவிரமடைவதற்கும், மாற்றுப் போராட்டங்கள்
தீவிரமடைவதற்கும், மாற்றுப் போராட்ட வழிமுறைகள் பற்றித் தீவிரமாக O2

சிந்திப்பதற்கும் வழிவகுத்து வருகின்றது. அத்துடன் தமிழ் - முஸ்லிம் சகவாழ்வுக்காக தமிழ்த் தரப்பில் மேற்கொள்ளப்படும் முயற்சிகள் ஒப்பீட்டளவில் மிகச் சொற்பமானதாக அமைந்துள்ளமை, இப்போக்கினை மேலும் தீவிரப்படுத்தவே செய்யும் என்பதை வரலாற்று அனுபவங்களைக் கொண்டு உணர முடியும் என்பதையும் இங்கு சுட்டிக் காட்ட
விரும்புகின்றோம்.
நமது மக்கள் மீதும் நமது அரசியல் அபிலாஷைகள் மீதும் பிரயோகிக்கப்படும் தமிழ் மேலாதிக்கப் போக்குகளை விட்டுக் கொடுக்காது எதிர்த்து நிற்கும் அதேசமயம், சிங்கள இனவாத அடக்குமுறைகளுக்கு நீண்டகாலமாக உள்ளாக்கப்பட்டு வரும் தமிழ் மக்களின் நியாயமான போராட்டங்களுக்கும் அவர்களின் நியாயமான போராட்ட வடிவங்களுக்கும், அடக்கியொடுக்கப்பட்டு வரும் இன்னுமொரு மக்கள் திரள் என்ற வகையில் நமது தார்மீக ஆதரவினை தொடர்ச்சியாக தெரிவித்து வந்துள்ளோம்; தொடர்ந்தும் தெரிவிப்போம்.
இதேவேளை வடக்கு கிழக்கிற்கு வெளியே தென்னிலங்கையில் சிதறி வாழும் எமது சகோதர முஸ்லிம் மக்கள், மிக அபாயகரமான அரசியல் ஒடுக்குமுறைக்கு உள்ளாகி உள்ளனர். அத்தோடு தொடர்ச்சியான சமூக, பொருளாதார, கலாசார அடக்குமுறைகளுக்கு நீண்ட நெடுங்காலமாக உட்பட்டு மிகமோசமாகப் புறந்தள்ளப்பட்டு வருகின்றனர். இனப்பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காணப்படும்போது அவர்களது அரசியல் அபிலாஷைகளும், சமூக, பொருளாதார, கலாசார உரிமைகளும் திட்டவட்டமாக உறுதிப்படுத்தப்படல் வேண்டும். அவர்களோடு எமக்குள்ள மிக நெருக்கமான பிணைப்பின் காரணமாக தொடர்ந்தும் அவர்களுக்காக குரல் எழுப்புவதையும் போராடுவதையும் எமது கடப்பாடாகக் கொண்டுள்ளோம்.
Ո3

Page 4
அவ்வாறே கடுமையான சமூக, பொருளாதார அரசியல் அடக்கு முறைகளுக்கு உள்ளாக்கப்பட்டு வரும் மலையகத் தமிழ் மக்களின் சமூக, அரசியல், பொருளாதார உரிமைகள் அரசியல் தீர்வு ஏற்பாடுகளில் திட்டவட்டமாக உறுதிப்படுத்தப்பட வேண்டும் எனவும் குரல் கொடுக்கின்றோம்.
அக்கம் பக்கமாக வாழும் இன்னுமொரு சகதேசியத்தை விலையாகக் கொடுத்து உண்மையான சமாதானத்தை எவரும் அடைய
முடியாது என்பதை வலியுத்துகின்றோம்.
இன்றைய புறநிலைமையைப் பொறுத்தவரையில், சிங்கள அரசியல் என்றும் தமிழ் அரசியல் என்றும் முஸ்லிம் அரசியல் என்றும் அரசியல் போக்கு காணப்படுகின்றது. இப்படிப்பட்ட நிலையில் நமது மக்களையும் அரசியல் சக்திகளையும் ஒன்று திரட்டி தெளிவானதும் தீர்க்கமானதுமான முஸ்லிம் அரசியலின் பால், தீவிர செயற்பாட்டு நிலைக்கு கொண்டு வரவேண்டிய கடப்பாடு, சிவில் சமூகத்திலுள்ள அரசியல் பிரக்ஞை கொண்ட பிரிவினரின் பொறுப்பில் விடப்பட்டுள்ளது. இவ்வாறான தீர்க்கமான அரசியல் நிலைப்பாடுகளும் அரசியல் பிரகடனங்களும் செய்யப்படாமை முக்கிய குறைபாடாக உள்ளது. இவ்வாறான நிலைமைகளை மாற்ற வேண்டியதன் தவிர்க்க முடியாமை காரணமாகவே, பல்கலைக்கழக மாணவர் சமூகத்தின் நேரடியான இந்த அரசியல் களச் செயற்பாடுகள் அமைகின்றன.
இனப்பிரச்சினை உண்மையில் அரசியல் பேச்சுவார்த்தைகள்
மூலம் தீர்க்கப்பட வேண்டுமெனில், பெரும்பாலான சிங்கள அரசியல்
கட்சிகளும் அரசியல் சக்திகளும் நியாயமான ஒருமித்த நிலைப்பாட்டுக்கு
விரைவில் வந்தாக வேண்டும். தமிழ்க் கட்சிகளையும் அமைப்புக்களையும்
பொறுத்தவரை, பெரும்பாலான பிரிவினர் ஒருமித்த அரசியல்
நிலைப்பாட்டிற்கு ஏற்கனவே வந்துவிட்டனர். எனவே வடக்கு கிழக்கு 04

முஸ்லிம் களின் அரசியல் பலத்தை ஒன்று திரட்டி, நமது உரிமைகளுக்காகவும் அரசியல் அதிகாரத்திற்காகவும் குரல்கொடுக்கவும் போராடவும் வேண்டிய கட்டம் மிக நெருங்கி விட்டது. இந்த வகையில் வடக்கு கிழக்கு முஸ்லிம்களின் அரசியல் எதிர்காலத்தைத் தீர்மானிப்பதற்கென அதிகாரமிக்க ஒன்றிணைந்த அரசியல் தலைமைத்துவம் நிறுவப்பட வேண்டியது இன்றைய வரலாற்றுத் தேவையாகும். இதில் முஸ்லிம் அரசியல் பிரதிநிதிகளும், அரசியல் சமூகவியல் துறைகளில் புலமையும், மக்கள் நலனில் அக்கறையும் கொண்ட சக்திகளும் இடம்பெற வேண்டும் என வலியுறுத்துகின்றோம்.
நமது சமூக, பொருளாதார அரசியல் அபிலாஷைகளை உள்ளடக்கியும் கடந்த கால வரலாற்று அனுபவங்களைப் பாடமாகக் கொண்டும், சக தேசிய இனங்களுடன் கெளரவமாகவும் சமத்துவமாகவும் சகவாழ்வு வாழ்வதைக் குறிக்கோளாகக் கொண்டும் கீழ்வரும் பிரகடனங்களை நாம் நமது மக்களின் ஏகோபித்த ஆதரவுடனும் அனைத்து முஸ்லிம் அரசியல் சக்திகளதும் ஒன்றுபட்ட பலத்துடனும் முன்மொழிகின்றோம்.
நமது அரசியல் பிரகடனங்கள்:
உலகளாவிய முஸ்லிம் 'உம்மாவின் ஒரு பிரிக்கமுடியாத கூறாக இலங்கை வாழ் முஸ்லிம்கள் அமைகின்றோம்.
இலங்கை வாழ் முஸ்லிம்கள் சமய, பண்பாட்டு, கலாசார அம்சங்களில் தனித்துவமானவர்களாகவும் , தனியான இனத்துவப் பணி பு கொண்டவர்களாகவும் வரலாற்று ரீதியாக நிலைபெற்று வருகின்றோம்.
இலங்கை முஸ்லிம்களில் அரசியல் அதிகாரத்தை தனியாக நிறுவும் அளவிற்கு செறிவாக அமைகின்ற வடக்கு கிழக்கு முஸ்லிம்களாகிய 05

Page 5
நாம், அரசியல் ரீதியில் தனித்துவமானதும் குறிப்பானதுமான பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளோம். அந்தவகையில் தனித்துவமான அரசியல் அபிலாஷைகளையும் அரசியல் தீர்வுகளையும் வேண்டி நிற்கின்றோம். அதாவது தனியான தேசியக் குணாம்சங்களைப் பெற்றவர்களாக வளர்ச்சி பெற்றுள்ளோம். எனவே பின்வரும் அம்சங்களை குறிப்பான அபிலாஷைகளாக வடக்கு கிழக்கு முஸ்லிம்களாகிய நாம் உள்நாட்டிலும் சர்வதேச சமூகத்தின் முன்னிலையிலும் பிரகடனம் செய்கின்றோம்.
1. வடக்கு - கிழக்கு முஸ்லிம்கள் தனியான அரசியல் சமூகம், தனியான தேசிய இனம் அல்லது தனியான தேசம் (Seperate Nationality or Nation). இங்கு தேசிய இனம் அல்லது தேசம் என்பது பொதுவான அரசியல் உணர்வினால் பிணைக்கப்பட்ட, பண்பாடு, கலாசார அம்சங்களில் தனித்துவமான மக்கள் கூட்டம் என்பதைக் குறிக்கின்றது.
2. வடக்கு கிழக்கு பிரதேசம் முஸ்லிம்களின் பாரம்பரியத் தாயகம்.
3. வடக்கு கிழக்கு முஸ்லிம்கள் தமது அரசியல் தலைவிதியினை தாமே தீர்மானித்துக் கொள்ளும் சுயநிர்ணய உரிமை கொண்டவர்கள்.
4. இன்றைய அரசியல் சூழலில், வடக்கு கிழக்கு முஸ்லிம்கள்
செறிவாக வாழும் பிரதேசங்களை ஆள்புல எல்லையாகக் கொண்டதும், அரசியல் ரீதியில் சமத்துவமானதுமான ஒரு சுயாட்சி அரசியல் அதிகார அலகு, அரசியல் தீர்வில் எமக்கு உறுதிப்படுத்தப்படல் வேண்டும்.
O6

வடக்கு கிழக்கிற்கு வெளியே தென்னிலங்கையில் சிதறி வாழும் எமது சகோதர முஸ்லிம் மக்களது சமூக, பொருளாதார, அரசியல், கலாசார உரிமைகள் நியாயமான முறையில் உறுதிப்படுத்தப்படல் வேண்டும். அதற்காகக் குரல் எழுப்புவதும் போராடுவதும் எமது கடப்பாடாகும்.
மேற்சொன்ன அடிப்படை அம்சங்களின் கீழ்.
வடக்கு - கிழக்கு முஸ்லிம்கள் என்ற தனியான அரசியல் வகையினமாகிய (Political Category) நாம் அரசியல் சமத்துவமும், சுயாட்சி உரிமையும் கொண்டவர்கள். இப்போதைய அரசியல் பேச்சுவார்த்தைகளிலோ அல்லது இதற்குப் பின்னரே எந்தவகையான அரசியல் தீர்வு எட்டப்பட்டாலும் நமக்குரிய இந்த அரசியல் சமத்துவமும், சுயாட்சி உரிமையும் மறுக்கப்பட முடியாதவையாகும்.
நமது சுயாட்சி முறையை உறுதிப்படுத்தும் அரசியல் சாசன ஏற்பாடுகள், தேசிய இனங்களுக்கு அரசியல் சமத்துவத்தை உறுதிப்படுத்துகின்றதும் அரசியல் அதிகாரம் வழங்குகின்றதும், அதற்கான ஆள்புல எல்லையை நிர்ணயிப்பதும், நமது பாதுகாப்பினையும் இருப்பினையும் உத்தரவாதப்படுத்துவமான ஒரு ஏற்பாடாக அமைய வேண்டும். அவ்வாறான தீர்வினை அடையக் கூடிய அரசியல் பேச்சுவார்த்தைகளில் சமத்துவ அந்தஸ்துடன் (முஸ்லிம்கள் இனப்பிரச்சினையில் நேரடியாக சம்பந்தப்படாத பிரிவினர் என்ற அல்லது இதுபோன்ற குறிப்பீடுகள் மூலமாக வடக்கு கிழக்கு முஸ்லிம்களை அரசியல் ரீதியாக ஓரங்கட்டுதல் நிறுத்தப்பட்டு) தனித்தரப்பாக வடக்கு கிழக்கு முஸ்லிம்கள் கலந்து கொள்வது உறுதிப்படுத்தப்படல் வேண்டும்.
07

Page 6
«Х
Ko
{
X
e
*
வடக்கு கிழக்கு முஸ்லிம்களின் அரசியல் எதிர்காலத்தைத் தீர்மானிப்பதற்கென அதிகாரம் மிக்க ஒன்றிணைந்த தலைமைத்துவம் நிறுவப்பட வேண்டும் என வலியுறுத்துகின்றோம்.
வடக்கு கிழக்கு முஸ்லிம்களின் அடிப்படை உரிமைகள் முறையான சட்ட ஏற்பாடுகளிலும் பிரயோகத்திலும் திட்டவட்டமாக உத்தரவாதப்படுத்தப்பட வேண்டும்.
அரசியல் பேச்சுவார்த்தைகளில் வடக்கு கிழக்கு முஸ்லிம்களின் தேசிய தனித்துவமும் அரசியல் சமத்துவமும் அரசியல் பிரதிநிதித்துவமும் உறுதிப்படுத்தப்படவில்லையெனில், அவ்வாறான அரசியல் பேச்சுவார்த்தைகள் வடக்கு கிழக்கு முஸ்லிம்களின் அரசியல் அபிலாஷைகளுடன் எந்தவித சம்பந்தமும் அற்றதாகும்.
வடக்கு கிழக்கு முஸ்லிம்களாகிய நமது அரசியல் அபிலாஷைகளுடன் எந்த வித சம்பந்தமும் அற்றதும், நமது மக்களின் அரசியல் இணக்கத்தினை ஜனநாயகபூர்வமாகப் பெற்றுக் கொள்ளாததுமான எந்தவித ஒப்பந்தங்களும் அரசியல் முடிவுகளும் தீர்மானங்களும் - நம்மை எவ்விதத்திலும் கட்டுப்படுத்தாது என்பதை உறுதிபடத் தெரியப்படுத்துகின்றோம்.
அவ்வாறான அரசியல் முடிவுகள் அனைத்தையும் அம்முடிவுகள் எட்டப்பட்ட அரசியல் பேச்சுவார்த்தைகளையும் வடக்கு கிழக்கு முஸ்லிம்காளாகிய நாம் முற்றாக நிராகரிக்கின்றோம். நமது மக்களின் இந்த நிராகரிப்பினை வடக்கு கிழக்கு முஸ்லிம்களின் அரசியல் பிரதிநிதிகள் பகிரங்கமாக முன்வைக்க வேண்டும் என வலியுறுத்துகின்றோம்.
08


Page 7
6.Loggi 2 LGOTI,
சமஷ்டி முறைத் தீர்வில் முஸ்ல வேண்டும்.
வடக்கு கிழக்கு அபிவிருத்தி, வெளிநாடுகளில் இருந்து டெ முஸ்லிம்களுக்கும் பகிர்ந்தளி
பிளவுபட்டிருக்கும் முஸ்லிம் அ சமூக நலனை மட்டும் கருத்த
வடக்கு கிழக்கு முஸ்லிம்களின் தனித்தரப்பாக வெளிப்படுத்துவ ஒவ்வொரு கட்டத்திலும் இட
இறுதித் தீர்வு வடக்கு கிழக்கு எய்தப்பட வேண்டும்.
வடக்கு கிழக்கிற்கு வெளியே எமது சகோதர முஸ்லிம் மக்க கலாசார உரிமைகள் நியாயம
வேண்டும். அதற்காகக் குரல
கடப்பாடாகும்.

2க் கோரிக்கைகள்
லிம்களின் சுயாட்சி பிரகடனப்படுத்தப்பட
புனர்வாழ்வு, மீள்குடியேற்றத்துக்கென றப்படும் நிதி, நியாயமான முறையில் க்கப்பட வேண்டும்.
ரசியல் தலைமைத்துவங்கள், முஸ்லிம் தில் கொண்டு ஒன்றுசேர வேண்டும்.
* அபிலாஷைகளை சம அந்தஸ்துடன் வதற்கு சமாதானப் பேச்சுவார்த்தையின் மளிக்கப்பட வேண்டும்.
கு முஸ்லிம்களின் சம்மதத்துடனேயே
தென்னிலங்கையில் சிதறி வாழும் களத சமூக, பொருளாதார, அரசியல், )ான முறையில் உறுதிப்படுத்தப்படல் ல் எழுப்புவதும் போராடுவதும் எமது