கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சில அறிமுக குறிப்புக்கள்

Page 1
இன்
65 : Ꮱ
காற்றலும் கடும் மழையாலு
\{ރ(W
தீயாலும் தீயவர்களாலும்
துப்பாக்கிகளாலும் குண்டுச
மாற்றமுடியாத தனித்துவ இலங்கை முஸ்லிம்களுக்கு
தோற்றுவித்த இயக்கத்தின்
"பூனிலங்கா முள்
- கவிஞர் ப பிரச்சார
(யூரீலங்கா மு
籌
வெளியீடு : 3
ஹீலங்கா மு
- இலங்கை முள் தனித்துவமான தே
 
 
 
 
 
 

Uலிம் காங்கிரஸ்'
- சில அறிமுக குறிப்புக்கள்
மருதூர்க் கனி -
முஸ்லிம் காங்கிரஸ்)
ஸ்லிம் காங்கிரஸ்
ஸ்லிம்களின் ஒரேயொரு சிய அரசியல் இயக்கம் -
ܦ

Page 2

தலைவர் கூறுகிறர்
முஸ்லிம் காங்கிரஸ் ஆரம்பிக்கப்பட்ட நாளிலிருந்து விமர்சிக்கப்படுவது அதன் தலையெழுத்தாக இருந்து வந்துள்ளது. பல கூர்மையான இரக்கமற்ற விமர்சனக் கணைகளால் தாக்குண்ட பின்னரும் கூட நிமிர்ந்து நின்று அலைகளு டன் போராடி நீச்சலடிக்கக் கூடிய திராணியை முஸ்லிம் காங்கிரஸ9க்குப் பெற்றுத் தந்தது எமது இயக்க அங்கத்தவர்களின் ஆத்ம பலமேயாகும். இரும்பினைப் போன்ற உறுதிபெற்ற அந்த நெஞ்சங்கள் - கஷ்டங்கள் அதிகரிக்கும் போதெல் லாம் இன்னு மின்னும் வலுப்பெற்றுக் கொண்டிருக்கின்றன.
எமது இலட்சியத்தை அடைவதற்காக எதையுமே இழப்பதற்கு தயாரா யுள்ள எமது அங்கத்தவர்களினதும் ஆதரவாளர்களினதும் தியாகங்களின் பெறு @g@య్ இலங்கையில் இன்றுள்ள ஒரேயொரு தேசிய முஸ்லிம் அரசியல் இயக்கம் என்ற அந்தஸ்தை ஜீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பெற்றிருக்கின்றது கிழக் இலங்கை முஸ்லிம்களுக்கு மத்தியில் மாத்திரமன்றி இன்று இந்த நாட்டில் வாழும் ஒவ்வொரு முஸ்லிம் பிரஜையின் உள்ளத்திலும் நம்பிக்கையோளியாக மாறியுள்ள ஜீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மூன்றவது வெளியீடாக எமது பிரச்சார செயலாளர் கவிஞர் மருதூர்க்கனியவர்களின் இச்சிறு கட்டுரையை வெளியிடுவதில் மகிழ்ச்சியடைகின்ருேம். 1984 ம் ஆண்டு மார்ச் மாதம் 17ம் 20ம் திகதிகளில் தினகரனில் வெளி வந்த இரு கட்டுரைகளின் திருத்திய பதிப்பே இந்த வெளியீடாகும்
1986 எம். எச். எம். அஷ்ரஃப்

Page 3
பூனிலங்கா முஸ்லிம் காங்கிரஸ்
- சில அறிமுகக் குறிப்புக்கள்
நாம் பிறந்த மண்ணுகிய இலங்கையில் பல்வேறு ஸ்தாபனங்கள், இயக்கங்கள் இருக்கின்ற போதும் கூட நமக்கு இன்னும் இயக்கங்கள் தேவை தானு? என்ற நியாயமான கேள்விக்கும் நியாயமான பல்வேறு விமர்சனங் களுக்கும் மத்தியில் பூரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் என்னும் அரசியல் இயக் கம் தோற்றமெடுத்தது. இந்த இயக்கத்தின் தோற்றுவாயையும் அதற்கான சமூகவியற் காரணங்களையும் முஸ்லிம் சமூகத்தின் முன்பு வைப்பதே இக் குறிப்புகளின் நோக்கமாகும்.
சமூகத்தின் மத்தியில் புரையோடிக் கிடக்கின்ற புற்றுநோய் போன்ற அடிப்படைப்பிரச்சினைகளை நாம் எழுப்பி அப்பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து அதற்கான நியாயமான தீர்வுகளை கேட்கும்போது "எ மது சமூகத்திற்கு எந்தவித குறையுமேயில்லை, எல்லாம் சிறப்பாகவே நடக்கிறது, எல்லாவற்றையும் நாம் பெற்றுவிட்டோம், இனிப் பெறுவதற்கு எதுவுமே இல்லே ' என்று எதிர்க் குரல் கொடுக்கும் இயக்கங்களும், ஸ்தாபனங்களும், தலைவர்களும், இன் னும் இங்கு இருப்பதஞலேயே பூரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தோற்றம் தவிர்க்க முடியாததாயிற்று.
இன்றைய எமது சமூகம் சாரதியில்லாத வண்டியைப்போல திக்கற்று சென்று கொண்டிருக்கின்றது. இன்று இருக்கின்ற தலைமையோ அல்லது காலத்துக்குக் காலம் உருவாக்கப்படுகின்ற தலைமையோ தேர்தல் ஒன்று முடிந்து வாணுெவியில் ஒலிபரப்பப்படும் முஸ்லிம் அமைச்சர் ஒருவரின் தலை மையில் தங்கியிருக்க வேண்டியிருக்கிறது. இன்னும் அதை தெளிவாகச் சொன்னுல் முஸ்லிம்களின் தலைமையை முஸ்லிம்கள் உருவாக்குவதற்குப் பதிலாக சிங்களக் கட்சி ஒன்று தனக்கு வசதியான ஒருவரைத் தேர்ந் தெடுத்து இவர்தான் முஸ்லிம்களின் தலவர் என்று முஸ்லிம்களுக்கு மத்தி யில் பிரகடனம் செய்கின்றது.
இத்தகைய முஸ்லிம் தலைவர்கள் எவ்வாறு முஸ்லிம்களுக்கு பணி செய்ய முடியும் ? அப்படித்தான் அவர்கள் சேவை செய்ய நினைத்தாலும் யதார்த்த நிலையில் அது சாத்தியமாகின்றதா, முடிகின்றதா? என்ற கேள்வி களுக்குப் பிறக்கும் இயல்பான முடிவுகளுக்கான காரணங்கள் நாம் புரியாத 606), IL6)6) -
இத்தகைய தலைவர்கள் திடீரென்றற்போல 'முஸ்லிம்களுக்கு உரி மைகள்தான் வேண்டும் சலுகைகள் அல்ல' என்று அறிக்கைகளும் விடு

வார்கள். ஆளுல் இவர்கள் ஏதும் உரிமைகளே அதிகாரத்திலுள்ள அவர் களின் தலைவர்களிடம் முஸ்லிம் சமூகத்துக்காக கேட்டதாக அல்லது அவை கிடைத்ததாக நாம் இதுவரை அறிந்தோமில்லை.
ஆன்ம பலமுள்ள புதிய தலைமைத்துவத்தின் தேவை !
இன்று இலங்கையில் முஸ்லிம்கள் இழந்துவிட்ட, இழந்து கொண்டிருக் கின்ற நிலம், கல்வி, வர்த்தகம், கலாசாரம், பாதுகாப்பு போன்ற அடிப் படை உரிமைகள் இவர்களால் இன்னும் இனம் காணப்படவில்லை. அவற்றை இனம் காணுவதற்கு அவர்களுக்கு திராணியுமில்லை, தைரியமுமில்லை.
தமது மனச்சாட்சிக்கு தெரிந்த, மனிதாபிமான நோக்கில் அமைந்த இழந்து விட்ட இழந்து கொண்டிருக்கின்ற உரிமைகளுக்குத்தானும் குரல் எழுப்பி அதற்குத் தீர்வு தேட இன்றைய தலைமையால் முடியவில்லை; அவர் களிடமிருந்து அவ்வாறு நாம் எதிர்பார்க்கமுடியாது. ஏனென்ருல் அவர்கள் சார்ந்திருக்கின்ற கட்சிகளின் நலன்களுக்கு அப்பால் நின்று சமூகத்தின் நலன்களுக்காகப் போராட அவர்களால் முடியாது. இது ஒன்றுதான் நமது சமூகத்தைப் பிடித்திருக்கும் மிகப் பெரிய துரதிஷ்டமாகும்.
தாம் சார்ந்திருக்கும் கட்சியை விட்டு தமது சமூகத்தின் நலனுககாக சத்திய ஆவேசத்துடன் குரல் கொடுத்து அதற்காக தமது நலன்களை தியா கம் செய்யக் கூடிய துணிவும் சமூகப் பிரக்ஞையும் ஆன்மபலமும் உள்ள தலைமைத்துவம் தோன்ரு தவரை நமது சமூகத்தின் எதிர்காலம் இருள் சூழ்ந்ததாகவே இருக்கும்.
இன்றைய தலைமையிடமிருந்து அப்படி ஒரு தியாகத்தை நாம் எதிர் பார்க்கவும் முடியாது. ஏனென்ருல் அவர்கள் சார்ந்திருக்கும் கட்சிகளும் நலன்களும் அவர்களின் கைகளில் விலங்கிட்டுள்ளன.
அரசியல் அதிகாரத்தைப் பெறுவதற்காக பாராளுமன்றப் பதவிகளை அடைந்து அதன் சுகானுபவங்களை அனுபவிப்பதற்காக தேர்தலை ஒரு பெரும் லாபம் தரக்கூடிய தொழிலாக முதலீடாக நம் தலைவர்களும் கருதினர்கள்; அதை அனுபவிக்கின்மூர்கள். அதற்காக தமது சமூகத்தின் நலன்களைக் கூட காட்டிக் கொடுத்தார்கள்.
முஸ்லிம் சமூகத்தின் விடுதலைக் கரு
இந்த நிலைமைகள் வரலாற்றின் காலகட்டங்களில் எந்த ஒரு சமூகத் திலும் நிரந்தரமாக இருந்ததில்லை. முஸ்லிம் சமூகம் இதற்கு விதிவிலக்கல்ல. முஸ்லிம் சமூகத்தின் விடுதலைக்கான கரு அந்த சமூகத்தின் கர்ப்பத்தில் தவிர்க்க முடியாதபடிக்கு தரித்து விட்ட து
(3)

Page 4
இன்றைய முஸ்லிம் சமூகத்தின் புதிய தலைமுறை குறிப்பாக, கிழக் கிலங்கையின் இன்றைய தலைமுறை பிரச்சினைகளை சரியாக இனம் கண்டு அதற்கான தீர்வையும் தேடுகின்றது. தமது சமூகத்தின் தலைவிதியை தாமே மாற்றுவதற்கு திடசங்கற்பம் பூண்டுள்ளது.
நாம் விரும்பியோ, விரும்பாமலோ உருவாக்கப்பட்டு விட்ட 'இன் றையத் தலைமையை தூக்கி எறிந்து விடுங்கள்' என்று வெறுமனே கோஷ் மிட நாம் விரும்பவில்லே ஆளுல் இன்றையத் தலைமையின் பலவீனத்தை யும் அது முஸ்லிம் சமூகத்திற்குச் செய்யும் துரோகத்தையும் இன்னும் தெளி வாக எடுத்துக்காட்ட எம்மால் முடியும். முஸ்லிம் சமூகத்தின் எதிர் காலத்தை அவர்கள் எவ்வாறு தாம் சார்ந்திருக்கும் கட்சிகளின் நலனுக் காக பலிகொடுக்கின்றன ரென்பதை தெளிவாக்கவும் முடியும். சமூகத்தின் நன்மைக்காக, கட்சி வேறுபாடுகளுக்கப்பால் நின்று இவர் க ளா ல் குரல் கொடுக்க முடியாது என்பதை உணர்த்த முடியும்.
நாமென்ன கண்ணிருந்தும் குருடர்களா !
எனவே தான் கட்சிகளின் நலனை மாத் தி ர ம் எண்ணிக்கொண்டு, சமூகத்தின் நலனப் பொறுத்தமட்டில் கண்ணிருந்தும் குருடர்களாக வாழ எங்களில் சிலர் விரும்பவில்லை. கட்சி வேறுபாடுகளுக்கு அப்பால் நின்று சமுதாயத்தின் நலனுக்காகச் சிந்திக்கக் கூடிய பேரியக்கம் ஒன்று தோற்று விக்கப்பட வேண்டிய அவசியத்தை உணர்ந்தோம். அதற்கு வடிவம் கொடுக்க வேண்டிய தேவையும் ஏற்பட்டது
எனவே முஸ்லிம்களின் இன்றைய தேவையை, எதிர்கால பாதுகாப்பை நினைத்து அதன் சுபீட்சத்தை உத்தேசித்து விடுதலேயை எண்ணி இந்த சிந்தனையில் ஒன்றுபட்ட நாம் 21, 09. 1980 ல் காத்தான்குடியில் வைத்து பூரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் என்ற இவ்வியக்கத்தை சட்டத்தரணி ஜனுப் எம். எச். எம். அஷ்ரஃப் அவர்களின் தலைமையில் தோற்றுவித்தோம்.
பூரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் என்ற இந்த அரசியல் இயக்கத்தின் தேவை அது தோன்றிய காலத்திலும் பார்க்க இன்று எவ்வளவு அதிகம் முக்கியம் என்பதை முழு முஸ்லிம் சமூகமும் குறிப்பாக, கிழக்கிலங்கை முஸ் லிம்களும் வெகுவாக உணர்ந்து வருகின்றனர்.
ஏற்கனவே இலங்கை முஸ்லிம்களின் சமூக அரசியல் பிரச்சினைகளை நாம் இனம் கண்டு 63வத்திருந்தோம். கடந்த ஆறு ஆண்டுசளில் எமது இயக்கம் செய்த பெரும்பணி இப்பிரச்சினைகளே தெளிவாக இனம் கண்டது மாத்திரமன்றி இப்பிரச்சினைகள் பற்றிய எண்ணங்களேயும் கருத்துக்களையும் எமது அமைப்புக்குழு அங்கத்தவரிடையே பரிமாறிக் கொண்டதுமாகும். ஒட்டமாவடியிலிருந்து பொத்துவில் வரையுள்ள மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்கள் இரண்டிலுமே ஆரம்பத்தில் எமது இயக்கப் பணி ஆரம்ப
மTனது.
(4)

முஸ்லிம் காங்கிரஸ் அகில இலங்கை ரீதியான ஒர் அமைப்பு
பூரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அகில இலங்கை ரீதியிலான ஓர் அமைப் பாகும். இருப்பினும் கூட எடுத்தவுடன் பரந்த அளவில் செயலில் இறங்* கூடிய வாய்ப்புக்கள் சூழ்நிலைகள், பொருளாதார வசதிகள் என்பன ஆரரி பத்தில் இருக்கவில்லை மைல் கணக்கான தூரமும் சின்னஞ்சிறு சிடி4-97 ஆரம்பிப்பதுபோல, பெரும் சமுத்திரமும் சின்னஞ் சிறு துளியுடன் தொடரி குவது போல நீண்ட கால எமது இலட்சியப் பணியையும் ஆரம்ப கட்டத் தில் மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களுக்குள் வைத்துக் கொள்ள லாமென தீர்மானித்திருந்தோம்.
பூரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிறந்த அன்றே அமைப்புக் குழு ஒன் றும் ஏற்படுத்தப்பட்டது. இவ்வமைப்புக்குழுக்கான அங்கத்தவர்கள் இவ் விரு மாவட்டங்களிலுமிருந்து தெரிந்தெடுக்கப்பட்டனர். அரசியல் இலாபங் களே எதிர்பாராத சமூக ஆர்வம் படைத்தவர்கள் எம்மால் இனம் கானப் படும் போது அவர்களே அமைப்புக்குழுவில் சேருமாறு அழைத்துக் கொண் டிருக்கின்ருேம். விண்ணப்பத்தினுலன்றி அழைப்பினுலேயே அமைப்புக்குழு அங்கத்தவர்களின் பட்டியல் நீண்டு செல்லுகின்றது என்பது குறிப்பிடத் விக்கது.
முஸ்லிம் சமூகப் பிரச்சினைகளில் காங்கிரஸ்
1983 ஜூலையில் நடைபெற்ற இனக்கலவரங்கள் எமது இயக்கத்தின் வேகத்தை அதிகரித்தது. ஏற்கனவே முஸ்லிம் சமூகப் பிரச்சினேகளே நாம் இனம் கண்டு வைத்திருந்தோம் எமது மீறப்படும் உரிமைகளை அறிந்திருந் தோம். இருந்தும் கூட இலங்கை முஸ்லிம் சமூகத்தை பாதிக்கக் கூ டி ய பிரச்சினைகளை கோவை செய்ய வேண்டிய தேவையையும் உணர்ந்தோம். இதனுல் ஆதாரபூர்வமான பிரச்சினைகளையும் தரவுகளையும் நாடளாவிய ரீதி யில் மக்கள் மத்தியில் இருந்து பெற - அறிய முஸ்லிம் காங்கிரஸ் விரும்பி யது. அது முஸ்லிம்களின் இன்றைய அவசியத் தேவையாகவும் இருந்தது.
எனவே பூரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இலங்கை முஸ்லிம்களுக்கு பத்திரிகை வாயிலாக ஒரு வேண்டுகோளை விடுத்தது. அதற்கு செவிமடுத்த இலங்கை முஸ்லிம்கள் தக்க ஆதாரங்களோடு எமக்கு அனுப்பி வைத்த அந்த முறையீடுகளிலிருந்து இலங்கை முஸ்லிம்களைப் பாதிக்கும் பிரச்சினைகளின் வெட்டுமுகத்தோற்றமொன்றை தரிசிக்க வாய்ப்பும் வசதியும் ஏற்பட்டது எமது பிரச்சினைகள் எவ்வளவு பூதாகாரமாக உருவெடுத்துக்கொண்டிருக் கின்றன என்பதையும் உணர முடிந்தது.
பிரச்சினைகளை பூசி மெழுக நாம் விரும்பவில்லை
எனவே தான் முஸ்லிம்கள் இன்று எதிர்நோக்குகின்ற 1949%73% ש" பூசி மெழுக நாம் விரும்பவில்லை. முஸ்லிம் தலைவர்களின் முகஸ்துதிகளு"
(5)

Page 5
காக ஒரு சமுதாயத்தின் எதிர்காலத்தை தாரை வார்த்துக் கொடுக்க நாம் ஒரு போதும் உடன்படமாட்டோம்.
புலிகளின் பசுத்தோல்களை அகற்றுவது புலிகளுக்கு கஷ்டமாகத்தானி ருக்கும்; இருந்தும் இவ் விஷயத்தில் எமது மதிப்புக்குரிய தலைவர்களுக்கு எம்மால் உதவ முடியாது. ஏனெனில் எமது தலைவர்களை திருப்திப் படுத்து வதை விட எமது சமூகத்தை திருப்திப்படுத்துவதையே நாம் விரும்புகின் ருேம்.
மாவட்ட அபிவிருத்திச் சபைகளின் தேர்தல் நடைபெறுவதற்கு ஒரு வாரத்திற்கு முன்னர் 31, 05, 1981 ல் முஸ்லிம் காங்கிரஸ் கல்முனையில் வைத்து 'அம்பாறை மாவட்ட தமிழ் பேசும் மக்களின் காணிப்பிரச்சினை பற்றிய தலைப்பில் சர்வகட்சி கருத்தரங்கை நடத்தியது. இக் கருத்தரங்கில் தலைமையுரையை நிகழ்த்தும்போது காங்கிரஸின் தலைவர் ஜனப் எம். எச். எம். அஷ்ரஃப் அவர்கள் பின்வருமாறு குறிப்பிட்டார்.
"..எங்கள் கடமை எமது சமூகத்தை சரியான வழியில் இட் டு ச் செல்வதாகும். அந்தப் புனிதமான பணியை நாம் செய்கின்றபோது நம்மை மக்கள் அறிவார்கள். அதேவேளை சமூகத்தை பிழையான வழியில் நடாத்து பவர்களும் சமூகத்தின் எழுச்சியை தமது கால்களுக்குக் கீழ் நசுக்கி வைத்துக் கொண்டிருப்பவர்களும் சுய நல வா தி களும் இனங்காணப்பட்டே தீருவார்கள். அதைத் தவிர்க்க முடியாது. அல்லாஹ்வுக்காக, அவனின் அழகிய படைப்பான மக்களுக்காக எமது சொத்து, சுகங்கள், உறவுகள், பந்த பாசம், மனைவி மக்கள் அனைத்தையும் துறப்பதற்கு நாம் தயாராயிருக்கின்ருேம். எங்களில் எவருக்கா வது ஒரு எம்பியாக வரவேண்டும் என்ற ஆசை கிஞ்சித்தும் கிடையாது என் பதை மனப்பரிசுத்தத்துடன் கூறிக்கொள்ள விரும்புகின்ருேம். '
பாராளுமன்ற கதிரைகளில் எங்களுக்கு நம்பிக்கை கிடையாது. மக் களில்தான் நாம் நம்பிக்கை வைத்துள்ளோம். எம். பியாக, அமைச்சராக இருந்து மக்களுக்கு தொண்டுசெய்வதிலும் பார்க்க சுயமாக நின்று பிரச் சினைகளை அணுகி அவற்றுக்கு தீர்வு தேடுவதையே காங்கிரஸ் பெரிதும் விரும்பு கின்றது. நடைமுறையில் அது நல்ல பயனையும் தந்துள்ளது.
முஸ்லிம் காங்கிரஸின் வளர்ச்சியில் போலித் தலைமை மூலைக்குள் ஒதுங்கும்
பூரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இப்போது தான் ஆறு ஆ ன் டு க ள் நிறைந்து குழந்தைப் பருவத்திலிருந்து சிறுவனுக மாறிக் கொண்டிருக்கிறது. எமது இயக்கத்துக்கு பால் பற்கள் முளைத்துக் கொண்டிருந்த வேளை அதைக் கண்டு பலரும் அஞ்சினர். விளைவு இவ்வியக்கத்தை நலிவுறச்செய்து அதை பால்யத்திலேயே மரணமடையச் செய்ய எடுக்கப்பட்ட முயற்சிகள் இறைவன் உதவியால் இம் முயற்சிகளை தோற்கடித்து அந்தப் பேரலைகளைத் தாண்டி சமுத்திரத்தின் அமைதி வலயத்துள் நாம் இப்போது நுழைந்து கொண்டி
(6)

ருக்கின்ருேம். இச்சிறுவன் திடகாத்திரமும் நேர்மையும் ஒழுக்கமுமுள்ம் வாலிபனுக மாறுகின்றபோது போலித்தலேமை மூலைக்குள் ஒதுங்குவது தவிர்க்க முடியாத முடிவாகுமென்பதை வரலாறு நிரூபித்துக் காட்டு மென்பதில் எமக்கு நிறைய நம்பிக்கை இருக்கிறது.
எங்கள் இயக்கம் ஐ. தே. கட்சிக்கு எதிரான இயக்கம் என்றும், நாங் கள் பூரீலங்கா சுதந்திரக்கட்சியினதும், த. வி. கூட்டணியினதும் கைக்கூலி கள் என்றும் கூட ஒரு காலத்தில் பேசிக்கொள்ளப்பட்டது. ஆனல் எமது இயக்கம் எந்த அரசியல் கட்சிக்கும் வால் பிடிக்காத தனித்துவமிக்க ஒன்று என்பது சத்தியமாகும். இந்த சத்தியநிலை இப்போது பொதுவாக எல்லோ ராலும் உணரப்பட்டு வருவது மகிழ்ச்சியை தருகின்றது.
இன்றுள்ள அரசியல் கட்சிகளின் நலன்களுக்கு அப்பால் சென்று எமது சமூகத்தின் நலன்களைப்பற்றி சிந்திக்கக் கூடிய ஆளுமையும் திராணியும் மூளை பலமும் எங்கள் அங்கத்தவர்களுக்கு உண்டு.
முஸ்லிம் காங்கிரஸ் ஒர் அரசியல் கட்சி !
எமது இயக்கம் என்ருே ஒரு நாள் இலங்கை முஸ்லிம்களின் அங்கீ
கரிக்கப்பட்ட அரசியல் கட்சியாகவும் தனித்த குரலாகவும் மிளிர வேண்டு மென்பது எமது கனவாகும்
அதற்காக மக்கள் மத்தியில் ஒர் அரசியல் கட்சியை அவசரப்பட்டு திணித்துவிட நாம் விரும்பவில்லை. அது மக்கள் மத்தியிலிருந்தே மலர்ந்து வரும் வரை நாம் காத்திருப்போம். அது இயல்பாகவே மலரத் தேவையான சகல முயற்சிகளையும் இன்று எமது இயக்கத்தின் அங்கத்தவர்கள் எடுத்துக் கொண்டிருக்கின்றனர்.
கடந்த ஆறு ஆண்டுகள் எமது இயக்கத்துக்கும் அமைப்புக் குழு
துலில்லாஹ் அந்தப் பரிசோதனையில் வெற்றிபெறும் மனத்தைரியத்தையும் பொறுமையையும் எமக்களித்த அல்லாஹ்வுக்கே எல்லாப்புகழும்.
இனப்பிரச்சினேயில் முஸ்லிம் காங்கிரஸ்
இன்று இந்த நாட்டை பிடித்திருக்கும் புற்று நோயான இனப்பிரச் சினையை தீர்த்து வைக்கும் முயற்சியில் மூன்று ஆண்டுகளாக தொடர்ச்சியாக
எவ்வித அலுப்போ சலிப்போ இன்றி முஸ்லிம் கவுன்ஸிலினுரடாக முஸ்லிம்
(7)

Page 6
காங்கிரஸ் தலைவர் செய்துவரும் பங்களிப்பு நிச்சயமாக எமது இயக்கத்துக்கு முஸ்லிம் சமூகத்தின் மத்தியில் மாத்திரமன்றி முழு நாட்டு வரலாற்றிலும் ஒர் அழியாத இடத்தை பெற்றுத்தருமென்ற நம்பிக்கையில் நாம் மகிழ்ச்சிய டைகின்ருேம்.
இனப்பிரச்சினை தீர்வு விடயத்தில் முஸ்லிம் சமூகத்தின் தனித்துவத் துக்கு அழுத்தம் கொடுத்து அதன் சிந்தனைகளை ஒருங்கு படுத்தும் பணி யில் பூரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தேசிய பத்திரிகைகள் மூலமாக விடுத்து வரும் பத்திரிகை அறிக்கைகள் நாடளாவிய வரவேற்பை பெற்றுள்ளதோடு மாத்திரமன்றி சர்வதேச கவனத்தையும் ஈர்த்துள்ளது குறிப்பிடத்தக்கது.
வெகு விரைவில் பூரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் கிளைகளை அமைக்க வும் எமது இயக்கத்தை ஒர் அரசியல் கட்சியாக பிரகடனம் செய்து பக் களுக்கு மத்தியில் முன்வைப்பதற்குமான முயற்சியில் நாம் தற்போது தீவிர மாக ஈடுபட்டு வருகின்ருேம்.
எமது உள்ளத் தூய்மையையும் சத்திய நிலைப்பாட்டினையும் பணிகளே யும் எல்லாம் வல்ல அல்லாஹ் ஏற்றுக்கொள்வானென்று பிரார்த்திப்ப தோடு எமது பணிகளுக்கு தமது பூரண ஒத்துழைப்பையும் ஆதரவையும் மக்கள் வழங்குவார்களென்ற நம்பிக்கையில் முஸ்லிம் சமூகத்தின் வருங்கால தலேவிதியை சரியாக நிர்ணயிக்கும் ஆக்க பூர்வமான பணிகளில் இப்போது நாம் முன்னேறிச் செல்லுகின்ருேம் !
(8)


Page 7
தலைவரின் எழு
"முஸ்லிம் சமூகத்தின்
மட்டத்திலிருந்து உருவாகாமல் சமூகத்தின்மீது திணிக்கப்படுகின் மிகவும் விசுவாசமாயிருக்கும் மு சர் பதவிகள். இதனுல் மு அமைச்சர்களும் முஸ்லிம் பா முஸ்லிம் அரசியல் தலைவர்கள் டுள்ளது.*
"முஸ்லிம் பாராளுமன்ற களை பாராளுமன்றத்தில் பிரதிட தொகுதிகளிலும் பிரதேசங்களிலு பெரும்பான்மை அரசியல் கட்சி கின்ருர்கள். முஸ்லிம் உணர்வ மிருக்க-முஸ்லிம்களின் அபிலா சோடித்துக் காண்பிப்பதற்கும் படுகின்றனர்.”
"முஸ்லிம் சமூகம் எதி சியல் நாணயத்துடன் வாழப்போ தங்கியுள்ளது. அத்தகைய மதி கள் யார்? இன்றைய எம்பீக்க
* 'இல்லையெனில் புதிய பற்றிச் சிந்திக்க வேண்டிய கா டது. தேசிய அரசியல் கட்சிகள் விட்டு சுயேச்சையான புதிய அ உருவாக்குவது? புதிய முஸ்லி றம் இதற்கு வழிவகுக்குமா? வேண்டும்.”
'கிழக்கு மாகாண முள் றக் கூடிய அரசியல் எழுச்சிய கூடிய வெற்றியிலும் - மதிப்பி தினதும் எதிர்கால அரசியல்
ஃபெயார் பிறிண்டர்ஸ், 65

த்துக்களிலிருந்து:
அரசியல் தலைமைத்துவமோ அடி
மேல் மட்டத்திலிருந்து முஸ்லிம் றது. ஆட்சியிலிருக்கும் கட்சிக்கு ஸ்லிம் பிரதிநிதிகளுக்கு அமைச் ஸ்லிம் அமைச்சர்களும் - அரை ராளுமன்றப் பிரதிநிதிகளும்தான்
என்ற மாயை உருவாக்கப்பட்
ற உறுப்பினர்கள் முஸ்லிம் உணர்வு லிப்பதற்குப் பதிலாக அவர்களின் முள்ள முஸ்லிம்களுக்கு மத்தியில் களின் முகவர்களாகப் பணியாற்று புகள் மூடி மறைக்கப்படுவது ஒருபுற சைகளுக்கு முரணுன ஒரு நிலையை
இப்பிரதிநிதிகள் பயன்படுத்தப்
ர்காலத்தில் எவ்வளவு தூரம் அர கின்றது என்பதில்தான் எல்லாமே நிப்பை பெற்றுத் தரப்போகின்றவர்
அரசியல் தலைமைத்துவத்தைப் லகட்டம் எம்மை அண்மித்து விட் 1ன் கட்டுப்பாடுகளை உடைத்தெறிந்து ரசியல் தலைமைத்துவத்தை எப்படி p அரசியல் கட்சியொன்றின் தோற் என்பவற்றையும் நாம் சிந்திக்க
லிம்களின் மத்தியிலிருந்து தோன் லும், அவ்வெழுச்சிக்கு கிடைக்கக் லும்தான் முழு முஸ்லிம் சமூகத் நாணயம் தங்கியிருக்கின்றது.”
பிரின்சஸ் கேற், கொழும்பு 12.