கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஒரு சிறுபான்மை சமூகத்தின் பிரச்சினைகள் 4

Page 1
ganda
SISE
äğfišFfi
邸
 


Page 2

ஒரு சிறுபான்மை சமூகத்தின் பிரச்சினைகள்
நான்காம் பாகம்
சிங்கள பேரினவாத அரசாங்கங்களின் இனவாதக் கொள்கையும் சிறுபான்மை
இனங்களின் திரிசங்கு நிலையும்
அ.முகம்மது சமீம், B.A. (Hons) Dip, in Ed., TEFL (LONDON)
முன்னை நாள் கல்விப் பணிப்பாளர்
(இலங்கை)
றிசானா பப்ளிஷர்ஸ் அப்துல்லா ஷொப்பிங் கம்ப்ளெக்ஸ் மருதானை, கொழும்பர-10 இலங்கை

Page 3
ഉ_/ിഞ്ഥ ஆசிரியருக்கு முதற் பதிப்பு 1998
ഖിഞ്ഞ ഖ இந்தியா 110/- இலங்கை 250/-
TITLE : ORU SIRUPAN MAI SAMUGATHIN
. P|RACH|NA|KAL- VOLUME |V
- PROBLEMS OF A MINORITY COMMUNITY SUBJECT : POLITICAL SCIENCE AUTHOR : A MOHAMED SAMEEM SIZE OF BOOK - 12.5X18 CM NO. OF PAGES : 4 50
TYPE 1 1. POINT
PAPER : 116 CREAMWOVE BNDING : ART BOARD
PRICE : IN INDIA : 10/-
| N SRI LANKA : 250/-
ISBN : 955-838-04-5
LASER TYPING : NIRA DESIGNS
217, ARCOT ROAD, VADAPALAN CHENNA - 600 026. Ph:4881 382
SALES IN INDIA : KCIMA RAN PCBLISHERS
79, 1 ST STREET, KUMARAN COLONY, WADAPALAN, CHEN NA - 6OO O26.

சமர்ப்பணம்
என் மனைவி
சித்தி பாத்திமாவுக்கு

Page 4
ஆசிரியரின் ஏனைய நூல்கன்
1. 9) si Go Tifiu 8,6). Të 5 TT in
2. இலங்கை முஸ்லிம்களின் திருமண சம்பிரதாயங்கள் 3. Problems of a Minority Community
4. Marriage Customs of the Muslims of Sri-Lanka 5. ஒரு சிறுபான்மை சமூகத்தின் பிரச்சினைகள் (முதலாம் பாகம்) 6. ஒரு சிறுபான்மை சமூகத்தின் பிரச்சினைகள் (இரண்டாம் பாகம்)
7. ஒரு சிறுபான்மை சமூகத்தின் பிரச்சினைகள் (மூன்றாம் பாகம்)

முன்னீடு
மானுவீகத்தின் விமுக்தி உண்மையில் உறுதி நிர்ப்பந்தங் களுக்குஞ் சேவகஞ் செய்யாத எழுத்து ஊழியம் - இவை நான் மிகவும் நேசிப்பவை. என் தனித்துவம் பிறருக்கு இடர் தராத் தனிமம். இருப்பினும், இத்தனித்துவம் தமிழன் என்கிற உணர்வாலும், அது குறியிட்டுச் சுட்டும் இனத்துவ அடையாளங்களிலும் வனையப் பட்டதும். விமுக்தி பெற்ற தனித்துவங்களின் கூட்டுத் தொகையும் மானுவீகமே. மானுவீகம் என்பது மானிடத்திலே தெய்வ தரிசனம், அத்தகைய தரிசனம் எத்தகைய பரசவ நிலை! இத்தரிசனத்திற்கு உபகாரியாய் நிற்கும் அனைத்து ஞானங்களும் வேண்டப்படுவன. இந்த ஞானத்துள் சரித்திர ஞானமும் அடங்கும். எனவே, சரித்திரப் பயிற்சியிலே நான் ஊன்றியுள்ள அக்கறையும் சத்தியமானது.
Zn+H.SO=Zns0+H, என்பதின் உண்மையை ஆய்வுக் கூடத்திலே எண்பித்துக் காட்டலாம். சரித்திரச் சான்றுகளை நிறுவுவதற்கு இத்தகைய வசதி இல்லை. இதனால் சரித்திரத் தகவல்கள் மங்கலானவையாகவும் சிதைந்தனவாகவுமே நம்மை அடைகின்றன. ஆட்சியாளர்கள் தமது அதிகாரக் குவிப்புக்காகவும், ஆளப்படு வோரின் நிபந்தனையற்ற பணிவுக்காகவும், பண்டு தொட்டு வந்தன எனப் புதிய சோடிப்புகளை சாமர்த்தியமாகப் புகுத்துவர். மேட்டுக் குடியினரின் அதிகாரங்களைத் தக்க வைக்கும் தத்துவங்கள் சமய அநுட்டான முறைமைகளுடன் கலப்படம் செய்யப்படும். ஞானம் பாமர மக்களிடமிருந்து அந்நியப்படுத்தப்பட்ட நிலையில், இச்சோ டிப்புகளும் கலப்படங்களும் சான்றாதாரங்களாய் வலிமைபெறும். வரலாற்றின் உண்மை ஆதாரங்கள் நைந்து, நொந்து, மறையும்! இலங்கை வரலாற்றினைத் துலக்கும் பணியிலே, இத்தகைய அறிவு மோசடிகளும், ஞானப் பிறழ்வு வேள்விகளும் பல நூற்றாண்டு காலமாகவே நிகழ்ந்து வந்துள்ளன. ஏடுகள் காத்தோரும், நாடு ஆண்டோரும் இணைந்து சாதித்த சதியினால், பழைமை பற்றிய ஞானம் பாமரருக்கும் பஞ்சைகளுக்கும் கிட்டாதாயிற்று. உண்மை. இதற்காகச் சரித்திரம் என்கிற கற்கை நெறியைக் குப்பை மேட்டிலே வீசுவதா?

Page 5
இடையறாத ஞானத் தேடல் வாழ்க்கையை விளக்கும். ବT ଗଠିt தனித்துவம் இனத்தின் தனித்துவத்திலும் தொங்கி நிற்கின்றது. ஒவ்வோர் இனத்துக்கும் தனித்துவ அடையாளம் உண்டு மரபு வழியில் கசிந்து, திரண்டு, சூக்குமமாயும் தூல மாயும் இந்த அடையாளம் நம்முள் வேர் கொண்டு வாழ்கிறது. எனவே , மரபினை-சுய மரபினை - அறிதல் அவசியம் அந்த மரபின் உயிர்த்துவ சாங்கங்கள் வாகாக வேண்டும். மரபு கற்பிக்கும் நெறிகள் விழுமியங்களாய் உயரும் இந்த விழுமியங்கள் ஓர் இனத்துக்குத் தனித்துவ கெளரவங்களையும் முதுசொம்களையும் உபகரிக்கும். இவை இழக்க ஒண்ணாத சம்பத்துகள் இந்தச் சம்பத்துகளைத் தக்க வைப்பதற்கு சரித்திரம் பற்றிய ஞானத் தேடல் தேவை. பாழ்பட்டுப் போன இழவுப் பயணமாகத் தோன்றும் இன்றைகளின் ஊடாக, நாளைய விடியலை அடைவதற்கு இந்த ஞானவிளக்கு ஏற்ற துணை நீண்ட இருட் குகையின் ஊடாக, மீண்டும் ஒளிக்கு சரித்திரத்தின் உண்மைகளை அறிவதிலே சத்திய அக்கறை பூண்டவன், இடையறாத தேடுதல் ஒன்றிலே தன்னைப் பிணைத்துக் கொள்ளுதல் நியதி. பொய்மை என்கிற பதர்களைத் தூற்றி உண்மை என்கிற
நெல்மணிகளைப் பொறுக்கிச் சேமிக்கும் தேடல்
இத்தகைய தேடுதல் நடத்தும் இயல்பு என் வாழ்க்கையின் இன்னொரு முகம்.
கடந்த காலம் என்னும் இருட் பாதையைப் பிளந்து, நூற்றாண்டுகளுக்கு முன்னர் நடமாடிய மனிதர்கள், அவர்கள் கண்ட கனவுகள்-பூண்ட இலட்சியங்கள்-வாழ்க்கைப் போராட்டத்திலே அவர்கள் சந்தித்த தோல்விகள்-இயற்றிய சாதனைகள்-அவர்கள் சாதித்த வெற்றிகள், அவர்கள் உருவாக்கிப் போற்றிய நம்பிக்கைகள்சடங்குகள்-நாகரிகங்கள்-பண்புகள்-விழுமியங்கள், அவர்களுடைய வெற்றிகளுக்கான காரணிகள்-தோல்விகளுக்கான ஏதுக்கள், இவை பற்றி எல்லாம் அறிவதற்கான ஞான வெளிச்சத்தினைச் சரித்திர அறிவு தன்னகத்தே கொண்டுள்ளது என நான் மயங்கியதும் உண்டு. மனித குலம் தன் முன்னேற்றம் கருதி உருவாக்கிய எண்ணங்களின் உயிர்ப்புகளை அறிந்து நம் முன்னோரின் தோள்களிலே நின்று சம
காலத்தினைப் புதிய வளர்ச்சிக் கட்டமாகப் பாவித்து நாளைகளை ஒர்

உத்தம பொற்காலம் ஆக்கிடலாம் என்கிற அங்க லாய்ப் பிலே, அரசியல் நிகழ்வுகளிலும்-கோ ஷ எழுச்சிகளிலும் என்னைப் பிணைத்ததும் வாஸ்தவம், ஆனால், எத்தகைய ஏமாற்றம்! நாளாக, நாளாக, இலங்கை வரலாற்றினை நுணுகி ஆராயும் முயற்சியிலே ஈடுபட, ஈடுபட சரித்திரத்தின் பிறிதொரு கோர முகத்தினையும் தரிசிக்க நேர்ந்தது. கருங்காலி நிறமும் திராவிட இனத்தின் உருவச் சாயலும் கொண்ட ஒர் இனம் தன்னை ஆரிய இனமாகப் பிரகடனப் படுத்திக் கொண்ட கொடுமை சிங் ஹல" என்கிற மகத்துவம் சாற்ற மானிடப் பெண் சிங்கம் ஒன்று உடலுறவு வைத்துச் சந்ததி பெருக்கியது என்கிற கடைந்தெடுத்த ஆபாசம் துஷ்டன் எனத் தந்தையினாலே தேசப் பிரஷ்டம் செய்யப்பட்ட தூர்த்தன் ஒருவனை ஒர் இனத்தின் பிதாமகனாய் நிவேதிக்கும் அவலம் மகனின் வெற்றி தேடி எதிரியின் படை வீரனுக்கு உடல் விருந்து படைத்ததூர்த்தையை இலட்சிய ராஜமாதாவாக ஏத்தும் அவதி. குகைகளிலே வாழ்ந்த பிக்குகளுக்கு ஏற்பட்ட விநோத வக்கிரங்களிலும் வறட்சிகளிலும் தோன்றிய விபரீதக் கற்பனைகள் இவை என இவற்றை நிராகரிக்காமல், இவையே நமது அசலான வரலாறு அட்சரம் பிசகாத உண்மைகள் ஆரிய சிங்கள இனத்தின் மூலாதார வேதத்தின் பகுதி என்கிற பலவந்தத் திணிப்பு! பகுத்தறிவிலே ஆரம்பப் பரிச்சயம் வைத்திருப்பவன் கூட, இந்த ஆபாச-அபத்தக் கற்பனைகளைக் கடாசு குப் பையிலே' என்று சொல்லுவான். ஆனால், இலங்கையில் வளர்ந்து சடைந்துள்ள புத்திஜீவிதம் இந்த அபத்தக் குப்பைகளையே உரமாக உண்டு, கொழுத்து, மூர்க்கம் அடைந்துள்ளது. இத்தகைய சூழலிலேதான், சமீமின் இந்த நூல் பிரசித்தமாகின்றது.
நண்பர் ஏ.எம். சமீம் அவர்கள், தம்முடைய வாழ்க்கையின் சத்தான பகுதி ஒன்றினை, பரமார்த்த சரித்திர மாணாக்கனாய் செலவு செய்துள்ளார். சரித்திர ஆதாரங்கள் பற்றிய இடையறாத தேடலிலே ஈடுபட்டு, புதிய ஞான வெளிச்சக் கூட்டினை அமைத்தல் அவருடைய எத்தனம். அழகான ஆசை ஆழமான உழைப்பு மனதில் உறுதியும், வாக்கில் இனிமையும், நினைவில் நல்லதும் வேண்டியே, 'ஒரு சிறுபான்மை சமூகத்தின் பிரச்சினைகள் என்னும் நான்கு பாகங்களிலே விரியும் இந்நூல் அமைந்தது. சென்னையில் என்னைச்

Page 6
சந்தித்த நண்பர் ஏனைய பாகங்களை எனக்கு அன்பளிப்புச் செய்து, நான்காம் பாகத்திற்கு நீங்களே முன்னுரை தருதல் வேண்டும் என அன்புடன் வற்புறுத்தினார். கடந்த நான்கு தசாப்தங்களாக இருவரும் நட்புப் பாராட்டுகிறோம். ஈழத்துத் தமிழ் இலக்கிய ஊழியத்தில் இருவரும் இரு வேறு கன் னைகளைச் சேர்ந்தவர்கள் கருத்து முரண்பாடுகள் உடையவர்கள் கருத்து முரண்பாடுகளின் மத்தியிலும் நட்புப் பேணப் படலாம் என்கிற இனிய பண்பினைப் பாராட்டுபவர்கள் இருப்பினும், ஏன் என் முன்னுரை ? என்கிற அவதியின் வசப்பட்டேன். அவதிகளுக்கு மேலானது நட்பு, மசிந்தேன். ஆனால், நூல்களை முழுமையாக வாசித்த பொழுது, அமைதி பிறந்தது. நெஞ்சில் உரமுமின்றி, நேர்மைத் திறமுமின்றி, வஞ்சனை சொல்லும் இலங்கையின் புத்திஜீவிகள் கூட்டத்திலிருந்து விலகி, ஊக்கமும், உள் வலியும் உண்மையில் உறுதியான பற்றும் கொண்டு சமீம் இந்நூலின் ஆக்கப் பணியினை நிறைவு செய்துள்ளார். புத்திஜீவிகள்' என வானத்திலே தலை வைத்துப் பவனி வரும் போகி களிடமிருந்து முன்னுரை பெறுவதிலும் பார்க்க, அலட்டிக் கொள்ளாது, என்றும் சரித்திரத்தின் பரமார்த்த மாணாக்கனாய்ச் சம்பாவனை செய்து வாழும் ஒரு பரதேசி'யிடம் பெறுதல் நலமாய் இருக்குமெனத் தீர்மானித்தாரெனக் கொள்ளுதல் செளகரியமானது.
இன்னொரு செளகரியம் பதச் சோறுடன் துவங்குதல், சிங்கள பாடநூல்கள் சிறுபான்மை இனங்களை வெறுத்தொதுக்கும் விதத்திலே நாடு பெளத்த சிங்களவர்களுக்கு உரித்து என் னும் தொனியிலே எழுதப்படுகின்றன. மாறாக, தமிழ் - முஸ்லிம் பாடசாலைகளிலே கற்பிக்கப்படும் பாட நூல்கள் இனசெளஜன்யத்தை வளர்க்கும் விதத்திலே எழுதப் பட்டுள்ளன.
இலங்கையின் இக்காலக் கல்வி நிலையைக் கண்டு சமீமின் நெஞ்சம் வெதும்புகின்றது. அவருடைய வெதும்பலின் ஊடாகவும், இறந்தனவாகி விட்ட மூன்று தசாப்தங்ளுக்கு ஊடாகவும், சடுதிப் பயணம் பாட நூல்களைப் பிரசுரிக்கும் திமிங்கிலங்களின் சுரண்டல்களிலிருந்து கல்வி விடுதலை பெற வேண்டும் புதிய தேவைகளை மனதிலே கொண்டு பாடநூல்கள் எழுதப்படுதல்

ΙΧ
வேண்டும் இந்நூல்கள் மாணாக்கருக்கு மலிவு விலையிலே கிடைத்தல் வேண்டும் இவற்றை அரசு நிறுவும் பாடநூற் சபையின் மூலம் சாத்திய மாக்குதல் சாலும் இத்தகைய பிரசித்தங்களுடன் இலங்கையில் பாடநூற் சபை அமைக்கப்படுவதாயிற்று. ஒவ்வொரு பாடத்திற்கும் தனித் தனி குழுக்கள். அந்த அந்தப் பாட நெறிகளிலே சிறந்து விளங்கும் கல்விமான்களை அகில இலங்கையையும் சலித்துத் திரட்டினார்கள். சரித்திர பாடநூல்களைத் தயாரிக்கும் குழுவிலே பணியாற்ற நானே முதலாவது தமிழனாய் நியமனம் பெற்றேன். அந்தக் குழுவில் மொத்தம் பதினைந்து கல்விமான்கள்' அறுவர் தமிழர் சிங்களவர் ஒன்பதின்மர் முதலாவது நூலின் முதலாவது பாடத்தினை எழுதும் பொறுப்பு என் வசம் தரப்பட்டது. இலங்கையில் பெளத்தம்-இந்து மதங்களின் வருகையும் பரம்பலும் பாடத்துக்கான வஸ்து. இந்திய துணைக் கண்டத்திலே தோன்றிப் பரம்பிய இந்துபெளத்த மதங்கள், கிறிஸ்து சகாப்தத்திற்கு முன்னரே இலங்கையில் பரம்பி, நாகரிக வளர்ச்சிக்கு உதவின. என்கிற கருத்தினைத் தொனிக்கும் ஒரு வாசகம் என் பாடத்தில் இடம் பெற்றிருந்தது. குழுவிலிருந்த ஒன்பது சிங்கள உறுப்பினர்களும் இதற்கும் கடும் ஆட்சேபனை தெரிவித்தார்கள் புத்த பிரான் இந்தியாவில் பிறக்கவில்லை. அவர் பிறந்தது நேப்பாள நாட்டிலே' 'இந்தியாவின் மேலாண்மையிலே சிங்கள நாகரிகம் வளர்ந்தது என்று எழுதுவது முறையல்ல. 'இந்தியாவிலுள்ள அனைத்து நாகரிகங்களிலும் வேறானதும் தனித்துவமானதும் சிங்கள நாகரிகம் என்பதற்குச் சான்றாதாரங்கள் உள. 'இந்து மதப் பரம்ப ல் , கிறிஸ்து வுக்குப் பின் பத்தாம் நூற்றாண்டில் சோழர் படையெடுப் பின் பின்னரே நிகழ்ந்தது. இவ்வாறு ஆட்சேபனையிலே பல சுருதிகள். அந்த ஒன்பது பேரும் சாமானியரல்லர். பல்கலைக்கழகத்தில் சரித்திரத்தில் சிறப்புப் பட்டங்கள் பெற்றவர்கள் கல்வித் துறையில் தடம் பதித்தவர்கள். புத்திஜீவிகள் பழகுவதற்கு இனியர் மனித உறவுகளில் அறிவு நாகரிகம் பேணுபவர்கள். அவர்களிடமிருந்து இத்தகைய எதிர்ப்பினை நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை. புத்தர் காலத்தில் நேப்பாளம் என்கிற நாடு இருந்ததா? புத்தர் ஞான ஒளி பெற்ற கயா எந்த நாட்டிலே இருக்கிறது? பல்லவர் காலத்தில் வாழ்ந்த நாயன்மார்களல்லவா திருக்கேதீஸ்வரம் பற்றியும், திருக்கோணமலை பற்றியும் பதிகங்கள் பாடினார்கள் ? என்கிற வகையில் என்

Page 7
Χ
நியாயங்களை முன்வைத்தேன். ஏனைய ஐந்து தமிழ் உறுப்பினரும் பேசா நோன்பில் என்னை அகதியாக் கினர் நியாயங்கள் பன்றிகள் முன்னால் வித்திப்பட்ட முத்துக்களாயின. நாங்கள் இலங்கை பற்றிய இலங்கை வரலாறு ஒன்றினை எழுதுவதற்குச் சேர்ந்திருப்பதாகவே நான் விளங்கிக் கொண்டேன். நீங்கள் இலங்கையின் சிங்கள வரலாறு எழுத நினைக்கின்றீர்கள் போலும் தமிழ்ப் பாடசாலைகளுக்கு இன்னொரு GJ 609 UT Got வரலாற்று நூலா எழுதுவது? இந்தக் குழுவில் என் சேவை பொருந்தாது' என்று கூறி வெளியேறினேன். அப்பொழுது கல்வி அமைச்சிலே செல்வாக்குச் செலுத்திய கலாநிதி ஆனந்த குருகே ஏதோ சமரசம் செய்து வைத்தார். 1965இல் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தாலே இந்த பாடநூற் சபையும், அதன் குழுக்களும் கலைக்கப்பட்டன. அத்துடன் இந்த ஆக்கினை ஒழிந்தது!
மூன்று தசாப்தங்களுக்கு முன்னர் என் மனசிலே தோன்றிய அச்சம், இன்று நிதர்சனமாகிவிட்ட கோரத்தினை, சமீமின் நூலிலேயே வாசித்துத் துக்கித்தேன்.
இலங்கையிலுள்ள சிறுபான்மை இனங்களின் பிரச்சனைகள்
குறித்து அநேக நூல்கள் எழுதப்பட்டுள்ளன. 'பூரீலங்கா மண்ணுக்கு பூமி புத்திரர்களான சிங்களர் மட்டுமே உரிமையாளர் சிங்களர் ஆட்சியாளராய் புத்த பகவானாலேயே அர்ச்சிக்கப்பட்டவர்கள். ஆரிய பெளத்த சிங்களர் மட்டுமே முதல் மரியாதைக்கு உரியர் ஏனைய அனைத்துச் சிறுபான்மை இனங்களும் வந்தேறுகுடிகள் அண்டிப் பிழைக்க வந்த குருவிச்சைக் கும்பல் பூரீலங்கா நாட்டிலே வாழும் மரபு உரிமமோ முகாந்திரமோ அவர்களுக்குக் கிடையாது. இரண்டாந்தரப் பிரஜைகளாகக் கையேந்தி வாழ்ந்து தொலையட்டும். இந்தச் சலுகைகூடச் சிங்க ளருடைய தாராளத்திலிருந்தே பெறப்படுகின்றது.' என்கிற வேதம், அநகாரிக தர்மபால காலந்தொட்டே-அல்ல, மகாவம்ஸம் புனையப்பட்ட காலந் தொட்டே-செலாவணியில் உள்ளது. இந்த வேதத்திற்கு வலுசேர்க்கும் ஆவணங்களை இன்றளவும் சிங்களப் புத்திஜீவிகள் முயன்றுழைத்துத் தயாரித்துக் கொண்டிருக்கிறார்கள் அறிவுத் திலகங்களாகப் போற்றப்படும் புத்த பிக்குகள், கல்லூரி அதிபர்கள் சட்டத்துறையில்

ΧΙ
நிபுணத்துவம் பெற்றவர்கள் நீதியரசர்கள் இலக்கியப் படைப் பாளிகள், நிர்வாக அதிகாரிகள் எழுத்தாளர்கள், அரசியல் வாதிகள் எனச் சகல மட்டங்களிலிருந்தும் இந்தப் புத்திஜீவிதக் கும்பல் முளைத்துள்ளது கல்வி கேள்விகள் மூலம் ஞானம் கைவரப் பெற்றவனையே புத்திஜீவி என நான் அர்த்தப்படுத்திக் கொள்ளுகிறேன். ஞானம் , துவேச ஆக்ரோ ஷங்களை மழுங்கச் செய்யும். சினத்தையும் மூர்க்கத்தையும் சிதைக்கும். தற்பற்றையும் ஆணவத்தையும் அறுக்கும். நியாயங்களை இனங்காணும் தெளிவு வாய்க்கும். அமைதி- சமத்துவ நிலை-ஒழுக்கம்-அடக்கம் ஆகிய பண்புகள் வாலாயமாகும். அறத்தின் பக்கலில் நிற்கும் திண்மை பொருந்தும். நல்வசனங்களும் நற்செயல்களும் இயல்பாகும். பின்னர் பைசாச உணர்வுகள் அனைத்தும் ஒடுங்கிய நிறைவு அரஹத் நிலையின் நிறைவு. இத்தகைய புத்திஜீவி ஒருவன் சிங்களர் மத்தியில் எப்பொழுது எந்த நூற்றாண்டில் தோன்று வான்? சிங்க ளர் திரட்டியுள்ள கெளரவர் சேனையிலே அணிதிரண்டுள்ள புத்திஜீவிகள் பெளத்தத்தினை ஒரு மதமாக மட்டும் கருதவில்லை. சிங்கள மேட்டுக் குடியினரின் சர்வ ஆதிபத்திய உரிமையை நிலைநாட்டும் அரசியல்கலாசார ஆயுதமாகவே பெளத்தத்தைத் தரிசிக்கின்றார்கள் மாறாக, தமிழ்ப் புத்திஜீவிகள் பலரும்-மிச்சில்கள் பொறுக்கப் போஜன மேஜையில் இரண்டாம் பந்தியில் இடம் பிடித்தோர் தவிர-இலங்கை மண்ணிலே தமிழர்களுக்கும் மரபுவழி உரிமைகள் உண்டு என்பதை நிறுவும் ஆவணங்கள் பலவற்றைத் தயாரித்துள்ளார்கள். இவர்களிலே சிலரேனும் , தங்கள் கட்சியின் நியாயங்களைப் பலவீனப்படுத்தக்கூடிய சான்றுகளை மறைத்தோ, அன்றேல் வசதியாக மறந்தோதான் தமது ஆவணங்களைச் சமைத்துள் ளார்கள். மனித நேயம் என்பது விதையடிக்கப்பட்டுள்ள சமர் பூமியிலே நியாயங்கள் என்றும் வெல்வதும் இல்லை.
வரலாற்று ஆதாரங்களை முன்வைக்கும் பொழுது, அறிவுபூர்வ மாகவே மூன்றாவது வழியொன்று இந்நூலிலே பயிலப்படுகின்றது. இந்த அணுகுமுறையே இந்த நூலின் பாரிய வெற்றி எனக் கொள்ளினும் பொருந்தும் முரண்பட்டு நிற்கும் இரண்டு இனங்களும் முன்வைக்கும் நியாயங்களும், அவற்றை ஊன்றக் கைப் பற்றிய ஆதாரங்களும் இங்கு வைக்கப்படுகின்றன. நடுவு

Page 8
ΧIΙ
நிலைமை, மிகுந்த எச்சரிக்கையுடன் பேணப்படுகின்றது. வரலாற்றுத் தகவல்கள் என இருசாரரும் சாட்டும் சான்றுகள் முழுமையாகத் தரப்படுகின்றன. இந்தத் தகவல்கள் வருங் காலச் சரித்திர ஆய்வாளருக்குக் கிட்டுதல் வேண்டும் என்கிற சமீமின் கரிசனை வெளிப்படை இந்த நான்காவது பாகத்திலே அண்மைக் கால இலங்கை வரலாற்றையும் அதன் போக்குகளையும், அவற்றை வனைந்தெடுக்கத் துணை போன நிர்ப்பந்தங்களையும் அறிவின் பரமார்த்த பக்தனாய் பதிவு செய்துள்ளார். அவற்றிலிருந்து பெறப்படும் கசப்பான இன முரண்பாட்டு மூர்க்கங்கள் பற்றிய செய்திகளைச் சாத்தியமான அளவுக்குச் சமீம் தவிர்த்துள்ள போதிலும், மனித நேயத்தின் பாற்படும் அக்கறைகளை ஒளிக்கவும் இல்லை. இதற்கு நிறைவான நிதானம் தேவை இந்த நிதானத்தின் பயிற்சியினால், இந்த ஆவணத்தின் நம்புதிறன் அதிகரிக்கின்றது.
நான்காம் பாகத்திலே விவரிக்கப்படுள்ள அநேக சரித்திர நிகழ்வுகளுக்கு நான் வாழும் சாட்சி. ஐம்பதுக்கு ஐம்பது, சமஷ்டி, தமிழ் ஈழம்" ஆகிய கோ ஷங்களின் நாயகர்களான ஜி. ஜி. பொன்னம்பலம், எஸ். ஜே. வி. செல்வநாயகம், சி. சுந்தரலிங்கம் ஆகிய தலைவர்களுடன் நன்கு பழகியிருக்கின்றேன். மற்றும் வி. நல்லையா , செள தொண்டமான், சு. நடேசன், எஸ். நடேசன், பொன் கந்தையா, அமிர்தலிங்கம் ஆகியோருடன் பிரச்சினைகளை இயல்பாக விவாதித்து மிருக்கிறேன் சிங் களத் தலைவர்களான ஜே.ஆர். ஜெயவர்த்தனா, பிரேமதாஸ, பூரீமாவோ பண்டாரநாயக்க, காமினி திஸநாயக்க, என்.எம். பெரேரா, கொல்வின் ஆர்.டி.சில்வா, விக்கிரமசிங்ஹ ஆகியோருடன் ஒரே மேடையில் அமர்ந்து அரசியற் பிரசாரங்கள் செய்து மிருக்கிறேன். மனிதன் அரசியல் பிராணி என்பதற்கு அப்பாலும் என் அரசியல் அக்கறைகளும் சமுதாய ஊழியமும் அமைந்தன. இந்தத் தலைவர்கள் எழுப்பிய கோஷங்களையும், அவை ஏற்படுத்திய அரசியல் சலனங்களையும், பின்னணிகளையும், நியாயங்களையும், விளைவுகளையும் இங்கே சமீம் சமர்ப்பித்துள்ள விதம் பிரமிப்பை ஊட்டு வன இந்தச் சம்பவங்கள் சிலவற்றைச் சித்திரிக்கும் பொழுது, சமீமுள் உறையும் மானிட நேயம் விழிப்படையும் கோலம் பரவசம் தருகின்றது.
'அஹிம்ஸ்-தர்மத்தைப் போதிக்கும் பெளத்த மதத்தைப்

XIII
பின்பற்றும் பெளத்தர்களும், அதன் நியமங்களைக் கடைப்பிடித்து அதனைப் போதிக்கும் பெளத்த பிக்குகளும் சிறுபான்மை சமூகங்களுக்கு எதிராக வன்செயலைத் தூண்டி விட்டார்கள் என்றால், அது உண்மையாக இருக்க முடியாது. ஆனால், அதுதான் உண்மை."
நாட்டின் சனத்தொகையில் முப்பது சதவீத மக்கள் பேசும் மொழியான தமிழ்மொழிக்குச் சம அந்தஸ்து கொடுக்காததும், பிரதேச அந்தஸ்தாவது வழங்குவதற்கு தடையாயிருப்பதும் அம்மொழிபேசும் சமூகங்களுக்குச் செய்யும் மிகவும் பெரிய துரோகமாகும். இவ்வெதேச்சாதிகாரக் கொள்கையை எதிர்த்துப் போராடுவது நியாயமானதே."
பிறிதோர் இடத்திலே , வவுனியாவிலும் கிழக்கு மாகாணத்திலும் (பாரம்பரியமாகத் தமிழ்பேசும் இனங்கள் வாழும் பகுதிகளில்) வலோற்கார மான சிங்களக் குடியேற்றத் திட்டங்கள் நியாயமற்றது என்றும் கூறுகின்றார். இத்தகைய தர்மாவேஷங்களுக்கு மத்தியிலும், அறிவுத் தேடலிலே அவர் கைப்பற்றும் நிதானம் மகா பராக்கிரமமானது. இந்த நிதானத்திலே யாரையும் புண்படுத்தலாகாது என்கிற அறிவு நாகரிகத்தினைப் பொருத்தும் லாவகம் நயமானது. நடுவு நிலைமை என்பது தர்மத்தினைத் துறக் காத நிதானம். கிடைத்துள்ள ஆதாரங்களுக்கும் தகவல்களுக்கும் வெளியே நின்று கருத்துச் சொல்லாத சாமார்த்தியத்தினைச் சமீம் கடைப் பிடிப்பதாக வெளிப்பார்வைக்குத் தோன்றுகிறது. இது வெளித் தோற்றமே கல்வி என்பது கசடறக் கற்றல் மட்டுமல்ல. அதற்குத் தக நிற்றலுமாம். நியாயங்களை மட்டு மல்லாமல் தர்மங்களையும் தேர்ந்து கொள்ளுவதற்கும் இந்நூல் வசதி செய்கின்றது. இந்த வசதிகளை அவர் பிரசாரத் தொனிகளின்றி அமைத்துத் தருதல் பாராட்டிற்குரியது.
இருப்பினும் , வரலாற்று ஆசான் என்கிற அறிவுஜீவிதத் திருத்த விசிலே இந்த நூலின் மூலம் தமக்கும் ஒர் ஆசனத்தினை சமீம் யாசிப்பதாகவும் தோன்ற வில்லை. அடிமட்ட மக்களுடைய ஏ க்கங்களின் பங்காள னாகவும் இலங்கையின் மார்க் ஸிஸ தலைமைத்துவம் தோற்றுப்போன போதிலும் பாட்டாளி மக்களுடைய சமவுடமை அரசியல் அதிகாரத்திலேதான் சிறுபான்மை பிரச்சினைகள்

Page 9
XIV
சீராக நேர் செய்யப்படும் என்கிற தத்துவத்தின் தோழனாகவும் தம்மை அடையாளப்படுத்தும் நேர்த்தியைப் பயிலுகின்றார் மானு வீகம் ஆராதிக்கப்படும் ஒரு சகஜ சூழலிலேதான்-கிராமியனும் அரசியல் பிரக்ஞை பெற்ற சுரண்டலற்ற சகாயச் சூழலிலேதான் - இலங்கை மண்ணின் அனைத்து இனங்களும் சமத்துவ உரிமைகளைச் சுகிக்கலாம் என்கிற கருத்துவத்தை, பாலுள் உறை நெய்யாக நான்கு பாகங்களிலும் நெய்துள்ளார்.
இன்னொரு தனித்துவமும் சிறப்பும் ஏ.எம். சமீம் அவர்களின் நூலுக்கு உண்டு. சிங்களர்-தமிழர் ஆகிய இரண்டு இனங்களுக்கு அப் பால், மூன்றாவது முக்கிய இனமாக முஸ்லிம் மக்கள் இலங்கையில் வாழ்ந்து வருகின்றார்கள். இவர்கள் எதிர்நோக்கும் தனித்துவப் பிரச்சினைகளை ஆவணப்படுத்தும் முழுமையான நூல் ஒன்று இது வரையில் வெளிவந்திலது. அந்தக் குறையையும் இந்நூல் உரிய முறையில் நிவர்த்தி செய்கின்றது.
'ஆரிய பெளத்த சிங் ளரான மண்ணின் பவித்திர புத்திரர்களுக்கே இலங்கை மண்ணின் அனைத்து வளங்களும் வசதிகளும் சொந்தம் ஏனையோர் இரண்டாந்தரப் பிரஜைகளாக வாழ ஏர் பார்வைப்பட்டு, சலுகைகள் சிலவற்றை யாசிக்கலாம்' என மூர்க்கமாக முகிழ்ந்தெழுந்துள்ள பெரும்பான்மை இனத்தின் கட்டித்த பேரினவாத ஆதிபத்தியப் பேராசைகளின் வலோற் காரத்திற்கும் வன்முறைக்கும் முதலிலே இலக்காகிச் சீரழிந்தவர்கள் முஸ்லிம்களே! இனசங்காரத்திற்குள் உட்படுத்துவதற்கான இனக் கலவரம் 1915இல், முஸ்லீம்களுக்கு எதிராகவே கட்டவிழ்க்கப்பட்டது. இதனைக் கனவாய், பழங்கதையாய் நாம் மறத்தல் முறையன்று. இருபதாம் நூற்றாண்டில், இலங்கையின் பெரும்பான்மைச் சிங்களர் இனம் தனது பிரதான ஆயுதமாகக் கையாளும் இன சங்காரக் கலாசாரத்திற்கு அதுவே நுழைவாயிலாக அமைந்தது என்பதைத் தகுந்த சான்றாதாரங்களுடன் அடையாளப்படுத்துகின்றார். ஒரு சிறுபான்மை இனத்தின் இந்தச் சங்காரத்தின் போது தமிழ்த் தலைவர்கள் எவ்வாறு நடந்து கொண்டார்கள்? ஆதரவற்ற அந்த இனத்தின் இடர் களையும் துயர் களையும் துடைத்திடல் வேண்டு மென்கிற சாதாரண மனித நேயப் பண்பினையாவது

XV
கடைப்பிடித்தார்களா? இல்லை இல்லவே யில்லை! மாறாக இந்த இன சங்காரத்தின் மூல விசைகளெனச் சந்தேகிக்கப்பட்டுச் சிறை யிலடைக்கப்பட்ட சிங்களத் தலைவர்களுடைய விடுதலைக்காக வாதாடத் தமிழ்த் தலைவர் சேர் பொன் இராமநாதன் இங்கிலாந்து சென்றார். இந்த ஊர்ச் செலவின் மூலம் படித்த இலங்கையரின் பிரதிநிதி என்கிற மேட் டிமை யை இராமநாதன் தம்முடன் தக்க வைத்துக் கொண்டார் கொவிகம சாதி சிங்களர் போலவே, தமிழ் வேளாளரும் ஆளும் வர்க்கத்தவர் என்கிற பெருமையைச் சிறிது காலஞ் சுகிக்க இது உதவியிருக்கலாம். இவ்வாறு சிங்களரும் வேளான இந்துக்களும் ஓர் அணியிலே இணைந்த பொழுது, முஸ்லிம்கள் நாதியற்ற, அனாதையான தலைமையற்ற ஓர் இனமாகத் தாழ்வுற்றுத் திணறும் ஒரு பரிதாப நிலை உருவாகியது. முஸ்லிம்களுடைய பொருளாதார வளத்தையும் முதுகெலும்பையும் முறிக்கும் இராக்கதம் இந்த இனக்கலவரத்திலே புரையோடிக் கிடந்ததாக நூலாசிரியர் இனங் காணுகின்றார்.
1915 ற்குப் பின்னர் முஸ்லிம் மக்கள் மத்தியிலே எழுந்த தலைமைத்துவம், சிங்கள ஜாதிக சிந்தனையை முழுமையாக ஏற்றுக் கொண்டு , முஸ்லிம் மக்களை இரண்டாந்தரப் பிரஜைகளாக, சலுகைகளை யாசிக்கும் கூட்டமாக வாழ வைத்த தரகர் குழுவாக மாறியது என்கிற குற்றச்சாட்டினை முஸ்லிம் இளைஞரின் மறு பரிசீலனைக்காகத் துணிச்சலுடன் முன் வைக்கின்றார். சேர். மாக்கான், சேர் பரீத், முதலியார் சின்னலெப்பை ஆகியோர் பேச்சுகளையும் செயல்களையும் தமது குற்றச்சாட்டுக்கு ஆதாரங்களாகச் சுட்டுகிறார். ஆசிரியர் தாம் ஒரு முஸ்லிம் என்கிற இனமான உணர்வினைத் துறக்காத உரிமையுடன், நாளைய சமுதாயத்திலாவது முஸ்லிம்கள் கெளரவமாக வாழுதல் வேண்டும் என்கிற கரிசனையுடன், கடந்த கால-சமகால முஸ்லிம் தலைமைத்துவத்தின் போக்கினால் விளைந்த நன்மை-தீமைகளைக் கடுமையான விமர்சனத் திற்கு உட்படுத்தும் உரிமையை எடுத்துக் கொள்கிறார். முஸ்லிம் மக்களுடைய நாளைய விடியலிலே அவர் ஊன்றியுள்ள அக்கறையின் ஆவேசமே இந்த விமர்சனங்கள்.
ஆட்சியை மாறி மாறிக் கைப்பற்றும் இரண்டு சிங்க ளக் கட்சிகளிலும் முஸ்லிம் பிரதிநிதித்துவத்துக்குக் குறை வில்லை.

Page 10
XVI
சுதந்திரத்திற்குப் பின் அமைக்கப்பட்ட அனைத்து அமைச்சர் அவைகளிலும் முஸ்லிம் பிரதிநிதித்துவத்திற்குப் பஞ்சமில்லை. செல்வாக்கு மிக்க இலாகாக்கள்கூட அவர்களுடைய நிர்வாகத்தின் கீழ் ஒதுக்கப்பட்டன. தோற்றம் வேறு உண்மை வேறு முஸ்லிம் அமைச்சர்களுக்கு எதிராகச் சிங்களப் பேரினவாதக் கோஷதாரிகள் எத்தகைய நெருக்கடிகளைத் தோற்று வித்துச் சிறுமைப்படுத்துகின்றார்கள் என்பதற்கான சம்பவங்களை ஆசிரியர் புதிய கோணத்திலே வெளிச்சமிட்டுக் காட்டுகின்றார். பழமொழிகளிலே வரும் ஒட்டகம் நினைவுக்கு வருகிறது. பொதி சுமக்கும் ஒட்டகத்தின் முதுகைக் கடைசித் துண்டு வைக்கோல் முறிக்கும். மானு வீகத்தின் இரட்சகர்களாயும், அதன் நிரந்தர உபாசகர்களாயும் வாழவேண்டிய டாக்டர்கள், தமது தொழிற் கல்வி அறங்களைக்கூடத் தூக்கி மிதித்து, சிங்களஜாதிக சந்நதர்களாக சக முஸ்லிம் டாக்டர்களுக்கு எதிராகவும், முஸ்லிம் அமைச்சருக்கு எதிராகவும் வேலைநிறுத்தம் செய்த தகவல்களை இந்நூலிலே வாசிக்கும் பொழுது, இலங்கை மனித சஞ்சாரமே யற்ற, பேய்களும், பிணந்தின்னும் கழுகுகளும் மட்டுமே வாழும் மகா மயான மாக மாறிவிட்டதோ என்கிற சஞ்சலம் என் மனசைப் பிழிந்தது இனத்தின் கெளரவங்கள் அனைத்தையும் காற்றிலே தூற்றி பெறப்படும் சலுகைகளினாலும் பதவிகளினாலும் என்ன பயன்? இனமானத்தினைத் துறக் காத முஸ்லிம் இளைஞர்கள் முன் வைக்கப்படும் மனச் சுத்திகரிப்பிற்கான கேள்வியாகவே இது எனக்குத்
தோன்றுகிறது.
கல்வித் திணைக்களத்திலே வகித்த அனைத்து பதவிகளுக்கும் மேலாக, ஒரு தமிழ் எழுத்தாளர் ஒரு முற்போக்கு இலக்கியவாதி' என்கிற உரிமை பாராட்டுதலை மகா கெளரவமாகக் கருதி ஏ.எம்.சமீம் கடந்த நாற்பது ஆண்டுகளாக வாழ்கிறார் என்பதையும் நான் அறிவேன். கல்விமான்-சரித்திராசிரியன் என்பவற்றுக்கு மேலாக, ஒரு தமிழ் எழுத்தாளன் என்கிற பீடுடன் இந்நூலினைச் சமீம் எழுதியுள்ளமை இந்நூலுக்கு வந்து வாய்க்கும் இன்னொரு
பெருமையாகும்.
முஸ்லிம்கள் தமிழ் பேசும் இனம் என அரசியல் கோ ஷங்களுக்கு அப்பாலும் , guŠub தரிசிக்கின்றார்.

XVII
முஸ்லிம்களுடைய வீட்டு மொழியாகவும் கல்வி மொழியாகவும் தமிழே பல நூற்றாண்டுகளாகப் பயிலப்பட்டு வந்துள்ளது. முஸ்லிம்களுடைய தனித்துவ அடையாளம் மதஞ் சார்ந்தது. அந்தத் தனித்துவத்தைத் தக்க வைப்பதற்கு அரபுமொழிக்கு அடுத்ததாக உதவும் மொழி தமிழே! இலங்கை மண்ணிலே வேர் கொண்டுள்ள முஸ்லிம் தனித்துவம் தமிழ் மொழியுடன் கலந்தே வனையப் பட்டது. இந்த உண்மைகளை நிராகரித்து, சிங்கள மொழியின் மேலாணையை ஏற்றுச் சிங்கள மொழி மூலம் பயிலும் முஸ்லிம் மாணாக் கருடைய அவலங்களை ஆசிரியர் அக்கறையுடன் சுட்டிக் காட்டுகின்றார். சிங்கள மொழிக்குத் துதிபாடும் அண்மைக்காலப் போக்குகளினால், முஸ்லிம் இனம், மொழி ரீதியாக இரண்டு பட்டு மேலும் சிதிலமடைந்து விடுமோ என்கிற நியாயமான அச்சத்தினையும், இளைய முஸ்லிம் சமுதாயத்தின் கவனத்திற்கு முன் வைக்கிறார்.
ஒரு சிறுபான்மை இனமாக வாழும் இலங்கை முஸ்லிம்களுடைய வரலாற்றினையும், அவர்கள் எதிர்கொள்ளும் அரசியல் பிரச்சினைகளை யும், முஸ்லிம் பிரக்ஞையுடன், அவர்களுடைய எதிர்கால சமுதாய நலனிலே நீங்காத அக்கறையுடனும் எழுதப்பட்ட பிறிதொரு நூல் என் வாசிப்புக்கு இதுவரை கிட்டவில்லை எனத் துணிந்து கூறுவேன்.
இந்த ஆவணத்தைப் தயாரிப்பதற்கு ஏ. எம். சமீம் அவர்களுக்கு நிரம்பிய தகைமைகள் உள. வரலாற்றினைப் பெரும் பாடமாகத் தேர்ந்து அதிலே சிறப்புப் பட்டம் பெற்றவர். கல்வித் திணைக்களத்தில் பல்வேறு பதவிகளிலே பணியாற்றி, பணிப்பாளர் நாயகமாகப் பதவி உயர்ந்தவர். அந்த உயர் பதவியின் நிரந்தரத்தினை சிங்கள புத்திஜீவிகளுடைய சிங்கள ஜாதிக சிந்தனைய என்கிற பலிபீடத்தில் இழந்தவர். இலங்கை முஸ்லிம்களுடைய கலாசார அக்கறைகள் அவர் இரத்தத்துடன் ஊறியவை. இஸ்லாமிய கலாசாரம், இலங்கை முஸ்லிம்களின் திருமண சம்பிரதாயங்கள் ஆகிய நூல்களை ஏலவே தமிழ்ச் சுவைப்புக்கு தந்துள்ளார். கதைஞர், நான்கு தசாப்தங்களாக தமிழ் இலக்கிய நேசராயும், சுவைஞரா யும், எழுத்தாளராயும், இலக்கியவாதியாயும் வாழ்பவர். இந்நூலினை எழுதுவதற்கு, இத்துறை சார்ந்த அநேக

Page 11
XVIII
நூல்களைத் தேடிச் சேமித்து, பல்லாண்டுகளாக ஆய்வு செய்துள்ளார். சமுதாய உணர்வுடனும், சமூகத்தின் கடமை நேசிப்புடனும், மனித நேயத்துடனும் இந்நூலினை சமீம் எழுதியுள்ளார். இலங்கையின் இனப் பிரச்சினைகள் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அக்கறையுடன் ஆவணப் படுத்தியுள்ளார். இஃது அரிய தோர் எழுத்துப் பணி; ஞானச் சேவை சமுதாய ஊழியம். இதற்காக அவரை மனசார வாழ்த்துகிறேன்.
இந்நூலிலே குறைகளே இல்லையா? உண்டு மாசு மறுவற்ற குழந்தையைக் குளிப்பாட்டி, துடைத்து, பூசல்மா இட்டுச் சீராட்டும்போது, சாந்துப் பொட்டு இட்டு வைத்தல் தமிழ் மரபு. கண்ணுறு படாது' என்பது ஐதீகம், சாந்துப் பொட்டினை உண்ட பகுதிகளும் உண்டு. எடுத்த பொடி மடக்காக, சுதந்திரன்' பத்திரிகையாளரைப் பற்றியும், முற்போக்கு எழுத்தாளர் சேவை பற்றியும் குறிப்பிடும் பகுதியைச் சொல்லலாம். இது சம்பந்தமான காட்டமான விமர்சனம் நற்போக்கு இலக்கியத்தின் பிதாமகர் வசம் உண்டு. முன்னீடு என்பது சுயவித்துவத்தின் சங்கொலியல்ல. என் விமர்சனத்திற்கு என் முன்னிட்டினை மேடையாக மாற்றுவது அறிவு நாகரிகம் சாராது. சமீமும் நானும் , முனைப்பான கருத்து முரண்பாடுகள் மத்தியிலும், நட்புப் பாராட்டி வாழ்கின்றோம். இதனை ஞான வான்களின் பண்பாக இருவருமே விளங்கிக் கொள்ளுகின்றோம். இந்த பண்பின் திருட்டாந்தமே இந்த முன்னீடு.
இதனைத் தொடர்ந்து, அ. முகம்மது சமீம் அவர்களுடைய ஆக்க இலக்கிய பங்களிப்பினைப் பிரசித்தம் செய்யும் நூல் ஒன்று வெளிவருதலைப் பெரிதும் விழைகிறேன். அவருடைய எழுத்து ஊழியம் தொடரவும் நின்று நிலவவும் என் ஆசிகள்
எஸ். பொன்னுத்துரை
1/25 Muro Street Eastwood 2122
Australia 150898

என்னுரை
ஒரு சிறுபான்மை சமூகத்தின் பிரச்சினைகள்' என்ற தலைப்பில் இலங்கை முஸ்லிம்களைப் பற்றி ஆராயப் புகுந்த நான், முஸ்லிம் சமூகத்தையும், அதன் பிரச்சினைகளையும் தனியாகப் பிரிக்கமுடியாதென்று உணர்ந்தேன். முஸ்லிம் களுடைய பிரச்சினைகள் ஏனைய சிறுபான்மை சமூகங்களோடு பின்னிப் பிணைந்திருக்கின்றன என்ற உண்மையையும் உணர்ந்தேன். இவ்வாய்வை செய்து கொண்டு போகும் போது, இலங்கைத் தமிழர்களுக்கும், மலைநாட்டு இந்திய வம்சா வழியினருக்கும் இழைக்கப்பட்ட அநீதியைக் கண்டேன். மார்க்சியக் கண்ணோட்டத்தோடு ஓர் ஆய்வை நடத்தும்போது, வரலாற்றுச் சம்பவங்களுக்கும், சமூகத்தில் ஏற்படும் கொந்தளிப்புக்களுக்கும், வன்செயல்களுக்குமுரிய காரணங் களைக் கண்டுபிடிக்க வேண்டும். இன உணர்வினால் ஏற்படும் பாதகங்களுக்கும், சாதி வெறியினால் தோன்றும் கலகங்களுக் கும், பின்னணியில் சமுதாய, பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் இருப்பதைக் காண்கிறோம். சமுதாயத்தில் தோன்றும் கொந்தளிப்புகளுக்கும், புரட்சிகளுக்கும், அடித்தளத்தில் பொருளாதார காரணிகள் இருப்பதைக் காண்கிறோம். 1915ம் ஆண்டில் முஸ்லிம்களுக்கெதிராகத் தோன்றிய கலகத்திற்கு முக்கிய காரணம் பொருளாதார வர்த்தகப் போட்டியே என்பதை எல்லோரும் ஏற்றுக் கொள்கின்றனர். தமிழர்களுக்கெதிராக ஏற்பட்ட கலகங்களுக்குக் காரணம் இப்பொருளாதார காரணிகளே, என்பதை யாராலும் மறுக்க முடியாது. ஜே. வி. பி. என்ற புரட்சிகர இயக்கம் தோன்றுவதற்கும் பொருளாதாரமே காரணம். தமிழர்கள் தனிநாடு கேட்பதற்கும், அவர்கள் மத்தி யிலே ஆயுதம் தாங்கிய சுதந்திர இயக்கம் தோன்றுவதற்கும் அடிப்படைக் காரணம் பொருளாதாரமே.
எனவே ஒரு சமூகத்தை மட்டும் தனியாகப் பிரித்தெடுத்து ஆய்வை மேற்கொள்வோமானால், ஒரு குறுகிய வட்டத்திற் குள்ளேயே எமது ஆய்வு அமையும், சமுதாயத்தைப் பாதிக்கும்.

Page 12
XX
பொதுவான காரணிகளை நாம் காணத் தவறிவிடுவோம். மனிதன் ஒரு தீவு அல்ல, அவன் சமுதாயத்தில் ஓர் அங்கம் சமுதாயத்தில் ஏற்படும் மாற்றங்களினால் அவனும் பாதிக்கப் படுகிறான். அதே போல முஸ்லிம்களும், இலங்கை சமுதாயத் தில் ஓர் அங்கம். பெரும்பான்மை இனத்தவ ரின் அடாவடிப் போக்கு, எல்லா சிறுபான்மை இனங்களையும் பாதிக்கிறது. இதில் முக்கியமாக பாதிக்கப்பட்டவர்கள் இலங்கைத் தமிழர்களே. இவர்களுடைய பிரச்சினைகளை அலட்சியப் படுத்தி, ஒரு குறிப்பிட்ட சிறுபான்மை சமூகத்தைப் பற்றிய பிரச்சினைகளை மட்டும் ஆராயும்போது அவ்வாய்வில் உண்மை மறைக்கப்படுகிறது. சுதந்திரத்திற்குப் பின் இலங்கையில் தோன்றிய பேரினவாத அரசாங்கங்கள், பொதுவாக எல்லா சிறுபான்மை இனங்களையும் பாதிக்கும் செயல்களையே நடைமுறைப் படுத்தி வந்திருக்கின்றன. ஆகவே, இலங்கையின் முக்கிய சிறுபான்மை இனமாகிய தமிழர்களுடைய பிரச்சினையை ஆராயாமல் விடுவது, ஆராய்ச்சி தத்துவத்திற்கே Glaru Jujub.5 GT TE Lost (g, up (Intellectual dishonesty).
எனவேதான், இந்த நான்காம் பாகத்தில் எல்லா சிறுபான்மை சமூகங்களையும் பாதித்த அரசாங்கக் கொள்கை களையும், சிங்கள அறிஞர்களினதும் எழுத்தாளர்களினதும் கருத்தோட்டங்களையும், இன உணர்வுச் செயல்களையும் கூற முற்பட்டுள்ளேன்.
ஒரு சிறுபான்மை சமூகத்தின் பிரச்சினைகள்' என்ற தலைப்பு இருந்தாலும், பொதுவாக இலங்கையிலுள்ள எல்லா சிறுபான்மை சமூகங்களையும் பரந்த அளவில், இந்நூல் எடுத்துக் காட்டுகிறது. எல்லா சிறுபான்மை சமூகங்களினதும் பிரச்சினை கள் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்திருக் கின்றன.
அ. முகம்மது சமீம்
மடிகே, கலகெதர, * இலங்கை,
1 18.98

()
| 1
| 2
| 3
| -
,
பொருளடக்கம்
இலங்கையின் ஆட்சி மத்தியதர வர்க்கத்தின் கைவசமாகுதல். இலங்கை அரசியல் வானில் கட்சிகளின் தோற்றம் ஐக்கிய தேசியக் கட்சியின் தோற்றம். டொனமூர் தசாப்தத்தில் இலங்கையின்
பொருளாதார வளர்ச்சியும் முஸ்லிம்களின் பங்கும்.
சோல்பரி ஆணைக்குழுவினரின் வருகையும் சிறுபான்மையின மக்களின் கோரிக்கைகளும். சோல்பரி குழுவினரின் முன், சிறுபான்மை இனங்களின் பிரதிநிதிகள் வைத்த கோரிக்கைகள். சோல் பரி ஆணைக்குழுவினர் முன் சிறுபான்மையின மக்கள் தெரிவித்த அச்சம். சோல்பரி திட்டத்தில் சிறுபான்மையின மக்களுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு.
சுதந்திர இலங்கை மசோதாவை ஆதரித்த முஸ்
லிம் பிரதிநிதிகளும் எதிர்த்த தமிழ் பிரதிநிதிகளும்.
சிறுபான்மை மக்களின் பாதுகாப்புக்காக சோல்பரி குழுவினரின் திட்டம் முறியடிக்கப்பட்டமை. தேர்தல் தொகுதிகளை அமைப்பதில் முற்போக்கு வாதிகளுக் கெதிராகச் செய்யப்பட்ட சதி. இடதுசாரிக் கட்சிகளின் அரசியல் முதிர்ச்சியின்மை, பண்டாரநாயக்கா, ஐக்கிய தேசியக்கட்சி அரசாங்கத்தை விட்டு வெளியேறுதலும், ஜி.ஜி. பொன்னம்பலம் அரசாங்கத்தோடு இணைதலும், இலங்கை இந்தியத் தமிழர்கள் குடியுரிமை இழக்கின்றனர். இனப்பிரச்சினைக்குக் காரணமாயிருந்த சக்திகள்,
பக்.
7
17
23
29
35
42
49
56
63
72
8O
88
95

Page 13
16
1 7
18
19
2O
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
XXII
சிங்கள - பெளத்த தேசிய வாதமும் 'அரசியல் பிக்குகளும்' பெளத்த பிக்குகளின் அரசியல் செல்வாக்கு சிங்கள-பெளத்த தேசியத்தினால் ஏற்பட்ட அனர்த்தங்கள்.
தாய்நாட்டைப் பாதுகாக்கும் இயக்கமும் சிறுபான்மையினரின் திரிசங்கு நிலையும்.
இனப்பிரச்சினை தீவிரமடைந்ததற்கான காரணிகள்
வன்செயல் இயக்கங்களும் புத்தபிக்குகளும் இலங்கையின் அரச யாப்புகளும் சிறுபான்மை மக்களின் பாதுகாப்பும். சிறுபான்மை மக்களின் மொழி உரிமை நசுக்கப்படுதல். சுயபாஷை இயக்கமும் அரசாங்கத்தின் தயக்கமும், சிங்கள மொழியின் ஆதிக்க வெறியும், தமிழ் மொழியின் தேசியவாதமும், தனிச்சிங்கள இயக்கமும் தமிழரசுக்கட்சியின் தோற்றமும்,
தமிழர்களின் தனிப்பெருந்தலைவராக எஸ். ஜே.வி.
செல்வநாயகம்.
தமிழரசுக்கட்சி சமர்ப்பித்த சமஷ்டி ஆட்சித் திட்டம், தமிழர்களின் மரபுவழி வந்த தாயகக்கோட்பாட்டு வாதமும் பிரதிவாதமும், தமிழர் தாயகமும் தனிநாடு கோரிக்கையும். தமிழர் விடுதலைக் கூட்டணியின் தனிநாடு
கோரிக்கையும் அதற்கு எதிரான பிரதிவாதங்களும்.
தமிழர் தாயகம்' என்பது கட்டுக்கதை என்பது சிங்கள அறிஞர்களின் கருத்து.
1 O2
1 Ο9
116
123
131
138
146
155
163
171
178
185
192
199
2O5
212
219

33
34
36
37
38
39
4 ()
41
4 3
பேராசிரியர் லெஸ்லி குணவர்தனா.
42
XXIII
கிழக்கு மாகாணம் கண்டி மன்னர்களின் ஆட்சிக்குட்பட்டே வந்திருக்கிறது' என்பது சிங்கள வரலாற்றாசிரியர்களின் கருத்து 'வடக்கையும், கிழக்கையும் இணைக்கக்கூடாது' என்பதற்குச் சிங்கள புத்திஜீவிகள் கூறும் காரணங்கள். சிங்கள அறிவியலாளர்களின் வரலாற்றுத் திரிபுவாதங்கள். சிங்கள ஆய்வாளர்களின் ஒருதலைப்பட்ச ஆய்வுகள்.
கட்டுக்கதைகளை ஆதாரமாக வைத்து எழுதப்பட்ட
சிங்கள இனத்தின் வரலாறு மாற்றியமைக்கப்படல் வேண்டும். இலங்கையின் தொல் பொருள் ஆய்வுகள் சிங்கள இனத்தின் மூதாதையர் திராவிடர் என்று உறுதிப்படுத்துகின்றன.
இலங்கைத் தமிழர்களின் மூதாதையர் கற்காலந்
தொடக்கம் வடக்குப் பிராந்தியத்தில் வாழ்ந்திருக்கிறார் கள்' என்று தொல் பொருள் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். பண்டைய காலந்தொட்டே இலங்கைக்கும் தென்னிந் தியாவிற்குமிடையில் இருந்துவந்த கலாசாரத் தொடர்பை மூடி மறைக்கின்றனர் சிங்கள வரலாற்றாசிரியர்கள்.
சிங்கள இனத்தவர் உயர்சாதியைச் சேர்ந்தவர்கள்
சிங்கள, தமிழ் ஆய்வாளர்கள் பண்டைய
சாசனங்களுக்கு இன ரீதியான வேறுபட்ட விளக்கங்களைக் கொடுத்தனர் சிங்கள, தமிழ் சமூகங்கள், அரசியலிலும் சமூக-மத கலாசாரத்திலும் வேறுபட்டே வந்திருக்கின்றனர்.
233
24 O
248
255
261
267
273
28O
286
293

Page 14
4 4
45
46
47
48
49
50
51
52
53
54
55
56
57
58
XXIV
இனஉணர்வை வளர்க்கும் சிங்கள பாடநூல்கள்' தமிழர்களின் அரசியல் விரக்திக்குரிய காரணங்கள்.
தரப்படுத்தல் தமிழ் மக்கள் தனிநாடு கோருவதற்கு வழி அமைத்தது. தமிழர்களுக்கெதிராகத் தோன்றிய சிங்களவரின் பகை உணர்ச்சி நியாயமற்றது. 'சிறுபான்மை இனங்கள் அதிகமான சலுகைகளைப் பெற்றுக் கொண்டன' என்ற சுசில் முனசிங்காவின் கூற்று உண்மையானதா? இலங்கை முஸ்லிம்கள் தாம் சிங்கள ஆதிக்கத்தின் கீழிருக்கும் ஓர் அடிமை சமுதாயம்' என்பதனை ஏற்றுக் கொண்டு விட்டனரா? வேலைவாய்ப்புகளில் சிறுபான்மை இனங்களுக்கெதி ரான பாரபட்சம். உயர்கல்வியில் ஏற்பட்ட வளர்ச்சியும் இன ஒதுக்கலும், முஸ்லிம்கள் சிங்கள மொழி மூலம் கல்வி கற்றதனால் ஏற்பட்ட விளைவுகள் சர்வகலாசாலைக் கல்வியின் வளர்ச்சியும் சிறுபான்மையின மக்களுக்கு ஏற்பட்ட அநீதியும் முஸ்லிம்களுக்கு எதிரான சதித்திட்டத்தில் உருவாகி வரும் பயங்கர சூழ்நிலை. சிங்களவரின் எதிரிகளாக முஸ்லிம் தலைவர்களைக் காட்ட முனையும் விஷமப் பிரச்சாரம் இலங்கை முஸ்லிம்களும் அவர்களது கல்விநிலையும் உசாத்துணை நூல்கள் - Bibliography பின்னிணைப்பு
3OO
3O7
3 13
32O
328
335
342
351
357
366
379
384
393
4 OO
419

ஒரு சிறுபான்மை சமூகத்தின் பிரச்சினைகள IV
1. இலங்கையின் ஆட்சி மத்திய தரவர்க்கத்தின் கைவசமாகுதல்
-இலங்கை முஸ்லிம்களை இன்று எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகளைப் பற்றிமு ன்னைய பாகங்களில் ஆராய்ந் தோம். இலங்கை மக்களின் வரலாற்றில் 1947ம் ஆண்டுக்கும் இன்றைய காலத்திற்கு மிடையே உள்ள இந்த இடைப்பட்ட காலத்தில் தோன்றிய முக்கிய சம்பவங்களையும், அச்சம்பவங் கள் ஏற்படக் கூடிய காரணிகளையும், இக் கால வரலாற்றில் ஊடுருவிச் சென்ற சில வரலாற்றுண்மைகளையும் மேலோட் டமாக ஆராய்ந்தோம்.
1931ம் ஆண்டுக்கும் 1947ம் ஆண்டுக்குமிடையே உள்ள காலப்பகுதியில் ஏற்பட்ட மாற்றங்களும், நிகழ்ச்சிகளும் இன்று இந்நாட்டில் நிகழ்ந்து கொண்டிருக்கும் பிரச்சினை களுக்குக் காரணம் என்றால் அது மிகையாகாது. இன்று பூதாகாரமாக எழுந்திருக்கும், பொருளாதார பிரச்சினை களையும், நாம் ஆராய்ந்தால், இவைகள் தோன்றுவதற்குரிய காரணங்களை, நாம் மேலே குறிப்பிட்ட இக்காலப் பகுதிக்குத்தான் செல்ல வேண்டும். என்று பெரும்பான்மையின மக்களுக்கு அரசியல் அதிகாரம் கிடைத்த தோ, அன்றே தொடங்கியது, சிறுபான்மையின மக்களின் பிரச்சினைகள்.
இலங்கையில் அரசியலில் ஆதிக்கம் செலுத்தி வந்த பிரித்தானிய ஏகாதிபத்தியவாதிகளின் அரசியல் அதிகாரம், இலங்கை மக்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டதின் கடைசி காலகட்டம்தான் இந்த 1931ம் ஆண்டுக்கும் 1947ம் ஆண்டுக்குமிடையே உள்ள இடைப்பட்ட காலம். அரசியல் ஞானமே அற்றிருந்த இந்நாட்டு மக்களின் அறியாமையைத் தமக்குச் சாதகமாகப் பாவித்து, சாதி, இனம், மொழி என்ற விஷக் கருத்துக்களை மக்களிடையே தூவி விட்டு, அவர்களுடைய உணர்ச்சிகளைத் தூண்டி விட்டு, தம்முடைய

Page 15
அ. முகம்மது சமிம் 2
பொருளாதார பலத்தினால், அரசியல் அதிகாரத்தைத் தம் கையிலேயே நிரந்தரமாக வைத்திருக்க வேண்டும், என்ற மத்தியதர வர்க்கத்தைச் சேர்ந்த அரசியலில் வாதிகளின் சூழ்ச்சியை இக்காலகட்டத்திற்றான் நாம் காண்கிறோம். இவ்வர்க்கம் பெரும்பான்மையின மக்களிடையே மாத்திரம் தான் இருந்த தென்று கூற முடியாது. சிறுபான்மை இன மக்களிடையேயும் இவ்வர்க்கத்தின் ஆதிக்கத்தை காண் கிறோம். இக்கால கட்டத்திற்றான் அரசியல் வாதிகளின் செல்வாக்கு வாக்காளர்களிடையே வளர்வதையும், அரசியல் தலைவர்களின் ஆதிக்கம், தம்மைப் பின்பற்றுவோரிடம் வளர்வதையும் காண்கிறோம்.
இவ்வரசியல் மாற்றங்களுக்கெல்லாம் முக்கிய காரணம், "சர்வசன வாக்கெடுப்பு இலங்கையில் அறிமுகப் படுத்தியதே. ஏனைய ஆசிய நாடுகளிலோ, பிரித்தானிய அரசாங்கத்தின் அதிகாரத்தின் கீழிருந்த இந்தியா போன்ற நாடுகளிலோ, ஏற்படாத மாற்றம் இலங்கையில் தோன்றுவதற்கும், இந்நாடுகளினின்றும் இலங்கையைத் தனியாகக் கணிப்பதற்கும், காரணம், இச்சர்வசன வாக்கெடுப்பு முறை இலங்கையில் புகுத்தியதே என்றால் மிகையாகாது. இம் மாற்றங்கள், அரசியல் பொருளாதாரத் துறைகளில் மாத்திரமல்ல, இலங்கை மக்களின் இலக்கிய வளர்ச்சியிலும் நாம் காணக் கூடியதாக இருக்கிறது. சர்வசன வாக்கெடுப்பு முறையினால், பாமர மக்களின் அரசியல் செல்வாக்கு வளர்ந்தது. இதன் 5ς Π Π ω00T LD IT 35 அவர்களுடைய கல்வித்தரத்திலும் வளர்ச்சி யேற்பட்டது. கன்னங்கர போன்ற அரசியல் தலைவர்களின் சமூக உணர்வு காரணமாக, இலவசக்கல்வி புகுத்தப்பட்டது. சமூகத்தின் அடித்தளத்தில் உள்ள தொழிலாளர்களினதும், விவசாயிகளினதும் பிள்ளைகள், இவ்விலவசக்கல்வியின் பலனைப் பெற்றார்கள். அரசாங்கத்தில் உயர் பதவிகளை வகிப்பதற்கும், தொழில் துறையில் விற்பன்னர்களாவதற்கும், இவர்களுக்கு இக்கல்வி உதவி செய்தது. இவைகளைவிட மேலாக, இவர்களிடையே

3 Gạ (1h 3 mLJAT 6T 670) LO F# (upoj, 53 GÖT LITT F f GD GGT 5, 6ÍT V
சிந்தனையாளர்களும், இலக்கிய வாதிகளும் தோன்றி, தம் சமூகத்தின் தாழ்ந்த நிலையை உணர்ந்து, இத்தாழ்வு நிலைக்குக் காரணமாயிருந்த உயர்வர்க்கத்தினரின் ஆதிக்கத்திற்கு எதிராகவும், தமது சமூகத்தின் பிரச்சினைகளையும் எடுத்துக் காட்டி, பாமரமக்களுக்கேற்ப இலக்கியம் படைத்தார்கள். இக்காலப்பகுதியில், ஏனைய நாடுகளில், பரவிவந்த சோஷலிச, கம்யூனிசக் கருத்துக்களை, மையமாக வைத்து, யதார்த்த பூர்வமாக இலக்கியம் படைக்கத் தொடங்கினார்கள். இதனுடைய பிரதிபலிப்பை நாம் அரசியலிலும் காணலாம். "லங்கா சம சமாஜக்கட்சி' 'கம்யூனிசக் கட்சி போன்ற இடதுசாரிக்கட்சிகளும், தொழிற்சங்கங்களும் இக்காலப் பகுதியில் தான் தோன்றின. சாதி உணர்வையும், மொழிப் பற்றையும், இனவெறியையும் தூண்டும் இலக்கியங்களும் தோன்றத்தான் செய்தன. நபூஞ்சக எழுத்தாளர்களும், இலக்கிய சனாதனிகளும், போலித்தனமான சோஷலிஸ் டுகளும், மக்களின் உணர்வுகளைத் தூண்டும் இலக்கியங் களைப் படைப்பதனால், பிரபல்யமடையலாம் என்ற நப்பாசையில், படைத்த இலக்கியங்கள் எவ்வளவு தூரம் மக்களைப் பாதிக்கும் என்று இவர்கள் உணரவில்லை. இதன் பலாபலன்களை நாம் இன்று அனுபவிக்கிறோம். இதன் காரணமாக இலங்கையின் அரசியற் கட்சிகளும், அரசியல் சித்தாந்த அடிப்படையில் தோன்றாமல், சாதி அடிப்படை யிலும், மொழி அடிப்படையிலும், இன அடிப்படையிலும் தோன்றின.
மொழி உணர்வும், இனவெறியும் இலங்கையின் அரசியலில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தின. ஜனநாயகத்தின் பெயரால் தோன்றிய சிங்க ள பெரும்பான்மை யின
அரசாங்கங்கள், சிறுபான்மையின மக்களை அடக்கியாழ்வதில் தான், கண்ணும் கருத்துமாயிருந்தன.
சர்வஜனவாக்கெடுப்பு இலங்கையில் அமுலுக்கு வந்த பிறகு, தேர்தல்களில் போட்டியிட்ட வேட்பாளர்கள்,

Page 16
அ. முகம்மது சமீம் A
பாமரமக்களின், சாதி, சமய மொழியாகிய உணர்வுகளைத் தூண்டி விட்டுத், தம்மைத் தேர்ந்தெடுக்குமாறு மக்களிடம் வாக்குகளைக் கேட்டார்கள்; இக்காலகட்டத்தில் அரசியல் கட்சிகள் இல்லாதிருந்தது குறிப்பிடத்தக்கது. வேட்பாளர்கள் பெரும்பாலும் சுயேட்சையாகவே போட்டியிட்டார்கள். ஆகவே தங்களது சாதி, சமய வேறுபாடுகளைச் சுட்டிக் காட்டி அதன் மூலம் வெற்றிபெற முற்பட்டார்கள். இவர்களின் இந்தச் செய்கை பிற்காலத்தில் மக்களிடையே எத்தகைய பாதிப்பை ஏற்படுத்தும் என்று இவர்கள் யோசிக்கவில்லை. எனவே அரசியலில் பெளத்தர்கள் தமது ஆதிக்கத்தை நிலை நாட்டத் தொடங்கினார்கள். தேர்தல்களில் போட்டியிட்ட பெரும்பான்மையானசிங்களவர்கள் பெளத்தர்களானபடியால், அரசியலில் பெளத்தர்களது கை ஒங்கியது. இக்காலப் பகுதியில்தான், கிறிஸ்தவ சிங்களவர்களும் பெளத்தர்களாக மதம் மாறுவதைக் காண்கிறோம். இவர்களை டொனமூர் பெளத்தர்கள், என்று சிலர் நையாண்டி செய்தார்கள்.
தேர்தல்களில், போட்டியிட்ட வேட்பாளர்களின் அரசியல் தத்துவம், அரசியற்கொள்கை என்பவற்றை விட அவர்களது, சாதி, சமயம் என்ன வென்ற அடிப்படையில் மக்கள் வாக்களித்தார்கள். 1931ம் ஆண்டில் நடைபெற்ற தேர்தலில், தெரிவு செய்யப்பட்ட 50 வேட்பாளர்களில், 9 பேர் போட்டியின்றி தெரிவு செய்யப்பட்டார்கள் என்றால், இவர்களது அரசியல் செல்வாக்கும், அந்தஸ்தும் எப்படி இருந்திருக்கலாம் என்று நாம் எண்ணிப்பார்க்க முடியும்' இலங்கை தேசிய காங்கிரசின் தலைவர்களான, டி. பி. ஐயத்திலக்க, டி. எஸ். சேனாநாயக்க, போன்றோரும், காங்கிரசின் அரசியல் தலைமைத்துவத்தைப் பிடிக்க எண்ணிக் கொண்டிருந்த எஸ். டபிள்யு. ஆர். டி. பண்டார நாயக்கவும் போட்டியின்றி தெரிவு செய்யப்பட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஊவா, சபரகமுவ மாகாணங்களில், ஐந்து சிங்களவர் போட்டியின்றித் தெரிவு செய்யப்பட்டார் களென்றால், கண்டி இராச்சிய காலத்திலும்; அதற்குப்

5 ஒரு சிறுபான்மை சமூகத்தின் பிரச்சினைகள் IV
பின்பும், பிரபுத்துவ ஆட்சிமுறையில், ஊறிப் போயிருந்த சிங்கள சமுதாயத்தின் மேல் எத்தகைய ஆதிக்கத்தைப் பிற்போக்குக் கருத்துக்களைக் கொண்ட, இந்நிலச்சுவாந்தார் கள், செலுத்தினார்கள் என்பதை நாம் உணர முடியும். ஜனநாயக முறைப் படி தெரிவு செய்யப்பட்ட முதலாவது அரசசபையில், பெரும்பான்மையான அங்கத்தவர்களின் பிற்போக்குக் கருத்துக்களைக் கண்டு, அதே சபைக்குத் தெரிவு செய்யப்பட்ட, தொழிற்சங்கத் தலைவரான ஏ. ஈ. குணசிங்க ஆச்சரியப்பட்டார். முன்னைய சட்டசபையில், அங்கத்தவர்கள் குறைவாக இருந்தபோது, மூன்று அங்கத்தவர்களின் மூலம் பிரத்நிதித்துவப் படுத்தப்பட்ட முஸ்லிம் சமூகம், அங்கத்தவர் களின் எண்ணிக்கை கூடுதலாக்கப்பட்ட, அரசசபையில், ஒரேயொரு அங்கத்தவரைத்தான் தெரிவு செய்யமுடிந்த தென்றால், சர்வஜன வாக்குரிமையைப் பெற்ற பாமர மக்களிடையே எவ்வளவுதூரம் சாதி, சமயம், ஆகிய 'வெறி தாண்டவமாடியிருக்கிறது, என்பதை நாம் ஊகிக்கலாம். ஒரு சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த ஒருவர், தன்னுடைய அரசியற் கொள்கையின் மூலமோ, முற்போக்குக் கருத்துக்கள் மூலமோ, அரசியலில் வ்ெற்றி பெற முடியாது, என்ற நிலை ஏற்பட்டது. இரண்டாவது அரச சபைக்கு நடந்த தேர்தலில் ஒரு முஸ்லிமால் கூட வெற்றிபெற முடியவில்லை யென்றால், அன்றைய மக்களின் மனநிலை எவ்வாறு இருந்திருக்கும் என்பதை நாம் ஊகிக்கலாம். ஆகவே ஒரு முஸ்லிம் என்ற முறையில், தேர்தலில் வெற்றி பெறலாம் என்ற நம்பிக்கையை முஸ்லிம்கள் இழந்தனர். இரண்டாவது அரசசபையில் இரு முஸ்லிம்கள் இருந்தார்களென்றால் அவர்கள் நியமனம் மூலமே வந்தவர்கள். முதலாவது அரசசபையில் இருந்த முஸ்லிம் அங்கத்தவரும், இரண்டாவது அரச சபையிலிருந்த இரு முஸ்லிம் அங்கத்தவர்களும், தம்முடைய சமூகத்திற்காக மட்டும் உழைத்தார்களென்றால், அதுதான் இல்லை. அவர்கள் பொதுக்கண்ணோட்டத்துடன், எல்லா மக்களுடைய சுபிட்சத் துக்காகத்தான் உழைத்தார்கள். ஜே.ஆர். ஜயவர்தனவினால்

Page 17
அ. முகம்மது சமீம் 6
கொண்டு வரப்பட்ட தனிச்சிங்கள மசோதாவில் பங்குபற்றிய சர். ராசிக் பரீதினுடைய கருத்துக்களும், இலங்கைக்குச் சுதந்திரம் - "டொமீனியன் அந்தஸ்து '- வேண்டு மென்ற விவாதத்தில் பங்கு பற்றிய, டாக்டர் கலில், றி.பி. ஜாயா, சர். ராசிக் பரீத் ஆகியவர்களுடைய, கருத்துக்களும், அவர்களுடைய பொதுநல நோக்கத்தையே காட்டுகின்றன. ஆகவே முஸ்லிம் தலைவர்கள், தம்முடைய சமூகத்தின் நன்மையை விட பொதுநல நன்மையையே கருதினார்கள் என்பது இதனால் புலப்படுகின்றதல்லவா? சாதி, சமயம் என்ற உணர்வில் ஊறிப்போயிருந்த, சிங்கள பாமர மக்களிடையே அரசியல் ஞானத்தையும், முற்போக்குக் கருத்துக்களையும் புகுத்தி அவர்களை ஒரு புதுமை மிக்க சமுதாயமாக மாற்றிய
பெருமை இடதுசாரிக் கட்சிகளையே சாரும்.

7 ஒரு சிறுபான்மை சமூகத்தின் பிரச்சினைகள் IV
2. இலங்கை அரசியல் வானில் கட்சிகளின் தோற்றம்
1931ம் ஆண்டில் இலங்கையில் சர்வஜன வாக்குரிமை அமுலுக்குக் கொண்டு வரப்பட்ட பின், 1948ம் ஆண்டில், இலங்கை சுதந்திர நாடாகப் பிரகடனப்படுத்தப்பட்ட கால வரையிலுள்ள காலப் பகுதியில், 1931 ல், 1936, 1947, ஆண்டுகளில், முறையே, மூன்று பொதுத் தேர்தல்கள் நடை பெற்றன. இந்திய சுதந்திரப் போராட்டம், மகாத்மா காந்தியின் தலைமையில் ஒரு மக்கள் இயக்கமாக மாறியதைப் போல் இலங்கைச் சுதந்திர இயக்கம் இருக்கவில்லை. மத்தியதர வர்க்கத்தின் தலைமையில் நடைபெற்ற இவ்வியக்கம், அரச சபையின் விவாதங்களின் மூலம், "டொமினியன் அந்தஸ்தைப் பெறும் நோக்கத்தையே கொண்டிருந்தது "பூரண சுதந்திரம் வேண்டும் என்று இந்திய காங்கிரஸ் கூறிய அதே வேளையில், 'பிரித்தானிய காமன்வெல்த்தில் ஒர் அங்கத்துவ நாடாக இருக்க வேண்டு மென்பதையே இலங்கைத் தலைவர்கள் விரும்பினர் என்றால், இலங்கையின் அரசியல் தலைவர்களின் மத்தியதர வர்க்க மனப்பான்மையைக் காட்டுவதோடு, மக்களின் அபிலாஷைகளுடன் தம்மைத் தொடர்புபடுத்திக் கொள்ளவில்லை யெ ன்பதையும் காட்டுகிறதல்லவா? இலங்கையின் அரசியல் கட்சிகள், தம்முடைய அரசியல் கொள்கைகளை முன்வைத்துப் பொதுத் தேர்தல்களில் போட்டியிடுவதற்கு இருபது வருடங்களுக்கு முன்னமேயே, சர்வஜன வாக்குரிமை இலங்கையில் அமுலுக்கு வந்தது. இலங்கை மக்கள், ஒரு கல்வியறிவு படைத்த, அரசியல் ஞானமுள்ள ஒரு சமுதாயமாக மாறுவதற்கு முன்னமே, "சர்வஜன வாக்குரிமை' என்ற இவ் வரப் பிரசாதம் கிடைத்த காரணத்தினால், அரசியல் கொள்கைகளைவிட சாதி, சமயம், மொழி, போன்றவையே மக்களிடம் பரவியதைக் காண்கிறோம். இலங்கைச் சனத்தொகை 1920-ம் ஆண்டுகளில் 0.15% விகிதமாக இருந்த

Page 18
அ. முகம்மது சமீம 8
வாக்காளர் தொகையைக் கொண்டிருந்தது. இது, 1921-23ம் ஆண்டுகளில் 4% விகிதமாக வளர்ந்தது. பத்து ஆண்டுகளில், இத் தொகை 21 வயதுக்கு மேற்பட்ட அத்தனை பேரையும் கொண்டதாக வளர்ச்சி பெற்றது. 1936ம் ஆண்டில், அரசியல் வாதிகளின் உந்துதலின்பேரில், 21 வயதுக்கு மேற்பட்ட எல்லோரும், சுயமாகவே, வாக்காளர்களாகப் பதிவு செய்யப்பட்டனர். ஆகவே 1931ம் ஆண்டில், 15 லட்சமாக இருந்த வாக்காளர் எண்ணிக்கை 1936ம் ஆண்டில், 24 லட்சமாகப் பெருகியது. பத்தொன்பதாம் நூற்றாண்டில் இங்கிலாந்தில் இதே போன்று வாக்காளர் எண்ணிக்கைப் பெருகிய போது அரசியற் கட்சிகள் தோன்றியது போல், இலங்கையில், அப்படியேதும் நடக்கவில்லை. அரசியற் கட்சிகள் இல்லாதவிடத்து தேர்தல்களில் போட்டியிட்டவர்கள் பெரும்பாலும், மக்களின் சாதி, 59F LCD LU , மொழி, ஆகியவைகளையே முன்வைத்தனர். 1936ம் ஆண்டில் நடைபெற்ற பொதுத் தேர்தல்களில் கூட அரசியற் கட்சிகள் தோன்றுவதை நாம் காணவில்லை. இப்பொதுத் தேர்தலில் "லங்கா சம சமாஜக் கட்சியின் வேட்பாளர்களாகப் போட்டியிட்ட டாக்டர் என்.எம். பெரேராவும், பிலிப் குணவர்தனாவும், ரு வன்வெல்லத் தொகுதியிலிருந்தும், அவிஸ்ஸா வெல்லத் தொகுதியிலும் முறையே வெற்றிபெற்றனர். இத்தேர்தலில் கூட பெரும்பான்மையான சுயேட்சை வேட்பாளர்கள் வெற்றி பெற்றதற்குக் காரணம், மக்களிடையே அரசியல் ஞானம் அற்றிருந்தமையே. ஆனால் இத்தேர்தலில் ஒர் உண்மை மட்டும்புலப்பட்டது. அரசியல் உலகில் ஜாம்பவனாக இருந்த ஈ. டபிள்யு. பெரேரா போன்றோரும், மந்திரிசபை அங்கத்தவர்களில் ஒருவரான சர். றிக்கிரி பண்டா பானபொக்கை போன்றோரும், தமது சொந்தத் தொகுதிகளிலேயே தோல்வியடையலாம் என்பதே இவ்வுண்மை.
வாக்காளர்களின் எண்ணிக்கை பெருமளவில் வளர்ந் திருந்தபோதும், தனியார் வேட்பாளர்கள், பொதுத்தேர்தல்

9 ஒரு சிறுபான்மை சமூகத்தின் பிரச்சினைகள் IV
களிலும், இடைத் தேர்தல்களிலும் வெற்றி பெறுவதற்குக் காரணம் இந்த டொனமூர் அரசியல் அமைப்பு முறையே.
கட்சிகளுக்கு அல்லாமல் தனியார்களுக்கே இவ்வமைப்பு முறை முக்கியத்துவம் கொடுத்தது. இதையே அன்றிருந்த கவர்னர் கல் டிகொட் 1938ம்ஆண்டில் இங்கிலாந்துக்கு அனுப்பிய தன்னுடைய அறிக்கையில் 'இன்றைய அரசியல் அமைப்பில் அரசியல் கட்சிகள் வளர்வதற்கு எவ்வித மார்க்கமுமில்லை, வளரவும் முடியாது" என்று அரசியல் அமைப்பு முறை மாற்றப்படல் வேண்டு மென்பதற்குரிய
காரணத்தையும் விளக்கினார்.
அரசியற்கட்சிகள் தோன்றாமைக்கு வேறுபல காரணங் களும் இருந்தன. அன்றைய "கட்சிகள்' பெரும்பாலும் ஒரு சிலருடைய தலைமைத்துவத்திலேயே இயங்கின. இவர்கள் கட்சிகளைப் பெரும்பாலும் தம்முடைய மானியப் பொருளாகவே கருதினார்கள். இலங்கை தேசிய காங்கிரஸ், ஒரு சிலருடைய தலைமையிலேயே நடைபெற்றது. இது ஒரு சட்டதிட்டங்கள் அடங்கிய ஒர் அரசியற்கட்சியாக மாறுவதை இத்தலைவர்கள் விரும்பவில்லை. முக்கியமாக, இம் மாற் றத்தை விரும்பாதவர்கள், தேசிய காங்கிரசின் தலைவர்களான, டி.பி.ஜயத்திலக்காவும், டி. எஸ். சேனநாயக்கவுமே. 1930க்கும் 1940க்கும் இடைப்பட்ட காலத்தில், இக்கட்சியின் இளைய தலைமுறையினர், முக்கியமாக, பின்னால் பிரதமராக வந்த டட்லி சேனாநாயக்கவும், ஜனாதிபதியாக வந்த ஜே. ஆர். ஜயவர்தனாவும், கட்சியை ஒர் அரசியற்கட்சியாகச் சீரமைக்கப் பாடுபட்டனர். உண்மையில் இக்கட்சிக்கு ஒரு காரியாலயம் என்றொன்று இருக்கவிலலை. இவர்கள் தங்களுடைய வீட்டு வராந்தாவில்தான் பெரும்பாலும் கூடினார்கள்.
தேசிய காங்கிரஸ் தலைவர்களில் முக்கியமாக டி. எஸ். சேனாநாயக்க, கட்சியின் புதிய சட்டதிட்டங்களுக்கு இணங்க விரும்பவில்லை. 1943ம் ஆண்டு ஜே. ஆர். ஜயவர்தனா, இலங்கைக் கம்யூனிஸ்ட் கட்சியை இலங்கைத் தேசிய

Page 19
அ. முகம்மது சமீம் 1C
காங்கிரசுடன் சேர்த்தபோது, சேனாநாயக்கா கட்சியை விட்டும் விலகினார். அவர் விலகியதோடு கட்சியின் செல்வாக்கும் குறைந்தது. சேனநாயக்கா ஒரு புதிய கட்சியை ஸ்தாபித்த போது, தேசிய காங்கிரஸின் உள்ளார்ந்த குறைபாடு வெளிப்படையானது. இக்கட்சியின் அங்கத்தவர்கள் பலர் சேனநாயக்காவின் புதிய கட்சியில் சேர்ந்தனர்.
அரசியற் கட்சிகளைச் சீரமைப்பதில், இச்சீர்திருத்த வாதிகள், உலகிலுள்ள பல அரசியற் கட்சிகளை முன் மாதிரியாகக் கொள்ள முனைந்தனர். அகில இந்திய தேசிய காங்கிரசைச் சிலரும் இங்கிலாந்தின் தொழிற்கட்சியை மற்றும் சிலரும் மாதிரியாகக் கொள்ள வேண்டுமென்ற கருத்தைத் தெரிவித்தனர். லங்கா சம சமாஜக் கட்சி உட்பட இலங்கைக் கம்யூனிஸ்ட் கட்சியும், ஏனைய இடதுசாரிக் கட்சிகளும், "சோவியத் யூனியனின் அமைப்பை முன் மாதிரியாகக் கொண்டு ஒரு தலைமைக்குழுவின் அதிகாரத்தின் கீழ் கட்சியை அமைக்க முற்பட்டனர். கம்யூனிஸ்ட் கட்சியை விட லங்கா சம சமாஜக் கட்சியில் ஒரளவு ஜனநாயக முறை பின்பற்றப்பட்டது. கருத்து வேறுபாடுகளினால் ஏற்பட்ட பிளவுகளுக்கும், தலைமைத்துவத்தில், தனிநபர் வேற்றுமை களினால் ஏற்பட்ட மோதல்களின் காரணமாக ஏற்பட்ட பிளவு களுக்கும், இக்கட்சி பின்னால் பல பிரிவுகளாகப் பிரிவதற்கும், கட்சியிலிருந்த ஜனநாயக முறையே காரணமாயமைந்தது. சிறுபான்மை யினங்களைப் பொறுத்த மட்டில் அவர்கள், தங்கள் தங்கள், சமூகங்களை 'அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ்' என்று இலங்கைத் தமிழர்களும், "இலங்கை இந்திய காங்கிரஸ்" என்று, இந்தியத் தோட்டத் தொழிலாளர்களும்; ‘சோனகர் சங்கம்' என்றும், 'அகில இலங்கை முஸ்லிம் லீக்' என்றும் "இலங்கை மலாயர் சங்கம்' என்றும் முஸ்லிம்களும் தத்தமது கட்சிகளை அமைத்தனர்.

ஒரு சிறுபான்மை சமூகத்தின் பிரச்சினைகள் IV
3. ஐக்கிய தேசியக் கட்சியின் தோற்றம்
இலங்கை தேசிய காங்கிரஸ், இந்திய தேசிய காங்கிரசை முன் மாதிரியாக வைத்தே சட்டதிட்டங்களை வகுத்தது. இந்திய காங்கிரசின் "பூரண சுயராஜ்' வேண்டுமென்ற கொள்கையை அடிப்படையாக வைத்தே, இலங்கையிலும், பூரணசுதந்திரம் வேண்டுமென்ற கோஷம் எழுந்தது. இந்தியாவில் சுதந்திரத் திற்காகப் பாடுபட்ட இந்திய காங்கிரஸ், சுதந்திர இந்தியாவின் அரசாங்கததை ஏற்று நடத்தவும் முன் வந்தது. ஆனால், இலங்கையில், சுதந்திரத்திற்காகப் பாடுபட்ட இலங்கை தேசிய காங்கிரஸ், இந்தப் பணியோடு நின்று விடுவதா அல்லது, சுதந்திரத்திற்குப் பிறகு அரசாங்கத்தையேற்று நடத்துவதா, என்ற பிரச்சினை எழுந்தது. இலங்கைத் தேசிய காங்கிரசின் முக்கிய தலைவர்களில் ஒருவரான டி. பி. ஐயத்திலக்கா அரசியலிலிருந்தும் ஒய்வு பெற்று, இந்தியாவுக்கு இலங்கையின் ஸ்தானிகராகச் சென்று விட்டார். காங்கிரசின் தனிப்பெருந்தலைவரான டி.எஸ். சேனாநாயக்கா, கம்யூனிஸ்ட் கட்சி காங்கிரசுடன் சேர்ந்ததனால் கட்சியினின்றும் விலகிக் கொண்டார். கட்சியிலிருந்தும் விலகிய டி. எஸ். சேனாநாயக்கா ஐக்கிய தேசியக் கட்சி" என்று எல்லா சமூகங்களையும், இடதுசாரிக் கட்சிகளைத் தவிர, எல்லா கட்சிகளையும் ஒன்றிணைக்கும் ஒரு கட்சியாக உருவாக்கினார்.
1947ம் ஆண்டில் நடந்த பொதுத் தேர்தலில், ஐக்கிய தேசியக் கட்சி, எதிர்பார்த்தபடி அமோகமாக வெற்றி பெறவில்லை யென்றாலும், சுயேச்சை அங்கத்தவர்களுடைய ஒத்துழைப்புடன் ஒர் அரசாங்கத்தை அமைக்கும் தகுதியைப் பெற்றது. அகில இலங்கைத் தமிழ் காங்கிரசில், பெரும்பாலான தமிழ் அங்கத்தவர்கள் டி. எஸ். சேனாநாயக்காவின் தலைமைத் துவத்தை யேற்று, அரசாங்கத்துடன் இணைந்தனர். இதே போன்று, 'அகில இலங்கை முஸ்லிம் லீக்கும், சர். ராசிக் பரீதின் தலைமையிலான 'அகில இலங்கைச் சோனகர்

Page 20
அ. முகம்மது சமீம் 12
சங்கமும் , டி. எஸ். சேனாநாயக்காவின் தலைமையை யேற்று,ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவு வழங்குவதென்று முடிவெடுத்தன. இதன் பிரகாரம், அரசசபையில் இருந்த மூன்று முஸ்லிம் அங்கத்தவர்களும், ஐக்கிய தேசியக் கட்சியில் சேர்ந்தனர். ஐக்கிய தேசியக் கட்சியின் பொருளாளர்களில் ஒருவராக சர். ராசிக் பரீத் தெரிவு செய்யப்பட்டார். ஜாயா, இப்புதிய கட்சியின் தலைவர்களில் ஒருவராக அங்கீகரிக்கப் பட்டார். பொதுத் தேர்தலுக்குப் பிறகு புதிய அரசாங்கத்தின் அமைச்சர்களில் ஒருவராக ஜாயா நியமிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. பொத்துவில் தொகுதியில் தோல்வி யடந்ததனால், சர். ராசிக் பரீதுக்கு எவ்வித அரசாங்க நியமனமும் கிடைக்கவில்லை.
இலங்கை அரசியல் நிலையில் ஏற்பட்ட மாற்றங்கள், முக்கியமாக, இலங்கைக்குச் சுதந்திரம் கிடைக்கும் இத்தருணத்தில், சிறுபான்மையின மக்களின் மனநிலையில் மாற்றத்தைக் கொண்டு வந்தன. இதுகாலவரையும் சிங்களத் தலைவர்களின், "சுதந்திர இயக்கத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து வந்த தமிழர் தலைவர் ஜி. ஜி. பொன்னம்பலம், சிங்கள மக்களுடன் ஒத்துப் போக வேண்டுமென்ற கருத்தைத் தமிழ் மக்கள் முன்வைத்தார். தமிழ் காங்கிரசிற்கு அவர் அனுப்பிய செய்தியில், "பொறுப்புள்ள ஒத்துழைப்பைத் தமிழ் மக்கள் கடைப்பிடிக்க வேண்டு மென்று கூறினார். 1946ம் ஆண்டு பெப்ருவரி 5ம் திகதி, 'ஹிந்து ஒர்கன்' பத்திரிகை அவருடைய செய்தியைப் பின்வருமாறு குறிப்பிட்டிருந்தது. 'தமிழ் மக்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் அதே வேளையில், ஏனைய சமூகங்களுடன் தமிழ் மக்கள் ஒத்துழைப்பதன் அவசியத்தை நான் தமிழ் மக்களின் முன் வைக்க விரும்புகிறேன். "பொறுப்புள்ள ஒத்துழைப்பு' என்ற கருத்தை நான் பிரேரிக்க விரும்புகிறேன். இது ஒரு சமூக நலன் கொள்கை மட்டுமல்ல, தமிழ் மக்களுக்குப் பல நன்மைகளைப் பயக்குவதோடு, பெரும்பான்மை சிங்கள மக்களின்

3 ஒரு சிறுபான்மை சமுகத்தின் பிரச்சினைகள் IV
அங்கீகாரத்தையும் இது பெரும், சிங்களத் தலைவர்களோடு, ஒத்துழையாமைக் கொள்கையைக் கடைப்பிடித்து வந்த தமிழ்த் தலைவர்களின் மனநிலையில் மாற்றம் ஏற்படுவதை நாம் காணலாம்.
1946ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் வெளியான 'ஹிந்து ஒர்கன் பத்திரிகை, டி.எஸ். சேனாநாயக்கா தோற்றுவித்த புதிய அரசியற் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியை பற்றிக் கூறும் போது, "சேனாநாயக்க இதுகாலவரையும், எடுத்துவந்த கொள்கைகளை அங்கீகரிப்பதற்கும், அவருடைய எதிர்காலக் கொள்கைகளை ஆதரிப்பதற்காகவுமே இக்கட்சி ஸ்தாபிக்கப் பட்டுள்ளது. இலங்கையின் அரசியல் சித்தாந்தத்தை நிர்ணயிப்பதற்கு சேனாநாயக்காவுக்கு மட்டும்தான் உரிமை இருக்கிறது என்று கூற முடியாது. தனிநபர்களின் கருத்து வேற்றுமைகளின் அடிப்படையில் தோன்றியதும், ஒரு தனித்தலைவரின் தலைமைத்துவத்தில் பற்றுதல் வைக்கும், போக்கினைக் கொண்ட ஒர் அரசியற் கட்சியின் பயனற்ற தன்மையை மக்கள் உணரும் காலம் வந்து விட்டது' என்று
கூறியது.
ஐக்கிய தேசியக் கட்சியில் சேர்ந்த மகாதேவாவைப் பற்றிக் கூறும் பொழுது, 'மகாதேவா இப் புதிய கட்சியில் சேர்வதன் மூலம் தனக்கும் தனது சமூகத்திற்குமிடையே இருந்த இடைவெளியைப் பெருப்பித்துக் கொண்டார்,' என்றது.
சிங்களத் தலைவர்களின் கொள்கைகளை சந்தேகக் கண் கொண்டு பார்த்த தமிழ்த் தலைவர்கள், டி. எஸ். சேனாநாயக்காவின் தலைமைத்துவத்தை ஏற்றுக் கொள்ள விரும்பவில்லை. 'சோல்பரி கமிஷனர்கள் இலங்கை வந்த சமயம் அவர்களுக்கு ஆதரவு நல்க வேண்டும் என்று குதூகலித்த தமிழ்த்தலைவர்கள், 1920ம் ஆண்டுகளில் 'தமிழர்கள் தாம் அனுபவித்த உரிமைகள் தமக்கு அளிக்கப்படல் வேண்டும்" என்ற தமிழர்களின் கோரிக்கையை, கமிஷனர்கள்

Page 21
அ. முகம மது 8 மீ ம 4
நிராகரித்ததனால், கமிஷனர்களின் மேல் வைத்த நம்பிக்கையை இழந்தனர். "சிறுபான்மை சமூகங்களுக்குப் பாதுகாப்பு அளிக்கப்படும்' என்று கமிஷனர்கள் வாக்குறுதியளித்தும், பெரும்பான்மை தமிழ்த்தலைவர்கள் தாம் வஞ்சிக்கப் பட்டதாகவே எண்ணினர். தமிழர்களின் இந்த விரக்தி நிலையை, 1946ம் ஆண்டு மே மாதம் 24ம் திகதி வெளிவந்த 'ஹிந்து ஒர்கன்' பத்திரிகை பிரதிபலித்தது. "சேனாநாயக்கா இந்நாட்டின் தலைவர்களில் அதிக செல்வாக்குப் படைத்தவர் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை. ஆனால், அவர் வடக்குப் பிரதேசத்தை முற்றாகவே புறக்கணித்து விட்டார். 'டி.எஸ். "சேனாநாயக்காவின் தனிப்பட்ட செல்வாக்கில் நம்பிக்கை வைத்து, இந்நாட்டின் எதிர்காலத்தை அடகு வைப்பது புத்திசாலித்தனமான செய்கையல்ல", என்று ஹிந்து ஒர்கன் பத்திரிகை கூறியது.
ஐக்கிய தேசியக் கட்சியுடன் சேரவேண்டும் என்று ஒரு சில முதிய தமிழ் அரசியல்வாதிகள் கூறினாலும், இளைய தலைமுறையினர் அதை ஏற்றுக் கொள்ளவில்லை. இவ்விளைய தலைமுறையின் தலைவராக வளர்ந்து வந்த எஸ். ஜே. வி. செல்வநாயகம், 'ஐக்கிய தேசியக் கட்சியென்பது ஒரு சில இனவாதிகளின் சேர்க் கையே யன்றி ஆளுங்கட்சியல்ல. இவர்களின் செய்கைகள், இந்நாட்டில் வாழும் பல்லின மக்களிடையே இருந்து வந்த செளஜன்ய உறவை முறிப் பதாகவே அமைகிறது' என்று கூறினார். மேலும் அவர், 'ஒலிவர் குணத்திலக்காவும், சேனாநாயக்காவும் இந்நாட்டின் சிறுபான்மையின மக்களை அடக்கும் நோக்கத்துடன் ஒரு இரகசிய திட்டத்தை அமுலுக்குக் கொண்டு வர முயற் சிக்கிறார்கள். தமிழ் மக்கள், சிங்கள மக்களுடன் ஒத்துழைக்க விரும்பவில்லை," என்று கூறினார் (ஹிந்து ஒர்கன், ஜூலை 27, 1947)
தமிழர் சமூகம் பொதுவாக ஐக்கிய தேசியக் கட்சியில் நம்பிக்கை வைக்காதிருந்தபோதும், சில தமிழ்த்தலைவர்கள்,

ஒரு சிறு பன்மை சமூகத்தின் பிரச்சினைகள் IV
- ܚܒܝܐ மகாதேவா, எஸ். நடேசன், சி. பொன்னம்பலம், சி. சுந்தர
லிங்கம் போன்றவர்கள் தங்களது தனிப்பட்ட நன்மைகளுக்காக ஐக்கிய தேசியக் கட்சியில் சேர்ந்தனர். தமிழ்காங்கிரஸ் தலைவர் ஜி.ஜி. பொன்னம்பலமும் இதற்கு விதிவிலக்கல்ல.
தமிழ்த்தலைவர்களுடைய சந்தேகத்தை நிவர்த்தி செய்யும் பொருட்டு டி. எஸ் சேனாநாயக்கா, சிறுபான்மையின மக்கள், இப் புதிய அரசியல் திட்டத்தினால் எவ்விதத்திலும் பாதிக்கப்பட மாட்டார்கள் என்று உறுதி மொழி கூறினார். 1945ம் ஆண்டு, அரசசபையில், புதிய அரசியல் திட்டம் பற்றிய விவாதத்தில் "லண்டன் மாநகரிலிருந்து நீங்கள் ஆளப்படுவதை விரும்புகிறீர்களா? அல்லது இலங்கை யராகிய நீங்கள், இலங்கையை இலங்கையர் ஆட்சி செய்வதற்கு உதவியளிக்கப் போகிறீர்களா? என்னுடைய தனிப்பட்ட முறையிலும், காங்கிரசின் சார்பிலும், நான் சிறுபான்மையின மக்களுக்கு உறுதியளிப்பது என்னவென்றால், சுதந்திர இலங்கையில், சிறுபான்மையின மக்களுக்கு, எவ்வித தீங்கும் ஏற்படாது என்பதே' என்று சேனாநாயக்க கூறினார். தமிழ்த் தலைவர்கள் சேனாநாயக்காவின் உறுதிமொழியில் நம்பிக்கை வைத்து, புதிய அரசியல் திட்டத்திற்குத் தமது ஆதரவை அளித்தார்கள்.
சர். ஐவர் ஜெனிங்ஸ், தன்னுடைய கட்டுரையொன்றில் பின்வருமாறு கூறுகிறார்.
"எல்லா இன மக்களுக்கும் நியாயமானதொரு அரசியல் அமைப்பையே சேனாநாயக்கா விரும்பினார். தமிழர்களுக்கு எத்தனை ஆசனங்களை வழங்குவீர் என்ற வினா எழுப்பப்பட்டபோது, "எல்லா ஆசனங்களும் தமிழர்களுக்கே சென்றாலும் நான் கவலைப்படப் போவதில்லை; அவர்கள் இலங்கையராக இருக்கும் வரையில்'.
டி. எஸ். சேனாநாயக்காவின் அரசியல் சித்தாந்தத்தை விளக்கும் பேராசிரியர் கே. எம். டி. சில்வா 'இலங்கை அரசியல் அமைப்பில் எந்தவொரு தனி இனத்துக்கோ அல்லது

Page 22
அ. முகம்மது சமிம் | 6
இனக்குழு விற்கோ விசேஷ சலுகைகள் கொடுக்கப்பட LD IT LIT’’ என்ற கொள்கையை சேனாநாயக்கா கொண்டிருந்தார்' என்று கூறுகிறார். மேலும் அவர் "பண்டாரநாயக்காவும் அவரது சிங்கள மகாசபாவும், இலங்கை ஒரு பெளத்த சிங்கள நாடாக வேண்டுமென்ற வற்புறுத்தலுக்கு அவர் இடம் கொடுக்கவில்லை' என்று கூறுகிறார்.
இலங்கை சோனகர் சங்கத் தலைவரான சர். ராசிக் பரீத் டி. எஸ். சேனாநாயக்காவுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், 'என்னுடைய சமூகமும் நானும், அவருடைய கொள்கைகளுக்குப் பக்க பலமாகவே இருந்திருக்கிறோம். "டொமினியன் அந்தஸ்து" என்ற அவரது குறிக்கோள் வெற்றி பெறும் இத்தருவாயில், அவரோடு நாமும் இணைந்து முன்னேறிச் செல்வோம்,' என்று அரச சபையில் கூறினார். எல்லா இனத்தவர்களுடைய ஆதரவில் தோன்றிய ஐக்கிய தேசியக் கட்சி எல்லா சமூகங்களினதும் ஐக்கியத்திற்குப் பாடுபட்டதா என்பதைப் பின்னர் பார்ப்போம்.

7 G (5 dl JU N GUI GOLD 8 (U55, 56b i Të si 60 60 6 Gli IV
4. டொனமூர் தசாப்தத்தில் இலங்கையின் பொருளாதார வளர்ச்சியும் முஸ்லிம்களின் பங்கும்
சுதந்திர இலங்கையில் அடியெடுத்து வைப்பதற்கு முன் டொனமூர் காலத்தின் பொருளாதார, சமூக, கலாச்சார வளர்ச்சியை நாம் அறிந்து கொண்டால், பின்னர் வரக்கூடிய அரசியல் பிரச்சினைகளுக்குரிய காரணங்களை அறிந்து கொள்ளலாம், "ஒரு நாட்டினதோ, அல்லது சமூகத்தினதோ, அரசியல் மாற்றங்களுக்கு அடிப்படைக் காரணம் பொருளாதாரமே என்பது கார்ல் மார்க்சின் கருத்து. கார்ல் மார்க்சின் இந்தப் புதுமையான கருத்தை வரலாற்றாசிரியர்கள் ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள். இதற்குத்தான் "விஞ்ஞானக் கண்ணோட்டத்தில் வரலாறு" என்ற நாமம் சூட்டி யிருக்கிறார்கள். எந்த ஒர் அரசியல் மாற்றத்திற்கும் பொருளா தாரம் ஒரு முக்கிய காரணம் என்பதனால் 1931-47க்குமிடையில் உள்ள காலப்பகுதியிலுள்ள பொருளாதார வளர்ச்சியை நாம் ஆராய்வோம். நாட்டின் பொருளர்தார நிலை இலங்கை முஸ்லிம்களை எவ்வளவு தூரம் பாதித்தது என்பதை உறுதியாகக் கூற முடியாதென்றாலும், வர்த்தகத்திலும், விவசாயத்திலும் ஈடுபட்டிருந்த முஸ்லிம்களை ஒரளவாவது பாதித்தது என்பதை நாம் மறுக்க முடியாது.
இலங்கை பொருளாதாரத்தில் இரண்டு முக்கிய அம்சங்களைக் காணலாம். ஒன்று, இலங்கையின் வருமானம் வெளிநாட்டு வர்த்தகத்தில் தங்கியுள்ளமை, மற்றொன்று, இலங்கையின் பொருளாதாரம், இரண்டு பிரிவுகளைக் கொண்டிருத்தல். உலக சந்தைக்கு உற்பத்தி செய்யும் ஒரு நவீன ஏற்பாடுடனான ஒரு தொழில் துறை. மற்றையது, வாழையடி வாழையாகக் கிராமச் சந்தைக்கு உற்பத்தி செய்யும் ஒரு பிழைப்பு ஊதியத் தொழில்துறை. பெருந்தோட்டப் பயிர் செய்கையும், கொழும்பிலும் இலங்கையின் ஏனைய முக்கிய

Page 23
அ முகமது 8 மிமி 18
நகரங்களிலுமுள்ள பெரும் வர்த்தகக் கம்பெனிகளைக் கொண்டதுதான் நவீன பொருளாதாரப் பிரிவு என்று நாம் கொள்ளலாம். தேயிலை, ரப்பர் தொழிற்சாலைகளுக்கான இயந்திரங்களையும், இதர பாகங்களையும் உற்பத்தி செய்வதில் ஆரம்பித்ததுதான் இந்நாட்டின் நவீன கைத் தொழில் பிரிவு. அரசாங்கத்தின் வரவு-செலவு திட்டத்தின் 590 இக் கைத் தொழிலுக்கு ஒதுக்கப்பட்டது. இலங்கையின் 14,000 கிராமங்கள், விவசாயத்தையும், கிராமக் கைத் தொழில் களையும், ஏனைய மரபுக் கைத் தொழில்களையும் நம்பி
இருந்தன.
இவ்விரு பொருளாதாரப் பிரிவுகளும், ஒன்றோடொன்று கலக்காமல் பிரிந்தே இருந்தன. கிராமப்புற பொருளாதாரமும், பெருந்தோட்டப் பொருளாதாரமும் வெவ்வேறு முனையில் இருந்தன. பெருந்தோட்டப் பயிர் செய்கையும், அதனை யொட்டிய தொழிற்சாலைகளும், வர்த்தக நிலையங்களும் பெரும்பாலும், ஆங்கிலேயரிடமே இருந்தன. தெங்குப் பயிர் செய்கையில் மாத்திரம்தான் உள்ளூர்வாசிகள், பெருமளவில் ஈடுபட்டனர். பெருந்தோட்டப் பயிர் செய்கையில், பெரும் பாலும் சிறு தோட்டங்களைப் பொறுத்த வரையில், 15% உள்ளூர் வாசிகளிடம் இருந்தது. இதில் முஸ்லிம்களின் பங்கு ஒரு கணிசமான அளவாக இருந்தது.
டொனமூர் அரசியல் அமைப்பு முறை இலங்கையில் அமுல் நடத்தப்பட்ட ஆரம்பகாலத்தில் இலங்கையின் பொருளாதாரம் 1931ம் ஆண்டில் ஏற்பட்ட உலக பொருளாதார மந்தத்தினால் பெரிதும் பாதிக்கப்பட்டது. இப்பொருளாதார மந்தத்தினால் ஏற்பட்ட விளைவுகளை எப்படிச் சமாளிப்ப தென்பதுதான் பெருந்தோட்டப் பயிர்செய்கைக்கும், அதனோடு ஒட்டிய தொழிற்சாலைகளுக்கு மேற்பட்ட முக்கிய பிரச்சினை. இப் பொருளாதார மந்தம் இலங்கை வெளிநாட்டு வர்த்தகத்தைப் பெரிதும் பாதித்தது. இலங்கையின் ஏற்றுமதிகள், பெரும்பாலும், தேயிலை, ரப்பர் ஆகிய

19 ஒரு சிறுபான்மை சமூகத்தின் பிரச்சினைகள் IV
பொருள்கள், கிடங்குகளில் முடங்கிக் கிடந்தன. ஐக்கிய அமெரிக்காவிலும், ஐரோப்பாவிலும் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சி, இந்நாடுகளின் இறக்குமதிகளைப் பெரிதும் பாதித்தது. இதனால், கீழத் தேய நாடுகளின் மூலாதார பொருட்களின் ஏற்றுமதி பெரிதும் பாதிப்புக்குள்ளாகியது. 1927ம் ஆண்டில் ஏற்றுமதி மூலம் கிடைத்த 48 கோடி ரூபாய் 1932ம் ஆண்டில் 19 கோடி ரூபாயாகக் குறைந்தது. 1927ம் ஆண்டில் 100% விகிதமாக இருந்த வெளிநாட்டு வர்த்தகம், 1932ம் ஆண்டில் 44% விகிதமாகக் குறைந்தது. இதனால் இலங்கையின் பொருளாதார வளர்ச்சி பாதிக்கப்பட்டது மல்லாமல் வேலையில்லாத் திண்டாட்டமும் தலைவிரித்தாடத் தொடங்கியது. 1929ம் ஆண்டுக்கும், 1932ம் ஆண்டுக்கும் இடையில், 9000 இலங்கையரும், 84,000 இந்தியர்களும் தங்கள் தொழில்களை இழந்தார்கள் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. ஒரு லட்சம் இந்தியத் தொழிலாளர்கள் தமது தாயநாடாகிய இந்தியாவுக்கு திரும்பிச் சென்றனர். கிராமப்புற பொருளாதாரமும், இதனால் பாதிக்கப்பட்டது. விவசாயப் பொருட்களின் முக்கியமாக அரிசி, போன்ற தானியங்களின் விலைவாசி குறைந்ததனால் கிராம மக்களின் வாழ்க்கைத் தரமும் குறைந்தது. டொனமூர் அரசியல் அமைப்பு முறையில், இலங்கையின் பொருளாதாரம் ஏகாதிபத்திய அரச உறுப்பினர்களின் கையிலேயே இருந்தது.
அரசசபையில் அங்கம் வகித்த உள்நாட்டு அரசியல்வாதிகளின் பொருளாதாரத் திட்டங்கள் அரச கட்டுக் கோவைகளில் அடைபட்டுக் கிடந்தன. இப்பொருளாதாரப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கான ஒரே வழியான ஆட்குறைப் பைத்தான், அரசாங்கம் செய்தது. இப் பொருளாதார மந்தநிலை யிலிருந்து விடுபடுவதற்கு, இலங்கையின் வரட்சிப் பிரதேசங் களில், குடியேற்றத் திட்டங்களை இலங்கை அரசியல்வாதிகள் வகுத்தனர். காணித் திருத்தத் திட்டங்களும், நீர்ப்பாசனத் திட்டங்களும் இதன் அடிப்படையாகத் தான் தோன்றின. தென் மேற்குப் பிரதேசங்க ளின் சனப் பெருக்கத்தைக் குறைப்

Page 24
9.(U) 5LOLOJ BULO 2O
பதற்கும் இது வழிவகுத்தது. தமிழர் வாழும் பிரதேசங்களை ஆக்ரமிக்கும் நோக்கத்துடன் இக் குடியேற்றத் திட்டங்கள் அமுலுக்குக் கொண்டு வரப்பட்டன என்று கூற முடியாது. அதே வேளையில், சமரவீர, தன்னுடைய, "தந்தை வழி உடைமை' யான காணி" என்ற கட்டுரையில் (இந்திய பொருளாதார-சமூக வரலாறு சஞ்சிகை IV 1976) இலங்கையின் வரட்சிப் பிரதேசம் சிங்கள விவசாயிகளுக்கு மாத்திரமே உரித்துடையது' என்ற சிங்க ள புத்திஜீவிகள் கருத்தையும் நாம் மறக்க முடியாது. இந்தக் கருத்தின் அடிப்படையில்தான் அன்றைய விவசாய, காணி அபிவிருத்தி அமைச்சராயிருந்த டி. எஸ். சேனநாயக்கா தன்னுடைய, நீர்ப்பாசனத் திட்டங்களையும், குடியேற்றத் திட்டங்களையும் வகுத்திருக்கலாம். இக் குடியேற்றத் திட்டங்கள் அரசியலில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. இந்நாட்டின் சிங்கள மக்களுக்கும், தமிழர்களுக்குமிடையே எல்லைக் கோடாக இருந்த வன்னிப் பிரதேசம் படிப்படியாக சிங்களவர் கைவசம் வந்ததால், இவ்வெல்லைக் கோடும் மறைந்தது. இதனால் ஏற்பட்ட பாரதூரமான விளைவுகள் "சிங்கள-தமிழ் இனங்களின் முரண்பாட்டுக்குக் காரண மாயமைந்தன. டொனமூர் அரசியல் காலத்தில் ஏற்பட்ட முக்கிய வளர்ச்சிதான், இந்நீர்ப் பாசன குடியேற்றத் திட்டங் கள். இதே போன்று தென்னிலங்கையின் ஈரப் பிரதேசங் களிலும் குடியேற்றத் திட்டங்கள் அமுலாக்கப் பட்டன என்பதையும் நாம் மனதிற் கொள்ள வேண்டும். இருந்தாலும் "சிங்க ள - தமிழ் இனப் பிரச்சினை வளர்வதற்கு இக் குடியேற்றத் திட்டங்கள் காரணமாயமைந்தன என்பதை நாம் மறுக்க முடியாது.
பொருளாதாரத் துறையில் ஏற்பட்ட இம் மாற்றங்கள் முஸ்லிம்களையும் பாதித்தது. பெருந்தோட்டப் பயிர் செய்கை யிலும், அதனை யொட்டிய சிறுவர்த்தகத் தேயிலை ரப்பர் தோட்டங்களைவிட தென்னைத் தோட்டப் பயிர்செய்கையில் தான் முஸ்லிம்கள் அதிகமாக ஈடுபட்டிருந்தார்கள்.

21 ஒரு சிறுபான்மை சமூகத்தின் பிரச்சினைகள் IV
பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியிலும், 20ம் நூற்றாண்டின் முற்பகுதியிலும், இலங்கை மேற்குக் கரையோரத்தைச் சேர்ந்த சில முஸ்லிம் குடும்பங்கள், இலங்கை பொருளாதார வளர்ச்சியில் பங்குகொண்டு பொருள் சம் பாதித்தார்கள். இதன் காரணமாக ஏனைய சமூகத்தில் தோன்றியதைப் போல, முஸ்லிம் சமூகத்திலும் ஒரு மத்தியதர உயர் வர்க்கத்தினர் தோன்றினர். இவர்கள் பழக்கவழக்கங்களில் இஸ்லாமிய பண்பாட்டைப் பேணி நடந்தாலும், பெரும்பாலும், மேல் நாட்டு நாகரிக வாழ்க்கையையே கடைப்பிடித்தார்கள். இதனால், முஸ்லிம் சமூகத்தின் பெரும்பான்மையான சாதாரண முஸ்லிம் மக்களுக்கும்
வர்களுக்குமிடையே ஓர் இடைவெளி தோன்றியது.
ளுககு ତ୍ର୍ଯ 色 து
பெரும்பான்மையான முஸ்லிம்கள் சில்லறை வியாபாரிகளாக நாடு பூராவும் தொழில் செய்தார்கள். பெரும் வர்த்தகர்களை நாம் இருவகையாகப் பிரிக்கலாம். ஒரு பிரிவு, மாணிக்க வியாபாரத்தில் ஈடுபட்டுப் பெரும் பொருள் சம்பாதித்தவர்கள். இவர்கள், ஏனைய பெரும் வர்த்தகர்களைப் போல் வியாபார கம்பெனிகளை ஸ்தாபித்தார்கள். 'மாக்கான் மார்க்கார் கம்பெனி, மாக்கான் மார்க்கார் குடும்பத்தவரால் ஸ்தாபிக்கப்பட்டு மாணிக்க வியாபாரத்தில் பிரபல்யம் அடைந்தது. இவர்கள் இங்கிலாந்தின் அரச குடும்பத்தினருக்கு மாணிக்கம் விற்றார்கள். 'அப்துல் கபூரும் மக்களும் என்ற கம்பெனியை அப்துல்கழர் குடும்பம் ஸ்தாபித்து மாணிக்கக்கல் வியாபாரத்தில் ஈடுபட்டது. மலைநாட்டிலிருந்து முஸ்லிம் பெரும் வர்த்தகர்கள், இலங்கையின் பொருட்களான, கராம்பு, சாதிக்காய், ஏலக்காய் ஆகியனவற்றை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து பெரும் பொருள் சம்பாதித்தார்கள். தென்னிந்திய முஸ்லிம்களும், போராக்களும், மேமன்களும், புடவைத் தொழிலில் ஈடுபட்டார்கள். கொழும்பு புறக்கோட் டை யின் புடவை வியாபாரம், பெரும்பாலும் இவர்கள் கையிலேயே இருந்தது. ஏனைய பாமர முஸ்லிம்கள் சிறு தொழில்களில் ஈடபட்டார்கள். தையல்காரர்களாகவும்,

Page 25
அ. முகம்மது சமீம் 22
கொத்தர்களாகவும் முஸ்லிம்கள் தொழில் செய்தார்கள். கிழக்கு மாகாணத்தைப் பொறுத்தவரையில் பெரும்பாலான முஸ்லிம்கள் விவசாயத்தையே நம்பி வாழ்ந்தார்கள். 1931ம் 32ம் ஆண்டுகளில் ஏற்பட்ட பொருளாதார மந்தம், வர்த்தகத்தையே நம்பி வாழ்ந்த முஸ்லிம் சமுதாயத்தைப் பெரிதும் பாதித்தது. முஸ்லிம்களுடைய வியாபாரத்தைப் பற்றிய சரியான புள்ளி விபரங்கள் இல்லையென்றாலும், ஏனையோருக்கு ஏற்பட்ட பாதிப்பு, முஸ்லிம்களையும் பாதித்தது. டொனமூர் காலப்பகுதியில் சிறுதொழில் செய்து வந்த முஸ்லிம் பெரும் வர்த்தகர்கள் பெரும் நஷ்டத்திற்குள்ளானார்கள். தேயிலை, ரப்பர் தோட்டங்களை வைத்திருந்தவர்களும் பெரிதும் பாதிக்கப்பட்டார்கள். அரிசிவிலை குறைந்ததனால், முஸ்லிம் விவசாயிகளும் பெரும்பாதிப்புக் குள்ளானார்கள். சுருங்கக் கூறின் முஸ்லிம்களின் பொருளாதாரம் ஒரு மந்த நிலையை இக்காலப் பகுதியில் அடைந்தது.

23 ஒரு சிறுபான்மை சமூகத்தின் பிரச்சினைகள் IV
5. சோல் பரி ஆணைக்குழுவினரின் வருகையும் சிறுபான்மை இன மக்களின் கோரிக்கையும்
இலங்கையின் சமீப கால வரலாற்றில், அதிகமான வாக்குகளைப் பெற்று அரசாங்கத்தை நிறுவிய ஒவ்வொரு அரசாங்கமும், அரசியல் யாப்பை மாற்றி ஒரு புதிய அரசியல் யாப்பை அமைப்பதையே கொள்கையாகக் கொண்டிருக் கின்றன. இது அரசியல் ஞானத்தில் ஏற்பட்ட முதிர்ச்சியைக் காட்டுகின்றதா அல்லது அரசியல் ஸ்திரமின்மையைக் காட்டுகின்றதா, என்பது அரசியல் அவதானிகளுக்கு ஒரு புதிராகவே தென்படுகிறது. பெரும்பான்மை இன மக்களின் அமோக ஆதரவைப் பெற்று, பெரும்பான்மையின மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இவ்வரசாங்கங்கள் பெரும்பான் மையின மக்களின் அபிலாஷையைப் பிரதிபலிப்பதற்காகவா அல்லது, சிறுபான்மை யின மக்களின் மேல் தமக்குள்ள ஆதிக்கத்தைப் பலப்படுத்துவதற்காகவா என்பது கேள்விக் குறியாகவே இருக்கிறது. ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம். ஒவ்வொரு பேரினவாத அரசாங்கமும், தம்முடைய ஆதிக்கத்தை நிலை நிறுத்த முயலும் அதே வேளையில், சிறுபான்மையின மக்களின் அபிலாஷைகளுக்கும், கோரிக்கை களுக்கும் எப்படி ஈடு கொடுப்பது என்பதுதான் அவர்களை எதிர்நோக்கி வந்திருக்கும் முக்கிய பிரச்சினை. 1970ம் ஆண்டிலும், 1978ம் ஆண்டிலும், அமுலாக்கப்பட்ட அரசியல் யாப்புகள், பகிரங்கமாக பேரினவாத மக்களின் ஆதிக்கத்துக்கு அதிக இடம் கொடுத்து, சிறுபான்மை மக்களின் உரிமைகளை உதாசீனம் செய்த வரலாற்றுண்மையையும், 1948ம் ஆண்டில் அமுலாக்கப்பட்ட அரச யாப்பு சிறுபான்மையின மக்களின் கோரிக்கைகளை நயவஞ்சகமாக மறைத்ததையும், சிறுபான்மையின மக்கள் மறக்கவில்லை. சிறுபான்மையின மக்கள் இன்று ஏமாற்றப்படுவதைப் போல அன்றும்

Page 26
அ. முகம்மது சமீம் 24
சிறுபான்மையின மக்கள் ஏமாற்றப்பட்டார்கள். 'சோல் பரி யாப்பு என்ற பெயரில், சுதந்திர இலங்கையில் 'எல்லா மக்களும் சமம்' என்று சிறுபான்மையின மக்களை வஞ்சித்து கபடநாடகம் ஆடியதில் முக்கிய பாத்திரமேற்ற கதாநாயகன் வேறு யாருமல்ல, இலங்கையின் 'தேசிய பிதா டி. எஸ். சேனாநாயக்க வேதான். சிங்கள ஆதிக்கத்தை நிலைநாட்ட மறைமுகமாக சேனாநாயக்க பாடு பட்டாரென்றால், எஸ். டபிள்யு. ஆர். டி. பண்டாரநாயக்கா, பகிரங்கமாகவே, சிங்கள மேலாண்மையை வலியுறுத்தினார். இதற்கு இவர் கையாண்ட யுக்திகள் தனிச்சிங்கள் மொழியும்', 'பெளத்த மதத்தை அரச பீடம் ஏற்றியது மே 2. இலங்கை சுதந்திரம் அடைந்த காலகட்டத்தை நாம் திருப்பிப் பார்த்தால், இன்று பூதாகாரமாக எழுந்திருக்கும் இனப்பிரச்சினைக்குரிய காரணமான சிங்க ளத் தலைவர்களின் கபட நாடகம்
வெளிப்படும்.
டிசெம்பர், 1941ம் ஆண்டில், இலங்கையின் அரசசபையில் கவர்னர் கல்டிகொட்டின் 'இலங்கையின் அரசியல் சீர்திருத்தம், யுத்தம் முடியும் வரைக்கும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது", என்ற பிரகடனம், இலங்கையின் தேசியத் தலைவர்களைப் பெரிதும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இலங்கையின் அரசியல் அமைப்பில் மாற்றத்தை எதிர்பார்த்திருந்த இலங்கை அரசியல்வாதிகளுக்கு இப்பிரகடனம், ஒரு பேரிடியாக விழுந்தது. இலங்கையின் அரசியல் மாற்றம் காலவரையறையில்லாமல் ஒத்திவைக்கப் பட்ட பிரித்தானிய அரசாங்கத்தின் செய்கைக்கு எதிராக, இந்தியத் தலைவர்கள் நடந்த தைப் போல், இலங்கைத் தலைவர்கள் எவ்விதப் போராட்டமும் நடத்தவில்லை. மாறாக, இலங்கை, அமைச்சர் குழு, தம்முடைய எதிர்ப்பை ஒரு குறிப்பின் மூலம் அரசாங்கத்திற்குத் தெரிவித்தனர்.
இலங்கையின் சுதந்திர இயக்கத்தில் மூன்று முக்கிய அம்சங்களைக் காண்கிறோம். ஒன்று இந்திய உபகண்டத்தில் நடந்ததைப் போல், இவ் வியக்கம், இரத்தம் சிந்தும் ஒரு

25 ஒரு சிறுபான்மை சமூகத்தின் பிரச்சினைகள் IV
போராட்டமாக இருக்கவில்லை. இரண்டாவது, வாக்கெடுப் பின் மூலம், இலங்கையின் அதிகாரம் மாற்றப் பட்டமை, மூன்றாவது, இலங்கையின் சுதந்திரம் ஒரு தனிநபரின் ஆளுமை காரணமாக ஏற்பட்டமை. ‘டி.எஸ். சேனாநாயக்க இலங்கை ஒரு பல்லின மக்கள் வாழும் நாடு என்ற உண்மை யை ஏற்றுக் கொண்டவர்" என்றும் 'அதன் ஜனநாயகம் எல்லா மக்களையும் பிரதிநிதித்துவப்படுத்துவதாயிருக்க வேண்டும் என்ற கொள்கையை உடையவர்" என்றும் பேராசிரியர் கே. எம்.டி. சில்வா கூறினாலும், சேனநாயக்கா பிரதமரானபிறகு, அவருடைய செய்கைகள் இக்கருத்துக்கு எதிர்மாறாகவே இருந்தன. இதைப்பின்னர் ஆராய்வோம். அதே நேரத்தில், இலங்கையின் அரசியல் தலைவர்களில் ஒருவராயிருந்த “பண்டார நாயக்கா, 'இலங்கை பெளத்த சிங்களவருக்கு மாத்திரமே உரிமையான நாடு, அதனால் பல்லின மக்களுக்குரிய நாடு அல்ல' என்ற கருத்தையும் பேராசிரியர் தெரிவிக்கிறார்.
இரண்டாவது மகாயுத்தத்தில், நேசநாடுகளுக்கு எதிராக ஜப்பான் யுத்தத்தில் இறங்கி, ஐரோப்பிய நாடுகளின் ஆதிக்கத்தில் இருந்த கீழத்தேய நாடுகளை ஆக்கிரமித்த சமயத்தில், இங்கிலாந்து அரசாங்கத்திற்கு ஆதரவளித்த இலங்கைத் தேசியத் தலைவர்களைத் திருப்திப்படுத்தும், வகையில் 1943ம் ஆண்டு மே மாதம் 26ம் திகதி, பிரித்தானிய அரசாங்கம் இலங்கையின் அரசியல் மாற்றம் சம்பந்தமாக ஒரு முக்கிய பிரகடனத்தை வெளியிட்டது. இந்தப் பிரகடனத்தில் மூன்று முக்கிய அம்சங்கள் குறிப்பிடப் பட்டன. முதலாவது, டொனமூர் அரசியல் திட்டத்தை ஒழித்து அதற்குப் பதிலாக "வெஸ்ட்மின்ஸ்டர் முறையில் ஜனநாயக அமைப்பு முறையொன்றை ஸ்தாபித்தல். இரண்டாவதாக, 1931ம் ஆண்டில் ஸ்தாபித்த தைப் போல், பாதி பொறுப் புள்ள அரசாங்கம் ஒன்றை நிறுவுதல். அதாவது கவர்னருக்குள்ள அதிகாரத்தை ஒழித்து அதற்குப் பதிலாக, உள்ளூர் நிர்வாகத்தின் முழுப்பொறுப்பையும் இலங்கையரிடம் கையளித்து, இன

Page 27
அ. முகம்மது சமீம் 26
அடிப்படையிலோ, மத அடிப்படையிலோ சிறுபான்மை சமூகங்களைப் பாதிக்கும் சட்டங்களையோ, இங்கிலாந்து மன்னரின் ஆளும் உரிமைக் கெதிரான சட்டங்களையோ, நாட்டின் பாதுகாப்பும், வெளிவிவகாரம் சம்பந்தமான சட்டங்களையோ இயற்ற முடியாதென்பதே அது. மூன்றாவதாக, இந்த அடிப்படையில் உருவாக்கப்படும் அரசியல் யாப்பு, அரசசபையின் அங்கத்தவர்களில் நான்கில் மூன்று பங்கு பேர் வாக்களித்தல் வேண்டும் என்பதே.
இந்தப் பிரகடனத்தை வரவேற்ற, அமைச்சர்குழு, இலங்கைக்கு ஒர் அரசியல் யாப்பை ஏற்படுத்த முற்பட்டது. அமைச்சர் குழுவின் பிரேரணையில் முக்கிய அம்சம் என்னவென்றால், எந்தவொரு சிறுபான்மையினத்திற்கும் எதிராக சட்டமியற்ற முடியாதென்பதும், எந்தவொரு குறிப்பிட்ட சமூகத்தினருக்கோ, அல்லது சமயத்தினருக்கோ, ஏனைய இனத்தவருக்கோ, சமயத்தவருக்கோ வழங்கப்படாத தனிச்சலுகைகள் வழங்கப்படக்கூடாது என்பதே. அமைச்சர் குழுவின் பிரேரணை, தேர்தல் தொகுதிகளையும், வாக்காளர் தொகையையும் நிர்ணயித்தது. பின்னர் அமுலாக்கப்பட்ட சோல் பரி, அரசியல் திட்டம் பெரும்பாலும் அமைச்சர் குழுவின் பிரேரணையை அடிப்படையாகக் கொண்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், ஜூலை 1944ம் ஆண்டில், பிரித்தானிய அரசாங்கம், இலங்கையின் அரசியல் அமைப்பில் மாற்றம் கொண்டு வரும் நோக்கத்துடன் சோல்பரி பிரபுவின் தலைமையில் ஒர் ஆணைக்குழுவை நியமித்ததை அமைச்சர்குழு எதிர்த்தது மட்டுமல்லாமல் அக்குழுவினர், இலங்கை வந்த சமயம் அவர்களைப் பகிஷ்கரிக்கவும் செய்தது. இதற்கு முக்கிய காரணம், அமைச்சர் குழுவினரின் வரைவுத் திட்டத்தைப் மறுபரிசீலனை செய்வதுடன், சிறுபான்மையின மக்களின் கருத்துக்களை அறியவுமே, இக்குழு நியமிக் கப்பட்ட தென்ற பிரித்தானிய அரசாங்கத்தின் பிரகடனமே. அமைச்சர்குழு தம்முடைய அரசியல் வரைவுத்திட்டத்தை வகுக்கும்போது, அரசசபை அங்கத்தவர்களோடு கூட

27 ஒரு சிறுபான்மை சமூகத்தின் பிரச்சினைகள் IV
கலந்தாலோசிக்காத மை குறிப்பிடத்தக்கது. மிகவும் இரகசியமாகத் தயாரிக்கப்பட்ட இவ் வரைவுத் திட்டத்தை, பிரித்தானிய அரசாங்கம் ஏற் காதமை வியப் பல்லவே. சிறுபான்மையின மக்கள் தலைவர்கள் இவ்வரைவுத் திட்டத்தை சந்தேகக் கண் கொண்டு பார்த்தனர். அமைச்சர் குழுவினரின் திட்டத்தில், பாராளுமன்றம் ஒரு சபையைக் கொண்டதாகவே இருக்க வேண்டும் என்றிருந்தது. ஒர் இரண்டாவது சபை தேவையென்றால், அதை சபை நிர்ணயிக்கட்டும் என்று கூறினர். இலங்கைக்கு ஒரு பொறுப்புள்ள அல்லது "டொமினியன் அந்தஸ்தைக் கொண்ட ஒர் அரசாங்கம் தேவையென்றால், சிறுபான்மை சமூகத்தவரின் ஒத்துழைப்பு அவசியம் என்பதை பிரித்தானிய அரசாங்கம் வலியுறுத்தியது.
சோல்பரி குழுவினர் இலங்கை வந்த போது, சிறு பான்மையினங்களைப் பிரதிநிதித்துவப் படுத்தும், பல தூதுக் குழுவினர்களைச் சந்தித்தனர். இத்தூதுக் குழுவினர்கள், பொதுவாக, நியமன அடிப்படையில் பிரத்தியேகமான பிரதிநிதித்துவமும், தனிப்பட்ட வாக்காளர் பட்டியலும், தனிப்பட்டவாக்காளர் தொகுதிகளும் தங்களுக்கு வழங்கப் படல் வேண்டும் என்று கேட்டனர். இலங்கை சோனகர் சங்கம், தம்முடைய வணிகர் சங்கத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பொருட்டு. ஒரு நியமன அங்கத் தவரையாவது தமக்குத் தரவேண்டும் என்று கேட்டுக் கொண்டது. இலங்கைத் தமிழரின் தாழ்த்தப்பட்ட சாதியைப் பிரதிநிதித்துவப் படுத்தும், அகில இலங்கை சிறுபான்மை தமிழர் சபை, பொதுசன வாக்கெடுப்பில், தம்முடைய பிரச்சினைகளை எடுத்துக் கூறுவதற்குத் தமக்குத் தகுந்த பிரதிநிதித்துவம் கிடைக்காமல் போகும் என்ற காரணத்தினால் தம்முடைய சாதிக்குப் பிரத்தியேகமாக ஒரு நியமன அங்கத்துவம் வேண்டுமென்று கேட்டனர். 'அகில இலங்கை தாழ்த்தப்பட்ட சாதியினரின் சம்மேளனம் , தனிப்பட்ட வாக்காளர் பட்டியலைக் கொண்ட பிரத்தியேகமான வாக்காளர் தொகுதிகள் தமக்கு வழங்கப்படல் வேண்டுமென்று கேட்டது. "கத்தோலிக்கர் சங்கமும்

Page 28
அ. முகம்மது சமீம் 28
சட்டசபையில், தமக்கும் பிரத்தியேக பிரதிநிதித்துவம் கிடைக்கக்கூடியதாக, தனிப்பட்ட வாக்காளர் தொகுதிகள் வேண்டுமென்று கேட்டது. இதே போன்று, 'அகில இலங்கை மீன்பிடித் தொழிலாளர் சங்கம்', தமக்கும் பிரத்தியேகமாக வாக்காளர் தொகுதிகள் வழங்கப்பட்டால் 15 அல்லது 20 ஆசனங்களாவது கிடைக்கும் என்று கூறியது. ‘இலங்கை மலையாளிகள் சங்கம்", இரண்டாவது சட்டசபையில் (செனட் சபை) தமக்கு இரு நியமன அங்கத்துவம் கிடைக்க வேண்டும் என்றது. இவர்களுடைய கோரிக்கைகள் எவ்வித பலா பலனையும் கொடுக்கவில்லை. சோல்பரி குழுவினர் இப்பிரதி நிதித்துவ கோரிக்கைகளை தள்ளுபடி செய்தனர்.
கண்டிச் சிங்களவரைப் பிரதிநிதித்துவப்படுத்திய பல தூதுக் குழுக்கள் கண்டிப் பிரதேசத்திலுள்ள 21 ஆசனங்களில், 1931ம் ஆண்டு தேர்தலில், கண்டிச் சிங்களவருக்கு 10 ஆசனங்களே கிடைத்ததென்றும், 1936ம் ஆண்டு பொதுத் தேர்தலில் கண்டிச் சிங்களவருக்கு 6 ஆசனங்களே கிடைத் தனவென்ற உண்மையையும் சுட்டிக்காட்டி தங்களுடைய தொகுதிகளில் கண்டிச் சிங்களவர் மாத்திரமே போட்டியிட வேண்டும் என்ற கோரிக்கையை விடுத்தனர். இக்கோரிக் கைக்கு சோல்பரி குழுவினர் செவிசாய்க்க மறுத்தனர். சிறுபான்மையின மக்களின் கோரிக்கைகளை நிராகரித்த சோல்பரி குழுவினர், சிறுபான்மையின மக்களின் பாதுகாப் புக்கு ஒரு முக்கிய பிரிவை தமது யாப்பில் புகுத்தினர்.

29 ஒரு சிறுபான்மை சமூகத்தின் பிரச்சினைகள் IV
6. சோல்பரி குழுவினரின் முன், சிறுபான்மை இனங்களின் பிரதிநிதிகள்
வைத்த கோரிக்கைகள்
இலங்கையின் அமைச்சர் குழுவினரின் அரசியல் திட்டத்தைப் பரிசீலனை செய்வதற்கும், சிறுபான்மையின மக்களின் கருத்துக்களை அறிவதற்கும், நியமிக்கப்பட்ட சோல்பரி ஆணைக்குழுவினரை எதிர்த்ததோடு அவர்களைப் பகிஷ்கரித்த அமைச்சர்குழு, ஒரு புதிய அரசியல் அமைப்பில் சிறுபான்மையினருக்குத் தமது கருத்துக்களைக் கூறுவதற்கு எவ்வித உரிமையுமில்லை என்ற எண்ணத்தில் இவர்கள் செயல்பட்டிருக்கலாம் என்று நாம் ஊகிக்கலாமல்லவா? சிறுபான்மையின மக்களின் அபிலாஷைகளை அறிய வேண்டிய அவசியமில்லை என்ற எண்ணத்தில்தானே, இவர்கள், சிறுபான்மையின மக்களைக் கலந்தாலோசிக்காமல், தமது அரசியல் திட்டத்தை இரகசியமாக வகுத்தனர்? அரசியல் அந்தஸ்திலிருந்து சிறுபான்மையின மக்களை ஒதுக்குவது என்ற முடிவுக்குப் பெரும் பர்ன்மையினத் தலைவர்கள் வந்ததனாற்றான், சுதந்திர இலங்கையில் பெரும்பான்மையின அரசாங்கங்களில், சிறுபான்மை யின மக்கள் தங்கள் உரிமைகளைப் படிப்படியாக இழக்க நேர்ந்தது.
மூன்று அங்கத்தவர்களைக் கொண்ட 'சோல்பரி ஆணைக்குழுவின் அங்கத்தவர்களில் ஒருவரான, பிரெடரிக் றிஸ் பிரபு "இலங்கையின் சிறுபான்மையின மக்களில் முக்கிய மானவர்கள், இலங்கைத் தமிழர்களே. அவர்களுடைய அரசியல் தலைவர்கள், சிறுபான்மையின மக்களுக்கு சமநிலை பிரதிநிதித்துவம் வேண்டு மென்ற கோரிக்கையை எம்மு ன் வைத்தனர்', என்று கூறுகிறார். பெரும்பான்மையின மக்களுக்குக் கிடைக்கும் ஆசனங்களுக்குச் சமமான பங்கு ஆசனங்கள் சிறுபான்மையின மக்களுக்கும் கிடைக்க வேண்டுமென்று தமிழ்த்தலைவர்கள் கூறினர். அப்பொழுது

Page 29
அ. முகம்மது சமீம் 30
தான் பெரும்பான்மையின மக்கள் சிறுபான்மையின மக்களின் மேல் தமது ஆதிக்கத்தைச் செலுத்துவதைத் தவிர்க்கலாம் என்று இவர்கள் கூறினர். இப்படி ஏற்பட்டால், அரசாங்கத்துக்கும் எதிர்க்கட்சியினருக்கும், சமமான ஆசனங்கள், பாராளு மன்றத்தில் இருக்கும் பட்சத்தில் ஒரு நிலையான அரசாங்கத்தை அமைக்க முடியாது என்று தமது ஆட்சேபனையைக் குழுவினர் தெரிவித்தனர். இந்தக் கருத்தை ஒரு கற்பனைவாதம் என்று நிராகரித்த தமிழ்த்தலைவர்கள் பெரும்பான்மையின மக்கள், சிறுபான்மையின மக்களுக்கு எதிராக எவ்வித நடவடிக்கை யையும் எடுப்பதைத் தவிர்க்கலாம் என்று கூறினர். இப்படி நடந்தால், தமது அரசாங்கம் நிலைத்து நிற்காது என்ற உணர்வில் பெரும்பான்மை சமூகம் சிறுபான்மையின சமூகங்களுக்கு எதிராக எவ்வித நடவடிக்கையும் எடுக்காது என்றும் இவர்கள் கூறினர். பாராளுமன்ற விவகாரங்கள் எவ்விதத்தடையுமின்றி நடைபெறும். நாட்டிற்கு பயன்தரும் எல்லா மசோதாக் களுக்கும் அரசாங்கத் தோடு எதிர்க்கட்சி தரப்பினரும் வாக்களிப்பர். இதனால் நிரந்தரமான எதிர்க்கட்சியென்று ஒன்று இருக்காது. நாட்டிலும் அமைதியான ஒரு சூழ்நிலையேற்படும் , என்றும் தமிழ்த் தல்ை வர்கள் வாதிட்டனர்.
தமிழர்களின் இக் கோரிக்கை நிறைவேற வேண்டு மானால், பெரும்பான்மையின மக்களுக்கும் சிறுபான்மை இன மக்களுக்கும் சம பங்கு ஆசனங்கள் கிடைக்கக் கூடியதாக தேர்தல் தொகுதிகள் மாற்றியமைக்கப்படல் வேண்டும். தேர்தல் தொகுதிகள் இன அடிப்படையில் அமைவதோடு, பெரும்பான்மை யின மக்களின் தேர்தல் தொகுதிகளில் வாக்காளர் எண்ணிக்கை, சிறுபான்மையினத் தொகுதிகளில் இருப்பதை விட அதிக எண்ணிக்கையுள்ளதாக இருத்தல் வேண்டும். அப்படியென்றால் பெரும்பான்மையின மக்கள் ஒருவரின் வாக்கின் மதிப்பீடு, சிறுபான்மையின மக்கள் ஒருவரின் வாக்கை விட குறைந்ததாகவே இருக்கும். கட்சியடிப்படையில்லாமல் இன அடிப்படையில் பொதுத்

3 ஒரு சிறுபான்மை சமூகத்தின் பிரச்சினைகள் IV
தேர்தல்கள் நடைபெறும் பொழுது பெரும்பாலும், இன உணர்வின் தாக்கம் மக்களை வெகுவாகப் பாதிக்கும். சனத்தொகை பெருகினாலும் ஒவ்வொரு பொதுத் தேர்தலிலும், இச்சமபங்கு ஆசனங்ளைப் பெறுவதற்கேற்ப வழிவகைகள் செய்யப்படல் வேண்டும். ஒரு நிலையான அரசாங்கம் ஏற்பட முடியாது. பெரும்பான்மையின மக்களைக் கொண்ட ஒர் அரசாங்கம் நிலைத்துநிற்க வேண்டுமானால், சிறுபான்மையின மக்களிடையே பிளவுகளை உண்டாக்கி, ஒரு சிறுபான்மையினத்தின் உதவியோடு அரசாங்கத்தை ஏற்படுத்தும் நிலை ஏற்படும். இதனால் ஏனைய சிறு பான்மையின மக்களின் நலம் பெரிதும் பாதிக்கப்படலாம்", என்றெல்லாம் ஆணைக்குழுவினர் வாதிட்டனர்.
டொனமூர் அரசியல் அமைப்பில், சர்வஜன வாக்குரிமை அமுலாகியதன் காரணமாக, சிங்கள மக்கள் தாம் முன்னர் அனுபவித்திராத அதிகாரத்தை அனுபவிக்கத் தொடங்கினர். 1931ம் ஆண்டுக்கு முன், இன அடிப்படையிலான பிரதிநிதித்துவம், அரசாங்க அங்கீகாரத்துடன் அமுலில் இருந்தது. அன்றைய சட்டசபையில் சனத்தொகை விகிதாசாரப்படி, பிரதிநிதிகள் இருந்ததனால், அரசாங்கம், உத்தியோக அங்கத்தவர்களின் உதவியுடன் எச்சமூகத்தவ ருக்கும் பாதிப்பு ஏற்படாமல், ஒரு நிலையான அரசாங்கத்தை நடத்த முடிந்தது. கவர்னர் கல்டிகட் தனது 'அரசியல் மாற்றம்" என்ற தலைப்பில் இங்கிலாந்துக்கு அனுப்பிய அறிக்கையில் ஜி.ஜி. பொன்னாம்பலத்தின் "ஐம்பதுக்கு - ஐம்பது' என்ற கோரிக்கையை குறிப்பிட்டு, இன அடிப்படையில், பிரதிநிதித்துவம் வழங்கப்படுமானால், இனங்களுக்கிடையே ஒரு பதட்ட நிலை உருவாகும்', என்று குறிப்பிட்டு, "சிறுபான்மையின மக்களின் தொகைக்கேற்ப பிரதிநிதித்துவம் வழங்கப்படுவதற்குத் தேர்தல் தொகுதிகள் மாற்றியமைக்கப் படுதல் வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார். 'இன அடிப்படையில் பிரதிநிதித்துவம் வழங்கப்பட்டால், அரசியல் கட்சிகள் வளர்வதற்கு அது தடையாக இருக்கும் என்றும்

Page 30
அ. முகம்மது சமீம் 32
குறிப்பிட்டார். சிறுபான்மை யின மக்கள் அதிகமான ஆசனங்களைப் பெறுவதற்கு தேர்தல் தொகுதிகள் மாற் றியமைக்கப்பட வேண்டும் என்ற கவர்னரின் கருத்து அமைச்சர் குழுவின் திட்டத்தில் பிறகு சேர்த்துக் கொள்ளப்பட்டது.
ஆணைக்குழுவினரின் சந்தேகங்களுக்குப் பதிலளிக்கும் வகையில், 'தமிழ் காங்கிரஸ் தலைவர் ஜி.ஜி. பொன்னம்பலம் தனது கருத்துக்களை ஆணைக் குழுவினர் முன்வைத்தார். 'ஆணைக்குழுவினர் சிறுபான்மையினங்களுக்கு சலுகைகள் செய்ய முன்வந்தது, வெளிப்படையாக நியாயம் என்று தோன்றினாலும், அது உண்மை யில் ஒரு மாயை' என்று பொன்னம்பலம் குறிப்பிட்டார். சிங்கள சமூகத்தினர், மற்றைய எல்லா சமூகங்களையும் விட அதிகமான ஆசனங்களையே பெறுவர். தன்னுடைய ஐம்பதுக்கு ஐம்பது என்ற கோரிக்கைக்கு ஆதரவாக, டொனமூர் காலத்தில் நடந்த இனவாத அரசியலை சுட்டிக் காட்டினார். 1936ம் ஆண்டின் தேர்தலுக்குப் பிறகு, அமைக்கப்பட்ட அமைச்சர்குழுவில் ஒரு சிறுபான்மை அங்கத்தவராவது சேர்த்துக் கொள்ளப் படவில்லை. இக்கால கட்டத்தில் இன உணர்வு வளர்வதற்கு இனப் பிரிநிதித்துவம் ஒழிக்கப்பட்டதே காரணம் என்று கூறினார். “பெரும்பான்மையின மக்களின் ஆதிக்கம்' என்ற பயம் நீங்கினால், சிறுபான்மையின மக்கள் தங்களுடைய ஆதரவையும் ஒத்துழைப்பையும் நல்குவார்கள் என்று கூறினார். 'பிரதிநிதித்துவத்தில் சமநிலை ஏற்படும் போது, இன உணர்வினால் ஏற்படும் நெருக்கடி குறைவதோடு, கட்சிகள் தோன்றுவதற்கும் இடமேற்படும். டொனமூர் காலத்தில், இருந்த மந்த நிலைக்குக் காரணம், சிங்கள சமூகத்தவ ருக்கிருந்த அசைக்கமுடியாத பெரும்பான்மை ஆசனங்களே” என்று பொன்னம்பலம் கூறினார். ஆணைக்குழுவின் முன் வந்த ஏனைய சாட்சிகள், இன ரீதியான கட்சிகளைவிட அரசியல் சித்தாந்தத்தில் தோன்றும் கட்சிகளே சிறந்தது என்று கூறினர். இன உணர்ச்சிகளின் பகைப் புலனில் இது எப்படி சாத்திய மாகும் என்பது ஆணைக்குழுவினருக்கு ஒரு பெரும் பிரச்

33 ஒரு சிறுபான்மை சமூகத்தின் பிரச்சினைகள் IV
சினையாக இருந்தது. இன உணர்ச்சிகளை உதாசீனம் செய்வதா, அல்லது அதை ஏற்றுக் கொண்டு அதற்கான நடவடிக்கைகளில் ஈடபடுவதா? அரசியலிலிருந்து இனவா தத்தை முற்றாக ஒழித்தால் நாட்டுக்கு நன்மை ஏற்படுமா? ஆணைக்குழுவினரின் முக்கிய பிரச்சினை இவ்வினப் பிரச்சினையே.
இலங்கை முஸ்லிம் லீக், "டொனமூர் குழுவினர் செய்த பெரும்பிழை, மக்களிடையே இருந்த இனவேற்றுமைகளை உதாசீனம் செய்து இன அடிப்படையிலான பிரதிநிதித்துவத்தை ஒழித்ததே ' என்று கூறியது. முஸ்லிம் லீக் பிரதிநிதிகள், "இலங்கை முஸ்லிம்களின் சனத்தொகை அடிப்படையில், ஆறு அல்லது ஏழு ஆசனங்கள் கிடைக்க வேண்டிய இடத்தில், அமைச்சர்குழுவினரின் திட்டத்தில், மூன்று அல்லது நான்கு அங்கத்தவர்களே தெரிவுசெய்யப்படுவார்கள்' என்று கூறினர். பிரதிநிதித்துவம் வழங்கப்படும் போது, தம்முடைய சமூகத்தினரில் குறைந்தது பன்னிரண்டு அங்கத்தவர்களைத் தெரிவு செய்யும் வாய்ப்பைத் தமக்களிக்க வேண்டும் என்று முஸ்லிம் தூதுக்குழுவினர் கேட்டனர். முஸ்லிம் லீக்கின் இந்தப் பிரேரணையை, "அகில இலங்கை முஸ்லிம் அரசியல் மகாநாடு ஆமோதித்தது. முஸ்லிம் சமூகத்தினரின் எல்லாக் கருத்துக்ளைக் கொண்ட எல்லா குழுவினரையும் தாம் பிரதிநிதித்துவப்படுத்துவதாக இம்மகாநாட்டினர் கூறினர். டொனமூர் குழுவினர் முன்னாள் இருந்த அரச மரபினை முற்றாகத் துண்டித்தனர். டொனமூர் குழுவினரின் திட்டத்தை நடைமுறைப்படுத்த ஒரு வாய்ப்பளிக்க வேண்டும் என்ற எண்ணத்தில்தான், அக்குழுவினரின் திட்டத்தைத் தாம் ஏற்றுக் கொண்டனர் என்று கூறினர். "அரச சபை அங்கத்தவர்களின் எண்ணிக்கையும், நிறைவேற்றும் அதிகாரம் கொண்ட கமிட்டிகளின் எண்ணிக்கையும், கூடியிருந்தால், டொனமூர் திட்டம் ஒரளவாவது திருப்திகரமாக செயல்பட்டிருக்கும், என்று இவர்கள் கூறினர். டொனமூர் குழுவினரின், பிரதி நிதிகளின் எண்ணிக்கை தணிக்கை செய்யாமல், அப்படியே

Page 31
அ. முகம்மது சமீம் 34
ஏற்றுக் கொள்ளப்பட்டிருந்தால் டொனமூர் அமைப்பு முறை இவ்வளவு கண்டனத்திற்கு ஆளாகியிருக்காது என்பதே இவர்களது வாதம், முஸ்லிம் சமூகத்தில் சிறுபான்மை யினமாகக் கருதப்பட்ட மலாயா இனத்தவர்களைப் பிரதி நிதித்துவப் படுத்திய "இலங்கை மலாயா காங்கிரஸ், முஸ்லிம் சமூகத்திற்குக் கிடைக்க இருக்கும் பன்னிரண்டு ஆசனங்களில் இரண்டு ஆசனங்களாவது தமக்குக் கிடைக்க வேண்டும் என்று கேட்டனர். இன அடிப்படையில், "இலங்கை சோனகரிலும் தாம் வேறுபட்டவர்கள், என்று இம்மலாயா இனத்தைச் சேர்ந்த பிரதிநிதிகள் கூறினர். மாலயா காங்கரசின் கருத்துக்களுக்கு முரண்பட்ட கருத்துக்களை, 'இலங்கை மலாயா லிக் கூறியது.
இலங்கைப் பறங்கியர் சமூகத்தினரின் பிரதிநிதிகளும் இலங்கை ஐரோப்பியர் சமூகத்தினரின் பிரதிநிதிகளும் இன அடிப்படையிலான பிரதிநிதித்துவத்தை விரும்பவில்லை யென்றாலும், பெரும்பான்மை சமூகத்துக்கும், சிறுபான் மையின சமூகங்களுக்குமிடையில், பிரதிநிதித்துவ சம நிலை யிருக்க வேண்டு மென்பதை விரும்பினர். சட்ட சபை யில் பெரும்பான் மையினத்துக்குப் பெரும்பான்மை வாக் குகள் இருப்பதைத் தவிர்க்கும் ஒரு வழிமுறையை ஆணைக்குழுவினர் கையாள வேண்டும் என்று இவர்கள் கேட்டுக் கொண்டனர். இலங்கையில் வளர்ந்த வரும் இனத்துவேஷம் வளர்வதை இது தடுக்க உதவும் என்று இவர்கள் கருதினர்.

35 ஒரு சிறுபான்மை சமூகத்தின் பிரச்சினைகள் IV
7. சோல்பரி ஆணைக்குழுவினர் முன் சிறுபான்மையின மக்கள் தெரிவித்த
அச்சம்
'இலங்கையின் சிறுபான்மையின மக்களின் பயத் திற்கும், அமைதியின்மைக்கும் காரணம், சர்வஜனவாக்குரிமை இலங்கை மக்களுக்கு வழங்கப்பட்டதே. சிங்க ள பெரும் பான்மை இனத்திற்கு இது மிகவும் அனு கூலமாயமைந்தது' என்று சோல்பரி ஆணைக்குழுவின் அங்கத்தவர்களில் ஒருவராயிருந்த சர். பிரடெரிக் றிஸ் தன்னுடைய கட்டுரை யொன்றில் கூறுகிறார். இருபத்தொரு வயதுக்கு, மேற்பட்ட ஆண்களுக்கும், முப்பது வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கும் வாக்குரிமை வழங்கப்படல் வேண்டும் என்று டொனமூர் ஆணைக்குழுவினர் go) Lu IT ff79; செய்தனர். இதற்கு முன்பிருந்ததைப் போல், "சொத்து, வருமானம், கல்வியறிவு போன்ற தகைமைகள் இருக்கக்கூடாது என்றும் இவர்கள் கூறினர். ஆனால் டொனமூர் ஆணைக்குழுவினரின் இந்தச் சிபாரிசு, ஒரு திருத்தத்துடன் ஏற்றுக் கொள்ளப்பட்டது, பெண்களுக்கும் இருபத்தொரு வயது என்ற எல்லை குறிப் பிடப்பட்டது. ஆனால் இந்திய வம்சாவழியினரைப் பொறுத்தவரையில் இந்தத் தாராள மனப்பான்மை இலங்கை பெரும்பான்மையினத்து அரசியல் வாதிகளிடம் இருக்க வில்லை. டொனமூர் ஆணைக் குழுவினரின், இந்தியத் தமிழர்களைப் பற்றிய சிபாரிசு, இச் சிறுபான்மையினத்திற்குப் பாதகமான முறையில் மாற்றியமைக்கப்பட்டது. வாக்குரிமை பொதுமக்கள் மத்தியில் பரவலாக்கப் படுவதால், மக்கள் நலன் கருதும் சட்டங்கள் அமுலாக்குவதற்குரிய ஒரு சூழ்நிலை யேற்படலாம் என்று டொனமூர் குழுவினர் கருதினர். தேர்தல் தொகுதிகள் பாரிய அமைப்பில் இருக்கும்பொழுது, வாக்கு களை மாற்றியமைக்கவோ, நேர்மையற்ற செயல்களில் ஈடுபடவோ முடியாத ஒரு நிலையேற்படும் என்றும் அவர்கள்

Page 32
அ. முகம்மது சமீம் 36
கருதினர். சோல்பரி குழுவினர் முன் சாட்சியளித்தவர்கள், இக்கருத்தை ஏற்றுக் கொள்வில்லை. பொதுவாக, சாட்சியமளித்த எல்லோரும், சர்வசன வாக்குரிமையால் நன்மைகளைவிட தீமைகள் தான் அதிகம் ஏற்பட்டன என்று கூறினர். லஞ்ச ஊழல், ஆள்மாறாட்டம், பயமுறுத்தல் போன்ற துர்நடவடிக்கைகள் மலிந்ததனால், பொதுவாக வாக்காளர் தொகுதிகளில் ஒழுக்கச் சிதைவு ஏற்பட்டது, என்ற கருத்தைப் பலர் தெரிவித்தனர். இந்நிலையை மாற்றுவதற்குப் பலர் பல வழிகளைக் கூறினர். வாக்காளர்களுக்குக் கல்வி தகுதி இருக்க வேண்டுமென்றும், மறைமுகமான தேர்தல் நடைபெற வேண்டுமென்றும் கூறினர். தேர்தல்கள் ஒரே நாளில் நடைபெற்றால் இவ்வூழல்கள் நடைபெறுவதைத் தடுக்கலாம் என்று சிலர் கூறினர். வாக்களிக்கும் வயது எல்லை பதினெட்டாகக் குறைக்கப்படல் வேண்டும் என்றும் சிலர் கருத்துத் தெரிவித்தனர். பிரேரணைகளுக்கெல்லாம் காரணம், அன்று தேர்தல்களில் நடைபெற்ற மோசடிகளே. இதை அறியும் போது உண்மையான ஜனநாயகம் அன்று நடைபெற்றதா, என்ற கேள்வி எழுகிறது.
சோல்பரி ஆணைக்குழுவினர் முன் சாட்சியமளித்த பெரும்பாலும் எல்லா சிங்களத்தலைவர்களும், குறிப்பாகக் கண்டிச் சிங்களத் தலைவர்கள், இந்தியத் தமிழருக்கு டொனமூர் குழுவினர் அளித்த வாக்குரிமையை எதிர்த்தனர். இவர்களுக்கு வாக்குரிமை கொடுக்கப்பட்டதால், காலம் காலமாகக் கண்டிமலை நாட்டில் வாழ்ந்து வரும், சிங்கள மக்கள் தங்கள் அரசியல் உரிமையைக் காலப்போக்கில் இழக்க நேரிடும் என்று இத்தலைவர்கள் தம் கருத்தைத் தெரிவித்தனர் 'இவர்கள் பெருந்தோட்டங்களில் வேலை செய்ய வந்தவர்கள், நிரந்தரமாக இங்கே குடியிருக்க வந்தவர்களல்ல" என்றும் வாதிட்டனர். இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காணும் முகமாகத் தான் டொனமூர் குழுவினர் "இலங்கையில் தொடர்ந்து ஐந்து வருடம் இருந்தவர்களுக்கு மாத்திரம்தான் வாக்குரிமை வழங்கினார்கள். இடையில் இவர்கள் எட்டு மாதங்கள்

37 ஒரு சிறுபான்மை சமூகத்தின் பிரச்சினைகள் IV
வெளிநாட்டில் தங்கியிருக்கலாம் என்ற சலுகையும் அளிக்கப்பட்டது. இந்தியத் தொழிலாளர்களுக்குத் தனிப்பட்ட ஒரு வாக்காளர் அட்டவணை இருக்க வேண்டும் என்று அன்றைய கவர்னர் பணித்தார். சோல்பரி குழுவினர் முன் சாட்சியமளித்த பலர், இவ்வட்டவணை சரியான முறையில் நிர்வகிக்கப்படாத காரணத்தினால் இந்தியத்தமிழ் வாக்காளர்களின் தொகை வருடாவருடம் குறைந்து கொண்டே வந்தது என்று கூறினர். இந்தியத் தமிழர்களின் தரப்பில் சாட்சியமளித்த தலைவர்கள், இது தமது சமூகத்திற்குப் பாதகமாகச் செய்யப்பட்ட ஒரு செய்கை என்று கூறினர். இவர்கள், ஏனையோருக்கு வழங்கப்பட்டதைப் போன்று இந்தியத் தமிழருக்கும் இவ் வரப் பிரசாதம் வழங்கப்படல் வேண்டும் என்று கேட்டனர். தம்முடைய சனத்தொகையின் பிரகாரம் தமக்குக் குறைந்தது, எட்டு அங்கத்தவர்களாவது சட்டசபையில் இருக்க வேண்டும் என்று இவர்கள் கேட்டுக் கொண்டனர். இந்தியத் தமிழர்களின் கோரிக்கையை எதிர்த்த கண்டிச் சிங்களவர், இந்தியர்களுக்குத் தனிப்பட்ட வாக்காளர் பட்டியல் இருக்க வேண்டும் என்றும் அப்பொழுதுதான் அவர்கள் தம்முடைய பிரதிநிதிகளை அவர்களாலேயே தேர்ந்தெடுக்க முடியுமென்றும் கூறினர். இந்தியத் தமிழர்கள் பொதுவாக்காளர்பட்டியலில் சேர்க்கப்படுவதைக் கண்டிச் சிங்களவர் வன்மையாக எதிர்த்தனர்.
சோல்பரி ஆணைக்குழுவினரின் முன் சாட்சியமளித்த சிறுபான்மையினத் தலைவர்கள், டொனமூர் அரசியல் திட்டத்தில் அமைந்த நிறைவேற்று அதிகாரம் கொண்ட நிர்வாகக் குழுக்கள், சிறுபான்மையினங்களுக்கு ஒரு பாதுகாப்பாயமைந்தன என்று கூறினர். முக்கியமாக முஸ்லிம் தலைவர்கள் இக்குழுக்களின் அங்கத்தவர்களின் எண்ணிக்கை கூடுதலாயமைய வேண்டும் என்று கேட்டனர். ஒரு சர்வாதிகார அரசியலமைப்பு ஏற்படுவதை இக்குழுமுறை தடுக்கும் என்றும் கூறினர். இக்குழுமுறையில் அரசசபையில் இருக்கும் எல்லா அங்கத்தவர்களும் ஏதோ ஒரு வகையில் நிர்வாகத்தில் ஈடுபட்டு

Page 33
அ. முகம்மது சமீம் 38
தமது பங்கை அளிப்பதற்கு இது ஏதுவாயிருந்தது என்று கூறினர்.
அரசியல் கட்சிகள் இல்லாத விடத்து எல்லா இனமக்களுக்கும் அரசாங்கத்தில் செயலாற்றுவதற்கு இது வாய்ப்பளித்தது என்றும் கூறினர். சிறுபான்மையின மக்களின் இக்கருத்து தவறானது என்பதை நிரூபிக்கவே சர். பாரொன் ஐயத்திலக்க தனிச்சிங்கள" அமைச்சர் குழுவை ஸ்தாபித்தார். கபினட் முறையிலுள்ள ஒருமைப்பாட்டுத் தன்மை இக்குழு முறையில் ஏற்பட வாய்ப்பில்லை என்று சிங்களத் தலைவர்கள் கூறினர். ஆகவே இக்குழு முறை ஒழிக்கப்படல் வேண்டும் என்று இவர்கள் வாதிட்டனர். சர். அன்ரூ கல் டிகட், "தனிச்சிங்கள அமைச்சரவை"யை ஸ்தாபித்தது, சிங்க ளத் தலைவர்கள் செய்த மாபெரும் தவறு, என்று தனது அறிக்கையொன்றில் கூறுகிறார். இதனாற்றான், அரசாங்கத்தில் தம்முடைய செல்வாக்கு முற்றாக ஒழிந்து விடும் என்று சிறுபான்மையினத் தலைவர்கள் பயந்தார்கள்.
அமைச்சர் குழுவினரின் திட்டத்தின்படி, பிரதம மந்திரி, கவர்னர்-ஜெனரலால் நியமிக்கப்படல் வேண்டும் என்றும், ஏனைய அமைச்சர்கள் பிரதம மந்திரியின் சிபாரிசின்பேரில், கவர்னர்-ஜெனரலாலேயே நியமிக்கப்படல் வேண்டும் என்றிருந்தது. சோல் பரி ஆணைக்குழு முன் சாட்சியம் அளித்தவர்களில் ஒரு சிலரைத் தவிர பெரும்பாலோர், கபினட் முறையை ஆதரிக்க வில்லை. இம்முறையை ஆதரித்தவர்கள் கூட பிரதம மந்திரி, 'மரபு முறைப்படி' சிறுபான்மையினத்தவர்களையும் தன்னுடைய அமைச்சரவை யில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்றே கூறினார்கள். ஒரு பிரதம மந்திரி தன்னுடைய விருப்பப்படியே அமைச்சர்களை நியமிக்கும் அதிகாரம் படைத்தவராயிருந்தால், முன்னர் நடந்தது போல, சிறுபான்மையின மக்களை ஒதுக்கி, "தனிச்சிங்கள அமைச்சரவையை ஏற்படுத்தலாம் என்று சிறுபான்மையினத் தலைவர்கள் தம்முடைய அச்சத்தை

39 ஒரு சிறுபான்மை சமூகத்தின் பிரச்சினைகள் IV
வெளியிட்டார்கள். அமைச்சரவையில், மூன்றிலொன்று அங்கத்தவர்கள் சிறுபான்மையின மக்களைக் கொண்டதாக இருக்க வேண்டுமென்று, சிலரும், ஐம்பதுக்கு ஐம்பது விகிதம் என்ற கோஷம் எழுப்பியவர்கள், அமைச்சரவையில், சரிபாதி சிறுபான்மையினத் தலைவர்களைக் கொண்டதாக இருக்க வேண்டுமென்றும் கூறினார்கள். அமைச்சர்களைத் தெரிவு செய்வதில் பிரதம மந்திரிக்குச் சில கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும் என்று ஒரு சாட்சி கூறினார். அவர் ஒவ்வொரு மாகாணத்திலிருந்தும் குறைந்தது ஒரு அமைச்சராவது நியமிக்கப்படல் வேண்டும் என்றும் இவர் கேட்டுக் கொண்டார். பிரதம மந்திரிக்கு சட்டப்படி கட்டுப்பாடுகள் விதித்தால், அவரால் அரசாங்கம் ஒன்றை அமைக்க முடியாமற் போகும் என்ற கருத்தைக் குழுவினர் தெரிவித்த போது, பிரதமராக இருப்பதற்கு அழைப்பு விடுத்தால், அதை யாரும் ஏற்க மறுக்க மாட்டார்கள், என்று சாட்சி கூறினார். பிரதம மந்திரியை கவர்னர் நியமிப்பதில் சாட்சிகளிடையே ஒருமைப்பாடு இருக்கவில்லை. பிரதம மந்திரி சட்டசபை யினால் தெரிவுசெய்யப்படல் வேண்டுமென் றும் ஏனைய அமைச்சர்களும் அப்படியே தெரிவு செய்யப்படல் வேண்டும் என்ற கருத்தும் தெரிவிக் கப்பட்டது.
கபினட் அரசியல் முறையில், பிரதம மந்திரி ஒரு சர்வாதிகாரியாக மாற முடியும் என்ற கருத்தை சிலர் தெரிவித்தனர். ஒரு அமைச்சரை விலக்குவதற்குப் பிரதம மந்திரி, சட்டசபையின் அங்கீகாரம் பெறவேண்டுமென்று ஒரு சாட்சி கூறினார். சிறுபான்மையினத் தலைவர்கள் இப்படி பாதுகாப்புத் தேடுவதற்குக் காரணம், பெரும்பான்மை யினத்தின் ஆதிக்கத்தினால் தங்களுடைய சமூகங்களுக்குப் பெரிதும் பாதகம் விளையலாம் என்ற பயமே.
சிறுபான்மையின மக்கள் தம்முடைய பாதுகாப்புக்காக, பாராளுமன்ற அமைப்பில் இரண்டாவது சபை - செனட் சபை யொன்று ஏற்படுத்த வேண்டும் என்று ஆணைக்குழு விடம்

Page 34
அ. முகம்மது சமீம் 40
கேட்டுக் கொண்டார்கள். மக்கள் பிரதிநிதிகளைக் கொண்ட கீழ் சபை, சமூகங்களைப் பாதிக்கும் அவசர சட்டங்களை அமுலாக்குவதையும் தடுக்கலாம் என்று இவர்கள் கூறினர். இரண்டாவது சபை அமைப்பதில் பலவிதமான கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டன. இச்சபைக்கான அங்கத்தவர்கள் மாகாண ரீதியாக தெரிவு செய்யப்படவேண்டுமா அல்லது நியமிக்கப்பட வேண்டுமா என்பதில் கருத்து வேற்றுமை யிருந்தது. சிறுபான்மையினங்களின் பாதுகாப்புக்காக இரண்டாவது சபை தேவையில்லை என்ற கருத்தை சிலர் தெரிவித்தனர். சிறுபான்மையினங்களைப் பாதிக்கும் எந்தவொரு சட்டமும், பிரதிநிதிகள் சபையில் மூன்றில் இரண்டு வாக்குகளால் நிறைவேற்றப்படல் வேண்டும் என்று இவர்கள் கூறினர்.
ஆணைக் குழுவினர் முன் சாட்சி அளித்த சாட்சிகளின் கருத்துக்களை இரு பிரிவுக்குள் அடக்கலாம். ஒன்று, தேர்தல் காலங்களில் நடைபெறும் ஊழல்களைத் தவிர்ப்பதற்கு வழிவகை ள் செய்ய வேண்டும் என்பதும், இரண்டாவது சர்வசன வாக்குரிமை யின் மூலம் அதிகாரத்தைப் பெறும் பெரும்பான்மையின மக்களின் அரசாங்கம் சிறுபான்மையின மக்களுக்குப் பாதகமாக அமையும் சட்டங்களினின்றும் பாதுகாப்பு வேண்டும் என்பதுமே அவை. காணி அபிவிருத்தி, நீர்ப்பாசன திட்டங்கள், வைத்தியசாலைகள், பாடசாலைகள் போன்ற திட்டங்களை வகுக்கும் போது சிறுபான்மையின மக்களை ஒதுக்கியே அரசாங்கம் செலவு செய்திருக்கிறது என்று சாட்சிகள் கூறினார்கள். கிழக்கு மாகாணத்திலிருந்து வந்த ஒரு சாட்சி கடந்த பதினான்கு வருடங்களாகக் கிழக்கு மாகாணம் அரசாங்கத்தால் புறக்கணிக்கப்பட்டே வந்திருக்கிறது என்று கூறினார். கிழக்கு மாகாணத்தையும் வட மாகாணத்தையும் புறக்கணித்த அரசாங்கம், ஏனைய மாகாணங்களில், குடியேற்றத் திட்டங்களையும், நீர்ப்பாசனத் திட்டங்களையும் பெரும் பணச் செலவில் அமுல் நடத்தியது என்று இவர்கள் அரசாங்கத்தின் ஒரவஞ்சகச் செயலைக் கண்டித்தனர். குறிப்பாக தமிழ்ப் பிரதிநிதிகளும், முஸ்லிம்

41 ஒரு சிறுபான்மை சமூகத்தின் பிரச்சினைகள் IV
பிரதிநிதிகளுமே அரசாங்கத்திற்கு எதிராக இக் குற்றச் சாட்டுகளை வைத்தனர். சோல்பரி அரசியல் திட்டம் அமுலுக்கு வருவதற்கு முன்னரேயே சிறுபான்மையின மக்கள் சுதந்திர இலங்கையில் பேரினவாத அரசாங்கங்களால் தாம் பாதிக்கப்படலாம் என்ற பயத்தை வெளியிட்டனர். பின்னர் நடந்த வரலாற்று சம்பவங்கள் இதற்குப் பதிலளித்தன.

Page 35
அ. முகம்மது சமீம் 42
8. சோல்பரி திட்டத்தில் சிறுபான்மையின மக்களுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு
1945ம் ஆண்டு நவம்பர் எட்டாந்திகதி, இலங்கையின் அரசியல் வரலாற்றில் ஒரு முக்கிய நாளாகும். அன்றுதான், இலங்கையின் அரசியல் மாற்றத்திற்கான மசோதா அரச சபையில், டி. எஸ். சேனாநாயக்காவினால் சமர்ப்பிக்கப் பட்டது. இம்மசோதாவை சமர்ப்பித்தபோது, சேனாநாயக்கா
பின்வருமாறு கூறினார்.
'அமைச்சர்கள், இலங்கையின் அரசியல் திட்டத்தை வகுத்தபோது அவர்களுடைய ஒரே ஒரு நோக்கம், இலங்கையின் சுதந்திரம் மட்டும்தான். ‘சிங்கள ஆதிக்கம் என்ற குற்றச்சாட்டைப் பற்றி நாம் கவலைப்படத் தேவை யில்லை. ஏனென்றால், எம்முடைய நோக்கம் 'இலங்கையர் ஆதிக்கமே யொழிய சிங்க ள ஆதிக்க மல்ல என்பது இப் பொழுது எல்லோருக்கம் விளங்கியிருக்கும். சிறுபான்மை யினங்களின் பாதுகாப்புக்காக நாம் வகுத்த திட்டத்தில், சிறுபான்மையினங்களுக் கெதிரான சட்டங்கள், கவர்னர்ஜெனரலின் அனுமதியில்லாமல் அமுல் நடத்த முடியா தென்பதும், இது சம்பந்தமாகக் கவர்னர் ஜெனரலுக்குத் தனிப்பட்ட அதிகாரம் வழங்கப்பட்டதென்பதும், கண்கூடு. சிறுபான்மையினரின் பாதுகாப்புக்காக ஒரு சுதந்திர அரச சேவைக்குழு' ஒன்று நியமிக்கப்படல் வேண்டும், போன்ற எமது பிரேரணைகளை சோல் பரி குழுவினர் முழுமையாக ஏற்றுக் கொண்டனர், என்ற உண்மையையும் நாம் கவனிக்கு மிடத்து, "சிங்க ள ஆதிக்கம்' என்ற கூற்று எவ்வளவு பொய்யானது' என்று கூறினார். ஆனால் அதே மூச்சில் அவர் "நான் ஒரு சிங்களவன் என்ற முறையில் எனக்குள்ள அதிகாரம் அத்தனையையும் ஒருமுகப்படுத்தி உறுதியாகக் கூற விரும்புவது என்னவென்றால், ஒரு சமூகத்தின் நன்மைதான்

43 ஒரு சிறுபான்மை சமூகத்தின் பிரச்சினைகள் V
எல்லோருடைய நன்மையாகும். ' என்று கூறினார்.
அவர் கூறியதன் உள்ளர்த்தம் என்னவென்றால், "சிங்கள இனத்தின் நன்மைதான் எல்லா இனங்களுக்கும் பொதுவானது' என்பதே. இந்த கருத்தோட்டத்திலிருந்து தோன்றியதுதான் "இலங்கைத் தேசியவாதம்' என்பது, "சிங்கள தேசியவாதம்' என்பதே. இந்த அடிப்படையில் தோன்றியதுதான், ஜாத்திக்க"- சிந்தனை' என்பதே. இன்றைய இனவாதத்தின் மூலகர்த்தா யார் என்பதை நாம் கூறாமலேயே வாசகர்களுக்கு விளங்கும்.
1937ம் ஆண்டு ஜனவரி மாதம் 25ம் திகதி, இலங்கை டெய்லி நிவ் சில் வெளியான செய்தியின்படி, தமிழர்கள் சிங்கள சமூகத்துடன் சங்கமமாக வேண்டுமென்ற தன்னுடைய கொள்கையை விளக்குமுகமாக அன்றைய தேசியகாங்கரசின் அங்கத்தவரும் சிங்கள மகாசபாவின் தலைவருமான எஸ். டபிள்யு.ஆர். டி. பண்டாரநாயக்க, 'ஒரு நாடு என்பது என்ன? நிலமா, மக்களா முக்கியம்? மக்கள்தான் முக்கியம் என்றால், எல்லா சமூகங்களையும், எல்லா கலாசாரங்களையும் அணைத்துக் கொண்டு, சுதந்திர பாதையில் ஒரு நாடு முன்னேறிச் சென்றதாக நான் இது கால வரையில் கேள்விப்பட்டதே இல்லை' என்று கூறினார். சேனாநாயக்கா மறைமுகமாகச் சொன்னதை பண்டார நாயக்கா வெளிப்படையாகவே சொன்னார். அவர் கூறியதன் உட்கருத்து என்னவென்றால், சிங்கள சமூகம் சிறுபான்மை சமூகங்களை அணைத்துக் கொண்டு சுதந்திரத்திற்காகப் போராட வேண்டியதவசியமில்லை. அவர்கள் தனித்தே இயங்க வேண்டும், என்பதே, இலங்கையைப் பின்னர் ஆட்சி செய்த இரு பிரதமர்களின் கருத்து இவ்வாறிருக்க, சிறுபான்மையின மக்கள் தங்களுக்கு உரிய உரிமைகள் கிடைக்கு மென்று
ஏங்குவது, வெறும் கானல் நீராகவே இன்று வரை இருந்து
வந்திருக்கிறது.
* ஜாத்திக்க' - என்பது சிங்கள இனத்தைக் குறிக்கும் ஒரு சொல்

Page 36
அ. முகம்மது சமீம் 44
சோல் பரி ஆணைக்குழு வின் அறிக்கை லண்டனில் வெளியாகும் சமயத்தில், தான் அங்கிருக்க வேண்டும் என்று எண்ணி சேனாநாயக்கா, லண்டனுக்குப் புறப்பட்டுச் சொன்றார். அவர் லண்டன் சென்ற சமயம், இரண்டாவது மகாயுத்தம் முடிவுற்று, யுத்தகாலத்தில் இங்கிலாந்தை ஆட்சி செய்த கன்சர் வட்டிவ் கட்சியினர் பொதுத் தேர்தலில் தோல்வியுற்று, தொழிற் கட்சி ஆட்சிக்கு வந்திருந்தது. இலங்கையின் அரசியல் மாற்றம் சம்பந்தமான கன்சர்வட்டிவ் கட்சியினரின் பிரேரணைகளை உடனடியாகத் தொழிற் கட்சியினர் அமுல் நடத்துவர் என்ற நம்பிக்கை சேனாநாயக் காவுக்கு இருக்கவில்லை. சோல்பரி குழுவினரின் சிபாரிசை நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற கடப்பாடு தொழிற் கட்சியினருக்கு இருக்க வில்லை. யுத்தத்திற்குப் பிறகு அரசாங்கத்தை யமைத்த தொழிற்கட்சியினர் எதிர்நோக்கிய பாரிய பிரச்சினைகளில் இலங்கை முக்கியமாக இருக்கவில்லை. எனவே, இலங்கையின் அரசியல் மாற்றம் காலதாமதமாகலாம் என்ற முடிவுக்கு இலங்கை அரசியல்வாதிகள் வந்தனர்.
சோல் பரி குழுவினரின் சிபாரிசு, இலங்கையின் அரசியல்வாதிகள் எதிர்பார்த்த அளவு இருக்க வில்லை. சோல் பரி குழுவினரின் சிபாரிசு, இலங்கை சுதந்திரம் அடைவதற்கு, இடைக்கால நிலையை உண்டாக்குவதாகவே இருந்தது. சோல்பரிகுழுவினரின் இந்தச் சிபாரிசை நிராகரித்து, இலங்கைக்கு "டொமினியன் அந்தஸ்து வழங்கப்படல் வேண்டுமென்று சேனாநாயக்கா வாதாடினார். தொழிற்கட்சி அமைச்சரவை சோல் பரி குழுவினரின் சிபாரிசை ஏற்றுக் கொள்வதென்றும், இலங்கைக்கு "டொமினியன் அந்தஸ்து, தற்சமயம் கொடுக்க முடியாதென்ற முடிவுக்கு வந்தது.
இதை ஏற்க மறுத்த சேனாநாயக்காவுக்கு, ஆறு வருடங்களுக்குப் பிறகு இதை மறுபரிசீலனை செய்வதென, காலனித்துவ அமைச்சர், ஹால் உறுதியளித்தார். இலங்கையின் அமைச்சர்குழு சோல்பரி திட்டம் அமைந்த மசோதாவை ஏற்றுக்

45 ஒரு சிறுபான்மை சமூகத்தின் பிரச்சினைகள் IV
கொள்வதென முடிவு செய்தது. ஆனால் இந்தக் கால எல்லைக்குப் பிறகும், இலங்கை இயற்கையாகவே டொமினியன் அந்தஸ்தைப் பெறும் வாய்ப்பில்லை, என்ற பிரிட்டிஷ் பிரதம மந்திரியின் எண்ணத்தை இலங்கை அமைச்சர்குழு அறியவில்லை. இலங்கை அரசியல் மாற்றம் சம்பந்தமான இம்ம சோதா சேனாநாயக்காவுக்குக் கிடைத்த தனிப்பட்ட வெற்றி என்று அமைச்சர்கள் கருதினர். இம்ம சோதாவை நவம்பர் மாதம், 1945ம் ஆண்டு சேனாநாயக்கா அரசசபையில் அறிமுகப்படுத்தினார்.
சோல்பரி குழுவினரின் சிபாரிசுகள் அடங்கிய இம்ம சோதா அரசசபையினரால் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. சோல்பரி குழுவினரின் முக்கிய பிரேரணைகள் இம்ம சோதாவில் சேர்க்கப்பட்டன.
(1) இலங்கை அரசாங்கம், 1943ம் ஆண்டு பிரிட்டிஷ் அரசாங்கத்தின் பிரகடனப்படி, ஒதுக்கி வைக்கப்பட்ட அதிகாரங்களைக் கொண்ட ஒரு கவர்னர்-ஜெனரலும், அமைச்சர் மண்டலமும் (கபினட்) மேல்சபை, கீழ்சபையாகிய இருசபைகளைக் கொண்ட ஒரு சட்டசபையும், கொண்டதாக
இருக்கும்.
(11) சர்வஜன வாக்குரிமை பேணப்படும். இலங்கையில் குடியேறியவர்களுடைய வாக்குரிமையை இலங்கை அரசாங்கமே நிர்ணயிக்க வேண்டும். தன்னுடைய சனத் தொகையின் தன்மை யைப் பற்றி நிர்ணயிப்பதற்கு இலங்கை அரசாங்கத்திற்குப் பூரண அதிகாரம் இருக்கும்.
(11) இலங்கையின் புதிய தேர்தல் தொகுதிகளை
நிர்ணயிப்பதற்கு, கவர்னர்-ஜெனரல் தேர்தல் ஆணைக்குழு வொன்றை நியமிப்பார்.
(IV) கீழ் சபை பிரதிநிதிகள் சபை" என்றழைக்கப்படும். இச்சபை தேர்தலில் தெரிவு செய்யப்பட்ட 95 அங்கத்தவர்

Page 37
அ. முகம்மது சமீம் 46
களையும், கவர்னர்-ஜெனரலால் நியமிக்கப்பட்ட 6 அங்கத்தவர் களையும் கொண்டதாக இருக்கும். இவர்கள் 'பாராளுமன்ற அங்கத்தவர்கள் என்றழைக்கப்படுவார்கள்.
(V) மேல்சபை "செனட் சபை யென்று அழைக்கப்படும். 30 அங்கத்தவர்களைக் கொண்ட இம்மேல் சபையில், கீழ் சபை யினால் தெரிவுசெய்யப்பட்ட 15 அங்கத்தவர்களும் கவர்னர்ஜெனரலினால் நியமிக்கப்பட்ட 15 அங்கத்தவர்களும் இடம் பெறுவர்.
(V1) அரசியல் நிர்வாகத்தில், கவர்னர் ஜெனரலுக்கு ஒதுக்கிவைக்கப்பட்ட அதிகாரங்களைத் தவிர்த்து, ஏனைய அதிகாரங்களை நிர்வகிக்கும் பூரண அதிகாரம், அமைச்சர் மண்டலத்திற்கு இருக்கும்.
(Vl) கவர்னர் ஜெனரலால் நியமிக்கப்பட்ட ஒரு பிரதம மந்திரி இவ்வமைச்சர் மண்டலத்திற்குத் தலைமை தாங்குவார். அவர். பாதுகாப்பு, வெளிவிவகார அமைச்சுகளுக்குப் பொறுப்பாக இருப்பார்.
(VH) 'அரசாங்க நிர்வாக சேவை நியமனங்களைச் செய்வ தற்கு, கவர்னர்-ஜெனரலினால் நியமிக்கப்பட்ட அரசாங்க
சேவைக்குழு"வினருக்கு வழங்கப்பட்டது.
(IX) உயர்நீதிமன்ற நீதியரசர்களும், பிரதம நீதியரசரும், கவர்னர்-ஜெனரலினால் நியமிக்கப்படுவர். ஏனைய நீதிபதி களை நியமிப்பதற்கு ஒரு நீதி ஆணைக்குழு நியமிக்கப்படும்.
சிறுபான்மையின மக்களின் பாதுகாப்பிற்காக இரண்டா வது சபையும், அரசாங்க சேவைக்குழுவும் அமைக்கப் பட்டன. கீழ் சபையினால் நிறைவேற்றப்படும் எந்தவொரு சட்டத் தையும் நிதானமாகப் பரிசீலனை செய்வதற்கு ஒரு மேல் சபையும், எல்லா சமூகங்களுக்கும் பாரபட்சமின்றி, அரச நியமனங்களைச் செய்வதற்கு ஒரு அரசசேவை ஆணைக்

47 ஒரு சிறுபான்மை சமூகத்தின் பிரச்சினைகள் IV
குழுவும் அமைக்கப் பட்டன என்ற அவைகளின் நோக்கங்கள் பற்றி குறிப்பிடப் பட்டன. -
சிறுபான்மையின மக்களின் பாதுகாப்புக்காக பின்வரும் பகுதிகள் புகுத்தப்பட்டன.
(1) பிறநாடுகளில் வாழும் அரசருடைய பிரஜைகளின் சொத்துரிமை சம்பந்தமாகவோ, காமன்வெல்த் நாடுகளோடு வர்த்தகமோ அல்லது வேறு எந்தத் தொடரோ சம்பந்தமாக மசோதாக்கள் கவர்னர் ஜெனரலின்பிரத்தியேக அதிகாரத்தின் கீழ் இருக்கும். (இது முக்கியமாக ஐரோப்பிய சிறுபான்மை யினரைப் பாதுகாக்க ஏற்படுத்தப்பட்டது)
(1) சிறுபான்மையின மக்களின் எதிர்ப்புக்கு உள்ளாகும் எந்தவொரு மசோதாவோ, அல்லது கவர்னர் - ஜெனரலின் அபிப்பிராயப்படி எந்தவொரு குறிப்பிட்ட சிறுபான்மையின ருக்குப் பாதகமாகவோ அல்லது அவர்களை அடக்க நினைக்கும் எந்தவொரு மசோதாவோ கவர்னர்-ஜெனரலின் பிரத்தியேக அதிகாரத்தின் கீழ்வரும்.
(11) குடியேற்றம் சம்பந்தமான மசோதாக்கள் கவர்னர்-ஜெனரலின் தனிப்பட்ட அதிகாரத்தின் கீழ்வரமாட்டா. ஆனால் ஏற்கனவே குடியேறிய ஒருவர், வெளிநாடு சென்று திரும்புவதைத்தடுக்கும் மசோதா, கவர்னர்-ஜெனரலின் அபிப் பிராயப்படி நியாயமற்றது என்று அவர் கருதினால் அம் மசோதா அவருடைய தனிப்பட்ட அதிகாரத்திற்குள் அடங்கும்.
(IV) வெளிநாட்டிலிருந்து இறக்குமதியாகும், பொருட்களுக்கு சுங்க வரி விதிக்கும் போது, எந்தவொரு சிறுபான்மை சமூகத்தையும் பாதிக்காத மசோதா கவர்னர் - ஜெனரலின் தனிப்பட்ட அதிகாரத்தின்கீழ் வரமாட்டா.
(V) ஒரு குறிப்பிட்ட சமயத்தவரின் வேண்டுகோளில் லாமல் அவர்களுடைய சமய அனுஷ்டானங்களைப் பாதிக்கும்

Page 38
அ. முகம்மது சமீம் 48
எந்தவொரு சட்டத்தையும் பாராளுமன்றம் நிறைவேற்ற முடியாது. மற்ற எந்த சமூகத்துக்கும் வழங்கப் படாத விசேஷ சலுகைகள், ஒரு குறிப்பிட்ட சமயத்தவருக்கோ, இனத்த வருக்கோ வழங்கும் சட்டங்களைப் பாராளுமன்றத்தால் நிறைவேற்ற முடியாது.
இவை எவ்வளவு தூரம் சிறுபான்மை யினரைப் பாதுகாத்தது என்பதைப் பின்னர் ஆராய்வோம்.

49 ஒரு சிறுபான்மை சமூகத்தின் பிரச்சினைகள் IV
9. சுதந்திர இலங்கை மசோதாவை ஆதரித்த (၂) ဓါးလခါးနံ பிரதிநிதிகளும் எதிர்த்த தமிழ் பிரதிநிதிகளும்
'மேலத்தேய நாடுகளில், அரசியல் பிரச்சினைகள் எழும்போது, மக்கள் பொருளாதார சமூகப் பிரச்சினைகளை வர்க்க அடிப்படையில் நோக்கி ஒன்று படுவார்களேயொழிய இன அடிப்படையிலல்ல. அதனாற்றான் இலங்கையில், மேல்நாட்டு ஜனநாயக முறை அறிமுகப்படுத்த முடியாது' என்று சோல்பரி குழுவினர் தமது அறிக்கையில் கூறினர். சோல்பரி குழுவினர் அன்று கூறிய கருத்து, ஐம்பது ஆண்டுகளுக்குப் பிறகு இன்றும் எவ்வளவு உண்மையானது என்பதை இன்றைய அரசியல் நிலையிலிருந்து நாம் அவ தானிக்க முடிகிறது, 'இலங்கையில் இடதுசாரிக் கட்சிகளின் வளர்ச்சியினால், அரசியல் பிரச்சினைகள், பொருளாதார, சமூக அடிப்படையில் மதிப்பீடு செய்யப்படுவது மட்டுமல்லாமல் இவ்வடிப்படையில் அரசியற் கட்சிகள் தோன்றும் வாய்ப்பை யும் நாம் காண்கிறோம் என்று சோல்பரி குழுவினர் கூறினர். இனவாத அரசியலின் வளர்ச்சி இவ்விடதுசாரி கட்சிகளின் செல்வாக்கை ஒதுக்கியது என்பது சமீபத்தில் நடந்த பொதுத்தேர்தல்கள் காட்டின.
சோல்பரி குழுவினரின் சிபாரிசின் படி , இலங்கையின் பாதுகாப்பு, வெளிவிவகாரம், நாணயம், பிரித்தானிய சாம்ராஜயத்துடனான, வர்த்தகம் போக்குவரத்து ஆகியவை கவர்னர் ஜெனரலின் தனிப்பட்ட அதிகாரத்தின் கீழ் இருக்கும்.
இலங்கையின் அமைச்சர்குழு, பிரிட்டிஷ் அரசாங்கத்தின் இந்த ஏற்பாட்டை ஏற்கத்தயாராயிருக்கவில்லை. யுத்த காலத் தில் இந்த ஏற்பாட்டை சிங்களத்தலைவர்கள் ஏற்றுக் கொண் டாலும் இப்பொழுது யுத்தம் முடிவுற்ற நிலையில், அதுவும் யுத்தம் வெற்றிகரமாக முடிவுற்றதற்கு இலங்கையின் பங்கு

Page 39
அ. முகம்மது சமீம் 50
கணிசமானது என்ற உண்மையைச் சுட்டிக் காட்டி, டொமி னியன் அந்தஸ்து இலங்கைக்கு வழங்க வேண்டு மென்று கேட்டனர். சிங்க ளத் தலைவர்களின் எதிர்ப்பை நாம் பின்வருமாறு சுருக்கலாம்.
(1) சிறுபான்மை யின மக்களின் பாதுகாப்புக்காக ஏற்படுத்தப்பட்ட இரண்டாவது சபை தேவையில்லை. இது ஜனநாயக முறையே அல்ல.
(1) கவர்னர்-ஜெனரலுக்கு வழங்கப்பட்டிருக்கும் அதிகாரங்கள் இரட்டையாட்சியை ஏற்படுத்தும். இதனால் நிர்வாகம் பாதிக்கப்படும். இதற்குப் பரிகாரம், அரசயாப்பில் இப்படியொரு ஏற்பாட்டைச் செய்வதல்ல. பிரித்தானிய அரசாங்கத்துக்கும் இலங்கை அரசாங்கத்துக்குமிடையில் ஒரு தனிப்பட்ட ஒப்பந்தம் ஏற்படுத்திக் கொள்ளலாம்.
(II) சிறுபான்மையினங்களின் பாதுகாப்பு- சிறுபான்மை யின மக்களின் பாதுகாப்புக்கான வழிவகைகளைச் செய்வதில் ஆட்சேபணை இல்லை. ஆனால், ஏற்கனவே கூறியதுபோல ஒர் இரண்டாவது சபை தேவையில்லை.
சிறுபான்மையின மக்களின் பாதுகாப்புக்காக சோல்பரி குழுவினரின் பிரேரணைகள் போதுமானது என்று சிங்களத் தலைவர்கள் கருதினர். ஆனால் சிறுபான்மையினத் தலைவர் கள், முக்கியமாக, தமிழ்த்தலைவர்கள், இதுபோதாது என்று கூறினர். பிரதிநிதித்துவத்தில், சம பங்கு இல்லாத பட்சத்தில், கவர்னருக்கு சில அதிகாரங்கள் கொடுக்கப்பட்டிருந்தாலும், பிரதிநிதித்துவ அடிப்படையில் பெரும்பான்மையினமான சிங்க ள சமூகத்திற்கு வழங்கப்பட்டிருக்கும் அதிகாரம் எவ்வகையிலும், சிறுபான்மையின மக்களின் பாதுகாப்புக்கு உத்தவாதம் அளிப்பதாக இல்லை. சிறுபான்மையின மக் களுக்கு சட்டத்தைவிட நடைமுறையில்தான் பாதகம் ஏற்படும் என்று தமிழ்த் தலைவர்கள் வாதிட்டனர். இதற்குப் பரிகாரம், பிரதிநிதித்துவத்தில் சமபங்கு ஆசனங்களை வழங்குவதோடு,

ஒரு சிறுபான்மை சமூகத்தின் பிரச்சினைகள் IV
அமைச்சர் பதவிகளிலும் சமபங்கு இருக்க வேண்டும், என்று சட்டம் இயற்றப்பட வேண்டும் என்றும் கூறினர். பின்னர் நடந்த சம்பவங்கள் இத்தமிழ்த் தலைவர்களின் அச்சம் எவ்வளவு தூரம் உண்மையானது என்பதை நிரூபித்தன.
இனி, இம்ம சோதா, அரசசபையில் அறிமுகம் செய்யப் பட்டபோது, நடந்த விவாதங்களைக் கூர்ந்து கவனிப்போம். டி. எஸ். சேனாநாயக்கா தன்னுடைய உரையில் இலங்கைத் தமிழ்த்தலைவர்களைப் பார்த்து பின்வருமாறு கூறினார். 'தமிழ் நண்பர்களாகிய உங்களிடம் நான் ஒரே ஒரு கேள்வி தான் கேட்க விரும்புகிறேன். லண்டனிலிருந்து நீங்கள் ஆட்சி செய்யப்பட விரும்புகிறீர்களா? அல்லது, இலங்கை யராகிய நீங்கள், இலங்கையை இலங்கையராலேயே ஆளப்படுவதற்கு உதவப்போகிறீர்களா? எம்முடைய திருநாடாம் இலங்கையின் சுதந்திரத்திற்குத் தடையாயிருக்கும், ஒரு சில அரசியல் வாதிகளின் அதிகார ஆசைக்குத் தூபம் போடாதீர்கள். இப்படி நாம் செய்வதால் எமது பண்டைய நாகரிகம், இந்நாட்டில் திரும்ப வளர்வதை மூழ்கடிக்கப் போகிறோமா?
"இந்தியத் தமிழ் நண்பர்கள், தம்முடைய தாய் நாடாம் இந்தியாவிற்குப் பூரண சுதந்திரம் கிடைக்க வேண்டும் என்று விரும்பும் அதே வேளையில் இலங்கை சுதந்திரம் அடைவதற்குத் தடையாக இருக்க மாட்டார்கள் என்று எண்ணுகிறேன். இந்த மசோதாவுக்கு எதிராக அளிக்கப்படும் ஒவ்வொரு வாக்கும், இலங்கை இன்னும் ஒர் அடிமை நாடாக இருக்க வேண்டும் என்பது மட்டுமல்ல, இந்தியாவும் ஒர் அடிமை நாடாக இருக்க வேண்டும் என்பதே. ஏனென்றால் இலங்கையின் பிரச்சினைதான், இந்தியாவின் பிரச்சினையுமே,
"முஸ்லிம்களைப் பற்றிக் கூறுவதாயிருந்தால், அவர் களுடைய நிதானமான போக்கைக் கண்டு நாம் எல்லோரும் பாராட்டுகிறோம். சிங்கள அடக்கு முறை என்ற ஒரு
கட்டுக்கதையை அவர்கள் கூற வில்லை. அவர்களுடைய

Page 40
அ. முகம்மது சமீம் 52
தேவைகளை நாம் பூர்த்தி செய்ய முனைந்தோம். சோல்பரி குழுவினர் இதில் இன்னொரு படி மேலே சென்றார்கள். முன்னர் "சிறிலங்கா மசோதாவை ஆதரித்த முஸ்லிம்கள் இத னையும் ஆதரிப்பார்கள் என நான் எண்ணுகிறேன்'
இம்ம சோதாவுக்கு அரசசபையில் இருந்த மூன்று முஸ்லிம் அங்கத்தவர்களும் தமது ஆதரவைக் கொடுத்தனர். றி.பி. ஜாயாவும், சர். ராசிக் பரிதும் மசோதாவை ஆதரித்துப் பேசினர். ஜாயா, தன்னுடைய உரையில் 'நாம் வெற்றி பெற்று விட்டோம் என்ற சந்தோஷத்தில் குதூகலிக்கவோ, அல்லது ஒருவரையொருவர் குற்றம் சாட்டுவதற்கோ இது தருணம் அல்ல. சிறுபான்மையின மக்களுக்கு ஏற்பட்ட அநீதியையோ அல்லது பெரும்பான்மையின சமூகத்தின் வெற்றியைப் பற்றியோ நான் கூற முன்வரவில்லை. இச்சபையிலுள்ள முஸ்லிம் அங்கத்தவர்கள், இம்ம சோதாவை ஆதரிப்பதென முடிவெடுத்ததற்கு ஒரேயொரு காரணம்தான் இருக்கிறது. அந்த ஒரு காரணம் என்னவென்றால், இந்த நாடு சுதந்திரம் அடைவதற்காக, எமது சமூகத்திற்குக் கிடைக்க இருக்கும் அனுகூலங்களையும் நன்மைகளையும், நாம் தியாகம் செய்யத் தயாராயிருக்கிறோம் என்பதே அது' என்று கூறினார். மேலும் அவர் "நான் முஸ்லிம் சமூகத்தின் முழு ஆதரவுடனும் தான் பேசுகிறேன். முஸ்லிம் சமூகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் முஸ்லிம் லீக், இலங்கையின் பல பாகங்களிலும் வாழும் முஸ்லிம்களின் அபிப் பிராயத்தைப் பெற்றுத்தான், இந்த முடிவுக்கு வந்தது. எனவே இச்சபையிலுள்ள முஸ்லிம் அங்கத்தவர்களுக்கு, இலங்கை வாழ் முஸ்லிம்களின் ஆதரவு இருக்கிறது என்பதையும் கூற விரும்புகிறேன்", என்று கூறினார்.
ஜாயாவுக்குப் பிறகு பேசிய ராசிக் பரீத், தேசிய விடுதலைக்கான தனது ஆதரவை மிகவும் அழுத்தம் திருத்தமாகக் கூறினார். ஆனால் ஜாயாவைப் போலல்லாமல், அவர் தமிழ்த் தலைவர்களை மிகவும் வன்மையான முறையில்

53 ஒரு சிறுபான்மை சமூகத்தின் பிரச்சினைகள் IV
சாடினார். "நாம் ஒரு வித கொச்சைத் தமிழில் பேசுவதனால், எம்முடைய அனுமதியில்லாமல் எம்மைப் பிரதிநிதிப் படுத்துவதாக தமிழ் அங்கத்தவர்கள் இச்சபையில் கூறினார்கள். துரதிர்ஷ்டவசமாக நாம் அதற்குத் தலை சாய்க்க வேண் டியுள்ளோம். ' என்று கூறிய ராசிக் பரீத், மேலும், 'என்னு டைய நண்பர்களின் மனதில் என்ன ஓடுகிறதென்பதை என்னால் ஊகிக்க முடியும். சோனகர்களைப் போல், தமிழர் களும் சிங்கள சமூகத்துடன் ஒத்துழைத்தால், இன்றைய நாள் இனிய நாளாகவே இருக்கும். முஸ்லிம்களாகிய நாம் இந்நாட்டில் அனுபவித்த துன்பங்களில் பத்தில் ஒரு பங்காவது நீங்கள் அனுபவிக்கவில்லை. 1938ம் ஆண்டில் நடந்த தேர்தலில் முஸ்லிம்களால், ஒரு அங்கத்தவர்கூட இச்சபைக்கு அனுப்ப முடியவில்லை. தமிழ் சமூகம் எமக்கு உதவியளித்ததா? இல்லை. 40,000க்குமேல் முஸ்லிம் வாக்காளர்கள் இருக்கும், மன்னார், மட்டக்களப்புத் தெற்கு, திருகோணமலை ஆகிய தொகுதிகளுக்குத் தமிழ் பிரதிநிதிகளைத்தான் தேர்ந் தெடுத்தீர்கள். ஆனால் நாம் தமிழ் அங்கத்தவர்களை எம்மில் ஒருவராகவே கணித்து வந்திருக்கிறோம். இந்நாட்டில் வாழும் ஐந்து லட்சம் சோனகர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சோனகர் சங்கத்தின் முழு ஆதரவையும் இம்ம சோதாவுக்கு அளிக்கிறேன் என்று இச்சபைத்தலை வருக்கு நான் கூற விரும்புகிறேன்' என ராசிக் பரீத் கூறினார். 'எனவே, சிங்களவருடன், தமிழரும், முஸ்லிம்களும் ஒன்றிணைந்து, இந்நாடு டொமினியன் அந்தஸ்தைப் பெறுவதற்கு முன் னேறுவோமாக ' என்று அவர் கூறினார்.
மிகவும் இக்கட்டான நிலையில் சிங்கள சமூகத்திற்கு ஆதரவளித்த முஸ்லிம்கள், சிங்களத் தலைவர்களால் நியாய மான முறையில் நடத்தப் பட்டார்களா? என்பதைப் பின்னர் ஆராய்வோம்.
சேனாநாயக் காவுக்குப் பிறகு அரச சபையில் பேசிய பண்டாரநாயக்கா, 'தம்முடைய சுயநலத்திற்காக அரசியலைப்

Page 41
அ. முகம்மது சமீம் - 54
பாவிக்கும், ஒரு சிலர் இந்நாட்டில் இருக்கும் வரைக்கும், எமது இலட்சியமான சுதந்திரத்தை நாம் முன்னோக்கிச் செல்வதில் தடைகள் ஏற்படும் ' என்று கூறினார். அவர் மேலும், "டொமினியன் அந்தஸ்தை நாம் பெறாததற்கு நாமே தான் காரணம். தமிழ் காங்கிரஸ், தம்முடைய இந்தப் போக்கைக் கடைப்படிக்கும் வரைக்கும், இரு சமூகங்களுக்குமிடையே பரஸ்பர நல்லெண்ணம் வளர முடியாது, ' என்று கூறினார்.
தமிழர்களின் பிரதிநிதியாகிய வி. நல்லையா, பெரும் பான்மை சமூகமான சிங்கள சமூகத்தின் கொள்கை யிலிருந்து தான் வேறு பட்டவனல்ல, என்றும், பெரும்பான்மை சமூகத்தின் முடிவையே தான் ஏற்றுக் கொள்வதாயும், கூறினார்.
சிங்கள்த தலைவர்களில் ஒருவரான மொலமுரே, முஸ்லிம்களைப் பற்றிக் கூறும்போது, 'முஸ்லிம்களைப் பற்றி நான் கூறுவதென்றால், சிங்கள மக்களுடன் ஒத்துழைக்கும் ஒரு சமூகம் தான் முஸ்லிம்கள், அவர்களுக்குத் தகுந்த பிரதி நிதித்துவம் அளிக்கப்படல் வேண்டும், ' என்று கூறினார். மேலும் அவர், 'சிறுபான்மையின மக்களுடைய நம் பிக்கையையும் நல்லெண்ணத்தையும் பெற பெரும் பான் மையின சமூகத்தின் தலைவர்கள், முனைய வேண்டும். அப்பொழுதுதான் எமது குறிக்கோளான சுதந்திரத்தை நாம் அடையலாம். ' என்று கூறினார்.
காங்கேசன்துறை, பிரதிநிதியான, எஸ். நடேசன், பேசுகையில், 'தமிழர்களுக்கு ஒரு மனக்குறை இருக்கிறது. அது வரலாற்றிலிருந்து தோன்றியது. தமிழர்கள் இந்த நாட்டின் ஆட்சியாளர்களா யிருந்திருக்கிறார்கள். இந்நாட்டின் நிர்வாகத்தை மற்றைய இனங்களுடன் பகிர்ந்தவர்கள். தமது எதிர்காலத்தைப் பற்றி எண்ணும் தமிழர், தமது கடந்தகால வரலாற்றை மறந்து விடவில்லை. எதிர்காலத்தில், இந்த நாட்டின் நிர்வாகத்தில் தமக்கு சம பங்குண்டு என்று அவர்கள் எதிர்பார்ப்பதில் தவறில்லை. பிரதிநிதித்துவத்தில் சம அந்தஸ்து

55 ஒரு சிறுபான்மை சமூகத்தின் பிரச்சினைகள் IV
வேண்டுமென்ற அவர்களின் கோரிக்கை நியாயமானது. இது கிடைக்கவில்லையென்றால், அவர்களது விதியென்றுதான் கூற வேண்டும்', என்று கூறினார்.
இந்தியத் தமிழர்களின் பிரதிநிதிகளான நடேச ஐயரும், இராஜகுலேந்திரனும், நியமன அங்கத்தவரான திவான் பகதூர் ஐ. எக்ஸ். பெரேய்ராவும், இம் மசோதாவைக் கண்டித்தனர். இலங்கைப் பிரஜா உரிமை விஷயத்தில், இந்தியத் தமிழர்கள் பாரபட்சமாக நடத்தப்படுவதை இருவரும் சுட்டிக்காட்டினர். மன்னார் தொகுதி அங்கத்தவரான தியாகராஜா, தமிழர்கள் நியாயமான முறையில் நடத்தப் படவில்லை யென்றும், 'தமிழர்கள் அரசாங்கத்திற்கு எதிராகக் கலகம் செய்வது சாத்தியமில்லை என்றும் கூறினார். சுமுகமான முறையில் தமது பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்ள முனைந்த தமிழர்கள், பிறகு ஏன் வன்முறையைக் கடைபிடிக்க வேண்டி வந்தது, என்பதற்கு வரலாறுதான் பதில் கூறவேண்டும்.

Page 42
அ. முகம்மது சமீம் 56
10. சிறுபான்மையின மக்களின் பாதுகாப்புக்காக சோல் பரிகுழுவினரின் திட்டம் முறியடிக்கப்பட்டமை
1947ம் ஆண்டில் இலங்கையில் நடந்த பொதுத்தேர்தலில், சோல்பரி ஆணைக்குழுவினர் எதிர்பார்த்த படி, தேர்தல் முடிவுகளும் அமைந்தன. சோல்பரி குழுவினர் தம்முடைய அறிக்கையில் 270 ம் பந்தியில் பின்வருமாறு குறிப்பிட்டார்கள்.
"எம்முன் வந்து சாட்சியமளித்தவர்களின் பிரேரணையை நாம் ஆராய்ந்ததில் பொதுத்தேர்தலில் பின்வரும் முடிவுகள் பெறலாம் என்று கூறப்பட்டது. மொத்தம் 95 ஆசனங்களில், சிங்களவர்களுக்கு 58 ஆசனங்களும், இலங்கைத் தமிழர் களுக்கு 15ம், இந்தியத்தமிழர்களுக்கு 14ம் முஸ்லிம்களுக்கு 8 ஆசனங்களும் கிடைக்கும். ஆறு நியமன அங்கத்தவர்களுடன், சிறுபான்மை இனத்தவர்களுக்கு 43 ஆசனங்கள் இருக்கும்'
சிறுபான்மை இனங்களுக்கெதிராக சட்டங்கள் இயற்றப்
படும் பட்சத்தில், சிறுபான்மையின மக்கள் ஒரே குரலில் எதிர்க்கலாம், என்று சோல்பரி குழுவினர் எதிர் பார்த்தனர். அவர்களின் எதிர்பார்ப்புப் படி ஒன்றும் நடக்க வில்லை. சிறுபான்மையின மக்கள் ஒற்றுமையாக செயற்பட்டிருந்தால், பெரும்பான்மையினமான சிங்களவருக்கு, அரசயாப்பில் புதிய மாற்றங்களைக் கொண்டு வருவதற்கு மூன்றில் இரண்டு வாக்குகள் கிடைப் தற்கு சாத்தியமில்லை.
சுதந்திரத்திற்குப் பிறகு, சிங்கள ஆதிக்கத்தின் கீழ் இயங்கிய தேசியக் கட்சிகள், இந்தியத் தமிழர்களின் வாக் குரிமை யைப் பறித்ததனால், இன்னும் 8-14 ஆசனங்களை சுவீகரித்துக் கொண்டனர். இதனால் பேரினவாத சக்திகளின் ஆதிக்கம் இன்னும் வலுவடைந்தது.
இதுமட்டுமல்ல. சோல்பரி குழுவினர் அமைத்த யாப்பில்

57 ஒரு சிறுபான்மை சமூகத்தின் பிரசசினைகள் IV
வேறுசில அம்சங்களையும் தமக்குச் சாதகமாக அமைத்துக் கொண்டனர் சிங்களத் தலைவர்கள். பிரதம மந்திரி அரசியல் முறையை சோல்பரி குழுவினர் உருவாக்கினர். இம்முறையில், ஒரு பிரதம மந்திரிக்கு, தனக்கு வேண்டியவர்களுக்கு அமைச்சர் பதவிகளைக் கொடுப்பதற்கும், முக்கிய அரசியல் நியமனங் களைச் செய்வதற்கும், அதிகாரம் இருந்த காரணத்தினால், அவர் சர்வ அதிகாரம் படைத்தவராக இருந்தார். சிறுபான்மை யின மக்களின் தலைவர்களை, தம் மோடு சேர்த்துக் கொள் வதற்கு, டி. எஸ். சேனாநாயக்கா இவ்வதிகாரத்தைப் பயன் படுத்தினார்.
சிறுபான்மை யின மக்களுக்கு நியாயமாகக் கிடைக்க வேண்டிய ஆசனங்களை, இந்தியத் தமிழர்களின் வாக்குரிமை யைப் பறித்ததனால், அரசியலில் ஒரு சுமுகமான சூழ்நிலை உருவாவதையும் அவர் தடுத்தார். சோல்பரி குழுவினர் இலங்கையில் "வெஸ்ட்மின்ஸ்டர் அரசியல் முறை வெற்றி பெறுவதற்கு இன்னும் நான்கு அம்சங்களை அரசயாப்பில் புகுத்தினர்.
முதலாவது, அரச யாப்பில் 29(2) பிரிவின்படி சிறுபான்மை யின மக்களுக்குப் பாதுகாப்பு வழங்கப் பட்டுள்ளது என்று அவர்கள் கூறினர். ஒரு சிறுபான்மை யினத்திற்கோ, அல்லது ஒரு சமயகுழுவினருக்கோ எதிராக சட்டம் இயற்றப்பட முடியாது என்பதே இதன் குறிக்கோள். ஆனால் ரோமன் கத்தோலிக்கருக்கு அனுகூலமான 29(2) என்ற ஒரு சிறு திருத்தம் செய்யப்பட்டுள்ளது என்று, பெளத்த ஜாத் திக பல வேக ய என்ற ஒரு பெளத்த தீவிரவாத இயக்கத்தினர் அரசாங்கத்தைக் குற்றம்சாட்டினர். ஆனால் 1972ம் ஆண்டில் இலங்கைக் குடியரசாகப் பிரகடனப் படுத்தப்பட்ட சமயத்தில், சிறுபான்மையினங்களுக்கான இப்பாதுகாப்பும் புதிய அரசியல் யாப்பிலிருந்து நீக்கப்பட்டது. இதற்குப் பதிலாக, "மக்களின் அடிப்படை உரிமைகளும், சுதந்திரமும் ' என்ற ஒர் அத்தியாயம் புதிய அரச யாப்பில்

Page 43
அ.முகம்மது சமீம் 58
சேர்த்துக் கொள்ளப்பட்டது. சிறுபான்மையின மக்களுக்காக வகுக்கப்பட்ட இவ்வுரிமைகளை, 18(2) பிரிவு மழுங்கச் செய்தது. இதனைப் பின்னர் ஆராய்வோம்.
1978ம் ஆண்டில் உருவாக்கப்பட்ட அரசயாப்பில், மக்களின் உரிமைகளின் பாதுகாவலனாக உயர்நீதிமன்றம் இயங்கும் என்று 120-6 பிரிவு குறிப்பிட்டது. 1972-8 அரசயாப்பில் இயங்கிய அரசயாப்பு நீதிமன்றத் தை விட இவ்வுயர் நீதிமன்றம் அரசியல் தலையீட்டினின்றும் சுதந் திரமாக இயங்கும் என்று பறை சாற்றப்பட்டது. இவ்வுயர் நீதிமன்றத்தின் தீர்ப்புகள், எவ்வளவு தூரம், அரசியல் தலை யீட்டினால் ஏற்பட்டன என்பது ஆராய்ச்சிக்குரிய விஷயம். பிறிதோரிடத்தில் இதனை விரிவாக ஆராய்வோம்.
பெரும்பான்மையின மக்களின் தலைவர் சிறுபான்மை யின மக்களின் நலன்களைப் பாதுகாப்பர் என்றும் சோல்பரி குழுவினர்எதிர்பார்த்தனர். டி. எஸ். சேனாநாயக்காவுக்கு அரசியல் அதிகாரத்தை வழங்கிய சமயத்தில், சோல்பரி குழுவினர், தம்முடைய அறிக்கையில் பின்வருமாறு எழுதினர்.
'மேற்கத்திய நாடுகளைப் போல், இலங்கையிலும் அரசியற்கட்சிகள் உருவாகும் வரையில், பெரும்பான்மையின குழுத்தலைவர், அரசாங்கத்தை அமைக்கும்போது, சிறுபான் மையின மக்கள் தலைவர்களுக்கு அவரவர்களுடைய விகிதாசாரப்படி அமைச்சர் பதவிகளை வழங்க வேண்டும் என்று நாம் ஆலோசனை கூறுகிறோம்.'
'டி.எஸ். சேனாநாயக்கா, யாழ்ப்பாணக்குடா நாட்டைத் தவிர்ந்த வவுனியா, மன்னார் தொகுதிகளின் பிரதிநிதிகளைத் தன்னுடைய அமைச்சரவையில் சேர்த்துக் கொண்டாரென் றாலும், 1948ம் ஆண்டில், தமிழ் காங்கிரஸ் தலைவர், ஜி.ஜி. பொன்னம்பலத்தையும் அமைச்சர் அவையில் சேர்த்துக் கொண்டாரென்றாலும், 1956ம் ஆண்டு தொடக்கம், இது

59 ஒரு சிறுபான்மை சமூகத்தின் பிரச்சினைகள் IV
காலவரை யாழ்ப்பாணத்து மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஒர் அங்கத்தவராவது இலங்கை அரசாங்கத்தின் அமைச்சரவையில் இடம் பெறவில்லை என்று அரசியல் தத்துவஞானி கலாநிதி, ஏ.ஜெ. வில்சன் கூறுகிறார். 1965-70ம் ஆண்டு டட்லி சேனா நாயக்காவின் அரசாங்கத்தில், ஐக்கிய தேசியக்கட்சிக்கும், தமிழரசுக்கட்சிக்குமிடையே ஏற்பட்ட ஒப்பந்தம் காரணமாக செனட் சபையில் அங்கத்துவம் வகித்த திருச்செல்வம், அமைச்சராகப் பதவியேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. சேனாநாயக்காவின் அமைச்சரவையில் அமைச்சராகக் கடமையாற்றிய ஹி. பி. ஜாயா கருத்து வேற்றுமையினால் அமைச்சரவையிலிருந்து விலகிய போது, அந்த இடத்திற்கு சேனாநாயக்கா ஒரு முஸ்லிமையும் நியமிக்க வில்லை. இலங்கையில் இடதுசாரிக்கட்சிகளின் வளர்ச்சி, சமய, இன, வேறுபாடுகளுக்கு முடிவுகட்டும் என்று சோல்பரி குழுவினர் நம்பினர். அவர்களுடைய எதிர்பார்ப்புக்கு நேர்மாறாகவே, இலங்கையில் அரசியற்கட்சிகள், சமய இன அடிப்படையில் வளர்ச்சியடையத் தொடங்கின. இதற்குத் தகுந்த உதாரணங்களாக, ஐக்கிய தேசியக் கட்சி, சிறிலங்கா சுதந்திரக் கட்சி, தமிழரசுக்கட்சி, (தமிழர் விடுதலை முன்னணி), இந்தியத் தொழிலாளர்களை மையமாகக் கொண்ட, இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ், முஸ்லிம் காங்கிரஸ், ஆகியவைகளை நாம் குறிப்பிடலாம். சிறு சிறு அரசியற்கட்சிகள் கூட, சமய, இன அடிப்படையிலேயே தோன்றின. மார்க்சிய தத்துவத்தின் அடிப்படையில் தோன்றிய இடது சாரிக் கட்சிகள் கூட காலப்போக்கில், சிங்கள-பெளத்த கொள்கைகளுக்குத் தூபம் போடத் தொடங்கின. கடைசியாக, சோல்பரிக்குழுவினர், 'அரச நியமனச் சபை', ‘நீதிபரிபாலன சபை", இலங்கைப் பாராளுமன்றத்தின் இரண்டாவது சபையான, செனட் சபை, கவர்னருக்கு அளிக்கப்பட்ட சில அதிகாரங்கள், ஆகியவை யெல்லாம், சிறுபான்மையின மக்களின் பாதுகாப்புக்காக சுதந்திரமாக இயங்கும், என்று நம்பினர். ஆனால், இங்கிலாந்து அரசாங்கம் இலங்கைக்கு டொமினியன் அந்தஸ்தை வழங்க

Page 44
அ. முகம்மது சமிம் SO
முடிவெடுத்த போது, கவர்னர் கூட இலங்கைப் பிரதம மந்திரியின் ஆலோசனைப்படித் தான் நடக்க வேண்டும் என்று கூறியது. பாராளுமன்ற அமைப்பில், சர்வ அதிகாரம் படைத்த ஒரு பிரதம மந்திரி தலைமையில் அரசாங்கம் நடக்கும்போது, பெரும்பான்மையின மக்களின் தலைவர் இப் பதவியை வகிக்கும் பட்சத்தில், மேலே குறிப்பிட்ட ஸ்தாபனங்கள் சிறுபான்மையின மக்களுக்குப் பாதகமில்லாத முறையில், சுதந்திரமாக இயங்கும் என்று எதிர்பார்ப்பது வெறும் நப்பாசையாகும். கடந்த கால அரசியல் வரலாற்றை நாம் அவதானிக்கும் போது, இச்சபைகள், சிறுபான்மையின மக்களுக்குப் பாதகமில்லாமல் நடந்தன என்று கூறமுடியாது. சோல் பரிகுழுவினரின் எதிர்பார்ப்புக்கு நேர்மாறாக பேரின வாத மக்களின் பலத்தைக் கொண்ட இலங்கை அரசாங்கம், 1948ம் ஆண்டிலிருந்து 1977ம் ஆண்டு வரைக்கும், கபினட் சர்வாதிகார அமைப்பிலும், 1978ம் ஆண்டிலிருந்து இன்று வரைக்கும் ஒரு நிறைவேற்று அதிகாரம் கொண்ட, ஜனாதிபதி சர்வாதிகார முறையிலும், ஆட்சி செய்த காரணத்தினால், சிறுபான்மை யின மக்கள், முக்கியமாக இலங்கைத் தமிழர்கள் நியாயமான முறையில் நடத்தப் படவில்லை. தமிழர்களது நியாயமான கோரிக்கைகளை மறுதலிப்பதற்கு சிங்களத் தலைவர்கள் வரலாற்றிலிருந்து புதிய நியாயங்களைக் கண்டுபிடிக்கத் தொடங்கினர். சுதந்திர இலங்கையில் தம்முடைய உரிமைகள் நிராகரிக்கப்படலாம் என்றுணர்ந்த தமிழ்த்தலைவர்களின் பயத்தை பிரதிபலிக்கு முகமாக, இலங்கைத் தமிழ்க்காங்கிரஸ் 1947ம் ஆண்டு நடந்த பொதுத் தேர்தலுக்குப் பிறகு, தமது அரசியல் அந்தஸ்தைத் தாம் நிர்ணயிக்கும் உரிமையை தமக்களிக்க வேண்டும், என்று இங்கிலாந்து அரசாங்கத்திற்குத் தந்தி அனுப்பியது. இதை அம்பலவாணர் சிவராசா தன்னுடைய முதுமானி ஆராய்ச்சியில் சுட்டிக் காட்டுகிறார். நவம்பர் 1947ம் ஆண்டில் எஸ். ஜே.வி. செல்வநாயகம், தமிழர்களுடைய அபிலாஷைகள் நிறைவேற வேண்டுமானால், அது, ஒரு சமஷ்டி அரசியல் முறையில்

ஒரு சிறுபான்மை சமூகத்தின் பிரச்சினைகள் IV
மூலம்தான் அடையலாம் என்று கூறினார். 1949ம் ஆண்டு திருகோணமலையில் நடைபெற்ற தமிழரசுக் கட்சியின் முதலாவது மகாநாட்டில், பல்லின மக்கள் வாழும் இலங்கைக்கு, சமஷ்டி ஆட்சிமுறைதான் சிறந்தது என்ற முடிவு எடுக்கப்பட்டது.
சோல் பரி ஆணைக்குழுவினர் இலங்கையின் தேர்தல் தொகுதிகளையும் ஆசனங்களையும் நிர்ணயிக்கும் போது, இலங்கை சனத்தொகையில், இனங்களுடைய விகிதாசார முறைப்படி ஆசனங்கள் வழங்கப்படல் வேண்டும் என்றனர்.
சோல்பரி குழுவினரின் கணிப்பு பின்வருமாறு அமைந்தது.
சனத்தொகை கிடைக்கும் விகிதாசாரப்படி ஆசனங்களின்
எண்ணிக்கை 1. கரையோரச் சிங்களவர் - 41 32
2. கண்டிச் சிங்களவர் = 25 36 3. இலங்கைத் தமிழர்கள் = 12 13அல்லது 14 4. இந்தியத் தமிழர்கள் - 10 7 அல்லது 8 5. முஸ்லிம்கள் = 6 尘
சோல் பரி ஆணைக்குழுவினரின் ஆலோசனைப்படி, நியமிக்கப்பட்ட தேர்தல் ஆணைக்குழு, 86 தனி ஆசனத் தொகுதிகளை சிபாரிசு செய்தார்கள். மூன்று தொகுதிகளில், தலா இரு ஆசனங்களும், ஒரு தொகுதியில் மூன்று ஆசனங்களும் இருத்தல் வேண்டும் என்று தீர்ங்மானித்தார்கள்.
தேர்தல் ஆணைக்குழுவினரின் கணிப்பும், 1947ம் ஆண்டில் நடந்த பொதுத் தேர்தலையும் ஒப்பிட்டுப் பார்க்கும் போது, அவர்களுடைய கணிப்பு சரியாகவே இருந்தது. பின்வரும் அட்டவணை இதற்குச் சான்று பகரும்.

Page 45
அ. முகம்மது சமீம்
62
குழுவினரின் 1947ம் ஆண்டு
சமூகங்கள் கணிப்பு பொதுத்தேர்தல்
முடிவுகள்
சிங்களவர் 68 68 இலங்கைத்தமிழர் 13 அல்லது 14 13 இந்தியத்தமிழர் 7 அல்லது 8 7 முஸ்லிம்கள் 4. 6 பறங்கியர் - I
தேர்தல் ஆணைக்குழுவினர், தேர்தல் தொகுதிகளை வகுப்பதற்கு தாம் கையாண்ட காரணிகளை அடுத்த அத்தியாயத்தில் ஆராய்வோம்.

63 ஒரு சிறுபான்மை சமூகத்தின் பிரச்சினைகள் IV
11. தேர்தல் தொகுதிகளை அமைப்பதில் முற்போக்குவாதிகளுக் கெதிராக செய்யப்பட்ட சதி
சோல்பரி ஆணைக்குழுவினரின் அரசியல்யாப்பின் 76 (2) சட்டப் பிரிவின்படி, சனத்தொகை அடிப்படையில் தேர்தல் தொகுதிகளை நிர்ணயிக்கும்படி, “தேர்தல் தொகுதி நிர்ணய ஆணைக்குழுவிற்கு ஆணையிடப்பட்டது. இவ்வாணைக் குழு, 95 பிரதிநிதிகள் தெரிவாகும் பிரகாரம் பின்வருமாறு ஆசனங்களைப் பிரித்தது.
மாகாணங்களுக்கான ஆசனங்கள் பிரிவு -1947-56
மேல்மாகாணம் - 20 மத்திய மாகாணம்- 15 தென் மாகாணம் - 12 வட மாகாணம் - 9 கிழக்கு மாகாணம் - 7 வட-மேல் மாகாணம் - 10 வட மத்திய மாகாணம் - 5 ஊவா மாகாணம் - 7 சபரகமுவ மாகாணம் - 10
மேலே குறிப்பிட்ட ஆசனங்களின் எண்ணிக்கை, 1931ம் ஆண்டு நடைபெற்ற சனத்தொகை வாக்கெடுப்பை மையமாகக் கொண்டிருந்தது. இது அரசயாப்பின் 76வது பிரிவின்படி நிர்ணயிக்கப்பட்டது. அப்படியில்லாமல், 1946ம் ஆண்டு சனத்தொகையை அடிப்படையாகக் கொண்டிருந்தால் பின்வரும் ஆசனங்களின் எண்ணிக்கை கிடைத்திருக்கும்.
மேல் மாகாணம் - 26 மத்திய மாகாணம் - 17

Page 46
அ. முகம்மது சமீம் 64
வட மாகாணம் - 10 கிழக்கு மாகாணம் - 8 வடமேல் மாகாணம் - 12 வடமத்திய மாகாணம் - 6 ஊவா மாகாணம் - 8 சபரகமுவ மாகாணம் - 12
எல்லாமாக மொத்தம் 114 ஆசனங்கள் கிடைத்திருக்கும். இதில், சிங்க ள பிரதேசங்களுக்குப் பதினேழும், தமிழ்ப் பிரதேசங்களுக்கு இரண்டும் கூடுதலாகக் கிடைத்திருக்கும். சிறுபான்மையின மக்களின் பாதுகாப்புக்காகத்தான், சோல்பரி ஆணைக்குழுவினர் இந்த ஏற்பாட்டைச் செய்தனர். இதே அடிப்படையில் 1956ம் ஆண்டு ஒரு தேர்தல் ஆணைக்குழுவை நியமித்து அன்றைய நிலமைப்படி பிரிதிநிதிகளின் எண்ணிக் கையை கணிக்கலாம் என்றும் கூறினர். ஆனால், ஆணைக் குழு விற்கு வழங்கப்படும் அதிகாரத்தில் மாற்றம் ஏதாவது செய்ய வேண்டு மென்றால், யாப்பின் 40வது சட்டப் பிரிவின்படி 'பாராளுமன்றத்தின் அங்கத்தவர்களில் மூன்றில் இரண்டு பங்கு பேர் 29 (4) பிரிவின்படி வாக்களிக்க வேண்டும் என்றும் கூறியிருந்தனர். இப்படியெல்லாம் சிறுபான்மையின மக்களின் பாதுகாப்புக்காக சோல்பரி குழுவினர், தடைகளை விதித்திருந்தார்களென்றாலும், பெரும்பான்மையின சமூகத் தின் தலைவர்கள், மிகவும் சூட்சுமமாக இத்தடைகளை நீக்கினார்கள் என்பது வரலாறு.
இலங்கை ஒரு பல்லின மக்கள் வாழும் நாடானபடியால், பிரதிநிதித்துவத்தில் சமூகங்களிடையே ஒரு சமநிலை ஏற்படுத்த வேண்டும் என்று சோல்பரி ஆணைக்குழுவினர் விரும்பினர். இப்படிச் செய்யும் போது, சில சமூகங்களுக்குத் தமக்குச் சாதாரணமாகக் கிடைக்க வேண்டியதை விட அதிகமான ஆசனங்கள் கிடைப்பதற்கு வழிவகுத்தனர். முக்கியமாக இப்படிப் பயனடைந்த வர்கள், கண்டிச் சிங்களவரும், இலங்கைத் தமிழர்களுமே. பின்தங்கிய பிரதேசங்களுக்கு

E 5 ஒரு சிறுபான்மை சமூகத்தின் பிரச்சினைகள் IV
முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்ற அடிப்படைக் கொள்கையின் பிரகாரமே, இப் பிரதேசங்களில் வாழ்ந்த மக்களுக்கு அதிகப்படியான பிரதிநிதித்துவம் கிடைக்க வாய்ப்பிருந்தது. 1947ம் ஆண்டில், சனத் தொகையின் அடிப்படையில், கண்டிச் சிங்களவருக்கு, 25 ஆசனங்களே கிடைத்திருக்க வேண்டும், ஆனால் இந்த ஏற்பாட்டின் அடிப்படையில், அவர்கள் 30க்கும் 36க்கு மிடையிலான ஆசனங்களைப் பெறும் வாய்ப்பைப் பெற்றனர். இலங்கையின் தேர்தல் தொகுதிகள், எல்லாம் ஒரு சமநிலையில் அமைந் திருந்தால், இலங்கைத் தமிழர்கள் வெகுவாகப் பாதிக் கப்பட்டிருப்பார்கள். ஆனால் அவர்கள் வாழ்ந்த பிரதேசங் களில், நிலப்பரப்பு அடிப்படையில், அதிகப்படியாக ஒர் ஆசனம் வழங்கப்பட வேண்டும் என்றிருந்ததால் (1000 சதுரமைல் நிலப்பரப்பிற்கு ஒர் அதிகப்படியான ஆசனம் என்ற அடிப்படையில்), சனத்தொகையின் அடிப்படையில், 12 ஆசனங்கள் கிடைக்க வேண்டிய இடத்தில் 13 ஆசனங்கள் கிடைத்தன. இந்தியத் தமிழர்களைப் பொறுத்த வரையில் அவர்களுடைய சனத் தொகைக்கேற்ப அவர்களுக்கு ஆசனங்கள் கிடைக்கவில்லை. அவர்கள் கண்டிச் சிங்களவர் பிரதேசத்தில் இருந்த காரணத்தினால், அவர்களுக்கென்று தனியாகத் தொகுதிகளை ஏற்படுத்த முடியவில்லை. இந்நிலையில் அவர்களுக்கு ஏழு ஆசனங்கள் கிடைத்ததே அவர்களுடைய பாக்கியம்.
முஸ்லிம்களைப் பொறுத்த வரையில், தேர்தல் ஆணைக்குழுவினர், 6 முஸ்லிம் பிரதிநிதிகள் தெரிவு செய்யப்படுவதற்கு வாய்ப்பளித்தனர். கொழும்பு மத்திய தொகுதியில், சனத்தொகையில் 31.8 சதவிகிதம் முஸ்லிம்கள் இருந்த காரணத்தினால், தங்களுக்கு ஒரு அங்கத்தவரை அனுப்பும் வாய்ப்பு கிடைக்கும் என்றனர். கிழக்கு மாகாணத்தில், முஸ்லிம்கள் 3 பிரதிநிதிகளைத் தெரிவு சேய்வதற்கு வாய்ப்பளிக்கப்பட்டனர். தேர்தல் குழுவினர், 'ஒன்றுக்கு மேற்பட்ட பிரதிநிதிகளைத் தெரிவு செய்யும்

Page 47
அ. முகம்மது சமீம் 66
தொகுதிகளை வகுப்பதால், கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம் களுக்கு 4 ஆசனங்களும் தமிழர்களுக்கு 3 ஆசனங்களும் கிடைக்கும் வாய்ப்பேற்பட்டிருக்கும். ஆனால், இப்படிச் செய்வதனால் முஸ்லிம்களுக்குப் பட்சபாதம் காட்டுவதாக ஆகிவிடும், என்ற காரணத்தினால் நாம் இதைச் செய்ய வில்லை' என்று கூறினர். வடமாகாணத்தில் 53,300 என்ற சராசரி சனத்தொகைக்கு ஒரு ஆசனம் என்றிருந்து, 31,500 சனத்தொகையைக் கொண்ட மன்னார்தொகுதிக்கு, ஒர் ஆசனம் கொடுப்பதற்குக் காரணம், இங்கே 10,500 முஸ்லிம்கள் தம்முடைய பிரதிநிதி ஒருவரைத் தெர்ந்தெடுக்கும் வாய்ப்பை அவர்களுக்குக் கொடுப்பதற்காகவே, என்று குழுவினர் கூறினர். மன்னாரிலுள்ள ஏனைய சமூகத்தினரது ஆதரவு முஸ்லிம்களுக்குக் கிடைக்கும் என்று அவர்கள் நம்பினர். வடமேல் மாகாணத்தில், 31,200 சனத்தொகையைக் கொண்ட புத்தளம் தேர்தல் தொகுதிக்கு ஒரு ஆசனம் கொடுக்கப் பட்டதன் காரணம், அங்கு வாழும் 10, 700 முஸ்லிம்கள், தம்முடைய பிரதிநிதி ஒருவரைத் தேர்ந்தெடுப்பதற்காகவே என்று விளக்கினர் தேர்தல் குழுவினர். தேர்தல் ஆணைக் குழுவினர், 'குறைந்தபட்சம் 4 முஸ்லிம்கள் பாராளுமன்றத் திற்குத் தெரிவு செய்யப்படுவார்கள்' என்று நம்பினர். இன்னும் இரண்டு தொகுதிகளில், முஸ்லிம்கள் தங்களின் பிரதி நிதிகளைத் தெரிவு செய்வதற்கு வாய்ப்பிருக்கிறது என்று கூறினர்.
கீழே உள்ள 1947ம் ஆண்டு தேர்தல் முடிவுகளைப் பார்க் கும் போது, ஆணைக்குழுவினரின் நம்பிக்கை வீண் போக வில்லை என்பது தெளிவாகிறது.

67 ஒரு சிறுபான்மை சமூகத்தின் பிரச்சினைகள் IV
தொகுதி மாகாணம் தெரிவுசெய்யப்பட்ட கட்சி
அங்கத்தவர்
1. மத்திய மேல் கொழும்பு மாகாணம். றி.பி.ஜாயா(2வது
அங்கத்தவர்) ஐ.தே.க 2. புத்தளம் வடமேல்
மாகாணம் எச்.எஸ்.இஸ்மாயில் ஐ.தே.க
3. மூதூர் கிழக்கு
மாகாணம் ஏ.ஆர்.எம். அபூபக்கர் ஐ.தே.க 4. கல்முனை கிழக்கு
மாகாணம் எம்.என்.காரியப்பர் | சுயேட்சை
5. மட்டக் கிழக்கு
களப்பு மாகாணம் ஏ.என்.சின்னலெப்பை ஐ.தே.க 6. பொத்
துவில் கிழக்கு
மாகாணம் எம்.எம். இப்ராஹிம் | சுயேட்சை
இவர்களோடு, மார்ச் மாதம் 1950ல் நடந்த இடைத்தேர்தலில் மத்திய மாகாணத்தில், மஸ்கெலிய தொகுதி யிலிருந்து, ஏ.அசீஸும், 1950ம் ஆண்டு மே மாதம் கொழும்பு மத்திய தொகுதியில் நடந்த இடைத் தேர்தலில் டாக்டர். எம். சி. எம். கலிலும் தெரிவு செய்யப்பட்டதால், பாராளு மன்றத்தில் முஸ்லிம்களின் எண்ணிக்கை எட்டாகக் கூடியது.
தேர்தல் ஆணைக்குழுவினர், தேர்தல் தொகுதிகளை நிர்ணயிக்கும்போது, சிங்கள சமூகத்தில் தாழ்ந்த சாதியினருக்கு தமது சாதியைச் சேர்ந்தவர்களைப் பிரதிநிதிகளாகத் தெரிவு செய்யும் வாய்ப்பை அளித்தனர். தாழ்ந்த சாதியினர் அதிகமாக வாழும் இடங்களில், ஒன்றுக்கு மேற்பட்ட அங்கத்தவர்களைத் தெரிவு செய்யும் வாய்ப்பை அளித்தனர். இவர்களுடைய

Page 48
அ. முகம்மது சமீம் 68
தேர்தல் ஏற்பாடுகள், பிரஜா உரிமை சட்டத்தினாலும், 1948; 1949ம் ஆண்டுகளில் தேர்தல் சட்டத்தில் கொண்டுவரப்பட்ட மாற்றங்களினாலும் சீர்குலைந்தன. இந்தியத் தமிழர்கள் வாக்குரிமை இழந்த காரணத்தினால், ஏழு தொகுதிகளில், வாக்காளர் தொகை வெகுவாகப் பாதிக்கப்பட்டது.
1947ம் ஆண்டு நடந்த பொதுத் தேர்தலோடு 1953ம் ஆண்டு பொதுத் தேர்தலை ஒப்பிட்டுப் பார்க்கம் போது, 68 ஆசனங்களை வென்ற சிங்கள சமூகத்தினர், 75 ஆசனங்களை வென்றனர். இந்தியத் தமிழர்கள் தங்களது எல்லா ஆசனங் களையும் இழந்தனர். இந்த நிலைமை, இதன்பிறகு நடந்த பொதுத் தேர்தல்கள் எல்லாவற்றிலும் பிரதிபலித்தது. 1947ம் ஆண்டில் நடந்த பொதுத் தேர்தலில் இருந்த வாக்காளர் தொகையை 1952ம் ஆண்டில் நடந்த பொதுத் தேர்தலோடு ஒப்பிட்டுப் பார்ப்போம்.
1947ம், 1952ம் ஆண்டுகளில் நடந்த பொதுத்தேர்தல்களில் வாக்காளர் எண்ணிக்கை
தேர்தல் தொகுதிகள் பொதுத்தேர்தல் 1947 互952
நுவரெலியா 24, 295 9, 279 தலாவாக்கெல்லை 19,299 2,912 கொட்டகலை 17,092 7, 749 நாவலப்பிட்டிய 22,580 10,082 மஸ்கெலிய 24,427 8,703 ஹப்புத்தளை III, 063 7,051 பதுளை 43,396 28, 151
1947ம் ஆண்டின் பிரதிநிதித்துவ முறைக்குக் காரணகர்த்தா வாகிய சர். ஐவர் ஜெனிங்ஸ், இதை வகுக்கும் போது, "நகரவாசிகளை விட கிராமவாசிகளுக்கே நான் முக்கியத்துவம் அளிக்கிறேன்" என்று கூறினார். கிராமப்புறங்களை விட,

69 ஒரு சிறுபான்மை சமூகத்தின் பிரச்சினைகள் IV
நகரங்களில்தான் ஒரு வகை ஒழுங்கு இருப்பதனால், இதுகால வரை, சட்டசபையை ஆக்கிரமித்துக் கொண்டிருந் தவர்கள் நகரவாசிகளானதால், கிராம வாசிகளுக்கும், அரசியலில் பங்கிருக்க வேண்டும் என்பது அவரது வாதமாகும். இதன் காரணமாக, அரசியல் முதிர்ச்சி பெற்ற கரையோர சிங்களவருக்கு அவர்களுக்கு நியாயமாகக் கிடைக்க வேண்டிய பிரதிநிதித்துவம் மறுக்கப்பட்டது. இதற்கு இன்னொரு காரணமும் இருந்திருக்கலாம். முற்போக்குக் கருத்துக்களைக் கொண்ட இடதுசாரிக்கட்சிகளின் செல்வாக்கு நகரப்புறங்க ளிலும் கரையோரப் பகுதிகளிலும் அதிகமாக இருந்த காரணத்தினால், முதலாளி வர்க்கத்தினரதும், பிற்போக்குக் கருத்துக்களைக் கொண்ட நிலப் பிரபுத்துவ வர்க்கத்தினரதும், அரசியல் ஆதிக்கத்தை ஸ்திரப்படுத்துவதற்கும், முதலாளி வர்க்கத்தின் குலகுருவான ஜென்னிங்ஸ் போன்றவர்கள் இந்த ஏற்பாட்டைச் செய்திருக்கலாம். 1946ம் ஆண்டு சனத்தொகை யின் அடிப்படையில், கரையோர சிங்களவருக்கு நியாயமாகக் கிடைக்க வேண்டிய ஆசனங்களின் எண்ணிக்கை 41. ஆனால் இந்த ஏற்பாட்டின்படி அவர்களுக்குக் கிடைத்த ஆசனங்கள் 32, சனத்தொகையின் அடிப்பன் டயில், 25 ஆசனங்கள் கிடைக்க வேண்டிய கண்டிச் சிங்களவருக்கு 36 ஆசனங்கள் கிடைத்தன. இதனால் மிகவும் பாதிக்கப்பட்டவர்கள் இடதுசாரிக்கட்சிகளே. இவர்களுடைய பிரச்சாரங்கள் கூட கரையோர சிங்களவர் வாழும், தென்மேற்குக் கரையோரப் பகுதிகளிலும், கெலனி பள்ளத்தாக்கைச் சேர்ந்த பெருந்தோட்டப் பிரதேசங்களிலுமே, அதிகமாக இருந்தன. இந்த அரசியல் சதியினால், இப் பிரதேசங்களில் வாழும் சிங்களச் சமூகம் தனக்கு நியாயமாகக் கிடைக்க வேண்டிய பிரதிநிதித்துவத்தை இழந்தது.
ஜனநாயக அடிப்படையில் ஒரு வருக்கு ஒரு வாக்கு என்பது நடைமுறையில் சாத்தியப்படவில்லை. நிலப்பரப்பு அடிப்படையில் பின்தங்கிய பிரதேசங்களுக்கு அதிகப்படியான ஆசனங்கள் வழங்கப்பட்ட காரணத்தினால், சனத் தொகை
அதிகமாக இருக்கும் மேற்குக் கரையோரப் பகுதி மக்களும்

Page 49
அ. முகம்மது சமீம் 7 O
தென்கரையோரப் பகுதி மக்களும் வெகுவாகப் பாதிக்கப் பட்டார்கள். இந்தியத்தமிழர்களின் வாக்குரிமை பறிக்கப் பட்டதனால், இந்த வேற்றுமை இன்னும் அதிகமாகியது. 1947ம் ஆண்டு நடந்த பொதுத் தேர்தலில், 95 ஆசனங்களில், 25 ஆசனங்கள், 40,000க்கும் 60,000க்கும் இடையிலுள்ள வாக்காளர் தொகுதிகளிலிருந்து தெரிவு செய்யப்பட்டன. மேலும் 25 ஆசனங்கள் 5000லிருந்து 25,000 வாக்காளர்களைக் கொண்ட தொகுதிகளிலிருந்து தெரிவு செய்யப்பட்டன. 1952ம் ஆண்டு நடந்த பொதுத்தேர்தலில், இந்த வித்தியாசம் இன்னும் அதிகமாகியது. 40,000க்கும் 60,000க்கும் இடையிலுள்ள வாக்காளர் தொகுதிகளில் 25 பிரதிநிதிகள் தெரிவு செய்யப்பட்ட அதே வேளையில், 31 பிரதிநிதிகள், 5000க்கும் 25,000க்கு இடையிலுள்ள வாக்காளர் தொகுதிகளிலிருந்து தெரிவு செய்யப்பட்டனர். 1956ம் ஆண்டு நடந்த பொதுத் தேர்தலில், 60,000 வாக்காளர்களைக் கொண்ட தொகுதிகளில் 9 ஆசனங்களும், 20,000-25,000 வாக்காளர்களைக் கொண்ட தொகுதிகளில், 8 ஆசனங்களும், 15,000-20,000 வாக்காளர் தொகையைக் கொண்ட தொகுதிகளில் 2 ஆசனங்களும், 5,000-10,000க்கும் இடைப்பட்ட வாக்க்ாளர் தொகுதி களிலிருந்து 3 ஆசனங்களும், 5000 வாக்காளருக்குக் குறைவாக இருந்த தொகுதிகளில் 1 ஆசனமும் கிடைத்தன. மேலே உள்ள புள்ளிவிபரங்களைப் பார்க்கும் போது, 30,000க்கு மேற்பட்ட வாக்குகளைப் பெற்ற ஒருவர் பிரதிநிதியாகத் தெரிவு செய்யப்படும் அதே வேளையில், 2500 வாக்குகளைப் பெற்ற ஒரு வரும் பிரதிநிதியாகுவதற்கு வாய்ப்பிருந்தது. எனவே 1956ம் ஆண்டில் நிறுவப்பட்ட பாராளுமன்றம் எவ்வகையிலும் மக்களைப் பிரதிநிதித்துவப் படுத்துவதாக இருக்கவிலலை. இதனாற்றான் கிராமப்புற மக்கள் அதிகமான பிரதிநிதிகளின் எண்ணிக்கையோடு அரசாங்கத்தை நடத்த முற்பட்டன. இதனால் அவர்களை ஆட்டிப்படைத்த நிலப் பிரபுத்துவ ஆட்சியாளர்கள் அரசியலில் அதிக செல்வாக்கைச் செலுத்தத் தொடங்கினர். கிராமப்புற, கல்வி அறிவில்லாத பாமர

71 ஒரு சிறுபான்மை சமூகத்தின் பிரச்சினைகள் IV
மக்களின் வாக்குகளின் பலத்தில் பண்டைய பிரபுத்துவ குடும்பங்கள் தமது ஆதிக்கத்தை தொடர்ந்தும் நடத்தின.
1956ம் ஆண்டில் நடந்த பொதுத் தேர்தலில் பண்டார நாயக்கா, பதவிக்கு வந்தது, இந்த அடிப்படையிலேயே. கிராமப்புற மக்களுக்கு சனத்தொகையின் அடிப்படையில் கிடைக்க வேண்டிய ஆசனங்களை விட அதிகமான ஆசனங்கள் கிடைத்த காரணத்தினால், நிலப்பிரபுத்துவ சக்திகளும், தேசிய "பூர்ஷ"வா சக்திகளும் இதனைப் பயன்படுத்தி ஆட்சியைக் கைப் பற்றின. பாவம், முற்போக்கு எண்ணம் படைத்த நகரப்புற மக்களும், முக்கியமாக இந்திய வம்சாவழியினரும் வஞ்சிக்கப்பட்டார்கள். ஆகவே "1956ம் ஆண்டில் நடந்த அரசியல் மாற்றம், ஒர் அரசியல் புரட்சி" என்ற அரசியல்வாதிகளின் கணிப்பு சரியானதா? இங்கே நடந்தது "கிராமப்புற மக்களின் தேசிய உணர்வைத் தூண்டிவிட்டு , இவ்வுணர்வைப் பயன்படுத்தி அதிகாரத்தைக் கைப்பற்றிய நிலப் பிரபுத்துவ பிற்போக்கு சக்திகளின் வெற்றி" என்று கூறுவதில் தவறேதும் இருக்கிறதா?

Page 50
அ. முகம்மது சமிம் 72
12. இடதுசாரிக் கட்சிகளின் அரசியல் முதிர்ச்சியின்மை
நூற்றுக்கு 92 சதவிகித எழுத்தறிவு பெற்ற ஓர் அரசியல் முதிர்ச்சி பெற்ற சமுதாயம் வாழும் இலங்கையில், முற்போக்குக் கருத்துக்களைக் கொண்ட 'சோசலிச இடதுசாரிக் கட்சிகள், இதுகால வரை, ஒர் அரசாங்கத்தை அமைக்க முடியாமை ஒரு பெரும் புதிராகவே இருந்து வந்திருக்கிறது. நாம் ஏற்கனவே கூறியதுபோல, வலதுசாரிச் சக்திகள் தேர்தல் தொகுதிகளைத் தமக்குச் சாதகமாக பிரித்தது ஒரு காரணம். இடதுசாரிக் கட்சிகளிடையே ஒற்றுமையின்மை இன்னொரு காரணம். 1947ம் ஆண்டு தேர்தலை நாம் ஆராய்ந்தால் இலங்கை இந்திய காங்கிரஸ் உட்பட இடதுசாரிக் கட்சிகள் ஐந்து லட்சம் வாக்குகளைப் பெற்ற அதே வேளையில், அரசாங்கத்தை அமைத்த ஐக்கிய தேசியக் கட்சி ஏழரை லட்சம் வாக்குகளையே பெற்றது. சுயேட்சையாக நின்று வெற்றிபெற்ற அங்கத்தவர்கள் பெற்ற ஐந்தரை லட்சம் வாக்குகளில், ஒரு கணிசமான தொகையினர் இடதுசாரிக் கொள்கைகளைக் கொண்டிருந்தனர். 95 ஆசனங்களில் 42 ஆசனங்களையே வென்ற ஐக்கிய தேசியக் கட்சி சுயேட்சை அங்கத்தவர்களின் உதவியுடன் அரசாங்கத்தை அமைத்தது.
அடுத்த பக்கத்தில் உள்ள அட்டவணையைப் பார்ப்போம்.

ஒரு சிறுபான்மை சமூகத்தின் பிரச்சினைகள் IV
73
00I960°00′II98* I38 ‘Iqoỹuqale)
I “ZZIogo 63I9řoggG8Iocco, impo
|- no 131Œulo
Ɛ *998° 9’ 083 oz)8som §§§) sowegiæ (§
† *//甜甜66ř ogg6de 1915. do đĩlgio
I ”III oz.Z$6 ‘986Go-To@fÎuose,
Go-Too Togogoogoooo @
$ ogG0 * 9.£6'I ‘o II0IsoUso*.ogogo urīg)
ZooZooZ o £I$$“0).£IGo-To Ziąogofīqīgo
g *O I0 I8°0 I030 of Oz83Go-Too?ugi ogło usorgiae
运9密习9塔u的函了圆
Zojoj,2渤9o69869 ožio/6637:e omgoo mɛsoo %%통道的說트mg5 i9道트로트德토
自信电或토9편토5國해恒9图增自己물을획그gW토트그Tmg활뚫T역
loose*ids) qe osog)? Nourie) (?) ingef, q, og I

Page 51
அ. முகம்மது சமீம் 74
மேலே உள்ள அட்டவணையை நோக்கும்போது, 39,696 விகித வாக்குகளைப் பெற்ற ஐக்கிய தேசியக் கட்சி அரசாங் கத்தை அமைத்தது. முன்னைய அரசசபையில் அங்கம் வகித்த 45 அங்கத்தவர்களில் 22 அங்கத்தவர்கள் தேர்தலில் தோல்வி கண்டனர். சபாநாயகர், உப சபாநாயகர் உட்பட மூன்று முன்னை நாள் அமைச்சர்கள் தோல்வியுற்றனர். ஐக்கிய தேசியக் கட்சி 75 அல்லது 80 ஆசனங்களை வெல்லும் என்று எல்லோரும் எதிர்பார்த்தனர். மார்க்சிய கட்சிகள் தென்மேற்குக் கரையோரப் பகுதியிலும் சப்ரகமுவ மாகாணத்திலும் வெற்றி பெற்றதோடு, ஐக்கிய தேசியக் கட்சியின் கோட்டைகளென கருதப்பட்ட தொகுதிகளிலும் தமது செல்வாக்கை நிலை நாட்டின. இடதுசாரிக் கட்சிகள் அரசாங்கத்தைக் கைப்பற் றலாம் என்ற பயத்தினால் உந்தப்பட்ட சேனாநாயக்கா அரசாங் கம் தொழிலாளர்களுக்கும், இடதுசாரிக்கட்சிகளுக்கும் எதிராக நடவடிக்கை எடுக்கத் தொடங்கியது.
இப்பொதுத்தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி தோல்வி யடைந்திருக்கலாம். இக்கட்சி காப்பாற்றப் பட்டதற்கு நாம் மூன்று காரணங்களைக் காட்டலாம். முதலாவது காரணம், இடதுசாரிக்கட்சித் தலைவர்களிடையே இருந்த தனிப்பட்ட குரோதமும் அவர்களிடையே இருந்த கருத்து வேறுபாடு களுமே. அவர்களிடையே ஒற்றுமையில்லாத காரணத்தினால், பல தொகுதிகளில் அவர்கள் மோதினர். ஜே.ஆர். ஜயவர்தன தயாரித்த ஒர் அறிக்கையின்படி இடதுசாரிக்கட்சிகள் இப்படித் தமக்குள்ளே போட்டியிடாமல் இருந்திருந்தால், இன்னும் 3 ஆசனங்களை வென்றிருப்பர். இரண்டாவதாக, ஐக்கிய தேசியக் கட்சி வேட்பாளர்கள் தமக்கிருந்த பணப் பலத்தினாலும், வாகன வசதி இருந்ததினாலும் வாக்காளர்களை வாக்குச்சாவடிகளுக்குக் கொண்டு செல்வதற்கும், பணப் பலத்தின் மூலம், காடையர்களைக்
* (ஜனாதிபதி ஆவன க் காப்பகத்திலுள்ள ஜே ஆர். ஜயவர்தனாவின் ஆவணங்கள்)

75 ஒரு சிறுபான்மை சமூகத்தின் பிரச்சினைகள் IV
கொண்டு வாக்காளர்களைப் பயமுறுத்தியும், பணத்தை வாரி இறைத்தும் அவர்களால் வெற்றியடைய முடிந்தது. கடைசியாக தேர்தல் தொகுதிகளைப் பிரித்ததன் மூலம், இடதுசாரிக் கட்சியினர் வெற்றிபெறாமல் செய்தனர். மார்க்சியக் கட்சிகள் போட்டியிட்ட மேற்கு, தென் மாகாணங்களில் வாக்காளர் தொகையினரை அதிகமாக்கியும், ஏனைய மாகாணங்களின் வாக்காளர் எண்ணிக்கையைக் குறைத்தும் 6 இடதுசாரிக் கட்சியினர் அதிகமான ஆசனங்களைப் பெறாமல் தடுத்தனர். தேர்தல் தொகுதி களிடையே இருந்த வேறுபாட்டை நாம் கவனித்தால், மூன்று தொகுதிகளில் 55,000க்கும் 56,000க்கும் இடையிலான வாக்காளர் இருந்த வேளையில் பொலன்னறுவை தொகுதியில் 5839 வாக்காளர்களே இருந்தனர். கீழே உள்ள அட்டவணை இதனை விரிவாகக் காட்டும்.
1947ம் ஆண்டு தேர்தல் தொகுதிகளின் வாக்காளர் எண்ணிக்கை
LO ITA5AT 600 TIL Ó தேர்தல் தொகுதியின் சராசரி சனத்தொகை
(ஆயிரம்) மேல் மாகாணம் 93.4 தென் மாகாணம் 80.2 மத்திய மாகாணம் 75.5 சப்ரகமுவ மாகாணம் 74.7 வடமேற்கு மாகாணம் 66.8 வடமாகாணம் 53.3 ஊவா மாகாணம் 53. I கிழக்கு மாகாணம் 38.8 வட மத்திய மாகாணம் 27.9
மேலே உள்ள அட்டவணையைப் பார்த்தால் மேல் மாகாணத்தில் உள்ள தேர்தல் தொகுதிகளின் சராசரி

Page 52
அ. முகம்மது சமீம் 76
சனத்தொகை 93,400 ஆக இருந்த வேளையில் வடமத்திய மாகாணத்தின் தேர்தல் தொகுதிகளின் சராசரி சனத்தொகை 27,900 மாக இருந்தது. இந்த வேற்றுமையின் காரணமாகக் கிராமப் புற மக்களின் மேல் ஆதிக்கம் செலுத்திவந்த பழமைவாதிகள் பயனடைந்தனர். இது டி.எஸ். சேனாநாயக்கா வுெக்கு அனுகூலமாக இருந்தது.
சில தேர்தல் தொகுதிகளிலுள்ள வாக்காளர் தொகையைப் பார்ப்போம்.
வவுனியா 11,099 அப்புத்தளை 11,122 மதவாச்சிய 11,403
அனுராதபுரம் 11,585 ஹொரொவபொத்தானை 12,785
மேலே உள்ள தொகுதிகளிலுள்ள ஒருவருடைய வாக்கு அதிக சனத்தொகையுள்ள தொகுதிகளின் ஐந்து வாக்குகளுக்குச் சமன். கிராமப் புறங்களிலிருந்து தெரிவு செய்யப்பட்டவர்கள், பெரும்பாலும் பழமைவாதிகளே. சேனாநாயக்கா, அரசாங்கம் அமைப்பதற்கு இது மிகவும் செளகரியமாயமைந்தது. மார்க்சீயக் கட்சிகள் போட்டியிட்ட தொகுதிகள், ஏனைய தொகுதிகளைப் போல் இருந்திருந்தால், ஒரு சமயம், இடதுசாரிக்கட்சிகளே அரசாங்கத்தை அமைத்திருக்கலாம். இலங்கைக்கு டொமினியன் அந்தஸ்து வழங்குவதில் தாமதித்ததற்குக் காரணம் காட்டிக் கொண்டிருந்த பிரித்தானிய அரசாங்கததைப் பயமுறுத்துவதற்கு மார்க்சீயவாதிகளின் தேர்தல் வெற்றி, சேனாநாயக்காவிற்கு அனுகூலமாயமைந்தது.
மார்க்சீய வாதிகளின் இந்த வெற்றியை "சிவப்பு அபாயம் என்று சேனாநாயக்கா மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்தார். 1947ம் ஆண்டு, ஆகஸ்ட் 22ம் திகதி "டெய்லி நியூஸ்” பத்திரிகையில் வெளியான செய்தியின்படி, சேனாநாயக்காவும், பண்டார நாயக்காவும், கண்டியில் நடந்த ஒரு கூட்டத்தில்,

77 ஒரு சிறுபான்மை சமூகத்தின் பிரச்சினைகள் IV
"மார்க்சீயவாதிகள் தேர்தலில் வெற்றிபெற்றால், இலங்கையில் மதத்தை அழிப்பதோடு, இலங்கையை ரஷ்யாவுடன் இணைத்து விடுவார்கள்' என்று கூறினார்கள். எந்தக் கட்சியில் சேர்வ தென்று தெரியாமல், வேலியில் அமர்ந்திருந்த 21 சுயேட்சை அங்கத்தவர்கள் ஐக்கிய தேசியக் கட்சியில் சேர்வதற்கு இப்பிரச்சாரம் உதவி செய்தது. சுயேட்சை அங்கத்தவர்களையும் கொண்ட ஒரு கூட்டு அரசாங்கத்தை அமைக்க இடதுசாரிக் கட்சியினர் தவறிவிட்டனர். 95 ஆசனங்களைக் கொண்ட பாராளுமன்றத்தில் 53 ஆசனங்களோடு அரசாங்கத்தை அமைத்திருக்கலாம்.
1947ம் ஆண்டின் தேர்தல் முடிவுகளை மிகவும் நுணுக்கமாக ஆராய்ந்திருந்தால், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைப் பீடத்துக்கு ஒரு முக்கியமான உண்மை புலப்பட் டிருக்கும். தம்முடைய வலதுசாரி அரசாங்கத்திற்குரிய அபாயம், இடதுசாரிக்கட்சிகளிடமிருந்து அல்ல, இந்த சுயேட்சையாக வெற்றிபெற்றவர்களிடமிருந்துதான் வரப்போகிறது என்ற உண்மையை விளங்கியிருப்பார்கள். ஐந்தரை லட்சம் வாக்குகளைப் பெற்ற சுயேட்சை வேட்பாளர்களின் வெற்றியின் தாத்பரியம் அப்போது ஏனையோருக்குப் புலப்படவில்லை. அவர்கள் ஒரு தனிக்கட்சி ஆரம்பிப்பதற்கு எடுத்த முயற்சி வெற்றி பெறவில்லை. இவர்களை வலதுசாரியினர் என்று கூறுவதைவிட "மத்திய - இடதுசாரியினர் என்றழைக்கலாம். இவர்கள், ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சிக்கு அபாய எச்சரிக்கையாக விளங்கியதற்கு நான்கு காரணங்களைக் காட்டலாம்.
மார்க்சியவாதிகளைப் போல், தனிப்பட்ட குரோதங்க ளினாலும், கொள்கை வேறுபாடுகளினாலும் பாதிக்கப் பட்டதைப் போல், இந்த 'மத்திய - இடதுசாரியினர்' பாதிக்கப்படவில்லை. இவர்கள் மதநம்பிக்கையில்லாதவர்கள்" என்ற குற்றச்சாட்டை ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர்கள் இவர்களின் மேல் சுமத்தமுடியவில்லை. ஏனென்றால் இவர்கள்

Page 53
அ. முகம்மது சமீம் 78
மதத்தில் நம்பிக்கைக் கொண்டவர்கள் மட்டுமல்ல, மதத்திற்கு அதிக இடம் கொடுக்க வேண்டுமென்ற கொள்கையைக் கொண்டவர்களாக, இருந்ததனால்தான் இவர்களை மதநம்பிக் கையில்லாதவர்கள் என்று சேனாநாயக்காவினால் ஒதுக்கி விட முடியவில்லை. மூன்றாவதாக இவர்கள், மாக்சீய வாதிகளைப் போலல்லாமல், அரசியல் கூட்டங்களில் தாய்மொழியைப் பாவித்ததுமல்லாமல், தமது கலாச்சாரத்தின் சின்னங்களையும் உபயோகித்தனர். மேலும் மார்க்சீய வாதிகள், மேற்கு நாடுகளிலிருந்து வந்த தத்துவங்களைப் பின்பற்றிய தோடு, மேற்கு நாட்டவரைப் போன்று தமது நடையுடைப் பாவனைகளையும் பின்பற்றிய காரணத்தினால், பண்டைய மரபைப் பின்பற்றி வந்த கிராமத்து சனங்களின் அபிமானத்தை மார்க்சீயவாதிகளால் வெல்ல முடியவில்லை. கடைசியாக இந்த 'மத்திய - இடதுசாரியினர், மத-கலாச்சார மறுமலர்ச்சிக்காக வாதிட்டதோடு, அவர்களுடைய சீர்திருத்தக் கருத்துக்கள், கலாசாரத் தைத் துண்டித்துவிடாமல், பண்டைய மரபோடு ஒட்டிச் செல்வதாயிருந்தது. மார்க்சீயவாதிகள். நகரப்புற தொழிலாளர்களின் ஆதரவில் தங்கியிருந்த காரணத் தினால் கிராம மக்களுடைய அபிலாஷைகளை அறியாமலிருந் தனர். அத்தோடு, இவர்கள் கூறிய சீர்திருத் தங்கள் கிராம மக்களுக்குப் புரியவில்லை. ஆனால் 'மத்திய -இடதுசாரியினர்' கிராமத்து மேன்மக்களுடைய ஆதரவைப் பெற்ற தோடு, சாதாரண மக்களின் மதிப்பையும் பெற்றனர். இதனாற்றான் இவர்கள் 'சுயேட்சையாக நின்று இத்தொகுதிகளில் வெற்றி பெற்றனர். 1956ம் ஆண்டில் ஏற்பட்ட அரசியல் மாற்றத்திற்கு இவர்கள்தான் காரணம் என்றால் மிகையாகாது. இந்த உண்மையை ஐக்கிய தேசியக் கட்சித் தலைமைப்பீடம் உணர மறந்தது. இந்த அரசியல் தீர்க்கதரிசனம் ஐக்கிய தேசியக் கட்சியினரிடம் இல்லாத காரணத்தினால், அவர்கள் கொஞ்ச காலம் அரசியல் அஞ்ஞாத வாசத்தில் இருக்கநேரிட்டது.
1947ம் ஆண்டு நடந்த பொதுத் தேர்தலில் இடதுசாரி கட்சியினர், பல கட்சிப் பிரிவுகளாக தேர்தலில் போட்டி

79 ஒரு சிறுபான்மை சமூகத்தின் பிரச்சினைகள் IV
யிட்டனர். எல். எஸ். எஸ்.பி, என்றும், பி.எல்.பி என்றும் சி.பி. LSS, BLP. CD என்றும் வெவ்வேறு கட்சிகளாகப் போட்டியிட்டனர். லங்கா சமசமாஜக்கட்சி, போல் ஷேவிக் லெனினிஸ்ட் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சி என்ற இவ்விடதுசாரிக் கட்சித் தலைவர்களிடையே, தனிப்பட்ட குரோதங்கள் மட்டு மல்ல, கொள்கையடிப்படையிலும் இவர்கள் வேறுபட்டனர். வேலை நிறுத்தப் போராட்டங்களின் காரணமாக, வேலை இழந்த அரசாங்க ஊழியர்களது ஆதரவும் இடதுசாரிக் கட்சியினருக்கு ஆரம்பத்திலிருந்தது. தமக்குப் பொதுமக் களிடையே இருந்த ஆதரவை இவர்கள் பயன்படுத்தத் தவறிவிட்டனர். தனிப்பட்ட முறையில் ஐக்கிய தேசியக் கட்சி வேட்பாளர்களைச் சாடிய இவ்விடதுசாரிக் கட்சியினர், தம்முடைய புரட்சிகர திட்டத்தையும், ஐ.தே.கட்சியின் ஊழலையும், "தொழிலாளர்களின் எதிரி" என்ற தன்மையை யும், மக்கள் முன்வைத்து, பாராளுமன்ற தேர்தல் மூலம் அர சாங்கத்தைக் கைப்பற்றத் தவறிவிட்டனர். தனித்தனியே இவர் கள் இயங்கிய காரணத்தினால், கூட்டாக ஒன்று சேர்ந்து ஒரு திட்டத்தை மக்கள் முன் வைக்கத் தவறியதனால், ஓர் இடதுசாரி அரசாங்கத்தை ஏற்படுத்தும் வாய்ப்பையும் இழந்தனர்.

Page 54
அ. முகம்மது சமீம் 8O
13. பண்டாரநாயக்கா, ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தை விட்டு வெளியேறுதலும், ஜி, ஜி. பொன்னம்பலம்
அரசாங்கத்தோடு இணைதலும்
1947ம் ஆண்டில், பொதுத் தேர்தலுக்குப் பிறகு, ஒரு இடதுசாரி முற்போக்கு அரசாங்கத்தை அமைப்பதற்கு மார்க்சீயக் கட்சிகளின் தலைவர்கள்தான் தவறினர், என்றால், முற்போக்குக் கருத்துக்களைக் கொண்ட எஸ்.டபிள்யு. ஆர்.டி. பண்டாரநாயக்காவும், தனக்குக் கிடைத்த சந்தர்ப்பத்தைத் தவற விட்டார். ஐக்கிய தேசியக் கட்சி என்ற ஒரு அரசியற்கட்சியை ஸ்தாபித்த டி.எஸ். சேநாநாயக்காவுடன் "சிங்கள மகாசபா'வின் தலைவர் என்ற முறையில் பண்டாரநாயக்காவும் சேர்ந்தார். இக்கட்சியிலுள்ள ஏனையோருடைய கருத்துக்களும் கொள் கைகளும், பண்டார நாயக்காவின் கருத்துக்களுக்கு முரண் பட்டதாகவே இருந்தது. ஒரு சுதந்திர இலங்கையில் புதுப் புது மாற்றங்களைக் கொண்டு வரும் சக்தியாக இக்கட்சி அமைய வேண்டும் என்று எண்ணிய பண்டாரநாயக்காவுக்கு, கட்சியின் கொள்கையும் போக்கும் விரக்தியைக் கொடுத்தன. ஐக்கிய தேசியக் கட்சியின் கொள்கை விஞ்ஞாபத்தில், சீர்திருத்தக் கருத்துக்களை உள்ளடக்குவதற்கு, பண்டார நாயக்காவுக்கு, டி. எஸ். சேனாநாயக்க அனுமதி அளித்திருந்தார். ஆனால் கட்சியின் தலைவரும் ஏனைய அங்கத்தவர்களும் பழமை வாதிகள் என்பதை பண்டாரநாயக்கா உணர்ந்தார். இலங் கையின் தேசியப் பத்திரிகைகள் கூட இக்கட்சியின் எதிர் காலத்தைப் பற்றிச் சந்தேகம் கொண்டிருந்தன. பழைய அரச சபை அங்கதவர்கள், இப்புதிய கட்சியின் மூலம் அதிகாரத் திற்கு வர எத்தனித்தனர். எனவே முற்போக்கு எண்ணம் படைத்த பண்டாரநாயக்கா இக்கட்சியினின்றும் தூரவிலகி யிருந்தது ஆச்சரியமில்ல. ஐக்கிய தேசியக் கட்சியுடன்

8 ஒரு சிறுபான்மை சமூகத்தின் பிரச்சினைகள் IV
இணைந்திருந்தாலும், பொதுத் தேர்தலுக்குப் பிறகு தன்னு டைய அரசியல் தீர்மானத்தை எடுப்பதென்று திறந்த மனத் துடனேயே இருந்தார்.
பண்டார நாயக்காவைத் தன்னுடைய புதிய கட்சியுடன் இணைத்துக் கொள்வதற்கு எல்லாவித தந்திரோபாயங்களையும் டி. எஸ். உபயோகித்தார். பொதுமக்கள் தம் மிரு வரையும் இணைத்தே கணித்தார்கள் என்றும், தன்னுடைய கட்சியின் கொள்கைகளையும் திட்டங்களையும் தீட்டுவதற்கு பண்டார நாயக்காவைப் போன்ற ஒர் அறிவில் சிறந்த ஒருவர் தனக்குத் துணையாக இருக்க வேண்டுமென்றெல்லாம் கூறித்தான் பண்டார நாயக்காவை ஐ.தே.கட்சியுடன் டி. எஸ். சேர்த்தார். டி. எஸ். சேனாநாயக்கா, தனக்கு வயதாகிவிட்டதென்றும், தனக்கு ஒரு வியாதி இருப்பதாகவும், தான் சீக்கிரமே அரசிய லிலிருந்து ஒய்வு பெறப் போவதாகவும், பண்டார நாயக்காவுக்கு அதிகமான அமைச்சர் அதிகாரங்களைக் கொடுப்பதாகவும், பாராளுமன்றத்தின் சபைத்தலைவராகவும், அப்பதவி பிரதி பிரதம மந்திரிப் பதவிக்கு ஒப்பான தென் றெல்லாம், ஆசைவார்த்தைகளைக் கூறி, பண்டாரநாயக்காவை ஐ.தே.கட்சியில் சேர்த்தார். உண்மையில் டி. எஸ். அரசியலிலிருந்து ஒய்வு பெறும் நோக்கத்தைக் கொண்டிருக்க வில்லை. அவர் நோயினால் பீடிக்கப்பட்டவர் என்பதும் பொய்யான கூற்றே. உண்மையில் புதிய அரசாங்கத்தில் பண்டாரநாயக்காவின் செல்வாக்கைக் குறைப்பதே அவரு டைய நோக்கமாயிருந்தது. பண்டார நாயக்கா, டி. எஸ். சேனாநாயக்காவை முழுமையாகவே நம்பினார். மேலும், டி.எஸ்., பண்டாரநாயக்காவுடன் பிரதம மந்திரிப்பதவிக்குப் போட்டியிடுபவரான, ஜே.எல். கொத்தலாவலையும், இன்னும் இரண்டொரு வருடங்களில் அரசியலிலிருந்து ஒய்வு பெறப் போகிறார் என்றும் கூறினார். சேனாநாயக்காவின் இந்தப் பசப்பு வார்த்தைகளை நம்பிய பண்டாரநாயக்கா, தன்னுடைய மனசாட்சிக்கு விரோதமாக, வேண்டா வெறுப்பாக ஐ.தே.கட்சியில் இருந்தார். ஆங்கிலேய மோகம் கொண்ட

Page 55
அ. முகம்மது சமீம் 82
மத்திய தர வர்க்கத்தின் பலத்தையும், சிங்க ளக் கிராம வாசிகளின் பல மின்மையையும், சிங்கள மேலாண்மைக் கருத்தை சிங்களமக்கள் மத்தியில் பரப்ப இது தருணமல்ல என்பதையும் உணர்ந்த பண்டாரநாயக்கா, நாட்டில் வளர்ந்து வரும் புதிய சக்திகளுக்குத் தலைமை தாங்கத் தயங்கினார். ஐ.தே. கட்சியிலிருந்து விலகினால் அரசியல் அஞ்ஞாதவாதத் திற்குத்தான் தள்ளப்படலாம் என்ற தயக்கமும் அவருக்கி ருந்தது.
ஆனால், ஐக்கிய தேசியக் கட்சியினரின் பழமைவாதக் கொள்கையைக் கண்டு விரக்தியடைந்த பண்டார நாயக்கா வுக்கு, இக்கட்சியில் தொடர்ந்து இருப்பது பெரும் பிரச்சினை யாகிவிட்டது. 1946ம் ஆண்டு ஜூலை மாதம் நடந்த சிங்கள மகாசபாவின் வருடாந்த கூட்டத்தில் பண்டாரநாயக்கா, 'ஐக்கிய தேசியக் கட்சி என்பது ஒர் அரசியற்கட்சியல்ல; அது ஒரு கூட்டுச் சேர்க்கைக் கட்சி, புதிய பாராளுமன்ற முறையை நடத்துவதற்கு ஒரு கட்சி அவசியம் என்ற காரணத்தினாற்றான் சிங்கள மகா சபா, இக்கூட்டுச் சேர்க்கைக்குத் தனது ஆதரவை அளிக்கிறது; என்றைக்கு இக்கூட்டுச் சேர்க்கையுடன் தன்மானத்துடன் இருப்பது சாத்தியமில்லையோ, அன்றே நாம் இதை விட்டு விலகத்தயாராயிருக்கிறோம்' என்று தனது கொள்கையைப் பகிரங்கமாக வே கூறினார். கல்வி, சுகாதாரம், வீடு, தொழில் ஆகிய துறைகளில் சீர்திருத்தம் கொண்டு வரப்படல் வேண்டும் என்று, சபா, தீர்மானம் செய்ததோடு, நாட்டின் தேசிய பண்பாடு பேணப்படுவதோடு நாட்டின் இரு தேசிய மொழிகளுக்கும்- சிங்களம் மாத்திரமல்ல- அரசமொழி அந்தஸ்து அளிக்கப்படல் வேண்டும் என்ற தீர்மானங்களையும் எடுத்தது.
அமைச்சர் பண்டாரநாயக்கா கொண்டு வந்த புதிய சீர்திருத்தத் திட்டங்கள் யாவையும் அமைச்சரவை அங்கீகரிக்க வில்லை. கட்சியின் உபதலைவராக இருக்க வேண்டும் என்று விரும்பிய பண்டார நாயக்கா, ஐந்து உபதலைவர்களில் தான்

83 ஒரு சிறுபான்மை சமூகத்தின் பிரச்சினைகள் IV
ஒருவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதை நினைத்து மனம் வெதும்பினார். தேசிய மட்டத்திலும், உள்ளூர் மட்டத்திலும், இலங்கையின் இரு சமூகங்களிடையே பரஸ்பர நல்லெண்ணம் வளரவேண்டும் என்ற நோக்கத்துடன், பண்டார நாயக்கா வினால் கொண்டு வரப்பட்ட மாகாண சபைகள் மசோதா அமைச்சரவையினால் தள்ளுபடி செய்யப்பட்டது. பண்டார நாயக்காவின் இம் மாகாண சபைத்திட்டம் அமுலுக்கு வந்திருந்தால் சிங்கள-தமிழ் சமூகங்களிடையே இருந்த நல்லுறவு மோசமாகியிருக்காது. ஆனால் பண்டார நாயக் காவுக்கு இருந்த இந்த அரசியல் தூரதிருஷ்டிப் பார்வை அன்றைய ஏனைய அரசியல்வாதிகளிடம் இருக்கவில்லை. பாமர மக்களுக்கும் அரசியலில் பங்கு இருக்க வேண்டும் என்று பண்டாரநாயக்கா கூறிய அதேவேளையில் ஜே.எல். கொத்த லாவலை, ஆங்கில தோட்டத்துரைமார்களையும் ஐக்கிய தேசிய கட்சியில் சேரும்படி அழைத்தார். அடுத்த பிரதமராக ஆவதற் குப் போட்டியிட்ட இவ் விருவரினதும் இரு துருவப் பார் வையை நாம் இதிலிருந்து காண முடிகிறது.
ஐக்கிய தேசியக் கட்சியின், பழமைவாதப் போக்கி னாலும், பிரித்தானிய ஆட்சியாளர்களின் கொள்கையைக் கடைப்பிடிக்கும், அடிமை மனப்பான்மையினாலும், விரக்தி யடைந்த பண்டாரநாயக்கா, அனுராதபுரத்தில் செப்டம்பர் 1946ம் ஆண்டு நடந்த ஒரு மாபெரும் கூட்டத்தில், "சிங்கள தேசம் புத்துயிர் பெற்று எழுவதற்கும், பெளத்த சமயம் மறுமலர்ச்சி பெறுவதற்கும், சிங்கள மக்கள் ஒற்றுமைப்பட்டு, சிங்கள கொடியின்கீழ் செயல்பட வேண்டும்' என்று கூறினார். 1947ம் ஆண்டு செப்டம்பர் மாதம், ஐ.தே.கட்சி அல்லாத ஒர் அரசாங்கத்தை அமைக்கும் நோக்கத்துடன் பண்டாரநாயக்கா, மார்க்சியக் கட்சித் தலைவர்களை இரகசியமாகச் சந்தித்தார். ஆனால் ஐ.தே. கட்சியை விட்டும் விலகி, ஒர் அரசாங்கத்தை அமைப்பதில் பண்டாரநாயக்கா தயக்கம் காட்டினார். இதற்கு ஒரு காரணம் சுயேட்சை அங்கத்தவர்களை பண்டார நாயக்கா நம்பவில்லை. இன்னொரு காரணம் ஏழு ஆசனங்களை வென்ற

Page 56
அ. முகம்மது சமீம் 84
ஜி.ஜி. பொன்னம்பலத்தின் தலைமையிலுள்ள தமிழ் காங்கிரஸ் தனக்கு ஆதரவு அளிப்பார், என்று நம்பவில்லை. பண்டார நாயக்காவின் தோழரும், பாராளுமன்ற அங்கத்தவருமான நிஸ் ஸங்க தன்னுடைய வீட்டில், ஐ.தே.கட்சி அல்லாதவர் களுடன் நடத்திய யமுனா கூட்டங்கள், பண்டாரநாயக்ாவின் தயக்கத்தினால் வெற்றிபெறவில்லை. திரும்பவும் 1948ம் ஆண்டு மார்ச் மாதம் அனுராதபுரத்தில் நடந்த ஒரு மாபெரும் கூட்டத்தில் பண்டார நாயக்கா ஐ.தே.கட்சி அரசாங்கத்தைக் கண்டித்தார். அவர் 'அடுத்த ஐந்து ஆண்டுகளில், பண்டைய மரபுகளையெல்லாம் உடைத்தெறிந்து, ஒரு சமுதாயப் புரட்சி இந்த நாட்டில் ஏற்படப் போகிறது. சாதாரண மனிதனின் காலம் உதயமாகிவிட்டது. மக்களின் நன்மைக்காகப் பாடுபட முடியாத தேசியத் தலைவர்கள், அரசாங்கத்தை விட்டும் விலக வேண்டும்' என்று கூறினார். பண்டாரநாயக்கா அரசாங்கத்தை விட்டும் வெளியேறுவது ஊர்ஜிதமாகிவிட்டது.
1947ம் ஆண்டு பொதுத் தேர்தலில் அதிகமான ஆசனங்களை வென்ற ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரான டி. எஸ். சேனாநாயக்காவுக்கு அரசாங்கம் அமைக்குமாறு கவர்னரிடமிருந்து வேண்டுகோள் விடுக்கப்பட்டது. சிறுபான் மையின மக்களை எப்படித் திருப்திப்படுத்துவது என்பதுதான் சேனாநாயக்காவின் முக்கிய பிரச்சினையாக இருந்தது. சிறுபான்மையின மக்களின் பாதுகாப்புக்காக சோல்பரி யாப்பில் 29(2) பிரிவு சேர்க்கப்பட்டது என்பதை நாம் ஏற்கனவே கூறியிருக்கிறோம். இப்பாதுகாப்பு, சிறுபான்மை யின மக்களைத் திருப்திப் படுத்தும் என்று டி. எஸ். நம்பினார். இரண்டாவதாக தேசிய காங்க ரசிற்குப் பதிலாக, எல்லா சமூகங்களையும் உள்ளடக்கிய ஒரு புதிய அரசியற் கட்சியைத் தோற்றுவிப்பதன் மூலம், சிறுபான்மையின மக்களின் நோக்கங்கயையும், அபிலாஷைகளையும் திருப்திப்படுத்தலாம் என்று எண்ணினார். இலங்கைத் தேசிய காங்கிரஸ் சிறு பான்மை மக்களின் நம்பிக்கையை இழந்ததினால், ஒரு சுதந்திர இலங்கையில் எல்லா மக்களுடைய ஆதரவையும் இதனால்

85 ஒரு சிறுபான்மை சமூகத்தின் பிரச்சினைகள் IV
பெற முடியாது என்றுணர்ந்த டி. எஸ். ஐக்கிய தேசியக் கட்சி"யை உருவாக்கினார். பண்டார நாயக்காவின் "சிங்கள மகா சபாவும் இதனோடு சேர்ந்ததனால், இக்கட்சியின் பலம் இன்னும் அதிகரிக்கும் என்று நம்பினார்.
இதுகாலவரையும் தமிழர்களோடு ஒத்துழைத்த கிறிஸ்தவ மக்களும் முஸ்லிம் மக்களும் இப்புதிய கட்சியில் சேர்ந்தனர்.
1948ம் ஆண்டு ஜி. ஜி. பொன்னம்பலம், தன்னுடைய தமிழ் காங்கிரஸ் அங்கத்தவர்களுடன் ஐக்கிய தேசியக் கட்சியில் சேர்ந்ததோடு, சேனாநாயக்காவின் குறிக்கோளான, "எல்லா இன மக்களையும் கொண்டதுதான் ஐக்கிய தேசியக் கட்சி", என்பது நிறைவேறியது. ஜி.ஜி. பொன்னம்பலத்தின் 'அரசாங்கத்துடன் சேரவேண்டும்" என்ற முடிவை அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர்களான எஸ். ஜே. வி. செல்வநாயகம், வன்னிய சிங்கம், செனட்டர் இ.எம். வி.நாகநாதன் எதிர்த்தனர். 1947ம் ஆண்டு பொதுத் தேர்தலுக்குப் பிறகு, சேனாநாயக்கா, இதரகட்சிகளின் ஆதரவை நாடி நின்ற சமயத்தில், தமிழர்களுடைய கோரிக் கைகளை முன்வைத்து, சம அந்த ஸ்தோடு ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்திருக்கலாம் என்பதே செல்வநாயகத்தின் வாதம். அதை விட்டு விட்டு சேனாநாயக்கா, இரண்டு தமிழர்களையும் தன்னுடைய அமைச்சரவையில் சேர்த்து, அரசாங்கத்தை அமைத்து, தன்னுடைய நிலைமையை ஸ்திரப்படுத்திக் கொண்ட பிறகு, எவ்வித உத்தரவாத முமில்லாமல், ஜி. ஜி. சேர்ந்தது தமிழர்களுக்கு இழைத்த துரோக மாகும். ஜி.ஜி. பொன்னம்பலத்தின் இந்த முடிவுக்கு, அவரைக் குறைகூற முடியாது. தமிழர்களிடையே இருந்த சில சக்திகளின் வற்புறுத்தலின் பேரில்தான் ஜி.ஜி. பொன்னம்பலம் அரசாங்கத்துடன் சேர்ந்திருக்கலாம். 'தமிழர்களிடையே ஒரு தொடர்ச்சியான, முரண்பாடில்லாத ஒர் அரசியல் தத்துவம் இல்லாத காரணத்தினாலும், அரசியல் குறிக்கோள் இல்லாத காரணத்தினாலும்தான், இந்த முடிவைத் தமிழ் காங்கிரஸ்

Page 57
அ. முகம்மது சமீம் 86
எடுக்க நேர்ந்தது' என்று அரசியல் தத்துவஞானி, கலாநிதி ஏ.ஜெ. வில்சன், தன்னுடைய 'எஸ்.ஜே. வி. செல்வநாயகமும் தமிழர் தேசியமும்' என்ற நூலில் குறிப்பிடுகிறார். சிங்கள அரசாங்கத்திடமிருந்து சலுகைகள் பெறுவதே தமிழர்களின் குறிக்கோளாயிருந்தது. 'தமிழர் சமூகம் அரசியல், சமூக, பிரதேச வேறுபாடுகளினால் பிளவுபட்டு, தம்முடைய பொருளாதார நன்மைக்கும், அரசாங்கப் பதவிகளுக்கும், சிங்க ள பழமை வாத தலைமைத்துவத்தை நம்பியிருக்க வேண்டிய ஒரு நிலையை அடைந்திருந்தது. அரசியலில் தாம் ஒரு சிறுபான்மையினம் என்ற தாழ்வு நிலையையும் ஏற்றுக் கொண்டிருந்தது. இதனாற்றான் இலங்கைத் தமிழரசுக் கட்சியைத் தோற்றுவித்து, தமிழர்களுக்கு ஒரு சமஷ்டி ஆட்சி வேண்டுமென்ற தனது திட்டத்தைத் தமிழ் மக்கள் முன் வைத்து, 1952ம் ஆண்டில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் போட்டி யிட்ட செல்வநாயகத்தைத் தமிழர்கள் தோற்கடித்தனர்' என்று கலாநிதி வில்சன் கூறுகிறார். அவர் மேலும் '1945ம் ஆண்டில், சேனாநாயக்காவுக்கு ஆதரவாக, சோல்பரி யாப்புக்கு வாக் களித்த எஸ்.நடேசனின் செய்கையினால் ஆத்திரப் பட்டு, 1947ம் ஆண்டில் அவரைத் தேர்தலில் தோற்கடித்த தமிழர் சமூகம், 1952ம் அவரை வெற்றிபெறச் செய்ததற்குத் தமிழர்களுடைய இந்த மனப்பான்மையைச் சுட்டிக் காட்டலாம்' என்று வில்சன் கூறுகிறார்.தமிழர் சமூகம், ஒரு நிரந்தர அரசியல் சித்தாந்தம் இல்லாத காரணத்தினால், தமக்குக் கிடைத்த வாய்ப்பைத் தவறவிட்டது.
இதே போன்று, முஸ்லிம் சமூகத் தலைவர்களும் தம்முடைய சமூகத்திற்கு எவ்வித உத்தரவாதமும் கேட்காமல், ஐக்கிய தேசியக் கட்சியில் சேர்ந்தனர். அன்று முஸ்லிம் தலைவர்கள் தமக்கு வேண்டிய உரிமைகளைக் கேட்டிருந்தால், பின்னால் முஸ்லிம் சமூகம் தன்னுடைய உரிமைகளைப் படிப்படியாக இழந்திருக்காது.
ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர்களின் உள்நோக்கம்

87 ஒரு சிறுபான்மை சமூகத்தின் பிரச்சினைகள் IV
அறியாது, எவ்வித உத்திரவாதமும் பெறாமல் சேர்ந்த முஸ்லிம் தலைவர்கள், தங்களுடைய தவறைப் பின்னால்தான் உணர்ந்தனர் . கருத்து வேறுபாடு காரணமாக றி.பி.ஜாயா அமைச்சரவையிலிருந்து அகற்றப்பட்டு பாக்கிஸ்தானுக்கு இலங்கைத் தூதுவராக அனுப்பப்பட்டார்.
முஸ்லிம்களை வெகுவாகப் பாதித்த காணிச்சட்டத்தை, முஸ்லீம்களுக்கு உதவுவதென்று வாக்குக் கொடுத்த டி. எஸ் சேனாநாயக்கா அமுலுக்குக் கொண்டுவந்தார். 'முஸ்லீம்கள் காணிகளைப் பதிவு செய்வதென்றால், தங்களுடைய தகப்பனும், பாட்டனும் இலங்கையில் பிறந்ததற்கு பத்திரம் சமர்ப்பிக்க வேண்டும்". பிறப்புப் பதிவானதே 1920களில்தான். இந்தச் சட்டத்தைப் பிரதமராயிருந்த சிறிமாவோ கூட வாபஸ் செய்ய மறுத்துவிட்டார்.
அன்றைய முஸ்லிம் தலைமைத்துவம் ஒரு மத்தியதர வர்க்கத்தைச் சேர்ந்த காரணத்தினால் பாமர முஸ்லிம்களின் கஷ்டங்களை அவர்கள் உணரவில்லை.

Page 58
அ.முகம்மது சமீம் 88 14. இலங்கை இந்தியத் தமிழர்கள் குடியுரிமை இழக்கின்றனர்
ஒரு சுதந்திர நாட்டில் ஒரு சிறுபான்மையின சமூகம் அரசியல் துரோகத்துக்கு உள்ளாக்கப் பட்டதென்றால், அது இலங்கை - இந்தியத் தமிழர் சமூகமாகத்தான் இருக்கும். ஒரே நாளில் பத்துலட்சம் மக்கள் தங்கள் குடியுரிமையை இழக் கின்றனர். இச்சட்டத்தை அமுலுக்குக் கொண்டு வந்தவர்கள், "ஒரு சுதந்திர நாடு, தன்னுடைய பிரஜைகள் யார் என்பதை நிர்ணயிக்கும் உரிமை அதற்கிருக்க வேண்டும்' என்ற கொள்கை அடிப்படையின் பேரில் தான், இச்சட்டத்தைக் கொண்டு வந்தனர், என்று கூறினர். இந்தியத் தமிழர்கள் தொழிலாளர்கள் என்ற காரணத்தினால்தான் அவர்களுடைய வாக்குரிமை பறிக்கப்பட்டது என்ற மார்க்சீயவாதிகளின் குற்றச் சாட்டு உண்மையானதா என்பது ஆராயப்பட வேண்டிய ஒரு விஷயமாகும். டி. எஸ். சேனாநாயக்கா அரசாங்கத்தில் ஒரு முக்கிய அமைச்சராயிருந்த ஏ. ரத்னாயக்கா 'இந்தியர்கள் தங்கள் நடத்தையினாலும் நோக்கத்தினாலும், எமது நண்பர்கள் என்று நிரூபித்திருந்தார்களேயானால், எமது நம்பிக்கைக்குப் பாத்திரமாயிருந்திருப்பார்கள். அந்த நம்பிக்கை எங்களுக்கு ஏற்படாதிருக்கும் வரையில் நாம் அவர்களைக் கட்டுப்படுத்த சட்டங்களைக் கொண்டு வருவோம்' என்று 1948ம் ஆண்டு பாராளுமன்றத்தில் பேசினார். ஐக்கிய தேசியக் கட்சியின் பிதாமகனும், இலங்கை அரசியல் யாப்பின் சாணக்கியனுமான சர். ஐவர் ஜெனிங்ஸ் இலங்கையின் அரசியல் யாப்பு என்ற தன்னுடைய நூலில் பின்வருமாறு கூறுகிறார்.
"பொதுத் தேர்தலைப் பற்றி நாம் பொதுவாகக் கூறுவதா யிருந்தால், அது இன அடிப்படையில் நடந்த போட்டியல்ல. இந்தியர்கள், இலங்கை இந்திய காங்கிரஸ் வேட்பாளர்களின் பின்னால் உறுதியாக நின்றார்கள். எங்கெல்லாம் இந்தியர்களின் வாக்குப் பலம் அதிகமாக இருந்ததோ, அங்கெல்லாம் இந்திய

89 ஒரு சிறுபான்மை சமூகத்தின் பிரச்சினைகள் IV
காங்கிரஸ் வேட்பாளர்கள் இல்லாத விடத்து இடதுசாரிக்கட்சி வேட்பாளர்களை ஆதரித்தார்கள். இதற்குச் சப்ரகமுவ தொகுதியை உதாரணத்திற்குக் காட்டலாம்’ என்றார். 'இந்திய வம்சாவளியினருடைய குடியுரிமையைப் பறித்த இச் சட்டங்கள் இலங்கைத் தொழிலாளர் இயக்கத்திற்கு எதிராக, முக்கியமாக தோட்டத் தொழிலாளருக்கெதிராகக் கொண்டு வரப் பட்ட சட்டம்', என்று எஸ். நடேசன், "சிறிலங்காவின் மலை நாட்டுத் தமிழர்களின் வரலாறு' என்ற நூலில் கூறுகிறார்.
இந்திய வம்சாவளியினரின் குடியுரிமை ஏற்கனவே கட்டுப் படுத்தப்பட்டிருந்தது. இந்திய அரசாங்கத்தின் பிரதிநிதியின், அறிக்கையின்படி "1931ம் ஆண்டு, ஜனவரி மாதத்திலிருந்து ஜூலை மாதம் வரையிலுள்ள காலப்பகுதியில், பதிவு செய்யப்பட்ட இந்தியர்களின் எண்ணிக்கை 1,00,574 ஆக இருந்தது. இது இலங்கையில் வசித்த இந்தியர்களின் சனத் தொகையில் 21% விகிதமாகவே இருந்தது என்று கூறுகிறார். இலங்கையில் நிரந்தரமாகக் குடியேறியவர்கள் என்ற அடிப் படையில்தான் இவர்கள் பதிவு செய்யப்பட்டார்கள். பதிவு செய்யப்பட்ட இந்தியர்களின் எண்ணிக்கை அதிகரிக்க, அதிகரிக்க, இந்த முறையில் கட்டுப்பாடு கொண்டு வர வேண்டுமென்ற குரல் அரசாங்கத்தரப்பிலிருந்து எழுந்தது.
சோல்பரி குழுவினரின் அறிக்கையின்படி, 1939ம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட இந்திய வாக்காளர்களின் எண்ணிக்கை, 225,000 லிருந்து, 1943ம் ஆண்டு, 168,000 ஆகக் குறைந்தது. ஆனால், 1931ம் ஆண்டுக்கும், 1940ம் ஆண்டுக்குமிடையில் இலங்கையின் வாக்காளர் எண்ணிக்கை 1,500,000லிருந்து 2,635,000 ஆகக் கூடியது. 1937ம் ஆண்டு இலங்கை சட்டசபையில் இந்தியர்களின் வாக்குரிமையைப் பற்றிப் பேசிய, டாக்டர் என்.எம். பெரேரா, 'இந்தியர்களின் மேல் விதித்திருக்கும் கட்டுப்பாட்டின் காரணமாக பிரஜா உரிமை யுள்ள ஏராளமான இந்தியர்கள், பிரஜா உரிமை இழந்திருக் கிறார்கள். என்னுடைய தொகுதியில், 10,000-12,000 இந்தியர்

Page 59
அ.முகம்மது சமீம் 90
கள் வாக்காளர்களாகக் கணிக்கப்படும் தகுதி பெற்றவர்கள் இருக்கிறார்கள். ஆனால் நான் கூறுவதில் நீங்கள் ஆச்சரியப் படுவீர்கள். இத்தொகையில், 2000க்கும் குறைவானவர்களே பதிவு செய்யப்பட்டிருக்கிறார்கள்', என்று கூறினார். இதே கருத்தை நடேசையரும், சட்டசபையில், ஐரோப்பிய பிரதிநிதி, கர்னல் றி. வை. றைட் என்பவரும், புள்ளி விபரங்களின் மூலம் இந்தியர்கள், வாக்காளர் பட்டியலிலிருந்து அகற்றப்பட்ட உண்மையை எடுத்துக் கூறினார்கள்.
1947ம் ஆண்டில் நடந்த பொதுத் தேர்தலில், இந்திய வம்சாவளியினர், தங்கள் சனத்தொகையின் அடிப்படையில் 14 அங்கத்தவர்களைப் பெற வேண்டிய நேரத்தில், 7 அங்கத்தவர் களைத் தான் பெற்றார்கள். 1948ம் ஆண்டின் பாராளு மன்றத்திலிருந்து பிரதிநிதிகளை அவர் பிரதிநிதித்துவப் படுத்தும், சனத் தொகையின் சராசரி எண்ணிக்கையைப் பார்த்தால், இந்தியர்களுக்கு விளைவித்த அநீதி, வாக்குரிமை இருந்த காலத்திலேயே எப்படி இருந்தது என்பது விளங்கும். கீழே உள்ள அட்டவணை இதைப் பிரத்தியட்சமாகக் காட்டுகிறது.
பாராளுமன்ற ஒரு பிரதி
இனம் சனத்தொகை பிரதிநிதிகள் நிதிக்கேற்ப
சனத்தொகை
ஐரோப்பியர்கள் 2,433 4. 608 பறங்கியர் 33,671 3. 11,224 இலங்கைத் தமிழர் 804, 950 I3 61,919 சிங்களவர் 4,515, 198 68 66,400 முஸ்லிம்கள் 382,984 6 63,831 இந்தியத் தமிழர்கள் 732,258 7 104,608
608 ஐரோப்பியர்களுக்கு ஒரு பிரதிநிதி என்றிருக்கும் போது, 104, 608 இந்தியர்களுக்கு ஒரு பிரதிநிதி என்ற வேறுபாட்டை நாம் இங்கே காண்கிறோம். இவ் விரு

91 ஒரு சிறுபான்மை சமூகத்தின் பிரச்சினைகள் IV
சமூகங்களையும் நாம் அந்நியர்கள் என்று கணித்தாலும், முதலாளி வர்க்கத்திற்கு ஒரு விதி, தொழிலாளர்களுக்கு ஒரு விதியா?
டி. எஸ். சேனாநாயக்காவினால் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்ட 1948ம் ஆண்டு 18ம் இலக்கக் குடியுரிமைச் சட்டத்தின்படி, ஒருவர் இலங்கைப் பிரஜை என்று தகுதிபெற வேண்டுமானால்,
(1) பரம்பரையாகக் குடியிருந்திருக்க வேண்டும். அல்லது
(i) இச்சட்டத்தின் நிபந்தனைகளின்படி பிரஜையாகப் பதிவு செய்யப்பட்டிருத்தல் வேண்டும்.
இச்சட்டத்தின்படி, பரம்பரைக் குடியுரிமை பெறத் தகுதியுடையவர்கள், தங்கள் தந்தை இலங்கையில் பிறந்திருக்க வேண்டும், அல்லது தந்தை வழி பாட்டனும், தந்தை வழி முப்பாட்டனும் இலங்கையில் பிறந்திருக்க வேண்டும். குறிப்பிட்ட திகதிக்குப் பின்னர் பிறந்தவர்கள், பிறப்பு நிகழ்ந்தபோது, அவர்களுடைய தந்தை இலங்கைப் பிரஜையாக இருந்திருந்தால் மட்டும், குடியுரிமை கோர முடியும். ஒருவர் குறிப்பிட்ட திகதிக்குப் பின் இலங்கைக்கு வெளியே பிறந்திருந்தால், அவருடைய பிறப்பு, உரிய அதிகாரியிடம் பதிவு செய்யப்பட்டிருத்தல் வேண்டும்.
மேலே குறிப்பிட்ட விதிகளின் படி, பரம்பரை குடியுரிமை தகுதி, சிங்களவருக்கும், இலங்கைத் தமிழருக்கும், முஸ்லிம் களுக்கும், மலாயர்களுக்கும், பறங்கியர்களுக்கும் வழங்கப் பட்ட அதே வேளையில் இந்தியாவிலிருந்து சமீபத்தில் வந்து இங்கு குடியேறிய இந்திய வம்சாவழியினருக்கு மறுக்கப் பட்டது. இச்சட்டத்தின் விதிகளின்படி, இலங்கையிலேயே பலகாலமாக வாழ்ந்து வந்த சிறுபான்மையினத்தவர்கள்கூட, தாம் 'பரம்பரைக் குடியுரிமைக்குத் தகுதியுடையவர்கள் என்று நிரூபிப்பதில் கஷ்டப்பட்டார்கள். இச்சட்டத்தைப் பற்றி

Page 60
அ. முகம்மது சமீம் 92
விமர்சித்த பீட்டர் கெனமன், 1960ம் ஆண்டு பாராளுமன்றத்தில் நடந்த விவாதத்தில் பின்வருமாறு கூறினார்.
'பிறப்புச் சாட்சிப் பத்திரத்தை அத்தாட்சியாக சமர்ப்பிப்பது இலேசான காரியமல்ல. உண்மையில், ஏழைகளிடம் பிறப்புச் சாட்சிப் பத்திரமே இல்லை. இப்பத்திரங்களைப் பாதுகாத்து வைக்க வேண்டுமென்ற அக்கரைகூட அவர்களிடமில்லை. முதியவர்களிடம் பிறப்புச் சாட்சிப் பத்திரம் அறவே இல்லை. காரணம், பிறப்பு பதிவு செய்யப்பட்டதே இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில்தான். நல்ல வேளையாக நான் ஒரு இலங்கைப் பிரஜை யென்று என்னிடம் யாரும் நிரூபிக்கக் கேட்கவில்லை. அப்படிக் கேட்டிருந்தால் உண்மையில் என்னுடைய தந்தையின் பிறப்புச் சாட்சிப் பத்திரத்தை என்னால் சமர்ப்பிக்க முடியாமலிருந் திருக்கும். காரணம் அவர் பிறப்புப் பதிவு செய்யும் காலத்திற்கு முன்பதாகவே பிறந்தார். இச்சபையின் எதிர்கட்சித் தலைவரால்கூட (டட்லி, சேனாநாயக்கா) சட்டப்படி தான் ஒரு இலங்கைப் பிரஜை என்று இந்த நிபந்தனைகளுடன் நிரூபிக்க முடியாது. '
பீட்டர் கெனமனின் மேலே குறிப்பிடப்பட்ட கூற்றினால், நாம் என்ன உணரமுடியுமென்றால், இந்திய வம்சாவளியினர் தாம் இலங்கைப் பிரஜை என்று நிரூபிப்பது எவ்வளவு கடினமானது என்பதே. இந்தச் சட்டத்தின் நோக்கமே இந்திய வம்சாவளியினருக்கு பிரஜா உரிமை வழங்கப்படக் கூடாது என்பதே.
இச்சட்டத்தைத் தொடர்ந்து1949ம் ஆண்டில், "இந்தியா -பாக்கிஸ்தான் பிரஜா உரிமைச் சட்டம் அமுலுக்கு வந்தது. இச்சட்டத்தின்படி இந்திய-பாக்கிஸ்தானியர்கள் ஜனவரி 1946ம் ஆண்டுக்கு முன், திருமணமானவர்கள் குறைந்தது 7 வருடமும், திருமணமாகாதவர்கள் 10 வருடமும், இந்நாட்டில் தொடர்ந்து வசித்திருக்க வேண்டும். மேலும் இவர்கள்

93 ஒரு சிறுபான்மை சமூகத்தின் பிரச்சினைகள் IV
நிதிவசதி படைத்தவர்களாயிருத்தல் வேண்டும். பிரஜா உரிமை பெறுவதற்கு வேறு சில சலுகைகளும், இப்பணம் படைத்தவர்களக்குக் கொடுக்கப்பட்டன. தங்கள் குடும்பங்கள் இலங்கையில் வசித்திருக்க வேண்டும். இலங்கைச் சட்டங் களைப் பேணி நடப்பதில் இவர்களுக்கும் எவ்வித கஷ்டமும் (பணம்) இருக்கக் கூடாது. 1948ம் ஆண்டின் சட்டத்திலுள்ள சில நிபந்தனைகளை இச்சட்டம் தளர்த்தியது என்று சிலர் கருத்துத் தெரிவித்தனர். எது எப்படி இருந்தாலும், முதலாளி வர்க்கத்திற்கும் தொழிலாளர் வர்க்கத்திற்குமுள்ள வேறு பாட்டை இச்சட்டங்கள் தெளிவாக எடுத்துக் காட்டின.
இப்பிரஜா உரிமை சட்டங்களினால் பத்து லட்சம் இந்திய வம்சாவழியினரின் எதிர்காலம் நிர்ணயிக்கப்படுவதற்கு முன்பே யே, இலங்கைப் பாராளுமன்றத் (திருத்த) சட்டம் 1949ம் ஆண்டில் நிறைவேற்றப்பட்டது. 'இலங்கைப் பாராளுமன்றத்தினால் நிறைவேற்றப்பட்ட ஜனநாயகத்திற்கு விரோதமான மிகவும் மோசமான சட்டம்தான் இந்தச் சட்டம்' என்று எஸ். நடேசன் தன்னுடைய "மலைநாட்டுத் தமிழர்களின் வரலாறு' என்ற நூலில் கூறுகிறார். அவர் மேலும், "ஒரே வீச்சில் இந்திய வம்சாவழியினர் வாக்குரிமை அற்றவர்களாக மாற்றப்பட்டனர்' என்று கூறுகிறார்.
இலங்கையின் தலைசிறந்த பொருளியல் பேராசிரியரான, ஐ. டி. எஸ். வீரவர்தனா, 1952ம் ஆண்டு ஜனவரி மாதம் வெளிவந்த ‘வரலாற்று சஞ்சிகையில், தான் எழுதிய 'சிறுபான்மை யின மக்களும், பிரஜா உரிமையும் ' என்ற கட்டுரையில், பின்வருமாறு கூறுகிறார். 'இச்சட்டங்கள் இலங்கையின் அரசியல் படத்தையே முழுமையாக மாற்றிவிட்டன. இலங்கை இந்தியர்களின் பெரும்பான்மை யோருக்கு வாக்குரிமை மறுக்கப்பட்டது. தோட்டத் தொழிலாளர் வர்க்கம் பிரஜா உரிமை பெறாமல் தடுப்பதே இச்சட்டங்களின் நோக்கமாகும்”. அவர் மேலும் கூறியதாவது, 'ஒரு சிறுபான்மை சமூகத்திற்கு எதிராக அதனை

Page 61
அ. முகம்மது சமீம் 94.
வேறுபடுத்திக் காட்டுவதுதான் இச்சட்டங்களின் முக்கிய அம்சமாக விளங்கியது. ஒரு வர்க்கப் பிரிவினருக்கு எதிராகக் கொண்டு வரப்பட்ட சட்டங்களே இவை. இவை, இந்தியர்களுக்கெதிராகக் கொண்டு வரப்பட்ட சட்டங்கள் என்று கூறுவதைவிட தொழிலாள வர்க்கத்திற்கு எதிராகக் கொண்டு வரப்பட்ட சட்டம் என்று கூறலாம். இன்றைய அரசியல் கொள்கையில், அரசியல் வேறுபாடு மாத்திரமல்ல, சமூகத்துவேஷம் என்ற வாடையும் அடிக்கிறது'.
இலங்கையின் முதலாளி வர்க்க அரசாங்கத்தின் இந்த இனத்துவேஷ மனப்பான்மைக்கு வக்காலத்து வாங்கிய ஐரோப்பிய முதலாளிகளின் பிரதிநிதியாகிய மேஜர் ஒல்டு பீல்ட் இந்தச் சட்டத்தைப் பற்றிக் கூறும் போது, 'இந்த நாட்டில் முன்பு நிலவிய சாதாரண காலங்களில், இம்ம சோதா ஒரு குடிமகனின் சுதந்திரத்திற்கு எதிராக செயல்படும் ஒன்றாக இருக்கும். ஆனால், இன்றைய நிலைமையில், முழு அதிகாரமும் அரசாங்கத்திடம் அளிக்கப்பட்டிருக்க வேண்டும். ' என்று பாராளுமன்றத்தில் கூறினார். ஏகாதிபத்தியத்தின் பிரதிநிதியே, இம்மசோதா மக்களின் சுதந்திரத்திற்கு எதிரானது என்று ஒப்புக் கொள்கிறார்.
லங்கையின் சிறுபான்மை சமூகத்தின் மேல் ஒரு சறு மூகத
விழுந்த முதல் அடிதான், இலங்கை இந்தியர்களை அரசியல் அனாதைகளாக்கியது.

95 ஒரு சிறுபான்மை சமூகத்தின் பிரச்சினைகள் IV
15. இனப் பிரச்சினைக்குக் காரணமாயிருந்த சக்திகள்
1948ம் ஆண்டுக்குப் பிறகு உருவெடுத்த சில சக்திகள்தான் இன்றைய இனப் பிரச்சினை பூதாகாரமாய் வளர்வதற்குக் காரணமாயிருந்தன. இச்சக்திகள் வளர்வதற்கு அரசியல்வாதிகள் மாத்திரமல்ல, சமய வாதிகளும், ஆசிரியர் களும், ஆயுர்வேத வைத்தியர்களும், எழுத்தாளர் களும் காரணமாயிருந்தனர். இச்சக்திகள் சமுதாயத்தின் அடி மட்டத் தில் வளர்ந்ததை அன்றைய அரசாங்கத்தின் பிரதம மந்தி ரியாயிருந்த டி.எஸ். சேனாநாயக்காவோ, அல்லது அவருடைய சகாக்களா அறிவதற்கு அவர்களிடம் அரசியல் விவேகம் இருக் கவில்லை. அன்றைய அரசியல் தலைவர்களில், அரசியல் தூரதி ருஷ்டிப் பார்வை ஒரே ஒரு அரசியல் தலைவருக்குத்தான் இருந் தது. அவர்தான் எஸ். டபிள்யு ஆர். டி. பண்டாரநாயக்கா, அன்று பண்டார நாயக்கா பிரதம மந்திரிப் பதவியை ஏற்றி ருந்தால், நாட்டைப் பிளவுபடுத்தும் இச்சக்திகள் வளர் வதை ஒரளவு தடுத்திருப்பார். ஆனால், டி. எஸ். சேனாநாயக்கா தன்னுடைய மகன் டட்லிக்கு இப்பிரதமர் பதவியைப் பெற்றுக் கொடுப்பதற்கு எடுத்த நடவடிக்கைகளினால், பண்டார நாயக்கா துரதிருஷ்டவசமாக, இச்சக்திகளுக்குத் தலைமை தாங்க வேண்டிய நிர்ப்பந்தத்திற்குள்ளானார்.
1948ம் ஆண்டில் இலங்கைக்குக் கிடைத்த சுதந்திரம், இந்தியாவைப் போலல்லாமல் ஒரு போராட்டத்தினால் கிடத்த தொன்றல்ல. இந்திய சுதந்திரப் போராட்டத்தில், சமூகத்தின் எல்லா மட்டத்திலுள்ள மக்களும் பங்கெடுத் தார்கள். சாதி அமைப்புமுறையை ஒழிப்பதற்காகப் பாடுபட்ட மகாத்மா காந்தி, கீழ்மட்டத்திலுள்ள சாதிமக்களை, 'ஆண்டவ னின் குழந்தைகள்'- 'ஹரிஜனங்கள்", என்றழைப்பதற்குக் காரணம், இந்திய சமுதாயம் ஒரு சாதி வேற்றுமை யற்ற சமுதாயமாக மாற வேண்டுமென்ற அவரது கொள்கையே.

Page 62
அ. முகம்மது சமீம் 96 இந்திய சுதந்திரப் போராட்டத்தில் எல்லா சாதிகளும் எல்லா வர்க்கப் பிரிவுகளும் எல்லா இனங்களும் பங்கெடுத்தனர். எனவே இந்தியாவிற்குச் சுதந்திரம் கிடைத்த பிறகு, இந்திய அரசாங்கத்தைப் பொறுப்பேற்ற இந்திய காங்கிரஸில், தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த டாக்டர் அம்பேத்கார் போன்ற வர்கள் முக்கிய பதவிகளை வகித்தனர். ஆனால் இலங்கையில், டி. எஸ். சேனநாயக்கா அமைத்த அமைச்சர் அவை யில், பண்டார நாயக்காவைத்த விர, ஏனைய முக்கிய சிங்க ள அமைச்சர்கள் பெரும்பாலும் டி. எஸ்ஸின் உறவினர்களாகவே இருந்தார்கள். அவருடைய அமைச்சரவையில், அவரது மகன் டட்லி சேனா நாயக்கா, மருமகன் சர். ஜோன் கொத்தலாவல, மருமகன் ஆர்.ஜி. சேனாநாயக்கா, நெருங்கிய உறவினரான ஜே.ஆர். ஜயவர்தனா, போன்றவர்கள் முக்கிய பதவிகளை வகித்தனர். எதிர்க்கட்சியினர் இவ்வரசாங்கத்தை 'மாமன் -மருமகன் ஆட்சி என்று கூறியதில் வியப்பில்லை. சேனா நாயக்காவின் அமைச்சரவை ஆங்கில ஏகாதிபத்திய ஆட்சியில், பெருந்தோட்டப் பயிர் செய்கையினாலும், முதலாளித்துவ பொருளாதார அமைப்பினாலும் பலனடைந்த உயர்வர்க்கத் தினரின் பிரதிநிதிகளைக் கொண்டதாயிருந்தது.
சுதந்திர இலங்கையில், தமக்கும் பங்கிருக்கும் என்று ஏமாந்த பாமர மக்களின் விரக்தியின் காரணமாகத்தான் இந்தச் சக்திகள், அரசியலில் செல்வாக்குப் பெறத் தொடங்கின. ஆங்கிலேயரிடமிருந்து இலங்கையருக்குக் கையளிக்கப்பட்ட அதிகாரத்தைப் பற்றி, மார்ஷல் சிங்கர் என்பவர் தன்னுடைய 'பிரமுகர்களின் தோற்றம் - இலங்கையின் அரசியல் தலைமைத்துவத்தைப் பற்றிய ஒர் ஆய்வு (பக்கம் 87) என்ற நூலில் பின்வருமாறு கூறுகிறார்.
'பிரித்தானியர்கள் 1924ம் ஆண்டிலும், 1931ம் ஆண்டிலும் ஒரளவு அரசியல் அதிகாரத்தையும், 1948ம் ஆண்டில், முழு அரசியல் சுதந்திரத்தையும், 'உள்ளூர் வாசிகளுக்குக் கொடுப்பதென்று முடிவு செய்ததுடன்,

97 ஒரு சிறுபான்மை சமூகத்தின் பிரச்சினைகள் IV இவ்வதிகாரத்தைத் தங்களோடு நெருங்கி ஒத்துழைத்தவர் களுக்குத்தான், வழங்கினார்கள். பிரித்தானியர்களால் அரசியல் அதிகாரம் வழங்கப்பட்ட இக்குழுவினரை நாம் பின்வருமாறு வகுக்கலாம். அவர்கள் (1) பெரும்பாலும் இலங்கையர்கள். (2) அதிகமானோர் கிறிஸ்தவ சமயத்தைச் சேர்ந்தவர்கள். (3) பெரும்பாலாக உயர்சாதியைச் சேர்ந்தவர்கள். (4) நகர கலாச்சாரத்தைப் பேணுபவர். (5) மேல் நாட்டுக் கல்வி பயின்றவர் (6) மேல்நாட்டு தொழில்களைச் செய்பவர். (7) சமூகத்தில் மிக உயர்ந்த பொருளாதார வர்க்கத்தைச் சேர்ந் தவர்'. அவர் அரசாங்கத்தைப் பொறுப்பேற்று நடத்திய வர்களை இப்படி வகுத்தார். சிங்கள பாமர மக்கள் சமூகத்தின் உயர்மட்டத்திலுள்ளவர்களாலும் பொருள் படைத்தவர்களா லும் அடக்கப்பட்ட, ஒரு சமுதாயமாகவே இருந்தனர். நாட் டுக்கு சுதந்திரம் கிடைத்ததால், அவர்களுக்கு எவ்வித நன் மை யும் கிட்டவில்லை.
வளர்ந்து வரும் இச்சக்திகளுக்கு எதிராகவே சேனாநாயக்கா அரசாங்கம் இயங்கிவந்தது. தொழிலா ளர்களுக்கு எதிராக 1947ம் ஆண்டில் அரசாங்கம் கொண்டுவந்த பொதுசன பாதுகாப்புச் சட்டமும், 1948ம் ஆண்டில், தொழிலாளர் சங்கம் (திருத்தச்) சட்டமும், தொழிலாளர்களின் தொழிற்சங்க இயக்கங்களை வெகுவாகப் பாதித்தன. இச் சட்டங்கள் பெரும்பாலும் மார்க்சீயக் கட்சிகளுக்கு எதிராகக் கொண்டு வரப்பட்ட சட்டங்கள் என்றாலும், அரசாங்கம்,
முதலாளிவர்க்க அரசாங்கம்" என்பதை நிரூபித்தது.
'இலங்கை பெளத்தர்களுக்கு மாத்திரம் உரியது" என்ற தீவிரவாதம், குறிப்பிட்ட சிலரிடையே பரவத் தொடங்கியது. இத்தீவிரவாதப் போக்குக்குத் தூபம் இட்டவர்கள் சில சிங்கள புத்திஜீவிகளும் பெளத்த பிக்குகளுமே. இந்நாடு "பெளத்த நாடாகப் பிரகடனப்படுத்தப்படல் வேண்டும் என்ற இவர்களுடைய கொள்கைக்கு மாறாக, டி. எஸ். சேனாநாயக்கா "இலங்கையில் பல்லினங்கள் வாழ்வதால், "இலங்கை ஒரு சமய

Page 63
அ. முகம்மது சமீம் 98
சார்பற்ற நாடாக", விளங்க வேண்டும் என்று விரும்பினார். இவ்வரசியல் பிக்குகள், கல்வி, மொழி போன்ற துறைகளில் மக்களின் உணர்வைத் தூண்டிவிட்டார்கள். சிங்கள மொழி மட்டும்தான் அரச மொழியாக இருக்க வேண்டுமென்ற மசோதா ஜே.ஆர். ஜயவர்தனவினால் 1944ம் ஆண்டில், சட்டசபையில் கொண்டு வரப்பட்டது. இம்மொழிக் கொள்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்தார் சேனாநாயக்கா, சி. டபிள்யு. டபிள்யு. கன்னங்கரவினால் 1947ம் ஆண்டில் கொண்டு வரப்பட்ட, 'இலவசக் கல்வித் திட்டத்தையும்' எதிர்த்தார். தம்முடைய உரோமன் கத்தோலிக்க தனியார் பாடசாலைகளுக்கெதிராகக் கொண்டு வரப்பட்ட சட்டம், என்று உரோமன் கத்தோலிக்கர்கள் பிரச்சாரம் செய்தார்கள். இதற்கெதிராக, 'அரசியல் பிக்குகள், பெளத்த மக்களின் நன்மைக்காகத்தான் இக்கல்வித்திட்டம் கொண்டு வரப் பட்டிருக்கிற தென்று பிரச்சாரம் செய்தார்கள். இதனால் அரசியல் பிக்குகளின் செல்வாக்கு மக்களிடையே வளர்ந்தது. சேனாநாயக்காவின் செல்வாக்கினால், உதவி நன்கொடைப் பாடசாலைகளுக்கு செப்டம்பர் 1948ம் ஆண்டு வரையில் அவகாசம் கொடுக்கப்பட்டது. 1948 Lib ஆண்டில் சேனாநாயக்காவின் புதிய அரசாங்கம், இச்சலுகையின் காலவரையறையை நீடித்தது.
சேனாநாயக்காவின் கொள்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்த இவ்வரசியல் பிக்குகள், 1947ம் ஆண்டு ஜனவரி 6ம் திகதியில் களனி விகாரையில் கூடி, களனி சுதந்திரப் பிரகடனம்" என்றொரு பிரகடனத்தை வெளியிட்டார்கள். 1947ம் ஆண்டில் நடந்த பொதுத் தேர்தலில், 'இவ்வரசி யல் பிக்குகள், சேனாநாயக்காவிற்கு எதிராக மார்க்சீயக் கட்சிகளையும், மார்க்சீய வேட்பாளர்களையும் ஆதரித்தனர். தேர்தலில் மார்க்சீயக் கட்சிகளின் வெற்றிக்குத் தாங்கள்தான் காரணம் என்று இவ்வரசியல் பிக்குகள் பறை சாற்றினர். இவ்வரசியல் பிக்குகள், இலங்கை ஒரு பெளத்த நாடாகப் பிரகடனப்படுத்தப்படல் வேண்டும் என்பதோடு நிற்கவில்லை.

99 ஒரு சிறுபான்மை சமூகத்தின் பிரச்சினைகள் IV
சிங்கள மொழி அரசமொழியாகப் பிரகடனப் படுத்தப்படல் வேண்டும் என்று அரசாங்கத்தை வற்புறுத்தினர். இது சம்பந்தமாக அவர்கள் பிரதமர் சேனாநாயக்காவைச் சந்தித்தபோது, அவர்களுடைய கோரிக்கையை வெறுப்போடு, புறக்கணித்தார்', என்று ஜேம்ஸ் மெனர், பண்டாரநாயக் காவும் இலங்கையும்" என்ற நூலில் கூறுகிறார். "இலங் கைச் சனத்தொகையில் எழுபது சதவிகிதமாக இருக்கும் சிங்கள இனம், அந்நியர் ஆதிக்கத்தில் பல நூற்றாண்டுகளாகத் தம்மைப் பாதுகாத்தது என்றால், ஒரு ஜனநாயக அரசியல் அமைப்பில், அவர்கள், சிதறிப் போவார்கள் என்று எண்ணுவதற்கு இடமில்லை' என்று சேனாநாயக்கா பிக்குகளுக்குப் பதிலளித்தார். சிங்கள மக்கள் மத்தியில் வளர்ந்துவரும் இன உணர்வை சேனாநாயக்கா உணரவில்லை என்பதை இது காட்டுகிறது. சிங்கள மக்களின் இனஉணர்வைத் தூண்டிவிடும் இம்மொழிப் பிரச்சினையை சேனாநாயக்காவுக்குப் பின்னால் பிரதமர்களாக வந்த டட்லி சேனாநாயக்காவும், சர். ஜோன். கொத்தலாவலையும் அலட்சியப்படுத்தினர். அரசாங்கத் தலைவர்களினதும், மார்க்சீயத் தலைவர்களினதும், மேலை நாட்டுப் பண்ப்ாட்டு வழக்கமும், நடையுடை பாவனைகளும், ஆங்கில மொழியில் அவர்களுக்கிருந்த மோகமும், 1950ம் ஆண்டுகளில் சிங்கள பாமர மக்களிடையே சிங்கள-பெளத்த உணர்வு வளர்வதற்குத் தூண்டுகோலாயிருந்தது.
1948ம் ஆண்டுக்குப் பிறகு, தேசிய உணர்வு இலங்கை மக்களிடையே பரவத் தொடங்கியது. பல இனங்கள் வாழும் இலங்கையில் தேசியம், "இலங்கைத் தேசியமாக இருக்க வேண்டும் என்ற பரந்த மனப்பான்மையைக் கொண்டிருந்தார் சேனாநாயக்கா, இலங்கைத் தேசியம் என்பது "சிங்களத் தேசியம்' என்ற கருத்தை சிங்கள இனவாதிகள் பரப்பத் தொடங்கினார்கள். இக்கருத்தை வலுவூட்டுவதற்கு, இவர்கள், வரலாற்றையம், சிங்கள மக்களின் பண்பாட்டையும், மரபையும் காட்டினார்கள். தமிழர்கள் இக்கருத்தை வெகுவாக எதிர்த் தார்கள். சிங்கள, தமிழ்மக்கள் வெவ்வேறான பாதைகளில்

Page 64
அ.முகம்மது சமீம் 1 OO
போவதற்கு இதுதான் ஆரம்பம். சிங்கள தேசியம், "சிங்கள பெளத்த தேசியமாக உருவெடுத்தது. சிங்கள சமூகத்தின் ஒரு கணிசமான அளவு உரோமன் கத்தோலிக்கர்களாக இருந்த சிங்களவர் இக்கருத்துக்குத் தமது எதிர்ப்பைத் தெரிவித்தனர். சிங்களவர் ஆரியர் என்றும் தமிழர்கள் தாம், திராவிடர் என்றும் தம்மை இனங்காட்டிக் கொண்டனர். சிங்க ள - பெளத்த 'உணர்வின் வளர்ச்சியினால், "இலங்கை சமுதாயம் ஒரு பல்லின மக்கள் வாழும் சமுதாயம்', என்ற கருத்துக்கும், இலங்கைத் தேசியம் என்ற கருத்துக்கும், "இலங்கை அரசாங்கம் ஒரு சமய சார்பற்ற அரசாங்கம்' என்ற கருத்துக்கும் சாவு மணி அடிக்கப் பட்டது. அனகாரிக்க தர்மபாலா, பியதாசசிறிசேன, முனிதாச குமாரதுங்க போன்ற எழுத்தாளர்களின் இன உணர்வைத் தூண்டிவிடும் எழுத்துக்களை முன் ஒரு அத்தியாத்தில் ஆராய்ந் தோம் - 1950களில் இவர்களின் வாரிசுகளாக மெத்தானந் தாவும், குலரத்னவும் இக் காலகட்டத்தில் தோன்றுகிறார்கள். சர். ஜோன் கொத்தலாவலையின் பெளத்தபிக்குகளை உதாசீனம் செய்யும் கொள்கையை எதிர்த்த, அகில இலங்கை பெளத்த காங்கரசின் தலைவரும், நீதியமைச் சருமான சர். லலிதா ராஜபக்ச அரசாங்கத்திலிருந்து விலகு கிறார்.
இவ்வினவாத அரசியல் கருத்துக்கள், சிங்களவர்கள் மத்தியில் "சிறிலங்கா சுதந்திரக்கட்சி என்ற ஒரு மத்திய கொள்கையுடைய கட்சியும், தமிழர்கள் மத்தியில் 'தமிழரசுக் கட்சி" என்ற ஒரு பிரிவினைக் கட்சியும் தோன்றுவதற்குக் காரணமாயமைந்தன. சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மூலம் சிங்கள பாமர மக்கள் தமது சிங்கள ஆதிக்கத்தை அரசியலில் நிலைநாட்டலாம் என்ற கருத்தையும் தமிழ் அரசுக் கட்சியின் மூலம், தமிழ் மக்கள், தம்முடைய தனித்துவத்தைக் காப்பாற்றுவதோடு, தம்முடைய பாரம்பரியத்தைப் பேணிக் காக்கும் ஒர் அரசியல் சுதந்திரத்தைப் பெறலாம் என்றும் எண்ணினர். இலங்கையின் இவ்விரு சமூகங்களும், வெவ்வேறு திசையில் செல்லும் போது ஏனைய சிறுபான்மையின மக்களாகிய முஸ்லிம்களும், இந்தியத் தமிழர்களும்,

101 ஒரு சிறுபான்மை சமூகத்தின் பிரச்சினைகள் IV
கிறிஸ்தவர்களும், செய்வதறியாது குழம்பிப் போன நிலையில் இருந்தனர். சிங்கள-பெளத்த இன உணர்வுக்குத் தலைமை தாங்க வந்த சிறிலங்கா சுதந்திரக் கட்சியை ஆதரிக்கத் தயங்கினர். மேலும், சுதந்திரக் கட்சி ஏகத்துவக் கொள்கைக்கு விரோதமான மார்க்சியக் கட்சிகளின் உதவியை நாடி நின்ற காரணத்தினால், முஸ்லிம்கள் ஐக்கிய தேசியக் கட்சியிலேயே நின்றனர். இவ்வின உணர்வு சிங்கள மக்கள் மத்தியிலும் தமிழ் மக்கள் மத்தியிலும் பரவியதனால், முஸ்லிம்கள் எப்படிப் பாதிக்கப்பட்டனர் என்பதை இனிவரும்அத்தியாயங்களில் ஆராய்வோம்.

Page 65
அ. முகம்மது சமீம் 102
16. சிங்கள பெளத்த தேசியவாதமும் அரசியல் பிக்குகளும்
இலங்கை பல இனங்களும், பல சமயத்தவர்களும் வாழும் ஒரு நாடு. ஒன்றுக்கொன்று முரண்பட்ட சமயக் கருத்துக் களையும், பண்பாட்டு முறைமைகளையும், மரபுகளையும் பின்பற்றும் இச்சமூகங்கள் தத்தமது தனித்துவத்தையும், பாரம்பரியத்தையும் காப்பாற்றுவதில் அதிக அக்கறை கொண்டிருக்கும். ஒரு பெரும்பான்மை சமூகம் தனது அரசியல் ஆதிக்கத்தை நிலை நாட்டும் அதே வேளையில், தனது சமயக் கருத்துக்களையும், மரபையும், மொழியையும் திணிக்க முயற்சி எடுக்கும் போது, சிறுபான்மையின மக்கள் மத்தியில், தங்களது, தனித்துவத்திற்குப் பங்கம் ஏற்படப் போகிறது என்ற பீதி ஏற்படுகிறது. இதன் காரணமாக பெரும் பான்மையின மக்க ளுக்கும், சிறுபான்மையின மக்களுக்குமிடையில் இருக்கும் நேச உறவு பாதிக்கப்படுகிறது. சமாதானமும் செளஜன்யமும் இருந்த இடத்தில், வெறுப்பும், பகைமையும் வளர்கிறது. பெரும்பான்மையினம் தன்னை ஆளும் இனமாகவும், சிறுபான் மையினங்கள் ஆளப்படும் இனங்களாகவும் என்ற மனப்பான் மையில் செயல்படும்போது, சிறுபான்மையின மக்களிடையே ஒரு கசப்புணர்வு பரவுகிறது. இக்கருத்தோட் டத்தை நாம் காரண காரியமுறையில் ஆராய்வோமானால், ஆட்சி செய்பவர் கள் உயர்ந்தவர்களென்றும் ஆட்சி செய்யப்படுபவர்கள் தாழ்ந்தவர்கள் என்ற கருத்தும் பெறப்படும். அதனால், ஆட்சி செய்யப் படுபவர்கள், ஆட்சியாளர்களுடன் சம உரிமை கோரமுடியாது என்ற கருத்தும் வெளிப்படுகிறது. இல்லையா? இந்தக் கருத்தோட்டத்தினால் ஏற்பட்ட விளைவுதான் இன்று உள்நாட்டு யுத்தமாகப் பரிணமித்திருக்கிறது. சமூகங் களிடையே சமாதானம் நிலவ வேண்டுமென்றால் இந்தக் கருத்தோட்டம் மாற வேண்டும். 1948ம் ஆண்டுக்குப் பிறகு இந்நாட்டில் தோன்றிய இயக்கங்களையும் இவ் வியக்கங் களுக்குத் தலைமை தாங்கியவர்களினது எண்ணங்களையும்

103 ஒரு சிறுபான்மை சமூகத்தின் பிரச்சினைகள் IV நாம் ஆராய்ந்தால், இன்று இந்நாட்டின் சீரழிவுக்குக் காரணமாயிருக்கும் காரணிகளை நாம் அறியலாம். இவ்வியக்கங்களை நாம் கால எல்லைக்குள் அடைக்காமல், ஐம்பதுகளிலிருந்து இன்று வரை இந்நாட்டில் ஏற்பட்ட அனர்த்தங்களை மையமாக வைத்து ஆராய்வோம்.
பத்தொன்பதாம், இருபதாம் நூற்றாண்டுகளில், பெளத்த மதத்தைப் பின்பற்றிய பெளத்தர்கள் இலங்கையின் இனப்பிரச்சினையில் ஈடுபட்டார்கள் என்பதை ஆராய்வோமா னால் நாம் பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் தோன்றிய 'பெளத்தமத மறுமலர்ச்சி"க்குப் போக வேண்டும். கடந்த நூறு வருடங்களில் - அதாவது 1880க்கும் 1990க்கும் இடையில் உள்ள காலப்பகுதியில் நிகழ்ந்த அரசியல் சம்பவங்களை நாம் ஆராய்ந்தால் இனப்பிரச்சினையினால் ஏற்பட்ட இன்றைய வன்செயல்களுக்குரிய காரணிகளை அறியலாம்.
அஹிம்சா தர்மத்தைப் போதிக்கும் பெளத்தமதத்தைப் பின்பற்றும் பெளத்தர்களும், அதன் நியமங்களைக் கடைப் பிடித்து, அதனைப் போதிக்கும், பெளத்த பிக்குகளும், சிறுபான்மை சமூகங்களுக்கெதிராக வன்செயல்களைத் தூண்டி விட்டார்களென்றால், அது உண்மை யாயிருக்க முடியாது. ஆனால் அதுதான் உண்மை. பெளத்த மறுமலர்ச்சி' பத்தொன் பதாம் நூற்றாண்டின் மத்தியப் பகுதியில், கிறிஸ்தவ இயக்கத் திற்கு எதிராக, மிக்கெட்டுவத்தகுணாநந்த தேரோவினாலும், ஹிக்கடுவே சுமங்கல தேரோவினாலும் ஆரம்பிக்கப்பட்ட ஒர் இயக்கம். அதற்கு ஒர் உருவம் கொடுத்து, அதனை ஒரு கழகமாக- இயக்கமாக - மாற்றினார், அமெரிக்காவிலிருந்து இலங்கை வந்த பெளத்த ஞானி கர்னல் ஒல்கொட் என்பவர். இவ்வியக்கத்திற்கு மெருகூட்டினார் அநகாரி கதர்மபாலா.
அநகாரிக்க தர்மபாலா, இப் பெளத்த இயக்கத்தை கிறிஸ்தவர்களுக்கெதிராக ஒர் இயக்கமாக மாற்றியதோடு,

Page 66
அ. முகம்மது சமீம் 104
"பெளத்த இனம்' என்பது "சிங்கள இனம்' என்று ஒருமைப் படுத்தினார். துட்டகாமினி, தான் தமிழர்களுடன் செய்த போரில், பல்லாயிரக்கணக்கான மக்களைக் கொன்று குவித்ததற்காக வருந்தி இதற்கு என்ன பரிகாரம் என்று தன்னை சுற்றியுள்ள பெளத்த பிக்குகளிடைம் கேட்டபோது, “பெளத்த மதத்தில் நம்பிக்கையில்லாதவர்களையும் துஷ்டர் களையும் கொலை செய்வது பாபமில்லை' என்று அவர்கள் கூறியதாக "மகாவம்சம் கூறுகிறது (25வது அதிகாரம் 101-11 செய்யுள்) இந்த யுத்தத்தை சங்கைக்குரிய வல்பொல ராகுல 'சிங்கள தேசியத்தின் ஆரம்பம் இது' என்று கூறுகிறார்.
பத்தொன்பதாம் நூற்றாண்டில் தோன்றிய பெளத்த மறுமலர்ச்சி இயக்கம், அரசியல் பொருளாதார நோக்கங் களையும் கொண்டிருந்தது. "உள்ளூர் முதலாளித்துவ பொரு ளாதாரம் வளர்ந்த காலகட்டத்தில் தோன்றிய இவ்வியக்கம் மத்தியதர வர்க்கத்திற்கு எதிராக மட்டுமல்ல, பிரித்தானிய ஆட்சிக்கு எதிராகத் தோன்றிய தேசிய இயக்கமாகவும், கிறிஸ்தவ இயக்கங்களுக்கு எதிராகவும் வளர்ந்தது' என்று குமாரி ஜயவர்தன கட்டுரையொன்றில் கூறுகிறார்.(பிக்குகளின் கிளர்ச்சி மறுமலர்ச்சி, கிளர்ச்சி, இனம் - லங்கா கார்டியன் - ஜூன் 15, 1979 - பக்கம் 13)
கர்னல் ஒல்கொட் இலங்கைக்கு வருவதற்கு முன்பேயே இவ்வியக்கம் அரசியல் உருவம் பெறுகிறது. மிக்கெட்டுவத்த குணானந்த தேரோவும், ஹிக்கடுவே சிறிசுமங்கல தேரோவும், கிறிஸ்தவர்களுக்கு எதிராகக் கூட்டங்கள் வைத்து பிரச்சாரம் செய்தார்கள். இவர்களோடு, வலபனே சித்தார்த்த தேரோ, வெலிகம சிறிசுமங்கலதேரோ, ரத்மலானை சிறிதர்மாலோக்க தேரோ ஆகியவர்களும் சேர்ந்து பிரச்சாரம் செய்தார்கள். இவ்வியக்கம், கர்னல் ஒல் கோட்டின் சிபாரிசில், பல கல்வி நிலையங்களையும் ஸ்தாபித்தது. இவ்வியக்கத்தின் முக்கிய கதாநாயகனாக விளங்கினார் அநகாரிக்க தர்மபாலா. அவர் வரலாற்றிலிருந்து மேற்கோள் காட்டி, "சிங்கள - பெளத்த

105 ஒரு சிறுபான்மை சமூகத்தின் பிரச்சினைகள் IV
இனத்தின் ஆதிக்க உரிமையை நிலைநாட்ட முற்பட்டார். இவ் வியக்கத்தை பெளத்த "- "சிங்க ள வர்த்தகர்களும், மத்தியதர வர்க்கத்தினரும் ஆதரித்தார்கள். 1915ம் ஆண்டில் முஸ்லிம்களுக்கெதிராக நடத்தப்பட்ட கலகத்தில் முக்கிய பங்கெடுத்தவர்கள் இவர்களே. முஸ்லிம் வர்த்தகர்களின் வர்த்தகத்திற்கு எதிராக எழுந்த இக்கலகம், நாளடைவில், இஸ்லாத்தைப் பின்பற்றும் எல்லா முஸ்லிம்களுக்கும் எதிராகப் பரவியது. முஸ்லிம்களை அடியோடு அழிப்பதோடு நாட்டை விட்டே துரத்த வேண்டும் என்பதும் அதன் அடிநாதமாக விளங்கியது.
பியதாச சிறி சேனாவை ஆசிரியராகக் கொண்டு வெளிவந்த "சிங்ஹல ஜாத்திய என்ற பத்திரிகை, முஸ்லிம்களுக்கு எதிராகப் புனைகதைகளை வெளியிட்ட தோடு, கொச்சினிலிருந்து இங்கு வந்து வியாபாரம் செய்யும், கரையோர சோனகருடன் - (கோஸ்ட மூவர்ஸ்) எவ்வித வர்த்தகத் தொடர்பும் சிங்களவர் வைத்திருக்கக் கூடாது' என்று 1909ம் ஆண்டிலேயே வெளியிட்டது. 1915ம் ஆண்டில் வெளிவந்த லக்மின என்ற பத்திரிகை 'சபிக்கப்பட்ட இவ்வினத்தை நாட்டைவிட்டே விரட்ட ஒரு திட்டத்தை வகுக்க வேண்டும்' என்று கூறியது. இக்கருத்தை விரிவுபடுத்தி, “சிங்கள பெளத்தய' என்ற பத்திரிகையில் முஸ்லிம்களுக் கெதிராகப் பிரச்சாரம் செய்தார் அநாகரிக்க தர்மபாலா.
இக்கலகத்தை பிரித்தானிய அரசாங்கம் அடக்கியபிறகு, இலங்கை அரசியல் தலைவர்கள், இலங்கைக்கு அரசியல் சுதந்திரம் கிடைக்க வேண்டுமென்ற அரசியல் இயக்கத்தில் முழு மூச்சாக ஈடுபட்டார்கள். அநகாரிக தர்மபாலாவும், இந்தியாவிலேயே தனது இறுதி காலத்தை 'புத்த கயாவில் கழித்தார்.
டொனமூர் அரசியல் காலத்தில் திரும்பவும், இன, மொழி, சமய அடிப்படையில் 'பெளத்த சங்கங்கள் நாடு

Page 67
அ. முகம்மது சமீம் O6
பூராவும் தோன்றின. இதில் முக்கியமானவை, அகில இலங்கை பெளத்த காங்கிரசும் சிங்கள மகாசபாவும்தான். இக்கால கட்டத்தில்தான் பெளத்தபிக்குகளில் சிலர் தீவிர போக்கைக் கடைப்பிடிக்க முற்படுகின்றனர். 1947ம் ஆண்டு பொதுத் தேர்த லுக்கு முன், களனியிலுள்ள வித்தியாலங்கார பிரிவெனைவைச் சேர்ந்த சில பெளத்த பிக்குகள், 'வித்தியாலங்காரக்குழு' என்று தம்மைக் கூறிக்கொண்டு, அரசியலில் பிரவேசித்தனர். "லங்கா சமசமாஜக் கட்சியின் ஆதரவாளர்களான இவர்கள் தேர்தல் கூட்டங்களில், சம சமாஜக் கட்சிக்காகப்பிரச்சாரம் செய்தனர். இவர்களில் முக்கியமான பிக்குகள் பலாங்கொடை ஆனந்த மைத்ரேய, நாரவில தம்மரத்தன, தும் பரபாலித, உடகந்தவெல சிறி சரணங்கர, ஆகியவர்களே.
"கொழும்பிலும், கொழும்பை அண்டிய பிரதேசங்களிலு முள்ள பிரிவெனாக்களிலிருந்து, தெளிவாக சிந்திக்கக் கூடிய ஒர் இளவயது பிக்குக்குழாம், 1947ம் ஆண்டு நடந்த பொதுத் தேர்தலின் மூலம் அரசியலில் ஈடுபடுவதைக் காணலாம். இவர்கள் பெரும்பாலும், சம சமாஜக்கட்சிக்கும் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் ஆதரவாகவே பிரச்சாரம் செய்தார்கள்', என்று "சிறிலங்காவின் அரசியலும் மதமும்', என்ற நூலில் உர்மிளா பத்ணிஸ் கூறுகிறார். இக்குழாத்தில், வல்பொல ராகுலதேரோ வும் பம்பரந்த சிறிசீவலி தேரோவும், கொட்டாஞ்சேனை பன்ன கித்தி தேரோவும், கல்லெல்ல ஆனந்தசாகரவும் இருந் தார்கள். இந்தியாவில் இவர்கள் கல்வி கற்ற காரணத் தினால், இடதுசாரிக் கொள்கையுடைய இந்திய பிக்குகளான, ஆநந்த கொளசல்யான, ராகுல சாங்கிருத்யாயன் போன்றவர் களின் கருத்துக்களின் செல்வாக்கு இவர்களிடம் தென்படலாயின.
1946க்கும் 1947க்குமிடையில் பிக்குகளிடையே 'பிக்குகள் அரசியலில் ஈடுபடலாமா?' என்ற விவாதம் நடைபெற்றது. பிக்கு சங்கத்தினில் இருந்த பழமை வாத கருத்துக்களைக் கொண்ட பிக்குகள், 'பிக்குகள் அரசியலில் ஈடுபடுவதைக் கடுமையாக எதிர்த்தார்கள். "பிக்குகளும்

ஒரு சிறுபான்மை சமூகத்தின் பிரச்சினைகள் IV
அரசியலில் ஈடபடலாம்' என்ற கருத்தை இளைய பரம்பரையைச் சேர்ந்த பிக்குகள் நிலைநாட்டினார்கள். இவர்களில் முக்கியமானவர் வல்பொல ராகுல பிக்கு. இவர் 'பிக்குகளின் மரபுரிமை"- (பிக்சுவுகே உறுமய) என்ற நூலை எழுதி' பண்டைய காலம் தொட்டே, பிக்குகள் மக்களின் சமூக நலனுக்காக அரசியலில் ஈடுபட்டு வந்தார்கள்' என்ற கருத்தை வலியுறுத்தினர். டி. எஸ். சேனாநாயக்கா, "பிக்குகள் அரசியலில் ஈடுபடக்கூடாது' என்று பிரச்சாரம் செய்தபோது, வித்தியாலங்கார பிரிவெனையின் அதிபர், பஞ்ஞாசார தேரோ, "மக்களின் நலன் அரசியலில் தங்கியிருக்கிறபடியால், பிக்குகள் அரசியலில் ஈடுபடத்தான் வேண்டும்', என்ற கருத்தை 'பிக்குகளும் அரசியலும் என்ற தன் நூலில் விளக்கினார். ஆனால், கண்டியிலுள்ள மல்வத்தை பிரிவெனாவைச் சேர்ந்த பிக்குகளும் ராமான்ய நிக்காயைச் சேர்ந்த பிக்குகளும், "மகா போதி சங்கத்தை" ச் சேர்ந்த பிக்கு அல்லாதவர்களும், பிக்குகள் அரசியலில் ஈடபடுவதை வன்மையாகக் கண்டித்தார்கள். அகில இலங்கை பெளத்த காங்கிரஸ், "எந்தவொரு பிக்கும், வாக் காளர்களுடைய உரிமைக்காகப் போராடவோ, உள்ளூர் ரீதியிலோ, அல்லது தேசிய ரீதியிலோ அரசியல் பதவிகளைப் பெறக் கூடாது' என்ற பிரகடனத்தை வெளியிட்டது. இதற் கெதிராக, தீவிர போக்குடைய பிக்குகள், ஜூன் 1946ம் ஆண்டில், இலங்கை பிக்குகளின் ஒன்றியம் (லங்கா எக்சத் பிக்கு பல மண்டலய) என்ற சங்கத்தை ஸ்தாபித்தார்கள். இச் சங்கம், "பெளத்த சங்கத்தைச் சேர்ந்த பிக்குகள், தம்முடைய சமூக அரசியல் உரிமைக்காகப் போராட உரிமையுள்ளவர்கள்? என்றும், 'முதலாளித்துவ அரசாங்கமான ஐக்கிய தேசியக் கட்சியின் அரசாங்கத்தைத் தோற்கடிப்பதே தமது கொள்கை என்றும் பிரகடனஞ் செய்தது. இச்சங்கம். மார்ச் மாதம், 1947ம் ஆண்டில், 'சோல் பரி யாப்பை உதறித்த ள்ள வேண்டும் , என்றும் 'இலங்கை ஒரு பூரணசுதந்திர நாடாகப் பிரகடனப்படல் வேண்டும்" என்றும் பிரகடனம் செய்தது. மேலும், 'இலங் கையில் ஒரு சோஷலிச ஆட்சி ஸ்தாபிக்கப்படல் வேண்டும்',

Page 68
அ.முகம்மது சமீம் O8 என்றும், 'போக்குவரத்து, நிலப்பொருட்சுரங்கங்கள், பெருந்ே தாட்டங்கள் அரசாங்கமயமாக்கப் படுவதோடு, இலவசக் கல்வித் திட்டமும் அமுலாக்கப்படல் வேண்டும்" என்றும் இவர்கள் தங்கள் கொள்கையைப் பிரகடனஞ் செய்தார்கள்.
1947ம் ஆண்டில் நடந்த பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி வெற்றிபெற்று அரசாங்கத்தை அமைத்தது. பிக்கு பல மண்டலயத்தின் நடவடிக்கைகள் தேர்தலுக்குப் பின் ஒரளவு ஒய்ந்து விட்டதென்றாலும், எதிர்கால நிகழ்வுகளுக்கு இது அடித்தளமாக அமைந்தது. "மத நம்பிக்கையற்ற மார்க்சீய வாதிகளுடன் சில பிக்குகள் சேர்ந்ததனால், இவர்களிடமிருந்து பெளத்தசமயம் காப்பாற்றப்படல் வேண்டும்', என்று ஐக்கிய தேசியக் கட்சியினர் கூக்குரலிட்டனர். தொழிற்சங்க வேலை நிறுத்தங்களிலும், அரசியல் கூட்டங்களிலும், ஈடுபட்டு விரக்தியடைந்த தீவிர கொள்கையுடைய இப்பிக்குகள் பெளத்த சமயம் அரசமதமாகப் பிரகடனஞ் செய்யப்பட வேண்டும் என்று தமது நிலைப்பாட்டினை மாற்றிக் கொண்டனர். இது சிறுபான்மை சமூகங்களுக்கெதிரான கொள்கையாதலால், மக்களின் உணர்ச்சியைத் தூண்டிவிட்ட இவர்களது பிரச்சாரம் பாமர மக்களிடையே காட்டுத் தீபோல் பரவியது. இவர்கள் ஆரம்பத்தில் வெற்றி பெறாததற்குக் காரணம், இவர்கள் கொழும்பைச் சேர்ந்த பிரிவெனாக்களின் பிக்குகள், ஆதலாலும், சமூகத்தின் மதிப்பைப் பெற்ற வயது முதிர்ந்த பிக்குகளை எதிர்த்ததனாலும், கண்டிப் பிரதேசத்தில் மத ஆதிக்கம் செலுத்திய சியாம் நிக்காய வைச் சேர்ந்த பிக்குகள் எதிர்த்ததுமே காரணம். எனவே தங்களுடைய கொள்கையை மாற்றி சமூகத்தின் ஒற்றுமையைப் பாதிக்கும் கருத்துக்களைப் பரப்பினர்.

ஒரு சிறுபான்மை சமூகத்தின் பிரச்சினைகள் IV
17. பெளத்த பிக்குகளின் அரசியல் செல்வாக்கு
ஒரு நாட்டில், மக்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் தங்கியிருக்கும் ஜனநாயக ஆட்சியில், பல்லினங்கள் வாழும் ஒரு சமுதாயத்தில், நிரந்தரமாக ஆட்சியில் அமர்ந்திருக்கும், ஒரு பெரும்பான்மை இனம் தன்னுடைய மொழியையும், மதத்தையும், கலாசாரத்தையும், மொழியாலும், மதத்தாலும், கலாசாரத்தாலும், வேறுபட்ட சிறுபான்மையினங்களின் மேல் திணிக்கும் போது, அச்சிறுபான்மை இனங்களின் அடிப்படை உரிமைகள் பாதிக்கப்படுகின்றன. அதுவும் குறிப்பாக, பெரும்பான்மை சமூகத்தின் இவ்வெதேச்சாதிகார போக்கிற்கு ஆதரவளித்தும், ஆசீர்வாதம் அளித்தும், வழி நடத்திச் செல்லவும் அச்சமூகத்தின் மதத்தலைவர்கள் முயலும்போது, சமூகங்களிடையே உள்ள பரஸ்பர ஒற்றுமை, சமாதானம், செளஜன்யம் பாதிக்கப்படுவதோடு, ஒரு பயங்கரமான நிலைமை உருவாகின்றது. சம அந்தஸ்து, சமாதானம், என்ற எல்லைக் கோட்டைத் தாண்டி, சிறுபான்மையின மக்களை அடக்கி, ஒடுக்கி ஆள முற்படுகிறது பெரும்பான்மையினம். பெரும்பான்மையினத்திற்கு அடிபணிந்து, அடிமை சமூகமாக, ஒரு தாழ்ந்த நிலையை சிறுபான்மையினம் ஏற்றுக் கொண்டால், அங்கே சமாதானமும் செளஜன்யமும் நிலவும். இதை ஏற்றுக் கொள்ளாவிட்டால் முடிவில் உள்நாட்டுக் குழப்பமும், உள்நாட்டு யுத்தமும் தான் ஏற்படும்.
இலங்கை முஸ்லிம்கள் தமது தாழ்ந்த நிலையை ஏற்றுக் கொண்ட காரணத்தினால் பிரச்சினையில்லாமல் வாழ்கின்றனர். முஸ்லிம் அரசியல் தலைவர்களும் இதை ஏற்றுக் கொண்டிருக் கின்றனர். இல்லாவிட்டால், இலங்கை இந்திய ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்ட நேரத்தில், முஸ்லிம்களுடைய உரிமைகள் பாதிக்கப்படும் என்று ஆட்சேபம் தெரிவித்த முஸ்லிம் தலைவர்களைக் கட்சியை விட்டும், அரசாங்கத்தை விட்டும்

Page 69
அ. முகம்மது சமீம் 10 வெளியேறும் படி அன்றைய ஜனாதிபதி கூறவில்லையா? 'முஸ்லிம்களுடைய உரிமையைப் பெற 'ஜிஹாத்' போராட் டத்தை நடத்துவோம் என்று ஒரு முஸ்லிம் அரசியல்வாதி கூறியதற்கு, இலங்கையிலுள்ள ஜூம்மா பள்ளிவாசல்களை யெல்லாம் ஆயுதம் தாங்கிய காக்கிச் சட்டைக்காரர்கள் தங்கள் துப்பாக்கிகள் சகிதம், முற்றுகையிடவில்லையா? பள்ளி வாசலுக்குத் தொழுகைக்காகச் செல்லும் முஸ்லிம்கள், ஆர்ப்பாட்டம் செய்வார்கள் என்ற பெரும்பான்மையின அரசியல்தலைவர்களின் கோணல் புத்தியைப் பற்றிக் கூறுவதா, அல்லது அவர்களுடைய ஆதிக்க வெறியைப் பற்றிக் கூறுவதா? சமீபத்தில், கிழக்கு மாகாணத்திற்கு ஒரு முஸ்லிம் பிரதிநிதி நியமிக்கப்படல் வேண்டும் என்ற முஸ்லிம் தலைவர்களின் கோரிக்கையை "நான்தான் கட்சியின் தலைவன்' என்ற ஆணவத்தில் கட்சித் தலைவர் உதாசீனம் செய்யவில்லையா? பள்ளிவாசல்கள் கட்டக்கூடாது, கண்டி தலதா மாளிகை இருப்பதனால், சுற்றாடலில் முஸ்லிம் பாடசாலை அமையக் கூடாது என்றெல்லாம் கட்டுப்பாடு விதிக்கப்பட்ட நேரத்தில், முஸ்லிம்கள் பயத்தில் இந்த அநீதியைத் தாழ்மையுடன் ஏற்றுக் கொள்ளவில்லயா? தொழு கையே தமது முக்கிய கடமை, என்றும் அல்லாஹ்வின் வழியே எம் வழியென்றும் தம்முடைய முழு நேரத்தையும் கழிக்கம், "தப்லீக் ஜமா அத்தாரை ஒரு சிங்கள துவேஷப் பத்திரிகை, "பயங்கரவாதிகள்' என்று கூறுவதைக் கேட்டும் வாய்மூடி மெளனியாக இருக்கும் ஒரு சமூகத்தின் அடிமை மனப்பான்மையை என்னவென்று கூறு வது? தன்மானமோ, சுய உணர்வோ இல்லாத ஒரு சமூகத்தின் எதிர்காலத்தைப் பற்றி நினைக்கவே பயமாயிருக்கிறது. தன் மானம் என்று ஒன்று இருந்திருந்தால், "சிங்கள மொழி மட்டும் தான் அரசமொழியாக இருக்க வேண்டும்" என்ற சட்டத்தினால், இன்று முஸ்லிம் சமூகம் மொழி அடிப்படையில், இரண்டாகப் பிளவு பட்டிருப்பதை எதிர்த்துப் போராடியிருக்கமாட்டார் களா? முஸ்லிம்களுடைய ஒற்றுமை இதனால் பாதிக்கப் பட்டிருப்பதை உணரும் சக்திகூட இச்சமுகத்திற்கு இல்லை.

11 ஒரு சிறுபான்மை சமூகத்தின் பிரச்சினைகள் IV
தமிழர் சமூகம் அப்படியல்ல. தாழ்ந்த நிலையை - இரண்டாந்தரப் பிரஜைகள் என்ற நிலையை - அவர்கள் ஏற்றுக் கொள்ளத் தயாராயில்லை. சம அந்தஸ்து கோரிய காரணத் தினால்தான், சிங்கள இன வெறியர்களின் தாக்குதல்களுக்கு உள்ளானார்கள். "உணவு, உடை, இருப்பிடம், மனிதனின் அடிப்படை உரிமைகள். இவ்வுரிமைகளை மறுத்து கட்டுப்பாடு விதித்தது ஒரு பேரினவாதக் கூட்டம். இதில் சிலவற்றைத் தளர்த்தியது இன்னொரு கூட்டம், உப்பையும் புளியையும் கொடுத்துவிட்டு, பிரச்சினைகளைத் தீர்த்துவிட்டோம் என்றால், தன்மானமுள்ள எந்தச் சமூகம்தான் ஏற்றுக் கொள்ளும்?
பெரும்பான்மையின மக்களின் மனதில் இத்தீய எண்ணங்களைப் பரப்பிய சூத்ரதாரிகள் யார் என்பதை இனி கவனிப்போம். "லங்கா எக்சத் பிக்கு பல மண்டலயத்தின் முக்கியத்துவத்தை நாம் 1956ம் ஆண்டில் நடந்த தேர்தலில்தான் அறிகிறோம். இச்சங்கத்தைச் சேர்ந்த பிக்குகள் இத்தேர்தலில் முழுமூச்சாக இறங்கினார்கள். ‘சிங்கள-பெளத்த தேசியம் என்ற கோஷத்தை மக்கள் முன் பரப்பினார்கள் மார்க்சீய வாதிகளை ஆதிரித்த இப்பிக்குகள் படிப்படியாக, தம்முடைய இடதுசாரிக் கொள்கையைக் கைவிட்டு விட்டு, "சிங்கள -பெளத்த இன உணர்வை மக்கள் மத்தியில் பரப்பினார்கள். 'அரசியல்-பெளத்தத்தின் ஆரம்பத்தைக் காண்கிறோம். சிறு பான்மையினங்களை ஒதுக்கித் தள்ளுவதும், பேரினவாத ஆதிக்கத்தை நிலைநாட்டுவதுமே இவர்களது கொள்கை யாயிருந்தது. "சிங்க ள - பெளத்த தேசியம் நிலைநாட்டப் பட்டது. சிங்கள அரசியற் கட்சிகளும் படிப்படியாக இக் கொள்கையைப் பின்பற்றத் தொடங்கின. சிறுபான்மையின மக்கள் தம்முடைய எதிர்காலத்தில் நம்பிக்கை இழந்தனர்.
பிரித்தானியர் தமது ஆட்சியில் சிங்க ள பெளத்த இனத்திற்கு எதிராகத் துரோகச் செயலில் ஈடுபட்டார்கள் என்றும் பெளத்த சமயத்தை அதற்குரிய அரியாசனத்தில் அமர்த்துவதுதான் இப் பெளத்த மறுமலர்ச்சியாளர்களின்

Page 70
அ. முகம்மது சமீம் 12 நோக்கமாயிருந்தது. இக்கொள்கைகளை நாம் ஆராய வேண்டு மானால், நாற்பதாம், ஐம்பதாம் ஆண்டுகளில் வெளிவந்த மூன்று ஆவணங்களை நாம் ஆராய வேண்டும். முதலாவது, 1946ம் ஆண்டில், வெளிவந்த வல்பொல ராகுல எழுதிய 'பிக்குகளின் உரிமை என்ற நூல். இரண்டாவது, 1956ம் ஆண்டில் 'பெளத்த விசாரணைக்குழுவினால் வெளியிடப்பட்ட பெளத்த சமயத்திற்கு இழைக்கப்பட்ட துரோகம்" என்ற அறிக்கை. மூன்றாவதாக, டி. சி. விஜய வர்தனவினால் எழுதப்பட்ட, "தர்ம விஜய', அல்லது "கோயிலில் தோன்றிய கிளர்ச்சி' என்ற நூல். இந்நூல்களை ஆராய்வதன் மூலம், பெளத்த மறுமலர்ச்சி இயக்கத்தின் மூன்று முக்கிய நோக்கங்களை நாம் அறிகிறோம். முதலாவது பண்டைய காலந்தொட்டு பெளத்த பிக்குகள் அரசியலில் ஈடுபட்டு வந்திருக்கிறார்கள் என்ற உண்மையை நிலைநாட்டுவது. இரண்டாவது இலங்கையில் பிரித்தானிய அரசாங்கம், பெளத்த சமயத்திற்கு எதிராகவே செயல்பட்டு வந்திருக்கிறது என்ற காரணத்தினால், பெளத்த சமயம் திரும்பவும் தன்னுடைய உரிய ஸ்தானத்தில் அமர்த்தப்படல் வேண்டும் என்பதும் மூன்றாவதாக பெளத்த பிக்குகளின் சங்கமும், பழையபடி அதற்குரிய இடத்தில் நிலைநிறுத்தப்படல் வேண்டும், என்பதுமே .
பூரீ வல்பொல ராகுல தன்னுடைய "பிக்குகளின் உரிமை” என்ற நூலில், டி. எஸ். சேனாநாயக்காவின், "பிக்குகள் அரசியலில் ஈடுபடக்கூடாது' என்ற கொள்கையைச் சாடினார். அதனாற்றான், வித்தியாலங்கார பிரிவெனவைச் சேர்ந்தவர்கள் 'பிக்குகள் அரசியலில் ஈடுபடலாம் என்ற பிரகடனத்தை வெளியிட்டனர், என்றார். இதன் பிறகு பிக்குகளில் சிலர் பெளத்த ஞான சபை மண்டபத்தில் கூடி "பிக்குகள் தங்களது நடவடிக்கைகளைத் தாங்களேதான் நிர்ணயிக்க வேண்டும். இதில் பொதுமக்கள் தலையிடக்கூடாது' என்று முடிவெடுத் தனர். இக்கூட்டத்திற்குப் பிறகு, "பிக்குகள் 'முற்போக்கு வாதிகள்' என்றும் "பிற்போக்குவாதிகள் என்றும் பிரிந்தனர்,

113 ஒரு சிறுபான்மை சமூகத்தின் பிரச்சினைகள் IV
என்று வல்பொல ராகுல கூறுகிறார். 'ஐக்கிய பிக்கு சங்கத்தின் (எக்சத் பிக்கு மண்டலய) நடவடிக்கைகளின் காரணமாகத் தான், பெளத்தர்கள் மத்தியிலும், பெளத்த பிக்குகளின் மத்தியி லும், சமய, அரசியல், சமூக, பொருளாதார விழிப்புணர்ச்சி ஏற்பட்டது' என்று ராகுல கூறுகிறார். "இதன் காரணமாகத் தான் பெளத்த இலக்கியத்தில், 'பிக்குகளின் அரசியல்", அரசியல் பிக்குகள்' என்ற பதப்பிரயோகங்கள் புகுந்தன என்கி றார், வல்பொல ராகுல தேரோ, இலங்கையின் பண்டைய காலக் கோவைகளான, "மகாவம்சம் ', "தீப வம்சம் போன்றவை களிலிருந்து மேற்கோள்கள் காட்டி, 'பெளத்த சமயம் சிங்கள மக்களின் "தேசிய மதம் என்றும், 'புத்தமதத்தை, சிங்கள மக்களின் தேசியத்திலிருந்தோ, சிங்கள மக்களின் பண்பாட்டிலிருந்தோ பிரிக்க முடியாது. ஆகையினால், 'மத-தேசியம்', "மத தேசியப் பற்று' என்ற சொற் பிரயோகங்கள் நடைமுறையில் வந்தன' என்று கூறுகிறார்.
"நாகரிக வளர்ச்சிக்கு - கலை, கலாசாரம், இலக்கியம்ஆகிய எல்லாத் துறைகளிலும் புத்த பிக்குகள் பெரும் பங்காற்றினார்கள். மேலை நாட்டு ஏகாதிபத்தியவாதிகளின் வருகையால் சிங்கள மக்களின், நாகரிகமும் பண்பாடும் பெரிதும் பாதிக்கப்பட்டது. அந்நியர்களிடமிருந்து நாட்டின் சுதந்திரத்தைக் காப்பாற்றுவதற்காக பிக்குகள் முன்வந்தார்கள் என்பது வரலாறு. எனவே சிங்கள மக்களின், அரசியல், சுதந்திரத்தைக் காப்பாற்றுவதற்காக, பிக்குகள் திரும்பவும் அரசியலில் ஈடபட வேண்டும்', என்ற கருத தை வலியுறுத்தினார் ராகுலதேரோ,
இரண்டாவது ஆவணமான, விசாரணைக்குழுவின், 'பெளத்த மதத்திற்கு இழைக்கப்பட்ட துரோகம்', என்ற அறிக்கை, தமிழர்களின் படையெடுப்புக்களினாலும், மேல்நாட்டு ஏகாதிபத்தியவாதிகளின் அனுசரணையினாலும் கிறிஸ்தவ சமயத்தினாலும் பெளத்த மதம் பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கிறது", என்ற கருத்தை வலியுறுத்துகிறது.

Page 71
அ. முகம்மது சமீம் 14
பதினான்கு பேரைக் கொண்ட இக்குழு வில் மூவரை நாம் முக்கியமாகக் குறிப்பிடலாம். பேராசிரியர் மலல சேக்கரா, ஆனந்த கல்லூரி, அதிபர்களான, பி.டி. எஸ். குலரத்ன, எல்.எச். மெத்தனாந்தா, ஆகியவர் இக்குழுவில் அங்கம் வகித்தனர். இக்குழுவின் அறிக்கையில் கூறப்பட்ட சிபாரிசுகள்தான், பின்னர் பண்டார நாயக்கா அரசாங்கங்களினால் நிறைவேற் றப்பட்டன. இக்குழுவின் அறிக்கையில் கூறப் பட்டவைகளை நாம் சுருக்கமாகக் கூறுவதாயிருந்தால்,
"பண்டைய காலத்தில் மகோன்னத நிலையிலிருந்த புத்த சமயம், தமிழர்களின் படையெடுப்புக்களினாலும், மேல்நாட்டவர்களின் ஆதிக்கத்தினாலும் நலிவுற்றது. சுதந்திர இலங்கையில் புத்த சமயம் திரும்பவும் தன்னுடைய உரிய ஸ்தானத்தைப் பெற வேண்டும். பிரித்தானியருடைய ஆட்சிக்காலத்தில் கிறிஸ்தவ சமயத்திற்கு அபரிமிதமான சலுகைகள் கொடுக்கப்பட்டன. அதே வேளையில் புத்த சமயமும், பிக்குகளின் சங்கமும், நியாயமான முறையில் இயங்க முடியாமல், அவைகளுக்குக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. முக்கியமாகக் கல்வித்துறையில், கிறிஸ்தவ மிஷனரிமார்களுக்கு அதிக சலுகைகளும், உதவிகளும் அரசாங் கத்தால் வழங்கப்பட்டன. நாடு பூராவும் கிறிஸ்தவப் பாட சாலைகள் நிறுவப்பட்டு அவைகளில் கல்வி பயிலும் பெளத்த மாணவர்கள் மதம் மாற்றப்பட்ட அதே வேளையில், புத்த சமயத்தைச் சேர்ந்தவர்களுக்குக் கல்விபுகட்டுவதில் எவ்வித அக்கறையையும் அரசாங்கம் காட்டவில்லை. இதனால் பெளத்தர்களின் கல்வியும், அவர்களது மதமும் பெரிதும் பாதிக்கப்பட்டது. பெளத்தர்களின் இன்றைய நிலையை மாற்றுவதற்கு அரசாங்கம் இரண்டு பரிகாரங்களைச் செய்ய வேண்டும். ஒன்று அரசாங்கம், பெளத்த சாசன சட்டம் , ஒன்றை நிறைவேற்றி அதனை அமுல் நடத்த வேண்டும். இச்சட்டத்தின் மூலம் அரசாங்கம் ஒரு பெளத்த சாசன சபையை அமைத்து, பெளத்த அரசர்களின் காலத்தில் இருந்த தைப் போல், புத்த மதத்திற்கு எல்லாவகையான

15 ஒரு சிறுபான்மை சமூகத்தின் பிரச்சினைகள் IV
சிறப்புரிமையை வழங்க வேண்டும். அரசாங்கம், “காலனித்துவ ஆட்சிக்காலத்தில், பாதிக்கப்பட்ட எல்லாசமயங்களையும் புனரமைப்பதற்கு, சமய சம்பந்தமான விஷயங்களைக் கவனிப்பதற்கு ஒர் அமைச்சரை நியமிக்க வேண்டும். இரண்டாவது, கிறிஸ்தவ மிஷனரி பாடசாலைகளுக்கு அரசாங்கம் வழங்கும் நன்கொடைகள் நிறுத்தப்படல் வேண்டும். இப் பாடசாலைகள், பின்னர் அரசாங்க மயமாக்கப்படல் வேண்டும். இதனால் சமூகங்களிடையே இருக்கும் ஏற்றத்தாழ்வுகள் நீக்கப்படும்', மேற் சொன்ன சிபாரிசுகளை பண்டாரநாயக்க அரசாங்கங்கள் நடைமுறைப் படுத்தின என்பது வரலாறு. இவற்றைப் பின்னர் பார்ப்போம்.

Page 72
அ. முகம்மது சமீபி 116 18. சிங்கள - பெளத்த தேசியத்தினால் ஏற்பட்ட அனர்த்தங்கள்
ஒரு நாட்டில் சனத்தொகை பெருக்கத்தினால் பொருள்வளம் குன்றும்போது, அந்நாட்டின் ஆட்சியார்கள் பல உத்திகளைக் கையாள வேண்டிவரும். வெளிநாட்டு மூலதனத்தின் மூலம் தொழிற்சாலைகளை அமைத்து, உற்பத் தியைப் பெருக்கி, வெளிநாட்டு வர்த்தகத்தை விருத்தி செய்து நாட்டின் பொருளாதாரப் பிரச்சினைகளைத் தீர்க்கலாம். இவை களைச் சரிவர செய்யமுடியாமல், பொருளாதார, மந்த நிலையை அடையும்போது, நாட்டில், மொழி, சமயம், இனப் பிரச்சனைகள் தலையெடுக்கத் தொடங்குகின்றன. இலங் கையின் பொருளாதாரப் பிரச்சினையைக் கூறப்புகுந்த கலாநிதி லால் ஜயவர்தன "சனத்தொகையின் பெருக்கத்தினால், நாட்டின் பொருளாதார வளர்ச்சி குன்றிய போது, குறைவாகவுள்ள பொருள்வளங்களை எல்லோருக்கும் சமமாகப் பகிர்ந்தளிக்க முடியாத நிலையேற்பட்டபோது, சிங்கள-பெளத்தர்களுக்கு மாத்திரம் பகிர்ந்தளிப்பதற்கு "சிங்கள-பெளத்த தேசியம்' என்ற தத்துவவாதம் உதவியளித்தது' என்று பெளத்தமதம் துரோகிக்கப்பட்டதா? என்ற நூலின் முன்னுரையில் கூறுகிறார். மேலும் அவர் 'தமிழ்சமூகம் புறக்கணிக்கப்பட்டதோடு, தமிழ் தேசிய வாதிகள் பிரிவினை கோருவதற்கும் காரணமாய் அமைந்தது. "சிங்கள-பெளத்த தேசியவாதம் எந்த அளவிற்கு நாட்டின் உள்நாட்டு யுத்தத்திற்குக் காரணமாயமைந்தது என்ற உண்மையை, அரசாங்கத்தின் பொருளாதார ஆலோசகராக இருக்கும் லால் ஜயவர்தனாவின் மேற்கூறிய கூற்று தெளிவாக்கு கிறது.
சிங்க ள - பெளத்த தேசியம்' என்ற தத்துவத்தை முன்வைத்துத்தான், 1956ம் ஆண்டில், ஐக்கிய தேசியக் கட்சியை முறியடித்து, சிறிலங்கா சுதந்திரக்கட்சி ஆட்சிக்கு வந்தது. ஆனால் இக்கொள்கைக்கு எதிராகப் பரந்த மனப் பான்மையைக் கொண்டிருந்த ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சி

117 ஒரு சிறுபான்மை சமூகத்தின் பிரச்சினைகள் IV
யிலிருந்தபோது, சிறுபான்மை சமூகத்தினர் தமக்குப் பாதகம் எதுவும் ஏற்படாது என்று நிம்மதியாயிருந்தனர். ஆனால், காலப்போக்கில் ஐக்கிய தேசியக் கட்சியும் "சிங்கள-பெளத்த தேசியத்தைத், தனது கொள்கையாக ஏற்றுக் கொண்டபோது, சிறுபான்மை சமூகத்தினர், இலங்கையின் சிங்கள தேசியக் கட்சிகளின் போக்கைக் கண்டு தம்முடைய நம்பிக்கையை இழந்தனர். அரசாங்கத்தை மாறிமாறி அமைத்த இவ் விரு கட்சிகளும் சிறுபான்மையினங்களைப் புறக்கணித்தனர். முஸ்லிம் சமூகத்தவர் தம்முடைய தாழ்ந்த நிலையை ஏற்றுக் கொண்டனர். இக்கொள்கையினால் ஆத்திரமடைந்த தமிழர்சமூகம் உரிமைக்காகப் போராடியது.
"சிங்கள-பெளத்த தேசியத்தின் அடிப்படைக் கொள்கை என்னவென்றால் இதன் எல்லைக்குட்பட்ட சமூகத்தவர் மாத்திரம்தான் சனநாயக உரிமை அனுபவிக்கலாம். இவ் வெல்லைக்கு அப்பாற்பட்டவர்கள் இவ்வுரிமையைக் கோருவதற்குத் தகுதி அற்றவர்கள், என்பதே' என்று பேராசிரியர் தம்பையா, தனது 'பெளத்த சமயம் துரோகத்திற் குள்ளாக்கப்பட்டதா?’ என்ற நூலில் கூறுகிறார். அவர் மேலும், 'இந்தத் தத்துவத்தின் அடிப்படையாகத் தோன்றிய, சிங்களபெளத்த மக்களின் மேலாதிக்கக் கொள்கை, சிறுபான்மை யினத்தவருக்கு அரசியல் அதிகாரம் பரவலாக் கப்படுவதற்கு எதிர்ப்பைத் தெரிவிக்கிறதென்றால், நாட்டின் பிரிவினையை ஏற்றுக் கொள்ளுமா?' என்ற கேள்வியை எழுப்புகிறார்.
பண்டைய காலந்த தொட்டே சிங்க ள - பெளத்த இனத்தின் மரபு, மூன்று அம்சங்களைக் கொண்டிருந்தது, 'நீர்ப்பாசன ஏரி, கோயில், வயற்காணி என்ற இவைகளைக் கொண்டே சிங்கள-பெளத்த இனத்தின் நாகரிகம் தொன்று தொட்டு வளர்ந்து வந்திருக்கிறது. இந்தக் கருத்தை வலியுறுத்த வந்த ஐக்கிய தேசியக் கட்சியின் மகாவலி அபிவிருத்தித் திட்டத்தின் 1983 ஆண்டு அங்குரார்ப்பன வைபவத்தில், "மகாவலித்திட்ட அமைச்சர் 'பண்டைய சமூகம் போற்றி

Page 73
அ.முகம்மது சமீம் 118
வளர்த்த விழுமியங்களை அடிப்படையாகக் கொண்ட 'ஏரி, கோயில், வயற்காணி' இவைகள்தான், எதிர்கால மகாவலி சமுதாயத்தின் உயிர்நிலையாக விளங்கப் போகிறது." என்று கூறினார். இவர் கூறியதன் விளக்கம் என்னவென்றால், பெளத்த சமயத்தை அடிப்படையாகக் கொண்ட சிங்கள இனத்தை வளர்ப்பதுதான் எமது கொள்கை என்பதே.
இனி, டி.சி. விஜயவர்தனாவினால் எழுதப்பட்டு 1953ம் ஆண்டில் வெளிவந்த 'தர்ம விஜய அல்லது 'கோயிலில் தோன்றிய கிளர்ச்சி", என்ற நூலை ஆராய்வோம். 'புத்தரின் அருளால், சிங்கள சமூகத்தின் நாகரிக வளர்ச்சிக்கும், ஒரு தேசிய இனமாக உருவெடுப்பதற்கும் காரணமாயிருந்த புத்த சமயம் இலங்கைக்கு வந்த 2500 வருடத்தை நினைவு கூருகமாக 'இந்நூலை வெளியிடுகிறோம். என்று நூலின் ஆசிரியர் கூறுகிறார். புத்த தர்மத் தோடு, சிங்கள தேசிய இனத்தை ஒன்றாக இணைத்து வளர்ந்ததுதான் இலங்கை நாடு. சிங்கள இனத்தின் சமயம் மட்டுமல்ல, கலை, கலாசாரம், இலக்கியம், ஆகியவைகளின் கேந்திரஸ்தானமாக அமைந்தது கோயில், நூலாசிரியர் இந்நூலில் இரண்டு கருத்துக்களைக் கூறுகிறார். முதலாவது, சிங்கள அரசர்கள் பண்டைய நாள் தொட்டு, புத்த சமயத்தைப் பராமரித்தது மட்டுமல்ல, புத்த சமயத்தின் மேம்பாட்டுக்கும், வளர்ச்சிக்கும் உத்தரவாதம் அளித்தனர். இரண்டாவது, புத்த பிக்குகள் தொன்று தொட்டு அரசியலில் முக்கிய பங்கை வகித்து வந்திருக்கின்றனர். சிங்கள மக்களின் நன்மைக்காகவும், நல் வாழ்வுக்காகவும், சமாதானத்திற் காகவுமே புத்தபிக்குகள் அரசியலில் ஈடுபட்டு வந்திருக் கிறார்கள். இந்நூலுக்கு முன்னுரை எழுதிய பஹமுனே சிறி சுமங்கல தேரோ, ஒரு படி மேலே சென்று மகாவம் சத்திலிருந்து மேற்கோள்காட்டி, "சிங்கள அரசர் களிடையே பிரச்சினைகள் ஏற்பட்டபோதெல்லாம், புத்த பிக்குகளே இவைகளைத் தீர்த்து வைத்தனர்" என்றும், சிங்கள அரசர்களை ஆட்சியில் நியமித்ததே புத்த பிக்குகள்தான் என்றும் கூறுகிறார். அரசர்களின் தெரிவுகளிலும், முடிசூட்டு

| 19 ஒரு சிறுபான்மை சமூகத்தின் பிரச்சினைகள் IV
விழாக்களிலும், அரசர்களின் நடத்தைகளிலும், தமது செல் வாக்கை செலுத்திய பிக்குகள், மக்களைக் கொடுங் கோலாட்சி யிலிருந்து விடுவிப்பதிலும் முக்கிய பங்கை வகித்தனர் என்று தேரோ கூறுகிறார். 'வருங்கால சந்ததியினருக்கு ஒரு வழி காட்டி யாக அமையட்டுமே என்ற எண்ணத்தில்தான் அன்றைய பிக்குகள் வரலாற்று நிகழ்ச்சிளைக் கோவை செய்து வைத்த னர்' என்றும் கூறுகிறார். 1953ம் ஆண்டில், ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சிக்காலத்தில் வெளியான இந்நூல் பெளத்த சமயம் ஆட்சிப் பீடத்தில் அமர வேண்டியதன் அவசியத்தை உணர்த்துகிறார் இதன் ஆசிரியர். இக்கருத்துக்களின் செல் வாக்குதான், 1956ம் ஆண்டில் பண்டார நாயக்கா அரசாங்கம் பெளத்த மதத்திற்கு முக்கிய இடத்தைக் கொடுக்கக் காரண மாயிருந்தது.
சிங்க ள - பெளத்த தேசியவாதம். 1956ம் ஆண்டு பண்டாரநாயக்காவின் அரசாங்கத்திற்றான் வெற்றியடைந்தது. இவ்வரசாங்கத்தால், பெளத்த மதம் காலனித்துவ ஆட்சிக்கு முன்னிருந்த நிலையை அடைகிறது. அரச மதமாக அரியாசனம் ஏறுகிறது. சிங்கள மொழி அரச மொழியாக மாறுகிறது. சிங்கள கலாசாரமும், சிங்கள தனித்துவமும் முக்கியத்துவம் பெறுகின்றன. 1956ம் ஆண்டில் ஐக்கிய தேசியக்கட்சியை தோற்கடிக்க ஒரு மக்கள் அரசாங்கத்தை பண்டார நாயக்கா ஏற்படுத்துவதற்கு புத்தபிக்குகளின் அரசியல் பிரச்சாரம் ஒரு முக்கிய காரணமாயமைந்தது.
புத்த பிக்குகளின் தேவைகளைக் கவனிப்பதற்கும், தம்ம’ பாடசாலைகளை நிர்வகிப்பதற்கும் ஐம்பதுகளில் ஞானசீஹா தேரோவும், சிவில் உத்தியோகத்தவரான என். கியு. டயஸ் என்பவரும், இலங்கை பூராவும், 'புத்த சாசன சமித்தி என்ற சங்கங்களை உருவாக்கினார்கள். ஏறக்குறைய 3500 சங்கங்கள் இப்படி ஸ்தாபிக்கப்பட்டன. அடுத்து என். கியு. டயஸ் , ஆனந்த கல்லூரி அதிபர் மெத்தானந்தாவுடன் சேர்ந்து 'சங்க சபாக்கள்' என்று பிக்குகளின் சங்கத்தை பல தேர்தல் தொகுதி

Page 74
அ. முகம்மது சமீம் 120
களில் ஸ்தாபித்தார். இதேபோல, அரசாங்க உத்தி யோகஸ்தர் களும், தாங்கள் வேலை செய்யும் பிரதேசங்களில் "பிக்கு சங்கங்களை உண்டாக்கினார்கள். 1956ம் ஆண்டு தேர்தலுக்கு முன், "பிக்குகளின் ஐக்கிய முன்னணி (எக்சத் பிக்கு பெரமுன) என்ற ஒரு சங்கம் ஸ்தாபிக்கப்பட்டது. "சிறிலங்கா மஹா சங்க கபாவும்', 'சமஸ்தலங்கா பிக்கு சம்மேளனய என்ற இவ்விரு சங்கங்கள்தான் இம்மு ன்னணியைத் தோற்றுவித்தன. "அமரபுர', 'ராமான்ய" நிக்காய என்ற புத்த பிக்குகளின் சங்கங் களைச் சேர்ந்தவர்கள் முக்கியமாக அரசியலின் ஈடுபட்டார்கள். இவர்களோடு, களனிய விஹாரையின் பிரதம குருவும், சியாம் நிக்காயைச் சேர்ந்தவருமான புத்தறக்கித்த தேரோவும், அரசியல் அரங்கத்தில் குதித்தார். இவர்கள் அன்றைய பிரதம மந்திரியாயிருந்த சர். ஜோன் கொத்தலாவலையையும், அவரது கொள்கைகளையும் எதிர்த்தார்கள். இவர்களுடைய உதவியுடன் அரசாங்கம் அமைத்த பண்டார நாயக்கா இவர்களுக்குக் கடமைப்பட்டிருந்தார்.
1956ம் ஆண்டுக்குப் பிறகு, "சிங்கள-பெளத்த தேசியவாதம் , அரசாங்கத்தின் பல துறைகளிலும் தனது செல்வாக்கைச் செலுத்தத் தொடங்கியது. சிங்கள மொழி அரசமொழியாதல், கல்வியில் தாய்மொழிக்கு-முக்கியமாக சிங்கள மொழிக்கு எல்லா வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுத்தல், தொழிற்றுறையில், சிங்களவருக்கு- மாத்திரமே தொழில் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தல், சிங்க ள விவசாயிகளுக்கு குடியேற்றத் திட்டங்களை அமைத்தல், நாட்டின் எல்லைகளில் சிங்கள-பெளத்த ஆட்சியை ஸ்திரப் படுத்தல்", போன்ற எல்லாத துறைகளிலும், சிங்கள-பெளத்த தேசியத்தின் தாக்கத்தை நாம் காணலாம்.
பிரித்தானிய அரசாங்கத்தின் காலத்தில், மிகவும் நலிவுற்ற நிலையிலிருந்த புத்த சமயம், திரும்பவும், அரியாசனத்தில் ஏற்றப்படவேண்டும், என்ற புத்த பிக்குகளினதும், மதவாதி களினதும் கொள்கைதான் சிங்கள பெளத்த தேசியமாகப்

12 ஒரு சிறுபான்மை சமூகத்தின் பிரச்சினைகள் IV
பரிணமித்தது. ஆகவே இந்த அமைப்பில், வேறு மதங்களையும் கலாசாரங்களையும் மொழிகளையும் பின்பற்றும் சிறு பான்மையின மக்களுக்கு இடமில்லை.
புத்த மத அடிப்படை வாதம், புத்தசமய மறுமலர்ச்சியாக உருவெடுத்து, 'புத்த மதத்தத்துவம்' என்ற எல்லையிலிருந்து, வெளியாகி, ‘சிங்கள-பெளத்த தேசியமாக மாறி, அரசியல், சமூக, பொருளாதாரத் துறைகளிலும் தனது ஆதிக்கத்தைச் செலுத்தத் தொடங்கியது. இவ்வடிப்படைவாதிகள், புத்த சமயத்தை மக்கள் மத்தியில் பரப்புவதற்குப் பல வழிவகைகளைக் கையாண்டனர். புதிய கல்விநிலையங்கள் மூலமும் வெகுசனத் தொடர்புச் சாதனங்களாகிய, பத்திரிகை, வானொலி, துண்டுப்பிரசுரங்கள், போன்றவைகள் மூலமும் உபந்நியாசங்கள் மூலமும், இவ்வடிப்படைவாதிகள் தமது கொள்கையைப் பரப்ப முற்பட்டனர். புத்தமதம், மதமாகப் பாவிக்கப்படாமல், ஒர் அரசியல்-கலாசார சாதனமாகப் பாவிக்கப்படத் தொடங்கியது. பெளத்த மத மறுமலர்ச்சி இயக்கம், நாளடைவில், "அரசியல் பெளத்தமாகவும் , சிங்க ள - பெளத்த தேசியமாகவும், சிங்க ள - மேலாண்மை யாகவும் உருவெடுத்து, சிங்கள-பெளத்த ஆதிக்கம், சிங்கள மக்களுக்கு மாத்திரம் சலுகைகள், சிங்கள மக்களின் தனியு ரிமை, ஆகியவைகளாகப் பரிணமித்து, இவைகளைப் பாதுகாப் பதற்கு வன்செயல்களிலும் ஈடுபடத் தயாராயிருந்தது.
"சிங்கள-பெளத்த தேசியத்தில் நாம் இரு போக்குகளை அவதானிக்க முடிகிறது. முதலாவது சிங்க ள - பெளத்த அரசர்களைப் பற்றியும் புனைகதைகளைப் பற்றியும் கூறும் வரலாற்றுக் கோவைகள் புனிதத்தன்மைப் பெற்று போலி வணக்கப் பொருட்களாகக் கருதும் அளவிற்கு மாறிவிடுகின்றன. இரண்டாவது, பெளத்த தேசியத்திலிருந்து 'பெளத்த-ஜனநாயகம், பெளத்த சோஷலிசம்' போன்ற புதிய தத்துவங்கள் தோன்றுகின்றன. பண்டைய வரலாற்றுக் கோவைகள் சமய அந்தஸ்தைப் பெறுவதோடு, பெளத்த

Page 75
அ. முகம்மது சமீம் 122 மக்கள், 'ஒரு பெளத்த ஜனநாயக அமைப்பில் சம அந்தஸ்துடனும் ஒற்றுமையுடனும் வாழ வேண்டும்', என்ற கருத்தும் தெரிவிக்கப்படுகின்றது. "ஒரு பெளத்த ஜனநாயக அமைப்பில் பெளத்த மக்கள் ஒரு பெளத்த வாழ்க்கை முறையைக் கடைப்பிடிப்பதோடு, மேலைநாட்டு முதலாளித் துவ அரசியல் முறையைப் பின்பற்றாமல், ஒற்றுமையுடன் வாழக் கற்றுக் கொள்ளவேண்டும் ' என்று இவ் வடிப் படைவாதிகள் கூறினர். எனவேதான், பெளத்த பிக்குகள், அரசியல் ஆலோசகர்களாகவும், அரசியல்வாதிகளுக்கு அறிவுரை வழங்குபவர்களாகவும் இருத்தல் வேண்டும் என்றும் இவர்கள் கூறினர்.
இந்த இரண்டு போக்குகளும், பெளத்த அரசியலால் ஏற்பட்டவை. 1956ம் ஆண்டு சிங்கள மக்களின் அரசியல் வரலாற்றில் ஒரு முக்கிய திருப்பம் ஏற்படுகிறது. பெளத்த மதமும், சிங்கள மொழியும் அரச அங்கீகாரம் பெறுகின்றன. இந்தக் கொள்கைகளை முன்வைத்து அரசாங்கத்தை அமைத்தது, சிறிலங்கா சுதந்திரக்கட்சி. ஆனால் அறுபதுகளில் இதே கொள்கையைக் கடைப்பிடிக்க முன்வந்தது ஐக்கிய தேசியக்கட்சி. இவ் விரு தேசியக் கட்சிகளும் பெளத்த சமயத்தைப் பொறுத்த வரையில் நெருக்கமாக வந்ததோடு இவைகளிடையே கொள்கையளவில் எவ்வித வேற்றுமையும் இருக்கவில்லை. எனவே, சிங்கள-பெளத்த மக்கள் இவ்விரு தேசியக் கட்சிகளை மாறிமாறி ஆட்சிக்குக் கொண்டு வந்தனர். பெளத்த பிக்குகள் இவ்விருகட்சிகளின் அரசியல் மேடைகளில் தோன்றினர். இவ்விருகட்சிகளிலும் புத்தபிக்குகளின் ஆதிக்கம் மேலோங்கியது.

123 ஒரு சிறுபான்மை சமூகத்தின் பிரச்சினைகள் IV
19. தாய் நாட்டைப் பாதுகாக்கும் இயக்கமும் சிறுபான்மையினரின் திரி சங்கு நிலையும்
ஐம்பதுகளிலும், அறுபதுகளிலும் பெளத்த சமய அடிப் படை வாதிகளும், தீவிரவாதிகளும், அரசியல் பிக்குகளும், பெளத்த சமயத்தைத் திரும்பவும் அரியாசனத்தில் ஏற்ற வேண் டும் என்ற நோக்கத்தோடு மும்முரமாகப் பாடுபட்டனர். 1970ம் ஆண்டு சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் அரசாங்கத் தோடு அவர் களுடைய இந்நோக்கம் கைகூடியது. இக்காலப் பகுதியில், சிங்கள மொழி அரசமொழியாகியதும், பெளத்த சர்வகலாசா லைகள் தோன்றியதும், கிறிஸ்தவ தனியார் பாடசாலைகள் அரசாங்க மயமாக்கப்பட்டதும், சிங்கள கலாசாரம் வளர்வதற்கு தனிப்பட்ட இலாகா அமைக்கப்பட்டதும், இவர்களுடைய அரசியல் செல்வாக் கினாலேயே நடைபெற்றன என்பதை மறுக்க முடியாது. எண்பதுகளில் இக்கூட்டம் ஒரு புதிய தத்துவத்தை மக்கள் முன் வைத்தது. தாய்நாட்டின் ஒற்றுமை யைப் பாதுகர்ப்பதோடு புத்தசமய அரசியல் மரபைப் பேணிக் காத்துவந்த தாய் நாட்டின் 'பூமிபுத்திரர்களுடைய அரச உரிமையையும் ஆட்சி உரிமையையும் நிலைநாட்ட வேண்டும் என்ற கோஷத்தை இவர்கள் எழுப்பினார்கள். இவர்களுக்கு உடந்தையாக வன்செயலில் ஈடபடத் தயாராயிருந்த ஒரு கூட்ட மும் தோன்றியது. புத்தமதத்தின் தர்மத்தை பாதுகாப்ப தென சத்தியப்பிரமாணம் செய்த புத்த பிக்குகளினதும், புத்தசமய அடிப்படைவாதிகளினதும், நடவடிக் கைகளைப் பற்றிக்கூறும் இரு ஆய்வுகள், இக்காலப் பகுதியில் நடைபெற்ற புத்தசமய அரசியல் சம்பவங்களைப் பற்றி அறிவதற்கு உதவுகின்றன. ஒன்று 'பீட்டர் ஷாக் என்பவர் எழுதிய 'ஒற்றுமையும் ஆட்சியுரிமையும் இலங்கையின் இன்றைய முரண்பாட்டில் தீவிர புத்தசமய சங்கத்தவரின் அடிப்படைக் கருத்துக்கள்" என்ற ஆய்வும், சரத் அமுனுகம வின் 'புத்த புத்திரரர்களா பூமிபுத்தி

Page 76
அ. முகம்மது சமீம் 124 ரர்களா? 'இன்றைய அரசியல் இனப் பிரச்சினையில், நவீன புத்தபிக்குகளின் பிரச்சினை" என்ற ஆய்வும், எண்பதுகளில், புத்தபிக்குகளின் நடவடிக்கைகளை அறிய உதவுகின்றன. இவ் விரு ஆய்வுகளும், புத்த பிக்குகள், அரசியற் கட்சிகளுடன் நேரடியாகவோ, மறைமுகமாகவோ தொடர்பு கொண்டு, அரசியலில் ஈடுபட்டதையும், அரசியல் செல்வாக்குப் பெற்ற தையும் கூறுகின்றன. இவ்வாய்வுகள், எண்பதுகளில், சிங்களதமிழர் இனப்பிரச்சினை மோசமடை வதைச் சுட்டிக்காட்டு வதுடன், புத்தசமயத்தின் பாதுகாவலர்களும், நாட்டின் ஆட்சி உரிமையைப் பெற்றவர்களுமான 'பூமிபுத்திரர்களுடைய ஆதிக்கத்தை நிலைநாட்டும் நோக்கத்துடன் தோன்றிய வன் செயல் இயக்கங்களிலும் புத்த பிக்குகள் இணைந்த வரலாற் றையும் எடுத்துக் காட்டுகின்றன. இவ்வியக்கங்கள் ஒரு புறத் தில், "மகாவம்சம் போன்ற பண்டைய வரலாற்றுக் கோவைக ளிலிருந்து ஆதாரங்களைக் காட்டி, முன்னைய காலத்தில், இந்நாடு 'தர்மதீபம்' என்று பெயர்பெற்றது என்றும், துட்ட காமினியின் ஆட்சியில் நாடு ஒன்று பட்டது என்றும், சமீபத்தில் அநகாரிக தர்மபாலாவின் தலைமையில் புத்தமத மறுமலர்ச்சி இயக்கத்தையும் எடுத்துக்காட்டி, சிங்கள மக்களின் ஆதிக்க உரிமையைப் பிரச்சாரம் செய்தன. மறுபுறத்தில் இவ்வியக்கங் கள், நாட்டின் இனப்பிரச்சினை வலுவடைவதற்குக் கொலை கார தமிழ்ப் பிரிவினைவாதிகள்தான் காரணம் என்று பிரச்சாரம் செய்தன. இனப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு அரசியல் அதிகாரத்தைப் பகிர்ந்தளிக்கும் திட்டம், நாட்டை இரண்டாகத் துண்டிக்கும் என்று சிங்கள மக்களின் உணர்ச்சி களை தூண்டிவிட்டன. 1987ம் ஆண்டில் இலங்கைக்கும் இந்தியாவுக்குமிடையில் நடைபெற்ற "இலங்கை-இந்திய ஒப்பந்தம்' என்பது 'தமிழர்களுக்கு ஆதரவாக இருக்கும் ஏகாதிபத்திய இந்தியாவுக்கு இந்நாட்டின் ஆட்சியுரிமையைத் தாரை வார்த்துக் கொடுத்த ஒரு திட்டமாகும்" என்று இவ்வியக் கங்கள் கூறின.
பீட்டர் ஷாக், தனது ஆய்வில், 'தாய்நாட்டுப் புத்திரர்

125 ஒரு சிறுபான்மை சமூகத்தின் பிரச்சினைகள் IV
களான பெளத்த-சிங்களவரின் ஆட்சியுரிமையை நிலைநாட் டும் நோக்கத்துடன், 1979ம் ஆண்டு தொடக்கம் இந்நாட்டில் தோற்றுவிக்கப்பட்ட இயக்கங்களைப் பற்றிக் கூறுகிறார். “சிங்கள பல மண்டலய ஜாதிக பெறமு ன, போன்ற இயக்கங் களை ஒரு குடையின் கீழ் கொண்டு வந்த 'மவ் பிம சுரகிமே வியாபாரய, தாய்நாட்டைப் பாதுகாக்கும் இயக்கம் - 1986ம் ஆண்டில் தோற்றுவிக்கப் பட்டது. இவ்வியக்கங்கள், துண்டுப் பிரசுரங்கள் மூலமும், சுவரொட்டிகள் மூலமும், பிரச்சாரக் கூட்டங்களை நடத்தியும், ஊர்வலங்களை நடத்தியும், 'தாய் நாட்டின் ஒற்றுமையைப் பாதுகாக்க வேண்டும்', என்றும், இலங்கையின் ஆட்சி பாதுகாக்கப்படல் வேண்டும்", என்றும், சிங்கள மக்களின் உணர்ச்சியைத் தூண்டிவிடும் வண்ணம் பிரச்சாரம் செய்தன. இப்பிரச்சாரங்களில் பெளத்தகுருமார்கள், முக்கிய பங்கெடுத்தார்கள். சிறுபான்மையின மக்களின் மனித உரிமைகளைக் குழிதோண்டிப் புதைக்கும் எண்ணத்துடன் ஆரம்பிக்கப்பட்ட இவ்வியக்கங்களுடன் சிறுபான்மையின மக்களையும் அங்கத்தவர்களாகக் கொண்டு சிறுபான்மையின மக்களின் நலன்களைப் பாதுகாப்போம் என்று பறை சாற்றும், சில அரசியற் கட்சிகளும், சம்பந்தப்பட்டதுதான் விந்தை யிலும் விந்தை. அன்றைய அரசாங்கத்தை நடத்திய ஐக்கிய தேசியக் கட்சிக்கு எதிராக, அரசியற்கட்சிகளும், பெளத்தமத மகாசங்க பிக்குகளும், பெளத்தமத அடிப்படைவாதிகளும், இவ் வியக்கங்களோடு ஒன்றிணைந்தன.
தாய் நாட்டைப் பாதுகாக்கும் இயக்கத்தின் முன்னணியில் சிறிமாவோ அம்மையாரைத் தலைவராகக் கொண்ட சிறிலங்கா சுதந்திரக் கட்சியும், தினேஷ் குணவர்தனாவின், எம்.ஈ.பி.* கட்சியும் அரசாங்கத்தால் தடை செய்யப்பட்ட ஜாதிக விமுக்திபெற முனையின்” கிளை ஸ்தாபனமான “சிறிலங்கா தேசப் பிரேமி' பெற முனைக் கட்சியும் ஒன்றாக நின்று
*1 மகஜன எக்சத் பெறமு ன - மக்கள் ஐக்கிய முன்னணி *2 (சிங்கள இனத்தின்) - தேசிய புரட்சி முன்னணி * 3 சிறிலங்கா நாட்டின் மேல் பற்றுதல் கொண்ட முன்னணி

Page 77
அ. முகம்மது சமிம் 126
உழைத்தன. சரத் அமுனுகம, 'நாத் அமரகோனின் தலைமை யிலுள்ள ‘சிங்கள பல மண்டலய', என்ற கட்சியையும், சிங்கள ஜனதா பெறமு ன வென்ற கட்சியையும், இவ்வியக்கத்துடன் இணைந்ததாகச் சுட்டிக் காட்டுகிறார். சில முக்கிய அரசியல் வாதிகளான, ருக்மன் சேனாநாயக்காவும், தென்னிலங்கைப் பாராளுமன்ற உறுப்பினர்களில் ஒருவரா யிருந்த பிரீன்ஸ் குணசேகரவும், இவ்வியக்கத்தில் இருந்ததாகக் கூறப்படுகிறது. ஜனநாயக உரிமைகள் இயக்கத்தின் தலை வராகவும், மனித உரிமைகள் இயக்கத்தின் முக்கியஸ்தர் களில் ஒருவராகவும் இருந்த பிரின்ஸ் குணசேகரா ஜே. வி.பி. குற்ற வாளிகளின் சார்பில், நீதிமன்றத்தில் வாதிட்டவர் என்பது குறிப் பிடத்தக்கது.
பெளத்த மகாசங்கத்தைச் சேர்ந்த, “சியாம் நிக்காய', அமரபுர நிக்காய', 'ராமன்ய நிக்காய' ஆகிய மூன்று பிரிவு களும், இவ் வியக்கத்தில் சேர்ந்திருந்தன. 'திரி நிக்காய' என்றழைக்கப்பட்ட இம்மூன்று நிக்காயைச் சேர்ந்த பிக்கு களும், பெளத்த கோயில்களை மையமாகக் கொண்டு கிராமங்க ளிலும் மாவட்டங்களிலும் மாகாணங்களிலும் பிரச்சாரங்களை நடாத்தினர். இத்திரிநிக்காயவைச் சேர்ந்த பெளத்த குருமார்கள் எல்லா அரசியற்கட்சிகளுடனும் தொடர்பு வைத்திருந்தனர். இக்குருமார்கள், அரசியல் கட்சிகளின் செயற்குழுக்களிலும், குறிப்பிட்ட சில சபைகளின் தலைவர்களாகவும் இயங்கி இருக் கின்றனர். இதில், "சிங்கள பல மண்டலயத்தின் பிரச்சார சபைத் தலைவராக இருந்த சோபித்த தேரோவும், ஜாத்திக்க பெற முனையின் ஆரம்ப கர்த்தாக்களில் ஒரு வரும், சியாம் நிக்காயாவின் கண்டிக்கிளை, அஸ்கிரிய பிரிவின் தலைவரு மான பளிப்பானெ சத்தானந்த தேரோவும் குறிப்பிடத் தக்கவர் கள். இவர் சிறிமாவோ அம்மை யாருடன், இவ்வியக்கத்தில் நெருங்கி ஒத்துழைத்தார்.
'ஜாதிக்க சுரகீமே வியாபாரய' என்ற இவ்வியக்கத்தினர்,
* சிங்கள - இனத்தைப் பாதுகாக்கும் இயக்கம்

127 ஒரு சிறுபான்மை சமூகத்தின் பிரச்சினைகள் IV
'தமிழர்களது, "பண்டைய காலந்தொட்டு வாழ்ந்து வந்த பிர தேசம், தமிழர்களின் தாய் நாடு' என்ற கோரிக்கையை நிராகரித்த தோடு, 'ஆட்சியைத் தமிழர்களுக்குப் பகிர்ந் தளிப்பது, நாட்டை இருகூறாகத் துண்டிப்பதற்குச் சமம்" என்று பிரச்சாரம் செய்தனர். இப்படி நடைபெற்றால், சிங்களவரின் ஆட்சிப் பலம் 'கூrண நிலை அடைவதுடன், பெளத்த சமய மும், சிங்களக்கலாச்சாரமும், பெரிதும் பாதிக்கப்படும் என்றும் கூறினர். சிறுபான்மையின மக்களுக்கு, முக்கியமாகத் தமிழர் களுக்கெதிராகப் பிரச்சாரம் செய்ததில் முக்கிய பங்கை வகித்தனர் பெளத்த பிக்குகள். ஐம்பதுகளில், சிறிலங்கா சுதந்திரக்கட்சியை ஆதரித்த பெளத்த பிக்குகள் நாளடைவில் ஐக்கிய தேசியக் கட்சியையும் ஆதரித்ததோடு, எண்பதுகளில் இலங்கையில் தோன்றிய எல்லா வகுப்புவாதக் கட்சிகளையும், 'வன்செயலில் ஈடுபடும் கட்சிகளையும், ஆதரிக்கத் தொடங் கினர். இலங்கையில் அன்று வந்திருந்த இந்தியப் பாதுகாப்புப் படையினரையும், தமிழர்களையும் தாக்கியதோடு இவர்கள் நின்றுவிடவில்லை. கத்தோலிக்கக் கிறிஸ்தவர்களும், பெளத் தசிங்களவரின் எதிரிகள் என்றும் கூறினர். இக்கத்தோலிக்க கிறிஸ்தவர்கள், தங்கள் கிறிஸ்தவ சமயத்தை பெளத்த மக்கள் மத்தியில் பரப்பியதுமல்லாமல், 'பெளத்தர்களின் சனத் தொகை எண்ணிக்கை குறைவதற்கும், காரணமாயிருந்தார் கள்' என்றும் கூறினர். இன்னொரு புதிய குற்றச் சாட்டையும், இவர்கள், கிறிஸ்தவர்களின் மேல்சுமத்தினர். வெளிநாட்டு ஏகாதிபத்திய அரசாங்கங்களின் ஒத்துழைப்புடன், இந்நாட்டில் அரசாங்க சார்பற்ற ஸ்தாபனங்களை நிறுவி, "மக்களின் நலனுக்காகச் செயல்படும் ஸ்தாபனங்கள் என்ற போர்வையில், பெளத்த மதத்தவரை மதம் மாற்றம் செய்யும் ஸ்தாபனங்கள் இவை என்றும் கூறினர். இலங்கையில் இனப்பிரச்சினை கிறிஸ் தவர்களை இரு கூறாகப் பிரித்தது. சிங்களப் பிரதேசத்தில் வாழும், உரோமன் கத்தோலிக்கக் கிறிஸ்தவர்கள் ஐக்கிய தேசி யக் கட்சியையும், தமிழ்ப் பிரதேசங்களில் வாழும் கிறிஸ் தவர்கள், தமிழ் அரசியற் கட்சிகளையும் ஆதரித்தன. அன்றைய

Page 78
அ. முகம்மது சமீம் 128
ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்தனாவுக்குக் கிறிஸ்தவர்களின் ஆதரவு இருந்த காரணத்தினால், "பெளத்த மக்களின் அபிலாஷைகளுக்கு எதிராகவே, ஜே. ஆர். செயல்படுகிறார்" என்று அவரது அரசியல் எதிரிகளும், பெளத்தமத அடிப்படை வாதிகளும், ஜே.ஆரின் மேல் குற்றம் சாட்டினர். பெளத்த பிக்குகளால் பிரசுரிக்கப்பட்ட 'வினிவிட' என்ற சஞ்சிகையின் 1988ம் ஆண்டில் வெளியான இதழில், 'ஒரு பயங்கரமான சிறுத்தை, வெள்ளைக்காவியுடையணிந்து, வறுமையில் வாடும் பெளத்த கிராமத்தவரைக் கத்தோலிக்க மதத்திற்கு மதமாற்றம் செய்ய முற்படுகிறது. ஈழம் அடைவதின் பாதையில் முதல் அடி இதுதான்', என்று வெளியாகிய செய்தியை, சரத் அமுனுகம தன்னுடைய புத்த புத்திரர்களா, பூமிபுத்திரர்களா? என்ற ஆய் வில் குறிப்பிடுகிறார். சிங்கள பெளத்த மக்களின் இன் உணர்ச் சிகளையும், மத உணர்ச்சிகளையும் தூண்டி விட்டு, சிறு பான்மை இனத்தவர்களுக்குச் சமாதானம் கூற முற்படு வதைப் போன்ற ஒரு பித்தலாட்டம் வேறொன்றுமில்லை.
இனி இவர்களுடைய மொழியிலிருக்கும் சில, வார்த் தைப் பிரயோகங்களை அவதானிப்போம். 'பூமிபுத்திரர்கள் தாய் நாட்டு மண்ணின் மைந்தர்கள்- 'ஏக்கிய பாவ ய7தாய்நாட்டின் ஒற்றுமை, 'ஸ் ைவரிபாவ ய', ஆட்சியுரிமை, 'ஏக்க சத்த ஒருகுடையின் கீழ் ஆகிய பதங்கள் மக்களின் உணர்ச்சிகளைத் தூண்டுவனவாக அமைகின்றன. இலங்கை யின் இன்றைய தேசியக் கொடி, துட்டகாமினி அன்று உபயோகிகத்த சிங்கக் கொடியை ஒத்திருந்ததோடு, சிங்கள இனத்தவரின் ஆட்சி உரிமையை - ஹெல ஜாத்திய வின்அரசியல் உரிமையைப் பிரகடனப்படுத்துவதாக அமைகின்றது, என்பது இவர்களது வாதம். "துன்சிங்க ள என்ற பதமும், 'ம விவிம தாய்நாடு என்ற பதமும் "சிங்களவரின் பிறப்புரிமை யாகிய தாய்நாட்டை ஆட்சிபுரியும் உரிமை என்ற நோக்கில் ஒர் இளைஞர் இயக்கம், கோஷம் எழுப்பியதாக, பீட்ட ஷாக், தன்னுடைய ஆய்வில் கூறுகிறார். 'அமரபுர நிக்காயவின் தலைமை குருவான, 'மதி ஹே பஞ்ஞாசீல தேரோ, 'இலங்

129 ஒரு சிறுபான்மை சமூகத்தின் பிரச்சினைகள் IV
கையின் தேசியக் கொடி, சிங்க ள பெளத்த கொடியாக (சிறுபான்மையினங்களைக் குறிப்பிடும் வர்ணங்களைத் தவிர்ந்த) இருந்தால், சிங்கள இனத்தவரின் தனித்துவத்தை எடுத்துக் காட்டுவதுடன், அவர்கள் பெளத்தர்கள் என்ற உணர் வையும் ஏற்படுத்தும் என்று கூறுகிறார்', என்பதனை எஸ்.ஜே. தம்பையா தன்னுடைய நூலில் எடுத்துக்காட்டுகிறார். 'மேலும் அவர் 'ஏனைய நிக்காயக்களைச் சேர்ந்த அமரபுர நிக்காய, சியாம் நிக்காயாவின், 'மல்வத்தை "அஸ்கிரிய நிக்காயாவின் தலைமைக்குருக்கள், இலங்கையின் 'ஒற்றுமையை, அரசியல் கட்சிகளின் வேறுபாடுகளற்ற, கட்சி சார்பற்ற, பிரிவினை யில்லாத, ஒர் அரசியல் அமைப்பைக் குறிக்கும், ஒரு கனவுலகக் குறிக்கோளாக சிங்களமக்களின் முன் ஒரு காட்சி பிரதி பிம்ப மாகக் காட்டினார்கள்', என்று கூறுகிறார்.
'இவ் வாதத்தின் மறுமுனையில் சோபித்த தேரோ போன்றவர்கள், தமிழ் பயங்கரவாதிகளுக் கெதிராக நடாத்தப் படும் யுத்தம் ஒரு புனித யுத்தம், என்று பிரச்சாரம் செய்தார் கள்', என்று எஸ். ஜே. தம்பையா கூறுகிறார். சோபித்ததேரோ போன்றவர் 'மவ் பிம சுரகீமே வியாபாரய' என்ற இயக்கத்தின் கூட்டங்களில் இந்தியத் தமிழர்களையும் சாடினார்கள். இந்தி யத் தமிழர்களின் தேசியத்திலிருந்து மலைநாட்டு சிங்கள வரைப் பாதுகாக்க வேண்டும் என்று கூறினார்கள். 'சிங்கள வரின் சமாதானத்தை நிலைநாட்ட வேண்டு மென் றால், மாகாண சபைகளோ, சமஷ்டி ஆட்சியோ அற்ற, ஒரு குடையின் கீழ் சிங்கள அரசாங்கம் அமைய வேண்டும்", என்று பிரச்சாரம் செய்தார்கள். "1978ம் ஆண்டில் அமுலாக்கப்பட்ட அரசயாப்பில், 'புத்த சமயத்திற்கு முதலிடம் கொடுக்கப்பட வேண்டும் என்ற நிலைமாறி, ஒரு சமஷ்டி ஆட்சியில் எல்லா மதத்தவர்களுக்கும் "சமநிலை கொடுக்கப் படும் ஒரு பயங்க ரமான நிலை ஏற்படும்', என்று தீவிரவாதிகளும், புத்தகுருமார்
களும் கூறினார்கள்.
புத்தபிக்குகளின் அரசியல் செல்வாக்கையும், அரசியல்

Page 79
அ. முகம்மது சமீம் 130
கட்சிகள் புத்த குருமார்களைத் தம் பக்கம் ஈர்க்கும் தந்திரோ பாயங்களைப் பற்றி சரத் அமுனுகம, தன்னுடைய ஆய்வில் பின்வருமாறு கூறுகிறார். '1980ம் ஆண்டுகளில், மகாசங்க வின் அரசியல் செல்வாக்கு வளர்வதைக் காண்கிறோம். பொதுவாக எல்லா சிங்கள அரசியற்கட்சிகளும் தமது கிளை ஸ்தாபனங் களை பிக்கு சங்கங்களில்அமைத்தனர். பிக்குளின் ஆதரவைப் பெறுவதற்காக, அவர்களுக்கு அரசாங்க வாசஸ்தலங்களும், 'பென்ஸ் கார்களும், வெளிநாட்டுப் பயணங்களும், அரசாங் கப் பதவிகளும், கோயில்கள் கட்டுவதற்குப் பண உதவியும், வழங்கப்பட்டன. பிரிவெனாக்களும், பிரிவென சர்வகலா சாலைகளும் அரசாங்கக் கட்சிகளுக்கு அங்கத்தவர்களைச் சேர்க்கும் மத்திய நிலையங்களாக மாறின. பிக்குகள் அரசிய லில் ஈடுபடுவதற்கு இனப்பிரச்சினை ஒரு வாய்ப்பை அளித்தது.'
இலங்கையின் இனப்பிரச்சினையை சுமுகமாகத் தீர்ப் பதற்கு, அரசியற்கட்சிகளுக்கும், அரசியல் தலைவர்களுக்கும் இவ்வியக்கங்கள் ஒரு முட்டுக்கட்டையாக அமைந்தன. புத்த குருமார்களும், அறிவியலாளர்களும், புத்திஜீவிகளும், தீவிர இன உணர்வைக் கொண்டிருக்கும்போது, சிறுபான்மையின மக்கள் எதிர்காலத்திலாவது தமது உரிமைகளைப் பெறுவார் களா? என்பதுதான் இன்றைய கேள்வி. யுத்தத்தின் மூலம்தான் சிறுபான்மையின மக்கள் தமது உரிமைகளை அடைய வேண்டு மென்றால் சிறுபான்மையின மக்களால்தான் என்ன செய்ய முடியும்? நிராயுதபாணியாக அஹிம் சா வழியைக் கடைப் பிடித்தால் அடித்து நொறுக்கப்பட வேண்டியவர்கள். அரசாங்க வன்செயலுக்கெதிராக ஆயுதம் தாங்கினால் பயங்கரவாதிகள். இதுதான் சிறுபான்மை மக்களின் இன்றைய திரிசங்கு நிலை.

31 ஒரு சிறுபான்மை சமூகத்தின் பிரச்சினைகள் IV 20. இனப் பிரச்சினை தீவிரமடைந்ததற்கான காரணிகள்
இலங்கையின் அரசியல் வரலாற்றில், 1950լb ஆண்டுகளின் நடுப்பகுதி, பெளத்த சமயத்தின் அரசியல் செல்வாக்கிலும், சிங்கள மொழியின் முக்கியத்துவத்திலும், பெரும்பான்மை யினத்தின் அரசியல் ஆதிக்கத்திலும் ஒரு திருப்புமுனையாக அமைந்த தென்றால், அறுபதிகளிலும், எழுதிகளிலும், இவை ஸ்திரப்படுவதை நாம் காணலாம். இக்கொள்கைகளை அமுல் நடத்தும் பொறுப்பு, பண்டார நாயக்காவின் 'மக்கள் அரசாங்கத்திற்கு வழங்கப்பட்டது. ஐம்பதுகளில் சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்கு, மாத்திரம் சொந்தமான கொள்கைகளாக இருந்தவை, அறுபதுகளிலும், எழுபதுகளிலும் ஐக்கிய தேசியக் கட்சியினதும் கொள்கை களாக மாறுவதைக் காணலாம். பெளத்த சமயத்தைத் திரும்ப வும் அரியாசனத்தில் ஏற்ற வேண்டும் என்ற கொள்கையில் இவ் விரு அரசியற் கட்சிகளும் போட்டி போடுவதைக் காணலாம். ஆகவே, சிங்கள மக்கள், பொதுத்தேர்தல்களில், இவ்விருகட்சிகளையும் மாறிமாறி தேர்ந்த தெடுப்பதையும் நாம் காணலாம். இதன் காரணமாக, சிங்கள மக்கள், சிறுபான் மையின மக்களை, அரசாங்கம் அமைப்பதில் நண்பர்களாவோ அல்லது எதிரிகளாகவோ கணிக்கத் தொடங்கி னர். பெளத்த சமயம் சம்பந்தப்பட்ட வரையில், இரு கட்சிகளும் ஒரே கொள்கையைக் கடைப் பிடித்த காரணத்தினால், பெளத்த பிக்குகளும் இருபிரிவுகளாகப் பிளவுபடுவதைக் காண்கிறோம். 1956ம் ஆண்டு அரசியல் மாற்றத்திற்கு முற்போக்கு எண்ணம் படைத்த ஒரு குறிப்பிட்ட பெளத்த பிக்குகளின் அரசியல் பிரச்சாரம் தான் காரணமென்றால், அறுபதுகளிலும், எழுபதுக ளிலும், புத்தபிக்கு சங்கத்தைச் சேர்ந்த பெரும்பாலும் எல்லா பிக்குகளும், இருகட்சிகளின் சார்பில் அரசியல் மேடைகளில், தோன்றுவதைக் காணலாம். இவ்வரசியல் நிலையை, உர்மிளா பத்ணிஸ், தன்னுடைய "இலங்கையில் சமயமும் அரசியலும்

Page 80
அ. முகம்மது சமீம் 32 என்ற நூலில் பின்வருமாறு கூறுகிறார். 'முன்னர் சிறிதளவாக ஆரம்பித்த பெளத்த பிக்குகளின் அரசியல் பிரச்சாரம், 1965ம் ஆண்டு பொதுத் தேர்தலில் முழுமை பெறுவதை நாம் காணலாம் ' என்று கூறுகிறார். மேலும் அவர் 'லங்கா எக்சத் பிக்கு பல மண்டலயத்தைச் சேர்ந்த பிக்குகளும், வித்யோதய, வித்யாலங்கார சர்வகலாசாலைகளைச் சேர்ந்த பிக்கு விரிவுரையாளர்களும், சிறிலங்கா சுதந்திரக் கட்சி, லங்கா சமாசமாஜக் கட்சிகளின் கூட்டமைப்பை ஆதரித்த அதே வேளையில், “சியாம் நிக்காய பிக்கு சங்கத்தின், மல்வத்தை பிரிவைச் சேர்ந்த தலைமை பிக்குவும், கொழும்பை மையமாக வைத்து ஆரம்பித்த "மகாசங்க', மகாசங்க பெறமு ன, ஆகிய சங்கங்களைச் சேர்ந்த பிக்குகளும் ஐக்கிய தேசியக் கட்சியை ஆதரித்தன, என்று கூறுகிறார். பெளத்த பிக்குகளின் சங்கங்களைச் சேர்ந்த பிக்குகள், பொதுத்தேர்தல்களில், இரு அரசியல் கட்சிகளை ஆதரிப்பது பழக்கத்தில் வந்துவிட்டது.
1960ம் ஆண்டு தொடக்கம் அடிக்கடி அரசியல் மாற்றங்கள் ஏற்பட்டு வந்தன. 1965ல் ஐக்கிய தேசியக் கட்சி, 1970ல் சிறிலங்கா சுதந்திரக் கட்சி, 1977ல் ஐ.தே.கட்சி, என்று மாறிமாறி இப்பெரும்பான்மையினக் கட்சிகள் அரசாங்கத்தை நடத்தின. ஆனால், ஜே.ஆரின் அரசியல் சூட்சுமத்தால், ஐ.தே.கட்சி 1994ஆம் ஆண்டு வரைக்கும் அரசாங்கத்தை நடத்தியது. 1958ம் ஆண்டில் நடந்த இனக்கலவரத்திற்குப் பிறகு, 1977ம் ஆண்டிலும், 1981ம் ஆண்டிலும், 1983 ம் ஆண்டிலும், தமிழர்களுக்கெதிராக சிங்கள இனவெறியர்கள் தங்கள் காடைத்தனத்தைக் கட்டவிழ்த்து விட்டனர். 1960ம் ஆண்டுக்கும் 1977ம் ஆண்டுக்குமிடைப்பட்ட காலப்பகுதியில் இனக்கலவரம் நடைபெறவில்லை. இதற்கு, எஸ். ஜே. தம்பையா பெளத்த மதம் துரோகிக்கப்பட்டதா?’ என்ற தன்னுடைய நூலில் 'பெளத்த மதத் தீவிரவாதிகளினதும், அரசியல் பிக்குகளினதும் டௌத்த மதத்தைத் திரும்பவும் அரியாசனத்தில் ஏற்ற வேண்டும், அதற்குரிய இடமளிக்கப் படல் வேண்டும் என்ற நோக்கங்களும், அபிலாஷைகளும்,

133 ஒரு சிறுபான்மை சமூகத்தின் பிரச்சினைகள் IV
1970ம் ஆண்டின் முற்பகுதியிலேயே நிறைவேற்றப் பட்டு விட்டன' என்று கூறுகிறார். மேலும் அவர், 'இக்கால கட்டத்தின் உச்ச கட்டம் என்னவென்றால், சிறிலங்கா சுதந்திரக் கட்சியும், ஐக்கிய தேசியக்கட்சியும், புத்த சமயம் சம்பந்தமான விஷயத்தில் ஒரே கொள்கையைக் கொண்டிருந்தன. 1972ம் ஆண்டில் அமுலாக்கப்பட்ட அரசயாப்பில், பெரும்பான்மை சமூகத்தவரின் சமயமான பெளத்த சமயத்திற்கு முதலிடம் கொடுக்கப்பட வேண்டும் என்ற கொள்கையில், இருகட்சி யினரும் ஒத்திருந்தனர்' என்று கூறுகிறார். பெளத்த சமயத் திற்கு முக்கியத்துவம் கொடுக்கப் படல் வேண்டும் என்ற கொள்கையில், பண்டார நாயக்காவின் தலைமையில் எம். இ.பி. அரசாங்கம், புத்தசமயத்தின் வளர்ச்சிக்காக, ஒரு கலாச்சார இலாக்காவை ஸ்தாபித்ததும், 1959ம் ஆண்டில், வித்தியோதய, வித்தியாலங்கார பிரிவெனாக்கள், சர்வகாலாசாலைகளாக தரம் உயர்த்தப்பட்டது இதன் பாற்பட்டதே. சிறிமாவோ ஆட்சியில் தனியார் பாடசாலைகள் அரசாங்கமயமாக்கப்படல் வேண்டும் என்ற கொள்கை, கத்தோலிக்க மிஷனரிமார்களின் நிர்வாகத்தில் இருந்த தனியார் பாடசாலைகள் பெளத்த மக்களின் அரசாங்கத்தின் நிர்வாகத்தின் கீழ், கொண்டு வரப் பட்டதும், இக்கொள்கையின் அடிப்படையில் பிறந்ததே. சிங்கள- பெளத்த மக்களின் ஆதிக்கத்தை நிலைநாட்டுவதற்கு, சிங்கள மொழி மாத்திரம்தான் அரசமொழியாக இருத்தல் வேண்டும் என்ற கொள்கையும் காரணமாயமைந்தது.
1956ம் ஆண்டு, பெளத்த சமயம விசாரணைக்குழு, தனது அறிக்கையில், கிறிஸ்தவ சமயத்தை விட, கிறிஸ்தவ பாடசாலைகளிலிருந்து புத்த சமயத்தைக் காப்பாற்றுவதுதான், இன்று எமது முக்கிய பிரச்சினை' என்று கூறுகிறது. 'தனியார் பாடசாலைகள் அரசாங்க மயமாக்கப்படல் வேண்டும்' என்ற கொள்கையில் மிகவும் மும்முரமாக நின்ற வர்கள் இக்குழு வினரே தனியார் பாடசாலைகளில் பெரும்பாலான பாடசாலை கள் கத்தோலிக்க மிஷன்களால் நடத்தப்பட்ட பாடசாலைகளே. கத்தோக்க ஸ்தாபனங்களால் நடத்தப்பட்ட ஆசிரியர் பயிற்சிக்

Page 81
அ. முகம்மது சமீம் 134
கலாசாலைகளும் அரசாங்க மயமாக்கப்பட்டன. பெளத்த ஸ்தாபனங்களால் நிர்வகிக்கப்பட்டு வந்த பாடசாலைகளின் நிர்வாகிகள் அரசாங்கத்தின் இக்கொள்கைக்கு ஆதரவளித்தனர். காரணம், ஒரு பெளத்த அரசாங்கத்தினால் தமக்கு அதிக சலுகைகள் கிடைக்கும் என்பதனாலேயே, இலங்கையின் இனப்பிரச்சினைக்கு மூலகாரணம் சிங்கள பெளத்த தேசிய வாத மென்றால், இவ்வியக்கத்தின் நோக்கங்களும், அபிலாஷை களும், 1970ம் ஆண்டிலேயே ஒரளவு நிறைவேற்றப்பட்டன. அப்படியென்றால், 1977லும், 1981லும் 1983லும், நடந்த இனக்கலவரங்களுக்குக் காரணம் என்ன? இக்காரணங்களை, எஸ்.ஜே. தம்பையா இரு பிரிவுகளாகப் பிரிக்கிறார். ஒன்று, சிங்களம் அரசமொழியாக மாறியபிறகு அதனால் நிர்வாகத்தில் ஏற்பட்ட பாதிப்புகளும், அதனோடு ஒட்டிய கல்விப்பிரச்சினை களும், உயர்கல்வி பெற்றவர்களுக்கு வேலைவாய்ப் பின்மை யும், சர்வகலாசாலை அனுமதியில் ஏற்பட்ட அநீ தியுமே. இரண்டாவது, சிங்களவருக்கு மாத்திரமே ஏற்படுத்தப்பட்ட குடியேற்றத்திட்டங்கள். சர்வகலாசாலை அனுமதியில் பின்தங்கிய பிரதேசங்களில் வாழும், மாணவர்களுக்கு சர்வகலாசாலையில் அதிக இடம் கொடுப்பதற்காக, "தரப்படுத்துதல்' என்ற திட்டம் கொண்டு வரப்பட்டது. பரீட்சையில் சித்தியானவர்களுக்கு 70% விகிதமும் மாவட்ட அடிப்படையில் 30% விகிதமும், இம் மாவட்டங் களுக்கு வழங்கப்படும் பங்கிலிருந்து 15% விகிதம் பின்தங்கிய பிரதேசங்களுக்கும், அனுமதி வழங்கப்பட்டது. இத்திட்டம் யாழ்ப்பாணத்துத் தமிழ் மாணவர்களைப் பெரிதும் பாதித்தது என்பதை நாம் ஏற்றுக் கொண்டாலும், சிங்களப் பிரதேசத்தி லுள்ள நகரப்புற மாணவர்களையும் இது பெரிதும் பாதித்தது, முக்கியமாக முஸ்லிம் மாணவர்களைப் பெரிதும் பாதித்தது. அதேவேளையில், பின்தங்கிய பிரதேசம் என்று கணிக்கப்பட்ட கிழக்கு மாகாண, தமிழ், முஸ்லிம் மாணவர்களுக்கு இது ஒரு வரப்பிரசாதமாக அமைந்தது. 'தமிழ் மாணவர்கள், பிரிவினைக் கோஷம் எழுப்புவதற்கு இத்தரப்படுத்துதல், ஒரு

35 ஒரு சிறுபான்மை சமூகத்தின் பிரச்சினைகள் IV
முக்கிய காரணமாக அமைந்தது', என்று "இலங்கையில் கல்வியும் சமூக முரண்பாடும் என்ற கட்டுரையில் சுனில் பஸ்தியான் கூறுகிறார்.
இலங்கையில், வரண்ட பிரதேசங்களில் அமுலாக்கப் பட்ட குடியேற்றத்திட்டங்கள், சிங்களவருக்குச் சாதகமாகவே அமைந்தன. புராதன காலத்தில், அநுராதபுரம், "பொலன் னறுவை இராச்சியங்களின் காலத்தில் இப்பிரதேசத்தில் வாழ்ந்த சிங்கள மக்கள் அடிக்கடியேற்பட்ட தமிழர்களின் படையெடுப் புக்களாலும், மலேரியா நோய் காரணமாகவும், தென்மேற்குக் கரையோரப்பகுதிகளில் குடியேறினார்கள் என்பது வரலாறு. ஆகவே, தெற்கிலும், தென் மேற்குக் கரையோரப் பகுதிக ளிலும், சனத்தொகை வீக்கம் காரணமாக, இங்குள்ள சிங்கள மக்களை, அவர்களுடைய மூதாதையர் வாழ்ந்த இடங்களாகிய, அநுராதபுரம், பொலன்னறுவைப் பிரதேசங்களில் குடியேற்று வதில் எவ்விதத் தவறுமில்லை. இதனை ஆட்சேபம் செய்வதில் எவ்வித நியாயமுமில்லை. ஆனால், தமிழர்கள் அதிகமாக வாழும் வவுனியப் பிரதேசத்திலும், கிழக்கு மாகாணத்திலும், முஸ்லிம்கள் அதிகமாக வாழும் அம்பாறைப் பிரதேசத்திலும், சிங்கள மக்களைக் குடியேற்றுவது எவ்விதத்தில் நியாயமாகும்? முஸ்லிம்களுக்குச் சொந்தமான ஆயிரக்கணக்கான ஏக்கர்வயல் நிலங்களை கரும்புப் பயிர் செய்கைக்காக, ஸ்வீகரித்து, திரும்பவும் அதை மக்களுக்கு வழங்கும் போது சிங்களவருக்கு மாத்திரம் வழங்குவது முஸ்லிம்களுக்கு இழைக்கப்பட்ட மாபெருந்து ரோகம் என்றால் அதை யாராலும் மறுக்கவோ மறைக்கவோ முடியாது. இதைத் தட்டிக் கேட்ட ஒரு முஸ்லிம் அரசியல்வாதியை ஜே.ஆர். அரசாங்கம் வெளிநாட்டு ஸ்தானிகராக அனுப்பியது, எல்லா முஸ்லிம்களுக்கும் தெரி யாமலிருக்கலாம். கல்லோய நீர்ப்பாசனத் திட்டம், மகாவெளி அபிவிருத்தித் திட்டம் போன்றவையெல்லாம், பெரும்பான் மையினத்தின் நலனுக்காக வகுக்கப்பட்ட திட்டங்கள். 'இத்திட்டங்களை ஆட்சேபித்துத் தமிழர்கள் எதிர்த்தபோது, இவைகளைத் தளர்த்தாது, இன்னும் அதிகமாக, வன்மை

Page 82
அ.முகம்மது சமீம் 136
யானமுறையில் நடத்தியது அரசாங்கம்' என்று இலங்கையின் வரண்ட பிரதேசத்தில், குடியேற்றத் திட்டங்களும், இன முரண்பாடும் என்ற கட்டுரையில் பீபல்ஸ் " என்பவர் கூறுகிறார். மேலும் அவர், 'இக்குடியேற்றங்களில் சிங்கள மக்களின் ஆதிக்கமும், பெளத்த மதத் தன்மையும் இருப்பதைப் பற்றி யாரும் ஆட்சேபிக்க முடியாது. ஆனால், இக்குடியேற்றத்திட்டங்கள், வரலாற்று அடிப்படையின் சிங்கள மக்களின் ஆதிபத்திய உரிமையாதலால், இன்றைய அரசாங்கத்தின் மூலவளங்கள், ஒரு சமூகத்தவருக்கு மாத்திரம் தான் சொந்தமானது. ஏனைய சமூகத்தவருக்கு இதில் பங்கு கேட்க உரிமை யில்லை, என்று உரிமை கொண்டாடு வதைத்தான் சகிக்க முடியாது' என்று கூறுகிறார்.
1990ம் ஆண்டில் வெளியான 'ஆசிய ஆய்வுக்கருத்துக்கள் சஞ்சிகையில், இலங்கையின் தமிழீழ இயக்கம்: பிரிவினைக் கான ஆதாரம், என்ற கட்டுரையில், அமீதா சாஸ்திரி, என்ற கட்டுரையாளர், எழுபதுகளில், தமிழர்கள் தமிழீழம்' என்ற தனிநாடு கேட்பதற்குரிய காரணங்களை விளக்குகிறார். தமிழர்கள், தமக்குத் தனிநாடு வேண்டும் என்பதற்குத்த மக்கு இழைக்கப்பட்ட அநீதிகளையும், அநியாயங்களையும் காரணம் காட்டுவதைவிட, தமிழர்களின் எதிர்கால பூலோக சாஸ்திர அடிப்படையில் வடக்கும்-கிழக்கும் இணைந்த ஒரு தனிநாடு, வேண்டுமென்ற காரணத்தையே முன்வைத்தார்கள். இக்குடி யேற்றத் திட்டங்களினால் தமிழர்களும், முஸ்லிம் களும் அதிகமாக வாழும் பிரதேசங்களில் சிங்களவரின் எண்ணிக்கை அதிகரித்ததோடு, இப்பிரதேசங்களிலுள்ள மூலவளங்களைப் பங்கு போடுவதில் போட்டியும் வலுப்பெற்ற தோடு, இன முரண்பாடும் நாளுக்குநாள் வன்மையானது.
'நீர்ப்பாசன வசதிகள் ஏற்பட்ட காரணத்தினால், வரண்டு போயிருந்த நிலம் இப்பொழுது பொன்கொழிக்கும் பூமியாக மாறியதைக் கண்ணுற்ற, இப் பிரதேசங்க ளில் வாழும் தமிழர்கள், திருகோணமலைத் துறைமுகத்தைக் கேந்திர

137 ஒரு சிறுபான்மை சமூகத்தின் பிரச்சினைகள் IV ஸ்தானமாக வைத்து, எதிர்காலத்தில், விவசாயத்திலும், கைத்தொழிலிலும், வளர்ச்சிபெறும வாய்ப்பை உணர்ந்துதான், இப்பிரதேசத்தைத் தனிநாடாகக் கேட்க முற்பட்டனர்' என்று சாஸ்திரி கூறுகிறார். சிங்கள மக்களை எதிர்த்துத் தமிழர்களின் நல்வாழ்வுக்காகத் தனிநாடு கோரும் தமிழர்கள், இப்பிரதேசத் தில், தமிழர்களின் அளவு சனத்தொகையைக் கொண்டிருக்கும் முஸ்லிம்களின் கதி என்ன? என்பதைச் சிந்திக்கவில்லை. இவர்க ளுடைய இந்நோக்கத்தை அடைவதில் உள்ள சிக்கலும் இது
தான.

Page 83
அ. முகம்மது சமீம் 138 21. வன்செயல் இயக்கங்களும்
புத்த பிக்குகளும்
புத்த பிக்குகளின் ஆதரவைத் தமது கட்சிக்குப் பெற முனைந்த அரசியற் கட்சிகளில் எல்லாவற்றையும் விட, அவர்களை ஒர் அரசியல் இயக்கமாக மாற்றி அரசியலில் நேரடியாக ஈடுபடச் செய்து வெற்றி கண்ட ஒரே ஒரு அரசியற் கட்சிதான் ஜனதா விமுக்தி பெறமு ன'. 1982ம் ஆண்டில், மேதின ஊர்வலத்தின்போது, ஜனதா விமுக்தி பெறமுனவின் கொடியின் கீழ், 'மஞ்சள் காவி உடை அணிந்த, ஆயிரம் பிக்குகள், சோஷலிச பெளத்த முன்னணியின் கொடி யைத் தாங்கிக் கொண்டு சென்றனர்' என்று அமுனுகம கூறுகி றார். ஜே.வி.பி. இயக்கத்தினர், பெளத்த பிக்குகளை ஒரு வன் செயல்குழுவாக அமைத்தனர். இவ்வியக்கத்தினர், கிராமப் புறங்களில் வாழும் சிங்க ள - பெளத்த இளைஞர்களைக் கொண்ட ஒர் இயக்கமாக ஆரம்பித்தனர். சர்வகலாசாலைகளில் மாணவர்களைத் தமது இயக்கத்திற்குத் திரட்டும் பணியில் ஈடுபட்டிருந்த ஜே. வி. பி. இயக்கத்தினர், இக்கல்வி நிலையங்களின் மாணவ சமுதாயத்தில் ஒரு முக்கிய அங்கமாக விளங்கிய பெளத்த பிக்குகளையும் இயக்கத்தில் சேர்க்க முற்பட்டனர். சிங்க ள - பெளத்த கொள்கையை அடிப் படையாகக் கொண்ட ஜே.வி.பி இயக்கத்தினரின், ஜனரஞ்சக, சம அந்தஸ்துக் கொள்கையும், இலங்கைத் தமிழருக்கெதிரான, முக்கியமாக, தோட்டங்களில் வேலை செய்யும் இந்தியத் தமிழருக்கெதிரான கொள்கையும் இவ் விளைஞர்களை, ஈர்த்ததோடு, பெளத்த மதபிக்குகளையும், இவ்வியக்கத்தில் சேர்வதற்குக் காணமாயிருந்தன. "1971ம் ஆண்டில் அரசாங்க த்திற்கு எதிராக, எழுந்த ஜே.வி.பி. இயக்கத்தினரின் கிளர்ச் சியின்போது, பெளத்த கோவில்களின் உட்பிரவாகங்கள், -2',4 தங்களை ஒளித்து வைப்பதற்கும், கிளர்ச்சிக்காரர்கள் ஒளிந் திருப்பதற்கும் பயன்படுத்தப்பட்டன" என்று இளைப் பாறிய நீதியரசர், ஏ.சி. அல்லஸ் தனது 1971 - கிளர்ச்சி' என்ற நூலில்

139 ஒரு சிறுபான்மை சமூகத்தின் பிரச்சினைகள் IV
கூறுகிறார். எண்பதுகளில்தான், பெளத்த பிக்குகள், ஜே.வி.பி. இயக்கத்தின் ஒர் அங்கமாக உருவெடுக்கின்றனர்.
1983ம் ஆண்டு ஜூலை மாதத்தில், யாழ்ப்பாணத்தில் 13 சிங்கள படைவீரர்கள், வழிமறித்துக் கொல்லப்பட்ட சம்பவம், நாடு பூராவும், தமிழர்களுக்கெதிரான இனக்கலவரத்தைத் தூண்டிவிட்டது. தமிழ்க் கிளர்ச்சிக்காரர்களால், இத்தனை சிங்களப் படை வீரர்கள் கொல்லப்பட்டது இதுதான் முதல்தடவை. ஜூலை 24ம் திகதியிலிருந்து, ஆகஸ்டு 5ம் திகதிவரை நடைபெற்ற இவ்வினக்கலவரம், 'கனத்தையில் (மயானபூமி), சிங்களப்படைவீரர்களின் இறந்தசடலங்களின் தகனக்கிரியை களுக்குப் பிறகு, துக்கத்தினால் ஆத்திரமடைந்த சிங்களப் படைவீரர்களின், இனபந்துக்களின் வெறியூட்டும் சம்பவமாகத் தொடங்கிய இக்கலவரம், இரண்டாம் நாள், ஒரு திட்டமிடப்பட்ட தமிழர்களுக்கெதிரான ஓர் இனக் கலவரமாக உருவெடுத்தது. இதுபற்றி பின்னர் விரிவாக ஆராய்வோம். இக்கலவரத்தின் பின்னால், அரசியல் செல்வாக்குப் படைத்த சில அரசியல்வாதிகள் இருந்தார்களென்றாலும், சிங்கள மக்களின் இவ்வின வெறியைத் தமது இயக்கத்திற்குச் சாதகமாக ஜே.வி.பி. இயக்கத்தினர் பாவித்தனர்.
1983ம் ஆண்டு இனக்கலவரத்திற்குப் பிறகு, ஜெயவர்தனா அரசாங்கம், ஜே.வி.பி இயக்கத்திற்கு எதிராகத் தடை உத்தரவு போட்ட பிறகு, இவ்வியக்கத்தினர், பாடசாலை மாணவர்களையும், சர்வகலாசாலை மாணவர்களையும், புத்த பிக்குகளையும், மனித கேடயங்களாக வைத்து, பின்னால் நின்று இயங்கினர். ஒவ்வொரு கிராமத்திலும், மாவட்டத் திலும், மாகாணத்திலும் புத்த பிக்குகளைக் கொண்ட ஜே.வி.பி கிளைகள் ஸ்தாபிக்கப்பட்டன. மூன்று நிக்காயாக்களையும்
5 -
கொண்ட பிக்குகள் இவ்வியக்கத்தில் சேர்ந்தனர். இலங் இந்திய ஒப்பந்தம், புத்தபிக்குகள் இவ்வியக்கத்தில் சேர்ந்து, மும் முரமாக ஈடுபடுவதற்கு ஒரு வாய்ப்பை அளித்தது.
மேலும், கல்வி மசோதா, தனியார் மருத்துவக் கல்லூரி,

Page 84
அ. முகம்மது சமீம் 140 ஆகியவைகளுக்கெதிராகவும், சர்வகலாசாலை மாணவர்களது சகாய நிதிப் பணத்தை உயர்த்துவதற்கும், சர்வகலாசாலை ஆசிரியர்களது சம்பளத்தை உயர்த்துவதற்குமாகிய இயக்கங் களில், ஜே.வி.பி. இயக்கத்தினர், புத்தபிக்குகளை முன்னின்று இயங்க வைத்தனர். வெளிநாட்டுநுகர்வுப் பொருட்களுக் கெதிராகவும் இவர்கள் குரலெழுப்பினர். அரசாங்கத்தின் பொருளாதாரக் கொள்கையால் செல்வந்தர்களுக்கும், ஏழைகளுக்கு மிடையே உள்ள இடைவெளி நாளுக்கு நாள் விரிவடைந்து வந்தது. பணக்கார வர்க்கத்தினால் ஏற்பட்ட நுகர்வு சமுதாயத்தை ஒழித்து, பண்டைய நாட்களைப் போல், சம அந்தஸ்துள்ள ஒரு விவசாய சிங்கள-பெளத்த சமுதாயத்தை உருவாக்கு வதே இவர்களது நோக்கமாயிருந்தது. இந்நோக்கத்தை அடைவதற்கு, ஜே.வி.பியின் கிளையான ‘தேசப் பிரேமி ஜனதா வியாபாரய' என்ற இயக்கம், புத்த பிக்குகளை வன்செயலில் ஈடுபடத் தூண்டிவிட்டது.
ஜே.வி.பி இயக்கத்தினர், சிங்கள சமூகத்திலுள்ள முக்கிய பிரமுகர்களுக்கெதிராகவும், சிங்கள பாதுகாப்புப் படைகளுக் கெதிராகவும் வன்செயலில் ஈடுபட முற்பட்ட போது, ஜே. ஆரின் இலங்கை-இந்திய ஒப்பந்தத்திற்கெதிராகத் தோற்று வித்த 'தாய்நாட்டைப் பாதுகாப்போம் (ம வ் பிம சுரகீமே வியாபாரய) என்ற இயக்கத்திலிருந்து சிறிலங்கா சுதந்திரக் கட்சியினரும், மகாஜன எக்சத் பெறமுன கட்சியினரும் அஸ் கிரி மகாநாயக்க போன்ற சிரேஷ்ட பிக்குகளும், இவ்வியக் கத்திலிருந்து தம்மை விடுவித்துக் கொண்டனர். தம்முடைய இயக்கத்திற்குத் துரோகம் விளைவித்தனர் என்று இளைய பிக்குகள் சிரேஷ்ட பிக்குகளைக் குற்றம் சாட்டினர். சில சிரேஷ்ட பிக்குகள் ஜே.வி.பி இயக்கத்தினரால் படுகொலை செய்யப்பட்டபோது, இவர்கள் இச்செய்கையைக் கண்டிக் காததோடு, தமது ஆதரவையும் கொடுத்தனர். அரசாங்கம் ஜ்ே. வி.பி இயக்கத்தினரைக் கொன்று இவ்வியக்கததை அடக்க
பற்றுள்ள மக்கள் இயக்கம்

4 ஒரு சிறுபான்மை சமூகத்தின் பிரச்சினைகள் IV முற்பட்டபோது, இவ்வியக்கத்தைச் சேர்ந்த பிக்குகளும் இதில் அடங்கினார்ர்கள் ஜே.வி.பி. இயக்கத்தினர் அதிகாரத்தையோ ஆட்சியையோ சிறுபான்மை மக்களுக்குப் பகிர்ந்தளிப் பதையோ அல்லது அவர்களுடன் பங்கு போடுவதையோ விரும்பவில்லை. சிங்கள-பெளத்த இளந்தலைமுறையினரின் கருத்து, இதுவென்றால், அறிவில் சிறந்த, பெளத்த தத்துவத்தில் ஆழ்ந்த அறிவுள்ள, எல்லோராலும் மதிக்கப்பட்ட சிரேஷ்ட பெளித்த பிக்கு சிந்தனையாளர்களின் கருத்தைப் பார்ப்போம். சிங்கள - பெளத்த மக்களின் மனோநிலைக்கு இவர்களது கருத்துக்கள் காரணம் என்றால் அது மிகையாகாது.
மதிஹே பஞ்ஞாசீஹ தேரோ, ஹேன் பிட்டகெதர ஞானசீஹ தேரோ ஆகிய இரு பிக்குகளும் அறிவில் சிறந்தவர் கள் மட்டுமல்ல, பெளத்த மக்களுக்கு ஞானவிளக்கம் கொடுப் பவர்களும்கூட மதிஹே பஞ்ஞாசீஹதேரோ, "சிங்களவரின் எதிர்காலம்" என்ற நூலை எழுதினார். ஞானசீஹ தேரோ, நாற்பது நூல்கள் வரை எழுதியிருக்கிறார். பஞ்ஞாசீஹதேரோ, 'அமரபுர நிக்காய' என்ற பெளத்த பிக்கு பிரிவின் மஹாநாயக்க-தலைமை பிக்குவாக இருந்தவர். இவ்விருவரும், பண்டைய சிங்கள சமூகத்திலிருந்த, சமயவாழ்க்கையையும், எளிய வாழ்க்கையையும் அன்று நிலை பெற்றிருந்த பொறாமை, வஞ்சகம், போட்டி அற்ற ஒரு சமத்துவ சமு தாயத்தை மக்களுக்கு எடுத்துக்காட்டினர். இந்தக் கற்பனை சமுதாயம் சிங்கள-பெளத்த மக்களின் கவனத்தை ஈர்த்ததில் வியப் பில்லை. இப்படியொரு இலட்சிய சமுதாயத்தை அடைவதில், இன்றைய பாராளுமன்ற ஜனநாயக ஆட்சி முறையும், சிறுபான்மையினமக்களின் உரிமைப் போராட் டங்களும் முட்டுக்கட்டைகளாக இருக்கின்றன என்பதை மிகவும் நாசூக்காக எடுத்துக்காட்டினர்.
சிறுபான்மை யின மக்களைப் பற்றியும், அவர்களது உரிமைகளைப் பற்றியும் இவ்விரு சிரேஷ்ட பிக்கு அறிஞர்கள் கொண்டிருந்த கருத்துக்களை இனி அவதானிப்போம்.

Page 85
அ. முகம்மது சமீம் 142 'சிங்கள பெளத்த மக்கள் ஓர் ஆபத்திற்கு உள்ளாக் கப்பட்ட இனம்', என்று பஞ்ஞ சீஹதேரோ கூறுவது என்னவென்றால், இந்நாடு, இரண்டாகத் துண்டாடப்பட்டால் சிங்கள இனம் தனது ஆட்சியுரிமையை இழந்துவிடுவதோடு தென்னிந்தியத் தமிழகத்தின் ஆட்சியும் இலங்கையில் தோன்றும் என்பதே. மேலும் அவர் 'சிங்கள் மக்கள் தங்கள் ஒற்றுமையைப் பலப்படுத்த, தமது சனத்தொகையின் எண்ணிக் கையைப் பயன்படுத்த வேண்டும். 74% சதவிகித மக்கள் ஒற்றுமையானால் 26% விகிதமுள்ள ஏனையோரால் என்ன செய்து விடமுடியும்?' என்று கேட்கிறார். அவர் மலைநாட்டுத் தமிழருக்கு வாக்குரிமை வழங்கியதை எதிர்த்ததோடு, பாராளுமன்றத்திலுள்ள சிங்களவர் அல்லாத ஏனைய சமூகத்தவருடன் "அதிகார ஆசை பிடித்த சிங்க ள அரசியல்வாதிகள் ஒப்பந்தம் செய்வதைச் சாடுகிறார்.
இதே கருத்தோட்டத்தில், ஞானசீஹ தேரோ, "சிங்கள அரசியல்வாதிகளிடையே இருக்கும் வேற்றுமைகளினால், பெரும்பான்மையினமான சிங்கள இனத்தின் ஒற்றுமை பாதிக்கப்படுகிறது' என்று கூறுகிறார். ஞானசீஹதேரோவின் பெளத்த பரிபாலனத்திட்டம் ஏன் தேவை? என்ற நூலை மொழிபெயர்த்த ஸ்டீவன் கெம்பர் என்பவர் பின்வருமாறு கூறுகிறார். இன்றைய பிரச்சினைக்கு 'சந்தர்ப்பவாதிகளான தமிழ் அரசியல்வாதிகள் தான் காரணம். இந்த நாட்டில், தமிழர்களின் துன்புறுத்தல்களைச் சிங்கள மக்கள் சகித்துக் கொண்டிருப்பதைப் போல், வேறு எந்த நாடும், சிறுபான் மையினம் குழப்பம் விளைவிப்பதற்கு இடம் கொடுக்காது. இந் நாட்டைத் துண்டாட நினைக்கும் தமிழரசுக் கட்சியின் கொள் கையை முற்றாகத் தடைசெய்ய வேண்டும். பெரும்பான்மை யினத்தை அடிபணிய வைக்கும் ஒரு சதி இது' என்று கூறு கிறார்.
'பரந்த மனப்பான்மையுள்ள பெளத்த பிக்குகள்கூட சிறிலங்கா அரசாங்கம் சிங்க ள - பெளத்த தேசியத்தைக்

143 ஒரு சிறுபான்மை சமூகத்தின் பிரச்சினைகள் IV
கடைப் பிடிக்க வேண்டும் என்ற கருத்தைக் கொண்டி ருப்பதுடன், அதிகாரம் பரவலாக்குவதென்பது, சிங்க ள வருக்கே உரித்தான தாய் நாட்டைப் பிரிப்பதற் கொப்பாகும், என்ற கருத்தையும் கொண்டிருக் கின்றனர்' என்று எஸ்.ஜே.தம்பையா கூறுகிறார். 'பல்லினங் கள் வாழும் ஒரு நாட்டில், பெரும்பான்மையினம் தனது ஆதிக்கத்தை வலியுறுத்தும் போது, சிறுபான்மை இனங்களான இந்துக்க ளினதும் முஸ்லிம்களினதும் ஜனநாயக உரிமைகள் தான் என்ன?' என்ற கேள்வியை அவர் எழுப்பு கிறார். மேல் நாட்டவரின் சமயசார்பற்ற தேசியவாதத்திற்குப் பதிலாக, 'சமய சார்புள்ள தேசியவாதம் என்ற தத்துவம் வலுவடையும்போது, சமய அடிப்படையில் சிறுபான்மை மக்களாகக் கணிக்கப்படும், இந்துக்களும், முஸ்லிம்களும் பெரும்பான்மை சமய மக்களான பெளத்தர்களுடன் சம அந்தஸ்தைக் கோர முடியாது. இல்லையா? எனவே, இந்தக் கருத்து அடிப்படையில் சிறுபான்மையின மக்கள் தங்கள் தாழ்ந்த நிலையை உணரவேண்டும்', என்ற கருத்தும் தொனிக்கிறதல்லவா?
வரலாறு என்பது இன்றைய அரசியலின் ஒர் ஆயுதம்', என்ற கருத்தை நாம் ஏற்றுக் கொள்வோமானால், இன்றைய அரசியல் பிரச்சினைகளுக்கும், "சிங்கள-பெளத்த தேசியவாத மேலாண்மை மனப்பான்மைக்கும் இலங்கையில் தோன்றிய வரலாற்று இலக்கியங்கள்தான் காரணம் என்ற கருத்தையும் ஏற்றுக் கொள்ள வேண்டும். 'இன்றைய இலங்கை சமுதாயம் வரலாற்று நினைவுகள் என்ற ஒரு பெரும் பாரத்தைத் தாங்கிக் கொண்டிருக்கிறது", என்று பேராசிரியர் கே.எம்.டி சில்வா கூறுகிறார். 'இலங்கையின் இன்றைய வரலாற்று இலக்கியம், அரசியல் தேவைகளுக்காக வேண்டுமென்றே தோற்றுவிக்கப் பட்ட ஒரு சாதனம்' என்று ஹெயின்ஸ் பெஷர்ட்ஸ் என்ற ஜெர்மன் ஆசிரியர் தன்னுடைய, 'பெளத்த சமயத்தின் வரலாற்றின் ஆரம்பம் : மகாவம்சமும் அரசியல் கருத்துக் களும்' என்ற ஆய்வுக்கட்டுரையில் கூறுகிறார். மேலும் அவர், 'அதன் நோக்கமென்ன வென்றால், சமய மரபோடு ஒட்டிய

Page 86
அ. முகம்மது சமீம் 144 ஒரு தேசிய தனித்துவம் என்ற கருத்துணர்வை வளர்ப்பதே யாகும் என்பதே. அதாவது "சிங்கள-பெளத்த தனித்துவத்தை வளர்ப்பது என்பதே அதன் நோக்கம். இக்கருத்தின் தாக்கம் இல்லாமல், இத்தீவின் கலாச்சார பாரம்பரியத்தையோ, அரசியல் மரபையோ எழுதுவது இயலாத காரியம்' என்று கூறுகிறார். இந்நாட்டின் வரலாற்றை எழுதிய பலர் இக்கருத்தை வலியுறுத்தியே வந்திருக்கின்றனர். வரலாற்றுக் கோவைகளான மகாவம்சம் போன்ற ஆவணங்களையும் இந்தக் கண் கொண்டேபார்த்தனர். "நாட்டை அழிக்க வந்த தமிழர்களை ஒழித்துக்கட்டி, நாட்டை ஒற்றுமைப்படுத்தி, புத்த சமயத்தை நிலைநாட்டிய வீரன்", என்றே துட்டகாமினியை உருவகித்துக் காட்டினர். இந்த கருத்தின் அடிப்படையில்தான், 'சிங்களவர் ஆரிய- (மேம்பட்ட) இனத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், இலங்கை புத்த சமயத்தின் இருப்பிடம்", என்றெல்லாம் காட்ட முற்பட்டனர். 'இவ்வரலாற்றாசிரியர்கள், மொழி, இனம், மதம் என்ற அடிப்படையில், “சிங்கள - தேசியம்" என்ற உணர்வைக் கடந்த நூறு வருடங்களாக வளர்த்து வந்திருக் கிறார்கள்', என்று குணவர்தனா, தன் "சிங்கத்தின் மக்கள்? என்ற கட்டுரையில் கூறுகிறார். சிங்கள இலக்கியவாதிகளும், "சிங்கள உணர்வு, 'ஆரிய இன உணர்வின் தாக்கத்திலிருந்து தோன்றிய தொன்று, என்ற கருத்தைத் தமது இலக்கியங்களில் வளர்த்து வந்திருக்கிறார்கள். அநகாரிக்க தர்மபாலா போன்ற பெளத்த அறிஞர்கள், மகாவம்சவில் வரும் துட்டகாமினிஎல்லாளன் யுத்தத்தை, "சிங்கள-ஆரியர்கள், தமது ஆட்சியை நிலைநாட்டிய சம்பவமாகக் காட்டியதோடு, “சிங்கள இனம் என்றைக்குமே வேறு இனங்களால் வெற்றி கொள்ளப் படவில்லை', என்ற கருத்தையும் பரப்பினர். மகாவம் சத்திற்குப் பிறகு தோன்றிய சூல வம்சம்" என்ற வரலாற்றுக் கோவை, சோழர்களை, நாட்டைச் சூறையாடவந்த தமிழ்ப்
பேய் இனம்", என்று கூறுகிறது.
கடந்த நூறு வருடங்களாக, தமிழர்களை எதிரிகளாகவும், நாட்டைச் சூறையாட வந்த பேய்களாகவும் காட்டி சிங்கள

145 ஒரு சிறுபான்மை சமூகத்தின் பிரச்சினைகள் IV
உணர்வைத் தூண்டி விட்ட சிங்கள இலக்கியவாதிகளினதும், வரலாற்றாசிரியர்களினதும், கருத்துக்களினால் பாதிக்கப்பட்டு, “சிங்கள -ஆரிய உணர்வு என்ற உயர்வுச்சிக்கல் உணர்வில் ஊறித்திளைத்திருக்கும், சிங்கள சமுதாயம் தமிழர் சமுதாயத் தைப் பற்றிய எண்ணத்தை வெகுசீக்கிரத்தில் மாற்றிக் கொள்வது இயலாத காரியம். தாம் ஒர் உயர்ந்த இனம்' என்ற உணர்வில் தோன்றிய சிங்களவரின் மேலாண்மை உணர்வு, சிறு பான்மை இனங்களைத் தமது அந்தஸ்திலிருந்தும் குறைந் தவர்கள், என்ற மனப்பான்மையை வளர்த்தது. இந்த மேலாண்மை உணர்வு சிங்கள-பெளத்தர்கள் மத்தியில் இருக்கும் வரைக்கும், சிறுபான்மையின மக்கள், தமக்குச் சிங்கள மக்களுடன் சம அந்தஸ்தைக் கோரவோ, அரசியலில் அதிகாரத்தில் பங்கு கேட்கவோ முடியாது. இதுதான் இன்றைய இனப்பிரச்சினையின் அடித்தளம்.

Page 87
அ. முகம்மது சமீம் 146
22. இலங்கையின் அரசயாப்புகளும் சிறுபான்மை மக்களின் பாதுகாப்பும்
இலங்கையின் இனப் பிரச்சினை மோசமடைந்து, தமிழர்கள் தனிநாடு கோருவதற்கும் அது உள்நாட்டு யுத்தமாக வளர்வதற்கும் காரணமாயிருந்த "சிங்கள-பெளத்த தேசிய வாதத்தைப் பற்றி முன்னைய அத்தியாயங்களில் ஆராய்ந்தோம். இதன் அடிப்படையில் தோன்றிய பேரினவாதிகளின் சிறுபான் மையினங்களைப் பற்றிய மனப்பான்மை, வேறொரு விதத்தி லும் சிறுபான்மை மக்களைப் பாதித்தது. இலங்கையின் அரச யாப்பு இரண்டு முறை மாற்றப்பட்டது. மூன்றாவது அரசயாப்பு ஒன்று அமைப்பதில் இன்றைய அரசாங்கம் ஈடுபட்டிருக்கிறது. இலங்கை சுதந்திர நாடாகப் பிரகடனப் படுத்தப்படுவதற்கு அடிப்படையாக இருந்த சோல்பரி அரசயாப்பு 1948ம் ஆண்டிலிருந்து 1972 ib ஆண்டுவரைக்கும் நிலைத்து நின்றது. இவ்வரசயாப்பை மாற்றி 1972ம் ஆண்டில் ஒரு புதிய அரசயாப்பை அமுலுக்குக் கொண்டு வந்தது அன்றைய சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையிலிருந்து அரசாங்கம். 'ஒரு சமுதாயமோ, அல்லது ஒரு நாடோ, ஒரு குறிப்பிட்ட வளர்ச்சியை அடையும் போது, அதன் வளர்ச்சிக் கேற்ப, அரசயாப்பும் மாற்றப்படல் வேண்டும்' என்று 1972ம் ஆண்டின் அரசயாப்பின் கர்த்தா டாக்டர்கொல் வின் ஆர். டி. சில்வா இலங்கையின் ஐக்கிய நாடுகள் சபையின் கிளை யினால் ஒழுங்கு செய்யப்பட்ட கூட்டத்தில் கூறினார். (நிஹால் ஜயவக்கிரமையின் கட்டுரை, டெயிலி நியூஸ், 1-7-95)
இவ்வரசயாப்பை யாத்த டாக்டர் கொல் வின் சிறுபான்மையின மக்களுக்கு சோல்பரி அரசயாப்பில் இருந்த ஒரேயொரு பாதுகாப்பையும் அகற்றிவிட்டார்.
சோல் பரி அரச யாப்பில் சிறுபான்மையின மக்களின் பாதுகாப்புக்கு இருந்த 29(2) சட்டப் பிரிவு போதுமானதல்ல,

147 ஒரு சிறுபான்மை சமூகத்தின் பிரச்சினைகள் IV
மக்கள் அடிப்படை உரிமைகள்" என்ற ஒரு பிரிவு சேர்த்துக் கொள்ளப்படல் வேண்டும், என்று, இதற்கு ஜே. எல். குரே போன்ற சட்டத்தறிஞர்கள் ஆட்சேபனை தெரிவித்த சமயத்தில், இந்த யாப்பின் கர்த்தாவாகிய, சர். ஐவர் ஜென்னிங்ஸ், அப்படியொரு அடிப்படை உரிமைகள் பிரிவு தேவையில்லை என்று கூறிவிட்டார். 'பிரிட்டனில், அடிப்படை உரிமைகள் சட்டம்' என்ற ஒரு பிரிவு இல்லை. எங்களது நாட்டின் சட்டப்பிரகாரம் நாங்கள் சுதந்திரமாக இயங்குகிறோம். 'அடிப்படை உரிமைகள்' சட்டம் இருக்கும் நாடுகளைவிட நாங்கள் சிறந்த முறையில் இயங்குகிறோம்" என்று ஜென் னிங்ஸ் கூறினார். ஆனால் 1961ம் ஆண்டு பி.பி.சி. ஒளிபரப்பில் பேசும் போது, அடிப்படை உரிமைகள் சட்டம்" என்று முழுமையான ஒரு பிரிவு இலங்கை அரசயாப்பில் இடம் பெற்றிருந்தால், நன்றாயிருந்திருக்கும் என்று ஒப்புக் கொண்டார். 'இலங்கையின் பிரச்சினைகளைப் பற்றி நான் இன்று அறிந்திருக்கும் அளவிற்கு அன்று அறிந்திருந்தால், அன்று தயாரித்த அரசயாப்பில் இருந்த சில பிரிவுகளில் மாற்றம் கொண்டு வந்திருக்கலாம்' என்று ஜென்னிங்ஸ் கூறியதை நிஹால் ஜயவிக்கிரம தன்னுடைய கட்டுரையில் கூறுகிறார். (டெயிலி நிவ்ஸ் 1-7-95)
சோல்பரி அரசயாப்பில் இருந்த ஒரு சிறப்பம்சம் என்னவென்றால், அரசியல், சமூக பொருளாதார மாற்றங்கள் பல ஏற்பட்டிருந்தும், அரசயாப்பில் மாற்றம் ஏற்படவில்லை யென்பதே. மனித உரிமைகள் சட்டம் என்ற வொரு பிரிவு இல்லாதிருந்தும், இந்த அமைப்பு, அரசியலில் பாரிய மாற்றங்களைக் கொண்டுவர இடமளித்ததோடு, சிறுபான்மை சமூகங்களைப் பாதிக்கும் சட்டங்களும் நிறைவேறுவதற்கும் இடமளித்தது என்பதுதான் விசேஷம். 'காலனித்துவ ஆட்சிக் காலத்தில் பெரும்பான்மையினத்தைவிட சிறுபான்மையின மக்கள், முக்கியமாக, கிறிஸ்தவர்களும், தமிழர்களும் அனுபவித்து வந்த விசேஷ சலுகைகளை, நாடு சுதந்திரம் அடைந்த பிறகும் அனுபவித்து வந்ததைத் தடுக்கவோ,

Page 88
அ. முகம்மது சமீம் 48 குறைக்கவோ, நிறுத்தவோ முடியாத நிலையேற்பட்டிருந்தால், ஒரு சமயம், இவ்வரசயாப்பை, முழுமையாக மாற்றுவதற்குரிய நெருக்கடி 1972வது ஆண்டுக்கு முன்பே வந்திருக்கலாம்" என்று பேராசிரியர் கே.எம்.டி.சில்வா கூறுகிறார். 1960களில், சிங்கள - பெளத்த தேசியவாதத்தைப் பல சட்டங்களை அமுலாக்குவதன் மூலம், நிலைநாட்ட விரும்பிய சிறிலங்கா சுதந்திரகட்சி, அரசயாப்பை மாற்றுவதில் முழுக்கவனம் செலுத்தவில்லை. அடிப்படை உரிமைகள் சட்டம் என்ற ஒரு பிரிவு இருந்திருந்தால், ஒரு வேளை, வெளிநாட்டவரதும், உள்நாட்டவரதும் தனியார் ஸ்தாபனங்களை, இழப்புப் பணம் கொடுக்காமல், அரசாங்க மயமாக்கப்பட்டிருக்க முடியாமற் போயிருக்கும். ஆகவே சோல்பரி அரசயாப்பில் தனியார் உடைமைகளையும் சொத்துக்களையும் பாதுகாப் பதற்கு எவ்வித பிரிவும் இருக்கவில்லை. 1960களில் சிங்கள- பெளத்த தீவிரவாதிகள் சிறுபான்மையின மக்களுக்கு எதிராக எடுத்த நடவடிக்கைகளைக் கண்டு சோல்பரி யாப்பை உருவாக்கி யவர்கள், தாம் அமைத்த திட்டத்தில் அடிப்படை உரிமைகள் பிரிவு இல்லாத காரணத்தினால், சிறுபான்மையின மக்களுக்குத் தமது திட்டம் பாதுகாப்பு அளிக்கவில்லை யென்பதை பின் னால் உணர்ந்து வருந்தினர். 'இவ்யாப்பின் மூலகர்த்தாவான சர்.ஐவர் ஜென்னிங்ஸ், இலங்கையின் அன்றைய நிலை யைக் கண்டு தான் உருவாக்கிய திட்டத்தில், அடிப்படை உரிமைகள் பிரிவு ஒன்றிருந்திருந்தால் நலமாயிருந் திருக்கும், என்று வருந்தினார்' என்று ஜே. ஏ.எல். குரே, தன்னுடைய 'வளர்ந்து வரும் சமுதாயத்தில் அரசயாப்பு அரசாங்கமும், மனித உரிமைகளும் என்னும் நூலில் கூறுகிறார். இவ்யாப்பின் மூலகர்த்தாக்களில் ஒருவரான சர். சார்லஸ் ஜெப்ரீஸ், தன்னு டைய "இலங்கை - சுதந்திரத்தை அடைந்த முறை" என்ற நூலில் 'மனித அறிவிற்கு எட்டிய திட்டங்களை, சிறுபான்மையின மக்களின் பாதுகாப்புக்கு சோல்பரி அமைப்பு வகுத்தது' என்று கூறயதை, சோல்பரி பிரபுவே, மறுதலித்தார், என்று பேராசியர் கே.எம்.டி. சில்வா கூறுகிறார். பி.எச். பார்மர் என்பவர் எழுதிய

49 ஒரு சிறுபான்மை சமூகத்தின் பிரச்சினைகள் IV
"இலங்கை-ஒரு பிளவுபட்ட நாடு", என்ற நூலுக்கு முன்னுரை எழுதிய சோல்பரி பிரபு, தன்னுடைய முன்னுரையில் பின் வருமாறு கூறுகிறார்.
'பின்னர் நடந்த சம்பவங்களை அவதானிக்கும்போது, இந்தியா, பாக்கிஸ்தான், மலாயா, நைஜீரியா போன்ற நாடுகளினதும், ஏனைய நாடுகளினதும் அரசயாப்புகளில், இருக்கும் 'அடிப்படை உரிமைகள்', என்ற ஒரு பிரிவை, சோல்பரி குழுவினர், சிபாரிசு செய்யத் தவறி விட்டனர்". 1960ம் ஆண்டு தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில், சிறிலங்கா சுதந்திரக் கட்சி “சோல்பரி யாப்பில் பாரிய மாற்றங்களைக் கொண்டு வர வேண்டும், அல்லது சோல் பரி யாப் பையே மாற்றியமைக்க வேண்டும்" என்று கூறியது. சோல்பரி யாப்பில் சிறுபான்மையின மக்களுக்கு இருந்த ஒரளவு பாதுகாப்பையும் அகற்ற வேண்டும் என்ற காழ்ப்புணர்ச்சியே இவர்களுடைய இக் கொள்கைக்குக் காரணம் என்றால் மிகையாகாது. சிங்கள-பெளத்த தேசிய வாதத்தத்துவத்தை தூக்கிப் பிடித்த சிறிலங்கா சுதந்திரக் கட்சி, தமிழர்களுக்கு எவ்வித சலுகைகள் கொடுப்பதையும எதிர்த்தது.
இனி, சோல் பரி, அரசயாப்பில் இருந்த 29(2) பிரிவு, எவ்வளவு தூரம் சிறுபான்மையின மக்களுக்குப் பாதுகாப் பளித்தது என்பதனை ஆராய்வோம். 1947ம் ஆண்டில் அமுலுக்கு வந்த சோல்பரி அரசயாப்பு, சிறுபான்மை யினங் களுக்கும், சமய பிரிவுகளுக்கும் பாதுகாப்பு அளித்தது என்ற ஒர் எண்ணம் அன்று நிலவியது. உண்மையில் சோல்பரி அரசியல் திட்டம், ஆங்கிலக்கல்வி படைத்த, பெளத்த, இந்து, கிறிஸ்தவ, முஸ்லிம், சமயத்தவர்களது உயர்குழுவினரிடையே ஏற்படுத்தப்பட்ட ஒர் ஒப்பந்தமாகும். எனவேதான், சிறுபான் மையின உயர்குழு மக்களுக்கு பிரதிநிதித்துவம் கிடைக்காத விடத்து, அவர்களுக்கு நியமன அங்கத்துவ மென்றும் இவர்களது அபிலாஷைகளைத் தீர்ப்பதற்கு இரண்டாவது சபை (செனட் சபை) யென்றும், அமைத்தார்கள். சிறுபான்மை

Page 89
அ.முகம்மது சமீம் 150
யினத்தைச் சேர்ந்த உயர்குழுவினரின் வாரிசுகளுக்கு, நியமனம் வழங்குவதற்கு, 'அரசசேவைகமிஷன்' என்றும், "நீதி சேவை கமிஷன்" என்றும் நிறுவினார்கள். 29(2) வது பிரிவின்படி, சிறுபான்மையின மக்களைப் பாதிக்கும் சட்டங்கள் இயற்றப் பட மாட்டாது என்றும் கூறினார்கள். ஆனால் நாள் செல்லச் செல்ல இவ்வுயர் குழு வர்க்கத்தினரிடையே இருந்த ஒப்பந்தம் சிங்கள தீவிரவாதிகளால் படிப்படியாக உடைத் தெறியப் பட்டது.
ஒரு ஜனநாயக ஆட்சிமுறையில் தமக்குச் சரியான பிரதிநிதித்துவம் கிடைக்காது என்ற பீதிதான் 1940களில் தமிழர்களை, 'ஐம்பதுக்கு ஐம்பது' என்ற கோரிக்கையை முன்வைக்க வைத்தது. இந்தக் கோரிக்கையின் காரணமாகத் தான், பிரதேசவாரியாக பிரதிநிதித்துவம் வழங்கப்பட்டது. இந்தியத் தமிழர்களுக்கு ஏழு பிரதிநிதிகள் கிடைத்தன. அன்றைய பிரதமராக இருந்த டி. எஸ். சேனாநாயக்க, சிங்கள மக்களின் பெரும்பான்மை பிரிதிநிதித்துவத்தை உறுதிப்படுத் துவதற்காக, இந்தியத் தமிழர்களின் வாக்குரிமையைப் பறித் தார். 1948ம் 1949ம் ஆண்டுகளில் அமுலுக்குக் கொண்டுவரப் பட்ட சட்டங்களினால், இந்தியத் தமிழர்கள் தங்கள் ஏழு பிரதிநிதிகளை இழந்ததுடன், பதினான்கு தேர்தல் தொகுதி களில் தங்களுக்கிருந்த செல்வாக்கையும் இழந்தனர். 1947ம் ஆண்டு தேர்தலில் 68 பிரதிநிதிகளைக் கொண்டிருந்த சிங்கள சமூகத்தவர், 1952ம் ஆண்டில் 75ஆகக் கூட்டிக் கொண்டனர். ஒவ்வொரு தேர்தலிலும் சிங்கள சமூகத்தவர் தங்கள் பிரதி நிதித்துவ அங்கத்தவர்களின் எண்ணிக்கையைக் கூட்டிக் கொண்டே சென்றனர். 1977ம் ஆண்டில் 168 அங்கத்தவர்களில் 137அங்கத்தவர்கள் சிங்களச் சமூகத்தைச் சார்ந்தவர் களாயிருந்தனர். இவ்வெண்ணிக்கை மொத்தத் தொகையில் 81% விகிதமாக வளர்ந்தது. சோல்பரி அரசயாப்பில் 29 (2) பிரிவு சிறுபான்மையினமான இந்தியத் தமிழர்களின் வாக்குரி மையைப் பாதுகாக்கத் தவறியது.

151 ஒரு சிறுபான்மை சமூகத்தின் பிரச்சினைகள் IV
தமிழர்களும் முஸ்லிம்களும் தொன்று தொட்டு வாழ்ந்து வந்த பிரதேசங்களில், டி. எஸ். சேனாநாயக்க அமுலுக் குக் கொண்டு வந்த சிங்களக் குடியேற்றத்திட்டங்கள் சிறுபான் மையின மக்களைப் பாதிக்கும் இரண்டாவது செய்கையாக அமைந்தது. இதன் காரணமாக, திருகோண மலை, அம்பாறை மாவட்டங்களில் தமிழர்களும் முஸ்லிம்களும் வாழ்ந்து வந்த பிரதேசங்களில், சிங்களவரின் சனத்தொகை பெருகியதால், சிறுபான்மையின மக்களின் வாக்குப் பலமும் குறைந்தது. பெரும்பான்மையினத்தவரின் இவ்வேறுபடுத்தும் கொள்கை யினால் பாதிக்கப்பட்ட தமிழர் சமூகம், ஒரு சமஷ்டி ஆட்சியில் தான் தமக்குப் பாதுகாப்பு இருக்கும் என்ற நிலைக்கு வந்தனர். தமிழரசுக் கட்சி' என்று ஒரு கட்சி தோன்றுவதற்கும் இதுவே காரணம்.
இலங்கை அரசாங்கம், பெரும் பொருள் செலவழித்து, தமிழ்ப் பிரதேசங்களில் சிங்களக் குடியேற்றத் திட்டங்களை அமைத்தது. 1948ம் ஆண்டில் 200,000 சிங்கள குடும்பங்கள் இப்படி குடியேற்றப்பட்டன. இதன் காரணமாகக் கிழக்கு மாகாணத்தில், மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து மூன்றி லொரு பங்கு, சிங்களவர்கள் அதிகமாகக் குடியேற்றப்பட்ட அம்பாறை மாவட்டத்தோடு சேர்க்கப்பட்டது.
1947-48ம் ஆண்டுக்கும், 1973-74ம் ஆண்டுக்கு மிடையில், காணி அபிவிருத்திக்கும், நீர்ப்பாசன திட்டங் களுக்கும், சிங்களவரைக் குடியேற்றும் திட்டங்களுக்குமாக, அரசாங்கம், 3,700,000, 000 ரூபாய் செலவழித்தது. இத் தொகையில் சிறுபான்மையின மக்களின் நலனுக்காக அரசாங்கம் எவ்வளவு செலவழித்தது என்பது குறிப்பிடப் படாவிட்டாலும், இத் தொகையில் பெரும் பகுதி சிங்கள் சமூகத்தின் நன்மைக்காகவே செலவழிக்கப்பட்டது என்பது மறுக்க முடியாத தொன்று. இக் குடியேற்றத் திட்டங்களில் குடியேறிய சிங்கள குடும் பங்களுக்கு, முதலில் எட்டு ஏக்கர் நிலமும், பின்னர் ஐந்து ஏக்கர் நிலமும் வழங்கப்பட்டது.

Page 90
அ. முகம்மது சமீம் 152
இக்குடும்பங்களுக்கு, வீடு, கிணறு வசதிகளும், விவசாயம் செய்வதற்கு உபகரணங்களும், பணமும் அரசாங்கத்தால் கொடுக்கப்பட்டது. சிங்களக் குடியேற்றத் திட்டங்களினால் பாதிக்கப்பட்ட தமிழ்ப் பிரதேசங்களின் சனத்தொகையைப் பற்றிய விபரம் 153ம் பக்க அட்டவணை காட்டுகிறது.
அரசாங்கத்தின் சிங்க ளக் குடியேற்றத் திட்டங்களின் காரணமாக, அம்பாறை என்ற ஒரு புதிய மாவட்டம் 1960களில் உருவாக்கப்பட்டது. மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து பிரித்தெடுக்கப்பட்ட இம்மாவட்டத்தில், 1963ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி, சிங்களவரின் சனத் தொகை 86% விகிதமாகக் கணிக்கப்பட்டது. கீழே உள்ள அட்டவணை திருகோணமலை, மட்டக்களப்பு மாவட்டங்களில் ஏற்பட்ட சனத்தொகையின் மாறுதல்களைக் காட்டுகிறது.
கிழக்கு மாகாணத்தின் இன ரீதியான சனத்தொகை விபரம்
if (!b[} (}) || 600I Ln 6 ) &) If I 6]] [ Lif) மட்டக்களப்பு-அம்பாறை மாவட்டங்கள்
சிங்க தமிழர் முஸ் ஏனை சிங்க தமிழர் முஸ் ஏனை ளவர் லிம் யோர் | ளவர் லிம் யோர் 1921. 3... O 55.2 38.1 3.5 4.5 55.5 39.7 2.5 1946 206 44.5 30.5 3.7 5.9 50.5 42.2 1.6 1971 288 38.2 32O 10 17.7 46.4 35.1 0.6
(ஆதாரம் மைக்கல் றொபர்ட்ஸ் கூட்டான இன பாகுபாடு - Collective identities).
இரண்டு தேர்தல் தொகுதிகளை உண்டாக்கியது. 197I Lib ஆண்டு கணக்கெடுப்பின்படி, சிங்களவரின் சனத்தொகை 71.9% தசமாக இருந்த வேளையில் பாராளுமன்றத்தில் அவர்களது விகிதாசாரம் 80% ஆகப்பெருகியது.
சிறுபான்மையினங்களின் அரசியல் உரிமைகளைப்

ஒரு சிறுபான்மை சமூகத்தின் பிரச்சினைகள் IV
153
(gồogi -7-Trīsroosisi sono qoulso($$isori uongo igog@s useresse đượī£ mgogo : qimugso)
II / ' /. /. Z86Z'60? – 18 G' I 2 Z6] 'Oij/802' GG - 96Z' GI 6/, 6' Z9ÇG I '76 - 7 / I ' [9] 6 TZ' W IZOliz'Oz - 23T '9
qCICTucn 「TT그CI-6
Q915nocooo!!809199919
€091€loĝ1998I 16 I - 9 G6I 占un9499迅珂七n9499迅珂
†66'09 - 0 TO6 GGZ'? / - / IG') ? Z8G ‘97 Z - I 82° 09`I
2702/9 - y02 /y
Ț 16 I -€ 9.6 Ț 1991, đĩlgio
q49坝坝h GQQTQL的D白氧 「TTL89%TTc그
q는&는 그rm『는 그m
garīgs1995notasuoloģisso usorșit? - †1913 –i-ingro opulasiĝoặđặrnowo) usergię

Page 91
அ. முகம்மது சமீம் 154
பாதிக்கும் அளவிற்கு சிங்கள அரசாங்கங்களின் கெடுபிடிகளை சோல்பரி அரசயாப்பின் 29(2) சட்ட பிரிவு தடுக்கும் சக்தியை இழந்தது.

155 ஒரு சிறுபான்மை சமூகத்தின் பிரச்சினைகள் IV
23. சிறுபான்மையின மக்களின் மொழி
உரிமை நசுக்கப்படுதல்
1947ம் ஆண்டில் அமுலுக்கு வந்த சோல்பரியாப்பு, 29(2) பிரிவு, சிறுபான்மையின மக்களின் பாதுகாப்புக்காக ஏற்படுத்தப்பட்டது என்று கூறப்பட்டது. ஆனால் படிப் படியாக, சிறுபான்மையின மக்களின் உரிமைகள் பறிக்கப் பட்டன. முதலாவது, இந்திய வம்சாவளியினரின் வாக்குரிமை பறிக்கப்பட்டது. இரண்டாவது, தமிழர்களும் முஸ்லிம்களும் வாழும் பிரதேசங்களில், சிங்களக் குடியேற்றத்திட்டங்கள், அமுலாக்கப்பட்டதால், அப்பிரதேசங்களில் தொன்றுதொட்டு வாழ்ந்து வந்த மக்களின் வாக்குப் பலம் குன்றியது. இதன் காரணமாக பெரும்பான்மை சமூகமான சிங்கள இனம் தனது பிரதிநிதித்துவ எண்ணிக்கையைக் கூட்டிக்கொண்டது.
சோல்பரி யாப்பில் 11(2) பிரிவு, பாராளுமன்றத்தில் தங்களுடைய சனத்தொகைக்கேற்ப பிரதிநிதித்துவம் கிடைக் காத பட்சத்தில், சிறுபான்மை யின மக்களின் பிரதிநிதித் துவத்தை சமன் செய்வதற்கு, பிரதம மந்திரியின் ஆலோசனை யுடன், ஆறு அங்கத்தவர்களை நியமிப்பதற்கு கவர்னர் ஜெனரலுக்கு அதிகாரம் இருந்தது. இந்தப் பிரிவின் நோக்க மென்னவென்றால், ஐரோப்பியர், பறங்கியர், முஸ்லிம்கள், ஆகிய இன மக்களுக்குத் தேர்தல் மூலம் தங்கள் சனத் தொகைக்கேற்ப, தகுந்த பிரதிநிதித்துவம் கிடைக்காத விடத்து, அவர்களுடைய பிரதிநிதித்துவத்தை சமன் செய்வது என்பதே. அவ்வரசயாப்பில் உள்ளடங்கிய தன்மை இதுதான். இப்பிரிவி லுள்ள அதிகாரத்தை உபயோகித்து, ஒர் இந்திய வம்சாவழி யினரையோ, ஒர் இலங்கைத் தமிழரையோ, ஒரு கண்டிச் சிங்களவரையோ, அரசாங்கம் நியமிக்கலாம் என்று சர். ஐவர் ஜென்னிங்ஸ் கூறுகிறார். இந்தியத் தமிழர்கள் தங்கள் வாக்குரிமை இழந்த காரணத்தால், 1952ம் ஆண்டு பாராளுமன்றத்தில் அவர்களுக்குப் பிரதிநிதித்துவம் கிடைக்காத

Page 92
அ. முகம்மது சமீம் 156 காரணத்தினால், ஒர் இந்தியத்தமிழர் நியமிக்கப்பட்டார். இப்பிரிவின் அதிகாரத்தை உபயோகித்து 1956ம் ஆண்டுக்கும் 1965 ஆண்டுக்குமிடையில் இருந்த இரண்டு பண்டார நாயக்கா அரசாங்கங்களும், சிங்கள சமூகத்திலுள்ள தாழ்த்தப்பட்ட சாதிகளிலிருந்தும் பிரதிநிதிகளை நியமித்தன. இதன் காரணமாக, சிங்களவரின் பிரதிநிதிகளின் எண்ணிக்கை இன்னும் அதிகரித்தது. முஸ்லிம்களுக்கு, அவர்களுடைய சனத் தொகை எண்ணிக்கையின் அடிப்படையில், பாராளுமன்றத்தில் தகுந்த பிரதிநிதித்துவம் கிடைக்காத காரணத்தினால், காலத்திற்குக் காலம், ஒரு முஸ்லிமுக்கு நியமன அங்கத்துவம் வழங்கப்பட்டது. 33,000 சனத்தொகையைக் கொண்ட பறங்கியரைப் பொறுத்த வரையில் அரசியலில் தங்களுக்கு இந்நாட்டில் எதிர்காலம் இல்லை என்று அவர்கள் உணர்ந்ததனால் அவுஸ்திரேலியா, கனடா போன்ற நாடுகளுக்குப் புலம் பெயர்ந்தார்கள். 'சிங்களத் தலைவர் களுடன் ஏற்படுத்தப்பட்ட அரசியல் ஒப்பந்தங்களை அவர்கள் உடைத் தெறிந்தாலும், இந்நாட்டில் அரசியல் அதிகாரங் களையெல்லாம் மையப்படுத்தப்பட்ட ஒற்றையாட்சியைத் தவிர்ந்த, அர்சியலதிகாரம் பரவலாக்கப்பட்ட ஒர் அரசியல் அமைப்பை சுமுகமான முறையில் உருவாக்கலாம் என்று தமிழ்த்தலைவர்கள் நம்பியிருந்தனர்', என்று கலாநிதி வில்சன் தன்னுடைய 'ஒற்றையாட்சியின் சிதைவு என்ற நூலில் கூறுகிறார்.
அவர் மேலும், 'தமிழர்களின் நிதானமான கோரிக்கை களுக்கு, சிங்க ளத் தலைவர்கள் செவிசாய்த்திருக்கலாம். ஆனால், சிங்கள அரசியற் கட்சிகளிடையேயும், சிங்க ள அரசியல் முன்னணிகளிடையேயும், சிங்கள-பெளத்த இயக்கங் களிடையேயும் இருந்த அரசியல் போட்டி தமிழர்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு இடம் கொடுக்க விடவில்லை. மாறாக சிங்கள மேல்வர்க்கத்தினர், வாக்காளர்களைத் தம் பக்கம் வென்றெடுப்பதிலும், அதனால் தாம் பெற்ற அரசியல் அதிகாரத்தைக் காப்பாற்றுவதிலும், அதை அதிகரிப்பதிலும்,

157 ஒரு சிறுபான்மை சமூகத்தின் பிரச்சினைகள் IV
தங்கள் கவனத்தை செலுத்திய காரணத்தினால், அவர்களுடைய அரசியல் வீழ்ச்சிக்கே அவர்கள் அடிகோலினார்கள்' என்று கூறுகிறார்.
சிறுபான்மையின மக்களின் கோரிக்கைகளுக்குப் பெரும் பான்மையினம் இடம் கொடுக்காவிட்டால், அவர்களின் கோரிக்கைகள் இன்னும் அதிகமாகும் என்பது ஒர் அரசியல் நியதி. சிறுபான்மையின மக்களின் கோரிக்கைகள் அதிகமாகும் போது, பெருபான்மையினமும், எவ்வித நியாயமான தீர்வுக்கும் வராமல் அடம் பிடிக்கத் தொடங்குகிறது. ஆனால் ஒரு சிறு பான்மையினம் ஒரு குறிப்பிட்ட பிரதேசத்தில் பெரும்பான்மை யாக வாழும் போது, அதனுடைய கோரிக்கைளைப் பெரும்பான்மையினம் உதாசீனம் செய்யும்போது, பிரச்சினை இன்னும் சிக்கலாகிறது. இக்கோரிக்கைகளுக்கு விட்டுக் கொடுத்திருந்தால் பிரச்சினை ஒரு வாறு தீர்க்கப்பட்டிருக்க லாம். ஆனால் இக்கோரிக்கைகள் ஒவ்வொரு முறையும் மறுக்கப்படும்பொழுது, சிறுபான்மை மக்களின் கோரிக்கை களும் அதிகரிப்பதோடு அவர்களிடையே தீவிரவாத சக்திகள் தலையெடுக்கத் தொடங்குகின்றன. இன அடிப்படையிலான தேர்தல் தொதிகள் வேண்டும் என்ற சாதாரணமான கோரிக்கைகள், மறுக்கப்படும் போது, மாவட்ட ரீதியில் அரசியல் அதிகாரம் பரவலாக்கப்படல் வேண்டும் என்ற கோரிக்கையாக மாறி, சமஷ்டி ஆட்சிமுறையில் ஒரளவு சுதந்திரமாக இயங்க வேண்டும் என்ற கோரிக்கையாக வளர்ந்து அதுவும் மறுக்கப்படும் பொழுது, 'தனிநாடு வேண்டும் என்ற உரிமைப்போராட்டமாக அது உருவெடுக்கிறது. இவ்வுரிமைப் போராட்டம், இளைஞர்கள் மத்தியிலே, ஆயுதம் தாங்கிய ஒரு 'வன்செயல் இயக்கமாக உருவெடுத்து தோற்றாலும் வென்றாலும் 'ஒரு தனிநாடு உருவாக்கும் கொள்கையின் அடிப்படையில் உள்நாட்டு யுத்தத்திற்கே அதனை இட்டுச் செல்கின்றது. இதுதான் இன்று இலங்கையில் ஏற்பட்டிருக்கும் உள்நாட்டு யுத்தத்திற்குக் காரணம்.

Page 93
அ. முகம்மது சமீம் 158
சிறுபான்மையின மக்களின் கோரிக்கைகளுக்கு இட மளிக்காதது ஒருபுறமிருக்க, அவர்களுடைய பிறப்பு உரிமைக ளையும் படிப்படியாக சிங்கள பேரினவாத அரசாங்கங்கள் பறித்தன. சோல்பரி யாப்பின் 29(2) பிரிவு, அவர்களுடைய உரிமையைப் பாதுகாக்க முடியாத ஒரு சக்தியாக வெறும் ஏட்டளவிலேயே இருந்தது. தமிழ், முஸ்லிம் மக்களின் தாய் மொழியாம் 'தமிழ் மொழி அரச அந்தஸ்தைப் பெறத் தவறியது. சிங்கள மொழி மாத்திரம்தான் அரசமொழியாக அரியாசனத்தில் ஏறியது. இதனால் பாரதூரமான விளைவுகள் ஏற்பட்டன.
டொனமூர் அரசதிட்டத்தின் காலத்தில், அரசசபையில் 1943ம் ஆண்டு நவம்பர் மாதம் 30ம் திகதி, அன்றைய அரசசபை உறுப்பினரான ஜே.ஆர். ஜயவர்தன, 'சிங்கள மொழி மாத்திரம்தான் அரசமொழியாக இருக்க வேண்டும்" என்ற மசோதாவைக் கொண்டு வந்தார். 'சிங்கள மொழி' அழியாமலிருக்க அதனைப் பாதுகாப்பதுதான் தனது குறிக்கோள் என்று வாதிட்டார். ஆனால் சிங்களமும் தமிழும் அரச மொழிகளாக இருக்க வேண்டும் என்று சபை தீர்மானித்தது.
டொனமூர் அரசியல் அமைப்பிலேயே, பெரும்பான்மை சமூகம் தங்களுக்கு அதிகாரம் கிடைத்தபொழுது, சிறுபான்மை மக்களின் உரிமைகளில் ஒன்றான மொழி உரிமைக்குச் சாவு மணி அடிக்கப்பட்டது. இந்தியாவில் நாலு கோடி மக்கள் தமிழ் மொழியைத் தாய்மொழியாகக் கொண்டிருப்பதனாலும், தமிழ் மொழியின் இலக்கியமும், தமிழ் கலாசாரமும், முப்பது லட்சம் மக்களின் தாய்மொழியாகிய சிங்கள மொழியின் வளர்ச்சியைப் பெரிதும் பாதிக்கும் ' என்ற காரணத்திற் காகத்தான், தான் இம்மசோதாவைச் சமரப்பிப்பதாக அன்று ஜே. ஆர். ஜயவர்தனா கூறினார். ஒரு சமூகத்தின் மொழி வளர்ச்சியைப் பற்றித் தெரியாதவர்களின் கூற்று இது. ஆனால் பண்டாரநாயக்கா, தமிழ் மொழியை அரசமொழியாக ஏற்றுக்

159 ஒரு சிறுபான்மை சமூகத்தின் பிரச்சினைகள் IV
கொள்வதால் எவ்வித் தீமையும் ஏற்படாது' என்று கூறியதோடு, 'சமூகங்களிடையே நல்லுறவையும், நம்பிக்கை யையும் ஏற்படுத்துவது அவசியம்' என்று கூறினார். எனவே, சுதந்திரத்திற்கு முன், இரு மொழிகளும் அரசமொழிகளாக ஏற்றுக் கொள்ளப்படல் வேண்டும் என்பது உறுதியாயிற்று. ஆனால் சுதந்திரத்திற்குப் பிறகு ஒரு சில வருடங்களிலேயே இந்நிலைமை மாறியது.
1951ம் ஆண்டில் சிங்களமும், தமிழும் தேசிய மொழிகளாக அமுலாக்கப்படுவதற்குரிய திட்டத்தை வகுக்குமாறு, “தேசிய மொழிகள் ஆணைக்குழுவுக்கு ஆணையிடப்பட்டது. இக்குழுவின் தலைவராயிருந்த, உயர்நீதி மன்றத்தின் முன்னைநாள், பிரதம நீதி அரசர் சர். ஆர்தர் விஜயவர்தனா, இக்குழு சமர்ப்பித்த அறிக்கைக்கு முரண்பட்ட கருத்தைத் தெரிவித்தார். குழுவின் கருத்தை ஏற்றுக் கொள்ளாத அவர் தன்னுடைய முரண்பட்ட கருத்தைப் பின்வருமாறு தெரிவித்தார், ''1943ம் ஆண்டு, ஜூன் மாதம் 23ம் திகதி, அரசசபையில், ஜே.ஆர். ஜயவர்தனவினால் சமர்ப்பிக்கப் பட்ட மசோதாவின் பிரகாரம், ஆங்கிலத்திற்குப் பதிலாக, இரு சுயபாஷை மொழிகளை அரசமொழிகளாக ஏற்றுக் கொள்வதை விட, நடைமுறையில் ஒரு சுய பாஷை மொழியை அரசமொழியாக ஏற்றுக் கொள்வது, தான் சாலச்சிறந்தது'. (ஆதாரம்: "தேசிய மொழிகளில் உயர்கல்வி அறிக்கை - பாராளுமன்ற ஆவணம். XXI 1953 பக்கம்-26, ம் 217ம்). சில புத்திஜீவிகளின் குறுகிய மனப்பான்மையினால், இலங்கையில் பெரும்பான்மை யினத்திற்கும், சிறுபான்மை யினங்களுக் குமிடையில் "மொழிப்போராட்டம் ஆரம்பமாகியது. பரந்த மனப்பான்மையுள்ள பண்டாரநாயக்கா போன்ற அரசியல் வாதிகளும், இத்தீவிரவாத சக்திகளின் பாதிப்புக்கு உள்ளா னார்கள்.
சுயபாஷை இயக்கம் இலங்கை சுதந்திரம் அடைவதற்கு முன்பே ஆரம்பித்தது. 1940களில் சுயபாஷை இயக்கத்தின்

Page 94
அ. முகம்மது சமீம் 16 O முக்கிய தலைவர்களான, டட்லி சேனாநாயக்கா, ஜே.ஆர்.ஜயவர்தனா, எஸ்.டபிள்யு. ஆர்.டி. பண்டாரநாயக்கா ஆகியவர்கள் சுதந்திரத்திற்குப் பின் அமைக்கப்பட்ட அரசாங்கத்தின் அமைச்சர்களாகப் பதவியேற்றனர். டொனமூர் அரசியல் அமைப்பில் அமைச்சர்கள் தனித்தனியாக இயங்கு வதற்கு வாய்ப்பிருந்தது. ஒவ்வொரு அமைச்சரும் தங்கள் கருத்திற்கேற்ப மசோதாக்களை அரசசபையில் சமர்ப்பித் தார்கள். அரசியற்கட்சிகள் இல்லாத காரணத்தினால், கட்சிக் கட்டுப்பாடு அப்போதிருக்கவில்லை. ஆகையினாற் றான், “சிங்கள மொழி அரச மொழியாக வேண்டும் போன்ற மசோதாக்கள் தனிப்பட்டவர்களால் சமர்ப்பிக்கப்பட்டன. ஆனால் 'கபினட் ஆட்சிமுறையில் அமைச்சர்கள், கபினட் (அமைச்சர்மண்டலம்) தீர்மானத்திற்குக் கட்டுப்பட்டிருந் தார்கள். அத்தோடு கட்சிக் கொள்கையும் அவர்களைக் கட்டுப் படுத்தியது. டி. எஸ். சேனாநாயக்கா, சமயம், மொழி போன்ற விஷயங்களில் நாற்பதுகளிலேயே ஆர்வம் காட்டவில்லை. சுதந்திரத்திற்குப் பிறகு பிரதம மந்திரியாகப் பதவியேற்ற டி.எஸ். சேனாநாயக்காவின் செல்வாக்கு, அரசாங்கக் கொள்கை அமைப்பதிலும், அபரிமிதமாக இருந்தது. மக்களின் உணர்ச்சிகளைத் தூண்டிவிடும் எவ்விதத் திட்டத்தையும் அவர் அனுமதிக்கவில்லை. இலவசக் கல்வித் திட்டம் சுயபாஷைத் திட்டம் ஆகியவை நிதானமாகவும், தாமதமாகவும் செயல்பட வேண்டியவை என்ற எண்ணம் கொண்டிருந்தார். ஒரு சிறுபான்மையினத்தையோ, அல்லது ஒரு குறிப்பிட்ட பிரிவின ரையோ பாதிக்கும் சட்டங்கள் அமுலாக்கப்பட்டால், சமூகத்தி லுள்ள அமைதிக்குப் பங்கம் ஏற்படும் என்ற கருத்தைக் கொண்டிருந்த அவர், இப்படிப்பட்ட திட்டங்களுக்கு அனுமதி வழங்கவில்லை. சேனாநாயக்காவுக்குப் பிறகு பிரதம மந்திரிப் பதவியையேற்கும் எண்ணம் கொண்டிருந்த பண்டாரநாயக்கா சேனாநாயக்காவின் இக்கொள்கையைக் கண்டு அமைதி இழந்தார். சேனாநாயக்காவின் அரசாங்கத்தின் கொள்கையில் சுயபாஷைத்திட்டத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கப்படாத

16 ஒரு சிறுபான்மை சமூகத்தின் பிரச்சினைகள் IV தையிட்டு ஏமாற்றமடைந்தார். சுதந்திரத்திற்குப் பிறகு, சுய பாஷை இயக்கத்தைத் துரிதப்படுத்தும் தலைவர்களில் பண்டாரநாயக்காவும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
சேனாநாயக்காவின் நிதானமும், அமைதியுமான போக் கிற்கு எதிராக பண்டாரநாயக்காவின் தீவிரப்போக்கு, சிங்களபெளத்த இனவாதிகளையும் தீவிரவாதிகளையும் ஈர்த்தது. தன்னுடைய தீவிரவாதக் கொள்கைக்கு ஐக்கிய தேசியக் கட்சி இடமளிக்காததைக் கண்டு, கட்சியிலிருந்தும் விலகுவது என்ற முடிவுக்கு பண்டார நாயக்கா வந்தார். பண்டாரநாயக்காவின் தலைமை யில் நடந்த "சிங்க ள - மகாசபாவின் வருடாந்த கூட்டத்தில், சிங்களமக்களின் கலாசாரத்திற்கும், சிங்க ள மொழிக்கும், சிங்கள மருத்துவத்திற்கும், சிங்கள"சுயபாஷை ஆசிரியர்களுக்கும் பெளத்த சமயத்திற்கும், பெளத்த மத ஸ்தாபனங்களும் அரசாங்கம் உதவி யளிக்க வேண்டும் என்ற தீர்மானம் நிறைவேறியது. இத்தீர்மானங்களை ஐக்கிய தேசியக் கட்சியின் நிர்வாகக் கூட்டத்தில் பண்டாரநாயக்கா சமர்ப்பித்தபோது, அவர் பெரும் கண்டனத்திற்குள்ளானார். அவமதிப்புக்குள்ளான பண்டாரநாயக்காவை, கட்சியிலிருந் தும், விலகி எதிர்கட்சி ஒன்றை ஆரம்பிக்கும்படி அவருடைய ஆதரவாளர்கள் கூறினார்கள். ஆகவே, 1951ம் ஆண்டில், பண்டாரநாயக்கா அரசாங்கத்திலிருந்தும் விலகி, "சிறிலங்கா சுதந்திரக் கட்சி, என்ற ஒரு புதிய அரசியற் கட்சியை ஆரம்பித்தார். அவர் அரைசாங்கத்தை விட்டும் விலகுவதற்கு, முக்கிய காரணமாக, 1940களில் ஏற்றுக் கொள்ளப்பட்ட சுயபாஷைத்திட்டம்,ஐக்கிய தேசியக்கட்சி அரசாங்கத்தினால், அமுலுக்குக் கொண்டு வராமையே என்று கூறினார். 1951ம் ஆண்டுக்குப் பிறகு, சுயபாஷை இயக்கத்தைத் தீவிரப்படுத் தியதோடு, சுயபாஷைத்திட்டத்தை அரசாங்கம் உடனடியாக அமுலாக்க வேண்டும் என்று பிரச்சாரம் செய்தார். 1943ம் ஆண்டில், ஜே. ஆர். ஜயவர்தனவினால் அரசசபையில் சமர்ப்பிக்கப்பட்ட 'சிங்கள அரச மொழியாக்கப்படல் வேண்டும் என்ற மசோதா விவாதத்தில் உரையாற்றிய

Page 95
அ. முகம்மது சமீம் 162
பண்டாரநாயக்கா இத்திட்டத்தை அமுலாக்குவதில் நிதானமாக இருத்தல் வேண்டும், என்று கூறிய அவர், தீவிரவாத போக்கைக் கடைப்பிடித்ததுதான் ஆச்சரியம். 1952ம் ஆண்டில் நடந்த பொதுத் தேர்தலுக்கான பிரச்சாரத்தில் பண்டார நாயக்கா தன்னுடைய சுய பாஷைக் கொள்கையை ஒரு முக்கிய கொள்கையாக மக்கள் முன்வைத்தார். சுய பாஷைக் கொள்கையில் நிதானப் போக்கைக் கடைப்பிடித்த ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் டட்லி சேனாநாயக்கா தேர்தலில் வெற்றிபெற்று அரசாங்கத்தை அமைத்தார். இக்கால கட்டத்தில் மக்கள் தீவிரவாதப் போக்குகளை ஆதரிக்காதது ஒரு காரணமாயிருக்குமோ?
 
 
 

163 ஒரு சிறுபான்மை சமூகத்தின் பிரச்சினைகள் IV
24. சுய பாஷை இயக்கமும் அரசாங்கத்தின் தயக்கமும்,
1952ம் ஆண்டின் பொதுத் தேர்தலுக்குப் பிறகு, ஐக்கிய தேசியக்கட்சியை ஸ்தாபித்த டட்லி சேனாநாயக்கா, ‘சுயபாஷை இயக்கத்தை ஆதரித்தாரென்றாலும், இதை அமுல் நடத்துவதில், நிதானத்தையும் பொறுமையையும் கடைப் பிடிக்க வேண்டும், என்பதோடு, தாமதமாகவே இது செயல்பட வேண்டும் என்ற கொள்கையைக் கொண்டிருந்தார். ஆனால் பண்டார நாயக்கா, இக்காலகட்டத்தில், சுய பாஷை இயக்கத் தில் தீவிர போக்கைக் கடைப்பிடித்தாலும் 1944ம் ஆண்டில் எல்லோராலும் அரசசபையில் ஏற்றுக் கொள்ளப் பட்ட, இரு மொழித் திட்டத்தின் அடிப்படையில் இம்மொழிப் பிரச்சினை தீர்க்கப்படல் வேண்டும் என்ற கொள்கையைக் கொண்டிருந் தார். 1955ம் ஆண்டு வரையிலாவது, ஆங்கில மொழிக்குப் பதிலாக சிங்கள மொழி மாத்திரம்தான் இருக்கவேண்டும் என்ற கருத்தை அவர் பகிரங்கமாகத் தெரிவிக்கவில்லை. 1954ம் ஆண்டு ஏப்ரல் 15ம் திகதி வெளிவந்த "லங்காதீப பத்திரிகை, பண்டார நாயக்காவின், சிங்க ளமும் தமிழும் தேசிய மொழிகளாக ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும், என்ற பேச்சை பிரசுரித்தது. ஆனால் சிங்கள மக்களின் படித்தவர்கள் மத்தியிலே தீவிரவாதப் போக்கு நாளுக்கு நாள் வலுவடைந்து வந்தது. தேசிய மொழி ஆணைக்குழுவின் தலைவர் சர். ஆர்தர் விஜயவர்தனாவின் சிங்கள மொழிமாத்திரம்தான் அரச மொழி யாக இருத்தல் வேண்டும் என்ற கருத்து, இத்தீவிர எண்ணமு டைய புத்திஜீவிகளின் கருத்தைப் பிரதிபலிப்பதாக இருந்தது. 1951ம் ஆண்டு மே மாதம் பிரதம நீதியரசர் விஜயவர்தனாவின் தலைமையில் நியமிக்கப்பட்ட "தேசிய மொழி ஆணைக் குழுவிற்கு, "சிங்களமும் தமிழும் அரசமொழிகளாக ஆக்கப் படல் வேண்டும், என்பதற்குரிய சாத்தியக்கூறுகளைக் குழு ஆராய வேண்டும் , என்று திட்ட வட்டமாகக் கூறப்பட்டது. மக்களின் உணர்ச்சிகளைத் தூண்டி விடும், "சுய பாஷை

Page 96
அ. முகம்மது சமீம் 164 போன்ற இயக்கங்களுக்கும், இனவாத அரசியலுக்கும், அப்பாற்பட்ட நிதானமான கட்சிசார்பற்ற ஒரு கொள்கையை, கல்வியறிவில் மேம்பட்ட ஒருவரான நீதியரசர் விஜயவர்தனா கடைபிடிப்பார் என்று எல்லோராலும் எதிர்பார்க்கப்பட்டது. அறிவு சார்ந்தவர்களே இப்படியென்றால், இன உணர்ச்சிகளுக்கு அடிமைப்படும் பாமர மக்கள் என்ன செய்வார்கள்?
தேசிய மொழி ஆணைக்குழு வின் முன் சாட்சியம் அளித்த, சிங்கள-பெளத்த தீவிரவாதி எல்.எச். மெத்தனாந்தா, 'சிங்கள மாணவர்களை விட தமிழ் மாணவர்கள் அதிகமாக சர்வகலாசாலைக்கு சேர்க்கப்படுகிறார்களென்றும், தமிழர் களின் சனத்தொகைக்கு அதிகமான விகிதமே தமிழ் மாணவர் கள் சர்வகலாசாலையில் பிரவேசிக்கிறார்கள் என்றும் கூறி பனார். ஆணைக்குழு தன்னுடைய அறிக்கையில், "உயர்கல்வி யில் எல்லோருக்கும் சம வாய்ப்பு வழங்கப்படல் வேண்டும்" என்ற அடிப்படையில், ஆறு சிங்கள மாணவர்களுக்கு ஒரு தமிழ் மாணவன் சர்வகலாசாலையில் சேர்வதற்கு அனுமதி வழங்கப்படல் வேண்டும்" என்று சிபாரிசு செய்தது. சிங்கள-பெளத்த தீவிரவாதிகளின் உந்துதலினால், ஆணைக் குழுவினர், 'இரண்டு மொழிகளும் அரச மொழிகளாக அமுலாக்கப்பட வேண்டும் என்ற அவசியம் என்ன' என்ற கேள்வியை எழுப்பியதற்கு அன்றைய கவர்னர்-ஜெனரல் சர். ஒலிவர் குணத்திலக்கா, 'சிங்களமும் தமிழும் அரச மொழிகளாக ஏற்கனவே அரசாங்கத்தால் ஏற்றுக் கொள்ளப் பட்டதை நீங்கள் அறிவீர்கள். இந்தக் கொள்கையை நீங்கள் ஆராயப்புகுவது, உங்களுக்கு வழங்கப்பட்ட அதிகாரத்திற்கு முரணானது' என்று கூறினார்.
1950களில் சிங்கள-பெளத்த கலாச்சார மறுமலர்ச்சி, தீவிர போக்கை அடைவதற்கு அன்றைய பிரதமராயிருந்த சர் ஜோன் கொத்தலாவலை ஒரு முக்கிய காரணமாயமைந்தார். 1953ம் ஆண்டில் பிரதமராகப் பதவியேற்ற சர். ஜோன்

165 ஒரு சிறுபான்மை சமூகத்தின் பிரச்சினைகள் IV
கொத்தலாவலை, இலங்கை வானொலியில் நாட்டு மக்களுக்கு ஆற்றிய செய்தியில் பின்வருமாறு கூறினார். 'எனது முதலாவதும், முக்கியமானதுமான கடமைதான் இந்நாட்டி லிருந்து கம்யூனிசத்தை ஒழிப்பது' ஒருசில வாரங்களிலேயே 'பச்சை சட்டை யணிந்த இளைஞர் படையொன்றை ஏற்படுத்து வதில் அவர் ஈடபட்டார். உலகம் பூராவும் அமெரிக்க - பிரித்தானிய ஏகாதிபத்தியத்திற்கு எதிராக கம்யூனிச தத்துவ அடிப்படையில் ஏகாதிபத்திய ஆட்சியின் கீழ் இருந்த நாடு களின் தேசிய சுதந்திர இயக்கங்கள் பரவி வரும் காலகட்டத் தில், இலங்கையில் கம்யூனிசத்தை ஒழித்துக் கட்டுவதென ஒரு தனிநபர் முற்பட்டாரென்றால், அவர் தேசிய மக்கள் இயக்கங்களைப் பற்றி அறியவில்லை என்பது புலனாகிறது, இல்லையா? கம்யூனிச புத்தகங்களுக்கும், சஞ்சிகைகளுக்கும் நாட்டில் இறக்குமதி செய்வதற்குத் தடை உத்தரவு போட்டார். சுதந்திர இயக்கங்களில் ஈடுபட்ட நேரு, சூஎன்லாய் போன்றவர் கள் அந்நாடுகளின் அரசியல் தலைவர்கள் என்ற முறையில் கூடிய “பண்டுங் மகாநாட்டில் ஒரு கோமாளியைப் போல் இலங்கைப் பிரதமர் நடந்து கொண்டார். “பொதுமக்கள் பாதுகாப்பு இலாகா போன்ற நிறுவனங்களை நிறுவி, ஒரு சர்வாதிகார ஆட்சியை உண்டு பண்ணும் எண்ணத்துடன் இயங்க முற்பட்டார்.
சர். ஜோன் கொத்தலாவலை இடதுசாரி இயக்கங்களுக்கு எதிராக மாத்திரம் இயங்கவில்லை. பண்டைய கால மரபை ஆதரிக்கும் உள்நாட்டு இயக்கங்களுக்கு எதிராகவும் இயங்கினார். அவருடைய அடக்குமுறை ஆட்சிப் பெருகப் பெருக, இவ்வியக்கங்களின் தீவிரவாத போக்கும் வளர்ந்தது. கலாசார, மொழி, சமய இயக்கங்கள் நாளுக்கு நாள் தீவிர போக்கைக் கடைப்பிடிக்கத் தொடங்கின. சிங்கள எழுத்தாளர் களும், ஆசிரியர்களும், பெளத்த பிக்குகளும் இவ்வியக்கங் களில் முக்கிய பங்கெடுத்தார்கள். சிங்களப் பத்திரிகைகள் மூலம் இவர்களுடைய கருத்துக்கள் பொதுமக் கள் மத்தியில் செல்வாக்குப் பெறத் தொடங்கின. ஐக்கிய தேசியக் கட்சி

Page 97
அ. முகம்மது சமீம் 166
இவ்வியக்கங்களின் வளர்ச்சியை உதாசீனம் செய்தது மட்டுமல்ல, பிரதமரின் வாழ்க்கை முறையும் மக்களின் கோபத்தைக் கிளப்பியது. அவரது இரவு நேரக்களியாட்டங்கள் பெளத்த மக்களையும், பெளத்த பிக்குகளையும் ஆவேசம் கொள்ளச் செய்தன. 1955ம் ஆண்டில் இம் மொழி, கலாசார இயக்கங்கள் உச்சநிலையை அடைந்தன. இக்காலகட்டத்தில் கூட இரு மொழிகளைத்தான் மக்கள் ஆதரித்தார்கள். 1952ம் ஆண்டில் பண்டார நாயக்காவின் சிறிலங்கா சுதந்திரக்கட்சி இரு மொழித் திட்டத்தை ஏற்றுக் கொண்டபோது கூட சிங்கள மக்களிடையே எவ்வித சலசலப்பும் ஏற்படவிலலை. பெளத்த சமய மறுமலர்ச்சி இந்து சமயத்திற்கு எதிராக வளர்ந்த காரணத் தினால், இந்து மதத்தைப் பின்பற்றி வந்த தமிழர்களுக்கு எதிராகவும் இவ்வியக்கம் மாறத் தொடங்கியது. சிங்களமும் தமிழும் தேசிய மொழியாகவும் தமிழ், பிரதேசமொழியாகவும்" என்ற நிலையேற்பட்டது. 1953ம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஒரு சிங்க ளத் தூதுக்குழு அன்றைய பாராளுமன்றத்தின் எதிர்க்கட்சித்தலைவராயிருந்த பண்டாரநாயக்காவைச் சந்தித்த போது, அவர், "இந்நாட்டின் வேலையில் லாப் பிரச்சினை யையும் பொருளாதாரப் பிரச்சினையையும் தீர்ப்பதற்கு நாட்டின் பெரும்பான்மை மக்களின் மொழியாகிய சிங்கள மொழி அரசமொழியாவதால் தான் தீரும்' என்று கூறினார். தமிழ் மொழியைப் பற்றிய பேச்சே அங்கு எழுவில்லை.
1955) ஆண்டு செப்டம்பர் மாதம் நடைபெற்ற சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் வருடாந்த கூட்டத்தில், "கட்சித் தலைவரின் "சிங்களம் மாத்திரம் என்ற கருத்து ஏகமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டதென்றாலும், தமிழ் மொழியின் நிலையும், அவர்களுடைய பிரேரணைகளில் குறிப்பிடப் பட்டது. பாராளுமன்றத்தில் இரு மொழிகளிலும் பேசலாம் என்றும், சட்டங்களும் இரு மொழிகளிலும் இருக்கலாம் என்றும் தீர்மானமாயிற்று. வடக்கு, கிழக்கு மாகாணங்களைத் தவிர்ந்த எல்லா மாகாணங்களிலுள்ள அரசாங்க நிலையங்களிலும், நீதிமன்றங்களிலும், உள்ளூர் ஸ்தாபனங்களிலும் சிங்க ள

167 ஒரு சிறுபான்மை சமூகத்தின் பிரச்சினைகள் IV
மொழி மாத்திரம்தான் உபயோக்கிக்கப்படல் வேண்டும் என்றும், வடகிழக்கு மாகாணங்களில், தமிழ் பிரதேச மொழியாக இருக்கலாம், என்றும் ஏற்றுக் கொள்ளப்பட்டது. இரு மொழிகளுக்கும் சம அந்தஸ்து வழங்கப்படல் வேண்டும் என்ற கொள்கையை சிறிலங்கா சுதந்திரக்கட்சி யேற்றுக் கொள்ளவில்லை யென்றாலும், தமிழுக்கு ஒரு "சிறிய" இடம் கொடுப்பதில் அக்கட்சியினர் ஆட்சேபனை தெரிவிக்கவில்லை.
தமிழுக்கு சம அந்தஸ்து கொடுப்பதைச் சிங்கள மொழி தீவிரவாதிகள் எதிர்த்தனர். இதில் பெளத்த பிக்குகள் முக்கிய பங்கை வகித்தனர். 1955ம் ஆண்டு ஒக்டோபர் 11ந் திகதி கொழும்பு மாநகரசபை மண்டபத்தில் கம்யூனிஸ்ட் கட்சியி னரால் ஒழுங்கு செய்யப்பட்ட இருமொழிக்கும் சம அந்தஸ்து" வழங்கப்படல் வேண்டுமென்ற கூட்டத்தைப் பெளத்த பிக்கு தீவிரவாதிகள் குழப்பினர். இவர்களிடையே நடந்த கை கலப்பை அன்றைய ஆங்கிலப் பத்திரிகைகள், உட்பட எல்லா பத்திரிகைகளும், 'கம்யூனிஸ்ட்வாதிகள், பெளத்தபிக்குகளை அடித்து நொறுக்கி, உதைத்து வெளியே இழுத்துத் தள்ளினர்,' என்று பிரசாரம் செய்தன. பெளத்த பிக்குகள் சிங்கள-பெளத்த இனத்தைச் சேர்ந்த கம்யூனிஸ்டுகளால் தாக்கப்பட்டதினால் ஆத்திரம் அடைந்த பெளத்த சிங்களவர், பாவம் அப்பாவி தமிழ், முஸ்லிம்களின் கடைகளைத் தாக்கி உடைத்தனர். (டெயிலி நியூஸ், ஒக்டோபர் 12, 1955) இதே போன்று சமசமாஜிகள் கட்சியினரின் கூட்டத்தையும் இத்தீவிரவாதிகள் குழப்பினர். அனுராதபுரியில் தனிச் சிங்களம் என்ற கொள்கைக்கு ஆதரவளிக்குமுகமாக நடந்த கூட்டத்திற்கு, பிக்குகள் மோட்டார் வாகனங்களில், கொழும்பிலிருந்து ஊர்வலமாகச் சென்றனர். அன்றைய பிரதமர் சர். ஜோன் கொத்தலாவலை, இச்சம்பவங்களைக் கண்டதும் காணாதது போல் இருந்துவிட்டார். அதோடு, 'தனிச்சிங்களம்' என்ற கோரிக்கையை ஏளனம் செய்தார். இது சிங்களமொழி தீவிர வாதிகளை இன்னும் ஆத்திரப்படச் செய்தது. ஐக்கிய தேசியக் கட்சியின் இவ் வலட்சியமான போக்கைக் கண்டு, அரசியல்

Page 98
அ. முகம்மது சமீம் 168
வாதிகளும், பிக்குகளும், சிங்கள ஆசிரியர்களும் உள்ளூர்சபை அங்கத்தவர்களும் ஆயுர்வேத வைத்தியர்களும் சிறிலங்கா சுதந்திரக்கட்சிக்குத் தமது ஆதரவை வழங்கத் தொடங்கி னார்கள். இம்மொழி இயக்கம், ஆங்கில மொழிக்கு எதிராக மாத்திரமல்ல, தமிழ் மொழி பேசும் தமிழ் மக்களுக்கு எதிராகவும் வளரத் தொடங்கியது. 'சிங்கள மொழியை அரசமொழியாக்குவதற்கும், சிங்கள இனத்தையும் சிங்கள கலாசாரத்தையும் தமிழர்களிடமிருந்து காப்பாற்று வதற்கு எங்கள் உயிரையும் தியாகம் செய்வதற்குச் சித்தமாயிருக் கிறோம்' என்று இவ்வியக்கத்தினர் கூறினர். சம அந்தஸ்துக் கொள்கையைக் கடைப்பிடித்த ஐக்கிய தேசியக் கட்சியி னின்றும், இடதுசாரிக்கட்சிகளினின்றும், மக்கள் விலகத் தொடங்கினர். ‘பாஷா பெற முன' என்றும், பிலிப் குணவர் தனாவின் தலைமையில், 'விப் லவகார சமசமாஜக்கட்சி" (புரட்சிகரமான சமசமாஜக்கட்சி) என்றும் மொழி அடிப்படையில் கட்சிகள் தோன்றின.
தனிச்சிங்கள இயக்கம், பல சக்திகளை ஒன்றி ணைத்தது. சாதாரணமாக ஒன்று சேராத, சிங்கள ஆசிரியர்கள், சிங்கள எழுத்தாளர்கள், ஆயுர்வேத வைத்தியர்கள், பெளத்த பிக்குகள் ஆகிய இவர்கள், இந்தப் பொதுத்திட்டத்திற்காக ஒன்று சேர்ந்தனர். 1954ம் ஆண்டு செப்டம்பர் 4ந்திகதி, "லங்கா ஜாதிக குரு சங்கமய', விவசாயிகள் உட்பட, இவ்வைந்து பிரிவுகளையும், "சிங்கள மொழியின் உயர்வுக்காக, 'பஞ்சமகா பல மண்டலய', என்ற ஒரு ஸ்தாபனத்தின் கீழ் கொண்டு வந்தது. "சிங்கள மொழி அரசமொழியாக வேண்டுமென்ற "பஞ்சமகா பல மண்டலவின் குரல் நாளுக்கு நாள் ஒங்கியது. சிங்கள மொழி இயக்கத்தினரின், இக்கோரிக்கைக்கு செவி சாய்க்காத அன்றைய பிரதமர், சர். ஜோன்கொத்த லாவல, தன்னுடைய செய்கையால் இப்பிரச்சினையை பூகம்பமாக
மாற்றினார்.
1954ம் ஆண்டு இறுதியில் யாழ்ப்பாணத்திற்கு விஜயம்

169 ஒரு சிறுபான்மை சமூகத்தின் பிரச்சினைகள் IV
செய்த பிரதமர், 'இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஹென்டி பேரின்பநாயகத்தின் வேண்டுகோளுக்கிணங்கி, ‘சிங்களம், தமிழ் ஆகிய இரு மொழிகளும் அரச மொழிகளாக, சம அந்தஸ்தைப் பெறும் வகையில், அரசயாப்பில், மாற்றங்கள் கொண்டு வருவதாகப் பிரகடனஞ் செய்தார். சிங்கள மக்களின் மத்தியில், கொந்தளித்துக் கொண்டிருக்கும் இப்பிரச்சினை, எரிமலையாக மாறுவதற்கு இப்பிரகடனம் உதவி செய்தது. நிதானமாக செயல்பட்டிருந்தால், பாராளுமன்றத்தில் த மக்கிருந்த பெரும் பான்மை வாக்குகளைக் கொண்டு, அரசயாப்பில் மாற்றங்களைக் கொண்டு வந்திருக்கலாம். ஆனால், தமிழர்கள் வாழும் பிரதேசத்தில் செய்யப்பட்ட இப்பிரகடனம், சிங்கள தீவிரவாதிகளை, அரசாங்கத்திற்கு எதிராகச் செயல்படத் தூண்டியது.
பெளத்த மதத்தின் பிரச்சாரகரும், ஆனந்தா கல்லூரி அதிபருமான, எல். எச். மெத்தானந்தா, இப்பிரகடனத்தைத் தி ரித்துக் கூறினார். 'தமிழுக்கு சம அந்தஸ்து கொடுப்ப தென்பது சிங்கள மக்கள் தமிழ் மொழியைக் கட்டாயமாகக் அகற்க வேண்டிய நிலையேற்படு மென்றும், இந்நிலையேற் பட்டால், சிங்கள இனம் தன்னுடைய தனித்துவத்தை இழக்கு மென்றம், தவறான கருத்தை மக்கள் மத்தியில் பரப்பினார். ஏரிக்கரை பத்திரிகைகளின் உரிமையாளரும், பெளத்த இயக்கத்தின் முக்கிய ஸ்தர்களில் ஒருவருமான, டி.ஆர். விஜயவர்தனாவும், பி. டி. எஸ். குலரத்தினாவும், "தமிழுக்கு சம அந்தஸ்தைக் கொடுத்தால், சிங்கள இனம் அழிந்து போகும்" என்ற கருத்தைப் பரப்பினார்கள்: ராமான்ய நிக்காய வைச் சேர்ந்த பெளத்த பிக்குகளும், மெத்தானந்த-குலரத்ன கூட்டுறவை ஆதரித்தார்கள். ஐக்கிய தேசியக் கட்சி, "சிங்கள மக்களுக்குத் துரோகம் விளைவித்த அதாக இவர்கள் கூறினார்கள். இந்நாட்டின் பிரதம மந்திரியாக வேண்டுமென்ற தன்னுடைய அரசியல் ஆசையை நிறைவேற்று வதற்குத் தருணம் பார்த்துக் கொண்டிருந்த பண்டாரநாயக்கா, "இசிங்கள மொழிதான் அரசமொழியாக வேண்டும்" என்று,

Page 99
அ. முகம்மது சமீம் 170
1955ம் ஆண்டில், நடந்த சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் வருடாந்த கூட்டத்தில், கட்சியின் கொள்கையாகப் பிரகடனஞ் செய்தார். இம்மொழிப்பிரச்சினை, ஒர் அரசியல் பிரச்சினையாக மாறியது. அரசியல் சமயோசிதம் தெரியாத, இடதுசாரிக் கட்சிகளான லங்கா சமசமாஜக்கட்சியும், கம்யூனிஸ்ட் கட்சியும், இருமொழிகளுக்கும் சம அந்தஸ்தைப் பெற்றுக் கொடுப்பதே தமது கொள்கை என்று இத்தருணத்தில் பிரகடனஞ் செய்தன. இக்கொள்கையை ஏற்காத பிலிப் குணவர்தனா, சமசமாஜக் கட்சியினின்றும் பிரிந்து, 'விப் லவகார சமசமாஜக்கட்சி என்று ஒரு புதிய அரசியல் கட்சியைத் தோற்றுவித்து, "சிங்கள மொழி, அரசமொழியாக வேண்டும்" என்ற கொள்கையைப் பிரகடனஞ் செய்தார். இக்காலகட்டத்தில் இம்மொழிப் பிரச்சினை சிங்களமக்கள் மத்தியில் ஒரு காட்டுத்தீபோல் பரவியதைப் பின்னர் பார்ப்போம்.

7 ஒரு சிறுபான்மை சமூகத்தின் பிரச்சினைகள் V
25. சிங்கள மொழியின் ஆதிக்க வெறியும், தமிழ்மொழியின் தேசியவாதமும்
மனித உரிமைகளில் முக்கியமான உரிமை ஒன்றுதான் "மொழி உரிமை" ஒரு சமூகத்தின் மொழிவளர்வதைத் தடுப்பதும், அம்மொழிக்குத் தகுந்த இடம் கொடுக்காததும், அம்மொழியை அடியோடு ஒழித்துக் கட்டுவதும், அச் சமூகத்தை அடியோடு நிர்மூலமாக்குவதற்கு ஒப்பாகும். அடிமை சமுதாயங்களில் கூட அவர்களது மொழி வளர்வதற்குக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதை நாம் கேள்விப்படவில்லை. சிங்கள மொழி அரசமொழி ஆவதில் எவ்வித ஆட்சேபனை யுமில்லை. ஆனால், நாட்டின் சனத்தொகையில் முப்பது சதவிகித மக்கள் பேசும் மொழியான தமிழ் மொழிக்குச் சம அந்தஸ்தைக் கொடுக்காததும், பிரதேச அந்தஸ்தையாவது வழங்குவதற்குத் தடையாயிருப்பதும், அம்மொழியைப் பேசும் சமூகங்களுக்குச் செய்யும் மிகப் பெரிய துரோகமாகும். இவ் வெதேச்சாதிகாரக் கொள்கையை எதிர்த்துப் போராடுவது நியாயமானதே.
சுதந்திரத்திற்குப் பின் பதவியேற்ற, அரசியல் தலைவர் கள், முக்கியமாக, டி. எஸ். சேனாநாயக்காவும், அவருடைய சகாக்களும், இந்நாட்டில் மதச்சார்பற்ற, உலகியல் சார்ந்த ஒரு அரசியல் அமைப்பை உருவாக்குவதையே தமது கொள்கை யாகக் கொண்டிருந்தார்கள். நாட்டின் நிலப்பரப்பை யோ, அதன் எலலைகளையோ, பாதிக்காத ஒரு தேசிய வாதத்தை ஆதரித்தார்கள். பல சமூகங்கள் வாழும் ஒரு நாட்டின் ஒரு தனிச் சமூகத்திற்கு மாத்திரம் சலுகைகள் கொடுக்கப்படும் பொழுது, சமூகங்களுக்கிடையே இருக்கும் ஒற்றுமையும், பரஸ்பர நல்லெண்ணமும் அங்கே பலியாகின்றன. ஒரு பெரும்பான் மையின மக்களுக்கு வழங்கப்படும் சலுகைகள், சிறுபான்மை யின மக்களுடைய சமய அனுஷ்டானங்களையும், மொழியை

Page 100
அ.முகம்மது சமிம் 72 யும் பாதிக்கும் போது, அங்கே சமூகங்களுக் கிடையே, பொறாமையும், குரோதமும், பகைமையும் வளர்கின்றன. இதனாற்றான், அன்றைய அரசியல் தலைவர்கள், நாட்டின் ஒற்றுமையைக் கருதி, சமூகங்களிடையே இருக்கும் அடிப்படை வேற்றுமைகளைப் பெரிதுபடுத்தாமல், அவைகளைக் கூடிய வரையில் அகற்றி, எல்லாசமூகங்களையும் சம அந்தஸ்தில் நடத்தும் ஒரு தேசிய வாதத்தை வளர்க்க முற்பட்டார்கள். இலங் கையின் எல்லா சமூகங்களையும் இணைக்கும் ஒரு தேசிய வாதத்தை முக்கியமாகக் கடைப்பிடித்தவர்கள் மார்க்சிய வாதி களே. இந்தியா வம்சாவழியினரும், இந்நாட்டின் ஒரு முக்கிய அங்கம் என்று கருதியவர்களும் அவர்கள் மாத்திரமே. ஏனைய சமூகங்களின் பரந்த நோக்குடையவர்கள் கூட இந்தியத் தமிழரை ஒதுக்கித் தள்ளியபோது, அவர்களும் இந்நாட்டைச் சேர்ந்தவர்கள் என்று மார்க்சீயவாதிகள் மாத்திரம்தான் கூறினார்கள். நாட்டில் சமாதானமும், ஒற்றுமையும், சமூகங் களிடையே சமநிலையும் இருந்த சமயத்தில், இவ்வமைதியைக் குழப்புவதற்கு சமயத்தையும் மொழியையும் அடிப்படையாகக் கொண்ட தீய சக்திகள் வளரத் தொடங்கின. நாட்டைப் பிளவுபடுத்தும் அளவிற்கு இத்தீயசக்திகளை உருவாக்கி, வளர்த்தவர்களே, நாட்டு மக்களின் நல்லுறவை வளர்க்க வேண்டிய, கல்வியறிவு படைத்த புத்திஜீவிகளே. பெரும் unt ଜର୍ତtଜ୪) uid சமூகமான சிங்கள மக்களின் உணர்ச்சிகளைத் தூண்டிவிட்டு, அதன்மூலம் பதவியையும் அதிகாரத்தையும் கைப்பற்ற எண்ணிய இக்குறுகிய மனப்பான்மை கொண்ட புத்திஜீவிகளின் செய்கையால்தான் இந்நாட்டில் இவ்வளவு அனர்த்தங்கள் ஏற்பட்டன.
1950களின் ஆட்சியில் இருந்த ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சி ஆட்டம் காணத் தொடங்கியது. பாராளுமன்றத்தில் அதற்குப் பெரும்பான்மை வாக்குகள் இருந்த போதிலும், ஆட்சிக்கு எதிராக எதிர்ப்பு சக்திகள் நாளுக்கு நாள் நாட்டில் அதிகரித்து வந்தன. கொரியாவுடனான வர்த்தகத்தினால் ஏற்பட்ட பொருளாதார வளர்ச்சி அதிக நாட்கள் நீடிக்கவில்லை.

173 ஒரு சிறுபான்மை சமூகத்தின் பிரச்சினைகள் IV
பொருளாதாரம் வீழ்ச்சியடையத் தொடங்கியது. 1952ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் 1,208 மில்லியன் ரூபாயாக இருந்த வெளிநாட்டு முதல் இருப்பு நிலை, 1953ம் ஆண்டில் 685 மில்லியன் ரூபாயாகக் குறைந்தது. சமூக சேவைகளுக்காக அரசாங்கம் செய்த செலவு குறைக்கப்பட்டது. 25 சதமாக இருந்த அரிசியின் விலை 70 சதமாகக் கூடியது. சீனியின் விலை உயர்ந்தது. பாடசாலை மாணவர்களுக்கு வழங்கப்பட்ட மதிய போசனம் நிறுத்தப்பட்டது. பொதுமக்களுக்கு வழங்கப்பட்ட உதவி நன்கொடை நிறுத்தப்பட்டது. ரெயில்வே கட்டணமும், தபால் கட்டணமும் உயர்த்தப்பட்டன. அரசாங்கத்தின் இச் செய்கை ஏழைகளைப் பெரிதும் பாதித்தது. அரசாங்கத்திற்கு எதிராக இடதுசாரிக் கட்சிகள், 1953ம் ஆண்டு ஆகஸ்டு 12ம் திகதி, ஹர்த்தால் என்ற பெயரில் பொது வேலை நிறுத்தத்தை மேற்கொண்டன. அரசாங்கத்தின் பொருளாதாரக் கொள்கை யால் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களும், பொது மக்களும் இயற்கையாகவே அரசாங்கத்திற்கு எதிராக எழுந்தனர். பொதுமக்களின் இந்த ஆக்ரோஷத்திற்கு எதிராக அரசாங்கம், அவசர காலச்சட்டத்தைப் பிரகடனப் படுத்தியது. காவல் பகுதியினரின் அடக்குமுறையால் பலர் இறந்தனர். இதனைத் தாங்கும் சக்தி பிரதமர் டட்லி சேனாநாயகாவுக்கு இருக்க வில்லை. பிரதமர் பதவியிலிருந்து அவர் இராஜிநாமாச் செய்யவே சர். ஜோன் கொத்தலாவலை பிரதமராகக் கடமையேற்றார்.
சர். ஜோன் கொத்தலாவலையின் ஆட்சியில் நாட்டின் பொருளாதார நிலைமை இன்னும் மோசமடைந்தது. அரசாங் கத்திற்கு எதிராகத் தோன்றிய மக்களின் திருப்தியைத் தருணம் பார்த்துக் கொண்டிருந்த சமய-மொழி தீவிரவாதிகள் தங்க ளுக்குச் சாதகமாக இவ்வதிருப்தியைத் திசை திருப்பினர். சமயகலாச்சார-மொழிப் பிரச்சினைகள் வளர்ந்து ஒரு பெரும் சக்தி யாக உருவெடுத்தது. அன்றைய அரசியல்-சமூக அமைப் பிற்கு இச்சக்தியை சமாளிக்கும் பலம் இருக்கவில்லை. மார்க்சீய வாதிகள் தங்கள் மார்க்சீய கருத்துக்களை மக்கள் மத்தியில்

Page 101
அ.முகம்மது சமீம் 174 பரப்ப முனைந்தனர். முதலாளித்துவ அரசியல்-சமூக அமைப்பை மாற்றி, சோஷலிச-கம்யூனிச ஆட்சியை ஏற்படுத்த எண்ணினர். காலம் காலமாக, புத்த சமயத்திலும், புத்த மத சிங்களக் கலாச்சாரத்திலும் ஊறிப்போயிருந்த பாமர மக்களின் மனநிலையை இவர்கள் அறியவில்லை. சமய-மொழி தீவிர வாதிகளின் பிரச்சாரத்திற்குப் பொதுமக்கள் பலியானார்கள். பெளத்த மதமும், சிங்கள மொழியும், சிங்கள காலாச்சாரமும், மேற்கு நாட்டவரின் ஆதிக்கத்தினால் பாதிக்கப்பட்டதைப் பற்றித் திரும்பத்திரும்ப பொதுமக்களுக்கு எடுத்துக் கூறப் பட்டது. சிறுபான்மை மக்களுக்கெதிரான "இனவெறி', பெரும்பான்மை இனமான சிங்கள மக்கள் மத்தியில் தலை தூக்கத் தொடங்கியது. இதே சமயத்தில் புத்தர் இறந்து 2000 வருடங்கள் பூத்தியானதையிட்டு புத்த ஜயந்தி காரணமாக பெளத்த மக்களிடையே எழுந்த சமய விழிப்புணர்ச்சி மொழி மூலம் வெளிப்பட்ட காரணத்தினால் இவ்விரண்டும் மைய மாகக் கொண்ட 'ஒரு தேசியவாதம் பொதுமக்களிடையே பரவியது. சிங்கள மக்களிடையே பரவிய இம் மொழித் தேசியவாதம் அரசியல் கட்சிகளை அதிர்ச்சியுறச் செய்தது. பல்லினங்கள் வர்மும் ஒரு நாட்டில் சேனாநாயக்கா தோற்று வித்த எல்லா இனங்களையும் இணைக்கும் சமய சார்பற்ற ஒரு தேசிய வாதத்திற்குப் பதிலாக குறுகிய கொள்கையையுடைய சிறுபான்மை மக்களுக்கு எதிராக சிங்கள பெளத்த தேசியவாதம் சிங்கள பெரும்பான்மை மக்களிடையே பரவியது.
ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சிக்கு எதிராக வளர்ந்த மக்களின் அதிருப்தி நாளடைவில் சிங்கள-பெளத்த தேசியமாக உருவெடுத்ததை உணர்ந்த அரசியல் தீர்க்கதரிசனம் படைத்த பண்டாரநாயக்கா, இந்த அதிருப்தியைத் தனக்குச் சாதகமாகப் பாவித்து, ஐக்கிய தேசியக்கட்சி அரசாங்கத்தைக் கவிழ்த்து, ஒரு புதிய அரசாங்கத்தை ஏற்படுத்தி இலங்கை வரலாற்றி லேயே ஒரு புதிய யுகத்தை ஆரம்பித்தார். சிங்கள மக்களி டையே எழுந்த இந்த மொழி வெறி தமிழ் மக்களிடையேயும்,

175 ஒரு சிறுபான்மை சமூகத்தின் பிரச்சினைகள் IV
மொழியுணர்வை ஏற்படுத்தியது. தமிழ் மக்களிடையே ஏற்பட்ட மொழியுணர்வை இளைஞர் காங்கரஸ் வாதிகளோ, தமிழ் காங்கிரஸ் வாதிகளோ உணரவில்லை. எஸ். ஜே.வி. செல்வ நாயகத்தின் தலைமையில் தோன்றிய தமிழரசுக் கட்சி, இம்மொழி உணர்வைப் பிரதிபலித்தது. ஆனால் இதில் ஒரு வேற்றுமை இருந்தது. சிங்கள மொழி வெறி தமிழர் களுக்கெதிராகப் பகைமையைத்தூண்டி விட்டது. ஆனால் தமிழ் மொழியாளர்கள், பகைமையை வளர்க்கவில்லை. தமிழ் மொழிக்கும் ஒரு தகுந்த இடம் கொடுக்கப்படல் வேண்டும் என்று தான் இவர்கள் கேட்டார்கள். தமிழரசுக் கட்சியின் பத்திரிகையான "சுதந்திரன் தமிழர்களின் உணர்வைப் பிரதிபலித்தது. எஸ்.டி.சிவநாயகம், சில்லையூர் செல்வராஜன், அமிர்தலிங்கம், ராஜதுரை கணேசலிங்கன், டானியல், டொமினிக் ஜீவா போன்றவர்கள் சுதந்திரன் மூலம் தமிழ் உணர்வை பரப்பிய அதேவேளையில், ஞானசுந்தரம் (பிரேம்ஜி) கைலாசபதி, இளங்கீரன், சிவத்தம்பி போன்றவர்கள், தேசியப்பார்வையில், முற்போக்கு எண்ணங் களையும், முற்போக்குக் கருத்துக்களையும் முற்போக்கு எழுத்தாளர் சங்கம் மூலம் தமிழ் மக்களிட்ையே ஒரு பரந்த மனப்பான் மை யை வளர்க்க முற்பட்டனர். மெத்தானந்தா, குலரத்னா போன்றவர்கள், சிங்கள மொழி உணர்வை யேற்படுத்தி, அதன்மூலம் தமிழர்களுக்கெதிராக சிங்கள ஆதிக்கத்தை நிலைநாட்ட முற்பட்ட அதே வேளையில், தமிழ் எழுத்தாளர் களும், மொழியாளர்களும் தேசிய உணர்வை வளர்ப்பதில் தீவிரமாக இருந்தனர். தமிழரசுக் கட்சியாளர்கள் வெறும் தமிழ் மொழியை வளர்ப்பதிலும், தமிழ்மொழிக்கு சம அந்தஸ்து வேண்டுமென்று வாதிட்டநேரத்தில், முற்போக்கு எழுத்தாளர் கள் இடதுசாரிக் கட்சிகளுக்கு ஆதரவாக, சிங்கள மக்களுடன் ஒன்றிணைந்து இரு சமூகங்களிடையேயும், ஒற்றுமையையும், பரஸ்பர நல்லெண்ணத்தையும் வளர்க்க முற்பட்டனர். ஆனால் சிங்கள தீவிரவாதிகளின் செய்கையால், இரு சமூகங்களும் வெவ்வேறு திசைகளில் செல்லத் தொடங்கின.

Page 102
அ.முகம்மது சமீம் 176
பிரதமர். சர். ஜோன் கொத்தலாவலை, தனது யாழ்ப்பாண விஜயத்தின்போது, "சிங்களத்திற்கும் தமிழுக்கும் சம அந்தஸ்து வழங்கப்படல் வேண்டும் என்று பிரகடனஞ் செய்ததை சிங்கள மக்களுக்குப் பிரதமர் துரோகம் இழைத்துவிட்டார் என்று மொழி இயக்கத்தினர்பிரச்சாரம் செய்யத் தொடங்கினர். 'அரசாங்கத்தின் சுயபாஷைக் கொள்கை ஒரு பித்தலாட்டம்' என்று சிங்கள மொழி இயக்கத்தின் முக்கியதலைவர்களில் ஒருவரான எல்.எச். மெத்தானந்தா கூறினார். (டெய்லி நியூஸ் 20-1-55) தமிழ் காங்கிரஸ் தலைவர் ஜி.ஜி. பொன்னம்பலம், கொத்தலாவலை அரசாங்கத்தை டி. எஸ். சேனாநாயக்கா வினதும், டட்லி சேனாநாயக்காவினதும் அரசாங்கங்களோடு ஒப்பிட்டு, கொத்தலாவலை அரசாங்கம் ஒரு வகுப்புவாத அரசாங்கம் என்றும் தமிழர்கள் இவ்வரசாங்கததை ஆதரிக்கக் கூடாது' என்றும் கூறினார். (லங்காதீப 20-9-54)
1956ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 18ம் திகதி, பிரதமர், சர். ஜோன் கொத்தலாவலை பாராளுமன்றத்தைக் கலைத்தார். அதே மாதம் களனியவில் கூடிய ஐக்கிய தேசியக் கட்சியின் மகாநாட்டில் தனிச்சிங்களம் அரசமொழியாக ஆக்கப்படல் வேண்டும் என்ற தீர்மானம் நிறைவேறியது. மொழிப் பிரச்சினையில் ஐக்கிய தேசியக் கட்சியின் இந்தத் திடீர் திருப்பம், அவர்களுக்கு நன்மை பயக்கவில்லை. ஜனவரி மாதத்தில் நடந்த ஐக்கிய தேசியக் கட்சியின் நிர்வாகக்குழு கூட்டத்தில் அக்கட்சியைச் சேர்ந்த தமிழ் அங்கத்தவர்களின், 'மனித உரிமைகள் சட்டம் யாப்பில் இடம் பெற வேண்டும்" என்ற கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. இது ஐ.தே.கட்சி யினரின் மொழிக் கொள்கையை பிரதிபலித்தது. ஏற்கனவே, 1955ம் ஆண்டு டிசெம்பர் மாதத்தில் சிறிலங்கா சுதந்திரக் கட்சி, தனது வருடாந்த மகாநாட்டில் "சிங்களம் அரச மொழியாகவும், தமிழுக்கு நியாயமான இடம் வழங்கப்படல் வேண்டும்' என்ற பிரேரணை நிறைவேற்றப்பட்டது.
பாராளுமன்றம் கலைக்கப்பட்ட பிறகு, பொதுத் தேர்

177 ஒரு சிறுபான்மை சமூகத்தின் பிரச்சினைகள் IV
தலைக் குறிக்கோளாக வைத்து அரசியல்கட்சிகள் கூட்டு சேர முற்பட்டனர். பண்டார நாயக்காவின் சிறிலங்கா சுதந்திரக் கட்சியும், பிலிப் குணவர்தனாவின் வி. எல். எஸ். எஸ். பி* கட்சியும் டபிள்யூ தஹநாயக்காவின் 'பாசா பெற முனை' (சிங்கள மொழி முன்னணி)யும் சேர்ந்து, "மகாஜன எக்சத் பெறமுன' (பொது ஜன ஐக்கிய முன்னணி) என்ற ஒரு கூட்டுச் சேர்க்கையை ஆரம்பித்தன. இக்கட்சியோடு பிரபல சிங்கள எழுத்தாளர். ஐ. எம். ஆர். ஏ. ஈரிய கொல்லவும், ஆர்.ஜி. சேனாநாயக்காவும் சேர்ந்தார்கள்.
ஐக்கிய தேசியக்கட்சி தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் “சிங்களமொழியை மாத்திரம் அரச மொழியாக்கப் போவ தாகப் பிரகடனம் செய்தது. கொத்தலாவலையின் இக்கொள் கை மாற்றத்தினால் ஐக்கிய தேசியக் கட்சி, தமிழர்களின் ஆதரவை இழந்தது. கொத்தலாவலையின் கொள்கையில் அடிக்கடி மாற்றம் ஏற்படுவதைக் கண்ட சிங்கள மக்களும், ஐக்கிய தேசியக் கட்சியில் வைத்த நம்பிக்கையை இழந்தனர்.
அரசியல் கட்சிகள் இரு துருவங்களாகச் செயல்பட்டன. சிங்களப் பேரினவாதக் கட்சிகளான, ஐக்கிய தேசியக் கட்சியும், மக்கள் ஐக்கிய முன்னணியும், சிங்களப் பிரதேசங் களில் மாத்திரம் போட்டியிடுவதென முடிவு செய்தன. இதே போன்று, தமிழ் காங்கிரசும், தமிழ் அரசுக் கட்சியும் தமிழ்ப் பிரதேசங்களில் மாத்திரம் போட்டியிட முன்வந்தன. மொழிப் பிரச்சினையில், இருமொழிகளுக்கும் சம அந்தஸ்து வழங்கப் படல் வேண்டும் என்ற கொள்கையை மக்கள் முன்வைத்த இடதுசாரிக்கட்சிகளான லங்கா சமசமாஜக் கட்சியும், கம்யூ னிஸ்ட் கட்சியும், சிங்களப் பிரதேசங்களிலும் தமிழ்ப்பிரதேசங் களிலும் போட்டியிட முன்வந்தன. சுருங்கக் கூறின் 1956ம் ஆண்டு பொதுத் தேர்தல் மொழி அடிப்படையிலேயே நடைபெற்றது.
* புரட்சிகர சமசமாஜக் கட்சி

Page 103
அ.முகம்மது சமீம் 178 26. தனிச்சிங்கள இயக்கமும் தமிழரசுக் கட்சியின் தோற்றமும்
1952ம் ஆண்டில் நடந்த பொதுத்தேர்தலில், தமிழரசுக் கட்சி தனது கொள்கையைத் தமிழ் மக்கள் முன்வைத்தபோது, அக்கட்சியைத் தமிழ் மக்கள் நிராகரித்தது மட்டுமல்லாமல், கட்சித் தலைவர் எஸ். ஜே. வி. செல்வநாயகத்தையும் தோல்வி யுறச் செய்தனர். நான்கு வருடங்களிலேயே தமிழரசுக் கட்சி தமிழ் மக்களின் ஆதரவைப் பெற்று, 1956ம் ஆண்டில் நடந்த பொதுத் தேர்தலில் அமோக வெற்றியைப் பெற்று, தமிழ் மக்களின் ஏகபோக உரிமைக் குரலாக வளர்ந்ததற்கு முக்கிய காரணம், பேரினவாதிகளின் தனிச் சிங்கள இயக்கமும், தமிழ் மொழியைப் புறக்கணிக்கும் கொள்கையுமே. பெரும் பான்மையினத்தின் மேல், சிறுபான்மை மக்கள் வைத்த நம்பிக்கை தளர்வதற்கும், தன்மானத்துடன் வாழ வேண்டுமானால், பிரிந்து செல்வதைத் தவிர வேறுவழி யில்லை என்ற முடிவுக்கு அவர்கள் வருவதற்கும், இப்பேரின வாதிகளின் எதேச்சாதிகாரப் போக்குமே காரணமென்றால் அது மிகையாகாது. தமிழ் மக்களின் தலைவர்களான சர்.பொன். இராமநாதனும், சர். பொன். அருணாசலமும், இந்நாட்டின் சுதந்திரத்திற்காகப் பாடுபட்டது மல்லாமல், பெரும்பான் மையினம் சிறுபான்மையினம் என்ற பாகுபாடில்லாமல், இலங்கை மக்கள் "ஒரு சமுதாயமாக வாழ வேண்டுமென்ற கொள்கையோடு இயங்கியதை அன்று தமிழ் மக்கள் எதிர்க்கவில்லை. டொனமூர் அரசியலில், சிங்கள பேரின வாதிகளின் ஆதிக்கம் வளர்வதைக் கண்ட அன்றைய தமிழ்த் தலைவரான, ஜி.ஜி. பொன்னம்பலம், எதிர்காலத்தில், தமிழ் மக்களின் அரசியல் நிலை கவலைக்கிடமாகிவிடும், என்பதை உணர்ந்து சிறுபான்மை மக்களுக்கு 50க்கு 50 பிரதிநிதித்துவம் வேண்டும் என்ற கொள்கையைக் கைவிட்டு சிங்கள அரசாங்கத் துடன் சேர்ந்து ஒத்துழைத்த தைக் கூடத் தமிழ் மக்கள் எதிர்க்கவில்லை. எனவே தனிநாடு வேண்டுமென்ற கொள்

179 ஒரு சிறுபான்மை சமூகத்தின் பிரச்சினைகள் IV
கைக்கு அவர்கள் தள்ளப்பட்டார்களென்றால், அதற் குரிய காரணங்களை இலங்கையின் சமீப கால அரசியல் வரலாற்றை ஆராய்வதன் மூலம்தான் நாம் பெற முடியும்.
1915ம் ஆண்டில் நடந்த இனக்கலவரத்தில், பிரித்தானிய அரசாங்கம் சிங்கள அரசியல் தலைவர்களைச் சிறையில் அடைத்த சமயம் அவர்களின் விடுதலைக்காக இலண்டன் சென்று அவர்களை விடுவித்தபெருமை, சர்.பொன் இராம நாத னையே சாரும். இராமநாதன் தன்னை ஒரு தேசியத் தலைவராகவே எண்ணினார். இலங்கையின் தேசிய அரசியலில் ஈடுபட்ட தமிழ்த்தலைவர்கள், இலங்கைக்கு 'சுயராஜ்யம்' கிடைப்பதற்காக சிங்களத் தலைவர்களுடன் ஒன்றிணைந்து செயல்பட்டார்கள். 1920களில் இலங்கைத் தேசிய காங்கரசின் தலைவராக தெரிவு செய்யப்பட்ட சர். பொன் அருணாசலம், தன்னை ஒரு தேசியத்தலைவராகவே எண்ணினார். ஆனால் சிங்கள தலைவர்களின் 'இனவெறி வளர்வதைக் கண்ட இவ்விருவரும்,தமிழினத்தின் தனித்துவத்தின் பெருமைகளை எடுத்துரைத்ததோடு, தமிழ் தேசியத்தையும் வளர்க்க முற்பட்டனர்.
'இவர்களின் வாரிசாகத் தோன்றிய ஜி.ஜி. பொன்னம்பலம் தமிழ் அரசியல் மரபைப் பிரதிபலித்தார். டொனமூர் அரசியல் காலத்தில், சிங்களவர்களுடைய ஆதிக் கமும் வலுவடைந்தது. இதனால், எதிர்காலத்தில், பெரும்பான் மையினத்தவரின் ஆதிக்கத்தினால் சிறுபான்மை யின மக்கள் வெகுவாகப் பாதிக்கப்படலாம் என்பதை உணர்ந்த பொன்னம் பலம், பிரதிநிதித்துவத்தில் சிறுபான்மையின மக்களுக்கும் சம பங்கு இருக்க வேண்டும் என்று வாதாடினார். தன்னுடைய கோரிக்கை நிறைவேறாமல் போனதை அடுத்து, அரசாங்கத்தில் அமைச்சர் பதவியை ஏற்ற அவர், தன்னை ஒரு தேசியத் தலைவர்களில் ஒருவராகவே எண்ணினார். தமிழ்த்தலைமைத் துவத்தில் ஏகபோக உரிமை கொண்டாடிய பொன்னம்பலத்தை எதிர்க்க அவருடைய கட்சியிலிருந்தே இன்னொரு தலைவர்

Page 104
அ. முகம்மது சமீம் 18O
தோன்றினார். பொன்னம்பலம் அரசாங்கத்தோடு, இணைந் ததை எதிர்த்த எஸ். ஜே.வி. செல்வநாயகம் 'தமிழரசுக்கட்சி' என்றவொரு புதிய கட்சியைத் தோற்றுவித்தார்.
பொன்னம்பலம் அரசாங்கத்துடன் சேர்வதென முடி வெடுத்தது அவருடைய தனிப்பட்ட செய்கை என்று கூற முடியாது. யாழ்ப்பாணத்திலும், முக்கியமாகக் கொழும்பிலும், வாழும் தமிழர்கள், அரசாங்கத்தை ஆதரிப்பதால் நன்மை பெறலாம் என்ற ஒரு நம்பிக்கை அவர்கள் மத்தியில் பரவலாக இருந்ததும் ஒரு காரணமாக அமையலாம். இது கால வரையில், சிங்கள மக்களுடன் வேறுபட்டு அரசியல் சமூக, பிரதேசச் சுதந்திரத்துடன் வாழ்ந்து வந்த தமிழர் சமுதாயம், பொருளாதார நன்மைகளுக்காகவும், தொழில் வாய்ப்புக்காகவும், சிங்கள சமூகத்தை நம்பி வாழும் நிலையை யடைந்தனர். தாம், ஒரு "சிறுபான்மை சமூகம்" என்று உணரத்தொடங்கினர். இல்லா விட்டால் 'பிரதேச சுதந்திரம்' என்ற கொள்கையைத் தமிழ் மக்கள் முன்வைத்த செல்வநாயகம், 1952ம் ஆண்டில் நடந்த பொதுத் தேர்தலில் தோற்கடிக்கப் பட்டிருக்க மாட்டார்.
பொன்னம்பலம் அரசாங்கத்துடன் இணைந்ததை, அவர் தமிழருக்குச் செய்த துரோகம் என்று செல்வநாயகம் கூறினார். "பொன்னம்பலம் தமிழர்களைத் தவறான வழியில் நடத்திச் செல்கிறார்" என்றும் செல்வநாயகம், பொன்னம்பலத்தைச் சாடினார். ஒரு சில வருடங்களிலேயே சிங்களவரின், "சிங்களபெளத்த ஆதிக்கம் தலையெடுத்த போதுதான், அவரின் கூற்றின் உண்மையை தமிழ் மக்கள் உணர்ந்தார்கள். 1947ம் ஆண்டு ஜூலை முதலாம் திகதி யாழ்ப்பாணத்தில்நடந்த தமிழர் மகாநாட்டில், 'தமிழ் மொழி அழிக்கப்படும் தறுவாயில் இருக்கிறது' என்று கூறினார். மேலும், அவர் 'சிங்களத் தலைவர்கள் சிங்கள மொழியை அரசாங்க மொழியாக வும், தமிழ் மொழியை வடக்கிலும் கிழக்கிலும் மாத்திரம் உபயோகத்திலிருக்கும ஒரு பிரதேச மொழியாகவும் மாற்றப் பார்க்கிறார்கள்' என்று கூறினார். 'ஐக்கிய தேசியக் கட்சி,

181 ஒரு சிறுபான்மை சமூகத்தின் பிரச்சினைகள் IV
வகுப்புவாதிகளைக் கொண்ட ஒரு கட்சியென்றும், இலங்கை யில் வாழும் சமூகங்களிடையே உள்ள செளஜன் யத்தை முறிக்கும் கொள்கையுடையது' என்றும் கூறினார்', என்று 1947ம் ஆண்டுஜூலை 22ம் திகதி வெளியான ஹிந்து ஒர்கன்" பத்திரிகை கூறியது.
பிறகு, ஐக்கிய தேசியக் கட்சி, தனது மொழிக் கொள்கையை முற்றாக மாற்றியதையும், பண்டாரநாயக்கா - செல்வநாயகம் ஒப்பந்தத்தை எதிர்த்ததையும், 1977ம் ஆண்டுக்குப் பிறகு, தமிழர்களின் மேல் இன வெறியர்களைக் கட்டவிழ்த்து விட்டதையும், தமிழர்களின் மேல் போர் தொடுத்து, யாழ்ப்பாணக் குடா நாட்டில் குண்டு மாறிப் பொழிந்ததையும், பார்க்கும் போது, செல்வநாயகத்தின் அன்றைய கூற்றில் எவ்வளவு உண்மை இருக்கிறது என்பதை உணர முடிகிறது. பொன்னம்பலத்தின் 'அகில இலங்கைத் தமிழ் காங்கிரசை விட்டும் வெளியேறிய செல்வநாயகம், "யாழ்ப்பாணத்தில், 1947ம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடந்த ஒரு கூட்டத்தில், 'இலங்கையில வாழும் தமிழர்கள் ஒரு தேசிய இனம், அவர்களை "இலங்கைத் தமிழர்கள் என்றோ, இந்தியத தமிழர்கள்" என்றோ பிரிக்க முடியாது' என்று கூறினார். 1953ம் ஆண்டு இலங்கைப் பிரதமராகப் பதவியேற்ற சர். ஜோன் கொத்த லாவல, 'பொன்னம்பலத்தை அமைச்சர் பதவியி லிருந்தும் விலக்கிய சம்பவத்தை, சிங்க ளத் தலைமைத் துவத்தில் தமிழர்கள் நம்பிக்கை வைப்பது எவ்வளவு தவறானது" என்று சுட்டிக் காட்டினார்.
1952ம் ஆண்டுக்குப்பிறகு சிங்கள மொழி இயக்கம் தீவிரம் அடைந்ததை உணர்ந்த தமிழர்கள், செல்வநாயகத்தின் தலைமைத்துவத்தில் நம்பிக்கை வைக்கத் தொடங்கினர். செல்வநாயகத்தின் கூற்றுக்களின் உண்மை யை தமிழர்கள் உணரத் தொடங்கினர். சிங்கள ஆதிக்கத்தினால் தமிழர்களுக்கு ஏற்படப் போகும பாதிப்பை விளக்கிய, செல்வநாயகம், 'தமிழர்கள், தலைவர்களின் மேல் நம்பிக்கை வைக்காமல்,

Page 105
அ. முகம்மது சமீம் 182
கொள்கையில் நம்பிக்கை வைக்க வேண்டும் என்றும், அதற் காக உயிர்த்தியாகம் செய்யவும் தயாராயிருக்க வேண்டும்' என்றும் கூறினார். 1956ம் ஆண்டின் முற்பகுதியில், மட்டக் களப்பில் நடந்த ஒரு கூட்டத்தில், 'அரசியல் வானில் பொன்னம்பலம், சுந்தரலிங்கம், செல்வநாயகம் ஆகிய தனி நபர்கள், வெறும் நிழல்கள்; இவர்களில் நம்பிக்கை வைக்காமல் ஒரு கட்சியின் கொள்கைகளுக்காகப் போராடவும், உயிரை விடவும் தயாராயிருக்க வேண்டும், ' என்று செல்வநாயகம் கூறினார்.
இந்திய வம்சாவளியினருக்கெதிராக அரசாங்கம் கொண்டு வந்த பிரஜா உரிமைச் சட்டத்தைத் தமிழ் காங்கிரஸ் உறுப்பினர்கள் ஆதரித்ததை வெகுவாகக் கண்டித்தார். தமிழர் பிரதேசங்களில் சிங்களக் குடியேற்றங்கள் ஏற்படுவதற்கு இவர்கள் வழிவகுத்தார்கள் என்று குற்றம் சாட்டினார். "சிங்கள இனத்தின் ஆதிக்கத்தில் இக்குடியேற்றத் திட்டங்கள், உச்ச கட்டத்தைக் காட்டுகின்றன" என்று கூறினார். மேலும் அவர், "ஓர் இனத்திற்குச் சொந்தமான நிலத்தை ஒரே நாட்டில் வாழும் இன்னொரு இனம் ஆக்கிரமித்துக் கொள்ளக் கூடாது' என்று கூறினார்.
1956 b ஆண்டு பொதுத் தேர்தலுக்கு மூன்று மாதங்களுக்கு முன் ஜனவரி மாதத்தில் நடந்த ஒரு கூட்டத்தில் பேசியதை 16ம் திகதி 'டைம்ஸ் ஒவ் சிலோன்’ பத்திரிகை வெளியிட்ட செய்தியின்படி செல்வநாயகம், தமிழர் சமுதாயத் தால் ஏற்றுக் கொள்ளப்பட்ட தலைவர் என்ற முறையில் பின் வருமாறு கூறினார், என்று கூறியது.
6
சுதந்திரத்திற்குப் பின், தமிழருக்குச் சொந்தமான நிலத்தை சிங்களவர் பலாத்காரமாக அபகரித்தனர். தமிழர்கள் வாழும் பிரதேசங்களிலுள்ள நஞ்சை நிலங்களில், கல்ஒயா திட்டம் என்றும் கந்த ளாய் திட்டம் என்றும் சிங்களக் குடியேற்றங்களையேற்படுத்தினர். சிங்கள அரசர்கள் கூட

183 ஒரு சிறுபான்மை சமூகத்தின் பிரச்சினைகள் IV
செய்யத் துணியாததை இவர்கள் செய்தனர். கடந்த மூவாயிரம் வருடங்களாகத் தமிழர் இம் மாகாணங்களில் வாழ்ந்து வந்திருக்கின்றனர். தங்களுக்குச் சொந்தமான ஏழு மாகாணங் களோடு திருப்தியடையாமல் எங்களுக்குச் சொந்தமான நிலங்களையும் பல வந்தமாக அபகரிக்க முற்பட்டிருக் கின்றனர்".
தமிழர்கள் தொன்று தொட்டு வாழ்ந்து வந்த பிரதேசங் களுக்கு அவர் வரலாற்று விளக்கத்தை கொடுக்க முன்வந்தார்.
சிங்கள இனம் தம்முடைய ஆதிக்கத்தை நிலை நாட்ட மேற்கொண்ட கைங்கரியததை செல்வநாயகம் ஒவ்வொன்றாக விளக்கிக் கூறினார். 'முதலாவதாக இந்திய வம்சாவளியினரின் பிரஜா உரிமையைப் பறித்தனர், இரண்டாவதாக, தமிழர்கள் பூர்வீகமாக வாழ்ந்து வந்த பிரதேசங்ளிலுள்ள நிலங்களை அபகரித்தனர், மூன்றாவதாக, "சிங்கள மொழி அரச மொழி' யென்று கூறி, தமிழ் மக்களின் மேல் சிங்கள மொழியைத் திணிக்க முயல்கின்றனர். கடைசியாக "பெளத்த மதத்திற்கு அரசயாப்பில் முக்கியத்துவம் கொடுப்பதன் மூலம், சிங்களபெளத்த ஆதிக்கத்தை நிலை நாட்ட முயல்கின்றனர்,' என்று கூறினார். தமிழ் மக்களின் மேல் சிங்களவரின் ஆதிக்கத்தை நிலை நாட்ட அவர்களுக்கு என்ன உரிமை இருக்கிறது என்ற கேள்வியை செல்வநாயகம் எழுப்பினார்.
சிங்கள ஆதிக்கத்தை எதிர்த்த, செல்வநாயகம், 'பிரித்தானிய ஆட்சியாளர், இலங்கையின் ஆட்சியை சிங்களத தலைவர்களுக்குக் கையளித்தபோது, "சிறுபான்மை மக்களை அடக்கி ஆளக்கூடாது' என்று, அவர்கள் சிங்களத் தலைவர் களின் மேல் வைத்த நம்பிக்கைக்குத் துரோகம் செய்யும் விதத்தில், நாட்டை ஆட்சி செய்த சிங்களப் பிரதம மந்திரி களான, டி. எஸ். சேனாநாயக்கா, டட்லி சேனாநாயக்கா, சர். ஜோன் கொத்தலாவல, ஆகிய மூவரும் நடந்து கொண்டார் கள்', என்று செல்வநாயகம் பொதுத் தேர்தலுக்கு மு ன்

Page 106
அ. முகம்மது சமீம் 184
கூறினார். 'தமிழர்கள் தமது ஆட்சியைத் தாமே நிர்ணயிக்க வேண்டிய காலகட்டம் வந்துவிட்டது", என்பதை அவர் உணர்த் திக் காட்டினார்.
1954ம் ஆண்டு டிசெம்பர் மாதம் வட்டுக்கோட்டையில் நடந்த கூட்டத்தில், செல்வநாயகம், 'தமிழனுடைய இன்றைய நிலை மிகவும் பயங்கரமானது, என்பதை ஒவ்வொரு தமிழனும் உணர்ந்து விட்டான்', என்று கூறினார். மேலும் அவர், 'இந் நிலையை எப்படி மாற்றலாம் என்பதில் எல்லோரும் குழம்பிப் போயிருக்கிறார்கள். எங்களுடைய கட்சி, தமிழ் பேசும் மக்கள் வாழும் பிரதேசத்தில் சுய ஆட்சியை நிலை நிறுத்துவதென முடிவெடுத்துள்ளது. எனவே, எமது மக்களில் பெரும்பாலா னோர் ‘சமஷ்டி ஆட்சியை ஏற்றுக் கொண்டிருக் கின்றனர்', என்று கூறினார். தமிழரசுக் கட்சி சமஷ்டி ஆட்சி" என்ற முடிவை தமிழ் மக்கள் முன் வைத்தது.

185 Q(b él y UT5760) L0 g en 8,5560 y 5él60) 6015, Gil V 27. தமிழர்களின் தனிப்பெருந்தலைவராக எஸ்.ஜே. வி.
செல்வநாயகம்
இலங்கைக்குச் சுதந்திரம் கிடைத்த ஒரு சில வருடங்களிலேயே, சிறுபான்மையின மக்களுடைய பிரச்சி னைகளும் அதிகரித்தன. முதலாவதாக, தேசியக் கொடிப் பிரச்சினையில், தமிழ்த் தலைவர்கள், சிங்க ளத் தலைவர் களுடன் முரண்பட்டார்கள். பிரஜா உரிமை வழங்குவதிலும், வாக்காள உரிமை வழங்குவதிலும், பெரும்பான்மை யினத்தலைவர்கள், நியாயமான முறையில் நடக்கவில்லை என்பது தமிழர் தலைவர்களின் முடிவு. அரசமொழி விவகாரத் திலும், தமிழர்கள் பூர்விகமாகக் குடியிருந்த பிரதேசங்களில் சிங்களக் குடியேற்றங்கள் நிலை நாட்டியதாலும், இரு சமூகங்களிடையேயும் கசப்புணர்வு வளரத் தொடங்கியது.
இலங்கையின் தேசியக் கொடி சிங்களவர்களின் சின்னமாகிய 'சிங்கத்தின் உருவத் தோடு அமைய வேண்டு மென்பது டி. எஸ். சேனாநாயக்கா உட்பட எல்லா சிங்களத் தலைவர்களினதும் முடிவு. இச்சின்னம் சிறுபான்மை சமூகங் களைப் பிரதிபலிப்பதாக இல்லை என்பது தமிழ்த்தலைவர் களின் ஆட்சேபனை. சில தமிழ்த்தலைவர்கள் "சிவனொளி பாத மலையை வரையலாம் என்ற கருத்தைத் தெரிவித்தார்கள். பெளத்தர்கள், "சமனல' என்றும், முஸ்லிம்கள் 'பாவாத, மலையென்றும் கூறுவதனால் இது பொருத்தமாயிருக்கும் என்றும் கூறினர். தமிழ்த்தலைவர்கள் 'சிங்கம் வரைந்த தேசியக் கொடியை எதிர்த்ததனால், மட்டக்களப்பு இரண்டா வது அங்கத்தவரான சின்ன லெப்பையைக் கொண்டு அரசாங்கம் இப்பிரேரணையைப் பாராளுமன்றத்தில் கொண்டு வந்தது. இதன் சூத்திரதாரி வேறு யாருமல்ல, ஜே. ஆர். ஜயவர்த்தனவேயாகும். இப் பிரேரணையை ஆமோதித்த, தொழிற்கட்சித் தலைவரான ஏ.ஈ.குணசிங்காதான் இதற்காக

Page 107
அ. முகம்மது சமீம் 186 வாதாடினார். 'நான் பிரேரிக்கிறேன்" என்ற இரு வார்த்தைகளைத் தவிர, சின்ன லெப்பை வேறொன்றும் பேசவில்லை. விவாதம் காரசாரமாக நடப்பதைக் கண்டு பிரமித்த நிலையில் அவர் காணப்பட்டார். "அவர் பொதுமக்கள் இருக்கும் கேட்போர் கூடத்தில் போய் இருந்திருக்கலாம். அவருடைய மெளனத்திற்குப் பாராளுமன்ற சலுகைகள் இடம் கொடுத்திருக்கலாம்' என்று பேராசிரியர் கே. எம்.டி. சில்வா, 'ஜே.ஆர்.ஜயவர்தனாவின் வாழ்க்கை வரலாறு' என்ற நூலில் கூறுகிறார். சிறுபான்மை சமூகங்களைச் சமாளிப்பதற்காகக் கொடியின் ஒரத்தில், தமிழர்களைப் பிரதிபலிப்பதற்காக ஒரு மஞ்சள் கோடும், முஸ்லிம்களைப் பிரதிபலிக்க ஒரு பச்சை கோடும் போடுவதாக முடிவெடுக்கப்பட்டது. 1978ம் ஆண்டு அரசயாப்பு மாற்றப்பட்ட சமயத்தில், நான்கு ஒரங்களிலும், 'அரசமா இலை போடுவதாக முடிவெடுக்கப்பட்டது. பாராளுமன்றத் தில் "தேசியக்கொடி" அமுலாக்கப்பட்ட பின், இப் பிரச்சினையை எல்லோரும் மறந்துவிட்டார்கள்.
இலங்கையின் சுதந்திரத்திற்குப் பிறகு தமிழர்களின் கொள்கையில் இருபோக்குகளை நாம் அவதானிக்க முடிகிறது. ஜி.ஜி.பொன்னம்பலம் தலைமையில், சிங்கள மக்களுடன் ஒத்துழைக்க வேண்டும், என்ற கொள்கையைக் கொண்ட ஒரு பிரிவும் செல்வநாயகம் தலைமையில் 'தமிழர் பிரச்சினையில் தீவிரமான முடிவெடுக்கப்படல் வேண்டும்', என்ற கொள்கை யைக் கொண்ட இன்னொரு பிரிவும் கூறியது. டி. எஸ். சேனா நாயக்காவில் நம்பிக்கை வைக்க முடியாதென்பது செல்வ நாயகத்தின் கருத்தாகும். அதே நேரத்தில் மார்க்சீய வாதிகளின் அறிவுரையையும் ஏற்க முடியாது என்பது அவருடைய கருத் தாகும். 'தமிழர்களின் தேசியம் வரையறுக்கப்படல் வேண்டும் என்று கூறிய அவர் சிங்கள மக்களுடன் இணைய முடியாதென்ற கொள்கையைக் கொண்டிருந்தார்.
1947ம் ஆண்டு செப்டம்பர் மாதம், பாராளுமன்றத்தில் நடைபெற்ற நன்றிகூறல் விவாதத்தில் பங்கெடுத்த செல்வ

187 ஒரு சிறுபான்மை சமூகத்தின் பிரச்சினைகள் IV
நாயகம், 'பிரதமமந்திரி தன்னுடைய அமைச்சரவையில் தமிழர் களை வெறும் பகட்டுக்காக வைத்திருக்கிறார் என்று டி.எஸ். சேனாநாயக்காவைச் சாடிய அவர் 'இன்றைய நிலையில் தமிழர்கள் ஒரு சமஷ்டி ஆட்சியை ஏற்படுத்த வேண்டும், என்ற முடிவுக்கு வர வேண்டும்,' என்று கூறினார். "தமிழர்கள் விரும்பினால், இந்நாட்டினின்றும் பிரிந்து ஒரு தனியாட்சியை ஏற்படுத்துவதற்கு ஏன் அவர்களுக்கு உரிமை இருக்கக் கூடாது? என்ற கேள்வியையும் எழுப்பினார்.
செல்வநாயகத்தின் சமஷ்டி ஆட்சிக் கொள்கையை ஏற்காத தமிழ்க் காங்கிரஸ், அரசாங்கத்துடன் சேர்வ தென முடிவெடுத்தது. நான்கு தமிழ் காங்கிரஸ் அங்கத்தவர்கள் அரசாங்கத்துடன் இணைந்தார்கள். மூவர் (செனட் சபை ஒருவர்) தமிழரசுக் கட்சி" என்ற ஒரு புதிய கட்சியை 1949ம் ஆண்டு டிசெம்பர் மாதம் தோற்றுவித்தார்கள். இதே கால கட்டத்தில், ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தின் முக்கிய அமைச்சர்களில் ஒருவராயிருந்த எஸ்.டபிள்யு. ஆர். டி. பண்டார நாயக்கா, அரசாங்கத்தை விட்டும் விலகி, "சிறிலங்கா சுதந்திரக் கட்சி' என்ற ஒரு புதிய கட்சியை ஆரம்பித்தார். பண்டார நாயக்காவின் இம்முடிவை செல்வநாயகம் வரவேற்றார்.
1949ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 15ம் திகதி, காங்கேசன் துறையில் நடந்த ஒரு கூட்டத்தில், 'தமிழர்கள்தாமே ஆட்சி செய்ய வேண்டிய காலம் வந்து விட்டது", என்று "தேசிய இனங்கள் சிறிதளவாக இருந்தாலும் தாமே ஆட்சி செய்யும் "சுயநிர்ணய உரிமை' அவைகளுக்கு இருக்க வேண்டும் என்ற கொள்கையை வலியுறுத்தினார். இந்திய சுதந்திரம் உண்மையானதென்றும், இலங்கையின் சுதந்திரம் போலியான தென்றும், அதில் தமிழர்களுக்கு இடமில்லை யென்றும் கூறினார். ஒரு சமஷ்டி ஆட்சியில், மொழியடிப்படையில் தமிழர்கள் தாமே ஆட்சி செய்யும் ஒரு தனிமாகாணம் தமிழர்களுக்கு இருக்க வேண்டும் என்ற கருத்தை அவர் தமிழ் மக்கள் முன் வைத்தார். தமிழர்களுடைய இந்தக்

Page 108
அ. முகம்மது சமீம் 188
கோரிக்கையைச் சிங்களப் பெரும்பான்மையினம் நிராகரித் தால், இப் பிரச்சினையை சர்வதேச மட்டத்தில் வாதாடு வதென்பதே செல்வநாயகத்தின் கொள்கையாயிருந்தது.
செல்வநாயகத்திற்குப் பக்க பலமாக இருந்த வன்னிய சிங்கம், கட்சியின் கொள்கையைப் பின்வருமாறு விளக்கினார்.
'தமிழர்களாகிய நாம், கொழும்பில் ஒரு மத்திய அரசாங்கத்தை மையமாகக் கொண்டு மொழி அடிப்படையில் இரு மாகாணங்களைக் கொண்ட ஒரு சமஷ்டி ஆட்சியையே விரும்புகிறோம். பாதுகாப்பு, வெளிவிவகாரம், ஆகியவை களைத் தவிர்த்து, மற்றெல்லா அரசவிவகாரங்களிலும், தாமே ஆட்சி செய்யும் உரிமை இவ்விரு மாகாணங்களுக்கும் இருக்க வேண்டும். '
செல்வநாயகத்தின் சமஷ்டி ஆட்சிக் கொள்கையை 'நாட்டைப் பிளவுபடுத்தும் ஒரு பைத்தியக்கார எண்ணம், என்று பொன்னம்பலம் கூறியதற்கு அவர், "சமஷ்டி ஆட்சி இல்லையேல், தமிழர்கள், பேச்சுரிமையற்ற, தன்னம்பிக்கை யில்லாத ஒரு தாழ்ந்த நிலையை அடைவதோடு, அவர்களுடைய தலைவர்களும் தங்கள் தன்மானத்தை இழந்து விடுவார்கள், " என்று பதிலளித்தார். செல்வநாயகத்தின் தீர்க்கதரிசனப் பார்வையை அன்றைய தமிழர் சமூகம் ஏற்றுக் கொள்ள வில்லை. அரசாங்கத்திலிருந்து சிறு சலுகைகளையும் நன்மைகளையும் பெறலாம் என்று ஏங்கிக் கொண்டிருந்த தமிழர் மத்தியதர வர்க்கத்தினர் இச்சமஷ்டிக் கொள்கையை எதிர்த்தனர். வடமாகாண ஆசிரியர் சங்க உறுப்பினர்களான ஹெண்டி பேரின்ப நாயகம், நேசையா, தம்பர், சிவசுப் பிர மணியம் போன்றவர்கள், 'இச்சமஷ்டிச் கொள்கை நாட்டை
பிளவுபடுத்தும் என்று கண்டித்தனர்.
செல்வநாயகத்தின் சமஷ்டி ஆட்சிக் கொள்கையில் கிழக்கு மாகாணம் ஒரு முக்கிய இடத்தைப் பெற்றது. சிங்களக்

189 ஒரு சிறுபான்மை சமூகத்தின் பிரச்சினைகள் IV
குடியேற்றங்களினால் இம் மாகாணம் தன்னுடைய தமிழ்த் தன்மையை இழந்து விடும், என்று கிழக்கு மாகாண தமிழ் மக்களுக்கு எச்சரித்தார். கிழக்கு மாகாணத் தமிழர்களும் இச்சமஷ்டிக் கொள்கையை ஆதரிக்கத் தொடங்கினர். இலங்கையின் பல பாகங்களிலும் வாழும் 'தமிழ் பேசும் மக்களைக் கொண்ட ஒரு தமிழ்த் தேசிய இனம் ஒன்றை உருவாக்குவதே செல்வநாயகத்தின் கொள்கையாயிருந்தது. 1947ம் ஆண்டு ஜூன் மாதம் 27ம் திகதி, யாழ்ப்பாணத்தில் நடந்த ஒரு கூட்டத்தில், செல்வநாயகம், 'இலங்கைத் தமிழர்களென்றும், இந்தியத் தமிழர்களென்றும் தமிழர்களைப் பிரிக்க முடியாது. இந்தியத் தமிழர்களுக்கெதிராகக் கொண்டு வரப்பட்ட சட்டம் உண்மையில் இலங்கைத் தமிழர்களையும் தாக்கும் ஒரு சட்டமாகும்', என்று கூறினார்.
அரசியலில் மட்டுமல்ல, நீதி பரிபாலனத்திலும் தமக்கு நியாயம் சிடைக்கும் என்ற நம்பிக்கையைத் தமிழர்கள் இழந்தனர். இக்கால கட்டத்தில் நடந்த மூன்று முக்கிய வழக்குகளில் கொடுக்கப்பட்ட தீர்ப்புகள் இதை ஊர்ஜிதம் செய்தன. கோடக்கன் பிள்ளையின் பிரஜா உரிமை நிராகரிக்கப்பட்டதை எதிர்த்து அவரால் அரசாங்க உத்தியோகத் தரான புஞ்சி முதன்னாயக்காவுக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த நீதிபதி சிவஞானசுந்தரம், 1948ம் ஆண்டிலும், 1949ம் ஆண்டிலும் அமுலாக்கப்பட்ட பிரஜா உரிமை சட்டம் 1946ம் ஆண்டின் அரசயாப்பில் 29(2) பிரிவுக்கு மாறானது என்று தீர்ப்பை அளித்தார். இத்தீர்ப்பை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் அரசாங்கம் வழக்கைத் தாக்கல் செய்தது. இதை விசாரித்த மூன்று உயர் நீதிபதிகளைக் கொண்ட குழு மாவட்ட நீதிபதியின் தீர்ப்பைத் தள்ளுபடி செய்தது. 'அரசாங்கத்திற்கு எதிராகத் தொடரப்பட்ட இவ்வழக்கு அரசாங்கத்தைத் தர்ம சங்கடத்தில் ஆழ்த்தும் என்ற காரணத் தினால், அரசாங்கத்திற்குச் சார்பாகவே தீர்ப்பு வழங்கப் பட்டிருக்கலாம், என்று எண்ணுவதற்கு இடமிருக்கிறது', என்று பேராசிரியர் வில்சன் கூறுகிறார்.

Page 109
அ. முகம்மது சமிம் 19 O
1953ம் ஆண்டில் தீர்ப்பு வழங்கப்பட்ட மற்றைய இரண்டு வழக்குகளும் சமஷ்டிக் கட்சியின் எதிர்காலத்தைப் பாதித்தது. எஸ்.நடேசனின் தேர்தல் வெற்றியை எதிர்த்து வழக்கு மனுச் செய்த செல்வநாயகத்திற்கு எதிராகத் தீர்ப்பளித்த உயர்நீதிமன்ற நீதியரசர், செல்வநாயகம் பெருந்தொகையான பணத்தை (ரூ. 40,000) வழக்குச் செலவாகக் கட்ட வேண்டுமென்று பணித்தார். ஜி.ஜி. பொன்னம்பலத்தின் தேர்தல் வெற்றிக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கில், வழக்காடிய வன்னிய சிங்கத்தை நீதிபதி கண்டித்தார். இத்தகைய சம்பவங்களினால் தமிழ்த்தலைவர்கள் விரக்தி யடைந்தனர். இவ்விரு தலைவர் களும் நிந்தனைக்குள்ளானதற்குக் காரணம் இவர்கள் சமஷ்டிக் கொள்கையைக் கொண்டிருந்ததனால் என்பது விளங்குகிறது.
அரசியலில் மாத்திரமல்ல, நீதிபரிபாலனத்தில் கூட நியாயம் கிடைக்காது என்பதை உணர்ந்த தமிழ்த்தலைவர்கள், தாங்கள் இந்த நாட்டில் தன்மானத்துடன் வாழ வேண்டு மானால், "சமஷ்டி ஆட்சி மூலம்தான் அதைப் பெறலாம் என்ற முடிவுக்கு வந்தனர். 1954ம் ஆண்டு ஒக்டோபர் மாதம், "முஸ்லிம் வாலிபர் சங்கக் கூட்டத்தில் உரையாற்றிய செல்வ நாயகம் சமஷ்டி ஆட்சி முறைக்கு விளக்கம் அளித் தார். 'நாட்டின் மொழிப் பிரச்சினை நியாயமான முறையில் தீர்க்கப்படல் வேண்டுமென்றால், அது சமஷ்டி ஆட்சிமூலம் தான் தீர்க்கப்படலாம்', என்று அவர் கூறினார். 'தமிழ்பேசும் மக்களை சிங்களம் பேசும் மக்களாக மாற்றமுயல்வது பிழை யானது மட்டுமல்ல தர்மத்திற்கு எதிரானதுமாகும். தங்கள் சமயத்தையும் கலாசாரத்தையும் பேணிவாழ்வதற்கு எந்த ஒரு இனத்திற்கும் உரிமை இருக்கிறது. ஒற்றையாட்சியில் சிறு பான்மை சமூகம் பெரும்பான்மை சமூகத்தின் தயவில் வாழ வேண்டியிருக்கும். பெரும்பான்மையினத்தின் தயவில் வாழ் வதை விட, எமது கலாசாரத்தை பின்பற்றி, தன்மானத்துடன் எமது சொந்த நிலத்தில் வாழ்வதுமேல். தமிழ் பேசும் முஸ்லிம்களை பொறுத்த வரையில், ஒரு சமஷ்டி ஆட்சி முறையில், இரு பிரிவுகளிலும் ஒரு முக்கிய சிறு பான்மையி

191 ஒரு சிறுபான்மை சமூகத்தின் பிரச்சினைகள் IV
னமாக அவர்கள் வாழலாம். கிழக்கு மாகாணத்தில் கல்ஒயா திட்டத்தின் மூலம் சிங்களக் குடியேற்றங்களை அரசாங்கம் ஏற்படுத்துவதால், முஸ்லிம்கள் தங்கள் பிரதிநிதித்துவத்தையே இழக்கலாம்' என்று அவர் கூறினார்.
சிங்கள பேரினவாதிகளின் 'ஆதிக்கவெறி'க் கொள்கை யினால், தமிழர்கள் 'சமஷ்டி ஆட்சி முறை ஒன்றின் மூலமே தான், தாம் தன்மானத்துடன் வாழலாம் என்ற முடிவுக்கு அவர்கள் வந்ததில் தப்பில்லை. தங்கள் சமஷ்டி ஆட்சித் திட்டத்தைத் திருகோணமலையில் 1956ம் ஆண்டில் நடந்த முதலாவது தேசிய மகாநாட்டில் தமிழரசுக் கட்சியினர் வெளியிட்டனர். இதே திட்டத்தை 1956ம் ஆண்டு நடந்த பொதுத் தேர்தலில் தங்கள் அரசியல் விஞ்ஞாபனமாகத் தமிழ்மக்கள் முன்வைத்தனர்.

Page 110
அ. முகம்மது சமீம் 192
28. தமிழரசுக்கட்சி சமர்ப்பித்த சமஷ்டி ஆட்சித் திட்டம்
தமிழரசுக்கட்சி, 1949ம் ஆண்டில் ஸ்தாபிக்கப்பட்ட போது, தன்னுடைய அரசியல் கொள்கையைப் பினவருமாறு கூறியது.
பல மொழிகளைப் பேசும் இனங்கள் வாழும் ஒரு நாட்டின், இன்றைய அரசியல்நிலை, இந்நாட்டில் வாழும் தமிழர்களுக்கெதிரானது என்ற முடிவுக்கு நாம் வந்துள்ளோம். இந்த அரசாங்கம் வெளியிட்ட கொள்கைகளின் அடிப்படைத் தத்துவங்களை அவதானிக்கும்போது, இவை பொதுமக்களின் நலன்களைப் பாதிப்பதோடு, இன்றைய அரசியல் அமைப்பு, நாட்டின் ஒற்றுமையையும் பாதிக்கிறது. எனவே, தமிழ் மக்களுடைய சுதந்திரத்திற்கு உத்தரவாதம் அளிப்பதற் கும், அவர்களுடைய தன்மானத்தைச் சட்டப்படி பாதுகாப் பதற்கும், அவர்களுடைய பிரச்சினைகளை ஜனநாயக முறையில் தீர்ப்பதற்கும், சுயநிர்ணய அடிப்படையில் தமிழ் மக்கள் சுய ஆட்சியை ஏற்படுத்துவதைத் தவிர வேறு வழியில்லை. இக் குறிக்கோளை அடைவதற்காக, அல்லும் பகலும் நாம் அயராது உழைக்க வேண்டும்' (1974ம் ஆண்டு வெளியான தமிழரசுக் கட்சியின் 25ம் ஆண்டுமலர்) தமிழரசுக் கட்சியின் இக்கொள்கைப் பிரகடனம் டி.எஸ். சேனா நாயக்காவின் அரசாங்கத்திற்கு ஒரு சவாலாக அமைந்தது. அரசியல் பரவலாக்கலில் தமிழர்களுக்குத் தமது அரசியற் பிரச்சினைகளைத் தாமே நிர்ணயிக்கும் உரிமையைக் கூட மறுத்த சிங்கள ஆட்சியாளர்களுக்கு, இப்பிரகடனம் ஒரு பேரிடியாக விழுந்தது. தமிழர்கள் தனிநாடு கோருகிறார்கள் என்று சிங்கள இனவாதிகள் பிரசாரம் செய்யத் தொடங்கினர்.
1951ம் ஆண்டு நடந்த தமிழ் அரசுக் கட்சியின் முதல் தேசிய மகாநாட்டில் தலைமையுரை ஆற்றிய செல்வநாயகம்,

193 ஒரு சிறுபான்மை சமூகத்தின் பிரச்சினைகள் IV
சிங்கள அரசியல் அமைப்பையோ, சிங்கள அரசாங்கத்தையோ சாடவில்லை. அவருடைய பேச்சு, தமிழர்களுடைய இன உணர்வைத் தூண்டவில்லை. தமிழர்களுடைய உரிமை களைப் பாதுகாப்பதே தனது குறிக்கோள் என்று கூறினார். தமிழர்கள் எதிர்நோக்கும் பேராபத்தை விளக்கிக் கூறினார். மிகவும் மனவேதனையுடன் இப்பொறுப்பைத் தான் ஏற்றுக் கொண்ட தாகவும், இதற்காகத் தன் வாழ்நாள் முழுவதும் பாடுபடப் போவதாக உறுதிமொழியளித்தார். ஒர் அரசியற்கட்சியின் தலைவராக அவர் பேசவில்லை. அவருடைய பேச்சைக் கேட்ட, தமிழ் மக்கள், தமிழர்களின் நலன்களைப் பாதுகாக்க வந்த ஒரு தத்துவஞானி என்று கருதினர். இதனாற்றான் அவருக்குத்
தந்தை செல்வா" என்ற நாமத்தைச் சூட்டினர்.
இம்மகாநாட்டில் ஏழு தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன. தமிழரசுக்கட்சியின் சமஷ்டி ஆட்சித் திட்டத்தை இவ்வேழு பிரேரணைகளும் விளக்கின.
முதலாவது தீர்மானம், தமிழ் பேசும் மக்களுடைய 'தனிநாடு உரிமையை யாராலும் மறுக்க முடியாது என்று கூறியது. சிங்கள மக்களுடன் இணைந்த ஒரு சமஷ்டி ஆட்சி மூலம் தான் தமிழர்கள் தங்கள் தனி நாட்டுக் குறிக் கோளை யடையலாம். சிங்கள இனத்தைப் போல தமிழ்த் தேசிய இனமும் ஒரு பண்டைய நாகரிகத்தையும், மகோன்னத வரலாற்றையும் கொண்டது. வேறெந்த மொழியையும் விட பண்டைய பாரம்பரிய மரபைக் கொண்டது தமிழ்மொழி. அது வளர்ச்சி பெற்று ஒரு வாழும் மொழியாக இன்றிருக்கிறது.
இலங்கையின் மூன்றிலொரு பங்கு நிலத்தில் தமிழர்கள் வாழையடி வாழையாக வாழ்ந்து வந்திருக்கிறார்கள். ஒரு பொது வாக்கெடுப்பின் மூலம், இவ்விரு இனங்களினதும், எல்லைகளை நிர்ணயிக்கலாம். இது ஜனநாயக அடிப்படையில் சுய நிர்ணய கொள்கையின் பாற்பட்டது. கனடா, இந்தியா, சுவிற்சலாந்து, சோவியத் யூனியன் போன்ற நாடுகளிலுள்ள

Page 111
அ. முகம்மது சமீம் 194 பல்லின மக்களின் பிரச்சினைகளை, சமஷ்டி ஆட்சிமூலம்தான் தீர்த்தார்கள் என்பது கண்கூடு.
இரண்டாவது தீர்மானம் பிரித்தானிய அரசாங்கத்தால் இலங்கை மக்களின் மேல் திணிக்கப்பட்ட சோல்பரி, ஆட்சித் திட்டத்தைக் கண்டித்தது. இவ்வரசியல் திட்டம் தமிழ் பேசும் மக்களை ஒர் அடிமை சமுதாயமாக மாற்றியது. தமிழர் களுடைய பிரச்சினைகளுக்கெல்லாம் காரணமாய மைந்தது இவ்வாட்சித் திட்டத்தினால் கொண்டு வரப்பட்ட ஒற்றை யாட்சித் திட்டமே. பெரும்பான்மையினமான சிங்களவரின் தயவில் தமிழ் மக்கள் வாழ வேண்டிய ஒரு நிர்ப்பந்தம் ஏற்பட்டது. இதனால் தமிழ்மக்கள் என்றென்றும் ஒர் அடிமை சமுதாயமாக வாழ்வதோடு, தம் தேசியத் தன்மையையும் இழக்க நேரிடும். எனவே தமது குறிக்கோளாகிய சமஷ்டி ஆட்சியை அடைவதில் அயராது உழைக்க வேண்டும்.
மூன்றாவது தீர்மானம், சோல் பரி ஆட்சிமுறையில் தமிழர்கள் அரசியலில் இழிநிலை அடைந்ததையும், பிரஜா உரிமை சட்டங்களினால் தமிழ்மக்கள் தாழ்வு நிலை அடைந்த தையும் குறிப்பிட்டது. தமிழ் மக்களுக்கெதிராக அரசாங்க நிர்வாகத்தின் கெடுபிடிகளையும் கூறியது. சிறுபான்மை மக்களுக்கெதிராகச் சட்டங்களை இயற்றுவதை சோல்பரி யாப்பு தடுத்த தென்றாலும், நிர்வாகத்தில் அவர்களுக்கு ஏற்படும் அநியாயங்களைத் தடுத்து நிறுத்தும் சக்தி அதற்கு இல்லாததை யாப்பிலுள்ள ஒரு முக்கிய குறைபாடாக, இது எடுத்துக் காட்டியது. சமஷ்டி ஆட்சி ஒன்றின் மூலம்தான் இந்நிலையை சீர்படுத்தலாம் என்று இத்தீர்மானம் கூறியது.
நான்காவது தீர்மானம் தமிழ் மொழிக்கு எதிர்காலத்தில் ஏற்பட இருக்கும் ஒரு பயங்கர நிலையைச் சுட்டிக்காட்டியது. இலங்கையின் ஏழு மாகாணங்களிலும் சிங்கள மொழி ஆதிக்கம் செலுத்தும் அதே வேளையில் தமிழ் மொழி, வட-கிழக்கு மாகாணங்களில் மாத்திரம் செயல்படும் நிலைக்குத் தள்ளப்

195 ஒரு சிறுபான்மை சமூகத்தின் பிரச்சினைகள் IV பட்டு, ஒர் இழிநிலையை அடையும் என்று கூறியது. சமஷ்டி ஆட்சியில்,தனியாட்சி மூலம்தான் தமிழ் மொழி சுதந்திரமாக இயங்க முடியும். தமிழ் மொழி அழியாமல் பாதுகாக்கப்பட வேண்டுமானால், மொழியடிப்படையில் ஏற்படுத்தப்படும் ஒரு தனியாட்சி மூலம்தான் அடையலாம் என்று தமிழ் அரசுக் கட்சியினர் மேடைகளில் பேசினர். இதன் அடிப்படையில் தான் செல்வநாயகம், 'மொழியும் நாடும் , ஒன்று என்று விவாதித்தார்.
ஐந்தாவது தீர்மானம் அரசாங்கத்தின் குடியேற்றத் திட்டங் கள், தமிழ் மக்களின் அரசியல் நிலையையே பாதிக்கும் என்று கூறியது. ஒரு சமஷ்டி ஆட்சி மூலம்தான்தமிழ்பேசும் மக்கள் பூண் டோடு அழியாமல் காப்பாற்றப் படுவார்கள் என்று கூறியது.
ஆறாவது தீர்மானம், "சிங்களவரின் சிங்க இலச்சி னையைக் கொண்ட தேசியக் கொடியை நிராகரித்தது. தமிழ் மக்களின் இன்றைய இழிநிலையைக் காட்டும் ஒரு சின்னமான இது அமைகிறது. நவீன ஆட்சிமுறையின் தத்துவங் களை விளக்கிய இத்தீர்மானம், ‘இன அடிப்படையிலில் லாமல், உயர்ந்த குறிக்கோளின் அடிப்படையில், “தேசியக் கொடி அமைய வேண்டும் என்று கூறியது.
ஏழாவது தீர்மானம், "ஒர் இனம் இன்னோர் இனத்தை அடக்கியாழும் நிலையை ஏற்படுத்தும் நிலையை உருவாக் காமல், எல்லா இன மக்களும் சம அந்தஸ்துடன் வாழும் ஒரு நிலையை உருவாக்கும் தனியாட்சியை வலியுறுத்தியது. இத்தீர் மானம், தமிழ் பேசும் முஸ்லிம் மக்களுக்கும் உத்தரவாதம் அளிப்பதாக அமைந்தது. அத்தோடு, வேளாளர் சாதியைச் சாராத ஏனைய சாதிகளுக்குப் பாதுகாப்பு அளிப்பதாகவும் இத்தீர்மானம் அமைந்தது. இவ்வேழு தீர்மானங்களைக் கொண்ட அரசியல் திட்டத்தைத் தமிழ்மக்கள் அங்கீகரித்து, 1956ம் ஆண்டின் பொதுத் தேர்தலில், தமிழரசுக் கட்சிக்கு வெற்றியளித்தனர்.

Page 112
அ. முகம்மது சமீம் 196
ஆரம்ப கட்டத்தில் தமிழரசுக்கட்சி, வடக்கும், கிழக்கும்" ஒன்றிணைய வேண்டும் என்று கூறவில்லை. மாறாக மாவட்ட அடிப்படையில் 'சமஷ்டி ஆட்சியில், தமிழ் பேசும் மக்கள் சுயமாக இயங்கலாம் என்றே கூறியது. சுவிற்சர்லாந்து அரசியல் அமைப்பின் பிரகாரம், சுதந்திரமாக இயங்கும் மாவட்ட ஆட்சிமுறையையே அன்று தமிழரசுக் கட்சி விரும்பியது. அதாவது வட மாகாணம் ஒரு மாவட்டமாகவும், கிழக்கு மாகாணம் ஒரு மாவட்டமாகவும் சமஷ்டி ஆட்சியில், தனித் தனியாக இயங்குவதேயாகும். 1952ம் ஆண்டு பொதுத் தேர்தலிலும், 1956ம் ஆண்டு பொதுத் தேர்தலிலும், தமிழரசுக் கட்சி தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் இதையே குறிப்பிட்டது. 1956ம் ஆண்டில் அமுலுக்குக் கொண்டு வரப்பட்ட தனிச் சிங்கள மொழிச்சட்டத்தை எதிர்த்து, காலிமுகத் திடலில், சாத்வீக முறையில் சத்தியாக்கிரகம் நடத்திய தமிழரசுக்கட்சித் தலைவர் களின் மேல், சில சிங்கள அரசியல்வாதிகள், காடையர்களைக் கட்டவிழ்த்து விட்டபிறகுதான், தமிழரசுக் கட்சியினர், தமது இம்மாவட்டத் திட்டத்தைக் கைவிட்டு, 'வட-கிழக்கு மாகாணங்கள் ஒன்றிணைய வேண்டுமென்ற திட்டத்தை முன்வைத்தனர். பின்பு நடந்த பண்டாரநாயக்க - செல்வநாயகம் ஒப்பந்தத்தில் இதையே செல்வநாயகம் வலியுறுத்தினார். சுவிற்சர்லாந்து, "கென்டன் அமைப்பை யொட்டிய மாவட்ட அடிப்படையில் தமிழர்கள் இயங்கு வார்களேயானால், அது, தமிழர்களின் பிரிவினைக்கு மாத்திர மல்ல பிரதேச அடிப்படையில் குறுகிய மனப்பான்மை வளர் வதற்கும் காரணமாயமையலாம், என்ற உணர்வில் அவர் செயல்பட்டார். தமிழர்களுடைய தேசிய ஒற்றுமைக்கும் இது
பாதகமாயமையும் என்று உணர்ந்தார்."
தமிழரசுக்கட்சியினர், 'தனிச்சிங்கள அரசமொழிச் சட்டத்தை எதிர்த்த தோடு, அரசாங்கத்தின் சிங்களக் குடியேற்றத் திட்டங்களை மிகவும் வன்மையாக எதிர்த்தனர்.
* இலங்கை தமிழரசுக் கட்சியின் 25ம் ஆண்டு விழா மலர்

197 ஒரு சிறுபான்மை சமூகத்தின் பிரச்சினைகள் IV
1951ம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெற்ற தமிழரசுக் கட்சியின் ஆரம்ப விழாவில் பின்வரும் தீர்மானம் நிறைவேற்றப் பட்டது. 'தமிழ் பேசும் மக்கள் பூர்வீகமாக வாழ்ந்து வரும் நிலத்தில் தமது உரிமையை நிலைநாட்டுவதோடு, அரசாங்கத் தின் 'கல்ஒயா திட்டம் போன்ற நீர்ப்பாசன திட்டங்களின் மூலம், சிங்களக் குடியேற்றங்களை ஏற்படுத்துவதை தமிழரசுக் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது. அரசாங்கத்தின் இக் கொள்கை, தமிழ் பேசும் மக்களின் அடிப்படை உரிமைகளைப் பாதிப்பதோடு, தமிழ்த் தேசிய இனத்தை முற்றாக அழிக்கும் ஒரு திட்டமிட்ட கொள்கையாகும்'.
1956ம் ஆண்டு பொதுத் தேர்தலுக்குப் பிறகு, தமிழரசுக் கட்சி, புதிய ‘மக்கள் அரசாங்கத்தின் மொழிக் கொள்கை யையும், குடியேற்றத் திட்டங்களையும் வன்மையாகக் கண்டித்தது. தமிழரசுக்கட்சியின் நான்காவது ஆண்டு மகாநாடு, 1956ம் ஆண்டு ஆகஸ்ட் 16ம் திகதி நடந்த சமையத்தில் கட்சி பின்வரும் தீர்மானத்தை அம்மகாநாட்டில் நிறைவேற்றியது.
"1947ம் ஆண்டுக்குப் பிறகு, இந்நாட்டை ஆட்சி செய்த பெரும்பாலும் எல்லா அரசாங்கங்களும், பண்டைய காலந் தொட்டு தமிழ் பேசும் மக்கள் வாழ்ந்து வந்த தமிழ்ப் பிரதேசங் களில் சிங்களக் குடியேற்றங்களையேற்படுத்தி, தாம் மரபுவழி யாக வாழ்ந்துவந்த 'தாய்நாட்டிலேயே அவர்களை அடக்கி யாளும் இத்திட்டங்களை தமிழரசுக்கட்சி கண்டிக்கிறது'.
1957ம் ஆண்டு, ஜூலை 27ம் திகதி மட்டக்களப்பில் நடந்த விசேஷ மகாநாட்டில், பின்வரும் தீர்மானம் நிறைவேற்றப் பட்டது. 'வடக்கு, கிழக்கு மாகாணங்களில், அரசாங்க உதவியுடன் நடைபெறும் சிங்களக்குடியேற்றத் திட்டங்கள் உடனடியாக நிறுத்தப்படல் வேண்டும். '
தமிழ்ப் பிரதேசங்களில் ஏற்படுத்தப்பட்டு வரும் சிங்களக்
குடியேற்றத் திட்டங்களை நிறுத்தும் படி பல முறை, பல ஆண்டுகளாகத் தமிழர்கள் சிங்கள அரசாங்கங்களிடம்கேட்டும்,

Page 113
அ. முகம்மது சமீம் 198
அவர்களுடைய கோரிக்கைகளை நிராகரித்தது மட்டுமல்லா மல், தமிழர் சமூகத்தை வதை செய்தது. அவர்கள் தனிநாடு கேட்பதற்குத் தூண்டுகோலாயமைந்தது.
பண்டார நாயக்கா-செல்வநாயகம் ஒப்பந்தத்தில் இரு தலைவர்களும் இது பற்றி ஒரு சுமுகமான முடிவுக்கு வந்தனர். தமிழர்களுடைய குறைகளை நீக்கும் இவ்வொப்பந்தம், குறைப்பிரசவமாக, கர்ப்பத்திலேயே மடிந்ததற்குச் சிங்கள இனவெறியர்கள் தான் காரணம் என்பதை வரலாறு கூறும். இவ் வொப்பந்தம் அமுலுக்கு வராவிட்டாலும், இப்பிரச் சினையை சுமுகமான முறையில், தீர்த்துவைப்பதற்கு அரசாங் கத்தின் உடன்பாட்டைப் பெற்றதே, தமிழரசுக் கட்சி யடைந்த ஒரு பெருவெற்றியாகும். “பண்டாரநாயக்கா - செல்வநாயகம்" ஒப்பந்தத்தை பின்னர் விரிவாக ஆராய்வோம்.

199 ஒரு சிறுபான்மை சமூகத்தின் பிரச்சினைகள் IV 29. தமிழர்களின் மரபு வழிவந்த தாயகக் கோட்பாட்டு வாதமும்
பிரதிவாதமும்
தமிழரசுக்கட்சி, தனியாட்சி கோருவதற்கு, "மரபுவழி வந்த தமிழர்தாயகம் ' என்ற தத்துவத்தைத் தமிழ் மக்கள் முன்வைத்தபோது, சிங்களத் தலைவர்களை இக்கருத்து பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. சிங்களப் பேராசிரியர்களும், புத்திஜீவிகளும் இதை வன்மையாகக் கண்டித்தனர். இக்கருத்து, பிழையென்பதற்கு வரலாற்றிலிருந்து மேற்கோள்கள் காட்ட் முற்பட்டனர். 'பூர்வீக தமிழர் தாயகம்", என்ற கருத்தை யேற்றுக் கொண்டால், தமிழர்களுக்குத் தனியாட்சி வழங்க வேண்டிய நிர்ப்பந்தத்திற்குள்ளாக வேண்டிவரும் என்பதனால், தமிழர்களின் தனியாட்சிக் கொள்கையின் அடிப்படைத் தத்துவத்தையே உடைத்தெறிந்தால், தமிழர்களின் வாதம் பொய்யானது என்பதை முழு உலகத்திற்கே எடுத்துக் காட்ட லாம் என்பது இவர்களது நோக்கம். இக்கருத்தை வெளியிட்ட இரு புத்திஜீவிகளின் வாதப்பிரதி வாதங்களை ஆராய்வோம். ஒன்று காமினி ஈரிய கொல்ல எழுதிய 'தமிழர் தனிநாடு கோரும் உரிமை - உண்மையும், கற்பனையும் ' என்ற நூலையும், பேராசிரியர் கே. எம்.டி. சில்வா எழுதிய "சிறிலங்காவின் பிரிவினைத் தத்துவம்' - ஒரு வரலாற்று ஆய்வு', என்ற நூலையும் எமது விமர்சனத்திற்கு எடுத்துக் கொள்வோம்:
தமிழர்களின் 'தனிநாடு உரிமையைப் பின்வருமாறு விளக்கலாம். 1984ம் ஆண்டு, ஜூன் 30ம் திகதி, இலங்கை ஜனா திபதி ஜே.ஆர். ஜயவர்தனாவுக்கும், இந்தியப் பிரதமர் இந்திரா காந்திக்கு மிடையே நியூடெல்லியில் நடந்த சமாதானப் பேச்சு வார்த்தைகளின் போது, தமிழ்த் தலைவர்களால், இருவருக்கும் சமர்ப்பிக்கப்பட்ட மகஜரில் குறிப்பிடப்பட்ட சில கருத்துக் களைப் பின்வருமாறு ஈரிய கொல்ல விளக்கு கிறார்.

Page 114
அ.முகம்மது சமீம் 2OO
'வரலாற்றுக்கு முற்பட்ட காலந்தொட்டே, இலங்கைத் தீவில் தமிழர்களுக்கு, ஒரு சுதந்திர ஆட்சி இருந்தது. சிங்களவரின் வருகைக்கு பின்பும் தமிழ் மன்னர்கள் சிலர் இலங்கை முழுவதையும் ஆண்டிருக்கிறார்கள். சிங்களவரின் வருகைக்குப் பின், இலங்கையின் ஆயிரம் வருட வரலாற்றில், தமிழ் மன்னர்களும், சிங்கள மன்னர்களும் மாறி மாறி, இலங்கையை ஆண்டு வந்திருக்கிறார்கள். இந்தப் பின்னணி யில் தான், 'தமிழர் தாயகம்' என்று கூறும் பிரதேசத்தில் 13ம் நூற்றாண்டில் ஒரு தமிழர் அரசாங்கம் தோன்றியது. தமிழர் ஆட்சி, வடமேற்குப் பிரதேசத்திலுள்ள சிலாபம் முதல், வட மாகாண பிரதேசத்தையும் உள்ளடக்கி, தென்கிழக்குப் பிரதேசத்திலுள்ள 'யாலை வனவிலங்குப் பாதுகாக்குமிடத்தி லுள்ள கும்புக்கன் ஆறுவரையிலுள்ள பிரதேசத்தைக் கொண்ட தாக இருந்தது. "இலங்கையின் மூன்றிலொரு பங்கு- அதாவது, புத்தளம் மாவட்டத்தின் பாதியையும், வடமாகாணத்தையும், கிழக்கு மாகாணத்தையும் உள்ளடக்கிய- நிலப்பரப்பைக் கொண்ட பிரதேசத்தைத் தமிழர் ஆட்சி செய்தனர். இலங்கை யின் ஏனைய பாகம் சிங்களப்பிரதேசமாக இருந்தது. எனவே, 1948ம் ஆண்டுக்கு முன்னர் இலங்கை இரண்டு தேசங்களாகக் கணிக்கப்பட்டு வந்தது.'
16ம் நூற்றாண்டில் இலங்கைக் கடற்கரைப் பகுதியை ஆட்சி செய்த போர்த்துக்கேயர் 1619 ம் ஆண்டில் தமிழர் அரசாட்சியைக் கைப் பற்றினர். தமிழ் ஈழத்துடன் தமக்கு எவ்விதத் தொடர்பும் இல்லையென்ற காரணத்தினால், சிங்களமன்னரோ, சிங்கள மக்களோ, போர்த்துக்கீசருடைய படையெடுப்பை எதிர்த்துப் போராடிய தமிழ் மன்னன் சங்கி லிக்கு உதவ முன்வரவில்லை. இவ்வரலாற்றுண்மையைச் சிங்களவர் உறுதிப்படுத்த வேண்டுமென்று தமிழ் மக்கள் விரும்புகின்றனர். போர்த்துக்கீசருக்குப் பிறகு, சிலாபம் முதல், கும்புக்கன் ஒயா வரையுள்ள தமிழர் பிரதேசத்தை ஆண்ட ஒல்லாந்தரும், பிரித்தானியரும், 1833ம் ஆண்டு வரையில், இதை ஒரு தனிப்பிரதேசமாகவே ஆண்டுவந்தனர். அவ்வாண்

2O1 ஒரு சிறுபான்மை சமூகத்தின் பிரச்சினைகள் IV
டில், இலங்கையின் அரசியலமைப்பில் சீர்திருத்தம் கொண்டு வரும் நோக்குடன் இலங்கை வந்த "கோல்புரூக் - கெமரன்" ஆணைக்குழுவினர், மக்களின் உளப்பாங்கு, மரபு, வரலாறு, என்பவற்றை கருத்திற் கொள்ளாமல், இவைகளுக்கு நேர் மாறாக, தங்கள் வசதிக்குத் தகுந்தாற்போல், இவ்விரு தேசங்க ளையும், ஒரே நிர்வாகத்தின் கீழ் கொண்டுவந்தனர். இவ்விரு பிரதேசங்களையும், ஒன்றிணைத்ததுதான் இன்றைய இனப்பிரச் சினைக்கு அடிகோலியது. 1948ம் ஆண்டில் பிரித்தானிய அரசாங்கம் சிங்கள அரசுக்கு சுதந்திரம் வழங்கிய தோடு, தமிழர் அரசையும் ஆளும் பொறுப்பையும் அதற்கு வழங்கியது. ஏகாதிபத்திய வாதிகளைப்போல், சிங்கள அரசாங்கம் தமிழர் பிரதேசத்தை ஒரு “காலனியாக மாற்றியதுமல்லாமல், தமிழர்களை அடக்கி யாளவும் முற்பட்டனர். ஆகவே, தமிழர் தாம் இழந்த சுதந்திரத்தைத் திரும்புப் பெறுவதற்கு அவர்களுக்கு உரிமை இருக்கிறது. 1972ம் ஆண்டில் அமுலுக்குக் கொண்டு வரப்பட்ட அரசயாப்பின்படி, இங்கி லாந்து அரசாங்கத்திடம் இருந்த ஆட்சிப் பொறுப்பு துண்டிக்கப் பட்டதுடன், இலங்கை ஒரு குடியரசு நாடாகப் பிரகடனப் படுத்தப்பட்டதுடன் இப்புதிய ஆட்சி தமிழ் மக்களின் மேல் திணிக்கப்பட்டது. ஆகவே தமிழ் மக்கள், தாங்கள் இழந்த 'தமிழ் ஈழத்தைத் திரும்பப் பெறுவதற்கு எடுக்கும் எல்லா முயற்சிகளும் இயற்யைானதே, தமிழ் மக்களுடைய துன்பங் களுக்கெல்லாம் காரணம், 1948ம் ஆண்டில் இந்நாட்டில் ஏற்பட்ட சிங்கள ஏகாதிபத்திய ஆட்சியே.
தமிழ் மக்களுடைய துன்பங்களைப் பின்வருமாறு வகுக்கலாம்.
1. சிங்கள இனத்த வருக்கு ஆட்சிப் பொறுப்பு வழங்கப்பட்ட 6 மாதங்களிலேயே, இந்தியத் தமிழரின் பிரஜா உரிமை பறிக்கப்பட்டதோடு, அவர்களுடைய வாக்குரிமையும் கவரப்பட்டது.
2. தமிழ் மன்னர்களால் ஆட்சி செய்யப்பட்ட தமிழ்

Page 115
அ. முகம்மது சமீம் 2O2
இனத்தின் தேசத்தில் லட்சக்கணக்கான சிங்களவர் குடியேற்றப் பட்டனர்.
3. 1956ம் ஆண்டில் சிங்கள மொழி மாத்திரம் அரச மொழியாக்கப்பட்டது. 1972ம் ஆண்டில், அமுலுக்கு வந்த குடியரசு அரசயாப்பில், தனிச்சிங்களமொழி"ச் சட்டத்திற்கு அசரயாப்பு அந்தஸ்து கொடுக்கப்பட்டது.
4. பெளத்த சமயத்திற்கு அளவுக்கு மீறிய முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது.
5. பிரித்தானிய அரசாங்கம் நாட்டைவிட்டும் வெளியேறு வதற்கு முன், தமிழர்களின் கோரிக்கையான "சம பலப் பிரதி நிதித்துவம் நிராகரிக்கப்பட்டது.
6. 25 ஆண்டுகாலமாக, எஸ். ஜே. வி. செல்வநாயகம், 'தமிழரசுக் கட்சியின் மூலம், தமிழர்களது உரிமைகளை 'சமஷ்டி ஆட்சி' மூலம்தான் பாதுகாக்க முடியம் என்ற அவரது கோரிக்கையும் மறுக்கப்பட்டது. தமிழர்களுக்குப் பிரதேச சுதந்திரம் கிடைப்பதற்கு, அவர் சிறிலங்கா சுதந்திரக் கட்சியுடனும், ஐக்கிய தேசியக் கட்சியுடனும் செய்த ஒப்பந் தங்கள், சிங்கள எதிர்ப்புக்களினால் கிழித்தெறியப் பட்டன.
ஆகவே தமிழர்களை அடக்கியாளும் "சிங்கள ஏகாதிபத்தியத்தை ஒழிப்பதற்கு ஒரே வழி, எமது தாயகத்திலிருந்து வெளியேறு' என்பதே, பொத்துவிலிருந்து, புத்தளம் வரைப்படர்ந்த ஒரு சுதந்திர ஈழத்தை, சமாதானம் மூலமோ, அல்லது ஆயுதம்தாங்கியோ ஸ்தாப்பிக் கப்படல் வேண்டும்.
தமிழ்த் தலைவர்களால் இரு நாட்டுத் தலைவர்களுக்கும் சமர்ப்பிக்கப்பட்ட மகஜரில் மேற்கண்டவாறு கூறப்பட்டது. -இங்கிலாந்திலுள்ள தமிழர் நிலையத்தினால் வெளியிடப்பட்ட "இலங்கை வரைப்படம் இதனை நன்றாக விளக்குகின்றது.

2O3 ஒரு சிறுபான்மை சமூகத்தின் பிரச்சினைகள் IV
இலங்கை வரலாற்றைப் பற்றிய தமிழர்களின் விளக்கத்தைச் சிங்கள புத்திஜீவிகள் எதிர்த்தனர்.
பேராசிரியர் கே. எம். டி. சில்வா, “யாழ்ப்பாணக்குடா நாடு தமிழர்களின் தொன்று தொட்ட தாயகம் என்பதை மறுக்கவில்லை. 13ம் நூற்றாண்டிலிருந்து, 17ம் நூற்றாண்டு வரையில், யாழ்ப்பாணத்தில் ஒரு சுதந்திரத் தமிழர் ஆட்சி இருந்தது என்ற வரலாற்றுண்மையை அவர் ஏற்றுக் கொள்கிறார். இக்காலப்பகுதியில் இவ்வாட்சியின் அதிகாரம் உயர்ந்தும் தாழ்ந்தும் வந்திருக்கிறது. 14ம் நூற்றாண்டில் இவ்வாட்சியின் அதிகாரம் உயர்நிலையை அடைந்தது. 15ம் நூற்றாண்டில், இதன் வலிமை குன்றி, பல சகாப்தங்களாகக் கோட்டை மன்னனின் ஆட்சிக்குள் வந்தது. 'இவ்வாட்சியின் உச்சகட்டத்தில், இதன் செல்வாக்கு இன்றைய் வடமாகாணத் தையும் தாண்டி, சிங்களப் பிரதேசத்திலும் பரவியதென்றாலும், இது கொஞ்ச காலத்திற்குத் தான் நீடித்தது' என்று சில்வா கூறுகிறார்.
“சிறிலங்கா வரலாறு' என்ற நூலில் 13ம் நூற்றாண்டின் சம்பவங்களைக் கூறப்புகுந்த பேராசிரியர் கே. எம்.டி. சில்வா பின்வருமாறு கூறுகிறார். (பக்கம் 63)
"யாழ்ப்பாணக்குடா நாட்டில் குடியேறிய தமிழர்கள், யாழ்ப்பாணத்திற்கும் அநுராதபுரிக்குமிடையிலுள்ள வன்னிப் பிரதேசத்திலும் குடியேறினார்கள். இலங்கையின்மேல் படை யெடுத்து வந்த இந்தியப்படை வீரர்களில், சிலர், இந்தியா விற்குத் திரும்பிப் போகாமல், இப்பிரதேசத்திலேயே தங்கி விட்டார்கள். 13ம் நூற்றாண்டளவில், இவர்கள் இப்பிரதேசத் திலிருந்தும் பின்வாங்கி, யாழ்ப்பாணக்குடா நாட்டில், தமது முக்கிய குடியேற்றத்தை ஸ்தாபித்தனர். ஒரு சிலர் கிழக்குப் பிரதேசத்திலும் குடியேறினார்கள். 13ம் நூற்றாண்டில், யாழ்ப்பாணப் பிரதேசத்தில் ஒரு தமிழ் அரசு ஸ்தாபிக்கப் பட்டது.'

Page 116
அ. முகம்மது சமீம் 204
சிங்கள வரலாற்றாசிரியர்களில் ஒருவரான சி.ஆர். டி. சில்வா, 'இனம், ஒருதலைப்பட்சம், வரலாறு எழுதுதல்' என்ற தலைப்பில், 1984ம் ஆண்டில் ஆற்றிய 'ஜி. சி. மென்டிஸ் நினைவுச் சொற்பொழிவில், '13ம் நூற்றாண்டிலிருந்து 17ம் நூற்றாண்டு வரையிலான காலப்பகுதியில், கம்பளை, கோட்டை, சீத்தாவக்க, கண்டி போன்ற இடங்களைத் தலை நகரங்களாகக் கொண்டு இலங்கையை ஆட்சி செய்த சிங்கள மன்னர்களின், ஆட்சிக்கு யாழ்ப்பாண இராச்சியம் "சட்டப்படி? உட்பட்டதென்றாலும், பெரும்பாலும், இப்பிரதேச மன்னர்கள் சுதந்திரமாகவே இயங்கி வந்திருக்கிறார்கள். ஆரம்பகாலத்தில், இம் மன்னர்கள், தென்னிந்தியாவின் விஜய நகர சாம்ராஜ் ஜியத்தின், கீழுள்ள சிற்றரசர்களாகவே இருந்திருக்கிறார்கள், பின்னர் இவ்வரசர்கள், போர்த்துக்கல் அரசனைத் தமது சக்கரவர்த்தியாக ஏற்றுக் கொண்டார்கள்", என்று கூறுகிறார்.
சிங்க ள வரலாற்றாசிரியர்கள், தமிழர்கள் தமது தனி யாட்சி உரிமைக்காக முன்வைத்த வரலாற்றுச் சம்பவங் களை மறுதலித்து, அவர்கள் முன்வைக்கும் காரணங்களை அடுத்த அத்தியாயத்தில் ஆராய்வோம்.

2O5 ஒரு சிறுபான்மை சமூகத்தின் பிரச்சினைகள் IV
30. 'தமிழர் தாயகமும்', தனிநாடு"
கோரிக்கையும்
இன்றைய அரசியற் பிரச்சினைகளுக்கும், அரசியல் நோக்கங்களுக்கும், விடை காண்பதற்கு, வரலாறு பயன் படுத்தப் படுகிறது. இலங்கை நாட்டைப் பிரிக்க முடியாது. இலங்கை சமூகத்தில் தமிழர்கள் ஒர் அங்கம், இலங்கையை ஆட்சி புரிவதற்கு அதன் பெரும்பான்மை சமூகமான சிங்கள இனத்துக்கு உரிமை யிருக்கிறது, என்றும் சிங்கள புத்திஜீவி களும் வரலாற்றிலிருந்து மேற்கோள்களும், ஆதாரங்களும் காட்ட முனைகின்றனர். தமிழர்களின் தனிநாடு கோரிக்கைக்கு மரபு வழிவந்த தமிழர் தாயகம்", என்ற அடிப்படைத் தத்துவத்தைத் தமிழ்த்தலைவர்களும், தமிழரசுக் கட்சியும் தமிழர்கள் முன்வைத்தனர். பெரும்பான்மை அரசாங்கமான சிங்கள அரசாங்கத்திடம் தனியாட்சி கோருவதற்குத் தமிழ ரசுக் கட்சி இத் 'தமிழர் தாயகம்' என்ற தத்துவத்தையே அடிப்படை வாதமாக வைத்தது.
'தமிழீழம் என்ற கோஷத்தை, எழுப்பியவர்களில் முக்கியமானவர், முன்னாள் இலங்கை சர்வகலாசாலையின் கணிதப் பேராசிரியராகவும் ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத் தின் அமைச்சராகவும், பாராளுமன்ற அங்கத்தவராகவும், 'அடங்காத் தமிழன்' என்று தன்னைக் கூறிக்கொண்ட சி. சுந்தரலிங்கம் அவர்களே, 1957ம் ஆண்டு, மே மாதம் 28ம் திகதி, அன்றைய பிரதமராயிருந்த எஸ். டபிள்யு. ஆர். டி. பண்டாரநாயக்காவுக்கு எழுதிய கடிதத்தில், சுந்தரலிங்கம் பின்வருமாறு எழுதினார்.
'1505ம் ஆண்டு, போர்த்துக்கீசர் இலங்கைக்கு வருவதற்கு முன், இலங்கையின் இரண்டாயிரம் ஆண்டு வரலாற்றில், இலங்கை நாடு இரண்டு அல்லது அதற்கு
* (இலங்கை வரைப்படத்தை பார்க்கவும்)

Page 117
அ. முகம்மது சமீம் 2O6
மேற்பட்ட அரசுகளாக பிரிக்கப்பட்டிருந்ததையும், அவ்வரசுகளில் 'தமிழர் அரசு ஒன்றாக இருந்ததையும் நீங்கள் அறிவீர்கள். இவ்வரலாற்றில் ஒரு குறுகிய கால எல்லையில் - 22 ஆண்டுகள் முதலாம் பராக்கிரமபாகு காலத்திலும், ஆறாம் பராக்கிரமபாகு காலத்திலும் தமிழர் அரசு ஒடுங்கி யிருந்தது. தமிழர்கள் வேறு எந்தக் காலத்திலும் சிங்கள அரசர்களால் ஆட்சி செய்யப்படவில்லை. எல்லாளனை வென்ற துட்ட காமினியினால் கூட வடஇலங்கையைக் கைப்பற்ற முடிய வில்லை. ' (ஈழம்: சுதந்திரப்போராட்டத்தின் ஆரம்பகாலம், சி. சுந்தரலிங்கம், 1967) ஒரு வருடத்திற்குப் பிறகு 1958ம் ஆண்டு, மே மாதம் 13ம் திகதி 'என்னருமை தமிழ் சகோதரர் களுக்கு", என்று எழுதிய மடலில், சுந்தரலிங்கம் பின்வருமாறு கூறுகிறார்.
'1832ம் ஆண்டுக்கு முன்னர், இலங்கையின் 2400 வருட வரலாற்றில் இலங்கையின் ஒரு பாகம், தமிழர்களின் ஆட்சியின் கீழ் இருந்து வந்திருக்கிறது. 'தமிழ் மொழிதான் ஆட்சி மொழியாக இருந்தது. 1802ம் ஆண்டு இங்கிலாந்துக்கும், ஒல்லாந்துக்குமிடையே ஏற்பட்ட, ஏமியென்ஸ், உடன்படிக்கை சம்பந்தமாக, 1803ம் ஆண்டு, ஜனவரி மாதம் 1ம் திகதி, இங்கிலாந்தில் வெளியிடப் பட்ட இலங்கை நாட்டுப் படமும் அதனோடு இலங்கை கவர்னர் றொபர்ட் பிரெளன் றிக்கினதும், இலங்கையின் முதலாம் காலனித்துவ செயலாளர் கிளெக்கார் னினதும் அறிக்கையின்படி, இலங்கைத் தமிழர்களின் மரபு வழிவந்த தாயகம், சிலாபத்திலிருந்து, வடக்கிலும், கிழக் கிலும் இருக்கும் நிலப்பரப்பு- திருகோணமலை மாவட்டம், மட்டக்களப்பு மாவட்டம், உட்பட தெற்கிலுள்ள வளவை கங்கை வரைக்கும் பரந்து கிடக்கும் நிலப்பரப்பு என்பது ஊர்ஜிதமாகிவிட்டது. '" (ஆதாரம், 'ஈழம்: இலங்கையின் சுதந்திரப் போராட்டத்தின் ஆரம்பம்)
1959ம் ஆண்டு ஒக்டோபர் 2ம் திகதி, சுந்தரலிங்கம், தன்னுடைய பாராளுமன்றப் பதவியை இராஜினாமா செய்த

2O7 ஒரு சிறுபான்மை சமூகத்தின் பிரச்சினைகள் IV
போது வெளியிட்ட அறிக்கையில், தன்னுடைய கொள்கையை இன்னும் ஆணித்தரமாக வலியுறுத்தினார்.
'1802ம் ஆண்டு ஏமியென்ஸ் ஒப்பந்தப்படி ஒல்லாந்த அரசாங்கம், இலங்கையிலிருந்த தமது ஆட்சியின் கீழிருந்த பிரதேசங்களை பிரித்தானிய அரசாங்கத்திற்குக் கையளித்த சமயம், கண்டி மன்னனின் ஆட்சியின் கீழிருந்த பிரதேசத்தைக் குறிக்குமுகமாக இலங்கை வரைப்படமொன்று, இந்திய கமிஷனர்களின் பார்வைக்காக வெளியிடப்பட்டது. பிரித் தானிய கவர்னர்களினதும், செயலாளர்களினதும், அறிக்கை களை, இவ்வரைப்படத்தோடு சேர்த்துப் பார்க்கும் போது, பண்டைய காலந்தொட்டு இலங்கைத் தீவில், தனிப்பட்ட இரு தேசிய இனங்கள் வாழ்ந்து வந்திருக்கின்றன- தமிழர்களும், சிங்களவரும். சிலாபத்திலிருந்து வளவை ஆறுவரையிலுள்ள பிரதேசமாகிய பாரம்பரிய தமிழர் தாயகத்தில் தமிழர் குடியிருந்து வந்திருக்கிறார்கள்'. சுந்தரலிங்கம், தமிழர்களின் தனிநாடு 'தமிழீழம்' என்ற கருத்தைத் தனது நூலில் பின்வருமாறு கூறுகிறார்.
"போர்த்துக்கீசர் இலங்கைக்கு வந்த சமயத்தில், இலங்கைத் தீவில், தமிழர் அரசாங்கம் ஒன்று நிலை பெற்றிருந் தது. இரண்டாயிரம் வருடங்களாக, தமிழ் மன்னர் கள் தமிழர் களை ஆண்டு வந்திருக்கிறார்கள். முதலாம் பராக்கிரமபாகு வின் காலத்தில் பதினாறு வருடங்களும், ஆறாம் பராக்கிரம பாகுவின் காலத்தில் ஆறு வருடங்களுமே, தமிழர் கள் சிங்களவரின் ஆட்சியின் கீழிருந்தார்கள். 1597 ம் ஆண்டு கோட்டை இராச்சியம் போர்த்துக்கீசரின் கீழ் வந்தது. இருபது வருடங்களுக்குப்பிறகு, 1619 ம் ஆண்டில், யாழ்ப்பாண இராச்சியம் போர்த்துக்கீசரின் கீழ் வந்தது. கண்டி இராச்சியம் மாத்திரம், சுதந்திரமாக இயங்கியது'.
தனிப்பட்ட முறையில் சுந்தரலிங்கம் கொண்டிருந்த கருத்தை இலங்கைத் தமிழரசுக்கட்சி ஐம்பதுகளிலிருந்தே

Page 118
அ. முகம்மது சமீம் 2O8
கூறிவந்தது. தமிழரசுக்கட்சியின் 'தமிழர் தாயகம்' என்ற கொள்கை எப்படி படிப்படியாக வளர்ந்து, தனியாட்சி' யாக உருவெடுத்தது என்பதைக் கவனிப்போம்.
1951ம் ஆண்டு ஏப்ரல் மாதம், நடந்த தமிழரசுக்கட்சியின் ஆரம்பக் கூட்டத்தில் பின்வரும் தீர்மானம் நிறைவேற்றப் பட்டது 'பாரம்பரியமாக தமிழ்பேசும் மக்கள் எந்தப் பிரதேசத் தில் வாழ்ந்து வந்திருக்கிறார்களோ, அந்தப் பிரதேசத்தைத் தமதாக்கிக் கொள்ள அவர்களுக்குப் பூரண உரிமையிருக்கிறது.
'தமிழரசுக் கட்சியின் இம் முதலாவது மகாநாடு, அரசாங்கத்தின் கல்லோயா போன்ற நீர்ப்பாசன திட்டங்களின் மூலம், சிங்கள குடியேற்றத் திட்டங்களையும், தமிழ்ப் பிரதேசங்களில் சிங்கள மக்களைப் பலவந்தமாகக் குடியேற்று வதையும் வன்மையாகக் கண்டிக்கிறது. இச்செய்கை தமிழ் மக்களின் அடிப்படை உரிமைகளைப் பாதிப்பதோடு, தமிழ் பேசும் மக்களை அடியோடு அழிப்பதாகவே இருக்கும்.'
சுதந்திரத்திற்குப் பிறகு, சிங்கள-தமிழ் பிணக்கு ஏற்படுவத்ற்கு ஒரு முக்கிய காரணம் தான், அரசாங்கத்தின் சிங்களக் குடியேற்றத்திட்டங்கள். இத்திட்டங்கள் பெரும் பாலும், தமிழ்ப்பிரதேசங்களைச் சார்ந்ததாகவே இருந்தன. 1956ம் ஆண்டு பொதுத் தேர்தல் பிரச்சாரங்களிலும், இது வலியுறுத்தப்பட்டது. ’சிங்கள அரச மொழிப் பிரச்சினை யோடு, சிங்களக் குடியேற்றத்திட்டங்கள், தமிழ் அரசியல் மேடைகளில் பலத்த கண்டனத்திற்குள்ளாகின. 1956ம் ஆண்டு, ஆகஸ்ட் 19ம் திகதி, நடந்த தமிழரசுக் கட்சியின் நான்காவது மகாநாட்டில், இப்பிரச்சினை திரும்பவும் எழுப்பப்பட்டது.
'1947ம் ஆண்டுக்குப் பிறகு வந்த அரசாங்கங்களின் குடியேற்றத் திட்டக் கொள்கை, தமிழரின் பாரம்பரிய தாயகத் தில், சிங்கள மக்களைக் குடியேற்றுவதன் மூலம், தமிழ் பேசும் மக்கள் வாழும் பிரதேசத்திலேயே அவர்களைச் சிறுபான்மையினராக்கி, அவர்களை அடக்கியாளும் ஒரு

209 ஒரு சிறுபான்மை சமூகத்தின் பிரச்சினைகள் IV திட்டமாகும். ' ஒரு வருடத்திற்குப் பிறகு, 1957ம் ஆண்டு, ஜூலை 27ம் திகதி மட்டக்களப்பில் நடந்த தமிழரசுக் கட்சியின் மகாநாட்டில் பின்வரும் பிரேரணை நிறைவேற்றப்பட்டது.
'வட மாகாணத்திலும், கிழக்கு மாகாணத்திலும், அரசாங்கத்தின் உதவியோடு நடைபெறும் சிங்க ளக் குடி யேற்றத் திட்டங்கள் உடனடியாக நிறுத்தப்படல் வேண்டும்'
1956ம் ஆண்டில் நடைபெற்ற பொதுத்தேர்தலில், மக்கள் ஐக்கிய முன்னணியும், தமிழரசுக் கட்சியும் அமோக வெற் றியை ஈட்டின. இடதுசாரிக் கட்சிகளின் ஒத்துழைப் போடு, எஸ்.டபிள்யு. ஆர்.டி. பண்டாரநாயக்கா "மக்கள் அரசாங்கம் ஒன்றை ஸ்தாபித்தார். தமிழர் பிரச்சினைக்கு ஆதரவாகவிருந்த இடதுசாரிச் சக்திகளின் கூட்டுச் சேர்க்கையினால் ஏற்பட்ட அரசாங்கம் தமிழர் பிரச்சினையைச் சுமுகமாகத் தீர்க்க முற் பட்டது. இதன் காரணமாக பிரதமர் பண்டாரநாயக்காவுக் கும், தமிழரசுக் கட்சித் தலைவர் செல்வநாயகத்திற்கு மிடையில் ஒர் ஒப்பந்தம் ஏற்பட்டது. இவ்வொப்பந்தத்தில் சிங்களக் குடியேற்றத் திட்டங்கள் ஒரு முக்கிய பிரச்சினையாக எடுத்துக் கொள்ளப்பட்டது. அவ்வொப்பந்தத்தில், 'குடியேற்றத் திட்டங்கள், பிரதேச சபைகளின் "அதிகாரத்திற்குள் கொண்டு வரப்படல் வேண்டும் என்று ஒப்புக் கொள்ளப்பட்டது. காணி பங்கீட்டு முறையிலும், காணி வழங்குவதிலும் இத்திட்டங் களில் வேலை செய்வதற்கும் ஆட்களைத் தேர்ந்தெடுப்பதில் இப்பிரதேச சபைகளுக்குப் பூரண உரிமை வழங்கப்படும். இன்று கல்லோயாத் திட்டத்தையும் அப்பிரதேசத்தையும் நிர்வகிக்கும் சபை மறுபரிசீலனைக் குள்ளாக்கப்படும்.'
இவ்வொப் பந்தம், தமிழரசுக் கட்சித தலைவர் செல்வநாயகத்திற்கு ஒரு பெரும் வெற்றியாகும். குடியேற்றத் திட்டங்கள் அப் பிரதேச சபைகளின் அதிகாரத்திற் குள்ளாக்கப் படல் வேண்டும், என்று அரசாங்கம் ஏற்றுக் கொண்டது. 'தமிழர் தாயகம்' என்ற கொள்கையை ஏற்றுக் கொண்டதா

Page 119
அ.முகம்மது சமீம் 210
கவே அமைந்தது. தமிழரசுக் கட்சியும், ஏனைய தமிழ்த் தலைவர்களும், 'தமிழர் தாயகம்' என்று கூறும் போது, திட்டவட்டமாக அதன் எல்லைகள் எவையென்று கூறவில்லை. வடக்கு, கிழக்கு மாகாணங்கள் என்று பொதுவாகக் கூறினார்
d56T.
சந்தர்ப்பவசமாக, பேராதெனிய சர்வகலாசாலை, புவியியல் பேராசிரியர் கலாநிதி ஜி.எச்.பீரிஸ், 1954ம் ஆண்டு, "றோயல் ஏசியட்டிக் சொஸைட்டி (இலங்கைப் பிரிவு)க்குச் சமர்ப்பித்த ஒர் ஆய்வில் இலங்கையின் முதலாவது, காலனித் துவ செயலாளர் கிளெக்கோர்ன் எழுதிய அறிக்கையைச் சுட்டிக் காட்டினார். இவருடைய இந்த ஆய்வு தமிழரசுக் கட்சிக்கு அனுகூலமாயமைந்தது.
'ஒல்லாந்த அரசாங்கத்தின் நீதிபரிபாலனமும், வரி வருமானமும், என்ற தலைப்பில், இலங்கைக் கரையோர நிர்வாகத்தைக் கையேற்ற ஆங்கிலேய ஆட்சியாளருக்கு, முதல் காலனித்துவ செயலாளர் கிளெக்கோர்ன், 1799ம் ஆண்டு ஜூன் மாதம் முதலாம் திகதி ஓர் அறிக்கையைச் சமர்ப்பித்தார். இவருடைய அறிக்கை, 1855ம் ஆண்டில் வெளியான, "இலங்கை ஆண்டுக்குறிப்பும், ஆண்டு அட்டவணையும் என்ற ஆவணத்தில் வெளியிடப்பட்டது. 1954ம் ஆண்டில் கலாநிதி பீரிஸின் 'ஒல்லாந்த ஆட்சியில், இலங்கையின் நீதிபரிபாலன மும், வருமானமும் ' என்ற ஆய்வு பலருடைய கவனத்தை ஈர்த்தது. 'தமிழர் தாயகத்திற்கு ஆதாரம் தேடிக் கொண்டிருந்த தமிழ் அரசியல்வாதிகளுக்கு இவ்வாய்வு பெரும் சாதகமாக அமைந்தது.
கிளெக்கோர்னின் அறிக்கையில் பின்வரும் கருத்து வெளியிடப்பட்டது.
"பண்டைய காலந்தொட்டே, இரண்டு தேசிய இனங்கள்
இந்நாட்டைத் தம்மிடையே பிரித்து ஆட்சி செய்து வந்திருக் கிறார்கள். முதலாவது, இந்நாட்டின் உள்நாட்டிலும் வளவை

211 ஒரு சிறுபான்மை சமூகத்தின் பிரச்சினைகள் IV
நதியிலிருந்து தென் பிரதேசத்திலும் சிலாபம் வரையிலுள்ள மேற்குப் பிரதேசத்திலும் சிங்களவர் என்ற இனத்தவர் வாழ்ந்து வந்திருக்கிறார்கள். இவ்விரு இனத்தவரும், பழக்கவழக்கங் களாலும் மொழியாலும், சமயத்தாலும் வேறுபட்டிருக்கிறார் கள். இந்நாட்டில் முதலில் குடியேறிய சிங்கள இனத்தவர், தம்முடைய பூர்வீக நாடாகிய சயாம் தேசத்தின் மதத்தையே பின்பற்றிவருகிறார்கள். '
மேற்கூறப்பட்ட கிளக்கோர்னின் அறிக்கையையே தமிழ் அரசியல்வாதிகள் தங்கள் தமிழர் தாயகம்' என்ற கொள்கைக்கு ஆதாரமாகக் காட்டுகின்றனர்.
'தமிழர் தாயகம்' என்பது ஒரு கட்டுக்கதை. இதை ஆதாரமாகக் கொள்ளமுடியாது, என்று பேராசிரியர், கே.எம். டி. சில்வா போன்றோரும், காமினி ஈரிய கொல்ல போன்ற சட்டத்தரணிகளும் வாதிடுகின்றனர். இவர்களுடைய வாதங் களை அடுத்த அத்தியாயத்தில் ஆராய்வோம்.

Page 120
அ. முகம்மது சமீம் 212 31. தமிழர் விடுதலைக் கூட்டணியின் தனிநாடு கோரிக்கையும் அதற்கு எதிரான பிரதிவாதங்களும்,
தமிழரசுக் கட்சி, தனது கட்சிப் பெயரைத் தமிழர் விடுதலைக் கூட்டணி என்று மாற்றிக் கொண்ட பின்னர், 'தனிநாடு கோரிக்கையில் மிகவும் கண்டிப்பாக இருந்தது. 1976ம் ஆண்டு மே மாதம் 14ம் திகதி பன்னாகம் என்ற இடத்தில் கூடிய தமிழர் விடுதலைக் கூட்டணி ஒரு முக்கிய தீர்மானத்தை எடுத்தது. இத்தீர்மானம் 'வட்டுக்கோட்டை தீர்மானம் என்று பிரபல்யமடைந்தது. தமிழர்களது தனிநாடு கோரிக்கையும் 'தமிழீழம்' என்ற "சுதந்திரத் தமிழ்நாடு கொள்கையும், இத்தீர் மானத்தால் வலியுறுத்தப்பட்டது. பண்டைய காலத்தில் தமிழர் கள் தனியாட்சி செலுத்தினார்களென்றும், இந்தத் தனியாட்சி யின் மரபாகத் தோன்றியதுதான், தமிழர்களது இன்றைய சுதந்திரத் தேசியம் என்பதும் இதில் சுட்டிக் காட்டப் பட்டது.
வட்டுக் கோட்டை தீர்மானம் பின்வருமாறு கூறியது.
"சிங்கள இனத்தவர் தம்முடைய அரசியல் அதிகாரத்தை உபயோகித்துத் தமிழர்கள் தொன்று தொட்டு ஆட்சி செய்து வந்த பிரதேசத்தில், அரசாங்க உதவியுடன், சிங்களக் குடி யேற்றங்களை ஸ்தாபித்து, தமிழர் நாட்டில் ஊடுருவல் செய்து, தமிழர்களை அவர்களது தாயகத்திலேயே சிறுபான்மையின மாக மாற்றியிருக்கின்றனர். ' வட்டுக்கோட்டைத் தீர்மானம், கிளெக்கோர்ன்" என்பவரின் அறிக்கையை அடிப்படையாகக் கொண்டு, தமிழீழத்தின் எல்லைகள்ை விளக்கியது."
'வரலாறு காலம் முதற் கொண்டே, நூற்றாண்டு கால மாக, இலங்கை என்னும் இந்நாட்டை சிங்களவர், தமிழர் என்ற இரு தேசிய இனங்கள் தம்மிடையே பிரித்து ஆட்சி செய்து
* கிளக்கோர்னின் இலங்கை வரைப்படம்

213 ஒரு சிறுபான்மை சமூகததின் பிரச்சினைகள் IV
வந்திருக்கிறார்கள். சிங்கள இனத்தவர், இலங்கையின் உள்நாட்டுப் பிரதேசத்தையும், தெற்கிலுள்ள வளவை நதியி லிருந்து, மேற்குக் கரையோரம் சிலாபம் வரையிலுமுள்ள பிர தேசத்தை ஆண்ட காலத்தில், தமிழர்கள் வடக்கிலும், கிழக் கிலும் தமது ஆட்சியைச் செலுத்தி வந்திருக்கிறார்கள். ' 'எனவே தமிழீழம் வடமாகாணத்தையும், கிழக்கு மாகாணத் தையும் உட்கொண்டதாக இருக்கும். '
இத்தீர்மானம் எடுக்கப்பட்ட அடுத்த ஆண்டிலேயே இலங் கையின் பொதுத்தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தலில் போட் டியிட்ட தமிழர் விடுதலைக் கூட்டணி, தனது தேர்தல் விஞ்ஞா பனத்தில், தமிழீழக் கொள்கையைப் பின்வருமாறு விளக்கியது.
"கிறிஸ்து சகாப்தத்திற்கு முன்னரேயே, இத்தீவின் முழுமையையும் தமிழ் அரசர்கள் ஆண்டு வந்திருக்கிறார்கள். இப்பின்னணியிலிருந்து நாம் பார்க்கும் போது, இலங்கையை இவ்விரு இனத்தவரும், (சிங்களவரும், தமிழரும்) மாறி மாறி ஆட்சி செய்து வந்திருக்கிறார்கள் என்பது தெளிவாகிறது. பதின்மூன்றாம் நூற்றாண்டு ஆரம்ப காலத்தில் ஒரு நிரந்தரமான அரசியல் அமைப்பு உருவாகுவதை நாம் காண்கிறோம். சிலாபத்திலிருந்து ஆரம்பித்து, புத்தளம் ஊடாக மன்னார் வரையிலுமுள்ள மேற்குக் கரையோரத்தை உள்ளடக்கி, வட மாநிலத்தையும் கொண்டு, கிழக்கில், திருகோணமலை முதல் மட்டக்களப்புப் பிரதேசத்தையும் சேர்த்து, தெற்கில் 'கூமன' அல்லது ‘கும்புக்கன் நதி' யை எல்லையாகக் கொண்ட ஒரு தமி ழர் தாயகம் ஸ்தாபிக்கப்பட்டிருந்தது. தமிழீழத்தின் நிலப்பரப்பு இதுதான். '
1985ம் ஆண்டு டிசெம்பர் மாதம், இந்தியப் பிரதமர் ராஜிவ் காந்திக்குத் தமிழர் விடுதலைக் கூட்டணி சமர்ப்பித்த மகஜரில், 'தமிழர் தாயகத்தின் எல்லைகள் வரையறுக்கப் பட்டதோடு, சர். ஹியு கிளெக்கோர்ன், என்ற ஆங்கில அதிகாரி யின் அறிக்கையில் அடங்கியிருந்த தமிழ்ப் பிரதேசத்தைப் பற்றிய விவரமும், குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும்,

Page 121
அ. முகம்மது சமீம் - 214
இம்மகஜரில் அவர்கள், 'வடமாகாணமும், கிழக்கு மாகாண மும், பிரித்தானிய ஆட்சியார்களால் இரு நிர்வாகப் பிரதேசங்க ளாகப் பிரிக்கப்பட்டிருந்தது. அரசாங்க உத்தியோக நியமனங்க ளிலும், இவ்விரு மாகாணங்களும் ஒரு தனிப் பிரிவாகவே கணிக்கப்பட்டு வந்திருக்கிறது.'
'1972ம் ஆண்டிலும், 1978ம் ஆண்டிலும், ஏற்பட்ட இலங்கையின் யாப்பு அமைப்புகளிலும் கூட, மொழியடிப் படையில் இவ்விரு மாகாணங்களும் ஒரு தனிப்பிரிவாகவே கணிக்கப்பட்டு வந்திருக்கின்றன. அரசாங்க நிர்வாகத்திலும், உள்ளூர் ஆட்சி நிலயங்களின், வர்த்தக அலுவல்களிலும் நீதிமன்றங்களிலும், 'தமிழ் மொழி உபயோகிக்கப்படல் வேண்டும் என்று முடிவாகியது. இவ்விரு மாகாணங்களிலும் தமிழ் பேசும் மக்களே பெரும்பான்மையாக வாழ்கிறார்கள். வட மாகாணத்தில் 97% விகிதமானோரும், கிழக்கு மாகாணத் தில் 75% விகிதமானோரும், தமிழ்மொழியையே தமது தாய் மொழியாகப் பேணிவந்திருக்கிறார்கள். இவ்விரு மாகாணங் களையும் ஒன்றிணைத்துப்பார்த்தால், ஏறக்குறைய 86% சதவிகிதமானோர் தமிழ்பேசும் மக்களாகவே இருக்கிறார்கள். பல்வேறு மொழிகளைப் பேசும் இந்தியா எப்படி, மொழி அடிப்படையில் மாநிலங்களை ஏற்படுத்தித் தனது மொழிப் பிரச்சினையைத் தீர்த்ததோ, அதேபோல, இலங்கையிலும், வட மாகாணத்தையும், கிழக்கு மாகாணத் தையும் ஒன்றிணைத்து ஒரு தனிப்பிரதேசமாக அமைக்கப் படுதல் வேண்டும்.'
தமிழர் விடுதலைக் கூட்டணியினால், ராஜிவ்காந்திக்குச் சமர்ப்பிக்கப்பட்ட மகஜரின் முக்கிய அம்சம் இதுதான். இதே கொள்கையைத்தான், ஏனைய அரசியல் கட்சிகளும், தமிழ் ஈழ விடுதலைப் புலிகளும் கொண்டிருக்கின்றன.
தமிழர்களது அவ் விவாதம், வரலாற்றுண்மைக்குப் புறம்பானது என்பது, சிங்கள புத்திஜீவிகளின் கருத்தாகும். முக்கியமாக பேராசிரியர் கே. எம். டி. சில்வா, வரலாற்று மேற்கோள்களைக் காட்டி, தமிழர்களது இவ்வாதம், 'ஒரு

215 ஒரு சிறுபான்மை சமூகத்தின் பிரச்சினைகள் IV
கட்டுக்கதை' என்று சாடுகிறார். இனி அவருடைய கருத்துக் களைப் பார்ப்போம்.
'கிளெக்கார்ன்" என்பவர், ஆங்கிலேய- கிழக்கிந்திய கம்பெனியில் வேலை செய்த ஒருவர். ஏமியன்ஸ் ஒப்பந்தப் படி, டச்சுக்காரர்களின் ஆட்சியிலிருந்த இலங்கைப் பிரதேசங் களை, டச்சு கிழக்கிந்திய டச்சுக் கம்பெனியின் கீழ் இயங்கிய கர்னல் மியுறோனின் சுவிற்சர்லாந்தைச் சேர்ந்த கூலிப்படையை, ஆங்கிலக் கம்பெனிக்கு மாற்றியதிலும் முக்கிய பங்கெடுத் தவர், கிளெக்கார்ன். இவருடைய சேவைகளுக்கு, ஆங்கிலக் கம்பெனியிலிருந்து, ஆங்கில அரசாங்கத்திற்கு ஆட்சி மாற்றப் பட்டபோது, இவருக்கு முதலாம் காலனித்துவ செயலாளர் பதவி வழங்கப்பட்டது.
இவருடைய அறிக்கையில் கூறப்பட்டிருந்த கருத்துக் களை, வரலாற்று ஆதாரமாக அன்று யாரும் கவனித்ததாகத் தெரியவில்லை. கலாநிதி ரால்ப் பீரிஸினுடைய ஆய்வுக்குப் பின்தான், தமிழ் அரசியல்வாதிகள் இதனைத் தூக்கிப் பிடிக்கின் றனர். கிளெக்கார்ன் படித்தவர் என்றாலும், இலங்கையின் பூர்வீக வரலாற்றை அவர் அறிந்திருக்க நியாயமில்லை. அவர் இலங்கைக்கு இரு முறைதான் விஜயம் செய்திருக்கிறார். 1796ம் ஆண்டில் முதலாம் முறை இலங்கைக்கு வந்த அவர் ஆறுவாரங் கள்தான் இலங்கையில் இருந்தார். இரண்டாவது முறை 1798ம் ஆண்டில் வந்த அவர் பதினான்கு மாதங்கள்தான் இலங்கையில் தங்கியிருக்கிறார். 1799ம் ஆண்டு ஜூன் மாதம் 1ம் திகதியிடப் பட்ட அறிக்கை இரண்டாவது முறையாக இலங் கைக்கு வந்த சமயத்தில், எட்டு மாதங்களில் இந்த அறிக்கையை அவர் சமர்ப்பித்தார் என்றால் ஒரு பெரிய ஆய்வுக் குப்பின் அதை எழுதினார் என்று கூறமுடியாது.
இலங்கையின் முதல் தேசாதிபதியாக இருந்த கவர்னர் நோத், கிளெக்கார்னைப் பற்றி நல்ல அபிப்பிராயம் கொண் டிருக்கவில்லை.

Page 122
அ. முகம்மது சமீம் 216
'96 (1796)ல் நடந்த ஆட்சிமாற்றத்தில், தான் பொறுப் பாக இருந்த அந்த நாட்களில் நடந்த சம்பவங்களைப் பற்றி அவர் (கிளெக்கார்ன்) எழுதிய குறிப்புக்கள் முட்டாள்தன மானவை' என்று கவர்னர் நோத் கூறுகிறார்.
கிளெக் கார்னின் அறிக்கையைப் பற்றி ஆழமாக ஆராய்ந்த, பேராதெனிய நீதித்துறைப் பேராசிரியராக இருந்த ரி.நடராசா அவர்கள், கிளெக்கார்னின் அறிக்கையைப் பற்றிக் கூறும் போது, 'டச்சுக் காலத்திலும், பிரித்தானியருடைய ஆரம்ப காலத்திலும், இலங்கை மக்களின் வாழ்க்கையின் பல அம்சங்களைக் கூறும் ஆவணங்களில் இது முக்கியமான தொன்று. டச்சுக் காலத்தில் இருந்த நீதிபரிபாலனத்தைப் பற்றிய முழு விபரமும், இந்த அறிக்கையில் அடங்கியிருக் கிறது', என்று கூறினார்.
பேராசிரியர் நடராசா, கிளெக்கார்னின் அறிக்கையைப் பற்றிக் கூறும் போது, அதில் அடங்கியுள்ள இரு விதமான கருத்துக்களைப் பற்றிக் கூறுகிறார். அதோடு, அவை, கிளெக் கார்னின், சொந்த கருத்தல்ல என்றும் கூறுகிறார்.
பேராசிரியர் நடராசாவின் கருத்தை விமர்சித்த பேராசிரியர் கே. எம். டி. சில்வா, டச்சுக்காலத்தில் இருந்த 'டச்சுக் கிழக்கிந்திய கம்பெனியின் ஆவணங்களைத் தன்னு டைய அறிக்கைக்கு உபயோகித்த கிளெக் கார்ன், அன்று நிலவிய கருத்தைத் தான் தன்னுடைய அறிக்கையில் பிரதிபலித் தார் என்பதற்கு நடராசாவின் கருத்து நமக்குப் பயன்படுகிறது' என்று கூறுகிறார்.
"டச்சுக் கம்பெனியின் உத்தியோகத்தர்கள் எவ்வளவு தூரம் இலங்கையின் பண்டைய வரலாற்றைப் பற்றி அறிந்திருந் தார்கள் '? என்ற கேள்வியை அவர் எழுப்புகிறார். இக் கேள்விக்கு மறுமொழியாக அவர் பின்வரும் கருத்தைத் தெரிவிக்கிறார்.

27 ஒரு சிறுபான்மை சமூகத்தின் பிரச்சினைகள் IV
மேற்குக்கரையோரப் பிரதேசத்தை ஆட்சி செய்த டச்சுக் கம்பெனிக்காரர்கள், கிழக்குக் கரையோரப் பிரதேசம் கண்டி மன்னனின் ஆட்சிக்குட்பட்டது என்ற உண்மையை ஏற்றுக் கொண்டிருந்தனர். திருகோணமலை, மட்டக்களப்புத் துறை முகங்கள் கண்டி அரசனின் ஆட்சிக்கு விட்டுக் கொடுக்க டச்சுக் காரர்கள் மறுக்கவில்லை. ஆனால் 1766ம் ஆண்டில் கண்டி அரசனுக்கும், டச்சுக்காரர்களுக்குமிடையே நடந்த ஒப்பந் தத்தில் இலங்கையின் முழுக்கரையோரப் பிரதேசமும் டச்சுக் காரர்களின் ஆட்சிக்கு கட்டுப்பட்டது என்று கண்டி மன்னன் ஏற்றுக் கொண்டான்.
எனவே கிழக்குக் கரையோரப் பிரதேசம் முன்னர் கண்டி மன்னனின் ஆட்சிக்குட்பட்டதென்ற உண்மையை டச்சுக்காரர் கள் இவ்வொப்பந்தத்தின் மூலம் ஏற்றுக் கொண்டனர்.
கிளெக்கார்னின் முடிவுகள் பிழையானது என்பதைக் கூற முன்வந்த பேராசிரியர் சில்வா, கிளெக்கார்ன் அன்று பலரும் சிங்களவருடைய பூர்வீகத்தைப் பற்றிக் கொண்டிருந்த தப்பான அபிப்பிராயத்தையே பிரதிபலித்தார் என்கிறார். 1817ம் ஆண்டில் லண்டனில் வெளியான இலங்கையின் பொரு ளாதார, விவசாய அலுவல்கள் என்ற நூலை எழுதிய 'அந்தனி பர்ட்டல கூதி என்பவர், சிங்களவரின் பூர்வீகத்தைப் பற்றிக் கூறும் போது, 'இலங்கையின் முக்கிய இனத்தவர் சயாம் (தாய்லாந்து) தேசத்திலிருந்து வந்தவர்கள், இதுதான் இன்று அவர்கள் மத்தியில் இருக்கும் கருத்து. அவர்களுடைய மொழி யும் மதமும் (பெளத்த மதம்) சயாம் தேசத்தை ஒத்ததே ' என்று கூறுகிறார். அன்று மக்கள் மத்தியில் இக்கருத்துத்தான் இருந் தது என்று பேராசிரியர் றால்ப் பீரிஸ், தனது ஆய்வில் சுட்டிக் காட்டுகிறார்.
இக்கருத்து எவ்வளவு தூரம் தவறானது என்று பேராசிரியர் கே.எம்.டி. சில்வா கூறுகிறார். இப்பிழையான கருத்து அன்று மக்கள் மத்தியில் நிலவியது என்பதற்கு இன்னொரு உதாரணத்தைப் பேராசிரியர் எடுத்துக் காட்டு

Page 123
அ. முகம்மது சமீம் 218 கிறார். 1823 ம் ஆண்டு இலங்கையில் சிவில் அதிகாரியாக இருந்த தோமஸ் றால்ப் பெக்ஹவுஸ் என்பவர் ஒரு பிக்குவின் துணையுடன் அநுராதபுரிக்குச் சென்றார். அங்கிருந்த போதி மரம், சயாம் தேசத்திலிருந்து கொண்டு வரப்பட்டது என்று பிக்கு தனக்குத் தெரிவித்ததாக அவ்வதிகாரி தன்னுடைய நூலில் எழுதியிருக்கிறார்.
இத்தவறான கருத்துக்குக் காரணம், பதினெட்டாம் நூற்றாண்டில் பெளத்த மதத்தைப் புதுப்பிக்கும் நோக்கத்துடன் அன்றைய கண்டி மன்னன், சயாம் நாட்டிலிருந்து பெளத்த பிக்குகளை வரவழைத்து, இலங்கை பெளத்த பிக்குகளின் சங்கத்திற்குப் புத்துயிர் அளித்தான். அதனாற்றான் இலங்கை யின் முக்கிய பிக்கு சங்கத்தினர் சயாம் நிக்காயவைச் சேர்ந்த வர்கள் என்று கூறப்படுகிறது. டச்சுக் கம்பெனிக்காரர்கள், கண்டி அரசனுடைய ஒரு தூதுக் குழுவைத் தங்கள் கப்பலில் தாய்லாந்துக்கு ஏற்றிச் சென்று திருப்பிக் கொண்டு வந்தார்கள். இச்சம்பவத்தை வைத்துத்தான் அன்றைய டச்சுக் கம்பெனி உத் தியோகத்தர்கள், இலங்கையின் பெளத்த மதத்தினர் தாய்லாந் திலிருந்து வந்தனர் என்ற தவறான கருத்தை எழுதிவைத்தனர்.
இலங்கையில் ஒரு குறுகிய காலத்தையே கடத்திய கிளெக்கார்ன், இத்தவறான கருத்தையே பிரதிபலித்தார். எவ்வித வரலாற்று ஆய்வையும் மேற்கொள்ளாத அவருடைய கருத்துக்களைத் தமது 'தனிநாடு கோரிக்கைக்கு ஆதாரமாகக் கொள்வது எவ்வளவு தவறானது என்று பேராசிரியர் சில்வா கூறுகிறார்.
தமிழ் அரசியல் தலைவர்களினதும், தமிழர் விடுதலைக் கூட்டணியினதும், இலங்கை யைப் பற்றிய வரலாற்றுக் கருத்துக்கள் தவறானது என்று வரலாற்று ஆதாரங்களைக் காட்டி, தனது கருத்துக்களைப் பேராசிரியர் சில்வா முன்வைக் கிறார். இதனை அடுத்த அத்தியாயத்தில் ஆராய்வோம்.

219 ஒரு சிறுபான்மை சமூகத்தின் பிரச்சினைகள் IV
32. 'தமிழர் தாயகம் என்பது கட்டுக்கதை என்பது
சிங்கள அறிஞர்களின் கருத்து
'ஒரு வரலாற்றாசிரியன் தன்காலத்திய கருத்துக்களைக் கொண்டு பண்டைய வரலாற்றை விளக்க முற்படுகிறான். ஆனால் கட்டுக்கதையாளனோ, தன்னுடைய சமகாலத்தவ ருக்குப் பயன்படக் கூடிய வகையில், கட்டுக்கதைகளை வரலாறாக மாற்றுகிறான். இருவருக்குமிடையே உலகளவு வேறுபாடு இருக்கிறது. எனவே ஒரு வரலாற்றாசிரியன், வரலாற்றிலுள்ள தன்னுடைய தேர்ச்சியைக் கொண்டு, மக்கள் மனதிலுள்ள சந்தேகங்களை நிவர்த்தி செய்யுமுகமாக, வரலாற் றிலுள்ள தவறான கருத்துக்களையும், கட்டுக்கதை களையும், நிர்மூலமாக்கி, வரலாற்றுண்மைகளை நிலை நாட்டுவது அவனுடைய கடமையாகும்', என்று லெனார்ட் தொம்சன் தன்னுடைய 'இன ஒதுக்கீட்டுக்கான அரசியல் கட்டுக்கதை' என்ற நூலில் கூறுகிறார்.
தமிழ் அரசியல் வாதிகளது வரலாற்றுச் சான்றுகள் வெறும் கட்டுக்கதை என்று கூற முன் வந்த பேராசிரியர் கே. எம். டி. சில்வா, தன்னுடைய வாதத்திற்கு மேலும் சில வரலாற்றுச் சான்றுகளை முன்வைக்கிறார்.
'வட மாகாணத்தையும், கிழக்கு மாகாணத்தையும், பிரித்தானிய ஆட்சியாளர்கள் தனித்தனியாகப் பிரித்ததற்குக் காரணம், தமிழர்களது பூர்வீக வரலாற்றையும் அவர்களுடைய தாய்மொழியையும் தனிப்பண்பாட்டையும் கொண்ட காரணத் தினாலேயே' என்ற தமிழ் அரசியல்வாதிகளின் வாதம், தவறானது என்று பேராசிரியர் கே. எம்.டி. சில்வா கூறுகிறார்.
இலங்கையின் கடற்கரைப் பிரதேசத்தைக் கைப்பற்றிய பிரித்தானிய ஆட்சியாளர்கள், தங்களுடைய நிர்வாக வசதிக்

Page 124
அ.முகம்மது சமீம் 220
காக இப்பிரதேசத்தை 13 பிரிவுகளாகப் பிரித்தனர். பிறகு இவைகளை 6 ஆகவும், 8 ஆகவும் பிரித்தனர். இப்பிரிவுகளை “ஏஜென்சிகள் என்றும், பின்னர் "கலெக்டரேட்டுகள்' என்றும் அழைத்தனர். 1815ம் ஆண்டில் கண்டி இராச்சியத்தைக் கைப்பற்றியபோது, கண்டி ஆட்சியில் இரண்டு விதமான நிர்வாகப் பிரிவுகளைக் கண்டனர். ஒன்று 'ரட்ட' என்றும் மற்றது "திசாவனி என்றும் இருந்தது. தலைநகருக்கு அருகிலுள்ள நிர்வாகப் பிரிவுகள் 9 ரட்டகளாகவும், தலை நகருக்குத் தூர இருந்த பாரிய நிர்வாகப் பிரிவுகள் 12 திசாவனி களாகவும் இருந்தன. 1833ம் ஆண்டு வரையிலும், இப்பிரிவுகள் எவ்வித மாற்றமுமில்லாமல் அப்படியே நிர்வகிக்கப்பட்டன. இலங்கையின் கரையோரப் பகுதியையும், கண்டிப் பிரதேசத் தையும் ஒருங்கிணைக்க வந்த "கோல் புரூக் - கெமரோன்" குழுவினர், இலங்கையை 5 நிர்வாகப் பிரிவுகளாகப் பிரித்தனர். மேற்கு, மத்திய, தெற்கு, வடக்கு, கிழக்கு என்று பிரித்தனர். கண்டி ஆட்சிக்குட்பட்ட சில பிரதேசங்களைக் கரையோரப் பிரதேசங்களுடன் சேர்த்தனர். 1818ம் ஆண்டில் ஏற்பட்ட கண்டி மக்களின் கிளர்ச்சியின் பின்னர், அவர்களுடைய தேசிய ஆட்சிக்குட்பட்டிருந்த நுவரகலாவிய என்ற அனுராதபுரப் பிரதேசம் யாழ்ப்பாணத்துடனும், மன்னாருடனும், முல்லைத் தீவினுடனும் சேர்க்கப்பட்டு யாழ்ப்பாண நகரத்தை நிர்வாகத் தலைநகராகக் கொண்ட வட மாகாணமாக ', அமைக்கப் பட்டது, அதேபோல, கண்டி இராச்சியத்தின் தம்மான்கடுவ" என்ற பிரதேசம், திருகோணமலையுடனும், மட்டக்களப்பு டனும் சேர்த்துக்கிழக்கு மாகாணமாக அமைக்கப்பட்டது.
வடமாகாணமும், கிழக்கு மாகாணமும், 1832ம் ஆண்டில் ஆங்கிலேயர்களால் உருவாக்கப்பட்ட புதிய நிர்வாகப் பிரிவு களேயன்றி கிளெக்கார்னின் அறிக்கையிலுள்ள கரையோ ரப் பிரதேசங்களல்ல. இலங்கை நிர்வாகப் பிரிவுகளை மாற்றி யமைப்பதில், கோல்புரூக் குழுவின் முக்கிய நோக்கம், கண்டி மக்களின் தேசிய உணர்வை முற்றாக அழிப்பதோடு, இனி மேலும், அவர்கள், பிரித்தானிய அரசாங்கத்திற்குத் தொந்தரவு

221 G? (Th சிறுபான்மை B (LyndhöÉS GÖT IS ITëé GD) GOTE, GIT IV
கொடுக்காமலிருப்பதேயாகும். 1845ம் ஆண்டில் வட-மேல் மாகாணம் என்று ஒரு புதிய நிர்வாகப் பிரிவை ஏற்படுத்தி யதற்கு 'சந்தர்ப்பத்திற்கேற்றவாறு, அரசியல் காரணங்களுக் காக, பழைய கண்டி இராச்சியத்தின் மாகாணப் பிரிவுகளை வெவ்வேறாகப் பிரிப்பதன் மூலம் கண்டி மக்களின் ஒற்று மையை குலைப்பதாகும்' என்று காரணம் கூறப்பட்டது. (1852, இங்கிலாந்து பாராளுமன்ற ஆவணம் XXVI) ஆகவே பிரித்தானிய ஆட்சியாளர்களின் முக்கிய நோக்கம், கண்டி மக்களின் சுதந்திர உணர்வை அடக்கி, ஏனைய இனங்களுக்குச் சலுகைகளை வழங்கி, தங்களுடைய ஆட்சியை ஸ்திரப்படுத்து த லேயாகும்.
1848ம் ஆண்டில் பிரித்தானிய ஆட்சிக்கு எதிராக எழுந்த 'கண்டி மக்களின் புரட்சி ஆட்சியாளர்களின் தவறான கொள்கையை எடுத்துக்காட்டியது. 'கண்டிப் பிரதேசத்தைக் கரையோரப் பிரதேசத்துடன் சேர்ப்பதன் மூலம் கண்டி மக்களின் தேசிய உணர்வை ஒழிக்கலாம், என்ற கொள்கையின் தவறை உணர்ந்த பிரித்தானிய ஆட்சியாளர்கள், அனுராத புரியைத் தலைநகராகக் கொண்டு வட-மத்திய மாகாணத்தை உருவாக்கினார்கள். யாழ்ப்பாணத்திலிருந்து, கண்டிமக்களை நிர்வகிக்கும் தவறை உணர்ந்தார்கள். எனவே, 1886ம் ஆண் டில், கிழக்கு மாகாணத்துடன் இணைக்கப் பட்டிருந்த பிர தேசத்தை வேறாக்கி, ‘ஊவாமாகாணத்தையும் 1889ம் ஆண்டில் "சபரகமுவ என்ற ஒரு புதிய மாகாணத்தையும் ஆட்சியாளர்கள் உருவாக்கினார்கள். பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் முன்னைய கண்டி இராச்சியத்தில் அதிகாரம் செலுத்தி வந்த கண்டி பிரபுத்துவக் குடும்பங்களினால் தமது ஆட்சிக்கு இருந்த அபாயம் நீங்கியது என்பதை பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் உணர்ந்தார்கள். அதனாற்றான் இந்தப் புதிய நிர்வாகப் பிரிவுகளை ஏற்படுத்தினார்கள். 'பிரித்தானிய ஆட்சியாளர்கள் தங்களுடைய நிர்வாகத்தின் வசதிக்காகவே, மாகாணங்களை அமைத்தார்களேயொழிய, தமிழர் விடுதலைக் கூட்டணி 1985ம் ஆண்டு டிசெம்பர் 1ம் திகதி, ராஜிவ்காந்திக்கு சமர்ப்பித்த

Page 125
அ. முகம்மது சமீம் 222
மகஜரில் 'தமிழ் பேசும் மக்களுடைய பிரதேசத்தைத் தமிழர்பிரதேசமாகப் பிரித்தானியர்கள் ஏற்றுக் கொண்டார்கள் என்ற கூற்று வரலாற்றுக்குப் புறம்பானது' என்று பேராசிரியர் கே. எம்.டி. சில்வா கூறுகிறார். மேலும் அவர், "போர்த்துக் கேயர் யாழப்பாண இராச்சியததைக் கைப்பற்றிய நேரத்திலும், ஒல்லாந்தர் யாழ்ப்பாணப் பிரதேசத்தை ஆட்சி செய்த காலத்திலும் இருந்ததைவிட 'வடமாகாணம்' நிலப்பரப்பில் கூடியதாகவே இருந்தது. இவர்கள் இப்படி நிர்வாகப் பிரதேசங்களை அமைத்தது தங்கள் நிர்வாக வசதிக்காக வேயன்றி அரசியல் காரணத்திற்காகவோ அல்லது ஒர் இனத் தின் தனித்துவத்தைக் காப்பாற்றுவதற்காகவோ அல்ல' என்று அவர் கூறுகிறார்.
"தமிழர் தாயகம்' என்பது வரலாற்றுக்கு முரணான ஒரு கருத்து என்று கூறப்புகுந்த பேராசிரியர் கே. எம்.டி. சில்வா தன்னுடைய கருத்தை நிரூபிப்பதற்கு யாழ்ப்பாணத்து "சர்வ கலாசாலை வரலாற்றுத் துறைப் பேராசிரியர் கலாநிதி இந்திர பாலாவின் ஆய்வை மேற்கோள்காட்டுகிறார். யாழ்ப்பாணத்து வரலாற்றை ஆராய்வதற்குத் தகுந்த வரலாற்று ஆதாரங்கள் இல்லாதது ஒரு காரணம். இதனால் யாழப்பாணத்து மக்களின் வரலாற்றை ஆதார பூர்வமாக எழுதுவது சாத்தியமில்லை. யாழ்ப்பாணத்து வரலாற்றைப் பற்றி இன்று கிடைக்கும் காலக் கோவைகள், பதின்மூன்றாம் நூற்றாண்டில் நிலை பெற்றிருந்த தமிழர் இராச்சியத்திற்கு, முன்னூறு வருடங்க ளுக்குப் பிறகு எழுதப்பட்டவையே' என்று கூறுகிறார் கலாநிதி இந்திரபாலா, மேலும் அவர், 'பதின்மூன்றாம் நூற்றாண்டுக்கு முற்பட்ட காலம் பற்றிய குறிப்புகள் அதாவது, தமிழர்களின் ஆரம்ப குடிய்ேற்றங்கள், பற்றிய செய்திகள், பெரும்பாலும், நம்ப முடியாத கட்டுக்கதைகள், இலங்கைத் தமிழர்களைப் பற்றிய தென்னிந்திய நூல்களிலுள்ள செய்திகள், குறிப்பிட்டுக் கூற முடியாதவை. ஆகவே எமக்குக் கிடைத்திருக்கும் இந்த பற்றாக்குறையான ஆதாரங்களைக் கொண்டு, கி.பி. முதல் ஆயிரம் ஆண்டு காலப்பகுதியில், தமிழர் வர்த்தகக் குடியேற்

223 ஒரு சிறுபான்மை சமூகத்தின் பிரச்சினைகள் IV றங்கள் நிரந்தரமாக இருந்தன என்று கூறுவது, முடியாத காரியம்' என்று கூறும் இந்திரபாலா, மேலும் 'பத்தாம் நூற்றாண்டுக்கு முற்பட்ட காலத்தில், தமிழர் குடி யேற்றங்கள் இருந்ததற்குச் சரித்திர சான்றுகள் குறைவாகவே இருக்கின்றன. பதினோராம் நூற்றாண்டில் இக் குற்றங்கள் பரவலாக இருந்தன. இக்குடியேற்றங்கள் பெரும்பாலும் யாழப்பாண மாவட்டத்திற்கு வெளியே இருந்தன. இன்றைய தமிழர் வாழும் பிரதேசத்தில், பதினோராம் பன்னிரண்டாம் நூற்றாண்டுகளில், கிழக்கு மாகாணத்தின் வட பகுதியிலும், மேற்குக் கரையோரப் பகுதிகளிலும், தமிழ் குடியேற்றங்கள் இருந்திருக்கின்றன. வடமாகாணம், பிரத்தியேக தமிழ்ப் பிரதேசமாக மாறுவதற்குத் தமிழ் குடியேற்றங்கள், பன்னிரண் டாம் நூற்றாண்டில்கூட, பரவலாக இருந்தன என்று கூறமுடி யாது. பதின்மூன்றாம் நூற்றாண்டில் நடைபெற்ற கலிங்க மன்னன் 'மாக வினது படையெடுப்புக்கு முன்னர், இந்நாடு, மொழியடிப்படையில் இரு பிரிவுகளாகக் கணிப்பதற்குத் தமிழ் குடியேற்றங்கள் பரந்துபட்டிருந்தன என்று கூறுவதே சந்தேக மானது. தமிழர் குடியேற்றங்களில் இரண்டாவதும் முக்கிய மானதுமான கட்டம் பதின்மூன்றாம் நூற்றாண்டி லேயே நடைபெறுகிறது' என்று கூறுகிறார். (டாக்டர் இந்திரபாலா வின், 'இலங்கையின் திராவிட குடியேற்றங்கள்-யாழ்ப்பாண இராச்சியத்தின் ஆரம்ப காலம் - கலாநிதிபட்டத்திற்கான ஆய்வு. 1969ம் ஆண்டு, மே மாதம் 1ம் திகதி, றோயல் ஏசியட் டிக் சொஸைட்டி (இலங்கைக் கிளை) சஞ்சிகையில் வெளியான, "இலங்கையின் ஆரம்பகால தமிழர் குடியேற்றங்கள்)
பதின்மூன்றாம் நூற்றாண்டில் தமிழர் இராச்சியம் ஸ்தா பிக்கப்பட்ட காலம் வரையிலான தமிழர் வரலாறு பற்றிய இந்திரபாலாவின் ஆய்வை அறிந்தோம். பதினான்காம் நூற் றாண்டின் பிற்பகுதியில், சிங்கள ஆட்சியின் பலம் குன்றத் தொடங்கியது. இக்கால கட்டத்தில், முன்னர் சிங்களவரின் ஆட்சிக்குட்பட்ட பிரதேசங்களான, தென்மேற்குக் கரையோரப்

Page 126
அ. முகம்மது சமீம் 224
பிரதேசங்களிலிருந்தும், மத்திய பிரதேசத்திலிருந்தும், தமிழர் இராச்சியம் வரிவசூலிக்கத் தொடங்கியது.
பதினான்காம் நூற்றாண்டில் மத்திய காலத்தில், யாழ்ப் பாணத்து இராச்சியம், புத்தளம் வரையிலுள்ள வடமேற்குக் கரையோரப் பகுதியில் தனது ஆதிக்கத்தை நிலைநாட்டியது. வடமேற்குக் கரையோரப் பகுதியின் மேல் தமிழருக்கிருந்த ஆதிக்கம் அதிக காலம் நீடிக்கவில்லை. காரணம், தென்னிந்தி யாவில் தனது ஆதிக்கத்தை நிலைநாட்டிய விஜயநகர சாம்ராஜ் யம், யாழ்ப்பாணத்துப் பிரதேசத்தையும் தனது ஆதிக்கத்துள் கொண்டுவர முனைந்ததால், யாழ்ப்பாண இராச்சியத்தின் மன்னன் தன் ஆட்சிக்கு எதிராகத் தென்னிந்தியாவிலிருந்தும் தோன்றிய இப்புதிய அபாயத்தை நேர்கொள்ளவும், யாழ்ப் பாண இராச்சியத்தைப் பாதுகாக்கவும், ஏனைய பிரதேசங்களி லிருந்து தனது படைகளை வாபஸ் வாங்கினான்.
வடமேற்குக் கரையோரத்திலிருந்த தமிழர் ஆதிக்கம் நீங்குவதற்கு சிங்கள மக்களின் அரசியல் பலம் கூடியது இன்னொரு காரணம். கோட்டை இராச்சியத்தை நிலைநாட்டிய ஆறாவது பராக்கிரம பாகு, இலங்கை வடபகுதியின் மேல் படையெடுத்த விஜயநகர படைகளை முறியடித்ததுடன், யாழ்ப்பாணத்தையும் கைப்பற்றி இருபது வருடங்களாகத் தனது ஆட்சியை யாழ்ப்பாணத்தில் நிலைநாட்டினான். ஆறாம் பராக்கிரமபாகுவிற்குப் பிறகு கோட்டை அரசகட்டில் ஏறிய அவனுடைய பின் சந்ததியினர், யாழ்ப்பாணத்தின் மேல் தமக்கிருந்த ஆட்சியை விட்டு விட்டுப் பின்வாங்கினர். ஆகவே, 15ம் நூற்றாண்டில், யாழ்ப்பாணத்து இராச்சியம் திரும்பவும் சுதந்திர ஆட்சியாகப் பரிணமித்தது. "சிங்கள மக்களிடையே பிரிவினை தோன்றி, கோட்டை இராச்சியம் என்றும், கண்டி இராச்சியம் என்றும் பிளவுபட்ட காரணத்தினால் யாழ்ப் பாணத்து இராச்சியம் தனது சுதந்திரத்தைக் காப்பாற்ற முடிந் தது. கோட்டை இராச்சியம் அந்நியர் ஆட்சியின் கீழ் வந்ததால் அடுத்த இரண்டு நூற்றாண்டுகளாக இலங்கையை ஆளும்

225 ஒரு சிறுபான்மை சமூகத்தின் பிரச்சினைகள் IV
உரிமை கண்டி மன்னனுக்கு உரித்தானது, என்று கே. எம். டி. சில்வா கூறுகிறார். அன்றைய காலகட்டத்தில், அரசியல் நிலையில்லாமை காரணமாக, அரசுகளின் பலம் கூடுவதையும், குறைவதையும் எல்லைகள் மாறுவதையும், தமது ஆட்சிக்குட்பட்ட பிரதேசங்கள் விரிவடைவதையும் சுருங்கு வதையும் நாம் காணலாம். அன்றைய இலங்கையிலிருந்த இராச் சியங்களில் யாழ்ப்பாணத்து இராச்சியம் தான் பலம் குன்றிய தாக இருந்தது. பதினாறாம் நூற்றாண்டுவரை யாழப்பாணத்துக் குடாநாட்டையும், மன்னார் பிரதேசத்தையும், ஆட்சி செய்த யாழ்ப்பாணத்து இராச்சியம், பதினேழாம் நூற்றாண்டின் முற்பகுதியில், போர்த்துக்கீசரின் ஆட்சியின் கீழ் வந்ததால் அன்றிலிருந்து யாழ்ப்பாணத்து மக்கள் தங்கள் சுதந்திரத்தை இழந்தனர்.
வன்னிப்பிரதேசத்தைப் பொறுத்த வரையில், பதின்மூன் றாம் நூற்றாண்டின் பொலன்னறுவை ஆட்சி வீழ்ந்த தன் பின், தம்முடைய ஆட்சி அனு போகத்தை யிழந்த சிங்கள பிரபுக் களும், கலிங்கமன்னன் மாகாவின் படையி லிருந்த தென்னிந் திய படைத்தளபதிகளும், இப்பிரதேசத்தைத் தம்மிடையே பங்கு போட்டுக் கொண்டார்கள். சிங்களப்பிரதேச எல்லையில் சிங்கள வன்னியார்களும் தமிழர் இராச்சிய எல்லையில் தமிழ் வன்னியர்களும் சுதந்திரமாக இயங்கினார்கள். தமிழ் வன்னியத் தலைவர்கள் காலத்துக் காலம் யாழ்ப்பாண மன்னனுக்குக் கப்பம் செலுத்தி வந்தார்கள்.
'ஆனால் எக்கால கட்டத்திலும், கிழக்குப் பிரதேசம் யாழ்ப்பாண ஆட்சிக்குட்பட்டிருந்த தென்று வரலாறு கூற வில்லை' என்று பேராசிரியர் சில்வா கூறுகிறார். கிழக்குப் பிர தேசத்தின் வரலாறுபற்றியும், இப்பிரதேசத்தின் தமிழ் குடியேற் றங்கள் பற்றியும் சிங்கள வரலாற்றாசிரியர்கள் என்ன கூறுகி றார்கள் என்பதை அடுத்த அத்தியாயத்தில் பார்ப்போம்.

Page 127
அ.முகம்மது சமீம் 226
33. "கிழக்கு மாகாணம் கண்டி மன்னர்களின் ஆட்சிக்குட்பட்டே வந்திருக்கிறது' என்பது சிங்கள வரலாற்றாசிரியர்களின் கருத்து
இலங்கையின் வரலாற்றில் கிழக்கு மாகாணம் முக்கிய இடத்தைப் பெற்றிருக்கவில்லை. காரணம், கிழக்குப் பிரதேசத் தின் கரையோரப் பகுதிக்கும், உள்நாட்டுப் பகுதிக்குமிடையில் பெரும் காடு இருந்த காரணத்தினால், இந்நாட்டை ஆண்டு வந்த சிங்கள இராச்சியங்களுக்கும், இக்கரையோரப் பிரதேசங் களுக்கும், அதிக தொடர்பு இருந்ததாகத் தெரியவில்லை. எல்லாளனை வெற்றி கொண்ட துட்ட காமினி 'றுஹானு' ரட்டவிலிருந்து, தீகவாப்பி ஊடாக, மகாவலிக் கங்கைக் கரையோரமாக வந்து, விஜித புர நகரக் கோட்டையை அடைந்தான் என்று மகாவம்சம் கூறுகிறது. இதில்கூட கிழக்குப் பிரதேசத்தைப் பற்றிய குறிப்பு இருக்கவில்லை. பொலன்னறு வையைத் தலைநகராகக் கொண்டு தமது ஆட்சியை நிலை நாட்டிய சோழர்கள், கிழக்குக் கரையோரப் பகுதியில், மகாவலி கங்கைக் கரையோரத்தில் 'வெருகலம் பதியையும், அதனருகிலுள்ள, 'முகத்துவாரத்தையும், தங்கள் கப்பல்கள் வந்து நங்கூரம் பாய்ச்சுவதற்கும், தங்கள் படைகளும் பொருட்க ளும் இறக்குவதற்கும், தங்குமிடங்களாகப் பாவித்தார்கள் என்ற குறிப்பைத் தவிர வேறெந்த குறிப்பும் இப்பிரதேசப் பற்றிப் பண்டைய வரலாற்றுக் கோவைகளில் நாம் காணமுடியாது. பதினாறாம் நூற்றாண்டில் கண்டி இராச்சியம் ஸ்தாபிக்கப்பட்ட பிறகு தான், இப் பிரதேசம் முக்கியத்துவம் பெறுகிறது. கிழக்குப் பிரதேசம் கண்டி இராச்சியத்தின் ஒர் அங்கமாகவே இருந்து வந்திருக்கிறது. "யாழ்ப்பாணத்து இராச்சியத்தின் கீழ் இப் பிரதேசம் எப்பொழுதுமே இருந்ததில்லை' யாழ்ப்பா ணத்து இராச்சியம் உச்ச நிலையை அடைந்தபோது கூட அதன் தெற்கு எல்லை திருகோணமலை வரைக்கும் மட்டும்தான்

227 ஒரு சிறுபான்மை சமூகத்தின் பிரச்சினைகள் IV இருந்தது. அதுவும் ஒரு குறுகிய காலம் மட்டும்தான்' என்று பேராசிரியர் சில்வா கூறுகிறார். பதின்மூன்றாம் நூற்றாண்டின் இறுதியில் திருகோணமலைப் பிரதேசம் ஒரு சிங்கள வன்னி யரின் அதிகாரத்திலிருந்ததாகவும், பதினான்காம் நூற்றாண் டில், வன்னியர் தலைவனின் ஆதிக்கத்திலிருந்ததாகவும் அவர் கூறுகிறார்.
கோட்டை இராச்சியத்தின் அரசன் ஆறாம் பராக்கிரம பாகு, யாழ்ப்பாணத்து இராச்சியத்தை வெற்றி கொண்ட பிறகு, கிழக்குக் கரையோரப் பிரதேசங்களில் அதிகாரம் செலுத்தி வந்த வன்னியத் தலைவர்கள், கோட்டை மன்னனின் ஆட்சியை ஏற்றுக் கொண்டார்கள். மேற்கு நாட்டவரின் வருகைக்குப் பிறகுதான், திருகோணமலையின் துறைமுகம் முக்கியத்துவம் பெறுகிறது. ஒல்லாந்தர் ஆங்கிலேய வர்த்தகக் கம்பெனிகளி னால் தம்முடைய ஆட்சிக்குப் பங்கம் ஏற்படலாம் என்று பயந்த போர்த்துக்கீசர், திருகோணமலைத் துறைமுகத்தின் பாதுகாப் பைப் பலப்படுத்த முற்பட்டனர். பதினாறாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில், இப்பிரதேசத்தில் போர்த்துக் கீசரின் நடமாட் டம் அதிகரித்தது. இதேபோன்று மட்டக்களப்பிலுள்ள புளியந் தீவுப் பிரதேசத்திலும் தமது ஆதிக்கத்தை நிலைநாட்ட முனைந்த GÕTIT.
'கோட்டை இராச்சிய மன்னன் தர்மபாலா, தன்னுடைய சக்கரவர்த்தியாகப் போர்த்துக்கீச மன்னனை ஏற்றுக் கொண்ட பிறகு, அவனுடைய இராச்சியத்தில் உரிமை கொண்டாடிய போர்த்துக்கீசர், 1597ம் ஆண்டு தர்மபாலா போர்த்துக்கீச மன்னனுக்குத் தனது இராச்சியத்தைத் தாரை வார்த்துக் கொடுத்தான்' என்பதைச் சுட்டிக் காட்டி கிழக்குப் பிரதேசமும் சட்டப்படித் தமது ஆட்சிக்குட்பட்டதென்று கூறினர். கிழக்குப் பிரதேசம், தமது ஆட்சிக் குட்பட்டதென்று இவர்கள் கூறினா லும், 'திருகோணமலை, மட்டக்களப்புக் கரையோரப் பகுதி களைத் தவிர, ஏனைய பிரதேசங்களில் இவர்களது ஆதிக்கம் நிலைபெறவில்லை. இவர்களை எதிர்க்க வன்னியர்களுக்குப்

Page 128
அ. முகம்மது சமீம் 228 போதிய பலம் இருக்கவில்லை. பதினாறாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் கண்டி இராச்சியம் ஸ்தாபிக்கப்பட்ட பின்னர், கண்டி மன்னர்கள், போர்த்துக்கீசரின் கிழக்குப் பிரதேச ஆட்சியை எதிர்க்க முற்பட்டனர். பதினேழாம் நூற்றாண்டில் கண்டி இராச்சியத்தை ஆண்ட இரண்டாவது, இராஜசிங்கன், ஒல்லாந்தரின் உதவியால், போர்த்துக்கீசரை இந்நாட்டை விட்டும் வெளியேற்றிய பிறகு, கண்டி மன்னர்கள், இப்பிர தேசத்தைத் தமது ஆட்சியின் கீழ் கொண்டுவந்தார்கள்' என்று பி.எ. றி. குணசிங்க, தனது "இலங்கைத் தமிழர்கள்" என்ற ஆய்வில் கூறுகிறார். கிழக்கு மாகாணம் என்றைக்குமே தமிழர் ஆட்சியின் கீழ் இருக்கவில்லை என்று கூற முன்வந்த பேரா சிரியர் சில்வா 'தமிழ்ப் பிரிவினை வாதிகள் இப்பிரதேசத் தைத் தமிழர்தாயகம்" என்று கூறுவதற்கு வரலாற்றில் எவ்வித சான்று மில்லை", என்று கூறுகிறார்.
மட்டக்களப்புக் கச்சேரியில் உத்தியோகத்தவராயிருந்த, எஸ்.ஒ. கனகரட்னம் என்பவர் எழுதிய "கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு மாவட்டத்தைப் பற்றிய ஒரு குறிப்பு", என்ற 1921ம் ஆண்டில் வெளியிடப்பட்ட நூலில் அவர் பின்வருமாறு கூறுகிறார்.
"புளியந்தீவு என்று பெயர் பெற்றிருந்த மட்டக்களப்பின் மேல் ஆதிக்கம் செலுத்திய கண்டி மன்னர்களின் ஆட்சியின் கீழிருந்த 'கண்டி மாகாணங்களின் ஒர் அங்கமாக இம்மாவட் டம் இருந்தது. இம்மாவட்டத்தின் வரலாற்றில் வருந்தத்தக்க அம்சம் என்னவென்றால், இதன் மேற்கிலும், தெற்கிலும் இருந்த சிங்களவரின் சனத்தொகை குறைந்ததே. ஒரு காலத்தில் மிகவும் செழிப்பாயிருந்த சிங்கள கிராமங்கள் இருந்த இடங் கள் இன்று வெறிச்சோடிப் போயிருக்கின்றன.'
கிழக்கு மாகாணம் கண்டி இராச்சிய மன்னனின் ஆட்சி
யின் கீழ் இருந்ததற்கு ஒல்லாந்துப் பாதிரியார் பிலிப்ஸ் பல் தெயஸ் எழுதிய "இலங்கை என்ற பெருந்தீவைப் பற்றிய

229 ஒரு சிறுபான்மை சமூகத்தின் பிரச்சினைகள் IV
உண்மையானதும், துல்லியதுமான விளக்கவுரை என்ற நூலையும் போர்த்துக்கீசியப் பாதிரியார் பர்னாவோ டி குவெய்ரோஸ், என்பவர் எழுதிய "லெளகீக ஆன்மீகத் துறை யில் இலங்கையை வெற்றி கொள்ளல் (The Temporal and Spiritual Conquest of Ceylon)" என்ற நூல்களையும் ஆதாரமாகக் கொள்ளலாம்.
கோட்டை இராச்சியத்தை ஆளும் உரிமையைப் பெற்றுக் கொண்ட போர்த்துக்கீசர் கண்டி இராச்சியமும் தமக்குரியது என்று கூறினர். 'கண்டி இராச்சியத்திற்குட்பட்ட பிரதேசங் களான, திருகோணமலை, கொட்டியார வளைகுடா, மட்டக் களப்பு, பானம, பின்தென்னை, யாழ்ப்பாணப் பட்டணம், ஆகி யன தமது ஆதிக்கத்திற்கு வரவேண்டிய பகுதிகள் என்று கூறி னார். 1672ம் ஆண்டு செனரத் மன்னன், தனக்குப் பிறகு மகன் குமாரசிங்க அஸ்தானவுக்கு அரசுரிமையை ஸ்திரப்படுத்து வதற்காகத் தனது ஆட்சியிலிருக்கும் பிரதேசங்களின் பிரதானி களையும் ஏனைய முக்கிய அரச உத்தியோகஸ்தர்களையும் அழைத்தான். இச்சபையில் கலந்து கொள்வதற்காக வந்தவர் களில், கொட்டியாரம், மட்டக்களப்பு, பானம, பாலுகாமம், ஆகிய கிழக்குப் பிராந்திய அரசத் தலைவர்களோடு யாழ்ப் பாணத்து அரசனின் பிரதிநிதியாக, "நாமக்கர் என்ற ஒருவரும் கலந்து கொண்டார், என்ற விவரத்தை பல்தேய சினுடைய நூலிலிருந்து அறிகிறோம். இவ்வரச உயர் சபையில் முடி வெடுத்த பிறகு, 'தன்னுடைய மகன் குமாரசிங்க அஸ்தானவை, எல்லா மக்களும், பிரதானிகளும், பிரதேச குறுநில மன்னர் களும், படைத்தளபதிகளும், மதத்தலைவர்களும் அரசனாக ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று தான் கட்டளையிடுவதாக! அரசகட்டளை பிறப்பிக்கப்பட்டது. பல்தேயசத்தின் இக்கூற்றை ஆதாரமாகக்காட்டி, சில சிங்கள புத்திஜீவிகள், யாழ்ப்பாண இராச்சியமும் கண்டிமன்னனின் ஆட்சியில் கீழ் வந்தது", என்று கூறுகிறார்கள்.
பல்தேயசும், டி குவெய்ரோசும், சிற்றரசர்கள் என்று

Page 129
அ. முகம்மது சமீம் 230
குறிப்பிட்டவர்கள் வன்னியர்களைத்தான். போர்த்துக்கீசரும், ஒல்லாந்தரும், திருகோணமலையில் தம் கோட்டையை அமைத் திருந்தார்கள் என்றாலும், கொட்டியார் விரிகுடா கண்டி அரசனின் ஆடசிக்குட்பட்டிருந்தது. இவ்விரிகுடாவில் வந்தி றங்கிய ஆங்கிலேய மாலுமியான றொபர்ட் நொக்ஸ் இவ்விடத் தில்தான், கண்டி மன்னன் இராஜசிங்கனுடைய ஆட்களால் கைதுசெய்யப்பட்டான்.
இலங்கையின் கரையோரப் பிரதேசம், போர்த்துக் கீசரினதும் ஒல்லாந்தரினதும், ஆங்கிலேயர்களினதும் ஆட்சிக் குட்பட்டிருந்த சமயம், கொட்டியார், மடடக்களப்பு புத்தளம், ஆகிய துறைமுகங்களே, கண்டி மன்னனினது, வெளிநாட்டுத் தொடர்புகளுக்கு உபயோகிக்கப்பட்டன. 1638ம் ஆண்டு கண்டி மன்னன் இரண்டாம் இராஜசிங்கனுடன் ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தத்தை மீறிய ஒல்லாந்தர் கண்டி மன்னனுக்குட்பட்டி ருந்த கிழக்குப் பிரதேசத்தைத் தம் வசம் ஆக்கிக் கொள்ள பிரயத்தனம் செய்தார்கள். இதுபற்றி, டிசெம்பர் 1663ம் ஆண்டு தன்னுடைய அறிக்கையில் குறிப்பிட்ட அன்றைய கவர்னர் றைக்ளொப் வான் கோயன்ஸ் பின்வருமாறு கூறுகிறார்.
'தென்மாகாணத்திலுள்ள வளவை ஆறிலிருந்து வட கிழக்கிலுள்ள திருகோணமலை வரையுமுள்ள கரையோரப் பிரதேசத்தில் கண்டி மன்னனுடைய பிரஜைகள் குடியிருப்பதால் என்னால் இப்பிரதேசத்திற்கு விஜயம் செய்ய முடியவில்லை'.
போர்த்துக்கீசரின் ஆட்சியில் பல இன்னல்களுக்குள்ளான மேற்குக் கரையோரப் பிரதேசத்தில் வாழ்ந்த முஸ்லிம்கள் கண்டி அரசன் செனரத்தினுடைய உதவியை நாடியபோது அவ்வரசன், 4000 முஸ்லிம்களை, தனது ஆட்சியின் கீழிருந்த கிழக்குப் பிரதேசத்தில் குடியேற்றினான் என்பது வரலாறு. மத்திய மாகாணத்திலும், வடமத்திய மாகாணத்திலும், அனு ராத புரிக்கு அருகாமையிலுள்ள வன்னிப் பிரதேசத்திலும், பொலன்னறுவையிலும் முஸ்லிம்கள், கண்டி மன்னர்களுடைய

23 ஒரு சிறுபான்மை சமூகத்தின் பிரச்சினைகள் IV
ஆட்சிக்காலத்தில் குடியேறினார்கள். இப் புராதன முஸ்லிம் கிராமங்களில் வாழ்ந்த முஸ்லிம்கள், பெரும்பாலும் விவசாயத் திலேயே ஈடுபட்டிருந்தார்கள். 1762ம் ஆண்டு, மதராசிலிருந்து கண்டி மன்னனிடம் தூதுவராக வந்த பைபஸ், கொட்டியார் துறைமுகத்தில் வந்திறங்கியபோது, மூதூரிலுள்ள கண்டி மன்னனின் அதிகாரிகள் அவரை வரவேற்று, திருகோணமலை, பொலன்னறுவை, மாத்தளை வழியாகக் கண்டி மன்னனின் இராஜசபைக்குக் கொண்டு சென்றார்கள். 'மூதூர் மாவட்டத் தில் 64 கிராமங்கள் இருக்கின்றன. இக்கிராமங்கள் 3 கிராமத் தலைவர்களின் நிர்வாகத்தில் இருக்கின்றன. இக்கிராமத் தலை வர்கள் கண்டி நகரில் வதியும், 'தளபதி'யின் (தளபதி என்று அவர் கூறியது, "திசாவை என்ற அதிகாரியைத்தான்) நிர்வாகத் தின் கீழ் வேலை செய்கிறார்கள்', என்று பைபாஸ், தன்னு டைய நாட்குறிப்பு ஏட்டில், எழுதிவைத்தார்:
1766ம் ஆண்டில் ஒல்லாந்தர் கவர்னர் 'பால்க் தன்னு டைய படைபலத்தின் உதவியுடன் கண்டி மன்னன் கீர்த்தி சிறி இராஜசிங்கனைப் பல வந்தப்படுத்தி, 'கண்டி மன்னனின் ஆட்சிக்குட்பட்டிருந்த கிழக்குக் கரையோரப் பிரதேசத்தில், கடலிலிருந்து 4 மைல் தூர அளவு பரப்புள்ள கரையோரப் பிரதேசம் ஒல்லாந்தருக்குக் கையளிக்கப்படல் வேண்டும்' என்று கண்டி மன்னனை ஒப்பந்தத்தில் கைச்சாத்திடச் செய் தான். எனவே கிழக்குக் கரையோரப் பிரதேசம் கண்டி மன்னர் களின் ஆட்சிக்குட்பட்டிருந்தது என்பது வரலாற் றுண்மை, என்பதை யாராலும் மறுக்கவோ, மறைக்கவோ முடியாது.
இதே கருத்தைத்தான், இலங்கையில் ஒல்லாந்தர் ஆட்சி" என்ற ஆய்வு நூலை எழுதிய பேராசிரியர் அரசரட்னமும் கூறுகிறார். 1635ம் ஆண்டுக்கும், 1687ம் ஆண்டுக்குமிடையில் ஆண்டகண்டி மன்னன் இரண்டாவது இராஜசிங்கனுடனும், 1687 ம் ஆண்டுக்கும், 1707 ம் ஆண்டுக்குமிடையில் ஆண்ட இரண்டாவது விமலதர்ம சூரியனுடனும், ஒல்லாந்தர் செய்து கொண்ட ஒப்பந்தத்தில், "போர்த்துக்கீசருடன் செய்த போரில்

Page 130
அ.முகம்மது சமீம் 232
ஏற்பட்ட செலவுத் தொகையைக் கண்டி மன்னன், கொடுக்கும் வரையில், கண்டி மன்னனின் பெயரில், கைப்பற்றிய போர்த் துக்கீசரின் ஆட்சிக்குட்பட்டிருந்த கரையோரப் பிரதேசங் களைத் தாம் வைத்திருப்பதாகக் கூறப்பட்டது', என்று பேரா சிரியர் அரசரட்னம் கூறுகிறார். அவர்கள் திருகோண மலைத் துறைமுகத்தையும், மட்டக்களப்பு கோட்டை அமைந் திருந்த புளியந்தீவையும் குறிப்பிடுகிறார்கள். (இலங்கை வரலாறுசமூகச் சஞ்சிகை - தொகுதி 6, நம்பர்1) எனவே கிழக்கு மாகாணம் சிங்களவரின் ஆட்சியில் இருந்தது என்பது கண்கூடு.

233 ஒரு சிறுபான்மை சமூகத்தின் பிரச்சினைகள் IV
34. வடக்கையும் கிழக்கையும் இணைக்கக்கூடாது' என்பதற்குச் சிங்கள புத்திஜீவிகள் கூறும்
காரணங்கள்
சிங்கள மத்தியதர வர்க்கத்தினரிடையே, முக்கியமாக, புத்திஜீவிகளின் மத்தியில், வடமாகாணமும், கிழக்கு மாகாண மும் ஒருங்கிணைக்கப்படல் வேண்டும்" என்ற தமிழ் அரசியற் கட்சிகளினதும், தமிழ் அரசியல்வாதிகளினதும் கோரிக்கை ஒரு பெரும் பிரச்சினையைக் கிளப்பியிருக்கிறது. தமிழர்களின் அரசியல் பொருளாதாரப் பலம் கூடி விடலாம் என்றும், இந்நாட்டின் கரையோரப் பிரதேசங்களில் மூன்றில் இரண்டு பங்கும், சன அமுக்கம் இல்லாத பெரும் நிலப்பரப்பும், புதிய குடியேற்றங்களை நிறுவுவதற்கும், விவசாயம் செய்வதற்கும் வேண்டிய ஆயிரமாயிரம் ஏக்கர் நிலங்களும், தமிழர்களின் சொத்தாகலாம் என்ற பயமும் இருப்பதை இவர்களுடைய பேச்சிலும், எழுத்திலும் இருப்பதை நாம் அவதானிக்கலாம்.
கிழக்கு மாகாணம் யாழ்ப்பாணத்துத் தமிழ் இராச்சியங் களுக்கு உட்பட்டிருக்கவில்லை, என்பது ஒரு முக்கிய காரண மாக சுட்டிக் காட்டப்படுகிறது. மேலும், இக்கிழக்குப் பிர தேசம் கண்டிச் சிங்களவரின் ஆட்சிக்குட் பட்டிருந்தது என்ற உண்மையும் வலியுறுத்தப்படுகிறது. இங்குள்ள சனத் தொகை யில், கணிசமான அளவு முஸ்லிம்களும், சிங்களவரும் இருக் கின்றனர் என்பதும் எடுத்துக்கூறப்படுகிறது.
'தமிழர் தாயகத்தில் சிங்களக் குடியேற்றங்களைப் பலவந்தமாக நிறுவும் அரசாங்கத்தின் கொள்கையை ஐம்பது களிலேயே எதிர்த்த தமிழரசுக் கட்சியினர் கல்-ஒயா நீர்ப் பாசனத்திட்டத்தை ஒர் உதாரணமாக எடுத்துக் காட்டுகிறார் கள்,' என்று பேராசிரியர் சில்வா கூறுகிறார். அவர் சி.டபிள்யு.
நிக்கலஸ் என்பவர் எழுதிய 'பண்டைய மத்தியகால இலங்கை

Page 131
அ. முகம்மது சமிம் 234 யைப் பற்றிய ஸ்தல வரலாறு' என்ற ஆய்வை மேற்கோள் காட்டி, 'இந்நீர்ப்பாசனத் திட்டம், "தீகவாப்பி-மண்டலம்", அல்லது "தீகவாப்பி - ரட்ட' என்று சிங்களவர் வாழ்ந்த பிரதேசத்தில்தான் அமுலாக்கப்பட்டிருக்கிறது", என்று கூறுகிறார். பொலன்னறுவையிலிருந்து ஆண்ட சிங்கள அரசர் களுக்குப் பிறகு, சுதந்திர இலங்கையில் அமுலாக்கப்பட்ட ஒரு பாரிய நீர்ப்பாசனத் திட்டம்தான் இந்த "கல்லோயா திடடம்.
பேராசிரியர் ஜெரால்டு பீரிஸின் "அரசாங்கத்தின் குடி யேற்றத் திட்டங்கள்எவ்வாறு திருகோணமலை மட்டக்களப்பு மாவட்டங்களின் சனத்தொகையைப் பாதித்தது' என்ற ஆய்வில் அவர் பின்வரும் முடிவுகளைக் கூறுகிறார்.
1. 'கல்லோயா நீர்ப்பாசனத் திட்டம் கிழக்கு மாகாண எல்லைக்குட்பட்டடிருந்தாலும், பூர்வீக சிங்கள கிராமங்கள் இருந்த பிரதேசத்தில்தான் -1921ம் ஆண்டு நடந்த சனத்தொகை கணக்கெடுப்பிலும் இது காட்டப்பட்டது - இத்திட்டம் அமு லாக்கப்பட்டது. பரம்பரை பரம்பரையாக இக்கிராமங் களில் வசித்துவந்த இச்சிங்கள மக்கள், யுத்தத்தினாலும் படை யெடுப்புக்களினாலும், வறுமையினாலும், பெருவாரி நோயி னாலும் பாதிக்கப்பட்டு, வறட்சி, வெள்ளம், சூறாவளி போன்ற இயற்கையின் கொடுரங்களுக்கு ஆளாகி, வந்த இம்மக்களுக்கு இந்நீர்ப் பாசனத்திட்டம் ஒரு விடிவெள்ளியாக அமைந்தது. இக்குடியேற்றங்கள் அவர்களுடைய வாழ்வில் ஒரு மறுமலர்ச் சியை உண்டு பண்ணியது.
2. கல்லோயா போன்ற இக்குடியேற்றத் திட்டங்கள், கிழக்கு மாகாணத்தில் ஏற்கனவே உள்ள தமிழர் குடியேற்றங் களைப் பாதிக்கவில்லை. உண்மையில் இத்தமிழர் வாழ்ந்த பிரதேசங்களில் சிங்களக் குடியேற்றங்கள் அமைக்கப் பட வில்லை. கல்லோயா நீர்ப்பாசனத்திட்டத்தினால் சிங்களவர் மாத்திரம் பயனடையவில்லை. கிழக்கு மாகாணத்தில் வாழ்ந்து வந்த தமிழ், முஸ்லிம் கிராம மக்களின் விவசாயத்திற்கு இது

235 ஒரு சிறுபான்மை சமூகத்தின் பிரச்சினைகள் IV
ஒரு வரப்பிரசாதமாக அமைந்தது. கல்லோயாத் திட்டம் அமுலாக்கப்பட்டு முப்பது வருடங்களுக்குப் பிறகும், சிங்கள மக்கள் இப்பிரதேசத்தில் சிறுபான்மையினராகவே இருக்கின் றனர் என்ற உண்மையை 1981ம் ஆண்டில் நடைபெற்ற சனத் தொகைக் கணக்கெடுப்பு காட்டியது.
கல்லோயாக் குடியேற்றத்திட்டத்தின் இனப்பிரிவுகள் 1981
சிங்களவர் தமிழர் முஸ்லிம்
இடதுகரைத்திட்டம் 61, 451 42, 114 18, 200
வலதுகரைத்திட்டம் 12,081 5,975 19,436
ஆற்றுப் 3,228 41,085 l 10, 119 பள்ளத்தாக்குப்பகுதி
ஆதாரம்- குடிமதிப்பு புள்ளிவிவரத் திணைக்களம்- இலங்கை 9 Jay Tig, Lib (Department of Census and Statistics)
3. கிழக்கு மாகாணத்தின் கரையோரப் பிரதேசத்தில் அங்கொன்றும் இங்கொன்றுமாக சிதறிக்கிடக்கும் கிராமங் களுக்கும், அதனையடுத்துள்ள உட்பிரதேசத்திற்கும் எவ்விதத் தொடர்பும் இருக்கவில்லை. கடற்கரைப் பகுதிகளில் தமிழர்கள் அதிகமாக வாழ்ந்த காரணத்தினால், ஏனைய இனத்தவர்களு டைய பாரம்பரிய உரிமையை உதாசீனம் செய்துவிட்டு, அத னையடுத்த உட்பிரதேசம், தமிழர்களின் 'மரபுவழிவந்த உட் பிரதேசம்" என்று கொள்வதற்கு எவ்வித நியாயமுமில்லை.
பேராசிரியர் பீரிஸின் மேற்கூறப்பட்ட கருத்துக்ளின் சாராம்சம் என்னவென்றால், கிழக்கு மாகாணத்திலுள்ள கல்லோயா போன்ற குடியேற்றத்திட்டங்கள், பெரும்பாலும், பண்டைய சிங்கள கிராமங்கள் இருந்த இடங்களிலேயே அமைக்கப்பட்டனவென்றும், இத்திட்டங்களினால், தமிழர்கள் எவ்விதத்திலும் பாதிக்கப்படவில்லை யென்றும், கிழக்கு

Page 132
அ. முகம்மது சமீம் 236
மாகாணத்தின் உட்பிரதேசம் எக்காரணத்தைக் கொண்டும்
தமிழர் தாயகத்தில் அடங்க முடியாதென்பதேயாகும்.
வடக்கோடு கிழக்கு மாகாணத்தை இணைக்கமுடியாது என்பதற்கு இன்னொரு முக்கிய காரணம், இலங்கை வாழ் முஸ்லிம்களில் மூன்றில் ஒரு பங்கு முஸ்லிம்கள் கிழக்கு மாகா ணத்தில் வாழ்கிறார்கள், என்பதே. கண்டி மன்னன் காலத்தி லேயே முஸ்லிம்கள் இப்பிரதேசத்தில் குடியேறினார்கள். முஸ்லிம்கள் தமிழ் பேசுபவர்களாக இருந்தாலும் தங்கள் தனித் துவத்தைக் காப்பாற்றியே வந்திருக்கிறார்கள். இதையும் ஒரு முக்கிய காரணமாக சிங்கள அறிவியலாளர்கள் காட்டுகிறார்
85ଗIT.
வடக்கையும் கிழக்கையும் இணைத்தால், இந்நாட்டின் நிலப்பரப்பில் 30% விகிதம் நிலப்பரப்பும் பாதிக்கு மேற்பட்ட கரையோரப் பிரதேசங்களும், இப்பிரதேசத்திலுள்ள நில-நீர் வளங்களும், இலங்கையின் முழுச்சனத்தொகையில் 12.6% விகிதமாக இருக்கும் இலங்கைத் தமிழருக்கே உரியதாகிவிடும். 'ஒரு நாட்டின் தேசிய வளங்களில், சனத்தொகையில் மிகவும் குறைந்த ஒர் இனத்திறகு அதன் சனத்தொகை விகிதத்திற்கு ஒவ்வாத வாறு அமைவது நியாயமில்லை' என்று பேராசிரியர் சில்வா கூறுகிறார். மேலும் '1981ம் ஆண்டு சனத்தொகைக் கணக்கெடுப்பின்படி, தமிழர்களின் சனத்தொகையில், 32.8% விகிதமானோர் வடக்கு - கிழக்கு மாகாணங்களைத் தவிர்ந்த ஏனைய மாகாணங்களில் வசிக்கிறார்கள்' என்று அவர்
கூறுகிறார்.
'தமிழர் தலைவர்கள் 'தமிழர் தாயகத்தைப் பற்றி இவ்வளவு உணர்ச்சிவசப்பட்டுப் பேசும் அதே வேளையில், கண்டிச் சிங்களவரின் தாயகமான மலைநாட்டுப் பிரதேசத்தில் இந்தியத் தமிழர்களின் குடியேற்றத்தால், சிங்களவருக்கு ஏற்பட்ட பாதிப்பைப் பற்றி பாராமுகமாக இருப்பதோடு இந்தியத் தமிழரின் உரிமைகளைப் பற்றிப் பேசவும் முன்

237 ஒரு சிறுபான்மை சமூகத்தின் பிரச்சினைகள் IV
வருகிறார்கள்' என்ற வாதத்தையும் சிங்களப் புத்திஜீவிகள் முன்வைக்கிறார்கள். இவர்களுடைய கருத்துக்களின் சாராம் சத்தை பேராசிரியர் பீரிஸின் பின்வரும் கூற்று நன்றாக விளக் குகிறது.
'இந்நாட்டிலுள்ள பல்லினங்கள் வாழும் பிரதேச அமைப்பைப் பார்த்தால், தாம் வாழாத இடத்தையும், தாயகம் என்று கூறிக்கொண்டு ஒரு குறிப்பிட்ட இனம், சில மாவட்டங் களையும், மாகாணங்களையும் தமக்கு மாத்திரமே உரியது என்று உரிமை கொண்டாடுவது எவ்வகையிலும் நியாயமான தல்ல."
தமிழர்களது வாதங்களையும், சிங்கள அறிவியலாளர் களின் வாதங்களையும் நோக்கும்போது, இரு துருவங்களைப் போன்று இவ்விரு சமூகங்கள் இருப்பதை அவதானிக்கலாம்.
"1930ம் ஆண்டுகளில், வறண்ட பிரதேசமாக மாறியிருந்த ‘ராஜரட்ட' என்ற சிங்கள மன்னர்களின் இராசதானி, வட மத்திய மாகாணத்திலும், அதனை அண்டிய பிரதேசத்திலும், அரசாங் கம் புனரமைப்பு வேலைகளில் ஈடுபட்டதை கண்டு இதனால் ஏற்படும் பொருளாதார வளர்ச்சியை ஆவலுடனும் பீதியுடனும் அவதானித்த வடக்கிலும், கிழக்கிலும் வாழும் தமிழர்கள் டி. எஸ். சேனாநாயக்காவின் காணிக்கொள்கையை எதிர்த்தார் கள் என்பதைத் தமிழ் காங்கிரஸ், சோல்பரி குழுவினரின் முன் வைத்த கோரிக்கைகளிலிருந்து நாம் அறிய முடிகிறது' என்று பேராசிரியர் சில்வா கூறுகிறார்.
ஒரு காலத்தில் பொன் கொழிக்கும் பூமியாக இருந்த அனுராதபுர, பொலன்னறுவைப் பிரதேசத்தில் வாழ்ந்த சிங்கள மக்கள் தமிழர்களின் படையெடுப்புக்களுக்கும் மலேரியா நோய்க்கும் ஆளாகி தென்மேற்குப் பிரதேசங்களில் குடி பெயர்ந்தனர்.
கானகமாக மாறிய இப் பிரதேசங்களின் காடுகளை

Page 133
அ.முகம்மது சமீம் 238
அழித்து நீர்ப்பாசன திட்டங்களின் மூலம் நன்செய்நிலங்களாக மாற்றி, இவைகளில், அரசாங்கம் சிங்களவரைக் குடியேற்றி யதைக் கண்டு, தமது 'தாயகத்தில் சிங்களவர் ஊடுறுவல் செய்கிறார்கள் என்று கூறுவது நியாயமல்ல. இக்குடியேற்றத் திட்டங்கள், சிங்களப் பிரதேச எல்லைகளை விஸ்தரிக்கச் செய்வதோடு, தமிழ்ப் பிரதேச எல்லைகளை ஒடுக்கமாக்கு கின்றன, என்பதும் தமிழர்களின் இன்னொரு குற்றச்சாட்டு. "ஒரு காலத்தில் சிங்களவரின் பிரதேசமாக இருந்த நிலம், கேட்பாரற்று இருந்த காரணத்தினால், இதைத் தமிழர்கள் தமது தாயகம் என்று கூறுவது பகுத்தறிவுக்கு முரணானது" என்பது சிங்களவரின் வாதம். 'குடியிருப்பதற்கு நிலமில்லாமல் அல்லல்படும் ஏழை சிங்கள மக்களுக்குப் பொருளுதவி செய்து, இவர்களை வறண்ட இப்பிரதேசத்தில் குடியேற்று வதனால் தமிழர்களுக்கு எவ்விதப் பாதிப்பும் ஏற்படப் போவதில்லை" என்று பேராசிரியர் பீரிஸ் கூறுகிறார்.
காமினி ஈரியகொல்ல என்ற சட்டத்தரணி, "நிலத்திற்கான தமிழர்களின் உரிமை கோரல்: உண்மையும புனைகதையும் என்ற நூலில் யாழ்ப்பாணத்துத் தமிழர்களுக்கும் மட்டக்களப்பு - திருகோணமலைத் தமிழருக்குமிடையே கலாசார வேறு பாடுகள் இருக்கின்றன என்பதற்கு யாழ்ப்பாணத்தில் அமுலாக இருக்கும் "தேசவழமைச் சட்டத்தை உதாரணமாகக் காட்டு கிறார். வட பிராந்திய மக்களின் பழக்கவழக்கங்களை மைய மாகக் கொண்டு 1707ம் ஆண்டில் ஒல்லாந்தரினால் கோர்க் கப்பட்ட சட்டம்தான் "தேசவழமை சட்டமாக உருவெடுத்தது. 'பங்காளிகளிடையே வழக்கத்திலிருந்து வந்த மரபுவழிச் சட்டத்தை ஒட்டியது' என்று ஈரியகொல்ல கூறுகிறார். கிழக்கு மாகாண தமிழர்களைப் பொறுத்தவரையில் அவர்கள் "உரோ மன்-டச்சு சட்டத்தினால் நிர்வகிக்கப் படுகிறார்கள். இவர்களு டைய சட்டம் பெரும்பாலும், கிழக்கிலுள்ள, முக்குவ சட்டத்தை அடியொட்டியிருக்கிறது. 'பழக்க வழக்கங்க ளினாலும், கலாசாரத்தினாலும், சாதியமைப் பினாலும் வேறுபட்ட மக்கள், சைவத்தினாலும் தமிழ் மொழியினாலும்

239 ஒரு சிறுபான்மை சமூகத்தின் பிரச்சினைகள் IV
ஒன்று பட்டுத் தம்மை ஒரு தனி இனமாகப் பறைசாற்றிக் கொண்டு தமக்கு ஒரு 'பாரம்பரிய - மரபு வழிவந்த தாயகம் ஒன்றிருக்கிறது" என்று கூறுவதற்கு இவர்களுக்கு எவ்வித அருகதையுமில்லை' என்று ஈரியகொல்ல கூறுகிறார்.
'நிலமில்லாமல் தவிக்கும் சிங்கள மக்களை,சன அமுக்க மில்லாத பிரதேசத்தில் குடியேற்றுவதில் எவ்விதத் தவறு மில்லை' என்கிறார் ஈரியகொல்ல. தன்னுடைய வாதத்தை நிரூ பிப்பதற்குப் பின்வரும் புள்ளிவிபரங்களைக் கொடுக் கிறார்.
LD (TG)JLll L Lib நிலப்பரப்பு ஒரு சதுர
g| ഞഥ ബ மைலுக்குள்ள
சன அமுக்கம்
கொழும்பு 248 684.8 மாத்தறை 48卫 五339 வவுனியா I O20 94 மட்டக்களப்பு 951 348 திருகோணமலை 1010 254 மன்னார் 7.58 141 முல்லைத்தீவு 610 127 அனுராதபுரம் 2752 214
மேலே காட்டப்பட்ட புள்ளிவிபரங்களை ஆதாரமாகக் காட்டி இப்பிரதேசங்களில் அமுலாக்கப்படும் சிங்களக் குடி யேற்றங்கள் நியாயமானது என்று இவர் கூறுகிறார்.
வரலாற்றுச் சம்பவங்களைத் தமக்குச் சாதகமாக எப்படித்
ரித்து சிலர் கூறுகின்றனர் என்பை டுத் ந்தியாயத்தில்
தது [0] த அடுதத அத த ஆராய்வோம்.

Page 134
| III
அ. முகம்மது சமீம் - 24 O 35. சிங்கள அறிவியலாளர்களின் வரலாற்றுத் திரிபுவாதங்கள்
"பதினாறாம் நூற்றாண்டில், ஐரோப்பாவில் ஏற்பட்ட மறுமலர்ச்சி இயக்கத்தை ஆராய்ந்த ஜெர்மன் வரலாற்றாசிரியர் 'றான்கே', 'அக்காலத்தில் வாழ்ந்த நிகழ்ச்சிக் கோவை யாளர்களின் வாசகங்களை ஆதாரமாகக் கொள்வது படுமுட் டாள்தனம்' என்று கூறுகிறார். 'இக்கோவையாளர்கள், சில நிகழ்ச்சிகளைப் பெரிதுபடுத்தியும், சில நிகழ்ச்சிகளை மறைத் தும், சில நிகழ்ச்சிகளுக்குப் 'புனைகதை முலாம் பூசியும் வரலாற்றுக் கோவை' என்ற நாமம் கொடுத்து அதிகார வர்க்கத் திற்கு ஆதரவாக எழுதிவைத்தார்கள்" றான்கே கூறிய கருத்துக்கள், இலங்கை 'வரலாற்றுக் கோவையாளர்களுக்கும், வரலாற்று ஆசிரியர்களுக்கும் எவ்வளவு பொருந்தும் என்பதை எம்மு டைய 'புத்திஜீவிகளினதும்', 'அறிவாளிகளினதும் வரலாற் றைத் திரித்துக் கூறும் கருத்துக்களை ஆராய்ந்தால் விளங்கும்.
காமினி ஈரியகொல்லவின், "தமிழர்களின் நிலஉரிமை: உண்மையும், புனைகதையும் என்ற நூலில் அவர் பின்வருமாறு கூறுகிறார். '13ம் நூற்றாண்டுக்கும் 17ம் நூற்றாண்டுக்கும் இடையிலுள்ள காலப்பகுதியில், யாழ்ப்பாணப் பிரதேசம் ஒரு தனிஅரசியல் பிரிவாக இயங்கினாலும், சட்டப்படி, சிங்கள அரசர்களின் ஆதிக்கத்தின் ஒரு பகுதியாகவே இருந்து வந்திருக் கிறது. அவர்கள், கம்பளையிலிருந்தோ, கோட்டையிலி ருந்தோ, சீத்தாவக்கையிலிருந்தோ, கண்டியிலிருந்தோ ஆட்சி செய்தாலும், யாழ்ப்பாணத்துக் குறுநிலத் தலைவன் சிங்கள ஆதிக்கத்திற்கு அடிபணிந்தே வந்திருக்கிறான். சிலசமயங் களில் அவன் சுதந்திரமாக இயங்கியதுண்டு. சிலசமயங்களில் தென்னிந்திய விஜய நகர சாம்ராஜ்யத்தின் சக்கரவர்த்தியைத் தன்னுடைய ஆட்சியாளராக ஏற்றுக் கொண்டதுமுண்டு. வேறு சில சமயங்களின் போர்த்துக்கல் மன்னனுக்கு அடிப ணிந்து வாழ்ந்ததுமுண்டு', என்று கூறுகிறார்.

24 ஒரு சிறுபான்மை சமூகத்தின் பிரச்சினைகள் IV
இக்கூற்றை மறுத்த, வரலாற்று விரிவுரையாளர் சீ.ஆர்.டி. சில்வா, தன்னுடைய ‘மெண்டிஸ் நினைவுச் சொற்பொழிவில் '1357 ம் ஆண்டுக்கும் 1370ம் ஆண்டுக்குமிடையில் யாழ்ப் பாணத்தை ஆண்ட குறுநிலத்தலைவன், கம்பளை அரசனின் மேல் தன் மேலாதிக்கத்தைச் செலுத்தினான்', என்று கூறுகிறார்.
பதினான்காம் நூற்றாண்டின் பிற்பகுதியில் சிங்களவரின் வலிமை குன்றியது. அதே நேரத்தில், ஆரியசக்கரவர்த்திகளின் ஆட்சியில் யாழ்ப்பாணத்து இராச்சியத்தின் வலிமை கூடியது. சிங்களவரின் வலிமை குன்றியதை அவதானித்த யாழ்ப்பா ணத்து அரசர்கள் தங்கள் ஆதிக்கத்தைத் தெற்கிலும் பரப் பினார்கள், கம்பளை இராச்சியத்திற்குச் சொந்தமான சில பிரதேசங்களில், ஆரிய சக்கரவர்த்திகளின் அதிகாரிகள் வரி திரட்டுவதில் ஈடுபட்டார்கள். தமிழர் ஆட்சியின் எல்லைகள், கம்பளைக்கு அருகாமையிலுள்ள 'நான்கு கோறளைகள்' என்ற பிரதேசம் வரைக்கும் விரிந்திருந்தன. பதினான்காம் நூற் றாண்டின் நடுப்பகுதியில் புத்தளம் வரையிலுள்ள வடமேற்குக் கரையோரம் யாழ்ப்பாணத்து இராச்சியத்தின் கீழிருந்தது என்பது வரலாறு (ஆதாரம்: இலங்கை வரலாறு - பேராசிரியர் கே.எம்.டி. சில்வா) 1353ம் ஆண்டு யாழ்ப்பாணத்துத் தமிழர் களின் படையெடுப்புக்குப் பிறகு, நான்கு கோறளைகள் எனப்படும் பிரதேசமும், தமிழர்களின் ஆட்சியின் கீழ் வந்தது. மாத்தளை மாவட்டத்திலும் தமிழர்களின் படையெடுப்பு நடந்தது. தெற்கில் பாணதுறை வரையிலும் தமிழர்களின் கப்பற்படை வந்தது. முழு இலங்கையிலும் தமிழர்களின் ஆதிக்கம் பரவியிருக்கும். துரதிருஷ்டவசமாக தென்னிந்திய விஜய நகர சாம்ராஜ்யப் படைகளின் படையெடுப்பை எதிர்ப் பதற்கு யாழ்ப்பாணத்து மன்னன் தென் இலங்கையிலிருந்து பின்வாங்க நேரிட்டது". (இலங்கை வரலாறு) மெத வெளை கல்வெட்டு சாசனத்தைக் காட்டி இதை நிரூபிக்கிறார் பரணவித் தார்ன, முன்னைநாள் பழம் பொருளாராய்ச்சியாளர். 'மெத வெல கல்வெட்டு சாசனத்தில், ஆர்யசக்கரவர்த்தி மார்த்தாண்ட

Page 135
அ.முகம்மது சமீம் 242
னைப் 'பெருமாள்' என்றிருந்ததையும், கம்பனள மன்னன் விக்கிரமபாகுவை சக்கரவர்த்தி சுவாமி என்றிருந்ததையும் காரணம் காட்டி, காமினி ஈரியகொல்ல 'விக்கிரமபாகு தான் இலங்கை முழுவதையும் ஆட்சி செய்ய உரிமையுள்ளவன்' என்று கூறுகிறார்.
ஆரிய சக்கரவர்த்தியின் வரிதிரட்டும் உத்தியோகத்தர்கள் தன்னுடைய ஆட்சியின் கீழ் இருக்கும் பிரதேசத்தில் கம்பளை யைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்த சிங்கள அரசன், வரிதிரட்டுவதற்கு அனுமதியளித்தான் என்ற வரலாற்றுண் மையை 'இராஜாவலிய' என்ற நூல் ஊர்ஜிதப் படுத்துகிறது. கம்பளை மன்னனின் மந்திரியாகவிருந்த அளகேஸ்வரன், ஆரிய சக்கரவர்த்தியின் உத்தியோகத்தர் களைக் கழுவிலேற் றினான். இதைக் கேள்விப்பட்ட ஆரிய சக்கரவர்த்தி என்றழைக் கப்பட்ட, சேகராசசேகரன், இந்தியாவிலிருந்து உதவியாக ஒரு படையைத் தருவித்து, அதனுதவியுடன் கம்பளை இராஜ தானியின் மேல் படை யெடுத்தான், இப் படையெ டுப்பை முதலியார் இராசநாயகம், தனது "யாழ்ப்பாணச் சரித்திரம்" என்ற நூலில் பின்வருமாறு கூறுகிறார். 'ஒரு லட்சம் எண் கொண்ட சேனையை இரு கூறாக்கி ஒரு கூற்றைக் கடல் மார்க்க மாகவும் மற்றதை வன்னி மாத்தளை வழியாற் கம்பளைக்கு மனுப்பி ஜயவர்த்தன கோட்டையையும் கம்பளையையும் ஒரே சமயத்திற்றாக்கும் படி ஏவினான். கரைமார்க்கமாய்ச் சென்ற படை மாத்தளைக் குட்புகுந்ததையறிந்த கம்பளையரசனாகிய புவனேகவாகு அப்படைக் கெதிர் நிற்கவஞ்சி றயிகம என்னு மூர்புக் கொளித்தான். கடற்படையோ நீர்கொளும்பு, பாணந் துறை என்னுமிடங்களிற்றங்கி தெமட்ட கொடையென்னு மிடத்தே பாளையம் வகுத்து" . என்று கூறுகிறார்.
சிங்கள நூல்களான ராஜவலியவும் வரலாற்றாசிரியரான போராசிரியர் கே. எம்.டி.சில்வாவும், அளகேஸ்வரனுடைய தலைமையில் திரண்ட சிங்களப் படை, தமிழர் படையை முறியடித்து, பாணந்துறையில் நின்ற கப்பல்களை அழித்தது

243 ஒரு சிறுபான்மை சமூகத்தின் பிரச்சினைகள் IV
என்றும் மாத்தளை சென்ற படையை வெற்றி கொண்டு தமிழர் படையைச் சின்னாபின்னஞ் செய்தது என்றும் கூறுகின்றனர்.
இவ்வரலாறு பொய்யென்றும், வெற்றிபெற்றது தமிழர் படையே என்றும் முதலியார் இராசநாயகம், கேகாலைப் பகுதியில் கோட்டகம என்னுமிடத்தில் கண்டெடுக்கப்பட்டு இன்று கொழும்பு நூதனசாலையில் வைக்கப்பட்டிருக்கும் சிலசாசனமொன்றை ஆதாரமாகக் காட்டுகிறார்.
இராசநாயகம், பின்வருமாறு கூறுகிறார்.
'கங்கணம் வேற்கண்ணிணையாற் காட்டினார் காமர்வளைப் பங்கயக்கை மேற்றிலதம் பாரித்தார் - பொங்கொலி நீர்ச் சிங்க நகராரியனைச் சேரா வனுரேசர் தங்கள் மட மாதர்தாம்'
என்னும் வெண்பா (இச்சிலசாசனத்தில்) பொறிக்கப்பட் டிருக்கிறது. இச்சில சாசனத்தின் துணைகொண்டே சிங்கை நகர் அரசன் வெற்றி பெற்றான் என்பதும், இச்சிலை அவ் வெற்றியின் ஞாபகச் சின்னமென்பதும் உள்ளங்கை நெல்லிக்கனி போற்றெள்ளிதிற் புலப்படக் கிடக்கின்றது. பழமைப் பரிசோதகராகிய எச்.சி.பி. பெல் அவர்களும் இச் சாசன எழுத்து பதினைந்தாம் நூற்றாண்டினதே யென்றனர். ஆகையால் அப்போரிலே யாழ்ப்பாணத்தரசனே வெற்றி கொண்டான் என்பதும், அளகேஸ்வரனிறந்தானென்பதும் சிங் கள அரசர் திறையீந்து வந்தார்களென்பதும் வெளிப் படை' இதே சம்பவத்தை, முதலியார் இராசநாயகம், ஆரியூர்ச் செப் பேட்டை ஆதாரமாக வைத்துப் பின்வருமாறு விளக்குகிறார்.
'கி.பி. 1390 ல் விஜய நகர் அரசனாகிய முதலாம் விருப்பகூடினோ, அன்றி அவன் பிரதிராஜாவாக மதுரையை யாண்ட கம்பண்ணா நாய்க்கனோ அனுப்பிய படையொன்று, யாழ்ப்பாண அரசனுதவியோடு இலங்கையை வென்று

Page 136
அ.முகம்மது சமீம் 244 கோட்டையை யாண்ட ஐந்தாம் புவனேக்கவாகு வென்னும் குமார அளககோனைப் பிடித்து, அவன் சகோதரர் நான்கு பேரைக் கொன்று, திறை பெற்று மீண்டது. இவ்விலங்கை வெற்றியைப் பற்றி விருப்பகூ:னுடைய ஆரியூர்ச் செப்பேட்டிற் கூறப்பட்டிருக்கிறது." (பக்கம் 72)
சிங்கள திரிபுவாத வரலாற்றாசிரியர்கள், தமிழர்களின் தாயகக் கோரிக்கையை மறுப்பதற்கு வரலாற்றுச் சம்பவங் களைத் திரித்துக் கூறுகின்றனர். வரலாற்றாசிரியர் ஜி.சி. மென்டிஸ், எழுதிய, இலங்கை வரலாறு, சிங்களவருக்குச் சாதகமாக இல்லையாதலால், "இவர் தலைமுறை தலைமுறை யாகப் பாடசாலை, சர்வகலாசாலை சிங்கள மாணவர்களை வழிகெடுத்திருக்கிறார்' என்று கூறுகின்றனர் இத்திரிபு வாதி கள். வரலாற்றுத்துறை விரிவுரையாளராக விருந்த சி.ஆர்.டி. சில்வா தன்னுடைய "மென்டிஸ் நினைவுச் சொற்பொழிவில், 'முன்னைய கூற்றில் (1951ம் ஆண்டில்) தமிழர்களின் 'தாயகக் கொள்கைக்கு வரலாற்றில் ஆதாரமிருக்கிறது, பதின்மூன்றாம் நூற்றாண்டுக்குப் பிறகு, யாழ்ப்பாண குடாநாட்டிலும், இன்றைய வடமாகாணத்திலும் தமிழர்கள் பெரும்பான்மை சமூகமாக வாழ்கிறார்கள் என்பதில் எவ்வித சந்தேகமு மில்லை' என்று கூறினார். அவர் மேலும் 'இதே காலப்பகுதி யிலும், அதற்குப் பின்பும், கிழக்குக் கரையோரப் பிரதேசங் களில் தமிழர் குடியேற்றங்கள் அதிகமாக இருந்தன என்பதற்கு வரலாற்றில் சான்றுகள் இருக்கின்றன, ஆதலால் தமிழர்கள் பெரும்பான்மையாக வாழ்ந்த ஒரு பிரதேசம் இருக்கிறது', என்று கூறினர்.
'சிங்களமக்களைப் பீடித்திருக்கும் ஒரு வியாதியின் அறிகுறிதான் சி.ஆர். டி. சில்வா போன்றவர்கள்', என்று காமினி ஈரியகொல்லை இவரைச் சாடுகிறார்.
யாழ்ப்பாணப் பிரதேசமும் சிங்களவரின் பிரதேசம் என்று நிரூபிப்பதற்குச்சில திரிபுவாதிகள் இடப்பெயர்களைக் காட்டு

245 ஒரு சிறுபான்மை சமூகத்தின் பிரச்சினைகள் (V
கின்றனர். இத்திரிபுவாத கருத்துக்களுக்கு ஈ.றி. கன்னங்கர என்ப வரின் "யாழ்ப்பாணமும் சிங்கள மரபு உரிமையும்' என்ற நூலில் காணலாம். அவர் கூறும் கருத்துக்களை இனி ஆராய்வோம்.
"யாழ்ப்பாண குடாநாடு, ஆதியில் ‘நாகதீபம்' என்றழைக் கப்பட்டது. கி.பி. 2ம் நாற்றாண்டுக்குரிய 'வல்லிபுரம் தங்கத் தகடு சாசனம், இப் பிரதேசத்தை ‘நாகதீவ' என்று குறிப் பிடுகிறது. "யாப்பனே' என்ற சிங்கள பெயர்தான் யாழ்ப் பாணம்' என்று மாறியது. 'பக் மக்போய தினத்தன்று புத்த பெருமான், நாக தீபத்திற்கு விஜயம் செய்தார்' என்று மகா வம்சம் கூறுகிறது. (1ம் பாகம், 1ம் அதிகாரம்) நாகதீபம், வதுன்னாகலை, என்ற இடங்களில் அரசு செய்த இரு நாக அரசர்களான, மகோதர, சூலோதர ஆகிய இருவருக்குமிடையே நடக்க இருந்த யுத்தத்தைத் தவிர்ப்பதற்காகவே புத்தர் விஜயம் செய்தார். புத்தர் இவ்விரு வரையும் 'கதுரு கொட என்ற இடத்தில் சந்தித்தார். இதுதான் இன்று ‘கந்தரோடை என்று பெயர் பெற்றிருக்கிறது. இவ்விரு அரசர்களும், யுத்தம் செய்ய இருந்த இடம், 'மல்ல வகம இன்று "மல்லாகம்' என்று மாறியிருக்கிறது. இவ்விரு அரசர்களும் கதுரு கொட என்ற இடத்தில் ஒரு "சேத்திய (விகாரையை)க் கட்டினார்கள். அத்தருணம் நாகதீபத்திற்கு வருகை தந்த களனி நாகமன்னன் மணியக்கித்த, புத்தரைக் களனிக்கு வரும்படி அழைத்தான் என்றும் அதன்படி புத்தர் வெசக் போய தினத்தன்று களனிக்கும் விஜயம் செய்தார் என்றும் மகாவம்சம் கூறுகிறது.
"வல்லிபுரம் தங்கத்தகடு சாசனம் "வசப அரசனுடைய காலத்திற்குரியது (கி.பி. 65-109) என்றும் இது 1936ம் ஆண்டில் அகழ்ந்தெடுக்கப்பட்ட இடத்தில் ஒரு புத்த விகாரை இருந்ததாகவும், இதே இடத்தில்தான் 'வல்லிபுர ஆழ்வார் கோவில்' என்ற விஷ்ணு கோவில் கட்டப்பட்டதாகவும் கூறப் படுகிறது. சிங்கள மக்கள் வாழ்ந்த இடத்தில் அதிகாரத்தைச் செலுத்திய சிங்களப் பிரபு, “பியகுதிஸ்ஸ என்ற இடமான 'பியகுதீபம் தான் இன்று தமிழில் புங்குடு தீவாக மாறியதாம்.

Page 137
அ. முகம்மது சமீம் 246
பேராசிரியர் ரன்வெல்ல, தன்னுடைய யாழ்ப்பாணத்துத் தமிழ் அரசு' என்ற நூலில், '13ம் நூற்றாண்டுக்கு முன்னர், யாழ்ப்பாணக்குடா நாட்டில் தமிழர்கள் இருந்ததாகவோ, தமிழ் அரசு ஒன்று இருந்ததாகவோ, வரலாற்றில் எவ்வித சான்றும் இல்லை; ஆனால், இலங்கையில் ஆதிகாலந்தொட்டு சிங்களக் குடியேற்றங்கள் இருந்ததற்கும், சிங்கள அரசர்களின் அர சாட்சி 18ம் நூற்றாண்டு வரைக்கும் நீடித்ததற்கும், பின்னர் 1815ம் ஆண்டில் கண்டி இராச்சியம் வீழும் வரைக்கும் அதனை யாண்ட நாயக்கர் வம்சத்தினர் ஆண்டமைக்கும், இலங்கையை ஆட்சி செய்யும் உரிமையும், யாழ்ப்பாணத்துப் பிரதேசத்தை ஆளும் உரிமை அவர்களுக்கிருந்தமைக்கும் சான்று பகர்வதற்கு எமக்கு காலக் கோவைகளும், கல்வெட்டு சாசனங்களும், வெளிநாட்டு பிரயாணிகளின் பிரயாணக் கட்டுரைகளும் உதவுகின்றன" என்று கூறுகிறார்.
மேலும், கன்னங்கரா, ‘தெ லிபொல தான் தெள்ளிப் பளையாகவும், இங்கே ஒரு பெளத்த விகாரை இருந்ததாகவும், 'ஹ"னுகம , சுன்னாகமாக மாறியதாகவும், இங்கேயும் ஒரு பெளத்த விகாரை இருந்ததாகவும் 'புதுகம' என்ற சிங்கள கிராமம்தான் 'புத்தூராக", மருவியதாகவும், (புத்த#ஊர்) என்று கூறுகிறார். இப்படி எத்தனையோ தமிழ் கிராமங்கள் சிங்களக் கிராமங்களாக இருந்ததாகவும், அவை கால கதியில் தமிழுக்கு மருவியதாகவும் கூறுகின்றனர்.
சமீபத்தில் 'சண்டே டைம்ஸ் , பத்திரிகையில் (12-11-1995) சந்திரசோமா என்பவர் 'தமிழர் தாயகக் கருத்தை மிகவும் வன்மையாகக் கண்டிப்பதுடன், தமிழர் படையெடுப் புக்களால் சிங்கள மக்களுக்கு ஏற்பட்ட பாதிப்பைப் பின் வருமாறு கூறுகிறார்.
'தென்னிந்திய படையெடுப்புக்களால், ஏற்பட்ட விபரீ தங்களாக பின்வருபவனவற்றைக் கூறலாம்.
(1) வடக்கும், வடக்கிலிருந்து அனுராதபுரம் வரையிலுள்ள

247 ஒரு சிறுபான்மை சமூகத்தின் பிரச்சினைகள் {V
பிரதேசமும், வட-மேற்கு மாகாணமும், கிழக்கு மாகாணமும் தமிழாக மாறின.
(i) இப்பிரதேசங்களிலுள்ள சிங்கள ஊர்ப் பெயர்கள் தமிழ்ப் பெயர்களாக மாற்றப்பட்டன.
(i) இங்குள்ள சிங்களவரின் நீர்ப்பாசன ஏரிகள் உடைக் கப்பட்டன.
இதற்கு உதாரணமாக, சில உதாரணங்களை இவர் காட்டுகிறார். "சம்பிலித்துறை என்று பெயர் பெற்றிருக்கும் துறைமுகம் ஒரு காலத்தில் "ஜம்புகோல" என்றிருந்தது என்றும், அசோகச் சக்கரவர்த்தியைச் சந்திப்பதற்கு தேவனம் பியதீச னுடைய தூதர்கள் இத்துறைமுகத்திலிருந்துதான் சென்றார்கள்" என்று கூறுகிறார். 'புவங்குதிவ' என்ற தீவில் இன்று புங்குடி தீவாகப் பெயர் பெற்றிருக்கும் இத்தீவில் - ஒரு பெளத்தவி காரை இருந்ததாகவும், சிங்கள அரசன் மஹல்லக்க, நாகதீ வில், ‘சாலிபப்பத்த விகாரையைக் கட்டினான்’ என்றும், விஜயனுக் குப் பின் அரசாண்ட பண்டு வஸ்தேவ என்ற சிங்கள அரசன் காலத்தில் ஊராதொட்ட' (இன்றைய உறும் புறாய்) - 'சுக்கரத் தித்த என்ற பெயரும் இதற்கிருந்தது- என்ற துறைமுகத்தின் வழியாகச் சோழர் படையெடுப்பு நடந்ததாகவும் கூறுகிறார். 'கோகன்னகம்' என்ற சிங்களப் பெயருடைய துறைமுகம் தான் இன்று திருகோணமலையாக மருவியிருக்கிறது என்பதும் இவருடைய கருத்தாகும்.
தமிழர்களுடைய 'தாயகக் கோரிக்கைக்கு மறுப்பு தெரிவிக்கும் முகமாகத்தான் இவர்களுடைய இவ்வாய்வுகள் அமைந்திருக்கின்றன. சிங்கள அறிவியலாளர்களின் இத்திரி புவாதக் கருத்துக்களில் எவ்வளவு உண்மையிருக்கிறது என்பது பின்வரும் அத்தியாயங்களில் ஆராய்வோம்.

Page 138
அ. முகம்மது சமீம் 248 36. சிங்கள ய்வாளர்களின்
<号沙 ஒரு தலைப் பட்ச ஆய்வுகள்
1983ம் ஆண்டு நடந்த இனக் கலவரத்தின் பின்னர் சிங்களப் பிரதேசங்களில் வாழும் இலங்கைத் தமிழர்கள் தங்கள் உயிருக்கும் உடைமைகளுக்கும் எவ்விதப் பாதுகாப்பு மில் லையென்று உணர்ந்தார்கள். தமிழர்கள் மிகவும் கோரமான முறையில் வெட்டிக் கொல்லப்பட்டும், தீக்கிரையாக்கப் பட்டதையும் கண்டு அன்றைய ஜனாதிபதி, "சிங்களவரின் நியாயமான கோபம்' என்று கூறி வாழாவிருந்ததோடு, சிங்கள இனவெறியர்களுக்குத் தங்கள் இனவெறியைத் தீர்த்துக் கொள்வதற்கு மூன்று நாட்கள் அவகாசம் கொடுத்ததைக் கண்டு, சிறுபான்மையினமான தமிழர்கள், சிங்கள அரசாங்கத் தின் மீது வைத்த நம்பிக்கையை இழந்தனர். தமிழர்கள், தாங்கள் தன்மானத்துடனும் சுயமரியாதையுடனும் வாழ வேண்டுமா னால், தாம் தொன்று தொட்டு வாழ்ந்துவந்த தமது தாயகமான யாழப்பாணத்திற்குச் செல்வதே சாலச் சிறந்தது என்று முடி வெடுத்தனர். சிங்கள அரசாங்கத்தின் ஒரவஞ்சகச் செயல் களினால் பாதிக்கப்பட்ட தமிழர் சமூகம், தாம் சுதந்திரமாக வாழவிரும்பியதில் எவ்விதத் தவறுமில்லை. எனவே தமக்குப் பிரதேசச் சுதந்திரம் வேண்டுமென்ற கோரிக்கையை அரசாங்கத் தின் முன் வைத்தனர். வடக்கையும் கிழக்கையும் இணைத்த ஒரு பிரதேசத்தின் ஆட்சிப் பொறுப்பைத் தமக்களிக்க வேண்டு மென்று கேட்டனர். இலங்கையின் இனப்பிரச்சினையைச் சுமுகமாகத் தீர்ப்பதற்கு இலங்கை ஜனாதிபதிக்கு உதவ முன்வந்த இந்தியப் பிரதமர் ராஜீவ்காந்தி, தமிழர்களின் இந்தக் கோரிக்கையை ஆதரித்தார். 'தமிழர்களின் கோரிக்கை நியாய மற்றது, தமிழர் தாயகம் என்று கூறுவதற்கு வரலாற்றில் சான்று கள் இல்லை யென்ற ஜனாதிபதியின் கருத்தை நிரூபிப் பதற்கு ஆய்வுகளை நடத்த சில ஸ்தாபனங்கள் முன்வந்தன. கொழும் பிலுள்ள மார்க ஸ்தாபனமும், கொழும்பிலும் கண்டியிலு முள்ள "சர்வதேச ஆய்வு நிலையமும் பேராதெனிய

249 ஒரு சிறுபான்மை சமூகத்தின் பிரச்சினைகள் IV
சர்வகலாசாலை புவியியல் பீடமும் இவ்வாய்வுகளை நடத்த முன்வந்தன. பாதுகாப்பு அமைச்சர் லலித் அத்துலத் முதலியின் வேண்டு கோளுக்கிணங்கவே தாம் இவ்வாய்வை மேற்கொள் வதாக பேராசிரியர் ஜெரால்டு பீரிஸ் கூறினார்.
"மார்க ஸ்தாபனம் வெளியிட்ட 'இலங்கையில் தேசிய ஒற்றுமையும் இனங்களுக்கிடையே உள்ள சமநிலையும் என்ற ஆய்வில், உள்ள முன்னுரையில் பின்வரும் கூற்றைக் காணலாம்.
'இலங்கையின் ஆரம்ப கால வரலாறு, சிங்களக்குடி மக்களுக்கும் தென்னிந்தியாவிலிருந்து வந்த படையெடுப்புக் களுக்குமிடையே தொடர்ந்து வந்த மோதல்களின் கோவை யே யன்றி வேறெதுவுமில்லை. தமிழர்களின் ஆதிக்கத்திற் கெதிராக சிங்கள மக்கள் நடத்திய சுதந்திரப் போராட்டங்களின் வரலாற்றிலிருந்து பிறந்ததுதான் சிங்கள தேசியத்துவம்" முகவுரையிலேயே இப்படிப் பாரபட்சமாக எழுதப்பட்ட ஒர் ஆய்விலிருந்து பாரபட்சமற்ற ஒரு முடிவை எதிர்பார்ப்பது தவறுதான். ஆனால் வரலாற்றுச் சம்பவங்களை நியாயமான முறையில் அணுகி, அவைகளுக்குச் சரியான விளக்கங் கொடுப்பது ஒர் ஆய்வாளனின் கடமை, அதுதான் தர்மம்.
இவ்வாய்வை விமர்சித்த ராஜன் ஹ9ல் என்பவர், இவ் வாய்விலுள்ள தவறான கருத்துக்களை விளக்கிக் கூறுகிறார். (கௌன்டர் பொயின்ட்- பாகம் 2 - இதழ் 4) அவர் பின்வரு மாறு தன் கருத்துக்களைக் கூறுகிறார்.
'இவர்களுடைய ஒரு தலையான கருத்து, "காணிக் குடியேற்றத்தைப் பற்றிக்கூறும் 5வது அதிகாரத்தில் வெளிப் படையாகத் தெரிகிறது. அதாவது 'வடக்குக் கிழக்குப் பிரதேசத் தில் அம்பாறையைத் தவிர்ந்த ஏழு மாவட்டங்களில், இலங்கை யின் நிலப்பரப்பில் 25% சதவிகிதமான நிலப்பரப்பு இங்கு இருக்கிறது. இங்கு வாழும் தமிழர்கள் இலங்கையின் சனத் தொகையில் 8% விகிதமானவரே இப்பிரதேசத்தில் வாழ்கின் றனர். இப்பிரதேசத்தின் முழுச்சனத்தொகை, இலங்கையின்

Page 139
அ. முகம்மது சமீம் 250 முழுச்சனத் தொகையிலும், 11.4% சதவிகிதத்தினரே இப் பிரதேசத்தில் வாழ்கிறார்கள், இப் பிரதேசத்தில் வாழும் முஸ்லிம்களின் நியாயமான உரிமையை இவர்கள் உதாசீனம் செய்வதோடு மலைநாட்டிலிருந்து குடியேறிய இந்தியத் தமிழர், சட்டமீறி குடியேறியதையும் சுட்டிக் காட்டத் தவறவில்லை. இப்பிரதேசத்தில் சிங்களக் குடியேற்றங்களை நியாயப் படுத்துதல் தான் இவர்களது குறிக்கோளாகும்.
'1827ம் ஆண்டு சனத்தொகைக்கான கணக்கெடுப் பின்படிஅ 17-20% மக்கள் இப்பிரதேசத்தில் வாழ்ந்தார்கள் என்றாலும், 1901ம் இச்சதவிகிதம் 14% குறைந்ததற்கு வேறு சில காரணங்களுண்டு. இதை ஆதாரமாக வைத்துக் கொண்டு சிங்களக் குடியேற்றங்களை நியாயப் படுத்துதல் எவ்வகை யிலும் சரியானதென்று கொள்ள முடியாது' என்று ஹஜூல் கூறுகிறார். உண்மையான புள்ளிவிபரங்களை நோக்கினால், சிங்களப் பிரதேசத்தில் வாழும் சிங்கள மக்கள், தமிழ்ப்பிர தேசங்களில் வாழும் தமிழ் மக்களைவிட தலைக்கு அதிகமா கவே நெற்காணிகளை வைத்திருக்கின்றனர் என்பது புலனா கும். அனுராதபுரத்திலும், பொலன்னறுவை யிலும், 9096 சதவி கித காணிகள் நெற்பயிர் செய்காணிகளாக இருக்கும் வேளை யில், யாழப்பாணப் பிரதேசத்திலும், திருகோணமலைப் பிரதேசத்திலும், முறையே, 31.6% விகிதமாகவும், 56.6% விகிதமாகவும் இருப்பதைக் காணலாம். யாழ்ப்பாணத்திலும், திருகோணமலையிலும், மட்டக்களப்பிலும் சராசரி தலைக்கு, 1.3 ஏக்கரும், 3.1 ஏக்கரும், 2.7 ஏக்கரும் முறையே இருக்கும் அதே வேளையில், சிங்களப் பிரதேசங்களில், தலைக்குச் சராசரி, 3.9 - 4.1 % ஆக இருப்பதைக் காணலாம். (ஆதாரம் - இனப் போராட்டம்: கட்டுக்கதையும், உண்மையும் அபிப்பிராயங்களும், நவ்ரங், புதுடில்லி - 1984 வெளியீடு)
மேலே உள்ள புள்ளிவிபரங்களைப் பார்த்தால் உண்மையில் இப் பிரதேசத்தில் வாழும் தமிழ் மக்களுக்கே அதிகமாகக் காணி கொடுக்கப்படல் வேண்டும்.

251 ஒரு சிறுபான்மை சமூகத்தின் பிரச்சினைகள் IV
சிங்கள அறிவியலாளர்கள் ஆய்வுகளை அவதானிக் குமிடத்து, தமிழர் தாயகக் கொள்கையை நிராகரிப்பதோடு, சிங்கள நாடாக இருந்த இலங்கையில், 12ம் நூற்றாண்டுக்குப் பிறகே, வடக்கில் தமிழ்க் குடியேற்றங்கள் ஸ்தாபிக்கப்பட் டனவென்றும், இப்பிரதேசத்தில் சிங்களக் குடியேற்றங்கள் ஸ்தாபிக்கப்படுதல் நியாயமானதென்பதும் புலனாகிறது. சுருங்கச் சொன்னால், இவ்வாய்வுகளின் முக்கிய நோக்கம், தமிழர்களின் சமஷ்டி ஆட்சிக் கோரிக்கையை- பிரதேச சுதந்திர நிர்வாகத்தை - நிராகரிப்பனவாகவே இருக்கின்றன. இவ்வா வுகள் எவ்வளவு பிழையானது என்பது, சமீபத்தில் தமிழ்ப் பேராசிரியர்களால் நடாத்தப்பட்ட ஆய்வுகளிலிருந்து அறிய GRO ITALIAD
பேராசிரியர் ஜி.எச். பீரிஸின் ஆய்வின்படி, 1871ம் ஆண்டு திருகோணமலை மாவட்டத்தில் 30% விகிதமாக இருந்த தமிழர்களின் சனத்தொகை 1901ம் ஆண்டில் 60% விகிதமாகக் கூடியதை மறுத்த ஹ"ல், தமிழர்களின் சனத்தொகை உண்மை யில் இம்மாவட்டத்தில் குறைந்தது என்பதைப் பின்வரும் புள்ளிவிபரங்களின் மூலம் காட்டுகிறார்.
'1827ம் ஆண்டில், திருகோணமலை மாவட்டத்தில் தமிழர்களின் சனத்தொகை 71% விகிதமாக இருந்தது. 1871ம் ஆண்டில் 64.1% ஆகக் குறைந்தது. 1901ம் ஆண்டில் இத் தொகை 60% ஆக இன்னும் குறைந்தது.
'19ம் நூற்றாண்டில், இம்மாவட்டத்தில் தமிழர்களின் சனத்தொகை (11%) சதவிகிதம் குறைந்தது என்பதை எப்படிக் கூடியது என்று மிகைப்படுத்திக் காட்டுகிறார் பீரிஸ்", என்று ஹ9ல் கூறுகிறார்.
மகாவலி அபிவிருத்தித் திட்ட அமைச்சின் மேலதிக செயலாளராக விருந்த, டென்னிஸ் பர்னாண்டு, 1988ம் ஆண்டு ஜனவரி மாதம் 'தொல்பொருள் ஆய்வுக்கூடத்தில், நிகழ்த்திய சொற்பொழிவிலுள்ள ஆதாரமற்ற கருத்துக்களைப் LI IT ii Lu

Page 140
அ. முகம்மது சமீம் 252
போம். 'பண்டைய காலந்தொட்டு மத்தியகாலம் வரையில் யாழப்பாணக்குடா நாட்டில், ஏற்பட்ட வரலாற்றுக் குடியேற் றங்கள்' என்ற சொற்பொழிவில் பின்வருமாறு கூறு கிறார். 'எமக்குக் கிடைத்திருக்கும் ஆதாரங்களின்படி, பண்டைய காலந்தொட்டே, யாழப்பாணக்குடா நாடு, மக்கள் வாழாத ஒரு பாலைவனமாகவே இருந்து வந்திருக்கிறது. ஒரு சில கிராமங் கள் அங்குமிங்குமாகச் சிதறிக் கிடந்தன என்பது உண்மை. ஆனால் 15ம் நூற்றாண்டுக்குப் பிறகுதான் தென்னிந்தியாவி லிருந்து வந்த வேளாளர் சாதியைச் சேர்ந்த ஒரு குழுவினர் யாழப்பாணக்குடா நாட்டில் நிலச் சொந்தக்காரர்களாக மாறி யதைக் காண்கிறோம். ஏனைய சாதிகளைச் சேர்ந்த பெரும்பான் மையான மக்கள் ஒரு சிறுதுண்டு காணியைக் கூட சொந்தம் கொண்டாட முடியாத நிலையில் தவித்தனர். காணிச் சீரத்தி ருத்தம் கூட இந்நிலையை மாற்றவில்லை. 15ம் நூற்றாண்டுக் காலத்தில் யாப்பாணக்குடா நாட்டில் அப்பிரதேசத்தை ஆட்சி செய்யக்கூடிய ஒர் இராச்சியம் தோன்றியது. இவ்விராச் சியத்திற்கு குறிப்பிடக்கூடிய துறைமுகங்களேதும் இருக் கவில்லை'. சிங்கள ஆய்வாளர்களின் ஆய்வுகள் இப்படி ஒரு தலைப்பட்சமாக ஒர் இனத்தின் வரலாற்றைக்கூட மறைக்குமள விற்கு, இருப்பதைக் காண்கிறோம். ‘நாகதீப" என்பது யாழப் பாணக்குடா நாட்டைக் குறிக்கும் ஒரு சொற்பதம் என்பதைப் பெரும்பாலும் எல்லா ஆய்வாளர்களும் ஒப்புக் கொண்டிருக் கும் உண்மையைக் கூட மறுத்து இது, "மகியங்கனைக்கு அருகாமையிலுள்ள மலைநாட்டிலுள்ள ஒரு பிரதேசம்" என்று கூறுமளவிற்கு இவருடைய வெறுப்புணர்வை நாம் காணலாம்.
யாழ்ப்பாண ஆய்வாளர்களால் சமீபத்தில் வெளியிடப் பட்ட ஆய்வுகள், தொல்பொருள் சாட்சியங்களை ஆதாரமாகக் கொண்டு, சில உண்மைகளை விளக்கின. யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தின் வரலாற்றுப் பேராசிரியர் இந்திரபாலா வின் தலைமையில், கலாநிதி சிற்றம்பலத்தின் உதவியுடன், மேற்கொள்ளப்பட்ட தொல்பொருள் ஆய்வுகளின் முடிவுகள் அடங்கிய, "யாழ்ப்பாணத்தின் ஆரம்பகால குடியேற்றங்கள்",

253 ஒரு சிறுபான்மை சமூகத்தின் பிரச்சினைகள் IV
என்ற தலைப்பில், பொன்னம்பலம் இரகுபதி என்பவரால் எழுதப்பட்ட நூல், ஜூலை 1987ம் ஆண்டு மதராஸில் வெளி யாகியது. கலாநிதிப்பட்டத்திற்காக எழுதப்பட்ட இவ் வாய்வு நூலில், தொல் பொருள் காட்சிப் பொருள்களி னதும், அவ் விடங்களினதும், சுற்றாடல்களினதும் புகைப்படங்கள் இருப் பதைக் காண்கிறோம். கந்தரோடையில் கண்டெடுக் கப்பட்ட பெளத்த கட்டடச் சுவடுகளும், ஆனைக்கோட்டையில் கண் டெடுக்கப்பட்ட பெருங்கற்காலத்திற்குரிய ஈமக்கிரியைத் தாழிகளும், புகைப்படங்களுடன் விளக்கப்பட்டிருக்கின்றன. புனித ஸ்தலங்களிலிருந்து அகழ்ந்தெடுக்கப்பட்ட இத்தொல் பொருள் சின்னங்கள், பண்டைய மனிதர்களது சமய அனுஷ் டானங்களையும், உணர்வுகளையும் விளக்குகின்றன. இவ் விடங்களில் கண்டெடுக்கப்பட்ட தொல் பொருள் சின்னங் களில், பெளத்த மடங்களுக்குச் சேர்ந்த சின்னங்களும், உரோம நாணயங்களும், இவைகளோடு, பிராமிலிபியில் 'கோவேந் தன்' என்று பொறிக்கப்பட்ட இலச்சினையும் இருந்ததாக அறிகிறோம். இவ்விலச்சினை, கி.மு. இரண்டாம் அல்லது மூன்றாம், நூற்றாண்டுக்குரியது என்பது ஆய்வாளர்களின் கருத்தாகும். "இதற்கு முன்னர், இவ்விடங்கள்ல் ஆய்வுகளை நடாத்திய தொல் பொருள் இலாகா, பண்டைய பெளத்த சின்னங்களின் தொன்மையைப் பெரிதுபடுத்தி விளம்பரப் படுத்துவதற்காக நடாத்தப்பட்டன', என்று இரகுபதி கூறுகிறார். யாழப்பாணத்தின் தொன்மையைப் பற்றியும், அங்கு வாழ்ந்த மக்களின் வரலாற்றுத் தொன்மையையும் ஆராய்வதற்காக இவ்வாய்வுகள் நடாத்தப்படவில்லை. 'தொல் பொருள் இலாகாவினால் நடாத்தப்பட்ட இவ்வகழ் ஆராய்வு கள், யாழ்ப்பாணத்து மக்களின் தொன்மையைப் பற்றியும், வரலாற்றுப் பாரம்பரியத்தைப் பற்றியும் கூறும் இவ்வகழ்வுச் சின்னங்களை அகற்றுவதாகவே அமைகிறது', என்பது கலாநிதி இரகுபதியின் கருத்தாகும். ' உண்மையான மைந்தன், தன்னுடைய தாய்நாட்டின் வரலாற் றுப் பாரம்பரியத்தை ஆராய பிறநாட்டு அறிஞர் வரும் வரையில்
"யாழ்ப்பாண மண்ணின்

Page 141
அ.முகம்மது சமீம் - 254
காத்திருக்கத் தேவையில்லை. இவ்வாதாரங்கள் பொறுமை யுடன் காத்திருக்க மாட்டா' என்று முதலியார் இராசநாயகம் தன்னுடைய பண்டைய யாழ்ப்பாணம்' என்ற நூலில் கூறு கிறார்.

255 ஒரு சிறுபான்மை சமூகத்தின் பிரச்சினைகள்
37. கட்டுக்கதைகளை ஆதாரமாக வைத்து எழுதப்பட்ட சிங்கள இனத்தின் வரலாறு மாற்றியமைக்கப் படல் வேண்டும்
இலங்கையின் வரலாற்றை எழுதிய வரலாற்றாசிரியர்கள் பெரும்பாலும் சிங்கள இனத்தின் வரலாற்றைத் தான் எழுதி னார்கள். அனுராதபுரி சகாப்த மென்றும், பொலன்ன றுவை சகாப்த மென்றும், அனுராதபுரி இராச்சியமென்றும், உரோ ஹன இராச்சியம் என்றும், மலாயாரட்ட இராச்சியம் என்றும் எழுதினார்களேயொழிய, தமிழர் இராச்சியம் இருந்ததைப் பற்றியோ, தமிழர்களின் வரலாற்றைப் பற்றியோ எழுத முனையவில்லை. தொல் பொருள் ஆராய்ச்சிகள் கூட சிங்கள இனம் இருந்த பிரதேசங்களில்தான் நடாத்தப்பட்டன. ரம்புக் கனவிலும், வடமத்திய மாகாணத்திலுள்ள கொன்வெவ என்ற இடத்திலும் பெருங்கற் கால காலத்திய மக்களின் சட்டிகளும், முட்டிகளும், ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப் பட்டன. ஆனால் பூனகரியிலும், கந்தோரடையிலும் இருக்கும் தொல்பொருட் கள் இவர்களுடைய கண்களில் படவில்லை.
இலங்கை வரலாற்றாசிரியர்களின் மூலநூல் மகாவம்சம். மகாவம்சம் என்ற வரலாற்றுக்கோவை கி.பி. 5ஆம் நூற்றாண் டில் வாழ்ந்த மொக்கல்லானவின் காலத்தில் (491-508 கி.பி.) வாழ்ந்த மகாநாம என்ற பெளத்த பிக்குவினால் எழுதப்பட்டது. இம்மகாவம்சம், கர்ண பரம்பரையாக வந்த கட்டுக்கதை களடங் கிய சில கோவைகளையே ஆதாரமாகக் கொண்டிருந்தது. கி.பி. நான்காம் நூற் றாண்டின் மத்திய பகுதியில், பல புத்த பிக்கு ஆசிரியர்களால் எழுதி முடிக்கப்பட்ட ஒரு நூலான தீப வம்சம் என்ற நூலையும், 'அத்தகத்தா மகாவம்சம்' என்ற நூலையும், வினயத்த கத்தா' என்ற நூலையும் ஆதாரமாகக் கொண்டது. "தீப வம்சம் ' என்ற நூலைப் போலவே

Page 142
2அ. முகம்மது சமீம் 256 "மகாவம்சமும் மகாசேன என்ற மன்னனுடைய ஆட்சியோடு முடிவடைகிறது. பெளத்த சமயத்தின் தோற்றத்தையும் வளர்ச் சியையும் கூறவந்த இந்நூல்கள், தேவநம்பிய தீசனுடைய வர லாற்றை மிகைப் படுத்திக் கூறியதுடன், ஜாத்தக்க கதைகளை யும் புகுத்தினர். (ஆதாரம், பேராசிரிய லஷ்மன் பெரேரா, இலங்கை வரலாறு' (பாகம் 1, பகுதி 1) துட்ட காமினியின் வரலாற்றை ஒரு சில வரிகளிலேயே "தீப வம்சம் கூறியது. ஆனால் "மகாவம்சம் இவ்வரசனுடைய வரலாற்றைக் காவிய இலக்கியத்திற்கு அமைய 'மகாவம்சம்' ஆசிரியரான மகாநாம துட்ட காமினியை ஒரு காவியத்தலைவனாக உருவாக்குகிறார். இந்த நூலைத்தான் சிங்கள வரலாற் று ஆசிரியர்கள் மூல நூலாகக் கொண்டிருக்கின்றனர்.
கி.மு. ஐந்தாம் நூற்றாண்டில், விஜயன் என்ற அரச குமார னும் அவனுடைய சகாக்களும், வட இந்தியாவிலுள்ள சிஹபுர என்னுமிடத்திலிருந்து கடல்மார்க்கமாக வந்த இலங்கையின் மேற்குக் கரையோரப் பகுதி, புத்தளத்தின் அருகாமையிலுள்ள 'தம்ப பன்னி" என்ற இடத்தில் வந்திறங் கினார்கள் என்பது மகாவம்சம் கூறும் கதை. இது ஒரு கட்டுக்கதையாயிருந்தாலும் இதில் ஒர் உண்மை புதைந்திருக்கிறதென்பது வரலாற்றாசி ரியர்களின் கருத்து. 'சிஹபுர" - சிம்ஹபுர - என்ற ஊர் இந்தி யாவின் வடமேற்குப் பிரதேசத்தில், சிந்து நதிக்கரையில் தக்சில” என்ற பிரதேசத்திற்கு அருகாமையிலுள்ள 'ஆரிய வர்த்த' என்ற பிரதேசத்திலிருக்கிறது என்பது இவர்களின் முடிவு. பண்டைய பாளி கிரந்தங்களின் படியும் அசோகனின் சாசனங்களின் படியும் அனுராதபுரியில் பந்துகாபய அரசனு டைய காலத்தில், 'வடஇந்தியாவிலிருந்து வந்த 'காம்போஜர் களும் யோனர்களும், வசித்தார்கள். இதற்குப் பின்னர் வந்த குடியேற்றங்கள் வங்காளப் பிரதேசத்திலிருந்தும், ஒரிஸ்ஸாலி ருந்தும் வந்தன என்று இவர்கள் கூறுகின்றனர். பின்னர் வந்த குடியேற்றங்கள் இலங்கையின் வடமேற்கிலுள்ள 'மல்வத்து ஒய என்ற ஆற்றின் கரையோரத்திலும், ஏனைய ஆற்றுப் பள்ளத்தாக்குகளிலும் வந்து குடியேற்றினார்களென்றும்,

257 ஒரு சிறுபான்மை சமூகத்தின் பிரச்சினைகள் IV
விஜயனுடைய பரம்பரையைச் சேர்ந்தவர்கள், இப்பிரதேசத்தில் "உபதிஸ்ஸ கம" என்ற இடத்தில்தங்கள் ஆட்சியை நிறுவினார்க ளென்றும், வரலாற்றாசிரியர்கள் கூறுகின்றனர். சேனாரத்ன என்பவர் எழுதிய 'இலங்கையின் வரலாற்றுக்கு முற்பட்ட தொல் பொருள் ஆய்வு", என்ற நூலை மேற்கோள்காட்டி, பேராசிரியர் கே.எம்.டி. சில்வா பின்வருமாறு கூறுகிறார்"
'இந்து-ஆரிய குடியேற்றங்களைப் பற்றிய தொல் பொருள் சாட்சியங்கள், இதுவரையில் எமக்குக் கிடைக்க வில்லை. கி.மு. 650க்கு முன், இத்தகைய குடியேற் றங்களைப் பற்றிய தொல்பொருள் ஆதாரங்கள் இப்பிரதேசத்தில் எந்த வொரு இடத்திலும் கிடைக்கவில்லை. இந்தியாவின் வடமேற் குக் கரையோரப் பகுதிகளிலிருந்தோ, கிழக்குக் கரை யோரப் பகுதிகளிலிருந்தோ இக்குடியேற்றங்கள் வந்ததற்கு எவ்விதத் தொல்பொருள் ஆய்வுளும் கிடைக்க வில்லை'.
சிங்கள இனத்தை ஆரியர்களுடன் இணைப்பதற்கு இரண்டு முக்கிய காரணங்கள் இருக்கின்றன. சிங்கள இனமும், அவர்களின் பெளத்த மதமும் வட இந்தியாவிலிருந்து வந்த தென்றும், இலங்கையில் குடியேறிய தென்னிந்தியத் தமிழர்கள், திராவிட இனத்தைச் சேர்ந்தவர்களென்றும், சிங்களவர் இவர்களி னின்றும் வேறுபட்டவர்கள் என்ற கருத்தை நிலை நாட்டுவதற் குமே இத்தகைய வரலாற்றை எழுதிவைக்க முனைந்தனர்.
கி.மு. மூன்றாம் நூற்றாண்டில் இலங்கைக்கும் தென்னிந் தியாவுக்குமிடையில் வர்த்தகத் தொடர்பு இருந்ததாகவும், இவ் வர்த்தக வளர்ச்சியின் காரணமாக, தென்னிந்திய துறை முகங்களிலிருந்து படையெடுப்புக்கள் ஏற்படத் தொடங்கின என்று சிங்கள வரலாற்றாசிரியர்கள் கூறுகின்றனர். இப்படி யேற்பட்ட படையெடுப்புக்கள்தான் முதலில் அனுராதபுரியை வென்ற இரு தென்னிந்திய படைவீரர்கள் என்பதும் அவர் களுக்குப் பின் வந்த எல்லாளனும் என்பது இவர்கள் கருத்து.
* (இலங்கை வரலாறு பக்கம் 9)

Page 143
அ. முகம்மது சமீம் - 258 இவர்களுடைய இக்கருத்துக்களை மாற்றியமைப்பதற்கு சமீபத் தில் இரு நூல்கள் வெளியாகியிருக்கின்றன. இவ்விரு நூல் களும் தொல்பொருள்களை ஆதாரமாக வைத்து, தமிழர்களின் பாரம்பரியத்தையும் தொன்மையையும் பற்றிக்கூறுவதோடு, சிங்கள வரலாற்றாசிரியர்களின் ஒரு தலைப்பட்ச ஆய்வுகளை யும், கருத்துக் களையும் எடுத்துக் காட்டுகின்றன. கலாநிதி சி. க. சிற்றம்பலத்தின், யாழ்ப்பாணம் - தொன்மை வரலாறு என்ற நூலும், சிரேஷ்ட விரிவுரையாளர் பரமு புஷ்பரட்ணம் எழுதிய, "பூநகரி - தொல் பொருளாய்வு - என்ற நூலும், தமிழர்களின் பூர்வீக வரலாற்றைப் பற்றிய சில உண்மைத் தகவல்களை உலகறியச் செய்திருக்கின்றன. புஷ்பரட்ணம் «T(Ա) திய நூலுக்கு அணிந்துரை எழுதிய பேராசிரியர் பொ. பாலசுந்த ரம்பிள்ளை பின்வருமாறு கூறுகிறார்.
"இலங்கைத் தமிழருக்கு நீண்ட கால வரலாறு இருப்பது போல் தமிழர் வாழும் பிராந்தியங்களுக்கும் தொன்மையான, தொடர்ச்சி குன்றாத பாரம்பரிய வரலாறு உண்டு. ஆயினும், இலங்கை வரலாறு தொடர்பான நூல்களில் தமிழர்களின் வரலாறு புறக்கணிக்கப்பட்டிருப்பது போல் தொல் லியல் ஆய்வில் தமிழர் பிராந்தியங்கள் புறக்கணிக்கப் பட்டமை நீண்ட காலக் குறைபாடாகும்.'
இலங்கை வரலாற்றை, அதுவும் சிங்கள இனத்தின் வரலாற் றை எழுத முற்பட்ட சிங்கள வரலாற்றாசிரியர்கள், மக்களிடையே கர்ண பரம்பரையாக வந்த கட்டுக்கதைகளை யும், ஐதீகங்களையும், வரலாறு என்று கூறிய நூல்களை ஆதார மாக வைத்து வரலாறு எழுதினார்கள். ஒரு நாட்டின் வரலாற்றை எழுதுவதற்கு தொல்லியல் இன்றியமையாததாகிறது. சிங்கள வரலாற்றாசிரியர்கள் தமது ஆய்வுகளில் எப்படி ஒரு தலைப் பட்சமாக நடந்தார்கள் என்பதைக் கூறிய புஷ் பரட்ணம், தன்னுடைய ஆய்வின் முடிவுகளைப் பின்வருமாறு கூறுகிறார்.
'இலங்கையின் வரலாறு விஜயன் வருகையோடு ஆரம்

259 ஒரு சிறுபான்மை சமூகத்தின் பிரச்சினைகள் IV பிக்கவில்லை. மாறாக இற்றைக்கு 28,000 வருடங்களுக்கு முற்பட்ட இடைக்காலப் பண்பாட்டுடன் தொடங்குகிறது. இப் பண்பாட்டிற்கும் தமிழ்நாடு திருநெல்வேலிப் பண்பாட் டிற்குமிடையே பல்வேறு அம்சங்களில் ஒற்றுமைத்தன்மை காணப்படுகிறது. இதனால் இலங்கைக்கு, இப்பண்பாட்டு மக்கள் தமிழ் நாட்டிலிருந்தே புலம் பெயர்ந்திருக்க வேண்டும்.
2. மகாவம்சம் கூறும் விஜயன் வருகை பற்றிய கதை வெறும் கட்டுக்கதை. அவ்வாறான குடியேற் றம் இலங்கையில் நடந்ததற்கு 'எது விதத் தொல்லியற் சான்றுகளும் காணப் படவில்லை.
3. இலங்கையின் நாகரிகத்தை வட இந்தியாவிலிருந்து குடியேறிய விஜயன் (கூட்டத்தார்) அறிமுகப்படுத்தவில்லை. மாறாக தென்னிந்தியாவிலிருந்து வந்து குடியேறிய பெருங் கற்காலப் பண்பாட்டிற்குரிய திராவிட மக்களே அறிமுகப் படுத்தினர்.
4. சிங்கள மக்களின் மூதாதையர் வட இந்தியாவிலிருந்து குடியேறிய ஆரியர்களின் (விஜயனின்) வழித்தோன்றல்கள் அல்லர். இவர்களும் தமிழ் மக்களைப் போல் தென்னிந்தியா விலிருந்து குடியேறிய இடைக்கற் காலப் பெருங்கற்காலப் பண்பாட்டு மக்களின் வழிவந்தவர்களாவர். தென்னிந்தியாவில் பெருங்கற்காலப் பண்பாட்டின் பின்னணியில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என்ற மொழி வழிப் பண்பாடுகள் தோன்றியதுபோல் இலங்கையிலும் பெருங்கற்காலப் பண் பாட்டின் பின்னணியில் தமிழ், சிங்கள மொழிப் பண்பாடுகள் தோன்றின".
மேற்கூறப்பட்ட தொல்லியல் ஆய்வுகளின் முடிவுகள் சிங்கள மக்களின் வரலாறு தொடர்பாக வரலாற்று நூல்களில் இடம் பெற்றுள்ள பாரம்பரியக் கருத்துக்கள் மாற்றியமைக் கப்பட வேண்டும் என்பதைச் சுட்டிக்காட்டும் அதே வேளை, தமிழர் தொடர்பாக வரலாற்று நூல்களில் மறைக்கப்பட்ட

Page 144
அ. முகம்மது சமீம் 260 உண்மை வரலாறு தொல்லியல் சான்றுகளின் பின்னணியிற் கட்டியெழுப்பப்பட வேண்டும் என்பதையும் கோடிட்டுக் காட்டுகின்றன.
மேலே கூறப்பட்ட புஷ்பரட்ணத்தின் கருத்துக்களை நிரூ பிக்கும் தொல்பொருள் ஆய்வுகள், ஏற்றுக் கொள்ளப் பட்டால், இது காலவரையும், இலங்கையில் நிலைத்து வந்திருக்கும் பண்டைய வரலாற்றைப் பற்றிய கருத்துக்கள் முழுமையாக மாற்றப்படல் வேண்டும். சிங்கள இனத்தவர் தான் வரலாற் றுக்கு முற்பட்ட காலத்திலும் குறிப்பாக வரலாற்று ஆரம்ப காலத்திலும் இலங்கையில் குடியேறியவர்கள் என்றும் இலங் கைத் தமிழர்கள், பின்னர் ஏற்பட்ட படையெடுப் புக்களினால், இலங்கையில் குடியேறியவர்களென்றும் கூறப்படுவதற்குக் காரணம், இலங்கை, சிங்கள இனத்திற்கு மாத்திரம்தான் சொந்தம் என்றும், தமிழர்கள் இலங்கையைத் தமது தாய்நாடு என்று கூறுவதற்கு எவ்வித அருகதையும் அற்றவர்கள் என்ற கருத்து அடிநாதமாக அமைகிறது. "ஆரிய இனம்' 'ஆட்சி செய்யும் இனம் என்றும், "மேம்பட்ட இனம் என்றும் கூறிய அடல்ப் ஹிட்லரின் கருத்தை வலியுறுத்துவதற் காகவும், இந்தியாவில் வடப்பிராந்தியத்தில் வாழ்ந்து வந்த திராவிட இனம் தென்பிரதேசத்திற்கும் விரட்டியடிக்கப் பட்டதாகவும், திராவிடர்கள் ஆரியர்களால் அடிமைகளாக் கப்பட்டு, அவர் களது ஆட்சிக்குட்படுத்தப்பட்ட இனம், என்ற கருத்தை நிலை நாட்டவுமே, சிங்கள புத்திஜீவிகள் பாடுபடுகின்றனர். ஆகை யால்தான், ஆரியர்களின் வழித் தோன்றல்களாகிய சிங்களவர் தான் இலங்கையை ஆட்சி செய்யும் உரிமையுள்ளவர்கள், தமி ழர்ஆட்சிசெய்யப்பட வேண்டியவர்கள்' என்ற கருத்தும் தொனிக் கிறதல்லவா? சில சிங்கள இனவாதிகள் இதை வெளிப்படையா கவே கூறுகின்றனர். வேண்டுமென்றால், சிறுபான்மையாக இருக் கும் தமிழர் இனம், "உயர் இனமான சிங்கள இனத்தை யாசித்து ஏதாவது சலுகைகளைப் பெறலாமே யொழிய அவர்களுக்கு ஆளும் உரிமை கொண்டாட எவ்வித அருகதையுமில்லை, சிங்கள இனத்திற்கு மாத்திரம் தான் இவ்வுரிமை இருக்கிறது.

261 ஒரு சிறுபான்மை சமூகத்தின் பிரச்சினைகள் IV
38. இலங்கையின் தொல்பொருள் ஆய்வுகள் சிங்கள இனத்தின் மூதாதையர் திராவிடர் என்று உறுதிப்படுத்துகின்றன
இலங்கையின் வரலாற்றை எழுதப் புகுந்த சிங்கள வர லாற்றாசிரியர்கள், பெளத்த விகாரைகளில் வாழ்ந்த பிக்கு களால் எழுதப்பட்ட பாளி நூல்களையே தமது ஆதாரமாகக் கொண்டதனால், இந்நாடு சிங்கள - பெளத்தர்களுக்கே உரிய நாடு என்ற கருத்தை மையமாகக் கொண்டு எழுதப்பட்ட இந் நூல்களின் கொள்கையைத் தாமும் ஏற்றுக் கொண்டனர். தமிழர் களைப் பற்றிய குறிப்புக்கள் இந்நூல்களில் இல்லாததால், தமிழர்கள் பண்டு தொட்டு இந்நாட்டில் வாழ்ந்து வந்திருக்கி றார்கள் என்ற உண்மையை அறியவும் முற்பட வில்லை. பதின் மூன்றாம் நூற்றாண்டுக்குப் பிறகே யாழப்பாணத்தில் தமிழர் இராச்சியம் உருவாகியதாக இவர்கள் முடிவு செய்தனர். யாழ்ப்பாண இராச்சியத்தின் காலத்தில் எழுதப்பட்ட நூல்களான 60) A956) ITALI LID IT60) (6); வையாபாடல், யாழ்ப்பாண வைபவமாலை ஆகியவற்றைத் தமக்குச் சாதகமாகக் காட்டுகின்றன. இந்நூல் கள் யாழ்ப்பாணத்து மக்களிள் பூர்வீக வரலாற்றைப் பற்றிய ஆதாரபூர்வமாகக் கூறாதபடியால், தமிழர்கள் பண்டைய காலந் தொட்டு வடமாநிலத்தில் வசிக்கவில்லை என்ற முடிவுக்கு வந்தனர். இலங்கையில் ஏனைய பகுதிகளில் செய்த அகழ்வாய் வுகளைப் போல் இப்பிரதேசத்தில் செய்யவில்லை. ஆனால், சமீபத்தில் யாழ்ப்பாண சர்வகலாசாலை ஆசிரியர்களினால் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாய்வுகள் தமிழர்களின் பூர்வீகத் தைப் பற்றிய உண்மைகளை உலகுக்கு எடுத்துக் காட்டின. 1970ம் ஆண்டு கந்தரோடையிலும், புத்தளம் மாவட்டத்தி லுள்ள, பொம்பரிப்பு என்ற இடத்திலும், மேற்கொள்ளப் பட்ட அகழ் வாய்வுகள், இன்று தமிழ் - சிங்கள மொழிகளைப் பேசுவோரின், மூதாதையினர் இப்பிரதேசத்தில் வாழ்ந்தனர்

Page 145
அ. முகம்மது சமீம் 262 என்ற உண்மையை எடுத்துக் காட்டின. இவ்வாய்வுகளை மதிப்பீடு செய்த யாழ்ப்பாணத்து ஆசிரியர்கள், 'தென்னிந் தியாவிலே எவ்வாறு, ஆதித் தென் திராவிடத்திலிருந்து தற் காலத் தென்னிந்திய மொழிகளாகிய தெலுங்கு, கன்னடம், தமிழ், மலையாளம் ஆகியன துளிர்த்தனவோ, அவ்வாறே இத் தென் திராவிட ஈழத்துத் தமிழும் சிங்கள மொழியின் மூதாதை மொழியாகிய எலுவும் துளிர்த்தன, என்ற கருத்தைத் தெரிவித் தனர். யாழ்ப்பாணத்து சர்வகலாசாலை வரலாற்றுத் துறைத் தலைவர், கலாநிதி சி. க. சிற்றம்பலம் இக்கருத்தைத் தன்னு டைய, "யாழ்ப்பாணம் - தொன்மை வரலாறு' என்ற நூலில் பின் வருமாறு விளக்குகிறார். 'வட இந்தியாவிலிருந்து பெளத்தத் துடன் ஈழம் புகுந்த அதன் மத மொழியாகிய பாளியின் செல் வாக்கினாலே திராவிட மொழியாகிய எலு (பழைய சிங்கள மொழி) வட இந்திய மொழிச் சாயலைப் பெற்று உருமாறிப் பெளத்த மத ஜாதகக் கதைகளைக் கருப்பொருளாகக் கொண்டு 'வடஇந்தியக் குடியேற்றம்", என்ற "ஐதீகம் வளர்க்கப்பட்டது. இக்கதை வெறும் ஐதீக மெனப் பலர் உணர்ந்திருந்த போதும் அண்மைக்கால ஆய்வுகள்தான் இது ஐதீகமென்பதை உறுதிப் படுத்தியதோடு ஈழத்திற் காணப்பட்ட பெருங்கற்காலக் கலா சாரத்திற் குரிய திராவிட மக்களின் குடிப்பரப் பலுக்கு இவ்வை தீகத்தின் மூலம் விளக்கங் கொடுக்கப்பட்டதும் நமது ஆய்வால் எடுத்துக் காட்டப்பட்டுள்ளது. இதனை மேலும் உறுதிப்படுத் தும் விதமாகச் சிங்கள -தமிழ் மொழிகளுக் கிடையே நிலவும் அடிப்படை ஒற்றுமைகள், இரு சமூகங்களிடையே நிலவும் பொதுவான அம்சங்கள், சமூக வழக்குகள், வழிபாட்டு முறை கள் ஆகியன அமைகின்றன. இதனாற் பாளிநூலாசிரியர் கூறு வது போல் சிங்கள் மக்கள் மட்டும்தான் இந்நாட்டின் ஆதிக் குடிகள் அல்லவென்பதும், தமிழ் மக்களும் இவர்களோடு ஒத்த பழைமையையும் வரலாறுமுடையவர்கள் என்பதும் உறுதியாகி விட்டது!'
சிங்கள மொழியியலாளர்களும், வரலாற்று ஆசிரியர் களும், சிங்கள மொழியை, 'ஆரிய மொழிக் குடும்பத்தில்

263 ஒரு சிறுபான்மை சமூகத்தின் பிரச்சினைகள் IV
ஒன்றாக பகுக்கின்றனர். ஆரியர்கள் இலங்கைக்கு வருவதற்கு முன்னர், இலங்கையில் குடியிருந்த பூர்வீகக் குடியான, வேடர் கள் ஒருவித சைகை மொழியுடன் இரகசிய மொழியைப் பேசி வந்தார்கள். 'தென்னிந்திய ஆதிவாசிகளை ஒத்திருந்த இந்த வேடர்கள், ஆரிய மொழி அல்லாத ஒரு மொழியையே பேசி வந்தனர் என்பது, இலங்கை வரலாற்றாசிரியர்களில் ஒருவரான கைகரின் கருத்து. இலங்கையின் சிங்கள குடியேற்றங்களுக்குப் பிறகு, சிங்கள மொழி இப்பூர்வீகக் குடியான வேடர்களின் மொழியில் செல்வாக்குப் பெற்றது. இலங்கையின் தாழ்த்தப் பட்ட சாதிகளில் அடிமட்டத்திலுள்ள "ரொடியா சாதியினர் பேசும் மொழியில் சிங்கள வார்த்தைகள் இல்லாததை இவர்கள் சுட்டிக் காட்டுகின்றனர். சிங்கள மொழியின் வரலாற்றை எழுதப்புகுந்த கைகர், சிங்கள மொழி யின் வரலாற்றை மூன்று பிரிவுகளாகப் பிரிக்கிறார். முதலாவதாகச் சிங்கள பிராக்கிருதக் காலம் - இது கி.மு. மூன்றாம் நூற்றாண்டு முதல், கி.பி. நான் காம் நூற்றாண்டு வரையிலான காலம். இரண்டாவது, சிங்கள உதய காலம் - இது கி.பி. நான்காம் நூற்றாண்டு தொடக்கம் எட்டாம் நூற்றாண்டு வரைக்குமுள்ள காலம். மூன்றாவது, சிங்களமொழி வளர்ச்சியடைந்த காலம் - இது பதின்மூன்றாம், பதினான்காம் நூற்றாண்டுகளில் வளர்ச்சியடைந்து பிராக்கிருத சொற்கள் எதுவுமில்லாமல், தனிச்சிங்களமாக உருவெடுத்து, 'தூதுவிடு காவியங்களாக மலர்ந்தது.
“சிங்கள மொழியில் திராவிட மொழிகளின் செல்வாக்குச் சிறிது இருந்தாலும், இது முழுக்க முழுக்க ஓர் ஆரிய மொழி இனத்தைச் சேர்ந்தது' என்பது கலாநிதி, நந்ததேவ விஜேய சேகரவின் கருத்து. ஆனால் ஆரிய - திராவிட மொழிகளின் பூர்வீகத்தை ஆராயப் புகுந்த மேல்நாட்டு அறிஞர்கள், வேறு கருத்துக்களைக் கொண்டிருந்தனர். "ராஸ்க்' என்பவர் சிங்கள மொழி திராவிட மொழி இனத்தைச் சேர்ந்தது என்றும், ‘எப். முளர் என்பவர், சிங்கள மொழியின் மூலமே திராவிட மொழிதான் என்றும், ஜெர்மன் அறிஞரான 'ஹாஸ்' என்பவர், "சிங்களமொழியின் வளர்ச்சியில் தமிழ்மொழி அதிக செல்வாக்

Page 146
அ. முகம்மது சமீம் 264 கைப் பெற்றிருந்தது என்றும் கருதினர். ஆனால், றிஸ்டேவிட், கைகர் போன்றவர்கள் சிங்கள மொழி, ஆரிய மொழி இனத் தின் ஒன்று என்றும், குஜராத்தி, மராத்தி, வங்காளி, ஹிந்துஸ் தானி, போன்ற வடஇந்திய மொழிகளில் உள்ள அமைப்பைப் போன்றிருக்கிறது என்ற கருத்தைக் கொண்டிருந்தனர். இக்க ருத்தைச் சிங்கள மொழியின் குரல் ஒலி மூலமும் அதன் இயற்கை உருவமூலமும், நிரூபிக்கலாம் என்பது இவர்களது கருத்து.
இலங்கையின் கல்வெட்டு, சாசனங்களை ஆராய்ந்த சிங் கள அறிஞர்கள் (பி. ஈ. ஈ. பர்ணன்டு) இக்கல்வெட்டுக்களில் உள்ள பிராமி லிபி, மேற்கு இந்தியாவிலும், தென்னிந்தியா விலும் உள்ள கித் னார், சித்தாபூர், பிரஹ்ம கிரி போன்ற இடங்களில் உள்ள அசோக சக்கரவர்த்தியின் கல்வெட்டுச் சாச னங்களிலுள்ள பிராமிலிபியை ஒத்திருக்கின்றன, என்று கூறு கின்றனர். எனவே வடஇந்திய செல்வாக்குதான் இலங்கை யில் ஏற்பட்டது என்ற முடிவுக்கு வந்தனர். இந்திய வரலாற்றாசி ரியர்களில் ஒருவரான ஏ. எல். பஷாம் என்பவர், விஜயன் வடமேற்குப் பகுதியிலிருந்து வந்திருக்கலாம் எனவும், அசோக சக்கரவர்த்தியின் காலத்திலிருந்த 'மெளரிய அரசமொழி', சிங்கள அரசமொழியில் அதன் தாக்கத்தை ஏற் படுத்தியிருக்க லாம் என்றும் கருதுகிறார். பெளத்த சமயம் தோன்றுவதற்கு முன் மேற்கிந்தியாவில் வழக்கத்திலிருந்த 'காமினி என்ற சொல்லையும், வட இந்தியாவில் அரசர்களுக்கு 'மஹாராஜா என்ற பட்டம் இருந்ததையும் உதாரணமாகக் காட்டுகிறார்.
இது இவ்வாறிருக்க, சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாய்வுகள், எமக்குப் புதிய முடிவுகளைத் தருகின்றன. சிங்கள மக்களின் மூதாதையினரான இந்துக்கள், பெளத்த மதத்தைத் தழுவியபோது, பெளத்த மதத்தினருக்குக் குகைக ளைத் தானமாக அளித்ததை எடுத்துக் காட்டுகின்றன. முதலா வது படை ஈழம், தமிழகம் ஆகிய பிராந்தியங்களில் கி.மு. ஆறாம் நூற்றாண்டில் வழக்கிலிருந்த திராவிட வரிவிடிவம் ஆகும். பின்னர் இலங்கையில் பெளத்தம் பரவியபோது, அதன்

265 ஒரு சிறுபான்மை சமூகத்தின் பிரச்சினைகள் IV மத மொழியாகிய பிராக்கிருதத்தின் செல்வாக்கும் மேலோங் கியது. இதனால் பழைய திராவிட மொழியின் வரிவடிவங்கள் மறையத் தொடங்கின. அதோடு, திராவிட கலாசாரப் பண்புகள் மறைந்து, வடஇந்திய கலாசாரப் பண்புகள் வளரத் தொடங் கின. திராவிட மொழியாகிய 'எலுவைப் பேசிய மக்களின் மத்தியில் வடஇந்திய கலாசாரம் மேலோங்கியது. திராவிட பழைய வரிவடிவ எழுத்துக்களும், 'ஆய்', 'வேள் பரத, பருமக, போன்ற திராவிடக் குழுப்பெயர்களும் மறைந்தன. பெளத்த மதத் தாக்கத்தினால், இந்து மதக் கடவுளரின் பெயர்களும் மறைந்தன.
இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட கல்வெட்டுச் சாசனங் கள், பெரும்பாலும் வரலாற்றுக் காலத்துக்குடையவை என்பது அறிஞர்களின் அபிப்பிராயம். இந்தியாவைப் போல, இலங் கையிலும் பயன்படுத்தப்பட்ட பிராமிலிபி, கி.மு. மூன்றாம் நூற்றாண்டுக்குரியனவாகும். கி.மு. மூன்றாம் நூற்றாண்டுக் குரிய இப் பிராமி வடிவங்கள், அசோக சக்கரவர்த் தியின் காலத்தில், இந்தியாவில் பரவலாகப் பயன்படுத்தப் பட்டன. அசோகனுடைய காலத்தில், தமிழ்நாடு உட்பட ஏனைய பாகங் களில் பாவிக்கப்பட்ட பிராமி வடிவங்கள் அவருடைய கல் வெட்டுச் சாசனங்களில் காணலாம். ஆனால் இதே காலத் தில்,தமிழ்நாட்டில் பயன்படுத்தப்பட்ட பிராமி வடிவங்கள், தமிழ் மொழிக்கே சிறப்பான 'இ 'ம' 'ற', 'ன', 'ள', 'ழ' போன்ற எழுத்துக்கள் பயன்படுத்தப் பட்டதோடு, தமிழ் மொழியிலே எழுதப்பட்டன. இதனால் இவை, தமிழ்ப் பிராமி எனப்பட்டன என்பது தமிழ்ப்பிராமி சாசனங்களை ஆராய்ந்த மகாதேவன் என்பவரின் கருத்து. பண்டைய தென்னாசிய கல்வெட்டுச் சாசனங்கள் என்ற ஆய்வில் வி. சிவசாமி என்ற ஆய்வாளர், "இந்தியாவில் ஏற்பட்ட எழுத்துக்களின் தோற்றம், சமகாலத்தில் இலங்கையிலும் பரவியது" என்கிறார்: இலங்கை யில் கண்டுபிடிக்கப்பட்ட பிராமிச் சாசனங்கள், பெரும்பாலும் அனுராதபுரியிலும், அதனையடுத்த ஏனைய இடங்களிலும், கண்டுபிடிக்கப் பட்டன. யாழ்ப்பாணத்தில் கந்தரோடையி

Page 147
அ. முகம மது சமீம் 266 லும், வல்லிபுரத்திலும், ஆனைக்கோட்டையிலும் கண்டெடுக் கப்பட்ட சாசனங்கள் இக்காலத்திற்கே உரியன என்பது சிவ சாமியின் கருத்தாகும். இலங்கையில், அனுராதபுரியில் கண்டெ டுக்கப் பட்ட சாசனங்கள், பிராக்கிருத மொழியில் பெளத்தம் சம்பந்தமாக இருப்பதனால், இச்சாசனங்கள் வட இந்தியத் தொடர்பாலே பரவியன என்றும், சிங்களவரின் மூதாதையர் வடஇந்தியாவிலிருந்து வந்ததற்கு இவை ஆதாரம் என்றும் கூறுகிறார் பரணவித்தாரன. 'ஆனால் இச்சாசனங்களிலே பல தமிழ்ப் பெயர்களும் தமிழ்நாட்டுப் பிராமி வடிவங்களின் செல்வாக்கும் இடம் பெற்றிருப்பதை இலங்கை தமிழ்நாட்டு சாசனவியலாளர் பலரும் பல சந்தரப்பங்களிலும் சுட்டிக் காட் டியுள்ளனர்', என்று தொல்பொருள் ஆய்வாளர் புஷ் பரட்ணம் கூறுகிறார். மேலும் புஷ் பரட்ணம் தன்னுடைய ஆய்வில் பின்வரு மாறு கூறுகிறார்.
'அண்மையில் மிகிந்தலை, வெசகிரி போன்ற இடங்க ளிலே கிடைத்த பிராமிச் சாசனங்கள் பற்றி ஆராய்ந்த அபய சிங்க, அவ்விடங்களிலுள்ள வரிவடிவங்கள் பெளத்த மதத்து டன் வடபிராமி எழுத்துக்கள் இங்கு பரவுமுன் தமிழ்நாட்டடி லிருந்து ஏற் பட்ட சமணசமயச் செல்வாக்காலே தோன்றிய திராவிட எழுத்துக்கள் எனக் குறிப்பிட்டார். கருணாரத்ன, பெர்னாண்டோ போன்றோர் தமிழ்நாடு இலங்கை ஆகிய பிராந்தியங்களுக்கிடையே பிராமி எழுத்துக்களில் உள்ள பொது ஒற்றுமையைச் சுட்டிக் காட்டினர். இதில் இருந்து, இலங்கை யின் வரலாற்றுக்கு முற்பட்ட காலம், வரலாற்று உதயகாலம் போல் வரலாற்றுக்காலமும் தென்னிந் தியத் தொடர்பாலே தோன்றிய தென்பது தெளிவாகின்றது'.
எனவே, சிங்கள வரலாற்றாசிரியர்களின், சிங்கள இனத் தவர் வடநாட்டிலிருந்து வந்தவர்களென்பதும், ஆரிய இனத் தைச் சேர்ந்தவர்கள் என்பதும், சிங்களமொழி வட மொழிகளி லிருந்து தோன்றிய தென்பதும் தவறான கருத்துக்கள்.

267 ஒரு சிறுபான்மை சமூகத்தின் பிரச்சினைகள் IV 39. 'இலங்கைத் தமிழரின் மூதாதையர் கற்காலந்தொடக்கமே வடக்குப் பிராந்தியத்தில் வாழ்ந்திருக்கிறார்கள்' என்று தொல்பொருள் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்
'தமிழர்தாயகம்' என்பது ஒரு மாயை, தமிழர் இராச் சியம் என்ற ஒன்று பதின்மூன்றாம் நூற்றாண்டுக்குப் பிறகே வரலாற்றில் இடம் பெற்றது. தமிழர் படையெடுப்புக் களின் பின்னர், முக்கியமாக மலேயாவிலிருந்து வந்த 'சந்திர பானுவின் படையெடுப்புக்குப் பிறகே, யாழ்ப்பாண மக்களைப் பற்றிய குறிப்புக்கள் வரலாற்றில் இடம் பெறுகின்றன, என்ற சிங்கள வரலாற்றாசிரியர்களினதும், சிங்கள அறிவியலாளர் களினதும் கருத்து தவறானது என்று, யாழப்பாணத்து ஆசிரியர் கள், தகுந்த ஆதாரங்களுடன், தமது ஆய்வுகளின் மூலம், எடுத்துக் காட்டியிருக்கின்றனர். தமிழர்களின் மூதாதையர்கள், வரலாற்றுக்கு முற்பட்ட காலமாகிய, கற்காலத்திலேயே இலங் கையின் வடக்குப் பிரதேசத்தில் வசித்துவந்திருக்கிறார் கள் என்பது இவர்களின் ஆய்வுகளின் முடிவு.
இலங்கையின் வரலாறு, 28,000 வருடங்களுக்கு முற் பட்ட இடைக் கற்காலப் பண்பாட்டுடன் தொடங்குகிறது', என்பது சுகந்தா பொன்சேக்காவின் கருத்து. இலங்கையில் ஆதி மனிதன் 1,25,000 வருடங்களுக்கு முன்பே வாழ்ந்திருக்கிறான் என்பது தெரனியாக லவின் கருத்து. எனவே இலங்கையில் ஆதிமனிதன் கற்காலத்திலேயே வாழ்ந்திருக்கிறான் என்பது அறிஞர்களின் முடிவு.
தொல் பொருள் ஆய்வாளர்களும், வரலாற்றாசிரியர் களும், கற்காலத்தை, பழைய கற்காலம், இடைக்கற்காலம், புதிய கற்காலம் என பிரித்தனர். இடைக்கற்காலக் கலாசாரத்

Page 148
அ. முகம்மது சமீம் 268 தினைத் தொடர்ந்து கி.மு. 1000 ஆண்டளவில் பெருங்கற்காலக் கலாசாரம் இலங்கையில் பரவியது. இடைக்கற் காலத்திற்குரிய சான்றுகள் மன்னார், கிளிநொச்சி, வவுனியா மாவட்டங்களில் கிடைத்ததைப் போன்று, பூநகரிப் பகுதியிலும் கிடைத்துள்ளன. யாழப்பாணக் குடாநாட்டில் சத்திராந்தையில் (காரைநகர்), மேற்கொள்ளப்பட்ட அகழ்வின்போது, பெருங்கற்காலத்திற் குரிய குவாட்ஸ் கல்வகையிலான கல்தகடு ஒன்று கண்டெடுக் கப்பட்டது. இக்கருவிகள் குறுணிக்கற்களால் ஆக்கப்பட்ட தனால், இதைக் குறுணிக் கற்காலம்' என்றழைப்பதும் உண்டு. மாந்தையில், குறுணிக்கற்காலக் கருவிகளோடு ஆன மக்களின் அன்றாட வாழ்க்கையின் அம்சங்களை எடுத்துக்காட்டும் தடயங் களும் கிடைத்துள்ளன என்பது தெரினியாகலவின் கருத்து.
புதிய கற்கால மக்களுடைய வாழ்க்கையைப் பற்றிய ஆதாரங்கள் இலங்கையில் கிடைக்கவில்லையென்றாலும், இவர்களே பெருங்கற்காலக் கலாசாரத்தினை வளர்த்திருக் கலாம். பெருங்கற்களாலான ஈமச்சின்னங்களை அமைத்தத னால் இவ்வாறு பெயர் பெற்றது. இச்சின்னங்கள், கல்லரை யறை, கல் மேசை, கல்வட்டம் போன்ற பெயர்களைப் பெற் றன. இவர்கள் தாழிகளிலும் குழிகளிலும் இறந்தோரை அடக் கஞ்செய்தனர். இவ்வீமச்சின்னங்களுள், இரும்பாயுதங்களும், இருந்ததனால், இக்கலாசாரத்தை இரும்புக் கலாசாரம் என்றும், அறிஞர்கள் கூறுவதுமுண்டு. இச்சின்னங்களோடு, கறுப்பு, சிவப்பு மட்பாண்டங்களும் இருந்தன. ஆகவே இக்காலமக்கள், விவசாயம், மந்தை வளர்ப்பு ஆகிய துறைகளில் ஈடுபட்டிருந்தனர் என்பது இச்சின்னங்கள் மூலம் அறிய முடிகிறது. தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாய் வுகளிலிருந்து தென்னகத்து மக்களே, இக்காலாசாரத்தை இலங்கைக்குக் கொண்டு வந்தனர் என்று நிரூபிக்கின்றன.
இலங்கையின் வரலாற்றுக் காலத்திற்கும், வரலாற்றுக்கு முற்பட்ட காலத்திற்குமிடையே உள்ள காலத்தை வரலாற் றுதய காலம் என்று அறிஞர்கள் கூறுகின்றனர். இலங்கையில்

269 ஒரு சிறுபான்மை சமூகத்தின் பிரச்சினைகள் IV
ஆட்சி செய்த தேவநம்பியதீசனின் ஆட்சிக்காலத்திற்கும் (கி.மு. 1000-250) முற்பட்ட காலமே வரலாற்றுதயகாலம். வரலாற்றுதயாலத்திலும், வரலாற்று ஆரம்ப காலத்திலும், அநுராதபுரிதலைநகராக விளங்கியது. 1969ம் ஆண்டு அனுராதபுரி யில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வுகளில் பெருங்கற்காலத்திற் கும், வரலாற்றுக் காலத்திற்குமுரிய தடயங்கள் பெறப்பட்டன.
1967ம் ஆண்டிலும், 1970ம் ஆண்டிலும் விமலாபேக்லே கந்தரோடையில் மேற்கொண்ட அகழ்வாய்வு, வடபகுதி மக்கள் வரலாற் றுதய காலத்தில் வாழ்ந்திருக்கின்றனர் என்பதை உறுதிப்படுத்தியது. இவ்வாய்வுக் குழிகளில் இரண்டு கலாசாரப் படைகள் இனங்காணப்பட்டன. இவை, வரலாற்றுதய காலம், வரலாற்றுக் காலம், ஆகிய இரு காலங்களுக்குரிய கலாசார சின்னங்களாக விளங்கின. கந்தரோடை ஆய்வின்போது, பெருங்கற்காலக் கலாசாரத்திற்குரிய இரும்பு, வெண்கலம், ஆகிய மூலப்பொருட்களிலான பல்வேறு வகையான கருவிகள், மணிவகைகள் உரோம நாணயங்கள் ஆகியன கிடைத்துள்ளன. இவற்றோடு, உரோம மட்பாண்டங்கள், இலட்சுமி நாணயங் கள் அம்மிக் குழவிகள், வெண்கலத் திரிசூலம் ஆகியனவும் கிடைத்தன. வெண்கலத் திரிசூலத்தோடு, வெண்கலத்திலான வேல் போன்ற இலை வடிவிலுள்ள கருவியும் இங்கே கிடைத் ததாகக் கூறப்படுகின்றது (ஆதாரம் - யாழ்ப்பாணம் - தொன் மை வரலாறு - கலாநிதி சிற்றம்பலம்) விமலா பேக்லே இது பற்றிக் கருத்து வெளியிடுகையில், 'இவை தென்னிந்திய இரும்புக் காலத்தைச் சேர்ந்த மட்பாண்டங்களை ஒத்துக் காணப் படுகின்றன", என்றும் "இத்தகைய ஒற்றுமை கந்த ரோடை - தென்னக மக்கள் ஆகியோர் ஒரே கலாசாரத்தின் வழிவந்தவர் கள் அல்லது இரு பகுதியினரும் மிக நெருங்கிய முறையில் தொடர்பு கொண்டிருந்தனர் என்பதை எடுத்துக் காட்டு கின்ற "தெனவும், "இங்கு கி.மு. நான்காம் நூற்றாண்டளவில் மக்கள் குடியேறியிருக்கலாம்' என்று சுட்டிக் காட்டியுள்ளார். 'எனவே கி.மு. 1000ம் ஆண்டளவில் தென்னகம் போன்று இலங்கையிலும், பெருங்கற் காலந்தோன்றிவிட்டது என்பது

Page 149
அ. முகம்மது சமீம் 270 தெளிவாகியுள்ளது, 'அநுராதபுரம் போன்று, கந்தரோடை, வடபகுதியின் முக்கிய தலைநகராக விளங்கிய மை புலனா கின்றது' என்று கலாநிதி சிறம்பலம் கூறுகிறார். "இதனால், இன்றைய சிங்கள - தமிழ் மக்கள் பெருங்கற் காலக் கலாசாரத் தின் வழிவந்தவர்கள்', என்ற முடிவுக்குச் சிற்றம்பலம் வருகிறார். பூநகரிப் பிராந்தியத்திலுள்ள மண்ணித்தலை, பரமன் கிராமம் போன்ற இடங்களிற் கிடைத்துள்ள பெருங் ககாலக் கலாசாரத்தைச் சேர்ந்த கறுப்பு சிவப்பு மட்பாண்டங் களும், ஏனைய தொல்லியல் சின்னங்களும், இப்பிரதேச மக் கள் கந்தரோடை மக்களுடன் தொடர்பு கொண்டிருந்தனர் என் பதை உறுதிப்படுத்துகின்றன.
ஆனைக் கோட்டையிலும், அக்காலத்திய துறைமுகங்களி லொன்றான நாவாந்துறைக்கு அருகிலும் கண்டெடுக்கப்பட்ட சின்னங்களில், சிந்துவெளி நாகரிகத்தில் கண்டெடுக்கப்பட்ட மண்பாண்டங்களிலுள்ளதுபோல், குறியீடுகளை ஒத்த ஒருவித சித்திர எழுத்து காணப்பட்டது. இவ்விரு வரிவடிவங்கள் இரு வரிகளாகக் காணப்படுகின்றது. இரண்டாவது வரியில் பிராமி வடிவங் காணப்படுகிறது. 'இவ்விரு வடிவங்கள் இம் முத் திரையில் காணப்பட்டாலும், ’கோவேந்த' என்ற வாசகமே இவ்வாறு இரு வரிகளாக இரு வடிவங்களில் எழுதப்பட்டுள் ளன' என்பது தொல்பொருள் ஆய்வாளர் ரகுபதியின் கருத் தாகும். 'சிந்து வெளி நாகரிக மக்களுக்கும், இலங்கையின் வடபிராந்திய மக்களுக்குமிடையில் நாவாந்துறைத் துறைமுகத் தூடாகத் தொடர்பிருந்திருக்கலாம்' என்று கலாநிதி சிற்றம் பலம் அபிப்பிராயப்படுகிறார். கப்பல் பிரயாணத்தில் ஈடுபட்ட ஒரு தலைவனால் அணியப்பட்ட ஒரு மோதிரத்தின் எஞ்சிய பாகமே இது என்பது அவரது கருத்தாகும்.
இலங்கையில் பல பாகங்களிலும், வரலாற்றுதய காலத் தில் வாழ்ந்த மக்களைப் போல், யாழ்ப்பாண குடாநாட்டிலும் வாழ்ந்திருக்கிறார்கள் என்பதைக் கலாநிதி சிற்றம்பலம் பின் வருமாறு கூறுகிறார்.

27 ஒரு சிறுபான்மை சமூகத்தின் பிரச்சினைகள் IV 'கந்தரோடை ஆனைக் கோட்டை, சந்திராந்தை, கும் புறுப்பிட்டி ஆகிய இடங்களிற் கிடைத்த மட்பாண்டங்கள், குறிப்பாகப் பெருங்கற்காலக் கலாசாரத்தின் முத்திரைகளான கறுப்புச் சிவப்பு நிறத்திலமைந்த கிண்ணங்கள், வட்டில்கள், சிவப்பு நிற மட்பாண்டங்கள் ஆகியனயாவும் ஒரே கலாசாரத் தின் அம்சங்களாக விளங்கியதை எடுத்துக் காட்டும் அதே நேரத்தில் ஈழத்தின் பிற பகுதிகளில் நிலவிய பெருங்கற் காலக் கலாசாரத்தின் ஒருபகுதியே இவை என்பதனையும் இம்மட் பாண்ட வடிவங்களுக்கிடையே இழை விட்டோடும் ஒற்றுமை எடுத்துக் காட்டுகின்றது. அநுராதபுரம், பொம்பரிப்பு, திவுல் வெவ, குடுகல்கின்ன போன்ற இடங்களிற் கிடைத்துள்ள மட் பாண்டங்களுக்கும் இவற்றுக்குமிடையே தோற்றமளவில் உள்ள ஒற்றுமை இக்கருத்தினை உறுதி செய்கின்றது.
தோற்றத்தில் மட்டுமின்றி இவற்றிடையே காணப்படுங் குறியீடுகளிலும் இத்தகைய ஒற்றுமை உண்டு. இதனால் யாழ்ப்பாணக் குடாநாடு ஈழத்து நாகரிக வளர்ச்சியிற் பிற பகு திகளைப் போல முக்கிய பங்கினை வகித்திருந்தமை புலனா கின்றது'.
யாழ்ப்பாணத்துப் பிரதேசத்தில் வாழ்ந்த மக்கள் தென் னிந்திய மக்களுடன் தொடர்பு கொண்டிருந்தனர் என்பதற்கு வேறுபல சான்றுகளும் உள்ளன. 'திருக்கேதீஸ்வர பிரதேசத் தின் குறிப்புகள்' என்ற ஆய்வில், எஸ். சண்முகநாதன், தான் மாந்தையில் நடத்திய அகழ்வாய்வின் போது, "கிடைத்த மனித சடலமொன்றைப் பற்றிக் குறிப்பிடுகிறார். இச்சடலத்தையும், அதனோடு கிடைத்த மட்பாண்டங் களையும் ஆராய்ந்த இவர், இவை வரலாற்றுதய காலத்திற்குரியது என்று கூறுகிறார். இச்சடலத்தினை ஆராய்ந்த சண்முகமும், ஜயவர்தன என்ப வரும், இது தற்காலத் தென்னிந்திய மக்களுடைய தோற்றத் தையே ஒத்துக் காணப் படுகின்றது என்ற முடிவுக்கு வந்தனர். பொம்பரிப்புப் பிரதேசத்தில் கண்டெடுக்கப்பட்ட தாழிகளில், வைக்கப்பட்டிருந்த மனித எலும் புக் கூடுகளை ஆராய்ந்த,

Page 150
அ. முகம்மது சமீம் 272 கென்னடி என்பவர், தமிழ்நாட்டு மக்களை ஒத்திருந்தது என்ற கருத்தைக் கொண்டிருந்தார். இத்தாழிகளைப் பற் றியும், இவற்றில் கிடைத்த மனித எலும்புகளைப் பற்றியும் கருத்தைத் தெரிவித்த கலாநிதி சிற்றம்பலம்', பின்வருமாறு தன் கருத் தைத் தெரிவிக்கிறார்.
'இத்தாழிக்காடு தமிழகத்திலுள்ள மிகப் பெரிய தாழிக் காடான ஆதிச்சநல்லூருக்கு நேரெதிரே காணப்படுவதும், இவ்வாதிச்சநல்லூர் தாம்ரவர்ணி நதிக்கரையில் அமைந் திருந் தது குறிப்பிடத்தக்கது. பொம்பரிப்புத் தாழிகளுக்கும் கிண்ணங் களுக்கும் வட்டில்களுக்கும் ஏனைய இரும்பு, வெண்கலப் பொருட்களுக்கும், ஆதிச்ச நல்லூரில் கண்டெடுக் கப்பட்ட தாழிகளுக்கும், கிண்ணங்களுக்கும், வட்டில்களுக்கும், பிற இரும்பு வெண்கலப் பொருட்களுக்கும் இடையே நெருங்கிய ஒற்றுமை உள்ளது. இதனால் வரலாற்றுதய காலத்தில் மன் னார்க் கரைக்குப் பாண்டி நாட்டிலிருந்தே பெருங்கற் காலக் கலாசாரத்தைப் பேணிய திராவிட மக்கள் புலம் பெயர்ந்திருப் பர் எனக் கொள்ளலாம்.
எனவே, இலங்கைத் தமிழரின் மூதாதையர், பெருங்கற் காலந் தொடக்கமே, யாழ்ப்பாணக்குடா நாட்டிலும், வடக்குப் பிரதேசத்திலும் வாழ்ந்திருக்கிறார்கள் என்பதும், இவர்கள் சிந்துசமவெளி நாகரிகக் காலத்திய மக்களுடனும் தொடர்பு கொண்டிருந்தனர் என்ற உண்மையை, அகழ்வாய்வுகளை நடத்திய தொல் பொருள் ஆய்வாளர்கள், ஆதாரங்களுடன் விளக்கியிருக்கின்றனர்.

273 ஒரு சிறுபான்மை சமூகத்தின் பிரச்சினைகள் IV 40. பண்டைய காலந்தொட்டே இலங்கைக்கும் தென்னிந்தியாவிற்குமிடையில் இருந்து வந்த கலாசாரத் தொடர்பை மூடி மறைக்கின்றனர் சிங்கள வரலாற்றாசிரியர்கள்
இலங்கையின் சமீப கால வரலாற்றில், சமூகங்களிடையே உள்ள இன உணர்வு, இனவெறியாக மாறி, இனப்போராட்ட மாக வளர்ந்திருப்பதைக் காண்கிறோம். வரலாற்றாசிரியர் களும், அறிவியலாளர்களும் தத்தமது இனங்களின் மேன்மை யையும், தொன்மையையும் காட்டுவதற்கு வரலாற்று நிகழ்ச்சிக ளையும், சம்பவங்களையும், இவ்வினக் கண் கொண்டு பார்க்க முற்பட்டனர். இதனால், சில சம்பவங்கள் மூடிமறைக்கப் பட்டும், சில நிகழ்ச்சிகள் மிகைப்படுத்திக் கூறப்பட்டும், வர லாற்றுத் தத்துவமே மாற்றியமைக்கப் பட்டது. பத்தொன் பதாம் நூற்றாண்டில், கிழக்கு நாடுகளின் வரலாற்றை ஆராய்ச்சி செய்த ஐரோப்பிய வரலாற்றாசிரியர்கள் 'ஆரிய இனம் என்றவொரு புதிய இனத்தைக் கண்டுபிடித்தனர். இந்திய - ஐரோப்பிய மொழிகளின் அமைப்பை ஆராய்ச்சி செய்த வில்லியம் ஜோன்ஸ் என்பவரே இக்கருத்திற்கு வித்திட்டவர். 'இந்திய - ஆரிய மொழிகளிலுள்ள ஒற்றுமையையும் தொடர் பினையும் காட்டி, இம்மொழிகளைப் பேசுபவர்கள், ஆரிய இனத்தைச் சேர்ந்தவர்கள் என்ற கருத்து, பத்தொன்பதாம் நூற் றாண்டில் ஐரோப்பிய அறிஞர்களிடையே பரவிற்று. செமித்திக் மொழியைப் பேசாதவர்கள் ஆரிய இனத்தைச் சேர்ந்தவர்கள் என்ற கருத்தும் பரவிற்று. இத்தத்துவத்தை அடிப்படையாக வைத்து, ஜெர்மன் தத்துவ ஞானி, ஹெகல், “ஜெர்மன் இனம் ஆரிய இனம், உயர்ந்த இனம், ஆளும் இனம்', என்ற கருத் தைத் தன்னுடைய தத்துவத்தில் புகுத்தினார். மெக்ஸ்முலர்

Page 151
அ. முகம்மது சமீம் 274 என்பவர் மொழிகளின் ஒற்றுமையை வைத்து, இம்மொழி களைப் பேசுபவர்கள், ஆரிய இனத்தைச் சேர்ந்தவர்கள் என்று கூறினார். ‘மனித நாகரிகத்தின் ஆரம்பமே இவ்வினத்திலிருந்து தோன்றியதுதான் என்று ‘ஹக்ஸ்லி' என்பவர் தன் கருத்தைத் தெரிவித்தார். 'வங்காள மக்களினதும், ஆங்கிலேயர்களினதும் நரம்புகளில் ஒடும் இரத்தம் ஒரே இரத்தம்' என்று 'முலர் கூறி னார். பத்தொன்பதாம் நூற்றாண்டில் இந்திய மொழிகளை ஆராய்ந்த றொபர்ட் கால்டுவெல் தென்னிந்திய மொழிகளான, தமிழ், மலையாளம், தெலுங்கு போன்றவை திராவிட மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தவை என்ற கருத்தைத் தெரிவித் தார். ஆகவே இம்மொழிகளைப் பேசுபவர்கள் திராவிட இனத் தைச் சேர்ந்தவர்கள் என்ற கருத்தும் பரவலாயிற்று. சிங்கள இனத்தின் மேன்மையை வலியுறுத்த முற்பட்ட சிங்கள வரலாற் றாசிரியர்கள், தமது மூதாதையர் வட இந்தியாவிலிருந்த ஆரிய இனத்தைச் சேர்ந்தவர்களென்றும் சிங்களமொழி வட இந்திய மொழிகளிலிருந்து வளர்ந்த ஒரு மொழியென்றும், தென்னிந் தியாவுக்கும் தமக்கும் எவ்வித சம்பந்தமுமில்லை யென்றும் கூறினார்கள். திராவிட இனத்தைச் சேர்ந்த இலங்கைத் தமிழர் களினின்றும் தாம் வேறுபட்டவர்கள் என்பதைக் காட்ட, மக்களிடையே இருந்த புனைகதைகளையும், கர்ணபரம்பரை யான கதைகளை யும், வரலாறாகத் திரித்துக் கூற முற்பட்டார்
56T.
சிங்கள இனத்தின் தொன்மையைக் காட்ட முற்பட்ட இவ் வரலாற்றாசிரியர்கள், சிங்கள மொழியின் தொன்மை யையும், சிங்கள இனத்தின் தனித்துவத்தையும், வரலாறு ஆரம்பகால முதலே தோன்றியவை என்று கூறத்தவறவில்லை. "சிங்கள இனத்தவர் பெளத்தர்கள், அவர்களுடைய எதிரிகள் தமிழ் பேசும் இந்துக்கள்' என்று இவ்வினவாத அறிஞர்கள் கூறுகி றார்கள்', என்று பேராசிரியர் லெஸ்லி குணவர்தனா, "தற்கால இலங்கையில் வரலாற்றுத் தத்துவம்' என்ற தனது நூலில் கூறுகிறார். அவர் மேலும் 'இவர்களுக்கு நேர் எதிராக தமிழ் அறிஞர்களும் வரலாற்றாசிரியர்களும், யாழ்ப்பாணத்துத்

275 ஒரு சிறுபான்மை சமூகத்தின் பிரச்சினைகள் IV தமிழர்களின் பண்டைய வரலாற்றுப் பெருமையையும், சிங்கள ஆதிக்கத்திற்குட்படாத சுதந்திர தமிழர் இராச்சியம் இருந்த தாகவும் கூறுகிறார்கள். இப்படி எழுதும்போது, இலங்கைத் தமிழர்கள் தமது பண்பாடு, தென்னிந்தியா விலிருந்து தோன் றிய தென்றும் வட இந்தியாவுடன் எவ்விதத் தொடர்பும் அவர் களுக்கிருக்கவில்லையென்றும், தென்னிலங்கை மக்களுட னும் எவ்விதக் கலாசார பரிமாற்றமும் தமக்கு இருக்கவில்லை யென்ற கருத்தை முன்வைக்கிறார்கள்' என்று கூறுகிறார்.
சிங்கள வரலாற்றாசிரியர்கள் சிங்கள இனத்தவர் வட இந்தியாவிலிருந்து வந்தவர்களென்றும், ஆரிய இனத்தைச் சேர்ந்தவர்களென்றும் வரலாற்றுச் சம்பவங்களைத் திரித்துக் கூறுகின்றனர். விஜயனும் அவனது சகாக்களும் இலங்கையில் வந்திறங்கிய இடத்தைத் 'தம்பபண்ணி என்று மகாவம்சம் கூறுகிறது. இதற்கு மகாவம்ச ஆசிரியர் கூறும் விளக்கம் என்னவென்றால், விஜயனும் அவனது கூட்டத்தினரும் வந்தி றங்கியபோது, களைப்பினால், தமது கைகளைத் தரையில் ஊன்றியபோது, அம்மண் செம்மண்ணான படியால், கைகள் செந்நிறமாக இருந்ததைக் கண்டு, 'தம்ப பொன் என்ற பெயரைச் சூட்டினர். 'உண்மையில் இப்பெயர் அன்று இப்பிரதேசத்தில் வாழ்ந்த தமிழர்களின் மூதாதையருடைய காலத்தில் வழக்கிலிருந்த தாமிரவர்ணி என்ற பெயருக்கே மகாவம்ச ஆசிரியர் இப்படி விளக்கம் கொடுக்கிறார். 'தமிழ் நாட்டில் தண்பொருணை ஆற்றுப் பகுதியிலிருந்து ஈழத்திற் குக் குடியேறிய மக்கள் தாம் வந்திறங்கிய இடத்திற் குத் 'தண்பொருணை' எனப் பெயரிட்ட பின்னர் வடமொழிக் கலாசாரப் பரம்பலால் இது தாமிரவர்ணியாகி, அதன் பின்னர், பிராகிருத வடிவமாகிய 'தம்பபண்ணியென மாறியது போலத் தெரிகிறது' என்று கலாநிதி சிற்றம்பலம் கருதுகிறார். மேலும் அவர், பாளி நூல்களிலும் கிரேக்க அறிஞர்கள் தருஞ் சான்று களிலும் ஈழத்தின் மிகப் பழைய பெயராக முறையே தம்ப பண்ணி, தப்ரபேன் காணப்படுவதால் ஈழத்தின் ஆதிக் குடியேற் றம் தமிழகத்தின் தாமரவர்ணி ஆற்றின் கரையோரத்திலிருந்தே

Page 152
அ. முகம்மது சமீம் 276
இங்கு வந்தது என்பதை இவை நினைவூட்டி நிற்கின்றன என லாம்' என்று கூறுகிறார்.
விஜயனும் அவனது சகாக்களும், தமது மனைவிமாரை மதுராபுரியிலிருந்துப் பெற்றதாகப் பாளி நூல்கள் கூறுகின்றன. இந்நகரம் மதுரா என்ற நகரத்தையே குறிக்கிறது என்பது இவர்களது விளக்கமாகும். மேலும், விஜயனுக்குப் பிறகு ஆட்சி செய்த பண்டுகாபயனின் அரச பரம்பரை வடஇந்தியா விலுள்ள ஆரிய வம்சத்தவர்களாகிய “பண்டு (பாண்டவர்) என்ற வம்சத்தைச் சேர்ந்தவர்கள் என்பது பாளிநூலாரின் கருத் தாகும். ஆனால், விஜயன் வருடாவருடம் தன் மாமனாகிய பாண்டிய மன்னனுக்கு முத்துக்களை அனுப்பிவைத்தான் என்றும் மகாவம்சம் கூறத் தவறவில்லை.
விஜயனுக்குப் பிறகு, தேவநம்பியதீசன் வரையிலான அரசர்கள் "பண்டு என்ற அடைமொழியை வைத்திருந்தனர். பண்டு வாசுதேவ, பண்டுகாபய, என்ற அரசர்களின் பெயர்கள் பாண்டி நாட்டின் தொடர்பைக் காட்டுகின்றன. மேலும், விஜயனது பாண்டிய இளவரசியும், தோழியரும் வந்திறங்கிய இடத்தை 'மாதித்த என்று மகாவம்சம் குறிப்பிடுகிறது. 'மா' என்பது "பெரிய" என்றும், "தித்த என்பது இறங்கு துறையென் றும் கொள்ளலாம். உண்மையில் "பெருந்துறை" என்ற தமிழ்ப் பெயரே நாளடைவில் 'மாதித்த என்று மருவியிருக்கலாம். இத்துறைமுகம் மாதோட்ட என்றும் அழைக்கப்பட்டது. “பெரிய தோட்டமே மாதோட்டம் என்று மருவியிருக்கலாம் என்பது அறிஞர்களின் கருத்தாகும்.
விஜயனுடைய காலத்தில் குறிப்பிடப்பட்ட "மதுரை கடைச்சங்க காலத்திலிருந்த தென்மதுரையென நாம் கொள் ளலாம். இடைச்சங்க காலத்தின் கபாடபுரம், பாளிநூல்களிலும், பழைய பிராமிக் கல்வெட்டுக்களிலும் குறிப்பிடப்பட்டுள்ளது. பந்துகாபயன் வாழ்ந்த இடங்களிலொன்றான துவாரமண்ட லமே, பிராமி கல்வெட்டுக்களில், தவிறிகிரிய என்று குறிப்

277 ஒரு சிறுபான்மை சமூகத்தின் பிரச்சினைகள் IV
பிடப்பட்டுள்ளது. இவை தமிழ்நாட்டுத் தொடர்பினைக் காட்டு கின்றது என்பதற்கு ஆதாரமாக, கலாநிதி சிற்றம்பலம், “கபாட புரம்/துவாரமண்டலம்/ தவறிகிரிய, ஆகிய பெயர் களோடு, வடபகுதியாகிய யாழ்ப்பாணத்தின் பெயராகிய, மணற்றியும் பாண்டிநாட்டோடு ஈழத்தின் வடபகுதி கொண்டிருந்த தொடர் பினை நினைவு கூறுகின்றது', என்று கூறுகிறார். 'மணற்றி, மணவூர், மணவை ஆகிய இப்பெயர்கள் தென்னிந்திய கடற் கரையின் இருமருங்கிலும் வழக்கிலிருந்த பெயர்கள், யாழ்ப் பாணத் தீபகத்திற்கு வெவ்வேறு காலகட்டங்களில் வழங்கப் பட்டது; என்று முதலியார் இராசநாயகம், குறிப்பிடுகிறார். யாழப்பாணத்து அரசர்கள், 'மணவையாரிய வரோதயன்', ‘மணவையர் கோன்' என்ற விருதுப் பெயர்களையும் சூட்டிக் கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. இப்பெயர் சிங்களத் தில் ‘வெலிகம என்றும், தமிழில் வலிகாமம் என்றும் மருவி யிருக்கலாம், என்பது அறிஞர்களின் கருத்து. இதே கருத்தைக் கலாநிதி இந்திரபாலா பின்வருமாறு கூறுகிறார். "யாழப்பாணப் பிரதேசத்தின் பழைய பெயர்களாகிய 'மணற்றி மணற்றிடல், மணற்றிடர் ஆகிய பெயர்கள் கொடுக்கப்பட்டிருப்பதைக் காணலாம். மணற்றிடல் என்ற பெயர் யாழ்ப்ப்ாணத்திற்குக் கொடுக்கப்பட்டதன் காரணம் தெரியவில்லை. இப்பெயர் சிங்களப் பெயராகிய "வெலிகம", என்பதன் தமிழ் மொழி பெயர்ப்பாக இருக்க முடியும். பன்னிரண்டாம் நூற்றாண்டில் பொறிக்கப்பட்ட தென்னிந்தியக் கல்வெட்டொன்றில் வலிகா மம் என்ற பெயர் யாழ்ப்பாணத்தின் ஒரு பகுதியின் பெயராகக் குறிப்பிடப் பட்டுள்ளது. என்று கூறுகிறார். 'ஆனால், மணலூர் பற்றி இறையனார் அகப்பொருளில், இடைச்சங் கத்தோடு காணப்படுங்குறிப்பினை அவதானிக்கும் போது, இப்பெயர் பாண்டிநாட்டில் இருந்தே ஈழத்தினை அடைந்திருக் கலாம் என்று எண்ணத் தூண்டுகிறது' என்று கலாநிதி சிற்றம் பலம் கருதுகிறார். இலங்கையின் பூதந்தேவ னார், சங்ககாலத் தில் இலங்கை தமிழ்நாட்டுடன் கொண்டிருந்த தொடர்பினைக் காட்டுகிறது.

Page 153
அ. முகம்மது சமீம் 278
சிங்களவர் தம்மை தென்னிந்தியாவுடன் தொடர்பு கொள் ளாததற்கு இருவேறு கருத்துக்களைச் சிங்கள வரலாற்றா சிரியர்கள் வைக்கின்றனர். பேராசிரியர் தர்மதாச, இலங்கைக் கும், தென்னிந்தியாவிற்குமிடையே இருந்த கலாசாரத் தொடர்பை முற்றாக மூடி மறைக்கப் பார்க்கிறார். இரண்டா யிரம் வருடங்களாக, சிங்களவருக்கும், தென்னிந்திய திராவிட இனத்தைச் சேர்ந்த தமிழர்களுக்குமிடையே நடந்த போர்க ளையே மிகைப்படுத்திக் கூறுகிறார். ஆனால் இவ்விரு மக்களி டையே இருந்த கலாசாரத் தொடர்புகளைப் பற்றியோ, மதத் தொடர்புகளைப் பற்றியோ, வர்த்தகத் தொடர்புகளைப் பற் றியோ, திருமணத் தொடர்புகளைப் பற்றியோ கூறாமல் போர் களைப் பற்றியும், தென்னிந்தியர்களின் படையெடுப்புக் களைப் பற்றியும், இதனால், சிங்கள இனமும், அவர்களின் கலாசாரமும் பாதிக்கப்பட்டதையுமே மிகைப்படுத்திக் கூறு கிறார். எல்லாளனைப் பற்றியும் அவனுக்கு முன், அநுராத புரத்தை ஆட்சி செய்த தென்னிந்திய படைத்தளபதிகளைப் பற்றியும் தென்னிந்திய கல்வெட்டுகளிலோ, இலக்கியங் களிலோ எவ்வித குறிப்புமில்லை. ஒரு நாட்டிலிருந்து இன் னொரு நாட்டிற்குப் படையெடுத்துச் சென்று வெற்றிவாகை சூடுவதைக் கல்வெட்டுகளிலோ, இலக்கியங்க ளிலோ கூறுவது அன்றைய தமிழ்நாட்டு மரபு. அப்படி ஒன்றும் இல்லாததால் ஏன் இவர்கள், இலங்கையின் வடபகுதியில் வாழ்ந்த தமிழர்களின் படையெடுப்புக்கள் என்று கொள்ள முடியாது? தென்னிந்தியாவிற்கும், இலங்கைக்குமிடையே கலாசாரத் தொடர்பிருந்ததை பெளத்தபிக்குகள் இவ்விருநாடு களுக்கு மிடையே போக்குவரத்து வைத்ததைப் பாளிநூல்கள் கூறுகின் றன. இவர்களில் முக்கியமானவர் தம்மபாலா’ என்ற பெளத்த பிக்கு. இலங்கையில் அரசியல் கொந்தளிப்பு ஏற்பட்ட காலங்க ளில், பெளத்த பிக்குகள் பாண்டி நாட்டில் தஞ்சம் புகுந்ததைப் பேராசிரியர் லியனகமகே எடுத்துக் காட்டுகிறார். இலங்கை மன்னன் மாணவம்மன், பல்லவ மன்னனிடம் புகலிடம் தேடிச் சென்று, பின்னர் பல்லவர்களின் உதவியுடன் தன்னுடைய

279 ஒரு சிறுபான்மை சமூகத்தின் பிரச்சினைகள் IV
அரசை மீட்டியதை இலக்கியங்கள் கூறுகின்றன. ஏழாம், எட் டாம் நூற்றாண்டுகளில் பல்லவர்களின் ஆட்சியில், தென்னிந் தியாவில் நாயன்மார்களின் தலைமையில் சைவ சமயம் வளர்ச்சி யுற்ற பிறகு, பெளத்த சமயம் மறைந்த காரணத்தினால், சிங்கள வர் தென்னிந்தியத் தமிழருடன் வைத்திருந்த கலாசாரத் தொடர் பு அறுந்தது, என்று நாம் கொள்ளலாம்.
பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில், சிங்களபெளத்தத் தனித்துவம்' என்ற இன உணர்வு தோன்றியபிறகு பெளத்த மதத்தைப் பின்பற்றிய பெரும்பான்மை சிங்கள இனம், பெளத்தமதமல்லாத ஏனைய இனங்களை, வெறுப் போடும், எதிர்ப் போடும் பார்த்தனர். 'இவ்வின உணர்வு, பல்லினங்கள் வாழும் இலங்கையில், நாட்டு அடிப்படையில் தோன்றும் ஒரு தேசிய உணர்வுக்கு முட்டுக்கட்டையாக அமைந்தது', என்று பேராசிரியர் லெஸ் லிகுணவர்தனா கூறுகிறார். ‘சிங்கள-பெளத்த தனித்துவத்திற்கு, பண்டைய காலந்தொடக்கம், ஒரு வரலாறு இருக்கிறது" என்ற பேராசி ரியர் தர்மதாசாவின் கருத்தை குணவர்தனா கண்டிக்கிறார். 'சிங்கள - பெளத்தம்' என்ற இப்பதம் இருபதாம் நூற்றாண் டின் ஆரம்பகாலத்தில் பிரபல்யமடைந்த தென்றாலும் இது பண்டைய காலந்தொட்டு சிங்கள - பெளத்தர்களின் வரயலாற் றைப் பிரதிபலிக்கும் ஒரு தத்துவமாக அமைகிறது", என்று பேராசிரியர் தர்மதாசா தனது, 'மொழி, மதம், இனம்: சிறிலங்காவில் சிங்கள தேசியத்தின் தோற்றம்", என்ற நூலில் கூறுகிறார். இவருடைய கருத்தை எதிர்த்த பேராசிரியர் குணவர் தனாவின் கருத்தை அடுத்த அத்தியாயத்தில் ஆராய்வோம்.

Page 154
அ. முகம்மது சமீம் 280 41. 'சிங்கள இனத்தவர் உயர்சாதியைச் சேர்ந்தவர்கள்', பேராசிரியர் லெஸ்லி குணவர்தனா
இன்றைய இனப்போராட்டத்திற்கும், இனவெறிக்கும், இனவெறியர்கள் மாத்திரம் காரணமல்ல. இனத்துவேஷத்தை வளர்க்கும் படைப்பாளி எழுத்தாளர்களும், இனவாதத்தைத் தூண்டிவிடும் நோக்கத்துடன் வரலாற்றிலிருந்து மேற்கோள் களைக் காட்டும் வரலாற்று ஆசிரியர்களும், அறிவியலாளர் களும் காரணம் என்றால் அது மிகையாகாது. 'அபின் தயார் செய்வதற்கு எப்படி பொப்பி மலர் மூலப்பொருளாக அமை கின்றதோ, அதேபோல, ஒரு தேசியவாதிக்கும், ஒர் இனவாதிக் கும், ஒர் அடிப்படைவாதிக்கும் வரலாறு மூலப் பொருளாக அமைகிறது. இத்தகைய தத்துவங்களுக்கு வரலாறு ஒரு முக்கிய ஆதாரப் பொருளாக அமைகிறது. தமது தத்துவங்களுக்கு ஏற்ப வரலாறு அமையாவிட்டால், அவ்வரலாற்றுச் சம்பவங்களைக் கற்பனை செய்து வரலாற்றை உருவாக்கலாம்' என்று எறிக் ஜே. ஹொப்ஸ்பாவ் ம் கூறுகிறார். இதே கருத்தை, இலங்கையை மையமாக வைத்து, பேராசிரியர் லெஸ்லி குணவர்தனா, 'அரசாங்க சக்திகளுக்கும், ஈழத்தை உருவாக்க முனையும் சக்திகளுக்குமிடையில் ஏற் பட்டிருக்கும் ஆயுதப் போராட்டம் மக்களின் கவனத்தை ஈர்த்த அளவு, இந்நிலை ஏற்படக் காரணமாயிருந்த "அறிஞர்களின் அறிவுப் படைப்புக்கள் ஈர்க்கவில்லை", என்று கூறுகிறார். இவ்வினப் போராட்டம் வலுவடைய, வலுவடைய இவ்வறிஞர்கள் தத்தமது, இனங் களின் மேலாண்மையை நிரூபிப்பதற்கு வரலாற்றி லிருந்து மேற்கோள்களைக் காட்ட வேண்டிய நிர்ப்பந்தத்திற்குள்ளாகி யிருக்கின்றனர். தம்முடைய ஆராய்ச்சிகளை இனவாதிகள் தமக்குச் சாதகமாக்குவதை இவர்களால் தடுத்து நிறுத்தும் சக்தியும் இவர்களுக்கில்லை.
ஒர் இனத்தின் தனித்துவத்தை அடையாளம் காண்பதற்கு,

281 ஒரு சிறுபான்மை சமூகத்தின் பிரச்சினைகள் IV
மானிடவியலாளர்கள் பல சாதனங்களை உபயோகிக்கின்ற னர். இதில் முக்கியமானது, சரீர சம்பந்தமான அங்க உறுப்புக் களை ஆதாரமாகக் கொள்வது. மொழியை அடிப்படையாகக் கொண்டு ஒர் இனத்தை, இன ம் காணுவதனால் பல தவறுகள் ஏற்பட ஏதுவாகின்றன. மொழி ஒரு காரணமாயிருக்கலாமே யொழிய, அதுவே அடிப்படைக் காரணமாயிருக்க முடியாது. ஆனால் பேராசிரியர் தர்மதாச, சிங்கள - பெளத்த இனத்தின் தனித்துவத்தை விளக்கும்போது மொழியையே அடிப்படை யாகக் கொள்கிறார். "சிங்கள - பெளத்தம்', என்ற பதம் இருபதாம் நூற்றாண்டின் ஆரம்ப காலத்திலே தோன்றிவிட்ட தென்றாலும், இலங்கை வரலாற்றில் பண்டைய காலத்தி லேயே, 'இவ்வின - மத தனித்துவம் தோன்றிவிட்டது. அதன் பிரதிபலிப்பையே நாம் இப்போது காண்கிறோம்' என்கிறார்.
இக்கருத்தை மறுதலித்த பேராசிரியர் குணவர்தனா, 'சிங்கள" தனித்துவத்தை அனுராதபுரியை அரசாண்ட அரசபரம்பரையோடு சம்பந்தப்படுத்துகிறார். இந்திய உபகண்டத்தில் தோன்றிய சாம்ராஜ்யங்களை அரசாண்ட மொளரிய, குப்த, பல்லவ, சோழ அரச பரம்பரைகளைப் போன்று சிங்கள அரசபரம்பரையும் சிங்கள தனித்துவத்தின் பிரதிபலிப்பே, என்கிறார் குணவர்தன. ஐரோப்பாவில் ஆட்சி யாளர்களுக்கும் ஆட்சி செய்யப்பட்டவர்களுக்குமிடையே இருந்த வேற்றுமையைப் போன்று, தென்னாசியாவிலிருந்த அரசபரம்பரைகளுக்கும், பாமர மனிதர்களுக்குமிடையே வேற்றுமையிருந்தது, என்பது இவரின் கருத்து. சிங்கள மொழி யைப் பேசும் எல்லாமக்களையும் குறிப்பதுதான் இச்சிங்கள தனித்துவம் என்று தர்மதாச கூறுவதை ஏற்காத குணவர்தன, சிங்கள தனித்துவம் ஒரு குறிப்பிட்ட ஆளும் வர்க்கத்தையே குறிக்கிறது என்கிறார். இருபதாம் நூற்றாண்டில் இலங்கையில் தோன்றிய இனவேறுபாட்டிற்கு வரலாற்றிலிருந்து ஆதாரம் தேடுவதே தர்மதாசாவின் குறிக்கோளாகத் தெரிகிறது. 'பண்டைய சாசனங்களிலேயே சிங்கள தனித்துவம் பிரதிபலிக்கிறது", என்ற இவரது கூற்றை மறுத்த குணவர்தன,

Page 155
அ. முகம்மது சமீம் 282 'இச்சாசனங்களில் சிங்கள மொழியே இருக்கவில்லை" என்கிறார். 'ஐந்தாம் நூற்றாண்டுக்குப் பிறகே சிங்கள மொழி ஒரு தனிமொழியாகத் தோன்றுகிறது" என்ற தர்மதாசாவின் கருத்து, "இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்பே, சிங்கள தனித் துவம் தோன்றிவிட்டது", என்ற அவருடைய பின்னைய கூற்று மு ன்னுக்குப் பின் முரணாகத் தென்படுகிறது. இவ்விரு பேராசிரியர்களது கருத்துக்களின் அடிப்படைவாதம் என்ன வென்றால், 'ஆரிய இனத்தைச் சேர்ந்த சிங்கள இனம் ஒரு தனி இனம் என்றும், 'திராவிட இனத்தைச் சேர்ந்த தமிழினம் அதனின்றும் வேறுபட்டதென்றும் காட்டுவதேயாம். இவ்விரு பேராசிரியர்களினது கருத்துக்களில் இழையோடி நிற்கும் அடிப்படைக்கருத்து என்னவென்றால், தமிழர்கள் இந்நாட்டில் வந்தேறுகுடிகளென்றும், இந்நாட்டில் சிங்களவருடன் சம உரிமை கொண்டாடுவதற்கு, அவர்களுக்கு எவ்வித அருகதை யுமில்லை யென்பதுமே, சிங்களவருக்குத் தென்னிந்தியாவுட னான தொடர்பை முற்றாக மறுக்கும், தர்ம தாசாவின் கருத்தை ஏற்றுக் கொள்ளாத குணவர்தனா இத் தொடர்பு, சிங்கள தனித்துவத்தைப் பாதிக்கவில்லை என்கிறார்.
அநுராதபுரியை ஆண்ட சிங்கள அரசர்களின் இலச்சினை சிங்கமாக இருந்ததை, இலங்கையின் பண்டைய நாணயங்களி லிருந்து அறியலாம் என்று வரலாற்றாய்வாளர் கொட்றிங்டன் கூறுகிறார். சிங்கள அரச பரம்பரை, வடநாட்டில் ஆட்சிசெய்த "சிம்ஹ பாகு"வின் வம்சத்திலிருந்து தோன்றியது என்பதை வரலாற்றிலிருந்து ஆதாரங்களைக் காட்டி நிரூபிக்க முயல்கிறார் பேராசிரியர் குணவர்தன.
"தென்னிந்திய "பத்திப்ரொளு ஆவணங்களின்படி, "சிங் கம் என்ற பெயரையுடைய - சிஹகோத்தா அரசன் ஒருவனைப் பற்றி ஒரு சாசனம் கூறுகிறது. புஹ்ளர் என்பவர் இவ்வாவணங் கள் கி.மு. 2ம் நூற்றாண்டுக்குரியது என்கிறார். ஆனால் தானி என்ற ஆராய்ச்சியாளர், கி.பி.5ம் நூற்றாண்டுக்குரியது என்கி றார். "சிங்கத்தினின்றும் பிறந்தவனும் சிங்கத்தின் தோள்

283 ஒரு சிறுபான்மை சமூகத்தின் பிரச்சினைகள் IV
களையுடையவனும், சிங்கபுரி என்ற நகரத்தை ஆட்சி செய்தவ னுமாகிய சிம்ஹபாகுவின் வழித்தோன்றலே விஜயன் என்பது இலங்கையின் வரலாற்று ஐதீகம்", என்று குணவர்தன கூறுகிறார்.
தீபவம்சமும், மகாவம்சமும், விஜயனும் அவனுடைய எழுநூறு சகாக்களும் இலங்கையில் வந்திறங்கியதைப் பற்றிக் கூறியதோடு, தென்மதுரையிலிருந்து ஆயிரம் குடும்பங்கள் (அத்தாசர-சேனி) வந்ததைப் பற்றியும் கூறுகிறது. இவர்க ளோடு விஜயனுடைய வருங்கால அரசியும் வந்திறங்கினார். பாளிநூல்கள் 'சிஹல" - சிங்கள - என்ற நாமத்தை, சிங்ஹபா குவுக்கும், விஜயனுக்கும் அவனுடைய எழுநூறு தோழர்க ளுக்கும் மாத்திரமே குறிப்பதற்கு உபயோகிக்கின்றன. அவர்க ளுக்குப் பிறகு, தென்னிந்தியாவி லிருந்து வந்த ஆயிரம் குடும்பங்களை, "சிங்கள' என்ற குழுவில் சேர்க்கவில்லை. வம்சத்தப்பகாசினி' என்ற நூலுக்கு விளக்கம் கொடுத்த மலல சேகர, சிங்கள இனத்திற்குத் தெளிவான விளக்கம் கொடுக் கிறார். இவருடைய விளக்கத்தின்படி சிங்கள இனம் விஜய னின் தோழர்களையும், அவர்களுடைய வழித் தோன்றல் களையுமே குறிக்கிறது என்கிறார். இவருடைய விளக்கத்தில் கூட "தென்னிந்தியாவிலிருந்து வந்த ஆயிரம் குடும்பங்கள்", “சிங்களம்' என்ற இக்குழுவில் சேர்க்கப்பட வில்லை, வம்சத் தப்பகாசினி எழுதப்பட்ட காலகட்டத்தில், "சிங்கள இனம்", இக்குழு அரசபரம்பரையோடு மட்டும் தொடர்புபடுத் தப்படவில்லை; அப்பொழுது வாழ்ந்த மிகச் செல்வாக்குப் பொருந்திய, உயரினம் என்று கருதப்பட்ட ஒரு சமூக இனத் தையே குறிப்பிடுகிறது. இவர்கள் விஜயனின் வழித்தோன்றல் கள் என்பது குறிப்பிடத்தக்கது. விஜயனுடன் வந்த சகாக்களில் சிலருக்கு 'அமாச்ச', (அமைச்சர்) என்ற அந்தஸ்து கொடுக்கப் பட்டிருந்தது. அவர்களில் ஒருவர் 'புரோகிதர்" என்றழைக்கப் பட்டார். விஜயனை அரசனாக்கிய தும் இவர்களே: விஜயனுக்குச் சத்திரிய சாதியில் ஒரு வரைப் பெண்ணாகத் தேர்ந்தெடுத்தவர்களும் இவர்களே. இக்குழுவினர்தான் அனு ராதகம, உஜ்ஜெயினி, உபதிஸ்ஸகம, விஜித போன்ற குடியேற்

Page 156
அ. முகம்மது சமீம் 284 றங்களை ஸ்தாபித்தவர்கள். எனவே "சிங்கள' என்ற இனத்தவர் தான் இலங்கையின் ஆதிக்குடியேற்றங்களை ஸ்தாபித்தவர்கள், என்பது இவர்களது வாதமாகும். இக்குறிப்பிட்ட இனக்குழுவுக் குள் தென்னிந்தியாவிலிருந்து வந்த 'ஆயிரம் குடும்பங்கள் அடங்க மாட்டார்கள். தென்னிந் தியாவிலிருந்து, விஜயனு டைய சகாக்களுக்கு மனைவிமார்களாகக் கொண்டு வரப்பட்ட வர்கள் கூட, நூற்றுக்குக் குறைவானவர்களே (ஊனசத்தம்) உயர்வகுப்பு சகாக்களுக்குக் கொடுக்கப்பட்டனர். அரசனின் வேண்டுகோளுக்கிணங்க, தங்கள் பெண்களை ஏனைய சகாக் களுக்களின் 'பாவனைக்குத் துணைக்கருவிகளாக, அனுப்பிய குடும்பங்களுக்குப் பரிசாக கிராமங்கள் வழங்கப்பட்டன என்று மகாவம்சம் கூறுகிறது. சிங்கள இனக்குழுவில் உயர்சாதியினர் மாத்திரம்தான் அடங்குவர், ஏனைய தாழ்த்தப்பட்டவர்கள். இக்குழு வில் அடங்க மாட்டார்கள் என்ற கருத்தும் இதில் தொனிக்கிறது. வர்க்க வேறுபாட்டையும் நாம் இதில் காண்கி றோம். சிங்கள இனத்தின் பூர்வீகத்தை, வம்சத்தப்பகா சினி, (மலலசேகரவின் விளக்கவுரை) மிகவும் தெளிவாகக் கூறுகிறது - அதாவது விஜயனின் சகாக்களின் வழித்தோன்றல்களிலும், உயர்வர்க்கத் தினர்தான், இக்குழு வில் அடங்குவர் என்ப தேயாம்.
ஆயிரம் குடும்பங்களைப் பற்றிக்கூறும் பொழுது பாளி நூல்கள் இவர்களை, 'அத்தாரசேனி, (சேனி என்பது சம்ஸ்கிருதத்தின் ஸ்ரேனி என்ற சொல்லின் திரிபு). -அதாவது, வியாபாரிகளும் தொழிலாளர்களும், என்று குறிப்பிடுகிறது. இவ் வத்தாரசேனியில் கொல்லர்களும், தச்சர்களும், தோல் வேலை செய்பவர்களும், ஒவியர்களும் அடங்குவர் என்றும், அரசன் ஒர் இடத்திற்குப் போவதற்கு முன், அவனுக்கும் அவனுடைய பரிவாரங்களுக்கும், வேண்டிய தேவைகளைச் செய்து கொடுப்பதுமே இவர்களது தொழில் என்பதை பாளிநூல்களிலிருந்து (மகா உம்மக்க - ஜாத்தக) அறிகிறோம். சத்திரியர்களும், பிராமணர்களும் தங்களுடைய கோத்திரங் களைப் பற்றிப் பெருமை கொண்டிருந்தனர் என்ற பாளிநூல்

285 ஒரு சிறுபான்மை சமூகத்தின் பிரச்சினைகள் IV
களின் குறிப்புக்களிலிருந்து, 'வைசியர்களும், சூத்திரர்க ளுமான இத் தொழிலாள வர்க்கத்தினர். "சிங்க ள - இனக் குழுவில் சேர்க்கப்படவில்லை, என்பதை அறிகிறோம். எனவே "சிங்கள இனக்குழுவினர் அரசனோடும் அவனுடைய குடும்பத் தாரோடும் நெருங்கிய தொடர்புடையவர்கள் என்ற கருத்தும் தொனிக்கிறது. ஆகவே "சிங்கள இனத்தின் மூதாதையர் ஆளும் வர்க்கத்தைச் சேர்நதவர்கள் என்பது புலனாகிறது.
மகாவம்சத்தையும், வம்சத்தப்பகாசினியையும், ஆராயும் போது, இந்நூல்கள், இக்குழுவினரைக் குறிப்பதற்கு 'குலின’ என்ற பதத்தை உபயோகிக்கின்றன. 'குலின என்ற பதத்திற்கு விளக்கம் கொடுத்த கைகர், 'அரச குடும்பத்தாரோடு சம்பந்தப் பட்டவர்களும், அரச சேவையிலும், படைகளிலும், உயர் பதவிகளை வகித்தவர்களும்' என்று கூறுகிறார்.
சிங்கள மொழியைப் பேசுபவர்கள், "சிங்கள இனத்தைச் சேர்ந்தவர்கள் என்ற பேராசிரியர் தர்மதாசாவின் கருத்துக் களை ஏற்காத பேராசிரியர் குணவர்தன, “பாண்டிய நாட்டிலி ருந்து வந்த தமிழ்ப் பேசும் மக்களும், இச்சிங்கள இனக்குழு வில் அடங்குவர், என்று கூறி, "உயர்வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள் மாத்திரம்தான் (நூற்றுக்கும் குறைவானவர்) இக்குழு வில் அடங்குவர் என்ற வர்க்க வேறுபாட்டையும் காட்டுகிறார். (இலங்கையின் சமகால வரலாற்றுத் தத்துவம் - பக்கம் 34) எனவே தாழ்த்தப்பட்ட தொழிலாளர் - வர்க்கத்தைச் சேர்ந்த தமிழ்ப்பேசும் மக்கள் இச்சிங்கள உயர் வகுப்பைச் சேர்ந்தவர் கள் என்ற கருத்தும் தொனிக்கிறது. இல்லையா?

Page 157
அ.முகம்மது சமீம் - 286 42. சிங்கள, தமிழ் ஆய்வாளர்கள் பண்டைய சாசனங்களுக்கு இனரீதியிலான வேறுபட்ட
விளக்கங்களைக் கொடுத்தனர்
இனவாத அரசியல் இன்று இலங்கையில் பூதாகாரமாக வளர்ந்து, மக்கள் தங்கள் உடைமைகளையும், சொந்தபந்துக் களையும், உயிர்களையும் இழந்து, பிறந்த மண்ணிலிருந்தும் வேரோடு அகற்றப்பட்டு, அனாதைகளாகவும், அகதிகளாக வும், அல்லல் படுவதற்கும், இரத்த வெள்ளம் ஆறாக ஒடுவதற் கும், அரசியல்வாதிகள் மட்டும் காரணமல்ல, புத்திஜீவிகளும் தான் காரணம் என்பதை மறுக்க முடியாது. தமிழர்கள், இலங் கையில் பண்டைய காலந்தொட்டு வாழ வில்லை என்பதை நிரூபிப்பதற்கு தொல்பொருள் ஆய்வுகளில் கிடைத்த ஆதாரங் களை மறைக்கவும், தமிழ் எழுத்தில் இருந்த சாசனங்களைத் திரித்து வாசிக்கவும், சில ஆராய்ச்சியாளர்கள் முற்பட்டனர்.
பண்டைய கல்வெட்டு சாசனங்களையும், இலக்கியங் களையும் நாம் ஆராயும் போது, தமிழ் மொழி பரவலாக உபயோகிக்கப்பட்டதை அறிகிறோம். 'பண்டைய கல்வெட்டு சாசனங்களிலுள்ள பிராமி எழுத்துவடிவத்தை ஆராயுமிடத்து இது இன்றைய சிங்கள-தமிழ் எழுத்து வடிவத்தின் முன்னோடி யாகவும், கி.மு. 3ம் நூற்றாண்டிலேயே தமிழ் மொழி உபயோகத்திலிருந்தது என்பதை நிரூபிக்கின்றன" என்பது, 'பிராமி எழுத்துவடிவங்களை ஆராய்ந்த பி. ஈ. ஈ. பர்ணாண்டு வின் கருத்தாகும். இன்றைய சிங்கள மொழியின் எழுத்து வடிவம், பல்லவர்களின் "கிரந்த லிபியினின்றும் தோன்றியிருக் கலாம் என்பது இவருடைய கருத்தாகும். இலங் கையின் பண் டைய பிராமி எழுத்து வடிவம், தென்னிந்திய பிராமி எழுத்து வடிவத்தை ஒத்திருக்கிறதென்றும், இதைத் 'திராவிடி என்று நாம் பகுக்கலாம், என்று, ஆந்திரா பிரதேசத்தில், 'பத்திப்

287 ஒரு சிறுபான்மை சமூகத்தின் பிரச்சினைகள் IV
ரோளு' என்ற இடத்தில் கண்டெடுக்கப்பட்ட தொல்பொருள் களிலிருந்து அறியலாம், என்பது தொல் பொருள் ஆய்வாளர் புஹ்லரின் கருத்தாகும். 'இதே வரிவடிவம், பண்டைய பாண்டிய நாட்டில் தோன்றிய கல்வெட்டு சாசனங்களிலுள்ள பிராமி எழுத்து வடிவத்தை ஒத்திருந்தது என்றும், இதைத் தமிழ் பிராமி எழுத்து என்று நாம் கொள்ளலாம்', என்பது 'பிராமி எழுத்து வடிவங்களை ஆராய்ந்த மகாதேவனின் கருத்தாகும். இத்தமிழ் பிராமி எழுத்து வடிவம் அசோகனின் கல்வெட்டு சாசனங்களில் காணப்படும் பிராமி எழுத்துக்களைவிட, முன் னையது என்பது அறிஞர்களின் கருத்தாகும். சிங்கள ஆய்வாளர் கள், இலங்கையிலுள்ள பண்டைய கல்வெட்டு சாசனங்களி லுள்ள பிராமி எழுத்து வடிவம், பிராக்கிருத மொழியின் எழுத்துக்களை ஒத்திருக்கின்றது என்கின்றனர். ஆனால் இக்கல்வெட்டுக்களில், தமிழ் வார்த்தைகளான, பெருமான், பெருமகள், மருமகன், கவிதி, அபி போன்றவை எப்படித் தோன்றின என்பதை இவர்களால் விளக்க முடியவில்லை.
பண்டைய காலத்தில் தமிழ் மொழி பேசுபவர்கள் வாழ்ந் தார்கள் என்பதற்கும், தென்னிந்தியத் தமிழர்கள் பெளத்த மதத்தின் வளர்ச்சிக்குப் பாடுபட்டார்கள் என்பதற்கு ஆதார மாக, மாத்தளையில் தல்கஹகொட விகாரையில், கி.மு. இரண் டாம் நூற்றாண்டுக்குரியது என்று அறிஞர்களால் கணிக்கப் பட்ட ஒரு கல்வெட்டு சாசனம், "ஒரு தமிழ்பிக்கு மகாசங்கத் திற்கு ஒரு குகையைப் பரிசாக அளித்தார்" என்று கூறுகிறது, "பெளத்த மதத்துடன் பரவிய பாளி பிராகிருதச் சொற்கள் இங்கிருந்த திராவிட மொழியுடன் கலந்தமை பிற்காலத்திலே சிங்கள மொழி தோற்றம் பெறக் காரணமானது", என்றும் "இதன் ஆரம்ப நிலையினை எடுத்துக்காட்டுவனவாகவே கி.பி. 3ம் நூற்றாண்டு வரையான பிராமிச் சாசனங்கள் அமைகின் றன' என்று பேராசிரியர் சிற்றம்பலம், தனது 'பிராமிக் கல்வெட்டுக்களும் தமிழும் என்ற கட்டுரையில் (சிந்தனை -தொ 1; இதழ் 1, யாழ்ப்பாணம் 1985) கூறுகிறார். இலங்கை யின் பண்டைய கால மனிதர்கள், எழுத்துவடிவம் தோன்றுவ

Page 158
அ. முகம்மது சமீம் - 288 தற்கு முன், குறியீடுகளைப் பாவித்தார்கள், என்பதற்குக் கந்தரோடையிலும், பூநகரியிலும் கிடைத்த மட்பாண்டங்களி லுள்ள வரிவடிவங்கள் நமக்கு உணர்த்துகின்றன. கி.மு. 3ம் நூற்றாண்டில் எழுத்துக்கள் தோன்றியதன் பின்னர் குறியீடு களின் பயன்பாடு படிப்படி குறைவடைந்தன' என்பது அறிஞர் களது கருத்தாகும்.
பண்டைய இலங்கையில் வாழ்ந்த தமிழ் மக்களும், சிங்கள மக்களும், தென்னிந்தியாவுடன் நெருங்கிய தொடர் பினைக் கொண்டிருந்தனர் என்பதற்கு தொல்லியல் கண்டு பிடிப்புக்களும், கல்வெட்டு சாசனங்களும், இலக்கியங்களும் உணர்த்துகின்றன. தென்னிந்தியாவுடனான தொடர் பினை மறைக்க முயலும், சிங்கள வரலாற்றாசிரியர்களின் கூற்றைப் பொய்யாக்கி, உண்மை நிலையினை இவ்வாய்வுகள் எடுத்துக் காட்டுகின்றன.
பரமன்கிராயிலே கிடைத்த கி.மு. 3ம் 2ம் நூற்றாண்டுக் குரியதென கணிக்கப்பட்ட சாசனமொன்றில், 'வேள்' அல்லது "வேளா' என்று எழுத்துக்கள் காணப்பட்டன. இதனை வாசித்த மகாதேவன், இதை 'வேளான்" என வாசித்துள்ளார். இவ் வெழுத்தை வாசித்த பாக்கரும் இது திராவிடர் இங்கு வாழ்ந்த தற்கு ஒரு சான்று என்றார். இதை ஏற்காத பரணவித் தாரன, இவ்வெழுத்தை அசோக பிராமிக்குரிய "ல"வாகக் கொண்டு சாசனங்களில் வரும் பெயர்களை 'வேல" அல்லது 'வேலு என வாசித்தார். சங்ககாலத்திலே சிறப்புற்றிருந்த 'வேள் அல்லது "வேளிர் எனப்பட்ட குறுநில மன்னரையே இது குறிக்கிற தென்று மகாதேவன் கூறுகிறார். பேராசிரியர் சிற்றம்பலமும் இக்கருத்தையேற்று, இலங்கையில் 'வேளிர் என்ற சிற்றரசுகள் இருந்திருக்கலாம் என்று கருதுகிறார். 'இலங்கையில் 'வேளிர்" என்ற சிற்றரசுகள் இருந்திருக்கலாம் என்று கருதுகிறார். "இலங்கை யாழ்ப்பாணப் பிரதேசத்தில், சங்ககாலத்திலேயே, 'தமிழ் வேளிர் அல்லது "வேளார் குடியேறியிருந்தனர் என்று கொள்ளலாம் என்பது இவர்களது கருத்தாகும்.

289 ஒரு சிறுபான்மை சமூகத்தின் பிரச்சினைகள் IV
இலங்கையில் அநுராதபுரி ஆட்சிக்காலத்தில், இதேகால கட்டத்திறகுரிய பல பிராமிக் கல்வெட்டுக்கள் சில சிற்றரசு களும் பல நிலக்குழுத்தலைவர்களும் ஆட்சிபுரிந்ததை உறுதிப் படுத்துகின்றன. (குணவர்தன) இத்தலைவர்கள், வேள, அய, பருமக போன்ற பட்டங்களைச் சூடியவர்களாகக் காணப் பட்ட னர். இப்பெயர்கள் சங்க இலக்கியத்தில் வரும் வேள், ஆய், பெருமகன் போன்ற பெயர்களின் மூலம் என அறிஞர்கள் கருதுகின்றனர்.
சிங்கள ஆய்வாளர்கள் கூறும் விளக்கத்திற்கும், தமிழ் ஆய்வாளர்கள் கூறும் விளக்கத்திற்கும் எவ்வளவு வேறுபாடு இருக்கிறதென்பதை, வல்லிபுரத்தில் கண்டெடுக்கப்பட்ட பொற் சாசனத்தை உதாரணத்துக்குச் சொல்லலாம். இப்பொற் சாசனத்தில் உள்ள வாசகத்தைக் கொண்டு வட பகுதி அநுராத புரி அரசின் கீழிருந்தது' என்று பரணவித்தாரன கூறுகிறார்.
'சித்த மஹாரஜ வஹயஹ ரஜெஹி அமெதே இசிகிரயே நகதிவ புஜமெஹி படகர அதநெஹி பியகுதிச
விஹர கரிதே
இதற்கு அவர் பின்வரும் விளக்கம் கொடுக்கிறார்.
'வசப மகாராஜாவின் ஆட்சிக்காலத்தில் அவனின் அமைச்சனான இசிகிரய நாகதீவை நிர்வகிக்கும்போது, படகர அத்தானாவின் பியகுதிஸ்ஸ ஒரு விகாரையை அமைத்தான்'. இவ் வாசகத்தை அடிப்படையாகக் கொண்டு பரணவித்தான பின்வரும் முடிவுக்கு வந்தார் - அதாவது
1. ‘நாகதீப" என்று கூறப்பட்டது யாழப்பாணத்தையே
2. வசப மன்னன் அநுராதபுரியை ஆட்சிசெய்த காலத்தில், அவனுடைய ஆட்சியின் கீழ், 'இஸிகிரய' என்ற ஒரு நிர்வா கியின் கீழ் நாகதீபம் இருந்தது.

Page 159
அ.முகம்மது சமீம் 290 3. நாகதீபவில் சிங்கள மொழிதான் பாவனையில் இருந்
தது.
4. இப்பிரதேசத்தில் பெளத்த கோயில்கள் கட்டப்பட்டன.
இதை ஆராய்ந்த பலர் - விக்கிரமசிங்க, டி. பி. ஜயத் திலக்க, கைகர் - இச்சாசனம் கி.பி. 3ம், 4ம் நூற்றாண்டுக்குரியது என்றும், இதிலுள்ள மொழியை, "சிங்கள - பிராகிருதம்" என்று கொள்ளலாம் என்றும் அபிப்பிராயம் தெரிவித்தனர்.
பரணவித்தாரனவின் விளக்கத்தை ஏற்காத பேராசிரியர் வேலுப்பிள்ளை இதற்கு இரண்டு மாறுபட்ட விளக்கங்களைக் கொடுக்கிறார். ஒன்று, இது திராவிட செல்வாக்கைக் காட்டு கிறது, என்றும், இரண்டாவது சிங்கள மொழியின் அடித்தளத் தில் திராவிட மொழியின் செல்வாக்கைக் காண்கிறோம் என்பதேயாம். சிங்களமொழியை ஆராய்ந்த கொடகும் புர, தம்ம ரத்ன, ஹெட்டியாரச்சி போன்றோர், “சிங்க ள - பிராக்கிரதத்திலுள்ள சில வார்த்தைகள் சமஸ்கிருதத்திலி ருந்தோ, பாளியிலிருந்தோ, வடஇந்திய பிராக்கிருதத்தி லிருந்தோ பெறப்பட்டவையல்ல; அவை தென்னிந்திய மொழி களிலிருந்து பெறப்பட்டவை என கூறுகின்றனர்.
இக்கருத்தை முற்றாக ஏற்காத பேராசிரியர் குணவர்தன, "பொதுவாக எல்லாமொழிகளிலும் காலப்போக்கில் ஏற்படும் செல்வாக்கு என்று கூறி, "இலங்கை சாசனங்களில் உள்ள அநேக வார்த்தைகள், சம்ஸ்கிருத மொழியிலும், வட இந்திய பிராக்கிருத மொழியிலும் உள்ள வார்த்தைகளை ஒத்திருக்கின் றன" என்று கூறுகிறார். இச்சாசனத்தில் உள்ள, 'மஹாரஜ", 'வஹயஹ", அதனெஹி, விஹார, போன்ற வார்த்தைகள் தமிழ் மொழியிலில்லை, இவை சமஸ்கிருத, பாளி ஆகிய மொழிகளில் உள்ள வார்த்தைகளுக்கு சமானம்', என்று கூறுகிறார். தென்னிந்திய செல்வாக்குள்ள வேறு சில சாசனங் கள் இருந்தாலும், வல்லிபுர சாசனத்தில் இச்செல்வாக்கைக் காணமுடியாது என்பதே இவரது கருத்து. இஸிகிரய என்ற

29 ஒரு சிறுபான்மை சமூகத்தின் பிரச்சினைகள் IV
பதத்தில் வரும், ‘ரய', ராயர் என்ற வார்த்தையைக் குறிக்கிற தென்றும், 'ராயர்" என்பது சிற்றரசன் என்பதும் 'இஸிகி என்பது 'ஈழத்தைக் குறிக்கிறது என்பது வேலுப் பிள்ளையின் கருத்தாகும். ஆனால் குணவர்தன, இது உயர்வகுப்பைச் சேர்ந்த ஒருவனின் பெயர் என்றும் குறிப்பிடுகி றார். ஆகவே, குணவர்தனவின் கருத்துப்படி, அநுராதபுரியை ஆண்டமன்னர் கள் வடபகுதியையும் ஆட்சி செய்தார்கள் என்பதையே இச்சா சனம் விளக்குகிறது", என்பதேயாம்.
இவ் வாசகத்தில் வரும் படகர்' என்பதற்குத் தற் போதுள்ள வல்லிபுரத்தைக் குறிக்கிறது என்று பரணவித்தாரன கூறுகிறார். இதை ஏற் காத சிற்றம்பலம், 'படகர்' என்பது ‘வடகரை' என்ற வார்த்தையே உருமாறியிருக்கலாம், என்றும், இது 'வடமராட்சி, என்ற வடிவத்தின் மூலமாகப் பகர என்று கொள்ளலாமா' என்று அபிப்பிராயப்படுகிறார். சிற்றம்பலம் 'ராயர்' என்ற பதத்தினோடு, 'இஸி' என்ற பதத்தையும் சேர்த்து, இது ஒர் இனக்குழுவைக் குறிப்பதாகும் என்கிறார்.
இவ்வாசகத்திலுள்ள 'வஹப", என்ற பதம் வசப மன்ன னைக் குறிக்கிறது என்பதை ஏற்றுக்கொள்ளாத பேராசிரியர் சிற்றம்பலம் 'பாளி நூல்கள் கூறும் அநுராதபுரத் தினை யாண்ட வசப மன்னனும், வல்லிபுரப் பொற்சாசனத்தில் கூறப்படும் வசப மன்னனுஞ் சாசனத்தின் எழுத்தமைதி குறிப்பதுபோல வெவ்வேறு காலத்தவர்கள் ஆவர். இவர்கள் ஒரு வம்சத்தைச் சார்ந்திருந்ததும், ஒரே பெயரைச் சூடியிருந்தது தான் இவர்க ளிடையே காணப்பட்ட ஒற்றுமையாகும்', என்று கூறுகிறார். அவர் மேலும் 'இச்சாசனத்தில் வசப மஹாராஜன் காலத்தில் நாகதீபத்தை இஸிகிரய என்பவன் ஆட்சி செய்ததாகக் குறிக்கப் படுவதால் ஒரு சமயம் இவ் வசப என்ற மன்னன் வன்னிப் பகுதியை உள்ளடக்கிய பழைய நாகதீபத்தின் பரப்பை ஒத்த பிர தேசத்தை ஆட்சி செய்ததால் 'மஹாராஜ' எனப்பெயர் பெற்றி ருத்தல் கூடும். இதனால் இப்பெரும் பிரதேசத்தின் ஒரு மாகா
ணமாக விளங்கிய யாழப்பாணக்குடாநாடே 'நாதீபம்’ என்று

Page 160
அ. முகம்மது சமீம் 292 இப்பொற் சாசனத்தில் அழைக்கப்படுகிறது எனலாம்', என்கிறார்.
சுருக்கமாகக் கூறினால், சிங்கள ஆய்வாளர்கள் யாழ்ப் பாணம் அநுராதபுரி ஆட்சியின் கீழ் இருந்தது எனவும், அங்கே பேசப்பட்ட மொழி சிங்களம் என்று கூறுவதை மறுத்த தமிழ் ஆய்வாளர்கள், நயாழப்பாணத்தில் வாழ்ந்த மக்கள் தமிழ் மொழியையே பேசினார்களென்றும் அவர்கள் தனியாட்சி யாகவே இருந்தனர் என்றும் கூறுகின்றனர்.

293 ஒரு சிறுபான்மை சமூகத்தின் பிரச்சினைகள் IV 43. சிங்கள, தமிழ் சமூகங்கள் அரசியலிலும், சமூக - மத கலாசாரத்திலும் வேறுபட்டே வந்திருக்கின்றனர்
இந்நாட்டின் இருபெரும் சமூகங்களிலொன்றான தமிழர் சமூகத்தின் தாயகக் கொள்கையை முற்றாக நிராகரிக்கும் சிங்கள அரசியல்வாதிகளின் நோக்கம் என்னவென்றால், தமிழர்களின் நியாயமான உரிமைகளைக்கூட அவர்களுக்கு மறுப்பதேயாகும். தமிழர்களின் அடிப்படை உரிமைகளே மறுக்கப்படும்போது, அங்கே நியாயத்திற்கும் தர்மத்திற்கும் இடமில்லாமல் போகிறது. இரு சமூகங்களுக்கிடையே சமா தானமும் செளஜன்யமும் நிலவ வேண்டும் என்றால் ஒருவரை யொருவர் அறிந்து கொள்ளும் மனப்பான்மையிருக்க வேண் டும். ஒரே சமநிலையிலுள்ள இரு சமூகங்களுக்கிடையேதான் சமாதானமும் பரஸ்பர புரிந்துணர்வும் நிலவ முடியும். ஒரு சமூகம் உயர் சமூகமென்றும், மற்றையது தாழ்ந்தது என்றும் கணிக்கும் போது அங்கே பரஸ்பர நல்லெண்ணம் வளர இட மில்லை. தமிழர்கள் கற்காலம் தொடக்கம் வடக்குப் பிரதே சத்தில் வாழந்திருக்கிறார்கள் என்ற உண்மை சமீபத்தில் நடாத் தப்பட்ட அகழ்வாய்வுகளின் மூலம் அறிகிறோம். சிங்கள அரசபரம் பரை யினருக்கும், பெளத்த பிக்கு சங்கத்தினருக்கும், சிங்கள மக்களுக்கும் தென்னிந்தியாவுடன் நெருங்கிய தொடர் பிருந்தது என்ற உண்மை கல்வெட்டு சாசனங்களின் மூலம் மட்டுமல்ல, இலக்கியங்களின் மூலமும் நாம் அறிகிறோம்.
இலங்கையின் பிராமிக் கல்வெட்டுகளில் 'நாக', 'உதி என்ற பெயரைச் சூடியோர்களைப் பற்றிய குறிப்புக்கள் காணப்படுகின்றன. "உதி என்ற பெயரைச் சூடியோர் பெரும் பாலும், சிற்றரசர்களாகவும், நிர்வாகிகளாகவும் இருந்திருக் கின்றனர். "பெரிய குளக்கல்வெட்டில் உதியின் வம்சத்தினை

Page 161
அ. முகம்மது சமீம் 2.94
விட 'நாக அரசனின் வம்சமே முக்கியம் பெற்றதாகக் காட்டப் பட்டுள்ளது. இக்கல்வெட்டுச் சாசனங்களில் தமிழர்களைக் குறிப்பதற்கு "த மேட' என்று கூறுவதை இது ஒத்திருக்கிறது. தென்பாண்டிநாட்டில், வாழ்ந்த “வேள்', பரதர் என்ற குலத்தவர் கள் இலங்கையின் வடபகுதியிலும் வாழ்ந்ததற்கு ஆதாரமாக வவுனியா மாவட்டத்தில் கிடைத்துள்ள கல்வெட்டு சாசனங்கள் உறுதிப்படுத்துகின்றன. 'வேள்' என்பவர் விவசாயத்திலும், பரதர் என்பவர் 'மீன் பிடித் தொழிலிலும் ஈடுபட்டிருந்தனர்.
இலங்கையைக் குறிக்கும் போது சங்ககாலத் தமிழ் இலக்கியங்கள் ‘நாகநாடு', 'மணிபல்லவம்', என்று கூறுகின் றன. பாளிநூல்கள் வடபகுதியை "நாகதீப", "நகதிவ' என்றும் குறிக்கின்றன. அனுராதபுரியை ஆண்ட மன்னர்கள் பெரும் பாலும், "நாகதீபத்துடன் கலாசார தொடர்பினையே கொண் டிருந்தனர். இப்பகுதியை ஆட்சி செய்ததாக எங்கேயும் கூறப் படவில்லை. தேவநம்பியதீசன் அசோகச் சக்கரவர்த்திக்கு அனுப்பிய தூதுக்குழு "யாழ்ப்பாணத்திலுள்ள ஜம்புகோளப் பட்டினம்", என்ற துறைமுகத்திலிருந்து சென்றதாக நாம் பாளி நூல்களிலிருந்து அறிகிறோம். "ஜம்பு" என்ற பதத்திற்குத் தமி ழில் நாவல்' என்று கூறலாம். நாவல் மரங்கள் உள்ள இடம் என் றும் சொல்லலாம். நாவல்பட்டினம் என்றும் நாம் கூறலாம். யாழப்பாணப்பிரதேசத்தில் வழக்கிலிருக்கும் வளம் தான் கோளமாக மருவியிருக்கலாம்.
தமிழிலக்கியங்களான சிலப்பதிகாரமும், மணிமேகலை யும், இலங்கையின் வடபகுதியை நாகநாடு' என்றும் மணி பல்லவம் என்றும் குறிப்பிடுவதை அறிகிறோம். தென்னிந்தியா வுக்கும், இலங்கையின் வடபகுதிக்கும் வாணிபத் தொடர்பு இருந்ததற்கு இவ்விரு காவியங்களிலும் வரும் குறிப்புக்கள் நமக்கு எடுத்துக்காட்டுகின்றன. சிலப்பதிகாரத்தில் (அதிகாரம் 1, வரி20-25) காணப்படும்.
'நாகநீண கரோடு ணாக நாடகனொடு போகநீள் புகழ்மன்னும் புகார் நகர துதன்னில்"

295 ஒரு சிறுபான்மை சமூகத்தின் பிரச்சினைகள் IV
என்ற வரிகளில், நாகநாட்டிலுள்ள நகரொன்று புகார் நக ரொடு ஒப்பிடப்பட்டுள்ளது. கண்ணகிக்கு வேண்டிய அணி கலன்களில் ஒன்றாகிய கால்சிலம்பினுள் எத்தகைய பொருள் இருக்க வேண்டுமென கேட்கப்பட்டபோது, மாநாய்கன்,
'எவராலும் பெறுதற் கரிய நாகமணியன்றி வேறு எந்த மணியும் தன் மகளின் காற் சிலம்புக்கு இருதல் ஆகாது'
என்று கூறி இத்தகைய நாகமணி, தென்திசையிலே உள்ள நாகதீவிலே உள்ளநாகராசனிடமே பெறலாமெனவும் கூறி னான்", என்று சிலப்பதிகாரத்திலிருந்து அறிகிறோம்.
'தமிழ்நாட்டு வாணிப குழுக்கள், கி.மு. பல நூற்றாண் டுகளுக்கு முன்னமேயே, அநுராதபுரத்தில் தமது வாணிப ஸ்தலங்களை அமைத்திருந்தனர், என்பதை அனுராதபுரத் திலுள்ள கல்வெட்டில் இடம்பெறும் 'கஹ பதிகன", என்ற சொல்மட்டுமன்றி, மாசாத்துவான், மாநாய்கன் என்ற பெயர் களும் எடுத்துக்காட்டுகின்றன' என்று பேராசிரியர் சிற்றம் பலம், தனது யாழ்ப்பாணம் - தொல்பொருள் ஆய்வு என்ற நூலில் கூறுகிறார். 'மாசாத்து வான்' என்ற வணிகர் குழுத் தலைவன் தரைவழி வாணிபத்தில் ஈடுபட்டான். அதேபோல, மாநாய்கன்", கடல்வழி வாணிபத்திலிடுபட்டான். தமிழ் காவியங்களான, சிலப்பதிகாரமும், மணிமேகலையும், நாக நாடு', 'மணிபல்லவம்' என்றழைக்கப்பட்ட வடபகுதியுடன், தமிழ்நாடு மேற்கொண்ட வர்த்தகத் தொடர்பினை உறுதிப் படுத்துகின்றன. நாகதீபப் பகுதியில் தமிழ்மொழி வழக்கி லிருந்ததை இப்பகுதியில் கிடைக்கப் பெற்ற பிராமிக் கல்வெட்டுக்கள் உறுதிப்படுத்துகின்றன. யாழ்ப்பாணப் பிரதேசத்தில் சிங்கள மக்கள்தான் வாழ்ந்தார்கள் என்றும் “சிங்கள மொழிதான் அங்கே பேசப்பட்டது என்றும், சிங்கள வரலாற்றுத் திரிபுவாதிகள் மட்டுமல்ல, படைத்தளபதிகள் கூட, இப்படி எழுதி சிங்கள மக்களின் இனஉணர்வைத் தூண்டி

Page 162
அ.முகம்மது சமீப 296 விடுகின்றனர். 'விங்க மாண்டர் மார்க் செனவிரத்ன தன்னுடைய 'தமிழர் தாயகத்தைத் தேடுதல்' என்ற நூலில் (பக்கம் 16) இக்கருத்தைக் கூறுகிறார்.
யாழ்ப்பாணப் பிரதேசத்தில், பதின்மூன்றாம் நூற்றாண் டுக்கு முன், தமிழ் இராச்சியம் இருந்ததற்குப் போதிய சரித்திர சான்றுகள் இல்லையென்றாலும் குறுநில மன்னர்கள் இருந் திருக்கிறார்கள். டெனியல் ஜோன் எழுதிய யாழ்ப்பாணச் சரித்திரம்' என்ற நூலில், இவர் "இப்பகுதியில் சிற் றரசர்கள் இருந்தார்கள் என்பதற்கு ஆதாரங்களைக் காட்டுகிறார். "இவர் களில் வெடியரசன் நெடுந்தீவிற் கோட்டை கொத்தளங் களை ஸ்தாபித்துத் தீவுப் பற்றுக்களைத் தனதடிப்படுத்தி அரசியலுக் குரிய படைக்கலன்களுடன் இராச்சியம் பண்ணினான்' என்று அவர் கூறுகிறார்.
யாழப்பாணக்குடா நாட்டையோ, வடபகுதியையோ, அனுராதபுரத்திலிருந்து ஆண்ட சிங்கள மன்னர்கள், தமது ஆட்சியின் கீழ் கொண்டு வந்தார்கள் என்பதற்கு வரலாற்றில் எவ்வித சான்றுமில்லை. தேவநம்பியதீசன் காலத்தில் புத்த சமயம் இலங்கைக்குக் கொண்டு வருவதற்கு முன், இந்நாட்டு மக்கள், ‘எந்தத் தெய்வத்தை வணங்கினார்கள், என்பதற் குரிய கேள்விக்கு, பாளிநூல்களில் எவ்வித பதிலையும் காணமுடிய வில்லை. தொல்பொருள் ஆராய்ச்சியாளர் தெரநியாகலவின் ஆராய்ச்சியிலிருந்து, சிந்துவெளி நாகரிகத்தைப் போல் இலங் கையிலும் தாய்த்தெய்வ வழிபாடு இருந்ததாக அறிகிறோம். கலாநிதி புஷ்பரட்ணம், பூநகரியில் கிடைத்த தொல்பொருட் களில், 'இலிங்கவடிவில் அமைந்த மண் உருவங்கள் கிடைத் தன' என்று கூறுகிறார். இவ்வாறான கலைச்சின்னங் கள் பல அநுராதபுரம், பொம்பரிப்பு, இரணமடு, மாமடுவ, உருத்திர புரம், சீகிரிய, அம்பாறை போன்ற இடங்களிலும் கிடைத்துள் ளன என்பது இவரது கருத்தாகம்'. கந்தரோடையில் கிடைத்த தொல் பொருட்களில் 'இலட்சுமி நாணயங்களும் கிடைத்தன. அநுராதபுரத்திற்கும், வடபகுதிக்குமிடையே இருந்த தொடர்பு

297 ஒரு சிறுபான்மை சமூகத்தின் பிரச்சினைகள் IV
பெரும்பாலும், கலாசாரத் தொடர்பாகவே இருந்து வந்திருக் கிறது.
பண்டைய இலங்கையில், பெளத்த மதத்தின் வருகைக்கு முன், மக்கள் இயக்கர், நாக வழிபாடுகளை மேற்கொண்டிருக் கலாம் என்பது அறிஞர்களின் கருத்து. இவ்வழிபாட்டோடு, தமிழ் நாட்டு மக்களின் வருகையாலும், தொடர்பாலும், திராவிடர்களின் வழிபாட்டு அம்சங்களும் சேர்ந்தன. ஆரிய வழிபாட்டுமுறை தமிழகத்தைப் பாதித்தைப்போல, இலங்கை யையும் பாதித்தது. பண்டைய காலத்தில் இயற் கைப் பொருட் களை வழிபடும் முறையிலமைந்தது தான் இவ்வியக்கர் வழி பாட்டு முறையாகும். விஜயன், குவேனி காலத்திலும், பண்டு காபய மன்னனின் காலத்திலும், இது நடைமுறையில் இருந்த தாக அறிகிறோம்.
நாகத்தினைத் தெய்வமாக வழிபட்ட காரணத்தினால், நாகவழிபாடு முறையும் நாகதீவில் இருந்ததற்குப் பாளிநூல் களிலுள்ள குறிப்புக்களின் மூலம் அறிகிறோம்', 'புத்தர் இலங்கைக்கு மேற்கொண்ட விஜயங்களின்போது, அவர் சந்தித்த நாக அரசர்கள் பற்றிய குறிப்புக்கள் மகாவம்சத்தில் இருக்கின்றன. இந் நாக வழிபாட்டில், வடபகுதி மக்களே ஈடுபட்டிருந்தனர் என்பதற்கு இப்பகுதி ‘நாகநாடு' என்றழைக் கப்பட்டதும் ஒரு காரணம். தமிழ்நாட்டுத் தொடர்பு காரணமாக, காலகதியில், இப்பகுதி மக்கள் நாக வழிபாட்டைக் கைவிட்டு, திராவிட வழிபாட்டம் சங்களில் முதன்மை பெறுவனவாகத் தாய்த்தெய்வம், சிவன், முருகன், திருமால், ஆகிய தெய்வவழி பாட்டு முறை வளர்ந்ததாக, யாழ்ப்பாண வைபவமாலை போன்ற நூல்களின் மூலம் அறிகிறோம். தமிழ்நாட்டிலுள்ள கண்ணகி - பத்தினி தெய்வம் - வழிபாட்டு முறை கஜபாகு மன்னன் காலத்தில் இலங்கையில் தோன்றியதாக நாம் சிங்கள இலக்கியங்களின் மூலமும், தமிழ்நாட்டு இலக்கியமான சிலப்பதிகாரத்தின் மூலமும் அறிகிறோம்.

Page 163
அ. முகம்மது சமீம் 298
"கடல்சூழிலங்கைக் கயவாகு வேந்தனும் அந்நாட்செய்த நாளனி வேள்வியுள் வந்தீ கென்றே வணங்கினர் வேட்டத் தந்தேன் வரமென் றெழுந்த தோர்குரல்"
என்ற பாடலிலிருந்து அறிகிறோம். சேரன் செங்குட் டுவன் தலைமையில் நடைபெற்ற விழாவில் கலந்து கொண்ட கஜபாகு அநுராதபுரத்தில் வருடாவருடம் ஆடிமாதத்தில் இவ் விழா நடைபெற ஏற்பாடு செய்ததாகவும் சிலப்பதிகாரம் கூறு கின்றது. 'பிரகாரம்' என்ற வீதிவலம் வருதல், தான், பின் னர் 'பெரஹர" வாகத் திரிபு பெற்றிருக்கலாம், என்பது கலாநிதி சிற்றம்பலத்தின் கருத்தாகும். இவ்வாறுதான் இலங்கையில் கண்ணகி வழிபாடு தோன்றியது என்பது அறிஞர்களின் கருத் தாகும் (எம். சற்குணம் - 'ஈழத்தில் கண்ணகி வழிபாட்டின் தோற்றமும் வளர்ச்சியும்')
யாழ்ப்பாணப் பகுதியில் கண்டெடுக்கப்பட்ட லட்சுமி நாணயங்களும், முல்லைத்தீவில் கண்டெடுக்கப்பட்ட நாணயங் களில், தலை விரி கோலமாகச் சூலத்தினைக் கையிலேந்தி நிற்குந்துர்க்கை போன்றவை இப்பகுதியில் இந்துமத வழி பாட்டினை எடுத்துக் காட்டுகின்றன. "வடபகுதியில் ஆதியில் காணப்பட்ட இவ்வழிபாடு தனித்துவமாகவும் பின்னர் சிவன், திருமால் ஆகியோருடன் அவர்களின் தேவியர்களாகவும் உயர்ச்சி பெற்றது", என்று சிற்றம்பலம் கூறுகிறார்.
ஆறாம், ஏழாம், எட்டாம் நூற்றாண்டுகளில் நாயன் மார்களும் ஆழ்வார்களும் தமிழகத்தில் ஏற்படுத்திய இந்துமத மறுமலர்ச்சி, இலங்கையின் வடபகுதியையும் அடைந்ததைத் திருஞான சம்பந்தர், சுந்தரமூர்த்தி, நாயன்மார் போன்றோர் இலங்கையிலிருந்த திருத்தலங்களான திருக்கேதீஸ்வரம், திருக் கோணேஸ்வரம் ஆகியவற்றின் மீது பாடிய பாடல்கள் எடுத்துக் காட்டுகின்றன.
சுருங்கச் சொன்னால், தென்னிலங்கையில் பெளத்தமதக்

299 ஒரு சிறுபான்மை சமூகத்தின் பிரச்சினைகள் IV
கலாசாரமும், வடபகுதியில் இந்து மதக் கலாசாரமும், வெவ் வேறாக வளர்ந்ததை நாம் வரலாற்றிலிருந்து அறியக் கூடியதாக இருக்கிறது. எனவே, அநுராதபுரத்திற்கும், யாழ்ப்பாணத் திற்குமிடையே இருந்த தொடர்பு பெரும்பாலும் காலாசாரத் தொடர்பாகவே இருந்து வந்திருக்கிறது. அநுராதபுரி அரசர்கள், யாழ்ப்பாணத்தைத் தமது ஆதிக்கத்தின் கீழ் வைத்திருந்தார்கள் என்பதற்கு எவ்வித ஆதாரமுமில்லை. ஆகவே, வடபகுதி மக்கள், தென்னிலங்கை மக்களின் ஆட்சியின் கீழ் வரவேண்டு மென்பது என்ன நியாயம்? ஒரு சமூகத்தின், அரசியல் வரலாற் றையும், அதன் சமய, சமூகக் கலாசாரத்தையும் பிரதிபலிக்கும் வகையில் தான் அதன் அரசியலமைப்பும் இருக்க வேண்டுமே யொழிய, இன்னொரு சமூகத்தின், மத, கலாசார அமைப்பை யொத்த ஒரு அரசியலமைப்பைத் திணிக்க முயல்வது அரசியல் தர்மத்திற்கே விரோதமானது. மேல்நாட்டு ஆதிக்க வெறியர் களின் காரணமாக, சுதந்திரத்தை இழந்த ஒரு சமூகம், நாடு சுதந்திரமடைந்த பின்னரும், ஒரளவு சுதந்திரமாக வாழ விரும்புவதில் என்ன தவறிருக்கிறது?

Page 164
அ. முகம் 19து சமீம் 3DO 44. 'இன உணர்வை வளர்க்கும்
a 9 p.
சிங்கள பாடநூல்கள்
தமிழர்களின் தாயகக் கொள்கையை மறுத்த சிங்கள அறிஞர்களின் கருத்து எவ்வளவு தவறானது என்பதை முன் னைய அத்தியாயங்களில் விளக்கினோம். தமிழர்களின் மூதாதையர் வடக்குப் பிரதேசத்தில், கற்காலம் தொட்டு வாழ்ந்திருக்கிறார்கள் என்ற உண்மை சமீபத்தில் கண்டெடுக்கப் பட்ட தொல் பொருள்களிலிருந்து அறிகிறோம். இத் தொல் பொருள் ஆய்வுகளின் உண்மையைக் கூட மறுக்கும் அளவிற்கு சிங்களவரின் மனநிலை வளர்ந்திருப்பதற்கு ஒரு காரணம், இவ்வின உணர்வை, தூண்டிவிட்ட எழுத்தாளர்களின் படைப் புகளேயாகும். அநகாரிக்க தர்மபால, பியதாச சிறி சேன, முனிதாச குமாரதுங்க போன்றவர்களின் எழுத்துக்கள் சிங்கள இனத்தவரின் இன உணர்வைத் தூண்டிவிட்டன. பத்தொன் பதாம் நூற்றாண்டின் இறுதியிலும், இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியிலும், இவர்கள் எழுதினார்களென்றால், இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில், குலரத்ன, மெத்தானந்த, மலலசேகர, வல்பொல ராகுல தேரோ, மதிகே பஞ்ஞாசிஹ தேரோ, சோபித்த தேரோ, சரத் அமுனுகம, காமினி ஈரிய கொல்ல போன்றவர்கள் இவ்வின உணர்வை மேலும், தூப மிட்டு வளர்த்தார்கள். இன்றைய சிங்கள இளைய தலைமுறையி னரின் இனஉணர்வை வளர்ப்பதற்குச் சிங்கள பாடநூல் களிலும், இக்கருத்துக்களைப் புகுத்தியிருப்பதிலிருந்து. இது ஒரு திட்டமிடப்பட்ட செயலாகும் எனக் கொள்ளலாம். சிங்கள பாடப்புத்தகங்களிலுள்ள இக்கருத்துக்களை ஆராய்வதன் மூலம் இவ்வின உணர்வு எவ்வளவு தூரம் இளம் நெஞ்சங்களில் வேரூன்றியிருக்கிறது என்பதை நாம் அறியலாம்.
றெஜி. சிரிவர்தன, என்ற சிங்கள எழுத்தாளர், பாடசாலை களில், 1982ம் ஆண்டு வரையில் உபயோகத்திலிருந்த சிங்கள - தமிழ் பாடபுத்தகங்களைப் பற்றி, ‘தேசிய ஒற்றுமை யா

3 O ஒரு சிறுபான்மை சமூகத்தின் பிரச்சினைகள் IV
அல்லது வகுப்பு வாதமா', என்ற தலையங்கத்தில், சிலோன் சர்ச் மன் (வால்யும் LXXX பாகம் 2 - 1983) என்ற சஞ்சிகையில், பின்வருமாறு எழுதுகிறார்:
'தமிழ் பாடப்புத்தகங்கள், தமிழ் அல்லாதவர்களதும், இந்துக்களல்லாத ஏனைய மதங்களைப் பின்பற்றுபவர்களதும், கலாசாரத்தையும், வாழ்க்கை முறையையும், அறிந்து, மதிக்கும் வகையில், ஒரு பண்பட்ட மனநிலையை வளர்த்து ஒரு பொது வான தேசிய தனித்துவத்தை உருவாக்க முனையும் அதே வேளையில், சிங்கள பாடப்புத்தகங்கள், ஒரு தனிப்பட்ட கலாசாரத்தை - அதாவது, சிங்களவரது கலாசாரம் மட்டுமல்ல, சிங்கள - பெளத்தர்களது வாழ்க்கை முறையை - பிரிவுணர்ச் சியை வளர்க்க முற்படுகின்றன. தமிழர்கள் பரம்பரையாக வந்த எதிரிகள் என்று காட்டப்படுகின்றனர். அதோடு, 1948ம் ஆண்டில் இந்நாடு பெற்ற சுதந்திரம் சிங்களவர் மாத்திரம் அனுபவிப்பதற்கு, சிங்களவரால் பெற்ற சுதந்திரம், என்ற கருத்தும் இப்புத்தகங்களில் இழையோடி நிற்கிறது'
மேலே குறிப்பிட்ட றெஜி சிரிவர்தனவின் கருத்து, இன்றைய சிங்கள இளைய தலைமுறையினரின் மனப்பான்மை எப்படி பாடப்புத்தகங்களின் மூலம் வளர்க்கப்பட்டிருக்கின்றன என்பதைத் தெளிவாக்குகின்றன. தமிழ் மக்களுக்கெதிராக ஏவிவிடப்பட்ட இனக்கவலரங்களின் பகைப்புலத்தை இதிலி ருந்து அறியலாம். சட்டத்தை நிலைநாட்ட வேண்டிய காக்கி உடையணிந்து, துப்பாக்கி சகிதம் நின்று கொண்டிருக் கும் படைவீரனும், போலிஸ்காரனும், "ஒருதமிழனைக் காணும் போது, நாட்டின் தனது இனத்தின் - எதிரியைக் காணும் அளவிற்கு 'அவனது மனநிலை மாற்றப்பட்டிருக்கிறது. தன் முன்னால் அடையாள அட்டையுடன் நிற்பவன் ஒரு சர்வகலா சாலைப் பேராசிரியராக இருக்கலாம், ஒரு டாக்டராக இருக்க லாம், ஒர் அரசாங்க உத்தியோகத்தராயிருக்கலாம். ஆனால் அவன் தன்னுடைய இனத்தின் - நாட்டின் - எதிரியைத்தான் அங்கே காண்கிறான். நாட்டின் ஒற்றுமையும், சமாதானமும்,

Page 165
அ. முகம்மது சமீம் 3O2 சமத்துவமும் நிலைநாட்டப்பட வேண்டு மென்றால், இந்த மனநிலைமாற்றப்படல் வேண்டும்.
சிங்க ள, தமிழ் பாடப்புத்தகங்களை ஆராயும் போது இவ்விரு மொழிகளிலுள்ள வேற்றுமைகள் நம் கண்முன் தெட் டத் தெளிவாகத் தெரிகின்றன. தமிழ் பாட புத்தகத்தில், (ஆரம்ப வகுப்பு) சிங்களவர், தமிழர், முஸ்லிம்கள் எல்லோரும் இந்நாட்டு மக்கள், நண்பர்கள் என்ற கருத்து தொனிக்கும் அதேவேளையில், சிங்கள பாடப்புத்தகத்தில் (முல்பொத்த) " இந்நாடு சிங்கள மக்களுக்கு மாத்திரமே உரியது என்ற கருத்து வெளிப்படுகிறது. இக்கருத்துப் பற்றி, மே மாதம் முதலாம் திகதி 1979ம் ஆண்டு வெளியான "லங்கா கார்டியன்" என்ற சஞ்சிகையில் பின்வரும் வாசகம் வெளியானது.
'இவ் விரு பாட நூல்களையும் ஒப்பு நோக்கும்போது முதலாம் வருடத்திலிருந்தே தமிழ் முஸ்லிம் மாணவர்களுக்கு இன ஒற்றுமை யைப் பற்றியும், சமூக நலனைப் பற்றியும் போதிக்க வேண்டு மென்ற எண்ணம் இலாகாவுக்கு இருக் கிறது. ஆனால் இதே செய்தியை சிங்கள மாணவனுக்கும் கொடுக்க வேண்டியதவசியமில்லை என்றும் நினைக்கிறது'. இப்படிக்கூறுவது பயங்கரமானதும், ஒழுக்கச் சிதைவும் என்று எண்ணுகிறதோ?"
லங்கா கார்டியனின் கருத்துக்களை வலியுறுத்துமாறு, ஏனைய பாடங்கள் அமைவதுடன், மற்றைய வகுப்புப் பாட நூல்களும் அமைகின்றன. தமிழ் பாடநூல்களில், தமிழ், முஸ் லிம், கிறிஸ்தவ சமூகங்களின் வாழ்க்கை முறையையும், கலா சாரத்தையும் அடிப்படையாகக் கொண்ட கதைகளும் கட்டுரை களும் இடம் பெறுகின்றன. ஆனால் சிங்கள பாடநூல்களில், பெளத்த கலாசாரத்தைப் பற்றி மாத்திரமே கதைகளும் கட்டுரை களும் இருக்கின்றன. சிங்கள சமூகத்தின் ஒர் அங்கமான கிறிஸ்தவர்களைப் பற்றிய செய்தியோ அவர்களுடைய மத
* முதல் புத்தகம்

303 ஒரு சிறுபான்மை சமூகத்தின் பிரச்சினைகள் IV
அனுஷ்டானங்களைப் பற்றியோ எவ்வித குறிப்புமில்லை. மூன்றாம் வகுப்பிலிருந்து ஒன்பதாம் வகுப்புவரையிலுள்ள தமிழ் சிங்கள பாடநூல்களிலுள்ள வேறுபாடு இன்னும் தெளி வாக விளங்குகின்றன."
தமிழர்களின் படையெடுப்புக்களை எதிர்த்துப் போராடி, உருவாக்கப்பட்டதுதான் "சிங்க ள - பெளத்த தனித்துவம் என்று இந்நூல்களில் சுட்டிக்காட்டப்படுகின்றன. இந்நாட்டில் பல்லின மக்கள் வாழ்வதைப் பற்றியோ, பல சமயத்தவர்கள் வாழ்வதைப் பற்றியோ, எவ்வித குறிப்புமில்லை. இவை இருட்டடிப்புச் செய்யப்பட்டிருக்கின்றன. 1948ம் ஆண்டில் இந்நாடு பெற்ற சுதந்திரம், சிங்கள மக்கள் பெற்ற சுதந்திரம்" என்றும் விளக்கிக் கூறப்படுகின்றது. இதற்கு மாறாக, தமிழ் பாடப்புத்தகங்களில், சிங்கள மாணவர்களுக்கும், தமிழ், முஸ்லிம் மாணவர்களுக்கு மிடையே நல்லெண்ணத்தை வளர்க் கும் கருத்துக்கள் கூறப்படுகின்றன. இந்துமத அனுஷ் டானங் களும், கலாசாரமும் விளக்கப்படுவதோடு, சிங்கள பெளத்த கலாசாரமும், பெளத்த மதவாழிபாடுகளும் கூறப்படுகின்றன. சிங்கள நூல்களில் சிங்களப் புத்தாண்டு. என்று மாத்திரம் கூறப் படுகின்றது. ஆனால் தமிழ் நூல்களில் இது, சிங்கள - தமிழ் புத்தாண்டு என்று விளக்கப்படுகின்றது. இந்நாட்டின் சுதந் திரத்திற் காக, உயிர்துறந்த தேசியவீரர்களில் ஒருவராகிய கெப் பிட்டி பொல வைப் பற்றிக் கூறுவதோடு பண்டார வன்னிய னைப் பற்றியும் தமிழ்நூல்கள் கூறுகின்றன.
ஆங்கில மொழிக்கல்விக்குப் பதிலாக சிங்கள மொழி மூலமும், தமிழ் மொழி மூலமும் கல்வி புகட்டப்படல் வேண் டும் என்ற அடிப்படையில், சிங்கள மொழிப் _1 - 3: II Gö 6)
* Ref: School Text Books and Communal Relations in Sri Lanka - Part - Analysis of Text BOOKS by Reggie Siriwardana, K. indrapala, Suni Bastian & Sepali Kitte gode
(Republished) - CO un Cill í OF COmmu na Harmony Through the Media 23/A Vitagiriya Avenue - Colombo 4.

Page 166
அ. முகம்மது சமீம் 3O4 களாகவும், தமிழ்மொழிப் பாடசாலைகளாகவும் பாடசாலைகள் பிரிக்கப்பட்டபிறகு இவ்விரு மொழிகளைப் பேசும் மக்கள், ஒன்றோடொன்று முரண்பட்ட நிலையில் வெவ்வேறு திசையில் செல்வதைக் காண்கிறோம். இவ்விரு சமூகங்களிடையேயும் இனஉணர்வு வளர்வதற்கு இதுவும் ஒரு முக்கிய காரணமாகும்.
சிங்கள இனவாதிகளிடையே இருக்கும் இனஉணர்வு எப்படி பாடப்புத்தகங்களில் புகுத்தப்பட்டன என்பதைக் கலா
நிதி சிறிவிர பின்வருமாறு கூறுகிறார்."
'பொதுவாக, இலங்கையர்களுக்குத் தேசம்" என்ற பதத்திலுள்ள பண்பியல்புகளைவிட, 'இனம்', 'மதம்' என்ப வைகள் முக்கியமாகத் தென்படுகின்றன. எனவே எழுத்தாளர் களும் வரலாற்றாசிரியர்களும் பண்டைய வரலாற் றில், நிலத்திற்காகவும் குடியேற்றத்திற்காகவும் படைவீரர்களி டையே ஏற்பட்ட சிறு மோதல்களைப் படையெடுப்புக்களாக வும், இனப்போராட்டமாகவும், சமயப் போர்களாகவும் பெரிது படுத்திக் காட்ட முற்பட்டனர். 'ஆரியர் 'திராவிடர் என்ற தத் துவங்களையும் புகுத்தினர். எல்லாளனுக்கும் துட்ட காமினிக் குமிடையே நடந்த யுத்தத்தை இனப்போராட்டமாகக் காட்ட முற்பட்டதோடு, இக்கருத்தைப் பாடநூல்களிலும் புகுத்தினர்".
துட்ட காமினியின் வரலாற்றை, சிங்களப் பாடப்புத்தகங் களில் ஒர் இனக் கண்கொண்டே எழுதிவைத்தனர். 3ம் வகுப்பு சிங்கள பாடப்புத்தகத்தில் (பாடம் 32) துட்டகாமினியைப் பற்றி அறிமுகப்படுத்தும்போது, 'அஞ்சாநெஞ்சம் படைத்த தாயும் ஒரு வீர மகனும் , என்ற தலையங்கத்தில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையின் ஆரம்பத்தில், 'தாய்நாட்டிற்காகவும், இனத் திற்காகவும், மதத்திற்காகவும், தங்கள் உயிர்களையே தியாகம்
* ஆதாரம் சி.ஆர் டி. சில்வா கல்வியில் தேசிய உணர்வின் பாதிப்பு - மைக்கல் றொபர்ட்ஸ் பதிப்பித்த, இலங்கையில், கூட்டான தனித்துவங்கள் தேசியம் கண்டனம் என்ற

305 ஒரு சிறுபான்மை சமூகத்தின் பிரச்சினைகள் IV
செய்த வீரர்களின் கதைகள் எமது வரலாற்றில் குறைவில்லை', என்று கூறப்பட்டுள்ளது. துட்டகாமினியின் வரலாற் றை இப் படி ஆரம்பித்து, ஏனைய பாடப்புத்தகங்களில், நாடு, இனம், மதம் என்ற அம்சங்கள் புகுத்தப்பட்டு, இன உணர்வு வளர்க்கப் படுகிறது. எல்லாளனுக்கும் துட்ட காமினிக்குமிடையே நடந்த போர், "நாட்டிற்காகவும், இனத்திற்காகவும், மதத்திற்காகவும், தன் உயிரையே தியாகம் செய்ய முன் வந்த ஒரு வீரனின் வீரச் செயல் என்று காட்டப் படுகிறது. புத்தபகவான் போதித்த புத்த மதத் தத்துவம் இங்கே காட்டப்படவில்லை; அரசியல் பெளத் தமே இங்கே காட்டப்படுகிறது.
துட்ட காமினியின் வெற்றிகளைப் பற்றிக் கூறிவிட்டு, பின் வரும் வாசகத்தோடு பாடம் முடிவுறுகிறது (பக்கம் 148-149).
"எமது மூதாதையர் எமக்கு விட்டுச் சென்ற தேசியக் குணவியல்புகளைப் பற்றியும், வேறு விசேஷ அம்சங்களைப் பற்றியும் நாம் பெருமைப் பட வேண்டும். ஆகவே எமது நாட்டிற்காகவும் இனத்திற்காகவும், நாம் எமது சேவையை ஆற்றுவது எமது கடமையாகும் ' இப்பாடத்திற்குப் பிறகு மாணவர்களுக்குக் கொடுக்கப்பட்ட கேள்விகள் கூட, இன உணர்வைத் தூண்டுபவையாகவுள்ளன. 'இளவரசர் துட்ட காமினி, தன்னுடைய இளவயதில் கூறியவற்றைப் பற்றி உமக்குத் தெரிந்ததை எழுதுக' என்ற கேள்வி கொடுக்கப் பட் டுள்ளது. "உருகுனைப் பிரதேசத்தின் ஆட்சியை ஏற்ற துட்ட கைமுனு, பெளத்த மத வளர்ச்சிக்காக, டாக பாக்களையும், விகாரைகளையும் கட்டுவித்து, திராவிட அரசனான எல்லாள னுடைய ஆட்சியிலிருந்த வடநாட்டை விடுவிப்பதற்காகப் படைகளைத் தயார் செய்தான்', என்று கூறுகிறது. (சிங்கள பாடநூல் 8, பக்கம் 20) தமிழர்களின் படையெடுப்புக்களால் தான், சிங்கள இனம் அழிக்கப்பட்டு, பெளத்த விகாரைகளும், டாகபாக்களும், சின்னாபின்னமாக்கப்பட்டன என்ற கருத்து பொதுவாக எல்லா பாடநூல்களிலும் கூறப்படுகிறது. 'திரா விட படையெடுப்பினால், சீரழிந்த நிலையிலிருந்த மகியங்

Page 167
அ. முகம்மது சமீம் 306
கனை டாகபாவை துட்டகைமுனு அரசன் திருத்தியமைத்தான்' என்றிருக்கிறது. கி.பி. 1073ம் ஆண்டில் சோழர்களை முறிய டித்து, சிங்கள இனத்தை விஜயபாகு மன்னன் காப்பாற்றி னான்', என்று 4ம் வகுப்பு பாடநூலில் கூறப்படுகிறது (பக்கம் 110) "எமது இனம்', "எமது நாடு", எமது மதம்', என்ற பதங்கள் அடிக்கடி இப்பாடநூல்களில் கையாளப்படுகின்றன.
இத்தகைய பதங்களும், கருத்துக்களும் பாடசாலை செல் லும் இளம்பிள்ளைகளின் நெஞ்சங்களில் வேரூன்றிய பிறகு, இவை, பிற்காலத்தில் இன உணர்வாகவும், இனவெறி யாகவும் மாறி, பல்லினங்கள் வாழும் இந்நாடு ஒர் இனத்திற்கு மாத்திரம் தான் உரிமையுள்ளது என்று நிலை நாட்டப்படுகிறது.

3G 7 ஒரு சிறுபான்மை சமூகத்தின் பிரச்சினைகள் IV
o 45. தமிழர்களின் அரசியல் விரக்திக்குரிய காரணங்கள்
இலங்கையில் இனவாத அரசியல் டொனமூர் ஆட்சிக்காலத்திலேயே ஆரம்பித்து விட்டதென்றாலும், சுதந் திரத்திற்குப் பிறகு, இனவாதத்தை ஒரு கொள்கையாக சிங்கள அரசியல் தலைவர்கள் கடைப் பிடிக்கத் தொடங்கினார்கள். 1952ம் ஆண்டுக்குப் பிறகு ஒவ்வொரு சிங்கள அரசியல் தலைவரும், சிங்கள இனத்தின் மேலாண்மைக்காகப் பாடுபடத் தொடங்கினர். இவ்வினவாத அரசியலை வளர்ப்பதற்காக அரசியல் தந்திரங்களைக் கையாளத் தொடங்கினர். 1945ம் ஆண்டில் சட்டசபையில் ஜே.ஆர். ஜயவர்தன கொண்டுவந்த 'சிங்கள மொழி மாத்திரம்தான் அரசமொழியாக இருக்க வேண்டும் என்ற மசோதா, 1948ம், 49ம் ஆண்டுகளில், டி. எஸ். சேனாநாயக்கா வினால் கொண்டுவரப்பட்ட ‘இந்திய பிரஜா உரிமை சட்டம், நீர்ப்பாசன குடியேற்றத்திட்டங்கள், ஆகியன வற்றை நாம் உதாரணமாகக் காட்டலாம். தனக்குப்பிரதம மந்திரி பதவி, கிடைக்காது, என்பதை உணர்ந்த எஸ்.டபிள்யு. ஆர். டி. பண்டாரநாயக்கா ஐக்கிய தேசியக்கட்சியிலிருந்து விலகி, சிறிலங்கா சுதந்திரக் கட்சி என்ற ஒரு புதிய அரசியல் கட்சியை ஆரம்பித்தாரென்றாலும், 1952ம் ஆண்டில் நடந்த பொதுத் தேர்தலில் போதிய வெற்றி கிடைக்காததை உணர்ந்த, பண்டாரநாயக்கா, இனவாத அரசியலை ஒரு கொள்கையாக ஏற்று, அதன் மூலம் ஆட்சியைக் கைப்பற்றலாம் என்ற முடி வுக்கு வந்தார். சர். ஜோன் கொத்தலாவல, பிரதமர் ஆனபிறகு, சிறுபான்மை மக்களுக்குத்தான் கொடுத்த வாக்குறுதிகளை தூக்கி எறிந்துவிட்டு, இனவாத அரசியலை மிகவும் மும்முர மாகக் கடைப்பிடிக்கத் தொடங்கினார். இக்கால கட்டத்தில் சிங்க ள - பெளத்த மக்களிடையேயும், பெளத்த பிக்குகளி டையேயும், இனவாத கட்சிகளும், குழுக்களும் சங்கங்களும் தோன்றத் தொடங்கின. இவை, சோஷலிசம் என்ற போர்வை யையும் போர்த்திக் கொண்டன. இதன் எதிரொலியாகத்தான் தமிழ் மக்களிடையே, பிரிவினை வாதத்தை அடிப்படையாகக்

Page 168
அ. முகம்மது சமீம் 3O8
கொண்ட அரசியல் கட்சிகள் உருவாகத் தொடங்கின. சிங்கள இனவாதத்தின் எதிரொலியாகத் தான் 'தமிழரசுக்கட்சி' என்ற ஒரு புதிய அரசியல் கட்சி இக்காலப்பகுதியில் தோன்றியது. இப்பிரிவினைவாதக் கட்சிக்குத் தமிழ் மக்களிடையே ஆதரவு இருக்கவில்லை யென்பதை 1952ம் ஆண்டு பொதுத் தேர்தல் எடுத்துக் காட்டியது. ஆனால் தென்னிலங்கையில் சிங்களபெளத்த இனவாதம் வளரவ ளர, வடக்கிலும், கிழக்கிலும், தமிழ் மக்களிடையேயும் இவ்வினவாதம் வளரத் தொடங்கி யது. கிறிஸ்தவ சமயத்தைச் சேர்ந்த ஒருவரால் ஆரம்பிக்கப் பட்ட இக்கட்சிக்கு இந்துக்கள் தமது ஆதரவை வழங்கத் தொடங்கினர். சிங்கள மக்கள் மத்தியில் சிங்கள இனவாதம் வளர்வதற்கு படித்த ஒரு கூட்டமே தோன்றியது. இக்குழுவின் தோற்றம்தான் இவ்வினவாத அரசியல் வளர்வதற்குக் காணர மாயிருந்தது என்றால் அது மிகையாகாது.
1945ம் ஆண்டில் இலங்கை சட்டசபையில், நிறைவேற்று அதிகாரம் கொண்ட கல்விக்குழுவின் சார்பில், அதன் தலைவ ராகவும் கல்வி அமைச்சராகவும் இருந்த சி. டபிள்யு. டபிள்யு. கன்னங்கர இலவசக் கல்வித் திட்ட மசோதாவைச் சமர்ப்பித்தார். பாலர் வகுப்பு முதல் சர்வகலாசாலை வரை கல்விக்கட்டணம் இல்லாமல் கல்வி கற்கும் வாய்ப்பு எல்லோருக்கும் வழங்கப் பட்டது. 1950ம் ஆண்டு தொடக்கம், அரசாங்க உத்தியோகங் களைப் பெறும் எதிர்பார்ப்புடன் ஏராளமான பட்டதாரிகள் சர்வகலாசாலைகளில் உற்பத்தி செய்யப்பட்டனர். அரசாங்க வெற்றிடங்கள் எல்லாம் தகுதியின் அடிப்படையில் நிரப்பப் படவில்லை. அரசாங்க உத்தியோகங்களைப் பெறுவதற்கு அரசியல் செல்வாக்கும் தேவைப்பட்டது. ஜனநாயக முறைப் படி பெரும்பான்மையின மக்களின் அரசாங்கம் நடைபெற்ற தால், சிங்கள பட்டதாரிகளுக்கே அரசாங்க உத்தியோகம் பெறும் வாய்ப்பு இருந்தது. சிங்கள பட்டதாரிகள் உயர்பதவி களைப் பெற்ற அதே நேரத்தில் தமிழ், முஸ்லிம் பட்டதாரி களுக்கு அரசாங்கத்தில் இடம் கிடைக்கவில்லை. சிலர் ஆசிரி யர் தொழிலில் தஞ்சம் புகுந்தனர்.

309 ஒரு சிறுபான்மை சமூகத்தின் பிரச்சினைகள் IV
சிறுபான்மையின மக்களுக்குப் பேரிடியாக விழுந்தது தான் தாய்மொழி மூலம் கல்வி புகட்டப்படல் வேண்டும் என்ற அரசாங்கத்தின் முடிவு. டொனமூர் அரசியல் திட்டத்தில் நிறைவேற்றும் அதிகாரம் கொண்ட கல்விக்குழு, 1943ம் ஆண்டில் தாய்மொழி மூலம் கல்வி கற்பிக்கப்படல் வேண்டும் என்று சிபாரிசு செய்தது. 1953ம் ஆண்டு தொடக்கம் பெரும் பாலும் எல்லா பாடசாலைகளிலும் தாய்மொழிக்கல்வி அமு லுக்கு வந்தது. 1954ம் ஆண்டு "உயர்கல்வி தேசிய மொழிக் குழு', சர்வகலாசாலைகளிலும், தாய்மொழிக்கல்வி அமுலாக் கப்படல் வேண்டும் என்று சிபாரிசு செய்தது. விஞ்ஞானம், மருத்துவம், பொறியியல் ஆகிய துறைகளைத் தவிர்ந்த ஏனைய துறைகளில் தாய்மொழி புகுத்தப்பட்டது. இதனால், சிங்களம், தமிழ் என்ற இரு பிரிவுகள் மொழி அடிப்படையில் உருவாகத் தொடங்கின. ஆங்கில மொழி மூலம் கல்விகற்ற காலத்தில், இவ்விரு சமூகங்களிடையே வேறுபாடுகள் அதிகமாக இருக்க வில்லை. ஒருவரையொருவர் அறியும் வாய்ப்பும் இருந்தது. தாய்மொழிக்கல்வி அமுலுக்கு வந்த பிறகு இரு சமூகங்களும் எதிர்முனைகளுக்குச் செல்லத் தொடங்கின. அறுபதுகளிலும், எழுபதுகளிலும், சர்வகலாசாலைகளின் எண்ணிக்கை வளர்ந் தது. இவைகளினின்றும் வெளியாகும் சிங்கள பட்டதாரிக ளுக்கு அரசாங்கப் பதவிகளைக் கொடுப்பதனால் தமது அரசி யல் செல்வாக்கை அதிகரிக்கலாம் என்று சிங்கள அரசியல் வாதிகள் எண்ணத் தொடங்கினர். சிங்கள மொழி மூலம் கல்வி பெற்ற சிங்கள பட்டதாரிகள், அரசாங்க உத்தியோகங்களைப் பெற்றனர். தமிழ் மொழி மூலம் கல்வி கற்ற, தமிழ், முஸ்லிம் பட்டதாரிகள் அரசாங்க உத்தியோகங்களைப் பெறும் வாய்ப்பில்லாமல் ஏங்கிக் கிடந்தனர். இதன் காரணமாக தமிழ் மொழி ஒரு தாழ்ந்த நிலைக்குத் தள்ளப்பட்டது. தமிழ் தேசிய வாதம் தோன்றுவதற்கு இதுவும் ஒரு காரணமாக அமைந்தது. 'தமிழ் மொழிக்கு உரிய இடம் வேண்டுமென்று, தமிழ் அரசியல்வாதிகள் கூறியது உண்மையில் தமிழ்மொழியை ஒரு சாதகமாகப் பாவித்து, தம்முடைய அடிப்படைக் குறிக்கோ

Page 169
அ. முகம்மது சமீம் 310 ளான 'தமிழ் ஈழம் பெறுவதற்கே என்பது அவர்களுடைய சொல்லும், செயலும் எடுத்துக் காட்டுகின்றன. தமது பிள்ளை களுக்கு ஆங்கில மொழி மூலம் கல்வி கற்பிக்கப் படு வதையே இவர்கள் விரும்பினார்கள். ஆங்கிலக்கல்வியைப் பெறுவத னால் உலகில் எப்பாகத்திலும், உத்தியோகம் பெறும் வாய்ப்பு இருக்கிறது என்பதை இவர்கள் உணர்ந்தார்கள்' ஒரு சமஷ்டி ஆட்சி அமைப்பில் தம்முடைய பிரதேசத்தில், ஆங்கிலக் கல்வியைப் புகுத்தி, அதன் மூலம் தம்முடைய மக்களுக்கு ஒரு சிறந்த எதிர்காலத்தை உருவாக்கலாம் என்பதும் இவர்களது நோக்கமாயிருந்தது. இதன் மூலம் அரசாங்க தனியார் துறை களில் தமிழ்மக்களுக்கு உரிய இடம் கிடைக்க வேண்டும் என் றும் வாதிட்டார்கள்.
தமிழ் மக்களுடைய விரக்திக்கு இன்னொரு காரணம்; 1956ம் ஆண்டில், அரசாங்கத்தால் கொண்டுவரப்பட்ட 'சிங்கள மட்டும்" என்ற கொள்கை, இதனால், தமிழ் மொழி மூலம் கல்விகற்ற தமிழர்களுக்கு அரசாங்கத்தில் பதவி கிடைக்காதது ஒன்று, ஏற்கனவே சிங்கள மொழி தெரியாதிருந்த தமிழ் அரசாங்க உத்தியோகத்தர்கள் தங்கள் கடமைகளைச் செய்ய முடியாமல், ஒய்வு பெறுவதற்குத் தள்ளப்பட்டது மற்றொன்று.
அடுத்து, 1960ம், 61ம் ஆண்டுகளில் அரசாங்கம் கொண்டு வந்த 'தனியார் பாடசாலைகள் அரசாங்க மயமாக்கப்படுதல்' கொள்கை, தமிழர்களுடைய எதிர்காலத்தைப் பெரிதும் பாதித் தது. தென்னிலங்கையில் போலல்லாமல் வடக்கிலும் கிழக்கி லும், கிறிஸ்தவ மிஷன்கள் தனியார் பாடசாலைகளின் மூலம் ஒரு சிறந்த கல்வித் திட்டத்தை அமைத்திருந்தார்கள். இத்தனி யார் பாடசாலைகள் அரசாங்க மயமாக்கப்பட்டதோடு தாய் மொழி மூலம் கல்வி கற்பிக்கப்படல் வேண்டுமென்ற அரசாங் கத்தின் கொள்கை தமிழ் மக்களுடைய எதிர்காலத்தைப் பெரிதும் பாதித்தது. இலங்கையின் ஏனைய இடங்களைப் போல, தமிழ்ப் பிரதேசங்களிலும், கல்வியில் அரசியல் வாதிகளின் தலையீடு தொடங்கியது.

3 11 Q(5 6 pi UT 66 60) Ln E PUS, 356ë 15 Të d) 60 60 8, GT IV
தனியார் பாடசாலைகள் அரசாங்க மயமாக்கப்பட்ட தோடு, சிங்க ள பெரும்பான்மை இனத்தின் ஆதிக்கத்தின் கீழிருந்த அரசாங்கம், வடக்கிலும், கிழக்கிலும் உள்ள தமிழ் பாடசாலைகளை மாற்றாந்தாய் குழந்தைகளைப் போல் நடத்தி யது. பழுதடைந்த நிலையிலுள்ள பாடசாலைக் கட்டிடங்கள், சனத்தொகைப் பெருக்கத்திற்கேற்பப் புதிய கட்டிடங்கள் கட் டப்படாததால் இடவசதியின்மை, ஆசிரியர் பற்றாக் குறை ஆகிய பிரச்சினைகளைத் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள், பாராளுமன்றத்திலும், பத்திரிகைகளிலும், எழுப்பினர். தமிழர் களைப் பிரதிநிதித்துவப்படுத்தும், தமிழ் அரசுக் கட்சியும் பின்னர் 'தமிழர் விடுதலைக் கூட்டணியும் அரசாங்கத்தை எதிர்த்ததனால், தமிழ் மக்களின் கல்வியை அரசாங்கம் முற்ற ாகப் புறக்கணித்தது. படிப்படியாக தமிழர்களின் கல்வியும் வீழ்ச்சியுறத் தொடங்கியது.
இவை எல்லாவற்றிற்கும் முத்தாய்ப்பு வைப்பதைப் போல, தமிழர்களின் எதிர்காலததிற்குச் சாவு மணியடித்தது, அரசாங்கத்தின் தரப்படுத்தல் கொள்கை, இத்தரப்படுத்தல்" மூலம் 1971ம் ஆண்டில், அரசாங்கம், சர்வகலாசாலைகளில் பிரவேசிப்பதற்கு சிங்கள மொழி மூலம் கல்விகற்ற மாணவர் களுக்கு, மு ன்னுரிமை வழங்கியது. கீழே காணும் அட்ட வணை, சிங்கள மாணவர்களுக்கும் தமிழ் மாணவர் களுக்கும் வழங்கப்பட்ட சர்வகலாசாலை அனுமதிக்கான புள்ளிவிபரங் களை எடுத்துக்காட்டுகிறது.

Page 170
அ. முகம்மது சமீம் 312
1971ம் ஆண்டு சர்வகலாசாலை அனுமதிக்கான புள்ளிகள்
சிங்கள தமிழ்
LLLLLLL cc00 cM LGL0 0OcaL SLL0cc00 OcMLL000OcaL S
மருத்துவம், பல்மருத்துவம் 229 250 பெளதீக விஞ்ஞானம் 183 204 மிருக வைத்தியம் 181 206 உயிரியல் விஞ்ஞானம் 175 184 கட்டடக்கலை 18O 194 பொறியியல் 227 250
இந்தத் தரப்படுத்துதல் கொள்கை, தமிழ் மாணவர்களின் உயர்கல்வியையும், எதிர்காலத்தில் உத்தியோகம் பெறும் வாய்ப்பையும் பெரிதும் பாதித்தது. 1977ம் ஆண்டில் ஒர் ஆய்வுக் கட்டுரையில், இது பற்றி எழுதிய சி.ஆர். டி. சில்வா, பின்வருமாறு கூறுகிறார்.
'பரீட்சைகளில் மிகவும் சிறந்த முறையில், சித்தியெய்திய தமிழ் மாணவர்களை மட்டம் தட்டுவதற்காக கொண்டு வரப் பட்ட ஒரு செயல்முறைதான் 'இந்தத் தரப்படுத்தல்' என்பது. இதனால் விஞ்ஞானப்பாடங்களைத் தமிழ்மொழி மூலம் கல்வி கற்ற மாணவர்கள் சிங்கள மாணவர்களைவிட அதிக புள்ளிகள் பெறவேண்டிய நிர்ப்பந்தம் அவர்களுக்கேற்பட்டது."
தம்முடைய எதிர்காலமே சூன்யமாகி விட்டதென்பதை உணர்ந்த தமிழ் இளைஞர்கள், ‘இனிமேலும் தமிழ் அரசியல் வாதி களை நம்புவதில் எவ்வித பலனுமில்லை என்ற நோக்கில் 'வன்முறை இயக்கங்களை உருவாக்கி, வன்முறையின் மூலம் தமது உரிமைகளைப் பெற வேண்டும் என்ற முடிவுக்கு வந்த
GÕTIT.

313 ஒரு சிறுபான்மை சமூகத்தின் பிரச்சினைகள் IV
46. தரப்படுத்தல் தமிழ்மக்கள் 'தனிநாடு கோருவதற்கு வழிவகுத்தது
இலங்கையில் இனவாத அரசியலில் தரப்படுத்தல்" ஒர் அம்சம். சிங்க ள - பெளத்த தேசியத்தின் பிரதிபலிப்பாக, "சிங்களமொழி அரச மொழியாகப் பிரகடனப்படுத்தப் பட்ட தும், தாய்மொழிக்கல்வி புகுத்தப்பட்டதும், தனியார் பாட சாலைகள், அரசமயமாக்கப்பட்டதும், கடைசியாக இவைகளுக் கெல்லாம் முத்தாய்ப்பு வைத்தாற்போல, சர்வகலாசாலை அனுமதியில் தரப்படுத்தல் கொண்டு வரப்பட்டதும் சிறுபான் மையின மக்களை அடிமை நிலைக்குத் தள்ளியது.
கிறிஸ்தவர்களுக்கு எதிராகத் தோன்றிய இச்சிங்களபெளத்த தேசியவாதத்தின் பாதிப்பை நாம் கல்வித் துறையில் தான் அதிகமாகக் காணலாம். 1989ம் ஆண்டு, 1268 அரசாங்க உதவி பெறும் பாடசாலைகளில், 120 பாடசாலைகளே பெளத் தர்களின் நிர்வாகத்தில் இருந்தன. கிறிஸ்தவர்களின் நிர்வாகத் தில் 1082 பாடசாலைகள் இருந்தன. 1960ம் ஆண்டில் பெளத்த பாடசாலைகளின் தொகை 1121 ஆக அதிகரித்த அதே வேளை யில், கிறிஸ்தவ பாடசாலைகள் 1170 இருந்தன. 1960ம் ஆண் டில் அரசாங்கம் தனியார் பாடசாலைகளைக் கையேற்றபிறகு, சிங்கள-பெளத்த மாணவர்கள் கல்விகற்கும் பாடசாலைகளுக்கு அரசாங்கத்தின் தனிப்பட்ட ஆதரவு கிடைத்தது.
டொனமூர் ஆட்சி முறைக்குப் பிறகும், சுதந்திரத்திற்குப் பிறகும் வந்த சிங்கள பெரும்பான்மை அரசாங்கங்கள் படிப் படியாக சிங்கள்-பெளத்த மக்களின் மேலாண்மையை வளர்த் தன. சுயபாஷை அமுலுக்கு வந்த பிறகு, பல்கலைக்கழக மாண வர்களின் தொகையில் சிங்கள்வரின் தொகை அதிகரிப்பதைக் காணலாம். அதே சமயத்தில் தமிழ் மாணவர்களின் எண்ணிக் கைக் குறைவதையும் காணலாம். கீழே உள்ள அட்ட வணை இதைத் தெளிவாக விளக்குகிறது.

Page 171
அ. முகம்மது சமீம் 314
பல்கலைக்கழக அனுமதி ஆண்டு
இனப்பிரிவு 195 O 1967
சிங்களவர் 66% 84.1% இலங்கைத் தமிழர் 24.5 4.1
நாட்டின் குடிசனத் தொகையில் சிங்களவர் ஏறக்குறைய 70% சதவிகிதமாகவும், இலங்கைத் தமிழர்கள் 11% சதவிகிதமாகவும் இருப்பதைக் காண்கிறோம்.
இத்தரப்படுத்தல் காரணமாக, பல்கலைக்கழக அனுமதி பெறும் தமிழ் மாணவர்களின் எண்ணிக்கை பாரதூரமாகப் பாதிக்கப்பட்டது. 1970ம் ஆண்டில் பொறியியல்துறையில் 55.9% விகிதமாக இருந்த சிங்கள மாணவரின் தொகை, 1971ல் 62.4% விகிதமாக அதிகரித்தது. விஞ்ஞானத்துறையில், 1970ல் 60.6% மாக இருந்த சிங்கள மாணவர்கள் 1971ல் 63.6% அதி கரித்தனர். இதே துறைகளில் இதே காலத்தில் தமிழ் மாணவர் களின் தொகை 35.3% த்திலிருந்து 33.3% ஆகக் குறைந்தது.
1973ம் ஆண்டில் மொழிவாரித் தரப்படுத்தல் அமுலுக்குக் கொண்டுவரப்பட்டது. இது தமிழ் மாணவர்களின் உயர்கல்வி வாய்ப்பைப் பெரிதும் பாதித்தது. மொழிவாரித் தரப்படுத்தல் முறையை நடைமுறை படுத்தியபின், இந்த ஆண்டின் பொறி யியல் துறையில் சிங்கள மாணவரின் தொகை 73% மாகவும், மருத்துவத் துறையில் 58.8% விகிதமாகவும் அதிகரித்தது. இதே வேளையில், பொறியியல் துறையில் தமிழ் மாணவரின் தொகை 24.4% மாகக் குறைவடைந்தது. விஞ்ஞானத் துறைக்கு அனு மதிக்கப்பட்ட மாணவர்களின் தொகை 1069லிருந்து 1177ஆக அதிகரித்த வேளையில் தமிழ் மாணவர்களின் தொகை 359லி ருந்து 347 ஆகக் குறைந்தது. பெறுமதிமிக்க வேலை வாய்ப்புக் களைப் பெறுவதற்கு விஞ்ஞானத்துறைக்கல்வி மிகவும் அவசி யமாக இருந்த காரணத்தினால், இவ் வாய்ப்பையும் தமிழ் மாணவர்கள் படிப்படியாக இழக்க நேரிட்டது.

315 ஒரு சிறுபான்மை சமூகத்தின் பிரச்சினைகள் IV
மொழிவாரித்தரப்படுத்தலோடு, 1974ம் ஆண்டில் அர சாங்கம் கொண்டு வந்த, மாவட்ட அடிப்படையிலான இட ஒதுக்கீடு முறையும் தமிழ் மாணவர்களின் பல்கலைக்கழகம் நுழைவதனைக் கடுமையாகப் பாதித்தது. குடிசன அடிப்படை யில் மாவட்டங்களுக்கான பல்கலைக்கழக அனுமதித் திட்டம் தமிழ் மாணவர்களின் உயர்கல்வியைப் பெரிதும் பாதித்தது. பொறியியல் துறையில் தமிழ் மாணவர்களின் எண்ணிக்கை 16.3% விகிதமாகவும், மருத்துவத் துறையில் 25.9% விகிதமா கவும் குறைந்தது. 1970ம் ஆண்டில் விஞ்ஞானத்துறையில் 35.3% விகிதமாக இருந்த தமிழ் மாணவரின் எண்ணிக்கை 74ல் 20.9% விகிதமாகக் குறைந்தது. 1969ம் ஆண்டில் போட்டிப் பரீட்சையின் மூலம் வடமாகாணத்திலிருந்து சர்வகலாசாலைக்கு அனுமதி பெற்ற தமிழ் மாணவர்களின் எண்ணிக்கை 27.5% தசத்திலிருந்து 1974ம் ஆண்டு மாவட்ட ரீதியிலான அனுமதி அமுலுக்குக் கொண்டுவரப்பட்ட பிறகு 7% மாகக் குறைந்தது. இத்திட்டத்தை விமர்சித்த பேராசிரியர் சி.ஆர். டி. சில்வா பின்வருமாறு கூறுகிறார். 'இத்திட்டத்தை ஆதரித்த கல்வி அமைச்சு, கிராமப்புறப் பாடசாலை மாணவர்களுக்கு உயர்கல்வி பெறுவதற்கு இத்திட்டம் சமவாய்ப்பை அளித்தது என்று கூறினாலும், உண்மை யில், இம் மாவட்ட ஒதுக்கீடு முறை, விஞ்ஞானத்துறை, தொழில் நுட்பத் துறைகளிலும், யாழப்பாணத்துத் தமிழரின் முதன்மையைக் கட்டுப்படுத்து வதாகவே அமைந்தது'
இம்மாவட்ட முறை அமுலுக்கு வந்த பிறகு விஞ்ஞானத் துறை கற்கை நெறிகளுக்குத் தெரிவு செய்யப்பட்ட தமிழ் மாணவர்களின் எண்ணிக்கை 15% விகிதமாகவும், மருத்துவத் துறைக்கு 20% விகிதமாகவும் குறைந்ததாக அறியமுடிகிறது. இலங்கையில் சர்வகலாசாலைகளின் எண்ணிக்கை அதிகரித் தும், பல்கலைக்கழக அனுமதிக்கான மாணவர்களின் தொகை அதிகரித்தபோதும், தமிழ் மாணவர்களின் தொகை குறைந்து கொண்டே போனது.

Page 172
அ. முகம்மது சமீம் 316 தமிழ் மக்களின் உயர்கல்வியைப் பாதித்த அரசாங்கத்தின் திட்டத்தைப் பின்வருமாறு வகுக்கலாம்
i. 1973ம் ஆண்டில் அமுலாக்கப்பட்ட தரப்படுத்தல்
திட்டம்.
2. 1974ம் ஆண்டில், "தரப்படுத்தலும் மாவட்ட ஒதுக்கீடு'
திட்டம்,
3. 1975ம் ஆண்டில் தரப்படுத்தலும் 100% விகித மாவட்ட
ஒதுக்கீடு திட்டம்.
4. 1976ம் ஆண்டில் 70% விகிதம் தரப்படுத்தல் 30%
மாவட்ட ஒதுக்கீடு திட்டம்.
இத்திட்டங்களினால் தமிழ் மாணவர்களின் பல்கலைக் கழக அனுமதி பின்வருமாறு பாதிக்கப்பட்டது.
1970ல் பொறியியல் துறைக்கான தமிழ் மாணவர்களின் எண்ணிக்கை 40,896 லிருந்து 1973ம் ஆண்டு 24.4% மாகவும் 1976ம் ஆண்டில் 13.2% மாகவும் குறைந்தது. விஞ்ஞானத் துறையில் 1970ம் ஆண்டில் இருந்த தமிழ் மாணவரின் தொகை, 35% விகிதத்திலிருந்து 1978ம் ஆண்டில் 15% விகிதமாகக் குறைந்தது. மருத்துவத்துறையில் 1970ம் ஆண்டில் 50% விகிதமாக இருந்த எண்ணிக்கை, 1973ம் ஆண்டில் 37% விகிதமாகவும், 1974ம் ஆண்டில் 26% விகிதமாகவும் குறைந்தது.
இத்திட்டத்தை விமர்சித்த போராசிரியர் சி.ஆர். டி. சில்வா, 'அரசாங்கத்தினால் கொண்டு வரப்பட்ட ஒவ்வொரு திட்டமும், சிங்கள மக்களுக்குப் பெரும் நன்மையையே அளித்தது. 1973ம் ஆண்டு அமுலுக்குக் கொண்டுவரப்பட்ட தரப்படுத்தல் திட்டம், சிங்கள மக்களுக்கு, (உயர்கல்வி பெறுவதில்) பெரும் நன்மையை ஏற்படுத்திக் கொடுத்ததுடன், சிங்கள மக்களின் பெரும் ஆதரவையும் பெற்றது. சிங்கள மாணவர்களின் சர்வகலாசாலை அனுமதி, பொறியியல் துறை

ஒரு சிறுபான்மை சமூகத்தின் பிரச்சினைகள் IV
317
9、Qg 6*8) #*oo
8/
§ 6. I
0°0I įžo į I Zo so I g * 6. I
9 No. 6 I
0 °98. 0 (0) 8°8) Ioĝae.
† 16. I
0°0 I
6 og? Ɛ *9I 6°03'
ÞA. 6 I
go I6 g、3Q I *3. Iosae
$/, 6 I
9°36 I ’9.g žozo 0 ° ± 9
zz/Iz6I
6*88 Goog 6 ogg 0°89
I 17016I gŁ6I-696 I
Þ og 9 6*8; 1. “Io As ‘69
01/696 I
(TrT니법에 역TT-5) rege% qiftefoss@an
qofnunsurato soos@gilo oo@o ideuaesi -ı serisitaso seu@@ge
1984,91909 un usorgio (úğrı9 ĝơTIÊo ofię gosgoogoon
I*9 6°98. žoz 6 og,
£). 6 I
8-ojo £(68 /* #9 Zo Iso
z//IE6 I
9°). 6°07 8°07 9*837
II/016I 9, 6 I-696 I
Q、A 6*8 #7
oogs ·
9°/,
02/696 I
(~ırı-ı-ā qi-i-i-o) de soo qartos@@@qi. qonun soğurīte)
19:Usūsto sotooɗo ice uceson -ıçerısı sıfa, ‹eu@@ge
19ourtologouqi đỉgio Gigfrī9 ĝons@so ofię gostosoegr.

Page 173
அ. முகம்மது சமீம் 3.18 யில் 73.1%கவும், மருத்துவத் துறையில் 58.8%கவும் கூடியது. இதே சமயத்தில் தமிழ் மாணவர்களின் எண்ணிக்கை 24% மாகக் குறைந்தது. 1975ம் ஆண்டில் சிங்கள மாணவரின் தொகை விஞ்ஞானத்துறையில் 80% விகிதமாகவும், கலைத்துறை பாடங் களில் 85% அதிகரித்ததால், நாட்டில் அவர்களுடைய குடிசனத் தொகை வீதத்தையும் விட அதிகமாகவே இருந்தது.
1969ம் ஆண்டுக்கும், 1975ம் ஆண்டுக்குமிடையிலான, சிங்க ள, தமிழ் மாணவர்களின் சர்வகலாசாலை அனுமதி விகிதாசாரத்தைப் பின்வரும் அட்டவணைகள் தெளிவாகக் காட்டுகின்றன.
318ம் பக்கத்தில் உள்ள அட்டவணைகளின் படி, சிங்கள மாணவர்களின் எண்ணிக்கை, எல்லாத் துறைகளிலும், 80% விகிதமாகப் பெருகிய அதே வேளையில், தமிழ் மாணவர்களின் தொகை படிப்படியாக 20% விகிதத்திற்கும் குறைவாகவே தேய்ந்து வந்ததைக் காணலாம்.
தமிழ் மாணவர்களின் உயர்கல்வியை மட்டுப்படுத்து வதற்கு அரசாங்கம் திட்டமிட்டு செய்தகாரியங்களினால் தமிழ் இளைஞர் சமுதாயம், விரக்தியடைந்து, தமிழ் இளைஞர் இயக் கங்களை வளர்த்து, தனிநாடு கோரும் அளவிற்கு அவர்களை இட்டுச் சென்றது.
பேராசிரியர் சி.ஆர். டி. சில்வா, தமிழ் மக்களின் விரக்தியையும், ஏமாற்றத்தையும பின்வருமாறு கூறுகிறார்.
"சிறுபான்மை சமூகங்களுக்கெதிராக அரசாங்கம் எடுத்த ஒரவஞ்சகச் செயல்கள் பெரும் அழிவைக் கொண்டுவந்தது. அரசாங்கத்தின், தனியார் பாடசாலைகளை அரசாங்க மயமாக் கியதனால் சிங்கள, தமிழ் சமூகங்களுக்கிடையே ஏற்பட்ட சந்தேகமும், பகைமையும சீக்கிரத்தில் மறையப் போவ தில்லை. இதனால் ஏற்பட்ட தமிழர்களின் தேசிய உணர்வு உயர்கல்வி பெறுவதில் ஏற்பட்ட தடைகளாலும் தமிழ்

319 ஒரு சிறுபான்மை சமூகத்தின் பிரச்சினைகள் IV
மொழிக்கு உரிய இடம் கிடைக்காத காரணத்தினாலும் வேலை வாய்ப்புகள் குன்றிய காரணத்தினாலும், பன்மடங்கு பெருகி யது. சர்வகலாசாலை அனுமதியில் ஏற்பட்ட ஏமாற்றம்தான் தமிழ் இளைஞர்களைத் தனிநாடு கோருவதற்கு அடிகோலி ա5/* ".

Page 174
அ. முகம்மது சமீம் - 320 47. தமிழருக்கெதிராகத் தோன்றிய சிங்களவரின் பகை உணர்ச்சி
நியாயமற்றது.
இலங்கையின் இரு பெரும் சமுகங்களான சிங்கள வருக் கும் தமிழருக்குமிடையே உள்ள இனப்பிரச்சினைக்கு முக்கிய காரணம், வரலாற்றில், ஆட்சியைக் கைப்பற்றும் போட்டியில் இவ் விரு சமூகங்களுக்குமிடையே ஏற்பட்ட போர்களும், மோதல்களும் திரித்துக் கூறப்பட்டதன் விளைவாக ஏற்பட்ட தேயாம். படைவீரர்களிடையே ஏற்பட்ட இம்மோதல் களை, வரலாற்றாசிரியர்களும், எழுத்தாளர்களும் பெரிது படுத்தி, இவைகளை இனப் போராட்டமாக திரித்துக் கூறியத னால் சிங்கள பாமர மக்களிடையே, தமிழர்களைப் பற்றிய ஒரு தப்பபிப் பிராயமும் அவர்கள் மேல் ஒரு பகை உணர்வும் வளர்ந்தது. சுதந்திரத்திற்குப் பிறகு இவ்விரு சமூகங்களும் தங்களது பிரச்சினைக்குக் காரணம், மற்றைய சமூகமே, என்ற எண்ணத்தில் செயல்படத்தொடங்கின.
'இவ்வினப் பிரச்சினை, இலங்கைக்கு மாத்திரம் உரியதல்ல. பல்லினங்கள் வாழும் நாடுகளிலும் இப்பிரச்சினை இருக்கத்தான் செய்கிறது. இந்நாடுகள் தங்களது அரசியல் யாப்பிலும், அரசியல் அமைப்பிலும், இனங்களுக்கிடையே சமத்துவமும், சமதர்மமும் பிரதிபலிக்கச் செய்ததனால் அவர் களுக்கிடையே சமாதானமும், செளஞன்யமும் நிலவ துவாகி யது. மொழி வேறுபாடு, சமய வேறுபாடு, இனவேறு பாடு போன்றவைகளைத் தவிர்ந்த ஒரு சமதர்மம் நிலவ வழியேற் பட்டது. இலங்கையின் பெரும்பான்மை சமூகமான சிங்கள சமூகம், சிறுபான்மையின மக்களைப் பொறுத்தளவில், பெருந் தன்மையுடனும் பொறுப்புணர்ச்சியுடனும், சமதர்மத்துடனும் நடந்து கொண்டிருந்தால் இனப் பிரச்சினை தானாகவே தீர்ந்திருக்கம். சிங்கள மத்திய தர வர்க்கத்தினர், இந்நாட்டின் அரசியல் அதிகாரத்தில் தனிஉரிமை கொண்டாடும் நோக்கத்

321 ஒரு சிறுபான்மை சமூகத்தின் பிரச்சினைகள் IV
துடன், தமிழர் அந்நியர்களென்றும், இந்நாட் டைச் சுரண்ட வந்தவர்களென்றும் பிரச்சாரம் செய்து, தென்னிந்தியத் தமிழர் களுடன் சேர்ந்து இந்நாட்டைக் கைப்பற்ற எண்ணம் கொண்டி ருக்கிறார்கள் என்று சிங்கள மக்களிடையே பீதியை உண் டாக்கி, தமிழர்களை இரண்டாந்தரப் பிரஜைகளாகக் கணித்து அவர்களுடைய உரிமைகளை மறுக்கும் அளவிற்கு சிங்கள மக்களின் மனப்பான்மையை மாற்றியிருக்கின்றனர்.
இந்நாட்டில் சமாதானமும், அமைதியும் நிலவ வேண்டு மானால், பெரும்பான்மையினமான சிங்கள மக்கள், சிறு பான்மை இனங்களான தமிழர்களுடனும், முஸ்லிம்களுடனும், அரசியல் அதிகாரத்தைப் பகிர்ந்து செயல்பட வேண்டும். இரண்டாவதாக, சிறுபான்மை மக்களின் பொருளாதார வளர்ச் சியில் அக்கரை காட்டுவதுடன், அவர்களுக்கு அரசாங்கத் திலும், அரசாங்கக் கூட்டுத் தாபனங்களிலும், சம வேலைவாய்ப் புக்களை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். மூன்றாவதாக சிறுபான்மையின மக்களின் சமய-கலாச்சாரங்களைப் பாது காத்து அவைகளின் வளர்ச்சிக்கு உதவ வேண்டும். இப்படிப் பெருந்தன்மையுடன் சிங்கள பெரும்பான்மையினம் நடந்ததா? என்பது ஆராயப்பட வேண்டியதொன்று.
கல்வித் துறையில், முக்கியமாக உயர்கல்வித் துறையில், தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட துரோகம் பற்றி முன்னைய அத்தியாயத்தில் ஆராய்ந்தோம். இவ்வத்தியாயத்தில், அரசாங்க ஸ்தாபனங்களில் வேலைவாய்ப்பில் தமிழர்களுக்கு இழைக்கப் பட்ட அநீதியை ஆராய்வோம்.
பொருளாதாரத் துறையில் தங்களைவிட தமிழ் மக்கள் உயர்ந்த நிலையில் இருக்கின்றனர், என்றும் அரசாங்க உத்தி யோகங்களில் அவர்களே அதிகமாக இருக்கின்றனர் என்ற ஒரு தவறான கருத்தை சிங்கள மக்கள் வளர்த்து வந்திருக்கின்றனர். காலனித்துவ ஆட்சிக்காலத்தில், ஆங்கிலேய ஆட்சியாளர்கள் தமிழர்களுக்கு அதிகமான சலுகைகளை வழங்கினர் என்றும்

Page 175
அ. முகம்மது சமீம் 322
நம்பினர். சுதந்திரத்திற்குப் பிறகும், சிங்களவரைவிட தமிழர் கள் அதிக சலுகைகளைப் பெற்று வந்துள்ளனர் என்றும் சிலர் தப்புக்கணக்குப் போட்டனர். இதற்குக் காரணம் தமிழர்கள் தம்முடைய விகிதாசாரத்தைவிட அதிகமானவர்கள் அரசாங்க உத்தியோகங்களில் இருக்கின்றனர் என்ற தப்பபிப்பிராயமும் இருந்து வந்திருக்கிறது. இலங்கை சுதந்திரம் அடைவதற்கு முன்பு இந்நிலை இருந்திருக்கலாம். சுதந்திரத்திற்குப் பிறகு இதில் பெரும் மாற்றம் ஏற்பட்டது.
கீழே உள்ள இரு அட்டவணைகளைப் பார்க்கும்போது இவ்வபிப்பிராயங்கள் எவ்வளவு தவறானது என்று தெளிவாக விளங்குகிறது. இலங்கை மத்திய வங்கியினதும், குடிமதிப்புப் புள்ளி விபர இலாகாவினதும் அறிக்கைகள்படி, சிங்களவரை விட தமிழர்கள் எவ்விதத்திலும், பொருளாதார உயர்வு பெற்றிருக்கவில்லை என்பது புலனாகும்.
1978/79ம் ஆண்டுக்குரிய மத்திய வங்கியின் சமூக
பொருளாதார மதிப்பீடு
சிங்களவர் தமிழர்
கல்விவளர்ச்சி கரையோர - 5.26
அறிகுறி கண்டி- 4.40 4.94
கல்வி அறிவு 88.4 86. 6. குழந்தை- இறப்பு
வீதம் 34. O 28.5 வேலையற்றோர் கரையோர - 18.5
வீதம் கண்டி- 13.8 109.3

323
ஒரு சிறுபான்மை சமூகத்தின் பிரச்சினைகள் IV
1983ம் ஆண்டு - குடிமதிப்பு - புள்ளிவிபர இலாகாவின் இலங்கையின் சமூக - பொருளாதாரக் குறியீடுகள்
குடும்ப அளவு
சராசரி
குடும்பத்தில் சராசரி வருமானம் பெறுபவர்கள்
வருமானம் பெறுபவர்களின் சராசரி வருமானம்
குடும்பத்தின் சராசரி வருமானம்
தலைக்கு சராசரி வருமானம் (Per -Capita Income)
கொழும்பு, யாழ்ப்பாணம், கொழும்பு களுத்தரை, காலி, வவுனியா, LD ITp535 JJ 3FGö) Lu மாத்தறை மன்னார்,
திருகோணமலை, மட்டக்களப்பு
5.41 5. 40 6.01
1.65 1.37 1.85
630.54 746. 48 1136.82
1040. 39 1022.68 2103.12.
192.31 189-39 349.95
மேலே உள்ள அட்டவணைகளைப் பார்த்தால், சிங்கள வரை, விட தமிழர்களின் சராசரி வருமானம் குறைந்ததாகவே காணப்படுகிறது. இப்படித் தப்பபிப்பிராயங்களை வைத்துத் தமிழர்களைப் பொருளாதார துறையில் மட்டந்தட்ட நினைப்
பது நியாயமற்றது
சுதந்திரத்திற்குப் பிறகு 1950களிலேயே பொருளாதாரத் துறையில் தமிழர்கள் ஒதுக்கப்பட்டு சிங்கள ஆதிக்கம் தலை

Page 176
அ. முகம்மது சமீம் 324 தூக்கத் தொடங்கியது. இக்காலப்பகுதியில் கொரியா யுத்தத்திற் குப் பிறகு இலங்கையின் றப்பர் ஏற்றுமதியில் பெரும் பாதிப்பு ஏற்பட்டதனால், இலங்கையின் பொருளாதாரம் வீழ்ச்சியடை யத் தொடங்கியது. நாட்டின் அந்நியச் செலாவணியிலும் பெரும் வீழ்ச்சி ஏற்பட்டது. அன்றைய அரசாங்கம் அரிசியின் விலையை உயர்த்தியதும், அரசாங் கத்திற்கெதிராக 'ஹர்த்தால்" நடந்ததும், பிரதமர் டட்லி சேனாநாயக்க பதவி துறந்ததும், சர். ஜோன் கொத்தலாவல பிரதமராகியதும், வரலாற்றுச் சம்பவங் கள். நாட்டின் பொருளாதார மந்தம் காரணமாக வேலையில் லாத் திண்டாட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வந்தது. 1930ம் ஆண்டுகளில் ஜெர்மனியின் பொருளாதார வீழ்ச்சியினால் ஏற்பட்ட பணவீக்கத்திற்கும் வேலை யில்லாப் பிரச்சினைக்குக் காரணம் யூதர்களே என்று ஹிட்லர் எப்படி ஜெர்மன் மக்களின் எண்ணத்தைத் திசை திருப்பினானோ, அதே போல, இவ் வேலையில்லாத் திண்டாட்டத்திற்குச் சில சிங்கள விஷமிகள் தமிழர்களைப் பலியாடாக்கினர். ‘சிங்கள மொழி மாத்திரம் தான் அரசகரும மொழியாக இருத்தல் வேண்டும் என்ற கோஷ மும் நாளுக்கு நாள் வலுப்பெற்றது. இதை 'இலங்கையில் இன வர்க்கப் போராட்டம்' என்ற தனது நூலில் குமர்ரி ஜயவர்தனா, பினவருமாறு விளக்குகிறார். "1950களில், ஒன்றோடொன்று தொடர்புள்ள 'கல்வியும்', 'வேலைவாய்ப் பும் இரு பெரும் பிரச்சினைகளாக வளர்ந்து, ஒன்றோடொன்று இணைந்து ஒரு புதிய உருவில், தமிழருக்கு எதிரான ஒர் இயக்கமாக உருமாறியது. 1950களின் ஆரம்ப காலத்தில் வேலையில்லாப் பிரச்சினை உக்கிரமடைந்த காரணத்தினாலும், சிங்கள, தமிழ் மொழிகளில் ஏற்பட்ட கல்வி வளர்ச்சியின் காரணமாகவும், உயர்கல்வியிலும் வேலையில்லாப் பிரச்சினையிலும் பெரும் பாதிப்பு ஏற்பட்டது. இக்காரணங்கள் நாட்டில் இருந்த கொந்த ளிப்பு நிலையை மேலும் மோசமடை யச் செய்ததோடு, மொழிப் பிரச்சினை ஒரு பொருளாதாரப் பிரச்சினையாக உருவெடுத்தது. 'அரசாங்க உத்தியோகங்களை ஆக்கிரமித்துக் கொண்டிருந்த கிறிஸ்தவ - சிங்க ள உயர்வர்க்கத் தினருக்

325 ஒரு சிறுபான்மை சமூகத்தின் பிரச்சினைகள் IV கெதிராவும் தமிழருக்கெதிராகவும் இம்மொழிப் பிரச்சி னையை, சிங்கள தேசியவாதிகள் தூண்டிவிட்டனர். ஆகவே சிங்களமொழி அரசகரும மொழியாக மாறினாற்றான், பாமர சிங்கள மக்களுக்கு அரசாங்க உத்தியோகங்களைப் பெறும் வாய்ப்பு இருக்கும் என்ற எண்ணமும் வலுப்பெற்றது. இது ஒரு பெரும் இயக்கமாக நாளுக்கு நாள் வளரத் தொடங்கியது. சிங்கள அரசியல் வாதிகள், அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கு இதை ஒரு சாதனமாகப் பாவிக்கத் தொடங்கினர். யாழ்ப் பாணத்தில் சிங்களத்திற்கும் தமிழுக்கும் சம உரிமை வழங்கப் போவதாக உறுதியளித்த அன்றைய பிரதமர் சர். ஜோன் கொத்த லாவல, தான் கொடுத்த வாக்குறுதியை மறந்து "சிங்களம் மட்டும்தான் அரசகரும மொழியாக இருக்க வேண்டு மென்று கூறுவதற்கு இவ்வியக்கம் தான் காரணம் என்றால் அதை மறைக்கவோ, மறுக்கவோ முடியாது.
இலங்கையில் ஆங்கிலக்கல்வி பரவுவதற்கு முக்கிய காரணகர்த்தாக்களாக இருந்தவர்கள் கிறிஸ்தவ மிஷனரி மார்கள். இம்மிஷனரி பாடசாலைகள் பெரும்பாலும் இலங் கையின் முக்கிய நகரங்களில் ஸ்தாபிக்கப்பட்டன. இவைகள் கல்விக் கட்டணம் அறவிட்டதால், ஒரு குறிப்பிட்ட பணம் படைத்தவர்களே இக்கல்வியால் பயன்பெற்றனர். அரசாங்க உத்தியோகங்கள் ஆங்கில மொழியில் இருந்த காரணத்தினால், ஆங்கிலக்கல்வி பெற்றவர்களே இவ்வுத் தியோகங்களில் ஏகபோக உரிமை கொண்டாடினர். 1911ம் ஆண்டு "டென்ஹம்' என்பவரின் அரசாங்க புள்ளிவிபரக் கணக்கெடுப்பின் படி, இலங்கையில் ஆங்கலக் கல்வி அறிவு பெற்ற ஆண்களில், இலங்கைத் தமிழர் 4.9 விகிதமாகவும், கரையோரச் சிங்களவர் 3.5 விகிதமாகவும் கண்டிச் சிங்களவ 0.7 விகிதமாகவும் இருந்தனர். அரசாங்க உத்தியோகங்களிலும் இலங்கைத் தமிழர் அதிகமாக இருந்தனர். இலங்கைத் தமிழர் 5.1 விகிதமாகவும், கரையோரச் சிங்களவர் 3.6 விகிதமாகவும், கண்டிச் சிங்களவர் 1.3 விகிதமாகவும் காணப்பட்டனர். இலங்கையின் ஏனைய பிரதேசங்களைப் போலல்லாமல், யாழ்ப்பாணப் பிரதேசம் ஒரு

Page 177
அ. முகம்மது சமீம் 326 வரண்ட பிரதேசமாக இருந்த காரணத்தினாலும், விவசாயமோ, வேறுதொழில்களோ செய்யும் வாய்ப்பு இல்லாதிருந்த காரணத் தினாலும் அரசாங்க உத்தியோகங்களையும், தொழில் நுட்ப உத்தியோகங்களையும் பெறுவதில் யாழ்ப்பாணத் தமிழர் அதிக ஆர்வம் காட்டினர். ஒரு கணிசமான அளவு யாழ்ப்பாண மக்கள் கிறிஸ்தவ மதத்தைத் தழுவிய காரணத்தினால், கிறிஸ்தவ மிஷனரிமார்களின் கல்வி நடவடிக்கைகள் யாழ்ப்பாணக்குடா நாட்டில் அதிகரித்தன. ஏனைய சமூகங்களை விட ஆங்கிலக் கல்விபெறும் வாய்ப்பு யாழ்ப்பாண மக்களுக்கு அதிகமாக இருந்தபடியால், இவ்வுத்தியோகங்களில், இவர்களே முதன் மை ஸ்தானத்தைப் பெற்றனர். அரசாங்க எழுது விளைஞர் சேவையிலும் நிர்வாக சேவையிலும், தொழில் நுட்ப உத்தி யோகங்களிலும் யாழ்ப்பாணத் தமிழர்கள் தங்கள் குடிசனத் தொகை வீதத்திற்கு அதிகமாகவே காணப்பட்டனர். 1921ம் ஆண்டில், நாட்டின் மொத்தச் சனத்தொகையில் 76% விகித மாக இருந்த சிங்களவர், “தேர்ந்தெடுக்கப்பட்ட தொழில் களில், 46% வீதமாகவும், சனத்தொகையில் 13% வீதமாக இருந்த இலங்கைத் தமிழர்கள் 31.9% வீதமாகவும் இருந்தனர். இலங்கைத் தமிழர்கள் என்று கூறும்போது, இவர்களில் பெரும் பாலானோர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்களாகவே இருந்த னர். மன்னார், வவுனியா, திருகோணமலை மட்டக்களப்புப் பிரதேசங்களிலிருந்து ஒரு சில தமிழர்களே இவ்வுத்தியோகங் களில் இடம் பெற்றனர். இக்காலப் பகுதியில் வர்த்தகம், பெருந்தோட்ட விவசாயம் போன்ற துறைகளில் தளர்ச்சி யேற்பட்ட காரணத்தினாலும் ஆங்கிலக் கல்வி சிங்கள உயர் வகுப்பினர் மத்தியில் பரவியதனாலும், அரசாங்க உத்தியோகங் களில், சிங்களவர் அதிக நாட்டம் செலுத்தத் தொடங்கினர். தமிழர்கள் இப்பதவிகளை ஆக்கிரமித்துக் கொண்டிருந்த காரணத்தினால், தமிழர்களின் மேல் பகை உணர்ச்சியை சிங் களவர் வளர்க்கத் தொடங்கினர். கிறிஸ்தவர்களுக்கும், கிறிஸ்தவ ஆங்கில ஆட்சிக்கும் எதிராகத் தொடங்கிய சிங்களபெளத்த இயக்கங்கள் தமிழர்களுக்கெதிராகத் திசை திருப்பப்

327 ஒரு சிறுபான்மை சமூகத்தின் பிரச்சினைகள் IV
பட்டன. டொனமூர் அரசியல் திட்டத்தில் அரசாங்க அதிகாரத் தைப் பெற்ற சிங்களப் பெரும்பான்மையினர் இப்பகை உணர்ச்சியை வளர்த்தனர். தமிழருக்கெதிராக வளர்ந்த இன உணர்ச்சியின் ஆரம்பம் இதுதான்.

Page 178
அ. முகம்மது சமீம் 28
48. 'சிறுபான்மை இனங்கள் அதிகமான சலுகைகளைப் பெற்றுக் கொண்டன' என்ற சுசில் முனசிங்கவின் கூற்று
உண்மையானதா?
இலங்கையின் இனப் போராட்ட வரலாற்றில், மூன்று முக்கிய அம்சங்கள், அதன் அடித்தளத்தில் ஒடிக் கொண்டிருப் பதை நாம் அவதானிக்கலாம். முதலாவது, பொருளாதார வளர்ச்சியிலுள்ள ஏற்றத்தாழ்வு, பணக்கார வர்க்கம் மேலும் மேலும் பணம் குவிப்பதும், ஏழைகள், ஏழ்மையில் மூழகிக் கொண்டிருப்பதும் இன உணர்வை வளர்க்க உடந்தைகளாயின. இரண்டாவது, ஆளும் கட்சியினருக்கு, அபரிமிதமான அதி காரம் கிடைத்த காரணத்தினால், எவ்வித நியாயத்திற்கோ, தர்மத்திற்கோ கட்டுப்பாடாமல், பேரினவாதக் கொள்கையைக் கடைப் பிடித்ததனால் ஏற்பட்ட இனவாதம். மூன்றாவதாக, பெளத்த மதத்தை மையமாக வைத்து, சிங்கள மக்களிடையே "சிங்கள-பெளத்த உணர்வைத் தூண்டிவிட்டு சிறுபான்மை யின மக்கள் சிங்களவரின் எதிரிகள் என்று பிரச்சாரம் செய்ததனால் ஏற்பட்ட விபரீதம். சிங்கள பாமர மக்களிடையே சிறுபான்மை மக்களுக்கெதிராக இன உணர்வைத் தூண்டி விடுவதை டாக்டர்களின் வேலைநிறுத்தம் நமக்கு அப்பட்டமாக விளக்குகிறது. தொழிற்சங்கங்கள் பெரும்பாலும் தங்கள் தொழில்களிலுள்ள குறைகளை நீக்குவதற்காகப் போராடு வதைத்தான் நாம் இதுவரை கண்டிருக்கிறோம் கேள்விப் பட்டிருக்கிறோம். ஆனால், ஒரு சிறுபான்மை சமூகத்திற் கெதிராகவும் சிறுபான்மை இனத்தைச் சேர்ந்த ஒர் அமைச்சருக் கெதிராகவும், ஒரு தொழிற்சங்கத்தினால் வேலை நிறுத்தம் மேற்கொள்ளப்பட்டது இதுதான் தொழிற்சங்க வரலாற்றி லேயே முதற் தடவையாகும்.

329 ஒரு சிறுபான்மை சமூகத்தின் பிரச்சினைகள் IV
இன உணர்வு எவ்வளவு தூரம், சிங்கள அரசியல் வாதி களினதும், அறிஞர்களினதும் இரத்தத்தில் ஊறியிருக்கிற தென்பதற்கு 96 ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 28ந்திகதி ஞாயிறு ஜலன்ட் பத்திரிகையில் வெளியான, முனசிங்கவின் "எதிர்காலத் தைப் பற்றிய சில சிந்தனைகள்' என்ற கட்டுரை தகுந்த உதாரண மாகும். பாராளுமன்ற அங்கத்தவரும் முன்னை நாள் மேற்குப் பிரதேச சபையின் முதன் மந்திரியாகவும் இருந்த சுசில் முனசிங்க பின்வருமாறு கூறுகிறார்.
"ஒரு நாட்டின் சனத்தொகையில் 74 சதவிகித பெரும் பான்மையினம், தமக்குள் பிரிவினையில்லாமல், ஒரு பலம் வாய்ந்த அரசாங்கத்தை நிறுவும் போது, அது அப்பெரும் பான்மை சமூகத்திற்கே தனது முழு ஆதரவையும் அளிக்கிறது. ஆனால், சுதந்திரம் அடைந்த நாள் தொடக்கம், பெரும் பான்மை சிங்கள இனம் அரசியலில் தமக்குள் பிரிவினை யையே ஏற்படுத்திவந்திருக்கிறது. இதன் காரணமாக, ஒவ் வொரு சிங்கள அரசாங்கமும், சிறுபான்மை மக்களின் ஆதரவு டனும், அனுக்கிரகத்துடனும்தான் தெரிவு செய்யப் பட்டிருக் கிறது. ஆகவே, அரசியல் அதிகாரத்தைப் பெறும் நோக்கத் தையே குறிக்கோளாகக் கொண்ட சிங்கள இனம், சிறுபான்மை யினங்களைத் திருப்திப் படுத்துவதிலேயே தமது காலத்தை செலவழித்து வந்திருக்கிறது. இதன் காரணமாக, சிறுபான்மை யினங்கள், தங்களுடைய சனத்தொகையின் விகிதாசாரத்திற்கு அதிகமாகவே இந்நாட்டு அரசியலில் தங்கள் செல்வாக்கை செலுத்தி வந்திருக்கின்றன. இதனால், இந்நாட்டின் பெரும் பான்மையினத்தை ஒரம் கட்டி அதன் நலனைப் பாதிக்குமள விற்கு, சிறுபான்மை யினங்கள் சலுகைகளைப் பெறும் ஒரு சூழ்நிலையை நாம் இன்று காண்கிறோம்.'
சுசில் முனசிங்க வின் கூற்று எவ்வளவுதூரம் உண்மை யென்பதை ஆராயவேண்டியது எமது கடமை.
அரசாங்க ஸ்தாபனங்களிலும், அரசாங்கக் கூட்டு

Page 179
அ. முகம்மது சமீம் 330
ஸ்தாபனங்களிலும், எவ்வளவு தூரம் சிங்கள பெரும்பான் மையின மக்கள் ஆட்சி செய்து வந்திருக்கிறார்கள் என்ற உண் மையை பின்வரும் இரண்டு அட்டவணைகளும் காட்டுகின்
றன.
1980ம் ஆண்டு, அரச ஸ்தாபனங்களிலுள்ள
வேலைவாய்ப்பு விகிதாசாரம்
தொழில் விகிதாசாரம் சிங்களவர் தமிழர் ஏனையோர்
தொழிலடிப்படையிலான
சிறப்புத் தொழில்கள்
(Professional and
Technical) 8.2% 12% 6 % நிர்வாக உத்தியோகம்
(Administrative and
Managerial) 81 % 16% 3% ஏனைய தொழில்கள் 84% 12% 4 %
1980ம் ஆண்டு அரசகட்டுஸ்தாபனங்களிலுள்ள வேலைவாய்ப்புக்கள்
விகிதாசாரம்-தொழில் சிங்களவர் தமிழர் ஏனையோர்
தொழிலடிப்படையிலான
சிறப்புத்தொழில்கள் 8.2% 13%. 5% நிர்வாக உத்தியோகம் 83% 14%. 3% ஏனைய தொழில்கள் 85% 11 % 4 %
(சனத்தொகைக் கணக்கெடுப்பு, புள்ளிவிவர இலாகாவின் 1980ம் ஆண்டு அறிக்கை)
மேலே உள்ள இரண்டு அட்டவணைகளும், அரசஸ் தாபனங்களிலும், அரச கூட்டு ஸ்தாபனங்களிலும் சிங்கள மக் கள் அனுபவிக்கும் தனி உரிமையைக் காட்டுகின்றன.

331 ஒரு சிறுபான்மை சமூகத்தின் பிரச்சினைகள் IV
சென்ற சில தசாப்தங்களாக, அரசாங்கத்தில் ஸ்தாபனங் களில் தமிழர்கள் எப்படி ஒரங்கட்டப்பட்டனர் என்பதைப் பார்ப்போம். 1911ம் ஆண்டு புள்ளிவிபரங்களின்படி, தொழி லடிப்படையிலான தொழில்களில், தமிழர்கள் 5.1% விகித மாகவும், கரையோரச் சிங்களவர் 3.6% விகிதமாகவும், கண்டிச்சிங்களவர் 1.3% விகிதமாகவும் இருந்தனர். இலங்கை அரசாங்க எழுது வினைஞர் சேவையிலும் குறிப்பிடத்தக்க அளவான தமிழர் காணப்பட்டனர். இதே போல நிர்வாக உத்தியோகங்களிலும், சிறப்புத் தொழில் உத்தியோகங்களிலும் தமிழர் தம்முடைய சனத்தொகை விகிதாசாரத்திற்கு அதிகமா கவே, இடம் பெற்றிருந்தனர். இதற்கு முக்கிய காரணம், அரசாங்க நிர்வாகம் ஆங்கில மொழியில் இருந்ததனால், ஆங்கில மொழியில், ஏனைய சமூகங்களைவிட தமிழர் அதிக பரிச்சயம் பெற்ற காரணத்தினால், இவ்வுத்தியோகங்களைப் பெற ஏதுவாயிருந்த தெனலாம்.
1921ம் ஆண்டில் சனத்தொகையில் 74% விகிதமாக" இருந்த சிங்களவர், தேர்ந்தெடுக்கப் பட்ட சிறப்புத் தொழில் களில், 46% விகிதமாகவும், 13% விகிதமாக இருந்த தமிழர் இத்தொழில்களில் 31.9% விகிதமாகவும் இருந்தது குறிப்பிடத் தக்கது. டொனமூர் அரசியல் திட்டத்தில் சிங்கள பெரும்பான் மையினம், அரசியல் ஆதிக்கத்தைப் பெறத் தொடங்கிய பிறகு, இவ்வுயர் பதவிகளில், சிங்கள மக்களின் விகிதாசாரம் அதிக ரிக்கத் தொடங்கியது. 1945ம் ஆண்டு 'அரச யாப்பு சீர்திருத்த" அறிக்கையின்படி, இலங்கை சனத் தொகையில், தமிழர்களை விட ஆறுமடங்கு அதிகமான சிங்களவர், அரச உத்தியோகங் களில் தமிழர்கள் வகித்த பதவிகளில் மூன்று மடங்கிற்கும் குறைவான அளவு பதவிகளையே பெற்றிருந்தனர். 1946ம் ஆண்டு நிர்வாக சேவையில், அரைப்பகுதியையும், நீதிச்
* சனத்தொகை புள்ளிவிபரம் பெளத்தர்கள் 6.7%
74% சிங்க - சிங்கள கிறிஸ்தவர்கள் 7% % FIIEJ 5 6T6) | T

Page 180
அ. முகம்மது சமீம் 332 சேவையில் மூன்றில் இரண்டு பங்கினையும் தமிழர்கள் கொண்டிருந்தனர் என்பது குறிப்பிடத் தக்கது.
சுதந்திரத்திற்குப் பிறகு, சனத்தொகையில் தமது விகிதா சாரத்திற்கேற்ப தமக்கு அரச பதவிகளில் இடம் இருக்க வேண் டும் என்று உரிமை கொண்டாடிய சிங்கள புத்தி ஜீவிகள் இப் பதவிகளில் தமிழர்கள் அதிகமாக இருப்பதைக் கண்டு தமிழர் களுக்கெதிராக இன உணர்வை சிங்கள மக்கள் மத்தியில் வளர்க் கத் தொடங்கினர். இதன் பிரதிபலிப்புதான் "சிங்களம் மட்டும்" மசோதா. நாட்டின் பொருளாதார நிலைமை மோசமடைந்த காரணத்தினால், வேலையில்லாப் பிரச்சினையும் தலைதூக்கிய காரணத்தினால், அரசாங்க சேவையில் இன விகிதாசாரப்படி வேலைவாய்ப்புகள் வழங்கப்படல் வேண்டுமென்ற கோஷ மும் சிங்களம் படித்த மக்களிடையே வலுவூன்றத் தொடங் கியது. அரசாங்க பதவிகளில் தமிழர்கள் அதிகமாக இருந்த காரணத்தினால், சிங்கள-பெளத்த தேசியமும், தமிழர்களுக் கெதிராக இன உணர்வைத் தூண்டி விட்டது. தொழிலடிப் படையிலான இப்போட்டியே இன உணர்வு வளர்வதற்குக் காரணமாயிருந்தது. முக்கியமாக, சர்வகலாசாலையில் பட்டம் பெற்ற சிங்கள பட்டதாரிகள் நாட்டில் பல பாகங்களுக்கும் சென்று, தமிழர்களுக்கெதிராக இவ்வுணர்வை வளர்த்தனர். சிங்கள மக்களிடையே "சுயபாஷை இயக்கம் வளர்வதற்கு ஒரு முக்கிய காரணம், அரச பதவிகளிலிருந்து தமிழர்களை அகற்ற வேண்டும் என்ற நோக்கமே. சிங்களம் மட்டும் அரச கரும மொழியாக இருந்தால், அரசாங்க சேவையில் சிங்கள மக்கள் அதிகமாக இடம்பெற வாய்ப்பு இருக்கிறதென்றும், ஆங்கில ஆட்சியில் தமக்கு இழைக்கப்பட்ட அநீதியையும் நிவர்த்தி செய்யலாம், என்ற நோக்கத்துடன்தான் இவ்வியக்கத்தை வளர்த்தனர். இதே கருத்தைத் தான், இலங்கை அரசியலில் வகுப்புவாதமும், மொழியும்" என்ற நூலில் றொபர்ட் கேர்ணி பின்வருமாறு கூறுகிறார்.
"சுயபாஷை இயக்கத்தைச் சிங்களவர் ஆதரித்ததற்குரிய

333 ஒரு சிறுபான்மை சமூகத்தின் பிரச்சினைகள் IV
முக்கிய காரணம், அரசாங்க உத்தியோகங்களிலிருந்து ஆங்கி லம் கற்றவர்களை அகற்றுவதை விட, தமிழ் உத்தியோகத்தர்க ளை அகற்றுவதே, அவர்களது குறிக்கோளாயிருந்தது. சிங்கள மொழி அரசகரும மொழியாக மாறினால் அரசாங்க பதவிகளில் சிங்களவருக்கு அதிக வாய்ப்பிருக்கும் என்பதோடு, சென்ற காலத்தில் சிங்கள மக்களுக்கும் இழைக்கப்பட்ட அநீதியையும், நிவர்த்தி செய் லாம் என்பதே". இச்சுய பாஷை இயக்கம் உண்மையில் பொருளாதார அடிப்படையைக் கொண்டது. இது வெறும் உணர்வுபூர்வ மானதொன்றல்ல. சிங்களவருடைய பொருளாதார நிலையை வளர்ப்பதே இதன் குறிக்கோளாகும்.
"பொருளாதார வாய்ப்புகள் குறைந்த ஒரு சமுதாயத்தில், அரசாங்கமே தொழில்களை வழங்கும் ஒரு தொழில் அதிபதி யாக இருக்கும் பட்சத்தில், மொழிப்பிரச்சினை ஒர் உணர்வு பூர்வமான பிரச்சினையல்ல. அதில் பொருளாதாரப் பின்ன ணியும் இருக்கிறது. சிங்களம் அரசகரும மொழியாகக் கொண்டுவரப் பட்டதின் முக்கிய நோக்கம், படித்த சிங்கள மத்தியதர வர்க்கத்தினருக்கு அரசாங்கத்தில் பதவிகளைப் பெறுவதற்கும் பதவி உயர்வுகளைப் பெறுவதற்கும் ஒரு பெரும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுப்பதேயாம்' என்று "இலங்கையில் தேசியமும், தமிழரும்', என்ற கட்டுரையில் கலாநிதி அரசரத்தினம் கூறுகிறார்.
1956ம் ஆண்டுக்குப் பின்னர், அரசகரும மொழிச் சட்டம், சுயபாஷை இயக்கம், பாடசாலைகளைத் தேசிய மயமாக்கல், தனியார் நிறுவனங்கள் தேசிய மயப்படுத்தல், போன்றவை தமிழர்களை, முக்கியமாக அவர்களுடைய பொருளாதார நிலையைப் பெரிதும் பாதித்தது. அரசாங்க பதவிகளில் தமிழர் களின் விகிதாசாரம் குறைந்ததைக் கீழே உள்ள அட்டவணை காட்டுகிறது.

Page 181
அ. முகம்மது சமீம் - 334
பொது எழுதுவினைஞர் சேவைக்குப்
போட்டிப்பரீட்சையின் மூலம் தெரிவு செய்யப்பட்டோர் எண்ணிக்கை
195 O 1951 1952 1953 1956
சிங்களவர் 208 108 435 226 1358
தமிழர் 150 114 3.25 54 181
மேலே உள்ள அட்டவணை 1956ம் ஆண்டுக்கு முன்னர் இருந்த நிலையைக் காட்டுகிறது. கீழே உள்ள அட்டவணை, 1956ம் ஆண்டுக்குப் பிறகு ஏற்பட்ட நிலையைக் காட்டுகிறது.
1956 1957 1958 1959 196 O
தமிழர் 31% 30% 1996 17 % 12%
அரசாங்க பதவிகளில் தமிழர்களுடைய விகிதாசாரம் எப்படி குறைந்து வந்திருக்கிற தென்பதை மேலே உள்ள அட்ட வணை காட்டுகிறது. (ஆதாரம் - சி. சுந்தரலிங்கம்- தமிழ்ஈழம் எங்கள் தெய்வம்)
1956ம் ஆண்டுக்குப்பிறகுதான் 'அரசாங்க தீவிர 'இனவாதம் 'உருவெடுத்தது. சுசில் முனசிங்கவின் கூற்று எவ்வ ளவு தவறானது என்பது மேலே உள்ள புள்ளிவிபரங்கள் காட்டுகின்றன. அவரைக் குறைகூற முடியாது. பொதுவாக எல்லா சிங்க ள படித்தவர்கள் மத்தியில் சிறுபான்மை யின மக்களைப் பற்றி இத்தகைய தப்பான அப்பிராயமே நிலவு கிறது.

335 ஒரு சிறுபான்மை சமூகத்தின் பிரச்சினைகள் IV
49. 'இலங்கை முஸ்லிம்கள், சிங்கள
ஆதிக்கத்தின் கீழிருக்கும் ஒர் அடிமை சமுதாயம் என்பதை ஏற்றுக் கொண்டு விட்டனரா?'
இலங்கையின் மூத்த அரசியல்வாதிகளில் ஒருவரான, சுசில் முனசிங்க வின் 'சிறுபான்மை சமூகத்தினர் தங்கள் விகிதாசாரத்திற்கு அதிகமாகவே சலுகைகளைப் பெற்றனர்' என்ற கூற்றும், இலங்கை கெலனிய சர்வகலாசாலை வேந்தரும், சிங்க ள - பெளத்த சமூகத்தின் தலை சிறந்த அறிஞரும் சிரேஷ்ட பெளத்த பிக்குவுமான கலாநிதி வல்பொல சிறிராகுல தேரோவின் 'இலங்கை சமுதாயம், பல இனங்களைக் கொண்ட சமுதாயம், என்று முன்னைய ஜனாதிபதி இது ஒரு சிங்க ள - பெளத்த நாடு பிரேமதாச கூறியதற்காகத்தான் நான் அவரை எதிர்த்தேன். இது ஒரு சிங்க ள - பெளத்த நாடு என்ற கூற்றும் (சண்டே டைம்ஸ் 5-5-96) முஸ்லிம் சமூகத்திற்கு எதிராக சிங்கள டாக்டர்கள் வேலைநிறுத்தம் செய்ததும் எதைக் காட்டுகிறதென்றால், இந்நாட்டில் சிறுபான்மை சமூகத்தினர் உரிமைகளைக் கோர அருகதையற்றவர்கள் அவர்கள் சிங்கள மக்களோடு சம அந்தஸ்துக் கோர தகுதியற்றவர்கள், இந்நாட்டில் அடிமைகளாக வாழலாம்' என்பதையே காட்டுகிறது. சிறுபான்மையினம் வாழும் ஒரு கிராமத்தில் ஒரு சிங்கள் படைவீரன் "பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டால், அக்கிராமத்தையே நிர்மூலமாக்கும சிங்கள படைவீரர்களின் ஆணவமான செய்கையும், இம் மனப்பான்மையின் பாற்பட்டதே, இன்று ஹேக் நகரில் முன்னைநாள் ஜெர்மன் நாஜி தளபதி, ஒரு இரண்டாம் உலக மகாயுத்தத்தின் போது சில ஜெர்மன் படைவீரர்கள் கொலை செய்யப்பட்டதற்காக ஒர் இத்தாலிய கிராமத்தையே அழித்தான்' என்ற குற்றஞ்சாட்டின் பேரில் சர்வதேச நீதிமன்றத்தில் விசாரணைக்குள்ளாக்கப்

Page 182
அ. முகம்மது சமீம் 336
பட்டிருக்கிறான். தம்முடைய நாட்டின் ஒரு பகுதியைக் கைப்பற்றியிருக்கும் காரணத்திறாகாக லெபனான் 'ஹிஸ்புல்லா விடுதலை இயக்கத்தினர், நடத்தும் விடுதலைப் போராட்டத்தில் ஒரு சில இஸ்ரேலிய படைவீரர்கள் கொல்லப்பட்டதற்காக, இஸ்ரேலிய அரசாங்கம், லெபனான் நாட்டையே அழிக்க முன் வந்திருப்பதும் இதே போன்றது. இல்லையா? இதில் அடிப்படை உண்மை என்னவென்றால் ஜெர்மனியர் ஆரியர்கள்- ஆளப் பிறந்தவர்கள் உயர்வர்க்கத்தினர், ஆகையால், கீழ் நிலையிலுள்ளவர்கள், ஆளப்படுபவர்கள் ஒர் ஆரியனைக் கொல்லலாமா? அரபு நாடுகிறல் உள்ள அரபியர்களை விட தாம் உயர்ந்தவர்கள் என்ற எண்ணத்தில் வாழும் இஸ்ரேலியர், ஒர் இஸ்ரேலியனை அடிமைகள் கொல்வது தகுமா? இதே எண்ண ஓட்டத்தைத் தான் நாம் இலங்கையிலும் காண்கிறோம். ஒர் உயர் இனத்தைச் சேர்ந்த வனை - ஆட்சி செய்யப்பட்டு வரும் ஒர் அடிமை கொல்லலாமா? கிளிவெட்டியிலும், கொக்கட்டிச் சொலை யிலும், புத்தளத்திலும் நடந்த சிங்களவரின் அத்துமீறிய செயல்கள் இதைத்தானே நமக்கு ஞாபகப்படுத்துகின்றன.
"1915ம் ஆண்டு இலங்கையில் நடந்தது கலவரமல்ல. முஸ்லிம்களுக்திெராக திட்டமிடப்பட்ட ஒரு சதி' என்று கத்ரி இஸ்மாயில் கூறுகிறார். முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர். அவர்களடைய வீடு கிளும் வியாபார ஸ்தலாங்களும், உடைமைகளும் தீக்கிரையாக்கப்படடன. இந்நிகழ்ச்சிக்குப் பிறகு, முஸ்லிம்கள் பயப்பீதியால், சிங்களவருக்குப் பயந்து அடங்கி ஒரு அடிமை சமுதாயம்போல் வாழும் அவல நிலையை ஏற்றுக் கொண்டனர். சிங்களவரை எதிர்க்கவோ, அவர்களுடன் மோதவோ விரும்பவில்லை. வாயால் கூட எதிர்க்க முற்படவில்லை. தம் சமூகத்தைப் பாதிக்கும் சிங்களத் தலைவர்களின் செவ ய்கைகளைக் கூட ஆமோதித்தனர். ஜே.ஆர். ஜயவர்தனா 1945ம் ஆண்டில் அரசசபையில் கொண்டு வந்த "சிங்களம் மட்டும் மசோதாவை ராசிக் பரீத் ஆமோதித் தார். 1938ம் ஆண்டில், டொனமூர் ஆட்சித் திட்டத்தில்

337 ஒரு சிறுபான்மை சமூகத்தின் பிரச்சினைகள் IV
‘அமைச்சர் சபையில் ஒருவராயிருந்த மாக்கான் மாக்கார், 'சிங்களவாரோடு சமமான பிரதிநிதித்துவத்தை நாங்கள் கேட்கவில்லை, என்றார். டி. எஸ். சேனாநாயக்காவின் பிரஜா உரிமைச் சட்டம் முஸ்லிம்களைப் பாதித்தது என்றாலும், அன்று சட்டசபையில் இருந்த அத்தனை முஸ்லிம் பிரதிநிதிகளும் இச்சட்டத்திற்கு ஆதரவளித்தனர். 35,000 இந்திய முஸ்லிம்கள் நேரடியாகப் பாதிக்கப்பட்டார்கள். இலங்கை முஸ்லிம்களும் சிங்களவர்களால் அந்நியர்களாகக் கரு புதப்பட்டார்கள். மு 1 லிம்கள் தம்முடைய பாட்டனார், இலங்கையில் பிறந்தவர்என்று நிரூபிக்க முடியாவிட்டால் "காணி' வாங்க முடியாது, பதிவு செய்ய முடியாது' என்ற நிலையேற்பட்டது. 1977ம் ஆண்டுக்குப் பிறகுதான், இந்நிலைமை முன்னைய அரசாங்கத்தில் வெளிவிவகார அமைச்சராகயிருந்து ஏ.சி. எஸ். ஹமீத் மாற்றினார்.
செனட் சபையில் பிரஜா உரிமைச் சட்டம் விவாதத்திற்கு எடுக்கப்பட்ட சமயம், ராசிக் பரீத், "ஒரு பிரஜா உரிமைச்சட்டம் இல்லாத காரணத்தினால் முஸ்லிம்கள் பல இன்னல்களுக் குள்ளானார்கள். 'முஸ்லிம் சகோதரத்துவம்' என்ற போர்வை யில் இலங்கை சோனகர்கள் மிகவும் மோசமான முறையில் சிலரால் நடத்தப்பட்டார்கள்'. சிங்களவர், இந்திய மு 1 லிம்களோ, இலங்கை முஸ்லிம்களையும், கணித்து விடுவார்களோ என்ற பயத்தினால், இலங்கை சோனகர்" என்ற பதத்தை ராசிக் பரீத் பாவிக்கத் தொடங்கினார். சிங்க ள வியாபாரிகளுக்கும், இந்திய முஸ்லிம் af) ulu IT LI TT rf) களுக்குமிடையே நடந்த வியாபாரப் போட்டியே, 1915ம் ஆண்டில் ஏற்பட்ட "சிங்கள-முஸ்லிம் கலவரத்திற்குக் காரணம் என்பதை ராசிக் பரீத் மறந்துவிடவில்லை. ஆயிரம் வருடத்திற்கு மேலாக, முஸ்லிம்கள் இந்நாட்டில் சிங்களவருடன் பரஸ்பர நல்லெண்ணத்துடன் வாழ்ந்து வந்திருக்கிறார்கள் என்று ராசிக் பரீத் கூறுவதற்குக் காரணம், அநாகரிக்க தர்மபாலா கூறியதைப் போல், சிங்களவர் தம்மை அந்நியர்கள் என்று கூறாமலிருப்பதைத் தடுப்பதற்கே, இதே மனப்பான்மை

Page 183
அ.முகம்மது சமீம் 338 யில்தான், 1956ம் ஆண்டில் பண்டார நாயக்கா அரசாங்கம் “சிங்களம் மட்டும் அசோதாவை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தபோது, சர். ராசிக்பரீத் பின்வருமாறு கூறினார்.
'சிங்களமொழியுடன் தமிழ் மொழிக்கு சம அந்தஸ்து கொடுக்கப்படல் வேண்டும் என்று கேட்பது நியாயமில்லை.
அப்படிக் கேட்பதாயிருந்தால், இலங்கையிலுள்ள ஆங்கிலேயருக்கும், பறங்கியர்களுக்கும் "ஆங்கிலமும் " மலாயர்களுக்கு "மலாயா மொழியும் " இலங்கை
சோனகர்களுக்கு "அரபு மொழியும் சமமான மொழிகளாக ஏற்றுக் கொள்ளப்படல் வேண்டும்'.
சிங்கள மக்களுடனும், சிங்கள மாழியுடனம் சம அந்தஸ்தைக் கோரும், யோக்கியதை இலங்கையில் வாபம் எந்த ஒரு சிறுபான்மை சமூகத்திற்கும் 'இல்லை' என்ற ராசிக் பரீதின் தாழ்வு மனப்பான்மை பிரதிபலிக்கிறது. இல்லையா? எந்த ஒரு காலத்திலும் முஸ்லிம்கள் அரபுமொழியைத் தாய் மொழியாகப் பேசவில்லை என்பதை ராசிக் பரீத் உணராம லில்லை. தாம் ஒரு தாழ்ந்த சாதி என்ற மனப்பான்மையையே இது காட்டுகிறது. ராசிக் பரீதின் இந்தக் கூற்றை எதிர்த்த அன்றைய பாராளுமன்றத்தில் கிழக்கு மாகாண பிரதிநிதிகளில் ஒருவரும், தமிழரசுக் கட்சியின் அங்கத்தவருமான எம்.எம். முஸ்தபா "நாம் அரபுத் தமிழைப் பேசவில்லை, நாம் பேசுவது தூய்மையான 'தமிழ்" என்று கூறியது தமக்கும் தமிழர்களுக்கும் எந்த விதமான வேற்றுமையுமில்லை என்பதை உணர்த்துவதற் காகவே என்று கொள்ளலாமல்லவா? ஆனால் சிங்களவர் மத்தியல், வாழும் முஸ்லிம்கள் ஒரு பயப் பிராந்தியுடன் வாழ்கிறார்கள். 1915ம் ஆண்டில் நடந்ததைப் போல் நடக்கக்கூடாது' என்ற பீதி முஸ்லிம்கள் மத்தியில் இருப்பதை, அன்று ராசிக்பரீத் பாராளுமன்றத்தில் ஆற்றிய் சொற்பொழிவு பிரதிபலிக்கின்றது.
'1885ம் ஆண்டில், சர். பொன்னம்பலம் இராமநாதன்,

339 ஒரு சிறுபான்மை சமூகத்தின் பிரச்சினைகள் IV
முஸ்லிம்களுக் கெதிராகச் செயற்பட்டதைப் போலவே, இன்று தமிழர்கள் செயற்பட முற்படுகிறார்கள். முஸ்லிம்களைச் சிக்க வைக்கும் தமிழர்களின் தந்திரோபாயத்தினால், என்னுடைய இனம், இன்னொரு இனத்தினால்- தமிழர்களால் - அரசியல படுகொலை செய்யப்படுவதற்கு நான் உடந்தையாயிருக்க விரும்பவில்லை'.
ராசிக் பரீத் இப்படிக் கூறுவதற்கு முக்கிய காரணம், சிங்களமொழியை எதிர்ப்பதனால் தன்னுடைய இனம், 1915ம் ஆண்டில் நடந்ததைப் போல் 'அரசியல் படுகொலை மட்டுமல்ல பூண்டோடு அழிக்கப்படலாம் என்ற பயமே.
1915ம் ஆண்டின் சிங்களவரின் செயலை மறப்பதற்காக, ராசிக் பரீத், இதே விவாதத்தில், (இம்ம சோதாவுக்கு) என்னுடைய வாக்கையளிப்பது, ஒரு வலிமையற்ற சிறுபான்மையினம், ஒரு பெரும்பான்மை சமூகத்திற்குச் செய்யும் பூஜையின் சின்னமாகக் கருத்ககூடாது' என்று கூறினாலும் உண்மையில், அது அவருடைய மனத்திலுள்ள சிங்களவரைப் பற்றிய பயத்தைப் பிரதிபலிப்பதாகவே இருக்கிறது.
முஸ்லிம்களின் மேல் சிங்களவரின் ஆதிக்கத்தை முஸ்லிம்கள் ஏற்றுக் கொண்டுவிட்டார்கள், என்று கருத்துப்பட 1938ம் ஆண்டில், சர். மாக்கான் பார்க்கார், அன்றைய சட்டசபையில் 'இந்நாடு சிங்களவர்களால் ஆட்சி செய்யப்படுவதையே நான் விருபும்புகிறேன்" என்று ஆற்றிய உரையையே, சர். ராசிக்பரீத், "எங்களுக்கொரு எஜமானன் தேவையில்லை. அப்படியொரு எஜமானன் எங்களுக்குத் தேவையென்று ஏற்பட்டால் சிங்களவர் மாத்திரமே எமது எஜமானர்களாக இருக்கட்டும். நாம், அவர்களின் கீழ் சேவை செய்யத் தயாராயிருக்கிறோம். தமிழர்களின் ஆதிக்கத்தின் கீழ்
நாம் அல்லல் பட்டது போதும் ' என்று உரையாற்றினார்.
'சென்ற காலத்தில் பல தவறுகள் ஏற்பட்டிருக்கலாம்.

Page 184
அ. முகம்மது சமீம் 340
அவைகளை நான் ஞாபகப்படுதத விரும்பவில்லை. என்னடைய எதிர்பார்ப்பும் எனது தாழ்மையான வேண்டுகோளும் இதுதான். எனவே சிங்கள சகோதரர்களுக்கு எனது நேசகரத்தை நீட்டுகிறேன்' என்று ‘சுதந்ர மசோதா? விவாதத்தில் ராசிக்பரீத் சட்டசபையில் பேசியது, சிங்களரின் வன்செயலுக்குப் பயந்து, 1915ம் ஆண்டில் நடந்ததைப் போல நடக்கக்கூடாது என்ற பயத்தினாலா?
இதே கருத்தைத்தான், கலாநிதிஅமீர்அலி, 'முஸ்லிம் சிறுபான்மை விவகாரச் சஞ்சிகை"யில் (1984 - பக்கம் 154) 'அரசியலில் உயிர்வாழ்தல் மு 1 லிம் சமூகத்தின் இன்றைய சிக்கலான நிலைமையும் முன்னைய அரசியல் தந்தரங்களம் என்ற கட்டுரையில், "1915ம் ஆண்டின் சம்பவத்திற்குப் பிறகு, இலங்கை மு1லிம் சமூகத்தினர் இரேயொரு பாடத்தைத்தான் கற்றார்கள். அதாவது, சிறிலங்கா ஒரு சிங்களநாடு, சிங்களவரை எதிர்ப்பது, பயங்கரமானதும், இன்னலை விளைவிப்பதுமாகும்', என்றும் கூறினார் என்று இதே கருத்தைத்தானே, சிங்கள - பெளத்தர்களின் சிரேஷ புட பெளத்த பிக்குவான சிறி ராகுல வல்பொல, "சண்டே டைம்ஸ்" பத்திரிகைக்களித்த பேட்டியில் (5-5-96) 'இந்த நாடு சிங்கள-பெளத்தர்களுக்கே இது உரிமையுடையது' என்று கூறும்பொழுது, சிறுபான்மையின மக்கள் வேண்டு மென்றால், சிங்களவரின் ஆதிக்கத்தின் கீழ் அடிமை சமுதாயமாக இருக்கலாம். உரிமைகளைப் பற்றி மூச்சு விடக்கூடாது" என்ற கருத்து தொனிக்கிறதல்லவா?
இதே கருத்தைத்தான் முன்னை நாள் கல்வி அமைச்சராக இருந்த பதியுத்தீன் மஹ்மூத், 1983ம் ஆண்டு சிங்கள அரசாங்கத்திற்கு ஆற்றிய உரையொன்றில், 'இந்த நாடு பிளவுபடுவதை நாம் ஏற்றுக் கொள்ளமாட்டோம். எந்த பிரிவினை சக்திக்கும் நாம் ஆதரவளிக்க மாட்டோம். சிறுபான்மை என்ற முறையில் நாம் இதை எமது தாயகமாகக் கொள்கிறோம் '. முஸ்லிம்கள் இந்த நாட்டுக்கு

34 ஒரு சிறுபான்மை சமூகத்தின் பிரச்சினைகள் IV
விசுவாசமாகவே என்றைக்கும் இருப்பார்கள், என்ற அவரது கூற்று அவருடைய பயப்பிராந்தியைக் காட்டுகிறதல்லவா? அவருக்கிருந்த பயம் பின்வரும் வாசகத்தில் துல்லியமாகப் பிரதிபலிக்கிறது. "நாம் யாரையும் இம்சிக்கவில்லை. யாரும் எம்மை இம் சிக்கக்ககூடாது என்று நம்புகிறோம். சிறிலங்காவின் பிரஜைகள் என்று கூறிக் கொள்ளும் ஏனைய மக்களுடன் நாம் சமாதானமாகவே வாழ விரும்புகிறோம்'.

Page 185
அ. முகம்மது சமீம் 342
50. வேலைவாய்ப்புகளில் சிறுபான்மை இனங்களுக்கெதிரான LI IT U LI L' 3F lib;
அரசாங்கத்தால் வேலை வாய்ப்புகள் வழங்கப்படும் போது, சிறுபான்மையின மக்களுக்கு, அவரவர்களுடைய விகி தாசாரப்படி வேலை வழங்கப் படுதல் வேண்டும் என்று, முன்னை நாள் வெளிவிவகார அமைச்சர் ஏ. சி. எஸ். ஹமீத் கொண்டு வந்த பிரேரணையை அன்றைய அரசாங்கம் ஏற்றுக் கொண்டது. இதன் படி, இலங்கைத் தமிழருக்கு 12% வீதமும், முஸ்லிம்களுக்கு 8% வீதமும், மலைநாட்டுத் தமிழருக்கு 5% வீதமும் வழங்கப்படல் வேண்டும். அரசாங்கத்தில் உயர் பதவி கள் வழங்கப்படும் போதும், இதை அனுசரிக்க வேண்டும் என்று அரசாங்கம் கூறியது. உயர்பதவிகள் வழங்கப்படுதலில் தாம் வஞ்சிக்கப் பட்டதாக சில தமிழ் அதிகாரிகளால், 'மனித உரிமைகள் மீறல்" என்ற அடிப்படையில் சில வழக்குகள் உயர்நீதிமன்றத்திற்குத் தாக்கல் செய்யப்பட்டன. இவ் விகிதா சாரம் பதவி உயர்வுக்குச் சாத்தியமல்ல என்று நீதி மன்றம் தள்ளு படி செய்தது. இவ்விகிதாசார முறை உண்மையில் அரசாங்கங் களினால் கடைப்பிடிக்கப்பட்டதா? என்பது ஆராயப் படவேண் டிய தொன்று. முன்னைய அரசாங்கம், இது 'அடிப்படை மனித உரிமைகளில் அடங்கும் என்பதை கொள்கையளவில் ஏற்றுக் கொண்டது. சமீபத்தில் இலங்கை அரசாங்கம், 'இலங்கை நிர்வாக சேவைக்கு", 40பேரை சேர்த்துக் கொண்டபோது, ஒரு தமிழரோ, முஸ்லிமோ இதில் அடங்கவில்லையென்று, 'மட்டக் களப்பு மாவட்ட பாராளுமன்ற அங்கத்தவர், ஜோசப் பரராஜ சிங்கம், ஜனாதிபதிக்கு 2-6-96ல் எழுதிய ஒரு கடிதத்தில் முறை பட்டிருந்தார் (வீரகேசரி 2-6-96) இன விகிதாசார அடிப் படையில், இன்று அரசாங்கம் வேலை வாய்ப்புகளை வழங்குகிறது என்று கூற முடியாது. இது இலங்கை இராணுவ முப்படைக்கும், போலிஸ் படைக்கும் ஆள் சேர்க்கும்போது கடைபிடிக்கப் படவில்லை என்பது கண்கூடு.

343 ஒரு சிறுபான்மை சமூகத்தின் பிரச்சினைகள் IV
10-7-96ல், பாராளுமன்றத்தில், 'மனித உரிமை ஆணைக் குழு மசோதா விவாதத்தில், அரசாங்கத்தால் நியமிக்கப்படும் எந்தவொரு ஆணைக்குழுவுக்கும் சிறுபான்மை இனமக்க ளுக்கு விகிதாசார அடிப்படையில், பிரதிநிதித்துவம் வழங்கப் படல் வேண்டும்' என்ற திருத்தப் பிரேரணையை, கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஏ.சி. எஸ். ஹமீத் கொண்டு வந்தார். அரசியல் யாப்பில் 126, சட்டவிதிப்படி, 'மனித அடிப் படை உரிமைகள் மீறப்பட்டால், 30 நாட்களுக்குள் 'சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு மனுதாக்கல் செய்யப்படல் வேண்டும் என்பது சட்டம். 'மனித உரிமை மீறல் ஆணைக்குழு முன்னி லையில் ஒருவர் தனது மனுதாக்கல் செய்து அதன் தீர்ப்பில் திருப்திப்படாதவிடத்து சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய் வதற்கு அவருக்குக் கால அவகாசம் கிடைக்காமற் போகலாம். எனவே மனித உரிமை ஆணைக்குழு முன்னிலையில் நடை பெறும் விசாரணைக் காலத்தைத் தவிர்த்து அதன் பின்னரான முப்பது நாட்களுக்குள் சுப்ரீம் கோர்ட்டில் அடிப்படை மனித உரிமைகள் மீறல் மனு தாக்கல் செய்ய அவகாசமளிக்கப்படல் வேண்டும் என்று கோரி, முன்னாள் அமைச்சர், ஏ. சி. எஸ். ஹமீத் பாராளுமன்றத்தில் கொண்டு வந்த பிரேரணை மூன்றில் இரண்டு அதிகப்படியான வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது (தினகரன் வார மஞ்சரி 14.7.96) இந்த திருத்தப் பிரேரணை சிறுபான்மை சமூகங்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக அமையும்.
சிறுபான்மை மக்களின் மனித உரிமைகள் கடைப்பிடிக் கப்பட வேண்டுமென்றால் வேலைவாய்ப்பில் மாத்திரமல்ல சர்வகலாசாலை அனுமதியிலும், நியமனங் களிலும் இவ்விகி தாசார முறை கடைபிடிக்கப்படல் வேண்டும். சென்ற காலங் களில் அரசாங்க வேலைவாய்ப்புகளில், இவ்விகிதாசார முறை கடைப்பிடிக்கப்பட்டதா என்பது ஆராயப்பட வேண்டியது என்று நாம் மேலே கூறினோம். அரசாங்க வேலை வாய்ப் புகளில் சிறுபான்மையினங்களின் விகிதாசாரம் பேணப்பட வில்லை என்ற உண்மை முன்னைய அத்தியாயமொன்றில்
விளக்கினோம்.

Page 186
அ. முகம்மது சமீம் 344
'சிங்களம் மட்டும் அரசகரும மொழிச் சட்டம் நிறை வேற்றப்பட்ட பிறகு அரசாங்கத்திலும், அரசாங்கக் கூட்டுத் தாபனங்களிலும், சிறுபான்மையின மக்களுக்கு வேலை வாய்ப் புகள் அரிதாகிக் கொண்டே வந்தன. அரசமொழியில் போதிய பாண்டித்தியம் இல்லாத காரணத்தினால் தமிழ்பேசும் மக்களுக் கான வேலைவாய்ப்பு, பதவி, உயர்வு, சம்பள உயர்வு மறுக்கப் பட்டன. அரசியலிலும், பொருளாதாரத்திலும், சமூக வாழ்வி லும், சிறுபான்மையின மக்கள் இரண்டாந்தரப் பிரஜைகளாகக் கணிக்கப்பட்டனர். அரசகரும மொழிகளில் தேர்ச்சியின்மை யால், பலர் தொழிலிருந்து பதவி விலகவும் வேண்டியேற்பட் டது. அரசாங்கத்திலும், அரசாங்கக் கூட்டுத்தாபனங்களிலு முள்ள வேலை வாய்ப்புகள் பெரும் பாலும் சிங்கள சமுதாயத் திற்கே வழங்கப்பட்டன. றொபர்ட் கர்ணி, எழுதிய "இலங்கை யின் மாக்சிஸ் கட்சிகள்" என்ற நூலில், "1956ம் ஆண்டுக்கும், 1970ம் ஆண்டுக்குமிடைப்பட்ட காலப்பகுதியில், 1,89,000 பேர் அரசாங்கக் கூட்டுத் தானங்களுக்குச் சேர்க்கப்பட்டதில் 99% வீதமானோர் சிங்களவரே" என்று கூறுகிறார். இதே கருத்தை, சச்சி பொன்னம்பலம், தனது, “தேசியப் பிரச்சினையும் தமிழர் விடுதலைப் போராட்டமும்' என்ற் நூலில், "இலங்கை சுதந்திரம் அடைந்த போது அரசாங்க பொதுச் சேவையில் வேலை செய்தோர் தொகை 82,000 ஆக இருந்தபோது இலங் கைத் தமிழர் அதில் 30 சதவீத இடத்தைப் பெற்றிருந்தனர். 1970 அளவில் அரசாங்க சேவையில் வேலை வாய்ப்புகளின் எண் ணிக்கை மிக விரைவாக 2,25,000 மாக அதிகரித்தது. ஆனால் இதே ஆண்டில் தமிழ் மக்கள் பெற்றுக் கொண்ட வேலை வாய்ப்பு விதமானது 6 வீதமாகக் குறைவடைந்தது". மேலும், அவர் "1973ல் உயர் நிர்வாக சேவைக்குப் பரீட்சை மூலம் தேர்ந்து எடுக்கப்பட்ட 100 பேரில் 4 பேர் முஸ்லிம்களாகவும் 4 பேர் தமிழர்களாகவும் காணப்பட்டனர்', என்று கூறுகிறார்.
கீழே உள்ள அட்டவணை, எப்படி தமிழர்களின் அரசாங்க உத்தியோகங்களில் உள்ள விகிதாசாரம் சுதந்திரத்திற்குப் பிறகு படிப்படியாகக் குறைந்து வந்தது என்பதைக் காட்டுகிறது.

345 ஒரு சிறுபான்மை சமூகத்தின் பிரச்சினைகள் IV 'அரசாங்க சேவையில் தமிழர்களின் வேலைவாய்ப்புக்களின் விகிதாசாரம்
1950 1965 1970
இலங்கை நிர்வாக சேவை 30 20 O5 எழுதுவினைஞர் சேவை 50 30 O5 பொறியியலாளர், டாக்டர்
விரிவுரையாளர்,
-நிபுணத்துவ சேவை- 6°0 30 IO ஆயுதப்படை 40 20 O தொழிலாளிகள் 40 20 O5
(ஆதாரம்: "தமிழர் விடுதலைப் போராட்டம்' - சச்சி பொன்னம்பலம் - லண்டன்)
சாதி, இனம், மதம், மொழி, பிரதேசம் என்ற பாகுபாடு இல்லாமல் எல்லா மக்களுக்கும் வேலை வாய்ப்புகள் வழங்க வேண்டுமென்பது 'மனித அடிப்படை உரிமைகள்" என்பதின் பாற்பட்டதாகும். ஆனால் இலங்கைக்கு சுதந்திரம் கிடைத்த பிறகு வந்த ஒவ்வொரு அரசாங்கமும் சிறுபான்மை)யின மக்களுக்கு அநீதியையே வழங்கிவந்தது.
1971ம் ஆண்டுக்கும் 1974ம் ஆண்டுக்குமிடையே உள்.ெ" காலப்பகுதியில், 22, 374 ஆசிரியர்களுக்கு நியமனம் வழங்கப் பட்டது. இதில் 18000 சிங்களவரும், 1807 தமிழர்களும் 2507 முஸ்லிம்களும் நியமிக்கப்பட்டனர். முஸ்லிம்களுக்கு ஏறக்குறைய 11% வீதம் ஆசிரிய நியமனம் வழங்கப்பட்டதற்கு முக்கிய காரணம், அன்றைய கல்வி அமைச்சர் ஒரு முஸ்லிமாக இருந்தபடியால்தான். கல்வி அமைச்சர் பதியுத்தீன் மஹ்ற மூத் அவர்களின் தனிப்பட்ட ஆளுமை காரணமாகத்தான் அன்றைய அரசாங்கத்தில் அவரால் முஸ்லிம்களுக்கு சேவை செய்ய முடிந்தது.

Page 187
அ. முகம்மது சமீம் 346
ஆனால் பெரும்பாலும், சிங்கள பெரும்பான்மையைக் கொண்ட அரசாங்கங்கள், சிங்கள சமூகத்தவருக்கே அதிக நன்மைகளைச் செய்தன. இதனால், சிறுபான்மை இனங்களான தமிழர்களும், முஸ்லிம்களும், பொதுவாக, எல்லாத் துறைகளிலும், வேலைவாய்ப்பு, உயர்கல்வி, பொருளாதார அபிவிருத்தி, குடியேற்றத் திட்டங்கள் போன்றவைகளில், புறக்கணிக்கப்பட்டே வந்தனர்.
1975ம் ஆண்டு, 'சனத் தொகைக் கணக்கெடுப்பு, புள்ளி விவகார இலாகாவின் அறிக்கையின்படி, சிங்களவர் 72% வீதமாகவும், தமிழர் 20.5% வீதமாகவும் (இலங்கைத் தமிழர் 11.2% இந்தியத் தமிழர் 9.3%) முஸ்லிம்கள் 7.1 வீதமாகவும் (இலங்கை சோனகர் 6.7% மலாயர்கள் .34) ஏனையோர் 0.5% இருந்தனர். வேலைவாய்ப்புகளில் சிறுபான்மையினங்கள் எப்படி பாதிக்கப்பட்டன என்பதை கீழே உள்ள அட்டவணை தெளிவாக்குகிறது."
*அரசாங்கத்தில் வேலை பெற்றோர் 1972
சனத் தொகை சிங்களவர் தமிழர் ஏனை"
யோர் 1971ஆண்டின் சனத்தொகை 72. O 20.5 7.5 நிர்வாக, நிபுணத்துவ தொழில்நுட்பத்தரங்கள் 67.7 28.5 3. 8 இடைநிலைத்தரம் 81.2 15.3 3.5 ஆசிரியர் 81.5 11.6 6.9 சிற்றுாழியர் 86.4 10.6 3.0 தொழிலாளர் 85.5 II. 6 2.9 ஏனைய பிரிவுகள் 82.6 12.9 4.5
மேலே உள்ள அட்டவணையின்படி இந்தியத் தமிழர்
இதில் முஸ்லிம்களும் அடங்குவர்

347 ஒரு சிறுபான்மை சமூகத்தின் பிரச்சினைகள் IV
களின் விபரங்கள் தனியாகக் கொடுக்கப்படாமையினால், இவ்வேலைவாய்ப்புக்களில் அதிகமாகப் பாதிக்கப்பட்டவர்கள் இவர்களே. முஸ்லிம்களும் தங்களுடைய சனத்தொகை விகிதாசாரத்திற்குக் குறைவாகவே, வேலைவாய்ப்புக்களைப் பெற்றனர் (ஆசிரியர் தொழிலைத் தவிர) சிங்களவர் தங்கள் சனத் தொகை விகிதாசாரத்திற்கு அதிகமாகவே வேலை வாய்புக்களைப் பெற்றனர். தமிழர்கள் தங்களுடைய சனத் தொகை விகிதாசாரத்திற்குக் குறைவாகவே வேலைவாய்ப்புக்களைப் பெற்றிருந்தாலும், இந்தியத் தமிழர்களும், முஸ்லிம்களுமே அதிகமாகப் பாதிக்கப் பட்டவர்கள்.
1977ம் ஆண்டில் அரகாங்கத்தை அமைத்த ஐக்கிய தேசியக் கட்சி, இந்நிலையை இன்னும் மோசமாக்கியது.
பின்வரும் அட்டவணையைப் பாருங்கள்
*அரசாங்கத்தின் வேலைவாய்ப்புக்கள் 1977-1981
மொத்த வெற்றி | சிங்களவர் தமிழர் ஏனையோர் டங்கள்
வினைஞர் 9,965 9,326 (93.6%) 492 (4.9) | 147 (1.5) ஆசிரியர் 29,218 25,553(87.6%) | 2084 (7.1) 1581 (5.3)
மொத்தம் 39,183 34,879 (87.6) 2,576 (6.6) 1728 (5.8)
(ஆதாரம்: தமிழ் டைம்ஸ் ஜனவரி 1985, லண்டன்)
சிறுபான்மையினங்களுக்கெதிரான பாரபட்சம், ஜே.ஆர். ஜயவர்தனாவின் அரசாங்கத்தில் இன்னும் அதிகரித்தது என்பதை மேலே உள்ள அட்டவணை காட்டுகிறது, இல்லையா?
1979ம் ஆண்டு ஜூலை 11ம் திகதி அன்றைய எதிர்க்கட்சித் தலைவராயிருந்த அமிர்தலிங்கம், ஜனாதிபதி

Page 188
அ. முகம்மது சமீம் 3.48
ஜே. ஆர். ஜயவர்தனாவுக்கு எழுதிய கடிதத்தில், 1978ம் ஆண்டில் ஐக்கிய தேசியக்கட்சி அரசாங்கம் பின்பற்றிய
வேலைவாய்ப்புக் கொள்கையானது, முன்னர் எப்போதும் இல்லாத அளவிற்குத் தமிழ் மக்கள் மீதான பாரபட்சத்தைக் கொண்டிருந்தது, என்றும் கூறினார். 1978ம் ஆண்டில் வழங்கப்பட்ட 140000 வேலைவாய்ப்புக்களில் தமிழர் 1000க்கும் குறைவான பதவிகளையே பெற்றுக் கொண்டனர்" என்று அவர் சுட்டிக் காட்டினார்.
17.7.1979ம் ஆண்டு 'சிலோன் டெய்லி நியூசில்? வெளியான செய்தி இதனை இன்னும் ஊர்ஜிதம் செய்கிறது."
* ஆதாரம் ஏசியன் சர்வே வால்யும் XXநம்பர் 9 செம்படம்பர் 1980 பக்கம் 909) சிங்கள -தமிழர் உறவுகளில் சமீப கால வளர்ச்சி டபிள்யு ஐ. சிரிவிர

3.49 ஒரு சிறுபான்மை சமூகத்தின் பிரச்சினைகள் IV
1979ம் ஆண்டு அரசாங்கத்தில் பல்வேறு திணைக் களங்களிலும் வேலைக்குச் சேர்க்கப்பட்டோர் தொகை
தரம் மொத்த தமிழர்
ஆட்சேர்ப்பு எண்ணிக்கை எண்ணிக்கை
இலங்கை
நிர்வாக சேவை 140 ஒருவருமில்லை
உதவி ரயில்வே
ஸ்டேஷன்
மாஸ்டர் 98 04
மருந்து தயாரித்துக்
கொடுப்பவர்
(பார்மஸிஸ்ட்) 480 O7
சர்வேயர்கள்
(நிலமளப்போர்) 3.18 05
இலங்கைக்
கப்பற்படை 2 70 146
பட்டதாரி
ஆசிரியர்கள் 1000 ஒருவருமில்லை
அரசாங்க
எழுதுவினைஞர் IOOO O2
ஆசிரியர்கள் 17,000 700
அரசாங்க வேலை வாய்ப்புகளில் சிறுபான்மை யினங் களுக்கெதிராக, அன்றைய அரசாங்கம் கடைப்பிடித்த பாரபட்சத்தை மேலே உள்ள அட்டவணை தெளிவாகக் காட்டுகிறது.

Page 189
அ. முகம்மது சமீம
· -
|-
(8* I) 9-63 (0-9) zo 99
(9 − I) go If
(0°0I) 8,8€ (8-9 I) ç’09
与追9n9
logo?
I Į 6 s
(g * I) goz (I (O) og (zoo) zog (g’6) 0'08
1999 TU9
(Z · I) 6 ogz
(Oog) so sɛ
(go I) 6 * #9
(zo 9 I) gogg
Ț 06 I
logo?
1,99£IĜŌŐ loogių sąeđĩ) 1,9op oặuorīts)
1994 Roones@to
(saŭco (@, uso spre coûsâ aelorg fæ rece 1919 Nongjo) pH sı-içoso)
q1,59 hossãoặđì lo qisĜUn-Iosrısıtıło 109199 uri og Non-løsriņłnię mgie qisĜtalogoso qi II e I og Nobilugso qitost,

35 ஒரு சிறுபான்மை சமூகத்தின் பிரச்சினைகள் IV
51. உயர்கல்வியில் ஏற்பட்ட வளர்ச்சியும் இன ஒதுக்கலும்
மத்தியதர வர்க்கத்தின் ஏகபோக சொத்தாக இருந்த உயர் கல்வி 1956ம் ஆண்டுக்குப் பிறகு மாற்றமடைந்தது. இலங்கைப் பல்கலைக்கழகம் (கொழும்பு, பேராதெனிய வளாகங்கள்) இவ்வர்கத்தின் உயர்கல்வி பிரதிநிதியாக இருந்தது. இலங்கை யின் முக்கிய நகரங்களில் உள்ள தனியார் பாடசாலைகளில் கல் விக் கட்டணம் கட்டி கல்வி கற்ற மத்தியதர வர்க்கத்தைச் சேர்ந் தவர்களே, சர்வகலாசாலைக்கு பெருமளவு அனுமதி பெற்ற னர். 1950/51 ஆண்டுகளில் அரசாங்கம் கிராமப் புறங்களில் அமைத்த 'மத்திய பாடசாலைகளிலிருந்து, கிராமப்புற மாணவர்களும் கணிசமான அளவு 1956ம் ஆண்டுக்குப் பிறகே சர்வகலாசாலைக்கு அனுமதி பெறுவதை நாம் காண்கிறோம். அதுவும், பெரும்பாலும் கலைப்பாடங்களிலேயே அனுமதி பெறுவதை நாம் அவதானிக்கலாம். வித்தியோதய, வித்தியா லயங்கார சர்வகலாசாலைகள் நிறுவப் பட்டவிறகு J i GJ Sa) T சாலைகளுக்கு அனுமதிபெற்ற மாணவர்களின் எண்ணிக்கை யும் அதிகரிக்கிறது. ஆனால் இவ்வுயர்கல்வி வளர்ச்சி ஒர் இனம் சார்ந்ததாக வளர்வதையும் நாம் அவதானிக்கலாம். 1956ம் ஆண்டில் சர்வகலாசாலை அனுமதியைப் பற்றி, பெளத்த விசாரணைக் கமிட்டி, பின்வருமாறு கூறியது, "சர்வகலாசாலை அனுமதி பெறுவதில் ஒரு கிறிஸ்தவ மாணவனுகு 200ல் 1 வாய்ப்பும், ஒரு இந்து மாணவனுக்கு 500ல் ஒரு வாய்ப்பும் ஒரு பெளத்த மாணவனுக்கு 1000ல் ஒரு வாய்ப்பும், ஒரு முஸ்லிம் மாணவனுக்கு 2000ல் 1 வாய்ப்பும், இருக்கிறதென்று நாம் கூறலாம்". உயர்கல்வியைப் பற்றி விசாரணை செய்த இப் பெளத்த கமிட்டி, கிறிஸ்தவர்களையும், இந்துக்களையும் விட பெளத்தர்களுக்கு வாய்ப்பு இருக்கவில்லை என்பதைச் சுட்டிக் கட்டியது. 1956ம் ஆண்டில் அதிகாரத்தைக் கைப்பற்றிய அர சாங்கம், ஒரு முற்போக்கு அரசாங்கம்" என்ற போர்வையைப் போர்த்துக் கொண்டிருந்தாலும், அதன் நடவடிக்கைகள், ஒரு

Page 190
அ. முகம்மது சமீம் 352 பெளத்த-சிங்கள அரசாங்கமாகவே செயல்பட்டது. முற் போக்கு சக்திகளான இடதுசாரிக் கட்சிகள் கூட, தங்கள் பார் வையை விஞ்ஞானக் கண்ணோட்டத்துடன் நோக்கவில்லை. பெளத்த சிங்களவருக்குச் சாதகமாகவே இவ்வரசாங்கம் செயல்பட்டது. கீழ்மட்டத்திலுள்ள பெளத்த சிங்கள மக்க ளுக்கு இது ஒரு முற்போக்கு அரசாங்கமாகச் செயல் பட்டதை மறுக்க முடியாது. இவ்வரசாங்கம் அமுலாக்கிய "சிங்களம் மட்டும்" மசோதாவும், பெளத்த சாசனமும், சிறுபான்மை யினங்களைப் பாதித்தன. இந்த பாதிப்பை நாம் உயர்கல்வி வளர்ச்சியிலும் காணலாம்.
அரசியல் அதிகாரத்தில் கிறிஸ்தவர்களின் ஆதிக்கம் படிப்படியாகக் குறைந்தது. 1948ம் ஆண்டில் 48% வீதமாக இருந்த பாராளுமன்ற அங்கத்துவம், 1952ல் 24% வீதமாகவும் 1960ல் 16% வீதமாகவும் குறைந்தது. இதே வேளையில் பெளத் தர்களின் வீதம், 1948ம் ஆண்டில் 21% ஆக இருந்தது. 1952ம் ஆண்டில் 57% ஆகவும், 1960ம் ஆண்டில் 66% ஆகவும் கூடி யது. 1939ம் ஆண்டில் அரசாங்க பட்ஜட்டில் கிறிஸ்தவ பாட சாலைகளுக்கு 75.2% வீதம் நிதி ஒதுக்கீடு வழங்கப்பட்ட அதே வேளையில், பெளத்த பாடசாலைகளுக்கு 19.3% வீதமே ஒதுக் கப்பட்டது. நூற்றுக்கு 71 சதவீதமிருந்த பெளத்த மக்களுக்கு அவர்களுடைய சனத்தொகை எண்ணிக்கையின்படி நிதி ஒதுக் கீடு செய்யப்பட வேண்டுமென்பது நியாயமானதே. சர்வகலா சாலையில் கூட, 1943ம் ஆண்டுக்கும் 1945ம் ஆண்டுக்கு மிடையே சர்வகலாசாலையிலிருந்த மாணவர்களில் கிறிஸ்தவர் களே அதிகமாக இருந்தனர் என்று சுட்டிக் காட்டப்பட்டது. அகில இலங்கை பெளத்த சம்மேளனம், இந்நாட்டின் பெரும் பான்மைச் சமூகமான சிங்கள- பெளத்தர்களுக்குக் கல்வியில் இழைக்கப்பட்டு வந்த இந்த அநீதியை அன்றைய அரசாங்கத் திடம் எடுத்துக்காட்டியது. அரசாங்கத்திலும், அரசாங்க உயர் பதவிகளிலும், கிறிஸ்தவர் களின் செல்வாக்கு அதிகமாக இருந்த காரணத்தினால், அன்றைய அரசாங்கம் இதைத் தட்டிக் கழித்தது. 1956ம் ஆண்டில் பெளத்தர்களுக்குச் சாதகமான

353 ஒரு சிறுபான்மை சமுகத்தின் பிரச்சினைகள் IV
அரசாங்கம் ஏற்பட்டபோது, பெளத்தர்களின் அரசியல் செல்வாக்கு அதிகரித்தது. வித்தியோதய, வித்தியாலங்கார சர்வ கலாசாலைகள் தோன்றிய பின் நாம் இதைக் காண்கிறோம். பொதுக்கல்வியில் சிறிஸ்தவர்களின் ஆதிக்கம் அதிகமாக இருந்த காரணத்தினால் பெளத்த அறிஞர்களும் கல்விமான் களும் தேசியக்கல்வி என்ற ஒரு கோஷத்தை எழுப்பினர். பின் வரும் அட்டவணை கல்வி அறிவில் கிறிஸ்தவர்களின் ஆதிக்கத் தைக் காட்டுகிறது."
எழுத்தறிவிலும், ஆங்கில எழுத்தறிவிலும், ஏனைய சமூ கங்களை விட கிறிஸ்தவர்கள், எவ்வளவு முன்னேற்ற மடைந் திருந்தார்கள் என்பதை மேலே உள்ள இவ்வட்டவணை காட்டு கிறது.
கல்வியில் கிறிஸ்தவர்களுக்கிருந்த ஆதிக்கத்தை உடைப் பதற்காகவே "தேசியக் கல்வித் திட்டம்' என்ற ஒரு திட்டத்தை பெளத்த கல்விமான்கள் கொண்டு வந்தனர். கல்வியிலிருந்த இந்த வர்க்க ஆதிக்கத்தை இத்திட்டம் உடைக்கும் என்ற காரணத்தினால், இடதுசாரிக் கட்சிகளும் இதை ஆதரித்தனர். முற்போக்கு சக்திகளின் இந்த ஆதரவு, பெளத்தர்களின் கையை ஒங்கச் செய்ததுடன், கிறிஸ்தவர்களைத் தனிமைப்படுத்தியது. 1956ம் 1959ம் ஆண்டுகளுக்கிடையே ஏற்பட்ட மொழிப் போராட்டம் இத்திட்டத்தைப் பின்தள்ளியது. 1960 ஆம் ஆண்டில் தோன்றிய சிறிமாவோ பண்டாரநாயக்க அரசாங்கம், இத்தேசிய கல்வித் திட்டத்தை அமுலாக்கும் நோக்கத்துடன், தனியார் பாடசாலைகளை, அரசாங்க மயமாக்கியது. உண்மை யில் இது, கிறிஸ்தவர்களின் கல்வி ஆதிக்கத்தை உடைப்பதற் காக எடுக்கப்பட்ட ஒரு திட்டம். 'பாடசாலைகள் அரசாங்க மயமாக்கப்பட்ட பிறகு அரசாங்க நிதி, பெளத்த பாடசாலை களுக்கே அதிகமாக ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனந்தா, நாலந்தா, விசாக்கா, போன்ற பாடசாலைகள் அபரிமிதமாக வளர்ந்தன. சிறுபான்மையின மக்கள் அதிகமாக இருக்கும் பாடசாலைகள் மாற்றாந்தாய் குழந்தைகளைப் போன்ற

Page 191
அ. முகம்மது சமிம் 3.54
நிலைக்கு ஆளாக்கப்பட்டன. தாய்மொழிக் கல்வியும் அமுலில் இருந்த காரணத்தினால் இவ்விரண்டும் சேர்ந்து பெளத்தர்களின் ஆதிக்கத்தை இன்னும் வளர்த்தது. இதன் தாக்கத்தை நாம் சர்வகலாசாலை அனுமதி வீதத்தில் காணலாம். ஆரம்பத்தில் இவர்களின் செல்வாக்கு கலைப் பாடங்களில் மாத்திரமே இருப்பதைக் காணலாம். 1970ம் ஆண்டில் கூட, சர்வகலாசாலை அனுமதியில் கிறிஸ்தவர்களின் செல்வாக்கு குறையவில்லை. கிறிஸ்தவர்களில் ஒரு கணிசமான அளவு தமிழ் பேசும் மக்கள் அடங்குவர் என்பது குறிப்பிடத் தக்கது."
°1970ம் ஆண்டின் சர்வகலாசாலை அனுமதி - வீதாசாரம்
கல்வித் பெளத் இந்துக் கிறிஸ்த முஸ்லிம் ஏனை துறை தர்கள் கள் வர்கள் கள் யோர் விஞ்ஞானம்
(பெளதிகம்,
உயிரியல்) 58.8 23.3 15. 7 1.8 0.4 பொறியியல் 43.4 32.9 21.7 2.0 - மருத்துவம் 46. 1 31.5 9.8 2.4 - பல் மருத்
துவம் 41.4 51.2 4.9 2.5 - விவசாயம் 53. 6 27.9 13.9 4.6 - விலங்கு
மருத்துவம் 66.6 23.8 4。8 4。8 - கலையியல்
பாடங்கள் 86.4 5.9 4.4 3.3 -
சட்டம் 37.4 27.1 22.9 10.4 2. l. 1960ம் ஆண்டில்
மாணவர்களின்
தொகை 55.9 20. 9 21.0 1.9 0.3 1965
மானவர்களின்
தொகை 71.0 15.0 II. 9 2.0 0.

355 ஒரு சிறுபான்மை சமூகத்தின் பிரச்சினைகள் IV
இலங்கையின் சனத்தொகையில் 7.5 ஆக இருக்கும் முஸ்லிம்கள், மேலே உள்ள அட்டவணையின்படி, சர்வகலா சாலைக் கல்வியில் எத்தகைய கீழ் நிலையில் இருக்கின்றனர் என் பது தெளிவாகிறது கிறிஸ்தவர்களினதும் இந்துக்களினதும் எண்ணிக்கையைக் குறைந்தும், பெளத்தர்களின் எண்ணிக்கை வளர்ந்தும் வருவதை 1960ம் ஆண்டிலும், 1965ம் ஆண்டிலும், சர்வகலாசலை அனுமதிபெற்ற மாணவர்களின் எண்ணிக்கையி லிருந்து நாம் அறியலாம். 1965ம் ஆண்டில் சர்வகலாசாலைக்கு அனுமதி பெற்ற மாணவர்களின் எண்ணிக்கையில் ஏற்பட்ட மாற்றத்திற்கு, 1960ம் ஆண்டில் தனியார் பாட சாலைகள் அரசாங்கமயமாக்கப்பட்டதன் விளைவு ஒரு முக்கிய காரண மாக அமைகிறது. சர்வகலாசாலைக்கு பெளத்த மாணவர்கள் அதிகமாக அனுமதி பெற்றதையும், மேலே உள்ள அட்டவணை காட்டுகிறது. சர்வகலாசாலைகளின் கலைத்துறை சிங்கள-தமிழ் மொழியாக்கப்பட்டதன் காரணமாக, குறிப்பாகக் கலைத் துறைப் பாடங்களுக்குக் கிராமப்புற சிங்கள பெளத்த மாணவர் கள் அதிகமாகத் தெரிவு செய்யப்படுவதைக் காணலாம். 1960ம் ஆண்டில் 55.9% வீதமாக இருந்த பெளத்த மாணவர்கள், 1965ம் ஆண்டில் 71% வீதமாக அதிகரித்ததை அவதானிக்கலாம்.
பொதுக்கல்வியில் ஏற்பட்ட மாற்றத்தை 1950ம், 1960ம் ஆண்டுகளுக்கிடையில், 9ம் வகுப்பிலிருந்து 12ம் வகுப்பு வரையிலுமுள்ள மாணவர்களின் எண்ணிக்கை, 65,000லிருந்து 225,000ஆக அதிகரித்திலிருந்து நாம் காணலாம். சர்வகலா சாலை அனுமதி கோரும் மாணவர்களின் எண்ணிக்கை, 1960ம் ஆண்டில் 5277 ஆக இருந்தது, 1969/70 ஆண்டில் 30,445 ஆக அதிகரிப்பதைக் காணலாம். ஆனால் சர்வகலாசாலைகளில் இருக்கும் ஆசனங்கள், இந்த அளவு அதிகரிக்கவில்லை. 1960ம் ஆண்டில் 1812 இடங்கள் இருந்தன. 1969/70ல் 3451 ஆகக் கூடியது. சர்வகலாசாலை மாணவர்களின் எண்ணிக்கையில் ஏற்பட்ட வளர்ச்சியைப் பின்வரும் அட்டவணை காட்டுகிறது.
(குறிப்பிட்ட சில ஆண்டுகளே ஆய்வுக்கு எடுக்கப்பட்டன.)

Page 192
அ. முகம்மது சமீம் 356
"சர்வகலாசாலை மாணவர்களின் மொத்த எண்ணிக்கை
1942 1956 1959 1960 1961 1965
904 2471 3987 4723 6259 14,367
1979 1982 1983 1986 1987 1988
16,302 18,009 18, 496 19,966 24,668 29, 781
(ஆதார்ம் சிறிலங்காவின் உயர்கல்வி, பொருளியல்போராசிரியர் இந்திரரத்ன)

357 ஒரு சிறுபான்மை சமூகத்தின் பிரச்சினைகள் IV
52. முஸ்லிம்கள் சிங்கள மொழி மூலம் கல்வி கற்றதனால் ஏற்பட்ட விளைவுகள்
பல்லினங்கள் வாழும் ஒரு நாட்டில் எல்லா இனங்களும் சம அந்தஸ்துடன் வாழ்வதுதான் ஜனநாயகம். மேல் நாட்டு ஜன நாயக முறைப்படி, எண்ணிக்கையில் கூடிய இனம்தான் ஆட் சியை நடத்துகின்றது. ஐரோப்பிய நாடுகளில், இனவேறு பாட்டைவிட வர்க்க வேறுபாடுதான் அதிகம். எனவேதான் அங்கே தோன்றிய அரசியல் தத்துவங்கள் இவ்வர்க்க வேறு பாட்டை நீக்குமுகமாகத் தோன்றியவையே. கீழத்தேய நாடு களைப் போல், இனவேறுபாடு அங்கே ஒரு முக்கிய அரசியல் பிரச்சினையாக இருக்கவில்லை. உரோம சாம்ராஜ்யத்தின் வீழ்ச்சிக்குப் பிறகு வடக்கே இருந்து வந்த ஜெர்மானிய இனத்தைச் சேர்ந்த குழுக்கள், தாங்கள் கைப்பற்றி குடியேறிய பிரதேசங்களுக்குத் தங்கள் இனத்தின் பெயரையே வைத்தார் கள். "பிரேங்கஸ்" என்ற கூட்டத்தினர், தாம் குடியேறிய பிரதேசத்திற்கு 'பிரான்ஸ்" என்றும் "ஒஸ்ட்றோ கொத்' என்ற கூட்டத்தினர் "ஒஸ்ட்ரியா", என்றும் 'லொம் பார்ட்ஸ், என்ற இனத்தவர் “லொம் பார்டி என்றும் ‘எங்லோ செக்சன்" என்ப வர்கள் இங்கிலாந்து' என்றும் பெயர் வைத்தார்கள். ஆனால் கீழத்தேய நாடுகளைப் பொறுத்தவரையில், ஒவ்வொரு இனத் திற்கு ஒரு நீண்ட வரலாறு இருக்கிறது. மேல்நாட்டு ஜனநாயக முறையைக் கடைப்பிடிக்கும்போது, எண்ணிக்கையில் அதிக மாக இருக்கும் இனத்தவர்களே ஆட்சியைக் கைப்பற்றும் போது, இந்த இனத்தைச் சேர்ந்தவர்கள், ஆட்சியாளர்களாக வும் ஏனைய சிறுபான்மை இனங்கள், ஆளப்படுபவர்களாகவும் ஆகிவிடுகிறார்கள். இதனால் இனவாதம் தலையெடுக்கிறது. இனத்துவேஷம் வளர்கிறது. வரலாற்றில், இனங்களுக்கி டையே ஏற்பட்ட மோதல்களும், போர்களும், முரண்பாடு களும், முன்வைக்கப்படுகின்றன. இன ரீதியான வரலாறு

Page 193
அ. முகம்மது சமீம் 358 எழுதப்படுகிறது. வரலாற்றில் தமக்கு ஏற்பட்ட அநீதிகளைக் காட்டி, அவைகளுக்குப் பரிகாரம் தேட முயல்கின்றன. இனத் தாலும், மொழியாலும், மதத்தாலும் வேறுபட்ட மக்கள் சம அந்தஸ்துடன் வாழ்வதற்கு அதற்கேற்ப ஒரு ஜனநாயக அமைப்பு முறை உருவாக வேண்டும். சிறுபான்மை இனங் களை அடக்கி ஒடுக்கி, அவர்களுடைய பாரம்பரிய உரிமை களை வழங்காமல், அவர்களை இம்சைபடுத்தும் ஒரு பெரும் பான்மை மக்களைக் கொண்ட ஆட்சியினால் நாட்டில் சமாதா னத்தையும், சமதர்மத்தையும் நிலைநாட்ட முடியாது.
உயர்கல்வியில் தமிழர்சமூகத்துக்கு ஏற்பட்ட அநீதியை முன்னைய அத்தியாயங்களில் விரிவாக எடுத்துரைத்தோம். எல்லாவற்றுக்கும் முத்தாய்ப்பு வைத்தாற்போல் வந்ததுதான் தரப்படுத்தல்' என்ற அநீதி. இனி, முஸ்லிம்களின் உயர்கல்வி என்ன நிலையிலிருக்கிறது என்பதை ஆராய்வோம்.
மூன்றில் இரண்டு பங்கு முஸ்லிம்கள் சிங்களவர் வாழும்பிரதேசத்தில், சிங்கள மக்கள் மத்தியில் சிறு சிறு குடி யேற்றங்களாக வாழ்கிறார்கள். மதத்தையே முக்கியமாகக் கருதிய முஸ்லிம்கள், மதத்தாலும், மொழியாலும் வேறுபட்ட சிங்கள-பெளத்தர்கள் மத்தியில் வாழ்ந்து வந்தாலும் தம்மு டைய மதத்தை மதத்தின் அடிப்படையாகத் தோன்றிய கலாசா ரத்தையும் ஆயிரம் வருடங்களுக்குமேல் பேணிப் பாதுகாத்தே வந்தார்கள். தம்முடைய சிறார்களுக்கு மதக்கல்வியையும், இஸ்லாமிய பண்பாட்டு நெறிகளையும் புகட்டுவதற்காக மக்தாப்களையும், மத்ரசாக்களையும் நிறுவி, அதன்மூலம், இஸ்லாத்தையும், தம்முடைய பாரம்பரிய மரபையும் பாதுகாத் தார்கள். மதம் சார்பற்ற கல்வியில் அவர்கள் அக்கறை காட்ட வில்லை. பத் தொன்பதாம் நூற்றாண்டில், சிங்க ள, தமிழ் சமூகங்கள் கிறிஸ்தவ மிஷனரிமார்களால் நடாத்தப்பட்ட கிறிஸ்தவ பாடசாலைகளில் சேர்ந்து ஆங்கிலம் கற்றார்கள். கிறிஸ்தவ பாடசாலைகளில், கிறிஸ்தவ சமயமும் புகட்டப் பட்டதால் பெளத்தர்களும், இந்துக்களும் கிறிஸ்தவ சமயத்

359 ஒரு சிறுபான்மை சமூகத்தின் பிரச்சினைகள் IV
தைத் தழுவினார்கள். கிறிஸ்தவர்களின் இந்த நோக்கத்தை அறிந்த முஸ்லிம்கள், ஆங்கிலக் கல்வியையே கற்க விரும்ப வில்லை. அன்றைய ஆட்சி, ஆங்கிலேயரின் கையில் இருந்த தால், ஏனைய சமூகங்கள், இக்கல்வியினால் பயன் பெற்று அரசாங்கத்தில் உயர் பதவிகளை வகிக்கத் தொடங்கினார்கள்.
கிறிஸ்தவர்களின் நோக்கத்தை அறிந்த சில பெளத்த, இந்துத் தலைவர்கள், கிறிஸ்தவ கல்விநிலையங்களை எதிர்த்த தோடு இம்மக்கள் மத்தியில் மறுமலர்ச்சி இயக்கம் தோன்று வதற்குக் காரணமாயமைந்தார்கள். தம்முடைய சமயத்தவர் களின் கல்விக்காகப் பாடசாலைகளை நிறுவினார்கள். 19ம் நூற்றாண்டு இறுதியில் தான் முஸ்லிம்களிடையே ஒரு விழிப் புணர்ச்சி தோன்றியது. ஆங்கிலக் கல்வியென்பது கிறிஸ்தவக் கல்வி அல்ல, என்று சில முஸ்லிம் தலைவர்கள் தம்மக்களி டையே எடுத்துரைத்தார்கள். எனவேதான், ஆங்கிலக் கல்வி புகட்டுவதற்காக, இஸ்லாமிய சூழலில், கல்வி கற்பதற்காக, தமக்கே பிரத்தியேகமான பாடசாலைகளை நிறுவினார்கள். இவ்வாங்கிலப் பாடசாலைகளில் கல்விக் கட்டணம் இருந்த காரணத்தினால், உயர்வர்க்கத்தைச் சேர்ந்தவர்களே இதனால் பயன் பெற்றார்கள். சிங்களம், தமிழ், முஸ்லிம் என்ற பாகுபாடில்லாமல் எல்லா சமூகங்களிலுமுள்ள உயர்வர்க்கமே இக்கல்வியினால் நன்மையடைந்தது.
கீழ் மட்டத்திலுள்ளவர்களது கல்வி வளர்ச்சிக்காக அரசாங்கம், அவர்களது தாய்மொழிகளில், கல்வி நிலையங் களை ஸ்தாபித்தது. இவைகள்தான் வர்னகியுலர் பாடசாலை கள் என்று பெயர்பெற்றன. முஸ்லிம்கள் தமிழ் மொழியைத் தாய்மொழியாகப் பேசிய காரணத்தினால், தமிழ்மொழிப் பாட சாலைகளில் சேர்ந்து கல்வி கற்றார்கள். ஆனால் இஸ்லாமிய சூழல் இல்லாத காரணத்தால், 'முஸ்லிம் பாடசாலைகள்' வேண்டுமென்ற கோரிக்கையை முன்வைத்தார்கள். நூறுவீதம் முஸ்லிம் மாணவர்கள் இருக்கும் பாடசாலைகள் முஸ்லிம் பாடசாலைகள் எனப் பெயர் பெற்றன. முஸ்லிம் ஆசிரியப்

Page 194
அ. முகம்மது சமீம் 360 பயிற்சிக்கல்லூரியின் ஸ்தாபனத்திற்குப் பிறகு முஸ்லிம் பாடசாலைகளுக்கு முஸ்லிம் ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டார் கள். முஸ்லிம் பெண்கள் ஆசிரியப் பயிற்சிக்கல்லூரி நிறுவப் பட்டதன்பிறகு பயிற்சி பெற்ற முஸ்லிம் பெண்களும் முஸ் லிம் பாடசாலைகளுக்கு நியமிக்கப்பட்டார்கள். பெரும்பாலும் முஸ்லிம் பாடசாலைகள் கலவன் பாடசாலைகளைாகவே இருந்தன. தமிழ் பாடசாலைகளில், முஸ்லிம் மாணவர்கள் பெரும்பான்மையாக இருந்தாலும் அவை, தமிழ் பாடசாலை களாகவே கணிக்கப்பட்டு வந்தன. இந்த நிலையை மாற்றி தஹநாயக்கா கல்வி அமைச்சராயிருந்த காலத்தில், 51% வீதமாக முஸ்லிம் மாணவர்கள் கல்விகற்கும் பாடசாலைகள் 'முஸ்லிம் பாடசாலைகளாகக் கணிக்கப்படும், என்று அவர் கட்டளை பிறப்பித்தார். ஆகவே தமிழ் பாடசாலைகளில், ஒரு பகுதி, தமிழர் பாடசாலைகளாகவும் மற்றைய பகுதி முஸ்லிம் பாட சாலைகளாகவும் விளங்கின.
முஸ்லிம் பாடசாலைகள் ஏன் தமிழ் மொழியின் மூலம் கற்பிக்கப்படும் பாடசாலைகளாக வளர்ந்தன என்பது ஆராய்ச் சிக்குரிய விஷயம். சிங்கள மொழியில் ஏன் முஸ்லிம் பாட சாலைகள் வளரவில்லை ? என்பது ஒரு முக்கியமான கேள்வி. நாம் ஏற்கனவே கூறியது போல், முஸ்லிம்கள் மதத்திற்குத் தான் முதலிடம் கொடுத்தார்கள். சிங்கள மொழியில் முஸ்லிம்கள் ஏன் கல்விகற்கவில்லை என்பதும் ஒரு முக்கியமான கேள்வி. எட்டாம் நூற்றாண்டில் இலங்கையில் குடியேறிய முஸ்லிம்கள் ஆயிரம் வருடங்களுக்கு மேலாக சிங்கள மக்கள் மத்தியில் வாழ்ந்த போதிலும் தமது மதத்தையும், கலாசாரத்தையும் பாதுகாத்தார்களென்றால், அதற்கு ஒரு முக்கிய காரணம் இருக்க வேண்டும். அவர்கள் தமிழைத்தாய்மொழியாகக் கொண்ட காரணத்தினாற்றான், தமது மதத்தையும கலாசாரத் தையும் அவர்களால் பாதுகாக்க முடிந்தது. பதினான்காம் நூற்றாண்டு தொடக்கம், தென்னிந்திய முஸ்லிம்கள், தமிழின்மூலம் மதத்தைப் பாதுகாத்துவந்தார்கள்.

36 ஒரு சிறுபான்மை சமூகத்தின் பிரச்சினைகள் IV
குர்ஆனுக்குத் தமிழில் விளக்கம் கூறியும், அரபு இலக் கியங்களைத் தமிழில் எழுதியும் வந்த காரணத்தினால், இஸ் லாம் பாதுகாக்கப் பட்டு வந்தது. தென்னிந்தியாவிலிருந்து இலங்கை வந்த ஆலிம்களும், மார்க்க அறிஞர்களும், இலங்கை முஸ்லிம்களின் இஸ்லாமிய அறிவை வளர்த்ததோடு இஸ்லா மிய உணர்வுமங்கிவிடாமல் செய்தார்கள். ஆனால் இலங்கை யில் 'தனிச் சிங்களம் மாத்திரம் அரசாங்க மொழியாக என்று மாறியதோ அன்றே இலங்கை முஸ்லிம்களிடையே மொழி அடிப்படையில் பிளவு ஏற்பட்டது. ஒரு வேற்று மொழியை நாம் கற்கும்போது, அம்மொழியின் கலாசாரமும், எமக்குத் தெரியாமலேயே, எம்மில் ஊறி விடுகிறது. டாகபாக்களிலும் பன்சாலைகளிலும், பெளத்த பிக்குகளால் வளர்க்கப்பட்ட சிங்கள மொழி பெளத்த மதப் பண்புகளைக் கொண்டிருந்தது. இறை நம்பிக்கையில்லாத இம்மதத்தவர்களின் சமயக் கருத்துக் களும் முஸ்லிம் இளம் உள்ளங்களில் புகுந்து அவர்களது இஸ்லாமிய அறிவு வளரவிடாமல் தடுத்தது. அரசாங்க பதவி களுக்கும், கல்வி வசதிகளைப் பெறுவதற்கும் ஆசைப்பட்டு, முஸ்லிம்கள் தம் மதத்தை இழக்கவும் தயங்கவில்லை. சிங்கள மொழி மூலம் கல்விகற்ற முஸ்லிம்கள் தமது மதத்தை இழந்த தோடு, அரசாங்கப் பதவிகளையும் உயர் கல்வியையும் பெற் றார்களாவென்றால், அதுதான் இல்லை. நாம் முன்னைய அத்தி யாயமொன்றில் கூறியதுபோல ஏறக்குறைய 15% வீதம் சிங்கள மொழியில் கல்வி கற்று வருகிறார்கள். சிங்கள மொழியில் கல்வி கற்றவர்கள் எத்தனை பேர் சர்வகலாசாலையில் சேர்ந்து உயர்கல்வியைப் பெறுகிறார்கள் என்பது ஆராயப்பட வேண்டியதொன்று.
1984/85ம் ஆண்டிலும் 90/91ம் ஆண்டிலும் சர்வகலாசாலை அனுமதி பெற்ற முஸ்லிம் மாணவர்களின் எண்ணிக்கையை ஆராய்ந்தால் இதனை ஒரு வாறு அறியலாம்."

Page 195
அ. முகம்மது சமீம் 362
1984/85ம் ஆண்டிலும் 1990/91 ஆண்டிலும் சர்வகலாசாலைக்கு அனுமதி பெற்ற முஸ்லிம் மாணவர் களின் எண்ணிக்கை
&#ff6) 1356) T&T 600 6\) 1984/85 1990/91
கொழும்பு 27 160
பேராதெனிய 190 262
ஜயவர்தனபுர O7 O8
களனி O2 O7
மொறட்டுவ O8 I 7
யாழ்ப்பாணம் 44 O2
உறுகுணை 09 O2
கிழக்கு 18 O9
ருகுண, களனி, ஜயவர்தனபுர சர்வ கலாசாலைகள் பெரும்பாலும் சிங்கள மொழியிலேயே கல்வி புகட்டுகின்றன. முஸ்லிம் மாணவர்களில் அதிகமானோர் கலை, வர்த்தகம் போன்ற துறைகளுக்கே அனுமதி பெறுவதனால், நாம் ஒரளவு, இவர்களின் மொழியை ஊகிக்கலாம். 1984ம் ஆண்டில் 305 மாணவர்களும், 1990ம் ஆண்டில் 465 மாணவர்களும் அனுமதி பெற்ற போது, இம்மூன்று சர்வகலாசாலைகளுக்கும் 16 பேரும், 17 பேருமே அனுமதி பெற்றிருக்கிறார்கள். இவை முஸ்லிம் மாணவர் தொகையில் 5% வீதமும் 4% வீதமுமாகவே இருக்கின்றனர். சிங்கள மொழியில் கல்வி கற்கும் முஸ்லிம் மாணவர்களில் எத்தனைபேர் சர்வகலாசாலை அனுமதி பெற்றி ருக்கின்றனர் என்பதை நாம் கீழே உள்ள அட்டவணையி லிருந்து ஒரளவு அனுமானிக்கிலாம்."

363 6 (Ib é O J FT GOT 60) LO FELJE, 5 #36b; || 3 || # # 6N 6OT 3, 6:1 || V
*மாவட்ட ரீதியாக, சர்வகலாசாலைக்கு அனுமதி பெற்ற முஸ்லிம் மாணவர்களின் எண்ணிக்கையும், சிங்களமொழி மூலம் சிங்களபாட சாலைகளில் கல்வி கற்கும் முஸ்லிம் மாணவர்களின் வீதாசாரமும், சர்வகலாசாலை அனுமதி
1983 1992 சிங்கள மொழியில éfrÉJ 956mT u_ITU gFFT60)6\)
களில் கல்விகற்கும் முஸ்லிம்மாணவர்கள்90
கொழும்பு 21 37 49.8 கம்பஹ 11 14 26.5 களுத்துறை 13 12 11.5 கண்டி 2 I 62 15.1 மாத்தளை 06 22 6.6 நுவரெலிய 05 O6 30. 7 O3 IO 59.9
மாத்தறை () 7 O 6 12.4 ஹம்பந்தோட்டை O2 O5 39.6 யாழ்ப்பாணம் O4. 04 - கிளிநொச்சி - ബ -
13 O -
முல்லைத்தீவு - - வவுனியா - O I - மட்டக்களப்பு 2 7 - அம்பாறை 91 I 63 0.3 திருகோணமலை 21 23 0.5 குருநாகலை 五3 3 () 11.2 புத்தளம் . 12 I 3.0 அனுராதபுரம் O5 O 9 2.5 பொலன்னறுவை () | O 4 1.3 பதுளை ()6 27. A GLCT STUTಿ, ಹಾಸ) ೧೨ - 97
ரத்தினபுரி ()3 32.7
கேகாலை 19 1. 3 6.4

Page 196
அ. முகம்மது சமிம் - 36 A.
1992ம் ஆண்டில் சிங்கள மொழியில் கல்விகற்காத தமிழ்ப் பிரதேசங்களிலிருந்து மாத்திரம், 244 முஸ்லிம் மாண வர்கள் அனுமதி பெற்றிருந்தனர்.
சிங்கள மொழியில் கூடுதலான வீதாசாரத்தைக் கொண்ட பிரதேசங்க ளான, நுவரெலிய, காலி, ஹம்பாந்தோட்டை, பதுளை, மொனராகலை, இரத்தினபுரி ஆகிய இவ்வாறு மாவட் டங்களிலிருந்து சர்வகலாசாலைகளுக்கு 30 முஸ்லிம் மாணவர்களே அனுமதி பெற்றிருக்கிறார்கள். இம் மாவட்டங் களிலும்கூட, தமிழ்மொழியில் சிறந்து விளங்குகின்ற முஸ்லிம் மகாவித்தியால யங்கள் இருக்கின்றன என்பதை நாம் மறந்து விடக்கூடாது. ரத்தினபுரியில், பலாங்கொடை முஸ்லிம் மகா வித்தியாலயம், நுவரெலியாவில், ஹரக்கமகந்த முஸ்லிம் மகா வித்தியாலயம், ஹம்பாந்தோட்டையில், தங்கல்லை மு. ம. வி. பதுளையில் அல்-அதான் மு. ம. வி, போன்ற தமிழ் மொழி மூலம் கற்கும் முஸ்லிம் மாணவர்களில், ஒரு கணிசமான அளவு சர்வகலாசாலைகளுக்கு அனுமதி பெறுகிறார்கள் என்பதை நாம் மறக்கலாகாது. ஆகவே, இப்பாட சாலைகளின் புள்ளி விபரங்களையும் எடுத்தால், சிங்களமொழி மூலம் கல்விகற்கும் மாணவர்கள் ஒரு சிறு தொகையினரே சர்வகலாசாலைக்கு அனுமதி பெறுகிறார்கள் என்பது புலனாகும். கம்பஹ மாவட்டத்தில், பெரியமுல்லர மு. ம. வி, அத்தனகல்லையில், திஹாரிய மு.ம.வித்தையும் நாம் மறக்க முடியாது. கொழும்பு மாவட்டம் இதற்கு விதிவிலக்கு, கொழும்பு மாநகரிலுள்ள பெரும் பாடசாலைகளான, றோயல் கல்லுரரி டி. எஸ். சேனா நாயக்கா, ம.ம.வி. போன்ற கல்விநிலையங்களில், முஸ்லிம் மாணவர்கள் இரு மொழிகளிலும் கல்வி கற்கிறார்கள், 37 மாணவர்கள், கொழும்பு மாவட்டத்திலிருந்து சர்வகலா சாலைக்கு அனுமதி பெற்றார் களென்றால், ஒரு கணிசமான அளவு தமிழ் மொழியில் கல்வி கற்கும் மாணவர்களும் இத் தொகையில் அடங்குவர். கொழும்பு சாகிராக் கல்லூரியை யும், பம்பலப்பிட்டி முஸ்லிம் மகளிர் மகாவித்தியாலயத்தை யும் தாம் அடக்கலாம். எனவே சிங்கள மொழி மூலம் கல்வி

365 ஒரு சிறுபான்மை சமூகத்தின் பிரச்சினைகள் IV
கற்கும் முஸ்லிம் மாணவர்களில் அநேகம் பேர் சர்வகலாசா லையை எட்டிக் கூடப்பார்த்ததில்லை. ஆனால் இதில் விசித் திரம் என்னவென்றால் சிங்கள மொழியைத் தாய்மொழியாக வீட்டு மொழியாகச் சில முஸ்லிம் குடும்பங்கள் ஏற்றதுதான் விந்தையிலும் விந்தை. சிங்கள மொழியில் வீட்டில் பேசுவதை சிலர் பெருமையாக நினைக்கின்றனர். ஆட்சியாளர்களின் மொழியல்லவா? பெருமைப்படத்தானே வேண்டும். மதத்தைத் தான் இழந்துவிட்டோம் தனித்துவத்தையுமா இழக்க வேண் டும்? 'நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த நிலைகெட்ட மாந் தரை நினைந்துவிட்டால்'

Page 197
அ. முகம்மது சமீம் 366
ਹੈ ਤੇ ਸਤਯ ਫGuਤ036
வளர்ச்சியும் சிறுபான்மையின மக்களுக்கு ஏற்பட்ட அநீதியும்
1942ம் ஆண்டு தொடக்கம் 1994ம் ஆண்டு வரையுமுள்ள காலப்பகுதியில், சர்வகலாசாலை கல்வியில் பாரிய மாற்றம் ஏற்பட்டது. ஒரு சர்வகலாசாலையாக இருந்து, எட்டு சர்வகலா சாலைகளாகப் பெருகியதோடு, ஒரு திறந்த வெளி சர்வகலா சாலையும் நாற்பதுக்கு மேற்பட்ட உயர்கல்வி நிலையங்களும் ஸ்தாபிக்கப்பட்டன. சர்வ கலாசாலைகளுடன் இணைந்த கல்லூரிகளும் 1990ம் ஆண்டுக்குப் பிறகு நிறுவப்பட்டன. 1942ம் ஆண்டில் 904 ஆக இருந்த சர்வகலாசாலை மாணவர் களின் எண்ணிக்கை 1988/89 ஆண்டில் 29, 781 ஆகப் பெரு கியது. 16 மில்லியன் மக்களுக்கு 8 சர்வகலாசாலைகள் என்ற அடிப்படையில் பார்த்தால் ஒரு மில்லியன் மக்களுக்கு ஒரு சர்வ கலாசாலை என்று கணக்கிடலாம். 2000ம் வருடத்தில் இலங்கை பயின் சனத்தொகை 2) (ஸ் லியனாகப் பெருகும், என்ற கணக் குப் படி இன்னும் 2 பல்கலைக் கழகங்கள் இலங்கைக்குத் தேவைப்படுகிறது. அனுராதபுரியிலும், தென்கிழக்கு இலங் கையிலும் இவ்விரு சர்வகலாசாலைகளும் நிறுவப்பட்டிருக் கின்றன. முஸ்லிம்கள் அதிகமாக வாழும் பிரதேசமாகிய தென்கிழக்கு இலங்கையில் இப்பல்கலைக்கழகம் நிறுவப்பட் டிருப்பதால் இது முஸ்லிம் களுக்கு ஒரு வரப்பிரசாதமாக அமை u LD.
1942ம் ஆண்டில் இலங்கை சர்வகலாசாலை ஸ்தாபிக்கப் பட்டபோது, அது ஒரு சுதந்திரஸ்தாபன மாகத்தான் நிறுவப் பட்டது. ஆனால் 1966ம் ஆண்டு உயர்கல்வி சட்டத்தின்பின் சர்வகலாசாலைக் கல்வி அரசாங்கத்தின் தலையீட்டுக்கு உள்ளா கியது. தேசிய உயர்கல்வி மன்றம் என்ற ஒர் அமைப்பின் கீழ் சர்வகலாசாலைகள் இயங்கும் " என்று இச்சட்டம் கூறினாலும் உண்மையில் சர்வகலாசாலைகள் கல்வி அமைச்சரின் நேரடி

ஒரு சிறுபான்மை gfup&#; #, #sör Lil PY {} #l60) 6ÜI 5, 617 | V
தலையீட்டுக்கு இலக்காகின. இவ்வாண்டுக்குப்பிறகு சர்வகலா சாலைகளுக்கு நியமிக்கப் பட்ட உபவேந்தர்கள். கல்வி அமைச் சரினாலேயே நியமிக்கப்பட்டனர். கல்வி அமைச்சின் உயர்அதி காரிகள் சர்வகலாசாலை செயலாளர்களாக நியமிக்கப்பட்டனர். அரசாங்கங்களின் அரசியல் கொள்கைக்கேற்ப சர்வ கலா சாலைகளின் இயல்பும் மாறத் தொடங்கின. 1972ம் ஆண்டு சர்வகலாசாலைச் சட்டம் சர்வகலாசாலைகளின் சுதந்திரத்தைக் குறைத்து அரசாங்கத்தின் நேரடி அதிகாரத்தின் கீழ் கொண்டு வந்தது. பேராசிரியர்கள் பெயரளவில் பேராசிரியர்களாக இருந்தார்களேயொழிய, அரசாங்க உத்தியோகத்தர்களாகவே இயங்கினார்கள். கல்வி அமைச்சரின் நிர்வாகத்தின் கீழ் சர்வ கலாசாலைகள் இயங்கத் தொடங்கின.
சர்வகலாசாலை நிர்வாக உத்தியோகத்தர்கள் எல்லா மட்டங்களிலும் அமைச்சரினால் நியமிக்கப்பட்டனர். நான்கு சர்வகலாசாலைகளும் ஒரு சர்வகலாசாலையின் கீழ் இயங்கும் வளாகங்களாக இயங்கின. 1977ம் ஆண்டில் அரசாங் ஏ, மாற்றத்துடன் திரும்பவும் சர்வகலாசாலைகள் தனித்தனியே இயங்கத் தொடங்கின. 1978ம் ஆண்டு சர்வ கலாசாலைச் சட்டம், "சர்வகலாசாலை மான்ய ஆணைக் , ழ என்ற ஒரு குழுவை நியமித்து, அதன்மூலம், சர்வகலாசாலைகளின் நிதி, நிர்வாகம் போன்றவைகளை அதன் பொறுப்பில் விட்டது. 1985ம் ஆண்டில் அமுலுக்குக் கொண்டு வரப்பட்ட திருத்தச் சட்டம், திரும் பவும் சர்வகலாசலைகளை அரசாங்கத்தின் மறைமுக நிர்வாகத்தின் கீழ் கொண்டு வந்தது. சர்வகலாசாலை நீதிமன்றம் ஒழிக்கப்பட்டது. உபவேந்தர்கள் ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டனர். ஆனால் சர்வகலாசாலைகளின் நிர்வாகம் 'சர்வ கலாசாலை மான்யக்குழுவின் கையில் விடப்பட்டது.
சர்வகலாசாலைகளின் நிர்வாகம் அரசாங்கத்தின் அதிகாரத் தின் கீழ் கொண்டு வரப்பட்ட பிறகு, பெரும்பான்மை இனத் தைக் கொண்ட இவ்வரசாங்கங்கள், இவ்வினத்தின் நன்மைக் காகவே இந்நாட்டின் உயர்கல் விக் கொள்கையையும்

Page 198
அ. முகம்மது சமீம்
368 அமைத்தது. அரசாங்கத்தின் இனவாதக் கொள்கையும் இதில் பிரதிபலித்தது. தரப்படுத்தல்' என்ற ஒரு திட்டத்தின் மூலம், தமிழர்களின் உயர்கல்வி பெரிதும் பாதிக்கப்பட்டது. தமிழ் மாணவர்கள் சர்வகலாசாலைக்கு அதிகமாகத் தெரிவு செய்யப் பட்டதால், அதுவும், மருத்துவம், பொறியியல் போன்ற துறைக ளில் அவர்கள் முன்னணியில் நின்றதால், இவர்களுடைய எண்ணிக்கையைக் குறைத்து, கிராமப்புற மாணவர்களின் எண்ணிக்கையைக் கூட்டுதற்கு சிங்கள அரசாங்கம், "தரப் படுத்தல்', 'மாவட்ட வீதம் போன்ற திட்டங்களை அமுலில் கொண்டு வந்தது. இதனால், சர்வகலாசாலைகளின் கல்வித்தரம் பெரிதும் பாதிக்கப்பட்டது. யாழப்பாணத்துத் தமிழ் மாணவர் களும், நகரப்புற மாணவர்களும் அதிக புள்ளிகளைப் பெற்றிருந்தாலும், அவர்களுக்குப் பல்கலைக்கழக அனுமதி கிடைக்கவில்லை. அதே வேளையில் குறைந்த புள்ளிகளைப் பெற்ற கிராமப்புற மாணவர்களுக்கு அனமதி வழங்கப்பட்டது. சர்வகலாசாலைக் கல்வித்தரம் இதனால் பாதிக்கப்பட்டது. தகுதியுடையவர்கள் நிராகரிக்கப்பட்டார்கள். தகுதியில்லாதவர் கள் தெரிவு செய்யப்பட்டார்கள். சுதந்திரமாக இயங்க வேண் டிய உயர்கல்வி, இனவாதம் என்ற சுழிக்குள் மூழ்கியது.
கீழே உள்ள அட்டவணை, அதிக புள்ளிகளைப் பெற்ற மாணவர்களை நிராகரித்து குறைந்த புள்ளிகளைப் பெற்ற மாணவர்களுக்கு அனுமதி வழங்கியதைத் தெளிவாகக் காட்டுகிறது."

369 ஒரு சிறுபான்மை சமூகத்தின் பிரச்சினைகள் IV
'சர்வகலாசாலை அனுமதி
கல்வித்துறை மாணவர்கள் அனுமதி அனுமதி
பெற்ற அதிக பெற்ற கிடைக்காத புள்ளிகள் மாணவர் மாணவர்கள்
கள் பெற்ற பெற்ற அதிக புள்ளிகள்
மருத்துவம் 353 199 279 பல்மருத்துவம் 279 196 275 விலங்கு மருத்துவம் 278 195 271 விவசாயம் 283 193 262 உயிரியல் விஞ்ஞானம் 279 182 248 பொறியியல் 376 185 272 கட்டடக்கலை 270 190 224 பெளதீக விஞ்ஞானம் 315 180 219 நிர்வாகக் கல்வி 327 220 263 வர்த்தகம் 274 2O3 247 சட்டம் 340 193 257
Ꮽ56ᏡᎧuᏪ 322 214 238
(ஆதாரம் சர்வகலாசாலை மான்யக்குழு திட்டமிடல்
ஆராய்ச்சிப்பகுதி)
மேலே உள்ள அட்டவணை க.பொ.த. (உயர்தரம்) பரீட்சையில் அதிகமாகப் புள்ளி பெற்ற மாணவர்கள் எப்படி வஞ்சிக்கப்பட்டார்கள் என்பதைக் காட்டகிறது. 279 புள்ளி களைப் பெற்ற ஒரு மருத்துவத்துறை மாணவனுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. ஆனால் 199 புள்ளிகளைப் பெற்ற மாண வனுக்கு மருத்துவத் துறைக்கு அனுமதி வழங்கப்பட்டது. இத்திட்டத்தில் தமிழ் மாணவர்கள்தான் அதிகம் பாதிக்கப் பட்டார்கள் என்ற உண்மையை முன்னைய அத்தியாய மொன்

Page 199
அ. முகம்மது சமிம் 37 C.
றில் விளக்கினோம். சர்வகலாசாலை கல்வியின் தரமும் குறைந் தது. தகுதியில்லாதவர்கள் டாக்டர்களாகினார்கள். தகுதி உள்ள வர்கள் நிராகரிக்கப்பட்டார்கள்.
மேலே உள்ள அட்டவணையோடு அடுத்தப் பக்கத்தில் உள்ள அட்டவணையை ஒப்பிட்டுப் பாருங்கள். மாவட்ட சனத்தொகையின் அடிப்படையில் அனுமதி கிடைக்க வேண்டிய மாணவர்களின் எண்ணிக்கை அரசாங்கத்தின் திட்டத்தினால் எப்படிப் பாதிக்கப்பட்டது என்பதை இந்த அட்டவணை
காட்டுகிறது.'
இந்த அட்டவணையை (11) நுணுக்கமாக ஆராய்ந்தால், தமிழ்ப் பிரதேசங்கள், முக்கியமாக யாழ்ப்பாணம் எப்படி பாதிக்கப்பட்டது என்பது விளங்கும். பரீட்சையின் புள்ளிவிபரங் களின்படி, யாழ்ப்பாணத்திலிருந்து மருத்துவத் துறைக்கு 61 மாணவர்கள் அனுமதி பெற வேண்டிய இடத்தில் 29 பேரே அனுமதி பெற்றனர். அதே போல பொறியியலுக்கும், விஞ்ஞா னக் கல்விக்கும் 56 பேர் தெரிவு செய்யப்பட வேண்டிய இடத்து, 20 பேரே தெரிவு செய்யப்பட்டனர்.
இதனோடு, கண்டி, கேகாலை, இரத்தினபுரி, குருநாக லைப் போன்ற மாவட்டங்களோடு ஒப்பிட்டுப்பார்த்தால் இந் தப் பாரபட்சம் இன்னும் தெளிவாகும்.
இனவாத அரசியலின் செல்வாக்கு உயர்கல் வியில் பிரதிபலித்தது. சுதந்திரமாக இயங்கி வந்த சர்வகலாசாலைகள் அரசாங்கத்தின் அதிகாரத்தின் கீழ் வந்ததன் விளைவாக சிறு பான்மையின மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். சிங்கள பெரும்பாமையினத்தைக் கொண்ட அரசாங்கத்தில் "சிங்களபெளத்த இனவாதிகளின் செல்வாக்கு அதிகரித்த காரணத் தால், தமிழ் முஸ்லிம், மக்களுக்கு உயர்கல்வியில் நீதி கிடைக்க ഖിന്റെ ഞഓ.
முஸ்லிம்களைப் பொறுத்த வரையில், 1942ம் ஆண்டில்

37 ஒரு சிறுபான்மை சமூகத்தின் பிரச்சினைகள் IV
சர்வகலாசாலை மாணவர் எண்ணிக்கையில், 2.8 விதமாக இருந்த முஸ்லிம் மாணவர்கள், 1976ம் ஆண்டில் 2.2 வீதமாகக் குறைந்தனர். 1985ம் ஆண்டுக்குப் பிறகு தான், அனுமதி பெற்ற முஸ்லிம் மாணவர்களின் வீதாசாரம், 6.6% ஆகக்கூடியது. 1989/90 ம் ஆண்டில் அனுமதி பெற்ற முஸ்லிம் மாணவர்களின் வீதாசாரம் 7.1% ஆகக் கூடியது. 1983ம் ஆண்டு இலங்கையில் ஏற்பட்ட சிங்கள தமிழ் கலவரத்திற்குப் பிறகு, தமிழ் மாணவர் களின் கல்வி பெரிதும் பாதிக்கப்பட்டது. தமிழ் மொழியில் கல்வி கற்ற முஸ்லிம்கள் இதனால் பலனடைந்தார்கள். தரப் படுத்தல், யாழ்ப்பாணத்துத் தமிழ் மாணவர்களின் உயர் கல்வியைப் பெரிதும் பாதித்ததால், பின்தங்கிய பிரதேசங் களின் தமிழ்-முஸ்லிம் மாணவர்கள் பலனடைந்தார்கள். முஸ்லிம் மாணவர்களுடைய அதிகரிப்பு, பெரும்பாலும், கலை, வர்த்தகம் ஆகிய துறைகளிலேயே இருந்தது. விஞ்ஞா னம், பொறியியல், மருத்துவம் ஆகிய துறைகளில் முஸ்லிம் மாணவர்களின் வீதாசாரம், அவர்களுடைய சனத்தொகை வீதா சாரத்திலும் பார்க்கக் குறைவாகவே இருந்தது. 1989/90ஆம் ஆண்டில், விஞ்ஞானத்தில் 3.8 வீதமாகவும், மருத்து வத்தில் 3.8 விதமாகவும் பொறியியலில் 4.1 வீதமாகவும் முஸ்லிம் மாணவர்கள் அனுமதி பெற்றனர். கீழே உள்ள அட்டவணை
இதனை மேலும் தெளிவாக விளக்குகிறது."
முஸ்லிம் மாணவர்கள், கலை, வர்த்தகம், சட்டம் ஆகிய துறை களில் அதிக வீதாசாரம் பெறுவதறகு ஒரு முக்கிய காரணம் தமிழ் மாணவர்கள் இத்துறைகளில் அதிக கவனம் செலுத் தாமையே. சர்வகலாசாலைகளுக்கு அனுமதி பெறும் முஸ்லிம மாணவர்கள் பெரும்பாலும் தமிழ் மொழி மூலமாகவே அனு மதி பெறுகிறார்கள். இம்மாணவர்கள் பெரும்பாலும் பின்தங் கிய மாவட்டங்களிலிருந்தே சர்வகலாசாலைகளுக்குத் தெரிவு செய்யப்படுகிறார்கள். பின் தங்கிய மாவட்டங்கள் என்று பகுப்பதற்கு, விஞ்ஞானகூடங்கள், விஞ்ஞான பட்டதாரிகள், க.போ.த (உயர்தர) விஞ்ஞான வகுப்புகள் இல்லாமை, அளவு கோல்களாக எடுக்கப்படுகின்றன. ஒரு விஞ்ஞான பட்டதாரி

Page 200
372
அ. முகம்மது சமீம்
9ぬ03I.963†g ogquae uri sasi um -8-I89 og--Ice-Tuoto) ĝi riqi (Tē 03ÇIg08£9 - †11ego oặugi 球2038I6208。GĻoluo -933! Ç’omụo 119) rosī Ɛ88086球。21.909$ $ ugi I II8Z I邓2Þ8 o 6filogoo 9 I03IIgI9A、いajgorogoo 63. I0 £3€I0II90° IZHigiới) uolo, uso o prvo logo uga mobilogertog) og -7 (colo 1994, fologo ugi(gairsēło 1994, folose uqi --ırı mtilegereg)qosn ($4)slogsgar@sequae uoluose og-roeg gaf@se---arte ugaqosnoy --ı Zıris ugi owo uolo, ĝice:qa-i-arouan 1,998||r9100911 GT --11) ஒஒஒரனே qıtmış909$ $ 1091494)||59qirtos@@@ơi qorı ராேடு(ப்பாகுqirtos@@@ơi
oooo!!809109919 199ųooyrtologo ug giốnloĝơıs@s@ qsum-ionribiso -i-)insuon
G 16 I - Ķons@s@ a9ca9lo uos ersyo,

ஒரு சிறுபான்மை சமூகத்தின் பிரச்சினைகள் IV
373
()630629/3岭A幻00° 00 Ioorgas (§ $08 I908£ I ogao co usorgio ĝ00 IZ 0IIIz ogy Hugo@susố IO30|--I g * Iao se soudige uaite, zo| 0I02했33 :했,Iso (go No rī |-I0-I63 * Irecorsigelgede uri (g) 30†0I()闵90 o £quae Hour, so 6093£ 03. I60 ° 8(uogo o usūg) @) 300 I30£66 "?que oặĝH I()ĝ0I$I g * Iao o quos uogo@@ II----|-† I • Zaŭge u ri qi so |-| 0Þ0990 - ZHraloog-i-Iqa |---| –9 s, '01. Ingge store |-I0I()II 9 *0Į Ligo 199 GT

Page 201
374
அ. முகம்மது சமிம்
0 * #7£ o £Z ogo “0 I() */ I ";8 ^98 ^99 ", IÞ og Þ og0 * s;Z ogÞ o.s.9 - † gnch) гэг5
0ே09ய ஓரி)
&rn 임동원u그8 grag홍홍gDon gusu的)的) 정s g그T5 gnd")s國劇urs
qi suo uoš59 ĝuis@s@ 0909 uouos ortojo 199ų9øyre soos ugi
qŲoosofi) og syso@logo? I 6-gge I,
go 6
† “O I
† - II
(\9 (99.9?
I6/066 s 06/686 I
68/886 I
@1099f@

375 ஒரு சிறுபான்மை சமூகத்தின் பிரச்சினைகள் IV
ஆசிரியருக்கு எத்தனை உயர்வகுப்பு விஞ்ஞான கல்வி பயிலும் மாணவர்கள் என்றும், பட்டதாரி ஆசிரியர் ஒரு வருக்கு எத் தனை மாணவர்கள் என்றும் இவ்வளவு கோளில் எடுக்கப் படுகின்றன. கீழே உள்ள அட்டவணையில் சில உதாரணங்கள்
காட்டப்படுகின்றன.'
இந்த அடிப்படையில் மாவட்டங்களிலுள்ள விஞ்ஞான கல்வி வசதிக்கேற்ப மாணவர்கள் சர்வகலாசாலைகளுக்கு அனுமதி வழங்கப் படுகிறார்கள். இந்த அடிப்படையில் பார்க் கும் போது, தமிழ் மொழியில் கல்வி கற்கும் முஸ்லிம் மாணவர் கள் பின்தங்கிய மாவட்டங்களில் அடங்குகிறார்கள். சிங்கள மொழியில் கல்விகற்கும் முஸ்லிம் மாணவர்கள் பெரும்பா லும், வளர்ச்சியுற்ற மாவட்டங்களில் அடங்குகிறார்கள். இதன் காரணமாக சிங்கள மொழியில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு சர்வகலாசாலை செல்ல அதிக வாய்ப்புக்கள் கிடைப்பதில்லை. முஸ்லிம்கள் அதிகமாக வாழும் பின்தங்கிய பிரதேசங்களான, கல்முனை, அம்பாறை, மட்டக்களப்பு, புத்தளம் ஆகிய இடங்களிலிருந்து தெரிவு செய்யப்படும் மாணவர்கள் இலங்கையின் ஏனைய பிரதேசங் களிலிருந்து செய்யப்படும் மாணவர்கள் தெரிவு செய்யப்படும் முஸ்லிம் மாணவர்களின் எண்ணிக்கை அளவாக இருக்கிறார் கள். இதைப் பின்வரும் அட்டவணை தெளிவாக விளக்குகிறது."
பல்கலைக்கழக மானிய ஆணைக்குழு, சர்வகலாசாலை களில் கல்வி பயிலும் மொத்த மாணவர் தொகையில், இன வகைப்படி தரப்படாமையினால், முஸ்லிம் மாணவர்களின்
வீதாசாரத்தைக் கூற முடியவில்லை.
13.8.96 ல் வெளியான டெய்லி நியூஸ் செய்தியின் படி 1996ம் ஆண்டில் இரண்டு பல்கலைக்கழகங்கள் - இராஜரட்ட சபரகமுவ ஸ்தாபிக்கப்பட்டன. எனவே மொத்தம் 12 சர்வகலாசாலைகள் இலங்கையில் இருக்கின்றன. இவ் வருடம்
11,000 மாணவர்கள் - 1800 மே லதிக மாணவர்கள்

Page 202
376
அ. முகம்மது சமீம்
ug9 s4? I rv9 10:09 LI Q7
(396 I FTIT (Q)o(991909$ 0.9 (99116-IIIII q. s uso?)
96998 II Igg0 I 898 #7ž/, 88390 89 Ig99 I I09Þ I g9693 / 0 I9/3. I † 1. Z II8I8%ZZG0 0g so IZÞZZ03Þ0 3 Ig/GZZ I89 I£3. $ggo / I809舒99Ģ0 888/6366/ 368 Þ699000 I96 I£ € 0ỹ6#Z 390980 £ I989ž6īžIož0 £ 心海 „ © § 12o4reisse ugi }§. 8, 1991,94?),1,9 oqoqo uso-Tura ?5@@g guo-Noirí4, mụegf,1919-ą, 1991/94?),ựus-ı-ārī Fīņ@re yin-a 姆·@€ 1,91494) se1991,94?): �g-- Fདྲི་
19ohoấuoĝaĵộro 1919 ĜIĘnŲsopo losugog@iss gge I,
Zg6 og 9 decoqiouse@o@ a9ae quae uogo@@ O IZ ‘93!111199.199 GT4/1/1991gogi 6 ZZ “ZZGjeçouriqalo1909 f)qoo Þ8.g99 HT1199?--ZigaFısıl oog-i-Iqa 898 ‘9gque@@Hque@@H 86/, '$g(ūgo urīgif@Cũcourīgif@ sg) ‘zz I19ços@rī1909 relíu-ilogera 99/ o Z9 oogoo11111,9 ugi (g)oogoo11111,9 ugi (s) $ $ I ‘883tī logoo bilogeo Þ68‘OZZUso uso¿ou? Þ09°/6°I qılogo urısı đĩımquae urısı đầum ggf. off ogFiqiới) uolo)Fiqiớī) uolo) Įrto logo u qi qi sẽņoog,qi --ire uga suo 0,01] !? Tiluriqı-ı-āre ugaUsoqoso

ஒரு சிறுபான்மை சமூகத்தின் பிரச்சினைகள் IV
377
(11,9(9) To oggom uff, 1925 ĝúologyúgojo į mygildrigo quae uoff?)
6 IGIIII ?quo uos@Uso *?(319п (g) © Io II I90Qomųjųn, £ 0809010qartılı ortoUso 80| 003IIqofnun sījuri (g) 60II/ I80qī£§@a I6/066 I 68/886 II6/066 I68/886 I 119orgi-i-Irtolongúisi역TTreuon rm환(相國民95)añoos@$15.909€.
*�ęuoig)Fırıể sẽ - ugotą, reliqi (s. 199-1@sergi-i-arts un morgioi995
·ơ109-i-Iriņmrņoto hosyolo @ęgiosos $199.143.43,59 looŋrologouqi qilçeņođì) ogųoos@logoso se /oe-eg/gget,,

Page 203
அ. முகம்மது சமீம் 378 அனுமதிக்கப்பட இருக்கிறார்கள். முஸ்லிம்களின் சனத் தொகை வீதாசாரப்படி 880 முஸ்லிம் மாணவர்கள் அனுமதிக் கப்படல் வேண்டும். மருத்துவத் துறைக்கு மாத்திரம் 68 முஸ்லிம் மாணவர்கள் அனுமதி பெறவேண்டும். இத்தனை முஸ்லிம் மாணவர்கள் அனுமதி பெறுவார்களா?

379 ஒரு சிறுபான்மை சமூகத்தின் பிரச்சினைகள் IV
54. முஸ்லிம்களுக்கெதிரான சதித்திட்டத்தில் உருவாகி வரும் பயங்கர சூழ்நிலை
1915ம் ஆண்டு சம்பவம் திரும்ப நடைபெறுமா?
தொழிற்சங்க வரலாற்றிலேயே இதுகால வரை நடை பெறாத ஒரு சம்பவம் இலங்கையில்தான் நடைபெற்றது. தொழிற்சங்கங்கள் பெரும்பாலும்,தங்கள் சங்கத்தின் அங்கத்த வரின் நலனுக்காக, உரிமைக்காக, சம்பள உயர்வுக்காக தங்கள் பிரச்சினைகளின் நிவர்த்திக்காகப் போராடுவதைப் பற்றித்தான் கேள்விப் பட்டிருக்கிறோம். ஆனால் பெரும் பான்மை இனத்த வரைக் கொண்ட, அறிவு படைத்த, உயர் அந்தஸ்திலுள்ள, பெரும் சம்பளத்தை பெறும், அங்கத்தவர் களைக் கொண்ட தொழிற்சங்கம் ஒரு சிறுபான்மை சமூகத்திற் கெதிராக, வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டது."
கியூபா அரசாங்கத்தின் வேண்டுகோளுக்கிணங்க இருபது இலங்கையர்கள் புலமைப்பரிசில் பெற்று மருத்துவப்பட்டம் பெறுவதற்காக, கியூபா சென்றார்கள். இதில் பத்துப் பேர் சிங்களவர், பத்துப் பேர் முஸ்லிம்கள். முஸ்லிம்கள் பத்துப் பேரும் வெளிவிவகார அமைச்சர் ஏ. ஸி. எஸ். ஹமீதுக்குத் தனிப்பட்ட முறையில் வழங்கப்பட்டது. சிங்களவர் பத்துப் பேரும் உயர்கல்வி அமைச்சினால் தெரிவு செய்யப் பட்டனர். 10 முஸ்லிம்களும் ஹமீதினால் தெரிவு செய்யப் பட்டனர். இலங்கையில் டாக்டர்களுக்கு உத்தியோகம் வழங் கும்போது, தரம் பிரிப்பதில் இலங்கை மருத்துவக் கல்லூரியில் பயின்றவர்களுக்கு முதலிடத்தையும், இலங்கை அரசாங்கத் தினால் புலமைப்பரிசில் பெற்று, வெளிநாடு சென்று திரும்பிய வர்களுக்கு இரண்டாம் இடத்தையும் வழங்குவதுதான் இதுகால வரைக்கும் கடைப் பிடிக்கப்பட்டு வந்த நடைமுறை. இதன்
* இலங்கை அரசாங்க டாக்டர்களின் வேலை நிறுத்தம்

Page 204
அ. முகம்மது சமீம் 38O பிரகாரம் அந்த 20 டாக்டர்களும், இரண்டாம் இடத்தில் வைக்கப்பட்டனர். ஆனால் முஸ்லிம்கள் இதில் இருக்கக் கூடாது என்பதுதான் டாக்டர்களின் விவாதம். ஏனென்றால் முஸ்லிம்கள் வெளிவிவகார அமைச்சரினால் தேர்ந்தெடுத் திருக்கப் பட்டிருக்கக்கூடாது என்பதேயாம். கியூபா அரசாங்கம் இவர்கள் எப்படித் தேர்ந்தெடுக்கப்படல் வேண்டும் என்ற நடைமுறையைக் கூறவில்லை. அவர்கள் கூறியது தகைமை களைப் பற்றி மட்டும்தான். அதன்படி தகைமைகளுள்ள பத்து முஸ்லிம்கள் தெரிவு செய்யப்பட்டார்கள். கல்வியில் பின் தங்கிய முஸ்லிம்களுக்கு இது ஒரு வரப்பிரசாதமாக அமைந் தது. இதற்கு ஒரு விசாரணைக் கமிஷன் தேவையா? முஸ்லிம் கள் இந்தப்பட்டியலில் அடித்தளத்தில் வைக்கப்படல் வேண் டும் என்பது மட்டுமல்ல, இவர்கள் டாக்டர்களாக ஏற்றுக் கொள்ளப்படக் கூடாது என்றும் ஒரு சிலர் கூறினர். ஒரு தொழிலில் பட்டம் பெற்ற ஒருவருக்கு அத்தொழில் செய்ய முடியாது என்று கூறுதற்கு எந்தவொரு தொழிற்சங்கத்திற்கும் யோக்கியதை இல்லை. முஸ்லிம்கள் தரம் குறைக்கப்படல் வேண்டும் என்று வேலை நிறுத்தப் போராட்டத்தில் டாக்டர்கள் இறங்கினார்கள். இதில் வேடிக்கை என்ன வென்றால், சிங்கள டாக்டர்கள் இரண்டாம் இடத்தில் வைக்கப்பட்ட அதே வேளை யில் முஸ்லிம் டாக்டர்கள் கடைசி இடத்திற்குத் தள்ளப்பட்ட னர். இதில் இன்னொரு வேடிக்கை யென்ன வென்றால், புலமைப்பரிசில் பெற்று கியூபாவில் பட்டம் பெற உலகின் பல பாகங்களிலிருந்தும் வந்தவர்களில், முதலாம் இடத்தைப் பெற்றுத் தங்கப் பதக்கத்தைப் பெற்றுக் கொண்டவர் இலங்கை யிலிருந்து சென்ற ஒரு முஸ்லிம் பெண்மணி. மேலும் நான்கு முஸ்லிம்கள் தங்கப்பதக்கத்தைப் பெற்றார்கள். இதில் என்ன தொனிக்கிறதென்றால், பெரும்பான்மையினத்தைச் சேர்ந்த படித்தவர்கள் மத்தியிலுள்ள இனத்துவேஷத்தைத்தான் இது காட்டுகிறது.
டாக்டர்கள் செய்தது நியாயம் தானே! அடிமை ச் சமுதாயத்தில் டாக்டர்கள் இருக்கலாமா? சென்ற அத்தியாயத்

381 ஒரு சிறுபான்மை சமூகத்தின் பிரச்சினைகள் IV
தில் சர். மாக்கான் மார்க்காரும், சர். ராசிக் பரீதும் கூறிய அதே தொனியில்தான். 1983ம் ஆண்டு அரசாங்கத்துக்கு விடுத்த செய்தியில் முன்னை நாள் கல்வி அமைச்சர் பதியுத்தீன் மஹ் மூதும் கூறினார். அது பின்வருமாறு:
'இலங்கை முஸ்லிம்கள், இந்நாட்டைப் பிரிப்பதற்கு எள்ளளவும் விரும்பவில்லை. இத்தகைய பிரிவினைக் கோரிக்ை ககளை நாம் என்றுமே ஆதரிக்க மாட்டோம். சிறுபான்மை யினம் என்ற வகையில், இந்நாடு எம்முடைய தாய்நாடு, இதில் சொந்தம் கொண்டாட எமக்கும் உரிமையுண்டு '
தன்னுடைய சமூகத்தின் எண்ணத்தைப் பிரதிபலித்த பதியுத்தீன் மஹ்மூத், திரும்பத் திரும்ப "சிறிலங்கா முஸ்லிம் களின் தாய்நாடு, இந்நாட்டுக்கு விசுவாசத்துடனும், தேசபக் தியுடனும் என்றைக்குமே இருப்பார்கள்' என்று கூறும் போது சிங்கள அரசாங்கத்துக்கும் சிங்கள பெரும்பான்மை யினத்திற் கும் விசுவாசத்துடன் இருப்பார்கள் என்ற கருத்து தொனிக்கிற தல்லவா?
இந்நாட்டில் முஸ்லிம்கள் சிங்க ள பெரும்பான்மை மக்களுடன் சிநேக பூர்வமாக வாழ விரும்புகிறார்கள் என்று முஸ்லிம் தலைவர்கள் பல்லாண்டுகளாகக் கூறியும், சிங்கள டாக்டர்கள் முஸ்லிம் சமூகத்திற்கு எதிராக இப்படிப்பட்ட நடவடிக்கைகளில் ஈடுபடுவது நியாயமா? சுருக்கமாகக் கூறினால் எல்லா முஸ்லிம் தலைவர்களும், சர். ராசிக் பரீதினு டைய வார்த்தைகளில் கூறுவதானால் 'தயவு செய்து முஸ்லிம் களை இலங்கைத் தாய்த்திருநாட்டின் புதல்வர்களாக ஏற்றுக் கொள்ளுங்கள்' என்பதே. ஆனால் சிங்கள மக்கள், முஸ்லிம் கள் இந்நாட்டின் புதல்வர்களாக ஏற்றுக் கொண்டனரா? சிங்கள வருடைய மனப்பான்மை முனனைய அரசாங்கத்தில் அமைச்சரா யிருந்த லலித் அத்துலத் முதலி 1983ம் ஆண்டு சர். ராசிக் பரீத் தர்மஸ்தாபனத்தில், ஆற்றிய சொற்பொழிவு பிரதிபலிக்கிறது.
"இலங்கையில் முஸ்லிம்களின் எதிர்காலம் என்ற

Page 205
அ.முகம்மது சமீம் - 382 தலைப்பில் பேசிய அமைச்சர் அத்துலத் முதலி, சிங்கள அரச மொழிக்கெதிராக தமிழர்களின் எதிர்ப்பை பேசிய அவர் 'கடந்த 30-40 வருடங்களாக நாம் இப் பிரச்சினையைப் பற்றியே விவாதித்துக் கொண்டிருக்கிறோம். மொழி என்ற ஒரு கம்பத்தை வளைத்து ஆடிக் கொண்டிருக்கிறோம்' என்று இப்பிரச்சினையை ஏளனமாகக் கூறிய அவர் முஸ்லிம்களு டைய எதிர்காலத்தைப் பற்றி, அடுத்த வரியில் மிகவும் முக்கிய மான ஒரு கருத்தை முன்வைக்கிறார். 'இந்நாட்டில் கற்பிக்கப் படும் எல்லா மொழிகளையும் முஸ்லிம்கள் கற்கத் தயாராயிருக் கிறார்கள். இதனால் தங்கள் தனித்துவம் பாதிக்கப்படும் என்று எண்ணவில்லை". மேலும் அவர் தன்னுடைய உரையில் முஸ்லிம்கள் மத அடிப்படையில்தான் பிரிக்கப்படுகிறார்கள் என்றும் மொழி அடிப்படையில் அல்ல என்றும் கூறினார். அவர் இப்படிக் கூறும் போது, முஸ்லிம்களை உதாரணம் காட்டிக் கூறினார் என்றாலும், தமிழர்களுக்கும் இது பொருந்தும் என்ற பொருளும் இதில் தொனிக்கிறது. இல்லையா? அத்துலத் முதலி மேலும் 'இந்நாட்டின் மொழிப் பிரச்சினைக்கு, முஸ்லிம்கள் தெரிந்தோ தெரியாமலோ ஒரு முடிவை காட்டியிருக்கிறார்கள்' என்று கூறினார். மொழிப்பிரச்சி னையை ஒர் இனப்பிரச்சினையாக நோக்கிய அத்துலத் முதலி "முஸ்லிம்கள் இதுகாலவரையும் சிங்களமக்களால் சகிப்புத் தன்மையுடன் நடத்தப்பட்டு வந்திருக்கிறார்கள்' என்றுகூறும் போது சிங்கள மக்களின் ஆதிக்கத்தை முஸ்லிம்கள் ஏற்றுக் கொண்ட காரணத்தினால் பல சலுகைகளைப் பெற்றிருக்கிறார் கள் என்ற கருத்தும் தொனிக்கிறது. இதே கருத்தைத் தான் பேராசிரியர் கே. எம்.டி சில்வாவும் தன்னுடைய கட்டுரை யொன்றில் கூறுகிறார். இதன் அடித்தளத்தில் உள்ள கருத்து என்ன? தமிழர்கள் சிங்களவரின் ஆதிக்கத்தை ஏற்காததனால், இன்று பல இன்னல்களை அனுபவிக்கிறார்கள் என்று கூறும் போது நீங்களும் (முஸ்லிம்களும்) சிங்கள ஆதிக்கத்தை ஏற்கா விட்டால் இந்த இன்னல்களை அனுபவிக்க நேரிடலாம் என்ற கருத்தும் தொனிக்கிறதல்லவா?

383 ஒரு சிறுபான்மை சமூகத்தின் பிரச்சினைகள் IV
இந்த மனப்பான்மை பொதுவாக எல்லா சிங்க ள மக்களிடையேயும் இன்று பரவலாக இருந்து வருகிறது. இதற்கு டாக்டர்கள் போன்று படித்தவர்களும் தங்கள் வேலை நிறுத்தச் செய்கையினால் இனவெறிக்குத் தூபம் போடுகிறார்கள். முஸ்லிம்களுக்கு எதிராக மட்டுமல்ல இவ்வரசாங்கத்தில் உள்ள முக்கிய அமைச்சர்களில் ஒருவராயிருக்கும் ஒரு முஸ்லிம் அமைச்சருக்கெதிராகவும் தான் இவ்வேலை நிறுத்தம் மேற் கொள்ளப்பட்டது என்றால் அது மிகையாகாது.
தமிழர்களை அடக்கிவிட்டோம். இனி முஸ்லிம்களின் கொட்டத்தை அடக்க வேண்டும் என்று சில விஷமிகள் முஸ் லிம்களுக்கெதிராக ஒரு சதித்திட்டத்தையே தீட்டி வருகின் றனர். 1915ம் ஆண்டுக்கு முன்னர் முஸ்லிம்களுக் கெதிராக ஒரு சூழ்நிலை இன்று உருவாக்கப்பட்டு வருவதற்கு ஆதாரமாக சிங்களமொழியில் மக்கள் மத்தியில் உலவிவரும் ஒரு துண்டுப் பிரசுரம்" எமக்கு எடுத்துக் காட்டுகிறது. இத்துண்டுப்பிரசுரம் முன்னைய அரசாங்கத்தில் வெளிவிவகார அமைச்சராயிருந்த ஏ.சி. எஸ். ஹமீத் அவர்களுக்கெதிராக இருந்தாலும், முஸ்லிம் சமூகத்திற்கெதிராகவே இருப்பதை நாம் காணலாம்.
* கடைசிப் பக்கம் பார்க்கவும் - appendix 1

Page 206
அ.முகம்மது சமீம் 38.4
55. சிங்களவரின் எதிரிகளாக முஸ்லிம் தலைவர்களைக் காட்ட முனையும் விஷமப் பிரச்சாரம்
பெரும்பான்மையின மக்கள் அரசியலில் பிளவுபட்டிருப் பதால், சிறுபான்மையின மக்கள் தங்கள் விகிதாசாரத்திற்கும் அதிகமாகவே சலுகைகளைப் பெற்று வருகின்றனர் என்ற தவறான கருத்து, சில புத்திஜீவிகளால் மக்கள் மத்தியில் பரப்பப்படுகின்றது. ஆகவே, சிறுபான்மையின மக்களின் கொட்டத்தை அடக்க வேண்டுமானால் அவர்களுடைய தலை வர்களைப் பற்றிய பொய்யான தகவல்களை சிங்கள மக்கள் மத்தியில் பரவவிட வேண்டும். சுகாதார அமைச்சர் பெளசிக் கெதிராக டாக்டர்களும், தாதிகளும் ஏனைய சுகாதார சிப்பந்தி களும், நடத்திய 24 வேலைநிறுத்தங்களும், (24 மாதங் களில்) முன்னைய வெளிவிவகார அமைச்சர், ஹமீதுக் கெதிராக இன்று சிங்கள மக்கள் மத்தியில் உலவ விட்டிருக்கும் துண்டுப்பிரசுரங் களும் கப்பல்துறை அமைச்சர் அஷ்ரபிற்கெதிராகக் கிளப்பப் பட்டிருக்கும் பொய்வதந்திகளும் இதன் பாற்பட்டதே. சிங்கள பூமிபுத்ரகட்சிச் செயலாளர் கட்சிக் கூட்டமொன்றில், 'தொண் டமானும், அஷ்ரப்பும் சேர்ந்து சிங்கள மக்களை ஆட்டிப் படைக்கின்றனர்" (வீரகேசரி - 31-5-96) என்ற விஷமத்தன மான பேச்சு சிங்கள மக்களின் இன உணர்வைத் தூண்டுவதாக அமைகிறது. இவர்கள் செய்த குற்றம்தான் என்ன? அஷ்ரபும் அவருடைய முஸ்லிம் காங்கிரசும், இன்றைய அரசாங்கம் அமைப்பதற்கு ஆதரவு கொடுக்காவிட்டால், பொதுசன ஐக்கிய முன்னணி', அரசாங்கம் தோன்றியிருக்கவே முடியாது. அக திகளாக இன்று அல்லற்படும் மக்களுக்கு சிங்களவர், தமிழர், முஸ்லிம் என்று வேறுபாடு காட்டாமல், இவர்களுக்கு புனர் வாழ்வு வழங்கியதற்கும், கப்பல்துறையை விரிவுபடுத்தி நாட் டின் பொருளாதார வளத்தைப் பெருக்கியதற்கும், தென்மா காண மக்களுக்கு ஒரு வரப்பிரசாரமாக அமையப் போகும், காலி துறைமுகத்தை விஸ்தரிக்கும் பணியில் ஈடுபட்டதற்கும்,

385 ஒரு சிறுபான்மை சமூகத்தின் பிரச்சினைகள் IV ஒரு நன்றியுள்ள சமூகம் கொடுக்கும் நன்றி இதுதானா?
அமைச்சர் பெளசி செய்த துரோகம்தான் என்ன? சுகாதார அமைச்சிலுள்ள ஊழல்களைக் கண்டுபிடித்து, நாட்டு மக்க ளின், முக்கியமாக ஏழைகளின் சுகாதாரத்திற்காக, வைத்தி சாலைகளைப் பார்வையிட்டு புனரமைக்கும் பணியில் ஈடு பட்டது தவறா? அரசாங்க உத்தியோகங்களை வகிக்கும் அர சாங்க டாக்டர்கள் தங்கள் பெயர்களைப் பதிவு செய்து விட்டு, ஏழை நோயாளிகளைத் தவிக்க விட்டு, தனியார் நிறுவனங் களில் போய் பணம் சம்பாதிப்பதில் ஈடுபட்டிருப் பதைச் சுட்டிக்காட்டியது தவறா? வேறு அரசாங்க உத்தியோகஸ் தர்களுக்கில்லாத சலுகை டாக்டர்களுக்கு மாத்திரம் வழங்குவது என்ன நியாயம்? மக்களுடைய பணத்தில் இலவசமாகக் கல்வி கற்ற இந்த டாக்டர்கள் மக்களுக்கு சேவை செய்யக் கடமைப் பட்டிருக்கிறார்கள். ஒரு முஸ்லிம் அமைச்சர் சுகாதார அமைச் சராக இருப்பதைச் சுட்டிக்காட்டி அரசாங்க வைத்திய சாலை களிலிருந்து முஸ்லிம் நோயாளிகள் விரட்டப் படுகிறார்கள்.
இந்நாட்டின் வருமான வரி கொடுப்பதில் முஸ்லிம்கள் ஒரு முக்கிய பங்கினை வகிக்கின்றனர். இவர்கள் டாக்டர் பட்டம் பெறுவதற்கு முஸ்லிம்கள் பணமும் உதவியிருக்கிறது. முஸ்லிம்களுக்கெதிராக ஏன் இந்தப் பாரபட்சம்? அவர்களு டைய 'ஆளும் வர்க்கம்" என்ற இன ஆணவம் அவர்களை, ஒரு முஸ்லிம் அமைச்சரை ஏற்றுக் கொள்ள இடம் கொடுக்கவில் லையா? அமைச்சர் பெளசி, இதுகாலவரை சுகாதார அமைச்சி லிருந்த நடைமுறையைத்தானே கடைப்பிடித்தார். புலமைப் பரிசில் பெற்று கியூபா சென்று டாக்டர் பட்டம் பெற்றுத் திரும்பிவந்த முஸ்லிம் டாக்டர்கள் இலங்கை மக்களின் பணத் தைச் செலவு செய்யவில்லையே. 1.6.96 ஐலண்ட் பத்திரிகை யில் வெளியான கொழும்பு மருத்துவக் கல்லூரி பெறுபேறு களைக் கவனித்தால், 164 டாக்டர்கள் பட்டியலில் இரண்டே இரண்டு முஸ்லிம்கள் தான் இருக்கின்றனர். இவ்விருவரில் ஒரு முஸ்லிம்தான் பூரண சித்தி எய்தி உள்ளார். இலங்கையில்தான்

Page 207
அ. முகம்மது சமீம் 386
இவர்கள் பட்டம் பெறும் வாய்ப்பு இல்லை யென்றால் வெளி நாடு சென்று பட்டம் பெற்றது குற்றமாகுமா? இவர்களுக்கு வேலை வழங்கப்படல் கூடாது என்பதுதானே டாக்டர்களின் கோரிக்கை, 1979-81 பெர்குசன் டிரெக்டரியின்படி முஸ்லிம் டாக்டர்கள் இந்நாட்டில் 2.93% மாகத் தானிருக்கிறார்கள். சர்வகலாசாலை மானியக்குழுவின் 69/70ம் ஆண்டு அறிக்கை யின்படி, மருத்துவத் துறைக்குத் தெரிவு செய்யப்பட்ட முஸ் லிம் மாணவர்களின் விகிதாசாரம் 0.9 % என்பதை 1975ம் ஆண்டு 78.9% மாக மருத்துவத் துறைக்குத் தெரிவு செய்யப் பட்ட சிங்கள மாணவர்களின் எண்ணிக்கையோடு ஒப்பிடும் போது, முஸ்லிம்கள் இத்துறையில் எப்படி ஓரங்கட்டப் படு கிறார்கள் என்பது புரிகிறதல்லவா? மானியக்குழுவின் அறிக் கையின் படி 1981/82 ஆண்டில் மருத்துவத் துறைக்குத் தெரிவு செய்யப்பட்ட மாணவர்களின் விகிதாசாரம் பின்வரு மாறு: சிங்களவர் 72.4% தமிழர்-25.3% ஏனையோர் 2.3% முஸ்லிம் கள் ஏனையோர் பட்டியலில் அடக்கப் படுகிறார்கள். புலமைப் பரிசில் பெற்று வெளிநாடு சென்று டாக்டர் பட்டம் பெற்று வந்த முஸ்லிம் டாக்டர்களை அவர்களுடைய உரிய இடத்தில் அமைச்சர் பெளசி வைத்தது தவறா? இவர்களுக்குப் புலமைப் பரிசில் கொடுத்ததற்காக முன்னைய அரசாங்கத்தின் வெளி விவகார அமைச்சர் ஹமீதுக்கு எதிராக ஒரு விசாரணைக் கமிஷன் தேவையாம். சிங்கள டாக்டர்களின் இனவாதம் எவ்வளவு கீழ்த்தரத்திற்குச் சென்றிருக்கிறது என்பது இதிலி ருந்தே விளங்கும். இவ்வளவுக்கும் காரணம் இவர்கள் இரு வரும் இந்நாட்டின் சிறுபான்மையினமான முஸ்லிம் சமூகத் தைச் சேர்ந்தவர்கள் என்பதே ?
முன்னைநாள் வெளிவிவகார அமைச்சர் ஹமீதுக் கெதிரா கத் துண்டுப்பிரசுரத்தில் கொண்டுவரப்பட்டிருக்கும் குற்றச்சாட் டுக்கள் பின்வருமாறு:
1. முஸ்லிம்கள் காணி வாங்குவதற்குத் தடையாயிருந்த சட்டத்தை நீக்கியது.

387 ஒரு சிறுபான்மை சமூகத்தின் பிரச்சினைகள் IV
2. முன்னைநாள் ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்தனாவில் தனக்குள்ள செல்வாக்கைப் பயன்படுத்தி, சுதந்திர சந்தைப் படுத்தும் பொருளாதாரக் கொள்கையை நிலைநாட்டியது.
3. ஜயவர்தனாவை இணங்க வைத்து மத்திய கிழக்கு முஸ்லிம் நாடுகளான சவூதி அரேபியா, குவைத், ஒமான், அபூ தாபி நாடுகளில், தூதர் காரியாலயங்களை நிறுவியது.
4. முஸ்லிம்களுக்கு விகிதாசாரப் படி அரசாங்க உத்தி யோகங்கள் வழங்கப்படல் வேண்டும், என்ற கொள்கைக்கு அன்றைய அரசாங்கத்தை இணங்க வைத்தது.
5. உயர்கல்விக்காக முஸ்லிம் வாலிபர்களை வெளிநாடு களுக்கு அனுப்பியது. இதற்கு, கியூபா ஒர் உதாரணம்.
7. முஸ்லிம்கள் ஆங்கிலம் மூலம் கல்வி பெறுவதற்கு ஊக்குவித்தது.
மேலே கூறப்பட்ட இவரின் செய்கைகளினால் சிங்கள் பெரும்பான்மையினம் பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கிறது. எனவே சிங்கள இனத்தின் பெரும் எதிரி ஹமீத், என்று விஷமத் தனமான வதந்தியைப் பரப்புகின்றனர்.
முஸ்லிம்களும் இந்நாட்டுப் பிரஜைகள். ஆயிரம் வருடங்களுக்கு மேலாக முஸ்லிம்கள் இலங்கையில் குடியே றினர் என்பது வரலாற்றுண்மை. கொழும்பில் கிடைத்த எட் டாம் நூற்றாண்டுக்குரிய கல்வெட்டு சாசனம் இதற்குச் சான்று பகரும். 711ம் ஆண்டு இலங்கையிலிருந்து ஹஜ்ஜுக்குச் சென்ற கப்பல், வடஇந்தியக் கரையோரமான கட்சுப்பிர தேசத்தில் ராஜா தாஹிரினால் கைப்பற்றப்பட்ட வரலாற்று சம்பவத்தை இவர்களால் மறைக்க முடியுமா? ஏனைய பிரஜைகளுக்குள்ள உரிமை ஏன் இலங்கைப் பிரஜையான முஸ்லிம்களுக்கு மறுக்கப்பட்டது. இவ் வநீதியை நீக்கியது பெரும் குற்றமா? என்ன சின்னத்தனமான எண்ணம் இவர் களுக்கு?

Page 208
அ.முகம்மது சமீம் 388
சுதந்திர வலையத்தினாலும், திறந்த பொருளாதாரக் கொள்கையினாலும் நாடு எவ்வளவு பயன்பெற்றிருக்கிறது என்பதைக் கூட உணரும் சக்தியில்லாத இக்குறுகிய மனம் படைத்தவர்களின் பொருளாதார அறிவை என்னென்று மட்டி டுவது. இத்திறந்த பொருளாதாரக் கொள்கையினால் முஸ்லிம் கள் பெரும் பணம் குவித்திருக்கிறார்களாம். எவ்வளவு அப்பட்டமான பொய்.
மத்திய கிழக்கு முஸ்லிம் நாடுகளில் இலங்கைத் தூதுவர் காரியாலயங்களை நிறுவியதால் முஸ்லிம்கள் மாத்திரம் தான் பயனடைந்திருக்கிறார்களாம். ஆனால், புள்ளிவிபரங்கள் வேறுவிதமாக வல்லவோ காட்டுகின்றன.
1977ம் ஆண்டில் 15,000க்குக் குறைந்தவர்களே மத்திய கிழக்கு நாடுகளில் வேலை வாய்ப்பைப் பெற்று அங்கு வேலை செய்து வந்தார்கள். ஆனால் 1994ம் ஆண்டு கணக்கெடுப்பின் படி, 500,000 (ஐந்துலட்சம் இலங்கையர்) வேலை செய்கிறார் கள். இலங்கை மக்கள் வங்கி வெளியீடான, “பொருளியல் நோக்கு, ஜனவரி 1996ல் இலங்கையின் ஊழியர் குடியகல்வுப் போக்குகளும் அச்சுறுத்தல்களும் என்ற தலைய்ைபில் எழுதிய எல்.கே.ருகுணகே "இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகத்தின் மதிப்பீடுகளின்படி, மத்தியகிழக்குப் பிராந்தியத் தில் தொழில்களில் ஈடுபட்டுள்ள மொத்த இலங்கையர் தொகை 500,000 ஆக இருப்பதோடு, இத்தொகை நாட்டின் ஊழியர் படை யின் 6% ஆகும். எவ்வாறாயினும் குடிசனத்தொகை மதிப்பீட்டு, புள்ளிவிபரத்திணைக்களத்தின் வேலையின்மை பற்றிய அறிக் கைகளோடு ஒப்பிடுகையில் இது 39% ஆகும். இது வேலையற்றோர் என்ற நிலைக்கு உட்படுவோரின் பெரும் தொகையை உள்ளடக்குகின்றது". என்று கூறுகிறார். மேலும் அவர் "2,500,000 மக்கள் தற்போது வெளிநாட்டுத் தொழில் வாய்ப்புக்களில் தங்கியிருக்கக் காணலாம்", என்று கூறுகிறார்.
சவூதிஅரேபியாவில் மாத்திரம் 2 லட்சத்துக்கு அதிகமா

ஒரு சிறுபான்மை சமூகத்தின் பிரச்சினைகள் IV
389
ɛozz Żggogg I 0” IZ £39°I / ZoţI 86 gol. I
ZoggI&# qıúlio llogg.se
1,9 os@şı sır@s@ 4) umų,9$
† I 9°9) 99 I ‘gz ÞI8I
0!
I9/8
£8/3,
ỹoŽI
፰88
3898
0809
0693
068
qi@șugito) 1țeo-loof, Øņioto) įrısıdő
ỹ96°03' 938 ‘6I 01. I9
0013
ædelsnog)
ኗ፻”ዷ “ኗኗ Þg09 I 8 Igo
80I
quasera musı sır@s@ 1994ırıgiųoso
(199m (9909091) († 16 I-gz6I) qi@orsi moșuriqizo ungere ude olo) omgislao logooogo@uolo ș-i legeri teeg -i-Iriņmiņoto seụolo qđòiseri myısır@łę prigiụeg,
Þ66 I 066 I 086 I
916 I
qi-1@re

Page 209
அ. முகம்மது சமீம் 390
னோர் வேலை செய்கின்றனர். ஏறக்குறை 35% விகிதத்தினர்.
இந்நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு இவர்களின் பங்கு என்ன என்பதைக் கீழே உள்ள அட்டவணை விளக்கு
கிறது.
5
இனி ருகுணகே கூறுவதைப் பார்ப்போம். "இதுவரை காலமும் வெளிநாட்டுச் செலாவணியை ஈட்டித்தரும் முக்கிய துறையாக விளங்கிய தேயிலை ஏற்றுமதி வருமானத்தை, 1980 களில் வெளிநாட்டு வேலை வாய்ப்பு மூலமான வருமானம் மிகைத்தமை குறிப்பிடத்தக்கதாகும். ஒரு மேலோட்டமான நோக்கில் இந்த வருமானம் ஆடை ஏற்றுமதி வருமானத்திற்கு இரண்டாவதாகத் தோன்றினும், ஆடை ஏற்றுமதி மீதான ஒர் அண்மைய ஆய்வின்படி, இறக்குமதி செய்யப்படும் மூலப் பொருட் செலவினை அதன் ஏற்றுமதி வருமானத்தில் (53,209 மில்லியன்) இருந்து கழித்தால் அதன் தேறிய பெறுமதி 30% ஆக மட்டுமே (15, 963 மில்லியன் ரூ) இருக்கின்றது. அவ்வா றெனின் இவ்வருடத்தில் முக்கிய வெளிநாட்டுச் செலாவணி வருமான ஊடகமாக வெளிநாட்டுத் தொழில் வாய்ப்பு காணப் படுகிறது" மேலே கூறப்பட்ட ஆய்வின்படி, மத்திய கிழக்கு முஸ்லிம் நாடுகளிலிருந்து, இலங்கையின் பொருளாதார வளர்ச் சிக்கு எவ்வளவு தொகை பணம் வருகிறதென்று நாம் அறிய லாம். உண்மையில் அந்நியச் செலாவணிச் சம்பாத்தியத்தில் இது 50% விகிதமாகும்.
முஸ்லிம் நாடுகளில் வேலை செய்து வருபவர்களில் முஸ்லிம்கள் தான் அதிகமானோர் என்றும் இந்நாடுகளில் தூதுவர் காரியாலயங்கள் நிறுவப் பட்டதால் முஸ்லிம்கள் தான் அதிக பயனை அடைந்தார்கள் என்றும் கூறுவதும் தவறு.
கீழே உள்ள அட்டவணை இலங்கையின் பல பாகங்களிலிருந்தும் இந்நாடுகளுக்குச் சென்றோர் விகிதாசாரம் கொடுக்கிறது."

391 ஒரு சிறுபான்மை சமூகத்தின் பிரச்சினைகள் IV
குடிபெயர்ந்த தொழிலாளரின் மாவட்ட ரீதியான பகிர்வு
6 1979 1980
கொழும்பு 57.6 53.0 கம்பஹ 15.8 15.9 கண்டி 4. O 5.8 மன்னார் 0. 0.0 அம்பாறை 0.2 0.3 புத்தளம் 1... O 1.5
சிங்களவர் அதிகமாக வாழும் பிரதேசங்களான, கொழும்பு, கம்பஹ போன்ற மாவட்டங்களிலிருந்து 70% அதிகமானோர் சென்ற அதே வேளையில், முஸ்லிம்கள் வாழும் பிரதேசங்க ளான, மன்னார், மட்டக்களப்பு, அம்பாறை, புத்தளம் போன்ற மாவட்டங்களிலிருந்து 1.7% விகிதமா னோரே சென்றிருக்கின்றனர். சமீபத்திய மதிப்பீடுகளின்படி இப்புள்ளிவிபரங்களில் சில மாற்றங்கள் ஏற்பட்டிருக்கலாம். ஆனால் பொதுவாகப் பார்ப்போமானால் இவ்வேலை வாய்ப் பில் சிங்களவரே அதிகமாகப் பலன்டைந்திருக்கின்றனர்.
'1979இல் தொழில்களுக்காக வெளியேறியோரின் மொத்தத் தொகையில், 47.3% ஆக இருந்த பெண்களின் விகி தாசாரம், 1993இல் 72.5% விகிதமாகவும் 1994ல் 83.5% விகித மாகவும் அதிகரித்ததைக் காணலாம்' என்று ருகுணகே கூறு கிறார். இப்பெண்கள் பெரும்பாலும் வீட்டுப் பணிப்பெண்கள ாகவே சென்றார்கள். அரபிகள், தம் வீட்டுப் பணிகளுக்கு முஸ் லிம் பெண்களையே அதிகமாக விரும்பியபடியால், முஸ் லிம் பெண்களே இத்துறையில் கணிசமான அளவு இருப்பதைக் காணலாம். இன்று, அரசாங்க வேலைப் பணியகம், இதில்கூட மாற்றம் செய்வதாக அறிகிறோம். பணிப்பெண்களாக செல்ல விரும்புவோருக்கு சிங்களம் மூலமே பயிற்சியை அளிக்கின் றனர். அரபு நாடுகளில் வேலை செய்வதற்கு சிங்கள மொழி

Page 210
அ. முகம்மது சமீம் 392
கட்டாயம் தேவைதானா? இனத்துவேஷம் எவ்வளவு தூரம் இவர்களிடம் ஊறிப்போயிருக்கிறது?
விமான நிலையத்தில் பூர்த்தி செய்யப்படும் வெளியேறு கைப் பத்திரங்களை அடிப்படையாகக் கொண்ட மதிப்பீ டுகளை நாம் பார்க்கும்போது, சிங்களவரின் எண்ணிக்கையே அதிகமாக இருப்பதைக் காணலாம். கீழே உள்ள அட்டவணை
இதனை இன்னும் விளக்குகிறது
இனம் மற்றும் பால் அடிப்படையில் யகல்
D{1}) ԼԳ- )کا (ت|- புெ ஜூலை-செப்டம்பர் 1993
பெண் ஆண் மொத்தம் 96
சிங்களவர் 6398 51.8 22123 68.2 28,523 64
தமிழர் Il II. Il 7 9.2 927 2.8 2044 4.6
முஸ்லிம் 4665, 38.7 9.344 28.8 13909 31.2
ஏனையோர் 33 0.3 59 0.2 92 0.2 மொத்தம் 12,113 100 32,453 100 44,568 100
மேலே உள்ள அட்டவணையின்படி எந்தச் சமூகம் அதிக பயன் அடைந்திருக்கிற தென்று விளங்குகிறதல்லவா? இதற்கு யார் காரணம்? சிங்களவரின் எதிரி ஹமீத் என்று கூறுவதைவிட சிங்கள மக்கள் அவருக்குச் சிலை எடுக்க வேண்டும். 1977ல் 115,000 பேர் கடவுச் சீட்டு பெற்றிருந்தனர். 1989ல் 2,200,000 பேர் பெற்றனர். முஸ்லிம்களுக்கெதிரான இப் பிரச்சாரங் களுக்கு, துண்டுப்பிரசுரங்களுக்கும் பின்னால் சில சிங்கள டாக்டர்கள் இருக்கிறார்கள் என்ற வதந்தியும் உலவுகிறது. 1915ம் ஆண்டு நடந்ததைப்போல், முஸ்லிம்களுக்கெதிரான ஒர் இனக் கலவரத்தை உண்டு பண்ணுவதா இவர்களது நோக்கம்? இப்படி நடந்தால் இதற்கு முழுப்பொறுப்பு இவர்கள் ஏற்க வேண்டும். முஸ்லிம்கள் தன்மானத்துடன் வாழ வேண்டுமா னால், தங்கள் உரிமைக்காகப் போராடத் தயாராக வேண்டும்.

393 ஒரு சிறுபான்மை சமூகத்தின் பிரச்சினைகள் IV 56. இலங்கை முஸ்லிம்களும் அவர்களது கல்வி நிலையும்
இலங்கையின் தெற்கிலும், மத்திய பிரதேசத்திலும் வாழும் முஸ்லிம்கள் தமிழைக் கைவிட்டு விடுவார்களே யானால் அவர்கள் வடக்கிலும், கிழக்கிலும் வாழும் முஸ்லிம் களினின்றும் தம்மைப் பிரித்துக் கொண்டவர்களேயாவர்.
'இதனால் தென்னிந்தியாவில் வெளியாகும் இஸ்லாமிய தமிழ் இலக்கியங்களின் நன்மைகளை அவர்களால் அனு பவிக்க முடியாமல் போய்விடும். அத்தோடு இலங்கை யிலுள்ள இஸ்லாமிய நிறுவனங்கள் திறமையுடன் செயல்பட முடியாத ஒரு நிலை ஏற்படும். ஆனால் இன்றைய சூழ்நிலையில் நாம் சிங்கள மொழியை ஒதுக்கிவிட முடியாது. தமிழைக் கைவிடுவ தானால் நாம் எமது சமூகத்தின் ஒற்றுமையை அழித்து விடுவ தோடு எமது அரசியல் அதிகாரத்தையும் பலவீனமடையச் செய் வோம்’ என்று 1953ம் ஆண்டு ஏப்ரல் 11ம் திகதி கம்பளையில் நடந்த மத்திய இலங்கை முஸ்லிம் கல்விச் சங்கத்தின் கூட்டத்தில் உரையாற்றும் போது மேற்கண்டவாறு காலஞ் சென்ற ஏ.எம்.ஏ. அஸிஸ் உரையாற்றினார். எவ்வளவு தீர்க்கதரி சனமான வார்த்தைகள்!
அதே வேளையில் அகில இலங்கை சோனகர் சங்கமும் அகில இலங்கை முஸ்லிம் லீக்கும் தனிச்சிங்கள மொழிக் கொள்கையை ஆதரித்தன.
முஸ்லிம்கள் தமிழைக் கைவிட்டு விட்டு சிங்களத்தை ஆதரிப்பதற்கு ஒரு முக்கிய காரணம், தம்மைத் தமிழர்களிடமி ருந்து வேறுபடுத்திக் காட்டுவதே, அவர்களுடைய நோக்கமாக இருக்கலாம். சர்.பொன்னம்பலம் இராமநாதனின் "இந்துக்கள் தான் முஸ்லிம்களாக மதம் மாறியவர்கள்" என்ற தவறான கருத் துக்கு வலுவூட்டுவதாக அமையும் என்றும் சிலர்கருதியமையாலேயே தம்மைத் தமிழரிடமிருந்து வேறுபடுத்திக் காட்ட முனைந்தனர்.

Page 211
அ. முகம்மது சமீம் 394
'சோனக சமூகத்தை தமிழர் சமூகத்துடன் சேர்த்துக் கணிப்பது என்னுடைய சமூகமாகிய சோனகர் சமூகத்தை வேறொரு சமூகத்தினால், அதாவது தமிழர் சமூகத்தினால் கொன்றொழிப்பதாகும்' என்று சர்.ராசிக் பரீத் சட்டசபையில் கூறினார்.
முஸ்லிம்கள் சிங்கள மொழியைத் தாய்மொழியாகக் கொள்ள வேண்டும் என்ற சில அரசியல்வாதிகளின் கருத்துக்கு எதிராக ஏ.எம்.ஏ அஸிஸ் பின்வருமாறு கூறுகிறார்:
'தாய்மொழி என்பது கணவனும் மனைவியும் ஒருவ ரோடு ஒருவர் உரையாடுவதும், இருவரும் தங்கள் பிள்ளைக ளுடன் பேசுவதற்குமான மொழியாகும். இலங்கை முஸ்லிம் களின் மிகப் பெரும்பான்மையோரின் வீட்டுப் பாஷை வடக் காயிருந்தாலும், தெற்காயிருந்தாலும், தமிழே. தமிழ்தான் முஸ்லிம்களின் தாய்மொழி என்பதற்கு இதுவே தகுந்த ஆதார மாகும்' (அஸிஸும் தமிழும் - ஏ.எம். நஹியா - 1991)
தனிச் சிங்களம் அரச மொழியாக பிரகடனப்படுத்தப் பட்டதோடு வடக்கு, கிழக்கைத் தவிர்ந்த ஏனைய பிரதேசங் களில் வாழும் முஸ்லிம்கள் சிங்கள மொழியை வீட்டு மொழி யாகவும் கல்வி மொழியாகவும் ஏற்கத் தொடங்கி னார்கள்.
சிங்களப் பிரதேசங்களில் வாழும் முஸ்லிம்கள் சிங்கள மொழி மூலம் கல்வி கற்பதற்கு இரண்டு முக்கிய காரணங் களைக் காட்டலாம். சிங்கள மொழி அரசமொழியாயிருப் பதால், சிங்கள மொழியின் மூலம் கல்வி கற்றால் அரசாங்கத்தில் வேலை பெறுவதற்கு அதிக வாய்ப்பு இருக்கிறது என்பது ஒன்று. மற்றையது முஸ்லிம் பாட சாலைகளில் உயர் கல்விக் கான அதிக வசதிகளில்லாமை, அதே வேளையில் சிங்களப் பாடசாலைகளில் அதிக வசதிகள் இருப்பதும், ஒரு காரண மாகும். 1991ம் ஆண்டு வெளியிடப்பட்ட புள்ளிவிவரங்களின் படி, முழு நாட்டிலும் 44,775 முஸ்லிம் மாணவர்கள் சிங்கள மொழிப் பாடசாலைகளில் கல்வி பயின்று வருகிறார்கள். இது

395 ஒரு சிறுபான்மை சமூகத்தின் பிரச்சி 50,
முஸ்லிம் மாணவர் தொகையில் 13.05 சதவீதமாகும்.
"இலங்கை முஸ்லிம்களின் கல்வி' என்ற பொருள்பற்றி 22.8.1993ம் ஆண்டில் பேராதனைப் பல்கலைக்கழக முஸ்லிம் மஜ்லியினரால் நடாத்தப்பட்ட கருத்தரங்கில் ஏ. எஸ். அகார் முஹம்மத் என்பவரால் சமர்ப்பிக்கப்பட்ட ஒர் ஆய்வுக் கட்டுரையில் அவர் பின்வருமாறு கூறுகிறார்.
'கொழும்பு மாவட்டத்தில் (கல்வியமைச்சின் 1991ம் ஆண்டு புள்ளிவிவரங்களின்படி) 15,247 முஸ்லிம் மாணவர்கள் சிங்கள மொழிப் பாடசாலைகளில் கல்வி கற்கின்றனர். இது அம்மாவட்டத்தில் மொத்த முஸ்லிம் மாணவர் தொகையில் சுமார் 50% ஆகும். காலி மாவட்டத்தில் மொத்த முஸ்லிம் மாணவர் தொகையில் சுமார் 60% வீதமானோர் சிங்கள மொழி மூலம் கல்வி பயில்கின்றமை குறிப்பிடத்தக்கதாகும்'.
இதே போலத்தான் ஏனைய மாகாணங்களிலும் ஒரு கணிச மான தொகை முஸ்லிம் மாணவர்கள் சிங்கள மொழிமூலம் கல்வி கற்கின்றனர். கிழக்கு மாகாணத்திலும், அம்பாறை, திருகோண்மலை ஆகிய இரு மாவட்டங்களிலும் முஸ்லிம் மாணவர்கள் நூற்றுக்கும் அதிகமானோர் சிங்கள மொழி மூலம் கல்வி பயில்கின்றனர்.
சிங்கள பாடசாலைகளோடு ஒப்பிடும் போது தேசிய மட்டத்திலும், மாகாண மட்டத்திலும் முஸ்லிம் பாட சாலை களின் வசதிகள் மிகக் குறைந்தனவாகவே காணப் படுகின்றன. உதாரணமாக குருனாகல் மாவட்டத்திலுள்ள 78 முஸ்லிம் பாடசாலைகளில் 75% விகிதமானவை 9ம் ஆண்டை விடக் குறைந்த கல்வி வசதியைக் கொண்டவையாகக் காணப்படு கின்றன. மூன்று பாடசாலைகள் மட்டுமே க.பொ.த. (உ.த) கலை, வர்த்தகம், விஞ்ஞானம் போன்ற வகுப்புக்களைக் கொண்டு நடத்துவதற்கான வசதிகளைக் கொண்டிருக்கின்றன.
1991ம் ஆண்டு கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்ட

Page 212
அ. முகம்மது சமீம் 396
புள்ளிவிவரங்களின்படி ஏறக்குறைய 3 லட்சம் முஸ்லிம் மாண வர்கள் தமிழ் மொழி மூலம், முஸ்லிம் பாடசாலைகளில் கல்வி கற்கிறார்கள். ஆண்கள் - 1,54,467, பெண்கள்- 1, 44,020 மொத்தம் - 2,98,489, இப்பாடசாலைகளில் 5666 ஆசிரியர் களும் 5005 ஆசிரியைகளும் மொத்தமாக 10,671 ஆசிரியஆசிரியைகள் கல்வி கற்பிக்கிறார்கள்.
3 லட்சம் முஸ்லிம் மாணவர்கள் தமிழ் மொழி மூலம் கல்வி கற்கும் இதே வேளையில், ஏறக்குறைய 50,000 முஸ்லிம் மாணவர்கள் சிங்கள மொழி மூலமே கல்வி பயில்கின்றார்கள். இது 15 சதவிகிதத்தினர் என கணிக்கலாம். சிங்கள மொழி மூலம் கல்வி கற்கும் முஸ்லிம் மாணவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறது. ஏறத்தாழ 3.5 இலட்சம் முஸ்லிம் மாணவர்கள் பாடசாலைகளில் கல்வி பயில்கிறார்களென்றால், இதில் எத்தனை பேர் உயர் கல்வியில் சித்தியெய்தி, சர்வகலாசாலைகளில் பட்டம் பெற்று இன்று உயர்பதவிகளில் இருக்கிறார்கள் என்பது ஆராயப்பட வேண் டிய தொன்று. முஸ்லிம் பாடசலைகளில் ஆசிரியர்களது தராதரங்களைப் பார்க்கும்போது, இம்மாணவர்கள் உயர்கல்வி பெறு வது சாத்தியமில்லை யென்பது புலனாகிறது. அட்டவணை யைப் பார்த்தால் இது விளங்கும்.
கீழே உள்ள அட்டவணை, மாகாண ரீதியாக, மாணவர் களினது எண்ணிக்கையையும், ஆசிரியர்களது எண்ணிக்கையை யும் விவரமாகக் காட்டுகிறது.

397 ஒரு சிறுபான்மை சமூகத்தின் பிரச்சினைகள் IV
1991-ஆம் ஆண்டில் கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்ட தமிழ் மொழி மூலம் கல்வி கற்கும் மாணவர்களினதும், ஆசிரியர்களினதும் பற்றிய
புள்ளி விபரம்.
தமிழ்மொழி
மூலம் கல்வி கற்கும் மாணவர்கள்
மேல் மாகாணம் மத்திய மாகாணம் தென் மாகாணம் கிழக்கு மாகாணம் வடமேல் மாகாணம் வடமத்திய மாகாணம் ஊவா மாகாணம் சப்ரகமுவ மாகாணம் வட மாகாணம்
42,998 43,610
8826
110, 131 44,472 24, 717
806.6
14, 764
905
ஆசிரியர்கள் (ஆசிரியைகள்
DI LLJ L)
1184
2009
508
2996
1550
797
423
883
32I
முஸ்லிம் பாடசாலைகளின் ஆசிரியர் நிலை -1992
ஆசிரியர்வகை ஆண்
பட்டதாரிகள் 815 பயிற்றப்பட்டோர் 3O43 தராதரப் பத்திரம் 139 (க.பொ.உ/த)
(க.பொ.த.சா/த) 1478 மெளல வி 45 ஏனையவர் 40
மொத்தம் 5640
பெண் மொத்தம்
6.25
2655
122
2O64
51
4 4
5564
1443
5698
261
3564
196
84
Il II, 224
சதவீதம்
12.86%
50.7%
2.7%
31.4%
I 7%
0.7%
100%

Page 213
அ. முகம்மது சமீம் 398
மேலே உள்ள அட்டவணையின்படி, ஏனைய ஆசிரியர் வகையினருடன் ஒப்பிடுகையில் பட்டதாரி ஆசிரியர்களின் தொகை குறைவாகவே உள்ளது. பட்டதாரி ஆசிரியர்களிலும், விஞ்ஞான, கணித பட்டதாரிகள் தொகை குறைவாகவே உள்ளது. பெளதிக விஞ்ஞான ஆசிரியர்கள் , உயிரியல், கணிதம், பட்டதாரி ஆசிரியர்-மாணவர் விகிதத்தில் தேசிய சராசரி ஆகும். முஸ்லிம் பாடசாலைகளில் ஆக உள்ளது. மாவட்ட அடிப்படையில் பார்க்கும்போது மட்டக்களப்பில் ஆகவும், திருகோணமலையில் ஆகவும், பண்டாரவளையில் ஆகவும் இருப்பதைக் காணலாம். தேசிய சராசரியோடு ஒப்பிடுகையில், முஸ்லிம் பாடசாலைகளிலுள்ள பட்டதாரி ஆசிரியர்களின் பற்றாக்குறை, பொதுப் பரீட்சைகளில் இப்பாடசாலைகளின் பெறுபேறு களைப் பாதித்திருப்பதையும் நாம் அவதானிக்கலாம்.
முஸ்லிம்களுடைய கல்வி நிலையை நாம் ஆராயுமிடத்து, பின்வரும் விவரங்கள் எமக்குத் தெளிவுபடுத்துகின்றன: இலங்கையில் ஏறக்குறைய 9909 அரசாங்கப் பாடசாலைகள் இயங்கி வருகின்றன. இவற்றுள் 72.3 விகிதமானவை சிங்கள மொழி பாடசாலைகள், 6.7 விகிதமானவை முஸ்லிம் பாட சாலைகள், ஏனைய 0.8 சதவீதம் கலவன் பாடசாலைகளாகும். எல்லாமாக 710 முஸ்லிம் பாடசாலைகள் இருக்கின்றன. 1992 கணிப்பின்படி 40 லட்சம் மாணவர்கள் பாடசாலைகளில் கல்வி பயில்கின்றனர். நாட்டின் மொத்த மாணவர்களில் முஸ்லிம் மாணவர்களின் பங்கு 8.5% வீதமாகும்.
முஸ்லிம்களின் எழுத்தறிவானது சதவீதத்தினைப் பார்க்கும் போதும், இலங்கைத் தேசிய சராசரியுடனும், ஏனைய சமூகங்களுடனும் ஒப்பு நோக்கும் போது முஸ்லிம்கள் பின்தங்கிய நிலையில் இருக்கின்றனர் என்பது புலனாகும்.
(ஆதாரம் : இலங்கை முஸ்லிம் பாடசாலைகளின் பொதுக் கல்விப் பெறுபேறுகள்- ஒரு அளவீடு- மா.கருணாநிதி.)

399 ஒரு சிறுபான்மை சமூகத்தின் பிரச்சினைகள் IV
"முஸ்லிம் மக்களில் 79.3 சதவிகிதத்தினரே எழுத்தறிவு டையவர். இந்நிலை இலங்கையின் தேசிய சராசரி எழுத்தறிவு வீதத்திலும் (87.2) சதவீதம்) இருந்து அதிகம் விலகியுள்ளது. சிங்கள மக்களில் 88.4 சதவீதத்தினரும், தமிழ்மக்களில் 86.6 வீதத்தினரும் எழுத்தறிவுடையோராவர். குறிப்பாக முஸ்லிம் பெண்களின் கல்வி நிலை ஏனைய இனத்துப் பெண்களிலும் பார்க்க (பெருந்தோட்டத் துறையைச் சார்ந்த பெண்கள் தவிர) குறைவாகவே உள்ளது - 71.5%. (மா.கருணாநிதி)
முஸ்லிம்களின் கல்வி நிலையை மேலோட்டமாகப் பார்க்கும்போது, பொதுப் பரீட்சைகளிலும், உயர் கல்வியிலும், முஸ்லிம்களின் நிலை வருந்தத்தக்கதாகவே உள்ளது. சர்வகலா சாலை அனுமதியில் ஏனைய சமூகங்களுடன் முஸ்லிம்களின் விகிதாசாரத்தைப் பார்க்கும்போது இது இன்னும் தெளிவா கிறது. முஸ்லிம்களின் உயர்கல்வியிலுள்ள அவல நிலையை நோக்கும்போது தான் பதியுத்தீன் மஹ்மூத், ஏ.சி. எஸ். ஹமீத் போன்ற முஸ்லிம் தலைவர்களின், முஸ்லிம்கல்விக்கு ஆற்றிய தொண்டு மேன்மை பெறுகிறது.

Page 214
அ. முகம்மது சமீம் ݂ ݂ 400
BIBLOGRAPHY VOL.IV
1 O
Jane Russe Communal Politics u nder Donoughmore Constitution - 1931 - 1947
- Dehiwela, Sri Lanka: TiS Sara PreSS - 1982.
W. Howard Wriggins Ceylon: Dilemmas of a
New Nation - Princeton University Press - 1960
Robert Kearney Communalism and Language in Politics - Durham, N.C: Duke University Press - 1967
SatChi Ponnambalam - Sri Lanka: The National/ Question and the Tamil Liberation Struggle - London: Zed Press, 1983 A.J. Wilson S.J. V. Chelvanayagam and the Crisis of Sri Lankan Tamil Nationalism - 1947-1977 - Lake House Bookshop, P.O. Box. 244, Colombo 2 A.J. Wilson Electoral Politics in an Emergent State: -The Ceylon General Election of May 1970 - Cambridge University Press - 1975 A.J. Wilson The Break-up of Sri Lanka. The Sinhalese - Tamil Conflict - London: Hurst/Honolulu: University of Hawai Press - 1988 Lennox Mills Ceylon under British Rule - 1792-1832 - London, 1933 G. C. Mendis (ed) "The Colebrooke - CamerOn Papers: - Documents on British Colonial Policy in Ceylon -
1796-1833 - Vol.1, Vol. II, (London – 1956) V. Samaraweera "The CO le b ro O ke – Cann e ro rn Reforms - in K.M. de Silva (ed) University History of

4O1
ஒரு சிறுபான்மை சமூகத்தின் பிரச்சினைகள் IV
12
13
14
15
16
17
18
19
2O
21
22
Ceylon - Vol.3 - From the beginning of the 19th Century to 1948 (Colomb0 1973)
M. Vythillingam, Ramanathan of Ceylon - The Life of Sir Ponnambalam Ramanathan (Chunnakan - 1977)
D.E. Smith, "The Sinhalese Buddhist Revolution' in - D.E. Smith (ed) South Asian Politics and Religion - Princeton, 1966
K. M. de Silva, A History of Srilanka (London 1981)
Ambalavanar Sivarajah, Politics of Tamil Nationalism in SriLanka - South Asian Publishers - Ne W. Delhi - 1996
James Emerson Tennent, An ACCOUnt Of the Island: - Physical, Historical and Topographical - London 1856
Ananda Guruge, Anagarika Dharmapala Return to Rihte OUSness, Colombo - 1965 D.C. Wijewardana, The Revolt in the Temple, Colombo, Sinha Publication 1953
James Manor (ed), SriLanka in Change and Crisis - (London 1964)
K.M. de Silva (ed), Sri Lanka: A Survey - London 1977 Michael Roberts (ed), Collective Identi ties, Nationalism and Protest in Modern Sri Lanka – VOLI Colombo 1979
B.H. Farmer, Ceylon: A Divided Nation (London 1963)
K. M. de Silva, "The History and Politics of Transfer of Power' in the University of Ceylon, History of Ceylon - Vol.3

Page 215
அ. முகம்மது சமீம் 402
23
24
25
26
27
28
29
3O
3.
32
33
34
35
Sir Charles Jeffries, Ceylon. The Path to Independence - London - 1982 A.J. Wilson, The Gaullist System in Asia. The Constitution of Sri Lanka, 1978 - London 1980) S. J. Thambiah, Sri Lanka: Ethnic Fratricide and the Dismantling of Democracy (New Delhi: Oxford University Press 1986) M.A. M. Shukri (ed), MLS lims Of Sri Lanka - Avenues to Antiquity (Beruwela, Sri Lanka Naleemia Institute 1986) Vasundara Mohan, Muslims of Sri Lanka - Jaipur, India: Allied Publishers 1985 S. Arasarathnam, Ceylon - (New Jersey: Prentice Hall, 1969)
S.A. Pakeman, Ceylon - (London, Ernest Benn Ltd. 1964)
S. U. Kodi kara, Indo-Ceylon Relations Since Independence - Colombo: The Ceylon Institute of World Affairs - 1965
G. C. Mendis, Ceylon Today and Yesterday - Colombo, Lake House 1963 K.M. de. Silva, Managing Ethnic Tensions in
Multi-Ethnic Societies-University Press of America, 1986
A.J. Wilson, Politics in Sri Lanka 1947-1973 (London: The Macmillan Press Ltd. 1974
Gamini riyagolla, Tamil Claims to Land: Fact and Fiction (Colombo: The Institute of Public Affairs 1985)
K. M. de Silva, The "Traditional Hornelands' Of the Tamils of Sri Lanka: A Historical Appraisal

403
ஒரு சிறுபான்மை சமூகத்தின் பிரச்சினைகள் IV
36
37
38
39
40
41
42
43
44
45
46
47
Colombo: International Centre for Ethnic Studies)
S. U. KOCdikara, Foreign Policy of Sri Lanka. A Third World Perspective (New Delhi: Chanakya Publications)
H.A.S.S. Nissanka, Sri Lanka's Foreign Policy: A Study in Non Alignment - New Delhi.
(Vikas Publishing House 1984) Urmila Phadnis, Religion and Politics in Sri Lanka New Delhi, Manohar Book Service 1976 Pieris P. E., The Kingdom of Jaffna patnam 1945 (London, Luzac & Co 1920) Pillay K.K. South India and Ceylon, Madras, (University of Madras - 1968) S. Pathmanathan, The Kingdom of Jaffna - Part Colombo: Arul Rajendram - 1978
Satchi Ponnambalam, Dependent Capitalism in Crisis - The Sri Lanka Economy, London, Zed Press 1981
Donald Snodgrass, Ceylon, an Export Economy in Transition, Homewood, Jillinois: Richard D. |r Win 1966
C.V. Veluppilai, Bom to Labour, Colombo 1970 Tarzie Vittachi, Emergency '58: The Story of the Ceylon Race Riots; London, Andre Detach 1958 W.A. Wiswa Warnapala and L. Dias HeWagame, Recent Politics in Sri Lanka, New Delhi, Nawrang 1983 Walpola Rahula, History of Buddhism in Ceylon.
The Anu radhapura Period, 3rd Century BC – 1 Oth Century A.D. (Colombo 1956)

Page 216
அ. முகம்மது சமீம் 404
48
49
50
51
52
53
54.
55
56
57
58
59
60
S. Paranavitana, "Triump of Duttagamini" in History of Ceylon Part I
S. Natesan, "The Northern Kingdom in History of Ceylon - Vol. 1 - Part II
K.W. Go One Wardana, "The Foundation of Dutch Power in Ceylon (1658-1687) Amsterdam 1958
T. Vimalananda (ed), Buddhism in Ceylon. under the Christian POWe rS and the Educational and Religious Policy of the British Government in Ceylon - 1797 - 1832 (Colombo 1963) K. M.de. Silva (ed), Letters on Ceylon 1846-50. The Administration of Viscount Torringtion and the "Rebellion' of 1848 (Colombo 1965)
S. Namasivayam, "The Legislatures of Ceylon" 1928. - 1948 - (London 1950) Sir Ivor Jennings, The Constitution of Ceylon 3rd ed. (Bombay 1953) D. L. Jayasuriya, "De Velopment in University Education: The Growth of the University of Ceylon (1942 - 1965) I.D.S. Weerawardana, "The General Elections in Ceylon, 1952 (M.D. Gunasene) (Mrs) V. Kumari Jayawardana, "The Rise of the Labour Movement in Ceylon (Durham, North Carolina 1972)
R. N. Kearney, Trade Uni On S and POliiiCS in Ceylon (Berkeley 1971) Sir John Kotela Wala, "An Asian Prime Minister's
Story (London 1956) Ludo Wyk, The Story of Ceylon (London 1962)

405
ஒரு சிறுபான்மை சமூகத்தின் பிரச்சினைகள் IV
61
62
63
64
65
66
67
68
69
I.D.S. Weera Wardana, Government and Politics in Ceylon (1931-1946)
Singer, The Emerging Elite: A Study of Political Leadership in Ceylon (Durham, North Carolina 1968)
Ameer Ali, "The 1915 Racial Riots in Ceylon (Sri Lanka) A Reappraisal of its Causes (South Asia 1981) A. C. Alles, Insurgency 1971 – Colomb O.: Colombo Apothecaries & Co. 1976)
Sarath Amunugama, "Anagarika Dharmapala (1864-1933) and the Transformation of Sinhala Buddhist Organization in a Colonial Setting. Social Science Information, No.4, (1985)
Sarath Amun ugama, "Budhaputra and Bhumiputra? Dilemmas Of MOdern Sinhala Buddhist monks in Relation to Ethnic and Political Conflict" Religion 21, (1991)
Suni | Bastian, "University Admission and the National Question, Ethnicity and Social Change in Sri Lanka, Social Scientists Association Colombo; Navamaga Printers, 1985
George Bond, "The Buddhist Reyjya | in Sri Lanka. The Religious Tradition Re-interpretation and Response, Colombia: University of South Carolina, PreSS 1988
C. R. De Silva, "The Impact of Nationalism in Education: The Schools Take-over (1961) and the University Admission Crisis 1970-1975, Collection Identities, Nationalism, and Protest in Modern SriLanka (ed) by Michael Roberts, Colombo, Marga |nstitute || 979

Page 217
அ. முகம்மது சமீம் 406
7O
7
72
73
77
78
79
8O
C. E. Goda kumbara, Sin ha le S e Literature, Colombo: Colombo Apothcaries Co. 1955 L.S. Dewarajah, "The Kandyan Kingdom' 1707-1760, Colombo: Lake House Publishers, 1971 Hulu galle, H. A.J., The Life and Times of D. R. Wije Wardana Colombo: Lake House 1960 J.E. Jayasuriya, Educational Policies and Progress during the British Rule in Ceylon. 1796-1948.
CO||OmbO: ASSO Ciated Edu Cat iOna|| Publi SherS
Kumari Jayawardana, Ethnic and Class Conflicts in Sri Lanka, Colombo: Navagama Printers, 1986
Kumari Jayawardana, "Bhikkus in Revolt"
Lana Guardian, May 15, June 15, July & July 1, 15, 1979. Kumari Jayawardana, Ethnic Consiousness in Sri Lanka. Continuity and Change, Sri Lanka, The Ethnic Conflict: Myths, Realities and Perspectives. Committee for Rational Development, New Delhi: Navrang, 1984 A.P. Kannangara, "The Riots of 1915 in Sri Lanka: A Study in the Roots of Communal Violence" Past and Present, No. 102 (1983) Robert Kearney, "The 1915 Riots in Ceylon: A Symposium", Journal of Asian Studies, 24 No.2 (1970) Kithsiri Malagoda, "Buddhism in Sinhalese Society, 1 750-1900, A Study of Religious Revival and Change, Berkeley: University of California Press 1976
James Man Or, “The EXpedient UfODia n.

4O7
ஒரு சிறுபான்மை சமூகத்தின் பிரச்சினைகள் IV
81
82
83
84
85
86
87
88
89
9 O
91
Bandaranalike and Ceylon, Cambridge: Cambridge University Press 1989
Gananath Obeysekere, The Cult of the Goddess Pattini, Chicago; University of Chicago Press, 1984
S. Paranavitana, History of Ceylon Vol. 1. Colombo: University of Ceylon Press Board, 1960
Patrick Peebles, "Colonization and Ethnic Conflict in the Dry Zone of Sri Lanka, "Journal of Asian Studies 49, No. 1, (1990)
Ralph Pieris, Sinha lese Social Organization: The Kandyan Period, Colombo: University of Ceylon, PreSS BOard - 1956
Bryce Ryan, Caste in Modern Ceylon, New Brunswick: Rutgen University Press 1953
Amita Shastri, "The Materia || BaS | S f O'r Separatism: The Tamil Eelam Movement in Sri Lanka", Journal of Asian Studies 49, No. 1 (1990)
Jonathan Spencer (ed), Sri Lanka. History and the Roots of Conflict, London: Routledge, 1990
Adrian Wijemanne, War and Peace in Post-Colonial Ceylon - 1948-1991 - Orient Longman 1996
C.A. Chandraperuma, Sri Lanka. The Year of Terror - The JVP Insurrection - 1987-1989, Colombo: Lake House Bookshop. 1991
R. Indrapala, "A Brief History of the City of Jaffna", Commemorative souvenir, The Jaffna Public Library (St. Joseph's Press 1984)
Michael Roberts, Caste Conflict and Elite Formation. the Rise of a Karave Elite in Sri Lanka 1500 - 1931 (Cambridge: Cambridge University Press 1982)

Page 218
அ.முகம்மது சமீம் 4.08
92
93
94
95
96
97
98
99
1 OO
O
102
103
O4.
M. D. Raghavan, The Karava Of Ceylon, SOCiety and Culture (Colombo: K. V. G. de. Silva and Sons 1961) K. Kailasapathy, The Cultural and Linguistic Consciousness of the Tamil Community in Sri Lanka, Punit havathy Tiruchelvam Memorial Lecture, Tam|| Women's Union, Kalalaya (Colombo: New Leela Press 1982) S.W.R.D. Bandaranaike, To Wards a New Era, Colombo 1961 - Speeches and Writings, Colombo, 1963 Buddhist Commission of Enquiry, "The Betrayal Of Buddhism, Balangode, 1956 H.W. Corington, A Short History Of Ceylon, London, 1926 John Daviy, An ACCount of the Interior of Ceylon London, 1821 E. B. Denham, Ceylon at the 1911 Census, Colombo, 1912
W. Geiger (trans) Culavamsa 1927 (VI) - Mahavamsa - London 1912 H.A.R. Gibb, Ibn Batuta, London 1920 B. Gunasekara, The Raja Valiya, Colombo 1960
Sir Charles JeffrieS, Transfer of Power, London 1960 Sir vor Jennings, Approach to Self-Government – Cambridge 1952 The British Commonwealth Of Nations, London, 1961
Janice Jiggins, Caste and Family in the Politics of the Sinhalese 1947-1976 - Cambridge 1976

409 ஒரு சிறுபான்மை சமூகத்தின் பிரச்சினைகள் V 105 James Jupp, Sri Lanka - Third World Democracy,
London, 1978 106 G.C. Mendis - The Problems of Ceylon History,
CO|OrmbO 1966 107 W. Nicholas and S. Paranavitana, A Concise
History of Ceylon 1961 108 H. Parker, Ancient Ceylon, London 1909 109 Denzi | Pieris, 1956 and After, Colombo 1958 110 Ralph Pieris, Some Aspects of Traditional Sinhalese
Culture, Peradeniya, 1956 111 C. Rasanayagam, Ancient Jaffna, Madras, 1926 112 C. F. Amera Singhe, ""Legal Limitations on Constitutional Reforms in Ceylon Journal of Historical and Social Studies' - Jan-June 1966 113 Sarath Amunugama, "The New Image of the Sinhale-Buddhist Nationalistin Michael Roberts (ed) "Collection Identities. 1 i 4 S. Ara Saratnam, "Nationalism in Sri Lanka and the
Tamils" in Michael Roberts (ed) Collective Identities... 115 Tissa Balasuriya, "Sri Lanka's Crisis of National
Unity', Colombo 1979 116 C.E. Corea, "Communal Riots", Dehiwela 1917 117 Colvin R. de Silva, "The Failure of Communalist
Politics." Colombo, 1958 118 K.M. de. Silva, "Nationalism and its impact', in Sri Lanka Since Independence, Colombo 1977 119 K. N. O. Dharmadasa, "Language and Sinhala
Nationalism: The Career of Munidasa Cumaratunga', in Modern Ceylon Studies, July 1972

Page 219
அ. முகம்மது சமீம் 40
120
21
122
123
124
125
126
127
28
B.H. Farmer, "The Social Basis of Nationalism in Ceylon', in the Journal of Asian Studies Vol. XXIV, 3 May, 1965 T. Fernando, "The Elite Politics in the New States', The case of Post-Independence Sri Lanka, in Pacific Affairs - 1973
Federal Party, "Ceylon Faces Crisis", Colombo, 1957
Leslie Goonewardena, "A Short History of the LSSP", Colombo, 1960 C.R. Hensman, "The Role of the Western Educated Elite', in Community, Colombo 1962 Kumari Jayawardana, "The Origin of the Left Movement in Sri Lanka, in Modern Ceylon Studies, July 1971
Sir ivor Jennings, "Nationalism and Political
Developments in Ceylon: The Background to SelfGovernment", in Ceylon Historical Journal, Vol. III,
1953-54
Robert Kearney, "The New Political Crisis of Ceylon' in Asian Survey, June 1962 - New Directions in Politics of Ceylon in Asian Survey, February 1967 - Political Stress and Cohesion-Ceylon in Asian Survey, February 1968 - The Marxists and Coalition Government in Ceylon, in Asian Survey, Feb. 1965 Educational Expansion and Volatility in Sri Lanka: 1971 Insurrection in Asian Survey, September 1975 S. U. Kodi kara, "CO mm u na i S m and Political Modernisation in Ceylon, in Modern Ceylon Studies, January 1970

41
ஒரு சிறுபான்மை சமூகத்தின் பிரச்சினைகள் IV
129
13O
131
132
133
134
135
136
137
139
140
N.S.G. Kuruppu, "A History of the Working Class Movement in Ceylon, in Young Socialist 1961-62
Badiuddin Mahmud, Muslim Dignity Resto red, COOmbo 1968
Vijaya Samara Weera, "The Muslim Revivalist Movement, 1880-1915 in Michael Roberts (ed) in CO//eCtİ Ve sidentifies
Donald E. Smith, "The Dialectic of Religion and Politics Of Sri Lanka' in Sri Lanka Since Independence, Colombo 1975
W.A. Wiswa Warnapala, Triumph of Competition in the Civil Service', in The Ceylon Journal of Historical and Social Studies, Vol.1, 1971
L.A. Wickremaratna, "The Kandyam and Nationalism'. Some Reflections' in "The Ceylon Journal of Historical and Social Studies", Vol. 5, 182 1975
A.J. Wilson, "Race, Religion, Language and Caste in Subnationalism of Sri Lanka, in Michael Roberts (ed.) Collective Identities
C. R. De Silva, Sri Lanka: A History, Delhi 1987
K.M. de Silva and Howard Wriggins, J. R. Jayawardena of Sri Lanka, A Political Biography - Wo|... | 1906 - 1956 - LOnd On 1977 B.H. Farmer, Pioneer Pea Sant Colonization in Ceylon, London 1959
Sir Ivor Jennings, Additional Notes on the General Election of 1952 CHJ 2(3,4) January & April 1953 "The Ceylon General Election of 1947'
University of Ceylon Review, 6(3) July 1948
141 Lierski, G, Origin of Trotskyism in Ceylon. A

Page 220
அ. முகம்மது சமீம் 412
42
143
46
147
148
149
150
151
152
154.
i55
documentary history of the Lanka Sama Samaja Party 1935-42, Stanford 1968 Mick Moore, The State and Peasant Politics in Sri Lanka, Cambridge 1985 B.S. Wije Weera, A Colonia | Administrative System in Transition: the Experience of Sri Lanka, COOmbO 1988 C. Suriya kumaran, The August of "|"83" Sri Lanka Ethnic Crisis and the WayOut, Colombo 1990 Y. Banks, "Caste in Jaffna' in Aspects of Caste in South India, Ceylon and North West Pakistan, E.R. Leach (ed) Cambridge 1960 Das Gupta, A Short Economic Survey of Ceylon, CO||OmbO 1949
H.N. S. Karunati lake, Economic Development in Ceylon, New York, 1971 Ralph Pieris, Sinha les e Social Organization, CO||OmbO 1956
K.M. de Silva, "The Tran Sfer Of POW er - British Perspective, CJHSS' 1974, Special double number on Sri Lanka Since Independence Sessional Paper XIII of 1946, The Report of the Delitation COmmiSSiOn T. Nadarajah, The Legal System of Ceylon in its Historical Setting, London, 1972 JOnes G. W and S. Sel Varatnam, Pop u la ti o n Growth and Economic Development in Ceylon, Colombo 1972
Education in Ceylon: A Centenary Volume, Colombo Ministry of Education, 1969 J.E. Jayasuriya, Education in Ceylon before and

413
ஒரு சிறுபான்மை சமூகத்தின் பிரச்சினைகள் IV
156
after independence, 1939-1968, Colombo 1960
Non-formal Education in Sri Lanka Marga Research Studies I, Colombo 1974
157 US Watte - Aratchi, G, "University Admissions in
158
159
16O
16
162
163
164
165
166
Ceylon: their economic and Social backgound and employment expectations' Modern Asian Studies Vol. VIII, No.3 (1974)
Report of the National Council of Higher Education for the year 1966-67 (Colombo 1968)
- Report of the National Council of Higher Education for the year 1970-71 Colombo (1972)
Sir Ivor Jennings, "Notes on the Constitutional Law of Colonial Ceylon, Ceylon Branch of the Royal Asiatic Society, New Series Vol.
Ceylon: Report of the Special Commission on the Constitution - Donoughmore Report, Colombo (1928)
Ceylon: Report of the Commission on Constitutional Reform (London 1945)) - Soulbury Report Ceylon Historical Journal, Vol. V (1955-56) Senanayake Memorial Number Ceylon Daily News Parliament of Ceylon 1965 (Colombo) Ceylon Daily News Seventh Parliament of Ceylon 1970
Amnesty International, Report of an Amnesty International Mission to SriLanka, 31, January , February 1982, London: Amnesty International Publication 1983 Ceylon Department of Census and Statistics, Census of Population 1971, Sri Lanka. Government Press, 1972

Page 221
அ. முகம்மது சமீம் A 4
167
168
169
17O
17
Ceylon Department of Census and Statistics, Statistical Abstracts of Ceylon, 1967-68, Colombo, Dept. of Government Printing, 1970
Ceylon Department of Elections, Results of Parliamentary General Elections in Ceylon, 19471970, Colombo: Dept. of Government Printing 1971
Ceylon Parliamentary Debates (Hansard) House of Representatives Official Report 1948, 1949, 19561971 Ceylon, Parliamentary Debates, (Hansard) Senate Official Report Vol.26, Dec. 1968 J. R. Jayawardana, Towards Just and Free Society, Sri Lanka: Dept. of Government Printing 1977
172 John D. Rogers, Cultural Nationalism and Social
173
174
175
176
177
Reform. The 1904, Temperance Movement in Sri Lanka Pub: Studies in Society and Culture: (SSC) Sri Lanka Past and Present - 1994 Elizabeth Nissan, The Work of Anthropologists from Sri Lanka, a Fe Vije My in 7 987 - Pub S.S.C. - 1 993 Jonothan Spencer, Collective Violence in Everyday Practice in Sri Lanka (SSC 1993) Michael Roberts, Noise as Cultural Struggle. TomTom Beating, the British and Communal Disturbances in Sri Lanka - 1880s-1930s (SSC 1993) Donald L. Horowitz, In Centives and Behaviour in the Ethnic Politics of Sri Lanka and Malaysia (SSC 1993)
E. Valentine Daniel, Three Dispositions Towards the Past: One Sinhala TWO Tamil (SSC 1992)
178 L.A. Wickremaratne, Religion, Nationalism and
Social Change in Ceylon - 1865-1885 (SSC 1993)

415
ஒரு சிறுபான்மை சமூகத்தின் பிரச்சினைகள் IV
79
18O
18
182
183
84
185
86
188
189
19 O
19
Bruce Kapferer, Nation list Ideology and a Comparative laeology (SSC 1993) R. A. L. H. Guna Wardana, Historiography in a Time of Ethnic Conflict - COnStruction of the Past in Contemporary Sri Lanka, Social Scientist ASSOCiation - CO ||Ombo - 1 995
T. SOm sekaram, Facts about Our Land – Pub. Aruju na Consulting Co. 1996 V. Sarva loganayagam, Trade Unions in Sri Lanka,
1973
Ariya Abey Singhe, Land Reform in Sri Lanka - 15051975 - Que St 46 - 1976
Ministry of Education, Education in Sri Lanka -
New Horizons
L.S.S.P. (Publication) - Lanka's Left the Way Forward - 1979
K. M. de. Silva, Muslim leaders and the National MOVennent - CES - 198478 -
Radhika Coomaras Wamy, Sri Lanka ''S Ethnic Conflict - Mythology, Power and Politics - CES - 1984
Sunil Bastian, Statiscal Guide on Ethnic Groups in Sri Lanka - CES - 1986
Sunil Bastian, Ethnicity and Class in Education - International Centre for Ethnic Studies (ICES) - 1985
Kumari Jaya Wardena, The Origins of the Left Movement in Sri Lanka - Sanjiva BOOKS, Colombo Michael Roberts, Ethnic Conflict in Sri Lanka and Sinhalese Perspectives. Barriers to Accommodation

Page 222
அ. முகம்மது சமீம் 46
192
193
194
195
196
97
198
199
2OO
2O1
2O2
2O3
2O4.
2O5
- Studies in Society and Culture: Sri Lanka Past and Present 1992
Paramu Pushparatnam, Pu na kary - An Archaelogical Survey (Tamil) University of Jaffna - 1993
S. Paranavitana, "On the Panakadu Inscription - JRAS - 1949 -
Epigraphica Zeylanica - Vol.I & Vol. V || ||
P.Ragu pathy, Early Settlements in Jaffna - An Archaelogical Survey - Madras - 1987 Senaratne S.P.E., Pre-Historic Archaelogy of Ceylon - Colombo 1969 Goonetilake, Sinhalization - The Origins - Lanka Guardian - Vol. 3. No. 1 P.E. Pieris, Naga dipa and Buddhist remains in Jaffna, Part || - JRAS – Vol. XXV|| || F.X. C. Nadarasa - Mattakkalappu Manmiyam - (Tamil), Colombo - 1973
Parker H, Ancient Ceylon (London 1909)
Codrington. H. W., Ceylon Coins and Currency - COOmbO 1924
K.A. Nilakanta Sastri, A History of South India (London 1958) Ellewela H. Social History of Early Ceylon - COOmbO 1969
B.J. Perera, Ancient Ceylon and its Trade with India - The Ceylon Historical Journal - No.3. Colombo -
1952 A. Liyanagamage, The decline of Polonnaruwa and the rise of Dambadeniya - Colombo 1968

417
ஒரு சிறுபான்மை சமூகத்தின் பிரச்சினைகள் IV
2O6
2O7
208
209
21 O
21
212
213
214
215
26
21 7
218.
S. Gurumo Orthy, Ceramic Traditions in South India - Madras 1981
C.S. Navaratnam, Vanni and the Vanniyars, Jaffna 1960
S. Paranavitana, "The Arya Kingdom in North Ceylon" - JRAS - Vol. VIII 1961
Graham Clarke J. G.D., Archaelogy and Society
A. Veluppillai, Ceylon Tamil Inscriptions - part || – Peradeniya 1972 S.P.F. Senaratne, Pre-Historic Archaelogy of Ceylon - Colombo 1981 H.C. Ray (ed) University of Ceylon - History of Ceylon - Vol. 1 COOmbO 1969
Indrapala. K. Early Settlements in Ceylon - JRAS (CB) vol. XIII 1969 S. Gnanaprakasam, Beginnings of Tamil Rule in Ceylon - Tamil culture - Vol.3-No. 3&4, Sep. 1953) "Sources for the study of history of Jaffna - Tamil Culture - Vol.2-Nos. 3&4 (Sep.1953) S. K. Sitrampalam (ed), Ya Ippa na I racci yam (Kingdom of Jaffna) University of Jaffna - 1992 (Tamil)
எம்.எஸ். அப்துல் ரஹீம் - யாழப்பாண முஸ்லிம்கள் வரலாறும் பண்பாடும் (யாழ்ப்பாணம்) 1979
95 IT இந்திரபாலா, யாழ்ப்பாணத்துக் கல்வெட்டுக்கள் - சிந்தனை, மலர் 2, இதழ்4 - பேராதனை - ஜனவரி 1959
யாழ்ப்பாண இராச்சியத்தின் தோற்றம் -பேராதனை - 1972

Page 223
அ. முகம்மது சமீம் 4.18
219 வீ. சி. கந்தையா - மட்டக்களப்புத் தமிழகம் -
221
222
223
224
225
226
யாழ்ப்பாணம் 1964
செ.குணசிங்கம், கள்ளியங்காட்டுச் செப்பேடுகள் - பேராதனை 1970
சண்முகசுந்தரம், த, 'ஈழத்தில் சைவக் கிராமிய வழிபாடு - நான்காவது அனைத்துலகத் தமிழ் ஆராய்ச்சி மகாநாடு நிகழ்ச்சிகள் - முதலாவது தொகுதி (பதிப்பு) சு.வித்தியானந்தன் - 1974
சி. க. சிற் றம்பலம், இலங்கையின் ஆதிப் பிராமிக் கல்வெட்டுக்கள் காட்டும் இந்து மதம்' - சிந்தனை தொகுதி 1 இதழ் 2, 1976 -
- "யாழ் மாபட்டத்தின் அண்மைக்காலத் தொல்லியல் ஆய்வும் ஆதிக்குடிகளும், செந்தழ ல், தமிழ் மன்றம் - யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் - 1982
பண்டைய ஈழத்து யக்ஷ-நாக வழிபாடுகள் - சிந்தனை (புதிய தொடர்) தொகுதி1, இதழ்2, கார்த்திகை 1983
ஜே.ஆர். சின்னத்தம்பி, தமிழ் நாட்டு எல்லைகள் - கொழும்பு - 1973
சி. பத்மநாதன், இரு தமிழ்ச் செப்பேடுகள் (யாழ்ப்
பாணத்திலிருந்து) - சிந்தனை - மலர்3, இதழ்1, ஜனவரி 1970

419 ஒரு சிறுபான்மை சமூகத்தின் பிரச்சினைகள் IV
“இனவெறியைத் தூண்டி நாட்டில் குழப்பத்தை மேலும் விரிவு படுத்தச் சதி”
"முஸ்லிம்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு அகில இலங்கை கதீப் மார்கள் சம்மேளத்தின் வேண்டுகோள்'
மறைமுகமாக இந்த நாட்டை ஆக்கிரமித்துள்ள சிலசக்தி கள் தங்களது கையாட்களைக் கொண்டு இனங்களிடையே து வேசத்தைத் தூண்டி மோத விடும் செயலில் ஈடுபட்டு வருகின்றன. ஏற்கனவே சிங்கள தமிழ் இனங்களை மோதவிட்டு தமது ஆதிக்கத்தையும் பொருளாதாரத்தையும் வளர்த்துக் கொண்டுள்ள இச்சக்திகள் முஸ்லிம்களையும் சிங்களவர்களையும் மோதவிடும் முயற்சியில் மும்முரமாக இப்போது ஈடுபட்டு வருகின்றன. இதில் நகைப்புக்குரிய விடயம் என்னவெனில், பெரும்பான்மை இனத்தைச் சார்ந்த 'படித்தவர்கள்' இதில் ஈடுபட்டுள்ளதாகும். குறிப்பிட்ட முஸ்லிம் அரசியல் தலைவர்களுக்கெதிராக பெரும்பான்மை இனத்தின் உரிமைகளைப் பறித்துக் கொண்டார்கள் என்றும், பறிக்கின்றார்கள் என்றும், பொய்ப்பிரச்சாரத்தில் இச்சக்திகள் ஈடுபட்டு முஸ்லிம்களுக்கு எதிராக இனத்துவேச உணர்வு களைத் தூண்டிவிடுகின்றன.
எங்காவது ஒரு முஸ்லிமுக்கும் ஒரு பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த ஒரு வருக்குமிடையே சச்சரவுகள் உருவாகுமாயின் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த ஒரு கும் பலால் முஸ்லிம்கள் தாக்கப்படுவது சகஜமாக இப்போது மாறிவருகின்றது. குறிப்பாக இவ்வாறான நிகழ்வுகள் அண்மையில் பல இடங்களில் இடம் பெற்றுள்ளன.
திட்டமிட்டு சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி முஸ்லிம்களை தாக்கி, உயிர்களுக்கும் உடமைகளுக்கும் சேதத்தை உண்டு

Page 224
அ. முகம்மது சமீம் 42O
பண்ண முனைந்து கொண்டிருக்கும் இச்சக்திகளை இனம் கண்டு அவ்வாறான சக்திகளின் செல்வாக்கு அதிகரிக்காமல் இருப்பதற்கு உரிய வழிகளைக் காண்பதில் கண்ணும் கருத்து மாக இருக்க வேண்டும்.
'உங்களில் ஒரு பிரிவினர் நன்மையின் பால் அழைத்த, தீமைகளை அகற்றும் பணியைப் புரியவும்', என்னும் குர்ஆன் கருத்துக்களைக் கவனத்திற்கு கொண்டு செயற்படவேண்டும்.
பல நூற்றாண்டுகளாக சிங்கள முஸ்லிம் சமூகங்களுக்கு இடையே இருந்து வரும் பரஸ்பர நல்லெண்ணமும், சமாதானமும் இன்று சீர்குலையும் நிலையில் உள்ளன. இதுகால வரையும் முஸ்லிம்கள் சிங்கள மக்களுடன் ஒற்றுமையாகவே வாழ்ந்து வந்திருக்கின்றனர். சிங்கள மக்களின் நல்வாழ்விலும், துன்பத்திலும், முஸ்லிம்கள் பங்கு கொண்டு வந்திருக்கின்றனர். இன்று முஸ்லிம் தலைவர்களுக்கெதிராக ஒருசில விஷமிகள் கட்டுக்கதைகளை கட்டவிழ்த்து விட்டிருக்கின்றனர். எமது சமுதாயத்திற்காகப் பாடு பட்டு வரும் முஸ்லிம் தலைவர்களைப் பாதுகாக்க வேண்டியது முஸ்லிம்களாகிய எமது கடமையாகும். முஸ்லிம் களின் எதிர்காலம் எமது தலைவர்களை பாதுகாப்பதில் தங்கியிருக்கிறது.
சிங்கள மக்களினதும், தமிழர்களினதும், முஸ்லிம்களி னதும் ஒற்றுமைக்காகவும் சமாதானத்திற்காகவும் நாம் பாடு பட்டால்தான் இந்நாட்டில் அமைதி நிலவும், நாடும் முன்னேறும். இலங்கையின் எல்லா சமூகங்களினதும் நல்வாழ்விற்காக எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திப் போமாக.
பின்வரும் அறிக்கையைப் பற்றி உங்களில் பலர் கேட்டும் அல்லது பார்த்தும் இருக்கலாம் என நம்புகிறேன். இத்தகைய சந்தர்ப்பங்களில் ஒவ்வொரு முஸ்லிமும் சிங்க ள முஸ்லிம் சமூகங்களுக்கிடையே நிலவும் ஒற்றுமையைப் பேணிப்பாது

42 ஒரு சிறுபான்மை சமூகத்தின் பிரச்சினைகள் IV
காக்கக் கடமைப்பட்டுள்ளார்கள். சில தினங்களுக்கு முன்னர் "சிங்கள முன்னணி' எனும் அமைப்பினால் வெளியிடப்பட்ட கீழ்வரும் அறிக்கையை வாசித்து அதில் கையாளப்பட்டுள்ள கருத்துக்களின் பால் நாம் சிந்தனையைச் செலுத்த வேண்டும். அந்த அறிக்கை பின்வருமாறு:
'சிங்களவர்களே விழித்தெழுங்கள்'
கடந்த அரசாங்கத்தில் பிரபல அமைச்சராகப் பதவி வகித்த ஏ. சீ. எஸ் ஹமீத் அவர்களால் முஸ்லிம் மக்களுக்கென பெற்றுக் கொடுக்கப்பட்ட சேவைகளும், வரப்பிரசாதங்களும் கியூபா நாட்டு புலமைப் பரிசில் விவகாரம் வெளிவந்ததைத் தொடர்ந்து அம்பலமாகியது. இது முஸ்லிம் சமுதாயத்துக்கு ஹமீத் பெற்றுக் கொடுத்த விஷேட வரப் பிரசாதங்களில் ஒன்றாகும்.
இந்த சந்தர்ப்பத்தில் நாங்கள் சில முக்கிய தகவல்களை நினைவில் கொள்ள வேண்டியது அவசியமானதாகும்.
1. 1977ம் ஆண்டில் ஐக்கிய தேசியக் கட்சி ஜே.ஆர் ஜயவர்தனவின் தலைமையின் கீழ் பதவிக்கு வந்தது. அதற்கு முன்னிருந்த பூரீமாவோ பண்டார நாயக்க ஆட்சி காலத்திலே எமது இரத்தத்தை உறிஞ்சிக் குடித்த முஸ்லிம் வர்த்தகர்களை நசுக்க எம்மால் முடிந்திருந்தது. ஆனால் புதிய அரசாங்கம் பதவியேற்றதை அடுத்து ஜனாதிபதி ஜயவர்தனவுக்கும் தனக்கும் இடையே இருந்த பரஸ்பர நம்பிக்கையைப் பிரயோகித்து ஹமீத் மீண்டும் சுதந்திர பொருளாதாரக் கொள்கையை ஏற்படுத்தி வர்த்தகத் துறையிலே வீழ்ச்சி அடைந்திருந்த முஸ்லிம்களை தலைநிமிர வைத்துள்ளதை இன்று எங்கும் காணக் கூடியதாக இருக்கிறது.
2. பிரதமர் பூரீமாவோ பண்டாரநாயக்கா அன்று
சமர்ப்பித்த நிதி மசோதாவின் கீழ் இந்த நாட்டு முஸ்லிம் ஒருவர் ஒரு காணியை வாங்க வேண்டியிருந்தால் தனது பிரஜா

Page 225
அ. முகம்மது சமீம் 422
உரிமையை ஒப்புவிக்க வேண்டி இருந்தது. இன்றேல் அந்த காணி உறுதிக்கு நூறு சத விதம் தீர்வை வரியை அறவிட வேண்டியேற்பட்டது. அந்த சட்டத்தை ஜே.ஆர் ஜயவர்தன ஆட்சியின் மூலம் செல்லுபடியற்றதாக்க ஹமீதால் முடிந்தது. இலங்கைப் பாராளுமன்ற சரித்திரத்திலே சமர்ப்பிக்கப்பட்ட இந்த சட்ட மூலங்களைப் போல் கடந்த 50 ஆண்டுகளில் எதையும் நிறைவேற்ற முடிந்துள்ளதா?
3. ஹமீத் வெளிநாட்டமைச்சராகப் பதவி வகித்த காலத்திலே தனது அதிகாரத்தைப் பிரயோகித்து மத்திய கிழக்கிலே உள்ள முஸ்லிம் நாடுகளான சவூதி அரேபியா, குவைத், ஒமான், ஐக்கிய அரபு ராச்சியம் என்பனவற்றில் எமது தூதுவராலயங்களை நிறுவி எமது நாட்டுடனான தொடர்புகளை வலுப்படுத்தியது ஏனென்றால் முஸ்லிம் உலகின் சக்தியை இந்த நாட்டில் உறுதி செய்யவும் அத்தோடு இலங்கை முஸ்லிம்களுக்கு தொலைவிலுள்ள பாதுகாவலர்களைத் தேடிக் கொடுப்பதற்கும் ஆகும். ஹமீத் மேற்கொண்ட இந்த முயற்சியின் பயனால் ஏற்பட்ட பிரதிபலன்கள் மூலம் வெளிநாடுகளிலே வேலை வாய்ப்பை பெற்ற முஸ்லிம்களின் முன்னேற்றம் தெரியவில்லையா?
4. இந்த நாட்டின் சகல அரசதுறை நியமனங்களும் இனரீதியான அடிப்படையிலேயே வழங்கப்பட வேண்டும் எனும் சட்டத்தின் மூலகர்த்தா ஹமீத் ஆவார். இந்த சட்டத்தின் பிரகாரம் அரச நியமனங்கள் முஸ்லிம்களுக்கு சட்ட ரீதியாகவே உறுதி செய்யப்பட்டுள்ளன.
5. இந்நாட்டிலே ஆங்கிலக் கல்வியை வளர்ப்பதற்கு ஜே.ஆர் ஜயவர்தன ஆட்சி மேற்கொண்ட முயற்சிகளுக்கு ஹமீத் முன்னணியில் நின்று செயல்பட்டது ஏனென்பது தெரியாதா? இதன் காரணமாக ஆங்கிலக் கல்வி அறிவிலே முஸ்லிம்கள் முன்னணி வகிப்பது தெரியவில்லையா?
மேலே குறிப்பிடப்பட்டுள்ளவைகள் முஸ்லிம் சமுதாயத்

423 ஒரு சிறுபான்மை சமூகத்தின் பிரச்சினைகள் IV
தின் நன்மை கருதி ஹமீத் வழங்கியுள்ள பங்பளிப்புகளில் ஒரு துளியாகும். இது போல் இன்னும் எண்ணற்ற முயற்சிகளை இவர் மேற்கொண்டுள்ளார்.
அமைச்சர் தொண்டைமான் எமது எதிரியாவார். அதை விடவும் பயங்கரமான எதிரிதான் ஹமீத். தொண்டமானின் போராட்டம் தோட்டத்தில் வாழும் தமிழ் மக்களின் உரிமைகளையும் சம்பளம், வீட்டுப் பிரச்சினை என்பவற்றோடு மட்டும் தொடர்புள்ளதாகும். ஆனால் ஹமீதின் போராட்டமோ இதை விடவும் ஆழமான்து. எந்த ஒரு கட்சியும் ஹமீதை இணைத்துக் கொள்ளக் கூடாது.
இப்படிக்கு 'சிங்கள முன்னணி"
நாட்டின் முன்னேற்றத்துக்காக மேற்கொள்ளப்படும் சில முயற்சிகளுக்கு தப்பான சில அபிப்பிராயங்களை உருவாக்கி எம் இரு சமுதாயங்கள் மத்தியிலும் வெறுப்புணர் வைத் தூண்டி விடுவதற்காக மேற்கொள்ளப்படும் முயற்சியே இது ஆகும். இவைகளால் நாம் ஏமாற்றப்படக்கூடாது. இலங்கை எங்களின் சொந்த நாடு. சிங்கள, தமிழ், முஸ்லிம், கிறிஸ்தவ மக்கள் அனைவரும் ஒற்றுமையாக வாழ்ந்து வருகிறோம். எமது ஒற்றுமைக்குப் பங்கம் ஏற்பட நாம் அனுமதிக்கக் கூடாது. இந்த ஒற்றுமை யைப் பேணிப் பாதுகாப்பது எமது பொறுப் பாகும். அதேவேளை எமது தலைவர்களைப் பாதுகாக்க வேண்டியதும் எமது கடமை
ஆகும். இவ்வண்ணம் மெளலவி யூஸுப் நஜ்முத்தீன் மெளலவி கலாநிதி பொதுச் செயலாளர் கே.எம்.எச்.காலிதீன்
தலைவர்
80, பராக்ரம ரோட், கிரேண்ட்பாஸ் கொழும்பு-14 தொலைபேசி: 423219
2O.O 7. 1996

Page 226
அ. முகம்மது சமீம் 424
TrCnslotion of the news entitled
"Sinhalo People should WCake upo"
The former Minister A C S Hameed is the greatest enemy of the Sinhala people. In fact he is the greatest enemy of our time. Under Mrs. Bandaranaike's Government from 1970 - 1977 Muslims were put in their place. The trade which was in their hands which they used to suck the blood of our people was almost controlled by the government. The Finance Act - the Law which did not allow the Muslims to buy lands as they wanted was passed but when the Government changed in 1977 Mr. Hameed was able to influence President
Jayewardene and take a series of Steps which gave the Muslim
community a new era. He influenced President Jayewardene to start a free market economy in Sri Lanka and the immediate
people who benefited by this was the Muslims. They started
active trading again and during–the last regime their wealth increased by heaps and bounds.
Mr. Hameed Was able to abolish the Law Which Mrs. Bandaranaike's Government introduced with regard to the sale of lands. Under this law every Musilm had to prove when he bought a land that he was a citizen of Sri Lanka. Otherwise he had to pay 100% duty. Mr. Hameed was able to influence President Jayewardene's government and this Law was repealed (cancelled). This is a rare occasion Very few laws passed in our country have been repealed (cancelled). Mr. Hameed was able to convince President Jayewardene and open Embassies in Saudi Arabia, Kuwait, Oman, Abu Dabi.
Why did he do this? He did this with one main idea i.e. to
increase the strength of the Muslims in Sri Lanka So that these Arab countries are distant guardians of the Muslims

425 ஒரு சிறுபான்மை சமூகத்தின் பிரச்சினைகள் IV
here. We know today how many Muslim villages have improved with the job opportunities in the Arab countries. The Muslims have got the Lion share.
The present war in the North could have been settled long ago if Mr. Hameed did not object to the coming of the Isralia to Sri Lanka. Mr. Hameed objected to the Sri Lanka go vernment ha v ing any connection with the Is ralia government. If the Isralias were allowed to come to Sri Lanka today there will be no war in the North and the Tamils would have been defeated and Sri Lanka would be prosperous country by now.
Mr. Hameed is responsible for bringing in a law to give all appointments in the government service on an ethnic basis. By doing this he has made sure that the Muslims get a definite quota of employment. Look at the Foreign Ministry today and the number of Muslims in the Foreign Service. We can go to give many such examples. He has sent 100s of Muslim youths both male and female abroad for higher education. Cuban example is only one.
Mr. Thondaman is only a Trade Unionist. He is only fighting for salary and to get better allowances for the Koolies but Mr. Hameed's goal is something quite different. He wants to make the Muslim community in this country. He is a great advocate of studying English and he was able to influence the last government to give pride of place to English. Today 1000s of Muslims, boys and girls are studying in English. The Sinhala people who supported the UNP must demand
that the UNP should sack. Mr. Hameed. No Sinhala party must
take him.

Page 227
(Մ
UgJ60)6IOO)
இலங்கை
வரலாற்று 徽 பெற்றவர். சாகிராக் கல்லூரியின் விரி பதவி வகித்து சில பணியாற்றினார்.
இலங்கை கல்விப் ப சேர்ந்து பின்னர் கல்வி அ பணிப்பாளராகவும் கடமை 48வது வயதில் ஓய்6 இலங்கைத் தூதரகத்தின் அதிபராகவும் பணிபுரிந்து, சர்வதேசக் கல்லூரியின் ப வரலாற்றிலும் தமிழ் ஈடுபாடுள்ள நூலாசிரியரி இலங்கை முஸ்லிம்களி: Problems of A Minority தமிழ்நாட்டில் வெளிவந்து சிறுபான்மை சமூகத்தி தலைப்பில் வெளிவந்த இந்நாலாவது தொகுதியும் நேர்மையான வரலாற்று ஆ
 
 

கமது சமீம் (B.A Hons) இலங்கை பப் பிறப்பிடமாகக் கொண்டவர்.
பல்கலைக் கழகத்தில் பாடத்தில் சிறப்புப் பட்டம் அவர் கல்வி கற்ற கொழும்பு 5ỊGODULUIIGITUITG5, 20 LU 9ģ6lUJITē56Ịub காலம் கழித்து அதிபராகவும்
குதியில் மாகாண பணிப்பாளராகச் மைச்சில் முதலாந்தரக் கல்விப் பாற்றினார். வு பெற்று, சவுதி அரேபியாவில் சர்வதேசப் பள்ளிக்கூடத்தின் தற்போது கொழும்பில் ஹெறோ 0ணிப்பாளராகச் செயலாற்றுகிறார். இலக்கியத்திலும் மிகுந்த ண் இஸ்லாமிய கலாச்சாரம், ன் திருமண சம்பிரதாயங்கள், Community 9,5u proofsóir அறிமுகமானபோதும் ஒரு ன் பிரச்சனைகள்? என்ற மூன்று தொகுதிகளுடன் அன்னாரின் பரந்த, ஆழமான,
ய்வு அறிவை உறுதிப்படுத்தும்.