கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தலைமைத்துவம்: எதிர்கொள்ளுகின்ற சவால்களும் அதற்கான விளக்கங்களும்

Page 1
மு.கா. தலை6
வொக்ஷால் லேன்
- - - - - - • @ @ • @ @ @ @ @ @ @ @ @
 


Page 2

'kiArHiBUtilUTHA' W下 ワ○。
M.M.M. NE YU PLOMA IN MASS MED s
PNA!! JourNALST & WRTER &
1293, OSMAN ROAD, 2 co3?neou
ANTHAMARUTHU - 85
முனர்ணுவரை
வரலாற்றின் ஒரு நெருக்கடியான காலக்கட்டத்தை பூரீல.மு.கா. இன்று எதிர்கொண்டிருக்கிறது. இவ்விதமான ஒரு சூழ்நிலையில், இதன் பணிகளில் முன்னின்று தலைமைத்துவத்தில் நம்பிக்கைக் கொண்டு கடுமையாக உழைக்கும் அனைவருக்கும், நான் நன்றி தெரிவிக்கக் கடமைப்பட்டுள்ளேன்.
இம்முறை தேர்தலில், பிரச்சார நடவடிக்கைகளுக்காக என்னால் கிழக்கிற்கு முன்போல் அடிக்கடி வரமுடியாமல் இருப்பதும் எனக்கு மிகுந்த மனவேதனையைத் தருவதுடன், இதனை நாளும் நினைத்து உருகவும் செய்கிறேன். எனினும்
ஐ.தே.க.வை ஆட்சியில் இருத்த வேண்டிய கடமை ழரீல.மு. காங்கிரஸிற்கு உண்டு. ஐ.தே.க.வின் வெற்றியை உறுதிப்படுத்த வேண்டி யவர்களாகவும் நாம் இருக்கின்றோம். இதுதான் றி.ல.மு.கா.வில் எனது தலைமைத்துவத்தை தக்க வைத்துக் கொள்ள, உள்ள எனக்குத் தெரிந்த ஒரே வழியாகும்.
தலைவர் என்ற வகையில் எனது வெற்றியை உறுதிப்படுத்துவதும், வருங்காலப் பிரதமரான ரணில் அவர்களின் வெற்றிக்காக
உழைப்பதுமான பிரச்சாரப் பணிகள் பூரீல.மு.கா.ஸின் தலைமைத் துவத்தின் மீது பெருஞ் சுமையென விழுந்துள்ளன.
O

Page 3
*** 6NᎧ60 ] 6NᎧ - ” , இந்நிலவரத்தி
*** 3 : "A : : : : காங்கிரஸ் போராளிகள் தமது வேறுபாடுகளைக் களைந்து முஸ்லிம்களின் பிரச்சினைத் தீர்வை நோக்கமாக் கொண்டு ஒற்றுமைப்பட்டு வாக்களிக்க வேண்டும். தேர்தல் முடிவுகள் வெற்றி முழக்கம் கொட்டவேண்டும். எனது வழிகாட்டலின் கீழான இத்தேர்தல், எனது தலைமைத்துவத்தையும் உறுதிப்படுத்த வேண்டும். இவ்வேளையில் -
எனது தலைமைத் துவத்திற்கு சவாலாக விஷமிகளால் மேற்கொள்ளப்பட்டுவரும் பொய்ப் பிரசாரங்களுக்கு பதிலடி கொடுக்கும் முடிவுகளாக எமது தேர்தல் முடிவுகள் அமையவும் வேண்டும். இந்த வகையில் -
என் தலைமைக்குச் சவாலாக எழுப்பப்படும் கேள்விகளுக்கு இச்சிறு பிரசுரத்தினூடாக பதிலளித்து, போராளிகளான, உங்களுடன் உரையாடி,
உண்மைகளை எடுத்துரைக்க விரும்புகிறேன்.
றவூஃப் ஹக்கீம், ரீல.மு.கா தேசியத் தலைவர்
O2
 
 
 

மறைந்த தலைவரைப் பற்றிய பேச்சுக்களோ, அவர்
பற்றிய நினைவு கூறல்களோ இல்லை என்கிறார்கள்.
இன்றைய தேர்தல் காலகட்டத்திலும், போஸ்டர்களிலோ, நோட்டீஸ்களிலோ எனது பிரச்சாரங்களிலும் நடிவடிக்கை களிலும் அவர் போட்டோக்களோ, கருத்துக்களோ இடம் பெறவில்லை என்பதும், நான் இவ்வற்றில் அசட்டையாக உள்ளேன் என்பதும் என்மீதான குற்றச் சாட்டாகும்?
இது தலைவர் இருக்கும் போதே நான் செய்தவிடயம். இதில் சர்ச்சைக்குரியதாக எதுவுமில்லை. ஒருவருக்குரிய மரியாதை என்பது, அவரை போட்டோக்களில் பதியவைப்பதாலோ, அவருடைய கருத்துக்களை முன்னெடுப்பதாலோ, பேணவேண்டும் என்று நான் நினைக்கவில்லை. இதுதவிர, SLMCயானது ஒரு தனி நபரால் உருவான கட்சியல்ல. நம் எல்லோரினதும் உழைப்பினாலும் கட்டி எழுப்பப்பட்ட கட்சி அஷ்ரஃப் என்ற தனிநபருக்கு மட்டும் கட்சியை சொந்தமாக்கி, அவரது பெயரையும், கொள்கைகளையும் முன்னெடுக்க வேண்டிய அவசியமும் தேவையும் கட்சிக்கு இருப்பதாக நான் நினைக்கவில்லை. இது மறைந்த அஷரப் அவர்களின் பெயரை விற்றுப் பிழைப்பவர்களுக்குத்தான் பொருந்தும் காலத்துக்கேற்ற வகையில், கட்சியின் நலனை முன்னிட்டு போராளிகளின் தேவைகளை உணர்ந்து அதன் பணிகள் மேற்கொள்ளப்படவேண்டும் என்பது எனது கணிப்பு.
O3

Page 4
மர்ஹாம் அவுத்ர ப் அவர்கள், தாம் வாழுங்காலத்தில் ஜ.தே.க.வுடன் ரணில் விக்கிரமசிங்க அதன் தலைவராக இருக்கும் வரை எவ்வித இனக்கப்பாட்டுக்கும் வரமறுத் தார். இந்த வகையில் ஐ.தே.க.வுடனான எனது இணைவும் ஒப்பந்தமும் குறித்து சந்தேகம் எழுப்பப்படுகின்றது. பணக்கட்டுகள் கைமாறி முஸ்லீம் சமுகத்தை விற்றுவிட் டதாக அபாண்டப் பறி சுமத்தப்படுகிறது.
ஒருவரது அடிச்சுவட்டையே மற்றுமொருவர் பின்பற்ற வேண்டு மென்பது காலத்துக்கொவ்வாத அம்சமாகும். முன்னாள் தலைவரின் பார்வையில் ரணில் அவருக்கு எதிரி என்னைப் பொறுத்தவரையும் ரணில் எனக்கு நண்பன். இதை நான் ஏன் குறிப்பிடுகிறேனென்றால் மறைந்த தலைவரின் சாணக்கியந்தான் எனது சாணக்கியமாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது தவறு. நாங்கள் அமைச்சுப் பதவிகளை துறந்த பின், ஐ.தே.க.வினர் சில விடயங்களில் நமக்கு உதவினார்கள். நமது கட்சியைச் சேர்ந்த அனைவருமே பணம்படைத்தவர்களல்ல. இந்நிலவரத்தில் ஐ.தே.க.யில் நல்லெண்ணம் படைத்த வர்த்தகப் பெருமக்களும், அரசியல்வாதிகளும் இருந்தார்கள். அவர்கள் எனக்கும் பதவிகளைத் துறந்த பாராளுமன்ற பிரதிநிதிகளுக்கும், எங்களுடைய போராளிகளுக்கும் உதவினார்கள். இது கட்சியை அடகு வைத்தாக ஆகாது. நியாயமாகப் பார்க்கப்போனால், இக்குற்றச்சாட்டை முன் வைப்பவர்கள், எமக்கு உதவியிருக்கலாம்; அதற்கான வழிவகைகளை ஆலோசித்திருக்கலாம். இதை விடுத்து, வீணான பழிகளைச் சுமத்துவது, எந்தவகையிலும் நியாயமாகாது.
மர்ஹாம் அவுத்ர ப் அவர்கள் இதுகாலவரை விட்டுக்கொ டுக்காத கட்சியின் தனித்துவத்தை நான் தாரை வார்த்து விட்டதாகவும், அதை அழித்தொழிப்பதற்கான பணிகளில் நான் இறங்கிவிட்டதாகவுமான குற்றச் சாட்டுக்களும் எழுந்துள்ளன? இத்துடன் இதுவரைகாலமும் தனித்துப் போட்டியிட்டு தனித்துவமாகப் பெற்றுவந்த தேசியப் பட்டியல் ஆசனமும், இன்று கேள்விக்குரியாக உள்ளது என்று கூறுகிறார்கள்.
இவற்றுக்கான அடிப்படைக் காரணம், ஆக மூன்று மாவட்டங்களில் மட்டுமே நாம் தனித்துப் போட்டியிடுவதும், ஏனைய மாவட்டங்களை
04

ஐ.தே.கட்சிக்கு தாரை வார்த்துக் கொடுத்து விட்டதும், எமது வாக்காளர்களைக் காக்க, ஐ.தே.க.வில் நமது வேட்பாளர்களைக் கூட நிறுத்தவில்லை என்பதுமாகும்; மூன்று மாவட்டங்களான திகாமடுல்ல, மட்டக்களப்பு, யாழ்ப்பாணம் ஆகிய இடங்களில் போட்டியிடும் நாம் 160,000 க்கு மேற்பட்ட வாக்குகளைப் பெற்று நிச்சயம் தேசியப் பட்டியலைப் பெறுவோம்; எங்களுடைய தனித்து வத்தைக் காப்போம்; இது நிச்சயம்!
கட்சியின் தனித்துவம் ஒருபுறம் இருந்தாலும் இம்முறை, நமது இலக்கு பொ.ஐ.முன்னணியை ஆட்சியிலிருந்து அப்புறப்படுத்துவதாகும். இவ்விதமாக நமது மறைந்த தலைவரும் தமது இலக்குகளில் குறியாக இருந்திருக்கிறார்; கடுமையாக உழைத்திருக்கிறார். இதே அடிப்படையில்தான் ஐ.தே.க.யுடன் நாம் இணைந்துள்ளோம். கட்சியின் தனித்துவத்தைக் காட்டிலும், ஐ.தே. முன்னணியின் வெற்றி, நம்முன்னுள்ள பாரிய பணியாகும். SLMCயின் வெற்றியை விட ஐ.தே.க.யின் வெற்றியைத் தீர்மானிக்கும் மகத்தான பொறுப்பை அல்லாஹற் நம்மீது சுமத்தியுள்ளான். எனவே
என் இதயத்துக்கு நெருக்கமான முஸ்லிம் போராளிகளே! வாக்காளப் பெருமக்களே, இவற்றின் பேரில் தவறான விளக்கம் கொள்ள வேண்டாம் தலைவரின் பாதையில் வந்தவர்கள் நாம். அவரின் கொள்கைகளை கிடப்பில் போடக்கூடாது. ஒருவருடன் இணைந்துவிட்டால் மெளத்தாகும் வரை அவருடன் இருக்கத் துடிப்பவர், தம் வாக்கை காப்பாற்ற பாடுபடுபவர் மர்ஹாம் அஷரப். அவர் வழியில் நின்று சொல்கிறேன்
ஐ.தே.கவுக்கும் SLMCக்கும் எந்தக் காலத்திலும் பிரிவு கிடையாது. இதற்காக எம்மாதிரியான விட்டுக் கொடுப்புகளை நாம் செய்தாலும், குற்றம் காணவும் கூடாது. ஒரு முறை ஐ.தே.க.க்கு வாக்களிப்பதன் மூலம் நமது வாக்காளர்கள், ஐ.தே.க.யின் வாக்காளர்களாக மாறிவிடுவர் என எதிர்பார்ப்பது முட்டாள்தனம். இம்மாதிரியான பிரச்சாரங்களை மக்கள் மத்தியில் கொண்டு செல்பவர்களைக் குறித்து விளிப்பாயிருங்கள். நமது வாக்காளர்கள் நம் வாக்காளர்கள்தான்; நமது தோழர்கள் நம் தோழர்கள்தான்; நமது போராளிகள் நம் போராளிகளேதான்.
05

Page 5
SLMCக்கான தேசியப்பட்டியல் எம்பிக்கள் குறித்து விதர்ைடாவாதமான சர்ச்சை எழுப்பப்பட்டுள்ளது. இதற்கும் நான் பதிலளிக்க கடமைப்பட்டுள்ளேன்?
SLMCயில் எனக்கு நம்பிக்கைக்குரியவர்கள் இல்லையா எனக் கேள்வி எழுப்புகிறார்கள். ஏனில்லை? இருக்கிறார்கள். எனது சகோதரரை அடுத்து கட்சியின் Giguoroi Lri i ஹப்ரத் அவர்கள் இருக்கிறார். குருனாகல் மாவட்டத்தில் அவர் போட்டியிடுவதால் தேசியப் பட்டியலில் அவர் இடம்பெறவில்லை. உண்மையில், தேசியப் பட்டியலில் நம்பிக்கைக்குரியவர்களும், பக்குவப்பட்டவர்களுமே இடம் பெறவேண்டும் டாக்டர் ஹபீஸை நியமிப்பதற்கான அடிப்படைக்காரணமும் அதுதான். மேலும், கொழும்பு மாவட்டத்தில் எமக்கு கடந்த தேர்தலில் 27,000 க்கு மேற்பட்ட வாக்குகள் கிடைத்தன. நிச்சயமாக கொழும்பு மாவட்டத்துக்கு தேசியப்பட்டியல் ஒன்றை வழங்க வேண் டியே உள்ளது. கடந்த பாராளுமன்றத்தில் எம்.எம்.சுஹைர் அவர்களுக்கு இது வழங்கப்பட்டது. இம்முறையும் முக்கியமான ஒருவருக்கு இதை வழங்கவேண்டியுள்ளது. அவர் நன்கு படித்தவராகவும் பண்பாளராகவும் இருக்கவேண்டும். எனது சகோதரர் இதற்குப் பொருத்தமானவராகவே இருக்கின்றார். இவற்றையும் கருத்திற் கொண்டே அவரை தேசியப் பட்டியலுக்குக் கொண்டுவந்தேன்.
இம்முறை ஐ.தே.க.மீதான நமது தேசியப் பட்டியல் மிகுந்த பரிசீலனைக்குட்படுத்தியே போடப்பட்டது. (ԼՔ56ÙIT6).151 616015/ சகோதரரான டாக்டர் ஹபீஸ்; இரண்டாவது என் ஒன்றுவிட்ட சகோதரரான எம்.என்.எம்.சல்மான்; பழம்பெரும் அரசியல்வாதியான மசூர் மெளலானா; பிரபல வர்த்தகரும், ஐ.தே.க.யின் பழம்பெரும் உறுப்பினராக இருந்து எம்முடன் இணைந்து கொண்ட முஸம்மில்; சிறந்த பேச்சாளரும், பழம் பெரும் அரசியல்வாதியுமான டாக்டர் உதுமாலெப்பை.
ஒரு வகையில் SLMCயில் இவ்விதமான பதவிகளுக்கு பக்குவப்பட்டவர்கள் மிகக் குறைவு. இவர்கள் அரசியல்ரீதியாக பக்குவப்பட இன்னும் காலம் உண்டு. இன்னும் இரு தேர்தல்களை யாவது இவர்கள் சந்திக்க வேண்டும். இதில்
O6

பழையவர்கள், புதியவர்கள் என்ற பாகுபாடு கிடையாது. வளர்ந்து வரும் போராளிகளுக்கும் நாம் இடந்தர வேண்டும். தியாகங்கள் இல்லாமல் ஒரு கட்சியை வளர்க்கவும் முடியாது. உலக அரசியல் வரலாற்றில் இவையெல்லாம் சர்வசாதாரணம். இலங்கையின் பழம் பெரும் கட்சியான ஐ.தே.கட்சியிலிருந்தே பலர் ஓரங்கட்டப்பட்டுள் ளார்கள். இது கட்சிக்கான தியாகம். விட்டுக் கொடுப்புகளுடன் நாம் கட்சியை வழிநடத்த வேண்டும். எனினும், கட்சிக்குப் பாதகமில்லாத வகையில், கட்சியிலிருந்து ஒதுக்கப்பட்டோம் என்று நினைப்பவர்களை, எந்த வகையில் கவனிக்க வேண்டுமோ, அந்த வகையில் கவனிப்பேன்.
ஒரு கட்சியில் அனைவருமே முக்கியத்துவம் வாய்ந்தவர்கள் என்று அல்ல. நான் இவ்விடயத்தை ஏலவே கண்டி மாவட்டத்தில் இடம்பெற்ற ஒரு கூட்டத்தில் குறிப்பிட்டேன். இது நமது முன்னாள் கட்சியின் செயலாளர் பாருக் அவர்கள் கென்யாவுக்குக்கான தூதுவராக சென்ற சமயம் அவருக்கு நடந்த பிரியாவிடைக் கூட்டமாகும். கட்சியை நடத்த தலைவரும், செயலாளரும் மட்டும் இருந்தால் போதும் ஏனையவர்கள் வெறும் பெயரளவில்தான் என்றும் கூறினேன். எனவே
தேசியப்பட்டியல் குறித்த சர்ச்சை என்பது விஷமிகளின் திட்டமிட்ட வேலையாகும். மேலும்
நான் தேசியப்பட்டியலை மூதூருக்கும், மட்டக்களப்புக்கும் மட்டுமே ஒதுக்கியுள்ளதாகவும் கூறுகிறார்கள். இது தவறு. ஐ.தே.க.யுடனான பேச்சுவார்த்தையில் நான்கு ஆசனங்களை உறுதிசெய்துள்ளேன். இந்தவகையில் அம்பாறை மாவட்டத்துக்கும் தேசியப்பட்டியல் தருவேன் என உறுதி கூறுகின்றேன்.
ഥTഖബ ിf99ിങ്ങ് ക്രമിഴ്കഥ, ഥഖിബ് த்துக்கு எதிராக கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரச்சினை குறித்தும் முரணர்பாடான கருத்துக்கள் நிலவுகின்றன?
மாவனல்ல முஸ்லிம் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு நியாயம் தேடவும், நிவாரணம் கொண்டுவரவும் நான் கடுமையாகவே உழைத் தேன் நான் இந்த அரசை விட்டு வெளியேற
O7

Page 6
மஹிபாலஹேரத்தின் நம்பிக்கையில்லாப் பிரச்சினைக் குறித்து பொ.ஐ.முன்னணி அரசு காட்டிய அசட்டையும், ஒரு முக்கிய காரணமாகும். மேலும்
பவுஸி, அலவி மெளலானா, பேரியல் அஷ்ரஃப், என்பவர்கள் தலையிட்டு பிரச்சினைக்கு முஸ்லிம்கள் தான் காரணம் என்ற நிலைப்பாட்டுக்கு வந்ததாலும், இது விடயத்தில் என்னால் சரியான நடவடிக்கை எடுக்க முடியாமல் போனது. எனவே
இவர்களின் அணியில் நான் இருக்கக் கூடாது என்பதற்காகவுமே எனது சாணக்கியத்தால் அரசைக் கவிழ்த்தேன்.
கரையோர மாவட்டம் குறித்து மீண்டும், பிரச்சினைகள் கிளப்பப்படுகின்றன. UNPயுடனான கூட்டில் அது சாத்தி யமா என்பதான சந்தேகங்களும் எழுப்பப்படுகின்றன.
இது நியாயமான பிரச்சினையும் நியாயமான சந்தேக மும்தான். இது பற்றி நான் விளக்கந் தரவே வேண்டும்.
பொ.ஐ.முன்னணி ஆட்சியை, கடந்த தேர்தலில் மீண்டும் நிறுவி, முஸ்லிம்களின் அரசியல் உரிமைப் பிரச்சினைகள் குறித்தே அதிகம் வலியுறுத்தினோம். இதன் பேரிலான முரண்பாடுகளே நாம் ஆட்சியை விட்டும் வெளியேறக் காரணமாயின என்பது நாடறிந்த சங்கதி. முஸ்லிம் மக்களறிந்த உண்மை.
ஐ.தே.க.யிடம், முஸ்லிம்களின் அரசியல் உரிமைகளை நாம் வலியுறுத்தியுள்ளோம்.
கரையோர மாவட்டத்தை மட்டுமல்ல, நிலத் தொடர்பற்ற ஒரு முஸ்லிம் நிர்வாக மாநிலத்தையும் நாம் வலியுறுத்தவுள்ளோம். பொ.ஐ.முன்னணி அரசாங்கத்தில் நமக்கு வழங்கப்பட்ட அமைச்சுக்களையும், பதவிகளையும் தூக்கி எறிந்தோம். ஐ.தே.கட்சி ஆட்சி அமைக்குமானாலும் கூட முஸ்லிம்களின், அதிலும் கிழக்கு மாகாண மக்களின் உணர்வுகளுக்கப்பால் நாம் எந்தப் பதவியிலும் தொங்கிக் கொண்டிருக்கமாட்டோம் என்பதை திட்டவட்டமாக
இத்தருணத்தில் கூறிக் கொள்ள விரும்புகிறேன். மேலும்
08

ஐ.தே.கட்சியுடனான புரிந்துணர்வு ஒப்பந்தம் குறித்தும் கேள்வி எழுப்புகிறார்கள். இப்போதைக்கு இது குறித்த விடயங்களை வெளிக்கொண்டுவர நான் விரும்பவில்லை. நான் என்பதை விட ஐ.தே.க.யும் இதனை விரும்பாது, அது மாத்திரமல்ல இவ்விதமான விடயங்கள் அனைத்தையும் வெளிப்படுத்துவது தலைமைத்துவப் பண்புமாகாது. அதனால்தான் கட்சியின் அரசியல் அதியுயர் பீடத்திற்கே இவ்விஷயங்களை இதுவரை தெளிவுபடுத்தியது கிடையாது.
ரகசியமாக நான் செய்து கொண்டுள்ள விஷயங்களை அம்பலப்படுத்த சில விஷமிகள் கேட்கும் கேள்விதான் இது. இதற்கெல்லாம் பதிலளிக்க வேண்டிய அவசியம் எனக்கில்லை. சாணக்கியமான அரசியல்வாதியின் செயலுமல்ல. தருணம் வரும் போது மக்களுக்கு நானே அறியத் தருவேன்.
எதற்கும் பொறுமை வேண்டும். 100 நாட்களல்ல, 100 மாதங்களல்ல, 100 வருஷங்களாவது காத்திருந்து ஐ.தே.க.வுடன் இணைந்து எம் காரியங்களை சாதிப்போம்.
எமது முன்னாள் தலைவரின் பாரியாரை பேய்க்குழந்தை என்றும், நடத்தை கெட்டவர் என்றும், அவரது சாரியை உரிவேன் என்றும் எனக்கு அடுத்து கட்சியின் உயர் பதவியில் இருப்பவர், எனக்குப் பின் கட்சியை வழிநடத்த க்கூடியவர் கேவலமாகப் பேசியபோது, அவற்றை
யெல்லாம் அங்கீகரிப்பது போல், நான் மகிழ்ச்சியில் திளைத்திருந்ததாகவும், அவற்றை மேலும் உற்சாகப்படு த்தியதாகவும் என் மீது குற்றம் சுமத்தப்படுகிறது?
இது உண்மையல்ல. உண்மை என்னவெனில், என் முன்னிலையில் அவ்வாறாக பேசப்பட்டபொழுது, எனக்கும் அது அருவருப்பாகவே இருந்தது. எனினும், பேசியவரின் திருப்தியைக் கருதி அவ்விடத்தில் அதற்கு நான் எதிர்வு கூறவில்லையானாலும் தனிப்படக் கூப்பிட்டு அவ்விதம் பேசியதை கடிந்து கொண்டேன்.
கரையோர மாவட்டப் பிரச்சினையைவிட, பேரியவின் அமைச்சுப் பதவிகளை நான் நீக்க முயன்று, அதனையே
09

Page 7
ஜனாதிபதியிடம் கோரியதாகவும், ஜனாதிபதி மறுத்ததால் தான், நான் அரசைக் கவிழ்க்க சதி செய்ததாகவும்
கூறப்படுகின்றது.
இது உண்மையே! ஏனென்றால் கரையோர மாவட்டத்தைப் பெறுவதென்றாலும், கட்சியை உயிரோடு வைத்திருக்க வேண்டு மென்றாலும், கட்சியை ஒரு தலைமைத்துவத்தின் கீழ் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதென்றாலும், முஸ்லிம்களுக்கான தனி முஸ்லிம் மாகாணமொன்றைப் பெறுவதென்றாலும், கண்டி மாவட்டத்தில் முஸ்லிம்களுக்கான தேர்தல் தொகுதியொன்றைப் பெறுவதென்றாலும், நமக்குள்ளே துரோகிகள் இருக்கக் கூடாது. ஒரே கட்சியைச் சேர்ந்த இருவர் ஒரு அரசாங்கத்தில் அமைச்சர்களாக இருப்பதும் கூடாது. இது எப்போதும் கட்சியை சரியான பாதையில் முன்னெடுத்து செல்வதற்குத் தடையாகவே இருக்கும்.
அம்பாறை மாவட்டத்தில், கட்சியின் வளர்ச்சிக்கும், நமது அபிவிருத்திப் பணிகளுக்கும் தடையாக செயற்பட்ட பேரியலையும் அவரைச் சார்ந்தவர்களையும் அமைச்சரவையிலிருந்தும், ஆட்சியிலிருந் தும் அப்புறப்படுத்த நினைத்தது எவ்வகையில் தவறாகும். எனவே
என் இலட்சியப் போராளிகளே இவ்விதமானதொரு சிறுபான்மைக் கட்சிக்கு சர்வ அதிகாரங்களும் பெற்ற ஒரு தலைவரே அவசியம். இதைத்தான் மறைந்த தலைவரும் நடைமுறைப்படுத்தி வந்தார்.
to(3, not முஸ்தபா நெளவு2ாட் போன்றவர்களை ஜக்கிய தேசியக் கட்சி சார்பாக எமது பட்டியலில் சேர்க்காமல்,
அம்பாறை மாவட்ட முஸ்லிம் பிரதிநிதித்துவத்தை குறைக்க நான் திட்டமிட்டதாக என்மீது குற்றம்சாட்டப் படுகின்றது.
மயோன் முஸ்தபா, நெளஷாட் போன்றவர்கள் ரணிலை நம்பி, அவரின் காலில் விழுந்தே அதனைக் கேட்டார்கள். முஸ்லிம் சமுகத்தின் தேசியத் தலைவரான என்னிடம் வந்து அவர்கள் கேட்டிருந்தால், நிச்சயமாக இடம் கொடுத்திருப்பேன். இதுதான் உண்மை. இவர்கள் தலைமைத்துவத்தை மதிக்கின்ற பண்பையும் அதற்குக் கட்டுப்படுகின்ற பக்குவத்தையும் கொண்டிருக்க வேண்டும்.
10
 

கட்சிக்குள் முன்னாள் தலைவரின் மனைவிக்கோ, மகனுக்கோ இடந்தரவில்லை என்ற குற்றச்சாட்டும் உண்டு அவர்களை நாம் தூக்கி வீசிவிட்டதாகவும் சொல்கிறார்கள்.
இக்கட்சி மறைந்த தலைவருடைய பரம்பரைச் சொத்தல்ல. அவருடைய பிற்சந்ததியினருக்கு அதை ஒப்படைப்பதற்கு மக்களால் வளர்க்கப்பட்ட கட்சி. மக்களுக்கே சொந்தம். அந்த மக்கள் இன்று என்னை ஏற்று நிற்கிறார்கள். இந்நிலையில்
அவருடைய மனைவிக்கோ, மகனுக்கோ, இடங்கொடுபடவில்லை என்பது சர்ச்சைக்குரிய விடயமல்ல.
இன்றுள்ள கட்சியின் பதவி நிலவரங்கள் குறித்து விளக்கம் கேட்கப்படுகின்றது. இன்று தலைமைத்துவம் உட்பட கட்சியின் சகல பதவிகளும் கிழக்கிற்கு வெளியே இருக்கின்றன. முன்னாள் தலைவரின் கருத்துப்படி தலை மைத்துவம் முஸ்லிம்களின் இதயமான அம்பாறையில் என்பதால், செயலாளர் பதவி கிழக்கிற்கு வெளியில் இருந்தது. இன்றோ செயலாளர் உட்பட பெரும்பாலான பதவிகள் கிழக்கிற்கு வெளியிலேயே தொடர்ந்தும் இருக் கின்றன. ஒரு மாத காலத்துள் நான் இதற்கு மாற்றுத் தருவதாகக் கூறியும், தொடர்ந்தும் கிழக்கு மக்கள் ஏமாற்றப்படுகிறார்கள் என்பதான கருத்துக்களும் எழுந்துள்ளன.
கிழக்கிலே தலைமைத்துவம், வெளியிலே செயலாளர், என்பது மறைந்த தலைவரின் கருத்து. கிழக்கு மக்கள் என்னை தானைத் தலைவனாக ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள். எனக்குப் பொருத்தமான ஒருவர் கிழக்கில் இல்லாத காரணத்தினால்தான் தொடர்ந்தும் கிழக்கிற்கு வெளியிலான ஒருவரை செயலாளராக வைத்திருக்கிறேன். இம்மாதிரியான விடயங்களில், அல்லது பொறுப்பான பதவிகளில் தலைவருக கு நம் பிக் கையும் விசுவாசமுமான வர்கள் வேண்டப்படுகிறார்கள்.
11.

Page 8
இம்மாதிரியான கேள்விகளுக்கு விஷமிகளின் குழப்படிகளும் அறிவில்லாத்தன்மையும் காரணமாகும். நமது கட்சியும் அதன் கொள்கைகளும் பிரதேசவாதத்தைக் கடந்தது. இந்த வகையில், தற்போதைய செயலாளர் வட-கிழக்கிற்கு வெளியில் இருப்பது ஒன்றும் துரதிஷ்டகரமான நிகழ்வு அல்ல. இதனால் கட்சிக்கும் கெடுதல் கிடையாது.
புதிய தலைமைத்துவம் கட்சியின் முக்கியளிப்தர்களை இரண்டு கட்டமாக ஓரங்கட்ட BLഖg:്ഞക எடுத்திருப்பதாகவும், அதில் முதல் கட்டமாக, 0 MTTTMTTTTMS S M M M T TTM00 S M S MM M M 0M MMS SS T LL 5ffിസ്ഥ1്, ബി ഗുണകl@ങ്ങ്. (ിfബ്ബ് ബ്"L) பட்டதாகவும், இரண்டாம் கட்டமாக தற்போது என்னோடு இருக்கும் சிரேஷட உறுப்பினர்களான அதாவுல்லா, ஹசனலி அன்வர் இளம்மயில், மொஹிதீன் அப்துல் T TT S MT S MMM 0C 0 0 S S S M T M S MM MM SLS பவுதிர் சேகுதாவுத், நசிர் அஹமட் போன்றவர்களை கட்சியிலிருந்து வெட்டிக் கழரிக்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக குற்றச் சாட்டுக்கள் வந்து கொண்டிருக்கின்றன. அதேவேளை, வெறுமனே தலையா ட்டும் குழுவொன்றை கிழக்கில் உருவாக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாகவும் கூறப்படுகின்றது.
இம்மாதிரியான விஷமத்தனமான பிரச்சாரங்களைக் கண்டு பயப்படுபவனல்ல நான் எனது முதலாவது பணி கட்சிக்குள் களை பிடுங்கி, கட்சியை தூய்மைப்படுத்துவது. தலைமைத்துவத்துக்குச் சவாலாகவும் , த டைக் கற்களாகவும் , தலைமைத்துவத்தை கேள் விக் குறியாக குபவர்களாகவும் , தொல  ைலயாகவும் இருப்பவர்களைக் கட்சியிலிருந்து அப்புறப்படுத்துவது எனக்குள்ள கடமை. ஆகவே
ஒரு தலைவருக்குரிய பணியைத் தான் நான் செய்து கொண்டிருக்கிறேன். ஆரோக்கியமான தலைமைத்துவம் ஒன்றைப் பேணவேண்டிய அவசியம் எனக்குண்டு.
12

சம்மாந்துறைக்கான வேட்பாளர்களை தெரிவு செய்வதில் குழறுபடியும் சுதந்திரம் கிடைத்த காலந்தொட்டு அப்பிர தேசம் பெற்றுவரும் பிரதிநிதித்துவத்தை இழக்கச் செய்ய நான் திட்டமிட்டு வழிவகுத்ததாகக் கூறுகிறார்கள்
சம்மாந்துறை வேட்பாளர் தெரிவானது இரண்டு "ரக் அத் சுன்னத்து தொழுது, திருவுளச் சீட்டு மூலம் பெற்றதாக இருந்தாலும் மறுநாள் மீண்டும் இத்தீர்மானத்தை மாற்றுவதற்கு அதியுயர் பீடம் கூட்டப்பட்டு, அதன் சம்மதத்தைக் கொண்டே மன்சூர் அல்ல, அன்வர் இஸ்மாயில் என்பது முடிவானது. இதனைக் கொண்டு நான் அல்லாஹற்வுக்கே சவால்விடுவதாக விஷமிகள் கூறுகிறார்கள். உண்மை அதுவல்ல. இதில் உள்நோக்கம் எதுவும் கிடையாது. அல்லாஹற்வையும் மறந்து, தொழுகையையும் மறந்து, திருவுளச் சீட்டையும் மறந்து, ஒரு நிர்ப்பந்தத்தின் பேரிலேயே இம் முடிவு மாற்றப்பட்டது. வேறு எதனாலும் Տ9|67)67).
இம்முறைத் தேர்தலில் தலைமைத்துவத்தின் சாணக்கியம் குறித்த கேள்வியும் எழுப்பப்படுகிறது. நாம் 15 ஆசனங்க ளைப் பெறுவோமா என சந்தேகக் கூச்சல் போடுகிறா ர்கள். மறைந்த தலைவர் எப்போதும் தனித்துவமான தேசியப் பட்டியல் ஒன்றை கட்சிக்கு என தக்கவைத்துக் கொண்டார். இம்முறை இது கிடைக்குமா என்பது குறித்தும் சந்தேகம் எழுப்பப்படுகின்றது.
இதில் சந்தேகத்திற்கே இடமில்லை. முன்னைய தலைமைத்துவத்தை விடவும், மிகுந்த சாணக்கியமாகவே எமது தேர்தல் வியூகம் தீர்மானிக்கப்பட்டுள்ளது. வட-கிழக்கில் 9ம் வெளியில் 3மாக, 12 ஆசனங்களைப் பெறுவோம். மேலும் தேசியப்பட்டியலில் நாம் பெறும் 3 ஆசனங்களும் சேர்ந்து நமக்கு ஒட்டுமொத்தமாக கிடைக்கப்போவது 15 ஆசனங்களாகும். ஆனால், இன்னும் கொஞ்சம் அதிகமாக உழைப்போமேயானால் மேலும் இரு ஆசனங்களும் ஐ.தே.க.யுடனான பரஸ்பரப் புரிந்துணர்வில் மேலும் ஒரு தேசியப்பட்டியலுமாக 18 ஆசனங்கள் கிடைக்கவும் வழியுண்டு.
தேர்தல் காலங்களில் இவ்விதமாக சந்தேகங்களைக் கிளப்பி, மக்கள்
13

Page 9
மத்தியில் குழப்பத்தை உண்டு பண்ணுவது வழக்கம். போராளிகளே இவ்விதமான சதிவலைகளில் நீங்கள் சிக்கக் கூடாது. ஆட்சியை நிறுவப் போவது நாங்கள்தான் நம்மைக் காட்டிக் கொடுத்த துரோகிகள் ஒதுக் கப்படுவார்கள் சக்தி வாய்ந்த பாரிய அமைச்சுக்களை நாம் பொறுப்பேற்போம். நம் சமுகத்துக்கு அளப்பரிய சேவைகளை வழங்குவோம்.
திகாமடுல்ல மாவட்டத்தில் 8 பேர் அதே மாவட்டத்தைச் சேர்ந்தவர்களாகவும், இருவர் கிழக்குக்கு வெளியிலிருந்தும் போடப்பட்டது கட்சியின் அடித்தளத்தையே அசைக்க எடுக்க കൃിഗ്രഥികിLITക ബി ഗ്b/ ക്രിസ്ഥ കTL LILേകിട്ടു/.
இது உண்மையல்ல. பிரதேசவாதங்களைக் கடந்து எமது போராட்டங்களை முன்னெடுத்துச் செல்லும் ஒரு பரிச்சாத்தமான நடவடிக்கையாகும். அதுமாத்திரமல்ல இவர்கள் இருவரும் எந்த வகையிலும் சளைத்தவர்களும் அல்ல. இதில் ஒருவரான பாரூக் மஜீத் கட்சியின் பிரதிச் செயலாளராக கடந்த சில வருடங்களாக என்னுடன் இணைந்து செயற்பட்டு வருபவர், இன்றும் தொடர்ந்தும் அப்பதவியை வகித்து தன்னையே அக்கட்சியாக அர்ப்பணித்த ஒரு தியாகி.
சகோதரர் ஆரிப் கட்சியுடன் இணைந்து 3 வருடங்களாக இருந்தப் போதும் கட்சியின் நிர்வாகத்தை ஒருபுதிய பாதையிலேயே சீரமைத்தவர் இதற்காக தன்னையே இரவுப் பகலாக அழித்துக் கொண்டவர்.
மறைந்த தலைவர், நான் என்ற வார்த்தைப் பிரயோகம் தவிர்த்து தலைமைத்துவம் என்றே பேசுவதாகவும், எந்த ஒரு ஆரம்பத்துக்கும், இன்ஷா அல்லாஹர் என்றே உச்சரிப்பார் என்றும் கூறப்படும் அதேவேளை, நமது கட்சிக் கீதமே மமதை தவிர் என உரைத்தும், நான் எப்போதும் நானென்றே பேசுவதாகவும், இன்ஷா அல்லாஹர் என்ற வார்த்தைகளுக்கு மதிப்பளிப்பதில்லை என்றும் குற்றம் கண்டு குறை கூறுகிறார்கள்.
இது பொதுஜன ஐக்கிய முன்னணி உலமாக்களின் வேலை. அவர்கள் சுமத்தும் வீண்பழி நான் என்பதையும் இன்ஷா-அல்லாஹற் என்பதையும் முதன்மையும், முக்கியமுமான விடயங்களாக நான்
14

கருதவில்லை. இதைவிடவும் முக்கியமான பிரச்சினைகள் உண்டு. இந்தச் சொற்களைப் பாவிக்காமல் இருப்பது எனக்குப் பழக்கமான ஒன்று. எனது இந்தப் பழக்கத்தை நிறுத்தக்கோருமாறு கூறி உங்களைக் குழப்ப வருகிறார்கள் பொ.ஐ.முன்னணி உலமாக்கள். போராளிகளே இந்தக் குழப்பத்தில் நீங்கள் சிக்க வேண்டாம். நமது போராட்ட நிலை வேறு, இலக்குகள் வேறு, காய்நகர்த்தல்களும் வேறு. எனவே, போராளிகளே இந்தப் பொ.ஐ.மு.வின் உலமாக்களின் திட்டமிட்ட சதிவலைக்குள் நீங்களும் சிக்க வேண்டாம்.
நம் இயக்கம் தூய்மையானது. நம் வழியும் தூய்மையானது. நம் பணி சிறக்க அல்லாஹற் நமக்கு துணை நிற்பான்.
குறிப்பு: போராளிகளுக்கு.
எனது வளியியத்தாக நினைத்து எமது சகப் போராளிகளுக்கும் இவற்றில் அடங்கிய கருத்துக்களை எத்திவைத்து அவர்களுக்கும் தெளிவை ஏற்படுத்தும் பணியைச் செய்வீர்களென நம்புகிறேன்.
15

Page 10