கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சமுதாயமா சந்தர்ப்பவாதமா றவூப் ஹக்கீமுக்கு ஒரு பகிரங்க மடல்

Page 1

5 PQ15 Lulé JTĀJS5 DL60

Page 2

பிரசுரம் 01
முஸ்லிம் காங்கிரஸ் தலைவருக்குப்
பகிரங்கக் கழதம்
ஜனாப்.வை.எல்.எஸ்.வறமிடி
முநீ.ல.முஸ்லிம் காங்கிரஸ் பிரதிச் செயலாளர் நாயகம் கடீசியின் யாப்புக் குழு உறுப்பினர்

Page 3
அநுத்தெறிவதற்காய் விலங்குகளும் வெல்வதற்காய் ஒர் உலகமும் எங்களிடமிருக்கிறது!
- ஸெய்த் ஷாகிர் அல் ஜிஷி

O1
அன்பின் தலைவர் அவர்களே,
கட்சியின் யாப்பின் பிரகாரம் தாங்கள் கட்சியின் தலைமைப் பதவியையும் அங்கத்துவத்தையும் இழந்திருப்பதால் (அது எவ்வாறு என்று பின்னர் விபரிக்கிறேன்) தங்களைத் தலைவர் என்று அழைப்பதில் சட்டப் பிரச்சினை இருக்கின்ற போதும் அடிப்படை மரியாதையின் நிமித்தம் தலைவர் என்று விளித்து இப்பகிரங்க மடலை எழுதுகிறேன்.
இன்று நமது கட்சியைச் சேர்ந்த மூன்று பாராளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்தில் அமைச்சுப் பதவி பெற்றிருக்கின்ற சூழ்நிலையில் தாங்கள் தலைவரான காலம் முதல் இன்று வரை கட்சிக்குள் தங்கள் கட்சி விரோதப் போக்கு காரணமாக பிளவுகள் ஏற்படும் போதெல்லாம் தாங்கள் வழமையாகப் பாவிக்கின்ற "பதவிகளுக்குச் சோரம் போய்விட்டார்கள்”, “அரசின் சதிவலைக்குள் வீழ்ந்து விட்டார்கள்” என்ற கோஷத் தையே இப்போதும் எழுப்பிக் கொண்டிருக்கின்ற இவ்வேளையில், உண்மைக்கும் பொய்க்கும் சத்தியத்திற்கும் அசத்தியத்திற்கும் யதார்த்தத்திற்கும் மாயைக்குமிடையில் மக்கள் தெளிவு காணவேண்டியிருக்கிறது என்பதால் இப்பகிரங்க மடலை வரைகிறேன். சமுதாயத்தின் பெயரால் சுய லாபங்களுக்காக நாங்கள் சோரம் போனதுதான் உண்மையென்றால் மக்கள் எங்களைக் கல்லால் அடிக்க வேண்டும். ஏனென்றால் சமுதாயத்தின் பெயரால் வயிறு வளர்க்கும் சாக்கடைகளை இச்சமுதாயம் இனிமேலும் பார்த்துக் கொண்டு வாளாவிருக்க் முடியாது. மாறாக, நாங்கள் இன்று புறப்பட்டிருப்பது சத்தியப் போராட்டத்திற்காக. அதே வேளை சமுதாயத்திற்காக, சமுதாயத்தால் தியாகங்களுக்கும் இழப்புகளுக்கும் மத்தியில் உருவாக்கி வளர்த்தெடுத்த இக் கட்சியை உங்கள் சுயநலத்திற்காக நீங்கள்தான் வியாபாரம் செய்து கொண்டிருக்கிறீர்கள் என்பதுதான் உண்மையென்றால் அதுதான் சத்தியம் என்றால் உங்களை மக்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை நீங்கள்தான் சொல்ல வேண்டும்.
விடுதலையூர் நோக்கிப் புறப்பட்ட முஸ்லிம் காங்கிரஸ் என்ற பேரூந்து, அதன் உண்மையான சாரதி எங்களை விட்டு மறைந்த நிலையில் வியாபாரிகள் என்று தெரியாமல் தியாகிகள் என்று நினைத்து பேரூந்தில் பயணம் செய்பவர்களால் புதிதாக நியமனம் செய்யப்பட்ட சாரதிகள் பேரூந்தின் திசையைத்திருப்பி விட்ட போது பேரூந்துப் பயணிகள் வாய் மூடி மெளனியாக இருக்கா விட்டால் வசைபாடுவேன் என்று புதிய சாரதி சொல்வதற்காக அவ்வாறே இருந்து விட முடியுமா? அல்லது அப்பேரூந்தின் திசை மாறிய பயணத்தை தடுத்து நிறுத்தி அதைச் சரியான பாதையில் செல்ல வைக்கும் முயற்சியில் இறங்குவதுதான் தவறாகுமா?
இங்குநாங்கள் இரண்டு கேள்விகளுக்கு தெளிவான பதிலைச் சொல் வேண்டிய கட்டாயத் தேவை இருக்கிறது. முதலாவது, நாங்கள் ஒரு மாற்று அணியை ஏன் அமைத்தோம் என்பது இரண்டாவது, அம்மாற்று அணி ஏன் அரசுக்கு ஆதரவளிக்க
வேண்டும் என்பது.

Page 4
O2 இக் கேள்விகளுக்குப் பதிலளிக்கு முன் தாங்கள் கட்சியின் ஓர் ஆரம்பகால அங்கத்தவரோ போராளியோ இல்லையென்பதால் கட்சியின் தோற்றுவாய்க்கு உங்களைச் சில வினாடிகள் அழைத்துச் செல்வது அவசியம் என நினைக்கிறேன்.
பேரினவாதக் கட்சிகளில் முஸ்லிம்களுக்கென்று அமைச்சர்களும் பாராளுமன்ற உறுப்பினர்களும் தாராளமாக இருந்த காலம் அது. அபிவிருத்திகளும் குறைவில்லாமல் நடந்த காலம் அது. ஆயினும் நமக்கென்று ஒரு கட்சி தேவைப்பட்டது ஏன்?
அன்று நமக்கென்று எல்லாம் இருந்தன. ஆனால் நமக்கென்றோர் சுதந்திரக் குரல் இருக்கவில்லை!
அன்று, டாக்டர் கலீல் அவர்கள் முஸ்லிம்களது பரம விரோதியான இஸ்ரேலியர் இலங்கைக்குள் நுழைவதற்கு எதிராகக் குரல் எழுப்பிய போது என்ன நடந்தது என்பதை நீங்கள் அறியாமல் இருக்க மாட்டீர்கள்.
இனப்பிரச்சினைத் தீர்வில் முஸ்லிம்களது நிலைப்பாட்டை அன்றைய ஐ.தே.கட்சியில் இருந்த முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் இந்திய இணை அமைச்சர்களான சிதம்பரம், பண்டாரி போன்றவர்களுக்கு விளக்க முற்பட்ட போது, முஸ்லிம் சமூகத்தின் தனித்துவம் கூட மறுக்கப்பட்ட காலமது. மட்டுமல்ல, இலங்கை இந்திய ஒப்பந்தம் முஸ்லிம்களின் இருப்பைக் கூட கண்டு கொள்ளத் தவறிய போது அதைப் பார்த்துக் கொண்டு வாளாவிருக்க வேண்டிய நிலையில் முஸ்லிம் அரசியல் தலைமைத்துவங்கள் இருந்த கையாலாகாத்தனத்துக்கான காரணமும் நமக்கென ஓர் சுதந்திரக் குரல் இல்லாமல் போனதே என்பதையும் அறிந்திருப்பீர்கள்.
இந்தக் காலகட்டத்தில்தான் முஸ்லிம் காங்கிரஸ் உதயமாகியது. முஸ்லிம் காங்கிரஸின் உதயம் தொடர்பாக பாவலர் பஸில் காரியப்பர் அவர்கள் ஒரு கவிதை பாடினார். “காலத்தின் தேவை ஓர் அரசியல் கட்சி. கண்முன் தெரிவதோ Uநீ.மு. காங்கிரஸ்" என்று.
அன்றைய சமுதாய விடுதலை வேட்கைதான், சாரி சாரியாக வாலிபர்களும் பொதுமக்களும் முஸ்லிம் காங்கிரஸில் இணைவதற்குக் காரணமாகியது. நாம் மறைந்த தலைவருடன் இந்நாட்டின் நாலா பக்கங்களிலும் காடுகளிலும் மேடுகளிலும் அலைந்து திரிந்து கட்சிப் பிரச்சாரங்களை முன்னெடுத்த போது மறைந்த நம் தலைவர் முழங்கிய கோஷம் "முஸ்லிம்களின் கைகளுக்கும் கால்களுக்கும் இடப்பட்டிருக்கின்ற அடிமை விலங்குகளும் வாய்களுக்குப் போடப்பட்டிருக்கின்ற பூட்டுக்களும் உடைத்தெறியப்பட வேண்டும். அச்சமும் மடமையும் உச்சத்தில் கொண்ட ஊமைச் சமூகமாய் முஸ்லிம் சமூகம் வாழ்ந்தது போதும். முஸ்லிம் சமூகம் இனியாவது தனது சொந்தக் குரலில் பேச ஒற்றுமைப் பட வேண்டும்” என்பதாகும்.
தம் சொந்தக் குரலின் அவசியத்தை உணர்ந்த வட கிழக்கு மக்கள் பெருமளவில் ஒற்றுமைப்பட்டபோது, வட கிழக்கிற்கு வெளியே வாழுகின்ற முஸ்லிம்களும் கணிசமான அளவு ஒற்றுமைப்பட ஆரம்பித்தார்கள். தலைவரின் மறைவு வட கிழக்கிற்கு வெளியே

O3 வாழுகின்ற முஸ்லிம்களுக்கு மத்தியிலும் தமக்கான ஒரு சுதந்திரக் குரலின் அவசியத்தின் அழுத்தத்தைத் தோற்றுவித்து விட்டது. அதன் விளைவுதான் அண்மைக் காலங்களில் வட கிழக்கிற்கு வெளியிலும் முரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கண்டு வந்த அபரிமித வளர்ச்சியாகும். குறிப்பாக கடந்த பொதுத் தேர்தலிலும் அதன் பின் நடை பெற்ற வடமேல் மாகாண சபைத் தேர்தலிலும் இவ்வளர்ச்சியில் ஒரு துரித கதி காணப்பட்டது. ஆனால் அதன் பின் நடைபெற்ற ஆறு மாகாண சபைத் தேர்தல்களிலும் அவ்வளர்ச்சியில் ஒரு மந்த நிலை காணப்பட்டதை நீங்கள் மறுக்க முடியாது: பத்திரிகைகளில் நீங்கள் மாறாக உரிமை கோரியிருக்கின்ற போதிலும் கூட. ஏனெனில் ஒரு மாகாணசபையில் நான்கு ஆசனங்களைப் பெற்ற கட்சி, ஆறு மாகாணசபைகளில் ஐந்தில் போட்டியிட்டு ஏழு ஆசனங்களை மாத்திரம் வென்றது என்பது ஒப்பீட்டளவில் பின்னடைவாகும். "தலைவருக்கு எதிராக அபாண்டங்கள் சுமத்தப்பட்ட போதும் மக்கள் அவற்றை நிராகரித்து விட்டு கட்சிக்கு வாக்களித்திருக்கிறார்கள்” என்று நீங்கள் பெருமை பேசிய போதும் தமக்கென ஒரு சதந்திரக் குரல் வேண்டும்’ என மக்கள் சிந்திக்க ஆரம்பித்திருக்கின்ற அதே வேளை, தலைவரின் எதேச்சாதிகார நடவடிக்கைகளில் மக்கள் அதிருப்தியுற ஆரம்பித்திருக்கிறார்கள் என்பதைத்தான் இப்பின்னடைவு காட்டுகிறது என்பதே உண்மையாகும். இல்லையெனில் "மேல் மாகாண சபையில் பத்து ஆசனங்களும் ஏனைய மாகாண சபைகளில் பத்து ஆசனங்களுமாக இருபது ஆசனங்களை நாங்கள் கைப்பற்றுவோம்’ என்ற தங்களின் ஹேஷ்யம் நிறைவேறியிருக்கும்.
இருப்பினும் இன்று இலங்கையில் ஒரேயொரு வளர்ந்த கட்சியாக முஸ்லிம்களைப் பொறுத்த வரையில் முஸ்லிம் காங்கிரஸ்தான் இருக்கிறது என்பதை யாரும் மறுக்க முடியாது.
இக்கட்சியை இவ்வாறு உருவாக்கி, வளர்த்தெடுப்பதற்குக் காரணமாக இருந்தவர்களையெல்லாம், அவர்கள் நியாயங்களைத் தட்டிக் கேட்க முற்படும் போதெல்லாம் ஒவ்வொரு சாக்குப் போக்குச் சொல்லி, கட்சியை விட்டு வெளியேற்றி விட்டு, தனியொருவனாக இக்கட்சியை மாற்றுக் கட்சிக்கு அடகு வைப்பதற்கும் வியாபாரம் செய்வதற்கும் உங்களுக்கு உரிமையும் அதிகாரமும் வழங்கியது யார்? என்ற கேள்விக்கு கட்சிக்குள் போராடி விடை கிடைக்காததினால் இக்கேள்விக்கு விடை தேடி, கட்சியை மீட்டு வரப் புறப்பட்ட பயணம்தான் இம் "மாற்று அணியாகும்.
மக்கள் குழப்பமடையக் கூடாது என்பதற்காக எம்மை நாம் "மாற்று அணி” என்று அழைத்த போதிலும் கூட கட்சியின் யாப்பின் பிரகாரம் உண்மையான கட்சி நாம்தான் என்பதற்கான சட்ட நியாயத்தை இந் நீண்ட மடலில் பின்னர் விளக்கலாம் என நினைக்கிறேன்.
கடந்த இரண்டு வருடங்களுக்கு மேலாக கட்சியின் உயர்பீடக் கூட்டங்களில்
பிரதித் தலைவர் சட்டத்தரணி என்.எம்.ஷஹிதும் நானும் தங்களது எதேச்சாதிகாரப்

Page 5
O4.
போக்குக்கு எதிராக குரல் கொடுத்து வந்ததை மறுக்க மாட்டீர்கள். குறிப்பாக ஐக்கிய தேசியக் கட்சி 2001ம் ஆண்டு ஆட்சியமைத்த கையோடு கட்சித்தாவல் சட்டமூலத்தைக் கொண்ட வர முயற்சித்த போது, அச்சட்டமூலத்தை ஆதரிக்க வேண்டுமென தாங்கள் கட்சியின் உயர் பீடத்திற்கு பிரேரணை கொண்டு வந்தீர்கள். அவ்வாறு செய்தால் ஐ.தே.கட்சி மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெற்று விடும். அதன் மூலம் முஸ்லிம்களின் அரசியல் பலம் சிதைந்து விடும். இவ்வாறான சமுதாயத்துக்கும் கட்சிக்கும் எதிரான ஒரு சட்ட மூலத்திற்கு என்ன லாபத்திற்காக நாம் ஆதரவளிக்க வேண்டும்” என்று முதலாவதாக அக்கூட்டத்தில் எதிர்த்துப் பேசியது நான் என்பதை மறந்திருக்க மாட்டீர்கள். அதனைத் தொடர்ந்து, இன்று உயர் பீடத்தில் இருக்கின்ற, நீங்கள் சொல்வதற்கெல்லாம் தலையாட்டுபவர்களைப் போலல்லாது, இறைமை யுடையவர்கள் அன்று இருந்ததால் நீங்கள் அதனைக் கைவிட வேண்டி ஏற்பட்டதும் அதன் பின் முறுகல் நிலை அதிகரித்து, அவர்களில் பலரை கட்சியை விட்டு நீங்கள் விலக்கியதும் நடந்த முடிந்த துயரக் கதைகளாகும்.
உங்களுக்கு முஸ்லிம் காங்கிரஸை விட, ஐ.தே.கட்சியே முக்கியம் என்பது எங்களுக்கு அப்போதே தெரிந்திருந்தது. ஐ.தே.கட்சிக்கு உதவுகின்ற ஓர் உபகரணமாகத்தான் முஸ்லிம் காங்கிரஸை நீங்கள் பாவித்து வருகிறீர்கள் என்பதும் தெரிந்திருந்தது. இதனைப் பொறுக்க மாட்டாமல்தான் சகோதரர் அதாவுல்லாஹ் போன்றவர்கள் உங்களைக் கட்சியில் இருந்து விலக்க முற்பட்டனர். கட்சியின் யாப்பில் உங்களுக்குச் சாதகமாக இருக்கின்ற சரத்துக்களைப் பயன்படுத்தி அவர்களைக் கட்சியிலிருந்து விலக்கி விட்டு, உங்களுக்கு வேண்டியவர்களைக் கட்சியின் உயர் பீடங்களில் அமர்த்தி, உங்களை நீங்கள் பலப்படுத்திக் கொண்ட போதும் கட்சியின் நன்மை கருதி கட்சியின் உட்கட்டமைப்புக்குள் இருந்து போராடிப் பார்ப்போம்" என்று தான் நாமும் இதுவரை போராடி வந்தோம். t
ஆனால் ஆட்டைக் கடித்து, மாட்டைக் கடித்து, ஆளையே கடித்ததாம் என்பது போல, நீங்கள் எழுத்து மூலமாகவே முஸ்லிம் காங்கிரஸை ஐ.தே.கட்சிக்குத் தாரை வார்த்த பின்பும் வாய் மூடி, மெளனியாக இருக்க முடியுமா? அப்படியிருந்தும் கூட கடந்த மூன்று. நான்கு மாதங்களாக கட்சியின் உட்கட்டமைப்புக்குள் போராடிப் பார்த்தோம். "இவ்வொப்பந்தத்தைக் கிழித்து வீசுங்கள்” என்றோம். முடியவில்லை. அதே வேளை இவ்வொப்பந்தம் சமாதானத் தீர்வில் முஸ்லிம்களுக்கான பங்கினைப் பெற்றுக் கொள்ளுகின்ற முயற்சியில் முஸ்லிம் காங்கிரஸ் சுயமாகச் செயல்படுவதைக் கூடக் கட்டுப்படுத்துகிறது என்ற நிலைமை எழுந்த பின்பும் வாய் மூடி மெளனியாக இருந்தால், அது கட்சிக்கும் சமுதாயத்துக்கும் செய்கின்ற பச்சைத் துரோகமாகத்தான் இருக்கும்.
இவ்வொப்பந்தத்தைப் பற்றி இம்மடலினுாடே சற்று விரிவாக ஆராய்வது அவசியம் என நினைக்கிறேன்.
நமது கட்சிக்கும் ஐ.தே.கட்சிக்குமிடையில் செய்யப்பட்ட உண்மையான ஒப்பந்தம்

O5
என்ன என்பது பற்றி உங்களுக்குத் தெரியும். இவ்வொப்பந்தத் தயரிப்பில் நமது கட்சியின் சார்பில் ஈடுபட்ட மூவரில் நானும் ஒருவன் என்பது மாத்திரமல்ல, இம்மூவரில் கட்சியின் அதியுயர் பீடத்தில் அங்கம் வகிப்பவன் நான் மட்டுமே என்ற வகையில் தங்களின் வேண்டுகோளின் பேரில் இவ்வொப்பந்த நகலை அதியுயர் பீட அங்கத்தவர்களுக்குத் தமிழில் மொழி பெயர்த்ததும் நானே என்பதையும் மறந்திருக்க மாட்டீர்கள். அவ்வாறு எல்லோருக்கும் தெரிந்த ஒப்பந்தம் ஒன்று இருக்க, உண்மையான ஒப்பந்தத்தைத் தயாரித்தவர்களுக்கோ அல்லது அதியுயர் பீடத்துக்கோ தெரியாமல் திருத்தப்பட்ட ஒப்பந்தம்” என்ற பெயரில் திருட்டுத்தனமான ஒப்பந்த மொன்றை ஐ.தே.கட்சியுடன் செய்வதற்கு உங்களுக்கு அதிகாரமளித்தது யார்?
தனிப்பட்ட முறையில் யாருக்கும் தெரியாமல் ஒரு திருட்டு ஒப்பந்தம் செய்வதற்கு இந்தக் கட்சி உங்கள் தனிப்பட்ட சொத்தா? இவ்வாறான ஓர் ஒப்பந்தம் செய்ததற்குக் கைமாறாக ஐ.தே.கட்சியிடம் நீங்கள் பெற்றுக் கொண்டது என்ன? அதையாவது கூறுவீர்களா?
தேர்தல் முடிவடைந்து சுமார் நான்கு மாதங்களின் பின்னர் வழக்கு ஒன்றில் (மூன்று பாராளுமன்ற உறுப்பினர்களை நீக்க முயற்சியெடுக்கப்பட்ட வழக்கு வெளியில் கொண்டுவர வேண்டிய சந்தர்ப்பம் ஏற்படாமல் இருந்திருந்தால் இன்று வரை இவ்வொப்பந்தம் பற்றி யாருக்கும் தெரிந்திருக்க மாட்டாது. ஏன் இந்தச் சதியைச் செய்தீர்கள்? சமுதாயத்தையும் கட்சியையும் ஏன் ஐ.தே. கட்சிக்கு விற்றீர்கள்?
இவ்வொப்பந்தம் பற்றி அறிந்ததும் நாங்கள் அதியுயர்பீடக் கூட்டத்தில் (High Command) இது தொடர்பாகக் கேள்வி எழுப்பிய போது அதியுயர்பீடத்திலுள்ள உங்களது அடிவருடிகளைக் கொண்டு காட்டுக் கூச்சல் போட வைத்து, நியாயம் வெளி வருவதை தடுக்க முயற்சிக்கவில்லை என்று. நீங்கள் ஓர் உண்மையான முஸ்லிமாக இருந்தால் கூற முடியுமா? அதன் பின்னர் நடந்த உயர்பீடக் கூட்டத்தில் (Polithureau) (உங்கள் வருகைக்கு முன் தவிசாளர் பவர் செய்கு தாவுத் தலைமை தாங்கிக் கொண்டிருந்தார்) நான் இவ்விவகாரத்தை எழுப்பிய போது, "இவ்விவகாரத்தைப் பற்றிப் பேசக் கூடாது" என்றுதலைமை தாங்கியதவிசாளர் அனுமதி மறுக்க, அந்தக் கூட்டத்தில் அதனை எதிர்த்து நான் வெளிநடப்புச் செய்ததை உங்களால் மறுக்க முடியுமா?
கீழ்வரும் சரத்துக்களை உங்கள் திருட்டு ஒப்பந்தத்தில் சேர்த்ததற்கான நியாயத்தை சமுதாயத்துக்கு உங்களால் கூற முடியுமா?
ஒரு சரத்து கூறுகிறது.
"The parties agree that the SLMC shall be regarded as a distinct party in Parliament subject however that its members shall be under the UNP Whip...............
"Uநீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்றத்தில் ஒரு தனிக் கட்சியாகக் கருதப்படும். ஆயினும் பாராளுமன்றத்தில் உள்ள அதனது உறுப்பினர்கள் ஐ.தே.கட்சி

Page 6
O6 கொறடாவின் கீழ் செயற்பட வேண்டும்.”
அதாவது ஐ.தே.கட்சிப் பட்டியலில் தெரிவு செய்யப்பட்ட அல்லது நியமிக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் மாத்திரமல்ல, மரச் சின்னத்தின் கீழ் போட்டியிட்டு வெற்றி பெற்ற தலைவர் உட்பட) பாராளுமன்ற உறுப்பினர்களும் ஐ.தே.கட்சி கொறடாவின் கீழ் செயற்பட வேண்டும். நீங்கள்தலைவராக இருக்க உங்களையும் ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்களையும் மொத்தமாக ஐ.தே.கட்சி கொறடாவின் கீழ் செயற்பட வைக்க வேண்டிய ஒரு வெட்கக் கேடான அடிமைச் சரத்தை சேர்த்ததற்கு நீங்கள் ஐ.தே.கட்சி யிடமிருந்து பெற்றுக் கொண்ட பகரம் என்ன?
தலைவர் உட்பட முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஐ.தே.கட்சி கொறடாவின் கீழ் செயற்படும் போது முஸ்லிம் காங்கிரஸை தனிக் கட்சியாகக் கருதுவதற்கு மீதி என்ன இருக்கிறது? முஸ்லிம் காங்கிரஸ் தனிக் கட்சி. ஆனால் அதன் பாராளுமன்ற உறுப்பினர்களோ ஐ.தே.கட்சி கொறடாவின் கீழ், அப்படியென்றால் பாராளுமன்ற உறுப்பினர்கள் தவிர்ந்த முஸ்லிம் காங்கிரஸ் தனிக்கட்சியாகக் கருதப்படும் என்பதா? யாரை ஏமாற்றப் பார்க்கிறீர்கள்? இந்த சரத்தைச் சேர்ப்பதில் உள்நோக்கம் இல்லாமலிருந்திருந்தால் ஏன் உண்மையான ஒப்பந்தத்தில் அது சேர்க்கப்பட்டிருக்கவில்லை? ஏன்? நாங்கள் அனுமதித்திருக்க மாட்டோம் என்ற அச்சமா? உங்கள் துரோகத்தனத்திற்கு நாங்கள் எவ்வாறு துணை போக முடியும்?
முஸ்லிம்களின் கைகளுக்கும் கால்களுக்கும் இடப்பட்ட அடிமை விலங்கை உடைத்தெறிய மறைந்த மாமனிதரால் உருவாக்கப்பட்ட இக்கட்சிக்கே அடிமை விலங்கை இட்டு விட்டீர்களே! இவ்விலங்கை உடைக்கின்ற பணியைச் செய்வது யார்? இன்னுமொரு கட்சியை உருவாக்கி இப்பணியைச் செய்வதை விட இக்கட்சிக்குள்ளேயே ஒரு மாற்று அணியாகச் செயற்பட்டு உங்களது கட்சி விரோத, சமூக விரோத நடவடிக்கைகளை முறியடிக்க வேண்டிய சமூகக் கடமை எம்மீது இல்லை என்கிறீர்களா? உங்கள் துரோகச் செயல்களுக்கு துணை போகாவிட்டால் தலைவர் என்ற ஆயுதத்தைப் பயன்படுத்தி எங்களைக் கட்சியில் இருந்து விலக்குவீர்களா? அதன் பின்னர் நாங்கள் கட்சி இல்லை. நீங்கள்தான் கட்சியா?
வரலாற்று ரீதியாக இந்நாட்டின் பெரும்பான்மை முஸ்லிம்கள் ஐ.தே.கட்சிக்கே வாக்களித்து வந்திருக்கிறார்கள். ஆனால் முஸ்லிம் காங்கிரஸின் வரவு. ஐ.தே.கட்சியின் முஸ்லிம் வாக்கு வங்கியில் ஒரு பாரிய சரிவை ஏற்படுத்திவிட்டது. அந்தச் சரிவை இன்று உங்களூடாக முஸ்லிம் காங்கிரஸ் என்ற பெயரில் ஐ.தே.கட்சி மிகவும் கன கச்சிதமாக ஈடு செய்து கொண்டிருக்கிறது. இதற்குப் பின்னால் சில வேளை சர்வதேச சியோனிச அமைப்புகள் செயற்பட்டிருந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
ஏனெனில் சோவியத் யூனியனின் வீழ்ச்சிக்குப் பிறகு இன்றைய உலகின் ஏக வல்லரசான அமெரிக்காவும் மேற்கத்திய உலகும் இஸ்லாமிய சக்திகளைத்தான்
தங்களுக்கு எதிரான சக்திகளாகப் பார்க்கின்றன. எனவே முஸ்லிம்கள் உலகின்

Ο 7
எந்தவொரு மூலையிலும் அரசியல் ரீதியாகவோ அல்லது வேறு வகையிலோ ஒற்றுமைப்பட்டு, ஒரு சக்தியாக உருவெடுப்பதை அவை விரும்பவில்லை. எனவே அதனை முறியடிப்பதற்காக கோடிக்கணக்கான டொலர்களை செலவு செய்யத் தயாராக இருக்கின்றன, செலவு செய்து கொண்டிருக்கின்றன. இந்தப் பின்னணியில்தான் இன்று அமெரிக்கா, சர்வதேச பயங்கரவாத முறியடிப்பு என்ற போர்வையில் இஸ்லாமிய உலகில் மூக்கை நீட்டிக் கொண்டிருக்கிறது.
அண்மைக் காலமாக இலங்கை அரசியல் விவகாரங்களில் அமெரிக்காவின் தலையீடு அதிகரித்திருப்பதும் பத்திரிகை வாசிப்பவர்களுக்குத் தெரியும். குறித்த "தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர்” ஒருவர் கடந்த ஆட்சிக் காலத்தில் பல தடவை அமெரிக்கா சென்று வந்திருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் Uநீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், ஐ.தே.கட்சிக்கு அடிமைப் பட்டதன் பின்னணி, ஒரு சர்வதேச சியோனிச வலைப் பின்னலுக்குள் சிக்கியிருக்கின்றதா? என்ற ஒரு கேள்வியும் இன்று பரவலாக எழுப்பப்பட்டுக் கொண்டிருக்கிறது.
இத்திருட்டு ஒப்பந்தத்தில் இச்சந்தேகத்தை வலுப்படுத்தும் மற்றுமொரு சரத்து சேர்க்கப்பட்டிருப்பதும் இங்கு ஈண்டு கவனிக்கத் தக்கது. அச்சரத்து பின்வருமாறு கூறுகிறது.
"It is further agreed between the Parties that on matters concerning the general interests of the Muslim Community as a whole in the Country, the SLMC is free to make decisions thereon after prior consultation and discusSi On With the Leader Of the UNP. "
அதாவது, “நாட்டிலுள்ள முழு முஸ்லிம் சமுதாயத்தினதும் பொது நலன் தொடர்பான விடயங்களில் Uநீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சுயமான முடிவுகளை எடுக்க முடியும். ஆயினும் அவ்வாறான முடிவுகளை எடுக்க முன் ஐ.தே.கட்சித்தலைமையுடன் கலந்துரையாடி அவரது ஆலோசனையையும் பெற வேண்டும்.”
முதலாவது, முஸ்லிம்களின் பொதுநலன் தொடர்பான முடிவுகளில் ஐ.தே.கட்சித் தலைமைத்துவத்தின் ஆலோசனை ஏன் பெறப்படவேண்டும் என்பதற்கு நீங்கள் கூறும் பதில் என்ன? ஐ.தே.கட்சி, ஜம்இய்யத்துல் உலமா போன்ற ஒரு ஸ்தாபனமா? அல்லது ஐ.தே.தலைவர் இஸ்லாமிய மதத்தலைவரா? இதன் பின்னணி என்ன?
"அவ்வாறு ஆலோசனை பெற்றாலும் இந்த சரத்தின் படி முஸ்லிம் காங்கிரஸுக்கு சுயமான முடிவுகளை எடுக்கும் உரிமை இருக்கிறது” என்றொரு வாதத்தை நீங்கள் முன்வைத்து வருகிறீர்கள். முஸ்லிம் காங்கிரஸுக்கு அவ்வாறான முடிவு எடுக்கும் உரிமை உண்டென்பதை ஐ.தே.கட்சி, ஒப்பந்த மூலம் சொல்லியா அது கிடைக்க வேண்டும்? முஸ்லிம்கள் தொடர்பாக சுயமான முடிவுகளை எடுப்பதற்காகத்தானே Uநீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உருவாக்கப்பட்டது. ஆனால் அந்த சுயமான முடிவு

Page 7
Ο8 எடுக்கும் உரிமையை பெயரளவில் குறிப்பிட்டு விட்டு அதற்கு அருகில் நிபந்தனை களையும் விதித்து, அந்த சுதந்திரமான முடிவெடுக்கும் உரிமையை கட்டுப்படுத்துவதற்கு ஐ.தே.கட்சிக்கு என்ன உரிமை இருக்கிறது? அதற்குத் துணை போவதற்கு நீங்கள் யார்? எதிர் காலத்தில் முஸ்லிம் காங்கிரஸ், முஸ்லிம்கள் தொடர்பாக எடுக்கப் போகின்ற முடிவுகளில் ஐ.தே.கட்சித் தலைமையின் கருத்துக்கள் தாக்கம் செலுத்தப் போகின்றன என்பதை நீங்கள் மறுக்க முடியுமா?
கட்சியின் மவுறா தீர்மான முறைப்படி தலைவர் எதுவித முன்முடிவும் இல்லாமல் கட்சியின் அதியுயர் பீடக் கூட்டத்திற்கு வந்து, அங்கத்தவர்களின் கருத்துக்களைக் கேட்ட பின்பு, இஹ்றலாஸான எண்ணத்தோடு, அல்லாஹ்வுக்காக, சமுதாய நன்மை கருதி முடிவுகளை அவர் அக் கூட்டத்தில் எடுக்க வேண்டும். ஆனால் ஐ.தே.கட்சி சொல்லுவதைக் கேட்டுக் கொண்டு வந்து பெயருக்கு அதியுயர் பீடக் கூட்டத்தை நடாத்தி விட்டு, ஐ.தே.கட்சித் தலைவரின் தீர்மானத்தை முஸ்லிம் காங்கிரஸின் தீர்மானமாக தலைவர் அறிவிப்பார். அதற்குக் கட்சியின் அதியுயர் பீட அங்கத்தவர்களும் பாராளுமன்ற உறுப்பினர்களும் போராளிகளும் கட்டுப்பட்டு வாய் மூடி மெளனிகளாக இருக்க வேண்டும். முஸ்லிம்கள் தொடர்பான தீர்மானங்களில் ஐ.தே.கட்சியுடன் கலந்தாலோசனை செய்வதற்கு, ஐ.தே.கட்சியின் நலன் என்ன தங்கியிருக்கிறது என்பதை விளக்குவீர்களா? மாறாக “ஐ.தே.கட்சி, முஸ்லிம்கள் தொடர்பான தீர்மானங்களில் முஸ்லிம்களை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற Uநீலங்கா முஸ்லிம் காங்கிரஸைக் கலந்தாலோசிக்க வேண்டும்” என்றொரு சரத்து ஏன் சேர்க்கப்படவில்லை? உண்மையில் இங்கு கலந்தாலோசிக்கப்பட இருப்பது ஐ.தே.கட்சியின் நலனா, அமெரிக்காவினதும் சியோனிச சக்திகளினதும் நலனா, என்பதையாவது தெளிவு படுத்துவீர்களா?
எல்லாவற்றுக்கும் மேலாக, இச்சரத்து சேர்க்கப்பட்டதில் உங்களுக்குத் தூய்மையான எண்ணம் இருந்திருப்பின் அல்லது நியாயமான காரணங்கள் இருந்திருப்பின் இந்த சரத்து எல்லோரதும் அங்கீகாரத்தைப் பெற்ற உண்மையான ஒப்பந்தத்தில் ஏன் சேர்க்கப்படவில்லை? அதை ஏன் திருட்டு ஒப்பந்தத்தில் சேர்த்தீர்கள்? இந்த சரத்தை சேர்ப்பதற்கான தெளிவான காரணம், சுருங்கக் கூறின், ஐ.தே.கட்சியின் கொறடாவின் கீழ் பாராளுமன்ற உறுப்பினர்களைக் கொண்டு வந்து கட்டி வைத்தது போல், கட்சியின் தீர்மானமெடுக்கும் அதியுயர் பீடம் உட்பட முழுக் கட்சியையும் மறைமுகமாகக் கட்டுப்படுத்துவதுதான் என்பது வெள்ளிடைமலையாகும். போதாக்குறைக்கு, “ஐ.தே.கட்சிப் பட்சியலில் போட்டியிடுகின்ற முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளர்கள். அப்பட்டியல்களில் தெரிவு செய்யப்படுகின்ற அல்லது தேசியப்பட்டியலில் நியமிக்கப்படுகின்ற பாராளுமன்ற உறுப்பினர்கள் ஐ.தே.கட்சி அங்கத்தவர்களாகக் கருதப்படுவார்கள்.” என்றொரு சரத்தும் சேர்க்கப்பட்டிருக்கிறது.
அதன் ஆங்கில வாசகம் பின்வருமாறு கூறுகின்றது.

O9 "All candidates nominated by the SLMC and accepted by the UNP to be candidates on the UNP District ListS or the UNP National List at the forthcoming General Elections or entering Parliament Subsquently through a UNP District List Or as a nominated member of Parliament upon nomination by the UNP, Shall be deemed to be members of the UNP."
யாருக்கும் தெரியாமல் திருட்டு ஒப்பந்தமொன்றின் மூலம் முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளர்களையும் பாராளுமன்ற உறுப்பினர்களையும் ஐ.தே.கட்சி அங்கத்தவர்களாக மாற்றுவதற்கு உங்களுக்கு என்ன உரிமை இருக்கின்றது? ஐ.தே.கட்சியின் கட்டளைக்கு அடிபணிய வேண்டிய அவசரத்தில் ஒருவருடைய சம்மதத்தைப் பெறாமல் அவரை ஓர் அரசியல் கட்சியில் அங்கத்தவராக்குவதன் மூலம் இலங்கை அரசியல் யாப்பில் ஒருவருக்கு வழங்கப்பட்டுள்ள அடிப்படை உரிமையையே மீறியிருக்கிறீர்கள் என்பதைக் கூடப் புரிந்து கொள்ளவில்லையா?
நீங்கள் தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் கட்சியின் நன்மைக்காக இதைச் செய்ததாகக் கூறினீர்கள். ஆனால் கட்சிக்கு இதனால் கிடைத்த நன்மை என்ன? அவ்வாறு அது கட்சிக்கு நன்மையான விடயம் என்றால் ஏன் அதனை எல்லோருக்கும் தெரிந்த உண்மையான ஒப்பந்தத்தில் சேர்க்கவில்லை? என்ற கேள்விகளுக்கு நீங்கள் பதிலளிக்கவில்லை? உங்களிடம் பதில் இல்லை என்பது ஒரு புறமிருக்க, உங்கள் திருட்டு ஒப்பந்தம், முஸ்லிம் காங்கிரஸின் நன்மைக்காக இச்சரத்து சேர்க்கப்பட்டதாகக் கூறவில்லை. மாறாக ஐ.தே.கட்சியின் வேண்டுதலில் இச்சரத்து சேர்க்கப்பட்டதாகத்தான் அதன் முகவுரையில் கூறுகின்றது.
" And whereas the UNP has required that all members of the SLMC contesting any parliamentary Seat as a candidate On a UNP District list or any
members of the SLMC included in the UNP National List or Subsquently nominated to Parliament by the UNP would also be members of the UNP."
அதாவது, “ஐ.தே.கட்சியின் மாவட்டப் பட்டியலில் போட்டியிடுகின்ற சகல முஸ்லிம் காங்கிரஸ் அங்கத்தவர்களும் அல்லது அதன் தேசியப்பட்டியலில் இடம்பெற்றிருக்கின்ற அங்கத்தவர்களும் அல்லது அதன் பின்னர் பாராளுமன்றத்திற்கு ஐ.தே.கட்சியினால் நியமிக்கப்படுகின்ற அங்கத்தவர்களும் ஐ.தே.கட்சியின் அங்கத்தவர்களாக
இருப்பார்கள் என்று ஐ.தே.கட்சி வேண்டிக் கொண்டதற்கிணங்க"
எனவே ஐ.தே.கட்சியின் வேண்டுகோளிற்கிணங்க என்று ஒப்பந்தம் சொல்கிறது. முஸ்லிம் காங்கிரஸ் (உங்களால் வெளியில் சொல்ல முடியாத நன்மைக்காக என்று நீங்கள் மக்களை ஏமாற்றப் பார்க்கிறீர்கள். அதே நேரம் நமது கட்சி யாப்பின் சரத்து 41 பின்வருமாறு கூறுகிறது.

Page 8
1Ο 4:l Elgibility
"Any person who has attained the age of 15 years and not a member of any other political group and is prepared
a. To accept and abide by the provisions of this Constitution; and..."
தகைமை (அங்கத்தவராக இருப்பதற்கு
அதாவது, “ஒருவர் கட்சியில் அங்கத்தவராவதற்கு 15 வயதை அடைந் திருப்பதோடு வேறு எந்தவொரு அரசியல் பிரிவிலும் (கட்சி) அங்கத்தவராக இருக்கக் கூடாது. அத்தோடு கட்சியின் யாப்பின் சரத்துக்களை ஏற்றுக் கொண்டு கட்டுப்பட்டு நடப்பதற்குத் தயாராக இருக்க வேண்டும்.
சரத்து 44 பின்வருமாறு கூறுகிறது.
4:4 LOSS Of Membership
"Any member of the Party who at any point of time is found to
have lost One or more of the aforsaid fundamental characteristics or fails and / or refuses to accept or abide by the provisions of the Constitution, the rules
and regulations............. shall be liable to be summarily dismissed from the membership and expelled from the Party by the High Command"
"கட்சியின் அங்கத்தவர் ஒருவர் மேற் குறிப்பிட்ட அடிப்படைத் தகைமைகளில் ஒன்றையோ அல்லது பலவற்றையோ இழந்தால் அல்லது கட்சியின் யாப்பின் சரத்துக்களை, விதிகளை . ஏற்றுக் கொள்ள அல்லதுஅவற்றுக்குகக் கட்டுப்பட மறுத்தால் கட்சியின் அதியுயர் பீடத்தினால் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு கட்சியின் அங்கத்துவத்தில் இருந்து நீக்கப் பட்டு கட்சியில் இருந்தும் வெளியேற்றப்படல் வேண்டும்.”
கட்சியின் யாப்பு, கட்சியின் அங்கத்தவரொருவர் இன்னுமொரு கட்சியில் அங்கத்தவராவதை பரி பூரணமாகத் தடுத்திருக்கும் போது, கட்சியின் யாப்புக்குக் கட்டுப்பட மறுத்து கட்சி யாப்பின் விதிகளை ஐ.தே.கட்சியின் வேண்டுகோளை ஏற்று மீறியமைக்காக, தாங்கள் கட்சியின் அங்கத்துவத்திலிருந்து நீக்கப்பட்டு கட்சியிலிருந்து வெளியேற்றப்பட வேண்டும். அதே நேரம் கட்சி யாப்பின் பிரகாரம் உங்கள் மீது நடவடிக்கை எடுக்கத் தவறிய அதியுயர்பீட (High Command) அங்கத்தவர்களுக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு கட்சியிலிருந்த வெளியேற்றப்பட வேண்டும்.
இவை ஒரு புறமிருக்க, இவ்வளவு சாதகமான ஓர் ஒப்பந்தத்தை எழுதிய போதும் ஐ.தே.கட்சி திருப்தியடையவில்லை. அதனால்தான் புதிதாக தேசியப் பட்டியலில் நியமிக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களை தங்களது கட்சியில் நேரடியாக விண்ணப்பப் படிவம் நிரப்ப வைத்து தங்களது சட்டபூர்வமான அங்கத்தவர்களாகவே
ஆக்கி விட்டார்கள். அன்று முஸ்லிம் லிக்கை ஓர் அரசியல் கட்சியாகப் பதிவதற்காக

11
டாக்டர் கலில் அவர்கள் தேர்தல் ஆணையாளரிடம் சென்ற போது, "முஸ்லிம் லீக்கை ஓர் அரசியல் கட்சியாகப் பதிவதற்கு அதற்கு சகல தலைமைகளும் இருக்கின்றன. ஆனால் நீங்கள் ஐ.தே.கட்சியிலும் அங்கத்தவராக இருப்பதால் (அப்போது அவர் ஐ.தே.கட்சியின் தவிசாளராக இருந்தார்) முஸ்லிம் லீக்கைப் பதிவதில் பிரச்சினை இருக்கின்றது. நீங்கள் எந்தக் கட்சியில் இருக்க விரும்புகிறீர்கள் என்பதைத் தீர்மானித்துக் கொண்டு வாருங்கள்” என்று திருப்பி அனுப்பியதால் முஸ்லிம் லீக்கை ஓர் அரசியல் கட்சியாகப் பதிவதே நின்று விட்ட வரலாறு இருக்கிறது.
கட்சியின் தவிசாளர், கட்சியின் யாப்பு விவகாரப் பணிப்பாளர், கட்சியின் தேசிய அமைப்பாளர் ஆகியோர் இன்னுமொரு கட்சியில் அங்கத்தவராகி இருக்கிறார்கள். “கட்சி யாப்பை மீறி பாராளுமன்ற உறுப்பினர் பதவிகளுக்காக மாற்றுக் கட்சிகளில் அங்கத்தவராகியவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுங்கள்” என்று நாங்கள் எவ்வளவு கேட்ட போதும் நீங்கள் நடவடிக்கை எடுக்கவில்லை. மாறாக, அவர்கள் ஐ.தே.கட்சியில் அங்கத்துவம் பெற்றதை ஆதரித்துப் பேசி வருகிறீர்கள். இதன் மூலம் நீங்களும் உங்களின் இந்த நிலைப்பாட்டை ஆதரிக்கின்றவர்களும் கட்சி யாப்புக்குக் கட்டுப்பட மறுத்திருக்கின்றீர்கள். எனவே நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டு நீங்களும்உங்களது இந்த நிலைப்பாட்டை ஆதரிக்கின்ற உயர்பீட அங்கத்தவர்களும் கட்சியிலிருந்து வெளியேற்றப்பட வேண்டியவர்கள். இந்நிலையில் பிரதித் தலைவர் என்.எம்.ஷஹிதும் நானும் தொடர்ச்சியாக இச்சட்டவிரோத செயல்களுக்கெதிராக குரல் கொடுத்தும் வெற்றி பெற முடியவில்லை. கட்சி யாப்பின் விதிகளுக்கமைய, கட்சி யாப்புக்கு விசுவாசம் தெரிவித்து, கட்சி யாப்பு விதிகளை மீறியவர்களுக்கெதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டைக் கொண்டவர்கள் இருவர். யாப்பு விதிகள் வேண்டுமென்றே மீறப்படுவதற்குத் துணை போய், யாப்பிற்கு விசுவாசமின்மையை வெளிக் காட்டி, கட்சியின் அங்கத்துவத்தை சட்ட ரீதியாக இழந்து நிற்பவர்கள் அதியுயர் பீடத்தைச் சேர்ந்த ஏனையோர்.
இந்நிலையில் தொடர்ந்தும் நாங்கள் கட்சியின் அங்கத்துவத்தை இழந்து நிற்பவர்களுடன் இணைந்து செயற்பட்டால் அவர்களது யாப்பு மீறல்களுக்கு நாமும் துணை போனவர்களாகி, யாப்பு விதிகளின் பிரகாரம் எமது அங்கத்துவத்தை இழக்க வேண்டி ஏற்படும். இந்நிலையில் கட்சியின் அங்கத்துவத்தை இழந்தவர்களை ஒதுக்கி விட்டு, கட்சியின் சட்டபூர்வ அங்கத்தவர்களாகிய நாம் இருவரும் கட்சியின் சட்டபூர்வ அதியுயர் பீடமாகச் செயற்பட்டு வருகிறோம். இங்கு சட்டப் பிரச்சனை எழுந்தள்ளதால் கட்சியைப் பாதுகாப்பதற்காக எதிர்காலத்தில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கை குறித்து சட்ட ஆலோசனை நடத்தி வருகிறோம். எனவே உண்மையான அரசியல் அதியுயர் பீடமாக நாமே செயற்படுவதால் நாம் முஸ்லிம் காங்கிரஸ் மாற்றுக் குழுவல்ல நாமே உண்மையான முஸ்லிம் காங்கிரஸ் ஆகும்.
ஆயினும் தேர்தல் ஆணையாளரைப் பொறுத்த வரையில் கட்சியின் தலைவர்

Page 9
12
பதவியும் லாளர் பதவியும் கட்சியின் அங்கத்துவத்தை இழந்தவர்களுக்கு மத்தியில் இருப்பதாலும் கட்சியின் அதியுயர் பீடத்தில் சட்ட பூர்வமான அங்கத்தவர்களாக நாம் இருவர் மாத்திரமே எஞ்சியிருப்பதாலும் இவர்களுக்கு எதிராக எந்த வகையில் ஒழுக்காற்று pLഖകങ്ങക எடுத்து. இவர்களைப் பூரணமாக கட்சியில் இருந்தும் இவர்கள் வகிக்கின்ற பதவிகளில் இருந்தும் வெளியேற்றி, முஸ்லிம் காங்கிரஸை பேரினவாத சக்திகளின் பிடியிலிருந்து விடுவித்து முஸ்லிம் சமுதாயத்தின் விடுதலை இயக்கமாக, அதனை 8ண்டும் முன்னெடுத்துச் செல்வது என்பதற்கான முஸ்தீபுகளில் இறங்கியிருக்கிறோம். சட்ட ரீதியாக இப்பிரச்சினைக்குரிய தீர்வுகள் எட்டப்படும் வரை பொது மக்கள் குழம்பிவிடக் கூடாது என்பதற்காக, தற்காலிகமாக முஸ்லிம் காங்கிரஸ் LDfT sp(D) அணி என்ற பெயரில் இயங்கிக் கொண்டிருக்கின்றோம். எனவேதான் உங்களைத் தலைவர் என்று அழைப்பதில் சட்டப் பிரச்சினை இருக்கிறது என்று ஆரம்பத்தில் குறிப்பிட்டேன்.
இதே நேரம் ஏற்கனவே எழுப்பப்பட்ட இரண்டாவது கேள்விக்குரிய விடைக்கு வரலாம் என்று நினைக்கிறேன். அதாவது நாம் அரசுக்கு ஏன் ஆதரவளிக்க முடிவு செய்தோம் என்பது மறு வார்த்தையில் சொல்லப் போனால், ஐ.தே.கட்சிக்கு நீங்கள் கொடுத்த ாக்குறுதியை நிறைவேற்ற முடியவில்லையே என்ற விரக்தியில் நீங்கள் “பதவிகளுக்காகச் சோரம் போய் விட்டார்கள்”, “எலும்புத் துண்டுகளுக்காகப் போய்விட்டார்கள் என்று எங்களை வைது கொண்டிருக்கின்ற கேள்விக்குரிய பதில்.
ஒள்விக்குரிய பதிலுக்கு வரமுன்னர், உங்கள் கூற்றுத் தொடர்பாகச் சில ஒன்றிகளைக் கேட்க விரும்புகின்றன். அமைச்சுப் பதவிகளை நீங்கள் "எலும்புத் துண்டுகள்" என்கிறீர்கள். அப்படியாயின் கடந்த அரசாங்கத்தில் நீங்கள் பெற்றுக் கொண்டதும் எலும்புத் துண்டுதானா? என்று கேட்க விரும்புகின்றேன். ஏனெனில் நீங்கள் நோக்கத்தை "எலும்புத் துண்டு” என்று கூறவில்லை. நோக்கம் எதுவாயினும், பெற்ற அமைச்சுப்பதவியைத்தான் எலும்புத்துண்டு என்கிறீர்கள். உலகில் எந்தவொரு நாட்டினதும் அரச இயந்திரமே அமைச்சுக்களாகத்தான் பிரிக்கப் படுகின்றன. அக்ப்பதவி "எலும்புத் துண்டு” என்றால், எலும்புத் துண்டுகளின் சேர்க்கைதானா 9igg இயந்திரம் என்பது? அல்லது அரசாங்கம் என்பது? அந்த அரச இயந்திரத்தைக் கைப்பற்றுவதற்காகத்தான் ஒருநாட்டு மக்கள் வாக்களிக்கிறார்கள். வெற்றி பெற்றாலும் g|lि, தோல்வி அடைந்தாலும் சரி, இலக்கு அதுதான். அவ்வாறாயின் எலும்புத் துண்டுகளுக்காகத்தான் நாட்டு மக்களே வாக்களிக்கின்றார்களா?
உங்களது அரசியல் எஜமானான ஐ.தே.கட்சித் தலைமைப் பீடத்திடம் கேட்டுப் பார்த்தீர்களா? உங்கள் கூற்றுச் சரிதானா என்று? கவனம் ஐ.தே.கட்சியின் தலைமை உங்களது கூற்றைப் பற்றிக் கேள்விப் பட்டால் தானும் இந்த எலும்புத் துண்டுகளின் முந்ந்காகத்தான் ஒரு கட்சியை நடத்துவதாக நினைத்து, உங்கள் மீது ஆத்திரப்
படக் கூடும்

13
அரசாங்கத்துக்கு ஆதரவளிக்கும் முடிவை சமுதாயத்தினதும் கட்சியினதும் நன்மை கருதி, கட்சியின் கொள்கைகளையும் இலட்சியங்களையும் அடிப்படையாக வைத்து, எமது சட்ட பூர்வ அரசியல் அதியுயர் பீடமே எடுத்தது என்பதை முதலில் தங்களுக்குத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். அதற்கான அடிப்படை நியாயங்களை இங்கு தருகின்றேன்.
கடந்த தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் நாடு பூராகவும் தனித்துப் போட்டியிட வேண்டும் என்ற ஆவேசம் இருந்ததை யாவரும் அறிவர். அதே நேரம் கட்சியின் உயர்பீட அங்கத்தவர் பலர் அதே நிலைப்பாட்டில் இருந்த போது, எங்களில் சிலர் உங்களின் நிலைப்பாட்டுக்கு ஆதரவாக, ஓர் உறுதியான உடன்படிக்கையைச் செய்து கொண்டு ஐ.தே.கட்சியுடன் இணைந்து போட்டியிடுவோம்’ என்ற கருத்தைக் கொண்டிருந்தோம். அதற்கான காரணம், அறுதிப் பெரும்பான்மை (சாதாரண பெரும்பான்மை) மூலம் அரசியல் நிர்ணய சபையை அமைத்து ஜனாதிபதி அரசியல் யாப்பை மாற்ற முயல்கிறார் என்பதும் அதில் தேர்தல் முறை ஒரு முக்கியமான அம்சமாக இடம்பெறப் போகிறது என்பதுமாகும். அவ்வாறான ஒரு சூழ்நிலையில் ஐ.ம.சு. கூட்டமைப்பை அறுதிப் பெரும்பான்மை பெற அனுமதித்தால் அவர்கள் வெற்றி பெற்று, சிறுபான்மையினருக்கு பாதகமான முறையில் தேர்தல் முறையில் மாற்றம் செய்து விட்டால், அதைத் தெளிவாகச் சிந்தித்துத் தடுக்கத் தவறிய குற்றத்திற்காக முஸ்லிம் காங்கிரஸ் முகம் கொடுக்க வேண்டி வரும். எனவே முஸ்லிம்களின் அரசியல் இருப்ப்ை பாதுகாத்துக் கொள்ள இருக்கின்ற ஒரே வழி. ஐ.தே.கட்சியுடன் கூட்டு ஏற்படுத்தி, வடகிழக்கிற்கு வெளியே இருக்கின்ற முஸ்லிம் வாக்கு வங்கியை ஐ.தே.கட்சியின் வாக்கு வங்கியுடன் இணைத்து, விகிதாசாரத் தேர்தல் முறையின் விந்தையைப் பயன்படுத்தி, ஐ.ம.சு.கூட்டமைப்பு அறுதிப் பெரும்பான்மை பெறுவதைத் தடுப்பதாகும்.
மாறாக, வட கிழக்கிற்கு வெளியே தனித்துப் போட்டியிடுகின்ற போது, சில வேளை ஒரு தேசியப் பட்டியல் ஆசனத்தை பெறுவதற்கு அது உதவினாலேயொழிய, தனித்து ஆசனங்களைப் பெறுவதற்கான வாய்ப்புக் குறைவாகவே இருந்தது. அதே நேரம், Uநீல.சு.க - ஜே.வி.பி கூட்டமைப்புக்குச் சாதகமான ஒரு அலை வீசிக் கொண்டிருந்த காலகட்டத்தில் தனித்துப் போட்டியிடுவதன் மூலம் ஐ.தே.கட்சியின் வாக்குகளில் குறைவை ஏற்படுத்துவதானது, ஐ.ம.சு. கூட்டமைப்பின் வெற்றியை மேலும் உறுதிப்படுத்துவதாகத்தான் முடியும். இது எங்கள் கண்களில் நாங்களே குத்திக் கொள்வதற்குச் சமமாகி விடும். எனவேதான் ஐ.தே.கட்சியுடன் ஒரு தேர்தல் உடன்பாட்டுக்கு வருவதற்கு ஆதரவளித்தோம். அதன் பிரகாரம்தான் ஐ.தே.கட்சியுடன் ஒரு ஒப்பந்தத்தைச் செய்து போட்டியிட்டோம். (இங்கு நான் குறிப்பிடுவது நீங்கள் செய்த திருட்டு ஒப்பந்தத்தையல்ல. நான் ஏற்கனவே குறிப்பிட்ட, நாங்கள் மூவர் சேர்ந்து கட்சி சார்பில் தயாரித்து ஐ.தே.கட்சியுடன் செய்த கொண்ட உண்மையான ஒப்பந்தத்தை
அவ்வொப்பந்தத்தில் பரீல முஸ்லிம் காங்கிரஸ் இரண்டு வார கால

Page 10
14
முன்னறிவித்தலுடன் தேவைப்படின் பிரிந்து செல்ல முடியும்” என்ற ஒரு வாசகத்தையும் சேர்த்திருந்தோம். ஏனெனில் ஆட்சிக்கு வருகின்ற எந்தக் கட்சியாயினும் எங்கள் தயவில் தங்கியிருக்க வேண்டும். அதற்கு அவ்வொப்பந்தம் வகைசெய்ய வேண்டும் என்பதற்காக. ஆனால் எங்களுக்குத் தெரியக் கூடியதாக ஒரு தேர்தல் உடன் படிக்கையை எழுதி விட்டு, எங்களது முதுகுக்குப் பின்னால் முஸ்லிம் காங்கிரஸை விற்பதற்கான ஒரு "வியாபார உடன்படிக்கையையும்” (Sale Agreement) எழுதி வைத்திருப்பீர்கள் என்று நாங்கள் கனவிலும் நினைத்திருக்கவில்லை.
உங்களுக்குத் தெரியும் தேர்தல் முடிந்த கையோடு மவுன்ட்லவினியா பீச் ஹோட்டலில் நடந்த நமது கட்சியின் அதியுயர்பீடக் கூட்டத்தில் “ஐ.ம.சு.கூட்டமைப்பு, அறுதிப் பெரும்பான்மை பெறுவதைத் தடுக்க வேண்டும் என்ற எமது முதலாவது இலக்கில் நாம் வெற்றி பெற்று விட்டோம். நாம் மக்களுக்குத் தேர்தல் வாக்குறுதியளித்தது போல் ஆட்சியை எங்களில் தங்க வைக்கின்ற இரண்டாவது பணியைச் செய்ய வேண்டும். தவறின் நம்மை விடுத்து அவர்கள் வேறு வழியில் பெரும்பான்மை பெற்று "அரசியல் நிர்ணய சபை" அமைத்து அவர்களது இலக்கை நிறைவேற்றி விட்டால், அது நம் சமூகத்துக்குச் செய்கின்ற துரோகமாகும். நாம் ஐ.தே.கட்சியுடன் கூட்டுச் சேர்ந்து போட்டியிட்டு ஐ.ம.சு.கூட்டமைப்பை அறுதிப் பெரும்பான்மை பெறுவதைத் தடுத்தது விழலுக்கு இறைத்த நீராகி விடும். இன்று Uநீல. முஸ்லிம் காங்கிரஸ், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், ஹெல உறுமய ஆகிய கட்சிகள் பாராளுமன்றத்தில் அண்ணளவாக முறையே 10, 9, 8) சம பலத்தைக் கொண்டிருக்கின்றன. இதில் எந்தவொரு கட்சி அரசுடன் சேர்ந்தாலும் அரசுக்குப் பெரும்பான்மை கிடைத்து விடும். எனவே நாம் சமுதாய நலனைக் கருத்தில் கொண்டு, வருகின்ற அரசு எதுவாக இருந்தாலும் அது எங்களில் தங்கியிருக்க வேண்டும்" என்று மக்களுக்கு அளித்த உத்தரவாத்தைக் காப்பாற்ற வேண்டும்.
நம் மூலம் அரசுக்குப் பெரும்பான்மை கிடைத்தால் அரசியல் நிர்ணய சபை' விடயத்தில் முஸ்லிம்களின் எதிர்கால அரசியல் இருப்பு பாதிக்கப் படாமல் இருப்பதை நாங்கள் உறுதிசெய்ய முடியும். எங்களையும் மீறி முஸ்லிம்களின் எதிர்காலம் பாதிக்கப் படக் கூடிய சூழ்நிலை எழுமானால், அரசுக்குக் கொடுக்கும் ஆதரவை விலக்கிக் கொள்வதன் மூலம் ஆட்சியைக் கவிழ்த்தாயினும் முஸ்லிம்களின் அரசியல் இருப்பைப் பாதுகாக்கலாம். ஓர் அமைச்சுப் பதவியில் இருந்த தூக்கி வீசியதற்காக (உங்கள் பாணியில் சொல்வதாயின் ஓர் எலும்புத் துண்டை மீண்டும் பறித்தெடுத்ததற்காக) ஆட்சியைக் கவிழ்த்துப் பழக்கப்பட்டவர்கள் நாம், சமுதாய நலனுக்காக அரசைக் கவிழ்ப்பதில் தவறில்லை. நாம் ஐ.தே.கட்சியை திருப்திப் படுத்துவதற்காக முஸ்லிம்களின் எதிர்காலத்தை இருட்டறைக்குள் தள்ள முடியாது” என்று நான் வாதிட்டது உங்களுக்கு மறந்திருக்காது.
அப்போது நீங்கள், நாங்கள் தொண்டமானுடன் பேசியிருக்கிறோம். ஹெல

15 உறுமயவுடன் பேசியிருக்கிறோம். அவர்கள் ஒரு போதும் அரசுக்கு ஆதரவளிக்க மாட்டார்கள். அரசு ஒரு போதும் பெரும்பான்மை பெறாது. கவலைப்பட வேண்டாம்” என்றீர்கள். இன்று திரு. தொண்டமான், அரசாங்கத்தில் இணைந்து பெரும்பான்மை கொடுத்திருப்பதைப் பற்றி என்ன சொல்லப் போகிறீர்கள்?
உங்களுக்கு சமுதாயத்தைப் பற்றி அக்கறை இல்லை. முஸ்லிம் காங்கிரஸ் தலைமைத்துவம் என்ற போர்வையைப் போர்த்திக் கொண்டு ஐ.தே.கட்சியின் முகவராக தொழிற்படுவது உங்கள் பணி என்பதற்காக, மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகள், தங்களைத் தெரிவு செய்த மக்களின் எதிர்காலத்தை உங்களுக்குத்தாளம் போடுவதன் மூலம் குழி தோண்டிப் புதைக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது எந்த வகையில் நியாயமானதாகும்?
முஸ்லிம் காங்கிரஸ் முழுப்பலத்தோடு அரசில் இணைந்திருந்தால் முஸ்லிம்களின் அரசியல் இருப்பிற்கு அரசியல் நிர்ணய சபையினூடாக ஏற்படக் கூடிய பாதிப்பைத் தடுத்து நிறுத்துவதற்கான வாய்ப்பு அதிகமாக இருந்த அதேவேளை, இன்று அரசு வேறு வழியில் பெரும்பான்மை பெற்ற பின்பும் நாம் ஏன் அரசில் இணைந்தோம் என்ற கேள்விக்கும் பதிலளித்தாகவேண்டும்.
நாம் வெளியே இருந்து ஐ.தே.கட்சிக்குத்தாளம் போட்டுக் கொண்டிருக்க, உள்ளே அரசு சகல மாற்றங்களையும் செய்ய, வெறுமனே மேடைகளில் ஏறி “இந்த அரசு முஸ்லிம்களை ஏமாற்றி விட்டது, முஸ்லிம்களின் அரசியல் பலத்தை தேர்தல் சட்டத்தை மாற்றுவதன் மூலம் சுக்கு நூறாக்கி விட்டது” என்று கோவடிமெழுப்பி, மக்களின் அனுதாபத்தை ஐ.தே.கட்சி மீது திருப்பி, அக்கட்சியைத் திருப்திப் படுத்துவது எம் பணியல்ல, அதுவே உங்கள் பணியாக இருந்த போதிலும் கூட வெள்ளம் வருமுன் அணை கட்ட வேண்டும். எனவேதான், உள்ளே இருந்து முழுமையாக பாதிப்பைத் தடுத்து நிறுத்தக் கூடிய வாய்ப்பு இருந்தும் அதை உங்களால் தவற விட்ட நாம், முடிந்த வரை பாதிப்பைக் குறைப்பதற்காகவாவது செயற்பட முடியும் என்ற அடிப்படையில்தான் அரசுக்கு ஆதரவளிக்க முன்வந்திருக்கிறோம். அதுவும் முடியாமல் போகுமாயின் அந்த சந்தர்ப்பத்தில் அரசைக் கவிழ்க்க முடியாவிட்டாலும் பதவிகளைத் தூக்கி வீசிவிட்டு வருவதன் மூலம் கொள்கை ரீதியிலான ஒரு வெளியேற்றமாக அதனை மாற்றி, ஒரு தாக்கத்தைக் கொண்டு வர முடியும். வெளியே இருந்து வெறுமனே எதிர்க்கும் போது எதிர்க்கட்சியில் இருப்பவர்கள் எதிர்க்கத்தான் செய்வார்கள் என்ற பொதுவான நிலைப்பாட்டினால் அது ஒரு பாரிய தாக்கத்தைக் கொண்டு வரப் போவதில்லை.
சுருங்கக் கூறின் முஸ்லிம்களின் எதிர்கால அரசியல் இருப்பிற்கான பாதிப்பைத் தடுத்து நிறுத்தக் கூடிய அரிய வாய்ப்பு மக்களின் தியாகத்தினால் எமக்குக் கிடைத்த போது, இன்னுமொரு கட்சியை திருப்திப் படுத்துவதற்காக அதைத் தட்டி விட்டது நீங்கள்தான். அப்பாதிப்பைக் குறைப்தற்காவது முயல்வோம் என்று இதய சுத்தியுடன் நாங்கள் எடுக்கும் முனைவுகளையும் எள்ளிநகையாடவேண்டாம்.

Page 11
16
நீங்கள் யார்? என்பதை விரைவில் மக்கள் அடையாளம் காணத்தான் போகிறார்கள். ஜனாதிபதி அமைத்துள்ள தேசிய ஆலோசனைப் பேரவையில் பங்கு பற்றுவது என்று கட்சியின் உயர்பீடம் எடுத்த முடிவை, ஐ.தே.கட்சியின் உத்தரவின் பேரில் சாக்குப் போக்குகளைச் சொல்லி மாற்றிய போது, நீங்கள் ஐ.தே.கட்சியின் இரும்புப் பிடிக்குள் சிக்கியிருப்பதை மக்கள் மேலும் அடையாளம் கண்டு கொண்டார்கள்.
எனவே, மேலும் காலம் கடத்தாது, சமுதாய நன்மைக்காக, கட்சியை அதன் உரிய பாதையில், அதை உருவாக்கி வளர்த்தெடுத்த போராளிகள் முன்னெடுத்துச் செல்ல வழி விட்டு ஒதுங்குமாறு மிகவும் பணிவன்புடன் வேண்டுகின்றேன். இது எனது வேண்டு கோள் மாத்திரமல்ல, ஆயிரக் கணக்கான எமது உண்மையான போராளிகளின் வேண்டுகோளும் இதுவே.
அல்லாஹ அக்பர்
அஸ்ஸலாமு அலைக்கும்.
உண்மையுள்ள,
வை.எல்.எஸ்.ஹமீட் பிரதிச் செயலாளர் நாயகம் கட்சியின் யாப்புக் குழு அங்கத்தவர்
மறைந்த தலைவரின் முன்னாள் இணைப்புச் செயலாளர்
26.11.2OO4


Page 12
நான் விழித்
3dy தூங்கிக் கெ நான் தூ
ᏑᎲj விழித்துக்
tәAод0°tè 61

திருக்கும் போது
தாயம் ாண்டிருக்கிறது!
ங்கும் போது
தாயம் 5 கொள்ளும்!
e.எச்.எம்.அஷ்ரப்