கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: புது யுகத்தை நோக்கி

Page 1

66ਰੰ69
gலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தேசியத்தலைவரும் தேசிய ஐக்கிய முன்னணி

Page 2

புதுயுகத்தை ទីក្រូចំក៏
எம்.எச்.எம். அஷரஃப் பூரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தேசியத்தலைவரும் தேசிய ஐக்கிய முன்னணி ஸ்தாபகரும்

Page 3
புது யுகத்தை நோக்கி
நால் - புதுயுகத்தை நோக்கி
முதற் பதிப்பு ~ 21 ஜூலை 1999
பக்கம் - (III + 30)
விலை ~ 20/=
வெளியீடு ~ தேசிய ஐக்கிய முன்னணி
வெளியீட்டகம் 53, வொக்சோல் லேன், கொழும்பு ~ 02.
Tel: 01-300919


Page 4
புது யுகத்தை நோக்கி
-് 1999ம ஆணடின
வரவு செலவுத்திட்ட விவாதத்தின் போது கெளரவ அமைச்சரும் தேசிய ஐக்கிய முன்னணி ஸ்தாபகரும் ழரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தேசியத்தலைவருமான M.H.M. (66 J. P.C., M.P. அவர்கள்
12 நவம்பர் 1998 ஆற்றிய ஆங்கில உரையின் தமிழாக்கம்
اسے
நன்றி! தமிழில் தந்த - அக்கரைப்பற்று
ஏ.எம்.எம். ஹாசீம் அவர்கட்கு.
- II -


Page 5
புது யுகத்தை நோக்கி
பதிப்புரை
உலக அரசியல் தலைவர்களின் மிக முக்கியமான உரைகள் வரலாற்றில் பதியப்பட்டுள்ளன ~ (நீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தேசியத் தலைவரும் தேசிய ஐக்கிய முன்னணி ஸ்தாபகருமான கெளரவ அமைச்சர் எம்.எச்.எம்.அஷரஃப் அவர்களின் பாராளுமன்ற ~ பாராளுமன்றத்திற்கு வெளியேயான அவரின் உரைகள் அனைத்தம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததும், வரலாற்றில் பதியப்பட்டு, பாதுகாக்கப்பட வேண்டிய ஆவணமுமாகும்.
இந்த வகையில் 12, நவம்பர் 1998இல் அவர் பாராளுமன்றத்தில் ஆற்றிய உரை தமிழில் இங்கு தொகுத்த ஆவணமாக்கப்பட்டுள்ளது. இப்பாராளுமன்ற உரையானத இலங்கை அரசியல் வரலாற்றின் கடந்த கால தவறுகள், அநீதிகளின் மீது கேள்விகளை எழுப்பி, நம்மைச் சிந்திக்கச் செய்து இந்த நாட்டில் சமாதானத்தையும், சமத்தவத்தையும் ஏற்படுத்த சிந்தனா, செயல் பூர்வமாக உழைக்கும் ஒரு தாரதிருஷடி மிக்க தலைவரின் உரையாக இவ்வுரை அமைந்திருப்பது மிகவும் சிறப்பானதாகும்.
இவ்வுரையை தொகுப்பு வடிவில் நாலுருவாக்கம் செய்ய அனுமதியளித்த கெளரவ தலைவர் அவர்களுக்கும், அழகுற உள்ளடக்கம் சிதைவுறாத தமிழில் மொழிபெயர்த்த ஏ.எம்.எம். ஹாசிம் அவர்களுக்கும் இந்நால் வெளிவர மூலகாரணியாக செயல்பட்ட பொறியியலாளர் எம்.எஸ். நசீர் அவர்களுக்கும் எங்களது இதய பூர்வமான நன்றிகள்.
பதிப்பாளர்: தேசிய ஐக்கிய முன்னணி வெளியீட்டகம்
— III -

புது யுகத்தை நோக்கி
பகுதி1
கெளரவ சபாநாயகர் அவர்களே!
இந்த வரவு செலவுத்திட்டத்தை சமர்ப்பித்தமைக்காக நமது நாட்டின் சனாதிபதியும் நிதியமைச்சருமான சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதங்க அம்மையார் அவர்களை நான் ஹீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் பாராட்ட விரும்புகின்றேன்.
இன்று அன்னாரின் நான்காவது வருட ஆட்சி நிறைவு பெறும் தினமாகவும் அமைந்துள்ளத, ஐயா! அரசாங்கத்தின் சார்பிலும் இங்கே குழுமியிருக்கும் பாராளுமன்ற உறுப்பினர்கள் சார்பாகவும் அன்னாரைப் பாராட்டுவதடன் அவருக்கு நீண்ட ஆயுளும் நல்லதிர்ஷ்டமும் கிடைக்கவும் அவர் இன்று வகிக்கும் பதவியில் நீடித்திருக்கவும் நாம் அவரை வாழ்த்துகின்றோம்.
சபாநாயகர் அவர்களே! அமைச்சரவையில் எனது சகாவான ஜி.எல். பீரிஸ் அவர்கள் இந்த யோசனைகளை முன்வைக்க எடுத்தக் கொண்ட முயற்சிகளையும் நாம் மதிக்கின்றோம். மலேசியுர, இந்தோனேசியா, தென்கொரியா, தாய்லாந்து போன்ற தெற் காசிய நாடுகளில் பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.எமது நாட்டில் யுத்தம் நடைபெறுகின்றது. இவ்வாறான நிலமையிலும் தன்னால் முடிந்த முயற்சிகளை மேற்கொண்டு தண்டு விழும் தொகையை குறைத்த பொருளாதாரத்தைச் சமாளித்த சனாதிபதி அவர்களுக்கு எமது பாராட்டுக்கள் உரித்தாகும். இருந்த போதம் எதிர்வரும் காலங்களில் ஏற்படவிருக்கும் அபாயக்குறிகளை சுட்டிக்காட்டாமல் ஒரு பொறுப்பான கட்சி என்ற வகையில் தனது நாட்டுக்குரிய கடமையிலிருந்த நீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தவற முடியாது. இந்த அறிகுறிகள் தலாம்பரமாக தெரிபடுகின்றன. இவற்றைக் கணக்கில் எடுத்த உடனடியாக
-O-

Page 6
புது யுகத்தை நோக்கி
நிவர்த்தி செய்யாவிட்டால் நாம் ஒரு தேசத்த மக்கள் என்ற வகையில் மனவருத்தம் அடைவதை விட வேறு வழியில்லை. இந்த கடமை உணர்வு ~ சபாநாயகர் அவர்களே ! நமது எதிர்கால சந்ததியினருக்கு நாம் செய்யவேண்டிய ஒன்றாகும். இல்லாவிட்டால் நாம் அரசாங்கத்தில் உள்ளவரா அல்லது எதிர்க்கட்சியில் உள்ளவரா என்று பாராமல் நம்மை அவர்கள் சபித்த விடுவார்கள்.
பொருளும் பொலிவும் அற்ற வரவு செலவுத் திட்டம்
1998 எமது சுதந்திர பொன்விழா வருடமாகும். ஆனால் இந்த வரவு செலவுத் திட்டத்தில் பொன்னுமில்லை பொலிவுமில்லை என்பதை ஒப்புக் கொள்கின்றேன். ஹீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அரசாங்கத்தில் ஒரு அங்கம் என்ற மரியாதையுடனும் பொறுப்புணர்ச்சியுடனும் இதனை நான் கூறுகின்றேன். சனாதிபதி அவர்கள் வரவு செலவுத்திட்டத்தை சமர்ப்பித்த சூழலின் கீழ் ஐ.தே. கட்சி அதிகாரத்தில் இருந்திருக்குமாயின் அதன் செயற்பாடு மிகவும் மோசமாக அமைந்திருக்கும். நடந்த கொண்டிருக்கும் இரண்டு போராட்டங்களுள் ஒன்று வடக்கு கிழக்கு ஆயுதப்போராட்டம் மற்றது பொருளாதாரப் போராட்டம். இந்த இரண்டு போராட்டங்களுக்கு மத்தியிலும் அபிவிருத்தி ஏற்படல் அவசியம் என்ற விருப்பத்தின் காரணமாக பொத முன்னணி அரசாங்கம் சனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதங்க அவர்கள் தலைமையின் கீழ் அவரின் பிரதியமைச்சர் ஊடாக வரவு செலவுத்திட்டத்தின் தொடர் யோசனைகளை முன்வைத்துள்ளத.
முக்கிய இரண்டு யோசனைகளில் ஒன்று ~ றயில் கட்டணம் 25% அதிகரிப்பு மற்றத வெளிநாடுகளில் தொழில் செய்த நாடு திரும்புவோருக்கு அமெரிக்க டொலர் ஆயிரத்த நாலு வரை சுங்க வரிச்சலுகை - இவையிரண்டும் தற்போது விவாத நிலையில் கைவிடப்பட்டுள்ளன. இவ்விரண்டு அம்சங்களும் கைவிடப்பட்டால் வரவு செலவுத்திட்டத்தில் முரண்பாடு
-O2

புது யுகத்தை நோக்கி
இல்லாத மீதி யோசனைகளை விவாதித்த பாராளுமன்ற நேரத்தை செலவிட வேண்டியதில்லை.
சபாநாயகர் அவர்களே! கடந்த ஐம்பத ஆண்டுகளின் வரவு செலவுத்திட்டங்கள் மக்களின் பொருளாதாரத்தையோ அல்லது மக்களின் வாழ்க்கைத்தரத்தையோ உயர்த்தவில்லை. அடிப்படைப் பொருளாதாரக் கொள்கை மாற்றம் அரசியல் யாப்பு மாற்றம் ஆகிய அடிப்படை மாற்றங்கள் ஏற்பட்டால் தவிர இந்த நாட்டை ஒன்று சேர்ப்பது எவருக்கும் மிகவும் சிரமமான காரியம் என்பதே முஸ்லிம் காங்கிரஸின் நிலைப்பாடாகும்.
நமது தவறுகள்
நாம் ஒரு நாட்டு மக்கள் என சிந்திக்கத் தொடங்க வேண்டும். தரித அரசியல் பொருளாதாரத் திட்டங்களை செயற்படுத்தி பிரச்சினைகளை அடையாளங்கண்டு தீர்வுகள் காணப்பட வேண்டும். நமது தவறுகளில் இருந்து பாடம் படிக்காவிட்டால் இவற்றைச் செய்ய முடியாது. எல்லா அரசாங்கமும் தற்போதைய குழப்பத்திற்கு பங்களிப்புச் செய்தள்ளன எண் பதைத் தானி நமத தவறுகள் எண் ற நாணி சொல்லுகின்றேன். ஒரு பேரின கட்சியை மாத்திரம் குற்றம் சாட்டுவத முறையல்ல.
பிரான்ஸ் நாட்டு அறிஞர் “ஜோர்ஜ் சண்சாயன’ அவர்கள் கூறிய வார்த்தைகள் எனது ஞாபகத்திற்கு வருகின்றன. சபாநாயகர் அவர்களே! அதனை நான் வசன நடைப்படுத்திக் கூற விரும்புகின்றேன் ;~ ‘கடந்த காலத்திலிருந்து பாடம் கற்றுக் கொள்ளாதவர்கள் தவறுகளைத் திரும்பவும் செய்து தொலை வார்கள் இது தலைசிறந்த புத்திமதியாகும், நாங்கள் எல்லோரும் தவறுகள் செய்துள்ளோம் என்று எல்லோருக்கும் தெரியும், சுதந்திரத்தின் போது அழகிய எழில்மிகு நாடாக (பரடைஸ்) நந்தவனம் என்னும் சொல்லுக்கு
-03

Page 7
புது யுகத்தை நோக்கி
பலவகைகளிலும் ஒப்புடையதாக இருந்த இந்த நாட்டை ஏதோ ஒரு வகையில் நாசமாக்கியவர்கள் இந்த நாட்டு அரசியல்வாதிகள் என மக்கள் நிந்திக்கின்றார்கள்.
அன்று சட்டமும் ஒழுங்கும் இருந்தது, தொழில்வாய்ப்பு இருந்தது, சமூகங்களிடையே ஒற்றுமையிருந்தது, சாந்தி, சமாதானம், அமைதி இருந்தது. பணவீக்கம் இருக்கவில்லை, பெரும் சச்சரவோ கசப்புணர்வோ மக்களிடம் இருக்கவில்லை.
குடியேற்றக்கொள்கை ஆட்சி நடத்தி சுயநலத்திற்காக நம்நாட்டை சுரண்டல் செய்த பிரித்தானியரை நாம் குற்றம் சொல்கின்றோம். எவ்வாறாயினும் நாட்டையும் மக்களையும் ஒன்று சேர்த்த பல சமூகங்களை இந்த நாட்டில் ஒற்றுமையாய் வைத்திருந்த பிரித்தானியரை நாம் புகழத்தான் வேண்டும். சபாநாயகர் அவர்களே! ஒரு பெளத்த விகாரை, முஸ்லிம் மசூதி, கிறிஸ்தவ தேவாலயம், இந்தக் கோவில் ஆகியவை ஒன்றுக்கருகில் ஒன்று நாலு யார் தரத்திற்குள் அமைந்திருப்பதை இன்றும் கூடக்காணி கின்றோம். எங்களுடைய இன்றைய பிரச்சினைகளுக்கு பிரித்தானியர்கள் பொறுப்பல்ல. உண்மை என்னவெனில் பிரித்தானியரைத் தரத்தி அவர்கள் வெளியேறும் கட்டம் வரைக்கும் நாம் அனைவரும் ஐக்கியப்பட்டிருந்தோம்.
பிரித்தானியர் எம்மை ஆட்சி செய்யத்தேவையில்லை என்ற எம் நிலைப்பாடு பெருமைக்குரிய விடயம்தான். எங்கள் சுதந்திரத்திற்காக நாங் களர் போராடினோம் . சுதந்திரப் போராட் டத்தில் சகல சமூகங்களும் ஒன்றபட்டிருந்தன. ஆனால், சுதந்திரம் கிடைத்ததன் பின் சுதந்திரப்பிரஜைகள் போன்று நாம் வசிக்கவில்லை. இது மனவருத்தப்பட வேண்டிய ஒன்றாகும். ஆதிக்கம் செலுத்தம் ஆர்வம், மற்றவரை சுரண் டல் செய்யும் உந்தல் ஆகியவற்றின் ஜனனம்தான் இனவாதம், பேரினவாதம் என்பன. இதனால் பெரும்பான்மை சமூகத்திற்கும் சிறுபான்மை சமூகங்களுக்குமிடையே பெரும் சிக்கல்கள் ஏற்பட்டன. சந்தேகமும் பரஸ்பர நம்பிக்கையின்மையும் நாட்டின் அரசியல்
-04

புது யுகத்தை நோக்கி தேகத்தில் புற்றுநோய் போல் பரவத்தொடங்கியது. இந்திய வம்சாவளி தமிழர்களின் பாராளுமன்ற அங்கத்துவத்தை இந்திய பாகிஸ்தான் வதிவிடச் (பிரஜா உரிமை) சட்ட மூலம் தரதிர்ஷ்டவசமாக பிடுங்கிக் கொண்டதிலிருந்த பிரச்சினைகள் 1948 தொடக்கம் ஆரம்பித்தன.
சமாந்தர கோடுகள் சந்திக்காத தேசியக் கொடி
ஐயா! இந்திய வம்சாவளி தமிழ் மக்கள், இழந்த இந்த உரிமையை நாற்பது வருடத்திற்குப்பிறகு 1988ல்தான் ஏழு ஆசனங்களை பாராளுமன்றத்தள் பெற்றதன் மூலம் மீளப்பெற்றார்கள் என்பது உங்களுக்கு நினைவிருக்கும். அதன்பின் தேசியக் கொடிப்பிரச்சினை வந்தத. அமரர் SWRD பண்டாரநாயக்க அவர்கள் தலைமையின் கீழ் ஒரு குழு நியமிக்கப்பட்டது. தேசியக் கொடி வடிவமைத்தல் சம்பந்தமாக மூன்று வருடங்கள் அந்தக்குழு யோசனை செய்தம் மூன்று வருட முடிவில் பொது இணக்கம் ஏற்படவில்லை. சிறுபான்மை சமூக அங்கத்தவரான செனட்சபை உறுப்பினர் காலஞ்சென்ற S. நடேசன் அவர்கள் தமது அபிப்பிராய பேதத்தை எழுத வேண்டி நேர்ந்தது. அவர் அந்தக்குழுவிடம் கேட்டுக் கொண்டதெல்லாம் என்னவெனில் இரண்டு கோடுகள் ஒன்று தமிழ்சமூகத்தை வரைபுபடுத்தம் காவிநிறக்கோடு, மற்றது முஸ்லிம் சமூகத்தை வரைபுபடுத்தம் பச்சைநிறக் கோடு. இந்த இரண்டு கோடுகளும் சிங்கம் இருக்கும் நீள் சதுரத்தினுள் அமைய வேண்டும் என்பதே. ஆனால் இந்த வேண்டுகோள் எற்கப்படவில்லை. தேசியக்கொடியில் உள்ள நீள் சதரத்தினுள் இரண்டு நிறங்களைச் சேர்த்தக் கொள்ளும் மனவிசாலம் கூட அப்போது எங்களுக்கு இருக்கவில்லை. அங்கேதான் பிரச்சினைகள் ஆரம்பமாயின. சிறுபான்மையினரின் நிறங்களை உட்படுத்தவதற்குப் பதிலாக சிங் களச் சமூகத்தை விளம்பரப்படுத்தம் சிவப்பு நிறத்தை விட்டும் தரமாக தேசியக் கொடியின் மூலையில் இந்த இரண்டு நிறங்களும இடப்பட்டன. சபாநாயகர் அவர்களே! இந்த இரண்டு
-05

Page 8
புது யுகத்தை நோக்க கோடுகளும் சிங்களசமூகத்தைப்பிரதிபலிக்கும் விஸ்தீரத்தினுள் அமைந்திருப்பின் அவிவமைப்பு நேர்த்தியானதாகவும், பெரும்பாண்மை சமூகம் ~ சிறுபான்மைச் சமூகங்களை அரவணைப்பதாகவும் காட்டியிருக்கும். ஆனால் அப்படி அத அமைந்திடவில்லை. நான் முன்கூறியத போன்று மூன்று வருடமாக நடந்த யோசனைகளில் இணக்கமின்மையால் தேசியக் கொடியை அங்கீகரிப்பதற்குப்பதிலாக திரு. நடேசன் அவர்கள் தனது அபிப்பிராய பேதத்தை தயக்கத்துடன் தெரிவிக்க வேண்டி இருந்தது. ஐயா! மூன்று நிறங்களின் மூன்று சமாந்தரக்கோடுகளை தேசியக்கொடியில் நீங்கள் பார்த்திருப்பீர்கள். ஐயா! சமாந்தரக்கோடுகள் ஒரு போதம் சந்திப்பதில்லை என்பத உங்களுக்குத் தெரியும். கடந்த ஐம்பது வருடமாக இந்த சமூகங்கள் சந்திக்க வேண்டும் என நாங்கள் முயற்சி செய்தள்ளோம். அதவும் சந்திக்கவில்லை.
ழரீ எழுத்து
1958ல் சிங்களம் மாத்திரம் சட்ட மூலம் நிறைவேற்றப்பட்டது. அதன் பிறகு வாகனப்பதிவிலக்கங்கள் சிங்கள “சிறி’ எழுத்துடன் அடையாளம் காணப்படல் வேண்டும் என்ற ஒரு பிரமாணம் இருந்தது. அதன் பிறகு எதிர்ப்புகளும் பிரசாரங்களும் காலம் சென்ற எஸ்.ஜே.வி. செல்வநாயகம் அவர்கள் தலைமையில் நடைபெற்றன. அத்துடன் அரச உதவியுடன் குடியேற்றங்களும் நடந்தன. இதனால் தமிழ் மக்கள் மத்தியில் ஆட்சேபம் தெரிவித்து “ஹர்த்தால்கள்’ நடைபெற்றன. ஐயா! பல உதாரணங்களை நான் கூறுவேன். அத ஒரு நீண்ட பட்டியல், இந்தப்பட்டியலுக்கு ஒரு முடிவில்லை. ஆனால் காலப்போக்கில் இப்பிரச்சினைகள் எவ்வாறு நிவர்த்தி பெற்றன என்பதை நீங்கள் காணலாம். தமிழ் பேசும் மக்களிடையே பெரும் சந்தேகமும் விரக்தியும் ஏற்படுத்திய இந்த “சிறி பிரச்சினை என்ன முறையில் தீர்க்கப்பட்டதென்பது இப்போதும் ஒருவருக்கும் தெரியாமலே உள்ளது. மோட்டார் வாகன பதிவு இலக்கப்பலகையில்
-06

புது யுகத்தை நோக்கி “சிறி எழுத்துக்குப்பதிலாக ஒரு கீறு திடீர் என்று வந்ததை நாங்கள் கண்டோம். பல வருடங்களுக்கு முன் இதைச் செய்திருக்கலாம். இரண்டு சமூகத்திற்கிடையே இவ்வளவு தாரத்தையும் சந்தேகத்தையும் ஏற்படுத்தியிருந்த சில முக்கிய சம்பவங்களை நினைவில் வைத்துக் கொள்ளவே நான் முயல்கின்றேன். இவை நமது தவறுகளில் சில. இத்தவறுகள் நடைபெற்ற போது இது சம்பந்தமாக பேச வேண்டும் என தமிழ்த் தலைவர்கள் அப்போது கேட்டார்கள், பேசினார்கள்.
ஆனால் தரதிஸ் டவசமாக அப் பேச்சுவார்த்தைகள் வெற்றியளிக்கவில்லை. பேச்சுவார்த்தை மார்க்கமாக பிரச் சினைகள் தர்க் கப்படத் தவறியதால் தீவிரவாதமும் பயங்கரவாதமும் சிறுபான்மை சமுகங்களுக்கு நீதி நியாயம் வழங்கும் ஒரேயொரு வழியாக மாறியது.
இந்த நீண்ட பட்டியலில் தமிழ்த் தலைவர்கள் திருவாளர்கள் ;~ ஜி.ஜி. பொன்னம்பலம், எஸ். நடேசன், எஸ்.ஜே.வி. செல்வநாயகம், ஏ. அமிர்தலிங்கம், எம். சிவசிதம்பரம், எனது மதிப்புக்குரிய நண்பரும், சகோதரரும் பாராளுமன்ற கெளரவ அங்கத்தவருமான சம்பந்தனர் அவர்கள் வரை இந்தப்பட்டியலில் நீங்கள் காணலாம். இவர்கள் ஒவ்வொருவரும் பேச்சுவார்த்தை என்ற வழியில்தான் சென்றார்கள். ஆனால் பலன்கிடைக்க வில்லை. வன்செயலில் ஈடுபட்டிருந்த தமிழ் இளைஞர்களை ஆயுதங்களை ஒப்படைத்த விட்டு சனநாயக அரசியல் நீரோட்டத்தில் சேர்ந்து கொள்ளுமாறு இந்திய ~ இலங்கை ஒப்பந்தம் நிறைவேற்றியதன் பின் அழைப்பு விடுக்கப்பட்டது. பாராளுமன்றத்திற்கு அவ்வாறு பதின் மூன்று தமிழ் உறுப்பினர்கள் வந்தார்கள். கடந்த அரசாங்கத்தில் நாங்கள் எதிர்க்கட்சியில் இருந்த போது அவர்கள் பாராளுமன்றத்தில் சில மாதம் இருந்த விட்டு எதுவும் கிடைப்பதற்கில்லை - என அறிந்து கொண்டதால் அதிருப்தியுடன் அவர்கள் எவ்வாறு மறைந்தார்கள் என்பது உங்களுக்குத் தெரியும்.
-O7.

Page 9
புது யுகத்தை நோக்கி
தேசிய அடையாளம்
நிலைமைகள் இவ்வாறு இருக்கும் போது ‘நாங்கள் இலங்கையர் எனும் தேசிய அடையாளத்தை ஏற்படுத்த வேண்டும்’ என நாம் பேசிக்கொள்கின்றோம். இலங்கையர் எனும் தேசிய அடையாளம் பற்றி ஐக்கிய தேசியக்கட்சி பேசுகிறது, நமது பொது முன்னணி அரசாங்கம் பேசுகின்றது. இதனை ஏற்படுத்த வேண்டிய தேவை பற்றி நாம் அனைவரும் பேசுகின்றோம். இந்த விடயம் பற்றி ஜீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் நிலைப்பாடு என்னவெனில் நாம் அனைவரும் இலங்கை மக்கள் எனும் ஒரு அமைவு இருந்தால் மாத்திரம்தான் இது சாத்தியமாகும் என்பதே. யாப்பு ரீதியாகவும், கோட்பாடு ரீதியாகவும், தத்தவார்த்த ரீதியாகவும், உளரீதியாகவும் நம்மை நாம் வேறுபடுத்திக் காட்டிக் கொண்டிருக்கும் போது “தேசிய அடையாளம்’ என்பத அசாத்தியமான ஒரு எண்ணக்கருவாகவும் கனவாகவும் மாறிவிடும். தேசிய அடையாளத்தைக் கட்டியெழுப்புவதில் முஸ்லிம் காங்கிரஸின் பங்கு என்ன என்பதையும் நான் விதந்தரைப்பேன். ஒரு முஸ்லிமாக இருப்பது இனவாதமில்லை என்றால், அரபு மொழியில் பெயர்வைத்துக் கொள்வத இனவாதம் இல்லை என்றால், பள்ளிவாசலுக்குச் செல்வது இனவாதம் இல்லை என்றால் எங்களை நீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் என்று அழைப்பதுவும் இனவாதமல்ல. ஹீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தேர்தல் ஆணையாளர் சந்திரானந்த டி சில்வா அவர்களால் அங்கீகாரம் பெற்றுப்பதியப்பட்ட கட்சியாகும். எனவே நாங்கள் எதவோ அதுவாகவே இருக்க வேண்டும். சிங்களவர் ஒருவரை முஸ்லிமாக மாற்றியமைக்க முடியாத பிறப்பிலே நாங்கள் சிங்களவராகவும் , முஸ்லீமாகவும், தமிழராகவும் பிறக்கின்றோம். பிறப்பிலே நாங்கள் இந்தக்களாகவும், கிறிஸ்தவர்களாகவும், றோமன் கத்தோலிக்கராகவும் பிறக்கின்றோம். இது எங்களுடைய தெரிவு அல்ல, இது இறைவனின் தெரிவு. எங்களுக்குரிய தனித்துவங்களைக் காப்பாற்றிக் கொள்வதோடு தேசிய அடையாளம் ஒன்றும் நமக்கு தேவையாயின் அதற்குரிய
-08

புது யுகத்தை நோக்கி வழிவகைகளை நாம் கண்டு கொள்ள வேண்டும் என்பதை மாத்திரம் சுட்டிக்காட்டவே முயல்கின்றேன்.
வரவு செலவுத்திட்டம் பற்றிப் பேசும் போது எமத வருமானத்தில் 30% யுத்தத்திற்காக செலவாகின்றது. எவ்வாறு நாங்கள் யுத்தத்தை நிறுத்தப்போகின்றோம்? சபாநாயகர் அவர்களே வடக்கில் போராட்டத்தலைவர் திரு. பிரபாகரன் முறையிடும் விவாதத்தைப் பாருங்கள். “பூனிலங்கா ஒரு சிங் கள நாடு, ஆகவே தமிழருக்கு இங்கு இடமில்லை’ என்று சொல்கிறார். இது உண்மையாகில் அவரும் அவருடைய மக்களும் கடலில் குதிக்க முடியாது. அவருடைய விவாதம் இது. எனவே அவருக்கும் அவருடைய மக்களுக்குமாக ஹீலங்காவின் ஒரு தண்டை வெட்டி எடுக்க வேண்டும் என சொல்கிறார்.
அரசியல் யாப்பு விளையாட்டு
1978 அரசியல் யாப்பும், ~ பாராளுமன்றத்தில் வசதியான அதிகப்பெரும்பான்மையும், புதப்புத திருத்தங்களும் இவை அனைத்தம், ஒருமித்தம் தனித்தம் நாடு சிதைவு பெறும் வழியை மேலும் மோசமாக்கின.
தனி நபர்களையும் குறிப்பிட்ட அரசியல் கட்சிகளையும் அதிகாரத்தில் தொடர்ந்த வைத்துக் கொள்ள வேண்டும் எனும் நோக்கத்தடண் அரசியல் யாப்புடன் விளையாடியதற்கான விலையை நாம் இப்போது செலுத்துகின்றோம். 1972 அரசியல் யாப்பு சோல்பரி யாப்பை அழித்த விட்டு, குறிப்பாக பகுதி இருபத்தொண்பதும், செனற் சபையும் நீக்கப்பட்டதவும் பாராளுமன்றத்தின் ஆயுள்காலம் உரிய ஐந்து வருடத்திற்குக் கூடுதலாக நீட்டப்பட்டமையும் நமது நாட்டின் சனநாயக வீழ்ச்சிக்கு முன்னோடியாக அமைந்த நிகழ்ச்சிகளாகும். ஒரு வருட பாராளுமன்ற நீடிப்பை எதிர்த்தவர்கள் நம்பத் தகாத ஒரு சர்வசன வாக்கெடுப்பு மூலம் பாராளுமன்றத்தை மேலும் ஆறு வருடங்களுக்கு நீடிக்கத்தயங்கவில்லை. பாராளுமன்ற
-09

Page 10
புது யுகத்தை நோக்கி
அங்கத்தவர்களின் சுதந்திரம் பற்றி பேசியவர்கள் வெட்கமின்றி பகிரங்கமாக பாராளுமன்ற அங்கத்தவர்களின் ராஜினாமா கடிதங்களைப் பெற்றுக் கொண்டு இதுதான் ஐந்து நட்சத்திர சனநாயகம் என்றார்கள். தார்மீக அரசின் மூக்குக்கு முன்னே கொழும்பு வீதிகளில் மக்கள் கொல்லப்பட்டதம் உயிருடன் தீயிலிடப்பட்டதம் வரலாற்றில் கறைபடிந்த கட்டங்களாகும்.
நாடு, மொழி, நேரம்
சுதந்திரம் கிடைத்த ஐம்பத வருடங்களாகியும் நமக்கு ஒரு மொழி பொதுவாக இல்லாதது வெட்கப்பட வேண்டிய விடயமாகும். தமிழ் மக்களுக்கும் சிங்கள மக்களுக்குமிடையில் பலமான தடை ஒன்று உள்ளது. இதனால் ஒரு சமூகத்தடைய மொழி மற்ற சமூகத்தவர்களுக்குத் தெரியாது. தொடர்ந்த எடுக்கப்பட்ட முயற்சிகள் முக்கிய இன்றியமையாத இந்தக்கேள்வியைக் கவனத்தில் கொள்ளத் தவறிவிட்டன.
நேரத்திற்குப் பெறுமதி தெரியாத ஒரு நாட்டு மக்களாக நாம் இருக்கின்றோம். நீலங்கா வாசிகளான நம்மைத் தவிர மற்றைய எல்லோருக்கும நேரம் பொன்போன்றத. சுதந்திரப் பொண்விழா கொண்டாட்டங்களின் போத சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதங்க அம்மையார் அவர்களின் இருபது நிமிட ஆங்கில உரையை சிங்களத்திலும் தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்த நாற்பத நிமிட வேளையில் ஆயிரத்து முன்னூற்று எழுபது வருடங்களை வீணாக்கியுள்ளோம் என்பதை எத்தனை பேர் அறிவார்கள் என்பத எனக்குத் தெரியாத, பிரபாகரனின் தர்க்கம் பிழையான அடிப்படை கொண்டத என நாம் நிரூபித்தால் மாத்திரம்தான் யுத்தம் ஒன்று அர்த்தமுள்ளதாகும். இவ்வாறு நிரூபித்த அவரின் கோரிக்கையை நிராகரிப்பதற்குப்பதிலாக ஹீலங்கா, சிங்கள மக்களுக்கு மாத்திரம் உரிய நாடு என நேரடியாகவோ மறைமுகமாகவோ அழுத்தம் கொடுப்பதால் பிரபாகரன் கூறும் கோட்பாட்டை நாமும் உறுதிப்படுத்துகின்றோம் அல்லவா? இது ஒரு சிங்கள நாடு என்று பிரபாகரன் கூறுகிறார்.
-O-

புது யுகத்தை நோக் பெரும்பான்மை சிங்களவரும் அவ்வாறுதான் கூறுகிறார் எனில் சபாநாயகர் அவர்களே! இரு அத்திவாரங்களும் ஒரே மாதிரியிருந்தால் இந்த யுத்தம் ஏன்? எங்கோ ஏதோ பிழையிருக்கிறதென்று நீங்கள் கருதவில்லையா? இரு அத்திவாரங்களும் ஒரே மாதிரியிருப்பின் தர்க்க முறைப்படி ஒரு யுத்தம் இருக்க முடியாது. ஆனால், உண்மையில் யுத்தம் புரிகின்றோம் எண்பததான் விசித்திரமாக உள்ளத. அது ஏன்? இதன் இரகசியம் என்னவெனில் திரு. பிரபாகரனுக்கும் ஆயுதம் ஏந்திப்போராடும் தமிழ் இளைஞர் குழுக்களுக்கும் அவர்களின் மக்களுக்கும் போதிய நிலமும் இடமும் இந்த நாட்டில் உண்டு என்பதை நம்பவைக்க அவர்களுடன் போர் புரிபவர்கள் தவறிவிட்டார்கள். நீலங்கா சிங்கள சமூகத்திற்கு மாத்திரம் சொந்தமல்ல, நாட்டு மக்கள் அனைவருக்கும் சொந்தம் என்ற நிலைப்பாட்டை நாம் எடுத்தால் மாத்திரம்தான் யுத்தம் ஒன்று கருத்துள்ளதாக அமையும். இதை சொல்லில் மட்டுமன்றி செயலிலும் நாம் நிரூபிக்க வேண்டும். சபாநாயகர் அவர்களே! எனது இன்றைய பேச்சில் திரு பிரபாகரன் நாறு வீதம் சரி என நாம் அறிந்தோ அறியாமலோ நிரூபித்துக் கொண்டிருக்கின்றோம் என்பதை எடுத்தக் காட்டத் தணிகின்றேன்.
எங்களுடைய ஆட்சி அமைப்பு முறைகளையும், தற்போதைய சட்ட சபையின் மாதிரியையும் நாம் ஹீலங்கா பிரஜைகள் எனும் வகையில் நோக்க வுேண்டும். வெஸ்ட்மினிஸ்டர் பாராளுமன்ற மாதிரியைக் கைவிட்டு நிர்வாக குழுக்கள் முறை கொண்ட டொனமூர் சட்டசபை மாதிரிக்கு நாம் போக வேண்டிய காலம் வந்த விட்டது. இதில் பொருத்தமான சீர்திருத்தங்களைச் செய்து கொள்ளலாம். ஐயா! நீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பதினைந்தாவது தேசிய மகாநாட்டில் எனத நண்பரும் எதிர்க்கட்சித்தலைவருமான ரணில் விக்கிரமசிங்க அவர்களிடம் இத விடயம் பற்றி உரையாடினேன். அதற்கு அவரின் விடை ஆக்கபூர்வமாய்
--

Page 11
புது புகத்தை நோக்கி இருந்தது. அதற்காக அவருக்கு நான் நன்றி சொல்கின்றேன். பொருத்தமான சீர்திருத்தங்களுடன் நிர்வாகக்குழு முறை கொண்ட பாராளுமன்றம் எனும் விடயத்தை ஐ.தே.கட்சி கருத்தில் கொள்ளும் என அவர் சொன்னார்.
சில சிந்தனைகள்
ஐயா! இச்சபையின் கெளரவ அங்கத்தவர்களுடன் சில அடிப்படைக்கருத்தக்களைப் பகிர்ந்த கொள்ள நான் இப்போது விரும்புகின்றேன். இக்கருத்துக்களை மீண்டும் மீண்டும் பாராளுமன்றத்திலும் வெளியில் பொதுமக்கள் மத்தியிலும் கூறிவந்தள்ளேன். நமது கடமை மிக முக்கியம் என்று நாம் கருதினால் இவை பற்றிய கவனம் முக்கியம். ஆங்கிலேயரிடமிருந்த பெற்றுக் கொண்ட வெஸ்ட்மினிஸ்ரர் (Westminister) சனநாயக முறை சற்று முந்தியே நம்மீது சுமத்தப்பட்டத. வரலாற்றுப் போக்கில் வளர்ச்சியடைந்தம், மக்களிடையே தெளிவும் கண்டுள்ள நாடுகளுக்கு இந்த சனநாயக முறை மிகவும் பொருத்தமாக உள்ளது. இதற்கு பூரண உதாரணங்கள் ஸ்கண்டிநேவி நாடுகளும், மேற்கு ஐரோப்பிய நாடுகளும் அமெரிக்காவுமாகும். நீலங்கா, பாகிஸ்தான், வங்காள தேசம் போன்ற நாடுகளில் கடைப்பிடிக் கப்பட்ட சனநாயக முறை இதுவரை வெற்றியளிக்கவில்லை. குல, ஜாதி வேரூன்றிய கென்யா, நைஜீரியா, தன்சானியா போன்ற இன்னும் பல ஆபிரிக்க நாடுகளிலும் இந்த சனநாயக முறை மிகப்பெரும் தோல்வி கண்டுள்ளத. ஆகவே தோல்விகளிலிருந்தம், வெற்றிகளிலிருந்தம் நாம் பாடம் கற்றுக்கொள்ள வேண்டிய நேரம் வந்தவிட்டத. நான் சொல்வத மேற்கத்திய மாதிரி கூடாதென்பதல்ல; ஆசிய ஆபிரிக்க அரங்கத்தில் சுற்றப்புறச்சூழல் இதற்குத் தயாராக இருக்கவில்லை. ஆகவே நமத மதம், கலாசாரம், பாரம்பரியம் ஆகியவற்றை மனதில் கொண்டு நமது தேவைகளுக்கும் அபிலாசைகளுக்கும் பொருந்தம் வகையில் நாம் இந்த சக்கரத்தை சுழற்ற வேண்டும்.
-12

புது யுகத்தை நோக்கி
சபாநாயகர் அவர்களே! மக்களிடையே, ஒற்றுமை, சினேகம், இணக்கம் தேவை என்று நாம் சொன்னால் அதை இந்த சபையின் எல்லையுள்ளிருந்தே நாம் ஆரம்பிக்க வேண்டும். சபாநாயகர் அவர்களே! மக்களின் அரசியல் தலைவர்களிடையே இணக்கம் ஏற்படக்கூடிய சூழ்நிலை இந்த விரோதமான அமைப்பில் இருக்கின்றதா? பல மைல் பிரயாணம் ஆரம்பமாவது ஒரு எட்டில்தான் என்று சொல்வார்கள். ஒரு தளி நீரிலிருந்த ஒரு சமுத்திரம் உருவாகின்றது. ஐயா! இது சம்பந்தமாக நான் குறிப்பிடத் தேவையில்லை. ஆனால், இன்று காலை இந்த சபையில் நடந்தத என்ன? மக்கள் மத்தியிலே சமாதானத்தையும் இணக்கத்தையும் கொண்டு வரக்கூடிய சூழல் இங்கே இல்லை. பாராளுமன்ற உறுப்பினர்கள் பொறுப்புணர்ச்சி உள்ளவர்களாகவும் நணி பர்களாகவும் ஒருவர் மற்றவர்களுடன் நல்லெண்ணம் கொண்டவருமாக இல்லாத வரை இக்கருத்தை, வீதிக்கு அடிமட்டத்திற்கு எடுத்தச் செல்வத மிகவும் கடினம்.
பாராளுமன்ற அங்கத்தவர்களை ஐக்கியப்படுத்த வதற்குப் பதிலாக தற்போதைய முறை நம்மைப் பிரித்த வைப்பதையே அவ்வப்போத காண்கின்றோம். நம்முடைய ஆசன ஒழுங்குகளும் அவ்வாறே இருக்கின்றன. திரு. ஹரல்ட் ஹேரத் அவர்களும் நானும் நல்ல நண்பர்கள். எங்களுக்கு இடைவெளியில் உள்ள தாரத்தைப் பாருங்கள், இதைவிட அண்மிக்க எங்களுக்கு முடியாமல் உள்ளது. ஆசன ஒழுங்கு, பாராளுமன்ற அடிப்படை வசதிகள் எல்லாமே இந்த தரத்தை உறுதிப்படுத்துகின்றன. ஓய்வு அறைகளும் மற்றும் வசதிகளும் கூடவே வேறுபடுத்தப்பட்டுள்ளன.
பொறுப்பு வாய்ந்த மக்கள், ஒன்று கூடி சிந்தித்த செயல்படும் ஒரே சபையாக இச்சபை இருப்பது ஒழிந்த நீண்டகாலமாகும். நான் நினைக்கின்றேன் மறைந்த
-13

Page 12
புது யுகத்தை நோக்கி "ஜவஹர்லால் நேரு அவர்கள் பாராளுமன்றத்திற்கு வியாக்கியானம் கூறும் போது “மக்கள் பிரதிநிதிகள் சிந்தித்து 6ld 456 (6th 360) (deliberative assembly) 6J605á. சொன்னார், நாங்கள் இந்த சபையில் சிந்தித்த செயல்படுகின்றோமா என்பதுதான் கேள்வி? சிந்தித்த செயல்படுதல் என்பதன் பொருள் திறந்த மனதடண் வந்த வாதப்பிரதிவாதங்களை செவிமடுத்த நாள் முடிவில் நான் மற்றவர்களை ஏற்றுக் கொள்ளச் செய்தல் அல்லத நான் பிறரை ஏற்றுக் கொள்ளல் என்பதாகும்.
ஆனால் இன்று அந்த அமைப்பு இங்கே இல்லை. ஒரு விவாதத்தின் முடிவு அறிவிக்கப்படும் வரை ஒருவர் வந்த அவர் ஆசனத்தில் அமர்ந்த கொண்டு முடிவுக்காக காத்திருக்கத் தேவையில்லை என மரியாதையுடன் சொல்லுகின்றேன். ஒவ்வொரு தரப்பினருக்கும் எத்தனை வாக்குகள் கிடைக்கும் பெரும்பாண்மை எத்தனை என்பதையும் முன்கூட்டியே ஒருவர் சொல்ல முடியும். எனவே சிந்தித்து செயல்படுதலின் முடிவு முன் கூட்டியே சுலபமாகச் சொல்லக்கூடிய விடயமாக மாறிவிட்டத. ஏதோ பிழையிருப்பதை இது காட்டுவதோடு பாராளுமன்ற முறையில் பாரிய நோயாகவும் உள்ளத.
பலன் ஏதும் எற்படாத ஒரு கதைக்கடையாக இச்சபை ஆகிவிட்டது. நமது விவாதங்களின் உயிரும் ஆத்மாவும் பிறப்பதற்கு முன்பே இறந்த விடுகின்றன. நமது தர்க்கங்களில் நாம் கவனம் செலுத்தவதில்லை. ஏதோ ஆரவாரம் செய்ய வேணி டும் என்பதற்காக கூச்சலிடுகின்றோம். இந்த கபட சச்சரவுகள் தொடர்பு சாதனங்களில் அறிவிக்கப்பட வேண்டும் என மட்டுமே ஆசைப்படுகின்றோம். நமத விவாதங்களும் வெறுப்புக்களும் உண்மையற்று நம்பகரமற்றிருப்பத தரதிஷ்டமே. ஐயா! நாங்கள் ஒருவரை மற்றவர் வெறுக்கலாம். ஆனால்
-14

புது யுகத்தை நோக்கி
அதில்கூட சத்தியமும், நம்பகத் தண்மையும் இருக்க வேண்டும். நாங்கள் நண்பர்களாக நடந்த கொள்ளலாம், ஆனால் வெறுப்பதாகப் பாசாங்கு செய்யக் கூடாது. நாங்கள் தாழ்வாரங்களிலிருந்து வெளியேறினால் கைகோர்த்துக் கொண்டு சிற்றாண்டிச் சாலைக்கு நடந்த செல்கின்றோம் அல்லது சிலவேளைகளில் ஒரே காரில் பிரயாணம் செய்கின்றோம் என்பதெல்லாம் நமது ஆதரவாளர்களுக்குத் தெரியுமா? சபையில் நமத பேச்சுக்களால் நமத ஆதரவாளர்கள் ஆத்திரமடைகின்றனர். வீதிகளில் சண்டை பிடிக்கின்றனர். சில வேளைகளில், நமக்காக அவர்கள் ஒருவரை மற்றவர் கொலை செய்தம் விடுகிறார்கள் ~ ஆனால் நாமோ ஆடியும் பாடியும் உண்டு சுவைத்த ஒன்று கூடி மகிழ்ந்த கொண்டிருக்கின்றோம்.
சபாநாயகர் அவர்களே! இந்த சபையினர் தோற்றத்தைப் பாருங்கள் குத்துச்சண்டை அரங்கம் போன்று இது தெரியவில்லையா? ஒரு வட்ட வடிவில் ஒருவருக்கு அருகில் மற்றவர் இருந்தால் என்ன கேடு வரும்? பிரித்தானிய மக்கள் பிரதிநிதிகள் சபை போன்று நாங்கள் விரும்பும் இடத்தில் அமரக்கூடிய தெரிவு இருந்தால் என்ன தீங்கு வரும்? இது அனைத்தம் மூடத்தனமாக மாறிவிட்டது .
பகுதி - 11
இங்கிலாந்திலும் எதிர்க்கட்சி ஒன்று உள்ளது. ஆனால் அங்கத்தவர்கள் விரும்பும் இடத்தில் அமர்ந்த கொள்ளலாம். கடைசிப் பாராளுமன்றத்தில் நான் உங்களுடன் எதிர்கட்சியிலிருந்த போது நான் எதிர்க் கட்சித் தரப்பினரா? அல்லது. அரசாங்கத் தரப்பினரா? என்பதை அடையாளம் கண்டு கொள்ளும் பிரச்சினை ஒன்று ஏற்பட்டது. எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்திருந்த படியால் என்னை எதிர்க்கட்சி அங்கத்தவர் என குறிகுட்டி அரசாங்கம் செய்யும் ஒவ்வொன்றையும் நான் எதிர்க்க வேண்டும் என
-15

Page 13
புது யுகத்தை நோக்கி எதிர்பார்க்கப்பட்டது. ஐயா! எனக்கு ஒரு பாய் கொடுத்து உதவுமாறு சபாநாயகர் அவர்களை அப்போது நான் கேட்டது பதிவாகியுள்ளது. நான் சொல்லியத ;~ எனக்கு அந்த ஆசனம் தேவையில்லை. நாண் பாயிலிருந்த கதைப்பேன். எதிர்க் கட்சியின் பக்கம் அமர்ந்திருப்பதற்காக எதிர்க்கட்சி அங்கத்தவர் என்று நான் ஏன் குறி சூட்டப்பட வேண்டும்?
ஐயா! இந்தப் பக்கமோ அல்லது அந்தப் பக்கமோ அமர்ந்திருந்தாலும் ற்ல.மு.காங்கிரஸ் முரண் அற்றே இருந்த வந்துள்ளது என்பது பதியப்பட வேண்டும். நாங்கள் இந்தப் பக்கம் இருக்கும் போது அவசரகால நீடிப்பை ஆதரிக்கிறோம். எதிர்க்கட்சிப் பக்கமாக நாங்கள் இருந்த போதும் அவசரகால நீடிப்பை ஆதரித்தோம். ஜீ.ல.சு.கட்சியினர் அப்போது எதிர்த்தனர். இப்போது என்ன நடக்கிறத? ஆசனங்கள் மாறியதம் அவசரகால நீடிப்பை அப்போது எதிர்த்த அவர்கள் இப்போது ஆதரிக்கிறார்கள். அதனை அப்போது ஆதரித்தவர்கள் இப்போது எதிர்க்கின்றனர். ஆனால் ஆசன மாற்றத்தைக் கருதாமல் ற்ல.மு.காங்கிரஸில் உள்ள நாங்கள் அவசர கால நீடிப்பைத் தொடர்ந்த ஆதரிக்கின்றோம். இங்கு இருக்கின்றோமா? அல்லது அங்கு இருக்கின்றோமா? என்று கருதாமல் அதனை நாங்கள் ஆதரிக்கின்றோம். எங்கள் தீர்மானங்களை எவ்வாறு கொள்கை அடிப்படையில் எடுக்கின்றோம் என்பதை அத காட்டுகின்றது.
ஐயா! இந்தச் சபையின் ஒழுங்கமைப்புப் பற்றியும் இந்த விரோதமான சூழல் உருவாக்கப்பட்டுள்ளது எவ்வாறு என்பது பற்றியும் பேசிக் கொண்டிருந்தேன். இது முழுவதும் மூடத் தனமாகவும் பகுத்தறிவுக்கு ஒவி வாததமாக ஆகிவிட்டது. சபாநாயகர் அவர்களே! இந்த அடிப்படைகளை மாற்றுவதற்கு ஏதாவது ஏன் நாம் செய்யக் கூடாதரி மாற்றாக புதிய அரசியல் கலாசாரம் ஒன்றை நோக்கி நாங்கள் ஏன் நகரக் கூடாத? அதிக தடிப்புள்ள ஒரு பாராளுமன்றம்,
-6-

புது யுகத்தை நோக்கி
ஒவ்வொரு அங்கத்தவர்களுக்கும் பூரண பேச்சுச் சுதந்திரமும் அச்சமோ பாரபட்சமோ இன்றி தீர்மானம் எடுக்கும் ஒரு பாராளுமன்றம், கட்சிக் கட்டுப்பாடுகளை மீறும் ஒரு அங்கத்தவர் அவருடைய ஆசனத்தை இழக்காமல் உபதேர்தல் ஒன்றைச் சந்திக்க சந்தர்ப்பம் கொடுக்குமொரு பாராளுமன்றம் வேண்டும். அவ்வாறாயின் அது நமது ஜனநாயத்திற்கு மணமும் நிறமும் கொடுக்கும்.
ஒரு பெரும் மாற்றம் தேவை
மறைந்த ஜனாதிபதி பிரேமதாச அவர்களுக்கு எதிரான அரசியல் குற்ற மசோதாவிற்குப் பிறகு நிறைவேற்று ஜனாதிபதி ஆட்சி முறை இருக்க வேண்டுமா? இல்லையா? என்பதையிட்டு நம் நாட்டு மக்கள் மிகவும் தடுமாற்றம் அடைந்தள்ளனர். ஐ.தே.கட்சிக்கு இதுபற்றி எந்தக்கருத்தம் இருப்பதாகத் தெரியவில்லை. நிறைவேற்று ஜனாதிபதி முறையை பாதுகாப்பதா அல்லது அழிப்பதா என்ற எந்த நிலைப்பாடும் ஐ.தே.கட்சிக்கு இல்லை.
நிறைவேற்ற ஜனாதிபதி முறையை பொருத்தமான திருத்தங்களுடன் வைத்துக் கொள்ள வேண்டும் என்பதே 1றி.ல.மு.காங்கிரஸின் கருத்தாகும். நிறைவேற்று அதிகார அமைப்பில் நன்மைகளும் உள்ளன. இந்த அதியுயர் பதவியை தேடும் ஒருவர் இந்த அமைப்பின் கீழ்தான் ஒவ்வொரு பிரஜையின் வாக்கு, நலன் ஆகியவற்றிற்கு பெறுமானம் அளிப்பார். தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதி அவரின் பொறுப்புக்களுடன் காலத்திற்குக் காலம் பாராளுமன்றத்திற்கு பதில் சொல்பவராக இருத்தல் வேண்டும். பிரித்தானியப் பாராளுமன்றத்தில் பிரதம மந்திரியின் நாள் ஒன்று உள்ளது. ஐயா! மாதத்திற்கு ஒரு முறையோ அல்லது இரண்டு மாதங்களுக்கு ஒரு முறையோ ஜனாதிபதி பாராளுமன்றத்திற்கு வந்து கேள்விகளுக்கு விடைசொல்ல ஒரு நாளை நாங்கள் ஏன் வைத்துக் கொள்ள முடியாது? ஜனாதிபதியின் நீதி
-7-

Page 14
புது யுகத்தை நோக்கி
63d TJ 60600Ts' (JTg535T (foOso (JUCicial immunity) -9) rod-sh அகற்றப்பட்டு நாட்டின் ஏனைய பிரஜைகள் போன்ற அவர் தனது உத்தியோக தனிநடத்தைக்கு பொறுப்புடையவராக இருக்க வேண்டும். நாட்டைக் கட்டியெழுப்பும் வகையிலும் ஒவ்வொரு பாராளுமன்ற உறுப்பினரும் பங்கு கொள்வதற்கு தற்போதைய அமைப்பு முறை விடுவதில்லை. சபாநாயகர் அவர்களே! இதன் முடிவு என்னவெனில் ஆக்கபூர்வ நடவடிக்கைகளில் ஈடுபட முடியாமல் எதிர்க்கட்சி அங்கத்தவர்கள் வெறுப்படைகின்றனர். அவ்வாறு அவர்கள் ஆக்கமற்ற சிந்தனைகளிலும் நடவடிக்கைகளிலும் ஈடுபடுகின்றனர். கடந்த காலங்களில் வரலாற்று ரீதியாக நாங்கள் அனுபவித்த ஆழ்ந்த வேறுபாடுகளையும் மனக் கசப்புகளையும் கருதாமல் நம்மிடையே ஏதோ ஒரு வகை புரிந்துணர்வும் ஒத்துழைப்பும் இல்லாமல் இந்த யுத்தத்தை ஒரு முடிவுக்கு கொண்டுவர முடியாது. நாட்டில் சமாதானமோ அல்லது அபிவிருத்தியோ ஏற்படவும் முடியாது.
சபாநாயகர் அவர்களே! ஒரு பெரும் மாற்றம் ஒன்று தேவை என்றே நான் நினைக்கின்றேன். இலங்கை மக்களுடைய நாடு, நீலங்கா என்பதை நாம் முதலில் விளங்கிக் கொள்ள வேண்டும். இனம், மதம், சாதி, மொழி எனக் கருதாமல் ஒவ்வொரு ஜீலங்கா பிரஜைக்கும் நாடு சொந்தமானத. பெரும்பான்மை சிறுபான்மை சமூகங்கள் எனும் வார்த்தைகள் பாவிப்பதைத் தடுக்கும் வகையிலும் அவ்வாறு பாவிப்பவர்களை தண்டிப்பதற்காகவும் சட்டங்களை இப்போதிலிருந்தே நாம் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.
சபாநாயகர் அவர்களே! அடுத்த ஆயிரம் ஆண்டை அண்மித்த வேளையில் இந்த வரவு செலவுத் திட்டம் முன்வைக்கப்பட்டிருக்கிறது. அடுத்த ஆயிரம் ஆண்டு ஆரம்பத்திற்கு இன்னும் நானூற்றுப் பதினைந்த நாட்கள் தரம் மாத்திரமே இருக்கின்றது. இருபதாம் நூற்றாண்டு போல்
-8-

புது யுகத்தை நோக்கி இல்லாத அடுத்த ஆயிரம் ஆண்டில் தரிதமாற்றத்தால் முன்னொரு போதம் இல்லாதவாறு உலகம் மாறப் போகின்றது. அந்த மாற்றத்தோடு நாமும் சேர்ந்து கொள்ளாதவிட்டால் வரலாற்று இருள்யுகத்தில் நாங்கள் தண்டனை பெறுவோம். காலத்தின் காற்று சிந்தனையில் மாற்றத்தை வேண்டுகிறது என்பதை உணர முடியாதவர்கள் எப்போதம் அப்படியே இருந்த தண்டனை பெறுவர். அடுத்த ஆயிரம் ஆண்டில் நழைவதற்கு தொழில் நட்பம்தான் முக்கிய அம்சம் என உலகம் தயாராகவுள்ளது. தொழில்நட்பத்தில் அளவிட முடியாத தரித மாற்றங்கள் ஏற்பட்டதால் நமத கல்விமுறை உபயோகமற்றதாய் ஆகிவிட்டது. ஒவ்வொரு துறையிலும் இது தெரிபடுகிறது. விஞ்ஞானம், மருத்துவம், பொறியியல், சட்டம் மற்றும் இலக்கியங்கள் எதை எடுத்துக்கொண்டாலும் நாம் இந்த வருடம் கற்றுக் கொள்வத அடுத்த வருடத்தில் உபயோகக் குறைவாக நேருகின்றது. அடுத்த ஆயிரம் ஆண்டுக்கு நாம் முகம் கொடுக்க வேண்டிய மிகப் பெரும் சவாலாக உபயோகமற்ற கல்வி முறை உள்ளது எனும் உண்மையை நாம் உலகத்தில் ஒரு சிறிய நாடு என்ற வகையில் உணர வேண்டும். எனவே இந்த நாட்டு அதிகாரம் ஒப்படைக்கப்பட்ட நாங்கள் நமது நிலைமையை மீளமதிப்பீடு செய்து ஒவ்வொரு துறையையும் எவ்வாறு சரிப்படுத்த வேண்டும் என கவனமாக யோசிக்க வேண்டிய நேரம் இதுவே.
முதலாவதாக, பெருமையும், இறமாப்பும் நம் அனைவரையும் நாசமாக்குகின்றத என்பதை ஏற்றுக்கொள்ள நாம் ஆயத்தமாக இருக்க வேண்டும் என நான் நினைக்கிறேன். சட்டம் இயற்றும் எமது கடமைகளை பணிவுடன் நாம் செய்ய ஆயத்தமாக இல்லை என்றால், ஒரு போதும் நாம் மாற்றம் அடையமாட்டோம். காலத்திற்கேற்ப நமத மனப்பக்குவமும், நடத்தையும் மாற்றம் அடைவதோடு, நமத பிரச்சினைகளை தாண்டுவதற்கு புத முறைகளையும் கற்றுக் கொள்ள வேண்டும். பரீட்சிக்கப்பட்ட முறைகளும் அவற்றின்
-19

Page 15
புது யுகத்தை நோக்கி
பெறுமானங்களும் மேற்கு உலகில் உண்டு. ஆசிய அரங்கில் உள்ள நாங்கள் நமது பெறுமானங்களுக்கு பொருந்தும் வகையில் அவற்றை அமைத்துக் கொள்ள வேண்டும்.
ஆற்றலும், மக்களும், தணிவும் எங்களிடம் உண்டு. அவ்வாறாயின் எமத காரியங்கள் ஏற்றுக் கொள்ளப்படும் வகையில் ஏன் நாங்கள் அவற்றைச் செய்து விட முடியாத? ஏன் சிறு பிள்ளைகள் போன்று நாங்கள் தொடர்ந்த சண்டை போட்டுக் கொண்டும் றோமாபுரி தீப்பற்றி எரியும் போது நீரோ மன்னன் பிடில் வாசித்துக் கொண்டும் இருந்த மாதிரி இருந்த கொண்டிருக்கின்றோம்? சபாநாயகர் அவர்களே! உலகில் மோசமான நிலை என்னவெனில் ஏழையாக இருப்பதோ வறுமையோ அல்ல, கவுத் டங்கள் நிவர்த்தியாகும் சிந்தனைகள் அற்று வங் குரோத்த நிலமையில் இருப்பததான் மிகவும் மோசமான நிலையென்பது எனது தாழ்மையான அபிப்பிராயமாகும்.
சபாநாயகர் அவர்களே ஒரு மாற்று ஜனநாயக முறை பற்றி முக்கியமாக நாம் சிந்திக்க வேண்டும் என நான் றிலமு. காங்கிரஸ் தலைவர் என்ற வகையில் சில வருடங்களாகத் தொடர்ந்த சொல்லி வந்துள்ளேன். ஐயா! ஜனாதிபதியவர்கள் பிரதம அதிதியாகவும் எதிர்க்கட்சி தலைவர் கெளரவ அதிதியாகவும் கலந்து கொண்ட ஹீல.மு.காங்கிரஸின் பதினைந்தாவத தேசிய மகா நாட்டில் புதியதொரு எண்ணக்கருவாக எதிர்ப்பற்ற ஜனநாயக முறையொன்றை நான் பிரேரித்தேன். ஜனநாயகம் செயல்படுவதற்கு நிறுவன ரீதியான எதிர் க் கட்சி தேவையெனிறு பொருளல்ல. இது முரண்பட்டதாகவும், விபரீதமாகவும் தெரியலாம். ஆனால், மறுபக்கம் பார்க்கும் போது எமது பிரிவு அணுகு முறை காரணமாக சுதந்திரம் கிடைத்த நாற்பத்தாறு வருடங்களுக்குப் பின் நமது நாட்டின் வரலாற்றில் முதல் தடவையாக பொருளாதாரக் கொள்கை அணுகு முறையில் 1994ல் ஒரு இணக்கம் ஏற்பட்டுள்ளதை உணர்கின்றோம்.
-20

- புது யுகத்தை நோக்கி
Lucġ55 III
இன்றைய பொருளாதார நாகரீகமும் நமது இதயமும்
சோசலிசம், மார்க்சிசம், கம்யூனிசம், லெனினிசம், மாஓசியம் போன்ற கோட்பாடுகளை சோவியத் ரஸ்யா உட்பட பல நாடுகளும் கைவிட்டுள்ளது. கட்டுப்பாட்டு பொருளாதார கட்டமைப்பு இப்போது இல்லை. இதனை இரண்டு நாடுகள் மாத்திரம் உலகில் பின்பற்றுகின்றன. ஒன்று கியூபா மற்றது வடகொரியா. மயன்மாரில் உள்ள அரசாங்க முறைபற்றி நான் சொல்வதற்கில்லை. மற்ற எல்லா நாடுகளிலும் வெவ்வேறு மணம கொண்ட ஜனநாயக முறை நிலவுகின்றது. உலகில் இன்றைய நாகரீகம் என்னவெனில் தனியார் தறை அபிவிருத்தி இயந்திர மாகவும் சந்தைப் பொருளாதாரமாகவும் இருப்பதே. அந்த அமைப்பை நடைமுறைப் படுத்துவதில் ஹீலங்காவில் உள்ள நமக்கு தயவும் கருணையும் கொண்ட இதயம் இன்னும் உள்ளது.
நமது இதயத்தில் கூடிய பகுதி சோசலிஸ்ட்டாகவும் அணுகுமுறையில் தயக்கத்துடன் முதலாளித்துவமும் என்பதே எனது அபிப்பிராயமாகும். இத நகர்ந்து கொண்டிருக்கும் ஒரு கட்டமாகும். அந்த அணுகு முறை நமது வாழ்வில் ஒவ்வொரு தறையிலும் தெரிகின்றது. நீதி வழங்குவதில், தொழில் வாய்ப்புக்கு ஆள் சேர்ப்பதில் நீக்குவதில் செல்வத்தை பங்கீடு செய்வதில் சமூகத்தில் ஏழை மக்கள் பகுதியினர் பட்டினியால் வாடாமல் பார்த்தக் கொள்வது, இது ஒரு தனிச்சிறப்புள்ள அணுகு முறையாகும். தலை ஆள் வருமானம் நமக்கு குறைவாக இருந்த போதிலும் புதிதாக ஏற்படுத்தப்பட்டுள்ள விதிமுறைகள் காரணமாக பொருளாதார நல்வாழ்வு பட்டியலில் றீலங்கா மேல் இடத்தை வகிப்பத எவ்வாறாயின் நமது ஏழை மக்களை நாம் கண்காணித்துக் கொள்ளும் முறையும், இலவசக் கல்வியும், இலவச சுகாதார வசதிகளும் இன்னும் இவை போன்றதுமாகும். ஆகவே நமது
-2-

Page 16
புது யுகத்தை நோக்கி தலை ஆள் வருமானம் குறைவாக இருக்கும் போது நமது வாழ்க்கைத் தரம் அதிசிறப்புள்ளதாகவோ அல்லது மேலோங்கி இருப்பதை வளர்முக நாடுகளுடன் ஒப்பிடும் போது காணலாம்.
சபாநாயகர் அவர்களே! இப்பிரயோசனமான நிலைமைகள் நமக்கு இருந்தம் குழப்பத்தில் நாம் கிடப்பத ஏனெனில் நாம் பழக்கப்பட்ட ஜனநாயக முறையில் எதிர்க்கட்சி, அரசாங்கத்தை அனைத்திலும் எதிர்ப்பதம் அரசாங்கம் எதிர்க்கட்சியை அனைத்திலும் எதிர்ப்பதமாகும். ஆகவே நாம் விசுவாசமாக இருப்பதற்கும் நமது கர்வத்தை அடக்குவதற்கும் காலம் வந்த விட்டத என நான் உணர்கிறேன். இந்த சந்தர்ப்பத்தில் விக்டர் ஹியூகோ அவர்களின் பிரபல்யமான சொற்கள் எனத நினைவுக்கு வருகின்றன.
“ஒருவர் ஒரு படையை, ஆக்கிரமிப்பை அல்லது இராணுவத்தை எதிர்க்கலாம். ஆனால் ஒரு நல்ல எண்ணக்கரு மேலோங்கும் நேரம் வந்துவிட்டால் அதை எந்த சக்தியாலும் தடைசெய்ய முடியாத
ஆகவே, சபாநாயகர் அவர்களே! எதிர்ப்பு இல்லாத ஒரு கட்டுக்கோப்பில் நமது ஜனநாயகத்தை பாதகாத்த, வளர்த்த நடைமுறைப்படுத்தம் நேரம் வந்த விட்டத. குறைந்த பட்சம் குறிப்பிட்ட ஒரு காலத்திற்கு நாட்டின் அடையாளம் காணப்பட்ட முக்கிய விடயங்களில் இதனை நாம் நடைமுறைப்படுத்த வேண்டும். இந்தப் பிரேரணையை இந்த சபைக்கு றி.ல.மு. காங்கிரஸ் சார்பில் சிபாரிசு செய்கிறேன்.
சபாநாயகர் அவர்களே! பாராளுமன்றத்தில் எனத சகாக்களிடம் தயவாகவும் அவர்களிடம் வினயமாகவும் நான்
வேண்டிக் கொள்வத என்னவெனில் கட்சி அரசியலை விட்டு
-22- -

புது யுகத்தை நோக்கி
உயர்ந்த அவர்களுள் எரிந்த கொண்டும் வெளிவருவதற்கு காத்துக் கொண்டும் இருக்கும் தேசிய உணர்ச்சிக்கும் நாட்டுப் பற்றுக்கும் ஒரு சந்தர்ப்பம் கொடுக்க வேண்டும் என்பதே. அவ்வாறான ஆழ்ந்த உணர்வுகளை நாம் ஒவ்வொருவரும் நமது இதயத்தில் சுமந்து கொண்டிருக்கிறோம் என்பதை நான் அறிவேன். அந்த உணர்வுகளை நாம் வெளிப்படுத்தி குறித்த ஒரு கால அவகாசத்திற்கும் தேவைக் குமாக உடன்பாட்டிண்மையில் உடன்பட்டு ஒன்று சேர்ந்த தொழிற்பட வேண்டும்.
கிராமப்புறங்களில் சமநிலையற்ற அபிவிருத்தி
சபாநாயகர் அவர்களே! நாட்டிற்கு தேவைப்படும் சமநிலை அபிவிருத்திபற்றி சிலவார்த்தைகள் நான் சொல்ல வேண்டும். சமநிலையற்ற அபிவிருத்தியே விரக்திக்குரிய பிரதான காரணங்களில் ஒன்றாகும். தமிழ் இளைஞர்களும், சிங்கள இளைஞர்களும் ஆயுதம் ஏந்திய காரணங்களுள் இதுவும் ஒன்றாகும். அரசாங்கத்தின் அபிவிருத்தியினால் குறித்த சில நகர்ப்புறங்கள் மாத்திரம் நலன் அடைந்தள்ளதை அபிவிருத்தி குறைந்த வடக்கு, கிழக்கு மக்களும் தெற்கில் சில பகுதிகளில் வாழும் மக்களும் கடந்த பல தசாப்தமாக கண்டித்து வந்துள்ளதை நாம் அறிவோம். தொடர்ந்த வந்த ஒவ்வொரு அரசாங்கமும் இவ்வாறே நடந்துள்ளது. கிராமப் பகுதிகளையும் தரப் பிரதேசங்களையும் அபிவிருத்தி செய்யும் வகையில் அடிப்படை வசதிகள் விருத்தி செய்யப்படுவத தற்போதைய தேவையாகும். கிராமப்புற மக்கள் அவர்களின் உற்பத்திப் பொருட்களை நகர்ப்புறச் சந்தைக்கு அனுப்புவதற்கு ரயில் பாதைகளும், வீதிகளும், நெடுஞ்சாலைகளும் தறைமுகங்களும் தேவை.
சபாநாயகர் அவர்களே! இந்த அடிப்படை வசதிகளின் பலவீனம்தான் வாழ்க்கை செலவு அதிகரிப்பதற்கு
–23–

Page 17
புது யுகத்தை நோக்கி பெரும் காரணமாகும். குறிப்பாக உணவு விலை அதிகரிப்பதற்கு முக்கிய காரணம் இதுவே. விவசாய உற்பத்திப் பொருட்களில் தன்னிறைவு அடைவதற்குப் போதிய சந்தர்ப்பங்கள் அதிகமாக இருந்தம் இவற்றை ஏற்றிச் செல்வதிலும் சேகரித்த வைப்பதிலும் ஏற்படும் செலவுகள் காரணமாக குறைந்த வருமானம் உள்ள நகர்ப்புற மக்களுக்கு இப்பொருட்கள் கட்டுப்படியாவதில்லை. பாடசாலைகள் போன்ற சமூக வசதிகளும் கிராமப்புறங்களில் பற்றாக்குறையாக உள்ளன.
பெரும்பான்மையான தமிழ் மக்கள் சிங்கள மொழியில் பேசுவதற்கு முடியாதிருப்பதை நான் காண்கின்றேன். உண்மை என்னவெனில் வட மாகாணத்திற்கு வெளியில் வசிக்கும் அநேக தமிழ் மக்கள் சிங்கள மொழியை படிப்பதற்கும் பேசுவதற்கும் இப்போது ஆரம்பித்துள்ளனர். கெளரவ சம்பந்தண் அவர்கள் பேசிய அன்று நாண் மிகவும் பெருமையடைந்தேன். அவரின் சிங்கள மொழி ஆற்றல் ஆங்கில மொழி ஆற்றலை விட குறைந்ததாக இல்லை. இரண்டாவது மொழியாக ஆங்கிலத்துடன் சிங்களம், தமிழ் ஆகிய மொழிகளையும் கட்டாயமாக கற்றுக்கொள்ள வேண்டும் என பிள்ளைகளை நாம் கேட்டுக் கொள்ள வேண்டும். எதிர்ப்பு இல்லாத ஜனநாயக அமைப்பில் எல்லோருக்கும் சமத்துவ நிலையை ஏற்படுத்துவித்தல் ஒரு முக்கிய முன்னேற்றப்படியாகும். இது இனங்களுக்கிடையில் உள்ள இசைவின்மையை அகற்றும் ஒரு திடமான வழியும் புரிந்துணர்வை ஏற்படுத்தம் வழியுமாகும்.
பிரதி சபாநாயகர் அவர்களே! எனத பேச்சின் முற்பகுதியில் உலகின் தொழில் நுட்பத்தில் ஏற்பட்டுக் கொண்டிருக்கும் மாற்றங்கள் பற்றி நான் குறிப்பிட்டேன். இதன் விளைவால் உபயோகமற்றதாக கல்வித்தறை அமைந்திருக்கிறத. மொழிகளும் சமய பாடங்களையும் தவிர நாம் இன்று கற்பது நாளை நடைமுறையில் இல்லாமல்
-24

புது யுகத்தை நோக்கி ஆகிவிடுகின்றது. புதிய சிந்தனைகளும் தொழில் நட்பமும் தாய் மொழிகளில் மொழி பெயர்க்கப்படும் வரை காத்திருக்க முடியாது. ஏனெனில் மொழி பெயர்ப்புக்கு காலம் எடுப்பதால் அவை வெளிவரும் போது தகவல்கள் காலாவதியாகி விடுகின்றன. ஆகவே உலக மயப்படுத்தலினால் ஏற்படும் சவால்களை நாம் சந்திப்பதாயின் நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் சரி நவீன கல்வி முறை பயின்ற ஒரு நாடாக, சர்வதேச மொழி ஒன்றில் தேர்ச்சி உள்ளவர்களாக நாம் இருக்க வேண்டும்.
ஆங்கில மொழிக் கல்வியின் அவசியம்
ஹீலங்காவில் உள்ள நமக்கு ஆங்கில மொழி ஒரு தெளிவான ஒரு தெரிவாக ~ கணிதம், விஞ்ஞனம் போன்று இன்று முக்கியமாக அமைகின்றது. ஆங்கில மொழி ஆங்கிலேயருடைய சிறப்பு உரிமையாக தொடர்ந்தம் இல்லை, ஆங்கிலம் ஒரு தொடர்பு வழி வடிவம். அது உலகில் ஏற்படும் மாற்றங்களை சர்வதேச அரங்கில் வெளிப்படுத்திக் காட்டும் ஒரு வழி முறையாகும். (Silicon, Chip, Computer, Internet, e-mail, Cricket) (3, T65p சொற்களுக்கு தாய்மொழி வடிவங்களை அறிமுகம் செய்வதற்கில்லை. கிரிக்கட் எனும் பதத்திற்கு தமிழ், சிங்கள வடிவம் இல்லை. பிரதி சபாநாயகர் அவர்களே! நமது உத்தியோக மொழிகள் அணுகுமுறை சம்பந்தமாக முக்கிய மீளாய்வு ஒன்றினை நாம் செய்ய வேண்டும். சிங்களம்தான் உத்தியோக மொழி என்ற நாம் கதைத்த காலம் ണ്ണങ്ങമ്പ്ര உண்டு. இன்று தொலைக்காட்சியில் பத்து மணிக்குப் பிறகு “டிஸ்கவரி” அலை வரிசையில் ஆங்கிலம் தெரியாமல் எதையும் நமக்கு விளங்கிக் கொள்ள முடியுமா? உலகில் அல்லது அவுஸ்திரேலியாவில் இருந்த ஒரு தகவலை சிங்களத்திலோ, தமிழிலோ நமக்கு இன்ரநெற் மூலம் பெற்றுக் கொள்ள முடியுமா? இது கிராமப்புற மக்களுக்கு நியாயமாகுமா?
-25

Page 18
புது யுகத்தை நோக்கி
எல்லோரும் ஆங்கிலம் படிக்க வேண்டிய நேரம் வந்த விட்டது என்ற உண்மையை ஏன் நாங்கள் அவர்களிடம் சொல்லக்கூடாத? சிங்கள அரசியல் தலைவர்களிடம் உண்மை இருந்த போதிலும் அவர்கள் தமிழ்மொழியை படிக்க முன்வருவார்கள் என நான் நினைக்கவில்லை.
ஆம், தவறை சரிப்படுத்தம் வகையில் நாம் ஏன் ஆங்கிலத்தை உத்தியோகபூர்வ மொழியாக்க முடியாத ஐயா! ஆங்கிலத்தை உத்தியோக மொழியாக்க மல்வானை மாநாட்டில் சேர் ஜோன் கொத்தலாவ காலத்தில் ஐ.தே.கட்சி சரியான தீர்மானத்தை எடுத்தது என நான் நினைக்கிறேன். ஆனால் தரதிஷ்டவசமாக சிங்களம் உத்தியோக மொழியாக இருக்க வேண்டும் என சிங்கள மகா சபையின் தலைவர் என்ற வகையில் எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்க நாத்தாண்டியில் தீர்மானம் நிறைவேற்றினார். மல்வானையில் எடுத்த தீர்மானம இரவோடு இரவாக கவிழ்க்கப்பட்டது. லேக் ஹவுஸ் எழுத்தாளரால் எழுதப்பட்ட “நீலங்காவின் மூன்று பிரதமர்கள்’ எனும் புத்தகத்தை வாசித்தப் பார்த்தால் எவ்வாறு சிலர் இரவில் சென்று சேர் ஜோன் கொத்தலாவல அவர்களை வற்புறுத்தி அவரின் தீர்மானத்தை மாற்றச் செய்தனர் எனும் வரலாற்றை மேற்படி எழுத்தாளர் கூறுவதைக் காணலாம். அந்த தீர்மானத்தை மாற்றினால் அதிகாரத்திற்கு வந்த விடலாம் என அவர்கள் நினைத்தார்கள். ஆனால் அத அவ்வாறில்லாமல் மறைந்த கெளரவ SWRD பண்டார நாயக்க அவர்கள் இந்த நாட்டின் பிரதமராக வரவேண்டும் என்ற நியதி அமைந்திருந்தது. ஐயா! சிங்களம் உத்தியோக மொழியாக ஆக்கப்பட்டதால் நிறைய நன்மைகள் ஏற்பட்டுத்தானுள்ளன.
இந்த நாட்டில் ஒரு புரட்சியை நாம் ஏற்படுத்தினோம். நாங்கள் அனைத்தும் செய்தோம். அது மேன்மையானது. இப்போது தமிழும் ஒரு உத்தியோக மொழிதான். ஆனால் தேவைப்படும் மொழிக்கு இன்னும் உத்தியோக அந்தஸ்த
-26

புது யுகத்தை நோக்கி
கொடுபடவில்லை. நாம் நமது நேரத்தை வீணாக்கிக் கொண்டிருக்கிறோம். றிலங்காவில் ஒரு சுதந்திர சமூகம் எனும் வியாக்கியானத்திற்கு நாங்கள் சீக்கிரமாகப் போகவேண்டியுள்ளது. எனவே நாட்டைக் கட்டியெழுப்பும் முக்கிய அத்திவாரமாகிய கல்வி, உறுதியான ஒரு அடிப்படை கொண்டுள்ளதாக இருக்க வேண்டும் எனும் யதார்த்தத்தை நாம் நிச்சயப் படுத்தல் வேண்டும். நமது கல்வி உலக தரத்திற்கு வரவேண்டுமானால் குறைந்த பட்சம் நமது உயர்கல்வி முறையை ஆங்கிலக் கல்விக்கு வேகமாக மாற்றுவதைத் தவிர வேறு எந்தத் தெரிவும் நமக்கு இல்லை. குறைந்த பட்சம் உயர் வகுப்புக்கள், பல்கலைக்கழகம், தொழில்நட்பக் கல்லூரி மட்டத்தில் இதனை செய்ய வேண்டும்.
நாம் செய்து கொண்டிருக்கும் இரண்டு யுத்தங்களையும், ஒன்று சமாதானம் மற்றது பொருளாதார சுபீட்சம். இவ்விரண்டும தேசிய மட்ட அடிப்படையில் கையாளப்பட வேண்டும். அவ்வாறு செய்யப்படுவதாயின் நமத முன்தேவைகளை நாம் மீள் ஒழுங்கு படுத்த வேண்டும். விஷேசமாக அடிப்படை வசதிகளை அமைத்த கிராமப் புறங்களின் சுமையை குறைக்க வேண்டும். இவ்வாறு இல்லாமல் ஏற்றத்தாழ்வான கல்விமுறை, கிராமப்புற சமநிலையற்ற அபிவிருத்தி, செல்வந்தர்களின் பிள்ளைகளுக்கு ஆங்கிலக்கல்வி, ஆனால் கிராமப்புற வறிய பிள்ளைகளுக்கு தொடர்ந்தம் தாய்மொழிக் கல்வி என்றால், இது ஒரு கொடுமை, ஒரு பாவம் என்பதை மறந்த விடக் கூடாது. நாட்டின் இளைஞர்கள் கிளர்ச்சி செய்வதற்கு ஒரு அத்திவாரமாகவே இதுவும் அமையும். விரக்தியின் காரணமாக அவர்கள் அதிகாரத்தைக் கைப் பற்றி ஜனநாயக கோட்பாடுகளை ஏறி மிதிப்பார்கள். அவர்களின் பரிதாப நிலைமைக்கு காரணமாக இருந்தவர் களையும் ஸ்தாபனங்களையும் அழித்து விடுவார்கள். இதற்கிடையில் மற்ற நாடுகளில் நடந்தவை போன்று ஒரு பாசிச நாடு ஏற்பட்டுவிடும்.
ஆகவே, எதிர்ப்பு இல்லாத ஜனநாயக முறை ஒன்றில்
-27

Page 19
புது யுகத்தை நோக்கி நாம் கவனம் செலுத்தம் போது, பொது இணக்க அணுகு முறையில் சமாதானம், அபிவிருத்தி ஆகிய இரட்டை பிரச்சினைகளையும் தீர்ப்பது, பழைய அபிவிருத்தி முறைகளை மீளாய்வு செய்வது, கிராமிய அபிவிருத்தி முன்தேவைகளை மீளாய்வு செய்வது, நமது நிர்வாக கட்டளைகள், நிதிக்கட்டளைகள் என்பனவற்றை மீளாய்வு செய்வது, தரித அபிவிருத்தி ஒன்றை மேற்கொள்வதில் ஒன்றுபடக் கூடிய நிர்வாகத் தடைகளை மீள்பரிசீலனை செய்வது என்பன அவசியமாகும். மூன்று மொழிகளையும் கற்பித்த அனைத்து சமூகங்களுக்கும் சமத்தவ சூழ்நிலைகளை ஏற்படுத்தி சம சந்தர்ப்பங்களை ஏற்படுத்தி உயர்கல்வி, பல்கலைக்கழக மட்டங்களில் ஆங்கில மொழியில் கல்வி பயில ஆவண செய்தல் வேண்டும்.
ஒரு புது நிறம்
பிரதி சபாநாயகர் அவர்களே! றி.ல.சு.கட்சியும், ஐ.தே.கட்சியும் சில சந்தர்ப்பங்களிலாவத சந்தித்தக் கொள்ளும் ஒரு பாலமாக, ஒரு மேடையாக குறுகிய காலத்தினுள் நீல.மு.காங்கிரஸை அமைத்த விட்டதற்காக இறைவனுக்கு நன்றி உடையவனாக உள்ளேன். மாண்புமிகு ஜனாதிபதி அவர்களும் எதிர்க்கட்சித் தலைவர் அவர்களும் ஏனைய அரசியல் கட்சிகளின் தலைவர்களுடன் 1றி.ல.மு.காங்கிரஸின் பதினைந்தாவது தேசிய மாநாட்டில் ஒன்றுகூடி வருகை தந்தார்கள். எதிர்ப்பு இல்லாத ஜனநாயகம், நிர்வாக கமிட்டி முறைக்கு திரும்புதல் போன்ற கருத்துக்கள் கொள்கையளவில் கட்சித் தலைவர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டது (ஹீலமு. காங்கிரஸின் ஒரு சாதனையாகும். நாங்கள் றிலங்கா மக்கள், வெவ்வேறு கட்சிகளும், நிறங்களும் நமக்கு ஆகாது. எல்லா நிறங்களும் ஒன்றாகி ஒரு நிறமாக வேண்டும் என்று கூறியதில் ஜனாதிபதி அவர்கள் ஒரு படி மேல் சென்று விட்டார்.
-28

புது யுகத்தை நோக்கி
தேசியக் கொடியில் ஒவ்வொரு சமுதாயத்திற்கும் ஒவ்வொரு நிறம் இருக்கின்றது. ஆனால் றிலங்கா மக்களுக்கென ஒரு நிறம் இல்லை. வெவி வேறு சமூகங்களுக்கும் வேறுபட்ட கலாச்சாரங்கள் உண்டு. ஆனால் நீலங்கா மக்களுக்கென்று ஒரு கலாசாரத்தை ஏற்படுத்தத் தவறிவிட்டோம். நமக்குரிய சமயப் போதனைகளை நம்மவர்களுக்கு மாத்திரம் என்று மட்டுப்படுத்திக் கொண்டோம். பெளத்த மதமும், புத்த பெருமானின் போதனைகளும் உலகிற்குப் பொதுவானது. இந்த நாட்டின் ஒவ்வொரு பிரஜைக்கும் புத்தபெருமான் எவ்வளவு சொந்தமோ அவ்வாறே நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் முஸ்லிம்களுக்கு மாத்திரமல்லாத, பெளத்தர்களுக்கும், கிறிஸ்தவர்களுக்கும், இந்தக்களுக்கும் ஒரு அருள் வடிவாகவே நபிகள் நாயகம் அவர்கள் அனுப்பப்பட்டார்கள் அவ்வாறே இயேசு நாதர், பகவத்கீதை இவைகளின் போதனைகள் எல்லோருக்கும் பொதுவானத. உண்மையில் சிங்கள மொழியுடன் புத்த பெருமானுக்கு ஒரு தொடர்பும் இல்லை. நான் அறிந்த மட்டில், புத்த பெருமான் ஒரு வார்த்தையாவது சிங்களத்தில் ஒரு போதம் பேசவில்லை.
1றி.ல.மு. காங்கிரஸின் பார்வையில் மனித இனமும் அனைத்து நீலங்கா மக்களும் ஒரு குடும்பமே. எல்லாம் வல்ல இறைவனின் படைப்புக்களே நாம் அனைவரும். நாட்டைக் கட்டி எழுப்புவதற்கு குறுகிய பாதைகள் இல்லை என்பதை நாங்கள் திடமாக நம்புகிறோம். அத மலர்கள் இல்லாத முட்கள் நிறைந்த நீண்ட கஷ்டமான பாதையாகும். நாட்டில் புரையோடியிருக்கும் சில பிரச்சினைகளுக்கு விடைகாணி பதில் 1998 ஒக்டோபர் 23ம் திகதி 1றி.ல.மு.காங்கிரஸ் வெற்றி கண்டது. நாங்கள் எங்கள் தலைமை அலுவலகத்தை கட்டி முடித்த "தாறுஸ்ஸலாம்” (சாந்தி இல்லம்) என பெயர் வைத்த நமது தாய் நாட்டின்
-29

Page 20
ஒவ்வொரு பிரஜைக்கும் அ ஐக்கியத்தையும் ஒருங்கிணைப்ை மூன்று நிறங்களையும் தேக் செய்துள்ளோம். மூன்று சமூ ஒற்றுமைப்பட்ட மக்களின் நிறம் நாங்கள் வெற்றி பெற்றோம். அ; பச்சையும் கூட்டுச் சேர்ந்த அரசியல் கட்சிகளால் ஏற்படு அறிந்து வானவில்லின் ஏழு அ தேசிய ஐக்கிய முன்னணி
அல்லாஹற் நாடினால், 2012ம் 6 அனைவருக்கும் சமாதான தொழில்படுகின்றோம். ஐயா! எம “இலங்கைத் தாய்க்கு ஒவ் அனைத்து பிரஜைக்கும் ஒரு தேசிய ஐக்கிய முன்னணியின்
பிரதி சபாநாயகர் அவ கட்சிகளுடனும் நல்ல சினே கொள்ளவே றி.ல. மு.க ஐ.தே.கட்சிக்கும், பொது 8 கட்சிகளுக்கும், முஸ்லிம் காங்கி எல்லோருக்கும் பொதவான ஒ ஏற்படவும், புதிய பொரு ஏற்படுத்திடவும் நமத தாய்நா முகிழ்த்திடவும் பிரார்த்தித்த 6
- ந6

புது யுகத்தை நோக்கி
ர்ப்பணம் செய்தள்ளோம். பயும் பிரதிபலிக்கும் பொருட்டு சியக் கொடியில் சந்திக்கச் )கங்களையும் கொண்டதாக ) ஒன்றையும் கண்டெடுப்பதில் துதான் சிவப்பும், கருமஞ்சளும், நிறமாகும். நிறம் சம்பந்தமாக த்தப்பட்ட கட்டுக்கதைகளை ழகிய நிறங்களையும் கொண்ட கொடியை ஏற்றியுள்ளோம். வருடம் அளவில் நமது மக்கள் ம் கிடைக்கும் வகையில் த கோஷம் என்னவென்றால், வொரு பிரஜையும் தேவை, இலங்கை தேவை’ இதுதான்
இலச்சினையாகும்.
பர்களே! அனைத்த அரசியல் கபூர்வ உறவை வைத்துக் ாங் கிரஸ் விரும் புகிறத. ஐன முன்னணிக்கும், தமிழ் ரஸ்"க்கும், ஜே.வி.பி. கட்சிக்கும் ரு புதியதொரு அரசியல் யாப்பு ளாதார கிராமம் ஒன்றை ட்டில் சமாதானமும் சுபீட்சமும் விடை பெறுகின்றேன்.
*றி -

Page 21
óL麾 ஐம்பது 636o655 L5 56i soä தையோ அல்லது ம8 தரத்தையோ உயர்த்த6 பொருளாதாரக் கொள்கை மாற்றம் ஆகிய அடி ஏற்பட்டால் தவிர இந்த எவருக்கும் மிகவும் சிரம முஸ்லிம் காங்கிரஸின்
நாங் களர் இலங்கை அடையாளத்தை ஏற்படுத் பேசிக்கொள்கின்றோம். இ6 அடையாளம் பற்றி ஐ பேசுகிறது, நமத பொது பேசுகின்றது. இதனை ஏற் பற்றி நாம் ஆனைவரும் விடயம் பற்றி நீலங்கா நிலைப் பாடு என்னவென இலங்கை மக்கள் எனும் மாத்திரம்தான் இத் சாத்தி ரீதியாகவும், கோட்பாடு ர் ரீதியாகவும் , உள ரீதிய வேறுபடுத்திக் காட்டிக் *88 90_អ្នាតធំ។
ஒரு எண்ணக்கருவாகவும்
1978 அரசியல் யாப்பும் வசதியான அதிகப்பெரு திருத்தங்களும் இவை தனித்தும் நாடு சிதைவு மோசமாக்கின. ரீலங்கா முஸ்லிம் காங்கிர æä ಥ್ರಿà: jp...ಜfieಷೆ: தலைவர் எம்.எச்.எம். அஷ்ர.

ஆணி டுகளின் வரவு களின் பொருளாதாரத் களின் வாழ்க் கைத் ിന്റെ തണു. ജ്യ്രഞLീ மாற்றம் அரசியல் யாப்பு ti JóO)L 10 II. Jó DJbi 56i நாட்டை ஒன்று சேர்ப்பது மான காரியம் என்பதே நிலைப்பாடாகும்.
யர் எனும் தேசிய த வேண்டும் என நாம் லங்கையர் எனும் தேசிய }க்கிய தேசியக் கட்சி முன்னணி அரசாங்கம் படுத்த வேண்டிய தேவை பேசுகின்றோம். இந்த முஸ்லிம் காங்கிரஸின் ரில் நாம் அனைவரும் ஒரு அமைவு இருந்தால் យpឲ្យយំ យំ (ម្ភៃ) { ரீதியாகவும், தத்துவார்த்த 阿ó剑0 @@@D 凰s கொண்டிருக்கும் போது என்பது அசாத்தியமான கனவாகவும் மாறிவிடும்.
பாராளுமன்றத்தில் ம்பான்மையும், புதுப்புத அனைத்தும், ஒருமித்தும் பெறும் வழியை മേബ
ஸ் தேசியத் தலைவரும்
ஸ்தாபகருமான கெளரவ