கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: அம்மா தேர்ந்த கவிதைகள் சில

Page 1

at a
の
以

Page 2

9tbd
-டூதர்ந்த கவிதைகள் சில
திருமதி.பொன்னுத்துரை இராசம்மா ൈഖ് ഒഖഠിuീ
கொக்குடியாவளவு, அல்வாய், யாழ்ப்பாணம்.
2OO7

Page 3
தொகுப்பு
முதற் பதிப்பு
வெளியீடு
&lářdfly6y_Ii
நூல் விபரம்
அம்மா
தேர்ந்த கவிதைகள் சில
: க.குணேஸ்வரன்
2001. 2007.
திரு, திருமதி விஜயநாதன் கெளரி திரு திருமதி வரதன் நிர்மலாதேவி
கொக்கட்டியாவளவு அல்வாய்.
: மதுரன் கிறா(மிபிக்ஸ்.
அல்வாய்.
நன்றி
அட்டைப்படம் :- எஸ்.தனபால் (1919-2000)
:-The Southern accent,
A.S.Raman, Tamilnadu Ovia Nunkalai Kuzhu, Chennai.

ாங்கள் போ 4:22" ங்ெகள் ఖundజ Áင်္ချေဓrreီး
விக்கலி ர்ே உார் து
இெத்த وارG,ژولر எங்கள் அமோஉே! உங்கள் வரலாவு జఇతిజఈ %வெப்பத غالوچمٹe@
இது சமர்ப்பவே

Page 4

உள்ளே.
ஒரு பதிவு ஒரு குறிப்பு ஒரு பார்வை
கவிஞர் அல்வாயூர் மு.செல்லையா
கவிஞர் அரியாலையூர் வே.ஐயாத்துரை
கவிஞர் அம்பி
நீலாவணன்
காரை செ.சுந்தரம்பிள்ளை
சோ.பத்மநாதன்
மு.புஷ்பராஜன்
சு.வில்வரத்தினம்
கி.பி.அரவிந்தன்
மேமன் கவரி
சேரன்
ஞானசம்பந்தன்
முல்லையூரான்
ராஜாத்தி வலென்றே மலங்கதானா- தமிழில்:- சோ.பத்மநாதன்
அய் ஜிங்- தமிழில்:- அ. யேசுராசா.
சமீஹற் அல் காசிம் - தமிழில்:-எம்.ஏ. நுஃமான்

Page 5
ஒரு பதிவு
எமது தாயார் பொன்னுத்துரை இராசம்மா மறைந்து 31ஆம் நாள் நினைவு நாளிலே அவரின் ஞாபகமாக ஒரு நூலை வெளியிட வேண்டும் என்ற எனது விருப்பமும் எம் சகோரர்கள் விருப்பமும் ஒன்று சேர்ந்து "அம்மா’ என்ற பெயரில் வெளிவந்திருக்கிறது.
எமது தந்தை சிறுவயதிலேயே எம்மை விட்டு மறைந்த பின்னர் எம்மை வளர்த்து ஆளாக்கிய எம் அன்னையின் நினைவுகளை மனதில் நிறுத்தி வைப்பதற்கு இச் சிறுநூல் ஒரு பதிவாக அமையும் என்று எண்ணுகிறோம்.
இநீ நுTலைத் தொகுத் துத் தந்த சு.குணேஸ்வரனுக்கும் இதற்கு ஒரு பதிவினை எழுதி தந்த சகோதரன் கலாநிதி மா. கருணாநிதி அவர்களுக்கும் அழகுற அச்சிட்ட மதுரன் கிறாபிக்ஸ் மகேஸ்வரன் அவர்களுக்கும் இதில் உதவிய அனைவர்க்கும் வெளியீட்டாளர்கள் என்ற வகையில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
திரு.திருமதி. விஜயநாதன் கெளரி
திரு.திருமதி வரதன் நிர்மலாதேவி வெளியீட்டாளர்கள்.
கொக்கட்டியாவளவு, அல்வாய்.
20.01.2007.

ஒரு குறிப்பு
'அம்மா - தேர்ந்த கவிதைகள் சில” என்ற இந்நூல் அமரத்துவமடைந்த பொன்னுத்துரை இராசம்மா அவர்களின் நினைவு வெளியீடாக அவரின் குடும் பத்தினரின் வேண்டுகோளுக்கு ஏற்ப தொகுக்கப்பட்டது. இந்நிலையிலே தொகுப்பாளன் என்ற வகையில் சில குறிப்புக்களை பதிவு செய்யலாம் என எண்ணுகிறேன்.
'அம்மா’ என்ற சொல்லின் ஆழத்தின் எத்தனை அர்த் தங்கள் பொதந்துள்ளன. உயிரூட் டி, உவகையோடு தாலாட்டி, ஆளாக்கிய அன்னையின் அன்பை வடிக்க எத்தனை விதமான வார்த்தைகள் இக்கவிதைகளில் இழையோடுகின்றன. அன்பின் மகத்துவத்தை, உறவின் வீரியத்தை, இழப்பின் துயரத்தை 'அம்மா’ பொருள்பட அமைந்த கவிதைகளை எடுத்து தொகுத்துப் பார்த்தபோது வித்தியாசமாக இருந்தது. ஆனால் என் கைக்குள் சிக்கிய கவிதைகள் அனைத்தையும் உங்களுக்குத் தரமுடியாது காலம் தடுத்துவிட்டது.
ஈழத்துப்படைப்பாளிகளின் கவிதைகளையும் புறநடையாக அமைந்த *டுமொழிபெயர்ப்புக் கவிதைகளையும் தேர்ந்தெடுத்து மேற்கொள்ளப்பட்ட

Page 6
இம்முயற்சியில் கவிதைகள் சுட்டும் பொருட்பரப்புக்கு முதன் மை கொடுத்து கவிதைகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. எனினும் பல கவிதைகள் தவிர்க்கப்பட்டோ, அல்லது சேர்க்கப்படாமல் விடுபட்டுப் போவதற்கோ சந்தர்ப்பம் ஏற்பட்டுவிட்டது.
1. 'அம்மா’ பொருள் சார்ந்து கவிதைகளைத் தேடியபோது அதிகமான கவிதைகள் அவைசுட்டும் தத்துவார்த்தத் தளம் காரணமாக தவிர்க்க வேண்டியவையாகி விட்டன.
2. சேர்க்க விரும்பிய ஈழத்து மூத்த, மற்றும் இளைய கவிஞர்களின் கவிதைகளைப் பெற்றுக்கொள்வதில் ஏற்பட்ட கால நேர சிரமங்கள் காரணமாகவும் விடுபட்டுப்போயின.
எனினும் கிடைத்தவற்றைக் கொண்டு தேர்ந்து கவிஞர்களின் காலப் பின்னணியில் இவை தரப்பட்டுள்ளன.பொருட்பரப்பு முதன்மைப்படுத்தப் பட்டாலும் கவிதைகளின் ஓட்டத்தினூடே கவிஞர்களின் சமூக வாழ்நிலை அனுபவத்திற்கும், அவர்களின் புலமைக்கும் ஏற்ப கவிதைகளின் உணர்வுச் செவ்வியில் ஏற்பட்டு வந்துள்ள மாற்றத்தைக் கண்டு கொள்ள முடியும். இது கவிஞர் அல்வாயூர் மு. செல்லையா முதல் து Nejnostižší ராஜாத்தி இயல் வரையில் அவர்களின் கவிதைகளினுTடாகத் தெரிகின்றது. அதனை நீங்களும் கண்டு கொள்வீர்கள்.
 
 
 
 
 
 

இங்கு இடம்பெற்றுள்ள கவிதைகளில் இரண்டு மொழிபெயர்ப்புக் கவிதைகளும் உள்ளடங்கியுள்ளன. 2%) இரண்டுமே பெற்ற தாயையையும் வளர்ப்புத் தாயையும் நோக்கிய பிள்ளைகளின் உணர்வுச் சித்தரிப்பாக அமைந்துள்ளன. ஒட்டுமொத்தமாக எல்லாமே அம்மாவை நோக்கிய பிள்ளைகளின் உணர்வலைகளே.
இத்தொகுப்பில் உள்ளடங்கியுள்ள கவிதைகள் சார்ந்த ஏனையவற்றின் தேவைகருதி கவிதைகள் பற்றிய விபரத்தினையும் கொடுத்துள்ளேன்.
இந்த வகையிலே இக் கவிதைகளை எழுதியிருந்த கவிஞர்களுக்கும் அவற்றை வெளியிட்ட வெளியீட்டாளர்களுக்கும் தொகுப்பாளன் என்கின்ற முறையிலே நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன். இத்தொகுப்பின்போது கவிதைகளைப் படியெடுத்து உதவிய செல்வி ராஜிதா ரவிரதன் அவர்களுக்கும்; தொகுப்பின் அட்டைப்படத்தில் அமைந்துள்ள களிமண் சிற்ப புகைப்படத்தை இத்தொகுப்பிற்கு பயன்படுத்த உதவிய பா. அகிலன் (விரிவுரையாளர், நுண்கலைத் துறை, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்) அவர்களுக்கும் அவர்தாம் எடுத்தாண்ட 'கண்ணுக்குள் வெளி வெளியீட்டாளர்களுக்கும்; தாய் ஒரு பன்முகநோக்கு என்ற வகையில் தமது பார்வையை எழுதி உதவிய கலாநிதி. மா. கருணாநிதி (கல்விப்பீடம், கொழும்பு பல்கலைக்கழகம்) அவர்களுக்கும்; நூலை அழகுற வடிவமைத்து அச்சிட்ட மதுரன் கிறாபிக்ஸ் மகேஸ்வரன் அவர்களுக்கும் தொகுப்பாளன் என்ற வகையில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

Page 7
இத்தொகுப்பில் அமைந்துள்ள கவிதைகளில் சில அதிகமான வாசகர்களுக்கு அரிதாகவே கிடைத்திருக்கும் என்ற காரணத்தினாலும், ஒரு பொருள்பட அமைந்தவை என்ற வகையில் ரசனைக்குரியதாகவும் அமைய வாய்ப்பிருக்கும். அது வித்தியாசமான தேடலுக்கும் இட்டுச் செல்லும் எனவும் நம்புகிறேன். இவ்வாறான ஒரு தொகுப்பினை பொன்னுத்துரை இராசம்மா நினைவாகக் கொண்டு வந்து இலக்கிய உலகுக்கு அளித்த அவர்தம் குடும்பத்தினர் நன்றிக்குரியவர்கள்.
'தினைப்புனம்', சு. குணேஸ்வரன் அல்வாய் தெற்கு, தொகுப்பாளன் அல்வாய்.
 

ஒரு பார்வை
గాలి శిeఒజఫ్రీజGynae
தாயின் இயல்புகளை அளவிட வார்த்தைகள் போதாது. அன்பு, கருணை, அரவணைப்பு ஆகியவற்றின் உறைவிடம் தாய். தானுண்டு தன்னுயிருண்டு எனத் தண்னோடு தன் னை வரையறை செய்யாமல் மற்றவர்களுக்காகத் தன்னைத் தியாகம் செய்பவள். உண்ணாமல், உறங்காமல் விழித்திருந்து தன் வரிசுகளின் உயர்வுக்காகப் பாடுபட்டு உழைப்பவள். உடல், உளம், அறிவு, ஆற்றல் மேம்பாட்டுக்கான வழிகாட்டல்களை உரிமையுடன் வழங்கி உயர்வுக்கான உந்துதல்களுக்கு அடித்தளமிடுபவள். மறுபுறத்திலே வாழ்வியற் சோதனைகளும் அதன் விளைவான வேதனைகளுமே அனுபவங்களாகிவிட்ட இன்றைய காலகட்டத்தில் தாயின் வகிபங்குகள் பல்வேறு பரிமாணங்களைப் பெறுகின்றன.
“தாங்கு மடிகிடத்தி குழந்தையின் தண்முகம் பார்க்கையிலே ஓங்கிய செல்வமெலாம் உலகில் உற்றது போல் மகிழும்” தாயை "அம்மா வெளியே வா அம்மா” என அழைத்து அழகான வானத்தைப் பார்த்து நிலா பற்றி அறிவார்ந்த வினாக்களுக்கு விடைகான முற்படும் தாய்மார்களுடன் தம்மக்களைப் போர்க்களத்துக்கு அனுப்பி வெற்றியை அல்லது வீரச்சாவை எதிர்பார்த்து நிற்கும் தாய்மார்கள், புலம் பெயர்ந்து பிறநாடுகளில் வாழும் தமது பிள்ளைகளையிட்டு இன்பமும் துன்பமும் கலந்த ஏக்கத்துடன் வாழும் தாய்மார்கள் எனப்பலவாறாகத் தாய்மார்களைக் காண்கின்றோம். இவ்வாறு மாறுபட்டுச் செல்லும் வாழ்வியற் கோலங்ளைக் கருப்பொருளாகக் கொண் டு வடிவமைக் கப்பட்ட கவிதைகள் பலவற்றினூடாகத் தாயின் பரிமாணங்களைக் கண்டு கொள்ளலாம்.
காலத்தால் அழியாத கவிதைகளைத் தந்த
GviO

Page 8
மகாகவி பாரதி தாய் பற்றிக் கூறியவை மெய்சிலிர்க்க வைக்கின்றன. “உண்ண உண்ணத் தெவிட்டாதே - அம்மை உயிரெனும் முலையிலே உணர்வெனும் பால் வண்ணமுற வைத்தெனக்கே என்றன் வாயினிற் கொண்டுட்டுமோர் வண்மையுடையாள்"
மனிதர் ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் தாயின் இடத்தினை எவராலும் நிரப்பிவிடமுடியாது. சாதாரண வாழ்விலும் சரி அதிஉயர் வாழ்வாயினும் சரி ஒவ்வொருவருக்கும் அவரவர் தாய் ஓர் இன்பஊற்று, கருணை வெள்ளம், அத்தியந்த பாசமழை என்பதனை இக்கவிதை எடுத்தியம்புகிறது.
நீண்ட இலக்கியப் பாரம்பரியம் கொண்ட தமிழிலக்கிய வரலாற்றிலே தாயப்பற்றிய பதிவுகள் முக்கியமானவை. சங்ககாலத்து புறநானுற்று வீரத்தாயிலிருந்து இருபத்தோராம் நூற்றாண்டில் ஈழத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் தாய் வரையில் அவர்களது தியாகவாழ்வும் வீரவாழ்வும் போற்றுதற்குரியவை.
ஒரு தாயம் வாழ் விண் வழிகாட்டியாக விளங்குகிறாள் என்பதை பின்வரிகள் கூறுகின்றன.
"மகளே. இப்பெரும் திசையெல்லாம் பரந்து கிடக்கிறது மெல்ல எழு. நில் . நேராய் நட. எனத்தாய் கூறுவதாக
குறிப்பிடும் கவிஞர் நான் செல்லும் பாதைகள் அனைத்திலும் அண்னையைக் காண்பதாகக் குறிப்பிடுகிறார். என்செய்வேன் என் அன்னையோ இப்பார் திசையெங்கும் பரந்து கிடக்கிறது அன்பு கொள்ளும் அனைவரிலும் உன்னையே காண விழைகின்றேன் கலக்கமுற்றுச் சில கணங்கள் என்னை மறப்பேன்.
என்று கூறிச்செல்லும் கவிஞர் தனக்கும் தாய்க்குமான உறவு மரணந்தழுவும்வரை மாசுபடாமல் இருக்க வேண்டும் என்று தெளிவுபடுத்துகின்றார்
இன்னொரு கவிஞர் ஒரு தாயின் அயரா உழைப்பினையும் நியாயத்தினையும் பின்வருமாறு பதிவு செய்து கொள்கின்றார்.
Gvi)

உன் தியாகங்கள்
உன் உழைப்புகள்
உன் இழப்புகள்
காலம் நம்மை
மறைத்த போதும் உன்னை
நினைவு கூறச் செய்யும்
உன் உழைப்பு
உன் சந்ததிகளில் வாழும்
தாயே தன் பிள்ளைகளுக்கு உரமூட்டுபவள்.
நெறி பிறழா வாழ்க்கைக்கு வழிகாட்டுபவள். இது போன்ற
தாயர் பலர் இன்று உருவாகி வருகின்றனர். ஆக்குபவள்
தாய் பெற்றுப் பேணி வளர்ப்பவளும் அவளே அன்பும்
கனிவும் மட்டுமன்றி நிறைய உளவலிமையும் அவளிடம்
உணி டு. இனி றைய கால கட்டத்திலே தனி
பிள்ளைகளுக்காக துயரச் சுமைகளையும் சுமந்து
வருகின்றாள். இதனால்தான் என்னவோ கலக்கமுறும்
தாயை ஆறுதல்படுத்தும் கவிதைகளும் இத்தொகுதியில்
காணக்கூடியதாக இருக்கின்றன. அதிலொன்று இங்கு
தரப்படுகிறது.
SILöLDIT!
ஏன் அழுகின்றாய்!
மீண்டும் வராத எனக்காகவா
உன்னைத் தழுவிக்கொண்டு
எனது நினைவுகளோடு விம்முகிறாய்.
நேற்று உயிர்த்த செடியின் துளிரும்
ஒரு முறை சிலிர்த்து நிற்கிறதே
ஏன் இவைகளையும் கலங்க வைக்கிறாய்
என நிலைமையை விளக்கியபின் பின்வருமாறு
நிழற்படுத்துகிறார் அந்தக் கவிஞர்.
9|LDLDT 6TCLRLDL
சுருண்டு கிடக்கும்
பூனைக்கு சோறு வை
உனது கைப்பக்குவத்தில்
கனிந்த உணவை
எனது தோழிக்கும் ஊட்டிவிடு.
எம்மவரோடு கதைபேசு
களித்திரு
போய்ப படலையைத் திறந்துவிடு.

Page 9
எமது பிரதேசங்களில் வாழ்கின்ற தாய்மாருக்கு இவை அவசியமாகத் தெரிகின்றன வல்லவா! புலம்பெயர் வாழ்வு வேரூன்றும் நிலையில் தாய்மாரின் பாசத்திற்கும் பரிவுக்கும் ஏங்கும் உயிர்கள் எத்தனை எத்தனை? இவர் களுக்கு இப் பொழுது தேவை உணவும் உடையுமல்ல. செல்வச் செழிப்புமிகுந்த வாழ்ககையுமல்ல தாய்மாரின் அன்பும் ஆசிர்வாதமும் தான் சென்றவிட மெல்லாம் தமது வாழ்வு சிறக்கவேண்டும் என எதிர்பார்த்துத் தாயிடம் வேண்டுவன ஏராளம் அவற்றில் ஒன்று
“ எந்த வேளையிலும் என்னை இழக்காமலிருக்க என்னை ஆசீர்வதி அம்மா.” இத்தகைய கவிதை வரிகள் நிதர்சனமானவை. தேசம் தொலைத்துத் தேசங்கள் பரந்தவர்கள் தாயின் பிரிவாற்றாமையால் ஏங்குகின்றனர். சுற்றமோ பிராங்பேட்டில் ஒரு சகோதரியோ பிரான்ஸ் நாட்டில் நானோவழி தவறிவந்த அலஸ்கா வந்துவிட்ட ஒட்டகம் போல ஒஸ்லோவில்.
இவ்வாறு தமது அகதி வாழ்வினைத் தாயுடன் இணைத்துக் கூறும் பலரை அன்றாட வாழ்வில் நாம் காண்கிறோம். தாயும் பிள்ளைகளும் பரஸ்பரம் எழுதிய கடிதங்கள் படிக்கும் போது உண்டாகும் மனவேதனைகள் சொல்லிலடங்கா. .கடிதங்களை வாசிக்க ..இருசொட்டுக் கண்ணிர்த் துளிகளும் வீசப்பட்டு நொருங்கிக் கிடந்தன பிறநாடுகளில் வாழும் பிள்ளைகளை நினைந்து ஏக்கமுறும் தாய்மாரின் இன்னொரு கோலமிது.
தாயுடனான பிணைப்புப் பரிக்க முடியாதது எங்கிருந்தாலும் எந்த நிைைலயிலும் தாயின் நினைவுகள் எம்மைப் பின்தொடர்ந்து கொண்டேயிருக்கும். அன்னையின் அன்பு அதிகாலைக் குளிர்போன்றது. அதனை மறக்கவும் மறைக்கவும் முடியாது.
கலாநிதி மா.கருணாநிதி கல்விப்பீடம், கொழும்பு பல்கலைக் கழகம்.
 
 

தாயின் மகிழ்ச்சி
~கவிஞர் அல்வாயூர் மு.செல்லையா
தாங்கும் மடிகிடத்தி குழந்தையின் தண்முகம் பார்க்கையிலே ஓங்கிய செல்வமெல்லாம் மடியினில் உற்றது போல்மகிழ்வாள்.
எண்ணும் மழலைமொழி செவிகளில் ஏறி இனிக்கையிலே பண்ணுங் கசந்துவிடும் சர்க்கரையில் பாலும் புளித்துவிடும்.
மெல்லக் குறுநடையில் அசைவுற்று மேவிடும் போதினிலே செல்வம் வருவதென்றே அணைத்திரு செங்கரம் நீட்டிநிற்பாள்
தீற்று முணவுவகை சிதறித்தன் தேகம் படுகையிலே ஏற்றுஞ் சிவன்மடியில் பக்தரிடும் இன்மலர் போலிருப்பாள்.
ஒக்கலை மீதிருத்திச் சிரசினை உள்ளங்கை யால்தடவி அக்களிப்போடு முகங் கொஞ்சுவது ஆனந்தத் தொல்லையன்றோ.

Page 10
வாரி மயிர்வகுத்தே நகையொடு வண்ண உடை உடுத்திப் பூரித்து முத்தமிடும் போதிலே போய்விடும் துன்பமெல்லாம்.
கையினிற் புத்தகப்பை எடுத்துயர் கல்விக்குச் செல்கையிலே ஐயிரு மாதத்துயர் பறந்தே ஆனந்தம் பொங்கிடுவாள்.
நற்குண மைந்தனென்றே பிறர்சொல்லும் நல்லுரை கேட்கையிலே பெற்றிடு நாளினிலும் உயர்ந்த பேருவ கையடைவாள்.
மங்கையைக் கைப்பிடிக்கும் திருமண வைபவம் பார்க்கையிலே தங்கிய வானுலக ஆனந்தம் சார்ந்ததென் றேமகிழ்வாள்.
கவிஞர் அல்வாயூர் மு.செல்லையா, இரண்டாம் பதிப்பு, 2002, வளர்பிறை - அல்வாய்.
 

தாயுள்ளம்
மகவிஞர் அரியாலையூர் வே. ஐயாத்துரை
ஓசைநயம் உவமானம் உணராத பருவம் ஒப்பனையின் தப்புயர்வை அறியாத பருவம் பேசுமொழி பேதமெதும் தெரியாத பருவம் பேறென்று தாயுள்ளம் பெருமைகொளும் பருவம்
ஆசையெதும் அறியாமல் அழுகின்ற பருவம் ஆதியழ காணவுயர் அகமுற்ற பருவம் தேசுநிறை குழவியெனத் திகழ்கின்ற பருவம் சீரான தாலாட்டுந் தெரியாத பருவம்
அன்னையவள் அன்புநிலை அறியாத பருவம் அவள்சிர ணைப்பிலது அயராத பருவம் தன்னினிமை அறியாத குழந்தைக்குத் தாயோ தாலாட்டுப் பாடுமுயர் தமிழின்ப மென்னே!
கண்ணான கண்ணென்று காதலிசை கனியக் கட்டிக்க ரும்புகற் கண்டென்று சொல்லித் தண்ணாருந் தமிழினாற் சங்கீதஞ் சாரச் சர்க்கரை அமுதென்றும் தாலாட்டுப் புனைவாள்
வேதனோ வேலனோ விசயனோ வென்பாள் விண்ணாளும் இந்திரத் தேவனோ வென்பாள் நாதமார் நந்தகோ பாலனோ வென்பாள் நாடாள வந்தசீர் மன்னனோ வென்பாள்

Page 11
பொன்னான பொன்னெனப் புகழுவா ளன்னை பொழுதே நிலாவெனப் பொழிகுவாள் பண்ணே மன்னே மலர்மணி மாணிக்க மென்பாள் வாசனைத் திரவியமு மாகக் கணிப்பாள்
தன்னுளத் தோங்குகுண சால்புநெறி சாரத் தாலாட்டுப் புரிகின்ற தாயன்புக் கீடாய் என்னதான் வாழ்த்துக்கள் எமக்குக் கிடைக்கும் எல்லோரும் இனிதான தாயன்பைக் கொள்வோம்.
கவிஞர் அரியாலையூர் வே. ஐயாத்துரை, வெள்ளைக் கமலம்,
முதற்பதிப்பு தை 1975, யாழ். இலக்கிய வட்டம்.
 
 

நீ தெய்வம்
கவிஞர் அம்பி
அம்மா நீ தெய்வம் அணையாத தீபம் அது சொல்லி நான் பாடவா - எந்தன் அன்புள்ள மலர் சூடவா இம்மா நிலத்தில்
எனை வாழவைத்த இதயத்தின் குரல் பாடவா - அம்மா இறையென்று துதி பாடவா?
ஈரைந்து மாதம்
எனை நீ சுமந்தாய் பேரின்பம் அதுவே என்றாய் - உன்றன் பெருஞ் செல்வம் நானே என்றாய் நேரந் தெளிந்தே நிதஞ் சேவை செய்தென் நெஞ்சத்தில் கோயில் கொண்டாய் - மன மஞ்சத்தில் உலாநீ வந்தாய்.
பாலூட்டி வளர்த்தாய் பலவின்னல் சகித்தாய் பாசத்தின் உருவாய் நின்றாய் - தமிழ்ப் பண்பூறக் கருவாய் நின்றாய் தாலாட்டி வளர்த்தாய் தமிழுட்டி நிலைத்தாய் சாந்தத்தின் பொருளாய் நின்றாய் - மனு தர்மத்தின் தமிழாய் நின்றாய்.

Page 12
உண்ணாத பொழுதும் உறங்காத இரவும் எந்நாளும் மறவேன் அம்மா - எந்தன் இதயத்தில் அணையாதம்மா கண்காத்த இமையே கருணைத் தேன் கடலே கரந்தந்த அருந்தெய்வமே - வாழ்வு வரந் தந்த பெருந் தெய்வமே.
 
 
 
 

போனேன் இல்லை!
கவிஞர் அம்பி
தாயே தயவே தவமே தலமே தமிழும் நீயும் ஒயா துறவாய் உணர்வாய் உயிராய் உலகில் வாழ்நாள் தேயா எழிலை தேய்த்தேன் உருவில் மகவாய் வந்தேன் மாயாத் துளிரென் றென்னைநீ தினமும் மனதிற் கொண்டாய்!
கருவில் உருவாய் கனவின் நனவாய் கலையின் வடிவாய் குருவாய் குலமே குளிருந் தருணம் குமிழாய்ப் போனேன் பிரிவில் பதியும் பயனும் மங்கிப் பிணிமேல் ஓங்க சொரியும் கண்ணிர் துளியில் ஒளிரும் துணையாய் நின்றேன்!
தேனும் வேம்பாய் தெளியும் தென்றல் தணலாய்த் தந்தை தானும் நீயும் தணலில் புழுவாய்த் தவிக்கும் படியோ போனேன் இல்லை இல்லை என்றும் போனேன் இல்லை ஊனில் உருவில் உளமாங் கோயிலில் உள்ளேன் அன்றோ!

Page 13
விதியா சதியா மதியா எதுவோ விளையாட் டொன்றே அதுவே நியதி அதுவே வாழ்க்கை அடியேன் மார்பில் எதையும் உலகில் நிலையென் றெண்ணின் உறவே துன்பம் நிதியும் நிலமும் நினைவும் நிலவும் நிறையும் மறையும்.
தளிரும் கொடியும் தமிழோ அழியா தவமோ அல்ல தெளியும் நினைவில் தினமும் தமிழே தரும்பே ரின்பம் அழியா நிலையில் அலையாய் கலையாய் அழியாத் தமிழாய் ஒளியாய் உணர்வாய் உயிராய் வாழ்வேன் வாழ்வேன் அம்மா!
கவிஞர் அம்பி, 1994, அம்பி கவிதைகள் சென்னை, மித்ர வெளியீடு
 
 
 
 

போதியோ பொண்ணியம்மா
-நீலாவணன்
பொன்னியம்மா நீயிறந்து போனாய், புதைப்பதற்கும் உன்னிக் கருமங்கள் ஊரார் புரிகின்றார் செல்வக் குடும்பத்தின் சீமாட்டி என்றுலகம் சொல்லும் படியாகச் சுகத்தோடும் வாழ்ந்தவளே, காலத்தின் போக்கில் கலாம்விளைந்த காரணத்தால் கோலம் குலைந்து குளிரில் கிடப்பவளே! சாம் பொழுதில். நீ மிகவும் சாந்தி நிறைந்தவளாய் சூம்பும் கரங்களினைக் கூப்பினையோ கோட்பியெனும் பானம், உனக்குப் பலகால மாய் விருப்பம் ஆனதுவே அம்மா அதையே நினைத்தனையோ!
“ஆறாண்டாய் எங்கள் அரசின் பெருங்கருணைப் பேராறு தந்தபிச்சைக் காசை நிறுத்துவதே எங்கள் பொருள் வளத்தை ஏற்ற வழியென்ற தங்கருத்தை, எம்மூர்த் தலைவர், அரசினர்க்குப் புள்ளிவிபரப் பொழிப்போடு காட்டியதால் தள்ளினார் என்னுடைய தாபரிப்புக் காசினையும்’ என்றாய் உனதுபசி எவ்வளவு என்பதையும் ஒன்றும் உறவு முறைகளுத வாததையும் பாரிசவாதம் படுக்கையிலே போட்டதையும் தூரத்துப் பார்வை தொலைந்ததையும் ஒவ்வொன்றாய்க் காட்டிப் பிறகுமந்தக் காசைத் தரும்படியாய்க் கேட்டு, மிகமன்றாட்டம் கேட்டு “முறைப்பாடு வன்னிய னார்க்கு வரைந்துதா தம்பி’ யென்றாய் என்னவோ பாவம் எழுதி யனுப்பிவைத்தோம்.

Page 14
“எம்பீ யைக் கண்டு எடுபிடியாய் வேலைசெய்தால் சம்மதம் கூட வரலாம்! அதற்குள்ளே என்ன அவசரமோ பொன்னியம்மா’ நான் எழுதி ஒன்பதுவே ஆண்டு! இன்னும் ஓராண்டு காத்திருக்க ஒண்ணாமல் எங்களது ஊராரை ஏய்த்து விட்டுக் கண்மூடிக் கொண்டதென்னே! பொன்னியம்மா!
போம் பொழுதில் என்ன நினைத்தாய் உன் இறுதிச் சுடர் மூச்சில்? பொன்னியம்மா போய் வருக! போதியோ! என்றிரங்கும் ஊரொடு, வானும் உருகி, அழுதரற்றும் மார்கழி மாத மழை
நீலாவணன், 2001, ஒத்திகை, நீலாவணன் கவிதைகள் கொழும்பு நன்னூல் பதிப்பகம்.
 
 
 

வெற்றி காணுவோம் (இக்கவிதையிலிருந்து சில வரிகள்)
~கவிஞர் காரை. செ.சுந்தரம்பிள்ளை
பெண்களை இந்த நாட்டின் கண்களை பெருமை சேர்த்திடும் தாய்க்கு லத்தினைப் புண்ப டுத்துவோர் தேவ ராகிலும் பொசுக்கு வோ மினிப் பொறுத்தி டோம் தமிழ் மண்வ ளர்ந்திடப் பசளை யாக்குவோம் மாபெரும் வரலாறு செய்குவோம்.
தாயடா இவள்! அன்னை சக்தியின் சந்நி தானமீ தெனவ ணங்கினார் தூய தொண்டர்கள் காலில் வீழ்ந்தனர் சூரியன் நடுவான் எழுந்தனன்!
* காரை. செ.சுந்தரம்பிள்ளை; 1993 காவேரி, யாழ்ப்பாணம்.
யாழ். இலக்கிய வட்டம்.

Page 15
மகா வாக்கியம்
சோ.பத்மநாதன்.
3) bLDIT ULD&FTg5)
யாரோடும் சண்டைக்கும் போகமாட்டா சகோதரிகளுக்கிருந்த நாவன்மை கூட
ஏனோ அம்மாவுக்கு இருந்ததில்லை! அவவுக்கு
ஆரும் பகையில்லை 9 IU 16ī) 9|L LLD 6I606\OITLD நல்ல பேர்
அபூர்வமா ஒருநாள் சகோதரியர் இருவர் உரையாடுவது காதில் விழுந்தது (அவர்கள் என்னைக் காணவில்லை) அம்மாவை சிலாவிச் சுட்டுக் கொண்டிருந்தார்கள் இதே பெண்கள்
முதல் நாள்
அம்மாவோடு மணிக்கணக்காக அளவளாவியவர்கள்!
பொறுக்க முடியவில்லை என்னால் அம்மாவைக் கேட்டேன், “உன்னைக் குறை கூறுகினம். அவையோடை என்ன கதை பேச்சு?
 
 
 
 

வழக்கம்போல சுருக்கமாகவே பேசினா அம்மா. “அவை செய்யிறது அவையோடை படிப்பறியாத
உலகமறியாத என் அன்னை அருளிய மகா வாக்கியத்தை
இன்றுவரை
நினைத்து
வியந்து வருகிறேன். 'யாரோடும் முரண்படாமல் எப்படி உறவுகளைப் பேணுகிறாய்? என என் நண்பர்கள் கேட்கும்போது அன்னை அருளிய அம்மகா வாக்கியம் நினைவில் வரும்!
சோ.பத்மநாதன், 2005, நினைவுச் சுவடுகள், திருநெல்வேலி, தூண்டி வெளியீடு.

Page 16
அம்மாவின் மரணம்
-மு.புஸ்பராஜன்.
உறவின் நாருரிந்த புலம் பெயர் வாழ்வில் அத்துயர் எனை அடைகையில் அம்மா புதைந்து வாரங் களாயின.
SDLIDL DMT...
சூழ நின்ற கன்றுகளுக்காய் ஊனை உருக்கி நித்தம் துயர் சுமந்த வாழை, உயிர் பிரிகையிலும் சூழ்ந்திருந்த மக்களிடை இல்லாத மகனை எண்ணி தவித்திருந்த மனம்.
ஒப்பாரிக் குரலோடு ஊர் சுமந்து செல்கையில் பின் செல்லாது சபிக்கப்பட்டவன் கண்முன் சிலுவை முன்னிருந்து நொந்தழுத முகம்.
உலர்ந்த தண்டில் பசுமையூறிப் பூக்கையிலே பூவை முகராது உயிர் பிரிந்து போனாலும் என்றுமே எமக்கு வாய்க்காத வரமொன்று வாய்த்தது. அப்பாவின் கல்லறையுள் அம்மாவைப் புதைத்தனராம்.
 

அம்மாவின் முகங்கள்
- மு.புஸ்பராஜன்
வெண்திரையாய் வீழ்ந்த விடிகாலை அப்பத்திற்கு
மூட்டிய அடுப்பின் வெக்கையிலும் புகையிலும் கண்கள் சிவந்த முகம்
மாலைக் கருக்கலில் மாதா சொரூப முன்னால் மெழுகுதிரிகள் ஒளிமின்ன நெஞ்சுருகி கீழுதடு துடிக்கும் முகம்
ஊர் உறங்கிய போதும் அப்பக் கடைக்காய் மாப்பிசைந்து பதப்படுத்த தூக்கம் வருத்தும் முகம்
ஊர் துறந்து உறவின் வேரிழந்து நீரோடு அள்ளுண்ட சாதனையாய் பெயர்கையில் வாஞ்சை யெல்லாம் கைகளில் தேக்கி முகம் வருடி முத்தங்கள் ஈந்த முகம்.
மு.புஸ்பராஜன், 2004, மீண்டும் வரும் நாட்கள், தமிழியல் & காலச்சுவடு, லண்டண் - சென்னை.

Page 17
நெற்றி மணி (இரண்டு கவிதைகள்)
~சு.வில்வரத்தினம்
1.
SDLIDL DMT விழாக் காலங்களிலும் விரத நாள்களிலும் கோயில்களிலும் அடியழித்துத் தொழுவது ஓர் அழகு
கோயில் வீதிகளை சுற்றிச் சுற்றி நெற்றிப் பிறை மண்ணில் ஒற்றிடத் தொழுது எழுவாள். வியர்வையில் ஒட்டியிருக்கும் மண்துகள்கள்
மின்னும்
புடமிட்ட பொன்னாக பூமிப் பிறையாக,
என் அம்மை,
ஒற்றி யெடுத்த நெற்றிமண் அழகே வழிவழி நினதடி தொழுதவர், உழுதவர், விதைத்தவர், வியர்த்தவர்க் கெல்லாம் நிறைமணி தந்தவளே, உனக்குப் பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு.
 
 

2.
கர்ப்பத்தில் இருக்கும்போதே தன் கவனக் குவிப்பினால் பட்டுப் போல் செதுக்கி செதுக்கி தாயென்னை ஈன்றெடுத்தாள்.
ஈன்றெடுத்த பின்னும் விட்டாளா? “மூக்குவா முழியும்வா” வென எண்ணெயிட்டு
அங்கங்களை கைநேர்த்தி செய்து காலை இளவெயிலில் உலரவிடுவாள் களிமண் சிற்பம் போல
இவ்வாறாக,
என் தாயொரு சிற்பியானாள். அவளின் கைதேர்ந்த செதுக்கலில் நானொரு நடைசிற்பம் ஆனேன். கால நடையில் நானே என் வாழ்வைச் செதுக்கத் தொடங்கினேன்.
வாழ்வைச் செதுக்கும் வலிமை தாயின் பாலூட்டலில் சுரந்தது. வாழ்வின் லயம் அவளின் தாலாட்டைத் தழுவியது.
SidtØst - என் இரத்தோட்டத்தில் இன்னுமுன் பாலூட்ட மூலவளம்; காற்றிலுன் தாலாட்டுச் சங்கீதம்
எண்ணிறந்த காயங்கள்பட்ட எம் தேசத்துக் காற்றில் தாயே உன் தெள்ளிய தாலாட்டை என்னால் தனிபிரித்துக் கேட்க முடிகிறது. என் உணர்வெளிப் பரப்பெங்கும் அதன் உயிரோட்டம் ஒலித்து நடக்கிறது. தாய்மையின் நித்தியத்துவத்தை ஓதியபடி
சு.வில்வரத்தினம் , 2001, உயிர்த்தெழும் காலத்திற்காக, கோயம்புத்தூர், விடியல் பதிப்பகம்.

Page 18
திசைகள்
-கி.பி.அரவிந்தண்
காலைச் சூரியனுக்கு முகம் காட்டி நின்றால் புறமுதுகில் மேற்கிருக்கும்
இடக்கைப் பக்கம் வடக்கு வாடைக்காற்று தழுவும் வலக்கைப் பக்கம் தெற்கு சோழகம் பெயரும்
வாடை சோழகம் கச்சான் கொண்டரில் என்றே திசைகள் உணர்த்தும் காற்றின் பெயர்கள்
அன்றைக்கு அம்மா சொல்லிடும் எளிமையில் திசைகள் துலக்கமாய் இருக்கும் இப்போவெல்லாம் திசைகள் எனக்குத் துலக்கமாயில்லை
பெயர் சொல்லும் படியான காற்றுகளும் எதுவுமில்லை
வீசுவது புயலெனத் தெரியும் புயலுக்குண்டா திசை? அதனிடை நான் இல்லாததால் வெளியில் நின்றபடி திசைகளைத் துலக்கும் ஒரோர் தடவையும்
 
 

முயற்சியில் தோற்கிறேன். அவை தொலைந்திருக்குமோ? ஏன் இந்த சந்தேகம் வடக்கிருந்து புறப்பட்டவன் நான் என் நினைவு சொல்கிறது
தெற்கிருந்து வருகிறாய் நீ குளிர் வலயத்தில் எதிர்கொள்பவர் சொல்கின்றனர்
எங்கிருந்து வந்தேன் எத் திசையில் செல்கிறேன்? என் விந்தணுவில் முளைத்தவையும் குரலெழுப்புகின்றன எத்திசையை முகங்கொள்வது?
எனக்குச் சொல்லித்தர அம்மாவுக்கு இலகாயிருந்தது என் குழந்தைகளுக்குச் சொல்லித்தர எனக்கோ முடியவில்லை
அம்மாவின் எளிமை எனக்கில்லை ஒரேயொரு தடவை எழுவான் திசையை யாரேனும் சுட்டுவீராயின் சுடரும் விடியல் சூரியனுக்கு முகம் காட்டி நிற்பேன் திசைகளைக் கண்டு கொள்வேன் குழந்தைகளுக்கு அறிவிப்பேன்.
கி.பி.அரவிந்தண் 1999, கனவின் மீதி, சென்னை, பொண்ணி பதிப்பகம்.

Page 19
ஒரு பிஞ்சின் பிரகடனம் (ஒரு தலைப்பு இரு கவிதைகள்)
-6.02D 856i
எனக்கு ஊட்டிப் பார்க்க உனக்கு ஆசைதான் அம்மா!
வறுமை ஈட்டி
தாக்கிய எலும்புக் கூடான உன் உடலில்
ஓடும் என்னை தீட்டிப் பார்த்த குருதியையா
நான் உறிஞ்சிப் பார்ப்பது? (36)160öLstlb SilbLDst!

அம்மா! நான் அங்கங்கள் விற்கும் தங்கத் தீவிலே சிரிக்கும் “டொலர்’
எத்தியோப்பியாவில் உயிர் மட்டுமே ஊசலாடும் எலும்புக் குச்சி!
5T6061Tuu சிவகாசியின் சின்ன இயந்திரம்!
கொழுந்துப் பூமியிலே பிள்ளைக் கமராவின் அநாதை ஆத்மா!
உன் மடி மட்டுமே என் அடையாள அட்டை நீ ஊட்டும் UT6ö LDL(68up என் உயிரின் சட்டை!
மேமண் கவி; 1993, குண்றின் குரல் - இதழ் 3, கண்டி.

Page 20
அம்மா அழாதே (இக்கவிதையில் இருந்து சில வரிகள்)
ஆசேரண்
அம்மா அழாதே நமது துயரைச் சுமக்க மலைகள் இல்லை. உனது கண்ணிர் கரையவும் ஆறுகள் இல்லை.
சேரன்; 2000, நீ இப்பொழுது இறங்கும் ஆறு, நாகர்கோவில், காலச்சுவடு பதிப்பகம்.
 
 

அம்மாவுக்கு
-செழியன்
வாழ்க்கை நினைத்ததைப் போல் அழகாக இல்லை
வானவில்லின் நிறங்களைப் போல் கைகளுக்குள் அகப்படாமல் சிறகசைத்துப் பறக்கும் வண்ணத்துப் பூச்சிகளைப் போல் வாழ்க்கையென்றும் அழகாக இல்லை.
அருவருப்பான மண் புழுவைப் போல் சொத சொத வென நாட்கள் நகர்கின்றது.
அடுப்படியில் படுத்துறங்கிய
്യങ്ങങ്ങ് சோம்பல் முறித் தெழுவதைப் போல் சமயத்தில் வருகின்ற உற்சாகம் நகரத்தின் சந்தடியில் அடிபட்டுப் போகின்றது.
முகவரியிட்ட கடிதங்களை தபால் பெட்டியில் சேர்த்து விட்டு காத்திருக்கும் நம்பிக்கைகள் கூட இல்லை

Page 21
உலகப் புகழ்பெற்ற நயாகரா வீழ்ச்சியைப் பார்ப்பதற்கும் கடிதங்களை எழுத மட்டுமல்ல சிறு தலையசைப்புக்கும் அவகாசம் இல்லை.
நட்பு முத்திரைகள் சேர்க்கவும்
முத்தமிடவும்தான்
உறவுகளை இழந்து
D60 b.
தவிப்பு மட்டும் எஞ்சியிருக்கிறது.
சொல்வதற்கு என்ன இருக்கின்றது 9th DFT பூக்களைப் பார்க்கின்ற போதும் புன்சிரிக்க முடிவதில்லை.
செழியன்; 2002 ஆணற்ற தனித்த தீவுகளில் நிலவு, ஈரமற்றமழை, கொழும்பு, டூண்றாவது மனிதன் மதிப்பகம்.
 

அம்மாவுக்கு.
-இரா.ஞானசம்பந்தன்
நல்ல மகவொன்றை நானிலத்தில் நீ பெறவே வல்ல இறைவனை வாழ்த்தி நீ பாடியே தவங்கள் பல செய்து தவக்குழந்தை வேண்டுமென நோன்புகள் தானிருந்து நோயிலே தானுழன்று கோயில் குளமேறி குலக்கொடியைத் தாருமென்று தாயின் பெருமையெல்லாம் தன்னகத்தே கொண்டவளாய் சேயின் வரவையெண்ணித் தினந்தோறும் நாளையெண்ணி பத்துத் திங்களும் பத்தியங்கள் தானிருந்து மடிசுமந்து சித்தம் கலங்கி சிற்றிடையில் நோவெடுத்து வேதனையின் விளிம்புவரை சென்று ஓர் நாளில் சாதனையாய் எண்ணிச் சற்புத்திரனைப் பெற்றெடுத்து உச்சி முகர்ந்து உள்ளமது குளிர்ச்சியுற்று கட்டியனைத்துக் கற்கண்டே தேனேயென்று தட்டியெடுத்த தங்கமே தளிரே வாவென்று மார்பிலும் தோளிலும் மகனெனைச் சீராட்டித்

Page 22
தாலாட்டுப் பாடித் தண்ணிலவு தான்காட்டி உண்ண உணவளித்து உதிரமதைப் பாலாயூட்டி பெற்று வளர்த்துப் பெருமைகளைத் தந்தவளே கண் விழித்துக் காத்து கடமைகளைச் செய்தவளே கற்ற வித்தைகளையும் காவியப் பாட்டுகளையும் இதிகாச புராணங்களையும்
இளமையிலே எந்தனுக்கு கற்றுத் தந்தவளே. உனைப் பிரிந்து உற்றாரைப் பிரிந்து பறந்ததே தூரதேசம் இந்தப் பறவை! மறந்ததா தாய்த்தேசம்? மயக்கத்தில் வாடுதே! பசுவினைப் பிரிந்த கன்றது பாதை தெரியாமல் பரிதவிப்பதைப் போல் சிசுவினைப் பிரிந்த தாயவள் சிந்தை கலங்கியதைப் போல் உருண்டோடிய நாளெல்லாம் உன் நினைவே உள்ளமதில் வெருண்டோடிய வெகுளிமான் வேடன் வலையில் சிக்கியதுபோல் வெளிநாட்டிலே கண்ணிழந்த பறவையது கானகத்தில் தவிப்பதுபோல் உனைப் பிரிந்து நாளும் உன்நினைவில் மூழ்குதே ஆண்டுபல வோடியும் அன்னையுன்னைக் காண வரவில்லையது மீண்டும் உனைப்பார்க்கும் நாளையெண்ணி மேலை நாட்டில் வாழ்கிறது!
இரா. ஞானசம்பந்தண் 2002, சம்பந்தண் கவிதைகள், கொழும்பு, உமாபதிப்பகம்.
 

தலைப்பில்லாத கவிதை
தலைப்பில்லாத கவிதை
- முல்லையூரான்
என் அம்மா பழையவள்தான் ஆனால் அவளின் முகத்தில் காலம் வரையும் முகச்சுருக்கங்கள் எனக்குப் புதியவை.
முல்லையூரான்; 1992, நிர்வாண விழிகள், டென்மார்க், குலி வண்ணிகேசண்.

Page 23
ஏக்கம்
-ராஜாத்தி
கோரப் பணிக்குளிரில் உதடுகள் வெடித்து உதிரம் சொட்ட. உறக்கமிழந்த அந்த இரவில் ஸ்ரேலிங் பவுண்களை எண்ணுகிற போது உனது நினைவுகள் என்னை ஓலமிட்டு அழவைக்கும்.
இன்னும் எனக்கு ஞாபகமிருக்கு அப்போ எனக்கு பன்னிரண்டு வயதிருக்கும் நம் வீட்டு முன்றலிலே நான் தடுக்கி விழுந்து என் உதட்டின் மெல்லியதான கீறலுக்கே நீ ஓவென்று அழுதாயே இங்கே எனக்காய் அழுவதற்கு யாரிருக்கார் இந்த ஐரோப்பிய நாட்டில் அகதியாய்.
அனாதையாய். வெந்து போகிறது மனது.
எப்போது என் நாட்டில்
எப்போது என் வீட்டில்
எப்போது உன் மடியில்.
ராஜாத்தி, 2001 மார்ச்-ஏப்ரல், உயிர்நிழல்.
 

தாய்க்கு
~ஆங்கிலமுலம்:- வலன்றே மலங்கதானா
தமிழில்:- சோ.பத்மநாதன்
நான் உன் கைகளுக்குள் வந்தேன் நீ என்னைப் பெற்ற அந்தப் பயங்கர வேளை எங்கே என்னைக் கடவுள் எடுத்துவிடுவாரோ என்று அஞ்சினாய்.
பிரசவம் சுகமாக நடைபெற வேண்டுமே என எல்லோரும் அமைதியாகக் காத்திருந்தனர் எல்லோரும் தம் கைகளைக் கழுவினர் வானகத்துத் தேவனை வரவேற்க அச்சத்தால் அசையாதிருந்தனர் பெண்கள் நீ என்னைப் பொத்தி வைத்திருந்த இடத்திலிருந்து நான் வெளிவந்த கையோடு முதல் மூச்சை நான் இழுத்தபோது நீ மகிழ்ச்சியால் பூரித்துப் போனாய்.
என்னை முதலில் முத்தமிட்டவள் பாட்டிதான் என்னைப் “பாதுகாப்பான இடத்துக்கு
-கொண்டு போனாள் என் அறைக்குள் வர எல்லோருக்கும் தடை அவர்களின் உடல் மணக்குமாம் நான் முழுக்க முழுக்க தூயவனாம் மெல்லிய மூச்சு இழையோட துணிகளால் சுற்றப்பட்டு நான் :

Page 24
ஈ மொய்க்காமல்
நுளம்பு கடிக்காமல் என்னையே பார்த்தபடி பாட்டி ஒரு பைத்தியக்காரிபோல: கடவுளும் என்னைப் பார்த்துக்கொண்டார் அவர் வயதான பாட்டியின் நண்பர்:
சோ.பத்மநாதன்; 2001, ஆபிரிக்கக் கவிதை, இணுவில், இணுவில் கலை இலக்கிய வட்டம்.
 

தயானெ எனது செவிலி
~அய் ஜிங் தமிழில் :-அ. யேசுராசா தயானெ, எனது செவிலி பிறந்த ஊரின் பெயரையே சூடினாள்: தயானெ, எனது செவிலி குழந்தைமணம் புரிந்தாள்.
நிலப் பிரபுவின் மகன்நான்.
ஆனால்,
தயானெயின் பாலில் வளர்ந்தநான் அவளது மகனுங் கூட
என்னை வளர்ப்பதால்
தயானெ தன் குடும்பத்திற்கு உணவூட்டினாள். ஓ! தயானெ, எனது செவிலி உனது மார்பின் பாலினால் நான் வளர்ந்தேன்.
தயானெ,
இன்று பனிமழை பெய்கிறது நான், உன்னை நினைக்கிறேன்; புல்மூடிய உனது புதைகுழி பனிமழையில். பூட்டிய உனது குடிசையின் தாழ்வாரம் உலர்ந்த களைகள் படர்ந்தபடி, உனது சிறுதோட்டம் ஈட்டில், அதன் வாசலின் முன்னால் உள்ள கல்வாங்கு பாசி படர்ந்து பச்சையாய் உள்ளது. ஓ! தயானெ,
இன்று பனிமழை பெய்கிறது நான். உன்னை நினைக்கிறேன்

Page 25
உனது புஜங்களில் என்னை உன் நெஞ்சோடு அணைத்தாய், வலுவான உன் கரங்கள்
என்னை வருடின. அடுப்பில் நெருப்பைநீ மூட்டிய பிறகு, உனது பணித்துறை ஆடையின் சாம்பலைத் தட்டிய பிறகு சோற்றுப் பருக்கையைப் பதம் பார்த்தபிறகு ஒருகிண்ணம் கறுப்பு அவரையை கறுத்த மேசைமேல் வைத்த பிறகு மலை முட்களால் கிழிந்த உனது புதல்வர்களின் சட்டைகளைத் தைத்த பிறகு வெட்டுக்கத்தியால் காயமடைந்த உன் இளையமகனின் கரத்தில் துணிகட்டிய பிறகு, உனது குழந்தைகளின் சட்டைப் பேனை நசித்த பிறகு, நாளின் முதல்முட்டையைச் சேர்த்த பிறகு, உனது புஜங்களில் என்னை எடுத்து நெஞ்சோடு அணைத்தாய், வலுவான உன் கரங்கள்
என்னை வருடின.
நிலப்பிரபுவின் மகனாய் நான் இருந்தேன், உனது பாலின் கடைசித் துளியையும் குடித்தேன்.
பெற்றோரால் திரும்ப நான் வீட்டிற்கு எடுத்துச் செல்லப்பட்ட பொழுது தயானெ,
நீயேன் அழுதாய்? பெற்றோரின் வீட்டில் நான் புதிய விருந்தாளியானேன்! மினுக்கிய சிவப்புத் தளபாடங்களை, பெற்றோரின் கட்டில் மீதிருந்த பொன்முலாமிட்ட வடிவங்களை நான் தொட்டேன்.
வாயிலின் மேலுள்ள ‘குடும்ப மகிழ்ச்சி’
 

என்ற சொற்களில் கண் மேய்ந்தேன்; அவற்றை என்னால் வாசிக்க முடியவில்லை. எனது புதிய பட்டுடைகளையும் முத்துத் தெறிகளையும் தடவினேன், எனக்குத் தெரியாத சிறியதங்கையை அம்மாவின் கரங்களில் கண்டேன். தணல்தட்டினால் உஷ்ணமாக்கப்பட்ட கட்டிலில் வர்ண முக்காலியில் அமர்ந்தேன், மும்முறை தீட்டிய நல்ல வெள்ளையரிசிச் சோற்றை உண்டேன், ஆனால் சொகுசிலும் நிறைவற்றே உணர்ந்தேன் - எனது பெற்றோரின் வீட்டில்நான், புதிய விருந்தாளியானேன்.
தனது பால்முழுதும் வற்றியபிறகு, வாழவதறகாய என்னைச் சுமந்தஅக் கரங்களால் தயானெ, உழைக்கத் தொடங்கினாள்; புன்னகையோடு எம் உடைகளைக் கழுவினாள், கிராமக்குளத்தின் குளிர்ந்த நீரில் புன்னகையோடு மரக் கறிகளைக் கழுவினாள், குளிரில் முறுகலான சீமைச் சிவப்பு முள்ளங்கிகளைப் புன்னகையோடு துண்டுகளாக்கினாள்; புன்னகையோடு, புளித்த தானியங்களைப் பன்றிகளுக்காய் அவள் கலந்தாள், இறைச்சி கொதிக்கும் பாத்திரத்தி னடியில் புன்னகையோடு நெருப்பினை விசிறினாள், அவரைகளையும் கோதுமையினையும் வெயிலுக்காய்ச் சதுக்கத்திற்கு, தூற்றுக்கூடையில் சுமந்து சென்றாள் - புன்னகையோடு,
வாழ்வதற்காய், தனது பால்முழுதும் வற்றியபிறகு

Page 26
என்னைச் சுமந்தஅக் கரங்களால் தயானெ, உழைக்கத் தொடங்கினாள்; தயானெ இந்த வளர்ப்பு மகனை
நேசித்தாள்;
தனது பாலையும் ஊட்டினாள், புதுவருட விழாவின் போது வெல்லப் பொங்கலை அவனுக்காய் வெட்டினாள். அடிக்கடி அவள்தன் கிராமத்து வீட்டிற்குச் சென்று திரும்புகையில், "அம்மா’ வென்றழைத்து அவன் ஓடி வருவான் அவன் கிறுக்கிய சித்திரத்தை அடுப்பிற்கு நேரே அவள் ஒட்டியிருந்தாள் வளர்ப்புக் குழந்தைபற்றி
அயலாரிடம்
தயானெ, எவ்வாறு புகழ்ந்தாள்! ஒருதடவை அவள் கனவொன்று கண்டாள், யாருக்குமே அதைச் சொல்லமுடியவில்லை கனவில் அவள் தனது குழந்தையின் திருமணத்தைக் கொண்டாடச் சென்றாள்
ஒளிவிடும் மண்டபத்தில் நிறப்பட்டால் அலங்கரிக்கப்பட்டு அவள் அமர்ந்திருந்தாள், அழகிய இளம் மணப்பெண் “மாமி’ யென அன்போடு அவளை அழைத்தாள். எவ்வளவு அன்போடு இக்குழந்தையை நேசித்தாள், 'r தனது பாலையும் ஊட்டினாள்!
கனவிலிருந்து மீளுமுன் தயானெ இறந்தாள். அவளின் மரணவேளை அவளது குழந்தை அருகில் இருக்கவில்லை அடித்துத் துன்புறுத்திய கணவன் அவள் இறந்த போது கண்ணி விட்டான், ஐந்து புதல்வரும் சேர்ந்து அழுதனர்; இறக்கும் வேளையும் அவள்
G4)

வளர்புக் குழந்தையின் பெயரை முணுமுணுத்தாள். தயானெ இறந்தாள்;
அவளது மரணவேளை அவளது குழந்தை அருகில் இருக்கவில்லை. தயானெ பிரிந்து சென்றாள்,
கண்களில்,
கண்ணிர்த் துளிகளுடன் நாற்பதாண்டுகள் பாரமாய் அழுத்திய ஆண்கள் உலகின் இழிவு படுத்தல்களோடும் அடிமையின் எண்ணற்ற துயர்களோடும் நான்குடொலர்ச் சவப் பெட்டியோடும் சில கட்டு வைக்கோலோடும், தன் சடலம்புதைக்க சிலஅடி மண்ணோடும், எரிந்த கடதாசிக்காசின் கைபிடிச் சாம்பலோடும் தயானெ பிரிந்து சென்றாள்
கண்களில்
கண்ணிர்த்துளிகளுடன்.
ஆனால் தயானெ அறியாத விஷயங்களும் இருந்தன; அவளது குடிகாரக்கணவன் இறந்தான் மூத்த மகன் கொள்ளைக் காரனானான் யுத்தநெருப்பில் இரண்டாம் மகன் இறந்தான் மூன்றாவது நான்காவது ஐந்தாவது புதல்வர் எஜமான்களதும் நிலப்பிரபுக்களதும் வெறுப்புடன் வாழ்ந்தனர்.
நான் -
இவ்வுலகின் நீதியின்மையைச் சபித்து எழுதுகிறேன். நீண்ட அலைதலின் பிறகு என் கிராமத்திற்குத் திரும்பிய பொழுது வயல்களிலும் மலைகளிலும் என் சோதரரைச் சந்தித்தேன்; முந்திய ஆண்டுகளைக் காட்டிலும்

Page 27
ஒருவருக்கொருவர் நாங்கள் நெருங்கினோம் அமைதியாய்
உறங்கும் தயானெ நீ அறியாதவை இவைதான்
தயானெ நீ முலையூட்டிய உனது குழந்தை இன்று சிறையில்; உனக்கு அர்ப்பணிக்கப்பட்ட கவிதையை, அவன் எழுதுகிறான் மஞ்சள் மண்ணின் அடியிலுள்ள உனது ஆவி உருவிற்கு, என்னைச்சுமந்த அந்த நீட்டிய கரங்களுக்கு என்னை முத்தமிட்ட உதடுகளிற்கு நேசம் நிறைந்த உன் கறுப்பு முகத்திற்கு எனக்கு வளமூட்டிய உனது மார்பிற்கு உனது புதல்வர்க்கு - எனது சோதரற்கு, பூமியின் மீதுள்ள எல்லா வளர்ப்புத் தாயாருக்கு, அவர்தம் புதல்வர்க்கு, எனது தயானெ போன்ற எல்லோர்க்கும் சொந்த மகன்போல் என்னை நேசித்த என் தயானெக்கும்.
தயானெ,
நான் உன்னுடைய மகன் உனதுமார்பு எனக்கு உணவூட்டியது உன்னைநான் மிக மதிக்கிறேன்; உன்னை நேசிக்கிறேன்.
: அ.யேசுராசா; 2002, பனிமழை மொழிபெயர்ப்புக் கவிதைகள்,
யாழ்ப்பாணம், அலை வெளியீடு
 

சிறையிலிருந்து எழுதும் கடிதம்
தி% -எம்.ஏ. நுஃமான்
SDLIDL DMT ! நண்பர்கள் என்னைத் தேடி வந்து கதவிலே தட்டும்போதெல்லாம் நீ வெம்பிக் கண்ணிர் மல்குவதை எண்ணி நான் வேதனைப்படுகிறேன்.
ஆனால் வாழ்க்கையின் சிறப்பு என் சிறையிலே பிறக்கிறதென்று நான் நம்புகிறேன் அம்மா என்னை இறுதியில் சந்திக்க வருவது ஒரு குருட்டு வெளவாலாய் இருக்காதென்று நான் நம்புகிறேன். அது பகலாய்த்தான் இருக்கும் அது பகலாய்த்தான் இருக்கும்.
一P亨仔 பாலஸ்தீனக் கவிதையிலிருந்து சமீஹற் அல் காசிம் ரிட%9-எம்.ஏ. நுஃமான் பாலஸ்தீனக் கவிதைகள்; 2000ஆத்தனம் அடையாளம் வெளியீடு
アゾジアーダー。

Page 28
._ހޝިt0
--gordaibaroar! -9-Sailbaoar!
-மாரதிதாசன்
அம்மா உன்றன் கைவளையாய் ஆகமாட்டேனா? அலுங்கி குலுங்கி நடக்கையிலே LullLDss Gl 60Iss?
செம்மாதுளை சிரிப்பதுபோல் சிரித்தெனைப் பார்ப்பாய். செல்வமகனே எனறெனைநீ மகிழ்வுடன் சேர்ப்பாய்!
அம்மா உன்றன் காதணியாய் ஆகமாட்டேனா? அசைந்தசைந்து கதைகளினைச் Garreo6) DIT' (L60s?
சும்மா இரு என்றெனை நீ சொல்லிடு வாயா? துயில்கையிலும் கனவுலகில் சொல்லச்சொல் வாயா
அம்மா உன்றன் நெற்றிப்பொட்டாய் ஆகமாட் டேனா? அழ கொளியாய் நெற்றிவானில் மினுங்க மாட்டேனா?
இம்மா நிலத்தில் என்மகனே குங்குமம் என்பாய் எழிற்கண்ணாடி பார்த்துப் பார்த்து இருத்தினை அன்பாய்!
பாரதிதாசண்: 1978, ஒரு தாயின் உள்ளம் மகிழ்கிறது, பூம்புகார் வெளியீடு, செண்ணை.
 


Page 29
போக்குவது புண்ணியம்
 

i măria - elani