கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: காத்திருப்பு

Page 1
瀾
 


Page 2


Page 3

காத்திருப்பு
(நாவல்)
தெணியான்
வெளியிடு: பூபாலசிங்கம் புத்தகசாலை,
340, செட்டியார் தெரு, கொழும்பு - 1 இ422321

Page 4
KATHIRUPPU A Social Novel
First Edition
Copy Right
Pages
Cover Design
Printed by
Price
ISBN
Published by
: December 1999
: (C) Author
122 + xi
: Ramani
: Perfect Printers.
130, Dias Place, Guna Singapura, Colombo - 12.
. Rs... 140/=
: 955-9396-03-X
: Poobalasingham Book Depot
340, Sea Street. Colombo - 11 T.P. 422321

பதிப்புரை
இந்த நாவலின் ஆசிரியர் தெணியான் அவர்கள் இலக்கிய உலகில் முன்னரே நன்கு அறியப்பட்ட ஒருவராவார். இவரது பிரபல நாவலொன்றைச் சில ஆண்டுகளுக்கு முன்னர் நாங்கள் எமது நிறுவனத்தின் மூலம் வெளியிட்டு வைத்திருந்தோம். மரக்கொக்கு என்ற இந்த நாவலுக்குச் சாஹறித்திய மண்டலப் பரிசும் கிடைத்தது பலரும் பாராட்டினர்.
தொடர்ந்து இல்லாது போனாலும் கூட, இடைக்கிடையே இந்த நாட்டில் தரமானவர்கள் எனக் கணிக்கப்படுகின்றவர்களின் நூல்களை நாம் நமது நிறுவனத்தின் மூலம் வெளியிட்டு வருவதை நீங்கள் அறிவீர்கள்.
அதன் அடிப்படையிலேயே இந்த நாவலையும் நாம் வெளியிட்டு வைக்கின்றோம். 'காத்திருப்பு என்ங் இந்த நாவலின் உள்ளடக்கக் கதைக்கரு ஒரு வித்தியாசமான அணுகுமுறையைக் கொண்டு புனையப்பட்டதொன்றாகும்.
தெணியான் தனக்கே உரித்தான தனித்துவ நடையைக் கொண்டு இந்தக் கதையை நகர்த்திச் செல்லுகின்றார் - நடத்திச் செல்லுகின்றார். சுவையாக இருக்கிறது.
இலக்கிய ரசிகர்கள் மத்தியில் சுவைஞர்களிடையே இந்த நாவலைப் பற்றிய கருத்து விவாதங்கள்கூட ஏற்படலாம் என நம்புகின்றோம். எதிர்பார்க்கின்றோம்.
அமரர் கேடானியலின் நாவலான 'கானல் என்ற நாவலை நாம் எமது நிறுவனத்தின் மூலம் வெளியிட்டதைத் தொடர்ந்து இலக்கிய உலகைச் சேர்ந்த பலர் எம்மைப் பாராட்டியதை இன்றுவரையும் பசுமையாக எமது நெஞ்சில் பதிய வைத்துள் ளோம். கானல் நாவல் ஈழத்து இலக்கிய உலகில் பல ஆரோக்கியமான சர்ச்சைகளை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

Page 5
மற்றும் பிரபல வானொலிக் கலைஞரும் இந்நாட்டுக் கலைஞர்களால் மதிக்கப்படுபவருமான திரு.ஜோர்ஜ் சந்திரசேகரன் அவர்களுடைய ஒரு சருகுக்குள் கசியும் ஈரம் நூலையும் பதிப்பித்து வெளியிட்டு வைத்தோம்.
நூல்களை வாங்கி விற்கும் நிலையிலிருந்து தரமான எழுத் தாளர்களினது புத்தம் புதிய புத்தகங்களை நாமே வெளியிடும் போது, அதை விற்பனை செய்யும்பொழுது கிடைக்கும் ஆத்ம திருப்தி இருக்கின்றதே, அது வார்த்தைகளுக்குள் அடங்க முடியாத ஒன்றாகும்.
இன்று இந்த நாட்டில் இலக்கியத் துறையில் பிரமிக்கத் தக்கதொரு மாற்றம் நிகழ்ந்து வருவதை நீண்ட காலப் புத்தக விற்பளையாளர் என்கின்ற முறையில் எம்மால் வெகு துல்லியமாக உணர்ந்து கொள்ள முடிகின்றது. ஈழத்துப் படைப்பாளிகளின் நூல்களை நமது நாட்டில் விரும்பிக் கேட்டு வாங்குவது மட்டுமல்ல, இன்று நம்மவர்கள் புலம்பெயர்ந்து வாழும் நாடுகளில் இருந்தும் நமது நாட்டு எழுத்தாளர்களினது நூல்களைக் கேட்டு வாங்கிப் பெறுகின்றனர்.
அதில் ஒருவர்தான் இந்த நாவலின் ஆசிரியர் தெணியான் அவர்களும்.
தொடர்ந்தும் சிறப்பான நல்ல நூல்களைத் தொடர்ந்தும் வெளியிட ஆவன செய்து வருகின்றோம். உங்களது பூரண ஒத்துழைப்புக் கிடைக்கும் பட்சத்தில் தொடர்ந்து பதிப்பகத் துறையில் காலூன்றி பல்வேறுவகை நூல்களை வெளிக் கொணர்வோம் என உறுதி கூறுகின்றோம்.
பூபாலசிங்கம் புத்தகசாலை பூ பூgதரசிங் கொழும்பு - 11
ii

முன்னுரை
ஒரு முன்னுரை எழுதவேண்டிய தவிர்க்கமுடியாத நிலையில் நான் உள்ளேன். அதுவும் மிகவும் குறுகிய கால இடைவெளிக் குள் எழுதிக் கொடுக்க வேண்டிய அவசரம்,
பிரியத்துக்குரிய நெருங்கிய நண்பரின் நூலுக்கு முன்னுரை எழுதுவது, மனத்திற்கு நேசமாயினும் சற்றுச் சங்கடமான நிலையும் கூட. ஆயினும் இலக்கியக் கூட்டங்களில் சிந்தப்படும் முகமன் புன்னகைகளுக்கு அப்பாலும் தொடரும் மனத்திற்கு இணக்கமான குடும்ப அளவிலான நண்பரான தெணியான் போன்ற ஒருவரின் புதிய நூலுக்கு அணிந்துரை எழுதுவது இனிமையான அனுபவமாகத் தெரிகிறது.
ஈழத்தில் நாவல் இலக்கியம் முதலில் உருவான காலம் பற்றி கருத்து வேறுபாடுகள் நிலவுகின்றன.
1890ல் வெளிவந்த அசன்பேயின் கதை ஈழத்தில் வெளிவந்த முதல் நாவல் என்று நம்பப்பட்டது. அப்படியாயின் ஈழத்தில் நாவல் இலக்கியம் படைக்க ஆரம்பித்து நூற்றாண்டைத் தாண்டிவிட்டது. 1856ல் வெளியான காவலப்பன்' என்ற நூலை நாவல் என்று ஏற்றுக்கொள்ளலாமா, இல்லை அது ஒரு மொழி பெயர்ப்பா என்றும் விவாதிக்கப்படுகிறது. காவலப்பனை நாவல் என்று ஏற்றுக்கொண்டால் தமிழ் நாவல் இலக்கியத்தின் வயது நூற்றைம்பதை எட்டுகிறது என்ற கருத்தை தெளிவத்தை ஜோசப் 'மல்லிகையில் முன் வைக் கின்ற காலகட்டத்தில் தான் தெணியானின் இந்த நாவல் வெளிவருகிறது.
கால அளவுகளைப் பார்க்கையில் தமிழின் முதல் நாவல்
தமிழகத்திலிருந்தல்ல, ஈழத்திலிருந்துதான் வெளிவந்தது என்ற வாதத்தையும் பெருமையையும் ஏற்றுக் கொண்டாலும் கூட தமிழகத்தில் அதன் அண்மைய வளர்ச்சிப் போக்கோடு

Page 6
ஒப்பிடுகையில் எமது நாவல் இலக்கியம் எந்தளவு பேசப்படும் நிலையில் நிற்கிறது என்றும் யோசிக்க வேண்டியுள்ளது.
குழந்தைகள், பெண்கள், ஆண்கள் 'விஷ்ணுபரம் என சு.ரா. ஜெயமோகன் போன்றோர் கதைக்கு மேலாகக் கிளைக்கதை களைப் பரப்பி, அதே நேரத்தில் மயிலிறகால் வருடுவது போன்று நுண்ணுணர்வுகளைப் புல்லரிக்கச் செய்யும் விரிவான பரந்த அனுபவங்களை அலை அலையாக வீசிவரும் நிலை ஈழத்தில் இன்னமும் உதயமாகவில்லை. பக்க விரிவையும் பிரசுர வசதிகளையும் அடக்க விலையையும் கருத்தில் கொண்டு மேலும் குறுநாவல்களே நாவல்களாக இங்கு நாமம் சூட்டப்படுகின்றன.
இதற்கு மேலாக, எமது விமர்சனத்துறையின் ஆக்கபூர்வமான பங்களிப்பின் போதாமையும் நாவலாசிரியர்கள் தம்மைச் செழுமைப்படுத்தக் கைகொடுக்கவில்லை எனவும் சிந்திக்கத் தோன்றுகிறது. அண்மையில் கவிஞர் சேரன் பேட்டியொன்றில் கூறிய கருத்தை இவ்விடத்தில் நினைவுபடுத்தலாம்.
படைப்பு என்பதை படைப்பின் அரசியல், சமூக, வரலாற்றுச் சூழலோடு சேர்த்து எடைபோட வேண்டிய அணுகுமுறையை அவர்கள் கொண்டுவந்தார்கள். இது முக்கியமானதுதான், எனினும் தனித் தனியான படைப்பாளுமைகள் பற்றிய ஆழமான விமர்சனங்கள் எம்மிடம் முக்கியமானதாக இருக்கவில்லை.
படைப்பாளிகள் பற்றிய விமர்சனங்கள் இடையிடையே இருந்தாலும் ஒரு வரன்முறையான முழுமையான விமர்சனம் முன்வைக்கப்படவில்லை என்றே கருதுகிறேன்.
உண்மைதான். படைப்பாளிகள் பற்றிய தனித்தனியான ஆழமான விமர்சனங்கள் முன்வைக்கப்படாததால் எழுத்தாளர்கள் தமது படைப்பாற்றல் பற்றிய தெளிவான கணிப்பீடுகளை அறிய வாய்ப்பின்றி, விமர்சகர்கள் முக்கியத்துவப்படுத்திய சமூக அரசியல் வரலாற்றுச் சூழலுக்கு அமைவாக கற்பனை உலகத்தி லிருந்து வரட்டுத்தனமாக எழுதித் தம்மையும் விமர்சகர்களையும் மட்டுமே திருப்திப்படுத்தினார்களே அன்றித் தம்மைச் செழுமைப் படுத்தவோ வாசகர்களின் உணர்திறனை விருத்தி செய்யவோ

முடியவில்லை என்றே எண்ணத் தோன்றுகிறது. ஆயினும் கவிதைத்துறை எப்படியோ தப்பிப் பிழைத்துவிட்டது.
கவிதை, சிறுகதை ஆகிய துறைகளோடு ஒப்பிடுகையில் ஈழத்தில் நாவல்கள் வெளிவந்தது தரத்தில் மட்டுமன்றி எண்ணிக்கையிலும் குறைவே. ஆரம்ப இடைக்கால நாவல்களைத் தவிர்த்து, எழுபதுகளின் பின்வந்த நாவல்களை நினைத்துப் பார்த்தால் செ.கணேசலிங்கத்தின் நீண்டபயணம், நந்தியின் மலைக்கொழுந்து, ஞானசேகரனின் 'குருதிமலை, பாலமனோகர னின் நிலக்கிளி, டானியலின் தண்ணீர்', 'கானல், ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியத்தின் 'ஒரு கோடை விடுமுறை, தாமரைச் செல்வியின் தாகம், அருளணின் "லங்காரமணி, அண்மையில் வெளிவந்த மாத்தளை சோமுவின் மூலஸ்தானம்' போன்ற ஒரு சிலவே சட்டென மனத்திற்குள் ஞாபகம் வருகின்றன.
தெணியானும் எமது நாவல் இலக்கிய வளர்ச்சிக்குத் தனது பங்களிப்பைப் பலமாகவே வழங்கியுள்ளார். நூலுருப் பெறும் அவரது ஐந்தாவது நாவல் இது வீரகேசரி வெளியீடான 'விடிவை நோக்கியைத் தொடர்ந்து, கழுகுகள் சென்னை நர்மதா வெளியீ டாக வந்தது. தொடர்ந்து பொற்சிறையில் வாழும் புனிதர்கள். 'மரக் கொக்கு ஆகியன இலங்கையிலேயே வெளியாகின. "மரக்கொக்கு நாவல் 1994ம் ஆண்டின் இலக்கியத்திற்கான இலங்கை சாகித்திய மண்டலப் பரிசையும், வடகிழக்கு மாகாண அரசின் பரிசையும், யாழ் இலக்கிய வட்டப் பரிசையும் ஒருங்கே
தட்டிக் கொண்டது குறிப்பிடத்தக்கது.
தினசரிகளில் வெளியான ஏனைய இரு குறுநாவல்களான "பனையின் நிழல்', 'பரம்பரை 'அகதிகள் ஆகியன விரைவில் நூலுருப் பெற இருப்பதாக அறிகிறேன். சிதைவுகள் என்ற மற்றுமொரு குறுநாவல் சுபமங்களாவும், கலை இலக்கியப் பேரவையும் இணைந்து நடத்திய போட்டியில் பரிசு பெற்றது. பின்பு தினகரன் வார மஞ்சரியில் தொடராக வெளிவந்தது.
தெணியானின் இலக்கியப் பங்களிப்பு பன்முகம் கொண்டு பரந்து விரிந்தது.

Page 7
"சொத்து, 'மாத்து வேட்டி ஆகியன தெணியானின் ஏராளமான சிறுகதைகளில் நூலுருப் பெற்ற சில சிறுகதைகளின் இரு தொகுதிகள், ஏராளமான இலக்கியக் கட்டுரைகளும் தெணியானின் ஆக்கங்களாக வெளிவந்து சிந்தனைகளைக் கிளறியுள்ளன. தூங்கி வழிந்து கொண்டிருந்தவர்களையும் உலுப்பியெழுப்பி ஆர்வமுடன் காது கொடுக்க வைக்கும் பேச்சுக்கலையும் அவருக்குக் கைவந்ததாகும்.
இலக்கியம் வெறும் பொழுது போக்கிற்கான சாதனமல்ல, அது ஆழ்ந்த சமூக நோக்கும் கடப்பாடும் கொண்டது என்ற அடித்தளத்திற்கு மேலாக தான் சொல்லுவது தனது தனிப்பட்ட, சமூக ரீதியான வாழ்க்கையின் நடைமுறைச் செயற்பாட்டினது சத்தியமான வெளிப்பாடாகவும் இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக நிற்பவர் தெணியான். தனது ஆரம்ப காலம் முதலே இடதுசாரி மற்றும் முற்போக்கு சிந்தனைகளோடும் அவை சார்ந்த போராட்டங்களோடும் தன்னை முழுமையாக இணைத்துக் கொண்ட அவர் தனது எழுத்தையும் சமூக மாற்றத்திற்கான, சீரமைப்பிற்கான கூரிய ஆயுதமாகவே பயன்படுத்தியுள்ளார்.
தெணியானின் எழுத்துக்களை மிகநீண்ட காலமாகவே உன்னிப்பாகவும் அனுபவித்தும் படிப்பவன் நான் அவருடைய நட்பு கிடைப்பதற்கு முன்னரே அவரது படைப்புகளோடு நன்கு பரிச்சயம் எனக்குண்டு நட்பின் நெருக்கத்தின் பின் அவரின் படைப்புகள் பற்றி அவருடனேயே நேருக்குநேர் காரசாரமாகவும் அதே நேரத்தில் ஆக்கபூர்வமாகவும் விமர்சிக்கும் நெருங்கிய நண்பர்கள் வட்டத்தில் ஒருவனானேன். இதனால் அவர் தனது படைப்புக்களில் கலைத்துவத்தின் நேர்த்திக்குக் கொடுத்துவரும் முக்கியத்துவத்தையும் அண்மைக்காலத்தில் அவதானிக்கும் வாய்ப்பும் கிட்டியிருந்தது.
மூன்று தசாப்தத்திற்கு மேற்பட்ட அவரின் எழுத்துத் தடங்களை திரும்பிப் பார்க்கையில் தொணியானின் படைப்பிலக்கிய வரலாற் றில் மரக்கொக்கு என்ற இதற்கு முந்திய நாவலை முக்கிய திருப்புமுனை என்று சொன்னால் புதிய படைப்பாகிய காத்திருப்பு மேலும் நுணுகச் செப்பனிடப்பட்ட கலை வார்ப்பு என்றே சொல்லத் தோன்றுகிறது.
vi

எழுத்தாளன் என்பவனுக்கு மென்மையான மனம் வேண்டும். மனத்திற்கு இனியதைக் கண்டால் சிரித்து மகிழ வேண்டும் துன்பத்தைக் கண்டால் மனம் வெதும்ப வேண்டும் அறிதிகளை எதிர்கொள்ளும் போது துடித்துப் பதைத்து எழ வேண்டும். இவற்றை அவன் அழுது, சிரித்து, கோபித்து வெளிப்படையாகக் காட்ட வேண்டும் என்பதில்லை. அவை அவனது மனத்தை உலுப்ப வேண்டும். குதற வேண்டும். குடைய வேண்டும் நாறல் பாக்குப்போல மனதுக்குள் ஊறிக் கிடந்து உள்வாங்கத்தான் சிறந்த படைப்புக்கள் பிறக்கும்.
தெணியானின் மனம் மென்மையானது. ஆனால் சிரிப்பையும் சோகத்தையும் பூசி மெழுகிக்கொண்டு கோபத்தை முனைப்பாகக் காட்டுவது தான் அவரது சுபாவம். இதனால் அவரது மேடைப் பேச்சுக்களையும், விமர்சனங்களையும், ஆரம்பகாலப் படைப் பிலக்கியங்களையும் மட்டும் தெரிந்தவர்களுக்கு அவர் சிம்ம சொப்பனமாகத் தெரிவதுண்டு.
இது எட்டி நின்று கதைப்போர் பேச்சு. உண்மையில் நெருங்கிப் பழகும் போதுதான் மெலிந்த நெடுது வளர்ந்த அந்த மனிதரின் வலித்த உடலின் உள்ளே கசிந்து இளகும் இதயத்தின் மென்மை புரியும். உள்ளே நேசம் சுரக்கும். நட்புக்காக ஏங்கும். நட்பில் மனத்தை இழக்கும். அதில் தன்னை இணைத்து சுகம் காணும். இதை நண்பர்கள் பலரும் "அறிவோர் கூடல்" கூட்டங்களில் பல தடவை உணர்ந்து நெகிழ்ந்திருக்கிறோம்.
அவரது இந்த இரு முனைப்பான போக்குகளை அவரது படைப்புக்களிலும் இனங்காணலாம். ஆரம்பகால படைப்புக்களில் வெளியே தெரியும் சீறும் தொணியானாகத்தான் தன்னை ஆர்ப்பரித்து வெளிப்படுத்தியுள்ளார். சீறிச் சினந்து கொத்திக் குதறும் தொணியானைக் 'கழுகுகள் நாவலில் கண்டோம்.
அண்மைக்காலத்தில் உள்ளே நெகிழும் தொணியானை தனது படைப்புக்களினூடே உணர்வுபூர்வமாக வெளிப்படுத்துகிறார். இதற்கு ஒரு உதாரணம் அவரது நான் ஆளப்பட வேண்டும் என்ற சிறுகதை,
vii

Page 8
இந்தப் பின்புலத்துடன் நோக்குகையில் தொணியானின் இந்தப் புதிய நாவல் எந்த வகையில் முக்கியத்துவம் பெறுகின்றது.
தொணியானையும் இன்னும் சில முற்போக்கு எழுத்தாளர்களை யும் சாதிப் பிரச்சனை தவிர வேறெதையும் எழுத முடியாதவர்கள் எனச் சிலர் கிண்டலடிப்பதுண்டு. மரக்கொக்கு என்ற அவரது இதற்கு முந்திய நாவலைப் படித்தவர்களுக்கு இப்பிரச்சனையை அவர் எவ்வளவு நிதானமாக ஆர்ப்பாட்டமின்றிப் பதிவு செய்திருக்கிறார் என்பது புரியும். வஞ்சம் தீர்க்க நிதானம் தவறிக் கொட்டியழும் சில படைப்புக்களிடையே அவரது படைப்பின் தனித்துவத்தைப் புரிந்துகொள்ளலாம்.
பொற்சிறையில் வாழும் மனிதர்கள் சாதியளவில் உயர் மட்டத்திலிருந்தாலும் பொருளாதார ரீதியில் சுரண்டப்பட்டுத் துயருறும் பிராமணர்கள் பற்றி அனுதாபத்துடன் பேசியது.
இந்தப் புதிய நாவலில் சாதி என்ற சொல்லே வரவில்லை. சாதியம் பற்றியும் அவர் பேசவில்லை. தொணியான் பின்வாங்கிவிட்டார் என்று சிலர் வாதிக்கக் கூடும். இது தவறானது.
உண்மையில் அவர் சாதியம் பற்றி மட்டும் எழுதும் எழுத்தாளர் அல்ல. மனிதரின் வாழ்வியல் பற்றிப் புரிந்துணர்வோடு எழுதும் எழுத்தாளராக தன்னை விரிவுபடுத்தியுள்ளார். சாதியால் இழிவு படுத்தப்பட்டவர்கள் பற்றி எழுதியுள்ளார். பொருளாதார ரீதியாக அடக்கப்பட்டவர்கள் பற்றி எழுதியள்ளார். இனரீதியாகத் துன்பத்திற்கு ஆளாக்கும் இன்றைய எரியும் பிரச்சனை பற்றியும் எழுதியுள்ளார்.
இன்று வெளியாகும் படைப்புக்களில் பெரும்பாலானவை எரியும் பிரச்சனையான இனப் பிரச்சனை பற்றியே பேசுகின்றன. இது இன்றைய தேவையும் புரிந்துகொள்ளக் கூடியதும்தான். ஆயினும் இன்றை எரியும் பிரச்சனை நாளை எப்படியோ?
எந்தச் சமூகத்திலும் என்றுமே நிரந்தர பிரச்சனையாக இருந்த, இருக்கின்ற வாழ்வியல் பிரச்சனை பற்றியே இந்த நாவலில்
viii
 

பேசுகிறார். வறுமை, பாலியல் ஆகிய இரண்டும் பின்னிப்
பிணைந்து இழையோடும் நாவல்தான் காத்திருப்பு.
இந்த நாவலில் இன்னும் ஒருபடி மேலே போய் பாலியல்
ரீதியாக வஞ்சிப்புப் பற்றியும் பேசியுள்ளார். இன்று பாலியல் பற்றி பலவித சலசலப்புகள் எழுந்துள்ளன. சிறுவர் பாலியல் துஷ்பிரயோகம் பற்றி தொடர்பு சாதனங்கள் முழங்குகின்றன. பெண்கள் மீதான பாலியல் வல்லுறவுகள் செம்மணி முதல் கதிர்காமம் வரை அடக்க அடக்க கிளர்ந்து ஒலிக்கின்றது.
இந்த நாவலிலும் பாலியல் வல்லுறவு வருகின்றது. உடல் ரீதியான பலத்தினால் அது பிரயோகிக்கப்படவில்லை என்பதே இங்குள்ள ஒரே வித்தியாசம். ஒருத்தியின் வறுமையைப் பயன்படுத்தி மனோரீதியாகத் திட்டமிடப்பட்டு படிப்படியாக அவள் அவ்வாறான வல்லுறவுக்கு ஆளாகிறாள்.
உண்மையாக இது வல்லுறவோ அல்லது இசையுறவோ என்று நாம் பிரித்துக் கூறமுடியாத வகையில் நாவல் மிக நுணுக்கமாகச் சொல்லப்பட்டிருக்கிறது. எமது எண்ணங்களுக்கும் கற்பனைகளுக்கும் புரிதலுக்கும் கதாசிரியர் நிறையவே சந்தர்ப்பம் அளித்துள்ளார்.
எமது சமுதாயம் கட்டுப்பாடானது. இன்று அதன் இறுக்கம் உடையும் நிலையில் இருந்தாலும் கூட, மேற்கத்தைய அல்லது ஏனைய பல நாகரிகங்களோடு ஒப்பிடுகையில் இன்னமும் முழுமையாகச் சிதைவுறவில்லை. இங்கு கணவன் மனைவி, பெற்றோர் பிள்ளைகள் குடும்பம் என்ற உறவுகள் இறுக்கமானவை. இராமர் சீதை போன்று ஒருவனுக்கு ஒருத்தி என்ற கருத்து இன்று நடைமுறையில் சிதைந்து வந்தாலும் சித்தாந்த ரீதியாக இன்னமும் இறுக்கமாகவே உள்ளது.
இந்த இறுகிய கட்டமைப்புக்குள் ஒரு பெண் கணவனுக்கு பாலியல் சுகங்களை வழங்கும் ஒருத்தியாக அவனது நாளாந்த தேவைகளை பூர்த்தி செய்யும் ஒருத்தியாக விளங்கி வந்தாள். கூட்டி மெழுகி உடைகள் தோய்த்து, சமைத்து உணவு வழங்கி படுத்து எழும்பும் இயந்திரம் பெண் குடும்பத்தைப் பராமரிப்பது,

Page 9
குழந்தைகளை பெறுவது அவளது கடமையாக விளங்க வைக்கப்பட்டிருந்தது.
பல்லாயிரக்கணக்கான பெண்கள், ஆண் பெண் உறவு அது கொடுக்கும் இதமான சுகம், நேச உணர்வு, பரஸ்பர திருப்தி உணர்வு, அது சொரியும் பாதுகாப்புணர்வு போன்றவற்றை உணராமலே திருமணம் செய்து, குழந்தை பெற்றுப் பாட்டிகளாகி மண்ணோடு மண்ணாகியிருக்கிறார்கள்.
இங்கு தெணியான் கதையிலும் அவள் அப்படியே ஆகியிருக்கக்கூடும். ஆயினும் அவளது உணர்வுகள் சரியாகவோ தவறாகவோ தூண்டலுக்கு ஆளாகின்றன.
அவளது கணவன் சற்று வித்தியாசமானவன். இளவயதில் தாயை இழந்த அவனுக்குப் பொரியம்மாவே அம்மா. அவள் காட்டிய அதீத அன்பும், அக்கறையும், கவனிப்பும் அவனை நெஞ்சில் திராணியற்றவனாக, எதற்கும் வளைந்து கொடுப்பவ னாக, தன்னைத் தானே மதிக்கும் சுயமதிப்புக்கூட அற்றவனாக சிதைத்துவிட்டது. அவன் மனைவி மேல் மதிப்பும் அதீத அன்பும் வைத்திருப்பவன். அவள் சந்தோசத்திற்காக எதையும் இழக்கத் துணிபவன். ஆனால் எதையும் வெளிப்படையாகச் சொல்லவோ செயலில் காட்டவோ தெரியாத அப்பாவி, அதற்கு மேலே. அவளது தேவைகளையும் உணர்வுகளையும் திருப்தி செய்யவும் தவறிவிட்டானா?
இவற்றையெல்லாம் நாவலில் தெணியான் வெளிப்படையாகச் சொல்லவில்லை. சொல்லாமல் சொல்லியிருக்கிறார், வாசகர்கள் தத்தமது கற்பனைகளுக்கும் அனுபவத்திற்கும் ஏற்பப் புரிந்து கொள்ளலாம். உண்மையில் இந்த நாவலில் அவர் சொல்லிய வற்றைவிட சொல்லாமல் உணர்த்தியவையே அதிகம். கத்தி முனையில் நடப்பது போல மிகுந்த கவனத்துடனும் நிதானத்துடனும் தெணியானின் பேனா மையைச் சிந்தியிருக்கிறது.
நாவலின் இறுதியில், இடையில் புகுந்தவன் பற்றிய அவளின் சிந்தனை இவ்வாறு ஓடுகிறது.
 

'.ஆனால் நீ எனக்குத் தேவைப்பட்டாய். அந்தத் தேவையை நான் உணர. கண்டுகொள்ளச் செய்தவனும் நீ என்னைச் சந்திக்காமல் இருந்திருந்தால் அந்தத் தேவையை நான் உணராமல் இருந்திருக்கக்கூடும். அதை உணர்த்தியவன் நீ.
வல்லுறவு பற்றிப் பேசுவதால் இக்கதையின் கதாநாயகன், கதாநாயகி, வில்லன் எனச் சினிமாப் பாணிப் பாத்திரங்களாக உருவாக்கப்பட்டிருக்கும் என நாம் எண்ணினால் அது தவறானது. எல்லாப் பாத்திரங்களுமே இயல்பாகப் படைக்கப்பட்டுள்ளது. அவர்களது எண்ணங்களும், செய்கைகளும் உள்ளபடியே காட்டப் பட்டுள்ளது. எவர்மீதும் ஆசிரியர் கோபத்தைக் காட்டவில்லை. எம்மையும் காட்டவிடவில்லை. அவ்வளவு நிதானமாகத் தன் உணர்வுகளை அடக்கி வாசித்துள்ளார்.
பாலியல் நாவல் என்பதால் முகம் சுளிக்க வைக்கும் சம்பவங்க ளைக் கொண்டிருக்கும் என எண்ணினால் அது தவறானது.
அடுக்களைக்குள் வீட்டு விளக்கைத் தேடுகிறாள். அவளுக்கு அவசரம், இருண்டு கிடக்கும் வீட்டுக்கு அவள் விளக்கேற்ற வேண்டுமல்லவா?
இவ்விதம் மிக நாசூக்காகச் சொல்கின்றார்.
இந்த நாவல் அவனின் காத்திருப்பு பற்றிப் பேசினாலும் அவனையும் நுணுக்கமாகப் பாக்கத் தவறவில்லை. பேய்ச்சுப்பு, சுப்பிரமணியமாக மாறி, மீண்டும் பேய்ச்சுப்புவாகத் தாழ்ந்து, இறுதியில் அவள் முன் படமாகி சுப்பிரமணியமாக உயர்கிறான்.
கதாசிரியர் கதை நகர்த்திப் போகின்ற பாங்கில் இதைப் பாலியல் நாவலாக மாத்திரமன்றி உளவியல் நாவலாகவும் பார்க்கத் தோன்றுகிறது. எதையும் சொல்லவோ செய்யவோ முடியாது மனத்திற்குள் மறுகிக் கொண்டிருக்கும் பாத்திரமான சுப் பிரமணியம் நந்தகோபாலனின் சைக் கிள் காற்றை இரகசியமாகத் திறந்துவிடுவதாகச் சித்தரித்திருப்பது இதற்கு நலல உதாரணம.
இவற்றுக்கு மேலாக இந்த நாவல் 25 - 30 வருடங்களுக்கு
xi

Page 10
முன்னரான யாழ்ப்பாணக் கிராமத்தை நினைவிற்குக் கொண்டு வருகின்றது. வயிரவர் கோயில் வீதி, விளையாட்டுப் போட்டி, நிலவொளியில் வாடகைச் சைக்கிள் ஓட்டப் பழகுவது, செகன்ட் சோ ஆங்கிலப்படம், பருத்தித்துறை தோசை என கழிந்தவற்றை நினைத்து ஏங்க வைக்கிறது.
இந்த நாவல் தெணியான் எழுத்து துறையில் ஓர் மைல்கல் என நம்புகின்றேன். இப்படைப்பை உருவாக்குவதில் அவர் காட்டி யுள்ள உண்மையான உழைப்பைக் காண்கிறோம். கதையின் கருவில், அது சொல்லப்பட்ட முறையிலும், எழுத்து நடையிலும, அவரின் நீண்ட எழுத்து அனுபவத்தின் முதிர்ச்சியையும, நுண் உணர் திறனையும், கற்பனை வளத்தையும், மொழி வசப் பாட்டினையும் காண்கிறோம். அவரது அனுபவமும் சிந்தனையும் கற்பனையும் பின்னிப் பிணைந்து ஈழத்து நாவல் பரப்பில் நாம் இதுவரை சந்திக்காத புதிய வாசக அனுபவத்தைக் கொடுக்கிறது.
நாவல் என்பது வெறும் சம்பவக் கோவை என்பதற்கு மேலாக ஒரு சமுதாயம் வெளியே பேசக் கூச்சப்படும் ஒரு விடயத்தினை மிகவும் கண் ணியமாகவும் , நேர்மையாகவும் அழகுபடச் சொல்லியிருக்கும் அவரது முயற்சி பாராட்டுக்குரியது.
தெணியானின் ஆழ நெஞ்சில் இன்னும் ஏராளமான வைரக் கற்கள் அமுங்கிக் கிடக்கின்றன. அவற்றைத் தோண்டியெடுத்துப் பட்டைதீட்டி காலத்தால் சாகாத படைப்புக்களாகச் செதுக்கக் கூடிய ஆற்றல் தெணியானிடம் செறிந்து கிடக்கின்றது. அவற்றை யும் அவர் படைத்துத் தரவேண்டும் என எதிர்பார்க்கிறோம்.
2010. 1999 எம்.கே.முருகானந்தன்,
348 காலி வீதி, வெள்ளவத்தை. கொழும்பு 6.
xii

காத்திருப்பு
"அ. ம். மா. அ. ம்ம். மா அ. ம்ம். மாஆ. அ. .ம்ம்.
y9
-LDITSV...
"ஏன் பிள்ளை தம்பி அழுகிறான்?" வெளியே போயிருந்த பெரியம்மா, கேட்டுக்கொண்டு வளவுக்குள் வருகிறாள்.
"அவருக்குப் போதாதாம்".
"கேட்டால் குடுக்கிறது தானே!"
"எங்களுக்கு."
"உங்களுக்கில்லாட்டாலும் தம்பிக்குக் குடுங்கோ" பெரியம்மா அடுக்களைக் கொட்டிலுக்குள்ளே நுழைகின்றாள்.
அவன் எழுந்து ஓடிவந்து பெரியம்மாவின் கால்களைக் கட்டிக் கொள்ளுகின்றான்.
பெரியம்மா அவனைத் துர்க்கி மடி மீது வைத்துக்கொண்டு அமருகின்றாள்.
அவன் கையில் சிறிய ஒரு மரவள்ளிக்கிழங்குத் துண்டு.
"எடி பிள்ளை கொய்யா வந்தாப்பிறகு அரிசி வாங்கி உங்களுக் குச் சமைச்சுத் தாறன் அவன் நித்திரையாப் போவிடுவன்"
"அதுக்கு மத்தியானம் ஒரு துண்டு கிழங்கு கூட எங்களைத் தின்னவிடானாம்".
"அவன் குழந்தையடி"
"இஞ்செ. உவனைவிடச் சின்னக் குழந்தை உவன்ரை வாயைப் பார்த்துக் கொண்டு பேசாமல் இருக்கிறாள்.
1.

Page 11
உவனுக்குத்தான் பெரிய வயிறே!"
"என் னடி. உவனுக்கு. உவனுக் கெண்டு ஆரையோ சொல்லுமாப் போல சொல்லுறாய்"
"உவன் உனக்குத்தான் செல்லம்"
"என்னெடி சொன்னனி. என்னெடி சொன்னனி.”
அவளை இழுத்துப் போட்டு கேட்டுக் கேட்டு முதுகில் * குத்துகிறாள், அடிக்கிறாள்.
"விடம்மா.விடம்மா. அவள் தெரியாமல் சொல்லிப் போட்டாள்"
மூத்தமகள் இடையில் புகுந்து தடுத்து நிற்கின்றாள். இப்பொழுதும் அவள் சினம் ஆறுவதாக இல்லை.
“என்ன சொல்லுகிறாய், அவனை ஆரெண்டு நினைச்சுக் கதைக்கிறாய். அவன்தான் என்ரை பிள்ளை. அவன் திண்ட மிச்சம்தான்ரி உங்களுக்கு"
அவன் பிறந்து இரண்டு ஆண்டுகள் நிறைவதற்குள் அவனைப் பெற்றவளை இழந்து போனான். தந்தை முகத்தை அவன் பார்த்ததில்லை.இன்று சிலசமயம், இறந்து போன தாயைத் தன் நினைவுத் திரையில் நிறுத்திப் பார்ப்பதற்கு அவன் எத்தனிப்பான். அவளின் உருவம் அவன் மனத்தில் அருவுருவமாக, நிறம் மங்கிய நிழற்படம் போலச் சலனப்படும். அதற்குமேல் அவனுக்கு அம்மாவாக, அப்பாவாக, தெய்வமாக எல்லாம் இருக்கின்றவள் அவனுடைய பெரியம்மாதான்.
பெரியம்மாவின் பிள்ளைகள் அவனுக்கு மூத்தவர்களாக இரண்டு பெண்கள். அவனுக்குக் கீழே மூன்று பெண்களும் இரண்டு ஆண்களுமாகிப் பெரிய குடும்பம், அந்தக் குடும்பத்தில் அவன் பெரியம்மாவுக்குச் செல்லப்பிள்ளை,
பெரியப்பா சிலசமயம் சொல்லுவார் -
"அவனை மடியிலெ மடியிலெ தூக்கி வைச்சு நீ மண்ணாக்கு கிறாய்"
"ஒமோம். மண்ணிலெ உருளுகிறவனெல்லாம் பொன்னாகத் தான் விளையுதுகள்"
பெரியப்பாவுக்கு அப்போது மெல்லிய சினம் மூளும்.
2
 

"எல்லாப் பிள்ளையளையும் ஒரே விதமான கரிசனையோடை பாக்க வேணும்"
"ஆரைப் பாக்கிறதிலை கரிசனை குறைஞ்சு போச்சு"
"ஒமோம், ஊரான் பிள்ளை தலை தடவ தன் பிள்ளை தானாக வளரும்"
“என்ன சொன்னனிங்கள்? பெரியம்மா எரிச்சலுடன் கேட்கின்றாள்.
"பழமொழியைத்தான் சொன்னனான்"
“என்ன பழமொழி?”
“ஊருலகத்திலெ உள்ள பழமொழி"
"ஏன் பேசிறியளில்லை?" “என்ன பேசிறது! சொல்லித்தான் தெரிய வேணுமே!"
"என்ன தெரியவேணும் எனக்கு வேறெ பிள்ளையன் இல்லை. அவன் தான் என்ரை பிள்ளை. அவன் ஊரார் பிள்ளை இல்லை. நான் பெத்த பிள்ளை."
பெரியம்மா தன் அருகே நின்ற அவனைத் தூக்கி எடுத்து நெஞ்சோடு அனைத்து, தலையைக் கோதி விட்டுக் கொண்டு கண்ணீர் சிந்துகிறாள்.
பெரியம்மாவின் தோள்மீது கிடந்து அவன் தேம்புகின்றான். பெரியம்மாவின் கண்ணிரைக் கண்டு அவன் விக்கல் எடுத்தெடுத்து பெரிதாகத் தேம்புகின்றான். அவன் தேம்புதல் பெருகப் பெருக, பெரியம்மா வாய்விட்டுக் கோ வென்று அழ ஆரம்பித்துவிட்டாள். அவனையும் பெரியம்மாவையும் கண்டு பெரியம்மாவின் மூத்த பெண்பிள்ளைகள் இருவருக்கும் கண்ணி கசியத் தொடங்குகிறது.
பெரியப்பா திகைத்துப் போனர். இப்படியொரு பெரிய தாக்கம்,
சாதாரணமாகத் தான் சொன்ன ஒரு பழமொழி உண்டாக்கும்
என்று அவர் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. மனம் நெகிழ்ந்து
கண்கள் அவருக்கும் மெல்லக் கலங்குகின்றன. பெரியம்மா
தோள்மீது கிடக்கும் அவனை, "அபக் கென்று தூக்கி தனது
3.

Page 12
  

Page 13
குழப்பமும் அவனை ஒழுங்காக விளையாட்டில் ஈடுபடாத வண்ணம் அவனைத் தடுக்கும்.
அவன் விடும் சின்னத் தவறுக்கும் எதிர்க் கோஷ்டி பெரிதாகக் கேலி செய்யும், அவனைத் தங்கள் பக்கம் சேர்த்துக் கொண்டவனின் சீற்றத்தை அது கிளறிவிடும். அந்த மாணவன் உடனே சினந்து கொண்டு சொல்வான்:
"பேய்ச் சுப்பு. உனக்கென்ன விளையாடத் தெரியும்?"
சுப்பு என்னும் முள் முடியைக் கொஞ்சம் கொஞ்சமாக அவன் தலையில் இப்படியே சூட்டிக் கொண்டார்கள்.
சுப்பு என்று அழைக்கும் போதிலெல்லாம் வாஸ்தவமாகப் பேய்ச்சுப்பு என்னும் அர்த்தத்தில் அவனை இம்சித்தார்கள்.
பெரியம்மா காதுக்கு எப்படியோ இந்தச் சுப்பு - பேய்ச்சுப்பு போய்ச் சேர்ந்துவிட்டான். W
பெரியம்மா துடித்துப் போனாள். அவளுக்குத் தெரியும், அவன் பேய்ச் சுப்பு அல்ல. வாயாடியாக இல்லாதவர்கள் எப்போதுமே அறிவில் குறைந்தவர்களா? அவனை எப்படிச் சொல்லலாம் பேய்ச் சுப்பு என்று!
"ஐயா, இந்தப் பிள்ளையை இப்பிடிச் சொல்லுகிதுகளாம்"
*6IČILI Lọ GILDLIDIT?”
“சுப்பு எண்டு”
"பெயரைச் சுருக்கிச் சொல்லுறார்கள் போலெ”
“இல்லை ஐயா"
"அப்ப.”
"பேய்ச்சுப்பு எண்டு.
ஆசிரியர்கள் மாணவர்களை அழைத்து எச்சரித்தார்கள்; கண்டித்தார்கள். ஆனால் சுப்பு அழிந்து போகவில்லை. சுப்பு - பேய்ச் சுப்புவாக அவன் ஆகிப் போனான்.
சின்னப் பிள்ளைகள் அவனைச் சீண்டிக் கொண்டிருந்தார்கள். பள்ளிக்கூடம் அவனுக்கு ஒரு சிறைக்கூடமாகத் தோன்ற ஆரம்பித்தது. படிப்பிலும் அவன் பெரிய கெட்டிக்காரனல்ல.
6
 

பள்ளிக்கூடம் இல்லாத நாட்களில் அவனுக்கு ஒரே குதூகலம், பள்ளிக்கூடம் போவதென்றால் அவன் முகம் பட்டென்று வாடிப் போகும். அவனை நிர்ப்பந்தித்துப் பள்ளிக்கூடம் அனுப்பி வைப்பது, பெரியம்மா மனதுக்கு உவப்பாக இருக்கவில்லை. எட்டாவது வகுப்பு முடிந்த பிறகு அவனை வீட்டோடு பெரியம்மா நிறுத்திக் கொண்டாள்.
ஆனால் பேய்ச் சுப்பு பள்ளிக்கூடத்தோடு போய்விடவில்லை. அவனோடு சேர்ந்து ஊருக்குள்ளும் அது வந்து விட்டது.
2
நந்தகோபாலன் எங்கே வளர்ந்தான் என்றால் அது வயிரவர் கோயில் வீதி என்றே சொல்ல வேண்டும். அந்தக் கோயில் அவன் வீட்டுக்கு அதிக தூரத்தில் இல்லை. சாதாரண கூப்பிடு தூரம். மெல்ல அடியெடுத்து வைத்து நடப்பதற்கு ஆரம்பித்த காலத்தில், சில சமயம் வீட்டில் அவன் காணாமல் போய் விடுவதுண்டு. அந்த வேளைகளில் அவன் அன்னை அவனைத் தேடி அங்குமிங்கும் ஒடி அந்தரிப்பாள். இறுதியில் வயிரவர் கோயிலுக்கு ஒடிச்சென்று பார்த்தால் அங்கு அமைதியாகத் தனிமையில் அவன் விளையாடிக் கொண்டிருப்பான்.
அந்தப் பிஞ்சுப் பருவத்திலேயே தன் வயதொத்த சின்னஞ்சிறு பிள்ளைகளை அவன் அழைப்பான்.
“கோயில் போவம்'
"நாங்க வரல்லெ" அவர்கள் மறுப்பார்கள். "யேன்”
"பேய் இருக்கு"
"BitbLOT"
"உம்மை. ஆச்சி சொன்ன" "பேய் இல்லை”
݂ ݂ - - - உம்மாண்டி பிடிக்கும்
"உம்மாண்டி சும்மா”

Page 14
"நா மாட்டன்”
"நா போறன்"
அவன் வயிரவர் கோயில் நோக்கிப் புறப்பட்டு விடுவான். அப்போது அவனோடு சேர்ந்து கொள்வதற்கு மறுத்து நின்ற சிறுவர்களுள் யாராவது ஒருவன் "நா வாறன்" என்று பின்னால் போவான். அவனுடன் புறப் பட்டுவிட்டவனைப் பார்த்து இன்னொருவன் பின் தொடர்வான். அவனைக் கண்டு இன்னும் ஒருவன். இப்படி ஒருவர் ஒருவராக . இறுதியில் எல்லோரும் போய்ச் சேர்ந்துவிடுவார்கள்.
அவர்கள் எல்லோருக்கும் தலைவன் நந்தகோபாலனாகத்தான் இருக்கும்.
மண்ணில் சோறு கறி சமைத்து அவர்கள் விளையாடுவார்கள். அந்தக் குடும்ப விளையாட்டில் அதிகாரம் பண்ணும் கணவனாக அவன் இருப்பான்.
மணலில் கோயில் கட்டித் திருவிழாச் செய்வார்கள். அவன் திருவிழா உபயகாரனாக முன்னின்று எல்லாம் கொண்டு நடத்துவான்.
கள்ளன் பொலிசு விளையாட்டு நடத்துவார்கள். அவன் பொலிசாக வந்து கள்ளனைக் கைது செய்து கடும் தண்டை கொடுப்பான். -
பள்ளிக்கூடம் போய்வர அவர்கள் ஆரம்பித்தார்கள். அதன்பிறகு மாலை வேளைகள், விடுமுறை காலங்கள் எல்லாம் வயிரவர் கோயில் வீதியில் கழிந்தன.
கெந்தி அடித்தார்கள்.
கிளித்தட்டுப் பாய்ந்தார்கள்.
வார் ஓட்டம் ஓடினார்கள்.
பள்ளிக்கூடத்தில் நடப்பது போல இல்லங்களாகப் பிரிந்து தங்களுக்குள் விளையாட்டுப் போட்டி நடத்தினார்கள்.
வயிரவர் கோயில் புளியமர நிழல் சலித்துப் போனால் நந்தகோபாலன் சில சமயங்களில் யுக்தியை மாற்றுவான்.
"இண்டைக்குப் போய்க் குளத்திலெ குளிப்பம்"
8
 

கடலுக்குப் போய் நீந்துவம்"
"எங்கே மாங்காய் கிடக்கு. புடுங்கிச் சம்பல் போடுவம்"
"(3ETLITG) 356T61 (36.60)6) (36.1600TT b
"மடையா! இது களவே முசுப்பாத்தி. இளனியும் புடுங்கி வருவம்"
நந்தகோபாலன் அரைக் காற்சட்டையை மேலே இழுத்து விட்டுக் கொண்டு சட்டென்று புறப்பட்டு விடுவான். அவன் பின்னே வானரப் படை போல நண்பர்கள் கூட்டம், அவன் கட்டளைக்குப் பணிந்து வந்து கொண்டிருக்கும்.
சயிக்கிள் ஒட்டும் பருவத்துக்கு அவர்கள் வந்துவிட்டார்கள். எல்லோருக்கும் கொள்ளை ஆசை. சயிக்கிள் ஒட்டுவது என்பது பெரிய ஒரு சாகசமாக அப்போது அவர்களுக்குத் தோன்றியது. சயிக்கிளில் ஏறிச் சவாரி போவது வெகு உல்லாசமாக இருக்கும் என்று ஆவல் கொண்டார்கள்.
ஊரில் சயிக்கிள் கடை ஒன்றிருந்தது. அது சுகதேகியின் கடை சுகதேகிக்குப் பெயர் என்னவோ பொன்னையா என்றுதான் தலைமைக்காரன் வீட்டுப் பதிவேடுகளில் குறித்திருந்தது. பொன் னையாவை ஊரில் எவருக்கும் தெரியவராது. எல்லோருக்கும் சுகதேகியைத் தெரியும். ஊருக்குள் இருக்கும் ஒரேயொரு சயிக்கிள் கடைக்காரன். உடல் நோகாமல் சீவியத்தை ஒட்டுவதில் ஆள் மகா நிபுணன், சுகதேகியாக வாழ்வதற்குத் தெரிந்த ஒரு மனிதன். அதனால் ஊர் மக்கள் சுகதேகி என்ற அர்த்தமுள்ள பெயரை அவருக்குச் சூட்டிவிட்டார்கள்.
சுகதேகியின் கடைக்குள்ளே ஒரு றாக்கை உண்டு வெறும் றாக்கை. அதன் ஒரு தட்டில் பழைய மணிக்கூடு ஒன்று "டிக்.டிக். டிக்." என்று ஓடிக்கொண்டிருக்கும். அதன் அருகே ஒரு கொப்பியும் பென்சிலும் அவர் வைத்திருந்தார். யாராவது ஒருவர் வந்து வாடகைக்குச் சயிக்கிள் வாங்கிக் கொண்டு போகும்போது, அந்தக் கொப்பியில் அவர் பெயரை எழுதி, மணிக்கூட்டில் நேரம் பார்த்து அதனையும் குறித்துக் கொள்வார். போனவர் சைக்கிளுடன் திரும்பி வரும் வேளை மீண்டும் நேரத்தைப் பார்த்து, கொப்பியில் குறித்து வைத்திருக்கும் நேரத்திலிருந்து கணக்கிட்டு, மணிக்கு முப்பது சதம் வீதம் வாடகை அறவிடுவார்.
9

Page 15
வாடகைக்கு விடுவதற்கென்று சுகதேகி மொத்தம் மூன்று சயிக்கிள்கள் வைத்திருந்தார். எல்லாம் பழசு, ஆனால் ஒயில் பூசித் துடைத்து பளபளக்கும் வண்டிகள், புதிய சயிக்கிள்கள் அவற்றின் மினுமினுப்பில் தோற்றுப்போகும். சின்னச் சின்னத் திருத்த வேலைகளும் சுகதேகிக்குத் தெரியும். காற்றுப் போனால் ஒட்டுவேலைக்கு நீண்ட நேரம் எடுத்து ஆறுதலாகச் செய்து முடிப்பார். திருத்த வேலைகளுக்கென்று சுகதேகியை நாடி வருகின்றவர்கள் மிக அருந்தல். ஆனால் எந்த வேளையிலும் தான் வேலையில்லாமல் சும்மா இருப்பதாகக் காட்டிக் கொள்ள மாட்டார். நிற்கவே நிற்கிறது வாடகைக்கு விடுவதற்கென்று அவர் வைத்திருக்கும் சயிக்கிள்கள். அவற்றில் ஒன்றினை எடுத்து ஏதாவது ஒரு திருத்தவேலை செய்து கொண்டிருப்பார்.
எந்தவொரு சயிக் கிள் கடைக்காரனிடமும் இல்லாத பிரத்தியேகமான ஒரு சயிக்கிள் அவரிடம் நிற்கிறது. நெருப்பில் எரியக்கூடுமானால் அடுப்பில் வைத்து எரிக்கக்கூடிய ஒரு விறகு கட்டை அது.
பிடிப்பதற்கு ஒரு ஹான்ரில் குந்தி இருப்பதற்கு பழைய சேலை சுற்றிய ஒரு சீற்; சுழலுவதற்கு இரண்டு சக்கரங்கள்; அந்தச் சக்கரங்களைச் சுற்றுவதற்கு அடிக்கடி கழன்று தொங்கும் ஒரு செயின் இதுதான் அந்தச் சயிக்கிள்.
பகல் வேளையில் அதற்கும் வாடகையாக மணிக்கு முப்பது சதம் அறவிட்டுவிடுவார். இரவானால் ஒரு இரவுக்கு இரண்டு ரூபா மாத்திரம் பெற்றுக் கொள்வார். மாலை ஆறுமணிக்குப் பழக்கச் சயிக்கிளை எடுத்துப் போய் அதிகாலை ஆறுமணிக்குத் திருப்பிக் கொடுத்துவிட்டால் போதும்,
சுகதேகியிடம் உள்ள பழக்கச் சயிக்கிள் நந்தகோபாலனுக்கும் நண்பர்களுக்கும் ஞாபகத்துக்கு வந்தது. அவர்கள் அவரை நாடிப்போவதற்கு ஒரு மனதாக எல்லோரும் தீர்மானித்தார்கள்.
எந்த நேரத்தில் சயிக்கிள் பழக்கத்தை வைத்துக் கொள்வது! பகல் வேளை வெயில் சுட்டெரிக்கும். வாடகைப் பணமும் அதிகம் போகும்.
பழக்கக்காரன் ஒட்டும்போது சயிக்கிள் தளம்பி நாரி நெளிப்பதும் விழுந்தெழும்புவதும் பார்ப்பவர் கண்களுக்கு
10
 

பெரு விருந்தாக இருக்கும் எல்லோரும் கேலி வேறு பண்ணுவார்கள். அப்படியானால் எவர் கண்களிலும் படக்கூடாது. அதற்கு ஒரே வழி.நிலவிலே சயிக்கிள் ஒட்டிப் பழகுவதுதான்.
ஒரு பூரணை தினத்தன்று மாலையில் சுகதேகி கடைக்கு நந்தகோபாலன் போனான். பழக்கச் சயிக்கிளை வாடகைக்கு வாங்கினான். அதை உருட்டிக் கொண்டும், தெண்டித் தெண்டித் துள்ளிக் குதித்துக் கொண்டும், வயிரவர் கோயிலை நோக்கி வந்தான்.
நந்தகோபாலன் வரவை எதிர்பார்த்திருந்த நண்பர்கள் அவன் தூரவந்து கொண்டிருக்கும் போதே அவனைக் கண்டு கொண்டு விட்டார்கள்.
"எடே கோபால் வாறான்ரா . கோபால் வாறான்ரா." கூக்குரல் போட்டவண்ணம் எதிர்கொண்டு ஓடிச்சென்று அவனைச் சூழ்ந்து கொண்டார்கள்.
நந்தகோபாலன் தலை நிமிர்ந்து பெருமையோடு எல்லோரையும் ஒரு தடவை பார்த்தான். அவர்களை விலக்கி விட்டுக்கொண்டு தெண்டித் தெண்டிக் குதித்து சயிக்கிளை முன்னுக்குத் தள்ளிக் கொண்டு ஓடினான். அவனைத் தொடர்ந்து அவன் நண்பர்கள் கூச்சல் போட்டவண்ணம் பின்னால் ஓடி வந்தார்கள்.
எல்லோரும் வயிரவர் கோயிலுக்குப் பின் புறமுள்ள வெட்டை வெளிக்கு வந்து சேர்ந்தார்கள்.
வானத்தில் முழுநிலவு அப்பொழுது மெல்லக் கிளம்ப ஆரம்பித்தது.
நந்தகோபாலன் நண்பர்கள் இருவர் இரண்டு பக்கங்களிலும் நின்று சயிக்கிளை இறுகப் பிடிக்க, நந்தகோபாலன் கம்பீரமாக ஏறிச் சயிக்கிள் சீற்ரில் அமர்ந்து கொண்டான். பின்னால் நின்று இன்னொரு நண்பன் மெல்லத் தள்ளிக் கொண்டு செல்ல சயிக்கிள் ஒட்டம் ஆரம்பமானது.
வெட்ட வெளியைச் சுற்றிச்சுற்றி சயிக்கிளைத் தள்ளிக்கொண்டு ஓடினார்கள்.
அவனைத் தாங்கிப்பிடித்து ஓடிக் கொண்டிருந்தவர்கள் சயிக்கிளைத் கைவிட்டுவிட்டு பின்தங்கினபோது சில யார் தூரம் 11

Page 16
அவன் சயிக்கிள் முன்னேறிச் சென்று தலைகுப்புற விழுந்தான்.
ஒட்டிக்கொண்டிருக்கும் போது செயின் கழன்று சயிக்கிளை மேலே ஒட்டவும் இயலாமல், கீழே அவன் இறங்குவதற்கும் முடியாமல் சரிந்து விழுந்தான்.
நிலவு காலித்த இரவுகள் எல்லாம் தொடர்ந்து பழகி, கால் கையில் அடிபட்டு உண்டான காயங்கள் முற்றாக ஆறுவதற்கு முன்பு நந்தகோபாலன் சயிக்கிள் ஒட்டக் கற்றுக் கொண்டு விட்டான்.
அதன் பிறகு முதல் வேலையாக தனக்கென்று சொந்தமாக ஒரு சயிக்கிள் வண்டியை அவன் வாங்கிக் கொண்டான்.
பணம் கொடுத்து வாங்கிய சயிக்கிள். அதை வீட்டில் நிறுத்தி வைக்கலாமா! நந்தகோபாலன் சயிக்கிள் அவனை ஏற்றிக் கொண்டு வீதிவீதியாக எப்பொழுதும் சவாரி போய்க் கொண்டிருந்தது.
ஆங்கிலப் படத்துக்கும், பருத்தித்துறையில் விற்கும் இரவு நேரத் தோசைக்கும் ஒரு தனி ருசி. படம் பார்த்து முடிந்து வந்து, தோசைக்காரியைச் சுற்றி இருந்து தோசை வாங்கிச் சாப்பிடலாம். ஒரு கறி, பச்சைச் சம்பல், சிவத்தச் சம்பல், என்று இரண்டு சம்பல்கள். இவை எல்லாவற்றுக்கும் மேலாக ஒரு பொடிச் சம்பல். இது பருத்தித் துறைக் கென்றுள்ள தனித்துவங்களில் ஒன்று. எள்ளைப் பதமாகக் காய வைத்து அதில் பக்குவமாகத் தயாரிக்கும் ஒரு சம்பல். வேறெங்கும் கடைக காதது. அதறி கென று ஒரு தனிச் சுவை. நந்தகோபாலனுக்குப் பொடிச் சம்பல் என்றால் உயிர்.
அவன் இருந்தாற்போல திடீரெனப் புறப்பட்டு விடுவான்.
"இண்டைக்கு சென்றல் தியேட்டரிலெ நல்ல படம்"
"உனக்குத் தோசை தின்னிற ஆசை வந்திட்டுது" என்பான் ஒரு நண்பன்.
"தோசையுந் தின்னலாந்தான்."
"என்ன படம்.1 இங்கிலிஸ் படமே.!"
"இங்கிலிஸ் படமென்டால் போதும், அதைப் பாராட்டால் கோபாலனுக்கு நித்திரையும் வராது"
12
 

** " .
எல்லோரும் சேர்ந்து கொல்லென்று சிரிக்கிறார்கள். "ஏன்ரா சிரிக்கிறியள்! உங்களுக்கு விருப்பமில்லாத மாதிரி, நீங்களுந்தான் வாயைத் திறந்து கொண்டு பாப்பியள் என்னை மட்டும் சொல்லிப் போடுவியள். ஆர் வாறது இண்டைக்குப் படத்துக்கு."
"இண்டைக்கு வேணாம்" "ஏன்?" "பிறகு போவம்" "இங்கிலிஸ் படம் ஒரு நாள் இரண்டு நாள் தானே ஒடும். இண்டைக்குப் போறது தான். நான் சொன்னாச் சொன்னது தான்."
"நீ சொன்னா என்ன?”
"நான் நினைச்சால் அது நடக்கும்"
"6T6)6OTLD... ?"
"எல்லாந்தான், எப்பவுந்தான் நடக்கும்" "அப்ப நீ போ!" "நீ வராட்டால் விடு. மற்றவை எல்லோரும் என்னோடை வருவினம் பார்”
"நான் என்ன வரமாட்டேன் எண்டே . சொல்லுறன்!" "அப்ப பிறகேன் விலை வைக்கிறாய்"
......... انتق[9قگی
"காசில்லையே . அதைச் சொல்லன் காசு நான் தரமாட்டனாடா! வெளிக்கிடடா மடையா விண் கதை கதைச்சுக் கொண்டு நிக்கிறாய்"
மாலையில் எல்லோரும் புறப்பட்டு வந்து வயிரவர் கோயிலில் சந்தித்துப் பின்னர் பருத்தித்துறை நோக்கிச் சயிக்கிள்களில் (3L u FT GIFT fi C56T.
நந்தகோபாலனும் அவன் நண்பர்களும் வயிரவர் கோயில் புளிய மரநிழலின் கீழ் முன்னர் போலச் சின்னப் பிள்ளைகளாக இப்போது ஒடியாடித் திரிவதற்கு இயலவில்லை.
13
*

Page 17
சீட்டுக்கட்டைப் பிரித்துச் சீட்டுக்களைச் சிறிய விசிறி போல கையில் அடுக்கிப் பிடித்த வண்ணம், நடுவே ஒரு சால்லையை விரித்து அதைச்சுற்றி புளிய மர நிழலில் மணல் மீது அமர்ந்து விட்டார்கள்.
அந்தப் புளியமரத்து வயிரவர் கோயில் கோபுரமில்லாத சின்னதுதான் கோயிலைச் சுற்றி வளர்ந்து நிற்கும் புளியமரங்களின் ஆகிருதி மிகப் பெரிது. அவற்றுக்குள்ளே கோயில் புதைந்து கிடப்பது போலத் தோற்றமளிக்கிறது. புளிய மரநிழல் விழுந்து மெல்லிய இருள் எப்பொழுதும் அங்கு பூசிக் கிடக்கும். ஒளி புகாத வீதிகள் கோயிலைச் சுற்றிச் செல்கின்றன. வெயில் காலத்தில் பூலோக சொர்க்கம் அந்தப் புளிய மரநிழல். கோயில் முன் வீதியில் சிறியதொரு கிணறு. அந்தக் கிணற்று நீரைப் பருகி, புளிய மரத்து நிழலில் படுத்து உறங்கினால், அந்தச் சுகந்தரும் கிறக்கத்தில் இந்த உலகமே மறந்து போகும். அப்படியொரு சுகம், அதோடு மெல்லிய காற்று வந்து மெல்லத் தழுவிக் கொண்டிருந்தால், அப்பப்பா. அந்த மோன சுகம் என்ன என்று சொல்வது!
இயற்கை இப்படி அளிக்கும் இன்பங்களை எல்லாம் வேண்டாம் என்று ஒதுக்கி விடுவார்களா, நந்தகோபாலனும் அவன் நண்பர்க ளும் வயிரவர் கோயில் புளிய மரத்து நிழல் தரும் இனிய சுகத்தில் எப்பொழுதும் அவர்கள் கூத்தும் கும்மாளமுந்தான்.
சினிமா, நாடகம், கோயில் திருவிழா, விளையாட்டுப் போட்டி என்று எங்கு செல்வதாக இருந்தாலும் நந்தகோபாலன் தலைமையில் அங்கு கூடித் தீர்மானிப்பார்கள். பிறகு கலைந்து சென்று, மீண்டும் ஒருவர் ஒருவராக அங்கு வந்து சேர்ந்து கோஷ்டியாக அங்கிருந்து கிளம்பிச் செல்வார்கள்.
விளையாட்டுப் போட்டிகள் என்றால் ஒன்று தவறவிட மாட்டார்கள். போட்டி நடைபெறும் மைதானத்துக்குச் சென்று அங்கு வெறும் பார்வையாளர்களாகப் பொறுமையோடு பார்த்துக் கொண்டு நிற்பதில் அவர்களுக்கு மனம் சலித்துப் போனது. தாங்களும் போட்டிகளில் இனிக் கலந்து கொள்ள வேண்டும் என்று தினவெடுத் தார்கள் கழகங்களுக் கிடையிலான விளையாட்டுப் போட்டிகள் எங்கு நடந்தாலும் அதில் தாங்கள் பங்குபற்றுவது என்ற தீர்மானத்துக்கு ஒருமனதாக வந்தார்கள்.
14

போட்டிகளில் தாங்களும் கலந்து கொள்வதாக இருந்தால் கழகப் பெயர் ஒன்று தங்களுக்குச் சூட்டிக் கொள்ள வேண்டும்.
என்ன பெயர் வைக்கலாம்!
புளிய மரநிழலில் நந்தகோபாலன் தலைமையில் ஆலோசிப்பதற்கு நண்பர்கள் கூடி இருக்கிறார்கள்.
நீண்டநேரம் எல்லோரும் மெளனமாக அமர்ந்திருக்கின்றார்கள்.
பொருத்தமான பெயர் ஒன்றைத் தேர்ந்தெடுப்பதற்கு ஆழமாக யோசிக்கின்றவர்கள் போன்ற பாவனையோடு கவிழ்ந்திருக் கின்றார்கள்.
உண்மையில் நந்தகோபாலன் வாயிலிருந்து வரப்போவதை எல்லோரும் ஆவலுடன் எதிர்பார்த்திருக்கின்றார்கள்.
எப்பொழுதும் முந் திக் கொண்டு வாய் திறக் கும் நந்தகோபாலன், இன்று மெளனமாகிப் போனது ஒரு புதுமைதான்.
காலம் நீண்டுகொண்டிருக்கிறது.
பலர் ஒன்றுகூடிப் பேசுவதற்கு வந்த இடத்தில் பேசாது வாய்மூடி மெளனமாக இருப்பதைப் போலச் சகிக்க இயலாத ஒரு சோதனை வேறொன்றுமில்லை.
நந்தகோபாலனுக்குத் தெரியும். அவனைத்தான் நண்பர்கள் எதிர்பார்க்கின்றார்கள். அந்த நண்பர்களை அப்படி ஆக்கி வைத்திருக்கின்றவன் அவன்தான். ஆனால் இன்று அவர்கள் பேசட்டும் என்று அவன் எதிர்பார்க்கின்றான். அவர்கள் எப்படிப் பேசுவார்கள்! என்றுமில்லாத வழக்கமாக அவர்கள் பேசுவார்களா! அவன்தான் சொல்ல வேண்டும். பொறுமை இழந்து இறுதியாக அவன் வாய் திறந்தான்.
என்ன பேர் . வயிரவர் கழகம் எண்டு வைப்பம்"
"என்ன!" நண்பர்கள் ஒரே சமயத்தில் அதிருப்தியுடன் கேட்கின்றனர்.
"வயிரவர் விளையாட்டுக் கழகம். எங்களுக்குத் துணை இந்த வைரவர் தானே! பூரண மனத்தோடு பேசுகின்றவன் போல மீண்டும் நந்தகோபாலன் அழுத்தமாகச் சொல்கிறான்.
"வயிரவர் எங்களுக்குத் துணை எண்டாலும் .
15

Page 18
ஆட்சேபனையாக ஒற்றைக்குரல் ஒன்று மெல்ல எழுகின்றது.
நந்தகோபாலன் அப்படியொரு குரலை ஒருபோதும் விரும்புவ தில்லை. தான் ஒன்று சொன்னால் அதற்கு மறுப்பிருக்கக்கூடாது. ஆனால் உள்ளுர அந்தக் குரல் இன்று அவன் மனதுக்குப் பிடிப்பாக இருக்கிறது. அதை வெளியில் காட்டிக்கொள்ளாது குரல் வந்த திக்கில் குறிப்பாக நோக்குகின்றான்.
அவன் பார்வை திரும்பியதும் ஆட்சேபித்த 'ஒட்டுண்ணி மெல்லத் தலை கவிழ்ந்து கொள்ளுகின்றான். 'ஒட்டுண்ணி நந்தகோபாலனுக்குக் குரோதமானவனல்ல. அவனோடு மிக நெருக்கமானவன். எப்பொழுதும் ஒட்டிக் கொள்ளுகின்றவன். அதனால் நண்பர்கள் மத்தியில் 'ஒட்டுண்ணி என்ற பெயரையே வாங்கி வைத்துக் கொண்டிருக்கின்றான். நந்தகோபாலனுடன் தனக்கிருக்கும் நெருக்கத்தைக் காட்டும் 'ஒட்டுண்ணி என்ற அந்தப் பெயர் தனக்குப் பெருமையானது எனக் கருதுகின்றவன். நந்தகோபாலன் மனம் அறிந்து அவன் பேசக்கூடியவன். அப்படி யொரு நசியற் கள்ளன். மனதில் என்னதான் வைத்துக்கொண்டு அவன் பேசுகின்றான் பார்ப்போமே! நந்தகோபாலன் நினைத்துக் கொண்டு மெல்லிய சினத்துடன் கேட்கிறான்.
"நான் சொன்ன பெயர் சரியில்லை. நீ ஒரு நல்ல பேர் சொல்லு பாப்பம்!"
"சொல்லு . வ .ன்"
“Golig (T6ö6)6ôr"
"நீ கோவிப்பாய்"
"இல்லைச் சொல்லு"
"வேண்டாம் வீண் கரைச்சல்"
"சொல்லன்ரா அப்பா." நந்தகோபாலன் சற்று இறுக்கமாகக் கேட்கின்றான்.
"சொல்லு . சொல்லு . " எல்லோரும் அவனை வற்புறுத்துகின்றார்கள்.
“DITL L6Ör"
"டேய் ஒட்டுண்ணி . சொல்லன்ரா" கடுமையாக ஒரு குரல் ஒலிக்கின்றது.
16
 

"சரியில்லை எண்டால் அந்தப் பேரை விட்டுவிடுகிறது. பேந்தென்ன சுருக்கு வைக்கிறாய்!” இன்னொரு குரல் கேட்கிறது.
"சரி சொல்லுறன். கோபால் அடிக்கக் குடாது."
"நான் ஒண்டும் செய்யமாட்டன். நீ சொல்லு" "சொல்லுறன்"
"சொல்லன்ரா"
"கோபாலன் கழகம்"
மீண்டும் அங்கு திடீர் மெளனம்.
நந்தகோபாலன் உள்ளம் குளிர்ந்து போகின்றது. அவனுக்கு வேண்டியவன் அவன் மணமறிந்து சொல்லி இருக்கிறான். ஆனால் அதை ஆட்சேபிப்பது போல நந்தகோபாலன் சினந்து பேசுகின்றான்.
"என்ன பகிடியா பண்ணுகிறாய்!
'ஒட்டுண்ணி மெளனமாகத் தலை கவிழ்ந்து இருக்கின்றான். திரும்பவும் அவர்கள் மத்தியில் மெளனம் வந்து விழுந்து சிதறிக் கிடக்கிறது.
சற்று நேரத்தின் பின்னர் பிரக்ஞை வந்தவன் போல இன்னொருவன் வாய் திறந்து சொல்லுகின்றான்.
"கோபால் அவனைக் கோவிக்காதே!" "இதுக்குக் கோவிக்காமல் என்ன செய்கிறது!"
"ஏன்”?
"அவன் சொல்லுறது சரியா?" "அவன் சரியாகத்தான் சொல்லுறான்" "என்ன சொல்லுகிறாய் நீ" "அவன் சொன்ன பெயர் பொருத்தமானது" "விசர்க்கதை கதையாதை"
"இதிலெ என்ன பிழை?”
17

Page 19
"ஒரு ஆளின் ரை பேரிலையோ கழகத்துக்குப் பேர் வைக்கிறது!”
"எல்லாரும் விரும்பினால் வைக்க வேண்டியதுதான்.
"சும்மா விடுங்கோ உந்தக் கதையை!” "இல்லை.எங்கள் எல்லோருக்கும் பிடிப்பான பேர் இது"
“என்ன, கோபாலன் கழகம் எண்டோ !”
"ஒமோம்"
"பேந்து நீங்கள் தான் முதுகுக்குப் பின்னாலெ ஏதும் கதைப்பியள்”
"நாங்கள் பேர் வைக்கிறம், பிறகார் கதைக்கிறது"
"சரி.சரி.ஏதோ உங்கடை விருப்பம்"
"கோபாலன் விளையாட்டுக் கழகம்” எல்லோரும் ஒரு மனதாக முடிவெடுத்துக் கொண்டார்கள்.
அந்தப் பிரதேசத்தில் கழகங்களுக்கிடையிலான விளையாட்டுப் போட்டிகள் எங்கே நடந்தாலும் அங்கே கோபாலன் விளையாட்டுக்கழகம் முறுக்கோடு நிற்கும். பொதுவாக எல்லாப் போட்டிகளிலும் அவர்கள் கலந்து கொள்ளு வார்கள். அஞ்சலோட்டம், குண்டெறிதல், கயிறிழுத்தல் போட்டிகளில் அவர்களை ஜெயிப்பதற்கு அந்தப் பகுதியில் யாரும் இல்லை.
விளையாட்டுப் போட்டிகள் நடைபெறும் சமயங்களில் மைதானத்தில் நந்தகோபாலனைப் பார்க்க வேண்டும். அவன் அணிந்திருக்கும் அரைக் காற்சட்டை வெடிக்கிறேன், வெடிக்கி றேன், என்று பருத்துத் திரண்ட தொடைகளில் தசைநார்கள் முறுகித் தெறிக்கும். அரைக்கை பெனியனுக்குள்ளே கருங்கல்லுப் போல தடித்துப் பரந்த மார்பில் தங்கச் சங்கிலி மின்னல் கொடி யாக நெளியும். கனத்த வண்ணக் கைக்குட்டை ஒன்று மடித்து தலையைச் சுற்றிக் கட்டிக்கிடக்கும். இத்தியாதிக் கோலத்தில் மைதானத்துள்ளே அவன் வளைய வந்து கொண்டிருப்பான்.
அஞ்சலோட்டப்போட்டி என்றால், குழுவில் உள்ளவர்களில் இறுதி ஆளாக அவன் நின்று, மின்னல் வேகத்தில் காளையைப் போலப் பாய்ந்து சென்று வெற்றியை ஈட்டிக்கொடுப்பான்.
8

கயிறிழுத்தல் போட்டியானால் நந்திபோல கோஷடியில் முதல் ஆள் அவன், வெற்றி நிச்சயம். கோபாலன் விளையாட்டுக் கழகத்துக்குத்தான். கயிறிழுத்தல் போட்டியில் வெற்றி பெற்றதுக்கான பரிசாக, பெரிய ஒரு வாழைக்குலையைத் தூக்கிக் கொடுப்பார்கள். பெருமிதத்துடன் அந்த வாழைப்பழக் குலையைக் கையில் தூக்கி தலைக்கு மேல் உயர்த்திப் பிடித்த வண்ணம் கம்பீரமாக நந்தகோபாலன் நடந்து வருவதும் ஒரு தனி அழகு தான்.
விளையாட்டுப் போட்டிக்குப் புறப்பட்டுப் போகும்போது, யாராவது ஒரு விளையாட்டு வீரன் அன்று போட்டியில் கலந்து கொள்ள முடியாது போனால், அந்த இடத்துக்கு நந்தகோபாலன் தம்பி வேணுகோபாலனைச் சேர்த்துக் கொள்ளுவார்கள். மற்றச் சமயங்களில் எல்லாம் நந்தகோபாலன், தம்பி வேணுகோபாலன் இவைகளில் எல்லாம் பங்குபற்றாத வண்ணம் சற்றுத் தள்ளியே வைத்திருப்பான். விளையாட்டுப்போட்டி எங்கே நடக்கின்றது என்று நந்தகோபாலன் எப்பொழுதும் தேடிக் கொண்டிருப்பான். அவன் செவிகளுக்குப் புதுமையான ஒரு தகவல் வந்து விழுந்தது. அந்தச் செய்தியைச் சொல்லி மகிழ்வதற்கு, கழக நண்பர்களைத் தேடி வயிரவர் கோயிலுக்கு அவன் ஓடோடி வந்தான்.
"உங்களுக்கொரு செய்தி தெரியுமா!"
"சொன்னால் தானே தெரியும்"
"புதுமையான ஒரு விளையாட்டுப்போட்டி"
“என்ன போட்டி?”
"கயிறிழுத்தல்"
"ப்பூஉ. அதிலெ என்ன புதுமை!"
"இருக்கு விஷயம்" "அப்ப . நாங்களும் போவம், நாங்கள் கயிறு பிடிச்சால் வாழைப்பழக் குலை எங்களுக்குத் தானே!"
"சுலபமாக நினைக் காதே! வரப் போறது அஞ் சாறு கோஷ்டியல்ல"
"அப்ப.?”
"ஐம்பது அறுபது கோஷ்டிவரும்"
19

Page 20
"ஒரு நாளில முடியுமா!"
"முடியும் இரவிரவாக எலக்ரிக் லயிற்றில போட்டி நடக்கப் போகுது”
"புதுமையாகத்தான் கிடக்கு"
"இதல்ல.இன்னுமிருக்குப் புதுமை"
"என்ன புதுமை.சொல்லன்'
"பரிசென்ன தெரியுமோ?"
"தாரே "
"இல்லை.இல்லை."
"அப்ப. என்னதான் குடுக்கப் போறாங்கள் சொல்லன்!”
"ஆட்டுக்கிடாய்”
"உண்மையாக?"
"சத்தியமாக"
"அடிசக்கை எண்டானாம், அதுசரி போட்டியிலெ பங்குபற்றுற துக்கு கட்டுக்காசு எவளவு? ஆயிரமோ இரண்டாயிரமோ !”
"ஸாச்ஸ்.நூறுரூபா"
"ஆக?"
"ஒமோம்"
கோபாலன் விளையாட்டுக் கழகத்துக்கு புதிய ஒரு உற்சாகம் பிறந்தது. எல்லோரும் ஆர்வத்தோடு போட்டியில் கலந்து கொண்டார்கள். போட்டியில் வெற்றி பெற்று கிடாயைத் தட்டிக் கொண்டு செல்வதற்கு பல கழகங்கள் முழுமூச்சுடன் போட்டியிட்டன. யார் முயன்று தான் என்ன! இறுதி வெற்றி கோபாலன் விளையாட்டுக் கழகத்துக்குத்தான்.
வாழைப்பழக் குலையைக் கையில் தூக்கிப் பிடித்துக் கொண்டு நடந்த நந்தகோபாலன், ஆட்டுக் கிடாயைத் தோளில் போட்டுக் கொண்டு வீறுநடை நடந்து வந்தான்.
பரிசாகக் கிடைத்த ஆட்டுக் கிடாயை என்ன செய்வது! விலை கூறி விற்றுப் பணமாக்கிக் கொள்வதா!
20

சீச்சி. அது கூடாது.
அடுத்த நாள் ஆட்டிறைச்சிக் கறியோடு நல்ல விருந்து.
விருந்து முடிந்த கையோடு நிதானமில்லாது தள்ளாடிக் கொண்டு வந்த கோபாலன் விளையாட்டுக் கழக நண்பர்கள், வயிரவர் கோயில் புளியமரநிழலில் கட்டிப் புரண்டார்கள்,
3 sélf of !
U JUJIJO . É
சுப்பிரமணியம் பள்ளிப் படிப்பைக் கைவிட்ட பிறகு விட்டோடு இருந்தான்.
g - - , : fesso) í G (og ....... ്
மணியம் என்ன அப்பு செய்கிறாய்?
GC . . . . . " }
சமையலுக்கு விறகு கொத்துறன் ԳԱԱ-յան) tյն:Ա Թաջ Թյtio» նշա) , իր նաեւ Թ. ԱւյնԱԱԼ Ջ ,
ஏனப்பு உனக்குந்த வேலை உடம்பை மு 4-HAPSIÀ SÀCIb
பெரியம்மோய். தண்ணி அள்ளிக் கொண்டு வரட்டுமே" "அக்கா அவை அள்ளுவினம்; நீ வெயிலுக்கெ மோகாதே"
ேேசந்தைக்கு ஆர்பெரியம்மா போறது? ஸ்ேே"
K6 - - -
அது நான் போவன். உனக்கேதும் வேணுமே!
1) இக்ஆேேெ, .
எந்த ஒரு வேலையும் அவனைச் செய்ய விடாது பெரிய்ம்மா நோகாமல் வைத்திருந்தாள். பெரியப்பாவுக்கு அது கட்டோடு பிடிக்கவில்லை. அவனுடைய எதிர் காலம்பற்றி அவர் கவலை கொண்டார். அவன் வேலைக்குப் போகவேண்டும் ஏதாவது ஒரு வேலையைக் கற்றுக் கொள்ள வேண்டும் என்று. அவர் விரும்பினார். பெரியம்மா என்ன சொல்வாளோ! அவள் மனதில் என்ன திட்டம் தீட்டி வைத்துக்கொண்டிருக்கின்றாள்ே பெரிய்ப்பா மனதுக்குக் குழப்பமாக இருக்கிறது. அதேவிேள்ைபஅவன் எதிர்காலம்பேற்றிக் கவலையோடு நினைத்துப்பார்க்காமல் அவரால் இருப்பதற்கும் இயலவில்லை.
இல் சிலகாலம்'இப்படியே பெரியப்பாவுக்குக்குழப்பத்துடன் கழிந்தது. பின்னர் ஒரு முடிவுக்கு வநிதார் யார் என்ன்
21

Page 21
நம்பினார். பெரியம்மாவுடன் இதுபற்றிப் பேசுவதற்குத் தீர்மானித்தார்.
"நான் சொல்லுறனெண்டு தப்பா நினைச்சுப் போடாதையப்பா." முன்னெச்சரிக்கையுடன் நிதானமாகப் பேச்சை ஆரம்பித்தார்.
"என்ன சங்கதி? பெரியம்மா, அவர் பேச்சின் நோக்கம் உணராது கேட்கின்றாள்.
"உழைப்பிக்க வேணுமெண்டு." "ஆர் உழைப்பிக்கிறது?"
"இவன் தம்பி சுப்பிரமணியம்.
"ஒ. அவனுக்கென்ன!"
"நீ தப்பா நினைச்சுப் போடாதையுமப்பா."
பெரியப்பா, பெரியம்மா முன் சொல்லுவதற்கு மேலும் தயங்குகின்றார்.
"என்ன தப்பு! நீங்கள் என்ன பிழையாகவே சொல்லப் போறியள்!"
"அவனைக் கொண்டு உழைப்பிச் செடுக்கிற எண்ணம் எனக்கில்லை."
"ஒ. அதெனக்குத் தெரியும்"
"அப்ப . அவனுக்கொரு தொழில் வேண்டாமே!”
"எனக்குந்தான் கொஞ்ச நாளாக யோசினையாக் கிடக்கு, அவனுக்கு உங்களைப் போல உந்த வெய்யில் வேகாருக்குள்ளே நிக்கக்கூடிய உடம்பில்லை."
தோட்டத்தில் கூலி வேலை செய்வதற்கு அவனைத் தான் அனுப்பப் போவதில்லை என்று பெரியம்மா சொல்லாமல் சொல்கின்றாள். பெரியப்பா அதை உணர்ந்து கொண்டு பேசுகின்றார்:
"கண்டி, மாத்தளைப் பக்கம் ஆற்ரையேனும் கடை கண்ணிக்கு அனுப்புவம், ஆளும் கொஞ்சம் திருந்தி வருவான்"
"அது நல்லதுதான, எண்டாலும் . இப்ப அடிக்கடி
22

குழப்பங்கள் வந்து கொல்லுகினம். வெட்டுகினம். கொள்ளை அடிச்சு . நெருப்பு வைக்கினம். எப்படி நம்பி அவனை அங்காலை அனுப்புறது!"
"அப்ப என்ன செய்யிறது!" "LJTULLD ."
பெரியம்மா மனதில் ஏதோ ஒரு திட்டம் இருக்கவேண்டும்.
ஒருநாள் அந்தப் பகுதிக் பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத் தலைவரைத் தேடிக்கொண்டு போனாள். அதன் பின்னரும் இரண்டொரு தினங்கள் அவரைத் தேடி அலைந்தாள். அதற்குப் பின்பு சுப்பிரமணியத்தை அவன் படித்த பள்ளிக்கூடத்துக்கு அனுப்பி, அவன் எட்டாம் வகுப்பு சித்தி அடைந்ததற்கான சான்றிதழைப் பெற்றுக் கொண்டாள்.
பிறகு சுப்பிரமணியத்துக்குப் பலநோக்கு கூட்டுறவுச் சங்கக் கடையொன்றில் விற்பனையாளனாக நியமனம் கிடைத்தது.
குறைந்த சம்பளம் என்றாலும் மாதச்சம்பளம், மாதச் சம்பளம் பெற்றுக் கொள்ளும் ஒரு உத்தியோகம், தான் எதிர்பார்க்காதது. தனக்கு இப்படியொரு உத்தியோகம். எல்லாம் பெரியம்மாவின் முயற்சி மானசீகமாகப் பெரியம் மாவை ஒரு தடவை வணங்கினான்.
முதல்நாள் அவன் வேலைக்குப் போவதற்குப் புறப்பட்டான். அப்போது பெரியம்மா சொன்னாள்: "அப்பு, மோனை அப்பிராணி மாதிரி இராதையெடி. சுறுசுறுப்பா கவனமாக வேலை செய்ய வேணும்"
அப்பிராணி. பெரியம்மா என்ன சொல்கிறாள்! அவன் அன்று யோசித்தான். எல்லாரும் சொல்லுறது போல. சீர் பெரியம்மா அப்படி நினைத்திருக்க மாட்டாள்.
முதல் மாதம் முடிய அவன் கையில் சம்பளம் கிடைத்தது. சம்பளத்தை என்ன செய்யலாம்! பெரியம்மாவுக்கு என்ன வாங்கிக் கொண்டு போகலாம்! அக்காமாருக்கு என்ன தேவைப்படும்! அல்லது தங்கச்சியவைக்கு. தம்பிமாருக்கு இறுதியில் அந்த எண்ணத்தையே ஒதுக்கிவிட்டுப் பணத்துடன் வீடு வந்து
சேர்ந்தான்.
23

Page 22
பெரியம் மா வை அழைக் கறான் தெய வத் துக் கு நிவேதிப்பதுபோல சம்பளப் பணத்தை எடுத்து இரண்டு கைகளினாலும் பெரியம்மாவின் கையில் வைத்துப் பணிந்து பெளவியமாக நிற்கிறான். பெரியம்மா கண்கள் கலங்குகின்றன. கூப்பிய கரத்தினுள்ளே பணத்தை வைத்து தெய்வங்களை மானசீகமாக நினைத்து வணங்குகின்றாள். வளர்ந்த வாலிபனான அவனை சின்னக் குழந்தையை முத்தமிடுவது போலக் கன்னங்களில் முத்தமிடுகிறாள். அவன் கண்களும் அப்போது பனிக்கின்றன. பெரியம்மா கண்களைத் துடைத்து விட்டுக் கொண்டு பெருமிதத்துடன் தலைமுதல் கால்வரை அவனை ஒரு தடவை நோக்குகின்றாள். திரும்பி வீட்டுக்குள் சென்று, திருநீற்றுத் தட்டுடன் மீண்டு வந்து அவன் நெற்றியில் திருநீற்றைப் பூசி, தன் நெற்றியிலும் இட்டுக் கொள்ளுகிறாள்.
இந்தப் பெரியம்மாவுக்கு அப்பிடி என்ன அவசரமோ ஒரு ஆறு மாதம் அவளால் பொறுத்திருக்க இயலவில்லை. அவனுக்குத் திருமணப் பேச்சுக்கள் ஆரம்பித்துவிட்டாள். பெரியப்பாவுடன் இருந்து மெல்ல இரகசியமாகப் பேசினாள். அக்காமாருடன் சேர்ந்து ஆலோசித்தாள். ஆலோசனையில் மேலும் ஆறு மாதம் கழிந்து போயிருக்கும்.
ஈசுவரியின் தாய் என்றுமில்லாதவாறு அடிக்கடி வீட்டுக்கு வந்து போக ஆரம்பித்தாள். பெரியம்மாவுடன் எப்பொழுதும் ஒன்றாகக் காணப்பட்டாள். ஒரு திருமணம் நடந்து முடியும்வரை பெண் வீட்டார் பிள்ளை விட்டாருடன் காட்டும் உறவின் நெருக்கம் போல உலகத்தில் வேறெந்த ஒரு மேலான பந்தமும் இருக்கமுடியாது. அந்த நெருக்கம் ஈசுவரியின் தாயின் புது உறவிலும் இருந்தது. அவள் வந்து போனால் சின்னக்கா அவனைப் பார்த்து, "மாப்பிள்ளை.மாப்பிள்ளை." என்று கேலி பண்ணத் தொடங்கி விடுவாள். "மாமி வந்திட்டுப் போறா' என்று ஈசுவரியின் தாயை அவனுக்கு மாமி உறவாக்கினாள்.
பெரியம்மா ஏதோ ஒரு முடிவுக்கு வந்துவிட்டாள். "தம்பி, ஈசுவரி நல்ல பிள்ளை மோனை"
"அதுக்கென்ன பெரியம்மா"
"தேப்பனில்லாத பிள்ளை . நாங்கள் அதை நினைச்சு நடந்தால் எங்களையும் கடவுள் கைவிடார்” -
24
 

"ஈசுவரியை உனக் குச் செய்து வைக் கலாமெண் டு நினைக்கிறன்"
"அக்கா அவையிருக்க ."
"இல்லை மோனை . அதைப் பிறகு பாப்பம், முதல் உனக்கு நான் கலியாணம் செய்து பாக்கவேணுமெண்டு ஆசை”
"எனக்கென்ன அவசரம்?"
"எல்லாத்துக்கும் ஒரு காலநேரம் வயதிருக்கு . அதது அப்பப்ப செய்ய வேணும்"
"இல்லைப் பெரியம்மா, அக்கா அவை மூத்தவை"
"நீதான்ரா எனக்கு மூத்த பிள்ளை, உனக்குப் பிறகுதான்ரா மற்றவைக்கு எல்லாம்"
பெரியம்மா முடிவு செய்துவிட்டாள். இனி அவள் முடிவை மாற்ற யாராலும் இயலாது. அவனுக்கு எல்லாமே அவள்தான். அவள் சொல்லை எப்போது அவன் தட்டி நடந்திருக்கிறான்! அவள் எதைச் செய்தாலும் அவன் நன்மைக்காகவே செய்வாள். அவன் மறுக்கலாம்; ஆனால் அவள் விட்டுவிடப் போவதில்லை. ஏதோ நடக்கிறது நடக்கட்டும் என்று அவன் இருந்துவிட்டான்.
தன்னம்பிக்கை என்றால் பெரியம்மா, எந்தக் காரியத்தை எடுத்தாலும் பேசி, செய்து முடித்து விடுவாள். அந்தப் பெரியம்மா எதையோ சொல்வதற்குத் தயங்குகிறாள். அவன் முகம் பார்க்கத் தயங்கி தலையைத் தூக்கி வீட்டுக் கூரையை வெறித்துப் பார்த்துக் கொண்டு இருகின்றாள். பின்னர் தலையைத் தாழ்த்திக் கொண்டு பெருமூச்செறிகின்றாள். பெரியம்மாவுக்கு இப்படியொரு தயக்கம், குழப்பம், மனப்போராட்டம் இதுவரை உண்டானதில்லை. பெரியம்மாவின் கம்பீரம் திடீரெனக் குன்றிப் போனது. அவள் ஒடுங்கிப் போனாள். அவன் முகத்தை ஒரு கணம் நேருக்கு நேர் சந்திக்க இயலாது தடுமாறுகின்றாள்.
அவனுக்குப் பொறுக்க முடியவில்லை. பெரியம்மா ஏன் இப்படி ஆனாள் இருந்தாற்போல பெரியம்மாவுக்கு என்ன நேர்ந்துவிட்டது! அவனுக்கும் மனதில் உண்டான தவிப்பை அடக்க இயலாது துடியாய்த் துடிக்கின்றான்.
25

Page 23
"என்ன பெரியம்மா'
"ஒண்டுமில்லை மோனை" பெரியம்மா முகம் வெளுத்துப் போனது.
"சொல்லுங்கோ பெரியம்மா!"
"ஒண்டுமில்லை அப்பு"
"என்னட்டையும் மறைக்க வேணுமே பெரியம்மா!"
"நீ எப்பிடி நினைப்பியோ?”
"எதை"
"அது ."
“எது?”
"நாங்கள் குடியிருக்கிற இந்த வீடும் வளவும் அரைவாசி கொம்மாவுக்கு"
"எனக்கது தெரியாது. அதுக்கிப்பென்ன?” "அதை . " பெரியம்மா தயங்கிக் கொண்டே இருக்கிறாள். " சொல்லுங்கோ பெரியம்மா!” "அக்கா அவைக்குக் குடன்" அவன் தலை பட்டென்று கவிழ்கிறது. அவன் கண்களிலிருந்து கண்ணிர் சுரக்க ஆரம்பிக்கிறது.
அவன் கண்ணிரைக் கண்டு பெரியம்மா பதைபதைத்துப் போகின்றாள்.
"அப்பு. அப்பு. என்னை மன்னிச்சுக் கொள்ளடி அக்கா அவைக்கு நீ குடுக்க வேண்டாம். நீ குடுக்க வேண்டாம்."
அவன் கண் களைத் துடைத்து விட்டுக் கொண் டு நிமிர்கின்றான். அவன் முகம் இப்படிச் சிவந்து பெரியம்மா இதுவரை கண்டதில்லை.
"பெரியம்மா என்ன சொல்லுறியள்!"
“என்னை மன்னிச்சுக்கொள் அப்பு. என்னை மன்னிச்சுக்கொள்"
"எப்பிடி மன்னிக்கிறது!"
"நான் தெரியாத்தனமாகக் கதைச்சுப்போட்டன்"
26
 

"நான் உங்கட பிள்ளை இல்லையெண்டா ." பெரியம்மா புழுப்போலத் துடிக்கின்றாள். சட்டென்று எழுந்து அவன் வாயைத் தன் கைக்கொண்டு பொத்துகிறாள்.
"அப்பிடிச் சொல்லாதை அப்பு . அப்பிடிச் சொல்லாதை அப்பு ."
அவள் கையை மெல்ல விலக்கி விட்டுக் கொண்டு நிதானமாக அவன் சொல்கிறான்:
"பெரியம்மா நான் ஆம்பிளை, குடியிருக்கிற வீடு வாசல் என்ரை சகோதரிகளுக்குத் தானே சொந்தம்"
பெரியம்மாவுக்கு வாயில் வார்த்தைகள் வரவில்லை. எழுந்து அவனை அனைத்துக் கொண்டு அவன் தலையைத் தடவித் தடவிக் கண்ணிர் பெருக்குகின்றாள்.
அவன் விழிகளிலிருந்தும் அவன் இதயம் ஒழுகிக் கொண்டிருக்கின்றது.
பெரியம்மா நினைத்ததை நடத்தி முடித்தாள்.அவனுக்கும் ஈசுவரிக்கும் திருமணம் நடந்து முடிந்தது.
ஈசுவரி அவன்மீது உயிரை வைத்திருந்தாள்.
அவன் எப்பொழுதும் அழகாக உடுத்து கண்களுக்கு நேர்த்தியாகத் தோன்ற வேண்டும். சுறுசுறுப்பாகக் காரியமாற்ற வேண்டும். வாய் திறந்து மற்றவர்களைப் போலப் பேச வேண்டும். என்றெல்லாம் அவள் விரும்பினாள்.
அந்த விருப்பத்தினால் அவன் தன்னைக் கோபித்து ஏசமாட்டானா! என்றுகூட அவள் உள்ளூர ஏங்க ஆரம்பித்தாள்.
"கொஞ்சம் பெலமாகக் கதையுங்கோவன்!"
அவன் ஓசை எழாமல் மெல்லச் சிரிக்கின்றான்.
"சொல்லுங்கோ "
"கதைக்கிறது கேக்கயில்லையே?"
"கேக்குது . என்னைக் கோபிச்சாவது பேசுங்கோ !”
"கோவம் வரவேணுமே!"
"உங்களுக்கு வராதே"
27

Page 24
"அன்பிருந்தால் .”
"வராதே! அன்புள்ளவர்கள் மேலேதான் கோபம் வரும்!"
"உன்னிலை எனக்குள்ள அன்பு அப்படி இல்லை"
"பின்னை எப்படி?”
"அதைச் சொல்லேலாது"
"சொல்லுங்கோ ."
"எனக்குச் சொல்லத் தெரியேல்லை"
ஈசுவரியின் முயற்சிகள் வீண் போகவில்லை. காலப்போக்கில் அவன் கொஞ்சம் மாறித்தான் போனான்.
கணுக்கால் தெரிய இப்போது அவன் வேட்டி கட்டுவதில்லை. சேட் ஒழுங்காக அணிந்து கொள்வான். ஆனால் அவனுக்கு இயல்பாகிப் போன அமைதியும் அடக்கமும் எப்படி அவனைவிட்டு விலகிப் போகும்!
ஈசுவரியை மணந்து கொண்ட பிறகு கெளரவமான ஒரு மனிதனாக அவன் மாறிப் போனான். அவனுக்கு வேலை கிடைத்த காலத்தில் அவனை ஒத்தவர்கள் "சுப்புவிற்கு அடிச்ச அதிட்டத் தைப் பாருங்கோ" என்று அவன் செவிபடக் கேலியாகச் சொன்ன துண்டு. ஈசுவரியை மணந்த பிறகு அது எல்லாம் எப்படியோ மறைந்து போயிற்று.
"சுப்பு" என்ற பெயர் சொல்லி ஒரு காலத்தில் தன்னைச் சொட்டையாக அழைத்தார்கள் என்பது அவனுக்கு மறந்து போயிற்று.
4.
ஆண்டுதோறும் புதுப்பஞ்சாங்கம் பதிப்பித்து வெளியிடுகிறவர்க ளுக்கு வயிரவர் ஆலயத்தின் பிரசித்தி தெரியாமல் போய் விட்டது. புளியடி வயிரவர் மகத்துவம் அவர்கள் அறிந்திருந்தால் ஆலய மகோற்சவப் பட்டியலில் வயிரவர் இடம்பெறாமலா போயிருப்பார்! மூர்த்தி, தலம், தீர்த்த விசேடங்கள் கொண்டவர் வயிரவர். அவரைக் குலதெய்வமாகக் கொண்டு வழிபடுகின்றவர்கள் வேண்டி யது வேண்டியபடி அருள்பாலிக்கும் அற்புத மூர்த்தி அவர்.
28
 

ر'oگینیزیا ((hongلمناR 100 — r r
ஆலயத்தைச் சுற்றி வளர்ந்து படர்ந்து நிற்கும் புளிய மரங்களால் தலவிசேடம் பெறுகின்றவர். அந்தப் புளியமர நிழல் தரும் சுகம் இருக்கிறதே அதை வேறு எங்குபோனாலும் பெற்றுக் கொள்ள இயலாது. அப்படி ஒரு கிறங்க வைக்கும் சுகம்,
தீர்த்த விசேடமும் வயிரவருக்கு இல்லாமல் போய்விடவில்லை. அவிச்சுப்போட்ட கோயில் அன்னதானச் சோற்றுக்கு ஒரு தனிச்சுவை உண்டென்று சொல்லுவார்கள். வயிரவர் கோயில் கிணற்றுத் தீர்த்தமும் அப்படித்தான். அதன் சிறப்பு என்னென்று சொல்வது! நீரை ஒரு தடவை பருகிப் பார்க்க வேண்டும். அவர்கள் நிச்சயம் அறிவார்கள் அதன் சுவையை, அந்தப் பகுதி மக்களுக்கு அதன் பெருமை தெரியும். அவர்கள் தினமும் பருகுவது வயிரவர் கோயில் கிணற்று நீர்தான்.
பருகுவதற்கு நன்னீர் எடுத்துப் போக பெண்கள் அந்தக் கிணற்றுக்கு வருவார்கள். கோயில் கிணற்றுக்குப் பெண்கள் விலக்குப்பட்டவர்கள். அந்தக் கிணற்றில் அவர்கள் நீர் அள்ளக்கூடாது. அப்படியொரு எழுதப்படாத சட்டம் ஆண்கள் யாராவது கிணற்றில் நின்றால் பெண்களின் குடங்களுக்கு அள்ளி ஊற்றி விடுவார்கள். அல்லது வயிரவருக்குப் பூசை பண்ணும் ஐயர் வரும் சமயம் பார்த்து, பெண்கள் குடங்களைத் தூக்கிக் கொண்டு வருவார்கள். ஐயருக்கு இதுவும் ஒரு தொண்டாக இருந்தது. சில சமயம் சிரமமும் தான். கிணற்றில் யாரும் இல்லாத போது தெருவில் போகும் ஆளை மன்றாட்டமாகக் கேட்டு, அவர் அள்ளி ஊற்றினால் தான் நீர் எடுத்துக் கொண்டு செல்ல முடியும் ஆண்கள் இல்லாத வேளைகளில் காத்துக் காத்து இருந்து ஏமாற்றத்துடன் வெறுங் குடங்களைச் சுமந்து கொண்டு வீட்டுக்குத் திரும்ப வேண்டியும் நேரும்.
பெண்கள் வீட்டுக்கு நீர் எடுத்துப் போவதில் சிரமம் பெரிதாகத்தான் இருந்தது. கீர்த்தி மிகுந்த தீர்த்த நீரைப் பருகாமல் இருந்து விடுவதற்கும் வீட்டிலுள்ள அவர்கள் தயாராக இல்லை.
பிரச்சனை ஒன்று தோன்றும் போதுதான் அதன் விடுவிப்புக்கான தீர்வும் வந்து சேருகிறது.
பருகுவதற்கு வயிரவர் கோயில் தீர்த்தக் கிணற்று நீர் எல்லோருக்கும் வேண்டும். சிரமமில்லாமல் அதைப் பெற்றுக் கொள்வதற்கு என்ன மார்க்கம்.?
29

Page 25
மனிதனில் தனிபட்ட தேவைகளும் சந்தர்ப்ப சூழ்நிலைகளும் மிகப் பழைமை வாதியாக இருக்கின்றவனையும் தீவிர சீர்திருத்தம் பேச வைத்து விடுகிறது.
வயிரவர் கோயில் கிணற்று நீரைப் பருகுவதற்கு ஆவல் கொண்டிருந்த சிலர் சீர்திருத்தம் பேச ஆரம்பித்தார்கள்.
“பெண்களை அள்ள விடவேணும்"
"சீச்சி. அது சரியில்லை" எதிர்ப்புக்குரல் எழுந்தது.
"ஏன்?
"ஒரு காலமுமில்லாத புது வழப்பம்"
"என்ன வழப்பம்! எங்கடை அப்பனவை குடும்பி கட்டினவை. நாங்களும் குடும்பியா கட்டியிருக்கிறம்!"
"அது வேற. இது குற்றம்" "குற்றம் கண்டுபிடிக்கிறியள், பெண்டுகளிலேதான்" "பூசைக்குரிய பண்டங்களிலே பெண்டுகள் தொடக் கூடாது. தீர்த்தக் கிணற்று நீரிலெயும்.தீட்டுத் துடக்குள்ளவை தீண்டக்கூடாது"
"பெண் தெய்வங்களை வைச்சுக் கும்பிடுகிறம்? "சும்மா குதர்க்கம் பேசக் கூடாது. அது தெய்வம். தெய்வத்துக்கு என்ன திட்டும் துடக்கும்"
"அப்பிடி இல்லையெண்டால் பிறகென்ன பெனன் தெய்வம், ஆண் தெய்வம் எண்டு வித்தியாசம்'
"சரி.சரி. உந்தக் கதையை விட்டுட்டு எல்லாத்துக்கும் ஐயரைக் கேட்பம்"
ஐயர் வழங்கப்போகும் நடுத் தீர்ப்பை இரண்டு கட்சியாரும் ஆவலுடன் எதிர்பார்த்து, ஒரு தினம் அவர் பூசை பண்ண வரும் நேரம் ஆலயத்தில் காத்திருந்தார்கள். "ஐயா, நீங்கள் என்ன சொல்லுறியள்?"
"என்ன சங்கதி"
"பெண் பிரசு கோயில் கிணத்திலெ பிளங்கலாமே!"
30
 

ஐயர் பதில் சொல்லவில்லை. அவர்களைப் பார்த்து அனுதாபத்துடன் சிரிக்கிறார்.
"ஐயா ஏன் சிரிக்கிறியள்!"
"கலி முத்தித்தான் போச்சு"
"என்னையா கலிகிலி எண்டு கொண்டு நிக் கிறியள். கேட்டதுக்கு மறுமொழியைச் சொல்லுங்கோ!"
"இவ்வளவு காலமும் இல்லாத ஒரு புது யோசினை. ஏன் இப்ப உங்களுக்கு வந்தது?"
"காலத்துக்குத் தகுந்ததாக நாங்களும் யோசிக்கத் தானே வேணும்"
"அதுதான் இது கலிகாலம் எண்டு சொல்லுறன். அது போகட்டும். சுவாமிக்கு அபிஷேகம் பண்ணுற நீரிலெ நீங்கள் யாரும் தொடக்கூடாது"
"இப்ப. பெண்டுகள் அள்ளலாமோ எண்டு தானே கேக்கிறம்"
"அதுதான் வாறன், ஆண்களே அள்ளக்கூடாது. அப்படி இருக்க பெண்களும் அள்ளலாமோ எண்டு கேட்டால்."
"ஐயா நாங்கள் குடிக்கத் தண்ணி வேணும்"
"இப்ப குடிக்கிறியள் தானே!" "எங்கடை பெண்டுகள் குடங்களை வைச்சுப்போட்டு, எளியன் சாதி மாதிரி தண்ணி அள்ளமாட்டாமல் ஒதுங்கி நிக்குதுகள்"
"ஒமோம் அது எங்களுக்கு அவமானம்" கட்சி பேதம் இல்லாது எல்லோரும் ஒன்று சேர்ந்து சூடாகச் சொல்லுகிறார்கள்.
"இது எங்கடை சாதிக்கு அவமானம்.வெட்கக்கேடு" சில குரல்கள் ஓங்கி ஒலிக்கின்றன.
"ஏதோ உங்கடை எண்ணம்" ஐயர் மெல்ல அடங்கிப் போகிறார்.
"ஐயாவின்ரை எண்ணம் இல்லாமல் கோயில் காரியத்திலெ நாங்கள் முடிவெடுக்க மாட்டம்" வயிரவருக்குப் பயந்தவர் ஐயரை மெல்லத் தேற்றலானார்.
"சரி, ஐயா சொல்லுங்கோ, இதுக்கென்ன செய்யலாம்!”
31

Page 26
ஐயர் மெளனமாகச் சற்று நேரம் தீவிர சிந்தனையில் ஆழ்ந்தார். பின்னர் அவர்களைப் பார்த்துச் சொல்கிறார்.
"சொல்லலாமோ எண்டுதான்."
"ஐயா தயங்க வேண்டாம். சொல்லுங்கோ"
"நான் சொன்னால் நீங்கள் செய்வியளோ?
"செய்வம், எங்கடை பெண்டுகள் தண்ணி அள்ள வேணும்"
"அதுக்குத்தான் வழி சொல்லுறன்"
"சொல்லுங்கோ ஐயா, சொல்லுங்கோ'
"இன்னொரு கிணறு வெட்டி கோயில் காரியங்களுக்கு விட்டிட்டு."
பொங்கிக் கொண்டிருந்தவர்கள் திடீரென்று உள்ளடங்கிப் போகிறார்கள். மெளனம் அங்கு ஆட்சி செய்கிறது என்ன பதில் சொல்வதென்று அவர்களுக்குத் தெரியவில்லை. வாயளவில் வீறாப்பாகச் சம்மதம் சொல்லி விடலாம். ஆனால் செய்து முடிக்க வேண்டுமே!
யார் முன்னின்று இதைச் செய்வது? பணம் எப்படிச் சேர்ப்பது? எல்லோரும் தயங்கிக் கொண்டு இருக்கிறார்கள்.
கையைத் துTக் கரி வாயை மூடிக் கொணர் டு ஒ சை எழாதவண்ணம் ஏளனமாக ஐயர் சிரிக்கிறார் என்பது விழிகளில் ஒளிர்கிறது.
அந்தச் சிரிப்பு அவர்கள் சிலரின் நெஞ்சங்களில் சுருக்கென்று பாய்ந்து தைக்கிறது.
ஐயர் என்ன தான் நினைக்கின்றார்
இயலாதவர்கள் என்று இளக்காரமாகவா எண்ணுகின்றார்! அல்லது தங்கள் பெண்டுகள் எளியன் சாதிமாதிரி தண்ணீர்க் குடத்தை வைத்துவிட்டு ஒதுங்கி நிற்க வேண்டும் என்று விரும்புகின்றாரா? இந்த அவமானம் சகித்துக் கொள்ளக் கூடியதல்ல.
"ஐயா, என்ன ஒரு மாதிரிச் சிரிக்கிறியள்!” அவர்களுள் ரோசக்காரர் ஒருவர் கேட்கின்றார்.
32
 

"ஒண்டுமில்லை" வெற்றிலை போட்ட வாயிலிருந்து எச்சில் தெறித்து காவிப் பற்கள் தெரிய ஐயர் இப்பவும் மெல்லச் சிரிக்கின்றார்.
"எங்களால முடியாதெண்டு நினைக்கிறியளாக்கும்" இன்னொரு குரல்.
"எப்பிடிச் செய்யிறதெண்டுதான் யோசிக்கிறம், முடியாத சங்கதியல்ல."
"யோசியுங்கோ.யோசியுங்கோ." ஒரு விரலினால் பூணுாலைக் கொழுவிப் பிடித்துக்கொண்டு ஐயர் கொஞ்சம் பலமாகக் குலுங்கிக் குலுங்கிச் சிரிக்கின்றார்.
அந்தச் சிரிப்பு. அவர்களுக்கு ரோஷத்தை மேலும் கிளறி விடுகின்ற சிரிப்பு.
தாங்கள் அவமானப்பட்டு விட்டதாக அவர்களுக்குள்ளே ஒரு எண்ணம் வண்டாக நெஞ்சைத் துளைக்கிறது.
"சரி ஐயா, நாங்கள் உங்களுக்கெண்டு ஒரு கிணறு வெட்டித்தாறம். ஒரு காணித்துண்டு வித்தால் போதாதே, ஒரு கிணறு வெட்ட எங்கடை பெண்டுகள்.சீச்சி.எளியன் சாதி மாதிரி நிக்கக் கூடாது."
"அது.நீங்கள் என்னவாலும் செய்யுங்கோ!” சாதுரியமாகக் காரியம் கைகூடிவிட்ட திருப்தியோடு ஐயர் மெல்ல நழுவினார்.
புளியடி வைரவர் ஆலய கட்டிடப் பொலிவில் தான் சின்னவர். சின்னவருக்கு பிரத்தியேகமாக மூலஸ்தானத்திற்கு அருகில் வாக்குக் கொடுத்தது போல இன்னொரு கிணறு தோண்டிக் கொடுத்து விட்டார்கள்.
அமுதமென, அந்தக் கிராமத்து மக்கள் கருதும், அந்தக் கிணற்று நீரை அதன் பிறகு சுதந்திரமாகப் பெண்கள் அள்ளி, தங்கள் குடங்களை நிரப் பிக் கொண்டு போவதற்கு ஆரம்பித்தார்கள்.
காலை, மாலை வேளைகளில் பெண்கள் கூட்டம் அந்தக் கிணற்றைச் சுற்றி குடத்துள் வார்த்த நீர் போல ததும்பி வழியும். நடுவேளைகளிலும் இடையிடையே பெண்கள் சிலர் வந்து போய்க் கொண்டிருப்பார்கள்.
33

Page 27
நந்தகோபாலனுக்கும் அவன் நண்பர்களுக்கும் நல்ல பொழுது போக்கு வயிரவர் கோயில் புளிய மரநிழல் ஒன்றே தஞ்சமாக அவர்கள் தவம் கிடக்கிறார்கள். ஆனால் நந்தகோபாலன் மனது க்கு எரிச்சல் ஊட்டும் ஒரு அதிருப்தி கிடந்து அவனை எப்போதும் முள்ளாக உறுத்துகின்றது. அந்தத் தவிப்பை நண்பர்களிடம் ஒரு தினம் மனம் திறந்து சொன்னான். "இந்தக் கிணத்திலெ பெண்கள் குளிக்கக்கூடாதெண்டு அந்த நாளையிலெ ஆரடா சட்டம் போட்டவன்? பெண்கள் இதிலெ குளிச்சுக் கொண்டு நிண்டால். ஆகா. ஆகா"
"உன்ரை தகப்பன் தான் கண்டிப்பாக நிண்டவர் எண்டு கேள்வி"
"அதுதானே, என்ரை அப்பன் நேர காலத்தோடை செத்துப் போனார். ஒரு ரசனை இல்லாத மனிசன், இருந்தென்ன. செத்தென்ன."
வயிரவர் கோயில் கிணற்றைச் சுற்றிச் செழித்து அடர்ந்து நிற்கும் அலரிச் செடிகள் வெள்ளையும் சிவப்பும் மஞ்சளுமாக மலர்ந்து சொரிவதுபோல, குடங்கள் சுமந்து அசைந்து வரும் பெண்கள் வண்ண வண்ணமாக பூத்துக் குலுங்குவதைப் பார்த்துக் கிடப்பதே நந்தகோபாலனுக்கும் அவன் நண்பர்களுக்கும் ஒழியாத (86)|68)6U).
"மச்சான் என்ரை ஆள் வருகுது"
வாலைக்குமரி எவளோ ஒருத்தி இடையில் குடம் சுமந்து வருகின்றாள். அவளை நெஞ்சில் சுமந்து திரிகின்றவன் இதயம் வேகமாக அடிக்க ஆரம்பித்து விடுகின்றது. சோம்பிக்கிடந்தவன் உடலில் மின்சாரம் திடீரென்று பாய்ந்தது போல ஒரு புத்துணர்ச்சி. இதயத் துடிப்பை அடக்க இயலாமல் அருகில் இருக்கின்றவன் செவியில் மீண்டும் மெல்லக் கிளுகுளுக்கின்றான்.
"மச்சான் என்ரை ஆள் வருகுது" "என்ரை ஆள்.என்ரை ஆள்.என்று ஏன்ரா பிதத்துறாuப் உன்ரை ஆளிலெ நாங்கள் கண்போட மாட்டம் உனக்கிண்டைக்கு அடிச்சிருக்கு லக்”
"நான் எவ்வளவு நேரம் காத்துக் கொண்டிருக்கிறன் தெரியுமா?
"தவம் கிடந்தாலும் பறவாயில்லை. ஆள் வந்திட்டுது. நானும்
34

ஒருத்தன் இருக்கிறன் பார்! அவன் பெருமூச்செறிகிறான்.
"உன்ரை ஆளும் வரும்"
"இரண்டு நாளாக இல்லை. எனக்குக் கண் பூத்துப் போச்சு",
"சுகமில்லையாக்கும்." "டொக்ரரிட்டைப் போனது கண்டநீயே!”
"நீ இதுகும் விளங்காத மடையன். இன்னும் இரண்டு மூண்டு நாள் பொறு. முழுகிக் கிளுகிப் போட்டு கம கம எண்டு வருவ LUFTsi”
"ஒரு கிழமையாச் சு. எங்கேயேனும் போவிட்டுதோ தெரியேல்லெ" இன்னொருவன் ஏக்கம் அவன் பெருமூச்சுடன் வெளிவருகின்றது.
"மச்சான் என்ரை ஆளுக்குக் கலியாணம் முற்றாப் போச்சாம்"
"g 600T60)LDLLT35'
"உண்மைதான் மச்சான்”
"நீ என்ன வாய்பாத்துக் கொண்டு இருக்கிறியே!” "நான் ஒருநாள் கூட அவவோடை கதைக்கயில்லெ ஒரு சொல்லுக் கூட கதைக் கயில் லெ” இப்படி வேறொருவன் ஏங்குகின்றான்.
"இருங்கோ மச்சான் தண்ணி குடிக்க வேணும்" ஒருவன் மெல்ல எழும்புகின்றான்.
G.
ஒ . ஓ . உனக்கு நல்லா விடாய்க்கும் போயிட்டு வா"
எல்லோரும் சொல்லிச் சிரிக்கின்றார்கள்.
போனவன் கிணற்றில் நீர் அள்ளிக் கொண்டு நிற்கும் கன்னிப்
பெண்ணிடம் தண்ணிர் வாங்கிக் குடித்துவிட்டுத் திரும்பி
வருகின்றான்.
"மச்சான் தண்ணி நல்லா இனிச்சுதோ!"
"சக்கரைத் தண்ணி தோத்துப் போகும்"
"அப்ப தேசிக்காயும் புளிஞ்சுவிட்டுத்தான் குடிச்சிருக்கிறாய்”
35

Page 28
சிரிப்பொலி அடங்க சில நிமிடங்கள் கழிகிறது.
விடலைப் பருவத்துக் கனவுகளில் மிதந்து அது வாலிபச் சேட்டைகளாக அவர்கள் மத்தியில் எப்பொழுதும் வெளிப்பட்டுக் கொண்டிருக்கும். நந்தகோபாலன் நண்பர்களுடன் சேர்ந்து அவர்களைக் கேலி பண்ணுவான்; சொட்டை சொல்லிச் சிரிப்பான். ஒவ்வொருவருக்கும் சோடி சேர்ப்பான். இப்படி அவன் எல்லாம் செய்வான். ஆனால் அவனுக்கு யாரும் சோடி சேர்த்துப் பேசுவதில்லை. அப்படி எவனும் பேசக்கூடாது. அவன் நெஞ்சில் குடியிருக்கின்றவள் பெயரை, தட்டித் தவறி வாய் திறந்து பகிடியாகவேனும் ஒருவனும் சொல்லக்கூடாது. அப்படியொரு இறுக்கம்.
வெகு தூரத்தில் அவள் வந்து கொண்டிருப்பது எவனாவது ஒருவன் கண்டுகொண்டு விட்டால் மிகுந்த மரியாதையுடன் நந்தகோபாலனுக்கு இரகசியம் போல மெல்லச் சொல்லுவான்.
"கோபால் பூ வருகிது”
"நந்தகோபாலன் அவள் வரும் திசை நோக்கி ஏக்கத்துடன் திரும்புவான்.
நந்தகோபாலனின் பூ வருகின்றாள் என்றால் நண்பர்கள் தலையைத் தாழ்த்திக் கொண்டு மெளனமாக அடங்கிப் (3LT6. Triggs.
பூ என்று மென்மையாக நோகாமல் சொல்லும் பூமணி, தனக்காகவே பிறந்தவள் என நந்தகோபாலன் நம்பினான்.
பூமணி . அவள் பூப்போல . அவளுக்கு முற்றிலும் கச்சிதமான பெயர் பறித்தால் பட்டென்று வாடிப்போகும் பூ வாடாத மலராக மார்பில் சூடிக்கொள்ள வேண்டிய வசந்தப்பூ அவள்.
நண்பர்கள் சில சமயம் இங்கிதமாகச் சொல்லுவார்கள்.
"பூவைக் கண்டால் கோபால் மெல்ல அடங்கிப் போகும்
அவன் முகம் மலர்ந்து இதழ்கள் சிறிது விரியும்.
"நிழலைக் கண்டே இப்பிடி அடங்கிப் போனால் . என்பான் ஒருவன்.
36
 
 
 

"பிறகென்ன . பெட்டிப் பாம்புதான்" என்பான் இன்னொருவன்.
கதை இப்படியே வளர்ந்து நீண்டு செல்லப் பார்க்கும். நந்தகோபாலன் மனதுக்கு அது உவப்பாக இருக்காது.
"ਤ . சரி . உந்தக் கதையை விடுங்கோ அவன் மெல்ல அடக்கி விடுவான். அதன் பிறகு யாருமே அந்தக் கதையை எடுக்கமாட்டார்கள்.
நந்தகோபாலனுக்கு . பூமணி அவளைப் புரிந்து கொள்ளவே இயலவில்லை.
பூமணி . உள்ளத்தால் வெறுத்து ஒதுக்கி, தான் ஒதுங்கி ஒதுங்கிப் போகின்றாளா அல்லது ஒதுங்குவது போலப் பாசாங்கு பண்ணி நெஞ்சில் ஆசைக்கனலை மூட்டி கவர்ந்திழுக்கின்றாளா! அவள் முகம் எந்தச் சுருதி பேதமும் பேசாத மலர்ந்த ஒரு பூ அவள் கண்களில் சுகமுமில்லை; துக்கமுமில்லை.
தண்ணீர்க்குடம் எடுத்து பூமணி தனித்து வருகின்றாள் என்றால், அவள் கிணற்றுக்கு வந்து சேர்வதற்கு முன்னர், நந்தகோபாலன் எழுந்து கிணற்றுக்குச் சென்று துலாக்கொடியைக் கையில் எடுத்துக் கொள்வான். தான் தண்ணிர் பருகுவதற்கு வந்தவன் போலப் பாவனை பண்ணிக் கொண்டு நீர் இறைத்துஅவள் குடத்துக்கு நிறைத்து விடுவான்.
அவளின் குனிந்த தலை நிமிராது, குடத்தைத் தூக்கி இடுப்பில் வைத்துக் கொண்டு திரும்பி அசைந்தசைந்து நடப்பாள்.
“பூ நன்றி சொல்லி இருக்கலாம்" “பூ நன்றிச் சிரிப்பொன்றைச் சிந்தி இருக்கும்" “பூ நன்றிப் பார்வை ஒன்றைத் தந்திருக்கலாம்."
அவன் மனசுக்குள் ஒவ்வொன்றாக எண்ணி, அவள்
பின்னோக்கிச் சிலையாக நிற்பான்.
எத்தனை தினங்கள் இப்படிக் கழிந்தன.
எத்தனை இரவுகள் விழிப்பில் விடிந்தன.
அவள் ஒருபோதும் மாறவில்லை. முகத்தில் என்றுமே அந்த
லர்ச்சி. அவனுக்கென்று தனி மரியாதை பதற்றமில்லாத
37

Page 29
உரிமைப் பாங்கு. இவைகளெல்லாம் என்ன நேசிப்பில்லாத நெஞ்சத்தின் சூனிய வெளிப்பாடா!
அவள் இதயத்துக் கர்ப்பக்கிருகத்தில் நேச ஒளி சுடர்விட்டுக் கொண்டிருக்க வேண்டும்.
பெண்ணின் இதயம் ஆற்று மணல் படுக்கை போன்றது. ஆயிரம் ஆயிரம் ஆசைக் கனவுகள் மணலுக்குள் நீராக புதைந்து கிடக்கும். ஆண் ஒருவன் மெல்லத் தொட்டுவிட்டால் அருவியாக அது பெருகி ஓடும்.
பூ எப்படி வாய் திறந்து சொல்லுவாள்! மீட்டாத வீணையிலிருந்து நாத வெள்ளம் எப்படிப் பெருகும்!
தோண்டாத ஆற்று மணலிலிருந்து ஆசை வெள்ளம் ஊறி 6TLILJLņLJ LJETULÒ !
அவளோடு தானாக முன்வந்து பேசவேண்டும் என்று நந்தகோபாலன் தீர்மானித்துக் கொண்டான்.
அவள் தண்ணிர் அள்ள வரும் வேளை காத்திருந்து பேச நினைத்திருந்தான். எதிர்பார்த்தது போல அவள் வந்தாள். பேச முயன்று நா வரண்டு போனது. இதயம் வேகமாக அடித்தது. வாய் திறக்க இயலவில்லை.
இப் படி எத்தனை நாட்கள் தனக் கே தனி  ைன நம்பமுடியவில்லை. இப்படியொரு கோழையாக எப்போது தான் மாறிப் போனான்.
இன்னொரு முடிவுக்கு இறுதியில் அவன் வந்து சேர்ந்தான்.
பூமணி தண் ணிர்க் குடமேந்தி தனி வழியே வந்து கொண்டிருக்கின்றாள்.
புளியமர நிழலில் நண்பர்களுக்கு மத்தியில் நந்தகோபாலன் வாடிச் சோர்ந்து அமர்ந்திருக்கின்றான்.
“பூ வருகுது நண்பன் ஒருவன் மெல்ல அவன் செவிக்குள் முனகுகின்றான். -
ஓ. தெரியும் நந்தகோபாலன் சொல்லிக் கொண்டு, வழமைபோல எழுந்து கிணற்றை நோக்கி நடக்காமல்
38

உட்கார்ந்திருக்கின்றான்.
பூமணி குடத்தைக் கீழே வைத்து துலாக்கொடியைக் கையில் எடுத்து நீர் அள்ள ஆரம்பிக்கின்றாள். நீர் மொண்டு வாளியை வெளியே எடுத்துக் குடத்தை நிரப்பி முடிக்கும் சமயம் பார்த்து, நந்தகோபாலன் கிணற்றுக்கு வந்து சேருகின்றான்.
பந்தலுக்கு வெளியே நட்டுக் கிடக் கும் தடியில் துலாக்கொடியில் கட்டிய வாளியை கொழுவி விடுவதற்கு அவள் கை நீண்டபோது, அவன் தான் நீர் அள்ளுவதற்குத் தயாராக அவளிடமிருந்து கொடியை வாங்குவதற்குக் கையை நீட்டுகின்றான்.
அவள் தடியில் கொழுவுவதைத் தவிர்த்துவிட்டு, அடக்கமாகப் பணிவோடு ஒதுங்கி நின்று வாளி கட்டிய துலாக் கொடியை அவனை நோக்கி நீட்டுகின்றாள். அவன் அதை வாங்கிக் கொள்ளும் சாக்கில் துலாக்கொடியுடன் சேர்த்து அவள் கரத்தை மெல்லப் பற்றுகின்றான்.
“虏 . விடடா நாயே" அவள் வாயிலிருந்து சீறிக் கொண்டு வார்த்தைகள் வெடித்துச் சிதறுகின்றன.
கொடிய நச்சுப் பாம்பைத் தொட்டவன் போல அவன் திகைத்து, நிலைகுலைந்து தலை குனிந்து நிற்கின்றான்.
அவள் தண்ணீர்க் குடத்தைத் தூக்கி, கூழற்றி எடுத்து இடுப்பில் வைத்துக் கொண்டு விறுவிறென்று வீடு நோக்கி வேகமாக நடக்கின்றாள்.
அவமானத்தால் குன்றிப்போன அவன் குனிந்த தலை நிமிராமல் மெல்ல நடந்து சென்று முதன் நாட் போரில் யாவையும் இழந்து தலை கவிழ்ந்து நின்ற இராவணனாக நண்பர்கள் முன் வெட்கிப் போய் நிற்கின்றான்.
நண்பர்கள் யாரும் வாய் திறந்து ஒரு வார்த்தை பேசவில்லை. அனுதாபத்துடன் அவனையே சற்று நேரம் பார்த்துக் கொண்டிருக்கின்றார்கள். பின்னர் ஒருவர் பின் ஒருவராக எழுந்து அங்கிருந்து பிரிந்து போய்க் கொண்டிருக்கின்றார்கள்.
நந்தகோபாலன் வயிரவர் கோயில் புளியமர நிழலில் தனித்துப் போய் இருக்கின்றான்.
39

Page 30
பூமணி வீடு போய்ச் சேர்ந்த வேகத்தில், அவள் தாய் மதுரையை எரித்த கண் ணகியாக கோபாவேசத்துடன் நந்தகோபாலன் வீடு வந்து சேருகின்றாள்.
"சும் மாவே முன்னையுள்ளவை சொல்லி வைச் சவை" முற்றத்தில் வந்து நின்று கொதித்துக் கொதித்துச் சீறுகின்றாள்.
"எண் னடியாத் தை சங் கதி!” நந்தகோபாலன் தாய் அடுக்களைக்குள் இருந்து வெளியே வருகின்றாள்.
நந்தகோபாலன் தம்பி வேணுகோபாலனும் வீட்டுக்குள் இருந்து முற்றத்துக்கு வந்துவிட்டான்.
"புங்கம் நிழலும் புளியம் நிழலும் கைம்பெண்டாடிச்சி வளர்த்த கழுதைக்குக் காட்டாதே எண்டு சும்மாவே சொல்லி வைச்சவை"
"வீடு தேடி வந்து என்ன கதை கதைக்கிறாய்? ஆரைக் கழுதை எண்ணுகிறாய்” நந்தகோபாலன் தாய்க்குப் பற்றிக் கொண்டு வருகின்றது.
வேணுகோபாலன் அமைதியாக மெல்லச் சிரித்துக் கொண்டு நிற்கின்றான்.
"வேறை ஆர்! உன்ரை மூத்தமோன்" "அவன் உன்னை என்ன செய்தவன்' கேலி செய்கிறாள்.
"அவன் என்னை என்ன செய்யிறது! கோயில் கிணத்துக்குத் தண்ணிக்குப் போற பொம்பிளைப் பிள்ளையின்ரை கையிலை எட்டிப் பிடிக்கிறானாம்"
"ஆருக்குப் பிடிச்சவன்?"
"ஆருக்கோ . என்ரை மோளுக்கு"
"குலுக்கி மினுக்கிக் கொண்டு திரியிற உண்ரை குமரி, கண்ணாலை சாடை காட்டினாளாக்கும் . ፵?
"அம்மா . உப்பிடிக் கதையாதை" வேணுகோபாலன் குறுக்கிட்டுச் சினந்து கொண்டு தாயை எச்சரிக்கின்றான்.
"நீ ஏன்ரா துள்ளுறாய்! எங்கே போவிட்டான்ரா அவன்! இண்டைக்கு வரட்டும்"
"அவர் எங்கே போவர் வயிரவர் கோயில் புளிக்குக் கீழே
40
 

காவல் கிடப்பேர் . தண்ணிக்கு வாற பெண்டுகளைப் பாக்கிறதுக்கு காவாலிப்பயல், இனிமேல் சேட்டை விட்டால் - - - - - - - - - நடக்கிறது வேறை கதை ஒழுங்கா இருக்கச் சொல்லு . இல்லையோ கொலை விழும்"
அவள் எச்சரித்துக் கொண்டு போய்விட்டாள்.
நந்தகோபாலன் தாய் அவமானத்தால் குன்றி, பெற்றவள் சொல்லுக் கேட்டு நடக்காது, தன் இஷ்டத்துக்கு அலைந்து திரியும் மகனை எண்ணி 'கோ' என்று கண்ணீர் விட்டு அழ ஆரம்பித்தாள்.
வேணுகோபாலனுக்கு அண்ணன் மீது அடங்காத சினம். என்ன செய்வதென்று அறியாமல் முடுமுடுத்துக் கொண்டு நிற்கின்றான்.
நந்தகோபாலன் தனித்திருந்து சிந்தித்துச் சிந்தித்து மனம் குழம்புகின்றான். யாருக்கும் தலை வணங்காது இதுவரை வாழ்ந்த அவன் பெருமை, ஆண்மை எல்லாம் ஒரு நொடிப்பொழுதில் அவள் நொருக்கிப் போட்டுவிட்டுப் போய்விட்டாள். அவமானம் தாங்க இயலவில்லை. நெஞ்சு வெடித்துவிடும் போல ஏதோ வந்து அடைக்கிறது. இனி என்ன செய்வது ஊரை விட்டு ஓடிப் போவதா அல்லது அவளை . அவமானப்படுத்தின அவளை - - - - - - - - அடைந்தே தீர வேண்டும்.
பூமணி கோயில் கிணற்றில் நீர் எடுத்துப் போவதற்கு வருவது தடைப்பட்டுப் போய்விட்டது. அவள் வராது போனாலும் நந்தகோபாலனா சும்மா இருப்பான்! அவள் வீட்டைச் சுற்றி அடிக்கடி வட்டமடித்துப் போய் வந்து கொண்டிருந்தான்.
அவள் மட்டும் அவன் கண்களுக்குத் தென்படுவதாக இல்லை.
"அவள் எங்கேதான் ஒளிந்தாலும் நான் அவளை விடப் போவதில்லை”
"பழி வாங்க வேணும் மச்சான்” என்றான் ஒரு நண்பன்.
"இல்லையடா மடையா! அவளை நான் கலியாணம் பண்ணி எனக்கு அடிமையாக வைச்சிருக்க வேணும். இந்த வயிரவர் மேல் சத்தியமாகச் சொல்லுறன். நான் அவளைத் தூக்கிக் கொண்டு போவன்” நந்தகோபாலன் நண்பர்கள் முன்னிலையில்
41

Page 31
வீர சபதம் எடுத்துக் கொண்டான்.
அதன் பிறகு அவன் வெறி பிடித் து அலைந்து கொண்டிருக்கின்றான். அவனுக்கு ஊணுமில்லை; ஒழுங்கான உறக்கமுமில்லை.
எத்தனை ஆண்டுகள் கழிந்தாலும் அவனை ஏற்று அவள் ஒருபோதும் வரப்போவதில்லை. பலாத்காரமாக அவளைத் தூக்கிப் போவதைத் தவிர அவனுக்கு வேறு மார்க்கமுமில்லை.
நந்தகோபாலனின் ஆத்ம நண்பர்கள் ஊரெங்கும் கதை பரப்பிக் கொண்டிருக்கின்றார்கள்.
"பூமணியைக் கோபாலன் தூக்கிக் கொண்டு போகப் போறான்"
"அவ என்ன பெரிய கண்ணகியே! ஒருக்கால் கையிலெ தொட்டாப்போல என்ன வந்தது! இப்ப என்ன நடக்கப் போகுதெண்டு பாருங்கோ"
"இன்னும் ஒரு கிழமைக்குள்ளே பூமணியைக் கோபால் கிளப்பிக் கொண்டு போயிடுவான்"
ஒருமாத காலம் இப்படியே சொல்லிச் சொல்லிக் கழிந்து போயிற்று.
ஒருநாள் காலைப் பொழுது விடிந்தபோது பூமணி வீட்டில் இல்லை.
இரவு படுக்கைக்குப் போனவள் எங்கே போனாள்? யாரோடு போனாள் அல்லது நந்தகோபாலனுக்கு அஞ்சி . தற்கொலை செய்து கொண்டு விட்டாளோ!
அவள் உறவினர் பரபரத்துக் கவலையுடன் ஒடியோடி எங்கும் அவளைத் தேட ஆரம்பித்தார்கள்
செய்தி வேகமாக ஊரிலும் பரவத் தொடங்கியது.
"பூமணியைக் காணவில்லையாம்"
"கோபாலன் தூக்கிக் கொண்டு போவிட்டானாம்"
நந்தகோபாலன் செவிக்கும் அதிசயமாகச் செய்தி வந்து சேருகின்றது. அவன் அதிர்ந்து, இதயம் இழந்து, குழம்பிப் போகின்றான்.
42
 

"பூ எங்கே போனாள்? அவள் ஆரோடும் போயிருக்க மாட்டாள். ". gg(8u_JH ............... அவள் தற்கொலை செய்திருந்தால்ع
அவள்மீது நெஞ்சு நிறைந்த நேசம் வைத்த நந்தகோபாலன் இதயம் வெடித்துவிடும் போல துடித்துக் கொண்டிருக்கிறது. இப்போது என்ன செய்வதென்றே அவனுக்குத் தெரியவில்லை. மனம் குழம்பிக் கொண்டிருக்கின்றது. நண்பர்களைச் சந்தித்தால் தகவல் எதுவும் கிடைக்கக்கூடும்.ஆனால் வீட்டை விட்டுப் புறப்பட்டு வெளியே கிளம்பிச் செல்வதற்கும் இன்று அவனுக்கு மனதில் தைரியமில்லை.
பொழுது ஊர்ந்து ஊர்ந்து மேலே போய்க் கொண்டிருக்கின்றது.
வெளியே போயிருந்த நந்தகோபாலன் தாய் பரபரப்புடன் விரைந்து வீட்டுக்குத் திரும்பி வருகின்றாள்.
"எட தம்பி, வேணு எங்கெயடா?”
அன்னையின் கேள்வி நந்தகோபாலனை சுயபிரக்ஞைக்கு மீட்டு வருகின்றது.
"வேணுகோபாலன் எங்கே? தம்பி வேணு எங்கே?" நந்தகோபாலன் தேடுவதற்கு ஆரம்பித்தான்.
மதியந்திரும்பி மாலைப் பொழுது நெருங்கிக் கொண்டிருக்கும் வேளை செய்தி மிகத் தெளிவாக வந்து உறுதிப்படுகிறது.
"வேணுகோபாலனும் பூமணியும் நீண்ட காலமாக ஒருவரை ஒருவர் நேசித்து வந்தார்களாம். இருவரும் ஊரை விட்டு ஒன்றாகக் கிளம்பிப் போய்விட்டார்களாம்"
நந்தகோபாலன் படுக்கையில் போய் விழுந்து இரகசியமாகக் குமுறிக் குமுறி அழுகின்றான்.
அவன் தன் குழந்தைப் பருவத்தில்தானும் எதற்காகவேனும் அடம் பிடித்து இப் படிக் குழறியதை அவன் அன்னை பார்த்ததில்லை.
அவளுக்கும் அவன் கண் ணிரைத் தாங்கிக் கொள்ள இயலவில்லை. கண்ணிர் சிந்திய வண்ணம் அவன் படுக்கை அருகே சென்று அமர்ந்து, அவன் தலையைத் தடவிக் கொடுக்கிறாள்.
43

Page 32
"அப்பு . ஏன் அழுகிறாய்? அவன் போனால் போறான்"
அம்மாவுக்கு என்னதான் சொல்லலாம் தான் மனச்சிறையில் வைத்திருந்த அவளை உடன் பிறந்தவன் கவர்ந்து கொண்டு போய்விட்டானே என்று சொல்லலாமா? அல்லது தம்பியானவன் ஏன் இப்படித் தன்னை இராமகாவியத்து வாலியாக்கிப் போனான் என்று கேட்கலாமா!
"அப்பு நீ மூத்தவன் இருக்க, அவன் இப்படிச் செய்திருக்கக் கூடாது. நீ கவலைப்படாதை நான் உனக்கு வாற மாதம் கட்டிவைப்பன்!
நந்தகோபாலன் ஏங்கிக் கொண்டிருக்கும் மனதின் அந்தரங்கத்தைத் தாய்க்கு எடுத்து வெளியே சொல்ல இயலாது தவிக்கின்றான். ஆனால் அவன் திருமணம் பற்றிய பேச்சைத் தாய் எடுத்திருப்பதைத் தனக்குச் சாதகமாகக் கொண்டு அவளைக் கேட்டான்:
"அம்மா நீ எனக்கொரு சத்தியம் செய்து தரவேணும்" "என்ன சத்தியம் மோனை!" "ஒமெண்டு சொல்லு, பிறகு என்னெண்டு சொல்லுறன்." "எட உனக்கில்லாததே! பிறகேன் சத்தியம்!" "இல்லை, வயிரவர் மேலெ சத்தியம். நீ என்ன சொன்னாலும் நான் சம்மதிப்பன் எண்டு சொல்ல வேணும்."
"சரி . சரி . வயிரவர் மேலெ சத்தியம். நீ என்ன சொன்னாலும் நான் சம்மதிப்பன் . சரிதானே!"
"சரியம்மா, சொல்லுறன் கேள். நான் இனிமேல் கலியாணம்
செய்யப் போறதில்லை. என்னை ஆய்க்கினை பண்ணக்கூடாது."
"இதென்ன மோனை கதை"
"இது அம்மா மேலெ சத்தியம். இனி அம்மா ஒண்டும் பேசக்கூடாது."
தாய் எதுவும் பேச இயலாது விக்கித்துப் போய் இருக்கின்றாள். நந்தகோபாலன் உணர்ச்சி வசப்பட்டிருக்கும் நிலையில் அன்னை மீது ஆணையிட்டு பீஷ்ம சபதம் எடுத்துக் கொண்டான்.
44

5
உத்தியோகம் பார்ப்பதென்பது இராஜபோக வாழ்வு அனுபவிப் பதற்கான ஒரு மார்க்கம் என்று பலர் எண்ணு கின்றார்கள். அப்படி எண்ணுகின்றவர்கள் நிச்சயம் அறிந்திருக்க மாட்டார்கள், பல நோக்குக் கூட்டுறவுச் சங்கத்தின் கிளையில் முகாமையாளருக் குக் கீழ் ஒரு விற்பனையாளனாக ஊதியம் செய்யும் உத்தியோக த்தின் பெறுமதி, சங்கத்தில் விற்பனைக்கிருக்கும் அரிசி, மா, சீனி மூடைகள் என்பவற்றை எல்லாம் ஒன்றாகச் சேர்த்து விற்பனையாளனின் தலைமீது அடுக்கி விட்டாற்போல இருக்கும் அந்த உத்தியோகத்தினால் விளையும் வாழ்வின் சுமை.
அந்த வாழ்வு தரும் அவலந்தான் சுப்பிரமணியத்தின் மாறாத வாழ்வாகிப் போனது.
சுப்பிரமணியம் கூட்டுறவுச் சங்கத்துக்குள் விற்பனையாளனாக அடியெடுத்து வைத்தபோது ஆயிரம் ஆசைக் கனவுகளை நெஞ்சில் சுமந்து கொண்டு வந்தான்.
சுப்பிரமணியத்தின் மானச தடாகத்தில் அப்பொழுது மலர்ந்த ஒரேயொரு தாமரை மலர் சொத்தி மணியம். சுப்பிரமணியத்துக்கு அப்போது இலட்சிய புருஷன் அவன்தான். சொத்தி மணியத்துக் குப் பெயர் என்ன என்பது இன்றுவரை சுப்பிரமணியத்துக்குத் தெரிய வராது. சொத்தி மணியம் பார்வைக்கு உயரமானவன் என்று சொல்ல இயலாது. வேண்டுமானால் கட்டையன் என்று எடுத்த எடுப்பில் கூசாமல் சொல்லலாம். அவன் நடக்கும்போது கால் ஒன்று கொஞ்சம் இழுபட்டு மெல்ல வரும். அந்த இழுபாடு தான் அவனைச் சொத்தி மணியம் ஆக்கி இருக்க வேண்டும். வேகமாகப் பேசினால் திக்குவாய்த்தனம் அவன் வாய்க்குள் இருந்து வெளிப்படும். பால் வெள்ளை அரவிந்த் வேட்டியை மடித்துத் தொடை தெரியக் கட்டி இருப்பான். நயிலோன் சேட் கடைக்குள் ஒருபுறம் தொங்கிக் கொண்டிருக்கும். தங்கக் கட்டிகளாகப் பருத்த மோதிரம் இரண்டு விரல்களில் மின்னும்.
பல நோக்குக் கூட்டுறவுச் சங்கங்கள் எழுபத்து இரண்டாம் ஆண் டு மறுசீரமைப் புச் செய்யப் படுவதற்கு முன் னம் வைத்திலிங்கம் முதலாளி கடையில் சொத்தி மணியத்தை சுப்பிரமணியம் கண்டிருக்கின்றான்.
45

Page 33
அந்தக் காலம் பலநோக்குக் கூட்டுறவுச் சங்கம் என்னும் பெயர் புழக்கத்தில் இல்லாத ஒரு காலம் கூப்பன்கடை என்றுதான் அதற்குப் பெயர்.
பெரியம்மா கூப்பன் புத்தகங்களுடன் பனையோலைப் பெட்டிகளை அடுக்கி கையில் எடுத்துக் கொண்டு கூப்பன் கடைக்குப் புறப்படுவாள். சுப்பிரமணியம் அவள் கொய்யகத்தில் பிடித்துக் கொள்ளுவான்.
“பெரியம்மா . பெரியம்மா .”
“என்ன?”
"நானும் வாறன்"
"நீ ஏன்?"
"பெரியம்மா . பெரியம்மா ."
"சாமானோடை உன்னையும் தூக்கிக் கொண்டு என்னாலெ நடக்கேலாது"
"நான் நடந்து வாறன்" "இப்ப சொல்லுவாய். நடப்பியோ உந்தத் தூரம்?"
"வரயிக்கெ நீ அழுதாலும் என்னாலெ தூக்கேலாது. சரியோ"
"நான் ஓடியோடி நடப்பன்"
"சரி . சரி . வா"
பெரியம்மா போகும்போது அவனைத் துக்கி இடுப்பில் வைத்துக் கொண்டுதான் நடப்பாள்.
"அப்பு, வரயிக்கெ தூக்கச் சொல்லிக் கேக்கக்குடாது என்னடி”
"ஒ . எனக்குப் பேரீச்சம்பழம் வேண்டித் தரோணும்" "தாறன்" சுப்பிரமணியத்துக்குப் பேரீச்சம்பழம் என்றால் உயிர். அந்தக்
46

காலத்தில் கூப்பன் கடைகளுக்குத்தான் பேரீச்சம்பழம் பெருமளவு விற்பனைக்கு வரும்.
கடைக்கு வந்து சேர்ந்ததும் முதல் வேலையாக பெரியம்மா எப்படியும் பேரீச்சம்பழம் வாங்கி அவன் கையில் கொடுத்து விடுவாள். பேரீச்சம்பழம் கிடைதததுதான் தாமதம் சரையைப் பிரித்து அவன் தின்பதற்கு ஆரம்பித்துவிடுவான்.
ஆவலும் அவசரமுமாக அவன் பேரீச் சம்பழத்தைத் தின்னுவதைக் கண்டு வைத்திலிங்கம் முதலாளி கல கல என்று சிரிப்பார். அந்தச் சிரிப்பில் ஏளனம் சற்று இழையோடிக் கிடக்கும். கண்டுகெட்டறியாததுகள் என்ற இளக்காரம் அவருக்கு.
ஊருக்கு அவர் பெரிய மனிதன். பெரிய பணக்காரன். அந்தக் காலத்தில் ஒவ்வொரு கிராமத்திலும் பெரிய பணக்காரர்களாக இருந்தவர்கள் கூப்பன்கடை முதலாளிமார்கள். ஒரு கிராமத்தில் இரண்டு மூன்று கூப்பன் கடைகளும் இருந்தன. அந்தக் கிராமத்தின் அதிகாரத்துக்கான போட்டியும் அவர்களுக்கிடையில் இருந்து கொண்டு இருந்தது. சமூக அதிகாரமும் ஆதிக்கமும் செல்வாக்கும் உடையவர்கள் கூப்பன்கடை முதலாளியாக இருந்தார்கள்.
வைத்திலிங்கம் முதலாளிக்கு இருக்கவேண்டிய மேன்மையான இலட் சனங்கள் அதி தனையும் இருந்தன. ஆனால் வெளிப்பார்வைக்கு அமைதியும் அடக்கமும் உடைய சாந்தகுண சொரூபி. முக்குறியாக வெண்ணிறு நெற்றியில், உடம்பில் பளிச்சென்று பூத்துக் கிடக்கும். பருத்து முன் விழுந்த வண்டியின்மேல் நாலுமுழ வேட்டி கட்டி சால்வை ஒன்றைச் சுருக்கி அதன்மேல் அரையைச் சுற்றிக் கட்டி இருப்பார். கடைக்கு வந்து விறாந்தையில் புட்டுவம் ஒன்றில் அமர்ந்து கொள்வார்.
வைத்திலிங்கம் முதலாளியின் கூப்பன் கடையில் 'மனேஜராக இருந்தவருக்கும் இரண்டு திருநாமங்கள் சூட்டி இருந்தார்கள். அவரைப் பெற்றவர்கள் அவருக்குச் சூட்டிய திருநாமம், கடைக்குச் சாமான் வாங்க வரும் பெண்கள் கேலியாக அவருக்குச் சூட்டிவிட்டிருக்கும் இரகசியப் பெயர்களுள் மறைந்து போயிற்று. "கிளிச்சொண்டர் என்று ஒரு பெயர் சூட்டினார்கள். அது போதாது என்று துவரந்தடியர் என்றும் ஒரு திருநாமத்தைச் சூட்டிக் கொண்டார்கள். அவள் வாயில் மேல் உதடு சற்று நீண்டு, கீழ்
事7

Page 34
உதட்டில் ஒரு வெள்ளைப் புள்ளி படர்ந்திருந்தது போதாதா, பெண்கள் அவரைக் கிளிச்சொண்டர் ஆக்குவதற்கு! தடியாக நெடுத்து மெலிந்து கறுத்துக் கிடந்த அவர் உடல் அவரைத் துவரந்தடியர் ஆக்கிவிட்டதில் அதிசயப்படுவதற்கு ஒன்றுமில்லை. சேட் அணியாது அந்தக் கருமேனியை வெள்ளை வெளேரென்று கிடக்கும் மெல்லிய சால்வையினால் போர்த்தி இருப்பார்.
கூப்பன் புள்ளிகளைக் கத்தரிக் கோலினால் நறுக்கி, அவைகளை இனம்பிரித்து சிகரெற் பேணிகளுக்குள் போடுவார். சாமான் சிட்டைகளை வதவதெண்டு எழுதுவார். கவனமாகப் பணத்தை எண்ணி எடுத்து, மேசை லாச்சியை இழுத்து அதற்குள் கிடக்கும் சிறிய குண்டுக் கிண்ணங்களுக்குள் போடுவார். வேலைப்பளு அதிகமானால் கடைக்கு வருகின்றவர்கள் மேல் "வள்’ ளென்று விழுவார். வாய் திறந்தால் வார்த்தைகள் "சுடுதண்ணியாகக் கொட்டும். அதனால் 'சுடுதண்ணியர் என்றும் சிலசமயங்களில் சொல்லுவார்கள்.
அவர் ஒரு கறாரான பேர்வழி. அவரிடம் கருணை என்பது கடுகளவும் கிடையாது. சாமான்களுக்குச் சிட்டை எழுதி மொத்தம் கூட்டி முடித்த பிறகுதான், கையிலுள்ள காசு போதாதிருப்பது சிலருக்குத் தெரிய வரும்.
"ஐயா காசு கொஞ்சம் குறையுது"
"ஒரு ஐம்பேசதம் ."
"உனக்குக் கணக்கு வளக்கது தெரியாதே காசில்லாமல் ஏன் பில் எழுதுவிச்சநீ"
"கொஞ்சம் குறைஞ்சு போச்சையா! பின்னேரம் கொண்டு வாறன்"
"அந்தக் கதை வேண்டாம். உன்ரை காசு நானே போட்டுக் கட்டுறது? சாமானை வெட்டிப் போட்டு உள்ள காசுக்கு வாங்கிக் கொண்டு போ!”
"இல்லை ஐயா!"
“என்ன இல்லை, உன்ரை எண்ணப்படி கடை நடத்தேலாது”
நடந்து கொண்டிருக்கும் வழக்கைப் பார்த்துக் கொண்டிருக்கும்
48
 

வைத்திலிங்கம் முதலாளி, இந்தச் சமயம் பார்த்து, "சரி . சரி குடுத்து விடுங்கோ வீட்டுக்குப் போய் காசை அனுப்பு"
என்று நடுத்தீர்ப்பு வழங்குவார்.
வைத்திலிங்கம் முதலாளி கடையில் இருக்கும் சமயம் பார்த்து,
கடனுக்குச் சாமான் வாங்குகின்றவர்கள் அங்கு வருவார்கள்
"ஐயா, கையிலெ காசில்லை" "என்ன வேணும்?" "அரிசியும் மாவும் தந்தால் போதுமையா!"
"சரி வாற கிழமை கொண்டு வந்து குடுத்து விடு" முதலாளி மறுக்காமல் கடன் கொடுப்பார்.
பல நோக்குக் கூட்டுறவுச் சங்கக் கடை ஒன்று தனிப்பட்ட ஒரு முதலாளிக்கு எப்படிச் சொந்தமாக இருக்கும் என்று சுப்பிர மணியம் சிந்தித்துப் பார்த்ததில்லை. பணபலமும் சமூக அதிகாரம் உள்ள பெரிய மனிதர்கள் ஒரு கிளைக்குப் போதுமான கூப்பன் காரர்களைச் சேர்த்துக் கொள்வார்கள், கூப்பன்காரரான அங்கத் தவர்கள் அறியாத வண்ணம் தமக்குள்ளே ஒரு செயற்குழுவைத் தெரிவு செய்து, மனேஜர், விற்பனையாளரைத் தமது இஷ்டம் போல நியமித்துக் கொள்வார்கள். அதிகாரத்தின் செயற்பாட்டு அமைப்பாக உருவாகி தட்டிக் கேட்பார் இல்லாது கூப்பன்கடை தடையின்றி நடக்கும். வைத்திலிங்கம் முதலாளியும் அப்படித்தான் செய்தார். முதலாளிக்கு நெருக்கமான உறவுக்காரர் கிளிச்சொண் டர். ஆனால் சொத்தென்று வரும்போது சொந்தமெல்லாம் பொய்யா குமல்லவா! முதலாளியின் சொத்து முழுவதையும் தின்று தீர்ப்பதற்கு மட்டும் சொத்தி மணியம் சொந்தமாகிப் போனான் கிளிச் சொண்டருக்கு.
அந்தச் சொத்தி மணியமும் எவ்வளவு வசதியுடன் வாழ்ந்தான். சொத்தி மணியத்தைப் பார்த்த நினைப்பில் சுப்பிரமணியம் தன் எதிர்காலக் கனவை நேர்த்தியாகக் கட்டி எழுப்பினான்.
சுப்பிரமணியம் பெரியம்மாவின் முட்டுப்பட்ட குடும்பத்துக்கு இடையிடையே சின்னச்சின்ன உதவிகள் செய்து வந்தான். ஈசுவரியின் தாயும் அவன் மீது உள்ள பிடிப்பினால், ஈசுவரியோடு வந்து தங்கி இருந்தாள்.
கூப்பன் கடை முதலாளி வைத்திலிங்கம் கெட்டுப்போனவர்கள்,
49

Page 35
கேட்டுப் போனபோது மறுக்காமல் கடன் கொடுத்தார். இப்பொழுது வைத்திலிங்கம் முதலாளி கூப்பன் கடை வைத்திருந்தால் சுப்பிரமணியம் போய், துணிவுடன் கடன் கேட்டிருப்பான்.
அவன் விற்பனையாளனாக இருந்து ஊழியம் செய்யும் கிளை முகாமையாளரிடம் போய் தனக்கு உதவி கேட்டிருக்கின்றான்.
மூத்தமகன் பிறந்திருந்த சமயம், காலையில் சுப்பிரமணியம் கடைக்குப் புறப்பட்டுச் செல்லும்போது ஈசுவரி சொல்லுவாள்.
"குழந்தைக்குப் பால் மா இல்லை”
"கொண்டு வாறன்’ தயக்கத்துடன் அவன் சொல்லிக் கொண்டு போவான்.
சொல்லும்பொழுது அவனுக்குச் சந்தேகமாக இருக்கும், கொண்டு வருவதற்கு இயலுமோ, என்னவோ!
"எப்படிக் கொண்டு வரப் போறான். கையிலெ மடியிலெ காசில்லை. மனேச்சர் ஒரு மாதிரியான ஆள்"
கடைக்குள்ளே அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் எஸ்.எம்.ஏ. பால்மாப் பெட்டிகளைப் பார்க்கப் பார்க்க அவனுக்கு வயிறு எரியும்.
"எத்தினை பேருக்கு இந்தக் கையாலெ எடுத்தெடுத்துக் குடுக்கிறன், ஆனால் என்ர பிள்ளைக்கு ஒரு பெட்டி கொண்டு (3LJIT B5 (LpLQUILI6)Îl 6ð60)6\)(8u_!" "
ஒரு சிறு நம்பிக்கை ஒன்றாக இருவரும் வேலை செய்கின்றவர்கள் என்ற உறவினால் இப்ப பிறந்த அவன் பிஞ்சுக் குழந்தை மேல் கருணை இல்லாமலா போய்விடும்!"
கடையை முடிவிட்டுப் புறப்படும் சமயம், வேறு யாரும் அங்கு இல்லாத வேளை பார்த்து சுப்பிரமணியம் பணிவுடன் கேட்பான்
"அண்ணே எனக்கொரு எஸ்.எம்.ஏ வேணும்" "ஒ. அதுக்கென்ன! உனக்கில்லாததே எடு" சொல்லிக் கொண்டு பேனாவைத் திறந்து சிட்டைப் புத்தகத்தை விரிப்பார் மனேஜர்.
"இண்டைக்கு காசில்லை அண்ணே!” பேனாவைக் கீழே வைத்து விட்டு சிட்டைப் புத்தகத்தைச்
50
 

சட்டென்று மூடிக்கொண்டு, "இதென்ன என்ரை சொந்தக் கடையே, நான் கடன் குடுக்கிறதுக்கு? யூனியனுக்கு நானெல்லே போட்டுக் கட்ட வேணும், நீ சாமான் நிறுத்துக் குடுக்கேக்கெ கூட நிறுத்துக் கொடுத்தாலும் என்ரை தலையிலெதான் வந்து விழும்" என்று நச்சரிக்க ஆரம்பித்து விடுவார்.
சுப்பிரமணிய்த்தின் இரவு வேளைச் சாப்பாடு முடிந்தபிறகு சொல்லத் தகுந்த தருணம் இதுதான் என்று எண்ணி, "நாளைக்கு அரிசியும் மாவும் இல்லை" என்பாள் இன்னொரு நாள் ஈசுவரி தயங்கித்தயங்கி,
அவன் ஒன்றுமே வாய்திறந்து பேசாது மெளனமாக இருப்பான். மறுநாள் மாலையில் அவன் வீடு திரும்பி வரும்போது அரிசியோ, மாவோ கையோடு கொண்டு வருவான் என்று களைத்த முகத்துடன் அவள் காத்திருப்பாள்.
அவன் வாடிச் சோர்ந்து வெறுங்கையுடன் திரும்பி வந்து சேருவான்.
இப்படி எத்தனை சம்பவங்கள்! என்னென்ன துயரங்கள்!
நந்தகோபாலன் கிளை முகாமையாளராகப் பலநோக்குக்
கூட்டுறவுச் சங்கத்துள் வந்தான். அவனோடு இணைந்து ஒரே
கிளையில் வேலை செய்யக் கிடைத்தது சுப்பிரமணியத்துக்கு. சுப்பிரமணியம் சில சமயங்களில் பிரமித்துப் போவதுண்டு.
"மணியம், வீட்டுப்பாடு எப்பிடி" நந்தகோபாலன் வலிந்து
கொண்டு கேட்பான்,
சுப்பிரமணியத்துக்கு எடுத்த எடுப்பில் அந்தக் கேள்விக்குப் பதில் சொல்ல வராது.
"என்னப்பா தயங்கிறாய்! நான் தான் தனிக்கட்டை நீ குடும்பக்காரன்"
"
"என்னத்தைச் சொல்லுறது!" சுப்பிரமணியம் மெல்ல
முனகுவான்,
"சரி.சரி.அரிசி, சீனி, மா, பருப்பு தேவையானதுகளை எடுத்துக் கொண்டு கணக்கைச் சொல்லு"
"காசு கணக்க வரும்"
51

Page 36
*உன்னை ஆர் இப்ப காசு கேட்டது? அரிசியை நிறுக்கிறாய். மாவை நிறுக்கிறாய்.எல்லாத்தையும் நிறுத்துக் குடுத்துப் போட்டு நீ போய்ப் பட்டினி கிடக்கிறதே? சூடு மிதிக்கிற மாடு வைக்கோல் தின்னத்தானே வேணும். யூனியனிலெ வேலை செய்கிறவன்ரை வயித்தைக் காயப்போட்டால் அவன் களவு தான் எடுப்பான். ஒரு மாதச் சம்பளம் பத்து நாள் சீவியத்துக்குப் போதாது”
சுப்பிரமணியம் ஒரு நாளும் இல்லாத திருநாளாக சுமையாகச் சுமந்து கொண்டு வீடுவந்து சேர்ந்தான்.
ஈசுவரிக்கு நான் காண்பது கனவா என்றொரு பிரமை. இதென்ன அதிசயம்! அவன் வீட்டுக்கு எப்போது இப்படிக் கொண்டு வந்திருக்கின்றான்! என்றுமே பற்றாக்குறை வாழ்வு தான் அவர்கள் வாழ்வு. அப்படி இருக்க இன்று. அவள் மனசில் எழுந்த ஆவலை அடக்க இயலாது வலிந்து கொண்டு கேட்டாள்.
"என்ன புதுமையா, இண்டைக்குச் சுமந்து கொண்டு வாறியள்" "புதுமைதான். எல்லாம் நந்தகோபாலன் செய்கிற புதுமை" "கடன்தானே!"
"கடனோ கிடனோ. அள்ளி அள்ளித் தாறான். கொண்டு போ. கொண்டு போ. எண்டு”
"சும்மா கடமைப்படக்கூடாது" "சம்பளத்திலெ குடுக்க வேணும்"
அடுத்த நாள் கடைக்குப்போய் திரும்பி வரும்போது சுப்பிரமணியம் கையோடு கொண்டு வந்து "ஈசா, இந்தா சவுக்காரம்" என்று அவளிடம் கொடுப்பான்.
"நேற்று கொண்டு வந்ததுகளுக்கே இந்த மாதச் சம்பளம் போதாது”
"சொன்னால் அவன் கேட்டால்தானே! அது தின்ன, இது குளிக்க. உடுப்புக்கழுவ. மகனுக்கும் கொண்டு போ எண்டு தாறான் கோபாலன்"
"உப்பிடிச் செய்தால் நந்தகோபாலண்ணனை கோப்பிறட்டியை விட்டுக் கலைக்கப் போகினம்"
"ஏன்?"
52

"கொள்ளை அடிக்கிறார், எண்டு”
"சீச் சீ. தன்ரை காசு போட்டுக் கட்டிப் போடுவான். அவனுக்கென்ன குறைச்சல் தேப்பன் தேடிவைச்சிட்டுப் போன சொத்துக் கிடக்கு காணி, பூமி ஏராளம், தனிக்கட்டை தாய் இருந்தாலாவது தட்டிக்கேட்பா பார்த்துப் பாராமல் சிலவழிக்கிறான்"
"கோபாலண்ணை நல்லவர்" "அதுதான் உதவி செய்கிறான்" சில தினங்களின் பின்பு சுப்பிரமணியம் வந்து மனைவி ஈசுவரிக்குச் சொல்லுவான்.
"கோபாலனுக்கு எங்கடை மகனிலை நல்ல விருப்பம்"
"எப்பிடித் தெரியும்? ஈசுவரி கேட்பாள். "மகன் பள்ளிக்கூடம் போக இன்னும் எவ்வளவு காலம் கிடக்கு எண்டு கேட்டான். நல்லாப் படிக்க வைக்க வேணும் எண்டு சொன்னவன்”
இன்னொரு நாள் வந்து சொல்லுவான். "வீட்டுப்பாடு எப்பிடி எண்டு கேட்டான்" "நீங்கள் என்ன சொன்னனீங்கள்?" "இப்ப பறவாயில்லை எண்டு சொன்னனான்" பின் பொருநாள் வந்து சொல்லுவான். "உனக்குச் சுகமில்லை எண்டு நேற்றுச் சும்மா சொன்னனான்.
இண்டைக்கு வந்து மறக்காமல் "இப்ப எப்பிடிச் சுகமே! எண்டு கேட்டவன்’
பிறகொருதினம் மாலையில் கடையில் இருந்து திரும்பி வந்ததும், ஈசுவரியிடம் சின்னக் குழந்தை போலக் குதித்துக் கொண்டு ஓடோடிச்சென்று சொல்லுகின்றான்.
"ஈசா.ஈசா.கோபாலன் இண்டைக்கென்னைக் கேட்டான். நீ என்ன நடந்து திரிகிறாய் எண்டு.
"அதுக்கென்ன செய்ய எண்டு சொன்னன்." "ஒரு சயிக்கிள் வாங்கிறதுதானே?" "காசெல்லோ வேணும்!”
53

Page 37
"நான் ஒரு சயிக்கிள் வாங்கித் தாறன், காசைப் பிறகு தா"
எண்டு சொன்னவன்,
"எதுக்கு அவர் சிலவழிக்க வேணும்" ஈசுவரி கேட்டாள். "அவன் விட்டால்தானே!"
மறுதினம் சுப்பிரமணியம் கடையில் இருந்து திரும்பி வரும்போது ஒரு சயிக்கிளில் ஓடி வந்து வீட்டில் குதித்தான்.
"இஞ்சாரப்பா இதைப் பாரும்" என்று சொல்லிக் கொண்டு இன்னொருநாள் சுப்பிரமணியம் ஒரு சேலையைக் கையில் தூக்கிக் காட்டுகிறான்.
கண்களைக் கவரும் ரோஜா வண்ண நைலோன் சேலை, அது அண்மையில் இறக்குமதி செய்யப்பட்ட சேலை, அப்பொழுது தான் புதிதாகக் கூட்டுறவுச் சங்கக்கடைகளுக்கு விற்பனைக்கு வந்திருந்தது. போதுமான சேலைகள் இல்லாததால் சீட்டுக்குலுக்கி அங்கத்தவர்கள் சிலருக்கு பணத்துக்கு விநியோகித்துக் கொண்டிருந்தார்கள்,
அந்தச் சேலைகளுள் ஒன்றை சீட்டுக்குலுக்கலுக்குள் அகப்படு த்தாமல் நந்தகோபாலன் எப்படியோ மடக்கி சுப்பிரமணியம் கையில் கொடுத்து அனுப்பி விட்டான்.
ஈசுவரிக்கு உள்ளத்தில் எழுந்த ஆர்வத்தை அடக்க முடியவில்லை.
நவநவமாய் வண்ண வண்ணச் சேலை கட்டி அழகு காட்டுவதில் ஈசுவரிக்கு அடங்காத ஆவல். ஆனால் அதற்கு அவர்களிடம் போதிய வசதி இல்லை. இப்படிக் கண்ணைக்கவரும் நவீனமான ஒரு சேலை கிடைத்தால் அவள் மகிழ்ச்சியைச் Ga Toba)6)I (861160) (BLbl
ஈசுவரி பாய்ந்து சென்று அதைக் கையில் வாங்கி மேலே தூக்கிப்பிடித்து இரசிக்கின்றாள்.
பின்னர் தன் மார்பில் மேல் போட்டு அழகு பார்க்கின்றாள். கண்ணாடிக்கு முன் போய் நின்று, அப்படியும் இப்படியுமாகச் சுழன்று சுழன்று அதன் அழகை அனுபவிக்கின்றாள்.
அதன் பிறகு தான் சுப்பிரமணியத்தைப் பார்த்து
54

“எங்கெயப்பா வாங்கினநீங்கள்?"
"நானாவது வாங்கிறதாவது!" கோபால் தந்தவன். காசு பிறகு தாறன் எண்டு சொன்னனான்!”
சுப்பிரமணியம் கடையை மூடிக்கொண்டு வீட்டுக்கு வந்து விட்டால் இப்பொழுது நித்தமும் நந்தகோபாலன் பற்றிய கதைதான் அவனுக்கு.
ஈசுவரிக்கும் அந்தக் கதைகளைக் கேட்க வேண்டும் போல மனசுக்குள் தோன்றும்.
என்றாவது ஒரு நாள் சுப்பிரமணியம் நந்தகோபாலன் பற்றிச் சொல்லத் தவறிவிட்டால் அவளாகவே கேட்டு வைப்பாள்.
“கோபாலண்ணை என்னவாம்?"
தரீபாவளித் தருநாள் அப் போது நெருங் கி வந்து கொண்டிருந்தது. ஈசுவரி ஒரு நாள் இரவு சுப்பிரமணியத்துக்குச் சொன்னாள்.
"இவ்வளவும் செய்கிற கோபாலண்ணாவுக்கு நாங்களும் ஏதும் செய்ய வேணும்"
"நாங்கள் என்ன செய்யலாம்” சுப்பிரமணியம் யோசித்துக் கொண்டு கேட்கிறான்.
"நல்லநாள் பெருநாளுக்கு வீட்டுக்குக் கூப்பிடுவம்"
“உது நல்ல யோசினை ஈசா தீபாவளிக்கு வரச் சொல்லிச் சொல்லுறன்."
தீபாவளி தினத்தன்று சுப்பிரமணியம் வீட்டில் கோழிக் கறியோடு நந்தகோபாலன் ஈசுவரியின் சமையலைச் சுவைத்து சாப்பிட்டான்.
தீபாவளி, அடுத்து வந்த தைப்பொங்கல், புத்தாண்டுப் பிறப்புக் கொண் டாட் டங்கள் எல்லாம் சுப் பிரமணியம் வீட்டில் நந்தகோபாலனுக்கு குதூகலமாகக் கழிந்தது.
சுப்பிரமணியம் மனவருத்தத்துடன் ஒருநாள் ஈசுவரிக்குச் சொன்னான்:
“ʻFF 5FIT (85E5ITLJIT 6Üb U T6)JLbʼ
55

Page 38
"என்ன பாவம்! அவர் நல்லாத்தானே இருக்கிறார்"
"பணம் இருந்தால் போதுமே! அது சாப்பாடு சமைச்சுக் குடுக்குமே! பின்னேரம் போய்த்தானாம் அடுப்பு மூட்ட வேணும். மத்தியானம் பாண் அல்லது பணிஸ்தான் சாப்பாடு"
"அதுக்கு நாங்கள் என்ன செய்யலாம்?" "இப்படிச் செய்தால் என்ன, ஈசா!"
"GTJULg?" "நான் கொண்டுபோற சாப்பாட்டோடை கோபாலுக்கும் கொண்டு போய்க் குடுப்பம்"
"ஈசா பேசாமல் இருக்குது!" "ஏதோ உங்கடை இஷடம்"
"அவன் செய்கிற நன்றிகளை நாங்கள் மறக்கக்குடாது. ஏதோ இந்த உதவியாவது செய்யத்தானே வேணும்".
6
தாழ்வாரத்தில் தட்டாதவாறு தலையை மெல்லத் தாழ்த்தியபடி வீட்டுக்குள் இருந்து வெளியே வந்து, பின் நிமிர்ந்து இரண்டடி எடுத்து வைத்து நடுமுற்றம் வரை வந்து தரித்து நிற்கின்றான் சுப்பிரமணியம்.
அடுக்களைக்குள் மனைவி ஈசுவரி, இப்போது அவள் வெளியே வரவேண்டும். எதிர்பார்த்துக் கொண்டு அவன் நிற்கின்றான். கதவு திறக்கவில்லை. எதிர்பார்த்தது போல அவள் வெளியே வரவில்லை.
காலையில் வேலைக்குப் புறப்பட்டுச் செல்லும் சமயம் மதியத் துக்கான உணவை ஒரு பையில் போட்டு கையில் கொடுத்துவிடு வாள் அவள். காலை தயாரித்த உணவையே மதியத்துக்கும் கட்டிக் கொடுப்பாள். இரண்டு பார்சல்கள் அந்தப் பைக்குள் இருக்கும். ஒன்று அவனுக்குரியது; மற்றொன்று மனேஜர் நந்தகோபாலனுக்கு உணவுப் பார்சலுக்காக அடுக்களை
56
 

வாசலைப் பார்த்துக் கொண்டு அவன் நிற்பான். அவள் வெளியே வருவாள். அவன் முகத்தை நிமிர்ந்து நோக்காள். அவன் கையில் உணவுப் பையைக் கொடுத்துவிட்டு குனிந்த தலை நிமிராது. திரும்பிச் சென்று மறைந்துவிடுவாள்.
அவனுக்கு அது ஏமாற்றமாக இருக்கும். அவன் வேலைக்குப் புறப்பட்டுச் செல்லும் வேளைகளில் தினமும் அவள் சிரித்த முகத்தை ஒரு தடவை கண்டுகொண்டு போவதற்கு அவாவுற்றிருந் தான். அவன் மனம் அப்படி அவளுக்கும் அது நன்றாகத் தெரியும். அந்த முகத்தின் மலர்ச்சிக்காக அவன் இப்பொழுதும் ஆவலுடன் தவித்துக் கொண்டிருக்கிறான். அவனுக்கு இப்படி ஒரு வழக்கத்தை உருவாக்கியவளும் அவள்தான். காலையில் புறப்பட்டுச் செல்லும்போது மலர்ந்த அவள் முகம், மாலையில் வீடு திரும்பும் வரை அவன் நெஞ்சில் அலராது விரிந்து கிடக்கும். அவள் முகத்தில் என்ன மலர்ச்சி! என்ன பிரகாசம் என்ன இனிமை!
கடையில் சாமான் நிறுத்துக் கொண்டிருக்கும் போதும் தன்னை மறந்து அவன் மெல்லச் சிரிப்பான்.
“என்ன சுப்பிரமணியம் சிரிக்கிறீர்?"
அங்கு நிற்கின்றவர்களுள் யாராவது ஒருவர் கேட்டு வைப்பார். "ஒண்டுமில்லை" அவன் அப்போது சுதாகரித்துக் கொள்வான். "ஒண்டுமில்லையோ . ஏதோ மறைக்கிறீர்” ஒசைப்படாமல் மெல்லச் சிரிப்பான்.
"புதுமாப்பிள்ளை போலெ எதை எதை நினைச்சுச் சிரிக்கிறீர்! எங்களுக்கு வாய் திறந்து வெளியிலெ சொல்லேலுமே!"
கூடி நிற்கின்றவர்கள் எல்லோரும் சேர்ந்து கொல்லென்று சிரிப்பார்கள்.
சுப்பிரமணியத்துக்கு முகம் சிவந்து போகும். சாமான் நிறுப்பதற்காகத் திரும்பிக் கொண்டது போல முகத்தை மறைத்து உள்ளே மலர்ந்து மலர்ந்து மகிழ்வான்.
க்டை எப்போது மூடும்! எப்போது வீடு போய்ச் சேரலாம் என்ற அவன் துடித்துக் கொண்டு நிற்பான்.
57

Page 39
"என்ன காலிலே கஞ்சி ஊத்திக் கொண்டு நிற்கிறாய்?" மனேஜர் கேட்பார்.
"நேரம் வந்திட்டுது" "ஒமோம், வீட்டுக்குப் போய் மனைவியைப் பார்க்க வேணும் இல்லையே!”
அவன் மெளனமாக உதட்டுக்குள் அப்பொழுதும் மெல்லச் சிரித்து மழுப்புவான்.
கடை அடைத்துவிட்டால் ஒரு நொடி அவனால் தரித்து நிற்க இயலாது. அவளைக் காண்பதற்கு ஆவலோடு ஓடோடி வந்து சேருவான்.
அவளும் அவனுக்காகவே காத்திருந்தாள்.
அவன் வருகை அவளை மகிழ்வித்தது.
அவன் முகம் அவள் நெஞ்சில் நிறைந்தது. இப்பொழுது அவன் முகத்தை அவள் நிமிர்ந்து பார்ப்பதற்குத் தயங்குகின்றாள். அவன் கண்களைச் சந்திப்பதை அவள் தவிர்த்துக் கொள்ளுகின்றாள்.
சுப்பிரமணியம் நிமிர்ந்து வானத்தை நோக்குகின்றான். பொழுது மேலே ஏறிக் கொண்டு வருகின்றது. அடுக்களைப் படலை
இன்னும் திறக்கவில்லை. அவள் வெளியே வரவில்லை. அவள் 6II JUDM i IGi.
அவளை வீணாக ஏன் காத்து நிற்க வேண்டும்! அவன் தலை குனிந்த வண்ணம் முற்றத்திலிருந்து நடக்கின்றான். வெளிப் படலையைத் திறந்து கொண்டு ஒழுங்கையில் இறங்குகின்றான்.
அவன் வீட்டிலிருந்து கூப்பிடு தூரத்தில் ஒழுங்கை ஒரமாக இரண்டு வீடுகள் அந்த வீடுகளைத் தாண்டி நடந்து கொண்டிருக்கின்றான். ஈசுவரி இன்று மத்தியானம் கடைக்கு வரப்போகிறாள். அந்த நினைப்பினால் வீசி நடக்கும் அவன் வெறுங்கையே அவனுக்குக் சுமையாகக் கனக்கிறது. உணவுப் ழையை அந்தக் கையில் தூக்கிச் சுமந்து வந்திருந்தால் இப்படி அவனுக்குக் கனமாக இருந்திருக்காது.
அவன் மணி னொழுங்கையில் தொடர்ந்து போய்க்
58

கொண்டிருக்கின்றான். ஓங்கி உயர்ந்து நிற்கும் பனங்காணிகளுக்கு மத்தியில் கன்னிப் பெண்கள் நடுத்தலையில் கவனமாக உச்சி வகிடெடுத்து விட்டிருப்பதுபோல மண்ணொழுங்கை நீண்டு கிடக்கிறது. மழை வெள்ளம் அள்ளிவந்து கும்பி கும்பியாக குருகு மணலை அங்கு குவித்து வைத்திருக்கிறது. ஒழுங்கைக்கு இரு மருங்குகளிலும் எல்லைக் கம்புகளாக நாட்டிய, வேலிக் கிளுவைகள் வளர்ந்து கிளை ஒச்சி, குளு குளு என்று குடை விரித்து நிற்கின்றன. மெத்தென்று கிடக்கும் மணற் கும்பிகள் அவன் பாதங்களை மெல்ல வருடிக் கொடுக்கின்றன.
மனதின் பாரங்களைச் சில கணங்கள் மறந்து போகின்றான். இதந்தரும் குளிர் நிழலில் அவன் உடல் புல்லரித்துப் போகிறது. சுவை மிகுந்த நல்ல உணவை அபக் கென்று அவசரமாக உள்ளே விழுங்கி விடாது, மெல்ல மென்று ருசித்து அனுபவிப்பது போல மெது மெதுவாக அடி எடுத்து வைத்து நடந்து கொண்டிருக்கின்றான்.
அவன் பின்னால் இருந்து குரல் ஒன்று எழுகின்றது. அந்தக் குரல் அவனுக்குத் தெளிவாக இல்லை. திரும்பிப் பின்புறம் பார்க்க வேண்டும் என்னும் எண்ணமும் மனதில் அவனுக்கு எழவில்லை. அவன் தன்பாட்டில் போய்க் கொண்டிருந்தான்.
மீண்டும் அதே குரல், சற்றுப் பலமாக ஒலிக்கிறது. அவன் விழித்துக் கொண்டு விடுகிறான். அந்தக் குரலை உன்னிப்பாகக் கேட்க வேண்டும். செவிகளைக் கூர்மையாக்கிக் கொண்டு மெல்ல அடி எடுத்து வைக்கின்றான்.
- - 9
dil IL ... di UL .
யாரோ ஒருவனுடைய குரல் அது. காற்றின் அலையாக வந்து அவன் நெஞ்சில் பாய்ந்து சுருக்கென்று குத்துகிறது. இன்னும் தடித்துக் கணக்காத ஒரு பிஞ்சுக்குரல் சின்னப் பையனின் குரல். குறி தவறாமல் அவன் இதயத்தில் வந்து விழுந்திருக்கின்றது. நின்று பின்புறமாகத் திரும்பி அவனை ஒரு தடவை பார்க்கலாம். அவன் அழைப்பை ஏற்றுக் கொண்ட தாகிவிடும். அதைத் தவிர்த்து விட்டுவிட வேண்டும். விளங்கிக் கொண்டதாகக் காட்டிக் கொள்ள வேண்டாம். அவன் எதுவும் நடக்காதது போலத் தன் பாட்டில் போய்க் கொண்டிருக்கின்றான்.
ஒரு காலத்தில் சுப்பு என்று முகத்துக்கு முன்னே சிலர்
59

Page 40
அவனைச் சொன்னார்கள். இப்போது அந்தப் பெயர் மறந்து போனது. சுப்பிரமணியம் எப்படிச் சுப்பு ஆனது. பட்டப் பெயர் சூட்டிச் சிலரை அழைப்பது கிராமத்தில் ஒரு வழக்கம். ஒரு காலத்தில் பெரு வழக்காக வழங்கி வந்த பட்டப்பெயர் பிறகொரு காலத்தில் மறைந்து போகும். பட்டப் பெயருக்குரியவன் பணத்தினால் வசதி வாய்ப்புக்களினால் சமூகத்தில் பெரிய மனிதன் ஆகிவிட்டால் சொட்டையாகச் சொன்ன பெயரும் தொலைந்து போகும். சிலரது சொந்தப் பெயர்கள் சொல்லுவதற்கு வாய்க்கு ருசியாகச் சுருங்கிப் போகும். சுருங்கினால் அது நாகரிகமாகவும் இருக்கும். அர்த்தமுள்ளதாகவும் இருக்கும். பழைய பெயர்களெல்லாம் மினுக்கி நவீனமாக மின்னும், சுப்பிரமணியம் என்ற பெயரைச் சுருக்கி 'மணியம்' என்று வாய்க்கு வசதியாக அழைக்கலாம். அது நாகரிகமாகவும் இருக்கும். இதென்ன சுப்பு: இந்தச் சுப்புவுக்கு முன் ஒரு அடைச் சொல்லை வைத்துக் கொண்டிருக்கிறார்கள். மனதுக்குள் அதை வைத்துக் கொண்டுதான் வெறும் 'சுப்பு ஆக்கி அழைத்தார்கள்.
பின்னர் மறந்து போனார்கள்.
சில ஆண்டுகளுக்குப் பிறகு திரும்பவும் அந்தச் சுப்பு, யாரோ ஒரு சிறு பையனின் வாயிலிருந்து கோரமாக வெளிவருகிறது. சின்னப் பையனுக்கு எப்படித் தெரியும் சுப்பு என்ற பெயர்? பெரியவர்கள் சொல்லிக் கொடுத்திருக்கிறார்கள். வயதில் பெரியவர்கள் என்று இருக்கும் எத்தனை பேர் மனதால் அறிவால் வெறும் சின்னஞ் சிறார்கள். அனுதாபத்துக்குரியவர்களான இந்தச் சின்னப் பிள்ளைகளை எப்படிக் கோபிக்கலாம்!
அவன் மனதுக்குள் வெறுப்போடு மெல்லச் சிரித்துக் கொண்டு ஒன்றுமே நடக்காதது போலப் போய்க் கொண்டிருக்கின்றான்.
KK
சுப்பு . சுப்பு . சுப்பு . சுப்பு ."
இராக ஆலாபனை பண்ணுகிறார்கள். இன்னொரு குரலும் இணைந்து கொண்டு ஒன்று மாறி ஒன்றாக ஒலிக்கின்றது.
சுப்பு . சுப்பு . சுப்பூ . சுப்பு ."
சுப்பு . சுப்பு . சுப்பூச்சுப்பு . சுப்பு . சுப்பு . சுப்பூச்சுப்பு."
அவனுக்குப் பொறுமை கலைகின்றது. சினம் மெல்லப் பற்றிக்
60
 

கொண்டு மூளுகிறது.
எல்லாம் ஒரு நொடிப் பொழுதுதான்.
அடுத்த நொடியில் கீழ் உதட்டினால் மேல் உதட்டை ஒரு தடவை அழுத்தி விட்டுக் கொண்டு, சினத்தை உள்ளுக்குள் விழுங்குகின்றான். உதடுகளைத் திறந்து வெறுமையாகச் சிரிக்கின்றான்.
கடந்த காலச் சம்பவம் ஒன்று நினைவுக்கு வருகின்றது.
அவனுக்கும் ஈசுவரிக்கும் திருமணம் நடந்து முடிந்து ஒரு வாரம் கழிந்திருக்கும். அவன் ஈசுவரியுடன் பெரியம்மா வீட்டுக்குப் போய்க் கொண்டிருந்தான். அவன் முன்னே செல்ல அவனைத் தொடர்ந்து ஈசுவரி தெருவில் வந்து கொண்டிருந்தாள். அவர்களுக்குப் பின்புறம் இருந்து ‘சுப்பு என்று அழைக்கும் ஒரு குரல் கேட்கின்றது. ஒரு சிறுவனின் குரல். வழமையாகக் கேலி பண்ணும் குரல். அந்தக் குரல் அவன் செவிகளில் வந்து விழுந்ததாக இல்லை. கேட்டுக் கேட்டு உள்ளம் மரத்துச் சலித்துப் போன கேலியும் கிண்டலுமான குரல். செவிடன் போலத் தன் பாட்டில் அவன் போய்க் கொண்டிருக்கின்றான்.
அவனுக்குப் பின்னால் வந்த ஈசுவரி சட்டென்று திரும்பி, பாய்ந்து சென்று அந்தச் சிறுவன் சற்றேனும் எதிர்பார்க்காத நிலையில் கையில் இறுகப் பற்றிப் பிடித்துக் கொள்ளுகிறாள்.
சந்தடி கேட்டு அவன் பின்னால் திரும்புகின்றான். ஈசுவரி சிறுவனைக் கையில் பிடித்துக் கொண்டு சீறுகின்றாள்.
“என்னடா சொன்னநீ .? என்னடா சொன்னறி" "சுப்பு எண்டு சொன்னனான்" கிறுங்காமல் பதில் சொல்லுகிறான் சிறுவன்.
"என்னடா சொன்னநீ ஈசுவரியின் குரல் ஆக்கிரோசமாக ஒலிக்கின்றது.
"சுப்பு எண்டு ." அவனுக்கும் அகங்காரம் குறையவில்லை. "ஆரடா சுப்பு? ஈசுவரி உரப்புகின்றாள்.
"அவர்தான்" சிறுவன் அவனைச் சுட்டிக் காட்டுகிறான்.
61

Page 41
ஈசுவரி முற்றாகப் பொறுமையை இழந்து போகின்றாள். விழிகள் சிவந்து கொண்டு வருகின்றன. பற்களை இறுகக் கடித்த வண்ணம் சிறுவனின் செவியைப் பிடித்துத் திருகுகிறாள்.
"g|ഓളുഖിച്ചേ..? (#[േഖ8u..? :FT്ളഖി(11."
சில கணங்கள் பல்லைக் கடித்துக் கொண்டு சிறுவன் திமிறிக் கொண்டு நிற்கிறான். அவன் திமிறத் திமிற அவள் பிடி இறுகி இறுகி காது முறுகிச் சிவந்து, வலி அதிகரித்துக் கொண்டிருக் கிறது. இனித் தாங்கிக் கொள்ள இயலாதென்ற நிலையில் வாய்விட்டுச் சொல்லத் தொடங்கினான்.
விடக்கா. விடக்கா. சொல்லமாட்டன். சொல்லமாட்டன். ஐயோ. ஐயோ. விடக்கா."
சிறுவன் நெருப்பில் விழுந்த புழுப்போலத் துடியாகத் துடிக்கிறான்.
இப்பொழுதும் அவள் சினம் அடங்கியதாகத் தெரியவில்லை.
சிறுவனைப் பார்க்க சுப்பிரமணியத்துக்குப் பரிதாபமாகத் தொன்றுகிறது.
அவன் ஈசுவரிக்கு அருகே வந்து அவள் கையில் பிடித்து ஆ. விடு இனிமேல்" என்றதும் அவளுடைய பிடி விலகுகிறது.
சிறுவன் காதைப் பொத்திப் பிடித்த வண்ணம் நழுவி ஓடுகின்றான்.
ஈசுவரி தலை நிமிர்ந்து கணவன் முகத்தை நோக்குகின்றாள். சாந்தமாகச் சிரிக்கும் அவன் விழிகளை அவள் விழிகள் ஒரு தடவை சந்தித்துப் பிரிகின்றன. அடுத்த கணம் அவள் விழிகள் பெருக்கெடுக்கின்றன. −
அவள் கண்ணிரைக் கண்டு துடித்துப் போகின்றான் அவன்.
"ஈசா இதென்ன குழந்தைப்பிள்ளை மாதிரி கண்ணைத் துடை" சொல்லிக் கொண்டு திரும்பி நடக்கிறான்.
அவள் முந்தானையை இழுத்துக் கண்ணைத் துடைத்துக் கொண்டு அவனைப் பின் தொடர்ந்தாள்.
62
 

۔۔
சுப்பு . சுப்பு . சுப்பூச்சுப்பு . சுப்பு"
யாரோ பெரியவர்களும் சேர்ந்து கொண்டு சிரிக்கின்றார்கள். அவர்கள் சிரிக்கச் சிரிக்கச் சிறுவர்களுக்கு மேலும் உற்சாகம் கிளம்புகிறது. பாடல் ஒன்றைச் சேர்ந்து நின்று கோஷடியாகப் பாடுவது போல சிறுவர்கள் கார்வை கொடுத்து திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டு துள்ளிக் குதிக்கிறார்கள்.
அவன் உள்ளத்துள் ஒரு கேள்வி. "நான் எப்படி மீண்டும் சுப்புவானேன்?
அவன் உள்ளம் உலைக்களமாகிக் கொதிக்கிறது. அனற் காற்று எழுந்து உள்ளுக்குள் அக்கினியாக வீசிக் கொண்டிருக்கி றது. அந்த ஒழுங்கை நிலமும் அடிசுடுகிறது. குளிர் நிழலும் உடலைச் சுட்டெரிக்கிறது. அப்படி ஒரு தவிப்பு. ஆனாலும் அவன் பொறுமை முற்றாக எரிந்து சாம்பலாகிப் போய்விடவில்லை. இனி இழப்பதற்கு என்ன இருக்கிறது, என்னும் இறுமாப்பு அவனுக்கு. அந்த இறுமாப்பில் விளைந்து வைரம் பாய்ந்து கிடக்கிறது இந்தப் பொறுமை.
பொறுமை என்பது ஓர் உருவம் எடுத்து மெல்ல மெல்லப் பாதம் பதித்து நடந்து போவது போல அவன் தலை கவிழ்ந்து தரையை நோக்கிய வண்ணம் போய்க் கொண்டிருந்தான்.
சுப்பிரமணியம் கடைக்கு வந்து சேர்ந்தான். கடை அடைத்துக் கிடக்கிறது. மனேஜர் நந்தகோபாலன் இன்னும் அங்கு வந்து சேரவில்லை. முதன் நாள் விற்பனையில் சேர்ந்த பணத்தைச் சங்கக் கந்தோரில் கட்டுவதற்கு அவன் சென்றிருப்பான், பிறகு தனது கிளைக்குத் தேவையான விற்பனைப் பண்டங்களை சங்க லொறியில் அனுப்பி வைத்துவிட்டு அங்கிருந்து அவன் வந்து சேருவதற்குச் சில தினங்களில் சற்றுத் தாமதமாகும். கடைத் திறப்பு அவனிடம், அவனில்லாமல் கடை திறக்கப்படுவதில்லை.
சுப்பிரமணியம் விறாந்தையில் அமர்ந்து கால்களைக் கீழே தொங்கவிட்டு, பாதங்களை வசதியாகப் படியில் வைத்து செளகரி யமாக அமர்ந்து கொண்டான். கடை வாசலுக்கு எதிரில் ஓங்கி உயர்ந்து பரந்து விரிந்து நிற்கும் இலுப்பை மரம். அதன் நிழல் மழை மேகம்போல மப்பும் மந்தாரமுமாகக் கடைக்கு மேலே கவிந்து கிடக்கிறது. அதன் இலை தளைகளை மெல்லத் தழுவி
63

Page 42
வரும் இளங்காற்று சிலுசிலுவென்று வீசிக் கொண்டிருக்கிறது. காற்றில் கலந்து சருக்கரையாக மணக்கும் இலுப்பைப்பூவின் சுகந்தம் தேனாகத் தித்திக்கிறது. இயற்கை அளிக்கும் கொள்ளை இன்பங்களை எல்லாம் எதேச்சையாக இருந்து அனுபவிக்கும் சுகவாழ்வு அவன் போன்ற சாதாரண மனிதர்களுக்கு எப்படிச் சித்திக்கும்.
இன்பம் என்பது ஒரு மனிதனுக்கு வெளியில் இருந்து வர வேண்டும் என்பதில்லை. அது தனக்குள்ளே அரும்பி வளர்ந்து கனிந்து சுவைப்பது. அந்தச் சுவையும் சுகமும் எங்கே ஏழைகளுக் குக் கிடைக்கப் போகின்றது! இப்படி அருந்தலாகக் கிடைக்கும் சந்தர்ப்பங்களில் ஒறுப்பின்றி இயற்கை அள்ளி வழங்கும் இன்ப சுகங்களை ஆனந்தமாக எல்லாம் அனுபவிக்கலாம் என்று அவன் மனதில் தீர்மானித்துக் கொள்ளுகின்றான்.
சற்று முன்னர் நடந்த சம்பவத்தினால் மனதில் தோன்றிய சஞ்சலங்களை ஒருபுறம் ஒதுக்கி வைத்துவிட்டு, அமைதியாக நனவோடையில் இறங்கி, கால்களை நீட்டி மிதப்பதற்கு எத்தனிக்கின்றான்.
ஆனால் அது அவனுக்கு இயலவில்லை.
பெரியம்மா அந்தப் பெயரை இல்லாது போக்கத் துடித்தாள். ஆனால் அது அவளுக்கு முடியாமல் போனது.
ஈசுவரி அதை ஒழித்துக் கட்டினாள்.
ஆனால் இன்று மீண்டும் .
ஈசுவரியின் செவியில் அந்தச் சிறுவர்களின் கிண்டற் குரல் போய் விழாமலா இருந்திருக்கும்!
அவள் முன்போலச் சினந்து கொண்டு இப்போது ஏன் வெளியே வரவில்லை?
மீண்டும் தன்னைச் சுப்பு ஆக்கியது யார்? உண்மையில் நான் சுப்பு ஆகிவிட்டேனா?
சுப் பிரமணியம் மனம் குழம் பிக் கொண்டு அங்கு உட்கார்ந்திருக்கின்றான்.
64

7
"சுப்பிரமணியம் வாய் திறந்து பேசாது”
"நந்தகோபாலன் சுப்பிரமணியம் பேச வேண்டியதையும் சேர்த்துப் பேசும்"
"இரண்டு பேரும் சேர்ந்தாத்தான் கூப்பன் கடையை ஒண்டாக நடத்தலாம்",
கடைக்கு வரும் பெண்கள் சிலர் இடையிடையே சொல்லி மெல்லச் சிரிப்பார்கள்.
சுப்பிரமணியம் அவர்கள் சொல்வதைக் கேட்டு தலை குனிந்து அமைதியாக இருந்துவிடுவான்.
நந்தகோபாலன் கலகல என்று சத்தமிட்டுச் சிரிப்பான்.
"ஒமோம். இரண்டு பேரும் வாயை மூடிக்கொண்டிருந்தால் வியாபாரம் நடந்த மாதிரித்தான்"என்று சொல்வான்.
அவனுக்கு அறிந்தவர்கள் அறியாதவர்கள் என்றில்லை. அவன் எவரோடும் வலிந்து சென்று தானே பேச்சுக் கொடுப்பான். அவர்களும் அவன் முன்பின் அறியாத ஒருவன் என்னும் உணர்வு இல்லாது மறுகணம் சகசமாக அவனோடு பேச ஆரம்பித்துவிடுவார் கள். அப்படியொரு வசீகரம் அவன் பேச்சில் - அடுத்தவர்களை அணுகும் முறையில் இருக்கவே செய்தது.
அவனுக்குப் பெண்கள் என்றால் போதும், எந்தப் பெண்களை யும் அவன் விட்டு வைப்பதில்லை. சிரித்து சிரித்து வலிந்து கொண்டு பேசுவான். அவனோடு பேசுவதற்கு விரும்பாத ஒரு பெண்ணாக இருந்தாலும் அவளை விளங்கிக் கொண்டு, விளங்காதவன் போல் சந்தர்ப்பம் வாய்க்கும் பொழுதிலெல்லாம் தொடர்ந்து பேசிக் கொண்டிருப்பான்.
தான் மனசார விரும்பாத ஒரு ஆடவனாக இருந்தாலும் பின்னால் வலிந்து, வலிந்து நிழல் போலத் தொடர்ந்து வந்து கொண்டிருந்தால் தன்னையறியாமலே அவன் வலையில் வீழ்ந்து விடுவது பலவீனமான பெண்ணுக்குரிய ஒரு இயல்பு.
பெண்களின் இந்தக் குண இயல்புகள் எல்லாம் நந்தகோபாலன்
65

Page 43
நன்றாக உணர்ந்து வைத்திருக்கின்றான்.
அவன் எந்தக் கடையில் மனேஜராக அமர்ந்து சிட்டை எழுதிக் கொண்டிருந்தாலும் அங்கே பெண்களின் கூட்டம் பெருகிக் கொண்டிருக்கும். அவர்களின் வயது வேறுபாட்டிற்கேற்ப "அக்கா", தங்கச்சி", "அம்மா", "மாமி’ என்று நெருக்கமாக உறவுமுறை சொல்லியே அவன் எல்லோரையும் அழைப்பான். அவர்களோடு பேசும்போது அவன் அடிக்கடி சிரிப்பதும், கண் களைச் சிமிட்டுவதும், இருக்கையில் மெதுவாகத் துள்ளிக் குதிப்பதும் அவனுக்கு இயல்பான குணங்கள்.
நந்தகோபாலனின் சிறப்பான அம்சங்களாக சிறிய கண்கள், பெரிய வாய், மழுங்கிய மூக்கு என்பவற்றைச் சொல்லிக் கொள்ள இயலாது. ஆனால் அகன்று விரிந்த தோளும் பரந்த மார்புமாக, கருகருவென விளங்கும் அவன் உடல்வாகில் ஏதோவொரு வசீகரம் இருக்கவே செய்கிறது.
பெண்ணுக்கு எப்போதும் கவர்ச்சி ஊட்டுவது ஆணின் முக அழகல்ல. ஆடவனின் வலிமை மிகுந்த உடலின் கட்டழகுதான் திருப்தி அளிக்கும். அதனால்தான் ஆணழகன் போட்டிகள் எல்லாம் முறுக்கேறிய தசைகளுக்கு மத்தியில் நடக்கிறது.
பங்குனி பிறந்துவிட்டால் போதும் உடலில் வியர்வை வழிகிறதோ இல்லையோ! "ஸே . ஸே . என்ன புழுக்கம் . அவியுது. " என்று சொல்லிக் கொண்டு அணிந்திருக்கும் சேட்டைக் கழற்றி ஒரு புறத்தில் தொங்கவிடுவான். பெனியனோடு நெஞ்சு நிமிர்த்தி மேசையின் முன் அமர்ந்திருப்பான். கழுத்தில் தங்கச் சங்கிலி தொங்கிக் கொண்டிருக்கும்.
அவன் பிறரோடு பேசும்போது அவர்கள் கைகளில், தோள்க ளில் தொட்டுத் தொட்டுப் பேசுவான். அவன் தொட்டுப் பேசுவதை மற்றவர்கள் கருத்தில் கொள்வதில்லை. அவன் அப்பிடித்தான் என்று அவனை அறிந்தவர்கள் சகசமாக எடுத்துக் கொள்வார்கள். அவனுக்கு அவன் சந்திக்கும் முகங்கள் கவலையால் வாடி இருப்பது காணச் சகிக்காது. எவருக்கு எந்த உதவியைச் செய்வதற்கும் தயங்காமல் முன்னிற்பான். அவனோடு ஒன்றாக வேலை செய்கின்றவர்கள் சில சமயங்களில் கேட்பதுண்டு.
“என்ன மனேச்சர் பாத்துப்பாராமல் கடன் குடுக்கிறியள்'
66

"என்ன செய்யிறது. பாவம்" "குடுத்த கடன் வந்து சேருமோ அல்லது . "சொல்லேலாது”
"அப்ப .'
"கையாலெ போட்டுக் கட்டுறதுதான்"
"வாங்கிற சம்பளம் போட்டுக் கட்டத்தான் காணும்"
"என்ன செய்யிறது! ஏழை எளியதுகள் .
சுப்பிரமணியத்துக்கு நந்தகோலனைத் தெரியும், அவனுக்கு இளகிய மனம், அதனாலே நட்டப்படுகின்றான். அதை வெளியில் சொல்லிக் கொள்ள மாட்டான். நட்டம் வந்தாலும் அவனுக்கு அதில் ஒரு மன நிறைவு இருக்கவே செய்கிறது.
பொழுது மதியம் தாண்டிக் கீழே சரிந்து கொண்டிருக்கிறது. கடைக்கு வந்து போகும் கூட்டம் கொஞ்சம் கொஞ்சமாகக் கலைந்துவிட்டது. இனி மீண்டும் மூன்று மணியளவில் வந்து வந்து கூட்டம் மெல்லச் சேரும்,
முன்னர் என்றால் நந்தகோபாலன் சும்மா இருக்கமாட்டான். "என்ன மணியம் பெட்டியிலெ குந்திவிட்டீர்?"
மணியம் மெல்லச் சிரிப்பான்.
"கண்ணாடியிலெ எல்லோ மணியம் இப்ப பாக்க வேணும்.
உடம்பெல்லாம் மாவைப் பூசிக் கொண்டிருக்கிறீர் . புட்டுக்கு மண் சுமந்த சிவன் மாதிரி.
"ஹறி . ஹறி . ஹறி. இது கப்பிரமணியம்.
"உமக் கெண்டு புறம்பாக வேட்டி நெய்ய வேணும். கணுக்காலுக்குக் கீழே இறங்குவதில்லை"
மணியம் மெளனமாக இருப்பான்.
s
எத்தினை வேட்டியப்பா வைச்சிருக்கிறீர்!"
67

Page 44
"புது வேட்டி ஒண்டை எடுத்துக் கொண்டு போம். பிறகு காசைத் தாரும்"
நந்தகோபாலன் மேசை முன் அமர்ந்து பார்வையை வெளியே,
பாதையை நோக்கி இடையிடையே வீசிக் கொண்டிருக்கின்றான். அவன் யாரையோ எதிர்பார்க்கின்றான். யாரோ வரப் போகும் தகவல் முன்கூட்டியே அவனுக்குத் தெரிந்திருக்க வேண்டும். அவன் இப்பொழுது இயல்பாக இல்லை. சற்று முன்னர் கூட கடைக்கு வந்த பெண்களுடன் சிரித்துச் சிரித்துப் பேசிக் கொண்டிருந்தான். இப்பொழுது குழம்பிக் கொண்டிருக்கின்றான். முள்ளின் மேல் அமர்ந்திருப்பவன் போல அந்தரப்படுகின்றான். சுப்பிரமணியத்தின் முகத்தை நேருக்கு நேர் அவனால் நோக்க இயலவில்லை.
அவன் தன்னை ஒரு தடவை பார்த்துக் கொள்கின்றான். உடலெங்கும் முகத்திலும் தலையிலும் கோதுமை மா. சுப்பிரமணியம் வழமைபோல இன்றும் தலைநிமிர்ந்து இருக்கின் றான். கடைக்கு வெளியே விறாந்தையில் அமர்ந்திருக்கும் நந்தகோபாலனை சாடையாக நோட்டமிடுகின்றான். வெளியே பாதையை அவதானிக்கிறான். அவனுக்குத் தெரியும் இப்பொழுது யார் வரப்போகிறாள் என்று. காலையில் அவன் புறப்பட்டு வந்த சமயம் அவன் கையில் அவள் உணவுப் பார்சல் கொடுத்து அனுப்பாது தவிர்த்து விட்டதே இதற்காகத்தான்.
அவள் வருகையை நந்தகோபாலன் எதிர்பார்த்திருக்கின்றான். சுப்பிரமணியமும் எதிர்பார்க்கின்றான். இருவர் எதிர்பார்ப்பிலும் எவ்வளவு வேறுபாடுகள்! சுப்பிரமணியம் அமைதியாகப் பெருமூச்சு விட்டுக் கொள்ளுகின்றான். இருவர் இதயங்களும் வேகமாக அடித்துக் கொண்டிருக்கின்றன. ஆனால் அவற்றின் ஆத்மநாதம் வெவ்வேறாக ஒலித்துக் கொண்டிருக்கிறது.
பொழுது மெதுவா, மெதுவ அரக்கிக் கொண்டிருக்கின்றது.
ஈசுவரி திடீரென்று பாதையில் தோன்றி வேகமாக வந்து கொண்டிருக்கின்றாள். வெயில் கொடுமை முந்தானையை இழுத்து தலையை மூடிப்போட்டுக் கொண்டிருக்கின்றாள். அவளின் நடை வேகத்திற்கு ஏற்ப கையில் தூக்கி வரும் உணவுப் பை அங்குமிங்குமாக நிலையில்லாது ஆடிக்கொண்டிருக்கின்றது.
சற்றுத் துTர அவள் வந்து கொணி டிருக நின்றாள்.
68
 

நந்தகோபாலன் அவளைக் கண்டு கொண்டான். அவன் முகம் இருளில் மலர்ந்த மலர் போல கள்ளத்தனமாக விரிகின்றது.
அவள் விரைவாக நடந்து வந்து கொண்டிருக்கின்றாள். இடைவெளி குறுகிக் குறுகி வருகிறது. கடையை அவள் நெருங்கிக் கொண்டிருக்கின்றாள்.
நந்தகோபாலன் தானே அங்கு எஜமானன்! அவன் வேறெங்கோ பார்ப்பவன் போல முகத்தைத் திருப்பிக் கொண்டு கம்மிப் போன குரலில் கட்டளை இடுகின்றான்.
"சுப்பிரமணியம், தண்ணி எடுத்துக் கொண்டு
சுப் பிரமணியத் துக்கு கட்டளை புதியதல்ல. அவன் எதிர்பார்த்தது. ஈசுவரி இப்படி இங்கு வந்து சேரும் சமயங்களில் அவனை நோக்கி இந்தக் கட்டளை எப்போதும் பிறக்கும். மேலே இருப்பவர்கள் எப்பொழுதும் தங்களுக்கு வாய்ப்பும் வசதியும் தேடிக் கொள்வதற்கு, தங்களுக்குக் கீழே இருப்பவர்களுக்குக் கட்டளை இட்டுக் கொண்டிருப்பார்கள் . சுப் பிரமணியம் நந்தகோபாலன் இடும் கட்டளையை உதாசீனம் செய்து தட்டி நடக்க இயலுமா!
ஈசுவரி கடைவாசலை வந்து அடைவதற்கு முன்னம், சுப்பிரமணியம் தண்ணீர் வாளியைக் கையில் எடுத்துக் கொண்டு தலை குனிந்த வண் ணம் கடையை விட்டுக் கீழே
இறங்குகின்றான். நந்தகோபாலன் விருப்பமும் அதுதான்.
அருகில் உள்ள வீட்டுக்குச் சென்று சுப்பிரமணியம் தினமும் தண்ணீர் அள்ளி வருவது வழக்கம். துலாக் கொடியைக் கையில் எடுக்கின்றான். வாளியைக் கிணற்றினுள்ளே விட்டு, துலாவைத் தாழ்த்தி நீரை மொண்டு மேலே தூக்குகின்றான். அவன் உள்ளத்தில் ஒர் எண்ணம் மேல் எழுந்து வருகிறது. ஈசுவரி பிள்ளையைப் பெத்து ஆறுமாசம் என்று நினைத்துக் கொள்ளுகின்றான். இப்பொழுது தண்ணிர் அள்ளிக்கொண்டு அவசரமாகப் போய் ச் சேர வேண்டும் என்ற எண்ணம் அவனுக்கில்லை. இந்தச் சமயங்களில் அவன் எவ்வளவு நேரம் தாமதித்துப் போனாலும் நந்தகோபாலனுக்கு அது விருப்பந்தான். சுப்பிரமணியத்தின் தாமதம் நந்தகோபாலனுக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கும். சுப்பிரமணியம் வேண்டும் என்று நன்றாகத் தாமதித்துச் சென்றாலும் அவன் வந்து சேர்ந்து விட்டானே
69

Page 45
என்று நந்தகோபாலன் அவஸ்தைப்படுவான். சுப்பிரமணியம் வெகுநேரமெடுத்து மதிய உணவு உண்பதற்குத் தயாராக, முகம் கைகால்களை நன்றாகக் கழுவுகின்றான்.
நந்தகோபாலன் மேசை அருகே விறாந்தையின் கீழ் ஈசுவரி வந்து நிற்கின்றாள். அண்மையில் ஒரு குழந்தை பெற்றவள். முன்னர் இல்லாத ஒரு வகை மதாளிப்பு, அவள் உடலெங்கும் இப்பொழுது பொங்கிக் கிடக்கிறது. சுருள் சுருளான கட்டைக் கூந்தல் சற்று உதிர்ந்து போனதால் நெற்றி பெரிதாகித் தோன்றுகிறது. முகம் வெளுத்து துயில் கொண்டு இப்பொழுது எழுந்திருக்கின்றவள் போலக் கன்னங்கள் உப்பிக் கிடக்கின்றன. முகத்தில் தடிப்பாகப் பவுடர் பூசி வந்திருக்கின்றாள். நந்தகோபாலன் அருகே வந்ததும் தலைமீது போட்டுக் கொண்டிருக்கும் முந்தானையை எடுத்து, முகத்தில் அரும்பிய வியர்வையை அழுந்தித் துடைத்து விட்டுக் கொண்டு, அதன் பிறகே நந்தகோபாலன் முகத்தை நோக்கிப் புன்னகைக்கின்றாள்.
நந்தகோபாலன் ஆவலுடன் அவள் முகம் பார்த்து மெல்லச் சிரிக்கின்றான்.
"குடையைப் பிடிச்சுக் கொண்டு வந்தாலென்ன? அவன் கேட்கின்றான்.
"குடை கிடந்தாலெல்லோ"
"சரி வாங்கித் தாறன்"
அவள் நந்தகோபாலன் மேசை மீது இரண்டு கைகளையும் வைத்து முன்நோக்கிச் சற்றுச்சரிந்து முழங்கைகளால் அழுந்தித் தாங்கிய வண்ணம் அவனோடு நெருக்கமாக எதையோ பேசிக் கொண்டு நிற்கின்றாள். அவன் சொல்வது கேட்டு அடிக்கடி சிரிப்பதும், அவன் முகம் பார்த்து நாணிக் குழைவதுமாக அழகு காட்டுகின்றாள்.
சுப்பிரமணியம் தண்ணீர் வாளியைக் கையில் தூக்கிச் சுமந்த வண்ணம் அங்கு வந்து சேருகின்றான்.
அவள் மேசை மீது ஊன்றிய கைகளை எடுத்து சற்று நிமிர்ந்து விறைப்பாக நின்று கொள்ளுகின்றாள்.
சுப்பிரமணியம் கடைக்குள் சென்று சுவர் ஒரமாகத் தண்ணிர் வாளியை வைத்துவிட்டு, தரையில் கிடக்கும் கடதாசி மட்டையை
70

ஒரு கையில் எடுத்து, தண்ணீர்க் குவளையை மறுகையில் எடுத்து, குவளையில் நீரை மொண்டு கடதாசி மட்டையினால் வாளியை மூடிவிட்டு நிமிருகின்றான். ஈசுவரியைக் கண்கொட்டாமல் அப்படியே பார்த்துக்கொண்டு நிற்கின்றான்.
அவள் தலை நிமிர்ந்து பார்க்க வேண்டுமே நந்தகோபாலன் தலை உயரவேண்டுமே இருவரும் தலை தூக்கவே இல்லை. ஆனால் அந்தச் சந்தர்ப்பத்தை எதிர்பார்த்துக் காத்திருந்தவள் போல, ஈசுவரி கையோடு கொண்டு வந்திருக்கும் பைக்குள் கையை விட்டு, சோற்றுப் பார்சல் ஒன்றை வெளியே எடுத்து, நந்தகோபாலன் மேசைமீது அநிச்சையாக வைக்கின்றாள்.
கரத்தில் தண்ணிர்க் குவளையுடன் நிற்கும் சுப்பிரமணியம் மறுகரத்தில் சோற்றுப் பார்சலை மெல்ல எடுத்துக் கொண்டு மெளனமாகக் கடைக்குள் திரும்புகின்றான்.
"மணியம் கெதியாச் சாப்பிடு. சாமானுக்குச் சனம் வரப் போகுது" நந்தகோபாலன் எப்பொழுதும் இப்படிச் சொல்லுவான். சுப்பிரமணியம் விரைவாகச் சாப்பிட்டு முடித்து விடக் கூடாது என்பதுதான் அவன் விருப்பம்.
அவன் சாப்பிட்டு முடிக்கும் வரை ஈசுவரியுடன் பேசிக் கொண்டிருக்கலாம். நந்தகோபாலன் முதலில் சாப்பிடுவதாக இருந்தால் ஈசுவரி நின்று யாரோடு பேசுவது!
சுப்பிரமணியம் இன்று தானே முன்வந்து விட்டான். உணவுப் பார்சலை எடுத்துப் போவதற்கு,
நந்தகோபாலனும் ஈசுவரியும் குரலை நன்றாகத் தாழ்த்தி, மீண்டும் நெருக்கமாக உரையாடத் தொடங்கி விட்டார்கள்.
சுப்பிரமணியம் சாவதானமாகச் சோற்றை உண்டு முடித்து விட்டு, கைகழுவுவதற்காகக் குவளையில் தண்ணிரை அள்ளிக் கொண்டு கடைக்கு வெளியே இறங்குகின்றான்.
ஈசுவரி நந்தகோபாலன் மேசை மீது சோற்றுப் பார்சலை எடுத்து வைக்கின்றாள். பின்பு அவனிடம் சொல்லிக் கொண்டு வீடு நோக்கி நடக்கின்றாள்.
சுப்பிரமணியம் கைகழுவி விட்டு நிமிர்ந்து பார்க்கின்றான். ஈசுவரி தூர விலகி, விலகி மெல்லப் போய்க் கொண்டிருக்கின்றாள்.
71.

Page 46
8
ஐந்து மணிக்குக் கடைக்கதவை இழுத்து மூடிக்கொண்டு, பூட்டை எடுத்து மாட்டி, திறப்பை நந்தகோபாலன் கையிற் கொடுத்துவிட்டு சோர்வுடன் வீடு வந்து சேர்ந்தான் சுப்பிரமணியம்.
ஈசுவரி பால்மாவைக் கரைத்து புட்டியில் ஊற்றிக் குழந்தைக்கு ஊட்டி முடித்துவிட்டு, ஏனையில் வளத்தி மெல்ல அதை அசைத்து அசைத்துத் துங்க வைத்துக் கொண்டிருக்கின்றாள்.
சுப் பிரமணியம் எதிர்பார்த்துத் தான் வந்தான். அவன் எதிர்பார்த்தது போலவே ஈசுவரி இப்பொழுது கண்ணுக்குக் குளிர்ச்சியாகத் தோன்றுகின்றாள். அவள் சற்று முன்னர் தான் குளித்து முடித்திருக்க வேண்டும். சலவை செய்து வைத்திருந்த சேலை ஒன்றை எடுத்து நேர்த்தியாக உடுத்துக் கொண்டிருக் கின்றாள். மெல்லிய நீல நிறச் சேலை அவளுக்கு எடுப்பாக இருக்கிறது. குளிக்கும் போது அவள் போட்டுக் கொண்ட சோப்பின் இனிய சுகந்தம், அவள் உடலிலிருந்து கமழ்ந்து வீடெங்கும் பரவிக் கிடக்கிறது. கூந்தலை அழகாக வாரி நவீனமான சிறிய குடுமி ஒன்று போட்டுக் கொண்டிருக்கின்றாள். இரண்டு இலைகளுக்கு மேல் மலர்ந்து சிரிக்கும் மல்லிகைக் கொத்தொன் றைக் கொய்து குடுமியில் சொருகி இருக்கின்றாள். முகத்தில் லேசான பவுடர், புருவங்களுக்கு மை, நெற்றியில் குங்குமத் திலகம், இப்படி ஈசுவரி கண்களுக்குக் கவர்ச்சியாகவும் எடுப்பாகவும் தோன்றுகின்றாள். அவள் சிங்காரித்துக் கொண்டி ருக்கும் அலங்காரங்கள், மயக்கும் மாலை நேரத்தின் கிறக்கம், எல்லாம் சங்கமமானதில் அவள் அழகு சுந்தரியாக ஜொலிக் கின்றாள்.
சுப்பிரமணியத்துக்கு ஒரு புறம் மனம் கொள்ளாத பெருமை. "என்ரை மணிசி இவளவு வடிவே' அவன் தனக்குள்ளேயே நினைத்துக் கொள்கின்றான். இளமை துள்ளும் எந்தப்பெண்ணும் முறையாக அலங்கரித்தால், செம்மறி ஆட்டுக்குட்டி போல அதில் ஒரு கவர்ச்சி இல்லாமற் போய் விடுவதில்லை. அவள் செளந்தரியத்தின் மீது தன் கண்கள் பட்டுவிடுமோ என்று உள்ளுர அஞ்சுகிறது அவன் உள்ளம். ஆனால். அடுத்த கணம் அவன் நெஞ்சுள் பொருமிக் கொண்டு சுடுமூச்சொன்று வெளிவருகின்றது.
72
 

ஈசுவரி இப்பொழுது அமைதியாக இல்லை. அவளுக்கு ஒரே பரபரப்பும் குழப்பமும், எங்கோ போவதற்குத் தயாராக அவள்
புறப்பட்டு நிற்கின்றவள் போலத் தோன்றுகின்றாள். அவள்
முகத்தில் ஒரு கலக்கம் செய்யுங் காரியங்களில் நிதானமில்லாத ஒரு வேகம், ஒரே குழப்பம்.
ஏணைக்குள் வளத்திய குழந்தை தூங்கிப் போய் விடுகின்றது. நிலையில்லாது அவள் உள்ளம் போல முன்னும் பின்னும் அசைந்தாடிக் கொண்டிருந்த ஏணை, ஆட்டமின்றித் தரித்து நிற்கின்றது. ஏணையை அசைத்துக் கொண்டிருந்த ஈசுவரியின் கை, அவள் தன்னை மறந்த நிலையில் ஏணையைப் பிடித்துக் கொள்ள, முகட்டு வளையை நோக்கிய வண்ணம் சற்றுநேரம் சிலையாக அமர்ந்திருக்கிறாள். பின்னர் ஒரு முடிவுக்கு வந்தவளாகச் சிலிர்த்துக் கொண்டு எழுந்து முற்றத்தில் இறங்கி, அடுக் களைக் கதவைத் திறந்து கொண் டு உள்ளே நுழைகின்றாள்.
“தேத்தண்ணி தாறதே? ஈசுவரியின் குரல் எங்கோ வெகு தொலைவில் இருந்து வருவது போல ஒசை சன்னமாக, அதே சமயம் கனத்து யாரையோ கேட்பது போல ஒலிக்கின்றது. ஏதோ ஒரு சம்பிரதாயத்திற்கு அவள் அப்படிக்கேட்டு வைக்கிறாள். அவளுக்குத் தெரியும். அவனிடமிருந்து பதில் வரப்போவதில்லை. ஆனால் அவளால் அப் படிக் கேட்காமல் இருக்கவும் ജൂuസെബിബ്ലെ,
அவன் தனக்குள் நகைத்துக் கொள்ளுகின்றான். தனக்கொரு தேநீர் தரவேண்டும் என்னும் ஆதங்கம் இப்போது அவள் மனதில் இல்லை. வலிந்து கொண்டு அவனிடம் ஏன் தேநீர் கேட்கவேண்டும்! அவளுக்கு இப்போதிருக்கும் அவசரம் பரபரப்புக்குள்ளே!
அவன் வாய் திறக்கவில்லை. பாய் ஒன்றினை எடுத்து அவன் விரிக்கின்றான். அதில் சரிந்து படுக்கும் போது மகனை ஒரு தடவை நினைத்துக் கொள்ளுகின்றான். அடுத்த வீட்டுக் குழந்தைகளுடன் விளையாடப் போய் இருப்பான். இனி வீட்டுக்கு வந்து விடுவான்.
அவனுக்குச் சங்கக்கடையில் காலை முதல் மாலை வீடு திரும்பும் வரை ஓயாத வேலை. அரிசி, மா, சீனி, பருப்பு
73

Page 47
மூடைகளைத் தூக்கி நிமிர்த்த வேண்டும். மூடைகளை வாய் வெட்டிப் பெட்டியில் கொட்ட வேண்டும். அவற்றை நிறுத்து நிறுத்து வாங்க வந்தவர்களின் பாத்திரங்களில் போட வேண்டும். மண்ணெய் அளந்தளந்து போத்தல்களில் ஊற்ற வேண்டும். தனியொருவனாகக் கடைக்குள் நின்று குனிந்து நிமிர்ந்து சுழன்று எல்லாக் காரியங்களையும் செய்ய வேண்டும். இப்படித்தினமும் உழன்று அவன் களைத்துப் போய் விடுகின்றான். வீட்டுக்குத் திரும்பி வரும்பொழுது உடலெங்கும் புண்ணாக அவனுக்கு வலி எடுக்கும்.
அவன் வீடு என்பது உண்மையில் அது ஈசுவரியின் வீடுதான். யாழ்ப்பாணத்துக் கணவன்மார் ஒவ்வொருவரும் தனக்கென்றொரு வீடு இல்லாத அகதிகள். அவர்களுக்குத் தஞ்சமளிக்கும் ஒரேயொரு புகலிடம் மனைவியின் வீடு மனைவி வீடு தங்களுக்குச் சீதனம் என்று இந்தக் கணவன்மார் பெருமையாகச் சொல்லிக் கொள்வார்கள்.
சுப்பிரமணியத்தின் சீதன வீடு இது. பெரிய வசதிகள் அப்படி ஒன்றுமில்லை. சங்கக்கடையில் சாமான் நிறுக்கும் அவனுக்கு பெரிய மாளிகையா சீதனமாகக் கிடைக்கும்! ஒரு அறையும் அதை ஒட்டி அதே அளவில் திறந்த ஒரு மண்டபமுமாக - சீமெந்துக் கற்களினால் சுவர் எழுப்பி - சீமெந்துத் தரை போட்டு - பனையோலை கொண்டு வேய்ந்த கூரைவீடு. அதற்கெதிரே சிறியதொரு முற்றம், வீட்டு வாசலுக்கெதிரே நிழலுக்காக முற்றத்தில் நட்டிருக்கும் ஒரு மாமரம். அந்த மரத்தின் அடியில் இரண்டு தண்ணீர்க் குடங்கள், வேலியோரமாக முற்றத்தின் அந்தத்தில் சுற்றிவர மண்ணினால் அரைச் சுவர் எழுப்பி, அதற்குமேல் பனம் மட்டைகளினால் நெருக்கமாக வரிந்து சிறிய இரண்டு பகுதிகளாகப் பிரித்த ஒரு அடுக்களை ஒரு பகுதி மச்சமாமிசம் சமையல் செய்வதற்கு மறுபகுதி விரதகாலங்களிற் சமைப்பதற்கு ஈசுவரியின் படுக் கை அறையும் அந்த அடுக்களையில் ஒன்று தான்.
சுப்பிரமணியம் அறையுடன் ஒட்டிய சிறிய மண்டபத்துள் பாய் ஒன்றை விரித்துக் கொண்டு படுத்தவன், மறுவினாடி குறட்டை விட்டு அவன் உறங்கிப் போனான். அப்படி ஒரு களைப்பு அவனுக்கு அவன் பாய் விரித்துப் படுக்கும் போது
74

தலையணையை எடுத்துப் போட்டுக் கொண்டு சரிந்தான். இப் பொழுது தலையின் கீழ் தலையணை இல் லை. தலையணையை விட்டு தலை கீழிறங்கிக் கிடக்கிறது. விரித்த பாய் சுருண்டு போய்விடாமல் அணையாக வைத்துக் கிடப்பது போலத் தலையைணை தனித்துக் கிடக்கிறது. அவன் ஒரு பக்கம் சரிந்து உடலை வளைத்து, முழங்கால்களை மடித்து, முன்நோக்கி நீட்டிய, கீழே கிடக்கும் கையை எடுத்து தொடைகளுக்கிடையே வைத்துக் கிடக்கின்றான்.
அயல் வீட்டுக்கு விளையாடச் சென்றிருந்த அவன் மகன் திரும்பி வந்து அவனருகே படுத்துக் கொள்ளுகின்றான். மகன் திரும்பி வந்ததும், அருகே படுத்துக் கொண்டதும் அறியாமல் ஆழ்ந்து உறங்குகின்றான். அவன் அந்த உறக்கத்திலும் அநிச்சையாக வழமை போல மறுகரத்தால் மகனை வயிற்றுக்குள் அணைத்து வைத்துக் கொண்டு கிடக்கின்றான். அவன் வாய் திறந்து கிடக்கின்றது. குறட்டைச் சத்தம் பெரிதாகக் கேட்கிறது. நீட்டி நிமிர்ந்து அவன் படுத்துக்கொண்டு விட்டால், ஒரு வேளை அந்தப் பாயின் நீளம் அவனுக்குப் போதுமானதாக இருக்காது என்று எண்ணத் தோன்றும். இப்படி ஒரு வளர்த்தி. அவனது நீண்ட முகத்தில் ஏறு நெற்றியும் கூர் மூக்கும் மேலும் அவன் உயரத்தை உயர்த்திக் காட்டும். அந்த உயரம், சுமாரான அவனது உடல் பருமனை பிறர் பார்வையில் அவனை ஒசட்டை ஆக்கி விட்டிருக்கிறது.
அவனுக்குப் பின்னே வீட்டு வளையில் தொங்கும் ஏனையில் குழந்தை கிடந்து உறங்குகிறது.
நேரம் இளமாலைப்பொழுது மயங்கும் வேளை, பகலவன் மேற்கு வானில் பதுங்கிப் பதுங்கிச் சென்று பட்டென்று பனை வடலிக் கூடலுக்குள் புகுந்து கொண்டான். எவளோ ஒருத்தி மிகுந்த தாபத்துடன் அவன் வருகையை ஏக்கத்துடன் எதிர்பார்த்து அங்கு காத்திருக்க வேண்டும். இல்லையேல் அவனுக்கு ஏனிந்த அவசரம் ஒடிமறையும் மோக வெறி! இந்த மண்ணின் கிராமியக் காதல் நெஞ்சங்கள் அந்தரங்கமாகக் கூடிக்குலவும் மனோரம்மியமான பூங்காக்கள், இந்தப்பனை வடலிக் கூடல்கள். ஒன்றுபட்ட நெஞ்சங்கள் அந்தரங்கமாக வந்து கூடுவதனால், இவைகள் கூடல்கள் எனப் பெயர் பெற்றிருக்க வேண்டும். இணைவிழைச்சு நாடி கூடலுக்குள் நுழைந்திருக்கும்
75

Page 48
பகலவன் அவளையும் தன்னையும் மறைத்துக் கொள்ள விரும்பி இருப்பான். அதனால் இளநீல வண்ணக் காகிதம் போல இருக்கும் வானத்தில் கடுஞ்சிவப்பு வண்ணச்சந்தை முதலில் தடவி, பின்னர் அடர்த்தியான கருமையை அள்ளிப் பூச ஆரம்பித்து விட்டான். சுப்பிரமணியத்துக்கு பகலவன் பனைவடலிக் கூடலுக்குள் புகுந்துவிட்டான் என்பது தெரியவராது. அவன் ஒன்றும் அறியாதவனாக அசந்து தூங்கிக்கொண்டு கிடக்கின்றான். ஆழ்ந்த உறக்கத்திலும் தன்னை அறியாமல் தன் மகனை இழுத்திழுத்து நெஞ சோடும் வயிற் றோடும் சேர்த்து அணைத்துக் கொள்ளுகின்றான். அவனுக்கு உறக்கம் என்னும் இருள். அந்த வீடும் இருளில் மூழ்கி அவனது மெல்லிய குறட்டை ஒலி ஒன் தவிர, நிசப்தமாகத் தூங்கிக் கிடக்கிறது:
அந்த நிசப்தத்தைக் கலைத்துக் கொண்டு திடீரெனக் குழந்தை ஏனையில் உதைத்து அழுகின்றது. ஏணை நனைந்து சொட்டுச் சொட்டாகச் சிறுநீர் சீமெந்துத் தரையில் விழும் மெல்லிய ஓசை கேட்கின்றது. 嵩)、、、 鬣 "சுப்பிரமணியம் குழந்தையின் அழுகுரல் கேட்டுக் கண் விழிக்கின்றான். அருகில் படுத்துக் கிடக்கும் மகனை அணைத்துக் கொண்டு ஒரு சில நிமிட்ங்கள் மரமாகக் கிடக்கின்றான்.
குழந்தை ஏணையை உதைத்து உதைத்து தொடர்ந்து அழுகின்றது. அதன் குரல் கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து ஓங்காரமாக ஒலிக்கின்றது. இருள் வேறு பெருகித் தேடித்துக் கொண்டு வருகின்றது. * 巽,、 "பாவம் பச்சைப் பிள்ளை" அவன் நெஞ்சுக்குள் நினைவு கசிகிறது. அதன் அழுகுரலால அவன் மனதுக்குள் துயரப்படுகின்றான். படுத்துக் கிடந்த வண்ணம் சுவர் ஒரமாகத் தலையைத் திருப்பி, அந்த இருளில் குறிப்பாக நோக்குகிறான். அவன் எதிர்பார்த்ததுபோல பால்மாவைக் கரைத்துப் போச்சியில் ஊற்றி வைத்துவிட்டுத்தான் அவள் போயிருக்கின்றாள்.அவன்
கண்களில் பால் போச்சியின் வெண்மை பளிச்செனத் தெரிகின்றது.
நெஞ்சப் பொருமலை நெடுமூச்சாக வெளிவிட்டுக் கொண்டு அவன் படுக்கையை விட்டு மெதுவாக எழுகின்றான். பால் போச்சியைக் குனிந்து ஒரு கையில் எடுத்துக் கொண்டு மறுகையினால் ஏணைக்குள் கிடக்கும் குழந்தையை அனைத்து
76
 

'്യ്
வெளியே தூக்கி வாசலை நோக்கி இரண்டடி எடுத்து வைத்து முன்னுக்கு வந்து, சீமெந்துத் தரையில் அமர்கின்றான். குழந்தையை மடிமீது கிடத்தி அதன் வாயில் பால் போச்சியைப் பொருத்தி பாலை ஊட்டுகின்றான்.
குழந்தை அழுவதை நிறுத்திக் கொண்டு விடுகின்றது. ஆவலுடன் மூசி மூசி மூச்சிரைக்கப் பாலைக் குடிக்கிறது. அதன் வேகமும் துடிப்பும் உணர்ந்து அவன் உள்ளம் நெகிழ்ந்து போகிறது. "பாவம் குழந்தை மீண்டும் ஒரு தடவை தனக்குள் சொல்லிக் கொள்கின்றான். குழந்தையைக் குறிப்பாக ஒரு தடவை பார்க்க வேண்டும் என்று அவன் மனதில் ஒரு ஆவல் எழுகிறது. பரவிக் கொண்டிருக்கும் மெல்லிய இருளில் உற்று உற்று நோக்குகின்றான். "சின்னக் கண்கள். பெரியவாய். மழுங்கிய மூக்கு." அவன் நெஞ்சில் படமாக விரிகிறது. நெஞ்சில் அசையும் அந்த நிழற்படம் இதயத்தில் முள்ளாகக் குத்துகிறது. குழந்தை முகத்தை மீண்டும் ஒரு தடவை பார்க்க வேண்டும் போல மனதில் ஒரு வெறி, அவன் தலை குனிந்து மடிமீது கிடக்கும் குழந்தை முகம் நோக்குகின்றான். இருளோடு இருளாகக் கிடக்கும் அந்தக் கரியநிறக் குழந்தையின் பிஞ்சு முகம் அவன் நெஞ்சைச் சுடுகிறது.
"குழந்தை அதுக்கென்ன தெரியும் பாவம்!”
அவனி வீட் டு வெளிப் படலை யைப் பார் த துக கொண்டிருக்கின்றான். படலை வேகமாகத் திறந்து கொள்ளுகிறது. ஈசுவரி முற்றத்திற்கு விரைந்து வருகின்றாள். அவள் நேரே அடுக்களைப் பக்கம் சென்று, அடுக்களைக் கதவைத் திறந்து கொண்டு அதற்குள்ளே நுழைகின்றாள்.
அடுக்களைக்குள் வீட்டு விளக்கைத் தேடுகின்றாள்.
அவளுக்கு அவசரம்.
இருண் டு கிடக்கும் வீட்டுக்கு, அவள் விளக்கேற்ற வேண்டுமல்லவா!
77

Page 49
9.
வளர்பிறை மேற்கு வானில் உதயமாகி மெல்ல நழுவிக்கீழே விழுந்து தேய்ந்து மறைந்து போயிற்று. வளர்நிலவின் முகமறியா மங்கியஒளி அழிந்து இருளின் கதிர்கள் விரிந்து பரந்து உறைந்து போனது. வெளியே அதிகநாட்டம் இல்லை. நேரம் அதிகமில்லை; எட்டுமணி தாண்டி இருக்கும்.
சுப்பிரமணியம் மாலைப்பட்ட நேரம் முதலாக அவன் வரவை எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றான். எப்படியும் இன்று அவன் வரத்தான் போகின்றான். அவன் இன்னும் ஏன் வந்து சேரவில்லை? ஒரு வேளை அவன் வரமாட்டானோ தான் தவறாக எண்ணி விட்டேனோ அல்லது இனித்தான் அவன் வரப் போகின்றானோ!
மாலையில் கடைகளை மூடிக் கொண்டு வீட்டுக்கு புறப் படுவதற்குச் சற்று முன்னதாக நந்தகோபாலன் சுப்பிரமணியத்திடம் சொன்னான்:
"நான் சோத்தைக் கண்டு மூண்டு நாள்"
"ஏன்?"
"உடம்பு சரியில்லை. காய்ச்சல் கீச்சல் வரும்போல கிடக்கு. சமைக்க ஏலாதாம்."
"உடம்பலுப்புக்கு புளிக்கஞ்சி நல்லது"
"புளிக்கஞ்சியோ. ஆர் காய்ச்சித் தாறது?
"கடையாலெ போய் அடுப்பு மூட்ட ஏலாதுதான்.கோபால் நான் சொல்லுறன் எண்டு கோவிக்கக்கூடாது, தம்பியோடை
ஒற்றுமைப்பட்டால்.அவன் ஒரு நேரச் சாப்பாடு தராமல் விட்டுவிடுவனே!"
மணியம், என்ன பேசினாலும் பொறுத்துக் கொள்ளுவன். ஆனால் உந்தக் கதை மாத்திரம் பேசாதே என்ரை தம்பி செத்துப் போனான்” “சரி.சரி. அதை விடு கோபால்."
மணியம் எனக்கிப்ப ஒரு வாய் சோறு தேவை. அவ்வளவு சோட்டையாக் கிடக்கு சாப்பாட்டுக் கடைக்கு சயி க்கிள் ஒடிப்போனாலும் பின்னேரம் சோறு கிடையாது"
78

്യട്
அப்ப என்ன செய்கிறது?"
"என்னாலெ சமைக்கேலாது”
"சோறு தானே - நான் தாறன்"
"ஸேச்ஸ். அது உங்களுக்குக் கரைச்சல்”
"ஒரு கரைச்சலுமில்லை. உடம்பு சரியாகிறவரைக்கும் இரண்டொருநாள் தாறதலெ என்ன வந்தது'
"எண்டாலும் கரைச்சல்தானே மணியம்"
"ஒரு கரைச்சலுமில்லை. இண்டைக்கு இரவு நான் கொண்டு வாறன்"
"வேண்டாம் மணியம் கொண்டு வந்தால் கடைசி வரையிலும் தின்னன்”
"ஏன்?
"இதென்ன கேள்வி சோறுதாறதும் போதாமல் என்ரை வீடு தேடிக் கொண்டு வந்து தரவேணும், நான் அதை வாங்கிச் சாப்பிட்டால். நான் ஒரு மனிஷனே! அதென்ன குணம்”
"அப்ப.வீட்டுக்கு வந்து சாப்பிட்டு விட்டுப் போவன்" "அப்பிடியே!”
"ஒமோம். வந்து சாப்பிடன்"
"UTILILD"
"பிறகென்ன பாப்பம்"
"வசதிப்பட்டால் வருவன்"
"பட்டினி கிடக்க வேண்டாம். இரண்டு மூன்று நாளுக்குத்தானே" நந்தகோபாலனுக்கு சொல்லிவிட்டு சுப்பிரமணியம் வீட்டுக்கு வந்து சேர்ந்தான்.
ஈசுவரிக்கு இந்தச் செய்தியை வீட்டில் அவன் சொல்லி வைக்கவில்லை. சொல்லி வைக்க வேண்டும் என்று மனதுக்குத் தோன்றவுமில்லை. அதனால் எதுவும் பேசாமல் அவன் மெளனமாக இருந்து விட்டான்.
79

Page 50
நந்தகோபாலன் நிச்சயம் வருவான் என்று சுப்பிரமணியம் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றான். நந்தகோபாலனுக்கு கொடுப்பதற்கு வீட்டில் உணவு தயாராக இல்லாமற் போய்விடாது. அப்படித்தான் இல்லாது போப் விட்டால் என்ன வந்தது! தனக்கென்றுள்ள சாப்பாட்டை அவனுக்குக் கொடுத்து அனுப்ப வேண்டியது தான். வீடு தேடி வரும் அவன் சாப்பிட்டு விட்டுப் போகட்டும் தான் பட்டினி கிடக்க நேர்ந்தாலும் பட்டினி கிடக்கலாம்.
இரவு ஒன்பது மணியை எட்டிக் கொண்டிருக்கும்போது நந்தகோபாலன் சயிக்கிளை உருட்டிக்கொண்டு உள்ளே வருகின்றான்.
அவன் வரவு எதிர்பார்த்து ஈசுவரி தயாராகக் காத்து இருந்திருக்க வேண்டும் அவன் சயிக்கிள் ஒட்டி வந்த களைப்புத்திர, சற்று ஆறியிருக்க முன்னர் அவள் இருவரையும் அழைத்தாள்.
"வாருங்கோ வந்து சாப்பிடுங்கோ"
இருவரும் ஒன்றாக எழுந்து போய் அந்த அடுக்களைக்குள் அமர்ந்திருந்து உணவு உண்பதற்கு அவ்வளவாக வசதிப்படாது. வீட்டின் திறந்த கூடத்துக்குள் சோற்றைக் கொண்டு வரும்படி அவளுக்குச் சொல்லலாம். அங்கே சுவாமிப் படங்கள் வளையில் கட்டித் தொங்கவிடப்பட்டிருக்கின்றன. மச்ச மாமிசம் அதற்குள் வைத்து சாப்பிடக்கூடாது.
"கோபால் நீ போய் சாப்பிடு"
"மணியம் நீயும் வா"
"இரண்டு பேருக்கும் இடம் வசதிப்படாது. நீ போய்ச் சாப்பிடு."
"இரண்டு பேரும் வாருங்கோ. ஒரு மாதிரி இருக்கலாம்" ஈசுவரி இருவரையும் அழைக்கின்றாள்.
"இல்லை கோபால், அது கரைச்சல், நீ 1ിറ്റ്
"அப்ப நீ போ, நான் பிறகு சாப்பிடுகிறன்" "இதென்ன கதை வீட்டுக்குன்னைக் கூப்பிட்டு இருத்திப் போட்டு நான் போய்ச் சாப்பிடுகிறது"
"எங்களுக்குள்ள என்ன வித்தியாசம். நீ சாப்பிட்டாலென்ன.
80

്യ്
பசிக்கிற ஆள் சாப்பிட வேண்டியதுதான்."
எனக்குப் பசியில்லெ, நீ தான் சோறு தின்னாமல் இருக்கிறாய் போ. போய்ச் சாப்பிடு கோபால்!”
"நீயும் விடுகிறதாயில்லெ" சொல்லிக் கொண்டு நந்தகோபாலன் எழுந்து போகின்றான்.
நந்தகோபாலன் இரவு நேரச் சாப்பாட்டை சுப்பிரமணியம் வீட்டில் அன்று இதமாக உண்டுவிட்டுச் சென்றான்.
மறுநாள் இரவு நந்தகோபாலன் அங்கு வந்தான். சுப்பிரமணியம் சாப்பிடுவதற்கு முன் இரவுச்சாப்பாட்டை உண்டு முடித்துவிட்டு அங்கிருந்து புறப்பட்டுச் சென்றான்.
மறுநாளும் அவன் வந்தான்.
சில தினங்களில் அவன் வருகை தடைப்பட்டுப் போய்விடும் என்று சுப்பிரமணியம் எதிர்பார்த்தான். அவன் எதிர்பார்த்ததுபோல எதுவும் நடக்கவில்லை.
நந்தகோபாலன் தொடர்ந்து ஒவ்வொரு இரவும் வந்து போய்க் கொண்டிருந்தான்.
அவன் வருகையுடன் இரவு நேரச் சாப்பாடு என்றுமில்லாத விசேடங்களுடன் அங்கு தயாராயிற்று.
சுப்பிரமணியம் வீட்டுக்கு வழமைபோல் ஒரு நாள் இரவு நந்தகோபாலன் வந்திருந்தான். அன்று மழைநாள், வானத்து வெள்ளிகள் சூலுற்ற கார்மேகத்துக்குள் புதைந்து கிடக்கின்றன. நந்தகோபாலன் உணவு உண்டு முடிக்க மழை தூறலாக ஆரம்பிக்கிறது.
"மழையிலெ நனைஞ்சாலும் தூறலிலெ நனையக்குடாது. இது தான நோய் ' சொல் லிக் கொண் டு நந்தகோபாலன் காத்திருக்கின்றான்.
தூறல் கொஞ்சம் கொஞ்மாக அதிகரித்து பெருமழை கொட்ட ஆரம்பிக்கிறது.
"ச் ஸ்ெ. போகலாம் போகலாம் எண் டால் மழையும்
81

Page 51
',
விட்டபாடில்லை."
"இந்த மழைக்கு எங்கெ போகப்போகிறாய்!"
"ஆள் இல்லையெண்டால் கள்ளர், காடர் வந்து வீட்டிலெ உள்ளதுகளைக் கொண்டு போவிடுவங்கள்"
"கும்மிருட்டு. மழை கொட்டுது. காத்தும் லேசா அடிக்கிது. இதுக்குள்ளே எங்கெ போறது.ஒரு பாயும் தலைகணியும் கொண்டு வந்து குடு, கோபால் படுக்கட்டும்!
அன்று நந்தகோபாலன் தனது வீட்டுக்குத் திரும்பிப் போகாமல் சுப்பிரமணியம் வீட்டில் படுத்துக் கொண்டான்.
மறுநாள் இரவும் மழைநாள் தான். அன்றும் அவன் திரும்பி வீட்டுக்குப் போகவில்லை.
அதன் பிறகு இரவு வருவான் உணவு உண்டு முடித்தபின் அங்கேயே படுத்துக் கொள்வான்.
அவனைப் "போ” என்று யாரும் அங்கே சொல்வார் இல்லை. அவ னும் அங் கருந்து புறப் பட்டு உடனே போய் விடுவதாகவுமில்லை.
LO
கூட்டுறவுச் சங்கத்தின் எந்த ஊர்க் கிளைக்கு நந்தகோபாலன் மாற்றலாகிப் போனாலும் அவனுக்குச் சோடி சுப்பிரமணியமாகவே இருக்கும். நந்தகோபாலன் சங்கத்துள்ளே செல்வாக்குள்ளவன். சங்கத்தின் நிர்வாகப் பொறுப்பில் இருக்கின்றவர்களை வசப்படுத்தி வைத்துக் கொள்ளும் வழி அறிந்தவன் அவர்கள் ஒவ்வொருவரின தும் தேவைகளை உணர்ந்து மக்களுக்கு விற்பனை செய்வதற்காகக் கிளைகளுக்குப் பங்கிட்டுக் கொடுக்கப்படும் அரிதான பண்டங்களை இரகசியமாக அவர்களுக்குக் கொடுத்துக் கடமைப்படுத்தி வைத்துக் கொள்ளுவான். அவன் எண்ணம்போல சுப்பிரமணியத்தை அவனுக்கு விற்பனையாளனாக நியமித்து விடுவார்கள். அயல் கிராமங்களின் கிளைகளில் அதிக காலம் அவன் இருந்து கடமை புரிவதில்லை. தனது சொந்த ஊர்க் கிளைக்கு ஒருவாறு விரைவில் மாற்றலாகி வந்துவிடுவான்.
82

"ஊருக்கடை கோபாலனுக்கு முதிசம்" "ஏன் மணியத்துக்குச் சீதனம்"
சாமான் வாங்குவதற்காகக் கடைக்கு வருகின்றவர்கள் பகிடியாகச் சொல்லிக் கொள்ளுவார்கள்.
"என்ரை ஊர்ச்சனங்களுக்குத் தொண்டு செய்ய வேணும். மற்றவையஞக்காக நான் ஏன் கவர் டப்பட வேணும் " நந்தகோபாலன் தனது ஊர் மக்களுக்கு அர்த்தமுள்ளதான இந்தச் சமாதானத்தைச் சொல்லிக் கொண்டிருப்பான்.
சுப் பிரமணியம் இவைகள் எதிலும் அவ்வளவாகப் பட்டுக்கொள்வதில்லை. ஏதோ, இவைகள் எல்லாம் தன்னோடு சம்பந்தப்படாதவைகள் என்ற எண்ணத்தில் தானும் தன்பாடுமாக அவன் இருந்துவிடுவான்.
பெரியம்மாவின் பிள்ளைகளான அவன் சகோதரர்கள் கடைக்கு வந்து போனார்கள். ஆனால் அவனோடு முகம் கொடுத்துப் பேசிக் கொள்வதை முடிந்தவரை அவர்கள் தவிர்த்துக் கொண்டுவிட்டார்கள். அவர்கள் வீட்டுக்கு அவன் போனாலும் அன்பாக முகம் மலர்ந்து அவனை இப்போது அவர்கள் வரவேற்று உபசரிப்பதில்லை. அவன் வந்திருப்பதை விரும்பாதவர்கள் போல ஏனோதானோ என்று நடந்து கொள்வார்கள்.
அவர்கள் போக்கினை அவன் விளங்கிக் கொண்டான். அவர்களைக் குறை சொல்லவும் இயலவில்லை. அவர்கள்மீது அவன் மனக்குறை கொள்ளவும் இல்லை. அவர்களைத் தேடி வலிந்து கொண்டு போவதை அவன் தவிர்த்துக் கொண்டு விட்டான்.
பெரியம்மாவும் அவனுக்கு இப்போது இல்லை.
பெரியம்மா உயிரோடு வாழ்ந்து கொண்டிருந்த காலத்திலேயே அவர்கள், அவனில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக விலக ஆரம்பித்துவிட்டார்கள். பெரியம்மா இறந்து போவதற்கு முன்பு அவனைத் தேடிக் கொண்டு அவன் வீட்டுக்குப் போகும் வழக்கத்தைக் கைவிட்டு விட்டாள்.
ஒருநாள் மாலையில் கடை மூடிய பிறகு அவன் வீடு நோக்கிச்
சென்று கொண்டிருந்தான். அவன் வரவை எதிர்பார்த்து, அவன் வரும் பாதையில் பெரியம்மா அவனுக்காகக் காத்திருந்தாள்.
83

Page 52
அவன் வந்துகொண்டிருக்கும் பாதையில் . அதுவும் பாதை ஒரத்தில் . பெரியம்மா தளர்ந்துபோய் அமர்ந்திருப்பதைக் கண்டதும், அவன் துடித்துப் பதைத்துக் கொண்டு சயிக்கிளை விட்டுக் கீழே குதித்தான்.
"பெரியம்மா . பெரியம்மா . இதென்ன பெரியம்மா, நடுத்தெருவிலை வந்திருக்கிறாய்!”
பெரியம்மா மிக மோசமாக உடல் குன்றிப் போனாள். முகம், கை கால்களில் வீக்கம், முறையாகச் சுவாசிப்பதற்கு இயலாமல் அவளுக்கு மூச்சுத் திணறுகின்றது. அவளால் தொடர்ந்து பேசவும் முடியவில்லை. எழுந்து நடக்கவும் இயலவில்லை.
"பெரியம்மா, நான் வீட்டை வருவன்தானே! ஏன் தெருவிலெ வந்திருக்கிறாய்!”
"உன்னோட தனியாகக் கதைக்கவேனும் மோனை" " வா பெரியம்மா வீட்டுக்குப் போவம் அங்கை வந்திருந்து ஆறுதலாகச் சொல்லு".
"நான் வரயில்லை மோனை'
"நான் சயிக்கிள்ளை இருத்திக் கொண்டு போறன்"
"நான் அங்கை வரமாட்டன் மோனை'
அவனுக்கும் அதற்குமேல் வற்புறுத்த இயலவில்லை.
“என்ன பெரியம்மா?"
பெரியம் மா எதனையோ அவனுக்குச் சொல்வதற்கு உன்னுகின்றாள். ஆனால் வாயில் வார்த்தைகளாக அது வெளியே வருவதாக இல்லை.
பெரியம்மா கண்கள் கலங்குகின்றன.
சேலைத் தலைப்பை இழுத்துக் கண்களை மெல்லத் துடைத்துக் கொள்ளுகின்றாள்.
பெரியம்மாவின் கண்கள் கலங்குவது கண்டு அவன் நெஞ்சு
84
 

பதைக்கிறது. அவன் விழிகளும் அவனை அறியாமல் பனிக்கின்றன.
"பெரியம்மா . என்ன சொல்ல வந்தநீ சொல்லன்" அவன் குரலும் கம்மித் தடுமாறுகின்றது.
தெரு என்றும் பாராமல் சின்னக் குழந்தையாக பெரியம்மா முன் அவன் குந்தி இருக்கின்றான். பெரியம்மா நடுங்கும் தன் கரத்தைத் தூக்கி, முன்னால் குந்தியிருக்கும் அவன் தலையைக் கோதிக் கோதி விடுகின்றாள்.
என்ன சுகம்! பெரியம்மா இப்படியே தலையைக் கோதி விட்டுக் கொண்டிருக்க வேண்டும். அவள் முன் பச்சைக் குழந்தையாக உலகம் உள்ளளவும் உட்கார்த்திருக்கலாம். அவள் மடிமீது தலைவைத்துப் படுத்துக் கொள்ள வேண்டும் போல மனசுக்குள் கொள்ளை ஆசை. இந்த வயதில் நடுத்தெரு வில் பெரியம்மா மடிமீது தலைவைத்துப் படுக்க முடியுமா! அம்மா அம்மாதான்! எந்த வயதிலும் பெரியம்மா அம்மாவேதான். ஆனாலும் . பெரியம்மாவைக் கட்டியணைத்து அழவேண்டும் போல அவனுக்குள்ளே குமுறிக் கொண்டு வருகின்றது.
பெரியம்மா உள்ளுக்குள் பொருமிக் கொண்டிருக்கின்றாள். ஆறாகத் துயர வெள்ளம் உள்ளே பெருகிக் கொண்டிருக்கின்றது. "மோனை நான் உனக்குத் துரோகம் செய்துபோட்டன் மோனை."
சற்றுப் பொறுத்திருந்து சொல்லுகின்றாள். "அவசரப்பட்டிட்டன் மோனை." சிறிது வேளை இடைவெளிக் குப் பிறகு மீண்டும் சொல்லுகின்றாள்.
"நான் உன்னைப் பெத்த தாய் மோனை. நீ நல்லா இருக்க வேணும் மோனை'
பெரியம்மா இரண்டு கைகளினாலும் அவன் முகத்தைத் தடவி விட்டுக்கொண்டு மேலும் பேச முடியாதவளாக கைத்தடியை எடுத்து ஊன்றி ஊன்றி நடக்கத் தொடங்கினாள்.
பெரியம்மா எதையோ அவனுக்குச் சொல்ல வந்தாள். இறுதியில் அவளுக்கு அதைச் சொல்லுவதற்கு இயலவில்லை. அவனுக்கும் அதைக் கேட்க வேண்டும் போலத் தோன்றவில்லை. 85

Page 53
அவளுக்குச் சொல்ல முடியவில்லை. அவனுக்குக் கேட்க வேண்டும் போல இல்லை.
கண்களில் நீர் தளும்ப போய்க் கொண்டிருக்கும் பெரியம்மா அவன் பார்த்துக் கொண்டு நின்றான். அவளைத் தடுக்க வேண்டும் என்று அப்போது அவனுக்குத் தோன்றவில்லை.
வெளியில் சொல்ல இயலாத மனப்பளுவைச் சுமந்தவண்ணம் அவனைப் பிரிந்து போய்க் கொண்டிருந்த பெரியம்மாதான் இறுதியாக உயிருடன் அவன் பார்த்த பெரியம்மா.
ஈசுவரியின் தாய் சுப்பிரமணியத்தின் மேல் மிகுந்த அன்பாக இருந்தாள்.
அவன் காதில் பட பலருக்கும் தனது உள்ளத்தில் இருக்கும் வாஞ்சையை அவள் சொல்லிக் கொண்டிருந்தாள்.
"எனக்கு அது மருமோனில்லை. நான் பெத்த பிள்ளை மாதிரி. ஆம்பிளைப் பிள்ளை இல்லாத குறைக்கு வந்திருக்கிற என்ரை
சுப் பிரமணியம் குடும்பத்துடன் வந்து அவள் தங்கி இருந்தாள்.அப்படி அவள் இருப்பது மூத்த மகள் இருவருக்கும் அவ்வளவாகப் பிடிக்கவில்லை. தங்களுடன் வந்து தங்கி இருந்தால் தங்கள் குழந்தை குட்டிகளைப் பார்த்து மேய்க்க வசதியாக இருக்கும் என்று எதிர்பார்த்தார்கள். ஆனால் அவர்களோடு தங்கி இருப்பதற்கு தாய் சம்மதித்துப் போக அல்லவா வேண்டும். அவர்கள் தாயைப் பார்த்து அதிருப்தியுடன் சொல்லுவார்கள்.
"இளைய மேளிலெயும் மருமேனிலெயுந்தான் உயிர்”
அதைக் கேட்டு வெற்றிலை வாய் திறந்து எச்சில் தெறிக்கச் சிரித்துவிட்டு மெளனமாத் தாய் இருந்துவிடுவாள்.
இப்பொழுது மகள் ஈசுவரியுடன் தாய்க்கு மனஸ்தாபம். எப்போது பார்த்தாலும் வீட்டில் இருந்து நச்சரித்துக் கொட்டிக் கொண்டிருப்பாள். ஈசுவரியுடன் இடையிடையே வாக்கு வாதப்படுவாள். ஒருநாள் ஈசுவரியோடு சண்டையிட்டுக் கொண்டு வீட்டைவிட்டு திடீரென்று புறப்பட்டு மூத்தமகள் வீடு போய்ச் சேர்ந்துவிட்டாள்.போகும்போது தன்பாட்டில், "வீட்டிலெ உள்ள
86
 

ஆம்பிளை ஆம்பிளையாக இருந்தாலெல்லோ ." என்று சொல்லிக் கொண்டு போனாள்.
சுப்பிரமணியத்தின் பெரியம்மா பிள்ளைகளான தம்பிமார் இருவர் இருக்கின்றார்களே! அவர்கள் அவன் மீது எத்தனை மதிப்பு வைத்திருந்தார்கள். அண்ணன் என்ற அன்பும் பயபக்தியுமாக இருந்தவர்கள் இப்பொழுது அவனை நேரில் கண்டாலும் காணாதவர்கள் போல முகம் திருப்பிக் கொண்டு போய்விடுகின்றார்கள். அவன் விரும்பினாலும் அவர்கள் மனம் வைத்து இரண்டு வார்த்தை அவனோடு பேசிக் கொள்வதில்லை. எ ல லோரும் இப் படி த துTர விலகப் போய் கி கொண்டிருக்கின்றார்கள்.
நந்தகோபாலன் மாத்திரம் சுப்பிரமணியத்தின் நிழல் போல அவனை விட் டுப் பிரியாது இ ைண ந து நின று கொண்டிருக்கின்றான். காலைப் பொழுது விடிந்து கடையில் சென்று சந்திக் கும் சொற்ப நேரம் வரை இருவரும் பிரிந்திருப்பார்கள். மீண்டும் மாலை கடை அடைத்தபின் இரவு வீட்டில் கண்டு கொள்ளும்வரை விலகி இருப்பார்கள். ஒரு தினத்தில் குறுகிய அந்த இரண்டு வேளைகள் தவிர, மிச்சமுள்ள நேரமெல்லாம் அவர்கள் இருவரும் ஒன்றாகவே இருப்பார்கள்.
பகல் நேரம் கடையில் இருக்கும்போது அசலும் நிழலுமாக இருவரும் இணைந்து இருப்பார்கள். இருள் வந்து சூழ்ந்துவிட்டால் ஒன்றாகவே இருப்பார்கள். ஆனால் இருளுக்கு நிழலுமில்லை. அது வந்து தொடர்வதுமில்லை.
இரவு சுப்பிரமணியம் சாப்பிட்டு முடித்தான். நந்தகோபாலன் வரவை இப்போது அவன் எதிர்பார்ப்பதில்லை. நந்தகோபாலன் குறித்த ஒரு நேரத்துக்கு வந்து சேரமாட்டான். அவன் வரவைக் காத்திருந்து சாப்பிடுவது சுப்பிரமணியத்துக்கு முடியாத காரியம். நந்தகோபாலன் வரவை அவன் எதிர்பார்த்திருக்காது கொடுத்ததை மறுவார்த்தை பேசாது உண்டு முடிப்பான். இறைச்சி, முட்டை என்று சாப்பாடு சில இரவுகளில் அவனுக்கும் கொஞ்சம் மணக்கும். அந்த விசேஷங்கள் அவன் சாப்பாட்டில் மாத்திரம் சில இரவுகள் இல் லாமலும் போகும் அவன் அதுபற்றி எ ல் லாம் கவலைப்படுவதில்லை. பாயை எடுத்து விரித்துக் கொண்டு சிவனே என்று படுத்துவிடுவான்.
87

Page 54
அன்று வெறுந்தரையில் உறங்கிப் போய்விட்ட மூத்த மகனைத் தூக்கி எடுத்து தனது பாயின் மேல் வளர்த்திவிட்டு தானும் அருகில் படுத்துக் கொண்டான்.
மூத்தவனுக்கு அடுத்த மகனும் இளைய பெண்பிள்ளையும் அடுக்களைக்குள் ஈசுவரியோடு இருந்தவர்கள். அங்கே வழமை போலப் படுத்து உறங்கிவிட்டார்கள்.
சுப்பிரமணியம் உறங்கிப் போய்விட்டான் என்றால் குறட்டை ஒலி கிளம்பிவிடும். இன்றும் மகனை அணைத்துக் கொண்டு படுத்தவன் அடுத்த கணம் குறட்டைவிட ஆரம்பித்துவிட்டான்.
அடுக் களைக் குள் கை விளக்கு சுடர் விட்டு எரிந்து கொண்டிருக்கிறது.
நந்தகோபாலன் சாப்பிடுவதற்கு இன்று வரவில்லை. எந்த நேரம் சென்றாலும் சாப்பாடு அவனைக் காத்திருக்கும் என்பது அவனுக்குத் தெரியும். அதனால் காலந் தாழ்த்தாது வந்து சேரவேண்டும் என்ற அவசரம் எதுவும் அவனுக்கில்லை. சினிமாவுக்குப் போய்க் காலங்கடந்து வருவான். நண்பர்களுடன் கூடி மது அருந்திக் களித்துவிட்டுத் தாமதமாக வருவான். எப்போது அவன் வந்து சேருவான் என்று சொல்வதற்கு இயலாது.
சில தினங்களில் அடி எடுத்து வைப்பதற்கு இயலாத நிலையில் தளம்பிக் கொண்டு வந்து படலை திறப்பான். அப்படியான வேளைகளில் அவனை அறியாமல் அவன் வாய் சினிமாப் பாடல் ஒன்றை முணுமுணுத்துக் கொண்டிருக்கும். சில சமயங்களில் வாயிலிருந்து மெல்லிய சீழ்க்காய்ச் சத்தம் வெளிவந்து கொண்டிருக்கும்.
இன்று அவன் இன்னும் வந்து சேரவில்லை. அடுக் களைக்குள்ளே கைவிளக்கு சுடர் விட்டு எரிந்து கொண்டிருக்கின்றது.
நேரம் என்ன இருக்கும் நடு இரவு தாண்டி இருக்குமோ! அவன் இன்னும் வந்து சேரவில்லை.
சுப்பிரமணியத்தின் குறட்டை ஒலி இடையில் முறிந்து போகின்றது. உறக் கம் கலைந்து கண் விழித் துக் கொள்ளுகின்றான். அடுக்களைப் பக்கமாகத் தற்செயலாக நோக்குகின்றான்.
88

அடுக் களைக் குள் கை விளக்கு சுடர் விட்டு எரிந்து கொண்டிருக்கின்றது.
சுப் பிரமணியத்துக்குத் தூக்கக் கலக்கம் நேரத்தை நிதானித்துக் கொள்ள இயலவில்லை. மறுபக்கம் புரண்டு படுத்துக் கொள்ளுகின்றான். அடுத்த விநாடி குறட்டை ஒலி எழுகின்றது.
நந்தகோபாலன் பட்டினி கிடக்க மாட்டான். ஒவ்வொரு இரவும் தவறாமல் அவனுக்கு உணவு வேண்டும்.இதுவரை எந்த ஒரு இரவும் அவன் வராது இருந்துவிடவில்லை. இன்று மட்டும் அவன் ஏன் வரவில்லை! அல்லது அவனுக்கு என்ன நேர்ந்துவிட்டது.
எங்கோ வெகு தொலைவில் நாய் ஒன்று குரைக்கிறது. கண் மறைக்கும் இருண்ட இரவின் பயங்கர அமைதியை அந்த ஒற்றைக் குரல் குலைக்கிறது.
அடுக் களைக் குள் கை விளக்கு சுடர் விட்டு எரிந்து கொண்டிருக்கின்றது.
சேவல் கூவ ஆரம்பித்துவிட்டது. ஒன்று இரண்டாக ஆரம்பித்து, திக்கெல்லாம் சேவல்கள் கூவுகின்றன. தொடர்ந்து காகங்கள் கரையத் தொடங்கிவிட்டன. உச்சிப் பனைக் கூடுகளுக்குள் கிடந்து சற்று நேரம் கரைந்த பின்னர், கூடுகளை விட்டு எழுந்து அங்குமிங்குமாகக் கரைந்து கொண்டு பறக்கின்றன.
நந்தகோபாலன் இரவு வரவே இல்லை.
அடுக்களைக்குள் சுடர் விட்டு எரிந்து கொண்டிருந்த கைவிளக்கு மெல்ல ஒளி இழந்து மங்கிப் போயிற்று.
வைத்தியசாலைக் கட்டிலின்மீது நந்தகோபாலன் துவண்டு போய்க் கிடக்கின்றான். அவன் தலை வெள்ளைத் துணியால் சுற்றிக் கட்டுப் போடப்பட்டிருக்கின்றது. தலையில் பலத்த அடி. தலையில் கட்டிய துணியில் கசிந்து உறைந்து போன இரத்தம் ஆங்காங்கே கறையாகத் தோன்றுகின்றது.
கடந்த இரவு கண் தெரியாத கும்மிருட்டில் தெருவில் அவன்
89

Page 55
நடந்து வந்து கொண்டிருந்தான். ஓங்கி உயர்ந்த பனைமரக் காணிகளை ஊடறுத்துக் கொண்டு வரும் தெரு அது. சன நடமாட்டம் அவ்வளவாக இல்லாத இடம்.
அவன் மெல்ல வந்து கொண்டிருக்கின்றான். அவன் எதிர்பாராத விதமாக திடீரென அவன் தலைமீது பலத்த அடி வந்து விழுகின் றது. இருட்டில் மறைந்து நின்று அடித்த அடி. அது இருட்டடி.
அந்தச் சமயம் தற்செயலாக அந்தப் பாதையில் வந்த ஒருவர், அவன் நிலத்தில் விழுந்து கிடப்பது கண்டு திகைக்கின்றார். ஓடிச் சென்று அயலில் குடியிருக்கின்றவர்களை அழைத்து வந்து அவர்கள் எல்லோருமாக அவனைத் தூக்கிச் செல்லுகின்றார்கள்.
நந்தகோபாலனுக்கு அவன் தம்பி வேணுகோபாலனுடன் இப்பொழுதும் தொடர்பில்லை. வேணுகோபாலன் பூமணியை மணந்து கொண்டபின் இருவருக்கும் இடையில் உண்டான பிளவினால் இன்றுவரை பேச்சுவார்த்தை இல்லை. தாய் இறந்து அவளின் இறுதிக்கிரியைகள் நடைபெற்ற சமயம் இருவரும் அந்த இடத்தில் நின்றார்களே அன்றி, ஒரு வார்த்தை முகம் கொடுத்துப் பேசவில்லை. வேணுகோபாலனை ஒதுக்கி விடுவதில் நந்தகோபாலன் எப்பொழுதும் தீவிரமாக இருக்கின்றான்.
இப்பொழுது என்ன செய்வது நந்தகோபாலனின் மிக நெருக்கமான உறவு என்றால் அவன் தம்பி வேணுகோபாலன் ஒருவன் தானே!
வேணுகோபாலனுக்கு செய்தி சொல் லி ஒரு ஆள் அனுப்பினார்கள். அவன் பரபரப்புடன் உடனே புறப்பட்டு ஓடி வந்தான். அவன் முன்னின்று மற்றவர்கள் ஒத்தாசையுடன் நந்தகோபாலனை வைத்தியசாலையில் கொண்டு போய்ச் சேர்த்தான்.
காலை விடிந்ததும் ஊரெங்கும் வதந்தி வேகத்தில் செய்தி பரவியது.
"நந்தகோபாலனுக்கு இரவு அடி விழுந்து போச்சாம்" "நந்தகோபாலனுக்கு இருட்டடி அடிச்சது ஆர்" "வேறை ஆர் அடிக்கிறது.” எல்லோருக்கும் தெரிந்திருந்தது. ஆனால் அதை எப்படி
90
 

வெளியே சொல்வது கண்களால் காணாத ஒன்றை வாய் திறந்து Glostgö6o6OTLDT i
"சுப்பிரமணியத்தின் தம்பிமார் . பெரியம்மா பிள்ளைகள் செய்த வேலை இது"
சனங்கள் எல்லோரும் தமக்குள்ளே இரகசியமாகப் பேசிக் கொண்டார்கள்,
நந்தகோபாலன் தனக்கு அடித்தவர்கள் யார் என்பதை அறியாமலா இருப்பான்! அவன் அவர்கள் யார் என்பதை வெளியே சொல் லத் தான் போகின்றான் . அப் போது உண்மை வெளிப்படத்தான் போகின்றது.
ஊர் மக்கள் எல்லோரும் வெகு ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்தார்கள்.
ஆனால் அவர்கள் எதிர்பார்ப்பு இறுதிவரை நிறைவேறாது ஏமாற்றமாகவே முடிந்தது.
நந்தகோபாலன் யார் பெயரையும் குறிப்பிட்டு இதுவரை வாய் திறந்து சொல்லவில்லை.
"கோபால் ஆரப்பா அடிச்சது?" என்று கேட்டார்கள் சிலர்.
"இருட்டிலெ மறைஞ்சு நிண்டு அடிச்சவனை எனக்கு எப்பிடித் தெரியும்?"
"ஆரிலெ உனக்குச் சந்தேகம்?"
"அப்பிடி ஆரிலுமில்லை"
"பகை உள்ளவர்கள்?"
"எனக்கு பகை ஒருத்தருமில்லை"
நந்தகோபாலன் சொன்ன பொய்யைப் பூரணமாக எல்வோரும் நம்பிக் கொண்டார்கள் என்றில்லை. அவன் உண்மையை மறைக்கின்றான் என்று பலரும் எண்ணினார்கள்
அந்த எண்ணம் தவறானதல்ல.
நந்தகோபாலன் மெல்ல வந்து கொண்டிருக்கின்றான். இருளில் மறைந்து நின்றவன் பொல்லைப் பிடித்துப் பலமாக ஓங்கி அவன் தலையில் அடித்த முதல் அடி உரமாக வந்து விழுகின்றது.
91.

Page 56
அவன் பட்டென்று திரும்பித் தனது கைக்குள் வைத்துக் கொண்டிருக்கும் பென்ரோச் சினால் அடித்தவன் முகத்தில் ஒளியைப் பாய்ச்சுகின்றான்.
அடித்தவன் சுப்பிரமணியத்தின் இளைய சகோதரன். நந்தகோபாலன் கண்டு கொண்டான். அவன் சுதாகரித்துக் கொண்டு திரும்புவதற்குள் இன்னொரு திசையிலிருந்து பொல்லடி வீச்சுடன் வந்து விழுகின்றது. அதன் பிறகு நடந்தது என்ன என்பது அவனுக்குத் தெரியவராது.
சுப்பிரமணியத்தின் தம்பிமாருடன் பகைமையை வளர்த்துக் கொள்ள நந்தகோபாலன் விரும்பவில்லை. அவர்கள் பகைமையினால் உருவாகக்கூடிய நெருக்கடிகள் தனக்கே இடையூறாக வந்து சேரும் என்று அவன் எண்ணினான். "கோபால் உனக்கு அடிச்சது ஆரப்பா? என்று கேட்டவர்கள் அத்தனை பேருக்கும் "தெரியாது. தெரியாது." என்றே சொல்லிக் கொண்டிருந்தான். -
நந்தகோபாலன் உள்ளத்துள் துயரப்பட்ட போதும் வெளியே கிளர்ச் சி கொள் ளாது உள்ளே அ ைமதிப் படுத் தி க் கொண்டிருந்தான்.
அவன் தம் பி வேணுகோ பலன் மனம் கொதித்துக் கொண்டிருந்தது. தமையனுக்கு நடந்ததை எண்ணி உள்ளுக்குள் துடித்துக் கொண்டிருந்தான். ஆனால் அவனாலும் அந்தச் சினத்தை வெளியே காட்டிக் கொள்ள இயலவில்லை. அவர்களோடு பகை பிடிப்பதற்கு சொல்லக்கூடிய காரணம் என்ன! அதைத் தோணி டிப் பார்த்தால் அதனால் வரக் கூடிய அனர்த்தங்கள் தான் அதிகம்.அவன் எல்லாவற்றையும் எண்ணி எண்ணி உள்ளம் குழம்பி, ஒருவாறு அதை அடக்கிக் கொண்டான்.
நந்தகோபாலனை வைத்தியசாலைக்குக் காரில் ஏற்றிக் கொண்டு சென்று இரவு சேர்த்துவிட்டு வந்தான் வேணுகோபாலன்.
அப்பொழுது இருந்த துணிவும் தன்னம்பிக்கையும் காலை விடிந்ததும் அவனுக்கு இல்லாமல் போனது. தமையனைத் தேடிக் கொண்டு போவதற்கு அவன் தயங்கினான். அண்ணன் என்ன
பூமணியை அழைத்துக் கொண்டு வீட்டுக்குப்போய் தாயோடு
92

ஒற்றுமைப்பட்ட பின்பு, நந்தகோபாலன் அந்த வீட்டுக்குப் போவதையே நிறுத்திக் கொண்டுவிட்டான். தனக்கென்று ஒரு தனிவீடு அவன் கட்டிக் கொண்டான்.
தாய் இறந்த சமயம் மயில்பாதம் வாத்தியார் தலைமையில் ஊரில் உள்ள பெரியவர்கள் சிலர் வந்து நந்தகோபாலனைச் சிக்கெனப் பிடித்துக் கொண்டார்கள்.
"கோபால், நீ வரத்தான் வேணும்" என்றார் வாத்தியார்.
"முடியாது" என்றான் நந்தகோபாலன்.
"கோபால், நீ என்ன விளங்காமல் கதைக்கிறாய்! இரண்டு பேருக்குத் தானே அவ தாய்” வாத்தியார் ஒரு விளக்கம் கொடுத்தார்.
"தெரியும் வாத்தியார்” சுருக்கமாக அவன் சொன்னான்.
"தம்பி நீ பெற்றவளுக்குச் செய்ய வேண்டிய கடைசிக் கடமை ஒண்டிருக்கு, அதை இப்ப செய்யாட்டால் . பிறகு எப்ப செய்யப் போகிறாய்!” என்றார் வயதில் முதிர்ந்து வாழ்ந்து அனுபவப்பட்ட ஒரு முதியவர்.
நந்தகோபாலன் தலை குனிந்து மெளனமாக இருந்தான்.
ஹா. ஹா. ஹா. மெளனம் சம்மதந்தானே. சரிசரி. வெளிக்கிடு வாத்தியார் ஒரு பொன்மொழியை உதிர்த்துவிட்டவர் போலச் சொல்லிக் கொண்டு மீண்டும் வாய் திறந்து “ஹா. ஹா. ஹா." என்று வழமையான தன் சிரிப்பைப் பலமாகக் கொட்டினார்.
"சரி, என்ரை கடமை முடிஞ்சதும் நான் என்ரை பாட்டிலை வெளிக்கிட்டு வந்திடுவன். அந்த நேரம் வந்து என்னை மறிக்கவும்குடாது. தடுக்கவும்குடாது நந்தகோபாலன் ஒரு நிபந்தனையோடு தன் முடிவைச் சொன்னான்.
"சரி . நீ வந்து உன்ரை கடமையைச் செய்துபோட்டு வா" என்றார் இன்னொரு முதியவர்.
நந்தகோபாலன் தான் சொன்னது போலவே நடந்து கொண்டான்.
இப்பொழுது மாத்திரம் எப்படி அவன் ஏற்றுக் கொள்வான்
93

Page 57
தம்பியின் உறவை அவன் ஏற்றுக் கொள்ளாமல் இருக்கலாம்; ஆனால் இந்த நிலையில் உடன் பிறந்தவனைக் கவனிக்காமல் எப்படி ஒதுங்கி இருக்கலாம்!
வேணுகோபாலன் செய்வது என்னவென்று அறியாது மனம் குழம்பிக் கொண்டிருந்தான். இறுதியில் அவன் ஒரு முடிவுக்கு வநதான.
தனது பிள்ளைகள் இருவரையும் நந்தகோபாலனிடம் அனுப்பி வைக்கத் தீர்மானித்தான். அவர்கள் இருவரும் சிறுவர்கள்; சின்னப் பிள்ளைகள். அவர்களைப் பெரிய தகப் பண் கோபித்து அனுப்பமாட்டார் என்று அவன் நம்பினான்.
காலை நேரம், நந்தகோபாலன் கட்டில் மீது கண்மூடிக் கிடக்கின்றான்.
வேணுகோபாலன் பிள்ளைகள் இருவரும் அவன் கட்டில் அருகே வந்து நிற்கின்றார்கள்.
"பெரியப்பா . பெரியப்பா ."
நந்தகோபாலன் கண் திறந்து பார்க்கின்றான். அவனுக்கு அதிசயமாக இருக்கின்றது. தலையை அவர்கள் பக்கம் மெல்ல மெல்ல திருப்பி, அவர்கள் இருவர் முகத்தையும் குறிப்பாக நோக்குகின்றான்.
அந்தப் பிஞ்சு முகங்களில் கவலையும் ஆவலும் இழைந்து அலை அடிக்கிறது. பெரியப்பாவின் துன்பம் அவர்கள் உள்ளங்களையும் துன்புறுத்தி இருக்க வேண்டும். பெரியப்பா தங்களை இணக்கமாக நடத்த வேண்டுமே என்ற ஏக்கம் கண்களில் பளிச்சிடுகிறது.
நந்தகோபாலனின் வரண்டு போன உதடுகள் அவர்களை நோக்கி மெல்ல மலர்கிறது.
அவர்கள் முகங்களிலும் திடீரென ஒரு மந்தகாசம்.
அவர்கள் இருவரும் சுறுசுறுப்பான சிறுவர்கள்.
அவர்கள் இருவருக்கும் எதிர்பாராத உற்சாகம் பிறந்துவிட்டது. இருவரும் பெரியப்பாவின் கட்டிலை ஆர்வத்துடன் மேலும் நெருங்கி நிற்கிறார்கள்.ஆனால் பெரியப்பாவுடன் என்ன பேசுவது
94

என்பதுதான் அவர்களுக்குப் புரியவில்லை!
வெறுமனே அவர்கள் முகத்தைப் பார்த்துக் கொண்டு கிடப்பது நந்தகோபாலனுக்கும் இயலாமல் போனது என்ன கேட்டு விசாரிப்பது என்று ஒரு கணம் யோசித்துவிட்டு பின்னர் ம்ெல்லக் கேட்டான்!
"என்னத்திலை வந்த நீங்கள்?"
"சயிக் கிளிலெ" உற்சாகமாக அவர்கள் பதில் சொல்லுகிறார்கள்
“L LS6ITT'?"
gLD
நந்தகோபாலனுக்கு ஆச்சரியமாக இருக்கின்றது. இவ்வளவு சின்னவர்களான இவர்கள் சயிக்கிள் ஒட்டக் கற்றுக்கொண்டு விட்டார்கள். அந்தக் காலத்தில் நான், சுகதேகி கடையில் வாடகைக்குச் சயிக்கிள் எடுத்ததும், சயிக்கிள் ஒட்டப் பழகியதும் நினைவுக்கு வருகின்றது. அதை நினைத்ததும் அவனுக்கு இப்போது சிரிப்பு வருகின்றது.
சிறுவர்கள் இருவரில் இளையவன் சற்றுச் சுட்டித்தனமானவன். பெரியப்பாவின் சிரிப்பைக் கண்டு அவன் கேட்கின்றான்,
“என்ன பெரியப்பா சிரிக்கிறியள்!"
"ஒண்டுமில்லை" நந்தகோபாலன் தனது கடந்த கால நினைவுகளில் மிதந்து கொண்டு சொல்லுகிறான்.
மூத்தவன் கொண்டு வந்திருக்கும் உணவுப் பார்சலைக் கையில் வைத்துக் கொண்டு நிற்கின்றான். நந்தகோபாலன் கண்களில் படாமல் இதுவரை கட்டிலுக்குக் கீழே தொங்கிய கையை மேலே தூக்கி "பெரியப்பா, இந்தாங்கோ அப்பா தந்தது" என்று சொல்லிக் கொண்டு உணவுப் பார்சலை பெரியப்பாவை நோக்கி நீட்டுகின்றான்.
நந்தகோபாலன் அதை எதிர்பார்க்கவில்லை. அவன் அதிர்ந்து போகின்றான்.
"வேண்டாம். வேண்டாம் அதைக் கொண்டு போங்கோ. கொண்டு போங்கோ."
95

Page 58
அவர்களிடம் பொங்கிக் கொண்டிருக்கும் உற்சாகம் பட்டென்று அடங்கிப் போய்விடுகின்றது. முகம் தொய்ந்து போகிறது.
அவர்கள் சின்னப் பிள்ளைகள்,அவர்களால் பெரியப்பாவை வற்புறுத்த முடியவில்லை. அதைப் பெரியப் பாவிடம் கொடுப்பதற்கும் இயலவில்லை. இருவருக்கும் ஒரே ஏமாற்றம். உணவுப் பார்சலைக் கையில் சுமந்து கொண்டு திரும்பிப் போகின்றார்கள்.
பூமணி. பூமணி. நந்தகோபாலன் அவளை நினைத்துப் பார்க்கிறான். மனம் அருவருக்க அது முடியவில்லை. அவளை முற்றாக மறக்க நினைக்கிறான். அதுவும் இயலவில்லை.
அந்த உணவு அவள் கைப்பட ஆக்கின உணவு. அதை எப்படித்தான் வாங்கி உண்பது?
உள்ளே உயிர்ப்புகள் உறைந்து கல்லாக அகலிகை கிடந்தது போல நந்தகோபாலன் கிடக்கின்றான்.
அவன் வைத்தியசாலைக் கட்டிலில் கிடக்கின்றான் என்ற செய்தி சுப்பிரமணியத்தின் செவியிலும் வந்து விழுந்தது. சுப்பிரமணியம் செய்தி அறிந்ததும் திகைத்துப் போகின்றான். ஒரு கணம் அவன் தரிக்கவில்லை. சைக்கிளை எடுத்துக் கொண்டு வைத்தியசாலைக்கு ஓடி வருகின்றான். நந்தகோபாலனைப் பார்த்ததும் சுப்பிரமணியத்தின் கண்கள் கலங்குகின்றன. வாய் திறந்து ஒரு வார்த்தை பேசுவதற்கு இயலவில்லை.
"ஆர் இப்படிச் செய்தவன்! இதுகும் ஒரு மனிசன் செய்யிற காரியமே! அவன் தனக்குள்ளே திரும்பத் திரும்பக் கேட்டுக் கொள்ளுகின்றான். கையோடு கொண்டுவந்திருக்கும் உணவுப் பார்சலை நந்தகோபாலனிடம் கொடுக்கின்றான். "பின்னேரம் வாறன்" என்று வேதனையுடன் சொல்லிக் கொண்டு வாடிச் சோர்ந்து புறப்படுகின்றான்.
வேணுகோபாலன் தமையனைப் பார்ப்பதற்குப் போகவில்லை. அவன் பிள்ளைகளிடம் கொடுத்து அனுப்பிய உணவைத் தமையன் ஏற்றுக் கொண்டிருந்தால், அண்ணனைப் போய்ப் பார்க்கும் துணிவு மனதில் பிறந்திருக்கும். நந்தகோபாலன் தன்மீது இன்னும் பகைமை கொண்டிருக்கின்றான் என்பதை அவன் உணர்ந்து கொண்டான். அண்ணன் மீண்டும் பழையபடி நடமாடித்
96.

திரியும் வரை அவனைக் கவனிக்காது எப்படி இருப்பது இந்தச் சந்தர்ப்பம் நல்லதொரு தருணம். இந்தத் தருணத்தை வாய்ப்பாகப் பயன்படுத்தி அண்ணனுக்குத் திருமணம் செய்து வைத்துவிட வேண்டும். அண்ணனுக்கென்று ஒரு மனைவி வந்துவிட்டால் எல்லாம் சரிவந்து விடும்.
மனிதன் பலவீனப்பட்டு நொந்து கிடக்கும்போது, அவனை வசப்படுத்தி எதற்கும் இணங்க வைத்துவிடுவது வெகு இலகுவான காரியம். இந்த வேளை தவறினால் அண்ணனை வழிக்குக் கொண்டு வருவதற்கு இனி எந்தச் சந்தர்ப்பமும் வந்து வாய்க்காது. அண்ணனிடம் தூதாக யாரை அனுப்பி வைக்கலாம் என்று அவன் யோசித்த போது அவன் மனதுக்குத் தோன்றியவர் மயில்பாதம் வாத்தியார்.
மயில் பாதம் வாத்தியாரை "மயிலுவாத்தியார்” என்றே கிராமத்தில் எல்லோரும் மரியாதையாக அழைப்பார்கள். கிராமப் புறங்களில் வாத்திமார் இப்பொழுதும் தங்களை ஒரு சமூகப் பிரமுகராகக் கருதிக் கொண்டிருப்பதற்கு மயிலு வாத்தியார் நல்ல உதாரணம். வாத்தியார் பென்சனுக்குப் போனபின் தான் ஒரு முழுநேர சமூக வேவையாளன் என்று சொல்லிக் கொண்டி ருப்பார். அந்தக் கிராமத்தில் உள்ளவர்களில் வாத்தியார் கையில் கொஞ்சம் பசையுள்ள மனிதன். அந்தப் பசையில் அவர் எங்கு போனாலும் அவரோடு மூன்று பேர் வந்து ஒட்டிக் கொண்டு விடுவார்கள். கிராமத்தில் என்ன சபை நிறுவினாலும் அவருக்கு அதில் முக்கியமான ஒரு பதவி இருக்க வேண்டும். எந்தக் கூட்டம் நடந்தாலும், வாயினால் கேட்டுத் தன்னைக் கடைசிப் பேச்சாளன் ஆக்கிக் கொண்டு விடுவார். கடைசிப் பேச்சாளன் தானே பெரிய பேச்சாளன் என்று கூட்டம் முடிந்த பின்னர் நாலு பேருக்கு முன்னே சொல்லி ஹா. ஹா. ஹா." என்று வாயைத் திறந்து சிரிப்பார்.
வாத்தியார் ஆசிரியராக வேலை செய்து கொண்டிருந்த காலத்தில் அவரின் மேதா விலாசம் பள்ளிக்கூடங்களில் வெளிப்பட்டிருக்கிறது.
"எனக்கு என்ன பாடம் படிப்பிக்க ஏலாது? எல்லாம் படிப்பிப்பன். சமயமும் படிப்பிப்பன்".
மயிலுவாத்தியார் பெருமையாகச் சொல்லிக் கொள்வார்.
97.

Page 59
வாத்தியார் இப்படி அடிக்கடி சொல்லிக் கொண்டிருப்பதற்கு அவரிடம் ஓர் அந்தரங்கம் இல்லாமல் போய்விடவில்லை.
வாத்தியார் அரிவரி முதல் ஆசிரிய பயிற்சிக் கலாசாலை வரை படித்து முடித்தது கிறிஸ்தவ சூழலில், அதனால் இந்து சமயம் படிப்பிப்பதற்கு அவரை யாரும் அனுமதிப்பதில்லை. வாத்தியார் தனக்கும் இந்துமதம் சார்ந்த ஞானம் நிறைவாக உண்டு என்று காட்டிக் கொள்வதற்கு ஒரு உபாயத்தைக் கையாளுவார். மரண வீடுகளில் பிரேதத்தைத் தூக்குவதற்கு முன் தேவாரம் பாடுவதற்கு ஆள் தேடுவார்கள். வாத்தியார் அங்கிருந்தால் அந்தச் சமயம் பார்த்து, நான் இருக்கிறன் என்று சொல்லி கொண்டு எழுந்து போய் நின்று "வான்முகில் வளாது பெய்க." என்று வாய்க்கு வந்த தேவாரத்தைப் பாடுவார். பின்னர் அதனை தனக்கொரு தராதரமாகவும் அவர் சொல்லிக் கொள்வார்.
"செத்த வீட்டிலை தேவாரம் பாடுற எனக்கு சமயம் தெரியாதா?” என்று கேட்டு வைப்பார். சக ஆசிரியர்கள் ஆளை ஆள் பார்த்து மெல்லச் சிரித்துக் கொள்வார்கள்.
கிராமத் தி ல எண் ன கொண் டாட் டம் நடந்தாலும் மயிலுவாத்தியார் குடும்பத்தோடு சென்று குதித்து விடுவார்.
"பந்திக்கு முந்து சண்டைக்குப் பிந்து" என்று எல்லோருக்கும் சொல்லி "ஹா. ஹா. ஹா." என்று வாயைத் திறந்து சிரித்துக் கொண்டிருப்பார்.
வாத்தியாருக்கு மனைவியின் அறிவாற்றலில் மிகுந்த நம்பிக்கை. அதைப் பெருமையாகப் பலரும் அறியும் வண்ணம் "என்னைவிட மனிசி புத்திசாலி" என்று உயர்வாகச் சொல்லிக் கொள்வார்.
மயிலுவாத்தியாரிடம் இப்பொழுது போகாவிட்டால் அவர் சில சமயம் கோபிக்க் கூடும். "என்னைவிட இந்த ஊரிலெ பெரியவன் ஆரடா?” என்று நேரில் வந்து கேட்டாலும் கேட்கலாம்.அவரிடம் சென்று நந்தகோபாலனிடம் அவரை அனுப்பி வைப்பதற்கு வேணுகோபாலன் தீர்மானித்தான்.
வாத் தியாரைத் தேடிக் கொண்டு அவர் வீட்டுக்கு வேணுகோபாலன் சென்றான்.
98
 

வாத்தியார் விளக்குமாறு கையில் எடுத்து வீட்டு முற்றம் கூட்டிக்கொண்டு நிற்கின்றார்.
அவன் படலையில் நின்று குரல் கொடுக்கின்றான். "வாத்தியார். வாத்தியார்.”
"அட. ஆர். வேணுவே. வா. வா. எல்லாம் கேள்விப்பட்டன்.
உன்னை இன்னும் காணயில்லை எண்டுதான் யோசிச்சுக் கொண்டு நிண்ட நான்”
வேணுகோபாலன் வாத்தியார் முன்வந்து அடக்கமாக நிற்கின்றான்.
அரிச்சந்திர மயான காண்டம் நாடகத்தில் நடிகமணி வைரமுத்து கோல் தாங்கி மயானத்தில் நிற்பதுபோல வாத்தியார் விளக்குமாறை ஒரு கையில் பிடித்து மறுகையை மடித்து இடுப்பில் முண்டு கொடுத்து நிற்கின்றார்.
"வாத் தியார் அண்ணனிட் டைப் போய் வர வேணும் . அவருக்கொரு கலியாணம். உங்களுக்கு விபரமாக ஒண்டும் சொல்லத் தேவையில்லை".
"வேண்டாம். வேண்டாம். எனக்கெல்லாம் தெரியும். நான் போய் அவனைக் கண்டு எல்லாம் சரியாக்கிக் கொண்டு வாறன்."
"அதைச் செய்யுங்கோ வாத்தியார்” “வேறை என்ன!" "ஒண்டுமில்லை" "அப்ப நீ வா. மாலைப்பட இந்தப் பக்கம் ஒருக்கால் வா" "அப்ப நான் வாறன்"
"ஓ, வா. வா. என்று அவனை அனுப்பி வைத்துவிட்டு, கையில் வைத்துக் கொண்டிருக்கும் விளக்குமாற்றையும் கீழே போட்டுவிட்டு "இஞ்சாரப்பா. " என்று அழைத்துக் கொண்டு மனைவியைத் தேடி ஓடுகின்றார்.
அவள் ஆலோசனையையும் பெற்றுக் கொண்டு மயிலு வாத்தியார் மாலையில் வைத்தியசாலைக்குப் புறப்பட்டார்.
வாத்தியார் வைத்தியசாலைக் கட்டடத்துக்குள் நுழைந்து
99

Page 60
கொண்டிருக்கும் போது நந்தகோபாலன் அவரைக் கண்டு கொண்டுவிட்டான்.
முருக்குப் போல வளர்ந்த அவர் உடலில், பதினைந்து வயதில் அளவெடுத்துத் தைத்தது போன்ற ஒரு நாஸனல் இப்பொழுதும் அவர் போட்டுக் கொண்டிருக்கின்றார். மயிர் உதிர்ந்து பளபளக் கும் மணி டையில் அங் கொண் றும் இங்கொன்றுமாக வெள்ளிக் கம்பிகள் மின்னுகின்றன. மேல் உயர்ந்து தடித்தெழுந்த புருவங்களுக்கடியில் மந்தியின் கண்கள் போல விழிகள் பதுங்கிக் கிடக்கின்றன. கிள்ளி வைத்த மூக்கும், அதன் அடிப்பாகம் உள்ளே பதிந்து மேல் உதடும் கீழ்த்தாடையும் மேல் எழுந்து தோன்றும் அவர் முகம் நோக்கினால், எப்பொழுதும் வழிந்து கொண்டிருக்கும் சளியை உள்ளே இழுத்துக் கொண்டிருப்பது போன்று ஒரு பிரமை தட்டும். மொத்தத்தில் வாத்தியார் முகம் ஒரு ஆதி மனிதனின் முகம் போல அவனுக்கு எப்பொழுதும் தோன்றும். -
நந்தகோபாலன் வாத்தியாரிடம் பள்ளியில் படித்திருக்கின்றான். அவர் படிப்பித்த "மாதனமுத்தா" கதை அவன் இன்றும் மறந்து போய்விடவில்லை.சிங்கள மக்கள் மத்தியில் வழங்கும் நாட்டார் கதை அது. வாத்தியாருக்கு வந்து சேருவது போல மாதன முத்தாவுக்கென்றும் சிஷயர் கூட்டம் ஒன்று எப்பொழுதும் சூழ்ந்து இருக்கும். வாத்தியாருக்கு “மாதனமுத்தா” என்ற பட்டப் பெயரை நந்தகோபாலனும் அவன் நண்பர்களும் சூட்டி இருந்தார்கள்.
மயிலுவாத்தியார் அந்தக் காலத்தில் பள்ளிக்கூடம் வரும்போது சைக்கிளில் ஒரு ஒலைப்பையைக் கொழுவித் தொங்க விட்டிருப் பார். பாடசாலை நடந்து கொண்டிருக்கும்போது இடை நடுவில் அவரை அங்கு காணக்கிடைக்காது. எங்கே, என்ன சாமான மலிவாக விற்கின்றதோ, அதை வாங்குவதற்கு ஓடிப் போய் விடுவார். சில சமயங்களில் தன்னிடம் படிக்கும் மாணவர்களையே பிடித்துப் பையைக் கையில் கொடுத்து அனுப்பி வைப்பார்.
வீட்டில் மாடு கன்று போட்டாலும் வாத்தியார் பாடசாலைக்கு
லீவு. ஆடு குட்டி ஈன்றாலும் லீவு போடுவார். பாடசாலைக்கு
நேரம் பிந்தாது அவர் சென்ற வரலாறு இதுவரை இல்லை.
வாய்ப்புக் கிடைத்துவிட்டால் வகுப்பறைக்கும் போகமாட்டார்.
அவருக் கென்று வைத் தக் கொண்டுள்ள கூட்டத்துடன்
சுவாரசியமாகப் பேசிக் கொண்டிருப்பார். இத்தனையும் செய்து
OO

கொண்டு மாணவர் கல்வியில் அக்கறை உள்ளவராகக் காட்டிக் கொள்வார். சிலசமயம் காலை, மாலை, விடுமுறை நாட்களில் மேலதிக வகுப்புகள் நடத்திக் காட்டுவார்.
நந்தகோபாலன் படிக்கின்ற காலத்திலேயே அவனுக்கு வாத்தியாரைப் பிடிக்காது. எதைப் பேசவேண்டும்! எதைப் பேசக் கூடாது என்று அறிந்து பேசத் தெரியாத ஒரு வாத்தியார்.
நநி த கோபா லணி வகுப் பு நண பணி ஒருவனுக் கு உடன் பிறந்தவர்கள் பலர். அவன் தனது சின்னத் தம்பி ஒருவனைப் புதிதாகப் பாடசாலைக்கு அழைத்து வந்திருந்தான். அந்தத் தம்பியுடன் அவன் போய்க் கொண்டிருப்பது ஆசிரியர் தங்கும் அறைக்குள் இருந்த மயிலுவாத்தியார் கண்ணில் பட்டு விடுகிறது. வாத்தியார் உடனே அவனை அழைக்கின்றார்.
"அடே இஞ்சை வா!"
அவன் தம்பியைக் கையில் பிடித்துக் கொண்டு வந்து அவர்
முன் நிற்கின்றான்.
"அடே இது உன்ரை தம்பியா?” வாத்தியாரின் கேள்வி.
“ຄູມີ (Bono)
"வரியமொண்டு தவறாமல் எங்களுக்கு அனுப்பி வைச்சுப்
போட வேணுமெண்டு கொப்பனுக்குப் போய்ச் சொல்லு .ஹா
. ബ്രI . ഉ][ . "
வாத்தியார் தனது ஹாஸ்யத்தை இரசித்துத் தானே சிரிக்கின்றார்.
உடன் ஆசிரியர்கள் எ ல லோரும மெளனமாக இருக்கின்றார்கள்.அந்த மெளனம் ஏன் என்று வாத்தியாருக்கு விளங்கவில்லை.
இப்பொழுது அவர் தன்னை நாடி வந்திருக்கின்றார் என்று நந்தகோபாலன் உணர்ந்து கொண்டான். தன் அருகில் இருக்கும் நோயாளர் மத்தியில் இங்கிதம் இல்லாமல் அநாகரிகமாக அவர் என்ன சொல்லப் போகின்றாரோ! அவன் உள்ளத்துள் அஞ்சிக் கொண்டிருக்கும்போது வாத்தியார் கட்டில் அருகில் வந்து நிற்கின்றார்.
வாத்தியார் நிற்பது அறியாதவன் போல நந்தகோபாலன்
101

Page 61
கண்ணை மூடிக் கொண்டு கிடக்கின்றான்.
"அட கோபால் எப்பிடி?
வாத்தியார் வழமையான பாணியில் பேச ஆரம்பித்து விட்டார். நந்தகோபாலன் கண்களைத் திறந்து பார்த்துவிட்டு, வாய்
திறக்காது மெளனமாகக் கிடக்கின்றான்.
"என்னடா நடந்ததுனக்கு?" வாத்தியார் மீண்டும் கேட்கின்றார். அவன் மெளனம் கலையவில்லை.
"என்ன பேசாமல் கிடக்கிறாய்! உதெல்லாம் நடக்கிற காரியந்தான் எண்டு என்ரை மனிசியும் சொன்னவ. இப்ப நான் வந்தது. உன்ரை தம்பி என்னைப் பிடிச்சு அனுப்பினவன்"
நந்தகோபாலன் வீங்கிக் கிடக்கும் கண்களை அகலத் திறந்து ஆச்சரியமாக அவரைப் பார்க்கின்றான்.
"என்ன பாக்கிறாய்?" நந்தகோபாலன் மெல்லச் சிரிப்பதற்கு முயலுகின்றான். "அட, கோபால்! நீ ஒண்டுக்கும் யோசியாதை அது நான் பாத்து நல்ல இடமாகச் செய்து வைப்பன். நீ ஒமெண்டு ஒரு வார்த்தை சொல்லு உன் ரை தம்பியும் அதைத் தான் விரும்புகிறான்"
நந்தகோபாலன் விரக்தியுடன் சற்றுப் பலமாகச் சிரிக்கின்றான்.
"அட நீ பேயன் மாதிரி நடவாதை, இஞ்சை பார் என்னை! பிள்ளை குட்டியோடை எப்பிடி இருக்கிறன். நீ இப்பிடி இருக்கலாமோ? ஹா. ஹா."
நந்தகோபாலன் தொடர்ந்து மெளனமாகக் கிடக்கின்றான். "என்னடாப்பா, வாய் திறந்து ஒண்டும் பேசிறாயில்லெ!"
"வாத்தியார், நான் என்ரை அம்மாவின் மேலெ சத்தியம் செய்திருக்கிறன். அதை மீறி நான் கலியாணம் செய்யப் போறதில்லை.
"விசர்க் கதை கதைக்கிறாய். குந்தி சொன்னவள் எண்டதாலை தானே பாஞ்சாலியை அஞ்சு பேரும் கட்டினவங்கள் கொம்மா
102

உன்னைக் கலியாணம் செய்ய வேண்டாமெண்டு சொன்னவவே!"
வாத்தியார் தனக்குள்ள இலக்கிய ஞானத்தைச் சந்தர்ப்பம் பார்த்து வெளிப்படுத்துகிறார்.
"வாத்தியார், நான் செய்த சபதத்திலெ இருந்து மாறமாட்டன்"
நந்தகோபாலன் விழிகளை மீண்டும் மூடிக் கொள்ளுகின்றான். அவன் இதற்கு மேல் பேசப்போவதில்லை. அவன் அழுத்தக்காரன். அங்கிருந்து மெல்லப் புறப்பட்டுப் போகின்றார்.
2
நந்தகோபாலன் முன்போலக் காலங் கடந்து இரவு நேரச் சாப்பாட்டுக்கு சுப்பிரமணியம் வீடு வருவதில்லை. மாலை மங்கி இருட்டிய பிறகு வெளியில் சனநடமாட்டம் முற்றாக இல்லாமல் போய்விடுவதற்கு முன்னர் இருளோடு இருளாக, சுமார் எட்டு மணிக்கெல்லாம் வந்து சேர்ந்துவிடுவான். அங்கு வந்து சேர்ந்துவிட்டால் இரவு சுப்பிரமணியத்துடன் பேசுவதை முற்றாக இப்போது தவிர்த்துக் கொண்டு விட்டான். சுப்பிரமணியம் அந்த வீட்டில் இருக்கின்றான் என்னும் நினைப்பே இல்லாதவனாக தானும் தன்பாடுமாக விலகி நடந்து கொள்வான்.
முன்போல பொழுது புலர்வதற்கு ஒரு சில மணி நேரம் முன்னதாக அதிகாலையில் எழுந்து அங்கிருந்து கிளம்பிப் போய்விடுவதில்லை. பொழுது உதயமாகப் போகும் சமயம் பார்த்து, அங்கிருந்து புறப்பட்டுப் போய்விடுவான்.
அடுக்களைக்குள் சுடர்விட்டு எரிந்து கொண்டிருக்கும் கைவிளக்கு முன்போல நீண்ட நேரம் வரை எரிந்து கொண்டிருப்ப தில்லை. அதுவும் காலநேரத்தோடு அணைந்து போய்விடும். விளக்கு அணைந்ததும் அடுக்களை இருளில் மூழ்கிக் கிடக்கும்.
பொழுதுபட்டுப் போனால் விடியும்வரை சுப்பிரமணியத்துக்கு எல்லா நேரமும் ஒரே நேரம்தான். அவன் வயிற்றுக்குச் சோறு கிடைத்துவிட்டால் போதும். வழமையாகத் தான் படுத்துக் கொள்ளும் இடத்தில் பாயை விரித்துக் கொண்டு மகனை அனைத்த வண்ணம் படுத்து விடுவான். அடுத்த விநாடி
103

Page 62
அவனிடமிருந்து குறட்டை கிளம்பிவிடும்.
சில தினங்கள் மாத்திரம் வழமைபோல அவனுக்கு உறக்கம் வருவதில்லை. பாயில் புரண்டு புரண்டு படுப்பான். அவனுக்கு வேப்புக்காட்டி விலகி விலகி ஓடும் தூக்கத்தை எப்படியும் துரத்திப் பிடித்து விடுவதற்கு முயற்சிப்பான். அவனோடு கிளித்தட்டுப் பாயும் அந்தத் தூக்கத்தைத் தொட்டுவிட இயலாது பெருமூச்செறிவான். அப்பொழுது அவன் அருகே கிடக்கும் மகனைச் சதா தடவித்தடவி அணைத்துக் கொண்டு கிடப்பான்.
என்னதான் பிரயத்தனம் செய்தாலும் அபூர்வமாகச் சில இரவுகளில் அவனுக்கு உறக்கம் வருவதே இல்லை. உறக்கம் என்பது இல்லாமல் முழு இரவும் படுக்கையில் விழுந்து எப்படிக் கிடப்பது. சிட்டைத் துண்டை எடுத்து உதறித் தோளின் மேற் போட்டுக் கொண்டு விறு விறென்று வெளியே நடப்பான். வீட்டு வெளிப்படலையைத் திறந்து கொண்டு தெருவுக்கு வந்த பிறகும், "எங்கே போவது' என்ற கேள்வி அவன் மனதில் ஒரு போதும் எழுவதில்லை. கால் போன போக்கில் விரைந்து போய்க் கொண்டிருப்பான். இறுதியில் அவனுக்கே அதிசயமாக இருக்கும். அந்த ஊர்ப் பிள்ளையார் கோயிலுக்கு அவன் வந்து சேர்ந்திருப்பான்.
துன்பம் வந்து நேரும்போது, அந்தத் துன்பத்தைத் தன்னால் தீர்க்க இயலாது என்று கண்டு கொண்டால் தனக்கு மேலேயுள்ள சக்தியை நோக்கி மனிதமனம் தாவுகின்றது. குழந்தையானால் தாய் தந்தையிடம் ஒடிப்போகும். முதிர்ந்த மனிதன் எங்கே போவான் இறைவனிடம் ஒடிப்போய்த் தன்னை அவனிடம் ஒப்படைத்துக் கொள்கின்றான்.
ஆலயத்துக்குச் சுப்பிரமணியம் வந்து சேர்ந்து விட்டால் முன் மண்டபத்துக்குள்ளே நுழைந்து, தோளில் கிடக்கும் சிட்டைத் துண்டை எடுத்து விரித்துவிட்டு "பிள்ளையாரப்பு" என்ற சொல்லிக் கொண்டு படுத்து விடுவான். அப்போது "பிள்ளையாரப்பு” விடம் முற்றுமுழுதாகத் தன்னை ஒப்படைத்து விடுவான். அதன் பின்னர் அவனுக்கு ஏன் உறக்கம் கெடப் போகின்றது. அவனிடம் இருந்து ஆழ்ந்த குறட்டை ஒலி கிளம்ப ஆரம்பித்து விடும். விடியும் வரை அவன் தூக்கத்தைக் கலைக்க இனி யாராலும் இயலாது.
சில இரவுகளில் நன்றாக உறங்கி இடையில் அவன் கண்
104

விழித்துக் கொள்வான். அப்பொழுது மகன் பற்றிய எண்ணம் மனதுக்கு ஓடிவரும். வீட்டில் மகன் தனித்துக் கிடக்கின்றான். இடையில் அவன் கண் விழித்துக் கொண்டால் அப்பாவைத் தேடிப் பார்ப்பான். தன் அருகே படுத்துக் கிடந்த அப்பாவைக் காணவில்லை என்றால் அச்சத்தினால் "கோ" வென்று குரல் எடுத்து அழக்கூடும். அவன் பாவம், குழந்தை. அவனிடமே போய்விடுவோம் என்று நினைத்துக் கொள்வான்.
எழுந்து சிமெந்துத் தரையில் விரித்த சிட்டைத்துண்டை எடுத்து உதறித்தோளின்மேல் போட்டுக்கொண்டு வீடு நோக்கி வருவான்.
சுப்பிரமணியத்துக்கு அன்றும் உறக்கம் பிடிக்கவில்லை.
அடுக் களைக்குள் சுடர் விட்டு எரிந்துகொண்டிருக்கும் கைவிளக்கு நேரகாலத்துடன் அணைந்து போய்விட்டது.
சுப்பிரமணியம் பாயில் புரண்டு, புரண்டு படுக்கின்றான். அவனுக்கு உறக்கம் வருவதாக இல்லை. உடலில் மெல்லிய வியர்வை அரும்பிப் பாயின் மேல் விரித்த சிட்டைத்துண்டு நனைகிறது. இடையிடையே சிறுநீர் கழிக்க வேண்டும்போல் வருகிறது. எழுந்தெழுந்து வீட்டுக்கோடிப் புறமாகச் சென்று இருந்துவிட்டு வந்து படுத்துக் கொள்ளுகின்றான்.
அவன் அருகே படுத்துக் கிடக்கும் மகனைத் தடவிப் பார்க்கின்றான். மகன் நன்றாக உறங்கிப் போய்விட்டான்.
அவன் எழுந்து படுக்கைமீது அமர்ந்த வண்ணம் வெளியே நோக்குகின்றான். எங்கும் ஒரே இருள். அடுக்களை சேற்றில் புதையுண்டது போல இருளில் புதைந்து கிடக்கின்றது.
நந்தகோபாலன் இன்று சயிக்கிளில் வந்திருக்கின்றான். அடுக் களையை ஒட்டி தாழ் வாரத் தில் சயி க் கிளை நிறுத்திவிட்டிருப்பது கண்ணுக்குப் புலப்படுகின்றது.
சுப்பிரமணியம் அந்தச் சயிக்கிளைப் பார்ப்பதைத் தவிர்த்து விட்டு, படுக்கையில் சரிந்து மல்லாந்து முகட்டை வெறிக்கின்றான். சற்று நேரத்தின் பின்னர் மீண்டும் சரிந்து படுத்துக் கொள்ளுகின் றான். இப்பொழுது அவன் பார்வையில் அந்தச் சயிக்கிள் தென்படு கின்றது. சிறிது நேரம் அந்தச் சயிக்கிளையே பார்த்து வெறித்துக் கொண்டு கிடக்கின்றான். காலம் நீண்டு கொண்டு போகின்றது. விழிகள் இமைக்காது மரமாக அசைவின்றிக் கிடக்கின்றான்.
105

Page 63
பின்பு வெறிபிடித்தவன் போல படுக்கையை விட்டுப் பட்டென்று எழுந்து முற்றத்துக்கு வந்து அடுக்களை நோக்கிப் போகின்றான். இப்பொழுது நந்தகோபாலனின் சயிக்கிள் அருகே வந்து விடுகின் றான். குனிந்து, என்ன செய்கிறேன் என்பது உணராமல் சயிக்கி ளின் இரண்டு சக்கரங்களிலும் அவசரமாக "வால்வ்களைக் கழற்று கின்றான். சக்கரங்களில் விம்மி நிற்கும் காற்று 'உஸ்ஸ் என்ற பெருஞ்சத்தத்துடன் வெளியேறுகின்றது. கழற்றிக் கையில் எடுத்த "வால்வ்களை சினங் கொண்டு தூர வீசி எறிகின்றான். பின் விரைந்து படுக்கைக்குத் திரும்பிவந்து, பாயின்மீது விரித்த சட்டைத்துண்டைக் குனிந்து கையில் எடுக்கின்றான். முகத்தில் அரும்பிய வியர்வைத் துளிகளை அதனால் அடைத்து விட்டு உதறித் தோளின் மேல் போட்டுக் கொண்டு மீண்டும் முற்றத்துக்கு வந்து படலையைத் திறந்து கொண்டு வேகமாக வெளியே நடக்கின்றான்.
சுப்பிரமணியத்துக்கு அதன் பிறகு நடந்தது என்ன என்று தெரியாது.
உதயகாலப் பூசை செய்வதற்கு இருளோடு இருளாகக் கோயிலுக்கு வந்திருக்கும் ஐயர் மண்டபத்துக்குள் படுத்துக் கிடக்கும் சுப்பிரமணியத்தைக் கண்டு கொள்ளுகின்றார். சுப்பிரமணியம் கோயிலுக்கு வந்து இப்படிப்படுத்துக் கிடப்பதை அவர் அறிந்திருக்கின்றார். ஆனால் ஒரு நாளேனும் அவனை அவர் நேரில் கண்டதில்லை. அவர் கோயிலுக்கு வந்து சேருவத ற்கு முன்னதாக அவன் அங்கிருந்து எழுந்து போய்விடுவான். இன்று மாத்திரம் அவன் ஏன் இன்னம் எழுந்திருக்கவில்லை.
படுத்துக்கிடக்கும் சுப்பிரமணியத்தை ஐயர் வந்து நெருங்கி நின்று பார்க்கின்றார்.
“மணியம்.மணியம்"
அவனிடமிருந்து பதில் இல்லை.
ஐயர் குனிந்து அவன் நெற்றியில் கை வைத்து தொட்டுப் பார்க்கின்றார்.
கை வெந்து விடும்போல சுப்பிரமணியத்தின் உடல் காய்ச்சலில் தகிக்கிறது.
அதன் பிறகு அவசரமாக ஐயர் அவன் வீட்டுக்குத் தகவல்
' 106

அனுப்புகின்றார்.
சுப்பிரமணியம் வைத்தியசாலைக் கட்டிலுக்கு வந்து சேர்ந்து விட்டான். இன்னும் அவனுக்குப் பிரக்ஞை திரும்பவில்லை. கட்டிலின் மீது நீட்டி நிமிர்ந்து கிடக்கின்றான். காய்ச்சல் கடுமையாகக் காய்வதும், பின்னர் பட்டென்று குளிர்ந்து தண்ணிராக வியர்வை ஓடுவதுமாக நிலையின்றிக் "கிடக்கிறது. அவன் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் "ஸ்ராண்டில்" தொங்கிக் கொண்டிருக்கும் "ஸேலைன்" சொட்டுச் சொட்டாக அவன் உடலுள் மெல்லப் போய்க் கொண்டிருக்கிறது.
ஈசுவரி துடித்துப் போனாள் செய்வது என்னவென்று அவளுக்குத் தெரியவில்லை. பித்தம் பிடித்தவள்போல அவன் கட்டில் அருகே நின்றுகொண்டிருக்கின்றாள். காய்ச்சல் தணிந்ததும் அவன் உடலில் ஊறிக்கொண்டிருக்கும் வியர்வையை ஒரு துவாயினால் மெதுவாக ஒத்தி எடுக்கின்றாள். சுப்பிரமணியம் இருந்திருந்து இடையிடையே கால்களை மாற்றி மாற்றி மடித்து நீட்டுகின்றான். அப்பொழுது முழங்கால்களுக்கு மேல் விலகி விலகிச் செல்லும் அவன் வேட்டியை அவள் இழுத்து இழுத்து விட்டுச் சீர் செய்து கொண்டு நிற்கின்றாள்.
சுயநினைவு இழந்து கிடக்கும் சுப்பிரமணியம் இடையிடையே வாய் புனாத்துகின்றான்.
"ஈசா நீ சந்தோஷமாக இருக்க வேணும்"
"ஈசா நீ சந்தோஷமாக இரு”
"நீ என்ரை ஈசாவெல்லெ . நீ சந்தோஷமாக இருக்க வேணும்"
"எனக்கு வேறை என்ன வேணும். என்ரை ஈசா சந்தோஷமாக இருக்கவேணும்"
ஈசுவரிக்கு இதயம் வெடித்துவிடும் போல விம்மிக் கொண்டு வருகின்றது. அவளால் வேதனையைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை. துயரம் பெருகிப் பெருகி கண்களில் இருந்து நீராக அது வடிய ஆரம்பிக்கிறது.
இரண்டு தினங்கள் கழிந்துவிட்டன. சுப்பிரமணியத்துக்கு நினைவு திரும்புகின்றது. ஆபத்தான கட்டம் தாண்டிவிட்டான் என்று வைத்தியர்கள் ஆறுதல் வார்த்தை சொல்கின்றார்கள்.
107

Page 64
இப்பொழுதுதான் ஈசுவரி நிம்மதியாக மூச்சு விடுகின்றாள்.
இரண்டுவாரம் சுப்பிரமணியம் வைத்தியசாலையில் படுத்துக் கிடந்தான்.இந்த இரண்டு வாரங்களும் ஈசுவரி ஓய்வொழிச்சல் இல்லாது வைத்தியசாலைக்கும் வீட்டுக்குமாக அலைந்து திரிந்து கொண்டிருந்தாள்.
ஈசுவரியின் தாய் ஈசுவரி வீட்டிற்குத் திரும்பிவந்து அவளுக்கு உதவியொத்தாசைகள் செய்து கொண்டிருக்கின்றாள்.
சுப்பிரமணியம் வைத்தியசாலையை விட்டு வீடு வந்து சேர்ந்தான்.
அவன் வந்த பிறகுதான் அந்த வீட்டில் ஆனந்தம் துளிர்த்தது. வீட்டில் ஒய்வாக இருப்பதற்கு ஈசுவரிக்கு இப்போது நேரமே இருப்பதில்லை. அவள் தாயிடம் வீட்டு வேலைகளை ஒதுக்கி விட்டுவிட்டு, சுப்பிரமணியத்துக்கு வேண்டிய காரியங்களிலேயே சதா அவள் மூழ்கிப் போய்க் கிடக்கின்றாள்.
அவனுக்கு வேண்டிய பத்திய வகைகளைத் தேடி, பக்குவமாக உணவுகளை ஆக்கிக் கொடுக்கின்றாள்.
மருந்து வகைகளை நேரந்தவறாது எடுத்துச் சாப்பிடுவதற்குக் கொடுக்கின்றாள்.
அவனுடைய துணிமணிகளைத் தோய்த்து உலர்த்தி உடுக்கக் கொடுக்கின்றாள்.
படுக்கைத் துணிகளைத் தோய்த்தெடுத்து சுத்தமாக, செளகரியமாகப் படுக்கை போட்டுக் கொடுக்கின்றாள்.
சுப்பிரமணியம் வீட்டுக்கு வந்து ஒரு வார காலத்தின் பிறகு, வெந்நீர் தயாரித்து அதில் அவனைக் குளிப்பாட்டுகின்றாள். முதுகு, கை, கால், தொடை என்று பிடித்துப் பிடித்துத் தேய்த்துத் தேய்த்து நீரை அள்ளி அள்ளி ஊற்றுகின்றாள். கமகமக்கும் சவர்க்காரத்தை எடுத்து வெண்ணுரை பூக்க அவன் உடல் எங்கும் தேய்க்கின்றாள். நீரை அள்ளி வார்க்கின்றாள்.
சுப்பிரமணியத்துக்கு உடல் புல்லரிக்கின்றது.
"எத்தினை வரியங்கள். எத்தினை வரியங்கள். மூத்தவன் பிறந்த பிறகு ஈசா என்ரை உடம்பிலெ தொடவே இல்லை.
08

இப்பதான். இப்பதான்."
சுப்பிரமணியம் உணர்ச்சி வசப்படுகின்றான்.
அவன் கண்களில் பெருகும் கண்ணிர் குளிப்பாட்டிக் கொண்டிருக்கும் நீரோடு நீராகக் கலந்து ஓடுகின்றது.
அவனுக்கு நீராட்டி முடிகின்றது. அவள் அவனை எழுந்து நிற்க வைத்து துவாயினால் ஈரத்தைத் துடைத்து விடுகின்றாள்.
"வேண்டாம் ஈசா விடு" அவன் தடுக்கின்றான். அவள் கேட்பதாக இல்லை.
அவன் அரையில் கிடக்கும் ஈர உடைகளைக் களைந்து தோய்த்துலர்ந்த ஆடை ஒன்றை அவள் தானே உடுத்தி விடுகின்றாள்.
அவன் தோளில் மெல்லப் பிடித்து நடந்து சென்று வீட்டுக்குள்ளே போய் திருநீற்றைக் கிள்ளி நெற்றியில் பூசி விடுகின்றாள்.
சுப்பிரமணியத்துக்குப் பத்திய உணவு, கரையக் காய்ச்சிய சோறு, குஞ்சுக் கோழி இறைச்சியில் காரம் குறைவாகப் போட்டு வாய்க்கு இதமாகக் காய்ச்சி இருக்கும் மணமணக்கும் கறி.
சுப்பிரமணியம் மெல்ல மெல்ல ருசித்துச் சாப்பிட்டுக் கொண்டிருக்கின்றான்.
"எங்கே பிள்ளையஸ்' மெல்லக் கேட்கின்றான்.
"அதுகள் விளையாடப் போட்டுதுகள்” ஈசுவரி,
"கூப்பிடு ஈசா!"
"அதுகளுக்கு வேண்டாம்"
"இல்லெக் கூப்பிடு ஈசா!"
"தம்பி . தம்பி .
"666T60TLDLDIT" கேட்டுக் கொண்டு மூவரும் ஓடிவருகின்றார்கள்.
"இஞ்சை வாருங்கோ" சுப்பிரமணியம் அழைக்கின்றான். மூவரும் போட்டி போட்டுக் கொண்டு ஓடிச்சென்று அவன் முன்னே
109

Page 65
குந்துகின்றார்கள்.
சுப் பிரமணியம் குழைத் துக குழைத் து மூன்று பிள்ளைகளுக்கும் ஒவ்வொருவராக ஊட்டிக்கொண்டிருக்கின்றான். அடுக்களைக்குள் இருக்கும் ஈசுவரியின் தாயின் கண்களில் இந்தக் காட்சி படுகிறது. அவளை அறியாது அவள கணகள கலங்குகின்றன. சேலைத் தலைப்பை இழுத்துக் கனகளைத் துடைத்து விட்டுக் கொண்டு சுப்பிரமனியத்தின் முகத்தையே பாசத்துடன் பார்த்துக் கொண்டிருக்கின்றT.ெ
சுப்பிரமணியம் சோர்வுடன் படுத்துக் கொள்ளுகின்றான்.
மாலைப் பொழுதாகிறது. சுப்பிரமணியம் படுக்கை விட்டு எழுந்திருக்கவில்லை.
TTSYYL SLLLSLS S S S S S S aSY hAA a SYA AAAA S M MMAS ஆறுதலாகப் படுத்துக் கிடக்கட்டும்.
பொழுது கருகும் வரை சுப்பிரமணியம் படுக்கையில் கிடக்க ஈசுவரி விட்டு வைக்கின்றாள். வீட்டுக்கு விளக்கு ஏற்றியாகிவிட்டது. அப்பொழுதும் அவன் எழுந்திருக்கவில்லி,
அவனை எழுப்பி தேநீர் பருகக் இாடுக்க வேண்டும் என்று ജൂ|ഖണ് ബങ്ങി ഇക്സിങ]Tണ്.
அவன் அருகே சென்று குந்தி இருந்து அவன் நெற்றியில் கைவைத்துப் பார்க்கின்றாள்.
அவள் திடுக்குற்றுப் போகின்றாள் கையில் மின்சாரம் தாக்கியது போல அவளுக்குத் தோன்றுகின்றது. அப்படியொரு வெப்பம் ஒரு கணம் செய்வது என்ன என்று அறியாது திகைக்கின்றாள். பின்பு சுதாகரித்துக் தொண்டு 6Dboug|D இருந்த மருந்துகளை எடுத்து, அவனை நிமிர்த்தி தன் மார்போடு அணைத்து வாயில் மருந்துக் குளிகைகளை இட்டு நீரைப் பருக்கி, மீண்டும் படுத்துகின்றாள். பழைய சேலைத்துணி ତୁଣୀ ପଠା]] எடுத்து குளிர்ந்த நீரில் நனைத்து அந்த ஈரத்துணியினால் உடலெங்கும் ஒத்தி எடுக்கின்றாள். ஒடிக்கொலோனை வெள்ளைத் துணியால் நனைத்தெடுத்து நெற்றியில் 91-9 விடுகின்றாள்.
அவள் என்னதான் செய்தும் காய்ச்சல் தணிவதாக இல்லை.
110

அதன் வேகம் மணிக்கு மணி அதிகரித்துக் கொண்டே போகிறது. நடு இரவு தாண்டிவிட்டது. சுப்பிரமணியத்துக்கு உணர்வு தப்பிப் போய்விட்டது.
ஈசுவரிக்கு இப்போது என்ன செய்வது என்றே தெரியவில்லை. அவளுக்கு எதையும் தெளிவாகச் சிந்தித் துப் பார்க்க இயலவில்லை. முற்றாக அவள் குழம்பிப் போனாள். நினைவில் வந்த தெய்வங்களை எலி லாம் மதவேறுபாடில் லாது பிரார்த்தித்தாள். ஒவ்வொரு கோயில்களுக்கும் நேர்த்தி வைத்தாள். அவள் இப்பொழுது தீர்க்கமாக வேண்டுவது சுப்பிரமணியத்தின் சுகம் ஒன்றுதான்.
அவனைத் திரும்பவும் வைத்தியசாலையில் கொண்டு போய்ச் சேர்க்க வேண்டும். இந்த அகால வேளையில் எப்படி அவனை அங்கே கொண்டு சேர்க்க முடியும்.
ஈசுவரி அவன் படுக்கை அருகே கலக்கத்துடன் கண் விழித்துக் காத்திருக்கின்றாள்.
அவள் தாய் சற்றுத் தூர விலகி அவனையே உற்று நோக்கியவண்ணம் குறாவிப் போய் குந்தி இருக்கின்றாள். குழந்தைகள் ஒன்றும் அறியாதவர்களாக உறங்கிக் கொண்டு கிடக்கின்றார்கள்.
முதற்கோழி கூவுகின்றது.
ஈசுவரியின் உள்ளத்துக்கு அந்த ஓசை தெம் பைக் கொடுக்கின்றது. இனி விடிந்துவிடும்.
9് ഖjി ബിറ്റu|ഥ ഖഞ] காத்திருக்கின்றாள். ᏭᎧ! Ꭷ] 60Ꭰ 60l வைத்தியசாலையில் கொண்டு போய்ச் சேர்ப்பதற்கு
சுப்பிரமணியம் திடீரென ஒருக்களித்து ஒருபுறம் சரிகின்றான். பெரிதாக ஒரு விக்கல் அவன் வாயிலிருந்து வெளிப்படுகின்றது.
சுப்பிரமணியம் விடியும்வரை காத்திருக்கவில்லை.
அவன் உயிர்மூச்சு மெல்ல மெல்ல அடங்கிக் கொண்டு போகின்றது.
ஈசுவரி, அவள் தாய் கதறி அழும் அவலக் குரல் விடிகாலை யின் அமைதியைக் குலைத்துக் கொண்டு கோரமாக எழுகின்றது.
111

Page 66
13
சுப்பிரமணியத்தின் சாவீட்டுக்கு வந்த பெண்களில் இரண்டொரு முதியவர்கள் மரணச்சடங்குகள் முடிந்த பின்னரும் அங்கு தங்கி இருந்தார்கள். அவர்கள் ஈசுவரிக்கு மிக நெருக்கமான உறவுக்காரப் பெண்கள். சொந்த வீடுகளில் பெரிதாக அவர்களுக் கென்று ஒரு வேலையும் இல்லாதவர்கள் இழவு காப்பதற்காக அவளோடு அவர்கள் தங்கி இருந்தார்கள்.
இழவு வீட்டில் செய்து முடிக்க வேண்டிய காரியங்களை மச்சாள், மாமி உறவுக்காரப் பெண்கள் முன் நின்று நடத்தி முறை செய்ய வேண்டும் என்பது வழக்கம்.
ஈசுவரிக்கு முறையான மச்சாள்மார், சுப்பிரமணியத்தின் பெரியம்மா பிள்ளைகள். சுப்பிரமணியம் உயிரோடு வாழ்ந்த காலத்திலேயே, ஈசுவரி குடும்பத்துடனான அவர்கள் உறவு முறிந்து போயிற்று. மரணச் சடங்குகள் நடந்த சமயம் அவர்கள் அங்கு வந்தார்கள். தலையிலும் மார்பிலும் அடித்தடித்து ஒப்பாரி சொல்லி அழுதார்கள். கணவனை இழந்த ஈசுவரியை சாவீட்டுக்கு வந்திருந்த பெண்கள் கடமையாகக் கருதி தவறாது கட்டியணை த்து அழுதார்கள்.
சுப்பிரமணியத்தின் சகோதரிகள் அவள் இருந்த பக்கம் திரும்ப வில்லை. தங்கள் தமையனைக் கொன்றவள் அவள்தான் என்று ஒப்பாரியில் சுட்டிப்புச் சொல்லி வசை பாடினார்கள். ஆனால் அண்ணனுக்கு அரப்பெண்ணெய் வைத்து, வாய்க்கரிசியும் போட்டார்கள். அதன் பிறகு அண்ணனின் பிரேதம் படலை தாண்டி வெளியே போகும் வரை காத்திருந் தார்கள். பிரேதம் புறப்பட்டது தான் தாமதம் "எங்கடை அண்ணன் இல்லையாம் இனி எங்களுக்கு இஞ்சை என்ன வேலை" என்று சொல்லிக் கொண்டு அவர்களும் புறப்பட்டுப் போய்விட்டார்கள். அதன் பிறகு அந்த வீட்டு முற்றத்தில் அவர்கள் காலடி எடுத்து வைக்கவேயில்லை.
மயில்பாதம் வாத்தியார் இந்தச் சந்தர்ப்பத்தைத் தவறவிடுவாரா? ஒரு சமாதானத்தை உருவாக்கி தனது பெருமையை பறை சாற்றுவதற்கு எண்ணங் கொண்டார். இனம் புரியாத தயக்கமும் கலக்கமும் அங்கு மனங்களில் கிடந்து நெருடிக் கொண்டிருந்தது. அவர் அதை உணரவில்லை. மரணவீட்டுக்கு வந்திருந்த சுப்பிர
112
 

மணியத்தின் தம்பிமார், வீட்டுக்கு வெளியே தெருமணலில் அந்நிய ர்கள் போலக் குந்தி இருக்கிறார்கள். அவர்கள் இருவரிடமும் ஒடியோடிப் பேசுகிறார் வாத்தியார், "உள்ளுக்கு வாருங்கோ. உள்ளுக்கு வாருங்கோ." என்று வருந்தி வருந்தி அழைக்கிறார். வேண்டாம் என்று அவர்கள் மறுக்கிறார்கள், மயிலு வாத்தியார் விட்டுவிடுவதாக இல்லை. பலர் மத்தியில் தனது மதிப்புச் செல்லாக்காசு ஆகிவிடக்கூடாது என்ற துடிப்பு அவருக்கு.
"தம்பியவை உங்கடை அண்ணன்ரை காரியம் நீங்கள் தானே முன்னுக்கு நிண்டு செய்ய வேணும்" வாத்தியார் உபதேசம் பண்ண ஆரம்பிக்கின்றார்.
ነፃ
"சும்மா போங்கோ." அவர்கள் சினக்கின்றார்கள். வாத்தியாருக்கு முகம் சுண்டிப் போகிறது. "ஹா. உஹா." வழமையான அசட்டுச் சிரிப்புடன் வாத்தியாரும் தெருவில் வந்து அமருகின்றார். நந்தகோபாலன் ஒரு வேலியோரம் ஒதுங்கி இருப்பது கண்ணிற்படுகிறது. "நந்தகோபாலனுக்கு இனிக்கலியா ணம் வேண்டாம்" வாத்தியார் மனதில் வன்மத்துடன் நினைத்துக் கொள்ளுகின்றார் . சுப் பிரமணியத் திண் தம் பிமாரைப் பழிவாங்கிவிட்டதான ஒரு திருப்தி அவருக்கு
ஈசுவரியின் சகோதரி கணவன் முன் நின்று எல்லாக் காரியங்களையும் நடத்துகின்றான். அவனும் மயிலுவாத்தியாரைக் கவனிப்பதாக இல்லை. பிரேதம் தூக்கும் சமயம் அவன் வந்து தேவாரம் பாடுவதற்கு வாத்தியாரை அழைக்கின்றான். வாத்தியார் வேண்டா வெறுப்புடன் எழுந்து போனார்.
காடாற்று எட்டு எண் று ஒவ்வொரு சடங்குக் கும் சுப்பிரமணியத்தின், பெரியம்மா பிள்ளைகளுக்கு ஈசுவரி தகவல் சொல்லி அனுப்பினாள். ஒருவர் கூட வராமற்போனது அவளுக்குப் பெரும் ஏமாற்றமாக முடிந்தது.
சுப்பிரமணியத்தின் தகனக்கிரியைகள் நடந்து முடிந்த மறுதினம், சுடுகாட்டுக்குச் சென்று காடாற்றுச் சடங்குகளைச் செய்து அஸ்தி யைக் கடலில் கொண்டு போய்ப் போட்டார்கள். அவன் இறந்து மூன்றாவதுநாள், வீட்டுக்கு வெளியே போட்டு வைத்திருந்த அவன் படுத்த பாயைத் தீமூட்டி எரித்து வீட்டில் ஆளுருவப் படையல் செய்து, படையலில் ஒரு பாதியை வெளியே எடுத்துச் சென்று சந்தியில் வைத்துக் கழிப்புச் செய்து எட்டுச் சடங்கை முடித்தார்
113

Page 67
கள். அதன் பிறகு அவன் இறந்த எட்டாம்நாள் சிறிய அளவில் படையல் செய்து, சரி எட்டுச் சடங்கையும் முடித்துக் கொண்டார்கள்.
எட்டுச் சடங்குகள் நடந்து முடியும் வரை, சுப்பிரமணியம் இறக்கும்போது படுத்துக்கிடந்த இடத்தில் விளக்கேற்றி வைத்து, இளநீர் சீவி வைத்து, பலகாரங்கள் வைத்து காலைக்கு, மாலைக்குப் பெண்கள் அழுதுகொண்டிருந்தார்கள்.
ஈசுவரி ஒரு மாதகாலம் வீட்டோடிருந்து இழவு காக்க வேண்டிய வள் வீட்டுக்கு வெளியே அவள் போகக்கூடாது. குளிப்பதற்கும் வீட்டுத் தேவைகளுக்கும் வீட்டுக்கு வெளியேயுள்ள கிணற்றில் நீர் எடுப்பதுதான் வழக்கம், வீட்டில் தங்கியிருந்த பெண்களும் அயலிலுள்ளவர்களும் தேவையான நீரை அள்ளி வந்து ஊற்றிக் கொண்டிருந்தார்கள்.
சரி எட்டு முடிந்ததும் அங்கு தங்கியிருந்து இழவு காத்த உறவுக்காரப் பெண்கள் ஒவ்வொருவராகத் தங்கள் வீடுகளுக்குப் புறப்பட்டு விட்டார்கள்.
ஈசுவரியின் தாய் மாத்திரம் தொடர்ந்து அங்கு தங்கியிருந்தாள். அவள் அங்கே தங்கியிருந்தது ஈசுவரிக்கு நிழல் போலச் சற்று ஆறுதலாக இருந்தது.
சுப்பிரமணியம் இறந்து முப்பது தினங்கள் வேகமாகக் கழிந்து போயின. மறுநாள் சுப்பிரமணியத்தின் அந்தியேஷ்டி ஈசுவரி நெருக்கமான உறவினர்களை அந்தியேஷடிக்கு அழைத்திருந் தாள். அந்தியேஷடிக்கிரியைகள் ஊருக்கு வடக்கே தீர்த்தக் கடற்கரையில் செய்து கடலில் கல்லுப்போட்டுவிட்டு விட்டுக்குத் திரும்பி வந்தார்கள், வீட்டில் சபீண்டீகரணம் நடைபெற்றது. துடக்கு வீட்டில் இதுவரை வாயலம்பாது இருந்த உறவுக்காரர்களும், மதியவேளை உரிமைச் சோறு தின்றுவிட்டு அங்கிருந்து
56TibLigoTrrit EGT,
சுப்பிரமணியம் இறந்து அவனுக்குச் செய்ய வேண்டிய அபரக்கிரியைகள் எல்லாம் நடந்து முடிந்து விட்டன. சுப்பிரமணிய த்தின் மகன் தந்தைக்குக் கொள்ளி வைக்கும் போது மழுங்க வழித்த தலையில் இப்பொழுது கரு கரு என்று முடி வளர்ந்து கிடக்கிறது. குட்டையாகக் குத்திட்டு நிற்கும் தலைமுடியோடு இருக்கும் அவன் உருவத்தில் குறுகிவிட்ட சுப்பிரமணியமாகத்
14
 

தோன்றுகின்றான்.
ஈசுவரியின் தாய் சுப்பிரமணியத்தின் கடும் சுகவீனத்துடன் அங்கு வந்து மகளுக்குத் துணையாகத் தங்கியவள். இப்பொழுது ஈசுவரி தனித்துப் போனாள். அவளுக்கு அந்த வீட்டில் வேறொரு துணையில்லை. தாய் துணையாக இருப்பாள் என்றே ஈசுவரி பனை போல நம்பி இருந்தாள். ஆனால் அந்தியேஷடி முடிந்த மறுதினம்.
காலையில் எழுந்து, அவள் அங்கு வரும்போது கையோடு கொண்டுவந்த பனையோலைப் பெட்டியை எடுத்து, தான் உடுத்திக் கொள்ளும் சேலைகள் இரண்டையும் மெல்ல மடித்து அதற்குள் அடுக்குகின்றாள். பின்பு இடுப்பில் சொருகிய முன்தா னையை இழுத்து, சேலைத்தலைப்பில் போட்டிருக்கும் முடிச்சை நிதானமாக அவிழ்த்து சில்லறைகளைக் கையில் எடுக்கின்றாள். பேரப்பிள்ளைகளை ஒவ்வொருவராக அழைக்கின்றாள். அணை த்து, உச்சிமோந்து, ஒவ்வொரு நாணயக் குற்றியாக அவர்கள் கைக்குள் வைக்கின்றான். பனையோலைப் பெட்டியைத் தூக்கித் தலைமீது வைத்துக்கொண்டு மெல்லப் புறப்படுகின்றாள்.
ஈசுவரி நடப்பவற்றை அவதானித்த வண்ணம் மெளனமாக அமர்ந்திருக்கின்றாள்.
ஒரு வார்த்தை தானும் ஈசுவரியோடு வாய்திறந்து அவள் பேசிக் கொள்ளவில்லை. எல்லோரும் சொல்வது போல "போவிட்டு வாறன்" என்று தானும் முறைமைக்கு ஒரு வார்த்தை சொல்ல வில்லை. இவ்வளவு நாளும் அந்த வீட்டில் அவள் தங்கி இருந் திருக்கின்றாள். அவளுடைய தொடர்புகள் எல்லாம் பேரப்பிள்ளை களோடுதான். ஈசுவரியோடு பேசிய வார்த்தைகளைக் கணக்கிட்டுச் சொல்லி விடலாம். நேருக்கு நேர் முகம் கொடுத்து ஈசுவரியைப் பார்ப்பதில்லை. ஈசுவரி அவளை நெருங்கிப் போனால் அவள் முகத்தில் சிடுசிடுப்பு வெடிக்கும். ஆனாலும் ஈசுவரிக்கு ஒரு நம்பிக்கை இருந்தது. தாய் தன்னையும் குழந்தைகளையும் தனித்து விட்டு விட்டுக் கிளம்பிப் போய்விட மாட்டாள் என்று உறுதியாக எண்ணி இருந்தாள்.
தாய் புறப்பட்டுப் போவது கண்டு அவள் உள்ளம் ஒரு கணம் அதிர்ந்து போகிறது. அந்த அதிர்ச்சியிலிருந்து பட்டென்று விடுபட முடியவில்லை. ஒரு வார்த்தை வாய் திறந்து பேசவும்
115

Page 68
இயலவில்லை. போய்க்கொண்டிருக்கும் தாயைத் தடுக்க வேண்டும் என்னும் எண்ணமும் அப்போது மனதில் எழவில்லை.
அவள் தன்னையும் குழந்தைகளையும் ஒதுக்கிவிட்டு அங்கிருந்து கிளம்பிப் போகின்றாள்! ஏன் இப்படி தன்னை வெறுக்கின்றாள்! பெண்ணாக இருக்கும் அவளால் தன்னைப் புரிந்து கெள்ள இயலவில்லையா ஒரு அம்மாவினால் விளங்கிக் கொள்ள இயலவில்லையென்றால் உலகத்தில் வேறுயார் தான் விளங்கிக் கொள்ளப் போகின்றார்கள்! எனக்கு இடையூறாக இருக்கக் கூடாது என்று நெஞ்சில் நினைத்து தூர விலகிப் போகின்றாளோ!
ஈசுவரிக்கு ஒன்றுமே தெளிவாக இல்லை. மனம் குழம்பிக் கிடக்கிறது.
அவளை ஏன் தான் தடுக்க வேண்டும்!
குறுக்கே நின்று தடுத்தால் அவள் தரித்து நின்று விடவா போகின்றாள்!
அவள் போகட்டும்! அதுதான் அவளுக்கு வேண்டியது.
அடுத்த கணம் ஈசுவரி உள்ளத்தில் உறைந்த உறுதிகள் உடைந்து சிதறுகின்றன. 'அம்மா போவிட்டாள்' என்ற நிதர்சன த்தை அவள் நெஞ்சு தாங்கிக் கொள்வதற்கு இயலாது தவிக்கின் றது. தானும் தன் குழந்தைகளும் யாருமற்ற அநாதைகளாகத் தனித்து விடப்பட்டுள்ளதாக அவள் உணருகிறாள். அவளுக்கு உள்ளுர அச்சம் பரவுகிறது. எதிர்காலம் அவள் முன்னே இருண்டு கிடக்கிறது. சின்னஞ்சிறு குழந்தைகளுடன் இனி என்ன செய்யப்போகிறேன் என்று நினைக்க. அவளுக்கு எல்லாமே சூனியமாக வெறிச்சோடிக் கிடக்கிறது.
எதிர்காலம் பற்றிய உறுதியான நம்பிக்கைகள் இருக்கும் போதுதான் மனதில் சுபீட்சமான கனவுகள் தோன்றும். ஈசுவரி உள்ளத்தில் கனவுகள் எப்படித்தோன்றும்!
தாய் அவளைக் கைவிட்டுப் பிரிந்து போன பிறகு, அவள் மனதில் இப்பொழுது எஞ்சி இருப்பது அச்சமும் துயரமும் சூனியமுந்தான்.
தாய் காலையில் போனாள். அதன் பிறகு இந்த ஒரு பகல்
116

பொழுதே பல ஆண்டுகள் போல நீண்டு நெஞ்சில் சுமையாகக் கனக்கிறது. இந்தப்பொழுது ஏன் இது நகராமல் நிற்கிறது என்னும் எண்ணம் இடையிடையே மனதுக்கு வந்து கொண்டிருக்கிறது.
கிழக்குச் சூரியன் மேற்குப்பொழுதாகி மெல்ல மெல்லச் சிவந்து பின்பு கருகி இருளில் அருகிக்கொண்டு போகின்றான்.
ஈசுவரி வீட்டு விளக்கைக் கையில் எடுக்கின்றாள். எண்ணை இருக்கிறதா என்று பார்த்த பின்பு விளக்கை ஏற்றி வைத்துவிட்டு நிமிர்கின்றாள். சுவரில் தொங்கும் சுப்பிரமணியத்தின் படம் அவள் கண்ணில் படுகிறது. உருப்பெருப்பித்திருக்கும் ஆள் அடையாள அட்டைப்படம் அது. படத்துக்குத் திலகமிட்டு நேற்றுச் சூட்டிய மலர் மாலை இன்று வாடிக்கிடக்கிறது. படத்துக்குக் கீழ் சுவரோடு பொருத்தி விட்டிருக்கும் பலகை மீது வைத்த விளக்கைப் பவ்வியமாக ஏற்றுகின்றாள்.
"அம்மா பசிக்கிது" குழந்தைகள் கேட்கின்றார்கள். விளக்கைக் கையில் எடுத்துக் கொண்டு இயந்திரம் போல அடுக்களையை நோக்கிப் போகின்றாள். குழந்தைகள் அவள் பின்னே குஞ்சுகளாகத் தொடர்கின்றார்கள். குழந்தைகளுக்கு அவள் முகம் நோக்கத் தயக்கமாக இருக்கிறது. "அம்மா பாவம்" என்று அவர்களுக்குத் தோன்றுகிறது. அம்மாவைப் பார்க்க அச்சமாகவும் இருக்கிறது.
அவள் பாயை எடுத்து விரிக்கின்றாள். குழந்தைகள் வந்து அமைதியாக வாட்டத்துடன் படுத்துக் கொள்ளுகிறார்கள். சற்று நேரத்தில் அவர்கள் உறங்கியும் போய் விடுகின்றார்கள்.
மூத்த மகனின் குறட்டை ஒலி மெல்ல எழுகிறது. அந்த ஒலி அவள் இதயத்தைப் போட்டுக் குடைய ஆரம்பிக்கிறது.
கைவிளக்கு மங்கி எரிந்து கொண்டிருக்கிறது.
ஈசுவரி இப்போது தனித்துப்போய் இருக்கின்றாள். சுப்பிரமணிய த்தின் படத்துக்கெதிரே சுவரில் சாய்ந்து, அவன் படத்தை "உற்று நோக்குகின்றாள். அவன் படத்தைப் பார்த்துக் கொண்டிருப் பது ஒன்றைத் தவிர வேறு வேலையே தனக்கில்லை என்பது போல அமர்ந்திருக்கின்றாள்.
இருளும் தனிமையும் தரும் அச்சம் மனித மனத்தைப் பலவீனப்படுத்தி விடுகின்றது.
T

Page 69
அவள் தொய்ந்து போய் இருக்கின்றாள். நிராதரவு அவளை அச்சுறுத்துகின்றது. அவள் இன்னும் சாப்பிடவில்லை. சாப்பிட வேண்டுமென்றும் அவளுக்குத் தோன்றவில்லை. அவிழ்ந்த கூந்தலை அள்ளி முடிக்க வேண்டும் என்னும் எண்ணமும் அவள் மனத்தில் எழவில்லை. இருண்டுகிடக்கும் அவள் மனமாக, பின்னே அது தோகை விரித்துக் கிடக்கிறது.
சுப்பிரமணியத்தின் படத்தையே பிரமையோடு நோக்கிக் கொண்டிருக்கின்றாள். எப்பொழுதும் மெலிதான சோகம் படர்ந்த சாயலுடன் சாந்தமாகத் தோன்றும் முகம், நேசம் மலர்ந்த இணக்க மான விழிகள், மெல்லிய உதடு. இவைகளையே பார்த்துக் கொண்டிருக்கலாம் போல அவளுக்குத் தோன்றுகிறது. அவள் உற்று உற்றுப் பார்க்கிறாள். அவன் ஏதோ அவளுக்குச் சொல்கி றான். நான் உன்னோடுதான் இருக்கின்றேன். நீ துயரப்படாதே. நீ அஞ்சாதே. கண்ணிர் சிந்தாதே. என்றெல்லாம் ஆறுதல் சொல்லுகின்றான். அவள் விழிகளில் நீர் திரளுகிறது. மெல்லத் துடைத்துவிட்டுக் கொண்டு மீண்டும் நோக்குகின்றாள்.
இருள் முழுமையாக வீட்டை விழுங்கிக் கொண்டு கிடக்கிறது. உள்ளே எரியும் சிறிது வெளிச்சத்தின் ஒளியில் ஈசுவரி அமர்ந்திருக்கின்றாள்.
வெளிப்படலை திறக்கும் சத்தம் எழுகின்றது. நந்தகோபாலன் இருளைத் துழாவிக் கொண்டு உற்சாகமாக உள்ளே வருகின் றான். முன்பெல்லாம் இருந்த தயக்கம் இப்போது அவனுக்கில்லை. புதிய உற்சாகம், முகத்தில் புன்னகை. "ஈசா" என்று ஆரவாரமாக அழைத்த வண்ணம் தாழ்வாரத்துக்குத் தலை குனிந்து பின்னர் நிமிர்ந்து அந்தக் கூடத்துக்குள் நுழைகின்றான்.
ஈசுவரிக்குத் தெரியும். அவன் எப்படியும் வரத்தான் போகின் றான். அவள் அதை விரும்பினாள். அவன் வரட்டும். ஆனால் இவ்வளவு விரைவாக அவன் வருவான் என்று அவள் எதிர்பார்க்க வில்லை. அவன் வருகை அவளை எந்த வகையிலும் பாதித்ததா கத் தெரியவில்லை. உணர்ச்சி அற்ற சடம் போலத் தோன்றுகி றாள். அவன் வந்திருப்பது கண்டு கொள்ளாதவளாக அமர்ந்திருக் கிறாள். அவள் விழிகள் நிலம் நோக்கித் தாழ்ந்து கிடக்கின்றன.
ஈசுவரியின் தாய் அவள் வீட்டுக்கு வந்து தங்க ஆரம்பித்த நாள் தொடக்கம், நந்தகோபாலன் அவளைச் சந்திப்பதற்கு
18

இயலவில்லை. அதுதான் அவளுக்கு மனதில் உள்ள கோபம் என்று அவன் எண்ணுகிறான். அங்குள்ள சிறிய வாங்கின்மீது குதுாகலமாக அமருகின்றான்.
ஈசுவரியின் இருப்பு இன்னும் குலையவில்லை. அவள் இருந்தது போல இருக்கின்றாள்.
என்னதான் சொன்னாலும் புருஷன் என்று இருந்தவனின் மரணம். வீட்டில் நடந்து முடிந்த மரணம். அது அவளைக்
கொஞ்சம் பாதிக்கத்தான் செய்யும் எண்ணிக்கொண்டு "ஈசா" என்று மீண்டும் நெருக்கமாக அழைக்கின்றான்.
அவளைப் பார்க்க அவனுக்கு ஆச்சரியமாக இருக்கின்றது. இவள் ஏன் இப்படி இருக்கின்றாள்! இவளுக்கு இனி என்ன குறை!
எவ்வளவு வாஞ்சையோடு அவள் தன்னை வரவேற்பாள் என்ற கற்பனையில் மிதந்த வண்ணம் அவன் அங்கு வந்தான். அவன் எதிர்பார்த்தது போல எதுவும் நடக்கவில்லை.
எரிந்து கொண்டிருக்கும் விளக்கின் மங்கிய ஒளியில் வாடிக்கிடக்கும் அவள் முகம் அவன் பார்வையில் படுகிறது.
சோகத்திலும் இவள் முகத்தில் என்ன சோபை "ஈசா என்னிலெ கோவமா? குரல் தடுமாறுகிறது. "வரவேணும். வரவேணுமெண்டு அடிச்சுக் கொண்டுதான் இருந்தன். ஆனால் எப்பிடி வாறது. இஞ்சை கொம்மா”
அவள் வாய் திறக்கவில்லை. தாழ்ந்து கிடந்த அவள் விழிகள் உயர்ந்து சுப்பிரமணியத்தின் மீது இப்போது பதிந்து கிடக்கின்றன. அவனது உதட்டில் மெல்லிய முறுவல் மலர்வது போலத் தோன்றுகிறது. அந்த முகத்தில் சினம் வெளிப்பட வேண்டுமே! எப்போதுதான் அந்த முகத்தில் அதை அவள் கண்டிருக்கின்றாள்!
நந்தகோபாலனுக்கு ஒரே குழப்பம். ஓயாமல் பேசிக்கொண்டிருப் பது அவன் சுபாவம். மெளனம் பேசும் என்பது இது வரை அவன் இப்படிக் கண்டு கொண்டதில்லை. மெளனம் சம்மதம் என்பார்கள். காதலர்கள் மத்தியில்தான் இது பொருந்தும். இந்த
119

Page 70
மெளனம் சம்மதமா? அல்லது--
"ஈசா, ஏன் இப்பிடி? "
"நான் எப்பிடி இருக்க வேணும்!” தனக்குள் கேட்டுக்கொள் ளுகின்றாள்.
"கோபமா ஈசா வந்து பார்க்கயில்லை என்று கோபமா? "
அவள் உதட்டில் செத்துப்போன ஒரு சிரிப்பு.
"ஈசா, உனக்கொரு குறை இல்லாமல் உன்னை நான் வைச்சிருப்பன். நீ ஒண்டுக்கும் இனிக் கவலைப்பட வேண்டாம்.
"இதென்ன ஈசா, ஒண்டுமெ சொல்லுறாயில்லை. மனதிலே உள்ளதை எனக்குச் சொல்லு! சுப்பு இருந்தான் எண்டு உனக்கு என்ன செய்தான்! நீ அவனிட்டை என்ன சுகம் கண்டாய்! அவன்தானே செத்துப்போனான். அவனால் இனிமேல் ஒரு இடைஞ்சலுமில்லை.
"என்ரை கண்னெல்லே! வாயைத் திறந்து பேசு. நான் பைத்தியம் மாதிரிக் கதைச்சுக் கொண்டிருக்கிறன்.
"என்ன பேசவேண்டிக் கிடக்கு அவர் என்மீது மாறாத அன்பு வைத்திருந்தார். உயிரையே வைத்திருந்தார். ஆனால் நீ எனக்குத் தேவைப்பட்டாய். அந்தத் தேவையை நான் உணர. கண்டுகொள் ளச் செய்தவனும் நீதான். நீ என்னைச் சந்திக்காமல் இருந்திருந் தால், அந்தத் தேவையை நான் உணராமல் இருந்திருக்கக்கூடும். அதை உணர்த்தியவன் நீ அந்த உணர்த்துதல் மட்டும் தான் உனக்குத் தேவைப்பட்டது. ஆனால் அவருக்கு என்மீது வற்றாத அன்பிருந்தது. அந்த நேசம் ஒன்றையே அவர் இறுதிவரை சுமந்திருந்தார். நான் இதைக் கண்டுகொள்ளாமல் இருந்து விட்டேன்." அவள் அமைதியாகத் தனக்குள்ளே சொல்லிக் கொள்ளுகின்றாள்.
அந்த மெளனத்தின் மொழி அவனுக்கு விளங்கிக் கொள்ள 366BBD}
120
 

இவள் என்ன புதிதாக இருக்கின்றாள்!
"பேய்ச்சுப்பு செத்துப் போனதில் இவளுக்கு அப்படியென்ன பெரிய இழப்பு!”
"ஈசுவரி, உனக்கிப்ப என்ன வயது! நீ எதுக்கும் கவலைப்பட வேண்டாம். நான் ஒரு முடிவுக்கு வந்திட்டன். இனி, உன்னோடை ஒண்டாக இருக்கப்போறன் நான் ஊருக்கும் பயமில்லை. ஆருக்கும் பயமில்லை. ஈசா . என்ரை கண்ணெல்லெ . நீ வாழ வேணும். அதுதான் என்ரை விருப்பம்.
சிலையாக இருக்கும் ஈசுவரியின் மெளனம் கலைகிறது.
"எனக்கும் அதுதான் விருப்பம்"
ਜg புத்திசாலி. என்ரை ஈசா புத்திசாலி" நந்தகோபாலன் குதித்துக் கொண்டு எழுகின்றான்.
"இனித்தான் நான் வாழப் போகிறன்"
"சரியாகச் சொன்னாய் ஈசா. மிகச்சரியான முடிவெடுத்திருக் கிறாய். இதைச் சொல்லாமல் என்னை வதைச்சுப் போட்டாய். நான் புழுப்போல துடிச்சுப் போனேன்"
"இவ்வளவு காலமும் நான் வாழயில்லை”
"அது எனக் குத் தெரியும் ஈசா சுப்பு உனக் குத் தகுந்தவனில்லை"
"நான் இனிமேல்தான் உண்மையாக வாழப் போகிறன்"
அவன் பக் கம் நோக காது ஈசுவரி சொல் லிக் கொண்டிருக்கிறாள்.
"உனக்கு நான் இருக்கிறன்"
"இல்லை” "என்ன! என்ன சொல்லுகிறாய் ஈசா?" அவன் திகைத்துத் தடுமாறுகின்றான்.
மனம் குழம்பித் தவிக்கிறது.
அவள் என்னதான் சொல்லுகின்றாள்!
121

Page 71
திரும்பவும் வாங்கின்யிது பதற்றத்துடன் அமருகின்றான்.
மீண்டும் மெளனம் கொடுரமாகப் பேசுகின்றது.
ன் ஏக்கத்துடன் அவள் முகம் நோக்குகின்றான்.
அவள் சுப்பிரமணியத்தை நோக்குகிறாள்.
அவனுக்குப் பேச முடியல்லை. குரல் தொய்ந்து போகிற சிரமத்துடன் தயங்கித் தயங்கி ஆழமான திணற்றிலிருந்து வரு  ேலக குரல் மெல்ல வெளிவருகிறது.
"ஈசா. என்ன ஈசா?" "நான் இனித்தான் அவரோடு உண்மையாக வாழப் போகிறன்."
சுவரில் தொங்கிக் கொண்டிருந்த கப்பிரமணியத்தின் படத்தை, கையைத் தூக்கி உறுதியுடன் சுட்டிக் நாட்டுகின்றாள்.
நந்தகோபாலன் தலை குனிந்து போகிறது. அவன் அப்படியே கல்லாகச் சமைந்து போகிறான். மெளனத்தில் எல்லாமே உறைந்து போகிறது.
காற்றும் அசையவில்லை. எரிந்து கொண்டிருக்கும் சுடரும் அசையவில்லை.
அந்தக் கணங்கள் கனத்து இறுகுகின்றது.
அவனுக்கு இருப்பதற்கு இயலவில்லை. மெல்ல எழுகின்றான். அவள் முகத்தை ஒரு தடவை பார்க்க வேண்டும் போல மனது துடிக்கிறது. அதுவும் முடியவில்லை. மனதில் துணிச்சலில்லை. தலை நிமிரவில்லை. முற்றத்தில் இறங்கி இருளோடு இருளாகக் கலந்து போகின்றான்.
122
 


Page 72
is a
擂
gëluai art TË BIT அவரது ஐந்தா துெ வீரகேசரி வெளியீடா நோக 計 ഞ1,
கழுகுகள் சென வெளியீடாக வந்தது
பொற்சிறையி
a .
மரக் கொத்து 1 ஆண்டின இலக்கி இலங்கை சாகித்தி பரிசையும் NII fu அரசின் பரிசையும் LT
oni L in Luĵnai)gFILIf Go GT, ĝi (3-a,
கொண்டது குறிப்பி
 

- -