கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஒரு பிடி மண்

Page 1
风、
Şშ-ალავრsoჭჯ
 


Page 2


Page 3

ஒடு | aliq LD6ÜOT
്യ{ീ1 !'
4A 晏a弱***
ஐ. சாந்தன்
நர்மதா பதிப்பகம் நல்ல நூல் வெளியீட்டாளர்கள் 16/7, y Rag T LI TT 55 i Gg5 (U5 , LI TF GT ką L2TT ř தியாகராய நகர், சென்னை-600 017

Page 4
Si Cru Pidi Mann-A Contemporary short story collection in Tamil by . Saanthan (C) a First Edition : June 1999 E. Published by : T. S. Ramalingam, Narraadha Pathi pagarn, 16 s 7, Rajabat har Street, T. Nagar, Chennai-600 017. E. Printed at : Afs Manian Achagam, 172, Shanmugam Pillait, Mylapore Chennai-600 004.
N 426 Price Rs. 37Pages : VIII + 184= 192 Paper Used: 11,6 kg SPB c/w

ஐ. சாந்தன்
தமிழிலக்கிய உலகில் தற்போது அதிகம் கவனம் பெற்றிருக்கும் ஜோதி விநாயகம் நினைவு பரிசுத்திட்ட அமைப்பின் ஸ்தாபகர்களில் ஒருவரான திரு. ஐ. சாந்தனின் சில கதைகள் சர்வதேசத் தரமுள்ளவை என விமர்சிக்கப்பெற்றிருக்கின்றன. ஆங்கிலத்தில் சிறப்பாக எழுதும் தமிழ் எழுத்தாளர் என ஈழத்தில் அறியப் பெற்றுள்ளார். சர்வதேசீய நோக்குள்ளவர் எனினும் தமிழீழப் பிரச்சினையை அழுத்தமாய் சொன்னவர். ருஷ்ய சிங்கள, ஆங்கில மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறார். இலக்கியத்திற்கப்பாலும், மொழிகள், நுண்கலை, சூழலியல், அரசியல், உலக சமாதானம், என்று விரிகிற ஆர்வப் பரப்பு இவருடையது. அறுபதுகளில் எழுதத் தொடங்கியவர்; தன் ஐம்பதுகளில் காலடி வைத்துள்ளார். தற்போது, தொழில்நுட்பக் கல்லூரி விரிவுரையாளர். சொந்த மண்ணை விட்டுப் பிரிய மறுக்கும் மனதுடன், சாந்தன் இன்னமும் யாழ்ப்பாணத்திலேயே வாழ்கிறார்.

Page 5
பொருளடக்கம்
ஒரு பிடி மண்
வாழ்க்கை
$_ ଶ) && ଗାଁt இன்னொரு வெண்ணிரவு யுகங்கள்
É760 TT
தேடல்
இரு கோடுகள் அந்நியமான உண்மைகள் ஒரு விருந்தின் முடிவு LIFT ġ55 g tħ
சுரண்டல்
ரிஷ்கா
அஸ்பெஸ்ரஸ் தலைமுறைகள் அதே விதியெனில் எழுதாத கடிதம்
நீன்றி
அவன்
உறுத்தல்
காலங்கள்
முளைகள் இடையில் ஓர் இருபது வருஷம் புதிய தரிசனங்கள் விலகிப் போகிறவன் பூகோளம் மனிதர்களும். மனிதர்களும். நிழல்
DO
13 4 19 22 38 6 6 4. 70 72 75 77 79 82 86
90 92 94. 97 00 03 6 29 36 4t 45 49 182

அணிந்துறுே
கடந்த கால் நூற்றாண்டுக் காலத்தில் இலக்கிய விமர்சகனாகவும் பத்திரிகை ஆசிரியனாகவும் பல்கலைக் கழக ஆசிரியனாகவும் இயங்கிவந்த முறைமையில் பல எழுத்தாளர்களைக் கண்டுணரவும் அவர்களுக்கு ஊக்க மளிக்கவும் அவர்களின் நூல்களுக்குக் கருத்துரைகள் வழங்கவும் அவ்வப்பொழுது எனக்கு வாய்ப்பு இருந்து வந்திருக்கிறது. ஆற்றல் மிக்க எழுத்தாளரின் ஆக்கங் களுக்கு முன்னுரை எழுதுகையில் மனநிறைவும் மகிழ்ச்சி யும் தோன்றுவது இயல்பே.
ஏறத்தாழ ஐம்பதாண்டு கால வரலாற்றினையுடைய ஈழத்துத் தமிழ்ச் சிறுகதையின் வளர்ச்சிக் கிரமத்தை யும் செல்நெறிகளையும் ஈழத்து நவீன இலக்கியத்தில் ஆர்வமும் அக்கறையும் உள்ளவர்கள் அறிவர். கல்லூரி களில் உயர் வகுப்புகளிலும் பல்கலைக்கழகங்களிலும் தமிழ் இலக்கியத்தை ஒரு பாடமாகப் பயிலும் மாணாக்கர் தமிழ்ச் சிறுகதை வளர்ச்சியை விரிவாகவும் விளக்கமாகவும் அறிந்திருக்கின்றனர். இந்நிலையில் சாந்தன் வெளியிடும் சிறுகதைத் தொகுதிக் குரிய பின்னணியை விரித்துரைக்க வேண்டிய அவசியம் இல்லை.
1960-களில் எழுதத் துவங்கி எழுபதுகளில் எழுத்து உலகின் கவனத்தைத் தன்பால் ஈர்த்துக்கொண்டவர் களில் ஒருவர் சாந்தன். கடந்த பத்தாண்டுக் காலத் தில் இலங்கையிலும் தமிழ்நாட்டிலும் அறியப்பட்ட

Page 6
VI
எழுத்தாளராக விளங்குகிறார். ஐம்பதுகளின் பிற்பகுதி யில் இலங்கையில் ஊற்றெடுத்துப் பொங்கிப் பிரவகித்த தேசிய- முற்போக்கு- ஜனநாயக வெள்ளம் நமது இலக்கியப் பரப்பில் பாய்ந்து அதனை வளப்படுத்திய பின் செழித்து வளர்ந்த செடிகளில் ஒன்றாக அவரைக் குறிப்பிடுதல் தவறாகாது.
ஐம்பதுகளிலும் அறுபதுகளிலும் கலை இலக்கிய உலகிலே தேசிய- முற்போக்கு- ஜனநாயகக் குரல் தன்முனைப்புடனும் வெளிப்படையாகவும் தொடக்க நிலைக்குரிய வீறாப்புடனும் ஓங்கி ஒலித்தது. ஈழத்துத் தமிழ் இலக்கியம் அதனால் பல மாற்றங்களைக் கண்டது. நமது அண்மைக்கால இலக்கியத்தின் தனித் தன்மை அக்காலப் பகுதியிலிருந்தே பலராலும் தணிக்கப்பட்டு வந்துள்ளது. அவ்விலக்கிய இயக்கத்தின் ஆரம்ப்கால ஆரவாரங்களும் சண்டவேகமும் சந்தடி யும் தணிந்து தெளிந்து அடங்கிய தலாப்தத்திலே தனது ஆரோக்கியத்தினாலும் இயல்பான செழிப்பா லும் எழுத்து உலகில் முன்னுக்கு வந்தவர் சாந்தன். இது வரலாறு.
இனி, இத்தொகுதியிலுள்ள கதைகளைப் பற்றிப் பேசுவோம். இவற்றின் பொதுப் பண்புகளை நோக்கும் போது கதை ஆசிரியரது கூரிய நுண்காட்சித் திறம், சுற்றிவளைக்காமல் நேரடியாகப் பொருளுக்கு வரும் தன்மை, விஷயத்திலிருந்து ஓரளவு விலகி நிற்கும் நடு உணர்வுநிலை, நுணுக்க விவரத்தில் கடைப்பிடிக்கும் கட்டுப்பாடான சிக்கனம், எளிமை என்பன துலாம்பரமா யுள்ளன. இப்பண்புகளின் கூட்டுச்சேர்க்கை கதை களின் தனிச் சிறப்பியல்பாக அமைந்துள்ளது.
கடந்த ஐந்தாண்டுகளில் சாந்தன் எழுதிய கதை
களில் சில இத்தொகுப்பில் இடம் பெறுகின்றன. கதை கள் வெளிவந்த வருடம் குறிப்பிடப்பட்டிருத்தல் பயன்

Vl {
2 – 60) – Ligi. இக்கதைகள் பெரும்பாலும் அளவில் சிறியன. கடுகு (1975) என்னும் தலைப்பில் இதற்குமுன் ஆசிரியர் வெளியிட்ட குறுங் கதைகளைப் போல மிகச் சிறியவையாக இல்லாவிடினும், பொதுவாகப் பேசு மிடத்து இவை உருவத்தில் சிறியவை என்பதில் தடை யில்லை. மேலே குறிப்பிட்ட நுண்மை, நேர்மை, எளிமை, சிக்கனம், முதலிய பண்புகளுக்குக் காரணமாகவும், அவற்றின் காரியமாகவும் இவை அமைந்துள்ளன என்று விவரித்தல் பொருந்தும். சாதாரணமாய்க் கால அடைவை ஒட்டிக் கதை கூறும் பாங்கில் அன்றி, நிகழ்வுகளையும் அவற்றையொட்டிய மனப் பதிவுகளையும் பல்வண்ணக் காட்சிக் கருவி போன்று சித்திரித்தல் ஆசிரியரின் பிரதான உத்தியாகக் காணப்படுகிறது. சிறு சிறு காட்சிகள் அமைந்து கிடக்கும் முறையில் சில சிந்தனைகளும் உணர்வுகளும் வாசகர்களால் பெறப்படுகின்றன. கதாசிரியரது நெறிப்படுத்தலோ குறிப்புரைகளோ விளக்கவுரைகளோ "பொன்மொழிகளோ எவையுமின்றி நினைவுத் திவலைகள் தாமாகவே பொருளை உணர்த்தும் உத்தி இது எனலாம். "முளைகள், இடையில் ஒரு இருபது வருஷம், குமிழிகள் ஆகிய கதைகளில் இதனைச் சிறப்பாகக் காணலாம். பொதுவாகப் புதுக் கவிதைகளில் காணப்பெறும் சொற்செட்டும் அலங்கார மற்ற மொழியாட்சியும் இவரது நடையின் குறிப்பிடத் தக்க குணாம்சங்களாயிருக்கின்றன. அந்த வகையில் பிரக்ஞைபூர்வமான நடைத்திறனுடையவர் என்றும் கூறுதல் மிகையாகாது. பொருளைக் கையாளும் நிதான நெறியின் நேரடியான வெளிப்பாடே நடையின் நயம் என்பது தருக்கத்தின் பாற்படுவதாகும்.
தன்னுணர்ச்சிப்பாடல், சிறுகதை இவற்றைப் படைக் கும் எழுத்தாளர் பலர், தமது இளமைக்கால நினைவு களைக் கருவாகக் கொண்டு புனைந்துரைத்தல் இலக்கிய உலகம் அறியாததொன்று அன்று. ஆற்றல் மிக்க நாவ

Page 7
VIII
லாசிரியர் பலர் பாத்திரங்களின் இளமைக்காலத்தை வருணிக்கும்போது தமது அனுபவ நினைவுகளை அதிற் பக்குவமாகப் பயன்படுத்தியிருப்பதை விமர்சகர்கள் சுட்டிக் காட்டியிருக்கின்றனர். நவீன இலக்கியத்தில் யதார்த்தம் நிலவுவதற்குரிய மூலங்களில் ஒன்று எழுத் தாளரின் சுய அநுபவமாகும். கால வெள்ளத்தில் அடி பட்டுப் போனவை போக எஞ்சியுள்ள நினைவுகளே ஒருவரை ஆழமாகப் பாதித்தனவாயிருக்கும். அவை குறிப்பிட்ட காலச்சூழலைப் பின்னணியாகக் கொண்டன வாகையால் தூலமாகவும், காலத்தால் வடித்தெடுக்கப் பொதுப்பண்புடையனவாகவும் அமைந்துவிடுவதையும் பல இலக்கியங்களில் காண் கிறோம். பாரதியினுடைய சுயசரிதை” இதற்குச் சிறந்த எடுத்துக்காட்டு. தனிநிலை அநுபவம் இலக்கிய ஆக்கப் பட்டறையிலே பொதுநிலை அநுபவமாக மாறும் ரஸ் வாதம் இவ்வடிப்படையிலேயேயாகும். இத்தொகுதியிலே புதிய தரிசனங்கள்" என்ற கதையில் வரும் பிறைகுடி ஆசிரியரும், முளைகள்' என்னும் கதையில் வரும் இராசலிங்கம் வாத்தியாரும் கதாசிரியருக்கு நன்கு தெரிந்த மனிதர்களாக இருக்கும் அதே வேளையில் வாசகர்கள் தத்தம் வாழ்க்கையிலும் கற்பனையிலும் இனங் கண்டுகொள்ளக்கூடியவராயும் வார்க்கப்பட்டி ருக்கின்றனர்.
1975-1980 காலப்பகுதியில் வெளிவந்த கதைகள் இவை என்றாலும், இவற்றில் கோலங்காட்டும் நினைவு கள் ஆசிரியரின் இளமைக்காலத்தைப் பற்றி நிற்பன. பள்ளிப் பாலகனாகத் துள்ளித்திரிந்த காலம் முதல் (முளைகள்) அரசாங்க உத்தியோகத்தில் கொழும் լ ն"(86Ն குடித்தனம் நடத்திய 35T GOtf வரை பல்வேறு சம்பவங்களும் நினைவுகளும் இக்கதைகளில் இடம் பெற்றுள்ளன. இவை கதாசிரியர் வாழ்க்கையைப் புரிந்துகொண்ட விதத்திற்கும், அப்புரிந்துகொள்ளலை

நமக்கு உணர்த்தும் விதத்திற்கும் ஆதாரமாய் அமைந் துள்ளன. கதைச் சம்பவங்கள், நிகழ்வுகள், பாத்திரங்கள் யாவுமே அடிநாதமான வாழ்க்கையின் இயல்பையும் அர்த்தத்தையும் கோடிகாட்டுவனவாயிருக்கின்றன. சம்பவங்களையும் அவற்றின் சமூக-வரலாற்று முக்கியத் துவத்தினையும் உரத்த குரலில் அழுத்திக் கூறியோ அல்லது பொதுவாக அங்கீகரிக்கப்பட்ட வடிவங்களில் வார்க்கவோ முற்படாது, 'அவ்வாறுதான் நடந்தன" என்று கருதத் தக்கவாறு விட்டுவிடுகிறார்.
இம்முறையிலேயே ஆசிரியரது நடுஉணர்வு நிலையும், பற்றற்று நிற்கும் பான்மையும் தெளிவாகப் புலப்படு கின்றன. சிருஷ்டி ஆற்றல் வாய்க்கப் பெற்றவர் களாலேயே இத்தகைய உத்தியை இலாகவமாகக் கையாள இயலும். அநாயாசமாகப் பொருளை உணர்த்தும் கலைத்திறன் சாந்தனிடத்து அபரிமிதமாய்க் காணப்படுகிறது. 'தான் கலந்து' எழுதுதல் இலக்கி யத்தில் போற்றத்தக்க பண்பாகக் கருதப்படுவதுண்டு. அம்முறையிலும் அற்புதமான சில ஆக்கங்கள் தோன்றி யிருக்கின்றன. ஆனால், கூறப்படும் பொருளோடு உணர்ச்சிபூர்வமாகக் கலந்துவிடாமல் அதனைப் புற நிலையில் வைத்து நோக்கி அதிலே தோன்றும் அவலங் களையும் குறிப்பாக முரண்களையும் இயற்பண்புடன் சித்தரிப்பதும் ஓர் இலக்கிய முறையியலாகும். இதற்குக் கட்டுப்பாட்டு உணர்வு வேண்டும். இந்நூலிலுள்ள 'மனிதர்களும் மனிதர்களும்” என்ற கதையில் இலங்கை யில் தமிழ் மக்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட வன் செயல்கள் சிற்சில காட்சிகளினூடாகச் சித்தரிக்கப் படுகிறது. திரைப்படம் ஒன்றுக்கு உகந்த காட்சித் தொகுப்புப் போல உயிர்க்களை வாய்ந்த ஒவியங் களினாலே நெருக்கடியான நிலைமையொன்றில் சிக்கித் தவிக்கும் மனிதர்களை நம்முன் நிலை நிறுத்துகிறார் சாந்தன்.

Page 8
ஆயினும் வன்செயல்களை விவரிப்பதோ, உணர்ச்சிவசப்பட்டு அவற்றைக் கண்டித்துரைப்பதோ கதையின் பிரதான நோக்கமன்று. சித்தரிக்க எடுத்துக் கொண்ட நிலைமையில் காணும் முரண்களைக் காட்டு வதன் மூலம் பலவற்றைக் கூறாமல் கூறிவிடுகிறார். கதையின் தொடக்கத்திலேயே முரணின் இயல்பு கூறப் பட்டுவிடுகிறது. 'அந்த அமைதியான அழகிய கிராமத் தின் மக்கள் இப்படி இருப்பார்கள் என்று நினைக்க முடிந்ததில்லை" என்னும் வாக்கியம் கதைக்குரிய தொனியை நிர்ணயித்துவிடுகிறது. ஒன்றுக்கு மேற்பட்ட பரிமாணங்கள் கதையில் தோன்றுவதற்கு முரண்களைக் காட்டும் முறை பெரிதும் இயைபுடையதாகும்.
அகதிகள் போல அச்ச உணர்வுடன் (அகமனப் போராட்டங்களுடனும்தான்) ரெயில் வண்டியில் பயணம் செய்ய முற்படும் அம்மனிதர்களில் சிலர் சொகுசான ஆசனங்களுக்காகச் சண்டை போட்டுக் கொள்வதும் ஆசிரியர் அமைத்துக் காட்டும் காட்சி களில் ஒன்று. இச்சிறு நுணுக்க விவரம் "மனிதர்களும் மனிதர்களும்' என்று தலைப்பின் அர்த்த பாவத்தைப் புலப்படுத்துகிறது. அநுபவத்தை ஒட்டிய ஒரு கதையில் அகதிகள் மீது அநுதாபத்தை மாத்திரம் சொரிந்து விடாமல் அவர்கள் மத்தியில் தலைதூக்கும் முரண்களை யும் பலவண்ணக் காட்சித் தொகுப்பில் அடக்கியிருப்பது ஆசிரியரின் அடக்கமான புறநிலை நோக்கிற்குச் சிறந்த உதாரணம். அதே சமயத்தில் இத்தொகுதியிலுள்ள ஏனைய சில கதைகளின் பின்னணியில், கடந்த சில வருடங்களாக இலங்கையில் நடைபெற்று வந்திருக்கும் இனக்கலவரங்கள் இழையோடிக் கொண்டிருப்பதையும் அவதானிக்கலாம். இனக்கலவரங்கள் பற்றிய சுட்டுக் குறியீடுகள் இத்தொகுதியில் இடம்பெறும் கதைகளின்
காலம் எதுவெனச் சுட்டுவதாகவும் கொள்ளலாம்,

3
காலம் பற்றிய இக்குறிப்புரைகள் சமகால உணர்வைத் தோற்றுவிக்கின்றன என்று கூறுவதும் பொருந்தும், உணர்ச்சிவசப்படாமல் "வாழ்க்கை இருந்தவாறு' என்னும் உணர்வை எழுப்பும் இக்கதைகளில் ஆசிரியரது நுண்ணயம் வாய்ந்த நகைச்சுவை சூட்சுமமான முறை பில் உட் கலந்து நின்று சுவைநலம் பயப்பதாயிருக்கிறது.
இத்தனைக்கும் மேலாக, ஆசிரியரையோ, அவரது படைப்புக்களையோ தத்துவார்த்த, இயக்க எல்லைக் கோடுகளுக்குள் நிறுத்தி, நிறுத்து எடைபோட வேண்டும் என்று எனக்குத் தோன்றவில்லை. சுயபிரகடனம் செய் யாத, ஆனால் கனதியான சமூகப் பார்வை ஆசிரியருக்கு இருப்பதனாலேயே இத்தகைய கதைகளை அவரால் எழுத முடிகிறது என்று எண்ணுகிறேன். வெளிப்படை யான வாக்குமூலங்களை இத்தகைய ஆக்கங்களில் எதிர் பார்த்தல் நியாயமன்று. எனினும் ஒன்று கூற விரும்பு கிறேன்.
நகர வாழ்க்கையினடியாகவும் ஒரு ରହିsld(Tଶot ஆய்வறிவுப் போக்கின் விளைவாகவும் சிற்சில மாந்தர்க்கு ஏற்படும் அன்னிய உணர்வு இரண்டொரு கதைகளில் கையாளப்பட்டிருக்கிறது. "அன்னியமாதலை உணரும் பாத்திரங்களை ஆங்காங்குக் காண்கின்றோம். விலகிப் போகிறவன்' என்ற கதையில் வரும் ஜெயனை உதாரணம் காட்டலாம். சித்திரம் என்ற வகையில் அப்பாத்திரம் இயல்பாகவே உள்ளது. அதனைத் தத்துவ வடிவில் நியாயப்படுத்த அவர் முயலவில்லை. தேடல்" என்ற பெயரில் தறிகெட்டு நெறியற்ற வக்கரித்த பாத்திரங்களை இலட்சியப்படுத்தவோ அவற்றுக்கு வக்காலத்து வாங்கவோ முற்படவும் இல்லை. எனினும் கத்தியின் கூர்ப்பாகத்தில் நடக்கும் காரியத்தைச் செய்து முடித்திருக்கிறார். இவ்விஷயத்தில் ஆசிரியர் விழிப்பாயிருத்தல் விரும்பத்தக்கது.

Page 9
驻
இன்று தமிழில் விதந்து குறிப்பிடத்தக்க சிறுகதை களை எழுதுவோரில் சாந்தனும் ஒருவர் என்பதை வாதிட்டு நிறுவ வேண்டிய தேவையில்லை. ஏற்றுக் கொள்ளப்பட்ட செய்திக்கு நிதரிசன பத்திரமாகவே என் உரை அமைகிறது. தமிழ்ச் சிறுகதை வளர்ச்சியில் ஆர்வமுள்ளவர்கள் ஆசிரியரை ஊக்கி உற்சாகப் படுத்தத் தவறமாட்டார்கள் என்றே நம்புகிறேன். கதை ஆசிரியருக்கு என் மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.
இராசவிதி திருநெல்வேலி க. கைலாசபதி இலங்கை
(மேற்கண்ட அணிந்துரை ஆசிரியரின் முளைகள்' தொகுதிக்கானது. உரையில் குறிப்பிடப்பெறும் கதை கள் இத்தொகுதியில் இடம் பெற்றுள்ளன.)

"போவமா.' காலணிகளை மாட்டிக்கொண்டே ராஜா கேட்டான்.
"ஒ ' என்றாள் கல்யாணி,
*事
30, 2 .
ஒரு முறுவலுடன், தன் கையிலிருந்த நைலான் கூடையைத் திறந்து அதனுள் ஒழுங்காக மடித்து வைக்கப்பட்டிருந்த இரண்டு பெரிய பாலித்தீன் பைகளை எடுத்து விரித்துக் காட்டினாள் கல்யாணி,
அவள் வெளியே வந்ததும் கதவைப் பூட்டிக் கொண்டு ராஜா பின்னால் வந்தான்.

Page 10
6 鹽 ஒரு பிடி மண்
அவர்களுடைய அனெக்சுக்கும் வீட்டுச் சொந்தக் காரருக்கும் பொதுவான, ஒடுங்கிய பாதையில் நடந்து தெருவில் இறங்கினார்கள்.
மாலை நேரத்து நெரிசலில் தெருவில் நடப்பதே சிரமமாயிருந்தது. JT93 IT முன்னாடியும் கல்யாணி பின்புறமுமாய் காலி வீதியை நோக்கி நடந்தார்கள்.
'போதுமான நேரமிருக்கும். ' அவன் திரும்பி மெல்லச் சொன்னான்:
'. இருட்டவே இன்னும் ஒரு மணி நேரமாகும். அதுக்கு முன்ன அங்க போயி என்ன செய்யிறது?"
"அப்படியே, மோகன் வீட்டுக்குப் போய்விட்டுப் போகச் சரியாயிருக்கும்." என்ற கல்யாணி,
*1. கண்டு எப்ப கிடைக்கும்?' என்று கேட்டாள்.
"சாடி ஆயத்தமெண்டா, நாளைக்குக் கூட எடுக்க 6l) IT Lib...”
வழமையாக இந்த நேரத்தில் கொழும்பிலிருந்து இரத்மலானைக்கு பஸ்ஸில் போவதை நினைத்துப் பார்க்க முடியாது. ஆனால் இன்றைக்கு ஏதோ அதிசயம் போல, அவர்களுக்கு இருக்கையில் இரண்டு இடம் கிடைத்தது. நெரிபடாமல் போய்விடலாம்.
O அவர்கள் இப்போதைய அனெக்சுக்கு குடி வந்து மூன்று மாதமாகிறது. புதுக் குடித்தனத்திற்கேற்றதாய், அமைதியாய், தொல்லைகளில்லாத இடமாயிருந்தது அது. வாடகைகூட அதிகமென்று சொல்ல முடியாது.
புது இடத்துக்கு வந்ததும், எல்லாவற்றையும் ஒழுங்காக அடுக்கி அழகுபடுத்தினாள், கல்யாணி. ஆனால், யாழ்ப்பாணத்தின் ஒரு கிராமத்தின் விட்டாத் தியான வாழ்விலிருந்து இந்த அனெக்ஸ் ஜீவியத்திற்குள்

சாந்தன் 鹽 7
புகுந்திருந்தவளுக்கு, வீட்டில் எ ங் கா வது ஒரு பசுமையைக் காண முடிந்தால் நன்றாயிருக்கும் என்று பட்டது. ஒரேயொரு பூச்சாடியாவது வைக்க முடிந்தால் அந்த இடம் முழுவதுமே தனிக் களை பெற்றுவிடும். வரவேற்பறை ஜன்னலருகில் காலை வேளைகளில் நல்ல வெயில் பிடிக்கிறது. ஜன்னல்கூட, ஒரு சிறிய பூச்சாடி வைக்கக்கூடிய அகலம்.
ராஜா ஒரு செடியைப்பற்றி சொன்னான். பூக்கிற தில்லை, அலங்காரச் செடிதான். நல்ல வடிவு. அவன் அலுவலகத்திற்கருகில் ஒரு பூஞ்செடி விற்பனை நிலை யத்தில் கண்டிருக்கிறான். இலைகள் கரும் பச்சையில் வெல் வெட் மாதிரி. இடைக்கிடை வெள்ளைப் பொட்டுக் கள். அவன் அதை விவரித்த விதத்தில் கல்யாணியின் ஆவல் பன்மடங்கா கிற்று.
ஒரு நல்ல பூச்சாடி வாங்கிவிட முடியும். ஆனால் அதனோடு மண்ணும் வாங்க முடியுமா என்பது ராஜா வுக்குத் தெரியவில்லை. இவர்களின் அனெக்ஸ் இருக்கிற காணி முழுவதுமே நிலந்தெரியாமல் சீமேந்து பூசி வைத்திருக்கிறார்கள் வீட்டுக்காரர்கள்.
'மோகன் விட்டிலை கேட்டுப்பாத்தா என்ன?”
"எப்பிடிக் கேட்கிறது?. மோகனும் பிறகு தன்ர வீட்டுச் சொந்தக் காரரைத்தானே கேட்க வேணும்?"
மண்தான் பிரச்சினையாயிருந்தது. அது மட்டும் கிடைத்திருக்குமென்றால், இரண்டு கிழமைக்கு முந்தியே செடி வீட்டுக்கு வந்திருக்கும்.
இன்றைக்கு ராஜா அலுவலகத்திலிருந்து வந்த போதே ஒரு திட்டத்துடன்தான் வந்திருந்தான்.

Page 11
8 雛 FG lík 106öf
மோகனுக்கும் அவன் மனைவி பிள்ளைகளுக்கும் இவர்களைக் கண்டது சந்தோஷமாயிருந்தது. இரவு சாப்பிட்டுவிட்டுப் போகலாமென்று வற்புறுத்தினார்கள். 'இன்னொரு நாள் வாறம் கடைகள் பூட்டுவதற்கு முன் கொஞ்சம் ஷாப்பிங் செய்ய வேண்டியுமிருக்கு." சொல்லிக் கொண்டு புறப்பட்டபோது இருட்டத் தொடங்கியிருந்தது. மெல்ல நடந்தார்கள். . "
தார் போடாத மண் ஒழுங்கை, வழமைபோல, ஆளரவமின்றி அமைதியாய்க் கிடந்தது.
"அந்தத் தூண்டியிலைதான்.' ராஜா காட்டினான்: **நல்ல மண். விளக்குந் தள்ளியிருக்கு”- நெருங்கி ாைர்கள்.
பின்னுக்கு ஆரும் வருகின்மா பாரும். முன்னாலை ஒருத்தருமில்லை.”
பின்னாலுமில்லை." பார்த்துவிட்டு, கூடைக் குள்ளிருந்த பாலித்தீன் பைகளையும் ஒரு பழைய பேணியையும் எடுத்தாள் கல்யாணி,
பேணியைக் கணவனிடம் கொடுத்தாள்.
'விஷ்ஷ். ஒரு சைக்கிள்.'
விளக்கில்லாத ஒரு சைக்கிள் அவர்களை நெருங்கி வந்தது. ராஜா குனிந்து, காலணிகளைச் சரிப்படுத்துகிற பாவனை காட்டினான். சைக்கிள் தாண்டியது.
*சரி." அவன் சொன்னபோது, கல்யாணிக்கு இதயம் படபடத்தது.
ராஜா, குனிந்த குனியிலேயே மண்ணை விறு விறென்று வறுகத் தொடங்கினான். கல்யாணி பை ஒன்றை விரித்துத் தயாராய் அருகில் பிடித்துக் கொண்டாள்.

சாந்தன் 靈 9
ஒன்று. இரண்டு. மூன்று. |5f7 321 . . .
"இன்னுமொன்று' என்றான் ராஜா, "இன்னொரு சைக்கிள் பின்னாலை, பரபரத்துக் கல்யாணி எச்சரித்தாள்.
ராஜா சட்டென்று எழும்பித் திரும்பிப் பார்த்தான். *அது தூர வருகுது மீண்டும் குனிந்து, குவிந்திருந் ததை அள்ளிப் பையில் போட்டான்.
'போதும், வாங்கோ." கல்யாணி அந்தரப் பட்டாள்.
ராஜா நிமிர்ந்து காலால் நிலத்தை ị Đt'__Lễ, பண்ணினான்.
"போவம்.” என்றான்.
*. அவசரப்படாம ஆறுதலா நடவும்.'
பின்னால் வந்த சைக்கிள் அவர்களை நெருங்கித் தாண்டிப் போனது. கல்யாணி பெருமூச்சு விட்டாள்.
Tਏ அவளிடம் இருந்த பைகளை வாங்கி ஒழுங் காக மடித்துத் துடைத்து கூடைக்குள் வைத்தான்.
1வைச்சிரும். கூடையைக் கொடுத்துவிட்டுக் கைகளைத் துடைத்தான்.
பூச்சாடிக் கடை பூட்ட முதல் (3 iturg சேர வேணும்.'
娜州
"ஒமோம்.' என்றாள் கல்யாணி,
(தமிழில் மீளுருவாக்கம்-1998)

Page 12
வாழ்க்கை
s
ஏதோ பிரச்சினை போல இருக்கு." என்றார் கடைக்காரர். திரும்பி வெளியே பார்த்தான். ஜனங்கள் ஒடிக்கொண்டிருந்தார்கள். στέθή வரிசைக் கடை களெல்லாம் மளமளவென்று பூட்டப்படுவது தெரிந்தது. பயமும் பரபரப்பும் சுரந்தன. -
"இங்கே வா."- அவர் சொல்லுமுதலே ஒரு உதவியாள் ஓடி வந்து வாசற் கதவுப் பலகைகளை அடுக்கத் தொடங்கினான்.
- "கெதியாத் தாங்கோ."
"அவசரப்படாம நிண்டு பாத்திட்டுப் போ, தம்பி.' 'இல்லை ஐயா, போயிடலாம்.'
ஒரே ஒரு கதவுப் பலகை மட்டும் போட இருந்தது. ஆளை விலக்கிக்கொண்டு வெளியே வந்தான்.
ஒடுகிறவர்களில் மோதிக்கொள்ளாமல் தெருவைக் கடக்க வேண்டியிருந்தது.
 

சாந்தன்
"என்ன பிரச்சினையெண்டு தெரியல்லை.ஆனா ஏதோ இருக்கு. -போகிற போக்கில் ஒருவர் சொல்லிக் கொண்டு போனார். தெருவின் பரபரப்பு பயத்தைக் கூட்டியது. எ ங் கோ ஏதோ சத்தமும் கேட்டது போலிருந்தது. கடைக்குள்ளேயே நின்றிருக்கலாமா? திரும்பிப் பார்த்தான். இப்போது ஒற்றைக் கதவும் மூடப் பட்டிருந்தது.
தன்னறியாத ஒரு விரைவு உந்தியது. முன்னால் தெரிந்த சந்தியில், மினி பஸ்கள் வேகமாகத் திரும்பிப் போய்க்கொண்டிருந்தன. தூரத்தில், ஒன்றை வழியில் நிறுத்தி அவசரமாக ஆட்கள் ஏறினார்கள்.
இப்போது பஸ் ஸ்ராண்டுக்குப் போவதை நினைக்க முடியாது. மற்ற வீதியில் திரும்பி மெல்ல ஓடினான். செருப்பு சங்கடமாயிருந்தது. தான் போகக்கூடிய பஸ் ஏதாவது வருகிறதா என்று திரும்பிப் பார்த்தபடி போனான். எல்லாம் ஏற்கனவே போயிருக்கவேண்டும் அல்லது பாதை மாறியிருக்கலாம்.
பின்னால், ஜனம் ஐதாகிக்கொண்டு வந்தது. தெருத் தொங்கல் அநேகமாக வெறிச்சிட்டிருந்தது.
வய்தாளி ஒருவர் கையில் பாரத்தோடு கஷ்டப் பட்டுக்கொண்டு முன்னாள் போனார்.
"அங்காலை பிடியுங்கோ " -தான் ஒரு பக்கத் தைப் பிடித்துக் கொண்டான்.
முன்னால் குளத்தடிச் சந்தியில் ஒரு பஸ் ஆட்களை
ஏற்றிக்கொண்டு நிற்பதுபோலிருந்தது. அதில் போகக் கூடிய மட்டுக்காவது போகலாம். ஒட முயன்றார்கள்.
சந்திக்கு வந்ததும் வேறும் சில பஸ்கள் தெரிந்தன. கொஞ்சம் ஆறுதலாயிருந்தது. இது கொஞ்சம் பாது காப்பான தூரமாயிருக்க வேண்டும். பெரியவர் பார்த்து ஒன்றில் ஏறிக்கொண்டார்.

Page 13
12 驚 ஒரு பிடி மண்
"மெத்த உபகாரம், தம்பி,"
அவன் பஸ்ஸைக் காணவில்லை. கூடிய பட்சம் தன் பாதையில் போகக்கூடிய ஒன்றினருகில் நின்றவர் களுடன் நின்று கொண் டான். சனங்களின் பதற்றம் இந்த இடத்தில்-அல்லது இப்போது-குறைந்திருப்பது மாதிரி இருந்தது. ஆனால் இன்னமும் விவரம் வடிவாகத் தெரியவில்லை.
பத்து நிமிஷமிருக்குமா?
பார்த்துக்கொண்டு நின்றபோது பஸ்காரர்கள் வந்தார்கள்.
'ஏறுங்கோ ஸ்ரான்டுக்குப் போட்டுப் போவம்.'
"ஸ்ராண்டுக்கா?
"இப்ப ஒண்டுமில்லையாம் அங்கை பயப்பிடாதை யுங்கோ "
பயமாய்த்தான் இருந்தது. ஆளைப் பார்த்து ஆளும், பஸ்ஸைப் பார்த்து பஸ்சும். வந்த இடத்திற்கே வட்ட மடித்தது மீண்டும்,
"அது உங்கட போல இருக்குது ' -ஸ்ராண்டுக்கு வந்ததும், கொண்டக்டர் பெடியன் ஏற்கெனவே வந்து நின்ற பஸ்ஸொன்றைக் காட்டிச் சொன்னான்.
அதுதான்.
"சீசி. காசு வேண்டாமண்ணை
இறங்கி மற்றதில் ஏறினான். இருக்க இடமிருந்தது.
இப்போது கடைக் கதவுகள் ஒவ்வொன்றாகத் திறபடத் தொடங்கியிருந்தன. எங்கிருந்தென்றில்லாமல் தெருவில் தலைகள் கூடிக்கொண்டு வந்தன. ஒரு பாட்டும் எங்கோ மெல்ல ஆரம்பித்தது.
s
(மல்லிகை - 1985) O

உலகங்கள்
திறந்த கேட்டை மூடப் போனபோதுதான் அது கண்களில் பட்டது. நாக்கிளிப் புழு. ஒரு கிழமையாய்ப் பெய்த மழையில் திளைத்துக் கொழுத்து, மேலே வந் திருந்தது. நெளிந்து நெளிந்து அவஸ்தைப்பட்டது. தெரியாத்தனமாய்க் காலிலோ, எறும்பு வாயிலோ, கோழியின் கண்ணிலோ பட்டாலும்-பாவம். ஒரு குச்சியால் எற்றத் தூக்கியபோது ஒரு யோசன்ை வந்தது. இது மருமகனுக்குப் பிரயோசனமான விளையாட்டுப் பொருளாய் அமையலாம்.
மீண்டும் உள்ளே போய், ஒரு கடுதாசித் துண்டை
எடுத்து வந்தான். அதை மெல்லத் தூக்கிப் போட்டு, நோகாமல் மடித்து சைக்கிள் கூடைக்குள் வைத்தான்.

Page 14
14 鱷 ஒரு பிடி மண்
அக்கா விட்டிற்கு வந்து சேர்ந்ததும், சரையைக் கையில் வைத்துக்கொண்டு மருமகனைக் கூப்பிட்டான். குடுகுடுவென்று ஓடி வந்த குஞ்சுவுக்கு வியப்புத் தாள
"அம்மா, மாமா பாம்புக் குட்டி கொண்டு வந்திருக் கிறார்." -பரபரப்பு மாறாமல் அதையே ஆச்சிக்கும் திருப்பிச் சொன்னான்.
'பாம்புக்குட்டி இல்லை ராசா, இது நாக்கிளிப் புழு." "கொம்மானுக்கும் வேலையில்லை, உனக்கும் வேலையில்லை' என்றபடி அம்மா.
தம்பி, அத்தான் நேற்றைக்கு வாறதெண் டு சொல்லிப் போட்டுப் போனவர், இன்னுங் காணேல்லை. ஒருக்கா மாமி வீட்டை போய்ப் பார்த்துக்கொண்டு வாறியா?"- அக்காவின் கண்கள் கலங்குவன போல் தெரிந்தன.
'இண்டைக்கு வந்திடுவர். பயப்பிடாதை .' 'வவனியாவிலை முந்தா நாள் ஏதோ பிரச்சினை எண்டும் பேப்பரிலை கிடந்தது."
'மாமா, மாமா நாக்கிளிப் புழு வெளியாலை விழப் போகுது."
"பொறு, வாறன்’-எங்கோ தேடி ஒரு பழைய ஜாம் பேர்த்தல் எடுத்துக் கழுவி, தழை உக்கின மண்ணாக நிரப்பிக்கொண்டு வந்தான்.
"ஏன் மாமா, இது?" 'இது இருக்கிறதுக்கு.' *நாக்கிளிப் புழு எங்க இருக்கும்?" "மண்ணுக்குள்ளை.'
"அப்ப இதை என்னெண்டு பிடிச்ச நீங்கள்?"

சாந்தன் 蠶 15
வெளியிலை வந்தது, பிடிச்சன்." 'ஏன் வெளியிலை வந்துது?" 'மழைக்கு வந்திருக்கும்." என்றபடி, புழுவைப் போத்தல் மண்மேற் போட்டான்,
"இனிப் பார், இது துளைச்சுக்கொண்டு உள்ளுக்குப் போகும்.'
*எப்பிடி? அதுக்குக் கையிருக்கா..?" 'இல்லை, தலையாலை துளைக்கும்.' *அதின்ர கண்ணுக்குள்ளை மண் போகாதே?" *அதுக்குக் கண்ணில்லை." குஞ்சு, போத்தலைத் தூக்கிக் கட்டிலில் வைத்து விட்டுத் தானும் அதையே பார்த்தபடி பக்கத்தில் குந்திக் (6ਹੌ
அக்கா வந்தாள். போறதெண்டா, வெயிலுக்கு முன்னம் போட்டு வாவன்?"
““မ္ဖင့) .......... 'நேற்றுப் பின்னேரம் அங்கயிருந்து வரப் பிந்தி பிருந்தா மாமி வீட்டிலை நிண்டிருப்பர். ஆனா, விடிஞ்சு இவ்வளவு நேரமாச்சே."
p
அக்காவைப் பார்க்கப் பாவமாயிருந்தது. *வராட்டி, தபால் ஏதும் வந்ததோ எண்டு கேள்."
மாமா, துளைக் குது.'
"பொறு, தேத்தண்ணி கொண்டு வாறன், குடிச் சிட்டுப் போகலாம்."
**ஹய்யா. போகுது மாமா.'

Page 15
16 疆 ஒரு பிடி மண்
'போத்திலைத் தட்டாமல் | lirii.”
தேநீரைக் குடித்துக்கொண்டிருக்கும் போது குஞ்சு C:
'மாமா, இது எப்பிடிக் கத்தும்?
அது கத்திறகில்லை ராசா.'
**s rahroor g Tւ՞յլ հ6լԻ?**
*மண்தான்."
இஞ்ச பாருங்கோ, எவ்வளவு போட்டுதெண்டு."
அரைவாசிக்கு மேல்.
அம்மாவிடமும் அக்காவிடமும் சொல்லிக்கொண்டு புறப்பட்டான்.
வடிவா விசாரிச்சுக் கொண்டு வா."
சைக்கிளை எடுத்துக்கொண்டு புற்ப்பட்டபோது, படலையடியில் மோட்டார் பைக் சத்தம் கேட்டது.
அத்தான்தான். உள்ளே திரும்பி, 'வந்திட்டார்.' என்றான், அக்காவிடம்,
ஏதும் பிரச்சினையோ? ஏன் பிந்தினது?-' என்ற படி முகம் மலர்ந்த அக்கா வந்தா,
*அப்பா. படியேறிக்கொண்டிருந்த அத்தானை நோக்கிச் சந்தோஷமாய்க் கத்தினான், குஞ்சு
* நாக்கிளிப்புழு, மு மு க் க உள்ளுக்குப் போட்டுது.'
(ஈழமுரசு (2ஆம் ஆண்டு மலர்) 1986)
O)

இன்னொரு வெண்ணிரவு
இரவு ஏழரை மணி வெயிலில் எங்கள் நிழல்கள் நீண்டு விழுந்திருந்தன.
அது, வெண்ணிரவுகளின் காலம், லெனின் கிராத் நகரின் நெவ்ஸ்கி நெடுஞ்சாலையிலிருந்து பிரிந்த ஒரு தெருவில் நாங்கள் நடந்து கொண்டிருந்தோம். நான், அமிதாக்கா, துளசி, மெஹம்மட்.
நான், நான்தான். அமிதாக்கா கொழும்புப் பக்கம். சிங்களம் தாய்மொழி, உண்மையில் எனக்கும் துளசிக்கும் ஓர் அக்கா மாதிரியே இருந்தா, துளசிக்கு, தமிழ் நாடு, சென்னை, ஆரம்பத்தில் துளசிக்கும் அமிதாக்காவுக்கும் இடையில் ஓர் இணைப்புக்கண்ணி

Page 16
18 醫 ஒரு பிடி மண்
யாக நான் இருந்தேன். ஆனால், என்னையும் மேவி, வலு கெதியில் ஒரு உறவு அவர்களைப் பிணைத்தது எனக்கு ஆச்சரியமாய்ப் போயிற்று. எனக்கு அதிகம் உற்றவர் எவர் என்று தெரியாதிருந்தது. அடுத்து, மெஹம்மட் ரோசாப்பூ நிறமும், கறுத்த சுருள் முடியும், பூனைக் கண்ணும், சிவப்பு உதடுகளும் கொண்ட டுனீஷியன், துளசியின் நண்பன். இந்தக் கதைக்கு சம்பந்தமில்லை, என்றாலும் அன்றுகூட இருந்தான்.
ஐஸ் கிரீமாகக் குடித்து அலுத்து, தேநீர்த் தவண்டை யில் புலோச்னயா ஒன்றுக்குள் நுழைந்து மொறு மொறுக்கிற புதுப்பாண் வாசனையை ரசித்தபடி வரிசை யில் நின்று, கறுப்புத் தேநீரும் பாணுமாய் மேசையடிக்கு வந்து வேலையை முடிக்குமட்டும் ஒருவரும் பெரிதாக ஒன்றும் பேசவில்லை.
பிறகு வெளியே வந்தபின் துளசி சொன்னாள்:
என்னதானிருந்தாலும் இந்த ஜோர்ஜியத் தேயிலை எல்லாம் எங்கள் தேயிலைக்குக் கிட்ட வர முடியாது."
'உண்மை." என்றாள், அமிதாக்காள்.
உலகிலேயே இந்தியத் தேயிலைதானே திறந் தேயிலை."
என்ன சொல்கிறாய், துளசி.?' நானும் அமிதாக் காவும் ஏககாலத்தில் கேட்டோம்.
(கணையாழி-1988)
OOO

யுகங்கள்
அரைக் கோளமாக வானம் கவிந்து கிடக்கிறது. வெள்ளைப் பிசிறில்லாத நீலம், பச்சைக் கம்பளத்தை மூடி, கம்பளத்தின் மேற்பரப்பு மஞ்சள் மயம். இப்படித் தெட்டத் தெளிவாக பட்டை பட்டையாக நிறங்கள் சந்திக்குமா? ஓரளவுக்கு செயற்கைத் தன்மை வந்து விட்டதாகக் கூட இருந்தது, இந்த இயற்கைக்கு பதினொரு மணி வெயிலில் இந்த நிற வார்ப்புகள் இப்படியிருந்தன. கோளத்தின் விட்டப் பரப்பின் நடுவில் கறுப்பு நாடாவாகத் தெரு, அதில் கண்ணுக்கெட்டிய தூரத்திற்கு ஒரே ஒரு மனுக்கணமாகத்தான் தான் என்பதுகூட உறைக்காதிருந்தது.
இயந்திரம் சீரான லயத்தில் ஒடிக்கொண்டிருக்கிறது. ஒரு சைக்கிளிலும் சற்று அதிகப்படி வேகம். கிடங்கு களைத் தவிர்க்க வசதி,

Page 17
20 魏 ஒரு பிடி மண்
சணல் பூவின் இதமான வாசம் துணையாக வந்து கொண்டிருந்தது. காற்று வழித்துணை வரும் நாயைப் போல, கூட வரும் எங்கோ ஒடும். பிறகும் வரும். கொஞ்சத் தூரம் மீண்டும்கூட. இப்படி இருந்தாற் போல ஒருக்கால் மக்கிப் புழுதியைச் சுழற்றி முகத்தில் வீசி விட்டு ஓடியது. இடக்கையால் மூக்கையும் உதடுகளை யும் துடைத்துக் கொண்டான். காற்றில்லாமல் வெயில் சுடும் போல இருந்தது. தலையைத் தொட்டுப் பார்த் தான். சுட்டது ஹெல்மெட் எல்லாம் மறந்தாயிற்று. அதொன்றுதான் இல்லாக் குறை.
நீலமும் பச்சையும் சந்திக்கிற வெளிவட்ட விளிம்பில் பனைகள் நிரைகட்டி நின்றன. இடது பக்கம் வெகு தொலைவில் அம்மன் கோயிலின் கோபுரமும் தேர்முட்டி யும் பொம்மைகளாய்த் தெரிந்தன. ஒட்டித் தெரிந்த சில ஒட்டுக் கூரைகள்.
எதிரே இன்னொரு மோட்டார் சைக்கிள் வந்து கொண்டிருந்தது. இரண்டு பேர். வலு வேகமாக புழுதியையும், புகையையும் மணக்கவிட்டு, விறுக்கெனத் தாண்டி மறைந்தார்கள்.
தெருக்கரையில் பழைய காரொன்றின் கோது கறள் கட்டிக் கிடந்தது. இதை யாராவது இன்னும் ஒரமாகத் தள்ளினால் நல்லது வலப்பக்கம் குட்டையில் இரண்டு கொக்குகள் மெல்ல மெல்ல நடந்துகொண்டிருந்தன. இன்னும் நீர் இருக்கிறது- இந்த வெயிலிலும்.
"புர்ரென்று ஒரு பெரிய கருவண்டு சணல் பூக்காட்டி லிருந்து விடுபட்டு அவன் முகத்தில் மோதுவதுபோல வந்து திரும்பியது. என்ன நினைத்ததோ, கூடவே கொஞ்சத் தூரம் மிதந்து வந்து இன்னொரு வட்டம் போட்டு விலகிப் போனது. ஒரு மடம். அதற்கடுத்தாற் போல வடக்கே ஒரு திட்டி, சாம்பல் மேடு, இன்னுஞ் சற்றுத் தள்ளி சிலுவைப் பாத்தி.

சந்தன் 鹽 2
தெரு இப்போது மேடாகியது. கொஞ்சத் தூரத்தில் மதகு பாதையின் சரி பாதித் தூரத்திலிருக்கிற மதகு. பாலமென்றால் இன்னும் பொருத்தம். வலப்புறக் கைப்பிடிச் சுவருக்கப்பால் கட்டுகளும் அணைக்கதவு களும் வரிசையாய்த் தெரிந்தன.
கடற்காகமொன்று பாலத்தைத் தாண்டிப் பறந்தது. குறுக்கே பெயர் தெரியாத இன்னுமொரு கடற்பவக்றை கூட்டம் மிதப்பதுபோல. சணல் வயல்களைத் தாண்டி சற்றுத் தூரத்தில் சில மாடுகள். இந்த இடத்திலிருந்து வயற்காரர்கள் விதைக்காமல் விட்டிருந்தார்கள். கிடைச் சியும், புல்லும் வரம்புமாக இருந்தது. எதிர்ப்பக்கத்தில் பனைகள் வளர்ந்துகொண்டு வந்தன.
இயந்திரத்தின் ரீங்காரத்தையும், காற்றின் சுருதியை யும் மீறி இன்னுமொன்று புலனிற் தட்டியது. எச்சரிக்கை யுற்றவனாய் அண்ணாந்து முன்னால் ஒரு வட்டம் பார்த்தான். அது காகம். என்றாலுங் கேட்டது. பின்னால் திரும்பி .
அந்தா! பின்னால் வலப்புறத்து வான் நடுவில் அது அந்த அழுக்குப் பச்சைத் தும்பி, தன்னை நோக்கித்தான் வருவதுபோல, சத்தம் இப்போது தெளிவாயிருந்தது. எக்கச்சக்கமாக மாட்டிக்கொண்டாயிற்று.
துளைக்கும்போது எப்படியிருக்கும், கடவுளே.
வேறு வழியில்லை. கைப்பிடியைப் பலமாகத் திருகினான். எதிரே பனங்கூடல் பெரிதாகி வந்தது. முகப்பிலிருந்த சிறு கோயில் தெளிவாகத் தெரிந்தது. இயந்திரத்துக்குப் போட்டியாய் இதயம். பின்னால் சத்தம் பலத்துக்கொண்டு வந்தது.
(ஈழ முரசு-1987)
S-2

Page 18
பெரிய வெளியாயிருக்கிறது. எங்கே தொடக்கம் எங்கே முடிவென்று தெரியாமல் நிலந்தான்; பூவுலகம், வைக்கோல் பட்டடைகள் போல் பஞ்சு பஞ்சாகக் குவிந்திருக்கின்றது. நிலா எரிக்கிறது. நல்ல நிலா, நல்ல வெளிச்சம். அந்த வெளிச்சம் வர்ணிக்க முடியாதது. நிலா வெளிச்சத்தை வர்ணிக்க எந்த மொழியாலும் முடியாது என்று படுகிறது. அப்படியான நிலவில் இந்தக் குவியல்கள் பஞ்சுதானா அல்லது நிலவொளியைத்தான் குவித்து வைத்திருக்கிறதா என்று சொல்லமுடியாமலிருக் கிறது. சில வேளை அது ஸ்நோவாகவும் இருக்கலாம்.
ஸ்நோவை இதுவரை கண்டதுமில்லை. படித்தது, கேள்விப்பட்டது, படத்தில் பார்த்தது, கற்பனை செய்தது என்று கொஞ்ச கொஞ்சமாய்ச் சேர்ந்த ஆதாரங் களில் அது இப்படித்தான் இருக்குமென்று உணர முடிந்திருக்கிறது.
இந்தக் குவியல்கள் மேகங்களாயிருத்தலும்கூடும். எப்படியோ-அது ஸ்நோவோ, பஞ்சோ,நிலவொளியோ,
 

சாந்தன் 圈 23
மேகமோ இந்த வெளியெங்கும் ஏராளமாய்க் குவிந்து குவிந்து கிடக்கிறது. அந்த மாய ஒளியில் சுவறிக் கொண்டு ஒவ்வொரு குவியலாக அவன் ஏறி மிதிக்கி றான். ஏறுவது களைப்பாயிருக்கவில்லை. ஏறுவதும், மிதப்பதும் பிறகு இறங்கி இன்னொன்றில் ஆரோகணிப் பதும் இயல்பாக நடக்கின்றன. எந்த முயற்சியு மில்லாமல்,
இந்த விளையாட்டில் அவன் தனியென்றில்லை. ஆங்காங்கே சிறகு முளைத்த குழந்தைத் தேவதை களும், அவையும் நிலவின் நிறமாய் உள்ளன. அவை தேவதைகள்தாமா என்பது சரியாக நினைவில்லை. அழகான குழந்தைகளாகவும் இருக்கலாம்.
இந்தக் கனவு வலு சின்ன வயதில் வந்தது. நிலாக் கனவுகளின் 6606 இதுவே முதலாவதாக நினைவுக்கு வருவது.
இதேபோல் இன்னுமொன்றுண்டு. அதிலும் ஸ்நோ வருகிறது. ஒரு மைதானம், நிலவொளியில் குளிக்கிற ஒரு வெளி ஸ்நோ தூவல்கள் அமைதியாகப் படிகின்றன. கூரைகளில் வெண் பனி  ைய ச் சுமந்துகொண்டு ஆங்காங்கே வீடுகள், ஊர் அமைதியாக இருக்கிறது. தூரத்தூர நாய்களின் ஊளைகள் மட்டும் ஒன்று மாறி ஒன்றாகச் சுருதி கூட்டுகின்றன. அவன் தனியே நடந்த படி இருக்கிறான்.
இந்த அந்நிய சூழல் தன் கனாக்களில் இடம் பிடித்தமை எவ்வாறென்பது இன்னமும் வியப்பாகவே உள்ளது. சின்ன வயதில் இவ்விரு கனாக்களும் கண்ட புதிதில் அப்போது செல்லுபடியாகக்கூடிய நியாய மொன்றை மனங் கற்பித்திருந்தது. முற்பிறவி ஞாபகமா யிருக்கலாம்.
அப்போது ஆறோ ஏழோ படித்துக்கொண்டிருக்க வேண்டும். ஆறுமுக மாஸ்டர் படிப்பித்த ஆங்கிலப்

Page 19
24 ஒரு பிடி மலன்
பாடப் புத்தகத்தில் நல்ல நல்ல தேவதைக் கதைகள் நிறைய இருந்தன.
இவ்விரண்டும்தான் அந்நிய களத்தில் ஜனித்த கனாக்கள். பிறகெல்லாம் அப்படி வரவில்லை. ஏழாம் வகுப்பில் பாடசாலை நூல் நிலையத்தில் சேர முடிந்தது. மொத்த மொத்தப் புத்தகங்களாய் ஐந்து பாகங்களில் அப்போது பொன்னரியின் ਯ666ó'' படிக்கக் கிடைத்தது. ஒவ்வொரு பாகமும் ஒழுங்காகக் கிடைத்தது* அதே தியானமாய்ப் படித்து முடித்தான். முடித்த பிறகு வெறுமை தெரிந்தது. இப்போது பிறந்து என்ன பிரயோசனம்? ஆயிரம் வருஷங்களுக்கு முன்புசரியாக, தொளாயிரத்துச் சொச்சம் என்று அப்போது கணக்குப் பார்த்த ஞாபகம்-பிறந்திருக்க வேண்டும். அந்த மனிதர்கள், அந்தக் காலம். அந்தச் சூழல், வயந்தித்தேவன்-ஆழ்வார்க்கடியான், தஞ்சை, அனுராத புரம். எதை நினைத்து ஏங்குவது? இப்போது இந்த இருபதாம் நூற்றாண்டில் வந்து பிறந்ததற்காக தன்னைத் தானே வெறுத்துக் கொண்டான்.
இந்த-இப்போது நான் நிற்கிற இடத் தி ல் வல்லவனாயன் இலங்கை வந்திருந்தபோது மிதித்திருக்கக் கூடும்-எல்லாம் பகல் கனாக்கள்.
ஆனால் அப்போது இரவுக் கனாக்களும் வந்தன தான். முக்கியமாக சொந்தச் சூழலில் கனாக்கள் இடம் பெறத் தொடங்கியதாக நினைவு வருகிற காலம் அது தான். அதில் வந்த முதற் கனவு இப்படி இருந்தது. காட்டுப்பாதை கொழும்புக்கு ரயிலில் போகிறபோது அநுராதபுரம் பக்கத்தில் வருகிற மாதிரி ஒடுங்கிய நேரான பாதை. எந்த முடக்குமில்லாமல் ஒரே நேர், நல்ல நிலவு, அடர்ந்த மரங்களைத் துளைத்து வருகிற வெளிச்சம். பாதையெல்லாம் பூப்பூவாய்ப் பரவிக் கிடக்கிறது. அவன் குதிரையில் போகிறான். அது நல்ல

சாந்தன் 鬣 25
வேகமாக ஒரே கதியில் போகிறது. செடி கொடிகள் முகத்தில் மோதி விலகுகின்றன. நிலா எட்டி எட்டிப் பார்க்கிறது. எங்கே போனோம் என்று தெரியவில்லை. கனதுாரம் போனான். கணநேரம் போனான். பிறகு திரும்பி அதே பாதையில் அதே மாதிரி வருகிறான். குளம்பொலி மட்டும் கேட்கிறது.
இந்த நிலாப் பைத்தியம் எப்போது தொடங்கிய தென்று சொல்ல முடியாதிருக்கிறது. சின்ன வயதில் :
நிலா நிலா ஓடி வா
நில்லாமல் ஓடி வா மலைமேல் ஏறி வா
மல்லிகைப் பூக்கொண்டு வா" என்று பாடிக்காட்டி அம்மா சோறு தீற்றிய போதா அல்லது அதற்கும் முன்பேயா? அதன் பிறகு அம்மா விடம் கேட்ட ஆயிரம் நிலாக் கதைகள் வேறு உரு வேற்றியிருக்கலாம்.
சின்ன வயதில் அப்பு வளவு முற்றத்தில் கழித்த இராப்பொழுதுகள் கூட இந்த லயிப்பை வளர்ப்பதில் உதவியிருக்க வேண்டும். அது பெரிய முற்றம். ஐம்பதடி சதுரமாவது வரும். இடையில் ஒரு சொட்டு நிழலில்லை. பகலில் புழுங்கல், ஒடியல், புழுக்கொடியல், மருந்துச் சரக்கு, ஓலைச்சார்வு என்று எதையாவது காய வைக்கிற இடம். கிழக்கே இரட்டை கேட் இருந்தது. தெற்கிலும், வடக்கிலும் வாழை பூஞ்செடிகள் தோட்டம். மேற்கில் வடக்கன் மாட்டு வண்டியும் காரும் விடுகிற பெரிய கொட்டில், முற்றத்தின் நாலு பக்கமும் தடி நட்டு குடைத்துணி துண்டு துண்டாகத் தொங்கவிட்டிருந்தது. கரகங்கள் அண்டாமல் பார்த்துக் கொள்ள இந்த முற்றத்தில் பகலெல்லாம் வெயில் கண்ணை மின்னும், பொழுதுபட காயப்போட்டதெல்லாம் எடுத்துவிட்டு தண்ணிர் தெளித்துக் கூட்டிவிட்டால் அது முழுதாக

Page 20
26 鬣 ஒரு பிடி மண்
வேறு இடமாகிவிடும். பெரிய கதிர்ப்பாய் விரித்து பின் நேரம் வெட்டிய பனையோலைகளைப் போட்டு ஆட்கள் கிழிப்பார்கள். சிறகடித்து, சட்டம் வார்ந்து தும்பாக்கி. தும்பாக்கிய ஒலைக் குவியலின் குளிர்ச்சியில் மல்லாந்து படுத்துப் பாாத்தால் ஆயிரங்கோடி-லட்சக் கோடி வெள்ளிப் பூக்கள். பார்க்கப் பார்க்க புதிது புதிதாய்த் தெரியும். நடுவில் ரோசாப் பூப்போல், இராசாத்தி போல் நிலவு வரும், தென்னை வட்டு பணம்வட்டு, கொட்டில் கூரை, வேப்பங்குழை எங்கும் பட்டு வழிகிற நிலவு, ஒலைக் குவியலில் கண்ணயர்ந்து அடுத்த நாள் காலையில் படுக்கையில் விழிக்கிறபோது அதிசயமாய் இருக்கும்.
எட்டாம் வகுப்புக்கு வந்தபோது தமிழ்ப்பாடப் புத்தகத்தில் பாரதி பாடல்கள் சில இருந்தன. அவற்றில் இரண்டு படித்த உடனேயே மனதில் பதிந்தன.
'எந்தையுந் தாயும் குலவி மகிழ்ந்திருந்தது இந் நாடே' அதில் 'நிலவினில் ஆடி ' என்ற அடிகள் முக்கியமாக, மற்றது "காணி நிலம் வேண்டும்.'
'முத்துச் சுடர் போலே நிலவொளி முன்பு வர வேண்டும்." என்ற வரிகள், பிறகு 'பாரதி பாடல்கள்.' தொகுதியை கிருஷ்ணசாமி கடையில் தேடி வாங்குகிற அளவுக்கு ஆக்கின.
விஞ்ஞானம் ஆறாம் வகுப்பிலிருந்தே கட்டாய பாடமாயிருந்தது. மனுவேலோ சாமுவேலோ என்பவர் எழுதிய புத்தகப் பாடநூல். கிரகணங்கள் பற்றியெல் லாம் அதில் இருந்தது. பூமிக்கும் சூரியனுக்குமிடையே சந்திரன் வரும்போது சூரிய கிரகணம் வருகிறது. சந்திர னுக்கும் சூரியனுக்குமிடையே பூமி வரும் போது சந்திர கிரகணம் வருகிறது. பிறகு மேல் வகுப்புகளில் 'அம்ப்ரா', 'பெனம்ரா' எல்லாம் பற்றியும் படித்தாலும்

சாந்தன் 麗 27
கிரகணம் என்று நினைக்கிறபோதில் ராகுவும் கேதுவும் தான் முதலில் மனதில் தலை காட்டுகின்றன.
பாம்பு கெளவியதும் கக்கியதுமான ஒரு முழு நாடகத்தை வடிவாகப் பார்க்கிற வாய்ப்பு ஐந்தாறு வயதில் சித்தித்தது. அதன் பிறகு அப்படி வசதியான முன்னிரவு முழு நிலா வேளையில் கிரகணம் வந்த ஞாபக மில்லை. அப்போது இருந்ததெல்லாம் ஒரு பயம்; ஒரு பரிதவிப்புதான். பாம்புகள் சந்திரனை விழுங்குகிற போது அங்கே மாட்டில் பால் கறந்துகொண்டிருக்கிற ஒளவையார் ஆச்சிக்கு என்ன நடக்கும்? அவ சந்திரனுக் குள்ளே போய்விடுவா என்றும் பாம்புகள் பத்திரமாப்ப் பிறகு அவளையும் சேர்த்துக் கக்கி விடுமென்றும் அம்மா சொன்னதில் ஆறுதல் வந்தது.
ஏழாம் எட்டாம் வகுப்புக் காலங்களில் என்றுதான் ஞாபகம், ரஷ்யாக்காரர் 'ஸ்புட்னிக்"கை அனுப்பியது. மாதத்தில் முக்கால் பங்கு இரவுகளில் நிலவைப் பார்க்க முடியாத ஆதங்கம், அப்போது பத்திரிகைகளெல்லாம் **செயற்கைச் சந்திரன்' 'செயற்கைச் சந்திரன்' என் றெழுதிய போது மறைந்தது. இனி எல்லா இரவுகளிலும் நிலா வீசும் என்ற எதிர்பார்ப்பு பிறந்தது. அந்தச் செயற்கைச் சந்திரன் வானில் சுற்றுகிற போது எழுந்த *பீப் பீப்” ஒலியை எல்லோருமே ரேடியோ அருகி லிருந்து வலு கவனமாக செவி மடுத்தார்கள். ஆனால், பிறகு பூமியைச் சுற்றுகிற ஒரு பண்பில் மட்டுமே அது சந்திரனாகுமென்பது வெளித்தபோது பெரிய ஏமாற்றமே.
இதே போல, நிலவும் விஞ்ஞானமும் சந்தித்த சம்பவமொன்று பிறகொரு தடவை நன்றாக மனதில் பதிய நே ர் ந் த து. அறுபத்தொன்பதிலாயிருக்க வேண்டும். கட்டு பெத்தை தொழி நுட்பக் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த காலம். ஓரிரவு மொரட்டுவை நகரையே ஜனங்கள் வெடிகளால் அதிர வைத்தார்கள்.

Page 21
28 靈 ஒரு பிடி மண்
அமெரிக்காக்காரன் சந்திரனில் இறங்கியதை ரேடி யோக்கள் அப்போது அஞ்சல் செய்து கொண்டிருந்தன.
ஊரை விட்டுக் கட்டுப்பெத்தைக்குப் புறப்பட முதலில் தவித்த தவிப்பு சொல்ல முடியாதது. வீட்டை விட்டு-ஊரை விட்டுப் பிரியப் போவது அதுதான் முதல் தடவை. இந்த இயல்பாக சுவறி விட்ட-வாழ்வு தன்னிலிருந்து பிய்த்தெடுக்கப்படுவது தாங்க முடியாததா யிருந்தது. பெற்றோர், சகோதரர்கள் வீடு, என்பதோடு நண்பர்கள், அவர்களைச் சந்திக்கிற அம்மன் கோயிலடி எல்லாம் பிரிய முடியாதவையாக இருந்தன. அம்மன் கோயில் தேர் முட்டி அப்போதைய வாழ்வின் மையமாக இருந்தது. நண்பர்களின் சந்திப்பிடம், கனவு களை வாழ்க்கையை எல்லாம் அவர்கள் பகிர்ந்து கொண்ட இடம். உலக ஞானத்தை வளர்த்த வித்தியா சாலை, தேர் முட்டிக்கு அப்போது கூரை இல்லா திருந்தது. படிப்படியாக ஏறி பன்னிரெண்டு பதின் மூன்றடி உயரத்திற்கு, வயல் சூழ்ந்த வெளியில் வானத்தை நோக்கியபடி அந்த இடத்தை ஆளும் அரசு கட்டிலாய் அது திகழ்ந்தது.
மாலைப் பூசை முடிந்த கையுடன் உச்சிக்கு ஏறி னால், வெயில் தாழ்ந்து, செவ்வானம் பூத்து, பிறகு அதுவும் அந்திக் கருக்கலில் கரைந்து விடுகிற மட்டும்அர்த்த சாமப் பூசை மணி கேட்கும்வரை பொழுது போவதே தெரியாமலிருக்கும். முன் நிலவு இரவுகளை ஆவலோடு எதிர்பார்த்தார்கள். அமாவாசை கழிந்தால் "நாயலைச்சல்” தரக்கூடிய நாலாம் பிறையைக் காண்ப திலிருந்து பிறகு பருவத்திற்கு அடுத்த நாள்வரையும் தினசரி இந்த நிலாத் தோயல் வாய்க்கும். தேர்முட்டிக்கு நேர் முன்னால் மகிழமரம் நிற்கிறது. சோழகம் தொடங்கு கிற போது மகிழ் பூக்கும். பெளர்ணமியன்றைக்கு மகிழின் உச்சிக்கும் அப்பால் வயல் வெளிகளைத் தாண்டி தூரத்தில் நிரை கட்டி நிற்கிற பனைகளுக்கு

சாந்தன் 醫 23
மேலே தொடுவானத்தில் அந்த முழு வெண்ணெய்ப் டிந்து காலித்து எழுகிற நேரம் உன்னதமானது.
கட்டுப்பத்தை வாழ்வுடன் இந்த விடலைத் தனத் திற்கு விடை தர நேர்ந்தது. தொழில்நுட்பக் கல்லூரிப் படிப்பு, பிறகு அது முடிந்த கையுடனே உத்தியோக மென்று கொழும்பு வாழ்வே நியதியாகிப் போனது.
பொதுவாக சினிமாவும் அவற்றில் வருகிற பாடல்
களும் தொண்ணுாறு சதவிகிதம் ஆத்திரமூட்டவே செய்
கின்றன. எனினும் சின்ன வயதிலிருந்து மனதோடு
பதிந்துவிட்ட சிலதும் இருக்கின்றன தான்.
“ “ Gol li g al G. Auir Gil 6 sessi 60 sili sa), (S6!... '' 14 ஆக இன்ப நிலாவினிலே." **ួ36 = 6 ៦ ប្រុស.** "அமுதைப் பொழியும் நிலவே."
மிஸ்ஸியம்மா, மாயா பஜார், பிரேம பாசம், இந்தப் ப்டங்களெல்லாம் எப்போதோ வந்தவை. இவை எல்லாவற்றையும் அப்போது பார்க்க முடிந்திருக்கிறது. மூன்றும் ஜெமினி, சாவித்திரி நடித்தவை. ஒன்றுவிட்ட அண்ணா ஒருவர்- அந்தக் காலத்தில் ஜெமினி விசிறி யாயிருந்தவர் அவர்- புண்ணியத்தில் இவற்றைப் பார்க்க கிடைத்தது. மற்ற, நாலாவது பாடல் வருகிற படம் சிவாஜி, யமுனா நடித்ததாயிருக்க வேண்டும். பெயர் ஞாபகமில்லை. எப்போது யாருடன் பார்த்தோம் என்பதும் நினைவில்லை. இவற்றில் அந்த பிரேம பாசம் பாடல் காட்சி அப்போது மனதிலுரட்டிய கிளர்ச்சி இன்னமும்தான் மறக்க முடியவில்லை.
மிஸ்ஸியம்மாவில் இருவரும் தோட்டத்தில் நின்று நிலவைப் பார்த்து பாடுவது மாயா பஜாரில் அபிமன்யு வும் அவன் காதலியும் தோணியில் துடுப்பு வலித்தபடி.
அந்த த்ரில் எல்லாம் அந்தக் காலத்துடன் மறைந்து

Page 22
30 露 ஒரு பிடி மண்
விட்டாலும், இந்தப் பாட்டுகள் இன்னமுந்தான் எங்கு கேட்டாலும் மனதை வருடச்செய்கின்றன. இதற்கெல் லாம் இந்த நிலவுதான் காரணம் என்று படுகிறது.
அம்மன் கோயில் தேர் முட்டியுடன் திருப்திப் பட்டு விடாது, நிலா இரவுகளில் வேறு இடங்கள் தேடிப்போன நாட்களுமிருந்தன. தோட்டவெளி ஊருக்கு மற்றப் பக்கத்திலிருந்தது. புன்செய் நிலம்: புகையிலைதான் முக்கிய பயிர், கார்த்திகையில் நட்டு மாசியில் வெட்டிய பின் அநேகமாக வெறும் நிலமாக கிடக்கிற வெளி, ஒன்றிரண்டு பேர் மிளகாய், வெங்காயம் நடலாம். மற்ற நிலங்களில் ஆடு, மாடுகள் மேயும். ஆனி ஆடியில் சோழகம் கிளப்புகிற செம்புழுதியுடன் நெரிஞ்சிமுள் குத்தக் குத்தப் பொடியன்கள் கொடியேற்றுவார்கள். எட்டுமூலை, கொக்கன், பிராந்தன் பாம்பன் எல்லாம் இரவிரவாக விண் கூவும்.
புகையிலை வளர்ந்து சனைத்திருக்கிற வேளை களில் இடமே மாறிவிடும். அலையடிக்கிற கடல் மாதிரி யிருக்கும். நடு ரோட்டில் போகிறபோது கடல் நடுவில் நடக்க முடிகிற மாதிரி.
தோட்ட வெளியில் மாசி பங்குனி ஏற்ற மாதங்களாய் இருந்தன. மூக்கியமாக மாசி பாதை இரு மருங்கும் சயனைத்திருக்கும் பயிர்களிடை நிலாப் பொழியும் பனியில் நீர்த்த நிலா. இந்தப் பணி மூட்டங்கள் நிலவுக்குப் புதுப் பரிமாணங்கள் தருவதாய்ப் படுகிறது. புகையிலையின் பச்சை நெடியும் பனிக் குளிரும் இந்த ஒளியும் ஓர் அற்புத சேர்க்கை. அதை மாசியின் முன்னிலவு இரவுகள் மட்டுமே தரமுடியும்.
இந்த இடம் பற்றியும் ஒரு கனவு வந்தது அதில் தோட்டவெளி பெரிய சமுத்திரமாக மாறியிருந்தது. அலை தளும்புகிற பெரிய சமுத்திரம். நடுவில் தெரு மட்டும் போகிறது. கடலிலிருந்து ராட்சத டைனோலர்கள்

சாந்தன் 鹽 31
எழுந்து வருகின்றன. புது விதமான மரங்கள் தூரத் தூரத் தெரிகின்றன. நிலவு புதுமையான ஒளியொன்றை வீசுகிறது.
கஷ 0ரினா கடற்கரைக்குப் பிக்னிக் போய் வந்தபின் தான் அந்த கனவு வந்திருக்க வேண்டும்.
கல்லூரி எழுபத்தைந்தாவது ஆண்டு விழாச் சமயத் தில் ஏ.எல். மாணவர்கள் நாடகம் போட்டார்கள். வாழ்வெனும் தோணியிலே ' என்று பெயர். இவன் வில்லன். குகன், விஜயதாசன் இப்படி இன்னும் பல பேர் நடித்தார்கள். பரா, கதை வசனம். கார்த்திகேயன், ஹீரோயின், கனக நாயக மாஸ்டர் டைரக்ட் செய்தார். நன்றாகத்தான் நடந்தது. நல்ல பெயர். இரண்டு நாள் மேடையேற்றினார்கள்.
மூன்றாம்நாள் கனகநாயகத்தார் நாடகக் குழுவை தன் சொந்தச் செலவில் கஷ oரினா பீச்சுக்குக் கூட்டிப் போனார். வாடகைக்குப் பிடித்த தனி பஸ் ஐந்து மணிக்கு வந்தது. கடற்கரைக்குப் போய்ச் சேர்ந்த போது மைம்மலாகிவிட்டது. அந்தத் தனிமையில், ஒரு புறத்தில் அரணாய் நிற்கிற சவுக்கந்தோப்பின் காற்றும், மறுபுறத்தில் கடலுமாய் இரைந்துகொண்டிருந்தன. நீரில் இறங்கியபோது நிலவு காலித்தது. இங்கு வந்தது இதுதான் முதல் தடவை. நிலவில் கடலில் நீந்துவதும் இதுதான் முதல் தடவை. நிலவு கடலின் பிரமாண்டத்தை உணர்த்தவே வந்திருந்தது. அது தனியாகப் பதிந்த நிலா.
எருமைகள் போல நீரில் ஊறித் திளைத்தவர்களை கரையேற்றியது கனகரின் கத்தல் மட்டுமல்ல; இன் னொன்றுமிருந்தது-சொறி, சளியாய்க் கடலில் மிதக் கிற ஜன்மம், கூட்டமாய் வருமாம். பயங்கர பிராணி என்றார்கள். மேலில் பட்டால் எரிவும், சுணையும் தாங்கமுடியாதிருக்குமாம். அது காக்கைச் செ றி.

Page 23
32 圈 ஒரு பிடி மண்
இரத்தச் சொறி பட்டால் இரத்தம் இரத்தமாய்ச் சத்தி
யடுக்குமென்றார்கள். எல்லாம் அங்கே தெல்லுத் தெல்லாகக் காண நேர்ந்த மீனவர் சொன்னவை. பிராணியியல் ஆசிரியரான கனகர் இன்னும் கனக்கச் சொன்னார். ஃபைலம், கிளாஸ் அது இது என்று அவர் சொன்னவற்றில் இப்போது மனதில் மீதி இருப்பது சொறியின் இங்கிலீஷ் பெயர் மட்டுத்தான். 'போச்சு கீஸ்மான் ஒஃவ் வார்.'
கட்டுப்பெத்தை வாழ்வில் இந்த நிலவு புதிய அறி முகம் கொண்டது. தென்னஞ் சோலைகளின் சலசலக் கிற கீற்றுக்களில் மின்னித் தெரிகிற நிலவு. தென்னங் கீற்றும் நிலவொளியும் எவ்வளவு அற்புதமாய் இசைவு கொள்கின்றன! பச்சைப்புல் தரைகளில்-வெள்ளை மணல் பரப்புகளில் இந்த நிலவு சுவறுகிறது.
ஒரு நள்ளிரவு. அடர்ந்த சிறிய தென்னந் தோப் பொன்றின் நடுவே அழகிய சிறு குடிசை ஓலைகளும் குரும்பைக் குலைகளும் கைக்கெட்டும் தூரத்தில் ஓலைகளுக்குள்ளால் நிலவு தாச்சி மறிக்கிறது. குடிசை யில் ஒரு குடுமிக்கார மனிதனும் அவன் மனைவியும், நடுத்தர வயதினர். இவன் அவர்கள் வீட்டில் விருந்தாளி பாக வந்திருக்கிற மாதிரி இருக்கிறது. குடுமிக்கார மனிதன் தென்னிலங்கைக் έξι τερς, πέθ போலவும், தென்பாண்டி மறவர் போலவும் இருக்கிறது. தெளிவா யில்லை. அந்த மனிதனும், மனைவியும் இளநீர் வெட்டித் தந்து அன்பும் மரியாதையுமாய் உபசரிக் கிறார்கள்.
கல்லூரிக்குப் போகிற தெருவில் பாதித் தூரம் தாண் டியதும் இரண்டு பக்கமும் வயல்கள் வந்தன. உண்மை யில் கட்டுப்பெத்தையைப் பரிச்சயங் கொண்டதுகூட இந்த இடத்தில்தான். அதுவும் ஒரு நிலவில்தான். அட்மிஷன் கிடைத்து கல்லூரி திறப்பதற்கு முதல் நாள்

சாந்தன் 靈 33
இடத்தைப் பார்த்து வைக்கலாமென்று பாலாவையும் கூட்டிக்கொண்டு வெள்ளவத்தையிலிருந்து போனான். சந்தியிலிறங்கியபோது இருட்டிவிட்டது. இந்த முக்கால் மைல் தூரமும் பஸ்ஸைப் பாராமல் விசாரித்துக்கொண்டு நடந்தே போனார்கள். பஞ்சுவையும், சோமுவையும் முதலில் சந்தித்ததுகட்ட அப்போதுதான். அரவமற்ற தெருவில் வயற்கரை மதகொன்றில் நிலவிலும் நிசப்தத் திலும் லயித்தபடி சிகரெட் குடித்துக்கொண்டிருந்த அந்த இருவருமே கல்லூரிக்கு வழிகாட்டினார்கள். இரண்டு நாட்களுக்குப் பிறகு பஞ்சு இவனைக் கன்ரினில் அடை யாளம் கண்டு விசாரித்தான்.
பிறகு, இந்த வயல்வெளிகள் மனதுக்கு வலு நெருக்கமானவையாக ஆகி வி ட் டன. பஞ்சுவையும் சோமுவையும் போலல்லாமல் சைக்கிளில்தான் இவன் அந்த இடத்திற்குப் போக முடிந்தாலும்கூட என்ன வென்று தெரியாத ஒரு பூண்டின் வாசனை, அமைதிக்குக் கனம் சேர்க்கிற தவளைகளின் இரைச்சல், இருந்திருந்து விட்டு ஒளி மங்கி மறைகிற வாகனங்கள்; உருக்கிய வெள்ளியாக மதகின் கீழே பளபளக்கிற வெள்ளம்
இந்த வெள்ளம் ஊரை நினைவூட்டும். புகையிலை இறைப்புக்கு நேரம் நெருக்கடியாகிறபோது இரவிரவாக நிலவொளியில் இறைப்பார்கள். பெரிய மாமாவின் தோட்டத்திற்கு இதற்காகவே அடிக்கடி போயிருக் கிறான். வேகமாக வாய்க்காலில் நீர் பாய்ந்தோடும். மெஷின் ரீங்காரம் சுருதி கூட்டும். இரவெல்லாம் இறைக்க மாட்டார்களா என்றிருக்கும்.
பெளர்ணமியன்றைக்கு விடுமுறை விடுவது நல்ல விஷயந்தான். இலங்கைதான் பெளர்ணமியை விடுமுறை யாக்கிய ஒரே நாடோ? அது இந்துக்களுக்குப் புனித தினம். பெளத்தர்களுக்கும் என்பது முக்கிய விஷயம். வெள்ளை உடை தரித்து மக்கள் புத்தவிகாரைகளுக்குச் சென்று வருவது பார்க்க ரம்மியமாய்த் தானிருக்கிறது.

Page 24
34 鹽 ஒரு பிடி மண்
ஏழெட்டு வருஷங்களுக்கு முன் கொழும்பிலிருந்து நண்பர்கள் யாழ்ப்பாணம் பார்க்க வந்தார்கள். நயினா தீவுக்குப் போன சமயம் இவர்களது நட்பைப்போல அன்று அதுவும் ஒரு பெளர்ணமியாயிருந்தது. கொழும் பிலிருந்து புறப்பட்டதிலிருந்து திரும்பப்போய்ச் சேர்ந்து இந்தப் பயணம் நிறைவேற்றுகிற வரைக்கும் இந்தக் குழுவின் தலைவனாக அவன்தானிருந்தான். மேற் சட்டையின்றி கோயிலுக்குள் வந்து திருநீறும் சந்தனமு மாய்ப் பூசிக்கொண்டு-யார்தான் அவர்களை அப்போது வேற்று மனிதர் என்று சொல்லியிருக்க முடியும்?- கும்பிட்டு வந்ததும், மடத்தில் அன்றிரவு புதினப் பத்திரிகையையே பாயாய் விரித்து எல்லோருமாய் அவனைச் சூழ்ந்துகொண்டு தூங்கிப் போனதும் . விகாரங்களின் வெண்காவியும், தென்னைகளும், நிலவும் கடலும் நினைவில்.
பார்க்கிற பெண்களை மனதால் அவன் நிர்வாண மாக்கி ரசிப்பதாக யாரோ ஒரு தடவை குற்றம் சொன்ன துண்டு. அது உண்மையல்ல, ஆனால் அது போன்ற ஒரு விஷயம் உண்மையாயிருக்கிறது. பகலில், புதிதாய், வடிவாய்க், காண நேர்கிற ஒவ்வோரிடத்தையும் அது நிலவில் எப்படி இருக்குமென்று கற்பனை செய்கிற வழக்கம், துர்க்கையம்மன் கோயில், சந்நிதி கோயில் கல்லுண் டாய்.
இந்த நிலாப் பித்து நினைவறிந்த நாளிலிருந்தே உள்ளதுதான். பிறகு தனக்கென வீடொன்று கட்ட வாய்த்தபோது அது சிறியதாகத்தான் அமைந்தாலும், நடுவில் நிலா முற்றம் வரத்தக்கதாக கஷ்டப்பட்டு வடிவமைத்தான். கட்டிட வடிவமைப்பாளனாயிருந்தது வசதியாய் போயிற்று. புது மாதிரி வீடென்று பார்த்தவர் கள் பாராட்டினார்கள், ஆனால் அது மறக்கப்பட்டு விட்ட-யாழ்ப்பாணத்தின் பாரம்பரிய-நாற்சார் வீட்டுப் LTGoffiGu GTGOT នោះវិនា ឆ្នាំឆ្នាំgoTTar.

சாந்தன் 35
நிலவிலும் நீரிலும் ஒன்றாகத் தோய்வது கோடை இரவுகளில்தான் சாத்தியமாகிறது. தெ ன்  ைன யும், கமுகும் அரண் சூழ்ந்த கிணற்றிலிருந்து அள்ளியள்ளி ஊற்றுவது சொர்க்க அனுபவம்.
கஷ 0ரினா பீச்சுக்குப் பிறகு முன்னிலாவைக் கடலுடன் சம்பந்தப்படுத்திக் கழிக்கிற வாய்ப்பு திருகோணமலைக்குப் போனபோது மட்டும் ஒரு தரம் கிட்டியிருக்கிறது-மற்றபடி மேற்குக் 35 600 U LL T 60T கொழும்பில் எப்படி அது வாய்க்கும்? ஆனால், ஊருக்குப் போவதற்காகக் காலை ரயிலில் புறப்படுகிற நாட்களில் இந்த மேலைக்கரை வித்தியாசமான ஒரு தரிசனம் தந்திருக்கிறது. கோட்டையிலிருந்து ஐந்தே முக்காலுக் குப் புறப்படுகிற ரயிலைப் பிடிக்க நாலரை ஐந்துக்கோ, சில சமயங்களில் அதற்கும் முன்போ, கரையோர ரயிலில் வந்துவிட வேண்டிருக்கிறது. பம்பலப்பிட்டியில் வெள்ள வத்தையில், அங்குலானவிலிருந்தெல்லாம் அந்த விடி யலில் ரயிலேறுகிறபோதில் காலிமுகம் வரையிலும் கடலும் கூடவரும். அநேக போதுகளில் தேய்பிறையின் இனந்தெரியாத சோகத்துடன் பின்னிலா கடலை மினுக்குவதைக் காண நேர்கிறது. உப்புக் காற்று முகத் தில் மோதும்,
எப்போதோ அப்புவுடன் காரில் மறவன்புலவுக்குப்
போனது இன்னும் நினைவிருக்கிறது. அரைக்கோளமாய் வானம் கவிழ்ந்து மூடிய அந்த வெளியில் குன்று குன்றெனக் குவிந்திருந்த சூடுகளிடையில் வெள்ளை மணல் மேடிட்டிருந்தது. அந்த மண்ணும் அதன் நிறமும் அப்போதைய வயதில் அந்நியமானவை. வானத் திலிருந்து வழிந்த நிலவே வெளியெல்லாம் மணலாய்ப் பரந்தது மாதிரி இருந்தது. பெரியவர்கள் பேசிக்கொண் டிருக்க, நேரம் போனதே தெரியாமல் மண்ணில் விளையாடியதும், பிறகு புரண்டு புரண்டு அப்படியே தூங்கிப்போனதும்,

Page 25
ஒரு பிடி மீண்
கல்லூரி மைதானத்தின் கரையில் நிற்கிற பன்னீர் மரத்தின் கீழே சொரிந்து கிடக்கிற பூக்களும் பச்சைப் புற்களும் சேர்ந்து சமைத்த பாயில் சகாக்கள் புடைசூழ் கொலுவேற்பதும் தேவனை ஆஸ்தான வித்துவானாக்கி அவன் குரலும் நிலவும் தரும் போதையில் கிறங்கிப் போவதும்.
ரஷ்ய இலக்கியங்களுடன் பழக்கமேற்பட்டபோது லேனின் கிராத்தையும் அதன் வெண்ணிரவுகளையும் அறிய நேரிட்டது. நிலவிரவுகள் மாதிரி இவையும் சொர்க்கத்தை பூமிக்குக் கொண்டு வருமா எனத் தெரியாதிருந்தது.
மாசியில் மட்டுந்தான் என்றில்லை-வருடத்தின் ஒவ்வொரு மாதத்திலும் நிலவு ஒவ்வொரு பரிமானம் கொள்ளத்தான் செய்கிறது. பங்குனியில் வளர்கிறது. சித்திரையில் உச்சம் கொள்கிறது. வைகாசி அதற்குப் பிரகாசமூட்டுகிறது. ஆனி ஆடியில் சோழகம் அதற்குத் துணை சேர்க்கிறது. புரட்டாசி ஐப்பசியில் காண நேர்கையில் இரட்டிப்பு மகிழ்வு. கார்த்திகையிலும் அப்படியே எனினும் விளக்கீடு வந்துவிடுகிறது.
சித்திரை நிலவில் பத்திரகாளி கோயில் திருவிழா நடக்கும். வைகாசி விசாகத்தில் அம்மன்கோயில் தேர். பிறகு ஆனிப் பெளர்ணமியில் நயினாதீவில் தேர். ஆவணியில் நல்லுரர் உற்சவம் வருகிறது. அநேகமாக நல்லூரில் மஞ்சத் திருவிழா பார்த்துவிட்டு நிலவில் திரும்புகையில் எல்லா வீடுகளிலும் ரேடியோக்கள் கண்டிப் பெரஹராவை அஞ்சல் செய்துகொண்டிருக்கும்.
சோழகமும் நிலவும் சாஸ்வதமாய் இருந்தால் உலகில் எந்தத் துன்பமும் அணுக முடியாது என்று படுகிறது. சித்திரையில் இவை சந்திக்கின்றன. சித்திரா பருவத்தில் இரவு மட்டுமில்லை, பகலும்சந்தோஷமானது தான். ஊரெல்லாம் ஒவ்வொரு கோயிலிலும் சித்திரைக்

சாந்தன் 圈 37
கஞ்சி காய்ச்சுவர் காள். சித்திர புத்திர நாயனார் கதை படிப்பார்கள்.
இந்த வருஷம் சித்திரைக் கஞ்சி யாரும் காய்ச்ச வில்லை. கதை படிப்புமில்லை. கோவில்களருகில் ஜனம் சேர்வது ஆபத்தானதாயிருந்தது. தவிர, கொண்டாட்ட மனநிலைகூட யாருக்கும் இருக்கவில்லை. பெளர்ணமி வந்தது ஞாயிறன்று. அதற்கு முந்திய திங்களில் பட்டணத்தில் நடந்த சம்மாரத்தில் இந்த ஊரிலிருந்தே இரண்டு பேர் செத்தார்கள். அன்றிலிருந்து அங்கு ஊரடங்கு, செவ்வாய் அன்று தூரத் தூரக் கேட்ட வெடிச் சத்தங்களும் தாழப் பறந்த விமானங்களுமாய் ஊரே கிலி கொண்டிருந்தது என்னாகுமென்று தெரியாதிருந்தது. புதனன்று ஏதோ அவசர அலுவலாய்ப் போன ஜெயந்தன் பிறகு திரும்பி வரவில்லை என்று சொன்னார் கள். இவை எல்லாவற்றிற்கும் ஒத்திசைவுபோல மூன்று நான்கு நாட்களாக வானம் மேகமூட்டத்துடன் துக்கம் காத்தது.
ஞாயிறிரவு ஏழெட்டுமணிபோல் வெளியே வந்த
போது வானம் வெளுத்து நிலவு தெரிந்தது. "அற்றைத்
திங்களவு வெண்ணிலவில்..' வரிகள் ஞாபகம் வந்தன.
(வீரகேசரி 1984)
JJ

Page 26
தேடல்
ஷோலக்காவுடன் தான் எல்லாம். மீண்டும் ஆரம்ப மாகின. அதுவும் எப்படிப்பட்ட நாட்களில்.
காலையில், அநேகமாக எட்டரை மணிக்கு எல்லோரும் ஏதேதோ அலுவல்களாய் வெளிக்கிடுகிற போது பிள்ளைகள் எல்லாம் பள்ளிக் கூடத்தில் பிரார்த் தனையில் இருக்கக்கூடிய வேளையில் இரைச்சல் தூரத் தில் கேட்கத் தொடங்கும்.
பிறகு நெருங்கி வரும். அந்த இரைச்சலின் மூலமே ஜனங்களை பதகளிக்கப்பண்ணுகிற விமானங்கள் வந்து
 

சாந்தன் 隱 33
சுற்றும். வட்டமாய், நீள் வட்டமாய், கிட்டவும் தூரவும், உயர்ந்தும் பதிந்தும் இரையும்- உறுமும், எந்த இடம் ஒன்றில்லாமல் எங்கும் அவை பறக்கும்.
அண்ணாந்து பார்ப்பவர் கண்களில் வெள்ளி உடம்புகள் மின்னுவது தெரியும். காலைச் சூரிய வெளிச்சம் பட்டு அவை மின்னும், முகில்களில் ஒளிந்துப் பின் வெளிக்கும். இருந்தாற்போல் எங்கோ குத்திப் பதிந்து குண்டுகளை வீசும்.
பள்ளிப் பிள்ளைகள், வேலைக்குப் போகிற ஆட்கள், வீட்டிலிருக்கிற யாரோ, தெருவால் தாண்டும் எவரோ, வெடித்துச் சிதறும் குண்டோடு தாமும் அடையாளம் தெரியாமலாகி.
உயிரும், உற்சாகமுமாயிருக்கும் ஒரு மனித உடல் அரை நொடியில் வெறும் மாமிசத்துண்டங்களாய் உருச் சிதைந்துவிடும்.
இப்படி ஒவ்வொரு நாளும் நடந்தது, தவறாமல், அநேகமாக இந்த எட்டரை மட்டில், எல்லோரும் எங்கோ புறப்படும்போது, என்றாலும் எவரும் தயங்கிய தில்லை. எங்கே இருந்தால் என்ன? எந்த இடம்தான் பத்திரம்? எல்லாமே ஒன்றுதான். வீடும் வெளியும் எங்கும் எதுவும் நடக்கலாம். பிறகென்ன? எதற்காகக் காத்திருக்க வேண்டும்?
எவரும் எதற்கும் காத்திருக்கவில்லை. அவரவர் அலுவல்களைப் பார்த்தார்கள்,
மரண தேவனின் சுயம்வரம். கண்ணை மூடிக்கொண்டு அவன் சுழற்றியெறிந்த மாலை எவர் மீது விழுந்ததோ அவர்களை அவன் அழைத்துப் போனான். அவனது மாலையைக் கவ்விக்கொண்டு சில நாட்களில் அந்த விமானங்கள் இரண்டாவது தடவைகூட வந்தன. பத்து பத்தரை பதினொன்றுக்கு இப்படிக் குண்டுகளைப்

Page 27
40 蠶 ஒரு பிடி மண்
போட்டுக் கண்டதுதான் என்ன? போட்டவர்களுக்கே தெரியாது.
ஆனால் யாரும் எதற்காகவும் காத்திருக்கவில்லை. விமானம் மேலே சுற்றினால், அந்தச் சத்தம் சந்தேகத் திற்குரியதாக இருந்தால்- இப்போது சத்தங்களை வைத்தே ஆபத்தை எடை போட ஜனங்கள் அறிந்து கொண்டுவிட்டார்கள்- அந்தந்த இடங்களிலேயே விழுந்து படுத்துக் கொண்டார்கள். குப்புறப்படுத்து, முழங்கைகளை ஊன்றி, கைகளில் தலையைத் தாங்கி, காதுகளையும் பொத்தியபடி, விழுந்துப் படுக்கக்கூட அவகாசம் கிடைக்காத துரதிருஷ்டசாலிகளை அல்லது அசட்டை செய்த அலட்சியக்காரர்களை ஆபத்து அளைந்தது.
ரமணனும் எல்லாரையும் போல தினசரி வேலைக்குப் போனான். வழமையான நேரத்திற்கே வழியில் ஏதும் பிரச்சினை என்றால் சைக் கிளைத் தெருக்கரையோடு போட்டுவிட்டு மற்றவர்களோடு தானும் படுத்துக் கொள்ளவேண்டும். சத்தம் அகன்றதும் சைக்கிளில் ஏறித் தன் வழி போகலாம். ஆக மிஞ்சினால், உடுப் பெல்லாம் ஊத்தையாகும். அவ்வளவுதான். உயிரே போகப் பார்க்கையில் உடுப்பு ஊத்தையாவதென்பது ஒரு கதையா? .
இப்படியான நாட்களிலா ஒருவன் புத்தகங்களைத் தேடி அலைவான்?
ரமணனிடம் முன்பு நிறையப் புத்தகங்களிருந்தன. சின்ன வயதிலேயே புத்தகங்களைப் படிக்கிறதும் அவற்றைச் சேர்க்கிறதுமான பழக்கம் வந்துவிட்டது. அம்மா, ஐயா, அப்பு, ஒருவருமே அவன் புத்தகங் களோடு மினைக்கெடுவதை அப்போது குறை சொல்ல

சாந்தன் 4
அப்பு ஒவ்வொரு வெள்ளிக்கிழமை பின்னேரமும் பட்டணம் போகிற போது கூட்டிப் போய் தம்பித்துரை கடையிலோ, கிருஷ்ணசாமி கடையிலோ வாங்கிக் கொடுப்பார். திரும்பும்போது குறைந்தது இரண்டு புத்தகமாவது கையில் இருக்கும். புத்தம் புதியதாய், அச்சு மையும் கடதாசியும் மணக்க மனக் க. கசங்காமல் மடங்காமல் மொட மொடவென்று. இரவு வீட்டுக்கு வர ஒன்பது பத்து மணி ஆகும். ரமணன் பார்சலை அவிழ்க் கவேமாட்டான். பத்திரமாகப் பெட்டிக்குள் வைத்து விடுவான். பூட்டுப் போட்ட மரப்பெட்டி,
அடுத்த நாளும், அதற்கடுத்த நாளும் பள்ளிக்குப் போவதுபோல-அல்லது அதனிலும் அக்கறையாக வேளைக்கே எழும்பி, வேலையெல்லாம் முடித்து எட்டு மணிக்கு முன்னதாகவே பின் திண்ணைக்குப் புத்தகங் களுடன் போய்ப் படுத்துவிட்டால். வழுவழுவென்று குளிர்கிற பச்சைச் சீமேந்தும், அருகில் சம்பு நாவல் மர நிழலும், அந்த நிழலில் கோலம் போடுகிற மஞ்சள் வெயில் பொட்டுகளுமாயிருக்கிற அந்தச் சூழலில் பகல் முழுவதும் எத்தனை உலகங்கள், இல்லை எத்தனை சொர்க்கங்கள் விரியும்.
ஆறாம் வகுப்பில் படிக்கிற காலத்திலேயே ரமண னிடம் நூறுக்கு மேல் புத்தகங்கள் சேர்ந்துவிட்டன. எல்லாப் புத்தகங்களுக்கும் உறை போட்டு ஒழுங்காகப் பட்டியல் எழுதி .
முகுந்தன் இதற்கு 'ரமணன்ஸ் லைப்ரரி என்று தானாகவே பெயரும் வைத்துவிட்டான். பட்டியல் ஒழுங்கின்படி இலக்கங்களை எழுதும்போது பார்த்தால் எல்லாப் புத்தகங்களிலும் முன் ஒற்றைகளில் முகுந்தனின் கையெழுத்தில் ரமணன் லைப்ரரி, ரமணன் லைப்ரரி
என்று ஆங்கிலத்தில் அழகாக எழுதியிருந்தது.

Page 28
42 醫 ஒரு பிடி மண்
ஆளோடு சேர்ந்து, படிப்போடு சேர்ந்து அந்த லைப்ரரியும் வளர்ந்தது.
கொழும்பிலிருந்து மாற்றலாகி யாழ்ப்பாணம் வந்த போது, பதினைந்து வருஷம் அங்கே வேலை பார்த்து அதில் பாதிக் காலம் அங்கே குடும்பம் நடத்தியுமாயிற்று. அப்படியிருந்தும், அம்மி, குழவி, கதிரை, மேசை, கட்டில் சைக்கிள் என்று எல்லாவற்றையும் சேர்த்தாலும் அவற்றிலும் கூடுதலாய் இடத்தைப் பிடித்தவை புத்தகப் பெட்டிகள், அப்படி வந்தது எண் பத்தொன்றில்,
இரண்டு வருஷத்திற்குள் எல்லாமே தலைகீழாக மாறிவிட்டன. எண்பத்து மூன்று ஜூலையில் கொழும்பி லிருந்திருந்தால் எ ன் னெ ன் ன அவதிப்பட்டிருக்க வேணுமோ. எத்தனை பேர் உடுக்க உடையில்லாமல் தண்ணிவெண்ணியில்லாமல், படாதபாடெல்லாம் பட்டுக் கப்பலேறி வந்திறங்கினார்கள். வீடு வாசல், சாமான், சக்கட்டு எல்லாவற்றையும் அந்தந்தப்படியே விட்டு விட்டு, அந்த அமளியில் புத்தகங்களை நினைத்துக் கூடப் பார்த்திருக்க முடியுமா?
நல்ல காலம், இரண்டு வருடம் முந்தி வந்தது .
இல்லை. அப்படியும் முற்று முழுதாகச் சொல்லி விட முடியாதிருந்தது.
இலங்கை முழுவதுமே ஊரடங்கு. அதுவும் எத்தனை நாட்கள்? யாழ்ப்பாணத்தில் ராணுவம் வீடு வீடாய்த் தேடல் நடததிற்று.
வேடிக்கை என்னவென்றால், புத்தகங்களை வைத்தி ருப்பதும் பிரச்சினை என்று கதை வந்தது.
"விசர். அதிலையென்ன பிரச்சினை?."
பலரைப் போல ரமணனும் அதை நம்பவில்லை.

சாந்தன் 鬣 43
ஆனால் அது வெறும் கதையாயில்லை. பிறகு கேள்விப்பட்ட செய்திகள். அந்தக் கதையை நம்பத் தான் வேண்டுமென்றன. ஒன்றில் புத்தகங்களுக்கு ஆபத்து, அல்லது வைத்திருந்தவர்களுக்கு ஆபத்து. சில வேளைகளில் இரண்டுக்குமே.
ஒரு முடிவுக்கு வர வேண்டியிருந்தது. அவர்களுக்கு ஆட்சேபமாய் இருக்கக்கூடியவை என்று தெரிகிற வற்றைத் தவிர்க்கலாம். தமிழ், விடுதலை, சுதந்தரம் என்று வருகிறவற்றை, தாமஸ் மசாரளக்கிலிருந்து பாரதிதாசன் வரை, ஏன், பாரதி பாடல்கள்?
பிறகு? யாரிடமாவது கொடுக்கலாமா? கொடுப் பதற்கு ஆட்களைத் தேட வேண்டும். அதற்கெல்லாம் அந்த அவதியில் நேரமெங்கே, அத்தோடு இந்தக் கதையைக் கேட்டால் யார்தான் வாங்க முன்வருவார்கள்?
அந்தச் சில முன் இரவுகள்.
எவ்வளவு பாடுபட்டு எங்கெங்கெல்லாம் தேடி சம்பளத்தில் பாதியைச் செலவழித்து வாங்கிய புத்தகங் கள். அவற்றில் எத்தனை தகரப் பீப்பாய்க்குள்சாம்பலைக் காற்றள்ளிச் சிந்தாமலிருக்கப் போட்டு, அயலட்டைக்கும் காகிதமெரிகிற மணம் பரவாமல் பார்த்து, சொக்கப்பனை எரித்த அந்தச் சில முன் இரவுகள் .
கவலையும் கவனமுமாய் செய்ய வேண்டியிருந்த காரியம் அது.
கிடைக்கவே முடியாதவை என்று பட்டவை தலை மறைவாய்ப் போயின. மெய்யான "அண்டர் கிரவுண்ட்” வாழ்வு முதலில் இரண்டு மூன்றாகச் சின்னச் சின்னப் பாலித்தீன் பைகளில் சுற்றி, பிறகு அவற்றைப் பெரிய பெரிய பிளாஸ்டிக் பையொன்றில் போட்டுக் கட்டி அதைப் பிறகு உரப் பைக்குள் போட்டு.

Page 29
ஒரு பிடி மண்
மாரி வந்தபோதுகூட நிலைமை மாறவில்லை.
ஆனால் பதிலாக நெருக்கடி கூடியது. இப்போது, தமிழையும், விடுதலையையும் சொன்னவை மட்டுமின்றி, சோஷலிஸம் ரஷ்யா என்று வருகிறவை கூடப் பிரச்சினையைத் தரும் போலிருந்தன. தல்ஸ்தோயையும் தஸ்தயேவ்ஸ்கியையும்கூட வைத்திருக்கப் பயமாயி ருந்தது. வருகிறவனுக்குப் புரட்சிக்கு முந்திய ரஷ்யா, பிந்திய ரஷ்யா என்றெல்லாம் விளக்கப்படுத்திக்கொண் 1գ-d53, 5 (ԼՔւգ սյո Ժյl.
சில புத்தகங்கள் முடிந்த மட்டில் ஒரிஜினல் சட்டை களைக் கழற்றிவிட்டு சினிமா ஜாக்கெட்டுகளைப் போட்டுக் கொண்டன. மற்றவற்றிற்குப் பழைய வழி இருந்தது. சொக்கப்பனையும் புதையலும் பிறகும் சில நாட்கள் தொடர்ந்தன. நிலைமையும் தொடர்ந்தது. அந்த வருடம் மாரியும் தொடர்வதுபோலவே இருந்தது.
பிறகு எண் பத்து நான்கில் பொங்கலுக்கும் எவ்வளவோ பிறகு தோண்டித் தேடிப் பைகளை வெளியே எடுத்தால் அழுகைதான் வந்தது.
அதோடு விட்ட ஆசைதான்! பொது நூலகங்களே போதும்.
இல்லை என்பது தெரிவதற்கு ஏழாண்டுகள் ஆயின. ஆசை விடவில்லை. நீறு பூத்திருந்திருக்கிறது. அது மீளவும். மூண்டதுதான் எப்படிப்பட்ட நாட்களில்! அந்த நாட்கள் அப்படிப்பட்டவையாக இல்லாதிருந்தி ருந்தால், அந்த மீளவும் முண் டமை சாத்தியப்பட்டிரா தென்று தெரிகிறது.
இதற்கு முதல் இவ்வளவு காலமும் எத்தனை ரஷ்யப் புத்தகங்களைப் படித்தாயிற்று. ஷோலக்காவுடைய *கன்னி நிலம் அவன் விதி எல்லாம் கூட ரமணனிட மிருந்தன. ஆனால் அந்த தோன் நதி அமைதியாக

சாந்தன் 霧 45
ஒடுகிறது மட்டும் எப்படிப் படிக்கவே கிடைக்காமல் போயிற்று? அதிலும் அதிசயம் அது இப்போது இந்த தொண்ணுற்றின் நடுப்பகுதியில் படித்துப்பார்க்கக் கிடைத்தது. -
நாலு பாகம். நாலையுமே ஜெயக்குமார் கொண்டு வந்து தந்திருந்தான். ஜெயக்குமாருக்கு இதிலெல்லாம் ஆர்வம் கிடையாது. ரமணனுக்காக யாரோ தெரிந்தவர் களின் தெரிந்தவர்களிடமிருந்து வாங்கி வந்தான். ஒரு வாரத்தில் திருப்பிக் கொடுக்க வேண்டும். ஆனால் அந்த நாட்களில் வாசிப்பதற்கும் நிறைய நேரமிருந்தது. ஊரடங்கு. வேலையில்லை. வெளியேத் திரிவது விட்டி லுள்ளவர்களுக்கு நிம்மதி தராது. வெளியில்தான் செய்வதற்கு 6T663T இருந்தது? எ  ைத யோ எதற்கோ-காத்துக் கொண்டிருக்கிற நிலையில் ரயிலுக் குக் காத்துக் கொண்டிருக்கிற வேளையில் படிப்ப தில்லையா? அப்படி வாசிக்க நிறைய நேரம் கிடைத்தது அது எவ்வளவு விசேசமானதொரு நேரப் பொருத்தம் அந்த நாவல் அணு அணுவாய்ச் சித்திரிக்கிற ஒன்றின் பிறப்பை அதன் இறங்கும் காலம் நெருங்கியதாய் உணர முடிகிற அந்த நேரத்தில் படிக்க நேர்ந்தமை! அது மட்டுமில்லை. ரமண னைத் தோன் நதியின் பால் ஈர்த்த இன்னொன்றும் இருந்தது. அதுதான் இன்னும் முக்கிய மானது.
தோனின் குளிர் நிரம்பிய காற்றை எங்கள் சோழகத் தில் உணர முடிந்தது. இரண்டுமே வேட்டொலிகளை யும் வெடிமருந்தின் மணங்களையும் சுமந்து வந்தவை போர் என்கிற பிரளயம். இருப்புகளை அசைக்கும் அந்த எரிமலைக் குமுறல்! எந்தக் காலமென்றால் என்ன, எந்தத் தேசமென்றால் என்ன
கிரிகோரி மெலிக்காவுடன் சேர்ந்து ரமணனும் அந்த நாலு தொகுதிகளையும் வாழ்ந்து முடித்தான். இன்னு மொரு தரமாவது அதில் ஊறிச் சுவற ஆசையாய்

Page 30
轟6 鹽 ஒரு பிடி மண்
இருந்தது. கயிற்றில் நடக்கிற காரியத்தை முடித்த அந்த ஷோலக்காவ் மூலமென்றே மயங்க வைத்த டாக்ளிஷ்,
இரவல் புத்தகங்களை எத்தனை நாளைக்குத்தான் திருப்பிக் கொடுக்காமல் வைத்திருக்க முடியும்? தானே வாங்கிக் கொள்ளத்தான் வேண்டும். எங்கு தேடி யென்றாலும்!
எங்கு போய்த் தேடுவது? புத்தகங்கள் எங்கு தானிருந்தன? அதுவும் இப்படி அருந்தலான புத்தகங் கள்?
சாப்பாடு, மருந்து, எரிபொருள், மின்சாரம் என்று ஒன்றுமேயில்லாமல், பட்டினியும் நோயும் பழங்கால வாழ்வும்ாய்ச் ஜனங்களின் அந்தரம், போர்நிலையைக் காட்டி வந்த பொருளாதாரத் தடை பள்ளிப் பிள்ளை கள் படிக்கிற பாடநூல், எழுதுகிற பென்சில், பேனா, கடுதாசி இதுகளையே வரவிடாதபோது.
இலக்கியம்! அதுவும் இது
வருவதற்கு லட்சத்தில் ஒரு வாய்ப்புகூட இல்லை. இந்தப் புத்தகங்களை விற்றுக் கொண்டிருந்த கடை யையே மூடியாயிற்று.
குண்டும் ஷெல்லுமாய்ப் பட்டினம் முழுவதையுமே பாழடித்தபோது அந்தக் கடையும் அதனுள்ளிருந்த வையும்கூடப் பாதிக்கப்பட்டதில் பிறகு திறக்கவே
. இருக்கும், இருக்கும் எங்காவது இருக்கும். வந்த தெல்லாம் என்ன, கரைந்தா போய்விடும்? யாரிடம் போய் எ ப் படி க் கேட்பது?. இங்கில்லாவிட்டாலும் கொழும்பில் கட்டாயம் கிடைக்கும். ஆனால் போய் வருவது யார்? அத்தனை கஷ்டங்களுக்குள்ளும் உயிரைப் பணயம் வைத்து, எப்படியோ ஒரு பையும் கையுமாய்க் காட்டையும் கடலையும் தாண்டி-இனி

சாந்தன் 懿 47
இல்லை என்ற அவசரத்திற்காகப் போய் வருகிறவர் களைப் பார்த்து புத்தகம் வாங்கி வா" என்றா கேட்க (tՔւգ-Ա-ւհ.?
இன்னுமொரு அவசரமுமிருந்தது. சோவியத் தேசமே இல்லாமலானால்? இந்தப் புத்தகங்கள் பிறகு வராது. வந்தாலும் முந்திய மாதிரிக் கிடைக்காது. இப்போது உள்ளதுகூட இனி விலை ஏறும். இல்லா மலும் போகும். தோன் நதி மட்டுமல்ல, கிடைக்கக்கூடிய ரஷ்யப் புத்தகங்கள் எல்லாவற்றையுமே வாங்கிவிடத் தான் வேண்டும்.
எந்த நிமிஷமும் எந்த இடத்திலும் வாங்கிக் கொள்ளலாமென்ற துணிவில், இருந்தவையெல்லா வற்றையும் போட்டெரித்த பைத்தியக்காரத்தனம் 1 இப்போது அப்படித்தான்படுகிறது. ஆனால் அப்போது அந்த அவதியில் வேறென்னதான் செய்திருக்க முடியும்?
ஆழ்வாப்பிள்ளை, ஒய்வு பெற்ற ஆசிரியர். பெரிய மனிதர் என்கிற முகம், ஆறடி உயரமும், அதற்கேற்ற உடம்பும், ஷேவ் ஒழுங்காக எடுக்காததில் துருத்துகிற நரை மயிரடர்ந்த கன்னங்களும், கள்ளின் போதையில் எப்போதும் கிறங்கி கண்ணாடியின் பின்னால் தெரிகிற கண்களுமாயிருந்தார். இடுப்பில் ஒரு சாரம். மேலே வெற்றுடம்பு. கடையில் ஆட்களில்லாதபோது முன்னா லிருக்கிற துணிக்கதிரையில் சாய்ந்திருந்து சுருட்டைச் சுகிக்கிற கோலம்,
பொழுது GLAIT (TLDG) இந்த வியாபாரத்தைத் தொடங்கியதாகச் சொன்னார். பிள்ளைகளெல்லாம் படித்து வெளி நாடுகளில் நன்றாயிருக்கிறார்கள். அவருக்குப் பென்ஷன் வருகிறது. இரண்டு பேருக்கு வடிவாகப் போதும். ஆனால் ஒரேயடியாக வீட்டிலிருந்து

Page 31
48 醫 ஒரு பிடி மண்
என்ன செய்வது? இதைத் தொடங்கிவிட்டார். பழைய புத்தக வியாபாரம்.
பத்திரிகையின் ஒரு மூலையில் வரி விளம்பரப் பகுதியிலிருந்த அறிவிப்பைப் பார்த்துவிட்டு நம்பவும் முடியாமல், விடவும் மனமில்லாமல் நப்பாசை துரத்த, ரமணன் வந்திருந்தான். உண்மையாகவே அது இருந்தது- அந்தக் கடை,
ஆழ்வாப்பிள்ளை, விலாசத்தை விவரமாகக் கொடுத் திருந்ததே கூட அவர் ஒரு கெட்டிக்காரன் என்பதை நிரூபிப்பதாக இருந்தது. இல்லாவிடில் அந்த இடத்தைக் கண்டு பிடித்தே இருக்கமுடியாது. பட்டணத்தின் பெரும் தெரு ஒன்றில் இருந்து, பிரிகிற ஒரு சிறிய ஒழுங்கையில், மூன்று நாலு முடக்குத் தாண்டி ஒரு பழைய வீட்டில் அவரது கடை இருந்தது. 'பழைய பேப்பர் புத்தகங்கள் வாங்கப்படும் விற்கப்படும் என்று படலையில் அறிவிப்புத் தொங்கவிட்டிருந்தார்.
வாங்குவது விற்பது இரண்டுமே கிலோக்கணக்கில் தான். கிலோவுக்கு, தனக்கென ஐந்து ரூபாய் வைத்துக் கொள்கிறார். மற்றபடி அவரது தராசின் முன் பழைய நோட்புக், பாரதக்கதை, சினிமா மஞ்சரி, சிற்றிலக்கியச் சஞ்சிகை எல்லாமே சமம். ஒடும் செம்பொன்னும் ஒக்க நோக்கும் பக்குவம்,
ஆழ்வாப்பிள்ளை GDT கடுதாசிகளையும் ஒன்று போலவும், எல்லா வாடிக்கையாளர்களையும் ஒன்று போலவும் நடத்தினார். இது ரமணனுக்கும் பிடித்தது. அவருக்கும் அவனைப் பிடித்துக் கொண்டது. மற்றெந்த வாடிக்கையாளர்களிலும் பார்க்க ஒழுங்காகத் தன் கடைக்கு வருகிறவன். அவனை "மாஸ்டர்' என்று இரண்டு நாள் கூப்பிட்டார். இப்படிப் புத்தகங்களில் ஆர்வமுடையவர்கள் ஆசிரியர்களாகத்தானிருப்பார்கள் என்ற அந்தக் கால நம்பிக்கை அவருக்கு.

சாந்தன் 麗 49
'நான் மாஸ்டர் இல்லை, மாஸ்டர்' என்றான் ரமணன் மூன்றாம் நாள்.
*அதற்கென்ன மாஸ்டர் என் டாக் குறைவோ..' என்றார் மாஸ்டர். ஒரு சிரிப்பு வேறு. அதன் பிறகு அவன் ஆட்சேபிப்பதில்லை.
கட்டுக்கட்டாய் குவியல் குவியலாய் கிடப்பவற்றில் தேடவேண்டும், வைக்கோற் போரில் ஊசியைத் தேடுகிற மாதிரி. கடலில் முத்துக் குளிப்பது போல, தமிழில் வந்த அத்தனை சஞ்சிகைகளையும் ஆண்டு, தேதி ஒழுங்கில்லாமல் அங்கே குவித்துவிட்ட மாதிரி இருந்தது.
கல்வி வெளிநாட்டுத் திணைக்களப் பாட நூல்கள்அரிவரியிலிருந்து ஆண்டு பன்னிரண்டு வரை-எல்லாப் பாடங்களும், பழைய டைஜஸ்டுகள்-கிழிந்தும் கிழியா மலும், இலவசச் சந்தாவில் வந்து சேர்கிற வெளி நாட்டுப் பத்திரிகைகள் அகதா கிறிஸ்ட்டி, அந்தக் காலத்து ஆங்கிலப் பாடப் புத்தகங்கள், மில்ஸ் அண்ட் பூன் வரிசை, சன சமூக நிலையங்களின் வெளியீடுகள். நீத்தார் நினைவுகள், வித விதமான பதிப்புகளில் விவிலியம் விழித்தெழு! தேவன் வருகிறார்-நீ தயாரா? போன்ற அதட்டல்கள், இடையில் இருந்துவிட்டச் சில சிங்களப் புத்தகங்கள்-அநேகமாய்க் (குமாரோதய, குமாரச்சனய) எப்போதோ ஒரு தரம் வருகிற ஒன்றிரண்டு ஜெர்மன், ப்ரஞ்சுப் புத்தகங்கள், கனக்க ஹரால்ட் ராபின்ஸ்-இவற்றுக்கெல்லாமிடையில் புகுந்து தேட வேண்டியிருந்தது.
இடையில் இன்னும் வரும், ஸிபாஸிம்போஸியம் இன்னரிரியூஷன் ஒஃப், வெவ்வேறு என்ஜினியரிங்குகள் ஸி.ஐ.எம்.ஏ. வெளியீடுகள் என்று கஞ்சிக்குள் பயறு போல, நல்ல காலம், பழைய கொப்பிகள் தனியாக இருந்தன.

Page 32
50 鬣 ஒரு பிடி மண்
ரமணன் தேடுவது மட்டும் கிடைக் காமலே போய் கொண்டிருந்தது. என்றாலும் அவன் விடாது தேடினான். ഖ{TITLDബT போகும், எதுவென்றாலும் நல்லதாய்? அதற்குள் எதுவோ தனக்காகக் காத்திருக்கிறது என்ற உணர்வு. எப்படியோ புத்தகங்களை அளைவதுகூடச் சந்தோஷம்தான். புத்தகப் புழுதிக்குத் தடுமன்-வரும் என்று யாரோ சொன்னதுக்கூடக் காதில் விழவில்லை.
போகிற நாட்களில் வெறுங்கையோடு வரக்கூடாது என்று அரைக்கிலோவோ, ஒரு கிலோவோ வாங்கினான். ஆழ்வாப்பிள்ளையர் வாங்கும் விலை பதினைந்து ரூபா, விற்கும் விலை இருபது ரூபா. கடைக்காரர் மனம் சலிக்கக் கூடாது. தடவைக்கு ஐந்து ரூபா, பத்து ரூபா நட்டம் போனாலும் பரவாயில்லை என்று பட்டது. அதோடு இத்தனை வெளியீடுகளையும் பார்ப்பதற்குக் கொடுக்கிற கட்டணமாகக்கூட அதைக் கருதினா லென்ன? ஒரு புத்தக கண்காட்சிக்குப் போவதில்லையா? தவிர, வேறென்ன பொழுதுபோக்கு அல்லது ஈடுபாடு தான் இருந்தது அப்போது?
கிழமைக்கு மூன்று நாட்களாவது ஆழ்வாப்பிள்ளை யரின் கடைக்குப் போவது வழமையாகிவிட்டது. அங்கே போய் நின்று மெனக்கெடத் துணிவு தரும் ஒர் அம்சமும் அங்கிருந்தது- பங்கர்- விமானத் தாக்குதலுக்குப் பதுங்கிப் பாதுகாப்புத் தேடக்கூடிய குழி, எந்த நிமிஷம் இரைச்சல் கேட்டாலும் இறங்கிக் கொள்ளலாம்.
ரமணன் போன வேளைகளிலெல்லாம் கடையில் வாங்குகிறவர்கள் என்று கூடிய பட்சம் இரண்டு பேர் தான் நின்றார்கள். சில வேளை அதுவுமில்லை. வாங்கு கிறவர்களிலும் பார்க்க விற்பவர்களே அவரின் வாடிக்கையாளர்களாக இருக்கவேண்டும். வீடு வீடாகப் போய் நிறைக் கணக்கில் வாங்கி இவரிடம் கொண்டு வந்து போட்டுவிட்டுப் போய்விடுகின்றனர் போலும்,

சாந்தன் 腦 51
விற்பனை நடக்கிற விராந்தைக் கருகில் குகை போல் தெரிந்த ஸ்டோர் ரூம் நிரம்பி வருகிறது.
"என்ன மாஸ்டர், இப்படி நெடுகத் தேடறியள்?
ஆழ்வாப் பிள்ளை ஒரு நாள் கேட்டார். உடனே சொல்ல முடியவில்லை.
"இலக்கியப் புத்தகங்கள்
ஓரளவு ஒழுங்காக்கப்பட்ட ராக்கையை காட்டினார்.
முதல்ல தற்கால இலக்கியம்.'
ஆழ்வாப் பிள்ளையரின் மெளனம் அவனுக்குச் சங்கடமாயிருந்தது. அைெர ஆறுதல் படுத்துவதுபோல,
'ஏதும் ர விஷ் ய ன் புத்தகங்கள் என்றாலும் பரவாயில்லை '
அடுத்த முறை போனபோது அவனுக்காகவே காத்திருந்தது மாதிரி எடுத்துக் கொடுத்தார்.
"இந்தாங்கோ மாஸ்டர். இதைப் பாருங்கோ.'
அட்டை இரண்டுமில்லாமல் பாணப்பூச்சி துளை துளையென்று துளைத்து அரிக்கிற மாதிரி இருந்தது அந்தப் புத்தகம் டாக்டர் ஷிவாகோ, படிக்கக்கூடிய தாக இருந்தது. பக்கங்களும் எல்லாம் ஒழுங்கா யிருந்தன.
அந்த மூன்று மாதங்களில் இன்னும் இரண்டே இரண்டு புத்தகங்கள்தான் கிடைத்தன.
ஃபேர்வெல் GB ஆம்ஸ் ஹெமிங்வே கிரேப்ஸ் ஆஃப் ராத்ஸ்ரீன் பெக்,
ஷ்வாகோ முன்பு படித்ததுதான். ஒமர்ஷரிப் ஷிவாகோவாக 西母湾点 படத்தைக் கூட ரமணன் பார்த் திருந்தான். அது கன காலம்,

Page 33
52 獸 ஒரு பிடி மண்
ஆனால் இப்போது இந்தச் சூழலிலும் தோன் நதி யைப் படித்த பிறகும் ஷ்வாகோ வேறு மாதிரி இருந்தது. மூன்னும் மின்னும் தெரிந்தவண்ணங்கள். மாஸ்கோவும் வேரிகினோவுங்கூட இங்கேயே இருந்தன. தோன் நதி தீரத்துக் கொஸாக்கும் மாஸ்கோவின் டாக்டர் விஷ்வாகோ வும் ஒரே புயலில் அள்ளுண்டு சுழன்ற இரு மனிதர்கள். அவர்கள் இந்த முக்கால் நூற்றாண்டு கழிந்தும் என்ன மாதிரி உயிரோடு இருக்கிறார்கள்.
இரண்டையும் சேர்த்து இன்னொரு முறைப் படிக்க வேண்டும். தோன்நதியை தேட அவசரம் மிகுந்தது. ஆழ்வாப் பிள்ளையாரின் வழியைப் பின் பற்றிப் பார்த்தால் என்ன? பத்திரிகையில் தேவை பகுதி யில் விளம்பரம் போட்டான்.
கவனத்தை ஈர்க்கவென்றும் பெயர்களைச் சரியாகக் குறிப்பிட வேண்டியும் விளம்பரம் ஆங்கிலத்தில் இருக்க நேரிட்டது. தன் பெயரைக் கொடுக்காமல் விளம்பர இலக்கத்திற்கே பதிலளிக்கும்படி இரண்டு நாட்கள் விளம்பரம் வந்தது.
பதில்களை எதிர்பார்த்து நாலைந்து நாட்கள் பத்திரிகை அலுவலகத்திற்கு அலைந்ததுதான் மிச்சம். ஒரே ஒரு கடிதம் வந்திருந்தது. அது ரமணன் போட்டது. வருகிற பதில்களை ஒழுங்காக வைத்துத் தருகிறார்களா என்று பார்ப்பதற்காகப் போட்டது.
பத்மநாதன் கொழும்பிற்குப் போய் வருகிறாரென்று சொன்னார்கள். கிடைத்த இடைவெளியைப் LÎu 16ări (95 திக் கொண்டு கொழும்பில் போய் ஏதும் வாங்கிக் கொண்டு வந்தால் மற்றவர்களுக்கும் பிரயோசனமாயிருக் கிறது. போய் வருகிறவருக்கும் பிழைப்பாகிறது. உயிரைப் பணயம் வைக்கத்தான் வேணும். அதற் கென்ன? ஊரில், வீட்டில், சும்மா இருந்தால்கூட, மேலே சுற்றுகிற பிளேனோ, அல்லது போக்கிடம்

சாந்தன் 鹽 53
தெரியாமல் கூவிச் செல்லும் ஷெல்களோ எங்கள் உயிரைப் பணயம் வைக்காமலா விடுகின்றன?
பத்மநாதன் இரண்டு தரம் போய் வந்துவிட்டார். அடுத்த கிழமை மட்டில் மீண்டும் போகிறார்.
ரமண னைப் பார்க்க அவருக்கு வேடிக்கையாக இருந்திருக்கும். ஜனங்கள் மருந்தென்றும் அது இது வென்றும் ஒடித்திரிகிற காலத்தில் இந்த விசரன் புத்தகத் திற்காக வந்திருக்கிறான். அதுவும் கதைப் புத்தகம்.
இப்படி நினைத்திராவிட்டால் அவரின் பிழை.
'புத்தகம், பாரமான சாமான்தான். ஆனால் நாலே நாலுதான். கனக்க இல்லை. நீங்கள் வாங்கிக் கொண்டு, நெஞ்சளவு தண்ணிக்குள்ளேயும் நடந்து வரவேனும் தெரியும். அந்தக் கஷ்டத்துக்கு நீங்கள் கேட்கிறதைச் சந்தோஷமாய் தருவன்.' பெயர் விவரமெழுதிய துண்டையும் காசையும் கொடுத்தான்.
* அரை மைலுக்கு அங்காலை, ஆமியின்ர இடம்." கடைக்காரர் சொன்னார்.
"அதுதான் ஜனப் புழக்கம் குறைவாயிருக்கு." -அவர் கடைகூட வெளித்துப் போய்தானிருந்தது. நன்றி சொல்லிவிட்டுக் கடைக்காரர் காட்டிய வழியே போனார்கள்,
ஒழுங்கைகளெல்லாம் ஆளரவமின்றிக் கிடந்தன. கொஞ்சதூரம் வயல், பிறகு பனங்காணி, தென்னந் தோட்டம், காண்டைப்பற்றை என்று மாறி மாறி வந்தன. எல்லாவற்றுக்கும் சிக்காராக வேலி அடைத்திருந்தது.
இதற்குள் அவர்கள் வந்து ஒளிந்து நின்றாலும் தெரியாது. நெஞ்சு படபடத்தது.
S-4

Page 34
54 ஒரு பிடி மண்
ஆழ்வாப் பிள்ளை ஒரு விடலை க்குரிய உற்சாகத் தோடு முன்னால் போகிறார். ரமணனுக்குப் புத்தகங் கள் தேடிக்கொடுத்துவிட்ட உசார் தெரிகிறது அவரில், முடக்குகளும் வளைவுகளுமாய் நீண்டு கொண் டிருந்தது ஒழுங்கை, அது எப்போதுமே இப்படியாகத் தானிருக்குமென்று பட்டாலும் இன்றைக்குக் கடைக் காரர் சொன்ன சேதியைக் கேட்ட பின் இந்த வெறுமை இன்னவென்றில்லாமல் அந்தரிக்க வைக்கிறது.
கேட்கிறதுக்கும் ஒரு த் த  ைர யு ம் காணலை ** ... ח_ן טff Ghמן
"அந்தா, தபால்பெட்டி. இதுதான் இடம், வாங்கோ.'
ஆழ்வாப்பிள்ளை ஒரு இடத்தில் காலை ஊன்றி இறங்கினார். ரமணனும் நின்றான். இடப்பக்கம் இரட் டைக் கேட்டும், அதனோடு சேர்ந்த முகப்புக் கொட்டி லும், கடைக்காரர் சொன்ன மாதிரி சரிதான். பச்சைப் பெயிண்டு. மாஸ்டர் மணியடித்தார்.
முன் படலைத் திறந்தது. வெள்ளை வேட்டியும் வெறும் மேலில் துண்டுமாய் ஒருவர் வந்தார்.
பெரியவர் பரியாரியார் வீடு இதுதானோ?” **ஆமாம். நான்தான்' என்றபடி ஒழுங்கையைக் கடந்து வந்தார்.
"..என்ன அலுவல்? வாங்கோ' கொட்டிலில் இரண்டு பக்கமும்-நடுவில் பெரிய வழிவிட்டு சிமிண்ட் திண்ணைகள் இருந்தன. ஒரு பக்கத் திண்ணையில் துவாலையால் தட்டி 'இருங்கோ' என்றவர், எதிர் திண்ணையில் அமர்ந்தார்.
மாஸ்டர் சொன்னதையெல்லாம் கேட்டுவிட்டுப் பெரியவர் மெதுவாகச் சொன்னார்:

சாந்தன் 腦 55
"ஆம், அது என்னுடைய மருமகனுடைய புத்தகங் கள்தான். மகளுடைய புருஷன். உங்களுக்கு வந்து சொன்னவரும் என்னுடைய சகலைதான்.ஆனால் என்னை மன்னிக்க வேணும் "
சரிவராது என்று ரமணனுக்குப் பட்டது. போன கிழமை வந்த தபாலில் புத்தகங்களை விற்க வேண்டாமென்று எழுதியிருக்கணம்.”
"எடச்சே!” என்றார் மாஸ்டர், தன்னையறியாமல், திரும்பி வர்ற நோக்கமோ, அல்லது ஏதும் லைப்ரரிக்கு அன்பளிப்பாகக் கொடுக்கிற நோக்கமோ, ஒன்றும் விவரம் எழுதவில்லை. விற்க வேண்டாம் என்று மட்டும்தான் எழுதியிருக்கு. நான் அதுக்கு மாறாச் செய்யேலாது.” - குரலில் வருத்தம் தெரிந்தது.
*அது சரி, அது சரி '
"நீங்கள் குறை விளங்கப்படாது' என்றார் பரியாரியார் மீண்டும்.
*ஒரு உதவி செய்வீங்களோ, ஐயா." *சொல்லுங்கோ.”
தற்செயலா இனி அவற்றை விற்கச் சொல்லி எழுதினா, தயவு செய்து ஒரு தபால் போடுவீங்களோ? விலாசம் தந்திட்டுப் போறேன்."
"ஓ! அதுக்கென்ன. கட்டாயமா." வேறொன்றுமில்லாத மெளனம். குறித்துக் கொடுத்து விட்டு மாஸ்டரைப் பார்த்துத் தலையசைத்தான்.
**Gt yfr G6) stuðst?'''
அதைக் கவனியாதவராய், மாஸ்டர் பரியாரியார் பக்கம் திரும்பினார்.
"இன்னொன்று கேட்கலாமோ ஐயா?

Page 35
56 屬 ஒரு பிடி மண்
** கேளுங்கோ.'
"இவ்வளவு தூரம் மெனக்கெட்டு வந்திருக்கம். தம்பிக்கு ஒருக்கால் அந்தப் புத்தகங்களைக் காட்ட முடியுமோ? முடியாவிட்டால் வேண்டாம்.'
ரமணன் இதை எதிர்பார்க்கவில்லை. மாஸ்டரின் கோரிக்கை அவ்வளவு நாகரிகமாகப்படவில்லை.
பரியாரியார் எழுந்தார்.
'உள்ள வாங்கோ.' என்று முன்னால் நடந்தார்.
திரும்பும் ரமணன் வழியில் சொன்னான்: "மாஸ்டர், தாங்கள் அதைப் பார்த்தது பிழை." 'ஏன், அது பரவாயில்லை." * அத்தனையும் ஒரு அலமாரி முட்டப் பாத்திட்டு, அதிலே ஒண்ணைக்கூட வாங்க முடியாமல் வர்றது
எவ்வளவு கவலை தெரியுமா என்ன அருமையான புத்தகங்கள். நான் எரிச்சதிலை அரைவாசி அங்கிருக்கு."
சரியாகப் பத்து ஐந்து நல்லகாலம். நாராயணன் இன்னும் வரவில்லை. வரட்டும்.
சைக்கிளை விட்டிறங்கி அதை நிறுத்தப் போன போது திடுக்கிட்டான். பின் காரியரிலிருந்த பார்சலைக் காணவில்லை. கட்டிய கயிறு மட்டும் தளர்ந்து தொங்கியது.
பத்மநாதனிடம் வாங்கி வைத்துக் கட்டிவிட்டு அசைத்துச் சரி பார்த்தது நன்றாக நினைவிருக்கிறது. முதலாவதும் மூன்றாவதுதான் கிடைத்ததாம் மற்ற இரண்டையும் அடுத்த முறை கட்டாயம் தேடிக்கொண்டு வருவதாகச் சொன்னார். நூற்று இருபத்தைந்துப்படி இரண்டும், அவருக்கு இருநூறுமாய்-நானூற்றம்பது ரூபா,

ஈரந்தன் 藝 57
அவ்வளவும் சரி. நானூற்றம்பது காசாக என்றாலும்
ரமணன் தன்னையறியாமலேயே  ைச க் கி  ைள மீண்டும் எடுத்து உந்தி ஏறினான்.பெருமாள் கோயிலடி யில் வந்தபோதுகூட எதேச்சையாக இடது கையால் தடவிப் பார்க்கையில் பார்சல் இருந்தது. இடையில் தான் எங்கோ விழுந்திருக்க வேண்டும். பாலித்தீன் பையில் வைத்தது பிழை. கட்டியதும் குறுக்கமறுக்காகக் கட்டியிருக்க வேண்டும்.
வந்த வழியே மெல்ல மிதித்தான். இவ்வளவு போக்குவரத்துள்ள இந்த இடத்தில்? சொல்ல முடியாது. ஒரு முறை இப்படித்தான் மோட்டார் சைக்கிளில் மாட்டி யிருந்த பை விழுந்துவிட்டதைக் கவனித்துத் திரும்பிப் போனபோது ஆளையும் பைக்கையும் அடையாளம் கண்ட யாரோ கூப்பிட்டு, விழுந்த பையைத் தந்தார்கள்பெருமாள் கோயிலடிவரை வந்தாயிற்று இல்லை. எவரும் கூப்பிடவில்லை. வந்த வழியே திரும்பிப் போனான். பரவாயில்லை. ஒன்றும் மூன்றும்தானே. ஒருவாயாக எல்லாமாக என்றால்தான் கவலை. அடுத்த முறை பத்மநாபனை நாலையும் சேர்த்தே பார்க்கச் சொல்லலாம்.
. நாளை ஏதாவது பேப்பரில், கண்டெடுக்கப்பட்ட பொருட்கள் தலைப்பில் வரக் கூடும். எல்லாப் பேப்பரை யும் பார்க்க வேண்டும்.
.பார்த்துவிட்டு இல்லாவிட்டால்தானே கூட ஒரு விளம்பரம் கொடுத்தாலென்ன? கண்டெடுத்துத் தருப வர்களுக்குச் சன்மானம் வழங்கப்படும். இப்போதே நானூற்றைம்பது.
. சில சமயம் ஆழ்வாப்பிள்ளையரின் கடைக்குக் கூட வந்து சேரலாம். ஞாபகமாக அவரிடம் சொல்லி வைக்க வேண்டும்.

Page 36
58 圖 ஒரு பிடி மண்
திரும்பி வரும்போது நாராயணன் சொன்ன இடத்தில் காத்து நிற்பது தெரிந்தது.
"என்னடா பத்தரையாகுது. இப்பத்தான் வாறியா?
சரியா அரை மணித்தியாலம் லேட்." என்று அவன் கத்தினான்.
'ஆ. மாஸ்டர், வாங்கோ வாங்கோ." ஆழ்வாப்
பிள்ளை வரவேற்றார்.
' உங்களுக்கு இரண்டு புத்தகம் வைச்சிருக் கிறேன்."
நினைத்தது சரிதான், கண்டெடுத்தவன் கொண்டு வந்திருக்கிறான்!.
மேசை லாச்சியை இழுத்து எடுத்து நீட்டினார். சப்பென்று போனது. இல்லை, இது வேறு. வாங்கிப் புரட்டினான்.
அகதி’-எறிக்மாறியா ரிமார்க் நாவலின் தமிழ் மொழி பெயர்ப்பு. .மற்றது "உர் ஒஃப் த சோல்டீஸ்'- புதை பொருளாய்வு.மாஸ்டர் பரவாயில்லை!
இதை ஊர் என்றுதான் உச்சரிக்க வேண்டும். கொஞ்ச நாட்களாக இந்த "உர்"ரும் எலமும்கூட ரமணனைக் கவர்ந்து வருகின்றன. அதுவும் எலம்" அல்ல. ஈழம்" என்று உச்சரிக்கலாம்.
*எப்படி.." என்றார் மாஸ்டர் பெருமிதத்துடன், நல்லது என்பதற்குள் யாரோ கையிலிருந்தவற்றைப் பறித்தார்கள்.
ஜெப நாயகம், மூக்கு நுனியில் கண்ணாடி கையில் ஐந்தாறு நல்ல புத்தகங்கள்.
ரமணனுக்குப் பொறாமையாக இருந்தது. இவன் வாறதுக்கு முந்தி இத்தனை புத்தகம் இங்கே கிடைத்

சாந்தன் 體 59
திருக்கிறதா. தன் கையில் இருந்தவற்றைக் கொடுத்து விட்டு அவனிடமிருந்தவற்றை வாங்கினான். பார்த் ததுமே தான் ஜெயின் மேல் பொறாமைப்பட்டது சரியல்ல என்றிருந்தது. எல்லாமே ஜெ. வழமையாக விநியோகிக்கிற பாவத்தின் சம்பளம் போன்ற இலவச வெளியீடுகள்.
**இது ஏன் உனக்கு. ஜெ. உர்ரைக் காட்டிக் கேட்டான் -
'எனக்குத் தா."
ரமணன் சிரித்தான்,
*நான் எடுக்கிறேன் ஐயா, இதை' என்றான் ஜெ. மாஸ்டர் பக்கம் திரும்பி அப்போதுதான் சீரியஸாகவே கேட்கிறான் என்று தெரிந்தது.
“பகடி விடாதை. இங்கை தா எனக்கு வேணும்." என்று பறிக்க வேண்டியிருந்தது.
*நான் படிச்சுட்டுத் தாறன்.' விடைபெறும்போது ஜெ.யை ஆறுதல் படுத்தச் சொன்னான் ரமணன்.
அதுதான் பிழையாய்ப் போய்விட்டது. ஜெ. அதை மறப்பதாயில்லை. காண்கிற வேளைகளிலெல்லாம் ஞாபகமாகக் கேட்டு விடுகிறான். இன்றைக்கு நாலாவது முறை. இனி என்ன சாட்டுச் சொல்லலாமென்றும் தெரியவில்லை.
ஜெ. ஆள் பரவாயில்லைதான். ஆனால் புத்தக விஷயங்களில் யாரை நம்ப முடியும்?
ஜெ. க்கு மட்டுமல்ல, யாருக்குமே புத்தகங்களைக் கொடுக்கவோ வாங்கவோ ரமணன் இப்போது தயாரில்லை. அன்றைக்கு காய் வெட்டுவதற்காகச் சொன்னதை வைத்துக்கொண்டு இவன் கலைக்கிறான். பிழை என்னில்தான்.

Page 37
60 獸 ஒரு பிடி மண்
'டேய், புத்தகங்களை வைச்சு என்ன செய்யப் போறாய்?. ஆர்மி ஊருக்குள்ள வந்தா புத்தகப்பெட்டி யைத் தலைல வைச்சுக் கொண்டா ஒடப் போறாய்?"- ஜெ. கேலியாகச் சிரித்தான். அவன் விநியோகிக்கிற புத்தகங்கள் அப்போதும் அவன் கைகளில் இருந்தன.
ரமணனுக்குக் கண்மண் தெரியாமல் கோபம் வந்தது.
* ஷட் அப் யுவர். மவுத்
*粉
இவ்வளவு கோபத்தை ஜெ. நிச்சயமாக எதிர்பார்த் திருக்க முடியாது. கூட இருந்தவர்களும் ஒன்றும் விளங் காமல் இவர்களையே பார்த்தார்கள்.

(3.b (88.1866ir
பஸ் போகிற வேகம் மூர்த்திக்கு மிகவும் பிடித் திருந்தது. கல்கிசையிற் புறப்பட்டு காலிவீதியூடாக பம்பலப்பிட்டி வரை வந்து திரும்பி, கறுவாக்காடு கொம்பனித் தெருவெல்லாம் ஊடறுத்து, கோட்டையில் மிதந்து, புறக்கோட்டையைத் தாண்டி மருதானைக்குள் நுழைந்துவிட்டிருந்த அந்த ஒற்றைத்தட்டு "இசுசு' அங்கொடைக்குப் போயாக வேண்டும். இன்னும் தாண்டிப்போக எத்தனையோ இடங்கள்.
சாரதிக்கு என்ன அவதியோ அந்த வேகத்துக்கு.
அதுதான் இவனுக்கும் பிடித்திருந்தது. மூர்த்தி கிராண்ட் பாசுக்குப் போகவேண்டும். இரவு மெயிலில் யாழ்ப்பாணத்திலிருந்து வந்த அசதி ஆளை வதைத்துக் கொண்டிருந்தது. பிந்தி வந்ததில், காலை நேரே அலுவலகத்துக்குப் போய்க் கொஞ்ச நேரம் வேலை

Page 38
62 醫 ஒரு பிடி மண்
பார்த்தான், சரிவரவில்லை. அரை நாள் லீவு போட்டு விட்டுப் புறப்பட்டவன் பஸ் தரிப்பில் முப்பது நிமிடம் காத்துக்கிடக்க நேரிட்டது.
நேரத்துக்குப் போனால் நிம்மதியாகக் கட்டிலில் Firu Gorth. எவ்வளவு வேளைக்குப் போகிறானோ அவ்வளவுக்கு நல்லது.
தொழில் நுட்பக் கல்லூரி நிறுத்தத்தில் நின்று புறப் பட்டதும் கூட்டம் சற்றுக் குறைந்தது போலிருந்தது. படிகளில் நின்று வந்த கண்டக்டர் இப்போது மேலேறி நின்று கொண்டான். மூர்த்தி இருந்தது கடைசி வரிசை, இவனுக்கு முன்னால் வாசலை ஒட்டி கண்டக்டர் வந்து நின்றான். வலு ஸ்டையிலாயிருந்தான். தன்னை ஆசு வாசப்படுத்தவோ அலங்கரிக்கவோ கைக்குட்டையில் முகத்தை அடிக்கடி ஒற்றிக்கொண்டான்.
சுருதி மாறிய இயந்திர உறுமல், அதனோடிணைந்த ஒரு உலாஞ்சல், சாரதி கியர் மாற்றி வண்டியை வெட்டி எடுத்திருக்க வேண்டும். தொட்டிலாக ஆடிய பஸ்ஸின் வாசல் வழியே- பிடி தளர்ந்து நிலை தடுமாறிய கண்டக்டர் தூக்கியெறியப்படுவது மூர்த்தியின் கண் களில் பட்டபோது மிகவும் பிந்திவிட்டது.
அநேகமாக இது எல்லோருடைய கண்களிலும் பட்டிருக்கும் போலிருக்கிறது. ஆளுக்காள்- பட்டவரை சமயோசிதமாக ஒவ்வொரு வேலை செய்தார்கள். தொடர்ச்சியாக மணி ஒலித்தது. யாரோ பஸ் உடம்பின் தகரத்தில் கூட படபடவென்று தட்டினார்கள்.
"ஐயோ சப்தங்கள்.
"நிறுத்து . கூவல்கள்.
மூர்த்தி இருக்கையை விட்டெழுந்தபடியே பின் கண்ணாடி வழியாகப் பார்த்தான். விழுந்த மனிதன்

சாந்தன் 屬 63
நடைபாதையில் புரண்டு எ மு ம் ப முயற்சிப்பது தெரிந்தது. மூர்த்தி உட்கார்ந்தான்.
வண்டியை நிறுத்தி, சாரதி உட்பட எட்டுப் பத்துப் பேர் இறங்கி, எங்கோ கிடந்த டிக்கட் மெஷினை எடுத்து, கண்டக்டரையும் கைத்தாங்கலாக அழைத்து
வந்தபோது ஆளுக்குக் காயமொன்றுமில்லை என்பதை
எல்லோரும் அறிந்து கொண்டார்கள். 'நல்லகாலம்" என்று பெருமூச்சு விடுவதற்கு இதை விடவும் இரண்டு காரணங்களிருந்தன. ஒன்று, அவன் விழுந்தபோது பின்னால் ஏதும் வாகனங்கள் வரவில்லை. மற்றது சில்லறைகள் சிதறவில்லை.
பஸ் மெல்லப் புறப்பட்டது. யாரோ நல்ல மனம் படைத்த ஒருவர்- வயதாளி- எழுந்து தன் இடத்தைக் கண்டக்டருக்குக் கொடுத்தார்.
எல்லோரும்- ஒவ்வொருவரும்- தத்தம் அநுதாபங் களையும் அறிவுரைகளையும் ஓர் அசாதாரணமான பொறுப்புணர்வுடன் கண்டக்டருக்கு வழங்கிக் கொண் டிருந்தார்கள், இவன் ஒருவனைத் தவிர,
இதனாலும், அந்த வயதானவரின் உணர்வுகூட இவனிடம் இல்லையென்று பட்டதாலும், சில பேருடைய
பார்வை மூர்த்தி மேல் ஒரு மாதிரியாக விழுந்தாலும்கூட
அவன் அவற்றைச் சட்டை செய்ய முடியாமலிருந்தான். கண்டக்டர் நடைபாதையில் விழுந்துருண்ட அந்தக் காட்சி ஒரு கொழுக்கியாக அவன் மனதை இழுத்து வேறெங்கோ போட்டுவிட்டிருந்தது.
இரண்டு கிழமைக்கு முன்புதான் ஒரு நாள்- ஜனவரி பத்தாம்தேதி- இரவு யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்ட பத்தின் முன் குழுமியிருந்த மக்கள் வெள்ளத்தில் ஒரு துளியாய் அவனும் நின்றிருந்தான்.
{ i II ) (மல்லிகை- 1974)

Page 39
அந்நியமான உண்மைகள்
"இங்கயிருந்து யாழ்ப்பாணத்துக்குப் போற முதல் பஸ் எத்தனை மணிக்கு காலையில?' சைக்கிளைக் கையில் பிடித்தபடி தகரக் கூரையின் கீழ்க் குனிந்து, உள்ளே எதையோ எழுதிக்கொண்டிருந்த ஆளிடம் கேட்டான், சிவம்.
அந்த ஆள்- டைம் கீப்பரோ, யாரோ - இவனை நிமிர்ந்து பார்த்துவிட்டு, வேலையில் மீண்டும் மும்முர மாய் ஈடுபட்டதுபோலக் குனிந்து எழுதலானான். அந்த "ஷெட்'டுக்குள் அது வெறும் ஷெட் மட்டுமில்லை, திருகோணமலை பஸ் நிலையக் காரியாலயம் 60) -ւք கீப்பர் அலுவலகம், புக்கிங் கந்தோர் எல்லாம் அது தான்- வேறு யாருமில்லை. எட்டடிக்கு எட்டடி சதுர மான அந்தத் தகரக் கொட்டகையின் கூரை விளிம்பு நிழலில் மட்டும் ஐந்தாறு பேர் ஒண்டிக்கொண்டு இந்தப் பதைபதைக் கிற வெயிலிலிருந்து தப்புகிறதாக எண்ணிக் கொண்டிருந்தார்கள்.
வேலையில் மும்முரமாக ஈடுபட்டிருக்கிற ஆளைக் குழப்பி விசாரிக்க வேண்டிய அவசரம் சிவத்திற்கில்லை. சைக் கிளை மெல்லத் தள்ளிச் சாத்திவிட்டு வந்து,
 

சாந்தன் 醫 $5
வலைக் கம்பிக் கருகில் ஆறுதலாக நின்றபடி, உள்ளே எழுதிக் கொண்டிருந்தவன் வேலையை முடிக் குமட்டும் பார்த்திருந்தான்.
நின்ற இடத்திலேயே தலையைத் திருப்பிப் பின்னால்
தெரிந்த சந்தைக் கடைகளைப் பார்த்தபோது, கூரை
களுக்கு மேலே, வலு உயரமாய்த் தெரிந்த மணிக் கூண்டுக் கோபுரத்தில் பதினொரு மணியாகிக் கொண் டிருந்தது.
கைகளைச் சொடுக்கும் ஓசை கேட்டு சிவம் திரும் பினான். உள்ளே இருந்தவன் பேனாவை மூடி மேசை யில் வைத்துவிட்டு இவனைப் பார்த்தான்.
* காலையில யாழ்ப்பாணத்துக்குப் போகிற முதல் பஸ் எத்தினை மணிக்கு?"
அந்த ஆள் சொன்ன பதில் இவனுக்குப் புரியாத தால் என்ன செய்வதென்று தெரியாமல் தடுமாறிய அந்த ஒரு கணத்திலேயே அவனுள் ஒர் சினமும் கிளர்ந்தது.
மச்சான்காரனின் வீட்டில் வந்து நின்று, திருகோண மலையைப் பார்க்க அவன் செலவிட்ட இந்த மூன்று நாட்களிலும் அவன் அவதானிக்க நேர்ந்தவற்றிற்கு ஒரு உச்சம் போல இந்த நிகழ்ச்சி அமைவதாக அவன் உணர்ந்தான். அதுவே இந்தச் சினத்தின் பிறப்புக்குக் காலாகவுமிருந்தது. அதை அடக்கிக்கொண்டு மீண்டும் சொன்னான்:
‘விடிய யாழ்ப்பாணத்துப் போற முதல் பஸ்ஸில் ஒரு சீட் புக் பண்ணவேணும்.'
இவன் சொன்னது புரியாததாக அவன் முகத்தில் கோலங்காட்டினான்.
*உங்களுக்கு தமிழ் தெரியாதா?”

Page 40
68 鬣 ஒரு பிடி மண்
தெரியாது' என்பது போலத் 56ծ) 6ծ եւ IITLգ-եւ 1351தெரியாமலிருக்கிறதே என்பதற்காக எந்த வித விநயமும் தென்படாததற்குப் பதில், ஓர் அலட்சியமே அங்கு மிதந்து நின்றது.
ஆத்திரமும் அவதியுமாய்ச் சைக்கிளை எடுத்தான் சிவம்.
"என்ன, புக் பண்ணிட்டு வந்திட்டியா?”
"என்னத்தைப் ப ண் னு ற து? அங்க பஸ், ஸ்டாண்டில் இருக்கிறவனுக்ரு நான் சொல்லுறது விளங் கலை; அவன் சொல்றது எனக்கு விளங்கலை என்னத்தையெண்டு பண்றது?"
*சரி, போகட்டும் நான் பின்னேரம் வரேக்கை புக் பண்ணிக் கொண்டு வறேன்."
"இருபது வயதுக்கு மேலாகியும் இன்னமும் திருகோணமலை தெரியாமலிருக்கிறேனே"- என்பது வெட்கப்பட வேண்டிய சங்கதியாக சிவத்தை அடிக்கடி உறுத்திக் கொண்டிருந்தது. அதுவும் அவனுடைய சொந்த மச்சான் அங்கேயே வேலை பார்த்துக்கொண் டிருககும்போது-போய் நிற்கத் தங்க எல்லா வசதியு மிருந்தும்-தான் ஒரு தரம் அந்த ஊரைப் பார்த்துவிட்டு வராதது முட்டாள்தனம் என்று நினைத்தான் சிவம். அநேகமாக இலங்கையின் மற்றப் பாகங்களுக்குப் போக வேண்டி நேர்கையில் தன்னுள் எழுகிற ஒரு கூச்சமும், ஆற்றாமை உணர்வும் இந்தப் பயணத்தில் நேராது என அவன் நம்பினான். தனக்குத் தமிழை விட வேறு மொழி சரியாகக் தெரியாததும், தான் லோங்ஸ்' போடாத ஒரு பிரகிருதி என்பதும் தன்னுள் இந்தத் தாழ்வுச் சிக்கலை வளர்த்திருந்ததை ஆய்ந்தறியக்கூடிய அளவிற்குச் சிவம்

சாந்தன் 鹽 67
படித்திருந்தாலும், இவையெல்லாம் தன்னைத் தானே குறைத்து மதிப்பிட-ஏற்ற காரணிகளே அல்ல என அவன் நன்றாக உணர்ந்திருந்தாலும், அதை மீற அவனால் முடிந்ததில்லை.
யாழ்ப்பாணத்தில் பிரயாணம் பண்ணுகிற மாதிரியே திருகோணமலைக்கும் போய் வந்துவிடலாம் என்று நம்பினான்.
அங்கே, நவராத்திரிக் கடைசி நாளன்று மானம்பூ" என்று நடக்கிறதைக் காட்டிலும் விசேஷமாக இங்கே இருக்கும். ஆனபடியால் இந்த முறை கும்பபூசையை அண்டி இங்கே வந்து நிற்க முடியுமானால் தெண்டித்து வரப் பார்." என்று போன மாதம் மச்சான் எழுதியது சிவத்திற்குத் தோதாய் வாய்த்தது.
இங்கே பார்ப்பதற்கு எத்தனையோ இடங்களி ருந்தன. இவ்வளவு நாளும் ஒரு முறையாவது இங்கு வராமலிருந்தது என்ன முட்டாள்தனம்" என்று தோன். றியது. கோணேஸ்வரம், கன்னியா எங்கும் போனான். துறைமுகம் பார்த்தான். இடையில் ஒரு ஞாயிற்றுக் கிழமை, அவனும் மச்சானும் சைக்கிளை எடுத்துக் கொண்டு சீனன்குடாவிற்கும் போய் வந்தார்கள். தாவி முறிகிற அந்த ஏற்றங்களில் சைக்கிள் உழக்கியதுகூட சந்தோஷமாயிருந்தது.
ஆனால் எங்கும் அவன் ஓர் ஏமாற்றத்தைச் சந்தித்துக்கொண்டிருக்க வேண்டியே நேர்ந்தது. அவன், நினைத்து வந்ததுபோல- திருகோணமலை, யாழ்ப் பாணம் போல-இல்லை என்பதுதான் அது.
அவன் படித்திருந்தது, கேள்விப்பட்டிருந்தது இவற் றால் திருகோணமலையைப்பற்றி அவனுள் எந்த ஒரு படம் பதிந்திருந்ததோ அது கொஞ்சம் கூடப் பொருந் தாமல் இருந்ததை இங்கு வந்தபின் அவனால்

Page 41
68 獸 ஒரு பிடி மண்
அவதானிக்க முடிந்தது. போன இடங்களிலெல்லாம் அவன் அதை உணர்ந்தான். அதைப்பற்றி மச்சானிடம் கேட்டபோது,
"உண்மைதான், ஒரு பத்துப் பன்னிரெண்டு வருஷத் துக்கு முந்திவந்திருந்தால், நீ நினைச்சதுபோலத்தானிருந் திருக்கும். இப்ப இல்லை." என்றார்.
"என்னெண்டு அப்பிடி மாறிச்சுது?"
அது பேசினால் அரசியலாய்ப் போகும். பேசாம வா." என்றார் மச்சான்.
*அரசாங்கமே திட்டமிட்டுக் குடியேற்றுது- பிற
6?
இன்றைக்கு பஸ் ஸ்டாண்டில் தவித்ததுபோல, நேற்றைக்கு சந்தையிலும் தவித்துப் போய்விட்டான் அவன், சந்தையிலிருந்து கடைத்தெருவைச் சுற்றிப் பார்த்தபடி நடந்தபோதும், அந்நியமாகிற ஒரு சூழலைக் கடைத்தெரு தந்தது. அங்கேயிருந்த சில பெயர்ப் பலகைகள், கடைக்காரரின் திமிர்த்தனத்தை உணர்த் தின. கன்னியாவிலிருந்து வருகிற போதும், சீனன் குடாவிற்குப் போகிறபோதும்கூட அந்தத் தெருக்களின் இரண்டு பக்கங்களும் இந்த மாறுதலின் நிச்சய சாட்சியங் களாய் விளங்கின. அங்கே எழுந்திருந்த வீடுகளெல் லாம் புதுக்கருக்கு அழியாதவை.
தான் நினைத்திருந்தது, தன் மனதில் விழுந்திருந்த படம் எல்லாம் நிதர்சனத்தில் இப்படி மாறி-அல்லது மாற்றப்பட்டு-இருந்ததே (6)լյrքս յ கொடுமையாக அவனுள்பட்டது.
காலை ஐந்தே முக்கால் பஸ் ஆறரைக்குத்தான் புறப்பட்டது. நேற்று இவன் போனபோது கொட்டகைக்

சாந் தன் 屬 68
குள்ளிருந்தவன் தான் இன்றும் புக்' பண்ணியவர்களைச் சரிபார்த்தான்.
பஸ் ஒரு முழு வட்டமடித்துத் திரும்பியபோது தூரத் தில் கோணேசர் கோயில் தெரிந்தது. அதனருகே, மேலே இரவெல்லாம் செம்புள்ளியாகத் தெரிகிற தொலை தொடர்புக் கோபுரவிளக்கு அணைந்து போய்க் கம்பிக் கூண்டு மட்டுமே தெரிந்தது.
நகரின் ஒடுங்கிய தெருவில், எதிரே வந்த கார் ஒன்றிற்கு இந்த பஸ் ஒதுங்கி நின்று வழிவிட்டபோது, தெருக்கரைச் சுவரொன்றில் பெரிதாக எழுதப்பட்டிருந்த வாக்கியம் சிவத்தின் கண்களில் பட்டது:
"இஸ்ரேலிய ஆக்கிரமிப்பாளர்களே, அரபுப் பிரதே சங்களை விட்டு வெளியேறுங்கள்."
(மல்லிகை)

Page 42
ஒரு விருந்தின் முடிவு
தில்லை நாதன் அரபு நாட்டுக்குப் போகிறான். வேலையை ரிசைன் பண்ணியாயிற்று. பதினாலு வருஷ ஸர்விஸ், உதறித் தள்ளிவிட்டுப் போகிறான். இங்கே வருஷம் முழுக்க மாரடித்தாலும் கிடைக்காத காசு அங்கே ஒரு மாதத்தில் கிடைக்குமாம்.
கந்தோரில் ஒரு நல்ல பிரியாவிடை ஒழுங்கு செய் தார்கள். தில்லை அதற்கு உரியவன்தான். எல்லோரு டனும் நன்றாகப் பழகியிருந்தான். நல்ல கலகலப் பானவன், பகடிக்காரன். அவன் பிரிவதில் பலருக்கு வருத்தமிருந்தது.
ஒரு நாள் பின்னேரம்-கந்தோர் முடிந்ததும்பார்ட்டி நடந்தது. அமைதியான பார்ட்டி, தில்லையைப் பாராட்டிப் பேசவும், அவனுக்கு வாழ்த்துகள் கூறவும்
 

சாந்தன் 蠶 71
பல பேர் முன் வந்தார்கள். சந்திரசிறி, கந்தவனம்,
ரொட்றிகோ மூன்று பேருக்கும் பேசும்போதே கண் கலங்கிவிட்டது. குளிர்பானங்கள் மட்டுமே பாவிக்கப் பட்ட இந்தப் பார்ட்டியிலேயே அவர்கள் கண் கலங்கி னார்கள்.
பிறகு ஒரு பேச்சின் சாராம்சம் இப்படி இருக்க நேரிட்டது.
... ... கடந்த கலவர காலத்திலே, இந்த ஊரிலேகூட
எவ்வளவோ நடந்தும் எங்கள் கந்தோரிலேயிருந்த
வடபகுதி சகோதரர்களுக்கு ஒன்றும் நடவாமல் விட்டது தில்லைநாதன் போன்ற நண்பர்கள் இங்கிருந்ததை நினைத்ததுதான். அப்படிப்பட்டவர் தில்லை. **
அடுத்த ஓரிரண்டு நிமிஷங்களுக்குள்ளேயே, இந்தப் பேச்சு வாபஸ் பெறப்பட வேண்டுமென்ற குரல் எழுந்தது. "கலவரம் என்று வந்தால், அடிக்கிறவர்கள் அடிபட வேண்டியவர்களை அவர்கள் எங்கிருந்தாலும் என்ன செய்தாலும்-நியாயம், தேவை இருக்கிறதோ இல்லையோ அடிக்க வேண்டியது ஒரு கடமையா, என்ன?. இந்தப் பேச்சு வாபஸ் பெறப்பட வேண்டும்'
இதை ஒட்டியும் வெட்டியும் கருத்துக்கள். ஒரே
கசமுசா, பார்ட்டி குழம்பிவிட்டது.
(FLDí, 1980)
口口口

Page 43
a- பாத்திரம்
படலை திறந்த சத்தம் கேட்டு நிமிர்ந்தான். ஒரு பெண், யாரென்று தெரியவில்லை. திண்ணையை நோக்கி விறுவிறென்று வருவது தெரிந்தது. தோளில் ஒரு பிள்ளை, நெருங்கி வர வர, மனுசியின் முகத்தை எங்கேயும் பார்த்ததில்லை என்பது தெளிவாயிற்று,
கிட்ட வந்தவுடன், கையிலிருந்த பேப்பரை மடித்த வாறே எழுந்து,
"யாரைப் பார்க்கறிங்க?' என்றான்.
அவள் இன்னும் நெருங்கி வந்தாள். படியில் பிள்ளையை இறக்கிவிட்டு,
'அம்மன் கோயிலடியிலிருந்து வாறேன்.' என்ற போது கண்கள் கலங்கின.
**கலவரத்துக்குள்ளை நாங்கள் தெமட்டக்கொடை யிலை இருந்தோம்."-சொல்லிவிட்டு லேசாக விம்மத் தொடங்கினாள்.
 

தேவை. அதுதான்.
சாந் தன் 醫 73
இவன் உள்ளே திரும்பி,
** அம்மா .' என்றான்.
s
"எங்கட அவர் அப்பா செத்துப்போனார்.
* *u JFT 17-??” 'தகப்பன் .'-அவள் குழந்தையைச் சுட்டியவாறே கண் களைத் துடைத்தாள்.
பொடியன் இவனை வடிவாகப் பார்த்துக்கொண்டு நின்றது, ஐந்து வயதிருக்கும் உருண்டைக் கண்கள்; உருண்டை முகம். அதைப் பார்த்து மெல்லச் சிரித்தான். தாயின் பின்னால் ஒளித்துக்கொண்டது.
"என்னவாம்?.' என்றாள் அம்மா, சொன்ன முழு வதையும் மனுசி திருப்பிச் சொன்னது.
"ஐயோ, பாவம்."
இங்கே, ஊரில், வீடில்லை, காணி மட்டும்தான். அம்மன் கோயிலுக்குக்கிட்ட, அம்பல வாத்தியார் வீட்டடியில்-இருக்கிறது. வாத்தியார் சொந்தமில்லை.
தெரிந்தவர், ஊரைவிட்டுப் போய்க் கனகாலமென்றாலும்
அவரை விசாரித்தால் இவர்களைப்பற்றித் தெரியும். உள்ள காணியில் ஒரு கொட்டிலாவது போடக் காசு
அம்மா உள்ளே திரும்பினாள்.
தெமட்டக்கொடையிலை எங்கே இருந்தீங்க .' வெள்ளவத்தைப் போற ரோட்டிலை ." என்னது? மீண்டும் கேட்டான். முகாமிலை இருந்தது நீங்களா?” **ஆம்.' தலையாட்டினாள்.
*எந்த முகாம்?"

Page 44
ஒரு பிடி மண்
'வியாங்கொடையிலை."
'இதென்ன சொல்லுறிங்க..?
குழந்தை முன்னால் ஓடிவந்து சிரித்தது.
உள்ளே இருந்து வந்த அம்மா, இந்தா." என்று கொடுத்தார்.
தாளைக் கும்பிட்டு வாங்கினாள். பிள்ளையைத் தூக்கி இடுப்பில் வைத்தாள். போகப் போக, அது இவனைப் பார்த்துச் சிரித்துக் கொண்டிருந்தது.
"ஏன் குடுத்த நீங்கள்?. சொன்னதெல்லாம் பொய். '- மெல்லிய எ ரிச் ச லு டன் கேட்டதைச் சொன்னான்.
"சீ பாவம். அவள் வீட்டை விட்டு அதிகம் வெளிக் கிடாமலிருந்திருக்கலாம்." என்றாள் அம்மா.
அப்படிதானிருக்கும்.
(LD656භිගණ-1984)
TO

856,oTL6)
சந்தைக் கட்டிடத்து விறாந்தையோடு மினி பஸ்கள் அணிவகுத்து நிற்கின்றன. ஒரு விதததில் வசதிதான். என்றாலும் நன்றாயில்லை.
நகர அபிவிருத்தி பற்றியெல்லாம் இப்போது கவலைப்பட முயல்வது ஆடம்பரம், பேராசை, முட்டாள்தனம்.
ஜனத்துக்கு வழிவிட்டு தூணோடு ஒதுங்கி ஒரு பக்க மாகத் திரும்பி நின்று கொண்டான். நீளவாட்டில் எல்லாமே பார்வைக்குள் வருகின்றன. இடப்புறம் கடை வரிசை, வலப்பக்கம் பஸ் வரிசை. பட்டணம் வடிவாய் தானிருக்கிறது இந்தக் கோணத்தில்,

Page 45
76 ஒரு பிடி மண்
தன்னுடைய பஸ் இனி எந்த நேரமும் வரலாம் *அதுதான் நல்லாருக்கு ' -கீச்சுக் குரல். குழந்தைக் குரல், வலு கிட்டக் கேட்டது. திரும்பினான்.
கடையின் கண்ணாடிச் சுவருக்கு இந்தப் பக்கத்தில் இவர்கள் நின்று கொண்டிருக்கிறார்கள். நாலுக்குமே பத்து வயதுக்குள்தானிருக்கும், பரட்டைத் தலையும் பேணியுமாய் ஐயா ஐயா என்று பஸ் பஸ்ஸாய் ஏறி இறங்குவார்கள். காய்ந்து போய் அழுக்காயிருப்பார் கள், கண்டிருப்பீர்கள்.
旁列
'நான் வாங்கினா அதுதான் வாங்குவேன் ' காட்சி யறைக்குள்ளிருந்த இன்னொரு துணியைக் காட்டி மற்றப் பிள்ளை சொன்னது .
'கடவுளே என்று ம ன து க் கு ஸ் முனகினான். வேற்ென்ன செய்யலாம் இப்போதைக்கு?
-அருமையான கதையாய் வாய்க்கும். ஆனால் . சே! அந்தாள் எப்பவோ எழுதிவிட்டார். அவர் எழுதிய கதைகளில் முதலில் நினைவுக்கு வருகிறதே இதுதான். இப்படியான கரு அப்போதே அவருக்குக் கொழும்பு நடைபாதையில் சந்தித்திருக்கிறது. சே!
'அண்ணா, வாங்கோ. வாங்கோ' கண் டக்டர் பெடியன் கத்தினான்.
(மல்லிகை-1985)
DO

3
flag.85s
அநேகமாக எல்லோரும் அப்படித்தான் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். பிழையான அணுகுமுறை இது, அடிப்படையையே ஆட்டங்காட்டுவது போல. எல்லோ ருக்கும் உணர்ச்சி இருந்தது-அதற்கென்ன குறை?-அது மட்டும்போதாது ஏதாவது செய்தாக வேண்டும் என்கிற தீவிரம் இருக்கிறது. அதனால்தான் இங்கே இப்படிக் கூடியிருக்கிறார்கள். என்றாலும் ஆதார நோக்கத்தைச் சரியாகப் புரிந்து கொண்டதாகத் தெரியவில்லை. அதைப் புரிந்துகொள்ள வேண்டும். சரியாக நடை முறைப்படுத்த வேண்டும். அப்போதுதான் அர்த்தம் இருக்கும்.
பழக்கப்பட்டுப்போன சொற்றொடர் என்பதாலா? பழகிவிட்ட செய்முறை என்பதாலா?- ஏன் ஒவ்வொரு பிரதிநிதியும் அப்படித் தவறான பெயரையே பாவிக் கிறார்? தலைமை வகித்த தோழர்களைக் கவனித்தான். அவர்கள் இந்தத் தவறான பிரயோகத்தை அவதானித் திருக்காமல் இருக்க முடியாது. ஏன் திருத்தவில்லை? பிறகு சொல்லிக்கொள்ளலாமென்று இருக்கிறார்களா? அல்லது எந்தப் பெயரிட்டு அழைத்தாலென்ன, C LIT TH E L Lib சரியான முறையில் முன்னெடுக் கப் பட்டால் சரி என்றிருக்கிறார்களா?

Page 46
78 疆 ஒரு பிடி மண்
என்றாலும் தன்னால் அப்படி இருக்க முடியவில்லை. இந்த வேற்றுமை- வெறும் சொற்களிலல்ல-செயற் பாட்டின் அடிப்படையிலேயே தங்கியிருக்கின்றது என்பதைக் குறிப்பிடத்தான் வேண்டும். வெகு ஜனங் களின் பிரதிநிதிகளான இவர்கள், போராட்ட வடிவையும் பெயரையும்கூடச் சரியாகப் புரிந்து கொள்ளத்தான் வேண்டும்.
தன்னுடைய முறை வந்தபோது, பேச்சின் ஆரம்பத் திலேயே அதைக் குறிப்பிட்டான்.
* இங்கே பேசிய பெரும்பாலான பிரதிநிதிகள் இதை ஒரு ஹர்த்தால் என்றும், துக்க தினம் என்றும் குறிப் பிட்டார்கள். ஆனால் அது தவறு. நாங்கள் அநுஷ்டிக்கப் போவது எதிர்ப்பு தினம். எங்கள் எதிர்ப்பை-இனப்படு கொலைக்கெதிரான மக்கள் எதிர்ப்பை-அகில உலகிற்கும் எடுத்துக்காட்டப்போகிற தினம் அது. மக்களைப் போராட்டத்திற்காகத் தயார்ப்படுத்துவதன் முதற்படி, ஆகவே, ஜூலை இருபத்தைந்தாம் தேதியை துக்க தின மாக-மன்னிக்கவும்-எதிர்ப்பு தினமாகவே நாங்கள் உலகிற்குக் காட்ட வேண்டும்.'
கூட்டம் முடிந்த பிறகு, விறாந்தையில் யாருடனோ பேசிக்கொண்டிருந்த போது தணிகாசலம் வந்தார். 'நீங்கள் சொன்னது சரி ' மெல்லச் சிரித்தார்.
'. எனக்கு அசோகமித்திரனுடைய கதையொன்று தான் ஞாபகம் வந்தது.'
*ரிக்ஷா ?." 'ஆ ரிஷ் கா!'
(முரசொலி-1987)

4.
அஸ்பெஸ்ரஸ்
பாலாவிடம் பெரிதாக ஒரு மாற்றமும் தெரியவில்லை கொஞ்சம் ஊதியிருந்தான்; நிறமும் கொஞ்சம் பெயர்ந் திருந்தது. தமிழை முன்னர் போலவே பேசினான். அவனது மனைவியும்தான்.
'போய்ப் பத்து வருஷ்மாச்சு. இப்பதான் வர முடிஞ்சுது."
போன செப்டம்பரிலும் வெளிக்கிட்டு வர முடிய
வசந்தி சொன்னாள்.
'. அது நல்லதாய்ப் போச்சு.'

Page 47
80 隱 ஒரு பிடி மண்
'நல்லதுதான் வந்திருந்தா, ரொம்ப கஷ்டப்பட் டிருப்பியள்." என்றான் சிவாவும்.
"எல்லாம் உடனுக்குடனை அங்கை டீ.வி.யிலை பாத்த நாங்கள்.'
'கடவுளே கடவுளே என்று உங்கள் எல்லோ ருக்குமாகக் கும் பி ட் டு க் கொண்டிருந்ததைவிட வேறென்ன செய்யனும்?.'-என்றாள் வசந்தி,
சிவா புன்னகைத்தான். "ஆனாலும், இப்ப எங்களுக்கென்று ஒரு அடை பாளம் வந்திருக்கு இலங்கைத் தீவின் தமிழர்கள் என்று சொல்றதிலே ஒரு பெருமையும் இருக்கு."
-பாலா, இதை ஆங்கிலத்தில் சொன்னான். அந்த மொழியின் சொந்தச் சூழல் அவன் உச்சரிப்பை மாற்றி யிருந்தது. இது நல்லது,
'அந்த அடையாளத்திற்கு இங்கே விலை கொடுத்தோம்’-சிவாவும் ஆங்கிலத்திலேயே சொன் ବ3 titବର୍ତt.
ஈஸ்வரி தேநீரைக் கொண்டு வந்ததும் அவளை அவர்களுடன் பேசவிட்டு விட்டு, "எக்ஸ்யூஸ்மி.' என்று சிவா ஏதோ அலுவலாக எழுந்து உள்ளே போனான்,
sy
'இது எப்ப கட்டினது? எண்பத்தி மூன்றா?. -வசந்தி, கடிதங்களை நன்றாக நினைவில் வைத் திருக்கிறாள். -
'ஏதோ, கட்டி முடிச்சாச்சு. அதுக்குப் பிறகு வெள்ளை கூட அடிக்க முடியேல்லை. ஒவ்வொரு
60.
"அஸ்பெஸ்ரஸே போட்டிருக்கிறீங்க?."

சாந்தன் 8
-பாலா குறுக்கிட்டான்.
"ஷெல்லுக்குக் கொங்கிறீற்கூடத் தாங்காது '
என்றாள் ஈஸ்வரி.
*அதில்லை. இது ஆக்களுக்குக் கூடாது நுரை யீரலைப் பழுதாக்கிப் போடும் அங்கு இதெல்லாம் எப்பவோ தடை செய்தாச்சு போட்டிருந்த இடங் களிலும் கழட்டி மாத்தியாச்சு.'
'என்னது?." -என்றபடி சிவா வெளியே வந்தான்.
"என்னடாப்பா, இதைப் போய்ப் போட்டிருக் கிறாய்?
-பாலா கூரையைக் காட்டித் திரும் பவும் சொன்னான்:
* எவ்வளவு ஆபத்தான விஷயம்! "
வந்த விருந்தினர்கள் என்ன நினைப்பார்களோ என்ற பிரக்ஞைகூட இல்லாதவன் போல, சிவா பலத்துச் சிரிக்க ஆரம்பித்தான்.
(முரசொலி- 1988)

Page 48
தலைமுறைகள்
எதிரிலும் வலத்திலும் கண்ணுக்கெட்டிய தூரம் வயல்வெளி, வருடத்தில் பாதி நாட்கள் வரண்டுபோய்ப் பாலைவனங்களையும் ஸ்தெப்பிகளையும் கற்பனை பண்ணச் செளகரியமாய்க் கோலங்காட்டுகிற வெளி,
தொலைவில், வயல் நடுவே, பத்திரகாளியம்மன் கோயிலும் பக்கத்தில் தேர்க்கொட்டகையும், இங்கே இவர்கள் வகுப்பில் செய்கிற மாதிரி உருவங்கள் போல. கோயிலருகே ஒடுகிற தெரு கண்ணில்படாது, ஆனால் இருந்திருந்துவிட்டு அதில் போகிற வாகனங்கள் மட்டும் சவர்க்காரச் செப்புகளாய்த் தெரிகின்றன. வயல்வெளி யின் முடிவில், பெருவரம்பாய் மீண்டும் பனைகள்,
 

சாந்தன் 籃 83
கல்லூரி மதிலோடு சணைத்துப் படர்ந்திருக்கின்ற வேம்பு, மாடி ஜன்னல்வரை வந்திருக்கிறது. எட்டித் தொடலாம் போலக் கொப்புகள்; எப்போதும் காற்றி லசைந்தபடி, காற்று, இங்கே வற்றாது வீசும். எல்லா நாளும் எல்லா வேளையும் ஓயாமல் சிலுசிலுக்கும். வெளிச்சத்திற்குக் கேட்கவேண்டியதேயில்லை. எந்த மழை மூடலிலும் மின் விளக்கே தேவைப்படாது- வரை தலுக்குக் கூட.
இதெல்லாவற்றிலும் முக்கியமானதும் இருந்தது; அமைதி. காற்றிலசையும் கிளைகளுக்கும் இருந்திருந்து விட்டு எங்கோ கரையும் காக்கைகளுக்கும் துணையாய் அவன் குரல்தான் அதனைக் குலைக்கும்
சூழலோடு இசைந்துபோய், அடுத்த வகுப்பிற்கான பாடத்தை இரைமீட்டபடி இருந்தவன், ਯ66 மாணவர் ஏறிவரும் அரவங்கேட்டுத் தயாரானான். முதலாம் ஆண்டுக்கு நிர்மானத் தொழில்நுட்பம் இப்போது,
பேச்சுக்களும் சிரிப்புக்களும் கரைந்து காலடி ஓசை களே நெருங்கின. வழமைபோல் ஜெயக்குமாரின் தலை முதலில் தெரிந்தது
D66)
"குட்மானிங், உள்ள வாங்க ?
எல்லோரும் வந்து அமரும்வரை காத்திருந்தான்.
இந்த மட்டத்தில் கற்பிப்பதில் இரண்டு சவால்கள். பரீட்சையே குறியாய் இதுவரை பழகியவர்களுக்கு, சுய சிந்தனையே ஆதாரமாய்க் கொள்ளவேண்டிய பரப்பு களைப் பரிச்சயம் பண்ணிவைக்க வேண்டியிருக்கிறது. மற்றது இவ்வளவு நாளும் உயர்தர வகுப்போ சாதாரண தர வகுப்போ வரை - தாய்மொழி மூலம் படித்திருப்பார் கள். இங்கே, இப்போ ஆங்கிலமொழி மூலம்.

Page 49
8 4 GB ஒரு பிடி மண்
எங்கள் நாட்களைப் போலில்லை. இருபது வருஷத்தில் எவ்வளவு மாற்றம்! "
எவ்வளவுதான் முதலில் அறிமுகப்படுத்தி, பின்னர் குளிகைகளாகக் கொடுத்தாலும் மொழியையும் விளங்கி அது சுமந்துவரும் பொருளையும் புரிந்துகொள்வ தென்பது இவர்களுக்குக் கொஞ்சம் சிக்கலாய்த்தானிருக் கிறது, ஆரம்பத்தில்,
"தொடங்கலாமா?.' எழுந்து முன்னால் வந்தான், இன்று. "டாம்ப் புரூஃபிங் கட்டடங்களுக்கும் கட்டடங் களுக்குள்ளும் ஈரலிப்பு ஏன் பாதகமானது? அது எவ்வெவ்வாறு ஊடுருவும்? எப்படி அவற்றைத் தடுக்க லாம்? மூன்று அடிப்படைகளிலும் விளக்கவேண்டும்.
அதற்கு முதல், ஆங்கிலம். "டாம்ப் - என்றால் என்ன?” 'அணைக் கட்டு ' "அது டாம், இது டாம்ப்'- இரண்டு சொற்களை யும் எழுதிக் காட்டினான்.
** இரண்டாவதுக்கு என்ன அர்த்தம்?" தானே சொல்ல வேண்டி வந்தது: "ஈரம், ஈரலிப்பு. சரி, புரூஃப்" என்றால்?
'நிறுவல்." கடைசி வரிசையிலிருந்து சுரேஷின் குரல்,
'நல்லது, அது ஒரு கருத்து. ஆனா இங்கே வேறு' -தொடர்ந்தான்:
-'தடை' என்று சொல்லலாம். தடைகாப்பு. சரி, அதுக்கொரு உதாரணம்?
-கேள்வியுடன் கைக் கடிகாரத்தைப் பார்த்தான்.

சாந்தன் 醫 85
பதில் கூட அங்கே இருந்தது. இருக்கிறது, இருக்கும். அநேகமாக எல்லோர் கைகளிலுமே கடிகாரம், நாலு விநாடிகள்,
G36) IT?...’’
திரும்பினான். தண்ணிரா, அதிர்ச்சியா? "புல்லட் புரூஃப் .'
(១_6rភា –1989)

Page 50
அதே விதியெனில்.
அங்கு நிலவிய அமைதியும் அவரைப் போலவே இருந்தது; நிறைந்து, அடங்கி, கம்பீரமாய் .
a
வீட்டின் முன் கூடத்தில் அவர் அமர்ந்திருந்தார். நாற்காலியில் சாய்ந்து, தலையை லேசாக ஒருக்களித்த படி, பரந்த நெற்றியின் மேல் பளபளத்த வெள்ளி இழைகள், மூடியிருந்த விழிகள் அவரது ஏகாக்கிர சிந்தை நிலையைக் குறிப்பதை அவனறிவான். முதுமை யையும் நோயையும் மீறியொளிர்ந்த காந்தி,
fါ@)ဏ္ဍိါ........
அவர் முன் இன்னொரு நாற்காலியில் பணிவும் பவ்வியமுமாக உட்கார்ந்து அவன் பார்த்துக்கொண்டி ருந்தான். அவருடன் சமதையாக உட்கார நேர்கிற Gភាសាតា មនោវិ៨៦ ஏற்படுகிற LLib இப்போதும் இருந்தது. வசதியாகச் சாய்ந்திருப்பதில் ஒரு மரியாதைக் குறைவு உறுத்தவும், முன் குனிந்து, கைகட்டி, முழங்
 
 
 
 

சாந் தன் 繳 87
கால்களில் பொறுத்து உட்கார்வதில் ஒரு பணிவும், விநயமும் இருப்பதால் திருப்தி,
வந்து சந்திக்க வேண்டுமென்று நினைத்துக்கொண் டிருந்தான். சில விஷயங்கள் பேச வேண்டியிருந்தன. சில தெளிவுகள் தேவைப்பட்டன. நாளை நாளைளன்று நாலு நாள்கள். அதற்கிடையில் அவரிடமிருந்தே தகவல் வந்தது.
ஆளைக் கண்டதும் குழந்தை போல் பரபரத்து வரவேற்றார்.
萝则
"என்ன, கனகாலமாக வராமல் விட்டிட்டீங்க?
'முடிகிற நேரங்களில் வந்தா நல்லது. எனக்கு முன்னை மாதிரி அடிக்கடி ஆபீஸ் பக்கம் வர இப்ப இயலாது. தெரியுந்தானே? இருங்கோ "
சில வேளைகளில் எதையாவது படித்துக் காட்டச் சொல்லுவார். வேறு சில வேளைகளில் அவர் சொல் வதை எழுதிக்கொடுக்க வேண்டியிருக்கும். அந்த வேளைகளில் எல்லாம் இப்புல்லுக்கும் ஆங்கே பொசி யும். அதைவிட, புல்லுக்கென்றே அவர் இறைப்பதும் உண்டு. அப்பெருக்கில் புல் சிலிர்க்கும். இவற்றைவிட சில பொழுது விவாதங்களிலும் கழியும்.
"என்ன விசேஷங்கள்?. கேள்விப்பட்டதுகளைச் சொல்லுங்கோ."
பட்டவற்றைச் சொன்னான். கேட்டுவிட்டு மெளனித் திருந்தார்.
அன்பும் அறிவும் பணிவும் பெருந்தன்மையுமென்று அவர் அரசியலைப் பார்த்த விதம் வேறு. அதைக் கடமையாய்- யோகமாய் வரித்து. தனக்கொரு கெளரவம் சேர்க்கவன்றி, தன்னால் இயக்கத்துக்கே கனம் சேர்த்து- இடது சாரி இயக்கத்தின் இந்தப் பிதாமகர்.

Page 51
88 鱷 ஒரு பிடி மண்
அவருடன் பழகும் சந்தர்ப்பங்கள் ஒவ்வொன்றும் புல்லரிக்க வைத்திருக்கின்றன. முதன் முதலில், பத்து வருஷங்களுக்குமுன், எந்த அறிமுகமும் இல்லாத வேளை யில் பத்திரிகைப் படங்களில் பார்த்த அடையாளத்தை மட்டும் வைத்து, பழுப்பு நிற நஷனலும் வேட்டியுமாய் ஒரு முற்பகல் பொழுதில் கிருலப்பனை பஸ்டாப்பில் தன்னருகில் நின்றவரிடம் வலிய அறிமுகப்படுத்திக் கொண்டு பேசியபோதும் அவர் காட்டிய அந்த நேயம்.
அதன் பிறகு ஊரோடு வந்தபின் நெருங்க நேர்ந்த சந்தர்ப்பங்கள்.
தோழமையும் வாஞ்சையும் காட்டி அரவணைக்கும் அவரைத் "தோழர்' என்றழைக்கத் தயங்குகிறான். அவருக்கும் சிகரமா, அல்லது அய்யா பெரியய்யாவின் சாயல் இவரிடம் மிக இன்னொரு பெரியய்யாவாக மனதில் பதிந்திருப்பதாலா?
"சமாதான ஒப்பந்தம் வந்து ஆறேழு மாதமாச்சு. எப்படி இருக்கிறது என்று நினைக்கிறீர்கள்?"
தன் அபிப்பிராயங்களைச் சொன்னான், ஆதங்கங் களை வெளியிட்டான்.
"வடக்குக் கிழக்கு இணைப்பு உத்தியோக மொழி, குடியேற்றம்- இதுகளெல்லாம் விட்டுக்கொடுக்க முடியாத குறைந்தபட்ச விஷயங்கள்தான் " அவர் ஆமோதித்தார்.
தடுப்புக் காவல்-'
கண்களை ஒரு கணம் திறந்து, "ஓ அதுக்குத் தான்.' என்றவர் பிறகு கேட்டார்:
'வடக்குக் கிழக்கு இணைப்புத் தொடர சர்வ ஜன வாக்கெடுப்புத் தேவை என்று சொல்லுகிறோம் இல்லையே."

சாந்தன் 醫 89
இதுதான் அந்த நெருடல். இதைப்பற்றித்தான் பேச வேண்டியிருந்தது. ஆமென்றான். அந்த ஒவ்வாமையை. அதன் முழுப் பரிமாணத்தில்- தான் உணர்ந்தவாறே விளக்க வார்த்தைகளைத் தேடி அவதியுற்றான்.
" . அதாவது, வடக்கோட இணைஞ்சிருக்கக் கிழக்குக்கு விருப்பமோ என்று அறிய வாக்கெடுப்பு.' அவர் தொடர்ந்து பேசினார்.
** ତୁ . . .
"அப்படிப் பார்த்தா அதுக்கு முதல், இலங்கையோட இணைஞ்சிருக்க விருப்பமோ என்றறிய வடக்குக் கிழக்கையும் வாக்கெடுப்பு நடத்தத்தானே வேணும்?.'
இவன் விதிர்த்து மெய்சிலிர்த்தான்.
DDD

Page 52
எழுதாத கடிதம்
மதிப்பிற்குரிய மனிதருக்கு,
உங்கள் முகம் எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. அதை முதலும் கடைசியுமாக ஒரேயொரு தடவைதான் கண்டிருக்கிறேன். எ ன் ற ர லும், உங்களவர்கள் எல்லோரதும் போன்ற ஒரு முகம்தான். ஆனால் முறுக்கிய கூர் மீசைக்குப் பின்னால் ஒரு குழந்தை எட்டிப்பார்த்தது; அதுதான் வித்தியாசம், அதுவே பெரிய வித்தியாசமில்லையா?
தொப்பி கழற்றிய தலையின் நரையோடிய நெளி மயிர்கள் நெற்றியில் அழுந்தியிருந்தன. என்றாலும் பார்க்க ஏழெட்டு வயதாவதுகூட இருக்கலாம் உங்களுக்கு
உங்களெல்லோரையும் சேர்த்துப் பார்க்கிறபோது முருங்கை மரத்தில் அப்பியிருக்கிற மயிர்க்கொட்டிகளும்
 

சாந்தன் 醫 9書
ਯਘ Tu 2)SI (15th ஒழுக்கெறும்புகளுந்தான் என் நினைவுக்கு வருகிறது. அன்றைக்கும் அப்படித்தான் போனிர்கள். ஒழுக்கெறும்பு வரிசை போல.
மதிலைத் தாண்டிப் பாய்ந்து, வளவை ஊடறுத்து, வெட்டிவிட்ட பின்வேலிக் கண்டாயத்தால் அடுத்த வளவிற்குள்.
மரத்தடியில் வெறித்தபடி நின்ற என் முகத்தில் எதைக் கண்டீர்கள்? பெரிதாய் எதையோ பிடிக்கப் போகிறவன் போல் பெரும் நடப்பாய்ப் போன அந்த விறைத்த முகத்துத் தலைவன் பின்னால் ஒவ்வொரு வரும் ஒவ்வொரு மாதிரி.
அங்குமிங்குமாய் ஆங்கிலத்திலும், தமிழிலும், இந்தி யிலும் ஏதோ சொல்லிக்கொண்டு போனவர்களிடையே நீங்களும் வந்தீர்கள். என்னருகில் தாண்டும் போது நீங்கள் சொன்னவை:
"நாங்கள் போகத்தான் வேண்டும் நான் திரும்பிப் போக விரும்புகிறேன்."
-அந்த ஆங்கிலம் சரியாய் இருந்தது. அந்த இரு
வரிகளும் ஆயிரம் கதைகள் சொல்லின. நான் புரிந்து
கொண்டு நிமிர்வதற்கிடையில் நீங்கள் வேலியடிக்குப் போய்விட்டீர்கள்.
அந்தக் குரலும். குழந்தை முகமும். உங்களைப் போல் இன்னும் வேறு பேர் இருந்திருக்கலாம். ஆனால் எ ப்யப்பட்ட அம்புகள் நீங்கள்.
இது நடந்து ஒரு வருஷமிருக்கும். இப்போது நீங்கள் சந்தோஷமாய்ப் போயிருக்கலாம். எங்கிருந்தாலும் வாழ்க!
மிக்க நன்றி எம்மைப் புரிந்து கொண்டமைக்கு.
(ஈழநாதம்-1990)

Page 53
a. நன்றி
மணியத்தார் திருப்தியாக ஒரு ஏப்பம் விட்டார். செம்பில் நாலுமிடறு தண்ணிர் குடித்தார்.
இலையைத் தூக்கிக் கொண்டு வெளியே வந்த போது பின் முற்றத்தில் நின்ற சிவப்பி கண்களிற்பட்டது.
"இன்னும் இங்கதான் நிக்கறியோ?. -இலையை எறியாமலே திரும்பி உள்ளே வந்தார். சிவப்பி வாலை ஆட்டுவதாக நினைத்து முழு உடம்பையும் ஆட்டிக்கொண்டு சந்தோஷித்தது.
"ஏன் இலையைத் திருப்பிக்கொண்டு வர்றிங்க?." மனைவியின் கேள்விக்கு மணியத்தார் பதில் சொல் லாமல் முறைத்தார்.
'போய் ஒரு விறகுகட்டை கொண்டா."
"அது பாவம் நின்னுட்டுப் போகட்டும்.'
 

சாந்தன் 屬 33
"பெட்டைச் சவத்தை வளர்த்துப் போட்டு குட்டி களைக் காப்பது யார்?."
"தெருவில் நின்றதைப் பெட்டையென்றும் பாராமல் பிடித்துக்கொண்டு வந்தது நீங்கள்தானே?"
மணியத்தாருக்கு அடக்க முடியாமல் கோபம் கிளர்ந்தது. மனைவி ஒயவில்லை;
".பெட்டையென்றாலும் அதை நம்பித்தானே இருந்த நாங்கள் இவ்வளவு நாளும்.'
"அது அப்ப.இப்ப இந்தியன் ஆமி போட்டுது. இனி என்ன சவத்துக்கிதை?
- அவர் விறகு கட்டை தேடப் போனார். சிவப்பி இன்னமும் வாலை ஆட்டிக்கொண்டு அண்ணாந்து அடுப்படி வாசலைப் பார்த்தபடி நின்றது.
(ஈழநாதம்-1990)
ODD

Page 54
19 ]1[]6[{6}{9ے
அவனால்தான் நாணிந்த நிலைமைக்கு வர முடிந்த தென்பது எனக்குத் தெரியாததல்ல. நானுமொரு மனிதன் என்றாகி, நாலு பேருக்கு என்னையும்; எனக்கு நாலு பேரையும் தெரிய நேர்ந்ததும் அவனால்தான்.
என்னுடன் சேர்ந்தே பிறந்து வளர்ந்தவன். ஆனாலும், சின்ன வயதில் அம்மாவிடம் கேட்ட கதை களிலும், ஐயாவும் அப்புவும் வாங்கித் தந்த புத்தகங் களிலும், வரதலிங்க வாத்தியார் வியாசங்களுக்குப் போட்ட நன்று மிக நன்று'களிலும் என்னை முந்திக் கொண்டு வளர்ந்தவன் அவன்தான். இதெல்லாம் பிறகு தான் தெரிய வந்தது. அவன் என்னோடிருப்பதை நானறிய நேர்ந்ததே எனது பதின்வயதுகளின் பின்னடி யில்தான்.
தன்னை அவன் இனங்காட்டப் போய், அதனால் நான்தான் அடையாளம் கண்டேன். இருபது ஆண்டு கள் இப்படிப் போயின. இந்த இடையில்தான் எத்தனை நடந்தது.
ஆள், வலு கழியன். பல பேர் கண்களில் படாத தெல்லாம் அவன் கண்ணில்படும். அதையெல்லாம் நான் மற்றவர்களுக்குச் சொல்லப் போய்க் கண்டதென்னவோ, கண்டனந்தான் அதிகம்.

சாந்தன் 靈 35
ஆனால், காலம் பிறகு அவனைச் சரியென்று சொன்னது. எதிர்த்தவர்கள் இழந்தவர்கள் கூட இதை ஏற்க நேர்ந்தது.
இவற்றாலெல்லாம் நான் நம்பிக்கை கொண்டேன். பிறகும் அப்படியே தயங்காது அவனை அனுசரித்தேன்.
நிலைமைகள் மாற மாற, எதிர்பாராதது ஏதோ ଗtଶidଶ୦t lf) நடந்ததில் நான் எச்சரிக்கையானேன். அவனால், அவன் சங்காத்தத்தால் பிரச்சினை வரும் போல் தெரிந்தது. ஏன் வீண் சிக்கலை? கொஞ்ச நாளைக்கு ஆளை விட்டு மெல்ல ஒதுங்கியிருக்க முடிவெடுத்தேன். சரியில்லாத வேலைதான்; மனதுக்குக் கஷ்டந்தான். ஆனால் என்ன செய்ய?
இவ்வளவும் புரிந்தவனுக்கு இதைப் புரிந்துகொள் வதா கஷ்டம்?
எவ்வளவு பயமடா உனக்கு ' என்று சிரித்து 6ն`ւ 6ւն (3ւյT6ԾTT6ծr.
எப்படியிருந்தாலும் அவனால் வந்த அடையாளம் இருக்கவே செய்தது. அவனை விலக்கிவிட்டு அவன் தந்த அடையாளத்தை மட்டும் நான் அணிந்திருப்பது சரியில்லை என்றும் உறுத்தும் மனது.
பிரச்சினைக் காலங்களிலும் அவன் பல தடவை சந்தித்தான். பலவற்றைக் காட்டினான், சொன்னான். நான்தான் கண்டதாகவே காட்டிக்கொள்ளவில்லை. அவன் சொல்வதெல்லாம் சரி; சத்தியம் என்று புரிந்தது. ஆனால் அவனுக்காக என்னைத் தியாகம் பண்ணும் துணிவு என்னிடம் இருக்கவில்லை. இப்படியே அவனைக் கைவிடுவதால் நஷ்டம் எனக்கேயென்பதும் நல்லாய்த் தெரியும். நிலைமை கொஞ்சம் திருந்தட்டும், ஆளை எங்கும் விலக விடாமல் என்னுடனேயே

Page 55
96 醫 ஒரு பிடி மண்
இருக்க வைத்து வட்டியும் முதலுமாக இரட்டிப்பு வாங்கிவிட வேண்டும்.
திருந்தியது. ஆனால், அவனைத்தான் கனநாள் காணவில்லை. புறக்கணித்த கோபத்தால் போயிருப் பானோ? போயிருந்தால், எவ்வளவு பெரிய இழப்பு! எனக்கென்று பிறகு என்ன அடையாளம்? பலரைப் போல நானும் பழம்பெருமை பேசித்தான் போக்க வேண்டும், மீதி நாளை!
இல்லை. நல்ல காலம், எதிர்பாராமல் ஒருநாள் தேடி வந்தான், அலுவலகத்திற்கு- ஒரு மத்தியானம் அவன் எப்போது வருவான், எங்கே வருவான் என்பதெல்லாம் சொல்லமுடியாது. சித்தன் போக்கு, சிவம் போக்கு.
ஒன்று மட்டும் புரிந்தது-நான் அவனை விட்டாலும் அவன் என்னை விடமாட்டான்!
கல்லும் நாயுமாய் அவனும் அவகாசமும் கொஞ்ச நாள் ஒளித்து விளையாடினார்கள்.
இப்படி நெடுக விடக்கூடாதென்றிருந்தேன். இன்று பொழுதுபட, இப்படித்தான்- அலைச்சல் கள் அலுவல்கள் எல்லாம் முடித்து, ஆறுதலாக ஒரு புத்தகமும் கையுமாய்ச் திரிந்தபோது.
புத்தகத்தைக் கண்டுவிட்டோ என்னவோ, அவன் எங்கிருந்தென்றில்லாமல் வந்து சேர்ந்தான்.
இன்றைக்கு நான் ஆளை விடவில்லை.
(ஈழநாதம்- மே 1990)

உறுத்தல்
கந்தையரின் நாளாந்த செயற்பாடுகள் ஒரு ஒழுங்குக் குட்பட்டவை.
காலையில் நாலரை மணிக்கு வைரவர் கோயில் மணி கேட்கும்போது விழித்தாரென்றால், காலைக் கடன், வீட்டு வேலை, மாடு கன்று பார்த்துவிட்டுத் தோய்ந்து கோயிலுக்கும் போய் வந்து, பிறகு தோட்டம், சந்தை என்று மத்தியானமாகும். கடைக்குப் போய்விட்டு வரும் போதே அன்றைய பத்திரிகையையும் வாங்கி வந்து விடுவார். ஆனால் வாங்கியவுடனேயே மேலாகப் பார்த்து, வர வர நுனிப்புல் மேய்ந்து என்றெல்லாம் கிடையாது.
கடைக்காரர் கொடுத்தவுடனேயே பத்திரமாக மடித் துப் பைக்குள் போட்டுவிடுவார்; இடையில் எவர் காரர் கண்ணிலும் படாமல்,

Page 56
98 ஒரு பிடி மண்
வீட்டுக்கு வந்ததும் கூட, அதைப் பிரிக்க மாட்டார்; கடையில் வாங்கியவற்றை மனைவியிடம் கொடுத்து விட்டு, பேப்பரைப் பத்திரமாக மேசையில் வைத்து விடுவார்.
பிறகு, அந்த இந்தத் தொட்டாட்டு வேலை, குளிப்பு, சாப்பாடு என்று ஒன்றரை மணியாகும் . சாப்பிட்டு முடித்த கையோடு, வெளித்திண்ணையிலிருக் கும் சாய்மனைக் கதிரையில் துண்டைப் போட்டுக் கொண்டு பேப்பரும் மூக்குக் கண்ணாடியு மாய்ச் சரிந்து விடுவார்.
பேப்பர் விரிக்கும்போது, மொறு மொறென்றிருக்க வேண்டும். அவருக்கு கடுதாசி மனமும், மை வாசனை யும் மூக்கிலடிக்க வேண்டும். பத்திரமாக ஒன்றுவிடாமல்தலைப்புச் செய்தியிலிருந்து மரண அறிவித்தல் வரைபடித்துவிட்டு, பேப்பரை மடித்து மனைவியிடம் கொடுத்துவிட்டு, அப்படியே ஒரு அரை மணி நேரம்
9 U JIFT G Al FT FT
இந்த பேப்பர்ப் படலம் அவரது அன்றாட வாழ் வில் ஒரு முக்கிய இடத்தைப் பிடித்தது. ஒவ்வொரு செய்தியாகப் படித்து, ரசித்து, யோசித்து அது, அவருக்கு புது அனுபவங்கள் எல்லாம் தரும். أنك إنكليح ஒரு சுகானுபவம்.
இப்போ, இரண்டு கிழமையாக, அநேகமானோரின் நாளாந்த செயல்பாடுகள் எவ்வளவோ பாதிக்கப்பட்டும் கூட, கந்தையரின் இந்த அன்றாட வழக்கங்கள் என்றும் Lாதிக்கப்படவில்லை. பேப்பர்கூட, ஒடர்ப் பேப்பர், கதிர்வேலு தன் கடையில பேப்பர் விற்கத் தொடங்கிய நாளிலிருந்து நடைமுறையிலிருக்கிற ஒடர், 9Բ (15 நாளைக்கு எடுக்க முடியாது போனாலும்கூட அடுத்த நாள் வரை காத்திருக்கும் பேப்பர்.

சாந்தன் 醫 39
இன்றைக்கும். சாய்வு நாற்காலியைத் தட்டித் துண்டை விரித்து விட்டு, மூக்குக் கண்ணாடியைப் போட்டுக் கொண்டு பேப்பரும் கையுமாய்ச் சரிந்தார்.
இந்தப் பத்து நாளாக வருகிற சங்கடம் இப்போதும் வந்தது. எங்கும் குண்டு வீச்சும் கொலையுமாக திருகோணமலையில் ஜனங்கள் பட்டக்கஷ்டம், முல்லைத் தீவுக்கு வரப் பட்டபாடு, அங்கிருந்து யாழ்ப்பாணம் வருகை. --கந்தையருக்கு என்னவோ செய்தது.
இதெல்லாம் ரசனைக்குரிய செய்திகளல்ல. இந்த ஜனம் இவ்வளவு பாடுபடுகையில், இருக்க இடமும், உண்ண உணவு ம், உயிருக்கு உத்தரவாதமும் இல்லாமல் ஓடி வருகையில், அவர்கள் பற்றிய சேதி களை-அவர்கள் படும் அவலங்களைத்தான் இப்படி ஆறுதலாக ஓய்வாகக் கிடந்து படிப்பதே பிழை அது ஒரு பாபமாகக் கூடப்பட்டது. கடவுளே!
கந்தையர் திடுக்கிட்டு எழுந்தார். - என்ன?. என்னவும்?.' என்றாள், பக்கத்துக் கதிரையில் பாக்கு வெட்டிக் கொண்டிருந்த மனைவி.
*ஏதோ குத்துது..' என்றார், சுதாரித்துக்கொண்டு.
(ஈழநாதம்- 1990)
IOC

Page 57
தேத்தண்ணி ஒன்றும் வேண் டாம்' -சித்தப்பா திடமாகச் சொல்லிவிட்டார்
1.பனங்கட்டியோட என்றாலும்.' "ஒப்பாசாரம் என்ன, இந்தக் கஷ்ட காலத்தில்?"- கணேசனும் மறுத்துவிட்டான்.
வேணும்னாடா, பச்சைத் தண்ணி கொஞ்சம் கொண்டு வா, நல்ல பானைத் தண்ணி.' என்றார் சித்தப்பா, உரிமையுடன் மீண்டும்.
ஆனந்தம் உள்ளே போனார். அவர், அவனுக்கும் சித்தப்பாவுக்கும் பொதுவான நண்பர்-வெவ்வேறு விதங்களில்; கணேசனும் ஆனந்தனும் மூன்று வருஷங் களாகக் கொழும்பில் ஒரே போடிங்'கில் இருந்த பழக்கம்; சித்தப்பா ஆனந்தத்துக்கு அயலவர்.
 

சாந்தன் 醫 01
குண்டுக்கும் ஷெல்லுக்கும் பயந்து இடம் பெயர்ந்து சித்தப்பா வீட்டில் தங்கியிருக்கிற இந்த ஒரு மாதத்தில், "இன்றைக்காவது உன்னுடைய கூட்டாளியைப் பார்த் துட்டு வருவோம், வா.'- என்று சித்தப்பாதான் அவனை வற்புறுத்தி அழைத்து வந்திருக்கிறார். ஆனந்தத்தை வந்து பார்ப்பதில் அவனுக்கொன்றும் ஆட்சேபணை இல்லைதான், என்றாலும் இந்த அகதிக் கோலத்தில் இதெல்லாம் ஏன் என்றிருந்தது.
*ஆனந்தம் வீடு, அழகாய் அடக்கமாய் இருக்கிறது வீடு. அவனையறியாமல் பெருமூச்சு வந்தது.
-ஆனந்தம், நிறைய பூமரங்கள் வைத்திருக்கிறார். முன் வாசலடியில், முற்றத்தை மறைத்து நிழல் பரப்பும் மாமரம், அதன் கீழ் வேலியருகே பதுங்குங்குழி, நேற்றோ முந்தாநாளோ தான் வேலை முடிந்திருக்க வேண்டும்மேலே குவித்த செம்மண்ணிலும், இடையில் தலை நீட்டும் தென்னங்குற்றியின் வெட்டு விளிம்பிலும் இன்னும் ஈரப்பசை,
மாமரத்தின் இந்தப் பக்கம், வீட்டு முன் சுவரை ஒட்டி, உயர்ந்த ஒரு பீடத்தில் துளசிமாடம். அகன்ற அந்தச் சாடியில், அது என்ன கூட, துளசியோடு சேர்ந்து பச்சைப் பசேலென?-திருநீற்றுப்பச்சை!
எழுந்து போய், இலையைத் தொட்டு (ԼՔ 5Մ வேண்டும் போலக் குறுகுறுப்பு. எத்தனை நாள், எங்கெல்லாம் தேடிய மூலிகை! அலுவலகத்தில் அவனோடு கூட வேலை செய்த அரியராஜ், ஒவ்வொரு மாதமும் செல்வச் சந்நிதியில் அர்ச்சனை செய்வித்துக் கொண்டு வரும் பிரசாதப் பொட்டலத்தை அவிழ்க்க, முன்பே புல்லரிக்க வைக்கும் புனிதம். திருநீற்றோடு, சம்புடத்தில் வைத்தால் வீடெல்லாம் வீசும் வாசம். கணேசனுக்கு இப்போதும் மேலெல்லாம் சிலிர்த்தது.
S-7

Page 58
102 ஒரு பிடி மண்
ஒரு செடியேனும் உண்டாக்கிவிட வேண்டுமென்று எத்தனை நாள் தேடித் திரிந்திருக்கிறான்! வலு பவித் திரமாக வளர்க்க வேண்டிய செடி. என்றுதான் எல்லோரும் சொன்னார்கள்.
ஆனந்தம் வழி கண்டிருக்கிறார் துளசியோடு,
56.60 TLDT 35.
செம்பும் இரண்டு பேணியுமாக வந்தவரிடம் கேட் டான்:
*அது, திருநீற்றுப் பச்சைதானே?"
ஆமாம்!' என்றார் பெருமையாக, "அதைத் தேடி நான் உண்டாக்கப் பட்ட பாடு!” தண்ணிரை வார்த்து, சித்தப்பாவிடம் கொடுத்து விட்டு, அவன் முன்னால் வந்த ஆனந்தம் கேட்டார்:
'உனக்கு வேணுமா?. மூன்று, நாலு கன்று முளைச்சு நிக்குது.தருகிறேன்."
(ஈழநாதம், முரசொலி-1990)

ஒன்று 1963.
இருந்தாற்போலக் குளிர்காற்று முகத்திலடித்தது. ஒரு வெளியில் நுழைந்திருந்தார்கள். வெட்டவெளி, பென் னாம் பெரிது. சுற்றி வர, வானம் முழுவதும் வெள்ளிகள் மின்னின.
எங்காவது வீடோ, கடைகளோ தெரிவதாயில்லை. காரின் வெளிச்சம் மட்டும் இருளை வெட்டியபடி முன்னால் ஒடிக்கொண்டிருக்கிறது.
"இந்த இடம் எதுன்னு தெரியுமோ?." அவர்களுக்குத் தெரிந்திருக்கவில்லை. * கல்லுண்டாய்'- அப்பு சொன்னார். அந்தப் பெயர் கண்ணனுக்கு விசித்திரமாகப்பட்டது. ஒரு முறை சொல்லிப் பார்த்தான்.

Page 59
104 ஒரு பிடி மண்
வெளி போய்க்கொண்டே இருந்தது. காற்றும் வெள்ளிகளும் இடைக்கிடையே ஒடும் பற்றைகளும்.
எதிரில் ஒரு வண்டியில், தட்டின் அடியில் கட்டி யிருக்கிற அரிக்கன் லாம்பு ஆடஆட வருகிறது. வண்டி யில் நெருங்க கார் விளக்குப் பட்டு மாடுகளின் கண்கள் நீலமாய் மின்னுகின்றன.
கார், இடதுபுறம் ஒதுங்கி நின்று பெரிய விளக்கு களை நூர்த்து, வண்டிக்கு வழிவிட்டது. தடக் படக் கென்று சில்லுகள் மாட்டு வாடையும், புதுநெல்லின் சுனை மணமும் சேர்ந்து வீசின.
அப்போதுதான் கண்ணன் அதைக் கவனித்தான், *நெல்லு மூட்டைக்கு மேலே ஒரு ஆள் படுத்திருக்கு." அவன் கத்திய விதத்தில் தம்பியும் சின்னண்ணையும் நந்தனும் பின் கண்ணாடி வழியாக அவசரமாகப் பார்த்தார்கள்.
5606 300T IT குழப்படி பண்ணாதை." அப்பு சொன்னார்.
கார் ஒடத்தொடங்கியதும், மீண்டும் குளிர்காற்று உள்ளே வீசியது சுகமாயிருந்தது.
கடல் மணம் அடித்தது. "கடல் வருகிறது."- பொடியன்களுக்கு உற்சாகமா யிருந்தது.
அங்கே அது என்ன விளக்குகள், கடலிலே?.
so y
தூர, வலப்பக்கம் தெல்லுத்தெல்லாக ஒளிப்பொட்டு கள். 'மீன் பிடித்தோணிகள்.' எத்தனை என்று எண்ன ஆரம்பித்தார்கள்.
நேரே முன்னால் இன்னும் தொலைவில், இன்னும் வெளிச்சப்புள்ளிகள், கனக்க, வரிசையாக மின்னி மின்னி மறைவது மாதிரி.

சாந்தன் 圖 105
"அதுகளும் தோணிகளோ?'
"அதுதான் பட்டணம். பட்டணத்து வெளிச்சம் தெரியுது. எவ்வளவு வடிவா இருக்கு, பார்த்தீங்களா?" என்றார் அப்பு. "இன்னும் பத்து நிமிஷத்துல அங்கே C3 i yrru? -- Gorry, hy...”
இன்னும் பத்து நிமிஷந்தானா? கண்ணனுக்கு ஏமாற்றமாயிருந்தது. இப்படியே போய்க்கொண்டிருக்க வேண்டும் போலிருந்தது.
இரண்டு 1973
பார்த்தீங்களா?. சொன்னான்.?" என்றான் நிமலன் பெருமையாக,
ஒழுங்கை இலேசாக வளைகிற இடத்துடன் வளைவுகள் முடிந்தன. வெளி, விரிந்து கிடந்தது.
சோக்கான இடம்.” என்றான் கண்ணன், தன்னையறியாமல்,
வலது பக்கம் ஒரு மடம், பழையது. பொளிகல்லு, அதற்கெதிரில் ஒழுங்கையின் இடதுபுறம் அதே வயதில் ஒரு கேணி, இந்த வெயிலிலும் தண்ணிர்.
*எப்படி?.." என்றான் நிமிலன், மீண்டும். 'ஸ் ஸ்." என்று வியந்தார்கள், இவர்கள். "இவ்வளவு மரத்திலும் தேவையான ஸ்பெஸிமன் எடுக்கலாம்." என்றான் குகன், முன்னால் காட்டி,
சாம்பல் பூத்த தடித்த இலைகளும் நீலப்பூக்களுமாய் ஒழுங்கையின் இருபுறமும் வரிசையாய் கண்ணுக் கெட்டிய தூரம் வரை வேலி மாதிரி அடர்ந்திருந்தது எருக்கலை.

Page 60
106 體 ஒரு பிடி மண்
பதினோரு மணி வெயில் கொளுத்திக் கொண் டிருந்தது. காற்றிலும் வெக்கை வந்தது. எருக்கம்பால் மணத்துடன், அந்த வரிசைகளுக்கு அப்பாலும் இப்பாலுமாய் அரிவுவெட்டுக்கு ஆயத்தமாக வயல்கள் விரிந்து கிடந்தன.
சைக்கிள்களை பூவரசமரத்தடியில் விட்டு பூட்டி விட்டு ஒவ்வொரு செடியாகப் பார்க்கத் தொடங்கினார் கள். மெல்லக் கொப்புகளை விலக்கி, இலை இலையாய் அடிப்பாகங்களைத் துருவத் தொடங்கினார்கள்.
"பயோலஜி படிக்கிறதுக்கு இந்தக் கல்லுண்டாய் ஒரு பக்கா இடம் என்று சுந்தரராமன் மாஸ்டர் சொல்லி யிருக்கிறார்.'
'உண்மைதான். நீங்கள் மாரியிலை வந்து பார்க்க வேணும்.'-நிமலன் சொன்னான்.
**இந்த வயலெல்லாம் நிரம்பி வழியும். அப்ப, தவளை கூடச் செய்யலாம்.'
"இப்ப முதல்ல வண்ணாத்திப் பூச்சியை முடி, பிறகு தவளையைப் பார்கலாம்."-குகன் இடைவெட்டினான்.
"இப்ப, அராலிப் பாலத்தடியில் மின் இராதோ?”
"இருக்கும். ஆனா அது கலப்பு நீரெல்லோ. வளர்க்க இயலாது.'
போவோமா, அங்கே?'
"இதை முடிச்சிட்டு அங்கே போவோம்." குகன் Ga Guan Gaffib_6) தெரிந்த தென்னந்தோப்பை காட்டினான்.
'இளநி அடிக்கணும்னா அடிச்சிட்டு நேரே.ராலிப் பாலம், பிறகு உப்பளம். சரியா?”

சாந்தன் ■ 107
"மச்சான் ஒடியா. ஒடியா.' கண்ணன் கத்தினான். ஓடினார்கள்.
"இங்கை பார்.” மிக மெதுவாக ஒரு இலையை
விலக்கிக் காட்டினான்.
பொன்னுருண்டை போல ஒரு கூட்டுப்புழு. மூன்று 1988 'பயமாயிருக்கா?."-வசந்தபுரம் சந்து திரும்பும் போது கண்ணன் கேட்டான்.
சீ.இதென்ன? இவ்வளவும் கண்டாச்சு. இனி এ6 581 60 ***
-சீலன் உசாராகச் சொன்னான். 'நீங்கள் கூட வர்றிங்க-எவ்வளவு ஜனம் போய் به ه ه از رقم 15) I (6)
**இதுகள் இருக்குது” கண்ணன், இரண்டு சைக்கிள் களிலும் முன்னால் சொருகியிருந்த வெள்ளைக் கொடி களைக் காட்டிச் சிரித்தான், கசந்து,
மெல்ல மிதித்தார்கள், உதிலை இரண்டாவது இருக்கு." -சீலன் சொல்லும்போதே,
*ஒ.மணக் குது.” என்றான் கண்ணன். வீதிப் பரிசோதனை நடக்கிற இடம் இங்கிருந்தே தெரிந்தது. எதிர்ப்பக்கத்திலிருந்து வ ரு ப வர் க ள் சைக்கிளில் ஏறிக்கொண்டிருக்கிற அதே இடத்தருகில் இவர்களுக்கு முன்னால் போகிறவர்கள் இறங்கி உருட்டத் தொடங்கினார்கள். 'ஐஸி ஆயத்தமா?." சட்டைப் பைக் குள் பார்த்தபடி, "ஒ.' என்றான் கண்ணன்,

Page 61
108 靈 ஒரு பிடி மண்
வேகத்தைக் குறைத்து மெல்ல இறங்கி முன் பின் னாக-நெஞ்சு படபடக்க
தெருவின் அகலத்தில் முக்கால் வாசியைத் தடுத்துப் போட்டிருந்த பீப்பாய்களைத் தாண்டி. அடுத்து அதே மாதிரி எதிர்ப்பக்கம் கிடந்த மரத்தைத் தாண்டி. இந்த நடைபாதை ஒரு இழுபட்ட 'எஸ்'ஸ்ாக இருக்க.
வரிசையைத் தொடர்ந்து அவர்களை அணுகினார் 56.
வரிசை நகர்ந்தது- அடையாள அட்டையைக் கையில் எடுத்துக்கொண்ட போது, எத்தனை தரந்தான் என்றாலும் பயம் போகாது போலிருந்தது.
கூர் மீசையும், கூர் விழிகளுமாய் நின்ற சிப்பாய், கண்ணனின் சைக்கிள் கூடையைத் திறந்து வடிவாகப் பார்த்திான்.
இதை இனிக் கழற்றி வைத்து விடவேண்டும்.' என்று தீர்மானித்தான் கண்ணன்.
பாக்கற்றுகளைத் தட்டும் போது, கனகாசு கொண்டு போகாதீங்கோ." என்று யாரோ சொல்லி யிருந்தது நினைவுக்கு வந்தது.
*ப்போ’-சிப்பாய், கண்ணனை விட்டு சீலனிடம் போனான்.
கண்ணன், தன் முன்னே நின்ற மற்றவனிடம் போனான். நீட்டிய கையில் ஐ.சி.யை வைத்தான். மறித்து வைத்திருந்த ஏழெட்டு அப்பாவிகளை-சற்றுத்தள்ளிஇரண்டு சிப்பாய்கள் காவல் பார்த்தபடி நின்றார்கள். நிலத்தில் உட்கார்ந்திருந்த மனிதர்களில் ஒரு பொடியன் அறிமுகமானவன், மீன் வியாபாரி. அவனைப் பார்த்துத் தலையசைக்கக்கூட திராணி வராத தன்னில் வெறுப்பாயு மிருந்தது. என்னையும் மறிப்பான்களோ?

சந்தன் 鹽 109
"ஸ்ர்வீஸ்?." அட்டையைப் புரட்டிப் புரட்டிப் பார்த்துக் கொண்டிருந்தவனிடமிருந்து கேள்வி வந்தது.
*நோ. உச்சர்." இவனுடைய மீசையும் முதலாவது ஆளுடையதை போலவே இருக்கிறது. இன்னும் மு ர ட னாக த் தெரிகிறான்
சிப்பாய், கண்ணனை ஏறிட்டுப் பார்த்தான். பார்வை சந்தேகத்தில் தோய்ந்திருந்தது. கண்ணனுக்கு வேர்த்தது.
if Gig, ''
"கடவுளே." என்று மூச்சு விட்டான். அடையாள
அட்டையை வாங்கிப் பத்திரமாகச் சட்டைப் பையில் வைத்தபடி சைக்கிளை உருட்டலானான்.
பின்னால் சீலன் வருகிறானா?
புற்றீசல் போல இவர்கள் இப்படி மொய்த்திருக்கஇடையில் தாங்கள். நினைக்க மயிர்க்கூச்செறிந்தது. திரும்பி வரும்போது மீண்டும் ஒரு தடவை இவர்களை யெல்லாம் தாண்டவேண்டும். இந்தக் கல்லுண்டாய் இப்படியாகுமென்று.
"இரண்டாவது கண்டமும் தாண்டியாச்சு.'சீலனின் குரல் பின்னாலிருந்து வந்தது.
சைக்கிளில் ஏறுகிற இடம் வந்ததும் ஏறினார்கள்.
"அடுத்ததும் கூப்பிடும் தொலைதானாம். தென்னந் தோப்பு.'
'இன்னும் எத்தினை. நாலு இடமோ?" "போய் வருகிறதென்றால், குறைஞ்சது பத்து இடத்தில் செக்கிங்-இருபது கிலோ மீட்டர் கூட இல்லை."

Page 62
110 屬 ஒரு பிடி மண்
நான்கு 1989
'உங்கள் மோட்டார் சைக்கிள் தானா இப்பிடி ஓடுது?-' பின்னால் உட் கார்ந்திருந்த ரேகா LJ 51qவிட்டாள்.
'. காத்தாய்ப் பறக்கிற சைக்கிள், இப்ப காத்துப் போனது மாதிரி.”
"ரேகா, இந்த இடத்தில் இறங்கி நடந்து போகவும் நான் தயார், எங்கள் நிலத்தின் அழகுக்கும், அதன் செழிப்புக்கும். அதையெல்லாம் பயன்படுத்தாம விட்டி ருக்கிற எங்கள் முட்டாள்தனத்துக்கு-அல்லது அதைச் செய்ய முடியாத எங்கள் நிலைமைக்கு எல்லாம் இது நல்ல உதாரணம். இந்த இடத்தை எனக்கு எவ்வளவு பிடிக்கும் என்று உனக்குத் தெரியுமா." என்றான் கண்ணன்,
“உங்கள் விருப்பத்துக்கேத்தபடிதான் இப்ப ஒவ் வொரு நாளும் இந்தக் கல்லுண்டாய் வெளியாலை இரண்டு தரம் தாண்டக்கிடைச்சிருக்கே.'-அவள் சிரித்தாள், - " - நாங்கள் ம ன சா ர விரும்புகிறதெல்லாம் எப்படியோ ஒரு நாள் கிடைச்சே தீரும். எனக்கு அதிலை நம்பிக்கை இருக்கு."
கண் களில் குறும்பும் நாணமும் கலந்து ஒளிர்ந்தன.
ஐந்து 1990
"இந்தச் சைக்கிளைக் கண்டு பிடிச்சவனுக்கு ஒரு சிலை வைக்க வேணும்.” என்றார், சாலமன்,
"மெய்தான்." என்றார் மூர்த்தி.

சாந்தன் 屬 1
"-இதில்லாட்டி எங்கள் கதியென்ன, இப்ப? * முந்தி இப்பிடி ஒடியிருப்போமா, எப்பாலும்?
"பொறுங்கோ. ஏதோ இரையிற மாதிரிக் கிடக்கு' கண்ணன் இடைமறித்தான். 'சி, அது காத்து.' 'இல்லை. அதோ.' - அவன் காட்டிய திசையில், தூர சின்னதாக இரண்டு பொம்மர்கள் வழுகி வருவது தெரிகிறது.
இந்த இடத்தில் இவர்களுக்கு மேலே மந்தாரம் போட்டிருக்கிறது. ஆனால் பொம்மர்கள் தெரிகிற இடத்தில மெல்லிய நீலமான வானம் தெரிந்தது. வெயிலில் விமானங்கள் மினுங்கின.
'பலாவியிலையிருந்து வருகிறான். கோட்டைக்குத் தானே' என்று சாலமன் சொன்னார்.
"உன்னோட காது இதுகளுக்கு நல்லாய்ப் பழகி விட்டுது, இப்ப '
விமான இரைச்சல், இவர்களுக்கு முன்னால் போய்க் கொண்டிருந்தவர்களுக்கும் கேட்டு இருக்கவேண்டும். அவர்கள் சைக்கிள்களும் வேகம் குறைந்து குழம்புவது தெரிகிறது. எதிர்ப்பக்கமிருந்து வந்த சைக்கிள்காரர்கள் வேகத்தை அதிகரிக்கிறார்கள்.
சத்தம் இப்போது தெளிவாகவே கேட்கிறது. இரண்டல்ல, மூன்று.
"கோட்டைக்குத்தான்.'
s
'மாட்டொழுங்கையாலை திரும்புவமா?.
"எங்க மூன்று பேருக்கும் ஒரு குண்டை வீணாக்க மாட்டான். பயப்படாம வாரும்.'

Page 63
112 鱷 ஒரு பிடி மண்
'ஹெலி, கிலி வந்தா?. இந்தக் கல்லுண்டாயிலை ஒதுங்க ஒரு இடமில்லை."
சவாறதாத் தெரியல்லை அதுக்கிடையில நாம் தாண்டிவிடலாம், வாங்கோ."
விமானங்கள் கோட்டையைச் சுற்றி வட்டமிடுவது வடிவாகத் தெரிகிறது. * நாளாந்த நிகழ்ச்சியாய்ப் போட்டுது இது எங்களுக்கு."
"என்ன வாழ்க்கை இது? இப்படி ஒவ்வொரு நாளும்'- மூர்த்தி சலித்தார். ". இதுவும் ஒரு வாழ்க்கையா?”
'இதுதான் வாழ்க்கை, மெய்யான வாழ்க்கை. இது தான் வாழ்க்கை என்கிறதுக்கு இப்பதான் அர்த்த மிருக்கு." -கண்ணன் சொன்னான். தான்தான் இதைச் சொன்னேனா என்றிருந்தது.
"அதோ அதோ. போடப் போறான். போட்டு விட்டான்.' -மூர்த்தி பதறினார்.
குத்திப்பதித்த விமானம் ஒன்று மேலெழுவது தெரிகிறது. அது வட்டத்தைத் தொடரும்போது வட்ட மிட்டுக் கொண்டிருந்த இன்னொன்று கீழே சறுகி. குண்டுகள் வெடிக்கின்றன. இங்கேயே அதிர்கிறது . படம் பார்ப்பதுபோல இருக்கிறது. ஆனால் இது மெய், தினசரி வேலைக்குப் போய்வரும் போதெல்லாம் இப்படிக் காண எத்தனை பேருக்குக் கொடுத்து வைத்திருக்கிறது உலகில்?
"பாத்தீங்களா. இது என்ன ஜீவியம்?' என்றார் மூர்த்தி, மீண்டும்.
'மூர்த்தி, நீங்கள் கடவுளை நம்புறது உண்மை என்றால் அப்படி எல்லாம் பேசக்கூடாது.' என்றார் சாலமன் உரிமையுடனும் உறுதியுடனும்,

ਲਲੁ । 鹽 113
9, 2003
வசந்தபுரம் விளையாட்டு அரங்கிலிருந்து கரவொலி களும் உற்சாகக் கூச்சல்களும் கேட்கின்றன.
4 ஏஷியா 2003 போட்டிகள் நடக்கு தில்லே." அதுதான் தெருவிலும் இவ்வளவு ஜனம்" காரின் வேகத்தைக் குறைக்கவேண்டி இருந்தது. கூட்டத்தில் வெளிநாட்டவர்கள் கணிசமாகவே தெரிந்தார்கள்.
ஸ்டேடியத்திற்கு எதிர்ப்புறம், தெருவுக்குத் தெற்கே கடலேரி பரந்து கிடக்கிறது. இடது பக்கம் நாவாந் துறையிலும் வலது பக்கம் காக்கை தீவிலுமாக மீன் பிடித் துறைமுகங்கள், எதையோ பிடிக்கிற பெருவிரலும் சுண்டுவிரலும் போல கடலுக்குள் நீட்டிக் கொண் டிருப்பது தெரிகிறது.
"கொஞ்சம் ஆழமாக்கிவிட, இந்தக் கடல் எப்படி இருக்கு!”
கரையின் தூய வெண்மணற்பரப்பிடை, பூம்பாத்தி களும், பூவரச மரங்களின் கீழ் சிமேந்து இருக்கைகளும் மாறி மாறி.
'முந்தி இந்த இடத்தில் மூக்கைப் பிடிச்சுக் கொண்டு போற நாங்கள். நினைவிருக்கா?
*குப்பை கூழம் நாத்தம் எல்லாம் பழங்கதை." வீதி முன்னரைப்போல் மூன்று பங்கு அகலமாக மாறி யிருக்கிறது. வழுவழுவென்று சுத்தமாக தார்ப்பாய்ை விரித்தது போல் நீளமாக.
தெருத் தீவுகளிலும் கரையோர நடைபாதைகளிலும் புளியும், வாகையும், மலை வேம்பும் ஓங்கிக் கிளை பரப்பத் துடிக்கின்றன.

Page 64
114 獸 ஒரு பிடி மண்
காக்கை தீவுச் சந்நிதியில் கடைகள் களை கட்டியிருக் கின்றன. கடைத் தெருவின் பின்னால் ஒரு நவீன குடியிருப்பும் அதை அண்டி-ஆனால் இந்தப் பரபரப்பு களிலிருந்து விடுபட்டு தென்னந்தோப்பும், அடர்ந்து கிடக்கிறது, தோப்பிடையே இருந்து அம்மன் கோயிலில் மாலைப் பூசை மணியோசை கேட்கிறது.
வலப்புறம் வயல்களும், இடப்புறம் தென்னஞ் சோலைகளும், கூடுதல் அடர்த்தியும் அழகும், பசுமையும்.
கடைகளும் கட்டடங்களும் அடுத்த சந்தியைக் குறிக்கின்றன. முந்திய மாட்டொழுங்கை எவ்வளவு மாறிவிட்டது.
தெற்குப்பக்கம், தென்னந்தோப்பைச் சுற்றி வந்த கடல், இப்போது இங்கே தெருவிலிருந்து கூப்பிடு தொலைவுக்குள் வந்திருக்கிறது. படகுக்கழகம்" என்ற பெயரும் மண்டபத்தைத் தாண்டி அலங்காரப் படகு களும் தெரிகின்றன. அது தாண்டியதும் கடற்கரை மீண்டும் விரிகிறது. தெருவோடு கூடவே வருகிறது.
வண்ணக் குடைகளும், விற்பனை வண்டிகளும், காற்று வாங்க வந்தவர்களுமாய் அந்த இடம் கலகல வென்று.
இறங்கி வலப்பக்கம் நடந்தார்கள். ஒரு நீள இரட்டை வட மணிமாலை போலத் தெரு. கோயிலின் பின்புறம் சற்றுத் தள்ளியிருந்த மேட்டில் ஏறினார்கள். மேலே வந்ததும், மறுபுறம் ஏரி தெரிந்தது. இது நன்நீர் ஏரி குட்டிக் கடல்போல, நடுவில் பச்சைப் பசேலென ஒரு குட்டித்தீவு.
"பாலம்வரை போகுது ஏரி வைகையாத்துத் தண்ணி இப்ப கடலுக்குள்ள வீணா ஒடுறதில்லை." பாலம் இங்கிருந்து வடிவாகத் தெரிந்தது. தெற்கே,

சாந்தன் 隨 115
சற்றுத் தள்ளி, புது உப்பளம் கட்டடங்களும், செவ் வானம் பூத்திருந்த பின்னணியில் இவை நிழலுருக்
535 GITT LI J . .
ஏரிக் கரையில் நடந்தார்கள். அது ஒரு தெரு அகல மிருந்தது. ஆனால் நடைபாதை மட்டும். உடற்பயிற்சிக் காக விரை நடை நடப்பவர்கள் கல்லூரி மாணவர் குழுவொன்று சிரிப்பும் கும்மாளமுமாய் வருகிறது.
வெறுமையாயிருந்த சீமேந்து வாங்கொன்றில் போய் அமர்ந்தார்கள். நீர்ப்பரப்பில் மின் விளக்குகளின் ஒளிக் கோடுகள் நெளிகின்றன. தெருவில் போக்குவரத்து அமளியாக இருக்கிறது, என்றாலும் இந்த இடம் சற்றுத் தள்ளி,
காற்று இப்போது நல்லாகவே வீச ஆரம்பித்தது.
வானில் ஒவ்வொன்றாக வெள்ளிகள் சிமிட்டத் தொடங்கின.
(வெளிச்சம், ஐப்பசி- 1991)

Page 65
அம்மன் கோயில் குளத்துக்குள்ளிருந்த ஐந்து தலை நாகம், பள்ளிக்கூட விளையாட்டில் தடிக் கொய்யாப் பற்றைக்குள்ளிருந்த 'முள்ளுப் பன்றி'- இவையெல் லாம் இப்போது எங்கே போயினவோ, தெரியவில்லை. இவைகளுடன், செல்லர் வளவுப் பாண்கிணற்றடி நெல்லி மரத்தில் ஒரு முனியும் அந்த நாட்களில் இருந்தது. இந்தப் பாண் கிணற்று முனியிலும் பார்க்க, அதற்குள்ளிருந்த பாம்புகள் தான் எங்களை அதிகம் பயமுறுத்தியிருந்தன. பள்ளிக் கூடப் பிள்ளைகளை வாத்தியார், கோயிலுக்கும் விளையாட்டு இடத்துக்கும் என்று தங்களுடன் அழைத்துக்கொண்டு போகிற நேரங்களைத் தவிர்த்து, மற்ற நேரங்களில்-அதிலும்
 

Gissi góði 鹽 17
முக்கியமாக மத்தியானம் பன்னிரெண்டு மணிக்குப் பிறகு -மேலே சொன்ன இந்தப் பயங்கரங்களெல்லாம் உலாவ வெளிக்கிட்டுவிடுமென்றும் சின்னப் பிள்ளை களைத்தான் அவை தேடித் தி ரி யு மென் றும் அநேகமாக எங்களெல்லோருக்கும் வீடுகளில் சொல்லி யிருந்தார்கள். பள்ளிக்கூடம், மத்தியானம் ஒரு மணிக் குத்தான் அப்போது விடுவது வழக்கம் என்பதை நினைத்துப் பார்க்கையில், இந்தப் பிராணிகளெல்லாம் ஏன் பன்னிரெண்டு மணிக்கும் பிற்பட்ட நேரத்தைத் தமது வாலாய வேலையாகக் கொண்டிருந்தன என்று இப்போது புரிகிறது-என்றாலும், மூன்றாம் வகுப்புத் தாண்டிய கையிலிருந்தே இந்தப் புரிதல் மெல்ல மெல்ல ஆரம்பித்திருக்க வேண்டும்.
எப்படியிருந்தாலும் பெரிய விக்கினி- இரண்டு விக்கினிகள் எங்களோடு ஐந்தாம் வகுப்புவரை படித் தார்கள்: பெரிய விக்கினி என்ற விக்கினராசாவும், சின்ன விக்கினி என்ற விக்கினேசுவரனும் துணிச்சல் காரன்தான். மூன்றாம் வகுப்பில் படித்தபோதே, ஒரு நாள், அந்தப் பாண் கிணற்றுக்குள் நீர்மட்டத்தில், சுவர்க் கரையோடு நீந்திக் கொண்டு கிடந்த பெரிய பாம்பு ஒன்றை, நிலத்தில் நின்றே குறிதவறாமல் கல்லால் எறிந்து கொன்றான். அதிலிருந்து எங்களுக்குள் அவனை ஒரு விண்னனாக நாங்கள் ஒப்புக்கொண்டோம்.
எங்கள் பள்ளிக்கூடத்துப் பெயர், கல்விக் கந்தோரி லும், முன்சுவரில் வாசலுக்கு மேலும், "பாரதி வித்தியா சாலை, ஆனால் அந்தப் பெயரை ஊருக்குள் யாராவது சொல்லி, நான் கேட்டதில்லை.
'தம்பி எங்கே படிக்கிறாய்? என்றால், "பொன்னையா பள்ளிக்கூடத்திலே." என்றுதான் மறுமொழி வரும். பொன்னையர்தான் பாரதி வித்தியா
S-8

Page 66
8 獸 ஒரு பிடி மண்
சாலையை நிறுவியவர்; எப்போதோ செத்துப் போய் விட்டவர். எங்கள் ஊர்க்காரர்கள் நன்றி மறவாதவர் களாய் இருந்தார்கள்.
இரண்டு இராசலிங்கம் வாத்தியார் சிரித்ததை, அவரிடம் படித்த ஐந்து வருட காலத்திலும், ஒரேயொரு முறை தான் பார்த்ததாக ஞாபகமிருக்கிறது. இதைச் சாதித் தவன் கனகநாதன்.
இராசலிங்க வாத்தியார் நாலாம் வகுப்பில் எங்க ளுக்கு இங்கிலீஷ் எடுத்தார். ஸ்பெல்லிங் முடிந்து, புத்தகங்கள் வாசிக்கிற கட்டம், வாத்தியார், எங்களின் உச்சரிப்பில் அதிக அக்கறை காட்டினார். ஒரு நாள் சொல்லித் தந்த மூன்று வசனங்கள்:
I am a o ον I am a girl This is my book -இதை ஒவ்வொரு வ ரா க எழுந்து சொல்ல வேண்டும். கலவன்" பாடசாலையில் கலவன் வகுப்பு. ஆதலால், ஆட்களுக்கேற்றபடி, Boyu quid Girlgọyuh முதல் இரண்டு வசனங்களிலும் இடம் மாறும். கனகநாதனின் முறை வந்தபோது, அவன் இவ்வசனங் களை, லீலாவதியைப் பார்த்துச் சொல்ல வேண்டி யிருந்தது. கனகநாதன் வண்டுறுட்டி போலக் கட்டைக் கறுத்தப் பொடியன் லீலாவதி நெடுத்த பெரிய பட்டை அவன் பயப்படாமல் எழுந்து நின்று உசாராகச் சொன்னான் :
is I am a boys
You are my girl.'
-இதற்கு மேல் அவனைச் சொல்ல விடவில்லை. வாத்தியார், போதும். இருடா மடையா!' என்றவர்,

சாந்தன் 鹽 13
விழுந்து விழுந்து சிரிக்கத் தொடங்கினார். ஒரு சின்னப் பிழை விட்டால் கூட, கையிலுள்ள கொய்யாத்தடியால் வெளுத்து வாங்குகிற இராசலிங்க வாத்தியார் சிரிப்பதைக் கண்ட மகிழ்ச்சியிலேயே அன்று, எங்களில் பலர், பகடி என்னவென்று விளங்காவிட்டாலும் கூட, சேர் ந் து சிரித்தோம் என்று நினைக்கிறேன்.
பள்ளிக்கூடத்தில், இராசலிங்க வாத்தியார் இரண் டாவது பெரியவர். முதல் வாத்தியாருக்கு அடுத்தவராக இருந்தார்.
மூன்று
என்றாலும் கூட, இராசலிங்க வாத்தியாரின் அடிக் கொடுமை தாங்காமல் நாங்களெல்லோரும் ஒருநாள் கூடி ஆலோசிக்க நேர்ந்தது, சிங்கமும் முயலும் கதையில் காட்டு மிருகங்கள் கூடி ஆலோசித்தது போல. ஆனால், நாங்கள் பெட்டைகளைச் சேர்க்கவில்லை. அவர் களை நம்பவும் முடியாது. அதோடு இராசலிங்க வாத்தியார் பெட்டைகளுக்குக் கை நீட்டுவதுமில்லை.
பெரிய விக்கினிதான் ஒரு யோசனை சொன்னான்: அவருக்கு ஒரு நல்ல வேலை செய்யலாம்.'
if (o)gFT6bGGD6õT IT?”
கிட்ட வாங்கோ..?
தலைகளை நீட்டினோம்.
66
*ஒரு செய்வினை செய்யலாம்."
செய்வினையோ. எங்களுக்குப் பயம் முளைத்தது.
பயப்படாதீங்கோடா. என்ற பெரிய விக்கினி எல்லாம் விளக்கமாகச் சொன்னான்.

Page 67
120 獸 ஒரு பிடி மண்
வாத்தியாருடைய காலடி மணலைக் கவனமாக அள்ளுவதுதான் முக்கியமான வேலை. அதை அள்ளி மண் சட்டியொன்றில் போட்டு வறுத்து, அந்த மணலைப் பாண் கிணறொன்றில் கொட்டிவிடவேண்டும். அவ்வளவுதான்! அடுத்த நாள் ஆள் பள்ளிக்கு வர இயலாது கால் இரண்டு பாதமும் தோல் வெடிச்சுப் புண் ணாய்ப் போகும்!
மணலை இரகசியமாக வறுத்துக்கொண்டு வருவது தன்னால் முடியுமென்று பெரிய விக்கினி சொன்னான். பாண் கிணறு தேடத் தேவையில்லை. அது எங்களரு dG36)Guj இருக்கிறது. தீர்மானம் ஏ க ம ன த க நிறைவேறியது.
எங்களுடைய வகுப்பு அப்போது நாலு பள்ளி கூட்டுகிற முறைதான், செவ்வாய்க்கிழமை. பொட்டை கள் தும்புக் கட்டோடு வகுப்புகளெல்லாம் கூட்டுவார் கள். பொடியன், விளக்குமாறும் கடகமுமாய் முற்றம், பக்கம், கோடி எல்லாம் கூட்டுவோம். பெரிய விக்கினியின் திட்டத்தின் பிறகு, அடுத்த செவ்வாய்க்குக் காத்திருந்தோம்.
வழமைக்கு மாறாக, முற்றத்திலிருந்து கோடிவரை போகாமல் கோடி, பக்கமெல்லாம் முடித்துவிட்டு, பிறகு வாசலடிக்கு வந்தோம். இராசலிங்க வாத்தியார் வருகிற நேரத்திற்குக் கொஞ்சம் முன்னால் முற்றம் கூட்டப்பட வேண்டும். பெரிய விக்கினி, ஒரு பெரிய கடுதாசித் துண்டைத் தன் கழுசான் பொக் கற்றுக்குள் ஆயத்தமாய் வைத்திருந்தான்.
நாங்கள் கூட்டிக் குவிக்கவும், வாத்தியார் பள்ளிக் கேற்றடியில் சைக்கிளில்ல் இறங்கவும் சரியாயிருந்தது. பின்னி நெளிந்திருந்த சைக்கிள் சில்லு அடையாளத் தினருகில் செருப்புப் போடாத வாத்தியாரின் காலடிகள் பளிச்சென்று பதிந்திருந்தன. பெரிய விக்கினி, ஒன்றுக்கு

சாந்தன் 屬 121
இரண்டு பாதமாக அள்ளிக்கொண்டான். அள்ளின அடையாளம் தெரியாமல் இருக்க, தேவராயன் விளக்கு மாற்றை அதன்மேல் போட்டு இழுத்தபடி போனான்.
மத்தியானம் பள்ளி விட்டதும் எல்லாப் பொடி பெட்டைகளும் கலையுமட்டும் பேய்க்காட்டிவிட்டு, பெரிய விக்கினி மண் சரை வைத்திருந்த இடத்திற்கு
போச்சடா!' என்று பெரிய விக்கினி கத்தினான்.
மதில் ஒட்டைக்குள் மறைவாய் அவன் ஒளித்து வைத்திருந்த கரையில், கடுதாசி மட்டும் கிழிந்து ஒட்டை யாகிக் கீழே கிடந்தது.
F3of Last 35 T5 lb....''
*மூதேசி!.'
வயிற்றெரிச்சலுடன் மீண்டும் அடுத்த செவ்வாயை எதிர்பார்க்கலானோம்.
56ចំg
முதல் வாத்தியாருடைய அறை எப்போதும் பூட்டித் தானிருக்கும். அவர் அந்த அறைக்குள்ளிருப்பது வழக்க மில்லை. மண்டபத்து நடுவில் மேசையைப் போட்டு விட்டு, எல்லா வகுப்புகளும்-அல்லது எல்லா வகுப்பு களுக்கும்-கண்ணில் படுகிற மாதிரி இருந்துகொள்வார். அறைக்குள், ஒரு அலமாரி, கால் உடைந்த பெரிய மேசை ஒன்று ஒன்றின் மேலொன்றாய்க் கொஞ்ச வாங்குகள் இப்படிச் சில சாமான்களிருந்தன. மேசை யின் மேல் ஒரு பெரிய சரஸ்வதி படமும் இலேசாக் மங்கிப்போன ஒரு பூகோள உருண்டையும், அலமாரியின் மேல், தேசப்படமொன்றும், உலகப் படமொன்றும் சுருட்டப்பட்டுக் கிடக்கும். இவைத் தவிர, இன்னொரு கிழிந்துபோன இலங்கைப் படம், சுவரில் தொங்கிக்

Page 68
22 ஒரு பிடி மண்
கொண்டு கிடந்தது. அலமாரிக்குள், சோக்கட்டிப் பெட்டிகள், டாப்பு இப்படி.
இவ்வளவற்றையும் பார்க்கிற சந்தர்ப்பம், அந்தஅறையைத் துப்புரவு செய்யச் சொல்லி எங்களில் கொஞ்சம் பேரை முதல் வாத்தியார் பிடித்து விட்டபோது கிடைத்தது.
பின்பக்கம் போனால், கக்கூஸ். ஒரு பக்கம் பெடியன், மற்றப்பக்கம் பெட்டைகள், பள்ளிக்கூடத் தின் பாதி தாண்ட முதலே, தன் இருப்பை உணர்த்திக் கொள்ள சக்தி வாய்ந்த கக்கூஸ் அது.
அதற்கு முன்னால், பெரிய பெரிய இலைகளை விரித்தபடி பரந்து நிற்கும் ஈரப்பலா மரம். ஒவ்வொரு நாளும் காலையில் பள்ளிக்குப் போய், புத்தகங்களை வாங்கி வைத்த கையோடு முதல் காரியமாய் இந்த ஈரப்பலாவடிக்கு ஓடி வந்து, விழுந்து கிடக்கிற பழுத்த இலைகளைப் பொறுக்கிக் காம்பை முறிப்போம். பென்சில் எழுத்தை அழிரப்பர் அழிப்பதுபோல, இந்த இலைக்காம்பு சிலேட்டை அழிக்கப் பெரிதும் உதவியா யிருந்ததை, யாரோ ஒரு முன்னோன் எங்களுக்காகக் கண்டுபிடித்து வைத்திருந்தான்.
ஈரப்பலாவில் இல்லாத நாட்களில், கிணற்றடிப் பள்ளத்து இடுக்கில் சணைத்துக் கொழுத்திருந்த, "தண்ணிப் புல்லு எங்களுக்குப் பயன்பட்டது. இவ் விரண்டும் இருந்தும்கூட, அதிக சிறுவர்களின் சிலேட்டில் எச்சில் மணத்தது.
இந்த இலைக்காம்பு பொறுக்குகிற சண்டையால்,
மூன்றாம் வகுப்புக் கடைசித் தவணையில் ஒரு நாள், நான் இராசலிங்க வாத்தியாரிடம் அடி வாங்கினேன்.

சாந்தன் 鹽 123
ஐந்து
எங்கள் வீட்டிலிருந்து பள்ளிக்குப் போவதென்றால்
ரோட்டுக்குப் போகத் தேவையில்லை. ஒழுங்கையா
லேயே போய்விடலாம். மழைக் காலங்களில் வெள்ளம் ஓடி, வாரடிக்கிற வெள்ளை மணல் ஒழுங்கை, வளவு
களும், வடலிகளும் பனங்காணிகளும் பற்றைகளும் மாறி
மாறி வரும். பற்றைகளுக்குள், ஒன்றில் காண்டை நிற்கும். அல்லது கொய்யா நிற்கும், அல்லது இரண்டுமே நிற்கும். உள்ளே நுழைந்தால், தின்னுவதற்கு எப்போதும் ஏதாவது தரக்கூடிய பற்றைகள், கொய்யாப் பழமோ காண்டைப் பழமோ இல்லாவிட்டால் கொய்யாக் குருத்து அல்லது காண்டைக்காய் இருக்கும். காண்டை நித்திய கல்யாணி, காய் இல்லாத காலமே கிடையாது.
இந்தக் கொய்யாவுக்கும், காண்டைக்கும் அப்பால்
தேவராயன் இன்னொரு சாமானை எங்களுக்குக்
காட்டித் தந்தான். பாக்குவெட்டிச் செடியின் குருத்தைப் பனங்குருத்தோடு சேர்த்துச் சப்பினால், வெற்றிலை மாதிரி வாய் சிவக்குமாம். இந்த ஆசையில் பாக்கு வெட்டிக் குருத்து கிள்ளப்போன கனகநாதனுக்கு ஒரு நாள் பிசுங்கான் ஒடு வெட்டிப் பெருகிய இரத்தம், இன்னமும் நினைவில் சிவப்பாயிருக்கிறது.
கனகநாதன் ஏழெட்டு நாள் பள்ளிக்குக் கள்ளம் போட்டது பற்றிய விசாரணை, தேவராயன் இராசலிங்க வாத்தியாரிடம் பிரப்பம்பழம் தின்றதில் முடிவடைந்தது.
{{ا} وہ لڑکے
காலையில் ஒரு கும்பல் சேரும். என்னோடும் எனக்குக் கீழும் படிக்கிற அயலட்டைக் குஞ்சு குரும னெல்லாம் ஒன்றாகப் போவோம். இந்தப் பட்டாளத்
திற்கு நான் பல நாட்கள் தலைவனாயிருந்திருக்கிறேன்.

Page 69
124 鬣 ஒரு பிடி மண்
நான், கனகநாதன், அவன் தம்பி தருமநாதன், தேவராயன், சிவலிங்கம், ராஜேஸ்வரி, செல்வராணி இப்படி.
போகப் போகப் பட்டாளம் பெருகும். படலைக்குப் படலை கூப்பிடுவதும் உண்டு.
இந்தத் தினசரிப் பயணத்தில் முக்கிய இடம் வகித்தது கதிரவேலர் வீட்டு நாய். சரியான கடியன். ஒவ்வொரு நாளும் எங்களைத் துரத்தி அதற்கு அலுப்ப தில்லை. துரத்துவதென்றால், வேலிக்கு அந்தப் பக்கம் தான். கதிரவேலர் நல்ல மனுஷன்; புத்திக்காரனும், பெடியன் பள்ளிக்குப் போகிற நேரத்தில் தன்னுடைய வீமன் சொறி தேய்க்கும் என்று உணர்ந்தவர். நாயை உள்ளேவிட்டு, படலையைப் பூட்டித்தான் வைப்பார். வேலியின் கீழ் வரிச்சு நல்ல பதிவு. பொட்டுகளும் இல்லை. எனவே நாய்ப்பிள்ளை வெளியே வரமுடி யாமல், நாங்கள் ஒழுங்கையால் நடக்கும் போதுதான் வளவுக்குள் குரைத்தபடி வேலி நீளம் ஓடிவரும். எப்படி என்றாலும், வெளியாலை வந்துதண்டா ?" என்ற பயம் எங்களுக்கு நித்திய கண்டமாயிருந்தது.
நாய்க்குப் பயந்து நாங்கள் பேச்சை நிறுத்தி நடந் தாலும், எங்களோடு வருகிற பெட்டைகளின் "தையல் பெட்டிகள்', 'கிலுக்குக் கிலுக்கென்று கிலுங்கி எங்கள் வரவை நாய்க்கு அறிவிக்கும். இந்தத் தையல்பெட்டி இல்லாத பெட்டையை நான் அப்போது கண்டதில்லை. ஒவ்வொருத்தியும் மூடி நெளிந்த, கிறுக்குப்பட்ட ரொஃபிப் பெட்டி ஒன்று வைத்திருப்பாள். அது இல்லாதவளிடம் வெறும் பவுடர் ரின்னாவது இருக்கும். இதற்குள், நூல்பந்து, அதில் குத்தப்பட்ட ஒன்றிரண்டு தையல் ஊசி, கிளிப்பர்'கள், ஆட்டுப்பிழுக்கைப் பென்சில் துண்டுகள், அழிரப்பர், காப்புகள், முட்டை ஊசிகள், தடிதண்டுகள், காண்டைப் பழங்கள் என்று என்னென்னவோ போட்டு வைத்திருப்பார்கள்.

சாங் தன் 屬 25
இவர்களுக்கு, தையல்பாடம் என்று தனியாக ஒரு பாடமிருந்தது. தையலம்மா உச்சர் ஒரு கதிரையிலிருந்து ஏதோ தைக்க, இதுகளும் சுத்தி நின்று குத்திப்பிடுங்குகிற வேலைகளில், நாங்கள், பெடியன் பன்ன வேலை" செய்வோம். தையலம்மாவுக்குப் பெயரே அதுதானோ வென்று, கனகாலம் ஐமிச்சப்பட்டேன். ஆனால், பிறகு தையலக்கா' என்று இன்னொரு டீச்சர் (கொஞ்சம் வயது குறைவு) வந்ததும் என் ஐயம் தீர்ந்தது.
இரண்டு மூன்று வருடம் படித்த பன்ன வேலையில், உருப்படியாக ஒரு பெட்டிகூட நான் இழைக்கவில்லை. *மூலை திருப்புகிற வேலை, எனக்குப் பிடிபடாமலே இருந்தது. இந்தச் சிக்கல் பெரிய விக்கினிக்கும் இருந்தது, எனக்குத் தெரியும். மூன்றாம் வகுப்புக் கடைசியில், வகுப்பேற்றச் சோதனைக்குப் பெரிய விக்கினி மூலை திருப்ப முடியாமல், கனகபூசணி-எப்போதும் ஒரு பெரிய சாம்பல் பூசணிக்காயை நினைவுபடுத்துகிறவள்-கனக நாதனின் தமக்கை, எங்களுக்கு ஒரு வகுப்பு மேலே படித்தவளிடம் இரகசியமாகக் கொடுத்து மூலை திருப்பிக் காட்டத் தெண்டித்த போது, அநியாயமாய் இராசலிங்க வாத்தியாரிடம் அகப்பட்டுக் கொண்டான். சவிள் அடி விழுந்தது.
6J (լք
காலையில், ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வகுப்புக்குச் சங் கீ த பம் முதற்பாடமாயிருக்கும்.
தன்னைச் சூழ எல்லோரையும் வட்டமாக நிற்க வைத்து விட்டு, ஐயர் வாத்தியார், "சரிகமபத நிச சொல்லிக் கொடுப்பார். பிந்தி வருகிற வேளைகளில், பள்ளிக்குக் கால் கட்டை தள்ளியிருக்கிற மதவடியில் வரும்போது இந்தச் சங்கீதம் காதில் விழும். நேரம் பிந்தியதை ஞாபகப்படுத்தி, இராசலிங்கம் வாத்தியாரின் கொய்யாத்

Page 70
126 獸 ஒரு பிடி மண்
51.6) L நினைவுக்குக் கொண்டுவருவதால், இந்த 'சரிகமபதநீச' இன்றும்கூட-சில வேளைகளில் எனக்கு
ஒரு பயத்தையும், பதட்டத்தையும் தருகிறது.
கனகநாதன், இந்த விஷயத்தில் பல நாட்கள் இராச லிங்க வாத்தியாரின் வாடிக்கையாளனாக இருந்தான்.
தனது ஞானத்தை உணர்ந்தோ, அல்லது தன் சீடப் பிள்ளைகளின் ஞானத்தை அறிந்தோ, ஐயர் வாத்தியார், இந்த சங்கீதப் பாடத்தை, நல்ல காலமாக சரிகமபத நிச வுக்கு மேலே போகவிடவில்லை. நான் கூட, இரண்டு வருஷம் அவரிடம் இந்தக் கலையைப் பயின்றேன், பள்ளிக்கு நேரத்துக்குப்போன நாட்களில்,
சரி கமபதநீச வில், நிசவை இழுத்து இழுத்து
நி, சா. வாக அழுத்தி, வாத்தியாரைப் பார்த்தபடி ரொம்ப உற்சாகமாக நாங்கள் பாடுவோம். .
எட்டு
அணில், ஆடு, இலை, ஈ, உறி, ஊசி, எலி, ஏணி,
ஐயா, ஒட்டகம், ஒலை, ஒளவை இதுகளெல்லாம் எப்படி இன்னமும் சிலையிலெழுத்தாக இருக்கின்றன?
a
அ, ஆ படிப்பித்த தையலம்மாவின் முகமும், படம் என்ற பெயரில் புத்தகத்தில் கறுப்புக் கறுப்பாக அச்சு மை அப்பிக்கிடந்த திட்டுக்களும் கூட, இன்னமும் இந்த அணில், ஆட்டுடனும்; கொக்கு, சங்கு, பூச்சி, குஞ்சுட னும் நினைவுக்கு வருகின்றன. இதற்குப் பிறகு நெஞ்சில் (!p ഞണ്ടു 'ILട്ടു), "கரடி காட்டு மிருகம். தான். 3. கண்ணைத் தோண்டும் பொல்லாத மிருகம்" என்று கரடி புராணம் முடிகிறபோது, இராசலிங்க வாத்தியார் திரும்பவும் நினைவுக்கு வருகிறார். -
கந்தசாமி நல்ல சிறுவன்’ என்று தொடங்கி, பிள்ளைகளே, நீங்களும் கந்தசாமியைப் போல நல்ல

சாந்தன் 鹽 27
பிள்ளைகளாயிருக்க வேண்டும்" என்று முடிகிற
பாடத்தைப் படிப்பித்தவர், முதல் வாத்தியார். அவர் படிப்பதற்கென்றே எழுதப்பட்டது போல அமைந் திருந்த பாடம், அது 'பிள்ளையஸ் , பெடியள்." என்று ஒவ்வொருதரமும் எங்களை அழைக்கும் முதல் வாத்தியார், ஒரு தடவை அப்படி அழைத்தது இன்னமும் இந்தக் கந்தசாமியைப் போல் நினைவில் நிற்கிறது. அந்த அழைப்புடன் கந்தசாமியும் முதல் வாத்தியாரும் மட்டுமில்லை; இராசலிங்க வாத்தியாரும் பெரிய விக்கினி யும்கூட நினைவுக்கு வருகிறார்கள். எல்லோருள்ளும், பெரிய விக்கினிதான், பெரிதாய் நினைவுக்கு வருகிறான்.
s
பிள்ளையஸ். என்று முதல் வாத்தியார் எங்கள் வகுப்புக்கு வந்து எங்களைக் கூப்பிட்டார். அது அவர் பாட வேளை அல்ல. ஒரு வியாழக்கிழமை, நாங்கள் மண் அள்ளிய செவ்வாயை அடுத்து வந்த வியாழன், முதலாம் பாடம் தேவாரம் முடிந்து, "அர ஹர மஹாதேவா சொல்லி விட்டு, வேரூ இங்லிஷ்'ஐயும் இராசலிங்க வாத்தியாரை யும் எதிர்பார்த்து நெஞ்சு படபடக்க, மூத்திரம் முட்ட, அந்தரித்துக் கொண்டிருந்த வேளை,
முதல் வாத்தியார் கூப்பிட்டதும், நிமிர்ந்து பார்த்தோம். இராசலிங்க வாத்தியாருக்குப் பதில் முதல் வாத்தியாரே இங்லிஷ் எடுப்பதில் எங்களுக்கு ரொம்ப விருப்பந்தான். ஆனால் அவர் பாடமெடுக்க வரவில்லை. @g TôTar fi
1. சத்தம் போடாமை இருந்து படியுங்கோ. இன்றைக்கு இராசலிங்க வாத்தியார் வரமாட்டார்."
எங்களுக்கு அவர் சொன்னது மண்டையில் உறைக்கும் முன்னரே, முதல் வாத்தியார் மிச்சத்தையும் சொன்னார், "நேற்றுப் பின்னேரம் அவரைக் கார் தட்டிப்
போட்டுது. தோட்டவெளி ரோட்டிலை 606

Page 71
*28 體 ஒரு பிடி மண்
போகையில் அவரை யாரோ காரில் அடிச்சுக் கையை முறிச்சுப்போட்டான்.வாத்தியாரை இப்ப ஆஸ்பத்திரியில் வைச்சிருக்காங்க."
முதல் வாத்தியார் சொல்லி முடிக்கும் முன்னரே, யாரோ விக்கி விக்கி அழத் தொடங்கிய சத்தம் கேட்டுத் திரும்பிப் பார்த்தோம்.
(மல்லிகை"-நவம்பர் 476)
[III]

|VN
2令
இடையில் ஒரு இருபது வருஷம்
அந்த அணில் செத்துப் போய்த் தூக்கில் தொங்கிக் கொண்டிருந்தது. வெ ள்  ைள யும் வயலற்றுமாகப் பூச்சுமந்து வளந்து சரிந்து வகுப்புத் தாழ்வாரத்திற்கே வந்திருந்த சீர்மைக் கிழுவங் கொப்புகளில் ஒன்றில்
இந்தத் தற்கொலை நிகழ்ந்திருந்தது.
வகுப்பைச் சுற்றி அரைச்சுவர்-நெஞ்சளவு உயரம், மேலே திறந்தபடி, உள்ளே நுழைந்ததும் கண்ணில் படுகிற மாதிரி-வகுப்பில் எங்கிருந்து பார்த்தாலும் தெரியக்கூடிய மாதிரி-அந்த அணில் தொங்கிக்
கொண்டு காற்றில் இலேசாக அசைந்தது.
பெரிய அணில், வெண்மையான வயிற்றுப் பாகம்
வகுப்பைப் பார்த்துத் திரும்பியிருக்க, குறண்டின் பின்னங்கால்களிரண்டிலும் அது ஆண் என்பதற்குப் பெருத்த சாட்சியம் தெரிந்தது. புசு புசு வென் று

Page 72
130 獸 ஒரு பிடி மண்
சணைத்துத் தொங்கிய வாலில் கட்டியிருந்த கடுதாசித் துண்டில் பெரிதாக மையினாவில் எழுதியிருந்தது. காதலிலே தோல்வியுற்றான் காளையொருவன்" என்று.
வழக்கம்போல அன்றைக்கும் பெட்டைகள்தான் லாப்பிலிருந்து முதலில் திரும்பி வகுப்புக்கு வந்தார்கள். பிறகு பொடியன்கள்.
எல்லாருக்கும் பின்னால்- கடைசியில்- நல்ல பிள்ளைகளாக வந்துகொண்டிருந்த எ ன க் கும், ஐயருக்கும் வகுப்பில் வெடித்த அமளிகள் வடிவாகக் கேட்டன.
ஆனால், கெட்டகாலம், அடுத்த வகுப்பறையில் பிரின்சிபாலுடைய பாடவேளையாய் அது இருந்தது.
இரண்டு
விசாரணை தொடங்கிய போது, வழமைபோல நியாயமாகவே சந்தேகம் எங்கள் பக்கம் திரும்பியது. நான் முதல் எதிரியாகவும், ஐயர் இரண்டாவது எதிரியாகவும் ஆனோம். பாட்னி சுப்பரின் சாட்சியம் எங்களுக்கு மிகப் பாதகமாய் அமைய நேர்ந்தது. ஆய்வுகூட வேலைக்காக, பாட நடுவில், எபீஸல் ஃபினியா-மயிற்கொன்றைபூத் தேட எங்களை அனுப்பி யதை அவர் சொன்னார்.
a
இந்த அணில் கூட கொன்றையடியில்தான் செத்துக் கிடந்தது.
மூன்று
ஜி. ஸி. ஈ. சாதாரண வகுப்பிலும்கூட, எங்களுக்கு
ஒழுங்கான ஆய்வுகூடப் பயிற்சி இருந்தது. பிரின்சிபாலின் மகன் எங்கள் வகுப்பிலிருந்தான் என்பதை இதற்குக்

சாந்தன் 鑿 131
காரணமாக அப்போது சொன்னார்கள். எப்படியோ விஞ்ஞானப் பாடங்கள் நான்கிலும், ஒவ்வொன்றுக்கும் கிழமையில் ஒருதரம், டபிள் பீரியட் வேளைகளில், ஆய்வுகூட வேலை இருக்கவே இருந்தது.
சுந்தரராமன் பிராணியியல் எடுத்தார். ஷேவ் எடுத்த
தாடைகள் பச்சையாய்த் தெரியும். நல்ல சிவலை. என்றைக்கும் எங்களால் மறைக் கப்பட முடியாத வலு. அருமையான மனுசன். இந்தியாவில் சொந்த ஊர். படிக்க வந்தவருக்கு யாழ்ப்பாணத்தில் ஏதோ பிடிப்பு ஏற்பட்டு, இங்கேயே தங்கிவிட்டார். அவரும் ஐயர் தான் என்று சொன்னார்கள். இதனால், எனது கூட்டாளி ஐயரை, மற்றெந்த மாஸ்டராலும் முடியாத விதமாக
ஏண்டா, ஷர்மா." என்று கூப்பிட இவரால் முடிந்தது.
எங்களைப் பொறுத்தவரையில், சுந்தரராமன் ஒரு விதி விலக்கு, தவளை, எலி, சுறா, நாக்கிளி, கரப்பொத் தான் எல்லாவற்றையும் அளைந்து டிஸ்ெக்ட் செய்கிற பிராமணர், இந்தச் சங்கடம் எங்கள் ஐயருக்கு அப்போது நேரவில்லை. ஸ்பெசிமன்களைப் பார்த்துக் கீறுகிற வேலை மட்டும்தான் அப்போதைய எங்கள் மட்டத்திற்கு இருந்தது.
চাr 6টা ভেক্ত
அன்று-அந்த அணில் தொங்கிய அன்று, விசாரணை முடிவில், இரண்டாம் எதிரி விடுதலையானார். செத்த அணிலை ஐயர்பொடியன் தொட்டிருக்க மாட்டான்" என்ற முடிவுக்கு பிரிசின்பால் வந்திருந்தார். அது சரி, அணிலின் தலையில் நான் சுருக்குப் போட்டுக் கொடுக்க கயிற்றின் மற்ற நுனியைத்தான் ஐயர் கிழுவங் கொப்பில் கட்டினார்.

Page 73
132 疆 ஒரு பிடி மண்
ஐந்தாறு வருடங்கள் என் வகுப்பு சகாவாக இருந்து, பிறகு என் நல்ல நண்பனாகவும் இருக்கிற இந்த ஜே.கே சர்மா என்கிற ஐயர் சம்பந்தமாக என்றைக்கும் எனக்கு முதலில் நினைவுக்கு வருவது, இந்த அணில் விவகாரம் தான். பிறகு, சுந்தரராமன்.
ஐ5 து
நாக்கிளிப் புழுவுக்கு உடலெங்கும் வயிற்றா' இருக் கிறது. ஸிற்றா-பற்ற உதவும் சின்னமுள்ளு நீளமாக இழுபட்ட 'எஸ்' வடிவம். லீற்றாவைக் கரும்பலகையில் கீறிக் காட்டி அதன் செயற்பாட்டையும் சுந்தரராமன் விளக்கிக் கொண்டிருந்தார்.
"இட் ஈஸ் எல்லோயிஷ் இன் கலர்." "கிளுக்' என்று சிரித்தார் ஐயர். அமைதியாக இருந்த வகுப்பில் இது பெரிதாக ஒலித்தது.
சுந்தரராமன் கையிலிருந்த சோக்கட்டியை மேசை யில் விசிறி விட்டுத் திரும்பியபோது, ஐயர் சொண்டைக் கடித்துக் கொண்டு கரும்பலகையிலிருந்த ஸிற்றாவைப் பார்த்து, தனது கொப்பில் வலு வீரியலாகக் கீறிக் கொண்டிருந்தார்.
'ஏண்டா ஷர்மா ? சுந்தராமன் கிட்ட வந்து, ஐயருக்கு முன்னால் நின்று கேட்டார்.
' .. G , ? 'ஒன்றுமில்லை சார் .' எழும்பி நின்று, இனக்க மான புன்சிரிப்புடன் சொன்னார், ஐயர், காது நுனிகள் செம்பருத்தி பூவாய்ச் சிவந்திருந்தன. சொல்லு. ஒய் டு யூ லாஃப்? ஐயரால் இப்போதும் தாங்க முடிய வி ல்  ைல. அடுத்தாட்டம் கிளுக்கிட்டார்.

சாந்தன் 鹽 33
சுந்தரராமனுக்கு எப்படி இருக்கும்?
சளாரென்று சன்னத்தில் ஒரு அடியும், பாடம் முடியும் மட்டும் ஐயர்-ஒரு ஜி. ஸி. ஈ. வகுப்பு மாணவன் -முழங்காலில் நின்றதுமாய் இந்தச் ச ம் பவம் முடிவடைந்தது.
தன்னை மீறி வந்த சிரிப்புகளுக்காக, ஐயர் கனகாலம் கழிவிரக்கப்பட்டுக் கொண்டிருந்ததை நானறிவேன். ஆனாலும் இரண்டு விஷயங்களை நினைத்து, அதனூடே அவர் ஆறுதலும் கொண்டார். ஒன்று, சிரித்த காரணம் சுந்தரராமன் மாஸ்டருக்கு தெரியாமல் போனது; மற்றது தான் வாங்கிய அடி.
ஆடு
ஐயரை நான் முதலில் சந்தித்தது, ஐம்பத்தெட்டாம் ஆண்டில். அது வடிவாக நினைவிருக்கும். அப்போது நாங்கள் ஏழாம் வகுப்பு. கப்பலேறிய தமிழர்கள்" என்று எங்களால் பிறகு அழைக்கப்படத் தொடங்கிய எட்டுப் பேரில் ஒருவராக இவரும் வந்தார்.
அந்த ஆண்டுக் கலவரத்தால் கொழும்புப் பள்ளி களுக்கு முழுக்குப் போட்டுவிட்டு ஊரோடு வந்த இந்த எண்மருக்கும் எங்களுக்கும் முக்கியமாக மூன்று வித்தியா சங்களிருந்தன. தமிழில் இங்லிஷில் காலில்,
எட்டாம் வகுப்புக்கு வருவதற்குள்ளாகவே ஐயர் என் நெருங்கிய கூட்டாளியாகிப்போனார். எங்களுக் குள் முதலில் ஒத்துப்போனது சாப்பாடு,
தினசரி மத்தியான நேரத்தில் சரைகளையும் சாப் பாட்டுப் பெட்டிகளையும் வாங்குகளில் திறந்து வைத்துக் கொண்டு, பொடியன்கள் வெட்டத் தொடங்குகிற எனக்குப் பக்கத்தில்தான் அவரால்
9-س-S

Page 74
134 靈 ஒரு பிடி மண்
பயமில்லாமல் உட்கார்ந்து சாப்பிட முடிந்தது. நான் பிறவிச் சைவம்,
முந்திப் படித்த பள்ளி பழைய சிநேகிதர்கள், தெஹறி வளையில் குடியிருந்த வீடு, தகப்பனின் உத்தியோகம், தங்கள் குடும்பம், கலவர காலத்தில் தங்கள் பட்ட அந்தரம், ரேயல் கல்லூரி அகதி முகாம், கப்பல் பயணத் தில் காய்ச்சலும் சக்தியும் வந்தது, காங்கேசன் துறையில் இறங்கியது என்று எல்லாவற்றையும் அவர் எனக்குப் பரிச்சயமாக்கிவிட்டிருந்தார்.
குழப்படிகளிலும் சாப்பாட்டிலும் மாத்திரம்தான் என்றில்லை, அந்தச் செத்த அணிலை நாங்கள் அவ்வளவு அலங்கோலம் பண்ணி அவமதித்திருக்கக் கூடாது என்று, அதன் தற்கொலைக்கு அடுத்த நாளில் அதன்பால் இரக்கம் கொண்டதிலும்கூட, நாங்கள் ஒத்தே போனோம்.
ஜி.ஸி.ஈ.யைத் தாண்டிய பிறகு, எங்கள் வழிகள் பிரிந்தன.
6J (Լք இடையில் கொஞ்ச காலம், ஆளை ஆள் சந்திக்கக் கூடவில்லை. பிறகு, ஏழெட்டு வருஷங்களுக்கு முன்பு, ஐயரை மீண்டும் கண்டேன். வேலை மாறிக் கொழும் பிற்கு வந்துவிட்டதாயும், வெள்ளவத்தையில் இருப்ப தாயும் சொன்னார். நான் மருதானையில் இருந்தேன்.
நகர வாழ்வின் அவதியில், கதைக்கக்கூட முடியாத அவசரங்களில் ஆளை ஆள் சந்திப்போம், எப்போ தாவது, எங்கேயாவது, பஸ்ஸில், ரயிலில்,
எட்டு இப்போது கீட்டடியில் ஒரு தரம் ரயிலில்தான் சந்தித் தேன், எழுபத்தேழு ஆகஸ்டில் கடைசிப் பகுதி. ஒரு வியாழக்கிழமை,

சாந்தன் ■ 135
அந்த நாட்களில் வீசிக்கொண்டிருந்த பெரும் புயலில்-அது தந்த கலக்கத்தில்-எந்த நிமிடம் என்ன ஆகுமோ என்ற அந்தரம் தாங்க முடியாமல், வருவது வரட்டும் என்ற முடிவுடன் நான் கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் புறப்பட்டிருந்தேன்.
கோட்டை ஸ்டேஷனில் ரயிலைப் பார்த்துக் காத் திருந்த கும்பலில் ஜே. கே. சர்மாவும் இருந்தார்.
இம்முறை, அகதி முகாமுக்குப் போகாமலே வந்து விட்டதாகச் சொன்னார்.
(மல்லிகை-ஏப்ரல் 79)
OOC)

Page 75
புதிய தரிசனங்கள்
பிறைகுடி மாஸ்டரை முதலில் அவன் கவனிக்க வில்லை. மாலை வெயிலுக்கு முதுகைக் காட்டி, நிழல் கள் நீண்டு முன்னே படர்ந்து வர, முகங்கள் தெளிவில் லாமல் பேசிக்கொண்டு கோவிலிலிருந்து வந்த அந்த மூன்று பேரில் சூடியர் நடுவில் வந்தார்.
“எடே. தனபாலே, எப்ப வந்த நீ.? கடவுள்தான் இப்ப உன்னைக் கொண்டுவந்து இதிலே நிக்க விட்டிருக்கிறார்."
-வியப்பும் மகிழ்வும் அவர் குரலில்,
வாழ்க்கையில் ஒரு இலட்சியத்தை- சிந்தித்தோ சிந்தியாமலோ-சரியோ பிழையோ- பற்றிக்கொண்டு, அவர்கள் அளவில் ஒரு அர்த்தத்தைக் கண்டு கொண்டு இந்த மூன்று மனிதர்களும். என்று பொதுவாகவே கண்ணோட்டி யோசித்துக்கொண்டிருந்தவன், நிமிர்ந்
 

சாந்தன் 體 137
தான். ஸார்." ரிஃப்ளெக்ஸ் ஆக்ஷன் போல குந்தி யிருந்த கல்லிலிருந்து எழும்பினான்.
பிறைசூடி அவரது பட்டமா பெயரா என்று முன்பு படிக்கிற காலத்தில்- அவனைக் குழம்பச் செய்த அதே உத்தூளனமான நீற்றுப் பூச்சு, சந்தன வட்டத்தில் அடங்கிய குங்குமம், காது மடலிலிருந்த வில்வம் எட்டிப் பார்த்தது.
ஆமாம், ஸ்ார்!’ என்றான் மீண்டும்.
அவர் தலை முழுவதும் நரைத்தாயிற்று. முன்னிலும் உயரமாய் மெலிதாய்த் தெரிந்தார். முகத்தில் புதிதாய்ச் சுருக்கங்கள். வருஷத்தில் இரண்டு மூன்று தடவை பயணத்தில் வருகிறபோது வழி தெருவில் காண்பதுதான் என்றாலும், இவ்வளவு அருகாகப் பார்த்துப் பத்து வருஷங்கள் இருக்குமா?
நீங்கள் முன்னால் போங்கோ நான் இவன் தம்பி யோட பேசிக்கொண்டு வாறேன்.”
வயலும் வெளியுமாய்க் கோவிலைச் சூழ்ந்து படர்ந் திருந்த அந்த இடத்தில், மாலை மனோகரமாக இருந்தது. பூசை முடித்துக் கதவைச் சாத்துகிற ஐயர் அந்தப் பிரதேசத்தின் அமைதியைக் கிழிக்கிறார்.
இதில இளங்கோவன் ஸார் விலகி, கல்லைக் காட்டி நின்றான். கோயில் முன் மதிலிலிருந்து உடைந்து விழுந்த பாறைக்கல், குருக்கத்தி முளைத்த இடுக்கு களுடன் கறுப்புக்கல், திண்ணை மாதிரி,
"வேண்டாம், வா. மெல்ல நடப்பம்."
இந்துக் கல்லூரியில் ஜி. ஸி. ஈ. படித்த அந்த மூன்று வருஷமும் கணிதமும் தமிழும் படிப்பித்தவர். எங்கோ மலைநாட்டுப் பள்ளியிலிருந்து மாற்றலாகி வந்த புதிதில், அவர்களுக்குச் சிரிப்பு மூட்டியவர். வந்த பின்தான்

Page 76
138 醫 ஒரு பிடி மண்
தங்கள் ஊர் ஆள், தூரத்து உறவு என்று தெரிய வந்தது. ஒரு தவணை முடிய முந்தியே சிரிப்பு எல்லாவற்றையும் வியப்பும் மதிப்புமாய் மாற்றினார். கணிதத்தில் மன்னன். சிவப்பழம். அந்த வயதில் இவர்களுக்கு ஒரு நடமாடும் என்ஸை க்ளோ பீடியா.
சைக்கிளை உருட்டிக்கொண்டு தடியரோடு நடந் தான். சந்தனமும் இன்னும் எதுவுமோ தன்னைச் தழ்ந்து கமழ, அவர் பேசிக்கொண்டு வந்தார். "எப்போ திரும்புகிறான், ஏன் அடிக்கடி ஊர்ப்பக்கம் வருவ தில்லை, கொழும்பில் வாழ்க்கை நிலைமை, வேறேதும் படிக்கிறானா, இன்னமும் கதைப் புத்தகங்களுடன் மினைக்கெடுவதுண்டா"- எல்லாம் கேட்டார். ஜனவரி யில் தன் மகன் செளதிக்குப் போனது, தான்சுகமில்லாமல் ஆஸ்புத் திரியிலிருந்தது, கடைசி மகளுக்கு இப்போ கல்யாணம் பேசுவது எல்லாம் சொன்னார்.
'அவன் எப்படி உன் கூட்டாளி இப்ப?”
“ I u IT fi 65ml) IT fi ?...” ”
*ஜெயநாதன்?.'
"கொழும்பிலைதான்."
"அது தெரியும். இப்ப உன்னோட எப்படி? முந்தி இரண்டு பேரும் வலு நெருங்கின சினேகிதம் அல்லவா."
"அதே மாதிரித்தான் ஸார் இன்னும்.' மெல்லச் சிரித்தான்.
4சரி, நீ என் பிள்ளை மாதிரி. உன்னைத்தான் கேட்க வேண்டும். ஒரு சம்பந்த விஷயம்'- சீரிய லாகக் கேட்டார்.
*ஜெயநாதன் ஆள் எப்படி?”

சாந்தன் 盤 133
'உங்களுக்குத் தெரியும்தானே ஸார். முந்தியைப் போலதான் இப்பவும்- ஒரு கெட்ட பழக்கமும் இல்லாதவன்.'
*உன் சிநேகிதன் என்பதுக்காகச் சொல்லாதே." அவர் சிரித்தார்.
'.என் மகளுக்குத்தான் இந்தப் பேச்சுக்கால்."
'இல்லை ஸார், அவனுக்கு ஒரு கெட்ட பழக்கமும் இல்லை. ஆனா.'
*சொல்லு."
"உங்கள் மகளுக்கு என்று சொல்லுறிங்கள், அது தான்.”
ஏன்? என்ன?”
'அவன் போக்குகள் உங்களுடைய குடும்பத்துக்கு ஒத்து வருமோ என்றுதான்."
பிறகும் சிரித்தார்.
*அவன் ஒரு கம்யூனிஸ்ட், நாங்கள் கோயில் குளம் என்று திரிகிற ஆட்கள். அதையே சொல் லுறாய்?"
தனபால் தலையாட்டினான்.
4.அதெல்லாம் முந்தியே எனக்கு நல்லாத் தெரியும். ஆனா, உன்னை நான் முக்கியமாகக் கேட்க நினைச்சது இதுதான்: அவன் மனப்போக்குகள் எப்படி? தனக்கு வாறவள் கடவுள் நம்பிக்கை உள்ளவளாயிருக்கிறதை ஒப்புக் கொள்வானா? அப்படி வந்தா, அவளின் நம்பிக்கையிலே குறுக்கிடாம போகக் கூடிய ஆளா. இதோ பார், பிறகு பிரச்சினைகளைக் கொண்டுவரும்."
'இல்லை ஸார், எனக்குத் தெரிஞ்ச அளவில் அவன் அப்படியான ஆளில்லை- பெண் சாதியாயிருந்

Page 77
i 40 ES ஒரு பிடி மண்
தாலும் அவளுடைய சுதந்திரத்தை மதிக்கக்கூடியவன். ஆனா, நான் நினைச்சது உங்களுக்கு ஏதாவது ஆட்சேபனை இருக்குமோ என்றுதான்."
எங்களைபொறுத்த அளவில் அவன் கம்யூனிஸ்ட் ஆக இருக்கிறதை பிழையாகவோ பிரச்சினையாகவோ எடுக்கவில்லை. ஏன் என்றால், கடவுள் இல்லையென்று சொன்னாலும், கடவுளுக்கு மிக நெருக்கமானவன் ஒரு நல்ல கம்யூனிஸ்ட் தான்."
தனபால் ஒருகணம் நின்று, அவரைத் திரும்பிப் பார்த்தான்.
(மல்லிகை-மார்ச்- 81)
[III]

விலகிப் போகிறவன்
சகாக்களிடமிருந்து தான் மிகவும் விலகிப் போய் விட்டதாக இப்போதெல்லாம் அடிக்கடி உணரமுடிகிறது. எப்படியென்று தெரியவில்லை. ஆனால் தானறியாமலே இந்த விலகல் கொஞ்சம் கொஞ்சமாக நேர்ந்திருக்க வேண்டும்.
தன்னைச் சூழ்ந்திருக்கிறவர்களுடன் சேர்ந்து வாழுகிற கலையைப் பயின்றிராதவன், வேறெந்த கலையைக் கற்றிருந்தாலும்கூட, வாழத் தெரியாதவனே யாவான்’-என்கின்ற அர்த்தத்தில் யாரோ சொன்னதை எங்கோ படித்தது வேறு, இந்த உணர்வை அதிகப் படுத்தி உறுத்திக் கொண்டிருந்தது.
அவர்கள் ஜெயனை வெறுத்தார்கள் என்றில்லைநிச்சயமாக இல்லை, ஆனால் ஒரு ஒதுக்கம், தங்கள் நட்பை இவனுடன் பகிர்ந்து கொள்ளத் தயக்கம்காட்டிய

Page 78
142 獸 ஒரு பிடி மண்
மாதிரித் தெரிந்தது. கன்ரீனில் தேநீருக்குக் கூட்டமாகப் போகிறபோது அவனுக்கு அழைப்பு வருவதில்லை. படம் பார்க்கப் போகிற திட்டம் அவனையும் சேர்த்து விவாதிக்கப்படுவதில்லை.
-இவையெல்லாம் பெரிதாக தெரிய ஆரம்பித்திருக் கின்றன. இந்த இடைவெளியை தவிர்க்க அவன் தீர்மானம் கொண்டான்.
வ கு ப் ப  ைற  ைய நினைவூட்டுகிற கந்தோர். வரிசையாக மேசைகள் இந்தக் கூடம், வகுப்பறை களிலும் பெரியது என்பது ஒரு வித்தியாசம்-நாலு வகுப்பறைகளை சேர்ந்த அளவு மற்றபடி, எல்லோரும் ஒருபுறமாய் பார்த்தபடி அமர்ந்திருந்து வேலைப் பார்க்கையில், வகுப்பறையில் பாடம் கேட்கிற நினைவு வரும், வாத்தியார் இடத்தில், மிஸ்டர் பெர்னாண்டோ, இந்த இருபது பேரையும் மேய்க்கிற பெர்னாண்டோ.
பகல் இடைவெளிகளில் இடம்பெறுகிற கலகலப்பு முகப்பாத்திகளாலும் அலுவலகம் வகுப்பறையை ஒத்திருந்தது. பெர்னாண்டோ நல்ல மனிதர், கண்களை மூடிக்கொண்டிருந்துவிடுவார். வேலை முடிந்தால் சரி: அவருக்கு மேலே சுந்தரலிங்கத்தார். விட்டுக் கொடுத்து வேலை வாங்குகிற தந்திரசாலி. இந்தச் சத்தங்களை என்றைக்குமே காதில் வாங்கிக்கொள்ளாதவர்.
இம்மாதிரி வேளைகளில்-ஒரு நாளைக்கு ஒன்று என்று அவிழ்த்துவிட, யோகேஸ்வரனிடம் நிறையக் கதைகள் ஸ்டாக்கில் இருந்தன. வெற்றிலை துப்பிய தவளையின் கதை, காஞ்சோண்டிச் செடியைக் கும்பிட்டவன் கதை-எல்லாம் அவன் சொன்ன கதைகளே. இந்த வரிசையில் இன்று அவன் கந்தையா வாத்தியாரின் கதையைச் சொன்னான் :
கந்தையா வாத்தியார், u6 சுதிக்கந்தன். நரிக் கள்ளன், ஆள். வாத்தியார் வீட்டுக்குப் பக்கத்து

சாந்தன் 43
வீடு, சுப்பிரமணியம். சுப்பிரமணியத்துக்கு மத்திய கிழக்கு நாடுகளுக்குப்போய்ச் சம்பாதிக்க நிறைய ஆசை இருந்தது. வலு பாடுபட்டு, ஒரு மாதிரி ஒமானில் ஒரு வேலை தேடிக் கொண்டு அவன் புறப்பட்டபோது, அவன் மனைவிக்கு இரண்டோ மூன்றோ மாதம், தலைப்பிள்ளை. இவள் கொஞ்சம் பேய்த் தரவளி, விவேகம் குறைவு, வெகுளி. சுப்பிரமணியம் புறப்பட்ட பின் கந்தையர் ஒரு நாள் அவளிடம் கேட்டார்:
"ஏடி, இவன் சுப்பிரமணியத்துக்கென்ன பைத் தியமோ? ஏன் இப்படி அரைகுறையில் விட்டுட்டுப் GB_n GTTer?**
"எதை வாத்தியார்?"
தலையை மாத்திரம் உண்டாக்கிவிட்டுப் போயிருக் கிறான். இனி, கை, கால் உடம்பெல்லாம் வைக்கிறது LIT Trib?' -
(இந்த இடத்தில் சிரிப்புப் பற்றியது) அவள் பயந்து போனாள். வாத்தியார் கொஞ்ச நேரம் சுப்பிரமணியத் தைத் திட்டினார். பிறகு கொஞ்ச நேரம் யோசித்து விட்டு வேண்டா வெறுப்பாகச் சொன்னார்:
இனி என்ன செய்யிறது? வேணுமென்றா, நான் மீதியை வைச்சுத்தருகிறேன்."
வாத்தியார் ஒரு நாளைக்கு ஒரு உறுப்பு விதம் உருவாக்கத் தொடங்கினார்.
ஆர்ப்பாட்டச் சிரிப்புகள் வெடிக்கவும் பொறுங் களப்பா, இன்னுமிருக்கு கதை." என்றான் யோகேஸ் கம்பீரமாக,
ஒரு வருஷத்துக்குப் பிறகு, சுப்பிரமணியம் வந்தான், ஒரு நாள் ஆசையாக பிள்ளையைத் தூக்கிக் கொஞ்சிக் கொண்டிருந்தபோது பெண் சாதி சொன்னாள்:

Page 79
144 g. ஒரு பிடி மண்
சம்ஹாம்ெ போனவேளையில் தலையை மாத்திரம் வச்சிட்டுப் போய்ட்டு, இப்ப வந்து ரொம்ப சந்தோஷ மாக கொஞ்சுறிங்க, கந்தையா வாத்தியார் மாத்திரம் இல்லாமலிருந்தா, என்ன நடந்திருக்கும்?"
எல்லோரும் வயிறு வெடிக்கச் சிரித்தார்கள், ஜெய னுக்கும் சிரிப்பு அடிவயிற்றைப் புரட்டியது. ஆனால், ஒரு கணந்தான்! பாவம் சுப்பிரமணியம் என்றிருந்தது, பாவம் அவன் பெண் சாதி. கந்தையா வாத்தியார், எப்பேர்ப்பட்ட வில்லாதி வில்லன் ! --ஜெயனுக்குச் சிரிப்பு நின்றுவிட்டது.
பகிடிக் கதை என்றாலும், இதைக் கட்டியவன் ஒரு கலைஞன்தான். ஆனால் என்ன இரக்கமற்ற, குரூர கற்பனை- இதற்காகத் தன்னால் சிரிக்கவே முடியாது; ஒப்புக்குனாலும் சிரிப்பு வராது.
*சுப்பிரமணியம், உன் பொண்டாட்டி எவ்வளவு பெரிய பரிதாபம்! நீயும்.'-ஒரு கணமேனும் வந்த சிரிப்புக்காகத் தன்னில் கோபம் கொண்டான்.
எதற்காகவோ மீண்டும் எழுந்த இன்னொரு பெரிய சிரிப்பலை, வாயை இறுக முடியிருக்கும் இவன்மேல் வந்து மோதியது. சிரிப்பால் இடுங்கிய சில ஜோடி கண் களில் அந்த விலகல் தெரிகிறது. "நீ வித்தியாச மானவனோ? என்று கேட்கிற பாவனை தெரிகிறது.
அந்நியம் கொள்வார்கள்தான்; கொள்ள ட்டும்.
(கணையாழி- 81)
LJLJL

92.7
பூகோளம்
பாட்டு வெயில் நெருப்பாய் இருந்தது, வலது புறத்து முகம் முழுதும் எரிகிற மாதிரி. இரண்டு பேரும் பேசிக்கொண்டே விரைந்து நடந்தார்கள். வழமை யான பஸ் இன்று காலை வாரிவிட, பம்பலப்பிட்டி சந்தியில் வந்திறங்கி வேறு பஸ் எடுக்க நேர்ந்திருக்கிறது.
கொழும்பு நடைபாதைகளில் நடப்பது, இப்போ தெல்லாம் பெரிய தொல்லையான வேலை. ஒருபுறம் கடல், மறுபுறம் தமிழன் என்று துட்டகைமுனு. சொன்னது போல, இங்கே ஒருபுறம் வேலி, மறுபுறம் வியாபாரிகள். நடக்கிறது எப்படி?-இந்த மாதிரி கிரி ஏதோ சொல்லிக்கொண்டு வந்தான். இவன், கிரிக்குத்

Page 80
146 體 ஒரு பிடி மண்
தலையாட்டியே, வழி நீளம் விரித்திருந்த கடைகளில் கண்களை மேயவிட்டபடி நடந்தான். இங்கே இருக் கிறதா பார்க்க வேண்டும்-அந்தப் பூகோளம்,
ஒரு பூகோள உருண்டை வாங்கி, சுதாவுக்குக் கொடுக்க வேண்டும் என்று கனநாளாக நினைவு. நேற்று கேட்டைப் பக்கம் ஒரு அலுவலாகப் போன பொழுது, பூந்தோட்ட வீதி நெடுக அது இருந்தது. சின்னன்-ஒன்றரை இஞ்சிதான் விட்டமிருக்கும். ஆனால் ரொம்ப தெளிவாக; அந்த அளவே ஒரு அழகாக, கோளத்துக்கேற்ற ஸ்டான்ட் வேறு. விலையைக் கேட்ட போது எங்கும் எட்டு ரூபா சொல்லி, ஏழரைக்குத் தரலாம் என்றார்கள். வாங்க மனம் வரவில்லை. விட்டு விட்டு வந்தான், ஏழரை கொஞ்சம் கூடத்தான்,
'மூன்றரைக்கு வேலை முடியுது. எல்லா விதத்திலும் நல்லது மச்சான்-இந்த வெயில் ஒன்றை விட." என்றான் கிரி,
*அதோ! அதுதான்.' அடுத்தடுத்திருந்த இரண்டு சாப்பாட்டுக் கடைகளுக்கு நடுவில்-இரண்டின் வாசல் களையும் மறைக்காமல், பரப்பப்பட்டிருந்த அங்காடி நடுவில், இந்தக் கோளங்களிலும் ஐந்தாறு.
ஒரு நிமிஷம், கிரி ' என்று சொல்லி, அதில் நின்றான்.
* யாரது, இங்கே?' சாப்பாட்டுக் கடைச் சுவரிலிருந்து இறக்கப்பட்டி ருந்த சின்னப் பாலித்தீன் பத்திக்குள்ளிருந்து ஒரு சிறுமி எட்டிப் பார்த்தாள்.
"என்ன வேணும் மாத்தயா?”
**இது எவ்வளவு?” *ஏழு ஐம்பது."

சாந்தன் 馨 147
*ஏழு ஐம்புதா?’-அவள் அவன் நடக்கத் திரும்பிய (3 IT g5!,
சரி, ஆறரை தாங்க ' என்றாள் அவள், வெளியே வந்து, -
"பரவாயில்லை, வேண்டாம்.'
ஆறு ரூபா தந்திட்டு எடுங்க' -ஓரடி எடுத்து வைத் தவனைப் பின்னால் கூப்பிட்டாள். திரும்பி வந்தான்.
ஒன்பது பத்து வயதிருக்கும் அந்தப் பிள்ளைக்கு. கறுப்பு இரட்டைப் பின்னல். இந்த வெக்கையில் கருகிக் களைத்திருந்தாள், கொஞ்சம் நீர்க்காவியும், கொஞ்சம் ஊத்தையுமாய் வெள்ளை யூனிஃபாம். பள்ளிக்கூடத் திலிருந்து நேரே வியாபாரத்தைக் கவனிக்க வந்திருக்க வேண்டும் என்று பட்டது.
"இந்த விலையை யாராவது பெரிய ஆள் சொல்லி யிருந்தால் நல்லாயிருக்குமே" என்ற நினைவுடன்,
"உன் அப்பாவைக் கூப்பிடு .' என்றான். "அவர் இங்க இல்லை ' அரை நிமிடம் நின்றுவிட்டு, அவள் போய்ச் சொன்னான்:
'தங்கச்சி, எனக்கிப்ப இது வேண்டாம். ஆனா கோட்டைப் பக்கமெல்லாம் இதுக்கு விலை ஏழரை ரூபா சொல்றாங்க. நீ ஆறு ரூபாய்க்குத் தரலாமென்கிறியே. ஏழரைக்குக் குறைய ஒருத்தருக்கும் கொடாதே."
-இதைச் சொல்லிவிட்டு, " சரி வா’ என்று கிரியின் பக்கம் திரும்பியபோது, அவள் பின்னால் நின்று கீச்சிட்டாள்.
*ஆறு ரூபாவுக்கென்றாலும் இதை வாங்க மன மில்லாம. புத்தி சொல்லிவிட்டுப் போறிங்களே. இன்றைக்கு ஒரு வியாபாரமுமில்லை, மாத்தயா."

Page 81
148 獸 ஒரு பிடி மண்
நின்று திரும்பிப் பார்க்க, "ஆறு ரூபா தந்திட்டு எடுத் திட்டுப் போங்க." என்றாள் மீண்டும்.
பாக்கற்றுகளுக்குள் எல்லாமாக, ஏழு முப்பத் தைந்து இருந்தது. இனி, பஸ்சுக்கு முப்பது சதம்போதும். ஏழு ரூபாயை எடுத்து நீட்டி, "சரி, தா." என்றபோது, அவள் ஒரு கணம் தயங்கினான்.
* அங்கே எல்லாம் ஏழரை ரூபாய்க்கு விக்கி றான்க பிடி!' என்றான்.
கோழி முட்டையிலும் கொஞ்சம் பெரிசான இந்தப் பூகோள உருண்டையை உருட்டிப் பார்த்துக்கொண்டு நடந்த போது, சிரிசிரியென்று சிரித்துக்கொண்டு கிரி கூட வந்தான்.
(மல்லிகை-ஏப்ரல் 80)
OOD

28 மனிதர்களும். மனிதர்களும்.
அந்த அமைதியான அழகிய கிராமத்தின் மக்கள் இப்படி இருப்பார்கள் என்று நினைக்க முடிந்ததில்லை. ஆறும், தெருவும், ரெயில்வே லைனும் ஒன்றுக்கொன்று GFDL. DIT 55 அந்தக் áSJ TLDLb முழுவதையுமே ஊடறுத்துப் போகின்றன. ஆற்றைத் தாண்டிப் போன கையோடு, தெரு தானும் செங்கோணமாய்த் திரும்பித் தண்டவாளத்தைக் கடக்கிற இடத்தில், இரண்டிற்கும் நடுவில் பாரிய அரச மரமொன்றின் கீழே இருக்கிற புத்தர் கோயில், அந்தப் பசுமைப் பின்னணியில் சரியாய்ப் பொருந்துகிற சின்ன வெள்ளைக் C3ց, ITս ն՝oՆ. அந்தக் கிராமத்தை நினைக்கிறபோதெல்லாம் நினைவு வருகிற கோவில், ரயிலில் போகிற போதிலும் பார்க்க பஸ்ஸில் போகிறபோதுதான் ஊரின் அழகு தெரிகிறது. அங்கேயே இருந்துவிட முடியுமானால் நல்லது என்று ஒவ்வொரு தரமும் அந்த ஊரைக் கடக்கும்போது மனதில் பட்டிருக்கிறது,
S -= 10

Page 82
150 鬱 ஒரு பிடி மண்
வயலின் நடுவில் ரோட்டிலிருந்து கமுக மர வரிசை களுக்கிடையில ஒடுகிற பாதைகள் தொடுக்கிற இடங்களில் ஊரின் அமைதியில் தோய்ந்துபோய் இருக்கிறவையும், தெரு வளைவுகளில் பெயர் தெரிய மலர்ச்செடிகளின் பற்றைகளுக்குள்ளிருந்து 6 rււգ-ւն பார்க்கிறவர்களையும்; தென்னஞ் சோலை வளைவு களில் எங்கோ ஓரிடத்தில் சிவப்பாய்க் கூரையைக் காட்டிக் கொண்டிருக்கிறவர்களையுமான வீடுகளில் குடியிருக்கிற அந்த ஊர் மக்களில் எப்போதுதான் பொறாமை வராமலிருக்கிறது?
என்றாலும், இந்த மனிதர்கள்தாம் அதைச் செய் தார்கள்.
ஒரு நல்ல முழு நிலவு நாளில் இந்த ஊரும், ஆறும், வயல்களும், கோயிலும் எப்படி மிளிரும் என்கிற எண்ணம் எப்போதும்-ஒவ்வொரு போதும்-மனதில் தோன்றியிருக்கிறது. ஆனால் இப்போது, அந்த ஒரு காலைப்பொழுதின் இளம் வெளிச்சத்தில்-சிவப்புக் கொடி காட்டி யாழ்ப்பாணம் போன ரயிலை இடையில் நிறுத்தி இவர்கள் ஆட்டம் போட்டபோது எப்படி இருந்திருக்கும் என்று யோசித்துப் பார்க்க முடியாம லிருக்கிறது.
வ ண் டி யி லி ரு ந் த பெண்களெல்லோரும் குமுறி அழத் தொடங்கிவிட்டதாகப் பரம் சொன்னார்.
*அழுகை வராம என்ன செய்யும்? அவர்கள் கத்தியும் பொல்லுமாய் வந்து ரயிலை அடிக்கையில்?”
ரயில், எப்படியோ தப்பி, திரும்பிக் கொழும்பிற்கே வந்துவிட்டது பிற்பகல் மூன்று நாலு மணிக்கு அது திரும்பி வந்து சேர்ந்தபின், ஸ்டேஷனில் தேடுவார் இல்லாமல் நாலைந்து சூட்கேஸ்கள் அநாதையாய்க் கிடந்ததாகப் பேசிக்கொண்டார்கள்.

சாந்தன் 醫 15情
இரண்டு
"இன்றைக்கும் அந்த வழியாகத்தான் ரயில் போகப் போகிறது. அந்த ரயிலில் தான் போகப்போகிறோம்!" மனம் சிலிர்த்தது.
அது, அன்றைக்கு-கலம்பகம் தொடங்கிய நாட் களில், இன்று எல்லாம் முற்றி உச்சத்திலிருக்கும்போதுஊரடங்குச் சட்டமும், கொலை கொள்ளைகளுமாகச் சேதிகள் காதில் விழுந்து கொண்டிருக்கும்போது
என்ன நடக்குமோ
ஆனால், வேறு வழியில்லை.
ஏதோ ஒரு விதத்தில் ரிஸ்க் எடுத்துத்தானாக வேண்டியிருக்கிறது.
மெல்ல எழுந்து, எலாம் மணிக்கூண்டுக்கு டார்ச்சை அடித்துப் பார்த்தான். மூன்று ஐம்பது. இனி எழும்ப லாம். நாலு மணிக்கு வைத்திருந்த எலாமை அழுத்தித் தவிர்த்தான். பன்னிரெண்டு மணிக்குப் படுத்த நேரத்தி லிருந்து, மொத்தமாக ஒரு மணியாவது நித்திரை வந்திருக்குமா என்பது ஐமிச்சம் இன்று மட்டும் இல்லைஇந்த ஒரு கிழமையாக, இரவெல்லாம் இப்படித்தான் கழிகிறது- பயமும் பதட்டமுமாய்.
எங்காவது ஆர்ப்பாட்டக் கூச்சல் கேட்கிறதா, வெடிச்சத்தம் கேட்கிறதா என்று காது விழித்துக் கொண்டிருக்கிறது. ஊரடங்கு நேரத்தில் அடிக்கொரு தரம்- கணநேரத்துக்கு மட்டும் காதில் விழக்கூடியதாய் உறுமிவிட்டு- தெருவில் பறக்கிற ஆயுதப் படை யினரின் வாகனங்கள் ஏதாவது தெருத் தாங்கலில் ரிவேஸ் செய்யும் சப்தமோ, அல்லது நிறுத்தும்காவலுக்கு நிற்கும் வீரர்கள் அருகில் நிறுத்துகிறார்களா இருக்கும்- சப்தமோ, இதயத்தைப் படபடக்க

Page 83
52 ஒரு பிடி மண்
வைக்கிறது!- கலகக் கும்பல்தான் வந்து இறங்கு கிறதோ என்று.
இரவில் பெட்ரூம் பல்ப்பைக்கூடப் போட முடிகிற தில்லை. கண்ணாடி ஜன்னல் மூலமாய்க் கசிகிற ஒளி வருகிற குண்டர்களுக்கு உள்ளே ஆட்களிருப்பதைக் காட்டிக் கொடுத்துவிடும். முற்றத்திலிருந்து மேலே வருகிற படிக்கட்டில் நாய் ஏறுகிற ஒலிகூட எழுந்து உட்காரச் செய்கிறது. តា (Bö சொந்தக்காரரின் பகுதிக்கும் இவர்களின் அனெக்ஸ் 0க்கும் இடையில் நிரந்தரமாய்ப் பூட்டப்பட்டிருந்த கதவு, இப்போதுபரஸ்பர உதவிக்காகவும், தைரியத்திற்காகவும் திறந்து சாத்தி வைக்கப்பட்டிருந்தது. முக்கியமானதும் பெறு மதிப்புமானதுமான சாமான்களை- சர்ட்டிஃபிக்கேட்டு கள், பத்திரங்கள், நகைகள், டேப்-ரிக்கார்டர், நல்ல துணிமணிகள் எல்லாம் பத்திரமாய் பார்சல் செய்து பழைய காட்போட் பெட்டியொன்றில் திணித்துக் கட்டி, அடுப்படியில் ஒரு மூலையில் தட்டுமுட்டுச் சாமான் களுக்கிடையில் வைத்திருந்தார்கள், படுக்கையறையி லிருந்த சூட்கேஸ்களில் பாவித்த பழைய உடுப்புகளை யும், புத்தகங்களையும் அழகாக அடுக்கி மூடினார்கள். எந்த நேரமும் தாக்குதல் நடக்கலாம். எந்த நேரமும் கொள்ளையர்-குண்டர்களை எதிர்பார்க்கலாம்
இந்த அவதி எந்த நேரமும் ஆபத்தை எதிர்நோக்கி யிருக்கிற இந்த அவதி-அந்தப் பதட்டமும் பயமும் உணர்வு-தாங்காமல்; அவனும் சாம்பசிவமுமாக நேற்றுப் பின்னேரம் தீர்மானம் பண்ணினார்கள், மனைவிமாரையும் அழைத்துக் கொண்டு இன்றைய ரயிலில் எப்படியும் யாழ்ப்பாணம் போய்விடுவதென்று.
"வர்றது வரட்டும்" என்றான் சாம்பன், முடிவாக,
"அது சரி. எப்படியும் ஏதோ ஒரு விதத்தில் ரிஸ்க்' எடுக்கத்தான் வேணும். இங்க இருக்கிறதும் ரிஸ்க்.

சாந்தன் 屬 153
ரயிலில் போற ரிஸ்கை எடுப்பம். தப்பிப் போய்ச் சேர்ந் திட்டா நாளைப் பின்னேரத்தோட இந்த அந்தரம் இராது" என்றான், இவனும்,
தேவையான சாமான்களைப் பார்சல் கட்டி வைத் திருந்தது இப்போது நன்மையாகப் போயிற்று. இப்படியே தூக்கிக் கொண்டு போய்விடலாம். அதிர்ஷ்டமிருந்தால் கொண்டு போய்ச் சேர்க்கவும் சேர்க்கலாம்.
நேரமாகிறது எழுந்திருந்தது. பக்கத்தில் அயர்ந்து போய்க்கிடந்த மனைவியை மெல்லத் தட்டினான். வேணி, திடுக்கிட்டு விழித்தாள்.
மூன்று
பாத்ரூமுக்குப் போகும்போது, இந்த நேரத்திலும்கூட வீட்டுக்காரரும் அவர் மனைவியும் பேசிக்கொள்கிற சப்தம் லேசாகக் கேட்டது. நித்திரை கொள்ளாமல் இரவு முழுவதும் இப்படித்தான் பேசிக்கொண்டிருக்கிறார்கள் போலிருக்கிறது. எப்படி நித்திரை வரும்? இது அவர் களுக்குச் சொந்த வீடு. இவர்களைப் போல உதறிவிட்டு ஊருக்கு ஓடிவிட முடியாது அவனுக்குப் பாவமா யிருந்தது. ஆனாலும் கூடவே, ஐம்பத்தெட்டாம் ஆண்டுக்குப் பிறகும் தெற்கில் இப்படி வீடுகள் வாங்கின -கட்டின எங்கள் ஆட்களுக்கு மூளையில்லை" என்ற எண்ணமும் வந்தது.
நேற்று மாலை ஊருக்குப் போகிற முடிவை எடுத்த தும், முதல் காரியமாக வீட்டுச் சொந்தக்காரரிடம் வந்து சொன்னான்:
"நாளைக்காலை பிளேனிலா?'-முகத்தில் வியப் புடன் அவர் கேட்டார்.
**இல்லை ரயிலில்."

Page 84
154 鱷 ஒரு பிடி மண்
"ரயிலா?." அவர் மனைவி வெளியே வந்தாள்.
' அவளையும் கூட்டிக்கொண்டு Ju 965 Geou i T போறிங்க?. நீங்கள் தனியா என்றாலும் பரவா யில்லை" உண்மையான கவலையுடன் சொன்னாள்.
'இல்லைப் பாருங்கோ, பிளேன் ரிசர்வ் இப்போதைக் குக் கிடையாது! நான் இப்ப இரண்டு நாளாக அலைந்துப் பார்த்துட்டேன். இன்னும் மூன்று நாளைக்கு புக்கிங்ஸ் ஃபுல். அதுவும் இப்ப அகதிமுகாமிலே இருக்கிற ஆட்களுக்குத்தான் முதல் இடம் கொடுக்காங்க-அது நியாயந்தானே.”
வீட்டுக்காரர் குறுக்கிட்டார்:
'ஒ, இப்ப நேற்றும் முந்தா நாளும் இங்கேயிருந்து வெளிக்கிட்ட ரயிலுகள் இரண்டும் பத்திரமாய்ப் போய்ச் சேர்ந்திருக்குத்தானே! காவல் போட்டுத்தானே ரயிலும் போகுது'
* காவல் போட்டு என்ன செய்கிறது? தண்ட வாளத்தை யாராவது வழியில் கழட்டிவிட்டிருந்தா என்ன செய்யயேலும்?"
"இந்த ரயிலுக்கு அரைமணிக்கு முதன்னால் பைலட் ட்ரெயின் ஒன்று போகுதாம்.' கூட நின்ற சாம்பன் சொன்னான்.
சரி, தீர்மானிச்சிட்டீங்க, பத்திரமாய்ப் போய்ட்டு வாங்கோ."- வீட்டுக்காரர் ஆசீர்வதிப்பது போலச் சொன்னார்.
அவன் சற்றுத் தயங்கினான். அவர் புரிந்துகொண்ட வராக மேலே தொடர்ந்தார்:
14. எங்களைப் பற்றி யோசிக்காதீங்கோ. என்ன
நடந்தாலும் இங்கேயிருந்து ஏற்றுக்கொள்ளுவதென்று தீர்மானிச்சிட்டோம்."

சாந்தன் 蠶 155
அந்த உறுதி அவனுக்கு வியப்பை அளித்தது. 1. தம்பி முந்தி உமக்குச் சொன்னது போல,
எனக்கு வேற வழியில்லை. இது, என் சொந்த சம்பாத்
தியத்தில் - நான் "உழைச்சு உழைச்சு மாதச் சம்பளக் காரன் நான்-வாங்கின வீடு, இதை விட்டுட்டுப் போக என்னால் முடியாது. இனி விட்டுட்டுப் போயுந்தான் அங்க என்ன செய்ய ஏலும்? இந்த உத்தியோகமில்லை யென்றால் எங்களை நாயும் மதியாது. கொத்தித் தின்னுற துக்கு ஊரிலை நிலபுலம் இருந்தாலும் பரவாயில்லை."
அவர் சொன்னதிலுள்ள நியாயத்தை உணர்ந்து தன் சமூகத்திற்காக இரக்கப்பட்டவனாயும், அவர் உறுதியை மாற்ற முடியாதென்பதை அறிந்தவனாயும் அவன் சொன்னான்:
"என்னதானிருந்தாலும் இந்த நிலைமையில் உங்களை விட்டுட்டுப் போக எங்களுக்கு ஒரு மாதிரி யாய்த்தானிருக்கு '
"அதை யோசியாதையும். எங்களைப் போல இல்லை, நீங்கள் எங்களுக்கு எது நடந்தாலும் யோசிக்க ஒருத்தரும் இல்லை. எங்கள் குடும்பத்தில் நாலு பேர், நாலுபேரும் இங்கேயே இருக்கிறோம். எந்த விதிவந்தாலும் எங்களுக்கு ஒன்றாகத்தான் வரும். ஆனா உங்களுக்கு ஊரில் அப்பா, அம்மா நாளும் பொழுதும் இதே கவலையாய்த்தானிருப்பாங்க. அவங்களின் நிம்மதிக்காகவாவது நீங்கள் போகத்தான் வேணும்.'
அந்த மனிதரில் பாசம் மிக்கவனாய் திரும்பும்போது அவன் சொன்னான்:
'எதுக்கும் உங்கள் தீர்மானத்தை இன்னொரு தரம் திரும்ப யோசிச்சுப் பாருங்கோ. உங்கள் மனதைக் குழப்புறதாகத் தயவு செய்து நினைக்க வேண்டாம்."

Page 85
158 醫 ஒரு பிடி மண்
நான்கு
குளியலறையிலிருந்து வந்தபோது நாலேகால் ஆகி யிருந்தது. சாம்பன் ஐந்தரைக்கு வருவதாகச் சொல்லி யிருந்தான்.
'நீர் பாத்ரூமுக்குப் போயிட்டு வாரும்.' என்று வேணியிடம் சொல்லிவிட்டு, மளமளவென்று மீதமிருந்த சாமான்களை ஒதுக்கும் வேலையில் ஈடுபட்டான்.
வழக்கமான ஐந்தே முக்கால் யாழ்தேவி கொஞ்ச நாட்கள் ஓடாமல் நின்றுவிட்டு, இப்போது இரண்டு நாட்களாகத்தான் ஆறே முக்காலுக்கு ஒடத் தொடங்கி யிருக்கிறது. ஆறு மணிக்கு கோட்டை ஸ்டேஷனில் நிற்க வேண்டுமென்றால் இங்கிருந்து ஐந்தரைக்காவது வெளிப் பட்டாக வேண்டும். ஊரடங்குச் சட்டம் ஐந்து மணி வரைதான் என்பதால் ஐந்தரைக்கு வருவதில் சாம்ப னுக்குக் கரைச்சல் இராது. வீடு பக்கத்தில்தான்.
சாம்பன் இருக்கிற வீட்டுக்காரரும் இங்கேயே நின்று பார்க்கப் போவதாகத்தான் சொல்லிக் கொண்டிருந்தார். அவருக்கும் சொந்த வீடு. இனி என்ன யோசிக்கிறாரோ? குஞ்சு குருமனாக நாலைந்து பிள்ளைகள். அவனுக்குப் பாவமாயிருந்தது.
“யாருக்கு யார் அநுதாபப்பட முடியும்? பட்டுத்தான் என்ன செய்ய முடியும்?' என்று மனதை ஆற்றப் பார்த்தான்.
வேணி திரும்பி வந்தபோது உடுப்புப்போட ஆயத்த மாயிருந்தான். அவள் ஃப்ளாஸ்கில் தேநீரை ஊற்றி வைத்துவிட்டு, நேற்று வாங்கி வைத்திருந்த பாணை வெட்டத் தொடங்கினாள். அவளருகே மெல்லப் போய் நின்று,

ஈரந்தன் 屬 157
"இன்றைக்கு இப்படி இந்த ரயிலிலே போறது உமக்குப் பயமில்லையே?. பயமாயிருந்தா, இப்ப என்னிடம் சொல்லும்- இந்த யோசனையை விட்டிட்டு அகதி முகாமிலை போய் நின்று, பிளேனுக்குத் தண்டிக்கப் பார்ப்போம்." என்றான்.
"இப்படி நெடுக யோசிச்சு மனம் குழம்பாமல், எடுத்த முடிவுப்படி வெளிக்கிடுவம், எது நடந்தாலும் இரண்டு பேருக்கும் ஒன்றாகத்தானே நடக்கும்?"
அவள் குரலில் தொனித்த உறுதி அவனுக்குத் திருப்தியாயிருந்தது.
ஐ5 து
வெளிக்கிட்டு முடிந்ததும், ஜன்னல்களைப் பூட்டி விட்டு எல்லாம் சரியாக இருக்கிறதா என்று சுற்றிப் பார்த்தான். வெளியே வந்தபோதுதான் விராந்தையி லிருந்த மீன் தொட்டியும், பூச்சட்டிகளும் கண்ணில்
பட்டன.
காசித்தும்பைச் செடிகளிரண்டிலும் இப்போதுதான் மொட்டுக் கட்டியிருக்கிறது. சட்டியில் வைத்து, தண்ணிரும் உரமுமாய் ஊட்டிக் காத்ததற்கு இந்தி மொட்டுதான்- கணுக்களில் திரண்டு, குருத்தல்ல என்று அடையாளம் காட்டுகிற மொட்டுக்கள்தான் வரவு. இது ரோஸ் நிறக் காசித்தும்பை, அடுக்கு இதழ், ரோசாப்பூ மாதிரி இருக்குமென்று சொன்னார்கள். வேணி, வலு ஆவலாக இது பூக்கப்போகும் நாளைப் பார்த்திருந்தாள். இப்போது பூக்கும் நேரத்தில் அதை விட்டுப்போக வேண்டி வந்துவிட்டது, திரும்பி வரும்போது-வந்தால்கருகித்தான் போயிருக்கும்- அதோடு இந்தப் பெயர் தெரியாத செடியும்.

Page 86
158 醫 ஒரு பிடி மண்
பாதி முறிந்து, வெயிலில் வாடிப்போய்த் தெருக் கரையில் கிடந்த இதன் முளையை, கந்தோரால் வரும் போது- ஒரு நாள் கண்டெடுத்து வந்தான். வெள்ளை யும் பச்சையுமான பெரிய இலைகள், நட்டதுதான் தாமதம், கிழமைக்கு ஒரு இலையாய் எறிந்து எழும்பி விட்டது.
மீன் தொட்டிகூட வற்றித்தான் விடும். ஒரு கப்பீஸ் குட்டியும் நாலு பிளேட்டீஸ் 0மாக ஐந்து மீன்கள். கடந்த ஐந்து மாதமாகச் சேர்ந்து வாழ்ந்து வருகிற மீன்கள். இந்த கப்பீஸ் குட்டி இங்கேயே இந்த வீட்டில் தான்- பிறந்தது. இதன் தாய், ஒரு நாள்-ஒரே நாளில்மளமளவென்று போட்ட பதினெட்டுக் குட்டிகளில் மிஞ்சி வாழ்கிற குட்டி அது. இந்த ஐந்து மாதமும் தாண்டிவிட்டது. இனி, தப்புகிற பருவம். வால், வர்ணங் களாக மினுங்கத் தொடங்கிவிட்டது. கப்பீஸில் வால் தான் அழகு- அதிலும் ஆண் மீன்- மயில் தோகையாய் மின்னுகிற வால்,
பிளேட்டீஸ் அப்படியில்லை. முருக்கம் பூ நிறத்தில் பாதி விரல் நீளத்தில் பளபளக்கும். பத்தாக இருந்தவை. போன முறை ஊருக்குப்போய் இரண்டு கிழமை நின்று விட்டு வந்தபோது நாலாகிவிட்டிருந்தன.
திரும்பி வருகிறபோது- வந்தால் தொட்டியின் தண்ணிரெல்லாம் வற்றி இதுகளெல்லாம் செத்துக் கருவாடாகி- உண்மையான கருவாடாகவே- ஆகி யிருக்கும்.
இந்த நேரத்தில் மீனும் பூஞ்செடியும் சாகப்போகிற துக்காகக் கவலைப்பட முடியாது என்று நன்றாக உணர முடிகிறது. மனிதர்களே ஒன்றும் பத்துமாய் அங்குமிங்கும் அநியாயமாய் வெட்டியும் சுட்டும் கொல்லப்படுவதாகச் சேதிகள் காதில் விழும்போது!

சாந்தன் 鹽 159
பூச்சட்டிகள் மூன்றையும் மழை பெய்கிறபோது பிடிக்கக்கூடிய இடமாக-- வெயில் கருக்காதபடி- பல கணியில் தோதான இடம் பார்த்து வைத்தான். பெய்கிற போது நனைந்து கொள்ளட்டும். மீன் தொட்டியை லிங்க்கில் குழாய்க்குக் கீழே வைத்து, தண்ணிர் சொட்டுச் சொட்டாக விழும்படி குழாயை மெல்ல இளக்கி விட்டான்.
இந்த அவதியில், இவற்றுடன் இவ்வளவு நேரம் மினைக்கெட்டதே பெரிது. கதவுகள் இரண்டையும் அவசரமாகப் பூட்டித் தள்ளிப் பார்த்துக்கொண்டார்கள். வெளியே எடுத்து வைத்திருந்த அந்தக் காட்போட் பெட்டியையும் சூட்கேஸையும் தூக்கிக்கொண்டு கீழே இறங்கினார்கள், வானம் வெளிறத் தொடங்கியிருந்தது.
ஆடு
சாம்பன் வந்து, கீழே வீட்டுக்காரருடன் பேசிக்
கொண்டு நின்றான்.
முதலின் இறங்கிய வேணியைக் கண்டதும், விட்டுக் காரரின் மனைவி வெளியே வந்தாள்.
'நீங்க இதிலேயே நில்லுங்க." என்று வேணியிடம் சொல்லிவிட்டு, சாம்பனைப் பார்த்து,
1. போவமா?' என்றான்.
"டாக்ஸிதானே?’ என்றார் வீட்டுக்காரர்.
அது சரியான ஆபத்தல்லவா? டாக்ஸிகாரனை எப்படி நம்புகிறது?’ என்றார், அவர் மனைவி.
*பஸ்ஸில் போறது இன்னும் ஆபத்து, நாங்கள் இரண்டு பேர் ஆம்பிளைங்க இருக்கிறம்தானே." சாம்பன் சொன்னான்.

Page 87
160 醫 ஒரு பிடி மண்
இவர்கள் வீடிருந்த ஒழுங்கையிலிருந்து தெருவுக்கு வந்தபோது இன்னும் தெரு விளக்குகள் எரிந்துகொண் டிருந்தன. முடக்கில் இரண்டு ஆமிக்காரர்கள் துவக்கு களுடன் நின்றார்கள். இவர்களைக் கூர்ந்து பார்த்தார் கள். அப்பாவித் தமிழர்கள் என்பது பட்டிருக்கும். தெருங்கித் தாண்டியபோது, உயரமாய் முறுக்கு மீசை புடன் நின்றவன் இவனைப் பார்த்து மெல்லப் புன்னகை செய்தான். நேற்றுப் பகல் இதே இடத்தில் நின்ற ஸென்ட்ரி, இரண்டு மூன்று தடவை ஆளை ஆள் பார்த் திருந்தார்கள். பதிலுக்குப் புன்னகைத்தான்.
இந்த ஆளும் சிங்கள ஆள்தானே! என்ற எண்ணம் வந்தபோது,
"என்ன, கூட்டாளியா." என்று சாம்பன் சிரித்தான்.
ஐம்பது யார் தள்ளி, தபார் கந்தோரடியில் இன்னும் இரண்டு ஆமிக்காரர்கள் இதேபோல நின்றார்கள், இந்த இடத்தில் தமிழர் வீடுகள் அதிகம்.
வழக்கமாக டாக்ஸிகள் நிற்கும் இடத்தில் ஒன்றை யும் காணவில்லை.
தியேட்டருக்கு முன்னால் பாப்பம்." என்றான்.
பேப்பர் கடையிலிருந்து, பால் வாங்கிக்கொண்டும் போன ஒன்றிரண்டு பேர், இவர்களை உற்றுப்பார்த்துக் கொண்டு போனார்கள்.
*இவங்க, எங்களைப் பார்க்கிற மாதிரியைப் பாரடா ?' என்றான் சாம்பன்,
"இப்ப கொஞ்ச நாளா இப்படித்தான் பார்க்கிறார் கள். வேடிக்கை பார்க்கிறவை, நக்கலாப் பார்க்கிறவை, அனுதாபத்தோட பார்க்கிறவை, துணிஞ்சு தெருவில் போறாங்களே என்று ஆச்சரியத்தோட பார்க்கிறவைஎல்லாரும் இருக்கும்.

சாந்தன் 隱 161
தியேட்டருக்கு முன்னால் ஒரு டாக்ஸிதான் நின்றது. தூரத்திலிருந்து நோட்டம் விட்டபோதே, டிரைவர் திருப்தியளிப்பவனாக இவர்கள் விரும்பியது போல் வயதானவனாக, அமைதியானவனாகத் தெரியவில்லை.
முரடன் போலத்தான் இருந்தான்.
வேற வழியில்லை." அவனிடம் போனார்கள்.
6J (Լք
காலி வீதியில் டாக்ஸி ஏறியபோது-மற்ற எல்லாத் தமிழ்க் கடைகளையும் போலவே-எதிரே 'வேல்முருகன் கஃபே பூட்டிக் கிடந்தது.
போன செவ்வாய்க் கிழமை, இந்த இடத்தில்தான் இந்தக் கலம்பகச் சேதி முதலில் காதில் விழுந்தது.
நிச்சிந்தையாய் புத்தகக் கடைக்குப் போய்விட்டுத் திரும்பியபோது பிரேமராஜன் எதிர்ப்பட்டான். ஆளைச் சந்தித்து இரண்டு வருடமாவது இருக்கும். வேல்முருகன் $6.Gଖିu' முன்னால் யாருடனோ பேசிக்கொண்டு நின்றவன் இவனைக் கண்டதும் ஓடிவந்து, ஸ்பீரியலான மெல்லிய குரலில்; "யாழ்ப்பாணம் எல்லாம் பெரிய கலாட்டாவாம். ஐஸ்ே. போலீஸ்காரருக்கும் ஜனங் களுக்கும் சண்டையாம்." என்றான்.
திடுக்கிட்டுப்போய், "ஏன்? எப்ப? உண்மையா?." என்றவன், அதே வேகத்தில் தொடர்ந்து, ". அப்படி என்றால், இனி அது ஒரு கொம்யூனல்ரேன் எடுக்காம லிருக்க வேணுமே!’ என்றான்.
"மரக்கட்டையை எரிச்சு, இரண்டு மூன்று பேரைச் சுட்டும் போட்டாங்களாம்.”
'இது எப்ப நடந்தது?"

Page 88
162 醫 ஒரு பிடி மண்
"நேற்றும் இண்டுமாம். நான் இப்ப பின்னேரம் ஒரு ட்ரங்க் கால் எடுத்த நான் - ஒரு விஷயமாய், அப்பதான் இது தெரிஞ்சுது!"
*உன்னுடய குடும்பம் எங்கே?
*யாழ்ப்பாணத்தில்தான். உன்னுடையது?"
". இங்கதான்! அதுதான் யோசிக்க வேண்டி யிருக்கு ' என்றவன் தொடர்ந்து,
11-ஆ பயந்து என்ன செய்கிறது எத்தனை ஆயிரம் குழந்தை குட்டிகள், வயது போனதுகள், சுகமில்லாதது கள் எல்லாம் இங்க இருக்கு நாங்களேன் பயப் படனும்?" என்று தன்னைத்தானே சமாதானப் படுத்துவது போலக் கூறினான்.
இப்படித்தான் அவளும் போன மாதம் சொன்னாள்.
தேர்தல் அமளிகளுடனேயே ஒரு குழப்பத்தைப் பலபேர் எதிர்பார்த்துப் பயந்திருந்தார்கள்.
*வாரும், உம்மையாவது யாழ்ப்பாணத்தில் கொண்டு போய் விட்டிட்டு நான் திரும்பி வந்து நிற்கிறேன்." என்றபோது, வேணி மறுத்துவிட்டாள்.
"அப்படி பயந்து என்ன செய்யறது கொழும்பில் எத்தனை ஆயிரம் தமிழர் இறக்கிறார்கள் எல்லா ருக்கும் வாற விதிதானே எங்களுக்கும்!"
அந்தக் குழப்பம் இப்போது ஒரு மாதம் பிந்தித் தொடங்கியிருக்கிறது போலத் தெரிகிறது. கொழும்பில் இருக்கிற, எத்தனை ஆயிரம் தமிழருக்கு மட்டுமன்றி, இலங்கையிலே இருக்கிற எல்லாத் தமிழர்களுக்குமே அமைதி போய்விடலாம்
இந்த நேரம் பார்த்து- கையில் அரும் பொட்டாகக் கிடந்த காசில்- பதினைந்து ரூபாய்க்குப் புத்தகம் வாங்கியிருக்கக்கூடாது என்று பட்டது.

母町画岛矿 隱 163
எட்டு
*பார்த்தீரா? பீற்றேஸ் காலேஜ் அகதி முகாம்.' சாம்பன், தன் மனைவிக்குக் காட்டினான்.
அது தாண்டுவதற்குள் கதிரேசன் கோயில் முகாம் வந்துவிட்டது.
'இப்ப எல்லாமாக எத்தனை முகாம்கள் இருக்கு?' வேணி கேட்டாள்.
'நாலு .' என்றான் இவன்,
'.முதல் தொடங்கியது உறின்டுக் காலேஜ், பிறகு கதிரேசன் கோயில், பிறகு கதிரேசன் மண்டபம், கடைசியா பிற்றேஸ் காலேஜ்'
"எல்லாத்திலையும் சேர்த்து ஐயாயிரத்துக்கு மேலே அகதிகள் இருக்குமாம்." என்றான் சாம்பன்.
கோயிலைத் தாண்டும்போது, வேணியும் சாம்பனின் மனைவியும் குனிந்து கும்பிட்டார்கள்.
கதைப் பராக்கில், ட்ரைவரைக் கவனிப்பதை விட்டு விடக்கூடாது என்று தனக்குள் ஞாபகப்படுத்திக் கொண்டான்,
இத்தனை பேரையும் கப்பலில்தானே யாழ்ப்பாணம் அனுப்பவேணும்?.' என்று சாம்பனின் மனைவி GਯL6.
"பிளேனிலையும் போகலாம்."
இன்னும் ஆட்கள் வந்தபடிதான் இருக்கு. பீற்றேஸ் காலேஜ் நிரம்பினா, அடுத்த முகாம் திறக்க ஆயத்தமா யிருக்கினம்.

Page 89
64 ஒரு பிடி மண்
பெண்களின் பதட்டம் குறைந்திருப்பதுபோலப் பட்டது. சாம்பனின் மனைவியும் வேணியும் பேசிக் கொள்ள ஆரம்பித்திருந்தார்கள்.
'நீங்க ஏன் அகதி முகாமுக்குப் போகவேனும்?" என்று அன்றைக்குக் கேட்டவன், அந்த நாயக்க, ஒரு Ժքւնւզւ63r (85ււT6ծr.
திங்கட்கிழமை பகல் கந்தோருக்குப் போனபோதே, அந்த வித்தியாசம்-மனதிற்பட்டது பிரதமரின் பேச்சை வெள்ளி இரவு ரேடியோவில் கேட்டபோது ஏற்பட்ட பய உணர்வு இப்போதும் வந்ததுபோல-கோபாலின் மேசையை சுற்றி எட்டுப் பத்துப் பேர், மதநுவரவின் மேசையைச் சுற்றி மீதிப் பேர் என்று நின்றார்கள்; இவனை ஒருவரும் ஒன்றும் கேட்கவில்லை. சிங்கள நண்பர்கள் எல்லோரும் தலையைக் கண்டதும் ஓடிவந்து விசாரிப்பார்கள் என யோசித்திருந்தான். ஆனால், அவர்கள் எல்லோரும் மநுரவரவின் மேசையைச் சுற்றி நின்றபடி பேசிக்கொண்டிருந்தார்கள், கண்ட பிறகும் கூட வெகு சாதாரணமாய்க் கதையைத் தொடர்ந்தார் கள். அப்போதுதான் அது-அந்த ஏமாற்றம், வெறுமை, பயம்-மனதில் உறைத்தது.
மணி பத்தாகியிருந்தாலும்கூட ரெஜிஸ்டர் மூடப் படாமல் இருந்தது. எட்டு மணி போட்டுக் கையெழுத்து வைத்தான். வீ ட் டி லி ரு ந் து வெளி வந்தபோதே ஒன்பதரை-வழக்கமான நேரத்திலும் இரண்டு மணிக்கு பிந்தி, தொடர்ச்சியாய் முப்பத்தாறு மணி நேரம் ஊரடங்குச் சட்டம் அமுலிலிருந்து முடிந்து மூன்று மணிக்குக் கூட ஆவதற்குள் வெளியே புறப்படுவது முட்டாள்தனம்- அதிலும் தமிழர்கள் ஆபத்தை எதிர் நோக்குகையில்; வேண்டுமென்றே பிந்திப் புறப் பட்டான்.

சாந்தன் 畿 165
கோபாலின் மேசையடிக்குப் போன போது, "கப்பல் போகுதாம். போகல்லையே?’ என்றான் சிவஞானம், 'கதை விடாதையுங்கோ. உண்மையாகக் கப்பலில் தான் போகப் போகிறோம் எல்லோரும்-'
"கதை இல்லை, உண்மையாகத்தான்' என்றான் கந்தசாமி, அது செய்தியாகத்தானிருந்தது.
"மூன்று கப்பல் ஒழுங்குபடுத்தியிருக்கும்.' 'ஹிண்டுக் காலேஜ், மிஷன் ஹால்-இரண்டிடத் திலேயும் முகாம் திறந்து ஆயிரம் பேருக்கு மேல் வந்திருக்காங்களாம் "
சேதிகள் தொடர்ந்தன. இவ்வளவும் எப்போ நடந்தது? இவர்கள் எப்படி அறிந்தார்கள்? உலகம் தன்னைத் தனியே விட்டு முன்னே போய்விட்டதைப் போல உணர்ந்தான்.
முழு விவரமும் கேட்டறியப் பதினைந்து நிமிஷ மானது.
"நுகேகொடை, கிரிலப்பனை, இரத்மலானை போன்ற இடங்களிலிருந்து நேற்றைக்கே ஆமிக்காரர் ஆட்களைக் கூட்டிக் கொண்டு வந்து காம்ப்பில் விட்டு விட்டார்களாம்.'
"இன்னும் ஜனம் வந்தபடி இருக்கு." என்றான் சிவஞானம்,
அடுத்தது வெள்ளவத்தைதான்." என்று சொல்லிச் சிரித்தான் சாம்பன். கலவரம் கலந்த சிரிப்பு.
மதநுவரவின் மேசையைக் காட்டி இவன் கேட்டான். "இவர்கள் ஒருத்தரும் வந்து உங்களை ஒன்றும் கேக்க வில்லையா??
S-11

Page 90
66 ஒரு பிடி மண்
'Lð gyp oLbl'
"ஒருத்தரையும்.'
'இல்லை." "இருக்கிறீங்களா - செத்தீங்களா? யாராவது அடிக்க
வந்தாங்களா? வீட்டுக்குக் கல்லெறிஞ்சாங்களா?- பயப் படுறிங்களா- என்று கூட?
-டாக்ஸி திடீரென்று வேகம் குறைவது போல் இருந்தது. திடுக்கிட்டு உஷாரானான்.
ஒன்பது
பம்பலப்பிட்டி ச ந் தி வந்துகொண்டிருந்தது. சாம்பனைப் பார்த்தான். அவன் நேரே பார்த்துக்கொண் டிராமல், அரைவாசி திரும்பி, டிரைவரும் பின் சீட்டில் உள்ளவர்களும் தன் பார்வையில் விழக்கூடிய விதமாக ஒரு கோணத்தில் உட்கார்ந்திருந்தான். சாம்பன் கவன மாகத்தான் இருக்கிறான்.
டாக்ஸியில்தான் ஸ்டேசனுக்குப் போவது என்று தீர்மானித்தபோதே, ஒரு ஆள் டிரைவருக்குப் பக்கத் திலும், மற்றவன் நேரே பின்னாலும் எச்சரிக்கையாய் இருந்துகொள்ள வேண்டுமென்று யோசித்திருந்தார்கள். டாக்ஸியில் ஏறி முதலில் சாம்பன் வீட்டுக்குப் போய் அவன் மனைவியையும் பிறகு வேணியையும் வந்து ஏற்றிக்கொண்டு புறப்பட்டபோது அது சரியாயிருந்தது.
என்ன? என்பதாகப் புருவத்தை நெறித்தான். ஒன்றுமில்லை' என்று சாம்பன் சமிக்ஞை காட்டினான். பெண்கள் இருவரும் தெருவைப் பார்த்துக் கொண் டிருந்தார்கள். தெரு அமைதியாய்க் கிடந்தது. அசாதாரணமான அமைதி, சந்தியில் சிக்னல் விளக்கு கள் எரியாமல் நின்றன.

சாந்தன் 67
இந்த இடத்தில் நின்று இடித்துத் தள்ளிக்கொண்டு ஏறிய கூட்டந்தான் அன்று ஆபீஸ் 0க்குப் போன போது பதட்டத்தைத் தந்தது. கொழும்பில் வாழ்ந்த இந்தப் பத்து வருடத்திலும் இப்படி ஒரு கூட்டத்தை இந்த இடத்தில் அந்த நேரத்தில் பார்த்தது அதுதான் முதல் தடவை. ஆனால் அது கந்தோருக்குப் போகிற ஜனந்தான். பஸ்கள் வெகுவாகக் குறைந்திருந்தன.
அந்த நெரிசலில் நிற்கவே பயமாயிருந்தது. தப்பித் தவறி யாருடனாவது மோதிக்கொண்டால், மிதித்துக் கொண் டால், இதுதான் சாக்கென்று 606 குள்ளேயே வைத்து அடித்துவிடக்கூடும் என்று பட்டது. மூச்சைப் பிடித்துக்கொண்டு பத்திரமாக நின்றான். தமிழ் முகங்களாக அல்லது தெரிந்த முகங்களாக ஒன்றையும் கான வில்லை.
பஸ் தும் முல்லை சந்தியில் பென்னாம் பெரிய வெள்ளைப் புத்தர் சிலையைத் தாண்டியபோது சிலபேர் பயபக்தியாக எழும்பிவிட்டு உட்கார்ந்தார்கள்.
அன்றைக்குக் கந்தோரும் வழக்கத்துக்கு மாறாகத் தான் இருந்தது. பதினொரு மணிக்குப் பிறகு கோபாலின் மேசையைச் சுற்றி நின்ற எல்லோரும் வீட்டுக்குப் போக புறப்பட்டபோது, நாளைக்கு என்ன மாதிரி?” என்று கேட்டான் சத்தியசீலன்,
'நிலைமையைப் பொறுத்து வருவோம்.' "இருக்கிறமோ, சாகிறமோ." அப்போதுதான் அந்தநாயக்க வந்தான். என்ன யோசிக்கிறீர்கள்?"
இந்தக் கேள்வியே சரியில்லை.
எப்படி, உங்கள் பக்கம்?'-சாம்பன் அந்த நாயக்காவைக் கேட்டான்.

Page 91
168 ஒரு பிடி மண்
"எங்கள் பக்கம் ஒன்றுமில்லை, நாங்கள் தமிழர் களைப் பத்திரமாகக் காப்பாற்றுவோம். ஒருத்தருக்கும் ஒரு அடிகூட விழாது! ஆனால் எல்லோரும் பயந்து போய்விட்டார்கள்." அந்தநாயக்க சிரித்தான்.
அவனிடம் அந்தக் கேள்வியைக் கேட்டதற்காகச் சாம்பன் வருந்துவது போலத் தெரிந்தது.
அந்தநாயக்க இவனிடம் திரும்பிக் கேட்டான். *என்ன கிருஷ்ணன், பேசாமலிருக்கிறாய்." 'ஒன்றுமில்லை "
* இன்றுதான் சவ அடக்கம். அந்தநாயக்க சொன் னான்.
"யாருடையது?"
*யாழ்ப்பாணத்தில் கொல் ல ப் பட்ட சிங்கள ஆளுடையது. அங்கே, யாழ்ப்பாணத்தில் சிங்களவர் ஒருவரும் கொல்லப்படவில்லை. தமிழர்தான் செத்தார் 56TTLib. '''
பொய் சொல்லவேணாம்." அந்தநாயக்க அரை குறைத் தமிழில் உறுக்கிச் சொல்லிவிட்டு, பிறகு பழைய படி இங்கிலீஷில் சொன்னான்:
4. எங்களுக்கு எல்லாம் தெரியும். ஆனால் நாங்கள் அப்படிச் செய்யமாட்டோம். பாது
ETT "G3 JITLř.”
៩៩១ar வதந்திகளைத் தயவுசெய்து ந ம் ப வேண்டாம்.'
நீங்கள் ஏன் தனி நாடு கேட்கிறீர்கள்?
6. அது வேறு கதை. தனி நாடு கேட்டதற்கும் இந்தக் கலவரங்களுக்கும் சம்பந்தமில்லை. யாழ்ப் பாணத்தில் போலீஸ் 0க்கும் பொதுமக்களுக்குமிடையில்

சாந்தன் 醫 169
ஏற்பட்ட கோளாறு இனக்கலவரமாகி இந்த அளவுக்கு வந்திருக்கிறது. முன்பு பேரதெனியாவிலோ, புத்தளத் திலோ நடந்த கலவரங்களைப் போலத்தான் இதுவும்
பத்து
டாக்ஸி சட்டென்று நின்றது; கிருஷ்ணன் திடுக் கிட்டான். இதயம் படபடத்தது. வயிற்றுக்குள் புகைந்து, முன்சீட்டில் கையை வைத்து உஷாரானான்.
"என்னது?"
சாம்பன் முற்றாக டிரைவர் பக்கம் திரும்பினான். 'டிக்கி மூடி கழன்றுவிட்டது மாத்தயா." டிரைவர் இறங்கினான். சாம்பனும் கதவைத் திறந்தான்.
*நீ இறங்காமல் இருந்துகொள்.' தலையைத் திருப்பிக் கண்ணாடிக்குள் பார்த்த படி, உண்மையாய்த்தான் டிக்கி கழண்டிருக்கு பயப் படாதீங்க." என்றான் கிருஷ்ணன், பெண்கள் பெருமூச்சு விட்டார்கள்.
சாம்பன் கதவருகில் வந்து, "டிக்கிதான் ' என்ற போதே டக்கு டக்கென்று திருப்பித் திருப்பி டிக்கி கதவை அடிக்கும் சப்தம் கேட்டது.
பிறகு டிரைவர் வந்தான்.
இப்ப சரி.' பெரிதாகப் பெருமூச்சு வந்தது. கொஞ்ச தூரம் போனதும்
இந்த ஆள் ஐயா" என்றதைக் 5u ? என்று கிருஷ்ணன் கேட்டான்.

Page 92
170 圈 ஒரு பிடி மண்
‘எப்ப?' சாம்பனுக்குப் புரியவில்லை.
*டிக்கி மூடி கழண்டு போச்சு, ஐயா! என்றானே "
*நான் கவனிக் கலை."
'இந்த நேரத்திலும் இப்பிடிச் சொன்னது, எனக்குப் பெரிய ஆச்சரியமாயிருக்கு. வாய்ப் பழக்கமாயி ருக்கும்.' சாம்பனும் பெண்களும் மெல்லச் சிரித் தார்கள்.
சேமிப்பு வங்கி, பிரிட்டிஷ் கெளன்ஸில், ஒபரோய்என்று ஒவ்வொன்றாகப் பின்னால் ஓடின. அந்த வங்கி யில் கிருஷ்ணனுக்குக் கணக்கு இருந்தது. பிரிட்டிஷ் கெளன்ஸில் லைப்ரரியில் அவன் மெம்பர்-நல்ல கால மாக இப்போது புத்தகம் ஒன்றும் இரவல் வாங்கியிருக்க வில்லை. வெளிநாட்டிலிருந்து நண்பரொருவர் வந்து நின்ற போதுதான், ஒபரோய்க்குள் முதன் முதலில் போகச் சந்தர்ப்பமாயிற்று. அன்பிற்குரிய அந்த நண்பரின் நினைவும், அந்த மாளிகையின் நினைவும் ஒன்றாகி விட்டிருந்தன - அவரை நினைத்தால் அதுவும், அதை நினைத்தால் அவரும் நினைவுக்கு வருகிற மாதிரி,
கோல்ஃபேஸின் குளிர் காற்று முகத்தில் அடித்தது. துறைமுகம் பக்கமாக நாலைந்து கப்பல்கள் தெரிந்தன. கடல் அமைதியாய் விரிந்து கிடந்தது. "இந்த கப்பல்களில்தான் எங்கள் ஆட்களை அனுப்பனுமோ?" என்றான் சாம்பன்.
** இருக்கும்.'
சிலிங்கோ, உச்சி, ஆகாசக்கடை, பாராளுமன்றக் கட்டிடம், செக்ரடேரியட். ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு தொடர்பிருந்தது-ஒவ்வொரு நினைவிருந்தது.
இனிமேல் வாழ்க்கையில் இவற்றைக் காணுகிற சந்தர்ப்பமே இல்லாமல் போகலாம்.

சாந்தன் 屬
பதினொன்று
டாக்ஸியிலிருந்து இறங்கியபோது, ஒரு கண்டத் திலிருந்து தப்பிய உணர்வு உண்டாயிற்று-நல்ல கால மாக டாக்ஸிக்காரன் எங்கும் கடத்திக்கொண்டு போய் விடவில்லை.
இறங்கி, பின்புறமாகச் சுற்றிக்கொண்டு மற்றப் பக்கம் வந்த போதுதான், சூட்கேஸை மடியில் வைத்துக் கொண்டு வேணி இறங்கிவிட்டிருந்தாள். கையை ஊன்றி உள்ளே குனிந்து துட்கேஸை எடுத்த போது, "ஐயோ." என்று குழறினான்.
முன் கதவைச் சாம்பன் சாத்தியிருக்க வேண்டும். இடதுகைச் சின்ன விரல் அறுந்து விழுந்ததுபோல வலித்தது. கதவைத் திறந்து கையை எடுத்தபோது, விரல் நுனி சப்பளிந்து போய் இரத்தம் வடிந்தது.
9
"ஐயோ." என்றான் சாம்பனும் பதறிப் போய்,
16. லாரி, லாரி நான் கவனிக்கவில்லை."
விரலைச் சூப்புங்கோ ' என்றாள், சாம்பனின்
LD6606.
வேணி ஓடிவந்து கையைத் தூக்கி விரலை வருடினாள். தெறிப்பதுபோல வலித்தது. டிக்கி மூடி யோடு போராடிக் கொண்டிருந்த டிரைவரும் ஓடி வந்தான்.
என்ன மாத்தயா?” என்றவன், *. அண்னே' என்றான்.
தனது ஷேட் பாக்கட்டுக்குள்ளிருந்த லேஞ்சியை எடுத்து இரண்டாகக் கிழித்துக்கொண்டு, மூன்று நிரை

Page 93
172 矚 ஒரு பிடி மண்
தெருக்களையும் தாண்டி, முன்னால் தெரிந்த கடைகளை நோக்கி ஓடினான்.
குப்பச் சூப்ப இரத்தம் வாய்புளித்தது, கிருஷ்ண அக்கு அவன் பாக்கெட்டுக்குள் இருந்த கைக் குட்டையை இழுத்து, காயத்தின் மேல் பொத்தினாள் வேணரி,
டிரைவர் திரும்பி வந்தபோது, கிழித்த பாதி லஞ்சி தண்ணீரில் நனைத்திருந்தது. கையைப் பிடித்திழுத்து? கைக்குட்டையை எடுத்துவிட்டு, அந்த ஈரத் துணியை இறுகச் சுற்றினான். குளிர்ச்சியில் வலி குறைந்தது.
"இனி இரத்தம் நின்றிடும்.' என்றான் டிரைவர், சுற்றி முடித்ததும்.
'டியப்படாதீங்க மாத்தயா, சின்னக் காயந்தான்."- அவன் புன்னகைத்தான்.
இருபது ரூபாய் கேட்டான். ஆளுக்குப் பத்தாய் அவனும் சாம்பனும் கொடுத்தார்கள். ஏதோ நினைத்த வனாய் உடனேயே பாக்கெட்டுக்குள் கையைவிட்டு, இன்னொரு ஐந்து ரூபாயையும் எடுத்தான் கிருஷ்ணன், "வேண்டாம் மாத்தயா, கூடுதலாக வாங்கிறது சரி யில்லை." -அந்த மனிதன் கதவைத் திறந்து தன் சீட்டில் உட்கார்ந்தான். "நான் போறேன். பத்திர மாய்ப் போய் வாங்கோ."
'வாருங்கோ." என்று வேணி கூப்பிடும் வரையில், அந்த டாக்ஸி போன திசையைப் பார்த்தவாறு நின்றான் கிருஷ்ணன். 'ஒரு உண்மையான மனுஷன்' என்றான் சாம்பன் நெகிழ்ந்து போய்.
போய் டிக்கட் கியூவில் நின்றார்கள்.

சாந்தன் 醫 173
பனிரெண்டு
திரும்பிப் போய் அகதி முகாமில் நின்று, கப்பலில் அல்லது பிளேனில் போகலாமா என்ற எண்ணம் திரும்பவும் ஒரு கணம் வந்தது. வேணியைப் பார்த்தான். அவள் எல்லாவற்றையும் இவன் கையில் ஒப்படைத்து, விட்ட நிம்மதியோடு- எது நடந்தாலும் இருவருக்கும் தானே என்ற நிதானமாயிருக்கலாம்- சாம்பனின் மனைவி சொன்ன எதையோ கேட்டுக் கொண்டிருந் திாள். என்றாலும் முகம் மாறித்தான் இருந்தது. உள்ளுறைந்த பயத்தின் வெளிப்பாடான வெளிறல்சாம்பனின் முகமும் அவன் மனைவியின் முகமும்கூட அப்படித்தானிருந்தன. தன் முகமும் அப்படித்தான் இருக்கும் என நினைத்துக்கொண்டான்.
அரைவாசியில் மனதைக் குழப்பி, முன்வைத்த காலைப் பின் வைக்கக்கூடாது என்றுபட்டது. வருவது வரட்டும் என்று வந்தாயிற்று- இரண்டு மூன்று நாட்க ளாக யோசித்து யோசித்து எடுத்த முடிவு, இனிக் குழப்ப வேண்டாம்.
இருந்திருந்துவிட்டு நினைக்கும்போது இதெல்லாம்இந்த ஐந்தாறு நாட்களாக நடப்பதெல்லாம்- ஏதோ திடீரென வந்து கவிந்த இருள் போல உணர முடிகிறது. தார்ஸி வித்தாச்சியின், எமர்ஜென்ஸி- 58 என்ற புத்தகத்தைப் படித்தபோது, கற்பனை பண்ணிப் பார்க்கக்கூடப் பயமாயிருந்த விஷயங்கள் எல்லாம் இப்போது தன்னைச் சுற்றி உண்மையாகவே, மீண்டும்இடையில் ஒரு இருபது வருடம்- நடக்கின்றது என்பதை நம்ப முடியாமல் இருந்தது.
கிருஷ்ணன் மணிக்கூண்டைப் பார்த்தான். ஆறே கால், ரயில் இன்னமும் மேடைக்கு வரவில்லை. ஸ்டேஷன்

Page 94
174 蠶 ஒரு பிடி மண்
வழமை போல இருப்பதாகத்தான் பட்டது- அதிகரிக்கப் பட்டிருந்த காவலைத் தவிர,
டிக்கட்டுகளை வாங்கிக்கொண்டு உள்ளே போன போது யாழ்ப்பாண ரயிலுக்கு எதிர்பார்த்ததிலும் அதிகமான கும்பல் நிற்பதை உணர முடிந்தது. வழக்க மான ஒரு பயணத்தின்போது எரிச்சலையும் பயத்தை யும் தந்திருக்கக்கூடிய இந்த நெரிசல் இன்றைக்கு ஒரு ஆறுதலாயிருந்தது.
'இவ்வளவு கூட்டம் இருக்குமென்று நான் நினைக்க
வில்லை." என்று சாம்பன் வியப்புடன் சொன்னான்.
"ஹலோ - கிருஷ்ணன்." -யாரோ முதுகில் தட்டினார்கள். திரும்பிப் பார்த்தான், ஜெயதேவன்.
"ஹலோ .' என்றான், பதிலுக்கு, 1.என்ன,
'ம்.' என்று சொல்லி ஜெயதேவன் சிரித்தான்.
1. கப்பலில் சந்திப்போம் என்று அன்றைக்குச்
சொல்லிட்டுப் G C6. இன்றைக்கு ரயிலில் சந்திக்கிறோம்.” கிருஷ்ணனும் சிரித்தான் கசந்து.
foG LS 65?'
"அதோ, அதில் நிக்கறாங்க. நான் உங்களைக் கண்டுட்டுத்தான் வந்தேன். போய், அவங்களை இதில் கூட்டிக் கொண்டு வரட்டா. எல்லாரும் ஒன்றாயிருந்து ஆளுக்காள் துணையாய்ப் போயிடலாம்.'
"ஆமாம், அதுதான் நல்லது." 'இவர், உன்னுடைய ஃபிரண்டா?'. ஜெயதேவன் திரும்பியதும் சாம்பன் கேட்டான். "கிளாஸ்மேட். கனகாலம்- ஒன்றாய்ப் படிச்சவர். இப்ப, இங்கதான் வேலை செய்கிறார்."

சாந்தன் 鹽 175
பதிமூன்று
ஜெயதேவனை முன் தினம்- செவ்வாய்க்கிழமை, கலம்பகம் தொடங்கிய பிறகு கந்தோருக்குப் போன இரண்டாவது நாள்-சந்தித்திருந்தான். பஸ் நிலைய வந்தபோது வழக்கமான கியூவில் கால்வாசிகூட இல்லை.
இவள் பாவம்-பயந்து பொட்டுக்கூட வைக்காமல் வந்தாள்.' -வெறும் நெற்றியும் பயக்களை படர்ந்த முகமுமாய் முன்னால் நின்ற இரு பெண்களையும் காட்டிச் சொன்னான் ஜெயதேவன். தமிழ்ப் பெண்கள்.
"இன்றைக்கு வேலைக்குப் போகாமல் நின்றால் என்ன குறைஞ்சு போகும்?' என்று கிருஷ்ணன் தொடர்ந்து, பாவம். என்ன நிர்ப்பந்தமோ?' என்றான்.
*அங்கு பார்த்தீங்களா?." -எதிர்ச்சாரியில் ஒரு கடையின் கதவெல்லாம் எரிந்து கிடந்தது.
சனிக்கிழமை மத்தியானம்-ஊரடங்குச் சட்டம் அறிவிக்கப்பட்டவுடன் அலைமோதிய ஜனத்திரளில் முண்டியடித்து அவனும் அக்கடையில் சாமான் வாங்கி யிருந்தான்.
*எப்ப நடந்தது?"
*முந்தாநாளாம்!"
*முந்தா நாளா?. ஊரடங்குச் சட்டம்?-' ஜெய தேவன் சிரித்தான்-ஆற்றாமையுடன் பயமும் அதில் கலந்திருந்தது.
நேற்றையிலும் பார்க்க இன்று கொஞ்சம் உசாரா யிருந்தது. இனி எல்லாம் குறைந்துவிடுமென்பது போல ஒரு உணர்ச்சி. ஜெயதேவனிடம் சொன்னான்:

Page 95
176 麗 ஒரு பீடி மண்
'இதெல்லாம் சொல்லலாகாது-" என்றான், அவன். கந்தோருக்குப் போனதும் முதல் வேலையாக அந்த நாயக்காவைத் தேடிப் போனான். வழக்கமான சிரிப் புடன் வரவேற்றான், அவன். அதைப் பொருட்படுத் காமல் கிருஷ்ணன் கேட்டான்:
'நேற்றிரவு ரேடியோ கேட்டாயா?" * : arahr?** "யாழ்ப்பாணத்துப் பிக்கு என்ன சொன்னார்?' அத்தநாயக்கா பிறகும் சிரித்தான்.
சிரிக்கிறாய் மச்சான்?' கிருஷ்ணனுக்கு எரிச்சல் வந்தது.
அத்தநாயக்கா சிரிக்கும்போது விமல் பெரேரா வந்தான்.
*ஏன் சிரிக்கிறாய்?" என்று அவனும் கேட்டான்.
நேற்று இராத்திரி ரேடியோப் பேச்சைக் கேட்க வில்லையோ' என்று கிருஷ்ணன் கேட்கிறான்.
நேற்றிரவு அந்த ரேடியோப் பேச்சை- யாழ்ப் பாணத்தில் எந்த ஒரு சிங்கள மகனுக்கும் எந்த வித மான சிறு பாதிப்பும்கூட ஏற்படவில்லை என்று ஒரு பெளத்தகுரு சிங்கள மக்களுக்கு உறுதியாய்க் கூறி வதந்திகளை நம்பித் தமிழருக்கு ஹிம்சை செய்ய வேண்டாம் என்று கேட்டுக்கொண்ட அந்தப் பேச்சைக் கேட்டதிலிருந்து அவன் நிம்மதி கொண்டிருந்தான்; வதந்திகள் ஒழிந்து உண்மை வெளிக்குமென. ஆனால் இப்போது? அதை நம்பச் சொல்கிறாயா?”
-அப்படி ஒரு நிம்மதி இருந்துவிட முடியாது என்பது போல் இவர்கள் சிரித்துக் கொண்டிருக் கிறார்கள்.

சாந் தன் 鹽 1盲了
பதிநான்கு
ஆறரையாகப் போகுது. இன்னும் கோபால் ஆட் களைக் காணவில்லை?.' என்றான் சாம்பன்.
வந்திருப்பாங்க. இந்தச் ஜனத்துல стШшtфф கண்டுபிடிக்கிறது.'
நான் போய் @@ முறை தேடிக்கொண்டு வரட்டா?.'
*நீ நில். நான் போயிட்டு வாறேன்.” கிருஷ்ணன் வேணியிடமும் சொல்லிவிட்டுப் புறப்பட்டான்.
தண்டவாளங்களுக்கு மேலாய் மேடைகளைத் தொடுகிற பாலத்தில் ஏறினான். பழக்கமான படிகள். கோட்டை அலுவலகத்தில் வேலை செய்த அந்த மூன்றாண்டு காலமும்- அநேகமாகத் தினசரி சந்தித்து வந்த பாலம். ஒவ்வொரு மாலையும் ரயிலைப் பார்த் திருக்கையில் ஏறி நிற்பது இந்தப் பாலத்தில்தான். முழு ஸ்டேஷனுமே பார்வையில் படும் கூட்டமாய் நெளிகிற மனிதர்கள். உலகத்தின் ஒரு முழுமையான சிறு பின்னம் கீழே இயங்குவதைப் பார்த்திருப்பதில், காத்திருக்கிற அலுப்பே தெரியாது.
நாலாம் மேடைக்கு மேலே, பாலம் இறங்கத் தொடங்குகிற இடம், இரண்டு பக்கங்களிலும் படிகள். வலப்பக்க மூலையில் போய் நின்றான். கிராதி விளிம்பில் கைகளைப் பொறுக்க வைத்து, ஒற்றைக் காலைத் தூக்கிக் கம்பியில் ஊன்றி நின்று பார்த்தபோது, இப்போதும் அந்தக் காலம் திரும்பிவிட்டாற் போல் இருந்தது. இடையில் இத்தனை இடைவெளியா? ஐந்து வருடம் ஓடிவிட்டது என்பதை நம்பமுடியவில்லை.

Page 96
8 ஒரு பிடி மண்
வழுவழுத்த கைப்பிடிப் பலகையில் வெளிப்பக்க மூலையில் அப்போது ஒரு சிறு ஆணி இருந்தது. பார்க்க
«ԼԲ Լգ.ա. IIT351. ஆனால் கைகளுக்குத் தட்டுப்படும்.
இப்போதும்- இன்னமும்-அது இருந்தது. நீண்ட இடைவெளிக்குப் பின் சந்திக்கிற நண்பனை விசா ரிப்பதுபோல அதனை வருடிப் பார்த்தான். அதைக் கடைசித் தடவையாக ஸ்பரிசித்த நாளுக்கும் இன்றைக்கு மிடையில் எத்தனை காரியங்கள் நடந்துவிட்டனகனவுபோல இந்த ஆணி மட்டும், இந்த அசைகிற உலகில்-அதுவும் விநாடிக்குக் கோடி அசைவுகள் நடக்கிற இந்த ரயில்வே ஸ்டேஷனில்-அந்தப்படியே ஐந்து வருஷம் இருந்திருக்கிறது.
நேரே முன்னால்-கொஞ்சம் பதிவாக-தொங்கிய ஒலிபரப்பி கரகரக்கவும் அவனுக்குக் கோபாலின் ஞாபகம் வந்தது.
இறங்கிக் கூட்டத்தைப் பிளந்து நடந்தபோது எதிரே ஒரிடத்தில் லோமாஸ் நின்று கொண்டிருந்தார். கூட, பெண் சாதி பிள்ளைகள், கண்டதும், "என்ன கிருஷ்ணன், பயணமா?" என்றார்.
தலையாட்டியபடியே, 'நீங்களுமா?.' என்று கேட்டான்.
அவசரத்தில் சுருக்கமாகப் பேச்சை முடித்துவிட்டு நகர்ந்த போதுதான், "நீங்களுமா?’ என்று கேட் டிருக்கக்கூடாது என்று பட்டது. ஸோமாஸ், கொஞ்சம் அசாதாரணமான மனிதர், அரசியல் சமூகப் பிரக்ஞைகள் உள்ள மனிதர், தேசிய ஒருமைப்பாடு, ஒற்றுமை என்று பாடுபட்டுக் கொண்டிருந்தவர்.

சந்தன் 79
பதினைந்து
திடீரென்று கூட்டத்தில் ஒரு பரபரப்பு ஏற்பட்டது. "ரயில் வருகுது ' என்றான் கோபால்,
"நாங்கள் முதலில் ஏறி இடம் பிடிக்கிறோம், நீங்கள் பிறகு ஆறுதலாக ஏறலாம்' என்று கிருஷ்ணன் வேணி யிடம் சொன்னான்.
'தள்ளி நில் பிள்ளை ஜனம் உன்னைக் குழந்தை யோட இடிச்சு விழுத்திப்போடும்.' ஜெயதேவனின் தாய் பேரப்பிள்ளையைத் தூக்கி வைத்திருந்த மருமகளைக் கையில் பிடித்துக் கொண்டாள்.
ரயில் நிற்குமுன்பே தொப்புத் தொப்பென்று ஆட்கள் பாய்ந்தார்கள். இடித்துத் தள்ளிக்கொண்டு நுழைந்தார்கள். கிருஷ்ணனுக்கு முன்னால் இரண்டு சீட்டுகள் காலியாகக் கிடந்தன. எதில் உட்காரலாம் என்று யோசிப்பதற்கிடையில் ஒரு ஆள் பாய்ந்து முன் சீட்டில் இருந்தான். மற்றதில் இருக்கப்போன கிருஷ்ண னிடம் அவன் கத்தினான்.
இவ்வளவும் எங்களுக்கு'- கைகள் இரண்டு சீட்டுகளையும் மறைத்துப் பரந்திருந்தன.
இரண்டு சீட்டுகள், ஆறு பேர் இருக்கலாம். கிருஷ்ணனுக்கு ஆத்திரம் பொங்கியது.
** LLUIT CIbiš (5?” "எங்களுக்கு1. அங்கு வருகின்ற ஆட்கள்-என் னுடைய ஃபிரண்ட்ஸ்.” கிருஷ்ணன் ஆளைப் பார்த்
தான். இளைஞன் கறுவல். முரட்டுத்தனமாய்த் தெரிந் தான்.
கிருஷ்ணன் கோபாலிடம் சொன்னான்:

Page 97
180 醫 ஒரு பிடி மண்
*நீ இதில் இரு. நான் போய்ப் பொம்பிளையளைக் கூட்டிக்கொண்டு வர்றேன் "
*வேண்டாம் ” அந்த இளைஞன் கோபாலுவைத் தடுத்தான்.
"இவ்வளவும் எங்களுக்கு
வந்த ஆத்திரத்தை அடக்கிக்கொண்டு கிருஷ்ணன் நிதானமாகச் சொன்னான்:
"ஐஸே வழக்கமான நாள் என்றாலும் பரவாயிலலை. இன்றைக்கு இந்த ரிசர்வேஷன் GeoGru_T*_G வேண்டாம். அடி வாங்கி ஓடுகிற நாம் நமக் குள்ளே சண்டை C_T_TLD៨៦ ஒற்றுமையாகப் Ο8ι ΠOές). Πιο
ஒரு சீட்டை எடுத்துக்கொண்டு மற்றதை விடு ' கோடால் கேட்டான்.
'ஏலாது நாங்களெல்லாரும் ஒன்றாயிருந்து போக இவ்வளவும் வேணும் இருக்கப்போன கோபாலை அவன் தடுத்தான்.
கிருஷ்ணனுக்குக் கண்மண் தெரியாமல் வந்தது. அவன் மேல் பாய்ந்தான்-மறித்த கைகளைத் தட்டி விட்டு,
'தள்ளி இருடா'- நசிந்த விரல் தட்டுப்பட்டு லேசாக நொந்தது.
*கிருஷ்ணன், பொறு பொறு." என்றான் கோபால். அதைக் கவனியாமல் கிருஷ்ணன் சொன்னான்.
*கோபால், நீ போய் அவங்களைக் கூட்டிக் கொண்டா."
இரண்டு வரிசை தள்ளியிருந்த இடத்திலிருந்து ஒரு
நடுத்தர வயது மனிதர் ஓடி வந்தார். கிருஷ்ணனைப் பார்த்துக் கையைக் கூப்பிக்கொண்டே,

சாந்தன் 醫 181
தம்பி சண்டை பிடியாதையுங்கோ ராசா. நாங்கள்
நல்லா அனுபவிச்சுப் போட்டு வாறம். இனியாவது
ஒற்றுமையா, நிம்மதியாப் போவம்." என்றார்.
கிருஷ்ணன் கரைந்து போனான். அவர் எங்கோ இன்னும் தெற்கிலிருந்து வந்தவர் போலப் பட்டார்.
மன்னிச்சுக்கொள்ளுங்கோ ஐயா, இனிச் சண்டை பிடிக்கவில்லை."
பதினாறு
ஏழே முக்காலுக்கு மணி அடித்தது. "ஒரு படியா வெளிக்கிடப் போகுது." என்றார்கள் யாரோ,
'கதிரமலையானே, பத்திரமாகக் கொண்டு போய்ச் சேர்த்துவிடு, அப்பு " ஜெயதேவனின் தாய் கைகளை விரித்தாள்.
*கதிரமலையானும் இங்குதானே இருக்கிறார். இனி நல்லூரானே சன்னதியானே என்று கும்பிடுங்கோ."
கோபால் மெல்லச் சொன்னான். ரயில் கூவியது. "இனிதான் இருக்குது, பயணம்."
மீண்டும் அந்த அறிந்திராப் புதுக்குரல்.
இவ்வளவு அவதிப்பட்டு வெளிக்கிட்டிருக்கத்
தேவையில்லை என்றும் கிருஷ்ணனுக்குப் பட்டது.
LD-81
O

Page 98
29 நிழல்
தெருவரைக்கும் கரண்ட் வந்து இருபது வருஷத் திற்கும் மேலே இந்த ஒழுங்கைக்கு எடுப்பதற்கு எவ்வளவோ நாள் படாத பாடு பட்டார்கள். எல்லோரும் அலுத்து இனிப் பிடிக்க ஒருவருமில்லை என்று ஒய விட்ட வேளையில் எதிர்பாராமல் அது வந்தது. ஒரு வருஷத்திற்கு முந்தி ஒரு நாள் ஆட்கள் வந்து தூண் பறித்தார்கள் ஆறு மாதங்களில் நட்டாயிற்று. இன்னும் வயர் தொடுக்கவில்லை. ஆனால், வீட்டு இணைப்புக் காக விண்ணப்பங்களை வாங்குகிறார்களாம். விண்ணப் பங்கள் போட முதல் வீட்டில் வயறிங் முடித்திருக்க வேண்டும்.
கேதீசனுக்கு இது விஷயம் போன கிழமைதான் தெரிய வந்தது. எப்படியும் இப்போதே எடுத்துவிட வேண்டுமென்றிருந்தது. போதாக்குறைக்கு இப்போது தவறவிட்டால் பிறகு கனக்ஷன் எடுப்பது வலு கஷ்டம் என்று யாரோ சொன்னார்கள்.
ஆளைக் கூட்டிவந்து எஸ்ரிமேட் போட்டுப் பார்த்தான். சுருக்கமாகத்தான், ஒன்பது விளக்கு, ஒரு ப்ளக் பாயின்ட்-எல்லாமாகப் பத்து, என்றாலும் ஆயிரத்தைந்நூறுக்கு மேல் வரப்பார்த்தது-எவ்வளவு சுருக்கினாலும், சாமான் பட்டியலை வாங்கி வைத்துக் ଗଣs it ବର୍ତT LIT ବର୍ତt.

சந்தன் 靈 183
ஆயிரத்தைந்நூறு பற்றி ஈஸ்வரியுடன் யோசித்த போது, அவள் பலாவைப் பற்றி சொன்னாள். பலா அடிவளவில் நின்றது. குறைந்தது இரண்டு பரப்பிற் காவது நிழல் பரப்பிக்கொண்டு கூடாரம் மாதிரி. அடி மரம், ஆறேழு அடிக்கு மேல் வரும், சுற்றளவும் அப்படித்தான். அவளது ஆச்சி காலத்து மரமாம். ஆனால் காய்ப்பதை மட்டும் கொஞ்சக் காலமாய் நிறுத்தி விட்டிருந்தது. அதைக் கொடுக்கலாமென்றாள். போன மாதந்தான் தோணிக்காரர் வந்து விலை கேட்டிருந் தார்கள், கேதீசனுக்கு அவ்வளவு மனமில்லை. அவ னுக்கும் அந்த மரத்திற்கும் பழக்கமேற்பட்டு பத்து வருஷத்திற்குள்தான். என்றாலும் தோணிக்காரர்களுக்கு முடியாது என்று சொல்லியிருந்தான்.
ஈஸ்வரி இப்போதும் அதைத்தான் சொல்லுகிறாள். கேதீசன் ஆமென்றால், அப்புக்குட்டிக் கிழவன் நாளைக்கே விலை கேட்டவனைக் கூட்டிவந்துவிடும். விலைகூட சரியாய் வரும்-வயரிங் செலவுக்கு அவ்வள வாய் பிரச்சினை இராது.
கேதீசனுக்கு இப்போதும் அவ்வளவு சம்மதமில்லை. மொக்குகளும் செம்மஞ்சள் தேமல்களுமான கம்பீரம், காற்றுக்கெல்லாம் பெய்கிற பழுத்தல்கள், வெய்யில் பூக்கும் வெள்ளை மணல், முற்றத்திலிருந்து பார்க்கையில் ஒரு தென்னை உயரத்தில் தெரிகின்ற உச்சிக் கொப்புஇதெல்லாவற்றையும் தறிக்க வேண்டுமா என்றிருந்தது? எல்லாவற்றுக்கும் மேலாய், கோடை மதியங்களில் அவன் சரணாலயம்,
வேறு வழியில்லாதிருந்தது.
அவனிலும் பார்க்க ஈஸ்வரி ஆர்வமாயிருந்தாள். ஒரே நாளில் கொப்பெல்லாம் தறித்து, அடி மரத்தைச் சுற்றித் தோண்டி, கூம்பாக வெட்டிப் G3 L II FT Luo ஒரு ராட்சசனை விழுத்துவது போல் பலாவை வீழ்த்தினார்கள், மரந் தூக்குகிற வண்டியில்

Page 99
184 屬 ஒரு பிடி மண்
இரண்டு வடக்கத்தி மாடுகளுடன் வந்து, இரும்புச் சங்கிலியால் கட்டித் தூக்கிப் போனது.
அடிவளவே வெளித்துவிட்டிருந்தது. வேறு யார் வீட்டிலோ இருப்பது போலிருந்தது. பரவாயில்லை, அந்த இடத்தைக் கொத்தி காய்கறித் தோட்டம் போடலாமென்றாள் ஈஸ்வரி. ஒரு மோட்டார் வாங்கி விட்டால் இன்னும் நல்லது .
சனிக்கிழமை காலையில் பட்டியலையும் காசையும் கொண்டு பட்டினம் புறப்பட்டான்.
சந்தையைத் தாண்டி பஸ் நிறுத்தத்தை நோக்கி நடந்தபோது, எப்போதும் குங்கிலியம் மணக்கிற அந்த இடத்தில் தட்டி அவிழ்த்து, வேலி திறந்திருந்தது. உள்ளே அவன் வீட்டுப் பலா கிடந்தது.
இதுதான் தோணி செய்கிற இடமென்று இவ்வளவு நாளும் தெரியாதிருந்ததே என்று வியந்தான். ஒரு நாளைக்குப் போய்ப் பார்க்க வேண்டும். ஆனால் இந்தப் பலாவை அறுக்கும்போதல்ல.
மல்லிகை- 1982
DI)


Page 100


Page 101
|- , ! ..
· 圈