கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: எழுதப்பட்ட அத்தியாயங்கள்

Page 1


Page 2


Page 3

எழுதப்பட்ட அத்தியாயங்கள்
சாந்தன்
@
LONYMOMsOhöŽIVLJörsVU
2011/1, பரீகதிரேசன் வீதி, கொழும்பு - 13.
தொலைபேசி: 320721

Page 4
மல்லிகைப் பந்தல் வெளியீடு
முதற் பதிப்பு: 2001-மே CO SANTHAN
விலை: ரூபா. 140/=
ISBN: 955-8250-05-8
அச்சிட்டோர்: யு. கே. பிரிண்டர்ஸ், 98 A விவேகானந்த மேடு, கொழும்பு ~ 13. தொலைபேசி: 344046, 074-614153

பதிப்புரை
‘எழுதப்பட்ட அத்தியாயங்கள்’ என்ற சாந்தனது இந்தச் சிறுகதைத் தொகுதியை மல்லிகைப் பந்தல் சார்பாக வெளியிட்டு வைப்பதில் பெருமகிழ்ச்சி அடைகின்றேன்.
சாந்தனின் படைப்பு நூலொன்று மல்லிகைப் பந்தல் வெளியீட்டு முத்திரையின் கீழ் வெளிவருகின்றது. சந்தோஷம் தருகின்றது.
சாந்தன் ஒரு வித்தியாசமான எழுத்தாளர். அவரது படைப்புகள் ஒவ்வொன்றுமே தனித் தனிச் சிறப்புகள் கொண்டவை. சிறு சிறு சம்பவங்களைக் கூட, கூர்ந்து அவதானத்துடன் நோக்கி அதன் சிறப்பான உள்ளீடுகளை உள்வாங்கி, நுண்ணிய மதி நுட்பத்துடன் அதைச் செழுமைப் படுத்தி, கலை நயத்துடன் படைப்பாக ஆக்கித் தருவதில் வல்லவர். விண்ணன்.
புதிய எழுத்தாளர் பரம்பரையில் இன்று பலரது கவன ஈர்ப்பையும் பெற்றுப் பிரகாசிப்பவர். ஏனைய எழுத்தாளர்களது இலக்கிய நடையைவிட, இவரது மொழி நடை வித்தியாசமானது. சுவை ததும்புவது. தனி ரகமானது.
இவரது தனிச் சிறப்பான அம்சங்களில் இதுவும் ஒன்று.
தான் எடுத்துக் கொண்ட சிறு கருவைக் கூட, தனக்கு வாலாயமாகக் கைவரப் பெற்ற உரை நடை மூலம் சொற்செட்டுடன் லாவகமாகவும் பூடகமற்ற நளினத்துடனும் கலை நுணுக்கம் செறிந்த சோடனைகளற்ற வார்த்தைகளுடனும் தனது சிருஷ்டிகளை வாசகர்கள் மத்தியில் கொண்டு செல்வதில் இலக்கிய உலகின் தனிக் கவனத்தைப் பெற்று வருபவர் சாந்தன்.

Page 5
இவரது சமூகப் பார்வை வித்தியாசமானது. படித்ததன் பின்னரும் ஆழ்ந்து சிந்திக்க வைப்பதில் இவரது படைப்புகள் பேசப்ப்ட்டுவருவன.
இது இவரது தனித்தன்மைகளில் மிக முக்கியமானது.
தனது படைப்புகளை ஒரு புத்திஜீவியின் கோணத்தில் நின்று அணுகிப் படைப்பதுடன் அவைகளை மொழி அளந்து படைப்பதிலும் கவனம் செலுத்தபவர்.
வசனங்களை நீட்டி இழுத்து, மடக்கி, செப்பிடு வித்தை பண்ணுவதைத் தவிர்த்து, வித்தை காட்டாது குறு குறு வசனங்களைப் பெய்து பெய்து கதையை நகர்த்திச் செல்வார், இவர்.
இவரது மொழி ஆளுகை தமிழுக்குப் புதுசு. இந்தத் தொகுதியில் இவற்றைப் பரக்கக் காணலாம். சுவைக்கலாம்.
சாந்தனது இந்தத் தொகுதியை வெளியிட்டு வைப்பதில் உவகையடைகின்றேன். படிகளை ஒப்பு நோக்கி உதவி புரிந்த திரு. மா. பாலசிங்கம், அழகாக அச்சிட்டு உதவிய யு. கே. பிரின்டர்ஸ் ஆகியோருக்கு எனது நன்றிகள்.
-டொமினிக் ஜீவா

முன்னுரை
கலை, இலக்கியம் என்பன வாழ்க்கையைப் பற்றிப் பேசுவன. வாழ்வியல் அநுபவங்களின் பிழிசாறாக அமைவன. வாழ்வியல் அநுபவங்களை நிகழ்வுகளாக-சம்பவங்களாக - நோக்கும் போது அவ் இலக்கியம் அல்லது கலை விவரணமாகி விடுகிறது. அந்நிகழ்வுகளின் அடியாக எழும் எண்ணக் கோலங்களையும் உணர்வலைகளையும் தேக்கி நிறுத்தும் நிலையிலேயே கலையும் இலக்கியமும் சிறப்படைகின்றன. கலை இலக்கியம் என்பவற்றின் பிறப்புத் தொடர்பான இந்த அடிநிலை உண்மையை நன்குணர்ந்து கொண்டவர்களுள் குறிப்பிடத்தக்க ஒருவர் - எழுத்தாளர் சாந்தன். ‘அநாயாசமாகப் பொருளை உணர்த்தும் கலைத்திறன்” வாய்ந்தவராகப் பேராசிரியர் க. கைலாசபதி அவர்களால் (முளைகள் சிறுகதைத்தொகுதி அணிந்துரையில்) மதிப்பிடப்பட்டுள்ள படைப்பாளி இவர்.
சாந்தன் கதைகள் காட்டும் உணர்வு நிலைகள் இருவகையின. ஒன்று சமூக பொருளியல் ஏற்றத்தாழ்வுக்கு எதிரான அறிவு நிலை சார்ந்த உணர்வெழுச்சியாகும். பொதுவான பகுத்தறிவின் வளர்ச்சி மற்றும் பொதுவுடமைச் சிந்தனையின் வரவு என்பன இதனைத் தூண்டி நின்று வழி நடத்தின. முனைப்புப் பெற்ற இன்னோர் உணர்வு நிலை ‘தமிழ் - சிங்கள இன முரண் சார்ந்ததாகும். பெளத்த - சிங்கள’ பேரினவாதத்தின் விளை பொருளான இந்த இனமுரண்பாட்டுணர்வு இன்று எய்தியுள்ள அதி தீவிர ‘பூதாகாரமான நிலை யாவரும் அறிந்ததே. இதனை உரிய கட்டத்தில் உணர்ந்து எழுத்தில் வடிக்க முயன்றவர் இவர்.
பொதுவாக மேற்படி இரு நிலைப்பட்ட உணர்வுத் தளங்களும் சாந்தனின் எழுத்துகளுக்குப் பகைப்புலன்களாக அமைந்துள்ளன. ஒரு
V

Page 6
முற்போக்குவாதி - பொதுவுடமைத் தளம்சார் படைப்பாளி - என்ற வகையில் மேற்படி இரண்டாவது உணர்வுத் தளமே - இனமுரண்பாட்டுச் சிந்தனைச் சூழலே - சாந்தனது கதைகள் பலவற்றிலும் முக்கிய பகைப்புலமாக அமைந்துள்ளது.
இத் தொகுப்பிலுள்ள கதைகளில் பல இதற்குச் சான்றாக உள. இதில் கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கிய அம்சம் என்னவெனில், முற்போக்குவாதி ஒருவர் இனமுரண் சூழலைக் கவனத்திற் கொள்ளக்கூடாது, என்ற தீண்டாமை உணர்வு நிலவிய வரலாற்றுக் கட்டத்தில், இந்த முற்போக்குவாதி அந்தத் தீண்டாமைைையத் தாண்டி வந்தவர் என்பதாகும். அவரது அந்நியமான உண்மைகள் என்ற கதை (மல்லிகை 75 ஜனவரி காலங்கள் : ஒரு பிடி மண் - தொகுதிகள்) இவ்வகையில் வரலாற்று முக்கியத்துவம் பெற்ற படைப்பாகும். அரசியல் மற்றும் இலக்கிய அமைப்புக்களின் எல்லைகட்குள் சாந்தன் என்ற படைப்பாளியின் ஆளுமை மட்டுப்பட்டு நிற்கவில்லை என்பதை இக்கதை உணர்த்தும்.
சாந்தனின் இனப்பிரச்சினை நோக்கில் ஒரு முக்கியகட்டம் 1981இல் எழுதப்பட்ட ‘கிருஷ்ணன் தூது சிறுகதை, சிறுகதைக் கட்டமைப்புத் திறனுக்கு எடுத்துக் காட்டாகக் காட்டக் கூடிய முதன்மையான கதையென மேற்படி கிருஷ்ணன் தூதுக் கதையைக் கூறலாம். இனப்பிரச்சினையின் மிகப் பெரிய வரலாற்றுப் பரிமாணத்தை ஓர் அலுவலகத்தின் நிகழ்ச்சிகளுக் கூடாகக் கதை மாந்தரின் குணநலன்களையும் இனப்பிரச்சினையின் வரலாற்றுச் செல்நெறியையும் புலப்படுத்திய திறனும் தமிழ்ச் சிறுகதைகளில் அதற்கொரு தனிச் சிறப்பை - தனி இடத்தைத் தருவன.
ஒன்றுக்கு மேற்பட்ட அநுபவங்கள் இணைத்துக் கதையம்சம் விரிவடைந்து செல்லும் நிலைக்கு சான்றாக அமைவது ‘ஆரைகள். ஆரைகள் குறுநாவலின் பிரதான பகுதி இனக்கொலைச் சூழலின் பின் மீண்டும் கொழும்பிற் பணிபுரியச் சென்ற ஒரு தமிழனின் உணர்வோட்டத்தின் படப்பிடிப்பாகும். சூழ்நிலையின் யதார்த்தத்தைப் புரிந்துகொண்டு சிங்களவர்களுடன் ஒத்து மேவி வாழமுற்படும் ஒரு சராசரி மனிதனை அக்குறு நாவல் தரிசிக்க வைக்கிறது. தனிமனித நிலையிலான "தான் என்ற தளத்தில் நின்று விரிந்து குடும்பம், சமூகம், இனம், வர்க்கம், உலகம், பிரபஞ்சம் என்ற வகையில் பார்வை விரிந்து செல்வதை இதிற் காணலாம். ஒருவனது ஒருநாள் வாழ்வில் நிகழும் பலதளச் செயற்பாடுகளை இணைத்துக் காட்டும் நிலையில் ‘ஆரைகள் செப்பமுற அமைந்துள்ளது.
VI

வெவ்வேறு மட்டங்களில் இனப்பிரச்சனையைத் தொட்டும் விமர்சித்தும் வந்துள்ள சாந்தன் அப்பிரச்சினையின் வரலாற்றை முழுமையாகத் தொட்டுக் காட்டும் வகையில் 1987ல் எழுதப்பட்ட அத்தியாயங்கள் என்ற குறுநாவலை எழுதினார். இதிலே தனது அநுபவங்கள், மனச்சாட்சி என்பவற்றின் தளத்தில் நின்று அப்பிரச்சினையின் செல்நெறியை விமர்சிக்கிறார். சிங்களவரிடம் பேரினவாத நோக்கு படிப்படியாக வளர்ந்த நிலை, தமிழரது உரிமைப்போராட்ட முயற்சிகள், ஈழக்கோரிக்கை உருவான சூழல், யாழ்ப்பாணப் பிரதேசத்தின் யுத்த சூழல், ஈற்றில் 1987 ஜூலையில் இந்தியாவின் நேரடித் தலையீடு அமைந்த நிலை என்பன நினைவோட்டத்தினுடாகக் கதையாகப் பரிணமிக்கின்றன. சுதுமலை அம்மன் கோவில் முன்றலில் இந்திய 'ஹெலி வருகையை எதிர்பார்த்து நிற்கும் ஒருவரது சிந்தனையோட்டமாக விரிந்து இக்கதை மேற்படி ஹெலி தரையிறங்குவதுடன் நிறைவு பெறுகிறது. தலைப்புக்கேற்ப இனப் பிரச்சினை தொடர்பான நிகழ்வுகள், மேற்கொள்ளப்பட்ட நடைமுறைகள் என்பவற்றின் சுருக்கப் பதிவோடாக - எழுதப்பட்ட அத்தியாயங்களாக - இக்குறுநாவல் அமைந்துள்ளது. இவ்வகையில் சாந்தனது வரலாற்றிலும், இனப்பிரச்சினை இலக்கிய வரலாற்றிலும், மேற்படி ஆக்கம் முக்கிய கவனத்திற்குரியதாகிறது.
மேற்சுட்டிய வகையில் அமைந்த ஆக்கங்கள் யாவற்றிலும் சாந்தன் தன்னை இனங்கடந்த "யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற மனப் பங்குடைய ஒரு பொது மனிதனாகவே புலப்படுத்திக் கொள்கிறார். தமிழன் என்ற சார்பு நிலையில் நின்று இனப்பிரச்சினையை அவர் நோக்கவில்லை. சிங்களவர் - தமிழர் இருசாரரும் மனித நேயத்துடன் ஒன்றிணைந்து வாழ வேண்டும் என்ற கருத்தை முன்வைத்த 1970 - 75 காலகட்டத்திலும் சரி, அதன்பின் சிங்கள பேரினவாதக் கொடுமைகளை இனங்கண்டு விமர்சிக்க முற்பட்டபோதும் சரி அவரது இந்தப் பொதுமனத் தளத்தில் மாற்றம் நிகழவில்லை. எனவே பிரச்சினை தொடர்பான பல்வேறு அம்சங்களையும் இவரால் விருப்பு பெறுப்பின்றி விமர்சிக்க முடிகிறது.
இத்தொகுப்பிலுள்ள ஏனைய கதைகள் மேற்குறிப்பிடப் பட்டவற்றின் தன்மைகளையே ஒத்து நிற்பதுடன் இயல்பான கலை வரலாற்று வளர்ச்சியாயும் அமைவன. தம்மீது திணிக்கப்பட்ட போர்ச் சூழல் நிர்ப்பந்தங்களுக்கு முகங்கொடுத்துத் தாக்குப்பிடிக்கும் மக்களின் வாழ்வியலை கலைப் படைப்பாக்கும் அவரது முனைப்புக்குச் சான்று பகர்வன இவை.
VII

Page 7
ஈழத்தின் இனப்பிரச்சினை இலக்கியம் தொடர்பாக நோக்கும்போது, கடந்த 25 ஆண்டு காலப்பகுதியில் இப்பிரச்சினை தொடர்பாகப் பிரக்ஞை பூர்வமாகச் சிந்தித்து தொடர்ந்து எழுதி வந்துள்ள சிறப்பு சாந்தனுக்கு உரியது. இனப்பிரச்சனையை உணர்ச்சி சார்ந்த ஒரு விடயமாக அணுகாமல் அறிவு பூர்வமாகச் சிந்தித்து உணர்வு பூர்வமாக வெளியிட முற்பட்டவர் என்ற வகையில் இவர் தனிக் கவனத்திற்கு உரியவராகின்றார். தேசியவாதம் பேசி நின்ற முற்போக்கு அணியினருள் பேரினவாதத்தின் பாதிப்புக்களை அனுபவங்களுக்கூடாக முன்வைக்கத் தொடங்கிய முதல்வர் என்ற வகையிலும் சாந்தன் வரலாற்று முக்கியத்துவம் உடையவராகிறார்.
பொதுவாக இத்தொகுப்பிலுள்ள கதைகளை வாசிக்கும் வாசகர்கள் சராசரியான தமிழ்ப் படைப்பாளிகளிலிருந்து வேறுபட்ட - சற்று வித்தியாசமான முறையில் அநுபவங்களைத் தொற்றவைக்கும்ஒரு படைப்பாளியைத் தரிசிப்பார்கள் என்று திடமாகக் கூறமுடியும். வாழ்வியல் அநுபவங்களுக்குள் கலந்து நின்று உண்மையையும் முழுமையையும் தேடும் ஒரு மனிதநேயவாதியையும் கொளகைப் பிரகடனம் செய்யாமலே தனி மனித - சமூகப் பிரச்சினைகளை நுட்பமாக நுணுகி நோக்கி விமர்சிக்கும் ஒரு முற்போக்குச் சிந்தனையாளனையும் சாந்தனில் அவர்கள் காண்பார்கள் என்பது எனது நம்பிக்கை, இவ்வகையில் இத்தொகுப்பு தமிழ்ப் படைப்பிலக்கியப் பரப்பில் தனிக் கவனத்திற்குரியதொன்று எனலாம்.
கலாநிதி நா. சுப்பிரமணியன்.
தமிழ்த்தறை, யாழ். பல்கலைக் கழகம்.

ஒரு
தென்னிலங்கை வாசகர்களைச் சென்றடையச் சாத்தியப் பட்டிராத என் ஆக்கங்களுக்கு இத்தொகுதியில் முன்னுரிமை கொடுக்க நேர்கிறது.
என்னுடைய இந்தக் கதைகளைப் பற்றியும, வழமை போலவே நான் எதுவும் சொல்லப் போவதில்லை, அவை தாமாகவே பேசிக் கொள்ளும்.
என் இலக்கிய வாழ்க்கையில் மல்லிகையுடனான தொடர்பு நீண்டது. குறிப்பிடப்பட வேண்டியது. அதை மீண்டுமொரு முறை நிறுவும் வகையில், 'மல்லிகைப் பந்தல் வெளியீடாக இத்தொகுதி வருகின்றது. திரு. டொமினிக் ஜீவா அவர்கட்கு நன்றி.
முன்னுரை எழுதிய பேராசிரியர் நா. சுப்பிரமணியன். கடந்த கால் நூற்றாண்டாகவே என் எழுத்துக்களில் கவனம் செலுத்தி வருபவர். அவர்க்கும், ஓவியர் ரமணி, மற்றும் கதைகளைத் தேர்ந்துதவிய குமரன், நண்பர் பொன். பூலோகசிங்கம் ஆகியோர்க்கும் நன்றிகள்.
தொகுப்பிலுள்ள ஆக்கங்களை அவ்வப்போது பிரசுரித்த சஞ்சிகைக்ளை இவ்வேளையில் மறத்தல் நன்றன்று.
சுதுமலை,
மானிப்பாய்,
2000-03-19 அன்புடன்
ஐ.சாந்தன்

Page 8

76° ஒரு
விடுமுறை நாளில்
(GSET ப்பி குடித்து விட்டு வெளியே வந்து காசு கொடுத்துக் கொண்டிருக்கும் போது யோகன் சொன்னான்; பார்த்தீரா,
இதுதான் நான் சொன்னது."
கடை முகப்பிலிருந்து ஸ்பீக்கள், பிரபலமான ஒரு சிங்கள பொப் பாடலைக் காதடைக்கப் பாடிக்கொண்ருந்தது. கஷியரின் மேசையருகில் சுழன்று கொண்டிருந்தது ரேப்.
கடந்த பயணம் யாழ்ப்பாணம் வந்திருந்த போது, சசி கூட இதை அவதானித்திருந்தான்.
சுவீப் ரிக்கற் வான்களும் விளம்பரச் சேவை ஒலி பெருக்கியுமாய், கடைக்குக் கடை அலறுகிற பாட்டுக்களோடு சேர்ந்து தெருவால் கார் பஸ் அடிக்கிற ஹோண் சப்தங்களைக் கூடக் காதில் விழாமற் பண்ணிக் கொண்டிருக்கிற அதே பட்டணந்தான். ஆனால்
....இப்ப, அநேகமான கடைகளில் இப்பிடித்தான்"- என்றான் யோகன், மீண்டும்.

Page 9
“ဝှ(g) ஃபஷன் போலை?" சசி சிரித்தபடி மூன்று பீடா வாங்கினான்.
சைக்கிள்களை எடுத்து உருட்டிக் கொண்டு, தெருவைக் கடந்ததும்,
"ஏன், அதிலை என்ன பிழை?" என்று கேட்டான் பூரீநிவாசன்
"வெறுமனை ஒரு பாட்டைப் போட்டு ரசிக்கிற சங்கதி மட்டுமில்லை இது, பூரீநி.வேற சில விஷயங்களையும் யோசிக்க வேண்டியிருக்கு"
W * O
நீங்கள் மாத்திரம் வெள்ளவத்தையிலை எல்லாம் செய்யலாம்.
A என்ன?"
யூரீநியின் இந்தக் கேள்வியும் அதன் வேகமும் சசிக்குச் சிரிப்பை மூட்டின.
"இந்த வெங்காயக் கேள்வியை நீரும் கேளாதேயும்."
"அதையும் இதையும் ஒப்பிடவும் ஏலாது. சும்மா கொச்சைத்தனமா எல்லாத்துக்கும் வெள்ளவத்தையை உதாரணத்துக்கு இழுக்காதையுங்கோ. Af
VV s o O o
தெல்லாம் எங்களுடைய தாழ்வு மனப்பான்மையைக் காட்டுகி
5 ளு தாழ D விஷயங்களாயிருக்கலாம்-!"
”அப்படியில்லை, பூரீநி. நீர் சொல்லுற நல்லுறவுக்கும் ஒற்றுமைக்கும் நாங்கள் எதிரில்லை. ஆனா, அந்த நல்லுறவு எண்டதும் ஒருவழிப்பாதை இல்லை. இண்டைய நிலையிலை எங்கட பரந்த மனப்பான்மை, விட்டுக் கொடுக்கிற போக்கு, நல்லுறவைக் காட்ட நாங்கள் எடுக்கிற முயற்சி - இதுகளெல்லாம் எங்கட பலவீனமெணி டு தான் எடுத்துக் கொள்ளப்படுகுது. ஆனபடியா, இப்படிச் சின்ன விஷயங்களிலை கூட - அது தற்செயலோ, என்னவோ - இனி நாங்கள் கொஞ்சம் கவனமா நடக்கிறதுதான் நல்லது போலிருக்கு."
பூரீநிவாசன் பதில் சொல்லவில்லை. பேசாமல் நடந்தார்கள். திஸ்ஸ

பேக்கரியைத் தாண்டும் போது அந்தப் பாட்டுக் காதில் விழுந்தது. பேக்கரி - ஷோ கேஸின் மேலிருந்த ரேடியோவிலிருந்து வந்த பாட்டு."
டிக்கிரி மெனிக்கே அம்புல கெனல்லா கொவிரால கொடட்ட அல்லா"
கேட்டு எத்தனை நாட்கள் சசி அப்படியே ஒருகணம் நின்றான்.
இந்தப் பாட்டு இப்படித்தான் - அடிக்கடி கேட்க முடிகிறதில்லை. எப்போதாவது இருந்துவிட்டு காதில் விழுகிறது. அப்படி விழுவதுதான் நல்லதென்றும் தோன்றுகிறது - அலுத்துப் போகாமல்,
இதைக் கேட்கிற போதெல்லாம் அவனுக்குப் பச்சைப் புல் வாசனை நினைவுக்கு வருகிறது. எட்டு வருஷங்களுக்கு முன்னால், ஒரு மாணவனாக இருந்தபோது, முதற் தடவையாக இந்தப் பாட்டை அவன் கேட்டான். அப்போதிருந்தே இதைக் கேட்க நேரிடுகிற அந்த எதிர்பாராத சந்தர்ப்பங்கள் எல்லாம் மகிழ்ச்சியைத் தந்நிருக்கின்றன.
பச்சைப்புல் வாசனை மட்டுமல்லாமல், கட்டு பெத்தையின் கபூக்தரை, காட்டுச் சூரியகாந்திச் செடிகள், மெஷறிங் ரேப் தியோடலைற். தசாநாயக்கவின் வெள்ளைத் தொப்பி-எல்லாங் கூட ஞாபகத்திற்கு வருகின்றன. இன்னும் அந்த டிக்கிரி மெனிக்கா, கமக்காரர்கள் எல்லாம் எப்படி இருப்பார்களென்ற கற்பனை.
'-டிக்கிரி மெனிக்கே அம்புல கெனல்லா.
எவ்வித துள்ளாட்டமுமின்றி, மொஹிதீன் பேக்கின் குரலில், அமைதியாகக் கம்பீரமாக அந்தப் பாடல் வருகிறது - மனதை வருடிக் கொடுப்பது போல,
மென் காற்றில் அலை தவழும் நெற் கதிர்களின் அமைதி இளந்துாற்றல் வெறும் மேலில் தழுவுகிற பரவசம்.
-இந்த மூன்று நிமிஷத்தை அவன் இழக்கக் கூடாது. "மச்சான். இதிலை கொஞ்சம் நிண்டிட்டுப் போவம்." என்றான் சசி.
கிருஷ்ணன் தூது தொகுதியில்
இடம் பெற்றது - 1982

Page 10
கிருஷ்ணனர்
g/g
லையில் வந்து கையெழுத்து வைக்கிறதற்கு அடுத்த வேலை
துடைக்கிறதுதான். லாச்சியைத் திறந்து டஸ்டரை எடுத்து,
வரைபலகையையும் ட்ரஃப்ரிங் மெஷினை'யும் அழுத்தித் துடைக்க வேண்டியிருக்கும். பியோன்மார் சாட்டுக்குக் கொடுத்து விட்டுப் போயிருக்கக் கூடிய இரண்டு தட்டுதல் போதாது. ஒரு சொட்டு ஊத்தை போதும் - படத்தைப் பாழாக்க.
வெள்ளிக்கிழமை உந்த வேலை பார்த்துக் கொண்டிருந்த போதுதான் சேனாதிபதி கூப்பிட்டான். துடைத்து முடித்து வாஷ்பேஸி' னில் கையையுங் கழுவிவிட்டு சேனாதியடிக்குப் போனபோது, அவன் அதைக் காட்டினான்.
A 8 f என்ன, உது?
ஒரு அச்சு புறூஃப், சின்னத்துண்டு. நலன் செய் சங்கம்' என்று போட்டு, எதிரே கந்தோரின் பெயர் இருந்தது. பிறகு விலாசம், தொலைபேசி எண் கீழே. தலைவர். செயலாளர், பொருளாளர். ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு உப, உப, உப, சேனாதியின் பெயர். உப-செயலாளர் என்பதற்கு எதிரிலிருந்தது. எல்லாம் இரண்டு மொழிகளில் -தமிழிலில்லை.
சினமாய் வந்தது.

லெற்றர் ஹெட்தானே?"
சேனாதி தலையாட்டினான்.
“இங்கிலீஷிலை போட்டிருக்கிறதைத் தமிழிலை போட்டால்
என்ன?"
* fy என்னவோ, அவங்கட வேலை
'ஆர் அடிப்பிக்கிறது?"
காரியதரிசி - லயனல்-'
கேட்கவா?-"கூப்பிட்டதும் லயனல் எழும்பி வந்தான்.
"விவே, இதுதான் எங்கட லெற்றர் . எப்படியிருக்கு?"
“எந்தப் பிரஸ், மச்சான் .?" விவே கேட்டான். லயனல் சொன்ன அச்சுக் கூடம், அதிகமாகத் தமிழ் வேலை செய்கிற இடம்.
லயனல், இதிலை தமிழையும் நீங்கள் போட்டிருக்கலாமே?"
V ס
இப்பவே பார், பேப்பரிலை கால்வாசி போச்சு
அப்ப அந்த ஆறு பேருடைய பெயரையும் எடுத்திடலாமே?
சின்ன எழுத்தாகப் போடுகிறது?.
ஒரு கூட்டம் கூடியிருந்தது. இன்னும், காமினி, கண்டொஸ், ரஞ்சித், சச்சி, “சரி. இங்கிலீஷை எடுத்திட்டுப் போடுங்களேன்?” சேனாதியிடமிருந்து கண்டொஸ் அந்த புறு.பை வாங்கிப் பார்த்துக் கொண்டிருந்தான்.
சரி. இங்கிலீஷா? எத்தினை கொம்பனிகளோட தொடர்பு கொள்ள வேண்டி வரும்? அதை எடுத்திட்டு? ."
“எந்தக் கொம்பனியெணி டாலும், பருத்தித் துறைக்கும் டொன்ட்ராவுக்கும் இடையிலை உள்ளதுதானே?."

Page 11
"எண்டாலும்-" "இங்கிலீஷ், இங்கே எத்தினை பேருடைய பாஷை? அதை எடுத்திட்டு அங்கத்தவர்களிலை நாற்பது வீதம் பேருடைய பாஷையைப் போட்டா, என்ன?’ சச்சி கேட்டான்.
"விவே, இதுக்கு முதல் லெற்றர் ஹெட் இல்லை. றபர் ஸ்ராம்ப் தானே பாவிச்சது?-" என்றான் ரஞ்சித்.
'?-'
அது தனிச் சிங்களத்தில் தானே இருந்தது.” ஒரு பிடி கிடைத்த மாதிரியும் இருந்தது விவேகானந்தனுக்கு.
”அந்த ஸ்ராம்பிலை தமிழையும் போடு" எண்டு நாங்கள் கேட்டிருந்தா, அது நடைமுறை சாத்தியமில்லை. இந்த அளவு" - இடது உள்ளங் கையில் வலது சுட்டு விரலால் ஒரு சின்ன வட்டம் போட்டுக் காட்டினான்.
“இந்த அளவு வட்டத்துக்குள்ளை இரண்டு பாஷை போடு, மூண்டு பாஷை போடு - எண்டு நாங்கள் கேட்டிருந்தா, அது முட்டாள் தனம்-"
“இது அப்படியில்லை, வடிவாப் போடலாந்தானே?"
இப்ப என்ன செய்யிறது மச்சான், அடிச்சாச்சே? கன்டொஸ் கேட்டான்.
"இல்லை. இது புறூப்தான், இப்பவும் வடிவாச் சேர்க்கலாம்."
பிறகு விவே சொன்னான்:
"மச்சான் இதெல்லாம் நாங்கள் கேட்டு நீங்கள் போடுகிற விஷயமில்லை. நீங்களாகவே உணர்ந்து போடுகிறதுதான் அழகு. இது
அரசியலில்லை. குடும்பம் மாதிரி. நல்லுறவுக்கும் சிநேகிதத்துக்கும் ஒரு பரஸ்பர மதிப்பு தேவையில்லையா?. இப்படி சின்ன விஷயங்களில் கூட.”
முடிக்க முதல் மிஸ்டர் பெர்ணாண்டோ வந்து விட்டார்.
"ஐஸே, இப்ப எத்தினை மணி? என்ன செய்யிறீங்கள் எல்லாரும் இங்கை?"

2
அரசமரம் சலசலத்தது. பென்னாம் பெரிய மரம். கந்தோரின் இந்தளவு பெரிய முற்றத்தில் ஒரு பொட்டு வெய்யில் படவிடாது. காற்றடிக்கிற நேரங்களில் பாடும். இப்போது வைசாகம் முடிந்த கையோடு, புதுப்பச்சை இலைகளும் வெள்ளைக் கடதாசிச் சோடனைகளுமாய்ப் பொலிந்து நிற்கிறது.
"எண்டாலும், நீர் அப்பிடி அவனோட பேசியிருக்கக் கூடாது-"
என்றான். சேனாதிராசா, Tu?
அவ்வளவு கடுமையா. சண்டை பிடிக்கிற மாதிரி."
“கடுமையா? சண்டையா?" -விவே திகைத்துப் போனான்.
அதை அவன் ஒரு சவாலாக நினைக்கலாம் - இப்படிக் கேட்டு போடவோ' எண்டு."
" கேளாமலே போட்டிருந்தால் வடிவுதான்"
"சச்சி, நீர் கொஞ்சம் பேசாம இரும் ." -சேனாதிக்குக் கோபம் வரப் பார்த்தது.
"நான் அவனை ஏச இல்லை. சிநேகிதன் எண்ட முறையிலை அதைக் கூடச் சொல்லக் கூடாதா?."
"இல்லை அண்ணை, நீங்கள் பேசினதிலை பிழையுமில்லை
ஒரு - இனி என்ன, கெஞ்சிறதா?" விவேயைப் பார்த்து, திரும்பவும் சச்சி
களு Š5l, 5|(b
சொன்னான்.
"எண்டாலும்-"-மெல்ல, ஆறுதலாகத் தொடங்கினான். சித்திரவேல். சேனாதிக்குப் பக்கத்து மேசை. எல்லாம் வடிவாகக் கேட்டுக்
கொண்டிருந்தவன்.
”.தெரியாதே - இப்ப உள்ள நிலைமைகளிலை நாங்கள் கொஞ்சம் பணிஞ்சுதான் நடக்க வேண்டியிருக்கு."

Page 12
3
வெள்ளைச் சல்லி பெறாத விஷயம் இப்படியாகி விட்டது. வேலையில் மனம் ஏவமாட்டேன் என்கிறது. அதுவும் முழுக்கச் கல்குலேஷன்கள்.
விசிறி சுழற்றிய காற்றின் வீச்சில் வரைபலகையுடன் பொருத்தியிருந்த கிளிப்பை மீற முடியாமல் படத்து முனை படபடத்தது. இந்தக் காற்றுப் பொல்லாதது - என்னதான் இறுக்கிப் பொருத்தியிருந்தாலும் படத்தாளை அசைத்து விடும். இம்மி அசைந்தாலும் நுணுக்கம் போச்சு - என்ன செய்வது? புழுக்கந் தாள முடியாது. விசிறிக்கு றெகுலேற்றரும் இல்லை. ட்ராஃப்ரிங் மெஷி'
னை அரக்கி, தாள் கிளம்பாமல் வைத்தான்.
என்னில் தான் பிழையா? -இரண்டு நாளாக இதே யோசனை
ஆனால், யோசிக்க யோசிக்க, அப்படியில்லை என்று படுகிறது. நேற்றும் அப்படித்தான் பட்டது. சொல்லி முடித்த அடுத்த கணங் கூட, ஒரு திருப்திதான் தெரிந்தது. சேனாதியும் சித்திரவேலும் தான் குழப்பிவிட்டார்கள்.
பென்சிலை உருட்டிக் கொண்டிருந்தபோது, சித்திரவேலுவே வந்தான்.
"எப்பிடி விவே?." அவன் நேரே விஷயத்தில் இறங்கினான்.
நான் பிறகு, - நேற்றும் முந்தநாளும்-இந்த விஷயத்தை நல்லா யோசிச்சுப் பாத்தன். நீர் சொன்னதிலை ஒரு பிழையுமில்லை எண்டுதான் படுகுது. சச்சி சொன்னது போல, இது கெஞ்சுகிற விசயமில்லைத்தான்-"
பெருத்த ஆறுதலாயிருந்தது.
சித்திரவேலு, சொல்லி விட்டுக் கொஞ்ச நேரம் மெளனமாயிருந்தான்.
"அப்ப இனி என்ன செய்யலாமெண்டு நினைக்கிறீர்?" விவே கேட்டான்.
இனியோ? - இத்தறுதிக்கு அடிச்சி முடிச்சிருப்பாங்களே?"

இல்லை அச்சுக் கூடத்திலையிருந்து வாற வெள்ளிக்கிழமை தான் எடுக்கலாம் - இண்டைக்குத் திங்கள் தானே?"
"அப்ப நாங்கள் செயற் குழுவுக்கு ஒரு விண்ணப்பம் எழுதுவம்அண்டைக்கு சும்மா வாய்ப்பேச்சிலை கதைத்ததை விட, வேற ஒண்டுமில்லைத்தானே? -
நீங்கள் எப்ப கேட்டணீங்கள்? எண்டு பிறகு கேக்க இடம் வைக்கக்
Fy கூடாது.
ኣኳ
அது நல்ல யோசனைதான்
”எழுதி, எல்லா அங்கத்தவர்களும் கையெழுத்து வைச்சுக்
கொடுக்கலாம்."
4.
”அய்யா நீங்கள் என்ன வேலை செய்திருக்கிறீங்கள்?"
மூர்த்தி கேட்ட விதத்தில் சிவஜோதி கொஞ்சம் பயந்து போய்
விட்டார்.
ጳኳ 影 O o
ஏன் என்ன ? என்ன செய்தனான்?
பின்னை என்ன? அந்த லெற்றர் ஹெட் திருப்தி' எண்டு கையெழுத்துப் போட்டுக் குடுத்திருக்கிறீங்களே. அதிலை ஒரு வரி தமிழிலையும் போட்டால் குறைஞ்சா போகும்?" சிவஜோதி திடுக்கிடத்தான் செய்தார்.
AWA s 本
என்ன தம்பி, என்ன தம்பி, அதை ஆர் யோசிச்சது?. அவன் உங்கட லயனல்தான் - கொண்டு வந்து சரியா எண்டு கேட்டான். அந்த லே-அவுட் அதுகளைப் பற்றிக் கேட்கிறானாக்கும் எண்டு
s ff நான் நினைச்சேன். எடடே.
"உங்கட கொமிற்றியிலை அதுகளைப் பற்றி ஒண்டுந் தீர்மானிக்க இல்லையா?.”

Page 13
“ஒரு ஐந்நூறு லெற்றர் ஹெட் அடிக்கிறது எண்டுதான் முடிவெடுத்ததொழிய, விபரம் ஒண்டும் தீர்மானிக்கவில்லை. தீர்மானிக்குறதெண்டா, நாங்களும் மூண்டு பேர் இருக்கிறமெல்லா? - நான் சேனாதி மணியத்தார்.
W W e
மணியத்தார் வாறார்" என்றான், கன்டொஸ்.
சுருட்டுப் புகை முன்னால் வந்தது.
தம்பியவை, இப்படி நீங்கள் மாத்திரம் தனித் தனிக் கூட்டமாக நிணி டு கதையாதயுங் கோடா. மற்றவர்களுக்கு, பார்க்க ஒருமாதியாயிருக்கும்."
இனிமேல் ஒரு பிரச்சியையுமிராது. அடுத்து முறையிலையிருந்து, தனிய இங்லீஷிலைதான் அடிக்கிறது எண்டு நாங்கள் தீர்மானிக்கப்
WW
போகிறோம்.
-சுப்பிரமணியம் ஆங்கிலத்தில் சொன்னார்.
”அய்யா, அவங்களிலை சிலபேர் நினைக்கிற மாதிரித்தான் நீங்களும் நினைக்கிறீங்கள் - சிங்களத்தில் போட்டது எங்களுக்குப் பிடிக்கேல்லை எண்டு பிரச்சினை அதில்லை! தமிழிலை போடாமல் விட்டதுதான் எங்கட பிரச்சினை! நீங்கள் தனிய இங்கிலீஷிலை அடிக்க வெளிக்கிட்டா, அதை எதிர்க்கிற முதல் ஆளாக நானிருப்பன். இப்ப பாதிப் பேருக்கு உள்ள நட்டத்தை நீங்கள் முழுப் பேருக்கும் கொண்டு வாறன் எண்டு
நிக்கிறியள்."
6
றொபேட்டைப் பற்றி விவேக்கு நல்ல அபிப்பிராயம் இருந்தது. பியோன் வேலைக்கு வந்து சேர்ந்தாலும், படித்தவன், அறிவானவன் என்று, அவனுடைய தொழிற் சங்கத்தில் தமிழர்களும் கனபேர் அங்கத்தவர்களாயிருக்கிறார்களாம். அவனோடு ஒரு தரம் தனியாகக்

கதைத்துப் பார்க்க வேண்டுமென்றிருந்தது. றொபேட், நலன் செய் சங்கத்திலும் செயற்குழு உறுப்பினன்,
சாப்பிட வெளிக்கிட்டுப் போனபோது, றொபேட் யாருடனோ பேசிக் கொண்டு நின்றான். அவ்வளவு சீரியசான பேச்சாகத் தெரியவில்லை. கிட்டப் போனதும்.
இல்லை, ஏன்?"
"ஒரு சின்னக் கதை."
தள்ளிப் போனார்கள்
"இந்த விஷயம் என்ன, குழப்பமாகிப் போச்சு. றொபட் என்ன நினைக்கிறீர்?"
அவன் கொஞ்சம் அசட்டுத்தனம் தெரியச் சிரித்தான். பிறகு
சொனி னான : "இடநீ தானி பிரச்சினை யாம் மூணி டு பாஷையிலும் போட, அரைவாசி இடம் போயிடுமே"
"ஏன் மூண்டு? -இங்கிலீஷை விடலாமே?."
“அதெப்படி? கொம்பனிகளுக்கு."
7
மத்தியானம் பஸ்சுக்கு நின்றபோதுதான் திடீரென்று அந்த யோசனை வந்தது. விவேகானந்தனுக்கு "வேண்டுகோள் கடிதத்தில், தனிய நாங்கள் மட்டும் கையெழுத்து வைக்கக் கூடாது."
கந்தோருக்கு வந்ததும், முதல் வேலையாக கனகசுந்தரத்தின் ஸெக்ஷனுக்குப் போனான்.
"அது நல்ல யோசனை தான்- அடிப்படையிலை இரண்டு பிரிவாகப் பிரிஞ்சு நடக்கிறதைத் தவிர்க்கத்தான் வேணும்." .கனக்ஸ் சொன்னார்.

Page 14
அதுதான், பாருங்கோ-இதிலை இரண்டு விஷயம் ஒண்டு, அப்படியான பிரிவைத் தவிர்க்க வேணும். மற்றது பிரிவைத் தவிர்க்க
வேண்டும் எண்டதற்காக வலிஞ்சு போகக் கூடாது."
"ஏன் நிக்கிறீர்? அவசரமே? இரும் இரும் இருந்து கதைப்பம்." கனக்ஸ், மேசையில் கிடந்த ஃபைல்களை ஒதுக்கி வைத்தார். விவே இருந்ததும் அவர் கேட்டார்.
நீர் சொல்லுறது சரி. ஆனா, கையெழுத்து வைக்கக் கூடிய ஆக்கள் இருக்கணுமே? ஆரைக் கேக்கிறது?"
அதுக்கு ஒரு வழி இருக்கு"
என்ன?"
"எங்கட மிஸ்டர். பெர்னாண்டோ இருக்கிறாரெல்லோ..?
உங்கட பொஸ்?"
”அந்தாள் நல்ல மனுஷன். இப்படியான வேற்றுமைகள் பார்க்கிறதில்லை இடதுசாரி எண்டு சொல்லுறவங்கள்."
அவர் மாத்திரம் வைச்சாப் போதுமே?"
அந்தாள் வைச்சா, அதைப் பாத்திட்டு அதுக்காக வைக்கக் கூடிய ஏழெட்டுப் பேர் எங்கட ஸெக்ஷனிலை இருக்கினம்."
8
வணககம. எலலாள மகாராஜா
மூர்த்தி. ஆள் பகிடிக்காரன் என்றாலும் இந்தப் பகிடி அவ்வளவு உவப்பாகத் தெரியவில்லை.
ዩኳ
அலம்பாதையடா-!" என்றான். விவே கோபமாக,
நான் என்ன செய்ய? உன்னை அப்பிடித்தான் நினைக்கிறாங்கள்

போலிருக்கு."
"அப்பிடி நினைச்சாலும் ஆச்சரியமில்லை. அது தான் வழக்கம். அப்படிப் பழக்கியிருக்கு." என்றான் கன்டொஸ்
முந்தி சின்னப் பெடியளாயிருந்த காலத்தில் எம். ஜி. ஆரும் வீரப்பாவும் வாள்ச் சண்டை போடுறதென்று சொல்லி நாங்கள் பூவரசந் தடி சுழட்டுற மாதிரி." விவே சிரித்தான்
உங்களுக்காவது இந்தியா இருக்கு . நாங்கள் எங்க போறது? எண்டு மிஸ் அத்தபத்து கேட்டா." கன்டொஸ் சிரிப்பை அடக்கிச் சொன்னான்.
ஆண்டவா! இந்த குழப்பத்திலும், மன உளைச்சலிலும் கூட நல்ல பகிடிகள் சந்திக்கின்றன!
சிரித்து முடித்த பின் அழுதிருக்க வேண்டுமோ என்று பட்டது விவேக்கு.
"எப்ப கதைச்சனி? என்னெண்டு இந்தக் கதை வந்தது?."
மத்தியானம் சாப்பிட்ட பிறகு கதைச்சுக் கொண்டிருக்கேக்கை."
"எழுபத்தேழாம் ஆண்டுக் கலவரத்துக்குள்ளை கூட நாங்கள் உங்களை ஒண்டும் செய்யலை. நீங்கள் ஏன் இப்படி நடக்கிறீங்கள்எண்டுங் கேட்டுதுகள்."
”எல்லாம், அறியாத்தன்மை: அதால் வந்த பயம், நாங்கள்
விளங்கப்படுத்த வேணும்." என்றான் தொண்டர்."
எவ்வளவு காலத்துக்கு என்னத்தையெண்டு விளங்கப் படுத்தப் போறீங்கள்? அதுக்கிடையிலை எங்கடபாடு முடிஞ்சிடும்." சச்சி சொன்னான் கோபமும் சிரிப்புமாய்.
இங்கிலீஷ் போடுற இடத்திலை தமிழைப் போடுறதாலை பாதகமில்லை என்பதை விளங்கப் படுத்த வேண்டியிருக்கு."
சரி நாளை செவ்வாய்க்கிழமைக்கிடையிலை எங்கட கடிதத்தைக் குடுத்திட வேணும். இப்ப எத்தனை பேர் கையெழுத்து வைச்சிருக்கு? FF இருபத்தொரு பேர் இன்னும் எட்டுப் பேர் வைக்க இருக்கு."

Page 15
கந்தையா?"
'வைச் சிட்டார். ஆனா, சரியா யோசிக்கிறார். இப்பவே பெர்னாண்டோவுக்குக் கொடுக்கிற மரியாதையிலை பாதியாவது அவங்கள்
தனக்குத் தாறFல்லையாம். இதிலை கையெழுத்தும் வைச்சா இன்னும் நல்லாத்தானிருக்கும் எண்டார். என்படியோ வைச்சுத் தந்திட்டார்."
”அந்தாள் - பாவம் அவங்களுக்கும் பயப்பிடுகுது. எங்களுக்கும் பயப்பிடுகுது." என்றான் மூர்த்தி
`சேனாதிபதி"
பின்னேரம் சொல்லுறன் எண்டார் ஆனா, தான் கொமிற்றிக் கூட்டத்திலை இதைப் பற்றிக் கதைப்பாராம். கதைச்சுத்தான் என்ன நடக்கப் போகுது? கொமிற்றியிலையுள்ள பதினோருபேரிலை இவையள் மூண்டுபேர் தலையளை எண்ணிப் பாக்கிறபோது என்ன செய்யேலும்?"
சேனாதி ஏன் இப்பிடிப் பின்னடிக்குது?
”அந்தாளுக்குப் பயம் - புறூஃப் ஏன் மற்ற ஆட்களுக்குக் காட்டினனீ? எண்டு தன்னைக் கேட்பாங்களோ எண்டு."
9
கந் தோரால் வந்து கணவன் தேத் தணிணி குடித்துக் கொண்டிருக்கும் போது, கமலா கேட்டாள்:
"இன்னும் உங்கட அந்த இது அடிச்சு முடியேல்லையே?"
VV ff எது? அந்த லெற்றர் ஹெட்?"
w
நீரும் ஒரு பக்கம், இதுக்குள்ளை." சேனாதிபதி சீறினான். அதிலை இப்ப காயிதம் எழுதப் போlரே?" கமலாவுக்குக் கண்கள் கலங்கிவிட்டன.
“எனக்கென்னத்துக்கப்பா, அதை?. ஏதோ உங்கட பேரும் போட்டு
o அச்சடிக்கினம் எண்டு சொன்னீங்கள். அதைப் பார்க்கலாமெண்டுதான்.

அவள், பலகைத் தடுப்பைத்தாண்டி அடுப்படிக்குப் போனாள்.
10
மிஸ்டர் பெர்னாண்டோ, இதை ஒருக்காப் பார்க்கிறீங்களா?."
சுங்கான் புகை மணத்தை ரசித்தவாறு, மரியாதையாகக் கேட்டான்
கன்டொஸ்,
“என்ன, அது?." நிமிர்ந்து, சுங்கானை மேசையில் வைத்த படி
அதை வாங்கினார் பெர்னாண்டோ.
நீள நீளமாகச் சுருட்டப்பட்ட பெரிய படங்கள் மேசையில் ஒருபக்கம் முழுவதையும் பிடித்திருந்தன. தடித்த கண்ணாடிக்கடியில் கிடந்த வண்ண வண்ணமான வெளிநாட்டுத் தபால் முத்திரைகளைப் பார்த்துக் கொண்டு நின்றான், கன்டோஸ்.
பெர்னாண்டோ படித்தார்:
"எங்கள் நலன் புரிச்சங்கத்தின் செயற்குழு, சங்கத்திற்காகக் கடிதத் தலைப்பு அச்சிடுவதென்று தீர்மானித்து அதற்கான வேலை
தொடங்கியிருப்பதாய் அறிகிறோம். குறிப்பிட்ட கடிதத் தலைப்பில், தமிழ் இடம் பெறவில்லை என்பது எங்களை வருந்தச் செய்கிறது
உறுப்பினர்களுக்கிடையில் நல்லுறவையும், ஒத்துழைப்பையும் வளர்ப்பதற்கும், சங்கத்தின் சுமுகமான செயற்பாட்டிற்கும் இம்மாதிரியான விஷயங்களில் தமிழுக்கும் உரிய இடங்கொடுப்பது அவசியமென்பதை ஒத்துக்கொள்வீர்கள்.
இது விஷயமாக ஆவன செய்யும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
நன்றி"
நல்லது எழுதத்தான் வேணும்?" என்றார். பெர்னாண்டோ வாசித்து முடித்ததும்.
பிறகு பழையபடி சாய்ந்து கொண்டு, கண்ணாடியை நெற்றியில் உயர்த்தி விட்டார்.

Page 16
"இது கொஞ்சம் நுணுக்கமான விஷயம். உணர்ச்சிகளோடு சம்பந்தப்பட்ட சங்கதி."
WW ff o o W.
ஒமோம்." என்றான். கன்டொஸ்.
ஆனா உங்கட வேண்டுகோளை வடிவா எழுதியிருக்கிறீர்கள் - நல்லமாதிரி"
"கன்டோசுக்கு சந்தோஷமாயிருந்தது.அப்ப இதிலை நீங்களும் கையெழுத்து வைக்கலாந் தானே? " என்றான்.
நானா? நான் எதுக்கு?" அந்தாள் இதை எதிர்பார்க்கவில்லை
"நாங்கள் மட்டுந் தான் இதிலை கையெழுத்து வைக்க
வேணுமெண்டில்லையே - இந்தக் கடிதத்திலை உள்ள நியாயத்தை ஒப்புக்கொள்கிற எவரும் வைக்கலாந்தானே-?"
"அதுசரி. அதுசரி" பெர்னாண்டோ சமாளித்துக் கொண்டு
சுங்கானைக் கையில் எடுத்தார்.
"அப்படியென்டா, மிஸ்டர் கந்தசாமி இதிலை இன்னுங் கொஞ்சம் மாத்தி, இன்னும் வடிவா எழுதி-எல்லோரும் கையெழுத்து வைப்பம்இப்ப கொஞ்சம் வேலையிருக்கு பிறகு ஆறுதலாகச் செய்வமா?"
கன்டொஸ் சிரித்துக் கொண்டு திரும்பி வந்தான்.
11
கன்ரீன் வழமைபோல் இருண்டு கிடந்தது. பிசுபிசுக்கிற மேசைகள். சிகரட் புகை, கிளாஸ்கள் அடிபடுகிற ஒசை. இலையான்கள்.
"நீ இந்தளவுக்கு மாறிப் போவாய் எண் டு நான் நினைச்சிருக்கேல்லை." காமினி சொன்னான்.
அந்தக் குரல் எவ்வளவு அந்நியப்பட்டு ஒலிக்கிறது? விவேகானந்தனுக்கு வேதனையாயிருந்தது. ஒரு சின்னச் சிரிப்பும் வந்தது.
தேத்தண்ணிக் கிளாஸை வைத்துவிட்டுக் கேட்டான்.

ஏன் அப்படிச் சொல்லுறாய். காமினி?"
பின்னை என்ன, இண்டைக்கு இவ்வளவு கோளாறு வந்திருக்கே. நீ தான் அவ்வளவுக்கும் காரணம்."
பயங்கரமாய்த் தானிருந்தது. பிறகும் நானா? நானா?
"நீ தான்." காமினி சிகரட்டை உறிஞ்சினான்.
"நீ தான். போன வெள்ளிக்கிழமை பகல், லயனல் புறூஃபைக் கொண்டு போய் காட்டின போது சரியெண்டு சொன்ன சிவசோதி, சுப் பிரமணியம் எல்லாருங் கூட, இணி டைக்கு உங்கடை
வேண்டுகோளிலை கையெழுத்து வைச்சிருக்கினம்."
ኳኳ s
நான் போய் மேசை மேசையா கன்வஸ் பண்ணினேன் எண்டு
நினைக்கிறியா? ff
அதைப் பிழையெண்டு பேச, நீ முதலிலை புறப்பட்ட பிறகு தான் இவ்வளவும் நடக்குது. இதெல்லாம் என்ன தாக்கத்தை ஏற்படுத்தும் எண்டு நினைச்சுப் பார்த்தீங்களா?."
"எங்களுக்கு எண்டும் ஒரு அடையாளம் இருக்கெண்டைதைக் காட்டினதும், ஏன் இப்படிக் குழம்புறீங்கள், மச்சான்?
ኳኳ
நாங்கள் குழம்பேல்லை. நீ தான் குழப்புறாய். பார், இண்டைக்கு செவ்வாய்க்கிழமை வெள்ளிக்கிடையிலை, பிரஸ்ஸிலையிருந்து
அதுகளை எடுக்க வேணும் அதுக்கிடையிலை இது ஒரு குழப்பம்." விவே சிரித்தான்.
12
கதவருகில் நின்று மெல்ல உள்ளே எட்டிப் பார்த்தார்கள். கல்தேராவும் ரஞ்சித்தும், பெர்னாண்டோ தனது இடத்தில் இல்லை. எங்கோ வெளியில் போயிருக்க வேண்டும். ஹோலின் மற்றத் தொங்கலில் கந்தையா இருந்தார். போனைக் காதில் வைத்தபடி
"லெப்.ற். றைற். லெப்.ற்றைற்." ஆளுக்கொரு நீண்ட படச்

Page 17
சுருளைத் தோளில் துவக்காகச் சார்த்தி, நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு இரண்டு பேரும் டக்டக்" கென்று உள்ளே வந்தார்கள். மேசைகளில் படிந்திருந்த பார்வைகளெல்லாம் நிமிர்ந்து அவர்கள் மேல் பதிந்தன
"லெப்.ற்றைற். லெப்.ற் றைற்' அணி நடை நீளப் போனது `வம் தக்.வம் தக்."
காமினியின் மேசையருகில் போய் காலை உதைத்து, அற்றென்ஷனில் நின்றார்கள்.
முறுவலித்தபடி வரைப் பலகையின் மேலிருந்த படத்தில் மீண்டும் புலனைச் செலுத்தியபோது. சச்சி சொன்னான்.
“பாருங்கோ. அண்ணை, என்ன மாதிரி, குழந்தைப் பிள்ளையள் போல் விளையாடி முஸ்ப்பாத்தி பண்ணுறாங்கள். ஆனா இந்த விஷயம் எண்டு வந்தவுடன் எவ்வளவு பிடிவாதமும் முரட்டுத்தனமும்."
தான் நினைத்ததையே சச்சி கேட்டுவிட்டதை விவே உணர்ந்தான். “ஒவ்வொருத்தன்ர இயல்பு என்ன மாதிரித் தானிருந்தாலும், இந்த உணர்ச்சி எல்லாரிலும் ஊறிப் போயிட்டுது."
இதுக்கு அந்த அரசியல்வாதிகள் தான் காரணம் எண்டு எனக்குப் படுகுது. முந்திச் சுகமா அதிகாரத்தைப் பிடிக்கிறதுக்குகாக சனங்களுக்கு வகுப்பு வாதத்தை ஏத்திச்சினம். அது இப்ப நல்லாச் சுவறி விட்டுது. சொல்லிக் குடுத்தவையே வந்து வகுப்புவாதம் கூடாது எண்டு சொன்னாலும் அவையளை சனம் தூக்கி எறியிற அளவுக்கு."
13
"இந்த பஸ் பெரிய தலையிடி." என்றான் சச்சி.
அஞ்சரை மட்டும் இதிலை நிண்டு காயாமல் ஜங்ஷனுக்கு எல்லாரும் முகப்பாத்தியா நடந்து போயிடலாம்."
நடக்கத் தொடங்கிய போது, பின்னால் யாரோ கூப்பிட்டார்கள்.
AV #y கனகஸ. நானும வாறன.
"இந்தாளோட நடந்தா ஜங்ஷனிலை முதல் பஸ் எடுக்கலாம்.
 

விடிய." என்றான் மூர்த்தி
மரமுகடுகளை, வாகையின் மஞ்சளும், காட்டுத்தீ மரத்தின் சிவப்பும் மூடியிருந்தன. அந்தக் கூடலுக்குள் போய்விட்டால் இந்தப்பாட்டு வெய்யில் முகத்தைச் சுடாது. நடந்தார்கள்.
எப்படி இண்டைக்கு அந்த லெற்றர் குடுத்திட்டீங்களா?." என்றார் கனக்ஸ்.
ஒ. மத்தியானம் குடுத்தாச்சு." மற்ற எல்லோரும் கையெழுத்து வைத்திட்டினமே?"
"இருபத்தெட்டுப் பேர் இ.இ. சிங்க ராயரைவிட அவர் லீவிலை "
V o ff என்ன நடக்குதெண்டு பாப்பம்.
"சீ என்ன நிம்மதியில்லாத சீவியம். கொஞ்ச நாளா கந்தோர் கூட நெருடலும், அந்தரமுமான இடமா ஆயிட்டுது. போதாக் குறைக்கு இப்ப இதுவும் 59(b பிரச்சனை."
"இதுகள் விளங்காம உபதேசம் பண்ணுகிற எங்கடை ஆக்கள் இன்னும் ஊர்வழிய இருக்கினம். இந்தச் சூடு குளிலை ஒரு எப்பனும் அறியாமல் -வெறும் தியறி-உபதேசம்."
AA h p O
ஆனா, அவங்கள் புத்திக்காரர்கள் எங்களைப் போலை இந்த
ரண்டுங்கெட்டான் அவலச் சீவியம் இல்லை -எப்ப என்ன வருமோ
(b. எண்டு. வடிவா, கதைச்சுக் கொண்டிருக்கலாந்தானே."
14
தபாற் கந்தோர் எக்கச் சக்கமா மினைக் கெடுத்து விட்டது. சாப்பிட்டுவிட்டு, அப்படியே வீட்டுக்கு ஒரு மணி ஒடர் தபாலையும் ரெஜிஸ்டர் பண்ணிவிட்டு வர, இவ்வளவு நேரமாயிருகிறது! இரண்டரை மணி.
அவதி ஒருபக்கம், வெய்யில் ஒருபக்கமாக வியர்த்து வடிந்தது. விசிறியைத் தட்டிவிட்டுப் போய் மேசையில் குந்தியபோது, சச்சி சொன்னான்:

Page 18
அட இரண்டு வடையை மிஸ் பண்ணிட்டீங்கள், அண்ணை"
WW
“கந்தையர் கொண்டந்தது." என்றான் கன்டோஸ் பின்னாலிருந்து,
“கந்தையரா? ஏன்?"விவே, திரும்பிப் பார்த்துக் கேட்டான் இதற்கு மறு மொழி சொல்லாமல் கன்டோஸ் கண்களைச் சிமிட்டிச் சிரித்தான்.
"எல்லோருக்கும் குடுத்தவரா?"
w Wy ஓ! ஸெக்ஷன் முழுக்க.
"ஏன்? என்ன விசேஷம்?" திரும்பவும் கேட்டான்.
"சும்மாதானாம். வீட்டிலை செய்தது எண்டு சொன்னவர். ஆனா, உண்மையிலை அண்டைக்கு அந்த கடிதத்திலை கையெழுத்து வைச்சதுக்குப் பிராயசித்தம்."
இப்போது சச்சியும் சேர்ந்து சிரித்தான்.
15
உங்கள் கடிதம் செயற்குழுவின் ஆலோசனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. குறிப்பிட்ட கடிதத் தலைப்புகள் இப்போது அச்சிடப்பட்டு விட்டதால், அது பற்றி ஒன்றும் செய்ய முடியாத நிலையில் உள்ளோம். அச்சிடப்பட்டவை முழுவதும் முடிவடைந்ததும், உங்கள் வேண்டுகோளைப் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்வது என்று செயற்குழு முடிவெடுத்துள்ளது" -இந்தக் கடிதம், புதுக்கடிதத் தலைப்பில் ஆங்கிலத்தில் ரைப் செய்யப்பட்டிருந்தது. கீழே செயற் குழுவுக்காக என்று லயனலின் கையெழுத்து.
பதில் வரப் பிந்தியதால், ஒரளவு எதிர்பர்த்திருந்தது தான்! பிறகு சேனாதி ஆட்கள் மூன்று பேரும் வந்து சொன்ன சேதி தான் என்றாலும், எழுத்தில் , அச்சிட்ட ஒற்றையில் பார்க்கப் பார்க்க கவலையும் கோபமும்
சேர்ந்து படருகின்றன.

முடிந்ததன் பிறகு, சேர்த்து அடிக்கிறோம். எண்டாலும் பரவாயில்லை. முடியுமட்டும். எவ்வளவு நாளானாலும்-பொறுக்க நாங்கள் தயார். ஆனால் முடிந்ததன் பிறகு யோசிக்கப் போகினமாம்!"
இ. இ. சிங்கராயர் அதைப் படித்து முடித்ததும் கொஞ்ச நேரம் பேசாமலிருந்தார். பிறகு சொன்னார்:
“றிசைன் பண்ணுறது வலு சுகமான வேலை. இப்ப நாங்கள் அதைச் செய்யிறதாலை பிரச்சினை தீர்ந்திடாது. எங்கட வேண்டுகோளும் நிறைவேறாது."
VV
அப்ப?
"இன்னொரு சந்தர்ப்பம் குடுத்துப் பார்ப்பம். சில சமயம் உண்மையிலேயே எங்கட வேண்டுகோள் பிந்தியிருக்கலாம்."
"இன்னொரு சந்தர்ப்பமோ?." விவேயும் கனக்சும் இதை எதிர்பார்க்கவில்லை.
ராஜினாமாக் கடிதத்தில் சிங்கராயரின் கையெழுத்தை வாங்க வராமல் விட்டிருக்கலாம் என்று கனகசுந்தரம் நினைத்தார்.
"உந்த லெற்றரை இப்ப குடுக்காமல், அதுக்கு முதல் இன்னோரு வேண்டுகோள் விட்டுப் பார்ப்பம்."
VV
எப்படி?
திருப்பி அடிக்கச் சொல்லி."
காசில்லை எண்டு மறுமொழி சொல்லலாம் - சுகமா" அதுக்குத்தான் ஒரு வழி இருக்கு."
என்ன?"
“செலவழிச்ச காசை நாங்கள் தாறம் எண்டு சொல்லி" இருவரும்
குறுக்கிட்டார்கள்,

Page 19
விவே சொன்னான்:
"வெட்கங் கெட்டவேலை. உதிலும் பார்க்க, தமிழைப் போடச் சொல்லிக் கேளாமல் இருக்கலாம்."
சிங்கராயர் நிதானமிழக்கவில்லை.
"பொறும் தம்பி, றிசைன் பண்னுறதாலை எங்கட வேண்டுகோள் நிறைவேறி விடுமா? - சொல்லும்."
நிறைவேறாது - ஆனா வேறவழி இல்லை."
“கந்தோர் கன்ரினை நடத்துறது ஆர்? இந்தச் சங்கந்தானே?"
இவர்களிரண்டு பேரும் தலையாட்டினார்கள்.
சங்கத்தாலை றிசைன் பண்ணிப் போட்டு, கன்ரீனிலை 69(5 தேத்தண்ணி கூடக் குடிக்கமுடியாது."
“தேத்தண்ணி பெரிசில்லை, சேர்." விவேயால் தன்னைக் கட்டுப்படுத்த முடியவில்லை."
"அதுதான்." என்றார் கனக்சும்.
"அதை நான் பெரிசு எண்டு சொல்லேல்லை. ஆனா, அதைத் தானும் ஏன் இழக்க வேணும்?. இந்த வேண்டுகோளுக்கு எந்த ஒரு மறுமொழியும் சொல்ல முடியாது-திருப்பி அடிக்கிறதை விட ஆனபடியால் தான் இவ்வளவு சொல்லுறன். இதுக்கும் மாட்டோம் என்று சொன்னால், றெஸிக்னேஷன் கடிதத்திலை முதல் கையெழுத்து வைக்கிற ஆளாக நானிருக்கிறன்."
16
"எங்கள் வேண்டுகோளை செயற்குழு ஆராய்ந்து முடிவை அறிவித்தமைக்கு நன்றி பாராட்டுகிறோம். எனினும், பரஸ்பர நல்லெண்ணத்திற்கும் ஒத்துழைப்பிற்கும் மதிப்புக் கொடுக்கும் விதமாக கடிதத்தில் தமிழும் சேர்க்கப்பட வேண்டும் என்பதில் வலியுறுத்திச் சொல்ல விரும்புகிறோம்.

இதன் கீழ்க் கையொப்பம் இட்டிருக்கும் உறுப்பினர்களாகிய நாம், ஏற்கனவே அச்சிடப்பட்ட கடிதத்தலைப்பிற்கான செலவைச் சங்கத்திற்குத் தந்து அத்தலைப்புகளைப் பெற்றுக் கொள்ளச் சித்தமாய் உள்ளோம். ஆகவே தமிழையும் சேர்த்து, புதுக் கடிதத் தலைப்புகளை அச்சிடுமாறு செயற்குழுவை மீண்டும் தயவாகக் கேட்டுக் கொள்கிறோம்."
17 உங்கள் வேண்டுகோள், செயற்குழுவின் பரிசீலினைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அந்த ஆலோசனைக்கு நன்றி தெரிவிக்கிற அதே நோரத்தில், தன் முன்னிலையில் அநேக பொறுப்புகள் இருப்பதால், கடிதத் தலைப்பு விஷயத்தில் இன்னும் சில நாட்களைச் செலவிட முடியாத நிலையிருப்பதனை செயற்குழு வருத்தத்துடன் தெரியப்படுத்துகிறது."
முன்னர் அறிவித்தது போல, கைவசமுள்ள கடிதத் தலைப்புகள் முடிவடைந்ததும், தமிழையும் சேர்ப்பது பற்றி உங்கள் வேண்டுகோள் பரிசீலனைக்கெடுத்துக் கொள்ளப்படும் என்பதை குறிப்பிட விரும்புகிறோம்."
18 தங்கள் பதில், நிரம்பிய துயரத்தையும், திருப்தியீனைத்தையும் எமக்குத் தந்தது. செயற்குழுவின் இத்தீர்மானத்தால் நலன் செய் சங்கத்திலிருந்து விலகுவதைவிட வேறெந்த முடிவுக்கும் வர எம்மால் இயலவில்லை. எமது ராஜினாமாக்களை ஏற்றுக் கொள்ளும்படி வேண்டுகிறோம்."
-இந்தக் கடிதத்தின் கீழ், இருபத்தொன்பது கையொப்பங்களும் இருந்தன.
>k
* 1981இல் (மலர்மன்னன் வெளியீடு, சென்னை) “/4" இல பிரசுரமானது
* 1982ல. “கிருஷ்ணன் தூது" தொகுதியில் இடம் பெற்றது.

Page 20
ஆரைகள்
ரம் ஆறரையாவது இருக்கும் போலிருந்தது. வேணி (65 அடுப்படியில் அலுவலாயிருக்கிற அரவங் கேட்டது. மெல்ல விழித்த கண்களை மூடிக்கொண்டான். கண்களும் தலையும் லேசாக நொந்தன. உடம்பில் சூடாயிருக்கலாம். நேற்றிரவு நித்திரை வேறு குறைவு. சாப்பாடில்லாமலும் இரண்டு நாளைக்கு அவனால் இருக்கமுடியும் ஆனால் ஒரு நாளைக்கு நித் திரை எட்டு மணித்தியாலத்திற்குக் குறைந்தாலும் அவனால் தாங்க முடியாது. அடுத்த நாள் பகல் ஒன்றும் ஓடாது. ஒரே அலுப்பாயிருக்கும். சிலநேரம் காய்ச்சல் மாதிரியிருக்கும். படுத்தால் தூங்கவேண்டும் என்று நினைத்தால் போதும்இரண்டு நிமிடத்திற்குள் தூங்கிவிடுவான். அதேபோல் இத்தனை மணிக்கு எழும்பவேண்டும் என்று நினைத்துப் படுத்தால் எல்லாம் வைத்தது மாதிரி எழும்பிவிட முடிகிறது. பத்துப் பதினைந்து நிமிஷம் முந்திப் பிந்தியிருக்கலாம். இது எப்படியென்று அவனுக்கு நெடுக ஆச்சரியமாயிருந்தது. என்றாலும் அப்படித்தான் நடக்கிறது.
இரவில் மாத்திரம் நித்திரை குழம்பினால் பிறகு கண்களை மூடுவது பெரும் பாடாகிவிடும். அந்த நேரம் பார்த்து இரவின் அமைதியில் எல்லா யோசனைகளும் தலை தூக்குகின்றன. வீட்டுக் கஷ்டம், வேலைக் கஷ்டம் நண்பர்கள், உறவினர்கள் அவ்வப்போது ஏற்படுத்தி விடுகிற நோக்காடுகள் - எல்லாம் அந்த நேரம் பார்த்து நினைவுக்கு வருகின்றன. ஆனாலும

இந்த வேளைகளில் சில அருமையான யோசனைகளும் அவனுக்குள் தெறித்திருக்கின்றன. ஒரு பகல்பொழுதில் அல்லது சாதாரண இயந்திர முடுக்கலான நாளாந்த ஒட்டமொன்றின் போது இப்படியான சிந்தனைகள் பொறி தட்டியிருக்குமா? என்பது ஐமிச்சமே அலுவலக வேலை ஒன்றில், குடும்பப் பிரச்சனை ஒன்றில் - இப்படி இரண்டு சந்தர்ப்பங்களில், அவை அவனை வழி நடத்தின. தடைக்கற்களைப் படிக்கற்களாக்க முடிந்தது. இவ் விரணி டையும் யோசிக் கையில் சாமத்து விழிப் பைச் சகித்துக்கொள்ளலாமென்பது மட்டுமன்றி. வரவேற்கலாம் போலவும் இருக்கும். ஆனால் தொல்லை அடுத்தநாள் விடிய எழும்பும்போதுதான் அவனறியாமலே அாை அல்லது முக்கால் மணித்தியாலம் கூடுதலாகத் தூங்கியிருப்பான். நேரத்திற்கு விழிப்புக் கொண்டால் அசதி வரும்.
நேற்றிரவு இப்படி இடையில் விழிப்புத் தட்டவில்லை தான். என்றாலும் படுக்கைக்குப் போக நேரமாகிவிட்டது. கண்களை மீண்டும் மெல்லத் திறந்தான் இனித் தூக்கம் வராது. ஆனால் எழும்பவும் மனமில்லாதிருந்தது. ஆறரை மணிச் செய்திக்கான முன்னிசை பின்வீட்டு றேடியோவிலிருந்து மெல்லக் கேட்டது. கண்ணாடி யன்னல்களால் பழுப்பு ஒளி கசியத் தொடங்கியிருந்தது. இந்த ஜன்னல்கள்தாம் இந்த அறைக்கு அழகு. அதுமட்டுமல்ல. அவைதாம் அறையை வாழ்விடமென்ற தகுதிக்கானதாக்குகின்றன. இந்த அறை. முன்னால் நாலடி அகலப் பல்கனி, இடப்பக்கத்தில் சின்ன அடுப்படி கீழே இறங்கினால் குளியலறை-இதற்கு வாடகை இரு நூற்றைம்பது ரூபா. இந்த ஜன்னல்கன் தனியா கீழறை. பல்கனி மட்டத்திற் கெழுந்து உரசி ஆடுகிற வாழைத்தோகைகளின் கீழே மறைந்து விடுகிற கொழும்பு நகரின் வரட்டுத்தனம், இந்த மூன்றையும் கருதியே அவன் இந்த வாடகைக்கு ஒத்துக்கொண்டான். அவன் சம்பளத்துடன் பார்க்கும் போது இது அதிகப்படிதான்.
ஜன்னல்கள் இரண்டடி இரண்டடியாக நாலு தொடர்ந்தாற்போல. ஐந்தடி உயரம், கண்ணாடி கிழக்கே பார்த்தவை. நிலா இராக்களில் பின் வீட்டுக் கூரைக்கும் மேலாக நிலவொளியை உள்ளே வர அனுமதிப்பவை.
இந்த வாழையிலைகளெல்லாம் அலையலையாகப் படர்ந்து ஏதோ நிலவுலகத்திற்கு மேலே வான மண்டல வாழ்வு சித்தித்திருக்கின்ற பிரமை தருவன. ஆனைவாழை, கதலி, மொந்தன் எல்லாமிருந்தன. வீட்டுச் சொந்தக்காரரின் ஒய்வு நேரங்களும், இந்த மண்ணும் அவற்றை மதர்க்க விட்டிருந்தன. அடிமரங்கள் இங்கிருந்து இலேசில் தெரியமாட்டா.

Page 21
தெரிந்தால் தென்னைமாதிரியிருக்கும். இந்த இலைகளில் குறுக்கும் நெடுக்கும் ஒடித்திரிகிற அணிற்பிள்ளைகள். இருந்திருந்துவிட்டு வந்து ஒளிந்து கொள்கிற குயில்கள்-இவையெல்லாம் இந்தக் கொங்றிற்கட்டை மறக்கச் செய்வதில் அவனுக்கு எவ்வளவோ உதவி செய்கின்றன.
பக்கத்து வீட்டுக் கூரை முகட்டிலிருந்து மைனா பேசத் தொடங்கிவிட்டது. இவர்களுடைய இப்போதைய வாழ்வில் அழகு சேர்ப்பதில் இந்த மைனாக்களுக்குப் பெரும் பங்குண்டு. இதன் இணை தெற்கே நிற்கிற இலவ மரத்தின் உச்சியிலிருந்து பதில் கொடுக்கும். இப்போதும் கொடுக்கலாம். எழுந்து. பல்கனியில் நின்று பார்த்தால், வாழையின் பச்சை இலைகளின் மேல் சுவரின் பிறைவளைவுச் சாளரத்தினடியில், சித்திரம் போல இலவங்கொப்புகளும் அதன் ஒரு மூலையில் இலையோடோ, காயோடோ மறைந்து மைனாவும் தெரியக்கூடும்.
இப்படியே கிடந்து மைனாவையும் வானத்தையும், வாழை இலைகளையும், அணிற்பிள்ளைகளையும் பார்த்துக்கொண்டு நாளைக் கழித்துவிட முடியாது. அன்றைய வேலைகள் நினைவுக்கு வந்தன. அலுப்பாயிருந்தது. எரிச்சலாயிருந்தது. நாளாந்தம் இதே படிதான். ஆறேமுக்காலுக்கு எழும்பினால் ஏழேமுக்காலுக்குள் வெளிக்கிடலாம். அரைமைல் நடந்தால் எட்டுமணிக்கு பஸ் எட்டுமணியென்றால், பஸ் எட்டுக்கு வந்துவிடவேண்டுமென்றில்லை. எட்டேகாலும் bdisorò. அடைத்து நெரித்துக்கொண்டு வரும். ஏறமுடிந்தால் பெரிய அதிர்ஷ்டம். ஏறுதழுவலை நினைவூட்டும். குளிப்பது துவைத்த துணி அணிவது என்பனவற்றையெல்லாம் இந்த பஸ் பயணம் அர்த்தமற்றதாக்கிவிடுகிறது. எட்டேமுக்காலுக்குள்ளாவது போய் இறங்கிவிட்டால் போதும் அவன் வேலை ஒன்பது மணிக்கு இடையிலும் பத்து நிமிட நடை இருந்தது.
வேலையென்றால் ஒரேவேலை, நாள் முழுதும், மாதமுழுதும் வருடமுழுவதும்-வேலையிற் சேர்ந்த நாளிலிருந்தே ஒரேவேலை. ஒரே மாதிரியான வேலை. சகாக்கள், சிகரெட் தொழிற் சங்கம் இவைதாம் அந்த அலுவலகத்தை அவனளவில் உயிர்த்துடிப்புள்ளதாக ஆக்குபவை. பின்னேரம், ஐந்துக்குப் புறப்பட்டால் வீடு வர் ஐந்தரையாகும். தேநீரின் பின், குளித்து மீண்டும் வேணியுடன் புறப்பட்டால், சாமான் வாங்குகிற வேலைகளும் முடிந்தமாதிரியுமிருக்கும். உலாவியது மாதிரியுமிருக்கும்.

கார் பஸ் புகைகளில் தெருவின் நெரிபாட்டில் எதிரே கண்ணைக் கூசப்பண்ணி வருகிற வாகனங்களில் மோதிவிடுகிறமாதிரி வருகிற சைக்கில்களில் இந்த உலவுகிற" என்பதன் அர்த்தம் அடிப்பட்டுப் போனாலும். மழை நாட்களில் இதுவும் கிட்டாது-வருடத்தில் பாதி
மாலை மழை.
எட்டுமணிக்குப் பிறகு வீடு வந்தால் அப்பாடா என்று கையைக் காலை நீட்ட முடிகிறது. வாடகையின் கடூரத்தையும் வீட்டுக்கார - ஆட்களின் சில்லுவண்டித்தனங்களையும், கொழும்பின் வரட்சியையும் மீறி, அவர்களுக்கு நல்லதொரு இல்லமாய் இந்த அனெக்ஸ் அமைந்தது. இதுதான் ஆறுதல். இது இந்த இல்வாழ்வு எட்டுவருடமாய் அவனை அவளும், அவளை அவனும் பார்க்கிற வாழ்வாய்த்தானிருந்தாலும்அவர்கள் இருப்பிற்கு ஒரு பரிமாணங் கொடுத்தது. இந்த எட்டிற்குப் பிற்பட்ட வேளைகளே அவன் விரும் புவன. அவளுக்கும் அப்படியாய்த்தானிருக்கும். அமைதி, ஒய்வு, புத்தகங்கள். படுக்க முன் ஒரு மணி நேரமாவது படித்தால்தான், தின்றது செமித்ததுபோலிருக்கும். அன்றைய தினம் ஒழுங்காய் முடிந்த உணர்ச்சி வரும். நகரிலிருந்து நான்கு முக்கிய நூலகங்களில் அவன் சேர்ந்திருந்தான்.
இந்த வாழ்வில் அழகுகளைச் சேர்க்க அவர்கள் முயன்றார்கள். இந்த இல்லம் ஜன்னலிற் படரவிட்ட ‘மணிப்பிளான்ற்" கொடி, பல்கனி, ஆகாயத்து நீலமும் வாழைப் பச்சையும், ஈர்த்துக்கொள்கிற புத்தக ஈடுபாடு, எட்டு மணிக்குப் பிற்பட்ட வேளை - இவையெல்லாம் அவர்கள் தேடியவையே.
கண்களைத் திறந்தான்.
எழும்புங்கோ." என்றாள் வேணி.
- - - - - - - - - -ஏழு மணியாகப் போகுது"
அவள் திரும்ப அடுப்படிக்குப் போனாள்.
இன்று காலையில் , இந்த நேரத்தில் அவன் வித்தியாசமானவனாயிருந்தான். எல்லாம் வீண் என்று பட்டது.

Page 22
எதனாலென்று தெரியவில்லை. திரும்பத் திரும்ப இதே நாட்கள். இதே மாதிரி, ஒரு கிழமை லீவு போட்டுவிட்டு, இருவருமாக யாழ்ப்பாணம் போய் வந்தாலென்ன என்று யோசனை வந்தது. ஆனால், இந்த மாதம் முடியும்வரை இன்னும் மூன்று வாரங்களுக்கு லீவெடுப்பது சிக்கலான காரியம் என்பதும் கூடவே நினைவு வந்தது. மண்ணாங்கட்டி வேலையும்,
மண்ணாங்கட்டி சீவியமும்,
ஆறேமுக்கால் இருக்கலாம். நிமிர்ந்து படுத்தான். குளிர் இன்னமும் பலமிழக்கவில்லை. மைனா தன்பாட்டில் பேசிக்கொண்டிருந்தது. அவனுக்கு இன்றைய வேலைகளெல்லாம் நடைமுறை வரிசையில் நினைவுக்கு வந்தன. கோப்பி, பிரஷ், குளியலறை சாப்பாடு, உடுப்பு நடை, பஸ், புழுதி, புகை, புழுக்கம் அவதி. தன்மேலேயே ஆத்திர மாயிருந்தது. நான் ஒரு முட்டாள். இந்த முப்பத்திரெண்டு வருடமாக வெட்டிக் கிழித்தது என்ன? இப்போது ஆறே முக்கால் என்று அவதிப்பட்டுத்தான் எதைக் காணப்போகிறேன்.
நேற்றுங்கூட மைனாதான் அவனை எழுப்பியது. படுக்கையால் எழும்பி, படத்தருகில் ஒரு நிமிஷம் கண் மூடி நின்று கோப்பிக் கோப்பையுடன் வெளியே வந்தால் மைனா தெரியும். பின் வீட்டு முகட்டில், பனியில் நீர்த்த இளம் மஞ்சள் முதல் வெயிலில் அலகால் சிற்குகளைக் கோதிக் கோதிப் பேசுகிற மைனா, இலவமரத்து ஜோடியைக் கூப்பிடுகிற
இன்று ஏன் இப்படியிருக்கிறது? இரவு என்ன கனவு கண்டேன்? நினைத்துப் பார்க்க முயன்றான். ஒன்றும் தெளிவாயில்லை. பக்கத்து மேசையில் வேணி பிரஷ்ஷை ஆயத்தமாய் எடுத்து வைத்திருந்தாள். ஏழு மணிக்கு ஐந்து நிமிஷம் என்றது மணிக்சூடு, எழும்பவா விடவா என்று யோசித்தான். கைகளை நீட்டி நெட்டி முறித்தான். போர்வையைத் தள்ளிவிட்டு டக்கென்று எழும்பினான். தான் உசாராயிருப்பது போன்ற பாவனை அவனாலேயே அதை ஏற்க முடியாமலிருந்தது. கட்டிலிலேயே உட்கார்ந்தான்.
வேணி திரும்ப வந்தாள்.
AVA F/ எழும்பியாச்சா?

ኳኳ " ። ፳፱
என்ன ஏதும் சுகமில்லையே? u
LÒ ....
எழும்பினான். ஏழு ஐந்து படத்தருகில் ஒரு நிமிஷம் கண்மூடி நின்றான். பிரஷ்ஷை எடுத்துக்கொண்டு அடுப்படிக்குப் போய் கோப்பியுடன் வந்தான். பிரஷ்ஷை மீண்டும் வைத்துவிட்டுக் கோப்பையுடன் பல்கனிக்குப் போனான். மைனா கூரையில்தானிருந்தது. ஆனால், பேசவில்லை. கழுத்தை இடுக்கி, மேற்கே தலையைச் சாய்த்து, ஏதோ கவலை மாதிரிக் குந்தியிருந்தது. தெற்கே இலவமரம் தெரிந்தது. அதன் பின்னால் கருமேகங்கள் அணிவகுத்திருந்தன. மேகமூட்டம் மேற்கிலும் அடர்ந்து தெரிந்தது. இன்றாவது லீவு போடலாமா? என்று யோசித்தான். முடியாது என்று பட்டது.
இந்தப் படிகள் சுருள் படிகள். இரண்டடி அகலம் வரும். கொங்கிறீட்டில் கட்டி வெள்ளை அடித்திருந்தது. வீட்டில் ஒரு பகுதியைத் தனியாக வாடகைக்கு விட வசதியாகப் பின்னர் கட்டியிருக்க வேண்டும். ஏறும் போது எவருக்கும் மூச்சு வாங்கும். இறங்கும் போது அடிஅடியாய் வைக்க வேண்டும். கீழே முற்றம் அழகாயிருந்தது. வெள்ளை மணல் விளக்குமாற்றுக் கோலம் வரம்பெல்லாம் பூஞ்செடிகள் வீட்டைச் சுற்றிக் கொண்டு முன் புறம் வருகிற இந்தப் பாதை இவர்களுக்கானது. இதுகூட இரண்டடிதான். நடந்தான்.
சடபடாவென்று சத்தங் கேட்டது. வாழைப் பாத்திக்குள் எங்கோ சுருட்டிக் கொண்டு கிடந்த வீட்டுக்காரரின் நாய் இவனைக் கண்டதும் உடம்பைச் சிலிர்த்துக் கொண்டு எழுந்து அவசரமாய் வந்தது. செம்மஞ்சள். ஏதோ கலவனாம். அவனுக்கு நாய்களைப் பிடிப்பதில்லை. அதிலும் வேலை வினைக்கெட்டு வளர்க்கிறவர்களின் செல்லங்களாகி விளையாடுகிற இந்த பிராணிகளில் வெறுப்பே வருகிறது. இதற்கும் இந்த வீட்டில் நடவாத நடப்பு கிட்ட வந்தாலே ஒரு சிணியும் இறைச்சியும் மணமும் எப்போதும் அடிக்கின்றன. இப்போதும் அடித்தன.

Page 23
இந்தக் கழுதைக்கு நான் கேற்றைத் திறக்கப் போகிற சங்கதி எப்படி எப்போதும் விளங்கி விடுகிறது? ஒவ்வொரு தரமும் இதை வெளியில் விட்டு விடாமல் கேற்றைத் திறந்து சார்த்துவது பெரும்பாடு. கிடைக்கிற நீக்கலில் தலையை நுழைத்துவிடும். நாயை விட்டுவிடாமல் கேற்றைத் தாண்டுவதென்பது வலுசிக்கலான காரியம். போதாக் குறைக்கு அதன் உடம்பெல்லாங்கூட காற்சட்டையில் தேய்த்து விடுகிறது அதற்கு இப்போது குட்டைவேறு பிடிக்கத் தொடங்கியிருக்க வேண்டும் என
அவன் நம்பினான்.
தெரு அளப்பதில் - ஒழுங்கை முகப்பிலிருந்து குப்பைத் தொட்டியை அளைவதில் - தெருக்கரைப் புற்களை அவசரமாக மோப்பம் பிடிப்பதில், ஒடி ஒடி ஒவ்வொரு மரமாகப் பார்த்துப் பின்னங் காலைத் தூக்குவதில், அடுத்தடுத்த வீட்டு அல்சேஷசன்களின் குரல்களில் வெருண்டோடுவதில் இதற்குப் பரமானந்தம் ஒன்று கிடைப்பது நன்றாகத் தெரிகிறது. அல்லது அதன் மட்டில் இதுதான் சுதந்திரமோ? ஆங்கிலத்தைத் தாய்மொழியாகக் கொண்டிருக்கக் கூடிய இந்தப் பிறவியை எக்காரணம் கொண்டும் வெளியில் வரவிடக் கூடாது என்பது முதலில் வேண்டுதலாகவும் பிறகு வெருட்டலாகவும் வீட்டுக் காரரால் அவனுக்கு விடப்பட்டிருக்கிறது.
பாதை முடிகிற இடத்தில் புற்றரை பத்தடிக்குப் பத்தடி சதுரமாக வளர்ந்த புல. அதைத் தாண்டினால் கேற். இவ்வளவு நேரமும் பின்னால் வந்துகொண்டிருந்த நாய், இப்போது முந்திக்கொண்டு கேற்றடிக்கு ஓடியது. கொழுக்கியில் அவன் கை வைக்கு முன்பே மூக்கை நுழைத்தது. மேலிற் பட்டுவிடாமல் விலகி நின்று கொழுக்கியைக் கழற்றினான். கேற்றை மெல்ல நீக்கினான். ப்றுானோ விழுந்தடித்து நுழைந்து, அவன் மறிப்பதற்குள் ஒழுங்கையில் பாய்ந்தது.
இப்போது பயப்படாமல் கேற்றைத் திறந்தான். வெளியே வந்து
வீட்டுக்காரரின் மனைவி முன் கதவடியில் நின்றா.
- - - - - என்ன, எங்கட நாயை நீங்கள் வெளியாலை விட்டிட்டுப்
போlங்கள்?."

மனுசியின் முகம் கோபத்தில் கோணியிருந்தது. உள்ளுக்கிருந்து பார்த்து விட்டு ஓடி வந்திருக்க வேண்டும். அந்த ப்றுாணோவின் முகத்திற்கும் இதற்கும் அதிகப்பட்ச வேற்றுமையில்லை என்பதாக இப்படியான வேளைகளில் அடிக்கடி படுகிறது. ஒரு கண்ணாடிதான் வித்தியாசம். அந்தக் கேள்விக்கு என்ன சொல்வதென்று புரியவில்லை.
ஓம். " என்றான். மிஸிஸ். பஞ்சாட்சரத்திற்கு ஆத்திரம் உச்சிக்கு ஏறியிருக்கலாம்.
”இனி அதைப் பிடிக்கிறது ஆர்?"
நான் போக விடேல்லை. தானாகத்தான் ஓடினது. ##
அதை விடாமல் போகத் தெரியாதா?"
வேணுமெண்டு போகவிட்டிட்டு இப்ப சொல்றீர்." வயதுக்கு எவ்வளவோ மூத்த மனுசிதானென்றாலும், ங்கள் இப்போது ' க்கு இறங்கிவிட்டதில் அவனுக்கும் சினம் கனன்றது.
அதை நீங்கள் கட்டி வைக்கவேணும். கட்டிக்கொண்டிருக்க வேற வேலை இல்லையா?." “எனக்கும் நாய் பிடிக்கிற வேலை இல்லை." மனுசி, கோபத்தில் ஒரு நிமிடம் குழம்பி நின்றது தெரிந்தது
பின்னேரம் அவர் வரட்டும்.நீங்கள் கெதியா வேற இடம் பாருங்கோ."
கெதியா வேற இடம் பார்கேலாது.மூன்றுமாத நோட்டீஸ் நீங்கள் தரவேணும். அதுமுந்தி ஒப்புக்கொண்ட விஷயம்"
இது, அமைதியான தனி ஒழுங்கையாயிருப்பதில் ஒரு நன்மை. இந்தச் சண்டையை அதிகம் பேர் பார்த்திருக்க முடியாது. மிஞ்சிப்போனால், பக்கத்து வீட்டுக்கும். முன்வீட்டுக்கும் கேட்டிருக்கலாம். ஆனால் அவர்களுக்கு, அவனிலும் பார்க்க அதிகமாக இந்த மனுசியைத தெரிந்திருக்கும்.

Page 24
வேனிக்கு நிச்சயமாகக் கேட்டிராது. ஆனபடியால் போய் விளங்கப்படுத்தத் தேவையில்லை. பின்னேரம் வந்து சொல்லிக்கொள்ளலாம்.
இந்தப் பிரச்சினையில் ஐந்து நிமிஷம் வீணாகிவிட்டது. காலையின் புத்துணர்வும் கெட்டுவிட்ட மாதிரியிருந்தது. அவன் நடக்கத் தொடங்கினான்.
3
ஒழுங்கை அமைதியாக இருந்தது. அந்த அமைதியே அழகாகவும் எதிரே ஐம்பது யார் துTரத்தில் கொழும்பு பரபரத்துப் பறந்துக்கொண்டிருந்தது. ஒரு ராட்சத ரீ வியில் மாதிரி தெரு தெரிந்தது. ஒழுங்கை வந்து மிதக்கிற இடத்தில் இடப்புறம் தபாற்பெட்டியும், வலப்புறம் குப்பைத் தொட்டியும் காவல். கிழக்கே திரும்பி நடந்தான். வெய்யில் முகத்திலடித்து எரிந்தது. அதிலுங் கூடுதலாக மனம் எழிய குணம் - என்னதான் பெரிய மனு ஷ வேஷம் போட்டாலும் உள்ளேயிருக்கிறது சூத்தைதான்.
வேணி பாவம், இபப்படியான ஆட்களுக்கு நடுவில் நாள் முழுவதையும் கழிக்க வேண்டியிருக்கிறது. அவன் திரும்பி வருகிறவரை ரேடியோவும் புத்தகங்களுமே கதி. சிலநேரம் மைனாக்களும் வரலாம். ஆனால் மைனாக்கள் மத்தியானத்தில் வருமா என்பது அவனுக்கு நிச்சமாய்த் தெரியவில்லை.
யாழ்ப்பாணத்துச் சனங்களென்று நம்பி வந்ததெல்லாம் பிரயோசனமில்லை. வாடகைக்கு அனெக்ஸ் தேடுகிறபோதெல்லாம் வீட்டுக்காரர்களும் யாழ்ப்பாணத்து ஆட்களில் வாரப்பாடு காட்டுவதை அவன் கண்டிருந்தான். ஆரம்பத்தில் இது ஒரு பெருமை தரக்கூடிய விஷயமாகவும்பட்டது.
பிறகு இந்தத் தேடல் அநுபவ முதிர்ச்சியின் பின்தான் விஷயம் புரிந்தது. அவர்களையென்றால், எழுப்புவது சுலபம். சண்டை சச்சரவு கோடு முறைப்பாடெல்லாமிராது. பயந்து உடனே விட்டுவிடுவார்கள். இதுதான் அந்தப் பரவலான பிரியத்தைக் கொடுக்கிறது.
இந்த அனெக்சுக்கு வந்து இரண்டு வருஷமாகிவிட்டது. முதல்

வருஷத்தில் பிரச்சினைகளேயில்லை. இப்பொழுது இலேசு இலேசாகத் தலை தூக்குகின்றன. இன்று கொஞ்சம் அதிகம்தான். இனி, அனேகமாக, அடுத்த வருஷத்துக்குள் விட்டுவிட வேண்டிய நிலை வரலாம். அப்படி விடச் செய்வதில் வீட்டுக்காரர்களுக்கு ஆதாயமுண்டு. இந்த ஒரே பகுதி தொடர்ந்து இருந்தால், வாடகையெல்லாம் ஒப்புக்கொண்ட தொகைதான் வரும் கூட்டுவது கஷ்டம். ஒரு பிடி' வேறு. இவையெல்லாம் இந்தக் கூடிய பட்ச மூன்றாண்டு விதிகளாற் தகர்க்கப்பட்டு விடுகின்றன. அடுத்த வருஷம் புதிய ஆட்கள் வரும்போது வாடகை முந்நூற்றைம்பதோ நாநூறோ என்று ஆக்கலாம். ஏற்கெனவே இருப்பவர்களிடமெல்லாம் இப்படி அதிகரித்துவிட முடியாது.
இந்த இடத்தை விட்டால் பிறகு எங்கே போகவேண்டியிருக்கும்? அதெல்லாம் தெரியாது. சொல்ல முடியாது. மூன்றுமாத நோட்டீஸ் கிடைத்தவுடன் தெரிந்தவர்களிடம் சொல்லிவைக்கவேண்டும். இரண்டு மாதமே மீதி என்றிருக்கும் போது தரகர்களைத் தேடவேண்டும். கடைசி மாதத்தில் ஒவ்வொரு ஞாயிறும் விடிய விடிய எலாம் வைத்தெழும்பி ஒப்ஸேவரும் கையுமாய் கடனோ உடனோ பட்டு - பொக்கற்றில் சில ஆயிர அட்வான்சுங் கொண்டு கொழும்பைச் சுற்றிப் பறக்க வேண்டும். மூலைக்கு மூலை, அந்த லேன் எங்கே, இந்த மாவத்தை எங்கே? இது என்ன நம்பர். எத்தனை அறை. எது பாதை, எவ்வளவு அட்வான்ஸ்.
இதெல்லாம் ஒரு சடங்காகவே நடக்கும.
அநேகமான இடங்களிற் சொல்வார்கள் - முக்கியமாகத் தமிழ் வீடுகளில் - எங்களுக்குக் காசு முக்கியமில்லை. ஆட்கள்தான் முக்கியம். துணை. துணைதான் தேவை. நல்ல ஆட்கள். யாழ்ப்பாணமா? மிக நல்லது. உங்களைப் பார்க்கத் தொல்லை இல்லாதவர்களாகவே படுகிறது. அட்வான்ஸை உடனே தரவேண்டும். வாடகையெல்லாம் முதலாந் திகதியே தந்துவிட வேண்டும். விளக்குகளெல்லாம் பத்து மணிக்குள் நூர்த்துவிட வேண்டும். விருந்தாளிகள் வரப்படாது. விறகு அடுப்பு எரிக்கப்படாது.
இந்தத் துணை' என்கிற சங்கதி சுவாரஸ்யமானது. அது எப்போதும் ஒருவழிப்பாதை. முக்கிமாக வீட்டுக்காரர்கள் வெளியூருக்குப் போகும்போது வீட்டைப் பார்த்துக் கொள்ளவேண்டும். இரவில்

Page 25
குறிப்பிட்ட நேரத்திற்கு எல்லாம் விளக்குகளையும் போட்டு அணைக்க வேண்டும். அல்லது கள்வர்களுக்கு வீட்டில் ஆட்களில்லாதது தெரிந்துவிடும். இனி, இப்படி நாய்களுள்ள வீடென்றால் பாண் வாங்கிப் போடவேண்டும். இதெல்லாம் உதவி - இதை செய்பவர்கள் துணைகள.
இந்தக் கண்றாவியுையெல்லாம் பார்க்கும் போது, கல்யாணமாகிக் கொழும்பிற்கு வந்தபோதே சின்னதாக ஒரு வீட்டை வாங்கியிருக்கலாம் என்று படும். அப்பொழுதெல்லாம் விலை இப்படி ஏறியிருக்கவில்லை. பலபேர் செய்தது மாதிரி ஊரிலிருந்த காணியை - வீட்டை விற்றுவிட்டு இங்கே வாங்கியிருக்கலாம். ஆனால் அவன் அதை விரும்பவில்லை. முட்டாள் வேலை வேணியும் நினைத்தாள். ஐம்பத்தெட்டுக் குப்பிறகு கொழும்பில் வீடு வாங்கியவர்கள் மூளையில்லாத வேலை செய்தவர்கள்.
*என அவன் முடிவு. இதை எழுபத்தேழும் நிரூபித்தது.
எழுபத்தேழு கலவரத்தில் இந்த இடத்திற்கு வந்தாயிற்று. அந்த நாட்களை நினைத்தாலே வயிற்றுக்குள் ஏதோ செய்கிறது. இங்கே இருக்கவும் முடியாமல் அகதிமுகாம் நெரிசலும் பிடியாமல், வருவது வரட்டுமென அவனும் வேணியும் ரயிலில் போனார்கள். வேணி துணிச்சல்காரிதான். கடவுள் புண்ணியத்தில் பத்திரமாகப் போய் சேர்ந்தார்கள். இத்தனைக்கும் பஞ்சாட்சரம் குடும்பம் அங்கே போக்கிடமில்லாமல் இந்த வீட்டை விட்டு வரவும் முடியாமல் இங்கேதானிருந்தார்கள்.
திரும்பிவர மூன்றோ. நாலோ மாதங்களாயின. ஊரிலிருந்து ஒரு காலை ரயில் புறப்பட்டு பிற்பகலில் இங்கே வந்து வீடெல்லாம் துடைத்துத் துப்பரவாக்கிக் குளிக்க இரவு பத்து மணியானது. கொழும்புடன் மீண்டும் ஒட்டிக்கொள்ளக் கொஞ்ச நாட்களாயின. அந்த நாட்களில் பஞ்சாட்சரம் குடும்பம் அணி னையோ தம்பியோ என்றிருந்தார்கள். கலவர நினைவுகள் மங்க மங்க உறவும் தூரப் போனது. நீ குடியிருப்பாளன். நான் வீட்டுக்காரன்.
இன்னொரு எழுபத்தேழு வருமா? நினைக்கவே பயமாயிருந்தது. சந்தி திரும்பியதும் பஸ் தரிப்புத் தெரிந்தது. முகத்திற் சுட்ட வெய்யில் இப்போது இடக் கன்னத்தைப் பதம் பார்த்தது தரிப்பில் வழமையான கூட்டம் இல்லை. இப்போது தான் பஸ்ஸோ, பஸ்களோ போயிருக்க

வேண்டும். நேரத்தைப் பார்த்தான். சரியாக ஐந்து நிமிஷம் வழமையான நேரத்திலும் பிந்தியிருந்தது. நஷனல்காரச் சிவலை மனிதர், நரைத் தலை சூட்கேஷ்காரர். சளக் சளக்கிற மூன்று பெண்கள் இவனுடன் பழக்கமாகிவிட்ட சிங்கள இளைஞன் பெயர்கூட இன்னுந் தெரியாது இவர்களைக் காணவில்லை. வழக்கமான சக பிரயாணிகள். அந்த பஸ் போய்த்தானிருக்கவேண்டும். அவன் கொஞ்சம் பிந்த, பஸ் கொஞ்சம் முந்தியிருக்கிறது. அவ்வளவுதான்.
4
இன்றைக்கு எழுந்ததிலிருந்து பட்ட கஷ்டமெல்லாவற்றிற்கும் ஈடுமாதிரி எதிரே தெரிந்தது. நன்றாகப் பாத்தான். தூரத் திருப்பத்திலிருந்து மேலேறி இரைந்து வருகிறது அவன் பஸ்தான். போதாக் குறைக்கு நெரிசல் இல்லாமல் வருவது மாதிரியும் இருக்கிறது.
தெரு விளக்குத் தூண் நிழலிலிருந்து வெளிவந்து கையை நீட்டினான். அவன்தான் ஒரே ஆள். இதில் ஏற. பஸ் லீ வாக இருந்தது. வாசலுக்கு நேர் இருக்கையில் குந்தினான். எல்லாமாக ஏழெட்டுப்பேர் கூட இல்லை. இந்த நேரத்திற்கு இப்படி ஒரு பஸ் வருகிறது. இவ்வளவு நாளும் எப்படித் தெரியாமல் போயிற்று?
ஸிஸன் ரிக்கற்றை எடுத்துக்கொண்டிருந்தபோது, "ஹலோ கிருஷ்ணா.' என்று அருகில் கேட்டது. யார்? பையை மூடிக்கொண்டு நிமிர்ந்தான். கொண்டக்டர் சிவா! 'ஹலோ சிவா ஆச்சரியமாய் இருந்தது. சந்தோஷமாயிருந்தது. சிவாவை இங்கே இந்த நேரத்தில், இந்த வெறும் பஸ்ஸில் சந்தித்தது வலு சந்தோஷமான சங்கதிதான். ஊரவன், பாலியகால நண்பன். எவ்வளவு காலத்திற்குப் பின் கிட்டத்தட்ட ஒரு வருஷத்துக்கு முன்பாக ஒரு நாள் இதே இடத்தில், இதே ரூட் பஸ்ஸில் சிவாவை சந்தித்தான். ஆனால் அப்போது மத்தியானம். பஸ் நிரம்பி வழிந்தது. இருவரும் பேசமுடியாதிருந்தது. போதாக் குறைக்கு அன்றைக்கு இந்த சிவா புதிரொன்றை வேறு போட்டுவிட்டுப் போயிருந்தான். இன்றைக்குக்
கேட்கலாம்.

Page 26
"எப்படி கிருஷ்ணா. அண்டைக்கும் கதைக்க முடியாமல் போச்சு." சிவா முன் ஸிற்றில் இவனைப் பார்த்தபடி குந்தினான். ஸிஸன் ரிக்கற்றை நீட்டிய கையைப் பிடித்துக்கொண்டான்.
- - - - - - - இங்கை கிட்டத்தானா இருக்கிறீர்?"
கிருஷ்ணன் இடத்தைச் சொன்னான். சிவா ரிக்கற்றில் அடையாளம் பண்ணிக் கொடுக்குமட்டும் பார்த்திருந்தான். "நீர் இந்த ரூட் தானா? எவ்வளவு காலம்?.
இல்லை நான் பிலியந்தலை, இண்டைக்கு மட்டும் இந்த ரூட். இந்த பஸ்ஸையும் அரைவாசியிலை திருப்பி விட்டிருக்கு."
இது இணி டைக் குமட்டுந் தானா?" கிருஷ்ணனுக்கு ஏமாற்றமாயிருந்தது.
சரி, பிறகெப்படி?.சொல்லும். சிவா கேட்டான்.
W e. o o O w O s
நீர் தான் சொல்ல வேணும்.உம்மட்டத்தான் முக்கியமான ஒரு விஷயம் கேட்க வேணும்."
அதென்ன?." சிவாவுக்கு ஆச்சரியம் வந்திருக்கும்.
பஸ், அடுத்த தரிப்பில் நின்றது. இரண்டு பேர் ஏறினார்கள். சிவா எழுந்து மணியை அடித்துவிட்டு, அவர்களுக்கு ரிக்கெற் கொடுக்கப் போனான். கிருஷ்ணனுக்கு ஏமாற்றமாயிருந்தது. போன முறை போலத்தான் இம் முறையும் நடக்கப் போகிறது போலிருக்கிறது. கதைக்க நேரங் கிடைக்கப் போவதில்லை.
சிவாவுக்கு முன் வழுக்கை பள பளத்தது. தாடியும் மீசையும் அடர்ந்திருந்த சிவந்த முகத்திற்கு இந்த வழுக்கை நன்றாய்த் தானிருக்கின்றது. சிவா சரளமாகச் சிங்களம் பேசுகிறான். இவ்வளவு வேகமாக அவன் தமிழிற் கூட சின்ன வயதில் பேசிய ஞாபகமில்லை. இதைத்தான் போன தடவை கேட்கமுடியாமற் போனது. சிவா ஏன் தமிழ்ப் பிரயாணிகளுடன் கூட சிங்களத்தில் பேசுகிறான்? தமிழர்கள்
என்று நிச்சயமாகத் தம்மை அடையாளங் காட்டுகிறவர்களிடங் கூட?
அவனுக்கு காது குத்தியிருக்கிறது. துவாரம் தெரிகிறதா? என்று

கிருஷ்ணன் பார்த்தான். இங்கிருந்து வடிவாகத் தெரியவில்லை. பஸ் அடுத்த முடக்கில் திரும்பியது. கைபிடிக் கம்பிகளைப் பற்றாமலே, சிவா அநாயாசமாக இவனை நோக்கி வந்தான். 'தள்ளியிரும் இவன் பக்கத்திலேயே உட்கார்ந்தான். காதுகுத்தியிருக்கவில்லைத்தான்.
என்ன கேட்க்கப் போறதெண்டு சொன்னீர்?" சிவாவின் குரல் கொஞ்சம் சப்தங் குறைந்திருந்ததாக இப்போது பட்டது.
“நீர் ஏன் தமிழ் ஆட்களோடு கூட சிங்களத்திலை பேசுறீர்?"
"இவையள் தமிழ் ஆட்களா?.” சிவா, ஒரு சீற் தள்ளியிருந்த அந்த இருவரையும் பார்த்தான்.
சிவா சிரித்தான்.
VAVA ΑΑ
என்ன?
"நான் எந்தெந்தத் தொங்கலெல்லாம் போய் வர வேண்டியவன்.இன்னாரெண்டு தெரிஞ்சால் சிக்கல் தானே?"
கிருஷ்ணனுக்குக் கோபம் வந்தது.
`உமக்குத் தாழ்வு மனப்பான்மை."சிவா இப்போதும் சிரித்தான்.
இருக்கலாம்.எனக்குமட்டுமில்லை.அது எங்கட சனத்துக்கே நல்லா ஏற்படுத்தப்பட்டிருக்கு ஆனா, என்னைப் பொறுத்தளவில் இன்னொரு காரணமும் இருக்கு."
“என்ன அது"
பயம்!" கிருஷ்ணன் ஒரு நிமிஷம் பேசாமல் சிவாவைப் பார்த்தான்.
"ஸொறி, சிவா." கிருஷ்ணன் சொன்னான்:
நீர் சொல்றது சரி தான்.நான் கேட்டதுக்குக் கோபியாதையும்.
"இதுக்கென்ன கோபம்.ஒரு நாளைக்கு எத்தனையோ தரம் இந்தக்

Page 27
கேள்வி எனக்குள்ளையே வருகுதுதானே"
சlவா மீண்டும் கிருஷ்ணனின் கைகளைப் பிடித்தான்.
பஸ் தடங்கலில்லாமல் ஓடிக்கொண்டிருந்தது. உள்ள சனத்தையெல்லாம், முன்னால் போனது அள்ளிக் கொண்டு போயிருக்கும்.
கிருஷ்ணனின் இடம் நெருங்கிக் கொண்டு வந்தது.
"நான் இறங்க வேணும் சிவா.இனி இந்த ரூட்டிலை எப்ப வருவீர்?"
அது சொல்லேலாது."
XV a. a s
அப்ப வீட்டை வாருமன் ஒரு நாளைக்கு.விலாசம் இப்ப
தெரியுந்தானே?"
5
வழமையான நேரத்திற்கே வந்து இறங்கியாயிற்று. இந்த பஸ் இப்படி ஒவ்வொரு நாளும் வந்தால் எவ்வளவு நன்றாயிருக்கும்.இப்போது ஆறுதலாகவே நடக்கலாம். அவதிப்படத் தேவையில்லை. வெய்யில் இன்னமும் சுட்டது. தலையைத் திருப்பி அண்ணாந்து பார்த்தான். மேகங்கள் இங்குமிருந்தன. மைனாக்களின் நினைவு வந்தது. வேணிக்கு அப்போது தான் போட்ட சத்தம் கேட்டிருக்குமா? கேட்டிருந்தால், தவித்துக் கொண்டிருப்பாள்.
பஞ்சாட்சரம் குடும்பங்கூட பாவமென்றுதான் இப்போது படுகிறது. ஒரு நாய்க்காக இவ்வளவு கத்தியிருக்கவேண்டியதில்லை. அவர்கள் செய்த முட்டாள்வேலை, ஊரைவிட்டு இங்கு வேரூன்ற முயன்றது. ஆனால் ஒரு விதத்தில் பார்க்கும் போது அதைக்கூட பிழையென்று சொல்லமுடியாது. இது தான் தலைநகரென்றிருக்கிறபோது எங்களுக்கும் இங்கே உரித்திருக்கிறது தான்.
நடைபாதைகள் என்று இந்தத் தெருவில் இல்லை. இரண்டு பக்கங்களிலும் புடைத்துப் பருத்த வாகைகள். இன்னும் காட்டுத் தீ

மரங்கள். மஞ்சளும், சிவப்புமான இதழ்கள் உதிர்ந்து கிடந்தன. அடுத்த மரத்தடியில் விலகி நடக்கவேண்டும். கொக்குகளுக்கும், காகங்களுக்கும் விருப்பமான இடமாக அது திகழ்கிறது. கீழே தார் றோட்டெல்லாம் வெள்ளையடித்த மாதிரி இருந்தது. நாற்றம் மூச்சு விடச் சங்கடப்படுத்தியது. அவசரமாகத் தாண்டினான். மாலைகளிலென்றால், இப்படிக் கீழே நடப்பதுகூட ஆபத்து. மழை நாட்களில் இன்னும் மோசம.
இந்த இடத்தோடும் , இந்தத் தெருக்களோடும் பத்து வருடங்களுக்கு மேலாகப் பரிச்சயம். ஆனாலும் எழுபத்தேழுக்கு முன்னிருந்த ஒட்டுதல் இப்போதில்லை என உணர முடிகிறது. ஒரு அந்நியம் தெரிகிறது. யாரோ பின்னால் விரைந்து வரும் சப்தம் கேட்டது. திரும்பிப் பார்த்தான், நல்லலிங்கம்.
வரட்டா தம்பி? நேரமாச்சு ff
ஒமோம்." என்று விடைகொடுத்தான் ஓடாத குறையாகத் தாண்டிப் போனார். அடுத்த கந்தோரில் வேலை செய்கிறவர். எட்டே முக்காலுக்கு இங்கு நிற்கவேண்டிய ஆள். வத்தளையிலிருந்து வரவேண்டும். குடும்பம் மட்டக்கிளப்பில். தனியாகச் சமைத்துச் சாப்பாடு கட்டிக்கொண்டு பஸ்ஸையும், பிடித்து இவ்வளவுதூரம் வருவதென்றால் கஷ்டந்தான். உழைப்புக்காக ஊரைவிட்டு வந்து இப்படி அல்லல்படுகிற எங்கள் ஆட்கள் எல்லோருமே பாவந்தான். இது ஏன் இப்படியானது? சிவா சொன்ன பதில், சின்ன விஷய மில்லை என்று தான் படுகிறது. தான் என்ன செய்யலாம்-இந்த இழுவையில் அகப்பட்டுப் போகிற ஒரு துரும்பு?
எதிரே பதுர்தீனின் வண்டிக்கடை நின்றது. தள்ளுவண்டியில் சோடா, சிகரற். வெற்றிலை, இனிப்புக்கள் எல்லாம் வைத்துக்கொண்டு பதுர்தீன் வியாபாரம் செய்கிறார். இதுதான் அவர் இடம். இந்த வாகை மரத்தடி வண்டிக்குச் சில்லுகளிருந்தாலும் வேறிடத்தில் கண்ட ஞாபகமில்லை. வீட்டுக் குத் தள்ளிப் போய் வர மட்டும் பாவிக்கிறாராயிருக்கும். கொம்பனித் தெருவிலிருக்கிறார். வெள்ளி பகல் தவிர்ந்த எல்லா நாட்களிலும் எல்லா நேரங்களிலும் பதுர்தீன் கடையை இங்கே காணமுடிகிறது.
வாங்க தொரே." என்றார் பதுர்தீன.
"..எத்தனை? மூணு தானா?"

Page 28
எப்படியும் ஐம்பது வயதுக்கு மேல் மதிக்கக் கூடிய பதுர்தீன் "தொரே என்கிறபோதெல்லாம் அவனுக்குக் கஷ்டமாயிருக்கிறது.
மூண்டுதான். " என்றான். கந்தோர் கன்ரீனில் சிகரட்
கிடைப்பதில்லை.
ஒரு வெறும் பெட்டியில் போட்டுக் கொடுத்து விட்டு சில்லறையை
வாங்கினார்.
மழை வர்ற மாதிரியிருக்கே. குடை இல்லாம வாlங்களே." இவருக்கு எப்படி உரத்துப் பேச முடிகிறது?
வரட்டும், வரட்டும்." அண்ணாந்து பார்த்தான்.
WW p FF
நான வரடடா?
கிருஷ்ணனுக்கு இந்த மனிதரை நன்றாகப் பிடிக்கிறது. எப்போதும் சிரித்துக் கொண்டிருக்கிறார். இரண்டு பாஷையும் தண்ணிப்பட்டபாடாக வருகிறது. தமிழிலும் உரத்துப் பேசுகிறார்.
சிவாவின் பதிலையும் பதுர்தீனையும் எந்தளவுக்கு சேர்த்துப் பார்ாப்பது சரி?
கந்தோர் வாசல் இங்கிருந்து தெரிந்தது. வளைந்த முதுகும் - விரைந்த நடையுமாய் ஜஸ்ரின் எதிர்ப் பக்கத்திலிருந்து வந்து உள்ளே நுழைகின்றான். இன்றைக்கு எவ்வளவாக வேலையிருக்கும்? கையிலிருப்பதை அரை மணித் தியாலத்திற்குள் முடித்துக் கொடுத்துவிடலாம். அது இன்று சரிபார்க்கப்பட்டு, பிழை ஏதுமிருந்தால், திருத்தவேண்டி வரும். மற்றும் படி புதிதாக ஏதும் வந்தாலொழிய நேரம் கிடைக்கும். வீட்டிற்குக் கடிதமெழுதலாம் எப்போது வருகிறோம் என்றெழுதுவுது? மாதவன், தன் லீவு முடிந்து திரும்புகிற வரைக்கும். லீவு கிடைக்கப் போவதில்லை. அவன் வர இன்னும் ஒரு கிழமைக்கு மேலாகும். மாதம் முடிய வருகிறோம் என்றுதான் எழுத முடியும்.
தன் மேசைக்கு வந்த போது எட்டு ஐம்பத்தைந்து. பையை வைத்துவிட்டு லாச்சியைத் திறந்து பேனையை எடுத்துக் கொண்டு போனான். கையெழுத்து வைத்து விட்டு வரும்போது, ஜி. பி. எழுந்து

கூட வந்தான். "உன்னோடு ஒரு கதை."
என்ன அது?"
கிருஷ்ணனுக்குப் பக்கத்தில் இன்னொரு கதிரையை இழுத்துப் போட்டுக் கொண்டு ஜி. பி. உட்கார்ந்தான்.
சொல்லு.' என்றான். கிருஷ்ணன், லாச்சியைத் திறந்தபடி
நான் வந்தது அரை மணித்தியாலத்துக்கு முந்தி." என்றான் ஜி. பி. சிங்களத்தில்.
பக்கத்துக் கந்தோர் ரைப்பிஸ்ட் பெட்டை எட்டரைக்கு வருமட்டும் நீ அப்படித்தான் வருவாய்"
“பகிடி வேண்டாம் மச் சான் எங்கட அப்ளிகேஷன்கள் போட்டோமில்லையா?."
"இந்தா ஜி. பி. நீ அரை மணித்தியாலம் முந்தி வாறதுக்கும் எங்கட அப்ளிகேஷன்களுக்கும் என்ன சம்பந்தம்?."
சுமதிபால தெரியுந்தானே உனக்கு?. என்ன. மூண்டாவது கொப்புக்குப் பாய்கிறாய்?. சுமதியைத் தெரியாதா உனக்கு." ஜி. பி. மீண்டும் கேட்டான். “எந்த? 'எம்' செக்ஷன்?" "அவனே தான். அவனை வரும்போது ரயிலில் சந்தித்தேன்"
ம்ம்?" இனி அடுத்தது. எங்கே இவன் பாயப்போகின்றான் என்று கிருஷ்ணன் யோசித்தான்.
W r Wf எங்கட அப்ளிகேஷன் கதை எல்லாம் முடிந்தது!. அவன் சொன்னான்
V WW என்ன அது?. பேய்க்கதை
"வருத்தம் தெரிவித்து பதிலும் ரைப் பண்ணியாச்சாம்பெரியவர்
கையெழுத்துப் போடவேண்டியதுதான் மிச்சம்.

Page 29
W WW
உண்மைதானா?.
O உண்மைதான். சுமதி பொய் சொல்லமாட்டான்.
e என்னத்துக்காம்? என்ன காரணம்.?
பெர்னாண்டோ, இங்க வா. ஜி. பி. இவனை விட்டு விட்டு பெர்னாண்டோவைக் கூப்பிட்டான். அவனும் வந்த பிறகுதான் இனி இவன் பதில் சொல்வான். கிருஷ்ணன் பையை லாச்சிக்குள் வைத்து
மூடினான்.
பெர்னாண்டோ தனியே வரவில்லை. பின்னால், நந்தாவும் அநுலாவும்
உங்களுக்குத் தெரியுமா சங்கதி?. ஜி. பி. அந்த மூவரையும் பார்த்துக் கேட்டான்.
எல்லோருக்கும் சொல்லு விஷயத்தை. கிருஷ்ணன் எழுந்து போனிடம் போனான்.
சுமதிபால தன் இடத்தில் தானிருந்தான். ஜி. பி. சொன்னது சரி. அவ்வளவையும் சுமதி இவனுக்குச் சொன்னான்.
V o rA f ஏ. டி. க்கு என்ன ஆட்சேபம்?
"ஒண்டல்ல.இரண்டு"
"என்னவாம்?."
முதலாவது உங்கட ஸே விசிலை ஆட்கள் குறையத் தொடங்கிவிடுமாம். மற்றது, வெளிக்கள ஆட்கள் தங்களுக்குப் போட்டி
என்று எதிர்க்கக்கூடும்.
VV o // அது அவருடைய ஊகந்தானே?.
நீர் தானே உங்கட யூனியன் காரியதரிசி" சுமதி கேட்டான்

அதுதான் செய்யவேணும். இதுக்கிடையிலை சரியான நிலவரம் அறிய உம்மட்ட ஒருக்கா வரலாமா? fy
வாரும்." கிருஷ்ணன் தன் இடத்திற்குத் திரும்பியபோது ஒரு கும்பல் நின்றது.
AV 9 s
என்னவாம்?
யாருக்குப் போன் பண்ணினாய்?" அவன் பதில் சொல்வதற்குள் பெரேரா வந்தார்.
ஐஸே என்ன இது? என்ன கும்பல்? இப்ப என்ன நேரம்?"
இல்லை மிஷ்டர் பெரேரா" கிருஷ்ணனிடந் திரும்பிக் கேட்டார்.
"வேறென்ன? ஏ. டி யைத் தான் காணவேணும்.
”கோட்டைக்கெல்லா போகவேணும்? இப்பவே போகப்போறியா?"
”போகத்தான் வேணும். ஆனா, கையிலை ஒரு சின்ன வேலை இருக்கு."
"நீ போ மச்சான். நான் செய்து கொடுக்கிறேன் அதை. என்றான் பெர்னாண்டோ.
அப்ப பிரச்சினையே இல்லை." பெரேரா சொன்னார். பையை எடுத்து வெளியே வைத்தான். யூனியன் ஃபைலை எடுத்துப் பைக்குள் திணித்துக் கொண்டு லாச்சியைச் சாத்தியபோது ஒரு யோசனை வந்தது. ஏ. டி. க்காகக் காத்திருக்கிறபோதாவது வீட்டுக்கு கடிதமெழுத முடியலாம். லாச்சியை மீண்டுந் திறந்து ஒரு ஒற்றை, முத்திரை என்வலப். எடுத்துப் பைகளுள் வைத்தான்
”அந்தக் கிழவனுக்கு வடிவாச் சொல்லு." பூட்டிக் கொண்டிருந்தபோது நந்த சொன்னான்.
கதிரையைத் தள்ளிவிட்டு எழுந்தான். "வெற்றிக்கு வாழ்த்துக்கள்.” அநுலா சிரித்தான்.

Page 30
m m m a r வழமைபோல வெற்றிக்கு" முருகவேள் திருத்தினான். எல்லோரும் சிரித்தார்கள்.
வெளியே வந்தபோது பத்து மணிக்கு ஐந்து நிமிஷமிருந்தது. பத்தரைக்குள் போய்விட முடியுமா? பஸ் கிடைப்பதைப் பொறுத்தது. மந்தாரமில்லாமல் வெய்யில் நல்ல வெளிச்சமாக இருந்தது.
6
அப்போது வந்திறங்கிய நிறுத்தத்திலிருந்துதான் கோட்டைக்கு பஸ் எடுக்கவேண்டும். நடந்தான்.
“என்ன தொரே, உடனே திரும்புறீங்க?." பதுர்தீன் யாரோ வாடிக்கையாளருடன் சம்பாஷணையை இடைமுறித்துக் கொண்டு இவனைப் பார்த்துக் கேட்டார்.
”கோட்டைக்கு ஒரு அலுவல் போய்வர வேண்டியிருக்கு.
இன்றைக்கு பஸ்ஸைப் பொறுத்தளவில் ராசியான ஒருநாளாயிருக்க வேண்டும். வந்து நின்றதும் நிற்காததுமாய் 107 வந்தது. சனமும் அவ்வளவில்லை. உண்மையில் இது பஸ் பயணத்திற்கு ஒரு தோதான நேரம். இந்தப் பத்துப் பதினொன்றை அண்டிய வேளை - காலைக் கும்பல் போயிருக்கும். மதியப் பரபரப்புக்கு நேரமிருக்கிறது.
ஜன்னலருகோடு ஸிற் கிடைத்தது. எதிர்காற்று முகத்திலடித்தது. ஏ. டி. இந்த நேரத்தில் இருப்பாரா? இருக்கவேணும். சந்திக்கமுடியுமா? மூட் எப்படியிருக்கும்? எப்படியாவது அப்ளிகேஷன்களை ஒப்புக் கொள்ளப்பண்ணவேணும் - முப்பத்தைந்து பேருடைய எதிர்காலம்! ஊழியர்களுக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்தமாக நிறுவனத்திற்கும் நன்மை என்று ஏன் உணர மறுக்கிறார்கள்?
இந்தத் தொழிற்சங்க வேலை மீண்டும் எப்படியோ தன்னிடமே வந்து சேர்ந்திருக்கிறது. எழுப்பத்தேழுக்கு முதல் ஒரு மூன்று வருஷம் அவன்தான் சங்கத்தின் இந்த அலுவலகக் கிளைக் காரியதரிசியாக இருந்தான். கிட்டத்தட்ட நூறுக்கும் மேல் உறுப்பினர்கள். அதில

கால் வாசிதான் தமிழர்களென்றாலும் இந்தக் கெளரவம் அவனைச்
சேர்ந்தது.
எழுபத்தேழில் இதிலும் ஒரு நெருடல் ஏற்படத்தான் செய்தது. மனதை உறுத்துகிற நெருடல். அதோடு போட்டது போட்டபடியே போய், திரும்பிவந்து ஓராண்டுக்குள் மீண்டும் இந்தப் பொறுப்பை எற்றுக் கொள்ள எப்படி முடிந்தது? கடந்த வருடாந்தக் கூட்டத்தில் தன் பெயர் பிரேரிக்கப்பட்போது, மறுதலிக்க உன்னிய நாக்கை அடக்கியது எது? இன்னுந்தான் தெரியவில்லை. பார். பார் என்னை இன்னமும் மதிக்கிறார்கள், என்று நடப்புக் காட்டும் முனைப்பா? அதுவே. தன்னிடமும் - அங்கீகாரத்தை வேண்டி நிற்கும் - தாழ்வு மனப்பான்மை எங்கோ ஒளிந்திருக்கிறதைக் காட்டுகிறதா? ஒட்டுமொத்தமாகப் பார்க்கும் போது விசித்திரமாயும், வியப்பாயும் எல்லாமே கோமாளித்தனமாகவும். இருந்திருந்து விட்டுப் படுகிறது.
மூன்று பாஷைகளிலும் வாயடிக்ககக் கூடிய வலு, பேயன் போல அலைகிற தன்மை, காரியத்தைக் கொண்டு போகிறதாக மற்றவர்கள் நினைக்கிற - கெட்டித்தனம், இவையெல்லாம் உண்மையிலேயே உள்ளனதானா? உள்ளதென்றாலும், பெருமை என்ற கரட்டின் பின்னால் நடக்கிற கழுதைப் புத்தியென்றே படுகிறது. ஒப்புக்கொண்டாயிற்று. மீறவும் முடியாது. ஒப்புக்கொள்ளாமல் அல்லது கிடைக்காமல் போயிருந்தால் அதுவும் தன் ஈகோவுக்கு எப்படியிருந்திருக்கும்?
இந்த வாழ்க்கையில் - தனக்கோ. தன் குடும்பத்துக்கோ, தன் சமுதாயத்திற்கோ எந்தப் பிரயோசனமுமில்லாத இந்தச் செக்குமாட்டு வாழ்க்கை என்று அடிக்கடி வருகிற உறுத்தலால் உபயோகமாக ஏதாவது செய்யவேண்டுமென்று அடிக்கடி கிளர்கிற முனைப்பின் குறைந்தபட்ச
வெளிப்பாடாயுமிருக்கலாம்.
சரி. இப்போ போய் ஏ. டி. யைக் கண்டு வாதம்பண்ணி, அப்ளிகேஷன் களை ஒப்புக்கொள்ள வைத்து.அது வெற்றிதான். கிருஷ்ணன் வீரனாகலாம். அதன் பிறகு எக்ஸாம். அதைப் பாஸ் பண்ணுவது ஒரு பொருட்டல்ல. அதுவும் சரி. பிறகு? உத்தியோகத்தில் ஒரு படி மேலே போகலாம். போய். அடுத்த அடி விழ விட்டு விட்டுப் போகப்போகிற உத்தியோகந்தானே.அதற்காக ஏனிந்தப்பாடு? இந்த மாயமான் வேட்டை?

Page 31
எழுபத்தேழில் ஊரோடு நின்ற அந்த மூன்று மாதங்களில் என்னென்ன யோசனைகள் வந்தன? எத்தனை தொழில்களைச் செய்ய முயன்றான்? ஊரில் - சரி, மிஞ்சிப் போனால் யாழ்ப்பாணத்தில் - எல்லாருமே கட்டிடங்களைக் கட்டப் போகிறார்களா? என்ன? என்றாலும் கட்டிட வேலைகள் என்றொன்றைத் தொடக்கலாம். ஒரு பெயர்ப் பலகை போட்டுக்கொண்டால் சரி, மார்க்கட் பிடிக்கும் வரை போர்ட்டைப் பார்த்துக் கொண்டிருக்க முடியாது. தோட்டஞ் செய்யலாம், கோழி வளர்க்கலாம். அதுவா, இதுவா அதுவும். இதுவுமா என்றெல்லாம் கொஞ்சங்கொஞ்ச ஆயத்தங்கள் செய்துகொண்டிருக்கும்போது வந்தவர்களெல்லாம் ஒவ்வொருவராகத் திரும்பத் தொடங்கியிருந்தார்கள்.
கடைசி ஆளாகக் கந்தோருக்கு வந்தபோது இவ்வளவு நாளும் என்ன செய்தாய்? அவ்வளவுக்குப் பயந்துவிட்டாயா?' என்றெல்லாம் இங்கத்தியச் சகாக்கள் கேட்டார்கள். வராமலும் ஒன்றும் செய்திருக்க முடியாது என்பதையும் சொல்ல முடியாது. மெல்லச் சிரித்துவிடலாம். அந்த நாட்களில் சுப் ஒன்றைச் சொல்வான். "மச்சான். இப்ப எவன் தன்ர சுய கெளரவத்தையும் அதே நேரம் இவர்களின்ர நல்லெண்ணத்தையும் காப்பாற்றிக் கொள்கிறானோ. அவன் சிறந்த ராஜதந்திரி."
பஸ்ஸால் இறங்கியபோது சரியாகப் பத்தரை இந்தத் தெருவைக் கடப்பது யமகண்டம். கொழும்பின் வரட்சியைக் காட்டுகிற கோட்டை தலைமை அலுவலகத்திலிருந்து, வலு பாடுபட்டுத் தான் இப்போதைய இடத்திற்கு வேலையை மாற்றிக் கொண்டிருந்தான். அங்கே கொஞ்சமாவது பச்சை தெரிகிறது. புழுதி, புகை, நெரிசல், வெக்கைஎல்லாம் இல்லையென்றில்லை. குறைவு.
சுமதியைத் தேடிப் போனான். அவன் இடத்தில் இல்லை. இப்போ வந்துவிடுவானென்று சொன்னார்கள். முன்னாலிருந்த கதிரையில் உட்கார்ந்தான். எப்படி கிருஷ்ணன்? உங்களுக்கென்ன. குடுத்துவைச்ச நீங்கள்." சுமதிபாலவின் இடத்திற்கருகிலிருக்கிற சிவராசா சொன்னார்.
கிருஷ்ணனுக்கு எரிச்சலாக இருந்தது.
"ஏன் ஐயா?" என்றான்.
> » − கந்தோரிலை கையெழுத்தைப் பொட்டு நினைச் ச இடமெல்லாம் உலாத்தலாம். எங்களைப் போல ஃபைலுகளோட

மாரடிக்கிற வேலையில்லை." கதைத்தால் கனக்க வரும். ஆத்திரத்தை அடக்கிக் கொணி டு பேசா திருந்தானி , இந்த ஸே விஸில் இருக்கிறவர்களுக்கு இப்படி ஒரு மனக்குறை
உடனேயே வந்தாச்சா?. " என்றபடி சுமதி வந்தான்.
விசேஷமாக ஒன்றுமிருக்கவில்லை. அப்போது தொலைபேசியில் சொன்னதுதான் இப்போது நேரிலும் சொல்ல இருந்தது.
“எதற்கும் ஏ. டீ. யோடு பேசிப் பார்க்கலாம்.நம்பிக்கைக்கு இடமிருக்கிறது." என்றான்.
மீண்டும் மேசைக் காட்டில் ஒற்றையடித் தடம் பிடித்து வெளியே வரவேண்டியிருந்தது. இது உண்மையிலேயே தனி உலகந்தான் இடத்தால் சனங்களும், சனங்களால் இடமும் குறுகிக் குறுகி.
ஏ. டி உள்ளே தானிருந்தார். ஆனால் பிஸியாம். யாரோ வெளிநாட்டுக்காரர்களுடன் ஏதோ டிஸ்கவுன் என்று அவருடைய காரியதரிசி சொன்னா. இப்போ தான் வந்திருக்கிறார்கள். இன்னும் அரை மணித்தியாலமாவது ஆகும்.
சந்திக்க வேண்டுகிற விபரங்களை எழுதிக் கொடுத்துவிட்டு, வரவேற்பறையில் போய் உட்கார்ந்தான். மற்ற நாட்களென்றால் இங்கே வெவ்வேறு பிரிவுகளிலுள்ள நண்பர்களைச் சந்திக்க - அலுவல்களைப் பார்க்கப் போயிருப்பான். இன்று நேரத்தை வீணாக்காமல் வீட்டுக்குக் கடிதமெழுத வேண்டும்.
7
வீட்டுக்குப் போய், மூன்று மாதங்களுக்கு மேலாகிவிட்டது. மூன்று மாதங்களுக்கொருமுறை போய், ஒவ்வொரு மாதம் நின்று விட்டு வருகிற வழமை. கல்யாணத்திற்கு முநீதி நினைத்தபோதெல்லாம் நின்றுநின்றாற்போல் போய்வர முடிந்தது. இருந்தாற்போல யோசனை வரும். வீட்டுக்குப் போகவேண்டும் போலிருக்கும். லீவு போடுவான். ரூம் மேற்றுக்கு ஃபோன் பண்ணுவான். கையை வீசிக்கொண்டே ரயிலேற

Page 32
முடிந்தது. இடங்கிடைத்தால் சரி. இல்லாவிட்டால் எங்காவது ஒரிடத்தில் பழைய பேப்பரைப் போட்டுவிட்டுக் குந்திக் கொள்ளலாம் லீவும் அப்போது பிரச்சனையாயில்லை. கல்யாணத்திற்குப் பிறகு அப்படியெல்லாம் போய் வந்துவிட முடியாதிருந்தது. இங்கும் சின்னதோபெரிதோ வீடென்றாகிவிட்டது. இனி இரண்டு பேருமாகப் போய் பத்து நாளைக்கு முன்பே இடம் றிசேவ் பண்ணி வைக்கவேண்டும். அதன் பிறகுதான் இந்த மூன்று மாதத்திட்டம் நடைமுறையில் வந்தது. இங்கிருந்து போனால், இந்த வரட்சியெல்லாந் தீர ஊரில் முக்குளித்து ஊறித் திளைத்துத் திரும்பும்போது கொஞ்சம் மனமில்லாமல்தானிருக்கும். வருஷத்தில் லீவென்பதே மிஞ்சுவதில்லை. இங்கிருக்கிற நாட்களில் கிழமைக்கொரு கடிதம் தப் பாது இந்தக் கிழமை இன்னமும் போடவில்லை.
ஊர் நினைவு வீட்டுப்பாசம் என்றெல்லாவற்றுடனும், பொறுப்பென்று ஒன்றும் இலைமறைகாயாய் இருக்கத்தான் செய்கிறது. அப்பராய் மட்டுமின்றி, அண்ணனாய்த் தம்பியாய், ஆசானாய்த் தோழனாய் என்றெல்லாம் ஒரு பெரு மரமாய்க் குடைகவித்து - நிழல் அளிக்கிற ஐயா இருக்கு மட்டும் விளையாட்டுப் பிள்ளைதானென்றாலும் அவரில்லாத காலத்தில். இவையெல்லாவற்றையும் தன்னோடு கொண்டு அவர் போனால்.பொறுப்பெல்லாந் தோளில் வரும். அவரில்லாத’ என்ற நினைவுக்காகத் தன்னில் கோபம் வருகிறது.
கடிதத்தை முடித்து, திரும்ப வாசித்து, உறையிலிட்டு, முத்திரை, முகவரி வேலைகளை முடித்தபிறகும் ஐந்து நிமிஷம் இருந்தது. ஏ. டி. யின் ஸ்ரெனோ சொன்னதில் இருபத்தைந்து நிமிஷங்கள்தான். கழிந்திருக்கின்றன. அரைமணியென்று விதியா என்ன, அஞ்சும் ஆகலாம். முந்தியுமிருக்கலாம். போய்ப் பார்ப்போம்.
இப்போது ஸ்ரெனோவையும் காணவில்லை. என்ன செய்யலாமென்று யோசிப்பதற்குள், ஏ. டி. யின் அறைக் கதவைத் திறந்து கொண்டு அந்த மனுசி வந்தது. செயற்கைப் புருவங்கள் செயற்கை மரியாதை, ஆனால் பாவம் நல்ல மனுசி.
இன்னும் அரைமணித்தியாலம் ஆகும் போலிருக்கிறது. உங்கள் துண்டை அப்போதே கொடுத்து விட்டேன்."
அப்படியானால், பதினொன்றே முக்காலாகும். பன்னிரெண்டிற்கு

அந்தாள் சாப்பாட்டிற்குப் போய் விடும். இடையில் பதினைந்தே நிமிஷங்கள் நிச்சய மில்லாத பதினைந்து நிமிஷங்கள் சாப்பாட்டால் திரும்பி வர ஒன்று ஒன்றரை ஆகும். இன்று நல்ல வினைக் கேடுதான். அப்போதும் சந்திப்பது எந்தளவுக்கு நிச்சயம்? வேறெந்த அவசர அலுவல் வருமோ? நாலும் ஆகலாம். சாப்பாடு.? போய்ச் சாப்பிட்டு வருவதிலும் சாப்பிடாமலிருப்பது பரவாயில்லை. வேண்டுமானால் இங்கே கன்ரீனில் ஏதாவது கடித்துக் கொள்ளலாம். நின்று தூங்க வேண்டியது தான்.
இதற்கெல்லம் இந்தப் பேயனை விட்டால் வேறெவன் கிடைப்பான்? இதுகள்தான் கணிப்பைத் தருகின்றன. சகாக்களின் மரியாதையைத் தருகின்றன. பிறகு, தன்முனைப்பைத் திருப்திப் படுத்தப் பார்க்கின்றன. இந்த முட்டாள்தனமெல்லாம் எதற்கு?
இப்போது என்ன செய்யலாம்? மூர்த்தியிடம் போகலாமென்று பட்டது. மூர்த்தி இங்கு வேலை செய்யத் தொடங்பிய காலத்திலிருந்தே நண்பன், அதற்கு முதல் தெரிந்தவன.
மூர்த்தியோடு தனபாலுங் கூட இருந்தான் உற்சாகமாக வரவேற்றார்கள்.
வந்திருக்கிறாயெண்டு சுமதி சொன்னான்.ஏ. டி. யைச் சந்திச்சாச்சா?."
கிருஷ்ணன் விபரம் சொன்னான்.
ஒவ்வொருவருக்கும் ஏதோ ஒரு விலை இருக்கத்தான் செய்கிறது. என்று யாரோ சொன்னதைப் போல ஒவ்வொருவரும் ஏதோ ஒரு சமயத்தில் இளகத்தான் செய்கிறார்கள். எவ்வளவு தான் வரண்டு தெரிந்தாலுங் கூட.
சிலர் அடிக்கடி இளகுகிறார்கள், சிலர் இருந்திருந்து விட்டு இளகுகிறார்கள். ஆனால் இவர்கள் எப்போதோ ஒரு தருணத்தில் இளகுகிறார்கள்.இதுதான் வித்தியாசம். மனதிலிருப்பவை அந்த நேரத்தில் வெளிச்சங் காண்கின்றன. தண்ணி, இந்த சாத்தியப் பாட்டை, சிலபேருக்கு சில சமயங்களில் அதிகரிக்கலாம். தண்ணியில்லாமலும் சாத்தியமுண்டு. வேறுபல காரணங்களிருக்கக்கூடும்.
தனபால், இந்த வரிசையில் கடைசி வகையைச் சேர்ந்தவனாகத் தன்னை இன்று இனங்காட்டினான். இந்த அலுவலகத்தில் தனபாலும் கிருஷ்ணனும் நாலாண்டு காலம் ஒரே சமயத்தில் வேலை செய்திருக்கிறார்கள். என்ன தான் பெரிய கந்தோர் என்றாலும், இரண்டு

Page 33
பேரும் வெவ்வேறு பிரிவுகள் என்றாலும் நாளைக்கு ஒருதரமாவது சந்திக்க முடிந்திருக்கிறது. இருந்தாலும் ஆளுக்காள் காணுகிற இடத்தில் புன்னகைப்பது கூட இல்லை. முதலில் இரண்டொரு நாள் கிருஷ்ணன் முறுவல் காட்டியும். தனபால் பிரதி பலிக்காததில் தானும் விட்டு, பிறகு முற்று முழுதான அந் நியம் இருவரிடை குடிகொண்டது ஞாபகமிருக்கிறது.
ஆனால், இப்போது மூர்த்தி இடையில் வந்ததிலிருந்து, இந்த நிலைமையில் லேசான மாற்றம் ஏற்படத் தொடங்கியிருக்கிறது. சாதாரண சகபாடி உறவு குடிகொள்ள ஆரம்பித்திருக்கிறது. பகிடி முசுப்பாத்தி
(n. l.
மூன்று பேருமாகக் கன்ரீனில் ரீ குடித்துக் கொண்டிருக்கும் போது தனபால் சொன்னான்.
மச்சான், உனக்குத் தெரியுமா..? உன்னை மற்றப் படியான் என்டெல்லோ எனக்கு முந்தி ஆரோ சொல்லி வைச்சான்கள்?" தனபால் சிரித்தான்.
எந்தப் படியான் என்டால்தான் என்ன?." கிருஷ்ணனும் சிரித்துக் கொண்டு. இந்தக் கூற்றால் தனக்கு ஆத்திரமெதுவும் ஏற்படவில்லை என்ற நிச்சயத்தில் பெருமிதம் கொண்டு சொன்னான்.
கன நாளைக்குப் பிறகு அண்டைக்கு. இவன் மூர்த்தி தான் சொன்னான்.எட பேயா? அவன் சுண்டியெடுத்த வெள்ளாளனெல்லோ.
இந்த இடத்தில் கணமேயெனினும் - டக்கென்று தன் மனம் கிளுகிளுத்ததைக் கிருஷ்ணனால் உணர முடிந்தது. அதனால், அடுத்த கணத்தில் தன்தோல்வியையும்.
அதுக்குப் பிறகுதான் இப்ப துணிஞ்சு அவனோட தேத்தண்ணி குடிக்க வந்திருக்கிறாய். ".மூர்த்தி நக்கினான்.
கிருஷ்ணனுக்கு நெஞ்சு நிறைந்த சிரிப்புச் சிரிப்பாக வந்தது. இன்றைக்கு இப்போதுதான் இப்படிச் சிரிப்பு வந்திருக்கிறது.
சரி, அதை விட்டிட்டு நீ வந்த காரியத்தைப் பார்.நேர மென்ன?."
பதினொன்று முப்பத்தைஞ்சு."

எழுந்து நடந்தார்கள்.
உங்கள் துரதிஷ்டம். "என்றா ஏ. டி. யின் ஸ்ரெனோ, இவனைக் கண்டதும்.
....அவர்களுடன் வெளியே போய் விட்டார். லஞ்ச் முடிந்து வந்ததும் உங்களைச் சந்திப்பதாகச் சொன்னார். WW
՝9յգ சக்கை. “என்ன செய்யப் போகிறாய்?. " என்றான் மூர்த்தி
"ஒண்டரை மட்டும் நிண்டு காய வேண்டியது தான்."
ΑΑ }f என்னோட வந்து சாப்பிட்டு வா.
“எனக்குப் பசியில் லை மூர்த்தி. ஆனா வீணா மின்னக்கெடவேண்டியிருக்கு.நீ போய்ச் சாப்பிடு.
அவ்வளவுக்கும் என்ன செய்வாய்?" “லைபரியிலை இருக்கலாம். எப்படியெண்டாலும் இண்டைக்குச் சந்திக்கத்தான் வேணும்.
அலுவலக நூல் நிலையத்திற்குப் போனான். சிவசுந்தரம் உற்சாகமாக வரவேற்றார். புதினப் பத்திரிகைகள் பகுதி கசமுச வென்றிருந்தது. புத்தகங்கள் சஞ்சிகைகள் பக்கம் அவ்வளவு சனமில்லை.
கொங்கிறீற்றையும், இரும்பையும், யந்திரங்களையும் சுமக்கிற கடதாசிகளை விலக்கி விலக்கி எதையென்றில்லாமல் ஒவ்வொன்றாகப் பார்வையால் மேய்ந்துகொண்டு.
அப்போதுதான் அந்த சஞ்சிகை தட்டுப்பட்டது. வெளிநாட்டு ஆங்கில சஞ்சிகை. அருமையான கட்டுரைகளிரண்டு அதிலிருந்தன. இந்து சமுத்திரமும் உலக சமாதானமும், மற்றது யு. எஃப். ஓ. என்கிற பறக்குந்தட்டுகள் பற்றியது.
தூரத்து மூலையொன்றின் தனிக் கதிரையாகப் பார்த்து நடந்தான். ஒன்றரைக்குள் படித்து முடியாவிட்டால் சிவசுந்தரத்திடம் சொல்லிவிட்டு வீட்டுக்கு எடுத்துப் போகவேண்டும்.
ஈழமுரசு - 1984 ரஜனி பிரசுரம் - 1985

Page 34
போக்கு
ட்டம் முடிந்து, நண்பர்களிடம் விடை பெற்றுக் கொண்டு வெளியே வந்த போது இருட்டத் தொடங்கியிருந்தது. இந்த நேரத்தில் பட்டணத்தைப் பார்த்து எவ்வளவு காலம்!
மோட்டபைக் என்றால் மிஞ்சிமிஞ்சிப் பத்து நிமிஷம் - வீட்டுக்குப் போய்விடலாம். அதைக் கூட வெளியே எடுத்து எவ்வளவு நாட்கள்! எதற்கென்று யோசிப்பது - இந்த சைக்கிள் தடியில் நாரிமுறிய உழக்கினாலும் அரை மணித்தியாலத்திற்கு மேலாகத்தான் ஆகும். அதுவும் இந்தத் தெருக்கிடங்குகளில் விழாமல் போகமுடிந்தால் வீட்டில் பயப்படப் போகிறார்கள்.
டைனமோவை அழுத்தி விட்டு ஏறினான். தான் பழங் காலத்து மனிதனாகிவிட்டது போல ஒரு கூச்சம் இப்போதும் எட்டிப் பார்க்கிறது. பெல் பிரேக், விளக்கு இதெல்லாவற்றுடனுந்தானா சைக்கிள் ஒட வேண்டும்? முடக்கில் திரும்புகையில், முந்திப் போகையில் மணியை
அடித்தால், பேயனைப் பார்ப்பது போல் பார்க்கிறார்கள்.
மில் சந்தியில் இடப்புறந்திரும்பினால் சுகமாகப் போகலாம். ஆனால், அது ஒரு வழிப்பாதை என்றிருந்தது. இன்னொருவனுக்குப் பயந்துதான் சரியாய் நடப்பேன் என்பது எனக்கு அவமானம்-நேரே போனான். ஒரு வழிப்பாதை, அது இது எல்லாம் யாருக்காக என்பதை எல்லோரும் மறந்து போனார்கள்.
முந்தியென்றால் இந்த நேரத்தில் இந்தத் தெரு எப்படியிருக்கும்காணிவல் மாதிரி. இப்போது கடைக்காரர்கள் மூடலாமா விடலாமா

என்று யோசித்துக் கொண்டுடிருக்கிறார்கள். இது கூடப் பரவாயில்லை. - பகலோடு அடங்கிய பட்டணத்துடன் பார்க்கும்போது, ஸெக்கன்ட்ஷோ பார்த்து விட்டுத் தெருவளந்த விடலைக்காலம். அப்புவோடு கடை கடையாய்ப் போய் வந்த சின்ன வயது, இலக்கியக் கூட்டம் என்று அது முடிந்ததும் அதன் பிறகு அதைப் பேசிக் கலைகிற மிகக் கிட்டிய இறந்த காலம் எல்லாம் நினைவில் வந்தன.
கண்களைக் குருடாக்கும் வெளிச்சமும் பயங்கர அலறலும் அதிலும் பயங்கர வேகமுமாய் ஒரு மினி பஸ் எதிரே வந்து திரும்புகிறது. யாருக்காக - எதற்காக இந்த ஒட்டம்? தெரு - பாதை - வழிஎன்பதே சமூக ஒழுங்கின் ஒரு அடிப்படை உதாரணம் என்று முன்னர் அடிக்கடி படும். இப்போது அது இன்னமும் வலுவாய்ப்படுகிறது. ஒழுங்கு- தெருநாகரிகம் - இதையெல்லாம் இப்போது யார் கவனிக்கிறார்கள்? எல்லாம் இயல்பான வழித் தடங்கள்தாமா? பாதை சரியாய்த்தானிருக்கிறதா?.
சடாரென்று சைக்கிள் குதித்தெழும்பியது. கைப்பிடி வழுகப் பார்த்தது. பிருஷ்டம் நொந்தது. கிடங்கு எங்கே கிடந்தது?
இந்த இடத்தில் தெருவிளக்குகள் கூட இல்லை. ஓவென்ற
முன்னால் இரண்டு சைக்கிள்கள், விலக்க வேணும். மணி அடித்தான். பாதித் தெருவுக்கு மேல் மறித்துக் கொண்டு போகிறார்கள் காதில் விழுந்திருக்குமா? கதை ருசி, கிட்டப் போய் இன்னொரு தரம், எதிரிலிருந்தும் ஏதோ வந்தது. இவர்களில் முட்டிவிடாமலிருக்க பிரேக் வேறு பிடிக்க வேண்டியிருந்தது. மூன்றாந் தரமும் அடித்துவிட்டு, ஆத்திரந் தாங்காமல் கேட்டான்.
'அண்ணை, பெல் அடிச்சாலும் விலத்திறீங்களில்லையே.
இரண்டு விநாடி மெளனம். இரண்டு பேரும் திரும்பிப் பார்த்த மாதிரி இருந்தது. பிறகு ஒருவன் கேட்டான்.
“பெல் அடிச்சா விலத்த வேணுமெண்டிருக்கா?”
அமிர்தகங்கை - தை 1986 இன்னொரு வெண் ணிரவுத் தொகுதி-1988

Page 35
எழுதப்பட்ட
அத்தியாயங்கள்
ரியாக எட்டேமுக்காலி. வழமையான நேரந்தான். பிந்தவில்லை.
அவதிப்படாமல் போகலாம் என்று திருப்தியாக இருந்தது.
படலையைத் திறந்து சைக்கிளைத் தள்ளியபடி வெளியே வந்தான். பள்ளிச் சந்தடிகள் ஓய்ந்து தெரு அமைதியாக இருந்தது. இளம் வெய்யிலும் காற்றுமாய் இந்தக் காலைப் பொழுது அழகாக இருந்தது. எல்லாக் காலைவேளைகளும் எல்லாக் குழந்தைகளையும் போல அழகானவைதாம் என நினைத்தான். நித்தியின் பாடல் நினைவுக்கு வந்தது.
படலையைச் சார்த்திக்கொழுவினான். சைக்கிள் சில்லுகளை அழுத்திக் காற்றுப் பார்த்துக் கொண்டு விரல்களை ஸிற்றுக்கடியிலிருந்த துணியில் துடைத்துக்கொண்டான். எதிர்முடக்கில் ஒரு சைக்கிள் வருவது தெரிந்தது. அது போகட்டும் என்று காத்து நின்றான். கிட்ட வந்ததும் தெரிந்தது. அது. செல்வநாயகம்.
நான்தான் முழுவியளம் போலை." சிரித்தபடி சொன்னார்.
VV
- - - - - - -நீ உதுகள் பார்க்காத ஆள்தானே."

அவனும் சிரித்தபடி பெடலைமிதித்தான்.
"சங்கதி தெரியுமே. அம்மன் கோவிலடியெல்லாம் பெடியள் ஆயத்தமா நிக்கிறாங்கள்."
"என்னது? இப்ப என்ன?.
“காலை எடுத்துவிட்டு நின்றான்.
ஆமி இறங்கப் போகுதெண்டு சனம் பெரிய அவதி" இது ஒரு புதுக்கதையாயிருந்தது.
"அப்பிடியிருக்காது.சமாதானப் பேச்செண்டு எங்கும் பெரிய அமளியாயிருக்கு இது வேறேதோ விஷயமாக்கும்."
Αν p a o fy
நம்பாட்டிப் போய்ப் பார். செல்வநாயகம் போய் விட்டார்.
அவருக்குப் பதில் சொன்னாலும் மனம் குழம்பி விட்டது. பிரச்சினை நடந்த நாட்களெல்லாம் நினைவுக்கு வந்தன. அப்படி ஏதும் நடந்தாலும். வீட்டை விட்டுப்போகக் கூடாது: என்ன செய்யலாம்?? போகிற வழிதானே. விசாரிக்கலாம் என்று பட்டது. யோசித்தபடி சைக்கிளை மிதித்தான்.
என்ன வாழ்க்கை இது என்றிருந்தது-ஒன்றுமே நிச்சயமில்லாமல் அடுத்த கணத்தில் இது தான் வாழ்க்கை என்றும் இருந்தது.
வாசிக சாலை தாண்டும் வரை ஒன்றும் வித்தியாசமாகத் தெரியவில்லை. மதவடிக்குக் கொஞ்சம் இப்பாலிருந்தே போராளிகள் நின்றார்கள். ஆயுதபாணிகளாய். சனநடமாட்டமும் அசாதாரணமாய்த் தெரிந்தது. என்னவாயிருக்கும்? எப்படி அறியலாம்? அம்மன் கோவிலடியில், தெருவில் பெரிய கும்பல் நின்றது. அதிலும் கோவில் முகப்பு வயல்களிலும் கூடப் போராளிகள்.எதையோ எதற்கோ - காத்து நிற்கிற மாதிரி.
கும்பலில் நின்றவர்கள் ஆளுக்கொன்று சொன்னார்கள். குழப்பம் கூடிவிட்டமாதிரி இருந்தது. ஆமி இறங்கப் போகிறதென்று சொல்லிக் கொண்டும், வேடிக்கை பார்க்க முடிகிறது அதிசயந்தான். இதில் நின்று வினைகெட முடியாது-நேரம் போய்க் கொண்டிருக்கிறது.

Page 36
ஒரு முடிவுக்கு வந்தவனாய்க் கோவிலின் பின்புறம் போனான். பிள்ளையாரடி மூலையில் இரண்டு பையன்கள் அவர்களருகில் போய்
மெல்லக் கேட்டான்
ஏதும் பிரச்சினையே தம்பி?.
அப்பிடியெல்லாம் ஒண்டுமில்லை. அண்ணை.
FF
“சனம் பயப்பிடுகுது போலை இருக்கே. "ஒண்டும் நடக்காது. பயப்பட வேண்டாமெண்டு சொல்லுங்கோ."
“என்ன சங்கதி?" ஒரு கணம் தயங்கினாற் போலிருந்தது.
பயப்பிடுகிறதுக்கோ பிரச்சினைக்கோ ஒண்டுமில்லை. நாங்கள் ஏதோ ரெஸ்ற் பண்ணப் போறம்." அந்தக் குரலில் தொனித்த ஆதரவு. அதை நம்பலாம்-பயப்படத் தேவையில்லை - என்றது. ஆனால் காரணத்தைத்தான் ஒப்புக் கொள்ள இயலவில்லை. என்றாலும் வற்புறுத்த முடியாது - கூடாது.
“சரி, தம்பி.மெத்தப் பெரிய உபகாரம்."
சைக்கிளைத் திருப்பிக்கொண்டு வந்தபோது தெருவடியில் நின்ற சனக்கூட்டம் அடர்த்தியிலும் கனத்திலும் அதிகரித்திருந்தது. இவனும் ஆட்கள் வந்தபடி இருந்தார்கள். கும்பலைக் கடப்பது கஷ்டமாக இருந்தது. மெல்ல மெல்ல விலகிக் கொண்டு போனான். எதிரே வரும் ஆட்களிலும் மோதாமல் தெருக்குழிகளிலும் விழுந்துவிடாமல் போவது வலுசிரமம்.
வீட்டில் போய் விஷயத்தைச் சொல்லி. பயப்படத் தேவையில்லை என்பதையும் சொல்லிவிட்டு வேலைக்குப் போகலாம். அரை மணித்தியாலம் பிந்திவிடும். பரவாயில்லை.
அரசடிச் சந்தியில் திரும்பிய போது எதிரே பெரிய வெள்ளைக் காரொன்று வந்தது. தெருக்கிடங்குகளைத் தவிர்த்துப் போகும் முயற்சியில் அதன் வேகம் குறைந்த போது பின் ஸற்றில் உட்கார்ந்திருந்தவர் பளிச்சென்று கண்ணிற் பட்டார். நிச்சயம் எங்கள் பத்திரிகைகளில் காட்சிதருபவர். சந்தேகமில்லை - தாடியும்

தலைப்பாகையும்-அவரே தான் விசேஷமாய் ஏதோ நடக்கத்தான் போகிறது. சைக்கிளை திருப்பிக் கொண்டு பின்னால் போனான்.
அவனைப் போலப் பலபேர் அவரைக் கண்டிருக்க வேண்டும். காரின் பின்னால் ஒரு கும்பலே ஒடத்தொடங்கியிருந்தது. கோவிலடிக்குப் போனபோது அது மிகவும் பெரிதாகி விட்டிருந்தது. ஆனால் முழுவதும் தொடர அனுமதிக்கப்படாமல் கும்பலிற் போனவர்கள் நிறுத்தப்பட்டார்கள். இன்னும் பின்னால் வந்து கொண்டிருந்த அவன் சைக்கிளை எதிர் வேலிக் கரையோரமாக விட்டுவிட்டு, உயர்ந்த ஒரு இடமாக நின்று
பார்த்தான்.
கார் கோவிலடியில் திரும்பி. வேப்பமரத்தின் கீழ் போய் நின்றது. பட பட படவென்று சிலர் இறங்கினார்கள். அவனுக்கு அடையாளந் தெரிந்த இன்னொருவர். முன்னையவரின் சகா - ஸஃபாரி ஸட்காரர்.
இருவரும் விறு விறென்று தேர்முட்டிப் பக்கமாக நடந்தார்கள். இடையில் என்ன நினைத்தார்களோ -யாராவது சொன்னார்களோ - சட்டென்று திரும்பிக் கோவில் வாசலடிக்குப் போய் படியைத் தொட்டுக் கும்பிட்டார்கள். மீண்டும் திரும்பி அதே நடையுடன் கிழக்கே போனார்கள். - கோவில் வாசலுக் கெதிரேயிருந்த வயலை நோக்கி
2
பள்ளிக் கூட விளையாட்டிடத்தை மிதித்து எத்தனை வருடங்களாகிவிட்டன? ஐந்தாம் வகுப்புவரை இந்தப் பள்ளியில் படித்த அந்தப் பிஞ்சுக் காலத்தில் தினசரி வந்து போன இடம்.எத்தனை விளையாட்டு, எத்தனை கும்மாளம் போட்ட இடம் கல்லால் மாங்காய்க்கு எறியப்போய். கனகநாதனின் மண்டையை உடைத்த இடம். வலது பக்கம் கொய்யாப் பற்றை, காண்டைகள எதிர் மூலை பாண கிணற்றடியில் நெல்லிமரம். இந்த விளையாட்டிடமே மாந்தோப்பு. வேறென்ன வேண்டியிருந்தது அப்போது?
ஆனால் விளையாடச் சொல்லி நிற்பார்கள், வாத்திமார் வேர்க்கவேணும். உடம்பிலுள்ள அழுக்கு நீரெல்லாம் வெளியே வரவேணும். சட்டை நனைய வேணும், வாத்திமார் விட மாட்டார்கள். இந்தக் கொய்யாவும் காண்டையும், மாங்காயும் கவர்ந்த வேளை,

Page 37
வாத்திமாரும் பாணி கிணற்றின் பாம்புகளும் வெருட்டி வைத்த
இது விளையாட்டிடமாக இல்லாமலாகியும் பல காலமிருக்கும். இப்போது புதுக்கட்டிடத்தோடு விசாலமான மைதானம் இருக்கிறது.
மாந்தோப்பு மாறாமலே இருக்கிறது. வடக்கிலும் மேற்கிலும் வயல்வெளிகள் வருஷத்திலும் ஒருதடவை - அதுவும் சிலவேளைநெல்லும், மீதி நாட்களில் கிடைச்சியும் விளைகிற வயல்கள். கிழக்கில் பனங்கூடல். தெற்கே ட' வடிவில் குச்சொழுங்கை, தெருவிலிருந்தும் பள்ளியிலிருந்தும் வருவதற்கான பாதை. எல்லாம் அப்படியேதானிருந்தன. ஆனால் இடம் மட்டும் சின்னதாகிவிட்ட மாதிரி.
சைக்கிளை நிறுத்திப் பூட்டிவிட்டு மெல்ல இடதுபக்கம் நடந்தான். சருகுகள் காலடியில் சரசரத்தன. நிழல் குளிர்மையாக இருந்தது தோப்பு முடிந்து வயல்வரம்பு தொடங்குகிற இடத்தில் கரை அடித்தது போல நிழல் நீளவிழுந்திருந்தது. நேரே முன்னால் மேற்கே-வயல்களைத் தாண்டிகூப்பிடு தொலைவில் கோவில், இளம்பகல் வெளிச்சத்தில் கோபுரம் பளிச்சென்றிருந்தது.
கோயில்முகப்பு, மருதமரத்தடி, மேட்டொழுங்கை எல்லாம் வரிசை கட்டினாற் போல சனங்கள். இங்கே, இவன் நிற்கிற இந்த தோப்பருகில் ஐந்தாறு பேர்மட்டுமே இங்கிருந்து பார்க்கிறயோசனை எதிர் வெய்யிலையும் சனநெருக்கத்தையும் தவிர்த்து. வசதியாகப் பார்க்கிற யோசனை பலருக்கு வராமலே போயிருக்கலாம். பக்கவாட்டுச்சிந்தனை பற்றாக்குறையான ஒரு பொருள்தான்.
இந்த இடத்திற்கும் கோவில் முகப்பிற்கும் சரி நடுவில், குளங்களிரண்டிற்குமிடையில் அந்தக் கறுப்பும் வெள்ளையுமான துணிக் குழாய் காற்றிலாடுகிற இடந்தான். போராளிகளின் தலைவரை அழைத்துப் போக வருகிற ஹெலி இறங்கப் போகிற இடமாயிருக்கவேண்டும்.
முந்தி எங்கள் ஒட்டப்பந்தயம் நடக்கிற மைதானம், இன்றைக்கு விமானத்தளமாகி விட்டிருக்கிறது. அதுவும் இன்ரநஷனல். இந்தக் குறும்புத்தனமான எண்ணத்தால் கிருஷ்ணன் தன்னையறியாமலே
முறுவலித்தான்.

மாந்தோப்பில் கெந்தியடிக்கலாம். ட்றில் செய்யலாம். தாச்சி விளையாடலாமி. ஆனால் ஒட்டப்பந்தயம் வைக்கமுடியாது. அது வயலில்தானி. நேரே மருத மரத்தடிக்கு ஓடவேண்டும். ஒடி நிலத்தோடு அரைந்து கொண்டு கிடக்கிற மரங்குழைகளில் இரண்டு இலை பிடுங்கிக் கொண்டு வரவேண்டும்- அதுதான் பந்தயம்.
பள்ளியிலிருந்து கோவிலுக்குப் போவதும் இந்தவழிதான். மூன்றாம் நாலாம் வகுப்புப் படிக்கிற நாட்களில் ஒவ்வொரு வெள்ளியும் முதல் பாடம் கோவிலுக்குப் போவதாயிருந்தது. அந்த உசாரில் காலை வெய்யிலும் கிடைச்சிக்கட்டையும் குத்துகிறது கூடத் தோற்றாது. வரிசையாகப் போகவேண்டும். கொஞ்சம் குழம்பினாலும் வாத்தியாரின் பூவரசங்கம்பு எங்கிருந்தென்றில்லாம் வந்து முதுகில் சுள்ளென்று பாயும். கோவில் அயலில் - இரண்டு குளங்களோடு - ஒரு கேணியும் இதனால் கண்காணிப்பும் கண்டிப்பும் கொஞ்சம் அதிகமாகவே இருக்கும்.
இங்கிருந்து போகும் போது வயல்வெளி ஒருகடல்போலும், கோவில் ஒருதீவு போலும் படும். உண்மையில் மாரி வந்தால் அப்படித்தான். ஊர்வெள்ளமெல்லாம் கோவிலடியில் சேரும். வெள்ளமென்றால் லேசல்ல.
சில இடங்களில் ஆளுயரம்.
கோவில் மேடையும் வலுபெரிது. நல்ல உயரம். ஆளுயர வித்தியாசம், அதற்கும் நிலத்திற்கும். அந்த நாட்களில் இரண்டு பக்கத்திலும் நீளத்திற்கு கம்பிக்கிராதி. மேடை நீளத்திற்கு இருபுறமும் செவ்வரளி பூத்திருக்கும். கிராதிக்கும் மேடை விளிம்பிற்குமிடையில் ஒட்டி ஒட்டிப்போக - ஒற்றைக்கால் வைக்க இடமிருக்கும். இந்த விளிம்பில் துணிந்து நடந்து அந்த நெடு மேடையை வெளிப்புறமாகவே கடந்து விடுபவன் அவர்களிடையே வீரனாக இருந்தான்.
வரிசை நேரே கிணற்றடிக்குப் போகும். வாத்தியாரோ அல்லது பெரிய பையன்களோ அள்ளி ஊற்றுகிற நீரில் ஒவ்வொருவராகக் கால் கழுவிக்கொண்டு. உள்ளே போய் சுற்றி வந்து. முன்னாலிருந்து சில தேவாரங்கள் பாடி பிறைக்குள்ளிருக்கிற திருநீற்றையும், கல்லில் கட்டையால் உரைக்கிற சந்தனத்தையும் பூசி. இவ்வளவும் செய்ய வேண்டும். செய்து விட்டு, வாத்தியார் கும்பிட்டு விட்டு வருகிறதுக் கிடையில் விளிம்பில் நடக்கலாம். அரளிப் பூ ஆயலாம்.

Page 38
கோவிலில் அநேகமாக அவர்கள் பாடுகிற தேவாரம் மாதர்ப்பிறைக்கண்ணியானை’ ஆக இருந்தது. கிருஷ்ணனுக்கு இன்றைக்கும்- இந்த முப்பது முப்பத்தைந்து வருஷத்திற்குப் பிறகும்அம்மன் கோவிலை நினைத்தவுடன் மனதில் வருகிற தேவாரமாக இது இருக்கிறது.
அப்படியான காலங்களில் ஒருநாள்தான் கொத்தலாவலை வந்தது. பிரதம மந்திரி வருகிறார் என்று சொல்லி, ஒரு கிழமையாகப் பள்ளியெல்லாம் ஒரே அமளியாக இருந்தது. பிறகு ஒரு நாள் காலையில், வெள்ளைக் காற்சட்டையும் சேட்டும் போட்டு, வேளைக்கே வெளிக்கிட்டு-அன்றைக்கு மப்பும் மந்தாரமுமாக இருந்தது. என்றொரு ஞாபகம்- பள்ளிக்குப்போய் அங்கிருந்து வரிசையாகக் கோவிலுக்குப் போய். முதல் வாத்தியார் சொன்னபடி கோவில் வாசலிலிருந்து இரண்டு புறமும் வரிசையாக அணிவகுத்து நிற்க, அந்த வரிசை மண்டபத்தையும் தாண்டி முன் வீதியிலிறங்கி வலது பக்கம் திரும்பி நெடுகப் போனது. கைகளில் முதல் நாளே தயாரித்துவைத்த வெற்றிக் கொடி ரிஸ்யூப் பேப்பரை வெட்டி ஈர்க்கிலில் ஒட்டிய இரட்டைக் கூர்க்கொடி.
கொஞ்சப் பேர் கோவிலுக்குள்ளிருந்து வெளி வந்து மெல்ல இந்த வரிசைக்கு நடுவால் போனது மட்டும் நினைவிருக்கிறது! அதில் யார் கொத்தலாவலை என்று தெரியாதிருந்தது. அவரும் வெளிக்கிட்டு மழையும் விட்டவுடன் பள்ளிக்குப் போனார்கள். அன்றுபள்ளி அவ்வளவுதான். பொது அறிவுப்பாடப் புத்தகத்தில் படித்த பிரதம மந்திரி கொழும்பிலிருந்து இலங்கையை ஆள்கிற பெரிய மனிதர்-தங்கள் ஊருக்கு வரவும். தாங்கள் அவரைப் பார்க்கவும் நேர்ந்த மகிழ்ச்சியிலும் அன்று வேளைக்குப் பள்ளி முடிந்த மகிழ்ச்சி பெரிதாயிருந்ததும் நினைவு.
பிரதமர் இன்னொன்றும் செய்தார் என்று பிறகு சொன்னார்கள். கோவிலடி வெள்ளம் ஒடுவதற்காக வெட்டப்பட்ட பெரியவெள்ள வாய்க்காலைத் திறந்து வைத்தாராம். இன்றைக்கும் அந்த வாய்க்கால் பகடி வெற்றியாகக் கொத்தலாவலை நைலஅல்லது கொத்தலாவலை நதி’ என நாமங்கொண்டுள்ளது. இந்த நதி மூலம், கோவில் வயலுக்குள் சேர்கிற வெள்ளந்தான் - நதி மருதடிப்பிள்ளையார் கோவில் வரை ஓடி வழுக்கையாற்றுடன் சேர, வழுக்கையாறு கல்லுண்டாயில் கடலுடன
சங்கமிக்கிறது.

3
ஐம்பத்தேழோடு பள்ளி மாற நேர்ந்தபின் இந்த வாராந்தக் கோவில் விஜயம் நிற்க நேர்ந்தது என்றாலும், மானிப்பாய்க்குப் போகத்தொடங்கிய பின்னும் அம்மன் கோவிலடியைத் தினசரி இரண்டு தரம் தாண்டுவது தவிர்க்க முடியாததுதான். இது ஒரு வருஷம்.
பிறது வந்த பின்னேரங்கள் அம்மன் கோவிலடி வெளியில் கால்பந்தை நினைவு படுத்துவனவாக அமைந்தன. கிருஷ்ணன் நல்லதொரு கோல் காப்பாளனாக இருந்தான். பள்ளியால் வந்து புத்தகத்தை வைத்துவிட்டு, தேத்தண்ணி குடித்தது பாதி, குடியாதது பாதியாக ஒடுகிற பின்னேரங்கள்.
ஜேக்கேயின் நட்புக்கிட்டியதும் இந்த நாட்களில் தான். கொழும்பு இந்துக் கல்லுரியில் ஏழாம் வகுப்புப் படித்துக் கொண்டிருந்துவிட்டு. ஐம்பத்தெட்டாம் ஆண்டில் தாய் தகப்பன் சகோதரங்களுடன் ஊரோடு வந்துவிட்ட ஜேக்கே அங்கிருந்து கொண்டுவர முடிந்தவற்றில் ஒன்று இந்தக் கால் பந்து அபிமானம்.
கால்பந்தை மிஞ்சியும் வேறு பல விஷயங்கள் ஜேக்கேயை கிருஷ்ணனுடன் இணைத்தன என்று படுகின்றது. விளையாட்டிற்கு மற்றவர்கள் வரப்பிந்திய சமயங்களில் அல்லது வேறெப்படியோ பேசக் கிடைக்கிற போதுகளில் கோயில் மண்டபத்தில் உட்கார்ந்து அலச இருவருக்குமே நிறைய விஷயங்களிருந்திருக்கின்றன."உங்கட கோல். பேஸ் இந்த வெளிக்குக் கிட்ட நிக்குமா?." என்று ஆயிரந்தடவை கேட்டிருப்பான் கிருஷ்ணன்.
வருஷத்திற்கொரு தடவை பள்ளி விடுமுறைக்கு மாமா வீட்டில் போய் நின்று பார்க்கிற மிருகக் காட்சிச்சாலை, மியூசியம், கோல்பேஸ், இரட்டைத்தட்டு பஸ்கள்,ஐஸ்கிறீம் வண்ணமீன்கள் இவற்றிற்கெல்லாம் அப்பாற்பட்ட ஒரு கொழும்பை ஜேக்கே இந்த மண்டபத்தில் கிருஷ்ணனுக்குக் காட்டியிருக்கிறான். கலவரம்பயம்.அகதிமுகாம், கப்பல் பயணம் என்று இது வேறொரு கொழும்பாக இருந்தது.
ஜேக்கே சொல்கிற கதைகளைக் கேட்கும்போது கிருஷ்ணனுக்கு மேலெல்லாம் விறுவிறுக்கும். இப்படியா? இப்படியும் மனிதர்கள் செய்வார்களா? நம்ப முடியாமலிருக்கும்.

Page 39
இதுகளுக்கெல்லாம் என்னென்ன செய்யலாம் என்று அதோ தெரிகிற அந்த மண்டபத்திலிருந்து இருவரும் எத்தனை திட்டங்கள் போட்டிருப்பார்கள்.சேர,சோழ,பாண்டியர்கள் எவ்வளவு வீரர்களாகத் திகழ்ந்தார்கள்? நாங்கள் ஏன் இப்படி இருக்கிறோம்? இருக்கக்கூடாது.
அவர்கள் பார்த்த படங்கள் படித்த கதைகள் எல்லாவற்றிலும் என்னென்ன நடக்கிறது. அப்படிச் செய்ய ஏன் துணிவு போதாது? சனம் பயப்படக்கூடாது.
இன்றைக்கு நினைத்தால் சிரிப்பு வருகிற, மெய் சிலிர்க்கிற, பயப்படுகிற எத்தனை திட்டங்கள் அன்று அந்த இரண்டு இளம் மூளைகளுக்குள்ளிருந்தும் உருக்கொண்டன!
தங்களுக்குப் பின்னால் வந்த தலைமுறை, நம்பமுடியாத அந்தக் கனவுகளையெல்லாம் நனவாக்க முயன்றதைக் காணும் சாட்சியாய்யாவது தானிருக்க முடிந்திருக்கிறது. ஆனால் ஜேக்கே? அதன் பின் அடித்த சூறாவளிகளில் அள்ளுணர்டு எந்தத் தேச அகதியாய் எங்கு போயிருக்கிறானோ?
4.
"எத்தனை மணிக்கு வருகுதாம்?."-சற்றுத்தள்ளி நின்ற வீரவாகு இவனைக் கேட்டார்.
"சரியாத் தெரியேல்லை. அண்ணை."
"பன்னிரண்டு மணிக்குள்ளை வந்திடும் எண் டு ஆரோ சொல்லிச்சினம்.
"பன்னிரண்டோ?."-இருவரும் கேட்டார்கள்.
".அவ்வளவுக்கு ஆகாது எதுக்கும் இன்னொரு அரைமணித்தியாலம் பாப்பம்."என்றபடி கிருஷ்ணன் கடிகாரத்தைப் பார்த்தான். ஒன்பது இருபத்தாறு.
"எண்டாலும் இது எங்களுக்குப் பெரிய வெற்றிதான். இல்லையே?"--வீரவாகு கேட்டார்.

G6 g
எது?
"இந்தியா எங்கட போராட்டத்தை அங்கீகரிச்சு இவ்வளவும் செய்யிறது."
"இனித்தான் தெரியும்.”
"இதுதான் நடக்குதெண்டு நம்பேலாம இருக்கு."-அவர்
புளகாங்கிதத்துடன் கூறினார்.
"எனக்கு அண்டைக்கே தெரியும்."-புதிய மனிதர் இடையிட்டுச் சொன்னார்.
என்ன? என்பது போல அவரைப் பார்த்தான் கிருஷ்ணன்
"மன்னிக்க வேணும்."-வீரவாகு அன்பாகக் கேட்டார்:
"எனக்கு உங்களைத் தெரியேல்லை?"
"நாங்கள் தெல்லிப்பளை." புதியவர் சொன்னார்:
".பிரச்சினை வந்ததோட அங்க இருக்கேலாம வந்து இங்கதான் றோட்டடியிலை வீடு எடுத்திருக்கிறம்."
"ஆஆ.." என்று வீரவாகு கேட்டார்:
"என்னவோ சொன்ன நீங்கள்?."
ஒ1எனக்கு, இது அணிடைக்கு மானிப்பாயாலை போன
ஊர்வலத்தைப் பாத்த உடனையே தெரியும்.”
"எதைச் சொல்லுறியள்? உதவிப்பொருள்."
ஒ1உதவிப் பொருளோட வந்த முக்கியமான ஆக்கள்.
பாக்கேல்லையே. நீங்கள்?."
"பின்னை? மத்தியானம் ஒரு மணியிலையிருந்து நிண்டுஇரவு எட்டு எட்டரைக்குத் தானே வந்தினம்."-என்று வீரவாகு சொன்னார்.
".இண்டைக்கும் நீங்கள் சொன்ன மாதிரி அப்படித்தானாகுமோ தெரியேல்லை."

Page 40
எதுக்கும் நான் ஒருக்கால் வீட்டை போட்டு ஓடிவந்திடுறன்."-வீரபாகு எட்டி நடந்தார்.
"ஒமோம். இதுகள் சரித்திர சம்பவங்கள். தவறவிடக்கூடாது" என்றபடி புதியவரும் திருப்பினார்.
"இவர்களுடைய எதிர்பார்ப்புக்கள். நம்பிக்கைகள்!" கிருஷ்ணனுக்குக் கால் உளைந்தது. மெல்ல நடந்து ஒரு மாவடியில் போய் நின்று பார்த்தான். வசதியாக்கிடந்த கல்லைத் தள்ளிவிட்டுக் குந்தினான்.எவ்வளவு அழகாக இருக்கிறது இந்த இடம்? எங்களுரில் இவ்வளவு கிட்ட இருந்தும் எத்தனை தரம் இங்கே வர முடிந்திருக்கிறது? இந்த நிழலில் ஒரு துண்டை விரித்துப் படுத்துக் கொள்ள முடிந்தால்.
கிருஷ்ணனுக்குப் பாரதியும் உமர் கய்யாமும் நினைவுக்கு வந்தார்கள்.
ஒரு கலைஞனுக்கும் ரசிகர்களுக்குமிடையேயுள்ள அடையாள பேதம் வலு மெல்லியதென்று படுகிறது கிருஷ்ணன் கூட.ஏ.எல்.படித்துக்கொண்டிருந்த காலங்களில் எழுத ஆரம்பித்தான். அவனை எழுத்தையும் இயற்கையையும் உபாசிக்க வைத்ததில் இந்த இடத்திற்குப் பெரும் பங்கு உண்டென்று தான் தெரிகிறது.
அவன் எழுதிய முதல் கதையிலேயே இந்த வயல்வெளி வந்திருக்கிறது. பிறகும் பலவற்றில் இந்த இடங்கள். அவன் கதையொன்றில் வருகிற ஒரு பாத்திரம் ஓரிடத்தில் இவ்வாறு கேட்கிறது:
"..எங்கட இந்த இடம்மாதிரி வேறை ஒண்டுமே இல்லையடாப்பா. இந்தாபார், இந்தளவு உயரமான தேர்முட்டிசுத்திவர வயல்வெளி, இந்த மகிழமரம்.ஐயர் வீட்டுரேடியோவிலை தூரத்திலை கேட்கிற பாட்டு. இந்தக் காத்து இதெல்லாம் வேறை எங்கை இருக்கு?"
இன்னொரு கதையில் இப்படி எழுதினான்.அம்மன் கோவில் தேர்முட்டி அப்போதைய வாழ்வின் மையமாக இருந்தது. நண்பர்களின் சந்திப்பிடம், கனவுகளை, வாழ்க்கையை எல்லாம் அவர்கள் பகிர்ந்துகொண்ட இடம். உலக ஞானத்தை வளர்த்த வித்தியாசாலை. தேர்முட்டிக்கு அப்போது கூரை இல்லாதிருந்தது. படிப்படியாக ஏறி,

பன்னிரண்டு பதின்மூன்றடி உயரத்திற்கு வயல் சூழ்ந்த வெளியில் வானத்தை நோக்கியபடி அந்த இடத்தை ஆளும் அரசு கட்டிலாக அது திகழ்ந்தது. மாலைப் பூசை முடிந்த கையுடன் உச்சிக்கு ஏறினால், வெய்யில் தாழ்ந்து செவ்வானம் பூத்து-பிறகு அதுவும் அந்திக்கருக்கலிற் கரைந்து விடுகிற மட்டும். அர்த்தசாமப் பூசை மணி கேட்கும் வரை பொழுது போவதே தெரியாமலிருக்கும்.தேர்முட்டிக்கு நேர் முன்னால் மகிழமரம் நிற்கிறது. சோழகம் தொடங்குகிற போது மகிழ் பூக்கும் பெளர்ணமியன்றைக்கு மகிழின் உச்சிக்கும் அப்பால். வயல்வெளிகனைத் தாண்டி துாரத்தில் திரைகட்டி நிற்கிற பனைகளுக்கு மேலே தொடுவானத்தில் அந்த முழு வெண்ணெயப் பந்து காலித்து எழுகிற நேரம் உன்னதமானது. கட்டு பெத்த வாழ்வுடன் இந்த விடலைத் தனத்திற்கு விடை தர நேர்ந்தது.
கட்டுபெத்தை அறுபத்தொன்பதில் கட்டுபெத்தையில் படித்துக் கொண்டிருந்த போதுபொழில்' என்றொரு மாத சஞ்சிகையை கிருஷ்ணனும் அவன் நண்பர்களும் கொஞ்சக் காலம் வெளியிட்டார்கள். ஐந்தோ, ஆறோ இதழ்கள் வந்தன. இலக்கியம் விஞ்ஞானம். புதிய அரசியற் சிந்தனைகள்.அந்த வயதிற்கேற்ற வீறு.
"இண்டைக்கு போஸ்ரர் ஒட்டப்போவம்."-அமரபால சொன்னான். பேர்தான் அப்படி - ஆள்.தமிழன்கொக்குவில், "ஆரார்?"
"பொழில்” இலக்கிய வட்ட உறுப்பிளர்கள் பெயர்கள் எல்லாமே சொன்னான் அவன்.
"விளம்பரம் இல்லாமல் சரிவராது தான்."
"கொழும்பு முழுதும் வெள்ளவத்தையிலிருந்து கொட்டாஞ்சேனை
வரை ஒட்டவேணும்."
இரவு பதினொருமணிக்குப் பசைவாளியும் போஸ்ரர் கட்டுமாய்ப் புறப்பட்டார்கள். நாலு சைக்கிள். ஆறு பேர் காலிவீதி அசாதாரண

Page 41
அமைதிக் கோலம் காட்டியது. ஊர் ஒழுங்கைகளில் ஒடுவது போல ஒட முடிந்தது.
"இப்ப பொழில் நோட்டீஸ் ஒட்டிப் பழகினால் தான் பிறகு
தேவையானதெல்லாம் ஒட்டலாம்."தர்மராஜா சொன்னான்.
"நோட்டீஸ் ஒட்டுறதோட சரியோ. தருமா?.
"பாரன், நான் யூகேக்குப்போட்டு வரேக்குள்ளை என்ன கொண்டு வாறனெண்டு.”
"வெள்ளைக் காறியோ?" ராஜேஸ்வரன் கேட்டான்.
"மடையா.ஒரு பிறிண்டிங்மெஷின் அல்லது ஜீப் இரண்டிலை ஒண்டில்லாம ஐயா வரார்.”
"அப்ப, ஐயா வரார்." ராஜேஸ் தொடர்ந்த சிரிப்புகள் ஒயுமுன்னே சத்திவேல் கத்தினான்.
"பொலிஸ் கலைக்குது.ஓடு ஒடு.” திடுக்கிட்டுத் திரும்பினார்கள்.
"...அங் கையில்லையடா ஏதோ பணி னிப் போட்டு வாறமாம்.கலைக்கிறான் ஒடு, பாப்பம்." காலி வீதியைக் கிழித்துக் கொண்டு பறந்தன நாலு சைக்கிள்கள்.
6
ஒரு மாலை வகுப்புக்கள் முடிந்து அறைக்குப் போய் உடைமாற்றிவந்து பட் மின் ரனுக்காகவோ அல்லது நாடக ஒத்திகைக்காகவோ-எதுவென்று சரியாக நினைவில்லை- கூடியிருந்த வேளையில் கன்ரீனில் இது நடந்தது. கதைகள் கட்டுரைகளில் வர்ணிக்கப்படுகின்ற மாதிரி மஞ்சள் வெயில் பொன்னொளி பரப்பியிருந்தது.வெக்கை அடங்கிய குளிர்மையான காற்று. புதிதாக எழுப்பிக் கொண்டிருந்த கட்டிடத்தின் வேலைத்தல இயந்திரங்களின் கடமுடாக்கள் கூட ஓய்ந்து இதமான அமைதி. கன்ரீனின் மூன்று புறமும் புற்றரைகளை நோக்கிய விறாந்தைகள். பதிவான கூரைகளும், அதைத் தாங்கும் தூண்களுமாய் ரம்யமான மண்டபங்கள். தேநீரும் கையுமாய் எல்லோரும் வந்து ஒரு மேசையைச்சூழ இருந்து பேசிக் கொண்டிருந்த

போது தான் அது நடந்தது. இந்தக் கும்பலில் எட்டுப்பத்துப்பேர் இருந்தார்கள். கிருஷ்ணன்.சிவராஜ சிங்கம், விநாயகம், கீர்த்தி, ரஞ்சித், காமினி விமல், மதநுவரநாணா இன்னும் பூட்டானியும் இருந்தான். அவன் இந்த எவரையுமே சாராத ஒரு வடஇந்திய சமூகத்தினன். இந்த நிகழ்ச்சியில் சம்பந்தப்படாதவன் -கூட இருந்தான். என்பதைத் தவிர என்றாலும் இந்த நிகழ்வுடன் பூட்டானி நினைவுக்கு வருவது தவிர்க்க முடியாததாகி இருக்கிறது. கண்ணாடிக்குள்ளால் தெரியும் பெரிய விழிகளும், பருப் பொலிந்த முகமும், இங்லீஷ் நிறைந்த- சிகரட்டால் கறுத்த சிவந்த உதடுகளும் கொண்ட கட்டையான ஆள்.
இவர்கள் கதைகள் எங்கும் ஒடிபிறகு அரசியலில் நிலைத்த போது வழமைபோல ஸ்போர்ட்டிவாக அதையும் பேசிக்கொண்டார்கள். மாணவர் பேரவை இயங்கிக்கொண்டிருந்த காலம். கட்டுபெத்தைக்கும் பேராதனை பொறியியல் பீடத்துக்கும் ஒரு புரிந்துணர்வு ஏற்பட்டிருந்ததாய்மொழி வழிக்கல்வியாளருக்கு முன்பே புதிய மாக்ஸிய சிந்தனைகள்-சின்னச் சின்னக் கலந்துரையாடல்களும் கருத்தரங்குகளுமாய் - உருக்கொள்ள முனைந்த விடியற்காலம். கனவுகளும் திட்டங்களும் கருக்கொள்ள
முயன்றகாலம்.
இந்தப் பேச்சின்போது சிவராஜசிங்கம் தன்னை ஒரு தீர்க்கதரிசி என்று நிரூபித்தான். இந்த அரசியல்-ஸ்போர்ட்டி-பேச்சினிடை தான் அவன் அதைக் குறிப்பிட்டான்.என்ன தொடர்பில் எதற்குப் பதிலாக அவன் அதைச் சொன்னானென்னு நினைவில்லையெனினும் அவன் வார்த்தைகளும் அதைச்சொன்ன போது அவன் முகத்தில் பூத்த அந்த வழக்கமான புன்சிரிப்பும் நன்றாக மனதில் பதிந்திருக்கின்றன.
பாதி முடிந்த தன் சிகரட்டை காமினியிடம் நீட்டியவாறே அவன் சொன்னான்: "மச்சான்.விஷயங்கள் இதேகதியில் போனால் நாங்களும் நீங்களும் ஆளுக்காள் எதிரெதிராகத்துவக்குத் தூக்கக் கனநாளாகாது. எல்லோரும் சிரிக்கத்தான் செய்தார்களெனினும் சிவாவின் கூற்றின் கனத்தை
உணராமலில்லை.
இதன் பிறது, தோளிற் கை போட்டுக் கொணர் டு அந்த பட்மின்ரனுக்கோ ஒத்திகைக்கோ போனார்கள்.

Page 42
7 தொப்பென்று முன்னால் ஏதோ விழுந்தது. கிருஷ்ணன் திடுக்கிட்டு நிமிர்ந்தான். ஒரு மாங்கொட்டை பறவைகளும் அணில்களும் அறக்கோதி மீந்த கொட்டை
பின்னால் யாரோ பேசிக் கொண்டு வரும் சத்தம் கேட்டுத் திரும்பிப் பார்த்தான். அந்தப் புதிய மனிதர்-தெல்லிப்பளையிலிருந்து வந்தவர். பொன்னுத்துரையோடு பேசிக் கொண்டிருக்கிறார் போலிருக்கிறது.
- - - - - - - - - - - - - சேர் பொன். ராமநாதன்ரை தகப்பன் பொன்னம்பலம் கேள்விப்பட்டிருப்பியள். மானிப்பாய்தான். அவருக்குத் தர்மவானெண்டு பேர். பெரிய மனுசன். அநாதியாயிருந்து வந்த கோயிலை அவர் தான் முதலிலை கட்டுவிச்சார் எண்டு சரித்திரம். அது. கிட்டத்தட்ட இருநூறு வருஷத்துக்கு முந்தி அதுக்கு ஒரு ஐம்பது வருசத்துக்குப் பிறகு த்ான் கல்லாலை கட்டினவையாம். அதிலையிருந்து அம்மாளாச்சி ஒவ்வொண்டாப் பாத்துத் தேடிக் கொண்டா. கோயில் பெரிசா வந்ததுமண்டபங்கள். கேணி, கிணறு. கொட்டகை எண்டு யாழ்ப்பாணத்திலை மாவிட்டபுரம், நல்லூர், அதுகளுக்குப் பிறகு முதலிலை பெரியகோபுரம் கட்டினது, அம்மாளுக்குத் தானெணி டு நினைக் கிறன் - அறுபதிலையாயிருக்க வேணும்."
கிருஷ்ணனுக்கு ”சந்தம்" பத்திரிகையில் கணேசரத்தினம் எழுதிய கோபுரம் கதை நினைவுக்கு வந்தது. கணேசு தூரத்து உறவினர். இடதுசாரி, கிருஷ்ணனுக்கு இலக்கியத்திலிருந்த ஆர்வத்தையும் ஆற்றலையும் தூண்டி விட்டவர். இந்தக் கோபுரத்தை வைத்துத் தான் அந்தக் கதையை எழுதியதாக அவர் சொன்ன ஞாபகம்.
அறுபதுகளின் நடுப் பகுதியில் கோவில் வீதியில் ஒரு மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. தேர்தல் கூட்டம். அப்போது தமிழ்ப் பகுதிகளில் அரசு செலுத்திக் கொண்டிருந்த ஒரு கட்சியின் கூட்டம். கிருஷ்ணனும் ஜெயநாதனும் போயிருந்தார்கள். ஜெயநாதன் நெருங்கின கூட்டாளி, கிருஷ்ணனின் வகுப்பில் படித்துக்கொண்டிருந்தவன். கூட்டத்தில் கணேசைச் சந்திக்க நேரிட்டது. அப்போது அவர் பல்கலைக் கழக விடுமுறைக்கு ஊருக்கு வந்திருந்தார்.
பேச்சாளர்களின் பேச்சுக்களுடன் ஒத்துக் போகாத இடங்களிலெல்லாம் இவர்கள் கைதட்டப் போக, சனம் திரும்பிப் பார்க்க,

இந்த ஒத்துப்போகாத் தன்மை அடிக்கடி தலைகாட்ட.
யாரோ முதுகில் தட்டினார்கள், சப்இன்ஸ்பெக்டர் சுப்பையா, டியூட்டியில் வந்திருக்கவேண்டும். முரட்டுத்தனத்திற்குப் பேர்போன ஆள் மூவரையும் தனியே அழைத்துப் போய் அந்தாள் சொன்னது இதுதான். "உந்தச் சேட்டை எல்லாம் இங்கை வாயாது. நீங்கள் மூண்டு பேரும் கூட்டத்தைக் குழப்ப வந்திருக்கிறியள். உங்களை ஒண்டா இருக்க விட்டாத்தான் பிழை. நீ அந்தப் பக்கம் போ. நீ கோவிலடிக்குப் போ. நீ றோட்டடிக்குப் போ. இனி உங்களை ஒண்டாக் கண்டனோ..?"
Άν s O # s «b
எங்கடை கோயிலுக்குப் பாருங்கோ, வராத வித்துவனில்லை. பொன்னுத்துரையர் சொல்லிக்கொண்டிருந்தார்.
ராஜரத்தினம் பிள்ளையென்ன. டி. கே. சி நடராஜன் என்ன தட்சணாமூர்த்தி யென்ன. காருக்குறிச்சி, செளந்தரராஜன் கூடவந்திருக்க வேணும். சரியா நினைவில்லை. சனங்களின் கவனம் இப்போது இந்த இடத்திற்கும் திரும்பியிருக்க வேண்டும். ஒருவர் இருவராக ஒழுங்கையால் வந்து கொண்டிருந்தார்கள். இந்த மாதிரி வர முதல் இந்த இடமும் நிரம்பிவிடும் என்றுபட்டது கிருஷ்ணனுக்கு.
8
சிவராஜசிங்கத்தின் பேச்சு சரியாகப் பதின்மூன்று வருசங்களின் பின் தன்னை நிரூபித்துக்கொண்டது.
கிருஷ்ணன் யாழ்ப்பாணத்திற்கு மாற்றலாகி வந்து ஒரு வருசம் கூட இராது. ஒரு பகல் சாப்பாடு வேளைக்கு முந்திய நேரம். வேலையோடு மண்டையை உடைத்துக் கொண்டிருந்தான். ஒரு படிக்கட்டு வடிவமைப்பு சரியாக வரமாட்டேன் என்று கொண்டிருந்தது. நீளமும் உயரமும் இளகமறுத்தன. எத்தனையோ தரம் விதம் விதமாக மாற்றிமாற்றிப் போட்டுப் பார்த்தும் சரிவருவதாயில்லை. பிளானையே மாற்ற வேண்டியது தான். பென்சிலைக் கடிக்கத் தொடங்கினான்.
கனத்த வாகனமொன்று வரும் ஓசை கேட்டது. திரும்பி ஜன்னலால் பார்த்தான். ஒரு ஜீப். ராணுவத்தினரினது போலப்பட்டது. அப்போது அது வலு சாதாரணமான விஷயம் - அவர்கள் நடமாடுவது. கிருஷ்ணனின் கந்தோருக்கு வர அடிக்கடி அவர்களுக்கு

Page 43
அலுவல்களிருந்திருக்க வேண்டும். - கட்டுமானம், பராமரிப்பு இவை
சம்பந்தமாக.
கிருஷ்ணன் தண் வேலையில் ஆழ்ந்து போய் ஐந்து நிமிடமாகியிராது. இ. இ. யுடன் பேசிவிட்டுத் திரும்பிய அந்த அதிகாரி கனத்த பூட்ஸ் ஒலிக்க கிருஷ்ணன் முன்னால் வந்து நின்றார். "ஹலோ கிருஷ்ணா! நீ இங்கேயா?."வியப்புடன் ஒலித்தது குரல். கிருஷ்ணன் நிமிர்ந்து பார்த்தான்.
`கீர்த்தி!?. " எப்படி விளிப்பது என்று தெரியவில்லை. சிவராஜசிங்கந்தான் கீர்த்தியை விலக்கி விட்டு முன்னால் வந்தான்.
கீர்த்தி இப்போது படைத்துறைப் பொறியியல் பிரிவில் ஒரு அதிகாரி ஆச்சரியமான சந்திப்புத்தான். பழைய புதினமெல்லாம் விசாரித்தான். எப்போது இங்கு வந்தாய்?
கொழும்பிலேயே இருந்திருக்கலாமே? கூட்டாளிகள் விமல், காமினி,
ரஞ்சித், நாணா எல்லாம் என்ன செய்கிறார்கள்?
"ஏன் நீங்கள்."மரியாதைப்பன்மை பிரச்சினை வரவே திடீரென ஆங்கிலத்திற்குத்தாவி. அவர்களைச் சந்திக்கவேயில்லையா?" இந்தத் தடுமாற்றத்தைக் கீர்த்தி கவனித்ததாகத் தெரியவில்லை.
”நான் தான் கிருஷ்ணனுக்கு முதலிலே யாழ்ப்பாணத்து ஆளாகிவிட்டேனே." என்று சிரித்தான்.
VV
− − − − Y− கட்டு பெத்தையை விட்ட பிறகு காண்வேயில்லை. ரஞ்சித்தை மட்டும் கண்டிப் பெரஹராவின்போது ஒரு தரம் சந்தித்தேன். அவன் வீட்டுக்குக் கூட கூட்டிப் போனான்.நான் தான் தனி.நீங்கள் எல்லோரும் ஒரே கந்தோர் தானே.? ff
"நான் இங்கு வரும்வரை."
பழைய மாதிரியே வாயடிக்கிறீர்.கீர்த்தி சிரித்தான்." கணக்கப் பேசவேண்டும் போலிருந்தது. ஆனால் ஐந்து நிமிடங் கூடப்
மட்டும் இல்லாதிருந்தால் ஐந்து நாட்கள் பேசியிருந்திருக்கலாம். எண்றும் பட்டது. கீர்த்தி முன்புபோலத்தானிருந்தான். அன்பாக விடை பெற்றான்.

அதன் பின் அவனைக் காணமுடியவில்லை. வேறு ஆட்கள் வந்து போனார்கள். கீர்த்தி மாற்றலாகிப் போயிருக்கலாம்
தான் சரியாகப் பேசாததை அவன் கவனித்திருப்பானா? அதையிட்டு மனம் நொந்திருப்பானா? என்று கிருஷ்ணன் பல நாட்கள் யோசித்தான்.
9
கல்யாண அழைப்பிதழை நீட்டியதும், ஃபெர்னாண்டோ வாழ்த்திக் கை குலுக்கினார். பிறகு சொன்னார். ”நான் கட்டாயம் வருவேன். உன்னைச் சாட்டியாவது யாழ்ப்பாணத்தை ஒரு தரம் பார்த்துவிடவேண்டும்."
ஃபெர்னாண்டோவிற்கு இன்னும் இரண்டு வருடத்தில் ஒய்வு பெறும்
6).jug).
VWA o e
நல்வரவு. எங்கள் கோஷ்டி முழுதாக வருகிறது. நீங்களும்
சேர்ந்து கொள்ளலாம்." என்றான் கிருஷ்ணன். 'உன் சீடப்பிள்ளைகள்
வராமல் விடுவார்களா?." ஃபெர்னாண்டோ சிரித்தார்.
திருமணம் அம்மன் கோவில் முன் மண்டபத்தில் தான் நடந்தது. நல்ல வசந்த காலத்தின் ஒரு பகற்பொழுதில் வெய்யிலும், தென்றலும், மகிழ் மணமும், சூழ்ந்திருந்த ஒரு வேளையில் சடங்கு நிகழ்ந்தது. கல்யாணத்திற்கு முதல் சனிக்கிழமை மத்தியான யாழ்தேவியில் எல்லோரும் வந்து சேர்ந்தார்கள். ஃபெர்னாண்டோ, ரஞ்சித், காமினி விமல்,
நாணா.
கோண்டாவில் ஸ்ரேஷனுக்குக் கார் பிடித்து அனுப்பியிருந்தான். பூட்டியிருந்த முருகையர் வீடு ஒரு கிழமைக்கு இரவல் எடுக்கப்பட்டு சுத்தமாக்கப்பட்டிருந்தது. இவர்களைக் கவனிக்கவென்றே பாலு நின்றான். வந்தவர்கள் விருந்தாளிகளாக உட்கார்ந்து விடவில்லை. முடிந்த வேலையெல்லாம் இழுத்துப் போட்டுக் கொண்டு செய்தார்கள். பந்தல் போட்டு, அலங்காரம் பண்ணி. கல்யாணத்தன்றைக்கு வெள்ளைச்
சாரமும் ஷேட்டுமாய் ஒடியாடி.
அந்தா, அந்தக் குளக்கரையில் கிருஷ்ணனும் நண்பர்களும் ஒரு ஃபோட்டோ கூட எடுத்துக் கொண்டார்கள். அது நடந்தது பதின்நாலு வருஷங்களுக்கு முந்தி.

Page 44
10
என்றாலும் இந்த அளவுக்கு மாறிப் போவாய் என்று நாங்கள் நினைக்கவில்லை." என்று காமினி ஒரு நாள் சொன்னான். அதற்கு காரணம் இவன் கூறிய விஷயம். மச்சான், இந்த இனப் பிரச்சனையையும், பிரிவையும் வளர விடுவோமானால் எக்கச் சக்கமான சிக்கலாகும். இந்த நாட்டோடு நிற்காது இந்து சமுத்திரப் பிரச்சனையாகவும் ஆகும்.
yy இதை விளையாட்டாக எடுக்கக் கூடாது.
தன்னுடைய கணிப்புச் சரியாகி விட்டதையெணிணி திருப்திபடுவதா? கவலைப்படுவதா? என்று இப்போதெல்லாம் அடிக்கடி யோசிக்கின்றான். கிருஷ்ணன்.
- - -ஆனால் தொண்ணுாற்றொன்பது வீதப் பேரைப் போல அவர்களும் அப்போது அவன் சொன்னதை அலம்பலாகத் தான் எடுத்தார்கள்.
"உனக்குக் கற்பனை கனக்க" இந்தக் கதைகள் நடந்த போது நண்பர்களின் யாழ்ப்பாண விஜயம் முடிந்து இரண்டாண்டுகள் கூட ஆகியிருக்கவில்லை. இடையில் ஒரு வருஷம் திருகோணமலையில் வேலை பார்த்து விட்டு கிருஷ்ணன் மீண்டும் கொழும்பிற்குத் திரும்பியிருந்தான்.
திருகோணமலைக்குப் போய் வந்த பிறகு உன்னைப் பார்த்தால் கொஞ்சம் வகுப்பு வாதிமாதிரிப் படுகிறது." என்பான் காமினி பகிடி போலவும் இருக்கும்.
என்றாலும், இன்னொரு திசையிலிருந்து இக்குற்றச்சாட்டு பலமாகவே முன்வைக்கப்பட்டது. திருகோணமலையில் வாழ்ந்த காலத்தில் - எழுபத்தி நாலில்-கிருஷ்ணன் ஒரு சிறுகதை எழுதினான். அங்கு இடம்பெறும் திட்டமிட்ட குடியேற்றம் பற்றிய கதை. அந்தக் கால மார்க்கட் நிலவரப்படி கிருஷ்ணன் வகுப்பு வாதியாக முத்திரை குத்தப்பட்டான்.
கண்மூடித்தனமான ஒருமைப்பாட்டுவாதிகள் ஆத்திரத்தால் குழம்பிப் போனார்கள். ”எல்லை எப்படிப் போடுவீங்கள்? சொல்லும்
பார்ப்பம்." தர்மேந்திரன் ஒரு நாள் கேட்டான்.

இந்தக் கேள்வி கிருஷ்ணனுக்கு எக்கச்சக்கமான எரிச்சலூட்டியது. அதிதீவிர இடது சாரியாகத் தன்னை இனங்காட்ட முயன்ற இந்த இளைஞனின் கொச்சைத்தனமான புரிந்துகொள்ளலுக்கு என்ன பதில் சொல்லலாமென்று உடனே புரியவில்லை.
உதெல்லாம் படுபிற்போக்குத்தனம்.'தர்மேந்திரன் பல்லவி பாடினான். செம்பூக்கள், இலக்கிய வட்டத்தின் உறுப்பினன் அவன். “இனத்தின்ரை பேராலை காணடப்படுறதை எதிர்த்துக் குரல் கொடுக்கிறது பிற்போககுத் தனமெண்டால், நாண் பிற்போக்கு வாதியாயிருக்கிறதிலை எனக்கு வலு
'ံမှ(!) வருஷத் திருமலை வாழ்வு என்னை இன ரீதியில் சிந்திக்கப் பண்ணியிருக்கிறது' என்கின்றான். காமினி, ஆனால் இந்தத் தர்மேந்திரன் - அதிசயம் - அங்கேயே பிறந்து வளர்ந்தவன். அவனால் எப்படி அப்படிப் பேச முடிந்தது. தர்மேந்திரனைச் சந்தித்த அதே திருகோணமலையில் தான் சதானந்தனையும் சந்திக்க நேரிட்டது. சதானந்தனின் பேச்சுக்கள் பிரமிக்க வைப்பனவாயிருந்த அதே நேரத்தில் அசாத்தியங்களை அவன் பேசவில்லை என்ற உணர்வையும் உருவாக்கின. பரப்பளவோடு பார்த்தால் எல்லை மிக நீண்ட கிழக்கு புத்தளத்திலிருந்து ஒரு புது சூயஸ். ஆனையிறவை நிரவுதல், முல்லைத் தீவு ஊடாக ஒரு நெடுஞ்சாலை என்று ?பேசிக்கொண்டிருந்த சதானந்தன்.
சதாநந்தனும் தர்மேந்திரனும் மோதிக் கொள்வதைப் பார்ப்பது வலு விசேஷம். இதற்குச் சாட்சியாய் இருவருக்கும் இடை ஆளாய் பல தடவைகள் இருக்க நேரிட்டிருக்கிறது. கிருஷ்ணனுக்கு திருகோணமலையை விட்டு வந்த பிறகு சதானந்தனைக் காணக்கூடச் சந்தர்ப்பம் வாய்க்கவில்லை. ஆனால் தர்மேந்திரனை முடிந்தது. எழுபத்தேழில் வெள்ளவத்தைப் பிள்ளையார் கோவில் அகதி முகாம்
வாசலில்.
புதியவரைக் காணவில்லை. இவர் மட்டும் தனியே.
என்ன, இண்டைக்கு வேலைக்குப் போகவில்லையே?"
W * y o o எப்படிப் போறது? எட. நான் வீட்டை கூடப் போய்ச்
சொல்லாமலிருந்திட்டேனே." என நினைத்தான்.

Page 45
.ஆனா. இதுவரையிலை புதினம் என்னவெண்டு தெரிஞ்சிருக்கும். நான் விட்டுட்டுச் சொல்லப்போய் வாறதுக்குள்ளை இங்கை வந்திட்டுப் போட்டா என்ன செய்யிறது."
கடைசியில் நானுங்கூட ஒரு விடுப்புப் பார்க்கிற ஆளாக மாறி விட்டேனா என ஒரு விநாடி கூசினான் கிருஷ்ணன். ஆனால் அடுத்த கணமே நினைவு வந்தது. இப்படித்தான் நடக்குமென்றில்லாவிட்டாலும் இப்படியானவைகள் நிதர்சனங்களாகையில் விளைவு எப்படித் தானாகுமென்றாலும் இதோ முந்தி அவர்கள் சொன்னது போல ஒரு சரிக்கா சம்பவம் இதற்கொரு சாட்சியாகிற சந்தர்ப்பம் கிடைக்கிறது.
இது வெறும் விடுப்பல்ல.
11
கட்டுபெத்தையிற் படித்துக் கொண்டிருந்த காலத்தில், ஒரு விடுமுறைக்கு வந்திருந்த போது கிருஷ்ணன் ஊரிலிருந்த தன் நண்பர்களைச் சேர்த்து ஒரு நாடகம் போட்டான். பிரதியை எழுதிக்கொண்டு வந்திருந்தான். அப்போது தன்னுடையவும் தன்னொத்த மிகச் சிறுபான்மையினரதும் இலட்சியமாயிருந்த ஒரு கருத்தைச் செல வாணியாக்க எழுதப் பட்ட நாடகம். 'விடிவு' என்று பெயர். தேர்முட்டியில் வைத்துத்தான் நண்பர்களுக்குப் பிரதியைப் படித்துக் காட்டினான். பாத்திரத் தேர்வும் பொறுப்புப் பகிர்வுங் கூட அங்குதான் நடந்தன. நோட்டீஷில் அச்சிடப் பட்ட விளம்பர வரிகள் இண்றுங் கூட நினைவிலிருக்கின்றன. பெரும்பான்மையினரின் எதேச்சாதிகாரத்தால் பாதிக்கப்ப பட்ட சிறுபான்மைக் கடம்பகள் தங்கள் லிடிவிற்காக மரகதபுரியில் கிளர்ந்தெழுகிறார்கள். அவர்களின் முடிவு விடிவு சொல்லும், இது ஓர் சரித்திர நாடகம். இன்றைய எம்நிலைமைக்கு மாற்றுத்தருகிற கருத்தை இதிலே காணுங்கள். தமிழிளைஞர்கள் எல்லோரும் இதைப் பார்க்க வேண்டும் மென்று மட்டுமல்ல, பார்த்துவிட்டுச் சிந்திக்கவும் வேண்டுமென வேண்டுகின்றோம்.
இரவுபகலாக நாடகம் பழகினார்கள். அப்பு வீட்டின் முன்
மண்டபத்தில் தான் நடந்தது. அப்பு இருந்தபோது ஆளும் பேரும் செல்வமும் செல்வாக்குமாய் நிரம்பிவழிந்த வீடு. அவர் இல்லாமலான நாலைந்து வருடங்களிலேயே வெறுமையாகிப் போனது. பழைய கால

அரண்மனை ஒன்றைப்போலச் சிதிலமுறத் தொடங்கியிருந்த அந்த வீட்டில் தான் அவர்கள் ஒத்திகை நடத்தினார்கள்.
வசதியான இடம் மணி டபத்தின் வலப்பக்கம் கிணறு. கிணற்றுக்கும் வடக்கே வைரவர் கோவில், அந்த வளவுக்கும் சுற்றாடலுக்குமான காவல் தெய்வம். கோவிலைத் தாண்டிப் படலை, ஆள்புழக்கம் குறைந்த அமைதியான இடம். இவர்களின் ஒத்திகைகள் முடிவடைகிற நேரத்தில் தான் யாரோ புதிதாய்க் குடிவந்தார்கள். அதற்குப் பிறகு பதினைந்து வருஷங்களாக அந்தப் படலையைத் திறக்கவே சந்தர்ப்பம் நேரவில்லை. கிருஷ்ணனுக்குப் பிறகு நேர்ந்த சந்தர்ப்பந்தான் எவ்வளவு வேடிக்கையான முரண்!.
12
எண்பத்து மூன்று ஜுலைக்குப் பிறகு எல்லாமே மாறித்தான் விட்டன. இந்த யாழ்ப்பாணம் இப்படியாகுமென்று எவர் நினைத்திருப்பார்கள்? ஆபத்துகளுக்கிடையில் நெடும் பயணமொன்றிற்கு ஆயத்தமாகிற மனநிலை வந்தது. எல்லோருக்கும் ஒரு விதி என்றாகிப் போனதினாலே
என்னவோ எல்லோருமே நெருங்கிப் போனார்கள்.
ஒவ்வொரு நாளும் புதிதுபுதிதாகச் சேதிகள் வந்தன விடிந்தால், பொழுதுபட்டால் பட்டணம் போனால் பேப்பர் படித்தால் என்று சேதிகள் வந்தன. புராணங்கள், சரித்திரங்கள் எல்லாம் மீண்டும் ஒரு முறை மெய்யாகி விடப் பார்த்தன. அசாதாரணங்களோ, சாதாரணமாகிப் போயின.
ஐந்தாறு மாதங்கழித்து ஒரு வியாழனாயிருக்க வேண்டும். காலை, ராசேந்திரம் மாஸ்ரர் தேடி வந்தார். அவரோடு ஒரு சேதியும் வந்திருந்தது. அது சேதியாக மட்டுமின்றி, போகப் போகக் குற்றச்சாட்டாகவும் மாறப் பார்த்தது. பிறகு அயலவர் ஊரவர் என்று ஒவ்வொருவராக வரவர அது குற்றச்சாட்டாகவே மாறியது.
"உனக்குத் தெரியாமல் எப்படி?"
நீதான் கூட்டிக் கொண்டு வந்திருக்கிறாயாம்."
VV ff நானா?

Page 46
எப்படி இந்த முடிச்சைப் போட்டார்கள்? அந்த நாடகம் இன்னும் நினைவிருக்கிறதா? அல்லது அவர்களுக்கெல்லாம் வித்தியாசமான தன் நடத்தைகளாலா, அல்லது வீட்டுடைமையாளர்கள வெளி நாட்டிலென்பதால் அடுத்த பொறுப்பாளி இவன் தான் என்ற நினைப்பிலா?
"அப்பு வீட்டில் பெடியள் வந்து இருக்கிறார்களாம்!"
"நானென்ன செய்ய?" என்று கேட்டான்.
ኣኳ
அவர்களை மெல்ல எழும்பச் சொல்லு
"நான் எப்படிச் சொல்லுறது?”
o o அக்கம் பக்கம் குடிசனம் உள்ள இடம். எல்லாரும் பயப்பிடுகினம் எண்டு."
ஏன் பயப்பிடுகினமெண்டு கேட்டா?."
ஏனோ?. "வந்தவர்களுக்குக் கோபம் வந்தது போலிருந்தது.
ஆமி மணந்து பிடிச்சுவந்தா ஊரை விட்டு வைப்பாங்களே?"
"உப்பிடி எல்லாருங் கலைச் சா அவங்களுமிருக்க இடம்
VWA
உன்ர கதையைப் பாத்தா உண்மை போலத்தானிருக்கு
sts sor?"
நீ தான் கொண்ணந்து.
"பேய்க் கதை பேசாதையுங்கோ." இடைமறித்துக் கோபத்துடன் சொன்னான்.
உங்களுக்கு வேணுமெண்டா நீங்களே போய்ச் சொல்லுங்கோ."
வந்தவர்கள் போய் விட்டார்கள். கோபித்துக் கொண்ட மாதிரித்தானிருந்தது.
அடுத்த இரண்டு நாட்கள் அந்தக் குறிச்சியே அவனைப் பிரஷ்டம் பணி னிய மாதிரி நடந்து கொணிடது. அந்த வீட்டில் வந்திருக்கிறவர்களைப் பார்க்க நேரிடுகிற போது இளித்தும் நெளிந்தும்

நெருக்கம் காட்டியும் நடந்து கொள்கிறவர்கள், தன்னோடு கோபம் சாதிக்கிற போக்கிலித்தனம் ஆத்திரத்தையும் அருவருப்பையும் ஊட்டியது. அதுவும் தனக்கிந்த விவகாரத்தில் எள்ளளவு சங்காத்தமும் இல்லாத போது கூட ஒதுங்கி நடவாதவர்கள் காணுகிற போதெல்லாம் முடிந்தளவு வெருட்டினார்கள்.
"உன்ர வீடும் பக்கத்தில் தானே."
பைத்தியம் பிடித்த மாதிரி இருந்தது.
கடைசியாக, அவர்களைச் சந்திக்கப் போன தூதுக் குழுவில் அவனும் அங்கம் வகித்தான். "நாங்கள் உங்களோடைதான் எண்டாலும் எங்கட பிரச்சினையை நீங்கள் கொஞ்சம் விளங்கிக் கொள்ளவேணும். இது குடிமனை நெருங்கின இடம். அதுதான்."
தூதுக்குழு பவ்வியமாகத் தன் வேண்டுகோளை முன்வைத்தது.
"உடனடியாக வெளிக்கிடுறது கஷ்டம். ஒரு கிழமைக்குப் பிறகுதான் சொல்லலாம்."
தூதுக்குழு திரும்பும் போது வைரவருக்கு நோந்துகொண்டு வந்தது.
ஒரு கிழமைக்குப் பிறகு போனபோது, "இன்னும் இரண்டு கிழமைக்குள்ளை மாறி விடுகிறம்." என்று உறுதி தந்தார்கள். குறித்த தவணை அரைவாசி கழியுமுன்னரே அதை நிறைவேற்றவும் செய்தார்கள். நேர்த்திப் பொங்கல் - எல்லோருக்கும் வசதியான ஒரு ஞாயிறு பிற்பகல் நடந்தது. கிருஷ்ணனும் போயிருந்தான். வைரவர் கோவில் மட்டும் மாறாமல் இருக்கிறது. ஆளுயரங்கூட இல்லாத சின்னக் கோவில். இலந்தை மரத்தினடியில் சதுரமாய் நிற்கிற சீமெந்துக் கட்டிடம், சுவர்கள் கறுத்துப் போயிருந்தன. சின்னக் கதவுகளிரண்டும் கழன்று போயிருந்தன. மற்றப்படி மாற்றமில்லை. கற்பூரம் எரிக்கவென்று முன்னாலிருந்த கல்லிற் கூட புகை அடிக்கடி கண்களைக் களித்தது. சுள்ளிகள் சடசடவென்று எரிந்து கொண்டிருந்தன. பொங்கற் பானையில் நீர் கொதித்துக் கொண்டிருந்தது. ஒவ்வொருவரும் ஒவ்வோர் கருமத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள். அவனைத் தவிர, பக்கத்து வீட்டு செல்வரத்தினத்தாரின் ரேடியோ அவனை ஈர்த்துக் கொண்டிருந்தது.

Page 47
இந்திய நிலைய மொன்றில் நடக்கிற நாடகம். நடிகர்கள் உணர்ச்சி பூர்வமாகப் பேசிக்கொண்டிருக்கிறார்கள். அந்நிய ஆக்கிரமிப்பிலிருந்து தாய் நாட்டைக் காக்கப் போராடுகிற வீரனின் கதையை விபரிக்கிற சரித்திர நாடகம்.
இந்த வேடிக்கை - எந்த நோக்கத்திற்காகக் கடைசித் தடவை இந்த இடத்திற்கு வந்தானோ, அதுவே இன்று யதார்த்தமாகி வருகையில், தான் அதற்குமாறாகச் செயற்பட வேண்டி நேர்ந்த இந்த வேடிக்கை வேதனையாயிருந்தது.
தான் மாறிவிட்டானா? என்கிற கேள்வியை கிருஷ்ணன் அடிக்கடி கேட்டுக் கொள்கிறான். ஒரு விதத்தில் மாற்றம் தான். எப்படியான மாற்றம்? முதிர்ச்சி தந்த அநுபவ விசாரிப்பில், பார்வை விரிவில் ஏற்பட்ட மாற்றம். நோய் உண்டென்றும் வைத்தியம் அவசியம் என்றும் ஒப்புக்கொள்கிற அதேவேளையில் சிகிச்கை எது என்பதில் ஏற்பட்ட அபிப்பிராய மாற்றம்.
அவ்வளவே.
ராசதுரை இதை வெளியாய்க் கேட்டார்.
13
நான் ஓடிவந்திட்டன்" என்ற குரல் கேட்டது. வீரவாகு சைக்கிளை இழுத்து நிறுத்திக் கொண்டிருந்தார்.
“இன்னும் வரேல்லையோ?"
"ம் ஹும்." நேரத்தைப் பார்த்தபடி தலையாட்டினான். கிருஷ்ணன் ஒன்பது முப்பத்தொன்று.
வீரவாகு கிருஷ்ணனுக்குப் பக்கத்தில் வந்து நின்றார். காற்சட்டையைத் தட்டி விட்டுக் கொண்டு அவனும் எழுந்தான்.
“g ஒணி டைக் கவனிச்சியா, கிருஷ்ணா, நான் இப்ப
வரேக்குள்ளைதான் யோசிச்சன்."
“என்ன?" என்பதைப் போல அவரைப் பார்த்தான். “இந்த இனப்பிரச்சினை சம்பந்தமான விஷயங்களெல்லாம் அநேகமாக ஆடியிலை தான் நடக்குது. கவனிச்சியா?"

AA o WW எப்படி?
இப்ப பார் இது ஆடி. எண்பத்து மூண்டிலை ஆடி. நானும் நீயும் ஓடி வந்ததும் எழுபத்தேழிலை ஆடி.
அந்தக் கலவரத்தின் போது கொழும்பிலிருந்தான் கிருஷ்ணன். எவர் இட்ட தீயோ. எப்படிப் பரவியதோ . அந்த வெப்பில் தகித்துத் தவித்து ஒருகிழமையாகப் பட்ட அவதி எந்நேரமும் ஆபத்தை எதிர்நோக்கியிருக்கிற அந்தப் பதட்டமும் பயங்கரமும் அவதி தாங்காமல் அந்த நாட்களில் வீசிக்கொண்டிருந்த பெரும் புயலில் - அது தந்த கலக்கத்தில் - எந்த நிமிடம் என்ன ஆகுமோ என்ற அந்தரந்தாங்க முடியாமல் வருவது வரட்டும் என்ற முடிவில் வேணியையும் அழைத்துக் கொண்டு ரயிலில் புறப்பட்டான். அதே ரயிலில்தான் வீரவாகுவும் வந்து கெண்டிருந்தார். யாழ்ப்பாணம் ஸ்ரேஷனில் ஒரே ரக்ஸியையே பிடித்துக் கொண்டு ஊருக்கு வந்தார்கள்.
ரக்ஸி நின்றதும் நிற்காததுமாய்ப் படலையைத் திறந்து கொண்டு யாரோ ஓடி வருவது தெரிந்தது. அம்மா பார்த்துக்கொண்டு நின்றிருக்க வேண்டும். நாங்கள் இன்று இப்படி வருவோமென்று எப்படித் தெரியும்?
பிறகுதான் தெரிந்தது. இப்போதுதான் பார்த்துக் கொண்டு நிற்கவில்லை. மூன்று நான்கு நாட்களாகவே இந்தக் காத்திருத்தல் தொடர்ந்து படலையடியில் நடக்கிறதென்று.
கொண்டு வந்த ஒரே சூட்கேஸையும் காட்போட் பெட்டியையும் தூக்கிக்கொண்டு உள்ளே வந்தார்கள். அம்மா கண்கலங்க இருவர் தலைகளையும் தடவினார். பேசமுடியாமலிருந்தது. ஐயர், யாரிடமோ விசாரித்துக்கொண்டு வரப்போய் விட்டாராம். "பிளேனிலை வருவீங்களோ? எண்டு கேட்க." இன்னும் ஒரு கிழமை காத்திருந்தாலும் இந்திய விமானத்தில் இடங்கிடையாதென்பது இவர்களுக்கு எப்படித் தெரியும்?
“கப்பல் பயணம் உங்களுக்கு ஒத்துக் கொள்ளாதெண்டு ஐயாவுக்கு
9.
ஒரே 6606).......
ஒரு கிழமையாக சாப்பாடும் நித்திரையுமில்லாமல் பயமும் பதட்டமுமாய்க் கழித்த கதையைச் சொல்லி முடியாதிருந்தது. இங்கும் அதே கதையாகத்தான் இருந்திருக்கிறது.

Page 48
உத்தியோகமும் வேண்டாம், ஒண்டும் வேண்டாம் உள்ளதைப் பார்த்துக் கொண்டு இனி ஊரோடையே இருங்கோ."அம்மா சொன்னா
ஏதோ அந்த அம்மாளாச்சிதான் இந்தளவிலையாவது கொண்டுவந்து விட்டது."
“ஏதோ இந்த எண்பத்தேழு ஆடியோடையாவது இந்தப் பிரச்சினை தீந்தாப்போதும். முப்பது வருஷமா மனைஞ்சுகிடக்கு.” வீரவாகு சொன்னார்.
"உண்மைதான் நான் கச்சேரிச் சத்தியாக்கிரகத்திலையிருந்து அடி வாங்கின ஆள். இப்ப மகேந்திரன் இப்பிடி." அவர் மகன் இயக்கத்தில் சேர்ந்திருந்தான்.
"இன்னும் எத்தனை சந்ததிக்கு இது இழுபட வேணும்?"
உண்மைதான்." என்றான். கிருஷ்ணன், மீண்டும் பிரச்சினை இவ்வளவுக்கு இறுகி, எண்பத்திமூண்டிலை பெடியள் துவக்கும் தூக்கி, இவ்வளவு சங்காரம் நடந்து முடிஞ்சாப் பிறகு இப்பதான் இந்தியாக்கு கண் திறந்திருக்கு.”
“.இந்தா வருகுது பின்னை வருகுது எண்டு எத்தனை தரம் பாத்திருந்தம்? அந்த மனுசி இருந்திருந்தா எப்பவோ எல்லாம் நடந்திருக்கும். . எங்கட விதி.’ .வீரவாகு எட்டிப் போய்ப் புகையிலையைத் துப்பிவிட்டு வந்து சொன்னார்: “.போன மாதம் சாப்பாட்டுப் பார்சல் கொண்டு வந்து பிளேனாலை போடேக்குள்ளையே, வந்திட்டுது எண்டு சனம்பட்டபாடு.
எல்லையைத் தாண்டி போன யாரோ ஒருவனை காவலுக்கு நின்ற
போராளி தடுத்துத் திருப்பி அனுப்பினான்.
“இந்த உலகத்திலுள்ள சகல சாத்தான்களும் சேர்ந்து எங்களைத் துடைச்சு வழிக்க வெளிக்கிட்டாப் பிறகும் இந்தியா இவ்வளவுக்குப் பொறுத்திருந்திருக்கு.”
“அவனவனுக்கு அவனவன் பிரச்சினை.

“சரி என்னவோ. இவ்வளவிலையாவது இது நடக்கிறது பெரிய விஷயம்" என்ற வீரவாகு `வெள்ளம் வந்த மாதிரிச் சனம் வருகுது பார்." என்றார்.
மருத மரத்தடி கோவில் மேடை தேள்முட்டிப் பக்கம் எங்கும் ஒரே தலைகளாய் இப்போது தெரிந்தன. ஹெலி இறங்கப் போகிற இடத்திற்கும் மருத நிழலுக்குமாய் முக்கியஸ்தர்கள் ஒடியாடிக் கொண்டிருந்தார்கள்.
“நான் அதிலைபோய் நிற்கப்போகிறன். ’கொஞ்சம் முன்னுக்காய், இடப்புறமிருந்த மதிற்கரையைக் காட்டினார் வீரவாகு.
VWA w
நீயும் வாவன்?
"நான் இதிலை நிக்கிறன் தெரியுதுதானே. நீங்கள் போட்டு வாங்கோ."
சைக்கிள் பூட்டியிருக்கிறதா? என்று இன்னுமொருமுறை பாாத்துவிட்டு வீரவாகு நடந்தார்.
புறாக்களும் காகங்களும் பறந்து கொண்டிருந்தன. சோழகமும் சனங்களும் இரைவது கேட்டது.
14
தர்மேந்திரன் தன்னை யாராக இனங்காட்ட முயன்றானோ அதே குழுவில் அப்போது ராசதுரையும் இணைந்திருந்தார். தொழிலால் ஆசிரியர், நல்ல வாசகர். கிருஷ்ணனுக்கு அப்போது அவரில் மதிப்பிருந்தது. இங்கே அவருக்கு சொந்தக்காரர் கனபேர். இதுதான் அவர் ஊரோ என்று நினைக்குமளவிற்குப் புழக்கம். திருகோணமலைக் குடியேற்றம் பற்றிய கதை அவர் கண்ணிலும் பட்டிருக்க வேண்டும். அதற்கடுத்த தடவை கிருஷ்ணனும் அவரும் சந்தித்த போது ஒரு பின்னேரம் முழுவதும் அந்த விவாதத்திலேயே கழிந்தது.
இப்போது அதோ, சனம் நிரைகட்டி நிற்கிற அந்த மேட்டொழுங்கையின் சீமெந்து விளிம்பில் இருந்து பேசிக் கொண்டிருந்தார்கள். எக்கச் சக்கமாக விமர்சித்தார். அன்றைக்கு

Page 49
அநேகமாகத் தர்மேந்திரன் கேட்ட மாதிரித்தான் எல்லாவற்றிற்கும் பதில் சொன்னான். அவர் ஒப்புக் கொள்வதாயில்லை.
“நீ படு வகுப்புவாதி.’ எதிர்பார்க்கப்பட்ட பாணியிலேயே முத்தாய்ப்பு வைத்து விட்டுப் போனார்.
அதற்குப் பிறகு போன வருஷம் திருவிழாவில் சந்தித்தான். மத்திய கிழக்கில் நாலைந்து வருஷம் வேலை பார்த்து விட்டுத் திரும்பியதாகச் சொன்னார்.
“நீ அப்ப எழுதினது சரி தான் . நாங்கள்தான் கவனிக்கேல்லை.” புன்சிரிப்புக் காட்டுவதைவிட வேறென்ன செய்யலாம்? ஆனால் உள்ளுக்குள்ளே மனம் கேட்டது. ஏன் அநேகம் பேர் பத்து வருஷம் பின்னாலேயே வருகிறீர்கள்?
தான் இப்போது சார்ந்திருக்கிறதாக ஒரு இயக்கத்தின் பெயரை அவர் கூறினார். அவன் வியப்புற்றான். இவ்வளவு தீவிரம் இவருக்கு
தற்போதைய நிலைப்பாட்டை நிரூபிக்க அவர் பட்ட அவதி அவனுக்குச் செயற்கையாகப் பட்டது. அந்த முயற்சியைக் கண்டு இலேசாக எரிச்சல் ஏற்படுவது தவிர்க்க முடியாததாயிருந்தது. அர்ப்பணிப்பிலும் மெய்மையிலும் தெரியக் கூடிய ஆழத்திற்குப் பதில் - மேலோட்டமான ஒரு பரபரப்புக் கோலத்தையே அவர் காட்டுவதாக அவன் உணர்ந்தான். தங்களைப் பரித்தியாகம் பண்ணி இளைஞர்கள் வளர்க்கிற வேள்வித் தீயில் பிரக்ஞை பூர்வமாகவோ அன்றியோ. அவர் குளிர்காய முனைகிறாரா?
”நீ யாரோடு?" யாருடனாவது கட்டாயம் சேர்ந்திருக்கத்தான் வேண்டுமென அவர் எதிர்ப் பார்ப்பதாய்ப் பட்டது.
"நான் சனங்களோடு.
முகத்தில் கேள்விக்குறி தோன்ற அவனைப் பார்த்தார். அவன் சொன்னான்.
"நான் தனிநாட்டுக்கும் மாறில்லை. ஐக்கிய இலங்கைக்கும் எதிரில்லை."

அவர் இன்னும் குழம்பிப் போனார்.
அதெப்படி?"
சனங்கள் எதைத் தீர்மானிக்கிறார்களோ, அது தான். என்னைப் பொறுத்தளவிலை தமிழர்கள் ஒரு தனித் தேசிய இனம். அவர்களுடைய சுயநிர்ணய உரிமை மறுக்கப்பட முடியாதது. எந்தவித சுரண்டல்கள், பாகுபாடுகள். அடக்கு முறைகள், அடிமைத் தனங்களுக்கும் ஆளாகாமல் இறைமையோடும் கெளரவத்தோடும் தாங்கள் வாழ எந்த வழி ஏற்றது என்பதைத் தெரிவு செய்கிற சுதந்திரம் அவர்களுக்கு உண்டு. எந்த விதத்திலென்றாலும் அவர்களுக்கு நியாயமும் பாதுகாப்பும் இருக்க வேண்டும். பிரச்சினை தீர வேண்டும். அதுதான் முக்கியம்.
W 珍 8 77 சுயநிர்ணயம் எண்டு சொல்லுறாய்?.
”ஓம். மாக்ஸிஸலெனினிஸ, கோட்பாடான - விரும்பினால் தங்களது சொந்த அரசினை அமைப்பதற்கான உரிமை உட்பட்ட தேசிய
“ஒரு சோஷலிஸ அமைப்பு முறையின் கீழ் தான் அது முற்று முழுதாக சாத்தியப்படும் எண்டு நான் நினைக்கிறேன்.” ராசதுரை சிரித்தார்.
“உப்பிடித்தான் நானும் முந்திச் சொல்லிக் கொண்டு திரிஞ்சனான்.
“சோஷலிஸம் எண்டு சொல்லிக் கொண்டு.” அவன் ரசிப்பைப் புரிந்துகொள்ளாமல் அவர் கேட்டார்" ஐக்கிய இலங்கைக்குள்ளை
“பிரதேச சுயாட்சி.” கிருஷ்ணன் பளிச்சென்று சொன்னான்.
‘வடக்குக் கிழக்குச் சேர்ந்த பிரதேச முழுமை ஒப்புக்கொள்ளப் பட்டு ஒரு தமிழ் மாநிலமாக - சுயாட்சிப் பிரதேசத்திற்குரிய அதிகாரங்களோடு.”
“ஏன், அது தனிநாடக இருந்தாலென்ன?”

Page 50
“இருக்கலாம். அதை நான் மறுக்கவில்லை. அது தான் சொன்னேனே - அதைத் தீர்மானிக்க வேண்டியது சனங்கள். ஆனா, சாத்தியம், அகப்புறக்காரணிகள், தாக்கம் சர்வதேச அரசியல் இதெல்லாம் நாங்கள் விரும்பியோ விரும்பாமலோ கவனத்திலெடுக்க வேண்டியிருக்கு.
“நீ போராட்டத்தைக் குறைச்சு மதிப்பிடுகிறாய் போலை.
“நிச்சயமாக இல்லை. தொடர்ச்சியாக வந்த ஆட்சியாளர்களின் நடவடிக்கைகளால் ஏற்பட்ட நிர்ப்பந்தந்தான் போராட்டம், அந்தப் போராட்டத் தாலைதான் இவ்வளவுக் கெண்டாலும் நிலமை வந்திருக்குது. மற்றது, கொள்கையிலை வித்தியாசமிருந்தாலும் நினைச்சுக் கூடப் பார்க்கேலாத அந்த அளவு அர்ப்பணிப்பு வீரம், தியாகம்-இதெல்லாத்துக்கும் நான் மரியாதை செய்யிறன். தலை வணங்கத்தான் வேணும். கிருஷ்ணன் மெய்சிலிர்த்து மீண்டும் சொன்னான்.
- - - - -அது நினைச்சுக் கூடப் பார்க்கேலாத அளவு பெரிசு.
எங்களுக்கு முன்னாலை நடந்து கொண்டிருக்கு."
"எண்டாலும் நீ மாறித்தான் போனாய். எண்டு நான் சொல்லுறன்."
அதை நீங்கள் சொல்லக் கூடாது" கிருஷ்ணன் லேசாக உணர்ச்சி
வசப்பட்டவனாய் ராசதுரையரைப் பார்த்துச் சொன்னான்.
“ஏனெண்டா நீங்கள் அப்பதென்துருவத்திலையிருந்து பாத்தீங்கள். நாண் வடக்கே நிண்டமாதிரித் தெரிஞ்சுது. இப்ப வடதுருவத்திலையிருந்து பாக்கிறீங்கள். தெற்கே நிற்கிறமாதிரித் தெரியுது. நான் நிண்ட இடத்திலை தான் நிக்கிறன்.
அதன் பிறகு இரண்டொரு தரம் தெருவில் சந்திக்க நேர்ந்த
வேளைகளில் அவர் வடிவாகக் கதைக்கவில்லை.
15
ஹெலிச் சத்தம் கேட்டாலே ஒளித்தோடுகிற சனம், இன்றைக்கு அது எப்போ கேட்கும் என்று தவங்கிடக்கிறது எல்லாம் எப்படி எப்படி

மாறுகின்றன. இந்த ஒரு ஐந்து வருடத்திற்குள் என்னென்ன வெல்லாம் நடந்து விட்டன. இந்த இயந்திரப் பறவையைப் பார்த்து மிரள வேண்டிய நிலை கூட இந்த ஊரில் தான் ஏற்பட்டது. உண்மையில் ஆகாயத் தாக்குதல்கள் எல்லாம் இந்த வட்டாரத்தில் தான் அரங்கேற்றப்பட்டன.
அந்த முதல் ஹெலித் தாக்குதல் நடந்து இரண்டு வருஷங் கூட ஆகவில்லை.
திருவெம்பாவைக் காலம். பஜனை, விடியுமுன் போயிருக்க வேண்டும். ஆறு ஆறரை ஆகியும் குளிர் ஒட்டிக்கொண்டு கிடந்தது. எழும்பலாமா? என்று யோசித்துக் கொண்டு கிடந்தான். இருந்தாற் போல குருவிகளின் சத்தத்தையும் மீறிக் கொண்டு அது.லான்ட் மாஸ்ரரா? இல்லை.
இண்டைக்கு வேளைக்கே வெளிக்கிட்டிட்டான்கள் என்று நினைத்த போதே இயந்திரத் துப்பாக்கி ஆகாயத்தில் சடசடத்தது! திடுக்கிட்டான். இதுவரை நடவாத விஷயம். ஹெலியிலிருந்து சுடுகின்றான்கள். எங்கிருந்து? எதை நோக்கி? சத்தமென்னவோ கூரைக்கு மேல் தான் கேட்டது. கணிடபடி ஊர்மனைகளுக்கு வேட்டு வைக்கிறான்கள் போலும்.
எந்த நேரமும் இந்த அஸ்பெஸ்ரஸ் தகட்டைப் புஸ்க் கென்று துளைத்து விட்டுக் குண்டு பாயலாம். சட்டென எழுந்தான். சமையலறையிலிருந்து வேணி ஓடி வந்தாள்.
சடைத்த மாவின் அடியோடு ஒண்டிக் கொண்டு இருவரும் கவனித்தார்கள். மெஷின்கண்கள் விடாமல் குரைத்தன. ஒன்றல்ல. இரண்டோ மூன்றோ ராட்ஸஸத் தும்பிகள் வானில் வளையமிட்டன. இடைவிடாமல் சூடு, எங்கே பட்டன. என்பது தெரியாமலிருந்தது. இந்தச் சத்தங்களுக்கிடையில் எங்காவது அவலக் குரல் ஏதும் கேட்கிறதா என்று கவனித்தார்கள். ஒன்றும் தெளிவாயில்லை.
சின்னவயதில் ராமாயணத்தில் படித்த - வானத்தில் வந்து கொடுமைகள் செய்கிற அரக்கர்களின் நினைவு வந்தது. இது வரை கேள்விப்படாத - அறிந்திராத - புதுவிஷயம் நடக்கப்போகிறது?
இப்போது கீழேயிருந்தும் குண்டும் வெடியும் கேட்கத்

Page 51
தொடங்கின. தெருவில் சனங்களின் பரபரப்புக் கேட்டது.
எறும்புப் புற்றுக்குள் தண்ணீர் போனது போல கலைவுகொண்டு விட்டார்கள். படலைக்கு ஓடினாண் தெருக்கரை வீடுகளிலிருந்தவர்களெல்லாம் உட்புறமாக வரத் தொடங்கியிருந்தார்கள். மலை வேம்படி ஒழுங்கையில் பெடியளின் முகாமொன்று இருந்ததாயும் அதற்குத்தான் சூடு நடக்கிறதென்றும் சொன்னார்கள். இல்லை, ஆமி ஹெலியில் வந்து பாலாவோடை தோட்ட வெளியில் இறங்கி விட்டது என்றார்கள். எல்லோரும் குழம்பிப் போயிருந்தார்கள். என்ன செய்யலாம், எங்கு போகலாம். எப்படித் தப்பலாம் ஒன்றுமே தெரியாதிருந்தது.
வேணி கத்தக்கத்த "இந்தா வாறன்." என்று சொல்லிவிட்டு மெல்லத் தெருப் பக்கம் நடந்தான். வேலிக் கதிகால்களின் குழைநிழலிற் பதுங்கிப் பதுங்கி-ஏதோ அந்த வானத்து வல்லூறுகள் தன்னைத் தான் குறிபாாக்கிறதாகப் பயந்து அரசடிச் சந்திக்கு வந்தபோது நாலைந்து பையன்கள் துவக்குகளோடு நின்றார்கள். ஒருவனிடம் ரேடியோக் கருவியிருந்தது. அவர்களைச் சுற்றி ஊர்ச் சனங்கள் கொஞ்சப் பேர் தேத்தண்ணிர், சோடா, வாழைப் பழத்துடன் அந்த நெருக்கம் புல்லரிக்க வைத்தது.
பதினொரு மணிவரை யந்திர துப்பாக்கிகள் இடைவிடாது குரைத்தன. மெல்ல மெல்லச் சேதி பரவியது. போராளிகளின் முகாமைப் பிடிக்க, தோட்டவெளியில் ஆமி இறங்கியதென்றும், பையன்களுக்குத் தாக்குப் பிடிக்க முடியாமல் திரும்பிப் போனதென்றும் சொன்னார்கள். ஒரு பையன் சண்டையில் இறந்து போனானாம். ஊர்ச் சனங்களில் அகப்பட்ட இரண்டுபேரை ஆமி பிடித்துக் கொண்டு போனதாம்.
பிறகுதான் பயம் அதிகரித்தது. அடிபட்ட பாம்பு சும்மா விடாது என்றார்கள். ஊர் கெலித்துப் போனது. தெருக்கரை வீட்டுக்காரர்கள் ஓடிப் போய் ஏதோ அகப்பட்டதை எடுத்துக் கொண்டு குச்சொழுங்கைகளிலிருக்கிற உறவினர் வீடுகளுக்குத் திரும்பினார்கள். எல்லாரும் பெரிதாக ஏங்கிப் போய் இருந்தார்கள். இனி, இந்த ஊரைச்சும்மாவிடுவானா?
அடுத்தநாள் பயம் தெளிந்து ஆங்காங்கு பார்க்கப் போனவர்கள் கழுத்தில் கட்டுகிற அட்சரக்கூடு மாதிரி கை நிறைய அள்ளி அள்ளிக்

கொண்டு வந்தார்கள். துவக்குக் குண்டுகளாம். பெருவிரலை நுழைக்கக் கூடிய அளவிற்குக் கூட அந்தப் பித்தளைக் குழாய்கள் இருந்தன.
அதற்கடுத்த நாளும் ஒன்றும் நடக்கவில்லை. அடுத்த கிழமையும் ஒன்றும் நடக்கவில்லை. அடுத்த மாதமும். அடிபட்ட பாம்பு மறந்து விட்டதென்றே பட்டது.
ஊரைக்காத்த கடவுளுக்கு நன்றியாக தை மாதம் அம்மன் கோவிலில் ஹோமம் நடைபெற்றது.
16 “இது இங்கை உள்ள ஆக்களுக்குத் தெரிஞ்சு தானே நடக்குது?" ”தெரியாமலிராது.
"எப்படிப் பேசாம இருப்பினம்?"
அவங்களும் சம்மதிச்சிருக்கலாம்."
“இந்தியா எதையும் செய்யும் எண்டு காட்டியிருக்கு."
"எண்டாலும் அமெரிக்காக்காரன் சும்மா இருப்பானோ. சி. ஐ. ஏ. தானே கால், எல்லாத்துக்கும்?."
"இந்தியாவுக்குப் பின்னாலை ரஷ்யன் இருக்கிறான்.அவன் தன்ரை கூட்டாளியை விட்டிடுவானோ..?"
சாதாரண சனங்கள் எதையெல்லாம் இப்போது பேசுகிறார்கள் என வியந்தான் கிருஷ்ணன்.
'உலகத்திலை நடக்கிற அட்டூழியங்கள் எல்லாத்துக்குப் பின்னாலையும் கழுகும் அதின்ரை ஆக்களும் தான். இங்கையும் திருக்கணாமலையிலை கண்வைச்சு, இந்து சமுத்திரப் பகுதியிலை அதிகாரம் செலுத்துகிறதுதான் அவயின்ர நோக்கம்."
V O
அதுக்குத்தான் கால்வைக்க இடம் எங்கை கிடைக்கும் எண்டு

Page 52
பார்த்துத் திரிஞ்சவைக்கு எங்கட பிரச்சினை நல்ல வாய்ப்பாய்ப் போச்சு..இந்தியாக்காரன் விடுவானோ, இல்லை, ரஷ்யாக்காரன் விடுவானோ.
W
9-3335..........
சர்வதேச அரசியல் கூட எப்படித் தண்ணிர் பட்ட பாடாக வருகிறது இவர்களுக்கு? சாதாரண சனங்கள்- தொழிலாளிகளாகவே படுகிறது. எவ்வளவு தெரிந்து வைத்திருக்கிறார்கள்? இது கூடப் போராட்டத்தின் ஒரு பெறுபேறுதான் ஒவ்வொரு நாளும் பத்திரிகை படிக்காதவர்கள் இப்போதில்லை. முன்பு பத்திரிகை படித்தவர்களிலும், பாதிப்பேர் சினிமாவையும், விளையாட்டுகளையும், வழக்குகளையும் தான் பார்த்தார்கள். இப்போது அப்படியல்ல. எல்லாம் படிக்க வேண்டியிருக்கிறது. அவர்கள் வாழ்வே அரசியலோடு சம்பந்தப்பட்டுப் போய் விட்டது. உள்நாட்டு அரசியலுடன் மட்டுமல்ல சர்வதேச அரசியலோடும்.
ஆனால் இவ்வளவுந்தானா? இந்தப் பேச்சுக்களை மட்டும் வைத்துக் கொண்டு திருப்திப்பட்டு விடுவது எவ்வளவு சரி? சனங்கள் அரசியல் மயப்படுத்தப்படுவது வேறு. இன்னுங் கனதூரம் போக வேண்டும். வெகுஜனப் பங்களிப்பின்றி போராட்டங்கள் சாத்தியமாகுமா? அந்தப் பங்களிப்பு எவ்வளவுக்கு இருக்கவேண்டும்? மக்கள் விலகி நிற்கும் வேளைகளில் வீரங்கள் எல்லாம் சாகசங்களாகவும். தியாகங்களெல்லாம் வீணாகவும் போகும் - சாத்தியப்பாடு உண்டல்லவா? இந்த இடைவெளிஇந்தக் கவனயீனம் எப்படி நேர்ந்தது? அரசியல் விழிப்புணர்வு பெறாத
யோசித்தவற்றையே திரும்பத் திரும்ப யோசித்துப் பார்த்தான் கிருஷ்ணன். தன் சிந்தனைத் தடம் சரியாக இருக்கிறதா? என்பதை முதலில் நிர்ணயிக்க வேண்டியிருந்தது. இப்போது சில வருஷங்களாக அடிக்கடி வருகிற யோசனை தான். தத்துவம் - நடைமுறை - கோழியும்
முட்டையும்.
இந்த வாழ்க்கை எவ்வளவு புதினமானது, எவ்வளவு புதிரானது. இந்தச் சவால்கள் தேடல்கள் எவ்வளவு மகத்தானவை இவையெல்லாம் இருப்பதால் இந்த வாழ்க்கை எவ்வளவு சுவாரஸ்யமானது. அழகானது

17
"ஹெலி இங்கேயிருந்து நேரே இந்தியாவுக்குத் தானே போகும்? யாரோ கேட்டார்கள்."
8 yif பின்னை?
”எம். ஜி. ஆரை சந்திச்சிட்டுத்தாான் பிறகு டெல்லிக்குப்
"அப்படித்தானிருக்கும்."
மற்றவர் ஆமோதித்தார்.
ஒரு கார்டுன்,
எம். ஜி. ஆரின் கையில் புலியொன்று பொம்மையாக ஆடுகிறது. அவர் இந்திரா காந்தி கையில் ஆடுகிறார். ஒரு பெரிய கரடி இந்திரா காந்தியை ஆட்டுவிக்கிறது. கரடியின் தொப்பியில் அரிவாள். சுத்தியல். ‘ஓ’ வரைந்ததோ ‘வி’ வரைந்ததோ, நினைவில்லை-ஒரு ஆங்கிலப் பத்திரிகையில் வெளிவந்தது. பொம்மலாட்டம் என்று தலைப்பு.
இன்னொன்று. வி'வரைந்தது “கிரான்ட் மாஸ்ரஸ் மூவ்" சதுரங்கப் பலகையில் எதிரெதிர்க் காய்களாக தமிழரும் சிங்களவரும். ராட்சதக் கைகளிரண்டு ஒரே ஆளுடையவை - காய்களை நகர்த்துகின்றன. மணிக்கட்டுப் பட்டியில் மீண்டும் அரிவாள் சுத்தியல்.
இப்படியான விஷமப் பிரசாரங்கள் எண்பத்து மூன்று ஆடியை அண்டி நடத்தவே பட்டன. அரசாங்கம் கட்சியையும் தடை செய்தது. ஆடிக் கலவரங்களின் சூத்திரதாரிகளில் ஒன்றென. தென்னை மரத்தில் தேள் கொட்ட பனை மரத்தில் நெறி கட்டிய இந்த வேடிக்கையைமொட்டந் தலைக்கும் முழங்காலுக்கும் போடப்பட்ட இந்த வம்புத்தனமான முடிச்சைப் பார்த்து அழுவதா, சிரிப்பதா என்றே தெரியாதிருந்தது. ஆனால் தடை அறிவிப்புகளையும் எச்சரிக்கைகளையும் ஐந்து நிமிடத்திற்கொருமுறை ரேடியோவில் "திரைவிருந்து" குதூகலத்துடனும் அட்டகாசத்துடனும் அறிவிப்பாளர் சொல்லிக்கொண்டிருந்த போது அருவருப்பும் ஆத்திரமுமே வந்தன. தடைசெய்யப்பட்ட கட்சிகளின் உறுப்பினர்களுக்கு சிறைத் தண்டனை சொத்துக்கள் பறிமுதலாகும் அவர்களுக்குத் தஞ் சம

Page 53
கொடுப்பவர்களுக்கும் அதே தண்டனை என்கிற பயங்கர அறிவிப்புகள் பீதியைத் தந்தன.
என்ன செய்யலாம்மென்று தெரியாதிருந்தது. முடிந்தளவு எச்சரிக்கை நடவடிக்கை எடுப்பதென்பது கடிதங்களையும், டயறிகளையும், சிவப்பு மட்டைகளையும் எரிப்பது அல்லது ஒளிப்பது என்பதாகவே இருந்தது. ஏற்கெனவே ஒரு தடவை வீடுவீடாகப் புகுந்து படையாட்கள் தேடுகிறார்கள் என்ற பயத்தில் - வடிகட்டித் தீர்த்தவை போக இப்போது இன்னொரு தடவை பெட்டிபெட்டியாக அலுமாரி அலுமாரியாகச் சல்லடை போடவேண்டியிருந்தது. முதல்தரம் வடித்தெடுத்தவை தமிழ் விடுதலை, சுதந்திரம் என்று வருகிறவை. இம்முறை மார்க்ஸிஸம்-லெனினிஸம், இப்படி முக்கியமான சிவத்தப் புத்தகங்கள் சில ஒரிஜினல் சட்டைகளைக் கழற்றிவிட்டு சினிமாக்கவர்களில் அடைக்கலம் புகுந்தன. வேறுசில தலைமறைவாயின. அண்டர் க்ரவுணர்ட் வாழ்வு, இன்னும் சில தீக்குளித்தன. எவ்வளவு கஷ்டப் பட்டு எப்படியெல்லம் சேர்த்த பொக்கிஷங்கள்.
தெருவில் இரைகிற வாகனங்களெல்லாம் அழைத்துப் போக வருகிற வாகனமாகவே காதில் ஒலித்தன. ரேடியோ ஓயாமல் வெருட்டியது. தலை மறைவாகலாமா? எப்படி எத்தனை நாளைக்கு? போதாக் குறைக்கு நாட்டிலிருந்த கொந்தளிப்பு-அவசரகாலம், ஊரடங்கு - எல்லாவற்றுக்கும் உச்சம் போல வெலிக்கடைக் கொடுரம்.வாழ்க்கை எவ்வளவு
பயங்கரமான தாகலாம் என்ற அநுபவம்.
கட்சியில் சேர்ந்ததற்குக்கூட முக்கிய காரணம் இந்த தேசிய இனப்பிரச்சினையில் கட்சி எடுத்த நிலைப்பாடுதான். இலக்கியத்திலும்அதன் பயனாகவோ அன்றி சமாந்தரமாகவோ-அரசியலிலும் இருந்த ஈடுபாடு - இயல்பாகவே, மனித நேயக் கொள்கைகளுக்கு இட்டுச் செல்ல. இந்தக் கொள்கைகளை வரித்தவர்கள் இலங்கையில் மட்டும் இனப்பிரச்சினையில் ஏனிந்தநிலை எடுத்தார்கள் என்ற கேள்வியில் அதற்கு மாற்றாய்த் தளம் தேடி அவனும் அவனொத்த தோழர்களும் சேர்ந்தமைத்த "செந்தமிழர் அமைப்பு."
அந்த நாட்களில் சக்திதாசன் ஒன்றைச் சொல்லுவான்-வேடிக்கையாக:
"தோழர், நாங்கள் இரட்டிப்புக் கவனமாக இருக்க வேணும். எங்கட

அமைப் பின் ர பெயரிலேயே இரணி டு ஆட்சேபகரமான விஷயமிருக்கு.ஒண்டு சிவப்பு மற்றது தமிழர்."
அமைப்பு ஏதோ காரணங்களால் அதே வேகத்தில் மறைய.
என்றாலுமிந்த இடைக்காலங்களில் இவை போன்ற தாக்கங்களால் கட்சி தன்னைச் சுயவிமர்சனம் செய்து சீர்ப்படுத்தி நேர்ப்பட்டமை நிகழ்ந்தது. லெனின் சொன்னது போலத் தவறு செய்யாதவர்கள் இரண்டுபேர். ஒருவன் இறந்து போனவன். மற்றவன் இன்னும் பிறக்காதவன். பரவாயில்லை, இயங்குபவன் தவறிழைப்பது தவிர்க்க முடியாதது தான். இங்கே தவறு நேர்ப்படுத்தப்பட்டு விட்டது.
பதினோராவது மகாநாட்டு அறிக்கையைப் படித்த பின் கட்சியில் சேராமலிருப்பதற்கான காரணமெதுவும் இருப்பதாய்ப் படவில்லை. இன்னும் அந்தக் காலகட்டத்தில் நேரான வெளிப்படையான நடைமுறை சாத்தியமான ஒத்துக்கொள்ளக் கூடிய தீர்வொன்றை வேறுயாரும் வைத்ததாயும் நினைவில்லை.
முன்பு ஒரு கட்டுரையில் கிருஷ்ணன் இப்படி எழுதியிருந்தான்”அவர்களோடு சிலது ஒத்துப்போகிறது. இவர்களோடு சிலது ஒத்துப் போகிறது. எவரோடும் முழுமையாக இனங்காட்ட முடியவில்லை" என்று. இந்தச் சுய விமர்சனத்துக்கும் மகாநாட்டுப் பிரகடனத்துக்கும் பின்னர் இவர்களோடு முழுமையாக இனங்காட்டுவது இயல்பான தேயாயிற்று. தன் நிலைப்பாடு நிரூபிக்கப்பட்ட திருப்தி.
தடை பற்றிய முதல் அறிவிப்பு-எதிர்பாராத வியப்பாயும்
அதிர்ச்சியாயும்-வந்தது. ஒரு முன்னிரவில் ஊரடங்குக் கெடுபிடிகள் தளர்ந்த முதற் காலையிலேயே வேணி அம்மன் கோவிலுக்குத்தான் ஓடி
18
இந்தச் சனக்கூட்டத்தைப் பார்க்க திருவிழா ஞாபகம் வருகிறது. இப்படிச் சனஞ் சேர்ந்து கனகாலத்தான். ஒலி பெருக்கியும் கோட்டை வெடியும் காதைச் செவிடுபடுத்துகிறது. திருவிழாக்கள. இரவுகளில் வாணவேடிக்கையும் இசைக் கச்சேரிகளுமாய் அமளிப்படும். முதற்

Page 54
தடவை இரவுத் திருவிழாப் பார்க்கப் போய் வெடித்துச் சிதறி வீழ்ந்து, தீப் பூக்களைப் பார்த்துப் பயந்தமை இன்னும் தான் நினைவிருக்கின்றது.
சோழகத்தில் விண் கூவிய கொடிகளுக்கும் - கோட்டை வெடிகளுக்கும் பதிலாக ஹெலிகளும் ஷெல்களும் எல்லாம் எப்படி மாறின? அம்மன் கோவில் திருவிழா வைகாசிப் பூரணையை அண்டி வருகிறது. எண்பத்தி மூன்றின் பிறகு இரவுத் திருவிழாக்ககள் இல்லையென்றாகின. ஆறு ஆறரைக்கெல்லாம் எல்லாம் முடிந்துவிடும். பகல் திருவிழாக்கள் கூட அமைதியாயிருந்தன. ஆனால், இம்முறை அப்படிக் கூட நடக்க முடியாது போயிற்று. அதற்குக் காரணமாயிருந்த பயங்கரத்தை கிருஷ்ணன் நேரிலே கண்டான். இங்கிருந்தல்ல~ ஆறு மைல்களுக்கப்பால் நின்று.
ஒரு பெண்னம் பெரிய ரி. வி. திரையில் பார்ப்பது போல எல்லாமிருந்தன. வானம் நல்ல பளிச்சிட்ட நீலமாயிருந்தது. மேகங்கள் திரைந்து ஆங்காங்கே குவிந்து கிடந்தன என்றாலும் முதல்நாள் பெய்த மழையில் கழுவிய மாதிரிச் சுத்தமான நீலம், முன்னாலும் பக்கங்களிலும் வயல் வெளி பரந்து கிடந்தது. அறுவடை முடிந்த வெறும் வயல். இடைக்கிடை சணல் பாத்திகள், மஞ்சள் சதுரங்களாகத் தெரிந்தன. வயல்களைத் தாண்டிதொடுவானில் பனை நிரைகள் குடிமனைகள், காற்று மெல்லக் குளிர்ச்சியாக வீசியது. சணல் பூ மணத்தை அது கொண்டு வந்தது. வெய்யில் பளிச்சென்று எறித்தது. அண்ணாந்து பார்த்த்ால் உச்சிக்கு நேரே மேலே நின்று கண்ணைக் குத்துகிற சூரியன்.
ஆனால், இவையெல்லாவற்றையும் ரசிக்கிற மனநிலையாயில்லை. இந்தப் பகைப்புலனில் இந்த ஒளிர்நீலவானில் மேகங்கள்களுக்கிடையிலும் பனங்கூடல் உச்சிகளுக்கிடையிலும், மறைந்தும் வெளித்தும் கொண்டு திரும்புகிற சரிகிற நேரங்களில் பளபளத்துக் கொண்டு விமானங்கள் வட்டமிட்டுக் கொண்டிருந்தன. ஆறு பொம்மர்கள் ஒரு ஹெலி என்றான் கிருஷ்ணன் இல்லை. ஐந்துதான் பொம்மர், மற்றது அவ்ரோ என நாகு திருத்தினான். இருக்கலாம். இடைவிடாமல் ரீங்கரித்துக்கொண்டு பெரிய வட்டங்களாக வளைய வந்து கொண்டிருந்தன. அந்த வட்டங்களின் மையம், சுதுமலை, மானிப்பாயாக இருக்கலாம் போலிருந்தது. அவர்களிருந்த இடத்திலிருந்து நேரே கிழக்காக இருந்தது. பட்டணமாக இருக்குமோ? " கிருஷ்ணன் தன்னை ஆறுதல் படுத்திக் கொள்ளத் தானே கேட்டான்.

"இல்லை, ஸேர்.அது இன்னும் வலப் பக்கமாகத் தெரியும். அந்தப் பனைக்கு நேரை தான் பட்டணம். இது மானிப்பாய்ப் பக்கந்தான்." நாகு சொன்னான்.
"ஏன் இவ்வளவு பெரிய வட்டமாகப் போடுகிறார்கள்? வட்டுக்கோட்டைக்குக் கூட வருகுதே.அந்தா பாருங்கோ." அன்ரனி தலைக்கு மேல் காட்டினார்.
அண்ணாந்து பார்த்தால் ஒரு பருந்தின் அளவில் ஒரு பொம்மர் வானத்து உச்சியில் வழுகிக் கொண்டிருந்தது.
எப்படியாவது உடனே வீட்டுக்குப் போய்விட வேண்டுமென அந்தரமாயிருந்தது. ஆனால் அது முடிகிற காரியமல்ல. ஹெலி நோட்டமடிக்கிற இடத்திற்குள் மோட்டார் சைக்கிளில் போவதைவிடத் தற்கொலைக்குச் சிறந்த வழி வேறிராது.கூட இருந்தால் நல்லதுதான். என்றாலும் ஆபத்தில் தலைபோட்டுத் தனக்குத் தீங்கைத் தேடிக்
பயமில்லை.
முதற் தடவை இந்த அரக்கத்தனம் அரங்கேறிய போது எங்குதான் தயாரிப்புகளிருந்தன? ஒரு வீட்டில் கூட குழி இல்லை. எதிர்பாராமல் வந்த பிரளயம் அது.
வேடிக்கை என்னவென்றால் அன்று பகல்தான் குண்டு வீச்சிலிருந்து தப்புவது பற்றிய புத்தகம் கிருஷ்ணனுக்குக் கிடைத்திருந்தது. ”கொண்டு போய் வாசியுங்கோ, ஸேர்" என்று சொல்லி குமார் ஒரு பிரதி கொடுத்திருந்தான். "இதுகும் நடக்கப் போகுதோ!" என்று வியப்போடு கேட்டுவிட்டு, படித்துப் பார்க்கலாமென்று வாங்கி வந்திருந்தான்.
எவ்வளவு விசித்திரம்-அந்தப் புத்தகத்தைக் கொண்டு வந்த அந்த மாலையே-அதை விரித்துப் பார்க்க முதலே - எதிர்பாராத அந்த நிகழ்வு நடந்தேறியது. வழமைபோல வட்டமிடும் பிளேன்கள் என்று தான் நினைத்தார்கள் எல்லோரும். காதைப் பிளக்கும் இடிகள் ஒன்றன் பின் ஒன்றாய்.குளித்துக் கொண்டிருந்தவன் சவர்க்காரம் போட்டது பாதி போடாதது பாதியாய் அள்ளி ஊற்றிக்கொண்டு வெளியே பாய்ந்தான். சூடென்றால் கொங்கிறீற் கூரைக்குக் கீழ் பதுங்கலாம் குண்டுக்கு என்ன செய்யலாம்? சத்தங்கள் மிக அருகில் தான் கேட்டன. எங்கென்பது

Page 55
தெரியாதிருந்தது. வீடு நடுங்கியது. காற்றில் கந்தக நெடி கலந்து வந்தது.பயத்திற்கு ஒலியும் மணமுமிருந்தன. அரை மணிநேர ஊழிக்காலம். பயப்பிரமை தெளியு முன்பே சேதிகள் வந்தன. தாவடியில் கருகிய அரும்பையும் மற்றவர்களையும் பற்றி. இரண்டு கிழமையாவதற்குள் அடுத்த தாக்குதல். இது காலையில். இம்முறையும் அதே வட்டாரந்தான் ஏன் இங்குதான் பாய்கிறார்கள்? ஹெலி. பொம்மர், குண்டு, சூடு - இவையெல்லாம் சேர்ந்து கிளப்புகிற சத்தம் சாவின் சங்கீதமாய்.இத்தடவை மலைவேம்படி ஒழுங்கையிலிருந்த அந்த வெறும் வீட்டில் பழி தீர்த்துக் கொண்டார்கள்.
கிருஷ்ணன் போய்ப் பார்த்தான். போரின் நாச குணம் புரிந்தது. சிதறிக் கிடந்த கட்டிடம், முறிந்து சாய்ந்த மரங்கள்.நல்ல காலம் யாரும் உள்ளே இருக்கவில்லை.
லெனின் கிராத்தில் பார்த்த பிஸ்கரேவ்ஸ்கிளே இடுகாடு நினைவு வந்தது. பாத்தி பாத்தியாய் எல்லையற்றுப் பரந்து கிடந்த கூட்டுப் புதைகுழிகள்.பாஸிஸ்ட் பசாசுகள் என்றைக்குமே மனித உயிர்களை மதித்ததில்லைத் தான். இந்த இரண்டாவது தாக்குதலுடன் பதுங்கு குழி வெட்ட வேண்டியது தவிர்க்க முடியாததாகிப் போனது. கந்தமுத்துவைக் கண்டு பிடிப்பதே கஷ்டமாயிருந்தது. ஆளுக்குச் சொல்லி வைத்துக் காத்திருந்து கண்டு தான் பிடிக்க வேண்டியிருந்தது. புத்தகத்தில் பார்த்த விஷயத்தைப் படங்கீறி விளங்கப்படுத்த முயன்ற போது கந்தமுத்து சொன்னார் “அதெல்லாம் எனக்குத் தெரியும், தம்பி. நீ இடத்தையும் ஒரு தென்னை மரத்தையும் காட்டு. அஞ்சுயார் பொலித்தீனும் பத்து உரப்பையும் கொண்டா. அவ்வளவு தான். f
வெட்டும் போது ஒரு நினைவு வந்தது. கீழால் வந்தான்களெண்டால் கண்ணில் படுமே. கூடவே ஒரு சமாதானமும் - அப்படி வரும் போது இங்கிருந்தா99 தானே.
இந்தப் பிரச்சினைகள் உச்சங் கொண்டதன் பிறகு இந்த நிலத்தைத்தான் எத்தனை தரம் எத்தனை தேவைகளுக்காக தோண்ட நேர்ந்திருக்கிறது. வியட்நாம் யுத்தகாலத்தில் கூட்டுக் குடியிருப்புகளே கூட நிலத்திற்கடியில் உருவாக்கப்பட்டனவாம். அந்த நிலைமை இங்கும் வருமா? பூமி தாய். தான் தன் பிள்ளைகளைப் பாதுகாக்கிற தாய்.

இந்தப் போரே இப்படி இருந்தால் நியூக்கிளியர் யுத்தம் எப்படி இருக்கும்? ஆனால் ஒன்று அதில் கவலைப்பட எவராவது மிஞ்சப் போவதில்லை. நட்சத்திரப் போர்த் திட்டங்களும், நியூக்ளியர். ரசாயன ஆயுதங்களும் எஸ். டி. ஐ. க்களும் ஏவுகணைகளும், அந்தப் புண்ணியத்தைக் கட்டிக் கொள்ளும்.
எதனுடைய உறுமல் எது வென்று தெரியாமல் ஆறு இயந்திரங்களும் ரீங்கரித்துக் கொண்டிருந்தன.
“என்ன பத்து நிமிஷமாக வட்ட மடிச் சுக் கொண்டே இருக்கிறான்.’ சரியாகப் பதினொன்றே முக்காலுக்கு இந்த இரைச்சல்கள் கேட்டு வெளியே வந்திருந்தார்கள்.
எதெது எங்கே என்று தெரியாமல் அந்த ஆள் தின்னிப் பறவைகள்
வட்டமடித்தன.
முழு யாழ்ப்பாணத்தையும் சுத்துறான்கள் போல இருக்கு." என்றார் அன்ரனி.
”அந்தா, போடப் போறான் ஸேர்.பாருங்கோ." என்றான் நாகு,
எங்கோ உச்சியில் வட்டமிட்டுக் கொண்டிருந்த ஒரு விமானம் திடீரென நாற்பத்தைந்து பாகை சரிவில் விரைந்து சறுகியது. ஒரு பனை மட்டத்தில் அதன் வயிற்றிலிருந்து ஒரு புகைத்திரள் வந்து கரைய மீண்டும் முன்னே மேலெழுந்தது.
W *
போட்டிட்டான்கள். என்றார் அன்ரனி.
ஆறேழு வினாடிகளின் பின்னர் சத்தம் வந்து சேர்ந்தது.
"எங்கட பக்கந்தான். " என்றான் கிருஷ்ணன், கலங்கிப் போய்.
"இண்டைக்கு அம்மன் கோவிலும் கொடியேத்தம்-இப்பதான் பன்னிரண்டு மணிக்கு."
பிறகும் ஐந்தாறு சத்தங்கள். அடுத்த நாள் தான் சரியான தகவல் தெரிந்தது.
95

Page 56
இறந்து போன ஏழு பேரில் ஐயர் ஒருவர். கிருஷ்ணனின் பால்ய கால நண்பன்-வகுப்புச் சகா ஒருவன்.
கொடி ஏறவில்லையாம்.
19
அன்று தான் - அதாவது கோவிலடிக் குண்டு வீச்சின் தாக்கங்கள் பற்றித் தெரிய வந்த அன்று தான் - காலையில் யாழ்ப்பாண வானொலியின் ஜனனம் நிகழ்ந்தது. வடமராட்சியில் விடுவிப்பு நடவடிக்கைகளும் தொடங்கின. முழு யாழ்ப்பாணமும் எனத் தொடங்கிப் பின்னர் வடமராட்சியில் மையம் கொண்ட அந்தச் சூறாவளி வீசிய நாட்கள்.
அந்த நாட்களைப் பற்றி இதழொன்றில் ‘இரா’ எழுதிய செய்தி விமர்சனக் குறிப்பொன்று கிருஷ்ணனின் நினைவுக்கு வந்தது.
சில காலமாகவே இராணுவ நடவடிக்கைகள் பற்றிப் பேசப் பட்டு வந்ததால் இந்த விடுவிப்பு நடவடிக்கை எவருக்கும் ஆச்சரியமளிக்க வில்லை. ஆனால் இதிற் கண்டதுதானென்ன?
யாழ் குடாவின் வடகரையில்-அதுவும் பருத்தித்துறையிலிருந்து காங்கேசந்துறை வரை - ஒரு மூன்று கிலோ மீற்றர் அகலப் பரப்பில் தீவிரவாதிகளை - தற்காலிகமாக? வெளியேற்றுவதில் இந் நடவடிக்கை வெற்றி கண்டுள்ளது. தீவிர வாதிகளுக்கேற்பட்ட பொருள் நஷ்டம் பற்றிக் கணக்கிடுவது சிரமம். எனினும் அவர்களைப் பொறுத்தளவில் ஆட்கள் இழப்பு என்பது மிகக் குறைவாகவே தெரிகிறது. ஆனால் தாங்கள் எதிர்பார்த்ததிலும் அதிகப்படியான இழப்புக்களுக்கு இராணுவம் முகம் கொடுக்க நேரிட்டது என்பதும் உண்மை.
இந்தப் போர் விளைவுகளை விடவும் இதனால் பொதுமக்களிடத்தேற்பட்டுள்ள தாக்கங்கள் பற்றியும் அரசின் நோக்கங்கள். போக்குகள் பற்றியுமே நாங்கள் அதிகம் கவனிக்க வேண்டியவர்களாயுள்ளோம். இந்த நடவடிக்கைகள் பொது மக்களைப் பெரும் பீதிக்குள்ளாக்கின என்பது சரியே. இதுதான் நடவடிக்கையின் முக்கிய நோக்கமுமாகும். மக்களைப் பீதியடையவும் அதன் மூலம

சோர்வடையவும் செய்வதன் மூலமும் தீவிரவாதிகளின் போராட்டத்தைக் கைவிடும்படி செய்வதே நோக்கமாயிருந்தது என ஊகிக்க முடிகிறது.
விமானக் குண்டுகளும், எரியூட்டும் பீப்பாக் குண்டுகளும், ஷெல்களும், துப்பாக்கிகளும், கத்திகளும் நூற்றுக்கணக்கான பொதுமக்களின் உயிர்களைக் குடித்துள்ளன. கொல்லப் பட்ட தீவிரவாதிகளின் தொகையிலும் இது பன்மடங்கு அதிகம். அடைக்கலந்தேடுமாறு அறிவுறுத்தப்பட்ட ஆலயங்களுட்படப் பல கட்டிடங்கள் - பாடசாலைகளும் . வீடுகளும் தாக்கப்பட்டன. ஆயிரக்கணக்கான இளைஞர்கள் சுற்றிவளைக்கப்பட்டுத் தென் பகுதிக்குத் தடுப்பு முகாம்களுக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர். இவர்களிற் சிலர் உள்ளுர் முகாம்களில் பணயக் கைதிகளாக வைக்கப்பட்டுள்ளனர். வேடிக்கை என்னவெனில், தம்மை விடுவிக்க வந்தோரிடமிருந்து தம்மைப் பாதுகாத்துக் கொள்வதற்காக மக்கள் தப்பியோட நேர்ந்தது.
சக்திதாசன் சொல்லுவான், வேடிக்கையாக - "இந்த விடுவிப்பு என்பது சமயங்கள் கூறுகிற விடுவிப்பாக இருக்கிறது. . இந்த உலக பந்தங்களினின்றும் அளிக்கப்படுகிற விடுவிப்பு. WW
படைகள் இவ்வாறு நடந்து கொள்ளும்போது, தீவிரவாதிகளே தமது ஒரேயொரு பாதுகாப்பு என மக்கள் எண்ணத் தலைப்படுவது மிக இயற்கையானதுதான்.
இராணுவ நடவடிக்யைானது தீவிரவாதிகளைப் பேச்சுவார்த்தைகளுக்கு வரச்செய்வதற்காகவே எனவும், தீவிரவாதிகள் பேச்சுவார்த்தைகளுக்குப் பின்னிற்கிறார்களெனவும் உலக அரங்கில் அபிப் பிராயமொன்றை உருவாக்குவதற்கான முயற்சிகள் எடுக்கப்படுகின்றன. உண்மையில் பின்னிற்பவர்கள் யார்?
‘இணைப்பு-சி’ என்பதை அமுலாக்க முன் வந்திருந்தாலோ அன்றி டிசம்பர் பத்தொன்பது யோசனைகளை ஏற்றுக் கொள்வதில் பின்னடைவு காட்டப்படாதிருந்தாலோ கூட நிலைமை இவ்வளவுக்கு வந்திருக்காது. இராணுவத் தீர்வை நியாயப்படுத்த முயலாமல் உண்மையாகவே சமாதானத் தீர்வொன்று காணப்படுவதில் அக்கறை இருக்குமெனில் அரசு தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ளவேண்டும்.

Page 57
இந்த அறிக்கைக்கு அடுத்ததாக, விடுவிப்புப் பற்றி நினைவுக்கு வருகிற அடுத்தது சுகுணேந்திரன் பற்றிய ஞாபகம். எதிலும் தலைபோட்டுக் கொள்ளாமல் தானுண்டு தன் பாடுண்டு என்றிருந்த அப்பாவி இளைஞன்.
உங்களைப் பாத்தா-தாடியும் ஆளும்-மொஸாட்டுக்காரன் மாதிரி இருக்கு ஸேர்." என்றான் ஒருநாள்.
ரீவிலை, ஸேர்."
ஆஜானுபாகுவான உடலும் அதற்குள்ளொரு குழந்தை உள்ளமும் கொண்ட சுகுணேந்திரன் கலகலப்பாகப் பேசுகிற, படிப்பில் அக்கறை மிக்க இளைஞன். அவனையுந்தான் பிடித்துக் கொண்டு போய் விட்டார்களாம். எல்லோருக்கும் நடக்கும்போது செய்தியாகவும், புதினமாகவும் படுகிற ஒன்று தமக்கு வேணி டியவர்கள் சம்பந்தப்படுகையில் - உணர்வுப் பரிமாணமும் பெற்று வேறொன்றாகி
20
எதிரே இடப் புறமிருந்த வரிசையிலிருந்து. யாரோ தன்னைப் பார்த்துக் கை அசைப்பது போலத் தெரிந்தது கிருஷ்ணனுக்கு வீரவாகு, “இங்கே வந்துவிடேன்" என்று சைகையால் கேட்டார். பரவாயில்லை.
இங்கேயே நிற்கிறேன்' என அபிநயங்களாலேயே பதில் அனுப்பினான்.
வீரவாகு கச்சேரி சத்தியாக்கிரகத்திலிருந்து அடிபட்டவர் என்பது இன்றுதான் தெரிய வந்தது கிருஷ்ணனுக்கு ஆள் பரவாயில்லை. கிருஷணன் கூட இந்தச் சத்தியாக்கிரகத்தில் தன் பங்கைச் செலுத்தித்தானிருக்கிறான் ஆதரவு தெரிவித்து நடந்த ஊர்வலங்களிலொன்று அவன் பள்ளியிலிருந்தும் போனது. பத்தாம் வகுப்பு மாணவர்களிலொருவனான கிருஷ்ணனும் அதிலிருந்தான்.

மண்டையைப் பிளக்கும் வெய்யிலில், தாகம் தொண்டையை வரட்டக் கத்திக் கொண்டு போனார்கள். விக்னராஜா-எச். எஸ். ஸி. வகுப்பு மாணவர்-இவர்களுக்கெல்லாம் அப்போதைய காலத்துக்கு ஹீரோ - தலைமையில் ஊர்வலம் போனது. கிரிக்கட் வீரனான எப்போதும் லோங்ஸும், வெள்ளை ஷேட்டும் கண்ணாடியுமனிந்து - ஷேட்டை அலட்சியமாக மூன்று பொத்தான்கள் திறந்து விட்டு அதற்குள்ளிருந்து சங்கிலியும், நெற்றியில் கற்றை மயிரும் ஊசலாடுகிற விக்னராஜா. ஜேக்கே கொழும்பிலிருந்து வந்த அதே சமயத்தில் அதே மாதிரி வந்தவர்தொண்டை அறக் கோஷம் போட்டார். அவர் இராணுவத்தை இங்கிலீஷில் விளிக்க வேனிடியது. இவர்களெல்லாம் “கெற்அவுட்” என்று கத்தவேண்டியது. இப்படியாக ஊர்வலம் உசாராகப் போனது.
பட்டணத்திற்குள் நுழைந்த பிறகு உண்மையாகவே ஒரு இராணுவ ட்ரக் இவர் களைத் தாண்டிப் போக நேரிட்டது. துப்பாக்கிகளுடன் உட்கார்ந்திருந்த சிப்பாய்கள் கூட வந்தால் சட்டையைத் திறந்து நெஞ்சை முன் தள்ளிக் காட்ட வேண்டும் என்ற அந்த வயதின் வீரக் கற்பனைகள்.
ஊர்வலத்தின் பிறகு நாலைந்து நாட்கள் தலையிடி காய்ச்சல், சத்தி என்று பள்ளிக்குப் போகமுடியாமலே போனது. விக்னராஜா இப்போது எங்கிருப்பார்? அந்த வருட முடிவோடு ஆளைக்கான முடியாமல் போனது. திரும்பவும் கொழும்பிலே குடியேறியிருப்பாரா? அப்படியானால் தன்னுடைய அந்தப் பதினைந்து வருட கொழும்பு வாழ்வின்போது எங்கோ எப்படியோ ஒரு தடவையாவது சந்திக்க pląUTLo6 போயிருக்குமா? விக்னராஜா வெளிநாட்டிற்குத்தான் போயிருக்க வேண்டும்-அப்போதே, பசுமையைத் தேடிப் பறந்திருக்க வேண்டும்.
ஆனால், இந்தப் போராட்டம் என்று வந்த பிறகு போனவர்கள் எத்தனை? உண்மையான பயத்திலும் பாதிப்பாலும் போனவர்கள் பாதிப்பேர் என்றால் நிலைமையைச் சுரண்டித் தம்மைப் -பலவழிகளிலும் - வளமாக்கப் பறந்தவர்கள் பாதி.
இந்த இக்கட்டான வேளையில் சொந்த மண்ணை விட்டு ஓடாமல் இங்கே வாழ்ந்து பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்த ஒவ்வொருவரும் போராளிகள் தாம். சுய இயல்புக்கும் இசைவுக்குமேற்ப அளிக்கப்பட்ட மெய்யான எந்த ஒன்றும் போராட்டத்திற்கான பங்களிப்புத்தான்.

Page 58
தன்மனச்சாட்சிக்கும் அறிவுக்குமேற்ற வகையில் செயற்பட்ட எவனும் விலகி நின்றதாய் கூறமுடியாது. இன்னொரு வகையில் போராளிக் குழுக்கள் என நேரடியாகக் குறிக்கப்பட்டவர்களைப் போல அதே அளவுக்கு இக் குழுக்களை ஆக்கபூர்வமாக விமர்சித்தவர்களும் கொள்கை கருதி விலகி நின்றவர்களுங் கூட போராட்டத்தின் சமபங்காளிகளேயாவர். போராளிகள் எனக் குறிக்கப்பட்டவர்களுடன் பரிச்சயங்களைப் பேணிக் கொள்வதனாலோ அல்லது வசதி கருதித் தம்மை அவர்களுடன் அடையாளங் காட்டிக் கொள்வதினாலோ பம்மாத்துப் பண்ணுகிறவர்களை விட, இந்தப் போராட்டத்திற்கு உண்மையான ஆக்கபூர்வமான பங்களிப்பைச் செலுத்தியவர்கள்.
போராட்டம் என்பது குழுக்கள் மட்டும் சம்பந்தப்பட்டதல்ல. அது ஒரு சமூகம், முழு இனம், பரந்த மக்கள் கூட்டம் தழுவிய விவகாரம். இயற்கையின் நியதி. முரண்களின் அறுவடை இயங்கியல் தழுவிய வளர்ச்சிப் போக்குகளில் இயல்பாகவே முளை கொள்கிற சமாசாரம். முக்காலமும் சம்பந்தப்பட்டது.
போராளிக் குழுக்களும் தலைவர்களும் போராட்டங்களை முன்னெடுப்பவர்களாயிருக்கலாம். ஆனால் அவற்றில் பங்கெடுப்பவரும் வெற்றிகொள்ள வைப்பவர்களும் மக்களேயாவர். மக்கள் பங்களிப்பில்லாதது எப்படிப் போராட்டமாகும்? அது இங்கே எவ்வளவு சாத்திமாயிற்று.
மக்கள் பங்களிப்பிற்கான தயாரிப்புகள் நடந்து கொண்டிருந்த வேளையில், அதற்கான ஆரம்ப அறிகுறிகள் தென்பட்டபோதில், முன் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு அது மெல்ல மெல்ல உருக்கொள்கையில் சிதைய நேர்ந்தது எவ்வாறு?.
பேச்சுவார்த்தைகளில் வலியுறுத்தப்பட்ட ஐந்தம் சத்திட்டத்தை அடிப்படையாகக் கொண்டு போராடவென அமைக்கப்பட்ட அந்தப் பேராயத்தில் கிருஷ்ணன் உறுப்பினனாயிருந்த தொழிற் சங்கமும் சேர்ந்திருந்தது. தங்கள் அமைப்பின் பிரதிநிதியாகக் குழுவில் அவனும் இடம் பெற்றிருந்தான். மகாநாடு, ஊர்வலங்கள். எதிர்ப்புத் தினங்கள், ஆர்ப்பாட்டங்கள் எனச் செயற்பாடுகள் சூடு பிடிக்கத் தொடங்கிய வேளையில் ஏற்பட்ட அந்த பின்னடைவு.மக்கள் போராட்டம் குறைத்து
100

மதிப்பிடப்பட்டதன் - அதற்குரிய முக்கியத்துவம் அளிக்கப்படத் தவறியமையின் விளைவு மட்டும்தானா?.
21
அந்த இடத்திற்கு வந்து பதினைந்து நிமிடங்களுக்கு மேலாகப் போகிறது. எதிரே மருத மரத்திற்கு இப்பால் குளத்தடியில் அமளியாயிருக்கிறது. முக்கியஸ்தர்கள் ஒடியாடிக் கொண்டிருக்கிறார்கள். சனக்கூட்டம் இப்போது இரு மடங்காகிவிட்டிருக்கிறது. கிருஷ்ணன் நின்று கொண்டிருக்கிற இந்த இடத்திற் கூட இப்போது நூறு பேருக்குமேல் சேர்ந்து விட்டார்கள். எல்லோர் முகத்திலும் மகிழ்ச்சி, பெருமிதம், பரபரப்பு.கிருஷ்ணன் மீண்டும் பக்கவாட்டுச் சிந்தனை பற்றி நினைக்கிறான். கூடுதலாக எதிர் பார்க்கிறார்களா?.
கண்களை இடுக்கிக் கொண்டு மேற்கு வானத்தைப் பார்த்தான். ஒன்றும் தெரியவில்லை. கும்பலின் இரைச்சலையும் எங்கோ கத்துகிற காக்கையின் குரலையும் கூடச் சோளகம் சுழற்றிக் கொண்டு போய்
விடுகிறது. இந்த வெளியில் இந்த வானத்தைப் பார்க்கிற
விளையாட்டு.கிருஷ்ணனும் கூட்டாளிகளும் விடலைகளாயிருந்த காலத்தில் அவர்களுக்குப் பிடித்தமாயிருந்த (b விளையாட்டு.இரவுத் திருவிழா வேளைகளில் சனங்கள் ஓரளவு
கூட்டமாக நிற்கிற இடத்தருகில் போவார்கள். ஒருவன் கொஞ்ச நேரம் வானத்தை உற்றுப் பார்த்துவிட்டு, வலு ஸிரியஸாக மற்றவனைத் தட்டி மேலே காட்டுவான்.
”அந்தா, அந்தா.
ஓமோம்."என்பான், மற்றவன். இப்போது கோஷ்டி முழுவதும் இருவரையும் சுற்றிக் கொள்ளும்.
”அந்தா, அந்தா.
"ஒமோம். இங்கை.
“இல்லையடா. அது.
W f7 போடா, அது தான்.
101

Page 59
அருகில் நிற்கிற சனக்கூட்டம் இவர்களைச் சூழ்ந்து தானுமிந்த இந்தா-அந்தாவில் பங்கேற்கத் தொடங்க இவர்கள் ஒவ்வொருவராகக் கழன்று விலகி, எட்ட நின்று தாங்களில்லாமலே தொடர்கிற வேடிக்கையை ரசிப்பார்கள்.
இதுபோல, இன்னும்மொன்றிருந்தது. ஆனால் அது பகிடியில்லை. புதிர். அந்த அறுபதுகளின் நடுப்பகுதி மாலைகளில் ஐந்தரை, ஆறு மணிப்போதில் அது நிகழும். தினசரி, தேர் முட்டி மீதிருந்து மேலைவானின் உச்சியைப் பார்க்கும் போதில் அநேகமாக அது தெரியும். சரிந்து போன சூரியனைப் பிரதிபலிப்பதே போல ஒரு ஒளிப் பொட்டு. எக்கச்சக்கமான உயரத்தில் சீரான வேகத்தில் சறுக்கிக் கொண்டே போகும் தெற்கிலிருந்து வடக்காக. அது கண்ணுக்குப் பட நேர்ந்த ஆரம்ப நாட்களில் ஜெற் விமானமா? செயற்கைக் கோளா? என்று பரபரப்பான விவாதம் நடந்து, பிறகு என்ன வென்றில்லாமலே அது இவர்கள் சூழலில் ஒன்றாகிப் போனது.
22
காற்றின் இரைச்சலோடு சேர்ந்தொத்த அந்த மெல்லிய சுருதி. அதை மீறிக்கொண்டு சனங்கள், கிருஷ்ணனும் கவனித்தான். சத்தம் நெருங்கி வந்தது. ஹெலிதான். ஒன்றல்ல, இரண்டும் சத்தம்.
தென்மேற்கிலிருந்து இரண்டு ஹெலிகள் - வழமையானவையல்ல என்று பார்த்தவுடன் தெரிந்தது. தாழப் பறந்து தோன்றின. ஆனால் இதென்ன? வெளியைத் தாண்டி வடக்கே போய் மறைந்து.வட்டம் போட்டு வருவார்களென எதிர்பார்த்த சனம் அண்ணாந்து அதிசயிக்க.ஏன் இறங்க முயலாமல் நேரே போகிறார்கள்? என்றாலும் இவைதான். साँी. அழைத்துப் போக இந்திய ஹெலிகள் வந்து விட்டன. இனி என்ன நடக்கும் சமாதானப் பேச்சின் முடிவு எப்படி இருக்கும்? சமாதானம் பிறக்கத்தான் வேண்டும். அது அவசியம். அத்தோடு நியாயமும். அது மிக அவசியம். இவ்வளவு இழப்புக்களுக்கும் கஷ்டங்களுக்கும் எதிர்பார்ப்புகளுக்கும் ஈடுகட்டுகிற தீர்வுதான் நியாயமானது. அது தான் சமாதானத்தைக் கொண்டு வரும். நியாயமும் சமாதானமும் ஒன்றிலொன்று தங்கியிருக்கின்றன.
102

சத்தம் மீண்டும் பலத்துக் கேட்டது. ஹெலிகளிரண்டு திரும்பி வருவது தெரிந்தது. மிகப்பதிவாக, வெளியைச் சுற்றி வந்தன. கரும்பச்சை, இங்கத்தையச் சகாக்களிலும் இவை பெரிதாய்த் தெரிந்தன. ‘இந்தியவான்படை' என ஆங்கிலத்தில் எழுதியிருந்தது.
ஒரு ஹெலி அதே உயரத்திலேயே சுற்றிப்பறக்க மற்றது பனை தென்னை வட்டுக்களைத் தழுவுவது போலத் தாழவந்து இறங்குகிற இடத்திற்கு மேலே நிலை கொண்டு-முன்புறம் கோவிலைப்பார்க்க நின்றுதளம்பாமல் மெல்ல மெல்லப் பதிந்தது.
இராட்சத விசிறிகளின் சுழற்சியில் புழுதிப் படலம் கிளம்பிப் படர்ந்தது. மக்கள் கோஷமிட்டார்கள். மெல்லப் பதிந்த அசுரப் பறவை
கால் பதித்தது.
1. 16-08-87 லிருந்து முரசொலி" வாரமலரில் தொடராக
வெளியானது.
s. பின்னர் 87லிலும் 90லும் இரு தடவைகள் நூலுருப் பெற்றும் - அசம்பாவிதங்களால் பிரதிகள் அழிபட்டன.

Page 60
இர்ைனொரு
வெணர்னிரவு
ரவு ஏழரை மணி வெய்யிலில் எங்கள் நிழல்கள் நீண்டு விழுந்தன. 9. அது வெண்ணிரவுகளின் காலம். லெனின்கிராத் நகரின் நெவ்ஸ்கி நெடுஞ்சாலையிலிருந்து பிரிந்த ஒரு தெருவில் நாங்கள் நடந்து
கொண்டிருந்தோம். நான், அமிதாக்கா, துளசி, மொஹம்மட்
நான், நான்தான். அமிதாக்கா கொழும்புப் பக்கம். சிங்களம் தாய்மொழி. உண்மையில் எனக்கும் துளசிக்கும் ஒரு அக்கா மாதிரியே இருந்தா. துளசிக்கு, தமிழ் நாடு, சென்னை. ஆரம்பத்தில் துளசிக்கும் அமிதாக்காவுக்கும் இடையில் ஒரு இணைப்புக் கண்ணியாக நான் இருந்தேன். ஆனால், என்னையும் மேவி, வலு கெதியில் ஒரு உறவு அவர்களைப் பிணைத்தது. எனக்கு ஆச்சரியமாய்ப் போயிற்று. எனக்கு அதிகம் உற்றவர் எவர் என்று தெரியாதிருந்தது. அடுத்து மொஹமட் ரோசாப்பூ நிறமும், கறுத்த சுருள் முடியும், பூனைக் கண்ணும், சிவப்பு உதடுகளும் கொண்ட டுனீஷியன். துளசியின் நண்பன். இந்தக் கதைக்கு சம்பந்தமில்லை, என்றாலும் அன்று கூட இருந்தான்.
104.

ஐஸ்கிறீமாகக் குடித்து அலுத்து, தேனீர் தவண்டையில் ‘புலோச்னயா ஒன்றுக்குள் நுழைந்து, மொறுமொறுக்கிற புதுப்பாண் வாசனையை ரசித்தபடி வரிசையில் நின்று கறுப்புத் தேநீரும் பாணுமாய் மேசையடிக்கு வந்து, வேலையை முடிக்கு மட்டும் ஒருவரும் பெரிதாக ஒன்றும் பேசவில்லை.
பிறகு வெளியே வந்தபின் துளசி சொன்னாள்:
“என்னதானிருந்தாலும் இந்த ஜோர்ஜியத் தேயிலை எல்லாம் எங்கள் தேயிலைக்குக் கிட்ட வர முடியாது. 9.
“உண்மை. ’ என்றா அமிதாக்கா,
“உலகிலேயே இந்தியத் தேயிலைதானே திறந்தேயிலை.
“என்ன சொல்கிறாய், துளசி?.
நானும் அமிதாக்காவும் ஏககாலத்தில் கேட்டோம்.
கணையாழி - 1988 இன்னொரு வெண்ணிரவுத் தொகுதி - 1988
105

Page 61
குயில் வீடு
ருந்தாற் போலக்கேட்ட குண்டுச் சத்தத்தில் திடுக்கிட்டான். 9. அந்தப் புள்ளிக் குயிலும் திடுக்குற்றுச் சிலிர்த்துக் கொண்டது.
தலையை உயர்த்தி, செம்மணிக் கண்களை உருட்டிப் பார்த்துவிட்டு, குழை அடர்த்திக்குள் ஊர்ந்து மறைந்தது.
இந்த மரம் பலமாடிக் கட்டிடம் போல அவனுக்குப் படுகிறது. பறவைகளின் பலமாடி வீடு. அடிமரம் ஒரே நேராய் நெடுத்திருக்க, ஆளுயரத்திலிருந்து கொப்புகள். ஒவ்வொரு கணுவிலும் எல்லாப் பாட்டிலும் கிளைகள். கிடையாக வளர்ந்து பரவி.இதற்கு ஆளுக்கொரு பெயர் சொல்கிறார்கள். பக்கத்து வளவில் மதிலோடு நிற்கிறது. பயன் என்னவோ இந்தப் பக்கம். சித்தப்பா வீட்டுக்குத் தான் அதிகம் என்று படுகிறது. காலை வெயிலில் ஒரு பொட்டுக் கூட இந்தப் போர்ட்டிகோவில் விடுவதில்லை.
சத்தம் மீண்டும் கேட்டது. குண்டல்ல - ஷெல். அடுத்தடுத்து இரண்டு. இன்று வேளைக்கே தொடங்கியாயிற்று. வீட்டைப் பார்க்க வெளிக்கிடவே முடியாது போலப் பட்டது.
106

படியில் உட்கார்ந்தான் இன்னும் கேட்கிறதா?
« இல்லை; பிறகு காணவில்லை. நின்று விட்டதாகத்தான் படுகிறது. பெரிய பிரச்சினை இல்லைப் போலும். இன்றும் கொஞ்சம் பார்த்துவிட்டுப்
புறப்படலாம்.
இந்த மரத்தில் குயில்களைத்தான் அவன் கண்டிருக்கிறான். இரண்டு கருங்குயில்களும், இரண்டு புள்ளிக் குயில்களும் என்றொரு கணிப்பு. அது எவ்வளவு சரியென்று தெரியாது. எங்கோ அவை போகும். வரும். ஆனால் வாசம் இங்குதான். பாம்புகள் போல வளைந்து - ஊர்ந்து பழந்தேடி உண்டுவிட்டு, ஒதுங்கிச் சிறகடிக்கும் வீடு இதுதான் அவற்றிற்கு. குயில்களின் இந்த வீடு எவ்வளவு அழகு எவ்வளவு நிம்மதி! இரவிலுங்கூட சில சமயம் சிறகடியும் குரலொலியும் கேட்கும்.இந்த மூன்று வாரப் பழக்கமாகி விட்டது.
சத்தங்கள் கேட்ட திக்கில்தான் அவன் வீடு. இப்படிச் சத்தங்கள் கேட்கத் தொடங்கிய இந்த ஒரு மாதத்தில், அவன் அயலில் ஐந்தாறு வீடுகள் அநியாயமாய்ப் போயின. கிடைத்ததை எடுத்துக்கொண்டு அவனும் குடும்பமும் இங்கே வந்தார்கள். விமானங்கள் ஒரு தடவை வட்டமிட்டுப் போய் அடுத்தாட்டம் திரும்பி வருவதற்குள் அவசர அவசரமாக ஓடி வந்தார்கள்.
வீடு என்ன கதியோ, இப்போது? இடையில் ஒரு தரம் மட்டும் போய்ப் பார்த்துவிட்டு வரமுடிந்தது. ஒவ்வொரு நாளும் காலையில், “ஒருக்கால் பாத்திட்டு வாறன்." என்று புறப்படுவான். மனைவி மக்கள் மறிக்க ஏதோ சொல்லிச் சமாதானம் செய்துவிட்டுப் புறப்பட முடியும்.
ஆனால், வீட்டடிக்குப் போய்.
"சந்திக்கு அங்காலை போறது புத்தியில்லை. போகாதையுங்கோ." என்பதைக் கேட்கிற போது, நெஞ்சில் கணக்கிற வேதனையும் சைக்கிள் உழக்கிய களைப்புமாகத் திரும்ப நேரிடும்.
O7

Page 62
செய்யக் கூடியதைச் செய்துவிட்டு, ஓய்ந்து-அல்லது ஒடிந்துஉட்கார்கிற நேரங்களிலெல்லாம் இந்த மரந்தான் ஒரு உலகாய் அவன்
இருந்தாற் போல அந்தச் சத்தம். மீண்டும். இது வலுகிட்ட இல்லை; இது குண்டுமல்ல, ஷெல்லுமல்ல. மதிலுக்கு அந்தப் பக்கத்தில்.
ஒவ்வொரு ஒலியுடனும் மரம் ஒரு தடவை நடுங்கிக் குலுங்கியது. பழுத்த இலைகள் சொரிந்தன. இந்த மரத்தின் அடியில் விழுகிற கோடரியின் சத்தம்! அவன் திகைத் ததான். என்ன இது? தறிக்கிறார்கள்?.ஏன்? பதுங்கு குழி மூடக்கூட இது உதவாதே?
குயில்கள் எங்கே போயிருக்கும்? இனி எங்கே போகும்?.தாங்க முடியாதிருந்தது.
மதிலால் எட்டி ‘தறியாதையுங்கோ’ என்று கூவ வேண்டும் போல அவதி.எழுந்தான்.
திடீரென மீண்டும் படியில் குந்தி விம்மலானான்.
ஈழநாதம் - 1990 யாழ்இனிது - 1998

மூண்டெரியுங் தீயின்
மூலப்பொறி
நான் மனிதன்'
நீ தமிழன்'
நான் மனிதன்'
இல்லை. நீ தமிழன்' நான் மனிதன், நான் மனிதன்'
நீ தமிழன். நீ தமிழன்'
சரி நான் தமிழன். நான் தமிழன்'
09

Page 63
மணர்னும் முளையும்
ண்டும் ஊரடங்கு அறிவித்தல், இடம் பெயரச் சொல்லும் எச்சரிக்கைகளால். எந்த நேரமும் ஒரு ஊழி தொடங்கலாம். தெருவில் மூட்டை முடிச் சுக்களும் முகத்தில்
கவலைகளுமாய்ச் சனங்கள்.
இடையில் ஒரு முச்சில்லு மிதிவண்டி பயணிகளிருக்கையில் இரண்டு பெண்கள். மருத்துவமனையால் வீடு திரும்புங்கோலத்தில் ஒரு இளம் பெண் அருகில் துணையாய் ஒரு மூதாட்டி அவள் அணைப்பில் துணிச் சுருளிற் துயிலும் ஒரு புத்தம் புதுப் பூக்குஞ்சு.
அ3இs2,
110

இளங்கணர்று /
இசைவாக்கம்?
பள்ளிப் பக்கம் பிரச்சினை. படிப்பும் வேண்டாம் பள்ளியும் வேண்டாம்.பிள்ளை வந்திடட்டும். கடவுளே."பெற்றவர்கள் நேர்ந்தார்கள்.
பொம்மர்களும் ஹெலிகளும் போய்த் தொலைய, பிஞ்சுகள் வந்தார்கள். பள்ளியின் வாயிலில் பதட்டமும் பயமுமாய்ப் பார்த்திருந்தவர்கள் பிள்ளைகளை அணைத்துக் கொண்டார்கள்.
‘பயந்திட்டியா ராசா?’
‘அம்மா நாலு குண்டுதான் போட்டவங்கள்.ஒருக்கா ஒரு பொம்மர் பதிஞ்சுது. ஆனா குண்டு போடாம எழும்பி விட்டுது.அது ஏன் அம்மா?’
-வெளிச்சம் - ஆடி/ஆவணி-1992
ஆஇs2,
111

Page 64
வேலிகளினர் கதை
லோ.." - சொன்னவன், இரண்டு எட்டு முன்னால்
வைத்துத் திரும்பிப் பார்த்தான். சிங்கள் கிருஷ்ணனைப் பார்த்தார்.
கிருஷ்ணன் சிங்கரைப் பார்த்தான். முன்னே போங்கள் என்பதுபோல ஆளுக்காள் தலையாட்டினார்கள். அது பயத்தாலல்ல, மரியாதைக்காக என்பது இருவருக்குமே தெரியும் ஒரு கணத் தயக்கத்துக்குப் பிறகு வயதுக்குக் கிருஷ்ணன் கொடுக்கிற மரியாதையை ஒப்புக்கொண்டவராக-சிங்கள் முன்னால் வந்து அந்தச் சிப்பாய்க் கருகில் போய் நின்றார். அவருக்குப் பின்னால் கிருஷ்ணன் போய்ச் சேர்ந்து கொண்டான்.
திரும்பிப் பார்த்தார்கள். அந்தப் பெரிய விறாந்தை முழுவதும் சனமாய் நின்றது. அம்மா, வேணி அக்கா, பிள்ளைகள்-எல்லோருக்கும் முன்னால், கிருஷ்ணனையே பார்த்தபடி நின்றார்கள். உனக்கேன் இந்த இருக்கேலாத வேலை? சாப்பாடெதுக்கு? இங்கே இருக்கிற-இந்தமற்றவர்களைப் போல, நீயும் நிண்டிருக்கேலாதா? அவனுக்குக் கேட்டது. போய் மினைக்கெடாமல் பத்திரமாய் வந்துவிடு என்று அந்தப் பார்வைகள் சொல்லின. கிருஷ்ணன் இதுக்கென்ன பயம்? என்பதாக அவர்களை உற்சாகப்படுத்துவது போல-ஒரு மெல்லிய முறுவலுடன் தலையசைத்தான்.
112

"சலோ"-சிப்பாய் திரும்பவும் சொன்னபடி தெருவிலிறங்கினான். சிங்கரும் அவரைத் தொடர்ந்து கிருஷ்ணனும் இறங்கினார்கள். படலைக்கு வெளியே நின்ற நாலு ஆட்கள் இரண்டிரண்டு பேராய் முன்னும் பின்னும் சேர்ந்து கொள்ள ஒரு வரிசை உருவானது.
இந்த வீட்டிற்கு முன் வீட்டில் சிப்பாய்கள் நிறையப் பேர் நின்றார்கள். அநேகமாக எல்லோருமே மதிலின் மேலால் இங்கு எட்டிப் பார்த்தபடி முன்னாலிருந்த காவற் கூட்டுக்குள் நின்றவன் ஏதோ உரத்துச் சொல்லிவிட்டுச் சிரித்தான். நெய்யும் கடலையெண்ணையும் கலந்த வடை மூக்கிலடித்தது. அவர்களைப் பார்க்காமல் தாண்டிப் போனார்கள்.
மெல்லத்தான் நடக்க வேண்டியிருந்தது. முன்னால் போகிறவன் ஆறுதலாய்ப் போகிறான் போலும், திரும்பி, தாங்களிருந்த வீட்டின் விறாந்தையில் நிற்பவர்களைத் தெரிகிறதா? என்று பார்க்க நினைத்தான் கிருஷ்ணன், வேண்டாம். இவர்கள் ஏதாவது நினைக்கக்கூடும். அதோடு, இங்கிருந்து பார்த்தால் மதிலுக்கு மேலால் நிற்கிற-மரங்கள் மறைக்கும்.
சிங்கரின் நெடிய உருவம் முன்னால் கையெட்டும் தூரத்தில் போய்க் கொணி டிருக்கிறது. வேட்டியின் கீழ் - அவரது ஒவ்வொரு அடியெடுப்புக்கும் -அந்தக் கறுத்தத் தோல் செருப்புக்கள் டக்டக் கென்று சீரான ஒலி கிளப்பிக் கொண்டிருக்கின்றன. சிங்கள் வழமையான கோலத்தில் தான் இருக்கிறார். வெள்ளை வேட்டி நஷனல், வெள்ளைச் சால்வை அது கழுத்தைச் சுற்றிப் போடப்பட்டிருந்தது. நரை மயிரடர்ந்த தலை, வழமையாகத் திருநீறும் சந்தணமுந்துலங்குகிற நெற்றியில் இன்று திருநீற்றை மட்டும் பார்த்த ஞாபகம். எப்படியோ ஆள் தொண்ணுறு வீதமாவது வழமையான கோலத்தில்!
கிருஷ்ணன் தன்னைப் பார்த்தான். மண்ணிற பிஜாமா சாரம், ரப்பர்ச் செருப்பு, வெளியே விட்ட வெள்ளை அரைக் கைச் சட்டை.
பரவாயில்லை, போய் இந்தச் சாப்பாட்டு விஷயத்தை ஒழுங்கு பண்ணிவிட்டு வந்து மத்தியானம் குளித்து மாற்றிவிட்டால் சரி. ஆனால் முகாமிலிருக்கிற சனத்தைப் பார்த்தால் மத்தியானமாவது குளிக்கமுடியுமோ, தெரியவில்லை. வந்து பார்க்கலாம். எப்படியும்
113

Page 65
இவ்வளவு பேருக்கும் இந்த மூன்று நாலு நாளைக்கும் சாப்பாட்டை ஒழுங்கு பண்ணிக்கொள்ளத்தான் வேணும்.எத்தனை பேர், எத்தனை குஞ்சு குருமன்.நாங்கள் போய்க் கதையாமல் சரிவராதாம்.
தெருக்கரையில் ஆங்காங்கே தேங்கி நிற்கிற வெள்ளத்தை விலக்கி நடக்க வேண்டியிருந்தது. கழுவி விட்ட நிலத்தில் காலை வெய்யில் அழகாய் விழுந்தது. நீண்டு நகரும் நிழல்கள். தடம் படாத தெருக்கரை மண், மழை பெய்தது முந்தநாளிரவு
எங்கே போகிறோம்? எங்கேயிருக்கிறது செஞ்சிலுவை அலுவலகம்? போனால் உடனே கவனித்து அனுப்பி விடுவார்களென்று பி. கே. சிங் சொன்னான். வேளைக்குத் திரும்பி அம்மன் கோவிலடிப் பக்கம்
இருக்கலாம்.
2
சரிதான், முன்னால் போகிறவன் இடது பக்கமாகத்தான் திரும்பப் பேகிறான்.
திரும்பினார்கள். என்ன, இது? கிருஷ்ணன் திகைத்தான்.
தெருவின் இருபுறத்து வேலிகளும் எரிந்து கதிகால்கள் கருகி.மதில்கள் உடைந்து, கதிரேசு கடைப் பலகைகள் கூட.
இதென்ன?
உயிரசைவே இல்லாத வெறுமை உறைத்தது. எங்கோ. ஒருதனிக்காகம் இரண்டு தரம் கத்தியது. ஆட்களை அமுக்குவது போலிருந்த அமைதி இந்தக் கத்தலில் இன்னமும் பெரிதாய்க் கனத்தது.
சிங்கரை நிமிர்ந்து பார்ாத்தான். அவருக்கும் உறைத்திருக்க வேண்டும். - பார்த்துப் பார்த்து நடப்பதில் புரிகிறது. கதைக்க முடியாதா? இயந்திரங்கள் போல முன்னும் பின்னும் கூட வருகிற படை ஆட்கள்.
114

இவர்கள் ஏனிப்படி எங்களைக் கூட்டிக் கொண்டு போகிறார்கள். ஏதோ கைதிகளைக் கொணி டு செல்வது போல? இரண்டு சிவிலியன்களைக் கூட்டிப் போக ஏன் இவ்வளவு பாதுகாப்பு?.முன்னால் ஒருத்தன் துவக்கோடு - அதை நீட்டிப் பிடிக்கிற விதமும் நடக்கிற நடையும் எச்சரிக்கையாக அடிவைக்கிறான். அங்குமிங்கும் பார்த்தபடி அடுத்தவர்களும் அதே மாதிரி பின்னால் வருகிறார்கள் - அவர்களைத் திரும்பிப் பார்க்க முடியாது-அவர்களும் அப்படித்தான் வருவார்கள்.
எங்கே போகிறோம்? என்னத்துக்கு இப்படி? முட்டாள்தனமாக வந்து மாட்டிக் கொண்டோமா? வேலியாயிருந்தவற்றின் விளிம்போடு படர்ந்திருந்த பச்சைப் புல் வரிசைக்கும், வாரடித்த வெள்ளைமணற் கரைகளுக்குமிடையில் கரைந்துங் கலைந்துங் கிடக்கிற கரித்திட்டுக்கள். தெருவின் தாரிலும் குறுணிக் கற்களிலும் அவர்களின் முரட்டுச் சப்பாத்துக்கள் நறுநறுக்கிற நடையொலி. அதுமட்டுமே கேட்கிற அமைதி. இந்த வெறுமை, இந்தப் பயங்கரம்.எங்கள் ஊர்தானா இது?
இல்லை. இது கனவில்லை.
நடந்தபடியிருந்தார்கள். பொன்னையர் வீட்டுப் போட்டிக்கோ கூரையின் மேல் அவர் வளவின் முன்மதில் கல்லெல்லாம் ஏறி. அது ஒரு கொத்தளமாகி, ஒட்டையிலிருந்து ஒரு துவக்கு நீட்டிக் கொண்டிருந்தது.
துரைலிங்கம் வீட்டு வேலி வெட்டி அடிவளவு வரை தெரிகிறது. கார்க்கொட்டிலில் துரையரின் மொறிஸ் மைனர் எரிந்து கருகி வெறுங்கோதாய். இந்தப் பக்கத்துச் சனங்களையெல்லாம் எங்கே கொண்டுபோய் விட்டிருப்பான்கள்? அம்மன் கோவிலிலா? எங்களைப் போல இந்தக் குறிச்சியும் இவர்களிடம் அகப்பட்டுக் கொண்டதா இல்லை, சுற்றி வளைப்பிற்கு முன்பே மாறிவிட்டதா?
மணத்தது. மணம் நெருங்கி வந்தது. இங்கே எங்கோ கிட்டத்தில்தான்.
அந்தா, குணம் வீட்டு மதிலின் பின், இரண்டு இடங்களில் ஒட்டைகளுக்கூடாக நீட்டிய துவக்குகள், காவற் கூடுகள். குணம்
வீட்டுக்கு அந்தப் பக்கமும் அதேபோல் இரண்டு, பாக்கிய மக்கா வீடு,
15

Page 66
பரஞ்சோதியர் வீட்டு மதில்களின் கற்கள்! செல்வத்தின் சைக்கிள் கடையின முன்னாலிருந்த பத்தியின் தகரங்களையுங் காணவில்லை. அவைதான் போலும், மேலே முழு இடமும் புயலடித்து ஓய்ந்த மாதிரி இல்லை, இனித்தான் புயலோ?
முன்னால் போனவன், வலதுபுறம் சட்டெனத் திருப்பினான். பரமசிவம் வீட்டுக்குப் போகிற வண்டில் பாதை திரும்பினார்கள்.
3
இதென்ன? மயிர்க் கொட்டி மொய்த்தது போல? இத்தனை பேர்களா?
சிலிர்த்தது.
இதுவுங் கனவில்லை.
இங்கே ஏன் வந்திருக்கிறோம்? இதற்குள் எப்படி நாங்கள் தேடி வந்த இடம் இருக்க முடியும்?. இத்தனை பேரிருந்தும் எவ்வளவு அமைதி இந்த முடக்கினுள் இத்தனை சிப்பாய்கள் இருப்பார்கள் என்று யார் நினைப்பார்கள்?.
வேலிக்கரைகளோடு-வரிசை.வரிசையாய்-குந்தியும் சப்பாணி கட்டியும்.பீடிகளை உறிஞ்சிய படி. நெய் மணத்தையும் மீறி எங்கும் அது மணத்தது.
கிருஷ்ணனுக்கு வயிற்றைப் பிசைந்தது. எங்களுரில் இப்படி கூர்க்காக்கள் மொய்ப்பார்களென்று எவராவது எப்போதாவது நினைத்திருக்க முடியுமா?
இவர்களின் வரிசை நடுவால் நடந்தது. இங்கொன்று அங்கொன்றாக, ஆங்கார உறுமல்கள், முணுமுணுப்புக்கள். இருந்தாற்போல் ஒரு சீழ்க்கை எல்லாமுகங்களும் ஒரே மாதிரி மரத்துக்கிடந்தன. பார்க்காமல் நடந்தார்கள். திடீரென ஒருவன் தலையை உயர்த்திக் கறுவினான். கத்தியசத்தம் திடுக்கிட வைத்தது. எல்ரிரிஈ என்ற மாதிரிக் கேட்டது. சிரித்தால் என்ன நடக்கும்? இந்த நேரத்திலும் வருகிற சிரிப்பை கிருஷ்ணன் மறைத்துக் கொண்டான்.
116

பரமசிவம் வீட்டுக்குத்தான் நேரே போனார்கள். கேற்றில் நுழைந்து திரும்பியதும், சிவத்தார் வளவு விரிந்து கிடந்தது. மேலே அடர்ந்த புற்றரையும். இந்த இடத்தில் சந்தடியில்லை. ஆனால், நேரே முன்னால், சற்றுத் தொலைவில், வீட்டின் போர்ட்டிக்கோ பரபரத்துக்கொண்டிருந்தது.
கொஞ்சத் தூரம் போனார்கள். ஒரு தென்னையருகில் வந்ததும் அழைத்து வந்தவன் இவர்களை நிற்கச் சொல்லிக் கைகாட்டினான்.
நின்றார்கள். அவன் மட்டும் நேரே போனான்.
இது இவர்களின் இடம். அலுவலகமோ, முகாமோ, எதுவோ. அதிலும் இந்த அமளியைப் பார்த்தால் பரமசிவத்தாரின் பழைய மோட்டார் சைக்கிள் எண்ணெய் சொட்ட நிற்கிற - இந்தப் போர்ட்டிகோதான் அவர்களின் கட்டளை மையமாகத் தெரிகிறது.
முப்பதடிக்கு முன்னால் அந்தப் போர்ட்டிகோ, அங்கு நடக்கிறதெல்லாவற்றையும் நன்றாகப் பார்க்க முடிகிறது. நடுவில் சோஃ பாக் கதிரையில் ஒருவன். அதிகாரி போலும். அவனும் கூர்க்கா. சற்றுத் தள்ளி, ஒரு மேசையின் மேல் தொலை தொடர்புக் கருவிகள். அவற்றின் முன்னால் மூன்று பேர். கதிரைகளில் உட்கார்ந்து மாறி மாறிக் கத்திக் கொண்டிருந்தார்கள். வெவ்வேறு இடங்களுக்கு இங்கிருந்து. கட்டளைகள் போவது மாதிரி இருந்தது. வயர்லெஸ் காரர்களின் பின்னால், அவர்களின் கதிரைகளில் கையை ஊன்றி வளைந்து ஒரு நெட்டை மனிதன். கட்டளைகள் இட்டபடி அவன் கூர்க்கா அல்ல. நல்ல சிவலை.
கறுத்தச்சீருடை முழுமொட்டையாக மழித்திருந்த தலை.
இவர்களைக் கூட்டிப் போனவன். கூர்க்காவின் முன்னால் போய்
நின்று சல்யூட் அடிக்கிறான். ஏதோ சொல்வது தெரிகிறது. திரும்புகிறான்.
அவன் வருவதைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். அருகில் வந்ததும், “ஆவ்!.’ என்றான,
முகாமிலிருந்து புறப்பட்ட போது வந்த "சலோ" வுக்குப் பிறகு அவன் வாயிலிருந்து வருகிற அடுத்த வார்த்தை இதுதான்.
117

Page 67
4
காலுக்குமேல் காலைப் போட்டுக் கொண்டிருந்த அதிகாரி, இவர்களையே உறுத்துப் பார்த்தபடி இருந்தான். தொப்பி மடியிலிருந்தது. அங்குமிங்கும் நரையோடிய தலை, ஐம்பது வயதிருக்கலாம். அருகில் போன பிறகு தான் அங்கே வேறு கதிரைகளில்லாதது கண்ணில் பட்டது.
கூர்க்கா ஒன்றுமே பேசவில்லை. இவர்களையே இன்னமும் உற்றுப் பார்த்தபடி இருந்தான்.
“குட்மோணிங்’ என்றார் சிங்கள்.
அவன் முறைத்தான்.
‘வெயிட், தேர்!.’ உறுக்கியபடி தூணைக் காட்டினான்.
“விக்ரம்சிங்!”
அழைத்து வந்தவன் அவசரமாக முன்னால் வந்தான். அதிகாரி சொன்னதை அட்டென்ஷனில் நின்று கேட்டான். சல்யூட் அடித்துத் திரும்பி நடந்தபோது, அந்த விக்ரம்சிங்கின் பின்னால், அவனோடு கூடவந்த நாலுபேரும் போனார்கள்.
கிருஷ்ணன் திடுக்கிட்டான். நாங்கள் இங்கே வந்திருக்கவே கூடாது? சாப்பாடாவது, ஒன்றாவது.போகிறவர்கள். பி. கே. சிங்கின் ஆட்கள். இவர்களைக் கொண்டு வந்து விட்டு விட்டுப் போகிறார்கள் இனித் திரும்புவது?.இந்தச் சூழலில் தனியே இவ்வளவு தூரமும் அரைமைல் தானென்றாலும் -போக முடியுமா? இவர்கள் யாராவது கொண்டு போய் விடுவார்களா?. நடக்கிற நடப்பைப் பார்த்தால், போகத்தான் முடியுமா? என்பதே சந்தேகமாயிருக்கிறது.
கிருஷ்ணன், புறங்கையால் முகத்தைத் துடைத்துக் கொண்டான். பி. கே. சிங்கின் முகத்தில் பொய்யோ, மெய்யோ புன்சிரிப்பாவது தெரிந்தது. கதிரையிலிருக்கிற இந்தக் கூர்க்கா முகத்தில் அதன் சாயலையே காணவில்லை. பிடித்துத்தின்று விடுகிறவன் மாதிரி. நெஞ்சு uLUL-553).
வீட்டுக்குள்ளிருந்து ஒருவன் வந்தான். கையில் வெள்ளித் தட்டு. அது நிறைய. வெள்ளையாய்ப் பூக்குவியல் போல.தேங்காய்ச் சொட்டு
118

வந்தவன் கூர்க்காவின் அருகே போய்த் தட்டை நீட்டினான். அவன் கையை மட்டும் நீட்டிப் பிடியாக அள்ளிக் கொண்டதும், தட்டுக்காரன் மொட்டத் தலை ஆளின் முன் போய் நின்றான். கிருஷ்ணன் இப்போது தான் கவனித்தான். அந்த ஆளின் தலை முழு மொட்டையில்லை. உச்சிச் சுழியருகில் மட்டும். விரல்தடிப்பில் நீளமாய் எலிவால் போல ஒரு குடுமி. அம்புலிமாமாப் படங்களில் வருகிற சில ஆட்களின் தலை மாதிரி.
அந்த ஆள், கதிரையில் கிடந்த வெள்ளைத் துவாய் ஒன்றை எடுத்தான். ஒற்றைக் கையால் முகத்தை அழுந்தத் துடைத்தபடி, மற்றக்கையால் சொட்டுகளை எடுத்தான். தட்டுக்காரன் கூர்க்காவின் அருகிலிருந்த சிறியமுக்காலியில் தட்டை வைத்து விட்டு உள்ளே
போனான்.
எதிரே இவர்கள் நிற்கிற உணர்வேயில்லாமல் இருவரும் சப்புகிறார்கள்.கிருஷ்ணனுக்கு எரிச்சல் மண்டியது. இருக்கக் கூட இடந்தராமல்.சிங்கரைப் பார்க்க வேண்டும் போலிருந்தது. அவர், பக்கத்தில்-தோளோடு தோள் முட்ட நிற்கிறார். ஆனால் எப்படித்
கதிரையில் இருக்கிறவனின் பெயர்ப்பட்டி இப்போது வடிவாகத் தெரிகிறது. மேஜர். பெயரைப் படிப்பதற்குள் கூர்க்கா கையை அசைத்து விட்டான். இப்போ தெரிகிறது. பதாவோ. பாதாவோ, எப்படி உச்சரிப்பது?
கறுப்புச் சட்டைக்காரரின் பெயரையும் பார்க்கவேண்டும் போலிருந்தது. அவன். நின்ற நிலையிலையே வயர்லெஸ்காரர்களை அதட்டியபடி, வலதுகையால் வாய் க்குள் சொட்டுக் களை எறிந்தபடியிருக்கிறான். கப்டன். வன்பர். அதைக்கூடச் சிலவேளை வான்பர் என்றோ வன்பார் என்றோ உச்சரிக்கவேண்டுமோ?
5
பதா. கிருஷ்ணனைக் கூப்பிட்டான். “கம் ஹியர்!’
கதிரையில் காலுக்கு மேல் கால்போட்டபடி இருந்து கூப்பிடுகிறான்.
இது காலவரை இப்படி எவருந் தன்னைக் கூப்பிட்டதில்லை.
119

Page 68
வந்த எரிச்சலுக்கு. என்னதான் செய்துவிட முடியும்? கையாலாகாத கோபம்.
இரண்டடி எடுத்து வைத்தான்.
“நீ இங்கிலீஷ் பேசுவாயா?”
அது பேசப் போய்த்தானே பி-கே-சிங்-இங்கே அனுப்பியிருக்கிறான்!
“ஓரளவு.”தெரிந்ததாக இவர்களுக்குத் தெரிந்துவிட்டது எவ்வளவு பிரச்சினையாகப் போயிற்று
“என்னுடைய கேள்விகளுக்கு ஒழுங்காகப் பதில் சொல்ல
வேண்டும்.பொய் சொல்லித் தப்ப நினைக்கக் கூடாது.
உறுத்து மிரட்டும் கண்களால் தன் உளஉறுதியைச் சிதறடிக்க முயல்கிறானா இந்த இராணுவத்தான்?
இதுதான் உணவுக்கு ஏற்பாடு செய்கிற வள்ளல்
“நீ ஒரு எல்ரீரியா?”
“இல்லை’
“பொய் சொல்லாதே! சொன்னால்.
கிருஷ்ணன் விறைப்பாகச் சொன்னான்.
“இல்லை. நான் ஒரு ஆசிரியன். குடும்பக்காரன்.
“ஆசிரியன் என்கிற முறையில் உண்மையைச் சொல்லு. எல்ரிரிஈக்காரர்கள் எங்கே?.இங்கே யார் எல்ரிரிஈ. ཉ་ཏ་
“இங்கு ஒரு தரும் இல்லை.
“நீ ஒரு இளம் ஆள். உனக்குக் கட்டாயம் தொடர்பு இருந்திருக்கும்.”
“எனக்கு அவர்களோடு எந்தத் தொடர்பும் கிடையாது.”
120

ஷட் அப். ”அவன் கதிரையிலிருந்து துள்ளி நிமிர்ந்தான். கன்னத்துத் தசைகள் துடிப்பது வடிவாகத் தெரிந்தது. இமை கொட்டாமல் இவனையே முறைத்தான்.
“எனக்குப் படிப்பிக்க நினையாதே!” கன்னத்துத் தசைகள் இன்னமும் துடித்தன.
இதற்கு என்ன சொல்வது? கிருஷ்ணன் பேசாமல் நின்றான்.
“சரி இந்த ஊர் புலிகளின் கோட்டை என்று சொல்லப் படுகிற இடம். நீ இந்த ஊரவன். உனக்கு அவர்களைத் தெரியாது என்கிறாய்! எப்படி நம்புவது?" அடிக்காத குறையாகக் கையை நீட்டி இரைந்தான் மேஜர்.
இருந்திருக்கலாம். ஆனால் எனக்குத் தெரியாது."
“அதெப்படி?.’பதா, கோபமாய் உறுமி நக்கல் சிரிப்புச் சிரித்தான்.
ܘ & எனனை முடடாளாககப பார்க்கிறாயா?
y
“என்னைச் சொல்ல விடுங்கள். வருவது வரட்டும் என்று கிருஷ்ணன் சொன்னான்.
“இப்போது இங்கே நீங்கள் இவ்வளவுபேர் இருக்கிறீர்கள். உங்களை யார், எவர்? யார் அதிகாரி, யார் சிப்பாய்? எங்கிருந்து வந்தீர்கள், இனி எங்கே இருப்பீர்கள்? இது ஒன்றுமே எங்களுக்குத் தெரியாது. எங்களைப் பொறுத்தளவில் நீங்கள் எங்கே இருந்தீர்கள்-இதைத்தான் நீங்கள் போனபிறகு யாராவது கேட்டாலும் எங்களால் சொல்ல முடியும்.”
முடித்தபோது பதற்றமாயிருந்தது. அதிகம் பேசி விட்டேனோ?
பதா, உற்றுப் பார்த்துக் கொண்டேயிருந்தான். வளைந்த புருவங்களின் கீழ் அந்த இடுங்கிய மொங்கோல் கண்கள் இன்னும் சிறிதாகி அவை கிருஷ்ணனைத் துளைக்க முயன்றன.
மார்பின் மேல் கட்டிக்கொண்டிருந்த கைகளை விலக்கி முகத்தைத் துடைத்தான் கிருஷ்ணன்.
21

Page 69
அரை நிமிஷமிருக்குமா? பதா சொன்னான்! “இங்கே பார்!”
கிருஷ்ணன் பார்த்தான்.
“இப்போ நான் உன்னை ஒடும்படி சொல்ல முடியும்.ஆனால் நீ எவ்வளவு தூரம் ஓடிவிடுவாயென்றும் நான் பார்த்துவிடுவேன். s
அவன் சொன்னது விளங்கச் சில விநாடிகள் பிடித்தன! கிருஷ்ணனுக்கு வியர்த்தது. ‘உன்னைச் சுடுவேன்’ என்பதை இதை விட வடிவாக வேறெப்படிச் சொல்லமுடியும்?
6
என்ன செய்ய நினைக்கிறான் இவன்? - கிருஷ்ணனுக்கு நெஞ்சிடித்தது. சிங்கள் பின்னால் நிற்கிறாரா?.
அந்த மொட்டந்தலை மனிதன் கழுத்திலொன்றும் கைகளில் இரண்டுமாய்-தொலைபேசிகளுடன் மல்லாடியபடியே இங்குமங்கும் பார்த்துக் கொண்டிருக்கிறான்.
AA o FF
பின்னால் போ!' கூர்க்கா கத்தினான்.
என்ன சொல்கிறான். இவன்? சற்றுமுன் சொன்னதுபோல் சுடப்போறானா? கடவுளே.அசையவே முடியாதிருந்தது.
பின்னால் போய் நில்!." மேஜர் மீண்டுங் கூவினான்.
“யூ கம் ஹியர்!’ என்றான். சிங்கரைப் பார்த்து.
கிருஷ்ணனுக்கு நம்ப முடியவில்லை; இப்போதைக்கு விட்டிருக்கிறானோ?.தன்னையறியாமலே பின்னால் நகர்ந்தான்.
சிங்கள் முன்னால் போனார். தோளில் கிடந்த சால்வையைச் சரியாக இழுத்துவிட்டபடி நின்றார்.
“இப்போது நீ சொல்லலாம்."பதா உறுமினான்.
"நான் என்ன சொல்ல வேண்டுமென்கிறீர்கள்?." அந்தக் குரலும்
22

ஆங்கிலத்தின் சுத்தமும் அவனை ஒரு கணம் அசைத்திருக்க
வேண்டும்.
அவரை அவன் முடிக்க விடவில்லை.
"உன்னுடைய புலுடாவை நிறுத்து. "கத்தினான்.
"இந்தியாவுக்கெதிரானவர்கள் இந்தியாவுக்குள்ளே கூட இருக்கிறார்கள்!"
-அந்தப் பெரியவரைத் தன் முன்னால் நிற்கவிட்டு, இவன் கதிரையில் கால்மேற்கால் போட்டபடி உட்கார்ந்து கதைக்கிற விதம்
அவருடைய படிப்பென்ன, பழக்கவழக்கமென்ன, வயதென்ன
இன்று? எங்களை இவர்கள் ஏதோ அடிமைகள் மாதிரி.
இராணுவம் என்கிற திமிர்! ஆயுதங்களும் ஆட்களுமிருக்கிற
அகம்பாவம்
“ஸோ, உனக்கும் ஒருவரையுந் தெரியாது?
தெரியாது?"
"போய் நில்!."-பதா, கத்தினான்.
“எக்ஸ்கியூஸ் மி." சிங்கள், நிதானமாகச் சொன்னார்.
....நீங்கள் எங்களைத் தவறாகப் புரிந்துகொண்டு விட்டீர்கள். காலையில் எங்கள் முகாமைப் பார்க்க வந்த உங்கள் கப்டன் பி. கே. சிங், வீடுகளுக்குப் போக நீங்கள் அனுமிதிக்கும் வரை ஊரவர் எல்லோரும் முகாமில் தானிருக்க வேண்டுமென்றார். அதுவரை
எங்களுக்கான சாப்பாட்டு ஏற்பாடுகள் பற்றி."
ஷட்அப்."-மேஜர் உச்சக் குரலில் இடைமறித்தான். முகம்.
123

Page 70
இரத்தமாய்ச் சிவந்தது. வியர்வையில் பளபளத்தது.
"இரண்டு பேரும்."அவன் காட்டினான்.
”.அந்தா அந்த மதிலோடு போய் நில்!"
7
மதிற்கரையோடு மாரிப்புல் மெத்தையாகச் சடைத்திருந்தது. சிவத்தார் வீட்டுப் பூ மரங்கள் இந்த மழைக்கு வஞ்சகமில்லாமல் மதாளித்து நின்றன. அவன் கனகாலம் தேடித்திரிந்த சரக்கொன்றைக் கன்றுகள், இந்தா - இதில் - கைக்கெட்டும் தூரத்தில் - முளைத்து நிற்கின்றன! என்ன வேடிக்கை. யார் செய்கிற வேடிக்கை இது?
சிங்கள் அருகோடு நிற்கிறார். ஆளைஆள் பார்த்துக்கொண்டார்கள். அவரின் முகமெல்லாம் வியர்த்திருந்தது. கண்ணாடியைக் கழற்றிவிட்டுச் சால்வையால் ஒற்றிக்கொண்டார். கதைக்கவே பயமாயிருந்தது.
“என்ன நினைப்பான்களோ..! இப்பிடி வெருட்டினால் -? எங்களுக்கென்ன தெரியும்?"
கிருஷ்ணன் திரும்பிப் பார்த்தான்.
எதிரே போர்டிகோ. இங்கே கதைத்தால் கேளாதுதான்.
என்றாலும் பதாவை இப்போது காணவில்லை.
அம்புலிமாமா ஆள் தொலைபேசியுடன் இன்னமும் அமளியாக இருக்கிறான். அவனோடு மட்டும் ஐந்தாறு ஆமிக்காறர். வீட்டின் கோடிப் பக்கத்தில் - சமையல் வேலை நடக்கிறதா? - கிடாரங்கள் வாளிகளின் சத்தங் கேட்டுக் கொண்டிருக்கிறது.
இவர்களின் இடதுபக்கம். கேற் முடக்கின் மறைவில் - அந்தக் கையொழுங்கையில் மொய்த்துக் கொண்டிருந்த ஆட்கள் இன்னமும் அங்கேதானிருக்க வேண்டும்.
பீடிப்புகை, காற்றெல்லாம் கலந்திருந்தது. இங்கிருந்து ஒன்றுமே தெரியவில்லை.
24

களைப்பாக இருந்தது. பசியில்லை. ஆனால் தணிணிர் விடாய்த்தது. காலையில் எழுந்ததற்குப் பச்சைத்தண்ணிர் கூடக் குடிக்கவில்லை!
“இந்தா, பத்து நிமிஷத்தில் பேசிவிட்டு வந்துவிடலாமென்று கூட்டிக் வந்து.என்ன நயவஞ்சகம்.
கோபமா, கவலையா, பயமா, ஏமாற்றமா. எதுவென்றில்லாமல்எல்லாம் கலந்து-மனதை அழுத்தின.
“இதிலை இருப்பம்’ என்று சிங்கரைப் பார்த்தான்.
G
ம்ம்? .
’ என்றவர், உடனே,
ஏதும் சொல்லுவாங்களோ?" என்றார்.
“இருந்து பாப்பம். காலால் புற்பரப்பை மெல்லத் தடவிவிட்டுக் குந்தினான். சப்பாணி கட்டிக் கொண்டபோது, காலுக்கு இதமாக இருந்தது.
சிங்கரும் பக்கத்தில் சால்வையைப் போட்டுவிட்டு அமர்ந்தார்.
யாராவது பார்க்கிறார்களா? இல்லை, ஒருவரும் இதைக் கவனித்ததாகத் தெரியவில்லை.
புல்லின் பூக்கம்பொன்றைக்கிள்ளி, கிருஷ்ணன் தன்னையறியாமலே
பற்களால் நன்னலானான். என்ன நடக்கும்?
8
படபடவென்று முறியும் சத்தங்கேட்டுத் திரும்பினார்கள். வளவின் மேற்கு வேலி விழுந்துகொண்டிருந்தது. பென்னாம் பெரிய லொறியொன்று. முக்கிய படி, உள்ளேவர முயன்று கொண்டிருந்தது. உச்சக்கியரில் அதன் உறுமல்.
ஒவ்வொரு கதிகாலாக முறிந்தது. அந்த மூரிவேலி-முடியாமல்வழிவிட்டுக் கொண்டிருந்தது. ஒரேயொரு வாதநாராயணி மட்டும்.
125

Page 71
கொஞ்சம் மொத்தமாக தாக்குப் பிடித்தது. காட்டுக் கத்தியும் கையுமாய், ஒரு சிப்பாய் ஓடி வந்து அதை அடியோடு தறிக்கலானான்.
வெட்டிய வேலிக்கப்பால், அடுத்த வளவு அதுவுந்தென்னங்காணி. முருகேசருடையது. அதையுந் தாண்டி, மதவடி றோட்டுத் தெரிந்தது! முருகேசர் வளவின் றோட்டு வேலி வெட்டித்தான் லொறி இங்கு வந்திருக்கிறது.இந்த வளவுக்கு வருகிற கையொழுங்கையால் பெரிய வாகனங்கள் வரமுடியாதென்று இந்த வேலை பார்க்கிறார்கள்! இப்போது மதவடி றோட்டிலிருந்து வலுசுகமாக வந்துவிடலாம்.
லொறி. தென்னைகளைத் தாண்டி - வளைந்து வளைந்து வந்து
கொண்டிருந்தது. சென்னைத் தெருக்களை நினைவு படுத்துகிறது. அந்தப் புகை மணம்,
இவர்களின் இந்த வேலைகளைப் பார்த்தால் - வாகனங்களும் ஆட்களுமாய் - இப்போதைக்கு விட்டுப் போகிற நோக்கம் இருப்பதாய்த் தெரிய வில்லை.
குறுக்குப் பாதையை ஆட்கள் சீர்படுத்துகிறார்கள். இந்த வளவுக்கு இவ்வளவு கிட்டவா, மதவடித்தெரு இருக்கிறது. தெருவுக்கு அந்தப் பக்கம் பள்ளிக்கூடத்தின் பழைய விளையாட்டு மைதானம்.
தண்ணிர்தான் நன்றாக விடாய்த்தது. எங்கே குடிக்கலாம்? அந்தா அந்தத் தகர மறைப்பின் பின்னால் சிவத்தார் வீட்டுக் கிணற்றடி வெட்டிய வேலிக்கப்பாலும் முருகேசர் வளவுத் துலா தெரிகிறது. முழத்திற் கொன்றாய்க் கிணறுகள் மாரிக்கு முட்டி வழிந்தபடி! ஆனால்? நினைக்க நினைக்க.
இப்படியே இந்தப் புல்லில் படுத்துவிட வேண்டும் போல் அசதியாயிருந்தது. தங்களைக் காணாமல் முகாமில் என்ன பாடு படுகிறார்களோ . இதெல்லாவற்றையும் அநுபவிக்கட்டுமென்று தான்
என்ஜினை ஒரு தடவை ஓங்கி ஒலித்துவிட்டு, லொறி மாவின் கீழ்
வந்து மெளனமாய் நின்றது.
ஷக்திமான், சாணிநிற உடம்பில் தூசி-இந்த மாரியிலும் சில்லுகளில் சேறு, ட்றைவர் குதித்தான். வேறெவரும் வந்ததாயில்லை. குதித்தவன்,
26

தொப்பியைக் கழற்றியபடியே, முன்னால் நின்ற ஆளிடம் ஏதோ உரத்துச் சொன்னான். பாணி பாணி என்று கேட்டது. மற்றவன் பதில் பேசாமல் வீட்டின் பின்னால் போகிறான். ட்றைவர். முகத்தைத் துடைத்தவாறே இவர்கள் பக்கம் பார்ப்பது தெரிந்தது. - கிருஷ்ணனி, பார்வையைத் திருப்பிக்கொண்டான்.
வெய்யில் ஏறிக்கொண்டிருக்கிறது. முகாமைவிட்டுப் புறப்பட்டு இரண்டரை மணித்தியாலம்.
9
வீட்டின் பின்னாலிருந்து ஒருவன் வருகிறான். ட்றைவருடன் பேசிவிட்டுப் போன அதே ஆள். கையில் பெரிய வெள்ளிச் செம்பு. சிவத்தார் வீட்டுச் செம்போ? ட்றைவர் போய் நீட்டுகிறான்.ட்றைவர் அண்ணாந்து மடமடவென்று குடிப்பதைப் பார்க்க, கிருஷ்ணனுக்கு இன்னும் விடாய்த்தது.
சிங்கள், காலை நீட்டி நெட்டி முறித்தார்.
V O If y எழும்புவமா? ம்ம்." கிருஷ்ணனும் எழும்பினான்.
எவருமே பார்க்கவில்லை.
தண்ணிர் குடித்தவன் புறங்கையால் வாயைத் துடைத்தவாறே செம்பைக் கொடுக்கிறான். அவன் தங்களைப் பார்க்கிறானோ?.இங்கேதான் வருகிறானோ?.
இரண்டடி முன்னால் வைத்த ட்றைவர். மீண்டும் மற்றவனைக் கூப்பிட்டுச் செம்பை வாங்குவது தெரிகிறது. இவர்களை நோக்கி வருகிறான்.
"தண்ணி குடிக்கிறீங்களா?. " அருகில் வந்ததும் செம்பை நீட்டினான். தமிழனா?
என்ன செய்யலாம்? சிங்கள் தயங்கியபடி வாங்கினார்.
127

Page 72
நீங்க தமிழ் ஆளா?.
குடியுங்க. WW
"எங்களை ஏன இப்பிடி நிக்கச் சொல்லியிருக்கு?."குமுறலுடன் கேட்டான் கிருஷ்ணன்.
AA A. ܟ O
என்ன ஆசசு?. சொன்னார்கள்.
விட்டுரு வாங்க. "என்றான். கேட்டுவிட்டு
நீங்க தான் ஒரு ஆள், இவ்வளவு நேரத்துக்கு இப்பிடி வந்து மனுசத்தன்மையாய்க் கதைச்சிருக்கிறியள்.தண்ணியும் தந்து."
“என்னதா இருந்தாலும் நாம ஒரே ஆளுங்க இல்லியா?"
AA e is a
உங்கட பேரென்ன?. சிங்கள் கேட்டார்.
W
கோபாலன்.
குடித்துவிட்டுச் செம்பைக் கிருஷ்ணனிடம் நீட்டினார். தண்ணீர், நாக்கு தொண்டை, நெஞ்செல்லாம் நனைத்து சில்லென்று இறங்கியது.
V o WW நான மலையாளததுககாரன. வர்றேன் F.......
-அவன் அவசரமாகச் செம்பை வாங்கிக்கொண்டு திரும்புவதாகப் பட்டது. லொறியை நோக்கி நடந்தான். சிங்கரும் கிருஷ்ணனும் ஆளை ஆள் பார்த்துக் கொண்டார்கள். என்ன நடந்தது. இவனுக்கு? எங்களுடன் பேசிக்கொண்டிருந்ததை யாராவது பார்த்துவிட்டார்களா? அல்லது. பார்த்தவிட்டால் என்ற பயமா? தான் தமிழன் என்று ஒப்புக்கொள்ள
இவனைத் தடுப்பது எது?
எல்லாமே புதிராக இருந்தது.
"இருப்பம்."
மீண்டும் புல் சணைப்பில் குந்தினார்கள். புல் மணத்தது.
28

10
எவ்வளவு நேரம் இருக்க வேண்டும், இன்னும்? என்ன நடக்கப் போகிறது?.உடலே ஓய்ந்த மாதிரி.
இடது புறம் -ஒழுங்கை மறைவில் - அத்தனை பேரும் இருக்கிறார்களென்றே படுகிறது. போர்ட்டிகோவில் அதே ஐந்தாறு பேர்தான். ஆனால், வீட்டினுள்ளும் பின்னாலும் எத்தனை பேரென்றே தெரியவில்லை.
ஒருவர் கூட இவர்களிடம் வரவே இல்லை-அந்த கோபாலனைத் தவிர, அவன் எங்கே? வேலி வெட்டிய ஆட்களெல்லாம் எங்கே? பீடிப்புகை, நெய்மணம், சமையல்புகை, வாகனங்களின் அருகாமையில் கிளம்பும் புழுதியும் பெற்றோலும் கலந்த நெடி, பச்சைப் புல் வாசம் - என்று ஒவ்வொன்றையும் சுமந்து அலைந்த காற்று. இருந்தாற் போல இரைந்து கடந்தது. தென்னோலைகள் அலையாய் அசைந்தன. திட்டுத் திட்டாய் விழுந்து கிடந்த வெய்யில் ஒடிஓடி உருமாறி.இந்த மாரியிலும் நல்ல
வெக்கை
சிங்கள், கந்தர்சஷ்டி கவசத்தை முடித்துவிட்டு, தேவாரமொன்றை வாய்க்குள் மெல்ல - மிகமெல்ல- சொல்லிக் கொண்டிருக்கிறார்.
"நாமார்க்குங் குடியல்லோம்.நமனை அஞ்சோம்."
நேரம், பன்னிரண்டு இரண்டு. கிருஷ்ணன் மணிக்கட்டைப் பார்க்கும் போதே. அந்தக் கறுத்தப் பிளாஸ்ரிக் டிஜிற்ரல் கடிகாரத்தில், இரண்டு மூன்றாக மாறிற்று-தோன்றித்தோன்றி மறைகிற புள்ளிகளில் தெரியும். அதன் உயிர்த்துடிப்பு.
இந்தப் பிரச்சினை மட்டும் இல்லையென்றால், இந்த நேரம் உச்சி வேளைப் பூசைக்காக ஒலிக்கிற கோவில் மணிகள் எல்லாப் பக்கமும் கேட்கத் தொடங்கியிருக்கும்.
இருந்தாற் போல சடசடவென்று, சூட்டுச் சத்தந்தான் கிழக்கே கேட்டது. கிருஷ்ணன், சிங்கரைப் பார்த்தான். துப்பாக்கிகள் ஆக்ரோஷமாய்க் குரைக்கத் தொடங்கின. கிழக்கேதான் கிட்டவுமில்லை, தூரவுமில்லை.
W 4 A சணடைதான
129

Page 73
எங்கள் பாடு? முகாமிலிருக்கிறவர்கள் பாடு?
வேட்டொலிகள் விடாமல் கேட்டன. இருபுறமும் மாறி, மாறி கூடியும் குறைந்தும்.ஒன்றுக்குள் ஒன்றாய், ஒன்றை மீறி மற்றதாய்.
இனி.? -கிருஷ்ணன் முழங்கால்களில் கைகளைக் கட்டிய படி குனிந்து கொண்டான். மயிர்கலைந்த தலையின் நிழல் முன்னால் விழுந்தது.
வீட்டுப்பக்கம் ஏதோ அசைவு தெரிந்ததில் திரும்பினார்கள் சிப்பாய்கள். வரிசையாக-பெரியதொரு பாம்பு போல் சரசரவென்று அந்த வரிசை. சந்தடியில்லாத அந்த வேகம் பயமாயிருந்தது. உருமறைப்புச் சீருடைகள். இரும்புத் தொப்பிகளை மறைத்த பச்சை மிலாறுகள். ஹோல்ஸ்ரரும். தயாராய்ப் பிடித்த துவக்குகளுமாய். முழங்கால்களருகில் உப்பியிருக்கிற பைகளில் கைக்குண்டுகளோ? நிதானமாய்ப் பதியும் கனத்த காலணிகள்.
வரிசை இப்படித்தான் வருகிறது. முன்னே வந்தவன் நெருங்குகிறான்.
எழும்பலாமா?-வேண்டாம். இப்போ எழும்பினால் பிரச்சினை. கைகால்களை அசைக்கமுடியாத மாதிரியும் இருந்தது. சிங்கரும் எழும்பவில்லை. எழும்பாமலேயிருந்தார்கள். வந்து கொண்டிருந்த வர்களுக்கு இவர்கள் கண்ணிலேயே படவில்லைப் போலும், தம்பாட்டில் கேற்றில் இவர்களைக் கடந்து திரும்பி.அங்கு ஒழுங்கையில் ஏற்கனவே இருந்தவர்கள்-?
வரிசை, வந்தபடியேயிருந்தது. எத்தனை ஆட்கள்
உயரமான ஒரு மெல்லிய சிப்பாய், தும்புக்கட்டு மீசையும் ஆளுமாய், வரிசையில் சேராது அருகோடு வந்தான். முதுகில் வயர்லெஸ். ஓடாக் குறையாகத் தாண்டிப்போனான். ஏரியல், உயரமாய், தென்னங்கீற்றுப்போல் அவன் நடைக்கேற்ப துடித்தசைந்தது.
இப்போது வருகிறவர்கள், இடைக்கிடை இவர்களையும் கவனிக்கிறார்கள். ஒருவன் ஏதோ சொல்லிவிட்டும் போகிறான்.
இருநூறு பேராவது தாண்டியிருப்பார்களா? இன்னமும் வருகிறார்களா..? அடுத்த பக்கத்து வளவுக்குள்ளும் ஆட்களிருக்க வேண்டும்.
130

அந்த அம்புலிமாமா ஆள். அவன் பெயர் அதற்குள் மறந்துவிட்டது. போர்ட்டிகோவிலிருந்து வெளியே வருகிறான். அதே கறுப்புச் சீருடை. இப்போ, தொப்பி அணிந்து கொள்கிறான். அவன் முதுகிலும் ஒரு
வயர்லெஸ்.
பின்னால் இரண்டு பேர் தொடர வேகமாக வருகிறான்.
ஆளைப் பார்த்தால் கம்பீரமாய்த்தானிருக்கிறது. இந்திப்பட நடிகனாய்ப் போயிருக்க வேண்டியவன். இல்லை, நடிப்பென்று பார்த்தால், அந்தப் பி. கே. சிங்கை யாரும் மிஞ்ச முடியாது! என்ன மாதிரிப் பேசி இங்கே அனுப்பினான்!
கப்டன், நெருங்கித் தாண்டிய போது இவர்களைப் பார்த்தான். போகிற போக்கில் சொன்னான்.
Α o • 1 f} நீங்கள் போகலாம்
சொல்லி விட்டுப் போனான்.
11
ஒன்றுமே விளங்கவில்லை.
இப்போது போகச் சொன்னால்-1 போகலாமா?.சில வேளை.
நினைத்ததும் மீண்டும் நெஞ்சிடித்தது-போகச் சொல்லி விட்டு.?
"இப்ப போ எண்டா. இதென்ன?" - சிங்கரும் குழம்புவது தெரிகிறது.
"போவம்?".-கிருஷ்ணன் திரும்பிப் பார்த்தான்.
கப்டனைக் காணவில்லை.
பாப்பம், இவங்கள் போய் முடியட்டும்.இப்ப எழும்பினாலும்
சரிதான், போகட்டும். வரிசை வந்து கொண்டேயிருந்தது.
31

Page 74
இவர்களுக்குள்-எங்களால் ஆளை ஆள் வித்தியாசங் கண்டு பிடிக்க முடியுமா? ஒரே சாயல் ஒரே நிறம். ஒரே உயரம்.
தன்னையறியாமலே தான் அவர்களைக் கவனிப்பதைக் கிருஷ்ணன் உணர்ந்தான். வேண்டாம். ஏதாவது நினைத்தாலும்.அங்கே பார்க்கக்
வலப்பக்கம், யாரோ ஓடி வருவது மாதிரி.
திரும்பினான்.
ஐந்நூறு பேருக்கப்பால் வருகிற ஒருவன், வரிசையை விட்டு விலகித் தங்களை நோக்கிக் கத்தியபடி ஓடி வருவது தெரிகிறது! நீட்டிய துவக்கு.
என்ன இது? ஏன் மற்றவர்கள் பிடிக்கவில்லை? ஆவேசங் கொண்டு அவன் கத்துவது இந்தியிலா என்று கூடத் தெரியவில்லை.
கடைசிச் சொல் மட்டும் புரிந்தது”. எல்ரிரிஈ!" அவன் உறுமியபோது, நெற்றியை மறைத்த மயிரும். கொலை வெறி துள்ளும் கண்களுமாய். அவன் முகம், மூன்றடிக்கு முன்னாலிருந்தது. ஏறிட்டுப்
பார்த்த கிருஷ்ணனின் நெஞ்சில் துப்பாக்கி இடித்தது. கண்களை மூடிக் கொண்டான்.
12 தானும் அப்போது மூடிக்கொண்டதாகச் சிங்கர் பிறகு சொன்னார்.
வெளிச்சம் - சித் திரை / வைகாசி - 1994
ஆS2,
132

சனம்
ந்த வெளி எப்போதுமே அற்புதமானது. மாரியோ, கோடையோ
இரவோ, பகலோ- எப்போதும். ஆனால் முன்னிரவு வேளைகளில்
வலு விசேஷம். தெரு, கிழக்கிலிருந்து மேற்கே ஒடுகிறது. ஒரே நேர். அப்படி வருகிறபோது, இருந்தாற் போல ஒரிடத்தில் வேலி அடைத்த வளவுகள் நின்று விடும். இரண்டு பக்கமும் வெளி விரியும். படாரென்று - கட்டொன்றை அவிழ்த்து விட்டதுபோல் - விட்டாத்தியாயிருக்கும். முகத்திலும் படுகிற புதுக் காற்றுப் போல் மனதிலும் வீசும்.
வெளி தொடங்குகிற இடத்திலிருந்து ஒரு முப்பதடி வந்ததும், தெருவின் தார் கழன்று நீழ் வட்டமாய்க் கிடக்கிற அந்தக் கிடங்கைத் தாண்டுகிற கையோடு, இடது பக்கம் திரும்பி, வெளி விளிம்பின் தென்னை நிரைகளுக்கு மேல் பார்த்தால், பத்திரகாளி கோவில் கோபுரம் தெரியும். ஒன்று அல்லது இரண்டு கணந்தான்-மோட்டார் சைக்கிளா, சைக் கிளா என்பதைப் பொறுத்து. மரங்களின் இடைவெளி அவ்வளவுதான். காட்டும். இன்றைக்கும். இந்தா. மாலை வெயிலில்
கால் மைலுக்கும் கூடவரும். வெளியின் நீளம். அகலமும் கிட்டத்தட்ட அவ்வளவு நட்ட நடுவில் தெரு பக்கத்துப் பாத்திகளிலும் தெரு உயரம்-புகையிலை வைக்கிற காலங்களில் வெளி நிறைந்து
133

Page 75
காலங்களில், அங்கொரு துண்டில் குரக்கன். இங்கொன்றில் மரவள்ளிஅவரவருக்கு வாலாயம்போல, வெளிச்சம் இருக்கிற எந்த நேரத்தில் வந்தாலும், எங்கோ யாரோ, ஏதோ செய்து கொண்டிருக்கிற உயிர்ப்பு.
இந்தத் துண்டில், கண்ணு உழுந்து போட்டிருக்கிறான். உழுந்தா? பயறா? இன்னும் வடிவாய்த் தெரியவில்லை. இவ்விரண்டு இலைகளோடு நிற்கிற பயிர். இன்று இறைத்த ஈரத்துக்கிடையில் மதாளித்துப் படர்ந்திருந்தது பசளிக்கீரை. மெல்லிய நீலம் பரவிய பச்சை, மடித்தால், இலைகள் டிக்கென்று ஒடியுமென்று இங்கிருந்தே உணர முடிகிறது.
சோழகம், கொஞ்ச நாட்களாகவே இப்படி ஒரு வாடைக் குளிரோடு வீசுகின்றது. எங்காவது மழையா? இங்கென்றால், வானம் வெளித்துக் கிடக்கிறது. மேற்கில் மட்டும் சில சிவப்பு முகில்கள்.
என்ன இது?
ஒருவரையும் காணவில்லை! தெரு நீளம் ஒரு காகக்குருவியும் இல்லை! என்ன சங்கதி? இந்த நேரத்தில் இந்தத் தெருவில் எவ்வளவு சனம் போகும்? என்ன நடந்தது?.
தோட்டங்களைத் திரும்பிப் பார்த்தான். வலது பக்கம் தெருவோடு ஒரு குரக்கன் பாத்தி, அங்கு வெருளி மட்டும் அதன் கையிலிருந்த சவுக்கு நுனி காற்றில் பறக்கிறது. இடது பக்கம் அதுகூட இல்லை. இதென்ன? கொடியேற்றுகிற பெடியள் எல்லாம் எங்கே போனார்கள்? காற்று எவ்வளவு நல்லதாய் அடிக்கிறது! அதற்கிடையிலா வலித்துக் கொண்டு போயிருப்பார்கள்? நேற்றுக்கூட இரவிரவாக ஒரு எட்டுமூலை
அசைவேயில்லை. ஒரு வாகனம், வண்டில், சைக்கிள் -? நடப்பவர்கள் கூட! என்ன நடந்தது எல்லோருக்கும்? இறைப்பவர்கள், விறகுக்கு அலம்பல் தேடுபவர்கள், எருப்பொறுக்குபவர்கள். எதையோ விதைப்பதற்காகக் கொத்துபவர்கள், புல் பிடுங்குபவர்கள், மாட்டைக்கலைப்பவர்கள், இவர்களோடு கதைப்பவர்கள், சண்டை
134

பிடிப்பவர்கள், வரம்பால் நடந்து தவறணைக்குப் போகிறவர்கள், வரும்போது வரம்பில் தள்ளாடுபவர்கள், குறுக்கே பாயக்கூடிய சிறுவர்கள்.? எல்லாரும் எங்கே? என்ன இது, இன்று?
யார் அப்படிப் போய்த்தான் பிறகு டானாவாக வலப்பக்கம் திரும்பும். இங்கிருந்து அந்த முடக்கும் தெரிகிறது. அங்கும் ஒரு மனுக்கணமும் இல்லை! வெளி முடிவில் வருகிற கனகராசா கடை, தள்ளியிருக்கிற சலூன், பிறகு சந்தி.ஓரிடத்திலுமா ஆட்களில்லாது போவார்கள்?
காற்று, தெற்கிலிருந்து வந்து தெருவைத் தாண்டி வடக்கே பறந்தது. பொலித்தீன் பையொன்று, பூப்போல், கடற்சொறி போல், பரசூட்போல்.இந்த வெயிலிலும், காற்றுக் குளிராய்த்தானிருந்தது.
என்னாகியிருக்கும். இங்கே? ஏதும் பிரச்சினையா? அப்படி என்ன? சத்தங் கூட கேட்காமல்.பயமா இது? பரபரப்பா? சைக் கிளை
به. تتكيجية هنتنتهيـم .ـ
பத்துவருஷம் எண்பத்து மூன்று ஜுலை. ஒரு காலை விடிந்த போதே வித்தியாசந் தெரிந்தது.
சக்தி வந்து மெல்லக் கூப்பிட்டான்.
“சந்தையடியிலே ஏழெட்டுப் பேரை ஆமி சுட்டுப் போட்டிருக்காம்! வாறியா, என்னெண்டு பாத்திட்டு வருவம்?" வழியில் கண்ட எவரோ, ஊரடங்காம் என்றார்கள். வடிவாயுந்தெரியவில்லை. ஊரே கெலித்து ஒடுங்கிக் கிடந்தது.
ff
"நேற்றிரவு தின்னவேலியிலை நடந்ததுக்குப் பழிவாங்கலாம் இது.
- - - - -காற்றோடு கதைகள்.
சந்தையடியில் சிறு கும்பல் நின்றது. நின்றவர்கள், காதுகளையும் கால்களையும் தயாராய் வைத்தபடி நின்றார்கள்.
135

Page 76
எப்போது எங்கிருந்து வருவான்களென்று தெரியாத பதகளிப்பு. பூட்டியிருந்த கடைகளின் விறாந்தைகளில் வளர்த்தியிருந்த சடலங்கள். எல்லாம் இளந்தாரிகள் . பள்ளிக்குப் போன
பெடியன்களும்.கடவுளே!
இடது கன்ன மேட்டில் துவாரம் தெளிவாய்த் தெரிய மல்லாந்து கிடந்த முகமொன்று. தாங்க முடியாமல், “வா, போவோம்" என்று சக்திதாசனை இழுத்தபடி வெளியே வந்தான்.
எங்காவது ஜீப்போ, ட்ரக்கோ இரைகிறதா? என்று புலன்களைக் குவித்தபடி ஒழுங்கைகளுடாகத் திரும்பிக் கொண்டிருந்த போது, சக்தி
சொன்னான்.
"மச்சான், பதின்மூண்டு சிங்களவர்களைக் கொண்டதெண்டு சொல்லுவாங்கள்.ஆனா, இது உண்மையிலேயே இலங்கை இராணுவமாக இருந்திருந்தால்."
சக்தி "இலங்கை" என்றதை அழுத்திச் சொன்னான்
”இந்தப் பதின் மூணி டிலை, மூணி டாவது தமிழாக இருந்திருக்குமே!"
இந்தத் தெருவால் வந்து கே. கே. எஸ் வீதிச் சந்தியையும் பார்க்கலாமென்றான், சக்தி வந்தார்கள். இடையில் ஏதோ இரைந்த மாதிரி ஒரு சத்தம், சோழகமா, வாகனமா என்றுகூட யோசிக்க முடியாத அந்தரத்தில் அமத்திக்கொண்டு பறந்தபோதும், இந்த வெளி இப்படித்தானிருந்தது!
---, -et. Scots------
இன்றாவது பரவாயில்லை, சக்தி கூட வந்தான். ஆனால் ஒரு நாலு வருஷத்திற்குப் பிறகு இந்த இடத்தை அப்படித்தாண்ட நேரிட்டபோது, இவன் தனியேதான் வந்தான். சைக்கிள்தான்.
தோட்டவெளியைச் சுற்றி அரண்கட்டி நிற்கிற பனங்கூடலெங்கும்
136

இந்தியன் ஆமி நிற்கக்கூடும்.இவன் ஆர். இப்படித் தன்னந்தனியே என்று. ஊரைச் சுற்றி வளைத்தபோது இப்படித்தான் ஏழெட்டுப் பேரை. ஏன் இங்கு வந்தேன்? இருந்தது போல் மாமா வீட்டில் இருந்திருக்கலாம்.இப்போ வீடு பார்க்க என்ன அவசரம்?
சுற்றி வளைத்து, அந்தக் குறிச்சியின் சனமெல்லாவற்றையும் ஒரே வீட்டில் அடைத்து வைத்த அந்த ஒருகிழமை. அவன்கள் விட்டதும் விடாததுமாய் வீட்டுக்குப் போய் அகப்பட்டதை எடுத்துக் கொண்டு பட்டணத்துக்கு நடந்தே போய் மாமா வீட்டிலிருந்த மூன்று கிழமை - இந்த ஒரு மாதமும் வீடு ஏதோ இருந்திருக்கும்தானே.
முதல்நாள் மகாலிங்கத்தைக் கண்டபோது, இரண்டு தரம் போய்த் தனது வீட்டைப் பார்த்துவிட்டு வந்ததாகச் சொன்னான். அவன் கதையைக் கேட்டு வெளிக்கிட்டதும் பிழை. அதுவும் தனியே! அவனோடாவது வந்திருக்கலாம்.ஆரும் கூட இருந்திருந்தால் பரவாயில்லை. தடுத்துவைத்த போதுதான் என்னவெல்லாம் செய்தான்கள்.ஆனால், ஊரெல்லாம் அப்போது ஒருமிக்க இருந்தது.
மழைக்காலம். எங்கும் பச்சை, பனையடி மூலையில் மாடுகள் கூட்டமாக மேய்ந்து கொண்டிருந்தன. பசுமாடுகள். வீடுகளை விட்டு வெளிக்கிட்டபோது புத்தியாய் அவிழ்த்து விட்டவர்களின் மாடுகள். பிறகு, அவன்களும் கட்டுகளில் நின்றதுகளை அறுத்து விட்டதாய்ப் பறைந்தார்கள்.எப்படியோ கட்டைகளில் நின்ற மாடுகள் மந்தையாப்
போயின!
தடுப்பு முகாமிலிருந்தபோதே இந்த மந்தை உருவாகிவிட்டது. ஒரு பிற்பகல், அந்த வீட்டைத் தாண்டி அது தெருவால் போனது. அவன் வீட்டு மாடும் அதில். கன்னி நாகு, மாடுகள், அந்த வீட்டிலிருந்த மனிதர்களைக் கவனித்ததாய்த் தெரியவில்லை. அவர்கள் கட்டில் நின்றார்கள். அவை சுதந்திரமாய்ப் போயின வீட்டைத் தாண்டியதும், பள்ளமாய்க் கிடந்த தெருக்கரையில் தேங்கி நின்ற வெள்ளத்தை வாய் வைத்து உறிஞ்சின. அதைக்கண்ட கந்தையர் அழுவார் போலிருந்தார்அவைகளுக்கு வித்தியாசமே இல்லைப் போலும். நல்லகாலம்
137

Page 77
மாரியாயிருந்தது.
அதே மந்தைதான். அவன் மாடும் அதில் நிற்குமா? ஏதோ, தப்பிப் பிழைத்திருக்கும்.அதையெல்லாம் பார்க்கிற நிலையில்லை, இது.
வீட்டுக்குப் போனது. பார்த்தது. திரும்பியதெல்லாம் வெளி நினைவில் மங்கிப்போயின.
இன்றைக்கும் வெளி அதே மாதிரி? முடிவில் வருகிற முதலாவது மின்கம்பம்.முதலி வீட்டு வேலியோடு வெளி முடிகிறது. கண்கள் கூர்ந்து முன்னால் தேடின.
கனகராசா கடை திறந்துதான் இருக்கிறது. அதற்கும் சலூனுக்குமிடையிலிருக்கிற ஒடையில் இரண்டு சைக்கிள்கள். கடையில் ஓர் ஆள், சலூனுக்குள்ளும் கண்ணாடிக் கதவினுTடு தெரியும் அசைவுகள.
இடது பக்கம் திரும்புகிற ஒழுங்கை முகப்பில் வாசிகசாலை திறந்திருந்தது. எட்டுப்பத்துச் சைக்கிள்கள் எதிர்வேலி நிழலோடு நின்றன. சனங்களும் கனபேர். குரல்கள் பெரிதாய் ஒலிக்கின்றன.
சைக்கிளை, ஃப்ரீவீலில் விட்டான்.
வெளிச்சம் - புரட்டாதி - 1993
138


Page 78
சாந்தன் எ தமிழிலக்
பெறுகின்றன. தமிழ், ஆங்கிலம் ஆகி படைப்பாளி அவர்
பென்குயின் நிறுவனம் வெளியிட்ட
இந்திய சாகித்திய அகடமி வெ
எழுத்தாளர் தொகுப்புப் போன்ற பல்ே ஆக்கங்கள் இடம்பெறுகின்றன.
இரு தொகுதிகள் ஆங்கிலத்திலும், ! தொகுதியொன்று சிங்களத்திலும் ருஷ்யன், இந்தி மொழிகளிலும் பெற்றுள்ளன.
தொழில் நுட்ப விரிவுரையாள கல்விப்பணியும் அவரது இல குறைந்ததன்று சொந்த மண்ணிலி நின்று பணியாற்றும் பல இள உத்தியோகத்தர்களை உருவாக்கி சிறப்பானது.
ISBN 955-825 O-O 5-8
 

மூன்று தசாப்தங்கட்கு மேலாகத்
செயற்பட்டு வரும் ஐயாத்துரை குத் தன்னை நிலைபெறச் செய்து ஞர்களுள் முதல் வரிசையில்
னின் ஆக்கங்கள் தனிக் கவனம் இரு மொழிகளிலும் இடம்பெற்ற
இலங்கைக் கதைகளின் தொகுப்பு யிடவுள்ள கடல் கடந்த தமிழ் வேறு தொகுப்புக்களில் சாந்தனின்
மாழி பெயர்க்கப்பட்ட கதைகளின் வெளியாகியுள்ளன. இவை தவிர அவர் ஆக்கங்கள் மொழிமாற்றம்
ாகப் பணிபுரியும் சாந்தனின் கியப்பணிக்கு எவ்விதத்திலும் ந்து அகல மறுக்கும் மக்களிடை
தொழில் நுட்ப சுகாதார திலும் சாந்தனின் பங்கு மிகச்
பொன். பூலோகசிங்கம்