கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: கதை கதையாம்: தேர்ந்த தமிழ்க் குறுங்கதைகள்

Page 1

عصحية 四而 染
ங்கதைக க் குறு

Page 2


Page 3

கதை கதையாம். . .
தேர்ந்த தமிழ்க் குறுங்கதைகள்
தொகுப்பு
சு. குணேஸ்வரன்
இளையகுட்டி அருமைக்கிளி நினைவு வெளியீடு

Page 4
நூல் விபரம்
நூல்
தொகுப்பு
முதற்பதிப்பு
வெளியீடு
அச்சிட்டோர்
வடிவமைப்பு
- கதை கதையாம்.
(தேர்ந்த தமிழ்க் குறுங்கதைகள்)
:-si. e5(geogresbarged B.A(Hons), PGDE, M.Phil
ජීවජ්ජිIfuit, வ/சேமமடு சண்முகானந்தா மகாவித்தியாலயம். ஓமந்தை. வவுனியா.
- 24 O2O2
:- இளையகுட்டி அருமைக்கிளி குடும்பத்தினர்.
கெருடாவில் தெற்கு, தொண்டைமானாறு,
:- சர்மிலன் பிறிண்டேர்ஸ்,
கெருடாவில் தெற்கு, தொண்டைமானாறு. 65T.Gu-O77163314O
:- சு. சிவனேஸ்வரன்
Cover :- The Owl and Pussycat by the Sea Thanks :- www.flickr.com
இளையகுட்டி அருமைக்கிளிநினைவு வெளியீடு
 
 

ტu27AMUgoluê
எங்கள் ஐயாவுக்கும் அம்மாவுக்கும்
கதை கதையாம் (தேர்ந்த தமிழ்க் குறுங்கதைகள்) தொகுப்பு - சு.குணேஸ்வள்

Page 5
தொகுப்பாளரிடமிருந்து
குறுங்கதை, கதை, சிறுகதை, குறுநாவல், நாவல் என்ற படிமுறையான இலக்கிய வடிவத்தில் தமிழ்ப்பரப்பில் பெரிதும் கவனத்திற்கு உட்படாத ஒரு வடிவமாக குறுங்கதைகள் இருந்துள்ளன.
குழந்தைகளையும் சிறுவர்களையும் மகிழ்விக்கும் “கதைகள்" பேசப்படும் அளவுக்கு குறுங்கதைகள் பேசப்படுவதில்லை. கதைகள் எழுதுவது என்பது அதிகமானவர்களுக்கு கைவந்த கலையாயினும் குறுங்கதைகள் அவ்வளவு இலகுவாக கைவராத காரணம் அவை வடிவச் செழுமை மிக்கவை என்பதே. அவை அர்த்தப் பெறுமதியுடன் மிகக் குறைந்த வரிகளில் வாசகனைச் சேரக்கூடியனவாக அவை அமைந்திருத்தல் (8ഖങ്ങBb.
இதனை ஈழத்திலும் தமிழகத்திலும் பல கதைசொல்லிகள் முயனர் றுள்ளார்கள். அவர்களில் வெற்றிபெற்றவர்கள் பரிகச் சொற்பமானவர்களே. அவ்வாறானவர்களில் நான் தேர்ந்து கொண்ட ஐந்து படைப்பாளிகளின் 28 குறுங்கதைகளை இத்தொகுப்பில் சேர்ந்துள்ளேன்.
இவ்வாறான குறுங்கதைகள் மிக எளிமையாகச் சொல்லப்பட்டுள்ளன. 'கதை களைப்போல் நீதி போதிப்பனவாக அல்லாமல் மனிதர்களிடம் இருக்கும் குறைகளை எள்ளி நகையாடுவனவாக உள்ளன. நாங்கள் சரியென எண்ணியிருப்பவற்றை மீள்வாசிப்புச் செய்யத் தூண்டுவன. அதேநேரம் சுவாரஷ்யமான வாசிப்புக்குகளம் அமைப்பன.
இளையருட்டி அருவடிக்கிளிநினைவு வெளியீடு 4

எனக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து எனது பெரியதாயார்
இளையகுட்டி அருமைக்கிளி அவர்கள் தனது ஓய்வு நேரங்களில் எதையாவது வாசித்துக் கொண்டிருப்பதை அவதானித்துள்ளேன். அவரின் வாசிப்பு தேர்ந்தெடுத்த வாசிப்பல்ல. தனது பிள்ளைகளிடம் இருந்து, அயலில் இருந்து, கிடைப்பவற்றை வாசிப்பவர். வாசிப்பு என்பது அவருக்கு மனச்சஞ்சலத்தைத் தீர்ப்பதற்கான ஒரு கருவியாக இருந்திருக்கின்றது. கிடைத்ததை வாசித்துவிட்டு குறுக்கும் மறுக்குமாக துண்டு துண்டான விசாரணைகளில் எங்களைத் திக்குமுக்காட வைத்த பல சந்தர்ப்பங்களை நாங்கள் மகிழ்ச்சியுடன் எதிர் கொண்டிருக்கிறோம்.
எனவே அவரை நினைவுபடுத்துத்துவதற்கு ஒரு கருவியாக இந்த நூலை நாங்கள் வெளியிடுகின்றோம். இது பிள்ளைகளுக்கும் பெரியவர்களுக்கும் ஏதாவது தூண்டுதலை வழங்கினால் அதுவே இதன் வெற்றியாக அமையும்.
இக்கதைகளை எழுதிய படைப்பாளர்கள் செம்பியன் செல்வன் சாந்தன், எஸ்.பொ, காசி ஆனந்தன், எஸ். ராமகிருஸ்ணன் மற்றும் அந்நூல்களை வெளியிட்ட வெளியீட்டகத்தாருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம். இத்தொகுப்புச் சார்ந்து என்னுடன் உரையாடலில் பங்கெடுத்த எழுத்தாளர் நந்தினி சேவியருக்கும் நண்பர் சி.விமலனுக்கும் நன்றி. நூல் வடிவாக்கிய சர்மிலன் பிறிண்டேர்ஸ் - சகோதரர் சிவனேஸ்வரனுக்கும் இத்தொகுப்புக்கு முதற்காரணராக இருந்த இளையகுட்டி அருமைக்கிளி குடும்பத்தாருக்கும் மிக்க நன்றி.
தினைப்புனம், -சு. குணேஸ்வரன். அல்வாய்.
15-01-2012
Web : www.vallaivelie.blogspot.com Mail : kuneswaranOgmail.com
5 - கதை கதையாம் (தேர்ந்த தமிழ்க் குறுங்கதைகள்) தொகுப்பு - சு.குணேஸ்வன்

Page 6
D_@frGGIT...
செம்பியன் செல்வன் குறுங்கதைகள் கையுறை/அரசியல்/தற்கொலைப்படை/பொறுக்கி/அடிக்கல் காக்கைகள்/வியர்வைச் சித்திரங்கள்/முதலைகள்/பாசம்
காசி ஆனந்தன் குறுங்கதைகள்
புடம்/தேவைlநிறைவுஇடம் தோல்கள்/இரவல்/மதிப்பு
சாந்தன் குறுங்கதைகள் தீர்வு/முதலாளிகள் பலவிதம்/கடப்பாடு ப்ரீ வீல்/புதிய மடமைகள்/சோடனை
எஸ்.பொ குறுங்கதைகள் கண்தயை
எஸ். ராமகிருஷ்ணன் குறுங்கதைகள்
சிறுமீன்/காதல் மேஜை சித்திரமீன்/எழுதத் தெரிந்த புலி
இளையருட்டி அருமைக்கிளிநினைவு வெளியீடு
6

செம்பியன் செல்வன்
செம்பியன் செல்வன் (1943-2005) இயற்பெயர் இராஜகோபால். யாழ்ப்பானம். குறுங்கதை, சிறுகதை, நாவல், இதழியல், சினிமா ஆகியவற்றில் தனது ஆளுமையைச் செலுத்தியவர். இவரது “சற்பவியூகம்' என்ற சிறுகதைத் தொகுதி கவனத்திற்குரியது.
இதுவரை ஒன்பது நூல்கள் வெளிவந்துள்ளன. இவரது 'குறுங்கதைகள் நூறு' என்ற தொகுப்பிலிருந்து கையுறை, அரசியல், தற்கொலைப்படை, பொறுக்கி, அடிக்கல், காக்கைகள், வியர்வைச் சித்திரங்கள், முதலைகள், பாசம் ஆகியவற்றைத் தருகிறோம்
கதை கதையாம் (தேர்ந்த தமிழ்க் குறுங்கதைகள்) தொகுப்பு - சு.குணேஸ்வன்

Page 7
கையுறை
குசேலர் தன் மனைவியைக் கூப்பிட்டார்.
"சுசி. நான் கிருஷ்ணனைச் சந்திக்கப் போகவேண்டுமே. எதனைத் தந்துவிடப் போகிறாய்?."
சுவாமி! உங்கட்குத் தெரியாமல் என்னிடம் ஏது இருப்பு?. அடுத்த வீட்டில் கடனாகப் பெற்ற ஒரு படி அவல்தான் எண்ணிடம் இருக்கிறது."
"அவலா. அவனுக்கு நிறையைப் பிடிக்குமே. அதுவே போதும்."
"சுவாமி. பிள்ளைகள் பசியால் கத்துகின்றனவே. கிருஷ்ணன் தங்கள் நண்பன்தானே. அவருக்கு நீங்கள் கையுறை கொண்டுபோக வேண்டுமா?
"அடிபேதாய். கண்ணன் என் நண்பன் மட்டுமல்ல. ஒரு பெரிய அதிகாரி என்பதனை மறந்தா போய்விட்டாய்."
இளையருட்டி அருமைக்கிளிநினைவு வெளியீடு 8

அரசியல்
காட்டுராஜா சிறுத்தையை அடித்துக் கொன்றது. அது வழக்கம்போல், சிறுத்தையின் ஈரலை மட்டும் உண்டுவிட்டு அப்பால் சென்றது. அதனை மறைவிலிருந்து, அச்சவிழிகளால் பார்த்துக்கொண்டிருந்த குள்ளநரி ஒன்று, விரைந்து சென்று, மீதமிருந்த சிறுத்தையின் எச்சில் மாமிசத்தைப்புசிக்கலாயிற்று.
வயிறுநிறைந்த மகிழ்ச்சியில், பெரிதாக ஊளையிட்டது.
மரக்கிளை வழியாக தாவிவந்த மந்தி ஒன்று, இதனைப் பார்த்துவிட்டு வியப்புடன் வினாவியது.
"சிறுத்தையை நீயா கொன்றாய்?
குள்ளநரிக்கு மின்னலென மூளையில் பொறி தட்டியது. பலமாகத் தலையசைத்தபடி, இதென்ன கேள்வி?. பார்த்தாலே தெரியவில்லையா?. கொன்றேன். தின்றேன். உனக்கும் பங்கு வேண்டுமா?" எனக்கேட்டது.
மந்தி, அச்சப்பயத்துடன் கிளைகளில்தாவியது.
குள்ளநரியின் தீரச்செயல்காடெங்கும் பரவியது.
அவ்வழியால் மீண்டும் வந்த காட்டு ராஜா கூட நரிக்கு மரியாதை செய்து, பாதைமாறிப் போகத்தொடங்கியது.
9-கதை கதையாம் (தேர்ந்த தமிழ்க் குறுங்கதைகள்) தொகுப்பு- சு.குணேஸ்வன்

Page 8
தற்கொலைப்படை
கடற்பறவைகள்தாழப்பறந்துமீன் வேட்டையாடின.
பச்சை இரத்த வாடைவீச, புழுவுடன் தூண்டில் நீரிடையே துடித்தன.
"வேண்டாம். வேண்டாம். எங்களை வாழவிருங்கள்
-மீன்கள் அலறின.
“உங்களை வாழவிட்டால். எங்கள் வாழ்வு.?கடற் பறவைகள் எக்காளமிட்டுச் சிரித்தன.
மீன்கள் ஒன்று திரண்டன. "இவர்களுக்கு இரையாகி அழிந்து போவதைவிட எதிர்த்து
புரட்சிக்குரல் எழுந்தது எப்படி..? நீரின் மேல் துள்ளி விழுந்த வெள்ளி மீனொன்று கடற்பறவைக்கு ஆசை காட்டியவாறு தூண்டிலை நெருங்கியது. "விர் ரென்று கடற்பறவையும் நீரைக்கிழித்துக்கொண்டு நெருங்கியது.
"கடக்" தூண்டில் சுண்டியிழுக்கப்பட்டது.
தூண்டில் முள்ளில், மீனுடன் கடற்பறவையும் துடித்தது.
இளையருட்டி அருமைக்கிளி நினைவு வெளியீடு 10

பொறுக்கி
அவன் வீட்டு வாசற்படியில் உட்கார்ந்திருந்தான். தெருவோரமாகக் கிடந்த மணிக்கற்களை எடுத்து,விட்டெறிந்து கொண்டிருந்தான். அவன்கரங்கள். வேலை. உழைப்பு. எனத் துடித்தன. வயிறும் பசியால் அழுதது. "இதிலிருந்து கொண்டு வீணாக ஏன் கற்களை எறிகின்றாய்? ஆற்றங்கரைகளில் போய் சிறுமணிக்கற்களைப் பொறுக்கிவா பணம் தருகிறேன்" -என்றது ஒரு குரல். “দ্যনে?” "கேள்விகேட்காதே.சொன்னதைச் செய். கூலியைப் பெற்றுச் செல்! -பதில் கருமையாக வந்தது.
2
அவன் சோற்றிற்காகக் காத்திருந்தான். மனைவி அரிசியைக் களைந்து கொண்டிருந்தாள். "ஏய்.இன்னுமா சோறு காச்சவில்லை. பசியால் பிராணன் போகுது".
3
அவன் ஆவலோருசோற்றை வாயிலிட்டான்.
"நறுக்"-வாயில் கல் கடிபட்டது.
அருத்தவாய்
"நறுக்!" அவன் வாயில் கடிபட்ட கல்லை எடுத்துப் பார்த்தான். ஆச்சரியத்தால் அதிர்ந்து 866ao (Tai
"கண்டுகொண்டேன். இவை நான் பொறுக்கிய கற்களல்லவா?
11-கதை கதையாம் (தேர்ந்த தமிழ்க் குறுங்கதைகள்) தொகுப்பு - சு.குணேஸ்வன்

Page 9
அடிக்கல்
தொழிலாளர்கள் காலையிலிருந்து, அந்த உச்சிப்பொழுதுவரை காத்திருந்தார்கள்.
அவர்கள் வெட்டிய அத்திவாரத்தின் ஈர மணி கூட உலர்ந்து சொரிந்து விழுந்து கொண்டிருந்தது.
சீமெந்துக்கலவை ஈரம்வற்றி, உலர்ந்து கொண்டிருந்தது.
அவர்கள் தங்கள் சாந்தகப்பை, மட்டத்தடி நீர்மட்டம், மண்வெட்டி என்பனவற்றுடன் நீண்டநேரமாகக்காத்திருந்தனர்.
வேலை தொடங்கவில்லை.
தந்தையுடன், வேலைக்குத்துணையாக வந்திருந்த சிறுவன் கேட்டான்.
"அப்பா, ஏன் இன்னும் வேலையை நீங்கள் தொடங்கவில்லை"
"மகனே,அடிக்கல்நாட்டுபவர் இன்னும் வரவில்லை"
"அடிக்கல் மிகப்பெரிதா அப்பா? உங்களால். அதை நாட்டமுடியாதா?
"அப்படியல்ல மகனே. அடிக்கல் பெரிதல்ல.அதனை நாட்டுபவர் பெரியமனுஷன்"
“உங்களைவிட அவர் பெரிய உழைப்பாளியா? இந்தக் கட்டிடம் கட்டும்வரை உழைப்பாரா? அப்படியான உழைப்பாளிஏன் இன்னும் வந்து சேரவில்லை
இளையகுட்டி அருமைக்கிளிநினைவு வெளியீடு 12

“இல்லையடா மகனே. அவர் உழைப்பாளியல்ல. பதவிக்காரன். அவரால் இந்த அடிக்கல்லை தூக்கவும் முடியாது. தூக்கவும் மாட்டார். அது அவருக்குக் கெளரவக் குறைவு, நாங்கள் தூக்கிக் கொருக்க அவர் அதனை ஆசீர்வதிப்பதுபோல் தொட்டுக் கொண்டு நிற்க புகைப்படங்கள் பிடிப்பார்கள். வெயிலிலும் மழையிலும் நாங்கள்தான் உழைத்துக்கொருக்கவேண்டும்,
"அப்படியானால் அவருக்கு எதற்கா இதில் பங்குகொருக்கவேண்டும். அடிக்கல்லில் அவர் பெயரைப் பொறிக்க வேண்டும்?
"பாவம். வருங்கால சமுதாயம் அவர்மீது குற்றம் சாட்டாமல், அவரும் உழைப்பில் பங்கு கொண்டார் என நாம் வழங்கும் பிச்சைக்காரத்தனமான சான்றிதழ்" அதுமட்டுமல்ல, மகனே! இந்தக் கட்டிடம் கட்டிமுடிந்ததும் திறப்புவிழாவுக்கென இன்னொரு பதவிக்காரன் பட்டு நாடா ஒன்றை வெட்டுவான். அவன் செய்த மாபெரும் உழைப்புக்காக அவன் பெயரும் பொறிக்கப்படும்"
"இதெல்லாம் ஏன் இப்படி?
"நம் தலைவிதி என்றுதான் இவ்வளவு நாளிருந்தோம்" இப்போது நாம் விழித்துக்
ിba്L" 9ഖa് ഗ്ര$86ിഞ്ഞു.
மாபெரும், நீண்ட கப்பல் போன்ற கார் ஒன்று, ஒருவனை மட்டும் சுமந்தவாறு, அலுங்காமல் குலுங்காமல் சப்தம் எதுவுமின்றிவந்துநின்றது.
13-கதை கதையாம் (தேர்ந்த தமிழ்க் குறுங்கதைகள்) தொகுப்பு. க.குணேஸ்வன்

Page 10
காக்கைகள்
அவர் விசித்திர மனநோய் ஒன்றினால் பீடிக்கப்பட்டவர். ஆனால் வெளியே இருக்கிறார். பணக்காரர். அவர் மனநோய் ஒரு மனோபாவம் எனக் கொண்டு பிறரால் பாராட்டப் பட்டுக் கொண்டிருந்தார்.
வெறொன்றுமில்லை.
எப்பொழுதும் தன்னைச் சுற்றி நாலுபேர் நிற்கவேண்டும்.
கொடை என்ற பேரில் பணத்தை வாரியிறைத்தார். நான்கு பேரென்ன? நாலாயிரம் பேர் சூழ்ந்து கொண்டனர், அவர் பூரித்தே போனார்?
வள்ளல் என்ற பெயர் பெரிதாகப் படர்ந்து.
செல்வம் கரையக் கரைய, கூட்டமும் குறையலாயிற்று.
பைத்தியக்காரன். விசரண் என்ற பெயர் அவருக்குச் சூட்டப்பட்டது.
இந்த அவமானங்களைவிட, தன்னைச் சூழ்ந்திருந்தவர்கள் இல்லையே என்ற கவலை அவரை வாட்டியது. திடீரென ஒரு சிந்தனை பிறந்தது.
சோற்றை வாரியிறைத்தார்.
"கா. கா. கா." - காகக் கூட்டம் அவரைச் சூழ்ந்தது.
அவருக்கு மீண்டும் மகிழ்ச்சி.
காகக் கூட்டங்கள் பறந்து சென்றன.
இப்போது அவர் தலை, தோள். முதுகு, முகம் எங்கும் காகங்களின் எச்சங்கள்.
முதன்முதலாக சிந்திக்கத் தொடங்கினார்.
இளையருட்டி அருமைக்கிளிநினைவு வெளியீடு 14

வியர்வைச் சித்திரங்கள்
எழிலார்ந்த கலாமண்டபம்.
உலகக் கட்டிடக் கலைஞர்களின் கனவுகளுக்கோர் உருவம், நாகரிக முதிர்ச்சியின் சின்னம்.உழைப்பின் உயிரோவியம்,
சிற்பிகளின் உளிகள்தூண்களை கலையாக்கியிருந்தன.
ஒவியங்களின் துரிகைகள் சுவர்களை இயற்கையால் திரையிட்டிருந்தன. எனினும் சில பகுதிகள் இன்னும்பூர்த்தியாகவில்லை.
சொந்தக்காரர் பெருமிதத்துடன் எல்லாவற்றையும் பார்வையிட்டவாறு சென்று கொண்டிருந்தார். அவர் அழகு மகள்-சின்னஞ்சிறுமியும் துள்ளிக்குதித்தவாறு அவருடன் வந்துகொண்டிருந்தான்.
திடீரென அவள் வேகம் தடைப்பட்டது.
"அப்பா. அப்பா. அந்தச் சித்திரங்கள்தான் எல்லாவற்றையும் விட நன்றாக இருக்கின்றன இல்லையாப்பா." என்றாள்.
பூர்த்தி செய்யப்படாத பகுதியில் நடந்துகொண்டிருந்த அவர் வியப்புடன் திரும்பிப் பார்த்தார்.
அங்கே
கட்டிடத் தொழிலாளர்கள் ஓய்வு வேளையில் சுவரில் சாய்ந்து சாய்ந்து. வியர்வைக் கறை ஏறி.ஏறி. படர்ந்து விரிந்து.
இன்னதென்று விளக்கமுடியாத ஒவியம் போல் மின்னியது.
15-கதை கதையாம் (தேர்ந்த தமிழ்க் குறுங்கதைகள்) தொகுப்பு - சு.குணேஸ்வன்

Page 11
முதலைகள்
பொதுத்தேர்தலில் இருகட்சிகள் போட்டியிட்டன.
ஒரு முதலாளியிடம் ஒருகட்சிதேர்தல் நன்கொடை கேட்டது.
முதலாளி சிரித்த முகத்துடன் அவர்களை வரவேற்று, உபசரித்து பெருந்தொகையான பணத்தையும் நன்கொடையாக வழங்கினார்.
சிலநாட்களின்பின் மறுகட்சியும் சென்று தேர்தல்நிதி,நன்கொடை கேட்டது.
அவர்களுக்கும் முதலாளி முன்போலவேநன்கொடைவழங்கினார்.
"அப்பாlஇப்போதுவந்தவர்கள் பதவிக்குவந்தால் நமக்கு ஆபத்தல்லவா?”
"Gö, Da58aD!”
"அப்படியானால் எதற்காக அவர்களுக்கு உதவினீர்கள்?"
"அவர்கள் பதவிக்கு வந்தால், நமதுதவியைக் காட்டிச்சலுகை பெறலாம் அல்லவா?”
"அதுசரி. முதல் கட்சியினருக்கு உதவாமல் விடலாமே?”
"தேர்தல் முடிவுநிச்சயமானதல்லவே?
"இரு கட்சிக்கும் வழங்கியதால் பெருஞ் செலவல்லவா?
"இல்லை மகனே இல்லை.நான் கொடுக்க இருந்த பணத்தை இரண்டாகப் பிரித்துத்தான் இரு கட்சிகளுக்கும் வழங்கினேன். எந்தக் கட்சி வெல்லுமோ என்ற அச்சமோ கவலையோ கூட எமக்கில்லை. எதுவென்றாலும் நமக்கு ஆபத்தில்லை. ஒரு
கட்சிக்கு வழங்கினால்தான் ஆபத்து. நாம் எப்போதும் நீரிலும் நிலத்திலும் வாழப் பழகவேண்டும் புரிகிறதா. ?
"புரிந்தது"
இளையருட்டி அருமைக்கிளிநினைவு வெளியீடு 16

IIITFi
பிள்ளைகளை நன்றாகத்தான் வளர்த்துப் படிப்பித்து ஆளாக்கிவிட்டார்.
6IaổÎGOI LJuJGổĩ?
வயோதிப காலத்தில் ஆதரவளிக்காமல் துரத்திவிட்டனர்.
அவர் ஆண்டிகள் மடத்தில் ஒண்டினார்.
ஒருநாள் அவர் பிச்சைக்குப் போய் வரும் வழியில் அவர் மகன் அவரைத் திருவோரும் கையுமாகக் கண்டு,கண்கலங்கிநின்றான்.
"என்ன கோலமப்பா இது? உடைந்துபோன திருவோரும் கையுமாக." தந்தைக்குப் பெருமகிழ்ச்சி
சதை ஆருகிறதா?
"கொஞ்சம் பொறுங்களப்பா. இதோ வருகிறேன்" என்று எங்கோவிரைந்தான். அவர் இரத்த, பாச உறவுக் கனலில் கனியாகி.
"இந்தாருங்கள் அப்பா
-அவர் கனவு கலைந்து பார்த்தபோது, மகன் கையில் அளவில் பெரிய புத்தம் புதிய திருவோரு காட்சியளித்தது.
17-கதை கதையாக் (தேர்ந்த தமிழ்க் குறுங்கதைகள்) தொகுப்பு - சு.குணேஸ்வன்

Page 12
காசி ஆனந்தன்
காசி ஆனந்தன் (1938) இயற்பெயர் காத்தமுத்து சிவானந்தன். மட்டக்களப்பில் பிறந்தார். தமிழகத்தில் வசிக்கிறார். ஈழத்து எழுச்சிக் கவிஞராக அறியப்பட்டவர். இவரது நறுக்குகள் என்ற தொகுப்பு பிரபல்யமானது.
காசி ஆனந்தன் கதைகளி என்ற தொகுப்பிலிருந்து புடம், தேவை, நிறைவு இடம், தோல்கள், இரவல், மதிப்பு ஆகிய குறுங்கதைகளைத் தருகிறோம்.
இளையருட்டி அருமைக்கிளிநினைவு வெளியீடு 18
 

புடம்
காட்டில் இருந்த மூங்கில் ஒருநாள் கத்தியால் வெட்டப்பட்டது. நெருப்புக் கம்பி தன்னைத் துளைத்தபோது "ஐயோ உடல் புண்ணாகிறதே என்று கதறி அழுதது"
"கொஞ்சம் பொறுமையாக இரு" மூங்கிலைப் பார்த்து ஆறுதல் சொன்னது காற்று.
மூங்கில் புல்லாங்குழல் ஆனது.
-மேடையில்
உலகமே மயங்கும் இசையை அள்ளிப் பொழிந்து கொண்டிருந்த புல்லாங்குழலைப் பார்த்து மேனி சிலர்த்தது காற்று.
அது சொன்னது
"புண்பட்டவன்
Uadrut'L6)lar
19-கதை கதையாம் (தேர்ந்த தமிழ்க் குறுங்கதைகள்) தொகுப்பு. க.குணேஸ்வன்

Page 13
தேவை
புல் மேய்ந்து கொண்டிருந்தது மாடு.
மரத்தில் இருந்து குருவிக்குள்சு தாயைக் கேட்டது:-
"ஏனம்மா மாட்டுக்கு நம்மைப்போல சிறகு இல்லை?
தாய்க்குருவி சிரித்தது.
"மாட்டுக்கு நம்மைப்போல சிறகு தேவையில்லை
என்றது தாய்.
தாய்க்குருவி சொன்னது:-
"வானத்தில் புல் முளைத்தால்
மாட்டுக்கும் சிறகு முளைக்கும்"
இளையகுட்டி அருமைக்கிளிநிலளவு வெளியீடு 20

நிறைவு
நகைக்கடை கண்ணாடிப் பெட்டியில் கண்ணைப் பறித்த இரத்தினக் கல்லைப் பார்த்து தெருவில் கிடந்த குருணிக்கல் பொறாமைப்பட்டது.
“எனக்கு ஏன் மதிப்பில்லை. நானும் ஒரு கல் தானே." என்று ஒலமிட்டது.
தெருவோரத்தில் கிடந்த கடப்பாரை கூறியது.
“ஏ குருணி காலம் முழுதும் உன்னை நீயே பெரிதாக எண்ணிக்கொண்டு பலரும் பார்க்க தெருவில் கிடக்கிறாய். ஆனால், இரத்தினக்கல் அப்படியா? நிறைந்து வளர்ந்து இரத்தினமாகும் வரை வெளியில் தலை காட்டியதே இல்லை. எங்கோ மண்ணின் மறைவில் அது தன்னைத்தானே உருவாக்கிக் கொண்டிருந்தது.
"அப்படியென்றால்.?" என்று இழுத்தது குருணிக்கல்.
கடப்பாரை சொன்னது:-
“நிறைவாகும்வரை
மறைவாகவே இரு"
0YM M SSSMMM MMSSSS MMSSL LTM MTMCMTG LLTLLL TT TTMTMTT LTT S YSTTMT

Page 14
&BLD
கழுதையும் பட்டாம்பூச்சியும் உலாப்போயின.
மைதானத்தில் குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்தார்கள்.
“இந்த இடத்தில் நான் இசைக்கச்சேரி வைப்பேன். இங்கே எனக்கு வரவேற்பிருக்கும்." என்றது கழுதை
அது பாடத் தொடங்கியது.
என்ன கொடுமை. கழுதைக் கச்சேரி- கல்வீச்சு கலாட்டா என்று ஆகியது.
அடிபட்ட கழுதையும் பட்டாம்பூச்சியும் ஊரின் எல்லையில் சாய்ந்து கிடந்த ஒரு குச்சி வேலியின் அருகில் வந்து சேர்ந்தன.
கழுதைக்கு ஒரே கொண்டாட்டம்.
ஓணான்கள் வரிசையாக அங்கே வேலியில் உட்கார்ந்து தலையை ஆட்டிக் கொண்டிருந்தன. கழுதை மகிழ்ச்சியோரு பாடத் தொடங்கியது.
என்ன ஆச்சரியம்
தலையை ஆட்டி எல்லோரும் கச்சேரியை ரசித்துக் கொண்டிருந்தார்கள்.
வியப்போடு அசைவற்று நின்ற பட்டாம்பூச்சியைப் பார்த்து ஒரு வண்டு "ஒன்றும் வியப்படையாதே. இங்கே அப்படித்தான்" என்று கூறியது.
சுருக்கமாக அது சொன்னது
"ஓணான்களின் ஊரில்
கழுதைகளும் வித்துவாண்களே!
இலளயருட்டி அருமைக்கிளி நினைவு வெளியீடு 22

தோல்கள்
பாம்புதோலைக்கழற்றிவைத்துவிட்டுப்புறப்பட்டது.
ஆடுகள் மேய்ந்து கொண்டிருந்த பக்கம் அதுபோனது.
அங்கே நின்ற தனியன் ஆட்டிடம் “அதோ பார். பாம்பு உண்னுடையவர்கள் இருக்கும் இடத்தை நோக்கித்தான் போகிறது. நச்சுப்பாம்பு - பல் பட்டாலே போதும்." என்று
கூறியது சேவல்.
".அப்படி ஒன்றும் நடந்து விடாது. பாம்பு தோலைக் கழற்றிப்புதிதாய்ப்பிறந்திருக்கிறது" என்றது தனியன் ஆடு,
சிறிது நேரத்தில்
ஆடுகளின் அலறல் புல்வெளியை உலுக்கியது.
ஒசை வந்த திசைநோக்கிதனியன் ஆடும் சேவலும் இடின.
அங்கே
பாவம்.அப்பாவி ஆடுகள் இரண்டு பாம்புக்குக்குப்பலியாகிச் செத்துக் கிடந்தன.
சேவல் சொல்லியது
“பல்லைக் கழற்றாத பாம்பு
தோலைக்கழற்றி என்ன?
வாலைக்கழற்றிஎன்ன?”
23-கதைகதையாம் (தேர்ந்த தமிழ்க் குறுங்கதைகள்) தொகுப்பு-சுகுணேஸ்வன்

Page 15
இரவல்
கிழட்டு அணில் மற்றஅணிலைப்பார்த்து "அடுத்தவர்களின் உழைப்பில் வாழ்வதேசிலருக்கு வாழ்க்கையாகிவிட்டது பார்." என்றது.
"ஏன் அப்படிச்சொல்கிறாய்?" என்று கேட்டது இரண்டாம் அணில்,
கிழட்டு அணில் சொன்னது:-
ஒணானைப்பார்த்தேன்.யாரோ ஒரு மனிதன் புதுவீருகட்டிக்கொண்டிருக்கிறானாம். பக்கத்தில் குப்பைமேட்டில் ஒரு பல்லி இருக்குதாம். அது ஒணானிடம் ஏதோ சொன்னதாம்.
“என்னவாம்?" என்றது இரண்டாம் அணில்.
கிழட்டு அணில் சொன்னது:-
“எனக்குத்தான் வீடுகட்டுகிறான் என்றதாம்பல்லி"
இளையருட்டி அருமைக்கினிநினைவு வெளியீடு 24

மதிப்பு
"வாழ்ந்தால் குயிலைப்போல வாழவேண்டும்" என்றது பட்டாம்பூச்சி.
இன்னொரு பட்டாம்பூச்சி கேட்டது:-
“ଗୁdf?'
"அதோ பார். மாமரத்தில் பாருகிறது குயில்.
மாமரத்துக்காகத்தான் அது பாருகிறது. பின்பு மாங்கனியைச் சாப்பிடுகிறது. பறக்கிறது.
"புரியவில்லையே”
"யாருக்கும் கடமைப்படக்கூடாது. கொடுத்துப் பெறு. தங்கி வாழாதே"
"ஓ இப்போது புரிகிறது" என்றது இரண்டாவது பட்டாம்பூச்சி
தனக்குள்ளே அது சொல்லிக் கொண்டது
“மரத்துக்கு ஒரு பாட்டு
குயிலுக்கு ஒரு பழம்"
25-கதை கதையாம் (தேர்ந்த தமிழ்க் குறுங்கதைகள்) தொகுப்பு. க.குணேஸ்வன்

Page 16
சாந்தன்
ஐ. சாந்தன். யாழ்ப்பாணம் சுதுமலை
1966இல் இருந்து எழுதி வருகிறார். குறுங்கதை, சிறுகதை நாவல், மொழிபெயர்ப்பு, உலக இலக்கியம் ஆகியவற்றில் தமது ஆளுமையைச் செலுத்தி வருகிறார்.
இதுவரை பத்துக்கும் மேற்பட்ட நூல்கள் வெளிவந்துள்ளன. ஒட்டுமா, கிருஸ்ணன்தூது ஆகியன கவனத்துக்குரியன. ஆங்கிலத்தில் The Sparks என்ற சிறுகதைத் தொகுதி வெளிவந்துள்ளது.
1975ல் வெளிவந்த கருகு என்ற குறுங்கதைகள் தொகுப்பிலிருந்து தீர்வு, முதலாளி பலவிதம், கடப்பாடு, ப்ரீ வீல், புதிய மடமைகள், சோடனை
ஆகிய குறுங்கதைகளைத் தருகின்றோம்.
இளையருட்டி அருமைக்கிளிநினைவு வெளியீடு 26
 

தீர்வு
"மதில் கரையோடநிக்கிற பப்பாசிமரத்தில,
ஒரு பழமும் மின்சுதில்லை."
"ஏன்?"
“றோட்டுக்கு அந்தப் பக்கமிருக்கிற பட்டினிப் பட்டாளங்களெல்லாம், ஆக்களில்லாத நேரம்பார்த்து மதிலிலை ஏறி, எல்லாத்தையும்பிடுங்கிக்கொண்டு போருதுகள்."
"அந்த மரத்தை வெட்டிவிடுங்கோ, தொல்லை இல்லை"
27-கதை கதையாம் (தேர்ந்த தமிழ்க் குறுங்கதைகள்) தொகுப்பு. க.குணேஸ்வன்

Page 17
முதலாளிகள் பலவிதம்
புதிதாக உத்தியோகமாகிக் கொழும்பிற்குப் போனதன் பின், அப்போது தான் முதற் தடமையாக ஊருக்கு வந்திருந்தான் செல்வம். தன் சகபாடி சுந்தரம் ஊரோடு கடை திறந்திருப்பதைக் கேள்விப்பட்டு, அவனைப்பார்க்கச் சென்றான்.
“எப்பிடிமுதலாளி? எப்பிடி"பிஸினெஸ்"எல்லாம்?" என்று, பாதிநக்கலாகக் கேட்ட செல்வத்திற்குச்சுந்தரம் சொன்னான்.
"மச்சான், மூவாயிரம் ரூபாய் முதல் போட்டுக்கடைபோட்ட எண்னை "முதலாளி எண்டா, எங்கடை"எம்.பியிற்ரஐயாயிரம் ரூபா முதலைப்"பொத்தி வேலை எடுத்தநீஆர்?"
இளையருட்டி அருமைக்கிளிநினைவு வெளியீடு 28

கடப்பாடு
"நாங்கள் சிட்டுக்குருவிகளுக்கு நிச்சயம் கடமைப்பட்டவர்கள்,
அவற்றின் பணி தனித்துவமானது எங்களைப் போல வான வெளியிலும் தோப்புக் கூடலிலும் மட்டுமே அவை பறவை மொழியைப் பேசவில்லை. மனித இனத்தின் நருவில் கூடப் பிரதேசங்களிலும், வீடுகளிலும் வாழ்ந்து கொண்டு, அவை எம் பறவை மொழியையும், பண்பாட்டையும் வளர்த்து வருகின்றன. அவற்றிற்கு நாம் நன்றி செலுத்துகிறோம்."
என்று பறக்கிற பறவைகள் மாநாட்டில் பருந்து தீர்மானங்கொண்டு வந்தது.
"மனிதப் பிரதேசங்களில் பறவை மொழியையும், பண்பாட்டையும் பாதுகாக்க வேண்டிய
தேவை என்ன? ஒரு விதத்தில், அதுகூட, ஆக்கிரமிப்பும் ஊடுருவலும் ஆகும் இல்லவா?”
கொக்கு குரலெழுப்பியது.
20ー கதை கதையாம் (தேர்ந்த தமிழ்க் குறுங்கதைகள்) தொகுப்பு - சு.குணேஸ்வன்

Page 18
ப்ரீ வீல்
"பட்டங்கள் நிலையானவை" என்றார் முதலாம் ஆள்.
"உண்மை, நாங்கள் செத்தாலும் எங்கள் பட்டங்கள் அழியாது போலத்தானிருக்கு" என்றார் மற்றவர்.
"இப்ப பாரும், எப்பவோ ஒரு காலத்தில எழுதினது உண்மைதான். இப்ப பத்துப் பதினைவுந்க வருஷமா பேனையைக் கையாலை தொடேல்லை. இன்னும் "எழுத்தாள"னெண்ருதான் சொல்லுறாங்கள்"
"உதென்ன பெரிசு? நான் ஒரு காலத்திலை தொழிலாளியாயிருந்தவன்தான். இப்ப என்ர பட்டறையிலஎனக்குக் கீழை பத்துப்பேர் வேலை செய்யிறாங்கள். எண்டாலும் இன்னும் என்னைத் "தொழிலாளி எண்ருதான் சொல்றாங்கள்"
இளையருட்டி அருமைக்கிளிநினைவு வெளியீடு 30

IsfjluI IDLEDIDö6lf
சமூக சீர்திருத்தவாதியான ஒருவரைச் சந்திக்கப் போனேன். சந்திரன்தான் கூட்டிப்போனான். இருவருக்கும் பொதுவான நண்பன், அவன் எங்களுடன் ராசுவும்
86L6155 Tai.
என் கையிலிருந்த பச்சை நிற "பைலை"க் காட்டி"இதை எங்கேயாவது வைச்சிட்டு வா: இந்த நிறம் அவருக்குப்பிடியாது" என்றான் சந்திரன்.
ராசு சிரித்துவிட்டுக் கேட்டான்.
"ஆள்கீரைக்கறி, வல்லாரைப்பச்சடி, இதுகளையும் சாப்பிடமாட்டாரோ?”
31-கதை கதையாம் (தேர்ந்த தமிழ்க் குறுங்கதைகள்) தொகுப்பு. க.குணேஸ்வன்

Page 19
சோடனை
"உது கட்டைக் குருத்து வாறபருவம். அநியாயமா இப்ப வெட்டாதையடா" என்றார் (88ITLDs. LD5aff.
கொடுவாட் கத்தியும் கையுமாய் வாழையருகில் நின்ற சிவநைானம் , திரும்பி "உப்பிடிப்பாத்தா, ஒரு வாழையும் வெட்ட ஏலாது. குறைஷ்சது ஆளுக்குப் பத்து வாழையாவது கொண்டுவரச்சொல்லியிருக்கிறான்கள்." என்றான்.
"இப்ப உவனுக்கு என்னத்துக்காம் வாழை?" அடுத்த வீட்டு அம்பாவிஅம்மாண் கேட்டார்.
"உணவு உற்பத்தியைப் பெருக்கச் சொல்லிப் பேச ஆரோ பெரியவன் கொழும்பாலை வாறானாம்.
அவரை வரவேற்க, இவயள்றோட்டெல்லாம் சோடிக்கப் போகினமாம்."
சிவஞானம் கத்தினான்.
"விசர்க்கதைபேசாதையெணைlநாங்களே சோடிக்கிறம்?
-சங்கத்தில பெரியவங்கட ஒடர்."
இளையருட்டி அருமைக்கிளிநினைவுவெளியீடு 32

GT600 IT
எஸ்.பொன்னுத்துரை (1932)
நல்லூர் யாழ்ப்பாணம்.
புலம்பெயர்ந்து அவுஸ்திரேலியாவில் வாழ்கிறார். கவிதை, சிறுகதை, நாவல், மொழிபெயர்ப்பு, கட்டுரை, விமர்சனம் ஆகியவற்றில் தனது ஆளுமையைச் செலுத்தி வருகிறார்.
இதுவரை இருபத்தைந்திற்கு மேற்பட்ட நூல்கள் வெளிவந்துள்ளன. தனது சுய வரலாற்றை 'வரலாற்றில் வாழ்தல் என்ற நூலாக 2000 பக்கத்தில் எழுதியுள்ளார். அவை இரண்டு நூல்களாக வெளிவந்துள்ளன. இவரது தி, சடங்கு ஆகிய புனைவுகள் கவனத்திற்குரியன. 2010ல் கனடா இலக்கியத்தேட்டம் இயல்விருது' வழங்கி கெளரவித்தது.
கீதை நிழலில் என்ற நூலிலிருந்து கணி, தயை என்ற இரண்டு குறுங்கதைகளைத் தருகிறோம்.
33-கதை கதையாம் (தேர்ந்த தமிழ்க் குறுங்கதைகள்) தொகுப்பு-சு.குணேஸ்வன்

Page 20
ഞ്ഞ്
*ஊனக் கண்கள் மட்டும் உள்ளவனுக்கு அது புரியாது.
கடவுளைஞானக் கண்களால் உணருதல் 8வண்டும்
அன்பேசிவம்" என்றான்சித்தன்.
"சிவனே பித்தன்" என்றாண்பித்தன்.
இருவரும் எதிர்பாராத வசத்தால் பைத்தியக்காரர் விருதி ஒன்றின் முன்னாற் சந்தித்தார்கள்.
"நான் கடவுளை உணர்ந்தவன். புரிந்ததா?" எனப்பித்தனை மடக்கினான்சித்தன்.
"கடவுளை உணவுந்தவன் என்கிறாய்.நீஅவரைக்கண்டிருக்கிறாயா?
"85sa T66)6O)6O'
"காணாததை எப்படிக் கண்டாய்?
"ஊனக் கண்கள் மட்டும் உள்ளவனுக்கு அது புரியாது. கடவுளை ஏநானக்கண்களால் உணருதல் வேண்டும்.
இளையருட்டி அருமைக்கிளிநினைவு வெளியீடு 34

இவ்வளவுதானா உன் சாமர்த்தியம், நான் கடவுளை இந்த இரண்டு கண்களாலும் பார்த்திருக்கிறேன்" எனக் கூறியபித்தன் பேய்ச்சிரிப்பில் மூழ்கினான்.
"நான்நம்பமாட்டேன்" என்றான்சித்தன்.
“இது யோக்கியமா? நீ ஞானக்கண்களாற் கடவுளை உணர்ந்ததாகச் சொன்னதை மறுபேச்சின்றி நம்பினேன். நான் கடவுளை என் ஊனக் கண்களாற் கண்டேன் என்று
சொல்வதை நீஏன் மறுக்கின்றாய்? இது நியாயமல்ல.
பித்தன் பேசுவதில் ஏதோ நியாயமிருப்பதாகச் சித்தனுக்குத் தோன்றியது. எனவே "எங்கே Bad Tu?" oа86 (886 Lпа.
"இந்த விருதியிலேதான்!
"அப்படியானால், நீஏன் வெளியே வந்துவிட்டாய்?"
"உஸ்ஸ். நான் வெளியே வந்திருக்காவிட்டால், அவர் உள்ளே இருக்கும் சமாசாரம் உமக்குத் தெரிந்திருக்குமா? அத்துடன், அவர் உள்ளே வந்தபிறகு எனக்கு அங்கே என்ன
8ഖഞ6?
இப்பொழுது சித்தனைப்பைத்தியக்கார விருதிக்கு அழைத்துச் செல்கிறார்கள்.
35--கதை கதையாம் (தேர்ந்த தமிழ்க் குறுங்கதைகள்) தொகுப்பு - சு.குணேஸ்வன்

Page 21
jBEDUII
*இது பக்திகந்ைதது, மந்திரம் ஏறியது.
எனவே இதன் முகத்துவம் அற்புதமானது?
அவல் முடிச்சினை மடியிலே பக்குவப்பருத்திக் கொண்டு குசேலர் துவாரகாபுரி வந்து சேர்ந்தார்.
நீண்ட காலம் பிரிந்திருந்த ஆருயிர்த் தோழன் கண்ணனைப் பார்க்கும் பரவசம் அவர் நெஞ்சினில் நிரம்பிவழிந்தது.
கண்ணன் தரிசனம் சித்தித்தது. பாசங்கொண்ட இரண்டு உள்ளங்கள் அன்பிலே ിഞ്ഞുgal.
அதேசமயம் குசேலரின் உள்ளத்தில் சுரணை ஒன்றின் தாக்குதல்
"இந்தக் கண்ணன் எவ்வளவு சம்பத்துக்களுடன் வாழ்கின்றான்! இவனுக்கு நான் கையுறையாகக் கொண்டு வந்திருப்பது அவல் முடிச்சு. இங்கு அறுசுவை உண்டிகள்
ைேளயகுட்டி அருமைக்கிளி நினைவு வெளியீடு 36

மலிந்து வழிந்து கிடக்கையில், கந்தல் துணியிலே முடிந்து கிடக்கும் அவல் சுவைக்கவா போகின்றது? அவன் நட்பின் நிமித்தம் இதனை ஏற்றுக்கொண்டாலும் சூழ இருப்பவர்கள் கேவலமாக நினைக்க மாட்டார்களா? என்னைப் பற்றிக் கேவலமாக நினைத்தாலும் பாதகமில்லை. இந்தப் பரம தரித்திரனுடன் நட்புரிமை பாராட்டும் கண்ணனைப் பற்றிப் பிரபுக்கள் கேவலமாக நினைக்கப்போகிறார்கள்"
குசேலரின் உள்ளத்தில் ஊர்தி செய்யும் சுரணையைக் கண்ணனும் அறிவான். அன்பின் சுரப்பிலே அவன்முகத்தில் புன்னகைக் கொத்தொன்று சினைத்தது.
"குசேலா! நீண்ட காலம் கழித்து வெகுதூரம் நடந்து வந்திருக்கிறாய். உன் பாலிய நண்பனுக்கு என்ன கொண்டு வந்தாய்?"
குசேலர் தயக்கத்துடன் அவல் முடிச்சை மடியிலிருந்து எடுத்தார்.
“என் இல்லாள் கொஞ்சம் அவல் செய்து தந்தனள்."
"அவலா? சாப்பிட்டு எவ்வளவு காலமாகின்றது? நினைக்கவே நாக்கில் ஜலமூறுகின்றது.தா: " என மகிழ்ச்சி பெருகக் கூறி, பல நாள் உண்ணா நோன்பு
இயற்றியவனைப் போல, அவலை ஆவலுடன் சாப்பிடத் தொடங்கினான்.
தன்னையே குசேலரின் அன்பிற்கு அடிமையாக்கும் பிரகடனத்துடன் எடுத்த பிடி அவலை உண்ண ஒண்ணாது கண்ணனின் மனைவி தருத்தனள்.
"அடிமையாகத் துணிந்தீர்களே! இந்தப்பிடி அவலிலே அப்படி என்னதான் அபூர்வச் சுவை இருக்கிறது? என அவள் இரகசியமாகக் கேட்டாள். ருக்மினி உனக்கு இது அவலாகத்
தோன்றலாம். இது பக்தி கலந்தது. மந்திரம் ஏறியது. எனவே இதன் மகத்துவம் அற்புதமானது" என விளக்கிய கண்ணபிரான்குசேலரை அருள்சுரக்கப்பார்த்தான்
37--கதை கதையாம் (தேர்ந்த தமிழ்க் குறுங்கதைகள்) தொகுப்பு - சு.குணேஸ்வன்

Page 22
எஸ். ராமகிருஸ்ணன்
எஸ் ராமகிருஸ்ணன். தமிழ்நாடு. தமிழில் மிகச் சிறந்த கதைசொல்லிகளில் ஒருவர். குறுங்கதை, சிறுகதை, நாவல், கட்டுரை, விமர்சனம், நாடகம், மொழிபெயர்ப்பு, உலகஇலக்கியம், சினிமா ஆகியவற்றில் தனது ஆளுமையைச் செலுத்தி வருகிறார்.
இதுவரை 30ற்கு மேற்பட்ட நூல்கள் வெளிவந்துள்ளன. உறுபசி, நெருங்குருதி, யாமம், ஆகிய புனைவுகள் கவனத்திற்குரியன. சண்டைக்கோழி, அவன் இவன், உட்பட 10ற்கும் மேற்பட்ட திரைப்படங்களில் வசனகர்த்தாவாகப் பணியாற்றியுள்ளார். 2010ல் தாகூர் விருதினைப் பெற்றுக்கொண்ட முதல் தமிழ் எழுத்தாளரும் இவரே. 2011ம் ஆண்டிற்கான இயல் விருதினை கனடா இலக்கியத்தேட்டம் வழங்குகின்றது. நகுலன் வீட்டில் யாருமில்லை , என்ற 50 குறுங்கதைகள் கொண்ட தொகுப்பு வெளிவந்துள்ளது. சிறுமீன், காதல்மேஜை, சித்திரமீன், எழுதத்தெரிந்த புலி ஆகிய குறுங்கதைகளை அவரது இணையத்தளத்திலிருந்து தருகிறோம்
 
 

சிறுமீன்
அந்த ஊரில் ஒரு குளமிருந்தது. அதில் சிறியதும் பெரியதுமாக நூற்றுக்கணக்கான மீன்கள் வசித்தன. எங்கிருந்தோ தினமும் ஒரு கொக்கு அங்கே பறந்து வந்து மீன்களைப் பிடித்துத் திண்னத் துவங்கியது. அந்தக் கொக்கு அலகில் மீனைப் பிடித்து வைத்துக்கொண்டு கொல்வதற்கு முன்பு கருமையாக பரிகாசம் செய்வதுண்டு.
உங்களை ஏன் கொல்கிறேன் தெரியுமா. உங்களால் ஒரு நாளும் வானத்தில் பறக்க முடியாது. இந்தக் குளத்தைத் தாண்டி வெளிஉலகம் தெரியாது.காருகள், மலைகள் நகரங்கள் என எதையும் கண்டதேயில்லை. எல்லாவற்றையும் விட நீங்கள் அழுக்கை சாப்பிட்டு வளரும் அற்ப உயிர்கள். உங்களை நான் கொன்றால் கேட்பதற்கு யார் இருக்கிறார்கள். என்னை எதிர்க்க உங்களால் இயலுமா. உங்கள் வாழ்க்கைக்கு ஒரு அர்த்தமும் இல்லை அதனால்தான் உங்களைக் கொல்கிறேன். என்று கேலிசெய்தது.
இப்படி தினம் கேலியும் அவமானமும் பட்டு சாவதை நினைத்துமீன்கள் மிகவும் வருத்தம் கொண்டன.
ஒருநாள் அந்தக் கொக்கு பார்த்துக் கொண்டிருக்கும் போது ஒரு சின்னஞ்சிறு மீண்குஷ்சு ஒன்று குளத்தில் இருந்து தாவி மண்ணில் விழுந்துதுடித்துச்சாக முயன்றது.
அதைக்கண்ட கொக்கு சிறுமீனே.உனக்குச் சாவதற்கு அவ்வளவு விருப்பமா. அல்லது என்னைக் கண்டு பயமா, நீநன்றாக வளரும் வரை பிழைத்து இருக்கட்டும் என்று தானே விட்டுவைத்திருக்கிறேன், அதற்குள் என்ன அவசரம் என்று கேட்டது.
39-கதை கதையாம் (தேர்ந்த தமிழ்க் குறுங்கதைகள்) தொகுப்பு. க.குணேஸ்வன்

Page 23
ஸ்பூன்வெல்வெட் துணியில் புரண்டபடியே எரிச்சலுடன் சொன்னது
"முள்கரண்டிகள் நிம்மதியற்றவை. அவை மூன்று நாக்குகள் கொண்டிருக்கின்றன. நடந்த தையும் நடப்பதையும் நடக்க போவதையும் ஒன்றாக குழப்பிக் கொள்ள Ց6ւԼգեւJ@6]]."
அதைகேட்டு சற்றே எரிச்சலுற்றமுள்கரண்டிசொன்னது
"ஸ்பூன்கள் வெட்கமற்று மனிதர்களின் நாக்கை முத்தமிடுகின்றன. தடவி கொருக்கின்றன. முள்கரண்டிகள் ஒருபோதும் அப்படிஇருப்பதேயில்லை."
கோபமுற்ற ஸ்பூன் சொன்னது
முள் கரண்டிகள் ஒரு போதும் சூப்பின் சுவையை அறிய முடியாது. உப்பும் சக்கரையையும் ஒரு போதும் தீண்டமுடியாது. ஐஸ்கிரீமின் குளிர்ச்சியை ஒரு போதும் உணரவே முடியாது. பாவம் அர்த்தமற்ற வாழ்க்கை."
இரண்டும் முகத்தை திருப்பிக் கொண்டன.
வீட்டின் உரிமையாளன் உணவு மேஜைக்கு வந்து சேர்ந்தான். சூடான சூப்பிற்குள் ஸ்பூனை தூக்கிபோட்டான். முள்கரண்டியை ஆவி பறக்கும் இறைச்சியின் நடுவில் குத்தினான். இரண்டும் மெளனமாகின. பசி தீருமட்டும் சாப்பிட்டுவிட்டு எச்சில்பட்ட ஸ்பூனையும் முள்கரண்டிஇரண்டும் ஒன்றாக தட்டில் போட்டு எழுந்து சென்றான்.
சுத்தம் செய்யப்படுவதற்காக இரண்டும் ஒரே தண்ணீர் வாளிக்குள் போடப்பட்டன. மிகுந்த ஆவேசத்துடன் ஸ்பூனை கட்டிதழுவியபடியே முள்கரண்டிசொன்னது.
"அன்பே இந்த நிமிசத்திற்காக தான் காத்துக்கொண்டிருந்தேன்." ஸ்பூனும் முள்கரண்டியும் மாறிமாறிமுத்தமிட்டுகொண்டன.
இளையகுட்டி அருமைக்கிவிநினைவு வெளியீடு 42

சித்திரமீன்.
ஆறு வயதிருக்கும் அந்த சிறுவன் தனியே உட்கார்ந்து தனக்குதானே பேசியபடியே கலர் பென்சிலால் படம் வரைந்துகொண்டிருந்தான்.
"ஒரு வீட்டை வரையும் போது யாருமே அங்கே இருக்கிற மீன் தொட்டியை கவனிச்சி வரையுறதேயில்லை."
"மீன் தொட்டியை வரையுறது ரொம்பகஷ்டம்."
"உலகத்திலயே தண்ணியை வரையறது தான் ரொம்ப ரொம்ப கவஷ்டம். எப்படி வரைஞ்சாலும் அதுதண்ணிமாதிரியே இருக்காது."
"அந்த தண்ணிக்குள்ளே நீந்திக்கிட்டிருக்கிற மீனை வரையுறது முடியவே முடியாது. அந்த மீன் ஒரு இடத்தில நிக்கவே மாட்டேங்குது. எப்பாவது நின்னா அசைவூசிகிட்டே நிக்குது. பிறகு மீனுநினைச்சிநினைச்சி ஒடிக்கிட்டு இருக்கு."
"படத்தில வரைஞ்ச மீனு அசையுறதேயில்லை. அதை அசைக்கிறதுக்காக நான் தான் பேப்பரை ஆட்டவேண்டியிருக்குது. அப்போகூடமீன் முன்னாடிபோறதேயில்லை."
"படத்தில் வரைந்சமீன் ஏன் நீந்தமாட்டேங்குதுனு தெரியுமா அதுக்கு ஒரு மேஜிக் பிரஷ் இருக்கு.அதைவச்சிவரையறுைம். அப்போ அந்த மீனுநீந்தும்."
43--கதை கதையாம் (தேர்ந்த தமிழ்க் குறுங்கதைகள்) தொகுப்பு. க.குணேஸ்வன்

Page 24
"மீனை வரையும் போது அதோட கண்ணை வரையறது லேசில்லை. கண்ணனுக்குள்ளே என்னமோ இருக்கு. அது சுத்திகிட்டே இருக்கு. அது நம்மளை பாத்துகிட்டே இருக்கு. சிரிக்குது. மீனுக்கு நிறைய ட்ரீம்ஸ் வரும். அந்த ட்ரிம்ல அது பஸ்மேல நீந்திகிட்டு போகும். ப்ளைட் மாதிரி ஆகாசத்திலநீந்திகிட்டு இருக்கும்."
"எனக்கு வீட்டை வரையுறது பிடிக்காது."
"அதுல கடல் இருக்காது"
"மரம் இருக்காது"
“பூ இருக்காது"
"அணில் இருக்காது."
"மேகம் இருக்காது"
"சூரியன் இருக்காது."
"ஒரு பறவை கூட இருக்காது"
"ஒண்னுமே இருக்காது."
"எனக்கு எங்க வீட்டைதவிர வேற ஒண்னணுமே வரைய தெரியாது."
"ஆனாலீட்டை வரையும் போது யாருமே மீன் தொட்டியை வரையுறதேயில்லை."
தனியே உட்கார்ந்து சிறுவண் தனக்குதானே பேசியபடியே படம் வரைந்து முடித்திருந்தான்.
இளையருட்டி அருமைக்கிளிநினைவு வெளியீடு 44

எழுதத் தெரிந்த புலி
காட்டிலிருந்து பிடிபட்டு கொண்டுவரப்பட்ட புலி ஒன்று சர்க்கஸ் கூண்டிற்குள் அடைக்கப்பட்டிருந்தது. கூண்டில் அடைக்கப்பட்ட மற்ற மிருகங்களைப்போல இல்லாமல் பகலும் இரவும் அந்தப்புலி நடந்து கொண்டேயிருந்தது.
ஏன் அப்படிகூண்டிற்குள் அலைகிறது என்று எவருக்கும் தெரியவில்லை.
ஒரு நாள் எங்கிருந்தோ ஊர்ந்து வந்த நத்தையொன்று புலிக்கூண்டின் மீது உட்கார்ந்தபடியே அதை பார்த்துக் கொண்டிருந்தது. புலி ஒய்வில்லாமல் வட்டமாக சுற்றிக் கொண்டிருப்பதைக்கண்டு எதற்காக இப்படி சுற்றிக் கொண்டிருக்கிறாய் என்று கேட்டது.அதற்கு புலி பதில் சொல்லவில்லை.
உடனே நத்தை கூண்டிற்குள் அடைபட்டு கிடப்பது பயமாக இருக்கிறதா என்று கேட்டது. அதற்கு புலி நான் சுற்றிக் கொண்டிருக்கவில்லை. எழுதிக் கொண்டிருக்கிறேன் 6াd{pg.
நத்தைக்கு அது புரியவில்லை. எப்படி என்று கேட்டது. கூண்டிற்குள் அடைபட்ட பிறகு வாழ்க்கையில் எதுவும் மிச்சமிருப்பதில்லை. பூஜ்யமாகி விடுகிறோம். இப்போது நான் வெறும் பூஜ்யம் என்பதை ஒவ்வொரு முறையும் எனக்கு நானே நினைவு படுத்திக் கொள்ள வேண்டியிருக்கிறது.
இல்லாவிட்டால் இந்தக் கூண்டு பழகிப்போகும், அதன் உணவு பழகிப் போகும் வேடிக்கை பார்ப்பவர்கள் முகம் பழகிப்போகும். பிறகு நான் கூண்டுப்புலியாக சுகமாக வாழப் பழகிவிடுவேன். அது கூடாது. அது ஒரு இழிவு.
இப்போது முடக்கபட்டு நான் அடையாளமற்று போயிருக்கிறேன் என்ற உண்மை மனதில் இருந்து கொண்டேயிருந்தால் மட்டுமே விருதலையை பற்றியநினைவு வளர்ந்து கொண்டேயிருக்கும், அதற்காகவே பகலும் இரவும் வட்டமாக சுற்றி வந்தபடியே எழுதிக் கொண்டிருக்கிறேன் என்றபடி புலி நடக்க துவங்கியது.
45 கதை கதையாம் (தேர்ந்த தமிழ்க் குறுங்கதைகள்) தொகுப்பு - சு.குணேஸ்வன்

Page 25
அதைக்கேட்டநத்தை சிரித்தபடியே சொன்னது.
நல்லவேளை நத்தைகளைஎவரும்பிடித்து கூண்டில் அடைப்பதில்லை உடனே ஆத்திரமான புலி சொன்னது
நானாவது பிடிபட்டு ஒருங்கிக்கிடக்கிறேன். நீ பிறப்பிலிருந்தே கூட்டில் அடைபட்டு கிடக்கிறாய். கூண்டில் அடைக்கபடுவதுதற்காலிகம், கூண்டிற்குள்ளே பிறந்து வளர்ந்து பயந்து சாவது அற்பமானது. நத்தைகள் வெறும் ஊமை. நான் அடைபட்டு கிடந்த போதும் என் குரல் அடைக்கபடவில்லை. கேள் என் ரெளத்திரத்தை என்றபடியே புலி உறுமியது.
அந்த குரலின் ஆழத்தில் அடர்ந்தகானகம் உக்கிரமாக நடனமாடிக்கொண்டிருந்தது.
நத்தை வெளியேறும் போது சொன்னது , பிடிபட்டதை விடவும் அதை நினைத்துக் கொண்டிருப்பது தீராதவலி. பிடிபட்டதிலிருந்து மெளனமாக இருப்பதால் தான் உனக்குள் கோபம் நிரம்பியிருக்கிறது. மெளனத்தை கைக்கொள்வது எளிதானதில்லை. பல நேரங்களில் மெளனம் வாழவைக்கிறது. பல நேரம் நம்மை சாகடிக்கிறது.
புலியாக இருப்பதா, நத்தையாக இருப்பதா என்பதில் இல்லை பிரச்சனை, அதை பிடித்து அடைப்பவன், அழித்து ஒழிக்கநினைப்பவனின் அதிகாரத்தில்தானிருக்கிறது. நீயும் நானும் ஏன் நண்பா கோபம் கொள்ளவேண்டும் என்றபடியே மெதுவாக கடந்து போக துவங்கியது யோசிக்க தெரிந்த நத்தை.
இலளயகுட்டி அருமைக்கிளிநிலளவு வெளியீடு - 46

நினைவுக்குரியவர்கள் பற்றி.
திருமதி இளையகுட்டி அருமைக்கிளி
தோற்றம் - 02-03-1937 Døopa — 25-12-2011
கணவர் அமரர். மாணிக்கன் இளையகுட்டி
பிள்ளைகள் பரமளாதேவி, பரமேஸ்வரி, அருந்தவராசா,சியாமிளாதமிழ்நாடு, கனகராசா, அழகராசா (சிங்கப்பூர்), அழகேஸ்வரி, அழகராணி, நிதிராஜா, நிர்மலா
DញoចំG6 நடராசா, சோதிலிங்கம், தங்கக்கிளி, ஞானலிங்கம் தமிழ்நாடு, சிவராணி, பிறேமா, கஜேந்திரன், ஜீவராசா, ஜெயமதி
இபரப்பிள்ளைகள் நடராசா + பரிமளாதேவி - அன்பழகன், மதியழகன்,நிசாகரன் சோதிலிங்கம்+பரமேஸ்வரி - சோதீஸ்வரி, ஜெகதீஸ்வரி,காண்டீபன், ரேணுகா, பார்த்தீபன், பிரதீபன்,தீபிகா, தீபன்ராஜ் ஞானலிங்கம்+சியாமளா - மயூரா,சுமன் அருந்தவராசா+தங்கக்கிளி-ஆதவன், அரவிந்தன், அனுதரன்,ரக்சிதா
கனகராசா+சிவராணி - துவழிதன், றஜிதன், விஜிதன்,சம்சாயினி அழகராசா+பிரேமா - பிரசாந், துவாரகா கஜேந்திரன்+அழகேஸ்வரி -கருந்துாரன்,கல்யாணி,கார்த்திகா, கவித்திரா,
றோகினி, கபிலா. ஜீவராசா + அழகராணி - தனுசாந், சாயித்தியா, ஆர்த்திகா, ஆரணிகா நிதிராசா + ஜெயமதி -யுகாசா, டிலூசன்.
47-கதை கதையாம் (தேர்ந்த தமிழ்க் குறுங்கதைகள்) தொகுப்பு - சு.குணேஸ்வள்

Page 26
பூட்டப்பிள்ளைகள்
அன்பழகன்சோமு) வசந்தி - அஸ்வினி அஸ்வின்
சோதீஸ்வரி உதயகுமார் - உமாநாத்
BrLinnéléß
ஜேகதீஸ்வரி ஜெயராச - சோபித்
சகோதரர்கள் அருமைராசா, சீனியன், கமலாதேவி, பஞ்சலிங்கம் (அமரர்), பொன்னம்பலம் (அமரர்), மகேந்திரராணி.
இளையகுட்டி அருமைக்கிளி நினைவு வெளியீடு
48


Page 27


Page 28
நினைவுகள்
எனக்கு நன்றாக
ဤ၄၈လ၊(၂၂၉,ဤလ် രജ്ഞ (ബിj எங்கள் பெரியப்
எப்போதும் ତୁ।
ចិញ្ច្រានោះ
காட்டுத்திடல் எங்கள் வீடு எல்லாம் : போது பெரியம்மாவின் தலையில் கோரைப் புற்கள் நார்க்கடகத்தில் நிரம் சுருளாகச் சேர்த்துக்கட்டிய முகட்டைக் Soni. 55-ე წუწუნი
எங்கள் அம்மாவின் பரம்பரை என்றழைக்கும் அம்மாவின் பவ்வியமா ம்மாவின் குரலும் இப்போதும் என்காதி வாயுடன் எங்கள் விட்டு சுவரில் வாசித்து முடிப்பார் పళ్ల
அவரின் வாசிப்பு தேர்ந்தெடுத்த @uൺ ഉn ിഞLLഖൈഖ് சஞ்சலத்தைத் தீர்ப்பதற்கான ஒரு கரு வாசித்துவிட்டு குறுக்கும் மறுக்குமாக အံ့ငှာ၈၈ပွာ திக்குமுக்காட வைத்த டிருக்கிறோம்.
பெரியப்பாவின் மறைவும் தமிழ் គិត ពាក្យថា ឲ្យទៅវិញ ដោយ circungi. som gunung இருந்திருக்கின் பாதைகள் அதிகம்தான்
மருந்துப்பேனிய
 
 
 
 

ஞாபகம் இருக்கிறது. விவேகானந்தாகல்வி ன்னை மாலை நேரக்கல்வி பயில்வத ல் பிடித்து அழைத்துச் சென்று சேர்த்தது. கொஞ்சம் பொல்லாதவர், கோபக்காரர் உழைப்பாளியாகவே நான் அவரைக் Giful rol பெரியம்மாவும் இணை களை நாங்கள் கண்டிருக்கிறோம். மான் டி மாலை நேரம் திரும்பிச் செல்லும் விறகுக்கட்டு இருக்கும் அல்லது பசுங் பியிருக்கும் பெரியப்பா கொக்கத்தடியில் கொடிகள் இலைகுழைகளைத் தூக்கிச
பில் பெரியம்மா நல்ல பருமன். அக்கா
என்றழைக்கும் பெரிய ல் ஒலிக்கிறது. வெற்றிலைபோட்டுச் சிவந்த திருந்து அன்றைய முழுப்பத்திரிகையும்
சிப்பல்ல. தனது பிள்ளைகளிடம் 6პტექნ. ப்பவர் வாசிப்பு என வியாக இருந்திருக்கின்றது. கி