கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மரக்கொக்கு

Page 1
!
...,
 

?

Page 2

రై)9లో తలె-లి లొ ఈరాyరా Y vy تربیلا جصہ مهمة
ہاتھ تعلیہ ﴿محمسیح | 0ھ حملحorه2 رومncیلا ہوئی عملی کےسہ
மரக்கொக்கு
- சமூக நாவல்
தெணியான்

Page 3
MARAKOKKU"
A Social Novel
by
THENIYAN (C)
First Edition.
Type setting:
Design c. Page Layout:
Cover Design.
Price:
Publication:
Privated Cut:
Sales:
Theniyaham Polikandy Valvetti thurai Sri Lanka.
November 1994
Shyamala Navaratnam
K. Navam
Naren Navaratnam (Age 12)
Rs. 75
Nankavathu PARIMANAM Unie Arts (Pvt) Ltd.
Poobalasingam Book Depot.
340, Sea Street, Colombo - 11.
 

அமரர் கே. டானியல் அவர்களுக்கு இது
சமர்ப்பணம்!

Page 4
6861 – 6,9 goliae), f)(ợnoloj) soosolyosi 70,9 gognascogąĵur:9 ž961 – Ģūģiono ?1937&olo (soooooooaeg)
s@suso
IsốI -�şıyor, o jowiss(ạonsuoj) pos@ẩ)o
£Z61 – 6,9 ựsoog/ffy(østovoj) govo? Roccoth so
............Ilgosong/sĩaẤTsøųolmųooooo

பேராசிரியர் கா. சிவத்தம்பி அவர்கள் பார்வையில். மரக்கொக்கு
தெ னியானின் இந்த நாவலிலே லங்கை முற்போக்கு
இலக்கியத்தின் மூன்றாவது தலைமுறையின் எழுச்சியை அவதானிக்கலாம். யாழ்ப்பாண நிலப் பிரபுத்துவத்தின் சிதைவு எவி வாறு மனிதாயத நிலைப்பட்ட பிரச்சினைகளைத் தோற்றுவிக்கின்றது என்பதனை இந்த நாவலிற் காணலாம்.
யழிப்பாணத்தின் சமூக வரலாற்றில் மிக முக்கியமான ஒருண்மை மரக்கொக்கு மூலம் புலனாகின்றது. யாழிப்பாணத்தினி சமூக அதிகார அமைப்பில் முக்கியத்துவம் பெறும் முதல் அமிசம் சாதி அன்று. சாதிக்குள் உள்ள பகுதி எனும் கூறு ஆகும். அடிநிலைச் சாதிகள் மேலே கிளம்பிய நிலையிலேயே உயர் மட்டத்தில் அதிகாரத் தொடர்ச்சியைப் பேண, சாதியொருமை என்னும் கோட்பாட்டை முன் வைத்தனர். பிறசாதி எதிர்ப்புணர்வு என்ற நிலையை ஒதுக்கிவிட்டு நோக்கினால், சாதிக்குள்ளே வரும் பகுதிகள் தான் முக்கியம். இத்தகைய பகுதிகள் எல்லாச் சாதிகளுள்ளும் உண்டு. விஜயலட்சுமி ஒரு மட்டத்திலே தங்கள் பகுதியின் மேன்மையையும் இன்னொரு மட்டத்திலே தங்கள் சாதியின் மேன்மையையும் காக்க முனையும் வகைமுறைகள் மிக நுணுக்கமாகச் சித்திரிக்கப்பட்டுள்ளன.
சாதி மேன்மை என்ற உணர்வு சமூக அதிகாரத்துடன் சம்பந்தப்பட்டது என்பதனைத் தெணியான்நன்கு எடுத்துக் காட்டியுள்ளார்.
விஜயலட்சுமி, ஈழத்துத் தமிழிலக்கியத்திலே

Page 5
தோற்றுவிக்கப்பட்டுள்ள மிக முக்கியமான, மிக்க கவர்ச்சியுடைய பாத்திரங்களுள் ஒன்று எனத் துணிந்து கூறலாம். மார்க்ஸியத்திற் சில வேளைகளிற் பேசப்படும்
மேற்கட்டுமானத்தின் கொடுங்கோன்மை' என்பதை
விஜயலட்சுமி என்னும் இந்தப் பாத்திரத்திலே மிகச் சிறப்பாகக் காணலாம்.
விஜயலட்சுமி போன்ற மிக நுட்பமான பாத்திரங்களை உருவாக்கும் திறனுடைய தெணியான் போன்ற எழுத்தாளர்கள், தங்கள் ஆக்கங்களை ஆக்க நிலையிலேயே, உலக இலக்கியப் பிரக்ஞையுடன் படைத்தல் வேண்டும்.
முற்போக்கு எழுத்தாளர்கள் தமது சமூகக்
கடப்பாட்டுக்கியைய முற்றிலும் பிரதேச மண்ணிலேயே
காலூன்றி நிற்கின்றனர். இந்த மணி வாசனையைச் சருவ தேசியப்படுத்தும் விசாலமான இலக்கியப் பரிச்சயத்துடன் இவ்வெழுத்தாளர்கள் தொழிற்படும் பொழுதுதான், எமது எழுத்தாளர்களின் சித்திரிப்புக்கள் பொதுப்படையான புனைகதை ஆய்வில் இடம் பெறும்.
மரக்கொக்கு" அந்தச் சாத்தியப்பாடுகளைத் தன்னகத்தே கொண்டது. .
தெணியான் போன்ற எழுத்தாளர்கள் இலக்கிய சருவதேசியத்தை அறிவதினாலும், சருவதேச இலக்கியச் செல்நெறிகளை அறிவதனாலும் தமிழ்ப்புனைகதைகளின் உலகப் பொதுவான வளர்ச்சிக்கு நிச்சயமாக உதவலாம்.
கார்த்திகேசு சிவத்தம்பி தமிழ்த்துறை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் யாழ்ப்பாணம், இலங்கை, 31-03-1982

இவளோடு பேச முன்னர்.
இவள் .மரக்கொக்கு! வாழ்வின் இனிய வசந்தங்களை இவளுந்தான்நீண்ட காலம் நெஞ்சிலே சுமந்திருந்தாள்
தனக்குள்ளே தான் ஓர் அரசி என்னும் நெஞ்சு நிறைந்த நினைவுகளுடனர், தனக்கெனத்தானே உருவாக்கிக்கொண்ட ஒரு சாம்பிராச்சியத்தின் தலைவியாக இவள் விளங்கினாள். இவளின் தனிவீடு இவளது ஆட்சியதிகாரங்கள் கோலோச்சும் கோட்டையாக இருந்து வந்தது. அந்தக் கோட்டையினுள்ளே இறுமாந்து தலை நிமிர்ந்து உலாவிக்கொண்டிருப்பதுபோல வெளியே இவள் தோற்றம் காட்டினாள் உள்ளத்தினுள்ளே, நிறைவேறாத கனவுகள் யாவும் தூரத்துத் தாரகைகளாக எப்பொழுதும் கணி சிமிட்டிக்கொண்டிருந்தன. அண்ணாந்து வானத்தை வெறித்த வணிணம் நெடுமூச்செறியும் இளமை உணர்வுகளினால் உள்ளம் கருகிக்கொண்டிருந்தது. கல்யாணம் ஆகாதவள். அதனால் வயது என்ன ஆனாலும், கன்னிப்பெண். இவளை இன்னும் எத்தனை காலம் ஏக்கத்துடனும் தவிப்புடனும் வாழ்ந்துகொண்டிருக்கும்படி நான் விட்டுவைக்கலாம்!
இவளுக்குத் தங்கைகளாக வந்து பிறந்த சிலர் தேடிவந்த சாதகங்களுடன் இணங்கிப் பொருந்திப் போனதால், இன்று வீட்டுச் சிறையிலிருந்து வெளிவந்துவிட்டார்கள். தாங்கள் வெளிவரவேண்டும் என்பதற்காகவே வெளியீட்டு நாயகர்களிடம் அந்தரங்கத்திற் சோரம் போனவர்கள், அவர்கள் இவள் எப்பொழுதும் எச்சரிக்கையானவள். அவர்களுக்கு நேர்ந்த விபத்து, இவளை மேலும் விழிப்படையச் செய்தது. தன்னை இழந்து போவதற்கு ஒரு பொழுதும் இவள் தயாராக இல்லாதவள். அதனால் நீண்ட பதினான்கு

Page 6
ஆண்டுகள் இவள் காத்திருக்க நேர்ந்தது. இவளை நான் காத்திருக்க வைத்துவிட்டேன். ஆனால் இவளின் காத்திருப்பு குமர் முத்திக் குரங்கான கதை’ ஆக முடியவில்லை. இவள் மீது நான் கொண்டுள்ள மாறாத கரிசனையினால் இப்பொழுது புதிய அழகும் ஆளுமையும் ததும்பும் வாலைப் படைப்பாக வளர்ந்து நிற்கின்றாள்.
இவளின் வாழ்வுக்கூடாக இற்றைக்கு இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முற்பட்ட யாழ்ப்பாணச் சமூகத்தை அதன் மூலவேருடன் கண்டுகொள்ளலாம். அக்காலகட்டத்துச் சமூக பரிணாமத்துக்கான முன் தொடர்ச்சியாக வளர்ந்துள்ள ஒரு வாழ்வுச் சங்கிலியையும் ஓரளவு தரிசிக்கலாம்.
பாரம்பரியப் பெருமைகள் என்னும் 'வெண் கொற்றக் குடையின் கீழ், சாதி அகங்காரம் என்னும் சிம்மாசனத்தில் வீற்றிருக்கின்றவள். இவள் குடும்ப உறவினர்களாகத் தோன்றியவர்கள், இவளிலிருந்து மாறுபட்ட சிந்தனைப் போக்கும், குணவியல்புகளும் உடையவர்களாகக் குடும்பத்துக்குள் வளைய வந்து இணைந்து நிற்கின்றார்கள் இவர்கள் அனைவரும் இந்தச் சமூகத்தின் வகை மாதிரியான மனிதர்கள். இவர்களது சிந்தனைகள் குணவியல்புகள், நடத்தைக் கோலங்கள், உணர்ச்சி வெளிப்பாடுகள் என்பவைகள் மூலம் இவர்களது வகைமாதிரி இயல்பினைக் கண்டுகொள்ளலாம்.
கதை என்பது எப்பொழுதும் எனக்கு மிக முக்கியமான ஒரு அம்சமல்ல. கதை ஒரு நூல்; அந்த மெல்லிய இழையைப் பற்றிக்கொணர்டு எனது கோணத்தில் யதார்த்தமான ஒரு சமூகத்தைச் சுட்டிக் காட்டவே நான் விழைகின்றேனர். அதனால எனது விருப்பு வெறுப்புக்களுக்கிணங்க இவர்கள் நடத்தைகளை நான் தீர்மானிக்கவுமில்லை; கட்டும்படுத்தவுமில்லை. இயல்பாகவே இவர்களை நான் விட்டு வைத்திருக்கின்றேன்.

இவர்களது நடத்தைகளுக்கு எந்த வகையிலும் நான் பொறுப்பாளி ஆகமாட்டேன். இவர்கள், இப்படித்தான்!
என் மீது மிகுந்த பற்றுதலும் நம்பிக்கையும் கொண்டு வாழ்ந்த, மக்கள் எழுத்தாளர் அமரர் கே. டானியல் அவர்களின் பாதங்களில் இவள் சிரந்தாழ்த்தி சமர்ப்பணமாக நிற்பதற்கு நானே பொறுப்பாளி ஆவேன். குலப் பெருமை, குடும்ப கெளரவம், சாதி அகம்பாவம், சைவ ஆசாரம் என்பவைகளே உயிரும் எலும்பும் தசையும் குருதியுமாகக் கொண்ட இவளே, இந்த இழி குணங்களுக்கு எதிராகத் தமது இறுதி மூச்சுள்ளவரை பேனா பிடித்த டானியல் அவர்களின் பாதங்களிற் பணிந்துநிற்பதற்கு மிகவும் பொருத்தமானவள் இவளைக் கொண்டுவந்து பணிந்து நிற்குமாறு நிறுத்தி வைப்பதில் நான் பெருமைப்படுகின்றேன். டானியல் அவர்கள் என்னிடத்தில் எதனை எதிர்பார்த்தாரோ, அதனை இவளுக்கூடாக நான் செய்திருக்கின்றேன் என்பது எனது நம்பிக்கை. மேலும் சூழ்நிலைகள் கனிந்து வரும்பொழுது, சமூக நீதியை நிறுவுவதற்கான, டானியல் அவர்களின் இலக்கிணைநிச்சயமாகத் தொடருவேன். இந்த அடிப்படை உணர்மையை உணர முடியாதவர்களுக்காக நான் அநுதாபப்படாமல் இருப்பதற்கு இயலவில்லை. டானியல் அவர்களின் விசுவாசிகள் என்று சொல்லிக்கொண்டு வாரிசு’ தேடி அலைந்துகொண்டிருப்பதை விட்டு, அவர்களே டானியல் அவர்களின் இலக்கினைத் தொடரலாம். நாவல் எழுதுவதென்பது மேடையேறிநாட்டார்பாடல்பாடுவதனை விடவும் எளிதானது தான் என்ற உண்மை அப்பொழுது புரிந்துவிடும்/இவள் எனது நோக்கிலி டானியல் அவர்களின் இலட்சியத்தைத் தொடருவதற்கு மிகவும் பொருத்தமானவள்
எனது நட்புக்கும் மதிப்புக்கும் உரிய பேராசிரியர் கா. சிவத்தம்பி அவர்கள் 1983ல் இவளுக்கென்றொரு முன்னுரைதந்திருந்தார். "பொற்சிறையில் வாடும் புனிதர்கள்"

Page 7
1989ல் பேராசிரியரின் அறிமுகத்துடன் வெளிவந்தார்கள் அதனால் இவளுக்கு வழங்கிய முன்னுரையின் ஒரு பகுதி மாத்திரம் இவளுடன் இணைந்து இன்று வெளிவருகின்றது.
இவளைப் படி எடுக்கும் வேலையினை எனது அன்புக்கு உரியவர்களான மு. அநாதரட்சகன், மா. சிலம்புச்செல்வி, பா. மணிவண்ணன் ஆகியோர் செய்து உதவினார்கள். ஒருசமயம், தமிழ் நாட்டில் கை தவறிப்போக இருந்த இவளை மீட்டெடுத்துத் திரும்பவும் எண்ணிடத்தில் சேர்த்தவர், எனது தம்பியின் மனைவி சியாமளா நவரத்தினம். இவள் இன்று வெளிவருவதில் அதீத அக்கறை காட்டி முழுப் பொறுப்பினையும் எடுத்துக்கொண்டிருக்கும் இருவருள் அவர் ஒருவர்; மற்றவர், நான்காவது பரிமாணம்' ஆசிரியரான எனது தம்பி க. நவரத்தினம் (க. நவம்) அட்டைப் படத்தை அழுகுற வரைந்தவர் எமது சின்ன மகன் நரேன் நவரத்தினமீ. இவர்கள் எலி லோரும எனது நன்றிக்குரியவர்கள்.
இனி நீங்கள் இவளோடு பேசுங்கள். பின்னர் எனக்கெழுதுங்கள்
தெணியான் தெணியகம்' பொலிகண்டி வல்வெட்டித்துறை இலங்கை, 13. 06, 94.

நெற்றியில் வெண்ணிறு பளிச்சென்று துலங்க, மீனலோசனி பூசை அறைக்குள் இருந்து வெளியே வந்தாள். அவள் அணிந்துகொண்டிருக்கும் ஊதாநிறப் பாவாடை சட்டைகள் கலைந்து கசங்கிக் கிடக்கின்றன. கடந்த இரவு படுக்கைக்குப் போகும்பொழுது அணிந்திருந்த உடைகளை அவள் இன்னும் மாற்றிக்கொள்ளவில்லை. அவள் கூந்தலை வாரி இன்னும் ஒழுங்காகச் சடை போட்டுக்கொள்ளவுமில்லை. அது ஒழுங்கின்றிச் சிலும்பி நெற்றியிலும், அதுகளிலும் விழுந்து கிடக்கின்றது.
ஆனால் குழந்தைக் கனவுகள் தூங்கும் அவள் நீலநயனங்கள் இந்த வீட்டினுள்ளே சுழன்று சுழன்று வருகின்றன. ஆர்வம் அந்த விழிகளில் அடங்காது சுடருகின்றது. அவள் மெல்ல நடந்துவந்து தனது கதிரைமீது அமர்ந்து கொள்ளுகின்றாள். ஒரு கால் துளி உடைந்துபோன அந்த முடக்கதிரை படபடத்து ஆடி, பின்னர் தன்னைச் சுதாகரித்து அவளைத் தாங்கிக்கொண்டு நிற்கின்றது. அந்தக் கதிரையினருகே பொருத்துப் பலகை விரிந்துபோன பழைய மேசை ஒன்று, வீட்டின் சுவர் சரிந்து கீழே விழுந்துவிடாதவாறு அணிடை கொடுக்கப்பட்டிருப்பது போல நெருக்கமாகப் போடப்பட்டிருக்கின்றது. அதன்மேல் பள்ளிப்புத்தகங்கள் சில, நேர்த்தியாக அடுக்கி வைக்கப்பட்டிருக்கின்றன.
இந்த வீட்டினுள் புகைமூட்டம் போல இளங்காலைப் பொழுதின் மெல்லிய இருள் இன்னும் கலைந்துபோகாது கவிந்து கிடக்கின்றது. - அவள் கவனம் பள்ளிப் புத்தகங்களின் மேல் இன்னுமே திரும்பவில்லை.
மலர்ந்து விகஸிக்கும் அவள் முகத்தில் நட்சத்திரப் பூக்களாக விழிகள் துருதுருவென ஜூவாலித்துக் கொண்டிருக்கின்றன. அந்த விழிகளில் ஒரு சொப்பன சுகம் இப்பொழுது மிதந்துகொண்டிருக்கின்றது. அவள் பள்ளிக்கு இன்று விடுமுறை நாள் பள்ளி நாட்களைப் போலவே தாமதமின்றிபடுக்கையைவிட்டு இன்றும் அவள் எழுந்துவிட்டாள் பள்ளிப்பாடங்களைப்படிக்கவேண்டுமென்ற விருப்பம் அவள்மனதிலுண்டு. ஆனால் அது முடியவில்லை. விடுமுறை நாட்கள் என்றால் மனதில் ஒரே உற்சாகம். நிர்ப்பந்தம் எதுவுமில்லாமல் அன்று படுக்கையிலிருந்து எழுந்துவிடமுடிகின்றது. இந்த உற்காசமும், ஆர்வமும் பள்ளிப் பாடங்களைப் படிப்பதில் அவளுக்கு இருப்பதில்லை.
11.

Page 8
மரக்கொக்கு
இளங்காலைப்பொழுது மனதுக்கு எவ்வளவு குதூகலமானது! ரம்மியமானது!
அவள் விழிகள் இமைப்பதற்கு இப்பொழுது மறந்துகிடக்கின்றன. கதிரவனின் தங்கநிறமான ஒளிக்கதிர்கள் வீட்டின் கனத்த சுவர் வெடிப்புகளுக்கூடாக உள்ளே புகுந்து, இருளைத் துளைத்துச் சென்று எதிர்ச் சுவரில் தங்கக் காசுகளாகப் பதிந்துகிடக்கின்றன.
அவள் விழிகளும் அந்த நாணயங்களின் கொள்ளை அழகை நயந்து தங்கக் காசுகள் போல ஜொலிக்கின்றன.
எத்தனை விடுமுறை தினங்களில் அவள் இந்தக் காட்சிகளைக் கண்டு அநுபவித்திருக்கின்றாள் ஒவ்வொரு அதிகாலைப் பொழுதும் புத்தமிபுதிய எழிற்கோலங்களைத் தினமும் அவள் உள்ளத்தில் மலர்வித்துக்கொண்டுதான் இருக்கின்றன. அந்தக் காட்சிகள் அவள் உள்ளத்தில் எழுப்பும் கனவுகள், கற்பனைகளில் அந்தப் பிஞ்சு மனசு பிரமித்துப் போகாத நாட்களில்லை.
தங்கப் பாளங்களை உருக்கி எடுத்து தங்கக் கம்பிகளாக வார்த்து, தங்கக் காசுகளாக வெட்டிச் சொரிவது போல ஓர் எண்ணம் அவள் மனதில் விரிகின்றது. இந்தத் தங்கக் காசுகள் தன்னிடமிருந்தால். "கழுத்தில் ஒரு தங்கச் சங்கிலி போடுவேன். அதன் நடுவில் தங்கக் காசொன்று கோத்திருப்பேன். கைகளில் பளபளக்கும் வளையல்கள். காதுகளில் பெரிய ஜிப்சிகள், விரல்களில்லெல்லாம் மோதிரங்கள்."
அவள் நெஞ்சிலிருந்து ஏக்கப் பெருமூச்சொன்றுமுட்டிக்கொண்டு வெளிவருகின்றது. மனதில் எழும் ஆசைகளை அடக்கிக்கொண்டு கைக்கெட்டிய தூரத்தில் தோன்றும் தங்கக் கம்பிகளை நோக்குகின்றாள். அவை தகதகத்து ஒளிர்கின்றன. சுவரில் பதிந்து கிடக்கும் தங்கக் காசுகள் கணி சிமிட்டிச் சிரிக்கின்றன. எல்லாம் எனக்கே சொந்தம்' என்ற எண்ணம் திடீரென மனதில் வந்து உதிக்கின்றது. தங்கக் கம்பிகளைப் பற்றிப் பிடிக்க வேண்டும், தங்கக் காசுகள் கலகலக்க அள்ளி அள்ளிச் சொரிய வேண்டும்' என்னும் ஆவல் உள்ளத்தில் கிளர்ந்தெழுகின்றது.
இருக்கையில் தொடர்ந்து அமர்ந்திருக்க இயலவில்லை. தங்கக் கம்பிகளை நோக்கி கால்கள் மெல்ல நகருகின்றன. கரங்களைக் கோத்து மேலே தூக்கிப் பிடித்து, அதனூடே தங்கக் கம்பிகள் நீண்டு செல்வதைக் கண்டு வியக்கின்றாள். அந்தக் கம்பிகளைத் தனது கரங்களுக்குள் அடக்கிக்கொண்டுவிட்டதாக இப்பொழுது அவள்மனதில் ஒரு எக்களிப்பு
12 தெணியான்

மரக்கொக்கு
பாதங்கள் தம் நிலை மறந்து பரதம் பயில்கின்றன.
சற்று நேரத்தின் பின்பு அவள் கவனம் எதிர்ப்புறத்துச் சுவர் நோக்கித் திரும்புகின்றது. சுவரில் பதிந்த வட்டவட்டத் தங்கக் காசுகள் பளபளத்து மின்னிக்கொண்டிருக்கின்றன. சுவர் அருகே சென்று கரங்களை விரித்து அதன்மீது வைக்கின்றார். தங்கக் காசுகள் அவள் கரங்களுக்குள்ளே வந்து விழுந்து கலகலக்கின்றன. இரு கரங்களினாலும் தங்கக் காசுகளை அள்ளி அள்ளிக் குவிக்கிறாள். தொடர்ந்து சிறிது நேரம் தங்கக் காசுகள் அள்ளிக் குவிக்கப்படுகின்றன. அவள் அள்ளிக் குவிக்கக் குவிக்கக் காசுகள் மறைந்து கொணடிருககின்றன. அவள் மனதுக்கிப் போது சலிப்புணர்டாகிவிடுகின்றது. அது இன்னொரு திசையில் மெல்லத் திரும்புகின்றது.
நெருக்கமாகச் சுவர்மீது சாய்ந்து நின்றவண்ணம் விழிகளை அகலத் திறந்து வைத்துக்கொண்டு எதிர்த்திசையிலிருந்து நீண்டு வரும் தங்கக் கம்பிகளை அந்த விழிகளுக்குள் பாய்ச்சுகின்றாள். விழிகள் மருண்டு மருண்டு மூடித்திறக்கின்றன. விழிகளை வெட்டிவெட்டித் திறந்த வண்ணம் அவள் கலகலவென்று சிரித்துத் துள்ளிக் குதிக்கின்றாள்.
விழிகளில் இருள் திரை விரிந்துகொண்டு வருகின்றது. அது கொஞ்சங் கொஞ்சமாகத் தடித்து பார்வை மங்கிப்போகின்றது. இப்பொழுது எங்கும் இருள்; ஒரே இருள்; அவள் பார்வையைத் தொலைத்துவிட்ட மை இருள். இது அவளுக்குப் புதிய அநுபவம். கணிகள் இல்லாது போனால். அது எப்படி இருக்கும்? கணிகள் இருந்தும் காணத் தவறிப்போகும் காட்சிகள் எத்தனை விழி இருந்தும் குருடுகள் இப்பொழுது தானும் அப்படித்தான் என்று நினைக்க, கிண்கிணிச் சிரிப்பு மீண்டும் பெருகி வழிகின்றது. என்றுமில்லாத இந்த அநுபவப்புதுமையில் மனம் பூரித்துப் போகின்றது.
இருள் எண்பது கருமைதானே! கருமையும் ஒரு அழகுதான் என்ற இன்னொரு நினைப்பு அவள் நெஞ்சில் எழுகின்றது. அது பள்ளியில் படித்த பூரீராமனின் அழகு - அவனது கரியநிற மேனியின் அழகு பற்றியது. ஐயோ! அவன் அழகென்பதோர் அழியா அழகுடையான்" என ஆசிரியை இராமனை நேரில் கண்டவள் போல ரசித்துச் சொன்ன கருமையின் அழகையும் அவள் நினைத்துப் பார்க்கின்றான். இந்த ஆழகில் தோய்ந்து குடைந்து குடைந்து திளைக்கவேண்டும்போல அவள் மனதில் ஓர் ஆவல் அரும்புகின்றது. கைகளை வீசி நீரைக் குடைவதுபோல் இருளைத்
தெணியான் 13

Page 9
மரக்கொக்கு துழாவிப் பார்க்கின்றாள்.
இன்னும் அவள் பார்வை தெளிவாகவில்லை. அவள் ஆர்வம் வேறொரு விளையாட்டாக உருமாறுகின்றது. இருளிலே பொருள்களைத் தொட்டுத் தடவி இனங் காண்பதுதான் அந்த விளையாட்டு கையை நீட்டி கைக்கெட்டியதைத் தொட்டுப் பார்க்கின்றாள். -
இது. சுவர்"
- அங்கிருந்து மெல்ல நகருகின்றாள்.
இது. மேசை, இது . கதிரை. இது . புத்தகம்"
அப்பால் நகருகின்றாள்.
இது. தூணி"
மீண்டும் நகருகின்றாள்.
இ.து.?
மீனா. குரல் கடுமையாக ஒலிக்கின்றது.
9/LCLOT... "படிக்கிற நேரம் என்ன விளையாட்டு வரவரச் சின்னப் பிள்ளை மாதிரி. ஹும். நீயும் இந்த வீட்டிலை மூலையிலை குந்திற வயது வந்திட்டுது."
வார்த்தைகளில் சினம் தெறிக்கின்றது.
அவளுக்கு உள்ளம் அதிர்ந்துபோகின்றது.
அம்மா எப்போதும் இப்படித்தான். இருந்தாற்போல காரணமின்றிச் சிடுசிடுப்பாள். பள்ளிப் பாடங்களைப் படிக்கவில்லை எண்பதற்காகதத்தான் இப்படிக் கோவித்துக்கொள்ளுகின்றாளா! அப்படியானால் ஏதேதோ எல்லாம் சொல்லுகின்றாளே! அது என்ன? அம்மா சொன்ன வார்த்தைகளை அவளுக்கு முழுமையாகப் புரிந்துகொள்ள முடியவில்லை. அம்மாவுக்குக் கண்ணில்லை. அம்மாவுக்கு மாத்திரமல்ல, இந்த வீட்டில் யாருக்குமே கண்ணில்லை. இந்த அழகை. தங்கக் கம்பிகள். தங்கக் காசுகளின் அழகைக் கண்டுகொள்ள முடியவில்லை. கணி இருந்தும் குருடுகள் எண்பது இவர்கள் தான்.
அவள் கணிகளைக் கசக்கி விட்டுக்கொண்டு வெட்டி வெட்டி விழிக்கின்றாள். பார்வையில் இப்போதும் புகை படிந்து கிடக்கின்றது. அம்மா அங்கிருந்து போய்விட்டாள் என்பதை அவள் உணர்ந்து கொள்ளுகின்றாள்.
அம்மா இந்த வீட்டின் வெடித்த சுவர்களைப் பார்த்துப் பெருமூச்சு
14 தெணியான்

மரக்கொக்கு
விட்டுக்கொண்டு போகின்றாள் என்பது அவளுக்குத் தெரியாது.
அவள் தொட்டுப்பார்த்துக்கொண்டது அவளுடைய அம்மாவின் கரமாக இருந்துவிட்டது அவளுக்கு அதிர்ஷடந்தான். அது விஜயா சித்தியின் கரமாக இருந்திருந்தால்.?
நினைத்துப் பார்க்கவே நெஞ்சு துணுக்குறுகின்றது. இப்பொழுது வீட்டுக்குள்ளே எரிமலை ஒன்று வெடித்துபூகம்பம் உருவாகியிருக்கும்.
விடுமுறை நாட்களில் வீட்டில் அவள் விளையாடுவதை அம்மா கண்டிக்கமாட்டாள். காலை நேரத்து இந்த விளையாட்டுக்களைத்தான் அம்மா எப்போதும் வெறுக்கின்றாள். ஆனால், அவளுக்கு அப்படி இல்லையே! அவள் மனசுக்கு ரொம்பவும் பிடிக்கிறது. உள்ளம் தோய்ந்து தன்னை மறந்துநிற்கச் செய்கின்றது இந்த விளையாட்டுத்தான்.இந்த விளையாட்டுக்கு இன்னொரு துணை வேண்டாம். தனித்து நிற்கலாம். அவள் மனம் நாடினாலும் இன்னொரு துணைக்கு எங்கே போவது! அவளுடன் சேர்ந்து விளையாடுவதற்கு இந்த வீட்டுக்கு யார் வரப்போகின்றார்கள்!
பள்ளிவிடுமுறை நாட்கள், மனதில் தங்க ஓடைகள் தகதகத்தோடும் இனிய நாட்கள்!
வீட்டினுள் கவிந்திருந்த இருள் சிறிது சிறிதாக இப்போது கலைந்து போய்விட்டது.தங்கக் கம்பிகளும், தங்கக் காசுகளும் தொலைந்து போய்விட்டன. அவை தொலைந்து போனதில் அவள் மனதுக்கு ஒரே சலிப்பு விரைந்து வந்து கதிரைமீது தொப்பென்று அமர்ந்து கொள்ளுகின்றாள். அந்த முடக் கதிரை தடதடத்துத் தளம்பி பின்னர் நிதானித்துக்கொண்டு ஒருவாறு அவளைத் தாங்கி நிற்கின்றது.
பள்ளிப் பாடத்தில் மனம் பட்டுக்கொள்ளவில்லை. இந்த வீட்டுக்குள்ளேயே அது அலையாக அலைகின்றது. வித்தியாசமான ஒரு வீடு இது. சுற்றிவர நான்கு பக்கங்களிலும் அறைகள்; நட்ட நடுவில் ஒரு முற்றம். முற்றத்துக்கும் அறைகளுக்கும் இடையில் அகலமான விறாந்தைகள் விறாந்தைகளின் ஓரத்தில் முற்றியமுதிரையில் கடைந்தெடுத்த வளுவளுப்பானதுரணர்கள்; தூண்களின் அடியிலும் தலையிலும் கவினுறச் செதுக்கிய மலர்களும் இலைகளும் பழமையான இந்த வீடு சரிந்து கீழே விழுந்துவிடாதவண்ணம் தாங்கிப்பிடித்துக்கொண்டு நிற்கின்றவை போலத் தூண்கள் நிமிர்ந்து கம்பீரமாக நிற்கின்றன. விறாந்தைகளுக்குப் பின்னே சுற்றிவர மொத்தம் பதினொரு அறைகள் அவைகளில் சில இன்று
தெணியான் 15

Page 10
மரக்கொக்கு
பாவனைக்குப் பயன்படாது பாழடைந்து கிடக்கின்றன. இரண்டொரு அறைகளின் கனத்த கதவுகள் கழன்று வாயில்கள் ஆவெனத் திறந்து கிடக்கின்றன. கிழக்குத் திக்கிலுள்ள நடுஅறை எப்பொழுதும் பூட்டியே கிடக்கின்றது. அதன் கதவில் சிறிய அளவிலான ஒரு துவாரம் இப்பொழுதும் காணப்படுகின்றது. அந்த அறையைக் காசு அறை' என்று இப்பொழுதும் வீட்டில் சொல்லிக்கொள்ளுகின்றார்கள் வடக்குப் புறமாக இருக்கும் பூசை அறையும், அதனை அடுத்துள்ள அறையும் மேற்கில் இரண்டு அறைகளும் மாத்திரம் இப்பொழுதும் பாவனைக்குரியவைகளாக இருந்துவருகின்றன. மேற்குப் புறமாக ஒடுக்கமான ஒரு வாயில் இந்த வீட்டின் பிரதான வாயில், வடக்கேயுள்ள இரு அறைகளுக்கும் இடையே அமைந்திருக்கிறது. அந்த வாயிலுடன் இணைந்து வெளியே நீண்டு கிடந்தது உயரமான ஒரு சவுக்கண்டி
யாழ்ப்பாணச் சமூகத்தின் சாதி வரண்முறைகளைக் கட்டிக் காக்கும் இந்த நாற்சார் வீட்டின் சுவர்கள் ஆங்காங்கே வெடித்து சிதிலம் அடைந்து கிடக்கின்றன. சுவர்களில் சுண்ணாம்புக் காறைகள் படை படையாகக் கழன்று அம்மைத் தழும்புகளாகத் தோன்றுகின்றன. கூரையில் ஆங்காங்கே ஓடுகள் பிரிந்து, சிதைந்து சிதறிக் கிடக்கின்றது. கூரைகளிலிருந்து வடிந்த மழைநீரினால் கரும் பச்சை வண்ணப்பாசி சுவர்களில் படிந்து கிடக்கின்றது. புழக்கத்துக்குத் தகுந்ததல்லவெனக் கைவிடப்பட்ட அறைச் சுவர் வெடிப்புகளில் ஆல், அரசு முளைத்து வேர் ஊன்றி சுயாதீனமாக வெளியே தலை நீட்டிக்கொண்டு நிற்கின்றன. வீட்டினுள்ளே அங்குமிங்கும் பாளம் பாளமாகத் தளம் வெடித்து கற்கள் பெயர்ந்து குண்டும் குழியுமாகக் கிடக்கின்றது.இந்த வீட்டின்நிலைமையைத் தமக்குச் சாதகமாக்கிக்கொண்டு பல்லி, ஓணான், அரணை,பூச்சிபுழுக்கள் போன்ற ஜீவராசிகள் எதேச்சையாக இங்கு சஞ்சாரம் செய்துகொண்டிருக்கின்றன. 扈、 இந்த வீடு ஏன் இப்படி இருக்கின்றது? இது போன்ற வீடுகள் வேறும் இருக்கின்றனவா? மனதில் எழுந்த இந்த வினாக்களுக்கான விடைகள் அவளுக்குத் தெளிவாகவில்லை. வீட்டுக்குள் சுழன்று சுழன்று வட்டமிட்டுக்கொண்டிருக்கும் அவள்மனதில் மீண்டும் அம்மா வருகின்றாள் பள்ளிப் பாடங்களைப் படிக்காமல் இன்னும் சும்மா இருப்பது கண்டால் அவள் சினந்து கண்டிக்கப்போகின்றாளே என்ற எண்ணம் மனதில் எழுகின்றது.
பாடப் புத்தகமொன்றை அநிச்சையாகக் கையில் எடுத்துக்
16 தெணியான்

மரக்கொக்கு
கொள்ளுகின்றாள். புத்தகம் அவள் நெஞ்சு போலப் பாரமாகக் கணக்கின்றது. மனமீ பள்ளிப் பாடத்தில் ஒன்றாது எங்கெங்கோ அலை பாய்ந்துகொண்டிருக்கின்றது.
விஜயா சித்தியைத் தேடிக்கொண்டு போய்விட்டால் இங்கே குந்தி இருந்து பாடம் படிக்கவேண்டியநிர்ப்பந்தம் இப்போது இல்லாது போய்விடும். புத்தகத்தைக் கையில் எடுத்துக்கொண்டு போய் அவளைப் பார்த்து பல நாட்களாகிவிட்டன. இனிமேலும் இப்படியே நாட்களைக் கடத்திக் கொண்டிருந்தால். நினைக்கவே உடல் நடுங்குகின்றது. அவளைத் தேடிக்கொண்டுபோய், அவள்முன் உட்கார்ந்திருப்பதே ஒரு தண்டனைதான் என்ன செய்வது! அதைச் சகித்துக்கொள்ளவேண்டியது தான்.
அவள் இப்பொழுது வீட்டின் முன் கூடத்துக்குள்ளே அமர்ந்திருப்பாள்.
அந்த வீட்டின் பாரம்பரியமான பழைய சவுக்கண்டியை இடித்துத் தள்ளிவிட்டு, கால மாற்றத்துக்கேற்றவண்ணம் நவீன கூடத்தை உருவாகிக்கிக்கொண்டவள் அவள் தான். ஆனால், கால நீரோட்டத்தில் கலந்து தன்னையும் சிறிதளவேனும் மாற்றிக்கொள்ள வேண்டுமென்னும் எண்ணம் இம்மியும் இல்லாதவளும் அவள் தான்.
மனித ஜீவிதத்தில் ஐந்து தலைமுறைகள் என்பது கணப்பொழுதில் வெட்டித்தெறிக்கும் சாதாரண ஒரு மின்னல் போன்றதல்ல. அந்தக் காலம் முதல்ாக ஆண்டு அநுபவித்து வந்திருக்கும் ஒரு பரம்பரையின் வழிவந்த வாரிசாக இன்னும் இருந்துகொண்டு இருப்பவள் தான் ஒருத்திமாத்திரந்தான் என்னும் எண்ணத்துடன் அவள் இன்னும் இறுமாந்திருக்கின்றாள்ஆட்சி அதிகாரங்களுடன் அந்தப் பரம்பரை வாழ்ந்திருந்ததன் வரலாற்றுச் சின்னமாக இன்று எஞ்சியிருப்பது இந்த வீடு ஒன்றே!
அவள் இதை ஒருபோதும் ஒப்புக்கொள்ளப் போவதில்லை. தன் மனதில் அவள் உறுதியாக நம்புகின்றாள் தான் ஒருத்தி மாத்திரமே அந்தப் பரம்பரையின் மாசுமறுவற்ற வாரிசாக இன்னமும் வழிந்துகொண்டிருப்பதாக அவள் அப்பா சொல்லுவாராம், நீ ஆணாகப் பிறந்திருக்க வேண்டியவள்! பெண்ணாகவந்து பிறந்துவிட்டாய்! நீதான் எண்னைப் போல இருக்கிறாய்! நீ அசல் அப்பா" தந்தையின் நற்சான்று மொழிகளை இன்னும் அவள் இடையிடையே நினைவுகூர்ந்து பெருமைப் பட்டுக்கொண்டே இருக்கின்றாள்.
மீனலோசினிபுத்தகம் ஒன்றைக் கையில் சுமந்தவண்ணம்பூனை
தெணியான் - 17

Page 11
மரக்கொக்கு
போலப் பதுங்கி வந்து கூடத்துக்குள்ளே அடியெடுத்து வைக்கின்றாள்
விஜயலட்சுமிக்கு ஆதர்சமான அந்தக் கூடம், அதை அண்டிய முன்பகுதி, அந்த வீட்டுக்குச் சற்றேனும் பொருந்தி வராத ஓர் இணைப்பு. அங்கிருந்து வடக்கு நோக்கிப்பார்வையை வீசினால் நிர்மலமான நீலவானம் கடலோடு தழுவி விகற்பமின்றி இரண்டும் ஒன்றான சங்கமத்தில் பூமியை மூடி மேல்விதானமிட்டிருக்கும் அற்புதக் காட்சி கண்களுக்குத் தோன்றும். அந்த நீலவிதானச் சேலைக்கு வெண்பட்டுக் கரை இட்டதுபோல ஒரு கையளவு அகலத்தில் வெணி மணற் பரப்பு கடற்கரை ஓரமாக நீண்டு கிடக்கும். வெண் பட்டுக்கரை விளிம்பில் கரும் பட்டு நூலொன்று இழைந்து செல்வது போல அந்த மணற் பரப்பின் மேல் தார் போட்ட பிரதான வீதி நீண்டு செல்லும், கடலுக்கு எதிர்ப் புறத்தில் வீதியோரமாக, கரும்பாசி படர்ந்து சிதைந்துகிடக்கும் வீட்டு மதில் தென்படும். சுண்ணக் கற்கள் பெயர்ந்து விழுந்துபோன மதிலின் ஒறுவாய்களில் காரை முட்கள், இலந்தை முட்கள் இட்டு நிரப்பி காவல் செய்யப்பட்டுள்ளது கண்களுக்குட் குத்தும். மதிலின் மையப் பகுதியில் அமைந்திருக்கும் வெளி வாயிலில் பக்கத்துக்கொன்றாக நிறுத்தி வைக்கப்பெற்றிருந்த தனிக் கற்களினாலான தூண்களில் ஒன்று உட்பக்கமாகச் சரிந்து நிலத்தில் வீழ்ந்துகிடக்கும்; மறு பக்கத்துத் தூண் எதிர்த் திசையில் சரிந்து கூர்ங்கோணம் அமைத்து தவமுனிவன் போல் அந்தரத் தியானம் பண்ணும்.
மதிலிலிருந்து சற்றுத் தூரம் உள் வாங்கியே அந்த நவீன கூடம் அமைந்திருக்கின்றது. கூடத்துக்கும் மதிலுக்கும் இடையே அழகான ஒரு பூந்தோட்டம். கூடத்தின் நடுவே சுவர் ஓரமாக மரச் சாய்வு நாற்காலி ஒன்று போடப்பட்டிருக்கின்றது. அந்த நாற்காலியின் மீது விஜயலட்சுமி மெல்லச் சாய்ந்தவண்ணம் வீற்றிருக்கின்றாள். அவளுக்கு எதிரில் பக்கத்துக்கு இரண்டாக நான்கு கதிரைகள் வைக்கப்பட்டிருக்கின்றன. நாற்காலிகளுக்குப் பின்னுள்ள பெரிய யன்னல்களில் பழசுபட்டு நைந்துபோன வண்ணச் சேலைகள் தொங்கிக்கொண்டிருக்கின்றன. அவளுக்கு நேர் எதிரே, நாற்காலிகளுக்கு மத்தியில் வட்ட வடிவமான ஒரு ரீப்போ, அதன்மேல் இளம் பச்சை வண்ணத்தில் வெண்பட்டு நூலால் பூக்கள் இழைத்த ஒரு விரிப்பு. அதன் மீது கருங்காலியில் செதுக்கி எடுத்த மரக்கொக்கு ஒன்று ஒற்றைக் காவில் தவமியற்றிய வணிணம் நின்றுகொண்டிருக்கின்றது.
விஜயலட்சுமியின் ஆட்சியில் அவளுக்குரியதான சபாமண்டபமாக விளங்கும் அந்தக் கூடத்தினுள்ளே அவளைப் பார்த்துக்கொண்டு நிற்கும்
18 தெணியான்
 

மரக்கொக்கு
அந்த மரக்கொக்கை நோக்கிய வண்ணம் பிரத்தியேகமான தனது சாய்வு நாற்காலியின் மீது அவள் வீற்றிருக்கின்றாள். ge மீனலோசனி கதிரை ஒன்றில் அமர்ந்திருந்து கையில்
கொண்டுவந்திருக்கும் புத்தகத்தைப் புரட்டிக்கொண்டிருக்கின்றாள்.
விஜயலட்சுமியின் மேலான கவனம் இன்னும் அவள் பக்கம் திரும்பவில்லை.
அவள் இப்படித்தான்; வித்தியாசமான ஒரு பெண். குரியன் உதிப்பதற்குத் தவறிப் போனாலும் போகலாம்; அவள் உதய காலத்துக்கு முன்பு படுக்கையைவிட்டு எழுந்திருப்பதற்குத் தவறமாட்டாள் கொட்டும் மழை பொழிந்துகொண்டிருக்கும் வேளையிலும், கொடுகவைக்கும் பனிபெய்துகொண்டிருக்கும் தருணத்திலும் சில்லென்று குளிரும் நீரில் முழுகிவிடுவாள். அதன் பிறகு பூசை அறையினுள்ளே அமைதியாகச் சென்று புகுந்துவிடுவாள்
பூசை அறை அவளைப் பொறுத்தவரையில் ஒரு தனி உலகம். இந்த உலகத்திலிருந்து பிரிந்து அந்நியப்பட்டுக் கிடக்கும் பிரத்தியேகமான உலகம் அது. அந்த உலகத்துக்குள் அவள் புகுந்துகொண்டுவிட்டால் வெளியுலகப் பிரக்ஞையே இல்லாது மனம் எல்லாவற்றிலுமிருந்து விடுபட்டுப் போகும். பூசை அறைக்குள் அவள் புகுந்துகொண்டுவிட்டால் மீண்டும் எப்போது வெளியே வருவாள் என்பது நிச்சயமாகச் சொல்ல இயலாது. அப்படி ஒரு வழிபாடு வழிபாட்டை முடித்துக்கொண்டு வெளியே வந்துவிட்டால், ஈரம் உலராத கூந்தலைப் பிடித்து, அதன் நுனியில் சிறிய முடிச்சொன்றைப் போட்டுக்கொண்டு கூடத்துக்கு வந்து சேருவாள் நாற்காலியில் அமர்ந்திருந்து திருமுறைப்பாடல்களைத் தன்னுள் மீட்டுமீட்டு மனம் அதில் அழுந்திப்போகும். சிலசமயம் சித்தர் பாடல்கள் அவள் நெஞ்சில் வந்து வரிசை சேர்க்கும். இவைகளிலெல்லாம் உள்ளம் ஒன்றாதபோது தந்தையின் சைவ சித்தாந்த நூல்களைக் கையில் எடுத்துத் தட்டிப் பார்க்கும். அதுவும் சலித்துப்போனால் தலையை மேலே தூக்கி விழிகளை அகலத் திறந்து கூரையை வெறித்து நோக்கும். சிலசமயங்களில் எதிரில் நிற்கும் மரக்கொக்கை இமையா விழிகளால் விழுங்கிவிடுவது போல வெறித்து நோக்கி உண்மத்தமாய் இருக்கும். சிலபோது கரங்களை மார்பின் மீது குறுக்காகக் கட்டியவண்ணம் விழிகளை மூடி எல்லையில்லாச் சிந்தனைக் கடலில் மூழ்கிக் கிடக்கும்.
அந்தச்சாய்வு நாற்காலி அவளுக்கென்றே உரியது. அதில்
தெணியான் 19

Page 12
மர்க்கொக்கு
இன்னொருவர் வந்து அமர்ந்துகொள்ள இயலாது. அது பிரத்தியேகமானது. ஒரு காலத்தில் அவள் தந்தை அமர்ந்திருந்த நாற்காலி அது. அவருக்குப் பின்னர் அவள் மாத்திரமே அதில் வந்து அமர்ந்துகொள்ளும் அதிகாரமுள்ளவளாக விளங்குகின்றாள். அந்தச் சாய்வு நாற்காலி தவிர மறந்தும் இன்னொரு நாற்காலியில் அவள் போய் உட்கார்ந்துகொள்ள மாட்டாள். அந்தச் சாய்வு நாற்காலிக்கு எதிரே போடப்பட்டிருக்கும் கதிரைகள் காட்சிக்கு வைக்கப்பட்டவை போலவே அங்கு கிடக்கின்றன. எப்பொழுதும் அவை வெறுமையாகத்தான் இருக்கின்றன. அந்தக் கூடத்துக்குள் காலடி எடுத்துவைத்து உள்ளே வருவாருமில்லை. அவள் எதிரில் வந்து, அமர்ந்திருந்து பேசுவாருமில்லை. அப்படியெல்லாம் நடந்துகொள்வதற்கு இங்கு எவருக்குத்தான் தகுதி இருக்கின்றது!
ஒற்றைக் காலில் தவமியற்றிக்கொண்டு நிற்கின்றது. அவள் தந்தைக்கு கலா சிருஷ்டிகளின் மேல் அடங்காத மோகம். தமிழ்நாட்டில் அவர் வாழ்ந்த காலத்தில் மிகுந்த வாத்சலியத்துடன் அங்கிருந்து அந்த மரக்கொக்கை இங்கு கொண்டுவந்தார். பாதி விழிகளை மூடித் தவம் செய்வதுபோல ஒற்றைக் காலில் நிற்கும் அந்த மரக்கொக்கின் மீது அசாதாரணமான ஓர் ஆர்வம் அவருக்கு இருந்து வந்தது. தந்தையின் பிறகு அவர் ஸ்தானத்தில் இன்று அமர்ந்திருப்பவள் விஜயலட்சுமி மாத்திரமல்லவா! அவளது ஆட்சியில் சபா மண்டபமாக விளங்கும் அந்தக் கூடத்தில் அவள் முன்னே நிற்கும் தகுதி இந்த மரக்கொக்கு ஒன்றுக்கு மட்டுமே உண்டு.
விஜயலட்சுமியின் தியானநிலை கலைவதாகத் தெரியவில்லை. கணிகளை மூடியவண்ணம் நாற்காலியில் அவள் சாய்ந்து கிடக்கின்றாள். இருவருக்கும் மத்தியில் அங்கு அமைதி உறைந்து கிடக்கின்றது. அந்த அமைதி மீனலோசினிக்குப் பயங்கரமாகத் தோன்றுகின்றது. ஓரக் கண்ணால் அவள் விஜயலட்சுமியை நோட்டமிட்டவண்ணம் கையிலுள்ள புத்தகத்தைச் சும்மா தட்டிக்கொண்டிருக்கின்றாள். அவள் அங்கு வந்திருக்கின்றாள் என்பது விஜயலட்சுமி அறியாமலில்லை என்பதும் அவளுக்குத் தெரியும். சாய்வு நாற்காலியின் சட்டப் பலகை மீது நீட்டி வைத்துக்கொண்டிருந்த கால்களை விஜயலட்சுமி இப்போது தூக்கிக் கீழே தொங்க விட்டுக்கொண்டிருக்கின்றாள். யராக இருந்தாலும் அவர்
முன்னே கால்களை நீட்டிக்கொண்டிருக்கக் கூடாதென்ற மரியாதையை
அவள் பின்பற்றுகின்றவள் என்பதை மீனலோசனி அறிவாள். இப்பொழுது
20 - தெணியான்

மரக்கொக்கு
வேண்டுமென்றே அவள் இப்படி மெளனமாக இருக்கின்றாள். அவள் போக்கு இப்படித்தான். மீனலோசனிக்கு இவைகள் எல்லாம் முன்னரே அநுபவத்தில் கண்ட சங்கதிகள்
குடும்பத்தில் அடுத்த தலைமுறையின் முதல் வாரிசாக வந்து பிறந்திருக்கின்றவள் மீனலோசனி ஒரு தலைமுறையின் முதற் குழந்தை அவள் அதனால் அந்தக் குடும்பத்தின் செல்லப்பிள்ளை வீட்டில் அவளை எல்லோரும் மீனா என்றே வாஞ்சையோடு அழைக்கின்றார்கள் பாட்டி மீனு' என்று அழைக்கும் குரலில் பாசம் பொழியும். விஜயலட்சுமி மாத்திரம் அவள் பெயரை மீனலோசனி என்றே முழுமையாகச் சொல்லுவாள். அப்பொழுது பள்ளி ஆசிரியைகள் தன்னை அழைப்பது போன்ற உணர்வு அவளுக்கு உண்டாகும். அப்படி பெயர் சொல்லி அழைக்கும் வேளைகளில் அவளிலிருந்து அந்நியப்பட்டுப் போய்விட்டதான ஓர் எண்ணம் மீனலோசனிக்கு மனதில் தோன்றும்.
அந்தக் கூடத்துக்குள்ளே வருவதற்கு மீணலோசனிக்கு மட்டும் எப்போதும் அநுமதி உண்டு அவள் உள்ளே வரும்போது தவறாமல் கையில் ஒரு புத்தகம் இருக்க வேண்டும். உள்ளே வந்துவிட்டால் விசிராந்தியா இருந்துவிடக் கூடாது. புத்தகத்தைத் திறந்து படித்துக்கொண்டிருக்க வேண்டும். அவள் வருகையின் நோக்கம் பள்ளிப் பாடத்தில் அவளுக்கெழுந்துள்ள சந்தேகத்தை விஜயலட்சுமியிடம் கேட்டுத் தெளிவுபடுத்திக் கொள்வதாகவே இருக்கவேண்டும். அப்படி ஒரு தேவை இல்லையானால், மீனலோசனி எதற்காக அங்கே காலடி எடுத்து வைக்கவேண்டும்!
மீனலோசனி புத்தகமும் கையுமாக மாத்திரம் அங்குவரலாம். ஆனால் அவள் தானாக முன்வந்து பேசிவிடக்கூடாது. விஜயலட்சுமி வாய் திறந்து பேசும்வரையும் மீனலோசனி கையோடு கொண்டுவந்திருக்கும் புத்தகத்தைத் திறந்து படித்துக்கொண்டே இருக்க வேண்டும்.
சில சமயங்களில் சில மணிநேரங்கள் வரை பொறுமையாக அவள் காத்திருப்பாள். விஜயலட்சுமியின் மெளனம் கலையாது நீண்டுகொண்டே செல்லும் அப்பொழுது சூழ்நிலையைப் புரிந்துகொண்டு அவள் அங்கிருந்து எழுந்து போய்விடவேண்டும்.
இந்த வழக்கங்களும் பாவனைகளும் விஜயலட்சுமியின் ஆட்சி அதிகாரங்களினால் அங்கு உருவாக்கப்பட்ட நடைமுறைகள்
தெ னியானி 21.

Page 13
மரக்கொக்கு
இவ்வாறெல்லாம் நடந்துகொள்வதன் மூலம் - மீனலோசனி மேல் தனக்கு ஈடுபாடு உண்டு - அவளைக் கண்காணித்து நல்வழிப்படுத்தி வளர்ப்பது தனது கடமை என்று வெளிக்காட்டிக்கொள்வதே விஜயலட்சுமியின் அந்தரங்க எண்ணம்.
மீனலோசனியின் பள்ளிப் பாடங்களை விளக்கிச் சொல்வதில் அப்படி யொரு அக்கறை அவளுக்கிருப்பதில்லை. பலருமி எண்ணுவதுபோலப்பள்ளிப்படிப்பு அரச உத்தியோகங்களைப் பெறுவதற்கே பயன்படும் என்று அவளும் கருதினாள். இந்தக் குடுமீபத்துப் பெண்களுக்கென்றே தனித்துவமான கெளரவங்கள் சில உண்டு. அந்தக் கெளரவங்களை எல்லாம் காற்றில் பறக்கவிட்டு பல சாதிக்காரர்களோடும், ஆண்களோடும் சேர்ந்து அரச உத்தியோகம் பார்ப்பதற்கு மீனலோசனியை அநுமதிக்கமுடியுமா? குலப்பெருமையைப் பேணிப் பாதுகாப்பதற்கு வேண்டிய கல்வி அவளுக்கிருந்தால் போதும் என்பதே விஜயலட்சுமியின் ஒரே தீர்மானம்.
அவளைத் தேடிக்கொண்டு மீனலோசனி இடையிடையே அங்கு வரவேண்டும். ஆனால் எப்பொழுது வந்தாலும் ஒரு மேலதிகாரிபோல அவள் விசாரணை செய்துகொண்டிருப்பாள்.
"பள்ளிக்கூடத்தில் உண்ரை சினேகிதிகள் யார்?" "எங்கே இருக்கிறவர்கள்?" தகப்பன்மார் என்ன தொழில் செய்கிறார்கள்?" "என்ன சாதி?" "மச்ச மாமிசம் திண்னுகிறவர்களா?" "அவர்கள் வீட்டுக்கு நீ போறதுண்டா?" "யார் யார் படிப்பிக்கின்றார்கள்?" இந்த விதமான வினாக்களைக் கேட்டுக்கேட்டு மீனலோசனியைக் குடைந்துகொண்டிருப்பாள்.
சில சமயங்களில் சட்டென்று பதில் வராதுவிட்டால் அவள் மனதில் சந்தேகம் முளைத்துவிடும். மீனலோசினி எதனையோதனக்கு மறைக்கின்றாள் என்று தீர்மானித்துக்கொண்டுவிடுவாள். அவள் அறிந்துவிடக்கூடாதென்று மீனலோசினி மறைக்கும் குற்றமொன்றைத்தான் கண்டுபிடித்துவிட்டதாக நினைத்து முகம் சினந்து உறுத்துப் பார்ப்பாள் காரணமின்றிப் பழி சுமத்துவாள் குடைந்து குடைந்து கேள்விகள் கேட்பாள்.
"உனக்கு உண்னைத் தெரியவேணும். உண்ரை பரம்பரையைத்
22 தெணியான்
 

மரக்கொக்கு
தெரியவேணும். படிப்புப் பெரிசில்லை; அதைவிடக் குலப்பெருமைதான் பெரிசு. உண்ரை உடம்பிலே ஒடுறது மணியகாரன் பரம்பரை ரத்தம். நீ அதை உணர்ந்து நடக்கவேணும்."
அவள் முகத்தைக் கடுமையாக வைத்துக்கொண்டு இப்படித்தான் புத்திமதிகளும் ஆலோசனைகளும் எச்சரிக்கையுமாகச் சொல்லிவைப்பாள். மீனலோசனிக்குப் பள்ளிப் பாடங்களில் எழும் சந்தேகங்களை அவள் கேட்டுவிட்டாலும் சில தருணங்களில் அதுவும் ஒரு நெருக்கடியை உருவாக்கிவிடும்.
தமிழ்ப் பாடநூலில் ஒரு பாடம்; நாராய், நாராய்." என ஆரம்பிக்கும் சத்திமுத்தப் புலவரின் பாடல் அது. அந்தப் பாடலில் வருகின்ற ஒரு அடியின் பொருள் விளங்காததால் ஒரு தினம் அவளிடம் தன் சந்தேகத்தை மீனலோசனி கேட்டாள்.
நணைசுவர்க்கூரை கரைகுரற்பல்லி. என்றால் என்ன?" அவள் அப்பொழுது பார்த்தாளே ஒரு பார்வை! மீனலோசனி எரிந்தே போனாள் மீனலோசனிக்கு இன்னும்தான் விளங்கவில்லை உக்கிரமான அந்தப் பார்வையின் பொருள்!
ஆனால் அவள் மனம் இந்த வீட்டை நினைத்துக் கொண்டது. இந்த வீட்டின் நனை சுவர்க் கூரைகளை நினைத்துக்கொண்டது. இங்கிருக்கும் கரை குரற் பல்லிகளை நினைத்துக்கொண்டது.
மீனலோசனி வேண்டுமென்றே இந்தக் கேள்வியைக் கேட்கின்றாள். அவளாக இப்படிக் கேட்டிருக்கமுடியாது! யாரோ அவளைத் தூண்டிவிட்டிருக்கிறார்கள். தன்னை அவமதிப்பதற்காகவே இவளிடம் சொல்லிஅனுப்பியிருக்கவேண்டும். அது யார்? விஜயலட்சுமியின் உள்ளத்தில் சந்தேகங்கள் எழுந்தன. அதன் பிறகு கேள்விக்குமேற் கேள்விகள் கேட்டு மீனலோசனியை அவள் துளைத்தெடுத்துவிட்டாள்
அந்தச் சம்பவத்தின் பிறகு அவளோடு பேசுவதற்கே மீனலோசனி உள்ளூர நடுங்கினாள். プ
கூடத்து வளையில் சிறிய அணிற்பிள்ளை ஒன்று மெல்ல ஓடிவருகின்றது. மீனலோசனியைக் கண்டு ஓட்டம் தணிந்ததுபோல ஓரிடத்தில் தரித்து, அவள் இருக்கும் திசை நோக்கித் தலையைத் தூக்கி வாலை உயர்த்தி "கீச். கீச். கீச்." எனச் சத்தமிட்டவண்ணம் தலையையும் வாலையும் மேலும் கீழும் ஆட்டி அசைக்கின்றது.
மீனலோசனிகையில் விரித்து வைத்துக்கொண்டுள்ள புத்தகத்தைச்
தெணியான் 23

Page 14
மரக்கொக்கு
சற்று மேலே தூக்கி முகத்தை மறைத்துப் பிடித்தவண்ணம் அந்த அணிற்பிள்ளையை ஆவலுடன் கள்ளத்தனமாக நோக்குகின்றாள். அணிற்பிள்ளை மீண்டும் கீச். கீச்." என் முன் போலக் கத்துகின்றது. திரும்ப ஓடுகின்றது. மீண்டும் திரும்பி வருகின்றது. முன் போல அவளைப் பார்த்து கீச்.கீச். என்று கத்துகின்றது. அணிற்பிள்ளையின் ஆனந்தமான இந்த விளையாட்டைப் பார்த்து அவள் உள்ளத்தில் மகிழ்ச்சி பொங்குகின்றது.
அணிற்பிள்ளை தன்னுடன் சேர்ந்து விளையாடுவதற்கு அவளை அழைப்பதாக மனதில் ஒரு பிரமை தோன்றுகின்றது. விஜயலட்சுமி தன்னைக் கவனிக்கின்றாளாவென இரகசியமாக நோட்டமிட்டவாறு அந்த அணிற்பிள்ளையை வாத்ஸல்யத்துடன் நோக்குகின்றாள். அணிற்பிள்ளை தலையைத் திருப்பி அங்குமிங்கும் பார்க்கிறது. அதன் மென்மயிர் வால் காற்றில் மெல்ல அசைந்தாடுகின்றது. அதன் முதுகுப் புறத்தில் திரிபுண்டரமாக அமைந்துள்ள வெண்ணிறக் கோடுகள் கண்ணைக் கவருகின்றன. அவளோடு சேர்ந்து விளையாடுவதற்கு விரும்பி அவளுக்கு அழைப்பு விடுத்துக்கொண்டிருந்த அணிற்பிள்ளைக்கு அவள் தன்னுடன் சேர்ந்துகொள்ளாததினால் சலிப்பு வந்திருக்கவேண்டும். அது கீச். கீச். என்றுகத்திக்கொண்டு திடீரென்று ஓடி மறைந்துவிடுகின்றது. அவளுக்கு ஏமாற்றமாகிவிடுகிறது. இப்போது அவள் தனது பார்வையைச் சாளரத்தின் பக்கம் திருப்புகின்றாள். சாளரத்தை மூடிக் கிடக்கும் மெல்லிய துகில் காற்றில் மெல்ல மெல்ல ஆடியசைவதும், சாளரத்துக்கு வெளியே மலர்ந்து கிடக்கும் மல்லிகை மலர்கள் அப்பொழுது தோன்றித் தோன்றி மறைவதும் வானத்தில் பூத்த நட்சத்திரப் பூக்களை முகிற் கூட்டம் மூடிமூடி விலகுவதுபோல அவளுக்குத் தோன்றுகின்றது. இந்தக் காட்சிகளில் மனம் லயித்து அநுபவித்துக்கொண்டே இருக்கலாம். ஆனால் அது நடக்கக்கூடிய காரியமா! விஜயலட்சுமி அவதானித்துவிட்டால் போதும்! வேறு வினையே வேண்டாம்!
மீனலோசனி அரை மனத்துடன் தனது பார்வையை வலிந்து திருப்புகின்றாள். புத்தகத்தின் இதழ்களை ஒவ்வொன்றாகப் புரட்டிப் பார்க்கின்றாள்.
மீனலோசினி அங்கிருக்கின்றாள். என்ற பிரக்ஞையே இல்லாதவள் போல இப்பொழுதும் விஜயலட்சுமி கணிகளை மூடிக்கொண்டு கிடக்கின்றாள் அலட்சியமான அவளின் மோனத் தவம் மீனலோசனியின் பிஞ்சு மனத்தைத்
24 தெணியான்

மரக்கெ ாக்கு
துன்புறுத்துகின்றது. இயல்பாக அவளின் துடியாட்டங்கள் எல்லாம் அடங்கி முள்ளின் மேல் நிற்பது போன்ற நிர்ப்பந்தம் அவளுக்கு இனிமேல் அங்கிருப்பதில் பயனில்லை; எழுந்து உள்ளே போய்விடலாமென்ற தீர்மானத்துக்கு அவள் வந்துகொண்டிருந்த வேளையில்.
வீதி ஓரத்திலிருந்து சயிக்கிள் மணியோசை கேட்கின்றது. அதனைத் தொடர்ந்து தபால் என்ற குரல் எழுகின்றது. -
மீனலோசினி இதுவே சரியான சந்தர்ப்பம் என்று கருதி அங்கிருந்து விடுதலை கிடைத்துவிட்ட பூரிப்பில் மெல்ல எழுந்து கூடத்துக்கு வெளியே வந்து துள்ளிக் குதித்துக்கொண்டு ஓடுகின்றாள்.
விஜயலட்சுமி நிஷ்டை கலைந்து விழிகளைத் திறந்தபோது
அவளுக்கெதிரே மரக்கொக்கின் காலடியில் கடிதங்கள் கிடக்கின்றன. கடிதம் என்றதும் மனதில் இயல்பாகவே ஒரு பரபரப்பு எழுமே! அதை யார் எழுதியிருக்கின்றார்? என்ன தகவல்கள் வந்திருக்கின்றன? அவைகளை அறிந்துகொள்ளும் ஆவல்கள் மனதில் எழும். இத்தகைய ஆவல்கள் அவள் உள்ளத்தில் எழவில்லை. எவரிடமிருந்தும் எந்தத் தகவல்களையும் அவள் எதிர்பார்க்கவில்லை. அந்த வீட்டுக்கு இப்படிக் கடிதங்கள் வருவதென்பதே பெரிய அபூர்வம். மீனலோசனிக்கு மட்டும் சில சமயங்களில் கடிதங்கள் வந்து சேரும். பள்ளி விடுமுறை காலங்களில் அவள் தோழிகள் யாராவது அவளுக்கு எழுதுவார்கள். தைப்பொங்கல், புத்தாண்டு, தீபாவளி போன்ற திருநாட்களில் வாழித்துக்கள் அனுப்புவார்கள். இப்பொழுது வந்துள்ள கடிதங்களும் அவளுக்குரியவைகளாகவே இருக்கவேண்டும். வழித்து மடல்கள் அனுப்பிவைக்கப்படும் காலமல்ல இது, தோழிகள் யாரோ சுக நலன்களைத் தெரிவித்தும் விசாரித்தும் இருப்பார்கள். எந்தக் கடிதமாக இருந்தாலும் அதனை விஜயலட்சுமி பார்வையிட்ட பின்னரே மீனலோசனியின் கைக்கு அது போய்ச் சேரும். மீனலோசனி விஷயத்தில் மாத்திரமல்ல வேறு எவர் பெயரில் வீட்டுக்குக் கடிதம் வந்தாலும் அவள் அறியாமல் உரியவரிடம் அந்தக் கடிதம் போய்ச் சேர்ந்துவிடமுடியாது.
இந்தக் கடிதங்களை அவள் பார்வைக்காக மீனலோசனி இங்கு வைத்துவிட்டுப் போயிருந்தாள். மீனலோசினியின் பள்ளித் தோழிகள்தான் கடிதங்களை அனுப்பியிருக்க வேண்டுமென்று எணர்ணிக்கொணர்டு அக்கறையோ, ஆர்வமோ இல்லாமல் மெல்ல எழுந்து கடிதமொன்றைக் கையில் எடுத்தாள்.
தெணியான் 25

Page 15
மரக்கொக்கு
என்ன புதுமை! இது மீனலோசனிக்குரிய கடிதமல்ல. விஜயலட்சுமியின் தாய் மீனாட்சியம்பாளுக்கலிலவா அனுப்பி வைக்கப்பட்டிருக்கின்றது!
அந்தக் கடிதம். அதன் முகவரியை எழுதியுள்ள கையெழுத்து. வியப்பினால் அவள் விழிகள் அகலத் திறக்கின்றன.
சந்தேகமில்லை. அது அன்னலட்சுமியின் கையெழுத்துத்தான்! அவளா எழுதியிருக்கின்றாள்? அம்மாவுக்கா எழுதியிருக்கின்றாள்?
மின்சாரம் பாய்ந்ததுபோலப் பட்டென்று அவள் உள்ளத்தில் பரபரப்பு மூளுகின்றது. கடிதத்தைப் பிடித்துக்கொண்டுள்ள கரம் மெல்ல நடுங்குகின்றது. சிரசிலே இரத்தம் குயீரென்று ஏறிக் கொதிக்கின்றது. என்ன துணிச்சல் அவளுக்கு கடிதமெழுதுகிறாளாம், கடிதம்! அன்னலட்சுமியைப் பிடித்து நெருடுவதாக எண்ணி பற்கள் நெறுநெறுக்கின்றன.
நான்கு ஆண்டுகள் ஆகிவிட்டன அன்னலட்சுமி இறந்து போய்விட்டதாக முடிவுகட்டி, அவளுக்குப் பிறகென்ன தொடர்பு இங்கே! ஓ. அவள் இப்போது நாதியற்று நடுத் தெருவில் நிற்கிறாளோ! கடிதம் எழுதுகின்றாள் அம்மாவுக்கு அவள் யாருக்கு எழுதினால்தான் என்ன! இந்த வீட்டுக்குள் ஒரு ஈ, எறும்புதானும் தன்னிச்சையாக நுழைவதென்பது நடக்கக்கூடிய காரியமா!
உணர்ச்சி மேலீட்டால் உடல் பதறிக் கொணடிருக்கின்றது. - விருட்டென்று திரும்பிச் சாய்வு நாற்காலியில் உட்கார்ந்து கொள்ளுகின்றாள். மேல் உறையைப் பக்குவமாகப் பிரித்துக் கடிதத்தை வெளியே எடுக்கும் அளவுக்கு மனதில் பொறுமை இல்லை. கைக்கு வந்தவண்ணம் மேல் உறையைக் கிழித்துக் கடிதத்தைக் கையில் எடுக்கின்றாள். கடிதத்தைப் படித்துப் பார்ப்பதற்கு முன்னர், அதை அணினலட்சுமிதானி எழுதியிருக்கின்றாளா என்பதை மீண்டும் உறுதிப்படுத்திக்கொள்ள விரும்பி கடிதத்தின் அடியில் இடப்பட்டுள்ள கையொப்பத்தை அவதானிக்கின்றாள். உள்ளத்தில் இருந்த அரைகுறை ஐயமும் தீர்ந்து போய்விடுகின்றது. அவள்தான். அன்னலட்சுமிதான் எழுதியிருக்கின்றாள். என்ன உரிமையில் வீட்டுக்கு அவள் கடிதம் எழுதியிருக்கின்றாள்! அப்படி எழுதுவதற்கு அவள் விரும்பினாலும் அம்மாவுக்கா எழுதவேண்டும்! இப்படிச் செய்வதன் மூலம் யாரை இம்சிக்கலாம் என்று அவள் எண்ணுகின்றாள்!
26 தெணியான்
 

மரக்கொக்கு
கடிதத்தை விரித்து வாசிக்கத் தொடங்குகின்றாள். மனோ வேகத்தின் பாய்ச்சலுக்கு விழிகள் ஈடுகொடுக்க இயலாது வரிக்கு வரிதாவிஓடுகின்றன. இப்படி ஒரு கடுகதியில் இதுவரையில் எதையுமே அவள் படித்து முடித்ததில்லை.
இப்பொழுது மூர்க்கமான அவள் கரங்களுக்குள் அந்தக் கடிதம் சிக்கி, மிகப் பரிதாபமாக அது கசங்கிக்கொண்டிருக்கின்றது. வெறும் காகிதமாக அவள் மனதுக்கு அது தோன்றவில்லை. அன்னலட்சுமியின் கழுத்தே கைகளுக்குள் சிக்கிக்கொண்டுவிட்டதாக எண்ணி வெறிகொண்டு நெரிக்கின்றாள். பின்னர் பலம் கொண்டமட்டும் வீசி தூர எறிகின்றாள். அது ஒரு மூலையில் போய் விழுந்துகிடக்கின்றது.
நான்கு ஆண்டு காலமாக மனதின் ஆழத்தில் புதைந்துபோய்க் கிடக்கும் மனக் கொதிப்புகள் எல்லாம் அந்தக் கடிதத்தின் மூலம் குரூரமாகக் கிளர்ந்தெழுகின்றன.
துரோகி. அவள் செய்த துரோகம் எந்தக் காலத்திலும் மன்னித்துவிடக்கூடியதல்ல. அவளை மன்னிக்கப்போவதுமில்லை. அவள் உள்ளம் பூண்டுள்ள உறுதி தளம்பாது மீண்டும் சபதம் எடுத்துக் கொள்ளுகின்றது.
இப்பொழுது என்ன செய்யலாம்! தெளிவாக எதுவும் மனதுக்குத் தென்படவில்லை. மனம் குழம்பிக்கிடக்கின்றது. கதிரையின் மீது தொடர்ந்து அமர்ந்திருப்பதற்கும் முடியவில்லை. நீண்ட காலமாக அவள் தன்னைத் தானே ஏமாற்றிக கொணடு வநீதிருககின்றாள். எல்லாமே மறந்துபோய்விட்டதாகப் பாசாங்குபண்ணிக்கொண்டு இருந்திருக்கின்றாள். நெஞ சகதீது நினைவிலிருந்து ஒழிந்து போனவைகளாக எண்ணிக்கொண்டிருந்தவைகள் ஒன்றன் பின் ஒன்றாக மேலெழுந்து வந்துகொண்டிருக்கின்றன. நினைவலைகள் நெஞ்சில் குமுறி எழுந்து மோதுகின்றன.
தான் என்ன செய்கின்றேன் என்பதை அவள் உணராது இருக்கையை விட்டு எழுகின்றாள். போதை தலைக்கேறியது போல ஒரு கணம் தடுமாறிக்கொண்டு நிற்கின்றாள். தன்னிச்சை இன்றிக் கைகளைத் தூக்கி ஆண்பிள்ளை போலப் பின்புறமாகக் கட்டிக்கொண்டு தலை நிமிர்ந்து கம்பீரமாக அந்தக் கூடத்துக்குள்ளே குறுக்கும் நெடுக்குமாக நடக்கின்றாள்.
சுவர் ஓரமாக ஒரு மூலையில் விழுந்துகிடக்கும் அந்தக் கடிதத்தின் மீது
எதேச்சையாக அவள் பார்வை சென்று விழுகின்றது. தீண்டத்தகாத ஒரு
தெணியான் 27

Page 16
மரக்கொக்கு
பொருள் அங்கே கிடப்பதுபோல எண்ணிமுகம் சுழித்துக் கொள்ளுகின்றாள்.
அழித்தவள். இப்பொழுது எழுதுகின்றாள் அம்மாவுக்குக் கடிதம். தனக்குள்ள உரிமையை அம்மா மூலம் நிலைநாட்டப் பார்க்கின்றாளா! இந்த வீட்டில் அவளுக்கென்ன உரிமை இருக்கின்றது! வரப் போகின்றாளாம் இங்கே அவளை யார் இங்கு அநுமதிக்கப் போகின்றார்கள்!
திடீரென ஒரு சந்தேகம் மனதில் எழுகின்றது. அவளுக்கு அநுசரணையாக இந்த வீட்டில் யாரோ இருக்கின்றார்கள்! அப்படி யாருமே இல்லாதிருந்தால் அவள் எப்படித் துணிந்து எழுதியிருக்க முடியும்! வீட்டுக்கு வரும் எண்ணம் எப்படித் திடீரென்று உண்டாகி இருக்க முடியும் இது அவளின் முதல் கடிதமல்ல. அப்படியானால் எல்லோருமாகச் சேர்ந்து கொண்டு ஏமாற்றப் பார்க் கின்றார்கள்
இந்த எண்ணம் மனதில் எழுந்ததும், உதைபந்து போல
நிலைகொள்ளாது அலைந்துகொண்டிருந்த உள்ளமும் உடலும் நிதானமாக ஒரு நிலைக்கு வருகின்றன. அவள் நடை இப்போது தடைபட்டுப் போகின்றது.
இவர்களைச் சும்மா விட்டுவிடக்கூடாது; உணமையைக் கண்டறியவேண்டும்.
"அம்மா. அம்மா..!"
உள்ளே இருந்து ஒரு பதிலும் இல்லை.
"அம்மா. ஏய் அம்மா."
மீண்டும் அழைக்கின்றாள்.
அவள் குரல் ஒரு பெண்ணின் குரலாக இப்பொழுது இல்லை.
அந்தக் குரல் கேட்டு உள்ளே இருந்தவர்கள் அதிர்ந்து போகின்றார்கள் ஒருவர் முகத்தை ஒருவர் அதிசயத்துடன் பார்த்துக்கொள்ளுகின்றார்கள் என்ன நடந்துவிட்டது? ஏன் இப்படிக் கூச்சலிடுகின்றாள்? இந்த விளக்கங்கள் அவர்கள் விழிகளில் தொக்கிநிற்கின்றன. வாய் திறந்து அவர்களால் பேசிக் கொள்வதற்கு இயலவில்லை.
தாய் என்பவள் அவள் பிள்ளைகளுக்குத் தெய்வமாவாள். அந்த அம்மாவுக்கு மரியாதை கொடுத்து இன்முகத்துடன் பேசிக்கொள்ளும் வழக்கம் இல்லாதவள் அவள் தனக்கே உரித்தான இறுமாப்புடன்தான் அம்மாவையும் எடுத்தெறிந்து நடக்கின்றவள். அம்மா ஆதரவுடன் நெருங்கி வரும போதிலெல்லாம் அலட்சியத்துடன் விலகி விலகிப்
28 தெணியான்

மரக்கொக்கு
போய்க்கொண்டிருப்பவள்
ஆனால் அவளே இன்று அம்மாவை அழைக்கின்றாள். இந்த அழைப்பிலும் அவளுடைய அகங்காரந்தான் வெளிப்படுகின்றது. வீடு அதிரும் வண்ணம் கூச்சல் போடுகின்றாள். இப்படி ஒரு கூச்சலை இதுவரை அவள் போட்டதில்லை.
இன்று வீட்டில் பிரளயுந்தான் என்று எண்ணி எல்லோரும் திகைத்துப் போனார்கள். அவள் இப்படிக் கூச்சல் போடுவதற்கு என்னதானி நடந்துவிட்டது? இதை அவளிடம் வந்து கேட்டறிவதற்கும் அவர்கள் தயங்கினார்கள்
அவளின் கடைசித் தங்கை தனலட்சுமி மாத்திரம் விரைந்தெழுந்து கூடத்து வாயில் வரை வந்துவிட்டாள். அந்த வாயிலைத் தாண்டி உள்ளே போவதற்கு அவளால் முடிவதில்லை. வாயிலில் வந்துநின்றுவிடுவதுதான் எப்பொழுதும் அவள் வழக்கம். அந்த வழக்கத்தை மீறி கூடத்துக்குள்ளே நுழையுமளவுக்கு அவளிடம் துணிச்சலில்லை. விஜயலட்சுமி போட்ட கூச்சல், என்ன செய்கின்றேன் என்பதை அவள் உணராமல் அவளை இழுத்து வந்து அங்கு நிறுத்திவைத்துவிட்டது. அவளுக்கு மனதில் எழுந்த பதற்றம் தன்னை மறந்த நிலையில் கூடத்துக்குள்ளே அவளை இழுத்துச் சென்றிருக்கவும் கூடும். ஆனால் விஜயலட்சுமியின் கொடுமையான சுட்டெரிக்கும் பார்வை அவள் மேலும் அடி எடுத்து வைக்காதவாறு அவளைத் தடுத்து நிறுத்திவிட்டது. விஜயலட்சுமியின் அந்தப் பார்வையில் "உன்னை யாரிங்கே அழைத்தார்க ள்?" என்ற வினா பொறிதட்டி நிற்கின்றது. கூடத்து வாயில் கதவைப் பிடித்துக்கொண்டு அதன் பின்னே அவள் பதுங்கிக்கொள்ளுகின்றாள்.
விஜயலட்சுமியினி கோபக் குரலாலி பாதிக்கப்படாத வள் மீனாட்சியம்பாள்தான். அவளுக்குத் தெரியும், பெற்ற தாய்க்கு அவள் தரும் மதிப்பு! அவளது அலட்சியப் போக்கினால் காயப்பட்டுப் போன மீனாட்சியம்பாளின் உள்ளம் இப்பொழுது மரத்துப்போய்விட்டது.
மீனாட்சியமிபாளைப் பொறுத்தவரை இந்த அவமதிப்புக்கள் எவையும் புதியவையல்ல. பொன்னம்பல மணியகாரனுக்கு வாழ்க்கைப்பட்டு, என்று இந்த வீட்டுக்கு வந்தாளோ அந்தக் காலம் முதல் அவளுக்கு இந்த மனக்குறை இருந்துகொண்டே வந்தது.
பொன்னம்பல மணியகாரனின் தந்தையானவர் குடும்ப அந்தஸ்த்துப் பார்க்காமல் மகனுக்கொரு பெண்ணைத் தேர்ந்தெடுத்துவிடவில்லை. தங்கள்
தெணியான் 29

Page 17
மரக்கொக்கு
குடும்பக் கெளரவத்துக்கு ஏற்ற இடம், புத்தூர் மணியகாரன் குடும்பம் என்று கருதியே அந்தக் குடும்பத்தில் வீட்டுக்குரிய மருமகளைத் தேர்ந்தெடுத்தார். ஆனால் தங்கள் குடும்பப் பெருமைக்கு, அவள் குடும்பம் தகுதியிற் சற்றுக் குறைவு என்றே பொன்னம்பல மணியகாரன் இடைக்கிடை குத்திக் காட்டிக்கொண்டிருப்பார் தன்னிற் குறைந்ததுதாரம் என்பதனைத் தனது தந்தையான மணியகாரன் மனதிற்கொண்டு அவளை மருமகளாகக் கொண்டுவந்தார் எனச் சொல்லி தந்தையின் திறமையை வியந்து பேசுவார். பாவம் அவள் இவைகளை எல்லாம் கேட்டும் வாய் திறந்து ஒரு வார்த்தை பேசாது ஒதுங்கிப் போவாள். பிள்ளைகள் தகப்பனின் குத்தல்கள் கிண்டல்களைக் கேட்டு வளர்ந்தவர்கள். இவர்களுக்குள்ளே விஜயலட்சுமி தகப்பன் பிள்ளை. தகப்பன் போலவே இருக்கின்றவள் தான் ஒருத்தி மட்டுமே என்ற எண்ணம் உள்ளவள். அவளிடம் எப்படி மரியாதையை எதிர்பார்க கலாம! அவள் அதிகாரம் பணிணி ஆட்சி செலுத்திக்கொண்டிருக்கவே எண்ணுகின்றாள்.
சில சமயங்களில் இதனை எண்ணி மீனாட்சியம்பாள் மனதுக்குள் புழுங்குவதுண்டு. ஆனால் அந்த வேதனையையும் அதிருப்தியையும் அவள் வெளிக் காட்டிக்கொண்டதில்லை. என்ன செய்தாலும் தன் வயிற்றிற் பிறந்தவள். தான் பெற்ற பிள்ளை பெற்ற தாயினால் அவளை எப்படி வெறுக்க முடியும் அவளை மனமார மன்னித்துவிடுவாள். அவளுடன் நேருக்கு நேர் மோதிக்கொள்வதைத் தவிர்த்து ஒதுங்கிக்கொண்டு போய்விடுவாள் மனதிற் கிடந்து அழுத்தும் ஊமைத் துயரங்கள் போதாதென்று மேலும் சுமைகளை ஏற்றிக்கொள்வதற்கு அவள் தயாராக இல்லை.
"பாவம் விஜயா! அவள் வாழுகிற வளருகிற வயது ஹூம். என்னாலும் என்ன செய்யமுடியும்?"
தனது இயலாமையை எணிணி வேதனையுடன் அவள் பெருமூச்சுவிட்டுக் கொள்வாள். விஜயலட்சுமியினது வாழிவின் வெறுமைகளையும் நிதானமாக நினைத்துப் பார்த்து அவளை மன்னித்துவிடுவாள்
மீனாட்சியம்பாள் பதற்றமின்றி மெல்ல எழுந்தாள். முந்தானையை இழுத்து கழுத்துவரை போர்த்திக்கொண்டாள். கணவன் பொன்னம்பல மணியகாரன் காலமானது முதல், வீட்டுக்கு வெளியே முற்றத்தில் காலடி எடுத்து வைத்தாலும் சேலைத் தலைப்பினால் இப்படி இழுத்து
30 - தெணியான்
 

மரக்கொக்கு
மூடிக்கொள்வது அவள் வழக்கம். மணியகாரன் காலமானதன் பின்னர் வெள்ளை நிறச் சேலை தவிர்ந்த இன்னொரு நிற ஆடையை உடுத்திக்கொள்வதுமில்லை. மெலிந்து சிவந்த மேனியில் பால்வண்ண ஆடை அணிந்து, கரு மயிர் ஒன்றுதானும் இல்லாத வெள்ளி முடியும், வெண்ணிறனிந்த நெற்றியுமாகத் தோன்றும் அவள் தெய்வீகப் பொலிவு காண்பவர்களை கையெடுத்து வணங்கச் செய்யும்.
மீனாட்சியம்பாள் கூடத்து வாயிலுக்குள் நுழையும் பொழுதே விஜயலட்சுமி அவளை நோக்கி வெறித்துக்கொண்டு நிற்கின்றாள். தாய் முகத்தில் பதிந்த அவள் விழிகள் சிவந்து அக்கினிகளாகக் கனன்றுகொண்டிருக்கின்றன. அந்தக் குரூமான பார்வை மீனாட்சியம்பாளின் இதயத்தைத் தொட்டுச் சுடுகின்றது.
மீனாட்சியம்பாள் இதயத்தினுள்ளே ஒளிந்து கிடக்கும் இரகசியத்தைப் பிடுங்கி வெளியே எடுப்பதற்கு எத்தனிப்பது போல அவள் பார்வை ஊடுருவித் துளைக்கின்றது.
அவளது அகங்காரமான நிமிர்ந்த நிலையும் வெறுப்பு மிகும் அலட்சியப் பார்வையும் தன்னைச் சிறுமைப்படுத்துவதாக மீனாட்சியம்பாள் உணருகின்றாள். ஆனாலி தன் உணர்வுகளைக் கட்டுப்படுத்தி எல்லாவற்றையும் சகித்துக்கொண்டு நிதானமாக அவளை நோக்கிக் கேட்கின்றாள்.
"என்ன விஜயா?"
அவளிடமிருந்து பதில் இல்லை. அவள் தாயை நோக்கி முறைத்துக்கொண்டு நிற்கின்றாள்.
"ஏன் கூப்பிட்ட நீ?"
இப்பொழுதும் வாய் திறக்காது அவள் முறுகிக்கொண்டுதான் நிற்கின்றாள்.
"சொல்லு விஜயா"
"அதை எடுத்துப் பார்!"
மூலையில் கிடக்கும் கடிதத்தை அவள் கை நீட்டிச் சுட்டிக் காட்டுகின்றாள்.
அவள் சுட்டிய இடத்தை மீனாட்சியம்பாள் குறிப்பாக நோக்கி, கசக்கி எறியப்பட்டுக் கிடக்கும் அந்தக் காகிதத்தைக் கணிடுகொண்டு மீண்டும் கேட்கின்றாள்.
"என்ன கடதாசி?"
தெணியான் 31

Page 18
மரக்கொக்கு
"கடதாசி இல்லை."
"அப்பு.?"
"கடிதம்"
ஆற்றை?"
"உனக்குத் தெரியாது?"
"தெரிஞ்சால் ஏன் உன்னைக் கேட்கிறன்"
ஒ.நல்லா நடிக்கிறாய்"
"என்ன சங்கதி? அதை முதல் சொல்லு"
"உனக்குத் தெரியாது?"
"சும்மா வீண் கதை கதையாதை விசயத்தைச் சொல்லு"
ஓ. உனக்குத் தெரியாது! வீட்டிலை ஒருதருக்கும் தெரியாது! அப்பிடித்தானே!"
"என்னை ஏன் கேட்கிறாய்? எல்லோரையும் கூப்பிட்டுக் கேளன்,
தெரியுமோ தெரியாதோ எண்டு வீணாக எண்னைப் போட்டு உலுப்புறாய்.
உண்ரை கூத்துகள் எனக்கு ஒண்டுமாக விளங்குதில்லை."
"எப்பிடி விளங்கும்" நீ அறியாமல் இஞ்சை என்னதான் நடக்குது! வீட்டிலை ஆருக்கு, என்ன தெரியும்"
"என்ன நடக்கேல்லை எணடு சொல்லு எல்லாருமாச் சேர்ந்துகொண்டு என்னை ஏமாத்தப் பாக்கிறியள்"
"எடியாத்தை, சுமீமா சன்னதம் பத்தாதை/இப்ப ஏன் கூப்பிட்ட நீ?" "உனக்குத் தெரியும்" நம்பாத வேதக்காறி நீ; தெரிஞ்சாலி உண்ணைக் கேட்டுக்கொண்டு இருக்கிறனே! நீ சொல்லாட்டால் விடு. நான் போறன்"
மீனாட்சியம்பாள் சற்றுச் சூடாகச் சொல்லிக்கொண்டு உள்ளே போவதற்குத் திரும்புகின்றாள். -
"அம்மா, கடிதம் உனக்குத்தான். அதையும் எடுத்துக்கொண்டு (3 tits"
அவள் தாயைப் பின்தொடர்ந்து சென்று சீறுகின்றாள். மீனாட்சியம்பாள் தரித்து, மீண்டும் அவள் பக்கம் திரும்பிக் கேட்கின்றாள்.
"ஆர் எழுதின கடிதம்?" "உன்ரை மேள்"
32 தெணியான்

மரக்கொக்கு
"என்ரை மேளோ" ஓம் அவள் தான்" "என்ன புதினம். எந்த மேள் எனக்குக் கடிதம் எழுதுறாள்!" "உண்ரை மேள், அன்ன.லச்சுமி" அன்னலட்சுமி என்ற பெயரை நையாண்டியாக அழுத்திச் சொன்னவாறு மீனாட்சியம்பாளின் கணினுக்குள் பார்வையைச் செலுத்தி எதையோ துழாவிப் பார்க்கின்றாள். அவள் எதிர்பார்த்தது போலத் தாயி மிருந்து எந்த ஒரு துரும்பும் அவளுக்குக் கிடைக்கவில்லை.
மீனாட்சியம்பாளுக்கும் அந்தச் செய்தியை நமீபுவதற்கு முடியவில்லை. அவள் தன்னை அறியாமலே கேட்டுவிடுகின்றாள்.
"அன்னம் எழுதி இருக்கிறாளோ?" ஓமோம், அவள் தான் .உண்ரை அன்னம்" விஜயலட்சுமியின் குரலில் மீண்டும் இழிவுபடுத்தும் ஏளனம். ஆனால், மீனாட்சியம்பாளுக்கு உள்ளம் குளிர்ந்துபோகின்றது.
அவளுக்குத் தன் செவிகளை நம்பமுடியவில்லை. "மகிழ்ச்சியான இந்தச் செய்தியை இப்படியா இவள் சொல்ல வேண்டும்" என்று மனதுள் நினைத்துக்கொள்ளுகின்றாள். மனதில் உண்டான பூரிப்பு ஒரு அணுவளவேனும் வெளிப்பட்டுவிடாது தன் உணர்ச்சிகளுக்கு மிக அவதானமாக அணை போட்டுத் தடுத்துக்கொள்ளுகின்றாள்.
மறுகணம் இன்னொரு வகையாகச் சிந்தித்துப் பார்த்து அவள் பெற்ற மனம் தவியாகத் தவிக்கின்றது. அண்னம் எதற்காக இப்போது கடிதம் எழுதி இருக்கின்றாள்? எண்னதான் எழுதியிருக்கின்றாளோ! அவளுக்கும் ஏதாவது இடைஞசல் வந்து வாழிககையில் குறுக்கிட்டுவிட்டதோ? தன் இஷ்டம் போல் எல்லோரையும் கைகழுவிவிட்டு ஒருவனோடு அவள் போனபோது உள்ளூர அவளை வெறுத்தவள் தான். ஆனால், அவள் ஒருத்தியாவது இப்போது குடியும், குடித்தனமுமாக இருக்கின்றாள் என்று எண்ணி உள்ளூர மனம் மகிழ்ந்துகொண்டு இருந்தாள். அவள் மீது இருந்து வந்த வெறுப்பு, அவள் ஒருத்தியாவது வாழ்ந்துகொண்டிருக்கின்றாள் என்பதில் மறைந்துபோனது. அவளை மனதார வெறுத்ததென்பது பொய் பெற்ற மனத்தால் அவளை ஒதுக்க முடியவில்லை. அவள்மனது தன்னையே தான்நம்புவதற்கு இயலவில்லை. அவளை எண்ணி இந்த மனம் ஏன் இப்பொழுது சஞ்சலப்பட வேணடும்! அவள் என்ன எழுதி இருக்கின்றாள் என்பதை அறிவதற்கு
தெணியான் 33

Page 19
மரக்கொக்கு
ஆவற்படவேண்டும்! அவள் கடிதத்தினால் எந்த விதமான பாதிப்புக்கும் ஆளாகாதவள் போலக் காட்டிக்கொண்டு, அவள் பற்றிய செய்தியை அறிந்துகொள்ளும் அந்தரங்க நோக்கத்துடன் வேண்டாவெறுப்பாகப் பேசுகின்றவள் போலக் கேட்டாள் ܬܹܐ
அவள் என்ன எழுதியிருக்கிறாள்?" "உனக்குத்தானே எழுதியிருக்கிறாள். நீ வாசிச்சுப்பாரன்"- என்கிறாள் சட்டென்று அலட்சியமாக விஜயலட்சுமி.
நீ சொல்லன்" "வீட்டுக்கு வரப் போறாளாம்" சொல்லிக்கொண்டு தாயின் முகத்தை உன்னிப்பாக அவதானிக்கின்றாள்.
மீனாட்சியம்பாள் முகத்தில் பூரிப்பில்லை; அவள் முகம் எதிர்பாராத விதமாகச் சுண்டிப்போகின்றது. ஏன் இங்கே வருகிறாள்! அவளும் கணவனோடு பிணக்குப்பட்டுக் கொணர்டுதான்.வரப்போகிறாளோ! எப்படியென்றாலும். அவள் வேறெங்கேதான் போவாள்! மூத்தவள் ஒரு பிள்ளையோடு குமர் போல வீட்டிலே இருக்கிறாள். இவளும் வந்து." மனதில் சந்தேகம் எழுகின்றது. நினைத்துப் பார்க்கவே நெஞ்சு வெடித்துவிடும் போலப் பாரம் அழுத்துகின்றது. உள்ளத்தில் எழுந்த சந்தேகத்தைப் போக்கவேணடுமென அவா உள்ளே உந்துகின்றது. அவள் வரவை வெறுத்துப் பேசுகின்றவள் போல, "எண்ணத்துக்கு வாறாளாம்?"
"அம்மாவின்ரை சோட்டை பிள்ளைக்கு இப்பதான் வந்திருக்குது" விஜயலட்சுமி தாய் உள்ளத்தைப் புரிந்துகொள்ளாமல் கிண்டல் பணினுகின்றாள்.
அவளின் கேலிப் பேச்சைக் கேட்டு தாய் மெளனித்துப்போய்நிற்கின்றாள். தாய்மீது எழுந்த சந்தேகம் அவள் மனதிலிருந்து இன்னும் முற்றாக நீங்கிப்போய்விடவில்லை. தாய் உணர்மையாகவே அண்ணலட்சுமியை இப்பொழுதும் வெறுக்கின்றாளா அல்லது வெறுப்பதுபோலப் பாசாங்கு பண்ணுகின்றாளா? உண்மையை அறிவதற்கு அவள் மனம் துடிக்கின்றது. தாய் தொடர்ந்து பேசாமல் ஊமையாகி நிற்பது அவளுக்குத் திருப்தியாக இல்லை. அந்த அதிருப்தியை வெளிப்படுத்திக் கொண்டு,
"என்ன ஊமையாப் போனாய்?" என்று மீண்டும் கேட்கின்றாள். நான் இதுக்கென்ன சொல்லுறது" அப்ப. நிறை குடம் வைச்சு, மாலை போட்டு மேளதாளத்தோடை அவளை வரவேற்கப் போறாயாக்கும்."
34 தெணியான்
 

மரக்கொக்கு
ஓ. நீ வாய்க்கு வந்ததையெல்லாம் சொல்லிக்கொண்டிரு." வெடுக்கென்று அவள் பேச்சை வெட்டிப் பேசுகின்றாள்.
நான் சொல்லிப்போட்டன். அவள் இந்த முத்தத்திலை கால் வைக்கக்கூடாது. நீ என்ன சொல்லுறாய்?"
நான் சொல்லுறதுக்கு என்ன கிடக்கு" "எழுதப்போறன் அவளுக்கு" "எழுதன்." அன்னலட்சுமி விஷயத்தில் எதுவிதமான அக்கறையும் இல்லாதவள் போலத் திரும்பவும் மீனாட்சியம்பாள் கூறுகின்றாள். இஞ்சை அவள் வரவே கூடாது" "என்னவாவது செய்யுங்கோ" கதையை நீட்டிக்கொண்டு போக விரும்பாது முடிவாக மீனாட்சியம்பாள் சொல்லிக்கொண்டு மன வாட்டத்துடன் திரும்பி உள்ளே நடக்கின்றாள்.
அவள் போய்க்கொண்டிருப்பதைப் பார்த்து, அவளுக்குப் பின்னே இறுமாப்புடன் விஜயலட்சுமி தலையாட்டிக்கொண்டு நிற்கின்றாள்.
பொன்னம்பல மணியகாரன் என மதிப்பு மரியாதைகளுடன் அழைக்கப்பெறும் பொன்னம்பலம்பிள்ளையின் தந்தையான சிதம்பரப்பிள்ளை மணியகாரன், இந்த மணியகாரனி பரம்பரம்பரையின் அதியுண்ணத பொற்காலத்தைச் சிருஷ்டித்த மகா புருஷரெனப் போற்றப்படுகின்றவர். சிதம்பரப்பிள்ளை மணியகாரனின் தந்தையான ஆறுமுகம்பிள்ளை, அவரது தந்தையான வைரவநாதபிள்ளை ஆகிய இருவரும் மணியகாரர்களாக இருந்து ஆட்சியதிகாரம் பண்ணியவர்கள் தான். ஆனால் அவர்கள் இருவரும் தங்கள் பரம்பரைச் சொத்துக்களாக இருந்த நிலபுலங்களையும், தங்கள் அதிகாரத்துக்குட்பட்ட இரண்டு ஆலயங்களையும் அந்தப்பகுதியில் வாழிந்த அடிமை குடிமைகளையும் ஆண்டு அநுபவித்து வந்திருக்கும் கோயில் மணியங்கள். சிதம்பரப்பிள்ளை மணியகாரண, பரம்பரை வழிவந்த கோயில் மணியமாக மாத்திரமல்லாது, அரச பதவி வழிவந்த மணியகாரனாகவும் மேட்டிமையுடன் திகழ்ந்த ஒருவர்.
வைரவநாதபிள்ளை மணியகாரன் வாழ்ந்து வந்த இல்லம் ஒரு காலத்தில் அந்தக் கிராமத்தின் மத்தியில் அமைந்திருந்தது. அவரின்
கெணியாள் a

Page 20
மரக்கொக்கு
அந்த இல்லம் அவரது குலப் பெருமைக்கும் கெளரவத்துக்கும் ஏற்றதாக அமைந்திருக்கவில்லை. புதிய இல்லமொன்றை உருவாக்கித் தங்கள் பெருமைகளைப் பேணிக் காக்கவேண்டும் என்னும் எண்ணம் அவர் மனதில் எழுந்தபோது, அந்தப்பகுதியில் அதுவரை இல்லாத ஆடம்பரமான ஓர் இல்லத்தைக் கட்டி முடிக்க அவர் மனம்கொண்டார். அப்படியான ஓர் இல்லத்தைக் கிராமத்தின் மத்தியில் கட்டி எழுப்புவதற்கு அவர் மனம் ஒப்பவில்லை. அதற்கு ஏற்ற இடமொன்றினை அவர் ஆராய்ந்துகொண்டிருந்தபோது தான், காங்கேசன்துறையிலிருந்து பருத்தித்துறை நோக்கிக் கடற்கரை ஓரமாகச் செல்லும் நீண்ட மண்பாதை வாகனப் போக்குவரத்துக்கு உகந்த விதமாகக் கல்லுப் பதித்த றோட்டாக உருவாகிக்கொண்டிருந்தது. அந்தப் பிரதான வீதிக்கருகே, அவருக்குச் சொந்தமான இரு ஆலயங்களுக்கும் மத்தியான இடத்திலிருந்த ஒரு நிலப் பரப்பைத் தமது இல்லத்தைக் கட்டுவதற்குப் பொருத்தமான இடமாக அவர் தேர்ந்தெடுத்துக்கொண்டார்.
அந்த நிலத்தில் அவரது அடிமை குடிமைகளின் தலைமகனான மடந்தையணி ஒரு குடிசையைக் கட்டி, தன் குடும்பத்துடன் வாழ்ந்துகொண்டிருந்தான். அந்தக் குடிசைக்கு அருகே இன்னொரு கொட்டிலைக் கட்டி, கடற்கரை வெணி மணலை அள்ளிவந்து அதனுள்ளே பரப்பினான். வாகன வசதியில்லாத அந்தக் காலத்தில் கால்நடையாகச் செல்லும் வழிப்போக்கர்கள் அவன் உருவாக்கிய அந்தக் கொட்டில் மடத்தில் வந்து தங்கிப் போனார்கள். அவன் தென்னை மரங்களில் ஏறி இளநீர்க் குலைகளை இறக்கிவந்து, மடத்தில் வந்து தங்கும் வழிப்போக்கர்களின் பசிக்களை தீர இளநீரைச் சீவிக்கொடுத்தான். அதனால் அந்த மடம் சிறப்படைந்ததோடு அவன் பெயரும் பேசப்பட்டு வந்தது. கடல்மேற் செல்லும் கப்பல்களில் பயணம் செய்பவர்கள், கரையில் வைத்துக்கொள்ளும் இடக் குறிப்புக்களுள் ஒன்றாக அந்த மடமும் இருந்துவந்தது. கப்பலோட்டிகள் பாடிச் செல்லும் கப்பல் பாட்டுக்களில் அவன் பெயரும் அந்த மடமும் குறிப்பிடப்பட்டு வந்தன.
இவைகளெல்லாம் மணியகாரன் அறியாதவைகளல்ல. தனது அதிகாரத்துக்குட்பட்ட ஒரு அடிமையின் பெயர் விதந்து பேசப்படுவதை மணியகாரன் விரும்புவாரா? அவன் செய்துகொண்டிருந்த இந்தத் தொண்டுகளை எல்லாம் நிறுத்திவிடுமாறு கட்டளை இடுவதற்கு மணியகாரன் இயலாதவருமல்லர். ஆனால் அப்படிச் செய்தால் உலகம்
36 தெணியான்

மரக்கொக்கு
தன்னைப் பழி சொல்லும் என்று கருதி, தகுந்த சந்தர்ப்பத்தை அவர் எதிர்பார்த்திருந்தார். தமக்கென்றொரு இல்லம் அந்த இடத்தில் நிருமாணிக்கத் தீர்மானித்த பிறகு, அவருக்கு அடிமையாக இருக்கும் மடந்தையன் அதன் பிறகும் அந்த நிலத்தில் குடியிருக்க முடியுமா! அல்லது வாய் திறந்து அவன் ஒரு வார்த்தை எதிர்த்துப் பேசத்தான் முடியுமா! அவன் அங்கிருந்து குடிபெயர்ந்து, கடற்கரைப்பகுதியிலிருந்து உள்ளே சென்று, ஒரு குடிசையைப் போட்டுக்கொண்டு வாழவேண்டி நேர்ந்தது.
மடந்தையனை அந்த நிலத்திலிருந்து வெளியேற்றிய பிறகு மணியகாரன் இல்லம் அமைக்கும் வேலைகள் ஆரம்பமாயின. மணியகாரன் வீடு கட்டி முடிக்கப்பட்டதே ஒரு பெரிய கதைதான். செவிவழி வந்த கர்ண பரம்பரைக் கதைகள் போல இன்றும் அந்தச் சம்பவங்கள் பேசப்பட்டு வருகின்றன.
மணியகாரன் தனது அதிகாரத்துக்குட்பட்ட பிரதேசத்துக்குள் வாழும் மக்களுக்குக் கட்டளை பிறப்பித்துவிட்டார். அதன் பிறகு சொல்லவும் வேண்டுமா! நூற்றுக்கணக்கான அடிமை குடிமைகள் குறித்த தினத்தில் அங்கு வந்துசேர்ந்தார்கள். அப்போது ஆனிமாதக் கடல் அலையின்றிச் செத்துக் கிடக்கின்றது. அடிமை குடிமைகளில் ஆணிகள் கொந்தாலிகள், கோடரிகளைக் கைகளில் தூக்கிக்கொண்டு கடலுக்குள் இறங்கினார்கள் பெண்கள் நார்க் கடகங்களை தலைமீது வைத்துக்கொண்டு அவர்களைப் பின்தொடர்ந்து சென்றார்கள் கரையிலிருந்து சுமார் ஐம்பது மீற்றர் தொலைவில் கடலின் உள்ளணை போல சிறு மதிலாக நீண்டு செல்லும் முருகைக் கட்டை அடைந்து கொந்தாலி, கோடரிகளினால் கொத்தி கற்களைப் புரட்டினார்கள். பெண்கள் தாங்கள் கொண்டுவந்திருக்கும் நார்க் கடகங்களில் அந்தச் சுண்ணக் கற்களைப் போட்டு நிரப்பித் தலைமீது வைத்துச் சுமந்தார்கள் இடுப்பளவு கடல் நீரில் மெல்ல மெல்லச் சுமந்து வந்து, கரையை அடைந்து வீதியைத் தாண்டி உள்ளே வந்து, அந்த நிலத்திற் கற்களைக் கொட்டிக் குவித்தார்கள் பாரிய கற்களை ஆண்கள் கட்டுமரங்களில் ஏற்றிக் கரையிற் கொண்டுவந்து சேர்த்தார்கள். மூன்று மாத காலம் காலை முதல் அந்திப் பொழுது கருகும் வரை இந்த வேலைகள் தொடர்ந்து நடைபெற்றன. கொதிக்கும் வெயிலில் உப்புக் கடலுக்குள் நின்று உடல் கருக வேலைசெய்து சுண்ணக் கற்களை அள்ளிச் சுமந்து அம்பாரம் அமீபாரமாக அவர்கள் குவித்தார்கள்
தெணியான் 37

Page 21
மரக்கொக்கு
அதன் பிறகு கற்களை அடுக்கி காளவாய்க்கு எரிஊட்டும் வேலைகள் ஆரம்பமாயின. காளவாய்க்கு வேண்டிய புளியமரங்களைச் சேரிக்கத் தொடங்கினார்கள். மணியகாரனின் அதிகாரத்துக்குட்பட்ட பகுதிகளில் புளியமரங்கள் ஏராளமாக வளர்ந்து நின்றன. ஏழுபுளியடி, கண்டுப்புளியடி, புளியடைப்பு, கட்டைப்புளியடி, புளியங்கண்டடி, புளியடி ஆகிய பகுதிகளில் எல்லாம் நங், நங் என்று கோடரிகளின் சத்தம் எழுந்தது. புளியமரங்கள் ஒவ்வொன்றாகச் சரசர எனச் சரிந்து வீழ்ந்தன. அந்த மரங்களின் கிளைகள் கொப்புகள் நறுக்கித் துண்டாடப்பட்டன. ஆணிகளும் பெண்களுமாகச் சுமக்கக்கூடியவற்றைத் தோளிலும் தலையிலும் சுமந்து வந்தார்கள். பாரிய மரங்களைக் கைவண்டிகளில் ஏற்றி இழுத்துவந்து சேர்ந்தார்கள். கைவண்டிகளில் கொண்டுவர முடியாதவற்றை மாட்டு வண்டிகளில் ஏற்றி வந்து போட்டார்கள்.
பின்னர் தரைமீது வட்ட வடிவில் புளியமரங்களைப் பரப்பி அதன்மேற் சுண்ணக் கற்களை அடுக்கினார்கள். கற்களுக்கு மேல் மீண்டும் புளிய மரங்களைப் பரப்பினார்கள். அதற்கு மேல் கற்களை அடுக்கினார்கள் இவ்வாறு அடுக்கி அடுக்கி ஆங்காங்கே வெற்றிடங்களை உருவாக்கி, உள்ளே காற்றுப் புகுந்து தீப்பற்றி எரிவதற்கு ஏற்ற வாய்ப்பினை
உண்டாக்கினார்கள் மலைபோல வெப்பம் தணிந்து குவிந்திருந்த
கற்குவியலின் மேற் பகுதியைப் புளியம் விறகினால் முற்றாக மூடினார்கள் அதன் பிறகே அந்தக் காளவாய்குத் தீ மூட்டப்பட்டது. காளவாயில் தீ மூண்டு விண்தொட வளர்ந்து எரியத் தொடங்கியது. ஒருமாத காலத்துக்கு மேல் அந்தத் தீ தொடர்ந்து எரிந்துகொண்டிருந்தது. அந்த நெருப்பினால் அந்தப் பகுதி எங்கும் அனற் காற்று வீசிக்கொண்டிருந்தது. கரும்புகை மூட்டம் குமைந்து குமைந்து மேலெழுந்து வானமெங்கும் பரவி இருள் கவிந்து கிடந்தது.
சில தினங்களின் பின் சுண்ணக் கற்கள் எரியுண்டு நெருப்பு மலையாக காளவாய் தங்க நிறத்தில் தகதகத்துக்கொண்டிருந்தது. மேலும் சில நாட்கள் கடந்த பின் கற்கள் நீறத் தொடங்கின. காளவாய் முற்றாக வெப்பம் தணிந்த பின்னர், கட்டட வேலைகளை மணியகாரன் தொடங்கினார். வெந்து தணிந்து நீறான சுண்ணச் சாந்தினை அடிமை குடிமைகள் வெட்டி வெட்டி அள்ளிக் கொட்டிக்கொண்டிருந்தார்கள் கொத்தனார்கள் மந்திரத்தில் எழுந்த மாளிகை போலக் கட்டு வேலைகளைத் துரிதமாகச் செய்து முடித்தார்கள்
38 தெணியான்

மரக்கொக்கு
அதன் பிறகு கூரை போடும் வேலைகள் ஆரம்பித்தன. அந்த வீட்டின் கூரையைப் பழைய முறைப்படி பனையோலை கொண்டு வேய்வது தனது கெளரவத்துக்கேற்றதல்ல என்று மணியகாரன் கருதினார். ஒடு போட்டுக் கூரை வேய்வதே தனது அந்தளிப்துக்கு ஏற்றதென்று அவர் எண்ணினார். அந்தக் காலத்தில் ஓடுகள் இங்கே சுலபமாகக் கிடைக்காது. ஆனால் மணியகாரன் போன்றவர்களுக்கு அது கைக்கெட்டாத காரியமல்ல. தமிழ்நாட்டிலிருந்து கடல் மார்க்கமாக அக்காலத்தில் பாவனையிலிருந்த பீலி ஒடுகளைக் கப்பல்களில் ஏற்றி வந்து இந்த வீட்டின் கூரையாக அவர் போட்டுக்கொண்டார்.
அந்தக் காலத்தில் இந்தப் பகுதியில் இருந்த ஒரேயொரு ஒட்டு வீடென்றால் அது மணியகாரனின் வீடுதான். இந்த வீட்டைக் கட்டி முடிப்பதற்கு மணியகாரனுக்கு அதிக காலம் தேவைப்படவில்லை. ஒரு ஆறுமாத காலத்துக்குள் சகல வேலைகளையும் அவர் பூர்த்திசெய்து முடித்துவிட்டார்.
வீட்டு வேலைகள் ஆரம்பித்து மணியகாரன் தனது குடும்பத்துடன் இங்கு வந்து குடியேறும் வரை அவரது அதிகாரத்துக்குட்பட்ட அடிமை குடிமைகள், ஆணிகள், பெண்கள் என்ற பேதமில்லாது அனைவரும் வந்து தங்கள் தொண்டு துரவுகளைத் தவறாமற் செய்து வந்தார்கள். அவர்கள் அனைவருக்கும் காலை உணவாகப் பாணிப் பனாட்டும், பழந் தணிணியும் கிடைத்துவந்தது. மதியத்தில் பனையோலைத் தட்டுவங்களைக் கோலி மரவள்ளிக் கிழங்கு, பூசனிக்காய்க் கறிகளுடன் தினை அரிசிச் சோறு அவர்களுக்குத் திண்னக் கிடைத்தது. சில தினங்களில் விசேஷமாகக் கத்தரிக்காய்க் கறி அந்தச் சோற்றுடன் அவர்களுக்குப் போடப்படும். பொழுது கருகும் வேளையிற் தான் தினமும் அவர்கள் தங்கள் குடிசைகளுக்குத் திரும்பிச் செல்வார்கள் அப்பொழுது அவர்களை எதிர்பார்த்து பட்டினியோடு கிடக்கும் குஞ்சு குருமண்களுக்கு தினைச் சோறும் கறியும் குஞ்சுப் பெட்டிகளில் அவர்கள் கொண்டுசெல்லக் கிடைக்கும். அதற்குமேல் அவர்களுக்கு மணியகாரன் கூலியாக எதனையும் கொடுத்ததில்லை. அவர்களும் மணியகாரனிடம் வேறு எதனைத்தான் எதிர்பார்க்கிறார்கள் அவர்களது காய்ந்த வயிறுகள் நனைந்தாற் போதாதா வயிறுகளை நனைப்பதும் தங்கள் சந்ததிகளை உருவாக்குவதும் தவிர அவர்களுக்கு வேறென்ன வாழ்க்கை இருக்கிறது! மணியகாரன் வீட்டு வேலைகளினால் ஆறு மாதங்கள் தங்கள் வயிறுகள்
தெணியான் 39

Page 22
மரக்கொக்கு
நனைந்ததை எண்ணி அவர்கள் மகிழ்ந்தார்கள். அவர்கள் மனங்களில் இன்னொரு பெருமையும் இருக்கவே செய்தது. தங்கள் எஜமானனுக்கு, தங்களது உடல் உழைப்பினால் மாளிகை போன்ற ஒரு வீட்டைக் கட்டிக் கொடுத்திருக்கின்றோம் என்பதுதான் அது.
மணியகாரன் அந்தப் புதுமனையிற் குடிபுகுந்தபோது பெருமனது வைத்து தனது அடிமை குடிமைகளையும் அங்கு அழைத்திருந்தார். குஞ்சு குருமன் ஒன்று தவறாது அவர்கள் எல்லோரும் மணியகாரன் வீட்டில் வந்து கூடினார்கள்
மணியகாரன் அழைப்பைக் கெளரவித்து அவரை ஒத்த பெரிய மனிதர்கள் மாட்டு வண்டிகளைப் பூட்டிக்கொண்டு அங்கு வந்து சேர்ந்தார்கள். அவரவர் வரிசை அறிந்து மணியகாரன் அவர்களை வரவேற்று உபசரித்தார். அந்த நாற்சார் வீட்டின் விறாந்தைகளில் புற் பாய்களை விரித்து அந்தப் பெரிய மனிதர்களைக் கெளரவமாக இருத்திப் பக்குவமாக அவர்களுக்கு உணவு பரிமாறினார்கள்
அதன் பிறகே அடிமை குடிமைகளுக்கான பந்திகள் வைக்கத் தொடங்கினார்கள். வீட்டுக்கு வெளியே தென்னோலைக் கிடுகுகளை நீள வரிசையில் போட்டு, அடிமை குடிமைகளை அவரவர் சாதி வரிசைக்கேற்ப அவற்றில் இருத்தியே அவர்களுக்குப் பந்தி வைத்தார்கள் அன்று அவர்களுக்குக் கிடைத்த நெல்லரிசிச் சோறு, அமுதம் போல அவர்கள் வயிற்றையும் நெஞ்சையும் குளிர்வித்தது. பந்திகள் முடிந்த கையோடு அவர்கள் கொண்டுவந்திருக்கும் பனையோலைப் பெட்டிகளுக்கும் முகம் சுழிக்காது அன்று சோறு போட்டனுப்பினார்கள். பந்தி வைத்தவர்கள் என்றுமுள்ள கெடுபிடிகள் இல்லாது எல்லோருக்கும் அன்று உணவு போட்டார்கள் பெரிய மனிதர்கள் வீட்டுக்கு வந்திருக்கும் தருணத்தில் இப்படி நடந்துகொள்ள வேண்டுமென மணியகாரன்தான் அவர்களுக்குக கட்டளையிட்டிருக்கவேண்டும்.
மணியகாரன் வளவு' என்று இன்றும் குறிப்பிட்டுச் சொல்லப்படும் அந்த வீடு ஒரு காலத்தில் நீதவான் வீடு' என்ற பெயரையும் பெற்றிருந்தது. அடிமை குடிமைகளுக்கிடையே உண்டாகும் பிணக்குகளை விசாரிப்பது, தீர்ப்பு வழங்கித் தண்டனை அளிப்பது எல்லாம் மணியகாரனின் அதிகாரத்துக்குட்பட்டதாகவே அக்காலத்தில் இருந்து வந்தது. மணியகாரனே, நீதவானாகவும் விளங்கியதனால் அந்த வீடு நீதவான் வளவு' என்னும் பெயரைப் பெற்றது.
40 தெணியான்

மரக்கொக்கு
சமூகத்தின் நெளிவு சுழிவுகளைக் கணக்கிட்டு தங்கள் இருப்பை ஸ்திரப்படுத்திக்கொள்ளும் சாதுரியம் இந்த மணியகாரன் பரம்பரைக்கே கைவந்த கலை. இந்தக் கலையில் அசாதாரண வல்லமை படைத்தவர் ஆறுமுகம்பிள்ளை மணியகாரன். அவர் ஒரு சாது என்று பெயரெடுத்தவர். மெல்லப் பேசுவார்; பயந்த சுபாவம் உள்ளவர் போலப் பாசாங்கு பண்ணுவார். நெற்றியிலும், உடலிலும் வெண்ணிறு தரித்திருப்பார் எப்பொழுதும் உருத்திராக்க மாலை ஒன்றினை அணிந்துகொண்டிருப்பார் உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவதில் அவர் ஒரு நிபுணர் மறந்தும் பொய் பேசாதவர் போலக் காட்டிக் கொள்ளும் பொய்யர் அவர் பொய் பேசுகின்றார் எண்பதனை யாரும் கண்டுகொண்டுவிட்டால், உடனே மறதி என்ற திரையை இழுத்துவிட்டு, தான் கூறிய பொய்யை மெய்யாக்கிவிடுவதில் வல்லவர் இறைவன் ஒருவனிடமே தான் எல்லாவற்றையும் ஒப்புக் கொடுத்து முறைப்பாடு செய்வதாகச் சொல்லி கடவுள் நம்பிக்கை உடையவர்களை அச்சுறுத்தி தனது வழிக்கு வசப்படுத்திவிடுவார். அவர் பூண்டிருக்கும் அதீத பத்திக் கோலம் அவரது சாதுரியங்களையும் குயுக்திகளையும் மூடி மறைக்கும் புனிதப் போர்வையாக விளங்கியது. அதிகார வெறியும் அகங்காரமும் தமது சிறப்பான குணங்களாகக் கொண்டிருக்கும் மணியகாரன்களுக்குள்ளே அவர் ஒரு தனிப் பிறவியாக எல்லோராலும் கருதப்பட்டு வந்தார். மணியகாரன் மிதித்த இடத்துப் புல் சாகாது' என்றே அந்தப்பகுதி மக்கள் அவரைப் பற்றிப் பேசிக்கொள்வார்கள்
அந்தப் பகுதியில் வாழும் மக்கள் எவரிடத்திலாவது நிலபுலங்கள் கொஞ்ச நஞ்சம் இருந்துவிட்டால், அவர்களைப் பக்தி வெள்ளத்தில் இழுத்துச் செல்லும் பேராறாக அவர் அவதாரம் எடுப்பார். அவர்களைத் தெய்வ கைங்கரியத்தில் ஈடுபடுத்தி நன்னெறியில் இட்டுச் செல்லாது போனால் அவருக்கு உறக்கம் வராது. அந்தப் பெரும் பணியைச் செய்து முடிப்பதற்காக அவர்களைத் தனது வீட்டுக்கு அழைத்துப் பேசுவார். மணியகாரன் வீட்டுக்குள்ளே கால் அடி எடுத்து வைப்பதொன்றே வந்தவருக்குக் கதி மோட்சமாக இருக்கும். மணியகாரன் அழைப்பை ஏற்று வந்தவர் வீட்டுக்குள் வருவதற்குத் தயங்கி கூனிக் குறுகி நிற்கும். சமயம் பார்த்து மணியகாரன் அங்கே எழுந்தருளுவார். மணியகாரன் தமக்குக் காட்சி தந்தது கண்டு வந்து நிற்பவர் பரவசப்படும் வேளையில் தம்பி வாருங்கோ. வாருங்கோ." என முகம் மலர்ந்து கரம் கூப்பி வரவேற்பார். அவரது அண்பான வரவேற்பினால் வந்தவர் மேலும் ஒருபடி
தெணியான் 4.

Page 23
மரக்கொக்கு
குளிர்ந்து மெல்ல உள்ளே நுழையும் போதே, மணியகாரன் ஒரு ஆசனத்தைச் சுட்டிக் காட்டி, தம்பி அதிலே இருங்கோ" எனச் சமாசனம் கொடுத்து உபசரிப்பார். அவர் இருக்கையில் அமரும்வரை காத்திருந்து, அதன் பிறகே மணியகாரன் தனது ஆசனத்தில் உட்காருவார்.
மணியகாரனின் உபசரிப்பினால் தன்னை மறந்து உட்கார்ந்திருக்கும் அவரோடு பேச்சை ஆரம்பிப்பதற்கு முன்னர், கரங்களைக் கூப்பி தலையை மேலே தூக்கி, "சிவனே. சிவனே. முருகா. முருகா." என இரண்டொரு தடவைகள் பிரார்த்தனை பணினுவார். அதன் பிறகு அங்கு வந்திருக்கின்றவரை நன்றாக அவதானிப்பார் அவர் இருக்கை கொள்ளாது ஆசனத்து நுனியிலேயே மெல்ல அமர்ந்திருப்பார்
மணியகாரன் தொண்டையை மெல்லக் கனைத்துக்கொண்டு பேசத் தொடங்குவார்.
தம்பி நீங்களும் இறைவனுடைய குழந்தை; நானும் அவனுடைய குழந்தை; எங்களுக்குள் என்ன ஏற்றத் தாழிவு'
வந்திருப்பவர் மணியகாரன் முன் அதனை எப்படி ஒத்துக்கொள்வது! ஒப்புக்கொண்டு பேசுவது மணியகாரனைத் தாழ்த்திப் பேசுவது போலல்லவா இருக்கும்! அதனை மறுத்துச் சொன்னாலி அவர் சொல்லை ஏற்றுக்கொள்ளாது அவரை அவமதித்தது போலல்லவா ஆகிவிடும். எதனைப் பேசுவதென்று அறியாது அவர் சங்கடப்பட்டுக் கொண்டிருப்பார் அந்தத் தருணத்தில் மணியகாரன், "அப்பனே, தில்லையிற் கூத்தனே! காசிவழி கருணைக் கடலே!" என வடக்குத் திசை நோக்கி பாக்குநீரிணைக்கு அப்பால் கோயில்கொண்டிருக்கும் தெய்வங்களைத் தோத்தரித்து முடிப்பார். அதன் பிறகு மீண்டும் பேச்சை ஆரம்பிப்பார்
தம்பி, நாங்கள் வரும்போது எதையும் கொண்டு வந்தவர்களல்ல; போகும்போது எதையும் கொண்டுபோகப் போகிறவர்களுமல்ல. காதற்ற ஊசியும் வாராது காணும் கடைவழிக்கே. என்று பட்டினத்தார் பாடி இருக்கிறார், அப்பனே. இதெல்லாம் உங்களுக்குத் தெரியாததல்லத் தம்பி"
மணியகாரனின் இந்தப்பீடிகைகளின் அந்தரங்க நோக்கம் உணராது வந்திருப்பவர் குத்திரப் பாவைபோல ஓம் ஐயா." என்று ஒத்துப் பாடுவார்.
"எதுவும் எங்களுக்குச் சதமல்ல. அவனுடைய தாளைத் தவிர" மணியகாரன் பட்டனத்தடிகளாகி மேலும் அவரைக் கணிய வைப்பது
42 தெணியான்
 
 

மரக்கொக்கு
உணராமல் அவர் ஐயா சொல்லுறது சரிதான்" என்று ஒப்புதல் கொடுப்பார். மணியகாரன் கழுத்தில் தொங்கிக்கொண்டிருக்கும் உருத்திராக்க மாலையை ஒரு கரத்தால் பற்றி மெல்ல உருட்டிக்கொண்டு மேலும் மெஞ்ஞானம் பேசுவார்.
இந்த சம்சார சாகரத்தில் கிடந்து உழலுவது எனக்கு வரவர வெறுத்துக்கொண்டே போகிறது. ஆனால் அவனுடைய தெய்வப் பணிகள் முட்டின்றி நடந்துவரவேண்டும் என்பதனால் தான். மணியகாரன் சொல்லி முடிப்பதற்கு முன்னர் வந்திருக்கின்றவர் தவித்துக்கொண்டு இடை மறித்துச் சொல்லுவார், "அது எங்களுக்குத் தெரியுமையா"
சற்று நேரம் மணியகாரன் கணிகளை மூடித் தியானத்தில் இருந்துவிட்டுப் பின்பு சொல்லுவார், தம்பி எனக்கு இரண்டொரு தினங்களாக நல்ல உறக்கமில்லை. இறைவன் எண்ணைச் சோதிக்கிறானோ என்றுதான் மனம் உளைகிறேன்; அதனால் தான் உங்களுக்கு ஆள் அனுப்பிக் கூப்பிட்டேன்."
வந்திருப்பவர் ஆவலுடன் அப்பொழுது சொல்லுவார், "என்ன சங்கதி ஐயா! நான் என்ன செய்யவேணும். சொல்லுங்கோ/ஐயா, சொன்னாலே அதுக்கு நான் மாறாக நிற்கமாட்டேன்"
இதுதான் தகுந்த சமயம் என்று கண்டு தம்பி தமிழ் நாட்டிலே இருந்து எனக்கொரு அறிவித்தல் வந்திருக்கு; பொன்னம்பலத்தான். அந்தத் தில்லைநடராஜன் நித்திய நைமித்தியங்கள் குறைவின்றி நடக்க வேணடுமானாலி இங்கிருந்தும் உதவவேணடுமென்று கேட்டிருக்கின்றார்கள்" என்பார் மணியகாரன்.
"செய்வமய்யா! அவனுக்கில்லாதது எங்களுக்கெதுக்கு!" வந்திருப்பவர் கைகூப்பிப் பரவசப்பட்டுக்கொள்வார்.
நிரந்தரமான ஒரு வருவாய்க்கு வழிதேட வேணும், இன்றைக்கு உதவி செய்துவிட்டு நாளைக்குக் கைவிடக்கூடாது"
"அவனுக்குச் செய்யும் பணியிலை எனக்கும் ஐயா இடமளிக்கிறது எனக்குக் கிடைக்கக் கூடிய பெரும் பேறு நான் என்ன செய்யவேணும், ஐயா சொல்லுங்கோ"
"உங்களுக்கு எண்ணெண்டு சொல்லுறது தம்பி" ஐயா, நீங்கள் எதைச் சொன்னாலும் நான் அதைச் செய்வேன்." "சரி, தம்பியும் விடுகிறதாக இல்லை. இதுவும் அவன் செயல்தான். அவன் தான் உங்களைக்கொண்டு இப்போ பேசுவிக்கிறான். அவன் மனக்
தெணியான் 43

Page 24
மரக்கொக்கு
கருத்தை மறுப்பதற்கு நான் யார்? தம்பி கொஞ்ச நிலபுலங்களைச் சிதம்பர நடராஜன் பெயரில் எழுதிவிட்டால். அவனுக்கு வேண்டிய உதவிகள் இங்கிருந்து குறைவின்றிப் போய்க்கொண்டே இருக்கும்."
நான் தாறனையா என்ரை காணி பூமிகளை அவனுக்கு நான் தாறனையா"
வந்திருப்பவர் சிரமேற் கரங்குவித்த வண்ணம் மெய் சிலிர்த்து எழும்புவார்.
மறுதினம் அவரது நிலபுலங்கள் கோயில் சொத்துக்காளாகப்பெற்று அவைகளைப் பராமரிக்கும் உரிமை மணியகாரன் பெயரில் சாட்டுதல் பண்ணப்பட்டு, உறுதி முடிக்கப்பட்டுவிடும்.
அந்தச் சொத்துக்கள் உணர்மையில் மணியகாரனின் பிள்ளைகளுக்குப் போய்ச் சேர்ந்துவிட்டன என்பதை அந்த அப்பாவி மனிதன் அறியமாட்டான். அவன் பொன்னம்பலத்தானின் பொற்றாமரைக் குளத்தில் மானசீகமாக மூழ்கி மூழ்கி, ஜீவன் முத்தியடைந்துகொண்டிருப்பான்.
ஆறுமுகம்பிள்ளை மணியகாரன் தீர்க்கதரிசனத்துடன் எந்தக் காரியத்தையும் திட்டமிட்டுச் செயற்படுத்துவதில் மகா தீரர் அவர் தமது பிள்ளைகளுக்குப் பெயர் குட்டுகின்றபொழுதே எதிர்காலம் பற்றித் திட்டமிட்டுவிட்டார். மணியகாரன் தமது மூத்த புதல்வனுக்குச் சிதம்பரப்பிள்ளை என்றும், இளைய மைந்தனுக்குக் காசிப்பிள்ளை என்றும் பெயர்களைச் சூட்டியதே ஒரு நோக்கத்துடன்தான். இந்தியாவிலுள்ள சிவதலங்களான காசிக்கும், சிதம்பரத்துக்கும் நிலபுலங்களைத் தரும சாதனம் செய்விப்பதாகச் சொல்லி தமது பிள்ளைகளான காசிப்பிள்ளைக்கும், சிதம்பரப்பிள்ளைக்கும் சொந்தமாக அந்தச் சொத்துக்களை எழுதி எடுத்துக்கொண்ட குட்சும புத்தி அவரைத் தவிர வேறு எவருக்கு வரும்!
மணியகாரன் குடும்பத்துக்குப் பணம் என்பது ஒரு விளையாட்டுப் பண்டம். அவர்கள் பணம் சேர்த்து வைப்பதும் அதனை எடுத்துப் பயன்படுத்துவதும் வேறு எந்தக் குடும்பத்திலும் நடைமுறையில் இல்லாத ஒரு புதுமை. அந்த வீட்டின் நடுப் பகுதியில் "காசறை" என்று சொல்லப்படும் பிரத்தியேகமான ஓர் அறை உண்டல்லவா! அந்த அறையின் கதவில் சிறிய ஒரு துவாரம் இருக்கின்றது. அந்தத் துவாரத்துக்கூடாக வெள்ளி நாணயங்களையும், செப்புக் காசுகளையும் உள்ளே போட்டு வைப்பது அவர்களுடைய வழக்கம். பணம்
44 தெணியான்
 

மரக்கொக்கு
தேவைப்படும்போது அந்தக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் கதவைத் திறந்து வேண்டிய அளவு பணத்தை அள்ளிக்கொண்டு போகலாம். பணத்தை எண்ணி வைப்பது, பின்னர் எண்ணி எடுப்பது தங்கள் குடும்ப கெளரவத்துக்கு இழுக்கான செயல் என்று அவர்கள் கருதினார்கள்.
ஆறுமுகம்பிள்ளை மணியகாரனுக்கு இருந்து வந்த சொத்துச் சுகங்களும் சமூக அந்தஸ்து அதிகாரமும் அவர் புத்திரன் சிதம்பரப்பிள்ளை மணியகாரனை மேலும் ஒருபடி உயர்த்திவிட்டன. சிதம்பரப்பிள்ளை மணியகாரன் கோயில் மணியமாக மாத்திரம் இருந்தவரல்லர் இந்த நாட்டை ஆட்சி செய்துகொண்டிருந்த ஆங்கிலேயர்களுக்கு, சுதேசிகளை அடக்கி ஆளத் தகுந்த இராஜப் பிரதிநிதிகள் தேவைப்பட்டார்கள். நிலவுடமையாளர்களாக இருக்கின்றவர்கள் அடிமை குடிமைகளைத் தமது அதிகாரத்தின் கீழ் அடக்கி ஆண்டுகொண்டிருக்கின்றவர்கள் தான் அந்தப் பதவிக்கு ஏற்றவர்களென ஆங்கிலேய ஆட்சியாளர்கள் கண்டுகொண்டார்கள் இராஜப் பிரதிநிதியாக உள்ளவர் தங்களுக்கு விசுவாசியாக இருந்து, சுதேசிகளைக் கட்டி மேய்க்கவேண்டுமென்பதே அவர்களுடைய எதிர்பார்ப்பு. அவர்களின் பிரதிநிதியாக இருப்பதற்குத் தகுந்த சொத்துக்களும் குடும்பச் செல்வாக்கும் சமூக அதிகாரமும் சிதம்பரப்பிள்ளை மணியகாரனுக்கு இருந்ததினால் அவரை மணியகாரன் என்னும் இராஜப் பிரதிநிதியாக அவர்கள் நியமித்துக்கொண்டார்கள். சிதம்பரப்பிள்ளை மணியகாரன் இரு வழிகளாலும் அதிகாரமுடைய மணியகாரனாகத் திகழ்ந்தவர். அவர் உயிருடன் வாழ்ந்த காலம் மணியகாரன் குடும்பத்துக்கு மகோன்னதமான ஒரு பொற்காலம்.
சிதம்பரப்பிள்ளை மணியகாரன் மேன்மையாகப் பயணஞ் செய்வதற்குச் செளகரியமான சிவிகை அவரிடமிருந்தது. சிவிகையைத் தோள்மீது வைத்துச் சுமந்து செல்வதற்கு அடிமை குடிமைகளும் எப்பொழுதும் தயாராக இருந்தார்கள். தூர இடங்களுக்கு அவர் பிரயாணஞ் செய்யும் போதில் அவரை ஏற்றிச் செல்வதற்கு ஆடம்பரமான வில்லு வண்டிகளும், அவற்றை இழுத்துச் செல்வதற்கு கொழுத்த காளை மாடுகளும் அவரிடமிருந்தன. அவைகள் போதாதென்று வெள்ளைத் துரைமார் அன்பளிப்பாக வழங்கிய குதிரை வண்டியும், நல்ல சாதிக் குதிரைகளும் அவருக்குச் சொந்தமாக இருந்தன. அந்த வண்டிகளை ஒட்டிச் செல்வதற்குரிய குடி மக்களும் அவரிடம் இருந்தார்கள்
மணியகாரன் தமது நிருவாகத்துக்குட்பட்ட மக்களுக்கு அதிகாரம்
தெணியான் 45

Page 25
மரக்கொக்கு
பண்ணும் எஜமானன் வெள்ளைக்கார ஆட்சியாளர்களுக்குப் பணிந்து சேவகஞ் செய்யும் இராஜப் பிரதிநிதி
வெள்ளைக்கார ஆட்சியாளர்களின் மணமறிந்து அவர்கள் தலை அசைப்புக்கெல்லாம் மணியகாரன் தாளம் தப்பாது ஆடிக்கொண்டிருந்தார். ஆனால் மதம் என்று வந்துவிட்டால் அதில் ஒரு கண்டிப்பும் நிதானமும் அவருக்கு வந்துவிடும்.
சைவமும் அதன் வழிவந்த சமய ஆசாரங்களும் தமது இரு கணிகளாக அவர் கருதினார்.
இந்து மதமும், இந்துக் கோயில்களும் சமூகத்தின் படிமுறையான சாதி வரண்முறைகள் நசிந்தும் சிதைந்தும் போய்விடாதவண்ணம் பேணிப் பாதுகாக்கும் காவல் அரணிகளாக விளங்குகின்றவை. பரம்பரைக் கோயில் மணியகாரனாக இருந்ததனால் சமூக அதிகாரத்தைப் பெற்று, அந்த அதிகாரத்தினூடாக அரச அதிகாரத்துக்கு உரித்துடையவரானவர் மணியகாரன். அவர் சமயம், சமய ஆசாரம் என்று வந்தால், சற்றேனும் நெகிழ்ந்து போக எப்படிச் சம்மதிப்பார்!
சிதம்பரப்பிள்ளை மணியகாரனின் தம்பியான காசிப்பிள்ளை இளவயதில் காலமானதால், தம்பிக்கு உரித்துடைய சொத்துக்களுக்கும் அவர் சோந்தை உடையவரானார். அதனால் ஆண்டு அநுபவிப்பதற்கு வேண்டிய செல்வங்கள் அனைத்தும் மணியகாரன் காலடியில் மலை போலக் குவிந்து கிடந்தன. ஆனால் மணியகாரன் மனதில் எப்பொழுதும் ஒரு சுமை அவரைப் போட்டு ஆழ்த்திக்கொண்டே இருந்தது. بي
இந்த மணியகாரன் பரம்பரை தழைத்துக் கிளைத்து வளருவதற்கு அவருக்கென்று ஒரு புத்திர பாக்கியம் இல்லாமற் போனதே அந்த மனச்
60.
தென்மராட்சி மணியகாரன் குடும்பத்தில் அவருக்குத் தகுதியான ஒரு மணப் பெண்ணை மனைவியாக அவர் தேர்ந்தெடுத்துக்கொண்டார். அவளோடு சேர்ந்து சில ஆண்டுகள் எந்தவொரு கவலையுமில்லாது இல்லற சுகத்தில் திளைத்து, வாழ்க்கையை நன்றாக அநுபவித்து வந்தார். அதன் பிறகே ஒரு குழந்தை இல்லாத குறை அவர் மனதை அரிக்க ஆரம்பித்தது. ஆண்டுகள் ஒன்றன் பின் ஒன்றாகக் கழிந்தன. பின்னர் தசாப்தமாக ஒன்று சேர்ந்து மேலும் கழிந்து செல்லத் தொடங்கியது. ஆனாலி மணியகாரனுக்குப் புத்திர பாக்கியம இல்லாமலே போய்க்கொண்டிருந்தது. காலங்கள் கடந்து போனதுபோல அவர் மனக்
46 தெணியான்

மரக்கொக்கு
குறையும் மலையாக வளர்ந்துகொண்டே சென்றது.
புத்திரப்பேறு அடைவதில் எந்தவிதமான ஒரு குறையும் தன்மீது இல்லையென அவர் உறுதியாக நம்பினார். மனைவியானவளிடத்தில் தான் ஏதோ குறை இருக்கவேண்டுமென்று அவர் கருதினார். அந்தக் காலத்தில் இதற்கெல்லாம் டொக்டர்களை அணுகிப் பரிசோதனை செய்துகொள்வது கெளரவக் குறைவான செயல் என்ற எண்ணம் பொதுவாக மக்கள் மத்தியில் இருந்ததால் அப்படிச் செய்வதற்கு அவர் மனம் ஒப்பவில்லை. அத்தோடு சமூகத்தில் பெரிய மனிதனாக இருக்கும் மணியகாரன் மனைவியை ஒரு டொக்டரிடம் இந்த விதமான பரிசோதனைக்கு உட்படுத்துவதா அந்த எண்ணத்தையே மணியகாரன் நஞ்சாக வெறுத்தார். நாட்டு வைத்தியம் பார்ப்பது தகுதியான காரியமாக அவர் மனதுக்குத் தோன்றியது. பரியாரி முருகன் அந்தக் காலத்தில் பிரபலமான நாட்டு வைத்தியன். அவன் இரகசியமாக மணியகாரன் வீட்டுக்கு அழைத்து வரப்பட்டான்.
மணியகாரன் மனைவியானவளின் இடது கரத்தை அவன் மெல்லத் தொட்டு நாடி பிடித்து குருதி ஓட்டத்தைத் துல்லியமாக அவதானித்து நாடி சாஸ்திரப் பாடலையும் பாடி, குணங் குறிகளைக் கேட்டறிந்தான். மணியகாரனின் மனைவியானவள் சொன்ன குணங்குறிகளோடு மேலும் இன்ன இன்ன குணங்குறிகள் இருக்குமென்று தானும் சிலவற்றை எடுத்துச் சொன்னான். அவன் சொன்ன குணங்குறிகளைக் கேட்டு மணியகாரன் மனைவியானவளின் முகத்தைக் குறிப்பாக நோக்கினார். அப்பொழுது அவன் சொன்னவற்றை ஒப்புக்கொண்டு அவள் மெல்லத் தலையசைத்தாள். அவன் நோயைக் கண்டறிந்துவிட்டான் என்ற நம்பிக்கை மணியகாரன் மனதில் உண்டானது. மனைவியைப் பிடித்துள்ள நோய் தீரவேண்டும். அந்த நோய் தீர்ந்துவிட்டால் அவள் வயிற்றில் கர்ப்பம் தங்கும். உடற் குடு தணியவேண்டுமானால் குழம்பு வைத்து மூன்று மண்டலம் பத்தியமாகச் சாப்பிட்டு வரவேண்டும். மருந்தும் முடியக் கர்ப்பமும் தரிக்கும் என்று அவன் தீர்ப்பு வழங்கினான்.
வைத்தியனின் ஆலோசனைப்படி சகல காரியங்களும் துரிதமாக நடந்தேறின. ஆனால் மணியகாரன் மனைவிக்கு வயிறு மாத்திரம் திறக்கவில்லை.
அதன் பிறகு சோதிடர்கள் அழைத்து வரப்பட்டனர். அவர்கள் மணியகாரனின் சாதக ஓலையையும், அவர் மனைவியானவளின் சாதக
தெணியான் 47

Page 26
மரக்கொக்கு
ஓலையையும் வைத்துக் கிரகநிலை, திசாபுத்தி என்பவற்றைக் கணக்கிட்டு ஆராய்ந்து பார்த்து, புத்திரதோஷம் இருப்பதாகச் சொன்னார்கள்.
தோஷ நீக்கத்துக்கான கிரக சாந்திகள் பல நாட்கள் மணியகாரன் வீட்டில் நடந்தேறின. மணியகாரனும் அவர் மனைவியானவளுமாகச் சேர்ந்து ஆலயங்களுக்குச் சென்று நவக்கிரகங்களுக்குப் பூசை செய்வித்தார்கள். ஆனால் மணியகாரன் மனைவிக்கு வயிறு மாத்திரம் திறக்கவில்லை.
அதன் பிறகு மாந்திரீகர்கள் வந்தார்கள் துஷ்ட தேவதையின் பார்வை மணியகாரன் மனவிையானவள் மீது விழுந்துவிட்டதாக மை பார்த்துச் சொன்னார்கள்
அந்தத் தேவதைகளை ஒட்டுவதற்கு வேண்டிய மடைகள் போட்டு, கோழிச் சேவல்களைப் பலியிட்டு கழிப்புகள் செய்தார்கள் யந்திரங்கள் தாபித்து மந்திர உச்சாடனம் செய்து, மணியகாரனும் அவர் மனைவியானவளும் அரையிற் கட்டிக்கொள்ளுமாறு கொடுத்துப் போனார்கள் ஆனால் மணியகாரனின் மனைவிக்கு வயிறு மாத்திரம் திறக்கவில்லை.
அதன் பிறகு சைவக் குருமாரை மணியகாரன் கலந்தாலோசித்தார். இதற்கெல்லாம் காரணம் பிராரத்துவ கண்மபலன் அதனைப் போக்குவதற்கும் வேதத்தில் மார்க்கம் சொல்லப்பட்டிருக்கின்றது. குத்திரர்கள் பிராரத்துவ பலனை அநுபவித்தே தீரவேண்டும். அவர்களுக்குப் பிராயச்சித்தம் கிடையாது. சத்திரியர்கள் கழுவாய் தேடிக்கொள்ளலாம். இந்தச் சமூகத்தில் சத்திரிய குலத்தவராக விளங்குகின்றவர் மணியகாரன். அவருக்கு மார்க்கமுண்டு. தேவர்களைப் பிரிதி செய்யச் சாந்திகள் செய்யவேண்டும்; தான தருமங்கள் வழங்கவேண்டும்.
அதன் பிறகு அவர்கள் எண்ணம் போல மணியகாரன் வீட்டில் வேத மந்திரங்கள் ஒலித்தன. தான தருமங்கள் வாரிவாரி வழங்கப்பட்டன. ஆனால் மணியகாரன் மனைவிக்கு வயிறு மாத்திரம் திறக்கவில்லை.
மணியகாரனை எல்லோரும் கைவிட்ட பின்னர், இறைவன் ஒருவனே தன்மீது கருணை கூர்ந்து தனது மனக் குறையைப் போக்க வல்லவன் எனற முடிவுக்கு அவர் வந்தார். மனைவியான வளையும் அழைத்துக்கொண்டுதலயாத்திரைகள் செய்தார் இருவருமாக உபவாசங்கள் இருந்தார்கள். ஆனாலி.பலன், அவருக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
மணியகாரன் மனம் சலித்துப் போனார். புத்திரப் பேறு இல்லாததினால் நரகத்துக்குப் போகவேண்டி நேரும் என்று வேதனைப்பட்டார். மலடன்
48 தெணியான்
 

மரக்கொக்கு
என்று உலகம் தன்னைப் பழிச்சொல் கூறித் தூற்றுமே என மனம் கலங்கினார். தான் மலடனல்ல என்று நிரூபிக்கவேண்டுமெனத் தவியாகத் தவித்தார். அப்பொழுது அவர் மனதில் இடைக்கிடை ஒரு சபலம். இரண்டாவது தாரமாக ஒரு பெண்ணை மணந்துகொண்டால் என்ன..! என்ற எண்ணம் தலை தூக்க ஆரம்பித்தது. ஆனால், வெள்ளைக்காரத் துரைமாரை எந்த முகத்துடன் எதிர்கொள்வதென்றே அவர் தயங்கிக்கொண்டிருந்தார்.
ஒருவனுக்கு ஒருத்தி என்பது தான் தமிழன் பண்பாடு எனச் சந்தர்ப்பம் வாய்த்தபோதில் எல்லாம் அவர்களுக்கு அடித்துச் சொல்லி வந்தவர் மணியகாரன். மனைவியானவள் மனையில் தனித்திருந்து பிரிவுத் துயரினால் தவிக்க, பரத்தையர் வீடு சென்று பல நாட் தங்கிக் காமம் துய்க்கும் பண்டைத் தமிழன் பண்பாடு அறிந்தும் அறியாதவர் போல, வெள்ளைத்துரைமாரிடம் பெருமை பேசுகின்றவர் துரைமாரின் இல்லற வாழ்க்கையைத் தருணம் வாய்த்தபோதிலெல்லாம் சாடையாக நையாண்டி செய்துகொண்டு வந்தவர். இவ்வாறெல்லாம் அவர் சொல்லிச் சொல்லி வந்ததற்கு அந்தரங்கமான ஒரு காரணமி அவருக்குள்ளே ஒளிந்துகொண்டிருந்தது. மணியகாரன் என்ற உயர்ந்த பதவியைப் பெறுவதற்காக வேண்டி சில சுதேசிகள் சொந்த மனைவியையே வெள்ளைக்காரத் துரைமாருக்கு விட்டுக் கொடுத்தார்கள் என்ற ஒரு வதந்தி அவர் செவிகளிலும் அடிபட்டிருக்கின்றது. அத்தகைய நெறிகெட்ட குடுமியம வில தனது குடும்பம் என்பதனை மணியகாரன முன்னெச்சரிக கையாக அவர்களுக்குச் சொல்லாமறி சொல்லிக்கொண்டிருந்தார். அவர் இப்பொழுது இன்னொரு பெண்ணை இரண்டாவது தாரமாக மணந்து கொள்வதென்றால்.
ஒருபோதும் நடக்க முடியாதவையென்று அறுதியிட்டு முடிவான சில காரியங்கள், எதிர்பாராதவண்ணம் கைகூடிச் சித்திப்பதும் உண்டு. மணியகாரன் வாழ்வில் அப்படித்தான் அது நடந்தது. அவர் நம்பிக் கையெடுத்த தெய்வங்களும் அவரைக் கைவிட்டுவிட்ட நிலையில், அந்தத் தெய்வங்களை மனதால் சபித்து துயரத்தில் மாய்ந்து மறுபுறம் மனச் சலனங்களுக்கு ஆளாகி உள்ளம் சாம்பிக்கொண்டிருந்த வேளையில். வாராமல் வந்த மாமணியாக மணியகாரன் பரம்பரையின் குலக் கொழுந்ஆ/ பொன்னம்பலம்பிள்ளை வந்து உதித்தார்.
தென்னியான் 49

Page 27
மரக்கொக்கு
பொன்னம்பலம்பிள்ளை மணியகாரன் குடும்பத்தின் செல்லக் குழந்தை.
வாழ்க கையின் சகல வசதிகளும் கொட்டுமீ மழை போல வருஷித்துக்கொண்டே இருந்தன. மணியகாரன்மிகுந்த வாத்சல்யத்துடன் பூப்போல வைத்து மகனைப் பேணி வளர்த்து வந்தார். பிள்ளைப் பருவம் தாண்டி வாலிபப் பராயத்தில் அவர் அடியெடுத்து வைத்த சமயத்தில் வெள்ளைக்காரத்துரை ஒருவர் வெள்ளைக் குதிரையொன்று அவருக்கு அன்பளிப்பாக வழங்கினார். பொன்னம்பலம்பிள்ளை அந்தக் குதிரை மீது ஆரோகணித்து வீதிகளில் உலாவி வருவது அப்பொழுது கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும். அவர் உலாவரும் காட்சியைக் காண்பதற்கென்றே வீதியோரங்களில் மக்கள் வந்து கூடுவார்கள் கன்னிப் பெண்களின் கனவுகளில் எல்லாம் அக்காலத்தில் அவர் வந்து போய்க்கொண்டிருந்தார். சித்தார்த்தனுக்கு வாய்த்த வாழ்க்கை போலவே அவரது விடலைப் பருவ வாழ்வு அமைந்திருந்தது. மிக உயர்ந்த அரச பதவியும் அதிகாரங்களும் அடிமை குடிமைகளுமுடைய ஒரு தந்தையின் தவப் புதல்வன்; செல்வச் செழிப்புள்ள குடும்பத்தின் தனிப்பிள்ளை. அருமை பெருமையாகப் பிறந்தவர் என்பதனால் எவ்விதக் கட்டுப்பாடுமில்லாது வளர்ந்தவர். இயல்பிலேயே துடியாட்டமான குணமுள்ளவர் இத்தகைய பொன்னம்பலம்பிள்ளையின் காலம் உல்லாசமாகக் கழிந்துபோனதென்பதில் அதிசயம் ஒன்றுமில்லை.
ஆனால் பொன்னம்பலம்பிள்ளையின் எதிர்காலம் பற்றித் தந்தையான மணியகாரன் கவலை கொள்ளாமல் இருக்கமுடியுமா? மகனி பொன்னம்பலம்பிள்ளை ஆங்கிலமும், அருஞ் சைவமும், ஆன்ற தமிழும் துறைபோகக் கற்கவேண்டுமென அவர் விரும்பினார். அவரைப் போலவே அவர் பிள்ளை உயர்ந்த பதவியில் அமரவேண்டுமென அவர் கணவு கண்டார்.
மணியகாரனுக்கும் அவர் போன்றவர்களுக்கும் ஆங்கிலப் படிப்பும் உயர் கல்வியும் தனிச் சொத்துக்களாக இருந்துவந்த காலமது. ஆங்கிலக் கல்வி கற்றவர்களுக்கு அரச பதவி என்னும் கனிகள் அக்காலத்தில் இயல்பாகவே வந்து கனிந்தன. அதனால் சைவப் பெருங்குடித் தோன்றல்களான உயர்குடிச் செல்வந்தர்கள் கிறிஸ்தவக் கல்லூரிகளை நாடி ஓடினார்கள் காலங்காலமாக வாழ்க்கையின் ருசிகளை அநுபவித்து வந்திருக்கும் அவர்கள் தருணத்தைத் தவற விட்டுவிடாது பதவி பட்டங்கள் பெற்று சுகபோகங்கள் அநுபவித்துச் சுதிப்பதொன்றே நோக்கமாக, தயங்காமல் மதம் மறவுஞ் செய்தார்கள். தமிழர் கலாசாரம், பண்பாடு என்பவைக ளெல்லாம்
50 தெணியான்
 

மரக்கொக்கு
அவர்களைப் பொறுத்தவரை பேச்சளவில் தான். நெற்றியில் வெண்ணறும் சந்தனத் திலகமுமிட்டு, தலையில் தலைப்பாகைக் கோலமிட்டு அந்தப் பேச்சின் வெளித் தோற்றங்களாகப் பாவனை பண்ணினார்கள். ஆனால் அவர்கள் உடலில் வெள்ளைத் துரைமாரின் உடைகளை அணிந்து இரண்டும் கெட்டான் மனிதர்களாக அவதாரம் எடுத்தார்கள்.
இந்தச் சுதேசித் துரைமாரின் பிள்ளைகள் உயர் கல்வி வாய்ப்புக்கள் தேடி இங்கிலாந்துவரை அக்காலத்தில் பறந்தோடிப் போனார்கள். இவ்வாறெல்லாம் அவர்கள் சென்று கல்வியைப் பெறுவதற்கு அவர்களது வெள்ளைக்கார விசுவாசம் அவர்களுக்கு உறுதுணையாக இருந்துவந்தது. அவர்களில் சிலர் தாம் கற்ற கல்வியுடன் அந்த நாட்டு வாழ்க்கைமுறை பண்பாடு என்பவற்றையும் பெருமையுடன் கப்பலில் சுமந்துகொண்டு நாடு திரும்பி வந்தார்கள். வேறு சிலர் தமக்கு ஏற்ற வாழ்க்கைத் துணைகள் இந்த நாட்டில் இல்லையென்று கருதி, வெள்ளைத் தோல் நங்கைகளையும் இணை சேர்த்துக்கொண்டு வந்து சேர்ந்தார்கள். இன்னும் சிலரோவெனில் இவர்கள் எல்லோரையும் தோற்கடித்துவிட்டது போல வெள்ளைத் தோல் மங்கைகளை மணம் புரிந்து, நாடு திரும்பிச் சுதேசிகளான காட்டுமிராண்டிகளுடன் சேர்ந்து வழிவதற்கு விரும்பாமல் நிரந்தரமாக அங்கு தங்கி வாழ்கையை ஆரம்பித்துவிட்டார்கள் ஒருசில தந்திரசாலிகள் மாத்திரம் வெள்ளைத் தோல் வனிதையர்களை மனைவிகளாக்கி பெண் இன்பம் அநுபவித்துவிட்டு, நாடு திரும்பும் போது அவர்களைக் கைகழுவிவிட்டு இங்கு வந்து சேர்ந்தார்கள்
சிதம்பரப்பிள்ளை மணியகாரன் இந்தச் சம்பவங்களையெல்லாம் அறிந்துதான் இருந்தார். இவைகளெல்லாம். அவர் மனதுக்குக் கசப்பாக இருந்தன. தனது மகன் அந்நிய மோகச் சூறாவளியினால் அடிபட்டுக்கொண்டு போகாத வண்ணம் மிக எச்சரிக்கையாகப் பாதுகாக்க அவர் விரும்பினார். அதற்கு ஒரேவழி மகனைத் தமிழ்நாட்டுக்கு அனுப்பி வைப்பது என்று அவர் முடிவு செய்தார். மணியகாரனைப் பொறுத்தவரை இந்தியா என்பது ஒரு அயல் நாடல்ல. தமிழ்நாடு எங்கள் தாய்நாடு என்பதாகவே அவர் பெருமைப்பட்டுக்கொண்டார்.
மணியகாரன்தீர்மானித்துவிட்டால் அதன் பிறகு எதுதான் அவருக்குத் தடையாக இருக்கமுடியும்!
பொன்னம்பலம்பிள்ளை தமிழ்ப் பண்பாட்டோடு கூடிய கல்வியைப் பெறுவதற்காகத் தமிழ்நாடு சென்றார். தந்தை அருகே இருக்கும்போதே
தெணியான் 51

Page 28
மரக்கொக்கு
கட்டுக்கடங்காத பிள்ளையாக வாழ்ந்தவர் அவர் இப்பொழுது அவருக்கு வாய்த்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி எப்படி வாழ்ந்திருப்பார் என்று சொல்லவும் வேண்டுமா! செல்வச் செழிப்புள்ள குடும்பத்துச் செல்லப் பிள்ளைகள் யாராவது வாழ்க்கையை அநுபவிப்பதற்குக் கிடைத்த சந்தர்ப்பங்களை வழுவ விடுவார்களாகட்டுப்பாடுகள் இல்லாத சூழ்நிலையில் வாழ்க்கையின் சுகங்களை அவர் சுதந்திரமாக அநுபவித்தார். பணிடைத் தமிழர் பண்பாடு தவறாது-அவர் தந்தையார் அனுபவிக்கத் தயங்கிய சுகம்-தாசி வீடு சென்று அவர் தாரளமாக அனுபவித்தார். மலைபோலக் குவிந்திருந்த மணியகாரன் செல்வங்கள் தமிழ்நாட்டில் சருக்கரை போலக் கரையத் தொடங்கின. விருத்தாப்பியம் அடைந்துவிட்ட மணியகாரனால் மகன் பொன்னம்பலம்பிள்ளையைக் கட்டுப்படுத்தவோ தன் எண்ணம் போல வழிநடத்துவதற்கோ இயலாமற் போயிற்று.
தமிழ்நாட்டில் ஐந்து ஆணர்டுகள் பொன்னம்பலம்பிள்ளை கோலாகலமாகக் கழித்துவிட்டார். தந்தையான மணியகாரணி எதிர்பார்த்ததுபோல கல்வியில் மாத்திரம் அவர் தேறவே இல்லை. அதன் பிறகும் பொன்னம்பலம்பிள்ளை தமிழ்நாட்டில் தங்கி இருப்பதை விரும்பாத மணியகாரன் அவரை இங்கு திருப்பி அழைத்துக்கொணர்டார். பொன்னம்பலம்பிள்ளை உயர் கல்வி பெறவேண்டும், உயர்ந்த பதவி அடையவேணடும் என்று ஏங்கிக்கொண்டிருக்கும் தந்தையின் அபிலாசையை நிறைவேற்றி வைப்பதற்குத் தவறித்தான் போனார். ஆனால் தமிழ்க் கலாசாரம், பண்பாடு, சமய ஆசார அநுட்டானங்கள் என்பவற்றை அவர் கைநழுவ விட்டுவிடவில்லை. அவற்றில் பட்டை தீட்டப்பெற்றுத்தான் அவர் நாடு திரும்பினார். அதனால் கோயில் மணியமாக இருக்கும் தகுதி அவருக்கு உணர்டென்பதையுணர்ந்து தந்தையான மணியகாரன் மனம் சற்றுத் தேறுதல் அடைந்தார்.
பொன்னம்பலம்பிள்ளை தமிழ் நாட்டிலிருந்து நாடு திரும்பிய பிறகும். இடையிடையே அங்கு போய்வந்துகொண்டுதானிருந்தார். தமிழ்நாட்டில் பட்டறிந்த சுகங்களையெல்லாம் அவர் விட்டுவிட முடியாமல் ஓடியோடிப் போய்க்கொண்டிருந்தார். அங்கே அவர் பெற்ற சுகங்கள் எல்லாம், அவருக்கு இங்கே கைக்கெட்ட இயலாத மலைத் தேன்களல்ல. ஆனால் குடும்ப கெளரவம் என்று ஒன்றிருக்கின்றதே! அது அவருக்கிங்கே தடையாக இருந்து வந்தது.
பொன்னம்பலத்தாரின் தமிழ்நாட்டு உறவுகள் இந்தப் பகுதி மக்களுக்கு
52 தெணியான்
 

மரக்கொக்கு
அதுவரை காலமும் கிடைக்காத சில நன்மைகளைக் கொண்டுவந்து சேர்த்தன. மணியகாரனுக்குச் சொந்தமான ஆலயங்களில் ஆண்டு தோறும் இடம்பெறும் திருவிழாக்களில் உள்ளூர்க் கலைஞர்களே இதுவரை காலமும் இடம்பெற்று வந்தார்கள் பொன்னம்பலத்தாரின் தமிழ் நாட்டுத் தொடர்பினால் தமிழ் நாட்டிலிருந்து நாதஸ்வர, தவில் வித்துவான்களும் சதிராட்டம் ஆடும் சின்னமேளக்காரிகளும் வருகை தந்து உள்ளூர் மக்களை மகிழ்வித்தார்கள் -
மணியகாரனானவர் ஒரு தந்தைக்குரிய பொறுப்புணர்வோடு மகன் பொன்னம்பலம்பிள்ளையை நல்வழிப்படுத்துவதற்கு இறுதிவரை பல பிரயத்தனங்கள் எடுத்து வந்தார். அவர் எடுத்த முயற்சிகள் யாவும் எதுவித பயனுமில்லாது போகவே இறுதியில் திருமணம் என்னும் கால் கட்டுப் போட்டுவிட்டால் மகன் வழிக்கு வந்துவிடக்கூடுமென எதிர்பார்த்தார்.
அதன் பிறகே பொன்னம்பலம்பிள்ளைக்கு ஏற்ற ஒரு மணப் பெண்ணைத் தேடுவதற்கு ஆரம்பித்தார். புத்தூர் மணியகாரன் பகுதியிலிருந்து மீனாட்சியம்பாளைப் பொருத்தமான மணப் பெண்ணாக அவர் தேர்ந்தெடுத்தார் மகனான பொன்னம்பலம்பிள்ளை தந்தையின் முடிவை மறுக்காது திருமணத்துக்குச் சம்மதித்து வந்தார். மணியகாரன் மிகக் கோலாகலமாக மகனின் திருமணத்தை நடத்தி வைத்துவிட்டு, அதன் பிறகும் அவர் நடத்தைகளை ஏக்கத்துடன் உன்னிப்பாக அவதானித்துக்கொண்டிருந்தார்.
சிதம்பரப்பிள்ளை மணியகாரன், மகன் பொன்னம்பலம்பிள்ளையின் நடத்தைக் கோலங்களை அதிக காலம் பார்த்துக்கொண்டிருப்பதற்குக் கொடுத்து வைக்கவில்லை. பொன்னம்பலம்பிள்ளை பொறுப்பில்லாத ஒரு பிள்ளையாக வளர்ந்துவிட்டதை எண்ணி மனநிம்மதியை இழந்து துயர் மாறாமல் அவர் உயிர் நீத்தார்.
சிதம்பரப்பிள்ளை மணியகாரன் உயிருடன் வாழ்ந்த காலம்வரை குடும்பப் பொறுப்புக்கள் எதுவும் அறியாமல் பொன்னம்பலம்பிள்ளையின் காலம் உல்லாசமாகக் கழிந்தது.
தந்தையின் மறைவு பொண்னம்பல மணியகாரனின் கணிகளை மெல்லத் திறக்கச் செய்தன. குடும்பச் சொத்துக்களில் பெரும் பகுதி தன்னால் அழிந்துபோனதை அவர் அப்பொழுதுதான் உணர்ந்தார். நிலபுலங்கள் பல கைமாறிப் போய்விட்டன. அந்த நிலபுலங்களில் தொண்டு துரவுகள் செய்துகொண்டிருந்த அடிமை குடிமைகளும் தூர விலகிப்
தெணியான் 53

Page 29
மரக்கொக்கு
போய்க்கொண்டிருந்தார்கள் குடும்ப வண்டியை முன்போல ஆடம்பரமாக ஓட்ட முடியவில்லை. சில சமயங்களில் அது நகர முடியாது ஆட்டங்காண ஆரம்பித்தது.
இந்நிலையில் பொன்னம்பலம் மணியகாரனால் பொறுப்பற்ற ஆடம்பர வாழ்வினை முன்போல எப்படி வாழமுடியும் குடும்ப நிலைமைக்கு ஏற்றவிதமாக அவர் தன்னை மாற்றிக்கொள்ள வேண்டியவரானார். அடக்கமான ஒரு குடும்பத் தலைவனாக அவர் வாழத் தொடங்கினார். அவருக்குச் சொந்தமான ஆலயங்களுக்குச் சென்று அவற்றின் நிருவாகங்களைக் கவனிக்க ஆரம்பித்தார். நெல்லு வயலில் விதைப்பு அறுவடைக் காலங்களில் நடைபெறும் வேலைகளை மேற்பார்வை செய்தார் நிலபுலங்களிலிருந்து கிடைக்கும் குத்தகைப்பணத்தை ஒழுங்காக வசூலித்துக்கொண்டார். அவரது கடந்தகால வாழ்வை அறிந்தவர்கள் அவர் இப்படி மாறிவிட்டாரே' என்று வியக்கும் வணிணம் பொன்னம்பலம்பிள்ளையாக இருந்தவர் பொன்னம்பல மணியகாரனாகப் புதிய அவதாரம் எடுத்துக்கொண்டார்.
இந்த நிலையில் நாடு சுதந்திரம் பெற்றது. அந்தச் சுதந்திரத்தினால் சாதாரண மக்கள் ஒருவித நன்மையும் அடைந்துவிடவில்லை. ஆனால் பொன்னம்பல மணியகாரன் குடும்பத்தைப் போன்று ஆண்டு அநுபவித்த குடும்பங்களில் தோன்றியவர்கள் தமது பழைய செல்வாக்கையும் அதிகாரங்களையும் தொடர்ந்து பேணவேண்டும் என்ற நோக்கத்துடன் அரசியலிற் குதித்தார்கள்.
நாடு சுதந்திரம் அடைந்து முதலாவது பாராளுமன்றத் தேர்தல் வந்தது. அப்பொழுது தமிழ்க் கட்சி ஒன்றின் தனிப்பெருந் தலைவர் ஒருவர் தமது பரிவாரங்களுடன் பொன்னம்பலம் மணியகாரனைத் தேடி அவர் இல்லத்துக்கு வந்தார். அந்தத் தலைவர் இங்கிலாந்தில் கல்வி கற்றுவிட்டு எதிர்காலச் சுபீட்சங்களை மனதிற்கொண்டு நாடு திரும்பியவர். அக்காலத்தில் அவருக்கு நன்றாகத் தமிழ் பேச வராது. தெளிவாகத் தமிழ் பேசுவதற்கு இயலாதிருப்பதே தமிழ் மக்களின் தலைவராக இருப்பதற்குரிய தகுதி எனக் கருதப்பட்ட காலம் அது அவர் மேடை ஏறி, திக்கித் திணறித் தமிழில் பேசினாலும், ஆங்கிலம் தெரியாத தமிழர்களும், ஐயா இங்கிலீசிலேயே பேச வேணும்" என்று கேட்டு அதை இரசித்த காலம்
அவர் மணியகாரன் வீட்டுக்கு வந்து சேர்ந்ததும், தமிழர் பண்பாட்டுக்கிணங்க வணக்கம்' என்று தமிழிற் கூறி இருகரம் கூப்பி
54 தெணியான்
 

மரக்கொக்கு
நின்றார். மணியகாரனும் வணக்கம் சொல்லி அவரை வரவேற்று உபசரித்தார். தலைவரும் அவரது பரிவாரங்களும் மணியகாரனைச் சூழ்ந்து ஆசனங்களில் அமர்ந்துகொண்டனர். அதன் பிறகு தலைவரே பேச்சை ஆரம்பித்தார்.
"மிஸ்ரர் பொன்னம்பலம்! நீங்க எங்க கட்சியில் எலெக்சன் கேக்கிறது!" பொன்னம்பல மணியகாரன் அவர் சொன்ன செய்தியைக் கேட்டுத் திகைத்துப்போனார். அவர் கேள்விக்கு என்ன பதில் சொல்வதென்று அவருக்குத் தெளிவாக விளங்கவில்லை.
"என்ன யோசிக்கிறது?" தலைவர்தான் மீண்டும் பேசினார். ஒன்றுமில்லை." மணியகாரன் சொல்லிக்கொண்டு தமக்குள்ளே தீவிரமாகச் சிந்தித்தார்.
தேர்தலில் போட்டியிடுவதானால் பல ஆயிரங்கள் பணமாக வேண்டும். அந்தப் பணத்துக்கு எங்கே போவது!
நீங்கதான் இந்தத் தொகுதிக்குப் பொருத்தம். உங்க பேர் சொன்னாலே எல்லோரும் வோட் பண்ணுவான். வேறையென்ன. கொஞ்சம் காசு வேணும்.நீங்கதானே வைச்சிருக்கீங்கநல்ல காசு" தலைவர் மணியகாரனைத் தட்டிக்கொடுத்துப் பேசிக்கொண்டிருந்தார்.
குடும்ப தார்ப்பரியங்கள் வந்தவர்களுக்கெல்லாம் வாய்விட்டுச் சொல்லக் கூடியவையல்ல. என்ன நியாயம் சொல்லித் தட்டிக் கழிக்கலாம் என்று மணியகாரன் மேலும் சிந்தித்துப் பார்த்தார். அப்பொழுது அவர் மனதில் ஒன்று தோன்றியது. அதை மெல்லச் சொன்னார்.
"எனக்கு அரசியலிலே அவ்வளவாக ஈடுபாடில்லைப் பாருங்கோ" தமிழர் தலைவர் வாயைத் திறந்து பலமாகச் சிரித்துக்கொண்டார். அவர் சிரிப்பது கண்டு பரிவாரங்களும் அவர் சிரிப்புக்கு ஒத்திசைவாகச் சிரித்துக்கொண்டனர். தலைவர் மணியகாரனைப் பார்த்து அப்பொழுது சொன்னார்
அந்தச் சமயம் பரிவாரங்களில் ஒருவர் தங்கள் பங்களிப்பாக வாய் திறந்து பேசினார்.
ஐயா, எங்களுடைய பிரதிநிதியாக இருக்கிறதுக்கு உங்களைத் தவிர வேறு யாருக்குத் தகுதி உண்டு? சம்மதம் என்று ஒரு சொல்லுச் சொல்லுங்கோ! நீங்கள் வீட்டில் இருக்க மற்றக் காரியங்கள் எல்லாம் நாங்கள் செய்கிறோம்"
தெணியான் 55

Page 30
மரக்கொக்கு
"எனக்கு அரசியலிலே அல்ல. ஆன்மீகத் துறையிலே தான் ஈடுபாடதிகம் பாருங்கோ." மணியகாரன் பிடிகொடுக்காது இன்னொரு திசையில் மெல்ல நழுவினார்
"அதுக்கெல்லாம் காலமிருக்கு மிஸ்ரர் பொன்னம்பலம்." குறுக்குவெட்டு வெட்டினார் வந்திருந்த தலைவர்.
இல்லைப் பாருங்கோ. நான் அந்த வழியிலே தான் வளர்ந்தவன். எனக்கும் அரசியலுக்கும் ஒத்துவராது" மணியகாரன் போர்த்திக்கொண்ட புனிதப் போர்வையை மேலும் இழுத்து இறுக்கமாகப் போர்த்திக்கொண்டார். "எங்களுடைய முடிவு உங்களை இந்தத் தொகுதிக்கு அபேட்சகராக நிறுத்துவதுதான். இப்போதும் முடிவை நாங்கள் மாற்றிக்கொள்ளவில்லை. நன்றாக யோசித்துப் பிறகு சொல்லுங்கோ" பரிவாரங்களில் ஒருவர் அழுத்தமாகச் சொல்லி முடித்தார்.
தலைவரும் பரிவாரங்களும் மணியகாரனிடம் சொல்லிக்கொண்டு விடைபெற்றுச் சென்றார்கள்
பொன்னம்பல மணியகாரன் தந்தையான சிதம்பரப்பிள்ளை மணியகாரனை இந்தத் தருணத்தில் நினைவு கூர்ந்தார். அவர் இன்று உயிருடன் வழிந்துகொண்டிருந்தால் தேடிவந்த இந்தச் சந்தர்ப்பம் கை நழுவிப் போவதற்கு விட்டிருக்கமாட்டார். தேர்தலில் மகன் போட்டியிடவேண்டுமென்று கட்டாயப்படுத்தி இருக்கக்கூடும். பொன்னம்பல மணியகாரன் பாராளுமன்றத் தேர்தலிற் போட்டியிடுவதற்கு வேண்டிய பணம் அவரிடம் இல்லை என்பது உண்மைதான். ஆனால் அது மாத்திரந்தான் காரணம் என்று சொல்லவும் முடியாது. பொறுப்பில்லாமல் சிறுபராயம் முதல் வளர்ந்து வந்தவர் அவர் எந்தப் பாரத்தையும் தாங்கிக்கொள்ளும் மனோபலம் அவரிடம் இல்லை. அவர் குடும்பமே அவருக்கு இப்பொழுது பெரும் சுமையாகத் தோன்றுகின்றது. அவரால் பாராளுமன்ற உறுப்பினர் என்ற சுமையை எப்படிச் சுமக்கமுடியும்!
தமிழ்க் கட்சியின் தலைவர் தமது கட்சியின் அபேட்சகராகப் பொன்னம்பல மணியகாரனை நிறுத்தவேண்டுமென விரும்பியதற்கும் ஒரு நியாயம் இல்லாமல் இல்லை. பொன்னம்பல மணியகாரன் இந்தப் பகுதி மக்களைத் தமது அதிகாரத்தின் கீழ் வைத்து ஆண்டநுபவித்து வந்த பரம்பரையான குடும்பத்தில் பிறந்தவர் அந்த அதிகாரமும் செல்வாக்கும் ஆண்ட பரம்பரைக்கு இன்னும் அற்றுப் போய்விடவில்லை. அதனால் வெற்றி நிச்சயம் என்பதை உணர்ந்தே பொன்னம்பல மணியகாரனை
56 தெணியான்

மரக்கொக்கு
அவர் அணுகினார். பொன்னம்பல மணியகாரன் அவர் வேண்டுகோளை ஏற்காது தட்டிக் கழித்த பின்பு, கரவெட்டி மணியகாரன் குடும்பத்திலிருந்து ஒரு அபேட்சகரைத் தமது கட்சியின் சார்பில் தேர்தலில் அவர் நிறுத்தினார். பொன்னம்பல மணியகாரன் வாழ்க்கைத் தேர்தலில் வெற்றி பெறுவதற்கான மார்க்கமின்றித் தவித்துக்கொண்டிருந்தார். ஆனால் தந்தையான மணியகாரன் மனதில் நீண்ட காலமாக இருந்த ஒரு தவிப்பு அவருக்கு இல்லாமல் போயிற்று திருமணமான மறு ஆண்டில் ஒரு பெண் குழந்தைக்குத் தந்தையானார் தலைப்பிள்ளை பெண் குழந்தையாகப் பிறந்ததினால், அடுத்த குழந்தை ஆணாகப் பிறக்கவேண்டுமென அவர் ஆவலுடன் எதிர்பார்த்தார். அவர் விருப்பம் நிறைவேறவில்லை. அதுவும் பெண்ணாகவே பிறந்தது. இரண்டு பெண்கள் பிறந்தபோது குடும்ப பாரம் மேலும் அதிகரித்துவிட்டதாக அவர் கருதினார். குடும்ப பாரம் அவரை அழுத்த அழுத்த வருமானத்தில் கண்ணாகக் கோயில் நிருவாகத்தில் அவர் கவனம் திரும்பியது.
ஐந்து ஆண்டுகள் வேகமாகக் கழிந்து போயின. அதன் பிறகு மீண்டும் பாராளுமன்றத் தேர்தல் வந்து சேர்ந்தது. தமிழ்க் கட்சியின் தலைவர் இந்தத் தடவை மணியகாரனைத் தேடிக்கொண்டு வரவில்லை. அவருடைய கட்சியின் சார்பில் தேர்தலிற் போட்டியிடும் வேட்பாளர் மணியகாரனை நாடி வந்தார். மணியகாரன் தனக்கு ஆதரவு தரவேண்டுமென்று வேண்டி நின்றார். மணியகாரன் ஆதரவு யாருக்கு இருக்கிறதோ, அந்த அபேட்சகரரைத்தான் அந்தப் பகுதி மக்கள் ஆதரித்து வாக்களிப்பார்கள் என்று அவர் நம்பினார். தனக்கு ஆதரவு திரட்டுவதற்காக வீடு வீடாக மணியகாரனை அழைத்துப்போக முடியாது. ஆண்டாண்டு காலமாக மணியகாரன் குடும்பத்துக்கு அடிமை குடிமைகளாக இருந்து தொண்டு துரவு செய்தவர்களின் வீட்டுப் படலைகளை மணியகாரன் போய்த் திறக்கலாமா! இப்படியொரு நிலைமை ஆண்ட பரம்பரைக்கு வந்துவிடக்கூடாது என்பதனாலேயே, சர்வஜன வாக்குரிமையை ஆங்கிலேய ஆட்சியாளர் நடைமுறைப்படுத்துவதற்கு எத்தனித்தபோது தமிழ்த் தலைவர்களில் ஒருவர். அது இந்த நாட்டுக்கு ஏற்புடையதல்ல என்று வண்மையாக எதிர்ப்புத் தெரிவித்தார். இந்த நிலையில் மணியகாரனின் பூரண ஆதரவு எனக்குண்டு என்பதனை மக்கள் மத்தியில் விளம்பரப்படுத்த வேண்டுமென்று வேட்பாளர் விரும்பினார். அதற்கு ஒரேவழி தேர்தல் பிரசார மேடைகளில் மணியகாரனை ஏற்றுவதுதான் என்று வேட்பாளர்
தெணியான் 57

Page 31
மரக்கொக்கு
முடிவு செய்தார்.
"ஐயா வந்து, என்ரை கூட்டங்களிலே இரண்டு வார்த்தை பேச வேணும்" வேட்பாளர் மணியகாரனிடம் விண்ணப்பித்து நின்றார். மணியகாரன் அதற்குப் பதிலேதும் கூறாது மெல்லச் சிரித்துக் கொண்டார். ஐயா மறுக்கக் கூடாது" வேட்பாளர் மீண்டும் வேண்டிக்கொண்டார். "எனக்குச் சமயப் பிரசங்கந்தான் செய்யத் தெரியும்" ஆலயங்களுடன் தான் தனக்கு நெருக்கமான தொடர்பு இருக்கின்றதென்பதை மணியகாரன் இவ்வாறு சொன்னார்.
"ஏதோ இரண்டு வார்த்தை." "அரசியல் மேடையிலையோ..!" "அப்ப. ஐயா தலைமை தாங்கினால் போதும்" தலைவர் கூட்டம் ஆரம்பித்து முடியும்வரை பேச வேண்டுமே!" ஐயா, ஒண்டு செய்யுங்கோ மேடையிலே வந்து இருங்கோ" இந்த வேண்டுகோளை மணியகாரனால் தட்டிக் கழிக்க முடியவில்லை. "சரி என்னை நீங்கள் விடுகிறதாக இல்லை. வாறன்" மணியகாரனுக்குச் சொந்தமான ஆலய வீதியில் பிரமாண்டமான தேர்தல் பிரசாரக் கூட்டம் ஒன்று ஏற்பாடானது. மணியகாரன் கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவதற்காக இந்தக் கூட்டத்துக்குச் சமூகம் கொடுத்தார். மணியகாரனை வரவேற்று உபசரித்து மேடைக்கு அழைத்துச் சென்று அங்கு உட்கரவைத்து, அபேட்சகர் முதலில் அவர் கழுத்தில் ஒரு மலர் மாலையைச் குட்டிக் கெளரவித்த பின்னரே தலைவர் கூட்டத்தை ஆரம்பித்தார்.
வெளியே சமூகத்துக்குக் கெளரவமான மனிதனாகக் காட்டப்பட்ட மணியகாரன் உள்ளத்தால் உள்ளே வெந்துகொண்டிருந்தார். அவருக்குச் சந்ததி குறைவில்லாது பெருகிக்கொண்டுதான் இருந்தது. ஆனால் ஒருவர் பின் ஒருவராக நான்கு பெண்கள் அவருக்கு வந்து பிறந்தார்கள் பெண் குழந்தைகள் இந்தச் சமூகத்தில்-பொன்னம்பல மணியகாரன் குடும்பத்தில்-பெரும் பாரமாக அவருக்கு இருந்தார்கள். ஆணி வாரிசு ஒன்றேனும் இல்லாமற் போனது அவருக்குப் பெரும் மனக்குறையாகவே இருந்து வந்தது.
பொன்னம்பல மணியகாரன் வெளி விவகாரங்களில் அக்கறை காட்டுவதற்கு இயலாத அளவுக்கு, குடும்ப நெருக்கடிகள் அவரை விழுங்கிக்கொண்டிருந்தன. அடுத்த பாராளுமன்றத்துக்கான தேர்தல்
58 தெணியான்
 

மரக்கொக்கு
வந்ததுகட்ட ஆரம்பத்தில் அவருக்குத் தெரியாதென்றே சொல்லவேண்டும். தேர்தலில் போட்டியிடும் அபேட்சகர்களின் தொல்லைகளிலிருந்து அவர் தப்பித்துக்கொண்டார். இந்தத் தடவை தேர்தலிற் போட்டியிடும் அரசியற் கட்சிகள், சுயேட்சை அபேட்சகர்களின் தொகை அதிகரித்திருந்தஆ/. எந்தவொரு வேட்பாளரும் மணியகாரனுக்கு தனித்து ஒரு முக்கியத்துவம் கொடுத்து விசேஷமாக அவரின் ஆதரவு திரட்டுவதற்காக அவர் வீட்டுக்கு வந்து போகவில்லை. ஒவ்வொரு வாக்காளரின் வீட்டுக்கும் போய் வருவது போல, மணியகாரன் வீட்டுக்கும் வேட்பாளர்கள் எல்லோரும் வந்தார்கள். மணியகாரனைப் பார்த்துக் கைகூப்பிக் கும்பிடு போட்டார்கள். தங்களை ஆதரிக்க வேண்டுமென விணயமாகக் கேட்டுக்கொண்டு திரும்பிப் போய்விட்டார்கள்.
மணியகாரன் வீதியில் இறங்கி நடந்து செல்லும் வேளைகளில் வழமையாகக் காலில் அணிந்துகொள்ளும் பளபளக்கும் குமிழ் மிதியடியை இன்னும் மாற்றிக்கொள்ளவில்லை; அது பழையதுதான். அவர் கையில் தாங்கிச் செல்லும் வெள்ளிப் பூண் போட்ட கைப்பிரம்பு மாறவில்லை; அதுவும் பழையது தான். ஆனால் வீதியில் அவர் நடந்து வருவதைக் கண்டு முன்னர் ஒதுங்கிநின்று அவருக்கு வழிவிட்டவர்கள் இப்பொழுது அவரைக் கணடும் காணாதவர் போல தங்கள் பாட்டில் போய்க்கொண்டிருந்தார்கள்.
மணியகாரன் இவைகளையெல்லாம் அவதானித்து உள்ளூரச் சாம்பிக்கொண்டிருந்தார். மறுபுறம் பிள்ளைகளை எண்ணி அவர் மனம் வருந்திக்கொண்டிருந்தது. பெண் வளர்ச்சி என்றால் அது பேய் வளர்ச்சி என்பார்கள். மணியகாரனுக்குப் பிள்ளைகளாகப் பிறந்ததினால் இந்த வளர்ச்சி விதிக்கு விலக்கானவர்கள் ஆகிவிடமுடியாது. மணியகாரனின் நான்கு பெண் பிள்ளைகளும் வரிசையாக வளர்ந்து அவர் மனதில் கிலேசத்தை வளர்த்துக்கொண்டிருந்தார்கள்
பெண்ணுக்குத் தகுந்த வரன் ஒருவனைத் தேடிப்பிடிக்கவேண்டும். அவன் பெற்றோர் கேட்கும் சீதனங்கள். நன்கொடைகள் அனைத்தும் அள்ளிக் கொடுக்கவேண்டும். இவ்வளவும் நடந்தேறுவது என்பது இன்று எளிதாக நடக்கத் தகுந்த மங்களகரமான ஒரு காரியமல்ல. மலையொன்றைத் தூக்கிச் சுமந்து சென்று மெல்ல இறக்கிவிடுவது, ஒரு பெண்ணுக்குத் திருமணம் பேசி செய்து வைப்பதிலும் பார்க்க எளிதாக இருக்கும். குலப் பெருமை ஒன்று மாத்திரமே தங்களுடைய
தெணியான் 59

Page 32
மரக்கொக்கு
பெரும சொத்தாக வைத்துக் கொணர்டு, பழமை பேணும் குணவியல்புகளிலிருந்து சற்றும் நெகிழ்ந்துகொடுக்காத மணியகாரன் குடும்பத்துப் பெண்களுக்கு தகுதியுள்ள மாப்பிள்ளைமாரைத் தேடி எடுப்பதென்பது சுலபமாக நடக்கத் தகுந்த ஒரு காரியமா!
ஒரு ஏழையின் வீட்டில் பிறந்துவிட்டாள் என்பதனால், ஒரு பெணி பூப்படைவதைத் தடுத்து நிறுத்திவிடமுடியுமா! மணியகாரன் வீட்டுப் பெண்கள் நால்வரும் பருவமெய்தி வீட்டோடு அடங்கிக் கிடக்கின்றார்கள். மூத்த மகள் வரலட்சுமி பருவப் பெண்ணாகி பத்து வருடங்களுக்கு மேல் கழிந்துபோய்விட்டது. அவளுக்குத் திருமணம் செய்து வைக்காது இனிமேலும் காலத்தைக் கடத்த இயலாதென்ற நிலையில் மணியகாரன் தகுந்த வரனைத் தேடுவதற்கு ஆரம்பித்தார். மகளுக்கு மாப்பிள்ளை தேடி, மாப்பிள்ளைமார் வீடுகளிளெல்லாம் அவரால் ஏறி இறங்குவதற்கு முடியாது. கலியாணத் தரகர்களை அழைத்து அவர்கள் உதவியை அவர் நாடினார். தரகர்கள் தான் என்ன செய்வார்கள்! உயர்குடிப் பிறப்பு, பழம் பெருமை, ஆசார அநுட்டானங்கள் இவைகளை மாத்திரம் சீதனமாகப் பெற்றுக்கொண்டு மணியகாரன் வீட்டு மாப்பிள்ளையாக வருவதற்கு எந்த மணமகன் தயாராக இருக்கின்றான்!
மணியகாரன் குடும்பத்துப் பெண்ணுக்குத் தோதான ஒரு மாப்பிள்ளையைத் தேர்ந்தெடுப்பது தரகர்களுக்கு மிகச் சிரமமாகவே இருந்தது. உத்தியோகம் பார்க்கும் ஒரு மாப்பிள்ளை திருமணத்துக்கு உடன்பட்டு வந்தால், அவனது குலம் கோத்திரம் மணியகாரன் குடும்பத்துக்கு ஏற்றதாக இருக்காது. இன்னொருவனுக்கு அவைகள் பொருந்தி வந்தால், அவன் மதுவும் மச்ச மாமிசமும் அருந்தும் ஆசாரம் கெட்டவனாக இருப்பான். இவைகள் எல்லாமே பொருந்தி வந்தால், அவன் கேட்கும் சீதனம் மணியகாரனாற் கொடுக்க இயலாமல் இருக்கும். இப்படிச் சிக்கலுக்குள் அகப்பட்டு, அவற்றை விடுவிக்க இயலாது மணியகாரன் திக்குமுக்காடித் திணறிப்போனார்.
இறுதியில் கோப்பாய்ப் பகுதியில் வாழ்ந்த பாரம்பரியமான உயர் குடும்பத்திலிருந்து மாப்பிள்ளை ஒருவர் மணமகனாக வந்து பொருந்தினார். மகளுக்குத் திருமணம் என்றதும் மணியகாரன் அடி மனதில் கரந்துறைந்த குலப் பொருமைகளும், பாரம்பரிய உணர்வுகளும் வெறியாகக் கிளர்ந்தெழுந்தன. அவற்றை மீண்டும் நிலைநாட்டுவதற்குக் கிடைத்த சந்தர்ப்பமாக மகளின் திருமணத்தைக் கருதினார். மூத்த மகளுக்குப்
60 தெணியான்

மரக்கொக்கு
பின்னால் இன்னும் மூன்று பெணகள் திருமணத்துக்குக் காத்திருக்கின்றார்கள் என்பதை அவர் மறந்தார். மகளின் திருமணத்தை ஆடம்பரமாகச் செய்து 'பெரிய வீட்டுக் கல்யாணம்' என்பதை நிறுவவேண்டுமென விரும்பினார். தமிழ்நாட்டு உறவுகளை அப்பொழுது மீண்டும் நினைவுகூர்ந்துகொண்டார். அங்கிருந்து நாதஸ்வரம், தவில் வித்துவான்கள், சங்கீத வித்துவான்கள், மணமக்களுக்கான கூறைகள், பட்டுகள் என்று வரிசையாக வருவித்துக்கொண்டார். உள்ளூர்களிலிருந்து சிகர சோடனைகள், மின்சார தீப அலங்காரங்கள், வாழை தோரணங்கள், ஒலிபெருக்கிகள், விசேஷ விருந்துபசாரங்கள் என்று ஏகப்பட்ட செலவுகள் செய்தார்.
ஆலயங்களில் பலர் சேர்ந்து செய்யும் திருவிழாக்கள் இந்தத் திருமண வைபவத்துக்குத் தோற்றுப்போகும். மணியகாரனின் அழைப்பை ஏற்று திருமண வைபவத்துக்குச் சமூகம் கொடுத்த பிரமுகர்கள் கூட்டம் ஒருபுறம்; அவரால் அழைக்கப்படாமலே திருமண நிகழ்ச்சிகளைக் கண்டுகளிப்பதற்கென வந்து கூடிய மக்கள் கூட்டம் மறுபுறமாகத் திருமணப் பந்தலுக்கு வெளியேயும் உள்ளேயும் சனசமுத்திரம் பெருகி வழிந்தது. அந்தப் பகுதி மக்கள் இதுவரை கண்டிருக்காத ஒரு பெருவிழாவாகவே மணியகாரனின் மூத்த மகள் வரலட்சுமியின் திருமண வைபவம் நடந்தேறியது.
ஆடம்பரமான இந்தத் திருமணச் செலவுகளால் மணியகாரன் குடும்பத்தில் எஞ்சியிருந்த அற்ப சொற்ப சொத்துக்களும் திடீரென அழிந்து போயின.
அதன் பிறகு மணியகாரன் குடும்பம் வாழ்க்கையை ஓட்டுவதற்கே இயலாமல் ஆட்டங்காணத் தொடங்கியது. மகளின் திருமணத்தை நடத்துவதற்குத் தான் செய்த ஆடம்பரச் செலவுகள் வீண் செலவுகளென மணியகாரன் அப்பொழுதும் எண்ணிப் பார்க்கவில்லை. அவரது குலப் பெருமைகள் அவ்வாறு சிந்தித்துப் பார்ப்பதற்கு அவருக்குத் தடையாக நின்றன. ஆனால் குடும்பம் நொந்துபோய்விட்டதை எண்ணி உள்ளூர் அவர் மனம் பொருமிக்கொண்டிருந்தார். இந்த மிடிமையிலிருந்து விடுபடுவதற்கு மார்க்கம் எதுவென அவருக்குத் தெரியவில்லை, குடும்பக் கஷ்டங்களை வெளியில் சொல்லிக்கொள்வதற்கோ, மனப்பாரம் தணிய மனந் திறந்து பேசிக்கொள்வதற்கோ அவருக்குத் துணையாக ஒருவர் இல்லை. துயரங்களையெல்லாம் அவர் வெளியிட இயலாது மனதில்
தெணியான் 6.

Page 33
மரக்கொக்கு
புதைத்து வைத்து உழன்றுகொண்டிருந்தார். மூத்த மகள் வரலட்சுமிக்குப் பின்னால் இருக்கும் மூன்று பெண்களையும் பார்த்து வேதனையுடன் அவர் பெருமூச்சு விட்டுக்கொண்டார். அவர் நெஞ்சகத்து வேதனைகள் அவரினி உதிரத்தை உறிஞ சி உயிர்ப்புடனர் பெருகி வளர்ந்துகொண்டிருந்தன. அவை வளர்ந்து வளர்ந்து வந்து இறுதியில் அவர் உயிரையே குடித்துவிட்டன.
மணியகாரன் மூத்த மகள் வரலட்சுமியின் திருமணத்தை நடத்தி முடித்த பின்னர் நம்பிக்கையுடன் வாழ்க்கையை எதிர்பார்த்துக் காத்திருந்தவள் விஜயலட்சுமி
விஜயலட்சுமி மனதில் ஒரு தீர்மானத்துக்கு வந்துவிட்டாள்.
அந்தத் தீர்மானம் மிக உறுதியானது. அவள் எடுத்த தீர்மானத்திலிருந்து எந்தச் சந்தர்ப்பத்திலும் இனிமேல்தளம்பப் போவதில்லை. அது அவளுடைய கபாவம்.
அன்னலட்சுமியின் வரவைத் தடுத்தாகவேணடும். இந்தக் குடும்பத்துடன் அவளுக்கு இனிமேலி எந்தவொரு தொடர்பும் இருக்கக்கூடாது. அவளுக்கும் இந்தக் குடும்பத்துக்குமிடையே உள்ள உறவுகள் யாவும் அறுந்து கை நழுவிப்போய்விட்டன. குடும்பத்துடன் தொடர்பு வைக்கவே அவள் எண்ணி இருக்கக்கூடாது. அவள் இனிமேல் இந்த வீட்டில் காலடி எடுத்து வைக்கவே கூடாது. அவளை எச்சரிக்கை செய்தாகவேண்டும். அவளுக்கு எச்சரிக்கை விடுப்பதற்கான மார்க்கம் என்ன? அவள் வருகையைத் தடுப்பதற்கான வழி என்ன? விஜயலட்சுமி, மனதில் இந்த எண்ணங்களே இப்பொழுதுபூதாகாரமாக எழுந்து நின்றன.
அவள் மகா புத்திசாலி அவள் அனுப்பி வைத்திருக்கும் கடிதத்தில் தனது முகவரியை எழுதாமல் தவிர்த்து விட்டிருக்கின்றாள். வேண்டுமென்றே அவள் இப்படிச் செய்திருக்கின்றாள். கொழும்பில் அவள் எங்கே தங்கி இருக்கின்றாளோ!
அவளுக்கு எச்சரிக்கை செய்து இப்போது எப்படி எழுதுவது! அவள் தங்கியிருக்கும் முகவரி முதலில் அவசியம் வேண்டும். அவள் முகவரியை இங்கே யாரிடம் போய்க் கேட்டறியலாம்! யாரோ ஒருவனுடன் ஓடிப் போனவள் பற்றி எப்படி வெளியே போய் விசாரிப்பது வலிந்து சென்று அவளுடன் உறவுகொள்ள எண்ணுவதாக அல்லவா மற்றவர்கள்
62 தெணியான்

மரக்கொக்கு
கருதுவார்கள்! என்றாலும் அவள் முகவரியை அறிந்துதான் ஆகவேண்டி இருக்கிறது! அவளை மணந்துகொண்டவன் குடும்பமும் இந்தக் கிராமத்தில் தான் வாழ்ந்துகொண்டிருக்கின்றது. அவர்களிடம் போய் அறிந்துகொள்ளலாம். யார் அதைக் கேட்டறிந்துவந்து சொல்லுவார்கள்? பெண் ஒருத்தி இரகசியமாக எப்படி அதை அறியமுடியும்? அதுவும் மணியகாரன் வீட்டுப் பெண்ணால் அது முடியக்கூடிய காரியமா? இந்த வீடு என்ற கோட்டைக்கு வெளியே தங்கள் கோயில்களைத் தவிர வேறு இடங்களில் முகம் காட்டாதவர்கள் அவர்கள். இந்த வீட்டுக்கு இப்போ வந்து போகின்றவர்கள் என்று குறிப்பிட்டுச் சொல்வதற்கு ஒருவரும் இல்லை. சின்னராசன் ஒருவனே தினமும் காலை மாலையில் வந்து போய்க்கொண்டிருக்கின்றான். தகப்பன் பனையேற இயலாமல் போனபிறகு தகப்பனுக்குப்பதிலாக அவன் வருகின்றான். சின்னராசன் தகப்பனைப்போல இல்லை. அவன் நம்பிக்கைக்குரிய ஒருவனல்ல. சயிக்கிளில் ஏறிச் சிங்கம் போல அவன் பாய்ந்து வருவான். தென்னை மரங்களிலும் பனை மரங்களிலும் ஏறிக் கள்ளை இறக்கிக்கொண்டு அலட்சியமாகத் திரும்பிப் போய்விடுவான். அவன் யாரோடும் முகம் கொடுத்துப் பேசமாட்டான். மனதில் பகை கொண்டிருப்பவன் போல அவன் தோன்றுகின்றான். அவனுடைய அலட்சியமும் கர்வமும் விஜயலட்சுமிக்குக் கட்டோடு பிடிப்பதில்லை. அன்னலட்சுமி பற்றிய தகவலை அறிந்துகொண்டு வருமாறு அவனிடம் போய்க் கேட்க முடியுமா குடும்ப விவகாரத்தை ஓர் அந்நியனிடம். அதுவும் அவனிடம் போய் எப்படிச் சொல்வது!
அவள் முகவரியை மணியகாரன் வீட்டிலிருந்து கேட்கின்றார்கள் என்ற உண்மை வெளிப்படாமல், மிகச் சாதுரியமாக அதை அறிந்து வரத் தகுந்த ஒருவர் இப்போது தேவை. அப்படிச் செய்து வரக்கூடியவர்கள் குடும்பத்துக்குள் யார் இருக்கின்றார்கள்? இதற்கு வேறு வழியேதும் இல்லை. மாணிக்கம் ஒருவரைத்தான் இப்பொழுது கூப்பிட்டு அனுப்பி வைக்கவேண்டும்.
இந்தச் சமூகத்தில் ஆணி துணை என்பது ஒரு குடும்பத்துக்கு எவ்வளவு அவசியம்! நெருக்கடிகள் உருவாகின்றபோதே தவிர்க்க இயலாது அந்த அவசியம் உணரப்படுகின்றது.
பொன்னம்பலமணியகாரனின் மறைவின் பின்பு மாணிக்கம் ஒருவரே இந்தக் குடும்பத்துக்கு உறுதுணையாக இருந்துவரும் ஒரேயொரு ஆண்மகன். அவர் இந்தக் குடும்பப் பாதுகாவலன் போல இப்பொழுது
தெணியானி 63

Page 34
மரக்கொக்கு
தோற்றமளிக்கின்றார் குடும்பத் தலைவனாகக் குடும்பத்துக்கு வெளியே கருதப்படுகின்றார். மீனாட்சியம்பாளுக்குத் தூரத்து உறவுமுறையான சகோதரன்.
மணியகாரனுக்கு எடுபிடி வேலைகள் செய்யும் ஏவற்காரனாக ஒரு காலத்தில் அவர் இங்கு வந்துசேர்ந்தார். தனக்கென்று ஒரு குடும்பமில்லாத ஏகாங்கி அவர் சோறு கண்ட இடத்தில் திண்று, திணிணை கண்ட இடத்தில் தூங்கிவிட்டுப் போகின்றவர். அவரது இந்தச் சுபாவத்தையாவது மன்னித்துவிடலாம். ஆனால் சேறு கணிட இடத்தில் மிதித்து, தணிணி கண்ட இடத்தில் கழுவிப்போட்டுப் போகும் பேர்வழியாகவும் இருந்தார். கட்டுப்பாடு, நெறியான வாழ்க்கைமுறை என்பவற்றுக்குப்பழக்கப்படாதவர் மீனாட்சியம்பாளின் உறவைச் சொல்லிக்கொண்டு இடையிடையே மணியகாரன் வீட்டுக்கு வந்தார். தானாகவே வலிய வந்து குடும்பத்துக்கு வேண்டிய உதவி ஒத்தாசைகளைச் செய்து கொடுத்தார். அவைகளை எல்லாம் மறுக்காது ஏற்றுக்கொண்டு மணியகாரன் மெளனமாக இருந்துவிட்டார்.
அவர் வருகையும் மறைவும் மின்னல் தோன்றி மறைவது போல இருக்கும். திடீரென்று இங்கே வருவார். இரண்டொரு தினங்கள் தங்கி நிற்பார். பின்னர் சொல்லாமற் கொள்ளாமல் வந்த வேகத்தில் மறைந்து போய்விடுவார். அவரது வாழ்க்கைப் போக்கை அறிந்து வைத்திருக்கும் மணியகாரனுக்கு அவருடைய தேவைகள் என்ன என்பது தெரியும். அவரால் நிரந்தரமாக ஓர் இடத்தில் தங்கி வாழ்வதற்கு இயலாதென்பதும் மணியகாரன் அறிந்த விடயம். அவர் இங்கு வந்து தரித்து நிற்பது மணியகாரனுக்கும் உள்ளூர விருப்பமானதொன்றல்ல.
எப்பொழுதும் உல்லாசமாக அலைந்துகொண்டிருக்கும் இந்த மாணிக்கத்தின் உள்ளத்திலும் எதிர்பாராத விதமாக ஒரு மாற்றம் நிகழுமென்றால், அதை யார் நம்புவார்கள்!
ஆனால் அது நிகழ்ந்துதான்விட்டது. மாணிக்கம் தகுந்த சந்தர்ப்பம் ஒன்றை எதிர்பார்த்து, மீனாட்சியம்பாள் மீது மலையளவு நம்பிக்கை வைத்திருந்தார். அவள் மனம் வைத்தால் தன் எண்ணம் ஈடேறும் என்பது அவர் மனதில் இருந்த ஒரே நம்பிக்கை,
இந்த நம்பிக்கையோடு இங்கு வந்து சில தினங்கள் அதிகமாகவே தங்கி இருந்தார். மணியகாரனின் கோயிலுக்குக் காலை மாலையில் ஒழுங்காகப் போய் வந்தார். கோயில் நிருவாகத்தை தான் பொறுப்பேற்றுக்
64. , தெணியான்

மரக்கொக்கு
கொணிடுவிட்டவர் போல சகல காரியங்களையும் முன்னினிறு கவனித்துக்கொண்டார். வீட்டுக் காரியங்களிலும் ஓடியாடி உதவி ஒத்தாசைகள் செய்தார்.
இருந்தாற்போல அவருக்குண்டான அதீத அக்கறைகளைக் கண்டு மீனாட்சியம்பாளே உள்ளூர அதிசயித்துப்போனாள் மீனாட்சியம்பாள் ஒரு தினம் மாலை வேளையில் வெற்றிலையை வாயில் இட்டு மென்ற வணிணம் வீட்டின் மேற்குப்புற வாசலில் வந்து அமர்ந்திருந்தாள் பங்குனி மாத வெப்பத்தினால் புழுங்கி அவிந்துகொண்டிருந்த உடலுக்கு மெல்ல வீசிக்கொண்டிருந்த கடற் காற்று இதமான சுகமளித்துக்கொண்டிருந்தது. மாணிக்கம் குழைந்துகொண்டு மெல்ல வந்து, மீனாட்சியம்பாள் அமர்ந்துகொண்டிருக்கும் வீட்டுப் படிக்கட்டுக்குக் கீழுள்ள படியில் அமர்ந்துகொள்ளுகின்றார். அப்படி அவர் நெருக்கமாக வந்து அமர்ந்துகொள்ளும் வழக்கம் ஏதும் அவர்களுக்கிடையே இதுவரை இருந்ததில்லை. இப்பொழுது ஏன் இப்படி வந்து உட்கார்ந்திருக்கின்றார் எண்பது மீனாட்சியம்பாளுக்குப் புரியவில்லை. அவராக வாய் திறந்து பேசட்டும் என்ற எண்ணத்துடன், மீனாட்சியம்பாள் எதுவும் சொல்லாது அவர் முகத்தைக் குறிப்பாக நோக்கிக்கொண்டிருக்கின்றாள்.
மாணிக்கம் தலையைத் தாழ்த்தி மெளனத்தில் ஆழ்ந்துவிட்டார். அந்த மெளனம் கலையாது சிறிது நேரம் கரைந்துகொண்டு போகின்றது. காலமோ நீண்டு வளர்ந்துகொண்டு செல்லுகின்றது.
இந்த நிசப்தம் மீனாட்சியம்பாள் மனதுக்கு ஓர் உறுத்தலாகத் தோன்றவே, அதைக் கலைத்துவிடும் உந்தலால்,
"என்ன மாணிக்கம்.?" என்று அவள் கேட்டுவிடுகிறாள். அப்பொழுதும் அவர் வாய் திறக்கவில்லை. அவரது அமைதியும் அடக்கமும் அவளுக்கு மேலும் அதிசயத்தையூட்ட, "என்ன இதில வந்திருக்கிறாய்?" என மீண்டும் அவள் கேட்கின்றாள்.
"அக்காள்." வாஞ்சை பொங்கும் அவர் குரல் கம்மிப்போகின்றது. சொல்ல நினைப்பதை அவரால் முழுமையாகச் சொல்ல முடியவில்லை. தரையை நோக்கிக் கவிழ்ந்த தலை இன்னும் நிமிரவில்லை.
TTT TL LLLLL S TLTLtttLG G TL S S S tt TL LLLLL S T TLTLT S TLS TTHT தூண்டிவிடுகின்றாள். அவள் பேச்சினால் உந்தப்பட்டவர் போல சற்று நிமிர்ந்து,
தெணியான் 65

Page 35
மரக்கொக்கு
நான் தனிச்சவன் அக்காள்." எனச் சொல்லிக்கொண்டு மெல்லத் தலை தூக்கி மீனாட்சியம்பாள் முகத்தில் பார்வையைக் குறிப்பாகப் பதிக்கின்றார்.
மீனாட்சியம்பாள் வாயில் ஊறும் வெற்றிலைச் சாரத்தை, தலையைத் திருப்பி சுவர் ஓரமாகப் பளிச் சென்று துப்பிவிட்டு மீண்டும் அவரை நோக்குகின்றாள்.
அவர் கணிகள் மெல்லக் கலங்குகின்றன. குறாவிப்போய் இருக்கும் அவர் முகம் களை இழந்து வாடிக் கிடக்கின்றது.
மீனாட்சியம்பாளுக்கு நெஞ்சு நெகிழிந்து போகின்றது. எதை நினைத்துக்கொண்டு மாணிக்கம் இப்போது இப்படிப் பேசுகிறார்? பொறுப் பேதும் இலலாது கட்டாக காவியாக அலைந்து கொண்டிருக்கின்றவர் மாணிக்கம். அவர் அடிமனத்திலும் தன்னை உணர்ந்துவிட்ட ஒரு ஏக்கமா! அவளுக்கு வியப்பாகத்தான் இருக்கின்றது. மாணிக்கத்தின மன உணர்வுகளும எணர்ணங்களுமீ நியாயமானவைகளாகவே அவளுக்குத் தோன்றுகின்றன. அவர் மீது உண்டான பரிவோடு,
இப்பவாது உனக்கு இந்த எண்ணம் வந்ததே. நல்லது, என்ன செய்ய நினைக்கிறாய்" எனக் கேட்கின்றாள்
"அக்காள்தான் முடிவு செய்யவேணும்" பொறுப்பை மீனாட்சியம்பாள் தலையில் அவர் சுமத்திவிட்டு, அவள் சொல்லப்போவதை ஆவலுடன் எதிர்பார்க்கின்றார்.
அவர் மனதில் இருக்கும் எணர்ணமி என்னவென்பதை மீனாட்சியம்பாள் விளங்கிக்கொள்ளாது தனியனி' என்று அவர் சொல்லிக்கொண்டதை மனதில் வைத்துக்கொண்டு, ஒரு கலியாணத்தைச் செய்யன்" என்றாள், சுருக்கமாக,
அவர் மெல்லச் சிரித்துக்கொள்ளுகிறார். அந்தச் சிரிப்பிலே உயிரில்லை. அதனை அவதானித்த மீனாட்சியம்பாள் திரும்பக் கேட்கின்றாள்.
"என்ன சிரிக்கிறாய்" "சிரிக்காமல் என்னக்காள் செய்யிறது?" "கலியானம் எனர்டாவி சிரிப்போ" "எனக்கும் ஒரு கலியாணம் எண்டால் பிரிக்காமல் என்னக்காள்
செய்யிறது"
"ஏன்.?"
66 தெணியான்

மரக்கொக்கு
நான் சொல்லித்தான் அக்காளுக்குத் தெரிய வேணுமோ! "-gyiju.” "அது வேண்டாம்" "மாணிக்கம், நான் சொல்லுறுதைக் கேள்! உனக்கெண்டு ஒரு குழந்தை குட்டி இருந்தால் தான் பின்னடிக்கு உதவுங்கள். நீ யோசியாதே! நான் செய்விச்சு வைக்கிறன்"
"அக்காள், இஞ்சை நாலு பொம்பிளைப் பிள்ளையன் இருக்குதுகள் அதுகள் என்னைப் பாராதே"
"அது சரியெடாப்பா. உண்ரை மனதிலை இருக்கிற எண்ணம் என்ன? அதை முதற் சொல்லு"
மாணிக்கம் மனதில் வேறு எதனையோ வைத்துக்கொண்டு பேசுகின்றார் என்பதை மீனாட்சியம்பாள் இப்போது உணர்ந்தாள். அதனை அறிந்துவிடும் ஆவலுடன் அவள் வற்புறுத்திக் கேட்கின்றாள்.
மாணிக்கம் தொடர்ந்தும் பீடிகை போட்டுப் பேசிக்கொண்டிருப்பதற்கு விரும்பவில்லை. ஆனால் அதனைச் சொல்லலாமோ, விடலாமோ என்று சில கணங்கள் மனம் தடுமாறுகின்றது. இந்தத் தருணத்தைத் தவறவிடக்கூடாது என்று இன்னொரு எண்ணம் இடித்துச் சொல்லுகின்றது. எப்படியோ வெளியிட்டுத்தானே ஆகவேணடும் என்ற முடிவுடன் மீனாட்சியம்பாள்முகத்தை ஏக்கத்துடன் நோக்கிக் கொண்டு சொல்லுகின்றார். "பிள்ளைகளுக்குத் துணையாக நான் இஞ்சை இருக்கலாம் எண்டு நினைக்கிறன் அக்காள்"
அவர் இப்படிக் கேட்பார் என்று மீனாட்சியம்பாள் எதிர்பார்க்கவில்லை. மாணிக்கத்துக்கு ஒரு கல்யாணம் செய்துவைத்துவிடலாம். அநுதாபத்துடன் அவள் எடுத்துச்சொல்லி பொன்னம்பல மணியகாரனை அதற்கு ஒப்புக்கொள்ளச் செய்துவிடலாம். அவர் உடன்பட்டு வந்துவிட்டால் மாணிக்கத்துக்கு ஒரு கல்யாணம் செய்து வைப்பது பெரிய காரியமல்ல. ஆனால் இது நடக்கக்கூடிய ஒரு காரியமல்ல, மாணிக்கம் மனதில் இப்படி விபரீதமான ஒரு எண்ணம் தோன்றி இருக்கக்கூடாது. மணியகாரன் ஒருபோதும் இதற்கு உடன்பட்டு வரப்போவதில்லை. இப்படி ஒரு பேச்சு எழுவதையே அவர் விரும்பமாட்டார். அதை உணர்ந்துகொண்டும் அவரிடம் போய் எப்படிப் பேசுவது? இது மாணிக்கத்தின் விருப்பம் என்றாவது அவரிடம் எடுத்துச் சொல்லி தப்பித்துக்கொள்ள முடியாது. மணியகாரன் மாணிக்கத்தை விட்டுவிடுவார் மாணிக்கம் பற்றிச் சொல்லப்
தெணியான் 67

Page 36
மரக்கொக்கு
போகும் மீனாட்சியம்பாளின் குலம் கோத்திரம் பற்றிப் பேச ஆரம்பித்துவிடுவார் மாணிக்கம் அவளுக்கு உறவுக்காரன் என்பதனால் வார்த்தைக்கு வார்த்தை அவளையே நையாண்டி பண்ணுவார். அந்த நையாண்டிகளையெல்லாம் கேட்டுச் சகித்துக்கொள்வது அவளுக்கு இயலாத காரியம். அதனால், அவள் திடமாகவே மறுத்துச் சொன்னாள் "அந்தாள் ஒத்துக்கொள்ளாது" "அந்தாளுக்கு நான் உதவியாக இருப்பேன். அக்காள்" மீனாட்சியம்பாளை அக்காள்' என்று அவர் உறவு சொல்லி அழைப்பது போல, மணியகாரன் இல்லாத இடத்திலும் அவரை அத்தான் என்று சொல்லிக்கொள்வதற்குத் தயங்கினார். இந்தத் தயக்கமும் தடுமாற்றமும் அவர் மீது அவளுக்குப்பரிதாபத்தை உண்டாக்கிவிடுகின்றது. அவருக்கு உதவ வேண்டும் என்னும் எண்ணம் நெஞ்சில் சிறு துளியாக அரும்புகின்றது. ஆனால்."அது சரி மாணிக்கம்." என்று பிறகும் தயங்குகின்றாள். அவளுக்கே இன்னும் அவர்மீது நமீபிக்கை உண்டாகவில்லை என்பதை உணராமல், அவளைப் பார்த்து இரந்து நிற்பது போல, பிறகென்ன அக்காள்!" எனக் கேட்கின்றார்.
மீனாட்சியம்பாளுக்கு ஒரு தயக்கம். எப்படி அவரிடம் முகத்துக்கு முன் சொல்வது என்று தயங்கிக்கொண்டு சுற்றிவளைத்துப் பேசினாள்
நீ இஞ்சை வந்தால் இரண்டு நாள்கூடத் தங்க மாட்டாய், அவ்வளவு அந்தரம் உனக்கு" ሦ
மாணிக்கத்துக்குத் தினமும் தாகம் அடங்க மது வேண்டும். அதற்கு இசைவாக உண்பதற்கு மச்ச மாமிசமும் தாராளமாக வேண்டும். மணியகாரன் வீட்டுக்கு வந்துவிட்டால் மட்டும் அவைகளை அவர் தொடுவதே இல்லை. ஆனால் எத்தனை நாட்களுக்கு அவர் இப்படி உபவாசம் இருக்க முடியும் இரண்டு நாட்கள் கழிவதற்கிடையில் அவருக்குத் தவண்டை உண்டாகிவிடும். அதன்பிறகு அவர் சொல்லாமற் கொள்ளாமல் அங்கிருந்து மறைந்துவிடுவார். அவருடைய இந்தக் குணங்களையெல்லாம் மனதில் வைத்துக்கொண்டுதான் மீனாட்சியம்பாள் இதனைச் சொல்லுகிறாள் என்பதை அவர் விளங்கிக்கொண்டு, இனிமேல் அப்பிடி எல்லாம் நடக்கமாட்டேன் அக்காள்" என்கிறார்.
நீ சொன்னால் மட்டும் போதுமே! அந்தாளுமல்லோ நம்பவேணும்" மீனாட்சியம்பாள் பேச்சில் சந்தேகம் எழுகின்றது.
நான் சத்தியமாகச் சொல்லுறணக்காள்!"
68 தெணியான்
 
 
 
 
 

மரக்கொக்கு
"எல்லாம் வாயாலை சொல்லலாம்" "என்னை நம்பக்காள்! நான் அப்பிடி நடந்தால் அண்டைக்கே நீ வெளியிலை என்னைப் பிடிச்சு விடு"
"எனக்கேதோநம்பிக்கையில்லை, அந்தாள் ஒத்துக்கொள்ளுமெண்டு!" நீ நினைச்சால் ஒத்துக்கொள்ளச் செய்யலாம் அக்காள் சரி. சரி. நீயும் விடுகிறதாக இல்லை. ஏதோ சொல்லிப் பாக்கிறன்"
மீனாட்சியம்பாளுக்கு மாணிக்கத்தின் மீது மனமிரங்கிவிட்டது. அவருக்கு வாக்குறுதியும் கொடுத்துவிட்டாள். அப்பொழுது இருவருக்குமிடையே உருவான செளசன்னியமும், மாணிக்கம் உணர்வு பூர்வமாகத் தன்னை விளங்கிக்கொண்டுவிட்ட அவரது அநாதரவான நிலையும் மீனாட்சியம்பாளை வாக்குறுதி வழங்கச் செய்துவிட்டன. பின்னர் மணியகாரனை நினைத்தபோது, மாணிக்கத்துக்கு அந்த நமீபிக்கையைக் கொடுத்திருக்கக் கூடாது என்று அவள் எண்ணிக்கொண்டாள். மணியகாரனை அணுகுவதென்பதை மனத்தால் நினைத்துப் பார்ப்பதற்கும் இயலாமல் தயங்கிக்கொண்டிருந்தாள்
அவளுக்கல்வா தெரியும் மணியகாரன் குணம் பரம்பரைக் கர்வம், அடுத்தவர் சொல்லுக் கேட்டு, அதற்கு இணங்கிநடப்பது தனக்கிழிவென்று கருதும் மூர்க்கம், பெண்கள்ஆலோசனை சொல்லும் தகுதியும் உரிமையும் இல்லாதவர்கள் என்ற நினைப்பு. இந்த இலட்சணங்களை உடைய மணியகாரனை எப்படி அவள் அணுகுவது! இதுவரை எந்தவொரு சமயத்திலும் அவள் பேச்சு அவர் காதில் எடுபட்டதில்லை. மாணிக்கத்தின் நடத்தைகள் பற்றி சில தருணங்களில் மீனாட்சியம்பாளிடம் சாடை மாடையாக அவர் கண்டித்துமிருக்கிறார். ஆசார அநுட்டானங்கள் என்றால் அவருக்கு மட்டுமல்ல அந்தக் குடும்பத்துக்கே அது உயிரல்லவா! சிதம்பரப்பிள்ளை மணியகாரன் ஆட்சி அதிகாரங்களுடன் மிகுந்த செல்வாக்கான வாழ்வு வாழ்ந்த காலம் வெள்ளைக்காரத் துரைமார் குதிரை வண்டிகளில் ஏறி மணியகாரனைத் தேடிக்கொண்டு அவர் வீட்டுக்கு வருவார்கள் மணியகாரன் அவர்களுக்கு எந்தக் குறையும் வைப்பதில்லை. உற்சாகமாக அவர்களை வரவேற்பார் வேண்டிய உபசரணைகள் எல்லாம் வலிந்து வலிந்து செய்வார். மதுப் பிரியர்களான அவர்கள் யாழ்ப்பாணத்துப் பனங் கள்ளைக் கூடச் சுவைத்துப் பருகும்படி கொடுத்து, அவர்கள் களிப்பது கண்டு, தான் இரசிப்பார். அத்தனை
தெணியான் 69

Page 37
மரக்கொக்கு
உபசரணைகளும் வீட்டின் சவுக்கண்டியோடும் அதனையடுத்து அவர் ஒதுக்கி வைத்திருக்கும் பிரத்தியேக அறையோடும் முடிந்து போய்விடும். அதற்கு அப்பால், யாழ்ப்பாணத்துச் சாதி ஆசாரங்களைப் பேணிப் பாதுகாக்கும் அந்தநாற்சார் வீட்டினுள்ளே வெள்ளைக்கார ஆட்சியதிகாரிகள் தானும் நுழையும் வாய்ப்பினை அவர் கொடுப்பதில்லை. அவர்கள் ஆளும் வர்க்கம் என்பதினால் அவர்கள் அதிகாரத்துக்கு அஞ்சியோ, அவர்கள் அநுசரணை தனக்கு வேண்டும் எண்பதற்காகவோ அவர் இந்த விஷயத்தில் தயக்கம் காட்டுவதில்லை. அந்த வீட்டில் வெள்ளைக்காரத் துரைமார் வந்து புழங்கிப் போகும் அந்த அறையை ஆசௌசமுள்ள இடமாகவே மணியகாரன் குடும்பம் அந்தக் காலத்தில் கருதி வந்தது.
மணியகாரன், வீட்டிலிருந்து புறப்பட்டு கச்சேரிக்கோ அல்லது வெள்ளைக்காரத் துரைமார் அலுவலகங்களுக்கோ சென்று, மீண்டும் திரும்பி வீடு வந்தாரேயானால், முதலில் ஆசௌசம் பிடித்த அந்த அறைக்குள்ளேயே புகுந்துகொள்வார். வெளியில் செல்லும்போது அவர் அணிந்திருந்த ஆடைகளையெல்லாம் களைந்து அங்கு போட்டுவிட்டு, நேராகக் கிணற்றுக்குச் சென்று திரும்பவும் நீராடி முடித்த பின்னர் பூசை அறைக்குட் போய் நெற்றியில் வெண்ணிறு தரித்துக்கொண்ட பிறகே வீட்டின் ஏனைய பகுதிகளுக்குள் பிரவேசிப்பது அவரது வழக்கம்.
இத்தகைய ஆசாரசீலரின் குடும்பத்தில் மாணிக்கம்தானும் ஒருவனாக ஒட்டிக்கொண்டு வாழ்வதற்கு நினைக்கலாமா! இப்படி ஓர் எண்ணம் அவர் மனதில் எழுந்திருக்கவே கூடாது. மணியகாரன் இதை ஒரு போதும் அநுமதிக்கப்போவதில்லை என்று எண்ணி மீனாட்சியம்பாள் மனம் குழம்பினாள்
மாணிக்கத்தை நினைக்கும் போது அவள் மனம் இரங்கவே செய்கிறது. மாணிக்கம் பாவந்தான்! மாணிக்கம் இந்தப் பேச்சை எடுத்த வேளையில, இந்தப் பேச் சே பேசக் கூடாதெனிறு தட்டிக கழித்திருக்கவேண்டும். அப்பொழுது இருந்த சூழ்நிலையில் அதைச் செய்யமுடியவில்லை. அவருக்கு நம்பிக்கையூட்டும் விதமான வாக்குறுதி கொடுத்தாகிவிட்டது. எப்படியும் மணியகாரனுடன் இனிமேற் பேசித்தான் ஆகவேண்டும். மணியகாரனின் பொல்லாத கோபத்துக்குள்ளாகவேண்டி நேர்ந்தாலும் அதைத் தவிர்ப்பதற்கு இயலாது. தகுந்த ஒரு தருணம் வரும் வரைக்கும் மீனாட்சியம்பாள் எதிர்பார்த்துக் காத்திருந்தாள்.
சந்தர்ப்பங்கள் தாமாகவே உருவாகவேண்டுமென்று எப்பொழுதும்
70 தெணியான்

மரக்கொக்கு
காத்திருக்க முடியாது. சந்தர்ப்பங்களை உருவாக்குவதற்கும் விசேஷமான சாதுரியங்கள் வேண்டும். காரியவாதிகள் இயல்பாக உருவாகாத சந்தர்ப்பங்களைத் தாமாகவே வலிந்து உருவாக்கிக்கொண்டுவிடுவார்கள் மீனாட்சியம்பாள் அத்தகைய திறமைகள் இயல்பாகவுள்ள ஒரு பெண்ணல்ல. ஆனால் பெண்களுக்கே கைவந்த சாதுரியங்கள் சிலவேனும் அவளிடம் இல்லாமலா போய்விடும்!
ஒரு கணவனின் பலங்கள், பலவீனங்களை மிகத்துல்லியமாக உணர்ந்து வைத்துக்கொண்டிருக்கின்றவள் அவன் மனைவி ஒருத்திதான். மணியகாரனை மீனாட்சியம்பாள் நன்றாக அறிவாள். அவர் மனதை முதலில் குளிரவைக்கவேண்டுமென அவள் விரும்பினாள் அந்த மகிழ்ச்சியின் மலர்ச்சி வாடுவதற்கு முன்னர் அவரை மெல்ல அணுகவேண்டுமென அவள் தீர்மானித்துக்கொண்டாள்.
மணியகாரன் மனது குளிரவேண்டுமானால் அவருக்கு உவப்பான உணவுகளை ஆக்கிக் கொடுக்கவேண்டும். அது ஒன்றைத் தவிர அவரை மகிழ்விப்பதற்கு இப்பொழுது வேறு மார்க்கமேதும் இல்லை. அவர் நயந்து சுவைத்துண்ணும் வணிணம் அவருக்கு உணவு ஆக்கிப் படைப்பதற்கு அவள் தயாரானாள் கத்தரிக்காயை நெய்யில் வதக்கி எடுத்து, தேங்காயைத் துருவிப் பிழிந்து சொட்டுப் பாலில் அந்த வதக்கலைப் போட்டு ஒரு குழம்பு வைத்தாள். உருளைக் கிழங்கைப் பக்குவமாகத் தோல் சீவியெடுத்து அது வறுவலோ அல்லது கறியோ என்று பேதங்காண இயலாத விகையில் மசாலை மணக்கும் புரட்டல் ஒன்று செய்தாள் கொடுகொடுக்கும் தேங்காய்ப் பாலில் கமகமக்கப் பருப்புக் கறி ஒன்று ஆக்கினாள் தொட்டாலே கை மணக்கும் ரசம், பசுநெய், மோர் மிளகாய், அப்பளம் இவைகளுக்கு மேல், கப்பல் வாழைப்பழமும் தேடி வைத்தாள்.
மணியகாரனுக்கு அன்று மதிய உணவு ஒரு விருந்துபோல அமைந்தது. அவர் நன்றாக ரசித்து உண்டார். இந்த உணவுகளைச் சுவைப்பது அவருக்கு இதுவரை எட்டாத புதிய அநுபவமல்ல. இதைவிடச் சுவையான உணவுகளை ஒரு காலத்தில் தினமும் உண்டு களித்தவர்தான் அவர் ஆனால் இன்று.? குடும்பம் இருக்கும் நிலையில் இந்த உணவுகளை உண்பதையே அவர் கற்பனை செய்யவும் முடியாத ஒருவராக இருக்கின்றார். மணியகாரன் ஒரு வார்த்தை வாய் திறந்து சொல்லவில்லை, அவளைப் பாராட்டி மீனாட்சியம்பாளுக்கு இது ஒரு
தெணியான் 71.

Page 38
மரக்கொக்கு மனக் குறைதான். ஆனால் அவர் முகத்தில் ஒரு நிறைவு. அந்த நிறைவொன்றினையே மீனாட்சியம்பாள் எதிர்பார்த்தாள். அவளைப் பாராட்டி நல்ல வார்த்தைகளை அவள் எதிர்பார்க்கவுமில்லை. இது அவருடைய சுபாவம் முன்னர் இப்படியான உணவுகளை உண்டறியாதவர் அல்லவா இதைப்போய்ப் பாராட்ட வேண்டுமென்று அவர் எண்ணி இருக்கக்கூடும். அப்படி அவர் நினைத்திருந்தால் அதுவும் நியாயமானது தான் என்று அவள் கருதினாள்.
மணியகாரன் பல நாட்களுக்குப் பிறகு மனநிறைவோடு வயிறார
உண்ட களைப்பு அவர் சவுக்கண்டிக்குள் வந்து சாய்வு நாற்காலியில் மெல்லச் சாய்ந்து, முன் நீண்டு கிடக்கும் மரச் சட்டங்கள் மேல் கால்களை நீட்டியவாறு வெற்றிலையைச் சுவைத்த வணிணம் உடலைத் தளர்த்திவிட்டுக்கொண்டு கிடக்கின்றார். அவருக்கு எதிரே நிர்மலமான நீல வானம் கவிந்து கிடக்கின்றது. நீலக் கடலோ அலைகள் இன்றிச் செத்துக் கிடக்கின்றது. வீதியிலும் அதிக சன நடமாட்டமிலலை. வாகனங்கள் ஒன்றிரண்டு இடையிடையே ஓடிக்கொண்டிருக்கின்றன. கடல் நீரைத் தடவிவரும் இளங்காற்று சிலுசிலு என்று உடலைத் தழுவிக்கொண்டு போகின்றது.
மீனாட்சியம்பாள் அந்தச் சவுக்கண்டிக்குள் மெல்ல வந்து அவர் கால் பக்கமாக தரையில் ஆசுவாசமாக அமர்ந்துகொள்ளுகின்றாள். அவள் வந்து இப்படி அவர் முன்னே அமர்ந்துகொள்வதென்பது இப்பொழுதெல்லாம் அபூர்வமாக நடைபெறுகின்ற ஒரு நிகழ்ச்சி முக்கியமான குடும்ப விவகாரங்கள் எதுவாவது அவரிடம் சொல்லவேண்டி இருந்தால் மாத்திரம் அவள் இப்படி வந்து அமர்ந்துகொள்வாள் ஒரு வருஷத்தில் இரண்டொரு தடவைகள் இப்படி நடப்பதே புதுமைதான். இந்த வேளைகளில் எல்லாம் மணியகாரன் தானாக முன்வந்து அவளோடு பேசிக்கொள்ள மாட்டார். அவள் பேசட்டும் என்று நினைத்துக்கொண்டு அவர் மெளனமாக இருந்துவிடுவார். அவருடைய அந்த மெளனம் சில சமயங்களில் அவளைப் பரீட்சித்துப் பார்ப்பது போலவும் தோன்றும். இன்று அவளுக்கே வியப்பாகத்தான் இருக்கின்றது. அவளை எதிர்பார்த்திருக்காது, அவராகவே பேச்சை ஆரம்பித்துவிட்டார்.
"மாணிக்கம் என்ன செய்யிறான்?"
அவளுக்கு நம்ப முடியவில்லை. தன் செவிகளையே சந்தேகிக்கும் ஓர் உள்ளுணர்வு அவளுக்குள்ளே கிளருகின்றது. அவள் யாரைப்பற்றி
72 தெணியான்

மரக்கொக்கு
அவருடன் பேச வேண்டுமெனத் திட்டமிட்டு எண்ணி இங்கு வந்தாளோ, அந்த மாணிக்கம்' என்ற பெயரை இன்று அவராகவே அல்லவா எடுக்கின்றார்! இது ஒரு நல்ல சகுனந்தான் என்று தனக்குள்ளே திருப்திப்பட்டுக்கொண்டு தண் உணர்வுகளை அவர் கண்டுகொள்ளாதவாறு உள்ளே மறைத்து சாதாரணமாகப் பேசுவது போலக் கேட்கின்றாள்.
"ஏன், அவனை விசாரிக்கிறியள்?" "அவன் கோயில்களை நல்லாப் பாக்கிறான்" மணியகாரன் தனக்குச் சொந்தமான இரண்டு கோயில்களுக்கும் கடந்த ஒருவாரகாலமாக அவர் போகவே இல்லை. மாணிக்கந்தான்பூசை நடைபெறும் வேளைகளில் அங்கு போய் நின்று எல்லாவற்றையும் கவனித்துக்கொண்டு வருகிறார். கோயில் வருமானங்கள் அனைத்தும் மணியகாரனுக்குச் சொந்தம்பூசகராக இருக்கும் குருக்கள் படி அரிசியும், சிறுதொகைக் காசுமீ மணியகாரனிடமிருந்து சமீபளமாகப் பெற்றுக்கொள்வது போதாதென்று சில சமயம் அரிச்சனைக் காசுகளை மணியகாரன் அறியமாட்டாரென்று நினைத்து மறைத்துக்கொண்டு விடுவதுண்டு. குருக்களின் இந்த ஏமாற்று வேலைகள் மணியகாரனுக்குத் தெரியாமலில்லை. அறிந்துகொண்டும் அறியாதவர் போல இருந்துவிடுவார். அவருடைய கெளரவம் அவரை மெளனமாக்கிவிடும். இந்த ஒருவார காலத்தில் கோயில் வருமானம் அதிகரித்திருக்கின்றது. மாணிக்கம் கணிகளில் எண்ணைவிட்டுக்கொண்டு எச்சரிக்கையாக இருந்திருக்கிறார். கோயில் வரும்படியை அதிகரித்துக் காட்டியிருக்கின்றார். மணியகாரன் மனதில் இதை வைத்துக்கொண்டே பேசினார் எண்பது மீனாட்சியம்பாளுக்குத் தெரிந்திருக்கவில்லை. ஆனால் இதுதான் தகுந்த தருணம் என்று உணர்ந்துகொண்டு தான் பேசவந்த விஷயத்தை மெல்ல ஆரம்பித்தாள்.
நானும் அவனைப் பற்றித்தான் சொல்ல வந்தனான்." மீனாட்சியமிபாளை இதுவரை திரும்பிப் பார்க்காது பேசிக்கொண்டிருக்கும் மணியகாரன் மெல்ல நிமிர்ந்து அவள் முகத்தை உன்னிப்பாகக் கவனித்தவண்ண்ம் "அவனுக்கென்ன..?" என்று கேட்கின்றார்.
"அவனும் ஆற ஒரு இடம் வேணும் நேரே சொல்லுவதற்குத் தயங்கி மீனாட்சியம்பாள் சுற்றி வளைத்துப் பேசுகின்றாள்.
மணியகாரனுக்கு அவள் பேச்சின் பொருள் விளங்கவில்லை. நீ என்ன சொல்லுகிறாய்?"
assoofura 73

Page 39
மரக்கொக்கு
என்று திரும்பவும் அவர் கேட்கின்றார்.
"எங்களுக்கும் ஒரு துணையாக இருக்கும்" என்று அவள் சொன்னபோதுதான், எதற்காக இந்தப் பீடிகை போடுகின்றாள் என்பது அவருக்குப் பட்டென்று புரிந்து விடுகின்றது. மீனாட்சியம்பாளின் மனதிலுள்ளதைச் சொல்லிவிடவேண்டுமெனினும் தவிப்பு உள்ளத்தில் விறுக்கெண்றெழ,
"உங்களுக்கும் உதவிக்கொரு ஆள் இல்லை" என்கின்றாள் அதைத் தொடர்ந்து,
": 5527an 62......" மணியகாரன் குரல் பீரங்கியாக வெடிக்கின்றது. கட்டுக்கடங்காத சினம் சிரசுமுட்ட அவருக்கு வந்துவிடுமானால், அந்த வேளைகளில் மனைவியானவளை மீனாட்சி என்று அழைப்பதுதான் அவர் வழக்கம். அவளை அவமதிப்பதற்கென்றே அவர் இவ்வாறு அழைப்பார் அவளுக்கும் இது நன்றாகத் தெரியும். இப்படியான வேளைகளில் அவள் மெல்ல விலகிக்கொண்டு போய்விடுவாள். இன்று அப்படி விலகி ஓடுவதற்கும் அவள் தயாராக இல்லை. மெளனமாக அவர் முகத்தை யே பார்த்துக்கொண்டிருக்கின்றாள். அவள் வழமைபோல, இல்லையென்பது அவருக்கும் விளங்கிக்கொண்டிருக்க வேண்டும். சினம் சற்றுவிரைவாகவே அவருக்கின்று தணிந்துகொண்டு வந்தது. ஆனால் அவள் மாணிக்கம் பற்றிய வேண்டுகோளினால் உண்டான அருவெறுப்பு மாறாமல், நீ உண்ரை குணத்தைக் காட்டுகிறாய்." என்கிறார் நையாண்டியாக,
அவளும் இன்று விட்டுவிடுவதாக இல்லை. நான் நல்லதுக்குத்தான் சொல்லுகிறன்" என்றாள் குரலைச் சற்றுத் தாழ்த்திக்கொண்டு.
"கூத்தாடிகள் போலப் பாகவதர் தலையும், குங்குமப் பொட்டுமாகத் திரியும் அவன். அவன் ஒரு நாய்ச்சாதி மணியகாரன் முழுவதையும் சொல்லி முடிக்காது இடையில் நிறுத்திக்கொள்ளுகின்றார்.
"அவன் அப்படியெல்லாம் இனிமேல்நடக்கமாட்டேன் எண்டு சத்தியம் பண்ணுகிறான்"
"ஆர் அவனோ?" நீங்கள் சொன்னால் கேட்டு நடப்பான்." நான் சொல்லியோ நல்லாத்தானி கேட்பான். குப்பையிலை கிடந்து புரளுகிறவனை நடு வீட்டுக்குள்ளே கொண்டுவந்து வைக்கச் சொல்லுகிறாய்! இந்த வீட்டு முற்றத்திலை கால் வைக்கிறதுக்கே அவன் தகுதியில்லாதவன்.
74 தெணியான்

மரக்கொக்கு
உனக்கேதோ சொந்தமெண்டு சொல்லிக்கொண்டு வாறான்; அதுதான் நான் பேசாமல் இருக்கிறன்"
"அவனுக்கும் இது தெரியும்"
"பிறகென்ன பேச்சு!"
இப்ப காலம் மாறிப்போச்சு முந்தின காலம் போல இப்ப ஆர் பயபக்தியாக நடக்கிறான்கள் அவன் இருந்தால் உங்களுக்குத்துணையாக இருக்குமெண்டுதான்."
மணியகாரன் மெளனமானார்.
அவள் சொல்வதிலும் நியாயம் இருக்கின்றது என்பதை அவர் புரிந்துகொண்டார். முன்போல இப்பொழுது கோயில் நிருவாகமீ நடத்துவதென்பது இயலாது. எல்லோரும் தலை நிமிர்ந்துவிட்டார்கள் சரியான சந்தர்ப்பங்களில் அவர்களைத் தட்டி இருதள்தத் தவறிவிட்டால் கோயிலிகளைக் கைவிடவேணடியதுதான். மணிக்கம் அதற்குப் பொருத்தமானவன். அவனைக் கையாளாக வைத்திருப்பது நல்லதுதான். இரண்டொரு சந்தர்ப்பங்களில் அவன் தன்னுடைய திறமையைக் காட்டியும் இருக்கின்றான்.
ஒரு சமயம் கோயில் கொடியேறு வருடாந்த உற்சவம் நடந்துகொண்டிருந்தது. அன்று மிக உச்சமான திருவிழா சிகரங்கள், சோடனைகள்,தவில்கள்,நாதஸ்வரங்கள், சின்னமேளங்கள் என்று கோயிலில் ஒரே அமர்ககளe, சனமோ சமுதீதிரமீ போலப் பெருகி வழிந்துகொண்டிருந்தது. எங்கு திரும்பினாலும் இளவட்டங்களே அன்று பெருமளவு கணிகளில் தட்டுப்பட்டார்கள். அதற்குக் காரணம் சதிராட்டக்காரி கனகவல்லிதான். அப்பொழுது இளவட்டங்களின் கனவுக் கன்னியாக அவள் விளங்கிய காலம் அது, பகற் திருவிழாவின்போது அவளுக்கு நெருக்கமாக நின்று அவளைப் பாரத்து ரசிப்பதும், இரவு பல்வேறு ஒப்பனைகளைச் செய்துகொண்டு வந்து, கோயில் மண்டபத்துக்குள் நின்று வளைந்து நெளிந்து ஒயிலாக அவள் ஆடும் சதிராட்டங்களில் மனம் பறிகொடுத்துக் கிடப்பதும், அன்றைய இளவட்டங்களின் வேலையாக இருந்துவந்தது. கனகவல்லியின் நிகழ்ச்சியென்றால், முன் வரிசையில் இடமீ பிடிப்பதற்கு இளைஞர்களிடையே ஒரு போட்டி இருந்துகொணர்டிருக்கும். அசைந்தாடும் கனகவல்லியின் அங்க லாவண்ணியங்களை அருகிருந்து ரசிப்பதில் அவர்களுக்கொரு மோகவெறி இளமனசுகளில் அந்த வெறியை மூட்டி அவர்களைத் தன் பக்கம்
தெணியான் 75

Page 40
மரக்கொக்கு
இழுப்பதில் அவள் மகா சாகசக்காரி சதிராட்டத்துக்கென ஒதுக்கப்பெற்ற இடத்தில் நின்று அவள் வளைந்து வளைந்து ஆடிக்கொண்டு வரும்போது முன் வரிசையில் தம்மை மறந்து உட்கார்ந்திருக்கும் இளசுகளைப் பார்த்து இடையிடையே கண்சிமிட்டுவாள். அந்தக் கணி சிமிட்டல் ஒன்றே போதும், ஜென்ம சாபல்யம் பெற்றுவிட்டதாக அந்த இளசுகள் கிறங்கிப்போவதற்கு, ஜென்ம சாபல்யம் பெறும் இந்த வாய்ப்பு கோயில்களுக்குள்ளே நுழைவதற்கு உரிமை இல்லாத இளசுகளுக்கு ஒருபோதும் கிட்டுவதில்லை. ஆனால் அவர்களும் இளைஞர்கள் தானே! அவர்களுள் ஒருவன், பால் போல வெள்ளை வேட்டியும் சேட்டுமாகத் திருவிழாவுக்கு அன்று வந்திருந்தான். தங்கச் சங்கிலி ஒன்று அவன் கழுத்தில் அணிந்திருப்பது அந்த வெள்ளை சேட்டுக்கூடாக வெளியே தெரிகின்றது. கோயிலுக்குள்ளே நுழையும் உரிமை இல்லாத ஒருவன் இந்தக் கோலத்தில் கோயிலுக்குள் வந்திருக்கக்கூடாது.
சுவாமி வீதிவலம் புறப்பட்டு தெற்கு வீதியில் வந்து தரித்து, மேளச்சமா முடிந்த பிறகு, கனகவல்லி அங்கே வருகின்றாள். இரவு நடக்கும் நிகழ்ச்சிகளுக்குக் கட்டியம் கூறுவதுபோல அங்கே இரண்டு பாட்டுப் பாடிவிட்டு அவள் போய்விடுவதுதான் வழக்கம். அந்தச் சமயம் பார்த்து அந்த இளைஞன் சுவாமிக்கு நெருக்கமாக முன் வரிசையில் வந்து நிற்கின்றான். மாணிக்கம் அந்தச் சனக் கூட்டத்துக்கு மத்தியில் அப்பொழுது எங்கே நின்றாரோ தெரியாது. அவர் பாய்ந்தோடி வந்து அந்த இளைஞனின் நெஞ்சிற் பிடித்துத் தள்ளி, கன்னத்தில் ஓர் அறை கொடுத்து, அவன் அணிந்திருந்த சேட்டைப் பிடித்துக் கிழித்து, அவனைப் பின்புறமாகத் தள்ளிக்கொண்டுபோய் அங்கிருந்து துரத்திவிட்டார். அவன் கொழும்பில் செருப்புக்கடை வைத்திருந்த ஒருவனின் மகன் என்று பின்னர் அறிய முடிந்தது.
இன்னொரு சம்பவம் சென்ற ஆண்டு கந்தசஷ்டி குரண் போர் நடந்த அன்று நிகழ்ந்தது. மணியகாரனுக்குச் சொந்தமான அந்தக் கோயிலில் வீதிவலம் வரும் சுவாமியை மணியகாரன் பகுதியார் தூக்கி வருவதே வழக்கமாக இருந்து வந்தது. குரனைத் தோள்மீது தூக்கி ஆட்டுவதற்கு நல்ல உடல் வலிமையுள்ள தொழிலாளர்கள் தேவைப்பட்டார்கள். அதனைச் செய்வதற்குக் கடற்றொழிலாளர்கள் பொருத்தமானவர்களாக இருந்ததினால் அந்தப் பொறுப்பை அவர்களிடமே மணியகாரணி பகுதியார் விட்டுவைத்தார்கள் உருண்டு திரணிட திருவாடு தண்டுகளைச்
76 தெணியான்

மரக்கொக்கு
சமாந்தரமாக நிலத்தில் வைத்து, குரனைப் பீடத்துடன் தூக்கி அதன் மீது வைத்துக் கயிற்றினால் வரிந்து கட்டுவார்கள். குரண் ஆட்டுவதில் அநுபவம் பெற்ற பலசாலியான ஒருவர் அந்தப் பீடத்தின் மீதேறி குரனுக்குப் பின்னே அவன் தரத்தில் பிடித்தவாறு உறுதியாக நின்றுகொள்வார். ஒரு பக்கத்துக்குப்பத்துப்பேர்வரை வரிசையாக நின்று திருவாடு தணிடைப் பிடித்துத் தூக்கித் தோள்களின் மேல் வைத்துக்கொண்டு குரண் ஆட்ட ஆரம்பிப்பார்கள் முதலில் யானைத் தலையோடு தாரகன் தோன்றுவான். பின்னர் சிங்க முகத்தோடு சிங்கன் தோற்றுவான். இறுதியில் குரன் எதிர்ப்படுவான். தரங்களை மாற்றிமாற்றிப் போட்டே இந்த அசுரர்கள் வந்துகொண்டிருப்பார்கள் முருகப் பெருமானைச் சுற்றிச் சுற்றி வந்து போர் செய்வார்கள். ஒருபுறம் சரிந்து வந்து, பின்னர் மறுபுறம் சரிந்து செல்வார்கள். எம்பி மேலே குதித்து கீழே வருவார்கள் தரத்தை அங்குமிங்குமாகத் திருப்பித் திருப்பிக காணபித்துக் கொணடிருப்பார்கள். போர்புரியும்போது கையில் தாங்கிக்கொண்டிருக்கும் ஆயுதங்களை ஒவ்வொன்றாக இழந்து இறுதியில் தரம் கீழே வந்து விழும். முருகப்பெருமானுக்கும் குரனுக்குமிடையே நடைபெறும் போரே மிக உக்கிரமாக நடைபெறும். குரசங்காரத்துடன் இந்த யுத்தக் காட்சிகள் நிறைவுபெற்றுவிடும். குரண் பக்கம் நின்று யுத்தக் காட்சிகளைப் பாவனை செய்து காட்டுவதில் கடற்றொழிலாளர்கள் மிக வல்லமையுள்ளவர்களாக விளங்கினார்கள் முருகனுக்கும் குரனுக்குமிடையே நடைபெறும் யுத்தம் ஒருவகையிற் பார்க்கும்போது மணியகாரன் பகுதியாருக்கும், கடற்றொழிலாளர் பகுதியாருக்குமிடையே நடைபெறும் யுத்தம் போலவும் தோன்றும். அந்த உணர்வு பிறப்பதற்குக் காரணமாக இருந்தவர்கள் மணியகாரன்கள்தான். இரு பகுதியாருக்கும் உரிய கடமைகளை வெவ்வேறாகப் பகிர்ந்தளித்தவர்களே அவர்கள்தான். கடற்றொழிலாளர்கள் சுவாமி தூக்குவதைத் தடுப்பதற்காக மணியகாரன்கள் நீண்ட காலமாகக் கையாண்டு வந்திருக்கும் தந்திரம் இது. மணியகாரன்களின் இந்தத் தந்திரத்தைக் கடற் தொழிலாளர் பகுதி இளைஞர்கள் விளங்கிக்கொண்டிருக்க வேண்டும். சென்ற ஆண்டு தாங்களும் சுவாமி தூக்க வேண்டுமென்று உறுதியாக அவர்கள் நின்றார்கள் அந்த உரிமை தமக்கில்லையென்றால் குரனையும்தூக்கி ஆட்டமாட்டோம் என்று மறுத்துப் பேசினார்கள். இதனால் உண்டான முறுகல் நிலையில் கோயிலுக்குள்ளே நிகழ்ந்த வாக்குவாதம் முற்றி கடற் தொழிலாளர் பகுதி
தெணியான் 77

Page 41
மரக்கொக்கு
இளைஞன் ஒருவன்மணியகாரன் நெஞ்சில் கைவைத்துவிட்டான். அந்தச் சமயம் மாணிக்கம் குறுக்கே பாய்ந்து அந்த இளைஞனை நெஞ்சிற் பிடித்துத் தள்ளி அவன் கன்னத்தில் ஓங்கியறைந்தான். உடனே அங்கே கலவரமும் பதற்றமுமான ஒரு சூழ்நிலை உருவானது. மாணிக்கம் மணியகாரனின் ஆள் என்பதனால் அவரை நெருங்குவதற்கு அவர்கள் தயங்கினார்கள் என்று சொல்லிவிடமுடியாது. மாணிக்கம் தனித்து நின்று நான்கு முரடர்களுக்குப் பதில் சொல்லத் தகுந்த திடகாத்திரமும் துணிச்சலுமுள்ளவர் என்பதனாலேயே மெல்ல அடங்கிப் போனார்கள்
அந்தச் சம்பவங்களை இன்று நினைத்துப் பார்க்கும்போது மீனாட்சியம்பாள் சொல்வதில் ஒரு நியாயம் இருப்பதாக இப்பொழுது மணியகாரனுக்குத் தோன்றுகின்றது.
நீண்ட மெளனத்துக்குப் பிறகு மணியகாரன் மீனாட்சியம்பாளைப் பார்த்துக் கேட்டார்.
"சரியப்பா.இவன் ஒழுங்கானவனாகத் திருந்தி நடப்பானோ..!" அவர் குரலின் வெம்மை தணிந்து இப்பொழுது சந்தேகம் தொனிக்கின்றது. o
நல்லபடியாக நடக்காவிட்டால் வீட்டை விட்டுக் கலைச்சு விடுகிறது" உள்ளே மகிழ்ந்த வண்ணம் சட்டென்று அவள் பதில் சொன்னாள்.
பிறகு நீ குறை சொல்லக் கூடாது!" இதிலை என்ன குறை" "சரி, ஏதோ உண்ரை எண்ணப்படி செய்" மணியகாரன் சம்மதம் தெரிவித்துவிட்டார். மணியகாரன் உயிருடன் வாழ்ந்த காலம் வரைமாணிக்கம் அவருக்கு எடுபிடி வேலைகள் செய்யும் ஒரு ஏவற்காரன் என்ற அந்தஸ்துக்கு மேல் அவரால் உயரமுடியவில்லை.
சமூகத்தின் கணிப்புக்குரிய பெரிய மனிதன் ஆவதற்கு ஒருவனிடம் விசேஷ தகுதிகள் எவையேனும் இருக்கவேண்டுமென்றில்லை. சந்தர்ப்பங்களும் குழ்நிலைகளும் வலிந்து வந்து அவனைப் பெரிய மனிதனாக்கி-உயர்ந்த ஸ்தானத்திலும் தூக்கி வைத்துவிடக்கூடும். இதற்குத் தகுந்த உதாரணமாக விளங்குகின்ற ஒருவர் உண்டென்றால் அவர் மணியகாரன் வீட்டு மாணிக்கந்தான்.
78 தெணியான்

மரக்கொக்கு
மணியகாரனின் மறைவின் பின்பு மாணிக்கத்தின் முக்கியத்துவம் அந்தக் குடும்பத்தினால் உணரப்படவேண்டியதாயிற்று மாணிக்கம் இப்பொழுது மீனாட்சியம்பாளின் தூரத்து உறவுக்காரனல்லர் அவளுக்கு உடன் பிறந்த சகோதரன் என்ற நிலைக்கு அவர் இன்று உயர்ந்துவிட்டார். இந்த உயர்வானது மணியகாரன் குடும்பத்தின் ஆண் துணை இல்லாது தனித்துப்போனநிலையினால் அவரைத் தேடி வந்து சேர்ந்ததுதான். ஆனால் அவரும் தன் நிலை உணர்ந்து இப்பொழுது முற்றாக மாறித்தான் போனார். அவருடைய உடை நடைகள், வாழ்க்கை முறைகள் எல்லாமே மாற்றமுற்று புதிய கோலம்பூண்டுவிட்டன. முன்னர் இருந்துவந்த பாகவதர் தலைவெட்டும் குங்கும வசியப்பொட்டும் இப்பொழுது இருந்த இடம் தெரியாமல் மறைந்து போய்விட்டன. அவரது தலை அலங்காரமாக முன் தலையைப் பிறைபோல மழித்துவிட்டு, பின்னே ஒரு பாக்களவு குடுமி ஒன்று அவர் தலையில் வந்து அமர்ந்துவிட்டது. பிறை வெட்டுத் தலை காரணமாக மேலும் பரந்து கிடக்கும் அவர் நெற்றியிலும் உடலிலும் பளிச்சிடும் வெண்ணிற்றுப் பூச்சு; அரையிலே கருப்பு வண்ணத்தில் உருத்திராக்கக் கரையிட்ட கொக்கு வெள்ளை நான்கு முழ வேட்டி; தோள் மீது அந்த வேட்டிக்கு இணையான ஒரு சால்வை; மதுபானத்தைக் கண்காளாற் காண்பதே மகாபாவம் எனக் கருதும் ஆசாரம்; மீன், இறைச்சி என்னும் சொற்கள் இப்பொழுது செவியில் வந்து விழுந்துவிட்டால் அருக்குளித்து அவஸ்தைப்படும் உத்தம சைவம், அவர் பழைய மாணிக்கத்தைத் தெரிந்தவர்களுக்கு வைதீக அவதாரம் எடுத்திருக்கும் இந்த மாணிக்கம் ஒரு அதிசயந்தான். மணியகாரன் குடும்பத்துக்குச் சொந்தமான ஆலயங்களை மேற்பார்வை செய்யும் பொறுப்புக்களெல்லாம் இப்பொழுது மாணிக்கத்தின் கைக்கு வந்து சேர்ந்துவிட்டன. அதனால் அவர் இன்று கெளரவமான கோயில் மணியமாகவும் மாறிவிட்டார்.
பொன்னம்பலமணியகாரனின் பிள்ளைகளுக்கு மாணிக்கம் இப்பொழுது தாய்மாமன்.
ஆனால் விஜயலட்சுமியைப் பொறுத்தவரை அவரால் அந்த ஸ்தானத்தை இன்னும் பிடித்துக்கொள்ள முடியவில்லை.
தந்தையான பொன்னம்பல மணியகாரனின் இடத்தில் இன்று இருப்பது, தான் ஒருத்திமாத்திரமே என்று எண்ணுகின்றவள் விஜயலட்சுமி குடும்பத்திற் கூப்பிட்ட குரலுக்கு ஓடிவரும் ஏவற்காரனாகவே அவரை இன்னும் அவள் கருதுகின்றாள். அவள் தான் இருக்குமிடத்துக்கு
தெணியான் 79

Page 42
மரக்கொக்கு
மாணிக்கத்தை அழைத்து, அதிகாரத்துடன் அவருக்குக் கட்டளை இடுவது அவளுடைய வழக்கம்.
ஆனால் இன்று அவளுக்குப் பொறுமை இல்லை. அன்னலட்சுமியின் கடிதத்தினால் முற்றாக அவள் மனம் குழம்பிப்போய் இருக்கின்றாள். மாணிக்கத்தைக் கூப்பிட்டு அவரை வெளியே அனுப்பிவைக்கும் அளவுக்கு அவளால் பொறுமையாக இருக்க முடியவில்லை. அன்னலட்சுமி தங்கியிருக்கும் இடமறிந்து உடனடியாக அவளுக்குக் கடிதம் எழுதவேண்டுமெனத் துடித்துக் கொண்டிருக்கின்றாள். இப்பொழுது முதலில் மாணிக்கத்தைச் சந்தித்தாக வேண்டும். மாணிக்கம் எங்கே? வழமைக்கு மாறாக அவளாகவே மாணிக்கத்தை வீட்டிற் தேடிப் பார்க்கின்றாள். மாணிக்கம் அங்கே இல்லை. இப்பொழுது மாணிக்கம் எங்கே போயிருக்கக்கூடும்! கோயிலிற் காலைப்பூசை முடிந்து அங்கிருந்து வீட்டுக்கு அவர் திரும்பி வந்துவிட்டார். இந்த வேளையில் அவர் எங்கே போயிருப்பார்!
மாணிக்கம் தோட்டத்துக்குப் போயிருக்கக்கூடும்! வீட்டுக்குத் தென் திசையில் சிறிதளவு காய்கறித் தோட்டம் ஒன்று செய்கை பண்ணப்படுகின்றது. அந்தத் தோட்டத்தைப் பார்வையிடுவதற்காக மாணிக்கம் அங்கே போயிருக்கலாம். அவர் இப்பொழுது உடனே திரும்பி வருவார் என்று கருதுவதற்கில்லை. அங்கே போயாவது அவரைச் சந்தித்தாக வேண்டும். விஜயலட்சுமி வீட்டிலிருந்து புறப்பட்டு, தோட்டத்தை நோக்கி வேகமாக நடக்கத் தொடங்கினாள்
இந்த வீட்டின் பின் பகுதியிலுள்ளநிலப் பரப்பு மிகப் பரந்து விரிந்து கிடக்கின்றது. வீட்டை அண்மித்த பகுதி தென்னை மரங்கள் மிகச் செழிப்பாக வளர்ந்து ஒரு தோப்பாக விளங்குகின்றது. தென்னந்தோப்புக்கு அப்பால் ஆங்காங்கே வைரம் பாய்ந்த பனை மரங்கள் உயர்ந்து வளர்நது தலை நிமிர்ந்து நிற்கின்றன. இந்தப் பனை மரங்களுக்குக் கீழே, நுணா, வேம்பு, கொய்யா, இலந்தை, ஆல், ஒதி, பூவரச மரங்களும் செடிகொடி, முள்ளுப் பற்றைகளுமாக வளர்ந்து அடர்ந்து செறிந்து கிடக்கின்றன. குரியன் நடுவானத்தில் ஏறித் தகித்துக்கொண்டு நிற்கும் வேளையிலும் அங்கே இருள் மண்டிக் கிடக்கும். கோடை காலத்து வெப்பம் அந்தப் பகுதிக்குள்ளே நுழைவதற்கு அஞ்சி விலகி ஓடும். எந்த வேளையிலும் மரங்கள் தரும் குளிர்ச்சியினால் அந்தப் பகுதி நிலம் வெப்பமின்றிச் சிலிர்த்துக்கொண்டே இருக்கும். வீட்டை அண்டியுள்ள அந்தப்பகுதியைச்
8O தெணியான்

மரக்கொக்கு
சிறிய ஒரு காடு என்றே சொல்லிவிடலாம். இந்தக் காட்டுக்கு மத்தியில் காணப்படும் கட்டிடங்கள் சில பாசி படர்ந்து கறுத்துப் பாழடைந்து கிடக்கின்றன. அவை எல்லாமே மேற்கூரைகள் இல்லாத வெறும் முண்டங்களாகச் சுவர்கள் எழுந்து நிற்கின்றன. அவற்றின் சுவர்கள் சில கீழே இடிந்து விழுந்து கிடக்கின்றன. வேறு சில சுவர்கள் வீழ்வதற்குத் தயாராகச் சரிந்துகொண்டு நிற்கின்றன. இந்தக் கட்டிடங்கள் யாவும் ஒரு காலத்தில் மணியகாரன் வீட்டு மாட்டுத் தொழுவங்களாகவும், மணியகாரன் குடும்பத்தவர்கள் ஏறிப்பிரயாணஞ் செய்யும் வண்டிகளை நிறுத்திவைக்கும் மால்களாகவும் பயன்பட்டவைகள் இந்தக் கட்டிடங்களுக்கு அப்பால், பரந்த அந்த நிலப்பரப்பின் தென்மேற்கு மூலையை அண்டி ஒரு குளம். அந்தக் குளத்தின் மேற்கட்டுகள் சிதைந்து அது இன்று கவனிப்பாரற்றுப்போய்க் கிடக்கின்றது. குளத்துக்குக் கிழக்கே, அந்த நிலப் பரப்பின் தெற்கெல்லை வேலி ஓரமாகவுள்ள ஒரு சிறியதொரு பகுதியில் அந்தக் காய்கறித் தோட்டம் உண்டு.
விஜயலட்சுமி தென்னந் தோப்பைக் கடந்து மரஞ்செடிகளும், பற்றைகளும் நிறைந்த காடு போன்ற பகுதிக்கூடாக ஒற்றையடிப் பாதையில் விரைந்து போய்க்கொண்டிருக்கின்றாள். நேரம் சுமார் பத்து மணி தாணடியிருக்கும். வெய்யில் உக்கிரமாக வெளியே தகித்துக் கொண்டிருக்கின்றது. அவளுக்குச் சூரியனின் முகமே தோன்றவில்லை. குரியனின் வெம்மை பெரிதல்ல. அவளுக்கு இப்போது இருக்கும் உள்ளக் கொதிப்பினால் அவள் உடல் வெந்துகொண்டிருக்கின்றது. தன்னை மறந்து வேகமாக அவள் நடந்து போய்க்கொண்டிருக்கின்றாள். சரளைக் கற்கள் அவள் பாதங்களைக் குத்தி வருத்துகின்றன. இப்பொழுதுதான் நினைவுக்கு வருகின்றது, வீட்டிலிருந்து வெளியே வரும்பொழுது செருப்பணிந்து கொள்ளவிலலை என்பது. பாதங்களிற் செருப்பணிந்து கொள்ளாது அவள் இப்படி வெளியே செல்லும் பழக்கமில்லாதவள். ஆனால் சரளைக் கற்கள் பாதங்களை உறுத்துவதைப் பொருட்படுத்த இயலாத நிலையில், அவள் மன உறுத்தல் அவளை உந்தித் தள்ள ஓட்டமும் நடையுமாகப் போய்க்கொண்டிருக்கின்றாள். அவள் சென்றுகொண்டிருக்கும் பாதையில் இரண்டு கீரிப்பிள்ளைகள் படுத்துக் கிடப்பது அவளுடைய பார்வையிற் தென்படுகின்றது. அவைகள் இரண்டும் மிக நெருக்கமாக ஒன்றுடன் ஒன்று இணைந்து. அவைகளுடைய நெருக்கம் கண்டு அவள் மனோ வேகம் தடைப்பட்டுப்
தெணியான் - 8.

Page 43
மரக்கொக்கு
போகின்றது. அவள் கால்கள் அவளை அறியாமல் வேகந் தணிந்து மெல்லத் தடைப்பட்டுத் தரிக்கின்றன. அங்கு அவளைத் தவிர வேறு எவருமில்லாத ஏகாந்தம். அவளுக்குள் மனதில் இனம் புரியாத ஒரு சலனம் அரும்புகின்றது. இந்தக் கீரிப்பிள்ளைகள். இவைகளின் நெருக்கம். இவைகள் கலைந்து ஓடிப் போய்விடாதவண்ணம், இந்த நிலையில் இப்படியே விட்டுவைத்துப் பார்த்துக் கொண்டிருக்க வேண்டும் போல ஓர் ஆவல் மின்னல் போல மனதில் தோன்றுகின்றது. இந்தக் கீரிப்பிள்ளைகள் இரண்டும் கணவன் மனைவியாக இருக்குமோ அல்லது நெஞ்சங்களால் நெருங்கி வந்துவிட்ட காதலர்கள் தானோ இந்த இரு கீரிப்பிள்ளைகளும் தங்கள் உறவின் கலப்பினால் மயங்கி வெளியுலகத்தை மறந்து கிடப்பது போல, அவைகளைக் கண்டு அவள்விழிகள் இமைக்க மறந்து கிடக்கின்றன. அவள் உள்ளத்தில் கொப்பளிக்கும் உணர்ச்சிகளில் மூழ்கி தன்னை மறந்து சிலையாகவே நிற்கின்றாள். சில கணங்களின் பின்னர் உள்ளம் திடுக்குற்று விழித்துக்கொண்டுவிடுகின்றது. சீ. இதெண்ன கேவலம்! வெட்கத்துடன் தன் உணர்ச்சிகளை ஒதுக்கித் தள்ளிவிட்டுக்கொண்டு மெல்லச் சுதாகரித்துக் கொள்ளுகின்றது.
உள்ளத்திற் பொங்கிய உணர்ச்சிப் பிரவாகம் முழுவதையும் வடிந்துபோகவிட்டவள் போல தடைப்பட்டுப்போன அவள் நடையில் பழையபடி புதிய வேகம் பிறக்கின்றது.
பாதையின் குறுக்கே படுத்துக் கிடக்கும் கீரிப்பிள்ளைகளை நோக்கி அவள் காலடி எடுத்து வைக்கின்றாள். ஆள் அரவங் கேட்டு அந்தக் கீரிப்பிள்ளைகள் திடுக்குற்று ஒரே சமயத்தில் தலை தூக்கிப் பார்க்கின்றன. கீரிப்பிள்ளைகளின் அந்தப் பார்வையில்-அவள் மகாபாரதத்தில் வரும் குந்திதேவியின் நாயகனான மன்னவன் பாண்டு ஆக, ரிஷியும் ரிஷி பத்தினியுமாக அவைகள் மாறி-நெருப்பை உமிழ்கின்றன. அது அவள் மீது உண்டான வெறுப்பின் ஜூவாலையா அல்லது ஏமாற்றத்தின் வெம்மையா அல்லது ஏளனத்தின் வெக்கையா!
அவைகளின் அந்தப் பார்வை அவளை இம்சிக்கின்றது. வெட்கமும் வேதனையுமாக அவள் தலை தாழ்ந்து போய்க்கொண்டிருக்கின்றாள்.
அவள் நெருங்கி வந்துகொண்டிருப்பது கண்டு கீரிப்பிள்ளைகள் பிரிந்து வெவ்வேறு திக்கிற் பாய்ந்து பற்றைச்குள் ஓடி மறைகின்றன.
அவள் இதயம் கணக்கின்றது. வேதனையினால் நெஞ்சம் வெடித்துவிடும் போல வேகமாக அது அடிக்கின்றது.
82 தெணியான்

மரக்கொக்கு
மனம் ஓரிடத்தில் நிலைகொள்ளாது தவியாகத் தவிக்க மேலும் சில மீற்றர் துாரம் அவள் நடந்திருப்பாள்.
அப்பொழுது மனிதக் குரல்கள். அந்தப் பற்றைக்
அந்த ஒற்றையடிப் பாதையில் அவள் நடை தடைப்பட்டு கால்கள் இரண்டும் மெல்லத் தரித்து நின்றுவிடுகின்றன.
செவிகளைத் தீட்டிக்கொண்டு மிக உன்னிப்பாக அந்தக் குரல்களை அவதானிக்கின்றாள்.
அந்த இருவரும் யாராக இருக்கலாம்! சிறுபிள்ளைகள்தானும் கொய்யாப்பழம், இலந்தைப்பழம் பறிப்பதற்கும் அந்த வளவுக்குட் திருட்டுத்தனமாக நுழைந்துவிட முடியாது. அந்தக் குரல்கள் சிறுபிள்ளைகளின் குரல்களாகவுமில்லை. அந்தக் குரல்கள் நூணா மரத்தின் கீழிருந்துதான் எழுகின்றன. சின்னப் பிள்ளைகளுக்கு அந்த மரத்தின் கீழ் என்ன வேலை நுணாப்பழம் பறித்து உண்ணவா போகின்றார்கள்!
அவள் சில வினாடிகள் நிதானமாக அங்கு தரித்து நின்று தன்னை ஆசுவாசப்படுத்திக்கொள்ளுகின்றாள். மனதிற் தோன்றிய பதற்றம் அட்ங்கிய பிறகு மேலும் உன்னிப்பாக அந்தக் குரல்களுக்குச் செவி கொடுக்கின்றாள்.
"சீ இதென்ன அசிங்கமான பேச்சு!" அவள் செவிகள் கூசுகின்றன. அந்தக கீரிப்பிள்ளைகள் இரணடும இப்படித்தான பேசிக்கொண்டிருந்தனவோ!
நெஞ்சில் குமட்டிகொண்டு வருகின்றது. இப்பொழுது மனதில் இன்னொரு வேகம் பிறக்கின்றது. அவர்கள் யார் என்பதை அறிந்துகொள்ள வேண்டும். கட்டுக் காவல்கள் மீறிக்கொண்டு மணியகாரன் வளவுக்குள். சினம் பொங்கிக்கொண்டு எழுகின்றது. இப்படி நடந்துகொள்ளும் இவர்கள் யார் என்பதை இப்போது எப்படி அறிந்துகொள்வது? மனதில் திரும்பவும் ஒரு தயக்கம். மீண்டும் மிகத் துல்லியமாக அந்தக் குரல்களையே அவதானிக்கின்றாள்.
ஓ. மாணிக்கம். இர்ரி" அவர்கள் இருவருந்தான். இதிற் சந்தேகமே இல்லை. வெளியில் இருந்து யாரும் இந்த வளவுக்குள் வரவில்லை. உள்ளே இருக்கின்றவர்கள்
தெணியான் 83

Page 44
மரக்கொக்கு
இவர்களும் மணியகாரன் வீடு என்ற பாதுகாப்புக்குள் ஒளித்துக்கொண்டுதான் இருக்கின்றார்கள் இருவரையும் கையும் மெய்யுமாகப் பிடிக்கவேண்டும்; வீட்டிலிருந்து வெளியே இப்பொழுதே துரத்திவிடவேண்டும் என்னும் எண்ணம் நெஞ்சில் இறுகி வருகின்றது.
அதனைச் செய்து முடிக்கும் உரிமையும் அதிகாரமும் தனக்கு மட்டுந்தான் உணர்டென்ற நினைப்பும் உணர்ச்சி வேகத்தில் மனதில் முதல் எழுகின்றது.
மறுகணம், தான் ஒரு பெண். அதுவும் திருமணமாகாத பெண். என்று நினைத்துக்கொள்ளுகின்றாள்.
இப்பொழுது தெய்வசிகாமணியின் நினைவுகள் வந்து நெஞ்சில் ஏன் எழுகின்றன/அவளைச் சுற்றி அவன் பின்னால் அலைந்து திரிந்தானே! அவனோடு இணங்கி நடந்திருந்தால். இவர்கள் இருவரையும் போல இருந்திருக்கலாமல்லவா! இவர்கள் தங்களை மறந்து எப்படிக்கிறங்கிப்போய் இருக்கின்றார்கள்! "மோகம் தவிர்த்துவிடு, அல்லது மூச்சை அடைத்துவிடு" எனப் பாரதி பாடி இருக்கின்றானே! அது இந்த மோன நிலையை எய்துவதற்கான வேட்கையினாற்றானா! அந்த இன்பம் மாணிக்கத்துக்கும் சின்னிக்கும் சித்தித்திருப்பதுபோல. தாபத்தினால் அவள் உள்ளம் ஏங்குகின்றது. அவள் உடலில் இனம்புரியாத ஒரு புல்லரிப்பு.
இவர்கள் இருவரையும் மன்னித்துவிட்டு அங்கிருந்து தான் மெல்ல விலகிப் போய்விடவேண்டும் போல ஒர் எண்ணம் அவள் மனதில் எழுகின்றது.
அடுத்த கணம் சமூகம் விதித்து வைத்துக்கொண்டிருக்கும் ஒழுக்க வரம்புகள் பற்றி அவள் எண்ணிக்கொள்ளுகின்றாள். மணியகாரன் குடும்பத்தோடு சேர்ந்து வாழும் மாணிக்கமும் சின்னியும் ஒழுக்கக் கேடாக நடக்கலாமா! தெய்வசிகாமணி பற்றி நினைப்பது மாத்திரம். ஓ! எல்லாம் நிறைவேறாத ஆசைகளினால் தான். மாணிக்கத்துக்கும் சின்னிக்குமிடையே உள்ள நெருக்கம் நிறைவு பெறாத ஆசைகளினால்தானா இவர்கள் இருவரையும் எப்படியும். சீ! தந்தையாகிய மணியகாரனினால் அது முடியக்கூடிய காரியம். தந்தையின் இடத்தில் இருந்தாலும் பெண் பெண்தானே இவர்களை எப்படித் தட்டிக் கேட்பது ஓர் ஆணின் இடத்தை நிரப்புவதற்கு இயலாத ஒரு பெண் தான் என்பதனை முதற் தடவையாக இப்பொழுது அவள் உணருகின்றாள்.
84 தெணியான்
 

மரக்கொக்கு
இவர்கள் இருவரையும் இப்பொழுது எப்படி அழைப்பது? எதனை விசாரிப்பது? எப்படிக் கண்டிப்பது?. அவள் பெருமூச்செறிந்தவண்ணம் தன்னை ஆசுவாசப் படுத்திக்கொள்ளுகின்றாள். அந்த இடத்தில் நின்றுகொண்டிருப்பதற்கு உள்ளமும் உடலும் கூசுகின்றன. அவள் அங்கு வந்த சுவடு தெரியாதவண்ணம் மனக் குமுறலுடன், தான் வந்த பாதையில் திரும்பி நடக்க ஆரம்பித்தாள்.
அவள் மனதை அரித்துக்கொண்டிருந்தவள் அன்னலட்சுமி அவள் இப்பொழுது மனத்திலிருந்து மறைந்து, மாணிக்கமும் சின்னியும் எதிர்பாராமல் அவள் நெஞசத்து உலையில் வந்து விழுந்து கொதித்துக்கொண்டிருக்கிறார்கள்
சின்னி. அவள் இந்தக் குடும்பத்துடன் வலிந்து வந்து ஒட்டிக்கொண்ட ஒருத்தி,
மணியகாரன் குடும்பத்துக்குத் தொண்டு துரவுகள் செய்யும் குடிமகள் அவள். நயினார்மார் குடும்பங்களில் நன்மை தீமைக் காரியங்கள் நிகழ்ந்துவிட்டால் அங்கு சென்று தமக்கே உரிய கடமைகளைச் செய்யும் பகுதியாரைச் சேர்ந்தவள். அவள் குடும்பத்து ஆண்கள், நயினார்மார் குடும்பங்களில் மரணம் நிகழந்துவிட்டால் பிரேதம்தூக்கும் தொண்டினை முன்னின்று முக்கியமாகச் செய்வார்கள் சின்னியும் அவள் போன்ற பெண்களும் அப்படியான சமயங்களில் வீட்டுப் பணிப் பெண்கள் செய்யவேண்டிய கருமங்களைச் செய்வது வழக்கம். வீடுவாசல் கூட்டி, முற்றம் பெருக்குவார்கள். உணவு சமைத்து நயினார்மாருக்குப் பரிமாறுவார்கள் இந்தச் சமூகத்தினால் காலாதி காலமாக அவர்களுக்குப் பணிக்கப்பட்டிருக்கும் குடிமைத் தொண்டுகள் இவைகள். இந்தக் குடிமை வேலைகளைச் செய்யும் நடைமுறைகள் இப்போது அருகிக்கொண்டு வந்துவிட்ட போதும், சிண்ணிமணியகாரன் குடும்பத்தின் மீது கொண்டுள்ள விசுவாசமீ நீங்காதவள். அவள் மணியகாரன் குடும்பத்துக்குத் தொண்டு துரவுகள் செய்து வருவதை இன்னும் கைவிட்டுவிடவில்லை. மணியகாரன் வீட்டில் நன்மைக் காரியங்கள் நடந்தாலென்ன, தீமைக் காரியங்கள் நடந்தாலென்ன தவறாமல் அவளை அங்கே காணலாம். அவளுக்கு அவ்வளவு விசுவாசம். அப்படி முக்கியத்துவம் எதுவும் இல்லாத காலங்களிலும் இடையிடையே மணியகாரன் வீட்டுக்கு அவள் வந்து போய்க்கொண்டிருந்தாள்
அவள் அப்படி வந்து போய்க்கொண்டிருப்பது மணியகாரன் வீட்டில்
தெணியானி 85

Page 45
மரக்கொக்கு
எல்லோருக்கும் மன நிறைவாகவே இருந்து வந்தது. தங்கள் குடும்பம் அதிகாரத்துடன் இருந்து எல்லோரையும் ஆண்டு வந்திருப்பதன் ஒரு சின்னமாகவே அவளை அவர்கள் கருதினார்கள். அவள் வீட்டுக்கு வந்துவிட்டால், விஜயலட்சுமி எல்லோரையும் முந்திக்கொண்டு வந்து அவளுக்குப் பல கட்டளைகளைப் பிறப்பிப்பாள். அவள் அந்தக் கட்டளைகளுக்குப் பணிந்து, தான் செய்யவேண்டிய தொண்டுகளை மகிழ்ச்சியோடு செய்து முடிப்பாள். விஜயலட்சுமியைத் தொடர்ந்து மற்றையவர்களிடமிருந்தும் கட்டளைகள் பிறக்கும். அவைகளையும் அவள் சிரமேல் ஏற்றுக்கொள்வாள். இதனாலும் இந்த வீட்டில் எல்லோரும் அவள் வருகையை விரும்பி எதிர்பார்த்துக்கொண்டுதான் இருப்பார்கள் மணியகாரன் வீட்டுக்குச் சின்னி ஒரு நாள் வழக்கம் போல வந்தாள். கணவன் கறுத்தானோடு சச்சரவுப்பட்டுக்கொண்டு வந்திருப்பதாகச் சொல்லி இங்கே தங்கினாள் சில தினங்கள் கழிந்துபோன பின்னரும், அவள் இங்கிருந்து கிளம்புவதற்கு எண்ணவில்லை. மணியகாரன் குடும்பம் இப்பொழுதுள்ள நிலையில் அவளையும் தங்களுடன் சேர்த்து தாங்கிக்கொள்வதென்பது அவர்கள் சக்திக்கு மீறிய ஒரு காரியந்தான். ஆனால் தங்களது இயலாமையை எப்படி அவர்களால் வாய்விட்டுச் சொல்லமுடியும் தொண்டு செய்யும் குடிமகளாக இருக்கும் ஒருத்தியை வீட்டை விட்டுப் போய்விடுமாறு எப்படி வலிந்து வெளியே அனுப்பலாம்! அப்படிச் செய்வதனால் அவர்கள் பரம்பரைப் பெருமைகளும் கெளரவங்களும் என்னவாகும் அவள் அந்தக் குடும்பத்துக்குச் சுமையாக இருக்கின்றாள் என்பதை அவர்கள் எலி லோருமி தமக்குள்ளே உணர்ந்து நொந்துகொண்டார்கள் தங்களுக்குள்ளேயே வாய் திறந்து அது பற்றிப் பேசிக்கொள்வது அவமானம் என்று கருதினார்கள் வீட்டுக் காரியங்களைச் செய்வதற்கு அவள் ஒத்தாசையாக இருக்கட்டுமென ஒவ்வொருவரும் தமக்குத் தாமே சமாதானம் தேடிக்கொண்டு மெளனமாக இருந்துவிட்டார்கள் சின்னி, மணியகாரன் வீட்டோடு வந்து மூன்று மாதங்கள் கழிந்து போய்விட்டன.
ஒரு தினம், மணியகாரன் வீட்டுக்கு அவளைத் தேடி கறுத்தான் வந்தான். கூடத்து வாசலுக்கு எதிரே நின்று உள்ளே பார்த்து "ஆச்சி" என்று குரல் கொடுத்தான்.
அப்பொழுது அந்தக் கூடத்துக்குள் சாய்வு நாற்காலியில் விஜயலட்சுமி அமர்ந்திருந்தாள்.
86 தெணியான்

மரக்கொக்கு
அவனைக் கண்டதும் அவன் வருகையின் நோக்கத்தை அவள் விளங்கிக்கொண்டுவிட்டாள். அவனைக் கூப்பிட்டு விசாரிப்பதில் அவளுக்கு அக்கறை இல்லை. அவனுடைய விவகாரத்தில் அவள் தலையிடுவது தனது அந்தஸ்துக்குக் குறைவான செயல் என்று கருதியிருக்க வேண்டும். அதனால் அவனோடு பேசுவதற்கும் அவள் விரும்பவில்லை, அவனை உள்ளே போகுமாறு அவள் கையசைத்தாள்.
கறுத்தான் கூனிக் குறுகியவண்ணம் அந்தக் கூடத்தைத் தாண்டி வீட்டின் மேற்குப்புற வாயிலுக்கு வந்து சேர்ந்தான். வாயிலில் நின்றவாறு உள்ளே பார்த்து "ஆச்சி. ஆச்சி." என்று குரல் கொடுத்தான்.
"அட கறுத்தானே. இப்பதான் உனக்கு அவளின்ரை நினைவு வந்ததோ!" கேட்டுக்கொண்டு மீனாட்சியம்பாள் வீட்டு வாயிலுக்கு வந்து சேர்ந்தாள் பின்னர் உள்ளே திரும்பி "சின்னி. சின்னி./" என்று அழைத்தாள்
அவள் அழைத்த குரலுடன் சின்னி அங்கே வந்து சேர்ந்தாள். கறுத்தான் அங்கே வந்து நிற்பான் என்று அவள் எதிர்பார்க்கவில்லை. அவனைக் கண்டு அவள் மனம் திடுக்கிட்டுப் போகின்றது. கறுத்தானை ஏறெடுத்துப் பார்ப்பதற்கு அவள் தயங்குகின்றாள். அவனுக்கு முகம் கொடுப்பதைத் தவிர்த்து மீனாட்சியம்பாளுக்குப் பின்னால் அவள் ஒட்டிக்கொள்ளுகின்றாள்.
"சிண்ணி, இஞ்சாலை வா! வெளியாலை வா' மீனாட்சியம்பாள் வாயிலில் நின்றவாறு அவளை அழைக்கின்றாள்.
கறுத்தானுக்கு முன் வந்து நிற்பது அவளுக்குக் கலக்கமாக இருக்கின்றது.
மீனாட்சியம்பாளின் கட்டளையைத் தட்டிக் கழிப்பதற்கும் அவளுக்குத் தைரியம் இல்லை. வேண்டா வெறுப்புடன் அவள் மீனாட்சியம்பாளைக் கடந்து வீட்டுக்கு வெளியே வந்து தலைகுனிந்து நிற்கின்றாள்
"ஆ. கறுத்தான் இனிமேல் சொல்லு" அவன் வந்திருப்பதன் நோக்கம் உணராதவள் போல மீனாட்சியம்பாள் அவனை விசாரிக்க ஆரம்பித்தாள்.
நான் இவளைக் கூட்டிக்கொண்டு போறதுக்கு வந்தனான் நாச்சியார். கறுத்தான் கைகளை நெஞ்சுக்கு நேரே குறுக்காகக் கட்டிக்கொண்டு பணிவாகச் சொல்லுகின்றான்.
"உண்ர பெண்டிலை நீ கூட்டிக்கொண்டு போறதுக்குப் பிறகென்ன!
தெணியான் 87

Page 46
மரக்கொக்கு
கூட்டிக்கொண்டு போவன்" மீனாட்சியம்பாள் சொல்லி முடிப்பதற்குள், சின்னி முந்திக்கொண்டு பேசுகின்றாள்.
நான் போகேல்லை ஆக்குமி" ஏனெண்டு கேக்கவாக்கும்" அவள் மறுப்பதற்குரிய காரணத்தைக் கேட்டறியுமாறு கறுத்தான் மீனாட்சியம்பாளுக்குச் சொல்லுகின்றான்.
இவர் குடிச்சுப் போட்டு வந்து அடிக்கிறார் மீனாட்சியம்பாளைப் பார்த்து அவன் மீது குற்றம் சாட்டுகின்றாள், சின்னி
நான்குடிக்கிறனான் நாச்சியார், அடிச்சாய்க்கினை பண்ணுறதில்லை" இந்தச் சமயம் வரலட்சுமி அங்கே வந்து சேருகின்றாள். விஜயலட்சுமி கூடத்தைவிட்டு வெளியே வந்து அங்கே நடந்துகொண்டிருக்கும் விசாரணையை மேற்பார்வை செய்கின்றவள் போல, அதோடு சம்பந்தப்படாமல் அவதானித்துக்கொண்டு நிற்கின்றாள். கறுத்தான் சொல்வதற்குப் பல குற்றச் சாட்டுக்கள் சின்னி மீது அவன் நெஞ்சிற் கிடந்து கணக்கின்றன. சின்னி தன்னை மதிக்காது எடுத்தெறிந்து நடக்கின்றாள்; ஒழுங்காக வீட்டில் தங்கி இருக்காது போனபோன இடங்களிலெல்லாம் தங்கி இருந்துவிடுகின்றாள்; வேள வேளைக்குச் சமைத்துப் போடுவதில்லை; மலடன் மலடன்" என்று வாய்க்கு வாய் சொல்லி ஏளனஞ் செய்கின்றாள். இப்படி எல்லாம் இவளிடம் அவமானப்படவேண்டி இருக்கின்றது. கணவன் என்றிருக்கின்றவன் இவைகளை எல்லாம் நாச்சியாரவைக்கென்றாலும் சொல்லலாமா! அவன் மனதில் மறைத்து வைத்துக்கொண்டு வெளியே எடுத்துச் சொல்ல முடியாமல் சாம்பிக்கொண்டு நிற்கின்றான்!
"எட கறுத்தான் குடிச்சால் உனக்கும் கணிமணி தெரியாது. பெண்ணாப் பிறந்தவளுக்குக் கைநீட்டி அடிக்கலாமே!" மீனாட்சியம்பாள்
சின்னி மீது அனுதாபங் காட்டுகின்றவள் போல, கறுத்தானை மெல்லக்
கண்டிக்கின்றாள்.
"நாச்சியாராணை சொலலுறணி, நாணி கை நீட்டி அடிக்கிறதில்லையாக்கும்" கறுத்தானின் குரல் பரிதாபமாக ஒலிக்கின்றது.
"சின்னி என்ன சொல்லுறாய் கறுத்தான் கூப்பிடுறான். போவன்!" மீனாட்சியம்பாள் இப்பொழுது கறுத்தானின் பக்கம் சாய்வது போலச் சின்னிக்குத் தோன்றுகின்றது. அவள் பதறிக்கொண்டு சொல்லுகின்றாள், ஐயோ நாச்சியார் எனக்கும் உவருக்கும் இனிமேல் எந்தத் தொடசலும் வேண்டார்."
88 தெணியான்

மரக்கொக்கு
இதுவரை நடந்தவைகளையெல்லாம் அமைதியாகக் கவனித்துக்கொண்டு நின்ற வரலட்சுமி எதிர்பாராத விதமாகச் சின்னியைப் பார்த்துக் கண்டிக்கின்றாள்.
"சின்னி, நீ என்ன அப்பிடிச் சொல்லுறது உண்ரை புருஷன் வரச்சொல்லிக் கேக்கிறான். நீ போகவேண்டியதுதானே!"
விஜயலட்சுமி இதைக் கேட்டு வியந்துபோனாள் வரலட்சுமி கணவனைப்பிரிந்து வாழ்ந்துகொண்டிருக்கின்றவள் சின்னியைப் பார்த்து வரலட்சுமி இப்படிப் பேசுவாள் என்று அவள் எதிர்பார்க்கவே இல்லை. அவள் மனதில் எழுந்த வியப்பு அடங்காமல் வரலட்சுமியின் முகத்தைக் குறிப்பாக நோக்குகின்றாள். வரலட்சுமி முகம் மாறி பார்வையைத் தாழ்த்திக்கொண்டு மெளனமாக நிற்கின்றாள்.
அந்த நேரம் கோயிலின் காலைப்பூசை முடிந்து மாணிக்கம் அங்கே வந்து சேருகின்றார். கறுத்தான் வந்து நிற்பதைக் கண்டதும் அவர் உள்ளத்தில் ஒருவகை எரிச்சல் மூளுகின்றது. அதிருப்தியுடன் அதிகாரத் தொனியில் அவர் பேசத் தொடங்கினார்.
"என்னடா கறுத்தான்! நீ குடிச்சிட்டு வந்து சின்னியைப் போட்டு அடிக்கிறியாமீ?"
கறுத்தான் அவர் பக்கம் திரும்பவே இல்லை. அவர் சொன்ன வார்த்தைகள் காதில் விழுந்ததாகவும் அவன் காட்டிக்கொள்ளவுமில்லை. அவரை இலட்சியம் பண்ணாதவன் போல அவன் நின்றுகொண்டிருந்தான் மாணிக்கத்துக்கும் அது விளங்கிக்கொண்டுவிடுகிறது. அவர் குரலை மேலே உயர்த்தி அவனை அதட்டுகின்றார். "என்னடா பேசாமல் நிக்கிறாய்" அவன் அசைந்து கொடுக்கவில்லை. அவனிடம் இதுவரை இருந்து வந்த தயக்கம் மறைந்து உறுதியான குரலில் மீனாட்சியம்பாளை நோக்கிச் சொல்லுகின்றான்
நாச்சியார், நான் இவளைக் கூட்டிக்கொண்டு பேகப்போறன்" நான் வரமாட்டேன்" சட்டென்று சின்னி மறுப்புத் தெரிவிக்கின்றாள். அவளிடமும் இப்போது துணிவு பிறந்துவிட்டதென்பது அவள் பேச்சிற் தொனிக்கின்றது.
மீனாட்சியம்பாளுக்கு மிக இக்கட்டாகப் போய்விட்டது. இருவரும் இப்படி முரண்டு பிடித்துக்கொண்டு நிற்பதை அவள் விரும்பவில்லை. அவர்கள் இருவருக்குமிடையே ஒரு சமரசத்தை உருவாக்கிவிடும்
தெணியான் 89

Page 47
மரக்கொக்கு
நோக்கத்துடன் சின்னியைப் பார்த்துச் சொல்லுகின்றாள்,
"சின்னி நான் உன்னைக் கவனிச்சுக்கொண்டுதான் இருக்கிறன் கறுத்தான் வந்து இவ்வளவு நேரமாகியும் நீ அவன்ரை முகத்தையே பாக்கிறாயில்லை. புரியன் பெண்டில் எண்டால் உள்ளுக்கை ஆயிரம் இருக்கும். பெண்ணாப் பிறந்தவள் தான் எல்லாத்தையும் சகிச்சுப் போகவேணும். அவன் குடிக்கிறான் எண்டு சொல்லுறாய்! இண்டு நேத்தெண்டே குடிக்கிறான்! உன்னைக் கட்டிறதுக்கு முந்தியே அவன் குடிக்கிறவனெண்டு உனக்குத் தெரியுந்தானே! இவ்வளவு காலமும் ஒத்துத்தானே இருந்தனி அவனும் தனிச்சவன். அவனுக்கும் வயிறு கொதிச்சால் அவன் எங்க போறது! நீ போய் அவனோடை ஒத்திரு!"
நாச்சியார், நான் இவ்வளவு காலமும் இவரோடை அண்டலிச்சது போதும். இனிமேலும் கிடந்து நெருக்குவாரப்பட ஏஸ்து"
"எடே கறுத்தான்/சின்னிசொல்லிப்போட்டாளெல்லேடா பிறகென்னடா கதை" மாணிக்கம் இடை மறித்துச் சின்னிக்கு ஆதரவாக மீண்டும் கறுத்தானைப் பார்த்து உறுமுகின்றார்.
சின்னி இணங்கி வருவதாக இல்லை. மீனாட்சியம்பாள் மனதிலும் சற்றுச் சூடேறுகின்றது. அவள் சின்னியை நோக்கி, "எடி சின்னி முடிவாக நீ என்னடி சொல்லுறாய்" என்று கேட்கின்றாள் அதிருப்தியுடன்
நான் உவரோடை போகயில்லை ஆக்கும்." "அப்பென்னடி செய்யப்போறாய்?" நாச்சியார் வீட்டுச் சட்டி பானையளை கழுவிப்போட்டு ஒரு மூலையிலை படுக்கப்போகிறன்"
"சின்னி, நீ உன்ரை புரியனைக் கை விட்டிட்டு, என்ரை வீட்டிலை இருந்து தொண்டு செய்யவேணுமே!"
நாச்சியாரவைக்கு நான் பாரமெண்டால் சொல்லவாக்கும், நான் போறன். ஆனாலி உவரோடை மாத்திரம் போக மாட்டன்"
அவள் கண்ணிர் விட்டு அழுவதற்கு ஆரம்பித்துவிட்டாள். மீனாட்சியம்பாளுக்கு இப்பொழுது வாய் அடைத்துப் போய்விட்டது. நாச்சியாரவைக்கு நான் பாரமெண்டால்." என்று சொன்னாளே, அதன் பிறகு எப்படி அவளை வீட்டை விட்டுப் போகும்படி சொல்வது! மணியகாரன் குடும்பம் ஒரு குடிமகளை வைத்துப் பாதுகாப்பதற்கு இயலாமல் வெளியே அனுப்பி வைத்துவிட்டதென்ற பழிச் சொல்லை அல்லவா கேட்கவேண்டி வரும் மீனாட்சியம்பாள் சொல்வது என்னவென்று
90 தெணியான்
 

மரக்கொக்கு
உணராமல் திடீரென்று மெளனமானாள்
சற்று நேரம் யாருமே எதுவும் பேசவில்லை. எல்லோரும் மீனாட்சியம்பாள் முகத்தையே பார்த்துக்கொண்டு நிற்கின்றார்கள். இந்த மெளனம் மாணிக்கம் மனதுக்குக் குழப்பமாக இருக்கின்றது. மீனாட்சியம்பாள் ஒருவேளை கறுத்தானுக்கு அனுசரணையாக நடந்துகொண்டுவிடுவாளோ என்ற அச்சம் மனதில் எழுகின்றது. அப்படி ஏதும் நிகழ்ந்துவிடுவதற்கு முன்னர், தான் முந்திக் கொள்ள வேண்டும் என்னும் எண்ணத்துடன் மீனாட்சியம்பாளை நோக்கி "அக்காள், அவள் எங்கடை குடிமகள்; தொண்டு துரவு செய்துகொண்டு இஞ்சை இருக்கப்போறன் எண்டால் அவளை வீட்டைவிட்டு அனுப்புகிறது எங்களுக்கு மதிப்பில்லை" என்கின்றார்.
இதற்கு மேல் அவரும் எதுவும் பேசவில்லை. மீனாட்சியம்பாள் முகத்தைப் பார்த்து அவள் என்ன கருதுகின்றாள் என்பதை அவராற் கணிடுகொள்ள முடியவில்லை. எல்லோரும் மீனாட்சியம்பாள் வழங்கப்போகின்ற தீர்ப்பையே எதிர்பார்த்துக்கொண்டு நிற்கின்றார்கள் விஜயலட்சுமி, தாய் மீனாட்சியம்பாளின் திறமைக்கு இதனை ஒரு பரிசோதனையாகத் தனக்குள்ளே எடுத்துக்கொண்டு தீர்வை அறிந்து போவதற்காகக் காத்து நிற்கின்றாள். கறுத்தான் மீனாட்சியம்பாளைத் தெய்வமாக எண்ணிக்கொண்டு அவள் வாய் திறந்து அருள் பாலிக்க வேண்டுமென பணிவுடன் எதிர்பார்த்து நிற்கின்றான்.
சின்னிக்கு மனதில் திடமான ஒரு நம்பிக்கை, மீனாட்சியம்பாள் கைவிட்டாலும், மாணிக்கம் எப்படியும் தன்னைக் காப்பாற்றாது விட்டுவிடமாட்டார் என்ற உறுதியுடன் அவள் இருக்கின்றாள்.
இவர்கள் எல்லோருடைய எதிர்பார்ப்புக்கும் முடிவு கட்டுவது போல மீனாட்சியம்பாள் தனது மெளனத்தைக் கலைத்துக் கொணர்டு பேசத்தொடங்கினாள்
"எடி சின்னி உன்னைப் போ எண்டு நான் சொல்லமாட்டன், விருப்பமில்லாதவளை போ எண்டு எப்பிடி நான் சொல்லுறது"
பின்னர் கறுத்தான் பக்கம் திரும்பி "கறுத்தான், நீ போ மேனை! அவள் எங்க போகப்போறாள்! இஞ்சை தானே இருக்கிறாள். கிணத்துத் றதணிணி எங்க போகப்போகுது பிறகு ஒரு நேரம் அவள் வருவாள் இப்ப நீ போ" என்கின்றாள் அவன் மீது மிகுந்த அனுதாபத்துடன்
மீனாட்சியம்பாள் தீர்ப்புக் கூறிவிட்டாள்.
தெணியான் Ο 1

Page 48
மரக்கொக்கு
கறுத்தானுக்கு இனிமேல் அங்கே என்ன வேலை! அவன் இதுவரை மீனாட்சியம்பாள் முன் மிகப் பணிவாக நின்றே பேசிக்கொண்டிருந்தான். மாணிக்கம் பக்கம் ஒரு தடவைதானும் அவன் திரும்பிப் பார்த்ததில்லை. மணியகாரன் குடும்பத்தார் முன்னிலையில் தலை நிமிர்ந்து நிற்பதற்கு அறியாதவன். அத்துணை பணிவான ஒரு குடிமகன் அவன்.இப்பொழுது அங்கிருந்து புறப்டுவதற்கு முன்னர்மாணிக்கத்தின்பக்கம் திரும்புகின்றான். அவனுடைய முகம் கறுத்து இறுகி, கணிகள் சிவந்துகொண்டு வருகின்றன. சின்னி மீது அவனுக்கு சினம் இருப்பதாகத் தெரியவில்லை. அவனது குரூரமான பார்வை மாணிக்கத்தையே குறிவைத்துக் குத்துகின்றது. அவர் மீது தான் அவன் மனதில் ஏதோ வன்மம் இருக்கவேண்டும். ஒரு குடிமகனாகிய அவனுடைய பார்வையை மாணிக்கத்தினால் எதிர்கொள்ள முடியவில்லை. அவர் வெலுவெலுத்துத் தலை குனிந்துகொண்டு நிற்கின்றார். அவருடைய மிடுக்கும் அதிகாரங்களும் பெட்டிப் பாம்பாக மெல்ல அடங்கிப் போகின்றன. அவன் அரையிற் கட்டியிருந்த சால்வைத் துணிடை அவிழ்த்தெடுத்து, உதறித் தோளிற் போட்டுக்கொண்டு "ஆச்சி வாறன்" என்று சுருக்கமாக மீனாட்சியம்பாளுக்குச் சொல்லிக்கொண்டு, தலை நிமிர்ந்து கால்களை உறுதியாக எடுத்து வைத்துக்கொண்டு அங்கிருந்து நடந்துபோகின்றான். குடிமகனான கறுத்தான் கடைசியில் இப்படி ஏன் நடந்து கொண்டான்? மாணிக்கம் மீது அவனுக்கென்ன குரோதம்? ஒரு எதிரியைப் போல அல்லவா விரோதமாக அவரை நோக்கினான் விஜயலட்சுமி மனதில் எழுந்த ஐயங்களுக்கு அப்பொழுது அவளால் விட்ை கண்டு கொள்ள இயலவில்லை.
ஆனால் இப்பொழுது. அவள் புரிந்துகொண்டுவிட்டாள். அவள் வீட்டுக்குள்ளேயே வாழ்ந்துகொண்டிருக்கும் இவர்களை, இத்தனை காலம் அவளால் விளங்கிக்கொள்ள முடியவில்லை. ஆனால் கறுத்தான் அன்றைக்கே எல்லாவற்றையும் உணர்ந்துதான் இருந்தான் இப்பொழுதும் அகஸ்மாத்தமாக இப்படி ஒரு சம்பவத்தை அவள் சந்திக்காது போயிருந்தால், மாணிக்கத்தையும் சின்னியையும் தான் விளங்கிக்கொள்ள முடியாது இருந்திருக்கும் என்று எண்ணி அவள் வெட்கப்படுகின்றாள்.
அவளுக்குச் சின்னியின் மேல் ஆரம்பம் முதல் ஒரு வெறுப்பு இருந்துகொண்டே வந்திருக்கின்றது. அதற்கான காரணம் அவள் மனதுக்குத் தெளிவாக இல்லை. எந்த நியாயமுமில்லாது அடிமனம்
92 தெணியான்
 
 

மரக்கொக்கு
ஒருவரை வெறுத்து ஒதுக்கி விடுகின்றது. ஒதுக்குவதற்கான நியாயம் தெளிவாகத் தெரியவராதபோதும், ஏதோவொரு நியாயம் அந்த அடிமனதில் ஒளிந்துகொணிடுதாணி இருக கினிறது. சினினிக்கும் தங்கை அன்னலட்சுமிக்குமிடையே மிக நெருக்கமான ஒரு உறவு இருந்து வந்ததை அவள் அவதானித்திருக்கின்றாள். இப்பொழுது தங்கை தனலட்சுமிக்கும் சின்னிக்குமிடையே அத்தகைய உறவு இருப்பதை அவள் உணருகினிறாள். அவளது அடிமனதின் அதிருப்திகள் நியாயமானவைகள் என்பதை அவள் இன்று நேரிற் கண்டுகொண்டுவிட்டாள் விஜயலட்சுமி விரைவாக வீடு நோக்கி வந்துகொண்டிருக்கின்றாள் இப்பொழுது காகம் ஒன்று கரைந்தவண்ணம் பறந்து வந்து அவள் எதிரே வட்டமிட்டு, பின்னர் தாழப் பதிந்து அவள் தலையில் உராய்ந்த வண்ணம் சிறகடித்துச் செல்கின்றது. அதனைத் தொடர்ந்து நாய் ஒன்று அந்தப் பாதையில் ஓடி வந்துகொண்டிருக்கின்றது. குடல் சரிந்து குருதி கொட்டும் மீன் தலையொன்று அதன் வாயிற் தொங்கிக்கொண்டிருக்கின்றது. ஒட்டிய வயிற்றுடன் ஆவலோடு ஓடி வந்துகொண்டிருக்கும் அந்த நாய், எதிரில் அவள் வந்துகொண்டிருப்பது கண்டு சட்டென்று ஒரு பக்கம் திரும்பி பாதையிலிருந்து விலகிப் பற்றைக்குள் புகுந்து மறைந்து விடுகின்றது. மீன் தலையிலிருந்து எழும் நாற்றமும் வழிந்தொழுகும் குடலும் குருதியும் ஒரு கணம் அவளைக் கலங்கடிக்கின்றன. மனதில் அகுசையும் அருக்குளிப்பும் எழுந்து, வாயில் ஊறிய உமிழ் நீரைக் காறி உமிழ்ந்தவண்ணம் நடையை வேகப்படுத்துகின்றாள்.
மணியகாரன் வீட்டு எல்லைக்குள் அவர்கள் கட்டுக் 45/16/34,667. மீறி நாய்கள் வந்து புகுந்துவிட்டன. விஜயலட்சுமிக்கு இப்பொழுதும் நல்ல ஞாபகம் அவளும் மூத்தவள் வரலட்சுமியும் இராமநாதன் பெண்கள் கல்லூரியிற் படித்துக்கொண்டிருந்த காலம் அது அவள் வகுப்பிற் படித்த தோழி ஒருத்தியழிப்பாண நகரில் வாழ்ந்து வந்தாள். அவள் தந்தையானவர் அரசாங்கத்தில் உயர்ந்த பதவி வகித்த ஒரு பெரிய மனிதர் நெற்றியிற் திருநீறுபூசி சந்தனத்தில் திலகமிட்டுக்கொண்டாலும் ஆங்கிலேயன் போல வாழ்வதே பெருமையெனக் கருதும் கறுப்புத்துரை அவர்
வீட்டுக்கொரு நாய் வளர்ப்பதிலும் அவர் தனது துரைத்தனத்தைப் பேணிக்கொள்வதற்குத் தவறவில்லை. உள்ளூர் நாய்கள் உள்ளூர் மனிதர்களைப் போலப் பறை நாய்கள்/ மனிதர்களுடன் சேர்ந்து கட்டிவிற் படுத்துறங்கும் பொக்கட் டோக்" ஒன்றைப் பணங் கொடுத்து வாங்கிக்
தெணியான் 93

Page 49
மரக்கொக்கு
கொண்டார். அந்த நாய்க்குட்டி பற்றி வாய் ஓயாமற் கதை கதையாக அவள் தோழி சொல்லிக்கொண்டிருப்பாள். அந்த நாய்க் குட்டியுடன் சேர்ந்து தான் ஓடியாடி மகிழ்ச்சியாக விளையாடும் அநுபவங்களை எல்லாமி அந்தத் தோழி ஒருவகைாயன பரவசத்துடன் சொல்லிக்கொண்டிருப்பாள்.
அந்தத் தோழியுடன் உணர்வுகளைப் பகிர்ந்துகொண்ட விஜயலட்சுமி உள்ளத்திலும் ஒரு ஆசை அரும்பியது. நாய்க்குட்டி ஒன்று வீட்டிலும் வளர்க்க வேண்டும்-அதனோடு சேர்ந்து விளையாடி மகிழவேண்டும் என்னும் எண்ணம் அவளை ஆட்டிவைக்க ஆரம்பித்தது.
விடுமுறையில் வீட்டுக்கு வந்திருந்த தருணமி தந்தையான பொன்னம்பல மணியகாரனிடம் தயங்கித் தயங்கி தன் விருப்பத்தை அவள் மெல்ல வெளியிட்டாள்.
மணியகாரன் அவள் வார்த்தைகளைப் பொறுமையாக இருந்து கேட்டுவிட்டு, வாய்விட்டுப் பலமாகச் சிரித்தார். பின்னர் அவளைப் பார்த்து ஒரு கேள்வி கேட்டார்,
"விஜயா, வீடுகளிலே நாய் எண்னத்துக்காக வளர்க்கின்றார்கள், சொல்லு LIjziLJLð"
"எண்னத்துக்கு.?"அவள் தனக்குள்ளே கேட்டுக்கொண்டாள். அவளாற் சட்டென்று பதில் சொல்ல முடியவில்லை.
"விளையாடுகிறதுக்கு என்றுதானே நீ நினைக்கிறாய் இல்லை விஜயா. வீட்டுக்குக் காவலுக்காகத்தான் வளர்க்கின்றார்கள் இந்த ஊருக்கே காவலாக இருந்தவர்கள் நாங்கள் எங்களுக்கு நாய்வேறு காவலா! ஊருக்கு நாங்கள் காவல்; இந்த ஊர் மக்களெல்லாம் எங்களுக்குக் காவலும் ஏவலுமாக இருந்திருக்கிறார்கள் இந்த வீட்டில் நாய் வளர்க்கிற ஒரு வழக்கம் இல்லை.நாய் அருவருப்பான ஒரு பிராணி அது கண்டது கடியதெல்லாம் தின்னும் எப்படி நாங்கள் வீட்டிலே நாய் வளர்க்கலாம்!" மணியகாரன் மிகத் தெளிவாக அவளுக்கு எடுத்து விளக்கினார். அப்ப குட்டி நாய் வளப்பம்"
குழந்தைத் தனமாக அவள் கேட்டாள் "குட்டி நாய் கண்டது கடியது தின்னாது. அப்படித்தானே நினைக்கிறாய். இல்லையா?" ஓம். திண்ணாது" "விஜயா, நாய் என்றால் அது நாய்தான். நாய்க்கு ஆசாரமில்லை, சுத்தமில்லை, நாயைப் பிடித்து குளிப்பாட்டி நடுவிட்டில் கொண்டுவந்து
94 தெணியான்

மரக்கொக்கு
வைத்தாலும் அது ஓடிப்போய்க் குப்பை மேட்டில் தான் விழுந்து புரளும் என்று பெரியவர்கள் சொல்லி வைத்திருக்கின்றார்கள். அப்படியான ஒரு இழிந்த பிராணியை நாங்கள் வீட்டில் வளர்க்கலாமா?"
மணியகாரன் அன்று சொல்லி வைத்த உணிமையின் உள்ளர்த்தம் இன்று தான் தன்னாற் தெளிவாக விளங்கிக்கொள்ள முடிந்தது என்பதை அவள் இப்பொழுது உணருகின்றாள்
நாய்கள் எப்பொழுதுமே நாய்கள் தான். அவைகள் ஒருபொழுதும் நல்ல பசுக்களாகிவிட முடியாது. மணியகாரன் வளவுக்குள் இன்று நாய்கள்.
அவள் வீடு வந்து சேர்ந்ததும், நேரே கிணற்றை நோக்கிச் சென்றாள். அவள் உள்ளத்திலும் உடலிலும் அடங்காத கொதிப்பு. ஆறாத அகுசை, கிணற்று நீரை வாளி, வாளியாக அவள் மொண்டு மொண்டு அள்ளி அள்ளித் தலையில் ஊற்றிக்கொண்டு நிற்கின்றாள்
la
பொன்னம்பல மணியகாரனின் நான்கு புத்திரிகளுக்குள்ளும் அன்னலட்சுமி சற்று வித்தியாசமான ஒரு பெண, அவள் ஒரு வீச்சில் தன் சகோதரிகள் போலச் சாயல் உள்ளவளாக விளங்கிய போதிலும் அவர்களைப் போன்ற அழகியல்லள் மனப்பாங்கிலும் அவள் சகோதரிகளிலிருந்து வேறுபட்டவளாகவே இருந்தாள். தாய் மீனாட்சியம்பாளின் மென்மைப் போக்கும் இணங்கிப் போகின்ற இயல்புகளும் அவளிடமே இருந்தன. அதனால் தாயின் அதீதமான அன்பை அவள் பெற்றிருந்தாள். அவள் சகோதரிகளைவிடத் தாயின் மீது அவளுக்கும் அளவிறந்த பிரியம் இருந்தே வந்தது. கால மாற்றத்துக்கு ஏற்றவண்ணம் சிந்திக்கும் ஒரு பெண்ணாகவே அவள் இருந்தாள். காலங்காலமாகக் குலப் பெருமைகளை மாத்திரம் அடை காத்துக்கொண்டு இந்த வீடு ஒன்றே சிறையாக வாழும் வாழ்வை அவள் மனதார வெறுத்தாள்.
அன்னலட்சுமிக்கு மூத்தவர்களான வரலட்சுமி, விஜயலட்சுமி ஆகிய இருவரையும் இராமநாதன் பெண்கள் கல்லூரிக்கு அனுப்பி விடுதியிற் தங்கியிருந்து கல்விகற்க வைத்தார்கள் கல்விகற்பதற்காகக் கல்லூரிக்குப் போனாலும் சமய ஆசாரம், சமூக ஆசாரம் என்பவை கெட்டுப்போகாமல் இருக்கவேணடும் எண்பதற்காகவே அவர்கள் அங்கு அனுப்பி வைக்கப்பட்டார்கள் வீடு என்ற சிறையிலிருந்து அவர்கள் விடுவிக்கப்பட்டு
தெணியான் 95

Page 50
மரக்கொக்கு
கல்லூரி என்ற இன்னொரு சிறையில் அடைத்து வைக்கப்பட்டார்கள்
இளையவர்களான அன்னலட்சுமி, தனலட்சுமி ஆகிய இருவரையும் இராமநாதன் பெணிகள் கல்லூரிக்கு அனுப்பி வைப்பதையே மணியகாரன் பெரிதும் விரும்பினார். ஆனாலி அவர் விருப்பம் நிறைவேறத் தகுந்த பொருளாதார பலம் அவருக்கு இல்லாமற் போயிற்று செல்லரித்துப்போன குடும்ப பொருளாதாரத்தை எண்ணி மணம் உளைந்தவாறு அவர்களைப் பருத்தித்துறை மெதடிஸ்த பெண்கள் கல்லூரிக்கே அவரால் அனுப்பி வைக்கமுடிந்தது. அவர்கள் இருவரும் வீட்டிலிருந்து வசு வணிடியிற் கல்லூரிக்குத் தினமும் போய் வந்தார்கள் மூத்தவர்கள் போல கல்லூரி வாழ்க்கை சிறை வாழ்க்கையாக அமையாததில் மனம் மிக மகிழ்ந்தவள் அன்னலட்சுமி அந்தக் காலத்தில் அவள் சுதந்திரக் காற்றை நன்றாக சுவாசித்தாள். தன் விழிகளைத் திறந்து அதுவரை அவள் காணாத வெளி உலகத்தை மிகத் தெளிவாகப் பார்க்க ஆரம்பித்தாள்.
அப்பொழுது பெண்கள் கல்லூரிக்குச் சமீபத்திலிருக்கும் ஹாட்லிக் கல்லூரியிற் படித்துக்கொண்டிருந்தான் ஆனந்தராசன் அவனை முன்னரே அவள் அறிந்திருந்தாள்.
ஆனந்தராசன் வணிடிற்காரக் கனகுவின் மகன். அந்தப் பகுதியில் வண்டிற்காரன் என்று சொன்னால் ஆனந்தராசனின் தந்தையான கனகசபை என்ற கனகுவை அறியாதவர்கள் இருக்க முடியாது. கனகு வண்டிலும் மாடுகளும் வைத்தே தனது வாழ்க்கையை ஒட்டி வந்தார். அதனால் அவருக்கும் மணியகாரன் குடும்பத்துக்கும் நீண்ட காலமாகவே தொடர்பு இருந்து வந்தது. மணியகாரனினி கோயிலிகளில் உற்சவங்கள் ஆரம்பித்துவிட்டால் அவர் தனது வண்டியை ஒட்டிச் சென்றுமணியகாரன் வீடு வந்து சேருவார் உற்சவங்களுக்குத் தேவைாயன இளநீர் மணியகாரன் வளவுக்குள் குலைகுலையாக வெட்டி குவிக்கப்பட்டிருக்கும். அவைகளை எல்லாம் ஏற்றிக்கொண்டு சென்று கோயில்களில் இறக்குவார். நீர்வேலி, கோப்பாய் போன்ற இடங்களுக்குச் சென்று வாழைக் குலைகளை ஏற்றிக்கொண்டு வந்து சேர்ப்பார். இந்த வேலைகளுக்கெல்லாம் மணியகாரனிடமிருந்து அவர் கைநீட்டிக் கூலிவாங்கிக்கொண்டதில்லை. மணியகாரனின் சாதிக்காரனான அவர் அடிமை குடிமைகள் போல ம்ணியகாரன் குடும்பத்திற்குத் தொண்டுகள் செய்தார். அவர் செய்து வந்த இந்தச் சேவைகள் எல்லாம் தாம் செய்யும் ஆலயத் தொண்டாக கருதி இருந்தாரா? அல்லது மணியகாரன் குடும்பத்தின் மேலுள்ள விசுவாசம்
96 தெணியான்
(ر

SSSSSSSSS
மரக்கொ. 6
காரணமாகச் செய்கின்ற ஒரு தொண்டாக எண்ணினாரா? இவற்றுள் எது அவரது மனக் கருத்தாக இருந்து வந்தது என்பதைப் பகுத்து இணங்காண முடியாத பயபக்தியுடன் அவர் நடந்துகொண்டார்.
தந்தையான வணிடிற்காரனோடு சேர்ந்து அரைக் காற்சட்டைப் பருவத்துச் சிறுவனாக ஆனந்தராசன் மணியகாரன் வீட்டிற்கு வந்து போயிருக்கின்றான். அந்தக் காலத்தில் மணியகாரன் வீட்டில் அவனுக்கு வழங்கப்பெற்ற கோயில் மோதகம், வடை என்பவற்றை வாங்கி உண்டுமிருக்கின்றான். அவன் வீட்டிற்கு வந்து போன அந்தச் சந்தர்ப்பங்களில் அன்னலட்சுமி அவனைக் கண்டுமிருக்கின்றாள். அவர்கள் இருவருக்குமிடையே உணர்டான இந்த அறிமுகங்கள், கல்லூரி வாழ்க்கையின் போதும் ஆரம்பத்தில் வெறும் பழக்கமாகவே இருந்து வந்தன.
ஆனந்தராசன் அன்னலட்சுமியைப் போலத் தினமும் வக வண்டியிற் தான் கல்லூரிக்குப் போய் வந்துகொண்டிருந்தான். வசு ஏறுவதற்குக் காத்திருக்கும் சமயங்களிலும் வண்டியிற் பிரயாணஞ் செய்யும் போதும் இருவரும் சந்தித்துக்கொள்ளும் சந்தர்ப்பங்கள் இயல்பாகவே உருவாகின. இந்தச் சந்திப்புக்களின் ஆரம்பம், முன்னரே ஒருவரை ஒருவர் அறிந்தவர்கள் என்ற நிலையில் இருந்து வந்தது. ஏலவே அறிந்து வைத்துக்கொண்டிருக்கின்றவர்கள் அடிக்கடி சந்தித்துக்கொள்ளும்போது அவர்களை உணராமலே இருவருக்குமிடையே ஒரு நெருக்கம் உருவாகிவிடுகின்றது. இத்தகைய வாய்ப்பு விடலைப் பருவத்து இளமுள்ளங்களுக்கு உண்டானால், அவர்கள் தம்முள் மிக நெருங்கி வந்துவிடுவார்கள். ஆனந்தராசன், அன்னலட்சுமி இருவரும் ஒரு தினம் சந்திக்க இயலாது போனால் அந்தப் பிரிவுத் துயரினால் உள்ளங்கள் தவிக்க ஆரம்பித்தன. இருவரும் சந்தித்த போது கனிவான பார்வைகளை இருவரும் தமக்குள்ளே பரிமாறிக் கணிகளிலே சுகம் காணத் தொடங்கினார்கள். இதமான புன்னகை மலர்களாக மலர்ந்து ஒருவர் மாறி ஒருவராகச் சூடிக்கொண்டார்கள். தருணம் வாய்க்கும் வேளைகளில் எல்லாம் முத்தான வார்த்தைகள் ஒன்றிரண்டு உதிர்த்து இதயத்துள் பவித்திரமாகப் பூட்டி வைத்துக்கொண்டார்கள்
ஆண்டுகள் சில கழிந்து போயின. அன்னலட்சுமி, கல்லூரிப் படிப்பை முடித்துக்கொண்டு வீட்டிற்குள் முடங்கிப்போனாள்
கல்லூரிக் காதலி என்பது கல்லூரி வாசல் வரை என்றே
தெணியான் 97

Page 51
மரக்கொக்கு
சொல்லுவார்கள் குமர்ப் பருவத்து இந்தக் காதல் மிகக் கவர்ச்சியானது. இளங் கன்றுகளின் பயமறியாக் காதல் இது காதல் ஒன்றுதான் உலகம் என்று எண்ணி மயங்கும் பருவமும் இதுதான். இந்தப் பருவ மயக்கம் கலையும் வேளையிலேயே யதார்த்தமான உலகம் கண்ணுக்குப் புலப்படும். சமூகத்தின் மேடு பள்ளங்கள் தெரிய வரும் கனவுகள் யாவும் கலைந்து நனவுலகிற் பாதங்கள் மெல்லப் பதியும். அப்பொழுது கல்லூரிக் காதல் பொய்யாக. நிழலாக.கானலாக. மாறிப்போவது தெரியவரும்.
ஆனந்தராசனின் இள மனதில் அரும்பிய காதலும் பருவத் தீயினாற் கனன்று பின்னர் அந்த வெப்பம் உள்ளடங்கித் தணிந்து போய்விடும் என்று அன்னலட்சுமி எண்ணியிருந்தாள். ஆனால் ஆனந்தராசன் இலகுவாக அவளை மறந்து போய்விடவில்லை. அவள் இதயங் கலந்த இனிய நினைவுகளின் பசுமையில் உள்ளம் மூழ்கித் திளைத்துக்கொண்டிருந்தான். ஆனந்தராசன் கல்லூரியை விட்டு வெளியேறி, அரசாங்கத்தில் உத்தியோகம் பெற்று ஊரைவிட்டுச் செல்லவேண்டி நேர்ந்தது. அரச பதவி புதிய குழல், நாகரிகமான பட்டின வாழ்க்கை இவைகளால் அவன் தன்னை மறந்து போவாணர் என்றே அன்னலட்சுமி தன்னுள்ளே தீர்மானித்துக்கொண்டாள். ஆனால் விடுமுறையில் அவன் ஊருக்கு வரும் வேளைகளில் எல்லாம் அவளைத் தேடத் தொடங்கினான். அவள் தரிசனம் கிடைக்காதா என்று எதிர்பார்த்து ஏங்கியவண்ணம் மணியகாரன் வீட்டைச் சுற்றி வட்டமிட்டுக் கொண்டிருந்தான்.
இந்தச் சமயத்தில் ஒரு தினம் சின்னி வந்து மிக அந்தரங்கமமாக அன்னலட்சுமியிடம் கேட்டாள், "பிள்ளை உனக்கு ஆனந்தராசன் எண்ட பொடியனைத் தெரியுமே?"
அன்னலட்சுமி மனம் திக்கிட்டுப் போனாள். ஆனந்தராசன் என்பவன் யார் அவன்? என்று சின்னியிடம் கேட்டுவைத்து, அவளுக்கும் அவனுக்கும் இடையில் உள்ள உறவு வெளியே தெரியவராதவண்ணம் எல்லாவற்றையும் அமுக்கிவைத்துவிடவேண்டுமென்று சட்டென்றுமனதில் தோன்றுகின்றது. ஆனால் சின்னியிடம் அவளால் அப்படிக் கேட்பதற்கு இயலவில்லை. சின்னி சொல்லப்போகும் தகவல் என்னவாக இருக்கும் என்பதை அறிந்துகொள்ளும் ஆவலே முந்திக்கொண்டு அவள் மனதில் எழுந்தது. அதனால் சின்னி தன்னைக் கண்டு கொள்ளாதவாறு மிகச் சாதுரியமாக, அவள்தன்னை மறைத்துக்கொண்டு நெஞ்சுப்படபடப்புடன் அலட்சியமாகக் கேட்டாள்.
98 தெணியான்
 

மரக்கொக்கு
"எந்த ஆனந்தராசன்?"
"வண்டில்காறனிரை மோன்"
"அவருக்கென்ன.?"
"ஒண்டுமில்லைப்பிள்ளை. சொல்ல வந்ததைச் சொல்லிமுடிக்காது சின்னி தயங்குகின்றாள்.
"என்ன சின்னி ஒளிக்காமல் சொல்லு" சின்னியின் பேச்சில் அக்கறை இல்லாதவள் போல், அதே சமயம் அவளை உற்சாகப் படுத்தித் தூண்டிவிட்டாள் -
இல்லைப் பிள்ளை." அன்னலட்சுமியின் முகத்தையே சின்னி குழப்பத்துடன் பார்த்துக்கொண்டு நிற்கின்றாள்.
"சின்னி நீ இப்ப என்ன சொல்ல வந்தனி? ஏன் மறைக்கிறாய்?"
முகத்தைச் சற்றுக் கடுமையாக்கி வைத்துக்கொண்டு அன்னலட்சுமி பேசினாள்.
சின்னிமனதில் மேலும் குழப்பம் வந்து நெருடுகின்றது. இப்பொழுது சொல்ல வந்ததை மறைத்துக்கொண்டுவிட்டால், அன்னலட்சுமியின் கோபத்துக்கு ஆளாகவேண்டி நேரும். வெளியே சொல்லிவிட்டால் வீட்டுக்குள்ளே என்னென்ன நடக்குமோ என்று உள்ளூர அவள் அஞ்சிக்கொண்டு நாச்சியார் இதாலை கரைச்சல் வந்தால்." என்று சொல்லி இடையில் நிறுத்திக்கொண்டாள்.
"என்ன கரைச்சல்?"
".." சின்னி பதிலேதும் பேசாமல் மெளனமாக நின்றாள்.
'நீ சொல்லுறதொண்டும் எனக்கு விளங்கயில்லை"
".." சின்னி அதற்கும் மெளனமாகவே நின்றாள்.
சின்னிசொல்லாமல் மறைத்துவிடுவாளோ என்ற ஏக்கம் அன்னலட்சுமி மனதில் திடீரென்று உதயமாகின்றது. அவளுக்கு நம்பிக்கை ஊட்டும் வகையில் பேச வேண்டுமெனத் தனக்குள்ளே தீர்மானித்துக்கொண்டு, நான் ஆருக்கும் சொல்லமாட்டன் சின்னி, நீ பயப்பிடாமல் சொல்லு" என்றாள்.
நாச்சியாராணை"
"சத்தியமாகச் சொல்லுறன்"
நாச்சியார் என்னைக் கோவிக்கக்கூடாது"
"கோவிக்கமாட்டன்"
"விஜயா நாச்சியாரை நினைக்கப் பயமாக் கிடக்கு"
தெணியான் 99

Page 52
மரக்கொக்கு
"அவவுக்கேன் தெரியப்போகுது" நாச்சியாரை நம்பித்தான் சொல்லுறன்" "சொல்லு" அன்னலட்சுமி இப்பொழுது தன்னை மறந்து அவசரப்படுத்துகின்றாள்.
"அவன் பொடியன். விசாரிச்சதாகச் சொல்லச் சொன்னவன்" "ஆரை.?" "உன்னைத்தான் நாச்சியார்" "goofinis?" "எனக்குத் தெரியுமே நாச்சியார் நாணி முடியாதெணிடு மறுத்துப்போட்டன். ஆனால் அவன் பொடியன்."
"வேறை என்ன சொன்னவர்?" அன்னலட்சுமி மிக ஆர்வத்துடன் வினவுகின்றாள். அவளிடம் நிகழ்ந்துள்ள மாற்றத்தைச் சின்னி மெல்ல அவதானித்துக்கொண்டு தொடர்ந்து கேட்கின்றாள்.
நாச்சியார் ஏன் பதட்டப்படுகுது?" இல்லை. எனக்குக் கோபமில்லை. நீ சொல்லு" தன் மனதிலுள்ள உணர்வுகளைச் சின்னி புரிந்துகொள்ளாதவாறு அன்னலட்சுமி மறைத்துக்கொள்ள எத்தனிக்கின்றாள்.
நான் மறுத்துப்போட்டன் நாச்சியார்" "எண்ணத்துக்கு.?" "பொடியன் ஏதோ கடுதாசி தாறனெண்டது" அன்னலட்சுமி மெளனமாக நிற்கின்றாள். அவளுக்கு ஏமாற்றமாக இருக்கின்றது. அந்தக் கடிதத்தை வாங்கி வந்திருக்கவேண்டுமென்று சின்னியிடம் வாய் திறந்து சொல்வதற்கு இயலாமல் தயங்கி அவள் மனம் தவிக்கின்றது.
அப்பொழுது சின்னி தொடர்ந்து சொன்னாள், "அவன் பொடியன் விடமாட்டன் எண்டு நிண்டான்" அவள் மேலும் என்ன சொல்லப் போகின்றாள் என்ற ஆவலுடன் சின்னியின் வாயையே அன்னலட்சுமி ஏக்கத்துடன் பார்த்துக்கொண்டு நிற்கின்றாள்.
நாச்சியார் வேண்டாமெண்டால் தன்னட்டைக் கொண்டுவந்து தரச்சொல்லிச் சொன்னவன்"
அன்னலட்சுமி தன்னை மூடிக்கொண்டிருந்த போர்வைகளெல்லாம் அவளை அறியாமல் மெல்ல நழுவிக் கீழே விழுந்துவிட்டன. அவளிடம்
100 தெணியான்

மரக்கொக்கு
இப்பொழுது உண்டான பதற்றத்தையும் துடிப்பையும் சின்னி அவதானித்து கணக்கிட்டுக் கொணர்டாள். இனிமேல எதனையும் மறைக்க வேண்டியதில்லை என்பது அவளுக்குத் தெளிவாகிவிட்டது. ஆனால் அன்னலட்சுமியின் ஆவலைத்தூண்டிவிடும் நோக்கத்துடன் மேற்கொண்டு அவள் ஏதும் பேசாமல் இருந்தாள்.
சின்னியின் சில துளிநேர மெளனத்தை அன்னலட்சுமி சகித்துக் கொள்வதற்கு இயலாமல் பட்டென்று தன் இதயத்தைப் புட்டுப் பேசினாள்
நீ வாங்கி வந்தனியே" "வேறை என்ன செய்யிறது. வாங்கிப்போட்டன்" சின்னி இப்பொழுது தெளிவாகப் பேசினாள். "எங்கே சின்னி அதை எடு!"அன்னலட்சுமி அவசரப்படுத்துகின்றாள். சின்னி தன் மனதுக்குள்ளே கள்ளக் குமரி என்று நினைத்துச் சிரித்துக் கொணர்டு, இடுப்புச் சேலைக்குள் மறைத்து வைத்துக்கொண்டிருக்கும் அவன் கடிதத்தை மெல்ல வெளியில் எடுத்து, அங்குமிங்கும் நோட்டமிட்டவண்ணம் அன்னலட்சுமியின் கைக்குள் வைக்கின்றாள்.
அன்னலட்சுமி அந்தக் கடிதத்தை நடுங்கும் கரங்களினால் வாங்கி மார்புச் சட்டைக்குள் சட்டென்று வைத்து மறைத்துக் கொள்ளுகின்றாள். அதன் பிறகு சின்னியைப் பார்த்து "சின்னி இதை ஆருக்கும் சொல்லிப் போடாதே" என்று கேட்கும்பொழுது அவள் குரல் சின்னியிடம் கெஞ்சி மன்றாடுகிறது. சற்றுத் தாமதித்து "சின்னி மாணிக்கம் மாமாவுக்கு நீ சொல்லுவியோ என்னவோ!" எனச் சின்னியின் உறவும் தனக்குத் தெரியும் என்பதைச் குசகமாக அவளுக்குணர்த்தி, அவள் முகத்தைக் குறிப்பாக நோக்கிக் குழைந்துகொண்டு நிற்கின்றாள்.
இதைக் கேட்டதும் கணினிப் பெண போலத் தலை குனிந்துகொண்டாள், சின்னி அவளால் அன்னலட்சுமியின் முகத்தை நிமிர்ந்து பார்ப்பதற்கு முடியவில்லை. கள்ளக் குமரிக்கு இதுகும் தெரியும்' என்று தனக்குள்ளே எண்ணிக்கொண்டு சொண்டுக்குள் மெல்லிய புன்னகை நெளிய, நான் சொல்லமாட்டன் பிள்ளை" என்கின்றாள் மெல்ல. சின்னியை அன்னலட்சுமி வீழ்த்திவிட்டாள். அதன் பிறகு சொல்லவா வேண்டும், சின்னியின் தயவில் அன்னலட்சுமி ஆனந்தராசன் உறவு வளர்ந்து வருவதற்கு!
சில காலத்தின் பின்னர் மணியகாரன் வீட்டிற்கு தென் திசையில்
தெணியான் O

Page 53
மரக்கொக்கு
ஒதுக்குப் புறமாகவுள்ள ஒரு மறைவிடத்தில் ஆனந்தராசனும், அன்னலட்சுமியும் இருளில் இரகசியமாகச் சந்தித்துக்கொண்டார்கள்
"அன்னம் இப்பிடியேநாங்கள் இருந்துவிட முடியது. ஒரு முடிவுக்கு வந்தாக வேணும்" எதிர்காலம் பற்றிய அக்கறையுடன் ஆனந்தராசன் பேச்சை ஆரம்பித்தான்.
அன்னலட்சுமிக்கு என்ன சொல்வது என்பது தெரியவில்லை. அவள் மனம் தனி குடும்பம் பற்றியே அப் போது சிந்தித்து அலைக்கழிந்துகொண்டிருந்தது.
மணியகாரனர் குடும்பத்து மாப்பிள்ளையாக வரும் தகுதி வண்டிற்காரன் மகனுக்கு இருக்கின்றதா என்று கேட்கும் போது.
மூத்தவள் வரலட்சுமி வாழ்க்கைப்பட்டு இன்று ஒரு பிள்ளையுடன் வாழ்விழந்தவள் போல வீட்டோடு இருக்கும் போது.
அடுத்தவள் விஜயலட்சுமி திருமணமாகவேண்டிய வயது தாண்டி குமர் முத்திக் குரங்காக" வீட்டுக்குள் குந்தி இருக்கும்போது.
இந்தத் திருமணத்துக்கு எப்படிச் சம்மதிப்பார்கள்? அன்னலட்சுமி சிந்தித்துக்கொண்டிருக்கின்றாள். அவள் சிந்தனையைக் குழப்பக்கூடாது; அவசரப்பட்டு ஒரு முடிவெடுக்கும் காரியமல்ல இது. அவள் நன்றாகச் சிந்தித்துத்தான் எதனையும் சொல்லவேண்டும்.
ஆனந்தராசன் மனதில் எண்ணிக்கொண்டு அவள் சிந்தனையிற் குறுக்கிடாது பொறுமையோடு காத்திருக்கின்றான். அதே சமயம் அவன் மனதிலும் தன் குடும்பம் பற்றிய நினைவுகள் எழுந்து உள்ளுக்குள் மோதிக்கொள்வதை அவனால் தவிர்த்துக்கொள்வதற்கு இயலவில்லை.
தனக்கெளிது தாரம் எண்பார்கள். மணியகாரன் வீட்டுப் பெண் கணவனை, சம்பந்திகளை எல்லாம் மதித்து நடக்க மாட்டாள் என்றால். மூத்தவளைக் கட்டின புருஷன் கை கழுவிவிட்டுப் போனது அதனால் தான் என்றால்.
அவர்களிடம் சீதனமாகத் தருவதற்கு ஒன்றுமே இல்லை என்றால். இவளுக்கு மூத்தவள் இன்னும் கலியாணமாகாமல் குமராக இருக்கின்றாள் என்றால்.
எப்படி உடன்படுவார்கள் இவளை ஏற்றுக்கொள்வதற்கு? அவன குடும்பம் இந்தக் குற்றச் சாட்டுகளை முன்வைக்கவேபோகின்றது. சமூகத்தில் பெரியவர்கள் என்று தங்களை எணணிக் கொணடிருப்பவர்கள், கீழேயுள்ளவர்கள் எனறு
102 தெணியான்

மரக்கொக்கு
கருதுகின்றவர்களிடம் உறவு நாடிப் போகும்போது அவர்கள் இருகரம் நீட்டி வரவேற்பார்களென்று எதிர்பார்ப்பது தப்பு. வெறுப்பும் சிக்கல்களும் இரு பகுதியாருக்குள்ளேயும் உருவெடுக்கவே செய்யும். இவர்கள் எல்லாம் சம்மதித்து வந்து, அதன் பிறகு தாங்கள் இருவரும் இணைவதென்பது நடக்கக்கூடிய ஒரு காரியமல்ல. இருவரும் ஒன்றுசேர்ந்து உறுதி தளராமற் தனித்து நிற்கவேண்டும். ஆனந்தராசன் இப்படி எல்லாம் எண்ணமிட்டுக்கொண்டு மீண்டும் அவளிடம் கேட்டான்
"அன்னம் நீ என்ன சொல்லுகிறாய்?" அவளிடமிருந்து பதில் இல்லை. "உண்ரை வீட்டார் சம்மதிப்பினமா?" அவள் இப்பொழுதும் மெளனமாகவே இருக்கின்றாள். "அன்னம் உண்ரை எண்ணம் என்ன? அதை முதல் சொல்லு!" இதன் பிறகு குரல் தளதளக்க அடித் தொண்டையால் அண்னம் மெல்லத் தயங்கித் தயங்கிச் சொன்னாள்
"உங்களுக்கு எங்கடை வீட்டுக்காரரைத் தெரியும்" ஓ. தெரியும் அப்ப. இப்பிடியே இரண்டு பேரும் இருக்க வேண்டியதுதான்" -
நான் என்ன செய்ய?" "என்ரை குடும்பத்திலையும் ஒத்துக்கொள்ளமாட்டினம். உண்ரை குடும்பத்திலையும் ஒத்துக்கொள்ளமாட்டினம். இரண்டு பகுதியாருக்கும் இது தெரியவந்தால் அதன் பிறகு நாங்கள் சந்திக்கிறதுக்கும் முடியாமல் தானி போகும். இன்னொரு ஆபத்தும் எனக்கு நெருங்கி வந்து கொணடிருக்கிது. எனக்குக கலியாணம் பேசவும் ஆரம்பித்துவிட்டார்கள். அதனாலை ஒரு முடிவுக்கு வந்துதான் ஆகவேணும்"
"என்னாலை ஒரு முடிவுக்கும் வரேலாமல் இருக்கு" "சரி என்ரை முடிவை ஏற்று நடக்க முடியுமோ?"
"ஏன் பேசுறாயில்லை," நடக்கிறன்" "சரி சொல்லுறன் கேள்! நீ என்னோடை கொழும்புக்கு வந்துவிடு! சம்மதந்தானே!"
தெ னியான் 103

Page 54
மரக்கொக்கு
"என்ன விருப்பமில்லையா?"
நான் உன்னைக் கட்டாயப் படுத்தமாட்டேன். நீ ஒப்புக்கொண்டால் உன்னைக் கூட்டிக்கொண்டு போறதுக்கு விரும்பினன். அதுக்கு நீ விரும்பாவிட்டால், வேறு வழியில்லை. நாங்கள் இண்டைக்கே பிரிந்து போய்விடுவோம்"
ஐயையோ! அப்படிச் சொல்லாதையுங்கோ"
"அப்ப என்ன சொல்லுகிறாய்! மனதிலை உள்ளதை ஒளிக்காமல் சொல்லு"
"உங்கடை வீட்டிலை."
"மணியகாரன் வீட்டுப் பொம்பிளையை மாலை போட்டு வரவேற்கத் தயாராக இருக்கினம்"
"சும்மா பகிடி பண்ணாதையுங்கோ"
"அன்னம் ஏன் சிணுங்கிறாய்! மணியகாரன் வீடு என்று சொன்னால் எங்கடை பாட்டன் இப்பவும் கை எடுத்துக் கும்பிடுகிறார்."
"பாட்டன்தானே." அன்னம் மெல்லச் சிரிக்கின்றாள்.
"அம்மா, ஐயா கொழுதத சீதனம் வாங்கத திட்டமிட்டுக்கொண்டிருக்கின்றார்கள். நீ அவை கேட்கிற சீதனம் எல்லாம் தருவாய் தானே. பிறகென்ன தடை."
நீங்கள் என்னை." அவள் மீண்டும் சிணுங்குகின்றாள்.
"கிணர்டல் பணிணயில்லை அன்னம், ஆருமே இந்தக் கலியாணத்திற்குச் சம்மதிக்கப் போறதில்லை. நீ தயார் எண்டால் நான் கூட்டிக்கொண்டு போய்விடுகிறன் முடியாதெண்டால் இப்பவே நாங்கள் பிரிந்து போய்விடுவோம்."
அவன் உறுதியாகச் சொல்லி முடித்துவிட்டான். இனிமேல் அவர் பேசப்போவதில்லை. அவன் பேசுவதற்கும் ஒன்றுமில்லை. அவள் தான் வாய் திறந்து தன் முடிவைச் சொல்லவேண்டும். அவள் பேசட்டும் என்று அவன் காத்திருக்கின்றான். அவள், தான் எடுக்கப்போகும் முடிவில் அவளுடைய எதிர்காலம் தீர்மானிக்கப்படப் போகின்றது என்பதை உணருகின்றாள். அவனுடைய தீர்மானத்திற்கு இணங்கிப்போனால், மணியகாரன் மகள் வீட்டை விட்டு ஒருவனோடு ஓடிப் போய்விட்டாள் என்ற அயவாதம் உண்டாகப்போகின்றது. அவனை மறுத்தால் காலமெல்லாம் கன்னியாகவே இருக்கவேண்டியது தான். அவன் ஒருவனைத் தவிர
104 தெணியான்

மரக்கொக்கு
இன்னொருவனை நெஞ்சில் நினைத்துப் பார்க்கவும் முடியாது. அவன் எண்ணப்படி நடந்தால் தனலட்சுமியின் எதிர்காலம் அதனாற் பாதிக்கப்பட்டு விடும். விஜயலட்சுமிக்கே உரிய வயது தாண்டிப் போய்விட்டது. தனலட்சுமிக்கு எதிர்காலமென்று ஒன்று எங்கே இருக்கப்போகின்றது! மணியகாரன் குடும்பம் என்னும் குலப் பெருமையைக் காத்துக்கொண்டு வாழாமல் எல்லாரும் இருக்கவேண்டியது தான்.
அவள் நீண்ட நேரம் ஆழமாகச் சிந்தித்துப் பார்த்தாள் தொடர்ந்து சிந்தித்துச் சிந்தித்துக் குழம்புவதனால் ஆகப்போவது ஒன்றுமில்லை. ஒன்றை அடையவேண்டுமானால், இன்னொன்றை இழந்து தான் ஆகவேண்டும். இழப்பில் தான் இன்னொரு உயிர்ப்பு மலருகின்றது. ஒரு முடிவுக்கு வராது தொடர்ந்து குழம்பிக்கொண்டிருப்பதற்கு இது சமயமல்ல என்று எண்ணிக்கொண்டு அவள் ஒரு தீர்மானத்துக்கு வந்தாள்.
அதுவரை பொறுமையோடு காத்திருந்த அவன், அப்பொழுது திரும்பவும் அவளிடம் கேட்டான்.
"அண்ணம் என்ன சொல்லுகிறாய்" "உங்கடை விருப்பம்" அவள் தயக்கமின்றிப் பட்டென்று பதில் சொன்னாள்
அவள் பூவிதழ்கள் மலர்ந்து மின்னல் போல ஒரு புண்ணகை அந்த இருளிலும் அப்பொழுது பளிச்சிடுகின்றது.
அவன் அடக்கமாக முகம் மலர்ந்து முதல் தடவையாக அவள் மென் கரத்தை வாஞ்சையுடன் மெல்லப் பற்றிக்கொள்ளுகின்றான்.
ܪܳ மணியகாரணி வீட்டு நவீன கூடம் இன்று வெறிச்சோடிப் போய்க்கிடக்கின்றது.
அந்தக் கூடத்துச் சாய்வு நாற்காலிக்கு நேர் எதிரே, வட்ட வடிவமான ரீப்போவின் மீது வெண்பட்டு நூலால் பூக்கள் இழைத்த இளம் பச்சை வண்ண விரிப்பின் மேல் ஒற்றைக் காலில் தவமியற்றிக்கொண்டு நிற்கும் மரக்கொக்கு துணையின்றித் தனித்துப்போய் நிற்கின்றது.
விஜயலட்சுமி கூடத்துக்கு முன்னுள்ள பூந்தோட்டத்துக்குள் உலாவிக்கொண்டு நிற்கின்றாள். அவள்மனம் அமைதி இழந்து அலையும் வேளைகளில் அந்தப்பூந்தோட்டத்துக்குள்ளேபுகுந்துவிடுவது அவளுடைய வழக்கம். மலர்கள் அவள் மனதுக்கு மிக ரம்மியமானவை. அவள் தனது மணச் சாந்திக்காகவே அந்த மலர்த் தோட்டத்தை உருவாக்கினாள் மலர்த்
தெணியான் 105

Page 55
மரக்கொக்கு
தோட்டம் அமைக்க வேண்டுமென்னும் எண்ணம் மனதிற் தோன்றியதும் திட்டங்களை வகுத்து பணிப்புரைகளை மாத்திரம் அவள் வழங்கினாள். நிலத்தைக் கொத்திப் பண்படுத்தி, பாத்திகள் கட்டி, மலர்க் கன்றுகள் நாட்டி நீர் பாய்ச்சும் வேலைகள் எதனையும் செய்யக் கூடியவளல்லவே அவள்! மணியகாரன் குடும்பத்தின் மீதுள்ள பழைய விசுவாசத்தை நெஞ்சில் சுமந்துகொண்டு அங்கு வரும் சில முதியவர்களை அவள் ஏவிவிட்டு வேலைகள் வாங்குவாள். அவர்களுக்கும் தங்களால் இயன்ற தொண்டுகளை இன்றும் மணியகாரன் குடும்பத்துக்குச் செய்துகொடுப்பதில் இனம் புரியாத ஒரு திருப்தி சிலவேளைகளில் சின்னியை அழைத்து பூந்தோட்ட வேலைகளைக் கவனிக்கும்படி செய்வாள். இவர்கள் யாரும் வசதியாக வந்து கிடைக்காத வேளைகளில் தனலட்சுமியின் தலையில் அந்த வேலைகள் வந்து விழும். -
தனலட்சுமிக்கு ஓயாத வேலைகள் வீட்டில் எப்பொழுதும் இருந்து கொண டே இருக்குமி, அங்கு தினமும் வந்து போய்க்கொண்டிருக்கும் சின்னராசனைப் பிடித்து தென்னைகளிலிருந்து தேங்காய்கள் பறிக்கவேணடும். தேங்காய்களை உரித்து தேங்காய் மட்டைகளையும், தேங்காய்களையும் விற்றுக் காசாக்க வேண்டும்.
சினினியை ஏவிவிட்டு கடலி நீரில் தென்னோலைகளை ஊறவைக்கவேண்டும். பின்னர் அவளையும் துணைக்கு வைத்துக்கொண்டு ஓலைகளைப் பிளந்து கிடுகுகளாக இழைத்து அவற்றையும் பணமாக்கவேண்டும். مي
தென்னை மட்டைகளைச் சேகரித்துக் குவித்து விறகாக விற்கவேண்டும்.
பனைஓலைகளை வெட்டி எண்ணிவிலைக்குக் கொடுக்கவேண்டும். ஆடு மாடுகளுக்கு இரை தேடிப் போடவேண்டும். சமையல் வேலைகளில் சின்னிக்குத் துணையாக இருக்கவேண்டும்.
நாள் முழுவதும் இயந்திரம் போல ஓய்வில்லாது அவள் இயங்கிக்கொண்டே இருப்பாள் வீட்டு வேலைகளைச் செய்வதில் அவள் ஒரு பொழுதும் மணஞ் சலிப்பதில்லை. குடும்பத்திற்காக ஓயாமல் எப்பொழுதும் உழைத்துக்கொண்டிருப்பது மட்டுந்தான் அவளுக்குரிய கடமை. அவள் உழைப்பினால் வருகின்ற வருமானங்கள் அனைத்தும் விஜயலட்சுமியின் கைக்குப் போய்ச் சேர்ந்துவிடவேண்டும். தன்னைத் தவிர்த்து இன்னொருவரிடம் அந்தக் குடும்பத்திற்குரிய வருமானங்களில்
106 தெணியான்

மரக்கொக்கு
ஒரு சதமேனும் இருக்கக்கூடாது என்பது விஜயலட்சுமியின் கட்டளை. வீட்டுச் செலவுகளுக்குப்பணம் தேவைப்படுகின்றபோது, விஜயலட்சுமியிடம் சென்று வேண்டிய தொகையைக் கேட்டுப் பெற்றுக்கொள்ள வேண்டும்.
இன்று காலையில் தனலட்சுமி அந்தக் கூடத்து வாசல்வரை வந்து தரித்து நின்றாள். வாசல் தாண்டிக் கூடத்துக்குள் நுழையும் வழக்கம் அவளிடம் இல்லை. வாசலில் அவள் வந்து நிற்கின்றாள் என்றால் விஜயலட்சுமி அவளுடைய வருகையின் நோக்கத்தைப் புரிந்துகொண்டு விடுவாள். உடனே "எவ்வளவு?" என்றொரு கேள்வி அவளிடமிருந்து பிறக்கும். தனலட்சுமி கேட்கும் தொகையை அப்படியே எடுத்துக் கொடுத்துவிடுவது அவள் வழக்கம். தனலட்சுமி வீட்டுச் செலவுக்காக அவளிடம் பெருந் தொகைப் பணத்தை எதிர்பார்ப்பதில்லை. அப்படியொரு தொகையைக் கொடுப்பதற்கு அவளிடம் பணம் இல்லை எண்பதும் தனலட்சுமி அறிவாள் சிறுகச் சிறுகச் சேர்த்து, சிறுகச் சிறுகவே தனலட்சுமி செலவு செய்துகொண்டிருந்தாள்
தனலட்சுமி கூடத்து வாசலுக்கு வந்தாள். அவள் வரும்பொழுதே மணச் சங்கடத்துடன் தான் வந்து சேர்ந்தாள் வீட்டுச் செலவுகளைச் சமாளிப்பதற்கு வேறு வழி இருந்திருந்தால், அவள் இப்பொழுது விஜயலட்சுமி முன்னால் வந்து நிற்பதைத் தவிர்த்துக்கொண்டிருப்பாள். ஆனால் தவிர்ப்பதற்கு அவளுக்கு மார்க்கமேதுமில்லை.
தனலட்சுமி அங்கு வந்துநிற்கின்றாள் எண்பதனை அறிந்துகொண்டும், அவள் மெளனமாகச் சாய்வு நாற்காலியில் அமர்ந்திருக்கின்றாள். சற்று நேரம் தாமதித்து "அக்கா" என்று தனலட்சுமி குரல் கொடுக்கின்றாள் அவளிடமிருந்து பதில் இல்லை.
மீண்டும் தனலட்சுமி குரல் கொடுக்கின்றாள். "அக்கா" "என்ன? " யாரையோ கேட்பது போல அவளிடமிருந்து பதில் கேள்வியாக எழுகின்றது.
"காக வேணும்" வழமைபோல எவ்வளவு வேணும்' என்ற கேள்வியை அவளிடமிருந்து தனலட்சுமி எதிர்பார்க்கின்றாள். அப்படியொரு கேள்வி இன்று எழவே இல்லை. அதற்குப்பதிலாக ஹூம்' என்ற அதிருப்திப் பெருமூச்சு மாத்திரம் மெல்ல ஒலிக்கின்றது. பின்னர் கூடத்தைவிட்டு வெளியே வந்து பணத்தை எடுத்து அவள் கையிற் கொடுத்துவிட்டு மீண்டும் கூடத்துக்குள்ளே
தெணியான் 107

Page 56
மரக்கொக்கு நுழைந்துவிடுகின்றாள் விஜயலட்சுமி
தனலட்சுமியை அவள் மனம் உறுத்திக்கொண்டிருக்கின்றது. தாய் மீனாட்சியம்பாளும் மூத்த சகோதரி வரலட்சுமியும் குடும்பத்தில் மூத்தவர்களாக இருந்தபோதும், விஜயலட்சுமியின் குணம் அறிந்து அவர்கள் சற்று விலகியே இருந்து வருகின்றார்கள். விஜயலட்சுமிக்கு, இளையவளான தனலட்சுமி மீது அதிகாரஞ் செலுத்தும் உரிமை உண்டு. அவளுக்குரிய பாத்தியதையை விளங்கிக்கொண்டு தனலட்சுமி பொறுத்துப் போய்கொண்டிருக்கின்றாள். ஆனால் சில சமயங்களில் அவள் மனம் வருந்தவே செய்தாள். இந்த வீட்டில் தான் ஒரு வேலைக்காரி போல் வாழ்ந்துகொணடிருப்பதாக அவள் எணர்ணி மனம் சஞசலப் பட்டுக்கொள்வாள்.
தனலட்சுமிபூந்தோட்ட வேலைகளை மணமி விரும்பி ஒரு பொழுதும் செய்வதில்லை. அவர்கள் குடும்பத்தைக் கொண்டு நடத்துவதற்கு வேண்டிய வருவாயைக் கொடுக்காத உடல் உழைப்பு அது. அங்கே ஒருபூந்தோட்டம் இருந்துநொண்டிருப்பதனால் குடும்பத்துக்கு என்ன லாபம் வருகின்றது என்று எணர்ணுகின்றவள் அவள். ஆனால் விஜயலட்சுமி உள்ளத்தில் அந்த மலர் வனம் ரம்மியமாகப் பூத்துக் குலுங்கிக்கொண்டிருக்கின்றது.
அந்திப்பொழுது சாய்ந்துகொணடிருக்கும் வேளைகளில் விஜயலட்சுமி அந்தப் பூந்தோட்டத்துக்குள் வந்து புகுந்துவிடுவாள். சிவந்த வானமும் குளுகுளுவென்று வீசும் கடற் காற்றும் அவளுக்கு இன்பமூட்டும். மலர்கள் பேசும் மெளன. மொழிகளுக்கு தன் மனச் செவியைக் கொடுத்து வெளி உலகை அவள் மறந்து நிற்பாள். அவள் உள்ளம் அந்த மலர்த் தோட்டம் என்னும் தனியுலகத்துள் ஒடுங்கி, அங்கேயே மலர்ச்சியுடன் சஞ்சரித்துக்கொண்டிருக்கும். ஜில்லென்றுபூத்துச் சொரியும் புஷ்ப சௌந்தரியத்தில் மனது சுகம் கண்டு லயித்துப்போகும். மலர்களின் சங்கத்திற் குழைந்து கமழும் கதம்ப சுகந்தத்தில் மனம் பொங்கி புளகாங்கிதம் கொள்ளும், மாலைக் கதிரவனின் தங்கக் கிரணங்கள் பூஞ்செடி கொடிகளை அணைத்துத் தழுவிரசவாதம் செய்யும் விந்தையில் அவள் சிந்தை மயங்கும். துளசி இலைகளைப் பறித்து உள்ளங்கையில் வைத்துத் தேய்த்து, மோந்து மோந்து பெறும் சுகானுபவத்தில் சிந்தை கிறுகிறுத்துப்போகும். செம்பருத்தி, சூரியகாந்தி,நந்தியாவர்த்தம்,மல்லிகை, முல்லை, றோஜா, நித்திய கல்யாணி பொன்னலரி பிச்சி, அசோகா. புஷ்பங்கள் நித்தமும் நிறைய மலர்ந்து அங்கே சொரிகின்றன. எத்தனை
108 தெணியான்

மரக்கொக்கு
புஷ்பங்கள்! எத்தனை எத்தனை வண்ணங்கள்!
மலர்களின் தூய வெண்மையும் சுகமான மென்மையும் எப்பொழுதும் அவள் உள்ளத்தைக் கவர்ந்து ஒரு தனியான இன்பத்தை அளித்துக்கொண்டிருக்கும். மல்லிகை, நந்தியாவர்த்தம் ஆகிய இரு மலர்களும் இந்த வகையில் அவள் நெஞ்சுக்கு நெருக்கமானவை. இவைகளுக்குள்ளே மல்லிகையின் கிளர்ச்சியூட்டும் நறுமணத்திலும், நந்தியாவர்த்தத்தின் அடக்கமான சுகந்தமே அவள் நெஞ்சைப் பெரிதும் ஈர்க்கின்றது. எப்பொழுதும் நந்தியாவர்த்தம் செடிகளையே அவள் வளைய வளைய வந்துகொண்டிருப்பாள். காலை மாலை வேளைகளில் அவள் வழிபாடு செய்யும்பொழுது நந்தியாவர்த்தம் மலர்களையே விரும்பிக் கொய்துகொண்டு பூசை அறைக்குள்ளே புகுவாள். அவள் கூந்தலிலும் நந்தியாவர்த்தமே தினமும் மலர்ந்து கிடக்கும். மலர்களுக்குள் அரசி நந்தியாவர்த்தமே என்பது அவள் உள்ளத்தில் உறுதியான எண்ணம். நந்தியாவர்த்தம் தூய வெண்மையானது; புனிதமானது; அடக்கமானது. வெண்மை மாசற்றது; புனிதம் களங்கமற்றது; அடக்கம் சிறுமையற்றது.
தான் நந்தியாவர்த்தம் போன்றவள் நந்தியாவர்த்தம் மீது அவள் நெஞ்சில் விழுந்த பிரியம், அந்த மலர்களின் மேல் தணியாத ஒரு பிரேமையாக வளர்ந்துவிட்டிருக்கின்றது. அவள் மனசார வெறுக்கும் ஒரு மலர் உண்டானால் அது குரியகாந்தி தான். ஆதவன் செல்லும் திசைகளுக்கெல்லாம் தன் முகம் திருப்பும் நெறி இல்லாத மலர் அது அடிமைப் பூ பெண்கள் இந்தச் குரியகாந்தி போன்றவர்கள் தான். கணவன் என்னும் ஆடவன் செல்லும் திசைகளுக்கெல்லாம் அவன் பின்னே ஓடி, அவனால் பொம்மைகள் போல ஆட்டி வைக்கப்படும் அப்பாவிகள்; தான் ஒருபோதும் அப்படியானவளல்லள்; குரியகாந்தி ஆகமாட்டாள். நந்தியாவர்த்தமாகவே இருக்கின்றவள்
ஆண்கள்.ஓ! பெண்களைத் தமது அடிமைகளாக வைத்து அடக்கி ஆளுகின்ற எஜமானர்கள்
விஜயலட்சுமி எப்பொழுதுமே ஆணிகள் பற்றி இப்படியான சிந்தனையுடன் இருந்து வந்தவளல்லள் மூத்தவளான வரலட்சுமி திருமணமாவதற்கு முன்னர் அவளுடைய சிந்தனைகள் வேறு விதமாகவே இருந்து வந்தன.
வரலட்சுமிக்குத் திருமணம் நடந்தேறிய பிறகு தனது எதிர்காலம் பற்றிய இனிய கனவுகளில் மிதந்தவள் தான் அவள் திருமணமாகாத
தெணியான் 109

Page 57
மரக்கொக்கு
ஒவ்வொரு கன்னிப் பெண்ணைப் போலவும் நினைவுச் சுகத்தில் அவளும் நீந்தித் திளைத்திருக்கின்றாள். தனக்கு வரப்போகின்ற கணவன் இப்படியான ஒரு ஆடவனாகவே இருப்பானென மனதில் உருவகித்து கற்பனை உலகிற் சிறகடித்துப் பறந்திருக்கின்றாள். அவளது இளமனதில் எண்ண அலைகள், அந்தக் காலத்தில் கடிவாளம் இல்லாது கட்டு மீறிப் பறந்திருக்கின்றன. மாலை நேரங்களில் வழிபாடு செய்வதற்காகப் பூசை அறையினுள்ளே புகுந்தாலும் அவள் மனது பக்தி மார்க்கத்திற் சென்று ஒடுங்குவதற்கு மறுத்து அவளை அலைக்கழித்திருக்கின்றது. அவள் வீட்டுப்பூசை அறையினுள் வைத்து, வழிபாடு செய்யும் குமரக் கடவுளின் திருவுருவப் படம் சிலசமயம் அவள் நெஞ்சிற் கிளர்ச்சியை ஊட்டி இருக்கின்றது. குமரக் கடவுளின் யெளவனப் பொலிவும், தேஜஸ2ம் அவள் உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும். அவள் தன்னை ஆண்டாளாக எண்ணி முருகனின் பேரழகிற் தன்னை மறந்து சில சமயம் ஏங்கி நின்றிருக்கின்றாள். -
பச்சைப் பசேல் என்று பரந்து கிடக்கும் மலைக் குன்றுகள்; அந்தக் குன்றுகளிலிருந்து ஊற்றெடுத்துப் பாய்ந்து வரும் வெண்னுரை அருவிகள்; அருவிக்கரை ஓரமெங்கும் மலர்ந்து சிரிக்கும் மலர்க் கூட்டங்கள்; மலர்களுக்கு மத்தியில் பசும் புற்றரையில் மரகதத் தோகை விரித்தாடும் வண்ண மயில், இவைகளைப் பின்னணியாகக் கொண்டு கரத்தினிற் கூர்வேல் தாங்கி நிற்கும் செவ்வேள் தோன்றுகின்றான்.
அவனது கருணை பொழியும் விழிகளிற் காந்தக் கவர்ச்சி மின்னிக்கொண்டிருக்கின்றது. செம்பவள இதழ்களில் மயக்கும் மந்தகாசம் மலர்ந்து கிடக்கின்றது. காளை முருகனின் களை கொட்டும் முகம். இவைகளெல்லாம் அவள் நெஞ்சிற் கிளர்ச்சியை ஊட்டுகின்றன. இந்த வேளையில் அவள் தன் நிலை மறந்து கிறங்கிப்போய் நிற்பாள். முருகன் குமரன்; குமரன் தெய்வம்; அவன் வடிவு தெய்வ வடிவு-தெய்வீக வடிவு. தெய்வீகமான அவன் பேரெழில் வடிவினை சாதாரண மனித இச்சைகளுடன் தரிசிக்கலாமா! அவள் தன் மனதைக் கடிந்துகொண்டு, விழிகளை மெல்ல மூடுவாள். மூடிய அவள் விழிகளுக்குள்ளும் களை சொட்டும் காளை முருகனின் திருவுருவமே தோன்றும்.
நெஞ்சில் ஆவல் மீதுற மீண்டும் அந்த விழிகளை அகலத் திறந்து குமரவேளை உற்று நோக்குவாள்.
இப்படி அவள் கண்ட கனவுகள் அத்தனையும் பொன்னம்பல
110 தெணியான்

, "தாக் 1ᏁᏪᏯ5 கொக்ரீே
மணியகாரன் மறைவினாற் பொய்யாகிப் போயின. அவள் உள்ளம் சிறிது சிறிதாக இறுகி, கல்லாக உறைந்து போயிற்று.
வரலட்சுமி. அன்னலட்சுமி. ஆகிய சகோதரிகள் இருவரும் மணியகாரன் குடும்பத்திற்குச் சம்பாதித்து வைத்துள்ளதாக அவள்கருதும் அபவாதங்களினால் மனம் காயப்பட்டு இன்று குரூரப்பட்டுவிட்டது.
திருமணம் என்பது பெண்களுக்கு விதிக்கப்படும் ஒரு தண்டனை, ஆண்களின் ஆதிக்கத்திற்குள் அடிமைப்படுத்தி வைக்கும் ஒரு தளை என்றே அவள் இன்று கருதுகின்றாள். ஆண்கள் கொடியவர்கள். அன்னலட்சுமி ஆண் ஒருவனிடம் ஏமாந்துபோன ஒரு அடிமை. மணியகாரன் பரம்பரையைத் தலை குனியும்படி செய்துவிட்ட ஒரு அவமானச் சின்னம் அவள்.
அவள் எப்படி மீண்டும் மணியகாரன் வீட்டுக்குள் காலடி எடுத்து வைக்கலாம்?"
விஜயலட்சுமி மனது மீண்டும் எழுப்பிக்கொண்டிருக்கும் இந்த வினாவுக்கு, தகுந்த விடை இல்லை. இப்பொழுது காலை மாலை என்னும் பேதங்கள் அவளுக்கில்லை. எந்த வேளையிலும் அவள் மனம் அலைவது போல அந்த மலர்த் தோட்டத்திற்குள்ளே அவள் சுற்றிக்கொண்டு நிற்கின்றாள். மாலைக் காலத்து மயக்கும் மந்தாரை, மனம் நாடும் துளசியின் நறிய மணம், அவள்தனாகிச் சங்கமிக்கும் நந்தியாவர்த்தத்தின் தூய வெண்மை, இவைகள் எவையும் மனதுக்கு இங்கிதமளிப்பதாக இல்லை. அவளது வெறித்த பார்வைபோல அவள் உள்ளமும் அவளைவிட்டு வெகுதூரம் விலகி எங்கோ அலைந்துகொண்டிருக்க. அவள் உடல் மட்டும் அந்தப் பூந்தோட்டத்துக்குள்ளே சுற்றிக்கொண்டிருக்கின்றது.
அவள் இன்னும் அறிந்துகொள்ளவில்லை மீனலோசனியின் தந்தை தான் அன்னலட்சுமியை இன்று அவள் வீட்டுக்கு அனுப்பி வைக்கின்றார் என்னும் உண்மையை
மீனலோசனியின் தாய் வரலட்சுமி பொன்னம்பல மணியகாரனின் மூத்த பெண் குடும்பத்துச் செல்லப் பெண் அவள் ஒரு குடும்பத்து முதல் குழந்தைக்கு எப்பொழுதும் செல்லப் பிள்ளையாக இருக்கும் அதிர்ஷ்டம் வந்து வாய்த்துவிடுகின்றது. மணியகாரன் காலத்தில் அவள் அநுபவித்த ஐஸ்வரியங்களைச் சொல்லவா வேண்டும்! பொன்னம்பல மணியகாரன் மார்பு மேலும் மடியின் மேலும் வளர்ந்தவள் அவள் அவளது குழந்தைப்
தெணியான் 1 11

Page 58
மரக்கொக்கு
பருவத்தில் அவள் இஷ்டத்திற்கெல்லாம் மணியகாரன்மறுப்பின்றி இசைந்து போனார். அவள் முகம் வாடினால், மணியகாரன் இதயம் வாடும். அவள் மீது ஒரு தூசு விழுந்துபோனால் அவர் நெஞ்சில் ஒரு மலையே வந்து விழுந்தது போலாகும். மணியகாரன் குடும்பத்தில் அவள் ஒரு பெண்ணாக அல்ல. ஒரு பூவாகவே இருந்து வந்தாள்
அந்தக் குடும்பத்தில் இன்றும் அவள் ஒரு குழந்தையாகவே இருக்கின்றாள். திருமணமாகி ஒரு பிள்ளைக்குத் தாயாக இருக்கும் அப்பாவிக் குழந்தை அவள். காலையில் எழுந்துவிட்டால்
வரலட்சுமியின் கணவன் எல்லாவற்றையும் உள்வாங்கி மனதில் வைத்துக்கொண்டு அமைதியாக இருந்துவிடும் அடக்கமான மனிதன். பொன்னம்பல மணியகாரணி இறந்தபோது அந்தக் குடுமீபத்தின் பொறுப்புக்களை ஏற்று நடத்தவேண்டியது தனக்குரிய கடமை என்று
அவர் உணர்ந்திருந்தார். மணியகாரனின் மரணச் சடங்குகள் அவர் எண்ணப்படி நடந்து முடிந்தன. அதன் பிறகு விஜயலட்சுமி முன்வந்து
கட்டளைகளைப் பிறப்பிக்க ஆரம்பித்தாள். மணியகாரனின் அந்தியேஷடிக் கிரியைகள் நடைபெறுவதற்கு இரண்டொரு தினங்களுக்கு முன்னர் விஜயலட்சுமியிடம் தாய் மீனாட்சியம்பாள் கேட்டாள்,
"பிள்ளை விஜயா, கொத்தானையும் கேட்டியோ", "என்ன விஷயம்?" தாயின் கேள்வியை விளங்கிக்கொள்ளாதவள் போல விஜயலட்சுமி பேசினாள்.
இல்லை. இந்த அந்தியேட்டியைப் பற்றி.”
இதைப்பற்றி அவரிட்டைப் போய் என்ன கேட்கிறது?" "அப்பிடிச் சொல்லக்கூடாது பிள்ளை" "அம்மா! எங்கடை தகப்பனுக்கு அந்தியேட்டி செய்யிறதுக்கு அவர் என்ன சொல்லுறது!"
அவர் தானே இப்ப இந்தக் குடும்பத்துக்குத் தலைவர்" விஜயலட்சுமி இதைக் கேட்டுக் கலகல என்று சிரித்தாள். பின்னர் தாயைப் பார்த்து நிதானமாகச் சொன்னாள்
"அம்மா, உனக்கென்னும் எங்கடை குடுமிபப் பெருமை விளங்கயில்லை. அவர் அக்காவின்ரைபுருஷனாக இருக்கலாம். அதுக்காக
112 தெணியான்

மரக்கொக்கு
எங்கடை குடும்ப காரியங்களை அவற்ரை எண்ணப்படி விட ஏலாது”
தாய் மனதுக்கு அவளுடைய எணர்ணம் சரியானதாகத் தோன்றவில்லை. ஆனால் அதுபற்றி அவளுடன் மேலும் பேசிக்கொள்ள விரும்பாமல் மன நெருடலுடன் மெளனமாக விலகி இருந்துவிட்டாள்.
வரலட்சுமியின் கணவன், வீட்டில் நடக்கின்ற காரியங்களை விளங்கிக்கொண்டு, அவரும் மெல்ல விலகி இருந்துகொண்டார்.
மணியகாரனின் அந்தியேஷ்டிக் கிரியைகள் நடைபெற்றபோது வெளியார் குடும்பப் பிளவுகளை விளங்கிக்கொள்ளாதவாறு அவரே எல்லாக் காரியங்களையும் முன்னின்று செய்யும் பாவனையுடன் நடந்துகொண்டார். விஜயலட்சுமியைநினைக்க அவருக்கு உள்ளூரசிரிப்பாக இருந்தது. அவளை அவரால் வெறுப்பதற்கு இயலவில்லை. அநுதாபத்துடன் தான் அவளை நினைத்துப் பார்க்க முடிந்தது. அவள் எதிர்காலம் பற்றிய அக்கறைகள் அவர் மனதைவிட்டு நீங்கிவிடவில்லை. விடுமுறையில் வீட்டுக்கு வரும் சமயங்களில் எல்லாம் மனவிை வரலட்சுமியுடன் அவளைப் பற்றிப் பேசியிருக்கின்றார். அவர் சொன்னவற்றைக் கேட்டு மனம்பூரித்துப்போன வரலட்சுமி தங்கை விஜயலட்சுமியிடம் குதூகலமாக ஒரு நாள் சொன்னாள்
"விஜயா, கொத்தான் உன்னைப்பற்றிக் கதைச்சவர்' "என்ன" விஜயலட்சுமியின் முகம் சட்டென்று மாறிப்போகின்றது. மூத்தவள் வரலட்சுமியினால் தங்கையைப் புரிந்து கொள்ள முடியவில்லை, அவள் தொடர்ந்து கூறினாள்
"அவருக்கு உன்னிலை அக்கறை" "அக்கா, உண்ர புருஷனுக்கு எண்னிலை என்ன அக்கறை?" விஜயலட்சுமி தமக்கையைப் பார்த்துச் சினந்தாள். அப்பொழுதும் வரலட்சுமி சிரித்துக்கொண்டுதான் பேசினாள்
"அவரைத் தவிர வேறை ஆர் உன்னைக் கவனிக்கிறதுக்கு இருக்கினம்!"
சரி. சரி. உந்தக் கதையை விடு. எங்கடை காரியங்களை நாங்கள் பாத்துக்கொள்ளுவம்"விஜயலட்சுமி அந்தப் பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டாள்.
வரலட்சுமி அதன் பிறகு தங்கை விஜயலட்சுமியோடு அதுபற்றி ஒன்றுமே பேசிக்கொண்டதில்லை. ஆனால் தன் கணவனிடம் குழந்தை போல ஓடிப்போய் நடந்தவற்றை எல்லாம் விவரமாக எடுத்துச் சொன்னாள்
தெணியான் 113

Page 59
மரக்கொக்கு
அவர் கவனமாகக் கேட்டுக்கொண்டு வழமைபோல மெல்லச் சிரித்துவிட்டு இருந்தார்.
அவர் இலங்கை வங்கி, கொழும்புக்கிளை ஒன்றில் மனேஜராகப் பணிபுரிந்துவந்தார். கடமையில் கண்ணாக இருக்கும் அதிகாரி அவர் தனிப்பட்ட தனது வழிவிலும் கண்ணியமான மனிதர் வீட்டுக்கு நினைத்த பொழுதிலெல்லாம் விடுமுறையில் வந்து போவது அவருக்குச் செளகரியமாக இருக்கவில்லை. மனைவியையும் குழந்தையையும் தண்னோடு அழைத்துப்போய் கொழும்பிற்குடும்பமாக வாழ்வதற்கு அவர் விரும்பினார். "இஞசார், உன்னையும் பிள்ளையையும் கொழும்புக்குக் கூட்டிக்கொண்டு போகப்போறன்"
"ஏன் கொழும்பு பாக்கவோ வரலட்சுமி அப்பாவித்தனமாகக் கேட்டாள் அவர் சிரித்துக்கொண்டு பதில் சொன்னார்.
ஓமோம், கொழும்பு பாக்கிறதுக்கும் அங்கை இருக்கிறதுக்கும்" "அங்கை இருக்கிறதுக்கோ?" மீண்டும் அவள் கேள்வி "அடிக்கடி லீவுபோட்டுவிட்டு வரேலாது" நான் வறதெண்டால் அம்மா. 2" ஓ. அம்மாவைக் கேட்கத்தான் வேணும், அம்மாவுக்கும் சொல்லு! அம்மா ஒத்துக்கொள்ளுவா"
அதன் பிறகு அம்மா முன்னிலையில் வரலட்சுமி கணவனின் விருப்பத்தை ஒரு தினம் எடுத்துச் சொன்னாள். அப்போது விஜயலட்சுமியும் அன்னலட்சுமியும் அங்கே கூட இருந்தார்கள். அம்மா அவளுக்குச் சட்டென்று பதிலேதும் சொல்லாமல் நீ என்ன நினைக்கிறாய்?" என்று நிதானமாகக் கேட்டாள்.
அவளுக்கு என்ன பதில் சொல்வதென்று அப்பொழுது விளங்கவில்லை. எல்லோருடைய முகங்களையும் பார்த்துப் பார்தது - விழித்துக்கொண்டிருந்தாள். விஜயலட்சுமியின் முகத்தை அடிக்கடி குறிப்பாக நோக்கினாள். விஜயலட்சுமியின் மனக் கருத்தையே அவள் எதிர்பார்த்திருக்கவேண்டும். அந்தச் சமயம் பார்த்து விஜயலட்சுமி வாய் திறந்தாள்.
"அதெப்படிச் சரிவரும்!" அவள் கேள்விக்கு யாருமே பதில் சொல்லவில்லை. அவளே தொடரந்து பேசினாள்
"கண்ட கண்டவர்களோடை எல்லாம் பழகவேணும்; விருந்து
114 தெணியான்

மரக்கொக்கு
கொண்டாடவேணும்; எங்கடை குடும்பத்திற்கு அது சரிவராது."
நாவலர் வகுத்த சமூக நெறிமுறைகளை வேதம் போலப் பேணிப் பின்பற்ற வேண்டுமென்னும் கருத்துள்ளவள் விஜயலட்சுமி, மநு வகுத்த நால் வருணங்களுக்குள் குத்திரர்களுக்குள்ளும் ஒரு சற்குத்திரர்களைக் கண்டு பிடித்தவர் நாவலர் அந்தச் சற்குத்திரர்களான மணியகாரன் பரம்பரை,நாவலர் சொல்லிவைத்ததற்கிணங்க, பிறர் கண்பட உணவுண்பதே சைவத்துக்கும் குல ஆசாரங்களுக்கும் குற்றமான செயல் என்று கருதுகின்றவள், அவள் அவள் சொன்னது கேட்டு அம்மா மெளனமாக இருந்தது போல அன்னலட்சுமியினால் இருந்துவிட முடியவில்லை. அன்னலட்சுமி அப்பொழுது சொன்னாள்
இந்தக் காலத்திலையும் உதுகளைப் பாத்துக்கொண்டு. 0% "வாழேலாது எண்டு சொல்லுறாயாக்கும். நாங்கள் உதுகளைப் பார்க்காமல் வேறை ஆர்பாக்கிறது? விஜயலட்சுமி திரும்பவும் சொன்னாள் "அதுசரி. கொத்தாண்ரை வசதியையுமல்லோ பாக்கவேணும்" என்றாள் மீனாட்சியம்பாள்.
"என்ன வசதி இவ்வளவு காலமும் அக்கா வீட்டிலை தானே இருந்தவ" விஜயலட்சுமி தனது கருத்தை நியாயப்படுத்தினாள்.
"பிள்ளை விஜயா, தமக்கையினரை புருஷன் எணர்டால் தகப்பனைப்போல எண்டுதான் சொல்லுவினம்"
மூத்தவளின் குடும்ப விவகாரங்களில் விஜயலட்சுமிதலையிடுவதை விரும்பாத தாய் மீனாட்சியம்பாள், அதனை நேரிற் சொல்லுவதற்கு இயலாமல் இப்படிச் சுற்றி வளைத்துப் பேசினாள்.
அப்பிடியான குடும்பமல்ல, எங்கடை குடும்பம்" விஜயலட்சுமி விட்டுக்கொடுக்காமல் சற்றுச் சூடாகவே தாய்க்குப் பதில் சொன்னாள்.
"எனக்கேதோ. சரியாகப் படயில்லை" அன்னலட்சுமி சட்டென்று சொல்லிக்கொண்டு மூத்தவள் வரலட்சுமியின் முகத்தை உன்னிப்பாகப் பார்த்தாள். அவள் வாய் திறந்து பேச வேண்டும் என்று அன்னலட்சுமி விரும்பினாள். ஆனால் மூத்தவள் வரலட்சுமி அவர்கள் முகங்களைப் பார்த்துக்கொண்டுதான் இப்பொழுதும் இருந்தாள். தனது குடும்ப விவகாரத்தில் தன்னிச்சையாக ஒரு முடிவெடுப்பதற்கு அவளுக்கு இயலவில்லை.
வரலட்சுமியின் கணவன் திரும்பவும் விடுமுறையில் மூன்று
தெணியான் 15

Page 60
மரக்கொக்கு
தடவைகள் வீட்டுக்கு வந்து போனார். அப்பொழுதும் அவர் கருத்தை மனைவி ஏற்றுக்கொண்டதாகத் தெரியவில்லை. விஜயலட்சுமி மேலாண்மை செலுத்திக்கொண்டிருக்கின்றாள் என்பதை அவர் விளங்கிக்கொண்டுவிட்டார். அதை அவர் விரும்பவே இல்லை. தனது மனைவி தன் எண்ணத்துக்கு இசைந்து வரவேண்டுமென்று பொறுமையோடு அவர் எதிர்பார்த்தார். பாவம் வரலட்சுமி வாழ்க்கை அநுபவங்கள்தானும் இதுவரை அவளுக்கேதும் கற்றுக்கொடுக்கவில்லை. அவளது பாதி வாழ்க்கை வெறுங் கனவுகளில் கழிந்து போய்க்கொண்டிருக்க ஆரம்பித்தது.
வரலட்சுமியின் கணவன் கொழும்பிலிருந்து கடிதங்கள் பல எழுதினார். அவள் ஒவ்வொரு கடிதத்திற்கும் மறுப்புத் தெரிவித்துக் கொண்டிருந்தாள்.
மகள் மீனலோசனியின் எதிர்காலம் பற்றிய எண்ணங்கள் அவர் மனதில் எழுந்து கவலை கொடுக்க ஆரம்பித்தன.
மனைவி மனம் மாறும், அவள் தனது எண்ணத்துக்கு இணங்கி வருவாள் என்று மிகுந்த பொறுமையுடன் காத்திருந்தார்.
ஆண்டுகள் ஒன்று இரண்டாக வளர்ந்துகொண்டு சென்றன. அவள் மனம் மட்டும் மாறவே இல்லை. அவளுடைய வரட்டுப் பிடிவாதம் தளர்ந்து போய்விடவில்லை. அவளுக்கு மேலுந் தொடர்ந்து கடிதங்கள் எழுதிக்கொண்டிருப்பதை அவர் நிறுத்திக்கொண்டார். மாதந்தோறும் பணம் மாத்திரம் ஒழுங்காக வந்து சேர்ந்துகொண்டிருந்தது.
மூன்று ஆண்டுகள் கல்யாணஞ் செய்தும் பிரமச்சாரியாக அவர் வாழ்ந்து முடித்துவிட்டார். அதன் பிறகு நண்பர்களும் உறவினர்களும் அவரை நெருக்க ஆரம்பித்தார்கள் மறுமணத்திற்குப் பெண் பேசிக்கொண்டு வரவும் தொடங்கினார்கள்.
இன்னொரு திருமணம் பற்றி அவரால் நினைத்துப் பார்ப்பதற்கே இயலவில்லை. அந்தப் பேச்சுக் கேட்டு அவர் மனம் கூசினார். அவர் தன் வாழ்வு பற்றிச் சிந்திப்பதை இப்பொழுது ஒதுக்கிவிட்டுவிட்டார். மகள் மீனலோசனி பற்றியே அவர் எண்ணிக்கொண்டிருந்தார். ஒரு பாவமுமறியாத குழந்தையின் எதிர்காலம் பாழாகிப் போய்விடக்கூடாதென்று கவலைப்பட்டார். மகளுக்காக என்ன செய்யலாம் என்று சிந்தித்தபோது. நண்பர்களின் மறுமணப் பேச்சு அவர் உள்ளத்தில் புதியதொரு சிந்தனையைத் தோற்றுவித்தது. அந்த யுக்தி மனைவியின் மனதை நிச்சயம் மாற்றிவிடும் என்றே அவர் நமீபினார். அவர் மறுமணஞ் செய்துகொள்ளத்
116 தெணியான்

மரக்கொக்கு
தீர்மானித்துவிட்டதாகவும், அதற்கு முன்னர் அவளிடமிருந்து விவாகரத்துப் பெற்றுக் கொள்வதற்கான ஏற்பாடுகளைச் செய்துகொண்டிருப்பதாகவும் அவளுக்கு எழுதினார்.
கணவன் போட்ட குண்டினால் வரலட்சுமி கதிகலங்கிப் போனாள் அவள் இதுவரை கண்டுகொண்டிருந்த பாதிக் கனவுகளும் முற்றாகக் கலைந்துபோயின. அப்பொழுது செய்வதென்ன என்று அறியாமல் அவள் திகைத்தாள். மனஸ்தாபத்துடன் கணவனோடு வழிந்துகொண்டிருப்பதாக இதுவரை அவள் எண்ணிக்கொண்டிருந்தாள். கணவன் தனக்கு இல்லையென்று வாழும் வாழ்வை அவளாற் கற்பனை பண்ணிப் பார்ப்பதற்கும் முடியவில்லை. இனிமேல் பிடிவாதத்தைக் கைவிட்டுவிட்டு கணவனின் எண்ணத்துக்கு இணங்கிப் போனால் என்ன. என்று நினைத்துக்கொண்டாள். ஆனால் தானாக வாய் திறந்து இதை எப்படிச் சொல்லலாம்? குடும்பத்திலுள்ளவர்கள் ஏற்றுக் கொள்ளுவார்களா? விஜயலட்சுமி சம்மதிப்பாளா? அவள் திரும்பவும் ஒரு முடிவுக்கு வருவதற்கு இயலாமற் தடுமாறுவதற்கு ஆரம்பித்தாள்.
அப்பொழுது அவள் மனதுக்கு ஆதரவு அளித்தவள் அன்னலட்சுமி "அக்கா நீ அத்தாண்ரை விருப்பம் போலைதான் நடக்கவேணும்" வரலட்சுமி மனதுக்கு அவள் சொல்வது சரியாகவே தோன்றியது. ஆனால் விஜயலட்சுமி இப்பொழுது என்ன நினைக்கின்றாளோ. அதை அறியாமல் எப்படி வாய் திறந்து பேசலாம்!
"எண்ணக்கா யோசிக்கிறாய்! அத்தான் நல்லவர் நீ சம்மதிச்சால் இப்பவும் சந்தோஷமாக உண்னை அவர் ஏற்றுக் கொள்ளுவார்."
அன்னலட்சுமி சொல்வது நியாயமென்றே மீனாட்சியம்பாளும் மனதில் நினைத்துக்கொண்டாள். ஆனால் தன் மனதிலுள்ளதை வெளியே எடுத்துச் சொல்வதற்கு அவள் தயங்கினாள் விஜயலட்சுமி எடுக்கும் முடிவுகள் தான் இப்பொழுது குடும்பத்தின் தீர்மானங்கள் ஆகின்றனவே.
விஜயலட்சுமி என்ன சொல்லப்போகின்றாள்! அவள் சொல்லப்போகும் தீர்வையே எல்லோரும் ஆவலுடன் எதிர்பார்க்கின்றார்கள்
அவள் அதுவரை பொறுமையாக எலலாவற்றையும் அவதானித்துக்கொண்டிருந்துவிட்டு பின்பு நிதானமாகச் சொல்லத் தொடங்கினாள்.
அன்னம், நீ சொல்லுகிறதைச் சிந்திச்சுச் சொல்லு எதுக்கும் உனக்கு அவசரந்தானே. அக்கா அவரோடை போக மாட்டன் எண்டு
தெணியான் 117

Page 61
மரக்கொக்கு
எதுக்காக மறுத்தவள்? இப்ப அதுகளை எல்லாம் தூக்கிக் குப்பையிலை வீசிப்போட்டு அவருக்குப் பின்னாலை போகச் சொல்லுகிறாய். நாங்கள் வீட்டோடை வாழுகிற கெளரவமான குடும்பப் பெண்கள் இது அவருக்குத் தெரியவேண்டாம்? விவாகரத்துச் செய்யப்போகின்றாராம். கோட்டுக்கிழுத்து எங்களை அவமானப்படுத்துகிறதுதான் அவருக்கு நோக்கமீ. இதுகளுக்கெல்லாம் பணிஞ்சு போறதுக்கு நாங்கள் கிள்ளுக் கீரை அல்ல. வெள்ளம் தலைக்கு மேலே போனதன் பிறகு, சாணி போனால் என்ன! முழம் போனால் என்ன!"
வரலட்சுமிக்கு அவள் கணவன் அந்த மாதம் அனுப்பி வைத்த பணத்தை, விஜயலட்சுமி மீண்டும் அவருக்கே திருப்பி அனுப்பிவிட்டாள்.
விஜயலட்சுமி உதயகாலப் பூசைவேளைக்கு முன்னரே ஆலயத்துக்கு வந்திருந்தாள். மாணிக்கத்தினர் பொறுப்பிலி கோயிலிகளைப் பார்த்துக்கொள்ளும்படி விட்டிருந்தாலும், சில சமயங்களிற் திடீரென அவள் அங்கு வந்து நின்று மாணிக்கத்தின் வேலைகளைக் கண்காணித்து, அவருக்குக் கட்டளை இடுவாள். இப்பொழுது மாணிக்கத்தின் மேல் அவளுக்கு உள்ளுர வெறுப்பு வளர்ந்துகொண்டிருக்கின்றது. அவர், கோயிலுக்குள்ளே போய் நின்று கோயிற் காரியங்கள் செய்வதையே, அவள் மனதாற்கடிந்துகொண்டாள் மாணிக்கம் மீதுள்ள அதிருப்தி காரணமாகவோ என்னவோ இருந்தாற்போல இன்று அவள் கோயிலுக்கு வந்திருந்தாள். அப்பொழுது மாணிக்கம் கோயிலுக்கு வந்து சேரவில்லை. உதயகாலப் பூசை நடக்க வேணடிய காலம் கழிந்து போய்க்கொண்டிருக்கின்றது. பூசைகண்டு போக, கோயிலுக்கு வந்தவர்கள் காத்து நிற்கின்றார்கள். பூசை செய்யும் ஐயர், அவள் வரவை எதிர்பார்க்கவில்லை. அவளைக் கண்டதன் பின்பு பரபரப்போடுபூசைக்குரிய காரியங்களை வேகமாக அவர் செய்ய ஆரம்பித்தார். கோயிலிற் பூசை நடந்துகொண்டிருக்கும் தருணந்தான் மாணிக்கம் அங்கு வந்துசேர்ந்தார். அவள் அங்கு நிற்பது கண்டு அவருக்கு திகைப்பாகவே இருந்தது. அவர் எதிர்பார்த்தது போல கோயிற் பூசைகள் முடிந்து, வழிபடுவதற்கு வந்தவர்கள் கோயிலை விட்டு வெளியேறுவதற்கு முன்னரே, அவள் ஐயரை அழைத்தாள் ஐயரோடு சேர்ந்து மாணிக்கமும் அவள் முன் போய்
118 தெ ணியான்

மரக்கொக்கு
நிற்கவேண்டுமென்பது அவருக்குத் தெரியும்.
கொடிக் கம்பத்துக்கருகே அவள் நின்றுகொண்டிருக்கின்றாள் ஐயரும் மாணிக்கமும் அவள் முன் வந்து நிற்கின்றார்கள். அவள் மாணிக்கத்தின் பக்கம் திரும்பாமல், ஐயரின் முகத்தைப் பார்த்துச் சொல்லுகின்றாள்,
"கோயிலை நடத்துறதெண்டால் ஒழுங்காக நடத்த வேணும். இல்லையெண்டால் முடியாதெண்டு சொல்லிப்போட்டுப் போய்விடவேணும். எதிலையும் ஒரு ஒழுங்கிருக்கவேணும்; ஒழுக்கமிருக்கவேணும். அது தவறினால் எல்லாம் பிசகித்தான் போகும்." அவள் சொல்லிக்கொண்டு போகும்போதே தனக்காகத்தான் அதை அவள் சொல்லுகின்றாள் என்பதை மாணிக்கம் விளங்கிக்கொண்டுவிடுகின்றார். பின்னர் பொதுப்படையாகப் பேசும் பாங்கினை மாற்றி ஐயரை நேரடியாக விசாரிக்க ஆரம்பித்தாள்.
ஐயர், உதயகாலப் பூசை எத்தினை மணிக்கு நடக்க வேணும்?" ஐயர் மெளனமாக நிற்கின்றார். வழிபாட்டுக்கு வந்த சிலர் இந்த விசாரணைகளைக் கவனித்துக்கொண்டு விலகி நிற்கின்றார்கள். அவள் ஐயரை விடுவதாக இல்லை.
'ஐயர் சொல்லும்" "ஆறு மணிக்கு." ஐயரின் குரல் தளதளக்கின்றது. "ஆறுமணிக்கே இப்ப பூசை செய்தநீர்?"
"என்ன பேசாமல் நிற்கிறீர்." நீர் உமிமடை நேரத்துக்குப்பூசை செய்கிற இடமல்ல இது பூசை கண்டுகொண்டு, தங்கடை தங்கடை காரியங்களுக்குப் போகவேணுமெண்டு எத்தினை பேர் இங்கை வருவினம். நீர் உரிய நேரத்துக்குப் பூசை செய்யாவிட்டால் அவர்களினிரை காரியங்கள் எத்தினை கெட்டுப் போகுமெண்டது தெரியுமோ..? நீர் இப்பிடித்தான் மற்றக்காரியங்களும் பாக்கிறீர்! இஞ்சை ஆரும் உங்கடை எண்ணப்படி நடக்கேலாது. இன்றைக்கு மன்னிச்சு விடுகிறன். இதுதான் கடைசி முறை. இனிமேல் இப்பிடி நடநீதிரெணடால, நீர் இந்தக கோயிலை விட்டுப் போகவேண்டியதுதான்."
அவள் இறுதியாக எச்சரிக்கை செய்துவிட்டு, கோயிலுக்குள் அங்குமிங்கும் போய்ச்சில இடங்களைப் பார்வையிட்டுக்கொண்டு வீட்டுக்குப் புறப்பட்டுச் சென்றுவிட்டாள்
தெணியான் 119

Page 62
மரக்கொக்கு
மாணிக்கம் காலைப் பூசையின் பிறகு வீட்டுக்குச் செல்ல மனம் வரவில்லை. கோயில் மடத்தில் போய் அவர் படுத்துக்கொண்டுவிட்டார். பொழுது உச்சிக்கு வந்து மதியகாலப் பூசையும் நடந்து முடிந்துவிட்டது. அதன் பிறகு மாணிக்கம் கோயிலிலிருந்து வீட்டுக்குத் திரும்பி வந்துகொண்டிருக்கின்றார். மாணிக்கம் இப்பொழுது மணியகாரன் காலத்து பராக்கிரமசாலி அல்லர் அவர் உடல் நன்றாக ஒடுங்கி மெலிந்து அந்த மெலிவினால் மேலும் நெட்டையாகி உள்வளைந்து கொக்குப் போலத் தோன்றுகின்றார். உடலால் மட்டுமல்ல, உள்ளத்தினாலும் அவர் மிகவும் ஒடுங்கியே போனார். அந்தக் காலம் போல கோயிலில் நின்று அதட்டி உருட்டி அதிகாரம் பண்ணுவதற்கு அவரால் முடிவதில்லை. அப்படி அவர் இன்று செய்ய நினைத்தால் பலருக்கு மத்தியில் அவமானப்பட நேரும் என்பதனை அவர் உணருவார். அதனால் அவர் தன்னையே ஒடுக்கிக்கொண்டுவிட்டார்.
மணியகாரன் குடும்பத்திற்கு வந்துகொண்டிருந்த அற்பசொற்ப வருமானங்களும் இப்பொழுது வெகுவாகக் குறைந்துகொண்டு போய்விட்டன. கோயிலுக்குச் சொந்தமானநிலங்களிற் குடியிருக்கின்றவர்களின் குடும்பங்கள் பெருகப் பெருக தங்கள் இஷ்டம் போலப் புதிய வீடுகள் பல அங்கு நிரந்தரமாகக் கட்டிக்கொண்டுவிட்டார்கள். அந்த நிலங்களிலிருந்து கிடைக்கும் வருமானங்களையும் அவர்களே தமக்குச் சொந்தமாக அநுபவித்துக் கொண்டிருக்கிறார்கள். மணியகாரன் குடும்பத்துக்கு வருடந்தோறும் அவர்களிடமிருந்து குத்தகையாக வந்துகொண்டிருந்த பணத்தையும் இப்பொழுது ஒழுங்காகக் கொடுப்பதில்லை. மாணிக்கத்தினால் அவர்களிடம் குத்தகைப் பணம் அறவிடவும் முடியவில்லை. அவர்களைக் குடியெழுப்பிவிடுவதற்கும் இயலவில்லை.
கோயில்களில் வந்து வழிபடுகின்றவர்கள் கூட்டம் முன்போல இல்லாது இப்பொழுது அருகிப் போய்விட்டது. யாழ்ப்பாணத்துக் கோயில்கள் சில, உரிமை மறுக்கப்பட்ட மக்கள் உள்ளே சென்று வழிபாடு செய்வதற்காகத் திறந்துவிடப்பட்டுவிட்டன. இன்னும் திறந்துவிடப்படாதிருக்கும் ஆலயங்களைப் பகிஷ்கரித்துவிடும் உணர்வினால், இந்த ஆலயங்களுக்கு வருகை தருவதையும் பலர் நிறுத்திக்கொண்டுவிட்டார்கள். அதனால் கோயில் வருமானமும் மிகக் குறைந்து போய்விட்டது.
இவைகளோடு இன்று காலையில் நிகழ்ந்த சம்பவத்தினால் மேலும் மனம் பொருமிக்கொண்டிருந்தார். அந்த வேதனைகளோடு மதியவேளை
120 தெணியான்

மரக்கொக்கு
அவர் செவியில் வந்து விழுந்த செய்தி அவரை முற்றாகக் குழப்பிவிட்டது. அந்தச் செய்தியை ஆரம்பத்தில் அவர் நம்பவில்லை. இப்படிப் பல தடவைகள் வெறும் செய்திகள் வந்து அடிபட்டிருக்கின்றன. ஆனால் எதுவும் நடந்துவிடவில்லை. எல்லாம் பொய் வதந்திகள் எதற்கும் இப்போது ஒருகால் ஆராய்ந்து பார்க்க வேண்டும். மாணிக்கம் ஆவலுடன் கோயிலுக்கு வெளியே வந்தார். வேலன் கோபுர வாசலுக்கு எதிரே இலுப்பை மர நிழலில், பறை மேளத்தை முன்னால் வைத்துக் கொண்டு குந்தியிருக்கின்றான். வேலன் மேல் அவருக்கு எப்பொழுதும் நல்ல நம்பிக்கை உண்டு. மூன்று வேளைகளும் தவறாமல் ஆலயத்துக்கு வந்து பூசைகள் நடைபெறுகின்ற சமயம், பறை மேளம் அடிக்கும் தொண்டன் அவன். நந்தனார் போல நல்ல பக்தன். இறைவனை வழிபடுவதற்குக் கோயிலுக்குள்ளே போகவேண்டுமென்னும் எண்ணமில்லாதவன். அவனுடைய பேரப் பிள்ளைகள் படித்து இன்று நல்ல நிலைக்கு வந்துவிட்டார்கள் ஆனால் வேலன் பழைய வாழிவை மறந்துபோய்விடவில்லை. பேரப்பிள்ளைகள் அவனைத் தடுத்துப் பார்த்தார்கள். அவர்கள் பேச்சை வேலனா கேட்கின்றவன்? அவன் செய்யும் தொண்டு, இன்றும் தொடர்ந்துகொண்டுதான் இருக்கின்றது.
கோயில் மணியமாக இருக்கும் மாணிக்கம் தன்னை நோக்கி வருவது கண்டு, வேலன் பறை மேளத்தை விட்டு மெல்ல எழுந்து, கைகளை மார்பின் மீது குறுக்காகக் கட்டிக்கொண்டு குறுகிப்போய் நிற்கின்றான்.
"என்ன வேலன், சுகமா இருக்கிறியா?" வயதில் பல ஆண்டுகள் மூத்தவனான வேலனை மாணிக்கம் சம்பிரதாயமாக விசாரிக்கின்றார்.
"ஏதோ ஐயா புண்ணியத்திலை இருக்கிறன்!" "அது சரி வேலன், ஒரு கதை அடிபடுகுது உண்மையே?" ஒமையா நானுந்தான் கேள்விப்பட்டனான்" "எண்ணெண்டு?" இந்தத் திருவிழாவுக்கு கோயிலுக்குள்ளை போகப்போகினமாம்" மாணிக்கம் சற்று நேரம் எதுவுமே பேசவில்லை. மெளனமாக நின்றுவிட்டு திரும்ப அவர் கேட்கிறார்.
"எங்க அறிஞ்ச நீ?" "அது ஐயா." என்று சொல்லிக்கொண்டு "கிகிகி.." என்று பொக்கை வாய் திறந்து சிரிக்கிறான் வேலன். அந்தச் சிரிப்பில் அவருக்கு
தெணியான் 12.

Page 63
மரக்கொக்கு
விளங்கிவிடுகின்றது. கள்ளுக் குடிப்பதற்குச் சென்ற இடத்தில் அவன் அறிந்திருக்கவேண்டும். அந்த இடத்தைத் தட்டித் தவறித்தானும் அவர் முன்னிலையில் இப்பொழுது அவன் சொல்லமாட்டான். அவ்வளவு நிதானம் அவனுக்கு அவன் சொல்லும் தகவல் பொய்யாக இருக்காது. அவனிடம் விடைபெற்றுக்கொண்டு திரும்பும்போது மாணிக்கம் மனம் பதறத் தொடங்கிவிட்டது. இப்பொழுது என்ன செய்யலாம்? தாழ்த்தப்பட்டவர்கள் கோயிலுக்குள்ளே நுழையாதவாறு எப்படி அவர்களைத் தடுக்கலாம்? மாணிக்கம் சிந்தித்துச் சிந்தித்து இறுதியில் மணஞ் சோர்ந்து வீடு நோக்கி வந்துகொண்டிருந்தார்.
அவர் கோயிலிலிருந்து புறப்பட்டு பிரதான வீதிக்கு வந்துவிட்டால், கூடவே ஒரு பதற்றமும் அவருக்கு வந்துவிடுகின்றது. அந்த வீதியை அவர் கடந்து செல்வது ஒரு நச்சுப் பாம்பைத் தாண்டுவது போலவே அவருக்குத் தோன்றுகிறது. தினமும் இந்த வீதியைத் தாண்டிச் செல்வது அவருக்கொரு சித்திரவதை, அவர் கோயிலிலிருந்து வந்து இந்த வீதியில் மிதக்கும்போது அவரை அறியாமலே அவர் பார்வை அந்தோனி வீட்டுப் பக்கம் திரும்பும். அப்பொழுது அந்தோனி, வீட்டுப் படலையிற் காணப்படாதுவிட்டால் அவர் நிம்மதியாகப் பெருமூச்சு விட்டுக்கொள்ளுவார். காலை நேரங்களில் அந்தோனி கடலுக்குப் போய்விடுவான். மாலையில், பகலெல்லாம் குடித்த கள்ளின் போதை தெளியாமல் எங்காவது படுத்துக் கிடப்பான். மதிய வேளைகளில்தான் அவனுடைய தொல்லைகள் போதை கொடுக்கும் மயக்கம் தலைக்கேறிவிட்டால் அவன் நிச்சயம் அவரைச் சீண்டாமல் விட்டுவிடுவதில்லை. ሥ
மாணிக்கம் இப்பொழுது வீதியில் மெல்ல வந்துகொண்டிருக்கின்றார். அந்தோனியின் வீடு கடற்கரை மணலில் வீதியோரமாக இருக்கின்றது. அந் தோனி வீட்டுப் படலையில் அமர்ந்து ○s ? ól) பொத்திக்கொண்டிருக்கின்றான். அவனுக்கு முன்னால் கள்ளுப் போத்தல் ஒன்று இருக்கின்றது. அதன் அருகே ஒரு கிளாஸில் கள்ளை ஊற்றி வைத்திருக்கின்றான். அவன் வாயில் பீடி புகைந்துகொண்டிருக்கின்றது. அவன் தலை குனிந்து வலையில் நூலைக் கோத்து பின்னர் கையை மேலே தூக்கிநூலை இழுக்கும்போது நிமிர்ந்த பார்வையில் மாணிக்கத்தைக் கண்டு விடுகின்றான். அவரைப் பார்த்ததும் அவனுக்கு குஷி பிறந்துவிடுகின்றது.
மாணிக்கத்திற்கு இப்பொழுது நெஞ்சு படபடக்கின்றது. கால்கள்
122 தெணியான்

மரக்கொக்கு
பின்னுகின்றன.
அந்தோனி வாயில் புகைந்துகொண்டிருக்கும் பீடியைக் கையில் எடுத்து, அருகேயுள்ள சிறிய கல்லின்மேல் அதை வைக்கின்றான். தொண்டையை ஒரு தடவை கனைத்து விட்டுக்கொண்டு தலையை ஆட்டி ஆட்டிப் பாடுவதற்கு ஆரம்பிக்கின்றான்.
'மாடு தின்னும் புலையா. உனக்கு மார்கழித் திருநாளோ!-எட
மாடுதின்னும் புலையா. உனக்கு மார்கழித் திருநாளோ!" அவன் மனவிை திரேசம்மாவுக்கு விளங்கிப் போய்விடுகின்றது. அவள் அடுக்களைக்குள் இருந்து அவனுக்குக் குரல் கொடுக்கின்றாள்.
"என்னப்பா பாட்டு ஒரு மனிஷன் மாஞ்சாதி தெருவாலை வழியாலை போக நீ விடமாட்டாய்"
அவள் உணர்மையில் அவர்மீது அநுதாபப்பட்டு அவனைக் கண்டித்துப் பேசுகின்றாளா? அல்லது மெல்லத் தனகிவிட்டு வேடிக்கை பார்ப்பதற்கு விரும்புகின்றாளா? இதில் எது என்பதை இனங்கண்டுகொள்ள முடியாதவாறு, அவள் குரல் செல்லம் கொஞ்சுகின்றது.
மாணிக்கத்திற்கு நெஞ்சு கொதிக்கின்றது. தோள்மீது போட்டிருக்கும் சால்வையை இழுத்து உடலை இறுகப் போர்த்து மூடிய வண்ணம் தலை குனிந்து அந்தோனியைக் கடந்து போய்க்கொண்டிருக்கின்றார்.
அந்தோனி கிளாஸைக் கையில் எடுத்து இரண்டு மிடறு கள்ளை உள்ளே விழுங்கிவிட்டு, மீண்டும் கீழே வைக்கின்றான். பீடியைக் கையில் எடுத்து உதட்டில் வைத்து உள்ளே இழுத்து, மூக்கினாற் புகையை வெளியே கக்கியவாறு அவன் பேசுகின்றான்.
"எடி திரேசு. உனக்கென்னடி தெரியும் இது காங்கேசன்துறை வயிரமுத்தன்ரை நந்தனார் நாடகத்துப் பாட்டெடி! அவன் மேடைக்கு வந்து பாடினான் எண்டால். ஐயோ. எப்பிடி இருக்கும் தெரியுமோ!" அந்தோனி தொடையின் மேற் கையினால் தாளம் போட்டு, நாடக நடிகன் போலத் தலையை ஆட்டி அசைத்து திரும்பவும் பாடுவதற்கு ஆரம்பித்தான்.
'மாடு திண்னும் ." அவன் கட்டைக் குரல் கம்மிக் கரகரத்து எழுகின்றது. ஆ. நீ நாடகம் ஆடினது போதும், பேசாமல் இரு!" திரேசம்மா உள்ளே இருந்து சொல்லுகின்றாள். "பேசாமல் இருக்கட்டுமோ! உனக்கென்னடி தெரியும் திரேசு செம்மறி
தெணியான் 123

Page 64
மரக்கொக்கு
ஆடு சுட்டு என்னோடை கள்ளுக் குடிச்சவன் இப்ப பெரிய சைவம்; ஒரு நாள் உவனும் நானும் போட்டிக்குக் கள்ளுக் குடிச்ச நாங்களெடி! நாங்கள் வாயிலை பிளாவை வைச்சுக்கொணடிருக்க, ஒருதன் கள்ளை ஊத்திக்கொண்டிருந்தான். வாயை வைச்சு மூச்சுவிடாமல் இழுக்க வேணும்; நான் தோத்துப் போனனெடி, எண்ரை திரேசு உவனுக்குத்தான்ரி வெற்றி கள்ளுக் கொள்ளாத வயிறுமில்லை; முள்ளுக் கொள்ளாத வேலியுமில்லை எண்டு அணிடைக்கு உவன் காட்டிப்போட்டான். இப்ப எண்ணெண்டால் உவர் பெரிய சைவம், நாங்கள் வேதம். உவையளெல்லாம் தமிழர் இணர்டைக்குக் கள்ளுக் கோப்பிரேஷனிலை கதைச்சாங்கள். கோயிலுக்குள்ளை போகப்போறாங்களாம். நான் அவங்கடை பக்கந்தான். உவர் என்ன செய்யப்போறார் பாப்பம்!"
அந்தோனியின் நையாண்டிப் பேச்சுக்களைக் கேட்டு வீதியில் போய்க்கொண்டிருக்கின்றவர்கள், தமக்குள்ளே நகைத்துக்கொண்டு செல்கின்றார்கள்.
அந்தோனி நேருக்கு நேர்மாணிக்கத்தை நையாண்டி பண்ணுகின்றான். அதைக் கேட்டு எந்தவொரு தமிழருக்கும்' ரோசம் வரவில்லை-அவனைத் தட்டிக் கேட்கவில்லை என்ற வேதனையுடன் மாணிக்கம் வீடு வந்து சேர்ந்தார்.
மாணிக்கம் அங்கே வந்து சேர்ந்ததும் முதல் வேலையாக ஆலயப் பிரவேசம் பற்றிய செய்தியை அவர்களுக்கு எடுத்துச் சொன்னார். அந்தச் செய்தியைக் காலந் தாழ்த்தி அவர் சொல்லப்போனால் விஜயலட்சுமியின் கோபத்திற்கு ஆளாகவேண்டி நேரும். மணியகாரனின் குடுமிபத்தவர்கள்தான் கோயிலுக்குச் சொந்த ககாரர்கள். கோயிற் தகராறுகளை அறியவேண்டியவர்களும் அவர்கள்தான். மாணிக்கம் தனக்குள்ளே இவ்வாறு எண்ணிக்கொண்டார்.
மாணிக்கம் சொன்ன செய்தி கேட்டு அவர்கள் விசனத்துடன் பலவிதமாக யோசித்தார்கள்.
ஆனால் விஜயலட்சுமி பொறுமை இழந்து கொதித்தெழுந்தாள். அன்னலட்சுமியின் கடிதத்தோடு அன்று வந்திருந்த இன்னொரு கடிதம், இப்பொழுது அவள் நினைவுக்கு வருகின்றது. அந்தக் கடிதம் போல அண்மைக் காலத்தில் இன்னும் சில கடிதங்கள் வந்திருக்கின்றன. அவைகளெல்லாம் வெறும் மிரட்டற் கடிதங்கள். அந்தக் கடிதங்களைப் போலத்தானி இதுவும் இருக்குமென்று அவள் அலட்சியமாக
124 தெணியான்

மரக்கொக்கு
இருந்துவிட்டாள். இப்பொழுது தெரிகின்றது அது வெறும் மிரட்டலல்ல, ஆலயப் பிரவேசம் செய்யத்தான் போகின்றார்களாம். கோயில், மணியகாரன் குடும்பத்துக்குச் சொந்தமானது. அது பொதுச் சொத்தல்ல. அவர்கள் சம்மதம் இல்லாது கோயிலுக்குட்பிரவேசிப்பதற்குத் தாழ்த்தப்பட்டவர்களுக்கு என்ன உரிமை இருக்கின்றது? அதற்கு ஒருபோதும் அநுமதிக்க இயலாது. உயிரைக் கொடுத்தேனும் அவர்கள் உள்ளே நுழைவதைத் தடுத்தாகவேண்டும். அதை இப்போது செய்வது எப்படி? மாணிக்கந்தான் இந்தத் தருணத்தில் விறுவிறுப்பாகக் கருமமாற்ற வேண்டும். ஆனால் அதற்குரிய சதுரியங்கள் மாணிக்கத்திடம் இல்லை. கோயில் மணியம் எண்றொரு பெயர் மாத்திரந்தான் அவருக்கு மணியகாரன் பரம்பரைக்குரிய திறமைகள், சாதுரியங்கள் எல்லாம் இந்த மாணிக்கத்திடம் எப்படி வரக்கூடும்?
சிதம்பரப்பிள்ளை மணியகாரன் காலத்தில் ஒரு சம்பவம். மணியகாரனின் கோயிலில் கந்தசஷ்டி நோன்புகாலப் பூசைகள் விசேஷமாக நடைபெறும் முருகன் அடியார்கள் ஏராளமாக ஆலயத்துக்கு வருவார்கள் தொண்டைமானாறு செல்வச் சந்நிதி போல கண்ட சாதிகளாலும் அகுசப்படாத ஆலயம் இது ஆசார சீலர்களான இறுக்கமான சைவர்கள் எல்லோரும் மணியகாரனின் கோயிலுக்கே வழிபாட்டுக்கு வருவார்கள் இங்குதான் விரதம் அனுஷ்டிப்பார்கள். கந்தசஷ்டி என்பது இந்துக்களின் மிகக் கடுமையான ஒரு விரதம் தினமும் மாலைப் பூசை முடிந்த பிறகு மூன்று மிளகுகளை வாயிற் போட்டு விழுங்கிவிட்டு ஆறு தினங்களும் சிலர் உபவாசம் இருப்பார்கள். வேறு சிலர்பூசைகள் முடிந்து கோயில்களில் வழங்கப்பெறும் தீர்த்தத்தை வாங்கி ஒரு நேரம் குடித்து விரதமிருப்பார்கள் வயோதிபர்கள், நோயாளர்கள் சோறு படைத்து ஒரு நேரம் உணவு உண்பார்கள். சோறுகாரர் ஆலயத்துக்கு வந்து, மாலைப் பூசையை முடித்துக்கொண்டு வீடுகளுக்குத் திரும்பிச் சென்றுவிடுவது வழக்கம். ஏனைய விரதகாரர்கள் அனைவரும் ஆலயத்திற் தங்கி, கந்தசஷ்டி கவசம், முருக தோத்திரங்கள் என்பவைகளைப் பாடித் துதித்தவண்ணம் இருப்பார்கள் ஆறாவது தினம் சூரசம்மாரம் முடிந்த பிறகே தத்தமது இல்லங்களுக்குத் திரும்பிச் சென்று பாரணம் பணிணி அதன் பிறகு வீட்டிற் தங்குவார்கள்
தாழ்த்தப்பட்டவர்களில் சிலர் மணியகாரனின் ஆலயத்தில் வந்து விரதம் அநுஷிடிப்பதும் உண்டு. கந்தசஷ்டி விரதம் ஐப்பசி மாதத்துப் பூர்வபக்கப் பிரதமையில் ஆரம்பித்து சஷ்டித்திதியில் நிறைவுபெறும்.
தெணியான் 125

Page 65
மரக்கொக்கு
இந்தக் காலத்தில் மாரி மழை ஆரம்பமாகிவிடும். அந்த மழை, விரதம் அநுஷ்டிக்கும் அடியார்களின் உடற் களையைப் போக்குவதற்காக முருகன் அருள்கூர்ந்து மாரியாகப் பொழிகின்றதென அடியார்கள் தமக்குட் பேசிப் பரவசப்பட்டுக்கொள்வார்கள். முருகனின் இந்த அருள் வெள்ளம் தாழ்த்தப்பட்டவர்களுக்குத்துன்பத்தை விளைவிக்கும். மழை பெழிந்தாலும் அவர்கள் ஆலயத்துக்குள் வந்து ஒதுங்க இயலுமா? மடங்களுக்குள்ளும் அவர்கள் அநுமதிக்கப்படமாட்டார்கள் மரங்களுக்குக் கீழ் ஆறுதினங்களும் இரவு பகலாகத் தங்கி இருக்கும் அவர்களுக்கு, மழை பொழிய ஆரம்பித்துவிட்டால் போக்கிடம் ஏதுமில்லை. ஒவ்வொரு ஆண்டும் அவர்கள் மழையில் நனைந்து கொடுகுவதே அவர்களுக்கு விதியாகிப்போனது. இந்தத் துன்பங்களை இனிமேலும் தொடர்ந்து அனுபவிக்க இயலாதென்ற நிலையில் தங்களுக்கென்று ஒரு புகலிடம் தேடிக் கொள்ள அவர்கள் விரும்பினார்கள். மடம் ஒன்றைக் கட்டிக்கொண்டுவிட்டால் இந்தக் கஷ்டங்கள் நீங்கிவிடும் என்று ஒவ்வொரு வருடமும் தவறாமல் அவர்கள் நினைத்துக் கொண்டார்கள்
தாழ்த்தப்பட்டவர்கள் பூசலார் நாயனார் போல தங்கள் மனங்களில் மடம் ஒன்று கட்டி முடித்துக்கொண்டுவிட்டார்கள். ஆனால் அதற்குச் செயல் வடிவம் யார் கொடுப்பது? ஆலயத்துக்கு வெளியில் தானும் ஒரு காவடி கரகம் எடுத்து வந்து நேர்த்திக் கடன் முடித்து இறக்குவதற்கு அனுமதி அளிக்காத ஆலயம் அது உற்சவ காலங்களிற் திருவிழாக் காண வரும் தாழ்த்தப்பட்டவர்களை கயிறு கட்டி ஒதுக்கியிருத்தி, பஞ்சமர்களுக்குப் பிரத்தியேக இடம் வழங்கும் கோயில் அது அங்கே தாழ்த்தப்பட்டவர்கள் மடம் ஒன்று கட்டுவதற்கு எண்ணலாமா?அப்படிக் கட்டுவதற்கு அங்கே அநுமதி அளிப்பார்களா? அவர்களுக்குச் சந்தேகமாகவே இருந்தது. எதற்கும் மணியகாரனை அணுகிப் பார்ப்போம் என்று சிலர் துணிந்துவிட்டார்கள் ஒருதினம் மணியகாரனைச் சந்தித்துப் பேசுவதற்காக அவரது விடுவரை அவர்கள் சென்றார்கள்.
ஐயா. ஐயா. வீட்டுக்கு வெளியே நின்று அவர்கள் குரல் கொடுத்தார்கள்
மணியகாரன் வந்து வீட்டு வாசலில் பிரசன்னமானார். மணியகாரனுக்கு மரியாதை செய்வதற்கென்றே கையில் வைத்துக்கொண்டு நின்ற மேற் துண்டை அரையிற் கட்டிக்கொண்டு கைகளைக் கட்டிக் கூனிக்குறுகி நின்றார்கள்
126 தெணியான்

மரக்கொக்கு
மணியகாரன், அவர்கள் தனக்குக் கொடுக்கும் மட்டுமரியாதைகளைக் கண்டு உள்ளே மகிழ்ந்தவண்ணம்,
"என்ன மக்கள்?" என ஆதரவாக வினவுகின்றார். அவர்கள்மணியகாரனுடன் பேசுவதற்குத்துணிந்து வந்துவிட்டார்கள் ஆனால் பேசுவதற்கு நா எழ மறுக்கின்றது. ஒருவர் முகத்தை ஒருவர் இப்போது பார்த்துக்கொண்டு நிற்கின்றார்கள். மணியகாரனுக்கு வலு திருப்தி அவர்களுடைய பயபக்தியை தனக்குள்ளே மெய்ச்சிக்கொண்டு
"சொல்லுங்கோ..!" என உற்சாகப்படுத்தினார். அவர்களுள் ஒருவனாக வைத்தியன் சிலம்பனும் வந்திருந்தான். வைத்தியன் என்பதால் அவனுக்குப் பிரத்தியேகமான ஒரு மதிப்புண்டு. அவனே விஷயத்தை வெளியே சொல்லவேண்டுமென்று மற்றவர்கள் விரும்பினார்கள். அதனால் அவன் முகத்தையே எல்லோரும் குறிப்பாக நோக்கினார்கள். சிலமீபனும் அதைப் புரிந்துகொண்டுவிட்டான். மணியகாரனிடம் வந்த காரியத்தை தானே எடுத்துச் சொல்ல வேண்டுமென்பதை அவன்தீர்மானித்துவிட்டான். கச்சேரிஆரம்பிக்கப்போகும் சங்கீத வித்துவான் தொண்டையை மெல்லச் செருமிவிட்டுக்கொள்வது போல வைத்தியன் ஒருமுறை செருமிக்கொண்டு,
ஐயாவைக் காண." என்று மாத்திரம் பவ்வியமாகச் சொல்லி நிறுத்திக்கொண்டான்.
மணியகாரனுக்கு உள்ளே சிரிப்பு மூண்டது. அதை வெளியே அவர் காட்டிக்கொள்ளாது "என்ன சங்கதி?" என்றார் மீண்டும்.
மணியகாரன் அக்கறையுடன் விசாரிப்பது கண்டு வைத்தியனுக்கு இப்பொழுது சற்றுத் தெம்பு வந்திருக்கவேண்டும். அவன் பணிவாக மெல்லச் சொன்னான்.
ஐயா, நாங்கள் கந்தசட்டி விரதக்காரர்" φιαπαιτα. அது எனக்குத் தெரியும் மக்கள்." "விரதகாலத்தில் நாங்கள் தங்கியிருக்க ஒரு இடமில்லை ஐயா!" ஒ. ஒ. உங்களுக்கு ஒரு மடம் வேணுமெண்டு கேக்கிறியள்; அப்பிடித்தானே! உங்கடை கஷ்டம் எனக்கு விளங்கும். எனக்கும் அந்த எண்ணம் மனத்திலை இருந்தது. எதற்கும் நீங்களாக வந்து கேட்கவேணும் எண்டுதான் பொறுமையாக இருந்தனான். அதுதானே முறை என்ரை மனத்திலை அந்த எண்ணம் இருந்தபடியால் தான் நீங்கள் மடம் எண்டு சொல்ல முன்னம் நான் சொல்லிப்போட்டன், கண்டியளோ. எனக்கெல்லாந்
தெணியான் 1.27

Page 66
மரக்கொக்கு
தெரியும். அதுசரி மக்கள். நீங்களாக மடங் கட்டப்போறியளே!. அல்லது நான் கட்டித் தரவேணுமோ!"
மடம் என்ற பேச்சுக்கே இடமில்லை என்று மணியகாரன் விரட்டிவிடக்கூடுமென்று எண்ணிக்கொண்டு வந்தவர்கள், அவர் ஆதரவு கொடுத்து இப்படிக் கேட்பார் என்று எதிர்பார்க்கவே இல்லை. இவ்வளவு நல்ல மனம் படைத்த மணியகாரனிடம் மடத்தைக் கட்டித் தரும்படியா கேட்பது?
"ஐயா மடங்கட்ட இடந் தந்தால் போதும்" என்றான் வைத்தியன். "அப்ப." நாங்கள் கட்டிக்கொள்ளுவமாக்கும்" "சரி மக்கள், உங்களுக்கும் பொருத்தமான ஒரு இடம் வேணும்" சொல்லிக்கொண்டு மூக்கின் மேல் விரலை வைத்துச் சிந்தித்துப் பார்ப்பது போலப் பாவனை செய்துகொண்டு பிறகு சொன்னார், "மக்கள், வடமேற்கு வீதியிலை தெருவோரமாக நீங்கள் ஒரு மடத்தைக் கட்டுங்கோவன்
"சரி ஐயா" மரந்தடி ஏதாயினும் வேணுமெண்டால் என்னைக் கேளுங்கோ" ஐயாவுக்கு நாங்கள் கரைச்சலி வைக்கமாட்டம்" "சரி சரி ஏதோ உங்கடை எண்ணம்" . இவ்வளவு எளிதாக மணியகாரன் சம்மதித்து விடுவார் என்று அவர்களால் நம்பவே முடியவில்லை. அவர்களுக்கு அப்பொழுது உண்டான பரவசத்தினால் மணியகாரனைத் தெய்வமாக எண்ணிப் பணிந்தார்கள் கைகூப்பி வணங்கினார்கள் மணியகாரனை நோக்கி "வாறமையா. வாறமையா." என்று தனித்தனியே சொல்லிக்கொண்டு மணியகாரனின் பெருந் தன்மையையும், முருகன் திருவருளையும் எணிணி வியந்தவண்ணம் அங்கிருந்து விடைபெற்றுச் சென்றார்கள்
மணியகாரன் குறித்துவிட்ட நிலத்தில் மடம் கட்டும் வேலைகள் விரைவாக ஆரம்பமாயின.
அப்பொழுதுதான் மணியகாரன் பகுதியார் விழித்துக்கொண்டார்கள் இதுவரை நடக்காத ஒரு காரியம் நடப்பது கண்டு வெகுண்டெழுந்தார்கள் மணியகாரனைத் தேடிப் போய்ச் சந்தித்தார்கள்
"என்ன வேலை செய்திருக்கிறியள்? "என்ன சங்கதி" மணியகாரன் மெல்லச் சிரித்து ஒன்றுமறியாதவர் போலப் பாவனை பணிணினார்.
128 தெணியான்

மரக்கொக்கு
இதுவரை காலமும் இல்லாத வழக்கம். மடங்கட்டுகிறாங்கள்." மணியகாரன் திரும்பவும் சிரித்துக்கொண்டார். இணிடைக்கு மடம். பிறகு மடத்திலை இருக்கிறவன் குளிக்க 9Cl5 கிணறு அதுக்குப் பிறகு மடத்திலை அன்னதானம். இப்பிடியே போனால் எங்களை மதிப்பானிகளே!"
"கொஞ்சம் பொறுங்கோ." என்றார் மணியகாரன் "எண்னத்தைப் பொறுக்கிறது" என்று திமிறினார்கள் மணியகாரன் அப்பொழுதும் நிதானம் இழந்துவிடாது பேசினார். "அவன்களோடை வீணான சோலி சுறட்டுகள் வேண்டாம். அவன்கள் தாங்களாகவே விட்டிட்டுப் போய்விடுவங்கள்."
"சரி உங்கடை சொல்லுக்காக நாங்கள் பொறுத்திருக்கிறம்" நல்லது, எல்லாம் நான் கவனிச்சுக்கொள்ளுறன்.நீங்கள் அமைதியாக இருங்கோ' மணியகாரணி அவர்களைச் சமாதானம் பணிணி அனுப்பிவைத்தார்
தாழ்த்தப்பட்டவர்கள் மடத்தைக் கட்டியெழுப்பும் வேலைகள் மும்முரமாக நடந்துகொண்டிருந்தன. அந்த மடத்துக்குச் சீமெந்தினால் தளம் போட்டு, சுற்றிவர ஒரு சாணி உயரம் சீமெந்துக் கல்லினால் ஒட்டுப் பிட்டி வைத்துக் கட்டினார்கள். அதன் கூரையைக் கிடுகுகளினால் வேய்ந்து முடித்தார்கள் சமீபிரதாய பூர்வமாக அந்த மடத்தினுள் புகுவதற்கு ஒரு நல்ல நாள் பார்த்துக் குறித்துக்கொண்டார்கள். அவர்கள் தீர்மானித்திருந்த தினத்திற்கு முதன் நாள் மணியகாரனிடம் சென்று ஐயா, நீங்களும் அதிலை ஒருக்கால் வரவேணும்" என்றுகும்பிட்டுக் கேட்டுக்கொண்டார்கள் "அவர்கள் வந்து பணிவோடு விடுத்த வேண்டுகோளை மணியகாரன், பெரிய மனது வைத்து ஏற்றுக்கொண்டார். உரிய நேரத்துக்கு அங்கு வருகை தருவதாக அவர்களுக்கு வாக்குக் கொடுத்துவிட்டார்.
பொழுது விடிந்துவிட்டால் தாழ்த்தப்பட்டவர்கள் கட்டி முடித்திருக்கும் புதிய மடத்தில் அவர்கள் பிரவேசம்.
அந்த இரவு சிலம்பணுக்கும் அவனைச் சேர்ந்தவர்களுக்கும் உறக்கம் பிடிக்கவில்லை. பலார் பற்றி விடிவதற்கு முன்னம் படுக்கையிலிருந்து எழுந்து உற்சாகமாகக் கோயில் வீதிக்கு வந்து சேர்ந்தார்கள்
அப்பொழுது அவர்கள் கட்டி முடித்த அந்த மடம் எரிந்து தணிந்து சாம்பலாக நீறிக்கொண்டிருந்தது!
அதன்பிறகு மடம் பற்றிஇன்றுவரை அவர்கள் பேச்சே எடுக்கவில்லை.
தெணியான் 129

Page 67
மரக்கொக்கு
சிதம்பரப்பிள்ளை மணியகாரனுக்கு அவர் மைந்தனான பொன்னம்பல மணியகாரன் இந்த விஷயங்களில் சளைத்தவரல்லர் பொன்னம்பல மணியகாரன் காலத்தில் அரசாங்கத்திற்கு நெருக்குதல்கள் அதிகரித்து ஆலயப் பிரவேச விசாரணைக் கொமிஷன் ஒன்றை அது நிறுவியது. அந்தக் கொமிஷன் முன், மணியகாரன் தோன்றி பலரும் பாராட்டத்தகுந்த வணிணம் சாட்சியம் அளித்தார்.
இவர்கள் முற்பிறப்பில் செய்த பாவம் காரணமாகவே இப்பிறப்பிற் தாழ்ந்த சாதியாராக வந்து பிறந்திருக்கின்றார்கள் ஆலயங்களுக்குள்ளே பிரவேசிக்கக் கூடாதென்று இவர்களைத் தடுப்பது நாங்களல்ல, நாங்கள் வெறும் கருவிகள் எல்லாவற்றையும் ஆட்டிவைக்கின்றவன், இறைவன். அவன் இன்றி ஓர் அணுவும் அசையாது. இவைகளுக்கெல்லாம் காரணமாக அவன் பிராப்தத்தை வைத்துள்ளான். இவர்களுடையதாழிந்த நிலைக்குக் காரணம் இவர்களது பிராப்தம், இந்துக்கள் பிராப்த கனிமத்தை ஏற்றுக்கொண்டுதான் ஆகவேண்டும். இவர்களுடைய பிராப்தத்தின்படி கோயிலுக்குட் பிரவேசிக்கக்கூடாத சாதியாக இறைவன் இவர்களைப் படைத்திருக்கின்றான். இவர்களுக்கு இதுதான் இறைவன் விதித்த விதி நாங்கள் இறை நம்பிக்கை உடையவர்கள். நாங்கள் நிரீச்சுரவாதிகள் அல்லர், நாங்கள் விதியை மீறி நடப்பதற்கு இயலாது."
அவர் முன்வைத்த கருத்துக்களுக்கு எதிர் நியாயம் சொல்ல யாராலும் முடியவில்லை.
அந்த விசாரணைக் கொமிஷன் இறுதியில் வந்த சுவடு தெரியாமல் மெல்ல மறைந்து போகவேணடி நேர்ந்தது. مي
மணியகாரன் யானையைப் போல அவரை இம்சைப்படுத்தியவர்களை மறந்துபோய் விடுவதில்லை, சில ஆண்டுகளுக்கு முன்னர் கோயிலில் பலர் முன்னிலையில் அவர் நெஞ்சிலி கை வைத்தானே, அவனைப் பழி வாங்குவதற்குத் தகுந்த தருணம் வருகின்றவரை மணியகாரன் காத்திருந்தார். நன்றாகத் திட்டமிட்டுச் சாதித்துங் காட்டினார்.
அந்த வாலிபனுக்கும் மணியகாரன் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருத்திக்குமிடையே இரகசியமான தொடர்பு இருந்துவந்தது. மணியகாரன் பகுதியார் தங்களை விடக் குறைந்த ஒரு சாதிக்காரன் தங்கள் பகுதிப் பெண்ணோடு தொடர்பு வைத்துக்கொண்டிருப்பதை அறிந்து கொதித்தார்கள் அந்தப் பெண்ணைத் தண்டித்துத் துன்புறுத்தினார்கள். அப்பொழுதும் அவள் தனக்கு அவனோடுள்ள உறவுகளை அறுத்துக் கொள்ளவில்லை.
130 தெணியான்

மரக்கொக்கு
அதன் பிறகு, அந்த வாலிபன் பக்கம் அவர்கள் கவனம் திரும்பியது. அவனைப் பல தடவைகள் எச்சரித்துப் பார்த்தார்கள். அவர்களை அவன் பொருட்படுத்தவே இல்லை.
இந்தச்சமயம் ஊருக்குள்ளேஒரு செய்தி மெல்லப்புகைய ஆரம்பித்தது. அந்தப் பெண்ணை அவன் அழைத்துச் சென்று, அவளை மனைவியாக்கி அவளுடன் வாழப்போகின்றான் என எல்லோரும் இரகசியமாகப் பேசிக் கொண்டார்கள். மணியகாரன்பகுதியார் இதன் பிறகுமா பொறுத்திருப்பார்கள்? சாதி என்று ஒன்று இருக்கின்றவரை சாதி அபிமானமும் இருக்கவே செய்யும் அந்த அபிமானத்தினால் அவர்கள் கொதித்துக்கொண்டு எழுந்தார்கள். ஆனால் வெளியே அந்தக் கொதிப்பை அவர்கள் காட்டிக்கொள்ளவில்லை. அவர்களுக்கென்று இயல்பான சில சுபாவங்கள் உண்டு உணர்ச்சிப் பெருக்கை வெளியே கொட்டி, தொல்லைகளை அவர்கள் வெளியே தேடிக்கொள்ள மாட்டார்கள் தங்கள் மனதில் எல்லாவற்றையும் உள்வாங்கி வைத்து, மறைந்திருந்து காரியமாற்றுவதில் மகா சமர்த்தர்கள். இந்த விஷயத்தில் அவர்களாற் சிலகாலமி காத்திருக்கவும் முடியவில்லை. அவர்கள் பலர் சேர்ந்து இரகசியமாக ஒரு திட்டம் தீட்டினார்கள்
இரவு வேளையில் தான் அந்தப் பெண்ணின் வீட்டுக்கு அவன் போய் வந்துகொண்டிருந்தான். மணியகாரன் பகுதியைச் சேர்ந்த சிலர் ஒருநாள் இரவு அவள் வீடு நோக்கி, அவன் போவதை அவதானித்துவிட்டு, அவன் திரும்பிவரும் பாதையில் எதிர்பார்த்து இருட்டில் மறைந்திருந்தார்கள் நடு இரவு தாண்டிய பிறகு அந்த இருளிற் தன்னந் தனியனாக அவன் வந்துகொண்டிருந்தான் குடியிருப்பு வீடுகள் இல்லாத இடத்தில் பற்றை மறைவிற் பதுங்கிக்கொண்டிருந்த மணியகாரன் பகுதியைச் சேர்ந்தவர்கள் திடீரென்று பாய்ந்து கொட்டன் பொல்லுகளால் அவனைத் தாக்கத் தொடங்கினார்கள் அவர்களுடைய திடீர்த் தாக்குதலினால் அவன் ஒருகணம் நிலைகுலைந்து, பின்னர் தன்னை ஒருவாறு சுதாகரித்துக்கொண்டு, தற்பாதுகாப்புக்காக எப்பொழுதும் மடியில் மறைத்து வைத்துக் கொண்டிருக்கும் வில்லுக்கத்தியை எடுத்து விரித்துத் தாக்கியவர்களைக் குத்த ஆரம்பித்தான். அப்பொழுது அவன் கையில் இறுகப் பிடித்திருந்த கத்தியிலிருந்து இரத்தம் சொட்ட ஆரம்பித்தது. அவனைத்தாக்கியவர்களும் அங்கிருந்து திடீரென்று மறைந்து போனார்கள் மறுநாட் காலை விடிந்த பிறகுதான், தனது கத்திக் குத்துக்கு ஒருவன் பலியாகிப்போனான் என்பது
தெணியான் 131

Page 68
மரக்கொக்கு
அவனுக்குத் தெரியவந்தது.
அவனைக் கைது செய்வதற்காகப் பொலீளம் தேடத் தொடங்கியது. பொலீஸின் கையில் அவனைச் சிக்க வைத்து, அவர்களைக்கொண்டு சித்திரவதை செய்விக்கவேணடும் என்னும் நோக்கத்துடன் மணியகாரன் பகுதியாரும் அந்தரங்கமாகத் தேடுதல் நடவடிக்கைகளில் இறங்கினார்கள் ஆனால் யாருடைய வலையிலும் சிக்கிவிடாமற் சிலகாலம் அவன் தலைமறைவாக இருந்தான். பின்னர் சட்டத்தரணி ஒருவர் மூலமாக நீதிமன்றத்தில் அவன் வெளிப்பட்டு, விளக்க மறியலில் வைக்கப்பட்டான். அவன் மீது கொலைக்குற்றஞ் சுமத்தப்பட்டு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெறத் தொடங்கியது. அவனுடைய வழக்கை விசாரணை செய்த நீதிபதி இருட்டில் நடந்த சம்பவம் என்பதால், அவன் தான் இந்தக் கொலையைச் செய்தான் எண்பதற்கான சாட்சியம் உறுதியாக இல்லாததினால், விளக்க மறியலில் இருந்து பிணையில் அவனை வீட்டுக்குச் செல்ல அநுமதிக்கின்றேன்" எனத் தெரிவித்துவிட்டார் எதிர்த்தரப்புச் சட்டத்தரணி பல்வேறு நியாயங்களை எடுத்துச் சொல்லி அவனைப் பிணையில் விடுவதை ஆட்சேபித்தார். அவருடைய ஆட்சேபனைகளை நீதிபதி ஏற்பதற்கு மறுத்தபோது, அவனுடைய உயிருக்குப் பாதுகாப்பு அளிக்க வேணடுமென்பதனால் அவனைப் பிணையில் வெளியே விடக்கூடாது என மிகத் தந்திரமாக அவர் வாதிட்டார்.
அவருடைய வாதத்தை, அவனுடைய சார்பில் ஆஜரான சட்டத்தரணி ஆட்சேபித்தபோது, நீதிபதி அந்த ஆட்சேபனையை ஏற்றுக் கொண்டார். நீதிபதியின் இந்த நடவடிக்கையினால் மணியகாரன் பகுதியார் கதிகலங்கிப் போனார்கள் கொலைக் குற்றச்சாட்டிலிருந்து அவன் தப்பித்துக் கொள்வதற்கான சாத்தியக் கூறுகளே அதிகம் என்பதை அவர்கள் உணர்ந்து கொண்டார்கள்
சாதியின் பெயரால் என்ன சம்பவம் நிகழ்ந்தாலும் அதன் பின்னணியில் குத்திரதாரியாக எப்பொழுதும் இருக்கின்றவர், கோணாசலம் வாத்தியார். இருளிற் பதுங்கி இருந்து அவனைத் தாக்கியவர்கள் வெறும் கொட்டன் பொல்லால் அடித்துவிட்டு வருவார்கள் என்று அவர் எதிர்பார்க்கவில்லை. அவனைக் கொலை செய்து போடுவார்களென்றே அவர் நம்பினார். ஆனால் நடந்த காரியங்கள் வேறுவிதமாக வந்து முடிந்துவிட்டன. இப்பொழுது அவனைக் கொலைக் குற்றவாளி என்ற பொறியில் தப்பாமல் விழுத்தி, தூக்கு மரத்தில் ஏற்றுவதற்கு என்ன செய்யலாமென்று வாத்தியார்
132 தெணியான்

மரக்கொக்கு
சிந்தித்துச் சிந்தித்து ஒரு வழியும் புலப்படாத நிலையில் மணியகாரனை நாடி ஓடிவந்தார்.
"ஐயா வழக்குச் சறுக்கிப்போடும் போலத் தெரியுது" என்றார் மணியகாரனிடம்.
ஓமோம் கேள்விப்பட்டன் சொல்லிக்கொண்டு மணியகாரன் ஆழ்ந்த சிந்தனையில் மூழ்கிப்போனார். கோணாசலம் வாத்தியார் இப்பொழுது தன்னைத் தேடிக்கொண்டு வந்திருப்பதன் நோக்கம் என்னவென்பதை அவர் தெளிவாக உணர்ந்திருந்தார். மணியகாரன் உள்ளத்தில் சாதி அபிமானம் ஒருபுறம், அவர் நெஞ்சிற் கை வைத்து அவரைப் பிடித்துத் தள்ளினானே அவன் என்ற வன்மம் மறுபுறம். இந்தச் சமயம் அவனுக்குச் சரியான பாடம் படிப்பித்தாக வேண்டுமென்று மணியகாரன் உள்ளத்தில் தீர்மானித்துக்கொண்டு, அதற்கான மார்க்கங்களைப் பல கோணங்களில் உரக்கச் சிந்தித்துப் பார்த்தார்.
சற்று நேரத்தின் பின்னர் அவர் சிந்தனையில் ஒளியொன்று பளிச்சென்று மின்னியது. அப்பொழுது கோணாசலம் வாத்தியாரைப் பார்த்துச் சொன்னார். "வாத்தியார், உங்களுடைய பள்ளிக் கூடத்திலை ஒரு விழாவுக்கு ஏற்பாடு செய்யுங்கோ!"
மணியகாரனின் தந்திரோபாயங்களை எளிதாக எல்லோரும் விளங்கிக்கொண்டுவிடுவது சிரமம். ஆனால் கோணாசலம் வாத்தியார் மணியகாரனின் உள்நோக்கங்களைப் பிடித்துக் கொண்டுவிடுவார். இன்றும் வாத்தியார் மணியகாரனின் உள் நோக்கங்களை விளங்கிக் கொண்டிருப்பார் என்பது மணியகாரனின் நம்பிக்கை. ஆனால் வாத்தியாருக்கு எதுவுமே புரியவில்லை. விளங்கிக்கொள்ளவில்லை என்று மணியகாரன் முன் சொல்வதற்கும் அவர் விரும்பவில்லை. தான் எல்லாவற்றையும் உணர்ந்துகொண்டுவிட்டதான ஒரு நடிப்புடன் மணியகாரனிடமிருந்து விடைபெற்றுக்கொண்டார்.
மணியகாரன் ஆலோசனைப்படி வாத்தியார், தலைமை ஆசிரியராக இருக்கும் மெதடிஸ்த மிஷன் தமிழ்க் கலவன் பாடசாலையில் கலைவிழா ஒன்றை நடத்துவதற்கான ஏற்பாடுகளைச் செய்தார். இரண்டு வார கால இடைவெளியில் கலை விழாவுக்கான ஒழுங்குகளை மிகத் துரிதமாகச் செய்து திகதியும் குறித்துக்கொண்டார்.
அவர்களுடைய வழக்கை விசாரணை செய்து கொண்டிருக்கும்
தெணியான் 133

Page 69
மரக்கொக்கு
நீதிபதியையே அந்த விழாவின் பிரதம விருந்தினராக வந்து பங்கேற்க வேண்டுமென மணியகாரனும் கோணாசல வாத்தியாரும் நேரிற் சென்று அழைப்பு விடுத்தார்கள். நீதிபதி, அவர்கள் விடுத்த அழைப்பினைப் பெரிய மனது பண்ணி ஏற்றுக்கொண்டார். அவர்கள் குறித்த தினத்தில் கலைவிழா சிறப்பாக நடைபெற்றது. மணியகாரன் செய்த ஏற்பாட்டுக்கிணங்க அந்த வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் அனைவரும் விழாவுக்கு வருகை தந்திருந்தார்கள் வெள்ளை வேட்டி, நஷனல், சால்வை, திருநீறு, சந்தனம் சகிதம் சமூகத்தில் பெரிய மனிதர்களாகவும், உத்தம சீலர்களாகவும் அங்கு காட்சியளித்தார்கள். பிரதம விருந்தினரான நீதிபதிக்கு அருகே இடம்பெற்றிருந்த ஆசனங்களில் மணியகாரனோடு சேர்ந்து கெளரவமான பெரிய மனிதர்களாக வீற்றிருந்தார்கள் கலைவிழா முடிந்து, பிரதம விருந்தினருக்கு வழங்கப்பெற்ற விருந்துபசாரத்திலும் அவர்கள் கலந்துகொண்டார்கள்
ஒருமாத காலத்தின் பின்பு அந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. விசாரணைக் காலத்தை நீட்டிக்கொண்டு செல்லாது இரண்டு தினங்களில் நீதிபதி முடித்துக் கொண்டுவிட்டார். எல்லோரும் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருந்த தீர்ப்பை நீதிபதி அப்பொழுது படித்தார்:
இந்த வழக்கில் சமூகத்தில் கணிணியமான பெரிய மனிதர்கள் சிலர் முன்வந்து சாட்சியம் அளித்திருக்கின்றார்கள். அவர்களுடைய சாட்சியத்தின்படி எதிரியே இந்தக் கொலையைச் செய்தார் என்பது உறுதியாகின்றது. சமூகத்திலுள்ள பெரிய மனிதர்களின் கருத்தை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டுதான் ஆகவேண்டும். எனவே கொலைக் குற்றம் புரிந்த காரணத்தினால் எதிரிக்கு மரண தண்டனை வழங்கப்படுகின்றது"
மணியகாரன் நீதிமன்றத்துக்குப் போகவில்லை. அவனுக்கு வழங்கப்பெற்ற தீர்ப்பை அறிந்து அவர் தனக்குள்ளே மெல்லச் சிரித்துக்கொண்டார்.
மணியகாரன் மனதில் நினைப்பதைக் கோணாசலம் வாத்தியார் சிலசமயம் செயலிற் செய்து காட்டிவிடுவார். அந்தத் திறமை கோணாசலம் வாத்தியாருக்கு நிறைய உண்டு. மணியகாரன் கை அசைத்துவிட்டுச் சும்மா இருந்துவிடுவார் வாத்தியார் அந்தக் காரியத்தைச் சிறப்பாக நடத்திக் காட்டுவார்.
ஒரு சமயம் அரசியல்வாதிகள் சிலர்மணியகாரனை அணுகினார்கள் அவர்கள் எப்பொழுதும் தமது அரசியல் லாபத்திலேயே கண்ணாக
134 தெணியான்

மரக்கொக்கு
இருந்து வருகின்றவர்கள் பொதுமக்களுடைய வாக்குச் சீட்டுக்களைத் தங்கள் பக்கம் திருப்புவதே எப்பொழுதும் அவர்களுடைய பிரதானமான நோக்கம். தாழ்த்தப்பட்ட மக்கள் மத்தியில் இடதுசாரிக் கட்சிகளின் செல்வாக்குப் பெருகிக்கொண்டு வருவது தமிழ் அரசியற் கட்சிகளுக்குப் பெரிய ஒரு பிரச்சினையாக உருவெடுத்தது. தாழ்த்தப்பட்ட மக்களைத் தங்கள் பக்கம் வென்றெடுப்பதற்கான உபாயங்களைத் தமிழ்க் கட்சிகள் ஆராய ஆரம்பித்தன. இடதுசாரிகள் தாழ்த்தப்பட்ட மக்களின் உரிமைகளுக்காகக் குரல் கொடுக்கின்றார்கள். அந்த மக்களையும் இணைத்துக்கொணர்டு உரிமைப் போராட்டங்கள் சிலவற்றை நடத்துகின்றார்கள். அதனால் அந்த மக்களின் ஆதரவு இடது சாரிகளின் பக்கம் வளர்ந்து கொண்டு வருகின்றது. அவர்களுடைய ஆதரவைத் தங்கள் பக்கம் திருப்பித் தேர்தலில் வெற்றி வாய்ப்பை அதிகரிக்க வேண்டுமெனத் தமிழ்க் கட்சிகள் தம்முட் தீர்மானித்துக்கொண்டன. அவைகளுள் ஒரு தமிழ்க் கட்சி தீவிரமாக ஈடுபடுவதற்கு முடிவு செய்துகொண்டது. தாழ்த்தப்பட்டவர்களின் உரிமைகளுக்காகத் தாங்களும் குரல் கொடுக்கவேண்டும்; அதேவேளை உயர் சாதிக்காரர் ஆதரவையும் இழந்து போய்விடாது எச்சரிக்கையுடன் நடந்து கொள்ளவும் வேண்டும். இதற்கான உத்திமுறை ஆயிரம் ஆயிரமாண்டுகள் பழமை வாய்ந்த மனமாற்றம்' என்னும் மந்திரத்தை மக்கள் முன் வைத்து பிரசாரங்களின் மூலம் அவர்களை மயக்குவதென முடிவு செய்து கொண்டார்கள்.
அப்பொழுது கோப்பாய்த் தொகுதிப் பாராளுமன்ற உறுப்பினராக ஒரு தமிழ்க் கட்சி உறுப்பினர் இருந்து வந்தார். அந்தக் காலத்தில் மேடையேறிப் பிரசங்கம் செய்வதில் அவர் ஒரு சிங்கம். அவர் தனது கட்சியின் சார்பில் யாழ்ப்பாணக் குடாநாடு எங்கும் சென்று குறாவளிப் பிரசங்கம் செய்துகொண்டு வந்தார். தாழ்த்தப்பட்ட மக்கள் அனைவரையும் கோயில்களுக்குள் அநுமதிக்க வேண்டுமென்பது, அவருடைய பிரசங்கத்தின் பிரதான தொனிப் பொருளாக அப்பொழுது இருந்து வந்தது.
பொன்னம்பல மணியகாரனை ஒருதினம் அவர் வந்து சந்தித்தார். மணியகாரனின் ஆலய வீதியில் தமது பிரசாரக் கூட்டமொன்றுக்கு ஏற்பாடு செய்யவேண்டுமென அவர் கேட்டுக்கொண்டார். மணியகாரன் அவர் வேண்டுகோளை மறுக்கவில்லை. மணியகாரனே அந்தக் கூட்டத்துக்குத் தலைமை தாங்கி நடத்தவேண்டுமெனவும் கேட்டு மணியகாரனை அவர் கனம் பண்ணினார். மணியகாரன் தனது உடல்நலமின்மையைக் காரணமாகச்
தெணியான் 135

Page 70
மரக்கொக்கு சொல்லி தலைமை தாங்க முடியாதென உறுதியாக மறுத்துவிட்டார். அப்பொழுது அந்தக் கூட்டத்துக்குரிய தலைவரைத் தேர்ந்தெடுக்கும் பொறுப்பு மணியகாரன் கையில் ஒப்படைக்கப்பட்டது. முன்கூட்டித் திட்டமிட்டு, அந்தச் சந்தர்ப்பத்தை எதிர்பார்த்திருந்த மணியகாரன் கோணாசலம் வாத்தியாரைத் தலைவராக அமர்த்திக் கூட்டத்தை நடத்துமாறு பணித்தார்.
அந்தக் கூட்டம் கோயிலின் வடக்கு வீதி மணலில் ஆரம்பமானது. அங்கு வருகை தந்திருக்கும் தமிழ் அரசியல் கட்சிப் பிரமுகரின் சண்டமாருதப் பிரசங்கத்தைக் கேட்பதற்காக அந்தப் பகுதி மக்கள் பெருந்திரளாக அங்கு வந்து குழுமி இருந்தார்கள். தலைமை தாங்கிய கோணாசலம் வாத்தியார் கூட்டத்தை ஆரம்பித்து வைப்பதற்குத் தாமே தேவாரம் பாடி, பின்னர் மிக இரத்தினச் சுருக்கமாகத் தலைமையுரையும் சொல்லி முடித்தார். அதன் பிறகு இரண்டொரு வார்த்தைகளிற் தமிழ்க் கட்சிப் பிரதிநிதியை அறிமுகம் செய்துவைத்தார் வாத்தியாரின் பேச்சைப் பல தடவைகள் கேட்டிருக்கும் அந்தச் சபையினருக்கு அன்று அதிசயமாக இருந்தது! வாத்தியாருக்கு இவ்வளவு சுருக்கமாகப் பேசுவதற்குத் தெரியுமா! வாத்தியார் இப்படி ஏன் மெளனமாகப் பேசிக்கொண்டிருக்கின்றார்! பலர் இவ்வாறு எண்ணி மனதில் வியந்துகொண்டிருக்கின்றார்கள். சிலருக்கு வாத்தியாரின் பிறவிக் குணம் தெரியும். அவரை உன்னிப்பாகக் கவனித்துவிட்டு, சொண்டுக்குட் சிரித்துக்கொண்டு கைவிரலால் மணலைக் கிளறியவாறு இருந்தார்கள்
தமிழ்க் கட்சிப்பிரமுகர் மேடையில் எழுந்தார். நாகரிகம், பண்பாடு பற்றிப் பேசினார். தமிழருடைய வீரம் பற்றி எடுத்து முழக்கினார் கணக விஜயர்கல் சுமந்த காட்சியை விபரித்தார். கடாரம் வென்ற கதை சொன்னார். சபையில் கூடி இருந்த மக்களை உணர்ச்சி நிலைக்குக் கொண்டுவந்த பின்னர் மனித உரிமைகள் பற்றிப் பேச ஆரம்பித்தார். மனித உரிமைகளை மறுப்பது அநாகரிகமென்பதை வலியுறுத்தினார். இறுதியில் தாழ்த்தப்பட்ட மக்களை ஆலயங்களுக்குட் பிரவேசிப்பதற்கு அநுமதிக்கவேண்டும் என்பதற்கான நியாயங்கள் ஒன்றன்பின் ஒன்றாக அவர் பேச்சில் பெருக்கெடுத்து ஓடின. வள்ளுவன், பாரதி, காந்தி. எனப் பலரைத் தமது நியாயங்களுக்கு ஆதாரமாக அவர் அங்கே கொண்டுவந்து நிறுத்தினார். ஒரு மணிநேரம் மாரி பொழிவது போலத் தொடர்ந்து பேசி, நல்ல பேச்சாளர் என்ற எண்ணத்தை மக்கள் மனங்களிற் பதித்துவிட்டு ஆசனத்தில் அமர்ந்தார்.
136 தெணியான்

மரக்கொக்கு
சபையோர் கைதட்டி ஆரவாரம் செய்தார்கள் பேச்சாளர் பெருமிதத்துடன் சபையைப் பார்த்துத் தலை அசைத்துக்கொண்டார் சபையிலுள்ள மக்கள் அனைவரும் தமது கருத்தை ஏற்றுக் கொண்டுவிட்டார்கள் என்னும் எண்ணம் அவருக்கு மனதில்
உதயமானது.
அப்பொழுது தலைவர் கோணாசலம் வாத்தியார் இமயம் போல எழுந்தார்
நாங்கள் ஒவ்வொருவரும் கரங்களில் வாள் ஏந்தி நிற்போம். கோயிலுக்குட்பிரவேசிப்பதற்கு வரும் எளிய சாதிகளைக் கண்டதுண்டமாக வெட்டி வீழ்த்துவோம்" என வாத்தியார் முழங்கினார் வாளைக் கையில் அப்பொழுதே ஏந்திவிட்டவர் போல, கையை மேலே தூக்கி வீசிவிசி ஆக்குரோஷமாகக் குதித்தார்.
சபையிலிருந்து எழுந்த கரகோஷம் வானைப் பிளந்தது. பொன்னம்பல மணியகாரன் வீட்டிற் தங்கி இருந்துகொண்டு மிகச் சாதுரியமாகத் தனது எண்ணப்படி காரியத்தைச் சாதித்து முடித்தார். மணியகாரன் பரம்பரைக்குக் கைவந்த இந்தச் சாதுரியங்களை எல்லாம் மாணிக்கத்திடம் எதிர்பார்க்கலாமா?
தாழ்த்தப்பட்டவர்கள் ஆலயப் பிரவேசம் செய்வதற்கு எடுக்கும் முயற்சிகளை முறியடித்தாக வேண்டும். அதற்கான மார்க்கம் இப்பொழுது எதுவென்று புலப்படாமல் விஜயலட்சுமி மனம் கலங்கினாள்
இது, வருடாந்த உற்சவங்கள் ஆரம்பிக்கப்போகின்ற வேளை, இந்தத் தருணம் பார்த்துத்தான் ஆலயப் பிரவேசம் செய்வதற்குத் தயார் பண்ணுகிறார்கள் உற்சவங்கள் நடைபெறாது குழம்பிப் போகுமானால் இந்த வருஷத்து வருமானமும் கிடைக்காமற் போய்விடும்.
இந்த ஆலயப் பிரவேசப் பிரயத்தனங்களை முளையிலேயே கிள்ளி எறிந்துவிடவேண்டும். அதற்கு இப்பொழுது என்ன செய்யலாம்?
தாழ்த்தப்பட்டவர்கள் ஆலயத்துக்குள் பிரவேசித்தால் பூசை பண்ணும் கோயிற் குருக்கள், அதன் பிறகுயூசை செய்வதற்கு முடியாதென்று மறுக்கின்றார் எனச் சொல்லலாம்.
குருக்களும் கோயில் தொண்டர்களும் மாத்திரம் கோயிலுக்குள்ளே செல்லலாம். மற்றவர்கள் எல்லோருமி கோயிலுக்கு வெளியே நின்று வழிபாடு செய்யலாம் என்றும் சொல்லிக்கொள்ளலாம்.
வருடாந்த உற்சவங்கள் வழமைபோல நடந்தேறிய பின்னர் ஒரு
தெணியான் 137
Ν

Page 71
மரக்கொக்கு
தினத்தைக் குறித்து, அன்று ஆலயப் பிரவேசம் செய்யலாமெனச் சமாதானம் சொல்லி முயற்சியை மழுங்கடித்துப் பின்னுக்குத் தள்ளி விட்டுவிடலாம்.
இந்தக் காலம், கடந்த காலங்கள் போல அல்ல. முரட்டுத்தனங்களும் அடக்குமுறைகளும் கையாளப் புகுந்தால், ஆலயத்தில் இரத்தம் பெருகி ஓடச் செய்துவிடும்.
சாதுரியங்களும், தந்திரங்களுமே அவர்களை வெற்றி கொள்ளுவதற்குத் தகுந்த ஆயுதங்கள்
யார் யாரைப் பயன்படுத்தி இந்தக் காரியத்தைச் சாதிக்கலாம்? கோணாசலம் வாத்தியார் இப்பொழுது வாழிந்து கொண்டிருந்தால்.
சாதி பெரிதா! சமயம் பெரிதா சமயமென்ன, சாதிதான் பெரிது. சாதியைப் பாதுகாப்பதற்காகவே சமயத்தைப் பேணிக்காக்க வேண்டி இருக்கின்றது.
சாதி அபிமானம் மிக்கவர்கள்தான் இப்போது உடனடியாகத் தேவை. அவர்களைஒவ்வொருவராக மனதில் வரிசைப்படுத்திப்பார்க்கின்றாள்
கடைக்காரர்கந்தவனம். வாத்தியார் வேலுப்பிள்ளை., பொட்டுக்காரப் பொன்னம்பலம். வண்டிக்காரச் சுப்பு. மேசன் சிண்ணையா. சாத்திரி சண்முகம். தோட்டக்காரக் கிட்டினர். விதானையார்
பெரியதம்பி. முதலியார் முருகேசு. வட்டிக்காரச் சுப்பிரமணியம்.
கிளாக்கர் ஜெயச்சந்திரன். இவர்களோடு ஏஜி.ஏ. சரவணமுத்துவுக்கும்
ஒரு தகவல் அனுப்பவேண்டும். ዖ
இப்பொழுது மாணிக்கத்துடன் அவ்வளவாக அவள் முகம்
கொடுத்துப் பேசுவதில்லை. ஆனால் மாணிக்கத்தைக் கைவிட்டுவிட்டால்,
அவள் கூப்பிட்டு வெளியே அனுப்பி வைப்பதற்கு அங்கே வேறு யார் இருக்கின்றார்கள்? அவரை அழைத்து, தானி நினைத்துக் கொண்டவர்களுக்குத் தகவல் அனுப்பவேண்டுமென அவள் தீர்மானித்துக் கொண்டாள்.
அன்னலட்சுமியையும் குழந்தையையும் கணவன் ஆனந்தராசன் அவர்கள் வீட்டுக் 'கேற்' வரை காரில் அழைத்து வந்துவிட்டு அவன் திரும்பிச் சென்றுவிட்டான். அவனைத் தன்னோடு வீட்டுக்கு வருமாறு அப்பொழுது அவள் அழைத்துப் பார்த்தாள். அவள் வேண்டுகோளை ஏற்பதற்கு அவன் முற்றாக மறுத்துவிட்டான். அவள் தன் எண்ணம்
138 தெணியான்

மரக்கொக்கு
போலக் குடும்பத்தவர்களை எல்லாம் வெறுத்து அவனோடு சேர்ந்து போனவள், இன்று கையில் குழந்தையுடன் வீட்டுக்குத் திரும்பி வந்திருக்கின்றாள். இந்தச் சமயத்தில் கணவனும் சேர்ந்து அவளோடு வீட்டுக்கு வந்திருந்தால் அவள் உள்ளம் நிச்சயம் குளிர்ந்திருக்கும். ஆனால் அது முடியவில்லை. கணவன் இன்றிக் கைக் குழந்தையுடன் மாத்திரம் வரவேண்டியிருக்கும் நிலைமையை எண்ணி அவள் உள்ளம் பொருமினான்.
கால நீரோட்டம் உள்ளங்களில் எரிந்துகொண்டிருக்கும் தீச்சுவாலையை ஆற்றி உறவுகளை மீண்டும் நெருக்கமாக வளர்த்துவிடுவதுதான் வழக்கம். அப்படி எதுவும் தன் குடும்பத்துக்குள் நிகழ்ந்திருப்பதாக அவள் உள்ளத்துக்குத் தென்படவில்லை. அவள் ஒரு குழந்தைக்குத் தாயான பின்னரும் அவளை நோக்கி அவள் குடும்பத்திலிருந்து ஒரு ஆதரவுக் கரம் நீளவில்லை. ஒரு தடும்பத்திலிருந்து பிரிந்து சென்றவர்களின் உறவை மீட்டு இணைக்கும் பாலமாகக் குழந்தைகள் வந்து பிறந்துவிடுகின்றனர். அவளுக்குக் குழந்தை ஒன்று பிறந்ததன் பின்னரும் பிரிந்த உறவுகள் அவளை வரவேற்கவில்லை. அவர்களுக்கு அவள் மீதுள்ள மனக்கசப்பு நீங்கியிருந்தால் அவள் கணவன் பற்றியும் விசாரித்திருப்பார்கள். அந்தக் குடும்பத்தில் ஒருவர் தானும் அவள் கணவன் ஆனந்தராசன் பற்றி ஒரு வார்த்தையேனும் கேட்கவில்லை.
ஆனந்தராசனி மிகச் சரியான ஒரு முடிவைத்தானி எடுத்திருக்கிறான் என்பதை இப்பொழுது அவள் உணர்ந்திருக்கின்றாள். தனது குடும்பத்தின் சொத்தாக இன்று இருப்பது பழம் பெருமை மட்டும்தான்; வேறு எதுவும் இல்லாத நிலையிற் குடும்பம் இன்று தாழ்ந்து போய் இருக்கின்றது.
அவள் வீடு வந்து சேர்ந்த பிறகுதான் தவறு செய்துவிட்டேனோ என்ற உணர்வு நெஞ்சிற் போட்டு உறுத்திக்கொண்டிருக்கின்றது. தானாகத் தேடிக்கொண்டு இங்கு வந்தது சரியானதா? அவள் மனதிற் சந்தேகம் எழுகின்றது. அவள் இங்கு வந்து வாரம் ஒன்று கழிந்து போய்விட்டது. இன்னும் சென்று கணவனை அவள் சந்திக்கவில்லை. அவளை தன்னுடன் வீட்டுக்கு வந்துவிடுமாறு அவன் கேட்கவில்லை. அப்படி அவன் கேட்டிருந்தால் அவனுடைய வீட்டுக்கு அவள் போய்த்தானே ஆகவேண்டும்! அவள் இப்போது இங்கு வந்திருப்பதன நோக்கம் உறவு
தெணியான் 139

Page 72
மரக்கொக்கு
கொண்டாடிக்கொண்டு வீடுகளுக்குப் போவதல்ல. அவன் இவைகள் எல்லாவற்றையும் விளங்கிக்கொண்டு பெருந்தன்மையோடு நடந்து கொண்டிருக்கின்றான். அவனைச் சந்திக்காமல் இருந்து வருவதும் அவன் வீடுதேடிப் போகாமல் இருப்பதும் தவறு என்னும் எண்ணம் அவள் நெஞ்சில் எழுகின்றது. அவன் குடும்பம் அவளைப் பற்றி எண்ணநினைக்கும்? என்ன சொன்னாலும் அவள் மணியகாரன் குடுமீபத்திற் பிறந்தவள்; மணியகாரனின் மகள்; அவளுக்கு அந்தக் குடும்பத்தின் கர்வம் இல்லாமலா போய்விடும். அவர்கள் இப்படித்தான் எண்ணுவார்கள் ஒரே கிராமத்தில் இருவரும் வாழ்ந்துகொண்டு கணவனை ஒருவார காலம் பிரிந்திருப்பது என்ன நியாயம்?
அவள் ஆனந்தராசனைத் தேடிக்கொண்டு அவன் வீட்டுக்குச் செல்லத் தீர்மானித்தாள். ஆனால் அவன் வீடு அந்தக் கிராமத்தில் எங்கே இருக்கின்றது என்பது இதுவரை அவளுக்குத் தெரியவராது. அவன் தந்தை வண்டிற்காரனை மட்டும் அவள் முன்னரே அறிவாள். அவரைத் தவிர அவன் குடும்பத்தில் அவளுக்கு அறிமுகமானவர்கள் வேறு யாருமில்லை. இப்பொழுது அவளுக்கு உதவக்கூடியவள் சினினி ஒருத்திதான் சின்னியை இரகசியமாக அவள் நாடினாள். அவள் மூலமாக ஆனந்தராசனுக்குத் தகவல் சொல்லி அனுப்பினாள்
அவள் கணவனின் வீட்டுக்குப் போய் வருவதற்குப் புறப்பட்ட போது மீனலோசனி அவளிடம் ஓடி வந்தாள்
"சித்தி, நானும் வரப்போறேன்" ஆவல் ததுமீபக் கேட்டு நின்றாள். அவளால் இப்பொழுது எதனையும் சொல்லிக்கொள்ள முடியவில்லை. மீனலோசனியின் வேண்டுகோளை ஏற்று அவளையும் தன்னோடு அழைத்துக்கொணிடு போகலாம்; அதை மற்றவர்கள் விரும்பமாட்டார்கள் மீணலோசனியை வரவேண்டாம் என்று அவள் தடுத்தால் அந்தக் குழந்தை மனம் வாடிப் போகும். இதனால் அவள் மெளனமாக இருந்தாள்.
மீனலோசனிக்குப் பெருத்த ஏமாற்றம். இந்த நல்ல சித்தி தன்னையும் அழைத்துக்கொண்டு போவதற்கு ஏன் சம்மதிக்கவில்லை எண்பது விளங்காமல் அவள் விழிக்கின்றாள்
மீனா.நீ போக வேண்டாம்'மீனாட்சியம்பாளின் குரல் இப்பொழுது கடுமையாக ஒலிக்கின்றது.
அவளுக்குத் தெளிவாகிவிடுகின்றது-கணவண் வீட்டுக்கு அவள்
140 தெணியான்

மரக்கொக்கு
போய்வருவதைத் தாய் மீனாட்சியம்பாள் விரும்பவில்லை என்பது. ஆனால் எவருடைய அதிருப்தியையும் அவள் பொருட்படுத்தப் போவதில்லை. குழந்தையோடு புறப்பட்டு வீட்டைவிட்டு வீதிக்கு வந்து சேர்ந்தாள். அவள் வரவை எதிர்பார்த்துக் காருடன் காத்து நின்ற ஆனந்தராசன் அவளையும் குழந்தையையும் அழைத்துக்கொண்டு தனது வீடு நோக்கிப்புறப்பட்டான். விஜயலட்சுமி அந்த நவீன கூடத்துக்குட் கிடந்து மனம் வெந்து புழுங்கிக்கொண்டு கிடக்கின்றாள்.
அன்னலட்சுமி மீண்டும் வீட்டுக்கு வந்துசேர்ந்தாள். அதன் பிறகு விஜயலட்சுமி என்று ஒருத்தி இங்கிருக்கின்றாள் என்பது எல்லோருக்கும் மறந்துபோய்விட்டது. புதிய உத்வேகம் எல்லோருக்கும் பிறந்துவிட்டது. குடும்பமே சுறுசுறுப்பாக இப்போது இயங்கிக்கொண்டிருக்கின்றது.இதுவரை அந்தக் குடும்பத்தில் விரக்தியும் வேதனைகளும் மாத்திரம் வேரோடிக் கிடந்தன. இப்பொழுது புதிய ஒரு செளஜன்னியம் அவர்கள் மத்தியிற் பிறந்துவிட்டது.
விஜயலட்சுமி அந்தக் குடும்பத்தில் அந்நியப்பட்டுவிட்டதாக இப்பொழுது உணருகின்றாள். ஆனால் அவளுக்குள்ளும் ஓர் ஆறுதல்அன்னலட்சுமி குழந்தையுடன் வீட்டுக்குத் தனித்து வந்திருக்கின்றாள். அவள் தன் கணவன் ஆனந்தராசனை இங்கு அழைத்துக்கொண்டு வரவில்லை. அவனும் அவளோடு சேர்ந்து வீட்டுக்கு வந்திருந்தால் அதனை விஜயலட்சுமியின் நெஞ்சு தாங்கிக்கொள்ளவே மாட்டாது. ஆனால் இங்கு வந்தவள் ஆனந்தராசனைத் தேடிக்கொண்டு அவன் வீட்டுக்குப் போயிருக்கக் கூடாது. மணியகாரன் வீட்டுப் பெண் வண்டிற்காரன் வீட்டுக்கு எப்படிப் போகலாம்? இந்த வீட்டிலிருந்து புறப்பட்டு அப்படிச் செல்வதற்கு முன், தன்னிடம் ஒரு வார்த்தை கேட்டிருக்கவேண்டும்.
அன்னலட்சுமி இப்பொழுது வீட்டுக்கு வந்திருப்பதனால் உண்டான மனக் கொதிப்பு ஒரு புறம்; தாழ்த்தப்பட்டவர்கள் ஆலயப் பிரவேசம் செய்வதற்கு முனைந்து நிற்பதனால் கிளர்ந்தெழுகின்ற சீற்றம் மறுபுறம். அந்த இரணடு உந்து முனைகளுக்கிடையிற் கிடந்து சுற்றிக்கொண்டிருக்கும் சயிக்கிள் சக்கரம் போல விஜயலட்சுமி மனம் அமைதியின்றிச் சுழன்றுகொண்டிருக்கின்றாள்.
தாழ்த்தப்பட்டவர்களின் ஆலயப் பிரவேச முயற்சிகளினால் குடும்பத்தில் எல்லோரும் மனம் புழுங்கிக்கொண்டுதான் இருக்கின்றார்கள் ஆனால் அன்னலட்சுமியின் திடீர் வருகையினால் அதனை அவர்கள்
தெணியான் 141

Page 73
மரக்கொக்கு
மறந்து விட்டவர்கள் போல வெளிப் பார்வைக்குத் தோன்றுகின்றார்கள்
ஆனால் தனலட்சுமி மாத்திரம் அவர்களுக்குள்ளே சிந்தனையில் வேறுபட்டு நின்றாள். அவள் தனது மனதை இன்னொருவரிடம் திறந்து சொல்லுவதற்கு இயலாது தனித்துப்போய் நின்றாள். அன்னலட்சுமி பெரும்பாலும் தன் மனக்கருத்தை ஆதரிக்கக் கூடுமென்று அவள் உள்ளுர நம்பினாள். அன்னலட்சுமி இப்போதென்ன பழைய கிராமத்துப் பெண்ணா? கொழும்பு நகரத்தில் மிக நாகரிகமான ஒரு சமூகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்றவளல்லவா அவள்? அவளுடைய சிந்தனைகள் காலத்துக்கேற்ற முற்போக்கானவைகளாகத்தானே இருக்க முடியும். அன்னலட்சுமி மாத்திரமல்ல, கிராமத்தில் வழிந்து கொண்டிருந்தாலும் தானும், அவள் போலக் காலத்துக்கேற்ற வணிணம் நாகரிகமாகச் சிந்திக்கின்றவள் என்பதனைத் தனலட்சுமி காட்டிக்கொள்ள விரும்பினாள். கணவனோடு அவன் வீட்டுக்குச் சென்று, அன்று மாலையில் திரும்பி இங்கு வந்துவிட்ட அன்னலட்சுமியிடம் அந்தரங்கமாகத் தயங்கித் தயங்கி அவள் பேசினாள்.
"அக்கா, இந்தக் கோயிற் பிரச்சினை என்னக்கா" இந்தக் காலத்தில இதெல்லாம் என்ன பிரச்சினை" அன்னலட்சுமி பட்டுக்கொள்ளாமற் பதில் சொன்னாள். "எல்லாரையும் கோயிலுக்குள்ளை விடலாம் எண்டு சொல்லுறியோ அக்கா"
விடத்தானே வேணும்" அன்னலட்சுமி கொழும்பு அனுபவங்களை மனதில் வைத்துக்கொண்டு இப்படிச் சொல்லிவிடுகின்றாள்.
"எனக்கும் அக்கா சொல்லுறது சரிபோலத்தான்படுகிது"தனலட்சுமி பெருமையாகச் சொல்லிக் கொள்ளுகின்றாள்.
அன்னலட்சுமி அவள் பேச்சைக் கேட்டு அதிசயித்துப் போகின்றாள். தனலட்சுமி மனதில் இப்படி ஒரு எண்ணம் இருக்கும் என்று அவள் எதிர்பார்க்கவில்லை. தன் கருத்தை மறுத்துத் தனலட்சுமி பேசுவாள் என்று அவள்நம்பினாள் அப்படி அவள் சொல்லப்போகும்நியாயங்களை அறிவதற்கும் அவள் விரும்பினாள். ஆனால் வீடு ஒன்றே உலகம் என்றிருக்கும் இவள் மனதில். கோயில்களைத் தமது சொத்துடமையாக வைத்து ஆண்டு, அனுபவித்துக் கொண்டிருக்கும் மணியகாரன் குடும்பத்தில் பிறந்த இவள் மனதில். இப்படிப் புதுமையான ஒரு சிந்தனையா? இந்தக் கருத்துப் புதுமை எப்படி இவள் மனதுக்கு வந்தது? அன்னலட்சுமி மனதில்
142 தெணியான்

மரக்கொக்கு
பலவிதமான சந்தேகங்கள் மெல்ல அரும்புகின்றன.
தனம், நீ எனக்குச் சொன்னது போல மற்றவைக்கு இப்பிடிச் சொல்லாதே" அன்னலட்சுமி இதனைப் புத்திமதியாக அவளுக்குச் சொல்லி வைக்கிறாள்.
அப்பொழுது ஏனக்கா அப்பிடிச் சொல்லுகிறாய்?" என்று கேட்கவேண்டும் போல மனதில் ஒரு உந்தல் தனலட்சுமிக்குப் பட்டென்று தோன்றுகின்றது. ஆனால் அப்படி அவளால் கேட்பதற்கு இயலவில்லை. தான் ஏதோ தவறாகப் பேசிவிட்டதாக அவள் நினைத்துக்கொண்டாள் அண்ணலட்சுமியுடன் மேலும் தொடர்ந்து பேசுவதற்கு அவளுக்குத் தயக்கமாக இருந்தது. சில ஆண்டுகளுக்குப் பிறகு இந்தக் குடும்பத்திற் குதூகலம் இப்பொழுதுதான் துளிர்விட்டிருக்கின்றது. அந்த மகிழ்ச்சிக் கொழுந்து தன் வாயினாற் கருகிவிடக் கூடாதென்று எண்ணி அவள் மிக எச்சரிக்கையானாள்
அணி ன லட்சுமியினர் குழந்தை எலிலோரையும் மகிழ்வித்துக்கொண்டிருக்கின்றான். ஆண் வாரிசு இல்லாத குடும்பத்தில் வந்து பிறந்தவன் அவன். இந்த வீட்டுக்கு இப்பொழுதுதான் வந்திருக்கின்றான். அவனுடைய ஒரு புகைப்படத்தையேனும் அவர்கள் முன்னர் பார்த்ததில்லை. அவன் பிறந்த செய்தியைத்தானும் அன்னலட்சுமி வீட்டுக்கு அறிவிக்கவில்லை. அவன் இங்கு வந்தது முதல் குடும்பமே அவனைச் சுற்றித்தான் இயங்கிக்கொண்டிருக்கின்றது. அவன் தரையில் பாதம் பதித்து நடப்பதற்கு அவர்கள் யாரும் விட்டுவைக்கவில்லை. எப்பொழுதும் யாரோ ஒருவரின் தோளின் மீது அல்லது மடியின் மீது அவன் இருந்துகொண்டிருக்கின்றான்.
மீனலோசனிக்கு ஒரு கணமேனும் அவனைவிட்டுப் பிரிய மனமில்லை. எப்போழுதும் அவனோடு அவள் ஒட்டிக்கொண்டிருக்கின்றாள். அவனுடன் சேர்ந்து விளையாடுகின்றாள். அவனைத் தூக்கியணைத்து உப்பு மூட்டை சுமக்கின்றாள். அவனைக் கட்டி அணைத்து முத்தமிடுகின்றாள். அவனுக்கு உடைகளை மாற்றி மாற்றி அணிந்து அழகு பார்க்கின்றாள். அவன் செய்யும் குறும்புகளைக் கண்டு ரசித்துச் சிரிக்கின்றாள். அப்பப்பா. அவள் பொழுது ஆனந்தமாக அவனோடு கழிந்து போய்க்கொண்டிருக்கின்றது. அன்னலட்சுமியையும் அவள் விட்டுவைக்கவில்லை. இப்பொழுது அவள் தனது தாயைமறந்துவிட்டவள் போல சித்தி அன்னலட்சுமியுடன் ஒட்டிக்கொண்டுவிட்டாள்.
தெணியான் 143

Page 74
மரக்கொக்கு
சில ஆணடுகளின் பிறகு, பிரிந்தவர்கள் இனிறு கூடியிருக்கின்றார்கள். அவர்கள் தமக்குள்ளே பகிர்ந்து கொள்வதற்கான செய்திகள் ஏராளம் இருக்குமல்லவா! கடந்த காலச் சம்பவங்களை நினைவு கூர்ந்து ஒருவர் மாறி ஒருவராகச் சொல்லிக கொண்டிருக்கின்றார்கள் அன்னலட்சுமியின் கொழும்பு வாழ்க்கை- அவள் தங்கி இருக்கும் வீடு-பழகுகின்ற நண்பர்கள் எனப் பலவற்றையும் கேட்டுக் கேட்டு அறிந்து கொள்ளுகின்றார்கள்
அன்னலட்சுமி நிதானமாக எல்லாவற்றையும் சொல்லிக் கொண்டிருக்கின்றாள். அவளுடைய நிதானம் கணவன் ஆனந்தராசன் பெயரை எந்தவொரு சந்தர்ப்பத்திலும் சொல்லாது விழிப்புடன் தவிர்த்துவிடுகின்றது. அவன் இல்லாமல் அவளுக்கென்ன கொழும்பு வாழ்க்கை? ஆனால் அவர்கள் குறிப்பிட்டுக் கேட்காதவரை அவன் பெயரை வாயிலி உச்சரிக்கப் போவதிலி லையென அவள் தீர்மானித்துக்கொண்டுவிட்டாள். அவள் இங்கு வந்ததன் பின்பு கணவன் வீட்டுக்கு ஒரு தடவை போய் வந்திருக்கின்றாள் அல்லவா? அதன் பிறகாவது அவன் பற்றி. அவன் குடும்பம் பற்றி நாகரிகத்துக்காகவேனும் ஒரு வார்த்தை கேட்டார்கள? அவன் இன்று சாதாரண எழுதுவினைஞராக இல்லை. போட்டிப் பரீட்சையிற் சித்தியெய்திப் பதவி உயர்வு பெற்று, கலாசார அமைச்சில் உயர்ந்த பதவியை வகிக்கின்றான். அவன் தம்பி இன்று சுவிசில் நின்று உழைத்து அனுப்பிய பணத்தில் மாளிகைபோல ஒரு வீடுகட்டி இருக்கிறார்கள். அந்த வீட்டில் ரீவி என்ன, டெக் என்ன, சோபா என்ன. இவைகளை எல்லாம் இவர்களுக்கு ஏன் சொல்லிக் கொள்ளவேண்டும்! இவர்களைப் பொறுத்தவரை அவன் எப்பொழுதும் தகுதியிற் குறைந்த ஒருவன். அவனைப் பற்றிப் பேசுவதே இவர்களின் கெளரவத்துக்குக் குறைவான ஒன்று. அன்னலட்சுமி மலதிற புழுங்கிக்கொண்டு அதை வெளியிற் காட்டிக் கொள்ளாது அவர்களுடன் பேசிக்கொண்டிருக்கின்றாள்.
மீனாட்சியம்பாளுக்கு மகள்மீது மணக் கசப்புகள் கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து கொண்டுபோக ஆரம்பித்துவிட்டன. அவள் ஒருத்தியாவது கணவனோடு வாழ்ந்துகொண்டிருப்பது அவள் மனதுக்கு ஆறுதல் அளித்துக்கொண்டிருக்கின்றது. அவள் நெஞ்சில் நினைத்துப் பார்க்கத் தகுந்த விதமாக அன்னலட்சுமி இன்னுமொரு காரியத்தைச் செய்திருக்கின்றாள். இந்தக் காலத்திற் குழந்தைகளுக்குப் பெயர்
144 தெணியான்

மரக்கொக்கு
குட்டும் போது காலத்துக்கேற்ற நவீனமான பெயர்களையே தேர்ந்தெடுக்கின்றார்கள். அந்தப் பெயர்கள் பெற்றாரின் அறிவு நிலை பற்றிய பல தகவல்களைச் சொல்லிவிடும். சினிமா நடிகர்,நடிகைகளின் பெயர்களைப் பெரும்பாலும் தங்கள் குழந்தைகளுக்கு வைத்துப் பெருமைப்பட்டுக் கொள்ளுகின்றவர்கள் இன்று அதிகம். இப்படியான இந்தச் சமூகத்தில் பாட்டனின் பெயரை-பழைய பெயரை யார் தங்கள் குழந்தைக்குச் குட்டுவார்கள்? குட்டியிருக்கின்றாள் அன்னலட்சுமி தந்தை பொன்னம்பல மணியகாரன் நாமத்தைத் தன் மகனுக்குச் குட்டியிருக்கின்றாள் என்பது மீனாட்சியம்பாள் நினைத்துப் பெருமைப்படச் செய்கின்றது.
தாயானவளுக்கே நெஞ்சில் இருக்கக் கூடிய சில வேதனைகள், மீனாட்சியம்பாள் மனதிலும் உறுத்திக்கொண்டு கிடக்கின்றன. ஒரு பெண் தாயாகப்போகும் நேரத்தில் தன்னைப் பெற்றவளை அவள் நினைத்துப் பார்ப்பாளாம். தாயாகப் போகின்றவளின் அருகில் இருக்க வேண்டுமென்னும் ஆதங்கம் அவளைப் பெற்றவள் மனதிலும் இருந்துகொண்டிருக்குமாம். அன்னலட்சுமியைத் தான், கவனிப்பதற்கு இயலாமற் போனது மீனாட்சியம்பாள் மனதிலுள்ள ஒரு குறை தான் உயிருடன் இருக்கும்போது அன்னலட்சுமி யாருமில்லாத அநாதை போலத் தனித்துத் துன்புற்றிருப்பாளே என்று எண்ணி அவள் மனம் வாட்டமுறுகின்றது.
"அன்னம், நீ என்ன மோனை செய்தாய்?" 'எதுக்கம்மா?" இவனைப் பெத்தபோது." ஆளப்பத்திரியிலை நல்லாக் கவனிப்பினம்" இதென்ன கதை வெந்நீர் வாக்க வேணும். பத்தியம் போடவேணும்."
மீனாட்சியம்பாள் அடுக்கிக்கொண்டு போகின்றாள். அன்னலட்சுமி அதைக்கேட்டு உதட்டுக்குள் மெல்ல முறுவலிக்கின்றாள். அவள் சிரிப்பது கண்டு மற்றவர்கள் பலமாகச் சிரிக்கின்றார்கள் மீனலோசனிசிரித்துக்கொண்டு மீனாட்சியம்பாளைக் கேலிபண்ணுகிறாள்.
"அம்மம்மா இப்பவும் பழங்காலத்திலைதான் இருக்கிறா. அம்மம்மாவை ஒருக்கால் கொழும்புக்கு அனுப்பி எடுக்கவேணும்"
மீனலோசனி மீது ஒரு போதும் கோபித்துக் கொள்ளாத மீனாட்சியம்பாளுக்கு இன்று அவள் பேச்சுக்கேட்டு மெல்லிய சினம் மூண்டுவிடுகின்றது.
தெணியான் 145

Page 75
மரக்கொக்கு
பழசுகள் போனால் வேறை என்ன எங்களிட்டை மிச்சம்! எல்லாம் பழம் பெட்டிதான். வெறும் பீத்தல் பெட்டிதான். இப்ப பாருங்கோவன் என்னென்ன கூத்துகள் துடங்கி இருக்குதெண்டு எல்லாம் கவிகாலம். அது கிடக்கட்டும். நீ எங்களுக்கொரு கடுதாசிகூட எழுதிப்போடயில்லை?" அன்னலட்சுமி இதற்கொரு பதில் சொல்ல விரும்பது மெளனமாக இருக்கின்றாள்.
மீனாட்சியம்பாள் விட்டுவிடுவதாக இல்லை. மீண்டும் கேட்கின்றாள். "என்ன பேசாமல் இருக்கிறாய்?" "எனக்கு விருப்பந்தான்." மெல்லச் சொல்லும் போது அவள் குரல் கம்முகின்றது. அடுத்து வரும் கேள்வி "உண்ரை புரியன் மறிச்சுப் போட்டானோ?" என்றுதான் இருக்க வேண்டுமென அவள் எதிர்பார்த்தாள். ஆனால் கேள்வி வேறுவிதமாக வந்து விழுந்தது. "அப்ப. ஏன் எழுதயில்லை?" "எழுதினால்." இந்தக் கேள்விகளுக்குத் தெளிவாகப் பதில் சொல்லி மனச் சங்கடங்களை உருவாக்கிவிடாமல் அவள் தவிர்க்கின்றாள்.
மீனாட்சியம்பாள் அதனை உணர்ந்துகொள்ளாமல் திரும்பவும் கேட்கின்றாள்.
"எழுதினால் என்ன! குழந்தையை ஏன் பெத்தனி எண்டு கேட்கப் போறமே!"
அவர்கள் மத்தியிற் சிரிப்பொலி மீண்டும் எழுகின்றது. மீனாட்சியம்பாள் பேரக் குழந்தையை மடியின் மீது இருத்தி வைத்துக்கொண்டு பேசிக்கொண்டிருக்கின்றாள். குழந்தை சுயாதீனமாக மெல்ல இறங்கி அவர்களைச் சுற்றி வளைய வளைய வந்து தளிர் நடை போடுகின்றான். அவர்கள் பேச்சுச் சுவாரசியத்தில் அவன் விளையாட்டைக் கவனிக்காது பேசிக்கொண்டிருக்கின்றார்கள் பின்னர் அவன் மெல்ல மெல்ல எடுத்தடி வைத்துக் கூடத்துக் கதவருகே வருகின்றான். கதவு சற்றுத் திறந்திருக்கின்றது. அந்தக் கதவைத் தன் பிஞ்சுக் கரங்களினால் மெல்லப் பிடித்த வண்ணம், தலையை உள்ளே நீட்டி எட்டியெட்டிப் பார்த்துத் துருதுரு வென்று விழிக்கின்றான். இந்தக் காட்சியைத் தற்செயலாகக் கண்டுவிடுகிறாள், அன்னலட்சுமி அவக்கென்று அவள் எழுந்து சென்று குழந்தையைத் தூக்கி வந்து மடியின் மீது வைத்துக்கொண்டு அமர்ந்து கொள்ளுகின்றாள்
146 தெணியான்

மரக்கொக்கு
விஜயலட்சுமி கூடத்துச் சாய்வு நாற்காலியில் ஒருக்களித்துச் சாய்ந்து கிடக்கின்றாள். உள்ளே நிகழ்ந்துகொண்டிருக்கும் பேச்சும் சிரிப்பொலியும் அவள் செவியில் வந்து விழுகின்றன. அவள் இப்பொழுது தனிமைப்பட்டுக் கிடக்கின்றாள். அவளைப் பழிவாங்குவதற்காகவே உள்ளே இருந்து பேசிச் சிரிப்பதுபோல அவர்கள் குரல் அவள் நெஞ்சில் வந்து குத்துகின்றது. அவள் நெஞ்சம் ஆற்றாமையினால் இப்பொழுது குமுறிக்கொண்டிருக்கின்றது. அன்னலட்சுமிதன் குழந்தையைப் பட்டென்று தூக்கிச் சென்றுவிட்டதையும் அவள் அவதானிக்கத் தவறவில்லை. அந்தக் குழந்தைக்கு அவள் தந்தையின் பெயர் குட்டி இருக்கின்றார்கள் என்ற செய்தி அவளுக்கு நெஞ்சில் இனிக்கின்றது. அவள் தந்தையைப் போலவே அவன் மூக்கும் முழியுமாக இருக்கின்றானாம். அவனை ஒரு தடவை நன்றாகப் பார்த்துவிடவேண்டும். அவள் மனம் ஆவல் அடங்காது தவித்துக்கொண்டிருக்கின்றது.இப்பொழுது கிடைத்தது அரிய சந்தர்ப்பம். இந்தச் சமயத்தில் அவனைப் பார்த்துவிடுவதற்கு அவள் எத்தனித்தாள் அது நிறைவேறவில்லை. அவளுக்கு இதுவும் எதிர்பாராத ஏமாற்றமாக முடிந்தது. வேதனையுடன் அவள் விழிகளை மூடிக்கொண்டு கதிரையின் மேற் சாய்ந்து கிடக்கின்றாள்.
அன்னலட்சுமிக்கு இது தகுந்த தருணமாகத் தோன்றுகின்றது. தனது வருகையின் நோக்கத்தை அவர்களுக்கு இன்னும் அவள் வெளியிடவில்லை. அவர்கள் ஒவ்வொருவர் மனதிலும் என்ன நினைத்துக் கொண்டிருக்கின்றார்களோ இப்பொழுது பேச்சை மெல்ல ஆரம்பிக்கலாம் என்று கருதி உரையாடலைத் தொடருகின்றாள்
"அம்மா, அத்தானைக் கொழும்பிலை சந்திச்சனான்." ஆரைச் சொல்லுறாய்?" "வேறை ஆர், மீனாவின்ரை அப்பா" அவள் பேச்சை ஆரம்பித்ததும் இதுவரை இருந்த சுமுகமான குழ்நிலை இருந்தாற்போல மாறுகின்றது. மூத்தவள் வரலட்சுமியை இரகசியமாக அவள் நோட்டமிடுகின்றாள். கணவனின் பேச்சை எடுத்ததும் வரலட்சுமி முகம் வாடிப் போகின்றது. மீனலோசனி தந்தையின் பேச்சு எழுந்ததும் ஆவலுடன் அந்தப் பேச்சைக் கவனிக்கின்றாள்.
மீனாட்சியம்பாளுக்கு அந்தப் பேச்சே அவ்வளவாகப்பிடிக்கவில்லை. அவள் வேண்டாவெறுப்பாக அக்கறையின்றிக் கேட்கின்றாள்
தெணியான் 147

Page 76
மரக்கொக்கு
"உன்னை அவர் எப்பிடிச் சந்திச்சார்?" "எப்பிடியோ. நான் கொழும்பிலை இருக்கிறது அறிஞ்சு, ஒரு நாள் வீட்டுக்கு வந்து போனார். பிறகு இடைக்கிடை வந்து போனவர். இப்ப தினமும் வருவார்."
தினமுமோ." மீனாட்சியம்பாளுக்கு வியப்பாக இருக்கின்றது. ஓமோம். இவன் அத்தானைக் கண்டால் விடமாட்டான். பெரியப்பா.பெரியப்பா எண்டு ஓடிப் போய்விடுவான். இவன் அவற்றை செல்லம். இவனிலை சரியான அன்பு சொக்களெற், பிஸ்கட் ரொய்ஸ் எண்டு தினமும் கொண்டுவருவார். ஒரு நாட்கூட இவனைப் பார்க்காமல் இருக்கமாட்டார்." அன்னலட்சுமி சொல்லிக்கொண்டு அவருக்கும் குழந்தைக்கும் உள்ள நெருக்கத்தை இவர்களுக்கு உணர்த்துவதற்கு எண்ணுகின்றாள். மடிமீது கிடக்கும் குழந்தையின் முகம்நோக்கி தலையைத் தாழ்த்தி வைத்துக்கொண்டு, "அப்பன், பெரியப்பா வாறார். பெரியப்பா" என்று சொல்லுகின்றாள்.
குழந்தை மடியைவிட்டு உடனே எழுகின்றான். பூவிதழ் மலர்ந்து சிரித்த வண்ணம் கைகொட்டி விழிகளை அகலத் திறந்து ஆவலுடன் அங்குமிங்கும் நோக்குகின்றான்.
"எடேயப்பா! பெரியப்பா எண்டதும் அவற்றை புளுகத்தைப் பாரன்" தனலட்சுமி தன்னை மறந்து மனதிற் தோன்றியதை வெளியே கொட்டிவிடுகின்றாள்.
மீனலோசனி ஆனந்த மிகுதியால் குழந்தையை அவக்கென்று தூக்கிக் கட்டியணைத்து முத்தமிடுகின்றாள்.
"ஹஉமீ. உதுகளை இனிமேற் பேசி என ன!" மீனாட்சியம்பாளிடமிருந்து துயரந் தோய்ந்த ஆழ்ந்த பெருமூச்சொன்று வெளிவருகின்றது.
அவர் நல்லவரம்மா" என்கின்றாள் அன்னலட்சுமி அப்பொழுது அவளுக்கும் வேதனை குரலை அடைக்கின்றது. அவள் குழந்தையினால் இதுவரை ஊற்றெடுத்துக்கொண்டிருந்த மகிழ்ச்சிப் பெருக்கு சட்டென்று வற்றிப் போய்விடுகின்றது. அவர்கள் எல்லோருடைய முகங்களும் வாட்டமுறுகின்றன. வரலட்சுமிக்குத் திடீரெனக் கண்கள் கலங்குகின்றன. இந்தச் சூழ்நிலை மேலும் இறுகிக்கொண்டு போவதைத் தவிர்க்கவேண்டுமென்று அன்னலட்சுமி மனதுக்குத் தோன்றுகின்றது. அவர்கள் மனங்களில் உருவான நெருடலைத் தளர்த்திவிட்டுத் தன்னுடைய
48 தெணியான்

மரக்கொக்கு
இலக்கில் எல்லோரையும் இட்டுச் செல்வதில் அவள் கருத்தாக இருக்கின்றாள். அங்கு நிலவிய மெளனத்தை அவள் மெல்லக் கலைத்துவிட்டுக்கொண்டு பேச்சைத் தொடர்ந்தாள். "அவர் மீனுவை நினைச்சுக் கவலைப்படுகின்றார்." "என்ன சொல்லுறார் அக்கா"தனலட்சுமி ஆவலோடு கேட்கின்றாள் "பெற்ற பிள்ளையில அக்கறையுள்ள ஒரு தகப்பன் என்ன நினைப்பாரோ, அதைத்தான் அவரும் நினைக்கிறார்."
"உதுகளைப் பேசி இனி என்ன பலன்? உந்தக் கதையளை விடுங்கோ" மீனாட்சியம்பாள் மீண்டும் அந்தப் பேச்சைத் தடுக்கின்றாள்.
மீனாட்சியம்பாள் இப்படிக் குறுக்கே தடுத்து நிறுத்திவிட நினைப்பது வரலட்சுமிக்கு உள்ளத்தில் எரிச்சலை மூட்டுகின்றது. ஆனால் தனி மனதிலுள்ளதை அவள் வெளியே காட்டிக் கொள்ளாமல மறைத்துக்கொண்டு, பேச்சில் சிறிதும் நாட்டமில்லாதவள் போல மெளனமாக இருக்கின்றாள்.
"அமீமா அப்பிடிச் சொல்லாதே! மீனுவின்ரை எதிர்காலத்தைப்பற்றி யோசிக்கத்தானே வேணும்" என்றாள் அன்னலட்சுமி
அதுக்கென்ன செய்கிறது அன்னம்/எல்லாம் முடிஞ்சு போனபிறகு" இல்லையம்மா" "எண்ண இல்லை?" இனிமேலாவது." "என்ன செய்யச் சொல்லுகிறாய்?" "மீனுவை அவர் தனினோட கூப்பிட்டு வைச்சுப் படிப்பிக்க விரும்பிறார்."
அன்னலட்சுமி சொல்லிவாய் மூடுவதற்குள் அவர்கள் யாருமே எதிர்பார்க்காத விதமாக மீனலோசனி மனதில் எழுந்த பரபரப்போடு அவளைப் பார்த்துக் கேட்கின்றாள்.
"சித்தி, நான் உங்களோடை அப்பாட்டை வரட்டுமா?" குழந்தைத்தனமாக அவள் பேச்சைக் கேட்டு அவர்கள் எல்லோரும் திகைத்துப் போய்விடுகின்றார்கள். ஆனால் அவள் கேள்விக்கு இப்பொழுது பதில் சொல்ல வேண்டியவள் அன்னலட்சுமி அல்லள் அவள் தாய் வரலட்சுமிதான். அவர்கள் எல்லோரும் வரலட்சுமி என்ன சொல்லப் போகின்றாள் என்று அவள் முகத்தையே குறிப்பாக நோக்கிக்கொண்டு இருக்கின்றார்கள் ஆனால் அவளுக்குச் சொல்வதென்ன என்று விளங்காத குழப்பம். அவள் பார்வையைத் தாழித்தித் தலை கவிழ்ந்து கொள்ளுகின்றாள்.
தெணியான் 149

Page 77
மரக்கொக்கு
அவர்கள் மனங்களில் எல்லாம் குழப்பமும் வேதனையும் பறந்து வந்து சிறகு விரிக்கின்றன.
தனலட்சுமி, அக்கா மனதில் என்ன இருக்கின்றது என்பதை விளங்கிக் கொள்ள இயலாமல் மனம் போன போக்கில் அதை அலையவிட்டு தனக்குள்ளே தடுமாறுகின்றாள்.
மகள் மறுத்துப் பேசாமல் மெளனமாக ஏன் இருக்கின்றாள் என்று நினைத்து அதிருப்தியும் ஐயுறவும் கொள்ளுகின்றாள், மீனாட்சியம்பாள்
அன்னலட்சுமிக்கு அக்காவின் அந்தரங்க உள்ளத்தைக் கண்டுகொண்டுவிட்டதில் மனம் மகிழ்ந்து போகிறது. ஆனால் தனது மனதைத் திறந்து பேசுவதற்கு இயலாத அப்பாவியாக இப்போதும் இருக்கின்றாளே என்றெணிணி அது வருந்திக்கொண்டிருக்கிறது.
மீனலோசனிக்கு ஒரு சந்தேகம்.தான் தவறுதலாகப் பேசிவிட்டேனோ என்று எண்ணி அச்சத்துடன் ஒவ்வொருவர் முகத்தையும் உன்னிப்பாக நோக்குகின்றாள்.
மீனாட்சியம்பாள் அங்கு நிலவிய இறுக்கத்தைக் கலைத்துவிட்டுக் கொண்டு மீனலோசனியைப் பார்த்து ஆதரவோடு மெல்லச் சொல்லுகின்றாள். மீனா, நீ நினைக்கிறது மாதிரி நடக்கேலாது! விஜயா முதலிலை ஒத்துக்கொள்ள மாட்டாள்."
இதைக்கேட்டு வரலட்சுமி கொதித்தெழுவாள் என்று அவர்கள் யாருமே எதிர்பார்க்கவில்லை. இதுவரை உள்ளே குமுறிக்கொண்டிருந்த எரிமலை ஒன்று எதிர்பாராமல் வெடித்துச் சிதறியது போல, அவள் வாயிலிருந்து வார்த்தைகள் கனன்று விழுந்தன.
"அம்மா, அவள் தன்ரை தகப்பனிட்டைப் போக விரும்பிறாள். அதுக்கு ஆரிட்டைப் போய் என்ன சம்மதம் கேட்கிறது! அவளாவது நல்லாய் இருக்கட்டும்!"
விஜயலட்சுமியின் செவிகளில் இந்த வார்த்தைகள் கூர்போல வந்து பாய்கின்றன. குடும்பத்தின் பெருமை, பாரம்பரியம் என்பவைகளைப் பாதுகாக்கவேண்டும்; சமூகத்தில் இருந்து வந்திருக்கும் தனித்துவத்துக்குக் களிங்கமில்லாமல் வாழ வேணடும் என்று எணணி வாழிந்து கொண்டிருக்கின்றவள் அவள் அவர்கள் உள்ளங்களில் அவள் மீது வெறுப்புத் தோன்றிவிட்டது. அதிருப்தி இப்போது வளர்ந்துவிட்டது. பழிகள் வந்து குழிந்துவிட்டன. தன் குடும்பத்துக்கே தான் பகையாகி அவள் வாய்விட்டுச் சொல்வதற்கும் இயலாத வேதனைகளால் இதயம்
150 தெணியான்

மரக்கொக்கு
வெந்து கருகிக் கொண்டிருக்கின்றாள். ஓயாத சிந்தனையினால் மனம் போராடிக்கொண்டிருக்கின்றாள். மனச் சுமையின் அழுத்தம் அவள் உடலையும் போட்டு அழுத்த, சாய்வு நாற்காலியைவிட்டு எழுந்திருப்பதற்கு இயலாது அந்த மரக்கொக்கு ஒன்றே துணையாக அதனுள் துவண்டு கிடக்கின்றாள்.
விஜயலட்சுமிக்கு இப்போது இரவு பகல் என்ற பேதமில்லை. அவள் உலகம் முற்றாக இருண்டு கிடக்கின்றது. இருள் குழிந்த உலகத்தில் நிம்மதியாக உறங்கவும் அவளுக்கு முடியவில்லை. மனம் அமைதி இழந்து வேதனையில் உழன்று கொண்டிருக்கின்றது.
அவள் காலையில் எழுந்து வழக்கம்போலத் தன் கருமங்களைச் செய்து முடிக்கின்றாள். பின்னர் கூடத்துக்கு வந்து சாய்வு நாற்காலியில் மரக்கொக்குக்கு எதிரே அமர்ந்து கொள்ளுகின்றாள். அவள் உடல் மட்டும் அங்கு துவண்டுபோய்க் கிடக்கின்றது. உள்ளத்துக்கு ஒரு சிறிதேனும் களைப்பே இல்லை. அது ஒரு இடத்தில் நிலைகொண்டு நில்லாது எங்கெங்கோ எல்லாம் ஓய்வின்றி அலைந்துகொண்டிருக்கின்றது. கரையில்லாத கடலிலி முடிவில்லாத அலைகளாக எணர்ணங்கள் எழுந்தெழுந்து மடிந்துகொண்டிருக்கின்றன. மனதைக் கட்டுப்படுத்தி ஆறுதல் காண்பதற்கான மார்க்கம் எதுவெனப் புலனாகாது அது தடுமாறிக் கொண்டிருக்கின்றது.
ஒரு சமயம் அவள் கணிகளை மூடிக்கொண்டு புறவுலகக் காட்சிகளில் இருந்து விடுபட்டு ஒதுங்கிக் கிடப்பதற்கு விரும்புகின்றாள். அப்பொழுது அகத்திரையில் அவள் விரும்பாத காட்சிகள் வந்து விரிந்து மனக் கணிணின் பார்வை மழுங்குகின்றது. திரும்பவும் விழிகளைத் திறந்து யன்னலுக்கூடாகச் குனியத்தை நோக்கி வெறித்துக் கொண்டிருக்கின்றாள்.
இன்னொரு சமயம் நாற்காலியைவிட்டு எழுந்து நோக்கமில்லாது கூடத்துக்குள் குறுக்கும் நெடுக்குமாக நடை பயில்கின்றாள்
பின்னொரு சமயம்பூந்தோட்டத்துக்குள்நுழைந்துபூமரங்களுடன் தானுமொரு மரமாக நிலைத்துப்போய் நின்றுவிடுகின்றாள். வேறொரு சமயம் வீட்டுக்குப் பின்புறமாகச் சென்று அழிந்து சிதைந்துபோய்க் கிடக்கும் கட்டிடங்களைப் பார்த்துப் பெருமூச்செறிந்த வணிணம் நிற்கின்றாள்.
தெணியான் 151

Page 78
மரக்கொக்கு
அவளுக்கு வயிறென்று ஒன்றிருப்பதை அவள் மறந்தே போனாள் நயினார்மார்குடும்பங்களுக்குப்பரம்பரை பரம்பரையாகச் சமைத்துப் போடும் தொண்டினைச் செய்கின்ற சாதியிற் பிறந்தவள் சின்னி சுவையான உணவுகளை ஆக்கிக் கொடுப்பதில் அவள் மிக வல்லவள் அன்னலட்சுமி வீடு வந்த நாள் முதல் தனக்குக் கைவந்த சமையற்கலையின் உன்னதச் சுவைகளை எல்லாம் ஒன்று கூட்டி வெவ்வேறு உணவுகளாக அவள் ஆக்கிக் கொடுத்துக்கொண்டிருக்கின்றாள். அவள் நெஞ்சு விஜயலட்சுமியை எண்ணிவேகின்றது. விஜயலட்சுமி இப்போது தனித்துப் போய்நிற்கின்றாள் அவள் பாவம், அவளுக்கு ஆதரவு காட்டவேண்டும் என்று உணர்ந்து அனுதாபத்துடன் அவளை நெருங்கி நெருங்கிப் போகின்றாள்.
விஜயலட்சுமி மனதில் சின்னி மீது அகுசையும் வெறுப்பும் நீண்ட காலமாக உண்டு. அவள் தன்னிடம் அநுதாபத்துடன் நடந்து கொள்வதை விஜயலட்சுமி விளங்கிக்கொண்டு வருகின்றாள் குடிமகள் ஒருத்தி தன் மீது கொண்ட அநுதாபத்தினால் பரிவுடன் நடந்து கொள்ளும் நிலைக்குத் தான் தாழிந்து போய்விட்டதாக அவள் எண்ணி நெஞ்சில் வேதனையுறுகின்றாள்.
விஜயலட்சுமி இப்படி அந்நியப்பட்டு மனம் உளைந்து கொண்டிருப்பது உணர்ந்து மீனாட்சியம்பாள் உள்ளம் வெதும்புகின்றாள் அவர்கள் குடும்பத்தில் அவள் ஒருத்தியை மாத்திரம் ஒதுக்கிவைத்துவிட்டு எல்லோரும் செளஜன்னியமாக இணைந்துகொண்டுவிட்டது தாயின் உள்ளத்தை உறுத்துகின்றது. ஆணிகள் இல்லாத குடும்பத்தில் ஒரு தலைவன் போல இருந்து நிருவகித்து வந்தவள். இப்பொழுது ଘsଣ%}}{{#$୩୩ ஆகிக்கொண்டு போகின்றாளே என்று எண்ணி வேதனையினால் உள்ளம் வேகின்றது. அவள் விலகி விலகிப் போய்க்கொண்டிருக்கும் போது மீனாட்சியம்பாள் அவளை நாடி நெருங்கி நெருங்கி வந்துகொண்டிருக்கின்றாள். அவள் உள்ளம் சமாதானம் உறவேண்டும். ஆறுதல் அடைய வேண்டும். குடும்பத்தில் அவளும் ஒருத்தியாக எல்லோருடனும் கலந்து உறவாடவேண்டும் என்னும் நோக்கத்தினால் அவளை அரவணைத்துப் போக முயலுகின்றாள்.
தாயின் மனதையும் அவள் கண்டுகொள்ளாமல் இல்லை. ஆனால் அவர்களுடன் எப்படித் தன்னால் இணைந்து போவதற்கு இயலுமி அன்னலட்சுமி ஒரு தடவையேனும் அவளை நினைத்துப் பார்த்தாளர் அன்னலட்சுமி வீடு வந்து சேர்ந்தாள். அவள் வந்த நாள் முதல் தன்னைத்
152 தெணியான்

மரக்கொக்கு
தேடிக்கொண்டு வருவாள். தன்னிடம் ஒரு வார்த்தையேனும் சொல்லி மன்னிப்புக் கோருவாள் என்று விஜயலட்சுமி ஒவ்வொரு கணமும் எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்றாள். அந்த எதிர்பார்ப்புகள் தினமும் ஏமாற்றங்களாகிக்கொண்டு செல்லும்போது அவள் மனதில் வெறுப்பும் வெஞசினமும் வளர்ந்து கொணர்டு போகின்றன. அன்னலட்சுமி அகஸ்மாத்தமாக வீட்டில் அவளைச் சந்திக்க நேரும்போது லட்சியம் பண்ணாது விலகிக்கொண்டு போய்விடுவது அவள் இதயத்தைக் கசக்கிப் பிழிந்துகொண்டிருக்கின்றது. -
விஜயலட்சுமி என்னதான மன வைராக கியததுடன் அன்னலட்சுமியை வெறுத்தபோதும், இப்பொழுது தன்னோடு அவளை ஒப்பிட்டுப் பார்க்காமல் இருப்பதற்கு இயலவில்லை.
அன்னலட்சுமி மூன்று ஆண்டுகளுக்கு இளையவள் இப்பொழுது அவள் பத்து வயது இளமையாகத் தோன்றுகின்றாள். அவளது உடலிற்தான் என்னபூரிப்பு எப்பொழுதும் மலர்ந்திருக்கும் அவள்முகத்தில் அடக்கமான ஒரு வஸிகரம்; சிரிக்கும் விழிகளில் நம்பிக்கையின் ஒளிர்வு. அவள் வாழ்க்கையைத் தன்னம்பிக்கையுடன் நோக்குவதும், நினைத்தது போலக் காரியங்களைச் செய்துமுடிக்கும் செயற்றிறனும் வாழ்வில் அவள் பெற்ற அநுபவங்களால் வந்தவைகளா இவைகள் விஜயலட்சுமியின் விழிகளைக் குத்திக் கூசவைக்கின்றன.
விஜயலட்சுமி முகம் பார்க்கும் கண்ணாடிக்கு முன் போக நேர்ந்தால், அவள் கால்கள் அநிச்சையாக அங்கு தரித்துநின்றுவிடுகின்றன. கண்ணாடியில் இப்பொழுதெல்லாம் தன்னை உற்று உற்று அவள் நோக்குகின்றாள். அழகி என்று ஒரு காலத்தில் அவர்களுக்குட் புகழ்ந்து பேசப்பட்டவள். அவள் உடல் உழைப்புச் செய்தறியாத பரம்பரையில் வந்த மிருதுவான செங்கதலி வாழையாக அவள் வளர்ந்தாள் கண்களுக்கு மைதீட்டி அறியாத இயல்பான கருவண்டு விழிகள், அவளுக்கு அவள் கூந்தலை விரித்தால் கனிந்து மழைபொழியும் கருமேகம் போலத் தோன்றும். வானத்திலிந்து கீழே இறங்கிவந்த ஒரு தேவதை போல இந்த வீட்டில் அவள் நடமாடிக்கொண்டிருந்தாள்.
கோயிற் திருவிழாக் காலங்களில் சகோதரிகளுடன் சேர்ந்து தங்கள் ஆலயங்களுக்கு அவள் செல்வதுண்டு. சரிகைக் கரையிட்ட காஞ்சிபுரம் பட்டுப் பாவாடை. அந்தச் சரிகை நிறத்தில் மேற்சட்டை அவைகளுக்குப் பொருந்திவரும் வண்ணத்தில் தாவணி இவைகளைச் சகோதரிகள்
தெணியான் - 153

Page 79
மரக்கொக்கு
எல்லோரும் ஒரே விதமாக அணிந்து அங்கு புதிய கோலத்திற் தோன்றுவார்கள். அவர்கள் அணிந்திருக்கும் உடைகளே அவர்களை மணியகாரனின் புத்திரிகள் என்று இனம் காட்டிவிடும். அப்பொழுது எத்தனை வாலிப விழிகள் அவளை வந்து மொய்த்திருக்கின்றன. அவள் அழகிற் சொக்கி தம்மை மறந்து மயங்கி இருக்கின்றன. அவரே மணியகாரன் புதல்வி என்பதால் அவளை நேருக்கு நேர் நோக்குவதற்குத் தயங்கித் தவித்திருக்கின்றன.
காதல் என்பது எந்தவொரு கன்னிப் பெண்ணுக்கும் கிட்டுதற்கு இயலாத சொர்க்க சொப்பனமல்ல.
தெய்வசிகாமணி தன்னை உருக்கி அவள் காதலுக்காகத் தவமிருந்திருக்கின்றான்.
அவன் மணியகாரன் அன்பையும் அவளுடைய காதலையும் பெறுவதற்காக முயன்றிருக்கின்றான். அவன் தனது குருவாக வரிந்துகொண்டவருடன் மணியகாரன் சமய விடயங்களைச் சம்பாஷிக்கும் போதில் பயபக்தியுடன் அவர்களுக்கு அருகில் இருந்து அவைகளைக் கேட்டறிந்திருக்கின்றான். மணியகாரன் மனதில் நல்லபிப்பிராயம் சம்பாதித்துக் கொள்வதற்காகத்தான் அவன் அப்படி நடந்துகொண்டானோ அல்லது எப்படி மணியகாரனின் அந்த நண்பரை அவன் குருவாகக் கொள்ள முடியும்? பள்ளிப் பாடங்களிற் தனக்குண்டாகும் சந்தேகங்களைப் போக்கிக் கொள்வதற்கே ஆரம்பத்தில் அவன் அவரை அணுகினான். சமய விவகாரங்களில் அவனுக்கிருந்துவந்த ஈடுபாடு பின்னர் அவரோடு அவனை நெருக்கமாக இணைத்துவிட்டது. அவரைக் குருவாகக் கொண்ட உத்தம சிஷியன் எப்படிக் காதல் வயப்பட்டுத்தன்னை மறந்து அலைந்திருக்க முடியும்! அவனுடைய குரு சாதாரணமான ஒரு மனிதரல்லர் மிகப்பெரிய ஒரு கல்விமான்; சமயப் பெரியார், ஆசாரசீலர் ஆறுமுகநாவலரிடத்து மிக இறுக்கமான பக்தி பூண்டவர். கல்யாணம் பண்ணியும் பிரமச்சாரியாக வாழ்ந்த உத்தமர் அவர் மணியகாரனுக்குச் சொந்தமான ஆலயத்துக்கு வந்து அங்குள்ள மடமொன்றிற் தங்கி இருந்தார். அவர் துறவு வாழ்வை மேற்கொண்டதற்கும் பின்னணியில் ஒரு கதை உண்டு. அவருக்குத் திருமணமான முதல் நாள் நடு இரவு, கிணற்றுக்குச் சென்று நீராடித் தன்னைப் புனிதப்படுத்திக் கொண்டாராம். அவர் மனைவியானவளும் அவ்வாறுநீராடி வந்த பின்பே படுத்து உறங்கவேண்டும் எனப்பணித்தாராம். எந்தப் பெண் அவளுக்குரிய வெட்கத்தைவிட்டு அந்த வேளையிற் சென்று
154. - - தெணியார்
 

மரக்கொக்கு
நீராடுவதற்குச் சம்மதிப்பாள்? பெண்மைக்கே உரிய வெட்கம் அவளை அவ்வாறு செய்யாது தடுத்தது. சமூகம் தன்னைக் கேலிபண்ணும் என்று அவள் அஞ்சினாள். அவருக்கு அவைகளெல்லாம் பெரியவைகளல்ல. ஆசாரம் ஒன்றுதான் அவருக்கு உயிர் மூச்சு அவரது சொற்கேட்டுப் பணிந்து நடக்காத மனையாளைச் "சற்றேனும் ஏறுமாறாக நடப்பாளேயானால் கூசாமற் கொள் சந்நியாசம்" என்பதனை சிரமேற்கொண்டு அன்றே அவர் நீத்தார். துறவு பூண்டார்.
அவர் பசுவின் பாலைத் தினமும் காய்ச்சிப் பருகுகின்ற முறைமை இருக்கின்றதே அதுவும் ஒரு புதுமைதான் காகிதங்களிற் தீ மூட்டிப் பாலைச் சூடாக்குவார். வேறு எந்தவொரு விறகிலும் தீ மூட்டி அவர் எரிப்பதில்லை. மெல்லிய குடு அரும்பியதும் அதனை அவர் பருகுவார். பால் அதிகம் வெப்பமாகி முறுகிப் போனால் அந்தப் பாலைப்பருகும் போது உடல் இச்சைகள் தோன்றும் என்பது அவர் எண்ணமாம்.
அந்தக் குருவுக்கு வாய்த்த சிஷியன் தான் காதல் வயப்பட்டு நின்றான்.
விஜயலட்சுமி ஆலயத்துக்கு வந்துவிட்டால் அவள் கவனத்தைத் தன் பக்கம் ஈர்ப்பதற்காக அவன் பல பிரயத்தனங்களைச் செய்தான். -
அவன் வாயிலிருந்து பாசுரங்கள் ஒவ்வொன்றாகப் பெருகி ஓடும். ஞானசம்பந்தப் பெருமானின் தேவாரத்தைப் பாடிப்பாடி வழிபாடு செய்வதற்கு அவன் என்றுமே மறந்துபோனதில்லை.
"சிறையாரும் மடக்கிளியே இங்கே வா தேனொடுபால் முறையாலே உணத்தருவேன். சிறையாரும் மடக்கிளியே.மடக்கிளியே.மடக்கிளியே. இங்கே வா.இங்கே வா." அவன் குழைந்து குழைந்து இவ்வாறு பாடி அழைப்பது எந்தக் கிளிய்ையோ! அவள் அறிவாள், அவன் அழைக்கும் அந்தக் கிளி தாபம் மிகுந்த அவன் பாடல் கேட்டு அவள் மனவாய் மெல்ல முறுவலிக்கும். ஆண்டவன் சந்நிதானத்தில் அவனுக்கு இப்படி ஒரு பித்தா எனச் சில சமயம் மனம் வெகுண்டெழும்.
ஆலால சுந்தரரும் இறைவன் திருவருள் வயப்பட்டு மெஞ்ஞானியாக நின்றவரல்லவா? பரவையாரின் பேரெழிலை இறைவன் சந்நிதானத்தில் அவர் கண்ணுற்றபோது "கற்பகத்தின் பூங்கொம்போ காமன் தன் பெருவழிவோ" என்றல்லவா மெய்மறந்து நின்றார். இவன் ஆலால
தெணியான் - 155

Page 80
மரக்கொக்கு
சுந்தரனோ அப்படியானால் அந்தப் பரவையார்.?
அவள் உள்ளம் பெருமிதமுற்று நகைத்துக்கொள்ளும். அவளுடைய ஒரேயொரு ஒரவிழிப் பார்வைக்காக. இதழோரக் குமிணி சிரிப்புக்காக. அவன் எப்படியெல்லாம் அலைந்தான்!
கன்னிப் பெண்ணின் களங்கமில்லாத வனப்பு ஒரு காந்தம் போல, எந்தவொரு காளையையும் கவர்ந்துவிடலாம்.
ஆனால் அவன்தன்னையல்லவா அறியவேண்டும். தனது தகுதியை அல்லவா அவன் உணர்ந்துகொள்ளவேண்டும். தோட்டத்து மண்ணைக் கொத்திக் கிளறிக்கொண்டிருக்கும் ஒரு தோட்டக்காரனின் மகன் அவன். மணியகாரனின் மகளை காதலிப்பதென்றால்.
அன்னலட்சுமி இவைகளையெல்லாம் எப்படி அறிவாள்? அவளுந்தான் அந்தச் சமயங்களில் அருகில் இருந்திருக்கின்றாள். அன்னலட்சுமியை மாத்திரம் ஆண்கள் காதலிப்பார்கள் என்றில்லை.
அன்னலட்சுமியின் பேதமையை எண்ணி அவள் மெல்ல நகைத்துக் கொள்ளுகின்றாள்.
அவள் அழகியாக முன்பு இருந்தவள் என்று மாத்திரம் அவளை இப்பொழுது சொல்லலாம். தங்க வண்ண மாம்பழம் போலத் தளதளத்த அவள் கன்னங்கள் இப்பொழுது வற்றித்தாடை எலும்புகள் மிதந்துவிட்டன. அகன்று விரிந்த நீள் விழிகளில் கருமையின் நிழல் வந்து படிந்து கிடக்கின்றது. தன்னம்பிக்கையும் பெருமிதமும் சிந்திய அந்த விழிகளில் விரக்தியும் ஏமாற்றமும் இன்று இழையோடுகின்றன. வாழைத்தண்டு போல வாளிப்பான அவள் உடல் காய்ந்து நார் பிசிறிச் சருகானது போல ஆகிப்போய்விட்டது. கரு மேகத் திரளிடையே வளைந்து நெளியும் மின்னல்களாக கற்றைக் குழலிடையே வெள்ளிமயிர்கள் சுருண்டு நெளிகின்றன. எப்பொழுதும் மலர்ந்திருக்கும் மிருதுவான அவள் வதனம் இப்பொழுது வாடிக் கிடக்கின்றது. மென்மையான செவ்விதழ்கள் வெளிறிக்கிடக்கின்றன. அவளுடைய நிமிர்ந்த ஒயிலான நடையில் ஒரு தளர்ச்சி வந்து, கால்களை மெல்லப் பின்னுகின்றது. வயது முப்பத்தைந்தைக் கடந்துவிட்ட அவள் தோற்றம், இப்பொழுது மேலும் சில ஆண்டுகளை அதிகரித்துக் காட்டுகின்றது.
அவளுக்கு உள்ளும் புறமும் ஓசையின்றி நடக்கும் போராட்டம் உடல் அழகையும் கொஞ்சம் கொஞ்சமாகச் சிதைத்துக்கொண்டிருக்கின்றது.
வீட்டுக்குள்ளே அன்னலட்சுமியின் வருகை.
56 தெணியான்
 

மரக்கொக்கு
வெளியே தாழ்த்தப்பட்டவர்களின் ஆலயப் பிரவேசம்
கோயிலிலி மகோற்சவங்கள் ஆரம்பித்து நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. மொத்தம் பதினைந்து தினங்கள் இடையூறில்லாமற் திருவிழாக்கள் நடந்து முடியவேண்டும். இறுதி இரணிடு நாட்களும் தேரோட்டமும், தீர்த்தோற்சவமும் இடம்பெறும் அந்த இரு தினங்களிலும் பல்லாயிரக் கணக்கான மக்கள் அங்கு வந்து கூடுவார்கள் இந்த
உற்சவங்களில் வருகின்ற வருமானங்கள் மணியகாரணி குடும்பம்
வாழ்க்கையைக் கொண்டு நடத்துவதற்கு மிக அவசியமானவை.
இந்த ஆண்டு, வழிபடுகின்ற அடியார்கள் இல்லாது ஆலயம் வெறிச்சோடிப்போய்க் கிடக்கின்றது.
வருடந்தோறும் வந்துகொண்டிருக்கும் வருமானத்தை இந்த ஆண்டு எதிர்பார்ப்பதற்கு இயலாது.
இந்த ஆலயத்துக்குள்ளே தாழ்த்தப்பட்டவர்கள் பிரவேசிக்க அநுமதித்தால் மணியகாரன் குடும்பத்துக்குச் சொந்தமான மறு ஆலயத்தையும் அவர்கள் விட்டு வைக்கப்போவதில்லை.
தாழ்த்தப்பட்டவர்கள் மற்றவர்களுக்குச் சமமாக எப்படி ஆலயத்துக்குள் நுழையலாம்! எந்தக் காலத்தில் இப்படியொரு கொடுமையான சம்பவம் நடந்திருக்கின்றது! கடந்த காலத்திற் தோன்றிய ஆலயப் பிரவேச எழுச்சிகளைத் தந்தையான பொன்னம்பல மணியகாரன் மிகத் தந்திரமாக முறியடித்திருக்கின்றார். அவரிடம் இருந்த திறமைகள் தன்னிடம் இல்லையென்றல்லவா உலகம் தூற்றப்போகின்றது. இந்த அவமானத்தைச் சகித்துக் கொண்டல்லவா வாழவேண்டும்.
தாழ்த்தப்பட்டவர்கள் ஆலயப் பிரவேசம் செய்வதற்கு எடுக்கும் முயற்சிகளினால் ஊர் இரண்டுபட்டுக் கிடக்கின்றது.
ஆலயப் பிரவேசம் செய்தே தீருவோம் என்ற வீராப்புடன் தாழ்த்தப்பட்டவர்கள் கிளர்ந்தெழுந்து நிற்கின்றார்கள் ஆலயத்துக்குள் வந்து நுழைகின்றவர்களைத் தடுத்து நிறுத்தவேண்டும் என்ற உணர்வு மறு பகுதியாரிடமும் உள்ளூரப் பொங்கிக கொண்டிருக்கின்றது.
விஜயலட்சுமியின் நிருவாகத்தின் கீழ் ஆலயம் இருக்கும் போது எழுச்சி கொண்டிருக்கும் ஆலயப் பிரவேச முயற்சிகளை உயிரை கொடுத்தாவது அவள் முறியடிக்க வேணடுமெனத துடித்துக்கொணடிருக்கினிறாள். ஆனாலி அவளுடைய மனோ
தெணியான்

Page 81
மரக்கொக்கு
வேகத்திற்கேற்ப அவளாற் செயற்படுவதற்கு இயலவில்லை. இந்தச் சமயத்தில் ஓர் ஆணி மகனைப்போல அவளால் எப்படிக் காரியமாற்றுவதற்கு முடியும்! அவள் மாணிக்கத்தையே கருவியாகப் பயன்படுத்துகின்றாள். அவரைத் தூண்டிவிட்டுக் காரியங்களைச் செய்து முடிக்க எண்ணுகின்றாள். ஆனால் இப்பொழுது அவள் மனதில் ஒரு சந்தேகம் எழுகின்றது. தான் கையாளும் தந்திரோபாயங்கள் அனைத்தும் தோற்றுப் போய்விடுமோ என்று அவள் மனம் ஏங்கிக்கொண்டிருக்கின்றது. ஆலயப் பிரவேசத்தை எதிர்க்கின்ற உயர் சாதியார் மனங்கள் கொதித்துக்கொண்டிருக்கின்றன. ஆனால் இப்பொழுதுள்ள சூழ்நிலையில் அவர்கள் நேருக்குநேர் வந்து மோதிக்கொள்வதற்குத் தயங்கிக் கொண்டிருக்கின்றார்கள் சாதி அபிமானம் சிறிதுமில்லாது அவர்கள் அவளைக் கைவிட்டுவிட்டால், அவள் தனித்து நின்று என்னதான் செய்வதற்கு இயலும் தாழ்த்தப்பட்டவர்களுக்கு அரசியல் ஆதரவும் இருப்பதாக அவள் அறிகின்றாள் பாராளுமன்றத்தில் இருக்கும் அவர்களுடைய நியமனப் பிரதிநிதி இந்த ஆலயப் பிரவேச முயற்சியின் பின்னணியில் இருப்பதாகவும் அவள் உணருகின்றாள். இப்பொழுது என்ன செய்யலாம். ஆறாத வேதனையுடன் அவள் சிந்தித்துப் பார்க்கின்றாள். அவளுக்கு ஒரேயொரு மார்க்கந்தான் தென்படுகின்றது. இந்த ஆண்டு ஆலயத்தில் வருடாந்த உற்சவங்கள் நடைபெறாது இடை நடுவிற் தடைப்பட்டுப் போனாலும் போகட்டும், ஆலயத்துக்குள்ளே தாழ்த்தப்பட்டவர்கள் நுழைந்து போய்விடாதவாறு, ஆலயக் கதவுகளை இழுத்துப் பூட்டி வைக்கவேண்டியதுதான் என்னும் முடிவுக்கு அவள் வ்ருகின்றாள்
ஆலயத்தின் பூட்டிய கதவுகளைத் தாழ்த்தப்பட்டவர்கள் வெளியே நின்று பார்த்துக்கொண்டு சும்மா இருந்துவிடுவார்களா? அவள் சற்றும் எதிர்பார்க்காத வகையிற் காரியங்கள் துரிதமாக நடக்கத் தொடங்கின.
அந்தப் பகுதிப் பொலீளம் அதிகாரியிடம் இருந்து கோயில் மணியகாரனுக்கு ஓர் அழைப்பு வந்தது. மணியகாரன் உடனடியாகப் பொலீளம் நிலையத்துக்கு வந்து தன்னைச் சந்திக்கவேணடும் என்று அந்த அதிகாரி பணித்திருந்தார்.
இப்போது பொலீஸ் நிலையத்துக்கு யார் போவது? மணியகாரன் மகளான அவள்-ஒரு பெண - கோயில் மணியகாரன் எப்தானத்தில் இருந்தபோதிலும் பொலீஸ் நிலையத்துக்கு அவள் செல்லலாமா? வெளியுலகப் பார்வைக்குக் கோயில் மணியம் என்ற முடியைச் சூடிக்கொண்டிருக்கின்றவர் மாணிக்கம் அவரையே பொலீஸ் நிலையத்துக்குச் சென்று வருமாறு
158 தெணியான்

மரக்கொக்கு
அவள் அனுப்பி வைத்தாள்.
பொலீஸ் அதிகாரி சில்வா, மாணிக்கத்தை அழைத்து அவருக்கெதிரில் இருத்திக்கொண்டு, அவருக்குத் தெரிந்த தமிழில் பேசுவதற்கு ஆரம்பித்தார்.
"எல்லாறையும் கோயில் விடுகிறது" அவர் மனதில் என்ன கருதிக்கொண்டு இவ்வாறு பேசுகின்றார் என்பதனை விளங்கிக்கொண்டுவிட்ட மணிக்கம், திருவிழாக்காறர் சம்மதிக்கமாட்டாங்கள்" என்று மறுத்துச் சொன்னார்.
அவங்கலைப் பிடிச்சு உல்லே வைக்கிறது நான் பொலீஸ் அதிகாரி விழிகளை உருட்டி மாணிக்கத்தை உறுத்துப் பார்க்கின்றார். பூசை பணினுகிற குருக்கள் பூசை பண்ண மறுக்கிறார்"
மாணிக்கம் அடுத்த அளப்திரத்தையும் நெஞ்சு படபடக்க மெலிலத் தொடுத்தார்.
பொலீளம் அதிகாரிக்குச் சினம் பற்றிக்கொண்டு வருகிறது. அவர் மீசையைத் தடவி விட்டுக்கொண்டு உரத்த குரலில் மாணிக்கத்தைப் பார்த்துக் கணிடிப்பாகச் சொன்னார்.
குறுக்கள். புகாரி. ஜயர் அவரையும் உலிலே வைக்கிறது. நீங்களையும் உல்லே வைக்கிறது. கோயில் பூட்டுறது இல்லே! பூட்டுறது குலப்பம் நீங்க செய்யிறது. நீங்களையும் பிடிச்சு உல்லே வைக்கிறது மறியலுக்கு மிச்சங்கவனம்/ நீங்க ஆக்கலுக்கு சொல்லிறது. குலப்பம் கூடாது சறியா. மிச்சங் கவனம்.நான் சொல்லி"
- பொலீஸ் அதிகாரியின் எச்சரிக்கையினால் மாணிக்கம் அதிர்ந்து போனார் அடுத்து என்ன செய்வதென்று அறியாமல் அவருக்கு மனம் முற்றாகக் குழம்பிப் போகிறது. ஆலயப் பிரவேசம் செய்கின்றவர்களைத் தடுத்தால். குழப்பம் விளைவித்தால். பூசகர் பூசை செய்ய மறுத்தால். கோயிற் கதவுகளைப் பூட்டி வைத்தால். தான் தப்பித்துக் கொள்வதற்கு இயலாதென்பதை அவர் உணர்ந்தார். தன்னைப் பிடித்துச் சிறைக்குள்ளே தள்ளிவிடுவார் என்று உள்ளுர அவர் அஞ்சினார். விஜயலட்சுமியின் எண்ணப்படி நடந்தால் துன்பங்கள் தனக்குத்தான் வந்துசேரும் என்பதையும் அவர் விளங்கிக்கொண்டார். இனிமேல் அவள் ஏவலின்படி எல்லாம் நடக்கப் போவதில்லை என்று தனக்குள்ளே தீர்மானித்துக்கொண்டார்.
தெணியான் 50

Page 82
மரக்கொக்கு
"ஆன நயினார்மார் இருந்தாலி இப்பிடியும் நடக்குமே! எளிய சாதியளுக்கு இப்ப கொழுப்பு வைச்சிட்டுது. ஆரை மதிச்சு நடக்குதுகள்! எளியதுகளுக்கு ரெண்டு குடுத்து, நில்லடா எண்ட் இடத்திலை நிப்பாட்ட ஆளில்லாமற் போவிட்டுது, கோயிலுக்குள்ளையெல்லோ போய்விட்டானிகள் மணியகாரன் நயினார் இருந்தால் இது நடக்குமே"
சின்னி மனம் பொறுக்க இயலாமற் குமுறிக்கொண்டிருக்கின்றாள் மணியகாரன் வீட்டில் இப்படி வாய் திறந்து அவர்களுக்கு முன் இதுவரை அவள் பேசியது கிடையாது. இப்பொழுது அவள் பேசுவதை அவர்கள் யாரும் கணிடிக்கவில்லை. அவள் கோயில்களுக்குள்ளே போகின்ற உரிமையுள்ள சாதிக்காரி தாழ்த்தப்பட்டவர்கள் தனக்குச் சமமாகிக் கோயிலுக்குள் வந்துவிட்டார்கள் என்ற சீற்றம் அவளுக்கு, நயினாருக்குத் தொண்டு துரவு செய்யும் குடிமகளாக இருக்கின்றவள் அவள் இதுவரை) வழக்கத்தில் இல்லாத இந்தக் காரியத்தை நயினார்மார் தடுத்திருக்க வேண்டுமென்பது அவள் எண்ணம். அவளைப் போலவே அந்தப் பகுதியிற் பலரும் மனம் பொருமிக்கொண்டுதான் இருக்கின்றார்கள். எதிர்த்து நின்று அவர்களால் எதனையும் சாதிப்பதற்கு இயலாத நிலையில் உள்ளே கொதித்துக்கொண்டு இருக்கின்றார்கள்
மணியகாரன் குடும்பத்தினால் இதனைத் தாங்கிக் கொள்வதற்கு முடியவில்லை. அவர்கள் மனங்களில் எழுந்த துயரம் கையறுநிலையில் அவர்களை மெளனமாக்கிவிடுகின்றது. கோயில் அவர்களுக்குச் சொந்தமானதால், இன்று நடந்து முடிந்த ஆலயப் பிரவேசம் தங்களுக்கு நேர்ந்த தனிப்பட்ட அவமானமாக அவர்கள் கருதுகின்றார்கள். நாகரிகமான கொழும்புச் சுழலில் வாழ்ந்துகொண்டிருக்கும் அன்னலட்சுமியினாலும் தங்கள் கோயிலில் நடந்து முடிந்த ஆலயப்பிரவேசத்தை ஏற்றுக்கொள்வதற்கு இயலவில்லை.
விஜயலட்சுமியின் மனநிலையைச் சொல்லவா வேணடும்! மணியகாரனின் புதல்விகளுக்குள் அவர்மீது அளவிறந்த பாசம் வைத்திருந்தவள் விஜயலட்சுமி அந்தப் பாசம் காரணமாக அவர் கால்களில் அணியும் குமிழ் மிதியடி, கையிற் கொண்டு செல்லும் வெள்ளிட்யூண் போட்ட கைப்பிரம்பு என்பவைகளை இன்றும் தனது அறையில் வைத்து மானஸிகமாகப் பூசித்துக்கொண்டு வருகின்றாள். இப்படி அவள் பாசம் வைத்திருந்த அவளின் தந்தை காலமானபோது மனதிற் பொங்கிய
160 தெணியான்

மரக்கொக்கு
துயரத்திலும் மேலான துயரம் இன்று அவள் உள்ளத்திற் பெருகிக்கொண்டிருக்கின்றது. தந்தை மறைந்த வேளை அந்த வேதனையைக் கண்ணிராக அழுது வடிப்பதற்கேனும் அவளுக்கு முடிந்தது. ஆனால் இன்றைய தோல்விகள் அவமானங்கள் என்பவைகளால் அவள் பகிரங்கமாக அழுது கண்ணிர் விட முடியுமா?
அவள் எவைகளை மனதிலிருந்து பிடுங்கித்தூர எறிந்துவிடுவதற்கு எண்ணுகின்றாளோ அவைகள் தான் மீண்டும் மீண்டும் அவள் நினைவுத் தடத்தில் ஊர்ந்து வருகின்றன. ஒன்றை மறந்துவிடவேண்டும் என்று நினைப்பது நினைவின் பிம்பங்களாகி அதனை மறக்கவியலாது நெஞ்சில் நிலைத்துவிடுகின்றது. மனதிலிருந்து மறந்து போகவேண்டியவைகளை மறப்பதற்கான மார்க்கமென்ன? அதற்கே ஒரு மார்க்கமில்லை. அவளுக்குப் பைத்தியம் பிடித்துவிடும் போலத் தோன்றுகின்றது. ஒரு கணம் அவள் மனதுக்கு உறக்கமில்லை. தனக்குத்தானே அது பெருஞ்சுமையாகி அலைந்துகொண்டிருக்கின்றது.
அவள் ஆலயப்பிரவேசத்தை எப்படியும் தடுத்துவிட வேண்டுமென்று எண்ணினாள் அதற்குத் தன்னால் ஆகக்கூடிய பிரயத்தனங்கள் அத்தனையும் செய்து பார்த்தாள். அவைகள் எல்லாமே இன்று தோற்றுப் போய்விட்டன. இன்று நடந்து முடிந்த ஆலயப் பிரவேசம் அவள் இதயத்தைக் கோரமாகத் தாக்கிப் பிய்த்துக் குதறிவிட்டிருக்கின்றது. அவள் மனம் இப்பொழுது அமைதி தேடி அலைந்துகொண்டிருக்கின்றது. அதற்கெங்கே அமைதி? கூடத்து நாற்காலிக்குள் சரிந்து முடங்கிக் கிடக்கின்றாள். பின்னர் எழுந்து அந்த நான்கு சுவர்களுக்கிடையே அங்குமிங்குமாக நடக்கின்றாள். நாற்காலிக்குள் எவ்வளவு நேரம் முடங்கிக் கிடப்பது? எவ்வளவு நேரம் கூடத்துக்குள் நடையாக அலைந்துகொண்டிருப்பது? அதுவே அவளுக்கொரு சிறைபோல இப்போது தோன்றுகின்றது. கூடத்தைவிட்டு நீங்கி வெளியே போகவேண்டும் போலத் தோன்றுகின்றது. இப்பொழுது எங்கே போகலாம்? பூந்தோட்டத்துக்குட் சென்று உலாவுவதிலும் அவள் மனதுக்கு நாட்டமில்லை. ஆனால் கூடமெனினும் அந்தச் சிறையை விட்டு வெளியே சென்றுவிடவேண்டுமென உள்ளம் துடித்துக்கொண்டிருக்கின்றது. எந்தவித நோக்கமும் இல்லாது கூடத்துக்கு வெளியே அவள் வருகின்றாள் அவள் செல்ல வேண்டிய பாதை எதுவும் புதிதாக மனதுக்குத் தென்படவில்லை. காலிகள் பழகிப்போன பழைய பாதையில் வீட்டுக்குப் பின் புறமாகத் திரும்ப காலி போன போக்கில் நடந்துகொண்டிருக்கின்றாள்.
தெணியான் 161.

Page 83
மரக்கொக்கு
வீட்டை அடுத்து தென்னந் தோப்பைக் கடந்து பனை மரங்களும் மரஞ் செடிகொடிகளும் செறிந்து வளர்ந்து நிற்கும் பற்றைக் காட்டுக்கூடாக ஒற்றையடிப் பாதையிற் போய்க்கொண்டிருக்கின்றாள்.
அந்தச் சிறிய காட்டுப் பகுதிக்கு மத்தியிற் கூரைகளை இழந்து சிதைந்துபோன கட்டிடங்கள் ஆங்காங்கே அவள் கணிணிற்படுகின்றன. அவைகளெல்லாம் அவள் நெஞ்சிலிருந்து பெருமூச்சை எழுப்பிவிடும் அளவுக்கு இண்று அவள் மனதைத் தொடவில்லை. இண்று தாழ்த்தப்பட்டவர்களின் ஆலயப்பிரவேசம் ஒன்றுதான் அவள் ஆத்மாவைக் குடித்துக்கொண்டிருக்கின்றது.
அவள் வேகமாக நடந்து சென்றுகொண்டிருக்கின்றாள். அவள் பார்வையிற் குதிரை லாயம் ஒன்று படுகின்றது. அதன் சுவரோரமாக யாரோ பெண்ணொருத்தி நின்றுகொண்டிருப்பது அகஸ்மாத்தமாக அவள் பார்வையில் வந்துவிழுகின்றது.
அவளுக்கொரே வியப்பு உள்ளம் திடீரென்று விழித்துக் கொள்ளுகின்றது. மனக் குழப்பங்கள் ஒதுங்கிப் போகின்றன. அவள் கவனம் அந்தப் பெண்ணின் மேல் வந்து குவிகின்றது.
அவள் இப்பொழுது எச்சரிக்கையாகிவிடுகின்றாள். யார் அவள்? மாலைப் பொழுது மங்கி மறைந்துகொண்டிருக்கும் இந்த வேளையில் அவளுக்கிங்கே என்ன வேலை?
அவள் எதற்காக இங்கு வந்து நிற்கின்றாள்? இப்பொழுது எண்னதான் அவள் செய்துகொண்டிருக்கின்றாள்?
விஜயலட்சுமி மனதில் எழும் சந்தேகங்கள் நெஞ்சில் வினாக்களாகப் பிறக்கின்றன. *
அவள் சென்றுகொணடிருக்கும் பாதையிலிருந்து விலகி, பற்றைக்கூடாக ஓசைப்படாமல் மெல்ல நுழைந்து சென்று, அந்தப் பெண்ணின் பார்வையிற் படாதவண்ணம் ஒளிந்துகொண்டு நிற்கிறாள். பாசி படர்ந்து கரும்பச்சை வண்ணத்திற் தோன்றும் அந்தக் கட்டிடத்தினி ஒரு சுவரிலிருந்து ஆலமீ விழுதொனிறு தொங்கிக்கொண்டிருக்கின்றது. அந்த விழுதினை ஒரு கரத்தினாற் பற்றிப் பிடித்தவாறு கால் ஒன்றை மடக்கிச் சுவரில் முண்டு கொடுத்த நிலையிற் சுவர் மீது பட்டும்படாமலும் ஒய்யாரமாகச் சாய்ந்து நிற்கும் அந்தப் பெணி. வேறுயாருமல்ல. பொன்னம்பல மணியகாரனின் கனிஷ்ட புத்திரி
162 தெணியான்

மரக்கொக்கு
தனலட் சுமிதான்.
அவளுககு முனி கம்பீரமான ஒரு இளைஞன - சின்னராசன்-நின்றுகொண்டிருக்கின்றான். அவனுடைய அரையில் இயனக் கூடு-கையிற் கள்ளு முட்டி தொங்குகின்றது. சினம் கொண்ட அவன் முகம் இன்று வழமைக்கு மாறாகப் புதுமையாக மலர்ந்திருக்கின்றது. இப்படி மலர்ந்திருக்கும் அவன் முகத்தை தனலட்சுமி காணபதே அரிது. அவள் சிலவேளைகளில் எணணுவதுண்டு, மணியகாரன் வளவுக்குள் வந்துவிட்டாற் தானி அவன் இப்படி மாறிவிடுகின்றானா என்று வீட்டுக்குப் பின்புறத்தில் சிதைந்து கிடக்கும் பல்லக்கு அவன் கணிணிற்படும் வேளைகளில் எல்லாம் அவனுக்குச் சினம் பொங்கிக்கொண்டு எழும். அப்பொழுது அவன் தனலட்சுமியைப் பார்த்துச் சொல்லியிருக்கின்றான்இந்தப் பல்லக்கு என்ரை தகப்பனிரை தோளிலை ஏறிச் சவாரி போயிருக்குமோ எனக்குத் தெரியாது. நிச்சயமாக என்ரை பாட்டனிரை தோள்மீது சவாரி விட்டிருக்கும். இது உங்களுக்கு அதிகாரத்தின் சின்னம்; எங்களுக்கு அடிமைச் சின்னம்."
அவன் வார்த்தைகளைக் கேட்டுச் சமாதானம் சொல்ல இயலாது தனலட்சுமி மெளனமாக இருப்பாள்
அவளுக்குப் புரியாத ஒரு புதிராகவே அவன் எப்பொழுதும் இருந்துவருகின்றான். அவனைத் தேடிக்கொண்டு அவள் வலிந்துபோனால் அவளோடு அவன் முகம் கொடுத்துப் பேசுகின்றான். மற்றச் சமயங்களில் அவளைக் கண்டும் காணாதவன் போல அலட்சியமாகத் தலை நிமிர்ந்து போய்விடுகின்றான்.இன்று அவன் வித்தியாசமாக இருப்பதாகவே அவளுக்குத் தோன்றுகின்றது. அவனுடைய வெளித் தோற்றமும் புதுமையாகத்தான் தெனிபடுகின்றது. நெற்றியிற் துலக கமாகத் திருநீறு பூசிக்கொண்டிருக்கின்றான். அதன் மத்தியிற் சந்தனத் திலகமிட்டு, மார்பிலும் தடித்த சந்தனம் பூசிச் சைவப் பொலிவுடன் விளங்குகின்றான்.
அவனைத் தேடிவந்து அங்கு காத்து நிற்கும் தனலட்சுமியைப் பார்ந்து மெல்ல நகைத்தவாறு அவன் கேட்கின்றான்.
"என்ன சின்ன மணியகாரன் இந்தப் பக்கம்?" எப்பொழுதும் அவன் இப்படித்தான் கிண்டலாகவே பேசுவான் என்பதை அவள் அறிந்திருந்தும், "சும்மா பகிடி பண்ணாதையுங்கோ" எனச் செல்லமாகக் கோபித்துக்கொள்ளுகின்றாள்.
அப்ப. சின்ன உடைச்சியார் எண்டு சொல்லட்டுமா?." அவன்
தெணியான் 163

Page 84
மரக்கொக்கு
மீண்டும் அவளைக் குத்திப் பார்க்கின்றான்.
"உங்களுக்கு எப்பவும் பகிடிதான்" சிணுங்கிக்கொண்டு அங்கிருந்து கிளம்பிப் போய்விடுகின்றவள் போல அவள் பாவனை பண்ணுகின்றாள்.
அவனுக்குத் தெரியும், அவள் அங்கிருந்து இப்போது போய்விடமாட்டாள் என்பது. ஆனால் அவளுடைய நடிப்பை நம்பி அவள் அங்கிருந்து புறப்பட்டுச் செல்வதைத் தடுக்கின்றவன் போலக் கைகளை நீட்டிக் குறுக்கே நிற்கின்றான்.
இந்தக் காட்சிகளால் விஜயலட்சுமிக்கு உள்ளமும் உடலும் பற்றி எரிகின்றன. இப்பொழுது செய்வதென்ன என்று அவளுக்குப் புலப்படாமல் அவள் பதறுகின்றாள். அங்கிருந்து செல்வதற்குப் புறப்பட்ட தனலட்சுமி இந்த அளவிலாவது அங்கிருந்து போய்விடமாட்டாளா. என ஏங்கியவண்ணம் மனதை ஒருவாறு அடக்கி, பல்லைக்கடித்துக் கொண்டு அவர்களைக் கவனித்துக்கொண்டிருக்கின்றாள்.
தனம், ஏன் வந்த நீ? அதைச் சொல்லு" அவன் தனலட்சுமியிடம் உரிமையுடன் வினவுகின்றான்.
அவள் திரும்பி முன்னர் நின்றது போலக் கவர்ச்சியாக நின்றவண்ணம், அவன் நெற்றியிலும் மார்பிலும் மாறிமாறிப் பார்வையைப் பதித்து, அவள் பக்திக் கோலத்தைக் குத்திக் காட்டி, உங்களை ஒருக்கால் பாக்கவேணுமெண்டுதான் வந்தனான்." என்கின்றாள்
தினமுந்தானே எனினைப் பாக்கிறாய்?" இப்பிடி ஒரு பக்தரை இதுக்கு முந்தி நான் பாக்கயில்லை." "என்ன பகிடியா பண்ணுறாய்?"
இதென்ன பகிடி" "பின்னை எண்ண் எங்கட உரிமைகளை நாங்கள் வெண்றெடுக்க விரும்புறம் சமூக நீதியை நிலைநாட்டுறதுக்காக நாங்கள் போராடவும் தயாராக இருக்கிறம்."அவன் வார்த்தைகள் தடித்துக்கொண்டு வருகின்றன.
ஐயோ! ஐயோ! நீங்கள் ஏன் கோவிக்கிறியள் ராசு!" அவள் சற்றுத் தடுமாறிப் போகின்றாள்.
இது உனக்குப் புரியாது." அவள் மெளனமாக அவன் முகத்தையே நோக்கி நிற்கின்றாள். "எவன் உரிமைகளை இழந்து நிற்கின்றானோ, அவன் தனது உரிமைகளுக்காகப் போராட வேணும். எங்கட உரிமைக்காக நாங்கள் தான் போராட வேணும்."
164 தெணியான்

மரக்கொக்கு
அவன் எப்பொழுதும் இப்படித்தான் என்பது அவளுக்குத் தெரியும். இந்தத் தருணங்களில் அவன் உணர்ச்சிவசப்பட்டு நிற்பாண். அவன் உள்ளத்தைச் சாந்திப்படுத்தும் நோக்கத்துடன் அப்பொழுது அவள் சொன்னாள்,
நீங்கள் கோயிலுக்குள்ளை போனது எனக்கு நல்ல விருப்பந்தானே rurgs"
அவன் ஏளனமாக அவளைப் பார்த்து நகைத்துக்கொண்டு நான் ஒருதன் மாத்திரம் போனது உனக்கு விருப்பம். இல்லையா?" எனக் கேட்டு அவள் முகத்தை உன்னிப்பாக நோக்குகின்றான்.
அவள் தலை கவிழ்ந்து மீண்டும் மெளனமாக நிற்கின்றாள். சற்று நேரம் தாமதித்து அவன் மனம் ஆறிய பிறகு, "சரி. சரி. அதை விடு உண்ரை அக்கா நாச்சியார் இப்பென்ன சொல்லுகிறா?" எனத் திரும்பவும் நையாண்டியாகப் பேச ஆரம்பிக்கின்றான்.
'ஆர் விஜயாவோ?" "வேறை ஆர்! அவதான்" நீங்களும் அவவுக்குச் சரியான பயந்தான்." அவளும் பழைய நிலைக்குத் திரும்பி சொல்லிக்கொண்டு மெல்லச் சிரிக்கின்றாள்.
"ஆர் நானோ" கேட்டுக்கொண்டு பலமாகச் சிரித்துவிட்டு மேலும் சொல்லுகின்றான். "என்னை எங்கடை அப்பு எண்டுதான் இப்பவும் நீ நினைச்சுக்கொண்டிருக்கிறாய். இல்லையா? அந்தக் காலம் மலையேறிப் போச்சு அவவை ஆர்மதிக்கிறது! அவவும் தன்னாலை ஆனமட்டுந்தானே பாத்தா எங்களைத் தடுத்துப் போடலாமெண்டு. அது நடக்கிற காரியமல்ல. பாவம்! பெம்பிளை எண்டுதான் நான் நினைச்சு நடந்து கொள்ளுகிறன்." சரி. இருண்டு போச்சு,நான் போறன் ராசு" அவள் அங்கிருந்து புறப்படப்போகின்றவள் போல போவதற்குத் தயாராகின்றாள். "சரி வேறை என்ன?" அவன் கேட்கின்றான். ஒண்டுமில்லை". அவன் முகத்தை ஒரு தடவை குறிப்பாக நோக்கி பின்பு தரையை நோக்கிப் பார்வையைத் தாழ்த்துகின்றாள். அதன் பிறகு குனிந்த தலை நிமிராமலே ஆ. மறந்து போச்சு நாளைக்குத் தேங்காய் பறிச்சுத் தரவேணும்," என்கின்றாள்.
அப்ப, நாளைக்கு எண்னை விடமாட்டாய். உன்னோடைதாண் முழு நேரமும் நான் மினக்கெடவேணும்."
அவள்முகத்தில் பொய்யான கோபம் பொங்கிக்கொண்டு வருகின்றது.
தெணியான் 1.65

Page 85
மரக்கொக்கு
அவன் முகத்தைப் பார்த்து முறைக்கின்றாள்
நாச்சியாருக்குக் கோபம் வருகுது. சரி சரி இப்ப கோபிக்க நேரமில்லை." என்று சொல்லிக்கொண்டு, அப்பொழுதுதான் ஞாபகம் வந்தவன போல, "ஆ, இந்தா" என இடுப்பில் சொரு கி வைத்துக்கொண்டிருக்கும் ஐம்பது ரூபா நோட்டொன்றை உருவி எடுத்து அவளிடம் நீட்டுகின்றான்.
"என்ன இது?"
அண்டைக்குக் கேட்டியே காசு."
ஓ. ஒரு கிழமையில திருப்பித் தருவன்."
"ஆர் உன்னைத் திருப்பிக் கேட்டது"
அவள்கரம் அவனுடைய நீட்டிய கரத்தை நோக்கித் தயக்கத்துடன் மெல்ல நீளுகின்றது. மிருதுவான அவள் கரத்தை அவன் பற்றி அதனுள் அந்த நோட்டை வைத்து மெல்ல அழுத்துகின்றான்.
விஜயலட்சுமிக்கு இப்பொழுது கணிகள் இருண்டுகொண்டு
வருகின்றன. அவள் உணர்வுநிலை தளம்பிமயங்கிக் கீழே சரிந்துகொண்டு போனவள் பட்டென்று அருகே நிற்கும் மரமொன்றை இரு கரங்களினாலும் இறுகப் பற்றிப் பிடித்து, அதன் மீது மெல்லத் தலை சாய்ந்து உடல் துவண்டு தளர்ந்து நிற்கின்றாள்.
பின்னர் சில நிமிஷங்கள் கழிந்து போக . மயக்கம் மெல்ல மெல்லத் தெளிந்துகொண்டே வருகின்றது. அவளுக்குப் பூரணமாகத் தன்னுணர்வு வந்ததன் பின் அவள் சிலிர்த்துக்கொண்டு தன்னைச் சுதாகரித்துக்கொள்ளுகின்றாள். அதன் பிறகு ஒரு துளிப்பொழுதுதானும் அவளால் அங்கு தரித்து நிற்பதற்கு இயலவில்லை. அவள் தான் வந்த சுவடு தெரியாமல் மெல்லத் திரும்பி ஒற்றையடிப் பாதைக்கு வந்து, அங்கிருந்து வேகமாக நடக்க ஆரம்பித்தாள் -
மணியகாரன் மகளும் அவனும் மிக நெருக்கமாக.
இதற்கெல்லாம் காரணம் மணியகாரன் குடும்பத்துக்கு நேர்ந்த பண முடைதான். அவர்கள் வசதியுடன் வழிந்த காலத்தில் அந்த வளவுக்குள் ஒருவன் வந்து கள்ளிறக்குவது பற்றிக் கற்பனையாகப் பார்ப்பதற்கும் அஞ்சுவான். இன்று அங்கு நிற்கும் தென்னை, பனை மரங்கள் சிலவற்றைக் கள்ளிறக்குவதற்குக் கொடுக்கவேண்டியநிர்ப்பந்தம் அவர்களுக்கு வந்துவிட்டது.
166 தெணியான்

கொக்கு
அந்தக் குடும்பத்தின் மேல் மாறாத விசுவாசத்துடன் பணிந்து தொண்டுகள் செய்துவந்தான், முத்தன். அவனுக்குப் பின் மகன் முருகன் அங்கு வந்து தகப்பனைப் போல நடந்து மரங்களிற் கள்ளிறக்கிக்கொண்டிருந்தான். அவன் வாதநோய் வயப்பட்டு மரங்களில் ஏறி இறங்குவதற்கு இயலாத நிலைமை வந்தபோது, அவன் மகன் சின்னராசன் மணியகாரன் வளவுக்குள் வந்து போகத் தொடங்கினான்.
மணியகாரன் குடும்பத்தின் அடிமையாக இருந்து தொண்டு துரவுகள் செய்து வந்திருக்கும் சிறைக் குட்டிகளுள் ஒருவனோடு இன்று
இந்தக் காட்சியைத் தான் நேரிற் கண்டதன் பிறகும் இன்னும் ஏன் கணிகள் அவிந்துபோகவில்லை. தன் உடலைவிட்டு உயிர் ஏன் பிரிந்து போகவில்லை.
மரணம். ஆமாம் அது ஒன்றுதான் இந்தத் துயரங்களிலிருந்து விடுதலை தரும்.
மரணம் பற்றிய எண்ணம் நெஞ்சில் எழுந்தபோது அந்த வளவின் ஒரு மூலையிலிருக்கும் குளம் அவள் நினைவுக்கு வருகின்றது. அந்தக் குளத்தில் முன்னர் ஒரு மரணம் நிகழ்ந்திருக்கின்றது. மணியகாரன் குடும்பத்து அடிமைகளில் ஒருவனான வெள்ளையண் அதில் விழுந்து தற்கொலை செய்திருக்கின்றான். அந்த வெள்ளையனின் கதை இப்பொழுது அவள் நினைவுக்கு வருகின்றது.
வெள்ளையன் மணியகாரன் குடும்பத்தின் மேல் மிகுந்த பற்றுள்ள ஒரு அடிமையாக இருந்து எப்பொழுதும் அவர்களுக்குத் தொண்டுகள் செய்துகொண்டிருந்தான். அவன் தன் குடிசையை மறந்து சில தினங்கள் அங்கேயே தங்கி இருந்துவிடுவதும் உண்டு. அவனுடைய மனைவி மக்கள் பற்றி அவன் பெரிதாக அலட்டிக்கொள்வதில்லை. மணியகாரன் குடுமீபத்துக்கு ஒருவித குறைவும் நேர்ந்துவிடக்கூடாதென்ற அக்கறையுடன் எப்பொழுதும் உழைத்துக்கொண்டிருப்பான் மணியகாரன் வளவுக்குள் அவனை எந்தச் சமயத்திலும் காணலாம். அப்படி என்ன வேலைகள் அவனுக்கென்று அங்கே குவிந்து கிடக்கின்றன என்று அவர்களுக் கே தெளிவாகத் தெரியாது. ஆனால் ஓயாமல் அவன் வேலைகளைச் செய்துகொண்டுதான் இருப்பான். அந்த வெள்ளையணுக்கு ஏனோ ஒரு சமயம் சித்த சுவாதீனம் இல்லாமற் போனது. அப்பொழுதும் பழையநினைவுகளால் அவன் உள்ளம் அலைந்துகொண்டு இருந்திருக்க
தெணியான் 167

Page 86
மரக்கொக்கு
வேண்டும். மணியகாரன் வளவுக்குத் தினமும் அவன் வருவான் முன்போல வேலை செய்கின்றவனாக அங்குமிங்குமாக அலைவான். சிலசமயம் மரநிழலின் கீழ் ஏகாந்தமாகப் படுத்துக் கிடப்பான். எதைக் கொடுத்தாலும் மறுப்பின்றி வாங்கித் திண்பான் முன்பெல்லாம் வாய் ஓயாமல் சளசளென்று பேசிக்கொண்டிருக்கும் அவன், இப்பொழுது கேட்டதற்கே வாய் திறந்து பதில் சொல்லாது எங்கோ பார்த்து விழித்துக்கொண்டு நிற்பான்.
அவன் இப்படியாகிப் போனதில் மணியகாரன் குடும்பத்துக்கு அவன் மீது மிகுந்த அநுதாபமீ. அவன் அங்கு வந்து போய்க்கொண்டிருப்பதை அவர்கள் யாருமே தடுப்பதில்லை. அவன் விரும்பிய நேரம் அங்கு வருவான்; பின்பு போவான். இப்படி அலைந்துகொண்டு திரிந்தவன், ஒருதினம் திடீரென்று காணாமற் போய்விட்டான். அவன் மனைவி மக்கள் அவனைத் தேடத் தொடங்கினார்கள் இரண்டு நாட்களின் பின் அந்தக் குளத்து நீரில் பனை மரக்குற்றி ஒன்றை இரு கரங்களினாலும் வலுவாக அணைத்துப் பிடித்தவண்ணம் அவன் பிணமாக மிதப்பதை அவர்கள் கண்டார்கள்
அதன் பிறகு அவனுடைய ஆவி பேயாக அலைந்து கொண்டிருப்பதாகச் சொன்னார்கள் அது இரவு வேளைகளிற் கூக்குரல் இடுமாம். பிறகு பெருங் குரல் எடுத்து அழுமாம். கோபங்கொண்டு மரங்களைப் பிடித்து உலுப்புமாம். போவோர் வருவோரைப் பிடித்துச் சேவுத்டைகள் செய்து அட்டகாசம் பண்ணுமாம். இப்படி எல்லாம் அப்பொழுதி பேசிக்கொண்டார்கள். அதனால் அந்திப் பொழுது கருக ஆரம்பித்துவிட்டால் அந்தக் குளம் இருக்கும் பக்கம் செல்லுவதற்கு எல்லோரும் அஞ்சினார்கள் வெள்ளையண் குளத்தில் விழுந்து செத்துப் போனதும், பின்னர் அவன் பேயாக அலைந்து திரிந்ததும் பொன்னம்பல மணியகாரன் பிறந்த காலத்தில் நிகழ்ந்து முடிந்த பழங்கதைகள். ஆனால் இரண்டு தலை முறைகளுக்குப் பின்னரும் மனங்களில் வெள்ளையனின் ஆவி இன்னும் பேயாக அலைந்துகொண்டுதானிருக்கின்றது. -
வெறிகொண்டு பேயாக அலைந்துகொண்டிருக்கும் வெள்ளையனின் ஆவி விஜயலட்சுமியை இப்பொழுது என்னதான் செய்துவிட முடியும்? அவளே பேயாக மாறிப்பிய்த்துக் குதறிப் போட்டுவிடமாட்டாளா? தனலட்சுமி, சின்னராசன் இருவரையும் பிடித்து அப்படிக் குதறி எறிய வேண்டுமென்றே அவள் இப்போதும் துடித்துக்கொண்டிருக்கின்றாள். குளத்தில் விழுந்து தற்கொலை செய்து பேயாக அவள் மாறினால். அவள் வேகமாக வந்து
168 தெ რგტflut|ffტუ7
 

மரக்கொக்கு
குளத்தின் கரையிலுள்ள ஒரு கல்லின் மேற் தொப்பென்று அமர்ந்து கொள்கின்றாள்.
அந்தக் குளம் அரிச்சந்திரன் மனைவி சந்திரமதியின் கழுத்திற் கட்டிய தாலிபோல இப்பொழுது எல்லோருக்கும் எளிதிலே கண்களிற் தோன்றது. அங்கு ஒரு குளம் இருந்தது என்பதை அறிந்தவர்கள் மட்டுமே உன்னிப்பாகக் கவனித்துக் கண்டுகொள்ளலாம். குளத்தில் கரையைச் சுற்றி முன்னர் ஒரு காலத்தில் இருந்த மேற்கட்டுக்கள் இப்பொழுது இடிந்து சிதைந்து குளத்து நீரினுள் விழுந்து மூழ்கிப் போய்க்கிடக்கின்றன. குளத்தினுள்ளே சேறும் சகதியும் நிறைந்து நீர் மட்டும் மேலே உயர்ந்து கரையை மூடிப் பரந்து, அதன் மீது பச்சைக் கம்பளம் விரித்தது போலப் பாசி படர்ந்து தடித்துக் கிடக்கின்றது. அதனைத் தொட்டுக்கொண்டு அறுகு, வசம்பு, புறாக்காலி புல் பூண்டுகள் குளுகுளுத்து நிற்கின்றன. அவைகளுக்கு மத்தியில் இரண்டொரு கற்கள் ஆமையின் முதுகுகளாக மிதந்து கிடக்கின்றன.
எங்கும் பச்சைப் பசேலெனத் தோன்றும் அந்தக் குளக்கரையில் விஜயலட்சுமி உண்மத்தம் பிடித்தவளாக உட்கார்ந்திருக்கின்றாள். அந்திப்பொழுது, பாசி படர்ந்து கிடக்கும் நீர்ப்பரப்பு செழித்து வளர்ந்து நிற்கும் மரஞ் செடிகொடிகள், நீரினாற் சிலிர்த்து நிற்கும் புல் பூண்டுகள், மெல்ல வீசிக்கொண்டிருக்கும் மாலை நேரத்துக் குளிர்ச்சியான மெல்லிய காற்று, இவைகள்இனிய சுகம் தரும் அந்தச் சூழலில் அவள் உடலிலிருந்து வியர்வை ஆறாகப் பெருகி ஓடிக்கொண்டிருக்கிறது. அவள் உள்ளேயும் துயரத்தின் பிரவாகம் பொங்கிக்கொண்டிருக்கின்றது. வாய்விட்டுக் கதறி அழவேண்டும் போல ஓர் உந்தல் மேலே பொங்கி வருகின்றது. அதனையும் நிர்ப்பந்தமாக உள்ளே அடக்கிக்கொண்டு நிஷ்டைகூடி நிசப்தமாகத் தியானத்தில் அமர்ந்திருக்கின்றவள் போல குளத்தை நோக்கி வெறித்துக் கொண்டிருக்கின்றாள்.
அறிவு மடம்பட்டுக்குளத்தை நோக்கித் தற்கொலை எண்ணத்துடன் வந்த மனநிலையிலிருந்து இன்னும் அவள் விடுபடவில்லை.
ஓ. தற்கொலை. தற்கொலை இந்த இம்சைகளிலிருந்து முற்றாக விடுபடுவதற்கான ஒரே வழி.
தற்கொலை உணர்வு உள்ளத்தில் மூர்க்கமாகக் கிளர்ந்தெழுகின்றது. தனக்கு தன் குடும்பத்துக்கு நேர்ந்த அவமானங்களுக்கெல்லாம் ஒரே தீர்வு தற்கொலைதான் என்று அவள் எண்ணுகின்றாள். -
தெ னியான் 169

Page 87
மரக்கொக்கு
சற்று நேரம் வெறுமையாக மேலும் கழிந்து போகின்றது.இப்பொழுது அவள் சிந்தனை இன்னொரு திசையிற் திரும்பி குடும்பத்தைப் பற்றி எண்ணமிடுகின்றாள். தான். தற்கொலை செய்துகொண்டால் மணியகாரன் குடும்பத்தின் பெருமைகளை யார் காப்பாற்றப்போகின்றார்கள்? தனது தற்கொலையினால் மணியகாரன் பரமீபன்ரக்கு இன்னும் அவமானமல்லவா வந்து சேரும்! தற்கொலை. தற்கொலை. இது சரியானதா? அவள் சிந்தனை தெளிவில்லாது குழம்புகின்றது. அவளால் ஒரு முடிவுக்கும் வருவதற்கு இயலாது அவள் குழம்பிக்கொண்டிருக்கும்பொழுது. ஐயோ!. பயங்கரமான அவலக் குரல் ஒன்று எழுகின்றது. அவள் திடுக்குற்று உடல் பதறிக்கொண்டு விழிக்கின்றாள். வெள்ளையண். வெள்ளையனின் ஆவி பேய் நினைவுகள் அவள் நெஞ்சில் வந்து குத்துகின்றன. அந்தக் குரல் எங்கே இருந்து எழுந்தது? வெளியே இருந்துதான் எழுந்ததா? அல்லது மனப்பிராந்தியா! அவளாற் தீர்க்கமாக உணர்ந்துகொள்ள இயலவில்லை. மனதிற் திடீரென எழுந்த பீதி அவளைப் பிடரி பிடித்து உந்துகின்றது. அவள் சட்டென்று எழுந்து வீடு நோக்கி ஓட ஆரம்பிக்கின்றாள்.
பொழுது கருகி இப்பொழுது நன்றாக இருட்டிக்கொண்டுவிட்டது. சில் வண்டுகள் எங்கும் சப்திக்கின்றன. மின்மினிப்பூச்சிகள் அங்குமிங்கும் வட்டமிட்டுக் கணி சிமிட்டுகின்றன. -
அவளுக்கு உடலெங்கும் வியர்த்துக் கொட்டுகிறது. நாவிலே தணியாத வரட்சி அவள் மூச்சிரைக்கும் சத்தம் அவளுடைய செவிகளிற் தெளிவாக விழுகின்றது. அச்சத்துடன் பின்புறமாகத் திரும்பித் திரும்பிப் பார்த்த வணிணம் வேகமாக இப்பொழுது அவள் வந்து கொண்டிருக்கின்றாள். காடு போன்று அடர்ந்த பகுதியின் நடுப்பாகத்தை அவள் தாண்டிக்கொண்டிருக்கின்றாள். திடீரென எரி வண்டுகள் பறந்து வந்து அவள் விழிகளில் பட்டென்று விழுந்துவிடுகின்றன. விழிகளில் எரிவெடுக்க ஆரம்பிக்கின்றது. சேலைத் தலைப்பை இழுத்துக் கண்களை மெல்ல மெல்ல ஒற்றி எரி வண்டுகளை வெளியே எடுத்துவிடப் பிரயத்தனிக்கின்றாள். கண்களை வெட்டி வெட்டித்திறக்கின்றாள். அவளுக்குப் பார்வை மங்கி எல்லாமே இருண்டு போய்க் கிடக்கின்றது.
கணிகளில் எடுக்கும் எரிவு இன்னும் தணியவில்லை.
காகங்கள் உச்சிப் பனைக் கூட்டுக்குக் குடும்பங்களாகத் திரும்பி வந்து சிறகடித்துச் சேருகின்றன.
170 தெணியான்

மரக்கொக்கு
அந்த வளவின் எங்கோ ஒரு மூலையிலிருந்து ஆந்தை ஒன்று அலறுகின்றது.
அவளால் ஒரு அடியேனும் நிதானமாக முன்னே எடுத்து வைப்பதற்கு இயலவில்லை. அவள் இருளைத் துழாவித் தடுமாறித் தவித்துக்கொண்டு நிற்கின்றாள்.
வெள்ளையனின் ஆவி மீண்டும் அவள் நினைவுக்கு வருகின்றது. உடலெங்கும் குளிர் பரவி உள்ளே சில்லிடுகின்றது. மனதிற் பொங்கும் அச்சமும் துயரமும் தீரும் வரை நெஞ்சு வெடிக்கப் பலமாகக் கதறி அழவேண்டுமென ஓர்உணர்வு நெஞ்சுவரைமுட்டிக்கொண்டு எழுகின்றது. ஆனால் வாய்விட்டு அழுவதற்கும் இப்பொழுது முடியவில்லை. அது நெஞ்சுப் பொருமலாகி வெளியே வருவதற்கும் இயலாது உள்ளே கிடந்து குமைகின்றது.
அந்த இருளில் கரிக்கும் விழிகளை உருட்டி உருட்டி விழித்தவணிணம் தான் நடந்து வந்த பழைய பாதையைத் திரும்பவும் அவள் தேடிக்கொண்டு இப்போது நிற்கின்றாள்.
விஜயலட்சுமி அவளுக்கு ஆதர்ஸமான அந்தக் கூடத்துச் சாய்வு நற்காலியில் தலைநிமிர்ந்து உட்கார்ந்திருக்கின்றாள். அவளால் மணியகாரன் பரம்பரைக்கு இதுவரை எந்தவொரு ஆசங்கையும் வந்ததில்லை என்னும் இறுமாப்பின் முழுவடிவமாக அவள் இப்பொழுது அமர்ந்திருக்கின்றாள். தான் தனித்துவமானவள் என்ற நினைப்புடன் தனது இருப்பு மணியகாரன் குடும்பத்தின் சங்கை, கீர்த்தி அழிந்து போகாமல் என்றும் காக்கும் என்னும் தற்றுணிவுடன் யாரையும் லட்சியம் பணிணாமல் நிவுகளங்கமான சிரேஷரையாகத் தலை நிமிர்ந்து இருக்கின்றாள்.
மீனாட்சியம்பாளுக்கு மனசு தாங்கிக்கொள்ள முடியவில்லை. விஜயலட்சுமி குடும்பத்திற் தனித்துப் போய் நிற்கின்றாள். அவளைக் குடும்பத்திலி ஏனையவர்களுடன் சுமுகமாக இணைத்துக்கொண்டு போவதற்குத் தாயானவளுக்கு இயலவுமில்லை. இவள் ஏன் இப்படி இருக்கின்றாள் காலா காலத்தில் கல்யாணம் ஆகியிருந்தால் இவளும் அசாதாரணமான ஒரு பெண்ணாக இல்லாமல் இருந்திருக்கக்கூடும். கல்யாணமாகாமல் முது கன்னியாக இருக்கும் பெண்கள் பொதுவாகவே இப்படித்தான் இருக்கின்றார்கள். இவள் தனக்கொரு திருமணம் வேண்டாமென்றா சொன்னாள்? இவளுக்குத் திருமணம் செய்து வைக்காது
தெணியான் 171

Page 88
மரக்கொக்கு
இருப்பது இவளுடைய குற்றமல்ல. இவளை இப்பொழுது எப்படிச் சமாதானம் பண்ணி வைக்கலாம் என்று சிந்தித்துக்கொண்டு பெருமூச்சு விட்டவண்ணம் அவள் தனக்குச் சொல்லிக்கொள்வது போலப் பேசினாள். "காலா காலத்தில உனக்குமொரு கலியாணத்தைச் செய்திருந்தால்." விஜயலட்சுமி தலை நிமிர்ந்து தாயின் முகத்தைக் குறிப்பாகப் பார்த்துவிட்டு மெளனமானாள். ஆனால் அவள் உள்ளம் மெளனமாக இருக்கவில்லை. 'கலியாணமாகி இருந்தால்.?" தனக்குள்ளேயே அது கேட்டுக்கொள்ளுகின்றது. அந்தக் கேள்வியே அவள் அடிமனதில் உணர்ச்சிகளைக் கிளர்ந்தெழச் செய்கின்றது. நெஞ்சு விம்மி எழுகின்றது. அவளை விரும்பிஅவள் பின்னால் அலைந்த தெய்வசிகாமணி இப்பொழுது நெஞ்சுக்கு வருகின்றான். அவனைத் தொடர்ந்து அன்னலட்சுமியின் குழந்தையின் எண்ணம் அரும்புகின்றது. அவனை வாரி எடுத்து மார்போடு அணைத்து. பொங்கி எழும் உணர்ச்சிகளினால் அவள் தவிக்கின்றாள்.
அவளுடைய துடிப்பையும் வேதனைகளையும் தாய் விளங்கிக் கொண்டிருக்கவேணடும். தன்னுடைய இயலாமையை எண்ணி பெருமூச்செறிந்த வண்ணம் இதமான வார்த்தைகளால் மகள் மனதை வருடிக் கொடுத்துத் தேறுதல் பண்ண எண்ணுகின்றாள்.
"பிள்ளை உனக்கென்னம்மா குறை! நான் இருக்கிறன்." விஜயலட்சுமியின் மனம் முன்னுக்குப் பின் முரணாகப் பேசும் தாயின் சமாதானத்தைக் கேட்டு நகைத்துக்கொள்ளுகின்றது.
- "பிள்ளை எழும்பம்மா. ஏதாவது சாப்பிடு!" தாய் பரிந்துகொண்டு கேட்கின்றாள்.
விஜயலட்சுமி உள்ளத்தில் மீளவும் இறுமாப்புத்தலைதூக்குகின்றது. "பிள்ளை நீ சாப்பிடாமல் பட்டினி கிடக்கிறதை நினைச்சால் என்ரை பெத்த வயிறு எரியுதம்மா"
அவளுக்குத் தெரியும் தாயின் மனம் தாய் பாவம் என்பதை அவள் உணருகின்றாள். ஆனால் இதுதான் தன்னுடைய பலம். தான் தளம்பிப் போனால் அன்னலட்சுமி கேவலமாக அல்லவா தன்னைக் கருதிவிடுவாள்! அவள் தன்னை மதிக்காதவரை அவளைத் தானி நிராகரித்து ஒதுக்கிவிடவேணடும் என்று எண்ணி மனதைத் திடப்படுத்திக் கொள்ளுகின்றாள்.
"விஜயா, ஒரு தேத்தணிணியாவது குடி பெத்ததாய் கேக்கிறன்
172 தெணியான்

மரக்கொக்கு
என்ரை சொல்லுக்கு மதிப்புக் குடுக்கக்கூடாதே!
இப்படிப் பல தடவைகள் மீனாட்சியம்பாள் நயந்து சொன்னாள்; வற்புறுத்திக் கேட்டாள்; கண்டித்துப் பார்த்தாள்.
ஆனால் விஜயலட்சுமி மனம் சற்றும் மாறவில்லை. அவள். அந்தச் சாய்வு நாற்காலிக்கு முன் வட்ட வடிவமான ரீப்போவின் மேல் இளம்பச்சை வண்ணத்தில் வெண்பட்டு நூலால் பூக்கள் இழைத்த விரிப்பின் மீது ஒற்றைக் காலிற் தவமியற்றிக்கொண்டு நிற்கும் அந்த மரக்கொக்குக்கு எதிரே . கல்லாகச் சமைந்துபோய் இருக்கின்றாள். ஆனால் அவள் உள்ளம் சுழன்று சுழ8:றடிக்கும் குறாவளி -கொந்தளித்துப் பொங்கும் ஆழ்கடல்-குமுறி வெடித்துக்கொண்டிருக்கும் எரிமலை-உலகம் முழுவதையும் பளம்மீகரம் செய்யும் ஊழித்தீ- இவைகள் எல்லாமாக இப்பொழுது மாறிக்கிடக்கின்றது.
அன்னலட்சுமி இன்று கொழும்புக்குப் புறப்படுகின்றாள். அவள் நேற்யைதினடி தாய் மீனாட்சியம்பாளை அழைத்து அவளோடு மிக அந்தரங்கமாகப் பேசினாள். -
"அம்மா, தனத்தை நான் கூட்டிக்கொண்டு போறன்!" மீனாட்சியம்பாள் பிரமித்துப் போனாள். அன்னலட்சுமி இப்படிக் கேட்பாள் என்று அவள் சற்றும் எதிர்பார்க்கவில்லை. உடனடியாக அப்போது என்ன பதில் சொல்வதென்று அவளுக்குத் தோன்றாமல், மகள் முகத்தை வியப்புடன் நோக்கிக்கொண்டு நின்றாள்.
"என்ன அம்மா பேசிறாயில்லை?" இல்லை. மீனாட்சியம்பாளாற் தெளிவாக இப்பொழுதும் பேச முடியவில்லை.
"ஒளிக்காமற் சொல்லம்மா" "அன்னம், அவளை உனக்குத் துணையாகக் கொண்டுபோய் வைச்சிருக்கப்பேறியோ?"
அன்னலட்சுமி உள்ளே நகைத்துக்கொண்டு சொல்கின்றாள்"எனக்கென்னத்துக்கம்மா துணை" "அப்பு அவளேர்?" "அவளின்ரை நன்மைக்காகத்தான்." "அன்னம், அவள் ஆருக்கும் பாரமாக இருக்க வேண்டாம்!" மீனாட்சியம்பாள் ஆருக்கும்' என்று குறிப்பிடுவது தீர் கணவன் ஆனந்தராசனை மனதில் வைத்துத்தானி என்பதனை அவள்
தெணியானி 173

Page 89
மரக்கொக்கு
விளங்கிக்கொள்ளுகின்றாள். ஆனால் அதனை வெளியே காட்டிக் கொள்ளது. "என்ரை சகோதரி எனக்குப் பாரமெண்டு நான் கருதயில்லை" என்றாள்.
"அது சரி. அவளை ஏன் நீ கூட்டிக்கொண்டு போக நினைக்கிறாய்? அதை முதலிலை சொல்லு"
"அம்மா, தனத்துக்கு இப்ப எண்ன வயது? அவளையும் இப்பிடியே வைச்சிருக்கப்போறியே?"
"அன்னம், நீ சொல்லுறது சரிதான் பிள்ளை ஆனால் ஒரு கலியானம் எணர்டார் கம்மாயே!”
"அது எனக்குத் தெரியுமம்மா" நீ அவளைக் கூட்டிக்கொண்டுபோய் என்ன செய்வாய்?" அதை நான் பாத்துக்கொள்ளுறன்." "அது உனக்கு முடியாது பிள்ளை." முடியும் அம்மா முயற்சி செய்தால் முடியாதது ஒண்டுமில்லை." "அன்னம், விஜயா வீட்டோடை இருக்கிறாள். அவளுக்கு எண்ணாலை ஒண்டும் செய்யமுடியில்லை. அவள் பாவம்! அவள் கலியாணம் வேண்டாமெண்டு சொல்லி இப்பிடி இருக்கயில்லை. வாழுகிற வயதிலை அந்தப் பிள்ளை இப்பிடி இருக்குது."
மீனாட்சியம்பாள் முகம் வாடிப்போகின்றது. அப்பொழுது அன்னலட்சுமி தாயைப் பார்த்து, அதுக்குத் தனத்தையும்.?" எனக் கேட்பதற்கிடையில், "இல்லைப் பிள்ளை, தனமும் அப்பிடி இருக்கவேணுமெண்டு நான் சொல்லயில்லை." என்று இடை மறித்துச் சொல்லிக கொணர்டு "இந்தக் குடுமீபத்தினரை நிலைமையை நினைக்கத்தான்." எனக் கணிணிர் சிந்தலானாள்.
தாயின் கண்ணிர் அன்னலட்சுமியையும் சில கணங்கள் கலங்க வைக்கின்றது. அந்தக் கலக்கத்தினால் விளைந்த சற்று நேர மெளனத்தின் பிறகு, "விஜயாவைப் போலத் தனத்தையும் இருத்திப்போடக் கூடாதம்மா." என்றாள் அன்னலட்சுமி,
தனம் சம்மதிப்பாளோ?" மீனாட்சியம்பாள் மனதில் சந்தேகம் எழுகின்றது.
அவளுக்கு நான் சொல்லுவன்" "அன்னம், தனம் சம்மதிச்சாலும் விஜயா இதுக்கு ஒத்துக்கொள்ள மாட்டாள். என்ன சொன்னாலும் அவளிண்ரை சம்மதமில்லாமல் தனத்தை
174 தெணியான்

மரக்கொக்கு
எப்பிடி நான் உன்னோடை அனுப்புறது"
"அம்மா, விஜயா ஒருக்காலும் சம்மதிக்கப்போறதில்லை. அவவோடை இதைப் பற்றிப் பேசப் போனால், தனமும் அவவைப்போல இருக்க வேண்டியதுதான்."
"எண்டாலும் பிள்ளை."
"அம்மா, விஜயாவோடை பேசி எல்லாத்தையும் குழப்பாதை! தனமாவது நல்லாயிருக்கட்டும்"
"ஏதோ எனக்கொண்டும் தெரியாது பிள்ளை. நான் தனத்துக்கு இடைஞ்சலாக ஏன் இருக்கப்போறன்?"
மீனாட்சியம்பாள் மனதில் இருந்த குழப்பமும் கிலேசமும் முற்றாக விடுபடவில்லை. அன்னலட்சுமியை மறுத்துப் பேசுவதற்கும் இயலாமல் அவள் மெளனமாக இருந்துவிட்டாள்.
அதன் பிறகுதான் அன்னலட்சுமி, தங்கை தனலட்சுமியை அந்தரங்கமாக அணுகினாள்
தனம், நீ என்னோடை கொழும்புக்கு வாறியா?"
அன்னலட்சுமி விளையாட்டாகப் பேசுகிறாள் என்று கருதிக்கொண்டு, ஓம் வாறன்" எனப் பதில் சொன்னாள் தனலட்சுமி
தனலட்சுமியின் மனதைப் புரிந்துகொண்டு பகிடி இல்லைத் தனம் சீரியஸாகத்தான் கேக்கிறன்" என்றாள் அன்னலட்சுமி.
தனலட்சுமி உள்ளூர வியந்துபோகின்றாள். தமக்கை மனதில்
இப்படியொரு எண்ணம் இருக்குமென்று அவள் சற்றும் எதிர்பார்க்கவில்லை. அதனால் அவளுக்குப்பதில் சொல்லுவதற்குப்பதிலாக அவளிடம் கேட்டாள்,
"ஏனர்?"
நீ இஞ்சை இருந்து என்ன செய்யப்போறாய்?"
இவ்வளவு காலமும் இஞ்சைதானே இருக்கிறன்."
இப்கிடியே இருக்கப்போறியா?"
"கொழும்புக்கு வந்து."
"அது நான் பார்த்துக் கொள்ளுறன்."
"என்ன செய்வாய்?"
அன்னலட்சுமிக்கு நெஞ்சிற் சினம் மூளுகின்றது. சற்றுச் சூடாகவே உடனே சொல்லுகின்றாள்,
"உனக்கு விளக்கந் தேவையில்லை."
நான் வரமாட்டன்" தனலட்சுமி பட்டென்று சொல்லிவிடுகின்றாள்.
தெணியான் 175

Page 90
மரக்கொக்கு
"ஏன்?" "எனக்கு விருப்பமில்லை." "ஏன் விருப்பமில்லை?"
தனம் எனக்கெல்லாம் தெரியும்." தனலட்சுமி திகைத்துப் போய்விடுகின்றாள். தனது அந்தரங்கங்கள் எல்லாம் அவள் அறிந்துகொண்டுவிட்டாளோ என்று உள்ளூர மனம் அஞ்சுகின்றது. அன்னலட்சுமி எதனை மனதில் வைத்துக்கொண்டு இப்படிச் சொல்லுகின்றாள் என்பதை அறிந்துவிடவேண்டும் என்றதுடிப்போடு "என்ன தெரியும்?" எனக் கேட்கும் போது அவள் குரல் கம்மிப் போகின்றது. அன்னலட்சுமி தங்கை தனலட்சுமியை அப்பொழுது நன்றாக அவதானித்துப் பார்க்கின்றாள். தனலட்சுமியின் முகம் திடீரென மாறிப்போவதையும், மெல்லிய ஒரு பதற்றம் அவளுக்குள் உண்டானதையும் அவள் உணர்ந்துகொண்டு "எல்லாம் தெரியும்" என்றாள் திரும்பவும் அழுத்தமாக, தான் இவ்வாறு சொல்வதில் வேறு உள்ளர்த்தம் எதுவுமில்லை என்று தனலட்சுமி மனதில் ஒரு எண்ணத்தைத் தோற்றுவிக்கும் நோக்கத்துடன், "விஜயாவுக்குப் பயப்பிடுறாய்" என்றாள் தொடர்ந்து.
தனலட்சுமி அப்பொழுது தன்னைச் சுதாகரித்துக் கொண்டு ஓமக்கா" என்றாள் சற்றுத் துணிவோடு
"அப்ப விஜயா சம்மதிச்சால்..?" தனலட்சுமி தலை கவிழ்ந்துபோகின்றது. "தனம், நீ சொல்லமாட்டாய். அது எனக்குத் தெரியும். தாழ்த்தப்பட்டவர்கள் கோயிலுக்குள்ளை போறது சரியெண்டு அண்டைக்கு நீ சொன்னபோதே மனதிலை எனக்குத் தெரியும்."
தனலட்சுமிக்கு இப்பொழுது எல்லாமே தெளிவாகிப் போய்விட்டது. தனது அந்தரங்கம் யாவற்றையும் அவள் அறிந்துகொண்டுதான் பேசுகின்றாள் என்பதை அவள் உணர்ந்துவிட்டாள். இனிமேல் எதையும் மறைப்பதில் அர்த்தமில்லை. அவளும் தன்னிஷ்டத்துக்கு ஒருவனோடு சேர்ந்துகொண்டு வீட்டை விட்டுப் போனவள். அவளைப் போல இன்னும் ஒரு முடிவுக்குத் தான் வந்துவிடவில்லை. அப்படி இருக்கும் போது ஏன் அஞ்சவேண்டும்! அவளோடு துணிந்து பேசலாம் என்று மனதைத் திடப்படுத்திக்கொண்டு
176 தெணியான்
 

மரக்கொக்கு
அவளிடம் கேட்டாள்
"அறிஞ்சுகொண்டு பிறகேன் வரச்சொல்லிக் கேக்கிறாய்?" தனம், நான் அறியாமல் இருந்திருந்தால், உன்னை வரச்சொல்லிக் கேட்டிருக்கமாட்டன்."
"அப்ப என்னை நீ காப்பாற்ற விரும்பவில்லை." "உண்மைதான். குடும்பத்தை. சாதியைக் காப்பாற்ற விரும்புறன் அது ஒன்று மாத்திரந்தான், இந்தக் குடும்பத்துக்கு இப்பவுள்ள பலம்."
நீ கொழும்புக்குப் போனாலும்." "சாதி மாறயில்லை எண்டு சொல்லுறியோ? உணர்மைதான் தனம். கொழும்பென்ன. சவூதி, ஜேர்மனிக்குப் போனாலும் அது முந்திக்கொண்டு அங்கே போய்விடுகிது.”
"அக்கா. தனலட்சுமி மனம் கலங்க ஆரம்பித்துவிட்டாள். "என்ன தனம்?" நான் என்ன அக்கா செய்யிறது?" என்று சொல்லிக்கொண்டு அன்னலட்சுமி எதிர்பார்க்காத விதமாக அவள் மார்பில் தனலட்சுமி முகம் புதைத்து விசும்ப ஆரம்பித்தாள்
தனம் உரிய பருவத்தில உனக்கொரு கலியாணம் செய்து வைச்சிருந்தால் நீ இப்பிடியெல்லாம் நடக்க எண்ணமாட்டாய். அது எங்கடை குற்றம் பிழை உன்னிலை இல்லை. இது வெளியிலை தெரியவந்தால் என்ன நடக்குமெண்டு ஒருக்கால் நினைச்சுப்பார் தனம்! விஜயா உண்ணைக் கொலை செய்துபோடுவாள். தானும் தற்கொலை செய்வாள்." அன்னலட்சுமி ஆதரவாக அவள் முதுகிற் தடவிக் கொடுத்துக்கொண்டு சொன்னாள்
"அக்கா. தனலட்சுமி தொடர்ந்து விம்முகின்றாள். அன்னலட்சுமி நெஞ்சிலிருந்து அவள் தலையை மெல்லத் தூக்கி, கணிகளில் ஊறிக்கொணடிருக்குமி கணிணிரைத் துடைத்து விட்டுக்கொண்டு திரும்பவும் சொல்லுகின்றாள்.
தனம், நான் உன்னைக் கூட்டிப்போக நினைக்கிறது உனக்கொரு கலியாணம் செய்து வைக்கிறதுக்காகத்தான்; நீ மனதை மாற்றிக்கொள்! விஜயாவுக்குப் போய் இதைப் பற்றிச் சொல்லாதே! அது அம்மா பாத்துக் கொள்ளுவா!"
அன்னலட்சுமி முடிவாகச் சொல்லி முடித்துவிட்டாள். இனிமேற் தனலட்சுமி எண்னதான் சொல்ல இருக்கின்றது!
தெணியான் 177

Page 91
மரக்கொக்கு
அன்னலட்சுமியின் செவியிற் சின்னி இந்த விவகாரத்தை மெல்லப் போட்டு வைக்காமல் இருந்திருந்தால் என்னென்ன விபரீதங்கள் எல்லாம் நடந்திருக்குமோ என்று இப்போது அவள் அஞ்சுகின்றாள். இப்பொழுது தனது பொறுப்புக்கள் அதிகரித்துவிட்டதை அவள் உணருகின்றாள். அவள் குடும்பத்தைப் பிரிந்திருந்த காலத்தில் அவளுக்கில்லாத மன உளைச்சல்கள் பல இப்பொழுது உள்ளத்தை வருத்துவதற்கு ஆரம்பித்துவிட்டன. இந்த மனவுளைச்சல்களோடும் புதிய பொறுப்புக்களோடும் கொழும்புக்குச் செல்லப் புறப்பட்டுக கொண்டிருக்கின்றாள்.
வீடு இன்று சுறுசுறுப்பாக இயங்கிக்கொண்டிருக்கின்றது. பிரயாணத்துக்கான ஏதோவொரு காரியத்தில் ஒவ்வொருவரும் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறார்கள். அவர்களுடைய மனங்களில் மாத்திரம் மகிழ்ச்சி இல்லை. பிரிவை எண்ணி உருவான ஊமைத் துயரத்தினால் அந்த மனங்கள் வருந்திக்கொண்டிருக்கின்றன.
வரலட்சுமியின் மனம் மகளை எண்ணி ஏங்குகின்றது. ஒரு நாளேனும் இதுவரை மகளைப் பிரிந்து வாழாத தாய் அவள் எப்படி அவளைப் பிரிந்து வாழ்வதற்கு இயலும்? அவள் பிரிவை எண்ணி அந்தரங்கமாகக் கண்ணிர்வடிக்கின்றாள். கணவன் தன்னையும் இப்பொழுது அழைத்திருந்தால் மகளுடன் புறப்பட்டுப் போயிருக்கலாம். அவருக்குத் தன்மீது கரிசனை இல்லாமற் போனதை நினைத்து உள்ளூரப் புழுப்போல அவள் நெஞ்சம் துடிக்கிறது. அவர் நிரந்தரமாகத் தன்னைக் கை விட்டுவிடுவாரோ. என்ற அச்சம் மனதைப் பிழிகின்றது. மகள் தகப்பனோடு போய்ச் சேர்ந்துவிட்டால். பிறகு தன்னையும் அவர் நிச்சயமாக அழைக்காமல் இருந்துவிடமாட்டார் என்ற நம்பிக்கை உள்ளத்தில் துளிர்க்கின்றது. இந்த மனப் போராட்டங்களுடனே மகள் மீனலோசனியின் பிரயாணத்துக்கான ஒழுங்குகளை அவள் கவனித்துக்கொண்டிருக்கின்றாள். மீனலோசனிக்குத் தாயின் பிரிவை இப்பொழுது பெரிதாக எண்ணிப் பார்ப்பதற்கு முடியவில்லை. அந்தக் குழந்தை மனம் ரயில் பயணம். அப்பாவின் சந்திப்பு. கொழும்பு நகரம். புதிய வாழ்க்கை. என்று கற்பனையாகவே அவற்றில் ஈடுபட்டுக் குதூகலித்துக்கொண்டிருக்கின்றது. மீனாட்சியம்பாளுக்கு நெஞ்சு கணக்கிறது. இதுவரை வீட்டைவிட்டுப் பிரிந்திருக்காத தனலட்சுமி, மீனலோசனி. உறவுகளைத் துறந்து, போய் மீணடும வந்திருக்கும் அன்னலட்சுமி. பேரக குழந்தை
178 தெணியான்
 

மரக்கொக்கு
பொன்னம்பலம்பிள்ளை. இவர்களையெல்லாம் எப்படிப் பிரிந்திருப்பது? பேரன் பொன்னம்பலம்பிள்ளையை மிகுந்த வாத்சலியத்துடன் ஒரு கணமேனும் விட்டு வைக்காமற் தூக்கிச் சுமந்துகொண்டு திரிகின்றாள். மாணிக்கம் மதியகாலப் பூசை வேளை கோயிற் பக்கம் இன்று போகவில்லை. கொழும்புக்குப் புறப்படுகின்றவர்களுடன் புகையிரத நிலையம்வரை சென்று அவர்களை வழியனுப்பி வைப்பதற்காக அவரும் வீட்டோடு நிற்கின்றார். சின்னியும் அவர்களுடன் சென்று வழியனுப்பி வைத்துவிட்டுத் திரும்புவதற்குத் தயாராகிப் புறப்பட்டுவிட்டாள்.
அன்னலட்சுமி வீட்டிலிருந்து புறப்பட்டுச் செல்லும்போதாவது விஜயலட்சுமியிடம் சென்று ஒரு வார்த்தை சொல்லிக்கொண்டு போகவேண்டும் என்று தாய்மீனாட்சியம்பாள் இப்பொழுது எதிர்பார்க்கின்றாள் ஆனால் அன்னலட்சுமியிடம் அதைச் சொல்வதற்கு அவள் தயங்கிக்கொண்டிருக்கின்றாள். அன்னலட்சுமி அவள் சொல்லைத் தட்டாமல் கேட்டு நடக்கக்கூடும் என்னும் நம்பிக்கை அவளுக்கு மனதில் உண்டு. ஆனால் விஜயலட்சுமி எப்படி நடந்து கொள்ளுவாளோ அவளை நினைத்தே மீனாட்சியம்பாள் மனம் அஞ்சுகின்றது.
அன்னலட்சுமி மனதிலும் கடைசி நேரத்தில் இது ஒரு உறுத்தலாகவே வருத்திக்கொண்டிருக்கின்றது. அவள் வீடுவந்து இத்தனை நாட்களும் விஜயலட்சுமியோடு பேசிக்கொண்டதில்லை. இப்பொழுது இங்கிருந்து புறப்படும் சமயத்தில் மரியாதைக்காகவாவது அவளிடம் போய்ச் சொல்லிக்கொண்டு புறப்படலாம். ஆனால் விஜயலட்சுமியின் சுபாவம் அவளுக்கு நன்றாகத் தெரியும். ஒரு மனித நாகரிகத்துக்காக வந்து சொல்லிக்கொண்டு போகின்றாள் என்று கருதாமல் அநாகரிகமாக நடந்து கொண்டுவிட்டால். அது புறப்பட்டுக்கொண்டிருக்கும் போது மனவேதனையைக கொடுக கும என்று அவள் எண்ணிக்கொண்டிருக்கின்றாள்.
விஜயலட்சுமி அவர்கள் எல்லோரிடமும் இருந்து ஒதுங்கிவிடுபட்டு அந்தக் கூடத்து நாற்காலிக்குள் தனித்துப்போய்க் கிடக்கின்றாள்.
அவளும் மனதில் ஓர் எதிர்பார்ப்புடனர்தானி இருந்து கொணடிருககின்றாள். அனனலட்சுமி கடைசி நேரததிற் சம்பிரதாயத்துக்காகவேனும் தன்னைத் தேடிக்கொண்டு வருவாள் என்று நம்பிக்கொணடிருக்கின்றாள்.
இப்பொழுது கார் ஒன்று வந்து வீட்டுக்கருகே வீதியோரத்திற்
தெணியான் 179

Page 92
மரக்கொக்கு
தரித்து நிற்கின்றது.
அவர்கள் எல்லோரும் வீட்டிலிருந்து புறப்பட்டுச் செல்வதற்குத் தயாராகிவிட்டார்கள்.
மீனலோசனி கூடத்துக்குள்ளே மெல்ல நுழைந்து விஜயலட்சுமிக்கு அருகில் வந்து நிற்கின்றாள்
விஜயலட்சுமி நாற்காலியிற் சாய்ந்து கண்கள் மூடிக் கிடக்கின்றாள். இதயம் படபடவென்று வேகமாக அடித்துக்கொண்டிருக்கின்றது.
மீனலோசனி ஒரு கணம் அவள் முகத்தை உன்னிப்பாக நோக்கிக்கொண்டு நிற்கின்றாள். பின்னர் மெல்ல அழைக்கின்றாள்.
"சித்தி!" இப்பொழுதும் அவள் மெளனமாகவே கிடக்கின்றாள். அதன் பின்னர் சில கணங்கள் தாமதித்துத் தயக்கத்துடன் மெல்லச் சொல்கின்றாள்.
"சித்தி, நான் போயிட்டு வறண்" இ.ம்." விழிகளைத் திறந்து மீனலோசனியின் முகத்தைப் பார்க்காமல் விஜயலட்சுமி அவளுக்கு விடை கொடுத்துவிடுகின்றாள்.
அடுத்து. அன்னலட்சுமி, அவள்தானே வரவேண்டும். அவள்தான் வரப்போகின்றாள். அக்கா" என அவள் அழைக்கும் குரல் இப்போது கேட்கப்போகின்றது. எத்தனை ஆண்டுகள் அவள் அப்படி அழைத்து! அவள் குழந்தை. பேரனைப் போல் இருக்கும் அவன். அவள் அணைப்பிலிருந்து சிரிக்கப்போகின்றான். உணர்ச்சியினால் விஜயலட்சுமியின் நெஞ்சுத்துடிப்பு அதிகரிக்க, செவிகளைக் கூர்மையாக வைத்துக்கொண்டு சாய்ந்து கிடக்கின்றாள்.
காலடி ஓசை எழுகின்றது. அவள்தான். அன்னந்தான் வருகின்றாள். அக்கா என்று அழைக்கப்போகின்றாள். விஜயலட்சுமி ஆவலுடன் உள்ளே துடித்துக்கொண்டிருக்கின்றாள்.
"அக்கா" விநயமான குரல். விஜயலட்சுமி திகைத்துப் போகின்றாள். இது அவளல்ல. அன்னமல்ல. விழிகள் பட்டென்று திறக்கின்றன. ஓ. தனலட்சுமி. தனம்.
"சீ நீயா! நீயும் வெளிக்கிட்டுப் போ.போ" வெறி பிடித்தவள் போல விஜயலட்சுமி கூச்சலிடுகின்றாள். அவள் விழிகள் சிவந்து அக்கினிச் சுவாலையாக உமிழுகின்றன. நாற்காலியின்
18O தெணியான்
 

மரக்கொக்கு
சட்டங்களைப் பற்றிப் பிடித்துக் கொண்டிருக்கும் அவள் கரங்கள் இறுகி, தனலட்சுமியின் கழுத்தாக அவை நெரிபடுகின்றன.
தனலட்சுமி நெஞ்சம் துணுக்குற்று, உடல் நடுங்கிக்கொண்டு நிற்கின்றாள். விஜயலட்சுமியை நாடி அவள் வரும்போது அந்தரங்கமாக மனதில் ஒரு துளி நம்பிக்கை இருக்கவே செய்தது. விஜயலட்சுமி அவளைத் தடுத்து நிறுத்திவிடக்கூடுமென்று அவள் எதிர்பார்த்தாள் அப்படித் தடுத்துவிட்டால். அந்த நினைப்பே அவளுக்கு மனதில் இனிக்கின்றது. ஆனால் நடந்தது அவள் எதிர்பார்க்காத ஒன்றுதான். விஜயலட்சுமி இப்பொழுது ஏன் இப்படிச் சீறி விழுகின்றாள். தான் கொழும்புக்குப் போவது அவளுக்கு விருப்பமாக இல்லையா? அல்லது முன்கூட்டியே வந்து அவளிடம் ஒப்புதல் பெற்றுக்கொள்ளவில்லை என்ற அதிருப்தியா? அல்லது அவளுக்கும். தெரிந்துபோய்விட்டதா? தனலட்சுமியால் தெளிவாக ஒரு தீர்மானத்துக்கு வருவதற்கு இயலவில்லை. விஜயலட்சுமி சினந்து பேசினாள் என்பதற்காக அவளை உதாசீனம் செய்துவிட்டுப் போவதற்கு முடியாமற் திரும்பவும் தயக்கத்துடன், "அக்காவுக்கு விருப்பமில்லை எண்டால்." எனச் சொல்லிமுடிப்பதற்குள் விஜயலட்சுமி ஆக்ரோஷமாகக் கொதித்தெழுகின்றாள்
"சீ. நாயே! அக்கா எண்டு சொல்லாதை போடி. நீயும் போ. எனக்கு முன்னாலை நில்லாதை போ"
தனலட்சுமி சீறிச் சீறி அழுது கண்ணர் சிந்தியவாறு அங்கிருந்து திரும்பிச் செல்கின்றாள்.
விஜயலட்சுமி கணிகளை மூடிக்கொண்டு மீண்டும் நாற்காலியிற் சரிந்து கிடக்கின்றாள்.
சற்று நேரத்தின் பின்னர் அவள் நெஞ்சப் படபடப்பு மெல்ல மெல்ல தணிந்துகொண்டு போகின்றது.
இப்பொழுது மறுபடியும் அவள் நெஞ்சில் எதிர்பார்ப்புத் தலைதூக்குகின்றது.
அன்னலட்சுமி. அவள் குழந்தை.பொன்னம்பல மணியகாரன் போல மூக்கும் முழியுமாக இருக்கும் அவன். அவனை ஒரு தடவையாவது நன்றாகப் பார்க்கவேண்டும் அன்னலட்சுமி இப்பொழுதாவது ஒரு மதிப்புக் கொடுத்து ஒரு வார்த்தை சொல்லிக்கொண்டு போகவேண்டும். விஜயலட்சுமி உள்ளத்தில் எதிர்பார்த்து எதிர்பார்த்து ஏங்கித் தவித்துக்கொண்டிருக்கின்றாள்.
தெணியார் 181

Page 93
மரக்கொக்கு
கார் அங்கிருந்து புறப்பட்டுச் செல்லுகின்றது. குடும்பத்தில் எல்லோரும் அவர்களை வழியனுப்பி வைப்பதற்காகச் சேர்ந்து போய்விட்டார்கள்.
ஆனால். அவள் . விஜயலட்சுமி. அவளுக்கெதிரே அந்த மரக்கொக்கு,
தனலட்சுமி அன்னலட்சுமியுடன் போய்விட்டாள்
மீனலோசனி தகப்பனிடம் போய்விட்டாள்
அக்கா வரலட்சுமி கணவனிடம் நிச்சயம் போய்விடுவாள்.
அம்மா மீனாட்சியம்பாள் முதியவள். இன்னும் எத்தனை காலம் உயிர் வழப்போகின்றாள்!
அவள்.விஜயலட்சுமி?
அவள் அந்தச் சாய்வு நாற்காலியை விட்டு ஆற்றாமையோடு
எழுகின்றாள். மெல்ல மெல்ல அடி எடுத்து வைக்கின்றாள். கால்கள் நடக்க இயலாது பின்னுகின்றன; தள்ளாடித் தள்ளாடி அறையை நோக்கி மெல்ல நடந்து செல்லுகின்றாள் படுக்கையில் பட்டென்று விழுந்து விம்மி விம்மி அழுதுகொண்டு கிடக்கின்றாள்.
அந்தக் கூடத்தில் சாய்வு நாற்காலிக்குகெதிரே வட்டவடிவமான ரீப்போவின் மேல் இளம் பச்சை வண்ணத்தில் வெண்பட்டு நூலால் பூக்கள் இழைத்த விரிப்பின் மீது ஒற்றைக் காலில் தவமியற்றிக்கொண்டு நிற்கும் அந்த மரக்கொக்கு, அங்கு தன் தவத்தைத் தொடர்ந்துகொண்டிருக்கின்றது.
கொக்குக்கு. என்றாவது ஒருநாள் நிச்சயம் ஒரு மீன் வரும்.
ஆனால் மரக்கொக்குக்கு. 2
182 தெணியான்


Page 94


Page 95
-
கூர்மையான சமூக விஞ்
- - -
- - - -
• u, 4. . .
۔ -ت۔ 0*- ت - 3
627 UT 父三岛、
- - - - - - - - - -
... -
". .
சுழிப்புக்களல்ல.
- - - -
" . .
PRINTED BY UNI
 
 
 
 
 
 
 

993. Soso, 88888XXX88:XX88
. 享、リ."。メ
܀ 11 - ܀ ܀ ܀
- - -
-
-
:பாத்ஜிங்கள்:கற்பனையின் -கலாநிதி சபா ஜெயராசா
E ARTS(PVT)LTD. TEL: 330195