கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தலைவரின் உரைகளிலிருந்து சமகால அரசியல் சிந்தனைகள்

Page 1

交
');

Page 2

இலங்கை முஸ்லிம்களின் அரசியல் இதயம் அம்பாறை மாவட்டம்
ரவூப் ஹக்கீம்

Page 3
நுழைவாயில்
ஹரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் மர்ஹஉம் எம்.எச்.எம். அஷர.ப் அவர்களின் அரசியல் பாசறையில் வளர்ந்து, அடுத்த தலைவராக அவராலேயே அடையாளம் காணப்பட்டு, வழி நடாத்தப்பட்ட சட்டத்தரணி ரவூப் ஹக்கீம் தலைமைத்துவத்திற்குரிய பொறுப்புக்களைச் சுமந்துகொண்டு, மக்கள் மத்தியில் தோன்றி ஆற்றி வரும் உரைகள் அனைவரது கவனத்தையும் ஈர்த்து வருகின்றன.
தமிழ், சிங்களம், ஆங்கிலம் ஆகிய மும்மொழிகளிலும் தங்கு தடையின்றி கருத்தாழம் மிக்க உரைகளை ஆற்றுகின்ற ஆற்றல், இறைவன் அருளால் ரவூப் ஹக்கீம் அவர்களுக்கு இயல்பாகவே வாய்த்திருக்கிறது.
தேசியத் தலைவர் ஹக்கீம் அவர்களின் உரைகள் அனைத்தும் ஒலி, ஒளிப்பதிவு செய்யப்பட்டு சமுதாயத்தின் நிகழ்கால, எதிர்கால நலன்கருதிப் பேணிப் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. தேர்ந்தெடுத்த சில சொற்பொழிவுகளிலிருந்து பொறுக்கியெடுக்கப்பட்ட சில பகுதிகள் மட்டும் இந்நூலில் உள்ளடக்கப்பட்டுள்ளன.
முஸ்லிம்களின் பாதுகாப்பு, இருப்பு, சமாதானம் என்பன அவரது உரையின் அடிநாதமாக அமைந்துள்ளதை அவதானிக்கலாம்.
இன்ஷா அல்லாஹற் விரைவில் அவரது உரைகளின் தொகுப்புக்கள் பாகம், பாகமாக வெளிக்கொணரப்படவிருக்கின்றன.
 

புலிகள் புரிந்து கொள்ளும் காலம் நிச்சயம் வரும்.
இன்று முஸ்லிம் காங்கிரஸஉடைய தலைவரை, ஏதோவொரு பணயக் கைதியைப் போல பார்க்கின்ற ஒரு பார்வை, ஒருசிலருக்கு வந்திருக் கின்றது. தலைவரை மேடையில் வைத்து மிரட்டுவது மட்டுமல்ல, தலைவர் மேடையில் இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி மிரட்டல்கள் எங்கெங்கோ இருந்தெல்லாம், எவர் எவரிடமிருந்தோ எல்லாம் வெளிப்படுகின்ற ஒரு காலமாக இன்று மாறியிருக்கின்றது.
இவற்றுக்கு மத்தியில், எனது நிம்மதி சீர்குலைந்து போய்விட்டது என்பதற்காக நான் பக்குவத்தையும், நிதானத்தையும் இழந்துவிட முடியாது. சமுகம் அதனை என்னிடம் எதிர்பார்க்கின்றது. அம்பாறை மாவட்ட உலமாக்களிடத்தில் இன்னும் சற்றுக் கூடுதலாக, இறுக்கமாக வளர வேண்டிய இந்தக் குணவியல்பை, இங்கு எல்லோருக்கும் உதார புருஷர்களாக, அம்பாறை மாவட்டத்து உலமாப் பெருமக்கள், எல்லோருமாகச் சேர்ந்து, இன்று இந்நிகழ்விலாவது வெளிக் கொணர்ந்திருக்கிறார்களே என்று நான் நிம்மதியடைகிறேன்.
இலங்கை உலமாக்கள் கொள்கை அடிப்படையிலே குழுக்கள் குழுக்களாகப் பிரிந்து போய்விடுகின்ற அபாயம் நிகழ்ந்து, நிலைமை இன்னும் மோசமாகப் போய்விடும் என்ற ஒரு பாரிய பின்னணி இருக்கின்றது. அகீதா கொள்கை அடிப்படையில் பிளவு, பிரச்சினைகள் இல்லாமலும், எல்லாத் தரப்புக்கள், கொள்கைகளை கொண்டவர்களா கவும், சமூகத்திற்கு மிக முக்கியமாகத் தேவைப்படுகின்ற ஒற்றுமை யைப் பற்றிப் பிடித்தவர்களாகவும், அரசியல் தலைமைகளுக்கு அறிவுரை கூறுவதற்கு அருகதையுள்ளவர்களாகவும், தங்களிடத்திலே அந்தக் குணவியல்பை இழக்காதவர்களாகவும் இன்று அம்பாறை மாவட்டத்திலாவது ஒன்றாகக் கூடியிருக்கின்றார்கள் என்பது நான் நிம்மதியடைகின்ற விஷயம். நிச்சயமாக இது இங்கு இலங்கை முஸ்லிம்களின் அரசியல் இருதயம் என்கின்ற இந்தக் கரையோரப் பிரதேசத்திலே நின்று நிலைக்க வேண்டும் என்பது நாங்கள் எல்லோரும் தொடர்ந்தும் ஆசிக்கும் ஒரு விஷயம்.
இனப்பிரச்சினைத் தீர்வு சம்பந்தமான, தற்போதைய நிலவரம் குறித்து நான் பேசவேண்டும் என்பது தான் இன்று எனக்குத் தரப்பட்டி ருக்கின்ற மகுடம்; தலைப்பு. இந்தத் தலைப்போடு சேர்த்து இங்கு
の7

Page 4
நிறையக் கேள்விகளும் என்னிடத்தில் கேட்கப்படுகின்றன. இவற்றில் தனித்தரப்பு என்கின்ற வேண்டுகோள் நிறைவேற்றப்படுமா?, தனி நிர்வாகம் தரப்படவில்லை என்றால்; மாற்று வழி என்ன?, ஆங்கிலப் பத்திரிகை ஒன்றிலே நாங்கள் அற்ப காரணங்களுக்காக விலகப் போவதில்லை என்று சொன்னதன் உண்மையான உள்ளர்த்தம் என்ன?, உயிரிழப்புக்களைத் தவிர்ப்பதற்கான உத்தரவாதம் உண்டா? என் றெல் லாம் இங்கு நிறைய கேள்விகள் எண் னிடத்திலே கேட்கப்படுகின்றன.
பிரதான கட்சிகளுக்கு தனித்து ஆட்சியமைக்கும் அருகதை இல்லை.
இந்நாட்டிலே இரண்டு பிரதான அரசியற் கட்சிகள்தான், மாறி மாறி ஆட்சிக்கு வருகின்ற பாரம்பரியம் இருந்து வந்திருக்கின்றது. இந்த இரண்டு பிரதானமான அரசியற் கட்சிகளுக்கும், தனித்து நின்று ஆட்சியமைக்கின்ற அருகதை இல்லை என்பது விகிதாசாரத் தேர்தல் முறையின் அறிமுகத்தோடு உருவாகிய ஒரு புதிய பரிணாமம் என்பதை நாங்கள் எல்லோரும் ஏற்றுக்கொள்கின்றோம்.
மறைந்த தலைவர் அவர்கள் தூரதிருஷ்டியோடு எண்பதுகளில் ஏற்பட்ட, முஸ்லிம் பாதுகாப்பு அச்சுறுத்தல்களின் பின்னணியிலே எங்களுக்கென்று ஒரு தனியான அரசியல் இயக்கத்தையும், தடத்தையும், நிலையான தளத்தையும் இங்கு அமைத்துச் சென்றார்கள்.
விகிதாசாரத் தேர்தல் முறையின் விசித்திரங்கள் காரணமாக எவ்வெவ்வாறாறெல்லாம் எதுவெது நடக்க முடியுமோ, அவற்றை யெல்லாம் செய்தும், செய்ய வைத்தும் ஈற்றிலே, இன்று வடகிழக்கைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற பாராளுமன்ற உறுப்பினர்கள் என்கின்ற பட்டியலில், ஆக உச்சக் கட்டமாக பதினைந்து பாராளுமன்ற உறுப்பினர்களை, வடகிழக்கிலே இருக்கின்ற தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கும், தெற்கிலே இருக்கின்ற ஜே.வி.பி. யிற்கும் ஈடாக, ஏறத்தாழ அதே அளவினராக, முஸ்லிம்கள் சார்பிலும், பாராளுமன்ற ஆசனங்களைப் பெற்றிருக்கின்ற ஒரு தறுவாயில்தான், இன்று ‘முஸ்லிம்களின் பாதுகாப்பிற்கு பங்கம் வந்திருக்கின்றது" என்ற இந்தப் பெரிய பீதியும், கலவரமும் ஏற்பட்டிருக்கிறது. பூரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் பணயக் கைதியாக நின்று பதிலளிக்க வேண்டிய ஒரு களநிலவரமும் இன்று ஏற்பட்டிருக்கின்றது.
缀
のジ
 
 
 

இரண்டு பிரதான கட்சிகளுக்கும் இனிமேல் தனித்து நின்று ஆட்சி அமைப்பதற்கான, அதிலும் குறிப்பாக தற்போது இருக்கின்ற தேர்தல் விகிதாசார முறை மாற்றப்படாத ஒரு சூழலில் அது ஏற்படுத்தப்பட மாட்டாது என்பதில் எங்களுக்குள்ளே சந்தேகங் கள் இருக்க முடியாது. இந்த இரண்டு கட்சிகளும் இரண்டு முகாம்களாக பிரிந்து நின்றால் மட்டும்தான் இந்த நிலைமை நிலைக்க முடியும். அவர்களுக்கு மத்தியிலே அரசியல் வேறுபாடுகள் இருக்கும் வரை மட்டும்தான் இப்படியான ஒரு சூழல் நிலவ முடியும்.
சமாதானம் கொண்டுவரப்பட வேண்டும் என்பதிலே இந்த இரண்டு அரசியற் கட்சிகளின் தேசியத் தலைமைகளுக்கும் மாற்றுக் கருத்துக்கு இடமிருக்க முடியாது. இரண்டு கட்சிகளும் பகிரங்கமாக எடுக்கின்ற நிலைப்பாடுகள், தாங்கள் தான் சமாதானத்தைக் கொண்டுவர வேண்டும் என்ற அடிப்படையிலானது. ஆனால், அதைக் கொண்டு வருவதற்கு ஒரு கட்சியை மிகைத்து மறு கட்சி, சிறப்பான அணுகு முறையைக் கையாளக்கூடியது என்ற ஒரு சந்தைப்படுத்துதலைத்தான் மக்கள் மத்தியிலே அவர்கள் செய்து வருகின்றார்கள்.
ஆட்சியைத் தீர்மானிப்பது முஸ்லிம் காங்கிரஸே
இவர்களுடைய இந்த அரசியல் சல்லாபத்திற்கு மத்தியில்தான் அவர்களை ஆட்சிக்குக் கொண்டுவரக் கூடிய சக்திகள், எவரை ஆட்சிபீடத்தில் அமர்த்துவது என்கின்ற தீர்மானங்களை எடுக்கின்றன. தங்களுடைய அரசியல் அபிலாஷைகளுக்கேற்ப இந்த அரசு எவ்வாறு வழிநடாத்தப்பட வேண்டும் என்பதை மையமாக வைத்து, அவர்களை ஆட்சிபீடத்திலே அமர்த்துவதா, இல்லையா? என்கின்ற தீர்மானங்களை எடுக்கின்றன.
தேர்தல் வரும்பொழுது இரண்டு பிரதானமான கட்சிகளுக்கும் ஆட்சிபீடத்திலே அமர்வதற்கு மூன்று மாற்று வழிகள் இருக்கின்றன. ஒன்று, தமிழர்களின் தேசியவாதத்தை அடிப்படையாகக் கொண்ட, புலிகளின் மறைமுக ஆதரவுடனான தமிழர் கூட்டமைப்பின் ஆதரவு.
அதற்கு அடுத்தபடியாக இருக்கின்ற மாற்றுவழி, சிங்களத் தேசியவாதத்தை தன்னுடைய அரசியல் இலக்காகக் கொண்டு அரசியல் செய்கின்ற ஜே.வி.பி. இயக்கத்தினர். இந்த இரண்டு இயக்கத்தினர்களும் தங்களுக்கென்று ஏறத்தாழ பதினைந்து பதினாறு ஆசனங்களைப் பாராளுமன்றத்திலே கொண்டிருக்கின்றார்:
2零

Page 5
அநேகமாக இவர்களுக்குச் சமனாக வடகிழக்கைப் பிரதிநிதித்துவப் படுத்துகின்ற பாராளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில் 12 ஆசனங்களை பூரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் பெற்றிருக்கின்றது.
இதில் பூணீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவருக்கு இருக்கின்ற தார்மீகப் பொறுப்பு, அவருடைய தேர்தல் ஆசனம் எங்கிருந்தாலும் சரி, எந்த முலையில் இருந்தாலும் சரி, கிழக்கு மாகாண முஸ்லிம்களின் அரசியல் அபிலாஷைகளோடு ஒன்றித்துப் போக வேண்டிய கட்டாயக் கடமையோடு இருக்கின்றது.
இதுதான் யதார்த்தம்
புலிகளுடன் சேர்ந்தும், புலிகள் ஆதரவுடனான தமிழர் தேசிய கூட்டமைப்புடன் சேர்ந்தும் இந் நாட்டில் சிங்கள, முஸ்லிம் மக்களைத் திருப்திப்படுத்தக்கூடிய ஒரு தீர்வைப் பெற்றுத்தர முடியும் என்கின்ற நம்பிக்கை ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இருக்க முடியாது; சந்திரிக்கா வுக்கும் இருக்க முடியாது. அதேபோன்று, ஜே.வி.பி.யுடன் சேர்ந்து தமிழர்களின் குறைந்தபட்ச அபிலாஷைகளையும், முஸ்லிம்களுடைய அரசியல் இலக்குகளையும் திருப்திப்படுத்துகின்ற ஒரு தீர்வைப் பெறுவதற்கான ஓர் அரசியல் கூட்டை ஐக்கிய தேசிய கட்சியோ, பொது முன்னணியோ அமைத்துக் காட்ட முடியாது.
இவர்களுக்கு இருக்கின்ற ஒரே மாற்று வழி, முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களை ஒன்றிணைத்த ஓர் அரசியல் இயக்கத்தை தங்க ளோடு இணைத்துக் கொண்டு, இந்த நாட்டிலே இன்று அரசியல், இராணுவ சக்தியாக மாறியிருக்கின்ற புலிகளோடு பேசுவதன் மூலம் தான் பிரச்சினைகளுக்கான ஒரு முடிவுக்கு வரமுடியுமென்பது களத்திலே இருக்கின்ற யதார்த்தமாகும்.
இதை மறந்து விட்டு நாங்கள் அங்கலாய்ப்பதில் அர்த்தமில்லை. இந்த அடிப்படையிலேதான் நானும் இவ்வளவு கலவரத்திற்கு மத்தியிலும், தேர்தல் வந்தாலும், வராவிட்டாலும், நாளை பேச்சு வார்த்தை தொடங்கினாலும், தொடங்காவிட்டாலும் முஸ்லிம்க ளுடைய அரசியல் இலக்கு சம்பந்தமான ஒரு கொள்கையுடன் இருக்கிறேன். இக்கொள்கையில் நாங்கள் எல்லோரும் இருக்க முடியுமாக இருந்தால், நிச்சயம் அந்தத் தீர்வு எங்களைத் திருப்திப்படுத்துகின்ற ஒரு தீர்வாக,
U
 

வறு சக்திகளோடு கூட்டிணைந்து இந்த இரண்டு மாற்று அரசாங்கங்க நம் கொண்டுவர முடியாத ஒரு தீர்வாக அது அமையப் போகின்றது ன்பதில் நாங்கள் நிச்சயமாக நம்பிக்கை கொள்ள வேண்டும்.
வடகிழக்கிலே தமிழ் மக்களோடு ஏற்படுகின்ற அரசியல் முரண்பாடு ளையும், சமுகப் பொருளாதார முரண்பாடுகளையும் பேச்சுவார்த்தை லம் தீர்த்துக் கொள்வதில் நாங்கள் நாட்டம் கொண்டிருக் ன்றோம் என்பதுதான் முஸ்லிம் அறிஞர்களும், உலமாக்களும், த்திஜீவிகளும், நேர்மையாகச் சிந்திக்கின்ற முஸ்லிம் இளைஞர்களும் |ன்று அழுத்தந்திருத்தமாக சொல்லி வருகின்ற விஷயம்.
அதே அடிப்படையிலேதான் மறைந்த தலைவர் அவர்கள் இந்த இயக்கத்தையும், இந்த இயக்கத்தினூடாக இளைஞர்க ளை வலுப்படுத்துவதிலும் வன்முறைக் கலாசாரத்தின்பால் செல்லாமல், ஜனநாயகத்தின் மேல் நம்பிக்கை வைத்து இஸ்லாமிய சமுகத்தின் ஒற்றுமையினூடாக, பேச்சு வார்த்தையி ஒனுடாக இதற்குத் தீர்வுகாண வேண்டும் என்பதை வலியுறுத்தி வந்தார்கள். s
தவறான பாதைக்கு வழிகாட்ட மாட்டேன்
இந்த நிலைமை கடந்த பதினைந்து வருடகாலமாக முஸ்லிம்களின் த்தியிலி ஏற்பட்டிருக்கின்ற அரசியல் வளர்ச்சியையும், விஷேசமாக Dஸ்லிம் இளைஞர்களின் அரசியல் முதிர்ச்சியையும் காட்டி நிற்கின்ற ஷயம். இந்த வளர்ச்சிக்கும், முதிர்ச்சிக்கும் எமது மறைந்த தலைவர் ம்.எச்.எம். அஷர..ப் அவர்களுடைய அரசியல் வழிகாட்டல் பிரதா மானது என்பதை நாங்கள் எல்லோரும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
அவர் அன்று முஸ்லிம் இளைஞர்களை ஆயுதமேந்துமாறு காரியிருந்தால், இந்த இனப்பிரச்சினையின் வடிவமே தலைகீழாக ாறியிருக்கும். இருந்தாலும் அவர்கள் அன்றும் கோரவில்லை. அந்த புரறைக்குள் இருந்து கொண்டு அவர் ஆசிக்கின்ற விஷயம், இந்த முகம் வன்முறை ஆயுதக் கலாசாரத்தின்பால் நிற்காமல், தனக் கன்றிருக்கின்ற தனித்துவமான அரசியலை சரிவர வடிவ:த் துக்

Page 6
கொண்டு, தமது சகோதரர்களோடு ஒன்றிணைந்து வாழ வேண்டும் என்பதிலே எங்களுக்கு எந்தவிதமான மாற்றுக் கருத்துக்கும் இடமிருக்க முடியாது.
சட்டரீதியாக ஆயுதங்களைத் தாங்குவதற்கு ஓர் ஒழுக்கக் கட்டுப் பாட்டின் அடிப்படையிலே, முஸ்லிம்கள் தங்களுடைய பாதுகாப்பை தாங்களாகவே உறுதிசெய்து கொள்ளக்கூடிய ஒரு கட்டமைப்பை, தங்களுக்குள் வளர்த்துக் கொள்ளக்கூடிய ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டுமென்பதில் அவரோடு யாரும் முரண்பட்டது கிடையாது. அரசாங்கம் அவரோடு முரண்பட்ட அத்தனை சந்தர்ப்பங்களிலும் சட்டபூர்வமாக ஆயுதங்களை ஏந்துகின்ற, அருகதையை முஸ்லிம் களுக்குத் தரவேண்டும் என்பதுதான் அவருடைய தாரக மந்திரமாக என்றும் இருந்து வந்திருக்கின்றது. அவருடைய கோட்பாடுகளிலும், வழிகாட்டல்களிலும் இந்தக் கட்சியை வழிநடாத்த வேண்டிய தார்மீகப் பொறுப்பைத் தாங்கி நிற்கின்ற நானும், அந்த வழிமுறையிலிருந்து விலகி தவறான வேறு பாதைகளை இந்த சமுகத்திற்குக் காட்ட (plgust gl.
முஸ்லிம் இளைஞர்களின் ஆகச்சிறியதொரு தொகையினர் ஆயுதத்திலே நாட்டமுள்ளவர்களாக இருக்கின்றார்கள் என்பது என்றும், எந்த மேடையிலும் வெளிப்பட்ட விஷயம். ஆயுதக் கலாசாரம்தான் எங்களுடைய இந்தக்கள நிலவரத்தில் ஒரு சாதகமான நிலையைத் தோற்றுவிக்க முடியுமென்பதில் நம்பிக்கை கொண்டு, இதில் நாட்ட முள்ளவர்களாக இளைஞர்கள் இருக்கின்றார்கள். எனவே, அவர்களை நெறிப்படுத்தவும், நிதானித்து செயற்பட வேண்டிய அவசியத்தை வலியுறுத்தவும் வேண்டியது நமது தார்மீகப் பொறுப்பாகும். முஸ்லிம் களின் அரசியல் இயக்கத்திற்கு - அரசியல் விமோசனத்துக்காக இருக்கின்ற ஒரே ஸ்தாபனத்திற்குத் தலைமை தாங்குகின்றவன் என்ற வகையில் இந்த அறிவுட்டலையும், வழிகாட்டலையும் செய்ய வேண்டிய பொறுப்பும் இருந்து கொண்டிருக்கின்றது.
முஸ்லிம்களுக்கு ஏற்பட்டிருக்கின்ற பாதுகாப்பு அச்சுறுத்தலின் பீதியின் காரணமாகவும், மாற்று வழிகளில் நம்பிக்கை குறைவு என்பதன் காரணமாகவும் இளைஞர்கள் ஆயுதம் ஏந்தியேதிர வேண்டும் என்று கதைத் துக் கொண்டு தரிகின்றார்கள் என்பதற்காக, “வெளி அரசியற் கட்சிகளின் சதி வலைகளுக்குள் மாட்டுப்பட்டவர்கள்” என்று அவர்களுக்குப் பட்டம் சூட்டுகின்ற பொறுப்பில்லாத அரசியலைச் செய்கின்ற ஒரு தலைமையாக நான் இருக்க விரும்பவில்லை என்பதையும் இங்கு திட்டவட்டமாகச் சொல்ல விரும்புகின்றேன்.
06
 
 
 

புலிகளின் தார்மீகப் பொறுப்பு.
உணர்ச்சி பொங்கச் செயற்பட முனைகின்ற முஸ்லிம் இளைஞர் களை, பொறுமை காக்க வைக்கும் பொறுப்பு முஸ்லிம் அரசியல் இயக்கத்தின் தலைமைக்கு இருப்பதைப் போலவும், உலமாக்களுக்கு இருப்பதைப் போலவும், இன்னுமொரு முக்கிய தரப்புக்கு இருக்கின்றது என்பதை நாம் அழுத்தந்திருத்தமாகச் சுட்டிக்காட்டியாக வேண்டும்.
விஷேசமாக முஸ்லிம் இளைஞர்கள் ஆயுதமேந்த முனைவ தற்குக் காரணமான புறச்சூழ்நிலைகளைக் களைகின்ற முக்கிய பொறுப்பு கிழக்கு மாகாணப் புலிகளின் தலைமைகளுக்கும் இருக்கின்றது. கிழக்கு மாகாணப் புலிகளின் தலைமை உணர்ந்து கொள்ளவேண்டிய மேலும் பல முக்கியமான விஷயங்களும், ஆயுதம் போன்ற விஷயங்களும் இருக் கன்ெறன. ஒரே பொருளாதாரத்தை, ஒரே பூமியைப் பங்குபோட்டுக் கொண்டு மொழியால் ஒன்றுபட்ட, மதத்தால் வேறுபட்ட இரண்டு சமுகக் கூறுகளுக்கிடையே எழுகின்ற முரண்பாடுகள் இயல்பாகவே தோன்றுகின்ற முரண்பாடுகளே. இந்த முரண்பாடுகளைத் தங்களுடைய விடுதலைப் போராட்டத்தின் குறுக்கெழுத்திலே, பிரதிபலிக்காமல் பாதுகாத்துக் கொள்வது தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் தார்மீகப் பொறுப்பென்பதை அதன் தலைவர்கள் உள்வாங்க வேண்டும்.
மொழிவாரியான மாநிலம் பற்றிப் பேசுபவர்கள், அதிலும் குறிப்பாக பெங்கொக்கில், திட்டவட்டமாக முஸ்லிம்கள் ஓரளவுக்காவது திருப்திப் படுகின்ற வகையிலே, தங்களுடைய முதலறிக்கையை புலிகளின் சார்பில் அன்டன் பாலசிங்கம் வெளியிட்டிருந்தார்.
வடகிழக்கு என்பது முஸ்லிம்களதும், தமிழர்களதும் தாயகம். ஒரே தாயகப் பூமியிலே வாழுகின்ற தமிழர்களும், முஸ்லிம்களும் சமுக, அரசியல் முரண்பாடுகளைக் கொண்டு வாழ்கின்றார்கள் என்கின்ற யதார்த்தம் உள்வாங்கப்பட்டுதான் போராட்டம் வடிவ மைக்கப்பட வேண்டும் எனவே, அவர்களது துப்பாக்கிக் கலாசாரம், ஒரு தனித் தேசிய இனமாக அங்கீகரிக்கப்பட்ட முஸ்லிம்களின் மேல் திணிக்கப்படுகின்ற பக்குவமில்லாத ஆயுதக் கலாசாரமாக மாறுவதைத் தடுப்பது புலிகள் இயக்கத்தின் பாரிய தார்மீகப் பொறுப்பாகும்.
07

Page 7
இதை உணர்ந்துகொள்ள வேண்டும் என்பதுதான் இன்றும் முஸ்லிம் காங்கிரஸின் சார்பில் நேர்மையாக நாங்கள் முன்வைக்கின்ற வேண்டு கோளாகும். இதைப் பயமுறுத்தலாக, அதட்டலாக அன்றி, சமூகத்தின் அரசியல் ஆணையைப் பெற்ற இயக்கத்தின் தலைமை என்ற வகையில் அவர்களிடத்தில் நாங்கள் நேர்மையாகச் சொல்ல வேண்டும்.
அரசியல் முதிர்ச்சி இல்லாத செயல்.
இதுவரையும் ஆயுதப் போராட்டம் பற்றியும், தங்கள் இனத்தின் அரசியல் இலக்குப் பற்றியும், ஒரே மொழி பேசுகின்ற முஸ்லிம் இனத்திற்குள் சரியான பிரசார வடிவங்களை முன்னெடுக்காமல், இருபது வருடங்களைத் தட்டிக் கழித்து விட்ட புலிகளின் தலைமை, திடீரென்று தமிழர்களுடைய, புலிகளுடைய அரசியல் இலக்கோடு முஸ்லிம்களின் அரசியல் இலக்கையும் முடிச்சுப் போட்டுத்தான் முடிக்க வேண்டுமென்று விடாப்பிடியாக நிற்பது அரசியல் முதிர்ச்சியில்லாத செயல் என்பதை புலிகள் புரிந்து கொள்ளவேண்டும். தங்களுடைய அரசியல் போராட்டத்தின் இலக்குகள் பற்றியும், அதன் சரியான வடிவமைப்பு பற்றியும் எந்த விதமான பிரசார வேலைகளையும் செய்யாமல், இன்று திடீரென வந்து, பேச்சுவார்த்தை மேசையிலே, வடகிழக்கிலே வாழ்கின்ற முஸ்லிம்களும் ஒரு தனியான தேசிய இனம், அவர்களும் இந்தத் தாயகத்தின் சொந்தக்காரர்கள் என்று ஏற்றுக் கொண்ட பிறகு தாறுமாறாகவும், முன்னுக்குப் பின் முரணாகவும் பேசுவது எந்த விதத்திலும் தார்மீகமாட்டாது என்பதை புலிகள் உணர்ந்து கொள்ளவேண்டும்.
வடக்கிலே நடந்த விஷயங்களுக்கு யார் பொறுப்புதாரிகள் என்றும், கிழக்கில் நடந்த படுகொலைகளுக்கு யார் பொறுப்புதாரிகளென்றும், கடந்த காலப் புண்களை கிளறிக் கொண்டு அதன்மூலம் ஆவேசத் தையும், ஆத்திரத்தையும் தூண்டுவது முஸ்லிம் காங்கிரஸஉடைய நோக்கமல்ல.
அவ்வாறான விஷயத்தில் இருந்து முஸ்லிம் காங்கிரஸ் சற்று விவேகமாகத் தூரமாகியிருக்க வேண்டுமென்று நினைத்த பொழுது, முஸ்லிம் காங்கிரஸின் தலைமையும் துரோகியாகப் பார்க்கப்படுகின்ற காலம் இது. புலிகளோடு சகவாழ்வு வாழ வேண்டும்; உரிமைகளை
 

எந்த விட்டுக்கொடுப்புமில்லாமல் தைரியமாக, நேர்மையாகப் பெற்றுக் கொடுப்பதற்கான புதுவிதமான அணுகுமுறைகளை நாங்கள் நேர்மை யாகச் செய்தாக வேண்டும் என்று நினைக்கின்ற பொழுது அதன் காரணமாகவே தொடர்ந்தும் முஸ்லிம் காங்கிரஸின் தலைமைத்துவம் நெருக்கடிக்குள் மாட்டிக்கொள்கின்ற ஒரு தலைமையாக இருக்கின்றது என்பதையும் புலிகள் புரிந்துகொள்ள வேண்டும்.
நிலைக்கும் சமாதானத்துக்கு சரியான அனுைகுமுறை
சமாதான காலத்திலும் முஸ்லிம்களிடம் பணம் பறித்தல், வாகனம் கடத்தல், ஆள் கடத்தல் போன்ற அசிங்கங்கள் அரங்கேறிக் கொண்டிருக்கின்ற பொழுது, கிழக்கின் குழப்ப நிலைக்கு காரணம் முஸ்லிம்களின் அரசியல்வாதிகளே என்று தீர்ப்பு வழங்கும் பாத்திரத்தை, கிழக்கிலே வாழும் புலிகளின் தலைமைத்துவம் உடனடியாகக் கைவிட்டாக வேண்டும். கிழக்கிலே வாழும் புலிகள் எல்லாவிதத்திலும் முஸ்லிம்களுக்கு நம்பிக்கையூட்ட முடியுமாக இருந்தால் மட்டுமே அவர்களுக்கு தங்களுடைய இனத்தின் உரிமைகளைப் பற்றியும், தங்களுடைய இலக்கு களைப் பற்றியும், தார்மீகத்தோடு பேசுகின்ற அருகதை வரும் என்பதை புலிகள் உணர்ந்து கொள்கின்ற காலம் நிச்சயமாக வந்துதான் தீரும். முஸ்லிம்களையும், அவர்களது தனித்துவமான அரசியலையும், தமிழர்களுக்குள் இருக்கின்ற மாற்று அரசியல் சக்திகளைப் போல பார்க்கின்ற குறுகிய பார்வை புலிகளிடத்தில் இருந்து மாறவேண்டும். புலிகளுக்கு எதிரான தமிழ் குழுக்களாக இன்று முஸ்லிம் காங்கிரஸ9 ம் அதே பார்வையில் பார்க்கப்படுகின்ற நிலைமை இருக்கின்றது.
இப்படியான ஒரு துர்ப்பாக்கியம் இங்கு நடந்து கொண்டிருக் கின்றது என்று, நேர்மையாக தமிழர்களுக்குள்ளே இருந்து புத்தி ஜீவிகள் பலரும் சிந்திக்கத் தொடங்கும் ஒரு காலமாக இது மாற வேண்டும். புலிகள் இதைச் சரிவர புரிந்துகொள்ள வேண்டும். அத்துடன், முஸ்லிம்கள், தமிழர்களுக்குள் வாழும் தமிழ் இயக்கங்கள் அல்ல என்பதை புலிகள் புரிந்துகொள்ள வேண்டும். இதைச் சரிவர இனங்கண்டு தங்களுடைய அணுைகுமுறையினை மாற்றிக் கொள்ளும் போதுதான் அது நிலைத்து நிற்கின்ற சமாதா னத்திற்கான சரியான அணுைகுமுறையாக இருக்கும் என்பதை அவர்கள் புரிந்துகொள்கின்ற காலம் நிச்சயமாக மிகத் தூரத்தில் இல்லை.
ഗ്ര

Page 8
ஆயுத கலாசாரத்தில், ஆயுத வன்முறையின் மூலமாக அவர்க ளுடைய இறுதி இலக்குகளை அடைவதற்கு இவ்வளவு தியாகங் களைச் செய்து விட்டும், அதற்குரிய அரசியல் சாணக்கியம் இல்லா மல் இப்படி இடக்குமிடக்காக - குறுக்கு மறுக்காகப் பேசுவது நற்பயன ளிக்காது. நேர்மையாகப் பேசுகின்ற, உண்மையாகவே தமிழர் விடு தலைப் போராட்டத்தின் தலைமைப் போராளிகளாக இருந்தால் இப்படிப் பேசத் தலைப்பட மாட்டார்கள் என முஸ்லிம்களின் தலைமைத்துவம் நம்புகிறது.
(அம்பாறை மாவட்ட உலமாக்கள் மத்தியில் ஆற்றிய உரையிலிருந்து 2003)
கிழக்கில் அமோக வரவேற்பு
7ク
 
 

நாங்களும் புலிகளாக இருந்தால்.
சாதாரணமாக, பள்ளிவாசல்களில் நான்கு, ஐந்து நம்பிக்கையா ர்களைக் கொண்ட சபைகளுக்குள்ளேயே ஒற்றுமை கிடையாது. ழு நாட்டுக்குமான ஓர் அரசியல் கட்சியை அல்லது சமுகத்திற்கான ரசியல் கட்சியை ஒற்றுமையோடு கொண்டு செல்வது என்பது வ்வளவு கஷ்டமான காரியம். இன்று ஜனாதிபதி இருக்கின்றார்; வருடைய கட்சிக்குள் நிறைய பிளவுகள் இருக்கின்றன. பிரதமர் ருக்கின்றார்; அவருடைய கட்சிக்குள்ளேயும் நிறைய பிளவுகள் ருக்கின்றன. ஆனால், ஓரளவுக்கு பலம்வாய்ந்த கதிரைகளிலே வர்கள் இருக்கின்ற காரணத்தினால் அவர்களுக்கு முகாமை செய்ய டிகின்றது. அதை ஒருவாறு சமாளித்துக் கொண்டு போகிறார்கள். rச்சினைகளுக்கு நிரந்தரமான தீர்வென்பது கஷ்டமான விஷயம். னென்றால் ஜனநாயகத்திலே அது அடிப்படை அம்சம். இதைத்தான் ான் விடுதலைப் புலிகளுடன் பேச்சுவார்த்தைக்குப் போயிருந்தபோது, ரு சந்தர்ப்பத்தில் சொன்னேன்.
புலிகளின் பேச்சாளராக இருக்கின்ற அன்டன் பாலசிங்கம் ஒரு முறை என்னுடன் ஏற்பட்ட ஒரு வாக்குவாதத்தின் பின்னணியிலே, திடீரென்று “உங்களுடைய கட்சி பிளவுபட்டுப் போய் இருக்கின் றது. நீங்கள் இங்கு வந்து பேசுவதற்கு முன்னர் உங்களுடைய கட்சியிலே ஒற்றுமைப்பட்டு விட்டு இங்கு வந்து பேசுங்கள்” என்று சொன்னார். நான் அதைக் கேட்டுக் கோபப் படவில்லை. ஏனெனில் வீணாகக் கோபப்படுவதில் அர்த்தமில்லை.
உடனே அவரைப் பார்த்து சிரித்துக் கொண்டே நான் பதிலைச் சான்னேன். நீங்கள் சொன்னது உண்மை. எமது கட்சிக்குள் பிளவுகள், பிரச்சினைகள் இருக்கின்றன. இந்த நாட்டிலே இருக் ன்ெற எந்தக் கட்சிக்குள்ளும் அந்தப் பிளவுகள், பிரச்சினைகள் இருக்கின்றன. ஆனால், நாங்கள் ஜனநாயகக் கட்சி. எங்களு டைய பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்வதற்கு எங்களுக்குச் Fல சிரமங்கள் இருக்கின்றன. நாங்களும் உங்களைப் போன்ற ஓர் அமைப்பிலே இருந்தால், இந்தப் பிரச்சினைகளை எங்களா லும் இலகுவாகத் தீர்த்துக் கொள்ள முடியும். ஆனால், அதை ான்னால் செய்ய முடியாது” என்று சொன்னவுடனேயே அவர் ரிந்துகொண்டு அப்படியே அமர்ந்துவிட்டார்.
77

Page 9
சில அமைப்புக்களில் வேறு வகையில் ஒற்றுமை வருகின்றது. பயம், பீதியின் காரணமாக ஒற்றுமைப்பட்டுக் கொண்டு இருக்க வேண்டிய நிர்ப்பந்தம் அவர்களுக்கு ஏற்படுகின்றது. ஒற்றுமை ஏற்படு வதற்கு சில விஷயங்கள் நடப்பதுண்டு. அது நான் இங்கு பகிரங்கமாகச் சொல்லிக் குறித்துக் காட்டுகின்ற விஷயமல்ல.
நாம் செய்வதையே
புலிகளும் செய்யவுள்ளனர்.
விடுதலைப் புலிகளின் அமைப்பு இந்நாட்டிலே ஒரு சமுகத்தின் விடுதலைக்காக தன்னுடைய உயிரையே மாய்த்துக் கொள்கின்ற ஒரு போராட்டத்தைத் தொடர்ந்து 18,000 உயிர்களைப் பலி கொடுத்து ஒரு பலமான நிலைக்கு வந்துள்ளது. அந்த இயக்கத் தைப் பலவீனப்படுத்துவது எங்களுடைய நோக்கமல்ல. ஆனால் அந்த இயக்கத்தைப் போல எங்களுக்கு வரமுடியுமென்று சொன்னால், வரமுடியாது. இதற்கு என்ன காரணமென்று உங்க ளுக்குத் தெரியும். அந்தப் பாதையில் போகாமல் ஒரு புதிய பாதையை நாங்கள் வகுத்துக் கொண்டிருக்கின்றோம். ஆனால் இன்று அவர்களும் அந்த சவால்களுக்கு முகங்கொடுக்க வேண்டிய சூழல் உருவாகியிருக்கின்றது. அந்த சூழலிலே இருந்து கொண்டு தான் நாங்கள் இந்நாட்டில் அரசியல் செய்யவேண்டிய ஒரு நிர்ப்பந்தம் எங்கள் எல்லோருக்கும் ஏற்பட்டிருக்கின்றது. முஸ்லிம் காங்கிரஸ் எதைச் செய்ய வந்ததோ, அதை இப்பொழுது விடுதலைப் புலிகளும் செய்ய வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட் டுள்ளனர்.
பலவந்தமாகத் தமிழர் தரப்பை ஒற்றுமைப்படுத்த வேண்டும் என்ற முயற்சியின் விளைவாக, இவ்வளவு காலமும் புலிகளை வெறுத்த அந்த இயக்கத்திற்கு எதிராக ஆயுதம் தூக்கிப் போராடியவர்களை எல்லாம் ஓர் அணியிலே சேர்த்து வைத்துக் கொண்டு, தமிழ் தேசிய கூட்டமைப்பு என்ற ஓர் அமைப்பு இன்று பாராளுமன்றத்தில் இயங்குகின்றது. இந்த நாட்டில் மத்திய அரசின் பேரம்பேசும் சக்தியாக எப்படி வருவது என்பதைப் பற்றி அவர்கள் சிந்திக்கின் றார்கள். அந்த அமைப்பிலே ஏற்கனவே புலிகளை விமர்சித்த 15 பாராளுமன்ற உறுப்பினர்கள் இருக்கின்றார்கள். இப்போது விடுதலைப் புலிகளை அவர்கள் விமர்சிப்பது கிடையாது. மாறாக மிகவும் சிலாகித்துப் பாராட்டிப் பேசுகின்ற ஒரு நிலைமை ஏற்படுத்தப்பட்டி ருக்கின்றது. இந்த நிலைமை சாதாரணமாக அல்லது அகஸ்மாத்தாக எந்தவிதமான பலவந்தமும் இல்லாமல் வந்த ஒரு நிலையல்ல.
/2
 

தமிழர் தேசிய கூட்டமைப்பு தமிழர்களுடைய விமோசனத்திற்காக, “புலிகள்தான் எங்களுடைய ஏக பேச்சாளர்கள்” என்று வேறு வேறு கட்சிகளையெல்லாம் ஒன்றாகச் சேர்த்து புலிகளை ஏகப் பேச்சாளராக்கி இருக்கின்றார்கள். ஆனால், புலிகள் பாராளுமன்றத்தில் இல்லை. கட்சிக்குள் கட்டுக்கோப்பான ஒழுக்க வரையறைகளைப் பேணிக் கொள்வது என்பது எல்லாக் கட்சிகளுக்கும் இருக்கின்ற சவால். இந்தச் சவாலை இன்று முஸ்லிம் காங்கிரஸ் எதிர்நோக்குகின்றது என்பது பலருக்கும் ஏளனமான, விமர்சனத்திற்குரியதொரு விஷயமாக இருந்தாலும், அது இன்று நேற்று முஸ்லிம் காங்கிரஸ்"க்கு வந்த விஷயமல்ல.
எல்லாவற்றுக்கும் தலைசாய்க்க முடியாது.
இந்த தமிழ் தேசிய கூட்டமைப்பினர் கடந்த 2 வருட காலமாக எதிர்கட்சியிலே இருக்கிறார்கள். சிலவேளை அரசாங்க கட்சிக்கு பெரும்பான்மை, இல்லாது போய்விட்டால் அவர்கள் தேவைப்படலாம் என்ற நோக்கில் அரசாங்கமும் அவர்களைப் பற்றி சற்று கரிசனை செலுத்துகின்றது.
அரசாங்கத்தில் இருக்கின்ற முஸ்லிம் காங்கிரஸைப் பற்றிய சில சந்தேகங்கள் ஆங்காங்கே அரசாங்கத்திற்கு இல்லாமல் இருக்க முடியாது. ஏனென்றால், முஸ்லிம் காங்கிரஸ் என்பது இந்த சமுகத்தின் உரிமைகளுக்காக போராடுவதற்கான கட்சியா கும். எடுத்ததெற்கெல்லாம் நாங்கள் ஆமாம் சாமி போட முடியாது. பிரதமர் சொல்கின்ற எல்லாவற்றையும் நாம் கைதுக்கி ஆதரிக்க ԱpւգսIITֆl
ஆனால், பிரதமருடைய அமைச்சரைவையில் இருக்கின்ற அமைச்சர் என்ற காரணத்தினால் அமைச்சரவையில் எடுக்கின்ற தீர்மானங்களில் கூட்டுப்பொறுப்பு என்கின்ற ஒருவிடயம் இருக்கின்றது. அந்த கூட்டுப் பொறுப்பை மதிக்கின்ற ஒரு கடமை இருக்கின்றதே தவிர, ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் சொல்லுகின்ற எல்லாவற்றிற்கும் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் தலைசாய்க்க முடியாது என்கின்ற ஓர் உடன்பாடு எங்களுக்கு மத்தியில் இருக்கின்றது.
பல விஷயங்களை அவர்கள் செய்ய எத்தனித்த பொழுது நான் உடன்பட மறுத்திருக்கிறேன்.
73

Page 10
இந்நாட்டின் தேசிய அரசியலில் முஸ்லிம் காங்கிரஸஉக்கென்று ஒரு தனியான பார்வை இருக்கின்றது. அந்த பார்வையின் அடிப்படையில் செயற்பட்டால் தான் முஸ்லிம்கள் மத்தியில் நம்பகத் தன்மையையும், அதேவேளையில் இதர சமுகத்தின் அரசியல் தலைமைகளுக்கு மத்தியிலே எங்களது நம்பகத் தன்மையையும் பாதுகாத்துக் கொள்ள முடியும்.
யாரினதும் எடுப்பார் கைப்பிள்ளையாக - சொல்வதற்கு எல்லாம் தலையாட்டுகின்ற பொம்மையாக முஸ்லிம் காங்கிரஸ்"டைய தலைமை இருக்க முடியாது.
(முஸ்லிம் காங்கிரளப் பதுளை மாவட்ட மத்திய குழுக்கூட்டத்தில் ஆற்றிய உரையிலிருந்து - 2003)
 

O O O இது இன்று நேற்று நடந்த
O விஷயமல்ல
"முஸ்லிம் காங்கிரஸ் பிளவுபட்டு விட்டது; முஸ்லிம் காங்கிரஸ் பிளவுபட்டு விட்டால் அரசாங்கம் ஆட்டங்கண்டு விட்டது, என்கின்ற ஒரு அர்த்தம் எல்லோரிடத்திலேயும் உணரப்பட்டிருக்கின்றது. இது மட்டுமல்ல, சர்வதேச சமூகத்திலுள்ள முக்கியமானவர்கள், பிரமு கர்கள், நாடுகளிலுள்ள தூதுவர்கள் எல்லோருமாக "முஸ்லிம் காங்கிரஸிற்குள்ளே இருக்கின்ற நிலைமை அவ்வளவு உறுதியான தொரு நிலைமையல்ல. முஸ்லிம் காங்கிரஸஉடைய தலைவர் கட்டுப் பாட்டை இழந்து விட்டார்” என்கின்ற நிலைமையை சூட்டிவிட்டிருக் கின்றனர். ஆனால் முஸ்லிம் காங்கிரஸ் பிளவுபடவில்லை; அதை நாங்கள் மிகவும் உறுதியாகப் பாதுகாத்துக்கொள்ள வேண்டும். இந்தச் சமூகத்திற்கு முஸ்லிம் காங்கிரஸ் தேவை; இந்த இயக்கம் தேவை. இதை பிளவுபட சமூகம் அனுமதிக்க மாட்டாது என்ற ஒரு நிலைமை இன்று உருவாகி இருக்கின்றது.
இந்தப் பாராளுமன்ற உறுப்பினர்களில் சிலர் இப்படிச் செயற்படுவது இன்று நேற்று நடந்த விடயமல்ல. மறைந்த தலைவர் எம்.எச்.எம். அஷ்ரஃப் அவர்களுடைய வாழ்நாளி லேயே நிறைய பேர் இப்படியான பிரச்சினைகள் ஏற்பட்டு, விலகிப் போயிருக்கின்றனர். பிரச்சினை ஏற்படுத்தியும் இருக்கின்றார்கள். 1989ஆம் ஆண்டு நான்கு உறுப்பினர்களே மறைந்த தலைவரோடு பாராளுமன்றத்திற்கு வந்தார்கள். ஆனால் அடுத்த தேர்தல் வருகின்ற பொழுது ஹிஸ்புல்லாஹற் தலைவரோடு இருக்க வில்லை.
தேர்தலுக்கு முன்பதாகவே, இரண்டு வருடங்கள் கழிந்தவு டனே பிரச்சினையை ஏற்படுத்திக் கொண்டு ஐக்கிய தேசிய கட்சியோடு கைகோர்த்துக் கொண்டு, அவர் பிரச்சினைகளை ஆரம்பித்தார். தேசியப் பட்டியல் உறுப்பினர் புஹாரிதின் ஹாஜியாரும் பின்னர் அவருடன் இருக்கவில்லை. சில முரண்பாடு களுடன் அபூபக்கர் மட்டும் ஒரு மாதிரியாக இறுதி நேரத்தில் ஒட்டிக் கொண்டிருந்தார்.
1994ஆம் ஆண்டில் அடுத்த பாராளுமன்றத்திலே இன்னும் நான்கு பேரைக் கூட்டி, எட்டுப் பேராக வந்தோம். அந்த எட்டுப் பேரிலும் என்னைத் தவிர, மற்றவர்கள் எல்லோரும் முரண்பாடுக
(2.

Page 11
ளுடனே இருந்தனர். இறுதி நேரத்தில் இந்த எல்லா பாராளுமன்ற உறுப்பினர்களும் மறைந்த தலைவரோடு முரண்பட்டிருந்தனர். யாரும் தலைவருடன் இருக்கவில்லை. இதுதான் அன்றைய நிலைமை. இப்படியான நிலைமை இருந்தபோதிலும், கட்சி தோல்வியடையவில்லை.
இதற்கடுத்த தேர்தலிலே எட்டு ஆசனங்கள் பதினொறு ஆசனங் களாகின. பதினொன்று இப்பொழுது பன்னிரண்டாக ஆக மாறியது. இந்த பன்னிரண்டும் குறைந்து விடக்கூடாது என்கின்ற நிலைமை இருக்கின்றது.
இன்று இந்தக் கட்டத்திற்கு கட்சியை நாங்கள் படிப்படியாக கொண்டு வந்திருக்க வேண்டும். ஆனாலும் பாராளுமன்ற உறுப்பினர் கள் விலகியிருக்கின்றார்கள் என்பது ஒன்றும் புதிய விடயமல்ல. நான் இந்த சந்தர்ப்பத்திலே ஒன்றைச் சொல்ல வேண்டும். பாராளுமன்ற உறுப்பினர்களை விலகி நிற்பதற்கு அனுமதிக்க முடியாது. இவர்கள் எப்படியோ ஒரே குடையின்கீழ் கொண்டுவரப்பட வேண்டும் என்பதுதான் எனது வேண்டுகோள்.
ஒரு வழக்கிலும் தோற்கவில்லை
அல்லாஹற் பாதிக்க விடமாட்டான்
ஓர் அரசோடு இணைந்து செயற்படுகின்ற பொழுது நம்பகத் தன்மை தேவை. ஒரு மு.மினுக்கு நம்பகத் தன்மை தேவை. அந்த நம்பகத் தன்மையை நாங்கள் பேணிக்கொள்ள வேண்டும். ரசூலுல்லாஹற்வை மக்காவாசிகள், குறைஷிக் காபிர்கள் எல்லோரும் அல்-அமீன் என்று நம்பிக் கையாளர் பட்டத்தையளித்து நம்பினார்கள் என்பது அவருக்கிருந்த அந்த அந்த சிபத்துக்களில் முக்கியமான விஷயம்.
நம்பிக்கை வேண்டும். தலைமைக்கு அது முக்கியம். இயக்கத்திற்கு அது முக்கியம். எனவேதான் எடுத்ததற்கெல்லாம் அரசாங்கத்தை விட்டு விலகுவேன் என்று சொல்லிக் கொண்டி ருக்க முடியாது. ஆனால் சமுகத்தின் பாதுகாப்பிற்கு பங்கம் ஏற்பட்டால், பிரச்சினை ஏற்பட்டால் மிகவும் இக்கட்டான நிலைக்கு தள்ளப்பட்டால் அவர்கள் விலகிவிடுவார்கள் என்கின்ற பீதி அவர்களுக்கு இருக்க வேண்டும். பீதியையும் நம்பகத் தன்மையையும் எப்படியாவது முடிச்சுப் போட்டு நாங்கள் கொண்டுபோக வேண்டும். இந்த வித்தையைத்தான் நாங்கள் இரண்டு வருடங்களாக புலிகளோடும் ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தோடு செய்து கொண்டு வருகின்றோம்.
76
 

அடுத்த கட்டமாக நாங்கள் எப்படிச் செய்வது, அடுத்து வருகின்ற புதிய கூட்டை எப்படி நாங்கள் கையாளுவது, இதன் மூலமாக ஏற்படுகின்ற அரசியல் மாற்றங்களுக்கு என்ன பதிலைச் சொல்வது என்பதைப் பற்றி நாங்கள் சிந்திக்க வேண்டும். மறைந்த தலைவர் அவர்கள் ஆரம்பத்திலே சில விஷயங்களைத் திட்டம் போட்டு வைத்திருந்தார். அந்தத் திட்டம் பற்றி எங்களுக்குச் சரியான தருணத்தி லே தெரியவில்லை என்பதும் இன்று எங்களுக்கு சில பிரச்சினைகளை ஏற்படுத்தியிருக்கின்றது. -
ஆரம்பத்தில் 2000ஆம் ஆண்டு தேர்தலை நாங்கள் சந்தித்தோம். அதற்கு முன் தலைவரைத் திடீரென்று செப்டம்பர் 16ம் திகதி ஒரு ஹெலிகொப்டர் விபத்திலே நாங்கள் இழந்துவிட்டோம். அப்படி அரும்பெரும் தலைவரை இழந்தவுடன் இந்த இயக்கம் அல்லோல கல்லோலப்பட்டது. அதிலிருந்து பிரச்சினைகள் தோன்றின.
ஒரு பெரிய தலைமை திடீரென இல்லாமல் போனால் எதிலும் தடுமாற்றம் வரும். அந்த இயக்கத்திற்குள்ளே தலைமைப் போட்டி வந்து, அதன் விளைவாக சிக்கல்கள் வந்தன. அவற்றின் காரணமாக இன்று வரை நாம் 20 வழக்குகளை இந்த கட்சி விவகாரம் சம்பந்தமாக சந்தித்திருக்கின்றோம். 20 வழக்குகளிலும் முஸ்லிம் காங்கிரஸின் தலைமை வென்றிருக்கின்றது. ஒரு வழக்கி லுமே தோல்வியடைந்தது கிடையாது. எங்களுக்கு அல்லாஹற் விடத்திலே நம்பிக்கை இருக்கின்றது. இந்த இயக்கத்தை அவன் பாதிக்க விடமாட்டான். இந்த இயக்கத்தின் சின்னத்தை நாங்கள் விட்டுக் கொடுக்கவில்லை. இந்த சின்னத்தை நாங்கள் கவனமாகப் பேணி வருகின்றோம். இதை வேறு யாரும் பறித்துக் கொண்டு போக முடியாத அளவுக்கு இதை செய்திருக்கின்றோம். எமக்கு எதிரானவர்கள் எதை எதையெல்லாம் செய்து பார்த் தார்கள். எமது இயக்கத்திற்கு எதிரானவர்கள் மீது சமுகம் ஆத்திரப்பட்டது; ஆவேசப்பட்டது.
இந்த ஆத்திரம், ஆவேசம் ஒவ்வொரு தேர்தல்களிலும் இன்னும் அதிகரித்தது. எனவே இந்த நிலைமை கட்சிக்கு வெற்றியைத் தந்ததேயொழிய தோல்வியைத் தந்தது கிடையாது.
இன்னுமொரு தேர்தல் வந்தால் நிச்சயமாக முஸ்லிம் காங்கிரஸ் அந்த தகுதியான பேரம் பேசும் நிலையில் இருக்க வேண்டும் என்ற நிலையை நாங்கள் கொண்டுவர வேண்டும். இது நாங்கள் இந்த சமூகத்திற்கு செய்கின்ற மாபெரும் கடமை.
(வாழைச்சேனையில் ஆற்றிய ஓர் உரையிலிருந்து )
77

Page 12
ஒலுவில் வர்த்தகத் துறைமுகம் முவின மக்களின் அபிவிருத்திக்கான 2ளற்றுக்கண்
மறைந்த எங்களுடைய தலைவரின் நீண்டநாள் கனவு நனவாகின்ற, ஒலுவில் துறைமுக அபிவிருத்திப் பணிகள் ஆரம்பித்து வைக்கப்படுகின்ற இந்த நிகழ்விற்கு ஒரு பிரத்தியேகமான வரலாறு இருக்கின்றது என்பதை நாம் மறந்து விடக்கூடாது. ஒரு சிறுபான்மை சமூகத்தின் போராட்ட வரலாற்றில், இந்த ஒலுவில் துறைமுகம் நிச்சயமாக மறைக்க முடியாத தடயத்தைப் பதித்த ஒரு நிகழ்வாக இருக்க வேண்டும் என்பதற்காக மறைந்த மாபெரும் தலைவர் எம்.எச். எம். அஷர.ப் அவர்கள் இப்படியான ஒரு துறைமுகத்தை இங்கு அமைக்க வேண்டும் என்று ஆரம்ப காலத்தில் சொன்ன பொழுது, துறைமுகமே இல்லாததோர் இடத்தில் துறைமுகத்தை அமைப்பது எப்படி இங்கு சாத்தியப்படும் என நிறையப் பேர் கேள்விக் கணைகளைத் தொடுக்கின்றவர்களாக இருந்தார்கள் என்பது நாங்கள் அறியாத விஷயமல்ல.
360 மில்லியன் ரூபா செலவிடப்படும்.
அமையப்போவது மீன்பிடித் துறைமுகம் மட்டுமல்ல என்பதை நாங்கள் மனதில் இருத்திக் கொள்ள வேண்டும். “இங்கு மீன்பிடித் துறைமுகம் மட்டும்தான் அமைவது சாத்தியம்; எனவே இதர விடயங்கள் அமைய மாட்டாது” என்று பேசிய பாராளுமன்ற உறுப்பினர்களும் இருக்கின்றார்கள். மீன்பிடித் துறைமுகம் என்பது ஒலுவில் துறைமுகத்தின் ஓர் அங்கமே தவிர ஒலுவில் துறை முகத்தின் பிரதான பாகமல்ல. ஒலுவில் துறைமுகம் என்பது ஒட்டு மொத்தமானதொரு வர்த்தகத் துறைமுகமாகவே அமைகின்றது என்பதை நான் எல்லோருக்கும் சொல்லி வைக்க வேண்டும். இன்றைய கணிப்பீட்டின்படி இந்தத் துறைமுகத்தின் நிர்மாணப் பணிகளுக்காக 360 மில்லியன் ரூபா செலவிடப்படவுள்ளதுடன், அது இரண்டு வருட காலத்தில் பூர்த்தி செய்யவும் திட்டமிடப்பட்டி ருக்கின்றது.
f
 

இந்தத் துறைமுகம் இங்கு அமைவதன் மூலம் மூன்று சமூகங்களும் நிறையப் பயனடையப் போகின்றன. இதனை இந்தப் பிரதேசத்தின் பொருளாதார அபிவிருத்திக்கான ஊற்றுக்கண் என்று வர்ணிக்க முடியும். இங்கு அமையப் போகின்ற துறைமுகம் குறித்து சந்தேகக் கண் கொண்டு பார்த்த பலர் இது மிக விரைவில் பிரமாண்டமாகக் கட்டி எழுப்பப்படும் போது பெருமையோடு அதனைப் பார்க்கப் போகின் றார்கள்.
சம்மாந்துறையில் கைத்தொழில் பேட்டை
துறைமுகத்தின் நிர்மாணப் பணிகளினூடாக இந்தப் பிரதேசத்தின் பொருளாதாரம் இதை நிர்மாணிக்கின்ற பொழுதே விருத்தியடையக் கூடிய வாய்ப்புள்ளது. துறைமுகம் இங்கு அமையப்பெற்றதன் பிறகு, அதை அடியொட்டிய மேலும் பல அபிவிருத்தித் திட்டங்களையும் நாங்கள் நிறைவேற்றுவதற்கான அடித்தளத்தை இப்போதிருந்தே இட ஆரம்பித்தி ருக்கின்றோம். சம்மாந்துறையில் கைத்தொழில் பேட்டை யொன்றை இதனோடு இணைந்ததாக அமைப்பது என்று முடிவெடுத்து அதற்கான பணிப்புரைகளையும் விடுத்திருக்கின்றேன்.
நான் அமைச்சுப் பதவியை பொறுப்பேற்ற உடனேயே ஹம்பாந் தோட்டைத் துறைமுகத்தை அமைப்பதற்கான சாத்திய வள அறிக்கை யை தயாரிப்பதற்கான ஒரு முடிவினை அரசாங்கம் எடுத்தது. அப் பொழுது நான் பிரதம மந்திரிக்கு எங்களுக்குத் தரப்பட்ட தேர்தல் வாக்குறுதி என்ற ஒலுவில் துறைமுகத்தின் அபிவிருத்தியைப் பற்றி நினைவுபடுத்தினேன். அடுத்த நாளே அவர் திறைசேரி அதிகாரி களையும், என்னையும் தன்னுடைய அலுவலகத்திற்கு அழைத்து டென்மார்க் நாட்டின் மூலமாக இதற்கென்று பூரணமாக நிதி ஒதுக்கீட் டை பெற்றுத்தருவதற்கான எல்லாப் பூர்வாங்க வேலைகளை யும் உடனடியாக ஆரம்பிக்குமாறு பணிப்புரை விடுத்தார். அதன் விளைவாக “இன்ஷா அல்லாஹற்” விரைவில் இந்த துறைமுகத்தின் நிர்மானப் பணிகள் ஆரம்பிக்கப்பட இருக்கின்றன.
அநீதி இழைக்கப்பட மாட்டாது
அபிவிருத்தி என்பது எல்லா சமுகங்களாலும் ஒருசேர அனுபவிக் கின்ற அதனுடைய அனுகூலங்களை எல்லோரும் அடைகின்ற விஷயமாக மாற்றியமைக்கப்பட வேண்டும். எனவேதான் இன்று மூன்று சமூகங்களும் நிறைய சந்தேகத்துடன் பார்த்துக் கொண்டிருக்கின்ற ஒரு சூழலில் இங்கு ஒலுவிலில், பாலமுனைக்கூடாக அமைக்கின்ற
77

Page 13
இந்தத் துறைU" தனியே முஸ்லம்களுடைய நலன்களுக்காக அமைகின்ற ஒரு துறைமுகமாக கணிப்பிடப்பட்டு விடக்கூடாது என்பதிலே நாங்கள் நிறைய கரிசனை செலுத்துகின்றோம்.
பாலமுனை, ஒலுவில் அதேபோன்று உதுமாபுரம் போன்றவற்றில் வாழ்கின்ற (ஐநாதரர்கள் மத்தியில் இந்தத் துறைமுகம் எப்படியாவது இங்கே அமை! வேண்டும் என்கின்ற அங்கலாய்ப்பு இருந்தாலும், காணிச் சுவீகரிப்பு என்ற காரணத்தினால் அவர்கள் தங்களுக்கு ஏதாவது அநியாயங்கள் நிகழ்ந்து விடுமோ என்று அச்சம் கொண்டிருந் தாாகள.
இந்தத் துறைமுக அபிவிருத்தி வேலைக்காக சுவீகரிக்கப் படுகின்ற ஓர் அங்குல காணிதானும் எந்தவிதத்திலும், யாருக்கும் அநியாயம் இழக்கின்ற அடிப்படையிலே சுவீகரிக்கப்பட மாட்டாது என்கின்ற உத்தரவாதத்தை நான் வழங்க விரும்புகின்றேன்.
சிலருக்கு சரியான உறுதிப் பத்திரங்கள் இல்லை. ஆனால் அவர்களுடைய அந்தக் காணியில் அவர்கள் வாழ்ந்தார்கள்; வீடுகளை நிர்மாணித்திருந்தார்கள் மற்றும் பயிர்களை அவர்கள் விளைத்திருந் தர்கள் என்கின்ற ஆதாரங்கள் நிரூபிக்கப்படுகின்ற பொழுது அவர்க ளுக்குப் பூரணி இழப்பீட்டை நாங்கள் அடுத்த ஓரிரு மாதங்களுக் குள்ளாக கொடுத்து முடிப்பது என்று தீர்மானித்திருக்கின்றோம்.
இதில் யாருக்கும் எந்தக் குறையும் வராமல், அநீதி ஏற்படாமல விஷயங்களைக் கையாளுமாறு துறைமுக அதிகார சபையின் அதிகாரிகளுக்கும் பிரதேச செயலாளர்கள் உட்பட காணிச் விகரிப்புடன் சம்பந்தப்பட்ட சகல அரச அதிகாரிகளுக்கும் பணிப்புரை ஆழங்கப்பட்டிருக்கின்றது.
சரியான முறையில் அதிகாரிகள் போதிய விளக்கத்தை அளிக்கத் தவறிவிட்டார்கள் என்ற காரணத்தினால் அங்குமிங்குமாக சற்று சலசலப்பு இருந்ததேயொழிய, மற்றப்படி எப்படியாவது இந்த அபிவிருத் தித் திட்டம் தங்களின் வாழ்க்கையில் சுபீட்சத்தைக் கொண்டு வரும் என்பதில் எல்லோருக்கும் நம்பிக்கை இருக்கின்றது என்பதை அவர்க ளோடு பேசுகின்ற பொழுது எங்களால் உணர முடிகின்றது.
移
20
 
 

கல்முனை இடநெருக்கடிக்கும் தீர்வு உண்டு
இந்து சமுத்திரத்திலே மிகவும் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த ஓர் இடத்திலே இருக்கின்ற எமது நாட்டின் எல்லாக் கரையோரப் பிரதேசங்களிலும், பொருளாதார சுபீட்சத்தைக் கொண்டு வருவதற்கான பாரிய செயற்திட்டமொன்றை பிரதம மந்திரி தன்னுடைய பொருளா தாரக் கொள்கையின் அடிநாதமாக அமைத்துக் கொண்டிருக்கின்றார். இதனடிப்படையில் நாங்கள் எதிர்பார்த்ததை விடவும் மிகவும் அசுர வேகத்தில் இந்தத் துறைமுகத்தின் நிர்மாணப் பணிகளைச் செய்வதற் கான சூழல் உருவாகியிருக்கின்றது.
கல்முனை போன்ற நகரங்களில் அபிவிருத்திக்கான இட நெருக்கடி ஒரு பாரிய சிக்கலாக இருந்து கொண்டிருக்கின்றது. கல்முனையைச் சேர்ந்த தமிழ் சகோதரர்கள் தங்களுடைய காணிச் சுவீகரிப்பு நடந்து விடுமோ என்கின்ற அச்சத்தில் இருக்கின்றார்கள். இதையெல்லாம் களையவேண்டிய தார்மீகப் பொறுப்பு எனக்கு இருந்து கொண்டிருக் கின்றது.
யாருக்கும் எந்த அநீதியும் நிகழாமல் அதேநேரம் நகர அபிவிருத்திக்குத் தேவையான தாழ்ந்த நிலங்களை நிரப்பி இந்தப் பிரதேசம் இடநெருக்கடியிலிருந்து பூரணமாக விடுபடுவதற்கும் இந்தத் துறைமுக அபிவிருத்தி வேலைகள் நிறையத் துணை போகின்றன. இந்தத் துறைமுக அபிவிருத்தியின் முலமாக இங்கிருந்து அகழ்ந்தெடுக்கப்படுகின்ற மற்றும் எஞ்சியிருக்கின்ற 500 இலட்சம் கியுபிக் மீற்றர் மணலைக் கொண்டு வந்து தாழ்ந்த பிரதேசங்களை நிரப்பி இன்னும் கிராம நகர அபிவிருத்திக்கு இடம் போதாமல் இருக்கின்ற எல்லாப் பிரதேசங்களுக்கும் அவற்றைப் பெற்றுத்தருவதற்கு திட்டமிடப் பட்டிருக்கின்றது.
இது மக்கள் ஆதரவுக்கான
ஒரு பரிசு
பாதை அபிவிருத்தி வேலைகள்கூட இதனுடாக நடைபெற இருக் கின்றன. சம்மாந்துறையிலே இருந்து இங்கு கருங்கல்லைக் கொண்டு வருவதற்காக இருக்கின்ற பாலங்களை எல்லாம் இன்னும் பலப்படுத்த வேண்டிய அவசியம் இருக்கின்றது. கனரக வாகனங்கள் சென்று
多7

Page 14
வரக்கூடியதாக இப்பிரதேச பாதைகளையும் மிகத் துரித கதியில் அபிவிருத்தி செய்யுமாறு வீதி அபிவிருத்தி அதிகார சபையினரைப் பணித்திருக்கின்றேன்.
பாலமுனை, ஒலுவில் பிரதேசத்து மக்களும், அட்டளைச்சேனை பிரதேச சபையிலே இருக்கின்ற எங்களுடைய சகோதரர்களும் எமது கட்சிக்குத் தந்த பூரண ஆதரவுக்கான ஒரு பரிசாக மட்டுமல்லாது, முழு தென்கிழக்குப் பிரதேசத்தின் ஒவ்வொரு மூலை முடுக்குகளிலி லும் இருந்து எம்முடைய அரசியல் நடவடிக்கைகளுக்குத் தந்த ஆதரவுகளுக்கும், அதற்கான தியாகங்களுக்கும் ஒரு பாரிய பரிசாக இதனை உங்களுடைய போராட்டத்தின் மூலமாக நாங்கள் பெற்றிருக் கின்றோம். ஆனால் இதனை நாங்கள் மட்டும் தான் அனுபவிக்க வேண்டும் என்கின்ற எந்த உள்நோக்கமும் எங்களைச் சார்ந்த எவருக்கும் கிடையாது.
அம்பாறை மாவட்டத்தின் முழுக்கரையோரப் பிரதேசத்திற் குமான வடிகாலமைப்புத் திட்டமொன்றினை செயற்படுத்தவென எழுபத்தைந்து கோடி ரூபாவை மிக விரைவிலே இன்னுமொரு வெளிநாட்டு நிதியுதவியின் முலம் நாங்கள் பெற இருக்கின்றோம்.
அதற்கான பணிப்புரைகளை பிரதம மந்திரி ஏற்கனவே விடுத்திருக் கின்றார்.
கடந்த முன்று நான்கு மாதங்களுக்குள்ளாக முன்று தடவை கள் பாரிய வெள்ள அபாயத்திற்கு உள்ளாகிய பிரதேசமாக இந்த அம்பாறை மாவட்டத்தின் கரையோரப் பிரதேசம் இருக்கின்றது என்ற காரணத்தினால் அவசரமாக, ஒழுங்காக திட்டமிடப்பட்ட ஒரு வடிகாலமைப்புச் செயற்திட்டத்தை இங்கு நடைமுறைப் படுத்தப்பட வேண்டிய அவசியம் இருக்கின்றது.
இதற்கென்று ஏற்கனவே திட்ட அறிக்கைகள் தயார் செய்யப்பட்டிருக் கின்றன. அதற்கான நிதி ஒதுக்கீடுகளை எப்படியாவது இந்த வருடத்திற்குள்ளாக பெற்றுத் தருவது என்கின்ற ஓர் உறுதிமொழி எங்களுக்கு வழங்கப்பட்டிருக்கின்றது.
தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் தொலைக்கல்வி நிலையம் ஒன்றும் அமைய இருக்கின்றது. ஒளிநாடாக் கருத்தரங்கு - வீடியோ கொன்பரன்சிங் போன்ற மிக நவீன கல்வியூட்டல் செயல்முறைகளை
22
 

ஏற்படுத்துவது சம்பந்தமாக நிதி ஒதுக்கீடுகளை உலக வங்கியினூடாக நாங்கள் பெறவிருக்கின்றோம். தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் அபிவிருத்திப் பணிகளுக்கென்று இம்முறை ஆறு கோடி ஐம்பது இலட்சம் ரூபாய்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
தென்கிழக்குப் பல்கலைக்கழகத்திற்கு ஆறு கோடி ஐம்பது இலட்சம் மில்லியன் ரூபா ஒதுக்கப்படுகின்ற பொழுது கிழக்கு அபிவிருத்தி அமைச்சு கிழக்குப் பல்கலைக்கழகத்திற்கு ஆறு கோடி ஐம்பது இலட்சம் மில்லியன் ரூபாய் பெற்றுக்கொடுக்க இருக்கின்றது. ஒரு சதம்தானும் கூடிக்குறையாமல் சமபங்காக அபிவிருத்தி நிதியை இந்த இரண்டு பல்கலைக்கழகங்களுக்கும் நாங்கள் ஒதுக்கிக் கொடுக்க இருக்கின்றோம்.
(ஒலுவில் துறைமுக நிர்மானப் பணிகளை ஆரம்பித்து வைத்து ஆற்றிய உரையிலிருந்து)
கூட்டமொன்றில் உரையாற்ற வந்திறங்கிய போது.
25

Page 15
மறைந்த தலைவர் வகுத்த வழி
இனப்பிரச்சினைத் தீர்விலே எங்களுக்கு நியாயமான பங்கு கிடைக்க வேண்டும்; எங்களை நாங்களே ஆள வேண்டும் எங்களுக்கும் சுயாட்சி வேண்டும் என்ற எங்களது அடிப்படைக் கோட்பாட்டை அடைவதற்காக நாங்கள் போராடுகின்ற பொழுது, இன்று எழுந்திருக்கின்ற இந்த முரண்பாடுகளின் பின்னணி, எங்களையும் பிரதம மந்திரி ரணில் விக்கிரமசிங்க அவர்களையும், நிதானமாகவும், கவனமாகவும் இந்தப் பாதையிலே எதிரிலே நாம் சந்திக்க இருக்கின்ற புதிய சவால்களைப் பற்றி சிந்திக்க வைத்திருக்கிறது.
மறைந்த தலைவர் மர்ஹூ ம் எம்.எச்.எம். அஷ்ரஃப் அவர்க ளுடைய “அரசுப் பங்காளி' என்ற கோட்பாடு இன்று புதிய வடிவம் எடுத்துள்ளதாக நான் பார்க்கிறேன். பங்காளிக் கோட்பாட்டை அடிப்படையாக வைத்து, மறைந்த எங்களுடைய பாராளுமன்ற ஆசனங்களையும், எங்களுக்கிருக்கின்ற அரசியல் பிரதிநிதித்து வங்களையும் நாங்கள் பல மடங்காகக் கூட்டிக்கொள்வதன் முலம் இந்த சமுகத்தின் அரசுப் பங்காளி என்கின்ற இந்த அரு கதையை இன்னும் காத்திரமாகப் போராடி, மீட்கின்ற பணியில் நாம் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றோம்.
பாராளுமன்ற உறுப்பினர்களை அதிகரித்துக் கொள்வது முஸ்லிம்களின் பேரம் பேசும் சக்தியை அதிகரிக்கச் செய்யும் என்ற நிலை அன்றிருந்தது. ஆனால் இன்று எழுந்திருக்கின்ற புதிய உட்பூசல்களினதும், அதனூடாக எழுந்திருக்கின்ற தாக்கங் களும் காரணமாக அந்த நிலை இன்றிருக்கிறதா என்ற கேள் வியை நாங்கள் ஒவ்வொருவரிடையேயும், மனசாட்சியைத் தொட் டுக் கேட்க வேண்டிய அவசியம் இருக்கின்றது.
2റ്റീ
 

ஒற்றுமையைத் தவிர வேறு வழியில்லை
இனப்பிரச்சினைத் திர்விலே முஸ்லிம்களுக்கு சரியான பங்கைப் பெறவேண்டுமா? ஒற்றுமையைத் தவிர வேறு வழியில்லை. முஸ்லிம் களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டுமா? ஒற்றுமையைத் தவிர வேறு வழியில்லை. முஸ்லிம்களுக்கு எதிராகக் கட்டவிழ்த்து விடப்படும் வன் முறைக்கு முகம்கொடுக்க வேண்டுமா? ஒற்றுமையைத் தவிர வேறுவழியில்லை. முஸ்லிம்களுக்கு எதிராக அவர்களின் சமுக, பொருளாதாரச் சுழற்சி மீது பயங்கர வாதப் பாய்ச்சல் நடத்தி அழிக்க முயலுகின்ற இனவாத முதலைகளை சமாளிக்க வேண்டுமா? ஒற்றுமையைத் தவிர வழியில்லை. இன்று மொத்தத்தல் நாம் இலங்கையில் முஸ்லிம் களாக வாழவேண்டுமா? ஒற்றுமையைத் தவிர வேறு வழியில்லை என்றுதான் சமுகம் எங்களுக்குச் சொல்லிக் கொண்டிருக்கிறது.
இதற்கு மத்தியில்தான் இந்த சமகால அரசியலிலே, எங்களுக்குள் ஏற்பட்டிருக்கின்ற இப்பிரச்சினையை நாம் பார்க்க வேண்டும். இதை அடியொட்டித்தான் எமது அடுத்த கட்ட நடவடிக்கைகளைப் பற்றிச் சிந்திக்க வேண்டும். தலைமைத்துவத்தின் பலத்தை அதிகரிக்க இருக்கின்ற பாராளுமன்ற உறுப்பினர்கள், இந்த அணியைக் கூட்டுவ தற்கு எடுக்கின்ற முயற்சிகளில் பலன் கிட்டுமா என்கின்ற எதிர்பார்ப் புக்களுக்கு அப்பால் எங்களுடைய அணியை மிக இறுக்கமாகப் பேண்ணுகின்ற இந்த ஒற்றுமையை, இனிமேலும் குறைக்க முயலுகின்ற சக்திகளுக்கு, நாங்கள் சோரம் போகாமல், காப்பாற்றிக் கொள்கின்ற முயற்சியில்தான் எங்களுடைய சமுகத்தின் எதிர்காலம் தங்கியுள்ளது.
இன்று முஸ்லிம் சமூகத்தின் ஒற்றுமையை இலக்கு வைத்து, எங்களுக்குள் ஏற்பட்டிருக்கின்ற பிளவுகளைப் பாவித்து, எங்களுக்கு கிடைக்கின்ற நியாயமான அத்தனைத் தீர்வுகளையும், சின்னாபின்னப் படுத்தி விடுகின்ற முயற்சியிலே ஈடுபட்டிருக்கின்ற எதிர்த் தரப்புக்களை வெற்றி கொள்ளப் பார்க்கின்றேன். எனவே, இதைப் பற்றி நாம் சிந்தித்துக் கொண்டிருக்கின்ற பொழுது, இந்தக் கால கட்டத்தில், பேராளர்களுக்கு மத்தியில் இருக்கின்ற முக்கியமான எதிர்பார்ப்பு, இருக்கின்ற பாராளுமன்ற உறுப்பினர்கள் எல்லோருமாக ஒன்றாக நின்று இப் போராட்டத்திலே அரசோடு பேசவேண்டும்; புலிகளோடு பேசவேண்டும்; சர்வதேச சமுகத்திற்கு உறுதியான ஒரு செய்தியைச் சொல்ல வேண்டும் என்பதுதான்.
25

Page 16
தங்களுடைய அணிகளுக்குள்ளே ஒற்றுமை போதாதென்று, வெளியிலே இருப்பவர்களைச் சேர்ப்பதற்காக, இன்று எதிர்கட்சி தடுமாறிக் கொண்டிருக்கின்றது. எங்களுடைய அணிக்குள இருப்பவர்களை கூறுபோட்டு, அவர்களுக்குள்ளே முரண்பாடு களை ஏற்படுத்தி, புதிய அரசொன்றை அமைப்பதே எதிர்கட்சியி ஒனுடைய தேவையாயிருக்கிறது.
பாராளுமன்றத்தை கலைக்க இருக்கின்ற ஜனாதிபதி, அதிகாரத்தை தேவையான சந்தர்ப்பத்திலே பாவித்து, புதியதொரு அரசை, தேர்தலில் லாமல் கொண்டு வருகின்ற, புதியதொரு முயற்சியிலே, இன்று கபடத் தனமாக இறங்கத் தொடங்கியிருக்கின்றார். இதற்கு நாம் இடமளிக்க
(LD9 UT 35. முதலைக் கண்ணிர் யாருடையது
சமாதானத்தில் நம்பிக்கையில்லாத சக்திகளும், சமாதானத்தினால் இந்நாட்டு சமூகத்தின், சமூகக் கூறுகளில், ஓரிரு கூறுகளுக்கு, நியாயம் கிடைத்துவிடும் என்பதை சகிக்க முடியாத பேரினச்சக்திகளும், இன்று படிப்படியாக இந்த முயற்சிக்கு மேளதாளத்தோடு ஆதரவளிக் கின்ற நிலைமை உருவாகியிருக்கின்றது. புதிய புதிய அரசியல் வியூகங்கள் வகுக்கப்படுகின்றன. புதிய அரசியல் கூறுகளைப் பற்றிப் பகிரங்கமாகப் பேசத் தொடங்கி இருக்கின்றார்கள்.
முஸ்லிம் காங்கிரஸ் கடந்த அரசாங்கத்திலிருந்து விலகி, ஆட்சியின் பெரும்பான்மை யை குறைத்துவிட்ட பொழுது தகுதிகாண் அரசாங்கமென்ற நிலையில் வெளியிலே இருந்து அரசை நடத்துவதற்கு நிபந்தனையுடனான உதவியைக் கொடுத்த சக்திகள், இன்று வெளிப்படையாக வந்து, இணைந்து கொண்டு, புதிய அரசை அமைப்பதற்கு தயாராகிக் கொண்டு இருக்கின்ற ஒரு காலகட்டம் ஆகிவிட்டது. முன்பு முஸ்லிம்களின் உரிமைகளைப் பற்றி படுமோசமாகப் பேசித் திரிந்தவர்கள் எல்லாம், முஸ்லிம்களுக்கு அநியாயம் நடக்கின்றதென்று முதலைக் கண்ணிர் வடிக்கின்ற ஒரு காலகட்டமாக இது மாறியிருக்கின்றது.
என்னைப் பொறுத்தமட்டிலே எங்களுக்கு இருக்கின்ற சவால், தற்போதிருக்கும் அரசோடு நாங்கள் தொடர்ந்து இருப்பதா, எதிர்கட்சி ஆட்சி அமைப்பதா? என்பது அல்ல. இந்த சமுகத்தின் அரசியல் ஒற்றுமையை எப்படியாது சீர்குலையாமல், இந்த இக்கட்டான கால கட்டத்திலே நாம் இவ்வியக்கத்தை எவ்வாறு பாது காப்பது என்பதுதான் எமக்கிருக்கின்ற சவால். அரசு அமைப்தும், அழிப்பதும் இன்று எங்களுடைய நோக்கமல்ல.
(முஸ்லிம் காங்கரளப் பேராளர்கள் மத்தியில் ஆற்றிய ஓர் உரையிலிருந்து)
26
 

முஸ்லிம் காங்கிரஸிற்கு எதிரிகள் அஞ்சுவதேன்?
இந்த சொற்ப காலத்தில் எங்களுள் சிலரை சோரம் போக வைத்து விடலாம் என்ற நம்பிக்கையோடு எமது கட்சிக்கு எதிரானவர்கள் இன்று பலவித கபட நாடகங்களை அரங்கேற்றிக் கொண்டிருக் கிறார்கள்.
முஸ்லிம் காங்கிரஸ?க்கு இருக்கும் ஒரேயொரு தகுதி, இந்த இயக்கம் இல்லையென்று சொன்னால் முஸ்லிம் சமுகத்தின் எதிர்காலம் கேள்விக்குறியாகிவிடும் என்கின்ற பீதி அனைத்து முஸ்லிம்களையும் ஆட்கொண்டிருப்பதாகும். ஐக்கிய தேசியக் கட்சிக்காரராக இருந்தாலும் சரி, பூணீ லங்கா சுதந்திரக் கட்சிக் காரராக இருந்தாலும் சரி, முஸ்லிம் காங்கிரஸ் என்ற இயக்கம் இருந்தாக வேண்டும் என்கின்ற அங்கலாய்ப்பு அவர்களுக்கு இருக்கின்றது. இவ்வியக்கத்தில் ஏற்பட்டிருக்கின்ற பிளவு, உடனடியாக சரிசெய்யப்பட வேண்டும் என்று பேச ஆரம்பித்திருக் கின்றார்கள்.
எதற்கு இவர்கள் பயப்பட்டுக் கொண்டு இருக்கின்றார்கள் என்பது எங்களுக்குத் தெரியாத விஷயம் அல்ல. ஆனால், அவர்களுக்கெல்லாம் பதில் சொல்லிக் கொண்டும், முக்கு நுனியிலே ஆத்திரத்தை வைத்துக் கொண்டும் இச் சமுகத்தில் அரசியலை நடாத்த முடியாது.
கடந்த காலத்தில் மறைந்த தலைவரையும் அடிக்கடி ஆத்திர மூட்டுகின்ற அடிப்படையிலே அவரோடு முட்டிமோதிக் கொண்டவர்கள் தான் இன்றும் இந்தத் தலைமையோடும் மோதிப் பார்க்கின்றார்கள். இவர்களுடைய இந்தச் சில்லறை அரசியலில் மாட்டிக்கொண்டு, இச் சமூகத்தின் எதிர்காலத்தை, இன்னும் சீர்குலைப்பதற்கு நாங்கள் தயாரில்லை. இதனால்தான் இவர்களைப் பற்றி நாங்கள் அதிகம் அலட்டிக்கொள்ளாமல் இருக்கின்றோம்.
வடக்கு கிழக்குக்கு வெளியே முஸ்லிம் சமுகத்தின் ஒற்றுமைக் கும், வடக்கு கிழக்கிலே வாழ்கின்ற முஸ்லிம்களின் அரசியல் உரிமைகளுக்கும், முஸ்லிம் காங்கிரஸைக் காத்திரமாகக் கட்டியெழுப்ப வேண்டிய காலமாக இது மாறிவருகிறது. இதைக் கண்டுதான் பலவிதமான சக்திகள் பீதியடைந்திருக்கின்றன.
27

Page 17
முஸ்லிம்களுக்கு இந்நாட்டு இனப்பிரச்சினைத் தீர்வில் சரியானதொரு பங்கு கிடைத்துவிடும்; கிடைத்து விட்டால் தமது சொந்த அரசியல் பாதிக்கப்பட்டு விடுமென்று அவர்கள் பீதியடைந்துள்ளார். இதனால் உள்ளும், புறமும் இருக்கின்ற பலவிதமான சக்திகள் இன்று எங்களுக்குள் இருக்கும் பிளவுகளை இன்னும் பூதாகரமாக வளர்ப்பதற்கு, அடிக்கடி பலவிதமான சதித்திட்டங்களைத் தீட்டிக் கொண்டிருக் கிறார்கள்.
கடந்த அரசின் ஆட்சிக்காலத்தின் பொழுது, கட்சியின் ஒற்றுமையை யும், கட்டுக்கோப்பையும் காப்பாற்றுவதற்காக ஐந்து மாதகாலத்தில் பதினாறு வழக்குகளை இத் தலைமைத்துவம் சந்திக்க வேண்டியிரு ந்தது. இதற்காக மாவட்ட நீதிமன்றங்களிலும், மேல் நீதிமன்றங்க ளிலும், மேன்முறையீட்டு நீதிமன்றங்களிலும் நாம் ஏறி இறங்க வேண்டியிருந்தது.
எமது பாராளுமன்ற உறுப்பினர்களின் பதவி பறிப்பு நாடகம் நடந்த பொழுது அதற்கு நாங்களே உயர் நீதிமன்றத்திலே வழக்குகளைத் தொடுத்து வாதாட வேண்டியிருந்தது. ஏற்கனவே எங்களுக்கு நான்கு தடவைகள், கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தினூடாக இந்தக் கட்சியின் தலைமையும், அதற்கு இருக்கின்ற அருகதையும் உறுதிப்படுத்தப்பட்டி ருக்கின்றன.
எங்களுக்கிருக்கின்ற அரசியல் பாராளுமன்ற ஆசனங்களை வைத்துக் கொண்டு, மக்கள் ஆணை எமது கட்சிக்குக் கிடைத்திருக்கின்ற பொழுதிலும், ஏதோ தனி மனிதர்களுக்கு கிடைத்ததாக வைத்துக் கொண்டு, தனி மனிதர்கள் சிலர் ஆடுகின்ற நாடகம் எத்தனை நாட்களுக்கு நீடிக்கப்போகிறது என்பதைப் பற்றி இன்று எல்லோரும் பார்த்துக் கொண்டிருக் கிறார்கள்.
சமூகத்தினுடைய அரசியல் எதிர்காலம், பற்றியும் இன்னும் எவ்வளவு காலத்திற்கு இந்தக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆசனங்களை, இச் சக்திகள் பாவிப்பதற்கு இவர்கள் இடம்கொடுக்கப் போகிறார்கள் என்பதைப் பற்றியும் சமூகமும், இளைஞர்களும் கோபத்தோடு பார்க்கத் தொடங்கிவிட்டார்கள்.
எனவேதான், தலைமைக்கு இருக்கின்ற தார்மீகப் பொறுப்புக்களில், அந்த அடிப்படைப் பொறுப்பான ஒற்றுமையை வலியுறுத்துகின்ற கடமையிலிருந்து நான் நழுவிவிட முடியாது.
(முதுரில் ஆற்றிய ஓர் உரையிலிருந்து)
2°
 

சொந்தக் காலில் நின்று போராட முடியுமென்பதை நிரூபித்தோம்
கடந்த காலத்தில் பேரியல் அஷரட்புக்கும், எனக்கும் இடையிலே கூட்டுத்தலைமை தொடர்பாக ஏற்பட்ட முரண்பாட்டில் நாங்கள் அணி பிரிந்தோம். தேசிய ஐக்கிய முன்னணி வேறாகப் பிரிந்தது. முஸ்லிம் காங்கிரஸ் தனியாக நின்றது. தேசிய ஐக்கிய முன்னணி தலைமை குறித்து இன்னும் நீதிமன்றத்தில் வழக்கு இருக்கின்றது.
பின்னர் முஸ்லிம் காங்கிரஸின் தலைமையின் அமைச்சுப் பதவி பறிக்கப்பட்டு அவமானப்படுத்தப்பட்டது என்பதற்காக நாங்கள் எதிர்கட்சி ஆசனங்களிலே அமர்ந்தோம். ஈற்றிலே ஆட்சி கவிழ்ந்தது. அதன் பின்னர் தேர்தல் வந்தது. தேர்தலிலே தேசிய ஐக்கிய முன்னணி உறுப்பினர்கள் வேறாக பொதுஜன ஐக்கிய முன்னணியின் அங்கமாக போட்டியிட்டார்கள். இன்று மட்டக்களப்பு மாவட்டத்தில் முஸ்லிம் காங்கிரஸிற்கு இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்கள் இருக்கின்றனர்.
அம்பாறை மாவட்டத்திலே முன்று ஆசனங்களைப் பெறுவ தென்பது தலைவருடைய ஆயுட்காலத்திலே பல தடவைகள் முயன்றும் முடியாமல் போன விஷயம். ஈற்றிலே ஐ. தே. கட்சியோடு ஒப்பந்தம் செய்து நாங்கள் தனித்து போட்டியிட்டோம். பல விதவிதமான அட்டுழியங்கள், அட்டகாசங்களுக்கு முகம் கொடுத்து, முஸ்லிம் காங்கிரஸிற்கு எட்டாக் கனியாக இருந்த முன்று ஆசனங்களை முயற்சியினால் பெற்றிருக்கின்றோம்.
இந்த இயக்கம் வாழ வேண்டும்; இந்த இயக்கத்தினுடைய உண்மையான பலம் வெளிப்பட்டாக வேண்டும். இந்த இயக்கத் தினுடைய தலைமை நகைப்புக்குள்ளாகின்ற பொழுது பாதிக்கப்ப டுவது தலைமை மாத்திரமல்ல, முழு சமுகமும் பாதிக்கப் படுகின்றது. முழு சமுகமும் வேதனை அடைகின்றது. மாற்றுத் தரப்பில் இருந்து ஏளனமாக, எக்காளமாக சில வார்த்தைப் பிரயோகங்கள் பாவிக்கப்பட்ட பொழுது முழு சமுகமும் வெட்கி, வேதனை அடைந்து, ஆத்திரமடைந்த நிலைமைகளை நாங்கள் பார்த்தோம்.
އާ%2

Page 18
கடந்த ஒரு வருட காலமாக முஸ்லிம் சமூகம் கண்டு அனுபவித்த திலிருந்து புதிய உத்திகள், உபாயங்களை வடிவமைத்து நம்பிக்கை யோடு அடுத்த வருடத்தைப் பார்க்கின்ற அவசியம் இருக்கின்றது. கடந்த வருடத்தில், நாம் கண்ட அனுபவங்களின் வாயிலாக, எங்க ளுக்கு இருக்கின்ற அங்கீகாரத்தை இன்னும் முயன்று வென்றெ டுக்கின்ற அந்தத் திக்கிலே, எங்களைக் கொண்டு செல்கின்ற உபாயங் களை நாங்கள் வகுத்துச் செயற்பட வேண்டும். கடந்த வருடம் நாங்கள் கண்ட பல விஷயங்களில் ஒன்றாக நான் அடையாளப்படுத் தியதுதான் புலிகளின் இராணுவப் பலமும், அரசியல் பலமும் புலிக ளின் இராணுவப் பலத்தோடு சேர்த்து அரசியல் பலமும், வருகின்ற பொழுது வடகிழக்கிலே முஸ்லிம்களுடைய பொருளாதாரத்தில் அது ஏற்படுத்துகின்ற தாக்கத்தை நாங்கள் அனுபவ ரீதியாக பார்த்திருக் கின்றோம்.
முஸ்லிம்களுக்கு மத்திய அரசில் இருக்கின்ற அந்தஸ்தில் ஏற்படுத்தக் கூடிய தாக்கத்தையும் அனுபவ ரீதியாக நாம் பார்த்திருக் கின்றோம். இவற்றையெல்லாம் சரி செய்வதற்கு என்ன உபாயங்கள் என்று நாங்கள் நீண்ட தூரம் போய்த் தேட வேண்டிய அவசியம் இல்லை. ஒற்றுமை என்பது மட்டும்தான் அவசியமும், அழுத்தமுமாகத் தேவையாக இருக்கின்றது என்பதை நாங்கள் புரிந்துகொண்டிருக் கின்றோம்.
கடந்த ஒரு வருட காலத்திலே நாங்கள் ஒரு விடயத்தைக் கிரகித்துக் கொண்டிருக்கின்றோம்.
புலிகள் தரப்பு தனியாக முஸ்லிம்களுக்கு தவறிழைத்த பொழுது, அதைப் பற்றி முஸ்லிம் சமுகம் எதிர்த்து, விமர்சித்து எவ்வளவுதான் பேசினாலும், அதற்காக புலிகளுடாக எங்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டுமென்று புலிகளுடைய தயவிலே தங்கியிருக்கின்ற ஒரு சமுகமாக நாங்கள் இருக்கத் தலைப் படவில்லை. எங்களுக் கென்று ஒரு தனியாக இயக்கத்தை உருவாக்கி அவ்வியக்கத்தினூடாக எங்களுடைய சொந்தக் கால்களிலே நின்று போராட முடியுமென்று நாங்கள் நிரூபித்துக் காட்டியிருக்கின்றோம்.
ーク
 

கடந்த காலங்களிலே அரசுகள் முஸ்லிம்களுக்கு தவறுகளை இழைத்திருக்கின்றன. அரசுகள் தவறுகளை இழைத்த போது அந்த அரசின் தயவிலே இருந்துகொண்டு முஸ்லிம்களுடைய அரசியல் உரிமைகளை வென்றெடுக்க வேண்டும் என்ற நினைத்த காலம் மாறி, எங்களுக்கென்று ஒரு தனியான அரசியல் இயக்கத்தை உருவாக்கி அதனூடாக அந்த அரசு எங்களுடைய தயவிலே தங்கியிருக்க வேண்டிய நிர்ப்பந்தத்தை நாங்கள் நான்கு தடவைகள் பொதுத் தேர்தல்களில் நிரூபித்திருக்கின்றோம். இதனால் அந்த அரசுகள் முஸ்லிம்களுக் கெதிராக தவறுகளை இழைத்த பொழுது நாங்கள் அலட்டிக்கொள்ள வேண்டிய அவசியமிருக்கவில்லை. இதற்கு நாங்கள் விமர்சனங் களைச் செய்தோம்.
எனினும் இன்று உருவாகியிருக்கின்ற சூழல் புதுவிதமானது. புலிகள் தனியாக முஸ்லிம்களோடு அலட்சியப் போக்கில் நடந்து கொண்டால் அதைப் பற்றி நாங்கள் அலட்டிக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. ஏனென்றால், எங்களுக்கு ஒரு நிறுவனம் இருக்கின்றது. அந்த நிறுவனம் தனித்து நின்று போராடக்கூடிய தகுதியைக் கொண்டது என்பதிலே நம்பிக்கை வைத்த போராளிகள் ஆயிரக் கணக்கானோர் அணிசேரத் தயாராகி இருக்கின்றார்கள்.
(காத்தான்குடியில் ஆற்றிய ஓர் உரையிலிருந்து)
தேர்தல் பிரசாரக் கூட்டமொன்றில்.
57

Page 19
முஸ்லிம்களின் சுயநிர்ணய உரிமை, சுயாட்சி பற்றி கிழக்கின் ஒவ்வொரு முதாட்டியும் நன்கறிவார்
முஸ்லிம்கள் ஒருபொழுதுமே தமிழர்களுடைய போராட்டத்தைக் கொச்சைப்படுத்தி தங்களுக்கு அதிகார அலகு பெறுவதற்கு விரும்ப வில்லை. ஆனால், தமிழர்களின் போராட்டத்தில் பாதிப்பு வராமல் முஸ்லிம்களுடைய அதிகார அலகு கிடைக்குமென்று சொன்னால் அது சாத்தியமாகாத ஒன்று. ஏதோ ஒரு விகிதாசாரம் பாதிப்பு வந்து தான் ஆகும். அதைத் தமிழர் தலைமை ஏற்றுக்கொள்ள வேண்டும். அதைத்தான் விட்டுக் கொடுப்பது என்பது. விட்டுக்கொடுப்பில்லாமல் சமாதானம் வருமென்று தமிழர் தரப்பு நினைக்கக்கூடாது. எனவேதான் தமிழர் போராட்டத்தை நாங்கள் கொச்சைப்படுத்த விரும்பவில்லை. தமிழர்களுடைய போராட்ட இலக்குகளில், அந்த உச்சகட்ட எதிர் பார்ப்பில், பாதிப்புக்கள் இல்லாமல் முஸ்லிம்களோடு, தமிழர்கள் கண்ணியமாக, கெளரவமாக அதிகாரத்தைப் பகிர்ந்துகொண்டு வாழ்வ திலே சிக்கல் இருக்கின்றது என்பதைப் புரிந்து கொள்ளவேண்டும். அதைப் புரிந்துகொள்கின்ற பரந்த மனமும், அந்தத் திடவுறுதியும் தமிழர் தரப்பின் ஏகோபித்த தலைமையாக மாறியிருக்கின்ற புலிகள் தரப்பிலே வரவில்லை என்று சொன்னால் பேச்சுவார்த்தைகளில் "வடகிழக்கு முஸ்லிம்களதும் தாயகம்" என்று சொல்வது வெறும் வாய்ப்பேச்சளவிலான விஷயமாக மாறிவிடும்.
‘வடகிழக்கு முஸ்லிம்களுடைய தாயகம்" என்று சொல்கின்ற பொழுது, அதை அடியொட்டி வருகின்ற வடகிழக்கிலே, முஸ்லிம்களுக்குரிய சுயநிர்ணய உரிமை மறுக்கப்படாமல், அவர்களுடைய வாழ்விடங்களிலே அவர்களுக்கென்று அவர்களு டைய சுயாட்சியை வடிவமைத்துக் கொள்வதற்கான அந்தப் பரந்த உள்ளம் தமிழர் தரப்பினருக்கு மத்தியிலே வந்தாக வேண்டும். இதை அடியொட்டித்தான் நாங்கள் எங்களுடைய திட்டங்களை வகுத்து பேச்சு வார்த்தைக்குப் போகின்றோம். பேச்சு வார்த்தைக் கான அனுகுமுறைகளில் நெகிழ்வுத் தன்மையும், பேச்சுவார்த்தையின் விடயதானத்தில் இறுக்கமும் என்பதுதான் நாங்கள் கடைபிடிக்கின்ற அனுகுமுறையாக இருக்க வேண்டும்.
52
 

முஸ்லிம் காங்கிரஸ9 டைய தலைவருடைய தலையில் தேங் காய் உடைக்கின்ற, அதிலே இருந்துகொண்டு அரசியல் செய்கின்ற, இதைத் தங்களுடைய சுயநல அரசியலுக்காகப் பாவிக்கின்ற, முஸ்லிம்கள் மத்தியிலே பீதியையும், பயத்தையும் ஏற்படுத்துகின்ற சக்திகள் இன்று மேடை போட்டு, கூட்டம் நடாத்தி மக்கள் மத்தியிலே செய்கின்ற வித்தையையும், விளையாட்டையும், முஸ்லிம் காங்கிரஸ் தலைவரோடும், முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர்களோடும் அமர்ந்து இந்த விஷயங்களைப் பகர்ந்து, இருக்கின்ற இதர முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களையும் அரவணைத்துப் பேசி, இந்த விஷயத்திலே ஒருமித்த கருத்தை உருவாக்குவதிலே ஒருமித்துச் செயற்படுபவர்களாக இருந்தால், அவர்கள் இந்த சமுகத்திற்குச் செய்கின்ற பங்களிப்பு அதை விடவும் சிறப்பாக இருக்கும் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும். இதைத்தான் நாங்கள் அவர்களிடத்தில் விநயமாகக் கேட்கின்றோம். கிழக்கிலே இருக்கின்ற ஒவ்வொரு முதாட்டியும் அதிகாரப் பகிர்வு குறித்தும், முஸ்லிம்களுக்கான சுயாட்சி என்கின்ற விஷயம் குறித்தும் மிகவும் விரிவாக அறிந்து வைத்திருக்கிறார்.
இன்று மத்திய அரசில், இருக்கின்ற வெவ்வேறு சமன்பாடுகளுக்கு மத்தியில் முஸ்லிம் காங்கிரஸின் பாராளுமன்ற மன்றக் குழுவும், இதர முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களும் தான் தங்களுடைய பாதுகாப்பை உறுதிசெய்து கொள்வதற்கான கவசம் என்றும், எங்களுக் கான அரசியல் அதிகாரம் என்றும், மக்கள் எல்லோரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றார்கள். இதன் பேரம்பேசும் சக்தியை நாங்கள் அநியாயமாக இழக்கக் கூடாது என்பதில் நாங்கள் கவனமாக இருக்க வேண்டும்.
(கொழும்பில் பூனி லங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் சான்றிதழ் வழங்கும் வைபவத்தல் ஆற்றிய உரையிலிருந்து)
罗子

Page 20
நடுநிலையான சமுகம் தீவிரவாதத்திற்கு ஆட்படாத சமுகம்
இங்கு காத்தான்குடிப் பள்ளிவாசல் 85 - 86 களிலே நடந்த பாரிய இனப்படு கொலையினால் அந்த வருடங்களில் இக்கல்லூரி யிலிருந்து வெளியேறிய மாணவர்கள் மிகவும் குறைவு. ஒப்பீட்டு ரீதியாக இந்த உண்மைகள் சொல்லப்படாவிட்டாலும் அதை எம்மால் பார்க்க முடிகின்றது. அது இந்தக் கலாசாலை நடவடிக்கைக ளிலே பாதிப்புகளை ஏற்படுத்தி இருக்கக்கூடும் என்பதை தெளிவுபடுத்துகிறது. அந்நிகழ்வுகள் எங்களுடைய சமூகத்திலே ஏற்படுத்தி இருக்கின்ற பாதிப்புகளை, இந்த வீழ்ச்சியைப் பார்த்தால் எம்மால் புரிந்து கொள்ள முடிகின்றது.
எனவே தான் நாங்கள் இவ்வாறான நிகழ்வுகள் இனிமேலும் நடக்கா மல், சமூகங்களுக்கிடையிலான நல்லுறவை, கடந்த காலக் கசப்புணர் வுகளை களைந்து, மீண்டும் கட்டியெழுப்புகின்ற ஒரு கஷ்டமான கைங்கரியத்தில் இன்று நாம் இறங்கியிருக்கின்றோம். நிறைய விமர்சனங்களுக்கு உள்ளாகின்ற ஓர் அரசியல் தலைவர் என்ற அடிப்படையிலே, உங்களுக்கு மத்தியிலே நான் இங்கு பேசிக் கொண்டிருக்கிறேன்.
கடந்த சில நாட்களாக குறிப்பாக இந்தக் காணிப் பிரச்சினை சம்பந்தமாக காத்திரமான முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன. அதிலும் குறிப்பாக கடந்த சில தினங்களாக எமக்கு இது வரை காலமும் பயிர் செய்வதற்கு இயலாமல் இருந்த, எங்களுடைய காணிகளை மீளக் கையளிப்பதில், இந்தப் பிரதேசத்தின் தலைவர்கள் அவர்களுடைய மேலிடத் தலைமைகளின் நெறிப்படுத்தலின் கீழ் ஒத்திசைவான இணக்கப்பாட்டுடனும், மிகச் சிறப்பான விட்டுக் கொடுப்புடனும் நடந்துக் கொண்டமைக்காக நான் உத்தியோகபூர் வமாக அவர்களுக்கு நன்றி கூறக் கடமைப்பட்டிருக்கின்றேன்.
54
 

ஆனால் அனுபவங்களையொட்டிய பின்னணியிலே,
மக்கள் மத்தியில் இருக்கின்ற பீதி உணர்வு அகல வேண்டும். இந்த காணிகளை கையளித்ததோடு மட்டும் விடுதலைப் புலிகளின் கடமைகள் முடிந்துவிட மாட்டாது என்பதையும், மிகவும் விநயமாக நேர்மையாக அவர்களிடத்திலே சொல்லி வைக்க வேண்டிய கடமைப்பாடு இருக்கின்றது. எந்த விதத் தங்கு தடையுமில்லாமல் கடந்த காலங்களைப் போன்று சுதந்தி ரமாக அந்தக் காணிகளுக்குச் சென்று வருகின்ற உரிமை, அதா வது இந்த வன்முறைச் சம்பவங்கள் இடம் பெறுவதற்கு முன்பு இருப்பதைப் போன்று ஒரு சுமுக நிலைக்கு, இந்த முழு வடக்குப் பிரதேசத்தையும் கொண்டுவருகின்ற தார்மீகப் பொறுப்பில் ஒரு பெரிய விகிதாசாரப் பங்கு புலிகளின் தலைமைக்கு இருக்கின்றது.
அவர்கள் கண்ணியமாக, கெளரவமாக அவர்களுடைய இந்தக் கடமையை நிறைவேற்றுவதன் மூலம் தமிழ் - முஸ்லிம் சமூகங்களுக்கிடையில் படிப்படியாக ஏற்பட்டு வருகின்ற இந்தப் புரிந்துணர்வுப் பாலத்தை இன்னும் இறுகப் பிணைக்கின்ற, ஒரு பாலமாக வளர்த்தெடுப்பதில் அவர்கள் எங்களுடன் நிச்சயம் ஒத்து ழைப்பார்கள் என நாங்கள் எதிர்ப்பார்க்கின்றோம்.
இதை அடியொட்டித் தான் சகோதரர் பஷிர் சேகுதாவூத் அவர்கள் பேசுகின்ற பொழுது "நாம் இழந்து வந்த சொத்துக்க ளிலே ஒரு முக்கியமான சொத்தை நாங்கள் மீளப் பெற்றிருக்கின் றோம்” என்ற ஒரு விடயத்தைச் சொன்னார். இது இஸ்லாத்திலே இருந்து தூரப்பட்ட ஒரு விஷயமல்ல. இஸ்லாமிய சமுகத்தின் அடிப்படைப் பண்புகளில் ஒன்றாக நடுநிலைமை என்பது திருக் குர்ஆனிலே சொல்லப்பட்ட விஷயம். ஒரு நடுநிலையான சமுகம் எந்த தீவிரவாதத்திற்கும் ஆட்படாத சமுகம் என்று அல்லாஹ9 த்தஅபூலா இந்த சமுகத்தைத் திருக்குர்ஆனிலே வர்ணிக்கின்றான். அந்த நடுநிலை தவறுகின்ற பொழுது அது சமுகத்தைப் பாதிப்பது மட்டுமல்ல எல்லா விடயங்களிலும் பாரிய பாதிப்புகளை ஏற்படுத்த வல்லது என்பதையும் நாங்கள் குர்ஆனை அடிப்படையாக வைத்துப்பார்க்கின்றோம். எந்த தீவிரவாதத் திற்கும் ஆட்பட முடியாத ஒரு நடுநிலையான சமுகமாக இருக்க வேண்டும் என்பதுதான் இறைவனது நோக்கமாக இருக்கின்றது.

Page 21
TTT AA TT L LL LkkLL Ak LLkkk AAA LL TTtL இருக்கின்ற இந்தக் கிராமத்திலே இதை விடவும் நான் விரிவாகப் பேசவேண்டிய அவசியமில்லை. முஸ்லிம் சமூகம் தன்னுடைய நடுநிலைமையை இழக்கவில்லை; இழக்கவைக்கப்பட்டிருக்கின்றது என்பது தான் உண்மை. அதைச் சிலர் தவறாகப் புரிந்து கொண்டிருக் கின்றார்கள். அதனுடைய பாதுகாப்பில் ஏற்பட்ட தாக்கத்தின் காரணமாக ஏதோ முஸ்லிம்கள் ஒரு பக்கச் சார்பாக நடந்து கொண் டார்கள் என்ற பிரமை ஏற்படுத்தப்பட்டிகின்றது.
முஸ்லிம்கள் அரச படையினரின் பாதுகாப்பிலே தங்க வேண்டிய ஒரு நிர்பந்தம் ஏற்படுத்தப்பட்டதென்றால், அதற்காக முஸ்லிம்க ளை குறைகூறுவது. அல்லது நடுநிலைமை தவறி விட்டார்கள் என்று சொல்வது சரியாக மாட்டாது என்பதை நாங்கள் சுட்டிக் காட்டியாக வேண்டும்.
இன்று இஸ்லாமியர்களை மறுதலிக்கின்ற பாங்கிலே பல விஷயங் களை நாம் பார்க்கின்றோம். அன்று நான் “தமிழ் நெட்டிலே பார்த்தேன்; படுபாதகமான பச்சைப் பொய்களையெல்லாம் சொல்கின்றார்கள். மிகவும் வேதனைப்பட்டேன். ஜப்பானில், ஹக்கோனில் நடைபெற்ற பேச்சுவார்த்தையிலும் அதனைக் கொண்டு வந்தார்கள். அங்கு காணிப்பிரச்சினைகள் சம்பந்தமாக பேசுகின்ற பொழுது ஏதோ சில பாதகங்கள் முஸ்லிம்களால் தமிழர்களுக்கு நடந்திருக்கின்றது என்று ஒரு பெரிய பட்டியலை முன்வைத்தார்கள். பல காணிகள் பறிக்கப்பட் டதாக பொய்யான பல விபரங்களை அடக்கியதாக ஒரு செய்தியை "தமிழ் நெட்"டில் பிரசுரித்திருக்கின்றார்கள்.
அதே பேச்சுவார்த்தையிலே அதற்கு நாம் உடனடியாகப் பதிலளிக்க வேண்டிய அவசியம் இருந்தது. நான் பிரதேசச் செயலாளர்களிடத்தில் இருந்து உடனடியாக தகவல்களைப் பெற்று எந்தெந்தக் கிராமங் களிலே எந்தந்த இடங்களிலே தமிழ் மக்கள் பாதிக்கப்பட்டிருக் கின்றார்கள் என்று பார்த்தேன். சில இடங்களிலிருந்து கிடைக்கப் பெற்றதாகச் சொல்லப்படுகின்ற தரவுகள் எல்லாம் பிழையாகக கொடுக் கப்பட்டிருக்கின்றன. அவற்றை எல்லாம் சரிவர நாங்கள் சுட்டிக் காட்டினோம்.
ஆனால் தவறுகள் நடக்கவில்லை என்று சொல்கின்ற தலைமைத்து வமாக நான் இருக்கவில்லை. ஆத்திரப்படுவதால், ஆவேசப்படுவதால்
56
 

நாங்கள் அடையப் போவது எதுவுமேயில்லை. ஆத்திரத்தை, ஆவே சத்தை உண்டு பண்ணுபவர்கள் அதனுடாக எங்களுக்கு இந்த நன்மைகளைச் செய்கின்றார்கள். நாங்கள் நிதானமாக, பக்குவமாக இந்த விஷயங்களை அணுகவேண்டிய அவசியம் இருக்கின்றது.
இது மக்கள் மத்தியில் ஆழ வேறுான்றிய ஓர் இயக்கம்; இந்த மண்ணிலே ஆரம்பித்த இயக்கம். காத்தான்குடி மண்ணிலே ஆரம்பிக்கபட்ட இயக்கம் என்ற ஒரு தனியான பெருமையை கொண்ட இயக்கம். இந்த இயக்கத்தின் தலைமை ஒரு நிறுவ னமாக பார்க்கப் படுகின்ற ஒரு நிலைமை இருந்து கொண்டி ருக்கின்றது. இருந்தும் படிப்படியாக, எனக்கெதிராக இன்று 10 பத்திரிகைகள் வரை வெளிவருகின்றன. இந்த இயக் கத்தின் தலைமை என்பது ஒரு நிறுவனம். அந்த நிறுவனத்தை இலக்கு வைத்து தாக்குவதன் முலம் இயக்கத்தை அழித்து விடலாம் என்பது தான் அதன் அடிப்படைத் தாற்பரியம்.
இதைப் பலவீனப்படுத்திப் பார்ப்பதற்கு எத்தனிக்கும் இவர்களின் முயற்சியில் அமைகின்ற வெற்றி எப்படிப்பட்டதென்பதை அவர்கள் . மிக விரைவில் கண்டுகொள்ள முடியும். சமுகம் இந்த இயக்கத்தை ஒரு போதும் இழக்க விரும்பாது. இந்த இயக்கம் பாதுகாக்கப் பட்டாக வேண்டும். இது ஒரு நிறுவனம் என்கின்ற விஷயம் மக்கள் மத்தியில் மிகவும் ஆழமாக வேரூன்றிப் போயிருக்கின்றது என்பதை எங்கு போனாலும் நாம் பார்க்க முடிகிறது. இதை பாதுகாப்பதன் முலம்தான் சமுகத்தின் பாதுகாப்பைப் பேணமுடியும். இதை ஏளனப்படுத்துவதன் முலம் அல்லது இதற்கு மாறாக இன்னுமோர் இயக்கத்தை ஆரம்பிப்பதன் முலம் எதையுமே சாதித்துவிட (plạULI FT55
மாற்று வழியாக இன்று பல விஷயங்களை பலரும் சொல்லிக் கொண்டு வரலாம். இந்த முஸ்லிம் சமூகத்தை ஒரு தீவிரவாதக் குழுவாக காட்ட வேண்டுமென்று, முழு உலகத்திலுமே இன்று எத்தனங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. இதிலே நாங்கள் கவனமா கக் காய் நகர்த்த வேண்டி இருக்கின்றது. இன்று எங்களுக்கு மத்தி யிலும், எங்களுடைய அரசியல் அபிலாஷைகளை வென்றெடுப்ப தற்காக, எங்களுக்கெதிரான அரசியல் நடவடிக்கைகளுக்காக, நாங்கள் எங்களைத் தயார்படுத்துகின்ற பொழுது இங்கிருக்கின்ற பின்னணியை அடிப்படையாக வைத்து மிகவும் அவதானமாக இருக்க வேண்டிய ஓர் அவசியம் இருந்து கொண்டிருக்கின்றது.
57

Page 22
யுத்தம் புரியாமலே பாதிக்கப்பட்ட சமுகம்
எப்படியாவது எங்களுக்கு நியாயமாக கிடைக்க வேண்டிய பங்கை கொடுக்காமல் இருப்பதற்காக, எங்களை தவிர வாதத்தின் பால் தள்ளிவிட்டு அல்லது அங்குமிங்குமாக ஏதாவது ஒன்றைச் செய்ய வைத்து சமுகத்தின் நியாயமான பங்கைக் கூட தராமல் தடுப்பதற்கான முயற்சிகளும் நடைபெறுகின்றன. அதற்கு உடந்தையாக எம்மவர்களும் ஆகிவிடக்கூடாது என்ற நிலைமை இருக்கின்றது. இதை நினைவுறுத்தித்தான் நாங்கள் ஒரு நடுநிலையான சமுகம் என்பதற்கான சரியான வரைவுகளை அறிந்து கொண்டிருக்கிறோம்.
இந்த யுத்தத்தில் ஈடுபடவில்லை என்ற காரணத்திற்காக முஸ்லிம்க ளுக்கு சமமான அந்தஸ்த்து தேவையில்லை என்று மிகவும் வெளிப்படையாகப் பேசப்படுகின்றது. யுத்தத்திலே ஈடுபடவில்லை என்றாலும், முஸ்லிம்கள் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டிருப்பது உண்மை. முழு நாடும் பாதிக்கப்பட்டிருக்கின்றது. சமூகக் குழுவாக, ஓர் இனமாக, ஒரு தேசிய இனமாக, முஸ்லிம்கள் இலக்கு வைத்துத் தாக்கப்பட்டார்கள்; முஸ்லிம்களது உடைமைகள் பறிக்கப்பட்டன; உயிர்களைக் கொடுரமாகக் கொலை செய்தார்கள் என்பதெல்லாம் அனைவரும் அறிந்த வரலாறு. எனவே போரிலே ஈடுபட வில்லை என்பதல்ல முக்கியம். "நீங்கள் ஒரு தீர்வைப் பற்றிப் பேசப் போகின்றீர்கள். தீர்வினால் பாதிக்கப்படுகின்ற சமூகமாக நாம் இருப் போமாக இருந்தால், அதிலே எங்களுக்கு பேச்சுவார்த்தையிலே உரிய இடம் தரப்பட்டேயாக வேண்டும்” என்று வலியுறுத்தியிருக் கின்றோம்.
போரிலே ஈடுபடுவது மட்டுமல்ல, ஒரு தரப்பு தீர்வினால் பாதிக்கப்படுகின்ற போதும், அதற்கு என்று சரியான அந்தஸ்த்து கொடுக்கப்பட்டாக வேண்டும். இந்த நியாயத்தைப் புரிந்து கொண்டு சரியான ஏற்பாடுகள் செய்யப்பட்டாக வேண்டும்.
ஆனால், வேண்டுமென்றே முஸ்லிம் காங்கிரஸின் குறிக்கோளை மாற்றுவதற்காக, இன்று பலரும் பல விதமாகக் களமிறங்கி பல விஷயங்களைச் செய்வதை நாம் பார்க்கிறோம். மிகவும் கவனமாகவும், ந்தான் விஷயங்களை நாம் அணுகியிருக்கின்றோம்.
ラダ
 
 
 

எப்படியாவது இந்த சமூக நலன்களை வென்றெடுக்க வேண்டும் என்பதற்காக சற்று விட்டுக் கொடுப்புடன் நாம் நடந்துகொள்ளும் போது, சில சமயங்களிலே எமது கட்சியின் முன்னணி உறுப்பினர்கள் கூட என்னைக் கடிந்து கொள்வதுண்டு. "ஏன் நீங்கள் உங்களுடைய ஸ்தானத்தை சில இடங்களிலே சற்று விட்டுக் கொடுக்கின்றீர்கள்” என்று கேட்பதுண்டு. சில சந்தர்ப்பங்களிலே தற்காலிகமான, ஒரு தலைகுனிவான விஷயமாக இருந்தாலும் சமூகத்தின் அங்கலாய்ப்பைப் போக்குவதற்காக சில விட்டுக்கொடுப்புகளை நாம் செய்ய வேண்டியி ருக்கிறது. ஆனால் நிரந்தரமாக இந்தக் கட்சியினுடைய தன்மானத்தை அல்லது எங்களுடைய சுயகெளரவத்தை பறிகொடுக்கின்ற வகையில் இந்த தலைமைத்துவம் நடந்துகொள்ள மாட்டாது என்று மிகவும் திட்டவட்டமாக நான் சொல்லியிருக்கின்றேன்.
(காத்தான்குடி ஜாமியதுல் எபித்தரீக்கிய்யா அரபுக் கல்லூரியின் பட்டமளிப்பு விழாவில் ஆற்றிய உரையிலிருந்து)
உலமாக்கள் முன்னிலையில்.
gಿ?

Page 23
துணிவில்லாத நிதானம் கோழைத்தனம், நிதானமில்லாத துணிவு தீவிரவாதம்
இளைஞர்கள் சிலரிடம் குறிப்பாக வாழைச்சேனை பிரதேசத்து போராளிகள், இளைஞர்கள், பெரியவர்கள் மத்தியிலும் பிரதேச செயலகப் பிரச்சினை சம்பந்தமான ஆதங்கம் இருப்பதும், அது இன்னும் நிறைவேறவில்லை என்று அங்கலாய்ப்பதும் எங்களுக்கு தெரியாத விஷயம் அல்ல. மிகவும் அவசரமாக அதை நிறைவேற்றித் தருவதற்கு அனைத்து முயற்சிகளையும் முஸ்லிம் காங்கிரஸ் கட்டாயம் மேற்கொள்ளும் என்பதை உங்களுக்கு நான் வாக்குறுதி யாகக் கூறி வைக்க விரும்புகிறேன். இதையும் எங்களுடைய பேச்சு வார்த்தையின் அங்கமாக மிகவும், அழுத்தம் திருத்தமாக நாங்கள் அரசுக்கு சொல்லி வைக்க இருக்கிறோம்.
நிதானமான துணிவு வேண்டும்
அரசாங்கத்தோடு பேசவேண்டிய அவசியம் இருக்கிறது. புலிகளோ டும் பேச வேண்டிய, கட்டாயமும் அவசியமுமான காலகட்டமாகவும் இது மாறியிருக்கிறது.
இன்று எல்லா சமுகங்களின் அபிலாஷைகள்ையும் அரவணைத்துப் போகின்ற ஒரு தீர்வைத்தான் சர்வதேச சமுகம், இந்நாட்டுக்கு வழங்க வேண்டும் என்ற அழுத்தம் ஏற்பட்டி ருக்கின்றது. இது, முஸ்லிம்கள் மத்தியிலே, வடக்கு, கிழக்கு, தெற்கு என்றில்லாமல், நாடு முழுவதும் வாழுகின்ற முஸ்லிம்கள் ஒருமித்து, ஓரணியிலே நின்று போராட வேண்டிய ஒரு காலகட்டம் என்பதனால் தான், நாங்கள் எங்கள் வியூகங்களை LDITöú வருகிறோம். முன்பு இருந்ததைப் போல அல்லாது, தெற்கிலே வாழுகின்ற முஸ்லிம்கள் மத்தியிலும், வடக்கில் வாழுகின்ற முஸ்லிம்கள் மத்தியிலும், தனித்துவமான பிரச்சினைகள் இருக்கின்றன என்பதை உள்வாங்கி ஏற்றுக்கொண்டு, இந்த தீர்வை தார்மீகமாக அங்கீகரிக்க வேண்டும் என்ற உணர்வு வலுத்து வருகிறது.
 

இந்த நாட்டின் எல்லைகளின் ஸ்திரத்தன்மை, பாதுகாப்பு, இறைமை ஆகியவற்றை எல்லாம் பாதுகாப்பதற்கு, யுத்தமே ஒரே வழி என்று நம்பிக்கொண்டிருந்த தெற்கிலே இருக்கின்ற சிங்கள சமுகம், இன்று சமாதான தீர்வு மட்டும் தான் இந்நாட்டு இறைமை யையும், எல்லைகளின் ஸ்திரத் தன்மையையும், பாதுகாப்பையும் உறுதிசெய்ய முடியும் என்பதில் நம்பிக்கை வைத்து, புதுவிதமான அணுைகுமுறைகளைக் கடைபிடிக் கன்ற காலமாக இது மாறியிருக்கிறது. இந்த சந்தர்ப்பத்தில் முஸ்லிம்கள் மத்தியில் அரசியல் வேறுபாடுகளுக்கு அப்பால் ஒற்றுமைப்பட வேண்டிய ஒரு காலமாக இது மாறியிருக்கிறது.
எங்களுக்குத் துணிவும், அதே நேரம் நிதானமும் வேண்டும். துணிவில்லாத நிதானம் கோழைத்தனம் என்று சொல்வார்கள். நிதானம் இல்லாத துணிவு தீவிரவாதம் என்று கூறப்படும். எனவே, இந்த இரண்டும் இல்லாமல், பக்குவமான, நிதானமான ஒரு துணிவுடன் தான் இந்த விஷயங்களை அனுகவேண்டும் என்பதை ஆத்திரப்படுகின்றவர்களும், ஆவேசப்படுகின்றவர்களும் மனதில் நிலை நிறுத்திக் கொள்ளவேண்டும்.
இந்த சந்தர்ப்பம் ஒரு முக்கியமான சந்தர்ப்பம். அடுத்து வருகின்ற ஒரிரு கிழமைகளும், அதற்கு அப்பால் வருகின்ற மாதங்களும் இந்த நாட்டின் இனப்பிரச்சினைக்கான காத்திரமான முன்னெடுப்புகள் செய்யப் படுகின்ற காலகட்டமாகும். இந்தக் காலகட்டத்திலே முஸ்லிம்கள் எல்லோரும் ஓரணி திரண்டு ஒருமைப்பட்டு நிற்கவேண்டியது அவசிய LDTG51D.
இதுதான் எமது இலக்கு
தமிழர்களின் தரப்பு தங்களது உச்சக்கட்ட கோரிக்கையாகத் தங்களுக்கென்று தமிழீழ கோரிக்கையை வைத்துக்கொண்டு, அதற்கு மாற்றீடாக அரசாங்கம் ஏதாவது சொல்ல முடியுமாக இருந்தால் அதைப் பரிசீலிக்கத் தயாராக இருக்கிறோம் என்று கூறுகின்றது.
4/

Page 24
அவ்வாறே முஸ்லிம் சமுகத்தின் அரசியல் அபிலாஷைகளை முன்னெடுத்துச் செல்கின்ற தார்மீகப் பொறுப்பை சுமந்த கட்சி, இயக்கம் என்ற அடிப்படையில், முஸ்லிம் காங்கிரஸ"ம் தமிழர்களின் தரப்பிற்கும், தமிழர்களின் ஏகோபித்த அரசியல் தலைமைத்துவமாக ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கின்ற அந்தப் போராட்டத் தலைமைத்துவத்திற்கும் சொல்கின்ற ஒரு விஷயம் இருக்கிறது. முஸ்லிம்களுடைய பாரம்பரிய வாழ்விடங்கள் அனைத்தையும் உள்ளடக்கிய ஒரு சுயாட்சிப் பிரதேசத்தைத் தான் முஸ்லிம் காங்கிரஸ் எங்களுக்கென்று தனியான அலகாகக் கேட்டு நிற்கிறது என்பதுதான் அந்த விஷயம்.
அவ்வாறன்றி, நிலத்தைப் பிரிக்காமல், அதிகாரத்தைப் பிரித்து, கண்ணியத்துடன், கெளவத்துடன் வாழமுடியும் என்று மாற்றுத் தீர்வைப் பற்றி கதைப்பதாக இருந்தால், அந்த மாற்றுத் தீர்வு எப்படியானது, எத்தகையது என்பதை முன்வைக்கின்ற தார்மீகப் பொறுப்பு புலிகளையே சாரும் என்று நாங்கள் கூறி வைக்க விரும்புகின்றோம். புலிகள் எவ்வாறான மாற்றுத்தீர்வைப் பற்றிக் கதைக்கிறார்களோ, அதற்கு ஏற்ப நாங்களும் மாற்றுத் தீர்வைப் பற்றிப் பேசுவதற்குத் தயாராக இருக்கிறோம். ஆனால், எங்களுடைய இலக்கு என்பது எங்களுடைய அத்தனைப் பாரம் பரிய வாழ்விடங்களையும், நிலங்களையும், விவசாய நிலங்க ளையும், மேய்ச்சல் பூமிகளையும் உள்ளடக்கிய முஸ்லிம் களுடைய அலகாகும்.
இந்தக் கோரிக்கையில் இருந்து நாங்கள் ஒரு சாணேனும், ஒரு அங்குலமேனும் நகர்வதற்கு தயாரில்லை என்பதை கூறிவைக்க விரும்புகிறோம். புலிகள் தமது அடிப்படையிலே இருந்துகொண்டு எவ்வாறு அரச தரப்புடன் பேச்சு வார்த்தைகள் நடத்துகிறார்களோ, அதே அடிப்படையிலே மிகவும் தன்நம்பிக்கையுடனும், நல்ல எதிர்ப் பார்ப்புகளுடனும் நாங்கள் புலிகள் நீட்டியிருக்கின்ற நேசக்கரங்களைப் பற்றிப் பிடிக்க விரும்புகிறோம்.
முஸ்லிம்களுடைய அபிலாஷைகள், எதிர்பார்ப்புகள் என்றெல்லாம் நாங்கள் இன்று குவித்து வைத்திருக்கின்ற அத்தனை விஷயங் களையும் ஓரிரு நாட்களிலோ, ஒரிரு வாரங்களிலோ பேசித் தீர்த்துக் கொள்ள முடியாது. இந்தப் பேச்சு வார்த்தைகள் நிலைத்து நிற்கின்ற பேச்சு வார்த்தைகளாக இருக்க வேண்டும். ஒரேயடியாக முறித்துவிட்டு ஓடி விடுகின்ற பேச்சு வார்த்தைகளாக இவை மாறிவிடக்கூடாது. எனவேதான் படிப்படியாக இந்த முன்னெடுப்புகளை நாங்கள் செய்ய வேண்டும்.
ഗ്ഗ
 

அனைத்து முஸ்லிம்களுக்குமான தீர்வையே பேசுவோம்
இன்று எங்களுக்கு அன்றாட நடைமுறைப் பிரச்சினைகள் என்று சில அம்சங்கள் இருக்கின்றன. இந்த நடைமுறைப் பிரச்சினைக ளுக்கு நாங்கள் தீர்வுகளைக் கண்டாக வேண்டும். அதற்கப்பால் இறுதித் தீர்வு என்ற பிரச்சினையைப் பற்றிக் கதைக்க வேண்டும். இந்த நடைமுறைப் பிரச்சினைகள், இறுதித் தீர்வு ஆகியவற்றுக் கிடையில், இடைக்காலப் பிரச்சினைகள் இருக்கின்றன. அதாவது, விரட்டியடிக்கப்பட்ட முஸ்லிம்களுடைய வாழ்விடங்களிலே அதே விரட்டப்பட்ட முஸ்லிம்கள், மீளச்சென்று குடியேறுகின்ற உரிமை யைப் பற்றி கதைக்க வேண்டிய அவசியம் இருந்து கொண்டிருக் கிறது.
வடக்கிலே இருந்து விரட்டப்பட்ட எங்களுடைய சகோதரர்க ளுக்கு இருப்பதைப்போல, இங்கு கிழக்கிலும், இந்த மட்டக்களப்பு மாவட்டத்திலும் இருப்பதை நாங்கள் உணர முடிகிறது. மட்டக்க ளப்பு மாவட்டத்தில் இருக்கின்ற முஸ்லிம்கள் தான், இந்த இனப் பிரச்சினையில் ஆகக் கூடுதலாகப் பாதிக்கப்பட்டவர்கள் என்பதிலே வேறு எந்த மாவட்டத்திலும் இருக்கின்ற முஸ்லிம்களுக்கு எவ்வித மாற்றுக் கருத்துக்களும் இருக்க முடியாது.
எனவே மட்டக்களப்பு மாவட்டத்து முஸ்லிம்களதும், திரு கோணமலை மாவட்டத்து முஸ்லிம்களதும் அபிலாஷைகளைப் பூர்த்தி செய்கின்ற ஒரு தீர்வு இல்லாமல், வேறு ஒரு தீர்வைப் பற்றி முஸ்லிம் காங்கிரஸ் ஒரு பொழுதுமே கதைக்க மாட்டாது என்பதை நாங்கள் திட்டவட்டமாக கூறிவைக்க விரும்புகிறோம்.
அடையாள ரீதியாக தென்கிழக்கு அலகு என்று சொல்வது சில எல்லைகளை வரையறுத்துக் கூறுகின்ற விஷயம் அல்ல. முழு வடகிழக்கிலும் இருக்கின்ற முஸ்லிம் பாரம்பரிய பிரதேசங்கள் அனைத்தையும் உள்ளடக்கிய ஒரு அலகைத்தான், தென்கிழக்கு அலகு என்று நாங்கள் சொல்கிறோம். இதை ஒரு சில எல்லைக ளுக்குள்ளேயே முடக்கிவிடுவதற்கு நாங்கள் தயாராக இல்லை.
45

Page 25
நாம் யாருக்கும் சார்பானவர்கள் அல்ல
புலிகள் தரப்பிலே கையோங்குகின்ற பொழுது, புலிகளுக்குச் சார்பாகக் கதைக்கின்ற ஒரு கூட்டமும், அரசாங்கத்தின் கைகள் ஓங்குகின்ற பொழுது அரசாங்கத் தரப்போடு சேர்ந்துக்கொண்டு தங்களுடைய சகஜ வாழ்வை நடத்திக்கொள்வதற்கு முயலுகின்ற ஒரு சிலரும் மாறி, மாறி இரண்டுத் தரப்புகளையும் ஏமாற்றி, தங்க ளுடைய பிழைப்புக்காக அரசியல் நடத்துகின்ற ஒரு அரசியல் வியா பாரம், கடந்த காலங்களில் நடந்துவந்தது. அதேபோல மாறி, மாறி துரோகம் செய்கின்ற ஒரு கூட்டமாக முஸ்லிம் காங்கிரஸை யாரும் காணக்கூடாது.
நாங்கள் அரச தரப்பையோ, தமிழர் தரப்பையோ, புலிகள் தரப்பையோ சார்ந்தவர்களல்லர். மாறாக நடுநிலையான, தனித்துவமான சுயாட்சி கோரி நிற்கின்ற ஒரு சமுகம். எங்களு டைய சுயகெளரவத்தை பேணிக்கொண்டு வடகிழக்கிலும் நாட்டின் எந்த முலையிலும் இருக்கின்ற சுதந்திரக் காற்றைச் சுவாசிப்பதற்கு உரிமையுள்ள ஒரு சமுகம், இதை அங்கீகரிக்கின்ற அடிப்படை யிலே, புலிகள் தரப்பு எங்களுடைய அபிலாஷைகளை கவனத்தில் எடுக்க வேண்டும் என்பது தான் எங்களுடைய கோரிக்கையாக இருக்கிறது.
ஒட்டமாவடி, வாழைச்சேனை, ஏறாவூர், காத்தான்குடி போன்ற மட்டக்களப்பு முஸ்லிம்கள் வாழுகின்ற அனைத்துப் பிரதேசங் களிலிருந்தும் முஸ்லிம்கள் ஒருமித்த குரலிலே எங்களுக்கென்று ஒரு பிரகடனத்தைச் செய்தாக வேண்டும். முஸ்லிம்களுடைய அரசியல் அபிலாஷைகளை சர்வதேச சமூகத்திற்கும், அரசுக்கும், புலிகளுக்கும் கோடிட்டுக் காட்ட வேண்டும். அதற்கு நீங்கள் எல்லோரும் பூரணமாக ஒத்துழைத்தாக வேண்டும். இச்சந்தர்ப்பத்திலே முஸ்லிம்களுடைய அரசியல் சக்திகள் அனைத்தும் ஒன்று திரண்டு மிகவும் காத்திரமான ஒரு செய்தியை, சர்வதேச சமூகத்துக்குச் சொல்லுகின்ற ஒரு தருணமாக இது மாறியிருக்கிறது. இந்தச் சந்தர்ப்பத்தை நாங்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
இந்த இயக்கத்தை பலமான ஓர் இயக்கமாக மாற்றுவதோடு, இந்த இயக்கத்தை விமர்சிப்பதற்கு முயலுகின்ற அனைவரையும், அவ்வாறு செய்யாமல் தடுத்து, இந்த இயக்கத்தின் முன்னெடுப்புகளை பூரணமாக ஆதரிப்பதற்கு அவர்களை தூண்டுவதும் உங்கள் எல்லோ ருக்கும் இருக்கின்ற மாபெரிய தார்மீகப் பொறுப்பாகும். இதைச் செய்வதன் மூலம் தான் பலமான ஒரு செய்தியை நாங்கள் முன்னெ டுத்துச் செல்ல முடியும். அதே நேரம் முஸ்லிம் காங்கிரஸ"டைய தலைமைத்துவம், தனி மனித ஆராதனைகளுக்கு ஆசைப்படுகின்ற ஒரு தலைமைத்துவம் அல்ல என்றும் திட்டவட்டமாக கூறிக்கொள்ள
 

அனைவரினதும் நிம்மதிக்கே யுத்த நிறுத்தம்.
இந்த சமூகத்தின் பாதுகாப்புக்கான அச்சுறுத்தல் ஏற்பட்ட பொழுது அதைத் தீர்ப்பதற்கென்று முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களின் சமாதானத்திற்கான ஒன்றியம், என்ற ஒன்றை நாங்கள் ஆரம்பித்திருக் கிறோம். ஆனால், பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுகின்ற பொழுது மட்டும், ஒற்றுமைப்படுகின்ற ஒரு சமூகமாக நாங்கள் இருப்பது. எங்களை நாங்களே ஏமாற்றிக்கொள்கின்ற ஒரு விஷயமாகும்.
யுத்த நிறுத்தம் என்பது அரச படைகளுக்கும், புலிகளுக்கும் நிம்மதியை தருவதற்காக மட்டும் கொண்டு வரப்பட்டதொன்றல்ல. இன்று யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நிம்மதியைப் பெற்றுத் தர வேண்டும் என்றுதான் யுத்த நிறுத்தம் செய்யப்பட்டிருக்கிறது. எனவே, யுத்த நிறுத்தத்தை கண்காணிக்கின்ற பிரிவினர், சர்வதேச சமூகத்தின் தலைமைத்துவத்தின் கீழ் நியமிக்கப்பட்டிருக்கின்றனர். நடக்கின்ற அத்தனை அத்துமீறல்களையும் ஆராய்ந்து பார்த்து, இவை இனிமேலும் நடக்காமல் தடுப்பது அந்த கண்காணிப்புக்குழுக்களின் மிகவும் அவசரமான, அவசியமான காரியமாக மாறி இருக்கிறது.
இதைப்பற்றி திட்டவட்டமாக நாங்கள் எங்களுடைய பேச்சுவார்த் தைகளிலே மிகவும் அழுத்தம் திருத்தமாக சொல்லி வைக்க விரும்புகிறோம். ஏற்கனவே சில முன்னெடுப்புகள் நடந்திருக்கின்றன.
சில பிராந்தியத் தலைமைகள் அகங்காரமாகப் பேசியிருக்கின்ற பேச்சுக்களைப் பார்க்கின்ற பொழுது, அதனுடாக பீதி மனப்பான்மை இன்றைய முஸ்லிம்கள் அனைவரையும் ஆட்கொண்டிருக்கிறது. வட கிழக்கிலே மட்டக்களப்பில் வாழுகின்ற முஸ்லிம்களை மட்டுமல்ல, இன்று வடகிழக்குக்கு வெளியிலே வாழுகின்ற முஸ்லிம்களையும் இப்பேச்சுக்கள் ஆத்திரமூட்டச் செய்திருக்கின்றன.
அத்தனை பேரும் வாயடைத்துப் போனார்கள்.
நாங்கள் எல்லோரும் ஒரு முகப்பட்டு ஓரணி நின்று இன்று எங்களுடைய இயக்கத்தைப் பலப்படுத்துகின்றவர்களாக மாற வேண்டும். அங்குமிங்குமாக ஒரு சிலர் ஆத்திரப்பட்டு கதைப்பதினால் எங்களுடைய பிரச்சினைகளுக்கான நிரந்தரமான தீர்வுகளை நாங்கள் கண்டுவிட முடியாது.
துரையப்பா செய்த ஆரோகத்துக்கு, கொடுத்த பாடத்தை நாங்கள் படிப்பிப்போம் என்று அச்சுறுத்தி, முஸ்லிம் காங்கிரஸின் தலைமைத் துவத்தை அடிபணிய வைக்க முடியாது என்று
45

Page 26
நாங்கள் கூறிவைக்க விரும்புகிறோம். மிக நிதானமாகவும் பக்குவமாகவும், துணிவுடனும் இந்தப் பிரச்சினைக்கு நாங்கள் முகங்கொடுக்க விரும்புகிறோம். பக்குவமில்லாமல் பேசுகின்ற அபத்தமான வார்த்தைகளில் இருந்து நாங்கள் அகன்ற விடுகிறோம்.
மறுமை நாளிலே நான் அல்லாஹற்விடம் விடை சொல்ல வேண்டிய ஒருவனாக இருந்துகொண்டிருக்கிறேன். எனவே, இந்த சமுதாயத்தின் பிரச்சினைகளை வட-கிழக்கிற்கு வெளியிலே இருக்கின்ற ஒருவரால் தீர்க்க முடியாது என்று கூறுகின்றவர் களுக்கு மத்தியிலே ஒன்றை நான் கூறிவைக்க விரும்புகிறேன் முன்பெல்லாம் தலைவர் வாழ்ந்த காலத்திலே கல்முனைக்கு மட்டும் சேவை செய்கின்ற அமைச்சர் ஒருவராக அவரைப் பார்த்தார்கள் மட்டக்களப்புக்கு மட்டும் சேவை செய்கின்ற ஒருவ ராக அவரை அபாண்டமாகக் குற்றஞ் சாட்டினார்கள். தலைவ ருடைய மறைவிற்குப் பிறகு இந்த இயக்கம் வட-கிழக்குக்கு வெளி யிலே இருக்கின்ற ஒருவரை தலைவராக ஏற்றுக்கொண்டதன் பிறகு இன்று அத்தனை பேரும் வாயடைத்துக் போய் இருக்கிறார்கெ
முஸ்லிம்களின் நலன்களை பாதுகாப்பதில் கவனமாக இருந்தால் தான் நிரந்தரமான தீர்வு வரமுடியும் என்று சர்வதேச சமூகம் நம்பியிருக்கிறது. எனவே, அந்த நம்பிக்கையை புரிந்து கொண்ட வர்களாக எங்களுடைய சக்தியை ஒன்று திரட்டி நாங்கள் எல்லோரும் ஓரணியில் நின்று, எந்தப் பிளவும் இல்லாமல் எங்களுடைய பிரச்சினை களை அணுகுகிறோம் என்பதை வெளிக்காட்டுவதுதான் இன்று அவசியமாகின்றது. மாறாக, வெறும் அபத்தமான பேச்சுக்களினால் நாங்கள் இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண முடியாது.
நல்லெண்ணம் இல்லாமல் தீர்வுகள் இல்லை. பரஸ்பர நல் லெண்ணம் என்பது அவசியமான விஷயம் என்பதை நாங்கள் புரிந்துகொள்ள வேண்டும். கடந்தகால தவறுகளுக்கு புலிகள் மன்னிப்புக்கோருகின்ற பொழுது நாங்கள் அந்த தவறுகளை மறந்துவிட்டதாக அவர்கள் கருத்திலே கொள்ள முடியாது. ஆனா ல், மன்னிப்பதற்கு தயாரான ஒரு சமுகமாக இருந்து கொண்டு எங்களுடைய எதிர்கால வாழ்விலே நாங்கள் வஞ்சிக்கப்படாமல் அவர்கள் நியாயமாக நடந்து கொளவார்கள் என்பதற்கான சரியா ன, காத்திரமான விடைகளை அவர்கள் தந்தாக வேண்டும் என்று நாங்கள் வலியுறுத்தவிருக்கிறோம.
(ஒட்டமாவடியில் ஆற்றிய ஓர் உரையிலிருந்து
6
 
 
 


Page 27
கட்சியின் உள்ளும், அரசியற் சூறாவளி சதிப்புரட்சிகளுக்குப் தாக்குப்பிழத்து, இருபதுக்கும் மேற்ப சமூகத்தின் நலன் க தொடர்ந்தும் தக்க 6 றிலங்கா முஸ்லிம் க சட்டத்தரணி ரவூய் வெற்றியைக் கண்டு
1994ஆம் ஆண்டு ெ றிலங்கா முஸ்லிம் ச உறுப்பினரான ரவுபூர் போதே பாராளுமன்ற தலைமை தாங்கும் கு அலங்களித்த வயதில் என்ற வரலாறு பை பின்னர், 2000ஆம் ஆ கண்டி மாவட்டத்தில் போட்டியிட்டு வட கி அச்சின்னத்தில் வெ பாராளுமன்ற உறுப் பெருமையைய் பெற்ற வெளிநாட்டு வர்த்த முஸ்லிம் சமய விவச 2001 ஆம் ஆண்டு ெ றிலங்கா முஸ்லிம் ச ஐக்கிய தேசிய கட்சி பாராளுமன்றத்திற்கு துறைமுக அபிவிருத் முஸ்லிம் சமய விவச
சர்வகட்சி மாநாட்டில் நிரந்தரய் பிரதிநிதிய பல்வேறு உலக நாடு கருத்தரங்குகளிலும் சாய்க் நாடுகளின் தே பணிபுரிந்து ஏழு நாடு ஆகக் கூடிய வெளி இலங்கையர் என்ற
சமாதானப் பேச்சுவா சுற்றுக்களிலும் பங்கு நாட்டில் நிரந்தர சம பொதுவாக முஸ்லிம் முஸ்லிம்களின் பிரச் மயப்பருத்துவதற்கு
Printed by: Comprint System,

புறமும் இருந்து புறப்பட்ட களுக்கும், ) அசைந்து கொருக்காமல்
ட்ட வழக்குகளுக்கு முகம்கொருத்து ருதித் தலைமைத்துவத்தைத் வைத்துக் கொள்வதில் ாங்கிரஸ் தேசியத் தலைவர் ஹக்கீம் குறிப்பிடத்தக்க
6froTITir.
பாதுத் தேர்தலையருத்து காங்கிரஸின் தேசியப்பட்டியல்
ஹக்கீம், தனது முதற்பிரவேசத்தின் ற அமர்வுகளுக்குத் தழுக்களின் பிரதித் தலைவர் பதவியை 0 இளையவர்
டத்தவள்.
ஆண்டு பொதுத் தேர்தலில்
மரச்சின்னத்தில்
ழக்கிற்கு வெளியே ற்றி பெற்ற முதலாவது
பினர் என்ற
றதோரு உள்நாட்டு க, வாணிப, கப்பற்துறை, கார அமைச்சரானார். பாதுத் தேர்தலில் கண்டி மாவட்டத்தில் ாங்கிரஸ் சார்பில் பில் போட்டியிட்டு மீண்டும் தத் தெரிவு செய்யப்பட்டபோது, தி, கப்பற்துறை, கிழக்கு அபிவிருத்தி,
ார அமைச்சரானார்.
b றிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ாக பங்களிப்புச் செய்த ரவூப் ஹக்கீம், களில் நடைபெற்ற மாநாடுகளிலும்,
கலந்து கொண்டாள். பொதுநலவாய, நப்தல் கண்காணிப்புக் குழுக்களில்
களின் தேர்தல்களைக் கண்காணித்து நாட்டுத் தேர்தல்களைக் கண்காணித்த சாதனையை ஏற்படுத்தியவர்.
ர்த்தைகளின் எல்லாச் குபற்றியதன் மூலம் ாதானம் ஏற்படுவதற்கும், களின் குறிப்பாக வட கிழக்கு சினைகளை சர்வதேச ம் பெரிதும் உதவியவர்.
Colombo 12, Tel: 2348415, 0777636138