கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: நமது சுயம் 2003

Page 1
O
D O)
ஹிஜ்ரி
A.
O
Ad
trUC
erim
கலந
விவ
s
ல்
6) அ
றபாடுகளுக
சிறப்பு !
அரசிய
GFL
30 ஜமாது
巔
* ----------------------------------------------------------------------------------------
|- |- |- |- |- |-|-, ,|-,|-|-|- |-│ │ │ │- . . . . . . . . .|-....... ),|-|- |-|-----,,, ,
, ,, . . . . . . . . . .
 
 
 
 
 
 

------------------------------
ܙܡܪ---ܪ̈ܕ¬¬.¬.¬¬ܨ܌ܫ ܝ ܒܢ ܕܝܠܢ ܀
·············································.
----
홍| 후 흑) ~활 역 a |- ~ | -1통4-)• E통+ ||환 - 환 후 활雕塑 O- |- 활| 홍劑<> _]] 4-)활 잃∞U', +*劍配而3Ự) ~Ns=日비밀 |-*「關珊珊 幽一身 阿)的阻挠。那咖|2호

Page 2
நமது சுயம் சிறப்பு வெளியீடு-02
அரசியல் கலந்துரையாடலுக்கும் செயற்பாடுகளுக்குமான ஆவணம்
பிஸ்மில்லாஹிர்றவற்மானிர்ரஹீம் ! அன்பார்ந்த முஸ்லிம்களே!
வடக்கு கிழக்கு முஸ்லிம்களும் இடைக்கால நிர்வாகக் கட்டமைப்பும் (Interim Administrative Structure)
சமாதானப் பேச்சுவார்த்தையின் விளைவாக உருவாகிய பல்வேறு அரசியல் திருப்பங்களில் முக்கியமான ஒரு திருப்பத்தை நாம் நெருங்கிக் கொண்டிருக்கின்றோம். இலங்கையில் உக்கிரமடைந்து விட்ட தேசிய முரண்பாட்டிற்கு நிரந்தரமான அரசியல் தீர்வு காணப்பட வேண்டியது வரலாற்றுத் தேவையாகி விட்டதைப் போலவே, இந்த இலக்கினை அடைவதற்கான நீண்ட படிமுறைச் செயற்பாடுகளில் இன்று அதிகாரம் கொண்ட இடைக்கால கட்டமைப்பு ஒன்று நிறுவப்பட வேண்டியதும் வரலாற்றுத்
தேவையாகி விட்டது.
இச்சூழலில் இன அடக்குமுறைகளின் கொடுமைகளால் இரு புறமும் இருந்தும் கசச்சிப் பிழியப்பட்ட நாம், இச் சமாதானப் பேச்சுக்களில் இருந்து நன்கு திட்டமிட்ட விதத்தில் கழட்டி விடப்பட்டுள்ளோம். நமது குரல்களை ஒதுக்கியது மட்டுமன்றி. நம் மக் களினர் குர ள் வளைகளை நெரித்த படி விடயங்கள் நகர்த்தப் பட்டுக் கொண்டிருக்கின்றன. இருந்தும் ஒரு இறுதி முயற்சியாக, தற்போதைக்கு ஒரு குறைந்தபட்ச அளவிலேனும் நமது இருப்பினையும் உரிமைகளையும் பாதுகாப்பினையும் உறுதிப்படுத்த ஓரணியில் நின்று இடைக்கால நிர்வாகக் கட்டமைப்புத் தொடர்பாக அரசியல் தலையீட்டை நாம் செய்ய வேண்டியுள்ளோம்.
அதற்கு முன்னர் அடுத்த கட்ட பேச்சுவார்த்தை தொடங்கப்படுவதா இல்லையா என்பதைத் தீர்மானிக்கும் ஒரு முக்கிய காரணியாகிவிட்ட இடைக்காலக் கட்டமைப்புக் குறித்து நாம் தெளிவான பார்வையைப் பெறுவதும். இக்கட்டமைப்பில் நமது மக்களின் நலன்களை உறுதிப்படுத்திக் கொள்ளும் விதத்தில், சிறப்பு ஏற்பாடுகளைக் கோருவதும் அதற்காகப் போராடுவதும் நமது அவசரக் கடமையாக உள்ளது.
இடைக்காலத் தீர்வுகள், இடைக்கால சபை - சுருக்க வரலாறு:
முரண்பட்டு மோதி நிற்கின்ற சமூகங்களுக்கு இடையே நிரந்தரமான அரசியல் தீர்வைக் காண்பதற்கான முயற்சிகளின் போது இடைக்காலத் தீர்வு என்பது ஒரு
2 om

தவிர்க்க முடியாத நிகழ்வாக பல சந்தர்ப்பங்களில் அமைந்து வந்திருக்கின்றது. உலகெங்கிலும் பல்வேறு சமூகங்களின் அனுபவங்களில் இதனை அவதானிக்கலாம். அயர்லாந்து. பலஸ்தீனம், பிலிபைன்ஸ், காஷ்மீர் உள்ளிட்ட பல்வேறு சமூகங்களில் ஒன்றுக்கு மேற்பட்ட தடவைகளிலும் வெவ்வேறு வடிவங்களிலும் இடைக்காலத் தீர்வு யோசனைகள் அறிமுகப்படுத்தப்பட்டு வந்திருக்கின்றன.
இலங்கையிலும் சுதந்திரத்திற்கு முன்பு பல சந்தர்ப்பங்களில் இடைக்கால அரச நிர்வாக முறைமைகள் அறிமுகப்படுத்தப்பட்டு வந்திருக்கின்றன. ஆங்கிலேய ஆட்சியின் இறுதி கால் நுாற்றான்டுப் பகுதியில் பல்வகை அரசியல் சட்ட முறைமைகளும், அரசியல் சபைகளும் நடைமுறைப்படுத்தப்பட்டன. இவற்றின் இறுதி விளைவாகவே 1948 இல் நிரந்தரத் தீர்வு என்ற வகையில் இலங்கையின் சுதந்திரம் சாத்தியமாகியது. இவற்றை விட சுதந்திரத்தின் பின்னா. இந்நாட்டில் தீவிர வளர்ச்சி பெற்று வந்திருக்கின்ற இன முரண்பாடுகளுக்கு இதுவரையில் பலவித தீர்வு முயற்சிகள் பரிசோதிக்கப்பட்டிருக்கின்றன. மாவட்ட சபை. மாகாண சபை போன்றவற்றை இத்தகைய தீர்வு முயற்சிகளில் முக்கியமானவைகளாக அடையாளம் காணலாம். இவை நிரந்தரத் தீர்வு என்ற அடிப்படையில் முன்வைக்கப்பட்ட போதிலும் கூட இன முரண்பாடுகள் தொடர்ச்சியாக நீடித்து நிலைதிருப்பதைக் கவனத்தில் கொள்ளும் போது, இவற்றை இடைக்காலத் தீர்வுகள் என்றே வகைப்படுத்த முடியும்.
இந்திய-இலங்கை உடன் படிக்கை நடைமுறைப்படுத்தத் தொடங்கிய காலத்தில் முதலில் பிரஸ்தாபிக்கப்பட்ட இடைக்கால சபை ஏற்பாடானது. அன்று ஜேஆர் தலைமையிலான அரசு தனது ஆதிக்கத்தை குறைந்தபட்ச அளவிற்கேனும் கைவிட மறுத்ததன் விளைவாக நடைமுறைக்கு வரவில்லை. அதனைத் தொடர்ந்து நடைபெற்ற நீண்டகால யுத்தத்தின் பின்பு இடைக்காலக் கட்டமைப்பு அல்லது இடைக்கால சபை என்ற கருத்தாக்கமும் கட்டமைப்பும் ஜனாதிபதி சந்திரிகாவினால் மிகவும் விரிவாக எழுத்து மூலமான நகல் வரைவாக முன்வைக்கப்பட்டது. அவ் அரசியல் பேச்சுவார்த்தை முறிவடைந்ததைத் தொடர்ந்து இடைக்கால கட்டமைப்பிற்கான எத்தனிப்புகளும் கைவிடப்பட்டன.
அடுத்த கட்டமாக. அண்மைக்காலத்தில் இராணுவச் சமனிலை விடுதலைப் புலிகளின் பக்கம் நகர்ந்ததைத் தொடர்ந்து விடுதலைப் புலிகளுக்கும் ரணில் தலைமையில் ஐக்கிய தேசிய முன்னணிக்கும் இடையில் யுத்த நிறுத்தம். புரிந்துணர்வு உடன்படிக்கை. அரசியல் பேச்சுவார்த்தை. இடைக்கால கட்டமைப்பு என்ற விடயங்கள் அரங்கிற்கு வந்தன. பல்வேறு முரண்பாடுகளுக்கும் மீறல்களுக்கும் மத்தியில் யுத்தநிறுத்தம் இன்று நடைமுறையில் உள்ளது. ஆரம்பத்திலிருந்து இன்று வரையிலும் இந்த வளர்ச்சிப் போக்குகள் அனைத்திலும் நாம் புறக்கணிக்கப்பட்டது மட்டுமன்றி. மோசமாக தாக்கப்பட்டிருக்கின்றோம் என்பதையும் இங்கு நினைவு கூாவோம்.
அரசியல் பேச்சுவார்த்தை மூலமாக தேசிய இனப்பிரச்சனைக்கு இறுதித் தீர்வு
காண்பது ஒரு நீண்டகாலச் செயற்பாடு என்பதனால், அதற்கு இடைப்பட்ட
காலககட்டத்தில் ஒரு இடைக்கால சபையொன்றை அமைத்து. அதில் விடுதலைப்
mina E 3 SS

Page 3
புலிகளுக்குப் பிரதானமான பாத்திரத்தை வழங்குதல். குறிப்பிட்ட காலத்திற்கு இந்த இடைக்கால நிர்வாகத்தை நடைமுறைப்படுத்துவது என்பது ரணில் தரப்பிற்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் தேர்தலுக்கு முன்பு இணக்கம் காணப்பட்ட ஒரு முக்கிய விடயமாகும்.
இவ்வாறான ஒரு ஏற்பாட்டிற்கு விடுதலைப் புலிகள் அதிக முக்கியத்துவம் கொடுத்தமைக்கு அப்போதும் இப்போதும் குறிப்பிடும் காரணங்களில் பிரதானமானவை
1. தற்போதைய அரசியல் சாசனம், சிங்கள ஆதிக்க சக்திகளுக்கும் இனவாதிகளுக்கும் சாதகமாக அமைந்திருப்பது. தமிழ் மக்களை தொடர்ந்து அடக்கி வருகின்றது. 2. நிறைவேற்று அதிகாரமும் (ஜனாதிபதி) சட்டவாக்க அதிகாரமும் (பாராளுமன்றம்) எதிரும் புதிருமான இருகட்சிகள் பொறுப்பில் இருப்பது.
இடைக்கால சபை அல்லது இடைக்காலக் கட்டமைப்பு எனும் விடயத்தை ரணில் தலைமையானது. ஐக்கிய தேசிய முன்னணி கூட்டரசாங்கத்தின் பிரதான பங்காளர் என்ற வகையில் முஸ்லிம் கொங்கிரசுடன் விரிவாகக் கலந்துரையாடி இவ்வாறான ஏற்பாட்டில் முஸ்லிம்களுக்கான இடத்தைத் தெளிவாக வரையறுத்திருக்க வேண்டும். நிச்சயமாக இது நடைபெறவில்லை என்பது நமது மக்களுக்குத் தெரியும். அவ்வாறாயின் ஒன்று. இவ்விடயத்தை ரணில் முஸ்லிம் கொங்கிரசுக்கு முற்றாக மறைத்திருக்க வேண்டும். அல்லது பொய் வாக்குறுதி அளித்து விட்டு இப்போது ஏமாற்றியிருக்க வேண்டும் அல்லது முஸ்லிம் கொங்கிரஸ் முக்கியஸ்தர்களுக்கு கொடுக்க வேண்டிய அரசியல் இலஞ்சத்தைக் கொடுத்து விட்டு அவர்களின் உடன்பாட்டுடன்
இவ்வாறான முடிவிற்கு வந்திருக்க வேண்டும்.
முதலாம், இரண்டாம் சுற்றுப் பேச்சுவார்த்தைக் காலகட்டத்தில் இடைக்கால சபை என்ற விடயம் மேசைக்கு வந்தது. கூடவே, இது தொடர்பாக முஸ்லிம் அரசியல் சக்திகளின் குரலும் ஒரு மித்த கருத்துடன் எழுச்சிகரமாக வெளிப்பட்டது. புரிந்துணர்வு உடனர் படிக் கையிலும் அரசியல் பேச் சுவார்த் தையிலும் முஸ் லிம் களர் புறக்கணிக்கப்பட்டதுடன் முஸ்லிம்கள் மீது விடுதலைப் புலிகள் பிரயோகித்து வந்த அடக்குமுறைச் செயற்பாடுகளும் முஸ்லிம்களின் குரல் ஓங்கி ஒலிக்க பிரதான காரணமாய அமைநதது.
(pGrossib 5TIJ60oflothuj (Muslim factor) 36j6560)Lj, 5 T6u ஏற்பாட்டில் இருந்து அப்புறப்படுத்த வேண்டும் என்பதிலும். எடுத்தவுடன் சர்ச்சைக்குரிய விடயத்தைத் தொடுவது சந்திரிகா மற்றும் ஜேவிபி தரப்புகளில் எதிர்ப் பிரச்சாரங்களுக்கு வழிவகுக்கும் என்பதிலும் கொண்ட பொது உடன்பாட்டுடன் ரணில்- விடுதலைப்புலிகள் கூட்டு இடைக்கால சபை என்ற அம்சத்தை தற்காலிகமாகக் கைவிட்டனர். பதிலாக, இடைக்கால நிர்வாக சபையானது. அதிகாரம் கொண்ட செயலனி என்பதாகப் பிரஸ்தாபிக்கப்பட்டு, பின்னர் மூன்று உபகுழுக்கள என்ற வடிவங்களை எடுத்தது. இதன் மூலமாக இடைக் கால கட்டமைப்பு என்ற சர்ச்சைக்குரிய அம்சம்
தணிவுநிலைக்குக் கொண்டு வரப்பட்டது.
- 4 SLSLSLS LSLS ynismus

ஆக சமாதானத்தைக் கொண்டு வருவதற்காகப் புறப்பட்ட அரசாங்கத்திற்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம், யுத்தநிறுத்தம். அரசியல் பேச்சுவாாத்தைகள் ஆகிய மூன்று வளர்ச்சிப் போக்குகளிலும் அரசியல் அாத்ததிலும் உயிர் உடமை என்ற அர்த்தத்தில் ஆகவும் பாதிக்கப்பட்ட பிரிவினராக முஸ்லிம்களாகிய நாம் ஆக்கப்பட்டுள்ளோம்.
இ6 டக் , ல நிர்வாகக் கட்டமைப்பு அரசியல் பேச்சுவார்த்தைக்கான முன்னிபந்தனையாகின்றது
ஒரு குறிப்பிட்ட இடைவெளிக்கும் பின்பு, இடைக்காலக் கட்டமைப்பு என்ற அம்சம் மீண்டும் முன்னணிக்கு வந்தது. அரசியல் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வரும் இந்த 17 மாத இடைக்காலத்தில் அரசாங்கத்தின் பல செயற்பாடுகளில் கடுமையான அதிருப்தி இருப்பதாகக் கூறி விடுதலைப் புலிகள் அதனை சரி செய்யும் மாற்று ஏற்பாடாக இடைக்கால சபையின் உடனடி அமுலாக்கத்தைக் கோரியது.
பல முனைகளில் பலவீனமான நிலையில் இருக்கும் அரசாங்கம். இடைக்காலக் கட்டமைப்பினை ஏற்படுத்தவும் அதில் தமது ஆதிக்கத்தை மட்டுப்படுத்தி, விடுதலைப் புலிகளுக்கு கணிசமான அதிகாரங்களை உறுதிப்படுத்தவும் வேண்டிய கட்டாயத்திற்கு உட்பட்டுள்ளது. தமது மேலாதிக்கப் பேரவாவினையும் மீறி இதனைச் செய்தாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
நான்காவது சுற்றுப் பேச்சுக்களின் போது, இறுதித் தீாவானது. உள்ளக சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் ஐக்கிய இலங்கைக்குள் சமஷ்டி ஆட்சிமுறைமை என்பதாக கொள்கையளவில் இருதரப்பினாலும் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. உண்மையில், இவ்வாறான அரசியல் பேச்சுக்கள் மூலமாக இறுதியான நியாயமான அரசியல் தீர்வைக் காணுதல் என்பது சிங்கள ஆதிக்க சக்திகள், விடுதலைப் புலிகள் ஆகிய இரண்டு தரப்பினைப் பொறுத்த வரையிலும் நீண்டகாலத்திற்குச் சாத்தியமற்ற விடயமாகவே உள்ளது. அரசியல் நிலைமைகளை கவனமாக அவதானிப்பவர்களுக்குத்
இது தெரியும். இன்னமும் சிங்கள தேசியம் தமிழ், முஸ்லிம் தேசியங்களை
ஆதிக்கத்திற்குள் வைத்திருக்கவும். தமிழ்த் தேசியம் முஸ்லிம் தேசியத்தை
ஆதிக்கத்திற்குள் வைத்திருக்கவும் முயன்று வருவது இதற்கு அடிப்படைக் காரணமாகும். அந்த வகையில் இடைக்கால கட்டமைப்பு ஒன்றை நிறுவி கணிசமான காலத்திற்கு
தற்போதுள்ள நிலைமையை நீடித்துச் செல்வது இன்றைய சர்வதேச சூழலில் இருதரப்பிற்கும் ஏற்புடையதாக உள்ளது. அது போல இலங்கையைக் குறிவைத்துச் செயற்பட்டு வரும் வல்லரசுகளுக்கும் வாய்ப்பானதாகும்.
இவ்வாறாக, இடைக்கால ஏற்பாடொன்றின் அவசியத்தை அனைவரும் ஏற்றுக் கொண்டுள்ள போதிலும், இவ் இடைக்காலக் கட்டமைப்பானது எப்படிப்பட்ட அதிகாரங்களைக் கொண்டதாக அமைய வேண்டும் என்பதில்தான் மிகக் கராறான வேறுபாடுகள் இரு தரப்பிற்கும் இடையில் நிலவுகின்றது. தத்தமது அதிகாரத்தை மேற்படி இடைக்காலக் கட்டமைப்பில் உறுதிப்படுத்திக் கொள்ளும் கடுமையான
போராட்டமே இன்று நடைபெற்று வருகின்றது.

Page 4
அரசாங்கம் சமர்ப்பித்த இரண்டு முன்மொழிவுகள் விடுதலைப் புலிகளால் ஏற்கனவே நிராகரிக்கப்பட்டது. மூன்றாவது தடவையாக அரசாங்கம் முன்வைத்துள்ள நகல் வரைவானது. மேலும் பல மாற்றங்களுக்கும் சேர்ப்புகளுக்கும் உள்ளாகக் கூடியது என்பதை நாம் எதிர்வு கூற முடியும். பொலிஸ் அதிகாரம், பாதுகாப்புப் படை விவகாரங்கள். காணி, வருமானம் போன்றவை மிகவும் சர்ச்சைக்குரிய புள்ளிகளாகும். இதைவிட அரசாங்கம் முன்வரைவு விடயத்தில் இரட்டை வேடம் போட்டு கபடத்தனம் செய்வதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இவற்றிற்குத் தீர்வு காண்பதற்கும் இவ் வரைபிலுள்ள மேலும் பல பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கும் பல சுற்றுப் பேச்சுவார்த்தைகள் பிரதான பேச்சுவாத்தைக்குப் புறம்பாக நடைபெறும் வாய்ப்புக்களும் காணப்படுகின்றது.
இடைக்காலக் கட்டமைப்பின் தாக்கம் - முஸ்லிம்களின் கண்ணோட்டத்தில்:
இனவாத அரசினால் அடக்கப்படும் தரப்பு என்ற வகையில் தமிழ் மக்களின் நலன்களை மாத்திரம் சார்ந்து நோக்கும் போது விடுதலைப் புலிகள் கோரும் ஏற்பாடுகள் நியாயத்தன்மை கொண்டதாக உள்ளது. அதேசமயம் இவ்வாறான இடைக்காலக் கட்டமைப்பில் முஸ்லிம்களின் பங்கு எப்படி அமைய வேண்டும் என்ற அம்சத்தில் விடுதலைப் புலிகளும் தமிழ் அரசியல் சக்திகளும் சிங்கள அரசாங்கத்தை விடவும்
மோசமான ஆதிக்கத்தன்மை வெளிப்படுத்துகின்றனர். நமது அரசியல் தலைவிதியை அவர்கள் தீர்மானிக்க முயல்கின்றனர். நம்மை அரசியல் அவமானத்திற்கு உள்ளாக்குகின்றனர்.
இடைக் காலக் கட்டமைப்பு விடயத்தில் வடக்கு கிழக்கு முஸ்லிம்கள் அரசாங்கத்தையும், விடுதலைப் புலிகள் அமைப்பினையும் நம்புவதும் நம்பாததும் இவ்விரு தரப்பும் அளிக்கும் வாக்குறுதியைப் வைத்துக் கொண்டு அல்லாது. கடந்த காலத்தில் முஸ்லிம் விவகாரத்தையும் முஸ்லிம்களின் அபிலாசைகளையும் இவ்விரு தரப்பும் எப்படி அணுகினார் கள் என ற வரலாற் று அனுபவங் களில் இருந்து தானி தீர்மானிக்கப்படுகின்றது. எடுத்துக் காட்டாக,
" இந்திய-இலங்கை ஒப்பந்தத்தில் முஸ்லிம்கள் முற்றாகப் புறக்கணிக்கப்பட்டமை.
" இவ் ஒப்பந்தத்தின் செல்தன்மையை உறுதிப்படுத்திக் கொள்வதற்காக, இவ் ஒப்பந்த காலத்தில் வலிந்து நடாத்தப்பட்ட தோதல்களில் இந்திய, இலங்கை அரசுகளால் முஸ்லிம் அரசியல் சக்திகளின் ஒரு தரப்பு (சிறிலங்காமுஸ்லிம் கொங்கிரஸ்) திட்டமிட்டுப் பயன்படுத்தப்பட்டுப் பின்னா கைவிடப்பட்டமை.
" மற்றொரு தரப்பு (முஸ்லிம் ஐக்கிய விடுதலை முன்னணி) விடுதலைப் புலிகளுடன் இந்- இல ஒப்பந்தத்திற்கு எதிராகவும் தோதல்களுக்கு எதிராகவும் வரலாற்று முக்கியத்துவம் மிக்க ஒப்பந்தம் செய்து கொண்டிருந்தும், இந்தியப் படைக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையில் நடைபெற்ற யுத்தத்தின் போது முஸ்லிம்கள் பல்வேறு பங்களிப்புக்களை விடுதலைப்புலிகளுக்கு வழங்கியிருந்த போதிலும். பிரேமதாசவுடன் பேச்சுக்கள் நடாத்திக் கொண்டே 1990 தொடக்கம் விடுதலைப் புலிகள் முஸ்லிம்கள் மீது அழித்தொழிப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டமை.
6 --

* வட மாகாண முஸ்லிம் கள் விடுதலைப் புலிகளால் இனச் சுத் திகரிப்புச்
(olgujuЈLLLL-60LD. 1990 ம் ஆண்டிற்கும் 2002 ஆண்டிற்கும் இடைப்பட்ட கால கட்டத்தில் விடுதலைப் புலிகள் வடக்கு கிழக்கு முஸ்லிம்களின் மிகப் பெரும்பாலான பிரதேசங்களை ஒரு முற்றுகை நிலைக்குள் வைத்துக் கொண்டு ஆங்காங்கு முஸ்லிம்களைப் படுகொலை செய்தமை, கப்பம் பெற்றமை, விவசாய நிலங்களை ஆக்கிரமித்தமை. ஆயிரக்கணக்கான கால்நடைகளை சுவீகரித்துக் கொண்டமை. தற்போது புரிந்துணர்வு உடனர் படிக் கை (MOU) மற்றும் அரசியல் பேச் சுவார்த்தைகள் போன்றவற்றில் முஸ்லிம்கள் இரு தரப்பினாலும் புறக்கணிக்கப்பட்டமை. தற்போதைய யுத்தநிறுத்த காலகட்டத்தில் விடுதலைப் புலிகளாலும், அவர்களின் ஏற்பாட்டில் தமிழ் வன்முறையாளர்களாலும் முஸ்லிம்களுக்கு இழைக்கப்பட்ட தொடர்ந்து இழைத்து வரும் படுகொலைகள். தாக்குதல்கள். பொருளாதார முற்றுகை போன்ற கூட்டுத் தண்டனைகள்.
* முஸ்லிம்களின் நிலபுலங்களையும் காட்டு வளங்களையும், கடல் வளங்களையும் ஆக்கிரமித்துக் கொண்டுள்ள விடுதலைப் புலிகள், அவற்றைக் காலாகாலத்திற்கும் தமதாக்கிக் கொள்ளும் நோக்குடன் மேற்கொள்ளும் பல்வேறு தந்திரோபாய நடவடிககைகள.
அரசியல் பேச்சுவார்த்தைகள் நடைபெற்ற இக்கால கட்டத்தில் முஸ்லிம்கள் மீது விடுதலைப் புலிகளால் அல்லது அதன் ஏற்பாட்டில் மேற்கொள்ளப்பட்ட வன்முறைகள் குறித்து பொறுப்புச் சொல்ல வேண்டிய ஐக்கிய தேசிய முன்னணி காட்டி வந்துள்ள பராமுகம்.
மேற்கண்ட நிகழ்வுகளில் இருந்து பெற்ற படிப்பினைகளின் அடிப்படையில்தான் வடக்கு கிழக்கு முஸ்லிம்களாகிய நாம் இடைக்காலக் கட்டமைப்பு பற்றிய விடயத்தை ஆழமாக நோக்க வேண்டியுள்ளோம். மேற்கண்ட அனுபவங்களில் இருந்து வடக்கு கிழக்கு முஸ்லிம்களாகிய நாம் விடுதலைப் புலிகளின் கீழ் வரும் நிர்வாகம் அல்லது விடுதலைப் புலிகளை பிரதான பகுதியாகக் கொண்ட நிர்வாகத்தின் கீழ் தம்மை இருத்திக் கொள்வதற்கு முற்றிலும் உடன்பாடு இல்லாதவர்களாகவே உள்ளோம். அறவே அரசாங்கத்தை நம்பிச் செயற்பட முடியாதவர்களாக உள்ளோம்.
தேசிய இனப்பிரச்சனைக்கு நிரந்தரமான அரசியல் தீர்வுகாணும் இன்றைய முயற்சியில் அரசாங்கம், விடுதலைப் புலிகள், நோர்வே ஆகிய தரப்பும் மேற்குலக அரசுகளும் அவரவருக்கென தனித்தனியான நிகழ்ச்சி நிரலின் கீழ் செயற்பட்டு வருகின்றன. அந்நிகழ்ச்சி நிரலில் நின்று கொண்டு கராறாகவும் அதேசமயம் தமக்குள் சிலவகை விட்டுக் கொடுப்புகளுடனும் இச்சக்திகள் செயற்பட்டு வருகின்றன. எனவே வடக்கு கிழக்கு முஸ்லிம்களாகிய நாமும் நமது அரசியல் சக்திகளும் நமக்கென தெளிவான ஒரு நிகழ்சிநிரலை வகுத்துக் கொண்டு செயற்படல் வேண்டும். அவ்வாறு நிகழ்ச்சி நிரலை வகுத்துக் கொள்ளும் போது மேற்கண்ட சக்திகள் ஒவ்வொன்றையும் பற்றி துல்லியமான கணிப்புக்களைச் செய்து கொள்ளுவது அவசியமாகும்.
ബത്തു — SLSSLSLSSLSLSSLSLSSSMMSSSLSSSLSSLSLSSLSLSSLSLSSLSLSSLS

Page 5
அந்நிய ஆதிக்க சக்திகளின் பாத்திரம்
இந்நாட்டின் இனமுரண்பாடுகள் பூேச்சுவார்த்தையினுாடாக எட்டப்டுகின்ற அரசியல் தீாவின் மூலமாகவே நிரந்தரமாக முடிவிற்குக் கொண்டு வரப்பட வேண்டும் என்ற செல்வாக்கு மிக்க சர்வதேச நாடுகள் விரும்புகின்றன. இதற்காக தமது ஒத்துழைப்புக்கள் அழுத்தங்கள் என்பவற்றைப் பிரயோகித்து. இத்தகைய ஒரு தீர்விற்கான சாத்தியப்பாட்டை உருவாக்க அவை முயற்சிக்கின்றன. இங்கு முரண்பட்டு மோதி நிற்கின்ற சமூகங்கள் மத்தியில் அரசியல் நல்லிணக்க சூழ்நிலை உருவாக்கப்பட வேண்டும் என்ற அக்கறையை இந்நாடுகள் கொண்டிருக்கின்ற போதிலும். தமது சொந்த பொருளாதார, அரசியல் மற்றும் இராணுவ நலன்களை உறுதிப்படுத்துவதை இவை முக்கிய இலக்குகளாகக் கொண்டிருக்கின்றன. இவற்றை அடைந்து கொள்வதற்காக பல்லாயிரம் கோடி ரூபாய் பெறுமதியான உதவிகளை வழங்குவதற்கும் இந்நாடுகள் முன்வந்திருக்கின்றன.
நீடித்து நிற்கக் கூடிய இறுதி அரசியல் தீர்வினைக் காண்பதற்கு இப்போதைக்கு சாத்தியமில்லை என்பதில் மேற்குலக ஆதிக்க சக்திகளும் தெளிவாக உள்ளன. இஸ்ரேல்-பலஸ்தீனப் பேச்சுவாாத்தை ஐரிஷ் பேச்சுவார்த்தை போன்ற அனுபவங்களில் இருந்து இதனைக் கண்டு கொண்ட மேற்குலக ஆதிக்க அரசுகள. தமது மூலதன க் குவிப் பை யும் இலங்கையினர் இயற் கை வளங் களை கொள்ளையிடுவதையும் இறுதித் தீர்வு எட்டப்படும் வரை தாமதப்படுத்துவது தமக்குப் பாதகமானது என்பதனால், மேற்படி இடைக்கால கட்டமைப்பானது உடனடியாக உருவாவவதற்கும். இடைக்கால நிர்வாகத்தை தமது நலன்களை உறுதி செய்யும் விதத்தில் வேகமாகவும் திறனுடனும் செயற்பட வைப்பதற்கும் முனைப்புடன் செயற்பட்டு வருகின்றன.
நிரந்தர அரசியல் தீர்வு காணப்படுவதையும் விட யுத்தமற்ற சூழலைப் பேணுவதில்தான் மேற்கு மற்றும் ஆசிய வல்லரசுகள் கவனமாக உள்ளன. நிரந்தர அரசியல் தீர்வை விரைவாகக் காணும்படி இரண்டு தரப்பினையும் இச்சக்திகள் வற்புறுத்தப்பபோவதில்லை.
விடுதலைப் புலிகள் மற்றும் தமிழ் அரசியல் சக்திகளின் நிலை:
கொள்கை வகைப்பட்டதும், நடைமுறைப் பிரச்சனைக்குத் தீர்வாக
அமைகின்றதும். நிறைவேற்று அதிகாரம் கொண்டதும். தற்போது நடைமுறையிலுள்ள அரசியல் சாசனத்திற்கு புறம்பாகச் செயற்படக் கூடியதுமான ஒரு கட்டமைப்பு
இடைக்கால ஏற்பாடாக நிறுவப்படல் வேண்டும் என்பது விடுதலைப் புலிகளின் நிலைப்பாடு. இவ்வாறு கோருவதற்கான நியாயங்களையும் அவர்கள் தொடர்ச்சியாக
வெளிப்படுத்தி வருகின்றனர்.
விடுதலைப் புலிகள் இடைக்கால கட்டமைப்புப் பற்றிக் கொடுத்துள்ள மேற்படி வரைவிலக்கணத்தில், கட்டமைப்பின் பண்பு பற்றித் தெளிவாகப் பேசப்பட்டுள்ளது.
8

ஆனால், அவ்வாறான கட்டமைப்பொன்றில் தமிழ்த் தரப்பிற்கும் முஸ்லிம் தரப்பிற்கும் சிங்களத்தரப்பிற்கும் எத்தகைய பாத்திரம் உள்ளது என்பது பற்றிய விடயத்தில் தமக்குப் பிரதான பாத்திரம் வழங்கப்பட வேண்டும் என்பதுடன் மாத்திரம் நிறுத்திக் கொண்டுள்ளனா. தமிழ் மக்களின் நலன்களை உறுதிப்படுத்தும் விடயங்களில் மாத்திரம் தாம் கறாராக இருப்பதாக விடுதலைப் புலிகள் நியாயம் கற்பிப்பார்கள் எனின் மூன்று இனங்கள் வாழ்கின்ற ஒன்றிணைந்த வடக்கு கிழக்குப் பிரதேசங்களுக்கான நிறைவேற்று அதிகாரம் கொண்ட இடைக்கால கட்டமைப்பொன்றையும் அதில் தமக்கு அதிகளவு அதிகாரத்தையும் அவர்கள் கோரி நிற்பதானது அடிப் படையில் முரண்படுகின்றது. அந்தவகையில், விடுதலைப் புலிகள் தமக்குரிய உண்மையான அதிகாரங்களை உறுதிப்படுத்திக் கொள்ளும் விடயத்தில் உறுதியாக நிற்கும் அதேசமயம், முஸ்லிம்களுக்கு உரிய அதிகாரங்களை தமக்குக் கீழ்ப்படுத்தி வைத்துக் கொள்ளும் நோக்கத்துடன் இன்னமும் தெளிவாகச் செயற்படுவதைக் காண்கின்றோம்.
அத்துடன் கடந்த 17 மாத காலத்தில் விடுதலைப் புலிகள் அமைப்பும். பெரும்பாலான தமிழ் அரசியல் சக்திகளும் வடக்கு கிழக்கு முஸ்லிம்கள் தொடர்பாக மேற்கொண்ட அரசியல் கொள்கை நிலைப்பாடுகளும் சரி. நடைமுறையில் முஸ்லிம்கள் மீது மேற்கொண்ட தொடர்ந்து மேற் கொண்டு வருகின்ற கொடுமைகளும் சரி. தமிழ்த்தரப்பில் முஸ்லிம்கள் ஒரு சொற்ப அளவேனும் நம்பிக்கை வைத்துச் செயற்பட முடியாது என்பதை உறுதிப்படுத்தியுள்ளது. எனவே முஸ்லிம்கள் தம்மையும் தமது
சக்தியையும் மட்டும் நம்பிச் செயற்பட வேண்டிய நிலையில் உள்ளனர்.
சTம்சமாக நோக்கினால், விடுதலைப் புலிகளைப் பொறுத்தவரையில், முஸ்லிம்களின் உரிமைகளை மறுத்து அவர்களை ஆக்கிரமிப்பில் வைத்திருக்கும் போக்கு தெளிவாகக் காணப்படுகின்றது. முஸ்லிம்கள் விடயத்தில் ஒரு முரணற்ற ஜனநாயகபூர்வமான கொள்கை விடுதலைப் புலிகளிடம் கிடையவே கிடையாது தெளிவாகின்றது.
ரணில் தலைமையிலான அரசாங்கத்தின் போக்கு:
அரசாங்கத்தைப் பொறுத்தவரையில், இவ்வாறான கட்டமைப்புக் குறித்து மிகவும் பொதுப்படையாகவும், மயக்கங்களுடனும் தனது முன்மொழிவுகளை சமர்ப்பிக்கின்றது. புலிகளுக்கு ஒரு வரைவும் ஏனையவர்களுக்கு ஒரு வரைவும் முன்வைத்தது அம்பலாமாகியுள்ளது. அரசு இயந்திரத்தின் ஒரு கூறாகிய ஜனாதிபதியை ஏமாற்றும் இவர்கள் முஸ்லிம்களை ஏமாற்றுவது சர்வசாதாரணமானது என்ற புரிதல் மக்களுக்கு ஏற்பட்டுள்ளது. அதேசமயம் தாம் முன்மொழிகின்ற கட்டமைப்பொன்றில் முஸ்லிம், சிங்கள மக்களின் நியாயமான உரிமைகள் உறுதிப்படுத்தப்படல் வேண்டும்
என்ற நிலைப்பாட்டை அரசாங்கம் முன்வைத்துள்ளது. இந்த நிலைப்பாடானது இதயசுத்தியுடன் முன்வைக்கப்பட்டதல்ல. மாறாக, முஸ்லிம்களையும் சாதாரண சிங்கள மக்களையும் இடைத்தடுப்பாக (Buffer) நிறுத்தி விடுதலைப் புலிகளை அரசியல் ரீதியில் ஓரங் கட்டுகின்ற நோக்கமும் தனிமைப்படுத்துகின்ற நோக்கமுமே மேலோங்கியுள்ளது.
- 9

Page 6
ரணில் அரசாங்கத்தைப் பொறுத்தவரையில் ஏற்கனவே முஸ்லிம்களின் உரிமைகள் பலவற்றை மறுத்துள்ளதுள்ளதுடன், தமது ஆதிக்க நலன்களைப் பாதுகாத்துக் கொள்ள தேவைக்கு ஏற்ப முஸ்லிம்களைப் பயன்படுத்தும் போக்கும் காணப்படுகின்றது. ஆக, நாம் தமிழ்தரப்பும். அரசாங்கத்தரப்பு ஆகிய இரு ஆதிக்கக் காரணிகளையும் எதிர்த்து முறியடிக்க வேண்டியுள்ளோம்.
இடைக்கால ஏற்பாடு குறித்து நமது மக்களின் உணர்வும் கோரிக்கைகளும்
ஏனைய விடயங்களைப் போலவே இடைக்காலத் தீாவு தொடர்பாகவும் நமது மக்கள் கனமான இருட்டுக்குள் வைக்கப்பட்டுள்ளார்கள். இடைக்காலத் தீர்வு குறித்தோ அதன் தவிர்க்க முடியாமை குறித்தோ, அல்லது அத்தகைய ஒரு தீர்வில் நமது மக்களுக்குள்ள அவசியம் குறித்தோ எந்தவித தெளிவான கருத்துக்களையும் நிலைப்பாடுகளையும் முன்வைக்காமல் நமது அரசியல் வாதிகளும் தலைமைகளும் மதில் மேல் பூனைகளாக கண்ணை மூடிக்கொண்டிருக்கின்றனர். எப்போதுமே சென்று விட்ட பஸ்ஸ5)க்குக் கைகாட்டுவதில் விற்பன்னர்களாக இருக்கின்ற இவர்கள் இப்போதும் அத்தகைய ஒரு சந்தர்ப்பத்திற்காகவே காத்திருக்கின்றார்கள். அதிக ஆர்ப்பாட்டங்கள் இன்றி ஒரு இடைக்காலத் தீர்வு உருவாக்கப்பட்டு அது நடைமுறைக்கு வந்து விட வேண்டும் என்பதில் இவர்கள் பெருவிருப்புக் கொண்டுள்ளார்கள். இவ்வாறு நிகழும் பட்சத்தில் இது குறித்து நமது மக்கள் மத்தியில் நியாயப்படுத்தல்கள். ஆவேசப்பேச்சுக்கள். உணர்ச்சி மிக்க எச்சரிக்கைகள் என்பவற்றின் மூலமாக ஒரு கண்டனத்தை முன்னெடுத்து விட்டு அப்படியே ஒய்ந்து விடலாம் என்ற எதிர்ப்பில் இவர்கள் இருக்கின்றனர்.
நமது மக்களுக்கு வெளியே நமது மக்களின் பங்கேற்பு இன்றி. நமது மக்களின் கருத்துக்கள் பற்றிய சிறு அக்கறையும் இன்றி இடைக்காலத் தீர்வினை நோக்கிய நகர்வுகள் வேகமான இடம்பெற்று வருகின்றன. ஏனைய விடயங்களில் போன்றே இடைக் காலத் தீர்வு விடயத்திலும் நாம் முற்றாக ஒதுக்கப்பட்டிக்கின்றோம். உதாசீனப்படுத்தப்பட்டுள்ளோம். இவ்வாறு நாம் உதாசீனத்திற்கும் அறியாமைக்கும் உட்படுத்தப்பட்டுள்ள நிலையில், இடைக்காலக் கட்டமைப்பு தொடர்பாக நமது மக்கள் மத்தியில் குழப்பங்களும் மயக்கங்களும் நிலவி வருகின்றது. புலிகள் அமைப்பின் அதிகாரத்திற்கு உட்பட்டதான ஒரு இடைக்காலக் கட்டமைப்பானது தம்மை எவ்வாறு கொடுரமாகப் பாதிக்கச் செய்யும் என்ற அச்ச உணர்வினால் இடைக்காலக் கட்டமைப்பையே எதிர்க்கின்ற ஒரு மனோபாவம் நமது மக்களில் பெரும்பாலோரிடையே
உருவாகியிருக்கின்றது.
ஆனால் அரசியல் எதார்த்தமோ இதற்கு முற்றிலும் மாறானதாக உள்ளது.
ஒரு இடைக்காலத் தீர்வு அல்லது ஒரு இடைக்காலக் கட்டமைப்பு அவசியம் என்று
கருதுகின்ற ஏனைய அனைத்துத் தரப்பினர்களிலும் பார்க்க வடக்கு கிழக்கு
முஸ்லிம்களாகிய நாம் தான் ஒரு இடைக்காலத் தீர்விற்குரிய அவசியத்தை மிகவும்
வலுவாகக் கொண்டுள்ளோம். இலங்கை அரசாங்கத்தைப் பொறுத்தவரை ஒரு
1 O -

இடைக் காலத் தீர்வு சாத்தியப்பாடாதிருப்பினும் கூட. தனது அதிகாரத்தைச் செயற்படுத்தக் கூடிய சாத்தியத்தையும் வழிமுறைகளையும் அது நிறையவே கொண்டுள்ளது. விடுதலைகள் புலிகள் அமைப்பைப் பொறுத்தவரை ஒரு இடைக்காலக் கட்டமைப்பு உருவாகாத போதிலும் இதுவரை நடந்து வந்திருப்பதைப் போன்று சட்டபூர்வ அங்கீகாரமற்ற நிலையிலும் வடக்கு கிழக்கு எங்கும் தமது அதிகாரத்தை நிறுவக்
கூடிய ஆற்றல்களைக் கொண்டுள்ளார்கள்.
ஆனால் எந்தவித அதிகாரங்களும் அரசியல் அடையாளங்களும் அற்றவர்களாக இருக்கின்ற நாம். இந்தப் பலம் பொருந்திய வெவ்வேறு தரப்பினருக்கு இடையில் எப்போதும் போல நசுங்கிச் சீர்குலைக்கபடுபவர்களாக இருப்போம்.
வடக்கு கிழக்கு மாகாண சபை கலைக்கப்பட்டதிலிருந்து கடந்த 13 வருடங்காளாக மிகவும் கீழ்த்தரமான முறையில் நாம் ஒதுக்கபபட்டு வருகின்றோம். மாகாண சபை கலைக்கப்பட்டு அதன் நிர்வாக அதிகாரமானது முற்றிலும் தமிழ் அதிகாரிகளினது கரங்களில் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில் இந்த அதிகாரிகளின் திட்டமிட்ட செயற்பாடுகளினால் நாம் சகல தளங்களிலும் பாதிப்புக்கு உள்ளாக்கப்பட்டு
வருகின்றோம்.
மேற்படி நிர்வாக உயர்ப்டங்கள் அனைத்துமே மக்களுக்குப் பொறுப்புச் சொல்ல வேண்டிய அவசியமோ கடப்பாடுகளோ அற்ற அதிகாரிகளினால் வடக்கு கிழக்கு மாகாண சபை நிர்வகிக்கப்பட்டு வருவதனால் ஏற்பட்டுள்ள விளைவுகளாகும். இந்த அதிகாரிகள் மக்களால் தெரிவு செய்யப்படாதவர்கள. மக்களுடன் எவ்விதத்திலும் நேரடியாகத் தொடர்பு படாதவர்கள். நிர்வாகத் துறைகளிலுள்ள அதிகாரங்களையும் சலுகைகளையும் ஒட்டைகளையும் நன்கு பயனப்படுத்தி தமக்கு வேண்டியவற்றையும் தாம் விரும்புகின்றவற்றையும் செய்து முடிக்கக் கூடிய நுட்பங்களை இவர்கள் துல்லியமாக அறிந்து வைத்திருக்கின்றார்கள். பல வருடங்களாக மக்களினால்
தெரிவுசெய்யப்பட்ட உறுப்பினர்களைக் கொண்ட மாகாண சபை நிர்வாக முறைமை செயற்பட்டிராத நிலையில், இவை அனைத்தையும் கட்டி ஆள்பவர்களாக இந்த அதிகாரிகள் தம்மைத்தாமே நியமித்துக் கொண்டிருகின்றார்கள்.
சுயநலமும் ஊழலும் மோசடிகளும் இனவெறுப்புகளும் நிறைந்த இத்தகைய கடைகெட்ட அதிகாரிகளின் பிடியிலிருந்து வடக்கு கிழக்கு மாகாண நிர்வாகம் அகற்றப்படாதவரை இங்கு வாழ்கின்ற நமது மக்களின் நலன்களும் உரிமைகளும் மிகக் குறைந்தளவில் கூட பாதுகாக்கப்பட முடியாத நிலையே நீடிக்கும். எனவே இத்தகைய அதிகாரிகளின் பிடியில் இருந்து வடக்கு கிழக்கு மாகாண நிர்வாகத்தை விடுவிப்பதற்கான முயற்சிகளில் நாம் உறுதியாக ஈடுபட வேண்டும். இதற்காக முன்னெடுக்கப்படுகின்ற எத்தகைய செயற்பாடுகளிலும் நாம் முழு மூச்சுடன் பங்கேற்ற வேண்டும்.
தற்போதைய சூழலில் மாகாணசபை என்பது பொருத்தமற்ற ஒன்றாக மாறியிருப்பதாலும் புதிய தீர்வு முயற்சிக்கான பேச்சுவார்த்தைகள் நடைமுறையில்

Page 7
இருப்பதாலும் இடைக்காலத் தீர்வு ஒன்று சாத்தியமான வழிமுறையாக இருக்கின்றது. இலங்கை அரசாங்கம். புலிகள் அமைப்பு, சர்வதேச சக்திகள் என சகல தரப்பினருமே இடைக்காலத் தீர்வில் அக்கறை கொண்டிருக்கின்றார்கள் என்பதால் மட்டுமல்ல நமது மக்களுக்கும் இடைக்காலத் தீர்வின் மூலமாகவே கூடுதல் பயன்பாடுகள் ஏற்படுவதைச் சாத்தியப்படுத்த வேண்டும் என்ற யதார்த்தத்தின் அடிப்படையிலும் நாம் இடைக்காலத் தீர்விற்காக முன்னிற்க வேண்டும். இடைக்காலத் தீர்வு முயற்சிகளுக்கு நமது ஆதரவையும் உறுதிப்பாட்டையும் நாம் தெளிவாக வெளிப்படுத்த வேண்டும்.
முஸ்லிம்கள் பல்வேறு அடக்குமுறைகளுக்கு தொடர்ச்சியாக உட்பட்டு வந்துள்ளபோதிலும், வடக்கு கிழக்கில் அரசியல் அதிகாரம் மிக்க சக்தியாக தோற்றமளித்துள்ள போதிலும், இதுவரை கால வரலாற்றில் தமது கட்டுப்பாட்டில் ஒரு நிர்வாகத் தைக் கூட பயனர் படுத்தும் உரிமை மறுக் கப்பட்ட வர்களாகவே வைக்கப்பட்டுள்ளோம். தொடர்ந்தும் அவ்வாறான நிலையில் வைப்பதற்கே முஸ்லிம்களைச் சுற்றி ஒரு அரசியல் சூழ்ச்சி வலை பின்னப்பட்டுள்ளது.
இவ்வாறான சூழலில் இனத்துவ முரண்பாடுகளின் தவிர்க்க முடியாத ஒரு பகுதியாகி விட்ட வடக்கு கிழக்கு முஸ்லிம்களாகிய நாம் சாச்சைக்குள்ளாகி இருக்கும் இடைக்காலக் கட்டமைப்பினை ஒரேயடியாக நிராகரிப்பது அல்லது நிபந்தனை ஏதுமின்றி ஒரேயடியாக ஏற்றுக் கொள்வது நமது அரசியல் எதிர்காலத்தையும். பாதுகாப்பையும் ஆபத்திற்குள்ளாக்கும். அதாவது, இக்கட்டமைப்பினை ஒரேயடியாக நிராகரிப்பது சிங்கள இனவாதத்தின் நிலைப்பாட்டிற்குச் சாதகமான நம்மைத் தள்ளிவிடுவது போல, ஒரேயடியாக ஏற்றுக் கொள்வதானது விடுதலைப் புலிகளதும் தமிழ் மேலாதிக்கத்தினதும் பிடிக்குள் நம்மை நிரந்தரமாகத் தள்ளிவிடும். எனவே நமது தேசிய அபிலாசைகளை உறுதி செய்து கொள்ளும் நியாயமான கோரிக்கைகளின் அடிப்படையிலும், குறிப்பிட்ட நிபந்தனைகளின் அடிப்படையிலும் இடைக்காலக் கட்டமைப்பினை ஏற்றுக் கொள்வதே யதார்த்தமான முடிவாகும்.
வடக்கு கிழக்கிலுள்ள சிங்கள மக்களின் இருப்பிற்கும் பாதுகாப்பிற்கும் அரச நிர்வாகங்களும் அரச படைகளும் உள்ளன. தமிழ் மக்களின் இருப்பினை உத்தரவாதப்படுத்தவும் அவர்களைப் பாதுகாக்கவும் விடுதலைப் புலிகள் அமைப்பும் அவர்களின் வலைப்பின்னலும் உள்ளது. நமது நிலையோ எல்லா முனைகளிலும் பலவீனமாகவே உள்ளது. இந்த வகையில், வடக்கு கிழக்கைப் பொறுத்தவரையில் அதிகாரப் படிநிலையில் ஆகவும் கீழ் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ள முஸ்லிம்கள் தற்போது அமைக்கப்படவுள்ள இடைக்காலக் கட்டமைப்பில் நமக்குரிய நியாயமான பங்கினை அதாவது பிரநிதித்துவத்தையும், வளங்களையும் பெற்றுக் கொள்ளவும் நமது பாதுகாப்பினை உறுதிப்படுத்திக் கொள்ளவும் தவறக் கூடாது.
இவ்வாறாக அரசியல் முயற்சி செய்வதும் இலக்குகளுக்காகப் போராடுவதும் நமது சொந்த அரசியல் தெளிவில் இருந்தும் அரசியல் அபிலாசைகளில் இருந்தும் நடைபெற வேண்டும். வடக்கு கிழக்கு முஸ்லிம்களுக்கு என்ன வேண்டும் என்பதை அரசியல் மற்றும் நடைமுறை அர்த்தத்தில் மிகவும் தெளிவாக, அரசாங்கத்திடமும் wymumu 12 ܕ -- ܝܗܒ -- *

தமிழ்த்தரப்பிடமும் ஆணித்தரமாக நாம் முன்வைக்க வேண்டும். நமக்குரியவற்றைப் பெறுவதற்கு அவர்கள் தருவார்கள் என்று காத்திராது சொந்த மக்களை அணி திரட்டித் தொடர்ச்சியாகப் போராட வேண்டும்.
நிறைவேற்று அதிகாரம் கொண்ட இடைக்காலக் கட்டமைப்பு (Interin SICIU) அமைக்கப்படல் வேண்டும். அதில் விடுதலைப் புலிகளுக்கு பிரதான பங்கு
தெளிவாச உறுதிப்படுத்தப்படல் வேண்டும் என விடுதலைப் புலிகள் தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது. கடந்தகால அனுபவங்களில் இருந்து இப்படியான ஏற்பாட்டிற்கு முஸ்லிம் சளி உடன் பட முடியாத போதிலும், சில கராறான நிபந்தனைகளின்
அடிப்படையில் ஒரு இறுதிச் சந்தர்ப்பத்தினை அரசாங்கத்திற்கும் விடுதலைப் புலிகளுக்கும் நாம் வழங்க முடியும். அதாவது, முஸ்லிம்களைப் பொறுத்தவரையில் முஸ்லிம்களின் அரசியல் தனித்துவம், சமத்துவம், சுயநிர்ணய உரிமை, தேசியப் பண்பு என்பன நிரந்தரத் தீர்வில் மாத்திரமல்ல, இடைக்காலக் கட்டமைப்பிலும் கூட
கொள்கை ரீதியாக ஏற்றுக்கொள்ளப்படல் வேண்டும். இது விடுதலைப் புலிகளால் மாத்திரம் அல்ல. ரணில் தரப்பினாலும் ஏற்றுக் கொள்ளப்படல் வேண்டும். தனியான முஸ்லிம் அலகுக்கு ஆதரவு போலக் காட்டிக் கொள்கின்ற சந்திரிகா தரப்பினாலும்
இவ் அடிப்படை அம்சங்கள் ஏற்றுக் கொள்ளப்படல் வேண்டும்.
அதேசமயம் இடைக்காலக் கட்டமைப்பில் முஸ்லிம் உரிமைகளும் முஸ்லிம்களுக்குரிய நியாயமான பங்கும் உறுதிப்படுத்தப்படல் வேண்டும். இவ்வாறான இடைக்காலக் கட்டமைப்பில் தமிழ்த்தரப்பின் மேலாதிக்கத்தைத் தவிர்க்கும் காப்புப் பொறிமுறைகள் உறுதிப்படுத்தப்படல் வேண்டும். அவ்வாறான காப்புப் பொறிமுறைகள் இல்லை எனின் தமிழ் மேலாதிக்கம் முஸ்லிம்களை நசுக்கும் என்பதுதான் வரலாறு. எனவே வடக்கு கிழக்கு முஸ்லிம்களுக்கான அரசியல் பிரதிநிதித்துவம், வள ஒதுக்கீடு என்பன இடைக்கால நிர்வாகக் கட்டமைப்பில் நியாயமானதாக இருக்க வேண்டும். இவற்றுடன் முஸ்லிம்கள் செறிவாக வாழும் பிரதேச செயலகங்களையும் இன்னும் மீள்வரைவு செய்யப்பட்ட சில பிரதேசங்களையும் உள்ளடக்கி, தம்மைத் தாமே சுயாதீனமான நிர்வகிக்கக் கூடிய புறம்பான இடைக்கால நிர்வாகக் கட்டமைப்பு (Separate Administrative Structure) உறுதிப்படுத்தப்பட வேண்டும். நமக்கான தனியான கட்டமைப்பானது வடக்கு கிழக்கு என அமையும் பொதுவான இடைக்காலக் கட்டமைப்பிற்கு உட்பட்டும் அதேசமயம், தனித்துவமாகவும் செயற்படுவதாக இருக்கும். இந்தவகையில், எதிர்காலத்தில் அமையப் போவதாகக் குறிப்பிடப்படும் சமஷ்டி முறைமைக்கும் தற்போது பேசப்படும் இடைக்காலக் கட்டமைப்பிற்கும் இடையில் உள்ளார்ந்து நெருக்கமான தொடர்புகள் உண்டு என்பதை நாம் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். நிரந்தரத் தீர்வினைப் போலவே இடைக்காலத் தீர்விலும்
முஸ்லிம்களின் அரசியல் சமத்துவம், தனித்துவம் என்பன உறுதிப்படுத்தப்படல் வேண்டும்.
இவ்வாறாக இடைக்காலக் கட்டமைப்பில் முஸ்லிம்களின் உரிமைகளை உறுதிப்படுத்துவது எனும் போது, அடிப்படை மனித உரிமை அடங்கலாக, முஸ்லிம்களின் அரசியல், கலாசார உரிமைகள், வள ஒதுக்கீட்டில் நியாயமான
பங்கு, உயிர், உடமை பாதுகாப்பு அடங்கலாக அனைத்து அம்சங்களும் சட்டபூர்வ
13 س
- l- t

Page 8
ஆவணங்களிலும் நடைமுறையிலும் உறுதிப்படுத்தப்படல் வேண்டும்.
முஸ்லிம்களின் மேற்படி உரிமைகளை உறுதிப்படுத்துவதாயின் இடைக்கால கட்டமைப்பில் முஸ்லிம்களின் பிரதிநிதித்துவம் எவ்வாறு இடம் பெற வேண்டும்? வடக்கு கிழக்கிலுள்ள அனைத்து வளங்களும் எவ்வாறு பகிரப்படல் வேண்டும்? சட்டம், ஒழுங்கு அடங்கலாக பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நிறுவன ஏற்பாடுகளில் (உதாரணமாக, பொலிஸ், காவல்துறை, நீதிமன்றம், சிறைச்சாலை அதிகாரம் போன்ற ஏற்பாடுகள்) எப்படிப்பட்ட ஏற்பாடுகள் நமக்கு வேண்டும்? என்ற முக்கிய பிரச்சனைகள் விரிவாக விவாதிக்கப்பட்டுத் தீாக்கப்படல் வேண்டும்.
அந்தந்த மாவட்டத்திலுள்ள சனத்தொகை விகிதாசாரத்திற்கு ஏற்ப மேற்படி ஏற்பாடுகள் அமைய வேண்டும் என்பது நமது நிலைப்பாடு ஆகும். சனத்தொகை எண்ணிக்கையை அடிப்படையாகக் கொள்வோம் எனின் அரைநுாற்றாண்டு கால அடக்குமுறைகள் மற்றும் 20 வருட யுத்தத்தின் விளைவுகளின் காரணமாக, இச் சனத்தொகை விகிதாசாரம் என்பது குறுக்கு மறுக்கான மாற்றங்களை அடைந்துள்ளது.
இதன் காரணமாகப் பல்வேறு சர்ச்சைக்குரிய அம்சங்கள் புதிதாக மேலெழுந்துள்ளதை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும். எனவே இவ் விடயத்தில் அதிகமான பேச்சுவார்த்தைகளுக்கும் பரஸ்பர விட்டுக் கொடுப்புகளுக்கும் சம்பந்தப்பட்ட தரப்புகள் அனைத்தும் தயாராக இருக்க வேண்டும். எடுத்துக்காட்டாக,
1-கடந்த காலங்களில் சிறிலங்கா அரசுகள் மேற்கொண்ட திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்கள் காரணமாக வடக்கு கிழக்கில் முஸ்லிம். தமிழ் மக்களின் சனத்தொகை விகிதாரசாரம் குறைக்கப்பட்டுள்ளது. இது தவிர்க்க முடியாமல் அவர்களின் அரசியல் பிரதிநிதித்துவத்தை குறைத்துள்ளது. அதுபோல தமிழ், முஸ்லிம் மக்களின் வளங்கள் மற்றும் நிர்வாக அதிகார வாய்ப்புக்களைப் பறித்தெடுத்துள்ளது.
2-யுத்தம் காரணமாக, மூன்று இன மக்களும் தமது பாரம்பரிய பிரதேசங்கள் மற்றும் வாழ்விடங்களில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர் அல்லது வெளியேறச் செய்யப்பட்டுள்ளனர். சுமுகநிலைமை ஏற்படுத்தப்படும் பட்சத்தில், தமது சொந்த இடங்களுக்கு மீளத் திரும்புபவர்களும் உண்டு. திரும்பாதவர்களும் உண்டு. இது தவிர்க்க முடியாமல் சனத்தொகை விகிதாசாரத்தில் தாறுமாறான மாற்றங்களை ஏற்படுத்தும்.
3-குறிப்பிட்ட பிரதேசம் அல்லது கிராமங்களில் வாழ்ந்த ஒட்டுமொத்த மக்கள் தமது பாரம்பரிய வாழ்விடங்களில் இருந்து பலவந்தமாக வெளியேற்றப்பட்டமையும் அதன் விளைவுகளும், இப்பிரச்சனையை தீர்ப்பதற்கு (மீளக்குடியமாத்துவதற்கு) பின்பற்றப்படும் வழிமுறைகளும் புதிதாக சனத்தொகை விகிதாசாரத்தைப் பாதிக்கும்.
4-வடக்கும் கிழக்கும் ஒரு ஆள்புல எல்லையாக இணைக்கப்படும் போது மூன்று இனங்களின் தற்போதைய சனத்தொகை விகிதாரங்கள் மிகவும் சடுதியாக
மாற்றியமைக்கப்படும்.
- 14

5-இவற்றுடன் கடந்த கால இன வன்முறைகள் காரணமாக வடக்கு கிழக்கில் குடியமாந்து இன்று அதன் பெருக்கத்தையும் பெற்றுள்ள மலையகத்தமிழ் மக்களின் அம்சமும் கணக்கில் எடுக்கப்பட்டு நியாயமாகத் தீாக்கப்படல் வேண்டியிருக்கும்.
சனத்தொகை விகிதாசார மாற்றம் என்பது வெறும் எண்ணிக்கைப் பிரச்சனை அல்ல. அது அரசியல் பிரச்சனையாகவும். பொருளாதாரப் பிரச்சனையாகவும் கலாசார, பண்பாட்டுப் பிரச்சனையாகவும் வடிவங்களை எடுக்கக் கூடியது. அதாவது அரசியல் பிரதிநிதித்துவப் பிரச்சனையாகவும் எனவே அதிகாரம் பற்றிய பிரச்சனையாகவும். வளங்கள் பங்கீடு பற்றிய பிரச்சனையாகவும், மத, காலசாரப் பிரச்சனைகளாகவும் வெடிக்கும் என்பதை கடந்த கால வரலாற்றில் இருந்து புரிந்து கொண்டுள்ளோம். எனவே மேற்கண்ட சர்ச்சைகளை ஊடறுத்துச் சென்று நியாயமான தீர்வுகளை எட்டுவதென்பது பிரச்சனைகளைத் தீர்ப்பதில் பங்குகொள்ளும் சம்பந்தப்பட்ட அனைத்து தரப்புகளின் அரசியல் புரிந்துணர்வு, பொறுமையான, ஜனநாயகபூர்வமான அணுகுமுறை, பரந்தமனப்பான்மை போன்றவற்றில் தங்கியுள்ளது.
இந்த விடயங்கள் ஒவ்வொன்றும் நம்மால் விரிவாக ஆராயப்படல் வேண்டும். தற்போது அமையப்போவது இடைக்கால ஏற்பாடுதானே அவ்வளவு ஆழமாகச் செல்லத் தேவையில்லை என்று இப்பிரச்சனைகளை விட்டு விட முடியாது. நிரந்தரத் தீர்வினை எட்டுவது என்பது தற்போதைக்கு பல தடையம்சங்களைக் கொண்டுள்ளது. என6ே இடைக்கால ஏற்பாடானது கணிசமான காலத்திற்கு நடைமுறையில் இருக்க வேண்டிய சூழல் உள்ளது. எனவே முஸ்லிம்களின் நலன்களைப் பாதிக்கும் மேற்குறிப்பிட்ட சர்ச்சைக்குரிய புள்ளிகள் அடையாளப்படுத்தப்பட்டு இப்போதே தெளிவான வரையறைகள் உறுதிப்படுத்தப்படல் வேண்டும்.
மத்திய அரசாங்க அதிகாரக் கட்டமைப்பில் முஸ்லிம்களின் அரசியல் பிரதிநிதிகள் குறிப்பிட்டளவிற்கு பங்கு வகிக்கின்றனர். அவர்களுக்கு உண்மையான அதிகாரங்கள் அரசு இயந்திரத் தில் முஸ் லிம் களினர் நல ர்ை சாா ந் து உறுதிப்படுத்தப்பட்டுள்ளதா என்பது தனியாக ஆராயப்பட வேண்டிய விடயம். அவ்வாறான ஒரு சில பதவிகளின் சுகம் காரணமாக இடைக்கால கட்டமைப்பில் முஸ்லிம்களின் நியாயமான பங்கினைக் கோட்டை விடுவதை மக்களாகிய நாம் ஒருபோதும் அனுமதிக்க முடியாது. ஏனென்றால் மத்திய அரசின் ஆதிக்கமானது இடைக் காலக் கட்டமைப்புக்குள் உட்பாய்வதை தடுக்கும் ஏற்பாடுகளைக் கொண்டதாகவே இவ்விடைக்கால கட்டமைப்பு அமையப் போகின்றது என்பதை நாம்
தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும்.
அரசாங்கமும் எதிர்க்கட்சிகளும் தற்போதைய நெருக்கடியைப் பயன்படுத்தி முஸ்லிம்களைப் பயன்படுத்த முயல்கின்றன. மாறாக நாம் அச்சக்திகளை நமது மக்களின் நலனில் நின்று பயன்படுத்தும் உத்திகளை வகுத்துக் கொள்ள வேண்டிய கட்டத்தில் உள்ளோம். ஒரு காலத்தில் மர்} oம் அஷ்ரப் அவர்கள் இவ்வாறான உத்திகளைக் குறிப்பிட்டளவிற்குப் பயன்படுத்தினார். அப்போது விடுதலைப் புலிகள் தீர்மானகரமான
சக்தியாக வடக்கு கிழக்கில் இருக்கவில்லை. இன்று நிலைமை அப்படி அல்ல. விடுதலைப் 15

Page 9
புலிகள் சர்வதேச சமூகத்தின் ஆதரவைப் பெற்றுக் கொண்டவர்களாகவும் வடக்கு கிழக்கைப் பொறுத்தவரையில் தீர்மானகரமான சக்தியாகவும் உள்ளனர். எனவே புதிய அரசியல் நிலைமைகளையும் சக்திகளின் சமநிலையையும் கவனத்தில் எடுத்து நமது அரசியல் அணுகுமுறைகள் அமைய வேண்டும்.
அனைத்து மக்களதும் உரிமைகளையும் உறுதிப்படுத்த வேண்டும் என்ற கோசத்துடன் ரணில் அரசாங்கம் சிங்கள ஆதிக்கத்தை இடைக்கால அரசியல் நிர்வாகக் கட்டமைப்பில் நிலைநாட்ட விளையும் எல்லாவிதமான நோக்கங்களையும் நாம் தமிழ்த்தரப்புடன் இணைந்து எதிர்க்க வேண்டும். இதற்கு முற்பட்ட காலங்களில் அதிகாரங்சள் அனைத்தும் சிங்களத் தலைமைகளின் கைகளில் குவிந்து கிடந்தபோது, தமிழ் முஸ் லிம் மக்களினி உரிமைகளை இத் தலைமைகள் அறவே உறுதிப்படுத்தவில்லை. எனவே சிங் களத் தலைமைகள் இப்போது காட்டும் அக்கறையானது அரசியல் கபடனத்தனம் கொண்டதாகும். எனவே ரணில் தரப்பின்
அரசியல் கபடத்தனத்திற்குள் நாம் அகப்பட்டுக் கொள்ளக் கூடாது.
வடக்கு கிழக்கில் பாரம்பரியமாக வாழ்ந்து வரும் மக்களுக்கான சுய அரசியல் அதிகாரத்தினை உறுதிப்படுத்தும் போராட்டத்தின் ஒரு கட்டமாக இன்றைய இடைக்கால நிர்வாக முரண்பாட்டினை எடுத்துக் கொண்டு நாம் விடயத்தை அணுகுவோம் எனின், முஸ்லிம்களோ, முஸ்லிம்கொங்கிரஸ் அடங்கலாக முஸ்லிம்
அரசியல் சக்திகளோ அரசாங்கதின் குரலாகவோ அல்லது சிங்கள எதிர்க்கட்சிகளின் குரலாகவோ ஒலிக்கக் கூடாது. அந்தச் சாயலைக் கூட நாம் காட்டக்கூடாது. இதுவரை
ரணில் அரசாங்கம் முஸ்லிம்களின் விடயங்களில் பொறுப்பற்ற விதத்தில் நடந்து
கொண்டுள்ளது. அப்படிப்பட்ட அரசாங்கத்தை நம்பி ஹக்கீம் தரப்போ அல்லது அத்தாவுல்லா தரப்போ அல்லது வேறு எவருமோ முஸ்லிம்களின் அரசியல் எதிர்காலத்தை ஒப்படைக்கும் எல்லாவிதமான முயற்சிகளையும் நாம் எதிாத்து நிற்க வேண்டும்.
அரசியல் தீர்வு காண்பதற்கான செயல்முறைகள் அனைத்திலும் முஸ்லிம்கள் தனித்தரப்பாக பங்குகொள்ள வேண்டும் எனக் கோருகின்றோம். அவ்வாறாயின் எமது செயற்பாடுகளும் நமது அரசியல் அபிலாசைகளின்பாட்பட்டுத் தனித்துவமானதாக அமைவது அவசியம். நாம் அரசாங்கத்துடன் என்றாலும் விடுதலைப் புலிகளுடன் என்றாலும் குறிப்பிட்ட விடயங்களின் ( SSues) மீதுதான் இணைந்து செயற்பட வேண்டுமே ஒழிய நிரந்தர அரசியல் இணைவுக்கும். அரசியல் சரணடைவிற்கும் உளளாகக கூடாது.
கடந்தகாலத்தில் முஸ்லிம்கொங்கிரஸ் ரணில் தரப்புடன் செய்து கொண்ட
தேர்தல் ஒப்பந்தமும், முஸ்லிம் கொங்கிரஸ் பிரபாகரன் தரப்புடன் செய்து கொண்ட புரிந்துணர்வு உடன்படிக்கையும் முற்று முழுதாக அரசியல் சரணாகதி வகைப்பட்டது என்பது இன்று தெளிவாக நிரூபிக்கப்பட்டுள்ளது. மேற்கண்ட இரண்டு சந்தர்ப்பங்களிலும்
நமது மக்களின் நலன்களை உறுதிப்படுத்துவதை விட தமது சொந்த நலன்களையும் குறுகிய கட்சி நலன்களையும் உறுதிப்படுத்திக் கொள்வது முதன்மையாக இருந்துள்ளது.
t 1 O - -----

இந்த விடயத்தில் ஹக்கீம் அதாவுல் லா இரு தரப்பும் ஒரே விதமாகவே செயற்பட்டுள்ளனர்.
இணைந்த வடக்கு கிழக்கு மாகாணசபையும் கூட ஒரு இடைக்கால ஏற்பாடுதான். அது கடுமையான யுத்தத்தின் மத்தியில் கடந்த 15 வருடகாலமாக நடைமுறையில் இருந்து வருகின்றது. இதில் மேல்நிலை அரசியல் மற்றும் நிறைவேற்று .ogg,TIJ Is 5, 6i ( Political and Executive Power) LDg, glu g|J ël (pi) அதன் பிரதிநிதியாகிய சிங்கள ஆளுனரிடமும் குவிந்திருந்தது. நிர்வாக அதிகாரம் (Adminitrative Power) தமிழ்த்தரப்பிடமும் மறைமுகமாக விடுதலைப் புலிகளால் கட்டுப்படுத்தக் கூடியதாகவும் இருந்தது. இருந்து வருகின்றது. இந்த இரண்டு அதிகாரங்களிலும் முஸ்லிம்கள் புறக்கணிக்கப்பட்டிருந்தனர். இவ்வாறான நிலைமை புதிய இடைக்கால கட்டமைப்பில் ஏற்படுவதை நாம் அனுமதிக்கக் கூடாது.
இடைக்காலக் கட்டமைப்பு தற்காலிகமானதாயினும் அதுவே பல வருடங்கள் நீடிக்கக் கூடியதாகும். மெய்யான சமஷ்டி அமைப்பு முறையொன்றுக்கு சிங்கள ஆதிக்க சக்திகள் உடன்படுவதற்கான சாத்தியப்பாடுகள் இப்போதைக்கு மிகவும் குறைவாகும். இந்நிலைமை பிரதமர் ஒரு கட்சி ஜனாதிபதி ஒரு கட்சியாக இருக்கும் முரண்படு தன்மையினால் ஏற்பட்டதென்று கருதத் தேவையில்லை. இரண்டு பொறுப்புக்ளையும் ஒரு கட்சி கொண்டிருந்தாலும் கூட இதுதான் நிலை. இது இரண்டு கட்சிகளுக்கு இடையில் உள்ள பிரச்சனையால் ஏற்பட்டதல்ல. மாறாக சிங்கள மேலாதிக்கத்தின் நீடித்த அடக்குமுறைக் கொள்கையில் இன்னமும் அவை ஊன்றி நிற்பதனால் ஏற்பட்டதாகும். இதற்கு முன்னர் ஜனாதிபதியும் பிரதமரும் ஒரு கட்சியாக இருந்து இன முரண்பாடுகளைத் தீவிரப்படுத்தி விட்ட பல்வேறு சந்தர்ப்பங்களை - ஜேஆா காலம். பிரேமதாச காலம். சந்திரிகாவின் காலம் - இந்நாட்டு மக்கள் கடந்து வந்துள்ளனர்.
அரசாங்கத்திற்கும் - விடுதலைப் புலிகளுக்கும் இடையில் முரண்பாடுகள் தணிவுநிலையில் இருக்கும் போது ரணில் முஸ்லிம்களைக் கைவிடுவதும் இரு தரப்பு முரண்பாடுகள் உக்கிரமடையும் போது, முஸ்லிம்களின் நலன்களை உறுதிப்படுத்துவதாக பாசாங்கு காட்டி முஸ்லிம்களைப் பயன்படுத்துவதும் ரணில் தலைமையின் போக்காக உள்ளது. இது கடந்தகால சிங்களத் தலைமைத்துவங்களும் பயன்படுத்திக் காலாவதியாகப் போன அரசியல் தந்திரமாகும். இப்படிப்பட்ட மாயைக்குள் இதற்கு மேலும் நாம் சிக்கிக் கொள்ளக் கூடாது.
மேற்படி நிலைமைகள் காரணமாக விடுதலைப் புலிகளும் தமிழ்த்தரப்பு மாத்திரம் இடைக்கால அரசியல் நிர்வாக கட்டமைப்பினைக் கோருவது அல்ல. முஸ்லிம்களாகிய நாமும் நமது அரசியல் பிரதிநிதிகளும் இக்கோரிக்கையை உரத்து முன்வைக்க வேண்டும். நியாயமான நிபந்தனைகளைத் தெளிவாக முன்வைக்க வேண்டும். இதில் நமது மக்களின் நியாயமான உரிமைகளையும் அபிலாசைகளையும் தெட்டத்தெளிவாக உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். அரசு விடுதலைப் புலிகள் ஆகிய இரண்டு தரப்பிடமும் மற்றும் சர்வதேச சக்திகளிடமும் இதனை நாம் வலியுறுத்த வேண்டும்.
17 -

Page 10
இடைக்கால நிர்வாகக் கட்டமைப்புத் தொடர்பாக,
நமது அடிப்படைக் கோரிக்கைகள்
1. சிங்கள மைய அதிகாரம் மற்றும் தமிழ் மேலாதிக்கம் என்பவற்றில் இருந்து சுதந்திரமானதும், அரசியல் அதிகாரம் மற்றும் நிறைவேற்று அதிகாரம் கொண்டதாக அமைந்ததும், முஸ்லிம், தமிழ், சிங்கள மக்களின் அரசியல் மற்றும் ஜனநாயக உரிமைகளை உறுதிப்படுத்தும் விதத்தில் அமைந்ததுமான பொது 43260) L 55 55/T6V ffilif 62 JITG555 5L. L. 60) LO ÚLy (Common Interim Administrative Structure ) ஒன்று ஒன்றிணைக்கப்பட்ட வடக்கு கிழக்குப் பிராந்தியத்தில் அமைக்கப்பட வேண்டிய அவசியத்தை நாம் வலியுறுத்துகின்றோம்.
2. கூடவே, வடக்கு கிழக்கில் முஸ்லிம்கள் செறிவாக வாழும் பிரதேசசெயலகப் பிரிவுகளையும், மீள்வரைவு செய்யப்பட்டு புதிதாக உருவாக்கப்படும் முஸ்லிம் செயலகங்கப் பிரிவுகளையும் ஆள்புல எல்லையாகக் கொண்டதான ஒரு தனியான (3760)L 4545/76u silif62/73, 4, 54 L-60)LDU/ ((Separate Interim Administrative Structure). முஸ்லிம்கள் தமது தேசியப் பண்பு, சுயநிர்ணய உரிமை, அரசியல் சமத்துவம் கொண்டவர்களாக தம்மைத் தாமே நிர்வாகம் செய்யக் கூடிய விதத்தில் அமைக்கப்படல் வேண்டும் எனக் கோருகின்றோம்.
பொது இடைக்காலக் கட்டமைப்பில் விடுதலைப் புலிகள் அமைப்பிற்கு பிரதானமான இடம் வழங்கப்படும் பட்சத்தில், இவ்வாறான கட்டமைப்பினால் வடக்கு கிழக்கு முஸ்லிம்கள் பாதிப்பிற்கும் பாரபட்சங்களுக்கும் உட்படாதவாறு காப்புப் பொறிமுறைகள் வகுக்கப்பட்டிருத்தல் வேண்டும். அவையாவன. . . .
L பொது இடைக்கால நிர்வாக சபையின அரசியல் பிரதிநிதித்துவமானது விடுதலைப் புலிகளுக்குப் பெரும்பான்மை எண்ணிக்கையாக வரும் விதத்தில் அமையுமானால், இப்பெரும்பான்மைப் பலத்தைப் பயன்படுத்தி முஸ்லிம்களுக்கும் வடக்கு கிழக்கில் பாரம்பரியமான வாழ்ந்து வரும் சிங்கள மக்களுக்கும் பாதகமாக இந்நிர்வாகம் செயற்பாடாதவிதத்தில் முஸ்லிம், சிங்க அரசியல் பிரதிநிதித்துவம் விடுதலைப் புலிகளின் பிரதிநிதித்துவத்தை சமப்படுத்தும் விதத்தில் அமைய வேண்டும்.
0 பொது நிர்வாக சபைக்கான அரசியல் பிரதிநிதித்துவமானது கட்சி ரீதியாக அல்லாது சமூக ரீதியில் அந்தந்த மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ள பொருத்தமான நபர்களில் இருந்து நியமிக்கப்படல் வேண்டும்.
L இச்சபையில் முஸ்லிம் சமூகத்துடன் தொடர்புடைய விடயங்களில் தீர்மானங்கள்
எடுக் கப்படும் போது, முஸ்லிம் பிரதிநிதிகளின் மூன்றில் இரண்டு
பெரும்பான்மையினரின் இணக்கம் பெறப்படல் வேண்டும்.
L இவ்வாறான பொது நிர்வாகக் கட்டமைப்பினை கண்காணிப்பதற்கு
முஸ்லிம்நாடுகளின் பிரதிநிதியையும் உள்ளடக்கிய தனியான சர்வதேச
கண்காணிப்புக் குழு அமைக்கப்படல் வேண்டும். ஐக்கியநாடுகள் சபைக்கு
கிரமாக அறிக்கை சமர்ப்பிக்கும் அதிகாரம் இக்குழுவிற்குத் தரப்படல் வேண்டும்.
mu 18

இவ்வாறான இடைக்காலக் கட்டமைப்பானது காலத்திற்குக் காலம் மீள்மதிப்பீடு செய்யப்படல் வேண்டும். ஒரு வருடகாலச் செயற்பாட்டின் பின்பு இடைக்கால ஏற்பாடுகள் தொடர்ந்தும் நடைமுறையில் இருப்பதா இல்லையா என்பது குறித்து வடக்கு கிழக்கிலுள்ள முஸ்லிம்கள் மத்தியில் கருத்துக் கணிப்பு எடுக் கப்படல் வேண்டும். அவ்வாறான கருத்துக் கணிப்பு
நடைபெறாவிட்டால் இடைக்கால நிர்வாக கட்டமைப்பானது காலாவதியாகும்
விதத்தில் சரத்துக்கள் அமைந்திருக்க வேண்டும்.
தற்போதுள்ள பொதுக் காணிகள் அனைத் தும் தொடர்ந்தும் பொதுக்காணிகளாகவே அடையாளம் காணப்படல் வேண்டும். அவற்றின் மீதான அதிகாரம் எந்தவொரு சமூகத்திற்கோ, அல்லது அரச பிரிவிற்கோ விடுதலைப் புலிகள் அமைப்பிற்கோ ஏகபோக உரிமையாக மாற்றப்படக்
கூடாது. அவை பொதுவான சபையில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவுடன் தெரிவு செய்யப்படும் ஒரு பொதுக்குழுவின் கண்காணிப்பின கீழ் விடப்படல் வேண்டும்.
முஸ்லிம்களுக்கான வளப் பங்கீடானது பொது இடைக்கால நிாவாக சபையினால் மேற்கொள்ளப்படும் போது. இணைந்த வடக்கு கிழக்கில் வரும் எண்ணிக்கை வீதாசார அடிப்படையில் அல்லாது. மாவட்ட அடிப்படையினான விகிதாசாரத்திற்கு ஏற்ப மேற்கொள்ளப்படல் வேண்டும். வளங்கள் எனும் போது அந்தந்த சமூகங்கள் சட்டபூர்வமாக உரிமை பெற்றுள்ள காணிகளைத் தவிர்த்து இதர காணிகள். நிலங்கள். காடுகள், மேய்ச்சல் தரைகள், மீன்பிடிப் பிரதேசங்கள் போன்றவை அடங்கும்.
அரசும் விடுதலைப் புலிகளும் ஆயுதப் படை அமைப் புகளைக் கொண்டுள்ளமையினால. இவ் இடைக்கால நிர்வாகக் கட்டமைப்பின் செயற்பாடுகள் மீது இவ்விரு தரப்பின் ஆயுதப் பிரிவுகளும் எந்தவித தலையீடும் செய்ய முடியாதவாறு ஏற்பாடுகள் உறுதிப்படுத்தப்படல் வேண்டும்.
சட்ட ஒழுங்கைப் பேணுவதற்கு பொறுப்பாக, முஸ்லிம்களுக்கான தனியான இடைக்கால நிர்வாகத்தின் கீழ் முஸ்லிம்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட ஒரு பொலிஸ்படை தாபிக்கப்படல் வேண்டும்.
புனர்நிர்மாணம், மீளக்கட்டமைப்பு போன்றவற்றிற்கு நிதி ஒதுக்கீடுகள் செய்யும் போது, அந்தந்த சமூகங்களிற்கு ஏற்பட்ட பாதிப்புகள் நியாயமாக மதிப்பிடப்பட்டு ஒதுக்கீடுகள் மேற்கொள்ளப்படல் வேண்டும். அதேசமயம். புதிய அபிவிருத்தி முயற்சிகளுக்கு நிதிஒதுக்கீடுகள் செய்யப்படுகையில் அந்தந்த மாவட்டத்தின் சனத்தொகை வீதத்திற்கு ஏற்ப ஒதுக்கீடுகள் உறுதிப்படுத்தப்படல் வேண்டும்.
வடக்கு கிழக்கு இடைக்கால சபையினால் வேலைவாய்ப்புகள் மற்றும் நியமனங்கள் மேற்கொள்ளப்படுகையில் கடந்த காலத்தில் இனப்பாகுபாடு
- 19 -

Page 11
காரணமாகவும், தொடாச்சியான யுத்தம் காரணமாகவும் சமூகங்களுக்கு ஏற்பட்ட பாதிப் புக் கள் கருத்தில் கொள்ளப்படுவதுடன் மT வட ட அடிப்படையிலான சனத்தொகை வீதாசாரத்தையும் கவனத்தில் கொள்ளப்படல் வேண்டும்.
நமது தீர்க்கமான முன்மொழிவுகள்:
விதத்தில் மாவட்ட மட்டத்திலான குழு (District Committee) நியமிக்கப்படும் போது, அக் குழுவின் அரசியல் பிரதிநிதித்துவமானது. குறிப்பிட்ட மாவட்டத்தில் பாரம்பரியமான வாழும் சமூகங்களின் எண்ணிக்கை விகிதாசாரத்திற்கு ஏற்ப அமையப்பெறல் வேண்டும்.
இனப்பிரச்சனையில் பாதிக்கப்பட்ட முக்கிய பிரிவுகளில் வடக்கு கிழக்கு முஸ்லிம்களும் அடங்குவர் என்பதும். மனித உரிமைகள் அடங்கலாக நமது அனைத்து உரிமைகளும் அரசியல் சமத்துவமும் பாதுகாப்பும் உறுதிப்படுத்தப்படும் விதத்தில் புரிந்துணர்வு ஒப்பந்தம் உடனடியாகத் திருத்தப்படல் வேண்டும் எனக் கோருகின்றோம்.
வடமாகாண முஸ்லிம் கடந்த 11 வருடகால இழப்பீடுகளுக்கான நஸ்ட ஈடுகளுடன் தத்தம் இடங்களில் மீளக் குடியமர்த்தப்படல் வேண்டும். இலங்கை அரசும். விடுதலைப் புலிகளும் சர்வதேச சமூகமும் இம் முஸ்லிம்களின் பாதுகாப்பையும் வழமை நிலைக்குத் திரும்புவதையும் உறுதிப்படுத்தல் வேண்டும். வடமாகாண முஸ்லிம்களின் பிரச்சனையானது வெறும் அகதிகள் பிரச்சனையாகக் கொள்ளப்படாது, இனப் பிரச்சனையின் ஒரு பாரதுாரமான அம்சமாகக் கொள்ளப்படல் வேண்டும்.
வடக்கு கிழக்கிலுள்ள முஸ்லிம்களின் உயிர்கள். உடமைகள், உளவியல் மீது மேற்கொள்ளப்படும் தாக்குதல்கள் கடுமையான யுத்த நிறுத்த மீறல் குற்றங்களாக யுத்தநிறுத்த ஆவணத்தின் சரத்துக்கள் இணைக்கப்படல் வேண்டும்.
இடைக்காலக் கட்டமைப்பு நடைமுறையில் இருக்கும் கால கட்டத்தில் அனைத்து சமூகங்களினதும் சுதந்திரமான கருத்து வெளிப்ாடுகளுக்கும். அரசியல் செயற்பாடுகளுக்கும் வெகுசனப் போராட்டங்களுக்கும் பூரண உத்தரவாதம் அளிக்கப்படல் வேண்டும்.
முஸ்லிம்களின் மாவட்ட ரீதியான சனத்தொகை விகிதாசாரத்திற்கு ஏற்ப ஆள்புல எல்லையும் மற்றும் வளங்களும் பங்கீடு செய்யப்பட்டிருக்க வேண்டும். வளங்கள் எனும் போது, பயிர் செய்யப்படும். பயிர்செய்யப்படாத காணிகள். மேய்ச்சல் தரைகள். காடுகள், மீன்பிடிப்பிரதேசங்கள் போன்றவற்றை உள்ளடக்கும்.
2O

வடக்கு கிழக்கு இடைக்கால சஎ க்கான ஆள் புல எல்லை தெளிவாக வரையறுக்கப்படுவதுடன், அதன் அதிகாரம் இச்சபைக்கு வழங்கப்படல் வேண்டும். இந்த ஆள்புல எல்லைக்குள் அடங்கும் முளல்லிகளின் பாரம்பரிய பிரதேசங்களின் எல்லைகள் இன்னதென தெளிவாக குறிப்பிடப்படல் வேண்டும். ஒன்றுக்கு மேற்பட்ட சமூகங்களின் ஆள்புல எல்லைகள் குறுக்கிடுகின்ற பொதுப்பிரதேசங்கள் தெளிவாக அடையாளங் காணப்பட்டு, அவற்றின் பயன்பாட்டு அதிகாரமானது சம்பந்தப்பட்ட சமூகங்களின் பிரதிநிதிகளை உள்ளடக்கிய விசேட குழுவின் பொறுப்பில் விடப்படல்
வேண்டும்.
முஸ்லிம்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட தனியான கட்டமைப்பு அலகினுள் எண்ணிக்கைச் சிறுபான்மையாக காணப்படும் தமிழ், சிங்கள சமூகங்களின் விகிதாசாரத்திற்கு ஏற்ப அவர் களின் அரசியல் பிரதிநிதித் துவம் உறுதிப்படுத்தப்படுத்தப்படுவதுடன் அச்சமூகத்தின் அல்லது சமூகங்களின் அனைத்து உரிமைகளும் நலன்களும் உறுதிப்படுத்தப்படல் வேண்டும்.
மேற்கண்ட அடிப்படையில், முஸ்லிம்களின் பிரதிநிதித்துவம், அரசியல் சமத்துவம், உரிமைகள். நியாயமான வளப் பங்கீடு, நிதி ஒதுக்கீடு, பாதுகாப்பு என்பவற்றை உறுதிப்படுத்தாத எந்தவொரு இடைக்காலக் கட்டமைப்பு ஏற்பாடுகளையும் முற்று முழுதாக வடக்கு கிழக்கு முஸ்லிம்கள் நிராகரிப்போம்! அவ்வாறான அரசி: பாரபட்சத்திற்கும் அடக்குமுறைக்கும் எதிராக தொடர்ச்சியான போராட்டங்களை முஸ்லிம் அரசியல் தலைமைகளும் மக்களும் ஓரணி திரண்டு நடாத்துவோம்.
இதற்கு மேலும், தொடர்ந்தும் நம் மீதான அநியாயங்களும் அடக்குமுறைகளும் தொடரும் எனின் சகவாழ்விற்கான வாய்ப்புக்கள் தமிழ்த்தரப்பினால் மறுக்கப்படும் எனின் வடக்கு கிழக்கு முஸ்லிம்களாகிய நாம் ஒருமித்த கருத்துடன் நமக்கென முற்றிலும் தனியான இடைக்காலக் கட்டமைப்பினை மாற்று ஏற்பாடாக முன்வைத்து உறுதியுடன் போராடுவோம். இதற்கான ஆதரவுகளை உள்ளும் சர்வதேச அளவிலும் திரட்டுவோம்!
அது மாத்திரம் அல்ல. நிரந்தரமான அரசியல் தீர்வு என்ற விடயத்திலும் கூட வடக்கு கிழக்கு முஸ்லிம்களாகிய நாம் தமிழ் மக்களுடன் எந்தவித சகவாழ்விற்கான வாய்ப்பு மறுக்கப்பட்ட நிலையில், வடக்கு கிழக்கில் எமக்கென தனியான ஆள்புல எல்லையை வகுத்துக் கொண்டு. முற்றிலும் தனியான சமஷ்டி ஏற்பாட்டினை இறுதித் தீர்வாக முன்வைத்துப் போராட வேண்டிய முடிவினை மேற்கொள்வோம்.
O

Page 12
NAMATU SUYAM, | 80/5A-13, Attarmahal, Keyzer Street, (OlOmbO-l !
Sri Lanku.
e-mail: Suyameenrum (Cyaho0.com
ஆசிரியர் பத்தி
முஸ்லிம் - தமிழ் அரசியல் சகவாழ்வா தனித்தனிப் பாதைகளா?
வடக்கு கிழக்குப் பாரம்பரியத் தாயகத்தில் முஸ்லிம்களுக்கும் தமிழ் மக்களுக்கும் இடையில் சமத்துவமான சகவாழ்வா? அல்லது தனித்தனி அரசியல் பாதையில் செல்ல வேண்டுமா? என்பதைத் தீர்மானிக்கும் ஒரு கட்டத்தில் இரு தரப்பும் நிற்கின்றோம். இதனைத் தீர்மானிக்கும் பிரதான வரலாற்றுப் பொறுப் பில் தமிழ் மக்களும் விடுதலைப் புலிகளும் நிறுத்தப்பட்டுள்ளனர்.
இனப்பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வு காண்பது பல சிக்கலான அம்சங்களைக் கொண்டது. இடைக்கால நிர்வாகக் கட்டமைப்பு குறித்து பல வேறு முனைகளில் எழுந்துள்ள சா ச்சைகளும் முரணி பட்ட அணுகுமுறைகளும் இதனைத் தெளிவாக எடுத்துக் காட்டுகின்றது. இனப்பிரச்சனைத் தீர்வுடன் நெருக்கமாகப் பின்னிப் பிணைந்துள்ள வடக்கு கிழக்கு முஸ்லிம்களாகிய நாம் எவ்வாறாயினும் இந்தச் சிக்கலான பிரச்சனையை எதிர்கொண்டுதான் ஆக வேண்டும். அவ்வாறு எதிர்கொண்டு நமது
உரிமைகளை உறுதிப்படுத்திக் கொள்வதுடன், நமக்குரிய அதிகாரம், வளங்கள்
என பவற்றையும் பெற்றுக் கொள்ள வேண டியுள்ளோம் தமது அபிலாசைகளையும் பாதுகாப்புக் குறித்த அச்சவுணர்வுகளையும் நமது மக்கள் பல்வேறு வடிவங்களில் தொடர்ச்சியாக வெளிப்படுத்தி வருகின்றனர். ஆதிக்க சக்திகளுக்கும் சொந்த அரசியல் தலைமைகளுக்கும் கடுமையான அழுத்தங்களை நமது மக்கள் கொடுத்து வருகின்றனர்.
நீண்ட கால அரசியல் பகைமைகளுக்குத் தீர்வு காணும் இறுதி வழிமுறையாக இப்போது அரசியல் பேச்சுவாாத்தை தோந்தெடுக்கப்பட்டுள்ளது. இப்பிரச்சனையின் பிரிக்க முடியா கூறாக வடக்கு கிழக்கு முஸ்லிம்களாகிய
SLSLSSLSLSSLSLSSLSLSSLSLSSLSLSSLSLSSLSLSSLSLSSLSLSSLSLSSLSLSSSMSSSLSSSMMSSSLSLSSSSMSLMSMSMSSLLLSLLSLLS 2 2 - — mmmmmm t
 
 
 
 
 

ாம் இருக்கின்றோம். இருந்தும் நாம் புரிந்துணர்வு உடன்படிக்கையில் புற சக் கணிக் கப் பட்டுள்ளோம் . அரசியல் பேச் சுவார் த தை யில் 60 கவிடப் பட்டுள்ளோம் அரசியல் சமத் துவ மும் தனித் துவ மும் மறுக்கப்பட்டுள்ளோம். இந்த 18 மாத காலத்தில் தொடர்ச்சியாக தமிழ் மேலாதிக்கத்தின் பலமுனைத் தாக்குதல்களுக்கு உள்ளாகியிருக்கின்றோம். நிராயுதபாணிகளாக நிற்கும் நாம் ஆயுதமேந்திய அடாவடித்தனங்களால் தினமும் குத்திக் குதறப்படுகின்றோம். நமக்குத் தரப்பட்ட வாக்குறுதிகள் காற்றில் பறக்க விடப்பட்டதைக் காண்கின்றோம். இறுதியாக நமக்கிருக்கும் தெரிவுகள் குறைந்து வருகின்றன. ஆயுதமேந்திப் போராடு மாறு புறநிலைமைகள் நமது மக்களைக் கடுமையாக நெருக்குகின்றது. நமது
அடிப்படை உரிமைகளையும் பாதுகாப்பினையும் உறுதி செய்வது முற்றிலும் Iது கரங்களில் விடப்பட்டுள்ளது.
நாம் துாங்கிக் கொண்டிருப்பதாகக் கருதி, நமது உரிமைகளையும் அபிலாசைகளையும் ஆதிக்க சக்திகள் ஆரம்பத்தில் தட்டிக் கழிப்பதும். நாம் ஓரணி திரண்டு நமது நிலைப்பாடுகளை தீவிரமான முன்வைத்துக் களம் இறங்கும் போது, நமது குரல்களை கவனத்தில் கொள்வதாக அவர்கள் வாக்குறுதி அளிப்பதும், பின்னர் நம்மை ஏமாற்றுவதும் தொடர் கதையாக இருந்து வருகின்றது. நம்மைப் பொறுத்தவரையில் இதற்கு முற்றுப் புள்ளி வைக்கும் நேரம் வந்து விட்டது.
இந்நிலையில், தற்போது இடைக்காலக் கட்டமைப்பு என்ற அரசியல் திருப்பு முனையை எதிர்கொண்டுள்ளோம். சிங்கள அரசியல் தலைமைகள் மீதும். தமிழ்த் தலைமைகள் மீதும் ஒரு சொட்டு நம்பிக்கையை வைத்து மேற்கொள்ளப்படும் இறுதி முயற்சியாக முஸ்லிம்கள் மத்தியில் இடைக்கால கட்டமைப்பு உருவாக்கத்தில் தமது உடனடி நீண்ட கால நலன்களை உறுதி செய்வதற்கான அரசியல் ஏற்பாடுகளை சமாப்பிப்பதாகு பல முனைகளில் முயற்சிகள் மேற் கொள்ளப் பட்டு வருகின ற து நமது அரசியல் எதிர்பார்ப்புக்களையும் நிலைப்பாடுகளையும் கற1 கவும் அதேசமயம் நியாயமான விட்டுக் கொடுப்புகளுடனும் ஓரணி நின்று எழுத்தில் முன்வைப்பது
முதற்பணியாக உள்ளது. அவற்றை நடைமுறையில் சாதிப்பதற்கு பல்வேறு சக்திகளுக்கு மத்தியில் தொடர்ச்சியாகப் போராட வேண்டியது அடுத்த கட்டப்பணியாக உள்ளது. நமது முதற் கடமையை இங்கு அரசியல் கலந்துரையாடலுக்கும் பின்னர் செயற்பாடுகளுக்குமான ஒரு ஆவணமாக முன்வைத்துள்ளோம்.
இந்த விடயங்கள் குறித்து பல்வேறு உரையாடல்கள் காத்திரமாக நடைபெறுவது முதலாவது நமது செயற்பாடாக உள்ளது. அரசியல் தெளிவடைதல், பொதுக் கருத்துக்களை எட்டுதல், இரார் மூலமாக செயலுாக்கம் கொண்ட முஸ்லிம் அரசியல் தலைமைகளையும் முஸ்லிம் அரசியல் நிறுவனங்களையும் சிவில் சமூகத்தின் ஒவ்வொரு சிறு சறினையும்
23

Page 13
/
ܢܠ
செயற்பட்டு நிலைக்கு உ நிலைக்கு மாறிச் செல்ல ே
ஆங்காங்கு உ தொடர்ந்தும் செய்து கொள் வீணாக்கும் செயல் அன்றி முஸ்லிம்களுக்கு அரசியல்
ஆட்சி செய்யக் கூடிய
விடயங்களில் நமது மக்க முரண்பாடுகளை இருப்பதா மக்களை பின்னோக்கி இழு உள்ளது. விழிப்புக் கொ முன்னின்று செயற்பட ( தலைவர்கள் முன்னுக்குப் பி தெளிவாக உணர்ந்து விட் முறைமையில் ஒரு தீவிரமா சிந்திக்கத் தொடங்கி விட்ட
தனியான தேசிய பல்வேறு அடக்குமுறைகளு ஆகக் குறைந்தபட்சம் என் முன்மொழிவுகளையும் வைச் விடுதலைப் புலிகளாலும் முஸ்லிம்கள் தமது போரா கட்டத்திற்கு எடுத்துச் செலி தமது உரிமைகளை வென்ே கொள்ளவும் தீவிரமானச் ெ இளைஞர்களும் தயாராக இன்றைய அறைகூவலாகு
O
நமது வாசகர்களுக்கு
இன்ஸா அல்லாஹ் - எதிர் வரு சஞ்சிகை வடிவில் வெளிவரவுள்
தருகின்றோம். உங்களின் ஆதர6

. . . . . " = حصير = ད།།༽ தனிச்சுற்றுக்கு மட்டும்
m പ്ര
ந்துவது தீவிரமாகச் செயற்படுதல் என்ற
வண்டியுள்ளோம்.
திரி உதிரியாக ஒரே முயற்சிகளையே 1ண்டிருப்பது காலத்தையும் நமது சக்திகளையும் வேறல்ல. திட்டவட்டமான இலக்குகளாக = ET(5լՐ
محصے
சமத்துவம், தனித்தவமான தம்மை ஒரு வடிவம் என்ற போன்ற அடிப்படை ள் ஓரணிக்கு வந்து விட்டனர். இல்லாத கப் பெரிதுபடுத்தி சில முஸ்லிம் தலைமைகள் ழப்பதுதான் ஆகப் பெரும் அரசியல் கேடாக ண்டு விட்ட மக்களை தலைமையேற்று வேண்டிய கட்டத்தில் முஸ்லிம் அரசியல் பின் முரணாகப் பேசிச் செயற்பட்டு வருவதை
(šUTr ன வடிவத்திற்கு மாற்றியாக வேண்டும் என்று
60 T.
ட முஸ்லிம் இளைஞர் சக்திகள்
சமூகமான இருந்தும் இரு தரப்புக்களின் நக்கும் ஆளாக்கப்பட்டவர்களாக இருந்தும், ற வகையில் அரசியல் நிலைப்பாடுகளையும் கின்றோம். இவை வழமைபோல அரசினாலும் நிராகரிக்கப்படும் எனின் வடக்கு கிழக்கு ட்ட முறையை புதிய வடிவத்திற்கும் புதிய பல வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு தள்ளப்படுவர். றெடுக்கவும். தமது இருப்பினைப் பாதுகாத்துக் செயற்படுவதற்கு பரந்துபட்ட நமது மக்களும் வே உள்ளனர் என்பது நமது மக்களின்
D.
ம் மாதத்திலிருந்து நமது சுயம் "ளது என்பதை மகிழ்வுடன் அறியத் புக்கு மனமார்ந்த நன்றிகள்.
SLSLSLSLSSLSLSSLSLSSLSLSSLSLSSLSLSSLSLSSLSLSSLS اس
24 -