கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: அறிவுக்களஞ்சியம்: புவனேந்திரன் ஈழநாதன் (நினைவு மலர்)

Page 1


Page 2


Page 3


Page 4

எமது இதயதெய்வமாய் இலக்கணம் வகுத்து இன்புறச் செய்து அன்பினாலும் அதியுயர் உணர்வினாலும் வையத்துள் வாழ்வாங்கு வாழ வழி சமைத்து அறநெறிகரத்து அதை எமக்கூட்டி இல்லறமே நல்லறமென ஜர்மோற்ற U SANGOLDugust sogg காலனின் கொடுங்கயிற்றின் கட்டுண்டு கனம் பொழுதில் கரைந்திட்ட - எங்கள் கண்ணான உறவே உற்நினைவு சுமந்த மலரை ஆசையெனும் நெய்கலந்து மாசமெனும் தேனூற்றி இறைவனின் திருவழகளில் சாற்றி நாறெழுதும் காவியத்திலுற்றிம்மோற்றி இம்மலர்ம் மாதங்களில் இம் மலரினை கண்ணீரால் கழுவி தொழுது சமர்ப்பிக்கின்றோம்
ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி!

Page 5

தோழிலதிபர்
憑

Page 6

முழுமுதற் பொருளே முத்தமிழ்ச் சுடரே மோனமே வேத நாயகனே தொழுதிடும் அடியார் துயரெல்லாம் தீர்க்கும் தூயனே ஜோதி யானவனே மழுவினைக் கரத்திலேந்திய பெருமான் மைந்தனே வாரண முகனே பழுதறப் பணிந்தேன் கடைக்கண்ணால் என்னை பார்த்தருள் செய் விநாயகனே.
அறிவுக்களஞ்சியம் 1

Page 7
அமரர் ஈழநாதன் அவர்களின் சுவடுகள்.
“வையகத்துள் வாழ்வாங்கு வாழ்பவர் வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படும்"
ஈழவளநாட்டினி வடக்கே அழகிய தீபகற்பமான யாழ்ப்பாணத்தின் உடுப்பிட்டி என்னும் கிராமத்தில் சிவசம்புப் புலவர் போன்ற ஆன்றோர்கள் அவதரித்த தேவனிகுறிச்சி என்னும் சிற்றூர் உணடு. இங்கே வினைதீர்த்து கேட்பதைக் கொடுக்கும் கற்பகப் பிள்ளையார் எழுந்தருளியுள்ளார். இவர் அருளால் புவனேந்திரன் தனலட்சுமி தம்பதிகள் இல்லற பந்தத்தில் இணைந்து இன்புற்று வாழ்ந்தார்கள்.
இவர்கள் நீண்டகாலமாக பிள்ளைச் செல்வம் இல்லாது துயருற்று தெல்லிநகர் துர்க்கை அம்மனை நோக்கி தவமிருந்து கேதார கெளரி விரதம் நோற்றதனி பயனாக 1981ம் ஆண்டு ஆணித் திங்கள் 20ந் திகதி ஒர் அழகிய ஆண்மகனை பெற்றெடுத்தனர். அம் மகவுக்கு "ஈழநாதனி" என்ற பெயர் சூட்டி இன்புற்றனர்.
31ம் நாள் தாய்மாமனாகிய திரு.நாகலிங்கம் மகேந்திரனி அவர்கள் தொட்டிலரில் இட்டு ஆசீர்வதித்தார். ஊரவர்களினாலும் உறவினர்களாலும் அனிபாக இளங்கோ என்று அழைக்கப்பட்டு அதுவே நிரந்தரமாகி நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்துவரும் வேளையில் அவரது இரண்டாவது வயதில் அவருக்கு விளையாட்டுத் துணையாக தங்கையாக துர்க்கா என அழைக்கப்படும் புவர்ணலதா வந்துதித்தார். இவரது தங்கையோடு விளையாடி மகிழந்திருக்கும் வேளையில் அவருக்கு ஏடுதொடக்கி வித்தியாரம்பம் செய்ய வேண்டிய வேளை வந்தது. துர்க்கை அம்மன ஆலயத்தில் "சிவத்தமிழ்ச்செல்வி தங்கம்மா அப்பாக்குட்டி அவர்களினால் கரம் பிடித்து அகரம் எழுதிவைக்கப்பட்டு பள்ளி செல்ல தன்னை தயார்ப்படுத்தினார். ஆரம்பக் கல்வி அறிவினை ஆசிரியை செல்வியிடம் கற்றார். அவ்வேளையினி அவரின் நான்காவது வயதில் தேனிமொழி, இளம்பரிதி என இரட்டையர்களாக தங்கையும் தம்பியும் ஒரே நேரத்தில் வந்துதிக்க இரட்டிப்பு மகிழ்ச்சியடைந்தார்.
அவர் பள்ளிப்பருவத்தை அடைந்ததும் யாழ் - உடுப்பிட்டி அமெரிக்கனி மிஷன் கல்லூரியில் தந்தையாரால் 1986ம் ஆண்டு சேர்க்கப்பட்டார். அங்கே ஆரம்ப வகுப்பில் திருமதி. சிவபாலதாஸ் என்னும் பாசமிகு ஆசிரியை கிடைக்கப் பெற்றார். தந்தையின் ஊக்குவிப்பின் பயனாக கல்வியில் அதிசிறந்த மாணவனாக விளங்கினார்.
அறிவுக்களஞ்சியம் 2

சிறுவயதிலேயே கடவுள் மீது அதிக ஈடுபாடு கொண்டதால் தனது ஏழாவது வயதில் சமயதீட்சைபெறறு மற்றவர்கள் ஏதாவது விளக்கம் கேட்டால் சிறுவயதிலேயே அதைத் தீர்த்து வைக்கும் அளவிற்கு அறிவாற்றல் உடையவரானார்.
தனது பத்தாவது வயதில் மகேந்திரன் மாமாவின் வழிகாட்டலில் பள்ளையார் காப்பு, புராணம், திருவாதவூரடிகள் புராணம், கந்த ஷஷ்டி கவசம் என்பன படிக்கத் தொடங்கினார். காலப்போக்கில் தனி தம்பி இளம்பரிதியையும் புராணம் கூறுதல் ஏனைய கிரிகைகளிலும் இணைத்து சிங்கப்பூர் செல்லும் காலம் வரை அத் தொண்டை கற்பக விநாயகர் ஆலயத்தில் திறம்பட செய்து வந்தார்.
5ம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் அதிகூடிய புள்ளிகளைப்பெற்று சிறந்த மாணவராக விளங்கினார். பாடசாலையால் நடாத்தப்படும் தமிழ் பேச்சுப் போட்டி, கவிதை, கட்டுரை, நாடகம், ஆங்கிலப் போட்டி மற்றும் பாடசாலைகளுக்கிடையிலான போட்டிகளிலும் பங்குபற்றி தனக்கு வேறொருவர் நிகரில்லை என்று இருந்து வந்தார். உதயன் பத்திரிகை நடாத்தும் கணித விஞ்ஞானப் போட்டியில் பங்கு பற்றி முதலிடங்களை தட்டிக் கொண்டார்.
ம்ே வகுப்பு படிக்கும் காலத்தில் தமிழீழ கல்வி கழகத்தினால் நடாத்தப்பட்ட இளநிலை தேர்வில் வடமாகாணத்தில் சிறந்த மாணவனாக திகழ்ந்தார். அதிலும் தமிழ் மொழியில் 98 புள்ளிகளைப் பெற்றமைக்காக உரும்பிராயில் வாத்திய அணிவகுப்புடன் ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டு மதிப்பளிக்கப்பட்டு பதக்கம் சூட்டப்பட்டார்.
ஒருமுறை ஆசிரியர் தினத்தில் பிரதமவிருந்தினராக லண்டனில் இருந்து வருகை தந்த திரு. தம்பிராசா வசந்தகுமார் என்பவரால் எந்தவித ஆயத்தமும் கொடுக்காது ஆசிரியர் தினத்தைப் பற்றி உரையாற்றப் பணிக்கப்பட்டார். இவர் “ஏணியும் தோணியும்" என்ற தலைப்பரில் ஆற்றிய உரையை பிரதமவிருந்தினர் கேட்டு ஆச்சரியப்பட்டார். கல்வியில் ஈழநாதனோடு எவராலும் போட்டி போட முடியாது என்ற உச்ச நிலையை அடைந்தார்.
ஆசிரியர்களுடனும் சக மாணவர்களுடனும் அனிபாகவும் பண்பாகவும் இருந்ததாலும் பாடசாலை வளர்ச்சியில் அதிக ஆர்வம் கொண்டதாலும் பாடசாலையினால் தலைமை மாணவன் என்ற சின்னம் சூட்டிக் கெளரவிக்கப்பட்டார். பாடசாலைக் காலத்தில் நண்பர்களால் ஈழி என்று அன்பொழுக அழைக்கப்பட்டார். சாரணிய
அறிவுக்களஞ்சியம் ஐ

Page 8
இயக்கத்தில் சேர்ந்து ஊரவர்கள், அயலவர்கள் எல்லோரையும் தனி புன்முறுவலால் கவர்ந்து சேவை செய்தார்.
தான் கற்ற கல்வியை தன் தம்பிக்கும் தங்கைமாருககும் அனிபோடும் கனிவுடனும் சொல்லித் தருவதில் சிறந்த ஆசானாக திகழ்ந்து அவர்களின் கல்வி அறிவு சிறக்க வழி கோலினார். சிறு வயதிலிருந்தே பல கதைகளை சுவைபடச் சொல்லி தம்பி தங்கைமாரை எப்போதும் தனி அருகில் வைத்திருப்பார்.
இப்படி சகல துறைகளிலும் இவர் மேம்பட்டு வரும் போது தந்தையார நோயுற்று படுத்த படுக்கையானார். இவரது கல்வியும் சற்று தளர்ந்து மருத்துவத்துறை கற்க வேண்டும் என்ற ஆசை நிராசையானது. இவரின் கல்வி சரியும் நிலையை அறிந்து இவரின் பெரியம்மாவின் மகளான நந்தா எனப்படும் நந்திமலர் வெளிநாட்டிலிருந்து உதவி செய்து கொழும்புக்கு அழைத்து படிக்க வைத்தார். மீண்டும அவர் கல்வியில் தழைத்து சிங்கப்பூர் அரசினால் நடாத்தப்பட்ட புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்து உயர்கல்வி கற்பதற்கு தாய்நாட்டைவிட்டு சிங்கப்பூர் பயணமானார். உயிரியல் விஞ்ஞானம் கற்றாலும் கணிதத்திலும் தான் சளைத்தவர் இல்லை என்பதை காட்டி பொறியியலாளர் ஆனார்.
2003ம் ஆண்டு காலத்தில் எழுத்துத்துறையிலும் அகலக் கால்பதித்து பல வலைப்பதிவுகளை நிறுவி இலக்கியம், தமிழ்ச்சமூகம், திரைத்துறை, அறிவியல், உலகநடப்பு, அரசியல் என பல தரப்பட்ட ஆக்கங்களை எழுதித் தள்ளி வலையுலகின் முடிசூடா மன்னனாகத் திகழ்ந்தார். சமவேளையில் யாழ் கருத்துக்களம் 2இல் ஈழவன் எனனும் பெயரில் சீரிய கருத்துக்களையும் பதிந்து வந்தார். எழுத்துத்துறையில் தான் வளர்ந்து வந்த சமவேளையில் எழுதும் ஏனைய எழுத்தாளர்களையும் தட்டிக்கொடுத்து ஊக்கப்படுத்தி குறை நிறைகளை பண்பாகவும் அமைதியாகவும் எடுத்துக் கூறி அனைத்து எழுத்தாளர்களின் அன்புக்குப் பாத்திரமானவராகத் திகழ்ந்தார்.
அவர் பிறந்த அதே ஆண்டு தெற்காசியாவின் பெருஞ்சொத்தான அறிவுக்களஞ்சியமான யாழ் நூலகம் எரியூட்டப்பட்டிருந்தது. அந் நிகழ்வு அவர் மனதில் ஆறாத வடுவாக இருந்து வந்தது. அதனை ஈடுசெய்யும் நோக்கோடு ஈழத்து எழுத்தாளர்களின் நூல்கள் அனைத்தும் ஆவணப்படுத்தப்படல் வேண்டும் என்ற அவரது பெருவிருப்பு இணைய நூலகமாக நூலகம் திட்டமாக உருப்பெற்று பல்லாயிரக்கணக்கான ஈழத்து எழுத்தாளர்களினி நூல்கள கணனிமயப்படுத்தப்பட்டு பாதுகாக்கப்பட்டு இன்று பயனளிக்கின்றது.
அறிவுக்களஞ்சியம் 4

சிங்கப்பூர் சென்று தன் மேற்படிப்பை தொடரும் காலத்திலிருந்து இறுதி வரை சிங்கப்பூர் வரும் நண்பர்களையோ உறவினர்களையோ முனி அறிமுகமில்லாத உறவுகளையோ அன்போடு அனுசரித்து உரிய உதவிகள் புரிந்து அவர்கள் தம் சொந்தக் காலில் காலூன்றும் வரை தன்னால் முடிந்த உதவிகளை புரிந்து சிறந்த மனிதாபிமானியாகவும் தன்னை நிலை நிறுத்தியுள்ளார்.
சிங்கப்பூர் சென்று மேற்படிப்பு பயிலும் காலத்திலே பள்ளிப் பருவத்தில் தான் நேசித்த பிரம்யா எனினும் நங்கையை கடிமணம் புரிந்து வாழ்ந்து வந்தார். தனி மேற்படிப்பினை நிறைவு செய்து தொடர்ந்தும் பொறியியல் துறையில் தொழில் புரியத் தொடங்கினார். சிங்கப்பூர் குடியுரிமை பெற்று அங்கே சொந்தவீடு வாங்கி குடியேறினார். காலச் சுழற்சி சொந்தத் தொழில் புரிய வேண்டும் என்ற பேரவா சிங்கப்பூரில் உணவகம் ஒன்றை திறக்கும் நிலைக்குத் தள்ளியது. காலம் எப்போதும் கைகொடுப்பதில்லைதானே அது ஈழநாதன் விடயத்திலும் சரியாக அமைந்தது. உணவகத் தொழில் பெருநட்டம் ஏற்பட்டது. இருந்தாலும் சோர்ந்து விழுந்து விடாது மீண்டெழுந்து இந்தோனேசியாவில் இரும்பு ஏற்றுமதித் தொழிலில் கால பதித்து சிறப்பாக தொழிலில் விருத்தியடைந்து, பப்புகாகினி நியூ கினி என்ற நாட்டின் அரசாங்க பணியகங்களின் தொழிநுட்பம் சார்ந்த இயங்கிகளை இயக்க ஒரு ஒப்பந்தம் கூட செய்திருக்கிறார். நீண்டகாலங்களின் பின்னர் நிறைவாக கடவுள் மழலைச் செல்வமாக ஆதிரன் என்றும் மழலையையும் கொடுத்தார். எல்லாச் செல்வமும் பெற்றுவிட்டார் இனியென்ன குறை என்று அனைவரும் வியந்து நிறகும் வேளையில் தாயகம் வந்து தன் மழலையின் 41ம் நாள் தொட்டிலிடும் நிகழ்வ்ரினை உறவினர்கள் புடைசூழ சிறப்புற நடாத்திவிட்டு திரும்பியவர் மறுவாரம் தனது 3வது வயதில் 30.09.2012 அன்று இந்தோனேசியாவில் இப்பூவுலக வாழ்வுக்கு முற்றுப்புள்ளி வைத்தார். தான் வாழ்ந்த குறுகிய காலத்தில் வாழ்வாங்கு வாழ்ந்த வானுறையும் தெய்வத்துள் வைக்கப்பட்டிருக்கும் ஈழநாதனின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல கற்பகத்தானையும் துர்காபுரம் வாழும் துர்க்கை அம்மனையும் பிராத்தித்துக் கொள்வோம்.
தேற்றம்
ஆண்டாண்டு தோறும் அழுது புரண்டாலும் மாண்டார் வருவரோ மாநிலத்தீர் - வேண்டா? நமக்கும் அதுவழியே! நாம்போம் அளவும் எமக்கென்? என்(று) இட்டு, உண்டு, இரும
அறிவுக்களஞ்சியம் 5

Page 9
2 சிவமயம்
சமரமாகுதேவன் குறிச்சிக் கற்பகப்பிள்ளையாரூஞ்சல்
பரீ அ சிவசம்புப் புலவர்களின் மருமகனும் மாணவருமாகிய பரீ சு. ஆறுமுக உபாத்தியாயர் அவர்கள் இயற்றிய
எண்சீர் விருத்தம் திருமேவு மணிமருமத் தரிமுனி னான தேவர்களும் மேவர்களும் பணிந்து போற்றத் தருமேவு வளச்சமர பாகு மேவுந் தாவறுகற் பகபிள்ளை யாரே நின்சீர் குருமேவு மூஞ்சலியற் கவியாற் பாடிக் கொடியபவத் தொடக்கறுத்துத் துரயே மாக உருமேவு மிடையூறொனி றொன்றா வண்ண முனதுதிரு வடிமலரே காப்ப தாமே.
துலே சீர்திகழு மணிமாடத் தொருநாற் பாலுந் தெளிபளிங்கி னாஞ்சிற்பத் தூண்க ணாட்டிப் பேர்திகழு மாணிக்க விட்டம் பூட்டிப் பிரிவறுசாம் பூந்தத்தின் றொடர்கள் மாட்டி
அறிவுக்களஞ்சியம் 6
 

யேர்திகழு நீலமணிப் பலகை யாலே யியையூஞ்ச வரமகிளிர் கரந்தொட்ட டாட்ட பார்திகழு மெழிற்சமர பாகு வாழ்கற பகப்பிள்ளை யாரேயுற் றாடீ ரூஞ்சல்
கழுமலக்கா னகப்பூங்கா வாடக் கண்ட கெளசிகன்கண் ணிர்விட்டுன் கமலத் தாள்க டொழுமடிய னாகியுளக் குறைகள் கூறாத் தோன்றுமகத் தியமுனிகைக் கரக நீரை யழுமரிட்ட வடிவாகிக் கவிழ்த்துப் பாய்ச்சு மளப்பீல்சீ ரருலாளர் யாமு முய்யப் பழுமாஞ்சேர் போழிற்சமர பாகு வாழ்கற் பகப்பிள்ளை யாரேயும் றாடீ ரூஞ்சல்.
ஓங்குகுட மோட்டாரே யாடீ ரூஞ்சல் ஒற்றைமணிக் கோட்டாரே யாடீ ரூஞ்சல் வீங்குமதிச் சடையாரே யாடீ ரூஞ்சல் துங்குபனைக் கரத்தாரே யாடீ ரூஞ்சல் துர்யபஞ்சாக் கரத்தாரே யாடீ ரூஞ்சல் பாங்குவளந் திகழ்சமர பாகு வாழ்கற் பகப்பிள்ளை யாரேயும் றாடீ ரூஞ்சல்
சங்கையிலா வன்பரொரு தந்தா வோலந் தந்திமுகத் தற்பரமெய்த் தந்தா யோலங் கங்கையுமை குமரவயக் கணேச வோலம் கசிந்துள்ள முரகடியார் கணேச வோலம் எங்களிரு கண்மணியா மிறைவா வோலம் இன்னுயிரேயோலமென்றெப்த்திரைக்குமோதை மங்குவிரைப் பாஞ்சமர பாகு வழ்கற் பகப்பிள்ளை யாரேயுற் றாடீ ரூஞ்சல்
அகத்தியானார் புகழ்நம்பி யாண்டோர் நம்பி யவ்வைவெண்ணெய் மெய்கண்டா ரமரர்கோமா கைதியலும் பத்திமையா ராது போற்ற வருளியமெய் யருணமக்கு மாமோ வென்ன
அறிவுக்களஞ்சியம் 7

Page 10
கியத்துயரி லாரடியோம் வேண்டா வின்ப மெணிமுறுவல் பூத்தொருகால் விழியி னோக்கு மகத்தொழிலர் வாழ்சமர பாகு வாழ்கற் பகப்பிள்ளை யாரேயுற் றாடி ரூஞ்சல்
ஏற்றசுடர் விளக்கநிரை யிருள்கால் சீக்க விரட்டுமணிக் கவரிமெனிகா விதமுனி டாக்கச் குற்றணிமா விசையைவளைத் துவனி போக்கத் துணைச் செவியிற் சின்னமிசைச் சுவைத்தேனி வாக்க போற்றுதுதி யெழுபவத்தினர் புனிமை விக்கப் பூந்தொடைத் தெநாசி தொறும் புலவோர் மோக்கப் பாற்பணைக ளார்சமர பாகு வாழ்கற் பகப்பிள்ளை யாரேயுற் றாடீ ரூஞ்சல்
பழமறைக டொழும்பகவ வலவை நேச பார்ப்பதிநற் தனவொளிர்பா சாங்கு சக்கை பழக்கஜா நநவிலம்போ தரக ணேச வத்துவித முத்தியரு ளமல யாருந் தொழவருமூ ஷகவாக னாரு டாதே சோமயவென் றண்பரெலாந் தொழுதி டேறப் பழமலகா வளர்சமர பாகு வாழ்கற் பகப்பிள்ளை யாரேயுற் றாடீ ரூஞ்சல்
மேதகைய பத்திநெறி விளங்கத் தோன்றி மிளிர்கோயிற் பணிசெய்வோர் மேனிமே லோங்க மாதயையி னோம்பியடிப் பத்தி நல்கும் வான்கருணை யிபக்கனிறே யாடீ ரூஞ்சல் போதவடி வாய்மறையின் பொருளாய்ப் பாசம் போக்கியவித்தகருளத்துபபொலியொன்றானாய் பாதவமா ரணிச்சமர பாகு வாழ்கற் பகப்பிள்ளை யாரேயுற் றாடீ ரூஞ்சல்
அருவாகி யுருவாகி யிரண்டு மாகி
auar6oaTíreoŮ 69u6oct6oaTareo aU6Pauy apareio மருவாகி மலராகி மரமு மாகி
அறிவுக்களஞ்சியம் ஐ

மணியாகி யொளியாகி வைய மாகிக் குருவாகி யுயிர்க்குயிராய்ப் பிறவு மாகிக் குணங்குறிமுனி னெலாங்கடந்து நின்ற சோதிப் பரமனாய் வளச்சமர பாகு வாழ்கற் பகப்பிள்ளை யாரேயுற் றாடீ ரூஞ்சல்
சந்தமறைப் பொருளாரே யாடீ ரூஞ்சல் சாரலருக் கருளாரே யாடீ ரூஞ்சல் செந்தமிழ்ப்பாத் தொடையாரே யாடீ ரூஞ்சல் திகடந்தப் படையாரே யாடீ ரூஞ்சல் அந்தமுதலில்லாரே யாடீ ரூஞ்சல் அணியரக வில்லாரே யாடீ ரூஞ்சல் பந்தமய லில்லாரே யாடீ ரூஞ்சல் பந்தமய லில்சமர யாகு வாழ்கற் பகப்பிள்ளை யாரேயுற் றாடீ ரூஞ்சல்
ar பக்தியிற்கற் பகப்பிள்ளை யார்வாழ் கோவிற் பணிநிதமுஞ் செய்திடுவோர் பல்கி வாழி சித்தமய லறுவிப்போர் சிறந்து வாழி செய்யதமிழ் சைவநெறி செழித்து வாழி வித்தகரா னிரைசெங்கோல் வேதம வாழி விரிகருமங் கற்புநெறி வீரம் வாழி இத்தரைவான றருணமழை யிகை வாழி யியமுகன்றாண் மலரடிச்சீ ரென்றும் வாழி
qrðsifikana மருவே யொளியுருவே தவர்திருவே யெச்சரிக்கை மறையே திருமுறையே தனியிறையேயெச்சரிக்கை உருகார் தமக்குரகா யரிமருகா வெச்சரிக்கை ஊனா யுயிரானா யறிவானா யெச்சரிககை நாதா மலர்ப்பாதா முறக்காதா வெச்சரிக்கை நண்ணார் தமையெண்ணாய் பரவிண்ணா யெச்சரிக்கை தாத்தாபர போதாபதப் போதா யெச்சரிக்கை தகவா ரருட்பகவா வெமையிகவா யெச்சரிக்கை
அறிவுக்களஞ்சியம் 9

Page 11
மரக்கு பக்திசெயு மனிபரக்கச் சோதீ பராக்கு பைந்தமிழ்பா மாலைபெறு மாதீ பராக்கு சித்தியெலாந் தருகருணைத் தேவே பராக்கு புத்தியொளி பெறவருளும் போதா பராக்கு பொருந்துபவ நோய்மருந்தாம் பாதா பராக்கு சக்திசிவந் தந்தமுதல் வித்தே பராக்கு தவச்சமர பாகுவளர் சித்தே பராக்கு
லாலி இந்திரனுக் காறளித்த தடங்கருணை யையா சந்திரனும் வெள்ளறகு மிலங்குசடை குனிறே லாலரி
தம்பிதனக் காகவனம் வந்தவிபக் கனிறே கும்பமுனி யுடனாடல் செய்தவருட் குனிறே லாலி
ஓங்குமறை யாயதற்கு மெட்டாத முத்தா ஓங்கார வடிவாகி யெங்குநிறை நித்தா லாலி
அம்மையப்பர் சுற்றிவந்து கனிபெற்ற பாலா எம்மையிலு மெளியேமுக் கருள்புரிந்த மூலா 6u/Ꮫ6lᎴ
topiñasoré
ஐந்துகரத் தானைமுக லீசருக்கு மங்களம் - எமை யலைத்துலைக்கும் வலியவினை நாசருக்கு மங்களம் நைந்துருகி யேத்துமன்பர் தாசருக்கு மங்களம் - ஒளவை நற்கயிலை சேரவைத்த தேசருக்கு மங்களம்
எங்குமெலா மானவெளி வடிவார்க்கு மங்களம் - சிவன் ஏறிரத வச்சதனைத் தடிவார்க்கு மங்களம் சங்கரித னகியுருவைக் கலைதார்க்கு மங்களம் - வளஞ் சார்சமர பாகுவந்து நிலைத்தார்க்கு மங்களம்
(முற்றும்)
அறிவுக்களஞ்சியம் 10
 

蜗 శ్లో தேவன்குறிச்சி அருள்மிகு மநீ கற்பக
விநாயகர் ஆலய பிரதம
குளுக்கவின் ரைாங்கல் உரை.
சமரபாகு தேவன்குறிச்சியை சேர்ந்த புவனேந்திரன் ஈழநாதன் அவர்களின் மரணச்செய்தி கேட்டு ஆழந்த கவலை அடைந்தேன். ஈழநாதன் அவர்கள் சிறுவயது முதலே கற்பகத்தானி மீது மிகுந்த பக்தி கொண்டவர். பிள்ளையார் கதை, திருவெம்பாவை, திருவாதவூரடிகள் புராணம் என்பன புத்தகம் பாராமல் படித்து பயன் சொல்லும் ஆற்றல் படைத்தவர். இவர் தனது பள்ளிப் பருவத்தில் பல சாதனைகளைப் படைத்தார். யார் உதவி என்று கேட்டாலும் எந்த உதவி என்றாலும் தன்னால் முடிந்தவரை இல்லை என்று சொல்லாமல் செய்யும் பரந்த உள்ளம் கொண்டவர். பிள்ளையாரின் அருளால் சிங்கப்பூர் சென்று படித்து முடித்து பொறியியலாளராகி படிப்பில் ஒரு கரையைக் கண்டு நல்லதொரு வாழ்க்கை வாழ்ந்து வந்தார்.
தனது மனதுக்கு பிடித்தவரை திருமணம் செய்து ஒரு குறையும் இல்லாமல் பிள்ளையார் அருளால் சகல செளபாக்கியத்துடன் நன்றாக வாழ்ந்து வந்தார். தனது சொந்த ஊரிற்கு வந்து தன் மகனின் 4வது நாளன்று எல்லா சொந்தபந்தங்களையும் ஒருங்கிணைத்து இன்முகத்துடன் உறவாடி சந்தோசமாகச் சென்றவர். நலமாக இருப்பாரென்று நாமெல்லாம் நினைத்தோம். ஆனால் எமக்கு வந்த செய்தியோ பேரிடியாக இருந்தது. எமது கற்பக விநாயகர் ஆலய சூழலில் வாழும் ஈழநாதனின் சொந்த பந்தங்கள், அயலவர்கள் எல்லோருக்கும் பெரும் ஆறாத்துயராகவும் இருந்தது. அவரது மரணச் செய்தியை எம்மால் நம்ப முடியவில்லை. ஈழநாதனின் இழப்பு அவரது குடும்பத்துக்கு மட்டுமல்ல எமது ஊருக்கும் ஆலயத்திற்கும் பேரிழப்பாகும்.
ஆலய குரு சு.தண்டபாணித்தேசிகர் (சீனி ஐயர்)
அறிவுக்களஞ்சியம் 11.

Page 12
T.P. No.: 02-32351
முறி துர்க்காதேவி தேவளப்தானம்
Sri Đurgadgvi (Đøvasthanam
Tellippalai, Sri Lanka
தலைவர் :
செஞ்சொற் செல்வர்
திரு. ஆறு திருமுருகன். B.A.
உய-தலைவர் :
திரு. சி. அருளானந்தசிவம் திரு. சி. ஆறுமுகநாதனி
பொதுச் செயலானர் :
வைத்தியகலாநிதி தி. திவாகரனி
இணைச் செயலானர்கள் : திரு. நா. தவநாதனி திரு. மு. அருளையா
தனாதிகாரி
திரு. அ. சண்முகநாதனர்
உப-தனாதிகாரி:
திரு. சு. ஏழுர்நாயகம்
துர்க்காதேவி துணை
அமரர் புவனேந்திரன் ஈழநாதன் நினைவாக பிரார்த்தனையுரை
இவ்வுலகில் பிறப்பதும் இறப்பதும் எம் கையில் இல்லை எல்லாமே இறைவனின் நியதி. தர்மசிந்தனையுள்ள
வாழ வேண்டிய இளையவர்களின் இழப்பு ஈடு செய்ய
முடியாது. அமரர் புவனேந்திரன் ஈழநாதன் தனது தந்தையாரோடு துர்க்கை அம்மனை வழிபாடு செய்து வந்தார். பக்தியோடு வழிபாடு செய்தார். நாம் வளர்க்கும் துர்க்காபுரம் மகளிர் இல்லப்பிள்ளைகளின் எதிர்கால வாழ்விற்கு தன்னாலான உதவிகள் செய்ய ஆவல் கொண்டுள்ளேன் என கூறினார். ஒரு தொகைப் பணம் அன்பளிப்பாக வழங்கி ஆனந்தத்துடன் விடை பெற்றார். அந்த நிழல் என்னும் ஓயவில்லை. ஆனால் அன்னாரின் இறப்புச் செய்தி கிடைத்து திடுக்குற்றோம். இறைநியதியை யார்தான் வெல்லமுடியும். ஆன்னாரின் ஆத்மா சாந்தி பெறத் துர்க்காதேவியை பிரார்த்திப்பதோடு அவரது குடும்பத்தவர்களுக்கு எமது அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கின்றோம்.
கலாநிதி.ஆறு.திருமுருகன்
தலைவர் ரீ துர்க்காதேவி தேவஸ்தானம்
தெல்லிப்பழை
2
அறிவுக்களஞ்சியம்
پھیپھgشیا!! الاریات|میں=دھ
 
 

"Kriya Krarna Jothy", "Kriya Kalapa Muktharmani"
பிரம்ழறி BARRHAMASAR ப. மனோகரக் குருக்கள் P. MRNOHARA KURUIKKAL பிரததிகுரு {{{#EF PREST வாலாம்பிகா சமேத இலத்தீஸ்வர சுவாமி VYALARGA SAAREA
தேவஸ்தானம் VATH FEESVÅRA SA TEMPLE இல்வெட்டித்துறை. iš fi DTRA,
譬鬱當製-靈黨鰭露露?
...في 338............
இரங்கல் செய்தி
இலக்கணாவத்தையை சேர்ந்த புவனேந்திரன் தம்பதிகளின் அருந்தவப் புதல்வன் ஈழநாதன் அவர்களின் திடீர் மறைவு செய்தி அறிந்து திகைப்படைந்தேன். சிறுவயதில் எனது புதல்வர்களின் ஆத்ம நண்பனாக பழகிய காலம் தொடக்கம் எம்முடன் அன்பு, மரியாதை, அடக்கம் உடையவராக இருந்து வந்தவர். தாம் வாழ்கின்ற காலத்தில் மாதா, பிதா, குரு இவர்களை தெய்வமாகப் போற்றி வந்தவர். அமரர் தொழில் நிமிர்த்தம் வெளிநாடு சென்று அனைவரிடமும் மிகுந்த செல்வாக்கு
பெற்றவராக திகழ்ந்தவர். பெற்றோர்கள் தம் அன்புப் புதல்வன் நல்ல நிலையில் வாழ்வதாக எண்ணிப் பெருமைப் பட்டார்கள்.
"அந்தோ பரிதாபம்" காலணி யாரைத்தான் கவர வேண்டும் என்று கூட நினையாமல் அமரனை கவர்ந்து சென்றுவிட்டான்.
தந்தை எவ்வழி நின்று செயற்படுகிறாரோ அதைவிட ஒருபடி மேலாக நின்று மைந்தன் தந்தைக்கு செய்ததை யாரால் மறக்க முடியும்.
பெற்றோர்கள், சகோதரர்கள், அன்பு மனைவ், பச்சிளம் குழந்தை இவர்களைத் தவிக்கவிட்டு மரணம் என்கிற பொறிக்குள் செல்வதற்கு எப்படி ஐயா மனம் வந்தது,
எல்லாம் விதியின் பயணி என்று எணணுவதைவிட எண்னதானி செய்ய முடியும்.
அமரனை இழந்து தவிக்கும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள். ஆத்மா சாந்தியடைய வாலாம்பிகை உடனுறை வைத்தீஸ்வரப்பெருமானை பிரார்த்திப்போமாக.
ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி!
சிவபரீ. பரமேஸ்வர மனோகரக் குருக்கள்
அறிவுக்களஞ்சியம் 13

Page 13
"Sivagana-aithantha Granahesigs Bru" "சிவகாழ சித்தாந்த ஒான தேசிக
tre-- till: died at a. "பிரதஷ்பாலங்கார : :*
Sivasri சோ. தண்டபாணிக தேசிகள் ۔ ۔ مہم۔ غوی۔ایسے ملا۔ وہ دیو A சமாதான நீதிவ்ஸ் Standalaikathasgay.JP பிர
Chief Pries கஃ
றி முத்துமா Cassass Sri Methu nari Agaman Temple D வல்வெட்டித்துறை
Valvettidari, Sri Lanka. T. Phone: 06.02.212267, 0212263-183 ...allao.2.
எனது பேரன்புக்குப் பாத்திரமான புவனேந்திரன் ஈழநாதனின் திடீர் மறைவுச் செய்தி கேட்டு அழ்ந்த அதிர்ச்சியடைந்தேன். இவர் தந்தை புவனேந்திரனைப் போன்ற தெய்வபக்தியும், குருபக்தியும் நிறைந்தவர். இவர் ஒர் அறிவுக்களஞ்சியமாக, தொழில்நுட்பவியலாளராக தொழிலதிபராக விளங்கி எம்மண்ணினி பெருமையை உலகறியச் செய்தவராவார்.
மேலும் எழுத்தாளராகவும், சிறந்த கவிஞராகவும் திகழ்ந்தவர். சிங்கப்பூர் முத்துமாரியம்மனி ஆலயத்துடன் அதிக ஈடுபாடு கொண்டவர். ஏழு ஆண்டுகளுக்குப் பின்பு தாய் நாட்டுக்கு வந்து தனது மகனின் தொட்டில் போடும் விழாவில் பங்கு கொண்டுவிட்டு சிங்கப்பூர் திரும்பியவருக்கு இத்திடீர் மறைவு எப்படி ஏற்பட்டது என்பதை அந்த ஆண்டவனதானி அறிவார்.
இவரின் பிரிவால் வாடும் தாய், தந்தை, சகோதரர்கள், மனைவி, பிள்ளை குடும்பத்தவர் அனைவருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள்களைத் தெரிவித்து அணினாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல அன்னை பரீ முத்துமாரித்தாயை இறைஞ்சி வேண்டிப் பிரார்த்தித்து அமைகின்றேன்.
"துறந்தார் பெருமை துணைக்குறின் வையத்து இறந்தாரை எண்ணிக் கொண்டற்று"
ஒம் சாந்தி / சாந்தி சாந்தி !
சிவபரீ சோமாஸ்கந்த தண்டபாணிகதேசிகர் ].P இந்துமத குருபீடாதிபதி அகில உலக சைவக்குருமார் சம்மேளனம்
பிரதமகுரு பரீ முத்துமாரி அம்மனி தேவஸ்தானம் - வல்லெட்டித்துறை
அறிவுக்களஞ்சியம் 14
 
 

சிவமயம் "என்னை நன்றாக இறைவன் படைத்தனன் தன்னை நன்றாகத் தமிழ் செய்யுமாறே."
கா. சிவபாலன் - திருமூலர் துர்க்காபுரம்,
மட்டுவில் தெல்லிப்பழை, K, SHIVAPALAN es غیر DURGAPURAM MADDUW. හීබ්, TELLPPALA. Te: O776485563 &2 نتیج O2 1790.1348 2.3 || ul. 20.s?
அறிவுக் களஞ்சியமாக விளங்கிய அமரர் ஈழநாதன் அவர்கள்.
அன்புத்தம்பி ஈழநாதன் இந்த நிலையில்லா நிலஉலகில் 31 ஆண்டுகள் வாழ்ந்தவர். தமது வாழ்நாளில் அவர் ஆற்றிய சமூகப்பணிகளும் அதிஉயர்ந்தவை. இவருடைய தந்தை திரு. புவனேந்திரன் ஐயா, எங்கள் துர்க்கை அம்பாளிடத்து பெரும்பக்தி கொண்டவர். அவர்கள் குடும்பத்தினரும் பெரும் பக்தி கொண்டவர்கள். தம்பி ஈழநாதன் தமது பெற்றோருடன் துர்க்கை அம்பாள் ஆலயத்துக்கு வருகைதந்து சிவத்தமிழ்செல்வி தங்கம்மா அப்பாக்குட்டி அம்மையாரிடத்து மிகுந்த தொடர்பு உடையவர்கள். இதனால் அம்மையாரின் பணிகளுக்கு பெரும் நிதியை அள்ளி வழங்கிய குடும்பத்தினர் ஆவர்.
எம்மால் நினைக்க முடியாத, கற்பனை கூட செய்து கொள்ள முடியாத ஈழநாதனின் மறைவு பெருந்துன்பத்தைத் தருகின்றது. இவருடைய இழப்பு ஈடுசெய்ய முடியாதது. இவர் கவிதை, கட்டுரை எழுதுவதில் அறிவுக் களஞ்சியமாக விளங்கினார்.
இவரின் பிரிவினால் தாங்கமுடியாத துன்பத்தில் மூழ்கியுள்ள பெற்றோர், உறவினர்கள் அனைவருக்கும் எனது ஆழந்த அனுதாபத்தை தெரிவித்துக்கொள்கின்றேன். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல துர்க்காதேவியை பிராத்திக்கின்றேன்.
பரீ துர்க்காதேவி தேவஸ்தானம் கா.சிவபாலன் தெல்லிப்பளை
அறிவுக்களஞ்சியம் 15

Page 14
ஈழநாதனின் மோட்சவாழ்வு வேண்டிப் பிரார்த்திக்கும் முன்னாள் அதிபர்.
"ஈழநாதன். மறைந்துவிட்டார்." என்ற அந்தத் துன்பகரமான செய்தியை, அவரது தந்தை திரு. புவனேந்திரன் அவர்கள் மூலமே அறிந்ததும் அன்று நான் அடைந்த அதிர்ச்சிக்கு அளவில்லை. எவருடைய வாயினால அந்தத் துணிபகரமான செய்தியைக் கேட்கக்கூடாதோ, அவர் மூலம் அறிந்ததுதானி மிகத் துன்பமாக இருந்தது.
உடுப்பிட்டி அமெரிக்கனி மிஷனி கல்லூரியில் நாணி அதிபராகப் பணியாற்றிய பொழுது, சுமார் 1000 மாணவர்களை தினமும் பார்த்து, அவர்களின் நடத்தைகளையும் பழக்க வழக்கங்களையும், கற்றல் திறமைகளையும் உணினிப்பாக கவனித்து வருவேன். அவர்களில் எல்லா மாணவர்களின் பெயர்களும் நினைவுககு வருவதில்லை. ஆனால் "ஈழநாதனி" என்ற பெயர் மட்டும் எங்கள் ஒவ்வொருவரினி நெஞ்சிலும் ஆழமாகப்பதிந்து இருந்தமைக்கு, அவருடைய பெயரின் மகிமை மட்டுமல்லாது, "ஈழநாதனின்" தனிப்பட்ட நடத்தைகள், பழகுகின்ற முறைகள், பெரியவர்களுக்கு மதிப்பளிக்கும் தன்மை, அதிபர் ஆசிரியர்களுக்குக் கீழ்ப்படியும் போக்கு, பாடசாலையில் நடைபெறும் எல்லா நிகழ்வுகளிலும் தானே முனிவந்து செயலாற்றுகின்ற தன்மை போன்ற குணவியல்புகளும் காரணம் என்பதை அவருக்குக் கற்பித்த ஆசிரியர்களே கூறிப் பெருமையடைவார்கள்.
கல்லூரியில் அவர் மாணவராக இருந்த காலத்தில், பாடசாலை ஆரம்பிப்பதற்கு உரிய நேரத்திற்கு முன்பே சமூகமளிக்கின்ற மாணவர்களில் அவரும் ஒருவராக இருப்பார். வகுப்பறைகளை ஒழுங்குபடுத்துவது, வகுப்பு கற்றல் செயற்பாடுகளுக்குத் தேவையானவற்றை அடுக்கி வைப்பது. தனது மாணவர்களுடன் அனினியோனியமாகப் பழகுவது. அவர்களின் தேவையை நிறைவேற்றுவது போன்ற செயற்பாடுகளினூடாக, ஏனைய மாணவர்கள் மத்தியில் கூட நீங்காத இடத்தைப் பிடித்துவிட்டார்.
இன்று இந்து ஆலயங்களில் பலர், தேவார திருவாசகங்களைப் பாடுவார்கள் அவற்றைச் செவிமடுக்கின்ற இந்துக்களான எங்களுக்கு கவலையாக இருக்கும். இந்து சமயப் பாடல்கள் ஒவ்வொன்றுக்கும் "பணி" இருக்கும் பொழுது, அதற்கேற்ப பாடும் பொழுதே பக்தியின் உச்சநிலையை அடைய முடியும். ஆனால் எமது கல்லூரியின் சமய நிகழ்வுகளிலும் பிரார்த்தனைகளிலும், "ஈழநாதன்" தேவாரங்களைப் பண்ணுடன் பாடுவதில் நனிகு பயிற்சி பெற்றிருந்தனர்.
அறிவுக்களஞ்சியம் 1,

எனது காலத்தில் பிள்ளைகள் மீது எவ்வளவு அன்பும் அரவணைப்பும் காட்டப்பட்டதோ அந்த அளவுக்கு இறுக்கமான கட்டுப்பாடுகளும் நடைமுறையில் இருந்தன. அந்த வகையில், வகுப்பு ஆசிரியர்களால் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர முடியாத வேளைகளில் சில மாணவர்களை என்னிடம் அவர்கள் அனுப்பி வைப்பார்கள். அவ்வாறு ஒருநாளாவது "ஈழநாதனி" என்னுடைய அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்படவில்லை. அந்த அளவிற்கு அவர், அவரது தந்தையின் வழி நடத்தலில் ஒரு கட்டுப்பாடான மாணவனாக இருந்தவர்.
கல்லூரியில் நடைபெறும் கலை, இலக்கியப் போட்டிகளிலும், நிகழ்ச்சிகளிலும், மிகவும் ஆர்வத்துடன் பங்கு பற்றி, பல பரிசுகளையும், சான்றிதழ்களையும் பெற்றதுடன் கல்வி அபிவிருத்திச் செயற்பாடுகளிலும் முன்னிலை வகித்த "ஈழநாதனி" எதிர்காலத்தில் மிக உயர்ந்த நிலையில் பிரகாசித்து, ஈழவானில் புகழ்பெற்று எமது கல்லூரிக்கும் தனது பெற்றோர், உறவினர்களுக்கும், எமது நாட்டுக்கும், இனத்திற்கும் பெருமையும், புகழும் சேர்த்துத் தருவார் என்று, எதிர்பார்த்துக் காத்திருந்த எங்களுக்கு அவரது திடீர் இழப்பு பேரிடியாக விழுந்தது!
எங்களுடைய தாயக மண்ணில் இருந்தும், அன்னிய நாடு சென்று, வளமான எதிர்காலம் ஒன்றுக்கான அடித்தளத்தை இட்டுக் கொண்டிருந்த நேரத்தில், அவரது "ஆத்மா” எங்களை விட்டுப் பிரிந்துவிட்டமை, இன்னொருவரால் ஈடுசெய்ய முடியாத ஒரு இழப்பு. இந்த இழப்பின் துயரத்தைத் தாங்கிக் கொள்ளும் மனோ பலத்தை இறைவா! அவரது பெற்றோர், சகோதரர்கள், மற்றும் அவரது உறவினர்களுக்கும் கொடுக்க வேண்டும். உன் பாதங்களை வந்து சேர்ந்த ஈழநாதனுக்கு மோட்ச வாழ்வைக் கொடுத்து, அவரது ஆன்மாவுக்கு சாந்தியை ஏற்படுத்த வேண்டும் என்று பிராத்திக்கிறேனர்.
ந.அனந்தராஜ்
முன்னாள் அதிபர் யா/உடுப்பிட்டி அமெரிக்கன் மிஷனி கல்லூரி நகரபிதா, வல்வெட்டித்துறை நகரசபை
அறிவுக்களஞ்சியம் 17

Page 15
ஈடுசெய்யமுடியாத பேரிழப்பு
வாழ்க்கை என்பது இரண்டு அசைவுகளால் உருவாகின்றது. ஒரு அசைவின் பெயர் தொண்டு, மற்றொன்றின் பெயர் அன்பு, தொண்டு சமுதாயத்தை களிக்கச் செய்கின்றது. இவ்விரண்டு பண்புகளினையும் அமரர். ஈழநாதனிடம் கண்டேன்.
பள்ளிப் பருவ காலத்தில் நல்ல முறையில் தன் வாழ்வை செப்பனிட கல்லூரியின் வாய்ப்புக்களை பயன்படுத்திக் கொண்டார். சிரேஷட மாணவர் தலைவராக இருந்து அனைத்து மாணவர்களுக்கும் வழிகாட்டியாக இருந்தவர். புத்திசாலித்தனம், விடாமுயற்சி, தன்னம்பிக்கை, அர்ப்பணிப்பு போன்ற உயரிய குணங்கள் அவரிடம் நிறைந்திருந்தன. முறையாக ஆய்வு செய்தல், முறையாக ஒதுதல் என்பவற்றை கடைப்பிடித்த அமரர். ஈழநாதன் பிற்காலத்தில் தொழில் முயற்சியில் ஆழ்ந்து முன்னேற்றமடைவதற்கு இவை அனுகூலமாக இருந்தது. ஈன்று புறம் தந்த தாயிலும், சான்றோனாக்கிய தந்தையிலும் மிகுந்த பக்தியுடையவராக வாழ்ந்தவர். அறிவு வளர்ச்சிக்கு காரணமான குருவிலும், தன்னுடன் படிதத சக மாணவர் மீதும் அளவு கடந்த நேசம் கொண்டிருந்தவர்.
கல்லூரிப் படிப்பை முடித்துக் கொண்டு படிப்பதற்காக வெளிநாடு சென்ற அமரர். ஈழநாதன் பொறியியலாளர் என்ற பட்டத்தைப் பெற்றுக் கொண்டார். பழந்தமிழர் மரபுக்கேற்ப தனக்கு ஒரு வாழ்க்கைத் துணையைத் தேடிக்கொண்டார். அவரது அர்ப்பணிப்புடன கூடிய சேவைக்காக அவர் பணிபுரிந்த AMD நிறுவனம் விருது வழங்கிக் கெளரவித்தமை குறிப்பிடத்தக்கது. இந்தோனேசிய நாட்டில் தானி தொழில் புரிந்த இடத்தின் ஒரு கிராமத்தில் வாழும் மக்களுக்கு சிறிய பாடசாலை அமைத்துக் கொடுத்ததாக அறிகின்றேன். அந்தளவிற்கு தொண்டு உள்ளம் படைத்தவர். இத்தன்மையான போக்கு ஒரு மனிதனின் உள்ளத்தில் கொண்ட அகங்காரத்தை நீக்கி விடுகின்றது. பொறி வழியிலே புறவுலகில் செல்லாது மனதை தடுத்து உள்ளிருக்கும் அறிவுத் தெய்வத்தை சிந்திப்பது தியானம், அமரர். ஈழநாதனி தன் வாழ்க்கையின் சிறு நேரத்தை தியான சிந்தனைகளில் செலுத்தியிருப்பது அவரது அன்பு உள்ளத்திற்கு எடுத்துக் காட்டாகும். அன்பே சிவம் என்பது தியானத்தின் வழி வந்தது.
அமரர் ஈழநாதன் ஓர் சிறந்த எழுத்தாளருமாவார். அவரது எழுத்துக்கள் புலம் பெயர் இலக்கியங்களில் தனி முத்திரை பதித்துள்ளது. இவ்வாறு பல்கலைகளிலும் பாண்டித்தியம் பெற்று தனி வாழ்க்கையை உயர்த்தி வரும் போது காலணி வந்து குறுக்கிட்டது மிகக் கொடியது.
அறிவுக்களஞ்சியம் 13
 

அவரது அகால மரணச் செய்தி கேட்டதும் எம் உள்ளம் அமைதி கொள்ளவில்லை. பார்க்குமிடமெல்லாம் பள்ளியில் கண்ட உருவமே எம் கண் முன் நிற்கின்றது. உள்ளத்தில் அமைதியில்லாதது போல கண்களில் உறக்கமில்லை. தன் அருமை நாயகனை இழந்து தவிக்கும் இளம் மனைவியும் பச்சிளங் குழந்தையும் என்ன செய்யும். பெற்றோர்கள் இதனை எவ்வாறு தாங்கிக் கொள்வார்களோ தெரியவில்லை. மரணம் எனும் கொடிய நோயைப் போக்க வித்தை மருந்து அறியாமல் விதியென்று பேசுகின்றோம்.
ஆத்மா சாந்தியடைக
கி.நடராஜா முன்னாள் அதிபர் உடுப்பிட்டி அ.மி.கல்லூரி
உன்னை பிறிவோம் என்று நினைத்ததில்லை இளங்கோ உனைக் காணும் இறுதிநாள் விழா இது தான் என அறிவில்லை தொட்டிலில் இட்டவன் தொட்டணைக்கமுன் பிரிந்துவிடாயே! உற்ற முனையாளையும் ஈஸ்ற பெற்றோரையும் தலிக்கவிடாலே இடமுடன் பழகிய ஊரவர், நண்பர் கண்ணீரோடு துயர்பகிர உன் காலடிபட்ட கற்பகத்தான்மண்னோ
இன்றும் சுறந்து நிற்கின்றது உன் நினைவலைகளை அந்த நினைவலைகளை மனதில் நிருத்தி ஆத்ம சந்திக்காக பிரார்த்திக்கின்றோம். 4 ஓம் சாந்தி சாந்தி சாந்தி அமரர் புவனேந்திரன் கற்பகத்தான் உறவுகண் நண்பர்கள் - இலக்கணாவத்தை உருப்பிட்டி
அறிவுக்களஞ்சியம் 1g

Page 16
உள்ளத்தில் நல்ல உள்ளம்
உடுப்பட்டி அமெரிக்கனி மிசன் கல்லூரியின மாணவர்களில் புவனேந்திரன் ஈழநாதன் அதி சிறந்த மாணவர்களில் ஒருவர் என்பது எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட உண்மையாகும். நான் இக்கல்லூரியல் கடமையாற்றிய காலப்பகுதியில் கல்லூரியில் மாணவனாக இருந்த ஈழநாதனில் அமைந்துள்ள சிறப்பரியல்புகளை பல கோணங்களில் அறியக்கூடியதாக உள்ளது.
அவரின் மாணவத் தோற்றம் எல்லோரையும் கவர்ந்திழுக்கும் தன்மை தன்னை கற்பித்த ஆசிரியர்களிடம் கீழ்ப்படிவும், விசுவாசமும்
எல்லோரையும் மெய்சிலிர்க்க வைக்கும் தனிமை தன்னோடு கற்ற சகபாடிகளுடன் கொண்ட நட்பும்,
அவர்களுக்கு உதவும் மனப்பாங்கும் கர்ணனின் ஒத்த தனிமை தன் உறவுகளையும், தனது சமூகத்தையும் நேசிக்கும்
மனப்பாங்கு சிறந்த குடிமகனின் தன்மை தமிழில் அவர் வைத்துள்ள பாசம், பேச்சாற்றல் இறைவனால்
அருளப்பெற்ற இயல்பாகக் காணப்படும் தன்மை ஒரு மனிதனிடம் நிறைவாகக் காணப்பட முடியாத மேற்படி தனிமைகள் அனைத்தும் நிரம்பப்பெற்ற அன்புக்குரிய ஈழநாதன் இன்று எம் முன் இல்லை. ஆனால் இது எங்கள் கல்லூரி
கல்லூரியால் நான் பெருமையடைகின்றேன். கல்லூரி என்னால் பெருமையடையட்ையட்டும்
என்ற தாரக மந்திரத்திற்கு ஏற்ப வளர்நதுவிட்ட உள்ளத்தில் நல்ல கருணையுள்ள பெருமைக்குரிய ஈழநாதனை இறைவன் தன்னிடம் அழைத்துச் சென்று எங்களையும், அவரின் குடும்பத்தாரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளான். என்ன செய்வது? விதியின்படி எல்லாம் நடந்து முடிநது விட்டன என அமைதி கொள்வோமாக.
ஒம் சாந்தி ஒம் சாந்தி ஒம் சாந்தி!
க.தர்மலிங்கம்
ஒய்வு நிலை அதிபர் உடுப்பிட்டி அமெரிக்கனி மிசன் கல்லூரி
அறிவுக்களஞ்சியம் 20
 
 

புவனேந்திரன் ஈழநாதன் அவர்களின் நினைவாக.
மனிதர்கள் பிறக்கிறார்கள், இறக்கிறார்கள். இது இயற்கையினி நியதி. ஆனால் இறப்பில் வித்தியாசம் இருக்கிறது. அந்தவகையில் அமரர். ஈழநாதன் அவர்கள் வாழவேண்டிய வயதில் அமரத்துவம் அடைந்துவிட்டார். ای
அமரரின் ஆரம்பக்கல்வி புகழ் பூத்த யாழ். உடுப்பிட்டி அமெரிக்கனி மிஷன் கல்லூரியில் ஆரம்பித்து க.பொ.த உயர்தரம் வரை கல்வி கற்றார். அவர் கற்ற காலத்தில் நல்ல மாணவனாக எல்லோர் மனதிலும் இடம்பிடித்துள்ளார். தனது கல்வியறிவினை மேலும் விருத்தியாக்கும் நோக்கில் அறிவியல் சார்ந்த புத்தகங்களை வாசிப்பதை தனது கடமையாகக் கொண்டார். இதற்கு உதாரணமாக மாணவனாக இருந்த காலத்தில் தண்ணிர் அள்ளச் செல்லும் போது கூட தனினோடு பாடப்புத்தகங்களை கொண்டுசென்று படிக்கும் அளவுக்கு திறைமைசாலியாக காணப்பட்டார். தற்காலத்தில் இப்படியான மாணவர்களைக் காண்பது அரிது.
நாட்டிலே காணப்பட்ட சீரற்ற சூழ்நிலை காரணமாக சிங்கப்பூருக்குச் சென்று கல்வி கற்று சிறந்த தொழில் வாய்ப்பினையும் பெற்றார். தொழில் செய்து வந்த காலத்தில் தானே தொழில் ஆரம்பிக்க வேண்டுமென எண்ணி ஆரம்பித்து நடாத்தினார். அதில் நல்ல வருமானத்தைப் பெற்று செல்வந்தரானார. அதற்குச் சான்றாக அவருக்கு கிடைத்த பரிசுகள் உள்ளன.
திருமண பந்தத்தில் கொம்மந்தறைப் பதியிலுள்ள பிரம்யா எனும் பெண்ணை இணைத்துக் கொண்டார். இல்லறம் எனும் நல்லறத்தில் இணைந்து ஆண்மகவு ஒன்றைப் பெற்றெடுத்து மகிழ்ச்சி அடைந்தார். ஆனால். ஆண்மகவின் வளர்ச்சி, படிப்பு, அவனை நல்லவனாக்குதல் போன்ற கடமைகளை மனைவியோடு இணைந்து செய்யமுடியாத பாக்கியம் இறைவனால் கொடுக்கப்பட்டுவிட்டதை எண்ண நெஞ்சம் நெகிழ்ந்தது.
எங்கள் கல்லூரி அன்னைக்கு தலை வணங்கும் பண்புகள் கொண்டவர். கற்கும் அதிபர் ஆசிரியர்களுக்கு கீழ்ப்படியும் தன்மை கொண்டவர். சகமாணவர்களுடன் அன்பாகப் பழகியவர்கள். கல்லூரி பற்றி ஏனையவர்களிடம் விசாரித்து அறிதல் என்பன நிறையவே இவரது குணாதிசியங்களில் காணப்பட்ட நல்ல இயல்புகளாகும்.
இறுதியாக அமரர். ஈழநாதன் தனது வாழ்வில் பெற்றோருக்கு சிறந்த மகனாக, சகோதர சகோதரிக்கு பாசமிகு சகோதரனாக, மனைவிக்கு அன்பான கணவனாக
அறிவுக்களஞ்சியம் 21

Page 17
கண்ணியமிக்க மனிதனாக, சிறந்த சமயப்பற்றுள்ளவராக, சிறந்த தொழிலதிபராக பல பாத்திரங்களை ஏற்று கருத்தாலும் செயலாலும் வாழ்ந்து சென்றார்.
ஓம் சாந்தி: சாந்தி: சாந்தி/
திரு.சு.கிருஸ்ணகுமார் அதிபர் உடுப்பிட்டி அமெரிக்கன் மிஷன் கல்லூரி
ஈழநாதன் கருத்துக்கள்
* வலைப்பதிவுலகில் நான் கால்பதிக்கும்போதே ஈழத்து கலை, இலக்கிய, சமூக அரசியல் விடயங்களை தமிழில் ஆவணப்படுத்தவேண்டும் என்ற நோக்கோடேயே வந்தேன். அது 2004ம் ஆண்டு மே மாதம் நிகழ்ந்தது. அப்போதிருந்த கனவு ஈழத்து கலையிலக்கிய முயற்சிகளை ஆவணப்படுத்துவதாக இருந்தது.
ஆவணக் காப்பகத்தின் முக்கிய பகுதியாக நூலகம் விளங்கும். ஈழத்து புலத்து நூல்களும் சஞ்சிகைகளும் இங்கே ஆவணப்படுத்தப்படும். தவிர, ஈழத்து கலை இலக்கிய ஆளுமைகளின்
வரலாறு, பங்களிப்பு, அவர்களது படைப்புகள்,நேர்காணல்கள், ஈழத்து கலை இலக்கிய மற்றும் வரலாறு பற்றிய கட்டுரைகள் குறிப்புகள் ஆய்வுகள், சமூகம் மதம் சார்ந்த கட்டுரைகள் தகவல்கள்மொழியியல் ஆராய்ச்சிக் கட்டுரைகள், நாட்டார் பாடல்கள் என்பவற்றை உள்ளடங்கியதாக இன்னொரு பகுதியும், ஈழத்தும் வட்டார வழக்குச் சொல்லகராதி இன்னொரு பகுதியாகவும் மேற்குறிப்பிட்டவை தொடர்பாக வெளிவந்து கொண்டிருக்கும் இணையத் தளங்கள் சஞ்சிகைகள் போன்றவற்றிம் விபரங்களுடன் அமைந்த தகவற் பக்கம் இன்னொரு பகுதியாகவும் இருக்கும். -
- ஈழநாதன
வெற்றியோ தோல்வியோ எதுவரினும் கடமையைச் செய்வோம். யார் பாராடடினாலும், பாராட்டாவிட்டாலும் கவலை வேண்டாம். நமது திறமையும், நேர்மையும் வெளியாகும்போது பகைவனும் நம்மை மதிக்கத் தொடங்குவான்.
எவனொருவன் தானே சரணடையாமல், மற்றவர்களின் இச்சைப்படி செயல்படாமல், எதனையும் சோதனைக்குட்படுத்தி அறிவு வெளிச்சத்தில் அலசி ஏற்கின்றானோ அவனே சுதந்திர மனிதன்.
அறிவுக்களஞ்சியம் 22
 
 

நிலையான நினைவுகள்.
கல்லூரி என்னும் கலைப் பூங்காவில் கற்பிக்கும் ஆசிரியர் உள்ளங்களில் மலர்ந்து நிற்கும் மாணவர் முகங்கள் பல, அதே நேரத்தில் மாணவர் உள்ளத்தில் மலர்ந்து நிற்கும் ஆசிரியர் முகங்கள் பல, இந்த வகையில் சின்னணி சிறிய பராயத்திலிருந்தே கண்ணுக்கும் கருத்துககும் விருந்தாக ஒளி நிலவாக பாடசாலையில் வலம் வந்தவர் ஈழநாதனி என்பதை என்றும் மறக்க முடியாது.
இளங்கோ என்னும் செல்லப்பெயரால் அழைக்கப்பட்ட இவரது அறிவும் ஆற்றலும் பார்ப்பவரைக் கவரும் அழகான தோற்றமும் கூரிய பார்வையும் எதையும் ஆராய்ந்து விடைகாணத் துடிக்கும் தனிமையும் இடைவிடாது வாசிகளும் பழக்கமும் கருத்தாளம் மிக்க எழுத்தாற்றலும் எல்லாவற்றுக்கும் மேலாக இவரிடம் காணப்பட்ட இறைபக்தியும் என்றோ ஒரு காலம் இவர் உயர்நிலை அடைவார் என்பதை பறை சாற்றி நின்றன.
இன்று இவ்வளவு குறுகிய காலத்துக்குள் இவர் சாதனைகள் பல எனக் கேள்விப்பட்ட போது மிக மகிழ்ச்சியாக இருந்தது. பெற்றோருக்கு உற்ற பிள்ளையாக நல்ல சகோதரனாக காதல் மனையாளுக்கு ஏற்ற கணவனாக பச்சைப் பிள்ளைக்கு தந்தையாக உற்றார், உறவினர், நண்பர்களுக்கு வள்ளலாக இறைபணித் தொண்டனாக. இப்படியே முப்பத்தொரு வயதுக்குள் நினைத்துப் பெருமை அடைவதற்கு முன்பே எல்லோரையும் மீளாக் கவலையில் ஆழ்த்தி இறைகதி அடைந்துவிட்டார்.
அவரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திப்பதோடு அவரைச் சார்ந்தவர்களின் ஆறாக் கவலையை தாங்கக் கூடிய சக்தியை இறைவன் அருள வேண்டும் என்று வேண்டிக் கொள்வோமாக.
திரு.திருமதி.தில்லையம்பலம் (ஆசிரியர்)
அறிவுக்களஞ்சியம் 23

Page 18
என் நினைவில் நிறைந்த ஒர் ஒளிச்சுடர்
ஒளிர்ந்த சுடரொன்று திடீரென அணைந்தது ஏனோ? தாங்கமுடியவில்லையே! ஈழநாதனே நீ ஈழத்தில் உதித்த ஓர் சுடரெடா.
உடுப்பிட்டி அமெரிக்கனி மிஷன் கல்லூரியில் தரம் 1 தொடக்கம் க.பொ.த உயர்தரம் வரை உணர் கல்வியை தொடர்ந்தாயே. தரம 6 தொடக்கம் தரம் 1 வரை உனக்கு நான் வகுப்பாசிரியராக இருந்தேனே. நீயும் உன் சக தோழர்களும் திறமையுடையவர்களாய் திகழ்ந்த ஒரு வகுப்பு. ஆனால் நீ படிப்பில் மாத்திரமின்றி பிறபாடவிதானச் செயற்பாடுகளிலும் திறமையுள்ளவனாகத் திகழ்ந்தாயே, நீயே உன் சக மாணவர்களையும் வலுக்கட்டாயமாக பங்குபற்ற வைப்பாயே. நீயே வகுப்பினி மாணவதலைவன். ஏகமனதாய் தெரிவு செய்யப்படுவாயே. சக மாணவர்க்கு உன் மேல் ஒரு தனிமதிப்பு. அவர்களுக்கு நீ ஒரு சிறந்த நண்பனாகவும், ஆசிரியர்க்கு நீ ஒரு சிறந்த மாணவனாகவும் திகழ்ந்தாயே. பாடசாலை நிகழ்வுகள், போட்டிகள் என்று அனைத்திலும் பங்குபற்றி பரிசில்களையும் எல்லோரினது பாராட்டுக்களையும் பெற்றுக்கொண்டாயே. எடுத்த பொறுப்புகள் யாவற்றையும் திறம்பட செய்து முடிப்பாயே, உன் இறைபக்தியும் போற்றத்தக்கதே. இதற்கு, சமய நிகழ்வுகளில் உன் பங்கு, ஆலயத் தொண்டு, விரதங்கள் அதிலும் உன் மெளனவிரத அனுஷடிப்பு சாட்சி.
உன்னிடம் வாசிப்புப் பழக்கம் நிறைந்து காணப்பட்டது. இடைவேளை, ஆசிரியர்கள் வகுப்புக்கு சமூகமளிக்காத வேளை அம்புலிமாமா போன்ற கதைப்புத்தகங்கள் தொடக்கம் பல்வேறு கதைப்புத்தகங்கள் தொடக்கம் பல்வேறு பெரிய கதைப்புத்தகங்களும் உனக்கு பொழுது போக்கே. வகுப்புக்கு வெளியேயும் வராமல் வாசித்துக் கொண்டிருப்பாயே. இவ்வாசிப்புப் பழக்கம் எனக்கும் ஏனைய ஆசிரியர்களுக்கும் இடையூறாக இருக்கும். இதனால் தண்டனையும் பெறுவாய், புத்தகங்களும் பறிக்கப்படும். பாடசாலை நேரம் முடிந்ததும் என்னிடம் வநது புத்தகத்தை தரும்படி கெஞ்சுவாயே. அம்மழலை முகம் என் கண்ணில் தெரிகிறதெடா. ஒரு முறை லயன் கிளப்பின் செயற்பாடுகள், நன்மைகள் பற்றி கூறி அதில் இணைய ஆர்வம் உள்ளவர்கள் பெயரை தம்மிடம் பதிவு செய்யலாம் என கூறியபோது, உயர்தர மாணவர்கள் எவரும் முனிவராதபோதும், நீ முன் வந்து இணைந்து கொண்டாயே. இந் நிகழ்வும் இன்னும் என் கண்களில் நிழலாடுகிறது. இப்படி நீ எல்லாவற்றிலும் பங்குகொண்டு எல்லா விடயங்களையும் தெரிந்து கொள்ள வேண்டுமென ஆசையுள்ளவளாகவே இருந்தாய், செயற்பட்டாய்.
அறிவுக்களஞ்சியம் 24
 

க.பொ.த சாதாரணதரத்தில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்று க.பொ.த உயர்தரத்தில் உயிரியல் பிரிவில் கல்வியை தொடர்ந்தாய். உண்பால் ஏற்பட்ட தடுமாற்றம் ஒன்றின் காரணமாக உன் திறமை பாதிக்கப்பட்டது. க.பொ.த உயர்தர பெறுபேறாய் 3சி மாத்திரம் பெற்றாய். உன் சகமாணவர்கள் பலர் பொறியியல் துறைக்கும், வைத்தியத்துறைக்கும் தெரிவானார்கள். பெற்றோர், ஆசிரியர், எமக்கு உன்பெறுபேறு அதிர்ச்சிதானி. உன் வாழ்க்கையை நீயே தீர்மானித்ததால் வந்த விளைவு.
"பெறற மனம் பித்து பிள்ளை மனம் கல்லு" என்பது போல காணப்பட்டாலும் பெற்றோர் உன்னை அரவணைத்து கல்வியில் உயர வழிவகுத்தனர். இதற்கு கல்வியில் முன்னேற வேண்டும் என்ற உன் இலட்சியம் சற்றேனும் முடங்கவில்லை என்பதுதான் காரணம். சிங்கப்பூர் சென்றாய் கணித பாடத்துறையைக் கற்று ஒரு கணனிப் பொறியியலாளரானாய். உன் வாசிப்புப் பழக்கம் காரணமாக ஒரு எழுத்தாளனாய் கணனித் தளத்தில் வலம் வந்து உன்னை உலகறியச் செய்தாயே. குறுகிய காலத்தில் ஒரு புகழ் பூத்த தொழிலதிபருமானாயே. பொருளாதார நிலையிலும் உயர்ந்தாயே. பெருமை அடைகிறேன். இதைப் பகிர நீ இல்லையே துயருறுகிறேன்.
உன் குழந்தையின் நாற்பத்தோராம் நாள் வைபவத்தில் கலந்துகொள்ள ஊர் வந்து மீண்டும் திரும்பிச் சென்ற சில தினங்களில் உன் மரணம் சம்பவித்தது என அறிந்தேன். உன்னை நேரில் சந்திக்க முடியவில்லையே என்ற ஒருகுறை எனக்கு இன்னும் உண்டு. உன் நண்பர்களிடமும், தகப்பனாரிடமும் எல்லாம் கேட்டு அறிவேன். இப்போது நிரந்தரமாய் எங்களை பிரிந்துவிட்டாய். என் மத நம்பிக்கையின்படி நாம் ஒரு நாள் சந்திப்போம்.
எம்மவர்க்கு உன் மரணம் ஒரு கேள்விக் குறியாகவே உள்ளதெடா. சுகதேகியாகத்தானே இருந்தாய். வைத்தியசாலையிலும் படுத்திருந்தது இல்லையே. 31 வயதில், இவ் இளமைப்பருவத்தில் இறைவனடி சேரவேண்டும் என்பது இறைவன் சித்தம் போலும். பிறந்தவர் இறப்பது நியதி. இறப்பு எவ்வடிவிலும் வரலாம். உன் பிரிவால் துயருறும் பெற்றோர், மனைவி, சகோதரர்கள் மற்றும் யாபேரும் ஆறுதல் அடையவும், உன் ஆத்மா சாந்தியடையவும் இறைவனை பிராத்திப்பது தவிர எனக்கு வேறேதும் தோன்றவில்லை.
அன்புடன் நீ சொல்லும் சுட்டி ரீச்சர் திருமதி.இ.மகாரத்தினம்
அறிவுக்களஞ்சியம் 25

Page 19
இறந்தும் வாழும் ஈழநாதன்
பிளளைப் பிராயத்து கல்லூரி நாட்களிலேயே ஈழநாதனை நாணி அறிவேனி. துருதுருவென்ற 2s66 செயற்பாடும், ஆளுமையும், பேச்சுவனிமையும், கல்வியினிபால் கொண்ட வேட்கையும். உங்களைத் தெரியாதவர்கள் எங்கள் கல்லூரியிலேயே இல்லை.
கல்வியில் சாதனைகள் பல செய்தீர்கள். பரிசுகள் பல பெற்றீர்கள். கல்லூரிக் காலத்தில் பரிசு வாங்கவோ, ஆற்றுகைகளை அரங்கேற்றவோ நீங்கள் மேடையேறாத காலம் இல்லை. "நெல்லியடியில் இருந்து கொடிகாமம் சந்தை வரை". நீங்கள் அரங்கேற்றிய நாடகம் இன்னும் எம் மனதில் பசுமையாய்.
உயர்தரக் கல்வியில் விஞ்ஞான பிரிவு மாணவனாக எங்களிடம் கற்க வந்தபோது ஈழநாதனை நாம் முழுமையாக புரிந்து கொண்டோம். கள்ளம் கபடமற்ற வெளிப்படையான பேச்சும், குழந்தைத்தனமான சிரிப்பும் எல்லோரையும் கவர்ந்ததுவே. சிரேஷட மாணவர் தலைவனாக உங்களை தெரிவு செய்தபோது எவருமே இரண்டாம் வார்த்தை பேசவில்லையே. அந்தளவிற்கு சகல ஆசிரியர்களையும் உங்கள் பக்கம் ஈர்த்துக்கொண்ட நல்ல மாணவன் நீங்கள். குருபக்திக்கு இலக்கணமாக இருந்த ஈழநாதனி எமது கல்லூரித் தாயின் 666ieucul Peteor.
நண்பர்கள் குழாம் எப்போதுமே உங்களை நாடியிருக்கும். பெயருக்கேற்ற் கம்பீரமும் அன்பும் ஆதரவும் உங்களைச் சூழ எப்போதும் நட்பலைகள் வட்டமிட்டபடி இருக்கும். நண்பர்களின் நாவில் ஈழியாக உறவாடினிர்கள். நட்பின் இலக்கணம் நீங்கள்.
இறுதியாக 12 வருடங்களின் பின் உங்களை உங்கள் செல்லமகனின் 4வது நாளில் கண்டபோது உண்மையில் திகைத்துத்தான் போய்விட்டேன். நல்ல கணவனாக, தந்தையாக, பொறுப்பான மகனாகக் கண்டபோது பூரித்துத்தானி போய்விட்டேன் பொறுக்கவில்லை இறைவனுக்கே பறித்துவிட்டானி. கண்டவுடன் அன்புடன் ஒடி வந்து "எப்படி இருக்கிறீங்கள் ரீச்சர்” என்ற இண்சொல் இனினும் எண் காதில் ரீங்காரமாய். "எப்படி ரீச்சர் எனினுடைய மகனினி பெயர்? ஆர்வமாய்க் கேட்ட அந்தக் குழந்தை முகம் மறக்கமுடியவில்லையே. அன்பு மனைவி, ஆசை மகனி, அருகிருக்க என்னுடன் எடுத்த புகைப்படம் மட்டும் இன்று நிஜமாக... நாம் இத்தனை காலம் கண்ட ஈழநாதனி எங்கே?
அறிவுக்களஞ்சியம் 25

எங்களினி கல்லூரித் தாய்க்கு வேதனை மிகுந்த காலமிது. அவளது செல்லப் பிள்ளைகள் அடுத்தடுத்து உதிர்வதை அவளால் தாங்கமுடியுமா? ஈழநாதனி எமது கல்லூரியின் ஒவ்வொரு கல்லும் உங்கள் புகழ் கூறும். எமது கல்லூரி அன்னை இருகரம் நீட்டி உங்களை அணைக்கக் காத்திருக்கிறாள். மீண்டும் பிறந்து வாருங்கள் பாலனாய். அதுவரை இறைவனி பாதங்களில் அமைதி கொள்க.
எமது அணிபு மாணவனி ஈழநாதா. உங்கள் ஆத்மா சாந்தியடையவும், உங்கள் குடும்பத்தினரின் நெஞ்சில் அமைதி பிறக்கவும் இறைவனை வேண்டி நிற்கினிறேன்.
திருமதி. ஆனந்தி சிவகுமாரனி பெளதீகவியல் ஆசிரியர்
பகுதித் தலைவர் யா/உடுப்பிட்டி அமெரிக்கனி மிசன் கல்லூரி
உன் மனதிற்குள் இருக்கும் பாடலை அறிந்தவனே நண்பன். எப்போது நீ ஒரு சில வார்த்தைகளை மறக்கிறாயோ அப்போது உன் நண்பனி அந்த வார்த்தையை எடுத்துக் கொடுப்பானி.
நீ கவலையில் இருக்கும்போது, முத்தம், கடிதம், அனைத்தல் என எதுவும் தராத ஒரு நிம்மதியை உன் நண்பனது அமைதி தரும்.
சிறந்த நண்பனிதானி நமது நெருங்கிய உறவினன்.
புத்தகங்களும், நண்பர்களும் குறைவாக இருந்தாலும் சிறந்ததாக இருக்க வேண்டும்.
நட்பு நீ நிற்கும் போது உன்னை உற்சாகப்படுத்தி இயக்க வைக்கும், தனிமையை இனிமையாக்கும், தேடும்போது வழிகாட்டியாகும், கவலையை போக்கி சிரிக்க வைக்கும், மகிழ்ச்சியில் பாட்டு ப் பாடும்.
உண்மையான நண்பனை அறிவது மிகக் கடினம். உனக்கு சாமர்த்தியம் அதிகம். நீ என்னை அறிந்துள்ளாய்.
நண்பர்களுக்குள் மன்னிப்புக்கும், நன்றிக்கும் இடமில்லை.
அறிவுக்களஞ்சியம் 27

Page 20
காலதேவன் பாதையில் கலந்த ஈழநாதன்
கேம்பிரிஜ் கல்வி நிறுவனம் நாற்பதாண்டு கால வரலாற்றில் பன்முக ஆளுமைமிகு மாணவர்கள் பலரை உருவாக்கி நிமிர்ந்து நிலைபெற்று நிற்கிறது. ஒவ்வொரு காலத்திலும் நெஞ்சை விட்டகலாத நினைவுக்குரிய மாணவர்கள் எமது கலாசாலையில் கற்று வெளியேறுகின்றனர். அந்த வரிசையில் அமரர். புவனேந்திரன் ஈழநாதன் எங்கள் இதயங்களில் நிறைந்து ஏற்றமிகு ஆற்றலொடு கல்வி பயின்ற மாணவனாக மிளிர்ந்தார். 1994இல் தரம் 8 வகுப்பில் சேர்ந்தது முதலே அனைவரின் அன்புக்கும் உரித்தானவரானார். இனிமையான சுபாவமும், நற்பழக்க வழக்கங்களும் பொருத்தி, கலாசாலை ஒழுக்கக் கோவைக்கு அமைவாக கல்வி பயின்றார். அவரின் வசீகரமான வதனமும், குறும்பான குறுநகையும் அனைத்து ஆசிரியர்களையும் அதிகமாகவே கவர்ந்திழுத்தன. 1997 இல் க.பொ.த சாதாரண தரத் தேர்வினை பூர்த்தி செய்யும் வரை கனிவான நடத்தையோடு கலாசாலையின் கீர்த்தியை பேணும் வகையிலே செயலாற்றினார்.
சீரோடும் சிறப்போடும் நூற்றாண்டு வாழவேண்டிய உத்தம பண்புகளின் உறைவிடமான அமரரின் துன்பியல் செய்தி செவிகளில் விழுந்தபோது அதிர்ச்சியுற்றோம். காலத்தின் மூடுமர்மங்களை கட்டவிழக்கும் வீரியமற்று நியதிகளை ஏற்று நெஞ்சுருகி துயர்க்கடலில் மூழ்கினோம். சமூக விழுமியங்களை ஏற்கும் பண்பாளனாய், மாட்சிமைக்குரிய மாணவனாய, பெற்றோரின் கனவுகளைச் செதுக்கவல்ல மகனாய், நட்பினைக் கெளரவிக்கும் நண்பனாய் வாழ்ந்த அமரர் புவனேந்திரன் ஈழநாதனின் பிரிவு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும்.
நிர்வாகி கேம்பிரிஜ் கலாசாலை
இளமையில் கல்வியைப் புறக்கணித்தவன் இறந்த காலத்தை இழந்தவன் எதிர்கால வாழ்விலும் இறந்தவன்!
புதிதாக இருக்கும் நட்பு கரும்பு போன்றது. அதுவே உண்மையான நட்பாகும்போது சர்க்கரையாக இனிக்கிறது ஆனால் உனக்கொன்று தெரியுமா? அதுவே நீயாகும்போது நட்பு எனக்கு தேனாகிறது.
அறிவுக்களஞ்சியம் 28
 

மானுடம் போற்றிய மனிதா
அமரர் ஈழநாதனினி அகால மரணச் செய்தி கேட்டு மிகவும் அதிர்ச்சியடைந்தேனி. பல்வேறு இன்னல்கள் இழப்புகள் மத்தியில் தனது முயற்சியினால் படித்து பட்டம் பெற்று வாழ்க்கையில் உயர்வடைந்து வரும் வேளையில் இப்ப்டி ஒரு சோதனையா? முயற்சியாளனாக உருவெடுத்து மனிதனில் மாணிக்கம் போல வளர்ந்து வந்து தனக்கு கல்வி புகட்டிய ஆசிரியரிடத்து அடக்க ஒழுக்கத்துடன் ஒழுகி நல்லறிவை வழங்குவதே தனி கடன் என ஒழுகியவர். நிறைந்த பேச்சாற்றல் இயல்பாக அவரிடம் காணப்பட்டது. தனி மனதில் உள்ள எண்ணங்களையும் சிந்தனைகளையும் வெளிக்கொணரும் எழுத்தாற்றல் அவரிடம் மிகுந்து காணப்பட்டது. இத்திறன் வெளிநாடு சென்று படித்த வேளையில் பிரதிபலித்தது.
ஆற்றல், அன்பு, அறிவு ஆகிய மூன்று பகுதிகளும் மனிதனிடத்து அமைந்துள்ள தெய்வீக இயல்புகள் ஆகும் பேராற்றல் படைத்தவனி பெருவாழ்வுக்கு தகுதியுடையவனாகின்றார், அந்த ஆற்றல் மன உறுதியையும் செயல் வண்மையையும் உண்டுபண்ண வல்லதாகின்றது. வாழ்வுக்கு இனிமை" தருவது அணிபு, அறிவு மனிதனை மனிதனாக வாழச் செய்கின்றது. இம்மூன்றும் நிறைந்த ஒரு மனிதனே அமரர ஈழநாதன்.
தனி மனம் போல வாழ்க்கைத் துணையை அமைத்து இல்லறத்தை நல்லறமாக்கி தான் வாழும் சமுதாயத்தின் பொதுநலனுக்காக வாழ்ந்த அந்த நல்ல மனிதனை சமூகத்திலிருந்து கூறுபடுத்திவிட்டானி கூற்றுவார். அவர் எம்மை விட்டுப்பிரிந்தது எம் சமூகத்திற்கு ஒர் பேரிழப்பாகும். -
தவிசாளர் பொ.வியாகேசு வடமராட்சி தெற்கு மேற்கு இயக்குனர் பிரதேச சபை - Becon Study Centere கரவெட்டி வதிரி உடுப்பிட்டி
எனக்கு முனினாடி நடந்து செல்லாதே, உன்னை பின்பற்றி வர நான் விரும்பவில்லை, என் பின்னாடி நடந்து வராதே, உனக்கு முன்னோடியாக இருக்க விரும்பவில்லை, என்னுடனே நடந்து வா என் நண்பனாக.
அறிவுக்களஞ்சியம் 2g

Page 21
மனிதம் நிறைந்த மாமனிதன்
திரு.திருமதி. புவனேந்திரனி தம்பதிகளின் மூத்த புதல்வன் ஈழநாதன் (இளங்கோ) மறைந்த செய்தி எமக்கு மிகுந்த அதிர்ச்சியை தந்தது.
வாழும் வயதினிலே மனைவி, பிள்ளை, தாய், தந்தை, சகோதரர்கள், சுற்றம், நண்பர்கள் அனைவரையும் தவிக்கவிட்டு மீளாத் துயில் கொண்ட சம்பவம் உண்மைதான் என ஏற்றுக்கொள்ள மனம் மறுக்கிறது. அவரின் ஆஜானபாகுவான சிவந்த தோற்றமும், மனிதாபிமானம் மிக்க சிறந்த பண்பாட்டு விழுமியங்களும், அறிவுத் தெளிவு மிக்க உரையாடல்களும் மனக் கண் முன்னே நிழலாடுகின்றது. காலமெல்லாம் எமது பிள்ளைகளைக் கடலிலே பறிகொடுத்து கலங்கித் தவித்த வேளையிலே அவர்களின் நண்பனாக, சக மாணவனாக, அடிக்கடி எமைத் தேடிவந்து ஆறுதல் படுத்தியதை எண்ணுகிறேன்! தூரம்தான் கூடினாலும் துவிச்சக்கர வண்டியிலே வியர்த்துக் களைக்க அந்த நான்கு நண்பர்களினதும் வீடுகளுக்கும் வந்து உரையாடிச் செல்வதை நினைக்கிறேன். தனது நண்பர்களின் மறைவையிட்டு தானும் அடிக்கடி கணி கலங்கினாலும் எமக்கு ஆறுதலும், நம்பிக்கையும் தரும் வார்த்தைகளை கூறத் தவறாததை எண்ணுகின்றேன்.
அவருடைய மனிதநேயமும், பணிவும், அறிவுமுதிர்ச்சியும் அந்த மாணவப் பருவத்திலேயே எம்மை வியப்படைய வைத்தது. அவருக்குக் கல்வி கற்பித்த ஆசிரியர்களும் அவரது ஆழுமைத் திறமையைப் பற்றி புகழ்ந்து கூறியதும் நினைவில் வருகின்றது. - -
உண்மையிலேயே "கருவில் திருவுடையார்” என்ற கூற்றுக்குப் பொருத்தமான பிள்ளை இவன்! அதுதான் இறைவனும் தனது சேவைக்காக குறை வயதிலேயே தன்னிடம் அழைத்துக் கொணடான் போலும்.
புலமைப் பரிசில் பெற்ற மாணவனாக சிங்கப்பூர் சென்று கற்ற கல்வியின் உற்ற விளைவாக இந்தச் சிறிய வயதிலேயே ஒரு தொழில் அதிபராக வளர்ச்சி கண்டு அதன் பயனை அறுவடை செய்ய வேண்டிய நேரத்திலே விதியின் விளையாட்டில் பலியாகிவிட்டதை எவர்தானி ஜீரணிப்பார். எமது மகனின் நண்பனாக எமக்கறிமுகமாகி இருந்தாலும், நாம் இடருற்றிருந்த காலத்தில் எமக்கும் நண்பனாக, பிள்ளையாக, நல்லாசானாக, தந்தையாக இருந்து எமது கண்ணிரைத் துடைத்த அன்புள்ளம் இன்று இல்லையே! அவர் தம் உற்றவருக்கு ஆறுதல் கூறவும் வார்த்தையில்லையே!!
அறிவுக்களஞ்சியம் 30
 

பரிவினால் அதிர்ச்சியுற்றிருக்கும் அவரது மனைவி, குழந்தை, தாய், தந்தை, சகோதர, சகோதரிகள், உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் இத்துயரில் இருந்து விடுபட இயலாவிட்டாலும் அதைத் தாங்கும் சக்தியையாவது எல்லாம் வல்ல இறையருள் தரவேண்டும். என மன்றாடி அமரரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிராத்திக்கின்றேனர். گھر
"தக்கார் தகவிலர் என்பது அவர் தம் எச்சத்தால் பெறப்படும்"
ஒம் சாந்தி ஒம் சாந்தி ஒம் சாந்தி!
வீ.சி.குகநாதன் (ஒய்வுபெற்ற வங்கி முகாமையாளர்)
சான்றோனி ஆக்காத கல்வி சாமர்ததியமாய்க் கழித்த சோம்பலேயாகும்!
தனிமனிதர் வாழ்வை இன்பமுடையதாகவும் நன்மையுடையதாகவும் மாற்றி அமைப்பதும் வாழ்வாங்கு வாழ வழி வகுப்பதுமே கல்வி!
ஒரு குழந்தை கனவானாகவோ, சீமாட்டியாகவோ இருக்கும்படி செய்வது கல்வியல்ல நல்ல மனிதனாக இருக்கச் செய்வதே கல்வி!
கற்காமல் இருப்பதைவிட பிறககாமல் இருப்பதே நல்லது ஏனெனில் அறியாமைதானி தீவினையின் மூலவேர்!
கல்வி ஒரு மூட்டை நூல்களை வாசிப்பது அன்று அடக்கம், ஒழுங்கு, அறம், நீதி இவற்றின் முன்மாதிரியாகும்
ஒழுக்கம் உண்டாக்காத இலக்கியக் கல்வியால் ஒருவித உபயோகமும் கிடையாது!
முக்கியமான மூன்று விஷயங்களில் நாம் நம்மை அர்ப்பணித்துக் கொள்ள வேண்டும் அவை பொது ஒழுக்கம், முனினேற்றத்தில் சிரத்தை, சிந்தனையில் மகத்தான புரட்சி என்பனவாகும்.
அறிவுக்களஞ்சியம் 31

Page 22
அன்புள்ள புவனேந்திரன் ஈழநாதன்
எல்லோராலும் இளங்கோ என அழைக்கப்படும் அமரர் பு:ஈழநாதன் எனது அன்புக்கும் பாசத்திற்கும் மதிப்புக்குமுரிய மருமகனாக வாழ்ந்தார்.
அவர் தனது கல்வியை உயர்தர வகுப்பு வரை உடுப்பிட்டி அ.மி கல்லூரியில் கற்று புலமைப்பரிசில் ஒன்றினூடாக சிங்கப்பூரில் பொறியியல் கல்வி கற்று அத் துறையில் தகமை பெற்று அந்நாட்டில் வேலைவாய்ப்பும் பிரஜாவுரிமையும் பெற்று விரும்பி இருந்தவரையே தனது வாழ்க்கைத் துணையாக்கி தமக்கென ஒரு ஆண் வாரிசு ஒன்றையும் பெற்று மிக இளம் வயதிலேயே நிறை வாழ்வு வாழ்ந்துள்ளார்.
கல்லூரியில் கல்விகற்கும் பராயத்தில் தமிழ், ஆங்கிலம் ஆகிய இருமொழிகளிலும் பேசவும் எழுதவும் திறமை பெற்று இருந்தார், இதனால் பல்வேறு கல்லூரி போட்டிகளிலும் மாவட்ட மாகாண போட்டிகளிலும் கலந்து கொணடு தனது ஆற்றலை வெளிக்காட்டி வந்தார். சிறுகதை, நாவல் இலக்கியங்கள் எதனைக் கண்டாலும் விரும்பி வாசிப்பதில் ஆர்வமுடையவர். குறைந்த நேரத்தில் நூல்களில் உள்ள கூடிய பக்கங்களை கிரகித்து வாசிக்கும் ஆற்றல் உள்ளவராக விளங்கினார்.
ஆலய வணக்கம் ஆலய தொண்டுகளில் மிகுந்த ஈடுபாடு கொண்டிருநததுடன் தேவார திருவாசகம் உள்ளிட்ட பஞ்சபுராணங்களில் தேர்ச்சியும் எந்த ஆலயங்களிலும் எச் சந்தர்ப்பங்களிலும் அவற்றை ஒதக்கூடியவராக விளங்கினார். சமயபுராணங்கள் இதிகாசங்களை வழுவின்றி படிப்பதுடன் அவற்றிற்கான விளக்கவுரைகளையும் கற்றறிந்தவர்களினால் ஏற்கக்கூடிய வகையில் சொல்லக்கூடியவராகவும் விளங்கினார்.
இனிமையாகப் பேசி அன்பாகப் பழகும் சுபாவத்தினால் கற்றறிந்த பலரை நண்பர்களாகப் பெற்றிருந்தார். - தானி வாழ்ந்த காலத்தில் தனக்கும் தனது குடும்பத்திற்கும் தானி பிறந்த ஊருக்கும் பெருமைதரக் கூடிய வகையில் வாழ்ந்து பெற்றோருக்கும் உற்றாருக்கும் குடும்பத்தினருக்கும் பெருமைசேரத்த பு:ஈழநாதனின் ஆத்மா சாந்தியடைய வேண்டுமென அவரது குலதெய்வம் கற்பகப் பிள்ளையாரை பிராத்திக்கிறேன்.
நா.மகேந்திரன
அறிவுக்களஞ்சியம் 32
 

இதயத்துடிப்படங்குதெடா ஈழநாதா உணர் பிரிவால் நாற்பத்தைந்தாம் நாளதுவில் நகரும் உன் நினைவுகளில் பள்ளிப் பருவத்து பசுமைகளில் - எம் நெஞ்சை உறுத்திடவே பாடசாலை வாசலும் வகுப்பறையும் மட்டுமல்ல தனியார் கல்வி கூடமும் தாவி உதிக்குதடா நெஞ்சமதில் கதிரை மேசையைக் கேள் கனிரீன் கதவுகளைக் கேள் நீ அலங்கரித்த பரிசளிப்பு விழா மேடையைக் கேள் விளையாட்டு மைதானத்தைக் கேள் நாம் ஒடித்திரிந்த வயல் வெளிகளைக் கேள் உலாவிய தெரு வீதிகளைக் கேள் அத்தனையும் சொல்லுமெடா - நீ பிரிந்த வேதனையை எப்போதும் எம்மருகே நின்றவனே கை கொட்டிச் சிரித்தவனே - உன் நினைவு எம்முடனிருக்க நீ மட்டும் எங்கு சென்றாய். ஈழி என்று நாம் அழைத்தாள் இன் முகம் கொண்டவனே - நீ இல்லை என்று நாமழவே எங்கு சென்றாய் ஓ நீ போற்றி வணங்கிய இறைவனடி சேர்ந்தாயா ஈழநாதா! நாதனோடு இணைந்திருப்பாய் - உன் ஆத்மா சாந்தியடையப் பிரார்த்திக்கும்
அறிவுக்களஞ்சியம் 33
நண்பர்கள் அமெரிக்கன் மிசன் கல்லூரி

Page 23
| |
| |
|
மலர்வு 2 Arag
20 30 警 事
08 09
豪 拳
1981 20篡念
2D sits U62,660.55g air seggsgjali ஈழம் தந்த ஈழவனே ஈழநாதா ஈழமணித் திருநாட்டின் சிரசென ஒளிரும் ஈகை நிறை உடுப்பிட்டிங் பதிதனில் Lurrňr Garryðggab LIMETERBarDaØTT-Tui பல் துறை நிபுணனாய் இலங்கவென - அவதரித்தாய் தனக்கெனத் தனி மெருகோடு மிளிரும்
களிப்புடனே உண் வளர்ச்சி கண்டு உள்ளக் களிப்புடனே உண்ணை வாழ்த்த உண்ண்தமாய் உயர்ந்த பல பெறுபேறு பெற்றாய் புலமை முதல் க.பொ.த உயர்தரம் வரை புதிய பல சாதனைகள் நீ படைத்தாய் பெற்றவரும் உற்றவரும் பெருமை கொண்டு நிற்கையிலே அந்நிய தேசமதில் அடியெடுத்து வைத்து அரும் பெரும் சாதனைகள் நீ படைத்த வேளையிலே கானுைம் உண்ணைக் கவர்ந்தனனோ கண்கலங்கி நிலை தளர்ந்து வாடுகின்றோம் மீண்டும் உண் துடிப்போடு கூடிய திருமுகம் காண துடிக்கின்றோம்
மீளத் துயரில் மூழ்கித் தவிக்கும் உண் நண்பர்கள். நண்பர்கள் 2000 A/L Batch உடுப்பிட்டி அமெரிக்கண் மிஷன் கல்லூரி
அறிவுக்களஞ்சியம் 34
 
 
 
 
 
 

அறிவுக்களஞ்சியம் gg

Page 24
ஈழி அண்ணா, ஈரவிழிகளுடன் நாம்.
... " န္တိဖို့ * 發羲
სიგაშიც:
2O.O6.98
SID). Jodorja EUDI56
30.09.2012
(பொறியியலாளர், எழுத்தாளர் பழைய மாணவன் உடுப்பிட்டி அமெரிக்கன் மிஷன் கல்லூரி)
நற் துக்கிறது எம் உள்ளம்- உம் பிரிவு Usäsở Ugarsje Evës ; 0505580S ESTESTö. ாத்திரங்களுக்கு ஒரு நீர் ஈத்த நாடகங்கள் எத்தனை. எத்தனை. ug:Lagogieřůerů. osašigu peřeroritů. இத்தனையும் எம் ஒருத்சு நக்கலில்லை. நீர் மறைந்து விரே அண்ணா
உம் எழுத்தாற்றல் உலகறிந்து உம் புகழ் பரவியபோது முதல் ரசிகர்கள் "ே என இதுறந்திருந்தோம் - இப்போது உம் முறைச் செய்தி உலகறிந்தபோது. கண்ணீர் வந்தியோலிட்டது சண்.ை
வாழ்வின் தடைக்கந்களைப் பழக்கற்காக்கினி தொழில்சார் திறயுைலும், எழுத்துப் புலையுர splittöggupta5 ODEŠĖ. காதலுடன் கைப்பித்த காரிகையை காரீருளில் லிட்டுச் சஜீரேசின்னா,
ஆதம் உல
ஜிசின்ன என நம் சிழைத்தோம். ஈழவர் இளங்கே ஜப்பாளிகள் சிலழத்தர் அப்பா என ஆதிரன் அழைக்கும் குரல் முேன். இழை விடுச் சதுர் சிண்.
நத்ர் வாழ் ப்ே பால். நல்வர்க்கு மிேல்லை போது, இது காலனின் நீ களின் தீப்பா ஒற் துக்கீந்து ஏற் உள்ளம் - உம் பிரீவை. இப் பூமி உள்: உம்புகழ் வாழும். Grb PatsRE PÈ OBSSR singö.
என்றும் உம் நினைவுகளையும்
வலிகளையும் சுமந்தபடி பள்ளித் தோழர்கள். உடுப்பிட்டி அமெரிக்கன்மிக்ஷன் கல்லூரி
 

www.noolaham.org
NXAAM
&{}{}AfrțX
நூலகத் திட்டத்தின் தொடக்க உறுப்பினர்களுள் ஒருவரும் நூலக நிறுவனத்தின் முக்கிய பங்களிப்பாளருமான புவனேந்திரன் ஈழநாதனி அவர்கள் 30.09.2012 அன்று அகால மரணமடைந்ததை முன்னிட்டு நூலக நிறுவனம் தனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றது.
நூலகத் திட்டம் ஆரம்பிக்கப்பட்ட காலத்திலிருந்து நூலகத்தின் செயற்பாடுகளில் பங்கு கொண்டு தனது உழைப்பைச் செலுத்தியவர் ஈழநாதன் அவர்கள். மிகச் சிறிய அளவிலிருந்த நூலகத் திட்டத்துக்கு வளங்களைத் திரட்டியும் பெருமளவு பங்களிப்பாளர்களை இணைத்தும் அதன் செயற்பாடுகளைச் சாத்தியமாக்கியவர் ஈழநாதன். அவரது பங்களிப்பு கிடைக்காது போயிருந்தால் நூலகத் திட்டமானது கொள்கையளவிலேயே நின்று போயிருக்கக் கூடும்.
நூலகத்திற்கான முதலாவது வழங்கி, முதல் நிதிப் பங்களிப்பு போன்றவற்றை வழங்கியதுடன் நூலகத்தினை ஈழத்தமிழர்கள் வாழுமிடங்களுக்குக் கொண்டு சென்று சேர்த்தமையும் நூலகத்திற்கு உலகெங்குமிருந்து புலம்பெயர் தமிழர்களுடைய பங்களிப்பைக் கொண்டு வநது சேர்த்தமையும் ஈழநாதனது முக்கிய பங்களிப்புக்களாகும். இன்றும் கூட ஈழநாதன் வாங்கியளித்த வழங்கியிலேயே நூலகம் இயங்குகிறது. நூலகம் தொடர்பான திட்டமிடல், உரையாடல்களிலும் முக்கிய பங்களித்த ஈழநாதன் நூலகத் திட்டம் 2008 இல் நூலக நிறுவனமாக இயங்கத் தொடங்கியபோது முதலாவது அறங்காவலர் சபையிலும் இடம்பெற்றுப் பங்களித்தார்.
ஈழத்தமிழர்களுடைய வாழ்வியல் முழுமையாக ஆவணப்படுத்தப்பட வேண்டும் என்பதிலும் ஈழத்தமிழ் ஆளுமைகள் வரலாற்றில் அழிந்து போகாமல் பாதுகாக்க வேண்டும் என்பதிலும் மிகப்பெரும் ஆர்வத்துடன் செயற்பட்டு வந்தார். பல்வேறு ஆவணவியலாளர்களுடன் தொடர்புகளைப பேணி அவர்களுக்குச் சகல விதங்களிலும் உதவி வந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இறுதியாக, சிங்கப்பூரில் நூலகத்திற்கான அலகொண்றைத் தொடங்கி ஈழத்தமிழர்களுடைய வாழ்வியலைப் பதிவு செய்ய வேண்டும் என்ற முயற்சியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டிருந்தார். அதுமட்டுமன்றி, சிங்கப்பூர் தேசிய நூலகத்தில் உள்ள ஈழத்தமிழர்களுடன் தொடர்புடைய ஆவணங்களை பெற்று ஒழுங்குபடுத்துவதோடு ஆவணப்படுத்தித் திறந்த அணுக்கத்திற்குக் கொண்டுவர வேண்டும் எண்பதிலும் ஆர்வமாக இருந்தார் அதற்கான ஆரம்பகட்ட முயற்சிகளிலும் ஈடுபட்டிருந்தார்.
அறிவுக்களஞ்சியம் 37

Page 25
இவ்வேளையில் அவர் •ᏋᎳᏯᏁᎱ6ᏓᏪ மரணமடைந்திருப்பது நூலகத்திற்கு ஆவணப்படுத்தல், நூலகவியல் சார்ந்த செயற்பாட்டாளர்களுக்கும் பேரிழப்பாகு நூலகம் அவருக்கான அஞ்சலியைத் தெரிவிக்கும் நேரத்தில் அவருடை விருப்பங்களையும் கனவுகளையும் நிறைவேற்றுவதற்கு உறுதி பூண்டுள்ளது.
தன்னைத் தானே ஆளாதவனி தனக்குத் தானே பகைவனி.
உழைப்பும், நேர்மையும் உயர்வுக்கு வழிகள்.
உழைப்பால் உடல் நலமும், உடல் நலத்தால் உள்ள நிறைவும் உண்டாகும்.
முடியாதது என்று எதுவும் இல்லை. ஆனால் எல்லாமே சுலபமாக
சலித்துக் கொள்பவன் ஒவ்வொரு வாய்ப்பிலும் உள்ள ஆபத்தைப் பார்க்கிறான். சாதிப்பவன் ஒவ்வொரு ஆபத்திலும் உள்ள வாய்ப்பினைப் பார்க்கிறானர்!
ஒரு செயல்வீரனைப் போல சிந்தனை செய், ஒரு சிந்தனாவாதியைப் போல செய்லபடு!
ந செய்யும் காரியம் தவறாகும் போது, நீ நடக்கும் பாதை கரடு முரடாய் தோன்றும் போது, உன் கையிருப்பு குறைந்து கடன் அதிகமாகும் போது, உன் கவலைகள் உண்னை அழுத்தும் போது, அவசியமானால் ஒய்வெடுத்து கொள். ஆனால் ஒருபோது மனம் தளராதே.
அறிவுக்களஞ்சியம் 38
 

இலக்கணாவத்தை மக்கள் ஒன்றியம் - கனடா
எங்களுர் உறவான, எங்களுருக்கு பெருமைகள் பல தேடித்தந்த உயிரான அமரர் "இளங்கோ" அவர்களை இழந்து எங்களுர் மக்கள் மட்டுமனர்றி சகல தரப்பினரும் தவிப்பதை பார்க்கின்றபோது "இளங்கோ" அவர்கள் பலர் மனதிலும் எவ்வளவிற்கு இடம் பிடித்துள்ளார் என்பதை அறிய முடிகின்றது.
சிறிய விடயமானாலும் தாங்கள் பெரிதாகவே சாதித்துவிட்டதாக மார்பு தட்டும் அல்லது பிதற்றிக் கொள்ளும் இந்த உலகினிலே சாதித்த விடயங்கள் முக்கியமாக எழுத்துத் துறையில், இலக்கியத் துறையில் எண்ணிக்கையில் அடங்கா, வார்த்தைகளில் அடக்க முடியாத விடயங்களை செய்துவிட்டு ஒன்றுமே தெரியாதவர்கள் மாதிரி ஒன்றுமே செய்யாதவர்கள் மாதிரி அடக்கமாக அமைதியாக வாழ்ந்து காட்டிய ஒரு செயல்வீரனி எங்களை விட்டு பிரிந்து விட்டான்.
இளங்கோவின் இழப்பு எங்கலுரைப் பொறுத்தவரை நிவர்த்தி செய்யமுடியாத பேரிழப்பாகவே நோக்க வேண்டியுள்ளது.
எங்கலுரைப் பொறுத்தவரை இளங்கோவின் வாழ்வு என்பது எதிர்கால சந்ததியினருக்கு ஒரு பாடப்புத்தகமாக, ஒரு அகராதியாகவே கணிக்க முடிகின்றது.
நல்ல விடயங்களை செய்கின்றவர்களையும், மதிக்க வேண்டியவர்களையும் இழிவு படுத்துவதே தங்களது பொழுதுபோக்கு நோக்காக கொண்டு இணையத்தளங்களில் மறுபெயர்களில் பதிவுகளை(தூற்றி) இட்டுவரும் இந்த சமூகத்திலே வாழ்க்கை என்றால் இதுதான், வாழ்ந்தால் இப்படித்தான் வாழவேண்டும் என்று செயலில் காட்டிய செயல்வீரன் இளங்கோ” எங்களை விட்டகன்று விட்டான்.
யாழ்கருத்துக்களத்தில் "ஈழவன்” என்ற பெயரில் இணைந்திருந்த அவரின் படைப்புக்கள் ஆகா என்று வாயைப் பிளக்கும் அளவிற்கு வியப்பைத் தருகின்றன.
2007ம் ஆண்டில் யாழ்கருத்துக்களத்தில் "வல்வைமைந்தன்” என்ற பெயரில் இணைந்திருந்த எனக்கு இவர் தான் அது என்று நேற்றுததானி அறிய முடிந்தது.
சில வருடங்களிற்கு முன்பு எனது பெயரை "வல்வை லிங்கம்” என்று மாற்றம் செய்து "நான் பிறந்த ஊர் இலக்கணாவத்தை" என்ற தலைப்பில் ஒரு நெடிய கட்டுரையை வரைந்திருந்தபோதும் கூட இவர் எனக்கு தனினை அடையாளம்
அறிவுக்களஞ்சியம் 3g

Page 26
காட்டவே இல்லை அந்தளவிற்கு தன்னை அடையாளம் காட்டுவதை விட செயலிலையே கணினும் கருத்துமாக இருந்துள்ளார்.
இனிறும் நேற்றும் "யாழ்கருத்துக்களம்” சென்றிருந்தபோது இளங்கோவினி” இழப்பின் பாதிப்பினை அனைத்து உறுப்பினர்களின் புலம்பல்கள் வெளிப்படுத்தயிருந்தன.
அமரர் "இளங்கோ" அவர்களை இழந்து தவிக்கும் குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் அனைவரினதும் சோகத்தில் "இலக்கணாவத்தை மக்கள் ஒன்றியம் கனடா" பங்கெடுப்பதுடன் அணினாரின் ஆத்மா சாந்திக்காக பிரார்த்திக்கின்றது.
ஓம் சாந்தி !
இலக்கணாவத்தை மக்கள் ஒன்றியம் கனடா சார்பில் திரு.லிங்கம் முத்து
உங்களுக்குப் பின்னால் நின்று கூடிப் பேசுபவர்களைப் பற்றிக் கவலைப் பட வேண்டாம். கொஞ்சம் வித்தியாசமாக எண்ணிப் பாருங்களேன்! நீங்கள், அவர்களுக்கு 2 அடி முன்னால் இருக்கிறீர்கள், இல்லையா? பெருமைப் பட்டுக் கொள்ளுங்கள்.
OOO
உனக்கு ஒரே நண்பனி நீயே, ஒரே பகைவனும் நீயே, உன்னைத் தவிர பகைவனும் இல்லை, நண்பனும் இல்லை
இயற்கை தனி வழியிலேயே செல்லும், அடக்குதல் என்ன செய்யும்.
OOO
அறிவு மவுனத்தை கற்றுத் தரும், அன்பு பேசக் கற்றுத் தரும். ン
அறிவுக்களஞ்சியம் 40

ஈழன்; சமூகம் தொலைத்த மனிதர் - லதா
திங்கடகிழமை பிற்பகலில் ஆஸ்திரேலியாவிலிருந்து ஒரு நண்பர் அழைத்துக் கேட்டார். ஈழநாதன் இறந்து விட்டாராமே உண்மையா என்று. எனக்கு ஒரு கணம் எதுவும் புரியவில்லை. நீண்ட காலத்துக்குப் பின்னர் அந்த நண்பர் அழைத்திருந்தார். முதலில் அந்த நண்பரை அடையாளம் கண்டுகொள்ளவே சில கணங்கள் ஆனது. அதன்பிறகு அவர் சொன்ன விஷயத்தை உள்வாங்க மேலும் சில கணங்கள் ஆனது. மூளை வேலை செய்வதற்குள் அவரின் அடுத்த கேள்வி என்ன நடந்தது?
விசாரித்துச் சொல்கிறேன் என்று அவரிடம் கூறி விட்டாலும், யாரிடம் கேட்பது, எப்படிக் கேட்பது என்று தெரியவில்லை.
ஈழநாதனை நேரில் பார்த்து பல ஆண்டுகள் ஆகின்றன. அவருடன் போனில் பேசி ஒராண்டுக்கும் மேலிருக்கும். இதில் அவரைத் தெரிந்தவர்களை எங்கே தேடுவது என்று புரியவில்லை. நட்பைப் போற்றவும் நலம் விசாரித்துக் கொள்ளவும் பொழுதில் இடமில்லை. தொடர்பில் இல்லாததால் தொலைபேசி எண்களும் காணாமல் போயிருந்தன.
ஈழநாதனின் நண்ப்ரும் மக்கள் பிணைப்பாளராக அரிய பணி செய்து வருபவருமான சாந்தன் உதவினார். ஈழநாதனின் நண்பர்கள் தொலைபேசி எண்களைத் தந்தார்.
கவிஞர், கட்டுரையாளர், சிந்தனையாளர், தமிழ் மொழி - சமூகத்தின் மீது அக்கறை கொண்ட ஆற்றலும் துடிப்பும் உழைப்பும் மிக்க இளையர் - ஈழநாதன்.
ஈழநாதன் யாழ்ப்பாணம் வடமராட்சியைச் சேர்ந்தவர். அவரது சொந்த ஊர் உடுப்பிட்டி, இலக்கணாவத்தை. சிங்கப்பூர் தெமாசெக் பலதுறைத் தொழில்நுட்பக் கல்லூரியில் படிப்பதற்கு கல்வி உபகாரச் சம்பளம் பெற்று 20 வயதில் 2001ஆம் ஆண்டு சிங்கப்பூருக்கு வந்தார்.
வந்த நாள் முதலே சிங்கப்பூருடனும் இங்கு வாழும் தமிழ்ச் சமூகத்துடனும் தம்மைப பிணைத்துக்கொண்டார். சொல்லப்போனால், இங்கு வாழும் சமூகத்துடன் புதிதாகக் குடிபுகுந்தவர்களை ஒன்றிணைப்பதில் அவர் ஒரு பாலமாகவே விளங்கினார். இலக்கிய நிகழ்ச்சியொன்றில் ஈழநாதன் அறிமுகமானபோது, அவர் என்னை அறிந்து வைத்திருந்தார். என்னை மட்டுமல்ல, தமிழ் உலகில் - இலக்கியம்
அறிவுக்களஞ்சியம் 41

Page 27
சார்நதோ, அரசியல் சார்ந்தோ, சமூகப் பணி தொடர்பாகவோ எந்த வகையிலாவது ஒரு துரும்பை அசைப்பவராக இருந்தாலும் அவரை ஈழநாதன் அறிந்து வைத்திருந்தார். அவர்கள் உலகெங்கினி எந்த மூலையில் இருந்தாலும்.
வலைப் பூக்களும் வலைப் பக்கங்களும் முகிழ்க்கத் தொடங்கியிருந்த 2000ஆம் ஆண்டின் தொடக்க காலம். தமிழ் வலைப் பூ, வலைப் பக்கங்களில் ஈழனி மிகுந்த ஈடுபாடு காட்டினார். நிறைய எழுதியதோடு, மற்றவர்களையும் எழுத ஊக்குவித்தார். பெரும்பாலும் எல்லா தமிழ் வலைப் பதிவுகளிலும் ஈழனின் பின்னூட்டங்கள் இருக்கும். எப்படித்தான் அவருக்கு நேரம் கிடைத்ததோ. எல்லாவற்றையும் வாசித்து, எல்லாவற்றிலும் ஈடுபாடு காட்டி, எல்லாருடனும் நட்புக் கொண்டாடி. நினைத்துப் பார்த்தாலே பிரமிப்பாக இருக்கிறது. மிகச் சிறு வயதிலேயே அவருக்கிருந்த பரந்த வாசிப்பும் அனுபவங்களும் தொடர்புகளும். முழுதாக அறிந்தவர்களுக்கு மலைப்பை ஏற்படுத்தும்.
பெரும் அறிஞர்கள் விவாதிக்கும் கூட்டமாக இருக்கட்டும். சாதாரண தொழிலாளர்களின் சிறிய ஒன்றுகூடலாக இருக்கட்டும் அனைத்து நிகழ்வுகளிலும் கலந்துகொண்டு தமது ஆதரவை அளிப்பார். நாற்காலி தூக்கி அடுக்குவார். விவாதங்களில் பங்கேற்பார். தேவைப்படுவோருக்குப் பொருளுதவியும் செய்வார்.
ஈழத்திலும் ஈழத்துத் தமிழ் மொழி - இலக்கியத்திலும் தீவிரமான பற்றும் ஈடுபாடும் கொண்டிருந்தபோதும் ஈழனிடம் பேதம் இருந்ததில்லை.
தமிழ் நாட்டிலிருந்து வந்தவரையும் ஈழத்தவரையும் வேறு நாடுகளில் இருந்து வந்தவரையும் அவர் பிரபலமானவராக இருந்தாலும் சாதாரணமானவராக இருந்தாலும், உள்ளார்ந்த அனிபோடு கவனிப்பார். தனது வேலைகளையும் போட்டுவிட்டு, அவர்களுடன் நேரம் செலவிட்டு ஊர் சுற்றிக் காட்டுவார். அவர்களது நிகழ்ச்சிகளில் பங்குகொள்வார்.
தமிழ் மொழி - இலக்கியத்தின் மீது ஈழனுக்கிருந்த வாஞ்சை அபராமானது. எல்லைகள் இல்லாதது. மொழி தொடர்பாக, எங்கு என்ன முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டாலும் அதை அவர் அறிந்திருந்திருப்பார்.
பக்கத்து நாடான மலேசியாவில், மாற்றுக் கருத்துடன் புதிய வேகத்துடன் இளைய தலைமுறைப் படைப்புகள் வெளிவரத் தொடங்கியபோதே, மோப்பம் பிடித்து பலருக்கும் பறை சாற்றியவர் ஈழனி. காதல்' இலக்கிய இதழ் வெளிவந்தபோது
அறிவுக்களஞ்சியம் 42

அதை சிங்கப்பூருக்கு எடுத்து வந்ததுடன், அவர்களை இங்கு அழைத்து வந்து அரிமுக நிகழ்ச்சியும் ஏற்பாடு செய்தார். இங்கு சந்தாதாரர்களை ஏற்படுத்தினார்.
பக்கத்தில் வாழும் நாம் தெரிந்துகொள்ளாமல் இருந்ததை, எங்கோ இருந்து வந்த இவர் முகர்ந்து, மணம் பரப்புகிறாரே என வெட்கமாக இருந்தது. இந்த "காதல்" குழுவினர்தான் இப்போது "வல்லினம்" இணைய இதழை நடத்துகின்றனர். இவர்கள் சிங்கப்பூருக்கு அறிமுகமானது ஈழன மூலம்தானி.
அவர்களது ஆரம்ப எழுத்துகளைப் பார்த்து, "தனித்துவம் பெரிதாக இல்லையே” என்றபோது, "இல்லையக்கா, அவர்களிடம் வேகமும் ஆர்வமும் இருக்கு. வித்தியாசமாக இருக்கிறார்கள். வாசிக்கிறார்கள். பாருங்கோ பெரிசா வருவார்கள்,” எனிறார்.
சிங்கப்பூரிலும் இணைய உலகத்திலும் புதிதாக எழுதத் தொடங்கியவர்கள், ஆரம்ப அடியெடுப்பவர்கள் பலருக்கும் ஊக்கமூட்டுபவராக ஈழனைப் பார்த்திருக்கிறேனர்.
எப்போதும் சிரித்த முகத்துடனே இருக்கும் ஈழனிடம் எனக்கு மிகப் பிடித்த விஷயம், அவரது ஆரோக்கியமான சிந்தனை. அவர் யாரையும் குறை சொல்லிப் பேசி நான் கேட்டதில்லை. கோஷடிப் பூசல்கள், குழு சர்ச்சைகளில் பங்கேற்க மாட்டார். ஏதாவது சர்ச்சை பற்றிக் கேட்டால், அதேனி நமக்கு என்பார். எல்லாரையும் பற்றியும் நல்ல விஷயங்களையே பேசுவார். புறம்பேசி நான் அறிந்ததில்லை. தவறான பேச்சுகள் அவர் காதில் விழுந்திருந்தாலும் அது பற்றிப் பேசவே மாட்டார்.
ஆனால், இணையத்தில் புனை பெயரில் எழுதுபவர்களையெல்லாம் அவருக்குத் தெரியும். ஏதோ ஒரு தளத்தில், ஒரு பின்னுட்டத்தை எழுதுபவரையும் அடையாளம் கண்டு விடுவார். இருந்தும் எவரையும் நோகச் செய்ததில்லை.
உலகெங்கும் பலரை அறிந்திருந்த ஈழனி, மனிதர்களை நேசித்தார். ஒருமுறை அவர் நண்பர் ஒருவர் தொழில் விஷயத்தில் அவரை ஏமாற்றி விட்டார். அது பற்றி வேறொருவர் மூலம் எனக்குத் தெரிய வந்து, ஈழனிடம் கேட்டபோது, "பரவாயில்லை, அவனும் கஷடப்படுகிறான். அவனுக்கு வேறு எதுவும் செய்வதும் சிரமம். அதை விடுவோம்," என்று சாதாரணமாக அந்த விஷயத்தையே மறந்துவிட்டார்.
எனக்குத் தெரிந்து ஈழனி மிகவும் கஷடப்பட்டிருக்கிறார். படித்த காலத்திலேயே பகுதிநேர வேலை பார்த்தார். படித்து முடித்த பிறகு இரண்டு, மூன்று வேலைகள்
அறிவுக்களஞ்சியம் 43

Page 28
பார்த்தார். அவர் ஆடம்பரமாக உடுத்தியோ, செலவழித்தோ நான் அறிந்ததில்லை. எப்போதும் ஜீன்சும் டி-சட்டையும் முதுகில் தூக்கும் பையுமாகத்தானி திரிவார்.
தமிழ் நூல்களை- குறிப்பாக இலங்கைத் தமிழ் நூல்களை இணைய தளத்தில் பாதுகாப்பாகவும் எல்லாருக்கும் கிடைக்கும் வகையிலும் சேமிக்க வேண்டும் என்பதற்காக ஈழனி மிகவும் உழைத்திருக்கிறார். பலரிடம், பல இடங்களில் தேடி நூல்களைச் சேகரித்தார். என்னிடம் இருந்த ஆரம்ப கால சஞ்சிகளைப் பெற வந்தபோது, நூல்களைச் சேகரிப்பதுடன் எழுத்தாளர்களையும் ஆவணப் படுத்த வேண்டும் என்று ஒரு பெரும் கனவை விவரித்தார்.
தமிழ் நூல்களை இணையத்தில் ஏற்ற வேண்டும் என்பதற்காக பாடுபட்டு உழைத்து பணம் சேர்த்து, இணைய நூலகத்தில் நூல்கள் சேர்த்தார். இரவிரவாக இருந்து அவரே நூல்களைப் பதிவேற்றுவார். இலங்கையில் பணம் கொடுத்து பதிவேற்றும் பணியைச் செய்தார்.
நூலகத்தில் ஈழநாதனின் பங்களிப்புப் பற்றி நூலகம் இணைய தளம் இவ்வாறு எழுதியுள்ளது.
நூலகத் திட்டம் ஆரம்பிக்கப்பட்ட காலத்திலிருந்து நூலகத்தின் செயற்பாடுகளில் பங்கு கொண்டு தனது உழைப்பைச் செலுத்தியவர் ஈழநாதன் அவர்கள். மிகச் சிறிய அளவிலிருந்த நூலகத் திட்டத்துக்கு வளங்களைத் திரட்டியும் பெருமளவு பங்களிப்பாளர்களை இணைத்தும் அதன் செயற்பாடுகளைச் சாத்தியமாக்கியவர் ஈழநாதன். அவரது பங்களிப்பு கிடைக்காது போயிருந்தால் நூலகத் திட்டமானது கொள்கையளவிலேயே நின்று போயிருக்கக் கூடும்."
நூலகத்திற்கான உதவி வழங்கி, முதல் நிதிப் பங்களிப்பு போன்றவற்றை வழங்கியதுடன் நூலகத்தினை ஈழத்தமிழர்கள் வாழுமிடங்களுக்குக் கொண்டு சென்று சேர்த்தமையும் நூலகத்திற்கு உலகெங்குமிருந்து புலம்பெயர் தமிழர்களுடைய பங்களிப்பைக் கொண்டு வந்து சேர்த்தமையும் ஈழநாதனது முக்கிய பங்களிப்புக்களாகும். இன்றும் கூட ஈழநாதன் வாங்கியளித்த வழங்கியிலேயே நூலகம் இயங்குகிறது. நூலகம் தொடர்பான திட்டமிடல், உரையாடல்களிலும் முக்கிய பங்களித்த ஈழநாதனி நூலகத் திட்டம் 2008 இல் நூலக நிறுவனமாக இயங்கத் தொடங்கியபோது முதலாவது அறங்காவலர் சபையிலும் இடம்பெற்றுப் பங்களித்தார்.
ஈழத்தமிழர்களுடைய வாழ்வியல் முழுமையாக ஆவணப்படுத்தப்பட வேண்டும்
அறிவுக்களஞ்சியம் 44
 

எண்பதிலும் ஈழத்தமிழ் ஆளுமைகள் வரலாற்றில் அழிந்து போகாமல் பாதுகாக்க வேண்டும் என்பதிலும் மிகப்பெரும் ஆர்வத்துடன் செயற்பட்டு வந்தார். பல்வேறு ஆவணவியலாளர்களுடன் தொடர்புகளைப் பேணி அவர்களுக்குச் சகல விதங்களிலும் உதவி வந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இறுதியாக, சிங்கப்பூரில் நூலகத்திற்கான அலகொன்றைத் தொடங்கி ஈழத்தமிழர்களுடைய வாழ்வியலைப் பதிவு செய்ய வேண்டும் என்ற முயற்சியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டிருந்தார். அதுமட்டுமன்றி, சிங்கப்பூர் தேசிய நூலகத்தில் உள்ள ஈழத்தமிழர்களுடன் தொடர்புடைய ஆவணங்களை பெற்று ஒழுங்குபடுத்துவதோடு ஆவணப்படுத்தித் திறந்த அணுக்கத்திற்குக் கொண்டுவர வேண்டும் என்பதிலும் ஆர்வமாக இருந்தார் அதற்கான ஆரம்பகட்ட முயற்சிகளிலும் ஈடுபட்டிருந்தார்.
எல்லாருடனும் நட்பாக இருந்தாலும் எல்லாக் கருத்துகளுடனும் உடன்படுபவரல்ல ஈழநாதன். 81ல் பிறந்த ஈழநாதன், யாழ்ப்பாணத்தில் இந்திய ராணுவத்தினரின் ஆக்கிரமிப்பு அட்டூழயங்களை நேரில் கண்டு, அனுபவித்தவர். அச்சமயத்தில் மக்களுக்கு அரணாக இருந்த விடுதலைப் புலிகள் மீது இயல்பாகவே அவருக்குப் பற்று இருந்தது- புலிகள் மீது விமர்சனங்கள் இருந்தபோதும்.
ஈழனின் அரசியல் ஈடுபாடு ஆழமானது. எத்தனை சிக்கல்களை எதிர்கொண்டாலும் தனது கொள்கையில் உறுதியாக இருந்தவர் அவர்.
இறுதிக் கட்டப் போரின்போதும் அதன் பின்னரும் பல தகவல்க்ள் ஈழன் மூலமே எனக்குக் கிடைத்தன. மண்ணின் பெரும் தோல்வி, அவரை மிகவும் அமைதியாக்கி விட்டது. அதோடு வேலைப் பளுவும் அழுத்தத் தொடங்கியது.
பெருங் கனவோடு, இலக்கோடு கடுமையாக உழைக்கத் தொடங்கிய ஈழனி எதிர்கொண்ட தோல்விகள் பல. மாம்பழம் விற்பனை முதல் உணவக வியாபாரம் என பல தொழில்கள் செய்தார்.
அவரது வாழ்க்கைக்கும் மொழி, சமூகம் சார்ந்து அவர் செய்ய நினைத்த பல பணிகளுக்கும் அவருக்குப் பணம் தேவைப்பட்டது.
முழு மூச்சாக உழைக்கத் தொடங்கினார். எழுதுவதில்லை. நண்பர்களுடன் தொடர்பில்லை.
தமது மகனின் 4வது நாளைக் கொண்டாடி விட்டு, செப்டம்பர் 28ம் தேதி
அறிவுக்களஞ்சியம் 45
s 鞋 翡
.

Page 29
வெள்ளிக்கிழமை சிங்கப்பூர் திரும்பிய ஈழனி, சனிக்கிழமை இந்தோனீசியா சென்றுள்ளார்.
அங்கு ஞாயிறு காலை அவர் இறந்துள்ளார். தகவல் அறிந்து அவரது நண்பர்கள் அங்கு சென்று அவரின் உடலை பெற்று, சிங்கப்பூர் வந்து சேர திங்கள் நள்ளிரவைத் தாண்டி விட்டது. பெற்றோர், மனைவி, மகன், நண்பர்களுடன் ஈழனின் இறுதிச் சடங்கு அக்டோபர் 2ஆம் தேதி புதன்கிழமை சிங்கப்பூர் மண்டாய் தகனச் சாலையில் நடைபெற்றது.
அவர் என்ன காரணத்தினால் இறந்தார் என்பது அங்கு நேரில் சென்ற நண்பர்களுக்கே தெரியவில்லை. ஈழனது இறப்புக்கான காரணம் ஈழனுக்கும் கடவுளுக்கும் மட்டுமே தெரியும். ஊகங்கள் ஆயிரம் இருக்கலாம். ஆனால் எதுவும் உண்மையில்லை.
3 வயதில் உயிர்நீத்த ஈழநாதன் என்ற தமிழ் - சமூக ஆர்வலர் சிங்கப்பூரில் 1 ஆண்டுகள் வாழ்ந்தது உண்மை. அக்காலகட்டத்தில் அவர் இச்சமூகத்தில் ஆக்ககரமான தாக்கம் ஏற்படுத்திருப்பது நிச்சயமானது.
ஈழநாதன் கடந்த சில ஆண்டுகளாக வேலைப் பளுவில் மூழ்கி, விலகி இருந்தாலும் அவரது அன்பை மறக்காமல் சிலராவது அவரின் இறுதிச் சடங்கில் பங்கேற்றது ஆறுதலளிக்கிறது.
ஈழநாதனின் தமிழ் மொழி தொடர்பான முயற்சிகளுக்கு சமூகம் முழு ஆதரவளித்திருந்தால், அவர் அவற்றில் முழுமையாக ஈடுபட எல்லா வகையிலும் உதவியிருந்தால், நூலகம் போன்ற மேலும் பல அரிய முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டிருக்கலாம். பொருள் தேடல் ஒரு நல்ல படைப்பு ஆத்மாவை அழுத்தி அமுக்கி விட்டது. கவிதை எழுதுவதை, கட்டுரைகள் எழுதுவதை, பதிவுகள் செய்வதை என ஒவ்வொன்றாக அழித்து விட்டது. கடைசியில் ஈழநாதனை தமிழுலகம் தொலைத்து விட்டது.
வெற்றிகளை சந்திக்க விரும்பினால், உடனே இடையூறுகளுக்கு தீர்வு காணுங்கள். - எல்லீஸ்
சோம்பேரி காலத்தை மதிப்பதில்ல்ை காலம், சோம்பேறிகளை
மதிப்பதில்லை. - காந்திஜி
அறிவுக்களஞ்சியம் 46
 

ஈழநாதன் - சில நினைவுகள் - எம்.கே.குமார் -
ஷோபாசக்தியின் முகநூலில் அப்போதுதான் வந்திருந்த அந்தச் செய்தி பேரதிர்ச்சியாய் எனக்குள் இறங்கியது. ஈழநாதன் சிங்கப்பூரில்தான் இத்தனை வருடங்கள் இருந்தார் என்பதுகூடத் தெரியாது. அவரைக் கடைசியாய் பார்த்து ஐந்து வருடங்கள் இருக்கும். இம்முறை அவரை நான் பார்த்தபோது போது பிரேதங்களுக்கான அறையொன்றில் படுத்திருந்தார். துர்நாற்றம் வரத் தொடங்கியிருந்தது. - ; 。
ஈழநாதன் என்ற பெயரே என்னை மிகவும் வசீகரித்தது. பெயரை விட அவர் பெரிதும் மாண்புடையவராயிருந்தார். அனைவருடைய பெயருக்கு அடுத்தும் அண்ணா என்பதைச் சேர்த்தழைப்பதுதான் அவரிடம் நான் கண்ட முதல் அடையாளம். அதில் போலி இருக்காது. எள்ளல் இருக்காது. காய்நகர்த்தல் இருக்காது. கடமையே என்றழைத்தல் இருக்காது. முழுமையான அண்ணா' என்றிருக்கும். தன்னறிதலில் வாழ்வறிதலில் மட்டுமே அது சாத்தியப்படும்.
சிங்கப்பூரில் “வாசகர் வட்ட்ம்" என்னும் அமைப்பரில் நண்பர் "மானலாஜென்" ரமேஷ சுப்ரமணியம் வழியாக நான் அறிமுகமாகியபோது அங்கிருந்தவர்களில் ரெ.பாண்டியனும் ஈழநாதனும் இலக்கியத்தின் வெளிப்பாடாய் என்னுள்
அறிவுக்களஞ்சியம் 47

Page 30
இணைந்துகொண்டார்கள். வாசிப்பு வெளியில் ஈழநாதனினி உரையாடல்கள் அதிசயிக்க வைக்கும். 25 வயது இளைஞனுக்குள் இவ்வளவு இலக்கிய பகுப்பாய்வுத்திறனா என ஆச்சர்யப்படுத்தும். நான் எங்கும் காணாதது இது. தமிழ்நாட்டில் பிறந்த இளைஞர்களுக்கு இது சாத்தியமில்லையோ என்று தோன்றும். வாசிப்புவெளியை நோக்கிய அதிக இலக்கிய ஆர்வத்துடனும் வாசிப்பை நோக்கிய மேம்பாட்டுடனும் இருக்கும் நீதிப்பாண்டி போன்றோரைப்பார்த்து அதிசயித்திருக்கிறேன். ஆனால், வாசிப்பின் முழுமையை இத்தகைய இளம்வயதில் அடைந்திருந்த ஈழநாதன் பொறாமைப்படவைத்தார்.
உட்லாண்ட்ஸ் நூலகத்தில் 2005ஆம் ஆண்டு நடந்த சாருநிவேதிதா கூட்டத்திற்கு வந்திருந்த ஈழநாதன் என்னுடனிருந்தார். ஈழத்தமிழர்களின் வாசிப்பு அனுபவத்தையும் பகுப்புணர்வையும் ஈழநாதன் கேட்ட ஒரு கேள்விக்குப் பதிலாய் மெச்சினார் சாருநிவேதிதா.
2005ஆம் ஆண்டு சகுந்தலா ரெஸ்டாரண்டில் நடந்த என்னுடைய பதிவுத்திருமணத்திற்கு வந்திருந்தார். சிரிக்கச்சிரிக்கப் பேசிக்கொண்டிருந்த மெனிமையான அவரது புண்ணகை முகம் இன்னும் நினைவில் இருக்கிறது.
வலைப்பதிவுகள் தொடங்கியிருந்த காலம். “மரத்தடி" இணைய குழுவின் "மதி” அவர்களும் ஈழநாதனும் எனது வலைப்பூ உருவாவதில் துணைபுரிந்தார்கள். சிங்கப்பூரில் வலை பதியும் நண்பர்கள் அனைவரும் சந்திக்கலாமே என்று தோன்றியதும் மலேசியாவிலிருந்த நண்பர் மூர்த்தி உட்பட கொரியாவிலிருந்த வந்திருந்த நா.கண்ணன் அவர்கள் சிறப்பு விருந்தினராய் க்லந்துகொண்ட எங்களது சுடிமுதல் இணைய நண்பர்கள் கூட்டம் சித்ரா ரமேஷ அவர்களின் சகோதரர் வீட்டுத்தோட்டத்தில் ஒரு மாலைப்பொழுதாக இனிமையாக அமைந்திருந்தது. ஈழநாதனி அக்கூட்டத்திற்கு வந்திருந்தார். இது தொடர்பான அனைத்துப்பதிவுகளும் “esispes scozuöassifoso” http://singaimurasu.blogspot.sg/ su6psučg6osò 96gpò இருக்கின்றன.
தமிழகத்திலருந்து வரும் இலக்கிய பிரபலங்கள் யாரையும் அவர் சந்திக்காமல் இருக்கமாட்டார். தமிழக எழுத்தாளர்களையும் அவரது படைப்புகளையும் அவர் நன்கு அறிந்திருந்தார்.
இரும்பு மற்றும் தகரம் தொடர்பான தொழில் செய்துவந்திருக்கிறார் ஈழநாதன்.
சாப்பாட்டுக்கடை ஒன்று வைத்து தோல்வியுற்றதாயும் நண்பர்கள் சொன்னார்கள். இலங்கை-சிங்கப்பூர்-இந்தோனேஷயா என அவரது வணிகம் இருந்திருக்கிறது.
அறிவுக்களஞ்சியம் 43

இலங்கையில் தனது குழந்தையின் 4ஆம் நாள் தொட்டில்போடும் விழாவை முடித்துவிட்டு சிங்கப்பூர் வந்தவர், வியாபார விடயமாய் இந்தோனேஷயாவின் ஒரு குறுந்தீவு ஒன்றுக்குச் சென்றிருக்கிறார். அவர் தங்கியிருந்த ஹோட்டலில் மயங்கிக்கிடந்த அவரை ஹோட்டல் ஊழியர்கள் எதோ ஒரு மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல அங்கேயே இறந்துவிட்டார் என்று சொல்கிறார்கள். அவருடன் இருந்தவர்களே மயக்கமருந்து கொடுத்திருக்கலாம் என சந்தேகிக்கிறார்கள். அவருடைய போனி, அடையாள அட்டை, பர்ஸ் ஆகியவற்றை வழக்கம்போல உடனிருந்தோர் பதுக்கிக்கொண்டுவிட, தூதரகம் வாயிலாக, சிங்கப்பூரிலிருந்த அவருடைய நண்பருக்குச் செய்தி கிடைத்து அவர் சென்று ஈழநாதன் உடலை மீண்டுக்கொண்டு வந்திருக்கிறார்.
ஈழநாதன் உடலை இலங்கைக்குக் கொண்டு செல்வதாய் சொன்னார்கள். கேலாங் பாருவில் இருக்கும் பொது பிரேத அறையொன்றில் ஈழநாதனின் உடல், அக். 2 செவ்வாய், காலை 10 முதல் 12 மணிவரை இறுதி மரியாதைக்கு வைக்கப்பட்டிருக்கும் எனச்சொன்னார்கள். அன்று காலை முக்கியமான ஒரு மீட்டிங் செல்லமுடியாதே என்ற வருத்தம். அந்த நேரத்திற்கு அங்கு சென்றிருந்த சித்ரா ரமேஷ அவர்கள் என்னைத் தொடர்புகொண்டார். அங்கு யாருமே இல்லை எனச்சொன்னார். நான்கு பிணங்களுக்கு நடுவில் ஈழநாதனது பிணத்தைப் பார்த்துவிட்டு அவசரமாய் வெளியில் வந்து எனினை அழைத்தார்.
பிணக்கூறு செய்யமுடியாத நிலையில் அவரது உடலை சிங்கப்பூரிலே எரியூட்டுவது என முடிவெடுத்து அடுத்தநாள் 03 அக். புதனி மாலை தகனம் எனவும் அதுவரை உடல் அங்கேயே இருக்கும என்றும் சொன்னார்கள். அடுத்தநாள் எப்படியும் பார்த்துவிடலாம் என்று உறுதியாய் இருந்தேன்.
புதனி மதியம், இரண்டு மணிக்கு கேலாங் பாரு சென்று அவ்விடத்தை அடைந்தபோது ரெ.பாண்டியன் மற்றும் நீதிப்பாண்டி ஆகியோர் நின்றுகொண்டிருந்தார்கள். பத்து இருபது நண்பர்களும் இருந்தார்கள். இறுதிச்சடங்குகள செய்யப்பட்டன. ரமேஷ மற்றும் சித்ரா ரமேஷ வந்தனர். நண்பர் மணிவேலன் வந்துவிட்டு சென்றார். சாந்தன் இருந்தார். ஒரு தாளில் இறுதிச்செலவுக்கான வரவுகள் நண்பர்களிடம் சேகரிக்கப்பட்டன.
ஈழநாதனின் உடல் வீங்கியிருந்தது. அழுகல் வாடை வரத்தொடங்கியிருந்தது. கண்களிலிருந்து இரத்தம் போன்றதொரு திரவம் கசிந்துகொண்டிருந்தது. வழக்கமான குறுந்தாடி அப்படியே இருந்தது. மணி 4.15 அளவில் உடல மண்டாய் தகனசாலைக்குப் பயணமானது. மண்டாய் மயானத்தில் 515 மணி அவருக்கான
அறிவுக்களஞ்சியம் 4g

Page 31
நேரம். நண்பர்கள், குடும்பத்தினர் உட்பட 25பேர் இருந்தோம். ரெ.பாண்டியனும் நூலக நண்பர் புஷபலதா அவர்களும் இருந்தார்கள்.
ஈழநாதனுடைய மனைவியின் சகோதரருடன் பேசினோம். இலங்கையிலிருந்து கிளம்பி வந்திருந்தார்கள்.
தனது குழந்தையின் 4ஆம் நாள் தொட்டில் போடும் விழாவை மகிழ்ச்சியாய் முடித்துவிட்டு போன புதன்கிழமை இலங்கையிலிருந்து சிங்கப்பூர் வந்திருந்த நண்பர் இந்த புதன் கிழமையில் மண்டாய் மயானத்தில் கிடந்தார். பிரமை நிலையிலிருந்த அழக்கூட தெம்பும் தைரியமும் இல்லாத நிலையில் ஈழநாதனின் மனைவி இருந்தார். அனைத்து சடங்குகளும் முடிந்து எரியூட்டலுக்கு தயாராகும் முன் ஒற்றைக்குரலாய் வந்த அந்த சகோதரியுடைய கூக்குரல் இயற்கையின் முடியுறாத அவலத்தைக் கையாள முடியாததாய் இருந்தது.
ஈழத்தில் இருக்கும் விதவைகளும் ஆதரவற்ற குழந்தைகளும் போதாதென்றா இன்னும் விதவைகளை உருவாக்குகிறாய் எனது அருமை இயற்கையே.
இலக்கியம் வழியாக எங்களோடு இணைந்திருந்த அந்த இனிய நண்பர் தமது 31 வயதில் மறைந்துவிட்டார். கவிதை, எழுத்து, வாசிப்பு, குறும்படம் என்று பல்வேறு தளங்களில் வாழ்ந்திருந்த அவரை "பொருள்" முடக்கியது. வாழ்வுக்கும் இலக்கியத்தும் இடையில் இந்த பொருள் படுத்தும் பாடு யாவருக்கும் தவிர்க்கமுடியாததாய் இருக்கிறது. அது நம்மையும் இழக்கச்செய்துவிடுவதுதான் வாழ்வின் பெரும்சோகம். ஈழநாதன் என்னும் மாண்புமிக்க அந்த இளைஞனைக் கொண்றுசாய்த்த ஈரமற்ற இயற்கையை என்ன செய்வது?
அவரது ஆத்மா சாந்தியடையட்டும்
தைரியமாக இருக்க வேண்டுமானால் பொய் சொல்லாதிருங்கள். - ஹெர்பர்ட்.
ஆசைகளை அடக்க முடியாத தனி சுதந்திரம் அழிவையே அளிக்கும்.
- கதே.
அறிவுக்களஞ்சியம் 50
 

ஈழநாதன் இனி வரமாட்டாராம்
இன்று đoố0/°(UP6) விடுமுறை நாள் என்ற ஆவலை விட, முழுநாள்
பயிற்சிப்பட்டறை இருக்கின்றதே என்ற
உளைச்சலோடு நகரப்பகுதியை நோக்கிச் சொல்லும் போது, சக நண்பனி தமிழ்ப்பித்தனின் தனிமடலில் "ஈழநாதன்
இறந்து 6oPu ‘L (To`ôTdb° என்ற ஒறறை வாக்கியம் coc’6ô வந்தபோது
ஒருகணம் என் தலையில் இடியே விழுந்தது போல இருந்தது, இப்போது இதை எழுதும்போதும் அந்தப் பாரத்தை இறக்கி வைக்கமுடியாமல் கைபோன போக்கில் தட்டச்சுகின்றேன்.
வலைப்பதிவு உலகுக்கு வந்த காலத்தில் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டதோடு, இணையப்பரப்பில் இருக்கும் சக நண்பர்களை அறிமுகப்படுத்தி எங்கள் எல்லோருக்கும் இணைப்பாக இருந்தார் மதி கந்தசாமி. அவரின் வழியாகவே எனக்கு ஈழநாதனி என்ற வலைப்பதிவரோடு தொடர்பை ஏற்படுத்திக் கொள்ள முடிந்தது. ஆனால் அதற்கு முன்னர் அவருடைய வலைப்பதிவு, மற்றும் தட்ஸ்தமிழின் முந்திய பதிப்பு (இந்தியா இன்ஃபோ என நினைக்கிறேன்) வழியாக ஈழநாதனி என்ற ஒரு கவிஞரை அறிந்து கொண்டாலும் இவ்வளவு இளையவர், ஈழத்து இலக்கிங்களை எல்லாம் ஒன்று திரட்டி ஆவணப்படுத்த வேண்டும் என்ற ஆகப்பெரிய கனவோடு இருப்பார் என்பதை நான் அவரைச் சந்திக்கும் வரை உணர்ந்ததில்லை. என்னுடைய முதல் சிங்கப்பூர்ப் பயணத்தில் ஒவ்வொரு இடமாகக் கூட்டிச் சென்று ஒரு குழந்தைக்கு வழிகாட்டுமாற்போல ஒவ்வொன்றாகக் காட்டி மகிழ்ந்தார், முதல் நாள் இரவு வேலை முடிந்த களைப்போ, தூக்கக் கலக்கமோ இல்லாது. கூடிகஷவடிவாச் சாப்பிடுங்கோ பிரபா” தான் வழக்கமாகச் செல்லும் உணவகத்துக்கு அழைத்துச் சென்று ஆசை தீரப்பரிமாறினார்.
அறிவுக்களஞ்சியம் 51

Page 32
அதன்பினனர் மின்னஞ்சல் வழியாக நீண்டது நம் தொடர்பு. எப்போது பேசினாலும் நூலகம் என்ற ஈழத்தில் ஒர் தமிழ் இணைய நூலகத்தைப் பற்றி அவர் பேசாத நாளில்லை. அது மட்டும் போதாது, தற்போது வாழ்ந்து வரும் ஈழத்தின் கலை, இலக்கியவாதிகள் எல்லோரதும் சொந்தக் குரலில் அவர்களது வாழ்வியலைப்பதிவு செய்ய வேண்டும் என்பதில் அப்போது தீவிர முனைப்பாக இருந்தார். கடிகஷபிரபா, 2007 ஆம் ஆண்டு தைப்பொங்கலுக்கு வருமாற்போல ஒரு ஒலிக்களஞ்சியம் செய்வோம், செலவெல்லாம் நான் பார்க்கிறேன் முதலில் காரியத்தில் இறங்குவோம், உங்களால் முடிந்த அளவுக்கு நீங்கள் பணிபுரியும் வானொலி வழியாகவும் இதைச் செய்யப்பாருங்கோ" என்று விதை போட்டார். அவர் சொனினதை நான் ஒருபக்கமாகச் செய்யத் தொடங்கினேன், அவற்றையே couégoudasi பிள்ளையாரடியில் ஒலிப்பதிவுகளாகவும் இட்டேன். பெரும் இலக்கியக் கனவோடு இருந்தாலும் தனினுடைய பணிச் சுமை காரணமாக இணையப்பரப்பில் முன்னர் அளவுக்குத் தீவிரமாக இல்லாவிட்டாலும், அவர் எல்லாத்தையும் பார்த்துக் கொண்டிருக்கிறார் என்பதை, ஈழத்துப் பதிவுகள் வரும்போது தன்னுடைய சிந்தனையைப் பின்னுரிட்டமாகப் பகிர்ந்து கொண்டிருந்தார்.
ஈழநாதா? நானி நினைக்கவில்லை இனி உம்மை என் வாழ்வினி எஞ்சிய நாட்களில் சந்திக்காமல் இருக்கப்போகினிறேனி என்று
ஈழநாதனைச் சந்தித்த அந்த 2006 நினைவில்
பெங்களுாரிலிருந்து வரும் போது ஒரு நாள் சிங்கப்பூரின் தங்குவதாக முடிவெடுத்தேன். ஆசிய நாடுகள் பலவற்றிற்குச் சென்றாலும் சிங்கப்பூருக்கு இன்னும் செல்லவில்லை என்று வெளியில் சொனினால் வெட்கக்கேடு. எனவே அந்த குறையும் இந்தப் பயணத்தோடு தீர்ந்தது.
சிங்கப்பூர் என்றால் உடனே நினைவுக்கு வருவது ஈழநாதனி. பெங்களுரில் வைத்து ஈழநாதனுக்கு மடல் ஒன்றைத் தட்டியதன் விளைவு அவரும் ஆவலோடு நான் தங்கியிருந்த Pan Pacific ஹோட்டலுக்கு வந்தார். நேராக அவர் என்னை அழைத்துப் போனது சிங்கப்பூர் நூலகத்துக்கு. அங்கு அருகில் உள்ள கலையரங்கில் சிங்கபூர் அரசின் அனுரசணையுடன் பல்லின மக்களின் கலைநிகழ்ச்சி வாரமாக அமைந்திருந்தது அது. சிங்கப்பூர் என்றால் வெறும் வர்த்தக நகரம் என்ற இமேஜை மாற்றும் அரசின் ஒரு கட்ட நடவடிக்கையே இந்தக் கலைநிகழ்ச்சி ஏற்பாடுகளும் உனக்குவிப்புக்களும் என்றார் ஈழநாதனி.சிங்கப்பூர் நூலகம் சென்றபோது ஒவ்வொரு புத்தகப் பிரிவினையும், சினிமா சம்பந்தப்பட்ட வாடகைக்கைக்கு விடும் சீடிக்கள் பற்றியும் விரல் நுனியில் தகவல்களை வைத்துக்கொண்டே பேசிக்கொண்டு வந்தார்.
அறிவுக்களஞ்சியம் 52

ஆளுக்கும் நூலகத்துக்கும் நல்ல பொருத்தம் என்று மனதுக்குள் நினைத்துக்கொண்டேன்
சிராங்க்கணி சாலை சென்று ஒரு உணவகத்தில் மீன், கணவாய, இறாலுடன் ஈழநாதன் உபயத்தில் (பெடியன் என் காசுப்பையைத் திறக்கவிட்டாத் தானே) ஒரு வெட்டு வெட்டினோம். காலாற சிராங்கூனி சாலையை அளந்தவாறே புத்தகம், நாட்டு நடப்பு, வலையுலகம் என்று பேசித் தீர்த்தோம்.
முஸ்தபா சென்டர் சென்று சீட்டிக்களின் பிரிவுக்குள் சென்று ஒவ்வொரு சீடியாகத் துளாவனோம். நல்ல சீனத்திரைப்படங்களை ஈழநாதன் அடையாளம் காட்டினார். ஹரிஸ் ஹைனஸ் அப்துல்லா (மலையாளம்) வி.சி.டியையும், அச்சுவினிடே அம்மா மலையாள இசை சி.டி (இளையராஜாவுக்காக) நான் வாங்கவும் நம் சந்திப்பும் பிரியாவிடை கொடுத்து நிறைவேறியது. நிறைய வாசிப்பு மனிதனைப் பூரணப்படுத்தும் என்பதற்கு தனி இளவயதில் நல்ல இலக்கிய சிந்தையுள்ள ஈழநாதனி ஒரு உதாரணம் என்று மனதுக்குள் நினைத்துக்கொண்டேன்.
aster U'ruf
நிகழ்ச்சித் தயாரிப்பாளர் அவுஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம்
முன்னால் தாவுவதற்குச் சிறிது பின்னால் செல்ல வேண்டும்!
வாழ்வதன் பொருள் இடைவிடாது முயற்சி செய்தல்!
முயற்சி இல்லாத நம்பிக்கை, கப்பலில்லாத கடல் யாத்திரை போன்றது!
அறிவுக்களஞ்சியம் 53

Page 33
jei zryó orciprélup ? -திரு. மனோ (ஜேர்மனி)
பஞ்சுபோன்ற உடலழகே பகலவனின் திருவுருவே பல்லக்கில் போகும் உன்னை பாடையேற்ற நேர்ந்ததுவே பக்குவமாக பொத்தி பத்தியங்கள் காத்து பாசமதை கொட்டிய பெற்றோர்
அன்பைச் சொரியும் அண்ணாவென அழுது புலம்பும் சோதரர்கள் அவ்வேதனை யாரால் நிவர்த்திட முடியும் ஆதவனி சுட்டாலே அடிவயிறு நோகும் தாய் - உன்னை அக்கினி சுடுகாட்டில் எப்படித்தானி அனுமதிப்பாள் !
விட்டிற்காக பெற்றவனி நீயில்லையே நாட்டிலே பெரு நாட்டமுள்ளவனே சிங்கை நகர் வாழ்ந்த சீமானே இளங்கோவே இருநாளினி முனிபெல்லோ உணர் அரு மகனை கையில் எடுத்தாய் நின் இடத்தை நிவர்த்தியாக்கி. நீள் தூரம் சென்றாயோ ?
d காதலித்து கரம் பற்றிய - உணர் கண் நிறைந்தபெண்ணவளை கலங்காதே என கதை கூறி யாராற்றுவார் ?
நெஞ்சு நிறைந்த கனம் கண்ணர் ஆறாக நிதமும் வாட்டிடுமே! உன் பிரிவால் துயருறும் உனது மனைவி, பெற்றோர், தங்கைமார், தம்பி, மைத்துனர்கள் அனைவருக்கும் வீறிடும் உங்கள் கண்ணிரலையை விரல்களால் தட்டிவிட்டு ஆறுதல் என்று கூறி அமைதிப்படுத்த முடியாது ஆனாலும் "எழுதிச்செல்லும் விதியின் கையில், அழுதாலும் தொழுதாலும் அவன் அன்றி ஒர் அணுவும் அசையாது” எனும் தத்துவத்தை உங்கள் இதயக்கமலங்களில் ஒத்தி ஆறுதல் கூறுகின்றேன் தம்பி அமரர் ஈழநாதனி அவர்கள் ஆத்மா சாந்தியடைய இறைவனை
வேண்டுகின்றேன்! ஒம் சாந்தி!
அறிவுக்களஞ்சியம் 54

தமிழேரீவகாண்டுவந்த சாபமா?
கரிகாலனி
இன்றைய பொழுது தற்செயலாக யாழ் இணையம் சென்றபோது பார்த்த செய்தி மனதினை அதிர செய்தது. ஆம் மூத்த வலைப்பதிவர் ஈழநாதன் தனது 3 வயதினில் அகாலமரணம் என்ற செய்தியே தானி அது. 2007ம் ஆண்டுக்கு பின்னர் வலை பதிபவர்களுக்கு அவரை தெரிந்திருக்க நியாயம் இல்லைதான். அதற்கு இரு வருடங்களுக்கு முன்பு 2004ம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து 2007ம் ஆண்டுவரை வலை பதிவிலும். யாழ் இணையத்திலும் எழுதி வந்தவர். அப்போது எல்லாம் திரட்டியே இல்லாத காலம். மதி கந்தசாமியின் ஒரு வலைப்பதிவில் எல்லா வலைப பதிவுகளும் தொகுககப்பட்ட காலம்.
கரிகாலனி ஆகிய நானி, ஈழநாதன், சயந்தன், வசந்தன். மதி கந்தசாமி இப்படி சிலர் தான் ஈழத்தினை சேர்ந்த பதிவர்கள் மற்றவர்கள் தமிழகத்தினை சேர்ந்த உறவுகள். சண்டை சச்சரவு அற்ற பதிவுகள், விட்டுக்கொடுப்புகள், நாகரிகமான ஆரோக்கியமான கருத்தாடல்கள், இப்படி இருந்த காலம். அப்பொழுது தனது நிறைந்த தமிழ் அறிவாலும் இலக்கிய திறனாலும் உதவி செய்யும் பண்பாலும் எல்லோரையும் கவர்ந்தவர் "ஈழநாதம்” அவரது பிரதான வலைபதிவு, அதை விட மேலும் 4.5 வலைப்பதிவுகள் வைத்திருந்தார். ஈழத்து நூல்களை இணையத்தில் ஏற்றும் திட்டமான நூலகம் திட்டத்தின் ஆரம்பகர்த்தாக்களில் ஒருவர். அதை விட யாழ் இணையத்தில் நிறைய பங்களிப்புகள் செய்தவராவார்.
2007ம் ஆண்டின் பின்பு எந்தொரு இடத்திலும் அவரது எழுத்துகள் காணப்படவில்லை. யாருடனும் தொடர்பில் இல்லை. சிங்கப்பூரில இருந்து எழுதிய அவர் என்ன ஆனார் என்று தெரியாமல் இருந்தது. நூலகம் சார்ந்தவர்களுடன் கேட்டபோது தங்களுடன் தொடர்பு இல்லை என்று சொன்னார்கள். இப்படி ஆட்கள் காணமல் போவது ஈழத்தவர் வாழ்வில் சகயம் என்பதால் பலரும் இதுபற்றி அலட்டிக்கொள்ளவில்லை.
இப்போது செய்தி வந்திருகிறது தனது பெற்றோர், மனைவி, பிள்ளை இவர்களை தவிக்கவிட்டு அகால மரணம் அடைந்திருப்பதாக, நல்லதொரு நண்பனை இழந்த துயரம் எனக்கு, நல்லதொரு மகனை, கணவனை தகப்பனை இழந்ததொரு துயரம் அவரின் குடும்பத்திற்கு .
அறிவுக்களஞ்சியம் 55

Page 34
அவரின் பிரிவால துயருறும் அவரின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்!
நண்பனே உனக்கு எனது கண்ணிர் அஞ்சலிகள்!
தமிழை விற்று பிழைப்பவன் எல்லாம் நூறு ஆண்டுகள் வாழும்போது தமிழுக்காக உழைப்பவர் எல்லோரும் அற்ப ஆயுளில் போவதென்பது தமிழே நீ கொண்டுவந்த சாபமா??.
கருணையும், மன்னிக்கும் தனிமையும் சாந்தியும் நிறைந்தவர்களின் இதயமே கடவுள்
ஏழைகள் மீது இரக்கம் கொண்டு அவர்களுக்கு உதவி செய்பவனி, பகலெல்லாம் நோன்பு நோற்று இரவு முழுவதும் இறைவனைத் தொழுபவனை வட உயர்ந்தவன
உண்மை, பற்றின்மை, அன்பு ஆகிய குணங்களைக் கொண்டவனே நல்ல மனிதனி.
தனி உயிரைக் காக்கவேண்டி வந்தாலும் அதற்காக தர்மத்தைக் கைவிடக் கூடாது.
புவனர்கள் உனக்குக் கட்டுப்பட்டு அடங்குமானால் உர்ை உள்ளத்தினர் ஆழத்தில் உள்ள இறைவனைக் காண்டது ഉബ്രീ
ഉളീയഗ്രഖത്രിമ ക്രീന്ദ്രെ ബഗ്ഗില്ക്കി ഉിശീഗ്
அமைந்துர்ைன ക ബമില്ക്കണു ബീബഗ്ഗ് 6%ീഖA வாழ்க்கைனைர் 2கே உயர்ந்த தர்மம்
அறிவுக்களஞ்சியம் 56
 
 
 

ஈழநாதன் گیا ہے elo நினைவுக்குறிப்புகள் - கத் குமாரசாமி
அமரர். புவனேந்திரன் ஈழநாதனி (மலர்வு 20.06.1981, உதிர்வு: 30.09.2012) பற்றி
இலங்கைத் தமிழ் இணைய எழுத்தாளர்கள் பலருக்குத் தெரிந்திருக்கும். வலைப்பதிவுகள் ஆரம்பமான காலத்தில் ஈழநாதம், "அக"விதைகள், படிப்பகம், படைப்பு, சலனச்சுருள் போன்ற வலைப்பதிவுகளை எழுதி வந்திருக்கிறார். மேலும் சிங்கை நாதம் மற்றும் ட்சுனாமி மீட்பு ஒருங்கிணைப்புப் பணி போன்ற வலைப்பதிவுகளிலும், யாழ்.களம் போன்ற கருத்துக்களங்களிலும் ᎧᏬ பங்களிப்பாளராக இருந்திருக்கிறார். 2005 இன் பின் வலைப்பூக்களில் எழுதுவதைக் குறைத்திருந்தாலும், தமது கருத்துக்களைப் பல்வேறு வலைப்பூக்களிலும் பகிர்ந்தும் வந்திருக்கிறார். ஈழநாதன் இலங்கையை மையமாகக் கொண்டு செயற்படும் நூலகம் எனப்படும் தன்னார்வத் தொண்டு நிறுவனத்தின் தோற்றுவாய்களில் ஒருவர். உடுப்பிட்டி இலக்கணாவத்தையில் பிறந்த ஈழநாதன், உடுப்பிட்டி அமெரிக்கன் மிசன் கல்லூரியின் பழையமாணவரும், முன்னாள் மாணவர் தலைவருமாவார். அவர் பற்றிய ஒரு சிறு ஞாபகமீட்டலே இதுவாகும்.
பெரிய ஈழி என்கிற ஈழநாதன்
அது 1994 ம் வருட நடுப்பகுதி, அல்லது பிற்பகுதி என நினைக்கிறேனர். நான்காம்
வகுப்புப் படித்துக்கொண்டிருந்தேன். யாழ்ப்பாணத்தில் வளர்ந்த பிள்ளைகட்குத் தெரியும், பாடசாலை தவிர்த்து தனியார் கல்விநிலையங்களுக்கும் பிள்ளைகளை அனுப்பிப் பெற்றோர் தம் கனவுகளை நனவாக்கிக்கொள்ள முயற்சி செய்துகொண்டிருந்தார்கள், செய்துகொண்டிருக்கிறார்கள், செய்துகொண்டேயருப்பார்கள். கேம்பிறிட்ஜ் கலாசாலை என அழைக்கப்பட்ட அப்படியான ஒரு தனியார் கல்விநிலையத்திற்தான் ஈழநாதனைக் குடும்பமாகச் சந்தித்தேனி.
இந்தத் தனியார் கல்விக்கூடங்கள் எல்லாமே மாலை நேரத்து வகுப்புகளை
நடாத்துபவை. அப்படி ஒரு மாலை வேளையிற்றானி அவர்கள் எல்லோரும் அங்கே வந்ததாக ஞாபகமிருக்கிறது. புதிதாக வகுப்புகளுக்குச் சேரும் யாரையும் ஆசிரியர்கள்
பெயர், எந்தப் பாடசாலை, அப்பாவின் பெயர், தொழில் என விசாரிப்பார்கள்.
அன்றைக்கும் அப்படித்தான், என்னுடைய நண்பன் ஸ்ரீகாந்தனி “எடே, ஒரு
புதுப்பெட்டையும், பெடியனும் வந்திருக்குதுகளடா" என்றான். அப்போதுதான் அந்தப் பெடியனைக் கவனித்தேன். சராசரிக்கு அதிகமான உயரம், அந்த வயதிலேயே. எங்களைவிட நல்ல நிறம். பெட்டை இருந்த இடம் தெரியவில்லை. எப்படியோ
அறிவுக்களஞ்சியம் 57

Page 35
அவள் தன்னை அறிமுகப்படுத்தும்போது பார்த்துக்கொள்ளலாம் 66 இருந்துவிட்டேன். முதல் பாடத்தில் அவர்கள் அறிமுகப்படுத்திக் கொண்டார்கள். பெடியன் இளம்பரிதி, பெட்டை தேன்மொழி. இருவரும் இரணைகள். இவர்களுக்கு ஒரு அக்காவும் அண்ணாவும் இருக்கிறார்கள். அக்கா புவர்ணலதா எங்களுக்கு இரு வயது மூத்தவர், அண்ணா ஈழநாதன் நான்கு வயது மூத்தவர். இளம்பரிதி, தேனிமொழி இரட்டையரின் முதல் அறிமுகத்தின்போதுதான் ஈழநாதன் பற்றிய நினைவுகள் ஆரம்பிக்கின்றன.
இளம்பரிதி "ஈழி’ ஆக முன்னரே யார் இளம்பரிதியின் அண்ணா, யார் அக்கா என்பது தெரிந்து போயிற்று, உருவ ஒற்றுமைகளின் மூலமாக, இளம்பரிதி-ஈழநாதன் இருவருமே கிட்டத்தட்ட ஒரே அச்சு. தலைகூட இடது கன்ன உச்சி பிரித்து வாரியிருப்பார்கள். சராசரிக்கு மேல் உயரம். குரல், பேசும் விதம் எல்லாமே ஒரே மாதிரி. இளம்பரிதி "ஈழி” ஆன பின்னரே ஈழநாதனோடு பேசுகிற வாய்ப்புக் கிடைத்தது. எனினபேசினோம் என்றெல்லாம் ஞாபகமில்லை. ஆனால் "வச்சிருக்கிரியாடா", "சாப்பிட்டியாடா”, “படிச்சியாடா" போன்ற கேள்விகளை ஒருவிதமாக இழுத்துத்தான் கேட்பார்கள் இருவரும். அதில் ஒரு ஈர்ப்பு, அன்பு, அக்கறை இருபபதற்றானோ என்னவோ ஈழநாதனுக்கும் சரி, இளம்பரிதிக்கும் சரி நண்பர்கள் நிறைய.
ஈழநாதன் அவர்களது வகுப்பில் நன்றாகப் படித்த குழாமில் ஒருவர். இளம்பரிதி எங்கள் வகுப்பில் அவ்வாறே. நானும் அந்த வயதில் கொஞ்சம் படிப்பேன். இந்தப் படிப்புத்தான் ஈழநாதனுக்கும் எனக்குமான முதற்பாலம் எனலாம். எல்லா வீடுகளிலும் ஒவ்வொரு வகுப்பிலும் யார் நன்றாகச் செய்வார்கள் எனக் கேட்பார்களில்லையா, அப்படித்தானி என்னுடைய பெயர் ஈழநாதனுக்கு அறிமுகமாகியிருக்கவேண்டும். ஆனால் ஈழநாதனின் பெயர் எங்கள் பதிண்மங்கள் தோறும் ஒலித்துக்கொண்டிருக்கப்போவது எனக்கு அப்போது தெரிந்திருக்கவில்லை.
பதின்மங்களில் இளம்பரிதி என்கிற ஈழி எங்களுக்கு மிக நெருங்கியிருந்தான், பல காரணங்களுக்காக. கடைசி வாங்கிலில் முரளி, ஈழி, கபிலன், நான், வேறு யாராவது என்பதாகவே வரிசை இருக்கும். அடிக்கடி தங்கராசா மாஸ்ரர் இடம் மாத்தி இருத்துவார். அப்போது அவர் விழிக்கும் பெயர்களிலேயே ஈழநாதனி எங்கள் நினைவுகளில் நிறைந்தார் எனலாம். டொக்ரர், புரொக்ரர் என அப்பாக்களின் தொழில்களால் நாங்கள் விளிக்கப்பட்டபோது, இளம்பரிதியும், தேன்மொழியும் "ஈழநாதன்" என்றே விளிக்கப்பட்டார்கள். வள்ளிப்பிள்ளை ரீச்சர், ஜெயானந்தனி சேர் ஏன் நிர்வாகி தங்கவேல் போன்றோரும் சிலவேளைகளில் இவர்களை ஈழநாதன் என்றழைத்ததுண்டு. இத்தனைக்கும் நாங்கள் பதின்மங்களுக்கு வந்தபோது
அறிவுக்களஞ்சியம் 58
 

ஈழநாதன் அதே நிறுவனத்தில் படித்துக்கொண்டிருக்கவில்லை. அவர் க.பொ.த உயர்தரம் படிக்கவென வேறு நிறுவனம் போக ஆரம்பித்திருந்தார். அவரை வழிதெருவில் கண்டால் பூக்கிற சிறுபுன்னகை மற்றும் அடையாளம் கண்டுகொள்ளப்பட்டதுக்கான தலையாட்டல் தவிரப் பெரியளவில் நாம் பேசிக்கொண்டதில்லை. தீபாவளி வருடப்பிறப்பு போன்ற நீாட்களின் நண்பர்கள் ஒன்றுகூடி எல்லா நண்பர் வீடுகளுக்கும் செல்வோம். அப்போது, மிக ரிக அரிதாக ஈழநாதனை அவரது வீட்டில் கண்டதுண்டு. அவர்களின் அப்பா தயக்கத்துடனேயே எங்களை வீட்டுக்குள் அனுமதிப்பார், தயக்கத்துடனேயே இளம்பரிதியை எங்களோடு அனுப்புவார். அதற்கு அவரளவில் நியாயமான காரணங்களும் இருந்தன.
ஈழி (எங்கள் நண்பர்கள் வட்டத்தில் இளம்பரிதி ஈழி, ஈழநாதன் பெரிய ஈழி, அவர்கள் வட்டத்தில் இவன் சின்ன ஈழி) மற்றவர்களுக்கு எப்படியோ, என் மனதுக்கு நெருக்கமான நண்பனாக இருப்பதற்கு ஒரே ஒரு காரணமே இருந்தது. சின்னவயதில் கோபம் போட்டு விளையாடுபார்கள்.(அது விளையாட்டுத்தான்). 6ம் வகுப்பில் வகுப்பில் இருந்த அனைத்து ஆண்பிள்ளைகளுமே என்னுடன் கோபம் போட்டார்கள். மூவரைத் தவிர, நித்து, கண்ணன், ஈழி. இதனாற்றாண் ஈழி நெருங்கிவந்தான் என்று சொல்லலாம். தோற்றத்தில் மட்டுமல்ல, நண்பர்களைச் சேர்த்துக்கொள்வதிலும் பெரிய ஈழியும், சின்ன ஈழியும் ஒரேமாதிரி இருந்தார்கள். நாம் நெருக்கமானவர்களாக நினைக்கும் எல்லோரும் எம்மை அவர்களுக்கு நெருக்கமானவர்களாக நினைக்கவேண்டும் என்கிற கட்டாயம் இருப்பதில்லைத்தானே. 2000 இல் ஈழநாதன் சிங்கப்பூர் போனது எனக்குக் கபிலன் மூலமாகவே தெரிய வந்தது. அவர்கள் குடும்பத்தின் முதற் பிரிவு அது என நினைக்கிறேன். அதே கபிலன் மூலம்தான் ஈழநாதன் - பிரம்யா இணைவும் தெரியவந்தது, இணைவுக்கு முன்னும் பின்னுமான சிக்கல்களுடன். அடுத்ததாக அவர்களின் குடும்பத்திலிருந்து லதாக்கா பிரிந்து போனார். இங்கே கண்ணனைப் பற்றிச் சொல்லவேண்டும். கண்ணனும் எங்கள் வகுப்புத்தோழன். வெள்ளந்தியான பெடியன். அவனது குடும்பத்திலும் ஒரு ஆண் - பெண் இரணைகள் இருந்தார்கள். சந்தர்ப்பவசமாக அவர்கள் ஈழநாதனின் வகுப்பில் படித்துக்கொண்டிருந்தார்கள். கண்ணனுக்கு ஒரு அக்கா இருந்தார். அவர், ஈழியின் அக்கா புவர்ணலதாவோடு படித்துக்கொண்டிருந்தார். எங்கள் இன்னொரு வகுப்புத்தோழன் அகிலனின் அக்கா அபிராமியும் லதாக்காவோடு படித்துக்கொண்டிருந்தார். நாங்கள் 9ம் வகுப்புப் படித்தபோது எங்கள் வகுப்பின் பக்கமாகவே இந்த அக்காக்களின் வகுப்பும் இருந்தது. தம்பிகள் எங்களோடு படிக்கிறார்கள் என்பதால் நல்ல நட்புணர்வும் இருந்தது. அந்த லதாக்கா அடுத்ததாக அந்தக் குடும்பத்திலிருந்து பிரிந்தார், திருமணம் செய்துகொண்டு. இந்தச் சகோதர சகோதரிகளின் தம்பி, தங்கைகளின் நண்பர்கள்
அறிவுக்களஞ்சியம் 5g

Page 36
676ύ6υτώ கூடிநின்று நடந்த ஒரே திருமணம் லதா அக்காவுடையது என்றே நினைக்கிறேன். அவர்களின் இலக்கணாவத்தை வீட்டில பெரிதாகச் செய்யப்பட்ட ஒரே திருமணமும் அதுவே. நானும் கபிலனும் திருமணத்துக்குப் பரிசுவாங்க யாழ்ப்பாணம் போய், பஸ் மாறி ஏறி, வல்லை - தொண்டமானாறு - பருத்தித்துறை முச்சந்தியில் இறக்கிவிடப்பட்டு, ஒரு நல்லவரின் உதவியால் வீடுவந்த ஞாபகம் இன்னும் இருக்கிறது.
A/L முதற்தரம் எடுத்து நாறடிததோம், எல்லோருமே. இரண்டாந்தரத்துக்குத் தேனிமொழி வரவில்லை. அவர் சுவிஸ் சென்றதாக அறிந்தோம். ஈழி எங்களோடு இரண்டாம்தரம் படித்தோம். இடைக்கிடையே எங்கள் பேச்சுகளில் ஈழநாதன் வந்துபோவார். இரண்டாம்தரத்தையும் வெற்றிகரமாக நாறடித்தபோது, அடுத்த அடி என்கிற குழப்பம் எல்லோருக்கும வந்தது. நாங்கள் எடுத்துவைத்த அடுத்த அடிகள் எங்களை ஒவ்வொரு திக்கில் பிய்த்துப்போட்டன.
2006 இல் கனடா வந்து ஏதேதோ செய்தேனி. எங்கெங்கோ அலைந்தேனி. நித்து மற்றும் மகி தவிர வேறு நண்பர்கள் தொடர்பிலிருக்கவில்லை. 2009 இல் வலைப்பதிவுகளின் அறிமுகம் எனக்குக் கிடைத்தது. கூடவே பேஸ்புக்கில் கூடிய நேரம் செலவிடக்கூடியதாய் இருந்தது. காரணம் 7 மாதங்கள் 22 நாட்கள் வேலையில்லாமல் இருந்தேன். எதை எழுதலாம், எப்படி எழுதலாம் என்று தெரியாமல் வலைப்பதிவுகளில் கண்டகண்ட குப்பைகளைக் கிறுக்கிக்கொண்டிருந்த காலத்தில் பெயரிலி எனப்படும் இரமணிதரனி கந்தையாவுடன் ஒரு சண்டை. ஒரே பதிவை ஈழத்தவர்க்கு ஒரு வடிவிலும், இந்தியர்க்கு ஒரு வடிவிலும் எழுதியதற்காக. நான் செய்தது சரி என வாதிட்டுக்கொண்டிருந்தேன். அப்போதுதான் ஈழநாதன் என் வாழ்வில் திரும்பவும் வந்தார்.
ஈழநாதன் வலைப்பதிவுகளை எழுதி, நிறுத்தியது தெரியும். நூலகம் திட்டத்தில் அவரது பங்களிப்புகளும் ஒரளவுக்குத் தெரியும். ஆனாலும், அவர் என்னை அடையாளம் கண்டு கவனித்துக்கொண்டிருந்தார் என்பது நான் முற்றிலும் எதிர்பாராதது. "ஈழத்து முற்றம்” எனும் குழும வலைப்பதிவு முயற்சியில் பனை பற்றி நான் எழுதிய பதிவொன்றில் ஈழநாதன், "இதுதான் பெயரிலி சொன்ன சுயம்” என்று ஒரு கருத்துரைத்திருந்தார். இப்போது அது இல்லை. காரணம், சில அற்பச் சண்டைகளைப் போட்டுக்கொண்டிருந்ததால் அதை அழித்திருப்பார் 6T60 நினைக்கிறேன். ஆனால் இரமணியுடனான சண்டையின் பின்னரே "எழுதுவதெல்லாம் எழுத்தல்ல" என்று எனக்கு விளங்க ஆரம்பித்தது. அதற்கு உரம் சேர்ப்பதாகவிருந்தது ஈழநாதன் அனுப்பிய ஒரு மின்மடல்.அதில் நிறைய விடயங்களை ஈழநாதன் தொட்டுப்போயிருந்தார். நிறையக் கருத்துரைகள், தமிழ்
அறிவுக்களஞ்சியம் 60
 

மணத்தில் அதிக "லைக்குகள்” கிடைப்பதற்காக எனினுடைய வேர்களிலிருந்து எவ்வளவு விலகிப்போகிறேன் என்பதையும், அது ஏன் தவறு என்பதையும் அழகாகச் சொல்லிப் போயிருந்தார் பெரிய ஈழி ஒரு தமையனுக்குரிய அக்கறையோடு நிறையத் தனிப்பட்ட விஷயங்களைப் பேச அம்மடலே ஆரம்பம். பின்னர் பேஸ்புக்கிலும் இருவரும் நண்பர்களானோம். தம்பியின் நணப்னைத் தம்பியாகப் பார்த்த பெரிய ஈழி மூலமாகவே, பேஸ்புக்கில் கிட்டத்தட்ட நான்கு வருடங்களாகத் தொடர்பற்றுப் போயிருந்த இளம்பரிதி மற்றும் தேனிமொழி ஆகியோரின் நட்பும் புதுப்பிக்கப்பட்டது.
பேஸ்புக்கின் ஒரே நன்மை, நண்பர்களோடு பேச முடியாதளவுக்கு வாழ்தலுக்கான அலைச்சல்கள் அலைக்கழித்தாலும், நண்பர்கள் என்ன செய்கிறார்கள் எப்படி இருக்கிறார்கள் என்பதை அறிந்துகொள்ள ஒரளவுக்காவது உதவுகிறது. தேனிமொழியின் இரு குழந்தைகள், அவரது கணவரின் ஊடகப் பங்களிப்பு, சின்ன ஈழியின் திருமண நிச்சயம், திருமணம், அவனது முதற்குழந்தையின் பிறப்பு என எல்லாவற்றையும் ஒரு பார்வையாளனாகவாவது கவனிக்கக்கூடியதாய் இருந்தது. அதே பேஸ்புக்தானி ஈழநாதனின் காதற்துணை பிரம்யாவுக்கான உருவத்தையும்
எனக்கு அறிமுகம் செய்து வைத்தது. ஈழநாதனின் பெரிய நூலகத்தையும் காட்டியது. ஈழநாதன் வேலை செய்துகொண்டிருப்பதையும் காட்டியது. கடைசியாக ஈழநாதன்
இனிமேல் எங்களுடன் நினைவுகளாய் மட்டுமே இருப்பானி என்பதையும் காட்டியது.
எங்களுக்கான பொதுநண்பர் ஒருவர் "எம் நண்பர் ஒருவர் மரணமடைந்ததாய்க் கேள்விப்படுகிறேன். உறுதி செய்யவேண்டும்" என்பதாக ஒரு தகவலைப் பகிர்ந்திருந்தார். அவரிடம் "யாரது” எனக் கேட்டபோதே அது ஈழநாதன் பற்றியது எனத் தெரியவந்தது. இளம்பரிதி, தேனிமொழி இருவரதும் தொடர்பெண்கள் எண்னிடம் இல்லை. வலையெல்லாம் அலைந்து கடைசியாக தேனிமொழியின் கணவர் மயூரனைக் கண்டடைந்து அவரின் தொடர்பெண்ணைப் பெற்று அவரை அழைத்துக் கேட்டபோது அவர் செய்தியை உறுதி செய்தார். ஈழநாதனின் மரணத்தைவிட, அவர் மரணம் மர்மமானது என்பதுதான் மனதை அலைக்கழித்தது. அவரது சகோதரங்கள் மூவரோடும் ஐந்து நிமிடத்துக்குக் குறைவாகவே பேசினேன். கண்ணனோடு நிறைய நேரம் கதைத்தும் மனம் பெரிதாக அலைச்சலை விடுக்கவில்லை. ஈழநாதன் உடல்வடிவம் நீத்தபின்னர் தேன்மொழி சின்னதாகப் போட்ட ஒரு குறிப்பினைப் பார்த்தபின் கனதியாக அழுகை வந்தது. கொஞ்சநேரம் அழ முடிந்தது, எங்கள் குழந்தமையில் அறிமுகமாகிய, எங்கள் அழகிய பதிண்மங்களில் ஒரு சுட்டுச் சொல்லாக எங்களோடு அலைந்த, ஈழநாதன் என்கிற அந்த சராசரிக்கு உயரமான தமையனுக்காக, மேலான நண்பனுக்காக,
அறிவுக்களஞ்சியம் $1

Page 37
HIV மூத்த பதிவரை இடிந்து நிற்கும் இலங்கைப் பதிவுலகம்
மனித பயணங்களில் எத்தனையோ மனிதரை கடக்க வேண்டியிருக்கும். அதில் சிலருடனேயே தொடர்ந்து பயணிக்க வேண்டியிருக்கும். சிலரை நடுவழியில் பிரிய வேண்டி நேரிடும்.
அந்த வகையில் கடந்த 30.09.2012 அன்று இலங்கையின் ஆரம்ப கால பதிவரகளில் ஒருவரான புவனேந்திரன் ஈழநாதனை இழந்திருக்கிறோம் என்று சொல்லும் போது மனது கனத்தாலும் அவ்வார்த்தையை கூற வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டு விட்டோம்.
2004 அளவில் பதிவுலக வாழ்க்கையை சிங்கப்பூரில் ஆரம்பித்த இளங்கோ அண்ணா தனக்கு கிடைத்த நேரங்களில் தமிழுக்காகவும் தமிழ் இலக்கிய வளரச்சிக்காகவும் உழைத்தவர். அவர் ஊரறிந்த தனது சொந்த பெயரை பல இடங்களில் பாவிக்காமல் ஈழவன், ஈழநாதன் போன்ற பெயர்களில் பல படைப்புக்களை வழங்கியிருந்தார். tuaigh கருத்துக்களத்தில் தீவிர பங்காற்றியவர்களில் இவரும் ஒருவர். அதிலும் ஈழத்து நூல்களை காப்பதற்காக 2 (56) isé6CUC - www.noolaham.net தளத்தில் இவரது உழைப்பு மிகப் பெரியதாக இன்றும் கருதப்படுகிறது. அத்தளத்தின் வளர்ச்சிக்காக மிகவும் சிரத்தை எடுத்துக் கொண்டு வெற்றியும் கண்டார்.
இவையனைத்திலும் எனக்குள் ஆயிரம் வலிகளை விதைக்க இவர் செய்த இச்செயல் காரணமாகிவிட்டது. உண்மையில் இத்தனை விடயங்களை துருவ ஆராய வெளிக்கிடும் எனக்கு அவர் செய்த செயல் வெட்கித் தலைகுனிய வைத்து விட்டது.
ஆரம்ப நாட்களில் நான் வன்னி சம்பந்தமான பதிவுகளை எழுதும் போது பல அழுத்தங்கள் கிடைத்தது. நீ பொய் பேசுகிறாய், வன்னி அவலம் என்று கதை விடுகிறாய், புலம்பெயர்ந்தவரை கேவலப்படுத்துகிறாய் என பகிரங்கமாகவும், தனிமடல்களிலும் பலர் அழுத்தம் கொடுத்திருக்கிறார்கள். அதே நேரம் ஈழநாதன் என்ற ஒரு பதிவர் பகிரங்கமாகவே வந்து என்னை உற்சாகப்படுத்தி கருத்திட்டுச் செல்வார்.
ஏதாவது அப்படியான பதிவு போட்டால் உடனே மின்னஞ்சல் ஒன்று போடுவார். நீங்கள் சொல்வதை ஏற்றுக் கொள்கிறேன். சில தேவைகளுக்காக உங்களை
அறிவுக்களஞ்சியம் 62
 
 
 

அடக்க நினைக்கிறார்கள். ஆனால் நீங்கள் எழுதுங்கள் என்று போடுவார். அடிக்கடி எமக்குள் தொடர்பிருந்தாலும் அவரது இளங்கோ என்ற கணக்கில் இருந்து எந்த தொடர்பும் என்னுடன் இல்லாததால் இவர் தானி அவர் என சந்தேகிக்க முடியர்மலே போய் விட்டது.
இத்தனைக்கும் எனக்கு அவர் உறவு வழியில் உடன் பிறவாத அண்ணனாக இருந்தாலும் ஒரு தடவை கூட ஈழநாதன் தான் இளங்கோ என்பதை அறிமுகப்படுத்தவே இல்லை.
அவருடனான சிறு வயது நெருக்கம் என்பது மிகவும் ஆழமானது. இருவருக்கும் 4 வயது இடைவெளி தான். அவரது தம்பிக்கும் எனக்கும் ஒரே வயது. மூவரும் பிள்ளையார் கதை என்றால் எமது ஆலயத்துக்கு பாடல்கள் படிக்கச் செல்வோம். இளங்கோ அண்ணா தீட்சை கேட்டவரென்பதால் அவர் பிள்ளையார் கதை படிப்பார். அவர் தம்பி இளம்பரிதியும் நானும் அப்போ தீட்சை பெறாததால் ஆலய விதிமுறைப்படி பிள்ளையார் கதையின் பின்னர் வரும் துதிப் பாடல்களைப் படிப்போம்.
எம்மை இச்செயற்பாட்டுக்கு அனுமதி தந்து மன உறுதி தநது உற்சாகப்படுத்தி விட்டவர் இப்போதும் எமது ஆலயத்துக்கு தலைவராக இருக்கும் மகேந்திரம் ஐயா தான். அவர் தந்த உறுதிக்கும் அனுமதிக்கும் என்றும் நன்றி சொல்லியே ஆக வேண்டும்.
அதுமட்டுமல்லாமல் அப்போது இளங்கோ அண்ணாவிடம் மட்டும் தான் தேவாரப் புத்தகம் இருந்தது. தான் படித்து முடிய தனது புத்தகத்தை தான் எமக்கு படிக்கத் தருவார். அதில் வரும் ஒரு வரி எப்போதும் என் நாவோடு சண்டைபிடிக்கும். அந்த வரிக்கும் என் நாவுக்கும் சமாதான ஒப்பந்தம் போட்டவர் இளங்கோ அண்ணா தான்.
இனி நான் கூறப் போவது அவர் வீட்டாருக்கே தெரியுமோ தெரியாது. ஆனால் இந்த இடத்தில் கட்டாயம் கூறவேண்டும். இனியும் அவரது வீட்டாருக்கு இதை மறைப்பதில் எதுவும் இல்லை.
இளங்கோ அண்ணா தமிழுக்காக மட்டும் உழைக்கவில்லை. ஈழத்திற்காகவும் பாடுபட்டவர். வணினியில் சில மாணவர்களுக்கு கணனி தொடர்பான கற்கையை தானி இங்கு வரும் காலங்களில் கற்பித்துச் சென்றிருக்கிறார். 2003-2004 காலப்பகுதியில் இங்கு வரும் போது நான் உடுப்பிட்டியில் இருந்து தான் உயர்தரம்
அறிவுக்களஞ்சியம் 63

Page 38
கற்றுக் கொண்டிருந்தேன். அப்போது அவருக்கு கிளிநொச்சியில் இடங்கள் தெரியாததால் என்னைத் தான் இடம் காட்டி அவர்களோடு தொடர்பை ஏற்படுத்தி விடும்படி கேட்டுக் கொண்டார்.
இருவரும் ஒரு காலைப் பொழுதில் வெளிக்கிட்டு ஒன்றாகவே பயணித்தோம். அதன் பின்னர் இரு வீட்டாருக்கும் சந்தேகம் வராத வகையில் நான் அவரை கிளிநொச்சியில் உள்ளவர்களுடன் தொடர்பை ஏற்படுத்திக் கொடுத்து விட்டு மல்லாவியில் இருந்த எனது அக்கா வீட்டுக்குச் சென்று விட்டேன். இது அப்போது என்னோடு ஒன்றாக கல்வி கற்கவரும் அவர் தம்பிக்குக் கூட நான் சொல்லவில்லை.
அவர் வணினி தொடர்பாக தனிமடலில் கதைக்கும் போது கூட இவர் தான் இளங்கோ அண்ணா என்ற சந்தேகம் எனக்கு துளி அளவு கூட வராமல் போனதை இட்டு என்றும் வெட்கப்பட்டாலும். அவரது அணுகுமுறை வாழ்க்கை முறை என்பன அவர் ஒரு மாமரமாகவே வாழ்ந்து போயிருக்கிறார் என்பதைக் காட்டுகிறது.
இந்நேரம் அவர் பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்திற்கும் தாய், தந்தை, சகோதரர்கள், மைத்துனர்களுக்கு எனினால் என்ன ஆறுதல் சொல்வது என தெரியவில்லை. ஆனால் அவர் இந்த மொழிக்கும் சமூகத்திற்கும் ஆற்றிய பங்கிற்காக அவரது ஆத்மா எம் வேண்டுதல் இல்லாமலே சாந்தியடையும் என்பது எனது திடமான நம்பிக்கையாகும்.இளங்கோ அண்ணா நீங்கள் மீண்டும் பிறந்து வர வேண்டும் என்பதே எண் ஆசை.
நன்றியுடன் அன்புத் தம்பி கரணி (ம.தி.சுதா)
எப்போதும் அச்சத்தில் இருப்பதை விட ஆபத்தை ஒருமுறை சந்திப்பதே மேல்.
இந்த உலகில் தலைவிதி என்று எதுவும் கிடையாது. எல்லாம் நீயாக தேடி கொணடதுதான்.
தனக்கு நிகழும்வரை எல்லாமே வேடிக்கைதான்.
அறிவுக்களஞ்சியம் 64
 
 

தமிழுடாய் நீ வாழ்வாய்.
இரண்டாயிரங்களின் முற்பகுதி புலம்பெயர் தேசங்களில் ஈழத்தமிழர்களின் இலக்கியங்கள் புத்தெழுச்சிபெறத் தொடங்கிய காலம். கண்ணித்தமிழ் கணனித்தமிழாக உருமாறி உருளும் உலகின்போக்குக்கு ஏற்ப உலாவரத தொடங்கிய காலம்.
நானும் எனது நண்பர்களும் இணைந்து சுவிற்சர்லாந்திலிருந்து "குருத்து" என்ற மாதஇதழை வெளியிடத் தொடங்கியிருந்தோம். சமவேளையில் வலைப்பூக்கள் மலரத் தொடங்கியிருந்தன. புத்தெழுச்சியோடு தமிழ் மொழி நாளொரு வண்ணமாய் இணையத்தில் மலர்ந்து மணம் பரப்பிக் கொண்டிருந்தது.
எமது குருத்து இதழை தொடர்புகள் பெரிதளவில் இல்லாத அந்த நேரத்தில் யாழ்ப்பாணத்திலுள்ள வாசகர்களும் எழுத்தாளர்களும் தபால் மூலம் பெற்று வாசிக்குமளவிற்கு வளர்சி கண்டமைக்கும் பெரு 69 as வட்டத்தை கொண்டிருந்தற்கும் இணையம் பெரும் ஆதரவினை நல்கி வந்தது. குறிப்பாக யாழ். இணையமும் அதன் கருத்துக்களமும் பெரும் ஆதரவு நல்கியிருந்தது.
அறிவுக்களஞ்சியம் ஐ

Page 39
இக் காலப் பகுதியில் உலகின் பல பாகங்களிலிருந்தும் புதிய எழுத்தாளர்களின் ஆக்கங்கள் எங்கள் மின்னஞ்சலை தினமும் நிறைத்த வண்ணம் இருக்கும். பல வகையான ஆக்கங்கள் வித்தியாசமான படைப்புகள் என வரும், அவற்றில் சில
நெஞ்சில் நிறைந்து நிற்கும்.
அப்படித்தான் அம்மாவின் கடிதம்' என்ற தலைப்பில் ஒரு கவிதையும் எங்கள் மின்னஞ்சலினி வரவுப் பெட்டிக்குள் வந்து விழுந்திருந்தது. படித்ததும் நெஞ்சில் நிறைந்தது. எழுதியவர் பெயரைப் பார்த்தேன் ‘ஈழநாதன்' என்று இருந்தது. யாரோ ஒரு பெரியவர் புனை பெயரில் எழுதியிருக்கிறார் என்று நினைத்தேன். மீண்டும் சில காலங்களில் 'எதிர்ப்பு' என்ற பெயரில் சிறுகதையொன்றும் அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. அது ஒரு குறியீட்டுக் கதை மிகவும் வித்தியாசமாக இருந்தது. சரி அவரைத் தொடர்பு கொள்வோம் என மின்னஞ்சல் மூலம் தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டேன். அக்குறியீட்டுக் கதையின் மூலக்ாரணமாக அமைந்த யாழ். நூலகம் பற்றியும் அதற்கு இணையாக நாமும் ஒரு இணைய நூலகமொன்றினை உருவாக்கி ஈழத்து எழுத்தாளர்களின் நூல்களை பேணிப் பாதுகாக்க வேண்டும் என்ற பெரும் இலட்சியம் பற்றியும் குறிப்பிட்டார். அவரோடு உரையாடியதில் பல விடயங்களில் எமக்குள் ஒற்றுமையும் ஒரே இலட்சியமும் இருப்பது தெளிவாயிற்று. அவரின் இணைய நூலக உருவாக்கத்திற்கு ஆதரவு நல்குவதாக வாக்களித்தேன்.
அப்போதுதான் அவர் தனது வலைபதிவுகள் பற்றியும் குறிப்பிட்டார். அச்சு ஊடகங்களில் மட்டும் எழுதாது வலைப்பதிவுகளையும் செய்யுமாறு கோரினார். Kuruthuyar.net எனும் பெயரில் வலைப்பதிவொன்றினை தொடங்கி எனது படைப்புக்களைப் பதியத தொடங்கினேன். குருத்து இதழின் ஆசிரியராக இருந்து அதனி பணிகளில் பெரும்பாலான நேரத்தை செலவு செய்ததால் வலைப்பதிவில் நேரம் செலுத்த முடியாது போனது. கனடாவிலிருந்து வலைப்பதிவை மேற் கொள்ளும் நண்பர் கவிதனின் அன்புக் கோரிக்கையால் என் ஆக்கங்களை அவரது கவிதைகள் என்ற வலைப்பதிவில் அவர மூலம் பதிவு செய்து வந்தேன். ஈழநாதன் எனக்கும் கவிதனுக்கும் பொதுவான நண்பராக இருந்ததால் கவிதனின் தளத்தில் ஈழநாதன் தனது கருத்துக்களை பதிவிடுவார்.
எமது குருத்து இதழ் யாழ். பல்கலைக் கழக சமூகத்தின் ஆதரவுடன் தாயகத்திலும் வெளிவருவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு அதற்கான ஏற்பாடுகளில் நான் மூழ்கிப் போனதால் ஈழநாதனுடனான தொடர்பு வலைப்பதிவோடு மட்டுமே மட்டுப்பட்டுப் போனது. சமவேளையில் யாழ் கருத்துக்களத்தில் ஈழவன் என்ற பெயரில் கருத்தாடல் செய்யும் நண்பராகவும் அறிமுகமாகினார். பல தரப்பட்ட கருத்துக்கள் சிந்திக்க தூண்டும் எண்ணங்கள் என கருத்தக்களம் களைகட்டத்
அறிவுக்களஞ்சியம் 66
 

தொடங்கிய காலம். நெற்பயிர் சிறப்பாக வளர்கின்றது என்றால் அங்கே களையும்
அதே வேகத்தில் வளரும் என்பது இயற்கையின் நியதிதானே. கருத்துக்களமும்
அப்படித்தானி ஆனது. அதனால் ஒதுங்கிக் கொண்டோம்.
நீண்ட இடைவெளியின் பின் ஈழநாதனி இணைய நூலதம் ஆரம்பிப்பதற்குரிய நேரகாலம் கூடி வந்ததும் என்னை தொடர்பு கொண்டார். அவர் அழைத்த நேரம் மிகவும் இக்கட்டான காலப்பகுதி பல தரப்பட்ட சிக்கல்கள், குருத்து இதழ் இனி வரமுடியாது என்ற நிலை, மிகவும் மனமுடைந்து போயிருந்தேன். என்னால் வேறு எத் திட்டங்களுக்குள் புதிதாய் என்னை இணைத்தக் கொள்ளக் கூடிய மனநிலை இருக்கவில்லை. ஈழநாதனுக்கு சிலரை இனங்காட்டி வைத்தேன்.
எல்லாவற்றிலும் இருந்து ஒதுங்கிக் கொண்டேன். இனி நான், என் வாழ்வு என்று வாழ நினைக்க எண் பெற்றோர் எனக்கு திருமணம் பேசி இல்லற பந்தத்தினுள் துழைக்க ஏற்பாடு செய்தனர். முதற் பார்த்த பெண் பெயர் கேட்டதுமே பிடித்துப் போயிற்று. ஆம் தேனிமொழி எண் இல்லறத் துணையென நிச்சயிக்கப்பட்டாயிற்று. தேனிமொழியின் அண்ணாவின் பெயர் ஈழநாதனி அந்த ஈழநாதன் தான் எழுத்துலகூடாய் எனக்கு அறிமுகமாகியிருந்த ஈழநாதன் என நான் நினைக்கவில்லை. எனது மனைவிக்காக நான் கவிதனின் வலைப்பதிவில் எழுதிய நினைவிருக்கிறதா? என்ற கவிதைத் தொடர் தொடர்ச்சியாக வெளி வந்தபோது ஈழநாதனும் கருத்தெழுதிச் செல்வார். சிறிது காலங்களின் பின்தான் தெரியவந்தது எனது மனைவியின் அண்ணாதான் அந்த ஈழநாதன் என்று.
குடும்ப உறவான பின்னும் குடும்ப நலங்கள் பற்றி நாம் பேசிக் கொண்டது மிக மிகக் குறைவு. தொலைபேசியில் தொடர்பு கொள்ளும் போதெல்லாம் இலக்கியங்கள் பற்றியும ஈழத்தவர்களின் படைப்புகள் பற்றியும்தானி மணிக்கணக்கில் பேச்சு நீளும். 2007களில் இருந்து ஈழநாதன் எழுதுவது என்பது முற்றாக இல்லாமல் போனது. இருந்தபோதும் புதிதாக எழுதுபவர்கள் பற்றியும் புதிதாக வருகின்ற படைப்புகள் பற்றியும் விரல் நுனியில் தகவல்களுடன் இருந்தார்.
ஈழத்தவர்களின் ஆக்கங்கள வெளிக்கொண்டு வரப்படவேண்டும். ஆவணப்படுத்தப்படல் வேண்டும், அவற்றிற்கு உரிய அங்கீகாரம் கிட்ட வேண்டும். மலிந்த விலைகளில் நூல்கள் அச்சிடப்பட்டு அனைத்துத் தரப்பினரையும் சென்றடைய வேண்டும். இதுவே ஈழநாதனின் பேரவாவாக இருந்தது.
இப்படி படைப்பாளிகளையும் அவர் தம் படைப்புக்களையும் வெளிக்கொண்டுவர வேண்டும் என துடித்த ஈழநாதன் இலக்கியம், தமிழ்ச்சமூகம், அரசியல், திரையுலகம்,
அறிவுக்களஞ்சியம் 67

Page 40
அறிவியல் என பல தரப்பட்ட விடயங்களில் துற்றுக்கணக்கான ஆக்கங்களை எழுதி இணையத்தளமெங்கும் விதைத்துச் சென்றிருக்கின்றார். அவரின் ஒரு சில ஆக்கங்களேனும் அவரது ஆசைபோல அனைத்துத் தரப்பினரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கோடு ஒரு சில ஆக்கங்கள் அவரது நினைவு சுமந்து வெளிவருணிற "அறிவுக் களஞ்சியம்" என்ற இந்த நூலில் தொகுக்கப்படுகின்றது. அவரை நாம் இழந்து தவித்த நேரத்தில் அவரது எழுத்துலக நண்பர்கள் பலரும் எழுதிய நினைவுக் கட்டுரைகள் அனைத்தையும் இங்கே இணைக்க முயற்சித்த போதும் அதற்கு காலம் அவகாசம் தரவில்லை. முடிந்தவரை கிடைத்தவை இணைக்கப்பட்டுள்ளது.
ஈழநாதனினி உடல் மட்டுமே எமை பிரிந்திருக்கின்றது. உணர்வுகளும் எண்ணங்களும் அவரின் எழுத்துக்கள் மூலமும் எழுப்பிச் சென்றிருக்கும் இணைய நூலகம் மூலமும் வாழ்வாங்கு வாழும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.
மைத்துனர் இணுவையூர் மயூரன்
2004 அல்லது 2005 இல் கொழும்பில் ஈழநாதனை முதனி முதலில் சந்தித்தபோது எங்கள் தலைமுறையினி புதிய பயணத்தினி தீர்கமான தோழமையாக இருந்தார் வலைப்பூவின் ஆரம்பநாட்களில் எங்களினி நட்பு வட்டத்துக்குள் ஈழநாதனி வந்தார். நூலகம் இணைய முயற்சியில் அவரின் ஆர்வம் மற்றும் ஈழத்து ஆவணப்படுதலில் அவரின் ஆர்வம் எனக்கு புதிய நம்பிக்கையை தந்தது, எனது எரியும் நினைவுகள் படம் எடுத்தபோது யாழில் மிக நெருக்கடியான ஒரு பணம் தேவையான நிலையில் அந்தப் படத்திற்கு தனது பங்காக பணம் அனுப்பி வைத்தார். தொடர்ந்து நமக்கான நமது முயற்சியிலும் போராட்டத்திலும் பலம் தருபவராக எனக்கத் தெரிந்தார். இப்போது நீண்டகாலம் தொடர்பில் இல்லாத நிலையில் திடீரென வந்த அவரினி சாவுச் செய்தி. சாவு எப்போதும் தாங்கிக்கொள்ள முடியாமலேயே இருக்கிறது.
-சோமிதரனர்
அறிவுக்களஞ்சியம் 58
 

ஈழநாதன் எழுதிய சில ஆக்கங்களின் தொகுப்பு
அறிவுக்களஞ்சியம் 6g

Page 41
அம்மாவின் கடிதம்!
<9)dბ{p/r. முந்தாநேற்று வந்து சேர்ந்த உன் கடிதத்துடன்,
உரிேற் பிள்ளையாரை
துணைக்கழைத்து! உச்சியில் எழுதிய في عيوب في عمروع"
துர்க்கை அம்மனின் துணையை வேண்டி தடவி அனுப்பிய குங்குமம்'
உறுப்பெழுத்தும் இன்ற கோழிக்கிளறலும் இன்றி
மணிமணியான உன் கையெழுத்து!
கோடிடாத தாளிலும் வரிகளை உருவாக்கி இடைவிட்டெழுதும் உன் நேர்த்தி!
ஒவ்வொருமுறை பிரிக்கும் போதும் புதிதாய் மணக்கும் உன் வாசம்!
மடிப்பின் ஒரத்தில் . தவறிக் கிடந்த பாதி நரைத்த உன் தலை முடி!
-ஈழநாதன்
"இப்படிக்கு அம்மா" முடிக்கும் வரிகளில் கலங்கிய எழுத்தில் உன் கண்ணிர்/ இத்தனையும் வந்தன. മ് മC0%;" ஏன் வரவில்லை?
அறிவுக்களஞ்சியம் 70
 
 

எதிர்ப்பு •ነ -ஈழநாதன்
காட்டிலே கூடியிருந்த மரங்களிலிருந்து தனியாக, கிளையும் கொப்புமாக பரப்பி பசுமையோடு நின்றிருந்தது அந்த மரம். هر
அதனைக் கடந்து போகும் பறவைக் கூட்டங்கள் கூட சிறிது நேரம் தங்கிப் போக விரும்பின அந்தளவு வனப்பும் வளமும் கொண்டு விளங்கியது அந்த மரம் காலங்காலமாக பலவித பறவைக் கூட்டங்கள் கிளைகளில் கூடமைத்துத் தங்கின, கிளைகளின் உச்சியில் கூட்டமாக வாழ்ந்து வந்த காகம்,மரப் பொந்துகளில் வசித்த ஆந்தை இவை தவிர சிறு குருவிகள் அணில்கள் எல்லாவற்றிற்கும் மரம் நிழலும் பழமும் கொடுத்தது.
காகங்களின் கூடு மரத்தின் உச்சியில் ஒரமாக இருந்தது,அதில் பலவிதமான காகங்கள் குடியிருந்தன, அவற்றிற்கிடையே பல நேரங்களில் சச்சரவு கிளம்பும், உணவுக்கும் இடத்துக்கும் தத்தமககிடையே அடித்துக் கொள்ளும், ஆனாலும் அவை மரத்தை விட்டுப் போகவில்லை, கிழட்டுக் காகங்களின் சமரசத்தில் ஒரளவு ஒற்றுமையாக வாழ்ந்தன.
இதே நிலவரம் தான் மரத்தின் நடுப்பகுதியில் பொந்துகளில் வாழ்ந்து வந்த ஆந்தைகளுக்கும், பொந்துகளின் தலைமைப் பதவிக்கு காலம் காலமாக சச்சரவு நடக்கும் ஒனறை ஒன்று அடித்துக் கொள்ளும் கிழக்கோட்டான்களின் மத்தியஸ்தத்தில் அவையும் ஒற்றுமை பேணின.
காகங்களுக்கும் ஆந்தைகளுக்கும் இடையில் இடப்பிரச்சனையில் என்றுமே நல்லுறவு இருந்ததில்லை, காலம் காலமாக அந்த மரத்தினி நிழலையும் வளத்தையும் பங்கு போட்டுக் கொள்வதில் இரு பகுதிக்குமே பிரச்சனைதான,இரண்டு பக்கத்திலுமிருக்கும் முதியவர்களால் நிலமை கட்டுக்குள் இருந்தது.
காலப்போக்கில் இருபகுதியிலும் இனப்பெருக்கத்தால் உறுப்பினர் எண்ணிக்கை பெருகியது, குடும்பங்கள் புதிதாக உருவாகின மரம் கொடுத்து வந்த பழங்கள் போதாமல் பிற மரங்களையும் நாடவேண்டிய தேவை ஏற்பட்டது.
இந்த நேரத்தில் தான் ஆந்தைகள் மத்தியில் புதிய எண்ணம் முளைவிட்டது அந்த மரம் காலம் காலமாக ஆந்தைகளுக்குச் சொந்தமெனவும், காகங்கள் இடையில் வந்து உச்சியை ஆக்கிரமித்துக் கொண்டனவெனவும் கிழட்டு ஆந்தைகள் ஆந்தைக் குஞ்சுகளுக்குப் போதித்தன, ஆந்தைக் குஞ்சுகளுக்கு கோபம் பொத்துக் கொண்டு
அறிவுக்களஞ்சியம் 71

Page 42
வந்தது தங்களுக்கு சொந்தமான வளத்தை காகங்கள் சுரண்டுவதாக எண்ணின, இரவு நேரங்களில் காகங்கள் தூங்கியதும் அவர்களது கூடுகளைக் கலைப்பதும் முட்டைகளைத் திருடுவதுமாக தொல்லை கொடுக்க ஆரம்பித்தன, சில ஆந்தைகள் இன்னும் மேலே போய் உச்சிப்பகுதிகளில் இருந்த சிறு பொந்துகளை துளை செய்து தமது குடியிருப்புகளாக்கிக் கொண்டன. தடுக்கவேண்டிய வயதான ஆந்தைகள் கைகட்டி வேடிக்கை பார்த்தன
வயதில் இளைய காகங்களுக்கு பொறுமை காக்க முடியவில்லை அவை இரவுகளில் விழித்திருந்து முட்டைகள் களவு போகாமலும் கூடுகள் கலையாமலும் காவலுக்கிருந்தன, இனினும் சில உச்சியில் வந்து கூடு கட்டிக் கொண்ட ஆந்தைகளுடன் சண்டைக்குப் போயின, வயதான காகங்களுக்கு இது பிடிக்கவில்லை மரம் இருவருக்கும் பொது இருவரும் சண்டையிடாமல் வாழ்ந்தால் அம்மரத்தின் பலனை இன்னும் பலகாலம் பயன்படுத்தலாம் என்பது அவர்களது வாதம், ஆந்தைகள் என்ன செய்தாலும் சண்டைக்குப் போவதை அவை விரும்பவில்லை பொறுமை காக்கும்படி குஞ்சுகளுக்கு அறிவுறுத்தின.
இது ஆந்தைக குஞ்சுகளுக்கு வாய்ப்பாகியது நாளுக்கு நாள் காகக் குஞ்சுகளை சீண்டி வேடிக்கை பார்த்தன, இவற்றைப் பொறுக்க முடியாத கிழக்காகங்கள் ஆந்தைத் தலைவர்களிடம் முறையிட்டன இனி இப்படி நடக்காது என்று உறுதிமொழி கிடைத்தாலும் அதை நம்புவதற்கு காகக்குஞ்சுகள் தயாராக இருக்கவில்லை, இது எங்கள் மரம் நீங்கள வந்தேறு குடிகள் என்ற ஆந்தைக் குஞ்சுகளின் கூச்சல் அவற்றை சீற்றமடைய வைத்திருந்தது.
காகங்கள் கூடி ஆலோசித்தன இப்படியே போனால் விரைவில் அம்மரம் தங்களிடமிருந்து பறிபோய் விடும் என்று குஞ்சுகள் வாதிட்டன கிழக்காகங்களும் நிலைமையின் தாக்கத்தைப் புரிந்து கொண்டதால் மெளனம் காத்தன, குஞ்சுகள் தீர்மானம் மேற்கொண்டன இனி அவர்கள் தாக்கினால் நாங்களும் திருப்பித் தாக்குவோம் வயதில் இளைய குஞ்சுகள் முழங்குவதைக் கேட்க கிழக்காகங்கள் கவலை கொண்டன என்ன மாதிரி அமைதியாக இருந்த மரம் இனி அங்கே அமைதி நிலைக்குமா என்ற கவலை கிழக்காகங்களுக்கு, அவை இன்னும் ஆந்தைகளுடன் சமரசமாகப் போய்விடலாம் என்று நம்பிக்கை கொண்டிருந்தன.
குஞ்சுக்காகங்கள் தீர்மானத்தைச் செயற்படுத்த முனைந்தன மரத்தின் ஒருபக்கத்தில்
வளர்ந்து செழித்திருந்த பனைமரத்திலிருந்து தும்புகளையும் ஒலைகளையும் கொண்டுவந்து தங்கள் கூடுகளை பலப்படுத்தின.இரவுகளில் முறை வைத்துக் காவல்
அறிவுக்களஞ்சியம் 72
 

காத்தன, பனைமரம் பலவிதங்களிலும் காகங்களினர் வளர்ச்சிக்கு உறுதுணையாகவிருந்தது.
இந்தத் தகவல்கள் ஆந்தைகளுக்கு எட்டியபோது இளைய ஆந்தைகள் கோபத்தில் குதித்தன காகங்களை பூண்டோடு அழித்து மரத்தை மீட்போமென சபதமிட்டன,விடயம் கிழக்கோட்டானுக்குப் போனது ஆந்தைகளிடத்தில் தனது செல்வாக்கை அதிகரிக்கவும், காகங்களை அழித்து மரத்தை முற்றாகத் தம்வசப்படுத்தவும் இளைய ஆந்தைகளின் கோபத்தைப் பயன்படுத்திக் கொள்வதுதான் வழி என்று கிழக்கோட்டான் எண்ணமிட்டது.
இரவிரவாக ஆந்தைகள் கூடின, நிலவொளியில் கூடி காகங்களை அழிக்கும் வழிவகைகளை ஆராய்ந்தன கிழக்கோட்டான் தலைமை வகித்தது, காகங்கள் மீது ஆந்தைகள் எல்லாம் கூடித் தாக்குதல் நடத்துவதென்று தீர்மானிக்கப்பட்டது, இந்த நேரம் அறிவாளி ஆந்தையொன்று ஒரு யோசனை கூறியது மரத்தின் ஒரமாக வளர்ந்துள்ள பனைமரமே காகங்களைப் பலமுள்ளவர்களாக மாற்றியுள்ளது, சகலவிதத்திலும் அவற்றைப் பனைமரமே வளர்க்கின்றது எனவே அதனை அழித்துவிட்டால் காகங்களின் வளர்ச்சி தடைப்படும் எப்போதும் ஆந்தைகளுக்கு அடிமையாக இருக்கும் என்று அது கூறியது இளைய ஆந்தைகளுக்கு மட்டுமல்ல கிழக்கோட்டானுக்கும் அது நல்ல யோசனையாகவே பட்டது.
இரவிரவாக ஆந்தைகள் பனைமரத்தை முற்றுகையிட்டன, கொலைவெறிதாண்டவமாட தும்புகள் ஒலைகளைக் கிழித்தன அப்படியும் ஆத்திரம் தணியாமல் கிழித்தவற்றை மேலே போட்டு பனைமரத்தைக் கொழுத்தின கொழுத்தி முடிந்ததும் சுவாலை விட்டெரியும் பனைமர வெளிச்சத்தில் அவை காகக் கூடுகளுக்குள் பாய்ந்தன எதிர்ப்பட்ட காகங்களைக் குதறின.இந்நேரம் காகங்க்ளும் அலறியடித்துக் கொண்டு எழுந்தன இவ்வளவுநாளும் தங்களுக்கு படிமுறை வளர்ச்சி தந்த பனை மரம் தீயில் கருகிக் கொண்டிருப்பதை அவற்றால் தாங்கமுடியவில்லை போதாக்குறைக்கு காகக் கூடுகள் பல சின்னாபின்னமாக்கப்பட்டிருந்தன உயிரிழந்த காகங்கள் மரத்தின் அடியில் விழுந்து கிடந்தன.
இளைய காகங்கள் ஆத்திரத்தில் துடித்தன "இப்படியே போனால் எதுவுமே எஞ்சாது” இளைய காகம் ஒன்று குரல்கொடுத்தது "வாருங்கள் எண்னோடு” காகக் குஞ்சுகள் எழுந்தன பறக்கும் அந்த இளைய காகத்தைத் தொடர்ந்தன எரிந்து கொண்டிருக்கும் பனை மரத்தை வட்டமிட்டது அந்த காகம் பாதி எரிந்து கொண்டிருந்த ஒலைத் துண்டொன்றை வாயில் கவ்வியது பறந்து போய் ஆந்தைகளின் பொந்தொன்றில் போட்டது,காகக் குஞசுகள் கோபத்தில் ஆர்ப்பரித்தன "இதுதான் வழி" "இதுதான்
அறிவுக்களஞ்சியம் 73

Page 43
வழி "எங்களைப் பணிய வைக்கமுடியாதென்று உணர்த்துவோம்" இளைய காகத்தைத் தொடர்ந்து மற்றக் குஞ்சுகளும் எரியும் கொள்ளிகளைப் பொறுக்கி வந்து ஆந்தைகளின் பொந்தில் போடத்தொடங்கின. வயதான காகங்கள் தடுக்க முயற்சி செய்யவில்லை, கைகட்டிப் பார்த்துக் கொண்டிருந்தன.
விடிந்தபோது மரம் புகைகக்கியபடி எரிய ஆரம்பித்திருந்தது
மிகு- இந்தக் கதைக்கும் /9/ம் ஆணர்டு மே மாதம் 3/ம் திகதி யாழ் நூலகம் எரிக்கப்பட்ட
சம்பவத்திற்கும் ஏதாவது தொடர்பு இருப்பதாக நீங்கள் கருதினால் அதற்கு ந7னர் பொறுப்பலில
அகதியாய் தெருவெங்கும் ஒடி ஒளிந்ததுவும, அநாதரவாய் வீதிகளில் அலைந்து திரிந்ததுவும், குண்டு வீச்சுக்காய் குழிகளில் பதுங்கியதும், அண்டை அயலெல்லாம் அவலமாய்ச் செத்ததுவும் கூடப்படித்தவர்கள் காணாமற் போனதுவும், கூடித் திரிந்தவர்கள் காட்டுக்கு ஒடியதும்! வீதித்தடைகளில் இறங்கி நடந்ததுவும், சென்றிக்கு சென்றி சலாம் போட்டதுவும்! ஊரடங்கு, காவலரண், செம்மணி, சுடுகாடு, பண்டுக்கு உள்ளே, பண்டுக்கு வெளியே. பாணுக்கு கியூ, சீனிக்கு கியூ, பால்மாவுக்கு தட்டுப்பாடு, பனடோலுக்குக் காத்திருப்பு. கொழும்பு போக பாஸ், திரும்பி வர பாஸ், வடமராச்சிக்கு ஒரு பாஸ், வலிகாமம் இன்னோர் பாஸ். எல்லாம் மறந்துவிட்டோம்! எதுவுமே நினைவில்லை!! போர் ஒய்ந்து போனதோடு, ஒரிழவும் நினைவில்லை. பணம், பகட்டு மட்டுமல்ல "பஜாஜ் பல்ஸர்" கூட கண்களை மறைத்துக் களியாட்டம் போடுதோ? நாளொரு கொள்ளை, பொழுதொரு கற்பழிப்பு! நாலு பேர் கூடினால், நாளுக்கு ஒரு சண்டை "ஹையேஸ்" கடத்தல்கள், காசுக்கு வெருட்டல்கள். வாளெடுத்துச் சண்டைகள், தாளுடைத்துத் திருட்டுக்கள். இதுதானா நாம் பார்க்கும் இன்றைய யாழ்ப்பாணம்? இந்தச் சீரழிவுக்கா? இத்தனை உயிரிழப்பு/
-ஈழநாதன்
அறிவுக்களஞ்சியம் 74
 

ஈன்ற பொழுதில்.
மகனே./
அன்றொருநாள் محبر எனக்கு, உனையீன்ற பொழுதிலும் பெரிதும் வலித்தது!
ஊரு விட்டு
உருை வந்து, தங்கியிருந்த ஒர் நாளில், என் கண்முன்னே உன்னுடலம், கண்டும் காணாமலும் நான்./
சந்தை செல்லும் வழியில் சுட்டுப் போட்டிருந்தார்கள். உடம்பெங்கும் துளைபட, திறந்த விழி வெறிக்க, பெற்றவெண் வயிறு வலிக்க,
இரவுச் சுற்றிவளைப்போடு அதுவாகிப்போன! நீ கிடந்தாய்.
உன்னுடலில் மொய்த்திருந்த இலையானிகளிலும் பார்க்க உன்னை மொய்த்திருந்த இராணுவம் அதிகம்!
"யார் பெத்த பிள்ளையோ" இரக்கப்படவெனவே பிறந்திருக்கும் சிலர் உச்சுக் கொட்டினார்கள்.
அறிவுக்களஞ்சியம் 75
-ஈழநாதன்

Page 44
எனக்குத் தெரியும்!
உனக்கும் தெரியும்!
நீ. நானிர் பெத்த பிள்ளை. ஐயிரண்டு திங்கள் அங்கமெல்லாம் நொந்து, நான் சுமந்து பெத்த
U660p6/
கர்ணன் பெத்த குந்தி போல குந்தியிருந்து,
குமுறியழ எனக்கும் ஆசைதான்.
உனக்காக
அழும் அழுகை உனினோடை தங்கச்சிக்கு எமனாக மாறிவிடும்!
நீ என் மகனென்று தெரியவரும் இப்பொழுதில், எண் வீடு. சுத்திவளைக்கப்படும்.
கட்டிய துணியுடன், இராணுவமுகாமுக்கு இழுபடுவாள் உன் தங்கை
வாய் வரைக்கும் 6666
ஒப்பாரி,
தொண்டைக்குழியோடு
காணமற் போனது.
ஐயோ என் மகனே.!
பெற்ற மகனையே, பேரு சொல்லி agpcpcq-custo பாவியாப் போனேனே!.
உண்னை ஈன்ற பொழுதிலும். பெரிதும் வலிக்கிறதே!
அறிவுக்களஞ்சியம் 75
 

у
職 聽
鱷
織體
娜홍
戀
Ë3 鞑
ip C
zensh
iti
罚
慈懿

Page 45

கோனல்கள் -ஈழநாதன்
விபச்சாரிகள் வாழ்க்கையை வித்தியாசமான கோணத்தில் படம் பிடித்துள்ளேனர்
இயக்குநரினி பெருமிதம்!
ஈழத்தமிழர் வாழ்க்கையை வித்தியாசமான கோணத்தில்
கவிஞர் சொல்லியுள்ளார்
6 Paoltesesfoort Paular&Pausresordby
குழந்தைத் தொழிலாளர் யாரும் பார்க்காத கோணத்தில் பார்க்கப்பட்டுள்ளார்கள்
செய்தியாளரின் சிலாகிப்பு/
பெண்களின் பிரச்சனை புதிய கோணத்தில் அணுகப்பட வேண்டும்.
பேச்சாளரின் படபடப்பு!
தாழ்த்தப்பட்டவர்கள் மற்றுமோர் கோணத்தில் போராட வேண்டும்
அரசியல்வாதியினி ஆவேசம்!
இவர்களெல்லாம் கோணத்தை விட்டு எந்தப் பிரச்சனையை 659/resů Umůůuagressiř47
அறிவுக்களஞ்சியம் 77

Page 46
கூனந் கிழவனும், தேவதைகளின் மெருநாளுக்
-ஈழநாதன்
வராமல் எங்கே போய்விடும்
வருடத்தின் பெருநாட்கள்?
நேற்றும்
இன்றும் வந்ததைப் போலவே இனி,
நாளையும் வரத்தான் செய்யும்.
கூனி விழுந்த கிழவனின் பிடிசாபத்துக்கும் முகஞ்சுழிப்புக்கும் அஞ்சாத தேவதைகள், பெருநாட்களை மீண்டும் அழைத்துவரும்.
காலைச் சாப்பாட்டிற்காய் கடை வாசலில் நிற்கும் கிழவன் பற்றி அவைகளுக்கென்ன கவலை?
பல்லடுக்கில் ஒட்டவும் கானா பருக்கைச் சோற்றுடன் முந்தைய நாளையும் அதுவுமில்லா நேற்றையும் கழித்துவிட்ட கிழவனுக்கு,
அறிவுக்களஞ்சியம் 7ஜ
 
 

பெருநாளுக்காய்ப் பூட்டிய கடைகளுக்கும் UPäpalü பெருமக்களுக்கும் சேர்த்து வைத்து, இன்றையச் சோற்றுக்கு உலை வைத்த பெருநாளையும் தேவதைகளையும் திட்டத்தான் முடியும்.
தேவதைகள் என்ன செய்யும் எல்லோரும் இன்புற்றிருக்கவன்றி ஏதுமறியாத் தேவதைகள் பெருநாட்களை மீண்டும் அழைத்து வரும்,
நேற்றைப் போல் இன்றும் பசித்திருக்கும் கிழவனுக்குப் பயந்து
வராமல் போய்விடுமா வருடத்தின் பெருநாட்கள்.
நேரமும் ஒய்வும் இருந்தால் தவளையும் ஒரு மைல் துள்ளிச் செல்லும்!
- -6)6. Ucus
2) சோர்வடைந்த பின்னும் ஒருவன் நெடுந்தூரம் செல்ல முடியும்!
- Urgotai)
المر .
அறிவுக்களஞ்சியம் 7g

Page 47
மழை உருது -ஈழநாதன்
"மழை வருது” "மழை வருது” முதற் துளிகளினி போதே கட்டியங்கூறும் மணி மணக்கும் நாசி.
வீழும் ஒவ்வொரு துளிகளும் உடைந்து சிதறுகையில் கூடவே கரையும் மனம்!
வீழ்ந்து வெள்ளமாய் ஆகிப்போன துளிகளுடன் புதுத்துளிகள் சேரும் சப்தம் புற் குழந்தைகளுக்கு மழையினி தாலாட்டாய்க் கூடவே கரையும் செவி!
துளிகளின்
ஊடுபுகும்
சூரியன் சிதறல்கள், வானவில்லாய்ப் பரிணமிக்கையில் கூடவே வளையும்
கண்கள்.
மணிகரைந்து ஒடும் வெள்ள நீர் அசுத்தமென்றறிந்தும் அளைந்திடப் பரபரக்கும் கைகள்.
கூதற் காற்றில் வெடவெடத்தாலும்
அறிவுக்களஞ்சியம் 8O
 

போர்க்கும் மனமின்றி குறுக்கே கைவைத்து குளிருக்கு அடைக்கலம் தேடும் உடல்!
இத்தனையும் எனக்கே.
எனக்காக
ஊரில் நின்றிருந்தால்!!
அடுக்குமாடி அறையொன்றின் சாளரங்களை. மழைத்துளிகளுக்காய் சாற்றும் போதுதான் எத்தனை நினைப்புகளும், ஆற்றாமைகளும்!
அறிவுக்களஞ்சியம் 31

Page 48
நகரில் தொலைந்த நட்சத்திரங்கள் -ஈழநாதன்
அடுக்குமாடி குடியிருப்பின் ஜன்னலோரம் அலைந்து திரிகிறது மேகம்.
கைக்கெட்டும் தூரத்தில் கருவானம் உண்டு களைத்து உறக்கத்தில்,
தெருவிளக்கின் ஒளியும், அலங்கார வளைவுகளின் பட்டுத் தெறிப்பும். பகலாக்கி விடும் முயற்சியில் Ung'
வென்ற களிப்புடன் பளிச்சிட்டபடி,
சந்திப்புகள் தோறும்
சிவப்பும்,
பச்சையும்,
இடையிடை
மஞ்சளுமாய் வீதிக் கட்டுப்பாட்டு விளக்கின் வர்ணக்கலவை, வாகனத்துக்கு எஞ்சியது வானிலும் தெறிக்கிறது.
நியோனிகளின் ஆதிக்கத்தில் கடை முகப்புகளும், கடைப்பெயரும்
கூடவே
தெறிபரப்பரில்,
வானமும்,
அறிவுக்களஞ்சியம் ! ஐ2
 
 
 

எங்கு தேடியும் தென்படாத போக்கில் நட்சத்திரங்கள். நிர்மலமாய் வானம்
நகரமயமாக்கலில், நட்சத்திரங்கள் கூட காணமற் போய்விட்டன.
பறவைகள் -ஈழநாதன்
எங்கள் ஊரினர் விடிகாலைப் பொழுதுகளில் வானத்தில் வட்டமிடும் வெள்ளைப்பறவைகள்!! சிலவேளை இரண்டிரண்டாய், சிலவேளை
கூட்டமாய்.
எப்போதும் தனியாகப் பார்த்தில்லை. அவை வருமுன்பே கட்டிங்கூறும கர்ணகொடூரச் சத்தம். சில வேளைகளில் சப்தம் மட்டுமே கேட்கும்//
6 si607th
பறவைகளின்றி நிர்மலமாய்த் தோன்றும்.
இறக்கை அடிக்காமல் வழுக்கிக் கொண்டே ஒன்றை ஒன்று துரத்தும். எதிரும் புதிருமாய் வட்டமிடும்.
அறிவுக்களஞ்சியம் !
83

Page 49
பனை மரங்களை முட்டிவிடுமாறு தாழப் பறக்கும்.
பதிவதும்
எழுவதும் போவதும் வருவதுமாய் வானவெளியில் சாகசங்கள் தொடரும்.
இன்னும் ரசிக்கலாம்
என்று தோன்றுகிறது.அவை மடடும். t குத்திப் பதிந்து
மேல் எழும்போதெல்லாம்
g560 (8666rd பீய்ச்சாது الارا. نمت له
நாம் இழந்து போன ஒவ்வொரு உயிரும் விலைமதிப்பில்லாதது. இதில் ஏற்றத்தாழ்வுகள் கண்டுபிடிக்க முனைவது சிறுமை,
-ஈழநாதன்
அறிவுக்களஞ்சியம் 34
 
 
 

பிறந்த பொன்னாடு
கல் தோன்றி மணிதோன்றாக் காலத்துக் கதையெல்லாம் தெரியாது. ஆனால்..! எண் முனி தோன்றிய மூத்த பழங்குடி
அப்புவும்
ஆச்சியும்
வாழ்ந்த மணி.
ஏன்
அப்புவின் அப்புவும் ஆச்சியின் ஆச்சியும் கூட அங்கேயே வாழ்ந்தனர். அதுக்கு முன்
இன்னும் ஒன்றிரண்டு தலைமுறை அப்பு ஆச்சிமார்
صaنت இருந்திருக்கலாம்.
நான் கூட பிறந்து வளர்ந்தது அங்கேதான் பிறந்த நாடுதான் பொன்னாாடு என்றெல்லாம் சொனினேன் மகனுக்கு.
அவனும் மொழிகிறான். உண்மைதான் அப்பா
- ஈழநாதன்
பிறந்த நாடுதான் பொன்னாடு பிறந்த நாட்டை விட்டு வரமாட்டேன் இலங்கைக்கு
அறிவுக்களஞ்சியம் 85

Page 50
&வலிகள் உயரும் ܟܼ -ஈழநாதன்
பெண்ணினர் பூப்படைதலுடன் வீட்டு வேலியை ஒரு வரி உயர்த்திக் கட்டும் அப்பாக்கள்.
வெளியே போய் விடுவரும் போதெல்லாம் வேலியை ஒருதரம் சரிபார்க்கும் அம்மாக்கள்.
முப்பது வயதெட்டியும் , முதிர்கன்னியாய், தான் விடும் மூச்சுக்களை தணிக்கை செய்யும் வேலிகளை
திட்டும்
பெண்கள்.
பொட்டுக்குள்ளால் கால் தெரிய எட்டிப் பார்த்தும் எதுவும் தெரியாமல் வேலியைச் சபிக்கும் இளசுகள்.
எவரைப் பற்றியும் 66.606vUUUlsco6). ஏறிக்கொண்டிருக்கும், சீதனச் சந்தையும் கிடுகு விலையும்!
அறிவுக்களஞ்சியம் 86
 

隱
靈

Page 51

arrearG aptழ்தல் -ஈழநாதன்
எனிறோ நடந்து மறந்து போனாலும் இன்றும் விசிக்கொண்டிருக்கும் இரத்த நெடில்! குண்டும் குழியுமான குண்டு வீச்சினி நினைவுச்சினினங்களின் மேல் விரையும் நாட்கள்! இயற்கை உபாதைக்கென ஒதுங்க கஷடமின்றி நகரத்தினர் மத்தியிலே தலைகாட்டும்
இடிபாடுகள்!
இடிந்தழிந்த வீட்டை கட்டவா விடவாவென்று வாஸ்து பார்க்கப்போகும்
படித்த மனிதர்கள்!
எங்களுக்கும் ஒருநாள் உதவக்கூடுமென்று செயற்கைக்கால் செய்பவர்களுடன் சமூக சேவையில் ஈடுபடும் இளைஞர்கள்!
அழிந்த நகரம் புதுப்பிக்கப்பட முன்னே புதிதாய் எழும் காவலரண்கள்!
ஒவ்வொருநாளும்
காணாமற் போகும்
நண்பர்கள்.
அறிவுக்களஞ்சியம் ஐ7

Page 52
போன இடம் தெரிந்தும் தேடப்போகாத பெற்றோர்கள்!
விதவைத் தாய்மாரை ஏக்கத்துடன் பார்க்கும் இளைய பெண்கள்!
சைக்கிளை விற்றுவிட்டு மோட்டார் சைக்கிள் வாங்க
ஆயிரம் தடைவ யோசிக்கும் அப்பா!
இத்தனை நாள் கழித்து எங்கள் ஊரில் மெதுவாய்ச் சூழும்
érdséssz96zr//
O ஈழநாதனின் சில வலைப் பதிவுகள்
) http://padippakam.blogspot.com/
2) http://akavithai.blogSpot.com/
3) http://padaippu.blogspot.com
4) http://salamaSurul.blogSpot.com/
5) http://relieftsunami.blogspot.com/
6) http://singaimurasu.blogspot.com
7) http://eelanatham.blogspot.com/
அறிவுக்களஞ்சியம்
88
 

நீட்டிக்கப்படும் உயிர்வாழ்க்கை
காலையிலிருந்து வானொலி அலறிக்கொண்டிருக்கிறது. மீண்டுமொருமுறை உயிர்வாழும் உரிமை எங்களுக்கு நீட்டிக்கப்பட்டிருக்கிறதாம். தொலைக்-காட்சியில் கூட அடிக்கடி காட்டினார்கள். சிரித்த முகத்துடன் தலைவர்கள் கைகுலுக்கிக் கொண்டார்கள். தேவதைகள் ஆசீர்வதித்தன. தேவர்கள்யூமாரி பொழிந்தனர். வானத்திலிருந்து அசரீரியாய் வானொலி பெருங்குரலெடுத்து அலறியது. சமாதான முன்னெடுப்பாய் உயிர்வாழும் உரிமை எங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாம். இப்போதைக்கு உயிர்வாழ மட்டுமேஆனுமதி. படிப்படியாக வெளியே நடமாடவும் பிற செயற்பாடுகளுக்கும் அனுமதி கிடைக்கும், அக்கம் பக்கத்தில் பேசிக்கொண்டார்கள். இப்படியாக வானொலியும்தொலைக்காட்சியும் சேதி சொன்ன காலையொன்றில், பக்கத்து வீட்டண்ணன் சுடப்பட்டிறந்தான். "ஒருவேளை உயிர்வாழ்வதற்கான அவனது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டிருக்கலாம்." தனினைத்தானே தேற்றிக்கொள்ளும் அவனது தந்தை!
ஈழநாதன்
CP
அதிகம் பேசாதவனை உலகம் அதிகம் விரும்புகிறது. அளந்து பேசுபவனை அதிகம் மதிக்கிறது. அதிகம்
செயல்படுபவனையே கைகூப்பித் தொழுகிறது.
கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.
நம்முடன் வாழ்வோரைப் புரிந்து கொள்வதற்கு நம்மை முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.
அறிவுக்களஞ்சியம் ஐg

Page 53
செருப்பு:
குறும்படத்திற்கு ஒரு குறு விமர்சனம் - ஈழநாதன்
ஐரோப்பா மற்றும் கனடாவில் தற்போது பரவலாக தமிழில் குறும்படங்கள் எடுப்பது அதிகரித்து வருகிறது. குறும்படத்துக்கேயுரிய தனிச்சிறப்பாகிய சமூகப் பொறுப்புடனி விடயங்களை நச்சென்று சொல்லல் பல படங்களில் திறமையாகக் கையாளப்பட்டு அவை பல மட்டத்தினரதும் பாராட்டையும் பெற்றிருக்கின்றன. சில படங்கள் கணினி முயற்சியென்பதால் சொல்ல வந்த விடயத்தில் நிலையாக நிற்காமல் ஏதேதோ சொல்லி கடைசி அறுபது விநாடிகளில கதையின் உச்சக்கட்டத்தைக் காட்டி விமர்சனத்துக்குள்ளானாலும் அவர்களது முயற்சியும் பாராட்டப்படவேண்டியதே.
இந்தவகையில் புலம்பெயர் ஈழத்துப்படைப்பாளர்களால் நாட்டின் போராட்டம் வறுமை போன்ற உணர்ச்சி நிறைந்த சிறு சம்பவங்கள் குறும்படங்களாக எடுக்கப்பட்டு அவை புலம்பெயர் நாடுகளில் நடைபெற்ற பல்வேறு நாடுகளையும் சார்ந்த குறும்பட விழாக்களில் வரவேற்பைப் பெற்றதையும் காண்கிறோம். அந்தத் தொடர்ச்சியில் ஈழத்திலிருந்து வெளிவந்த ஒரு நல்ல குறும்படமென்று ஆரம்பித்துச் சில நிமிடங்களிலேயே சொல்லிவிடக் கூடிய குறும்படம்தானி செருப்பு. இக்குறும்படம் வெளிவந்து சிலநாட்கள் ஆன போதும சங்கைக்கு இவை கொண்டுவருவதில் உள்ள சிக்கல்காரணமக பல நாட்களாக பார்வைக்கு எட்டவில்லை. நேற்றே அப்பால் தமிழில் இணைக்கப்பட்டுள்ள கோப்பிலிருந்து தரவிறக்கிப் பார்த்தேனி.
கெளதமன் என்பவரால் இயக்கப்பட்டிருக்கிறது இந்தப்படம். 15 நிமிடங்கள் ஒடும் இப்படத்தில் ஒவ்வொரு நிமிடமும் இது நிழல் பிம்பங்கள் என்ற உணர்வின்றி ஈழத்தின் வன்னிப்பகுதியில் நடைபெறும் வாழ்க்கையின் சிறுகாலப்பகுதியைக் கண்முனினால் நிறுத்துகின்றது. கதை நடக்கும் რ6mdb வணினியென்று குறிப்பிடப்படாவிட்டாலும் உணர முடிகின்றது. கூடவே யாழ்ப்பாணத்திலும் போர் நடந்த காலத்தில் இதே வாழ்க்கைதானி என்ற நினைவும் தலை தூக்குகிறது.பாத்திரத்தேர்வு கதை கதைக்களம் என்று ஒவ்வொரு விடயமும் கவனமாகக் கையாளப்பட்டிருக்கின்றது. பாடசாலைக்குப் போவதற்குச் செருப்பு வாங்க ஆசைப்படும் எழைக்குடும்பத்துச் சிறுமியின் பரிதவிப்பு. அவளுக்கு சிறு செருப்பைத்தானும் வாங்கிக்கொடுக்க முடியாத ஏழைத்தந்தையின் இயலாமை.
அறிவுக்களஞ்சியம் go

வறுமையின் கோரத்தாண்டவம். அதனை விட செருப்புக் கிடைத்தும் அதனை சிறுமி அனுபவிக்க முடியாமற் போய்விட்ட அவலம் என ஒவ்வொரு சம்பவமும் பார்த்துப் பார்த்துச் செதுக்கப்பட்டுள்ளன.
தேங்காயைக் கோதி சிறு உண்டியல் செய்து செருப்பு வாங்குவதற்காக சிறுமி பணம் சேர்க்கும் ஒவ்வொரு நிமிடமும் ஏதோ ஒருசோகக் கதையை நின்று நிறுத்தி வாசித்த உணர்வு. பின்னணி இசை படத்திற்குப் பலம் சேர்த்திருக்கிறது. பாத்திரங்கள் உணர்ந்து நடித்திருக்கிறார்கள் அதிலும் அந்தச் சிறுமியினதும் தந்தையினதும் நடிப்பு மிகவும் சிறப்பாக அமைந்துள்ளது. கோடரி வெட்டிக் காயமேற்பட்ட போதும் அதனையும் தாங்கி சம்பளத்தை வாங்கிச்செல்லும் தந்தை. தந்தைக்கு காய்ச்சல் வந்தபோது தானி ஆசையாசையாய் சேர்த்து வைத்த காசை அம்மா எடுக்கையில் தடுக்க மனமினிரி ஊமையாய் அழும் மகள் இரு உறவுகளும் சிறப்பு. அழகான ஒரு கவிதையொன்றை குறும்படமாகப் பார்த்த மனநிறைவு.
இதுதாணி ஈழநாதனி. இனி நாங்கள் எல்லாரும் எங்களுக்குத் தெரிஞ்ச அவன் செய்த எத்தனையெத்தனையோ நல்ல நல்ல விசயங்களை எல்லாம் சொல்லுவம். அவனி மட்டும்தானி இல்லாமல் போனான். ஆனால், அவன் செய்ததைக் கதைக்க வேணும்.
-மதி கந்தசாமி
மானிடத்தை நேசித்த ஒரு மனிதநேயன் ஈழநாதன். அவனை இழந்த துயர் எல்லோரையுமே பெருந்துயராய் நினைவுகளிலெல்லாம் அவனி குரல் ஒலித்துக்கொண்டே இருக்கின்றது.
-சாந்தி ரமேஷ் வவுனியனி
அறிவுக்களஞ்சியம் g1

Page 54
மிகவும் அதிர்ச்சி தந்த வருத்தமான செய்தி. மனக் கலக்கம் அடைந்துண்ளேன். ஒரு ஏழு ஆண்டுகளுக்கு முனி அவரை சிங்கையில் ஒரு பதிவர் சந்திப்பில் கண்டு பேசினேன். நியூசியில் தமிழ்ப்புத்தகங்கள் கிடைக்கவில்லை. நம்ம மதி கந்தசாமி அவருக்கு எனி வருகைத் தகவல்கள் சொல்லி எனக்கு உதவும் படி சொனினாராம். நான் புத்தகக்கடைக்கு கூட்டிப்போறேன் அக்கா என்று அனிபாகச் சொன்னார்.
அவர் மறைவு இனினும் கூட நம்ம முடியாததாக உள்ளது. எத்தனை சின்ன வயசு. எமனுக்கு ஏன் இவ்வளவு அவசரம்.
- துளசி கோபால் ン
ஈழியோடு ஒன்றாய் சாப்பிட்டு, ஒன்றாய் வாழ்ந்தவர்களுள் நானும் ஒருவன். இதோ அவனது இறுதிக் கிரிகைகள் கணி முன்னே பார்த்துக்கொண்டு நிற்கின்றேன். இன்னும் அவனது அந்தக் கணிர் குரல் கேட்டுக்கொண்டு இருக்கின்றது. ஈழி சாகவில்லை. இன்னும் வாழ்ந்துகொண்டு இருக்கிறான். ஏன்றும் வாழ்வான். அவன் ஆத்ம சாந்திக்காக கண்ணிருடனர்.
-மாலவனி பாலநவநீதனி
ஒரு காலத்தில் வலையுலகில் எம்மோடு மிகவும் ஒன்றியிருந்த ஈழநாதன். மிகவும் அதிர்ச்சியான செய்தி.
-சந்திரவதனா செல்வக்குமரன்
لا
அறிவுக்களஞ்சியம் g2
 
 
 
 
 

பெற்ற ஒரு எழுத்தாளர், உயர்கல்வித் தெரிவில் சில நுணுக்கங்களை எனக்கு சொல்லிக் கூடக் கொடுத்திருந்தார். திடீரென்று,என்ன நடந்தது. அன்னாரின் இழப்பினால் துயருறும் குடும்பத்தினருக்கு ஆறுதல் சொல்ல மட்டுமே முடியும். ஏன்றாலும் மிகக் கவலையாக இருக்கின்றது. எனினோடு அடிக்கடி பேசுவார்.
- யோகா தினேஸ்
கிளிநொச்சியில் எங்கள் வீட்டில் வந்து இரண்டு நாட்கள் தங்கி நூலக வேலைகள் பற்றி உரையாடியதை நினைவு கூருகின்றேன்.
-சிவராசா கருணாகரன
ஈழத்தில் வெளிவந்து பல ஆண்டுகளாகிவிட்ட அபூர்வ நூல்களை கண்டறிந்து அதை மின்னணு வடிவமாக்கி இணையத்தில் இலவசமாக வெளியிடுவதற்காக நூலகம் அறக்கட்டளையினை தொடங்கிய அதன் ஆரம்பகால உறுப்பினரான ஈழநாதன் இன்று மரணமடைந்தார்.
அவருக்கு என் ஆழ்ந்த அஞ்சலி நூலகம் உலகம் முழுவதுமான தமிழ் வாசகர்கள் ஈழத்து நூல்களை ஒரே இடத்தில் தேடிக் கண்டறிந்து இலவசமாக தரவிறக்கி படிக்க வழி அமைத்த சிறந்த தளம். எனக்கு
இதன் மூலம்தான் பல ஈழம் சார்ந்த நூல்கள் கிடைக்கப்பெற்றது. ஈழநாதனை இழந்துவிட்ட போதும் நூலக அறக்கட்டளை தொடர்ந்து தடையின்றி அதன் பணிகளைச் செய்ய வேண்டும் என்பதே வாசகர்களின் எதிர்பார்ப்பு,
-எச். பீர் முஹம்மது
"அம்மா. "ஜெய்ப்பூர்" செயற்கைக்கால் வாங்கித் தந்தால் தான், பள்ளிக்குப் போவேன்" ஒற்றைக் காலில். அடம்பிடிக்கும், பள்ளிச்சிறுவனர்! -ஈழநாதன்
அறிவுக்களஞ்சியம் gg

Page 55
நினைவல் வைத்திருக்கிறோம்.
எங்கள் குடும்ப உறவின் பேரிழப்பால் நாம் துயர்சுமந்து நிற்கும் இந்தவேளை தக்க சமயத்தில் நேரிலும் தொலைபேசியிலும் மின்னஞ்சலுடா முகப்புத்தகமூடாகவும் தொடர்புகொண்டு துயரில் பங்கேற்ற உறவுகள், நண்பர் அன்னாரின் பெறுமதிமிக்க வாழ்ந்த காலத்துச் சாதனைகளை பதிவில பதிவுலகத்தினர், சிங்கைநகரிலே அன்னாரின் இறுதிக்கிரிகைகள் அனைத்தினை சிறப்பான முறையிலே செய்து எம் நெஞ்சை நெகிழவைத்த அன்னா நண்பர்குழாம். உணவு ஏற்பாடுகளைச் செய்து உடனிருந்து உறுதிதந்த உறவு உடனுக்குடன் அவர் தொடர்பான பதிவுகளையும் அஞ்சலிகளையும் காவி இலக்கணாவத்தை குழுமத்தினர். அஞ்சலி செலுத்துவோருக்கென அமைத்துக்கொடுத்த யாழ் இணையம், நூலகம் திட்டம், தமிழ் மணம், விக்கிபீ மற்றும் இதர தளங்களின் நிர்வாகத்தினர். "புதிய நூலகம்” இதழ் 15 தி அன்னாரினி நினைவு சுமந்த சிறப்பிதழாக வெளியிட்ட நூலக நிர்வாகத்தி அனைவருக்கும் நன்றியென்ற ஒற்றை வார்த்தை சொல்லி எம்மிலிருந்து எவை பிரித்துப்பார்க்க முடியவில்லை. நினைவில் வைத்திருக்கிறோம்.
இங்ங் பெற்றோர், மனைவ, ம சகோதரர்கள், மைத்துனர் மருமக்கள், பெறாய
அறிவுக்களஞ்சியம் 94

வந்த წ670
Part
тауф
arb
66

Page 56
முத்தையா +ஆமணி நாகலிங்கம் *சினினமணி
Y Y
புவனேந்திரன் H தனலட்சுமி V ノ Y
புவர்ணலதா தேனிமொழி இள
al Ho கதாதரன் மயூரன் துஷ்
Y Y கபிஷா மகிழினி @یا கபிஷன் சங்கவி
* ஈழநாத6
-ܠ
* இக்குறியீடு அமரர்களைக் குறிக்கும்

எங்கள் ஆலமரத்தின் விழுதுகள்
சிவபாதகுணம் + கெளரிநாயகி
V 人 Y
பிரசாந் பிரண்யா பிரதீவ்

Page 57


Page 58


Page 59
துந்தது எது நடக்கிறதோ அது எது நடக்க இருக்கிறதே உன்னுடையது எதை எதைாருவர்
எதை கொடுத்தரரே
துன்ேறு உன்னுை மற்றொரு நாள்
 

ತ್ರಿಗಿರಿ
ព្យញ្ជ நடந்து ប្រញ៉ േ
அதுவும் நன்று LöğÓ. தாய் ஏற்ர அழுகிறது ாய் அதை இழப்பதற்கு
Garcialise 流L7cm。
இங்கிருந்த எடுக்கப்பது |A; 575 L.
5T éig. JG)GT பற்றொருவருடையதா