கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சுயம் 2002

Page 1


Page 2
சுயம் அரசியல் கலந்துரையாடலுக்கான ஒரு சிறப்பு வெளியீடு:
பிஸ்மில்லாஹிர்றஹற்மானிர்ரஹீம்
அன்பார்ந்த முஸ்லிம்களே!
இன்றைய அரசியல் சூழலில் வடக்கு கிழக்கு
முஸ்லிம் மக்களாகிய நாம்
என்ன செய்ய வேண்டும்? நமது தலைவர்கள் என்ன செய்ய வேண்டும்?
உக்கிரமடைந்து விட்ட தேசிய முரண்பாடுகளுக்கு நிரந்தரத் தீர்வு காணும் முயற்சியாக விடுதலைப் புலிகளும் இலங்கை அரசாங்கமும் நெருங்கிச் செயற்பட்டு வருகின்றன. இரண்டு தரப்பினரும் தோளோடு தோள் நின்று ஒத்துழைப்புடன் செயற்பட்டுவருவதாக நம்பப்படுகின்றது. அரசியல் பேச்சுவார்த்தைகள் மூலமாக சமாதானத்தை எட்டும் அடுத்த நிகழ்வாக தாய்லாந்துப் பேச்சு வார்த்தைகளின் முதற்பகுதி அமையவுள்ளது. அதற்கு முன்னர் அவசரமாக அரசியல் சாசனத்திற்கு 19வது திருத்தம் கொண்டு வரும் ஏற்பாடுகள் ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்டுள்ளது. சமாதானத்திற்கான திசையில் முதற்கட்டமாக வடக்கு கிழக்கில் சுமுக நிலைமையை ஏற்படுத்துவது எனவும் அடுத்த கட்டமாக தேசியப் பிரச்சனைகளுக்கு நிரந்தரத் தீர்வு காணபது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச் சூழலில் தேசியப் பிரச்சனையின் பிரதானமான சமூகப் பிரிவுகளில் ஒன்றாக விளங்கும் முஸ்லிம்களாகிய நாம் அரசியல் நிலைமைகளைச் சரியாக மதிப்பிட்டு தீர்க்கதரிசனத்துடன் முடிவுகளை எடுக்கவும் அவற்றைச் செயற்படுத்தவும் வேண்டும். தீர்மானகரமான சந்தர்ப்பங்களில் ஓய்ந்து இருந்து விட்டு, ஆபத்துக்கள் குரல்வளையை நெரிக்கும் போது கொதித்துக் குமுறுவதில் பயனேதும் இருக்காது என்பதைப் புரிந்து கொண்டு வடக்கு கிழக்கு முஸ்லிம்களாகிய நாம் விழிப்புடன் ஒன்றுபட வேண்டும் என்ற அக்கறையுடன் இந்த அவசர வெளியீட்டினை சுயம் சுற்றுக்கு விட்டுள்ளது.
சமாதான முயற்சிகளின் முதற்படியாக அமைந்த அரசு-விடுதலைப் புவிகள் புரிந்துணர்வு உடன படிக்கை, யுத்த நிறுத்தம் என்பன இரண்டு
m شایعهٔ

முக்கிய நிகழ்வுகளாகும். இவ்விரண்டு நிகழ்வுகளும் வடக்கு கிழக்கு முஸ்லிம்களை உரிய முக்கியத்துவமளித்து கவனத்தில் எடுக்காது விட்டது மாத்திரமன்றி. எத்தகைய பாதிப்புக்களை நமது மக்களுக்கு ஏற்படுத்தியது என்பதையும் நடைமுறையில் நாம் அனுபவித்திருந்தோம். இன்னமும் அனுபவித்து வருகின்றோம்.
சமாதான முயற்சியின் அடுத்த கட்ட நகர்வான தாய்லாந்து பேச்சுக்கள் பற்றியும். அதில் கலந்து கொள்ளும் அரசியல் தரப்புக்கள் பற்றியும் இப்போது பரபரப்பாகப் பேசப்படுகின்றது. அரசியல் பேச்சுக்களின் ஆரம்பத்தில் பிரதானமாக இடம்பெறப்போவது இடைக்கால நிர்வாகம் பற்றிய விடயங்களாகும். இவை தொடர்பாகவும் இதில் முஸ்லிம்களின் நிலை என்னவாக இருக்க வேண்டும் என்பது பற்றியும் பல்வேறு தரப்புகளிலும் அரங்குகளிலும் விவாதங்கள் நடைபெற்றுவருகின்றது. காத்திரமான தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டு முஸ்லிம்களின் அரசியல் தலைமைகளுக்கு அறிவிக்கப்பட்டு வருகின்றன. முஸ்லிம்கள் மத்தியில் செயற்படும் பல்வேறு அமைப்புக்களும் நிறுவனங்களும் தனிநபர்களும் தத்தமது கருத்துக்களையும் கோரிக்கைகளையும் முன்வைத்து வருகின்றனர்.
இடைக்கால ஏற்பாடுகளோ அல்லது நிரந்தர ஏற்பாடுகளோ அரசியல் அதிகாரங்களுடன் சம்பந்தப்படும் எந்தவொரு விடயம் குறித்தும் இன்றைய நிலையில் முஸ்லிம்கள் ஒருமித்த தெளிவான நிலைப்பாடுகளுடன் உறுதியாக இருப்போம். முஸ்லிம் களின் இத்தகைய உறுதியான அரசியல் நிலைப் பாடுகளையும் அபிலாசைகளையும் முஸ்லிம்களின் அரசியல் தலைமைகள் திடமாக முன்னெடுத்துச் சென்று, உறுதியுடன் செயற்பட்டு வென்றெடுக்க வேண்டுமென வலியுறுத்துவோம். அரசியல் தலைமையைச் சுற்றியிருப்போர். தலைமைக்கு நெருக்கமானவர்கள் இதற்கான அழுத்தங்களைக் கொடுக்க வேண்டுமெனக் கேட்டுக் கொள்வோம். இதற்கு முன்னிபந்தனையாக நமது அபிலாசைகளையும் உணர்வுகளையும் முஸ்லிம் அரசியல் தலைமை சமத்துவத்துடன் வெளிப்படுத்தும் வாய்ப்பினையும் இடத்தையும் பேச்சுவார்த்தை அரங்கில் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டுமென வலியுறுத்துவோம்.
O
ஒருவேளை, பேச்சுவார்த்தை அரங்கில் நமது அரசியல் தலைமைகளுக்கு உரிய இடமும் முஸ்லிம் களின் நியாயமான அரசியல் முடிவுகளுக்கும் கோரிக்கைகளுக்கும் உரிய முக்கியத்துவமும் தரப்படாது விட்டால், இன்றைய முன்னோடிப் பேச்சுவார்த்தைகளை நிராகரித்து சகலவிதமான பாரபட்சங்களுக்கும் நமது மக்களின் உடன்பாடின்மையையும் எதிர்ப்பினையும் வெளிப்படுத்துவோம். நமது நியாயமான அரசியல் அபிலாசைகள் நசுக்கப்படப் போவதைப் பற்றி நமது அரசியல் தலைமை உள்நாட்டிலும் சர்வதேச அளவிலும் உடனடியாக பிரச்சாரப்படுத்த வேண்டும். அரசியல் பேச்சுவார்த்தைக்கு வெளியே நமது மக்களை ஒன்று திரட்டி நமது நியாயமான அரசியல் கோரிக்கைகளையும் நிலைப்பாடுகளையும் முன்வைத்துப் போராட வேண்டும்.
تھAعrھک

Page 3
வடக்கு கிழக்கு முஸ்லிம்களாகிய நாம் ஏன் இப்படியான கறாரான ஒரு நிலைக்குத் தள்ளப்பட்டோம்? இதற்கு நியாயமான, போதுமான காரணங்கள் உள்ளனவா? நிச்சயமாக உண்டு. ஒரு தேசிய இனத்தின் ஆளும் பிரிவானது. மற்றொரு தேசிய இனப் பிரிவினரை அரசியல் சமத்துவம், தனித்துவம் மற்றும் கெளரவத்துடன் நடத்துவர் என்ற நம்பிக்கை தற்போது அற்றுப் போயுள்ளது. சிங்கள தரப்பு மீது தமிழருக்கும், முஸ்லிம்களுக்கும். மலையகத்தமிழருக்கும் நம்பிக்கை அற்றுப்
போயுள்ளது. வடக்கு கிழக்கைப் பொறுத்த வரையில், தமிழ் தரப்பின் மீது முஸ்லிம்களுக்கு -
நம்பிக்கை அற்றுப் போயுள்ளது. கசப்பானதாயினும் இதுதான் உண்மை. எனவே, இடைக்கால ஏற்பாடு என்றாலும் சரி. நீடித்த ஏற்பாடு என்றாலும் சரி, தற்போதைக்கு ஒவ்வொரு தேசிய இனமும் கணிசமான அளவிற்குத் தம்மைத் தாமே ஆளும் நிலை தோற்றுவிக்கப்பட்டு நடைமுறையில் உறுதிப்படுத்தப்படல் வேண்டும். நீடித்த காத்திரமான சமாதானத்திற்கு இவ்வாறான ஏற்பாடு அத்தியாவசியமாகும். இடைக்கால நிர்வாக ஏற்பாட்டிலும் சரி. நீண்டகால தீர்வு ஏற்பாடுகளாயினும் இதற்கான கட்டமைப்பு ரீதியான ஏற்பாடுகள் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என நாம் குரல் எழுப்புகின்றோம்.
இலங்கை அரசு முஸ்லிம்களை தொடர்ந்தும் ஏமாற்றி வருகின்றது
வரலாற்று ரீதியாக பார்ப்போம் எனின், இலங்கை அரசு தொடர்ந்தும் முஸ்லிம்களை ஏமாற்றி வருகின்றது. குறிப்பிட்ட காலம் நம்மைப் பயன்படுத்தி விட்டுப் பின்னர் படுகுழியில் தள்ளி விடுகின்றது. 87ம் ஆண்டு இந்திய - இலங்கை ஒப்பந்தத்தில் முஸ்லிம்களைப் புறந்தள்ளியமை மிகவும் தெளிவான எடுத்துக் காட்டாகும். 90இல் பிரேமதாச-விடுதலைப் புலிகள் பேச்சுவார்த்தைக் கட்டத்திலும் நமது மக்கள் மீது ஏதேச்சாதிகாரம் பிரயோகிக்கப்பட்ட போது அரசு மெளனம் சாதித்தது. இன்றும் புரிந்துணர்வு உடன்படிக்கை. அரசியல் பேச்சுவார்த்தைகள் என்ற பெயரிலும் இலங்கை அரசாங்கம் நமது மக்களை ஏமாற்றி வருகின்றது. எதிர்கட்சியாக இருக்கும் போது முஸ்லிம்களுக்காக பரிந்து பேசியும், ஆளும் தரப்பாக மாறியவுடன் முஸ்லிம்களின் உரிமைகளைப் பறிப்பதையும் நயவஞ்சகத்தனத்துடன் சிங்கள அரசியல் கட்சிகளும் தலைமைகளும் இதுவரை திட்டமிட்டு செய்து வருகின்றன. இன்று ஐக்கிய தேசிய முன்னணி கூட வடக்கு கிழக்கு முஸ்லிம்களின் அரசியல் ஸ்தானம் பற்றிய விடயத்தில்
மெளனம் சாதிக்கின்றது. சந்திரிகாவின் எதிரணியோ நமக்காக பரிவுடன் பேசுவதாகக்
காட்டிக் கொள்கின்றது.
இலங்கை அரசின் இன்றைய நிலை என்ன? வடக்குக் கிழக்குப்
பிராந்தியங்கள் மீதும், மக்கள் மீதும் இலங்கை அரசு இதுவரை கொண்டிருந்த .
மேலாதிக்கத்தினை கணிசமான அளவிற்கு கைவிட்டாக வேண்டிய ஒரு பலவீனமான நிலைக்கு அரசு இப்போது தள்ளப்பட்டுள்ளது. அரசின் சமாதான அக்கறை என்பது நல்ல நோக்கதில் இருந்து உருவாகியதாக கருத முடியாதுள்ளது. அடக்கப்படும்
ليکلي الله
 

தேசிய இனங்களின் உண்மையான பிரச்சனைகளையும் உணர்வுகளையும் புரிந்து கொண்டு இலங்கை அரசின் அதிகாரத்திலுள்ளவர்கள் சமாதானச் செயற்பாடுகளை முன்னெடுக்கவில்லை. புதிய வழிமுறைகளைப் பயன்படுத்தி எப்படி தமது ஆதிக்கத்தை அதிகபட்சம் தக்க வைத்துக் கொள்வது என்பதுதான் அவர்களின் எண்ணம் என்று கருத வேண்டியுள்ளது. எனவே இப்படியானவர்களின் சமாதான முயற்சிகள் குறித்து நாம் எப்போதும் சந்தேகம் கொண்டவர்களாக இருப்பது அவசியமாகும். காரணம்
நாம் இரண்டு தரப்புகளினால் அடக்கி ஒடுக்கப்பட்டு வரும் பிரிவினராகும்.
இவ்வாறாக இலங்கை அரசு பலவீனப் படும் சந்தர்ப் பங்களில் முஸ்லிம்களைப் பலிகொடுத்து தன்னைக் காப்பாற்றிக் கொள்வதுதான் சிங்கள அரசியல் தலைமையின் வழிமுறையாகும். இதனையே 1987-88இலும் செய்தார்கள். இப்போதும் செய்து வருகின்றார்கள். வடக்கு கிழக்கிலுள்ள முஸ்லிம்களின் உரிமைகள். பாதுகாப்பு விடயத்தில் அதிகம் பொறுப்பு அரசிற்கு உள்ளது என்ற விடயத்தை நமது தலைமைகள் வலியுறுத்த வேண்டும். இடித்துரைக்க வேண்டும். பயன் இல்லை எனின், அரசாங்கத்தின் பங்காளிகள் என்று நமது மக்களை தொடர்ந்தும் ஏமாற்றக் கூடாது. உடனடியாக அரசாங்கத்துடனான உறவைத் துண்டித்துக் கொள்ள விட வேண்டும்.
அரசியல் நெருக்கடிகளின் போது, நமது மக்கள் மத்தியில் இருந்து அழுத்தங்கள் அதிகரிக்கும் சமயங்களில் நமது அரசியல் தலைவர்களை விலைக்கு வாங்குவதன் ஊடாக நமது மக்களை அரசு மெளனிகளாக்குகின்றது. படிப்படியாக நமது அரசியல் உரிமைகளுக்கான குரல்களைக் கரைத்து விட முயல்கின்றது. இப்போது பேச்சுவார்த்தைக் குழுவில் அரசாங்க பிரதிநிதிகளாக முஸ்லிம்காங்கிரஸ் தலைமையை இணைத்து விட்டதன் மூலமாக மீள முடியாப் பொறிக்குள் நமது மக்களை தள்ளியுள்ளது. நமது மக்களுக்காக சிங்களத் தரப்புடனும், தமிழ்த் தரப்புடனும் சுதந்திரமாக வாதிட்டு நமது மக்களின் நலன்கள் உறுதிப்படுத்த முடியாதவாறு அரசு ஆப்பு வைத்துள்ளது. இந்த நிலை நீடிக்க மக்களாகிய நாம் ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது. அடுத்து நடைபெறும் பேச்சுக்களில் தனித்தரப்பாக, சுதந்திரமாகப் பங்குகொள்ளுமாறு தொடர்ந்து வலியுறுத்துவோம்.
எனவேதான், அரசாங்கப் பிரதிநிதிகளில் ஒருவராக நாம் கலந்துகொள்ளக் கூடாது என்றும் முழுமையான தனித்துவத்துடன் தனியான ஒரு தரப்பாக வடக்கு
கிழக்கு முஸ்லிம்கள் சார்பில் பேச்சுக்களில் கலந்து கொள்ள வேண்டும் என
வலியுறுத்துகின்றோம். அவ்வாறான வாய்ப்பு அரசாங்கத்தினாலும் தமிழ்த்தரப்பினாலும் மறுக்கப்படும் எனின், நமது மக்களை ஏமாற்றிப் பலியிடும் இவ்வாறான அரசியல் பேச்சுவார்த்தைகளில் கலந்து கொள்ளாது முஸ்லிம் தலைமை வெளியேறி விட வேண்டும் என்று வலியுறுத்துகின்றோம். அரசியல் பேச்சுவார்த்தைகளை நிராகரித்துவிட வேண்டும் என மீண்டும் வலியுறுத்துகின்றோம். நிராகரிப்பு என்பதை தலைமையின் போராட்டமாக்க வேண்டும். அதற்கு ஆதரவாக மக்களாகிய நாம் வீதிகளில் இறங்குவோம். மாறாக, 87 இல் முஸ்லிம்களைப் புறக்கணித்த இந்திய - இலங்கை
5 3 AAA

Page 4
ஒப்பந்தத்தின் கீழ் நடைபெற்ற தேர்தல்களில் கலந்து கொண்டது போன்ற ஒரு அரசியல் தவறினை நமது அரசியல் தலைமைகள் மறுபடியும் செய்யக் கூடாது. இதனை நாம் முஸ்லிம் அரசியல் தலைமைக்கு வலியுறுத்துவோம்.
தமிழ்த்தரப்பும் நம்மைத் தொடர்ந்தும் ஏமாற்றி வருகின்றது:
விடுதலைப் புலிகள் அடங்கலாக தமிழ்த் தரப்புக்களும் முஸ்லிம்களைப் பயன்படுத்தி விட்டு, படுமோசமாக நம் மீது பாதிப்புக்களை ஏற்படுத்தியுள்ளனர். 1987 இல் விடுதலைப் புலிகள் முஸ்லிம் ஐக்கிய விடுதலை முன்னணியை பயன்படுத்திக் கொண்டது. விடுதலைப் புலிகள்-முஸ்லிம் ஐக்கிய முன்னணி உடன்படிக்கை முழுமையாக விடுதலைப் புலிகளினால் மீறப்பட்டது. அதுமாத்திரமன்றி 1990 இல் தன் பயங்கரமான கொலை வெறியை முஸ்லிம்கள் மீது கட்டவிழ்த்து விட்டது. ஏனைய தமிழ்க் கட்சிகள் இந்திய அரசுடன் சேர்ந்து முஸ்லிம் காங்கிரஸ் கட்சியை பயன்படுத்தி இறுதியில் ஏமாற்றினர். இரத்தத்தில் நமது மக்களையும் இளைஞர்களையும் குளிப்பாட்டினர்.
அணி மைக் காலத்தில் வன ரிையில் விடுதலைப் புலிகளும் - முஸ்லிம் காங்கிரசும் இணைந்து வெளியிட்ட கூட்டறிக்கையின் நம்பகமற்ற தன்மையையும், உள்நோக்கங்களையும் நேரில் கண்டோம். இவ்வாறு மேற்கொள்ளப்பட்ட ஏமாற்றுதல்களையும் நமது தலைவர்கள் ஏமாளிகளாகி நமது மக்களின் குருதியையும் நெருப்புக்களையும் சாம்பர் மேடுகளையும் கண்டு அவமானப்பட்டு நின்றதையும் நாம் கண்டோம். சக முஸ்லிம் பத்திரிகைகளும் சுயம் பத்திரிகையும் இந்த உண்மைகளை விலாவாரியாக எடுத்துக் காட்டியிருந்தன.
இப்போது துாதுக் குழு' எனும் பெயரில் ஒரு புதிய அரசியல் நாடகம் தொடங்கியுள்ளது. முஸ்லிம் தலைவர்களோ ஒருபுறம் கையாலாகாத்தனத்தையும். மறுபுறம் வீராவேச உரைகளையும் வெளிப்படுத்துகின்றனர். தூதுக்குழு விவகாரம் நாடகமல்ல. உண்மையான முயற்சிதான் எனின் விடுதலைப் புலிகளும் இதர தமிழ்த் தரப்புகளும் முஸ்லிம்களின் தனியான தேசியத்துவத்தை எதுவித நிபந்தனைகளும் இன்றி ஏற்றுக் கொள்ள வேண்டும். சுயநிர்ணய உரிமையை ஒப்புக் கொள்ள வேண்டும். பொதுவான பாரம்பரியத் தாயகத்தில் சுதந்திரமாக வாழவும், தொழில் செய்யவும் நமக்குரிய இயற்கை வளங்களை நமது மக்கள் சுதந்திரமாகப் பயன்படுத்துவதையும் தங்குதடையின்றிப் போக்குவரத்து செய்வதையும் பேச்சளவில் அல்லாது நடைமுறையில் உறுதிப்படுத்த வேண்டும். முஸ்லிம் மக்களுக்கு எதிரான மூதுார், வாழைச்சேனை நிகழ்வுகளுக்கும் இழப்புகளுக்கும் தார்மீகப் பொறுப்பேற்க வேண்டும். இதனைச் செய்து விட்டுத்தான் எந்தவகையான அரசியல் பேச்சுக்களையும் முஸ்லிம் தரப்புடன் ஆரம்பிக்க வேண்டும். ஹக்கீம்-அன்ரன் சந்திப்பு இதுபற்றி விரிவாக ஆராய்ந்ததாக நமக்குத் தெரியவில்லை.
فيلمتعة

வடக்கு கிழக்கு முஸ்லிம்களின் அரசியல் அபிலாசைகளை நமது அரசியல் பிரதிநிதிகள் தமிழ்த் தரப்பிடம் வலியுறுத்த வேண்டும். இவற்றை விடுதலைப் புலிகளோ, இதர தமிழ்த்தரப்புகளோ ஏற்றுக் கொள்ளவில்லை எனின் எந்தவித அரசியல் பேச்சுக்களையும் சம்பந்தப்பட்டவர்களுடன் வைத்துக் கொள்ளக் கூடாது. அவ்வாறு
மீறுவது நமது மக்களுக்குச் செய்யும் துரோகத்தனமாகும்.
ஆக, 1970களுக்குப் பின்பு உருவாக்கப்பட்ட அரசியல் சாசனங்கள் தமிழ், முஸ்லிம், மலையகத் தமிழ் மக்களை பல்வேறு அடக்குமுறைகளுக்கு உட்படுத்தியுள்ளது. மேலும் அரசியல் சாசன ரீதியில் உறுதிப்படுத்தி ஏற்றுக் கொள்ளப்பட்ட அடிப்படை விடயங்கள் பல மிக மோசமாக மீறப்பட்டுள்ளன. இவ்வாறாக அரசியல் சாசன ரீதியில் உறுதிப் படுத்தப்பட்ட ஏற்பாடுகளையே இலகுவில் துாக்கியெறிந்து விட முடியும் எனின் வெறும் தார்மீக ரீதியான வாக்குறுதிகளையும் சாந்தப்படுத்தல்களையும் ஏற்றுக் கொண்டு ஒரு தேசிய இனத்தின் தலைவிதியை இன்னொரு தேசிய இனத்தின் அதிகாரத்தரப்பிடம் பணயம் வைப்பது அரசியல் தற்கொலைக்கு ஒப்பானது என உரத்துச் சொல்கின்றோம். இந்நிலையை ஏற்பட மக்களாகிய நாம் எவரையும் அனுமதிக்கக் கூடாது.
அடக்குமுறைகளையும் பாரபட்சங்களையும் கைவிடுவதாகக் கூறும் எந்தவொரு வாக்குறுதியும் செயல்களில் நிரூபிக்கப்படல் வேண்டும். அதற்கான சிறு முனைவுகூட இப்போது உளச்சுத்தமாக மேற்கொள்ளப்படவில்லை. உண்மையான அக்கறை சிங்கள அதிகாரத்தரப்பிடம் இருந்து தமிழ்த்தரப்பிற்குக் காட்டப்படவில்லை. சிங்கள, தமிழ் அதிகாரத்தரப்புகள் இரண்டிடம் இருந்தும் முஸ்லிம்கள் மீதும் நிரூபித்துக் காட்டப்படவில்லை. மாறாக, ஏற்கனவே இருக்கும் அடக்குமுறைக் கூறுகள் மேலும் மேலும் இறுக்கிக் கொள்வதற்கு சட்டரீதியான வழிமுறைகளை உறுதிப்படுத்திக் கொள்வதில்தான் பெரிதும் அக்கறை காட்டப்படுகின்றது. இரு தரப்பினாலும் அடக்குமுறைக்கு உள்ளாக்கப்படுபவர்கள் என்ற வகையில் இது நமது மக்களுக்கு மேலும் சந்தேகத்தையும் அச்சத்தையும் தருவதாக உள்ளது. இவ்வாறான எச்சரிக்கைகளையும் கேள்விகளையும் நாம் எழுப்பும் போது, சமாதானத்தைக் குழப்பும் செயற்பாடாக குறுக்கப்படுவதில் விரைந்து முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றது. இது நமது சந்தேகத்தை மென்மேலும் அதிகரிக்கின்றது.
முஸ்லிம் அரசியல் தலைமைகளும் நமது மக்களை ஏமாற்றி வருகின்றது:
இந்த விடயம் குறித்து நாம் இப்போது அதிகம் பேசப்போவதில்லை. நமது மக்களுக்கு முஸ்லிம் தலைவர்களின் மாறுபாடுகள், புரட்டுக்கள், வாய்வீச்சுக்கள் பற்றி அதிகம் தெரியும். என்ன செய்வது நமக்கென்று ஒரு வலுவான அரசியல் தலைமைத்துவம் இனி மையால் இவர்கள் அந்த வெற்றிடத்தை நிரப் பிக்
- .فيعة -

Page 5
கொண்டிருக்கின்றார்கள். ஆனாலும் அவர்களை நாம் விடக்கூடாது. பொறுப்புக்களில்
இருந்தால் அவற்றை சரியாக ஆற்றும்படி ஓயாது விரட்டுவோம். அவர்களை ஓய்ந்திருக்க வ விடக்கூடாது. முடியாதவர்களை பொறுப்புக்களை விட்டு ஒதுங்கக் கோகுவோம்.
நமது மக்கள் தெளிவான அரசியல் அபிலாசைகளுடன் உள்ளனர். "
ஆனால் அரசியல் தலைவர்கள்தான் வெறுங்கையுடன் உள்ளனர். அரசியலை வியாபாரமாக்கி அங்குமிங்கும் பாய்ந்து கொண்டிருக்கின்றனர். அரசியல் தலைமையாக இருந்து கொண்டு கடமைகளைச் செய்யாது பலன்களையும் சலுகைகளையும் அனுபவித்துக் கொண்டிருக்கும் காலம் முடிவிற்கு வந்து விட்டது என்பதை நமது தலைவர்கள் படிப்படியே உணரத் தொடங்கி விட்டனர். ஒரு கடைசிச் சந்தர்ப்பம் இப்போது அவர்களுக்குத் தரப்பட்டுள்ளது. எனவே மக்களின் சார்பில் முஸ்லிம்
அரசியல் தலைவர்கள் தமது உண்மையான பொறுப்பினை நிறைவேற்றியாக வேண்டும்
என்று கோருகின்றோம்.
வடக்கு கிழக்கு பிரதேசம் முஸ்லிம்களின் தாயகமும்தான் என்று
விடுதலைப் புலிகள் ஏற்றுக் கொண் டதாக முஸ்லிம் காங் கிரஸ் தலிைமை பெருமைபாராட்டிக்கொள்கின்றது. இந்த பொதுவான தாயகத்தின் ஆதிக்கம் முழுவதும் தமக்கு மாத்திரமே என்பதை நடைமுறையில் விடுதலைப் புலிகள் காட்டி வருவதைப் , பார்க்கும் போது, நாம் கோரும் அர்த்தமும் விடுதலைப் புலிகள் வெளிப்படுத்தும் அர்த்தமும் எதிரும் புதிருமாக இருப்பது தெளிவாகின்றது. இப்படியான உறுதி மொழிகளில் உள்ள வார்த்தைகளில் உண்மையான அர்த்தம் எதுவென நடைமுறைகள்தான் காட்டி நிற்கும்.
வடக்கு கிழக்கு முஸ்லிம்களின் அரசியல் எதிர்காலம் தொடர்பாக சகல முஸ்லிம் அரசியல் தலைவர்கள் மத்தியிலும் பொதுவான நிலைப்பாடு எட்டப்படுதல்.
இன்றைய கட்டத்தில் முஸ்லிம்களின் அரசியல் தலைமைத்துவங்கள முஸ்லிம் காங்கிரஸ் என்றும், தேசிய ஐக்கிய முன்னணி என்றும், முஸ்லிம் மக்கள் கூட்டமைப்பு என்றும், சிங்களக் கட்சிகளின் முஸ்லிம் பிரதிநிதிகள் என்றும் இன்னு பல அமைப்புகளாகவும் பிளவுண்டிருக்கின்றனர். இவ்வாறான நிலைமையினா ஏற்படும் பாதகத்தின் தாக்கத்தினை அதிகபட்சம் சுமக்கப்போவது வடக்கு கிழக்கிலுள் முஸ்லிம் மக்கள் தான். இதுவரை நிலவி வந்த அரசியல் சூழல் மிகவேகமா மாற்றமடையப் போகின்றது. அரசாங்கத்துடன் ஊடாடி வந்த அரசியல்வாதிகளின் அதிகாரங்கள் மட்டுப்படுத்தப்படவும் படிப்படியே முடிவிற்கு வரவும் போகின்றது. அதற்கா
8 فلم محقق

அறிகுறிகளை இப்போதே நாம் காணமுடிகின்றது. இந்தப் பின்புலத்தில் பாப்போம் எனின். கட்சி வேறுபாடுகளை ஒதுக்கி வைத்துவிட்டு அனைத்து முஸ்லிம் அரசியல் தலைவர்கள் ஒனர் றிணைந்து செயற் பட வேண டிய அவசிய காத நாம்
வலியுறுத்துகின்றோம்.
அடுத்து வரும் காலத்தில் வடக்கு கிழக்கு முஸ்லிம்களின் அடிப்பா அரசியல் மற்றும் வாழ்வியல் உரிமைகளை உறுதிப்படுத்திப் பாதுகாக்க வேணடும் எனின், முஸ்லிம் அரசியல் தலைவர்கள் அனைவரும் பொதுவான கருத்தின் கீழும் வேலைத்திட்டத்தின் கீழும் ஒன்றுபட்டுத்தான் ஆக வேண்டும். தாமதிக்கும் ஒவ்வொரு கணமும் வடக்கு கிழக்கு முஸ்லிம் களின் அரசியல் சமூக எதிர் காலம் ஆபத்திற்குள்ளாகின்றது என்று வலியுறுத்துகின்றோம்.
- பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த முஸ்லிம் அரசியல் நிறுவனங்களுக்கும் அரசியல் தலைவர்களுக்கும் இடையில் ஒற்றுமை பற்றி அதிகம் பேசப்படுகின்றது. கரங்களைப பலப்படுத்த வேண்டும் என்று ஆக்ரோசமாகப் பேசப்படுகின்றது.
எதன் மீது ஒற்றுமைப் படுவது? இதுவரை அனுபவித்து வந்த அதிகாரங்களையும் சலுகைகளையும் மீள் உறுதி செய்து கொள்வதற்கா? அல்லது வடக்கு கிழக்கு முஸ்லிம்களின் தேசிய அபிலாசைகளையும் இருப்பினையும் பாதுகாப்பினையும் உடனடி நீண்ட கால அடிப்படையில் உறுதி செய்து கொள்தவற்கா?
எப்படி ஒற்றுமைப் படுவது? தெளிவான கொள்கைகள் பொது வேலைத்திட்டத்தின் அடிப்படையில் வெளிப்படையாகவா? அல்லது பின் கதவுகள் வழியாகவா?
எனவே முஸ்லிம்களினர் தேசியம், சுயநிர்ணயம், பாரம்பரியத தாயகம், சமத்துவமான அரசியல் அதிகாரம், தம் மைததாம் பாதுகாப்பு கொள்தல் போன்ற மூலாதார விடயங்களில் உடனடியாக பொதுக் கருத்துக்கு வந்தாக வேண்டும் என்றும். அதற்கான பொதுக் கலந்துரையாடல் ஒன்று அவசரமான நடைபெற வேண்டும் என்றும், அதில் தனிப்பட்ட மற்றும் கட்சி அரசியல் வேறுபாடுகளை ஒரு புறம் வைத்துவிட்டு வடக்கு கிழக்கு முஸ்லிம்களின் உடனடி நீண்டகால நலன்களின் அடிப்படையில் ஒன்றிணைந்து ஒரு வேலைத்திட்டத்திற்கு வருமாறும் முஸ்லிம் அரசியல் தலைவர்கள் அனைவருக்கும் அறைகூவல் விடுகின்றோம்.
இவ்வாறான புனிதமான முயற்சிக்கு முன்கையெடுத்துச் செயற்படுபவர்கள் வடக்கு கிழக்கு முஸ்லிம் மக்களால் வாழ்த்தி வரவேற்போம். ஒரு ஆபத்தான கட்டத்தில் ஒட்டுமொத்த முஸ்லிம் மக்களையும் பாதுகாக்க முன்வந்தவர்கள் என்று வரலாற்றில் நாம் குறித்து வைப்போம். நேரடியாகவோ மறைமுகமாகவோ இதற்கு குறுக்கே நிற்பவர்கள். இம் முயற்சிகளைபின்னோக்கி இழுப்பவர்கள் முஸ்லிம்களின் துரோகிகள் எனப் பிரகடனம் செய்வோம்.
9 -- M

Page 6
அரசியல் சாசனத் திருத்தம் 19 தொடர்பாக முஸ்லிம் அரசியல் தலைவர்கள் எடுக்க வேண்டிய நிலை என்ன?
இலங்கையிலுள்ள சக தேசிய இனங்களைப் புறக்கணித்துச் சிதைத்து விடும் நோக்கத்துடனும், பரந்துபட்ட சிங்கள மக்களை அடக்கியொடுக்கும் நோக்கத்துடனும் சிங்கள ஆதிக்க சக்திகள் 1977ம் ஆண்டு கொண்டு வந்த அரசியல் சாசனம் இன்று அவர்களுக்கும் அவர்களது மக்களுக்கும் அடிமைச் சங்கிலியாக மாறிவிட்டது. மீள முடியாச் சிக்கலுக்கும் அவர்கள் மாட்டிக் கொண்டுள்ளனர்.
இப்போதும் கூட ஆட்சியாளர்கள் கொண்டு வரும் 19வது அரசியல் சாசனத் திருத்தமானது எந்தெந்த விடயங்களில் முஸ்லிம்களைப் பாதிக்கின்றனவோ அவற்றிற்கு நமது முஸ்லிம் தலைவர்கள் ஆதரவு கொடுக்கக் கூடாது. நமது நலன்களை உறுதிப்படுத்தாது நமக்கு எதிரானதாக அமையும் விடயங்களை கடுமையாக எதிர்க்க வேண்டும். இதுபற்றி விவாதங்களை அடுத்து வரும் நாட்களில் நமது மக்கள் மத்தியில் நடாத்த வேண்டும். அடக்கப்படும் தேசிய இனங்களுக்கு வரும் பொதுவான பாதிப்புக்கள் குறித்து தமிழ் மற்றும் மலையக அரசியல் தலைமைகளுடன் விவாதித்து பொது உடன்பாட்டுக்கு வரவேண்டும் என்று வலியுறுத்துகின்றோம்.
6|Li(8) கிழக்கு பிரதேசத்தில் முஸ்லிம்களின் இன்றைய அதிகாரப் படிநிலை என்ன?
வடக்கு கிழக்கில் பெரும் எண்ணிக்கையில் வாழும் மூன்று சமூகப் பிரிவுகளும் (முஸ்லிம்கள். தமிழ் மக்கள், சிங்கள மக்கள்) சமமான பாதிப்புக்களைக் கொண்டுள்ளனர் என இன்றைய நிலையில் வகைப்படுத்துவதும், அனைவரையும் திருப்திப்படுத்தும் தீர்வுகள் எனப் பேசுவதும் அடிப்படைத் தவறாகும். தற்போது ஒரு அதிகாரப்படிநிலை வரிசையில் சமூகங்கள் உள்ளன.
சிங்கள மக்கள் நீண்டகாலமாக இலங்கை அரசின் விசேட போசிப்பில் இருந்து வருகின்றனர். தமிழ் மக்கள் அண்மைக்காலமாக அதாவது விடுதலைப் புலிகள் தம்மை ஒரு அரசு போன்ற ஒரு கட்டமைப்பிற்கு வளர்த்துக் கொண்டு விட்ட பின்னர், ஒரு குறிப்பிட்ட அளவிற்கு அதிகாரம் பெற்று வருகின்றனர். அதேசமயம், முஸ்லிம்கள் எந்தவித அதிகாரமும் அற்றவர்களாக உள்ளனர். இருக்கின்ற சில அதிகாரங்களையும் இழந்து வருகின்றவர்களாக உள்ளனர். ஒரு சிலர் எம்பிக்கள் மந்திரிகளாகவும் அரை மந்திரிகளாகவும் இருந்து சலுகைகளை தாமும் பெற்று. தமக்கு மிக நெருக்கமானவர்களுக்கும் பெற்றுக் கொடுத்த நிலைமை காலாவதியாகிக்
yed S S S S S S O

கொண்டிருக்கின்றது. அப்படியான காலம் இப்போதும் இனி வருங்காலங்களிலும் முடிவிற்கு வந்து விட்ட பின்புலத்தில், வடக்கு கிழக்கு முஸ்லிம்களாகிய நாம் இன்று அதிகாரப் படிநிலையில் கீழ் மட்டத்திற்குத் தள்ளப்பட்டுள்ளோம். இந்த யதார்த்த நிலைமையை சரியாகப் புரிந்து கொள்வோம்.
இப்படிப்பட்ட சூழலில் உள்ளூராட்சித் தேர்தல்களில் அனைத்து சபைகளையும் நாம் வெற்றி கொண்டாலும் உண்மையான அரசியல் மற்றும் நிர்வாக அதிகாரத்தில் அவை வெற்றுத் தன்மை கொண்டதாகவே இருக்கும். எனவே உள்ளளுராட்சித் தேர்தல்களுக்கு முக்கியத்துவம் தருவதை விட நாம் அரசியல் மற்றும் நிர்வாக அதிகாரங்களை பெற்றுக் கொள்வதிலும் அவற்றை உறுதிப்படுத்திக் கொள்வதிலும் ஒன்றிணைந்து விரைந்து செயற்பட வேண்டும் என அறை கூவல் விடுக்கின்றோம்.
வடக்கு கிழக்கிலுள்ள சிங்கள மக்களின் இருப்பிற்கும் பாதுகாப்பிற்கும் அரச படைகள் உள்ளன. தமிழ் மக்களின் பக்கம் விடுதலைப் புலிகள் உள்ளனர். இப்படியான சூழலில் முஸ்லிம்களின் நிலை மிகவும் பலவீனமானதாக உள்ளது. எனவே நமது இருப்பு மற்றும் பாதுகாப்பிற்கான அதிகபட்ச உறுதிப்படுத்துதலைக் கோருவது முற்றிலும்
நியாயமானதே.
அந்தவகையில் பின்வரும் விடயங்களை முஸ்லிம்கள் தரப்பில் முஸ்லிம் அரசியல் தலைமைகள் திட்டவட்டமாக முன்வைத்து வாதாடி வென்றெடுக்க வேண்டும். இவ்விடயங்களில் எவ்வித விட்டுக் கொடுப்புகளுக்கும் சமரசத்திற்கும் இடமிருக்கக் கூடாது. இதற்கு நமது அரசியல் தலைமைகளுக்கு முடியாது போனால் முஸ்லிம்களுக்கு அரசியல் தலைமை கொடுக்க இலாயக்கற்ற தமது நிலையை ஒப்புக் கொண்டு தாமாகவே அப்பொறுப்புகளில் இருந்து விலகிக் கொள்ள வேண்டும்.
இடைக்கால நிர்வாகக் கட்டமைப்பு நடைமுறைக்கு வரும் எனின், வடக்கு கிழக்கு முஸ்லிம்கள் நலன்சார்ந்து முஸ்லிம் தலைமை வென்றெடுக்க வேண்டிய அடிப்படையான விடயங்கள்.
1. வடக்கு கிழக்கு முஸ்லிம்கள் தனியான இனம். பண்பாடு கொண்டவர்கள் தனித்துவமானவர்கள் என்று ஒருபுறம் ஒப்புக்கொள்வதாகக் காட்டிக் கொண்டு மறுபுறம் அரசியல்பண்பு நீக்கம் செய்து, நமது தேசிய அபிலாசைகளை காயடிக்கும் முயற்சிகள் தமிழ்த்தரப்பினால் மேற்கொள்ளப்படுகின்றது. எனவே, வடக்கு முஸ்லிம்கள் அரசியல் அர்த்தத்தில் தனியான அரசியல் சமூகம். எனவே தனியான தேசிய இனம். தமது அரசியல் தலைவிதியை தாமே நிர்ணயிக்கும் சுயநிர்ணய உரிமை கொண்டவர்கள். தமது பாரம்பரியத் தாயகத்தில் தம்மைத் தாமே
شکtملمع

Page 7
ஆளக் கூடியவாகள் என்று ஏற்றுக்கொள்ளப்பட்டு அரசியல் அதிகாரங்கள் உறுதிப்படுத்தப்பட வேண்டும். இவ்விடயத்தில் முஸ்லிம் தலைமை சிறிதேனும் விட்டுக் கொடுப்புக்கள் செய்யக் கூடாது. இதற்கு முன்னோடியாக இடைக்கால நிர்வாக அமைப்பிலும் போதுமான ஏற்பாடுகளை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். வடக்கு கிழக்கு முஸ்லிம்களின் தாயகம், சுயநிர்ணய உரிமைகள் பற்றிய விடயங்களில், முஸ்லிம் காங்கிரஸ் பங்குதாரராக இருப்பதாகப் பெருமைப்பட்டுக் கொள்ளும் ஐக்கிய தேசியக் கூட்டமைப்பு அரசாங்கத்தின் நிலைப்பாட்டை அறிந்து முஸ்லிம்காங்கிரஸ் தலைமை நமது மக்களுக்கு அறியத்தர வேண்டும்.
2. அரசியல் பேச் சுவார்த்தைகளில் சுதந்திரமான இன்னுமொரு தரப்பாக உண்மையான அர்த்தத்தில் முஸ்லிம்களின் அரசியல் தலைமை செயற்பட வேண்டும். அவ்வாறாயின், முஸ்லிம்களின் அரசியல் அபிலாசைகளையும் இடைக்கால நிர்வாகம் தொடர்பில் முஸ்லிம்களுக்கான பாத்தியதைகள் பற்றியும், விடுதலைப் புலிகளுடன் மாத்திரம் அன்றி, அரசு தரப்புடனும் நமது அரசியல் தலைமை பேச வேண்டும். மேற்படி இரண்டு தரப்பினதும் நிலைப்பாடுகளை திட்டவட்டமாக அறிந்து நமது மக்களுக்குத் தெரியப்படுத்தியாக வேண்டும்.
3. வடக்கு கிழக்கு முஸ்லிம்கள் மத்தியில் எழும் சட்டம் ஒழுங்குப் பிரச்சனைகளைக் கவனிப்பது முற்றிலும் முஸ்லிம்களின் பொறுப்பில் விடப்படல் வேண்டும். இதற்கான சிறப்பு ஏற்பாடுகள் உடனடியாகச் செய்து முடிக்கப்படல் வேண்டும். சிங்கள பொலீசாரோ, தமிழ்க் காவல் துறையினரோ வடக்கு கிழக்கு முஸ்லிம்களுடன் தொடர்புடைய சட்ட ஒழுங்கு விவகாரங்களில் தலையீடு செய்தல் கூடாது. சமாதானப் பேச்சுக்களின் நோக்கங்களில், வடக்கு கிழக்கில் சுமுகநிலையை ஏற்படுத்துவதும் ஒரு பகுதி என்பது உண்மையென்றால், இதற்கு மேற்படி ஏற்பாடு - மிக மிக அவசியமாகும். எந்தவித மயக்கத்திற்கும் இடமின்றி நமது முஸ்லிம் தலைமை இந்த உரிமைகளை வென்றெடுக்க வேண்டும்.
4. 1990இல் விடுதலைப் புலிகளால் வெளியேற்றப்பட்ட வடக்கு முஸ்லிம்கள் முழுமையான நட்டஈடுகளுடன் மீளக்குடியேற்றம் செய்யப்படல் என்பது புனர்வாழ்வு நடவடிக்கைளில் அனைத்தையும் விட முதன்மை பெற வேண்டும். இதனை உறுதிப்படுத்தும் வாதங்களையும் ஆதாரங்களையும் முஸ்லிம் தலைமை அரசியல் பேச்சுவார்த்தைகளில் முன்வைக்க வேண்டும். அவசியமான அனைத்து தகவல்களையும் ஆதாரங்களையும் உடனடியாகத் திரட்டித் தம்வசம் தயாராக வைத்துக்கொள்ள வேண்டும்.
5. வடக்கு கிழக்கு முஸ்லிம்கள் 1990 களுக்கு முன்னர் தமது பாரம்பரியமான தொழில் நடவடிக்கைகளில் சுதந்திரமாக ஈடுபட்டது போன்ற நிலைமை, தமக்குரிய இயற்கை வளங்களை சுதந்திரமாகப் பயன்படுத்திக் கொண்ட நிலைமை மீண்டும்
2 - فالعضة

தோற்றுவிக்கப்படல் வேண்டும். அத்துடன் 1970க்குப் பின்பு திட்டமிட்ட சிங்களக் குடியேற்றம் காரணமாக முஸ்லிம்களிடம் இருந்து அடாத்தாகப் பிடுங்கப்பட்ட ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்கள் யாவும் மீள ஒப்படைக்கப்படுவதை நமது முஸ்லிம் தலைமை உறுதிப்படுத்த வேண்டும்.
6. நீண்டகாலமாக அரசினால் திட்டமிட்டுப் புறக்கணிக்கப்பட்டது மாத்திரமன்றி அரசினால் திணிக்கப்பட்ட தொடர்ச்சியான யுத்தம் காரணமாக வடக்கு கிழக்கு பிரதேசத்திலுள்ள உள்ளகக் கட்டுமானங்கள் சிதைக்கப்பட்டுள்ளன. எனவே வடக்கு கிழக்கினை மீளக் கட்டியெழுப்பும் நடவடிக்கைகளுக்கு பெருமளவு நிதியொதுக்கீடுகளைப் பெற்றுக்கொள்வதில் தமிழ் தரப்புடன் இணைந்து முஸ்லிம் தலைமை உறுதியாகச் செயற்பட வேண்டும். மேலும் அவ்வாறாக ஒதுக்கப்படும் நிதியினைப் பயன்படுத்தும் செயற்பாடுகளில் இலங்கை அரசு அதிகாரப் பண்புடன் தலையீடு செய்யக்கூடாது. அது போன்றே முஸ்லிம் பிரதேசங்களுக்கென ஒதுக்கீடு செய்யப்படும் நிதியினைப் பயன்படுத்தும் செயற்பாடுகளில் தமிழ்த் தரப்பினர் எந்தவித தலையீடும் இருக்கக் கூடாது என்பது உறுதிப்படுத்தப்பட வேண்டும்.
7. வடக்கு கிழக்கில் முஸ்லிம்களுக்கும் தமிழருக்கும் பொது எனக் கருதப்படும்
அபிவிருத்தித் திட்டங்கள் மற்றும் புனர்வாழ்வு புனரமைப்பு விடயங்களில்,
சம்பந்தப்பட்ட இரு தரப்பும் திறந்த தன்மையுடன் உரையாடி பொது உடன்பாடுகள் எட்டப்பட வேண்டும். அவ்வுடன்பாடுகள் நடைமுறைப்படுத்தப்படல் வேண்டும்.
8. முஸ்லிம்களை செறிவாகவும், பாரம்பரியமாகவும் கொண்ட பிரதேசங்களின் நிர்வாகத் துறைசார் விடயங்களில் சிங்கள தரப் போ, தமிழ்த் தரப் போ எந்தவித தலையீடுகளையும் நேரடியாகவோ மறை முகமாகவே மேற்கொள்ளக் கூடாது
என்பது திட்டவட்டமாக உறுதி செய்யப்பட வேண்டும்.
*ಿ: தே சமூகப் பண்புடன் சுயம் தொடர்ந்தும் வெளிவர பலரின் பங்குபற்றுதலும் உழைப்பும்
சிலரின் பொருளாதாரப் பங்களிப்பில் சுயம் தொ ர்ந்தும் தங்கியிருப்பது وق) ولما
நமது சமூகத்தின் பத்திரிகை என்பதை உறுதிப்படுத்த 200 விஷேட கூலிவி*மிா மோk மாதத்திற்கு 20000 தந்து
கின்ற 200 வாசகர்களை நாம் எதிர்பார்க்கிறோம். st கய உதவி கிடைத்தால்
::::::::::: ::::::::::
"ת.י.לצאת: " "ירח : :
ாலும் இந்த ஆறுமாத இை ல் சுயம் பொருளாதார ரீதியாக
போதுமென்று கருதுகின்றோம். இன்ஷா அல்ல
வாசிப்பு என்பவற்றில் மட்டுமன்றி அதைப் பதிப்பிப்பதிலும் ஒரு வலுவான சமூகத்தன்மையைப் பேணுவோம். “့် မွို "
SSL S S S S S S SS S S S S S S S - ஆசிரியர் )رقع)U
வக்கவும். சந்தாப் பணத்தைப் பெற்றுக்கொள்வது
குறிப்பு மறுபக்கமுள்ள படிவத்தை நிரப்பி குறித்து நீங்கள் நிரப்பி அனுப்பிய இந்தப் படிவம் கிடைத்த பின்பு உங்களோடு தொடர்பு கொள்வோம்.

Page 8
9. பொதுவான Lllimi i till 16\) ஊடகத்துறையில் தனியான ஒலி, ஒளி 6}وتیUY6\( வரிசைகள்
முஸ்லிம்களுக்கு என ஒதுக்கீடு செய்யப்படல் வேண்டும்.
10. தமிழீழ விடுதலைப் புலிகள் தமிழ் மக்கள் தரப்பில் காவல்துறை அமைப்பினை நடைமுறைப்படுத்தி வருகின்றனர். இடைக்கால நிர்வாக கால கட்டங்களில் இதற்கும் இலங்கை அரசாங்கத்தின் காவல்துறைக்கும் இடையில் மோதல் இன்றிச் செயற்படுவதற்கான ஏற்பாடுகள் பற்றி பிரதானமாக விவாதங்கள் தாய்லாந்தில் நடைபெறவுள்ளது. ஆக, வடக்கு கிழக்கில் தனித்தனியான காவல் துறைகள் இயங்குவதற்கான சூழல் ஏற்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் நமது மக்கள் செறிவாக வாழும் தொழில் செய்யும் பிரதேசங்களில் முஸ்லிம் பொலிஸ் படைப் பிரிவுகள் ஏற்படுத்தப்படல் வேண்டும். அதனை கட்டுப்படுத்தி நெறிப்படுத்தும் அதிகாரம் முஸ்லிம்களுக்கான நிர்வாக அதிகாரத்தின் பொறுப்பில் ஒப்படைக்கப்படல் வேண்டும்.
அரசாங் கத்தில் பங்குதாரர்கள் என ற பெயரோடு ஒரிரு அமைச்சர்களையும் அரை அமைச்சர்களையும் கொண்டிருப்பது வடக்கு கிழக்கு முஸ்லிம்களின் அடிப்படைத் தேசிய அபிலாசைகளுக்கு எதனையும் தந்து விடாது. புதிய மாற்றங்கள் வேகமாக உருவாகிக் கொண்டிருக்கும் சூழலில் நாம் இருப்பதையும் இழந்து விடப் போகின்றோம். இந்த இழப்புக்களைத் தடுக்கும் வல்லமைகள் இந்த பங்குதாரர்தன்மைக்கு இருக்காது. இந்த உண்மையை நமது அரசியல் தலைமை இப்போது நன்கு உணர்ந்து கொண்டு விட்டன. தமது கையாலாகாத் தனத்தை ஆங்காங்கு கூட்டங்களிலும் கலந்துரையாடல்களிலும் சூசகமாகத் தெரிவித்து வருகின்றனர்.
தமிழர்களுக்கு ஒன்று கிடைக்கின்றது என்றால் அது எமக்கும் தரப்படல் வேண்டும் என்று கோரும் அரசியல் அப்பாவித்தனமான அடம்பிடித்தலை நமது
ராகிய நான்
3: மேற்படி விசே
இத்தால் அறியத்தருகின்றேன்
பெயர் :
விலாசம்:
தொலைபேசி இல
 
 
 
 

தலைவர்கள் என்று சொல்வோர் முதலில் நிறுத்திக் கொள்ள வேண்டும். வடக்கு கிழக்கு முஸ்லிம்களுக்கு என்ன வேண்டும்? என்பதை அரசியல் அர்த்தத்தில் மிகத் தெளிவாக சிங் கள. தமிழ்த் தரப்பு இரண் டிடமும் முன் வைக்க வேண்டும் , நமக்குரியவற்றைப் பெறுவதற்குத் தொடர்ச்சியாகப் போராட வேண்டும். மதில் மேல் பூனைகளாக இருந்து அரசியல் பிழைப்பு நடாத்தும் அந்தக் காலம் முடிந்து விட்டது. இனியொரு தடவை அது வரப்போவதும் இல்லை. -
இன்றைய அரசியல் அரங்கில் வடக்கு கிழக்கு முஸ்லிம்களைப் பிரதிநிதித்துவப் படுத்தும் முஸ்லிம்காங்கிரஸ் ஒரு புறம் அரசாங்க தரப்பாகவும் மறுபுறம் தனித்த பிரிவாகவும் பங்குபற்றுவது அதன் அரசியல் குழப்பத்தையும் வழமையான நிலையற்ற தன்மையையும் காட்டுகின்றது. மாறி வரும் போக்குகளுக்கு ஏற்ப அவ்வப்போது நிலைப்பாடுகளை எடுப்பதும் மாற்றிக்கொள்வதுமான அதன் செயலானது
அரசியல் உறுதியற்ற பண்பை வெளிப்படுத்துகின்றது. நீண்டகால நோக்குடன் வடக்கு கிழக்கு முஸ்லிம்களின் அரசியல் அபிலாசைகளை உறுதிப்படுத்தும் எவ்வித கொள்கைகளும் திட்டங்களும் அற்ற அகப் பலவீனத்தை அது வெளிப்படுத்துகின்றது. முதன்மையான முஸ்லிம் அரசியல் தலைமை என்ற வகையில் முஸ்லிம் காங்கிரஸ் அரசியல் உயர்பீடம் தமக்குள் விவாதித்து தெளிவான அரசியல் நிலைப்பாடுகளை மேற்கொண்டு மக்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும்.
மேற்படி அரசியல் பேச்சுவார்த்தைகளின் போது வடக்கு கிழக்கு முஸ்லிம்களின் தனியான, அரசியல் சமத்துவம் மிக்க பிரதிநிதித்துவம் இடம் பெற வேண்டும் என்பதே வடக்கு கிழக்கு முஸ்லிம்களினதும், முஸ்லிம் மக்கள் நலன்சார்ந்து செயற்படும் அமைப்புக் கள் நிறுவனங்களினதும் விருப்பாகும் . இந்த விடயம் பரவலாக அண்மைக் காலமாக மக்கள் மத்தியில் தெளிவாக வெளிப்படுத்தப்பட்டுள்ளது. முஸ்லிம்காங்கிரஸ் கொண்டுள்ள இன்றைய இரட்டை நிலைப்பாடு உடனடியாகக் கைவிடப்படல் வேண்டும் என்று மக்களின் சார்பில் சுயம் கேட்டுக்கொள்கின்றது.
வடக்கு முஸ்லிம் மக்களின் சர்வசன கருத்துக் கணிப்பாக அமைகின்ற இந்த அபிலாசைகளை வென்று தரும் கடப்பாட்டை நமது அதிகபட்ச வாக்குகளைப் பெற்று அரசியல் தலைமைத்துவத்திற்கு வந்துள்ளவர்களில் முதன்மைப் பாத்திரம் வகிக்கும் முஸ்லிம் காங்கிரஸ் ஆற்ற வேண்டும் என்று நாம் கோருகின்றோம். மக்களின் இந்த அரசியல், நம்பிக்கைக்கு மதிப்பளித்துச் செயற்படுவது முஸ்லிம் காங்கிரஸ் உள்ளிட்ட முஸ்லிம் அரசியல் தலைவர்களின் கடப்பாடாகும்.
ஒன்றுபடுவோம் உறுதியாய் நிற்போம். நம்தேசிய உரிமைகளை ஒன்றுவிடாது வென்றெடுப்போம். ஒய்ந்துவிட வேண்டாமென நம் தலைவர்களுடன் ஓயாது சண்டையிடுவோம்.
- அல்ஹம்துலில்லாஹ் -
5 تحکrعA

Page 9
சுயம் வெளிவ
 

தனிச்சுற்றுக்கு
180/5A-13, ATHTHAR MAHAL, KEYZER STREET COLOMBO -11, SRI LANKA.
Phone. O77 761479