கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: இந்துக்கலைக்களஞ்சியம் 1

Page 1
இந்து சமய கலாசார அலு இந்து சமய அலுவல்கள்
పజిల్ల్లో స్గ &ষ্ট্র 毅
YL S L S LLS LS LS LS LS L L SL ZLLLSLLLL LZZZL LLL LS LS LS
 

ல்கள் திணைக்களம் அமைச்சு - இலங்கை
less இ'

Page 2
隱過r *je5/6–劑| (soos gosso mogođì)|
 
 

og Ogos, og rá gafarno esco-wropeo ooroo oo@so qo&sodels go-isregorio: QaeTea@』 oosoɛ) moog) aus osso pog) un sfērpsigorosso exegos ooooooooooo :: » Q y Quae uri sasarae sastels彎職「 oo oitooo@origjue@ iso erroristo NođÐ uoc, q,), g), 43*****go vā pigolo31,9 leg)o(o)-tog,4,09070),~(nportog *Q*Q4n/7匈7% *Q日eé g鹽圈爾•屬é ooo oo@so gogo oog H os@oguae soole googg
∞ 10091) fırığı um groasis los es unio,

Page 3


Page 4


Page 5
இந்துக்கலை
தொகுதி -
பிரதம பதிப் பேராசிரியர் சி
உதவிப் பதி
திரு. க. இ
Ը
岛
Gooffi இந்து சமய கலாசார அலு இந்து சமய அலுவ
இலங்
2OO
நிர்வாக ஆ
Sy திரு. எஸ். தெ

க்களஞ்சியர்
[프 - r)
JULI ÁFífluLJň
பத்மநாதன்
ŮUITáRlíflu Jiř
ரகுபரன்
ஆசிரியர் தய்வநாயகம்
مذ علق بخده و ترفيا ت 6 كية قرية 111 11، مقاً i قشری }rygiiiiiiود،
யீடு
வல்கள் தினைக்கணம் ல்கள் அமைக்க
OS 29.3 5
agg 03P

Page 6
முதற்பதிப்பு
இரண்டாம் பதிப்பு
(திருத்தியது)
வெளியீடு
பதிப்புரிமை
அச்சு
விலை
ISBN: 955 9233-06-8
ஜூன், 1990
செப்டெம்பர், 2005
இந்து சமய கலாசார அ இந்து சமய அலுவல்கள் 248 - 1/1, காலி வீதி, கொழும்பு - 04, இலங்கை,
இந்து சமய கலாசார அ
யுனி ஆர்ட்ஸ் (பிரைவே 48 பீ, புளூமெண்டால் வீதி, கொழும்பு - 13,
இலங்கை.
EUGUINT 500 /=

லுவல்கள் திணைக்களம்
அமைச்சு
லுவல்கள் திணைக்களம்
ாட்) லிமிட்டெட்.

Page 7
HINDUENO)
Volu
Editor - i.
PROF. S. PAT
Sub E
K. RAGU
Managin
S. THEIWA
Publi Department of Hindul Reli
Ministry of Hindu
Sri Li
20

(CLOPAEDIA
me - I
in - Chief THMANATHAN
Editor
JEPARAN
g Editor NAYAGAM
isher
igious and Cultural Affairs
Religious Affairs anka
05

Page 8
First Edition
Second Edition :
Published By
Copyright
Printed By
June, 1990
September, 2005
Department of Hindu Religious Ministry of Hindu Religious A 248 1/1, Galle Road, Colombo- 04,
Sri Lanka.
Department of Hindu Religious
Unie Arts (Private) Limited.,
48B, Bloemendhal Road, Colombo - 13. Sri Lanka.
RS. 500/=
ISBN: 955 9233-06-8

and Cultural Affairs, ffairs,
and Cultural Affairs.

Page 9
இந் கலைக்க
(தொகு
எழுத்தா
பேராசிரியர் பொ
பேராசிரியர் சி. ப;
பேராசிரியர் வி. சி
பேராசிரியர் நா.
கலாபூஷணம் வ
திரு. க. இரகுப
திரு. செ. அழக
திரு. எஸ். தெய்
திருமதி இந்திர
திருமதி தேவகு
திருமதி நித்திய
திரு. பூரீ பிரசா
கட்டுரைகளின் இறுதியில் அவ்வக் சுருக்கித்தரப்பட்டுள்ளது. மே பெயர்ச்சுருக்கங்கள் முறை (பொ. பூ) (சி.ப), (வி.சி) (சோ.கி) செ.அ), (எஸ்.தெ), (இ. ச),

ாஞ்சியம்
தி - 1)
ார் குழு
பூலோகசிங்கம்
நிமநாதன்
6 griff
கிருஷ்ணராஜா
ஞானகுமாரன்
சந்தா வைத்தியநாதன்
ரன்
ரெட்ணம்
வநாயகம்
சதானந்தன்
மாரிஹரன்
வதி நித்தியானந்தன்
ந்தன்
கட்டுரைகளின் ஆசிரியர் பெயர்
படி கட்டுரையாளர்களின் ய வருமாறு அமையும். (நா. ஞா), (வ, வை), (க.இர), தே. ஹ), (நி.நி), (றுரீ.பி)

Page 10
இ
கலைக்க
(தொ
கட்டுரை
g) . G6). FTA
வி. சி. கந்ை
王 டி. பி. செல்ல
கே. ஏ. மண
ப. அருனா
சுவீரா ஜெய
நவாலியூர்
க. நாராயணி
மேற்படி அறிஞர்களின் கட்டுரைகள் வேறு நூல்களிலிருந்து பெறப்பட்டவை ே
முறையே
(உ. வே. சா), (வி. சி.
(ப.அ), (சு.;ெ

ந்துக் களஞ்சியம்
குதி - 1)
ஆசிரியர்கள்
பிநாதையர்
85fMUT
லத்துரை
வாளன்
சலம்
பர் வால்
சோ.நடராசன்
ஏன்
இத்தொகுதிக்கென எழுதப்பட்டவை அல்ல. மற்படிகட்டுரையாளர்களின் பெயர்ச் சுருக்கங்கள் வருமாறு அமையும். க), (டி.பி. செ) கே. ஏ. ம), ஜ), (சோ.ந.) (க.நா.)

Page 11
கே. என். டக்ள் மாண்புமிகு கமத்தொழில் சார்ந்த கூட்டுறவு
இந்துசமய அலு கல்வி, வாழ்க்கை
இந்துக் கலைக்களஞ்சியம் வெ பணியாகும். இந்துசமய கலாசார அ வருடங்களாக இப்பணியில் முழுமை மகிழ்வடைகின்றேன்.
1990 ஆம் ஆண்டு, இந்துக் கை வெளியிடப்பட்டது என அறிகின்ே விடுபட்ட காரணத்தினால் விடுபட்ட செய்ய முன்வந்திருப்பது மிகவும் வர:ே இப்பதிப்பு அமைந்துள்ளது கண்டு பூ
எனது அமைச்சு ஆரம்பிக்க மேற்கொள்ளப்பட்டதுடன், புதிய ெ சாலச்சிறந்ததாகும்.
கடந்த பல ஆண்டுகளாக இப்பணி பல்கலைக் கழகத்து வரலாற்றுத்துறை பாராட்டிற்குரியவர். இத்தகைய ட ஈடுபட்டுவரும் திணைக்களப் பணி அவர்களின் முயற்சி வரவேற்கத்தக ஈடுபட்டுவரும் உதவிப் பணிப்பாளர் தி கட்டுரைகளைத் தொகுத்து வழ1
உத்தியோகத்தர்கள் அனைவரையும் ப
மேலும் பல தொகுதிகள் வெளி துணையாக நிற்கும். இப்பணி, திணைக்களத்தின் செயற்பாடுகள் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கெ
*
 

55/0/
ஸ் தேவானந்தா
அமைச்சர், விற்பனை அபிவிருத்தி, அபிவிருத்தி, ரவல்கள் மற்றும் த் தொழிற்பயிற்சி
ளியிடும் முயற்சி மிகவும் சிரமமான புலுவல்கள் திணைக்களம், கடந்த பல யாக ஈடுபட்டு வருவது கண்டு மிகவும்
லைக்களஞ்சியத்தின் முதல் தொகுதி றன். அத்தொகுதியில் பல சொற்கள் சொற்களையும் சேர்த்து மறுபதிப்புச் வற்கத்தக்கது. காலத்திற்கேற்ற பணியாக ரிப்படைகின்றேன்.
ப்பட்ட இக்காலத்தில் இப்பணி தாகுதிகளையும் வெளிக்கொணருவது
ரியில் ஈடுபட்டு வருகின்ற, பேராதனை பேராசிரியர் சி. பத்மநாதன் அவர்கள் பணியில் சளைக்காது ஆர்வமுடன் ப்பாளர் திருமதி சாந்தி நாவுக்கரசன் கேது. ஆரம்ப முதல் இப்பணியில் ரு எஸ். தெய்வநாயகம், மற்றும் ஆய்வுக் ங்குகின்ற அறிஞர்கள், ஆராய்ச்சி >னமாரப் பாராட்டுகின்றேன்.
வருவதற்கு எமது அமைச்சு என்றும் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு
T சிறப்புற அமைய எனது ாள்கின்றேன்.
SSSSSSSSSSS
Vii
|-

Page 12
Viii
வெளி
சாந்திநா பணிப் இந்துசமய கலாசார அ
இந்துக் கலைக்களஞ்சியம் என்னு ஆறு தொகுதிகள் திணைக்களத்தின் அருமை கருதியும், தேவை கருதியும் பதிப்பை மீண்டும் வெளியிட்டு வைப்
இந்துக் கலைக் களஞ்சியம் தெ அபிவிருத்தி அமைச்சராக விளங்கிய எண்ணத்திற்கேற்ப ஆரம்பிக்கப்பட் இராஜாங்க அமைச்சராக கெளரவ
காலத்திலேயே முதற் தொகுதி வெளி
முதலாவது தொகுதியைத் தொகுக் கழகத்தின் முன்னாள் தமிழ்த்து பொ. பூலோகசிங்கம் அவர்கள் ! நிறைவேற்றியிருந்தார். இத்தொகுதியி வரையான நான்கு சொற்களுக்குரிய இவை இந்து சமயத்துடன் தொடர்பு இதிகாச புராணங்கள், பண்பாடு போ
கட்டுரைகளாக அமைந்திருந்தன.
ஏறத்தாழ பதினைந்து ஆ வெளியிடப்பட்டிருந்த காரணத்தின இந்நூலில் விடுபட்டுப் போயிருந்த ட சேர்த்துக் கொள்ளப்பட வேண்டிய
முதற்பதிப்பு தவிர்ந்த ஏனைய பதி புரியும் பேராதனைப் பல்கலைக் க
சி. பத்மநாதன் அவர்கள், முதற் தொ
 

பிடுரை வுக்கரசன்
U16, லுவல்கள் திணைக்களம்
ம் தொகுதி நூல் வரிசையில் இதுவரை வெளியீடாக வெளியிடப்பட்டுள்ளன. முதலாவது தொகுதியின் இரண்டாம் பதில் மிக்க மகிழ்ச்சி அடைகின்றோம்.
5ாகுக்கும் பணி, முன்னாள் பிரதேச கெளரவ செ. இராஜதுரை அவர்களின் ட்டதாகும். ஆயினும் 1990 ஆண்டு பி. பி. தேவராஜ் அவர்கள் விளங்கிய
பிட்டு வைக்கப்பட்டது.
கும் பணியைப் பேராதனைப் பல்கலைக் |றைப் பேராசிரியராக விளங்கிய மட்டுமே ஏற்று, திறம்பட அதனை ல் அகர வரிசையில் 'அ' தொடக்கம் 'ஈ' 640 கட்டுரைகள் இடம் பெற்றிருந்தன. டைய வரலாறு, தத்துவம், ஆலயங்கள்,
ன்ற பல்வேறு அம்சங்களையும் சார்ந்த
ண்டுகளுக்கு முன்னர் இந்நூல் ால் தீர்ந்து போயிருந்தது. அத்துடன் பல தலைப்புகளுக்கான கட்டுரைகளும்
அவசியம் இருந்தது.
ப்புகளுக்கு பதிப்பாசிரியராகக் கடமை ழக வரலாற்றுத்துறைப் பேராசிரியர் குதியை திருத்திய பதிப்பாக வெளியிட

Page 13
வேண்டிய அவசியத்தை எமக்கு உணர்த்தியதோடு, புதி எனவும் தெளிவுபடுத்தினார்.
அதற்கமைய திருத்திய பதிப்பாகிய இந்நூலி கொள்ளப்பட்டுள்ளன. இவை இந்து சமயத்துடன்
விளக்குவனவாகும்.
இத்தொகுதி சிறப்பாக வெளிவருவதற்குப் பதிப்பு குழுவினர், கட்டுரையாளர்கள், மற்றும் திணைக்கள்
உத்தியோகத்தர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்:
இந்து சமயம், இந்துப் பண்பாடு ஆகிய துறைகளை ஆய்வு மேற்கொள்ளும் ஆய்வாளர்களுக்கும் இப்பதிப்
நம்பிக்கையாகும்.
S S S S S S S S S S S S S S
韋-書
-
 
 
 
 
 
 

ப கட்டுரைகள் இணைத்துக் கொள்ளப்பட வேண்டும்
ல் மேலும் 120 புதிய கட்டுரைகள் சேர்த்துக்
தொடர்புடைய பல்துறை சார்ந்த அம்சங்களையும்
ப் பணியில் முன்னின்று செயற்பட்ட பதிப்பாசிரியர் ஆய்வுப் பகுதி உதவிப் பணிப்பாளர், ஆராய்ச்சி த பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
ப் பாடமாகப் பயிலும் உயர்பிரிவு மாணவர்களுக்கும்,
பு பெரும் பயன் தருவதாக அமையும் என்பது எமது
LSquqSqqSqq SqqS qSuuqSuSqSqSqSuMquququqqq qq qqq qqq qqq qqq qqSqqSqSqSu

Page 14
பதிப்
சிரேஷ்ட வரலாற பேராதனைப்
இந்து சமய, கலாசார அலுவல் ஒன்றான இந்து கலைக்களஞ்சியத் ஆக்கப்பணிகள் பெரும்பாலும் நிை வெளியிட்ட தொகுதிகளையும் மாற்றங்களோடு விரிவாக்கி ( தீர்மானித்துள்ளது. அவற்றின் பிர, விட்டன. இலங்கையில் உள்ளவர்களு அவற்றைப் பெற்றுக்கொள்வதில் வெளியிடப்பட்ட தொகுதிகளை இடம்பெறாத விடயங்கள் பலவற்றை கட்டுரைகளிற் சிலவற்றை விரிவுபடுத்து ஆயினும், அவற்றை உரிய முறையி வசதிகள் சொற்பமானவை. போ: ஈடுபடுத்திக் கொள்ள முடியவில்லை.
கல்லூரி மாணவர்களும், ஆசிரிய இந்துக் கலைக்களஞ்சியத்தின் தொகு வழக்கம் உருவாகி வருகின்றது. இதுவ வளர்ச்சியைப் பொறுத்தவரையில் கொள்வதற்கு அவர்கள் வெளிக் ஆதாரமாகும். இலங்கையில் நன கருத்தரங்குகள் என்பவற்றிலே பங்கு தேசங்களிலிருந்தும் வரும் அறிஞரு தலைவர்களும் இத்தொகுதிகளைப் அவற்றால் ஏதாவது பெருமைகள் சமுதாயத்துக்கே உரித்தானவை.
லங்கைக்கும் சைவ சமயத்திற்கும்
(5 றகு
காலம் முதலாக நிலைபெற்று வி
 

ԱՅԾԱ
மநாதன் பேராசிரியர் றுத்துறை, பல்கலைக்கழகம்.
கள் திணைக்களத்தின் வெளியீடுகளில் தின் ஏழாவது தொகுதி தொடர்பான றைவெய்திவிட்டன. அத்துடன் முன்பு மீண்டும் ஒவ்வொன்றாகச் சில வெளியிடுவதென்று திணைக்களம் திகள் பெரும்பாலும் விநியோகமாகி ஒளும் வெளிநாடுகளில் வசிப்பவர்களும்
ஆர்வங் கொண்டுள்ளனர். முன் மீண்டும் பதிக்குமிடத்து அவற்றிலே ரப் புதிதாகச் சேர்த்துக் கொள்வதற்கும் துவதற்கும் வாய்ப்புக்கள் கிடைக்கின்றன. லே பயன்படுத்திக் கொள்வதற்கான திய அளவிலே கட்டுரையாளர்களை
ர்களும் பல்கலைக்கழக மாணவர்களும் ததிகளை ஆவலோடு விரும்பிக் கற்கும் ரை வெளிவந்துள்ள தொகுதிகள், அறிவு b மிகவும் பயனுடையவை என்று காட்டும் ஆர்வம் ஒர் உறுதியான டபெறும் ஆராய்ச்சி மாநாடுகள், கொள்வதற்கு இந்தியாவிலிருந்தும் பிற ம், கலைஞரும் சமய நிறுவனங்களின் பெரிதும் பாராட்டிச் செல்கின்றனர். கிடைத்தால் அவை இந்நாட்டு இந்து
) இடையிலுள்ள தொடர்பு பூர்வீகமான பருவது. இலங்கை சிவபூமி என்று
-

Page 15
  

Page 16
போதியளவு கல்வியறிவும் சமயாபிமானமும் சமுத தேவைகளாகும். இலங்கைச் சைவர்கள் தங்கள் சமய ( இந்நாட்களில் சமய உபதேசம் செய்வதில் எந்தவகையி அவற்றைப் பற்றி விளக்குவதிலும் கவனஞ் செலுத் முதலிய கிரியாபூர்வமான கருமங்களையே அவர்கள் என்பவற்றைப் பொதுமக்களுக்கு விளக்கும் தகைமை இருபதாம் நூற்றாண்டுகளில் வாழ்ந்த அந்தணர்கள் ப சமயாபிமானங் கொண்டோராயும் இருந்தனர். பலர் ட படித்து, அவற்றை அச்சிலே பதிப்பித்து, நூல்களாக ெ அந்தணர் ஈடுபாடு கொண்டனர். ஒரு சமயம் மக்கள் குருமார் சமய ஞானமும் சமயாபிமானமும் அவர்கள் தகைமையும் ஈடுபாடுங் கொண்டுள்ள சமயகுருமார் சவால்களை எதிர்கொள்ளும் ஆற்றல்களைச் சைவர்
சைவசமுதாயத்தின் அடிப்படையான பலவீனத் அமைத்து, மாநாடுகள் கூட்டி, சமய மரபுகளு முற்பட்டுள்ளனர். "வேதம் எனப்படுவது திருக்குறள்” 6 பிறதேசமொன்றிலே கேட்கும் அரும்பேறு எமக்குக் கி திருவாசகங்களை ஒரு புறத்தில் ஒதுக்கி வைக்க வேண் வேண்டும். தங்கள் சமயத்தவரின் சமயாபிமானத்தை ஈடுபடுகின்றனர். அவர்கள் சமுதாயத்திற் செல்வா வசதிபடைத்தோராயும் விளங்குகின்றனர். முன்னே விழிப்புணர்வுடைய சமய குருமார் சைவர்களிடையில்
இந்துக்கள் எல்லோரும் தங்கள் சமயத்தைப் பற்றி நாகரிகத்தைப் பற்றியும் ஒரளவுக்கேனும் அறிந்திருத் சாதனை என்பன பற்றி இந்து சமயத்தைப் போல :ே இடம்பெறுவதில்லை, அச்சிந்தனைகளும் நெகிழ்ச்சிய இயல்பானவை; அவை இயற்கை நெறியோடு இ ஒப்புக்கொள்கின்றது. “மெய்ப்பொருள் ஒன்றே விளக்குகின்றனர்” என்பது வேதவாக்கு “ஞானம், யோ பலவற்றின் மூலமாகவோ ஒருவர் என்னை அடைந்து சொல்வார். அவரது குறிப்பிலே கர்மம் என்பது 8 நிறைவேற்ற வேண்டிய கடமைகளை, அறங்களைக் குறி அமைந்துள்ளது “ வையத்தில் வாழ்வாங்கு வாழ்வா திருவள்ளுவர் வாக்கு. எனவே பிறவிப் பயனை அவசியமில்லை. இல்லற வாழ்க்கையோடு இணைந்து வாழ்க்கையிலே தானதருமங்கள் இன்றியை
xii
 

ாய உணர்ச்சியும் சமய குருமாருக்கு இன்றியமையாத் நருமாராக மரபு வழியாகக் கொள்ளும் பிராமணர்கள் லும் ஈடுபடுவதில்லை. சமய நூல்களைப் படிப்பதிலும் துவதில்லை. கோயில்களில் ஆராதனை, அபிஷேகம் செய்கின்றனர். அவற்றின் தேவைகள், நோக்கங்கள் மயும் ஈடுபாடும் அவர்களுக்கில்லை. பத்தொன்பதாம், லர் நூற்பயிற்சி உடையோராயும் ஒழுக்க சீலர்களாயும் ராணங்களையும் சமயசாத்திர நூல்களையும் ஏடுகளிற் வளியிட்டுள்ளனர். புராண படனத்தில் அந்நாட்களில் ரிடையே சிறப்புற்று விளங்கவேண்டுமாயின் அதன் ரிடையே ஏற்படுவதற்கு ஆவன செய்தல் வேண்டும். இல்லாதவிடத்து இந்நாட்களிலே தோன்றும் பெருஞ் கள் இழந்துவிடுவர்.
தைப் புரிந்துகொள்ளாத சைவர் சிலர் சங்கங்களை க்கு விரோதமான சிந்தனைகளை வெளிப்படுத்த ான்ற ஆதீன முதல்வர் ஒருவரின் ‘அருள்வாக்கினையும் டைத்தது. அதனை ஒப்புக் கொள்வோமாயின் தேவார எடும். திருக்கோயில் வழிபாட்டு நெறியையும் கைவிட ப் பலவீனப்படுத்தும் கைங்கரியங்களிற் சைவரிற் பலர் க்குடையோராயும் உயர்பதவிகளில் உள்ளோராயும் இங்கு கூறியதைப் போல விவரங்களைத் தெரிந்த இல்லாதமையால் இத்தகைய நிலைகள் ஏற்படுகின்றன.
யுெம், அதனை ஆதாரமாகக் கொண்டு வளர்ச்சிபெற்ற தல் அவசியமானதாகும். கடவுள், வழிபாடு, ஆன்மீக வறெந்தச் சமயத்திலும் ஆழமான, பரந்த சிந்தனைகள் புடையனவாக அமைந்துள்ளன. கருத்து வேறுபாடுகள் யைபுடையவை என்பதை இந்து சமயம் மட்டுமே
- அதனை ஞானிகள் வெவ்வேறு வண்ணமாக கம், கர்மம், பக்தி என்பனவற்றில் ஒன்றன் மூலமாகவோ கொள்ளலாம்” என்று பூரீ கிருஷ்ணர் பகவத்கீதையிலே கிரியை நெறியினை அன்றி, ஒருவர் வாழ்க்கையிலே றிக்கின்றது. அவ்வாறான சிந்தனையின் அடிப்படையில் ன் வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படும்” என்னும் அடைவதற்குத் துறவறம் மேற்கொள்ள வேண்டிய துள்ள நெறியாக அமைவது இந்து சமயநெறி. இல்லற மயாதவை. மன்னுயிர்களின் வாழ்க்கையினை

Page 17
மேம்படுத்துவதனைக் குறிக்கோளாகக் கொண்டவை வித்தியாதானம் போன்றவை. தானதருமங்கள் எல்ல கொண்டவை. அந்தவகையிற் சமூகசேவைகள் இயல்பு அவை பாவங்களைப் போக்கி ஆன்மாவைப் பரிசுத்த
ஆன்மா பற்றிய சிந்தனைகள் இந்து சமய மரபு ஆன்மாக்களைப் பொறுத்தவரையில் அவற்றிடையே பெண் என்ற பேதங் கடந்த நிலையில் உள்ளவை. ஆகே அடிப்படையில் இந்துசமய சிந்தனைகளோடு இயை தடையாக அமைந்திருக்கும் சமூகக் கட்டுப்பாடுக கைைளயப்பட வேண்டியவை. சமயக்கல்வி, சமய உ கூடியதாக அமைதல் வேண்டும். நீதியினை அடிப்பை
இளைஞர் சமுதாயமொன்றை உருவாக்கக் கூடிய சம
சகதர்மினி என்று பெண்ணைக் குறிப்பிடுவது வழிகளிலும் பெண்கள் ஆண்களுக்கு சமநிலையில் தத்துவமாகும். பெண்ணின் பங்களிப்பின்றி சமய செய்யலாகாது என்பதே புராதனமான விதியாகும் உரியவர்கள் என்பதிற் புராதனமான சாத்திரங்களிற் ச கவலையோடும் வாழ்கின்றாளோ அங்கிருந்து திரும மனுதரும சாஸ்திரம். கூட்டுக்குடும்பங்களில் மணமகள் சாஸ்திரப் பிரமாணம். இந்து நாகரிகத்திற் போ பெண்களுக்குக் கெளரவம் வழங்கப்படவில்லை. ெ
முதன்முதலாகத் தர்மசாஸ்திரங்களே ஒப்புக்கொண்ட
உலகிலுள்ள மொத்தச் சனத்தொகையில் ஏறச் குறிப்பிடத்தக்கது. சமய அடிப்படையில் சனத்தெ இடத்தைப் பெறுகின்றனர். அவர்களிற் பெரும்பா அங்குள்ள இந்துக்களிடையே ஏறக்குறைய 25 மொழிக மரபுகளும் நாவலந்தீவு என்றும் பாரதவர்ஷம் என்று உற்பத்தியாகி வளர்ச்சி பெற்றனவாகும். அவை ஏறக்கு பல இனங்களைச் சேர்ந்த மக்களும் பல பண்பாட்டு முற்காலங்களில் இந்தியத் துணைக்கண்டம் அனை விளங்கியது. வேதங்களும் ஆகமங்களும் தர்மசாஸ்தி நூல்களும் அம்மொழியில் எழுதப்பட்டன. இந்நாட்க துறைகளில் ஆங்கிலம் தொடர்பு மொழியாக விளங்கு அந்நாட்களிற் சமஸ்கிருத மொழியைப் பயின்றனர். ஆகியவற்றிடையிலே பரஸ்பரத் தொடர்புகளும் செல்
*
-
 
 
 
 

தான தருமங்கள். அவை அன்னதானம், பூமிதானம், ாம் மனிதாபிமான சிந்தனைகளை அடிப்படையாகக் டைய எல்லோரும் செய்யவேண்டிய கடமைகளாகும். ப்படுத்தும் புண்ணியங்களாகும்.
பிலுள்ள எல்லாப் பிரிவினருக்கும் பொதுவானவை. சாதி, சமூக, தேச வேற்றுமைகள் இல்லை. அவை ஆண், வே மனித உரிமைகள் என்னும் நவமான கோட்பாடுகள் புடையவை. இந்து சமுதாயத்தின் முன்னேற்றத்திற்குத் ளும், அவற்றை நிதானப்படுத்தும் சிந்தனைகளும் ணர்ச்சியோடு சமுதாய உணர்ச்சியையும் ஏற்படுத்தக் டயாகக் கொண்ட சமுதாயம் ஒன்றை அமைக்கவல்ல யக்கல்வியே இன்று அவசியமாகின்றது.
புராதன கால இந்துக்களின் வழக்கமாகும். எல்லா உள்ளவர்கள் என்பதே அதற்கு அடிப்படையான குருமார்கள் சடங்குகள், கிரியைகள் என்பவற்றைச் பெண்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் மதிப்பிற்கும் கருத்து வேறுபாடில்லை. எங்கு பெண் கண்ணிரோடும் }கள் உடனடியாகவே வெளியேறிவிடுவாள் என்கிறது ாாகச் செல்லும் பெண் முதன்மை பெறுவாள் என்பது ல உலகிலுள்ள பிற புராதனமான நாகரீகங்களிற் பண்களின் சொத்துரிமைகளை உலகளாவிய ரீதியில்
_ତ0T.
குறைய நூறு கோடி மக்கள் இந்துக்கள் என்பது ாகையினை நோக்குமிடத்து இந்துக்கள் மூன்றாம் லானோர் தென்னாசியாவிற் பரந்து வாழுகின்றனர். 5ள் வழங்குகின்றன. இந்து சமயமும் அதன் பண்பாட்டு றும் சொல்லப்படுகின்ற இந்திய துணைக்கண்டத்தில் 1றைய 3500 ஆண்டுக்கால வரலாற்றைக் கொண்டவை. நெறிகளும் இந்து சமுதாயத்திலே சங்கமமாகிவிட்டன. த்திலும் சமஸ்கிருத மொழி தொடர்பு மொழியாக ரங்களும் சிற்பசாஸ்திரங்களும் கலாதத்துவம் பற்றிய ளில் கல்வி, கலை, வாணிபம், பொதுநிர்வாகம் முதலிய வதனால் அதனைப் பலரும் விரும்பிக் கற்பதைப் போல ஏறக்குறைய 2000 வருடங்களாக தமிழ், சமஸ்கிருதம்
வாக்கும் ஏற்பட்டிருந்தன.
■
*-
xiii

Page 18
  

Page 19
  

Page 20
முதலாப்
66.16ն
கெளரவ பி இந்து சமய, இந்து இராஜாங்
(யூன்
உலகிலேயே மிகத் தொன்மைய ஒன்றாகிய இந்து சமயம் மிக விசாலி இந்துசமய மெய்யியலும் சிந்தனைய வளர்ச்சி பெற்று வந்துள்ளன. பார ஞானிகளும், முனிவர்களும் இந்துச தொண்டாற்றியுள்ளனர். இந்துசட கருத்துக்களும் பல்வேறு இலக்கிய காணப்படுகின்றன. இந்து சமயத்தவ போக்கிக் கொள்ளவும், சிந்தனைச வேண்டிய அவசியம் இருக்கிறது.
"፥ሄmo..
விழிப்புணர்வு ஏற்பட்டு வருவது கு இன்று ஒரு பக்தி இயக்கத்தையே மு சமய வழிபாடுகளும், கிரியைகளு மறுமலர்ச்சியைப் பெற்று மிளிர்கின் தமது சமயம் பற்றிய சிந்தனையில் ெ என்பதை மறுக்க முடியாது.
இலங்கையில் பாடசாலைகளிலு கூடங்களிலும் இந்து சமயமும், இ கற்பிக்கப்படுகின்றன. இந்துமதம் போதிக்கப்படுகின்றது. யாழ். பல்க ஒன்று அமைக்கப்படவுள்ளது. இ நோக்குமிடத்து தத்துவம், சிந் கலைக்களஞ்சியம் ஒன்றின் அவசியப்
அறுநூற்று எழுபது விடயங்க6ை தொகுப்பு ஒன்றினை எமது அபை கிடைத்தமையிட்டுப் பெருமகிழ் தத்துவங்களைத் தெளிவுறக் கற்க விரு அமையும் என்பதில் ஐயமில்லை. பண்பாட்டின் ஏற்றமிகும் இந்து இக்கலைக்களஞ்சியம் உறுதுணையா
இக்கலைக்களஞ்சியத்தின் தே அபிவிருத்தி, இந்து சமய, கலாசார அ அவர்கள் ஆற்றிய பணி மிகவும் முச்
இதனை உருவாக்குவதில் பொ. பூலோகசிங்கம் பாராட்டுக் உலகளாவிய இந்து மதத்தவரும் இக் அறிவுச் செல்வமாக ஏற்றுக் கொள்ை

b பதிப்பின் ht"Gaոր
பி. தேவராஜ் கலாசார அலுவல்கள் |க அமைச்சர்
T 1990)
பும், மேன்மையும் வாய்ந்த மதங்களுள் )மான அறிவுப் பரப்பைக் கொண்டது. பும் பல நூற்றாண்டுகளாகப் பரிணாம த நாட்டுச் சமய குரவர்களும், தத்துவ மய சிந்தனையின் வளர்ச்சிக்குப் பெருந் மயத் தத்துவங்களும், சிந்தனைகளும், ங்களிலும், ஏடுகளிலும் பரந்து சிதறிக் ர்கள் தமது சமயம் பற்றிய ஐயங்களைப் ளைத் தெளிவுபடுத்திக் கொள்ளவும்
ந்து சமயத்தில் ஆன்மீகத் துறையில் ஒரு றிப்பிடத்தக்கது. இந்து சமயத்தவர்கள் ன்னின்று நடாத்தி வருகின்றனர். இந்து ரும், வைபவங்களும் இன்று புதிய ாறன. இந்நிலையில் இந்து சமயத்தவர் தளிவு பெறுவது ஒரு மேலதிகத் தேவை
லும், பல்கலைக்கழகங்களிலும், கல்விக் ந்துப் பண்பாடும், இந்து நாகரிகமும் பாடசாலையில் கட்டாய பாடமாகப் லைக்கழகத்தில் சைவ சித்தாந்தத்துறை இப்பின்னணியைக் கருத்திற் கொண்டு தனை என்பவற்றை உள்ளடக்கிய ) இலகுவில் உணரப்படும்.
ாக் கொண்ட இந்துக் கலைக்களஞ்சியத் )ச்சின் மூலம் வெளியிடச் சந்தர்ப்பம் ச்சி அடைகிறேன். இந்து சமய ம்புவோருக்கு இது ஒரு வரப்பிரிசாதமாக சிந்துநதி தோற்றுவித்த சிறப்புமிகு துமதம் எழுச்சிபெற்று மலர்ச்சியுற, க அமையும் என்று நம்புகின்றேன்.
ாற்றத்திற்கு முன்னைநாள் பிரதேச அமைச்சர் திரு. செல்லையா இராசதுரை கியத்துவம் வாய்ந்ததொன்றாகும்.
அயராது உழைத்த பேராசிரியர் குரியவர். தமிழ் கூறும் நல்லுலகமும் கலைக்களஞ்சியத் தொகுப்பினைத் தமது பர் என்று நம்புகின்றேன்.

Page 21
முதலாம்
அணி
p
கெளரவ செ முன்னைநாள் பி.
இந்து சமய, இந்து கலாசார, தமிழ் இன்றைய மலேசியாவுக்க
(யூன்
இந்துசமயம் காலத்தால் மூத்தது இன்று நாம் காணமுடியாத, கடலுள் இந்து சமயம் தன் காலடிகளைப் பதி தென் அமெரிக்கா, பசுபிக் மகா சமு சமுத்திரத் தீவுகள், அத்திலாந்திக் சமு சமயம் பரவி இருந்ததற்கான ஆதாரங் பழைமை வாய்ந்த இந்து ச1 மெய்ஞ்ஞானத்திற்கு மட்டுமல்ல, விஞ இருக்கின்றன. கடல் கோள்களா? போனாலும் இந்துசமயத் தத்துவங்களு நிற்கின்றன.
சீரும் சிறப்பும் மிகுந்த இந்து சமயத் ஆண்டு கூட்டியதின் பின், இந்துசமய வேண்டுமென்ற எண்ணம் திருவருளின இலங்கையிலும் இந்தியாவிலும் பல ஆதரவையும் இச்சந்தர்ப்பத்தில் வேண்டி எண்ணக் கருத்துக்களை அவர்கள்மு பாராட்டுதல்கள் கிடைத்தன. ஆயினும் தயாரிக்கும் பொறுப்பை ஏற்றுக் கொள் ஆனால் என் மனதில் ஏற்பட்ட எண்ணி
வந்தது.
தென் புலோலியூர் மு. கணபதிப்பிள் ஒப்படைத்தேன். அவர் கலைக் கள மாதங்களுக்குள் இறைவனடி சேர்ந்து வி கலைக் களஞ்சியம் வெளியிட வேண் வலுப்பெற்று வளர்ந்து வந்தது. பேராத பேராசிரியர் கலாநிதி திரு. பொ. பூலோ எண்ணக் கிடக்கைகளை எடுத்துக் கூறிே என்னுடன் பழக்கப்பட்ட அவர், என
முன்வந்தார். பகலும், இரவும் பார

பதிப்பின் துறை
இராசதுரை
தேச அபிவிருத்தி, மொழி அமுலாக்கல் அமைச்சரும், ான இலங்கைத் தூதுவரும்
1990)
உலகத்தின் எல்லாப் பாகங்களிலும் அமிழ்ந்துபோன நிலப்பரப்புக்களிலும் த்து இருக்கின்றது. வட அமெரிக்கா, த்திரத்திலுள்ள பல பிரிவுகள், இந்து த்திரத்திலுள்ள தீவுகள், எங்கும் இந்து கள் கிடைத்த வண்ணம் இருக்கின்றன. மயத்தின் ஆழமான கருத்துக்கள் நஞானத்திற்கும் ஏற்புடையவைகளாக ல் உலகில் பல பாகங்கள் அழிந்து
ரும், வழிபாட்டு முறைகளும் நிலைத்து
திற்கு அகில உலக இந்து மாநாடு 1982ம் கலைக்களஞ்சியமொன்று வெளியிட ால் என் இதயத்தில் தூண்டப்பட்டது. அறிஞர்களின் ஒத்துழைப்பையும், நின்றேன். என் உள்ளத்தில் ஊறிநின்ற ன் வைத்தேன். நல்ல முயற்சி என்று முழுநேரமாகக் கலைக்களஞ்சியத்தைத் ளும் எவரும் முன் வந்தார்கள் இல்லை.
னம் நாளும் பொழுதும் வலுப்பெற்று
ளை அவர்களிடம் இப்பொறுப்பினை ஞ்சிய வேலைகள் ஆரம்பித்துச் சில ட்டார். மேலும் பல மாதங்கள் கழிந்தன. டும் என்கின்ற எண்ணம் என்மனதில் னைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறைப் கசிங்கம் அவர்களை அழைத்து எனது னன். கால் நூற்றாண்டுகளுக்கு மேலாக து ஆர்வத்தைக் கண்டு கைகொடுக்க
து கலைக்களஞ்சிய வேலைகளைச்

Page 22
சோர்வின்றிச் செய்யத் தொடங்கினார். எனது அ பணிப்பாளர் திரு ஆ. பாஸ்கரதாஸ் அவர்களுடன் உ ஆராய்ச்சி உத்தியோகத்தர்கள், கலாசார உத்தியோ வினைஞர்கள், சிற்றுாழியர்கள் அனைவரும் என்மன பயனாக இக்கலைக்களஞ்சியம் வெளிவருகின்றது. ஒ இல்லையென்று ஒரு சிலர் விமர்சிக்கக்கூடும். உலகி அப்படியே இருந்திருக்கின்றன. எத்தனையோ பதிப்புச் முற்றுப் பெற்றதாகவில்லை.
இந்துசமயக் கலைக்களஞ்சியம் ஒரு அத்திவாரம இக்கலைக் களஞ்சியத்தை உருவாக்கிய எனது அ பூலோகசிங்கம் அவர்களை நான் மனதாரப் பாராட
இப்பணியைப் பாராட்டி மேலும் அவரை ஊக்குவி
இந்து சமயப் பேருலகம் இக்கலைக் களஞ்சியத்
என் விருப்பமாகும்.
ந
Xviii

மைச்சின் இந்து சமய, கலாசார அலுவல்கள் பிரிவின் தவிப் பணிப்பாளர் திரு. வீ. விக்கிரமராஜா, திணைக்கள 3த்தர்கள், தட்டெழுத்து சுருக்கெழுத்தாளர்கள், எழுது விருப்பத்தை அறிந்து உழைத்தார்கள். அந்த உழைப்பின் ரு கலைக் களஞ்சியத்திற்குரிய முழுத் தொகுப்புக்களும் லுள்ள கலைக் களஞ்சியங்களின் ஆரம்ப வெளியீடுகள்
கள் வெளிவந்தும் உலகக் கலைக்களஞ்சியங்கள் இன்னும்
ாக அமைகின்றது. தனியொரு மனித சக்தியாக நின்று, ன்புக்குப் பாத்திரமான பேராசிரியர் கலாநிதி பொ. -டுகின்றேன். இந்துப் பெருமக்கள் அவரது சிறப்பான ப்பார்களென்று நம்புகின்றேன்.
தை வரவேற்று தமது உடமையாக்க வேண்டுமென்பது
ன்றி !

Page 23
dpg56,ost என்
பேராசிரியர் பெ B. A. (Hons.
(யூன்
1988 ஆம் ஆண்டு சனவரி மாத பிரதேச அபிவிருத்தி, இந்து சமய, ச் செல்லையா இராசதுரை அவர்கள் அவர்தம் உத்தியோக வாசஸ்தலத்தி பணிப்பாளர், ஆ. பாஸ்கரதாஸ் அப்பொழுது அவர்கள் இந்துக் 4 ஆரம்பமாகியும் தொடர முடியா அப்பணியைத் தொடர வேண்டுமாயி நெறியை வகுத்துக் கொடுப்பதாக ஒத்து திட்டம் ஒன்றினைச் சில தினங்களுக்கு சமர்ப்பித்தேன். இத்திட்டத்திலே விடயத்தொகுதிகள் பற்றியும், செயற்ப காட்டப்பட்டிருந்தது. ஆயினும் அப்பொழுது பல இடையூறுகள் நில முதன்மையானது என்று கூற ே வேண்டியவர்களை அழைப்பதிலும் பாதிப்பு வெகுவாக இருந்தது. இத முடியவில்லை.
மாண்புமிகு அமைச்சர் அவர்கள் தனியாக அப்பணியிலே ஈடுபடுப் வேலையோ பாரியது. துணிந்து ஏற் அக்காலத்தில் மார்ச்சு மாதம் 21ஆம் நீத்தனர். பாலிய வயதிலே த சகலவிதங்களிலும் துணையாக நின் மறைவு பெரும் இடைவெளியைத் ஏற்படுத்திய துணிச்சல், பணியை அளித்தது. துணிந்து காலை வைத்து
அகில உலக இந்து ஆராய்ச்சி அப்பொழுது இந்து சமய, கலாசார அ அதற்குப் பணிப்பாளர் ஆ. பாஸ்கரத கீழ் ஆராய்ச்சி அலுவலர், கலா, உடையவர்கள் அந்நிலையத்திலே பணி நூலகமும் அமைந்திருந்தது. தட்ெ பட்டிருந்தனர். ஆராய்ச்சி நிலையம் ஏ தொடங்கியும் இருந்தது.

பதிப்பின்
றுறை
1. பூலோகசிங்கம்
D.Phil. (Oxon)
1990)
ம் பத்தொன்பதாம் தேதி, மாண்புமிகு லாசார அலுவல்கள் அமைச்சர் திரு. ன் அழைப்பின் பேரில் அன்னாரை ல் இந்துசமய, கலாசார அலுவல்கள் அவர்களுடன் சென்று சந்தித்தேன். கலைக்களஞ்சியம் தொகுக்கும் பணி மல் இருப்பதை எடுத்துக் கூறினார். ன், அவர்கள் பின்பற்றக்கூடிய ஒழுங்கு நுக் கொண்டு, பின்பற்றக் கூடிய பொதுத் தள் மாண்புமிகு அமைச்சரவர்களுக்குச் செயற்குழு அமைப்புகள் பற்றியும் டுத்தும் ஒழுங்குகள் பற்றியும் விரிவாகக் திட்டத்தினை அமுலாக்குவதிலே ஸ்வின. நாட்டு நிலைமையே அவற்றில் வண்டும். பல்வேறு குழுக்களுக்கு கூட்டுவதிலும் நாட்டு நிலைமையின் னாலே திட்டத்தினைச் செயற்படுத்த
திட்டத்தினைச் சமர்ப்பித்த எம்மையே படி வற்புறுத்தத் தொடங்கினார். றுக் கொள்ளத் தயக்கமாக இருந்தது. ம் தேதி, எம் தாயார் தம் பூதவுடலை ந்தையை இழந்துவிட்ட எனக்குச் ற பேருள்ளம் படைத்த அன்னையின்
தோற்றுவித்தது. அச்சந்தர்ப்பம் ஏற்றுக் கொள்ளும் பக்குவத்தினை விட்டேன்.
நிலையம் என்ற அமைப்பொன்று லுவல்கள் திணைக்களத்தில் நிலவியது. "ஸ் பொறுப்பாக இருந்தனர். அவரின் Fார அலுவலர் என்ற பதவிகளை புரிந்து கொண்டிருந்தனர். அங்கு சிறு -ழுத்தாளர்களும் அதற்கு நியமிக்கப் ற்கனவே கலைக்களஞ்சிய வேலையைத்
Xix

Page 24
துணிந்து வைத்த காலை இழுத்துக் கொள்ள வே கருமத்தை ஆரம்பிக்க வேண்டி இருந்ததே காரண நூற்றாண்டுக்கு மேலாகத் தெரிந்தவன், அவர் அமைச்ச சந்தித்த பழக்கமுடையவன். இதனால் வேண்டுகோன
மாண்புமிகு அமைச்சர் அவர்கள் கலைக்களஞ் தொடர்ந்து வற்புறுத்தினார். இதனால் தமிழ் நெ( விடயங்களைத் தெரிந்து எழுதுவதாகத் தீர்மானிக்கப்ப அரசியல் வானிலே தோன்றிய தேர்தல் மேகங்கள் கா
1988 ஆம் ஆண்டு ஏப்பிரல் மாதம் கலைக்களஞ் தொடங்கினேன். முதலாவது கையெழுத்துப் பிரதிய வழங்கப்பட்டது. அகில உலக இந்து ஆராய்ச்சி நீ ஊக்குவித்தார்கள். எமக்குத் தேவையான நூல்கலை முயன்றதோடு, யாம் எழுதிய விடயங்களைத் தட்டச் இருந்தனர். சிலர் சிற்சில தரவுகளைத் தம் கைப்பட தெய்வநாயகம், எஸ். தர்மசீலன், எஸ். மனோகரன், ெ யோகமலர், த. கிருஷ்ணதேவி, த. கதிர்காமன், தி. அ ஆகியோரும் திருமதி தேவேந்திரன் அவர்களும் அட இந்து சமய கலாசார உதவிப் பணிப்பாளர் திரு. வீ. வ திருமதி நிர்மலா கருணானந்தராஜா தட்டச்சு வேலை
எந்த எந்த விடயங்களைப் பற்றி எழுதுவது என் எழுதுவதற்கு வேண்டிய தரவுகளைப் பெறு நூலகங்களையெல்லாம் தேட வேண்டி இருந்தது. வேண்டியிருந்தது. இவற்றை எல்லாம் அசுர வேகத் உழைக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டேன். பல்கை கலைக்களஞ்சியத்திலே ஈடுபட வாய்ப்பளித்தது.
ஆயினும் ஆரம்பத்தில் இருந்தே எடுத்துக் கொண் எதை எதை எல்லாம் எழுத வேண்டும் என்று இருந்.ே இடந்தரவில்லை. எம்மால் ஆண்மட்டும் முயன்று பெற சமர்ப்பிக்கப்படும் தரவுகள் ஆறு மாதத்திலே தொகுக் பதினோராம் தேதி, ஏற்றுக் கொண்ட வேலை6 அமைச்சரவர்களிடம் தட்டச்சுப் பிரதிகள் ஒப்புவிக்க
பல்கலைக்கழகத்திலே ஆரம்பம் முதல் பணிபுரிந் ஈடுபட்டபோது ஏற்பட்ட அனுபவங்கள் பல. இ எதிர்பார்க்காதவை, மாண்புமிகு அமைச்சர் அவ நின்றிராவிட்டால் அப்பொழுது என்ன நடந்திருக்குே
\
அக்தோபர் பதினோராம் தேதி சமர்ப்பிக்கப் ெ கொடுக்கப்பட்டன. ஜனாதிபதித் தேர்தல் திசம்பர் 1 ஆம் தேதி பொதுத் தேர்தல் இடம் பெற்றது. அச் தேர்தல்களுக்குப் பின் கவனத்திற்கு எடுத்துக் கொள்ள கிடந்தது. நானும் கடுஞ்சுகயினமுற்றுத் தனியார் மரு
மாண்புமிகு இந்து சமய, கலாசார அலுவல்கள் அவர்கள் கடமை ஏற்றார். தம்முடைய அமைச்சின்
XX

1ண்டிய கட்டம் வந்தது. பிள்ளையார் சுழி போட்டுக் மாகும். மாண்புமிகு அமைச்சர் அவர்களைக் கால் சர் ஆவதற்கு முன்பே மேடைகளிலே பலதரம் ஒன்றாகச் ளை உதறித் தள்ளிவிட முடியவில்லை.
நசியத்தின் ஒரு பகுதியையாவது செய்து தரும்படி டுங்கணக்கின் முதல் நான்கு எழுத்துகளுக்கு மட்டும் பட்டது. அதற்கும் காலக்கெடு விதிக்கப்பட்டது. அதற்கு ரணம் என்று எது நடக்குமோ என்ற நிலை.
சியம் தொகுக்கும் பணியிலே முழு மூச்சாக ஈடுபடத் பின் தொகுதி மே மாதம் மூன்றாந் தேதி தட்டச்சிற்கு ைெலயத்திற் பணி புரிந்தவர்கள் பக்கபலமாக நின்று ளயும், கட்டுரைகளையும் தம் நூலகத்திலே தேடித்தர *சிலிட்டுத் தொகுத்து வைப்பதிலே மிகவும் உதவியாக எழுதியும் உதவினர். திருவாளர்கள் கு. வடிவேல், எஸ். ப. வடிவேல் ஆகியோரும் செல்விகள் அ. வசந்தி, சோ. முதா, சா. சத்தியவதி, சி. சந்திரவதனி, க. புவனேஸ்வரி ப்பொழுது ஆராய்ச்சி நிலையத்திற் பணிபுரிந்தவர்கள். விக்கிரமராஜா ஆராய்ச்சி நிலையத்தினை நிர்வகித்தவர். லயில் உதவியவர்.
ாபது ஒரளவு தீர்மானிக்க முடிந்தபோதும், அவற்றை வது இலகுவாக அமையவில்லை. பல்வேறு நண்பர்களையும், ஆதரவாளர்களையும் நாடித் திரிய 3திலே செய்ய வேண்டியும் இருந்தது. இரவு பகலாக லைக்கழகத்திலே அன்று நிலவிய சூழல் முழுநேரம்
ட விடயத்தின் விரிந்த பரப்பினை உணராமல் இல்லை. தனோ, அவற்றை எல்லாம் எழுதி முடிக்கக் காலக்கெடு 0க்கூடியவற்றைப் பெற்றுச் சமர்ப்பித்துள்ளோம். இங்கு க்கப் பெற்றவை. 1988 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் யை இறக்கி வைத்தேன். அன்றுதான் மாண்புமிகு ப்ேபட்டன.
ந்த எமக்கு, அமைச்சிலே கலைக்களஞ்சிய வேலையில் }வற்றிலே பல புதிய அநுபவங்கள். நான் என்றும் ர்கள் பல சந்தர்ப்பங்களிலே எமக்குப் பக்கபலமாக மோ என்று இப்பொழுது சிந்தித்துப் பார்க்கிறேன்.
பற்ற பிரதிகள் நவம்பர் 25 ஆம் தேதி அச்சகத்திற்குக் 9ஆம் தேதி நடைபெற்றது. 1989 பெப்ருவரி மாதம் 15 சகத்திற்குக் கொடுத்த பிரதிகள் அங்கேயே கிடந்தன. ாப் பெறலாம் என்று கருதப்பட்ட விடயம் அப்படியே த்துவமனையை அடைந்தேன்.
i இராஜாங்க அமைச்சராகத் திரு. பி. பி. தேவராஜ் ஆதரவில் எழுதப்பெற்று அச்சகத்திற்கு ஒப்படைக்கப்

Page 25
பெற்ற பிரதியினை அச்சிட்டு வெளியிட அவர்கள் விரு இன்று இந்துக் கலைக்களஞ்சியத்தின் பகுதி வெளிவரம கூறிக் கொள்கின்றேன்.
இந்துக் கலைக்களஞ்சிய எழுத்துப் பிரதி அ வெளிக்கொணர்வதிலே முக்கிய பங்கு வகித்தவர் இந்து என்றால் மிகையாகாது. அவருடைய ஒத்தாசை இல்ல கைவிட்டிருப்போம்.
கலைக்களஞ்சியத்தை எழுதியதிலும் அதனை நூல தாள்களைத் திருப்பித் திருப்பிப் பார்த்தவர்களுக்கு இ
இந்து சமய, கலாசார அலுவல்கள் அமைச்சிற்காக அமைச்சரிடம் யான் என்பணிக்கு எதனையும் பல அவ்வப்போது சிறு உதவிகளைச் செய்யத் தவறவில்6 திரு. செ. குணரத்தினம் ஊடகமாக இருந்தார். இங்கு
எமக்குத் தரப்பட்ட பணிப்பினையும், காலக் பரப்பளவினையும் மனதிற் கொண்டு வாசகர் இக்கலை பல்கலைக்கழகத்திலே 1947 அக்தோபர் விஜயதசமி பெறுபேறான முதலாவது தொகுதி 1954 இலே தான் பத்து வருடம் எடுத்தது. பிரித்தானியக் கலைக்களஞ் அரையாண்டிலே ஒரு தொகுதியைப் பூரணப்படுத்தி இந்துக் கலைக்களஞ்சியம் தமிழிலே தோன்றுவதற்கு, வைக்கிறோம்.
இத் தொகுப்பிலே 670 விடயங்கள் பற்றி எழுதப் ெ சஞ்சிகை, விழா, விரதம், பொருள் என்பன பற்றிய விடய பெரும்பான்மையான விடயங்களுக்குக் களமாக விள முயற்சி எடுக்கப்பட்டுள்ளது.
திரு. சுப்பிரமணியம் சேது ராமலிங்கம் நீண் கலைக்களஞ்சியத்தினை தமது இம்பீரியல் பிரஸ்' எனு எம் நன்றிகள்.
கல்லூரி வாழ்க்கையின் போதிருந்து நண்பராக வி விளங்கும் கட்டத்திலே இக்களஞ்சியம் வெளிவருவது

ம்பினார்கள். அவர்களுடைய ஆதரவு இல்லையேல் ாட்டாது. அன்னாருக்கு என்னுடைய நன்றியறிதலைக்
*சகத்திற்குப் போன பின்பு அதனை அச்சிட்டு சமய, கலாசார ஆய்வாளர் திரு. எஸ். தெய்வநாயகம் விட்டால் யாம் எப்பொழுதோ களைத்துச் சோர்ந்து
T வெளியிடுதல் பெரும் பாடாகிவிட்டது. சரவைத் கூேற்றின் தாற்பரியம் விளங்காமற் போகாது.
இக்கருமத்திலே, அன்று ஈடுபட்டபோது மாண்புமிகு ண்டமாற்றாக யாசிக்கவில்லை. ஆயினும் அவர் லை. அதற்கு அன்று செயலாளராக அமைந்திருந்த அவரை நினைவு கூருகிறேன்.
கெடுவையும், எடுத்துக் கொண்ட விடயத்தின் க் களஞ்சியத்தினை நோக்க வேண்டும். சென்னைப் அன்று ஆரம்பித்த கலைக்களஞ்சியப் பணியின் வந்தது. "சேம்பர்ஸ்' கலைக்களஞ்சியம் வெளியிடப் சியத்தின் 9ம் பதிப்பு 15 வருடம் எடுத்தது. எனவே விட முடியாது என்பதை யாம் நன்கு உணர்வோம்.
ஒரு முன்மாதிரியாக இத்தொகுதியைக் கருதி முன்
பற்றுள்ளன. தெய்வம், பெரியோர், நாடு, தலம், நூல், பங்களாக அவை அமைகின்றன. தமிழ்நாடும், ஈழமும் ங்கியுள்ள போதும் அவற்றுக்கு அப்பாலும் நோக்க
எட காலமெடுத்து நல்ல முறையிலே இந்துக் Iம் அச்சகத்திலே அடித்துத் தந்துள்ளார். அவருக்கு
ளங்கிய திரு. கே. சி. லோகேஸ்வரன் செயலாளராக இறைவன் செயல்.
XXi

Page 26
XXii
dp056Ds
dyD8
பேராசிரியர் ெ
B. A. (Hons
اليا)
*இலங்கை ஜனநாயக சோசலி வழங்கப்படும் எம் திருநாடு, ப தம்பபண்ணி’ என்றும், தமிழ் நூ இலங்கை’ என்றும் அழைக்கப்ப என்றும், அராபியராற் செறன்டிப்’ ( மேற்கு ஐரோப்பியரான போர்த் பெயர்களின் ஆங்கில வடிவம் 'சிே
அகலங்கூடிய மையப்புள்ளியில், அகலமும் கொண்டு, 25481 வடநிலநடுக்கோடுகள் 5-55 - 9 உபகண்டத்தில் இருந்து மன் பிரிக்கப்பட்டுள்ளது; இப்பிரிவின் ஆ இடைவெளியுண்டு.
பூமியில் மிகச் சிலவான இட போன்று பல்வேறு இயற்கை வி பிரதேசத்திற் காண முடியும். உரு மலைச்சரிவுகள், குத்தாக இறங்கு காடுகள், காற்று வீசும் சமவெளி சொரியும் நீர் வீழ்ச்சிகள், மணல் 6 கடல்கள் - இவையெல்லாம் ஒ காணப்படும் சிறப்பினை உடையது
பண்டைக்காலம் முதல் இல சமூகமாகவே விளங்கியது. பெருந்தோட்டப் பொருளாதா விடுதலைக்குப் பின்பே கைத் மேற்கொள்ளப்பட்டன.
கிறிஸ்தாப்தத்திற்கு அப்பாற் ஏற்படுத்தும் பண்டைய பார பிரமிப்பூட்டும் அழிபாடுகள் பண் பகர்கின்றன. மூதாதையரின் ெ குளங்களும் நீரணைகளும் சம ெ நிலைபெற்றுள்ளன.

ம் பதிப்பின் $வுரை
பா. பூலோகசிங்கம் .), D.Phil. (Oxon)
ன் 1990)
செ குடியரசு” என உத்தியோகபூர்வமாக ாளி நூல்களிலே "லங்கா’ அல்லது நூல்களிலே "ஈழம்' அல்லது (தென்) ட்டுள்ளது. கிரேக்கரால் தப்ரபேன்’ என்றும் அழைக்கப் பெற்ற இலங்கைக்கு, துக்கேயரும் ஒல்லாந்தரும் வழங்கிய லான்’ ஆகும்.
இலங்கை 270 மைல் நீளமும் 140 மைல்
சதுரமைற் பரப்பினையுடையது; -51 இடையில் அமைந்தது; இந்திய னார்குடா, பாக்கு நீரிணைகளாற் ஆகக் குறைந்த மையப்புள்ளியில் 20 மைல்
உங்களிலேயே இலங்கையில் உள்ளது நோதங்களையும் ஒருசேர ஒரு சிறிய ண்டு ஒடும் மலைகள், கம்பளம் விரித்த ம் பள்ளத்தாக்குகள், மழை பொழியும் கள், குளிர்ச்சிதரும் அருவிகள், அழகு விரித்த கடற்கரைகள், நீலப்பரப்புடைய }ரு சிறிய நிலப்பரப்பிலே நிறைந்து
இலங்கை,
ங்கை பிரதானமாகப் பயிர்த்தொழிற்
காலனித்துவ ஆட்சியின்போது ார முறைமைக்கு மாற்றப்பட்டது. தொழில் மயமாக்கும் முயற்சிகள்
சென்று யாவருக்கும் செருக்கினை ம்பரியத்தினையுடையது இலங்கை, டைய, உயர்ந்த நாகரிகத்திற்குச் சான்று பாறியியல் ஆற்றலைப் பறைசாற்றிக் வளிகளிலும் மலையடிவாரங்களிலும்

Page 27
பண்டைக்காலம் முதல் நிலவிய மன்னர் ஆட்சிமு ஆட்சியாளராற் படிப்படியாக நீக்கப்பட்டு 1815 இலே அமைப்பின் கீழ் இலங்கையின் சகல பிரிவுகளும் மு ஆண்டு பெப்ருவரி மாதம் நான்காம் தேதி காலனித்து வெவ்வேறு ஆட்சி முறைகளைப் பின்பற்றி வந்து இன் பின்பற்றுகின்றது.
இலங்கை பல இன மக்கள் வாழும் நாடு. சிங்கள பெரும்பான்மைச் சமூகம். சனத்தொகையில் 74 சத வீ ஐரோப்பியர், மலாயர், வேடர், நாடோடிகள் சிறுபா இசுலாமியருக்கும் தாய்மொழி தமிழ். தமிழரு இரண்டுபடுத்தப்பட்டுள்ளனர். இந்திய தமிழர் எ செய்கைக்காகக் கொண்டுவரப்பட்டோரின் சந்ததி தொகையில் இலங்கைத் தமிழர் 12.7% இந்தியத் தமிழ்
மகாவம்சம், சூளவம்சம் எனும் பாளி நூல்கள் சிங் தமிழருடைய பண்டைய வரலாற்றைக் கூறும் பழை அவர்கள் பழைய காலத்திலிருந்தே வாழ்ந்திருக்கிறார் கி. பி. எட்டாம் நூற்றாண்டு வரையில் தாம் இல போதிலும், போர்த்துக்கேயர், ஒல்லாந்தர் காலகட் செலுத்தும் இனமாக முன்வருவதைக் காணக்கூடி புறக்கணிக்க முடியாத வீதாசாரம் பெற்றிருந் வழித்தோன்றல்கள். இவர்களிலே பெரும் பான்மை அவுஸ்திரேலியாவுக்குக் குடி பெயர்ந்து விட்டன ஆரம்பத்திலும் காணப்பட்ட ஐரோப்பியரும் அவர்க போயினர். மலாயர், ஒல்லாந்தர் ஆட்சியின்போது பே வந்தவர்கள். ஆங்கிலேயர் ஆட்சியின் போது அ அதிகரித்தது. சிறிய சமூகங்களாகக் காணப்பட்ட ே முன்னே குறைந்து கொண்டு வருகின்றனர்.
பெளத்தம், இந்துசமயம், இசுலாம், கிறித்துவப் சனத்தொகையில் 69 வீதமானவரும் பெரும்பாலுப் தேரவாத பெளத்தம் இலங்கையிற் செல்வாக்கு முக்கியமானது. கதலிகமும் புரோடஸ்தாந்த வம்சாவளியினரிடையே மட்டுமன்றி, சிங்களம் தமிழ்
கெளதம புத்தர் பரிநிர்வாணம் அடைந்தது கி. மு அரசோச்சியது கி. மு. 250 - 210 இலங்கைக்குப் பெலி 246 என்பது இலங்கையர் மரபு.
இலங்கையில் இந்துசமய வரலாற்றுக்கு ஆதிை காலத்தின் ஆரம்பம் முதலாக அதன் பயிற்சிக்கான காலத்திற்கு முன்பே வேரூன்றத் தொடங்கிவிட்டதோ
கி. மு. மூன்றாம் நூற்றாண்டிலிருந்து பெறப்படுவ இந்துசமயம் இலங்கையில் நிலவியிருந்தமைக்குச் சா?

றை பதினாறாம் நூற்றாண்டில் இருந்து காலனித்துவ முற்றாக ஒழிக்கப்பட்டது. 1833 இலே ஒரே நிர்வாக தன் முதலாகக் கொண்டு வரப்பட்டன. 1948 ஆம் வ ஆட்சியில் இருந்து இலங்கை விடுதலை பெற்றது. று செயல்முறை ஜனாதிபதி ஆட்சியினை இலங்கை
மொழியைத் தாய்மொழியாகக் கொண்ட சிங்களவர் தத்தினர் சிங்களவர். தமிழ், இஸ்லாமியர், பறங்கியர், ான்மை சமூகத்தவர். தமிழருக்கும் பெரும்பான்மை ம் இலங்கைத் தமிழர், இந்தியத் தமிழர் என னப்படுபவர் 1837 முதல் பெருந்தோட்டப் பயிர்ச் யினரைப் பெரும்பான்மையாகவுடையவர். சனத் pர் 94% இசுலாமியர் 7.6%.
கள பெளத்தரின் பழைய வரலாற்றைக் கூறுகின்றன. 2ய ஆவணங்கள் இல்லை. ஆயினும் இலங்கையில் "கள் என்று கொள்ள ஆதாரங்களுள. இசுலாமியர் ங்கையில் வசிக்கத் தொடங்கியதாகக் கூறுகின்ற ட்டத்திலேயே குறிப்பிடத்தக்க செல்வாக்கினைச் டயதாகவுள்ளது. இலங்கைச் சனத்தொகையின் த பறங்கியர், காலனித்துவ ஆட்சியாளரின் யோர் 1956 சிங்களம் மட்டும் சட்டத்தை அடுத்து ர், காலனித்துவ ஆட்சியின் போதும் விடுதலை ளைப் போன்று குடிபெயர்ந்து தத்தம் நாடுகளுக்குப் ார் வீரராகவும், நாடு கடத்தப்பட்டவராகவும் இங்கு புவர்களுடைய எண்ணிக்கை போர் வீரர்களால்
வடரும், நாடோடிகளும் ஏனைய கலாசாரங்களின்
) என்பன இலங்கையின் பிரதான சமயங்களாம். ) சிங்களவருமானவர்கள் பெளத்த மதத்தவர்கள். gD — 6Ö) L — ULJ g5I. இந்துக்களிடையே சைவ சமயம் பிரிவுகளும் இலங்கையிலே காலனித்துவ பேசும் மக்களிடையேயும் பயில்கின்றன.
543 என்பர். தேவநம்பியதீசன் அநுராதபுரத்திலே ாத்தம் மகிந்ததேரராற் கொண்டுவரப்பட்டது கி. மு.
ய வரையறுத்துக் கூறுவது அரிது. வரலாற்றுக் ஆதாரங்கள் நிலவுகின்றன. இதனால் வரலாற்றுக்
என்று ஐயுற வேண்டியுள்ளது.
னவாகக் கருதப்பெறும் பிராமிச்சாசனங்களிலேயே ன்றுகளுள சிவ என்ற பெயர்களையும், சிவ என்று
XXiii

Page 28
தொடங்கும் பெயர்களையும், சிவ என்பதுட குறிப்பிடத்தக்க அளவு காணமுடியும். சாசனங்கள் நிலவியதற்கு இப்பெயர்கள் சான்றாகலாம். பிராமிச்சாசனங்கள்’ (1970) எனும் தொகுப்பிலே 355 647), வேலுசுமண (647) என்பனவும் முருகவ குறிப்பிடத்தக்க செல்வாக்குடன் விளங்கியமை தெளிவாகும்.
கோணேஸ்வரமும், கேதீஸ்வரமும் பழைய க - 307) அழித்த கோகண்ண தேவாலயம் சிவலிங்க கி. பி. நான்காம் அல்லது ஐந்தாம் நூற்றாண்டில் குறிப்பிடுகின்றது. 'கோகர்ணம்’ பெயர் வந்தவ லீலாவதி ஆட்சியில் எழுந்த தாடாவம்சத்திலே பூ எனும் இடத்திலே இந்துக் கோயில் ஒன்று நி மாதோட்டம், மாதோட்டத்தில் அமைந்தது தி சுந்தரமூர்த்தி நாயனாரும் போற்றிப் பரவிய பெ
சுமார் கி. பி. 993 வரை நிலவிய அநுராதபுர நகரத்தின் வடபகுதியில், பல சைவக்கோயி சிவபெருமான், காளியம்மன், பிள்ளையார் எ காணப்பட்டுள்ளன. இசுறுமுனியா புடைச் "காதலரிருவர் சிவபார்வதியையும் குறிப்பன என்
நிகாய சங்கிரகம் முதலாம் சேனனை (833 திருவாதவூரடிகள் புராணம் மூலம் அத்துறவி ம
அநுராதபுர அரசின் மறைவினை அடுத் பெயரிடப்பட்டுச் சோழப் பேரரசின் ஒர் அங் சார்பினராதலால் அவர்களுடைய காலத்தில் ப6 திருக்கேதீஸ்வரம் அமைந்த மாதோட்டத்தில் கோயில்கள் சாசனங்கள் மூலம் புலப்படுவன. பத கோயில்களுள பொலநறுவையில் வானவன் 1 கோயில்களிற் சிலவும் சோழர் காலத்திற்குரிய மதிரிகிரியாவில் பண்டித சோழீஸ்வரமும் சோழ
பொலநறுவை அரசர் (1070 - 1215) பெள சைவத்தை ஒடுக்க முற்படவில்லை. மானாபரண முதலியோர் பெளத்த தருமத்தைப் பின்பற்றிய ே நடத்தியுள்ளனர். விக்கிரமபாகுவும் (1712 - 11 சார்புமிக்கவராகக் காணப்பட்டனர்.
பொலநறுவை அரசை முற்றுவித்த காலிங்க
விளைவித்தவனாகக் கருதப்படுவன். மாகன் வி குறிப்பிடத்தக்கது.
XXiV

ன் முடியும் பெயர்களையும் பிராமிச்சாசனங்களிலே T எழுந்த காலத்திலே அல்லது முன்பிருந்தே சிவவழிபாடு
பேராசிரியர் பரணவிதான தொகுத்த "பழைய இடம் பெறும் வேல (403, 477) வேலு (123, 169, 250, 271, ழிபாட்டிற்குச் சான்று பகரலாம். மேலும் பிராமணியம் சாசனங்கள் மூலமும் பின்வந்த பாளி நூல்கள் மூலமும்
ாலத்திலேயே குறிப்பிடப்பட்டுள்ளன. மகாசேனன் (274 ம் அமைந்த கோயில் என்று மகாவம்சதீகை கூறுகின்றது. ஸ் எழுந்த வாயுபுராணம் கோகர்ணம் திருக்கோயிலைக் ாறு தகூதிணகைலாச புராணத்திலே கூறப்பட்டுள்ளது. ரீ மேகவர்ண ஆட்சியின்போது (352 - 370) மஹாதித்த லவிய செய்தி கூறப்படுகின்றது. மஹாதித்த என்பது ருக்கேதீஸ்வரம் திருஞானசம்பந்தமூர்த்தி நாயனாரும் ருமையுடையவை. இவ்விரு திருத்தலங்கள்.
அரசின் புராதன அழிபாடுகளின் மத்தியில், சிறப்பாக ல்களின் அழிபாடுகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. னும் தெய்வங்களுக்குரிய கோயில்கள் இவற்றிடையே சிற்பங்களில் 'மனிதனும் குதிரையும் ஐயனாரையும் 1ற கருத்தினையுடையோர் பலருளர்
- 853) சைவனாக்கியது ஒரு துறவி என்று கூறும். ாணிக்கவாசகர் என்று சிலர் துணிவர்.
து 1070 வரை மும்முடிச் சோழ மண்டலம் எனப் வகமாக விளங்கியது இலங்கை. சோழர் சைவசமயச் ல சைவக் கோயில்கள் இலங்கையிலே தோன்றியுள்ளன. ராஜராஜவீஸ்வரம், திருவிராமீஸ்வரம் எனும் இரு வியாவில் ரவிகுல மாணிக்க ஈஸ்வரம் உட்பட பல சைவக் மாதேவி ஈஸ்வரமும் அழிந்து காணப்படும் ஏனைய 15 பவை. அதகட எனும் ஊரில் உத்தமசோழீஸ்வரமும் ]ர் காலத்தில் அமைக்கப்பட்டவை.
ாத்த மதத்தினைப் பெரும்பாலும் ஆதரித்தவராயினும் ன், முதலாம் பராக்கிரமவாகு, நிசங்கமல்லன் (1787 - 196) பாதும் பிராமணர் மூலம் வைதீகக் கிரியைகள் பலவற்றை 32) இரண்டாம் கயவாகுவும் (1732 - 153) சைவமதச்
மாகன் (1215 - 1255) பெளத்தத்திற்குப் பெரும் இடையூறு ரசைவமதத்தினைச் சார்ந்தவனாகக் கொள்ளப்படுதல்

Page 29
காலிங்கமாகன் ஆட்சி ராஜரட்டையில் நி6 காரணமாயிற்று. அத்தோடு வடக்கிலும், கிழக்கிலு பெறவும் கரணமாயிற்று. ஐரோப்பியர் பதினாறாப் வடக்கிலே ஆரியச் சக்கரவர்த்திகளும், தெற்கிலே (
போர்த்துக்கேயர் தம் ஆதிபத்தியத்தைத் திடப் பகுதிகளில் இருந்த கோயில்கள் அனைத்தையும் த6 நடைபெறாதவாறு ஆரம்பத்தில் சட்டங்களை பிற்பகுதியில் சமய சட்டங்களைக் கண்டிப்பா இவ்வாய்ப்பினைப் பயன்படுத்திப் பல சைவக் ே மக்களின் நன்மதிப்பினைப் பெற்றுத் தம்மாட்சிக் சட்டங்களை நீக்கிச் சமயசுவாதீனக் கொள்கைகை கிறித்தவ தாபனங்கள் முழுமூச்சாக மதமாற்றத்தி:ே
இலங்கைச் சைவரிடையே ஆதீனங்களோ, பிரி அன்று இருக்கவில்லை. இதனால் சமயத்துறையில் ஏற்பட்ட விழிப்புணர்ச்சி தனிப்பட்ட அறிஞர்களது பூரீலபூனரீ ஆறுமுகநாவலர் இயக்கத்தை முன்னின்று அடுத்து நிறுவனரீதியில் சைவபரிபாலன சபை வளர்ச்சிக்கும் பாதுகாப்புக்கும் உதவின. சேர் இராசரத்தினம் முதலியோர் அரசியல் ஆதரவுக்குச்
இலங்கை விடுதலை அடைந்தது 1948 ஆம் ஆண் அலுவல்கள் திணைக்களம் ஒரு பிரிவாக 1979 இத்திணைக்களம் 1982 ஆம் ஆண்டு ஏப்பிரல் மாத இதுஅரசின் ஆதரவில் நடைபெற்றது என்பது குறிப் இன்று இராஜாங்க அமைச்சர் ஒருவரைப் பெற்றுத்
சமய பாடங்களைப் பள்ளிக்கூடங்களில் கட்ட சமயத்தை அறிந்து கொள்ளும் வாய்ப்பு இலங்கையி தவிசொன்று நிறுவியுள்ள பெருமை இலங்கைக்குை அமைக்கப்படும் சாத்தியக் கூறுகள் காணப்படுகின்
இலங்கை எங்கணும் பெரியதும் சிறியதுப திருக்கேதீஸ்வரம், கோணேஸ்வரம், முன்னேஸ்வரப் கோயில், கொக்கட்டிச் சோலை தான்தோன்றீக கொச்சிக்கடை பொன்னம்பலவாணேஸ்வரர் கோ முதலிய சிவதலங்கள்) நயினை நாகபூஷணியம்மன் காரைதீவு கண்ணகையம்மன் கோயில், மாத்தளை மு கதிர்காமம், செல்வச்சந்நிதி, நல்லூர், மாவிட்டபுர தலங்கள், தேவிநுவரை விஷ்ணு கோயில், வல்லிபுரம் கோயில், வண்ணை பெருமாள் கோயில் முதலிய வி கோயில், முறிகண்டிப் பிள்ளையார் கோயில், உரும்ட மருதடி விநாயகர் கோயில் முதலிய பிள்ளையார் த6 திருத்தலங்களாம்.

விய சிங்கள அரசைத் தெற்கு நோக்கித் தள்ளக்
> தமிழ் மக்கள் பெரும்பான்மைச் சமூகமாகத் தனிமை நூற்றாண்டிலே கால்கொள்ளத் தொடங்கிய போது
கோட்டையரசரும் கண்டியரசரும் காணப்பட்டனர்.
படுத்தும் நோக்கத்துடன் இலங்கையின் கரையோரப் ரைமட்டமாக்கினர். ஒல்லாந்தர் பொது வழிபாடுகள்
விதித்தபோதும், பதினெட்டாம் நூற்றாண்டின் ன முறையிற் செயற்படுத்தாது நெகிழ விட்டனர். ாயில்கள் கட்டப்பட்டன. ஆங்கிலேயர் இலங்கை கு வலுவூட்டும் எண்ணத்துடன் ஒல்லாந்தர் விதித்த ளைப் பின்பற்றினர். ஆயினும் இக்காலகட்டத்திலே U ஈடுபட்டிருந்தன.
வேனாக்களோ கிறித்தவ பரம்பலைத் தடுத்து நிறுத்த பத்தொன்பதாம் நூற்றாண்டின் நடுப் பகுதியளவில் செல்வாக்கை மையமாகக் கொண்டிருந்தது. நல்லூர் வ நடத்தியவர். நாவலர் பெருமானின் மறைவினை முதலிய தாபனங்களும் அரசியல் ஆதரவும் சமய பொன்னம்பலம் இராமநாதன், இந்து போர்டு காரணமாய் அமைந்தவர்கள்.
டிலாகும். பிரதேச அபிவிருத்தி அமைச்சின்கீழ் இந்து ஆம் ஆண்டு ஜ"ன் மாதம் அமைக்கப்பட்டது. ம் அகில உலக இந்து மாநாடு ஒன்றினை நடத்தியது. பிடத்தக்கது. இந்துசமய, இந்து கலாசார அலுவல்கள்
தனியாக இயங்கிவருகின்றது.
ாயமாகக் கற்பித்து வருவதால் இந்து மாணவர் இந்து லுண்டு. பல்கலைக்கழகத்திலும் இந்துப்பண்பாட்டுத் ண்டு. சைவசித்தாந்தத்திற்கும் தவிசொன்று விரைவில் DᎶᏡᎢ.
ான எத்தனையோ திருக்கோயில்கள் உள்ளன. , நகுலேஸ்வரம், ஒட்டுசுட்டான் தான்தோன்றீசுவரர் வரர் கோயில், வண்ணை வைத்தீசுவரர் கோயில், யில், கப்பித்தாவத்தை கைலாசநாதசுவாமி கோயில் கோயில், வற்றாப்பளை கண்ணகியம்மன் கோயில், த்துமாரியம்மன் கோயில் முதலிய அம்மன் தலங்கள்; ம், மண்டூர், கந்தவனம், குமாரபுரம் முதலிய முருகன் பூரீ சக்கர ஆழ்வார் கோயில், பொன்னாலை விஷ்ணு ஷ்ணு தலங்கள்; அமிர்தகழி மாமாங்கப் பிள்ளையார் ராய் கருணாகரப் பிள்ளையார் கோயில், மானிப்பாய் பங்கள் - பொதுவாக இலங்கையர் போற்றிப் பேணும்

Page 30
இலங்கைத் திருக்கோயில்கள் பொதுவாகத் த கோபுரங்களையோ விமானங்களையோ கொண்டிரா தோற்றமும் உடையவை. கதிர்காமம், செல்வச் சந்நி துணி கட்டி மெளனபூசை நடத்துவதைக் காணலாம். பவனிக்குத் தேரிலே எழுந்தருள வைத்து வடம் இ சிவனொளிபாத மலையிலும் பல்வேறு மதத்தவர்கள்
பத்தொன்பதாம் நூற்றாண்டின் மத்தியிலே பிரபல போற்றப்பட்டு வருவதாகும். கந்த புராணம் புராண திருவாதவூரடிகள் புராணம், திருச்செந்தூர் புரா6 கொள்ளப்பட்டுள்ளன. கீழ் மாகாணத்திலே கஞ்சன்
நல்லை ஆதீனமும் இராமகிருஷ்ண மிஷனும் அரும்பணிகள் குறிப்பிடத்தக்கவை. அகில இலங் ஒன்றிணைத்து இந்துக்களின் பிரச்சினைகளைத் அமைப்பினை வலுப்படுத்தி ஊக்குவித்தால் பல நன் திருமூலநாயனார் 'சிவபூமி’ எனப் போற்றிய பூமி, எம்
XXVi

மிழகத்தில் உள்ளவை போன்று பிரமாண்டமான த போதும், பல நல்ல வேலைப்பாடுகளும், அழகிய தி, மண்டூர் எனும் திருத்தலங்களில் பூசகர் வாயிலே மாத்தளை முத்துமாரியம்மனை நகரத்து வீதிகளில் ழுத்துச் செல்பவர்கள் மகளிர் கதிர்காமத்திலும், கலந்து வழிபாட்டில் ஈடுபடுவது குறிப்பிடத்தக்கது.
ஸ்லியம் பெற்ற புராணபடனம் ஈழத்திலே தொடர்ந்து படனத்திலே சிறப்பிடம் வகிப்பது காணத்தக்கது. ணம் என்பனவும் புராண படனத்திற்கு எடுத்துக்
அம்மானை படித்துப் பயன் சொல்லப்படுவதாகும்.
இந்து சமய விருத்தியின் பொருட்டு ஆற்றிவரும் கை இந்து மாமன்றம் இந்து சமய தாபனங்களை நீர்த்து வைக்க அக்கறை கொண்டுள்ளது. அதன் மைகளைச் சாதிக்கும் நிலையை உருவாக்க முடியும். பூமி என்ற பெருமையை நாம் நிலைநாட்ட வேண்டும்.

Page 31
அக்கமகாதேவி
அக்கமாதேவி, மாதேவியக்கா எனும் பெயர்களாலும் வழங்கப் பெறுவர்; பன்னிரண்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த கன்னட நாட்டுப் பக்தை; பசவண்ணர் கல்யாணநகரில் நிறுவிய வீரசைவ நிலையத்திலே தொண்டுபுரிந்து வந்தவர்; பூரீசைலம் அடைந்து மல்லிகார்ச்சுனரை வழிபட்டு, அவருடைய பெயரை முத்திரையாக ஒவ்வொரு வசனத்தின் இறுதியிலும் வைத்துக் கன்னடத்திற் பல வசனங்களை எழுதியவர்; வீரசைவ வசன இலக்கியத்தில் அக்கமாதேவியின் வசனங்கள் முக்கிய இடத்தினைப் பெறுகின்றன.
வடகர்நாடகத்தில் வசவண்ணர் கி.பி 12 ஆம் நூற்றாண்டில் தோன்றி வீர சைவ மதத்தைப் பரப்பினார். இந் நெறியைப் பின்பற்றிய அடியார்கள் சிவசரணர் எனப்பட்டனர். இவர்கள் தம் கருத்துக்களையும் இறை அனுபவங்களையும் பாடல் வடிவில் எழுதிவைத்தார்கள். இவை வசனங்கள் எனப்படும். இவர்களுள் பெண்கள் பலர் இருந்தார்கள். அவர்களுள் அக்கமகாதேவியும் ஒருவர். இவர் வீர சைவத்தின் ஐந்து தூண்களிலே ஒருவர் என்று போற்றப் பெறுபவர். கன்னட இலக்கிய வரலாறு என்னும் வானத்தில் ஒளிமிகுந்த ஒரு தாரகையாகச் சுடர் வீசித் திகழ்கின்றார் அக்கமாதேவி. இந்தியாவின் தலைசிறந்த பக்தியும், மெய்ஞ்ஞானமும் வாய்க்கப்பெற்ற பெண் கவிஞர்களுள் மகாதேவியும் ஒருவர். கன்னட மொழியில் இவர் படைத்துள்ள 341 உம், யோகாங்க திரியும், சிருஷ்டிய வசனமும், பதங்கள் 17 உம் கிடைத்துள்ளன.
தமிழ் நூல்கள் மகா தேவியக்காவை அக்கமகாதேவி என அழைக்கின்றன கன்னட மொழியில் இவரது பெருமையைப் பல சரணர்கள் பாடியுள்ளனர். அக்கமகாதேவியின் வரலாற்றைப் பற்றி பல்வேறு விதமான கருத்து வேறுபாடுகள் காணப்படுகின்றன. அக்கமகாதேவியின் வரலாற்றை முதன்முதல் எழுதியவர் ஹரிஹர கவி ஆவார். இவரைப் பின்பற்றியே இவருக்குப் பின்வந்தோர் வரலாற்று நிகழ்ச்சிகளைக் கூட்டியும் குறைத்தும் எழுதியுள்ளனர். சாமரசரின் பிரபுலிங்க லீலையைப் பின்பற்றி தமிழில் சிவப்பிரகாசர் எழுதியுள்ள பிரபுலிங்க லீலையிலும் அக்கமகா தேவியின் வரலாறு இடம் பெற்றுள்ளது.
வடகர்நாடகத்திலுள்ள உடுதடி என்னும் ஊரிலே வசித்த நிர்மலன், சுமதி என்பவரின் மகளாகப் பிறந்தார் மகாதேவி. இவரது தாய் தந்தையர் பெயர்களையும் இலக்கியங்கள் பின்வருமாறு வெவ்வேறாக கூறுகின்றன. ஹரிஹரா என்னும் கவிஞர் முறையே சிவபக்த, சிவபக்தை என்றும் சாமரச நிர்மல, சுமதி என்றும் ராசகவி என்னும் கவிஞர் ஒங்கார செட்டி, லிங்கம்
இந்துக் கலைக்களஞ்சியம்

என்றும் பிடுபர்திபசவ விமல, குடிலால என்றும் பலவாறு கூறுகின்றார்கள். சிவப்பிரகாசரால் தமிழில் எழுதப் பெற்றுள்ள பிரபுலிங்க லீலையிலும் அக்கமகாதேவியின் பெற்றோரின் பெயர் நிர்மலன் - சுமதி என்றே கூறப்பட்டுள்ளது.
பெயருக்கேற்ப மகாதேவி அக்காவின் பெற்றோர் சிவசரணர்களாகவும் நற்பண்பு வாய்ந்தவர்களாகவும் விளங்கினர். குழந்தை இல்லாத குறையினால் வருந்தி உமையம்மையை வழிபட்டு இறையருளால் இவர்களுக்கு மகாதேவி மகளாகப் பிறந்தார். வீரசைவ மரபில் பிறந்த மகாதேவி இளமைப் பருவத்திலேயே சிவபெருமானிடம் காதல் கொண்டு அவரைத் தம் கணவராகக் கருதி வளர்த்து வந்தார். பேரழகு, கல்வி, பக்தி இலக்கியப் படைப்பாற்றல், சிவஞானம், வீரசைவ ஞானம் ஆகிய நற்பண்புகள் கொண்டு விளங்கினார். சிறந்த குருவின் அருள் இவருக்கு கிட்டியது. சடுத்தலமார்க்கம் பற்றிய அறிவும் மிகப் பெற்றவர்.
பேரழகுடன் விளங்கிய அக்கமகாதேவியைக் கண்ணுற்ற அவ்வூர் அரசன் கெளசிகன் அவரை மணக்க விரும்பினான். வீர சைவர்கள் வீரசைவரல்லாத ஒரு பவிக்கு பெண் தருதல் என்பது இயலாது எனக் கூறி, மாதேவியின் பெற்றோர் அத் திருமணத்தை மறுத்தனர். ஆனால் பெற்றோர் துன்புறுத்தப் படுவர் என்று அஞ்சி மாதேவியார் மூன்று நிபந்தனைகளுடன் கெளசிகனின் அரண்மனைக்குப் புறப்பட்டார். அந்நிபந்தனை 356TT6)6OT:
1. தம் வழிபாட்டு முறைகளில் கெளசிகன் குறுக்கிடக் கூடாது. 2. தம் விருப்பமின்றிக் கெளசிகன் தம்மை அடையக் கூடாது. 3. அரசன் சிவபக்தனாக வேண்டும்.
இந்நிபந்தனைகளைப் பற்றிச் சிந்திக்காமலே அவை எளிதென்று கருதிய கெளசிகன் அவற்றிற்கு இசைந்தான். மாதேவியாரும் அரண்மனைக்குச் சென்றார். அரண்மனையை தம் பக்தியாலும் குருலிங்க சங்கம வழிபாட்டாலும் சிவமயமாக்கினார். அவரது பேரழகைக் கண்டு காமம் மீதுற்று கெளசிகன் ஒருநாள் கொடுத்த வாக்கை மீறி அவரைத் தழுவ முனைந்தபோது அவன் வாக்கு தவறினான் என்று மாதேவியார் உடனே தன் ஆடை அணிகலன்களைக் களைந்து கூந்தலை அவிழ்த்துவிட்டு பற்றுகளை நீக்கி நான் என்பது அழிந்து திகம்பரியாகி உடனே அரண்மனையை விட்டு நீங்கிச் சென்றார். மகாதேவி அக்காவின் திருமணம் தொடர்பாக கருத்து முரண்பாடுகள் காணப்படுகின்றன. ஹரஹர (மகாதேவி அக்கன ரகளே கி. பி. 1200), சென்ன பசவங்க (மகாதேவி அக்கன புராண 1560), கஞ்சவீரன்னொடை (சூனியசம்பாதனே 1495) ஆ. ந. கிருஷ்ணராய (வீரசைவ சாகித்யமத்து சமஸ்கிருதி 1943), கே. ஜி. குந்தணராசா (மகாதேவி 1937) ஆகியோர் திருமணம் நடந்தது என்றும் சாமரச (பிரபுலிங்க லீலை கி.பி. 1430) விருபாட்ச பண்டித
1

Page 32
(சென்ன பசவங்கபுராண 1584), ராசகவி (மகாதேவி அக்கன சாங்கத்ய 1600) கும்மாளபுரத சித்தலிங்க (சரன்யசம்பாதனே 1500) ஆகியோர் திருமணம் நடக்கவில்லையென்றும் கருத்துக் களை முன்வைக்கின்றனர்.
அக்கமகாதேவிக்குத் திருமணம் நடைபெறவில்லையென்று முதன்முதல் கூறிய கவிஞர் 15 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சாமரசரே ஆவார். அவர் பாடியுள்ள பிரபுலிங்க லீலை கூறும் கருத்து பின்வருமாறு அமைந்துள்ளது.
உலாவந்த கெளசிக மன்னன் அக்கமகாதேவியைக் கண்டு மோகம் கொண்டு அக்கமாதேவியின் பெற்றோரிடம் விருப்பத்தை தெரிவிக்க, பெற்றோர் வீரசைவர்கள் ஆதலால் அதற்கு மறுத்து அக்கமா தேவியிடம் கேட்குமாறு கூறினர். அக்கமாதேவியும் அரசன் தன் விருப்பங்கள் அனைத்தையும் நிறைவேற்ற வேண்டும், தம் விருப்பம் நிறைவேற்றவில்லையெனின் தாம் உடனே நீங்கிச் சென்று விடுவார் என்ற நிபந்தனைகளை முன்வைத்தார். அவ்வாறே கெளசிகமன்னன் வாக்குறுதி யளித்தார்.
அக்கமாதேவி பல்லக்கிலேறி அரண்மனையைச் சென்றடைந்து ஒரு புறம் தங்கியிருந்தார். அவர் பேரெழிலில் மயங்கிய மன்னன் காமம் மீதுரப் பெற்று மாதேவியிடம் சென்று தன் விருப்பத்தைக் கூறினான். அதற்கு மாதேவி “நீர் வாக்களித்தபடி முதலில் என் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும். சிவபக்தனாகிய பின்னர் வருக” என்றார். சமண அரசனாகிய கெளசிகன் தான் சிவபூசை செய்ய இயலாதெனக் கூறினான். அவ்வாறாயின் தம் நிபந்தனைப்படி தாம் உடனே நீங்குவதாகக் கூறி அக்கமாதேவி தம் ஆடை அணிகலன்களைக் களைந்து கூந்தலை விரித்துவிட்டு அரண்மனையை விட்டு அகன்றார். சாமரசனின் பிரபுலிங்க லீலையில் அக்கமாதேவி கெளசிகனைத் திருமணம் செய்துகொண்ட குறிப்பே இல்லை என்பது மேற்குறிப்பிட்ட வரலாற்றால் புலனாகின்றது. சாமரசனைப் பின்பற்றி வேறு பல கவிஞர்களும் திருமணம் நடைபெறவில்லை என்று கூறியிருப்பதை ஆர். சி. ஹிரேபத், எம் எஸ் லட்டே ஆகிய இரு கன்ன பேராசிரியர்களும் தங்கள் நூல்களில் விளக்கமாக எடுத்துக் காட்டியுள்ளனர்.
மேற்குறித்த வரலாறுகளால் அக்கமாதேவியின் திருமணம் குறித்து கன்ன கவிஞர்களிடையேயும் கருத்து வேறுபாடுகள் இருப்பது புலனாகும். உடுதடியை விட்டுச் சென்ற அக்கமாதேவி, பசவர் அனுபவ மண்டபம் அமைந்திருந்த கல்யாண் நகர் சென்றார். சிவ சரணர்களால் அனுப்பப்பெற்ற சின்னரய்யனிடம் தாம் காமத்தை வென்றதாக எடுத்துரைத்தார். அனுபவ மண்டபத்தில் பிரபுதேவருக்கும் அக்கமாதேவிக்கும் இடையே நடந்த உரையாடல்கள் அவரது பெருமையையும் ஆழ்ந்த ஞானத்தையும் பற்றின்மையையும் உலகுக்கு பறைசாற்றுவனவாக அமைகின்றன.
அனுபவ மண்டபத்தில் அல்லமப் பிரபுவின் அருள்பெற்று அவர் கூற்றின்படி பூரீ சைலத்திலுள்ள கதலி வனத்திற்குச்
2

சென்றார். மாதேவியார் இட்டலிங்க பூசையில் நாட்டத்தை நிலைநிறுத்தி சிவ யோகினியாக இட்டலிங்க ஐக்கியமானார்.
மகாதேவியின் வாழ்க்கை அன்பும், தத்துவமும், மனத்தூய்மையும், ஞானமும், வைராக்கியமும் அஞ்சாமையும் நிறைந்த வாழ்க்கையாகும். பெண்கள் அபலைகள், ஆற்றலற்றவர், துறவு நெறிக்கும் ஆன்மீக தேடலுக்கும் உரியவரல்லர் என்ற பொதுவான கருத்தினைத் தகர்த்தெறிந்து பெண்களும் ஆற்றல் உடையவர்கள். அவர்களும் துறவு பூண்டு இறைவனை நாடலாம், முக்தியெய்தலாம் என உலகுக்கு எடுத்துக் காட்டியவர் அக்கமகாதேவியார்.
அக்கமகாதேவியின் ஆழ்ந்து பரந்து அகன்ற நுண்ணிய தத்துவ அறிவிற்குச் சான்றாக அவரது யோகாங்க திரிவிதியும், சிருட்டி பற்றிய வசனமும், பிற வசனங்களும் அமைகின்றன. பொது மக்களின் இலக்கிய வடிவின் அடிப்படையில் இவர் இயற்றியுள்ள பதங்களிலும் தத்துவமே மறைபொருளாக உள்ளது. யோகாங்கதிரிவிதி என்பது 67 மூன்றடிப் பாடல்களைக் கொண்டதாக விளங்குகிறது. அக்கமாதேவி தம் இறையனு பவத்தைப் பதங்களாகப் பாடியுள்ளார். இவரது பதங்கள் பதினேழு மட்டும் கிடைத்துள்ளன.
அக்கமாதேவியின் படைப்புக்களில் ஒன்றாகிய வசனங்கள் உரை நடையிலமைந்த வசன கவிதைகளாக விளங்குகின்றன. வீர சைவ தத்துவங்களும், சமுதாயத்திற்கு அறநெறியும், சென்ன மல்லிகார்ச்சுனனையே கணவனென்றும் கொண்ட சரணசதி லிங்கபாவமும் விரிவாகக் கூறப்பெற்றுள்ளன. அக்கணவனின் அன்பிற்கு ஏங்கும் காதல் ஏக்கத்தினை - ஆன்மாவின் துடிப்பை இவரது வசனங்கள் தெளிவாகக் காட்டுகின்றன. சிவபெருமானின் தோற்ற வர்ணனையும் புராணக் கதைகளும் இவரது வசனங்களில் குறைவே. இவர் வீர சைவராதலால் இட்டலிங்க வழிபாடு, குருவின் பெருமை, சரணர்களின் சிறப்பு ஆகியவை மிகுதியாக இடம்பெற்றுள்ளன.
சிறந்த மெய்ஞ்ஞானம், பக்தி நலம் வாய்ந்த அக்கமாதேவி வசன இலக்கியப் படைப்பாளருள் தலையாயவராகப் போற்றப் படுகின்றார். (ஹ. தே.)
அக்கினி
இருக்கு வேதத்தில் இந்திரனுக்கு அடுத்து அதிகமான பாடல்களைப் பெறும் தெய்வம் அக்கினி, இருநூறு பாடல்களுக்கு மேல் அக்கினியைப் போற்றும் பாடல்களுள. தெய்வங்களுக்கும் மக்களுக்கும் இடையிலான மத்தியஸ்தனாகவும் மக்களையும் அவர்களுடைய உடைமைகளையும் காப்பவனாகவும் நல்லன வற்றை எல்லாம் அளிப்பவனாகவும் இருளையும் இன்னலையும் விடாது எதிர்ப்பவனாகவும் அக்கினி போற்றப் படுகிறான். வேள்வியிலே அவியினை ஏற்கும் முக்கிய கடமைக்கு உரியவனாதலின் வேதத்திலே அவனுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டமை எதிர்பார்க்க வேண்டிய தொன்றாகும். பதினெண் புராணங்களில் ஒன்றான அக்கினி புராணம் அக்கினி தெய்வத்திற்கு முக்கியத்துவமளிப்பதாகும்.
இந்துக் கலைக்களஞ்சியம்

Page 33
இருக்கு வேதப் பாடல்கள் அக்கினியைத் தீயென ஒளிரும் மயிரும் தாடியும் உடையவன், பிரகாசமான பல்லும் எரி எழும்பும் தாடையும் உடையவன் என்றும் அரணிக்கட்டையில் இருந்து பிறந்தவுடன் அவன் பெற்றோரை இரையாக்கிக் கொள்கின்றான் எனவும், வலிமையின் மைந்தன், முதியவன், புதியவனும் அவனேயெனவும் போற்றுகின்றன. அவனுக்கு விண், வெளி, மண் ஆகிய மூன்று இடங்களும் பிறப்பிடமாகக் கூறப்படுகிறது. புரோகிதனுக்குரிய கடவுளாதலின் அவனைப் புரோகிதன் என்பர். அடுப்பிலும் அவன் உறைந்தானாதலின் அவன் மனைத் தெய்வமாகவும் கருதப்பட்டான். விண்ணகத்து விழி நீரில் அவன் மின்னல் வடிவில் வாழ்ந்து வந்தான். உண்மையில் அக்கினி இங்குமுளன், அங்குமுளன், எங்குமுளன். அக்கினி ஒருவன் தான் உளனா? அன்றி அக்கினித் தேவர் பலருளரா? ஒரே நேரத்தில் அக்கினி எவ்வாறு ஒருவனாகவும், பலராகவும் இருத்தல் கூடும்? இவை போன்ற வினாக்கள் இருக்கு வேதத்திற் கேட்கப்பட்டுள்ளன. மிகப் பழைய காலத்தில் ஒருமைவாதப் போக்கினை எடுத்துக் காட்டி நின்ற இவ்வாராய்ச்சி அரும்புகள் பின்னர் உபநிடதங்களிலே வளர்ச்சி முற்றிக் கனியாகிக் காட்சியளிக்கின்றன.
அரிவம்சம் என்னும் நூல் அக்கினி கறுப்புடை தரித்தவன் என்றும் புகை இவனது கொடி என்றும் சித்திரிக்கிறது. இவனிடம் எரியும் வேல் இருந்ததாகவும் இவன் நான்கு கைகளைக் கொண்டவனாகவும், பொன்னாலான குதிரைகள் இவனது தேரை இழுத்துச் செல்வதாகவும் சொல்கின்றது. இவனது வாகனம் செம்மறி ஆடு என்றும் கூறப்பட்டுள்ளது.
அக்கினிக்குப் பல பெயர்கள் உண்டு. வாகின (ஒம வேள்வியைப் பெறுபவன்) , தனஞ்சயன் (செல்வத்தை வெல்பவன் அல்லது அழிப்பவன்), விதகோத்திரன், (யாகத்தைப் புனிதமாக்குபவன்), சுவாலன் (எரிப்பவன்), தூமகேது (மேகத்தைக் கொடியாக உடையவன்), உதாசா (படைப்புகளை உண்பவன்), சகரதன் (செம்மறியாட்டு வாகனன்), சசி அல்லது சுப்ரா (ஒளிமிக்கவன்), உராகிதாசுவர் (சென்னிறக் குதிரைகளை உடையவன்), சப்த சிகுவாகன் (ஏழு நாக்குக் கொண்டவன்). இவன் தென்கிழக்கு மூலையின் காவலனாகக் குறிக்கப் படுகின்றான். ஆயிரம் நாமங்களுடையவன். நித்தியன், நாளின்றி எந்நாளும் தோன்றும் அதிதி, வீடு தோறும் உறையும் கிருகபதி, யக்ஞத்தின் தெய்வம். புரோகிதன் என்றெல்லாம் போற்றப்படுகின்றான். மரத்தில் இருந்து கிளைகள் உண்டாவது போல இவனிடத்திருந்தே எல்லா மங்களங்களும் உண்டாகின்றன. செல்வத்தின் பெரு வாயிலைத் திறந்து விடுபவன். மழையைத் தருபவன் போன்ற பண்புகள் இவனுக்குரியதாக வேதப்பாடல்கள் குறிப்பிடுகின்றன.
அட்டத்திக்குப் பாலகரிலே தென்கிழக்குத் திசைக் குரியவனாகவும் அக்கினி இடம் பெறுகிறான்.
அக்கினியின் பிறப்புப் பற்றியும் பெற்றோர் பற்றியும் மாறுபட்ட கதைகள் வழங்குகின்றன. தியெள பிருதுவியின் புதல்வனாகவும்,
இந்துக் கலைக்களஞ்சியம்

அதிதியின் புதல்வனாகவும், அங்கிரசின் புதல்வனாகவும், சாண்டிலியின் புதல்வனாகவும், பிரமனின் மூத்த மகன் அபிமானி யாகவும் பலவாறு அக்கினியின் தோற்றம் கூறப்படுகின்றது.
அக்கினியும் அவர் புதல்வர்களும் பேரப்பிள்ளைகளுமாக 49 பேர் வாயு புராணம் கூறும் 49 தீக்கு இணையாகின்றனர்.
அக்கினியோடு தொடர்புடைய பல கதைகள் இதிகாசங் களிலும் புராணங்களிலும் இடம் பெறுவன. இவற்றிலே கந்தனின் தோற்றம் பற்றிய கதையும் தேவிபாகவதம் கூறும் மாயாசீதை கதையும் அடங்குவன.
சப்தரிஷிகளின் யாகத்திலே தோன்றிய அக்கினி அவர்களுடைய மனைவியர் மீது மயக்கம் கொண்டு வனத்திலே அலைந்தபோது, அவனை அடைய ஆவலாய் இருந்த சுவாகா, ஆறு ரிஷிபத்தினிகளின் வேடத்திலே அவனைக் கூடியதாகவும் அக்காலத்திலே தோன்றிய விந்துவைப் பொற்கலசத்திலே சேர்த்து வைத்ததாகவும் அதிலிருந்து ஆறுமுகன் தோன்றியதாகவும் கதையுண்டு.
இராமனுக்கு உதவுவதற்காக நீலன் என்பானுக்கும். குரங்குத் தாய் ஒருத்திக்கும் மகனாக அக்கினி பிறந்தான் என்பது இராமாயணத்திற் குறிப்பிடப் பெற்ற செய்தியாகும். இவன் மிகுதியாக யாகங்களைச் செய்து தனது வலிமையைச் செலவிட்டு விட்டான் என்று மகாபாரதம் கூறுகிறது. தன் வலிமையை மீண்டும் பெறுவதற்காகத் தாண்டவ வனம் முழுவதையும் எரிக்க விரும்பியதாகவும் அதை இந்திரன் தடுக்க முற்பட்டதாகவும் மகாபாரதம் கூறுகின்றது.
வனவாசத்தின்போது அக்கினி இராமனை அணுகி வரப்போகும் நிகழ்ச்சிகளைக் கூறி இராவணனை ஏமாற்ற மாயச் சீதையை உருவாக்கி இராமனிடம் விட்டுவிட்டு உண்மைச் சீதையைத் தன் பாதுகாப்பில் கொண்டு சென்று விட்டான் என்றும் அக்கினிப் பரீட்சையின் போது மாயச் சீதையை ஏற்றுக் கொண்டு உண்மைச் சீதையை இராமனிடம் சேர்ப்பித்ததாகவும் அதனாலேயே சீதை எவ்விதத் தழும்புமின்றி அக்கினியிலிருந்து தோன்றியதாகவும் மாயச் சீதை புஷ்கரத்திலே தவமிருந்து துவாபரயுகத்தில் பாஞ்சாலனின் யாக குண்டத்திலிருந்து பாஞ்சாலியாகத் தோன்றிப் பாண்டவர் மனைவியானாள் என்றும் தேவிபாகவதம் கூறுகின்றது.
அக்னி தவம் செய்து திசைத் தெய்வமானான். தென்கிழக்கு திசைக்குரியவன். தேஜோவதி இவனது தலைநகரம். பிரசாபதிக்குச் சாண்டிலியிடம் பிறந்தவன். இவனது மனைவி சுவாகா தேவி. இரண்டு முகங்களும், காளி,கதாளி தூம்ரா, லோஹிதா, மனோஜவா, ஸ்புலிங்கினி விச்வரூபா என்னும் ஏழு நாக்குகளும் (ஸப்த ஜிஹ்வா) கொண்டவன் அக்னியின் வாகனம் ஆடாகும். இவனுக்குக் குமரன் என்ற பெயர் கொண்ட புதல்வன் ஒருவன் உண்டு.

Page 34
அக்னி தக்ஷயாகத்தில் அவிர்பாகம் உண்டதால் வீரபத்திரரால் ஏழுநாவும், கரமும் அறுக்கப்பெற்று மீண்டும் அவைகளைப் பெற்றுக்கொண்டான்.
சிபிச் சக்ரவர்த்தியின் நடுநிலையை அறியப் புறாவாக உருக் கொண்டவன். அமிர்தம் சுமக்க அஞ்சி அக்னி கடலில் ஒளிந்த பொழுது மீன்கள் அவனது இருப்பிடத்தைக் காட்டிக் கொடுத்தன. அதனால் அம்மீன்களை தூண்டிலில் அகப்படுமாறு அக்னி சபித்தான். பின்பு தவம் செய்து அமிர்தம் சுமக்கும் வலிமையைப் பெற்றுக் கொண்டான்.
விச்வாகரன் சிவபெருமானைக் குறித்துக் கடுந்தவம் செய்து தங்களைப் போலவே எனக்கு ஒரு குமாரனை அருள வேண்டும் என்று கேட்க அதன் காரணமாக அக்னிதேவன் புதல்வனாகத் தோன்றினான். ஒருமுறை நாரதர் அக்னி இடிவிழுந்து தனது பன்னிரண்டாம் வயதில் இறப்பான் என்றுகூற அக்னியும் சிவபெருமானைக் குறித்து அருந் தவம் செய்தான். சிவபெருமான் தவத்தின் உண்மையைச் சோதிக்க இந்திரன் உருத்தாங்கி வந்து என்ன வேண்டும் என்று கேட்க வந்தவன் இந்திரன் என்று கருதி யாதும் தேவையில்லை என்று அக்னி கூற, இந்திரன் தனது வச்சிராயுதத்தைக் காட்டியவுடன் அக்னி அஞ்சினான். அக்னி தன்னிடம் கொண்டிருந்த உண்மையான அன்பை அறிந்து சிவபிரான் தனது சுய உருவைக் காட்டி யமபுரிக்கும், தேவருலகத்திற்கும் இடையி லிருக்கும் பேற்றையளித்து அருள் புரிந்தார்.
காண்டவ வன தகனத்தின் பொழுது தக்ஷகன் என்னும் நாகத்தின் குமரனாகிய அசுவசேநனை தப்பவிட்டதனால் கண்ண பெருமானால் நிலையில்லாதவனாகச் சபிக்கப்பட்டான்.
அக்னி தேவர் தான் சகல தேவர்களுக்கும், பிதிரர்களுக்கும் ஹோமம் செய்த பொருளை எடுத்துச் சென்று உரியவர்களிடம் சேர்ப்பிப்பவர். ஒருமுறை தனது பணியில் வெறுப்புத் தோன்றியதால் அப்பணியைச் செய்ய மறுத்தார். தேவர்கள் அனைவரும் அக்னியிடம் சென்று மற்றொருவர் வரும் வரையாவது இப்பணியை நீதான் செய்யவேண்டும் என வற்புறுத்தினர். ஆனால் அதனை செவிமடுக்காமல் அக்னி வெளியே சென்றான். தேவர்கள் அக்னியைப பின் தொடர்ந்தனர். இதனைக் கண்ட அக்னி தேவர் அஸ்வ ரூபமெடுத்து ஓடினான். தேவர்களும் விடாது தொடர்ந்தனர். அக்னி ஒரு மரத்துள் புகுந்து தன்னை மறைத்துக் கொண்டார். அஸ்வம் ஒளித்ததால் அம்மரம் அஸ்வத்த மரம - அரசமரமாயிற்று. இதனைக் கடைந்தால் நெருப்பு வெளிப்படும். இம்மரம் அறிவின் அடையாளம்.
தாரகன் முதலிய அரக்கர்களை அழிக்க எண்ணி இந்திரனானவன், அக்னி, வாயு முதலியவர்களுடன் நிலவுலகிற்கு வந்தான். அவர்கள் வரவை அறிந்த அசுரர்கள் கடலில் ஒளிந்தார்கள். அரக்கர்களின் தீய எண்ணத்தை அறியாத அக்னி அவர்களை வருத்தாமல் வாளா இருந்தான். ஆனால் அரக்கர்களோ கடலிலிருந்து தப்பிப் பூமியில் வந்து மக்களையும்,
4.

முனிவர்களையும் வருத்தினர். மருத்துக்களோடு வந்த இந்திரன், அக்னியை நோக்கி 'நீ முயற்சியில்லாதிருந்ததனால் இத்துன்பம் விளைந்துள்ளது. அக்னியே! நீ கடல் நீரை வற்றச் செய்யின் அரக்கர் அகப்படுவர் எனக் கூற கடல்நீர் வறண்டால் ஜல ராசிகள் அழியும் எனக் கூறி மறுத்தான். தனது சொல்லை மறுத்ததால் தேவசரீரம் கொண்ட அக்னி வாயுவுடன் கூடிப்போய் பூமியில் கும்பத்திற் பிறந்து கடல் நீரெல்லாம் குடிக்க” என்று ஆணையிட்டான். அவ்வாறே அக்னி கும்பசம்பவராய் அகத்தியராகப் பிறந்தான்.
சிவபெருமானின் நெற்றிக்கண்ணில் தோன்றிய ஆறு பொறிகளைத் தாங்கிச் சென்று கங்கையில் சேர்த்தவன்.
சிவபெருமான் பார்வதி தேவியுடன் தனித்து இருக்கையில் சமயம் தெரியாத அக்னி புறா வடிவம் கொண்டு செல்ல, பார்வதியன்னை அக்னியாகிய அப்புறாவை நோக்கி “நீ கல் தின்று சகோதரத்தைப் புணருவாயாக எனச் சாபம் தர, அக்னி, சிவவிர்யமாகிய நெருப்பினைத் தாங்கி சரவணத்தில் விட்டு அச்சாபத்தினின்று நீக்கம் பெற்றான்.
விருத்திராசுரனைக் கொன்ற பிரமகத்திக்கு அஞ்சி இந்திரன் ஒளிந்து கொள்ள, நகுஷனால் விரும்பப் பெற்ற இந்திராணியின் நிலையை இந்திரனுக்குக் கூறி அவனுடன் அவிர்பாகம் பெறும் பேறு பெற்றமை.
அக்னி சூரிய சந்திரர்களிடத்து சோதியாகவும், மேகத்திலே மின்னலாகவும், பூமியில் தீயாகவும், கடலில் வட முகாக்னி யாகவும், ஆன்மாக்களிடத்தில் ஜடராக்னியாகவும் உள்ளது. இவ்வாறாகப் புராணங்கள் அக்னியைப் பற்றிப் பலவாறாகப் பேசுகின்றன.
அக்கினியின் சிற்பங்கள் திருவாங்கூரைச் சார்ந்த கண்டியூர், சிவன் கோயிலிலும், தில்லை நடராஜர் கோயிலிலும் காணப்படுகின்றன. சிற்பங்களில் அக்கினி கிழவனாகவே சித்தரிக்கப்பட்டுள்ளான். அவனைச் சூரியனின் சரிபாதியாகக் கருதுவர். அவன் உடலுறுப்புகள் செந்நிறத்திற் குறிக்கப் பட்டுள்ளன. அக்கினியின் உருவத்தில் இரண்டு முகங்களும், ஆறு கண்களும், ஏழு கைகளும், மூன்று கால்களும் சித்திரிக்கப்பட்டுள்ளன. அவனைச் சுற்றி வட்டவடிவமான ஒளிப்பிழம்பும் காணப்படுகின்றது.
மக்கள் வாழ்க்கையின் நாகரீக வளர்ச்சிக்கு அடிப்படை ஆதாரமாக விளங்கிய அக்கினி வேதகால வழிபாட்டில் மட்டுமன்றி இன்றும் மிக முக்கியமான ஓர் இடத்தை வகிப்பது மனம் கொள்ளத்தக்கது. திருக்கோயில்களில் நடைபெறும் கிரியைகளிலும், இல்லங்களில் நடைபெறும் மங்கல, அமங்கலச் சடங்குகளிலும் அக்கினி ஒம்பப்பட்டே கிரியைகள் நடத்தப் படுகின்றன. குறிப்பாகத் திருமண வைபவத்தில் அக்கினியைச் சாட்சியாக வைத்தே மணமகன், மணமகள் கழுத்தில் தாலி கட்டுவதுடன் அக்கினியை மும்முறை வலம் வந்து சங்கற்பம் செய்து கொண்ட பின்பே வாழ்க்கைப் பயணத்தை
இந்துக் கலைக்களஞ்சியம்

Page 35
ஆரம்பிக்கின்றனர். மேலும் கோயில்களில் தீபாராதனை, மக்கள் கற்பூரம் ஏற்றி வழிபடுதல், திருவிளக்குப் பூஜை, நெய்விளக் கிடுதல் என்பனவும் அக்கினி இந்து சமய அனுட்டானங்களில் பெறும் முக்கிய இடத்தைத் தெளிவாகப் புலப்படுத்துகின்றன.
(பொ.யூ.)
69Hö58&of 1 qUTa:Orıb
பதினெண் மகாபுராணங்களாக வழங்கும் புராணங்களில் அக்கினிபுராணம் ஒன்றாகும். ஆக்னேய புராணம் என்ற பெயரும் அதற்குண்டு.
அக்கினி தேவனால் வசிட்டருக்குக் கூறப்பட்ட புராணம் இதுவென்பர். அக்கினி மீது இயற்றப்பட்டதெனக் கூறப்படும் இது சிவபுராணங்களுள் ஒன்றாகக் கருதப்படுகின்றது. இதன் காலம் கி. பி. பத்தாம் நூற்றாண்டு என்று சிலர் கூறுவர்.
அக்கிணிபுராணம் அளவிலே பெரிய புராணமாகும்; ஏறக்குறைய 420 அத்தியாயங்களையுடையது. சுயமான சில விடயங்களோடு வேறு நூல்களிலிருந்தும் பல பகுதிகளை உள்ளடக்கியது. யாஜ்ஞவல்கியரிலிருந்து சட்டம் பற்றிய ஒரு பகுதியும் சுஸ்ரதரிலிருந்து வைத்தியம் பற்றி ஒரு அத்தியாயமும் பிங்களர், பாணினியிலிருந்து இலக்கணம், அணி, யாப்புப் பற்றித் தெரிந்த பிரிவுகளும் அதில் அடங்கும்.
கலைக்களஞ்சியம் போன்று பல விடயங்களையும் உள்ளடக்கும் பண்பு அக்கிணிபுராணத்திலுண்டு. கிரியை வழிபாடு, உலகவுற்பத்தி, அரசபாரம்பரியம், போர்முறைகள், ஸ்வப்ன மந்திரம், சாதகம், கட்டடக்கலை, சிற்பக்கலை, ஆயுள்வேதம், விஷ வைத்தியம், நாடக சாத்திரம், அணியலங் காரம்,உடற்கூற்றியல், சிவலிங்கம், துர்க்கை, தசாவதாரம், இராமாயணம், மகாபாரதம், தேவபூஜாவிதிகள், தேவதா பிரதிட்டை
முதலிய பல்வேறு விடயங்கள் இதனுள் இடம் பெறுகின்றன.
(பொ.யூ.)
c91855 371 DuJ1ÎD
தீருமூலநாயனாரின் திருமந்திரத்திலும் (1557, 1558) மாணிக்கவாசக சுவாமிகளின் திருவாசகத்திலும் (திருவண்டப் பகுதி, 17) சைவத்தின் அகச் சமயம் ஆறென்ற குறிப்பு அறியப்படுகின்றது.
பன்னிரண்டாம் நூற்றாண்டிற்கு முன்பும், திவாகரத்திற்குப் பின்பும் எழுந்த பிங்கலந்தையில் வைரவம், வாமம், காளாமுகம், மாவிரதம், பாசுபதம், சைவம் என்பன அகச் சமயம் என்ற விளக்கம் கிடைக்கின்றது. இப் பட்டியலினை உமாபதி சிவாசாரியரின் சங்கற்ப நிராகரணப் பழையவுரையும் ஏற்றுக் கொள்ளுகின்றது. தத்துவப் பிரகாசம் பதினைந்தாம் நூற்றாண்டின் கடைக்கூறுக்கு முன்பு எழுந்தது. அதுவும் இப்பழைய மரபினை ஏற்றுள்ளது. தத்துவப் பிரகாசம் பதினாறாம் நூற்றாண்டில் எழுந்த சூடாமணி நிகண்டும் பிங்கலந்தை தந்த அகச்சமயப் பட்டியலை வழி மொழிந்துள்ளது.
இந்துக் கலைக்களஞ்சியம்

ஆயினும் இவற்றிலே வைரவம், வாமம், மாவிரதம், பாசுபதம் என்பன இன்று அகப்புறச் சமயமாகப் பட்டியல் பெற்றுள்ளன. காளாமுகத்திற்குப் பதிலாகக் காபாலம் அகப்புறத்தில் இடம் பெறுகிறது. சங்கற்ப நிராகரணம் நிராகரித்த ஐக்கிய வாதசைவம் அகப்புறப் பட்டியலைப் பூர்த்தி செய்கின்றது.
இன்று அகச் சமயப் பட்டியலிலே பாடானவாதம், பேதவாதம், சிவசமவாதம், சிவசங்கராந்தவாதம், ஈசுவரவவிகாரவாதம், சிவாத்துவிதம் என்பன இடம் பெறுகின்றன. இவை யாவும் உமாபதி சிவாசாரியரால் சங்கற்ப நிராகரணத்திலே நிராகரிக்கப்பட்டவை என்பதும் அவரால் அகச்சமய அந்தஸ்து வழங்கப்படாதவை என்பதும் மனங்கொள்ளத்தக்கன.
இவ்வறுவகை அகச்சமயமும் சித்தாந்த சைவத்தின் பதி முதலிய ஆறு பதார்த்தங்களையும் ஒப்புக் கொண்டு அவ்வப் பொருள்களுக்குக் கூறும் பொது இயல்பு மாத்திரையே கொண்டு தன்னியல்பு கொள்ளாது மாறுபடுவன.
பாடாணவாத சைவத்தின்படி ஆன்மா பிறப்பிறப்பிலிருந்து நீங்கி விடுதலை பெற்று முத்தியடையும் போதும் ஆணவமலப் பிடிப்பிலிருந்து நீங்காது சுட்டறிவும் சுகதுக்காநுபவமுமற்றுப் பாடாணம் போற் கிடக்கும்.
பேதவாத, சைவம் ஆன்மா அறிவை (மெய்ஞ்ஞானம் பெறுவதன் மூலம் பாசத்திலிருந்து விடுதலை பெறுகிறது என்றும் அதுவே முத்திநிலை என்றும் கருதும். ஆன்ம விடுதலைக்குப் பக்தி மார்க்கமும் இன்றியமையாதது என்ற சித்தாந்த சைவம் கருதுகிறது.
சிவசமவாதசைவம் ஆன்மாவின் பசுத்துவம் நீங்க அது சிவனைப் போலாகி விடும் என்று கருதும். இந்நிலையில் ஆன்மா இறைவனை ஒத்து நிற்கும். இறைவன் அருளினால் இறைவனை அறிய வேண்டுமென்பதில்லை. மலம் ஒழிந்த நிலையில் ஆன்மா வீடு பேறுக்குத் துணையான பஞ்ச கிருத்தியத்தையும் செய்யும் ஆற்றலைப் பெறுகிறது. ஆன்மா இறைவனுக்குச் சமமாகவோ அல்லது இறைவன் தொழிலைச் செய்யும் ஆற்றல் பெறவோ முடியாது என்பது சித்தாந்த சைவம்.
சிவசங்கிராந்த சைவம் மலங்களின் பிடிப்பிலிருந்து விடுபட்ட செயலற்ற நிலையை ஆன்மா அடையும்போது இறைவனது அருளால் சிவமாக நிற்கும் என்று கருதும்.
ஈசுவரவவிகார சைவம் இறைவனது முயற்சி இன்றி ஆன்மா தன் முயற்சியாற் பக்குவம் பெறும்; பதியறிவு பெற்று ஆன்மா இறைவனுடன் சேருகின்றது என்ற சித்தாந்தம் உடையது.
சிவாத்துவித சைவம் முத்திநிலையில் ஆன்மா சிவத்துடன் கலந்து சிவமாய் விடும் என்று கருதும். அந்நிலையில் ஆன்மா என ஒரு பொருள் வேறாயிராது. ஆன்மாவானது இறைபாவனை யினால் இறைவனோடொத்த வடிவத்தைப் பெற்று எல்லாப் போகங்களையும் அனுபவித்து மீட்சியின்றி இருக்குமாம்.

Page 36
அகத்தியத்தாபனம்
ஈழநாட்டின் திருக்கோணமலை மாவட்டத்திற் கொட்டியாரப் பற்றிலுள்ள மூதூரிலிருந்து பத்துமைல் தொலைவிலுள்ள கிளிவெட்டிக் கிராமத்திற்குச் சுமார் ஏழுமைல் தொலைவில் அமைந்தது கரைசையம்பதி. கிளிவெட்டியிலிருந்து கங்குவேலிக் கூடாகவும் கரைசையை அடையலாம்.
திருக்கரைசையம்பதியிலே அமைந்தது அகத்தியத்தாபனம் எனும் திருத்தலம். இத்தலத்திலே அகத்தியர் தாபித்த சிவலிங்கம் அமைந்த திருக்கோயில் ஒன்றின் வரலாறு புராணத்திலே கூறப்பட்டுள்ளது.
அகத்தியத்தாபனத்தில் அமைந்த சிவாலயம் தலபுராணம் பெற்ற சிறப்புடையதாதலால் ஒரு காலத்தில் சீரும் சிறப்பும் பெற்று விளங்கியிருக்க வேண்டும். மேலும் இப்புராணம் கொட்டியாரப் பற்றிலே ஏனைய திருக்கோயில் விழாக்களிலும் படிக்கப்பட்டு வருவதை நோக்கும்போது இச்சிவாலயம் பெற்றிருந்த முக்கியத்துவம் புலப்படுகின்றது.
புராணம் பெற்ற சிவாலயம் அமைந்த இடத்திலே அண்மைக் காலத்திலே கண்டெடுக்கப் பெற்ற புனிதச் சின்னங்களான லிங்கம், கோமுகை, நந்தி, பலிபீடம், சுப்பிரமணியர், அஸ்திரதேவர், முக்கூட்டுக்கல், வாயிற்கற்கள், தூண்கள் முதலானவற்றை ஒருசேர வைத்துச் சிறிய கோயில் ஒன்று கட்டிப் பக்தர் போற்றி வருகின்றனர்.
அகத்தியத்தாபனத்தின் வரலாறு கூறும் திருக்கரைசைப் புராணம் சுன்னாகம் அ. குமாரசுவாமிப்புலவரின் பொழிப்புரை யுடன் திருகோணமலை வே. அகிலேசபிள்ளையால் மயிலிட்டி வச்சிரயந்திரசாலையில் விகிர்தி வருடம் ஆனி மாதம் (1890) பதிப்பிக்கப்பட்டது. இப்பதிப்பின் இரண்டாம் பிரசுரம் திருகோணமலையிலே நந்தன வருடம் ஆடி மாதம் (1952) அச்சிடப் பெற்றது. 1975 இலே கட்டைபறிச்சான் இந்து இளைஞர் மன்றம் வ. அ. இராசரத்தினம் மேற்பார்வையில் ஒரு பதிப்பினை வெளியிட்டது. (பொ.பூ.)
அகத்தியர்
இருக்கு வேதத்தில் இடம்பெறும் பாடல்களைப் பாடியவர் களிலே அகஸ்தியர் ஒருவர் அறியப்படுகிறார். அவர் மனைவி லோபா முத்திரையின் பாடல்களும் அங்கு காணப் படுகின்றன. வான்மீகி ராமாயணத்திலும் வியாச பாரதத்திலும் வடமொழிப் புராணங்களிலும் அகஸ்தியர் என்பவரைப் பற்றிப் பல்வேறு கதைகள் கூறப்பட்டுள்ளன.
தைத்திரீய ஆரணியகம் அகத்திய நட்சத்திரத்தைக் கூறுகின்றது. சுவர்க்கத்தை அடையும் சான்றோரின் ஒளிப் பிழம்புகளே நட்சத்திரங்கள் என்று தைத்திரீய சங்கிதையும் சதபத பிராமணமும் கூறுவன.
6

எட்டுத் தொகை பத்துப் பாட்டாம் பண்டைய தமிழ்த் தொகை நூல்களிலே அகத்தியர் எனும் பெயர் காணப்படவில்லை. பரிபாடலிலே “பொதியின் முனிவன்’ என்று அகத்திய நட்சத்திரம் குறிப்பிடப்படுகின்றது (11.11 - 22). அகத்தியர் பொதிகை மலையில் வாழ்ந்தவர் என்ற கருத்து இப்பரிபாட்டின் காலத்தில் நிலவியுள்ளது. சங்கத வழக்கும் தமிழ் வழக்கும் தொடர்புபட்டு, வேதகாலத்து அகஸ்தியரும் பொதிகை முனிவரும் ஒருவராகக் கருதப்படுவதையும் இங்கு காணலாம்.
பொதிகைமலை பற்றிய குறிப்புகள் இடம்பெறும் குறுந்தொகை (84, 376), அகநானூறு (25, 138, 322), புறநானூறு (24, 128) எனும் பழைய தொகை நூல்களிலே அகத்தியர் செய்திகள் எவையுமில்லை. வான்மீகி இராமாயணத்தின் ஆரண்ய காண்டத்திற் பஞ்சவடிக்கு இரண்டு யோசனையிலும் கிஷ்கிந்தா காண்டத்தில் அயோமுகத்தின் சிகரத்திலும் (குடகுமலைச்சிகரம்) அகத்தியரின் ஆசிரமங்கள் இருந்தன என்று குறிப்பிடப் படுகின்றது. பொதிகை மலையிலே அவ்வாறு இருந்ததாகக் குறிப்பில்லை.
சிலப்பதிகாரத்திலும் அகத்தியர் பெயர் இடம் பெறவில்லை. பொதிகை முனிவனும் (8, 8, 27.68; 12.24:1-23, 1-3) பிரமனின் மகனும் (12.24.1-2), இந்திரன் மகனுக்கும் ஊர்வசிக்கும் இட்டசாபத்தை நீக்கியருளிய திருமுனியும் (3.1-3) ஆகிய அகத்தியர் செய்திகள் குறிப்பிடப்பட்டுள்ளன.
மணிமேகலையிலேதான் அகத்தியர் எனும் பெயர் முதன் முதலாகத் தமிழ் நூல்களிலே காணப்படுகின்றது (பதிகம், 11:22.35). மணிமேகலையிலே அகத்தியர் உற்பத்தி வரலாறு (13.94-96), இந்திர குமாரனைச் சபித்தது (24.10-12), காந்தன், எனும் சோழன் வேண்ட தம் கரகத்தைக் கவிழ்க்கக் காவிரி தோன்றியது (பதிகம் 9.12 காந்தன், பரசுராமன் மழுவுக்குப் பயந்து நீங்கிய போது அகத்தியர் மொழி கேட்டுப்பின்பு தான் மீள்வதாகக் கூறியது (22.25-38), தொடித்தோட் செம்பியன் 'மலயத் தருந்தவன்” உரை கேட்டு தூங்கெயில் எறிந்தமை (13-4) என்பன கூறப்பட்டுள்ளன.
சிவனருள் பெற்ற செம்மையினராக அகத்தியரை நாயன்மார் திருப்பாடல்களிலே காணலாம். திருமூலநாயனார் தென்திசை நோக்கி வந்தது அகத்திய முனிவரைக்காணவென்று சேக்கிழார் பெரியபுராணத்திற் கூறியுள்ளார்.
பக்தி இலக்கிய காலகட்டத்திலே அகத்தியர் தமிழோடு தொடர்புபடுத்தப் பெற்றுள்ளார். பாண்டியரின் குலகுருவாகவும் தமிழாசிரியராகவும் செப்பேடுகளிலும் மெக்கீர்த்திகளிலும் அகத்தியர் குறிப்பிடப்படுகிறார்.
இக்காலகட்டத்திலே தென்கிழக்காசிய நாடுகளிலே தென்னாட்டவர்கள் கொண்ட தொடர்புகளால் அகத்தியர் மரபும்
அந்நாடுகளிலே பரவத் தொடங்கியது.
இந்துக் கலைக்களஞ்சியம்

Page 37
பாண்டியநாட்டுக்கும் பாண்டியருக்கும் சிறப்பிடம் தரும் இறையனாராகப் பொருளுரையிலே முதலிரு தமிழ்ச் சங்கங்களில் அங்கம் வகித்ததும் அவர் எழுதிய அகத்தியம் முச்சங்கத்திற்கும் இலக்கணமாக விளங்கியதும் கூறப்படுகின்றன. களவியலுரை கூறும் செய்திகள் முன்னைய காலங்களிற் காணப்பெறாதவை.
கம்பர் ஆரண்யகாண்டத்து அகத்தியப்படலத்திலே கடலையுண்டது, வாதாவியை வதைத்தது, விந்தத்தை அடக்கியது, இறையாணையால் தென்திசை ஏகியது, குண்டிகையிற் காவிரி கொணர்ந்தது ஆகிய செயல்களை அகத்தியருக்குக் கூறுவதோடு அமையாது தமிழ்முனி யாக அவரைப் படைத்தனர். கிட்கிந்தா காண்டத்திலே கம்பர் பொதிகை மலையில் அகத்தியர் தமிழ்ச் சங்கம் ஒன்றினை நிறுவி நடத்தியதாகவும் கூறியிருக்கிறார்.
பன்னிருபடலப் பாயிரம் தொல்காப்பியரை அகத்தியரின் மாணவராகக் கூறியது; புறப்பொருள் வெண்பாமாலைப் பாயிரம் அகத்தியர் மாணாக்கர் தொல்காப்பியர் முதலாம் பன்னிருவர் என்று கூறியது. இக்கருத்துக்களைத் தொல்காப்பிய உரையாசிரியர் காலங்களிலே ஐயுற்றுள்ளனர் என்பது பேராசிரியர் கூற்றுகளால் புலனாம் (மரபியல் 94); இளம்பூரணர் பன்னிருபடலத்துள் வெட்சிப் படலம் தொல்காப்பிர் கூறினாரென்றால் பொருந்தாது என்பதன் மூலம் ஐயங்களை வலுப்படுத்தினார்.
யாப்பருங்கல விருத்தியுரை "ஆனந்த வோத்து' எனும் நூல் செய்ததாகக்கூறிய கருத்தைப் பேராசிரியரும் நச்சினார்க் கினியரும் மறுத்துள்ளனர்.
பெரும்பற்றப்புலியூர் நம்பி குறுமுனிக்குத் தமிழுரைத்த திருவிளையாடலைப் போற்றிப் பேணியள்ளார். கச்சியப்ப சிவாசாரியர் அசுரகாண்டத்தில் அகத்தியர் பற்றிய பெளராணிக வரலாறுகளை விரித்துரைத்துள்ளார். காஞ்சிப் புராணத்தில் தழுவக் குழைந்த படலத்திற் சிவஞான முனிவர் அவற்றை வழி மொழிந்துள்ளார். மருத்துவம், இரசவாதம், மந்திரம், யோகம், ஞானம் என்பன பற்றி எழுந்த பல நூல்கள் அகத்தியர் பேருடன் வழங்குகின்றன; அகத்தியரைச் சித்தராகக் கொண்ட மரபு இந்நிலைக்குக் காரணமாகும்.
பெரியபுராணத்தைத் தழுவும் அகத்தியர் பக்த விலாசம் ஒன்று வடமொழியிலுண்டு; அகத்தியர் பேருடன் தேவாரத் திரட்டு ஒன்று வழங்குகின்றது; ஆறெழுத்தந்தாதியுமுண்டு.
அகத்தியரை வரலாற்றுப் புருடராக நிறுவும் முயற்சிகள், பல்வேறு கேள்விகளைத் தோற்றுவிப்பினும், அன்னாரைப் பண்பாட்டு வரலாற்றிலிருந்து பெயர்த்தெடுத்தல் பெரியதொரு இடைவெளியைத் தோற்றி நிற்கும். (பொ.யூ.)
அகத்தியர் தேவாரத் திரட்டு
தேவாரத்திருமுறையிலிருந்து தொகுக்கப்ப பெற்ற இருபத்தைந்து திருப்பதிகங்களையுடையது அகத்தியர் தேவராத் திரட்டு.
இந்துக் கலைக்களஞ்சியம்

மூவர் திருப்பதிகங்கள் முழுவதனையும் ஒதி மகிழ விரும்பிய சிவாலய முனிவருக்கு அகத்தியர் 25 திருப்பதிகங்களைத் திரட்டி அவற்றை நாள்தோறும் பாராயணம் செய்வோர் அடங்கன்முறை முழுவதையும் ஒதிய பயனைப் பெறுவர் என்று அறிவுறுத்திய தாய்க் கூறுவது மரபு.
இத்திரட்டிலே இடம்பெறும் திருப் பதிகங்கள் குருவருள், திருவெண்ணிறு (பரையின் வரலாறு), அஞ்செழுத்துண்மை, கோயிற்றிறம், சிவனுருவம், திருவடி, அருச்சனை, அமைதிநிலை என எட்டுப் பிரிவுகளாக அமைக்கப்பட்டுள்ளதை நோக்கும்போது திருமுறைப்பாடல்களைப் பொருளடிப்படையிற் பகுத்துப் பாராயணம் செய்யும் மரபு ஒன்று புலனாகின்றது. திருவாசகத் திற்கும் திருவாசகத்தனுபூதி எனப்படும் திருவுள்ளக்கிடை ஒன்று இத்தன்மைத்தாகக் காணப்படுதல் குறிப்பிடத்தக்கது.
அகத்தியர் தேவாரத்திரட்டு அகத்தியராலே தொகுக்கப்பட்ட தென்பது மரபு. குறுமுனியடிகள் சீடர் சிவாலயமுனிவர் என்றும் அவர் சீடர் திருநெறி விளக்க ஆசிரியர் என்றும் கூறுவர்.
நல்லூர் க. சதாசிவப்பிள்ளை (1910) பூரீ ஆறுமுக நாவலர் முன்னிலையிற் பரிசோதித்துப் பதிப்பித்தனவற்றிலே 1866 இலே வெளியிட்டனவே அகத்தியமாமுனிவர் திரட்டியருளிய தேவாரத் திரட்டு, திருவாசகம், திருவிசைப்பா, திருப்பல்லாண்டு, பெரியபுராணச் செய்யுட்டிரட்டு என்பன. 1873 இலும் 1880 இலும் அவர் இவற்றை மீண்டும் பதிப்பித்துள்ளார்.
கயப்பாக்கம் சதாசிவச் செட்டியார் (1872 - 1929) அகத்தியர் தேவாரத்திரட்டிற்கு விரிவுரை கண்டுள்ளார். வித்துவான் தி. பட்டுச்சாமி ஒதுவாரின் குறிப்புரையுடன் அகத்தியர் தேவாரத்திரட்டினைத் திருப்பனந்தாள் பூரீ காசி மடத்தினர் 1965 இலே வெளியிட்டனர். சோளங்கிபுரம் சிவபூரீ அருணகிரி முதலியார் 1927 இலே வெளியிட்ட பன்னிரு திருமுறைத் திரட்டிலே அகத்தியர் தேவாரத் திரட்டும் இடம் பெறுகின்றது.
உமாபதி சிவாசாரியர் பெயராலே "திருமுறைத்திரட்டு” ஒன்று வழங்குகின்றது. இதனை ச. சோமசுந்தரதேசிகர் 'சித்தாந்தம்' சஞ்சிகையில் 1930 இலே வெளியிட்டனர். இத்திரட்டிலும் 99 திருப்பாடல்கள் பத்துத் தலைப்புக்களின்கீழ்த் தரப்பட்டுள்ளன. பதிமுதுநிலை, உயிரவை நிலை, இருண்மல நிலை, அருளது நிலை, அருளுருநிலை, அறியும் நெறி, உயிர் விளக்கம், இன்புறுநிலை, ஐந்தெழுத்தருள் நிலை, அணைந்தோர் தன்மை எனும் அப்பிரிவுகள் திருவருட் பயணிலே காணப்படுதல் குறிப்பிடத்தக்கது. (பொ.யூ.)
அகத்தியான்பள்ளி
வேதாரணியத்துக்குத் தெற்கில் ஒரு மைல் தொலைவில் உள்ளது இத்தலம். பார்வதி தேவியாருக்கு இமயமலையில் நடந்த
திருமணத்தை அகத்தியர் இத்தலத்திலிருந்து தரிசித்தார் என்பது புராணம். சுவாமி அகத்தீசுவர், அம்பிகை : பாகம்பிரியாள்,

Page 38
பாகம்பிரியாநாயகி, செளந்தரநாயகி. தீர்த்தம் : அக்னி தீர்த்தம் (கோயிலுக்கு எதிரில்). சுவாமி சந்நிதி : கிழக்கு அம்பாள் சந்நிதி தெற்கு. தலவிருட்சம் : அகத்தி. பிறசெய்திகள் அகத்தியர் திருவுருவம் கோயிலில் உள்ளது. மிக அழகியது.
இத்திருக் கோயிலில் சோழமன்னரிலே திரிபுவன சக்கிரவர்த்தி இராசராச தேவரது இரண்டாம் ஆட்சியாண்டில் (29.1, 1218) பொறிக்கப் பெற்ற கல்வெட்டு ஒன்றும் பிற்காலப் பாண்டியர்களில் மாறவர்மன் திரிபுவனச் சக்கிரவர்த்தி குலசேகர தேவரின் ஐந்தாம் ஆட்சியாண்டு, முப்பத்தொன்றாம் ஆட்சியாண்டுகளில் பொறிக்கப்பெற்ற இரண்டு கல்வெட்டுக்களும், மாறவர்மன், திரிபுவன சக்கிரவர்த்தி வீரபாண்டிய தேவரின் பதினைந்தாம் ஆட்சியாண்டில் பொறிக்கப் பெற்ற கல்வெட்டு ஒன்றும் ஆக நான்கு கல்வெட்டுக்கள் இருக்கின்றன. இவை நுந்தா விளக்குகளுக்கும், நித்திய வழிபாட்டிற்கும் நிலங்கள் அளிக்கப் பெற்ற செய்திகளைக் குறிப்பிடுகின்றன. இராசராசன் ஒரு விளக்கிற்காக 1500 காசுகளும் மாறவர்மன் குலசேகரன் ஐந்தாமாண்டில் பொன்தானமும், முப்பத்தொன்றாமாண்டில் விழா நடத்த நிலதானமும் அளித்தனன்.
ஒரு சிலாசாசனத்திலிருந்து குலசேகர பாண்டியனுக்கு (கி. பி. 1268 - 1308) இருந்த வியாதி வேதாரணியம் கோயிலில் உற்சவம் நடத்தி நீங்கப் பெற்றது வெளியாகிறது. திருஞானசம்பந்தராற் பாடப்பெற்ற தலம்.
அகத்தி யான்பள்ளியகத்தியநாதரம் பிகைபேர் பாகம் பிரியTள்
(சிவகூேடித்திர விளக்கம்)
வாடிய வெண்டலை மாலைகுடி மயங்கிருள் நீடுயர் கொள்ளி விளக்குமாக நிவந்தெரி ஆடிய எம்பெருமான்அகத்தியான் பள்ளியைப் பாடிய சிந்தையி னார்கட்கில்லையாம் பாவமே,
(திருஞா. 2ஆம் திரு.)
இத்தலத்தைப் பற்றி வேறு தலங்களில் வழங்கும் தேவாரங்கள் :
அகத்தியான் பள்ளி அமர்ந்தான் கண்டாய்
(மறைக்காடு திருந7) அறப்பள்ளியகத்தியான் பள்ளி (பொது திருஞா) ஆதியகத்தியான் பள்ளியண்ணாமலை (பொது திருநா) (வ. வை.)
ć93ljuspši 3Dub
அகப்புறச் சமயம் என்ற ஆட்சி திருமந்திரம், திருவாசகம்,
பிங்கலந்தை, சிவஞான சித்தியார், சங்கற்பநிராகரணம், தத்துவப்
பிரகாசம், சூடாமணி நிகண்டு என்பனவற்றிலே காணப்படாத
வொன்றாகும்.
8

அகப்புறச் சமயப் பட்டியலிலே பாசுபதம், மாவிரதம், காபாலம், வாமம், வைரவம், ஐக்கியவாதம் என்பன இடம் பெறுவன.
இவற்றிலே பாசுபதம், மாவிரதம், வாமம், வைரவம் என்பன பிங்கலந்தை முதல் சூடாமணி நிகண்டு வரை அகச்சமயப் பட்டியலிலே இடம் பெற்றனவாம். சங்கற்பநிராகரணம் நிராகரித்தனவற்றிலே ஒன்று ஐக்கியவாதம்.
பாசுபதம், மாவிரதம், காபாலம், வாமம், வைரவம் என்பன வேதம் சிவாகமம் இரண்டையும் பொதுவகையாற் பிரமாணமாகக் கொள்ளினும், அவ்வேதம் சிவாகமம் இரண்டுக்கும் வேறாகிய பாசுபதம் முதலிய நூல்களைச் சிறப்பு வகைப் பிரமாணங்களாகக் கொள்வன. ஐக்கியவாதம் வேதம், சிவாகமம் இரண்டையும் சிறப்பு வகையாற் பிரமாணங் கொண்டு அவற்றில் விலக்கியவற்றை நீக்கி விதிக்கப்பட்டவற்றை ஏற்பினும் ஆணவமலம் ஒன்று உளது என்பதை மறுத்து அதனுண்மையைச் சாதிக்கும் சிவாகமங்களை
இகழும்.
திருநீறும் சடையும் தரித்த மூர்த்தியாகிய சிவனைப் பாசுபதரும், என்புமாலை தரித்த மூர்த்தியாகிய சிவனை மாவிரதரும், காபாலத்தையுடைய மூர்த்தியாகிய சிவனைக் காபாலரும், அக்கினியும் உபவிதமும் தரித்த மூர்த்தியாகிய சிவனை வாமமதத்தாரும், தமருகமும் சிலம்பும் தரித்த மூர்த்தியாகிய சிவனை வைரவமதத்தாரும் முதற் பொருள் என்பர். ஐக்கியவாத சைவர் சிவன், சதாசிவன், மகேசுவரன் எனும் பெயருடைய அருவம் அருவுருவம் உருவம் எனும் இலக்கணங் களுடைய பதியே முதற்பொருள் என்பர்.
பாசுபதமும் ஐக்கிய வாதமும் ஆணவ மலத்தை மறுக்கின்றன. மாவிரதம் எலும்பணிதல் முதலிய சரியைகளை அனுட்டிப்போர் முத்தராவர் என்றும் இந்த முத்தருக்குச் சிவனோடு சமமான எல்லாக் குணங்களுமுண்டென்றும் கொள்ளும்.
காபாலம் பச்சைக்கொடி ஒன்றை கையிற் பிடித்துக் கொண்டு நாடோறும் மனிதர் தலையோட்டிற் பிச்சை ஏற்று உண்ண வேண்டும் என்றும் உன்மத்தராய்ச் சிவன் ஆவேசித்தலால் எல்லாக்குணங்களும் பெற்றுச் சிவசமமாவர் என்றும் கூறும். வாமம் சடமும் சித்துமாகிய எல்லா உலகும் சத்தியின் பரிணாமம் என்றும் சத்தியில் இலயித்தலே முத்தி என்றும் கூறும், வைரவரே பரம்பொருள் எனக் கொண்டு வைரவ பதத்திற் சேர்வதே முத்தி என்றும் கொள்வது வைரவம்.
பாசுபதம், மாவிரதம், காபாலம் என்பன முறையே சங்கிராந்த சமவாதம், உற்பத்தி வாதம், ஆவேசவாதம் எனவும் படுவன.
(பொ.பூ)
அகப்பேய்ச் சித்தர்
அகப்பேய் சித்தர் தம் மனம் பேயாக அலைதல் பற்றி பேயென
உருவகப்படுத்தி அலையாது நிற்க என அறிவுரை கூடிப் பாடியதால் இப் பெயர் பெற்றார் எனக் கருதலாம். இவரது பாடல்களின் இறுதியில் அகப்பேய் என்னும் சொல் முடிவாகக் காணப்பெறுகின்றது.
இந்துக் கலைக்களஞ்சியம்

Page 39
அகப்பேய்ச் சித்தரின் இளமைப் பெயர் நாயனார். இளம் வயதில் படிக்க வேண்டிய நூல்கள் பலவற்றையும் படித்து அவற்றைக் கருத்தில் படியவைத்துக் கொண்டார். தனது ஜீவனோபாயத்துக்காக ஆடை வியாபாரம் செய்தார். அவரது நேர்மை அவருக்கு வருமானத்தை மேலும் மேலும் பெருக்கியது. இருப்பினும் அவரது மனம் அதில் நாட்டமுறவோ அமைதியடையவோ இல்லை.
மக்களின் போலி வாழ்க்கையையும், உலகியல் வாழ்க்கையில் கொண்ட அதீத மோகத்தினால் பரபரப்போடு நாலா பக்கங்களிலும் ஒடி முறை தவறிப் பொருளைச் சேர்க்க முயற்சி செய்கிறார்கள். முறைகேடாகச் சேர்த்த பொருளோ வந்த வழியே போய் விடுகின்றது. அகவாழ்விலும் புறவாழ்விலும் பொய்யை விடாமல் இறுகப் பற்றி நிற்கும் மக்களின் அவல நிலை கண்டு மனம் வெதும்பினார். மக்களை அணுகி இந்த அவல வாழ்வினின்றும் வெளியே வரவேண்டும். நிலையற்று ஒரு கணப் பொழுதில் அழிந்து போகும் இவ்வுலக வாழ்விற்காக இத்தனை தூரம் நாம் மயங்கி நிற்பதில் அர்த்தம் இல்லை. விதியால் வந்த உடம்பு அதைக் கொண்டு அறிவோடும் உணர்வோடும் செயல்பட்டால் ஒரளவு வெற்றி அடையலாம். எனவே, நிலையற்ற இன்பங்களை மகிழ்ச்சியை நாடி நிற்பதைத் தவிர்த்து நிலையான பேரின்பப் பெருவாழ்வைப் பெறுவதற்கு உரிய வழிமுறைகளை நாடி நில்லுங்கள் என்று உபதேசித்தார்.
இவரது உபதேசத்தைக் கேட்டவர்கள் சிரித்தார்கள். நாயனாரைப் பார்த்துக் 'நீங்கள் கூறுகின்ற தர்மத்தின் படி நடந்தால் வாழ்க்கையில் முன்னேறவே முடியாது. நீங்கள் கூறுவது எல்லாம் மனிதனின் முன்னேற்றத்தைக் கட்டுப்படுத்துவது ஒரு தடைக்கல். நீங்கள் கூறும் ஞான நூல்களை ஒரு பொழுதுபோக்கிற்காகப் படிக்கலாமே தவிர அதனால் எமது வாழ்க்கைத் தரத்தை எவ்விதத்திலும் உயர்த்திக் கொள்ள முடியாது” என்று கூறிநகைத்தனர்.
இவர்களது பேச்சைக் கேட்ட நாயனார் மனம் வருந்தினார். எத்தனை முயன்றாலும் இவர்களைத் திருத்தவே முடியாது என்று உணர்ந்து கொண்டார். இவர்களைத் திருத்த முயன்றால் தனது மனமும் அமைதி இழந்துவிடும் என்று உணர்ந்து அவர்களை விட்டு விலகி வாழ முற்பட்டார். பல பல சாதுக்களைக் கண்டு அவர்களை அணுகினார். ஆயினும் அவர்களின் குணக் குறைகள் நாயனாரைத் தூர விலக வைத்தது. இறுதியிலே காணகத்திலே தன் கண்களுக்குத் தென்பட்ட ஒரு ஜோதி மரத்தின் அடியில் அமர்ந்து, நான்கு வேதங்களையும், பதினெட்டுப் புராணங்களையும் தொகுத்த வியாசரை மானசீகக் குருவாக மனதில் இருத்தித் தியானம் செய்தார். உள்ளம் முழுவதும் வியாசரின் திருவுருவம் ஊடாக நாக்கினில் அவரது திருநாமங் கொண்டு நாயனார் தவம் மேற்கொண்டார். தவம் கனிந்தது. வியாசர் அவர் முன் தோன்றி "உன் கவலையை விடு; உனக்கு அனுபூதி நிலை கூடும்; மக்களின் மனம் லயம் அடைவதற்காக உன் அனுபவங்களை எழுதிவை, அது மக்களின் வாழ்க்கைப்
孺
f இந்துக் கலைக்கன்ஞ்சியம்

போக்கினை மாற்றுவதற்கு உதவியாக இருக்கும்’ என்று உபதேசித்துவிட்டுச் சென்றார். வியாசரின் உபதேசத்தின் பின் கடுமையான தவத்தினை மேற்கொண்டார் நாயனார்.
தவம் கைகூடிய நிலையில் வியாசரின் கட்டளை நினைவுக்கு வந்தது. மக்களின் அறிவு மாயையினால் மயங்கிப் போகின்றது. அந்த மாயை பெற்ற பிள்ளை தான் மனம், அந்த மனப் பேயோ ஒய்வு ஒழிவு என்பதே இல்லாமல் எல்லா இடங்களிலும் சுழன்று எழுந்து, குதித்துப் பார்த்ததை எல்லாம் விரும்புகின்றது. கண்ணிற் பட்டதை எல்லாம் சொந்தமாக்கிக் கொள்ளத் திட்டம் போடுகிறது. அதன் காரணமாக வெறி கொண்ட மனதை அகப்பேய் என்று அழைத்து அது ஆனந்தமயமாக வாழ்வதற்காகப் பலப் பல உபதேசங்களைப் பாடல்களாக ஆக்கினார்.
இங்கு கூறப்பட்ட வரலாறு கர்ணபரம்பரையானது அகப்பேய்ச்சித்தரின் உண்மை வரலாறோ அன்றிக் காலமோ துணிதற்கரிது.
ஏனைய சித்தர்களைப் போலவே இவரும் மறைபொருள்
சொற்களைக் கொண்ட பாடல்கள் பலவற்றைப் பாடியுள்ளார்.
தன்னை யறிய வேணும் அகப்பேய் சாராமற் சாரவேனும்
மின்னை யறிவதெல்லாம் அகப்பேய்
பேயறி வாகுமடி
தானறிநின்றவிடம் அகப்பேய்
சைவம் கண்டாயே
சைவம் ஆருக்கடி அகப்பேய்
தன்னை யறிந்தவர்க்கே"
அகப்பேய்ச் சித்தர் தன் உபதேசங்கள் மூலம் விளக்க முற்படுவது மக்கள் ஒவ்வொருவரும் நான் யார்? இப் பிறவி எடுத்ததன் நோக்கம் என்ன? அந்த நோக்கத்தை அடைய வழி என்ன? இவ்வுலக வாழ்க்கையில் நாம் ஈடுபட்டு நின்றாலும் தாமரை இலையிற் தண்ணிர் போல் உலக பந்தங்களில் மூழ்காமல் வாழ்வது தான் விஷய பந்தங்கள் எம்மைத் தொடராமல் இருப்பதற்கு ஒரே வழி என்பதாகும்.
அகப்பேய் எனும் விளியுடன் அமையும் தொண்ணுாறு பாடல்கள். பதினெண் சித்தர்கள் பெரிய ஞானக் கோவை எனும் தொகுப்பில் இடம் பெறுகின்றன. முருகேசநாயகர் 1899 இலே இத்தொகுப்பினை வெளியிட்டுள்ளார். 1907 ജൂബേ வி. சரவணமுத்துப்பிள்ளை சென்னையில் இரு பாகமாக அச்சிட்டனர். அரு. ராமநாதன் பதினெண்சித்தர் பெரிய ஞானக்கோவை என வழங்கும் சித்தர் பாடல்கள் எனும் பெயரிலே 1959 இலே வெளியிட்டுள்ளார். (நி. நி.)

Page 40
அகலிகை
“பஞ்ச கன்யா ஸ்மரணம் பாவநாசனம்’ என்பது சங்கத வழக்கு. ஐம்பெருங்கன்னியரை நினைக்கப் பாவங்கள் தொலையும் என்பது அதன் பொருள். இம்மரபிலே அகலிகை, திரெளபதி, சீதை, தாரை, மண்டோதரி என்பவர்களைக் கூறுவர். மணமாகாத பெண் என்று பொருள்படாது கன்னி எனும் சொல் என்றும் அழியாப் புகழ் வாய்ந்த பெண் என்ற சிறப்புப் பொருளை இங்கு அடைகின்றது.
வேதங்களில் இயற்கைப் பாடல்களுக்கு இயைந்த கதைத்துளிகளாயிருந்த அகலிகை - இந்திரன் உறவு காலப்போக்கிற் சுவையான கதையாகப் பரிணமித்தது. வேதகீதங்களிலும் பிராமணங்களிலும் அகலிகையைப் பற்றிய இடைவரவான குறிப்புகளுள. சதபத பிராமணம் இந்திரனை "அகலிகை காதலன்” என்று கூறுகின்றது. இத்தகைய குறிப்புகளையும் கதைக்கூறுகளையும் ஒன்று திரட்டி வால்மீகி அகலிகை கதைக்கு இராமாணயத்தில் இலக்கிய உருவம் கொடுத்தார். மகாபாரதத்திலும் அகலிகை கதை இடம் பெறுகின்றது.
மிதிலை நோக்கி விசுவாமித்திரருடன் இராம லட்சுமணர் செல்கையில் அழகும் அமைதியும் நிரம்பி வாழ்வோரில்லாது காணப்பட்ட ஆசிரமத்தைப் பாதையிலே கண்டு இராமன் வினவியபோது விசுவாமித்திரர் கூறுவதாக வால்மீகி இராமாயணத்தில் அகலிகை கதை இடம் பெறுகின்றது. இந்திரன் அகலிகையை அடையும் நோக்கத்துடன் கெளதமருடைய உருவிலே முனிவர் இல்லாத சமயத்திலே புகுந்து உடலுறவுக்கு அழைத்தபோது அகலிகை வேஷதாரி இந்திரன் என்று அறிந்தும் தேவேந்திரனே தன்னைத் தேடி வந்தானே என்ற கர்வத்திலே தன்னையிழந்து இந்திரன் ஆசைக்கு இடமளித்து அவனை விரைந்து செல்லும்படி கூறுகிறாள். இந்திரன் திரும்புகையில் எதிர் வந்த முனிவர் உண்மையுணர்ந்து இந்திரனை நபுஞ்சகமாகப் போகும்படியும் அகலிகையைக் காற்றே உணவாக ஆகாரமின்றிச் சாம்பல்மேல் யார் கண்ணுக்கும் புலப்படாது மறைந்து வாழும்படியும் சபித்தார். அகலிகைக்கு பாவவிமோசனமாகத் தசரதராமன் ஆசிரமத்துக்கு வந்து காலடிபட்டபோது அவள் பாவம் நீங்கும் என்று கூறிவிட்டுச் சென்றார். விசுவாமித்திரர் கூறிய இக்கதை கேட்டு இராமன் ஆசிரமத்துள் நுழைந்தபோது அகலிகை பழையவுருடன் தோன்றினாள்.
வால்மீகி கூறும் கதை வடமொழி நூல்களிலேயே மாற்றமுடையதாகக் காணப்படுகின்றது. கதாசரித்சாகரம் கெளதமர் ஆசிரமத்துள் நுழைந்தபோது இந்திரன் பூனையாக மாறி வெளியேற முயன்றான் என்று கூறும். 'அத்யாத்ம ராமாயணம்' அகலிகை கல்லாகவும் இந்திரனது தேகம் விகாரமடையவும் கெளதமர் சபித்ததாகக் கூறும்.
புராணங்களிலும் அகலிகை கதை முன்வரலாறுகளோடு நிலவுகிறது. படைத்தற் கடவுளான நான்முகன் தான் முன்னர்ப்
O

படைத்த பெண்களின் அங்கங்களில் உள்ள சிறப்பை எல்லாம் எடுத்து, அழகுமிக்க பெண் ஒருத்தியைப் படைத்து, அவளுக்கு அகல்யா என்று பெயரிட்டான். இவ்வழகிய மங்கைக்குத் தக்க கணவன் தானேயன்றிப் பிறரில்லை என எண்ணிச் செருக்குற்ற இந்திரன் இவளைத் தன் மனைவியாக்க எண்ணினான். பிரமனது விருப்பத்திற்கு மாறாக இங்ங்ணம் இந்திரன் எண்ணிச் செருக்குற்றதால், பிரமன் அவளை அவனிடம் கொடாமல் கோதம முனிவரிடம் கொடுத்து இவளைப் பாதுகாத்து வருக எனக் கட்டளை இட்டான். அவ்வாறே அவர் பன்னெடுங்காலம் பாதுகாத்துப் பின் பிரமணிடம் கொண்டு சென்று சேர்த்தார். அவருடைய பற்றற்ற தன்மையையும், தவச் சிறப்பையும் கண்டு பிரமன் உவந்து அம்முனிவருக்கே அவளை மனைவியாக்கினான். இதனால் பொறாமை கொண்ட இந்திரன் வேற்றுருக் கொண்டு அவளை அடைய விரும்பினான்.
தமிழிலே பரிபாடலில் இரு பாடல்களில் (199) அகலிகை சரிதச் செய்திகள் முதன் முதலாகக் காணப்படுவன. இந்திரனின் பூனை வடிவமும் அகலிகையின் கல்லுருவும் கெளதமரின் கோபமும் இந்திரன் ஆயிரம் கண் பெறலும் அவற்றிலே குறிப்பிடப்படுகின்றன.
“ஐந்தவித்தான் ஆற்றல்அகல்விசும்புளார் கோமான்
இந்திரனே சாலுங்கரி
என்ற திருக்குறளிலும் அகலிகை வரலாறு சம்பந்தப் பட்டுள்ளதாகக் கருத இடமுண்டு.
கோசிக முனிவரும் இராம இலக்குவர்களும் மிதிலையின் புறமதிலை அடைந்தனர். அங்குக் கல்லுருவாகக் கிடந்த அகலிகை, இராமன் திருவடித் துகள் பட்ட அளவில் உயிர்த்தெழுந்தாள் என்றும், கோசிக முனிவர் அவள் தன்மையை இராமனுக்கு உரைத்தார் என்றும் கம்பராமாயணம் கூறுகிறது.
பண்டை வடிவங்கொண்டு நின்ற அகலிகையை 'அன்னையே அனையாள் என்று வணங்கிய இராமனுக்கு அவளது வரலாற்றினைக் கோசிக முனிவர் கூறினார். அகலிகையை விரும்பிய இந்திரன் நல்லறிவு கெட்டுக் கோதம முனிவர் இல்லாத நேரத்தில், அத்தூய முனிவர் உருவத்தைத் தாங்கிக் குடிலுள் புகுந்தான் புகுந்த அவனுடன் காமப் புதுமணத் தேறலை உண்ணும்போது, அகலிகை தன்னிலை உணர்ந்தாள். உணர்ந்த பின்பும் தக்கது அன்று எனத் தெளிவு பெறாதவளாக அவ்வின்ப நுகர்ச்சியில் ஆழ்ந்தாள். அப்போது முக்கண்ணன் அனைய முனிவர் விரைந்து வந்தார். அகலிகை அஞ்சி நின்றாள். இந்திரன் பூனை வடிவங் கொண்டு போகலுற்றான். அதனைக் கண்டு சினந்த முனிவர் 'ஆயிரம் மாதர்க்குள்ள அறிகுறி நினக்குண்டாக என இந்திரனுக்கும், விலைமகள் அனைய நீயும் கல்லாகுக' என அகலிகைக்கும் சாபம் இட்டதாகக் கம்பர் கூறியுள்ளார்.
பிழைத்தது பொறுத்தல் பெரியோர்க்குக் கடன் எனப் பணிந்து அகலிகை சாப நீக்கம் வேண்ட, முனிவர்
இந்துக் கலைக்களஞ்சியம்

Page 41
இராமபிரானின் திருவடித்துகள் படுங்கால் கல்லுருவம் நீங்கும் எனவும், இந்திரனுக்காகத் தேவர்கள் வேண்ட முனிவர் சினம் தணிந்து, அவன் உடம்பில் அமைந்த குறிகள் ஆயிரம் கண்களாகத் தோன்றும் எனவும் அருளினார்.
தன் திருவடித் துகளால் முன்னைய வடிவம் பெற்ற அகலிகையிடம் இராமன், மாதவன் நல்லருள் உண்டாக அவரை வழிபடுவாயாக! என்றும் முந்தைய நிகழ்ச்சியால் துயர்ப்படாது எம்முன் வருக என்றும் கூறி, அவளுடன் அருந்தவ முனிவர் இருப்பிடம் அடைந்தான். அரிய விருந்தினர்களாக அவர்களைப் பெற்ற முனிவர் வியந்து எதிர்கொண்டு போற்றினார். 'நெஞ்சினால் பிழைப்பு இல்லாதவளாகிய அகலிகையை ஏற்றருள வேண்டும்’ என இராமன் முனிவரிடம் வேண்டினான். குணங்களால் உயர்ந்த இராமன் திருவடிகளை வணங்கிய அகலிகையை அம்முனிவரிடம் இராமன் ஒப்படைத்தான் என்பது கதை நிகழ்ச்சியாகும்.
இக்கதைக்குத் தத்துவப் பொருள் காணவும் இடமுண்டு. கம்ப இராமாயணப் பழைய உரை ஒன்றில், 'அகலிகை பெண்ணுருவாய் நின்றது எப்படியிருந்ததென்றால், அறிவு வடிவாய் இருந்த ஆன்மா, மாயையால் பிறப்பு, இறப்புகளுக்கு உள்ளாகிப் பின்னர்ப் பழைய வினைகள் நீங்கப் பெற்றுத் தலைவன் திருவடி சேர்ந்து, தூய ஆன்மாவாக நிற்பது போலிருந்தது என்று ஒரு குறிப்புக் காணப்படுகிறது.
கோதம முனிவருக்கும் அகலிகைக்கும் பிறந்தவர் சதானந்த முனிவர் ஆவார். அவரைக் "கோதமன் காதலன்' என்று கம்பர் அவரைக் குறிப்பிடுகிறார்.
இருபதாம் நூற்றாண்டிலே வெள்ளக்கால் ப. சுப்பிரமணிய முதலியார், ச. து. சுப்பிரமணிய யோகியார் போன்றோர் செய்யுளிலும், புதுமைப் பித்தன், எம். வி. வெங்கட்ராமன் முதலியோர் கதைகளிலும் அகலிகையின் கதைக்கரு பல மாற்றங்களுடன் இடம் பெற்றுள்ளது. ஈழத்திலும் “மஹாகவி' (து. உருத்திரமூர்த்தி), சில்லையூர் செல்வராசன் (தான்தோன்றிக் கவிராயர்), இ. இரத்தினம் முதலியோர் அகலிகை கதையைக் கருவாக வைத்துப் புதிய படைப்புகளைப் படைத்துள்ளனர்.
திருமண நாளிலே மணமக்களுக்குக் கல்லுருவாக - அம்மியாக - அகலிகைசரிதம் திருமணச் சடங்குகளிலே உணர்த்தப்பட்டு வருகின்றது. திருமணத்தின்போது கன்னிக் காலாக நாட்டப் பெறும் முள்முருக்க மரமும் ஆயிரம் யோனியுற்ற இந்திரனுடைய நிலையை உணர்த்துவதற்காக நாட்டப்படுகிறது என்று விளக்கம் கூறப்படுவதும் உண்டு. (ஜி. ஆர். கி.)
63566)35 66.61JT
அகலிகை கதை வடமொழிகளிலும் தென் மொழிகளிலும் பலவித வேறுபாடுகளுடன் அமைந்துள்ளது. தமிழ் மொழி யிலேயே அது பல்வேறு உருவங்களைப் பெற்றுள்ளது.
இந்துக் கலைக்களஞ்சியம்

அவ்வுருவங்களில் ஒன்றே அகலிகை வெண்பாவாகும். அதனுள் கடவுள் வாழ்த்து, காப்பு ஆகியன உட்பட 295 வெண்பாக்கள் உள்ளன. இந்நூல் இந்திரகாண்டம், அகலிகை காண்டம், கெளதம காண்டம் எனக் காவியப் பாங்கிலே பிரிக்கப்பட்டுள்ளது.
இந்திர காண்டத்திலே இந்திரன் தனது சபா மண்டபத்திற் கொலுவிருத்தல் முதலாக அவன் அகலிகையை நினைத்தல், அவளழகை எண்ணி ஏங்கிக் காமவயப்படுதல், அகலிகையை அடைய நிச்சயித்தல், கெளதமரது ஆச்சிரமமுள்ள வனத்தைச் சேர்தல் என்பனவரை நிகழ்ந்தவை கூறப்படுகின்றன. இக்காண்டத்திலே அகலிகை திருப்பாற் கடலிலே தோன்றியதும் அவளது கட்டழகைக் கண்டு இந்திரன் அவளை அடைய விரும்பியதும் கெளதம முனிவரும் அவளை விரும்பியதால் பிரமதேவன் போட்டி நியமித்ததும் இரு தரம் வைத்த போட்டிகளிலும் இந்திரன் தோற்றதும் கூறப்படுவன.
அகலிகை காண்டத்திற் கெளதமர் வெளியே போக இந்திரன் உபாயம் செய்தல் முதலாக, அவன் அகலிகையைப் பற்றல், அவள் வருந்தித் தவித்தல், அவன் செய்கை தகாதெனக் கூறல் அவன் தன் காமத்தின் இயல்பு கூறல், அவன் வலிந்து தன் கருத்தை முடிக்கத் துணிதல், அவள் மூர்ச்சையடைந்து கற்பழிக்கப்படுதல் ஈறாகக் கூறப்படுகின்றன.
கெளதம காண்டத்தில் முனிவர் ஆசிரமத்துக்குத் திரும்புதல் முதல் அவர் இந்திரன் களவைக் கண்டு அவனைச் சபித்தல், அவர் அகலிகையை மூர்ச்சை தெளிவித்தல், அவள் இந்திரனால் உற்ற குற்றத்திற்குப் பரிகாரஞ் செய்தல், அவள் அவரைச் சரணமடைதல், தேவர் வேண்டக் கெளதமர் இந்திர சாபத்தை ஒருவாறு மாற்றல், அகலிகை கல்லாதல், இராம பாத பரிசத்தால் அவள் தொல்லுருப் பெறுதல், அகலிகை கெளதமரை அடைதல் ஈறாகவுள்ள நிகழ்ச்சிகள் கூறப்படுகின்றன.
அகலிகை வெண்பாவில் அதன் ஆசிரியர் கதை மாற்றங்கள் பல செய்திருக்கிறார். அகலிகை காண்டத்தில் அகலிகை கற்பழிக்கப்படுமுன் அவளுக்கும் இந்திரனுக்கும் இடையே நிகழும் நீண்ட சம்வாதம் அவற்றிலொன்றாகும். செக சிற்பியரின் லுக்கிறீஸ் கற்பழிப்பு எனும் படைப்பில் வரும் சம்வாதத்தைத் தழுவி அமையும் இப்பிரிவின் மூலம் அகலிகையின் கற்பின் மாட்சியை ஆசிரியர் விரித்துரைக்கின்றார். அகலிகை தன்னைக் காக்கவும் தகைசான்ற சொல்லைக் காக்கவும் இயன்றளவு முயன்றவளாகச் சித்திரிக்கப்பட்டுள்ளாள். தன் முயற்சியெல்லாம் வீணாக, அயர்வுற்று, மூர்ச்சித்த அகலிகையிடமே, அவள் பிணம் போலக் கிடந்த நிலையிலேயே இந்திரன் தன் கருத்தை முடித்துக் கொண்டது இன்னுமொரு மாற்றமாகும். ஆயினும் அகலிகை வெண்பாவிலே கற்பழிப்பின் விளைவாய்த் தோன்றிய ஒழுக்கப் பிரச்சினைகள் தொடப்படவில்லை. கெளதமர் அகலிகை கற்பிழந்தது ஊழ் வினையால் என்று தேற்றியபோதும் கழுவாயாகக் கல்லாகச் செய்தார்.
11

Page 42
அகலிகை வெண்பாவின் ஆசிரியர் இராவ்சாகிட் வெள்ளக்கால் ப. சுப்பிரமணிய முதலியார் (1857 - 1946) கால்நடை மருத்துவத்தில் ஈடுபாடுமிக்க முதலியாரவர்கள் இலக்கிய ஆர்வம் மிக்கவராக விளங்கினார்.
அகலிகை வெண்பா 1914 ஆம் ஆண்டிலே வெளி வந்தது இரண்டாம் பதிப்பு 1920 ஆம் ஆண்டிலும் மூன்றாம் பதிப்பு 1938
ஆம் ஆண்டிலும் வெளிவந்தன. (பொ.யூ.)
அகளங்கன்
அகளங்கன், தியாகசமுத்திரன் என்பன
விக்கிரமசோழனின் (1118-1135) சிறப்புப் பெயர்களிற் பிரபல்யமானவை. தமிழ் நாவலர் சரிதையிலுள்ள தனிப்பாடல் ஒன்றிலே விக்கிரம சோழ அகளங்கனே என்னுந் தொடர் வருகின்றது. விக்கிரம சோழனின் அவைக்களப் புலவரான ஒட்டக்கூத்தகும் தண்டியலங்காரம், வீர சோழியம் பொருந்தொகை என்பவற்றிலே இணைக்கப்பட்டுள்ள பாடல்கள் பலவற்றின் ஆசிரியர்களும் அகளங்கன் என்று விக்கிரம சோழனைக் குறிப்பிட்டுள்ளனர். தமிழ் நாவலர் சரிதையில் வரும் பாடல்கள் பலவற்றிலும் அகளங்கன் புகழ்ந்து போற்றப்படுகின்றான்.
வீரசோழியம் அலங்காரப் பலத்தில் மேற்கோளாக வரும் செய்யுளொன்று அவனை மேல்வருமாறு புகழ்ந்துரைக்கின்றது
விச்சா தரனேனு பந்தரத்து மேவானால் அச்சுத னாயினுமம் மாயனலன்-நிச்ச நிறைவான் கலையான் அகளங்க ணிதி இறையா னனகனெங் கோன்.
முதலாங் குலோத்துங்க சோழனின் (1070-1022 புதல்வனாகிய விக்கிரமசோழன் வேங்கி தேசத்திலே அரசப்பிரதிநிதியாக அதிகாரம் செலுத்தியவன். குலோத்துங் கனின் ஆட்சியின் முடிவிலே, 1118இல் அவனைச் சோழ தேசத்திற்கு வரவழைத்து இளவரசனாகப் பட்டங் கட்டினார்கள் சயதரன் 1020ஆம் ஆண்டளவில் இறந்ததும் விக்கிரமசோழன் சோழச்சக்கரவர்த்தியாக முடிசூடினான். அதன் விளைவாக அவன் பரகேசரி என்னும் பட்டப் பெயரையும் பெற்றான்.
அகளங்கனாகிய விக்கிரமசோழன் ஆணித்திங்களில் உத்திரட்டாதியிற் பிறந்தவன். பேரம்பலத்திலே ஆண்டுதோறு அவனது பிறந்த நாளிலே சிறப்புச் செய்வதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. அதனை அவனது மெய்க்கீர்த்தி மூலம் அறிய முடிகின்றது.
விக்கிரம சோழனின் தமையன்மார்களாகிய இராசரா சோழகங்கன், இராசராச மும்முடிச் சோழன், வீரசோழன் ஆகிய மூவரும் இறந்துவிட்டதால் விக்கிரமசோழனை 1118இல் இளவரசனாகப் பட்டங்கட்ட நேர்ந்தது. அகளங்கனின் தேவிய முக்கோக்கிழானடிகள், தியாகபதாகை, நேரியன்மாதேவி என்னு
12
そ

மூவர். அவர்களில் முக்கோக்கிளானடிகள் முதலாவது பட்டத்தரசியாக விளங்கினாள். அவள் 127 ஆம் ஆண்டில் இறந்த பின்பு தியாகபதாகை அப்பதவியைப் பெற்றாள். விக்கிரமசோழனின் மகனாகிய இரண்டாம் குலோத்துங்கன் தந்தையின் பின்பு தாயவழி உரிமையாக ஆட்சியதிகாரம் பெற்றான்.
விக்கிரமசோழனின் மெய்க்கீர்த்திகள் இருவகையினவாகும். அவற்றிலொன்று பூமாலை மிடைந்து பொன்மாலை திகழ என்ற அடியுடன் தொடங்குவது; இரண்டாவது பூமாது புணரப் புவிமாது வளர என்று தொடங்குவது. அரசனின் ஆட்சியின் சிறப்பும் திருப்பணிகளும் அவற்றிலே இலக்கிய நயம் மிகுந்த வண்ணமாக வர்ணிக்கப்படுகின்றன. அவற்றின் மொழிநடை கனிவானது; கவர்ச்சியானது. அது சேக்கிழாரின் செய்யுள் நடைக்கு நிகரானது. மெய்க்கீர்த்திகள் இரண்டும் அவைக்களப் புலவரான கவிச்சக்கரவர்த்தியின் பணியானவை என்று கொள்ளத் தக்கவாறு அமைந்துள்ளன.
தருமமுந் தவமுந் தானமுந் தழைப்ப வேதமும் மெய்ம்மையு மாதியுகம் போலத் தலைத்தலை சிறப்பவந்தருளி வெலற்கரும் போர்ப்புலி யானை பார்த்திவர் குட நிறைமணி மகுடம் முறைமையிற் குடி மன்னுயிர்க் கெல்லா மின்னுயிர்த் தாய்போல் தண்ணளிபரப்பித் தனித்தனி பார்த்து மண்முழுதுங் களிப்ப மனுநெறி வளர்த்துத்தன் கோயிற் கொற்ற வாசல் புறத்து மணிநா வொடுங்க முரசுகள் முழங்க”
விக்கிரமசோழன் தருமம், தானம் தவம் என்பன தென்திசையிற் சிறந்தோங்குவதற்கும் வேதநெறி சிறந்து விளங்கும் படியாகவும் முடிசூடியவன்; அவனது ஆட்சியில் மனுநெறி அனுசரிக்கப்படுகின்றது. அவனது வாயிற் புறத்திலே வந்து குறைகூறி முறைப்பாடு செய்வதற்கு ஒருவரும் இல்லாதபடியால் மணியோசை ஒலிப்பதில்லை; அங்கும் மங்கள முரசமே ஒலிக்கின்றது. மன்னுயிர்கள் எல்லாவற்றையும் தாய் போலப் பரிந்து புரந்தான். அரசனை அரசநெறியின் காவலனாகவும் மரபுவழியான இலட்சியங்களின் உதாரண புருஷனாகவும் மெய்க்கீர்த்தி வர்ணிக்கின்றது. அவன் மனுவேந்தன்.
முதலாங் குலோத்துங்க சோழனின் ஆட்சியின் முடிவிலே கர்நாடகத்திலும், வேங்கி தேசத்திலும் சோழரின் ஆதிக்கம் முடிவுற்றது. அவற்றின் சில பகுதிகளை மீண்டுங் கைப்பற்றிக் கொண்டமை விக்கிரமசோழனின் குறிப்பிடத்_தக்க சாதனையாகும். விக்கிரமசோழன் இளவரசனாகப் பட்டங்கட்டியதன் விளைவாக வேங்கிநாட்டின் மீதான அதிகாரம் வெலநாண்டு வம்சத்தவனாகிய முதலாம் கொங்கனின் மகனாகிய சோடன் என்பவனுக்கு வழங்கப்பட்டது. சளுக்கிய வேந்தன் ஆறாம் விக்கிரமாதித்தன் அவனை வென்று வேங்கி
இந்துக் கலைக்களஞ்சியம்

Page 43
நாட்டைக் கைப்பற்றிக் கொண்டான். விக்கிரமாதித்தன் இறக்கும்வரை அவனுடைய ஆட்சி அங்கு நிலவியது. அதன் பின் வேங்கியில் விக்கிரமசோழனின் மேலாதிக்கம் ஏற்பட்டுவிட்டது. வேங்கியிற் சிற்றரசனாகவிருந்த மகாமண்டலேஸ்வரன் நம்பயன் என்பவன் விக்கிரமசோழனுக்கு அடங்கியவனாக ஆட்சி புரிந்தான். வெலநாண்டு வம்சத்தவர்களும் 1135ஆம் ஆண்டளவில் விக்கிரமசோழனுக்குத் திறை செலுத்தும் சிற்றரசராக இருந்தனர்.
குலோத்துங்க சோழனின் கால முடிவில் இழந்துவிட்ட கங்கபாடியின் ஒரு பகுதியைச் சோழர்கள், விக்கிரமசோழனின் ஆட்சியில் மீண்டும் கைப்பற்றிவிட்டனர். அவனது அதிகாரிகளில் ஒருவனாகிய உதயமார்த்தாண்ட பிரம்மராயன் கி.பி.1120 இல் கோலார் ஜில்லாவிலுள்ள சுகட்டுரிற் சிவாலயம் அமைத்து, அதற்கு நிவந்தமாக இறையிலி நிலம் வழங்கினான். அங்குள்ள வேறொரு கல்வெட்டு விக்கிரமசோழ வீரநுளம்பன் என்னும் பிரதானியைக் குறிப்பிடுகின்றது. அவன் குலநெல்லி உலோகீசுவரமுடைய மகாதேவர்க்கு விமானமொன்றை அமைத்தான். அத்திருப்பணி கூறும் கல்வெட்டு விக்கிரம சோழனின் பத்தாம் ஆண்டில் எழுதப்பட்டுள்ளமை குறிப்பிடற்குரியது.
விக்கிரமசோழனின் காலத்திலே இருபஞ்சங்கள் ஏற்பட்டன. அவற்றில் முதலாவது கி.பி.1125 ஆம் ஆண்டிலே தொண்டை நாடு, நடுநாடு என்பவற்றிலே வெள்ளப்பெருக்கின் விளைவாகப் பயிர்கள் அழிந்த காரணத்தால் ஏற்பட்டது. இவ்வாறான நிலையொன்று சோழநாட்டில் அவனது 11 ஆம் ஆண்டில் ஏற்பட்டது.
விக்கிரமசோழனின் தில்லைத் திருப்பணிகள் அவனது மெய்க்கீர்த்தியிலும் ஒட்டக்கூத்த பாடல்களிலும் புகழுக்குரிய சாதனைகளாகப் போற்றப்படுகின்றன; அவற்றைக் குறித்த மெய்க்கீர்த்திப் பகுதி மேல்வருமாறுள்ளது;
“செம்பொன்னம் பலஞ்சூழ் திருமா எளிகையும் கோபுர வாசல் கூடசாலைகளும் உலகு வலங்கொண் டொளிவிளங்கு நேமிக் குலவரை உதையகுன்றமொடு நின்றெனப் பசும்பொன் வேய்ந்த பலிவளர் பீடமும் விசும்பொளிதழைப்ப விளங்குபொன் வேய்ந்து இருநிலந் தழைப்ப இமையவர் களிப்பப் பெரிய திருநாள் பெரும்பெயர் விழாவெனும் உயர்பூரட்டாதி உத்திரட் டாதியில் அம்பல நிறைந்த அற்புதக் கூத்தர் இம்பர் வாழ எழுந்தருளு வதற்குத் திருத்தேர்க் கோயில் செம்பொன் வேய்ந்து பருத்திரண் முத்தின் பயில்வடம் பரப்பி நிறை மணி மாளிகை நெடுந்திரு வீதிதன் திருவளர் பெயராற் செய்து சமைத் தருளி பைம்பொற் குழித்த பரிகல முதலாச்
༤༽
செம்பொற் கற்பகத் தொடுபரிச் சின்னமும்
இந்துக்கலைக்களஞ்சியம்
“..ww W aکال མ་
እቾነ% ̊ ఫైసీ,
རྒྱུ་

அளவில் லாதன வொளிபெற வமைத்துப் பத்தா மாண்டில் சித்திரைத் திங்கள் அத்தம் பெற்ற ஆதிவாரத்துத் திருவளர் மதியின் திரையோதசிப் பக்கத்து இன்ன பலவும் இனிது சமைத்தருளி ஒருகுடை நிழற்கீழ்த் தலமுழுதுங்களிப்ப"
அம்பலவாணர் கோயிலைச் சூழ்ந்த திருச்சுற்று மாளிகை, கோபுரவாயில், கூடசாலை, பலிபீடம் என்பவற்றுக்குப் பொன் வேய்ந்தமை, தனது ஜன்மநக்ஷத்திரமாகிய உத்திரட்டாதியில் நடைபெறுந் திருவிழாவிற் சுவாமி எழுந்தருளுஞ் சித்திரத்தேரை முத்துவடங்களால் அலங்கரித்தமை, இறைவர்க்கு நிவேதனம் வழங்குவதற்குப் பொற்கலங்கள் வழங்கியமை, ஆலயத்திலே பொன்னாலான கற்பக தருக்களை அமைத்தமை முதலியன விக்கிரமசோழன் புரிந்த திருப்பணிகளாக அவனது மெய்க் கீர்த்தியிற் குறிப்பிடப்படுகின்றன. அவை யாவும் கி.பி. 128 ஆம் ஆண்டளவில் நிறைவேறி விட்டன.
தில்லைச் சிற்றம்பலத்தைச் சூழ்ந்த முதலாம் திருச்சுற்று மாளிகை அந்நாட்களில் விக்கிரமசோழன் திருமாளிகை என்று வழங்கியது. விக்கிரம சோழன் தெங்குத் திருவீதி என்பதனைப் பற்றியுஞ் சாசனக் குறிப்புண்டு. அவ்வீதி விக்கிரம சோழனின் திருப்பணியாகுமென்று குலோத்துங்க சோழன் பிள்ளைத் தமிழிலுஞ் சொல்லப்படுகின்றது. சிதம்பரத்தி லுள்ள நூற்றுக்கால் மண்டபமும் அவனது திருப்பணியாகும். அதிலுள்ள பன்னிரண்டு தூண்களில் விக்கிரம சோழன் திருமண்டபம் என்னும் பெயரை எழுதியுள்ளனர். அரசனாணைப்படி அதனைக் கட்டிமுடித்த அரும்பாக்கிழான் மணவிற் கூத்தனான காலிங்கராயன் பொன்னம்பலவாணர் மாசித் திங்கள் மாநாளில் கடலாடி வீற்றிருக்க மண்டபமும் அங்கு எழுந்தருளுவதற்குத் திருவீதியும் அமைத்தான்.
விக்கிரமசோழனின் திருநக்ஷத்திரமான உத்திரட்டாதியில், ஆண்டுதோறும் ஆனிமாதத்தில், செங்கற்பட்டு ஜில்லா சிவன்கூடல் என்னும் ஊரிலுள்ள கோயிலில், ஏழு நாட்கள் திருவிழாச் சிறப்புச் செய்வதற்கென்று அறக்கட்டளை 128இலே செய்யப்பட்டது. ஏழாம் ஆண்டிலே வண்ணக்குடி என்னும் ஊரினை தியாகசமுத்திர சதுர்வேதிமங்கலம் என்று பெயர்மாற்றி அதனைத் திருவிடைமருதூர்க் கோயிலுக்கு இறையிலித் தேவதானமாக விக்கிரமசோழன் வழங்கினான். திருக்கோடிகா சிவாலயத்திலுள்ள சண்டேசுவரர் கோயில் அவனுடைய காலத்திலே தியாகசமுத்திரம் என்னும் பெயரால் வழங்கியது. விக்கிரம சோழனின் காலத்துக் குறுநில மன்னர், அரசியல் அதிகாரிகள் என்போரைப் பற்றிய செய்திகள் சாசனங்களிலும் சமகாலத்து நூல்களிலுங் காணப்படுகின்றன. அவர்களிற் சிலரைப் பற்றிய விவரங்கள் மேல்வருவனவாகும்:
1. கருணாகரத் தொண்டமான்: குலோத்துங்க சோழன் காலம் முதலாகப் படைத்தலைவனாகவும், அதிகாரியாகவும் இருந்தவன்.
13 خخففتقنبلی हुई हैं
217gელ وتأتي

Page 44
10.
11.
12。
13.
14
பூபால சுந்தரன்: குலோத்துங்க சோழன் காலத்தில் அதிகாரிகளில் ஒருவனாக விளங்கியவன். அவனது மனைவி இராசேந்திர சோழியார். விக்கிரம சோழனின் படைத்தலைவனாக இருந்து சோழகோன் என்னும் பட்டம் பெற்றவன். மறையோன் கண்ணன் அமைச்சர்களில் ஒருவன்; கஞ்சாறு என்னும் ஊரிலுள்ள அந்தணர் குலத்தவன். வாணன் படைத்தலைவன்; வாணகோப்பாடி நாட்டு வாணர் குலத்தவன்; விருதரா பயங்கர வாணகோவரையன் என்னும் பட்டம் பெற்றவன். 124 இல் கண்டராதித்த சதுர்வேதிமங்கலத்திற்கு அண்மையிலுள்ள வானவிச்சாதர நல்லூர் முடிகொண்ட சோழேஸ்வரமுடைய மகாதேவர்க்கு நாள் வழிபாட்டிற்கு நிவந்தமாக மூன்றேகால் வேலி இறையிலி நிலம் அளித்துள்ளனன். அரும்பாக்கிழான் மணவிற்கூத்தனான காலிங்கர் கோன் குலோத்துங்க சோழன் காலம் முதலாகப் படைத்தலைவனாக விளங்கியவன். முனையர் கோன் : முனையதரையன், முனையரையன் என்னும் பட்டங்கள் பெற்ற அமைச்சன், விக்கிரம சோழன் உலாவிற் பாராட்டப்பெற்றவன். செஞ்சியர்கோன் காடவன் : பல்லவர் குலச் சிற்றரசன், செஞ்சி நாங்கொற்றன் ஆடவல்லான் கடம்பன் என்று சாசனக் குறிப்புண்டு; அதிகாரிகளில் ஒருவன்; செஞ்சியர் கோன் என்று ஒட்டகக்கூத்தர் குறிப்பிடுகின்றார். வேணாடர் வேந்து திருவாங்கூர் நாட்டின் தென்பகுதியான வேணாட்டின் அரசன் இராமவர்மன் என்பது இயற்பெயர். வேணாடர் வேந்து என்று ஒட்டக்கூத்தர் குறிப்பிடுவர். அனந்தபாலன் : கி.பி. 121இலே திருவாவடு துறையிலே சங்கர தேவன் அறச்சாலை, அனந்தபாலருப் பெருந்திருவாட்டி என்ற அறச்சாலைகள் அமைத்து, தவசியர்க்கும் அந்தணர்க்கும், அனாதைகட்கும் உணவளித்தற் பொருட்டு நிலம் வழங்கியவன். மருத்துவம், இலக்கணம் முதலியன கற்போர்க்கும் இலவசமாக உணவு வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. கங்கை கொண்ட சோழபுரத்திலிருந்த சேனாதிபதிகளில் ஒருவன். இளங்காரி குடியிற் பிறந்தவன். சங்கரன் மகன். அம்பலங் கோயில் கொண்டான் என்பது அவனது விருதுப் பெயர். வத்தவன் : குலோத்துங்க சோழன் காலம் முதலாகச் சேவை புரிந்த படைத்தலைவன்.
சேதியராயன் மலையகுலராசன்! கிளியூர் மலையமான். கருநாடரோடு போர் புரிந்து வெற்றி பெற்றவனென்று விக்கிரம சோழன் உலா கூறும். அதிகன் : தகடூலிருந்த கொங்கு மண்டலத்துச் சிற்றரசன் வடகலிங்கத்து அரசனை வென்றவன். தேவருடையான் மனதுக்கினியான் : விராடராசன் என வழங்கியவன்; நாகபட்டினத்துத் தேவூரில் வாழ்ந்தவன் திருப்புகலூரின் முடிகொண்ட சோழப் பேராற்றின் வடகரையில் கி.பி. 128 இல் ஒரு வைத்திய சாலையும் மடமும் நிறுவி ஆதுலரையும், அநாதரரையும் காப்பாற்றுவதற்கு ஏற்பாடுகள் செய்தவன்.

14.
15.
16.
17.
18.
19.
20.
21.
22.
23.
திருச்சிற்றம்பலன் மானசேகரன் : அமைச்சர்களில் ஒருவன். பூம்பூகாரில் மடம் அமைத்து, அதில் அந்தணர் ஐம்பதின்மர் நாள்தோறும் உண்பதற்கு ஏற்பாடு செய்தவன் என்பது சாசனக் குறிப்பு. சூரைநாயகன் மாதவராயன் மணவிற் கூத்தன் காலிங்கராயனின் மகன். இவன் செங்கற்பட்டு திருப்பாசூர்க் கோயிலுக்கு அணிகலங்களும், நந்தவனமும் வழங்கியவன். கருணாகரன் சுந்தரத்தோளுடையான் அரசனிடமிருந்து வளவன் பல்லவராயன் என்னும் பட்டம் பெற்றவன். நடு நாட்டிலே பொண்ணாகடத்தில் அதிகாரியாகக் கடமை புரிந்தவன். ஆவூர்க் கோயிலில் அன்னதானம் செய்வதற்கு அறக்கட்டளை ஏற்படுத்தியவன். இராசேந்திர சோழ சம்புவராயன் : செங்கேணி குலத்தவன். இயற் பெயர் அம்மையப்பன். வடஆர்க்காடு சீயமங்கலத்துக் கோயிலில் அர்த்தயாம வழிபாட்டிற்குச் சில வரிகளாற் கிடைக்கும் பொருளை நிவந்தமாக அளித்தவன். சகோதரனான அகளங்க சம்புராயன் மதுராந்தகத்திலுள்ள சிவன் கோயிலில் ஒரு நுந்தாவிளக்கு எரித்தற்கு 96 ஆடுகளை ஒரு சமயத்திலே தானம் பண்ணினான். சுந்தரன் கங்கைகொண்டான் : பாண்டி நாட்டினன்; துவராபதிவேள் என்னும் பட்டம் பெற்றவன்; வாட்படைத் தலைவன். மகாமண்டலேசுவரன் பெத்தராசன் : பொத்தப்பி நாட்டுச் சிற்றரசன். அவனது மகனாகிய விமலாதித்தன் மதுராந்தக பெத்தப்பிச் சோழன் என்னும் பட்டத்தை விக்கிரம சோழனிடமிருந்து பெற்றவன். அவனுடைய சாசனங்கள் நந்தலூர், திருக்காளத்தி ஆகிய ஊர்களில் உள்ளன. இராசேந்திர சோழப் பொத்தப்பிச் சோழன் : பொத்தப்பிச் சோழருள் ஒருவன்; இயற்பெயர் கன்னரதேவன். மகாமண்டலேசுரன் நம் பயன் வேங்கிநாட்டுச் சிற்றரசன். மகாமண்டலேசுரன் கட்டிதேவ மகாராசன் கடப்பை ஜில்லா புடோலி என்னும் ஊரைச் சேர்ந்தவன். புடோலி அரையன் என்று வழங்கப்பெற்றவன். விக்கிரம் சோழ கருப்பாறுடையான் என்ற பட்டத்தை அரசனிடமிருந்து பெற்ற ஆந்திர நாட்டுச் சிற்றரசன். இராசேந்திர சோழ காங்கேயராசன் : வெலநாண்டுச் சோழரில் ஒருவன். ஆந்திர நாட்டுச் சிற்றரசன். (சி. ப.)
ජීjහිරිගෂ්1]circගණr, ෆිශා.(1853 – 191O)
திருகோணமலை வேலுப்பிள்ளையின் புதல்வர்; இராசக்
கோன், அழகைக்கோன் என்போரின் தந்தை; குமாரவேலுப் பிள்ளையிடமும் சிறிய தந்தை தையல்பாகம் பிள்ளையிடமும் தமிழ் இலக்கிய இலக்கணங்களைக் கற்றுத் தேறியவர்; பயிற்றப் பெற்ற ஆசிரியராகவும் அரசினர் கல்லூரி அதிபராகவும் பணிபுரிந்தவர்; திருகோணமலையிலே விசுவநாதசுவாமி கோயில், மடத்தடி வீரகத்திப் பிள்ளையார் கோயில் முகாமையாளராகச் சேவை புரிந்தவர்.
இந்துக் கலைக்களஞ்சியம்

Page 45
திருக்கோணமலை விசுவநாதசுவாமி ஊஞ்சல், திருக் கோணமலை சிவகாமியம்மன் ஊஞ்சல், திருக்கோணமலை பத்திரகாளி ஊஞ்சல், நிலாவெளி சித்திவிநாயகர் ஊஞ்சல், திருகோணை நாயகர் பதிகம், திருக்கோணமலை வில்லூன்றிக் கந்தசாமி பத்துப் பதிகம், திரிகோணமலை விசாலாட்சியம்மை பெருங்கழிநெடில் விருத்தம் (1923), வெருகல், சித்திர வேலாயுதசுவாமி பேரிற் சொல்லிய அடைக்கல மாலையும் ஊஞ்சலும் (1887), வெருகல் சித்திரவேலாயுதசுவாமி பேரில் சிறைவிடு பதிகம், நெஞ்சறிமாலை முதலிய பிரபந்தங்களைப் பாடியவர்; திருக்கோணாசலவைபவம் (1950), எழுதியவர்; திருக்கரைசைப் புராணம் (1890), வெருகல் சித்திரவேலாயுதர் காதல் (1906), நரேந்திரசிங்கராசன் வசந்தன் சிந்து (1908) முதலியனவற்றைப் பதிப்பித்தவர். (பொ. பூ)
686606joggarfrid T af.
யாழ்ப்பாணம் மண்டைதீவிலே பத்தொன்பதாம் நூற் றாண்டின் பிற்கூறிலும் இருபதாம் நூற்றாண்டின் முற்கூறிலும் வாழ்ந்தவர்; இவர் பாடிய திருவெண்காட்டந்தாதியும் திருவெண்காட்டீசர் கும்மி என்பனவும் ஒரே நூலாகக் கொக்குவிலில் 1922 இல் அச்சிட்டு வெளியிடப்பெற்றன. (திருவெண்காடு என்பது மண்டைதீவிலுள்ளது) இவருடைய முருகன் கீர்த்தனைப் பதிகம் இரண்டும், நடராஜ பஞ்சரத்தினமும் ஒரே தொகுப்பாக 1928இலே வெளியாயின; மதுரை மீனாட்சியம்மன் மீது பேரின்பக்கீர்த்தனையும் பதிகமும் பாடியுள்ளார். சோதிட வல்லுநராகிய சர்மா அவர்கள், உலகியல் தொடர்பான பாக்களும் இயற்றியுள்ளார். (பொ.யூ.)
6,685T). 1615 - 1675
இயற்பெயரால் அன்றிச் சாதிப் பெயரால் வழங்கப் பெறுபவர்; அகோ எனும் சாதியைச் சேர்ந்தோர் தட்டார் தொழில் செய்பவர்; அகமதாபாத்தினை அடுத்த ஜேதல்புரம் என்ற ஊரினர்; அகமதாபாத்திலே குடியேறினவர்; வாழ்வினை வெறுத்துக் காசி சென்றவர்; அங்கு பிரம்மானந்தரைச் சற்குருவாக அடைந்தனர்; வேதாந்தம் பற்றிய அகோகீதா முதலிய காவியங்களையும் 'சப்பே' எனும் சந்தப்பாக்கள் பலவற்றையும் இயற்றியவர்; குஜராத்தி இலக்கியத்தில் இவருடைய ஆக்கங்கள் சிறந்த இடத்தினைப் பெறுவன. (பொ.யூ.)
அகோபிலம்
கர்னூல் மாவட்டத்திற் சிரவேல் தாலுகாவில் நந்தியாலுக்கு முப்பத்தேழு மைல் தொலைவிலுள்ள பூரீ அகோபிலம் இரணிய சம்மார தலமாகும். சிங்கவேள் குன்றம் என்று தமிழிலே வழங்கப்படுவது. இங்கு பெரிய விஷ்ணு கோவில் உண்டு. நரசிம்ம மூர்த்தி லக்ஷமி நாச்சியாருடன் வீற்றிருந்த திருக்கோலத்தில் அருள் புரிகிறார்.
இந்துக் கலைக்களஞ்சியம்

அகோபிலத்தில் ஒன்பது நரசிம்ம சந்நிதிகளுள. அடிவாரத்தில் லக்ஷமி நரசிம்மன், மலையேறும் வழியில் யோகநரசிம்மன், சத்ராந்த நரசிம்மன், மலைமேல் உக்ரநரசிம்மன், வராக நரசிம்மன், அருகேயுள்ள வேதாத்ரி மலையில் பர்முலிதி நரசிம்மன், கந்தாத்ரி மலையில் ப்ரஹலாத நரசிம்மன், பார்க்கவ தீர்த்தக் கரையில் பார்க்கவ நரசிம்மன், காரங்கிநரசிம்மன். பிரகலாதாழ்வானுக்குப் பிரத்யக்ஷம். இந்திரநரசிம்ம பாபநாச, கஜ, பார்க்கவ தீர்த்தங்கள்.
சிங்கவேள் குன்றம் திருமங்கையாழ்வாரால் மங்களா சாசனம் செய்யப்பட்டது (பெரியதிருமொழி, 17).
இராமாநுசரின் விசிட்டாத்துவித மரபினைச் சார்ந்த பூரீ அகோபிலமடம் (அழகியசிங்கர் மடம்) இங்கு தாபிக்கப்பட்டதாகும்.
(பொ.யூ.)
c965TTJäflays-TffluJTř
தமிழ்நாடு சிதம்பரத்தில் வாழ்ந்த ஆதி சைவர்; பதினைந்தாம் நூற்றாண்டில் வாழ்ந்தவராகக் கருதப்படுவர்; இலிங்கபுராணத்தின் ஆசிரியர் கடவுள் வாழ்த்திற் போற்றும் "அகோரசிவன்” இவராகலாம். இவருடைய அகோர பத்ததி
சைவர்களிற் பெரும்பாலானோர் பின்பற்றும் பத்ததியாகும்.
(பொ.பூ.)
அகோர பத்ததி
தமிழ் நாட்டிலும் ஈழநாட்டிலும் அதிகம் பாவனையிலுள்ள
பத்ததி, அகோர பத்ததியாகும். இதற்குக் கிரியா கிரிமத்யோதிகை என்ற பெயருமுண்டு.
இதனை எழுதியவர் பதினைந்தாம் நூற்றாண்டிற் சிதம்பரத்தில் வாழ்ந்தவராகக் கருதப்படும் அகோர சிவாசாரியர். அவர் சித்தாந்தப் பிரகாசிகை இயற்றிய சர்வாத்ம சம்புவின் சீடராவார்.
அகோர பத்ததி சிவசமவாதச் சார்பினது என்று சிவஞான முனிவராற் (1785) கண்டிக்கப்பட்டது. ஈழநாட்டிலும் ஆறுமுக நாவலர் காலத்தில் இதனைக் கண்டித்துத் திருவாவடுதுறை ஆதீன வித்துவானாக விளங்கிய வடகோவை சு. சபாபதிநாவலர் (1845-1903) எதிர்ப்புக்களுக்காளானமை ஆறுமுகநாவலர் பிரபந்தத் திரட்டாற்புலனாகும்.
பூர்வ, அபர, சைவசோடச பிரகாசிகை என முப்பிரிவுகளை உடையது அகோரபத்ததி தனிவழிபாடு, கோயில் வழிபாடு, கிரியைகள், தீகூைடி முதலிய சமய வழிபாட்டு முறைகளுக்குரிய கிரியைகளை விளக்கிக் கூறுவது.
அகோர பத்ததிக்குத் திருவாரூர் நிர்மலமணி தேசிகர் வடமொழியில் எழுதிய வியாக்கியானம் உண்டு. அதனை சித்தன் கேணி ஆ அம்பலவாண நாவலர் 1927 இலே பதிப்பித்துள்ளார்.
15

Page 46
அகோரமுனிவர்
அகோரதேவர், அகோர தம்பிரான் எனவும் அழைக்கப் பெறுவர்; சங்கதத்தைச் சிதம்பரம் திருமாளிகைத் தேவரிடமும் தமிழைத் திருவாரூர் வன்மீகநாத தேசிகரிடமும் கற்றவர்; வன்மீகநாத தேசிகரின் புதல்வர் இலக்கண விளக்கம் வைத்தியநாத தேசிகர் இவருடைய மாணவர் என்று கருதப் பெறுவதால், இவர் காலம் பதினேழாம் நூற்றாண்டாகும். திருவாரூர்க் கோயிலில் அபிடேகக் கட்டளையை நிர்வாகஞ் செய்தவர்; காசி சென்று கதியடைந்தவர்.
திருக்கானப்பேர்ப்புராணம், கும்பகோணப் புராணம், வேதாரணிய புராணம் என்பவற்றைப் பாடியவர். (பொ.யூ.)
அகோரமூர்த்தி
19ஞ்சமூர்த்திகளை நிலைக்களமாகச் செலுத்திப் பஞ்ச கிருத்தியத்தைச் செய்யும் பரமசிவனது சுத்த குணங்களாகிய ஈசானம், தற்புருஷம், அகோரம், வாமதேவம், சத்தியோஜாதம் என்னும் ஐந்தும் கரும சாதாக்கியராகிய சதாசிவ மூர்த்தியின் திருமுகங்களாம்.
ஈசான முகமானது சிறுபிள்ளை முகம் போன்று பளிங்கு நிறமாய் ஈசான திக்கைப் பார்த்து மேனோக்கியதாயிருக்கும். தற்புருஷ முகமானது யெளவனப் பருவத்தையுடையதாய், கோங்கம்பூ நிறம் போன்றதாய்க் கிழக்கு நோக்கியதாயிருக்கும். அகோர முகமானது தூங்கிய தாடியையுடையதாய், வெளிப்பட்ட பற்களையுடையதாய், கண்டோர் பயங்கொள்ளத்தக்கதாய், விருத்தர் முகம் போன்றதாய், வலத்தோளின் மேல் தெற்கு நோக்கியிருக்கும். வாமதேவ முகமானது மாதர் முகம் போன்று அவர்கள் ஆபரணங்களையுடையதாய், வெட்சிப்பூ நிறத்ததாய், இடத்தோளின் மீது வடக்கு நோக்கியதாய் விளங்கும். சத்தியோசாத முகமானது அரசர் முகம் போன்றதாய் வெண்மை நிறமுடையதாய், பிடரில் மேற்கு நோக்கியதாய் விளங்கும்.
பஞ்ச கிருத்தியத்திற்குக் காரணரும் பஞ்ச கருத்தாக்களை அதிஷ்டிப்பவரும் தாம் என்பதை அறிவிக்கும் பொருட்டு சிவபெருமான் கொண்ட கோலம் இதுவாகும்.
சிவபெருமானின் அகோர முகத்திலிருந்து தோன்றிய திருவுருவமே அகோர மூர்த்தியாகும். இத்திருவுருவத்தின் தோற்றத்திற்கான கதையொன்றுண்டு.
பிரமணிடம் வரம் பெற்ற மருத்துவாசுரன் தேவர்களுக்கு ஆற்றொணாத் துன்பம் விளைவித்தான். சிவபிரானின் அருளின்படி தேவர்கள் வேற்றுருவெடுத்துத் திருவெண்காட்டிலே சென்று வாழ்ந்தனர். மருத்துவாசுரன் அங்கும் சென்று தேவரை வருத்தியபோது வெண்காட்டீசர் இடப தேவரை ஏவி விட்டனர். இடபதேவருக்குத் தோற்ற அசுரன், சிவபிரானை நோக்கித்
16

தவமிருந்து சூலாயுதத்தினை அவரிடம் இருந்து பெற்று மீண்டும் போருக்கு வந்தபோது தன்னை எதிர்த்த இடபதேவரை சூலாயுதத்தாற் காயப்படுத்தினான். இடபதேவர் வெண் காட்டீசரிடம் சென்று முறையிட்டனர். அவருக்குக் கோபம் உண்டாகி, அகோரமுகத்திலிருந்து அகோரமூர்த்தியைத் தோற்றுவித்தார். சிவபிரான் தன் கோபத்தையே அகோர வடிவம் கொள்ளச் செய்தார் என்றும் கூறுவர். அகோர உருவத்தினைக் கண்ட மாத்திரத்திலே மருத்துவன் சரணாகதியடைந்து தோத்திரம் செய்தான்.
அகோர மூர்த்தியும் அகோர வீரபத்திரரும் வெவ்வேறு திருவுருக்கள்; வெவ்வேறு காரியத்திற்காக வெவ்வேறு காலங்களில் தோன்றிய வெவ்வேறு மூர்த்திகள்.
அகோர மூர்த்தியின் திருவுருவம் சுவேதாரண்யம் எனப்படும் திருவெண்காட்டிலே அமைந்த சிவபிரானின் திருக்கோயிலிலே அமைந்துள்ளது. திருவெண்காடு, வைத்தீஸ்வரன் கோயிலுக்குச் சில மைல் தொலைவிலுள்ளது. இத்திருக்கோயிலிலே அகோர மூர்த்தியே பிரதான மூர்த்தியாவர் என்பது குறிப்பிடத் தக்கது.
சரணடைந்த மருத்துவனை அகோரமூர்த்தியின் காலடியிலும் காயம்பட்ட இடபதேவரை நிருத்த மண்டபத்திலும் திருவெண்காட்டிலே காணலாம். கரிய திருமேனியும் செவ்வாடையும் தீப்பிழம்பு போன்ற சிகையும் நெருப்பைக் கக்கும் நெற்றிக் கண்ணும் கோரப் பற்களும் எண் கரங்களும் கொண்டு இடக்காலை முன் வைத்து வலக்காலின் இரு விரல்களை ஊன்றி நடக்கும் பாவனையில் வேதாளம், கத்தி, உடுக்கை, கபாலம், கேடயம், மணி, திரிசூலம் தாங்கி, பாம்புகளையும் மணிமாலை யையும் அணிந்து திருவெண்காட்டு ஈசன் தோற்றமளிக்கிறான்.
அகோர மூர்த்தியை வழிபட்டால் வெற்றியும் செல்வங்களும் பெறுவது மட்டுமன்றி பிரமகத்தி போன்ற கொடிய பாவங்களையும் களையலாம் என்று நம்பப்படுகின்றது. பங்குனி சதுர்த்தசியில் இவருக்கு விசேட வழிபாடு நடைபெறும். இதனால் பங்குனி சதுர்த்தசி, அகோர சதுர்த்தசி என்றும் பேர் பெறும். (பொ.பூ)
c6 3356 OTT601 Daisasla Day
19ாழ்ப்பாண மாவட்டத்திலே, யாழ்ப்பாணம் காங்கேசன் துறைப் பெருவழியிற் சுன்னாகத்தை அடைந்து, அங்கிருந்து மேற்கு நோக்கிச் செல்லும் வழியில் மாகையம்பதியில் அமைந்துள்ள புராதன திருத்தலம் அங்கணாமைக் கடவை.
அங்கணாமைக் கடவையில் அமைந்துள்ள கண்ணகியம்மன் கோயில் ஈழத்திலே தோன்றிய கண்ணகி கோயில்களிலே பழமையுடையதொன்றாகும். இத்தலத்திற்குப் பரமாக்கைப்பதி, அங்கணம்மைக்கடவை, அங்கணாக்கடவை, மாகையம்பதி என்ற பேர்களும் உள்ளன.
இந்துக் கலைக்களஞ்சியம்

Page 47
இங்கு ஆண்டு தோறும் வைகாசி விசாகப் பொங்கல் மிகச் சிறப்பாக நடைபெறுகின்றது. அப்பொழுது பக்தர்கள் நெடுந்தூரங்களிலிருந்தும் தரிசனம்பெற வருவது வழக்கம். நித்திய பூசையும் நடைபெறும்.
கண்ணகி கதைப்படிப்பு இங்கும் சிறப்பாக நடைபெறுகின்றது. குளிர்த்தியும் வழமையாக நடைபெறும். (பொ.யூ.)
அங்க தேசம்
அங்க தேசம் வட இந்தியாவிலுள்ள மிகவும் புராதனமான இராச்சியங்களில் ஒன்றாகும். பிராமணங்கள், ஆரணியகங்கள், உபநிடதங்கள் என்பவற்றில் அதனைப் பற்றிய குறிப்புகள் உள்ளன. மகாபாரதம் அதனைப் பற்றிக் குறிப்பிடுகின்றது. குந்திபுத்திரனாகிய கர்ணன் அங்கதேச மன்னனாக விளங்கினான் என்பது மகாபாரதக் கதை.
பிராச்ய ஜனபதங்களிள் (கிழக்கிலுள்ள இராச்சியங்களில்) அங்க என்பதும் ஒன்றெனப் பாணினி குறிப்பிடுகின்றார். ஆறாம் நூற்றாண்டில் நிவவிய பதினாறு மகாஜனபதங்களில் அங்கதேசமும் ஒன்றாகக் கொள்ளப்பட்டது. பெளத்த நூலான அங்குத் தர நிகாயம், சமண நூலான பகவதீசூத்திரம் என்னும் வியாக்யா-பிரஞாப்தி என்பன அங்க, காசி, கோசலம் முதலான பதினாறு மகாஜனபதங்களின் பெயர்களைக் குறிப்பிடுகின்றன. பிரக்ஞா யனா என்னும் சமண நூலும் அங்க தேசத்தின் சிறப்புகளைக் குறிப்பிடுகின்றது. மகாபாரதம் வர்ணிக்கும் அங்க தேசம் பாகல்பூர், மொங்கிர் என்ற நவீன காலத்து மாவட்டங்களின் பகுதிகளை உள்ளடக்கிய இராச்சியமாக அமைந்திருந்தது.
அங்கம், மகதம் ஆகிய இராச்சியங்களுக்கு இடையிலே சம்பாநதி, எல்லையாக இருந்தது. அங்க தேசம் கங்காநதியின் தென்பால் அமைந்திருந்தது. அதன் தலைநகரமான சம்பா(பதி) கங்கை, சம்பா என்னும் ஆறுகள் கூடுமிடத்திலே அமைந்திருந்தது. அது மிதிலை நகரிலிருந்து 60 யோசனை தூரத்திலிருந்தது. மாலினி என்னும் பெயராலும் வழங்கிய சம்பா நகரம் கங்கைச் சமவெளியிலுள்ள ஆற்றுவழிப் பாதையில் ஒரு பிராதானமான கேந்திர நிலையமாகும். செல்வச் செழிப்பின் காரணமாக அது சிறப்புற்றிருந்தது. இந்தியாவின் பிரதானமான ஆறு நகரங்களிற் சம்பாபதியும் ஒன்றெனப் பெளத்த நூலான அங்குத்தர நிகாயம் குறிப்பிடுகின்றது.
வியாபார நிலையங்களும் வணிகர் குடியிருப்புகளும் சம்பா நகரத்தில் மிகுந்து காணப்பட்டன. நெடுந்தூரம் பிரயாணஞ் செய்யும் வணிகர் சந்திக்குந் தலங்கள் அங்கு காணப்பட்டன. அங்கிருந்து வணிகர் சுவர்ணபூமிக்குச் சென்று வாணிபஞ் செய்தனர். சம்பா என்னும் பெயரால் இந்து-சீனத்தில் ஒரு இராச்சியம் உருவாகியிருந்தமை குறிப்பிடற்குரியது. சம்பா நகரத்துக்குச் சமீபத்தில் கக்கரா என்னும் பிரசித்தமான தடாகம் அமைந்திருந்தது.
இந்துக் கலைக்களஞ்சியம்

கி.மு. ஆறாம் நூற்றாண்டின் முற்பகுதியில் பிரமதத்தன் என்பவன் அங்க தேசத்து அரசனாக விளங்கினான். அவன் மகதநாட்டு வேந்தனாகிய பிம்பிசாரனின் தகப்பனை ஒரு காலகட்டத்திலே போரில் வெற்றி கொண்டான். அதற்குப் பழிவாங்கும் நோக்குடன் பிம்பிசாரன் அங்க தேசத்தின் மீது படையெடுத்து, அதனைக் கைப்பற்றிக் கொண்டான். அங்க தேசம் மகத இராச்சியத்தின் ஒரு பகுதியாகியது. அதன் வளங்களை மகத மன்னர்களாற் பயன்படுத்திக் கொள்ள முடிந்தது. கிழக்கிந்தியாவில் மகதம் தனிப்பெரும் சக்தியாக எழுச்சி பெறுவதற்கு அத்திபாரம் இடப்பட்டது. மகத இளவரசனாகிய அஜாதசத்துரு சம்பா நகரத்திலே இராசப்பிரதிநிதியாக நியமிக்கப்பட்டான். குப்த பேரரசரின் ஆட்சிக் காலம் முடியும் வரை அங்க தேசம் மகதப் பேரரசின் பாகமாயிருந்தது. பின்பு, ஏழாம் நூற்றாண்டில் அது கண்ணோசியின் ஆதிக்கத்தின் கீழ் அமைந்திருந்தது.
(4. L.)
அங்காரக சதுர்த்தி
செவ்வாய் அநுட்டித்துப் பேறு பெற்றதால் அங்காரக சதுர்த்தி எனப் பெயர் பெறும் விநாயக சதுர்த்தி எல்லாத் துன்பங்களையும் நீக்கும் ஆற்றலுடையதால் சங்கடஹர சதுர்த்தி எனவும் பெயர் பெறும்.
மாசிமாதம் தேய்பிறையில் செவ்வாய்கிழமையோடு வரும் சதுர்த்தி திதியில் தொடங்கி சதுர்த்திகளில் ஓராண்டு அநுட்டிப்பது இவ்விரதம். அதிகாலையில் எழுந்து நீராடிச் சங்கற்பித்துக் கொண்டு சிவசின்னங்களை அணிந்து விநாயகரைத் தியானித்து அவருடைய மந்திரங்களில் ஒன்றை அல்லது அவருடைய பெயர்களை இடைவிடாது செபித்தல் வேண்டும். உபவாசம் இருப்பது மேலாகும். அன்று இரவு உறக்கமும் கூடாது. விநாயக புராணத்தைப் பாராயணம் செய்வது நல்லது விநாயக சதுர்த்தி விரதத்திற் பின்பற்றப்பட்ட வழிபாட்டு முறைகளையும் பின்பற்றலாம்.
அங்காரக சதுர்த்தி விரதம் பல நன்மைகளைத் தரவல்லது என்று கூறுவர். இன்றும் கடன் தொல்லை, நோய், பகை,
உடையவர்கள் இவ்விரதத்தை அநுட்டித்து வருகின்றனர்.
(பொ.யூ.)
அங்காரகன்
நவக்கிரக மண்டலத்தில் மூன்றாவதாக வருபவன். அங்காரகன். மங்கலன், குஜன், செவ்வாய், செம்மீன் போன்ற பெயர்களும் இவனுக்கு உண்டு. பூமிதேவியின் புதல்வன் ஆகையால் 'குஜன்’ எனப்பட்டான்.
உமாதேவி சிவனிடமிருந்தி விலகித் தவம் புரியும் பொழுது தவத்தின் உக்கிரகத்தின் ஒருசொட்டு பூமியில் விழுந்து ஒரு குழந்தையாகிறது. அக்குழந்தையே மங்கலன். மங்கலனைச் சுற்றி அக்னிப் பிழம்புகள் வளையமிடுகின்றன. மங்கலனின்
17

Page 48
தவவலிமையை மெச்சி இறைவன் அவனுக்கு கிரகபதவியை அளிக்கின்றார். இதனை இன்னொரு விதமாகவும் கூறுவர். பரத்வாஜ முனிவர் அணிந்திருந்த உருத்திராக்க மணி ஒன்றிலிருந்து மங்கலன் தோன்ற, அக்குழந்தையை பார்வதி எடுத்து வளர்க்கிறாள். அக்குழந்தைக்கு சகல சாத்திரங்களையும் முனிவர் கற்பிக்கின்றார். மங்கலன் தனது தவவலிமையால் கிரகபதவியைப் பெறுகின்றான்.
வானத்தில் இக்கிரகம் செம்மையாகக் காணப்படுவதால் "செவ்வாய்' என அழைக்கப்படுகின்றது.
புறநானூறு இதனை “செம்மீன்' என்று குறிக்கின்றது. “முந்நீர் நாப்பண் திமில் சுடர் போலச் செம்மீன் இமைக்கும் மாக விசும்பின்' என்று புறநானூறு கூறும் வீரபத்திரரே அங்காரகன் என்று கூறுவர். தக்ஷனை அழித்துத் தன் வலிமையால் உலகை நடுநடுங்க வைத்த பெருமானை தேவர்கள் வணங்கி இறைஞ்ச வீரபத்திரர் தனது உக்கிர வடிவத்தை மாற்றி சாந்த உருவனாய் அங்காரகனாய்க் காட்சியளித்தார். வீரபத்திரருக்குச் சிறந்த நாள் செவ்வாய்க் கிழமை. அங்காரகனுக்கும் அந்த நாளே சிறப்பாக அமைந்துள்ளது.
அங்காரகன் இரத்தம் போலச் சிவந்த மேனியை உடையவன். செவ்வண்ண மலரில் விருப்புள்ளவன். நான்கு கரங்கள் உடையவன். சக்தியும் கருணையும் வலது கரத்தில் விளங்க, ஈட்டியும் மழுவும் இடது கரத்தில் விளங்கும். செம்மறியாட்டு வாகனத்தை உடையவன். எட்டுக் குதிரைகள் பூட்டிய பொன் வண்ணத் தேரில் பவனி வருபவன். அங்காரகனுக்கு அன்னப் பறவையை வாகனமாக சோதிட நூல்கள் கூறும்.
சிவபெருமானின் கண்ணில் தோன்றியதால் முருகனின் அம்சம் என்றும் கூறுவர். செவ்வாய் முருகனை வழிபடச் சிறந்த நாள். செவ்வாய் தாயின் சம்பந்தமே இல்லாமல் அவதரித்ததாக மகாபாரதம் கூறுகின்றது. அங்காரகனுக்கும், முருகனுக்கும் பல ஒற்றுமைகள் உண்டு.
முத்துக்களில் செந்நீரோட்டம் கொண்ட ஒருவகை முத்துக்கு "அங்காரகன்’ என்று பெயர் எனச் சிலப்பு கூறுகின்றது. செவ்வாய் ஆண்கிரகம்; துவரை, பவழம், செப்புப் பாத்திரம் தானம் செய்தால் அங்காரகன் பிரீதி அடைவான்.
செவ்வாய் ஒருவர் ஜாதகத்தில் 2,4,7,8,12 ஆம் இடத்தில் இருந்தால் அந்த ஜாதகன் செவ்வாய் தோஷம் உடையவன். என்பது பொருள் அதேபோல செவ்வாய் தோஷம் கொண்ட பெண் ஜாதகத்தையே அதனுடன் இணைக்க வேண்டும். ஏழு எட்டாமிடங்கள் களத்திர ஸ்தானம். அதில் செவ்வாய் இருந்தால் தோஷம் என்று கூறுவர். இதற்கும் சில விலக்குகள் உண்டு.
"சதுஷ் ஸப்த மகோ பெளம.
மேஷகர் காளி நக்ரக
யதா ராசெள சுபப் ரோக்த
குஜாத் தோவு ந வித்யதே //
18

என்று காளிதாசர் இயற்றிய ஜாதக சந்திரிகையில் இந்த விலக்கு கூறப்பட்டிருக்கின்றது. ஆண்- பெண் ஜாதகங்களில் கடகம், மேஷம், விருச்சிகம், மகரம் ஆகிய இராசிகளில் செவ்வாய் இருந்து அந்த இராசிகள் 4,7,8 ஆம் இடங்களாயினும் செவ்வாய் தோஷம் இல்லை என அப்பாடல் கூறுகின்றது.
மேலும் 12,48,12 ஆகிய இராசிகள் சர இராசிகளாக இருந்து அந்த இடங்களில் செவ்வாய் இருந்தாலும் செவ்வாய் தோஷத்திற்குப் பரிகாரம் என ஜாதக சந்திரிகை கூறுகின்றது. குரு-புதனுடன் செவ்வாய் சேர்ந்திருந்தாலோ, பார்க்கப்பட்டாலோ செவ்வாய் தோஷ பரிகாரம் உண்டு என்றும் கூறப்பட்டுள்ளது. ஜாதகத்தில் செவ்வாய் நல்ல நிலையில் இருந்தால் பூமியையும், செல்வத்தையும், செல்வாக்கையும் அபரிமிதமாக அளிப்பான். கடன் தொல்லையிலிருந்தும் விடுபடச் செய்வான்.
அங்காரகன் அவந்தி நாட்டவன். பாரத்வாஜ கோத்திரத் திற்கு உரியவன். அவனது தேவி சக்திதேவி. அவனது குமாரன் சுரேசன் என சித்தாந்த சேகரம் கூறுகின்றது.
அதிதேவதை-பிருதிவி; பிரதி அதிதேவதை-கூேடித்திர பாலகன், இராசிச் சக்கரத்தில் விருச்சிகத்தையும் மேஷத்தையும் சொந்த வீடாகக் கொண்டவன். கடகத்தில் நீசன், மகரத்தில் உச்சன்.
செவ்வாய் முருகனின் அம்சம் கொண்டவன்; பழனி,
புள்ளிருக்கு வேளூர், திருச் சிறுகுடி ஆகிய மூன்று தலங்களும் செவ்வாய் கோளுடன் சம்பந்தப்பட்டவை.
தஞ்சை மாவட்டத்திலுள்ள வைத்தீஸ்வரன் கோயில் (புள்ளிருக்கு வேளூர்) அங்காரக க்ஷேத்திரம். செவ்வாய்க்குத் தனிச் சந்நிதி உண்டு. இங்கு கல்லில் மூலத்தான மூர்த்தியும் அழகான செப்புத் திருமேனியும் உள்ளது. ஒவ்வொரு செவ்வாய்க் கிழமையும் உற்சவம் நடைபெற்று ஆட்டு வாகனத்தில் அங்காரகன் பவனி வருவான்.
அங்காரகனுக்குப் பல திருநாமங்கள் உண்டு. லோகிதாங்கன், ரக்தாயதேக்ஷணன், ரக்தவர்ணன், சக்திதரன், குமாரன், மகாகாயன், மங்கலன், தனப்ரதன், ஹேமகுண்டலி, ரோக நாசனன், ரக்த வஸ்த்ரதரன் என்று பல திருநாமங்களை நவக்கிரக ஸ்தோத்ர சங்கிரகம் தொகுத்துத் தருகின்றது.
உரோமானியர்கள் செவ்வாயை போர்க் கடவுளாக வணங்கினர். செவ்வாயின் ஆசியுடன் சென்றால் போரில் வெற்றி கிடைக்கும் என நம்பினர். செவ்வாய்க்கு மார்ஸ் (Mars) என்று பெயரிட்டனர். பல கோயில்களை உரோமர்கள் அமைத்தார்கள்.
சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான முத்துஸ்வாமி தீட்சிதர் தமது நவாவரணக் கிருதிகளில் "அங்காரகம் ஆஸ்ரயாமி” என்று எடுத்துப் பாடியுள்ளார். பக்தர்களின் விருப்பத்தை நிறைவேற்று பவன். செவ்வாய்க் கிழமைக்கு உரியவன். பூமியின் புத்திரன்.
இந்துக் கலைக்களஞ்சியம்

Page 49
மேஷத்தையும், விருச்சிகத்தையும் ஆட்சி வீடாகக் கொண்டவன். சங்கு போன்று அழகிய கழுத்தை உடையவன். மகரத்தில் உச்சம் பெற்றவன். சகோதர பாவத்திற்குக் காரகன். வைத்தீஸ்வரன் கோயிலில் நிலை கொண்டவன். முருகனின் அம்சம் பெற்றவன். சூரியன், சந்திரன், குரு ஆகிய கோள்களின் நண்பன்.
ஆறாத காயங்கள், மூட்டுவலி ஆகியவற்றால் அவதியுறு பவர்கள் செவ்வாயை ஆராதித்தால் சிறந்த குணம் ஏற்படும் என சோதிட நூல்கள் கூறுகின்றன.
செவ்வாய் கிரகம் தணல் போல் காணப்படும். சூரியனைச் சுற்றிவர 687 நாட்கள் ஆகும். சூரியனைச் சுற்றும் கோள்களில் புவிக்கு அடுத்தாற் போல் உள்ளது செவ்வாய். அது நமக்கு மிக அருகில் வரும்பொழுது சுமார் மூன்றரைக் கோடி மைல் தொலைவில் இருக்கும். சூரிய குடும்பத்திலேயே மிகச் சிக்கலான புதிர் செவ்வாய் கிரகமாகும்.
"வசனநல் தைரியத்தோடு மன்னவர் சபையில் வார்த்தை புசபல பராக்கிரமங்கள் போர்தனில் வெற்றி ஆண்மை
நிசமுடன் அவரவர்க்கு நீணfலந் தன்னில் நல்கும் குசநில மகனாஞ் செவ்வாய் குரைகழல் போற்றி போற்றி"
என்று துதிப்பாடல் ஒன்று கூறுகின்றது. முறைப்படி செவ்வாயை ஆராதித்தால் மனத்திண்மை, அரச சபையில் பேசும் ஆற்றல், தோள்வலி, போரில் வெற்றி முதலியன கிட்டும். வீடு, வாகனங்கள், வாங்க செவ்வாய் நல்ல இடத்தில் ஜாதகத்தில் அமைந்திருக்க வேண்டும். அப்படி அமையப் பெறாதவர்களும் செவ்வாய் கிரகத்தை பக்தியுடன் சாத்திர முறைப்படி வணங்கினால் நன்மைகள் பெருகும். தீமைகள் அகலும் என்பர்.
நவக்கிரக ஆராதனை முறை கோள்களை முறைப்படி ஆராதித்து வணங்கும் முறைகளைக் கூறுகின்றது.(வ.வை.)
அரங்காளம்மன்
சிவபெருமான், உமையம்மையிடமிருந்து தோன்றிய வீரபத்திரனும், பத்திரகாளியும், தனித்தனியே உலாவித் தக்கன் வேள்வியை அழித்தனர். இப்பத்திரகாளியே அங்காளியாவர். அவர் அர்த்தநாரி வடிவினர். இவர் கோயில் முன்னர் திருநந்தி
தேவரும் பலிபீடமும் இடபக் கொடியும் இருத்தல் இதனை உணர்த்துகின்றது.
அங்காளம்மன் தக்கன் வேள்வியை வீரபத்திரருடன் இருந்து அழித்து ஆடிய திருவிளையாடலை நினைவு கூர்தற்கே ஆண்டுதோறும் மாசி மாதம் அமாவாசையில் மயான நிருத்தம் (மசான கொள்ளை) என்னும் உற்சவம் கொண்டாடப்படுகின்றது.
அங்காளம்மன் கோயிலிற் பெரியாண்டவன் என்று சொல்லுவது வீரபத்திரரைக் குறிக்கும். பெரியாண்டவர் 1000 முகங்களையுடையவர். பெரியாண்டவர் பூசை செய்பவர்கள் மண்ணால் ஆயிரம் லிங்கம் வைத்துப் பூசிப்பர்.
இந்துக் கலைக்களஞ்சியம்

ஈழத்திலே கிழக்குப் பிரதேசத்திலே ஆங்காங்கு பெரிய தம்பிரான் கோயில்களுள; வடக்கிலும் பெரிய தம்பிரான் கோயில்கள் சிற்சில இடங்களிலுள. பெரியாண்டவன் என்றும் பெரிய தம்பிரான் என்றும் குறிப்பிடப்படுபவர் வீரபத்திரர் என்று கருத இடமுண்டு.
பர்மா தேசத்தில் இரங்கூன் நகருக்கு அணித்தாகவுள்ள பீலிக்கா எனும் ஊரிலே கோயில் கொண்டிருக்கும் அங்காளேஸ்வரி மீது தமிழ் நாட்டு இராமச்சந்திரபுரத்தைச் சேர்ந்த பழ. சண்முகனார் பாடிய அங்காளேஸ்வரி அந்தாதி 1964 இலே அரங்கேற்றப் பெற்றது. (பொ.யூ.)
அங்காளேஸ்வரி அந்தாதி
பர்மா தேசத்தில் இரங்கூன் நகருக்கு அணித்தாகவுள்ள பீலிக்கா எனும் ஊரிலே கோயில் கொண்டிருக்கும் அங்காளேஸ்வரி என்னும் அம்பிகைமீது பாடப்பட்டது.
தக்கன் வேள்வியைச் சிதைக்கச் சிவபிரானிடமும் உமாதேவியாரிடமும் இருந்து தனித்தனி தோன்றிய மூர்த்தங்கள் முறையே வீரபத்திரரும் பத்திரகாளியுமாவர். பத்திரகாளியே அங்காளி எனப் பெயர் பெறுவர்.
அங்காளேஸ்வரி அந்தாதி பீலிக்காவிலே 1964 ஆம் ஆண்டில் அரங்கேற்றப்பட்டது. இதனுள் காப்புச் செய்யுள் இரண்டும், சற்குரு வணக்கம் ஒன்றும் அவையடக்கம் ஒன்றுமாக நான்கு பாடல் புறவுறுப்பாக அமைய, அகவுறுப்பாக 100 வெண்பாவுள.
இப்பிரபந்தத்தைப் பாடியவர் சித்தாந்த நன்மணி எனப் போற்றப் பெறும் பழ. சண்முகனார். இவர் தமிழ்நாடு திருச்சி மாவட்டம் திருமயம் வட்டம் இராமச்சந்திரபுரத்தைச் சேர்ந்தவர்; பர்மா வாழ் சைவர்களாற் சிவராஜ செல்வர், சிவபூஜாதுரந்தர் என்று போற்றப் பெறுபவர்.
ஆழ்ந்த இறையுணர்வும் தேர்ந்த தமிழ்ப் புலமையும் புலப்படும் அந்தாதியில் அபிராமி அந்தாதியின் செல்வாக்குக் காணப்படுகின்றது. மணிவாசகரின் திருவாசகமும் வடலூர் இராமலிங்க சுவாமிகளின் வாக்கும் ஆங்காங்கே போற்றிப் பேணப்பட்டுள்ளன. எளிமையான நடை அந்தாதிக்கு அழகு சேர்க்கின்றது. (பொ.பூ.)
அச்சிறுபாக்கம்
விநாயகரை வணங்காது திரிபுரம் எரிக்கச் சென்ற இறைவனது தேர் அச்சு முறிந்த இடம் (அச்சு + இறு) பாண்டியன் ஒருவன் கங்கை மணலை வண்டியில் கொண்டு வரும் பொழுது இத்தலத்திற்கு வந்ததும் வண்டி செல்லாமையான் மேற் கொண்டும் அதனை ஊக்கிச் செலுத்த அச்சுமுறிந்தது. பின்பு
அவன் அசரீரியினால் செய்தி அறிந்து ஆலயத் திருப்பணி செய்தான் என்பது வரலாறு.
19

Page 50
அச்சிறு பாக்கம் மக்கள் வழக்கில் அச்சரப்பாக்கம் என மருவலாயிற்று.
சென்னை திருச்சி நெடுஞ்சாலையில் மதுராந்தகத்தை அடுத்து இவ்வூர் உள்ளது. செங்கற்பட்டிலிருந்தும் பேருந்து வசதியுண்டு. சென்னையிலிருந்து 59கல் தொலைவில் உள்ளது. கண்வர், கெளதமர் பூசித்த தலம்; மதுராந்தகச் சதுர்வேதி மங்கலத்துத் தென்பால் தனியூர் அச்சிறுபாக்கம் என்பது கல்வெட்டுக் குறிப்பு. இறைவன்- பார்க்க புரேசுரர்;ஆட்சீஸ்வரம்-ஆட்சி கொண்ட நாதர்; ஸ்திரவாச புகீஸ்வரர்; முல்லைக் கானமுடையார்.
இறைவி :- சுந்தரநாயகி, இளங்கிளியம்மை - பாலசுகாம்பிகை; அதிசுந்தர மின்னாள்.
தலமரம் :- கொன்றை.
தீர்த்தம் - சங்குதீர்த்தம் - சிம்மதீர்த்தம்.
முன்னொரு காலத்தில் பாண்டிய மன்னன் இவ்வழியே செல்லும் பொழுது முல்லைப் புதர் ஒன்றினைக் கண்டான். அதன் வழியாகப் பொன்னிற உடும்பு ஒன்று ஒடி சரக்கொன்றைப் பொந்தில் புகுந்து கொண்டது. அரசரின் ஆணைப்படி பணியாட்கள் கொன்றைப் புதரை வெட்ட குருதி பொங்கிச் சிவலிங்கம் ஒன்று வெளிப்பட்டது. மன்னவன் அஞ்சி திரிநேத்ரதாரி என்ற முனிவரிடம் பெரும்பொருளைத் தந்து ஆலயம் அமைக்கச் செய்தான். இருசந்நிதிகள் கொண்ட ஆலயத்தைப் பார்த்து “எதற்காக இருசந்நிதிகளை அமைத்தீர்கள்” என அரசன் முனிவரைக் கேட்க அவரும் உம்மை ஆட்கொண்ட "உமையாட்சீஸ்வரருக்கு ஒரு சந்நிதியும், எமை யாட்கொண்ட ஆட்சீஸ்வரருக்கு ஒரு சந்நிதியுமாக அமைத்தேன்” என்றார்.
உமையாட்சீஸ்வரச் சந்நிதி உள்ளடங்கிய தோற்றத்தில் திருச் சுற்றில் இருக்கின்றது. வாயிலிற்குச் சற்றுத் தள்ளி மூலவராகிய "ஆட்சீஸ்வரர்' காட்சி தந்ததை இன்றும் மகோற்சவத்தில் ஏழாம்நாள் மாலை கொன்றையடி சேவையாக நடைபெறுகின்றது.
மூலவர் ஆட்சீஸ்வரர் - சுயம்புமூர்த்தி அகலமான சதுர ஆவுடையார் திருமுன் நின்று மக்கள் வழிபடும் இடத்தின் கீழே கிணறுகள் உள்ளதாகக் கூறுகின்றனர். கருங்கற்கள் போட்டு மூடப்பட்டுள்ளது. மழைக் காலத்தில் கற்களின் இடை வழியாகப் பார்த்தால் தண்ணீர் தெரியுமாம். சுவாமியின் பின்புறம் வெட்டுப்பட்ட பள்ளம் உள்ளது.
இளங்கிளியம்மை சந்நிதி அழகு நிரம்பியது. அம்பிசை நின்ற திருக்கோலத்தில் அபயவரதத்துடன் கூடிய நான்கு கரங்களுடன் காட்சி அளிக்கின்றாள். அபிராமி அந்தாதி திருஞான சம்பந்தரின் தலப்பதிகம்; அப்பரின் கூேடித்திரச்
20

கோவைப் பதிகம் முதலியன கல்லிற் பொறிக்கப்பட்டுள்ளன. துவார கணபதி ஒருபுறமும், மறுபுறம் பாலசுப்பிரமணியரும் உள்ளனர்.
சித்திரை மாதத்தில் மகோற்சவ விழா பத்து நாட்களுக்கு நடைபெறுகின்றது. பதினோராம் நாள் சுவாமி பெரும்பேறு கண்டிகை கிராமத்திற்குச் சென்று அகத்தியருக்குக் காட்சிதரும் ஐதீக விழா நடைபெறுகின்றது. நாள்தொறும் நான்கு காலப் பூசைகள் நியமமாக நடைபெறுகின்றன. நவராத்திரி விழாவும் சிறப்புற நடைபெறுகின்றது.
இவ்வூரைச் சேர்ந்த தனபால் செட்டியார் என்பவரது அருமுயற்சியால் அறுபத்து மூவர் உற்சவத் திருமேனிகள் செய்யப்பட்டுள்ளது. நித்த சுதானந்த சுவாமிகளால் ஆட்சீஸ்வரர் அருட்குறிமாலை, இளங்கிளி யம்மை அருட்குறிமாலை, ஆட்சீஸ்வரர் அருளித்த மாலை, அருமருந்திரத்தமாலை எனும் நூல்கள் பாடப்பட்டுள்ளன.
கல்வெட்டுக்கள் :-
இத்தலம் இராஜேந்திர சோழவள நாட்டைச் சேர்ந்ததாகக் குலோத்துங்கன் காலத்துக் கல்வெட்டுக் கூறுகின்றது. இத்தலத்திறைவன் அக்ஷேஸ்வரர் கல்வெட்டுக்களில் அச்சுக் கொண்டருளிய தேவர் என வழங்கப்படுகிறார். திரிபுவனச் சக்ரவர்த்தி கோனேரின்மை கண்டான் காலத்தில் ஆட்கொண்ட நாயகன் சேதிராயனால் ஒருசிலை தயாரிக்கப்பட்டது. இது இன்னார் சிலை என்று அறியக்கூடவில்லை. இராஜகேசரிவர்மன் முதலாம் குலோத்துங்கன் 5ஆம் ஆண்டில் குலோத்துங்கன் உருவச்சிலை செய்துவைக்கப் பெற்றது. ஏனைய கல்வெட்டுக்கள் கோயிலுக்கு விளக்கிற்காக ஆடுகளும், பொன்னும், திருவமுதிற்காக நிலமும் விட்ட செய்தியை அறிவிப்பன. மூன்றாங் குலோத்துங்கச் சோழன் ஆட்சி 12ஆம் ஆண்டிற் பாண்டிய நாட்டைக் கைக்கொண்ட செங்கணி அம்மையப்பன் வைரங்கள் வழங்கினான். கங்கன் என்பவனால் அர்ச்சனாபோகமாக நிலம் அளிக்கப் பெற்றுள்ளது.
பண்-குறிஞ்சி பொன் றிரண்டன்ன புரிசடை புரளப்
பொரு கடற் பவளமொ டழனிறம் புரையக் குன்றிரண்டன்ன தோளுடை யகலங்
குலாய வெண் ணுரலொடு கொழும் பொடி யனிவர் மின் றிரண்டன்ன நுண்ணிடை யளிவை
மெல்லிய லாளையோர் பாகமாப் பேணி அன்றிரண்டுருவ மாய வெம்மடிக
ளச்சிறு பாக்கமதாட்சி கொண்டாரே.
(திருஞானசம்பந்தர்) (வ.வை.)
அச்சுதாருந்தசுவாமி
தமிழகம் வடஆர்க்காடு போளூரிலே பிறந்தவர்; அப்பாய்
நாயுடு என்பதைப் பூர்வீகப் பெயராகவுடையவர்; பத்தொன்பதாம்
இந்துக் கலைக்களஞ்சியம்

Page 51
நூற்றாண்டின் பிற்பகுதியில் வாழ்ந்தவர்; வேலூர் வேங்கடகிருஷ்ணதாசர் சீடராய் அச்சுததாசர் என வழங்கப் பெற்ற மாயாவாதி; தம் மாணவர் சூளை சோமசுந்தரநாயகர் செல்வாக்காற் கடாமூர் நிசாநந்தர் சீடராய் அச்சுதாநந்தர் எனும் சைவசித்தாந்தி ஆனவர்;
அத்வைத கீர்த்தனநந்தலகரி, சக்குபாய் சரித்திரம், சன்மார்க்க தர்ப்பணம், துருவ சரித்திரம், தோத்திர இசைப் பாடல்கள், பிரகலாத சரித்திரம், நிசாநந்தர் பதிகம் என்பனவற்றை இயற்றியவர். (பொ.யூ.)
68 GOTib15a))35 c6ba Dipu Tir
19த்தொன்பதாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர்; தமிழ்நாடு தென்னார்க்காடு மாவட்டம் திண்டிவனம் தாலுகாவிலுள்ள இரட்டணை நகரிலே பிறந்தவர்; பெருமாளையரின் புதல்வி; பண்டிதை; சிறுபிராயத்திலே விதவையானவர்; திருப்பாதிரிப் புலியூரிலும் வடலூரிலும் அதிகம் வாழ்ந்தவர்; தமிழ், வடமொழி கற்றவர்; சொற்பொழிவாற்றுவதில் வல்லவர்.
ஆத்திசூடி வெண்பா, இராமலிங்கசுவாமிகள் வரலாற்றுப் பாடல், குழந்தை சுவாமிகள் பதிகம் திருவாமாத்தூர்ப் புராணம் திருவிடையூர்த் (மேல்சேவூர்) தலபுராணம் முதற் காண்டம் என்பனவற்றைப் பாடியவர். அரசியலிலும் ஈடுபட்டவர். அது விஷயமாகக் கட்டுரைகளும் கவிதைகளும் இயற்றியவர்.
(பொ.யூ.)
68 Tib
அசாம் இந்திய நாட்டின் வடகிழக்குப் பகுதியில் உள்ள மாநிலம், வடக்கே பூடான், அருணாசலப் பிரதேசம், கிழக்கே நாகாலாந்து, மணிபுரி, தெற்கே மிசோரம், திரிபுரா, பங்களாதேசம், மேகாலயா, மேற்கே மேற்கு வங்காள மாநிலம் இவற்றால் சூழப்பட்டதே அசாம் மாநிலமாகும்.
அசாம் மாநிலம் 78,523 ச. கி. மீ. பரப்பளவு உள்ளது. இதன் தலைநகர் திசுபூர் (Dispur) ஆகும். புதிய தலைநகர் LîTITöGéFITélé-Li (Pragjyotishpur).
அசாம் மாநிலத்துக்கு இமய மலைத்தொடர்களான பாட்காய்புர், நாகர்மலை - பராய் தொடர், சாசி, சயிந்திய மலைத்தொடர் போன்றவை எல்லைப்புறங்களாக அமைந் துள்ளன. மாநிலத்தின் நடுவே வெள்ளம் பெருக்கெடுத்தோடும் பிரம்மபுத்திராவும் அதன் கிளை ஆறுகளும் பாய்கின்றன.
அதிக அளவில் மழை பெய்யும் இந்திய மாநிலங்களுள் அசாம் சிறப்பானதாகும். அசாம் என்ற பெயர் வடமொழியில் அசம் - சமமானதன்று என்று பொருள்தரும். மலையும் சமவெளியும் பள்ளத்தாக்குகளும் கொண்ட இம்மாநிலத்திற்கு இப்பெயர் பொருத்தமே. மேலும், 'அசம்’ என்றால் நிகரற்றது என்றும்
இந்துக் கலைக்களஞ்சியம்

பொருள் உண்டு. அசாம் என்ற பெயர் அகோம் மொழியில் உள்ள அசம் என்ற சொல்லிலிருந்து வந்தது என்பர். இதன் பொருள் ‘வெல்லுதற்கரியவர் என்பதாகும். இச்சொல் ஆசாம் - ஆசம் - ஆகம் - ஆகோம் என்று மருவி வந்தது. பிறகு ஆங்கிலேயரால் அசாம் என்று உச்சரிக்கப்பட்டுள்ளது.
இராமாயண காலத்தில், அசாம் பரத கண்டத்தின் பகுதியான பிராக்சோதிச அரசாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த அரசு விசுவாமித்திரரின் பாட்டனாரான அமிருதராசர் என்பவரால் ஏற்படுத்தப்பட்டது. மகாபாரதத்தில் இப்பகுதியை நரகாசுரன் ஆண்டுவந்ததாகக் குறிப்பு உள்ளது. இதனைக் காமரூபம் என்றும் இங்கு வாழ்ந்தவர்களைக் கிரீடர்கள் என்றும் அழைத்தனர். யுவான் சுவாங்கின் பயணக் குறிப்பும், கவிவாணர் எழுதிய அர்ச சரித (Harsha Charita) நாடகமும், கல்வெட்டுகளும் அசாம் பற்றி அறிய உதவியாக உள்ளன. இவற்றிலிருந்து, இப்பகுதி காமரூபம் என்று அழைக்கப்பட்டது என்றும், கி. பி. 4ஆம் நூற்றாண்டிலிருந்து கி. பி. 7-ஆம் நூற்றாண்டு வரை இப்பகுதியை வர்மன் மரபினைச் சேர்ந்த மன்னர்கள் ஆண்டுவந்தனர் என்றும் இவர்கள் நரகாசுரன் வழிவந்தவர்கள் என்றும் அறியப்படுகிறது.
வர்மன் மரபிற்குப் பின், அசாம் பகுதியைச் சலசுதம்ப மரபினர், பாலர், கென் மரபினர் போன்றோர் ஆண்டனர். கென் மரபினரின் காலத்தில்தான் முகம்மது கோரியின் படைத்தலைவரான பக்தியார் கில்சி இப்பகுதியை வென்றார். ஆனால், மீண்டும் கென் வமிசத்தினர் அசாமைத் தங்கள் ஆட்சியின்கீழ்க் கொண்டு வந்தனர். கி. பி. 1515-இல் கோரி வமிசத்தினர் அசாமைக் கைப்பற்றினர். விரைவிலேயே அகோம் மரபினர் மீண்டும் அசாமைக் கைப்பற்றிக் கிழக்கிந்தியக் கம்பெனியார் காலம் வரை ஆண்டுவந்தனர். கி. பி. 1819ஆம் ஆண்டு பர்மியர் இப்பகுதியைக் கைப்பற்றினர். பர்மியரிடமிருந்து ஆங்கிலேயர் அசாம் பகுதியை வென்றனர். பின்னர் அது பிரிட்டிசு இந்தியாவின் (British India) ஒரு பகுதியாக மாறியது.
இந்தியா 1947ஆம் ஆண்டு ஆங்கில ஆட்சியிலிருந்து விடுதலை பெற்றபொழுது பிரிவினை செய்யப்பட்டது. அதனையொட்டி அசாம் பிரதேசத்தின் பகுதியான சில்கட் மாவட்டம் பாகிசுத்தான் பகுதியான கிழக்கு வங்காளத்துடன் இணைக்கப்பட்டது.
எஞ்சிய அசாம் பகுதி 2,23,590 ச. கி. மீ பரப்புடையது. ஆயினும், கடந்த சில ஆண்டுகளாக அசாம் பகுதியிலிருந்து வேறு சில மாநிலங்கள் பிரிக்கப்பட்டன. இன்றைய அசாமின் பரப்பளவு 78,523 ச. கி. மீ.
அசாமிலிருந்து வடகிழக்கு எல்லைப் பகுதி என்ற அமைப்பு 1948இல் பிரிக்கப்பட்டது. இப்போது அது அருணாசலப் பிரதேசம் என்றழைக்கப்படுகிறது. 1957ஆம் ஆண்டு நாகர்மலை மாவட்டம் மத்திய அரசின் கண்காணிப்பின் கீழ்க் கொண்டு வரப்பட்டது. 1963ஆம் ஆண்டு இப்பகுதி, நாகாலாந்து என்ற தனி மாநிலமாக
21

Page 52
ஆக்கப்பட்டது. 1970ஆம் ஆண்டு அசாமின் மற்றெ பகுதியான மேகாலயா மத்திய அரசின் கண்காணிப்பின் கீ கொண்டுவரப்பட்டது. 1972ஆம் ஆண்டு காசி, சயிந்தி காரோமலெ மாவட்டங்களைக் கொண்ட இப்பகுதி மேகால என்ற தனி மாநிலமாக மாறியது. அவ்வாண்டே மிே மலைப்பகுதி மாவட்டம் அசாமிலிருந்து பிரிக்கப்பட்டு மிசோ என்ற பெயரில் மத்திய அரசின் ஆளுகையின் கீ கொண்டுவரப்பட்டது. 1962 ஆம் ஆண்டு அசாம் மாநிலத்தி வடக்கில் உள்ள இமாலயப் பகுதிகள் சீனப்படைகள தாக்கப்பட்டன. மலைவாழ் மக்களில் பலர் அசாம் மாநிலத்தி மலைகளிலும் சமவெளிகளிலும் வாழ்ந்து வருகின்றனர். நாக நாக்டர், காசி கூட்டத்தினர், சயிந்தியா கூட்டத்தின் மிசிரியர்கர்பி கூட்டத்தினர், கூகி பிரிவினர், போரே - போே பிரிவினர், மிசோலுசாயி பிரிவினர், இலலுங்கு கூட்டத்தி சுத்தியா பிரிவினர், மிரி அல்லது மிசிங் பிரிவினர், அகா பிரிவி மோரோ அல்லது மட்கா பிரிவினர், கம்மதியர், நாரா பிரிவி பகியால் பிரிவினர், ஐதன்யர், துருங் பிரிவினர், காம்சங் பிரிவி என்னும் பல மலைவாழ்மக்கள் அசாம் பகுதியில் வாழ் வருகின்றனர். மற்றும் பார்ப்பனர் காயசுதர், கலிக கோச், கியே கனகா, கைபர்டா, குமாரா, அரி என்ற சாதிப் பிரிவுகளு உள்ளன. அசாமிய மக்களிடையே ஆவினத்தைப் போற்றும் ! உள்ளது. ஆவினம் போற்றும் விழாவாகப் பிகுபண்டிகை அங் கொண்டாடப்படுகிறது. மக்கள் எண்ணிக்கைச் செறிவு, இந்தி முழுவதன் செறிவை விடக் குறைவு. நாகாலந்தில் ஒரு ச கிலோ மீட்டருக்கு 31 பேரும், மேகலாயாப் பகுதியில் 45 பே உள்ளனர். அசாமின் சில பகுதிகளில் கல்வி அறிவுத் த இந்திய நாட்டின் பொதுத்தரத்தைவிட உயர்ந்துள்ளது. மக் தொகையில் மேகாலயாப் பகுதியில் 30 விழுக்கா நாகாலாந்துப் பகுதியில் 27 விழுக்காடும் எழுத்த பெற்றவர்கள். ஆனால், அசாமில் பொதுவாக 29 விழுக்க மக்களே எழுத்தறிவு பெற்றுள்ளார்கள்.
இருபதாம் நூற்றாண்டுத் தொடக்கத்திலிருந்து அண் மாநிலங்களிலிருந்தும் அயல் நாடுகளில் இருந்தும் மக் குடியேற்றம் அசாமில் நடந்து வருகிறது. அதனால் பெ அரசியல் கொதிப்பு உருவாகியுள்ளது. வங்காளத்திலிருந் பீகாரிலிருந்தும் பங்களாதேசத்திலிருந்தும் மக்கள் அசா கடந்த 70 ஆண்டுகளாகக் குடியேறியும் ஊடுருவல் செய் வருகின்றனர். 1951ஆம் ஆண்டு மக்களின் எண்ணிக்கையை 1981ஆம் ஆண்டு மக்கள் எண்ணிக்கையையும் ஒப்பிடும்பே 30 ஆண்டுகளில் 35 விழுக்காடு அளவிற்கு இப்பெருக் அதிகரித்துள்ளது. இது இந்திய நாட்டின் பொதுமக் எண்ணிக்கைப் பெருக்கத்தைவிட ஒன்றரை மடங்காகும். ஆம் ஆண்டு அசாமில் இஸ்லாமியர் 9.4 விழுக்காட்டினர இருந்தனர். 1974ஆம் ஆண்டில் அவர்கள் எண்ணிக்கை 3 விழுக்காடாக உயர்ந்துள்ளதால் பல சிக்கல்கள் தோன்றியுள்ள காசிப் பிரிவினர் போன்ற மலைவாழ் மக்களிடையே தாய் அதிகாரம் குடும்பத்திடையே உள்ளது. அசாம் மாநிலத் மலைப் பகுதிகளில் கிறித்தவ சமயத்தினரும் சமவெ
22

T,
ாட், ரூம்
DITL| குக் lut
துர ரும் ரம், கள் டும் றிவு ாடு
பகுதிகளில் இந்து சமயத்தினரும், இஸ்லாமிய சமயத்தினரும் வாழ்கின்றனர். 1971ஆம் ஆண்டு மக்கள்தொகை விபரப்படி அசாமில் இந்துக்கள் 71 விழுக்காடும், இஸ்லாமியர் 24 விழுக்காடும் இருந்தனர். மலைவாழ் மக்களிடையே கிறித்தவ சமயத்தினர் எண்ணிக்கை 51 விழுக்காடாகும். இந்நூற் றாண்டின் தொடக்கத்தில் மிசோரம் பகுதியில் 27 விழுக்காடு கிறித்தவர்கள் இருந்தனர். 1971ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்குப்படி அங்குக் கிறித்தவ சமயத்தினர் 98.09 விழுக்காடாக உள்ளனர்.
இங்குள்ள இந்துக்கள் வைணவ, சைவ, சக்தி வழிபாட்டு முறைகளைப் பின்பற்றி வருகின்றனர். வைணவ வழிபாட்டு முறை பெரிதளவு இங்கு பரவுவதற்குக் காரணமாய் இருந்தவர். 16ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த சங்கரதேவர் என்னும் அடியாராவார். மகாபாரதக் கதைகள், கண்ணன் வழிபாடு, பாகவதம் நூல் போன்றவை இந்துக்களிடையே பெரிதும் இடம் பெற்றுள்ளன. பட்டிதொட்டிதோறும் உள்ள மக்கள் கண்ணன் பெயரைப் போற்றும் மரபினர். சங்கரதேவர் வைணவ வழிபாட்டு முறையை நாமதர்மமாக அறிமுகப்படுத்தி மக்கள் மன்றங்களை அமைத்துள்ளார். சைவ வழிபாட்டு அசாமிய இந்துக்களிடம் சிறப்பாக உள்ளது. பண்டைக்கால அசாமிய இந்துக்களில் பலர் சைவ சமயத்தினர். தேசுபூரில் உள்ள மகா பைரவர் ஆலயம் மற்றும் உமாநாதர் ஆலயம் சிறப்பானவை. சக்தி அல்லது தேவி வழிபாடும் அசாமிய இந்துக்களிடம் உள்ளது. இங்குள்ள காமாக்யா ஆலயம் சிறப்பான சக்தி பீடமாகும். தாந்தரீக முறையில் தேவியை வழிபடும் முறையும் அசாமில் தோன்றியதே.
அசாமில் ஆலயங்களும் தான் என்ற வழிபாட்டு மன்றங்களும் நூற்றுக்கணக்கில் உள்ளன. சிவன், துர்க்கை, திருமால் போன்ற தெய்வங்களுக்கு இவ்வாலயங்கள் எழுப்பப்பட்டுள்ளன. இவற்றுள் பெரும்பாலானவை சிவ ஆலயங்கள். அசோ (Hajo) என்ற ஊரில் பெயர்பெற்ற பெளத்த ஆலயம் உள்ளது. பூடான்நாட்டிலிருந்தும் பெளத்தர் இங்கு வந்து வழிபடுகின்றனர்.
பிகு அல்லது பைகாச விழா அசாமில் மிகச் சிறப்பான விழா. இது அசாமியப் புத்தாண்டு விழா. இது இளவேனிற் காலத்தில் சித்திரை மாதத் தொடக்கத்தில் கொண்டாடப்படுகின்றது. கோமாதா கோலட்சுமி என்ற முறையில் ஆவினத்திற்கு வழிபாடு செய்யப்படுகிறது. மற்றும் தியல் திருவிழா கண்ணனைப்பற்றிய விழா, அம்பு பசிநோன்பு, சிவராத்திரி போன்றவையும் சிறப்பான விழாக்களாகும். சிவசாகரில் நடத்தப்படும் சிவராத்திரி விழா மிகவும் போற்றத்தக்கதாகும்.
அசாம் நீர்வளம், நிலவளம், வனவளம், கனிவளம் மிக்க மாநிலம். அங்குள்ள மலைச்சாரல் பகுதியில் 756 தேயிலைத் தோட்டங்கள் உள்ளன. அவை 26.3 கோடி கிராம் தேயிலையை உற்பத்தி செய்கின்றன. அதன் மதிப்பு ஏறத்தாழ 400 கோடி உரூபாய் ஆகும். இங்கு மழை மிகுதியாகப் பெய்கிறது. இதனால்,
இந்துக் கலைக்களஞ்சியம்

Page 53


Page 54
அர்த்தநா
 

ரீசுவரர்

Page 55

Iர்த்தர்

Page 56


Page 57
930)
 

மன்

Page 58
குனித்த புருவமும் கொவ்6ை பணித்த சடையும் பவளம்போ இனித்தமுடைய எடுத்த பெ மனித்தப்பிறவியும் வேண்டு:
 

வச் செவ்வாயிற் குமிண் சிரிப்பும் ால் மேனியில் பால்வெண்ணிறும் ாற்பாதமும் காணப்பெற்றால் வதே இந்த மானிலத்தே.

Page 59
2 திருநீலகண்ட
யாழ்பாணர்
8. எறிபத்தர் 9. ஏனாதிநாதர் 10. sajar 60BFÜLuff
15. மூர்த்திநாயனார் 18.முருகநாயனார் 1. உருத்திரபசுபதி 18. és போ
22. குலச்சிறையார் 24. GITGIMyššifri
gú60LOLifi
 
 
 
 
 
 
 

5. மெய்ப்பொருள் 8. alpsürListorL 1. அமர்நீதி
நாயனார் STTILÁGOTTÄ ETT LIGUETTÄ
Suissuit 12 மானக்கஞ்சாறர் 13. gíflanúLTUs 14. ஆனாயர்
நாளைப் 19. திருக்குறிப்புத் 2吋 சண்டேசுவரர் 21 திருநாவுக்கரசர் "GLITs தொண்டர்
2. நமிநந்தியடிகள் 瓯 திருஞானந்த
jagis"

Page 60
29 ஏயர்கோன் கலிகாமர்
37. சுழற்றிற்றறிவார் 38. கணநாதர்
53 இடங்க
57. gS5UMí Bisualls 58. lokie)GuféBjäus 59. நேச நாயனார் 80 கோச்செ
 
 
 
 
 

ilöTLSTTi 33. சோமாசிமாறர் 34 சாக்கியர் 35. சிறப்புலிநாயனார்
வநாயனார் 40. புகழ்ச்சோழர் 41 நரசிங்க 42. அதிபத்தர்
முனையரையர்
LILq:45sir 47. கணம்புல்லர் 48 strifisturf 49. நெடுமாற நாயனார் GsGITGI
ங்கட் சோழர் 81 சடைய நாயனார் 82 இசைஞானியார் 63. திருநீலகண்ட நாயனா

Page 61


Page 62
eg, Il (IPë
 

சுவாமி (நல்லூர்)

Page 63


Page 64


Page 65
சுவரோவியத்தில்
 

முதலாம் ராஜராஜன்

Page 66

முகநாவலர்

Page 67
இராமகிரு:
 


Page 68


Page 69
இம்மாநிலத்தில் அடர்ந்த பசுமை இலைக் காடுகள் மிகுதி, மரம் அறுக்கும் தொழிலுக்கு இவை அடித்தளமாகும். இங்குள்ள மூங்கில் காடுகள் செழிப்பானவை. அவை காகித உற்பத்திக்குப் பயன்படுகின்றன. உலகிலேயே பல வண்ணங்களோடு கூடிய சிறியதும் பெரியதுமான மலர்கள் மலிந்துள்ளன. நெல் விளைச்சலும் பிரம்மபுத்திர வடிகால் நிலத்தில் சணலும் மிகுதியாக விளைகின்றன. ஆண்டுதோறும் இம்மாநிலம் பிரம்மபுத்திரா ஆறும் அதன் கிளை ஆறுகளும் பெருகும்போது வெள்ளத்தால் பாதிக்கப்படுகின்றது. இங்கு பருத்தி, பழவகை, எண்ணெய் விதைகள், கரும்பு, கோதுமை, தேயிலை போன்றவை பயிராகின்றன. கனிவளத்திற்கும் இம்மாநிலம் பெயர் பெற்றது. நிலக்கரி, பழுப்புநிலக்கரி, சுண்ணாம்புக் கல், பெட்ரோல், எரிவாயு போன்றவை இங்குக் கிடைக்கின்றன. ஒலை முடைதல், கம்பள ஆடை நெய்தல் போன்ற குடிசைத் தொழில்களுடன் உரச்சாலை, காகிதம், பெட்டோல், மரப்பலகை வெட்டுதல், சர்க்கரை, தேயிலை உற்பத்தி ஆலைத் தொழில்களும் உள்ளன. (இரா. ச)
அசுத்தமாயை
‘மாயா' என்பது இந்திய தத்துவ தரிசனத்திலே பெறும் பொருள்களிலே இரண்டு அதிமுக்கியமானவை என்று கொள்ள முடியும். மா-அது; யா-அன்று; அது அன்று; உண்மையான வற்றை மறைத்து உண்மையல்லாதவற்றை முன் வைப்பது; பொய்த் தோற்றம். இத்தத்துவம் மாயாவாதம் என்று பெயர் பெறுகின்றது. மாயை உண்மையானதுமன்று; பொய்யா னதுமன்று - அது உண்மையானதாகவும் பொய்யானதாகவும் இருக்க இயலாது. எனவே அது இன்னதென்று சொல்லப்பட இயலாத ஒன்று (அநிர்வசனியம்). விவர்த்தவாதம் கூறும் மாயாவாதம் பிரமத்தில் இவ்வுலகம் மயங்கித் தோன்றுகின்றது; ஆன்மாவை மூடி வைத்திருக்கின்ற உடல், உயிர், மனம் எனும் கோசங்கள் மாயையினால் உண்டாக்கப்பட்டவை. வேதாந்தம் எனப் பொதுவாகப் பெயர் பெற்று விளங்கும் சங்கர அத்துவைதம் கூறும் மாயை இதுவாகும்.
மாயையின் இன்னொரு பொருள் உலகத்தின் ஒடுக்கத் திற்கும் (மா) தோற்றத்திற்கும் (யா) இடமாதல். சிலர் மாய் (தல்), ஆ(தல்) எனும் வினையடிகள் சேர்ந்த தமிழ்ச் சொல்லே மாயை என்பர். இக்கருத்துக்களை முன் வைப்பவர் சைவ சித்தாந்திகள். அவர் மாயை அநாதியான நித்தியப் பொருள் என்று கொள்வர்.
தனு கரணங்கள் உயிரின் அறிவை ஓரளவு விளக்குவதால் மாயையை விளக்கு என்பர் உமாபதிசிவனார். கன்மம் போல மாயையும் உயிரை வந்து அடைவதால் ஆகந்துகமலம் என்பர்.
தனு - உடம்பு, கரணம் - உணர்வுக்குரிய கருவி, புவனம் - வாழுமிடம், போகம் - நுகர்பொருள் என்பனவற்றைப் படைப்பதற்கு முதற் காரணம் மாயை, துணைக்காரணம் சத்தி, நிமித்த காரணம் இறைவன். இறைவன் படைப்புக்கு (சிருட்டிக்கு) முதற் காரணம் என்ற கொள்கை சைவ சித்தாந்தத்திற்கு முரணானது.
இந்துக் கலைக்களஞ்சியம்
 

மல கன்மங்களோடு விரவாது சுத்தமாயிருப்பது சுத்தமாயை எனப்படும். இதற்குக் குடிலை, விந்து, மகாமாயை என்றும் பெயர். சுத்தமாயை சிவதத்துவம், மலகன்மங்களோடு விரவி அசுத்தப்படுவது அசுத்தமாயை. காரியப் பாட்டில் தனு கரண புவன போகம் என்ற நான்காய் நிற்பது அசுத்தமாயை. இது அதோமாயை எனவும்படும்.
அசுத்த மாயையில் வித்தியா தத்துவம், ஆத்ம தத்துவம் என்பன அடங்குவன. வித்தியா தத்தவத்தைச் சுத்தாசுத்த மாயை என்றும் கூறுவதுண்டு. வித்தியாதத்துவத்திற் காலம், நியதி, கலை, வித்தை, அராகம், புருடன், மாயை என்பன அடங்கும்.
ஆத்ம தத்துவம் அந்தக்கரணம், ஞானேந்திரியம், கன்மேந்திரியம், தன் மாத்திரை, பூதம் என்பனவாம். மனம், புத்தி, சித்தம், அகங்காரம், அந்தக்கரணமாம், சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் எனும் புலன் தன் மாத்திரை, மெய், வாய், கண், மூக்கு, செவி எனும் பொறி ஞானேந்திரியம்; நா, கை, கால், குதம், குறி கர்மேந்திரியம்; நிலம், நீர், தீ, வளி, வான், ஆகியவை பூதங்களாம்.
சுத்தமாயையாம் சிவதத்துவங்கள் ஆன்மாவுக்கு மெய்யுணர்வு விளக்கத்திற்கு உபகாரமாய் நிற்பன. வித்தியா தத்துவங்கள் சம நிலையில் நின்று மெய்யுணர்வு விளக்கத்திற்கு உதவுவதோடு வினைகளைச் செய்யவும் பயனை நுகரவும் தூண்டுவனவாயும் உதவும். அசுத்தமாயையாம் ஆன்மதத்துவம் ஆணவத்தின் சார்பாய் அறியாமையை விடுவித்து வினைகளைப் பெருக்க உதவும். (பொ.யூ.)
33rajé1D35 uTasib
அசுவத்தை (குதிரையை) முக்கியமாகக் கொண்டு செய்யப்படும் வேள்வி அசுவமேத யாகமாகும். பிரம்மா தான் முதன் முதலாக அசுவமேதயாகம் செய்ததாகக் கூறப்படுகின்றது. பிரயாகையிலும் பின்பு வாரணாசியிலும் பிரம்மா அஸ்வமேதயாகம் செய்த இடங்கள் இன்றும் புனித நீர்த்துறைகளாகக் காட்டப்படுகின்றன.
வேத காலத்திலிருந்து வரலாற்றுக் காலம் வரை அரசர்கள் அசுவமேதயாகம் செய்த செய்திகள் நூல்களிலே குறிக்கப் படுவன. சதபத பிராமணம் சனகன், பரீச்சித்து, பீமசேனன், உக்கிரசேனன், சுருதசேனன் என்போர் அசுவமேதயாகம் செய்ததாகக் குறிப்பிடுகின்றது.
அஸ்வமேத யாகம் செய்த இந்திய மன்னர் பலர். அவர்கள் பல்வேறு காலப்பகுதிகளையும், பிரதேசங்களையும் வம்சங் களையுஞ் சேர்ந்தவர்கள். பாண்டவர்களின் அஸ்வமேத யாகம் பற்றி மகாபாரதத்திலே குறிப்புண்டு. யஜாதி, ஜனமேஜய, பரீகூழித் ஆகியோர் செய்த அஸ்வமேத யாகங்களைப் பற்றிப் பெளராணிகமான குறிப்புகள் உண்டு.
வரலாற்றுக் காலத்தில் அந்த யாகத்தைச் செய்த மன்னர்களிற் புஷ்யமித்திர சுங்கன் முதன்மை பெறுகின்றான்.
23

Page 70
அவன் இரண்டு அஸ்வமேதங்களைச் செய்தானென்று சொல்லப் படுகின்றது. நான்காம் நூற்றாண்டிலே குப்தப்பேரரசின் ஸ்தாபகனாகிய சமுத்திரகுப்தன் அஸ்வமேத யாகஞ்செய்தான். அவனைப் புகழ்ந்து கூறும் அல்லாஹாபாத் மெய்கீர்த்தியில் நெடுங்காலமாக வழக்கற்றுப் போய்விட்ட அஸ்வமேத யாகத்தை அவன் செய்வித்தான் என்று சொல்லப்படுகின்றது. அவன் அஸ்வமேத யாகஞ் செய்தமையினை நினைவு கூரும் வண்ணமாக நாணயங்கள் வெளியிடப்பட்டன. அவற்றின் ஒரு புறத்திலே குதிரையின் உருவமும் யாகத் தம்பமும் சித்திரிக்கப்பட்டுள்ளன. மறுபக்கத்தில் மகாராணியின் உருவம் அமைந்துள்ளது. அதன் பின் குமாரகுப்தனின் ஆட்சியிலும் (415-455) ஒரு அஸ்வமேத யாகம் நடைபெற்றது. அது முடிந்ததும் குமாரகுப்தன் மகேந்திராதித்தன் என்னும் பட்டப்பெயரைச் சூடிக்கொண்டான்.
ஆறாம் நூற்றாண்டின் முற்பகுதியில் காமரூபத்து மன்னர்களால் அஸ்வமேத யாகஞ் செய்யப்பட்டது. அவர்களில் ஒருவனான நாராயணவர்மன் இரு அஸ்வமேத யாகங்களைச் செய்வித்தான் என்பதை அரசரால் வழங்கப்பட்ட முத்திரை மூலம் அறிய முடிகின்றது. அதன் பின்பு ஸ்திரவர்மன் என்னும் அரசன் இரண்டு அஸ்வமேத யாகங்களைச் செய்வித்தானென்று சொல்லப்படுகின்றது.
மாளவ அரசனாகிய ஆதித்த சேனன் என்னும் பிந்திய குப்த மன்னன் மகாராஜாதிராஜ என்னும் பட்டத்தைச் சூடிக் கொண்டதோடு மூன்று அஸ்வமேத யாகங்களையுஞ் செய்தானென்பது சாசனக்குறிப்பால் அறியப்படும். கலிங்க தேசத்தில் ஆட்சி புரிந்த சைன்யபட்டன் (619-659) தனது வலிமையைப் பிரகடனப் படுத்தும் வண்ணமாக அஸ்வமேதம் முதலான வேள்விகளைச் செய்தான்.
ஆந்திர தேசத்தின்மீது குப்தர் படையெடுப்பதற்கு முன் ஆட்சி புரிந்த சாலங்காயன குலத்து அரசன் தேவவர்மன் அஸ்வமேத யாகஞ் செய்தமை பற்றிச் செப்பேட்டு வாசகமொன்றிலே கூறப்படுகின்றது. விஷ்ணுகுண்டின வம்சத்து முதலாம் மாதவவர்மன் பதினொரு அஸ்வமேதங்களைச் செய்தானென்று அவனது வம்சத்தவர்களின் சாசனங்களிற் சொல்லப்படுகின்றது. தகூதிணாபதத்தின் ஒரு பகுதியிலே சாளுக்கிய வம்சத்தவரின் ஆட்சியை உறுதியாக ஏற்படுத்திய முதலாம் புலிகேசி (535-566) அஸ்வமேதம், அக்னிஷ்டோமம் அக்னிசயனம், வாஜபேயம், ஹிரண்ய கர்ப்பம் முதலியவற்றைக் செய்தானென்று சாளுக்கியரின் சாசனங்கள் கூறும். காஞ்சிப் பல்லவர்களிற் சிலர் தர்ம மகாராஜ, அஸ்வமேதயாஜி என்னும் விருதுப் பெயர்களைக் கொண்டிருந்தனர். ஆதிகால பல்லவர்களில் ஒருவனான சிவஸ்கந்தவர்மன் அஸ்வமேத யாகப் செய்தான். பல்லவ மல்லனாகிய இரண்டாம் நந்திவர்மனின் உதயேந்திரம் செப்பேடுகளில் அஸ்வமேதம் பற்றிய குறிப்புண்டு வாகாடக மன்னரிற் சிறந்தவனான முதலாம் பிரவரசேனன் அஸ்வமேத யாகஞ்செய்து சாம்ராட் (பேரரசன்) என்ற பட்டத்தையுஞ் சூடிக் கொண்டான்.
24

சமீபகாலத்திலே ஆந்திரப் பிரதேசத்திலும் வட இந்தியாவிலும் மக்களுடைய நல்வாழ்வு கருதி இறையருள் வேண்டி சிறிய அளவில் அசுவமேத யாகம் செய்யப்பட்டுள்ளது.
அசுவமேதயாகம் உலகினைக் காக்கும் மூர்த்தியாகிய மகாவிஷ்ணுவின் அருள்வேண்டி இயற்றப்படுவதாகக் கூறுவர் சிலர். மகாவிஷ்ணுவுக்கு அயக்கிரீவர் எனும் அவதாரம் ஒன்றுண்டு. இந்த அவதாரத்திலே அவர் குதிரை முகத்துடன் தோன்றினார். தசாவதாரத்தின் கடைசி அவதாரம் கல்கி அவதாரம் என்பர். இந்த அவதாரத்திலும் அவர் குதிரை வடிவம் பெறுவர் என்று கருதப்படுகின்றது. அசுவமேத யாகத்திலே அசுவம் முக்கியத்துவம் பெறுவதால் இந்த யாகம் மகாவிஷ்ணுவை நோக்கிச் செய்யப்படுவது என்பதிலே பொருத்தமுண்டு.
அம்பாள் லலிதா திரிசதியில் “ஹயமேதஸ மர்ச்சிதா” எனப் போற்றப்படுகிறாள். அசுவமேதயாகத்தால் நன்கு ஆராதிக்கப் பெறுபவள் என்பது இதன் பொருள்.
சகல உலகங்களிலுமுள்ள இயங்கு நிலைத் திணைகளின் மூலகாரணமும் அவற்றின் விளக்கமுமான வஸ்துவான விராட்புருஷனின் அடையாளம் யாகக் குதிரை என்பாருமுளர் பிரஜாபதியாக யாகக்குதிரை கருதப்படும் என்ற கருத்தும் கவனிக்கத்தக்கது.
ஆயினும் அஸ்வமேதயாகக் கிரியைகளை நோக்கும்போது அவை இந்துக்கள் வணங்கும் பல்வேறு தெய்வங்களின் அநுக்கிரகத்தினையும் வேண்டி நிற்பதைக் காணமுடியும்.
அசுவமேத யாகம் இயற்றப்படும் நோக்கமும் காலத்திற்குக் காலம் வேறுபட்டு வந்துள்ளது. சதுரங்க சேனாபலமும் வீரதீரபராக்கிரமமும் படைத்த அரசன் தன்னுடைய ஆணையை வேற்று மண்ணில் நிலைநாட்ட எடுத்துக் கொண்ட பரீட்சைகளில் அசுவமேதயாகமும் ஒன்றாகக் காணப்படுகின்றது. நூறு அஸ்வமேதயாகம் செய்தவன் இந்திரப் பதவி பெற்று தேவரையும் உலகத்தையும் ஆளமுடியும் என்று நம்பியுள்ளனர். சதபத பிராமணத்தில் அசுவமேதயாகம் செய்தவர் வீரனைப் புதல்வனாகப் பெறுவார் என்று கூறப்பட்டுள்ளது. இராமாயணத்தில் தசரதன் புத்திரப் பேற்றினைக் கொண்டாட அசுவமேதயாகம் செய்துள்ளதாகக் கூறுவர். அவன் பின்பு தன் ஆட்சி அதிகாரம் அதிகரித்த நிலையிலும் அசுவமேதயாகம் செய்துள்ளான். வரலாற்றுக் காலத்து மன்னர் அசுவமேத யாகத்தை ஒரு மாபெரும் காரியமாகக் கருதிச் செய்துள்ளனர். பிரமகத்தி போன்ற கொடிய பாவங்களிலிருந்து நிவர்த்தி பெறவும் அசுவமேத யாகம் உதவுகின்றது என்பர்.
இலங்கையில் மட்டுமன்றி அனைத்துலகிலும் சாந்தி, சமாதானம், சுபீட்சம் நிலவ வேண்டும் என்ற நோக்குடன் ஈழத்திலே 1985,86 இலே மகா அசுவமேத யாகம் செய்யப்பட்டது. இதற்கு முன்பு சிறிய அளவிலே ஆந்திரப் பிரதேசத்திலும் வட
இந்துக் கலைக்களஞ்சியம்

Page 71
இந்தியாவிலும் மக்கள் நல்வாழ்வு கருதி இறையருள் வேண்டி அசுவமேதயாகம் செய்யப்பட்டிருக்கின்றது.
அசுவமேத யாகத்தின் நோக்கம் மாறியதுபோல அதன் கிரியைகளும் மாறி வந்துள்ளன. ஒரு காலத்திலே யாகக் குதிரை யாகத்திலே பலியிடப்பட்டுள்ளது என்று கருதப்படுகின்றது. ஆனால் அண்மையில் ஈழத்தில் நடந்த மகாயாகத்தில் யாகக் குதிரையை முன்னிறுத்திக் கிரியைகள் செய்தார்களேயன்றி யாகக் குதிரையைப் பலியிடவில்லை. பலியாக நீற்றுப் பூசணிக்காய் அக்கினிக்கு வழங்கப்பட்டது. இவ்வாறு செய்வதற்கு ஆதாரம் உண்டு என்பதை வலியுறுத்த வேண்டியதில்லை. உயிர்ப்பலி அவைதிக மதங்களின் எழுச்சிக் காலத்திலிருந்து பொதுவாகத் தவிர்க்கப்பட்டு வந்துள்ளது. ஈழத்தில் உயிர்ப்பலி சட்டத்தின் மூலம் தவிர்க்கப்பட்டுள்ளது. காலதேச வர்த்தமானங்களுக்கு ஏற்பக் கிரியைகள் மாறியதையும் மாற வேண்டிய அவசியத்தையும் நாம் காண்கிறோம். யாகக் குதிரையை யாகம் முடிந்த பின்பு திருக்கோயிலுக்குத் தானமாக ஈழத்திலே வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
அசுவமேத யாகத்தின்போது யாகக் குதிரை முதலிலே வேற்று நாடுகள் ஊடாகச் செலுத்தப்பட்டபோது அதனை வரவேற்காதவரோடு போர் ஏற்பட்டது என்றும் அப்போரிலே யாகம் செய்யும் மன்னன் தோல்வியடையின் பெரும் அவமானத்திற்கு ஆளாவான் என்றும் கருதப்படுவதற்கு மாறாக யாகக் குதிரை யாகத்திலே கலந்து கொள்ள வேண்டி விடுத்த அழைப்பாகவும் கருதப்படுகின்றது.
அசுவமேத யாகத்தின் கிரியைகள் தோற்றக் காலத்திலே இருந்து மாறி வந்துள்ளன. ஈழத்திலே நிறைவேற்றிய அசுவமேத யாகத்தின் கிரியைகள் கும்பகோணம் அக்னி கோத்திரம், பூரீ இராமானுசதாத்தாச்சாரியரால் வகுத்துக் கொடுக்கப்பட்டவை. அதற்குக் காஞ்சி காமகோடி பீடாதிபதி பூரீ சந்திரசேரேந்திர சரஸ்வதி சுவாமிகள் காலாக இருந்தார்கள்.
இந்துக்களிடையே நடைபெற்று வந்த வழிபாட்டு முறைகளும் கிரியைகளும் காலதேச வர்த்தமானத்திற்கேற்ப அமைய வேண்டிய அவசியத்தை உணர்த்தி அவற்றை மனங்குன்றாது செவ்வனே நடாத்திக் காட்ட ஈழம் தன்னாலான பங்கினை அஸ்வமேதயாகம் மூலம் எடுத்துக் காட்டியது குறிப்பிடத்தக்கது.
அசுவினி தேவர்
இருக்கு வேத தெய்வங்களில் இந்திரன், அக்கினி, சோமன் எனும் மூவரை அடுத்து அதிகமான பாடல்களைப் பெறுபவர் அசுவினிதேவர். இவர்கள் மீது சுமார் ஐம்பது சூக்தங்கள் உள்ளன.
இவர்கள் இரட்டையராகக் கூறப்படுவர். இவர்களின் தோற்றம் பற்றி வேறுபட்ட கூற்றுகள் நிலவுகின்றன. பெண்
இந்துக் கலைக்களஞ்சியம்

குதிரை வடிவெடுத்த சரண்யுவை, ஆண்குதிரையாக மாறிச் சூரியன் கூடியதால் அஸ்வினி குமாரர் என்று பெயர் பெற்றனர் என்பது ஒரு கண்த விவஸ்வானின் புதல்வர் என்றும், பூஷனின் புதல்வர் என்றும், வடவையின் புதல்வர் என்றும், விண்ணின் புதல்வர் என்றும், கடலின் அல்லது நீரின் புதல்வர் என்றும் பலவாறு கதைகள் கூறப்படுகின்றன. பூஷனின் தந்தை இவர்கள் என்ற கதையுமுண்டு. நகுலசகாதேவர் இவர்களுடைய புதல்வர் என்று மகாபாரதம் சுட்டுகின்றது.
வைகறையிலே சூரியோதயத்திற்கு முன்பு அசுவினிதேவர் வானிலே தோன்றுவர் என்பர். இருளை அகற்றித் தீயபேய்களை இவர்கள் விரட்டியடிப்பர் என்பர்.
அசுவினி தேவர் தேவர்களுடைய வைத்தியராகவும் பேர் பெறுவர். நற்சுகத்தினை மீட்டளிப்பவராகவும், கண்ணொளி வழங்குபவராகவும் நல்லுருவற்றவருக்கு நல்ல வடிவம் அளிப்பவராகவும், மூழ்கப் போவோரை மீட்பவராகவும், தாமசகுணத்தோரைப் பேணுபவராகவும், முதிர்ந்த பெண்களுக்கு, சிறப்பாக மணஞ் செய்யாத பெண்களுக்கு நண்பராகவும், இளமையை மீட்பவராகவும், காதலுக்கும் திருமணத்திற்கும் தலைமை வகிப்பவராகவும், காதலரைச் சேர்த்து வைப்பவராகவும் சித்திரயுத்தத்தில் வல்லவராகவும் இடையூறுகளால் அவதிப் படுவோருக்கு உதவுபவராகவும் அசுவினிதேவர் காட்டப் படுகின்றனர்.
அசுவினி தேவர் என்றும் இளமையோடு சுறுசுறுப்பாக இயங்குபவராகவும் நித்திய ஒளிவீசும் பொன் மயமான நிறத்தவராகவும் காட்டப்படுகின்றனர். தாம் விரும்பும் எவ்வடிவினையும் எடுக்கும் ஆற்றல் அவர்களுக்கு உண்டு.
முச்சக்கரமுடைய அவர்களுடைய பொற்றேர், குதிரைகளால் அல்லது பறவைகளால் இழுக்கப்படுகின்றது.
முகங்கள் நீங்கலாகக் குதிரை வடிவிலே இருவரும் ஒருமித்துச் சிங்கபீடத்தில் வீற்றிருப்பதாகச் சித்திரிக்கப்படுவர்.
நட்சத்திர வரிசையிலும் அசுவினி தேவருக்கு இடமுண்டு.
ஒருசமயம் சூரியன் தன்மகள் சூர்யாவிற்கு விவாகம் நடத்த ஒரு பந்தயம் வைத்தான். தேர் ஒட்டுவதில் எவன் முன்நிற் கிறானோ அவனுக்கே என் மகளைத் தருவேன் என்று நிபந்தனை விதித்தான். அதன்படி அச்வினி தேவர்கள் போட்டியில் வென்றனர். ஆனால் தமக்குப் பின்பாக வந்த ஸோமனுக்கு சூர்யாவிடம் இருந்த காதலை அறிந்து சற்றும் தயங்காமல் ஸோமனையே மணமகனாக்கினர்.
இப்படிப்பட்ட தியாக எண்ணம் நிறைந்த அச்சுவினி தேவர்களும் காதல் வயப்பட்டதை சதபதப்ராமணம் கூறும். வயது முதிர்ந்த சியவன முனிவரை கட்டழகி சுகன்யா நாடு நலமுறும் பொருட்டு மணந்து கொண்டாள். அவளது அழகிலே தம்மைப் பறிகொடுத்தனர் அசுவினி தேவர்கள். நரை, திரை முதிர்ந்த
25

Page 72
அக்கிழவரை விட்டுத் தங்களை மணந்து கொள்ளும்படி மன்றாடினர். "உங்களிடமே குறையை வைத்துக் கொண்டு எனது பதியின் கிழத்தன்மையிலா குற்றம் காண்கிறீர்கள். செல்லுங்கள் இங்கிருந்து'என்று சினந்து கூறினாள் சுகன்யா,
உங்களிடம் குறை உள்ளது என்ற சுகன்யாவின் உரை இரட்டையரைச் சிந்திக்க வைத்தது. தங்களிடம் காணப்படும் குறையாது என வினவினர். “முதலில் எனது கணவரின் கிழத்தன்மையை நீக்குங்கள் பிறகு சொல்கிறேன்” என்றாள். அசுவினி தேவர்களும் சியவன மகரிஷியை ஒரு தீர்த்தத்தில் மூழ்கி எழச் சொன்னார்கள். மூழ்கி எழுந்த முனிவர் அசுவினி தேவரையும் விஞ்சும் எழில் கொண்ட வாலிபனாக மாறினார். தனது கணவனின் மாற்றத்தில் மனம் மகிழ்ந்த சுகன்யை, அசுவினி தேவர்களை நோக்கி “குருக்ஷேத்ரத்தில் நடைபெறும் யாகத்தில் உங்கள் இருவரைத் தவிர மற்றைய தேவர்களுக்கு அவிபாகம் வழங்கப்படுகின்றது. அவி கிடைக்காதது உங்களுக்குக் குறையல்லவா?” என்று கூற நேரே குருக்ஷேத்திரம் சென்றவர்கள் தங்களது அவி பாகத்தைக் கேட்டனர். அதற்கு அங்கு குழுமியிருந்த தேவர்கள் நீங்கள் மானுடருடன் பழகி அவர்களது துயரங்களைப் போக்கி வருவதால் தேவ கணங்களிடை உங்களுக்கு இடமில்லை என்று கடிந்து கூற “எளிமைக்கும், அன்பிற்கும், கருணைக்கும் தேவருலகில் இடமில்லையென்றால் இந்த யாகமே தலையற்ற முண்டம் தான்” எனச்சினக்க, தேவர்கள் தங்கள் தவறுணர்ந்து அசுவினி தேவர்களை தங்களுக்கு சமதையாக்கி அவிர்பாகமும் அளித்தனர்.
அசுவினி தேவரில் ஒருவன் விண்ணையும் பகலையும், சூரியனையும் உருவகிப்பவன். மற்றவன் மண்ணையும் இரவையும் சந்திரனையும் உருவகிப்பவன். உஷை என்னும் வைகறைக் கன்னி உலகுக்கு வருமுன் மேக மீதேறிச் சென்று அவளுக்காக விண்ணுலகக் கீழ் வாயிலைத் திறந்து வைப்பவர்கள் அசுவினி தேவர்களே. (வ. வை.)
அஞ்சைக்களம்
சுந்தரமூர்த்தி சுவாமிகள் “மாகோதை அணியார் பொழில்
அஞ்சைக்களத்து அப்பனே' என்று பாடியுள்ளார்.
மாகோதை சேர ராசதானியாகிய கொடுங்கோளூரின் பரியாய நாமம்; பெரிய சேரமான்.
கொடுங்கோளூர் : சேர நாட்டில் இத்தலத்துக்குச் சமீபத்தில் உள்ளதோரூர், இக்காலத்துக் கொடுங்கலூரென்று வழங்குகிறது.
ஸ்வாமி வஞ்சிக் குளேசுவரர் ஸந்நிதி : கிழக்கு அம்பிகை : பார்வதி
திருச்சூரிலிருந்து கொடுங்கோளூர் போகும் பஸ் ஏறிக் கொடுங்கோளூருக்கு எதிர்கரையில் இறங்கி உப்பங்கழி வழியே
26

வஞ்சி (சிறுபடகு) அமர்த்தி நேரே (அம்பலம்) கோயிலுக்குப் போகலாம். கொடுங்கோளூர் சென்று சேரன் செங்குட்டுவன் எடுப்பித்த கண்ணகி கோயில் என்று கருதப்படும் பகவதி கோயிலைத் தரிசித்து பஸ் முலம் அம்பலம் சேரலாம். நீராடி ஈர உடையுடனாவது அல்லது பட்டுடனயுடனாவது செல்லவேண்டும். அஞ்சைக்களத்தப்பர் சில அங்குல உயரமே உள்ளார். தலைக்குத் தலைமாலை என்னும் பாசுரம் கூறுவதைத் திருமேனியின் சிரசில் தரிசிக்கலாம்.
முதற் பிரகாரத்தில் ஒரு சிறு அறையில் சேரமான் பெருமாள் நாயனாரும், சுந்தரரும் செப்புத் திருமேனிகளாகப் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கின்றனர். ஆடிச்சுவாதியன்று தமிழ்மக்கள் திரளாகக் கூடுகின்றனர். இங்கிருந்து சுந்தரமூர்த்தி நாயனார் வெள்ளானை மீது கயிலாயம் சென்றனர். சுவாமி பெயர் : அஞ்சைக் களத்தீசர், வஞ்சிக்குளேசுவரர், அம்பிகை உமையம்மை சந்நிதி: கிழக்கு, தீர்த்தம் சிவகங்கை, சுந்தரர் பாடிய தலம்.
தலைக்குத்தலை மாலை அணிந்ததென்னே
சடைமேற்கங்கை வெள்ளம் தரித்ததென்னே அலைக்கும்புலித் தோல்கொண் டசைத்ததென்னே
அதன்மேற்கத நாகங்கச் சார்த்ததென்னே மலைக்குநிகர் ஒப்பனவன் திரைகள்
வலித்தெற்றி முழங்கி வலம்புரிகொண் டலைக்குங் கடலங்கரைமேல் மகோதை
அணியார்பொழில் அஞ்சைக் களத்தப்பனே
(சுந்தரர்) (உ. வே. சா.)
அஞ்ஞானக் கும்மி மறுப்பு
அஞ்ஞானக் கும்மி மறுப்பு எனப் பொதுவாக வழங்கும்
கிறிஸ்த அஞ்ஞானக் கும்மி மறுப்பு கொக்குவில் சி. சிலம்புநாத பிள்ளையாற் பாடப்பெற்றதாகும்.
சுன்னாகம் அ. முத்துக்குமார கவிராயர் பத்தொன்பதாம் நூற்றாண்டின் ஆரம்ப தசாப்தங்களிலே வாழ்ந்தவர். அவர் யாழ்ப்பாணத்திலே நடைபெற்ற கிறித்தவப் பரம்பலைக் கண்டு, அதனைக் கண்டித்துப் பாடியது ஞானக்கும்மி. அதனை பூரீ ஆறுமுகநாவலர், நல்லூர் சி. விநாயகமூர்த்திச் செட்டியார் பேரால் வெளிப்படுத்தினார்; அவர் இரண்டாவது முறையாக ஆங்கீரச வருடம் ஆனி மாதம் (1872) அதனை வெளிப்படுத்தியுள்ளார்.
தருமபுரவாதீனத் தம்பிரானாய் ஆறுமுகத்தம்பிரான் என்று விளங்கி 1836 இலே கிறிஸ்தவத்தைத் தழுவி வெஸ்லி ஆபிரகாம் என்ற பெயரைத் தாங்கியவர் ஞானக் கும்மியை மறுத்து அஞ்ஞானக் கும்மி பாடினார். அது 1878 இலே வெளிவந்தது.
அஞ்ஞானக் கும்மியை மறுத்துச் சிலம்புநாதபிள்ளை பாடியதே அஞ்ஞானக் கும்மி மறுப்பு. இது கொழும்பு புதினாலங்காரி அச்சுக் கூடத்திலே பதிப்பிக்கப்பட்டது.
இந்துக் கலைக்களஞ்சியம்

Page 73
பதிப்பாண்டு நூலிலே சுட்டப்படாவிடினும் 1878 க்கும் 1880 க்கும் இடையிலே அது பதிப்பிக்கப்பட்டது என்று துணியலாம். ஆசிரியருடைய ஒமையந்தாதிப் பதிப்பிலே (1880) இந்நூல் குறிப்பாகச் சொல்லப்படுகின்றது.
கிறிஸ்தவ மதப் பரம்பலை எதிர்த்து எழுந்த ஞானக் கும்மியும் அஞ்ஞானக் கும்மி மறுப்பும் அக்காலத்திலே மத மாற்ற நடவடிக்கைகள் அமைந்திருந்தவாற்றினைத் தெளிவாக எடுத்துக் காட்டுகின்றன. (பொ.பூ.)
அஞ்ளுைவதைப் பரணி
அஞ்ஞானமாம் அரசனையும் அகங்காரம் முதிலியனவாய் யானை முதலிய படைகளையும் ஞானமாம் பகைவன் அழித்ததாக உருவகித்துப் பாடப்பெற்றது அஞ்ஞைவதைப் பரணி. சொரூபானந்தர் எனும் தம் ஞானகுருவின் கீர்த்தியையும் சிறப்பையும் கூற எடுத்துக் கொண்ட பிரபந்தமான பரணியிலே ஆதிசங்கரரின் வேதாந்த தத்துவக் கருத்துக்கள் அடிப்படையாக அமைவன என்பர். தமிழ் நாட்டில் வேதாந்தம் கற்பவர்கள் படிக்கும் பதினாறு நூல்களிலே அஞ்ளுைவதைப் பரணி பத்தாவதாகும்.
இப்பரணிக்கு அஞ்ஞானவதைப் பரணி, ஞானவதைப்பரணி, ஞானப்பரணி என்ற பெயர்களுமுள; இதனுள் ஏறக்குறைய 500 தாழிசைகளுள.
இப்பரணியைப் பாடியவர் தத்துவராயசுவாமிகளாவர். இவர் பதினான்காம் நூற்றாண்டுக்கும் பதினாறாம் நூற்றாண்டுக்கும் உட்படும் காலகட்டத்தில் வாழ்ந்தவர்.
இப்பரணியினைப் பாடியவர் தத்துவராயரல்லர் அவர் மாணவர் சோதிப்பிரகாசர் என்பர் சிலர்.
சண்முகசுந்தரமுதலியார் 1869 இலே பதிப்பித்த தத்துவராயர் அடங்கன் முறையிலே அஞ்ஞைவதைப் பரணி இடம் பெறுகின்றது. (பொ.யூ.)
©ນະນ ຫrtນມີ1 ຫຼ601)
வைணவர்கள் எட்டுத் திருப்பதிகளை “ஸ்வயம் விக்தஸ்தலம்’ என்று கொள்வர். இவ்வெட்டினையும் இந்தியா விலுள்ள வடநாட்டவர் எண் வைகுண்டங்களாகக் கருதுவர். இவற்றிலே நான்கு வடநாட்டுக்குரியவை; நான்கு தென் னாட்டுக்குரியவை.
வடநாட்டு வைகுண்டங்கள் பதரிகாசிரமம். சாளக்கிராமம், நைமிசாரணியம், புட்கரம் என்பனவாம்.
பதரிகாசிரமம், ரிஷிகேசத்திலிருந்து இமயமலை மீது 170 மைல் தொலைவிலும் அரித்துவாரத்திலிருந்து 183மைல்
இந்துக் கலைக்களஞ்சியம்

தொலைவிலும் உள்ளது. பதரி மரத்தின் (இலந்தை மரம்) கீழிருந்து நரனுக்குத் திருமந்திரத்தை உபதேசித்ததலமிது. இங்கு வீற்றிருந்த திருக்கோலத்தில் உள்ளவர் பதரி நாராயணர்; பிராட்டியாரின் திருநாமம் அரவிந்தவல்லி நாச்சியார். இங்குள்ள கடவுள் தப்தரூபி (உஷ்ணரூபி). இங்கு உஷ்ணமாய் மலையினுள்ளிருந்து வெளிவரும் நீரருவியுண்டு. பதரி நாதனைப் பெரியாழ்வாரும் திருமங்கையாழ்வாரும் மங்களா சாசனம் செய்துள்ளனர்.
சாளக்கிராமம் நேபாளத்திலுள்ள திருப்பதி, காட்மண்டுக்கு மேற்கே கண்டகி நதியின் கரையிலுள்ளது. இங்கு நின்ற திருக்கோலத்தில் எழுந்தருளிய திருமாலுக்கு பூரீ மூர்த்தி என்றும் பிராட்டியாருக்கு பூரீதேவி என்றும் பெயர். பெரியாழ்வாரும் திருமங்கையாழ்வாரும் மங்களாசாசனம் செய்துள்ள திருப்பதியிது.
நைமிசாரணியம் கிழக்கிந்திய இரும்புப் பாதையில் நிம்சார் எனும் நிலையத்திலிருந்து ஒருமைல் தொலைவிலுள்ளது. இங்கு முனிவர் பலர் தவஞ் செய்துள்ளனர். இங்கு நின்ற திருக் கோலத்தில் எழுந்தருளிய திருமாலுக்குத் தேவராஜன் என்றும் பிராட்டியாருக்குஅரிலசுஷ்மி, புண்டரீக வல்லி என்றும் பெயர். இப்போது சந்நிதி புலப்படவில்லை. ஆரண்யத்தையே கடவுளாக வழிபடுகின்றனர். திருமங்கையாழ்வார் மங்களா சாசனம் செய்துள்ளார்.
புஷ்கரம் என்னும் திருப்பதி அஜ்மீரிலிருந்து கிழக்கே எட்டுமைல் தொலைவிலுள்ளது. இங்கு கடவுள் தீர்த்தரூபி, ஒரு பெரிய குளம் இருக்கிறது. அதற்கே பூசையும் நடக்கிறது.
தென்னாட்டு வைகுண்டங்கள் திருவேங்கடம், பூநீரங்கம், வானமாமலை, பூரீமுஷ்ணம் என்பனவாகும்.
திருப்பதி, திருமலை என்றும் திருவேங்கடம் வழங்கும். ஆந்திர பிரதேசத்தில் உள்ள மிக்க பிரபலமான பிரார்த்தனைத் தலம். திருவேங்கடத்தான், பூரீ நிவாசன், வேங்கடாசலபதி, பாலாஜி என்று நின்ற கோலத்தில் எழுந்தருளிய திருமால் பெயர் பெறுவர்; பிராட்டியார் அலர்மேல் மங்கைத் தாயார், பத்மாவதி எனப் பெயர் பெறுவர். தொண்டரடிப் பொடியாழ்வார் நீங்கலாக ஆழ்வார் யாவரும் மங்களாசாசனம் செய்த திருப்பதியிது.
திருச்சி மாவட்டத்திலே திருச்சிக்கு வடக்கே மூன்று மைல் தொலைவிலே அமைந்த திருவரங்கம் “கோயில்” என்று வைணவராற் சிறப்பிக்கப்படுவது. காவிரி, கொள்ளிட நதிகளின் மத்தியில் அமைந்தது. இங்கு கிடந்த திருக்கோலத்திலே அருள்புரியும் விஷ்ணுவுக்கு ரங்கநாதன், நம்பெருமாள், பெரிய பெருமாள் என்றும் பிராட்டியாருக்குச் பூரீ ரங்கநாச்சியார் என்றும் பேர். மதுரகவியாழ்வார் நீங்கலாக ஏனைய ஆழ்வார் யாவராலும் மங்களாசாசனம் செய்யப் பெற்ற சிறப்புடைய தலம் ஆழ்வார்களுடைய 247 திருப்பாசுரம் பெற்ற பெருமையுடையது.

Page 74
வானமாமலை என்னும் திருப்பதிக்குச் சிரீவரமங்கை, நாங்குனேரி, தோதாத்திரி என்றும் பெயர்களுள. திருநெல் வேலிக்குத் தெற்கே பதினெட்டு மைல் தொலைவில் நாகர் கோயில் போகும் பாதையில் உள்ளது. திருமாலுக்கு வானமாமலைப் பெருமாள், தோதாத்திரி நாதன், தெய்வநாயகன் என்றும் பெரிய பிராட்டியாருக்கு சிரீவரமங்கை நாச்சியார் என்றும் பெயர். இங்கு வீற்றிருந்த கோலத்தில் பெருமாள் அருள்புரிகிறார். நம்மாழ்வாழ் மங்களாசாசனம் செய்த திருப்பதியிது.
பூரீ முஷ்ணம் சிதம்பரத்திற்கு மேற்கே இருபத்தைந்து மைல் தொலைவிலுள்ளது. இங்கு பூரீ பூவராகஸ்வாமி சந்நிதியுண்டு. மூலவர் சாளக்கிராமசிலை, வராகரூபம், உற்சவர் யஜ்யவராக ஸ்வாமி புருஷரூபம்.
சைவர்கள் சப்த விடங்கத் தலங்களாக நள்ளாறு, நாகைக்காரோணம், காறாயில், கோளிலி, வாய்மூர், மறைக்காடு, ஆரூர் எனும் ஏழு திருத்தலங்களையும் கொள்வர். டங்கர், உளியால் செய்யப்பட்டவர்; விடங்கர் உளியால் செய்யப்படாதவர்; அதாவது சுயம்புவாகவுள்ளவர். இவ்வேழு திருத்தலங்களிலுள்ள விடங்கருக்கு முறையே நக விடங்கர், சுந்தர விடங்கர், ஆதிவிடங்கர், அவனிவிடங்கர், நீலவிடங்கர், புவனிவிடங்கர், வீதிவிடங்கர் என்று பெயர்கள் உள்ளன. மேலும் இவ்விடங் களுக்கு முறையே உன்மத்த நடனம், பராவாரதரங்க நடனம், குக்குடநடனம், பிருங்கநடனம், கமலநடனம், ஹம்ஸபாத நடனம், அஜபாத நடனம் என ஏழு நடனங்களும் உரியவையாகக் கூறப்படுவன.
தான்தோன்றியீச்சுரமாகப் பல சைவத் தலங்கள் இந்தியாவில் உள்ளன. ஈழத்திலே கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் கோயிலும், ஒட்டு சுட்டான் தான்தோன்றீஸ் வரர் கோயிலும் பிரசித்தமானவை. கொக்கட்டிச்சோலை மட்டக்களப்பு மாவட்டத்திலும் ஒட்டுசுட்டான் முல்லைத்தீவு மாவட்டத்திலும் உள்ளவை. (பொ. பூ)
அட்ட திக்குப் பாலகர்
கிழக்கு, தென்கிழக்கு, தெற்கு, தென் மேற்கு, மேற்கு, வடமேற்கு, வடக்கு, வடகிழக்கு என எட்டுத் திசைகளாக வைத்து அவற்றிற்கு முறையே இந்திரன், அக்கினி, யமன், நிருதி, வருணன், வாயு, குபேரன், ஈசானான் எனும் எண்மரைப் பாலகராகக் கொள்வது வழமை.
இந்திரன் ஐராவதயானையிலே வச்சிராயுதத்துடனும், அக்கினி ஆட்டு வாகனத்திலே சக்தி எனும் ஆயுதத்துடனும், யமன் எருமைக்கடாவிலே தண்டம், பாசம், குடாரம் அல்லது சுரிகையுடனும், நிருதி நரவாகனத்தில் அல்லது பூதவாகனத்தில் குந்தம் அல்லது வாளுடனும், வருணன் மகர வாகனத்திலே பாசத்துடனும், வாயு மான் வாகனத்தில் துவசத்துடனும், குபேரன் நரவாகனம், குதிரை அல்லது கிளியில் கட்கத்துடனும், ஈசானன் இடபத்திலே திரிசூலத்துடனும் சித்திரிக்கப்படுவர்.
28

SILLIDT Fö8
அட்டமாசித்தி என்று மரபாகக் கருதப்படும் எட்டுச் சித்திகளையும் அடைந்தவர் சித்தர் என்று பொது வழக்கிலே கருதப்படுவர். இவை இயற்கையிகந்தனவும் அற்புதத்தன்மை உடையனவுமான திறமைகளாம். இவை யோகப் பயிற்சியால் அடையப் பெறுபவை.
இவை அணிமா, மகிமா, லகிமா, கரிமா, பிராப்தி, பிராகாமியம், ஈசத்துவம், வசித்துவம் என்பனவாம். அணிமா, அணுவைப் போற் சிறிதாதல்; மகிமா, மேருவைப் போற் பெரிதாதல், லகிமா, காற்றைப் போல் இலேசாயிருத்தல்; கரிமா பொன்போற்பழுவாதல்; பிராப்தி எல்லாவற்றையும் ஆளுதல்; பிராகாமியம் கூடுவிட்டுக் கூடுபாய்தல்; ஈசத்துவம், விரும்பியவற்றைச் செய்து முடித்து அனுபவித்தல்; வசித்துவம் எல்லாவற்றையும் வசப்படுத்தல்.
சம்பந்தப் பெருமான் அட்டமாசித்திகள்' என்பதை எடுத்தாள்வார் (3.36.11), “எம்மை உணர்ந்த யோகியர்கள் இவற்றை விரும்பார்” என அட்டமாசித்தி உபதேசித்த திருவிளை யாடலிற் கூறப்படுகின்றது.
உண்மையோகி, இராசயோகப் பயிற்சியால் உண்டாகும் இச்சித்திகள், சித்த சலனத்தை ஏற்படுத்தி முத்திக்குத் தடையாம் என்பதை அறிந்து வெளிப்படுத்தார்; சித்திகள் தன்னுடைய
ஏவலைக் கேட்கத் தக்க நிலையில் ஒழுகி உய்வடைவர்.
(பொ. பூ)
அட்டமூர்த்தி
நீலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம், சூரியன், சந்திரன், ஆன்மா எனும் எட்டும் சிவபெருமானுடைய அஷ்ட மூர்த்தங்களாம். இவற்றை அதிட்டிப்பவர் அப்பரம்பொருளே யாவர். உலகத்தவர், உண்மைப் பொருளாய் நிற்பவர் தாம் என்று அறிந்து உய்யும்படி சிவபெருமான் அட்ட மூர்த்தியாய் நிற்கிறார்.
பிருதிவிரூபமாகிய விக்கிரக வணக்கமும், கங்கை முதலிய தீர்த்த வணக்கமும், நித்திய நைமித்தியங்களிற் செய்யப்படும் அக்கினி வணக்கமும், பஞ்ச பூததலங்களிற் செய்யப்படும் பஞ்ச பூதலிங்க வணக்கமும், சிவபூஜை முதலியவற்றிற் செய்யப்படும் சூரிய சந்திர வணக்கமும், குருவையும் சிவனடியார்களையும் பிராமணர் முதலிய பெரியோர்களையும் சிவபெருமானாகப் பாவித்து வணங்கும் வணக்கமும் சிவபெருமானின் அஷ்ட மூர்த்த வணக்கமாம்.
"எண்வகை மூர்த்தி யென்பதிவ் வுலகினி லுண்மை யானென வுணர்த்திய வாறே."
என்பது பதினோராந் திருமுறை. அப்பர் சுவாமிகள்
இந்துக் கலைக்களஞ்சியம்

Page 75
இரு நிலனாய்த் தீயாகிநீரு மாகி
யியமான னாயெறியுங் காற்று மாகி அருநிலைய திங்களாய் ஞாயிறாகி
யாகாச மாயட்ட மூர்த்தியாகிப் பெருநலமுங் குற்றமும் பெண்ணு மானும்
பிறருருவு தம் முருவுந் தாமே யாகி நெருந லையா யின்றாகி நாளை யாகி
நிமிர்புன் சடையடிக ணின்ற வாறே'
என்று இந்நிலையைப் பாடியுள்ளார். மாணிக்கவாசகரும் ("நிலநீர் நெருப்புயிர்') காரைக்காலம்மையாரும் ("அவனேயிருசுடர்') இதனைப் பாடியுள்ளார்.
உலகமனைத்தும் சிவசொரூபம் எனும் தத்துவத்தினை உணர்த்துவது அட்டமூர்த்தி. (பொ. பூ)
©ນວນຶ່ງນະນmomb
சிவபிரானின் வீரச் செயல்கள் நிகழ்ந்த எட்டு இடங்கள் அட்டவீரட்டானம் எனத் தொகுத்து வழங்கப் பெறுவன. இவ்வழக்கு திருஞான சம்பந்தர் காலத்திலேயே காணப் படுகின்றது. "அட்டானம் என்று ஒதிய நாலிரண்டும்” என்பர் அவர் (2.39.3).
கண்டியூர் வீரட்டம் தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ளது; தஞ்சாவூர் இருப்புப் பாதை நிலையத்திலிருந்து திருவை யாற்றுக்குப் போகும் பெருவழியிலே தஞ்சையிலிருந்து ஆறு மைல் தூரத்திலுள்ளது. இத்தலத்திற்குச் சம்பந்தர் பதிகம் ஒன்றும் (338) அப்பர் பதிகம் ஒன்றும் (4.93) ஆக இருபதிகங்கள் உண்டு. இறைவர் பெயர் வீரட்டேசர். பிரமாவிற்கு இங்கு தனிக் கோயிலுண்டு.
பிரமனின் தலையொன்று அறுபட்ட வீரச்செயல் கண்டியூருடன் தொடர்புறுத்தப்படுகின்றது. பிரமனும் திருமாலும் மேரு மலையில் இருக்கும்போது, முனிவர்கள் சிலர் மும்மூர்த்திகளுக்கும் முதன்மையானவரும் அநாதியாயுள்ளவரும் உயிருக்குயிராய் உள்ளவருமாகிய கடவுள் யார் என்று வினவினர். இருவரும் தாமே பரம்பொருள் என்று கூறிப் போர் விளைவித்தனர். சிவபிரான் சோதி வடிவாய்த் தோன்றி யருளினார். அதையுணர்ந்த திருமால் அகந்தை நீங்கிப் பெருமானை வணங்கினார். பிரமன் வணங்காது இகழ்ந் துரைத்தார். சிவபிரான் வைரவக் கடவுளை உண்டாக்கிப் பிரமனுடைய உச்சித் தலையைக் கிள்ளி ஏந்தச் செய்தார்.
கோவலூர் வீரட்டம் தென்னார்க்காடு மாவட்டத்திலுள்ளது. திருக்கோவலூர் இருப்புப் பாதை நிலையத்திலிருந்து வடக்கே கால்மைல் தூரத்திலுள்ள அறையணி நல்லூரை அடைந்து, அங்கிருந்து பெண்ணையாற்றைக் கடந்து, தென்கரையிலுள்ள இத்தலத்தை அடையலாம். இத்திருத்தலத்திற்குச் சம்பந்தர்
இத்துக் கலைக்களஞ்சியம்

பதிகம் ஒன்றும் (2,100) அப்பர் பதிகம் ஒன்றும் (4:69) ஆக இருபதிகங்களுள. இறைவன் திருநாமம் வீரட்டநாதர்.
கோவலூர் அந்தகாசுரனைக் காய்ந்த தலமாகும். இரணியாட்சகன் மகன் அந்தகாசுரன் சிவபிரானை வழிபட்டு வரம் பெற்றுத் திருமால் முதலிய தேவர்களைப் புறங்கண்டு உலகை ஆண்டு வந்தான். தேவர்கள் அவனுக்குப் பயந்து பெண் வடிவிலே கயிலையிலே இறைவியின் கணங்களோடு வாழ்ந்து வந்தனர். அக்காலத்திற் சிவபிரான் தாருகாவனத்து முனிவர்களைச் சோதிக்கச் சென்றதை அறிந்து அத்தகாசுரன் கயிலைக்குப் போருக்குப் புறப்பட்டு வந்தான். அம்பிகையின் திருவருள் பெற்றுத் திருமால் அனேக பெண்களையுண்டாக்கி அனுப்ப, அவர்களுக்குத் தோற்று அந்தகன் ஓடினான். சிவபிரான் கயிலை மீண்ட பின்பு அந்தகன் தன்னைத் தோற்கடித்த பெண்களைச் சிறைபிடிக்க எண்ணிக் கயிலையை அடைந்தான். அதனைத் தேவர்கள் உணர்த்தச் சிவபிரான் வைரவக் கடவுளை அனுப்பினார். அவர் சென்று அவனைச் சூலத்திற் கோர்த்து நடனம் புரிந்தார். அந்தகாசுரன் அறிவு பெற்றவனாகிச் சூலத்தின் மேலிருந்தே சிவனைத் துதித்தான். வைரவ மூர்த்தியும் மகிழ்ந்து அவனைச் சிவகங்கையில் முழுகுவித்து, அருள் செய்து, பாசத்தை நீக்கினார்.
அதிகை வீரட்டம் தென்னார்க்காடு மாவட்டத்திற் கடலூர்த்தாலுகாவிற் பன்ருட்டி நகரின் பகுதியாக இன்று விளங்குகின்றது. இது பன்ருட்டி இருப்புப் பாதை நிலையத்திலிருந்து தென் மேற்கே ஒரு மைல் தொலைவிலுள்ளது. இத்தலத்திற்குச் சம்பந்தர் பதிகம் ஒன்றும் அப்பர் பதிகம் பதினாறும் சுந்தரர் பதிகம் ஒன்றுமாகப் பதினெட்டுப் பதிகங்கள் உள்ளன. இறைவன் வீரட்டானேசுவரர் என்றும் இறைவி திரிபுர சுந்தரி என்றும் பேர் பெறுவர்.
அதிகை வீரட்டம் திரிபுரத்தை எரித்த வீரச் செயலோடு தொடர்புடையது. திரிபுரம் எரித்த காலை இறைவன் வில்லையேந்திய திருக்கோலத்தோடு வீற்றிருந்த தலம் விற்கோலம் என்பர். அது இன்று கூவம் எனப்படும். திருவிற் கோல இறைவனுக்குத் திரிபுராந்தகர் என்றும் இறைவிக்குத் திரிபுராந்தநாயகி என்றும் பெயர். அச்சிறுபாக்கமும் திரிபுர தகனத்தோடு தொடர்புடையது என்பர். இவ்விரு திருத் தலங்கள் பற்றியும் சம்பந்தர் பாடியுள்ளார். (3:23:177).
திரிபுரத்தை எரித்த கதை புறநானூற்றிலும் (செய். 55), கலித்தொகையிலும் (செய்.1,2), சிலப்பதிகாாத்திலும் (6.40-44) இடம் பெறுகின்றது.
பூமி, அந்தரம், சுவர்க்கம் என்ற மூவுலகிலும் பொன், வெள்ளி, இரும்பு எனும் மூன்று உலோகங்களாலான மூன்று கோட்டைகளையுடைய அசுரர் திரிபுரத்தவர் என விளங்கினர். சிவபக்தி, அடியார் பக்திகளிற் சிறந்து, சிவபூசை செய்து வாழ்ந்த போதும் தேவர்களை வருத்தினர். பிரமன் முதலான தேவர்கள்
29

Page 76
முறையீட்டுக்கு இணங்கித் திருமால் அவர்களுடன் சேர்ந்து செய்த வேள்வியிலே தோற்றிய பூதங்கள் திரிபுரத்தவரை அணுக முடியாது அழிந்தன. திரிபுரத்தவரின் சிவபத்தியைச் சிதைக்கத் தம் அம்சத்தில் ஆதிபுத்தனைப் படைத்து நாரத முனிவருடன் திரிபுரத்தவர்களைச் சிவ நெறியினின்று நீங்கும் நெறியைப் போதித்து அனுப்பினர். திரிபுரத்தவரும் சிவநெறி விட்டு நீங்கினர். மகிழ்ச்சியுற்ற திருமால் தேவரோடு கயிலையடைந்து திரிபுரத்தவர்களை அழிக்க வேண்டிய சூழலை எடுத்துரைத்த போது, சிவபிரான் புறப்பட்டுத் தேரிலே வில்லை வளைத்து நாணேற்றிக் கணைபூட்டித் திரிபுரத்தவரை நோக்கி ஒரு புன்சிரிப்பை உதிர்க்கத் திரிபுரங்கள் வெந்து சாம்பலாயின.
பறியலூர் வீரட்டம் தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ளது. மாயூரத்தின் கிழக்கிலுள்ள விளநகரில் இருந்து கிழக்கே ஒரு மைல் சென்று, அங்கிருந்து தெற்கே ஒருமைல் சென்றாற் பறியலூரை (பரசலூர்) அடையலாம். இத்தலத்திற்குச் சம்பந்தர் பதிகம் ஒன்று (1:134) உண்டு. இறைவன் பெயர் வீரட்டேசர்.
தக்கன் யாகத்தை அழித்த வீரச் செயலுடன் தொடர்புடையது திருப்பறியலூர். பிரமனது மானச புதல்வனான தக்கன் தவஞ் செய்து சிவபிரானிடத்து உமையைப் புதல்வியாகவும் இறைவனை மருமகனாகவும் பெற வரம்பெற்று, தனக்குப் பிறந்த தாகூடிாயணியைச் சிவனுக்கு மணஞ் செய்து வைத்தான். கயிலைக்குத் தக்கன் சென்றபோது பூதகணங்கள் தடுத்ததாற் சினமடைந்து சிவனை நீக்கித் திருமால் முதலியோரைத் தலைவராக்கி யாகம் செய்தான். யாகத்திற்கு வந்த மகளை வரவேற்காது இகழ்ந்தான். சினங் கொண்ட உமை தக்கனைச் சபித்துவிட்டுக் கயிலையை அடைந்து பெருமானிடம் யாகத்தை அழித்தருள வேண்டினாள். இறைவன் வீரபத்திரக் கடவுளையும் உமாதேவியார் பத்திரகாளியையும் உண்டாக்கினர். தக்கன் வேள்விக்குச் சென்று தமக்குரிய அவியைக் கேட்கும்படியும் அவன் கொடுக்க மறுப்பின் அவன் தலையை அறுத்து, அவனைச் சேர்ந்தவர்களை அழிக்கும்படியும் உத்தரவிட்டார். தக்கன் மறுத்ததால் அவன் யாகத்தைச் சிதைத்து அதிற் பங்கு பற்றியோரைத் துன்புறும்படி செய்தனர்.
விற்குடி வீரட்டம் தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ளது. மாயூரம் - பேரளம் இருப்புப் பாதையில் விற்குடி இருப்புப் பாதை நிலையத்திற்கு ஒரு மைல் தூரத்தில் உள்ளது விற்குடி வீரட்டம். இத்திருத்தலத்திற்குச் சம்பந்தர் பதிகமொன்றுண்டு (2.108). இறைவன் திருநாமம் வீரட்டநாதர்.
விற்குடி சலந்தராசுரனை அழித்த வீரச் செயலோடு தொடர்புடைய தலமாகும். பெருமானின் சினம் கடலிலே வளர்ந்து சலந்தரன் எனப் பெயர் பெற்று. தவமியற்றிப் பலவரங்களைப் பெற்றுத் தேவர்களைத் துன்புறுத்திச் செருக்குற்றுச் சிவபிரானை வெல்லக் கயிலை சென்றான். சிவபிரான் கிழவேதியராய்த் தோன்றி, அவனை வினவியறிந்து, பூமியில் வட்டமாகக் கோடு கிழித்து, அதைப் பெயர்த்தெடுக்கும்படி
30

கூறினார். அவன் அவ்வாறே பெயர்த்தெடுத்துத் தலையில் வைத்தான். அது சக்கரமாகி அவன் உடலைக் கிழித்து அழித்தது.
வழுவூர் வீரட்டம் தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ளது. மாயவரத்திற்குத் தென்மேற்கில் ஐந்து மைல் தொலைவிலுள்ளது. யானைத் தோலை உரித்துப் போர்த்தது வழுவூர் திருத்தலத்துடன் தொடர்புடைய வீரச் செயலாகும்.
யானை வடிவம் கொண்ட கயாசுரன் மேரு மலையிற் பிரமனை நோக்கித் தவம் செய்து அழியாத ஆயுளையும் வலிமையையும் பெற்றான். ஆயினும் சிவனெதிரில் அவன் வரம் வெல்லாது என்பதையும் நான்முகன் கூறியுள்ளான். எல்லாவுலகங்களையும் வென்று காசியில் உள்ள முனிவர்களைத் துரத்திச் சென்றான் கயாசுரன். அவர்கள் மணிகர்ணிகை எனும் ஆலயவாயிலை அடைந்து விசுவேசரை வணங்க, அவர் உக்கிரவடிவோடு தோன்றி, திருவடிகளால் மிதித்துத் திருக்கரங்களால் அவனுடைய தோலை உரித்துப் போர்த்தார்.
குறுக்கை வீரட்டம் தஞ்சாவூர் மாவட்டம் மாயூரம் தாலுகாவில் மாயூரத்திற்கு வடக்கிலுள்ள நீடூர் இருப்புப் பாதை நிலையத்தி லிருந்து வடமேற்கே சுமார் ஐந்துமைல் தொலைவிலுள்ளது. இத்தலத்திற்கு அப்பர் பாடிய இரு பதிகங்கள் உள்ளன. (4:49, 4:50). இறைவன் திருநாமம் வீரட்டேசுவரர். காமதகனபுரம் என்ற பெயரும் தலத்திற்குண்டு. இத்தலத்துச் சபை காமனங்க நாசனிசபை எனப் பெயர் பெறும்.
காமனை எரித்த வீரச் செயலோடு தொடர்புடையது குறுக்கை. திருமாலின் மானச புதல்வன் காமன் (மன்மதன்) சூரபத்மன் முதலிய அரக்கர்களை அழிக்க இன்றியமையாதிருந்த சிவபுத்திரனின் தோற்றத்திற்காகச் சிவபிரானை யோகத் திலிருந்து நீக்க, மலரம்புகளை ஏவி இறைவன் கண்விழி பட்டவுடன் எரிந்து சாம்பலானான். இரதியின் வேண்டு கோளுக்கு இணங்கி அவளுக்கு உருவமாயும் ஏனையோருக்கு அருவமாயும் இருக்க மன்மதனுக்கு அருள் புரிந்தார்.
கடவூர் வீரட்டம் மாயூரம் - தரங்கம்பாடி இருப்புப் பாதையிலே திருக்கடவூர் நிலையத்திற்குக் கிழக்கே அரைமைல் தூரத்திலுள்ளது. சம்பந்தர் பதிகம் ஒன்றும் (3:8), அப்பர் பதிகம் மூன்றும் (4:31, 4:107, 5:37), சுந்தரர் பதிகம் ஒன்றும் (7.28) ஆக ஐந்து பதிகங்கள் இத்தலத்திற்குள. இங்குள்ள உற்சவமூர்த்தி காலசம்மார மூர்த்தி எனப்படுவர்.
கடவூர் மார்க்கண்டேயருக்காக யமனை உதைத்த வீரச் செயலுடன் தொடர்புடையது. நோற்றலின் ஆற்றல் தலைப்பட்ட வர்க்குக் கூற்றம் குதித்தலும் கைகூடும். பதினாறு வயதினை அடைந்தால் இறந்து விடுவான். தம்பிள்ளை எனக்கவன்ற பெற்றோரைத் தேற்றிச் சிவபிரானை நோக்கித் தவஞ் செய்தார் மார்க்கண்டேயர். அவர் தவத்திற்கு மகிழ்ந்த ஈசன், பாசக்கயிறாலே இழுத்த காலனை உதைத்து மார்க்கண்டேயருக்கு என்றும் பதினாறு வயதுடைய நிலையளித்தார்.
இந்துக் கலைக்களஞ்சியம்

Page 77
அட்டாரங்க நமஸ்காரம்
அட்ட என்றால் எட்டு என்பது பொருள். அங்கம் - உறுப்பு எட்டு உறுப்புக்களும் நிலனுறப் பணிதலே அட்டாங்க நமஸ்காரமாகும். இந்த நமஸ்காரம் ஆண்களுக்கு உரியது.
தலை, கையிரண்டு, செவியிரண்டு, வாய், புயங்கள் இரண்டு என்னும் எட்டு உறுப்புக்களும் நிலத்தில் படும்படியாக வணங்க வேண்டும். மார்பு பூமியிலே பதியும்படி வலக்கையை முன்னும் இடக்கையைப் பின்னும் நேரே நீட்டிப் பின் அம்முறையே மடக்கி வலப்புயமும், இடப்புயமும் மண்ணிலே பொருந்தக் கைகளை அதையை நோக்கி நீட்டி வலச்செவியை முன்னும் இடச்செவியைப் பின்னும் மண்ணிலே பொருந்தச் செய்து வணங்குதலே அட்டாங்க நமஸ்காரம் ஆகும்.
இறைவனின் திருவடியில், எல்லாப் பற்றுக்களையும் உதிர்த்து வேரற்ற மரமாக வீழ்வதை தண்டம் சமர்ப்பித்தல் என்பர். தண்டு என்றால் மரக்கட்டை
அகப்பற்றையும், புறப்பற்றையும் விடுத்து, எந்த விதமான பிடிப்பும் இல்லாமல் வீழ்ந்து வணங்குவதே நமஸ்காரம் செய்வதன் பொருளாகும். இதில் பஞ்சாங்க நமஸ்காரம் த்ரயாங்க
நமஸ்காரம், யத்ராங்க நமஸ்காரம் என்று பலவகைகள் உண்டு.
(வ. வை.)
311 Trias 61JT855gsp6ir
அட்டாங்க யோகத்தினைக் குறள் வெண்பாவாற் கூறும்
நூல் அட்டாங்கயோகக்குறள் என்பதாகும். தமிழ் மொழியிலே
மூன்று அட்டாங்கயோகக் குறள் நூல்கள் அறியப்படுவன.
ஞானக்குறள், ஒளவைக்குறள் எனும் பெயர்களாலும் வழங்கும் அட்டாங்கயோகக்குறள் ஒளவையார் என்பவர் பாடியதாக வழங்குகின்றது. சிறப்புப் பாயிரம் நீங்கலாக 310 குறள் வெண்பா ஒளவைக்குறளிலுள்ளன. இங்குள்ள பல குறள்களுக்கு யோக நூல் வல்லார்தாம் பொருள் கூற முடியும். இந்நூலை மதுரை சிவப்பிரகாசர் சிவப்பிரகாசவுரையில் எடுத்தாள்வதால் அவர் காலத்திற்கு (கி. பி. 1489) முற்பட்டது ஞானக் குறள் எனலாம். திருக்கழுக்குன்றம் ஆதிமூல முதலியார் (1882), மு. சி. பூரணலிங்கம்பிள்ளை (1899) என்போர் சென்ற நூற்றாண்டிலே பதிப்பிக்க, 1906 இலே பூரீ சுந்தரவிலாஸ அச்சுக் கூடத்திலிருந்து ஒரு பதிப்பு வெளிவந்தது.
சிதம்பரம் கண்கட்டி மறைஞானசம்பந்தர் பதினாறாம் நூற்றாண்டிலே வாழ்ந்தவர். அவரும் அட்டாங்கயோகக்குறள் ஒன்று பாடியுள்ளார். திருவாவடுதுறையாதீனத்தார் அதனை மறைஞான சம்பந்தர் பாடவில்லை என்றும் அவர் ஆசிரியர் களந்தை ஞானப்பிரகாச பண்டாரம் பாடினார் என்றும் கருதுவர்.
இந்துக் கலைக்களஞ்சியம்

சேற்றுார் ரா. சுப்பிரமணியகவிராயர் குறிப்புரையுடன் அட்டாங்க யோகக்குறள் ஒன்றினைச் செந்தமிழ்ப் பிரசுரமாக வழங்கியுள்ளார். இரண்டாம் பதிப்பு 1923 இலே வெளிவந்தது. நூலாசிரியர் இன்னார் எனத் தெரியாது. இதனுள் பாயிரத்தில் ஆறும் நூலிற் 59உம் ஆக 65 குறள்கள் உள்ளன. (பொ.பூ)
ceilijas (31 JT851D
எட்டுப் பிரிவுகளை உடைய யோகநெறி அட்டாங்க யோகம். எட்டு அங்கங்களாவன இயமம், நியமம், ஆசனம், பிராணாயாமம், பிரத்தியாகாரம், தியானம், தாரணை, சமாதி என்பனவாம்.
அண்டத்தில் உள்ளது பிண்டத்தில்' என்ற கொள்கையே யோக நெறியின் அடிப்படை பேரண்டத்திற் காணப்படும் பொருள், இயக்கங்கள், விதிமுறைகள் யாவும் பிண்டமாகிய நம் உடலிலும் இருக்கின்றன. அண்டப் பெருவெளியில் நடைபெறும் பெளதீக இரசாயண மாற்றங்களும் அவற்றுக்கான விதிகளும் நம் உடலிலும் உண்டு. அண்டத்தின் சுருக்கமாகப் பிண்டமும் பிண்டத்தின் விரிவாக அண்டமும் இருக்கின்றன. எனவே அண்டத்தைப் பிண்டத்தில் காணமுடியும் என்றும் பிண்டத்தை அண்டமாக மாற்ற முடியும் என்றும் யோகியர் உறுதியாக நம்புகின்றனர்.
யோகப் பயிற்சியில் வல்லவர்கள் அண்டத்தில் உள்ள அனைத்தையும் பிண்டத்திற் காண்பர். பேரண்டத்தை இயக்கும் சக்திகளின் உருவகமாக தெய்வங்களை யோகியர் தம் உடலிலேயே காண்பர். \ம நற்றியில் சதாசிவத்தையும் கழுத்திலே மகேசுவரனையும், நெஞ்சிலே உருத்திரனையும், உந்தியில் விட்டுணுவையும், மூலத்தில் பிரம்மனையும் காணும் ஆற்றல்மிக்கவர்கள் யோகியர். "வாலை எனும் குண்டலினி யோகப் பயிற்சியால் தத்தம் உடலிலிருக்கும் தெய்வங்களைக் காணாமல் மனிதர்கள் சாகின்றனரே” என்று கொங்கணர் வருந்துகின்றார்.
நாடிகள்
மூச்சுக்காற்றின் நடப்பும் கட்டுப்பாடும் எல்லா வகை யோகப் பயிற்சிகளிலும் முதன்மை பெறுகின்றன. நாசிவழி, காற்றுப்பை இவற்றோடு மூச்சோட்டம் முடிந்திடுவதில்லை. நம் உடல் முழுதும் காற்றின் இயக்கம் இருந்து கொண்டிருக்கிறது. பேரண்டத்தில் உள்ள வாயுக்கள் அனைத்தும் நம் உடலிலும் இயங்குகின்றன.
குருதியோடுவதற்கு நரம்பு மண்டலம் இருப்பதுபோல வாயுக்கள் ஒடுவதற்கு நம் உடலில் நாடிகள் இருக்கின்றன. பருப்பொருளான நரம்பு மண்டலத்தைக் காண முடியும்; நுண்பொருள்களான நாடிகளை அனுமானிக்கலாமே தவிரக் காணமுடியாது.
மூக்கு, மூச்சுக்குழல், காற்றுப்பை எனும் உடலுறுப்புகளில் இருந்து வெளிவிடும் மூச்சியக்கம் நம் காட்சிக்கு உட்படும் ஒரு
31

Page 78
செயல். யோக நெறியிற் சொல்லப்படும் மூச்சுப்பயிற்சி வே அது நுண்மையானது. நுண் நாடிகளின் வழி நடக்கு மூச்சியக்கத்தைக் கட்டுப்படுத்தப் புறத்தளவில் செய்யும் மூச் பயிற்சி துணை செய்கிறது. அக மூச்சுப் பயிற்சிக்குத் துை செய்யாத புற மூச்சுப் பயிற்சியால் பயனேதுமில்லை.
நம் உடலில் பத்து வகையான வாயுக்கள் ஒடுகின்ற இவ்வாயுக்களின் இயக்கம் பத்து நாடிகளின் வழி நஎ பெறுகிறது. இந்நாடிகளைப் பொதுவாக இரு வகைப்படுத் சூரியநாடி, சந்திரநாடி என்றழைப்பர். இவ்விருவகை நாடிகளு அவற்றில் ஓடும் வாயுக்களும் தம் இயல்பால் முரணானை முரண்பட்ட நாடிகளின் இணைப்பாகவும் இயைபாக செயல்படுவது நடு நாடி, இதனைச் சுழுமுனை நாடி என்று கூறுவர்.
முரண்களும் அவற்றின் இயைபும் எங்கும் காணப்ப( இயக்கம். பேரண்டத்தின் பருப்பொருள் இயக்கம்முதல் த மனித வாழ்வின் இயக்கம்வரை அனைத்திலும் இவ்வியக்கத்ை காணலாம். முரண்களின் இயக்கம் மட்டுமே இருந்த முடிவிலாக் குழப்பமே விளையும். ஒவ்வொரு கட்டத்திலு முரண்கள் இயைபு பெறுகின்றன. முரண்களிலிருந்து இயை இயைபிலிருந்து முரண்களும் என இயக்கம் தொடர்கின்றது. இ முடிவில்லாத இயக்கம். முரண்களும் அவற்றின் இயைபும் எ6 விதியின் அடிப்படையில் அரசியல், சமூக, பொருளாத வரலாறுகளைப் பொருள் முதல்வாதியான காரல்மார் விளக்குகின்றார். முரண் இயக்கங்களாலும் இவற்றி இயைபாலும் உலகம் இயங்கிக் கொண்டே இருக்கிறது எனு உண்மையை 'மண் திணிந்த நிலனும் நிலன் ஏந்திய விசும் விசும்பு தைவரு வளியும். தீ முரணிய நீரும்.” என் புறநானூற்றுப் பாடல்அழகுற எடுத்துக் காட்டுகின்றது.
யோக சமாதியே யோகப் பயிற்சியின் இறுதிப்பு கடுமையான தொடர் பயிற்சியால்தான் இவ்விறுதிப் படி: எட்டமுடியும். யோக சமாதியை எட்டுவதற்கான பக்குவ நிலை நம் உடலையும் மனதையும் கொண்டுவரப் பயில வேண் பயிற்சிகளை யோகத்தின் உறுப்புகளாகக் கூறுகின்றன எண்வகை யோகப்படிகளைக் கொண்ட யோகமே அட்டா யோகம் எனப்படுகிறது.
யோக உறுப்புக்கள் இயமம் :
பிறர்க்குத் தீங்கு செய்யாமலும் பிறரைத் துன்புறுத்தாம வாழ்வது 'இயமம்' எனப்படும். இது, ஆன்மீக நெறியா களுக்குப் பொதுவாகவும், யோகநெறியாளர்கட்குச் சிறப்பாக வேண்டப்படுகின்ற பண்பு தீங்கு செய்யாதிருத்தல்' என்பது ட செயல்களை மட்டும் குறிப்பதன்று. எண்ணம், சொல், செ எதனாலும் தீங்கு செய்யாது வாழ வேண்டும். நல்லி செய்வதற்கு முன்னோடிச் செயலாகத் தீமைகளிலிருந்து வி வேண்டும். தீயனவற்றை எண்ணாமல் கடுஞ் செ சொல்லாமல், கொடுஞ்செயல் புரியாமல் வாழ்வது ஆன்
32

டும்
னி
தக்
ால் லும் பும்,
ன்ற
IT町
க்சு
றும் பும், ண்ற
) ULI க்கு
2. ULI TÍ.
ங்க
லும்
លុយ៉ា றச் பல்
T6)
நீக
நெறியின் முதற்படி. இவ்விதிக்கு விலக்கே இல்லை. இதைத்தவிர, அதைத்தவிர என்று விதிவிலக்கு ஏற்படுத்தாமல் எல்லா நிலைகளிலும் தீங்கு செய்யாதிருப்பதே சிறந்தது. யோகப் பயிற்சியால் ஆன்ம இன்பம் காண முயல்வோருக்கு இது முதற்கட்டுப்பாடு.
எவ்வெவற்றைத் தவிர்க்க வேண்டுமெனப் பட்டியல் போட இயலாதெனினும் குறிப்பாகச் சிலவற்றைக் கூறலாம். உயிர்களைத் துன்புறுத்தல், பொய்கூறல், களவு, பாலுறவு, கொடுமை, கபடு, பழியுணர்வு, சொல்பிறழ்தல், மிகையுணவு, தூய்மையின்மை முதலியவற்றை யோகநெறி முயல்வார் கண்டிப்பாகத் தவிர்த்தல் வேண்டும். இக்கட்டுப்பாடு யோக சாதகனைப் பக்குவப்படுத்தும் என்பதில் ஐயமில்லை. புதர்களையும் காடுகளையும் அழித்து மேடுபள்ளங்களைச் சமப்படுத்திய பின்னரே கட்டடம் கட்ட முயலுதல் போல ஆன்மீகப் பயணம் தொடங்குமுன் கடைபிடிக்க வேண்டிய நெறிகளை 'இயமம்' கூறுகிறது.
நியமம்
செய்ய வேண்டிய நல்லனவற்றைத் தொகுத்து நியமம்' என்று குறிக்கின்றனர். அல்லனவற்றிலிருந்து ஒதுங்கி யிருப்பதோடு நின்று விடாமல் நல்லனவற்றைச் செய்து ஆன்மப் பயணம் தொடங்க வேண்டும். அல்லனவற்றை ஒதுக்குவதோடு நின்று விடுபவன் சமுதாயத்திற்குப் பயனற்றவனாகக் கருதப்படுவான். காட்டிலும் குகையிலும் தனிவாழ்க்கை நடத்தும் தன்னலக்காரனாகி விடுவான். உலகை வெறுத்துச் சமுதாயத்தை விடுத்து ஒதுங்கி விடும் மறுப்பு வாழ்க்கையால் பயனில்லை. நியமத்தின் செம்மைக்காகத்தான் இமயம் சொல்லப்படுகிறதே தவிர இயமமே ஆன்மீக நெறியின் முதலும் முடிவும் அன்று. இவ்வுண்மையை உணரமாட்டாதார் யோக நெறியைச் சிறப்பிக்கும் இந்தியத் தத்துவத்தையே மறுப்புத் தத்துவம் என்று வருணிக்கின்றனர்.
யோகப் பயிற்சிக்கும் ஆன்மப் பக்குவத்திற்கும் துணை செய்யும் நற்செயல்கள் சிலவற்றை ஈண்டு குறிப்பிடலாம். தவம் மேற்கொள்ளல், மனநிறைவு, நம்பிக்கை, இருப்பதையும் இயன்றதையும் கொடுத்தல், இறைவழிபாடு, ஆன்மவிசாரணை, நடுநிலை, தெளிந்த சிந்தனை, மந்திரம் ஒதல், மன உறுதி என்பன யோகப் பயிற்சியாளன் தவறாமல் கடைப்பிடிக்க வேண்டிய செயல் முறைகள். நியமத்தின் உறுதியும் செம்மையும் ஆன்மீக நெறிக்கு அடித்தளமாகின்றன.
இயம நியம நெறிகளை வழுவாது கடைப்பிடித்தால் மனம் அமைதியுறும். விருப்பு வெறுப்புகளுக்கு இடமின்மையால் மனம் சலனப்படாமலும் உணர்வு மோதல்களுக்கு வாய்ப்பளிக்காமலும் நம் கட்டுப்பாட்டில் இருக்கும். காட்டாறு போல் பொங்கும் உணர்வுகளைக் கட்டி நிறுத்தி நாம் விரும்பும் திசையில் ஒழுங்குறப் பாய்ச்ச இவ்விரு கட்டுப்பாடுகளும் இன்றியமை யாதனவாம். இக்கட்டுப்பாடுகள் தளர்ந்தாலும் மீறப்பட்டாலும் ஆன்மப் பயணம் தடைப்படும்; பிறழ்ந்து போகும்.
இந்துக் கலைக்களஞ்சியம்

Page 79
ஆசனம்
யோகப் பயிற்சிக்கு ஏற்ற வகையில் உடலை இருத்திக் கொள்ளும் நிலைக்கு ஆசனம் என்று பெயர். யோகப் பயிற்சிக்கான இடம், உடலின் இருப்புநிலை ஆகியவற்றை இப்பிரிவு கூறுகிறது. யோகப் பயிற்சிக்கான இடம் தூய்மையானதாகவும், அமைதியானதாகவும், நல்ல காற்றோட்டம் உடையதாகவும் அமைய வேண்டும். அத்தகைய இடத்தில் நாணற் புல் பரப்பியோ, மான்தோல் அல்லது புலித்தோல் விரித்தோ அதில் அமர்ந்து கொண்டு யோகம் பயில்வது சிறப்பென்று பண்டைய யோகசாத்திர நூல்கள் கூறுகின்றன. விரிப்பின் மேல் அல்லாமல் வெற்றுத்தரையில் அமர்ந்து கொண்டு யோகப் பயிற்சி செய்யக் கூடாது. யோகப் பயிற்சியின் போது நம்முள் ஏற்படும் ‘காந்தசக்தி விரிப்பொன்றால் தடுக்கப்படாவிட்டால் தரையில் பாய்ந்து பயனற்றுப் போய்விடும். அவ்வாறு சக்தியைத் தடுத்துச் சாதகனுள் செலுத்துவதில் புலித்தோலும் மான்தோலும் சிறந்தனவாகக் கருதப்படுகின்றன. புலித்தோலோ மான்தோலோ இன்றி யோகம் பயிலக்கூடா தென்பதன்று. வெற்று மரப்பலகையின் மீதமர்ந்தும் மர நாற்காலியில் உட்கார்ந்தும் யோகம் பயிலலாம். யோகப் பயிற்சியின்போது தன்னை இழந்து சாதகன் சாய்ந்து விழக்கூடும் என்பதால் உயரமான இடத்தில் அமராமல் தரைமட்டத்தில் அமர்ந்து பயில்வதே பாதுகாப்பான செயல்.
இடம், சூழ்நிலை, விரிப்புகள் இவற்றைவிட முதன்மையானது உடலை இருத்திக் கொள்ளும் நிலை. உடற் கட்டுப்பாட்டுக்கு முதன்மை தரும் அடயோகம் பல நூறு வகையான ஆசனங்களைக் குறிப்பிடுகின்றது. உடல் நலத்திற்கும் வளத்திற்கும் உறுதுணையாகும் இவ்வாசன வகைகளை யோக சாத்திர நூல்களில் விரிவாகக் காணலாம். ஆன்ம இன்பத்தை நோக்கும் யோகப் பயிற்சிக்கு உடலை அசையாமல் நேராக இருத்திக் கொள்ள வேண்டும் என்பதே அடிப்படை குறிப்பாக முதுகுத்தண்டுவடம் வளையாமல் நேராக நிமிர்ந்திருக்குமாறு அமர்ந்து கொள்ள வேண்டும். அவ்வாறு அமர்வது, சூக்கும நாடிகளில் வாயுவின் ஒட்டத்தைச் சீர்படுத்தத் துணை செய்யும். வளைந்து நெளிந்து உட்கார்ந்திருப்போரைக் காட்டிலும் நேராக நிமிர்ந்து உட்காருவோர் சுறுசுறுப்பும் தெளிந்த சிந்தையும் உடையவராக இருப்பதை அன்றாட அனுபவத்திற் காணலாம். எனவே ஆசனங்களின் வகைகளையும் எண்ணிக்கைகளையும் இடர்ப்பாடான இயல்புகளையும் எண்ணிக் களைக்கவோ மலைக்கவோ தேவையில்லை. உடல் தனக்கொரு தொல்லையாக இல்லாமல் யோக சாதகன் தன் உடலை இருத்திக் கொள்ள வேண்டும் என்பதே முக்கியம்.
ஆன்ம இன்பம் சுவைக்க விரும்பும் யோகசாதகன் பத்மாசனமிட்டுப் பயில்வதே மிகவும் சிறந்தது. இடது பாதத்தை வலது தொடையிலும் வலது பாதத்தை இடது தொடையிலும் வைத்து முழங்கால் பகுதி தரையில் படுமாறும், கைகளைத் தளர்த்தி முழங்கால் மீது வைத்தும் நேராக நிமிர்ந்து அமர்வது பத்மாசனம் எனப்படும். இளமை முதற்கொண்டே
இந்துக் கலைக்களஞ்சியம்

பயில்வோருக்கு இவ்வாசனமிட்டு அமர்வது எளிய செயல்; மற்றவர்கட்குச் சற்றுக் கடினமாக இருக்கும். சோர்வின்றி முயல்வோருக்கு வெற்றி கிட்டும். முறைப்படி ஆசனமிட்டு அமரும்போது சாதகன் தன் உடலில் ஒரு மாற்றத்தை உணருவான் என்பது அறிவியல் உண்மை.
எந்த ஆசனத்தையும் மேற்கொள்ளலாம். உடல் நிலையாக, நேராக அதேபோது ஒய்வாக இருக்க வேண்டும் என்பதை நினைவிற் கொள்ள வேண்டும். உடல் ஒரு சுமையாகவோ தொல்லையாகவோ சாதகனுக்கு இருக்கக்கூடாது. சுருங்கச் சொல்லின் உடல் இருப்பதையே அவன் உணரக் கூடாது. எப்படி அமர்ந்தால் இவையெல்லாம் கிட்டுமோ, அப்படி அமர்ந்து பயிலலாம். ஆசனம்' என்ற பெயரால் உடலை வருத்தி அவ்வலியின் துன்பத்தில் சாதகன் மனம் செல்லக்கூடாது. இனிமையானதாக எளிமையானதாக ஆசனம் அமைதல் வேண்டும். அவரவர் உடல் நிலைக்கும் சூழ்நிலைக்கும் ஏற்ப ஆசனம் மேற்கொள்வதில் தவறில்லை.
பிராணாயாமம்
உயிர்ச்சக்தி நம் உடலில் சூக்கும நாடிகள் வழியே வாயுவாக ஒடிக் கொண்டிருக்கிறது. நம் உடலில் ஒடும் வாயுக்கள் மூச்சுப் பயிற்சியின் வழியாக கட்டுப்படுத்தப்படுகின்றன. பிராணாயாமம் என்பது பொதுவாக மூச்சுப் பயிற்சியைக் குறித்தாலும், அது நம் உடலில் ஒடிக் கொண்டிருக்கும் பிராணன்' என்னும் உயிர்க் காற்றின் பயிற்சியையே சிறப்பாகக் குறிக்கிறது. நாசி, மூச்சுக்குழல், காற்றுப்பை வழியாக வாங்கிவிடும் மூச்சை ஒழுங்குபடுத்தும் பயிற்சியின் மூலமே பிராணனின் ஒட்டத்தைக் கட்டுப்படுத்த முடியும். மூச்சுப் பயிற்சியின் மூலம் கட்டுப்படும் பிராணன் எனும் உயிர்ச்சக்தி தன் கொதிப்பும் கொந்தளிப்பும் அடங்கி அமைதி அடைகிறது. மூச்சோடு மிக நெருங்கிய தொடர்புடையது மனம், மன அதிர்வுகளே மாயா காரியங்கள் அனைத்திற்கும் காரணமாகின்றன. மூச்சுப் பயிற்சியின் மூலம் கட்டுப்படும் மனத்தில் அதிர்வலைகள் மறைகின்றன; அமைதி நிலவுகின்றது. எனவே, மூச்சுப் பயிற்சி, பிராணனை ஒழுங்குபடுத்தவும் மனத்தை ஒருமுகப்படுத்தவும் வழி செய்கிறது எனலாம்.
மூச்சுப் பயிற்சி மூன்று உறுப்புக்களை உடையது. மூச்சை வெளியிடுதல், உள்ளிழுத்தல் நிறுத்தல் என்ற முறையில் மூச்சுப் பயிற்சி நடக்கிறது. காற்றுப்பை ஏறத்தாழ வெற்றிடமாகும் வரை முதலில் காற்றை வெளியேற்ற வேண்டும். இது, மூச்சுப் பயிற்சிக்குத் தயாராகும் நிலை. தாமரைத் தண்டில் நீர் ஏறுவதைப்போல மூச்சை நேராக உள்ளிழுக்க வேண்டும். இதற்குப் பதினாறு நொடியளவு காலம் எடுக்கலாம். இதனைப் பூரகம்’ என்றும் இவ்வாயுவை அபாணன் என்றும் கூறுவர். உள்ளிழுத்த காற்றை அறுபத்து நான்கு நொடி கால அளவு உள்ளே நிறுத்துதல் கும்பகம் எனப்படும். கும்பகப்படும் வாயுவை வியாணன்' என்று கூறுவர். உள்ளே நிறுத்திய காற்றை முப்பத்திரண்டு நொடி கால அளவு சீராக வெளியிடுதல் ரேசகம் எனப்படும். இவ்வாயுவைப் பிராணன்' என்று கூறுவர்.
33

Page 80
மூச்சுப் பயிற்சியைத் தொடங்குமுன் உடலை நிலையாக, நேராக, உறுதியாக அதேபோது, ஒய்வாக இருத்திக் கொள்ளும் ஆசனநிலை கைவரப் பெற்றிருக்க வேண்டும். கும்பக நிலையில் மூச்சை நிறுத்தும்போது உடலில் அசைவோ நெளிவோ வளைவோ இருக்கக் கூடாது. தொடக்க நிலையில் மூச்சுப் பயிற்சியைப் படிப்படியாகப் பயிலுவது நலம்; எளிதுங்கூட ஏற்ற ஆசனத்தில் உடலை நிலையாக வைத்துக்கொண்டு இடது நாசியை வலது கை விரல்களால் அடைத்து வலது நாசி வழியாகக் காற்றை வெளித்தள்ளி காற்றுப்பையை வெற்றிடமாக்க வேண்டும். இடது கை விரல்களால் வலது நாசியை அடைத்துக் கொண்டு இடது நாசி வழியாகக் காற்றை இழுக்க வேண்டும். பின்னர், உள்ளிழுத்த காற்றைக் குறிப்பிட்ட கால அளவுப்படி நிறுத்தி வெளியிட வேண்டும்.
மூச்சை உள்ளிழுத்து நிறுத்தி, வெளியிட முறையே 16, 64, 32 நொடிகள் எனச் சாத்திரங்கள் வரையறை செய்கின்றன. தொடக்க நிலையில் இக்கால அளவைப் பின்பற்ற முடியாமற் போகலாம். நீண்ட காலப் பயிற்சியுடையோர் இக்கால அளவுகளை முறையாக நீட்டித்துக் கொள்ளவும் கூடும். மூச்சை உள்ளிழுக்க எடுத்துக் கொள்ளும் கால அளவைப்போல் நான்கு மடங்கு கால அளவு நிறுத்த வேண்டும் என்றும் இரண்டு மடங்கு கால அளவில் சீராக வெளிவிட வேண்டும் என்றும் கடைப்பிடித்தால் போதும். பூரகம், கும்பகம், ரேசகம் என்பன 1: 4: 2 என்ற கால விகிதத்தில் நடப்பதே சிறந்ததெனப் பெரும்பாலான யோக சாத்திரங்கள் கூறுகின்றன. சிலர் மூச்சுப் பயிற்சியின் கால விகிதம் 11:1 என்ற அளவில் அமைய வேண்டும் என்கின்றனர்.
மந்திரச் சொற்களுக்கும் எழுத்துகட்கும் முதன்மை தரும் மந்திர யோகத்தார், பிரணாயாமத்தை 'ஓம்' எனும் பிரணவ மந்திரத்தோடு இணைத்துப் பேசுவர். 'ஓம்' என்பது ஒரு கூட்டொலி. இவ்வொலியில் 'அ', 'உ', 'ம்' எனும் மூன்று ஒலிகள் கலந்துள்ளன. மூச்சை உள்ளிழுத்தல் 'அ'கரம் என்றும், நிறுத்துதல் 'உ'கரம் என்றும், வெளிவிடுதல் மகரம் என்றும் கொள்வர். 'அ'கர ஒசையோடு மூச்சை உள்ளிழுத்து 'உ'கர ஒசையோடு நிறுத்தி மகர ஒசையோடு வெளிவிடும் மூச்சுப் பயிற்சியே 'ஓம்' எனும் பிரணவ மந்திரத்தின் தத்துவம்
என்பர்.
மூவகையான தசை இறுக்கங்கள் மூச்சுப் பயிற்சியின் பயனைக் கூட்டிப் பெருக்கும். மூச்சை உள்ளிழுத்து முடித்தவுடன் தாழ்வாய்களை இறுக்கிக் கொள்ள வேண்டும்; மூச்சை வெளியிட்டு முடித்தவுடன் முகத்தின் தசைகளைச் சுருக்கிக் குதவாயை இறுக்கிக் கொள்ள வேண்டும்; மூச்சை நிறுத்தும்போது இவ்விரு இயக்கங்களோடு வயிற்றின் தசைகளையும் சுருக்கி இறுக்க வேண்டும். இத்தகைய தசை இறுக்கங்களோடு செய்யப்படும் மூச்சுப் பயிற்சி விரைவாகவும் கூடுதலாகவும் பயன்தரும்.
காலையும் மாலையும் தொடர்ந்து மூச்சுப் பயிற்சி செய்வாரது உடலும் உள்ளமும் மாற்றமடையும். "நீண்ட கால முறையான
34

பயிற்சிக்குப்பின் முதல் நிலையாக உடல் முழுவதும் வியர்வைத் துளிகள் அரும்பும். வழக்கமாக வியர்வைபோல் இது கெடு நாற்றம் வீசாது. அடுத்த கட்டமாக உடல் அதிரும். இறுதியாக உடல் இலேசாகும். மனம் தெளிந்து அமைதியுறும். தந்திர இராச தந்திர சாத்திரம் இவ்வாறு கூறுகிறது.
மூச்சுப் பயிற்சியில் நிறைவு கண்டவர்களின் சிறப்பியல்புகளை இரகயமாலா' எனும் சாத்திரம் விரிவாகக் கூறுகிறது. "மூச்சுப் பயிற்சியில் முழுமை அடைந்தவர்களின் முகம் எப்போதும் மலர்ந்திருக்கும்; கண்கள் ஒளி வீசும். அவர்களிடம் சூக்கும சக்திகள் நிறைந்திருக்கும். மனம் அமைதியும் நிறைவும் உடையதாக இருக்கும். உடல் காற்றினும் இலேசாக இருக்கும்.”
பிரத்தியாகாரம் :
பிரத்தியாகாரம் என்பது புலனொடுக்கத்தைக் குறிக்கும். ஒவ்வொரு பொறியும் காட்சியுலகப் பொருளுடன் நீங்காத் தொடர்பு கொண்டுள்ளன. கண்கள் ஒளிபடு பொருளொடும், காது ஓசை தரு பொருளொடும், நாசி நாற்றம் வீசும் பொருளொடும். தோல் தொடு பொருளொடும், நாக்கு சுவை தரு பொருளொடும் எனப் பொறிகள் யாவும் பொருளொடு பிணைக்கப்பட்டுள்ளன. இப்புற உலகப் பிணைப்புகள் ஆன்ம தரிசனத்திற்குத் தடைகளாக உள்ளன. எனவே பொறிகளைப் புற உலகப் பொருள்களிலிருந்து துண்டித்துக் கொள்ள வேண்டும். புற உலகு நோக்கியோடும் பொறிகளைத் தடுத்து ஈர்த்துக் கொள்வதே பிரத்தியாகாரத்தின் நோக்கம். "ஜம்புலன் தன்னை அடக்கும் உபாயம்,” “ஜம்புலக் கதவை அடைக்கும் உபாயம்’ எனவரும் விநாயகர் அகவல் தொடர்கள் பிரத்தி யாகாரத்திற்கு விளக்கங்கள் ஆகின்றன.
கண்களை மூடிக் கொள்வதும் காதுகளைப் பொத்திக் கொள்வதும் புலனொடுக்கம் ஆகாது. புலனுணர்வுகளோடு தொடர்புடைய மனப் பகுதியைக் கட்டுப்படுத்தவேண்டும். மனம் கட்டுப்பட்டுச் சலனமற்று அமைதியாக இருந்தால் கண்கள் திறந்திருந்தாலும் காட்சி தெரியாது. மனத்துக்கும் பொறிகளுக்கும் உள்ள தொடர்பினைத் துண்டித்து விட்டால் பொறிகள் செயற்பட்டாலும் காட்சிகள் உருவாகா. தொடக்க நிலையில், பொறிகளைச் செயற்கையாக மூடிக் கொண்டு பயிலமுற்பட்டாலும் மனத்தைக் கட்டுப்படுத்துவதிலேயே சாதகன் முனைய வேண்டும். அத்தகைய மனக்கட்டுப்பாடே உண்மையான பிரத்தியாகாரம் எனப்படும். மந்திரச் சொற்களில் மனத்தைச் செலுத்துவதன் மூலம் புற உலகக் காட்சியிலிருந்து மனத்தை ஈர்க்க முடியும், என்று மந்திரயோகத்தார் கருதுகின்றனர். இறைவனின் திரு உருவை எண்ணுவதால் மனத்தை ஈர்க்கலாம் என்று கூறுகின்றனர் பக்தி யோகத்தார். மூலாதாரம் முதற் கொண்டு சகசுராரம் வரையுள்ள சூக்கும சக்கரங்களில் மனத்தை ஈடுபத்திப் பதிய வைப்பதன் மூலம் மனக்கட்டுப்பாட்டை அடையமுடியும் என்று இலய யோகத்தார் கூறுகின்றனர்.
புறஉலகு நோக்கி விரைந்தோடும் மனத்தை ஏதேனும் ஒரு வழியால் தடுத்து ஈர்த்துக் கொள்ள வேண்டும். மனத்தை
இந்துக்கலைக்களஞ்சியம்

Page 81
அலைக்கழிக்கும் காட்சிகள் பறஉலகில் நிறைந்துள்ளன. அக்காட்சிகளாற் பாதிக்கப்படாத மனமே ஆன்ம விடுதலைக்குத் துணை நிற்க முடியும். எனவே, பிரத்தியாகாரம் என்பது பொதுவாகப் புலனொடுக்கத்தைக் குறிப்பிட்டாலும் அது உண்மையில் மனக்கட்டுப்பாட்டையே உணர்த்துகின்றது.
தாரனை :
தாரணை, தியானம், சமாதி என்று சொல்லப்படும் மூன்றும் மன அமைதியின் படிநிலைகள். தாரணையைக் காட்டிலும் தியானத்திலும், தியானத்தைக் காட்டிலும் சமாதியிலும் மனம் அமைதியில் ஆழ்கிறது.
புறக்காட்சியிலும் சிந்தனையிலுமாக மன உணர்வுகள் சிதறுகின்றன. அவ்வாறு சிதறா வண்ணம் மன உணர்வுகளை ஒருமுகப்படுத்தி நிறுத்தி வைப்பதற்குத் தாரணை என்று பெயர். ஒவ்வொரு காட்சியிலும் சிந்தனையிலும் மனம் அதிர்கிறது. இத்தகை மன அதிர்வுகளைச் சித்தவிர்த்தி' என்பர். 'சித்தவிர்த்தி ஆன்மவிடுதலைக்குத் தடையாகும். அதிர்வலைகள் ஓய்ந்து அமைதி பெற்ற மனமே ஆன்ம விடுதலைக்கு வழிவகுக்கும். இதற்குமுன் சொல்லப்பட்ட இயமம், நியமம், ஆசனம், பிராணாயாமம், பிரத்தியாகாரம் என்பனவெல்லாம் சித்த ஒடுக்கத்தை நோக்கியே செயற்படுகின்றன. இச்சித்த ஒடுக்கமே ஆன்மா தன்னை உணர்கின்ற முதற் படிநிலை.
மனத்தை ஒருமுகப்படுத்தி நிறுத்துவதற்குப் பலவழிகள் சொல்லப்படுகின்றன. பொருள்களையும் நிகழ்ச்சிகளையும் இறைவனின் வெளிப்பாடாக எண்ணுவதால் மனம் இறைவனை நோக்கி ஒருமுகப்பட்டு நிற்கும். பிராணாயாமப் பயிற்சியின் கும்பக நிலையில் மனத்தைச் சாதகன் தன் உடல் உறுப்பொன்றில் நிறுத்திடப் பழகினாலும் மனம் ஒருமுகப்பட்டு நின்றிடும். மனத்தைக் கட்டுப்படுத்துவது பிரத்தியாகாரம்; மனத்தை ஒருமுகப்படுத்துவது தாரணை.
தியானம் :
ஏதேனும் ஒர் உறுப்பில் மனத்தை ஒருமுகப்படுத்துவது தாரணை, குறிப்பிட்ட உறுப்பொன்றில் மட்டுமல்லாமல் முழுமையிலும் மனத்தை ஒருமுகப்படுத்தி நிறுத்துவது தியானம். தியானம் என்பது தாரணையிலிருந்து வேறுபட்டதன்று. தாரணையின் முதிர்ந்த நிலையைத் தியானம் எனலாம். தியானம் என்பது தாரணையைக் காட்டிலும் உயர்ந்து சிறந்து விரிந்த நிலையாகக் கருதப்படுகிறது. தியான நிலையில் உணர்வுகள் ஆன்மீக மயமாய் இருக்கும்; தூய அறிவுச் சுடராய் விளங்கும். புலன்களாற் காணவொண்ணாத முழுமுதற் பொருளை - பூரணத்தை - தியான நிலை உணர்த்தும்.
சகுண தியானம், நிர்குண தியானம் எனத் தியானம் இருவகைப்படும். சகுன தியான நிலையில் இறைவனின் திருவுருவைக் கண்டு மனம் இன்புறும். சகுன தியான முதிர்ச்சியில் இறைவன் திருஉரு மறைந்திட மனம் அருவ
இந்துக் கலைக்களஞ்சியம்

நிலையில் ஆழ்ந்து ஆனந்தம் கொள்ளும். அருவத் தியானம் சமாதிநிலைக்கு வழி செய்யும். அருவத் தியானம் எளிதிற் கைவராது. மிக ஆழ்ந்த நிலையில் மனத்தை ஒருமுகப்படுத்த முடிந்த யோகியர்க்கே அது கிட்டும். சகுணத் தியானத்தினை நீண்டகாலம் பயின்ற பின்னரே அதன் விளைவாக அருவத் தியானம் அமையும். சகுணத் தியானத்தில், தியானிக்கப்படும் இறையுரு மட்டுமே இன்ப ஊற்றாக இருக்கும். நிர்குணத் தியானத்தில், எல்லாவற்றையும் உள்ளடக்கிய முழுமையும் இன்ப ஊற்றாக இருக்கும். எங்கும் இன்பம் எதிலும் இன்பம் என்ற நிலைக்கு நிர்குணத் தியானம் கொண்டு செல்லும். நிர்குண தியான நிலையில் இறைவேறுபாடுகளும் மதவேறுபாடுகளும் மறைந்து எல்லாம் ஒன்றெனக் காட்சி தரும். நிர்குண தியான நிலைக்குச் சென்றவர்கள் சமய எல்லைகளைக் கடந்தவர்கள். அத்தகையோருக்கு அரியும் அயனும் ஒன்றே; புத்தரும் மகாவீரரும் ஒன்றே; ஆத்திகமும் நாத்திகமும் ஒன்றே. எல்லாவற்றையும் பூரணத்தின் கூறுகளாகவே உணருவர்; வேற்றுமை பாராட்ட மாட்டார்கள்.
சமாதி
மன ஒருமுகப்பாட்டின் இறுதிநிலை சமாதி எனப்படும். தாரணை நிலையில் மனம் புறத்தளவில் ஒருமுகப்பட்டிருக்கும். இந்த ஒருமுகப்பாடு நிலைத்திருக்காது. மனவுணர்வுகள் அவ்வப்போது ஒருமுகப்படுவதும் சிதறுவதுமாகவே இருக்கும். தியான நிலையில் ஒருமுகப்பாடு சிதறாமல் தொடர்ந்து நிலைத்திருக்கும். இவ்வொருமுகப்பாடு மேலும் தீவிரமடைந்து ஆன்மாவைப் பிணைத்திருந்த தத்துவங்கள் அனைத்தையும் அழித்துவிடுகிறது. நான் என்ற தன் முனைப்பு செயலற்றுப் போகிறது. தத்துவ அழுக்குகள் அகன்று விட்டதால் ஆன்மா. தன்னியல்பான 'சத்', 'சித்', 'ஆனந்தம்' ஆகிறது. இவ்வாறு பக்குவப்பட்ட ஆன்மா பூரணத்திற் கலந்து ஒன்றாகி விடும் நிலையைச் சமாதி எனலாம்.
சமாதி நிலையை வருணிக்கப் பல உவமைகள் சொல்லப்படுகின்றன. எனினும் சமாதி நிலையை மொழியால் முழுமையாகக் கூறமுடியாது என்பதே உண்மை. எத்தனை சொற்களை அடுக்கினும் உவமைகளைக் கூட்டினும் சமாதி நிலையை வருணிக்க எவராலும் முடியாது. பூரணத்தை வருணிக்க முடியாதது போலவே, பூரணத்தில் ஆன்மா கலந்து கரைந்துவிடும் சமாதி நிலையையும் வருணிக்க முடியாது. சமாதி நிலையில் இருப்பவராற் கூடச் சமாதிநிலையை விவரிக்க முடியாது. தண்ணிரில் விழுந்த உப்பு தன்னை இழந்து தண்ணிரோடு ஒன்றி விடுகிறது. குடத்தில் இருந்த தண்ணீரைக் கடலில் கொட்டினாற்போல ஆன்மா பூரணத்திற் கலந்து விடுகிறது. இவ்வுவமைகள் சமாதி நிலையின் இயல்பை அனுமானிக்க உதவுகின்றன. (க. நா.)
с6911-1й856ðтоцрвоор
திருஞான சம்பந்தமூர்த்திநாயனார், திருநாவுக்கரசு சுவாமிகள், சுந்தரமூர்த்திசுவாமிகள் எனும் சைவநாயன்மார்
35

Page 82
மூவரும் பாடிய திருப்பதிகங்கள் அடங்கிய முதல் ஏழு திருமுறைகளையும் தேவாரம் எனவும் அடங்கன் முறை எனவும் வழங்குதல் மரபாம்.
தேவார முதலிகள் மூவரும் பாடிய திருப்பதிகங்கள் யாவும் அடங்கியுள்ளதால் அடங்கன் முறை என்று பெயர் பெற்றதென்பர்.
அகத்தியர் தேவாரத்திரட்டினை 'குட்டி அடங்கன் முறை என வழங்குவது இங்கு நோக்கத்தக்கது.
ஆயினும் தத்துவராயர் அடங்கன் முறை' எனும் தொகுப்பிலே அவருடைய பதினெண் நூல்கள் மட்டுமே அடங்குவது கவனிக்கத்தக்கது. (பொ.பூ.)
©1-ëແນກຫນມີ (ລpg8tນກຮເມີ)
வடமொழியில் 'ஹ' என்றால் சூரியன் என்றும் 'த' என்றால் சந்திரன் என்றும் பொருள்படும். இவை முறையே உடலிலோடும் பிரான, அபான வாயுக்களைக் குறிக்கும். பிராணாயாமம் என்று சொல்லப்படும் மூச்சுப் பயிற்சியால் இவ்வாயுக்களின் இயக்கங்களை ஒழுங்குபடுத்திச் சுழிமுனையில் ஒருங்கிணையச் செய்யும் யோக முறையை ஹதயோகம் என்று வடமொழியில் முன்னோர் மொழிந்தனர். இதனை 'வாசி யோகம்’ என்று சித்தர்கள் கூறினர். காலப்போக்கில் அடயோகம் என்பது உடற்பயிற்சியாக மாறிவிட்டது. ஆன்மாவை இறைமையிற் கலக்கச் செய்யும் யோகப் பயிற்சிக்கு உறுதுணையாக உடல் கருதப்பட்டு அதன் நலனுக்கென்று சில பயிற்சிகள் அடயோகம் என்ற பெயரிற் சொல்லப்பட்டன. காலம் செல்லச் செல்ல அதன் குறிக்கோள் மறைந்தது. உடலை வளப்படுத்தி இளமையோடும் வலிமையோடும் இருக்கச் செய்வதற்கே யோகப் பயிற்சி என்ற நிலை ஏற்பட்டுவிட்டது. யோக நிலையின் ஒரு படிநிலையாக இருந்த அடயோகம் தனித்ததொரு யோகமாக வளரத் தொடங்கிற்று.
உடலை வளமோடும் வலிமையோடும் வைத்துக் காத்துக் கொள்ளவே யோகப் பயிற்சி எனும் கருத்து, ஹதயோகப் பிரதீபிகா போன்ற பிற்கால யோக இலக்கியங்களில் அழுத்தம் பெற்று வளர்ந்தது. அடயோகப் பயிற்சிகள் உடலின் அக,புற உறுப்புகளையும் அவற்றின் இயக்கங்களையும் கட்டுப்படுத்தி விரும்பும் வண்ணம் இயக்கப் பயன்பட்டன. இப்பயிற்சிகளின் விளைவாக நீர்மேல் நடக்கவும் நெருப்பிற் குளிக்கவும் திடப் பொருளுள் மறைத்திடவும் கூடுமெனப் பிற்கால யோக இலக்கியங்கள் கூறத் தலைப்பட்டன. உடலை வருத்தி வளைக்கவும் நெளிக்கவும் முனைந்த இவ்வகை யோகியர் உடலை வெறுக்கவும் தொடங்கினர். அதன் விளைவாக உடலைப் பட்டினி போடுவதும், அருவருப்பாய்க் கருதுவதும்,
பொருட்படுத்தாமல் விடுவதும் யோகியர் பண்புகளாயின.
(க. நா.)
36

அடைக்கலாங் காத்த முதலியார்
19தினெட்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும் பத்தொன் பதாம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் வாழ்ந்தவர் காவாந் தண்டலம் அடைக்கலங்காத்த முதலியார்; இவர் துறைசை சிவஞான யோகிகளின் ( -1785) மாணவர்;
இளைய நாயனார் வேலூர் வெண்பாவந்தாதி, கடம்பர் கோயில் பதிற்றுப் பத்தந்தாதி, மாகறலந்தாதி எனும் அந்தாதிகளைப் பாடியவர். (பொ. பூ)
ඊiórරැorīśāśrmérinfluff, ව - ෆිගා.
காஞ்சி பிரதிவாதி பயங்கரம் உ. வே. அண்ணங்கராசாரியர் பத்தொன்பதாம் நூற்றாண்டின் கடையிலே தோன்றி, இருபதாம் நூற்றாண்டிலே வைணவரிடையே சிறந்த அறிஞராகக் கருதப் பெற்றவர்; காஞ்சிபுரத்தில் வாழ்ந்தவர்; தமிழ், சங்கதம், இந்தி, தெலுங்கு எனும் மொழிகளிலே வல்லவர்; அம்மொழிகளிலே வைணவ நூல்களுக்கு வியாக்கியானங்கள் எழுதியவர்;
நாலாயிரத் திவ்விய பிரபந்தம் முழுவதற்கும் திவ்வியார்த்த தீபிகை’ எனும் தமிழுரை கண்டு வெளிப்படுத்தியவர்; வேறு வைணவ நூல்களுக்கும் தமிழுரை தந்தவர். (பொ.யூ.)
அண்ணன்
பிரதிவாதி பயங்கரம் அண்ணன் என நயினாராசாரியராற் சிறப்பிக்கப் பெற்றவர்; அண்ணா, பூரீ வைஷ்ணவதாசர் என அழைக்கப்பெற்றவர்; காஞ்சிபுரத்தில் வாழ்ந்தவர். பதினான்காம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும் பதினைந்தாம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் வாழ்ந்தவர்; நயனாராசாரியர், மணவாள மாமுனிகள் எனும் வைணவப் பெரியோரின் சீடர்.
வேதாந்த தேசிகர் மீது சப்ததிரத்நமாலிகா பாடியவர்; பிரபத்தியோகக் காரிகைகள் இயற்றியவர்: பூரீ பாஷ்யம், பாகவதம்,
அஷ்டசுலோகி என்பனவற்றிற்கு வியாக்கியானம் செய்தவர்
(பொ.யூ.)
96örøOJTJ3FT1ólegu Jñ
தமிழ்நாடு சிதம்பரம் அண்ணாசாமி ஐயர் சங்கத மூலத்திலிருந்து சிதம்பர மஹாத்மியம் தமிழிலே இயற்றியவர்;
அதன் இரண்டாம் பதிப்பு 1897 இலே வெளி வந்தது.
* (பொ.யூ.)
அண்ணாமலைச் சதகம்
அண்ணாமலை நாதரை முன்னிலைப்படுத்திப் பாடப் பெற்றது அண்ணாமலைச் சதகம். இதற்கு வசந்தராயச் சதகம் எனும் மாற்றுப் பெயருமுண்டு. திருவண்ணாமலைக் கோயில் அறங்காப்பாளராக விளங்கிய சிங்கபுரி வசந்தராயர்
இந்துக் கலைக்களஞ்சியம்

Page 83
என்பவரின் பெயர் விளங்கவே ஆசிரியர் வசந்தராயச் சதகம் என்ற பெயரையும் சூட்டினார்.
அண்ணாமலைச் சதகத்தின் ஆதியில் விநாயகர் காப்பு, நூற்பெயர் வெண்பா, கடவுள் வாழ்த்து என்பனவும் அந்தத்தில் அவையடக்கமும் வாழிப் பாடலும் இடம் பெறுகின்றன; இடைநடுவே 100 பாடல்கள் உள்ளன; எனவே 105 பாடல்கள்
அண்ணாமலைச் சதகத்திலுள்ளன.
அதனைப் பாடியவர் மாம்பாக்கம் உபாத்தியாயர் திருச்சிற்றம்பல நாவலர் என்பவராவர்; அவர் காலம் பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதி என்பர்.
அண்ணாமலைத் தேவனை முன்னிலைப்படுத்தி ஆசிரியர் கூறும் செய்திகளிற் சில சரித்திர சம்பந்தமானவை: சில சமயம் தொடர்பானவை; சில உலகியல் சார்ந்தவை; சில அறநீதி ஆசாரம் பற்றியவை. தோத்திரப் பாங்கு குறைந்து தரவுக் களஞ்சியமாக அண்ணாமலைச் சதகம் அமைகின்றது.
காஞ்சிபுரம் மகாவித்துவான் கோ. சபாபதி முதலியார் பாடிய அருணாசல சதகமுமுண்டு. திருவண்ணாமலையிற் கோயில் கொண்ட இறைவி மீது வித்துவான் சின்னக் கவுண்டர் பாடிய
உண்ணாமுலையம்மன் சதகமுமுண்டு. (பொ. பூ)
SaôTaOT1D600008 6)8-L19Uss, USBIT
ராஜா, சேர், டாக்டர் எனும் கெளரவப் பட்டங்கள் சூட்டப் பெற்றவர்; செட்டிநாடு கானாடு காத்தானில் பிறந்தவர்; முத்தையா செட்டியாரின் புதல்வர்; வெற்றி பெற்ற தொழிலதிபர்; அதன் பலனாகக் கிடைத்த செல்வத்தை அரும் பணிகளுக்குக் கொடுத்த கொடை வள்ளல்; சிதம்பரம் மீனாட்சி தமிழ்க் கல்லூரியை அண்ணாமலைப் பல்கலைக்கழகமாக வளர்த்துத் தமிழுக்கென ஒரு பல்கலைக்கழகம் அமைத்த பெருமையினர்; அண்ணாமலைப் பல்கலைக்கழகம் நிறுவியபோது (1929) சிதம்பரம் இசைக் கல்லூரியையும் உருவாக்கியுதவியவர்; தமிழிசை வளர்ச்சிக்குப் பெருந்தொண்டு புரிந்தவர்; 1941 ஆகஸ்டு மாதத்திலே அண்ணாமலை நகரில் முதல் தமிழ் இசைமாநாடு நடக்க மூலகாரணர், 1943 இலே சென்னையிலே தமிழிசைச் சங்கம் நிறுவியுதவியவர்; பல கல்லூரிகளின் வளர்ச்சிக்கும் பொருளுதவி புரிந்தவர்; சிதம்பரம், திருவண்ணாமலை, கரூர் முதலாம் திருத்தலங்களின் திருப்பணிகளுக்குப் பெரிதும் உதவியவர்; தில்லைக் கோவிந்தராஜர் கோவிலுக்குச் செய்த திருப்பணி சிறப்பாகப் போற்றப் பெறுகின்றது.
தமிழ் மக்களின் கல்வி, கலைகள், சமயம் ஆகிய பண்பாட்டமிசங்களிலே பெரிதும் அக்கறை கொண்டு விளங்கிய
இந்துக் கலைக்களஞ்சியம்

ராஜா அண்ணாமலைச் செட்டியார் அரசியலிலும் நல்ல பதவிகளை வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. (பொ.யூ.)
S}6öTaOT1D600608: 6)8-L19u JUss, SUITS-T (1881-1948)
இவர் இராமநாதபுரம் மாவட்டம் கானாடு காத்தான் என்னும் ஊரில் 30.9.1881 ஆம் ஆண்டு முத்தையாச் செட்டியாருக்கும், மீனாட்சி அம்மையாருக்கும் மகனாகப் பிறந்தார். இவர் கரூரில் உள்ள பள்ளியில் சேர்ந்து ஆங்கிலமும் தமிழும் பயின்றார். 1901 முதல் 1910 வரை இந்தியா, பர்மா, இலங்கை, மலேசியா, கிழக்கிந்திய தீவுகள், சீயம் முதலிய நாடுகளில் அயராது பாடுபட்டுப் பெரும் பொருளிட்டினார். மிகவும் சுறுசுறுப்பும், கண்டிப்பும், காலமறிந்து எச் செயலையும் செய்யும் தன்மையுடையவராக விளங்கினார்.
1910முதல் 1913ஆம் ஆண்டுவரை காரைக்குடி நகர சபையில் தலைவராகப் பணியாற்றினார். 1912இல் தில்லியில் நடந்த ஐந்தாம் மன்னரின் முடிசூட்டு விழாவிற்கு அழைக்கப்பட்டார். 1916முதல் 1919வரை சென்னை சட்டசபையின் உறுப்பினராகவும் பதவி வகித்தார். 1917இல் நாட்டுக் கோட்ட்ை நகரத்தார் சங்கத்தை சென்னையில் நிறுவினார். இவரது முயற்சியால் சென்னை சட்ட சபையில் நகரத்தார்க்கு ஒர் இடம் அளிக்கப்பட்டது. பர்மா சட்ட சபையிலும் தனவந்தர் ஒருவருக்கு இடம் அளிக்கப்பட்டது. 1920இல் இந்திய இம்பீரியல் வங்கியின் சென்னைக் கிளையில் ஆளுநராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1921 - 1935 ஆகிய காலத்தில் சென்னை அரசாங்க சபையில் உறுப்பினராக இருந்தார்.
இலண்டனில் ஐந்தாம் ஜோர்ஜின் முடிசூட்டு விழாவிற்குச் சென்ற சமயம் ஆக்ஸ்போர்ட், கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகங்களைப் பார்வையிடும் சந்தர்ப்பமும் கிடைத்தது. இதனால் அவை போன்ற ஒர் உயர்கல்வி நிலையத்தை தமிழ்நாட்டிலும் ஏற்படுத்த வேண்டும் என அங்கேயே உறுதி பூண்டார். அதற்குத் தேவையான மூலதனத்தை ஒதுக்குவதிலும் பொருத்தமான இடத்தைத் தேர்ந்தெடுப்பதிலும் அடுத்து பத்து ஆண்டுகளைச் செலவிட்டார். சிதம்பரம் நகரிலேயே அண்ணாமலைச் செட்டியார் தம் தாயார் பெயரில் பூரீ மீனாட்சி கல்லூரியை நிறுவினார் (1920). 1922 இல் பி. ஏ. பட்டப்படிப்புத் தொடங்கப் பெற்றது. 1925 ஆம் ஆண்டளவில் தில்லையின் எல்லையில் உள்ள திருவேட்களத்தில் புதிய கட்டிடங்கள் கட்டப்பெற்று கல்லூரி அங்கு செயற்படத் தொடங்கியது. 1925இல் மேலும் இரண்டு கல்லூரிகளை நிறுவினார். அவை மீனாட்சி தமிழ்க் கல்லூரி, மீனாட்சி வட மொழிக் கல்லூரி என்பவை.
தொடக்கத்திலிருந்தே பெரும் புலமை பெற்றவர்களும் பேரறிஞர்களுமே இம் மூன்று கல்லூரிகளிலும் முதல்வராகவும் பேராசிரியர்களாகவும் நியமனம் பெற்றனர். வரலாற்றுப் பேரறிஞர் கே. ஏ. நீலகண்ட சாஸ்திரிகள், மகாமகோபத்தியாய டாக்டர் உ.வே.
37

Page 84
சாமிநாதய்யர், தண்டபாணி சாமி தீட்சதர், ஆங்கிலப் பேராசிரியர் கே. சாமிநாதன் போன்றோர் சிலராவர்.
1926இல் ஆந்திரப் பல்கலைக்கழகம் நிறுவப்பட்டது. அதே போன்று தமிழுக்கும் ஒரு பல்கலைக்கழகம் தேவையென மக்கள் விரும்பினர். அதனால் அப்பணிக்கு இருபது இலட்சம் ரூபாயும் 700 ஏக்கர் நிலத்தையும் அளிக்க முன்வந்தார். அவர் வழங்கிய நன்கொடைகளை ஆதாரமாகக் கொண்டு பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டது. அது அவரின் பெயரால் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் என்று நாமகரணம் பெற்றது. துணைவேந்தர் பதவி அவருக்கும் அவருக்குப் பின் குடும்பத்தில் மாநில ஆளுனர் குறிப்பிடும் ஒருவருக்கும் வழங்கப்பட்டன. அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தை நிறுவிய பின் இராசா அண்ணாமலை இசைக் கல்லூரி என்ற பெயரிலேயே தனிக்கல்லூரியை நிறுவினார். அந்தக் கல்லூரி சில ஆண்டுகளுக்குப் பின் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டது.
அவர் தமிழிசை வளர்ச்சிக்குப் பெரும் பணி புரிந்தவர். 1941 ஆகஸ்ட் மாதத்திலே அண்ணாமலை நகரில் முதல் தமிழ் இசை மாநாடு நடக்க மூலகாரணராக விளங்கினார். 1943 இலே தமிழ்ச்சங்கம் நிறுவ உதவி புரிந்தார்.
அவர் தில்லைக் கோவிந்தராசப் பெருமாள் கோயில் இளையாற்றங்குடி சிவன் கோவில் ஆகியவற்றைப் புதுப்பிக்கவும் திருவண்ணாமலை சிவன் கோயில் முதலிய பல கோயில்களைப் பேணிப் பாதுகாக்கவும் பல நிதியுதவிகள் வழங்கினார். கானாடு கார்த்தானில் மகளிர் மருத்துவமனை நிறுவியும், சென்னையில் பெண்களுக்காக “வெலிங்டன் கிளப்பு” ஏற்படுத்தியும் தில்லையில் நகரப் பெருமக்களுக்காக நகர மன்றம், பூங்கா
ஆகியவற்றையும் ஏற்படுத்தியும் பல சமூகப் பணிகள் புரிந்தார்.
(தே.ஹ.)
é96öITECOJTJ1D6DD6D 6U 11gu JITñ
8ாவடிச்சிந்தின் தந்தை என்று அழைக்கப்படுவதற்குத் தகுதி படைத்த அண்ணாமலை ரெட்டியார் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள சென்னிகுளம் என்ற ஊரில் 1865ஆம் ஆண்டு பிறந்தார். இவருடைய தந்தை சென்னவரெட்டியார்; தாய் ஒவு அம்மாள்.
இளமையிலேயே இவர் தமிழில் ஆர்வம் கொண்டு இராமசாமி என்ற புலவரிடமிருந்து தமிழ் இலக்கியங்களைப் பயின்று வந்தார். மீனாட்சிசுந்தர கவிராயரும் உதவி புரிந்தார். சில காலம் டாக்டர் உ. வே. சாமிநாத ஐயரிடம் நன்னூல் கற்றார். மனப்பாடம் செய்யும் ஆற்றலும் இவரிடம் சிறந்து விளங்கியது.
ஊற்றுமலை ஜமீன்தார் இருதாலய மருதப்ப தேவர் இவரை ஆதரித்தார். ஜமீன்தார் கழுகுமலைக்குக் காவடி எடுத்தபோது, அவருக்காக அண்ணாமலை ரெட்டியாராற் பாடப்பட்டவைகளே காவடிச் சிந்து ஆகும்.
38

விநாயகர் துதியுடன் இந்தப் பாடல்கள் ஆரம்பிக்கின்றன. இதற்குப்பின் முருகன்மீது சில பாடல்கள் உள்ளன; கழுகுமலைநகர், மலை, கோயில், குளம் ஆகியவையெல்லாம் மற்றப் பாடல்களில் விவரிக்கப்பட்டுள்ளன. முருகன் மிகவும் உன்னதமான நாயகனாகவும், மனித ஆன்மா அவருடன் ஒன்றியிருப்பதற்கு விழைவதாகவும் சித்திரிக்கப்பட்டுள்ளது. பாடல்கள் அழகிய மெட்டுக்களைக் கொண்டுள்ளன. செய்யுள் நயம் சிறப்பாக உள்ளது. ஹரிகாம்போஜி, கரகரப்பிரியா, நடபைரவி, சக்கரவாகம், முகாரி, ஆனந்த பைரவி, செஞ்சுருட்டி முதலிய ராகங்கள் கையாளப்பட்டுள்ளன. "புள்ளிக் கலாபமயில்” போன்ற சிந்துக்களின் இசை மிகவும் பழகிப்போய், “காவடிச்சிந்து மெட்டு” என்றே வழங்கப்படுகின்றது. ஆதிதாளம் மட்டுமன்றி, மிச்ரசாபு, கண்டலகு, திஸ்ரலகு, ஏகம், ரூபகம் முதலிய தாள வகைகளும் பயன்படுத்தப்பட்டுள்ளன. மற்றும் முடுகு என்ற விரைவாகப் பாடப்படும் பகுதியும் காவடிச் சிந்தின் ஒரு விசேஷ அம்சமாகும். “செந்தின் மாநகர்” என்று தொடங்கும் பாடலில் அதீத எடுப்புக் காணப்படுகிறது. “கண்ணாயிரம்’ என்று தொடங்கும் பாடலின் காலப்பிரமாணம் (சதுஸ்ரகம்) வியத்தற்குரியது. காவடி எடுத்து ஆடுவோர் கால் பெயர்த்து வைப்பதைக் காண்பது போன்ற உணர்ச்சி கேட்போர் உள்ளத்தில் எழும்.
அண்ணாமலை ரெட்டியாரின் காவடிச் சிந்தில் மிகவும் பற்றுக் கொண்டிருந்த மாகவி சுப்பிரமணிய பாரதியார், தானும் சில காவடிச் சிந்துக்களை இயற்றியுள்ளார். அண்ணாமலை ரெட்டியார் வீரைதலபுராணம், வீரை நவநீத கிருஷ்ணசாமி பதிகம்', 'கோமதி அந்தாதி போன்ற நூல்களையும் படைத்துள்ளார். தன்னை ஆதரித்த ஊற்றுமலை ஜமீன்தார்மீது 300க்கு மேற்பட்ட பாடல் வரிகளைப் பாடியுள்ளார்.
அண்ணாமலை ரெட்டியாரின் திருமணம் பருவக்குடி என்ற இடத்தில் நடந்தது. அந்தச் சமயத்தில் ஊற்றுமலை ஜமீன்தார் யானைகளையும், ஒட்டகங்களையும் அனுப்பி உதவியதாகச் சொல்லப்படுகிறது.
அண்ணாமலை ரெட்டியார் உரையாடலில் திறமை உள்ளவர். பிறரைக் கவரும் தோற்றம் பெற்றவர். ஆனால் தன் வாழ்க்கையைத் தக்க வழியில் நடத்திச் செல்லாததால், தன் 26ஆவது வயதிலேயே காலமானார்.
காவடிச்சிந்துகளைப் பாடுவதில் ஆர்வம் கொண்டிருந் தவர்கள் காரைக்குடி வீணைச் சகோதரர்கள், மழவராயநேந்தல் சுப்பராமபாகவதர், ஹரிகேச நல்லூர் முத்தையா பாகவதர் முதலானோர். காவடிச்சிந்து முதல் தடவையாக கல்குளம் குப்புசுவாமி முதலியார் அவர்களால் 1904ஆம் ஆண்டு வெளிப்படுத்தப்பட்டது. டாக்டர் எஸ். இராமநாதன் அவர்கள் காவடிச்சிந்துகளின் உண்மையான மெட்டுக்களைக் கண்டுபிடித்து அவற்றைச் சுரத்தாளக் குறிப்புகளுடன் 1966ஆம் ஆண்டு வெளியிட்டார். (பி. டி. செ.)
இந்துக் கலைக்களஞ்சியம்

Page 85
céaira TT1D60)6O 66).Jator JT
திருவண்ணாமலைச் சிவதலத்தின் பெருமைகளைப் போற்றும் அண்ணாமலை வெண்பாவுக்குத் திருவண் ணாமலை மாலை என்ற பேருமுண்டு விநாயகர் காப்பினையும் பயன்கூறும் இரு வெண்பாக்களையும் ஆதியும் அந்தமு மாகவுடைய அண்ணாமலை வெண்பாவிலே இடைநடுவே நூறு வெண்பாக்கள் உள்ளன.
அண்ணாமலை வெண்பாவின் ஆசிரியர் சிதம்பரம் குருநமச்சி வாயர் ஆவர்; அவர் பதினாறாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர்.
அண்ணாமலைவெண்பா அருணகிரியின் பெருமைகளைச் சிறுசிறு கூற்றுகளாக எளிய நடையிலே அமைத்துக் கூறுகின்றது.
புரசை அட்டாவதானம் இ. சபாபதி முதலியார் பாடிய அருணை வெண்பாமாலையும் புராணிகர் சோணாசல முதலியார் பாடிய சோணாசல வெண்பாவும் உள்ளன. (பொ.யூ.)
delaiya OTT61JT85T 36JT15356
தமிழ்நாடு திருமழிசை கோயில் கந்தாடை அண்ணாவப் பங்கார் சுவாமிகள், தென்கலை வைணவருடைய பழநடை விளக்கம் எனும் மூவாயிரப்படி குருபரம்பராப்ரபாவம் இயற்றியவர்; அது 1895இலே அச்சிடப்பெற்றது. (பொ.யூ.)
அத்தியயனோற்சவம்
ஆழ்வார் விழா எனவும் அத்தியயனோற்சவம் அழைக்கப் பெறும். இது தமிழ்த் திருப்பாசுரங்களுக்குச் சங்கத வேதத்தோடு ஒத்த தகுதி அளிக்கப்பட்டதைக் கொண்டாடும் ஞாபகார்த்த விழாவாகும். இது மார்கழி மாதத்திலே கொண்டாடப்படுவதாகும்.
இவ்விழா வைணவ திருப்பதிகளிலே, சிறப்பாக பூரீரங்கம்,
ஆழ்வார் திருநகரி, பூரீவில்லிபுத்தூர் ஆகிய திருப்பதிகளிற் கொண்டாடப்படும் கவர்ச்சி மிக்க உற்சவமாகும்.
ஆரம்பத்தில் நம்மாழ்வார் திருமேனி, ஆழ்வார் திருநகரி யிலிருந்து பூரீரங்கத்திற்குக் கொண்டு வரப்பட்டு அவர் முன்னிலையில் இவ்விழா நடைபெற்றது. பின்பு நீண்ட தூரத்தின் காரணமாக அவ்வழக்கம் கைவிடப்பட்டபோதும் பூரீரங்கமும் ஆழ்வார் திருநகரியும் இவ்விழாவினைக் கொண்டாடி வந்தன. ஏனைய வைணவ திருப்பதிகளும் இவற்றைப் பின்பற்றி அவ்விழாவினைக் கொண்டாடத் தொடங்கின. அவ்விழா இருபது நாள் நடைபெறும்.
முதல் பத்துநாள் திருமொழித் திருநாள்; அடுத்த பத்துநாள் திருவாய்மொழித் திருநாள். திருமொழித் திருநாள் பதினொரு ஆழ்வாரின் மூவாயிரம் திருப்பாசுரங்களுக்குரியது; திருவாய்
இத்துக் கலைக்களஞ்சியம்

மொழித் திருநாள் நம்மாழ்வாரின் திருவாய் மொழிப் பிரபந்தத்திற்கு மட்டும் உரியது. திருநெடுந் தாண்டகத்துடன் திருமொழித் திருநாள் ஆரம்பமாவது மரபு. திருமங்கை மன்னன் வேண்டுகோளின்படி அவ்விழா அறிமுகஞ் செய்யப்பட்டதால் அவர் திருப்பாடலுடன் தொடங்குவதாகக் கூறுவர்.
பூரீரங்கம், ஆழ்வார் திருநகரி, பூரீவில்லிபுத்தூர் எனும் திருப்பதிகளிலே அரையர் அல்லது விண்ணப்பம் செய்வார் எனும் மரபினர் திருப்பாசுரங்களை ஒதும் முறைமையுள்ளது. அவர்கள் ரீநாதமுனிகளின் பரம்பரையில் வந்தவர்களாதலின் அவர்களுக்கு இத் திருப்பதிகளில் விசேட மரியாதைகள் வழங்கப்படும். வேறு வைணவ திருப்பதிகளிலும் முன்பு அரையர் இருந்தமைக்குச் சான்றுகளுண்டு. விசேட தலையணியுடன் தனித்தோ அல்லது நால்வர் ஐவராகச் சேர்ந்தோ அவர்கள் பாசுரங்களைப் பாடி 'தம்பிரான்படி” வியாக்கியானங்களை எடுத்துரைப்பர். சில பாசுரங்களுக்கு அபிநயமும் செய்வர். திருமொழித் திருநாள் இரவுகளிலே மகாவிஷ்ணு இராமனாகவோ கிருஷ்ணனாகவோ அலங்கரிக்கப்படுவார்.
திருவாய்மொழித் திருநாள் முன்னையதிலும் கூடியளவு மதிப்புடன் செய்யப்படும். இங்கும் பாடலும் வியாக்கியானமும் முக்கியத்துவம் பெறும். கடைசி நாளிலே நம்மாழ்வார் வைகுண்டம் அடைவதும் அவர் திரும்பி பூமிக்கு வருவதும் உள்ளத்தைத் தொடுமாறு செய்து காட்டப்படும்.
மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் ஆவணி முதல் ஞாயிறன்று தேவார முதலிகளையும் மணிவாசகரையும் நடராசப் பெருமான் சந்நிதிக்குத் திருமுறைகளுடன் எழுந்தருளப்பண்ணி அங்கு தமிழ் வேதமாகிய திருமுறைகள் ஒதப்படுவதும் இங்கு நோக்கத்தக்கது. (பொ.யூ.)
அத்திரி (அணுஆயா)
மகரிஷிகளில் ஒருவரான அத்திரி, அக்கினி, இந்திரன், அஸ்வினி தேவர் மீது பாடிய பாடல்கள் பல வேதத்திலுள. பின்னைய மரபுகளில் மனுவில் ஒருவராகவும் நட்சத்திரங்களில் ஒன்றாயும் கூறப்பட்டுள்ளார்.
தொழுநோயுடன் பிறந்த போதும் தெய்வ பக்தியினாலே பிற்காலத்தில் அதிலிருந்து மீண்டவர் அத்திரி மகரிஷி.
அத்திரிமகரிஷி தக்ஷனின் மகள் அனுசூயாவை மணந்தவர். வனவாசத்தின்போது இராமனாதியோர் அவர்களுடைய ஆசிரமத்தினை அடைந்து விருந்தினராக உபசரிக்கப்பட்டனர்.
அனுசூயாவின் தெய்வபக்தியும் பதிபக்தியும் அவருக்கு அற்புதங்களைச் செய்யும் ஆற்றலை அளித்தன. தன் கணவன் பிரபல்லியமான ஒரு தாசியுடன் உறவுகொள்ள விரும்பியபோது அவனைத் தன் தோள்மீது சுமந்து அவளிடத்துக்குக் கொண்டு
39

Page 86
சென்றவள். அப்போது அத்திரி வேறொரு தெய்வீக புருஷரை அவமதிக்க அவர் மறுநாள் சூரியோதயத்திற்கு முன் அத்திரி மரணமடைவார் என்று சபித்தார். அனுசூயை சூரியனை உதிக்க வேண்டாம் எனக் கட்டளை இட்டதால் மறுநாள் உலகம் இருண்டு கிடந்தது. தேவர்கள் இடையிட்டு சாபத்தினை மாற்றச் செய்ததால் மீண்டும் சூரியன் உதிக்க முடிந்தது.
நாரதரின் சூழ்ச்சியினால் அனுசூயையின் கற்பிலே பொறாமை கொண்ட பார்வதி, சரஸ்வதி, லக்ஷமி என்போர் தம் கணவரை அனுசூயை தம்மீது ஆசையுண்டாகச் செய்யும்படி வேண்ட, அவர்களும் துறவி வேடம் தாங்கி விருந்தினராகச் சென்றனர். விருந்திற்கு முன்பு அனுசூயையை நிர்வாணமாக விருந்து படைக்க மும்மூர்த்திகளும் வேண்டியதால் விருந்தினர் விருப்புக்கு இடமளிப்பது நியதியாதலால், அனுசூயா அவர்களை குழந்தைகளாக மாற்றி முலைப்பால் ஊட்டித் தன் பிள்ளைகளாக ஆச்சிரமத்திலே வைத்திருந்தார். நிலைமையை அறிந்த தேவிமார் இரங்கி வேண்டியதால் அவர்களை அனுபவித்த பின்பு மும்மூர்த்திகளையும் பழைய உரு அடைய அனுமதித்தார்.
வேறொரு கதையின்படி மும்மூர்த்திகளையும் விடுவிக்க அவர்களுடைய பகுதிகளில் ஒவ்வொன்றை அவளிடம் விட்டுச் செல்ல வேண்டும் என்பது நியதியென்றும் அதன்படி உருவாகிய தெய்வமே தத்தாத்ரேயன் என்றும் கூறுவர். இன்னுமொரு கதையின்படி கற்பரசிக்குத் தோற்ற மும்மூர்த்திகள் அத்திரிக்கும் அனுசூயாவுக்கும் வழங்கிய பிள்ளையே தத்தாத்ரேயன் என்றும் கூறப்பட்டுள்ளது.
தத்தாத்ரேயனை வழிபட்டு பேறு பெற்றவன் காத்தவீரியன்.
(பொ.பூ.) அத்துவசுத்தி
அத்துவா - வழி. ஆன்மாக்களுக்குக் கன்மம் ஏறுதற்கும் கன்மம் நீங்கிப் பரகதி அடைதற்கும் காரணமாகிய வழி அத்துவா அத்துவாக்கள் சொற் பிரபஞ்சம், பொருட் பிரபஞ்சம் என இருவகைப்படும். அவற்றுள் மந்திரம், பதம், வன்னம் சொற்பிரபஞ்சம்; புவனம், தத்துவம், கலை பொருட் பிரபஞ்சம்.
ஆறு அத்துவாக்களிலும் கட்டப்பட்டிருக்கின்ற போகங்களை எல்லாம் ஏக காலத்திலே புசிப்பித்துத் தொலைத்து மோட்சத்தைச் கொடுத்தல் அத்துவ சுத்தி.
மந்திரம் பதத்திலும், பதம் வன்னத்திலும், வன்னம் புவனத்திலும், புவனம் தத்துவத்திலும், தத்துவம் கலையிலும் அடங்க ஒடுக்கிக் கலையைத் திரோதான சத்தியிலும், திரோதான
சக்தியைச் சிவத்திலும் அடக்குமாறு ஒடுக்குவது அத்துவசுத்தி (பொ.யூ.)
அத்துவிதம்
இறைவனுக்கும் ஆன்மாவுக்கும் உள்ள தொடர்பினை
பற்றிய சிந்தனையைத் தூண்டி இந்திய தத்துவ வளர்ச்சியிற்
40

சிறப்பிடம் பெறுவது அத்துவிதம் எனும் கோட்பாடு. இச் சொல்லிற்குக் கொண்ட பொருள்மாறுபாட்டின் விளைவாக வெவ்வேறு வைதிக சமயப் பிரிவுகளின் அடிப்படைச் சித்தாந்தங்கள் உருவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
“ஏகம் ஏவ அத்துவிதீயம் பிரமம்” என்பது வேத மகாவாக்கியம். "அத்துவிதீயம்” என்ற சொல்லே அத்துவிதம் என வட சொல்லாகத் தமிழிலே வழங்குகின்றது. அத்துவி தீயம் அல்லது அத்வைதம் என்பது நவைதம் என்பதன் திரிபு என்பர். இச்சொல்லின் அகரத்திற்கு வடமொழியிலே தரப்படும் ஆறு பொருள்களிலே மூன்று தத்துவ உலகிற் சிறப்பிடம் பெறுகின்றன. அப்பொருள்கள் இன்மை, மறுதலை, அன்மை என்பனவாம்.
அமலம் எனும்போது மலம் இல்லாதது எனப் பொருள் தருகின்றது. இதுவே இன்மைப் பொருள் : அநீதி எனும்போது நீதிக்கு மறுதலை எனப்பொருள் தருகின்றது. இதுவே மறுதலைப் பொருள். அப்பிராமணன் எனும்போது பிராமணனாய் இருந்தும் பிராமணத் தன்மை இல்லாதவன் எனப்பொருள் தருகின்றது. இதுவே அன்மைப் பொருளாம்.
அத்துவிதம் எனும் சொல்லுக்கு இன்மை, மறுதலை, அன்மை எனும் முப்பொருளும் கொள்ளப்பட்டுள்ளது. இன்மைப் பொருளினைக் கேவலாத்துவிதமும் விசிட்டாத்துவிதமும், மறுதலைப் பொருளினைத் துவைதமும், அன்மைப் பொருளினைச் சைவ சித்தாந்தமும் கொண்டிருக்கின்றன. இரு எண்ணுப் பெயர் (ஏகம், துவிதம்) மீது அகரம் அன்மைப் பொருளில் மட்டுமே வழக்கில் வரும் என்பர் சைவ சித்தாந்திகள். (அநேகம் - ஒன்றல்லாதது; அத்துவிதம் - இரண்டல்லாதது).
'அயம் ஆத்ம பிரம’ (இந்த ஆன்மா பிரமம்) எனும் யாஞ்ஞவல்கியர் கூற்றும், “தத்துவம் அஸி’ (அது நீயே) எனும் உத்தாலகர் கூற்றும் உபநிடதக் கருத்துக்கள். கெளடபாதர் மாண்டுக்கிய காரிகையில் ஆன்மாவின் இருமையின்மைத் தன்மையை வற்புறுத்தியதோடு உலகம் வெறும் தோற்றமே என்ற கருத்தையும் முன் வைத்தார். இவருடைய சீடர் பூரீ சங்கரரே அத்துவிதத்திற்கு இன்மைப் பொருள் கொண்டு விரிவாகத் தத்துவ விளக்கம் செய்தவராவார்.
பிரமம் இரண்டில்லை எனத் தொகுத்த பூரீ சங்கரர் பிரமம் உண்மையான பொருள்; இந்த உலகம் ஒரு பொய்த் தோற்றமே, ஒவ்வொரு ஆன்மாவும் பிரமம்தான்; பிரமத்தை விட வேறன்று என விரித்துரைத்தார். ஒரு சூரியனே பல குடங்களில் உள்ள நீரில் பிரதிவிம்பித்துப் பலவாகத் தோன்றுவது போல ஒர் ஆன்மாவே பல உடல்களில் நின்று பலவாகத் தோன்றுகின்றது என்று அவர் விளக்கினார். உபநிடதங்களுக்கும் பகவத் கீதைக்கும் பிரமசூத்திரத்திற்கும் அவர் தந்த உரைகளிலும் அம்மொழியில் எழுதிய உபதேச சகஸ்ரி, விவேக சூடாமணி என்பனவற்றிலும் இக்கோட்பாட்டினை விளக்கிப் போந்தார்.
இந்துக் கலைக்களஞ்சியம்

Page 87
பூரீ சங்கரரின் சீடர் சுரேசுவரர், பதுமபாதர் என்போரும் தம் குருவின் கோட்பாடுகளை விளக்கி எழுதியிருக்கின்றார்கள். வேறு பலரும் பூரீ சங்கரரின் மதத்தை விளக்கி வடமொழியிற் பல நூல்களை எழுதியுள்ளனர்.
தமிழ் மொழியிலும் சங்கர மதத்தினை விளக்கும் பல நூல்களுண்டு. தமிழ் நாட்டிலே வேதாந்தம் கற்பவர்கள் நாநாசிவவாதக் கட்டளை, கீதாசாரத்தாலாட்டு, சசிவன்ன போதம் மகாராஜாதுறவு வைராக்கியசதகம், வைராக்கிய தீபம் இலட்சணா விருத்தி வேதாந்த சூடாமணி கைவல்லியநவநீதம் அஞ்ளுைவதைப்பரணி, விவேகசூடாமணி, ஈஸ்வரகீதை, பகவத்கீதை, பிரமகீதை, பஞ்சதசி, ஞானவாசிட்டம் எனும் பதினாறு நூல்களை முறையே கற்பது இங்கு மனங் கொளத்தக்கது.
பூரீ சங்கரர் சித்தாந்தப்படி பிரமம் அல்லது ஆத்மா ஒன்றே உண்மை; குணங்குறியில்லாதது; நிர்க்குணப் பிரம்மம்; சொல்லுக்கும் மனதுக்கும் எட்டாதது. இதனால் பூரீ வல்லபர் பூரீ சங்கரரின் அத்துவிதத்தைக் கேவலாத்துவிதம் என்றார்; ஏகான்மவாதம் என்ற பெயரும் இதனாலேயே சங்கரர் மதத்திற்கு ஏற்பட்டது.
நம்முடைய புத்திக்குப் பிரமம் சகுணப் பிரமமாய்த் தோன்றுகிறது. இந்நிலையிற் பிரமம் உலகுக்குக் காரண மாகின்றது. ஆனால் பிரபஞ்சம் மாயை. அது அனாதி; ஆனால் நித்தியமன்று. ஞானம் உதயமாகும்போது மாயை மறைந்து விடுகிறது. இதனை மாயாவாதம் என்றார் மாணிக்கவாசக சுவாமிகள்.
சங்கரமதம் மோட்சத்திற்கு வழி ஞானம் என்றும் கருமம் சாதனமாகாது என்றும் கொள்வதாகும். நிஷ்காம கருமத்தினால் மனம் சுத்தமடையும், உபாசனையும் ஒருமுகப்படும். அப்பொழுது வேதாந்த விசாரத்திற்குரிய சூழல் உருவாகின்றது. வேதாந்த விசாரத்தில் ஈடுபடுமுன் நான்கு சாதனம் தேவை எனப்படுகின்றது. அவை :
1. ஆத்மா அழியாதது: ஏனையவை அழியும் என்ற
பகுத்தறிவு.
2. இகபர சுகத்தை நாடாது இருப்பது.
3. சமாதி சட்கசம்பத்து; மனவடக்கம் (சமம்), இந்திரியங்களைத் திசை திருப்புவது (தமம்), திருப்பிய இந்திரியங்களைத் தாக்கும் பக்குவம் (திதிட்டை), மனதை
ஒரு நிலைப்படுத்தல் (சமாதானம்), வேதாந்த போதனை யிற் சிரத்தை,
4. மோட்ச ஆசை முமுட்சுத்துவம்)
இந்துக் கலைக்களஞ்சியம்

ஞான மார்க்கத்தின் பகுதிகளாகச் சிரவணம், மனனம், நிதித்தியாசனம் என்பன சங்கர மதத்திற் கூறப்படுவன. வேதாந்த வாக்கியப் பொருளைக் குருவிடம் கேட்டல் சிரவணம். கேட்ட பொருளைச் சிந்தித்தல் மனனம். சிந்தித்துத் தெளிந்ததை இடைவிடாது தியானித்தல் நிதித் தியாசனம்.
சங்கரமதம் அஞ்ஞானத்தின் அழிவே மோட்சம் என்கிறது. மோட்சம் அடைந்தவர் சீவன் முத்தர். இப்பிறவியிலேயே மோட்சம் அடையலாம். சீவன் முத்தர் தேகம் தாங்கிச் சீவிப்பவர் போலத் தோன்றினும் அவருக்குத் தேகமில்லையாம். முத்தியில் ஆன்மா இல்லையாகின்றது. இறைவன் ஒருவனேயுளன். சங்கரமதமே அத்துவிதம் என்றும் வேதாந்தம் என்றும் பொது வழக்கிலே செல்வாக்குப் பெற்றுள்ளது என்பது நோக்கத்தக்கது.
பிரமம் இரண்டில்லை என்று அத்துவிதத்திற்குப் பொருள் கொண்ட மற்றொரு பிரிவினர் விசிட்டாத்துவித வாதிகள். பூரீ இராமாநுசர் தம் ஆசாரியர் இக்கோட்பாட்டினை முன்வைத்த போதும், பூரீ இராமானுசரே அதனை வகுத்து விளக்கி அமைத்துக் கொடுத்தவராவர்.
உலகமும் உயிருமாகிய விசேஷணங்களையுடையது பிரமமாகிய விசேஷியம். இந்த விசேஷணம், விசேஷியம் ஆகிய இரண்டும் சேர்ந்த விசிஷ்டமே பரம்பொருள். இதனாலேயே இத்தத்துவம் விசிஷ்டாத்துவிதம் என வழங்கப்படுகின்றது.
ஈஸ்வரன், சித்து, அசித்து எனும் தத்துவத்திரயத்திலே ஈஸ்வரனே சார்பற்ற உள்பொருள்; ஏனையவை இறைவனைச் சார்ந்து நிற்பவை என்பர் விசிட்டாத்துவித வாதிகள். ஆன்மாவுக்கு உடல் சரீரம், உடலுக்கு ஆன்மா சரீரி. அதேபோன்று இறைவனுக்கு ஆன்மாவும் உலகும் சரீரம். சித்தும் அசித்தும் ஈசுவரனிடமிருந்து வேறுபட்டவை ஆயினும் பிரிக்க முடியாதவை. இறைவன் அந்தர்யாமியாய் உண்ணின்று உணர்த்துபவர்.
பந்த ஆன்மாக்கள் சமுசாரச் சூழலில் அகப்பட்டு வீடுபேறடைவதற்கு ஒரு பிறவியிலிருந்து மற்றொரு பிறவி எடுத்துக் கொண்டிருப்பவை. மோட்ச வழி, கருமம், ஞானம், பக்தி, பத்தியிலும் பிரபத்தி அதிகம் சிறந்தது. ஆன்மா தன் சடவுடல் அழியும்போது வீடுபேற்றினை அடைகின்றது. வைகுண்டத்திலே பரமாத்மாவான விஷ்ணுவின் நித்திய தரிசனத்தைக் கண்டு களிப்பது மோட்சம்.
விசிட்டாத்துவிதம் போன்று விஷ்ணுவை ஈஸ்வரனாகக் கொண்டது துவைதம். துவைதத்தின் தலை சிறந்த பிரசாரகர் பூரீ மத்துவர். இவர் அத்துவிதம் என்பதற்கு மறுதலைப் பொருள் கொண்டவர். உள்பொருள்கள் பலவாகும் என்பதே துவைதத்தின் அடிப்படைத் தத்துவம் (ஈஸ்வரன், ஆன்மாக்கள், உலகு). ஆன்மாதான் இறைவனைச் சார்ந்தது என்றும் இறைவனது
41

Page 88
கட்டுப்பாட்டுக்குள் இருப்பது என்றும் அறியும் அறிவால் மீட்சி பெறுகின்றது. சரியான அறிவு இறைவன் மீது அன்பு கொள்ள வைக்கிறது. அன்பு அல்லது பக்தியே மோட்சம் அடையும் வழி. இறைவன் அருளாலேயே ஆன்மா விடுதலை பெற முடியும்.
பூரீ சங்கரரும் பூரீ இராமானுசரும், பூரீமத்துவரும் தந்த மதக் கோட்பாடுகளை பூரீ நிம்பார்கர், பூரீ வல்லபர், பூரீ சைதன்னியர் என்போர் தழுவி துவைதாத்துவிதம், சுத்தாத்துவிதம், அசிந்தியபேதாபேதம் எனப் புதிய மரபுகளை ஏற்படுத்தியுள்ளனர்.
சைவ சித்தாந்திகள் அத்துவிதத்திற்கு அன்மைப் பொருள் கொள்வர். இறைவனும் உலகுயிர்களும் கலப்பினால் ஒன்றாகவும், பொருள் வகையால் வேறாகவும் உள்ள தன்மை சைவசித்தாந்தம் வற்புறுத்துவதாகும். இறைவன் அறிவுள்ள னவும், அறிவு இல்லாதனவுமாகிய எல்லாப் பொருள்களிலும் வேறறக் கலந்து ஒன்றாயும், அவற்றின் வேறாயும், உடனாயும் இருக்கிறான். உயிர் மலத்தினின்று நீங்கி இறைவனை அடைந்த நிலையிலும் இறைவனே அதற்குத் தலைவன்; உயிர் இறைவனாக மாட்டாது. ஆன்மா ஆணவ மலம் முற்றாக நீங்காதபோது இறைவனோடு ஒன்றாக முடியாது. ஒன்றென்றும், இரண் டென்றும் கூற முடியாத கலப்புநிலை, இரண்டற்ற நிலை அத்துவித முத்தி. இது, தாள்+தலை இரண்டாம் தன்மை அற்று தாடலை என்று ஒன்றாதல் போன்றது. பதி, பசு, பாசம் சைவ சித்தாந்தத்தின் அதி முக்கிய கோட்பாடு என்பது ஈண்டு மனங் கொள்ளத்தக்கது.
சைவசித்தாந்திகள் மேற்கொண்ட அத்துவித ஆராய்ச்சி அவர்கள் மரபுக்குச் சுத்தாத்துவித சைவம் என்ற பெயரைத் தருமளவிற்குச் செல்வாக்குள்ளதாக அமைந்தது. (பொ.பூ)
அத்துவித வெண்பா
வெண்பாவிலே அத்துவிதம் கூற எழுந்தது அத்துவித வெண்பா. இங்கு கூறப்படும் கருத்துக்கள் வாதுளாகமத்தைத் தழுவியதாம்; வாதுளாகமசாரம் என்றே நூற்பா கூறுகின்றது.
அத்துவிதவெண்பா ஆசிரியர் சித்தர் சிவப்பிரகாசர். திருவாவடுதுறையாதீன தாபகர் மூவலூர் பூரீ நமச்சிவாய மூர்த்திகளின் சீடர் சித்தர் சிவப்பிரகாசர், இலிங்கதாரணி. குடந்தை சிவப்பிரகாசர் எனப் பிறப்பாலும், துறைசை சிவப்பிரகாசர் எனத் தொடர்பாலும், திருவண்ணாமலை சிவப்பிரகாசர், துறையூர் சிவப்பிரகாசர் எனப் பணி செய் இடத்தாலும் இவர் பெயர் பெறுவர். இவர் சீடர் திருப்பேரூர் சாந்தலிங்க தேசிகர், துறையூர் ஞானக்கூத்தர் முதலியோர்.
அத்துவித வெண்பா 218 வெண்பாவுடையது. அதற்குத்
துறையூர் ஆதீனத்தின் பத்தாம் தலைவர் நன்னூற் சிவப்பிரகாசர் உரை கண்டுள்ளார். அத்துவித வெண்பா அச்சிடப் பெற்றுள்ளது.
42

அத்யாத்தும உபநிடதம்
சர்க்கிலயசுர் வேதத்தைச் சேர்ந்த அத்யாத்தும உபநிடதம், முக்திகோபநிடதம் கூறும் 108 உபநிடதங்களில் ஒன்றாகும். அதற்குத் துரீயாதீத அவதூத உபநிடதம் என்றும் பெயர். அபாந்தரதமன், பிரமன், கோர அங்கிரஸ், ரைக்வா, இராமன் வழி அத்யோத்தும உபநிடதம் உணர்த்தப்பட்டதாகக் கூறப்படுகின்றது. அது நாராயண உபநிடதம்.
இருமையற்ற நிலை விரிவாக விளக்கம் பெறும் அத்வைத பாரமான உபநிடதம் அதுவாகும். (பொ.யூ.)
அத்யாத்தும ராமாயணம்
இராம சரிதையின் ஆத்மீகத்தை வெளிப்படுத்துவது அத்யாத்தும ராமாயணம். கிருஷ்ணாவதாரத்துக்குப் பாகவதம் போன்று இராமாவதாரத்திற்கு அத்யாத்தும ராமாயணம் அமைகின்றது. இராமபிரானின் ஆத்மீக உயர்ச்சியை எடுத்துக்காட்டி இராமபிரானைத் தம் இஷ்ட தெய்வமாகக் கொண்டு போற்றுபவர்களின் பக்தி உயர்வுக்கு வேண்டிய பாராயண நூலாக இது அமைகின்றது.
அத்யாத்துமராமாயணத்திலே இராமன் பெருந் தலை வனாகவோ அல்லது தர்மத்தின் பிரதி நிதியாகவோ அல்லாது கடவுளாக - தெய்வீக அவதாரமாக - தன்னுடைய ஆத்மீக உணர்வோடு, அதனை வெளிக்காட்டித் தன்னோடு தொடர்பு கொள்பவருக்கு மோட்சம் அளிப்பவனாக அமைகிறான். மகாவிஷ்ணு மனித உடலுடன் தோன்றியமை அதனுள்ளே தெளிவாக உணர்த்தப்பட்டுள்ளது. பிறந்த பொழுதே தன்னை மகாவிஷ்ணு என்று இராமன் காட்டிக் கொள்கிறான். இராமன் வனவாசம் மேற்கொண்டது அவனுடைய திட்டமேயன்றி வேறன்று கைகேயி முதலியோர் அவனுடைய மாயையின் வழியே இயங்கினார்களே ஒழியத் தாமாக இல்லை. இராவணன் கவர்ந்தது மாயச்சீதையே அன்றி உண்மைச் சீதையன்று. உண்மைச் சீதை அக்கினி பகவானின் பாதுகாப்பில் இருந்து அக்கினிப் பிரவேசத்தின்போது அக்கினி பகவானால் இராமனிடம் மீண்டும் அளிக்கப்படுகிறாள். இராவணனும் கும்பகர்ணனும் இராமன் இன்னான் என்று தெரிந்து கொண்டும் மோட்சத்தை விரைவில் அடையும் மார்க்கம் இராமனுடன் நேரடியாக மோதுவதே என்று நினைத்தே போர் செய்தார்கள். சீதைக்காக இராமன் அழுவதுபோல் காட்டிக் கொண்டது மக்கள் தன்னை மானிடன் என்று நினைப்பதற்காகவேயாம். இவ்வாறு அத்யாத்தும ராமாயணம் இராம சரிதையிலே நோக்கத்திற்கேற்ப பல மாறுதல்களைச் செய்துள்ளது.
பாசுரங்களும் உயர்ந்த ஆன்மீக விடயங்கள் பற்றிய விரிவுரைகளும் தத்துவ ஆய்வுரைகளும் ஆத்மீகப் பயிற்சிக்கான வழிகாட்டிகளும் அத்யாத்தும ராமாயணத்தின் நோக்கத்தினைத்
இந்துக் கலைக்களஞ்சியம்

Page 89
தெளிவாக்குகின்றன. பாகவதத்தோடு அத்யாத்தும ராமாயணம் இவ்விடயங்களில் பல ஒற்றுமைகள் உடையதாகக் காணப்படுதல் குறிப்பிடத்தக்கது.
மகேஸ்வரனுக்கும் பார்வதிதேவிக்கும் இடையே நடக்கும் உரையாடலைப் பிரமா நாரதருக்குக் கூறுவது போன்ற அமைப்பினை உடையது அத்யாத்து மராமாயணம். இது பிரமாண்ட புராணத்தின் முதற் பகுதியிலே 61ஆம் அத்தியாயத் திலிருந்து தொடரும் பகுதியாக உள்ளது. உத்தர காண்டம் நீங்கலாக ஆறு காண்டங்களில் 56 சருக்கங்களும் சுமார் 3643 பாடல்களுமுள்ளன.
இதனாசிரியர் இன்னார் என்றோ அல்லது இதன் காலம் யாதென்றோ துணிய முடியவில்லை. ஆயினும் சிலர் பதினான்காம் நூற்றாண்டில் வாழ்ந்த இராமானந்தர் எனும் ஞானியே இதன் ஆசிரியர் என்று கருதுவர். இது மலையாள மொழியில் எழுத்தச்சன் இயற்றிய இராமாயணத்திற்கு மிகவும் உதவியுள்ள தாகத் தெரிகின்றது.
அத்யாத்துமராமாயணம் கவிச் சிறப்பிலே வான்மீகி ராமாயணத்திற்கு ஈடுநிற்க முடியாவிட்டாலும் இலக்கிய நயத்துடன் விளங்குகின்றது. மேலும் இலகுவான சங்கத மொழி நடையும் காணப்படுகின்றது.
சென்னை மயிலாப்பூர் இராமகிருஷ்ண மடத்தினருக்காக சுவாமி தபஸ்யானந்தர் ஆங்கில மொழி பெயர்ப்புடன் 1985 இலே வெளியிட்டுள்ளார். (பொ.யூ.)
அத்வயதராகோபநிடதம்
சர்க்கில யசுர் வேதத்தைச் சேர்ந்த அத்வயதாரகோப நிடதம் முக்திகோபநிடதம் கூறும் 108 உபநிடதங்களில் ஒன்றாகும். செய்யுளும் வசனமுமாக அது காணப்படுகின்றது. பிரமத் தினையே இலக்காகவுடைய அவ்வுபநிடதம் ராஜயோகத்தின் முக்கியமான அமிசங்களை விளக்குகின்றது. ராஜயோகத்தினை தாரகாயோகம் எனக் கூறுதல் குறிப்பிடத்தக்கது. (பொ.யூ.)
அதர்வசிகா உபநிடதம்
அதர்வ வேதத்தைச் சேர்ந்த சைவ உபநிடதம் அதர்வ
சிகோபநிடதம். இவ்வுபநிடதம் முக்திகோபநிடதம் தரும் 108 உபநிடதப் பட்டியலில் இடம் பெறுகின்றது. (பொ.யூ.)
அதர்வசிரஸ் உபநிடதம்
அதர்வவேதத்தைச் சேர்ந்தது அதர்வசிரஸ் உபநிடதம்.
அது முக்திகோபநிடதம் தரும் 108 உபநிடதப் பட்டியலில் இடம் பெறுவது. சைவ உபநிடதமான அதர்வசிரஸ் பாசுபதருக்கு உரியது.
இந்துக்கலைக்களஞ்சியம்

அதர்வ வேதம்
அதர்வ வேதம் வைதிகமொழியில் அமைந்த வேதங்களில் நான்காவதாக இடம் பெறுவதாகும். அதர்வாங்கிரஸ், பிருகுவாங்கிரஸ், பிரமவேதம், பேஷஜானி முதலிய பெயர்களும் இதற்குண்டு.
திரயீவித்யாவில் அதர்வம் இடம் பெறவில்லை. தர்ம சூத்திரங்கள் அதர்வத்தை நான்காவது வேதமாகக் குறிப்பிடவில்லை. மகாபாரதத்திலே அதர்வம் தனிவேதமாகக் கருதப்படும் நிலையினை அடைந்து விட்டது.
அதர்வ வேதத்திற்கு ஒன்பது பாடாந்தரங்கள் உள என்பர். ஆயினும் இன்று இரு பாடாந்தரங்களே கிடைத்துள்ளன.
அதர்வ வேதத்திலே மிகப் பழைய கருத்துக்கள் பல உள்ளனவேனும் அவை ஏனைய வேதம் கூறும் கருத்துக்களிலும் வேறானவை.
உயர்நிலையில் நில்லாத கீழோருக்கு உரியது என்ற கருத்து ஒரு காலத்தில் இருந்ததால் மக்கள் அதர்வத்தை வேதமாகக் கருதவில்லை. அக்கினி வழிபாட்டில் மிகவும் ஈடுபட்ட புராதன காலப் புரோகிதரான அதர்வர்கள், அங்கிரஸர்களுடன் தொடர்புடையது இவ்வேதம் என்பர். ஆயினும் அவர்கள் சோமனுடன் தொடர்புறுத்திக் கூறப்படும் இருக்கு வேதம் கூறும் புரோகிதர்களிலும் வேறுபட்டவர்.
நாளடைவில் ஏனைய வேதங்களில் இருந்து பெற்ற சில மாற்றங்களால் நான்காம் வேத நிலையை அடைந்தது. அதர்வத்தில் ஏழில் ஒரு பகுதி இருக்கிலிருந்து எடுக்கப் பெற்றவை என்பது குறிப்பிடத்தக்கது. அதிலும் பாதிக்கு மேல் இருக்கின் பத்தாவது மண்டலத்திலிருந்து எடுக்கப்பட்டவை; ஏனையவை முதலாம், எட்டாம் மண்டலங்களிலிருந்து பெறப்பட்டவை.
அதர்வ வேதத்தில் ஒன்பது பிரிவுகளுள்ளன. இப்பிரிவுகள் சாகை, சரணம் அல்லது பேதம் என வழங்கப்படுவன. இச் சாகைகளிலே செளநகியமும் பைப்பலாதமும் பிரசித்தமானவை.
அதர்வ சங்கிதையில் 731 சூக்தங்கள் உள்ளன; அதிலே சுமார் 6000 பாடல்கள் உள்ளன; பதினைந்தாம், பதினாறாம் காண்டங்கள் உரை நடையிலமைந்தவை.
அதனுள் இடம்பெறும் 20 காண்டங்களிலே இருபதாவது காண்டம் பிற்காலத்தில் இருக்கு வேதத்திலிருந்து பெறப்பட்ட தாகும். பத்தொன்பதாம் காண்டத்தில் வரும் பாடல்கள் இவ் வேதத்திற்கே உரியவையல்ல.
அதர்வ வேதத்தில் தெய்வம் பற்றிய பாடல்கள், தத்துவக் கருத்துக்கள் நிறைந்த பாடல்கள் இடம்பெற்றபோதும் அவை
43

Page 90
மாந்திரீகத்திற்கு அதிமுக்கியத்துவம் அளிக்கின்றன. நோய் தீர்க்கும் மந்திரங்கள், ஆயுளை நீடிக்கும் மந்திரங்கள், நன்மை விளைவிக்கும் மந்திரங்கள், பிராயச்சித்த மந்திரங்கள், இருவரைச் சேர்த்தும், பிரித்தும் வைக்கும் மந்திரங்கள், ரகூைடி முதலிய பல்வேறு மந்திரங்கள் அதர்வத்திலே காணப்படுவன. ஏனையோருக்குத் தீமை ஏற்படுத்த வேண்டும் மந்திரங்கள் பல அதர்வத்திலே இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
இவற்றின் மூலம் பொது மக்களின் நம்பிக்கைகள், பழக்க வழக்கங்கள் பலவற்றை அதர்வத்திலே காணமுடிவதாகக் கொள்வர். சோதிடம், வைத்தியம் முதலியன அதர்வத்திலிருந்து பலவற்றைப் பெற்றுப் பிற்காலத்திலே வளர்ச்சி பெற்றனவாதல் வேண்டும்.
அதர்வம் அரக்கர்களை அழிப்பவர்களாகவே தெய்வங் களைச் சித்திரித்துள்ளது. இதனால் அவர்களுடைய தனிப் பண்புகள் கூறப்படாமல் அரக்கர்களை அகற்றும் மந்திரங்களுக்கே முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. அதர்வம் கூறும் கிரியை மாந்திரீகம் என்பது கவனிக்கத்தக்கது.
பிராமணர் பற்றியும் அவர்களுக்கு அளிக்கப்பட வேண்டிய சிறப்புப் பற்றியும் அதர்வத்தில் அதிகம் கூறப்பட்டிருத்தல் கவனிக்கத்தக்கது. பதின் மூன்றாவது காண்டத்திலுள்ள ரோஹித சூக்தங்கள் சூரியனை அதி தெய்வமாக உயர்த்திப் பாடுவன.
இருக்கு வேதத்திலே தோன்றும் தத்துவக் கருத்துக்கள் உபநிடதங்களில் வளர்ச்சி பெறுமுன் உள்ள இடைநிலை அதர்வ வேதத்தில் வரும் தத்துவக் கருத்துக்கள் செறிந்த சூக்தங்களிற் புலனாகும்.
அதர்வ வேதத்தின் பிராமணம், கோபதபிராமணம் ஆகும். முண்டக உபநிடதம், பிரசன்ன உபநிடதம், மாண்டுக்ய உபநிடதம் என்பன அதர்வத்தின் உபநிடதங்களாகும். முண்டக உபநிடதமும் பிரச்ன உபநிடதமும் வசனமும் செய்யுளும் கலந்தவை. மாண்டுக்ய உபநிடதத்தில் பன்னிரு பாடல்கள் உண்டு; ஆயினும் “ஓம்’ எனும் பிரணவத்தை அடிப்படையாகவுடைய அதனுள் 108
உபநிடதங்களின் சாரம்சமும் இடம்பெறுவதாகக் கூறுவர்.
(பொ.யூ.)
அதிசயமாலை
சிவபெருமான் செய்த அற்புதத் திருவிளையாடல்களையும் ஆசிரியர்க்குச் செய்த நன்மைகளையும் கூறுவது அதிசய
D 68) G).
அதிசயமாலையின் ஆசிரியர் திருவாவடுதுறையாதீனத்தின் மூன்றாம் பண்டார சந்நிதிகளாக விளங்கிய பூரீ அம்பலவாண தேசிகராவார். அவர் பதினாறாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் வாழ்ந்தவர்.
44

அதிசயமாலையில் 76 கட்டளைக் கலித்துறைப் பாக்கள் உள்ளன. தில்லையுளாடிய வித்தகனை மகுடமாகவுடையது
அதிசயமாலை.
அதிசயமாலை. பதினான்கு பண்டார சாத்திரத்தில் இடம் பெறுவது. பண்டாரசாத்திரம் அச்சிடப் பெற்றுள்ளது.
(பொ.யூ.)
அதிதி
இருக்குவேதப் பெண் தெய்வங்களில் அதிதியும் ஒருத்தியாவாள். பிள்ளைகளையும் ஆனிரைகளையும் ஆசீர்வதிக்கும்படி அவளை அழைப்பர். அவளைப் பாவங்களை அனுமதிப்பதிலும் சம்பந்தப்படுத்தியுள்ளனர். முடிவற்ற பூரண வெளியின் உருவமாக - ஆகாயத்தின் துணையாக - வாழ்வின் ஊட்டமாக - பூமிக்கு வளம் சேர்ப்பதாக அதிதி என்ற தெய்வம் கருதப்படுகின்றது. அதிதி பசுவின் வடிவிலே அமைத்துக் காட்டப்படுவதுமுண்டு.
யசுர் வேதத்தில் விஷ்ணுவினுடைய மனைவியாகச் சுட்டப்பட்ட போதும் இராமாயணம், பாரதம், விஷ்ணுபுராணத்தில் வாமனனின் தாயாக அதிதி கூறப்படுகின்றாள். தக்ஷனின் தாயாகக் கூறப்படும் மரபுக்குப் பதிலாக விஷ்ணு புராணத்தில் மகளாகக் கூறப்படுகின்றாள். பாரதம், விஷ்ணு புராணம் முதலியவற்றிலே காசிபரின் மனைவியாகக் காட்டப்படுகின்றாள். தேவிபாகவதம் கிருஷ்ணனின் தாய் தேவகிஅதிதியின் அவதாரம் என்று கூறுகின்றது. பாற்கடலைக் கடைந்தபோது அதிதிக்குக் கொடுக்கப்பட்ட தோடுகளை நரகாசுரன் திருடியதாகவும் அவற்றைக் கிருஷ்ணன் மீட்டு அதிதியிடம் கொடுத்ததாகவும் பாரதம், மச்சபுராணம் முதலியன கூறுவன.
அதிதியிலிருந்து எண்மர் தோன்றியதாகவும் அவர்களில் மார்த்தாண்டனை (சூரியனை) விலக்கிவிட்டு ஏனைய எழுவருடன் அதிதி தேவர்களை அடைந்ததாகவும் தைத்திரீய ஆரணியகம் கூறும். இந்த எழுவருமே ஆதித்தர் எனப் பெயர் பெறுபவர்.
தேவர்கள் பலருக்குத் தாயான அதிதி தேவமாதா எனவும் படுவர். அர்த்தசாஸ்திரத்திலும் அதிதி வழிபாடு கூறப்படுகின்றது.
பராசக்தி என்று பிற்காலத்தில் வழங்கப்பட்ட பிரம்மத்தின் பரிபூரண ஆற்றலான அம்பிகைக்கு சமதையாக இருக்கு வேதத்தில் புகழப்படும் பெண் தெய்வம் அதிதி. சூரிய மண்டல ஜோதியை “ஸவிதா” என்று காயத்ரி மந்திரத்தில் போற்று கின்றோம். “ ஸவிதா எங்களை நல்லவர்களாக்கி இன்பங்களை நாங்கள் எய்துமாறு நீ செய்’ என்று அதிதியை வேதம் வேண்டுகின்றது எனில் சூரிய ஜோதியையும் தூண்டி விடும் பிரம்மத்தின் ஞான ஜோதி இவள் என்பதே பொருள்.
இந்துக் கலைக்களஞ்சியம்

Page 91
அதிதி மனநலனை அளிப்பவள். மனநலனினூடாக உடல் நலனையும் பொருள் நலனையும் அளிப்பவள். r
“அதிதியே! அன்போடு காப்பவளே! கருணையோடு வழிகாட்டுபவளே! எந்நாளும் நலிவுறாமல் எங்குமாய் விரிபவளே! பேராற்றல் பெற்ற அரசி! நல்ல நோன்புள்ளவர்களுக்கு அன்னையாக அருள் செய்பவளே! பிரபஞ்சமெங்கும் காணப்படும் விதிகளின் உயிராக தர்மத்தின் பத்தினியாக இருப்பவளே! உன்னைத் துணைக்குக் கூவுகின்றோம்” என்று கூறுகின்றது யஜூர் வேதம்.
பாவங்களை மன்னிக்கும் பாவன உருவமே இவளது வடிவம் கொலைக் குற்றவாளிகளும் மன்னிப்புக்காகப் பிரார்த்திக்கும் தெய்வம் நரபலிக்காக கட்டுண்ட பாலன் ஒருவன் அதிதியை நோக்கி 'உன்னையன்றி எவர் என்னை மீண்டும் பெற்றோர் முகம் பார்க்குமாறு செய்யமுடியும்?’ என்று கேட்பது நெஞ்சை உருக்குவதாக உள்ளது. “எம்மை அதிதி பாவமற்றவர் களாக்கட்டும்” என்றே வேதங்கள் மீண்டும் மீண்டும் கூறும். பாவத்தைச் சுமக்கும் ஒருவன் அந்த பாவணியை நெருங்கவே அஞ்சுகிறான். அவன் அக்கினியைப் பார்த்து ‘தீக்கடவுளே! உன்னைக் குறித்து நாங்கள் செய்த அபசாரத்தை மன்னிப்பாய். அதிதி தேவியிடம் நாங்கள் பிழை செய்யாதவாறு எங்களை
தூய்மையாக்குவாய்” என்று மறை மந்திரத்தால் புகழுகின்றது.
(வ. வை.)
அதிபத்த நாயனார்
“விரை திரை சூழ் கடல் நாகை அதிபத்தற்கடியேன்” எனச் சுந்தரமூர்த்தி நாயனார் போற்றும் (7.39.7) அதிபத்த நாயனார் சோணாடு நாகபட்டினம் என்னுமூரினர்; தாம் பிடிக்கும் முதல் மீனைச் சிவபெருமானுக்கு அர்ப்பணம் செய்பவர். ஒரேயொரு மீன் கிடைத்த போதும் அதனையும் சிவபெருமானுக்கு அர்ப்பணித்துவிட்டுப் பட்டினி கிடந்தவர்; பொன்மீன் கிடைத்தபோதும் அதனைத் தாம் எடாது சிவனுக்கு விட்ட சிவனடியார்.
சுந்தரமூர்த்தி நாயனாருக்குக் காலத்தால் முற்பட்டவர்; சுந்தரர் காலம் இரண்டாம் நரசிம்மவர்மன் (690 - 729) காலம். (பொ.யூ.)
அதிராவடிகள்
பதினொராந் திருமுறையிலே தொகுக்கப் பெற்றுள்ள மூத்த பிள்யைார் திருமும்மணிக்கோவையைப் பாடியவர். பிள்ளை யாரைப் பாடுவதாலும், கட்டளைக் கலித்துறையைப் பயன்படுத்துவதாலும் பிள்ளைத் தமிழுக்குரிய பருவங்கள் பலவற்றை விரிவாக அமைத்துப் பாடியவரும் பூரீ மாற பூரீ வல்லபன் (835-862) காலத்தவருமான பெரியாழ்வாருக்கு முன்பு சப்பாணி, ஊசல், செங்கீரை முதலிய பருவங்களை அமைத்துப் பாடுவதாலும் இவர் காலம் தமிழ் இலக்கிய வரலாற்றிற் பல்லவர் காலம் எனும் காலகட்டத்திற்கு உட்பட்டதாகும்.
இந்துக் கலைக்களஞ்சியம்

9f86ổJUTT 1D 1 JTraörgu Jaör
கொற்கை, தென்காசி முதலிய தென்பாண்டி நாட்டு ஊர்களிலே ஆட்சி புரிந்த பாண்டிய மன்னன்; ஆட்சிக் காலம் 1564 - 1604 என்பர்; நெல்வேலி மாறனுடைய புதல்வர் வரதுங்கராம பாண்டியனின் சிறிய தந்தையாருடைய புதல்வர்.
நைடதம், காசிகண்டம், கூர்மபுராணம், மகாபுராணம் என்பனவற்றைப் பாடியவர்; இலிங்க புராணம் பாடிய குலசேகர பாண்டியனும் வாயுசங்கிதை பாடிய குலசேகர வரகுணராம பாண்டியனும் அதிவீரராம பாண்டியனே என்பர்; வெற்றிவேற்கை எனும் அறநூலையும் அதிவீரராமபாண்டியன் பாடியுள்ளார். (பொ.யூ.)
eg565JTripő Jugorúb céljairao TeólujTít
அதிவீரராமன் பட்டினம் என்னுமூரினர்; பூனி மகாபாரத அம்மானை பாடியவர்; கருந்திட்டங்குடி அட்டாவதானம் கே. ராமசாமிப்பிள்ளை அதனைப் பதிப்பித்தார்; இரண்டாம் பாகமாகிய யுத்தகாண்டம் 1903 இலே பதிப்பிக்கப்பட்டுள்ளது. (பொ.யூ)
அதிஷ்டானம்
திருக்கோயிலின் கட்டடத்திலே உபபீடத்திற்கு மேற்பட்ட பகுதி அதிஷ்டானம் எனப்படும்; இது பல படைகள் கொண்டது. உபபீடமும் அதிஷ்டானம்போல பல பகுதிகள் கொண்டிருக்கலாம். பத்மம் அல்லது பத்மபாதுகை உபபீடத்தோடு சேர்ந்த பகுதி. இவ்வுறுப்புகள் இன்றியும் அதிஷ்டானம் மட்டுமே இருக்கக் கூடும். உபானம், ஜகதி, குமுதம், கண்டம், கபோதம், பட்டிகை என்ற உறுப்புகள் படையில் அடங்குவன. (பொ.யூ.)
அந்தக்கரணம்
மாயையின் தத்துவங்கள் சிவதத்துவம், வித்தியாதத்துவம், ஆன்மதத்துவம் என மூவகைப்படுவன. ஆன்மாவோடு சம்பந்தப்பட்டிருத்தலால் ஆன்மதத்துவம் எனப்படுவது. அசுத்த தத்துவம், போக்கிய காண்டம் எனவும் பெயர் பெறும். ஆன்மாக் களுக்குச் சாத்வீகம் முதலிய குணங்களினாலே சுகதுக்க மோகங்களை உண்டாக்குவதால் அசுத்த தத்துவம். புசிப்பிக்கப்படும் பொருளாயிருத்தலால் போக்கியகாண்டம். ஆன்மதத்துவம் அசுத்தமாயையின் பாற்படும். இதனுள் அறுபத்துநான்கு தத்துவங்களுண்டு. அவற்றிலே நான்கு அந்தக்
கரணம்.
அந்தக் கரணம் மனம், புத்தி, அகங்காரம், சித்தம் எனும் நான்குமாம். கண்ணுக்குக் காட்டாகிய விளக்குப்போல ஆன்மாவுக்குக் காட்டாக நிற்பது அந்தக் கரணம். மனம் ஒன்றைச் சங்கற்பித்தும் ஐயுற்றும் பற்றி நிற்கும். அகங்காரம்
45

Page 92
யான் நிச்சயிப்பேன் என்று எழுச்சி கொள்ளும். புத்தி பெயர், சாதி, கன்மம், குணம் என்பன பற்றிச் சிறப்பு வகையாலே துணியும். சித்தம் இஃது யாதாகற்பாற்று என ஒரு பொருளைச் சிந்திக்கும். (பொ.யூ.)
அந்தகக் கவி வீரராகவ முதலியார்
முத்தமிழ்க் கவி வீரராகவ முதலியார் என்ற பெயரு முடையவர் என்பதைத் தமிழ் நாவலர் சரிதைப்பாடல் (244) மூலம் அறியலாம்; அவரிலும் வேறானவர் ஒருவர் பொற்களந்தை முத்தமிழ்க் கவிராயர் என்ற பெயருடன் பத்தொன்பதாம் நூற்றாண்டில் வாழ்ந்துள்ளார்; செழியதரையனுக்கு அந்தகக்கவி வீரராகவர் விடுத்த சீட்டுக்கவி மூலம் அவர் அந்தகர் என்பது புலனாகும். (தமிழ் நாவலர் சரிதை, 250) தொண்டை நாட்டிலே வடுகநாத முதலியாரின் புதல்வராகத் தோன்றியவர்; உழலூர், பூதூர், பொன்விளைந்த களத்தூர் (களந்தை, பொற்களந்தை) எனும்
ஊர்களோடு தொடர்புடையவராகக் காணப்படுவர்.
பதினேழாம் நூற்றாண்டின் முற்பகுதியில் அரியலூர் ஜமீன்தாராக விளங்கிய கிருஷ்ணய்ய ஒப்பிலாத மழவராயனை (1612 - 1644) நேர்முகமாகப் பாடியவர், ஈழம் வந்து ஆரியச் சக்கரவர்த்தியாம் பரராசசேகரனைப் பாடிப் பரிசில் பெற்றவர்; ஆரியச் சக்கரவர்த்திகளின் ஆட்சி யாழ்ப்பாணத்திற் சங்கிலி குமாரனைப் போர்த்துக்கேயர் 1619 ஆம் ஆண்டு மே மாதம் கைப்பற்றியதோடு முடிவடைகின்றது. தருமையாதீன கர்த்தர் அழகிய திருச்சிற்றம்பல தேசிகரை (1680 - 1700) கவி வீரராகவர் பஞ்சரத்தின் மூலம் பாடியுள்ளார். 1683 ஆம் ஆண்டிற்கு முன்பு மறைந்த மாதை திருவேங்கடநாதர் கவிவீரராகவர் மீது சமரகவி பாடியுள்ளார். எனவே கவிவீரராகவர் காலம் பதினேழாம்
நூற்றாண்டு என்பது தெளிவாகின்றது.
திருவாரூருலா, திருக்கழுக்குன்றத்துலா, கீழ்வேளுருலா, சேயூர்க்கலம்பகம், சேயூர் முருகன் பிள்ளைத்தமிழ் திருக்கழுக் குன்றப் புராணம் முதலிய தல சம்பந்தமான பிரபந்தங்களைப் பாடியவர்; திருக்கழுக்குன்றமாலை எனும் பிரபந்தம் சிலரால் இவர் பாடியதாகவும் வேறு சிலராற் சித்தர் சிவப்பிரகாசர் பாடியதாகவும் கருதப்படுகிறது; தனிப்பாடல்களும் இயற்றியவர்; உலகியல் சார்ந்த பிரபந்தங்களையும் தனிப் பாடல்களையும் கூடப் பாடியவர். (பொ.யூ.)
அந்தராளம்
இடைப்பகுதி, இடைக்கழி, இடைநாழிகை என்று அழைக்கப்படும் அந்தராளம் கருவறைக்கும் அர்த்த மண்டபத்திற்குமோ அல்லது அர்த்த மண்டபத்திற்கும் முக மண்டபத்திற்குமோ இடையிலுள்ள பாகம். சில சமயங்களிற்
கோயில்களில் அந்தராளம் அமைக்கப்படுவதில்லை. (பொ.யூ)
46

அந்தரிதம்
குடமுழுக்கு, குடநன்னீராட்டு விழா, கும்பாபிஷேகம், பிரதிஷ்டை என்பன ஒரு பொருட் கிளவிகள். ஆலயத்தில் நிறுவப்படும் மூர்த்தியில் எழுந்தருளி அல்லது நிறுவப் பெற்றிருந்த மூர்த்தியில் சாந்நித்தியம் மிகுந்து உயிர்களுக்கு அருள் புரியும்படி பிரார்த்தித்து அபிஷேகஞ் செய்தலே குடமுழுக்கு எனும் பிரதிஷ்டைக் கிரியையாம்.
குடமுழுக்குச் சில காரணங்களின் அடிப்படையில் நான்காகப் பிரிக்கப்பட்டுள்ளது. அவை ஆவர்த்தம், அனா வர்த்தம், புனராவர்த்தம், அந்தரிதம் எனப்படும்.
ஆவர்த்தம் புதிய கோயில் அமைப்புடன் தொடர்புடையது. ஏனைய மூன்றும் பழைய கோயிலுடன் தொடர்புள்ளவை. அனாவர்த்தம் நீண்ட காலத்திற்குப் பின்பு மீட்கும் கோயிலுடன் தொடர்புடையது; புனராவர்த்தம் நடைமுறையிலுள்ள ஆலயத்தின் தற்காலிகமான அழிபாடுகளுடன் தொடர்புடையது. ஆனால் அந்தரிதம் தோஷநிவர்த்தியாம் சாந்தியுடன் தொடர்புடைய குட முழுக்கு.
ஆலயத்தில் மரணம் உண்டானாலும், ஆசௌச முள்ளவர்கள், ஆசாரக் குறைவானவர்கள் பிரவேசித்தாலும், நாய், கழுதை, பன்றி, குரங்கு முதலிய விலங்குகள் நுழைந்துவிட்டாலும் தோஷம் உண்டாகின்றது. இத்தோஷத்திற்கு நிவர்த்தி (சாந்தி) செய்யப்படல் வேண்டும். இச் சாந்தியாகச் செய்யப்படும் பிரதிட்டையே அந்தரிதம். இதற்கு நாள், நட்சத்திரம் பார்க்க வேண்டிய விதியில்லை. ஏனைய குடமுழுக்குக்கு இவை உண்டு.
(பொ.பூ.)
அந்தாளிக் குறிஞ்சி
தமிழ் மக்கள் பண்டைக் காலத்தில் நூற்றி மூன்று பண்களை வகுத்துக் காட்டியுள்ளனர். அவற்றுள் 38 ஆவது பண் அந்தாளக் குறிஞ்சியாகும். அந்தாளக் குறிஞ்சி தேவாரப் பண்கள் இருபத்து மூன்றினுள் ஒன்றாகும். இவ் அந்தாளக் குறிஞ்சி குறிஞ்சிப் பண்ணின் நைவளம் (நட்டபாடை) என்னும் திறத்தின் புறநிலையாக அமையும். அரும்பாலையிற் பிறந்தது, பண்ணியற்றிற வகையைச் சேர்ந்தது. இதன் மற்றப் பெயர்கள் அந்தாழி, அந்தாளிர் என்பனவாகும். இப் பண் வெளிப்படும் பண்கள் வன்மைக்குரிய பண்கள் ஆகியவற்றில் ஒன்றாகவும், நான்காம் சாமத்தில் பாடுவதற்குரியதாகவும் இதன் தெய்வம் ஈசனாகவும் பஞ்ச மரபிற் குறிப்பிடப்பட்டுள்ளது.
இசைத் தமிழ்ப் பதிகங்களாகிய தேவாரத்தைப் பகுத்துத் தொகுத்த பொழுது திருநீலகண்ட யாழ்ப்பாண மரபில் வந்த ஒரு பாடினியாரால் அப் பதிகங்களுக்கு இசை அமைக்கப்பட்டது. திருஞானசம்பந்தர் அருளிய தேவாரத் திருப்பதிகங்கள் முதல் மூன்று திருமுறைகளாய் செவ்வழி முதலிய இருபத்திரண்டு பண்களுள் அடங்கின. திருஞானசம்பந்தரின் மூன்றாம்
இந்துக் கலைக்களஞ்சியம்

Page 93
திருமுறையில் இறுதி யிலமைந்துள்ள 124, 125 ஆம் பதிகங்கள் மட்டுமே தேவாரத்தில் அந்தாளிக் குறிஞ்சியில் அமைந்துள்ளன. அவர் திருநல்லூர்ப் பெருமணத்தில் தம் திருமணம் காண வந்த அனைவரையும் உடன் கொண்டு அவ்வூர்த் திருக்கோயிலில் தோன்றிய சோதியினுள் புக்கபோது பாடிய திருப்பதிகம் “கல்லூர் பெருமணம்” என்னும் இறுதிப் பதிகமாகும். அதனால் ஞானசம்பந்தர் இறுதியாகப் பாடிய பண் அந்தாளிக் குறிஞ்சியாகும். திருமுறை கண்ட புராணம் “அந்தாளிற்கு ஒன்றாக்கி’ என்பதனால் ஞானசம்பந்தரின் இரு அந்தாளக் குறிஞ்சிப் பண்களும் ஒரே கட்டளை அமைப்பு டையனவாயின என்பது புலனாகின்றது. 124 ஆம் பதிகமாகிய திருக்கருக்காவூர் வெள்ளடைப் பதிகம், தானனா தானன தானா தானனா (சுண்ண வெண்ணிறனி மார்பிற் றோல் புனைந்து) என்னும் அமைப்புடையது.
இவ் அந்தாளிக் குறிஞ்சி சாமா என்னும் இராகத்தில் தற்பொழுது பாடப்படுகின்றது. இச் சாமா இராகம் 28 ஆவது மேள கர்த்தாவாகிய ஹரிகாம்போதியின் சேய் ராகம் ஆகும்.
(தே. ஹ.)
அந்துவன்
திருப்பரங்குன்றத்திலே கோயில் கொண்ட முருகப்
பெருமானைப் பாடிய பண்டைய சான்றோர். மதுரை மருதனிள நாகனரால் இச்செய்தி,
"சினமிகு முருகன் தண்பரக் குன்றத்து அந்துவன் பாடிய சந்துகெழு நெடுவரை”
என அகப்பாட்டிற் (செய் 59) கூறப்பட்டுள்ளது. (பொ.பூ)
அருதாரியப்பர்
அநதாரி எனவும் வழங்கப்படுவர்; தொண்டை நாட்டுச் செங்காட்டுர்க் கோட்டம் வாயல் எனும் ஊரினர்; தொண்டை மண்டல சதகத்துள்ளும் சோழ மண்டல சதகத்துள்ளும் இவர் செய்திகள் கூறப்படுகின்றன.
சமஸ்கிருத நூலைத் தழுவி மதுரை மாதேவியான தடாதகைப் பிராட்டியின் வரலாறுகளைச் சுந்தர பாண்டியம் என்ற நூலாகப் பாடியுள்ளார். சுந்தர பாண்டியம் சகம் 1486 இலே (கி. பி. 1564) பாடப்பட்டது. (பொ.யூ.)
அருந்தகக்கவிராயர்
அனந்ததேவன் என்றும் அழைக்கப் பெற்றவர்; பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் வாழ்ந்து கொண்டிருந்தவர், மானூர் என்னும் ஊரினர்.
உத்தர இராமாயண நாடகம் இயற்றியவர்; அது கலி 4910 (கி. பி. 1810) இல் அரங்கேற்றப்பட்டது. அது 1960 இலே அச்சிடப்
இந்துக் கலைக்களஞ்சியம்

பெற்றது. அவர் பாடிய மதுரைப் பதிற்றுப் பத்தந்தாதி பரஞ்சோதி முனிவர் பேராற் பதிப்பிக்கப்பட்டுள்ளது. (பொ.யூ)
அருந்த பாரதி ஐயங்கார் (1786 - 1846)
கவிராசசுவாமி என்று சிறப்பிக்கப் பெற்றவர்; தமிழ்நாடு தஞ்சாவூர் மாவட்டம் உமையம்மாள் புரத்திற் பிறந்தவர், மிராசுதார் பூரீநிவாச ஐயங்காரின் புதல்வர்,திருவள்ளூரில் ஆசிரியராகவும் பின்பு தஞ்சை மாவட்டக் கோயில்களிலே கர்ணமாகவும் சம்பிரதியாகவும் பணிபுரிந்துவிட்டுத் திருவிடை மருதூரிலே வசித்தவர்;
இடப வாகனக் கீர்த்தனை, உத்தரராமாயணக் கீர்த்தனை, கல்லணை வைபவக் கீர்த்தனை, பூரீமத் வேதாந்த தேசிகர் வைபவப் பிரகாசிகைக் கீர்த்தனை என்பனவற்றோடு திருச்சிராப்பள்ளி, திருவாவடுதுறை, குடந்தை ஆகிய தலங்களில் எழுந்தருளிய இறைவன் மீதும் கீர்த்தனைகள் பாடியவர்; திருவிடைமருதூர் நொண்டி நாடகம், உமையம்மாள்புரம் யானைமேலழகர் நொண்டிச் சிந்து, பாகவத தசமஸ்கந்த நாடகம் இயற்றியவர்; முப்பாற்றிரட்டு, மருதூர் வெண்பா என்பனவும் வழங்கியவர். (பொ.யூ.)
அருந்த விரதம்
ஆவணி மாதத்துச் சுக்கில பட்சத்து பதினான்காம் நாள்
மிருகசீடம் உச்சத்திலே இருக்கும்போது அநுட்டிக்கப்படும் விரதம்
அநந்த விரதம் அல்லது அநந்த பத்மநாப நோன்பு ஆகும்.
அனந்தசயன மூர்த்தியை நோக்கிச் சகல துன்பங்களில் இருந்தும் தம்மைக் காத்துக் கொள்ளும் பொருட்டு அநுட்டிக்கப் படுவது அநந்தவிரதம்.
அநந்தவிரதி தன் வலக்கையிலே சக்திகளைக் குறிப்பதாகப்
பதினான்கு நூலிழைகளாலான பருத்தியிலான பட்டியைக் கட்டுவது சம்பிரதாயம். இப்பட்டி அநந்த தர்மம் என்றழைக்கப் படும்.
கேரள நாட்டிலே திருவனந்தபுரம் மத்திய நிலையத்திற்குச் சுமார் அரை மைல் தொலைவிலுள்ள அநந்தபுரத்திலே அநந்த
பத்மநாப விரதநோன்பு சிறப்பாக அநுட்டிக்கப்படுவதாம்.
(பொ.யூ.)
அருந்த வைத்தியநாதசிவன்
“சிவபக்திசந்திரிகை” எனும் பத்திரிகையைத் தமிழ்நாடு
திருவாடியில் 1890 இலே வெளியிட்டவர்; 1893 வரை அது வெளிவந்ததாகத் தெரிகிறது. (பொ.பூ)
அருந்தானந்தா
19தினான்காம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும் பதினைந்தாம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் வாழ்ந்த சமயப் பெரியார்
47

Page 94
இராமானந்தர் நெறியிலே சென்றவர்களிலே அநந்தானந்தரும் ஒருவராவர். ஜெய்பூருக்கு அண்மையில் கல்தா (GALTAS) எனுமிடத்தில் அமைந்துள்ள இவரது மடம் பலரும் அறிந்த மடமாகும்.
இவருடைய சீடர் கிருஷ்ணதாசர் பைகாரி என்பவராவார். அவருடைய சீடர்களே அக்கிரதாசரும் கீல்காவும், கீல்கா (KILHAS) என்பவர் வடமேற்கு இந்தியாவிலே காகி (KHAKIS) எனும் மதப் பிரிவொன்றினைத் தோற்றுவித்தார். அக்கிரதாசரின் சீடரே நாபாதாஸ் என்றும் நாபாஜி என்றும் அழைக்கப்பெறுபவர்.
பதினேழாம் நூற்றாண்டின் முற்பகுதியில் வாழ்ந்த நாபாஜி இருநூறு வைணவ ஞானிகளுடைய வரலாறுகளைப் பக்த மாலா என்ற பெயர் கொடுத்துப் பாடியுள்ளார். அந்நூல் இந்தி மொழியிலே பிராஜ் கிளை மொழியில் இயற்றப்பட்டுள்ளது. அதற்கு நாபாஜியின் சீடர் பிரியதாஸ் வியாக்கியானம் செய்துள்ளார். (பொ.யூ.)
அநபாயன்
சேக்கிழார் பெருமான் பெரிய புராணத்திலே பத்திடங்களில் அநபாயன் என்னும் மன்னனொருவனைப் புகழ்ந்துரைக்கின்றார். அவன் சேக்கிழார் காலத்தவன். அவருக்கு ஆதரவு புரிந்தவன் என்று கொள்வது பொருத்தமானது. அநபாயன் என்பது சோழ மன்னரில் ஒருவனாகிய இரண்டாம் குலோத்துங்க சோழன் என்பவனுக்கு உரிய சிறப்புப் பெயர்களில் ஒன்றாகும். அபயன், திருநீற்றுச் சோழன், எதிரிலிப் பெருமாள், பெரிய பெருமாள், கலிகடந்த பெருமாள் என்பனவும் அவனுக்குரிய சிறப்புப் பெயர்களாகும்.
விக்கிரம சோழனின் (கி. பி. 1118-1133) மகனாகிய இரண்டாங் குலோத்துங்கன் 133 ஆம் ஆண்டிலே சோழச்சக்கரவர்த்தியாக முடி சூடிக்கொண்டான். அவன் அரசனாகிய பொழுது இராசகேசரி என்னும் பட்டப் பெயரையும் பெற்றான். அநபாயன் சைவ சமயத்திலே பேரபிமானங் கொண்டவன். உத்தம தானமாகிய பேரம்பலத்திலே திருப்பணிகள் புரிந்தவன். அவன் அறிஞருக்கும் கலைஞருக்கும் ஆதரவுகள் புரிந்தவன். கவிவாணராற் போற்றப்பட்டவன். அவனுடைய ஆட்சியின் சிறப்பினை ஆறு வகையான வடிவங்கள் கொண்ட மெய்க்கீர்த்தியில் இராசதானியிலுள்ள கவிவாணர் புகழ்ந்துரைத்தனர்.
பூமன்னு பதுமம் எனத் தொடங்கும் மெய்க்கீர்த்தி
வாசகத்தின் ஒரு பகுதி மேல்வருமாறு அமைந்துள்ளது.
'பசிபகையானது தீங்கு நீங்க மன்னுயிர் தழைப்ப மனுவாறு விளங்க மாதவர் தவமும் மங்கையர் கற்பும் ஆதி அந்தண ராகுதிக் கனலு மீதெழு கொண்டல் வீசு தண்புனலு
48

மேதினி வளருஞ் சாதி ஒழுக்கமும் நீதி அறமும் பிறழாது நிகழப் பாவும் பழனப் பரப்பும் பனைக்கை மாவு மல்லது வன்றளைப் படுதல் கனவிலுங் காண்டற் கரிதென வருந்திப் புடையினும் பல்வேறு புள்ளினு மல்லது சிறையெனப் படுதலின்றி நிறை பெருஞ் செல்வமோடவனி வாழ.
அம்பொன் மலர்க்கொடிச் செம்பியன் கிழானடி ஒரு மருங்குடனமர்ந்த திருப்ப அருள்புரி சிமயப் பொற்கொடி இமயப் பாவையுஞ் சிவனும் போலப் புவனமுழுதுடையா ளிவன் திரு மணிமார்வத் துலகமுழு துடையாளெனவுட னிருப்பச் செம்பொன் வீர சிம்மா சனத்துப் புவனமுழுதுடையாளோடும் விற்றிருந்தருளிய இராஜகேசரி வன்மரான திரிபுவனச் சக்கரவர்த்திகள் குலோத்துங்க சோழ தேவர்.”
குலோத்துங்கனின் பெருந்தேவி புவனமுழுதுடையாள் என்பதும் அவன் திரிபுவனச் சக்கரவர்த்தி என்னும் பட்டம் பெற்றவன் என்பதும் மனுநூல் விளக்கும் இராசதர்மத்தைப் பின்பற்றியவன் என்பதும் மெய்க்கீர்த்தியால் உணரப்படுகின்றன.
தில்லையிலே திருப்பணிகள் பல புரிந்து சிறப்புப் பெற்றவன் அநபாயன், “தில்லைத் திருநகர் சிறப்புடைத்தாகத் திருமுடிசூடிய ரீ குலோத்துங்க சோழ தேவர்” என்ற குறிப்பு திருமாணிக் குழியிலுள்ள சாசனம் ஒன்றிலே காணப்படுகின்றது. குலோத்துங்க சோழன் தில்லையிலே முடிசூடினான் என்பதை இது குறிக்குமென்று சிலர் கொள்வர். அவனுடைய தில்லைத் திருப்பணிகள் பற்றிய விவரங்கள் கவிச்சக்கரவர்த்தியான ஒட்டக்கூத்தர் பாடிய குலோத்துங்க சோழனுலா இராசராச சோழனுலா, தக்கயாகப் பரணி ஆகிய நூல்களிலே சொல்லப்படுகின்றன. குலோத்துங்கன் தில்லையில் "நாற்பெருந் தெருக்கள் அமைத்தும் பற்பல மண்டபங்கள் கட்டுவித்தும் அந் நகரைச் சிறப்பித்தான். சிற்றம்பலத்தைப் பொன்னாலும் பல்வகை மணிகளாலும் அலங்கரித்துப் பணிபுரிந்தான். பேரம்பலத்தையும் உட்கோபுரத்தையும் திருச்சுற்று மாளிகையையும் மாமேரு போலப் பொன்மயமாக்கினான், எழுநிலைக் கோபுரங்கள் எடுப்பித்தான். உமாதேவியார் தாம் பிறந்த இமய வெற்பை மறக்கும்படி சிவகாம கோட்டம் மிகப் பெரிதாக அமைத்தான். அவ்வம்மையார் விழா நாளில் உலா வருவதற்குப் பொன்னாலும் மணியாலும் அழகுறுத்தப் பெற்ற தேரொன்று செய்தளித்தான். திருக்கோயிலில் பொன்னாலாகிய கற்பகத் தருக்களை அமைத்தான். நாற்புறமும் கூடங்களோடு திகழும் திருக்குளம் ஒன்று கட்டினான்'
இரண்டாம் குலோத்துங்கனின் காலத்திலே சோழ் இராச்சியத்திலே அமைதியான சூழ்நிலை காணப்பட்டது.
இந்துக் கலைக்களஞ்சியம்

Page 95
தந்தையாகிய விக்கிரமசோழன் கல்யாணிச் சாளுக்கியரிடமிருந்து LổLL வேங்கிதேசம் அநபாயனின் ஆட்சியின் கீழ் அமைந்திருந்தது. அவனுடைய சாசனங்கள் பல அங்கும் காணப்படுகின்றன.
இரண்டாம் குலோத்துங்கன் கல்வியிலும் கலைகளிலும் பயிற்சியும் தேர்ச்சியும் மிக்கவன். அவன் பாட்டியல் இலக்கணங்களை நன்கு அறிந்தவன். புலமை மிக்கவன். பலவகைச் செய்யுள்களை இயற்றும் ஆற்றல் கொண்டவன். விநோதன் துரக வித்தியாவிநோதன், நித்திய கீதப் பிரமோகன், ஞான கெம்பீரன் எனப் பலவாறு ஒட்டக்கூத்தர் அவனது குண நலங்களைச் சிறப்பித்துப் பாராட்டுகின்றார். அவன் இசைக்கலையில் ஈடுபாடு கொண்டவன் என்பதும் போர்க்கலையிற் பயிற்சி பெற்றவன் என்பதும் இவற்றாற் புலனாகின்றது.
பேரம்பலத்திலே பள்ளிகொண்டுள்ள கூத்தர்பிரானை வழிபடும் வழக்கமுடையவன் அநபாயன். “தில்லையில் நடஞ்செய் கமலங்களை வளைக்குஞ் சிந்தையன்' என்றும் “நவநிதி தூய் - ஏத்தற்கு அருங்கடவுள் எல்லையில் ஆனந்தக் கூத்தைக் களிகூரக் கும்பிட்டவன்’ என்றும் அவனை ஒட்டக்கூத்தர் வர்ணித்துள்ளமை குறிப்பிடற்குரியது. அவனைத் "தில்லைக்கூத்தபிரான் திருவடித் தாமரையிலுள்ள அருளாகிய தேனைப் பருகும் வண்டு போன்றவன்” என்று திருவாரூர்ச் சாசனமொன்று புகழ்ந்துரைக்கின்றது.
அநபாய சோழன் தேவார முதலிகள் மூவரைப் போற்றும் பண்புடையவன். அவர்களின் படிமங்களைத் திருவாரூரிலே தாபனம் பண்ணுவித்து, அவற்றின் வழிபாட்டுக்கும் விழா நடத்துவதற்கும் நிவந்தமாக இறையிலி நிலங்கள் பலவற்றை அவன் வழங்கினான். செந்தமிழ் வழக்கில் தீஞ்சொன்மாலை தொடுக்கும் உத்தம கவிஞரான சேக்கிழாரும் ஒட்டக் கூத்தரும் அநபாயனின் ஆதரவைப் பெற்றிருந்தனர். இருவரும் சைவ சமயத்திலே பேரபிமானங் கொண்டவர்கள். சிவஞானம் பற்றிய தெளிவான விளக்கம் கொண்டவர்கள். பன்னிரண்டாம் நூற்றாண்டிலே அநபாய சோழனின் ஆட்சியிலே பாடப்பெற்ற பெரியபுராணம், நாயன்மார் வழிபாடு பெருவிருத்தி பெற்றிருந்த காலத்துப் பேரிலக்கியமாகும். தமிழகத்துச் சைவசமய வரலாற்றிலே திருத்தலங்களும், திருத்தொண்டரும், அருள்நெறியான பக்திநெறியும் பெற்றிருந்த இணையிலாச் சிறப்பினை உவமையிலாத வண்ணமாகச் செப்புகின்ற இலக்கியமாக அது விளங்குகின்றது.
சோழர் நிர்வாகத்தில் உயர் பதவியிலிருந்த வரிப் பொத்தகம் சேக்கிழார் மரபில் வந்தவரும் அரசசேவை புரிந்தவருமான சேக்கிழார், தமிழகத்து ஊர்கள், தலங்கள், சமூகப் பிரிவுகள், நாட்டு வளம், வழமைகள், கால பருவங்கள் என்பவற்றை நன்கறிந்தவர். அவர் இலக்கண இலக்கியங் களிலும் யாப்பு, அணி இலக்கணங்களிலும் புலமை மிக்கவர்.
இந்துக் கலைக்களஞ்சியம்

சைவசமய மரபுகள், ஆசாரங்கள், தத்துவங்கள் என்பன பற்றிய ஆழமான அறிவினைக் கொண்டவர். நாயன்மாரின் சிறப்புக்களைச் சைவசமய மரபுகளோடும் சமுதாய வழமைகளோடும் இணைத்து எளிமையும் தெளிவும் இனிமையுங் கலந்த கவிநடையிற் கூறும் தனிப்பெருங் காப்பியமாய் அமைந்தது பெரியபுராணம்.
சிவநெறியினையும் தரிசனங்களையும் புராணங்களையும் நன்குணர்ந்தவரான ஒட்டக்கூத்தர் சோழரின் அவைக்களப் புலவராக நெடுங்காலம் விளங்கியவர். அவர் தமிழிலக்கியப் பரப்பிலே புதிய மரபுகளை ஏற்படுத்திச் சாதனை புரிந்தவர். அதனாற் கவிச்சக்கரவர்த்தி என்று பாராட்டப்படுபவர். சோழ மன்னரின் சிறப்புகளைப் பொருளாக கொண்டு பிரபந்தங்கள் பாடியவர். விக்கிரமசோழன், இரண்டாம் குலோத்துங்க சோழன், இரண்டாம் இராசராசன் என்போர் மீது அவர் பாடிய பிரபந்தங்கள் மூவருலா என வழங்கும். அநபாயனாகிய குலோத்துங்கனைப் பற்றியது குலோத்துங்க சோழன் உலா என்பதாகும். உலாப் பிரபந்தங்களில் முதன்மையானது சேரமான் பெருமாள் பாடிய திருக்கைலாய ஞானஉலா, ஒட்டக்கூத்தர் பாடிய உலாக்கள் அதனை முன் மாதிரியாகக் கொண்டவை. ஆயினும், சோழ மன்னரைக் கதாநாயகராகக் கொண்ட உலாப் பிரபந்தங்கள் சோழப் பெருமன்னரின் அரசியற் பாரம்பரியங்களையும் வழமைகளையும் சுவை நயத்துடன் கூறும் இலக்கிய வடிவங்களாகும். ஒட்டக்கூத்தர் பாடிய மற்றொரு நூலான குலோத்துங்க சோழன் பிள்ளைத்தமிழ் குலோத்துங்க சோழனைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டுள்ளது. அவரின் தக்கயாகப் பரணி சிவனை நிந்தனை செய்து, யாகஞ் செய்த தக்கனை வதை செய்தமை பற்றிய புராணக் கதையினைத் தமிழில் வர்ணிக்கும் சுவைநயம் பொருந்திய நூலாகும். ஒட்டக்கூத்தர் சைவநெறி பற்றிய சிந்தனைகளையும் மரபுகளையும் தனது பிரபந்தங்களில் மிகுதியாகக் கையாண்டுள்ளமை குறிப்பிடற்குரியது.
தண்டியலங்காரம் என்பதன் ஆசிரியரான தண்டி யாசிரியர் குலோத்துங்க சோழன் காலத்து மற்றுமொரு பெரும்புலவராவார். பல நூற்றாண்டுகளுக்கு முன்பு தண்டின் என்பவர் எழுதிய காவ்யாதர்ஸ் என்ற அலங்கார நூலை ஆதாரமாகக் கொண்டு தமிழிலே தண்டியலங்காரத்தை எழுதினார். அந்நூலின் உதாரணச் செய்யுள்கள் சில குலோத்துங்க சோழனைப் பற்றியவை. தலைநகரமான கங்கைகொண்ட சோழபுரத்தையும் ஒட்டக்கூத்தரது கவிநயத்தையும் அவர் புகழ்ந்து பாடியுள்ளார்.
குலோத்துங்கன் புலவர்கள் பலருக்கு ஆதரவு வழங்கினான் என்பதைக் குறிக்கும் வண்ணமாக, “கற்றவர் குடி புடைசூழ் கற்பக இளவனமே” என்று அவனை ஒட்டக்கூத்தர் பாராட்டுகின்றார்.அவனுடைய இப் பண்பு மெய்க்கீர்த்தியில் மேல்வருமாறு வர்ணிக்கப்படுகின்றது.
49

Page 96
"பெரும் புலவரும் அருங் கவிஞரும் நரம்புறு நல்லிசைப் பாணரும்
கோடியருங் குயிலுவரம் நாடு நாடு சென்று இரவலராய் இடும்மை நீக்கிப் புரவலராய்ப் புகழ் படைப்ப"
குலோத்துங்கன் புலவர், கவிஞர், பாணர் முதலியோரின் காவலனாய் விளங்கினான் என்பது மேல்வரும் பிள்ளைத்தமிழ்ப் பாடலினாலும் உணரப்படும்.
"கோடியர் புலவர் விறலியர் பாணர் குலகிரிகளும் குறை நிறையத் தேடிய நிதியங் குலோத்துங்க சோழன்
உருட்டுக சிறுதேரே'
குலோத்துங்க சோழன் தன் முன்னோர்களைப் போலக் கங்கைகொண்ட சோழபுரத்தையே இராசதானியாகக் கொண்டிருந்தான். அதனைக் கங்காபுரி என்றும் கங்காபுரம் என்றும் சமகாலத்து நூல்கள் குறிப்பிடுகின்றன. ஆயினும், சில சமயங்களில் அவன் விக்கிரமசோழபுரத்து அரண்மனையிலே தங்கியிருந்தான் என்பதைச் சாசனக் குறிப்புகளால் அறியமுடிகின்றது. அங்கிருந்து அவன் அனுப்பிய அறக் கட்டளைகள் கீழைப் பழுவூர், பிரமதேசம், ஏமப்பேரூர் போன்ற ஊர்களிலுள்ள சாசனவாசகங்களில் அடங்கியுள்ளன.
தியாகவல்லி, முக்கோக்கிழானடி என்னும் இருவரும் குலோத்துங்கனின் தேவியராவர். அவர்களிலே தியாகவல்லி பட்டத்தரசியாக விளங்கினாள். “மலாடர் குலமணி விளக்கு” என மெய்க்கீர்த்தியில் வர்ணிக்கப்படும் முக்கோகிழானடி மலைய மானாட்டு மலைய மான்களின் வம்சத்தவள். அவனுடைய குமாரனாகிய இராசராசன் 147ஆம் ஆண்டிலே இளவரசனாகப் பதவி பெற்றான். (f.L.)
அநு. கீதை
மகாபாரதத்திலே ஆறாவது பிரிவான பீஷ்ம பருவத்திலே இடம் பெறுவது பகவத்கீதை: பதினான்காவது அஸ்வமேதிக பர்வத்திலே இடம் பெறுவது அநுகீதை.
பாரதப் போர் தொடங்குமுன் பார்த்தசாரதியைப் படை நடுவே தேரைச் செலுத்த வைத்து குருக்ஷேத்திரத்தில் இரு படைகளையும் கண்டு, ஒரு பிரிவின் அழிவால் மற்றப் பிரிவு அடையப்போவது யாதெனத் திகைத்து நின்ற அர்ச்சுனனுக்குக் கிருஷ்ண பரமாத்மா செய்த உபதேசம் பகவத்கீதை, பீஷ்ம பருவத்திலே 25 முதல் 42ஆம் அத்தியாயம் வரை 18 அத்தியாயங்களாக அமைந்து கிடப்பது.
பகவத்கீதையின் பின் பாரதயுத்தம் நடந்து முடிந்தபோது எழுந்தது அநுகீதை. கிருஷ்ண பரமாத்மாவிடம் அருச்சுனன் போரின் ஆரம்பத்திலே கூறியவற்றை மீண்டும் உரைக்கும்படி வேண்டுகிறான். கிருஷ்ணனோ கீதை உபதேசம் செய்தபோது தான் பெற்ற யோக நிலையை அப்பொழுது பெற முடியாது என்று கூறிய போதும், மாற்றாக அநுகீதை புகன்றான்.
அநுகீதையிலே பல்வேறு தத்துவ மரபுகள் நிலவுதல் குறிப்பிடப்பட்டுள்ளது. (பொ.பூ.)
50

அநுபூதி
கடவுளை ஆன்மா அநுபவித்து அறிவது அநுபூதி, கடவுள் உண்மையை அறிவினால் காண்பதென்பது முடியாது; ஆனால் அநுபவத்தே காணமுடியும் என்பர் அநுபூதிமான்கள். அநுபூதிமான்கள் தாம் பெற்ற அநுபவத்தைப் பெரும்பாலும் குறியீடுகள் மூலமே வெளியிட்டுள்ளனர்.
கருமயோகம் மூலம் ஆசையையும் ஆணவத்தையும் அகற்றி மனதைத் தூய்மைப்படுத்தல் முதற் படியாக அநுபூதியிற் கருதப்படும். கரும யோகம் பலன் கருதாது செய்யும் கருமம். இதனால் சுயநல ஆசை நீங்கும். அகங்காரமமகாரங்கள் நீங்கும். எளிய வாழ்க்கை வந்துறும்.
பின்பு ஞானயோகம் பயின்று தம்மைத் துறந்து தியானத்தின் வாயிலாகக் கைவல்லியசாந்தியை அடைதல் வேண்டும். ஞானயோகம் மனதைப் புறத்தே சஞ்சரிக்கவிடாது தியானித்தல். மனதை வசப்படுத்தப் பிராணாயாம முறைகளைக் கையாள வேண்டும். மனதை அடக்கித் தியானம் செய்தால் ஆன்மா விடுதலை பெற்றுச் சாந்தி அடையும். இதுவே கைவல்லியம் எனப்படும்.
பின்பு பக்தியோகம் பயின்று கடவுளை நேரிற் கண்டு அவருடன் ஐக்கியப்பட்டு நிரதிசய ஆனந்த வெள்ளத்தில் மூழ்க வேண்டும். அதுவே அநுபூதி நிலையாகும். பக்தி யோகத்தில் பரிபூரண பிரமானுபவம் பெறும் ஆன்மாவுக்கு வெளியுலகம் தெரியாது; சமாதி நிலையில் இருக்கும். மூச்சு நின்று போகும்: உடல் அசையாது ஆன்மா கடவுளிடத்தில் ஆழ்ந்து ஆனந்தமாகிவிடும்.
இந்த ஆனந்தம் நிலையானதன்று. கணநேரம் நிற்பது. ஆயினும், பரத்திற் பெறப்போகும் நித்தியானந்தத்தின் சுவையுடையது என்பர்.
அநுபூதிக் கலையை உபநிடதங்கள், பிரமசூத்திரம், பகவத்கீதை, பாகவத புராணம் என்பன வடமொழியிலே விளக்கிக் கூறுவன. தமிழிலே திருமந்திரம் அநுபூதியைச் சிறப்பாக விளக்கியுள்ள போதும் அதன் குறியீட்டுப் பண்பு அநுபவித்தவர்களுக்கு மட்டும் விளக்கம் அளிப்பதாய் அமைகின்றது.
சாக்த தந்திரங்களில் குண்டலினி எனும் அநுபூதி விளக்கப்பட்டுள்ளது. ஆன்மாவிற் சுருண்டு முடங்கி உறங்கிக் கிடக்கும் மனோசக்தியாம் குண்டலினியைத் தட்யெழுப்பி உயர எழுந்து வரச் செய்து மிகச் சிறந்த உள்பொருளான சிவத்தோடு அதனை இரண்டறக் கலந்துவிடச் செய்வதே குண்டலினி எனும் அநுபூதி நெறியின் குறிக்கோளாகும். அதனைத் தாந்திரிக நூல்களிலே விளக்கமாகக் காணலாம். (பொ.யூ.)
இந்துக் கலைக்களஞ்சியம்

Page 97
அநுமான்
தெய்வங்களின் பட்டியலிலே, சிறப்பாக வைணவ தெய்வங் களின் பட்டியலிலே அநுமான் முக்கியமானதொரு இடத்தைப் பெறுகிறான். அநுமார் கோயில்கள் இந்தியாவிலே ஆங்காங்கு காணப்படுகின்றன. ஈழ நாட்டிலும் அநுமார் பல திருத் தலங்களிலே பரிவார தெய்வமாக எழுந்தருளியிருக்கிறார். அனுமனை மூலவராகக் கொண்ட கோயில்களும்,ஒன்றிரண்டு அண்மைக்காலத்தில் இலங்கையில் தோற்றம் பெற்றுள்ளன.
சுமேரு மலையிற் கேசரி எனும் வானர அரசன் ஆட்சி புரிந்து வந்தான். அவன் மனைவி அஞ்சனாதேவி சந்ததி வேண்டி மானிட ரூபத்திலே ஈசுவரனைக் குறித்து ஏழாயிரம் வருடம் தவம் செய்தாள். அவள் தவத்திற்கு மகிழ்ந்து தோன்றிய ஈசுவரனிடம் மிக்க கீர்த்திமானாயும் மகாதீரனாயும் அதிபக்திமானாயுமுள்ள புத்திரனை அளிக்கும்படி கேட்டாள். ஈசுவரனும் தன்னைத் தியானித்துக் கொண்டு மூடிய கண்களுடன் கைகளை ஏந்தி நின்றால் வாயுபகவான் பிரசாதத்தைக் கொடுத்துச் செல்வார் என்றும் அதனை உண்டால் சற்புத்திரன் உண்டாவான் என்றும் அவன் பதினோராவது மகா உருத்திரன் என்றும் கூறினார்.
தசரதன் புத்திரகாமேஷ்டி யாகத்திலே தோன்றிய பாயசகலசத்தைப் பிரித்து மனைவியருக்குக் கொடுத்துபோது கருடன் ஒரு பாத்திரத்தைத் தூக்கிச் சென்றது. காற்றுப் பலமாக அடித்ததால் கருடன் தவறவிட்ட பாத்திரத்தை வாயு பகவான் கொண்டு சென்று அஞ்சனாதேவியின் கரத்தில் போட்டு விட்டுச் சென்றான். அதனையுண்டதனால் அஞ்சனாதேவி கர்ப்பமுற்று ருத்திராம்சரூபியாகிய வாணர உருவத்துடன் கூடிய புத்திரனைப் பெற்றாள்.
புத்திரன் வளர்ந்து வருகையில் தேவர்கள் பலரும் அவனுக்குப் பல வரங்களை அளித்துச் சிரஞ்சீவி நிலையும் (சாகாவரமும்) கொடுத்தனர்.
மகாபாரதத்திலும் அக்கினி புராணத்திலும் அநுமான் பற்றிய செய்திகள் காணப்படினும் இராமாயணத்திலேயே அநுமான் பற்றிய வரலாறு விரிவாக இடம் பெறுகின்றது. ஆனந்த இராமாயணமும் மூலராமாயணமும் அநுமானின் புகழ் பாடுகின்றன.
இராமாயணத்திலே இராம பக்தியின் சிறந்த உதாரணமாக அநுமான் சித்திரிக்கப்படுகிறான். உள்ளக் கோயிலிலே இராமனையே பரம் பொருளாகக் கொண்டு, அவன் சேவையையே தன் இலட்சியமாகக் கொண்ட இராம பக்தனாக அநுமான் விளங்குகின்றான். இராமபக்த அநுமான் இராமபக்தியை விளக்கும் சிறந்த பாத்திரமாக அமைகின்றார்.
சிவாஜியின் குரு இராமதாசர் தம்மை அநுமானின் அவதாரமாகக் கருதி மகாராஷ்டிரம் முழுவதும் ஆங்காங்கே
இந்துக் கலைக்களஞ்சியம்

அநுமார் கோயில்களை எழுப்பினார். வடநாட்டிலே ஒவ்வொரு குடியிருப்பிலும் அநுமார் படிமத்தினை எழுந்தருளச் செய்வது வழக்கம் என்பர். தர்ம தேவதையை அவளுடைய தனிமையிலிருந்து காப்பாற்ற அவதரித்தவர் அநுமார் என்பர். அநுமார் பெயரால் அற்புதச் செயல்கள் செய்யப்படுகின்றன. அநுமாரைத் தியானிப்பதால் பலவிதமான வல்லமைகளும் பெறலாம் என்ற நம்பிக்கையுண்டு.
தமிழ் நாட்டு விஷ்ணு கோயில்களிலே பொதுவாக அநுமார் திருமேனி எழுந்தருளப் பெற்றிருத்தல் காணத்தக்கது. அநுமந்தவாகனம் தமிழ்நாட்டு விஷ்ணு கோயில்களிலே காணப்படுகின்றது. பொன்னாலை பூரீ வரதராஜப் பெருமாள் கோயில், பூரீ வல்லிபுர ஆழ்வார் கோயில் முதலிய கோயில்களில் யாழ்ப்பாணத்திலே அநுமார் பரிவார தெய்வமாக இடம் பெறுகிறார். வந்தாறுமூலை மகாவிஷ்ணு கோயில் போன்ற கோயில்களில் மட்டக்களப்புப் பிரதேசத்திலும் அவர் பரிவார தெய்வமாக இடம் பெறுகிறார். திரு அயோத்தியிலே அமைந்துள்ள அநுமார் கோயில் பிரபல்யமுடையது. ஆஞ்சநேயர் புகழ்பாடும் நூல்கள் தமிழிலும் உள்ளன.
நா. கனராஜையர் அநுமபுராணம் பாடியுள்ளார். சீர்காழி அருணாசலக் கவிராயர் அநுமார் பிள்ளைத் தமிழ் இயற்றியுள்ளார். வேங்கடாசலதாசர் அநுமா ரனுபூதி வழங்கியுள்ளார். அநுமார் ஒயிற்கும்மி ஒன்று குமரகுருபர ஜயராற் பாடப்பட்டுள்ளது. (பொ.யூ.)
அநுராதபுரம்
இலங்கையின் வடமத்திய பகுதியில் அமைந்துள்ள அநுராதபுரம் இலங்கையின் மிகப் புராதனமான நகரம். அது 1300 ஆண்டுகளுக்கு மேலாக இலங்கை மன்னரின் இராசதானியாக விளங்கிய நகரம். இலங்கையில் மிகக் கூடுதலான தொல்பொருட் சின்னங்கள் அங்குதான் காணப்படுகின்றன. இந் நாட்களிற் பழைய நகர்ப்பகுதி புதிய நகர்ப்பகுதி என இரண்டு பிரிவுகளுண்டு. புதிய நகர்ப்பகுதி 19 ஆம் 20 ஆம் நூற்றாண்டுகளில் ஏற்பட்ட குடியேற்றங்களின் விளைவாக அபிவிருத்தியடைந்த பகுதியாகும். அது அநுராதபுர மாவட்டத்தின் நிர்வாக நிலையமாக அமைந்துள்ளதாற் பல அரசாங்க நிறுவனங்களும் அரசாங்க அதிகாரிகளின் வதிவிடங்களும் நீதித்தலங்களும் காவல் நிலையங்களும் அங்கு அமைந்துள்ளன. போக்குவரத்துப் பாதைகளை இணைக்கும் கேந்திரநிலையமாக அது அமைவதால் பிரதானமான தரிப்புநிலையங்களும் அங்கு உள்ளன.
பழைய நகர்ப்பகுதி அட்டமத்தானங்கள் என்று சொல்லப்படும் பெளத்தர்களின் புனித தலங்கள் அமைந்துள்ள பகுதி என்பதால் அதனைப் புனித நகராகப் பிரகடனப்படுத்தியுள்ளனர். மகாபோதி என்று சொல்லப்படும் வெள்ளரசமரம் அமைந்துள்ள தானம், தூபாராமம்,
5.

Page 98
றுவான்வலிசேய, அபயகிரி சேதியம், ஜேதவனாராமம் முதலிய பிராமண்டமான, புராதனமான சேதியங்கள் அங்கு அமைந்துள்ளன. அத்துடன் பல நூற்றுக் கணக்கான பெளத்தப் பெரும் பள்ளிகள், சேதியங்கள் என்பவற்றின் அழிபாடுகள் பழைய நகர்ப்பகுதியிலே பரந்து காணப்படுகின்றன. அவை, யாவும் தொல்பொருள் திணைக்களம், கலாசார முக்கோணம் என்னும் நிறுவனங்களின் பொறுப்பில் உள்ளன. கடந்த மூன்று தசாப்தங்களாக இயங்கிவரும் கலாசார முக்கோணத்தினால் அபயகிரி, ஜேதவனராமம் என்னும் பிரமாண்டமான சேதியங்கள் புனராக்கஞ் செய்யப்படுகின்றன. அவற்றின் சுற்றாடல்களிலே அகழ்வாராய்வுகள் புதிதாக அந்நிறுவனத்தினால் மேற் கொள்ளப்பட்டன. பெருமளவிலான தொல்பொருட் சின்னங்கள் அங்கு கிடைத்துள்ளன. அவற்றில் ஒரு சிறி பகுதியைக் காட்சிக்கு வைப்பதற்காக இரண்டு புதிய அருங்காட்சியகங்களும் உருவாக்கப்பட்டுள்ளன. காலத்தால் முற்பட்ட வேறொரு அருங்காட்சியகமும் அங்குள்ளது. அங்கு பல சிலாசாசனங்களும் சிற்பங்களும் சீனத்துப் பீங்கான்களும் புராதனமான கலவோடுகளும் வேறும் பல சின்னங்களும் வைக்கப்பட்டுள்ளன.
அநுராதபுரம் பற்றிய இலங்கைப் பெளத்தர்களின் சிந்தனைகள் உணர்ச்சி பூர்வமானவை; அபிமான நோக்கு டையவை. அங்கு குவிந்திருக்கும் தொல்பொருட் சின்னங்களாலும் அவற்றைப் பற்றிய அரசாங்க வெளியீடு களாலும் அவை மேலும் முனைப்புப் பெறுகின்றன.
அநுராதபுரத்தில் அகழ்வுகளின் போது, மிகக் கீழ் அமைந்த படைகளில் குறுணிக் கற்காலச் சின்னங்களை அடுத்துத் தென்னிந்திய உற்பத்தியுடைய பெருங்கற்காலப் பண்பாட்டுச் சின்னங்கள் காணப்பட்டன. அச்சின்னங்களும் பெளத்த சமயம் பரவுவதற்கு முற்பட்ட மூன்று நூற்றாண்டுகளுக்கு உரியனவாகும். தென்னிந்தியாவிற்குரியதான பெருங்கற் பண்பாடு வட இந்தியாவிலிருந்து பரவிய பெளத்த கலாசார மரபுகள் ஆகியவற்றின் சேர்க்கையினை மூலமாகக் கொண்டு ஆதி அநுராதபுரத்துச் சமுதாயம் அபிவிருத்தி அடைந்த தென்பதனைத் தொல்பொருட் சின்னங்கள் மூலமாக அறிய முடிகின்றது. பெளத்த சமயம் பரவியதோடு அதன் மொழியான பிராகிருதமும் பொது வழக்கு மொழியாகியது.
கி.பி.நான்காம் நூற்றாண்டில் அநுராதபுரம் இராசதானியாகப் பாண்டுகா அபயன் என்பவனால் அமைக்கப்பட்டது. அதனைப் பற்றிய விவரங்கள் மகாவம்சத்திலே காணப்படுகின்றன. அநுராதபுரத்திற் சேரிப்புறங்களும் குடியிருப்புகளும் வழிபாட்டு நிலையங்களும் ஈமக்காடும் அவனால் உருவாக்கப்பட்டன என்று அந்நூல் கூறும். நிர்வாக முறையொன்றின் பூர்வாங்கமான ஏற்பாடுகள் பாண்டுகாபயனால் உருவாக்கப்பட்டன. நகரகுத்தக என்னும் நகரகாவலன் ஒருவனை அவன் நியமித்தான். அநுராதபுரத்திற்கு வெளியில் அமைந்துள்ள பகுதிகளிலும் தனது மேலாதிக்கத்தை ஏற்படுத்தும் முயற்சிகளில் அவன் ஈடுபட்டான். கிரிகண்ட என்னும் பிரதேசத்தின் அதிபனாக சிவ என்பவனை அவன் நியமித்தானென்று சொல்லப்படுகிறது.
52

அநுராதபுரத்திலே, ஆதியில் அமைந்திருந்த குடியிருப்பு களையும் சமுதாய ஏற்பாடுகளையும் வழிபாட்டு நிலையங்களையும் பாண்டுகாபயன் காலத்துக்குரியனவாக மகாவம்சம் வர்ணிக்கின்றது. அங்கு குறுணிக்கற்காலப் பண்பாடு, பெருகற்காலப் பண்பாடு என்பன்வற்றைக் கொண்ட மக்கள் பரவியிருந்தனர். பழைய நகரின் மையப்பகுதியில் நடந்த அகழ்வாராய்ச்சிகளிலே மிகவும் ஆழமான படைகளில் அவற்றுக்குரிய சின்னங்களே காணப்பட்டன. வளர்ச்சி நிலையிலே பல்வேறு மட்டங்களிலுள்ள சமுதாயங்கள் அங்கே காணப்பட்டன. மேற்குடி மக்கள் மையப் பகுதியிலும் புறச்சேரிகளான ஒதுக்குப் புறங்களிற் சண்டாளரும் வேடரும் வாழ்ந்தனர் என்பதை மகாவம்சத்தின் மூலமாக அறியலாம்.
அநுராதபுர வாசிகளிடையே வெவ்வேறான வழிபாட்டு முறைகளும் சமயநெறிகளும் செல்வாக்குப் பெற்றிருந்தன. அரசனும் அவனைச் சேர்ந்தவர்களும் யக்ஷ வழிபாட்டில் ஈடுபாடு கொண்டிருந்தனர் என்பது மேல்வரும் மகாவம்சப் பகுதியால் உணரப்படும்.
“நகரின் கிழக்குப் பக்கத்திலே இயக்கனான கால வேலனை நிலைபெறச் செய்தான். அபயவாவியின் கீழ்ப்புறத்தில் இயக்கனான சித்தராஜனை நிலைகொள்ளுமாறு செய்தான். முற்பிறப்பிலே தனக்கு ஆதரவு புரிந்த யக்கினியை நகரின் தென்புறத்தில் அமைவு கொள்ளச் செய்தான். அரண்மனையில் யக்கினியைக் குதிரை வடிவிலே நிலைபெறச செய்தான். ஆண்டு தோறும் அவர்களுக்கும் வேறு இயக்கர்களுக்கும் வேள்விகள் செய்தான். திருவிழாக் காலத்திலே சித்தராஜரின் உருவத்தின் பக்கத்திலிருந்து கொண்டு உபசாரமாகத் தேவர்களும் மனிதரும் கூத்தாடும்படி செய்தான்.
“மேலும், நான்கு புறச்சேரிகளையும் அபயவாவி யினையும் ஈழக் காட்டினையும் உருவாக்கினான். பச்சிமராணியின் வழிபாட்டு நிலையத்தையும் வைஸ்ரவண தேவனின் ஆலமரத்தையும் வேட்டுவர் தேவனின் பனைமரத்தையும் யோனருக்குரிய தலத்தையும் யாக சாலையினையும் மேற்கு வாயிற்புறத்தில் அமைத்தான்.”
நகரைச் சுத்தஞ் செய்வதற்கும் பிரேதங்களை எடுத்துச் செல்வதற்கும் சுடுகாட்டினைக் காவல் புரிவதற்கும் சண்டாளர் பெருந்தொகையானோரைப் பாண்டுகாபயன் நியமித்தான். அவர்களின் கிராமம் சுடுகாட்டின் வடமேற்கில் அமைந்திருந்தது. அவர்களுக்கென்று அக்கிராமத்தின் வடகிழக்கிலே சுடுகாடொன்றினை அரசன் அமைப்பித்தான். அதற்கும் பாஷாண மலைக்கும் இடையிலே வேட்டுவரின் குடிசைகள் வரிசையாக அமைந்திருந்தன. அதன் வடக்கிலே காமினி வாவிக்கு அண்மையில் துறவிகளின் ஆசிரமமொன்று இருந்தது. சண்டாளரின் சுடுகாட்டுக்குக் கிழக்கிலே ஜோதிய என்ற சமணமுனிவரின் ஆராமத்தை அரசன் அமைப்பித்தான். அங்கு கிரி என்னும் சமணரும் புறச்சமயிகளான துறவிகள் வேறு பலரும் வாழ்ந்தனர். “அவ்விடத்தில் கும்பண்ட என்னும் சமண
இந்துக் கலைக்களஞ்சியம்

Page 99
முனிவருக்கு அரசன் போதனாசாலை ஒன்றினை அமைத்துக் கொடுத்தான். அதன் மேற்கிலே வேட்டுவர் குடியிருப்புக்குக் கிழக்கிலே புறச்சமயிகளான ஐந்நூறு குடும்பங்கள் இருந்தன.” ஜோதி முனிவரின் ஆசிரமத்துக்கும் காமினி வாவிக்கும் இடையில் அஜிவிகருக்கும் அங்கும் இங்குமாகச் செல்லும் துறவிகளுக்கும் ஆராமங்களை அமைத்துக் கொடுத்தான். சிவிகசாலை ஒன்றையும் அவன் அமைப்பித்தான். அது சிவலிங்க வழிபாட்டுத் தலமாகுமென்று மகாவம்சத்தின் உரைநூலான வம்சத்தப்பகாஸினி கூறும்.
பெளத்த சமயம் கி.மு.மூன்றாம் நூற்றாண்டில் நிறுவனரீதியாக நிலைநாட்டப்படுவதற்கு முன்பு அனுராதபுரம் இராசதானி என்ற நிலையை அடைந்தது. அதிலே பல்வேறு பண்பாட்டு நெறிகளைக் கொண்ட சமூகப் பிரிவுகள் காணப்பட்டன. மேற்குடியினரும் சண்டாளரும் வேட்டுவரும் தனித்தனியான புறங்களில் வாழ்ந்தனர். அரசனும் சுற்றத்தவரும் யகூஷ தேவர்களை வழிபட்டனர் போலத் தெரிகின்றது. சித்தராஜ காலவேல, பச்சிமராணி போன்ற தேவர்களை வழிபட்டனர். சைவம், சமணம், ஆஜிவிகம், வைதீகம் போன்ற சமயநெறிகளைப் பின்பற்றியோரும் நகர்ப் புறங்களில் வாழ்ந்தனர். அவர்களும் அரசனுடைய அங்கீகாரத்தையும் ஆதரவையும் பெற்றனர்.
இத்தகைய பின்னணியிலே பெளத்த GFLD LLJ Lh அனுராதபுரத்திலே பரவியது. தேவநம்பியதீசனுடைய காலத்திலே மஹிந்ததேரரும் சங்கமித்தையும் அனுராதபுரத்தை அடைந்தனர். மகாவிகாரையும் மகாபோதியும் உருவாக்கப்பட்டன. அனுராதபுரத்திலே தூபாராம சேதியம் அமைக்கப்பட்டது. அரசன் பெளத்த சமயத்தைத் தழுவிக் கொண்டான். அதனை முன்னுதாரணமாகக் கொண்டு பிரதானிகளும் குடிகளிற் பலரும் பெளத்தராயினர் என்பது மரபுவழிக்கதை.
பெளத்த சமயம் பரவியதன் விளைவாக மோரியர் கலாசாரமும் வடஇந்தியப் பண்பாட்டு மரபுகளும் அநுராதபுரத்தை அடைந்தன. தீசனுக்கு அரசனாக அபிஷேகம் செய்வதற்கென்று அதற்கு வேண்டிய பொருள்களை மோரியப் பேரரசனாகிய அசோகன் அனுப்பிவைத்தான். அசோகனுடைய பெயர்களில் ஒன்றான தேவநம்பிய என்பதைத் தனது பட்டப்பெயராக அநுராதபுர மன்னன் சூடிக்கொண்டான். அநுராதபுர இராச்சியம் மோரியப் பேரரசின் அமைப்பில் அடங்கி விட்டதனையும் தீசன் அசோகனை அதியரசனாக ஒப்புக் கொண்டதனையும் இவை உணர்த்துகின்றன.
பெளத்த சங்கத்தவரின் மொழியான பிராகிருதம் இலங்கையிலே தொடர்பு மொழியாகியது. சங்கத்தாருக்கு வழங்கிய தானங்களைப் பதிவு செய்கின்ற பிராமியச் சாசனங்கள் எல்லாம் அம்மொழியில் எழுதப்பட்டன. சங்கத்தார் மூலமாக ஆதிகாலத்துப் பெளத்த இலக்கியம் முழுவதும் அநுராதபுரத்திலுள்ள மகாவிகாரையினை அடைந்தது. அது இந்தியாவிலே காலப்போக்கில் அழிந்துவிட்ட பொழுதிலும் அநுராதபுரத்துப் பெரும்பள்ளிகளில் முழுமையாகப் பேணப்
இந்துக் கலைக்களஞ்சியம்

பட்டுள்ளமை குறிப்பிடற்குரியது. நிலையான பெருங் கட்டடங்களைக் கட்டும் முறையினையும் பெளத்த சமயத் தொடர்பின் மூலமாகப் புராதனகால இலங்கை வாசிகள் அறிந்து கொண்டனர்.
தேவநம்பிய தீசன் காலத்தில் இராசதானிக்கும் பெளத்த சங்கத்துக்கும் இடையில் ஏற்பட்ட தொடர்பு காலப்போக்கில் வலுப்பெற்றது. அரசனது அதிகாரம் உறுதிப்படுவதற்குச் சங்கத்தவர் ஆதரவு புரிந்தனர். சங்கத்தாரை ஆதரிப்பதும் பெரும்பள்ளிகளை சேதியங்களை அமைப்பதும் தங்கள் தலையாய கடமையென்று மன்னர்கள் கருதினர். அரசர்களின் கட்டுமானப் பணிகள் அனைத்தும் பெளத்த சமயந் தொடர்பானவை. அவற்றுள்ளும் பெரும்பாலானவை அநுராதபுரத்தில் அமைந்து காணப்பட்டன. காலப்போக்கில் அநுராதபுரம் ஒரு சங்கத்தாரின் நகரம் என்று சொல்லுமளவிற்குப் பெரு விசாலமாகி வளர்ச்சியுற்றது. சங்கத்தாரின் வதிவிடங்களான சங்காரமங்கள், கோயில்களான சேதியங்கள், படிமாகரம் என்னும் வழிபாட்டு நிலையங்கள், உபோசத மாளிகைகள், கல்லூரிகளான பிரிவேனாக்கள், சங்கத்தாரின் ஆதுலர்சாலைகள் எனப் பலவகையான, நூற்றுக்கணக்கான கட்டடங்களின் அழிபாடுகள் அங்குள்ளன.
துட்ட காமினி என்னும் அரசனின் காலத்தில் றுவான்வலிசாய, மிருசுவேதி என்னும் பிரமாண்டமான கோயில்களும் உலோகபாசாத என்ற ஒன்பது அடுக்கு மாளிகையான சங்கத்தார் பள்ளியும் நிர்மாணிக்கப்பட்டன. வட்டகாமினி அபயன் காலத்திலே அபயகிரி விகாரம் அமைக்கப்பட்டது. காலப்போக்கிலே சங்கபேதம் ஏற்பட்டு அங்குள்ளவர் மகாவிகாரையிலிருந்து பிரிந்து தனியான பிரிவாகினர். மகாசேனன் என்னும் மன்னனின் காலத்திலே (கி. பி. 278-302) அநுராதபுரத்திலே மிகப் பெரிய அளவிலான கோயில்கள் உருவாக்கப்பட்டன. சேதியங்கள் எல்லாவற்றிலும் மிகப்பெரியதான ஜேதவனாராமம் அமைக்கப்பட்டதோடு அபையகிரி சேதியமும் அளவிற் பெரியதாக வடிவமைக்கப்பட்டது.
மூன்று நிகாயங்ளையும் சேர்ந்த பெருமளவிலான சங்கத்தார் அநுராதபுரத்திலே தங்கியிருந்தனர். அநுராதபுரத்திலும் மிகிந்தலையிலும் சுமார் 8000 பிக்குகள் வாழ்ந்தனரென்று ஃபாஸியென் என்னும் சீன யாத்திரிகர் கூறுவார். அநுராதபுரத்துப் பெளத்த நிறுனங்கள் காலப்போக்கில் அரசருக்குப் பெரும் சுமையாகி விட்டன. அரச வருமானங்கள் எல்லாம் அவற்றைப் பராமரிப்பதில் விரயமாகின. அவற்றுக்கு ஆதாரமாக நிலமானியங்கள் வழங்கப்பட்டன. நிலவருமானங் களையும் குடிகள் ஆற்ற வேண்டிய சேவைகளையும் ஒழுங்காகப் பெற்றுக் கொள்வதற்கு நிர்வாக ஏற்பாடுகளை விகாரங்கள் மேற்கொண்டன. பெரும்பள்ளிகளின் தேவைகளும் அளவிலாதனவாகி விட்டன. அநுராபுரத்துப் பெரும் பள்ளிகள் அரசரின் நன்கொடைகளை ஆதாரமாகக் கொண்டு இயங்கியவை. குடியானவர்களின் ஆதரவில் அவை தங்கியிருக்கவில்லை. வஸ்திரம், உணவு, மருந்து மூலிகைகள் முதலியன அவர்களுக்குப் பெருமளவிலே தேவைப்பட்டன.
53

Page 100
வெளிநாடுகளில் உற்பத்தியான போகப் பொருட்களும் பெரும்பள்ளிகளிற் புழக்கத்திலிருந்தன. சேதியங்களில் நாள் வழிபாட்டுக்கும் உற்சவங்களுக்கும் வேண்டிய கற்பூரம், சந்தனம், அகில், குங்கிலியம், பட்டுத்துணிகள் முதலானவை விலைமிக்கவை; தூரதேசங்களில் உற்பத்தியானவை, பெளத்த நிறுவனங்களின் பெருவளர்ச்சியின் பிரதிபலனாக அனுராதபுரத்தை மையமாகக் கொண்டு வாணிபம் விருத்தி பெற்றது. சதேசிகளாயும் பரதேசிகளாயுமுள்ள வணிகர் வாணிப நிலையங்களையும் தரிப்பு நிலையங்களையும் குடியிருப்புகளையும் பெளத்த நிலையங்களின் சமீபத்திலே அமைத்துக் கொண்டனர். அவற்றுக்குத் தேவையான உள்நாட்டுப் பொருள்களையும் பிற தேசங்களிலிருந்து உற்பத்தியாகும் பொருள்களையும் விநியோகம் செய்வதில் நான்கு நாட்டார், நானா தேசிகள் போன்ற தென்னிந்திய வணிக கணத்தவர் ஈடுபட்டனர் என்று கருதலாம். அனுராதபுரத்திலுள்ள பிரதானமான பெளத்த நிறுவனங்கள் அன்னியத் தேசங்களோடும் தொடர்புகளை ஏற்படுத்தியிருந்தன. சங்கத்தார் வணிகர் வசமான கப்பல்களிற் கடற்பிரயாணங்களை மேற்கொண்டனர். வணிகர் மூலமாக இந்து சமய வழிபாட்டு நிறுவனங்கள் நகரின் சில பாகங்களில் உற்பத்தியாகின என்று கருதலாம்.
அநுராதபுரத்தின் சில பகுதிகளில் இந்து சமய வழிபாட்டு நெறிகளைப் பின்பற்றியோர் வாழ்ந்தனர். அவர்களைப் பற்றிக் கிடைக்கின்ற சொற்பமான விவரங்கள் சாசனங்கள் மூலமாகவும் வேறு தொல்பொருட் சின்னங்கள் மூலமாகவுங் கிடைக்கின்றன. இலங்கையில் இந்துக் கோயில்கள் பற்றிய மிகப் புராதனமான கட்டிட அழிபாடுகள் அநுராதபுரத்திற் கிடைத்துள்ளன. விஜயாராமத்துக்குப் போகும் வழியிலும் அதற்குச் சமீபமாகவும் அகழ்வாராய்வுகளைச் சுமார் நூறு வருடங்களுக்கு முன் நடத்திய பொழுது சில சைவாலயங்களின் அத்திபாரங்களும் சிற்பங்களும் அடையாளங் காணப்பட்டன. அங்குள்ள கோயில்கள் கல்லினால் அமைந்த அடித்தளங்களின் மேலே செங்கற்களினாற் கட்டப்பட்டிருந்தன. அவை கர்ப்பகிருகம், அந்தராளம், அர்த்தமண்டபம் என்னும் பகுதிகளோடு அமைக்கப்பட்டிருந்தன. கோயில்களின் சமீபத்தில் உயரமான தளமொன்றிலே, கல்லினால் அமைக்கப்பட்ட வேறு கட்டிடங்கள் இருந்தன. அவை அளவிற் கோயில்களிலும் பெரியவை. பல கூடங்களுடன் அமைக்கப் பட்டவை. கோயில்களிற் கடமை புரிந்த பிராமணரின் வீடுகளாக
அவை அமைந்திருந்தன என்று கருதப்படுகின்றது.
கட்டிட அழிபாடுகளிடையே கிடந்த தூணொன்றில் ஒன்பதாம் நூற்றாண்டுக்குரிய வரிவடிவங்களில் எழுதப்பட்டுள்ள இரண்டு சாசனங்கள் உள்ளன. அவை ஆலயமொன்றிலே விளக்கெரிப்பதற்கென்றும் திருவது படைப்பதற்கும் சேக்கிழான் செட்டி சங்கன், சேக்கிழான் சென்னை என்னும் வணிகர் வழங்கிய தானங்களைப் பதிவு செய்கின்றன. அவர்கள் ஒவ்வொருவரும் 30 ஈழக்காசினை தனித்தனியாகக் கொடுத்தனர். நன்கொடைக்குப் பொறுப்பேற்றவர்கள் குமாரகணத்துப் பேரூரார். குமர்ரகணமென்னும் இடத்திலே தமிழர் குடிகளாயிருந்தனர் என்பதையும் அக் குடியிருப்புகள்
54

பேரூர் என்ற நகரமாக உற்பத்தியாகிவிட்டன என்றும் அது சுயாட்சியுரிமை கொண்டவோர் அமைப்பாகச் செயற்பட்ட தென்றும் கொள்வதற்கு இச்சாசனங்கள் ஆதாரமாயுள்ளன.
அநுராதபுரத்தின் வடபகுதியிலே, முற்காலங்களிற் தமிழர் வாழ்ந்த பகுதியில் 1893 ஆம் ஆண்டு அகழ்வாராய்வுகளை நடத்திய பொழுது நான்கு நாட்டார் என்னும் தமிழ்வணிக கணமொன்றினால் நிறுவப்பெற்ற தமிழ்ச் சாசனங் கிடைத்தது. அது ஒன்பதாம் நூற்றாண்டுக்குரிய வரிவடிவங்களில் எழுதப்பட்டுள்ளது. அது சேனாவர்மன் என்னும் அரசனைக் குறிப்பிடுகின்றது. சேன என்னும் பெயருடைய மன்னர் ஐவர் அநுராதபுரத்தில் அரசு புரிந்தனர். எனினும் சாசன வாசகத்திலுள்ள அரசனைப் பற்றிய அடைமொழிகளின் அடிப்படையிலே இச்சாசனம் இரண்டாம் சேன (853-887) என்னும் அரசனைக் குறிப்பிடுகின்றதென்று அனுமானித்துக் கொள்ளலாம். இச்சாசனம் மாக்கோதைப் பள்ளி என்னும் பெளத்தப் பள்ளியொன்றினைக் குறிப்பிடுகின்றது. மாக்கோதை என்பது சேரமன்னரின் சிறப்புப் பெயர்; அது அவர்களின் தலைநகரமான திருவஞ்சைக் களத்தையுங் குறிக்கும். மாக்கோதைப் பள்ளி என்னும் பெயர் அதனை அமைத்த நான்கு நாட்டுத் தமிழர் சேரநாட்டால் வந்தவர்கள் என்பதை உணர்த்துவதாகும்.
நான்கு நாட்டாராலும் அமைக்கப்பட்ட நால்வரும் (மாக்கோதைப்) பள்ளியில் கம்மியரும் கூடி நின்று இத்தர்மம் (கொ)ண்டு செலுத்துவதாக அமைத்துக் க(ல்) வெட்டிக் கொடுத்தோம். நான்கு நாட்டோமும் என்பது சாசனக் குறிப்பு.
மாக்கோதைப் பள்ளி தொடர்பாக ஏற்படுத்திய அறக்கட்டளையொன்றினை நிறைவேற்றும் பொருட்டு, நான்கு நாட்டவர் ஒரு குழுவொன்றை நியமித்தனர் என்பதையும் அக் குழுவானது பள்ளியிலுள்ள பணியாளரோடு கூடிக் குறிப்பிட்ட பொறுப்புகளை நிறைவேற்ற வேண்டும் என்பதும் இக்குறிப்பினாற் தெளிவாகின்றது. நான்கு நாட்டார் என்போர் ஒரு வணிகக் குழுவினர் என்பது தென்னிந்திய சாசனக் குறிப்புகளால் அறியப்படுகின்றது. கர்நாடக தேசத்து அய்யாவொனே ஐநூறுவரின் சாசனங்களிற் சிலவற்றிலே நான்கு நாட்டார் பற்றிச் சொல்லப்படுகின்றது. சேரநாட்டு மாக்கோதைப் பட்டினத்திலிருந்தும் இலங்கைக்குச் சென்று அநுராதபுரத்தில் நிலைகொண்டிருந்த நான்குநாட்டார் பெளத்தப் பள்ளி ஒன்றினை அமைத்து, அதற்கு ஆதரவு புரிந்தமை குறிப்பிடற்குரியது. வெண்பாவிலமைந்த இரண்டு செய்யுள்கள் அவர்களமைத்த சாசனத்திலுள்ளன.அவற்றுளொன்று தர்மபாலன் என்னும் பெளத்த துறவி ஒருவரைப் பற்றியதாகும். அவர் மாக்கோதைப் பள்ளியில் இருந்தவர்.
பத்தாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ஐந்தாம் மகிந்தன் என்னும் அரசன் படைக்கலகம் ஒன்றின் விளைவாக
அநுராதபுரத்திலிருந்தும் தென்னிலங்கைக்கு ஓடிவிட்டான்.
இந்துக் கலைக்களஞ்சியம்

Page 101
படையிலுள்ளவர்களுக்கு அவனால் வேதனம் வழங்க முடியவில்லை. எனவே, தமது கூலியைக் கொடுக்குமாறு வற்புறுத்திப் படையிற் சேவகம் புரிந்த மலையாளர், கன்னடர், சிங்களர் முதலாயினோர் ஆயுதபாணிகளாய் அரண்மனையின் முன்பு கூடிக் கலகம் புரிந்தனர். அவர்களை எதிர்கொள்ள முடியாதவனாகிய அரசன் இரகசியமாக இராசதானியினின்றும் வெளியேறிவிட்டான். அநுராதபுரம் அதன் விளைவாக இராசதானி என்னும் நிலையை இழந்தது. முதலாம் இராஜராஜ சோழனது காலத்தில், கி. பி. 993 ஆம் ஆண்டளவில் சோழர் இலங்கையின் பெரும்பகுதியைக் கைப்பற்றிவிட்டனர். ஜனநாதமங்கலம் எனப் புனர்நாமம் பெற்ற பொலநறுவை ஈழமான மும்முடிச்சோழ மண்டலத்தின் பிரதான நிர்வாக நிலையமாகியது. முதலாம் விஜயபாகு 1070 இலே முடிசூடிய பொழுதும் அவன் அங்கு தங்கியிருக்கவில்லை. அவன் பொலநறுவையிலே தனது இராசதாணியை அமைத்துக் கொண்டான்.
இராசதானி என்ற நிலையினை இழந்துவிட்டபோதும் பொலநறுவைக் காலத்திலும் அநுராதபுரம் முக்கியத்துவம் வாய்ந்த பெருநகரமாக விளங்கியது. சங்கத்தார் பீடங்களிலும் ஆராமங்களிலும் பெருந்தொகையான துறவிகள் வாழ்ந்தனர். அங்குள்ள பெருங்கோயில்கள், புனித தலங்கள் என்பவற்றுக்குத் தேசத்தின் பிற பகுதிகளிலிருந்து பலர் யாத்திரை போகும் வழக்கம் இருந்தது. பொலநறுவையிலிருந்த மன்னர்கள் அநுராதபுரத்துப் பெளத்த நிறுவனங்களைப் பராமரிப்பதிலும் பெருவிழாக்களை நடத்துவதிலும் ஈடுபாடு கொண்டிருந்தனர். கணிசமான அளவிலே, பெளத்த நிறுவனங்களின் காரணமாக வாணிப நடவடிக்கைகள் நகரில் நடைபெற்றதால் நானாதேசி வணிகர் அநுராதபுரத்தில் நிலைகொண்டிருந்தனர். பெளத்த நிறுவனங்களுக்குச் சமீபமான இடங்களில் நானாதேசி வணிகரின் தொல்பொருட் சின்னங்கள் காணப்பட்டுள்ளமையால் அவர்களின் விற்பனை நிலையங்களும் குடியிருப்புகளும் அத்தகைய இடங்களில் இருந்தன என்று அநுமானித்துக் கொள்ளலாம்.
லீலாவதி என்னும் அரசியின் ஆட்சியில் நானாதேசி வணிகர் அநுராதபுரத்தில் மடிகை என்றவொரு வணிகர் குடியிருப்பினை ஏற்படுத்தினார்கள். அநுராதபுரம் போகும் யாத்திரிகர்களுக்கு அன்னதானம் வழங்குவதற்கு அறக்கட்டளை ஒன்றை லீலாவதி ஏற்படுத்தினாள். அதை நிறைவேற்றும் பொறுப்பு நானா தேசி வணிகரிடம் ஒப்படைக்கப்பட்டது. அதனைப் பற்றிய சாசனக் குறிப்பு மேல்வருமாறுள்ளது. “பல்வேறு திசைகளிலிருந்தும் அநுராதபுரம் போகின்ற வறியவர்களுக்கு அன்னதானம் செய்தற் பொருட்டு பலவலவிமேதாவி என்னுந் தானசாலையினை அமைத்து, அதை நடத்துவதற்கும் பாதுகாப்பதற்கும் வேண்டிய ஏற்பாடுகள் அரசியாராற் செய்யப்பட்டுள்ளன. அதற்கு வேண்டிய சரக்குகள் முதலான பண்டங்களை வருமானத்திலிருந்து கொடுப்பதற்காக பலவலவிமேதாவி என்னும் மடிகையினைத் தான சாலைக்கு அண்மையில் நானாதேசி வணிகரைக் கொண்டு அமைப்பித்தார்.
இந்துக் கலைக்களஞ்சியம்

நான்கு யாளத்து வயல்வெளியும் 30 அடிமைகளும், எருமைகள், மாடுகள் ஆகியன எல்லாமாக 150 உருப்படிகளும் இதற்கெனத் தானமாகக் கொடுத்தார்.”
அநுராதபுரத்திலே சில புதிய இந்துக் கோயில்கள் அமைக்கப்படுவதற்கு நானாதேசிகனின் குடியிருப்புகள் காரணமாயிருந்தன. தூபாராம சேதியத்துக்குச் சமீபத்தில் அம்மன் கோயிலொன்று பொலநறுவைக் காலத்தில் அமைந்திருந்தது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் முடிவிலே நடைபெற்ற அகழ்வாராய்ச்சிகளின் பயனாக அதன் இடிபாடுகள் அடையாளங் காணப்பட்டன. அக்கோயில் சேதியத்துக்கு வடக்கிலே, கால் மைல் தூரத்தில், வை (Y) வீதி என வழங்கிய தெருவின் சமீபத்தில் அமைந்திருந்தது. கோயிலின் இடிபாடுகள் காலப்போக்கில் மண்மேடாகி விட்டன.
அக்கோயில் வழமை போலக் கர்ப்பகிருகம், அந்தராளம், மண்டபம் என்னும் பகுதிகளைக் கொண்டிருந்தது. மண்டபத்திலிருந்த 20 தூண்கள் அதன் கூரையைத் தாங்கியிருந்தன. மூலஸ்தானத்திலே கோயிற் பிரகாரத்தின் மதில்கள் செங்கட்டிகளினாற் கட்டப்பட்டிருந்தன. பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்த அம்மனின் படிமம் இடிபாடுகளிடையே காணப்பெற்றது. அம்மனின் கோலம் மகிஷமர்தனியின் தோற்றமாகும். கட்டிடத்தின் கோலத்தையும் அதன் சிற்ப வடிவங்களையும் ஆராய்ந்தவர்கள் இக்கோயில் பொலநறுவைக் காலத்தில் அமைக்கப் பெற்றதென்று கூறியுள்ளார்.
மகிஷமர்த்தனியின் கோலம் நானா தேசி வணிகரின் முத்திரையில் அமைந்துள்ளமையும் இங்கு கவனித்தற்குரியது. இக்கோயில் பொலநறுவைக் காலத்தில் அமைக்கப்பெற்றதென்று கொள்ள முடிவதாலும், அக்காலத்தில் நானாதேசி வணிகர் அநுராதபுரத்திற் செல்வாக்குப் பெற்றிருந்தபடியாலும் அது நானாதேசி எனப்படும் ஐந்நூற்றுவரின் கணதெய்வமான பரமேஸ்வரியின் கோலமான மகிஷமர்த்தனியின் வடிவம் அமைந்த மூலஸ்தானமுடைய அம்மன் கோயில் என்பதாலும் அக் கோயிலை நானாதேசி வணிக கணத்தவர் அமைத்தனரென்று ஊகித்துக் கொள்ள முடிகின்றது. தூபாராம சேதியத்துக்கு அண்மையில் அது அமைந்திருந்தமையாற் சேதியம் தொழுவதற்குச் சென்ற யாத்திரிகர் கூடும் தலத்தில் விற்பனை நிலையங்களை அமைத்திருந்த வணிகராலும் அவர்களோடு கூடியிருந்தவர் களாலும் அக்கோயில் நிர்மாணிக்கப் பெற்றதென்று கருத முடிகின்றது.
நானாதேசி வணிகரோடு தொடர்புடைய தொல்பொருட் சின்னங்கள் சில ஜேதவனாராம சேதியத்தின் சுற்றுப் புறங்களில் கலாசார முக்கோணத்தினராற் கண்டெடுக்கப்பட்டுள்ளன. உமாமகேஸ்வரர், உமாதேவியார், வீரபத்திரர், தகூழிணாமூர்த்தி, “பூவளநாயகி’ முதலியோரின் உலோகப் படிமங்கள் ஒரு கிடங்கொன்றிலே புதைக்கப்பட்டிருந்தன. அவற்றுள் வீரபத்திரரின் படிமத்தில் பூணூரீ நானாதேசியன் என்ற பெயர் 12 ஆம் நூற்றாண்டுக்குரிய வரிவடிவங்களில் எழுதப்பட்டுள்ளது.
55

Page 102
அதனால் வீரபத்திரரின் படிமமும் அதனோடு காணப்பெற்ற பிறபடிமங்களும் பொலநறுவைக் காலத்தன என்பதும் அவை நானாதேசிகளின் வழிபாட்டு நெறியோடு தொடர்பானவை என்பதும் உணரப்படும். பத்தினியின் படிமங்கள் இரண்டு, அவற்றோடு காணப் பெற்றமை குறிப்பிடற்குரியது.
அபயகிரி விகாரத்தின் சமீபத்திலிருந்தும் அர்த்தநாரி வடிவமொன்று கண்டெடுக்கப் பெற்றுள்ளது. வடிவமைப்பில் அது சில சிறப்பம்சங்களைக் கொண்டுள்ளது. றுவான்வலிசாயவின் வாசற்படியிலே பூனி ஜகதொப்ப கண்டன் பெரும் பள்ளி என்னும் பெயர் தமிழில் எழுதப்பட்டுள்ளது. அதன் எழுத்துகள் 12 ஆம், 13 ஆம் நூற்றாண்டுகளுக்கு உரியவை. ஜகதொப்பகண்டன் என்பது ஜகதோர்வகண்ட என்ற கன்னடச் சொல்லின் தமிழ் வடிவமாகும். அது புவனேகவீரன் என்ற பாண்டிய மன்னர்களின் விருதுப்பெயரைப் போன்றது. ஜகதொப்பகண்டன் என்பது அரசனொருவனதோ உயர்பதவி பெற்றிருந்த சேனாவீரன் ஒருவனதோ சிறப்புப் பெயராதல் வேண்டும். ஒரு சமயத்திலே, பொலநறுவையிலுள்ள தளதாய்ப் பெரும் பள்ளியைப் போன்று, றுவான்வலிசாய என்னும் பேரமைப்பு வணிக கணமொன்றின் பொறுப்பில் விடப்பட்டிருந்ததென்று கருத முடிகின்றது. அதன் காரணமாக அது புனர்நாமம் பெற்றுப் படையொன்றின் பெயரால் ஜகதொப்பகண்டன் பள்ளி என வழங்கியதென்று கொள்ள முடிகின்றது.
பதின்மூன்றாம் நூற்றாண்டின் பின்னர் அநுராதபுரத்துக் கோயில்களும் பெரும்பள்ளிகளும் கைவிடப்பட்டன. காலப்போக்கில் அவை இடிந்து வீழ்ந்து மண்மேடுகளாகி விட்டன. நவீன காலத்தில் நடைபெற்ற ஆராய்ச்சிகளின் பயனாக கட்டிடங்களும் பிற தொல்பொருட் சின்னங்களும் அடையாளங் காணப்பட்டுள்ளன.
அனுபலப்திப் பிரமாணம்
இந்திய மெய்யியலில் அறிவைத் தரவல்ல பிரமாணங்களாகப் பத்துப் பிரமாணங்கள் எடுத்தாளப்படுவதுண்டு. இவை பிரத்தியட்சம், அனுமானம், ஆப்தம், ஒப்புவமை, அருத்தாபத்தி, அனுபலப்த்தி, இயல்பு, ஐதீகம், மீட்சி, சம்பவம் எனச் சுட்டப்பெறும். இப்பத்துப் பிரமாணங்களை வேதவியாசகர் எடுத்தாள்வார். இதில் கிருதகோடி எட்டாகவும் வீரசைவர் பாட்டார் வேதாந்திகள் ஆறு ஆகவும் குறைத்து ஏற்று நிற்பர். மேலும் பிரபாகரர் ஐந்து பிரமாணங்களையும் (மேற்சுட்டப்பட்ட முதல் ஐந்து பிரமாணங்கள்) நியாயவாதிகள் நான்கு பிரமாணங்களையும் சாங்கியர், சைவசித்தாந்திகள் மூன்று பிரமாணங்களையும் பெளத்தர், வைசேடிகர் இரண்டு பிரமாணங்களையும் உலகாயதர் பிரத்தியட்சம் ஒன்றினையும் ஏற்பவர்களாகத் திகழ்கின்றனர். ஒவ்வொரு தரிசனங்களின் தத்துவ முறைகளுக்கு ஏற்ப அவர்கள் ஏற்கும் பிரமாணங்களும் கூடிக் குறைந்தமைகின்றமை காணலாம்.
ஆப்தம் தவிர்ந்த ஏனைய பிரமாணங்களினை விரிவான வகையில் நோக்குகையில் அவற்றில் பிரத்தியட்சப்
56

பிரமாணத்தின் செல்வாக்கினை அல்லது தாக்கத்தினை முற்றாக நாம் நிராகரித்துவிட முடியாது. அனுமானம்கூட காட்சி யளவையின் சில கூறுகளினைத் தன்னகத்தே கொண்டுள்ள தென்பது நுணுகி ஆராயுமிடத்து அறியற்பாலதே. அனுமானம் தரும் நியாயவாதத்தில் ஏதுவும் (hetu) உபநயமும் (upanaya) காட்சிப் பிரமாணத்தின் சார்பின்றிப் பெற்றதாகக் கொள்ள
முடியாது. உதாரணமாக,
அம்மலை தீயினை உடையது. (பிரதிக்ஞை) ஏனெனில் அங்கு புகையுண்டு. (ஏது) எங்கெங்கு புகையுண்டோ
அங்கெல்லாம் தீயுண்டு. (உதாரணம்) அங்கே புகையுண்டு. (உபநயம்) அம்மலை தீயினை உடையது. (நிகமனம்)
எனும் வாதத்தில் புகையுண்டு என்பதனைக் கொண்டு அவ்விடத்தே தீயுள்ளதெனும் தன்மை அனுமானத்தினைச் சார்ந்ததாயினும் புகையுண்டு எனும் அறிவானது காட்சியளவை யாலன்றிப் பிறிதொரு நிலையால் பெற்றிருப் பதற்குச் சாத்தியமில்லை என்பது புலனாகும். இது போலவே ஏனைய பிரமாணங்களும் பெரிதும் காட்சி அல்லது அனுமானத்தின் செல்வாக்கினைத் தன்னகத்தே கொண்டு விளங்குகின்றமை நுணுகி ஆராயுமிடத்துப் பெறலாம். இப்பிரமாணங்கள் காட்சி அனுமானப் பிரமாணங்களின் இணைப்பெனும் வகையில் அல்லது அவற்றின் பிறிதொரு தோற்றம் எனும் வகையில் எடுத்தாளப்படலாம் என்பது பொதுவாழ்வில் ஏற்கத்தக்கதே. இவற்றுக்குதாரணமாக ஒப்புவமை, ஐதீகம், இயல்பு போன்ற பிரமாணங்களினைச் சுட்டலாம். அனுமானத்தின் அடிப்படை யினைப் பெரிதும் மையமாகக் கொண்டு விளங்கும் பிரமாணங்களாகச் சம்பவம் மீட்சி அல்லது ஒழிவு அறிவு அருத்தாபத்தி போன்ற பிரமாணங்கள் விளங்குகின்றன.
புறப்பொருட்கள் சார்ந்த நிலையில் பெறப்படும் அறிவானது காட்சியளவையைத் தவிர்த்து அமைதல் சாத்தியமில்லை. புறப்பொருட்கள் காணப்படுவதற்குரியனவாகும். பார்க்கப் படுவனவே புறப்பொருட்களாகும் எனச் சுட்டப்பட்ட மெய்யிலறிஞர் ஒருவரின் கூற்றும் இவ்விடத்து நோக்கத் தக்கதாகும். இதனின்று புறப்பொருள் பற்றிய அறிவைத் தரும் நிலையில் பிரமாணங்களுக்கு அடிநிலையாகக் காட்சியளவை அமைவது தெளிவிற்குரியதாகும். புறப்பொருட்களுக்கும் புறவுலகுக்கும் அப்பாற்பட்டதான நிலையான உண்மைப் பொருள் பற்றிய அல்லது பெளதிக அதீத உண்மைகள் பற்றிய அறிவானது புலன்கள் வழிப்பெறும் பிரமாணங்கள் ஊடாக நிலைநாட்டப்பட முடியாததாகும். புலன்வழிப் பிரமாணங்கள் புறப்பொருள் களுக்கும் புறவுலகுக்கும் அப்பால் செல்லும் தரத்தன்று. இவ்விடத்தே பெளதிகவதித உண்மைகள் ஆப்தம் வழியேயே எடுத்தாளப்படலாம் என்பது சில இந்திய தரிசனங்களால் வலியுறுத்தப்படுகின்றது. எனினும் ஆப்தம் கூட காட்சியவையின் செல்வாக்கினை முற்றாகத் தவிர்த்தொரு தனிப்பிரமாணமாக
இந்துக் கலைக்களஞ்சியம்

Page 103
அமைதல் சாத்தியமானதோ என்பதில் எழும் ஆசங்கை அறிவியலாய்வில் தவிர்க்க முடியாததேயாகும்.
அனுபலப்த்தி எனும் வடமொழிச் சொல்லானது உபலப்த்தியின் எதிர்மறைப் பொருள் சுட்டும் சொல்லாகும். அனுபலப்த்தியானது அறிதலின்மை (non Cognition) காண்டலின்மை (non aprehension) காட்சியின் இன்மை (non perception) எனப் பலவாறாக எடுத்தாளப்படுகின்றது. எனினும் இப்பதங்கள் அனுபலப்த்திக்குரிய பொருளினைத் தெளிவாகச் சுட்டுவன எனக் கூறமுடியாததோடு ஐயப்பாட்டுக்குரிய நிலைக்கு இட்டுச் செல்லவும் வாய்ப்பளித்து விடுகின்றன. அறிதலின்மை அல்லது காண்டலின்மை என்பன இன்மை பற்றிய அறிவெனும் அனுபலப்த்திப் பிரமாணத்தினை மாறுபாடாக உணர்த்தவும் வழிவகுத்தல் சாத்தியமே. ஏனெனில் இங்கு அறிதலின்மை அல்லது காண்டலின்மை என்பது அறிதல் அல்லது காண்டல் என்பதில் எதிர்மறை நிலையைச் சுட்டுவதாக அமையலாம். அதாவது அறியாமை அல்லது காணாமை எனும் நிலைக்குரியதாகப் பெறப்படலாம். ஆனால் அனுபலப்த்தி எனும்போது இன்மை பற்றிய அறிவாகவே கொள்ளப்பட வேண்டுமே தவிர அறியாமை பற்றியதாக அமைய முடியாது. சுருங்கச் சொல்லின் ஒன்றின் இன்மை அல்லது இல்லாதமை பற்றிய அறிவைத் தருவதாகவே அனுபலப்த்திப் பிரமாணம் அமைகின்றது.
நாம் பல்வேறுபட்ட பொருட்களினைக் காண்கிறோம். காட்சிக்குக் காணக்கூடியதான விடயங்கள் அல்லது பொருட்கள் வேண்டும். நாம் எவ்வாறு ஒரு குறிப்பிட்ட இடத்தில் உள்ள பொருட்களைக் காண்கிறோமோ அவ்வாறே ஒரு குறிப்பிட்ட இடத்தில் காணாத பொருட்களின் இன்மை பற்றியும் காணுவது அல்லது அறிவது சாத்தியமாகும். உதாரணமாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் பொது அறையினுள் தொலைக்காட்சிப் பெட்டியில்லை எனக் கூறும்போது தொலைக்காட்சிப் பெட்டியின் இன்மை பற்றிய அறிவாக அனுபலப்த்தி அமைகின்றது. இவ்வாறான இன்மை பற்றிக் காணும் அறிவானது வியவஹாரிக வாழ்வில் நாளாந்தம் நடைபெறுவதுடன் தெளிவாக எடுத்துக் காட்டக்கூடியதுமாகும். அத்துடன் இவ்வாறு இன்மை பற்றிப் பெறும் அறிவு நேரடியானதும் உடனடியானதும் ஆகக் கொள்ளக் கூடியது போல் தோற்றுவதுடன் காட்சிப் பிரமாணத்தினைப் போன்ற ஒரு பிரமையினை ஏற்படுத்துவதும் இவ்வறிவுப் பிரமாணத்தினை நுணுகி ஆராய்தல் பயனுடையதாகும்.
பொதுவில் ஒரு பொருளின் இருப்பற்ற (non existence) தன்மையானது அப்பொருளின் இருப்பின்மையினைச் (anupalabdhi) சுட்டுவதாகின்றது. அதேவேளை அறிதலின் மைக்கு அல்லது காண்டலின்மைக்கு நாம் காணமுடியாதவை அமைத்தும் உட்படுவதுமாகாது. உதாரணமாக இருள் சூழ்ந்த அறையில் ஒரு பொருள் இருப்புள்ள பொருளாக அமையினும் அதனைக் காணமுடியாதமை அல்லது அறிய முடியாமை ஏற்படுகின்றது. இங்கிது அனுபலப்த்தி நிலைக்கு இட்டுச் செல்வதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இங்கிதனை நாம்
இந்துக் கலைக்களஞ்சியம்

காணத் தவறுதல் எனச் சுட்டுதல் கூடிய பொருத்தமுடையது. இதுபோலவே ஆன்மாவின் பாவ புண்ணியங்களினை நாம் காணமுடியாமை இருப்பின்மை பற்றிய அறிவுக்கு இட்டுச் செல்வதில்லை. ஏனெனில் இது அதீத புலனுணர்வுக்குரியவை என எடுத்தாளப்படக் கூடியதேயாகும்.
அறிவுப் பிரமாணங்களுள் மிக முக்கியமானதாகவும் அடிப்படையானதாகவும் விளங்குகின்ற காட்சியினை இந்திய மெய்யியற் குழுக்கள் அனைத்தும் அதன் அடிப்படையினைத் தம்முள் வேறுபட்ட வகையிலாயினும் ஏற்றுக் கொள்ளுகின்றன. பொதுவில் காட்சியானது புலக்காட்சியினைக் குறித்து நிற்கின்றது. புலக்காட்சி என்பது ஐம்புலன்களான கண், காது, மூக்கு, வாய், மெய் ஆகியவற்றின் மூலம் பெறப்படும் அனுபவங்கள் ஆகும். இப்புலன்கள் வழி பலவிதமான பொருட்களைக் காணவும் ஒசை ஒலிகளைக் கேட்கவும் பலவிதமான மணங்களை நுகரவும் பல்வகையான சுவைகளை ருசிக்கவும் பலவிதமான பொருட்களைத் தொட்டுணரவும் முடிகின்றன. இவ்வாறான அனுபவங்கள் அனைத்தும் புலக்காட்சி என்பதனுள் அடங்குகின்றன. பிரத்தியட்சம் எனும் வடமொழிச் சொல்லானது புலக்காட்சிக்கு இணையானதெனலாம். பிரத்தியட்சத்தின் சொல்லிணக்கத்தினை நோக்கின் அது பிரத்தி + அக்ச அல்லது பிரத்தி + அக்சி எனப் பகுக்கப்பட்டுப் பொருள் சுட்டுதல் காணலாம். பிரத்தி என்பது அருகில்- முற்பட எனப் பொருள்பட அக்ச என்பது புலனுறுப்புக்கள் எனவும் அக்சி என்பது புலனுறுப்பான கண் எனவும் பொருள் சுட்டுகின்றது. எனவே பிரத்தியட்சமானது கண் அல்லது இதர புலன் வழிப் பெறுவதான அறிவாகும். காட்சிப் பிரமாணத்தினைப் பற்றி வரைவிலக்கணப்படுத்துகையில் இந்திய தரிசனங்களிடையே வேறுபட்ட கருத்தமைவுகள் நிலவுகின்றன. புறப்பொருள்களுடன் புலன்கள் வழித்தொடர்பில் பெறப்படும் அறிவே காட்சி எனவும் புலன்கள் வழிப் பெறப்படுவதாயினும் பிழையற்ற அறிவே காட்சி எனவும் தெளிவான காண்டலே காட்சி எனவும் நேரடியான அறிவே காட்சி எனவும் பல்வேறுபட்ட விளக்கங்களினைப் பல்வேறுபட்ட தரிசனங்கள் சுட்டி நிற்கின்றன. முதலாவது கருத்தினை நியாயவாதிகளும் அடுத்ததினைப் பெளத்தர்களும் மூன்றாவதினைச் சமணர்களும் இறுதியாகச் சுட்டப்பட்டதினை வேதாந்திகள் பிரபாகரர் நையாயிகரில் ஒரு பகுதியினருங் கொண்டிருந்தனர். இவ்வாறாகக் காட்சி பற்றிய தன்மைகள் பல்வேறு வகையில் வரைவிலக்கணப்படுத்தப்படுகின்ற போதிலும் காட்சியானது பொதுவில் புலன்களுக்கும் புறப்பொருட்களுக்கும் இடையிலான தொடர்பில் எழுவதென் பதனை முற்றாக மறுப்பதற்கில்லை.காட்சியானதும் நேரடியானதும் உடனடியானதும் என வேதாந்திகள் குறிப்பிடு கின்ற போதிலும் புறப்பொருட்களுக்கும் புலன்களுக்கும் இடையிலான தொடர்பு அதன் அடிநிலையில் கொண்டமை கின்றதென்பதனை ஏற்று நிற்பர்.
புலன்களுக்கும் புறப்பொருட்களுக்கும் இடையில் எழும் தொடர்பில் காட்சி அமைகின்றதெனும்போது காண்பவன்
57

Page 104
காணப்படுபொருள் எனும் இருநிலைகள் அவசியமானதாகின்றது. காண்பவரது புலனின் செயற்பாட்டால் காணப்படும் பொருட்கள் காட்சிக்குரியனவாகின்றன. காட்சி போல அனுபலப்த்திப் பிரமாணத்தின் மூலம் பெறப்படுகின்ற இன்மை பற்றிய அறிவானது நேரடியானதும் உடனடியானதும்போல் அமைவதாயினும் காண்பவனின் புலன் தொடர்பில் பொருந்து வதற்கான புறப் பொருட்கள் இன்றி அமைவதாகின்றது. அதாவது காண்பவன் இருக்கின்றபோது புறத்தே காணப்படும் பொருள் இல்லாததாகின்றது. இந்நிலையில் காட்சிக்குரிய வரைவிலக்கண நிலையினின்று நோக்குகையில் அனுபலப்பத்திப் பிரமாணம் காட்சிப் பிரமாணத்தினின்று வேறுபட்டு அமைகின்றது. இன்மை பற்றிய அறிவினைப் புலன் எவ்வகையில் பெற்றுக் கொள்ளுகின்றதென்பதனை நோக்குகையில் அனுபலப்த்திப் பிரமான அறிவு பெறப்படுவதில் உள்ள சிக்கல் தன்மை புலனாகின்றது.
அனுபலப்த்தித் தொடர்பில் எழும் சிக்கல்களினைத் தீர்ப்பதற்குப் பல்வேறான விளக்கங்களினைப் பல்வேறுபட்ட தத்துவக் குழுக்கள் அளிக்க முயல்கின்றன. இருப்பற்றதென்று குறிப்பிடும் வகையில் ஒரு பொருளுமில்லை எனக் குறிப்பிடும் பிரபாகரர் ஓர் இருப்புடைய பொருள் இன்றி இருப்பற்ற தென்பதற்கு எந்த உண்மைத்துவமுமில்லை என்பர். ஓர் இருப்புடைய பொருளானது அதன் இருப்பினைக் கொண்டு, அதாவது இருக்கின்ற தன்மையினைக் கொண்டு எடுத்தாளப்பட இருப்பற்றதானது பிறபொருளின் தொடர்பு கொண்டு எடுத்தாளப்படுவதாகின்றது. ஓர் இருப்பற்ற பானையின் காட்சியானது வெறும் நிலத்தின் காட்சியே தவிர வேறில்லை எனப் பிரபாகரரும் சாங்கியரும் கொள்வர். இக்கருத்துவழி இருப்பின்மையானது காட்சி வழிப் பெறப்படலாமென்பதனை வலியுறுத்துபவர்களாகின்றனர். இவர்கள் கருத்தினின்று காட்சிக்குப் பொருந்துவதற்கான புறப்பொருட்கள் வேண்டுவதெனும் சிக்கல் எழாததுபோல் தோற்றுகிறது. இவ்வாறான முடிவினையே நையாயிகரும் கொண்டபோதிலும் அதனை விளக்குகையில் சிறிது வேறுபட்டமைகின்றனர். நிலத்தில் பானையின்மை என உரைக்கும்போது நிலத்தில் பானையின் இருப்பற்ற தன்மையானது நிலத்தின் ஒரு குணமாக (விசேஷணம்) பெறப்படுகின்றது. நிலத்தின் நிறம் அளவு போல பொருளின்மையும் காட்சிவழி அறியப் பெறலாமெனக் கருதினர். குமாரில பட்டரும் பார்த்தசாரதி மிஸ்ராவும் ஒவ்வொரு பொருளும் இருவடிவம் கொண்டதென்றும் அவை இருப்பும் இருப்பற்றதும் ஆகுமென்றும் எடுத்தியம்பினர். பட்டர் இருப்பும் இருப்பற்றதும் ஒரு பொருளின் இரு வேறுபட்ட நிலைகள் எனினும் ஒன்று மற்றதாகக் குறைக்கப்பட முடியாதது எனக் கருதினார். இரண்டு வேறுபட்ட பொருளைத் தருவதாயும் வேறுபட்ட பயன்பாட்டிற் குரியதாயும் அமைகின்றன. இதனால் இருப்பற்தென்பது இருப்புடையதென்பதினின்று வேறுபட்ட தெனக் கொள்வர். அத்வைதிகளும் இக்கருத்தில் பட்டருடம் பொருத்துபவர்களாக விளக்குகின்றனர்.
நிலத்தில் பானையினைக் காணாதபோது பானை யின்மையானது வெறும் நிலம் அல்லது நிலம் என்பதாகுமாயின்
58

நிலத்தில் பானை உள்ளபோதும் இல்லாத பானையினை நாம் காணவேண்டியவர்களாகி விடுவோமென அத்வைத வாதிகள் கட்டுவர். ஏனெனில் பானை உள்ளபோதும் மேற்கண்டவாறு சுட்டப்பட்ட நிலமானது பார்க்கப்படவில்லை எனக் கூறப்பட முடியாததேயாகும். வெறும் நிலம் என்று கூறும்போது நாம் உண்மையில் அறிவது நிலத்தில் வேறு எப்பொருளும் இல்லாமல் இருக்கின்ற நிலையேயாகும். மறுவார்த்தையில் சொல்லப் போனால் இருப்பற்றதான எல்லாப் பொருளும் அங்கு உளதெனலாம். இவ்வாறு கூறின் நிலத்தினின்று இருப்பற்றதாகக் கொண்ட பொருட்கள் வேறுபட்டதெனச் சுட்டும் அத்வைதிகள் கருத்துத் தெளிவடைகின்றது. காட்சிக்கான ஆதாரமே தன்னில் இருப்பற்றதின் காட்சிக்கும் ஆதாரமாதல் சாத்தியமற்றதாகும். இக்கருத்துக்களினூடாக அத்வைதிகள் இன்மை பற்றிய அறிவானது புலன்கள் வழிப்பெறும் காட்சிப் பிரமாணத்தினூடாகப் பெறலாம் என்பதனை மறுப்பதில் வலியுறுத்தம் அளிப்பர்.
அனுபலப்தியினைத் தனிப்பிரமாணமாக ஏற்க மறுத்த மாதவர் காட்சி வழியே இன்மை பற்றிய அறிவினைப் பெறலாமென விளம்புவர். காட்சியானது உடன்பாட்டு (Positive entity) நிலையான அறிவினை மாத்திரமன்றி எதிர்மறைக்குரிய அறிவினையும் அளிக்கவல்லதெனவும் எதிர்மறையும் ஒரு பொருளாகப் புலன் புறப்பொருள் தொடர்பில் அமைவுறுதல் சாத்தியம் எனவும் கருதினார். எனினும் மாதவரின் இக்கருத்தானது ஏற்றுக் கொள்ளத்தக்கதாக இல்லை. நாம் காணாத பொருளினை ஒரு பொருளாகக் கொண்டு புலன் அதனுடன் தொடர்புற்று இன்மை பற்றிய அறிவானது காட்சியினூடாக அமைகின்றதென்பது பொருத்தமானதாயும் ஏற்புடைத்தாயுமில்லை.
காட்சிப் பிரமாணத்தின் வழி இன்மை பற்றிய அறிவானது பெறப்படவில்லையாயினும் பிற முக்கியமான பிரமாணங் களினூடாகப் பெறுதல் சாத்தியமற்றதோ எனும் கேள்வி தொக்கு நிற்கின்றது. அனுமானத்தின் வழி இன்மை பற்றிய அறிவு பெறுதல் கூடுமோ எனப் பார்க்கையில் சில இடர்ப்பாடுகள் ஏற்படுகின்றன. அனுமானமானது எமது புலன்களுக்கு அப்பாற்பட்டவொரு பொருளினை அதனுடன் பிரிக்க முடியாத தொடர்புடையதும் எமது புலனுக்கு உட்பட்டமையக் கூடியதுமான பிறிதொரு பொருள் வழிப்பெறுகின்ற அறிவு முறையேயாகும். உதாரணமாக அம்மலையில் புகையுள்ளமையினைக் கண்டவிடத்து அம்மலை நெருப்புடைத்து என்பதனை புகையுள்ளவிடத்து நெருப்புள்ளது என்பது பெறப்படுவதுபோல வெதிரேகத்தில் நெருப்பில்லாதவிடத்து புகையில்லை என்பதும் பெறப்படலாம். இவ்வகையில் ஒரிடத்தில் பார்வைக்குட்படாத ஒரு பொருள் அவ்விடத்தில் இல்லை எனும் உதாரணத்தின் ஊடாக இன்மை பற்றிய அறிவினை அனுமானத்தின்பாற் பெறலாம் போல் தோன்றுகின்றது.
இந்நிலத்தில் பானை இல்லை - பிரதிக்ஞை அது அங்கு பார்க்கப்படவில்லை - ஏது
இந்துக் கலைக்களஞ்சியம்

Page 105
எங்கெங்கெல்லாம் ஒரு பொருள் பார்க்கப்படவில்லையோ
அங்கெல்லாம் அப்பொருள் இல்லை - உதாரணம் அது அங்கு பார்க்கப்படவில்லை - உபநயம் இந் நிலத்தில் பானை இல்லை - நிகமனம்.
எனும் வடிவத்தில் இன்மை பற்றிய அறிவானது அமைதல் பொருத்தமானது போல் எடுத்தாளப்படலாம். ஆனால் பார்க்கப்படவில்லை என்பதும் பானை இல்லை என்பதும் எவ்வகையில் பெறப்பட்டதென்பதனை நோக்குகையில் நாம் ஏலவே நோக்கிய ஆரம்பநிலைக்கே மீண்டும் தள்ளப்படுகின்றமை தவிர்க்க முடியாததாகின்றது.
காட்சியால் அனுபலப்தி தரும் அறிவினைப் பெறலாம் என எடுத்துக் காட்ட முயன்ற மாதவர் அனுமானத்தினாலும் பெறப்படலாம் என விளக்க முற்பட்டார். உதாரணமாக தேவதத்தன் பார்வையில்லாதவன். ஏனெனில் அவன் நிறங்களின் இயல்பினை அறியான். எனவே நிறங்களின் இயல்பினை அறியான் என்பதிலிருந்து தேவதத்தன் குருட்டுத் தன்மை கொண்டவன் என்பது அனுமானிக்கப்படலாம் என்பார். எனினும் மாதவரின் இந்த விளக்கமும் ஒன்றில் ஒன்று தங்கியுள்ளதென்னும் போலிக்குள் அடங்குவதாகும். இவற்றினின்று இன்மை பற்றிய அறிவினை எவ்வாறு அடைகின்றோம் என்பதற்கு அனுமானப் பிரமாணமும் உரிய விடையளிப்பதாயில்லை என்பது தெளிவு. காட்சி, அனுமானம் ஆகிய இருவழிகளாலும் இன்மை பற்றிய அறிவு பெறப்படவில்லையாயின் நாம் இதனை எவ்வகையில் பெற்றோம் என்பது கேள்விக்குரியதாகின்றது. அதேவேளை இன்மை பற்றிய அறிவினை நாம் அன்றாட வாழ்விலேயே தெரிந்து அறிந்து கொள்ளுதலும் ஐயப்பாடற்றதொன்றாகும். இது எவ்வாறு அறியப் பெற்றது எனும் கேள்விக்கு அத்வைதிகளும் பட்டரும் ஒரு தனிப் பிரமானத்தின் வழியே அறியப் பெற்றதெனும் முடிவிற்கு வருகின்றனர். அதுவே அனுபலப்தி அல்லது யோக்யானு பலப்தி எனக் கொண்டனர்.
இன்மை பற்றிய அறிவினை அனுபலப்திப் பிரமாணம் எடுத்தாள்கின்றதெனும் போது பொதுவில் காட்சிக்கு உட்படாத அதாவது காணமுடியாத பொருட்களின் அறிவை உட்படுத் துவதாகவே கொள்ளப்படுகின்றது. காட்சியின் இன்மை தவிர பிரமாணங்களின் இன்மை அறிவும் அனுபலப்திப் பிரமாணத்துள் அடக்கப்படும் பட்சத்தில் காண்டலின் இன்மை எனச் சுட்டுவதிலும் பார்க்க அறிதலின் இன்மை (non-cognition) என அமைதல் பொருத்தமானதாகலாம். அத்துடன் அனுபலப்திப் பிரமாணம் விரிந்த பரப்பளவினை உள்ளடக்குவதாகவும் அமையும். வேதாந்தப் பரிபாஷை ஆசிரியர் தாமராஜா அத்வரீந்திரர் அனுபலப்திப் பிரமாணத்தினைப் பெரிதும் காட்சிப் பிரமாணவழிப் பெறும் அறிவின் இன்மைக்குரியதாக எடுத்தாள. பாட்டர் அனுபலப்திப் பிரமாணத்தினை ஏனைய பிரமாணங்களின் இன்மை வடிவங்களையும் உட்படுத்தும் வகையில் அமைந்திருக் கின்றதென டாடா (Datta) எடுத்தாளுகின்றார், அறிதலின் மையினை (non- cognition) அனுபலப்தி முழுமையாக அடக்குவதாயின் அனுபலப்திப் பிரமாணமானது மேலும் ஐந்து
இந்துக் கலைக்களஞ்சியம்

வகைக்குரியதாகும் சாத்தியம் எழுகின்றது. காட்சி, அனுமானம், ஒப்புவுமை, ஆப்தம், அருத்தாப்தி ஆகியவற்றின் இன்மை பற்றிய அறிவும் அனுபலப்திப் பிரமாணத்துள் உள்ளடக்கி இப்பிரமாணம் விரிவும் தெளிவும் பெறுதல் சாத்தியமாகின்றது. இந்நிலையில் மறைஞான தேசிகர் போன்ற சைவசித்தாந்திகள் சுட்டுவது போன்று அனுபலப்திப் பிரமாணமானது காட்சியும் அனுமானமும் இணைந்த வகையில் அடக்கக்கூடியதெனும் தன்மைக்கு அப்பாற்பட்டதாகின்றது.
வேதாந்த பரிபாஷை ஆசிரியர் அனுபலப்தியில் நான்கு வகைகளை இனங்காட்டுவதன் மூலம் இன்மை பற்றிய அறிவினைத் தெளிவாக்க முனைகின்றார்.
g|ഞഖ :
1. பிராக பாவம் (pragabhava) 2. பிரத்வம்ஸா பாவம் (pradhvamsabhava) 3. அத்தியந்தா பாவம் (atyanātabhāva) 4. அன்னியோன்னியா பாவம் (anyonyabhava)
என்பனவாகும். பிராகபாவம் என்பது முன்னைய இருப்பின்மை ஆகும். அதாவது ஒரு சாடியானது உருவாக்கம் பெறுவதற்கு முன்னாள் மண்ணான காரணத்தினின்றும் எழும் காரியமான சாடியின் இன்மையே பிராகபாவம் ஆகும். எனவே ஒரு பொருளின் இருப்பின்மையினின்று முன்னைய இருப்பின்மை யானது சிறிது வேறுபட்டதாகின்றது. இது ஒரு குறிக்கப்பட்ட பொருளின் இருப்பின்மையினைச் சுட்டுகிறது. இந்த இன்மையானது ஆரம்பமற்றிருந்தாலும் எப்போது ஒரு பொருள் உதாரணமாக ஒரு சாடி உருவாக்கம் பெறுகின்றதோ அப்போது அச்சாடியின் இன்மை முடிவுக்கு வருகின்றது.
பிரத்வம்ஸாபாவமானது அழிவினால் ஏற்படும் இருப்பின்மையினைச் சுட்டுகின்றது. பொதுவில் இருப்பற்ற ஒரு பொருளினின்று இவ்விருப்பின்மையானது மாறாத வகையில் பெறப்படுவதாக வரைவு செய்யப்படுகின்றது. மறுவார்த்தையிற் கூறின் ஒரு பொருளின் அழிவானது அதாவது சாடியின் இன்மையானது அச்சாடியின் இருப்பின்மை பற்றிய அறிவுக்கு இட்டுச் செல்கிறது. அதேவேளை ஒரு பொருளின் இருப்பின்மைக்கு அப்பொருளின் இருப்பானது இன்றியமை யாததாக அமைகின்றதெனினும் அதன் அழிவிலும் இருப்பின்மை பெறப்படுதல் இங்கு குறிப்பிடத்தக்கதாகும். இருப்பின்மையானது முழு அழிவென்பது சந்தேகமற்ற ஒரு ஆரம்பமென்பது எடுத்தாளப்படுகின்றது. ஆனால் அதற்கு முடிவுண்டோ என்பதில் கருத்து வேறுபாடுகள் நையாயியர்களுக்கும் அத்வைதிகளுக்கும் இடையில் காணப்படுகின்றன.
மூன்றாவது வகையான அத்தியந்தாபாவம் முழுமையான இருப்பின்மையினைச் சுட்டி நிற்கின்றது. ஒரு குறிப்பிட்ட பொருளானது இறப்பு, நிகழ்வு, எதிர்வு எனும் முக்காலங்களிலும் ஒரு குறிப்பிட்ட அடிப்படையில் இருப்பற்றதாக அமையின் அதனை முழுமையான இருப்பின்மை எனச் சுட்டலாம். காற்றில்
59

Page 106
எக்காலத்திலும் இல்லாத நிறத்தினை அத்தியந்தா பாவத்துக்கு உதாரணமாகக் கூறலாம். நையாயிகர் அத்தியந்தா பாவமானது நிலையானது எனக் கொள்ளும் வேளை அத்வைதிகள் பிரமமே நிலையானதொன்று எனக் கொள்வதனால் அதனை மறுத்து அத்தியந்தாபாவம் அழியக் கூடியதென எடுத்தாள்வர். அன்னியோன்னிய பாவமானது பேதம் அல்லது வேறுபாடு எனும் பொருள் தரும். ஒரு பொருளை இது அதுவல்ல எனப் பிரித்தறிதல் அன்னியோன்ய பாவமாகும். இவ்வேறுபாடானது நிபந்தனைப்படுத்தப்பட்டதும் நிபந்தனைக்குட்படாததும் என இரண்டாக வேதாந்த பரிபாஷை எடுத்தாள்கின்றது. ஜீவனுக்கும் பிரமத்திற்கும் இடையிலான வேறுபாடானது முதலாவது நிலைக்கும் பானைக்கும் துணிக்கும் இடையிலான வேறுபாடானது பிற்பட்ட நிலைக்கும் ஒப்பிடக்கூடியது. அத்வைதிகளைப் பொறுத்தவரை இவ்விருநிலை வேறு பாடுகளும் நிலையானதொன்றல்ல.
தர்க்க சங்கிரகமும் இன்மை பற்றிச் சுட்டுகையில் முன்ன பாவம், அழிவுபட்ட பாவம், முழுவதும் பாவம், ஒன்றினொன்று பாவம் என நான்கையும் எடுத்தாளுகின்றது. இவை முறையே பிராகபாவம், பிரத்வம்ஸா பாவம், அத்தியந்தா பாவம், அன்னியோன்னியபாவம் என்பதன் மறு நாமங்களெனலாம். மேற்படி இருப்பின்மையினை நான்காக வகுத்துக் கூறப்படுகின்ற வேளை நையாயரிற் சிலர் அன்னியோன்னிய பாவத்தினை ஒன்றெனவும் பிராகபாவம், பிரத்வம்ஸா பாவம், அத்தியந்தா பாவம் ஆகிய மூன்றையும் உள்ளடக்கிய சங்கர்காபாவத்தினை மற்றொன்றெனவும் ஆக இரண்டாக எடுத்தாள்வார். நரசிங்காசிரமின் தனது பேதிக்காரத்தில் இருப்பின்மையதின் வகைகள் தேவையற்ற ஒன்றெனவும் எல்லா வகைகளினையும் பூரணமான இருப்பற்றதென ஆக்கலாம் எனவும் சுட்டுதல் காணலாம்.
தண்டியாசிரியர் தண்டியலங்காரத்தில் அபாவம் பற்றிக் குறிப்பிடுகையில்
"என்று பாவமும் இல்லதம பாவமும்
ஒன்றினென்றபாவமும் உள்ளதபாவமும்
அழிவுபாட்ட பாவமும் என வைந்தபாவம்" எனச் சுட்டுகின்றார்.
மேற்படி பாடல்வழி ஐந்துவகை இன்மை பேசப்படுகின்றது.
f என்றுமபாவம்
2. இல்லதனபாவம்
3. ஒன்றினொன்றபாவம்
4. உள்ளதனபாவம்
5. அழிவுபாட்டபாவம் என அமையும். முயற்குக் கொம்பு இல்லை என்பது போல எக்காலத்தும் இல்லாத இன்மையானது என்றுபாவத்துள் அடங்கும். இரண்டாவதான இல்லதன் இன்மையானது இல்லாமையது இல்லாமையைச் சுட்டுவதென விளக்கப்படுகிறது. அதாவது வாராமை இல்லை என இரண்டு எதிர்மறை வந்து
60

குறிக்கும் இன்மையதாகும். மூன்றாவதான ஒன்றினொன்ற பாவமானது இரு பொருள்களிடையே நெருங்கி இல்லாத சம்பந்தத்தைச் சுட்டி நிற்கும். மேலானவர்க்கும் பொய்மைக்கும் நெருங்கிய தொடர்பின்மை இதற்கு உதாரணமாகச் சுட்டப்படுகின்றது. ஓரிடத்து ஒரு காலத்து உள்ள பொருள் பிறிதோரிடத்துப் பிறிதொரு காலத்தும் இல்லையென்று கூறுவது உள்ளதனபாவம் ஆகும். இப்பிறப்பில் ஏழையாதற்குக் காரணம் முற்பிறப்பில் நோலாமையே என்பது உள்ளதன் இன்மையை எடுத்துக் காட்டவல்லதாகின்றது. ஐந்தாவதான அழிவுபாட்ட பாவமானது முன்பிருந்தமை பிற்பட அழிந்து இன்மையாயின என்பதனைத் தருவதாகும். கழிந்திளமை எனத் தண்டியாசிரியர் சுட்டும் கழிந்த இளமையானது அழிவுபாட்டபாவத்திற்கோர் உதாரணமாகும்.
பெளத்தர்கள் இன்மையின் இருப்பினை மறுத்துரைப்பர். இவர்கள் இன்மைக்கும் இன்மைக்குரிய பொருளுக்குமிடையில் எந்தத் தொடர்புமில்லை என்றும் எப்போது இன்மை இருக்கின்றதோ அப்போது இன்மைக்குரிய பொருளிராதென்றும் இன்மைக்குரிய பொருளிருக்கும்போது இன்மை இராதென்றும் குறிப்பிட்ட கால இடத்தில் அமைய வேண்டுமென்றும் ஆனால் இன்மையானது இவற்றுடன் இணைந்தமையுமென்பதனை நினைக்கவும் முடியாதென்றும் கூறுவர். எப்படியிருந்த போதிலும் தர்மகீர்த்தி தனது நியாயபிந்துவில் பதினொரு வகையான அனுபலப்தியினை எடுத்தாளுதல் காணலாம். அவையாவ:
1. சுவபாவானுபலப்தி.
உதாரணம் : அங்கு பானையில்லை. ஏனெனில் அங்கு பார்க்கப்படவில்லை.
2. காரியானுபலப்தி.
உதாரணம் : அங்கு புகையில்லாதிருக்கும் வரை புகைக்குரிய காரணங்களுமில்லை.
3. வியாபகானுபலப்தி,
உதாரணம் : அங்கு மரமெதுவுமில்லாதிருக்கும் வரை அங்கு தேவதாருவும் இல்லை.
4. சுவபாவவிருத்தோபலப்தி
உதாரணம் : அங்கு குளிரில்லை. ஏனெனில் அங்கு தீயுண்டு.
5. விருத்தாகாரியோபலப்தி
உதாரணம் : அங்கு குளிரில்லை. ஏனெனில் அங்கு புகையுண்டு.
6. விருத்தோவியாப்தோபலப்தி
உதாரணம் : முன்னைய பொருட்களின் அழிவானது நிச்சயமானதல்ல. ஏனெனில் அது வேறு காரணங்களில் தங்கியுள்ளது.
7. காரியவிருத்தோபலப்தி
உதாரணம் : நெருப்புள்ளவரையில் அங்கு குளிர் வருவதற்கு வேறு காரணங்கள் இல்லை.
8. வியாபகவிருத்தோபலப்தி
உதாரணம் : இங்கு பணியில்லை. ஏனெனில் தீயுள்ளது.
இந்துக் கலைக்களஞ்சியம்

Page 107
9. காரணனுபலப்தி,
உதாரணம் : அங்கு நெருப்பு இருக்கும் வரையில் புகையில்லை.
10. காரண விருத்தோபலப்தி.
உதாரணம் : அவன் நெருப்பிற்கு அருகிலிருக்கும் வரை அங்கு குளிரால் நடுக்கமென்பதில்லை.
1. காரணவிருத்தோகாரியோபலப்த்தி.
உதாரணம் : அங்கு புகை அதிகமுள்ளதால் நடுக்க உணர்வுள்ள மக்கள் இல்லை.
என்பனவாகும்.
அறிதலின்மையானது முற்படக் குறிப்பிட்டது போலக் காட்சி வழி போன்ற பிரமாணங்களினால் பெறுவது போன்ற பிரமையினை அளித்தாலும் காட்சிக்குரிய வழிமுறையினின்று தெளிவாக வேறுபடுவதினின்று காட்சி வழிப் பெறுவதல்ல என்பது தெளிவு. மேலும் காட்சிக்குரிய நிலை நிராகரிக்கப் படுகின்ற விடத்து இன்மை பற்றிய அறிவானது அனுமானம் போன்ற இதர பிரமாணங்களினால் பெறுதலும் அசாத்தியமே. நிலத்தில் ஒரு பொருளின் இன்மையானது நிலத்தினைப் பார்த்தலும் உடன் அக்குறிப்பிட்ட பொருளை நினைவு கூருவதும் அத்தொடர் நிலையில் அப்பொருளின் இருப்பின்மை மனதில் எழுவதும் போல் அமைகின்றதென மீமாம்ஞ்சகர் சுட்டும் கருத்தும் முற்றாக நிராகரிக்கப்பட முடியாததே. இவ்வகையில் சிக்கலான வகையில் இன்மை பற்றிய அறிவினைத் தரும் அனுபலப்தியைத் தனிப்பிரமாணமாக ஏற்றல் பொருத்தமானதாகலாம். (நா. ஞா)
அப்பய்ய தீகூழிதர்
இவர் காலம் 1520 - 1593 எனவும் 1554 - 1627 எனவும் மாறுபட உரைப்பர். தமிழ்நாடு வட ஆர்க்காடு ஆரணியைச் சேர்ந்த அடையபலம் எனும் கிராமம் பூர்வீகவூர். திருவிரிஞ்சி புரத்திற் பிறந்தவர். ரங்கராஜாத்வரியவர்களின் புதல்வர். பிள்ளைப் பெயர் விநாயக சுப்ரமணியம். அப்பா எனும் வீட்டுப் பெயர் அப்பய்யா என மருவியது.
வேத வேதாந்தங்களை நன்கு பயின்றவர். வைதிக நெறியில் நியமத்துடன் ஒழுகிய ஆசார சீலர், வேதங்கள் விதித்த வேள்விகளை நிகழ்த்தியவர்; சமரச மெய்ஞானி; ஆயிரக் கணக்கான மாணாக்கருக்கு கல்வியறிவையும் மெய்யறிவையும் புகட்டியவர்; மன்னர் போற்றிய பெருமையாளர்; அவர் அளித்த நிதிகொண்டு ஆலயங்கள் நிறுவியவர்.
நூற்றுக்கு மேற்பட்ட நூல்களைச் சமஸ்கிருத மொழியிலே இயற்றியவர். சிவார்க்கமணி தீபிகை, கல்ப தருவின் வியாக்யானம், பரிமளம், ராமாயணதாத்பர்ய சங்க்ரகம், பாரததாத்பர்ய சங்க்ரகம், ஆனந்தலஹரி, சிவாத்வைத நிர்ணயம், சிவகம், ஆனந்தலஹரி, சிவாத்வைத நிர்ணயம், சிவ தத்துவவிவேகம், ப்ரம்ம தர்க்கஸ்தவம், சிவகர்ணாம்ருதம், சிவார்ச்சனசந்திரிகா,
சித்தாந்தரத்னாகரம் என்பன அவற்றிலே சிலவாம்.
(பொ.யூ.)
இத்துக்கலைக்களஞ்சியம்

அப்பர் தேவாரம்
அப்பர் சுவாமிகள் என்றும் திருநாவுக்கரசு சுவாமிகள் என்றும் போற்றப்பெறும் சைவசமயக் குரவர், முதலாம் மகேந்திரவர்மன் (610 - 630) எனும் பல்லவ மன்னனை விபக்ஷ விருத்தி' யிலிருந்து மீட்டவர். இவர் மாறவர்மன் அரிகேசரி (640 - 690) காலத்திலும் வாழ்ந்தவர் என்று பெரிய புராணம் மூலம் அறிய முடிகின்றது.
திருநாவுக்கரசு நாயனார் பாடிய திருப்பதிகங்கள் அப்பர் தேவாரம் என்று பேர் பெறுவன. இன்று அவர் பாடியனவாகக் கிடைப்பவை 312 திருப்பதிகங்களாம். இத்திருப்பதிகங்கள் பன்னிரு திருமுறைகளிலே நான்காம், ஐந்தாம், ஆறாம் திருமுறைகளாகத் தொகுக்கப்பட்டுள்ளன.
நான்காம் திருமுறையிலே பத்துப் பண்களில் அமைந்த 13 திருப்பதிகங்கள் தொகுக்கப் பெற்றுள்ளன. இத் திருமுறையில் 1086 திருப்பாடல்கள் உள்ளன. இத்திருமுறையில் இடம் பெறும் யாப்பமைதிகள் திருநேரிசையும் திருவிருத்தமுமாம். அறுசீர்க் கட்டளையடியினையுடைய செய்யுள் திருநேரிசையாகும். திருவிருத்தம் தற்காலத்திற் கட்டளைக் கலித்துறை எனப்படும்.
ஐந்தாம் திருமுறை திருக்குறுந்தொகை என்றுஞ் சொல்லப்படும். இதனுள் அமைந்த 100 திருப்பதிகங்களுள் 1018 திருப்பாடல்கள் உள்ளன. இங்குள்ள யாப்பமைதி யாப்பருங் கலத்திலே கலிவிருத்தம் எனப் பெயர் பெறும்.
ஆறாம் திருமுறை திருத்தாண்டகம் என வழங்கப்பெறும். இதனுள் 99 திருப்பதிகங்களும் 983 திருப்பாடல்களும் இடம் பெறுகின்றன. தாண்டகம் என்பது தொல்காப்பியத்தின் செய்யுளிலியலின் அடிப்படையிலே எண்சீரான் வந்த கொச்சக ஒரு போகு எனக் கருதப்படுகின்றது.
அப்பர் தேவாரத்திலே 275 திருப்பதிகங்கள், திருத்தலங்கள் பற்றியவை; 37 திருப்பதிகங்கள் பொதுப்பதிகங்கள். அப்பர் சுவாமிகளின் பதிகம் பெற்ற திருத்தலங்கள் 125; வேறு தலப் பதிகங்களிலோ பொதுப் பதிகங்களிலோ குறிப்பிடப்படும் திருத்தலங்கள் 102.
காஞ்சிபுரம் மகாவித்துவான் கோ. சபாபதி முதலியார் 1867 இலே திருநாவுக்கரசுநாயனார் திருப்பதிகங்களைப் பதிப்பித் துள்ளார். மதுரை இராமசாமிப்பிள்ளை எனும் திருஞானசம்பந்த பிள்ளையின் தேவாரம் தலமுறைப் பதிப்பு விஷ வருடம் மார்கழி மாதம் (1881) வெளிவந்தது. திருமயிலை செந்தில்வேலு முதலியாரின் தேவாரம் தலமுறைப்பதிப்பு விஜய வருடம் சித்திரை மாதம் (1893) வெளிவந்தது; வண்ணை சி. சுவாமிநாத பண்டிதரின் தேவாரம் தலமுறைப் பதிப்பு சாதாரண வருடம் (1911) வெளிவந்தது. காஞ்சி நாகலிங்க முனிவரும் கயப்பாக்கம் சதாசிவச் செட்டியாரும் பதிப்பித்த தேவாரத்தின் பதிப்பு விவரங்கள் கிடைக்கவில்லை.
61

Page 108
சென்னை சைவசித்தாந்த மகாசமாஜம் திருநாவுக்கரசு சுவாமிகள் தேவாரத்தை இருமுறை 1930, 1935 ஆம் ஆண்டுகளிற் பதிப்பித்தது. திருப்பனந்தாள் பூரீ காசிமடத்தினர் 1957 இலே திருநாவுக்கரசர் தேவாரம் தலமுறைப் பதிப்பினை வெளியிட்டனர். தருமையாதீனம் திருநாவுக்கரசு நாயனார் அருளிச் செய்த தேவாரத்திருப்பதிகங்களை தனித்தனித் திருமுறைகளாகக் குறிப்புரையுடன் வெளியிட்டுள்ளது; நாலாம் திருமுறை முத்து சு. மாணிக்கவாசக முதலியார் குறிப்புரையுடன் 1957 இலும், ஐந்தாம் திருமுறை வி. சா. குருசாமி தேசிகர், சொ. சிங்கார வேலனார் குறிப்புரையுடன் 1961 இலும் ஆறாம் திருமுறை சி. அருணைவடிவேல் முதலியார் குறிப்புரையுடன் 1963 இலும் வெளியிடப் பெற்றன. (பொ. யூ.)
அப்பர் பிள்ளைத்தமிழ்
திருநாவுக்கரசர் மீது பாடப் பெற்றது அப்பர் பிள்ளைத்
தமிழாகும்; காப்புச் செய்யுள் மூன்றுடன் பத்துப் பருவத்திற்கும் பருவத்திற்கு ஒன்றாகப் பத்துப்பாடல்கள் உடையது.
அப்பர் பிள்ளைத்தமிழிலே அப்பர் சுவாமிகளின் தேவாரத் திருவாக்குகளையே எடுத்துக் காட்டி, அவற்றை அருளியவர் அவரென்று போற்றியிருத்தல் குறிப்பிடத்தக்கது.
அப்பர் பிள்ளைத்தமிழைப் பாடியவர் மு. கோ. இராமன் என்பவராவார்.
காரைக்குடி சொக்கலிங்கச் செட்டியார் (1856 - 1930) பாடிய நால்வர் பிள்ளைத் தமிழில் திருநாவுக்கரசர் பிள்ளைத்தமிழும் ஒன்றாகும்.
அதிலே காப்பும் பத்துப் பருவத்திற்குப், பருவத்திற்குப் பத்தாக நூறு பாடல்கள் உள்ளன. எனவே திருநாவுக்கரசர் பிள்ளைத் தமிழிலே 101 பாடல்கள் அடங்கியுள்ளன. (பொ.பூ)
அப்பன் சுவாமி
தமிழ்நாடு தொட்டாசார்யபுரம் அப்பன் சுவாமி சங்கத புராணங்களிலிருந்து, எம். திருமலைராயபிள்ளையின் கேள்விப்
படி, திருமலைமஹாத்மியம் தொகுத்தனர். அது சென்னையில் 1878 இலே அச்சிடப் பெற்றது. (பொ.பூ)
ඒif91Jffෂීලීෂl:19, ෆිබ].
யாழ்ப்பாணம் துன்னாலை வடக்கினைச் சேர்ந்தவர்; துன்னாலை வடக்கு ஞானவயிரவர் தோத்திரப்பதிகமும் கதிர்காம வெற்றி வேற்கரன் கட்டளைக் கலித்துறையும் (1922), யாழ்ப்பாணக் கோட்டை வாசல் முனியப்பசுவாமி பதிகம் (1919) என்பதும் இவருடைய ஆக்கங்கள். (பொ.பூ)
62

đ91ủ1JTở8°T1ó] 83U JÎ, 357.
யாழ்ப்பாணம் வயாவிளானிற் பத்தொன்பதாம் நூற் றாண்டின் பிற்பகுதியில் வாழ்ந்து கொண்டிருந்தவர்; நகுலேசுவரம் அது இவர் பாடிய தலபுராணமாம் நகுலகிரிப் புராணம் வயாவிளான் க. வேலுப்பிள்ளையால் சயசிறீ சாரதா பீடேந்திர சாலையிற் சுபகிருது வருடம் ஆவணி மாதம் (1902) பதிப்பிக்கப் பெற்றது; அதனைக் கீரிமலை இந்து சமய விருத்திச் சங்கம் 1961 இலே மறுபதிப்புச் செய்தது. (பொ. பூ)
அப்பாத்துரைப்பிள்ளை, மு.
யாழ்ப்பாணம் நவாலி முத்துத்தம்பியின் புதல்வர்; பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் வாழ்ந்தவர்;
சுந்தரமூர்த்தி சுவாமிகள் மாலை, நல்லைச் சுப்பிரமணிய மும்மணி மஞ்சரி (1894), மருதடியந்தாதி (1891) முதலிய பிரபந்தங்களைப் பாடியவர்; சுதுமலை வ. இராமலிங்கம் பாடிய மாணிக்கவாசகர் விலாசம்(1876) முதலாம் நூல்களைப் பதிப்பித்தவர்.
(பொ.யூ.)
©ນ້ນຫລຽນນີ້oha067
*விஷ்ணு தாசர் எனப்படுவர்; அட்டாவதானம் வீராசாமி செட்டியாரின் மாணவர்; பத்தொன்பதாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர்; பூரீ பெரும் பூதூர் உடையவர் பஞ்சரத்தினம் பாடியவர்.
- (பொ. யூ.)
அப்பாவுப்பிள்ளை
தமிழ் நாட்டினர்; திரிசிரபுரம் அப்பாவுப்பிள்ளை அல்லது முத்துசாமிப்பிள்ளை என்று வழங்கப் பெற்றவர்; பத்தொன்பதாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர்; நன்னெறி சத்தியபாஷ அரிச்சந்திர விலாசம், சித்திராங்கி விலாசம், சோழ
விலாசம், இந்திரசபா, நூதன பவழேந்திர சபா, பத்மினி சபா எனும் நாடகங்களை இயற்றியவர். (பொ.பூ)
அப்பாவு முதலியார்
தமிழ்நாடு முடிச்சூர் அப்பாவு முதலியார் பத்தொன்பதாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர்; வைணவர்; குமரேச விசயம், விட்டுணு தத்துவ விளக்கம், சற் சம்பிரதாய தீபிகை, தென்னாசாரியப் பிரபாவத் தீபிகை இயற்றியவர் இராமாநுச நூற்றந்தாதிக்கு உரை கண்டவர்; நாலாயிரத் திவ்விய பிரபந்தத்தைக் குரோதன வருடம் புரட்டாதி மாதம் (1865) பதிப்பித்தவர்; திருவாய்மொழிக்கு வியாக்கியானம் எனும் நூலை ராமாநுஜாசாரி, கே. ராஜகோபால பிள்ளையுடன் காலயுத்தி வருடம் (1859) பதிப்பித்தவர். (பொ.யூ.)
அப்பாஸ்வாமிப்பிள்ளை
தென்னாடு புதுவை அப்பாஸ்வாமிப்பிள்ளை நவநீத சாரம்
எழுதினார். வேதாந்த தத்துவத்தின் சுருக்கமான அந்நூல் 1859
இந்துக் கலைக்களஞ்சியம்

Page 109
இலே சென்னையில் அச்சிடப்பட்டது. கே. வடிவேலு செட்டியார் 1903 இலே சென்னையில் மீண்டும் அச்சிட்டுள்ளார். (பொ.பூ)
அப்பிள்ளார்
19தின்மூன்றாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர்; வைணவ சமயப் பெரியார்; ராமனுஜப் பிள்ளான் என்ற பிள்ளைப் பெயரினர்; கிடாம்பி அப்பிள்ளார் என்றழைக்கப் பெற்றவர்; காஞ்சிபுரத்தில் வாழ்ந்தவர்;
பூரீ இராமாநுஜர் சீடர் கிடாம்பி ஆச்சான்; அவர் புத்திரர் கிடாம்பி ராமநுஜப்பிள்ளான்; அவர் புதல்வர் பூரீ ரங்கராஜர்; அவர் புதல்வர் கிடாம்பி அப்பிள்ளார்; இவர் சகோதரி புதல்வர் வேதாந்த தேசிகர்; நடாதூரம்மாளின் சீடர், வேதாந்த தேசிகரின் குரு.
பூரீ பாஷ்ய வியாக்கியானமும் நியாயகுலிசமும் இயற்றிவர். (பொ.யூ.)
அப்பிள்ளை
தமிழகத்து வைணவ சம்பிரதாயத்தில் அஷ்ட திக்கஜங்களில் ஒருவராகக் கருதப்படுபவர்; ஆழ்வார்கள் வாழித்திருநாமம் பாடியவர்; ஐந்து திருவந்தாதிகளுக்கும் உரை கண்டவர்; யதிராஜ விம்சதி எனும் சங்கத நூலுக்கு வியாக்கியானம் செய்தவர். (பொ.யூ.)
3.114ëg51:19 83uji, 3. (1788 - 1863)
ரொல சுப்பிரமணிய ஐயர் எனும் மறுநாமமுடையவர்; நல்லூர் சிகிவாகனஐயரின் புதல்வர்; தம்பி வேங்கடாசலஐயரின் புதல்வர் கார்த்திகேயஐயர், ஆறுமுகநாவலருடன் சேர்ந்து பிரசங்கங்க ளாற்றியவர்; தெளகித்திரன் நல்லூர் வே. கனகசபாபதி ஐயர்.
நல்லூர்க் கந்தசுவாமி கோயில் அர்ச்சகர்; யாழ்ப்பாணம் மாவட்ட நீதித்தலத்திற் புறக்டராக அனுமதி பெறவும் பதிவு செய்யவும் எட்வேட் பாண்ஸ் பிரபுவிடம் 1825 இலே உத்தரவு பெற்றவர்.
நல்லூர் சுப்பிரமணியர் பிள்ளைத் தமிழ், சூதுபுராணம் என்பனவற்றையும் தனிப் பாடல்களையும் பாடியவர்; பாடல்களுள் ஒன்றுங் கிடைத்திலது. (பொ.யூ.)
அப்புமுதலியார்
சென்னை சிந்தாதிரிப் பேட்டை கோவிந்தசாமி முதலியார் புதல்வர்; ஜெளனி கறார் முனிசாமி முதலியார் மராத்தி மொழியிலிருந்து மொழி பெயர்த்த பூணூரீ ஹரிநாம ஸ்தோத்திரப்பா, ஸங்கீர்த்தனம் என்பனவற்றை ஒரே நூலாக 1887 இலே பதிப்பித்தவர்.
இந்துக்கலைக்களஞ்சியம்

அப்பூதியடிகள் நாயனார்
“ஒரு நம்பி அப்பூதி அடியார்க்கும் அடியேன்” என்று சுந்தர மூர்த்தி நாயனார் போற்றிய (7.39.7) அப்பூதியார், அப்பர் சுவாமிகள் காலத்தவர் (4.12.10); ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர்; சோணாடு திங்களூரில் வசித்த பிராமணர்.
அப்பர் சுவாமிகளின் வரலாற்றைக் கேட்டறிந்து, அவர்பாற் பேரன்பு கொண்டு, அவர் பெயரையே தன் மனைக்கண்ணுள்ள எல்லாப் பொருள்களுக்கும் தம்மக்களுக்கும் வைத்து வழங்கியவர்.
திங்களூருக்கு எழுந்தருளிய திருநாவுக்கரசர் இச் செய்தியைக் கேள்வியுற்று அப்பூதியாரை அடைந்து, அவர் பெயராலே தண்ணீர்ப்பந்தல் வையாது வேறொருவர் பெயரால் வைத்தமைக்குக் காரணம் கேட்டபோது, வினாவியவரை இன்னாரென்று உணராது அப்பூதியார் சமணத்திலிருந்து நீங்கிக் கல்லைத் தெப்பமாகக் கொண்டு கடலைக்கடந்த அப்பெயரிலும் வேறு பெயர் சிறப்புடையதோ என்றும் சைவக்கோலத்திலிருந்தும் அவ்வாறு கேட்கும் அவர் யாவர் என்றும் வினாவினார். அப்பர் தம்மை அறிமுகப்படுத்தியபோது அப்பூதியார் பெருமகிழ்வு எய்தி அடிபணிந்து திருவமுது செய்ய வேண்டி இசைவு பெற்றார். திருவமுது பரிமாற இலை கொண்டுவரச் சென்ற மூத்த குமாரனை அரவம் தீண்ட அவன், அடியவர் திருவமுதுக்கு இடையூறு ஏற்படக்கூடாது என்று கருதி இலையைத் தாயிடம் சேர்ப்பித்து விட்டு மயங்கி வீழ்ந்தான். மகன் உடலை மறைத்து விட்டு அப்பரைத் திருவமுதுக்கு அழைத்தபோது அவர் திருநீறு அளிக்கையில் மூத்த திருநாவுக்கரசு எங்கே எனவினவி, உண்மை அறிந்து, திருப்பதிகம் பாடி உயிர்பித்து அப்பூதியடிகளின் அமுதுண்டு சென்றார். அப்பூதியடிகள் திருநாவுக்கரசர் திருவடியே சிந்தித்து இறையடிநிழல் சேர்ந்தார். (பொ.யூ.)
அபய பிரதானஸாரம்
வடகலை வைணவ ஆசாரியராக விளங்கிய வேதாந்த தேசிகர் சகம் 1191 இலே (கி. பி. 1269) அவதரித்து நூறு வருடங்களுக்கு மேல் வாழ்ந்தவராகக் கருதப்படுவர். வேங்கடநாதன் எனக் காஞ்சிபுரத்தையடுத்து தூப்புல் எனும் ஊரிலே அனந்த சூரியாரின் புதல்வராகத் தோன்றித் திருவரங்கத்திலே பேரும் புகழும் எய்தியவர். கிடாம்பி அப்பிள்ளாரின் மருகரும் சீடருமான வேதாந்த தேசிகர் வட தென் மொழிகளிலே நூற்றுக்கு மேற்பட்ட நூல்களின் ஆசிரியராவார்.
அவருடைய மணிப்பிரவாள நடையில் அமைந்த நூல்களில் அபயபிரதானஸாரம் ஒன்றாகும். சரணாகதியைப் பொருளாக உடைய நூலிலே, வால்மீகி ராமாயணத்தைச் சரணாகதி வேதம்’ என்று கூறும் ஆசிரியர், அதன் மேற் கோள்கள் மூலம் எடுத்துக் கொண்ட பொருளை விளக்கியுள்ளார். பிரபத்தி இராமாயணத்திற் சிறந்த விளக்கம் பெறுவதாகப் பெரியவாச்சான்பிள்ளை போன்றோரும் கருதியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
63

Page 110
அரக் கிரியைகள்
ஒருவர் இறந்த பின்னும் அவருக்கு வாழ்வுண்டு என்ற நம்பிக்கையே அபரக்கிரியைகளுக்குக் காரணமாம். இறந்த பின்பும் குறைந்தது முப்பத்தொரு நாள் வரை (அந்தியேட்டிவரை) அருவமாய் இறந்தவர் உயிர்விடும்போது இருந்த இடத்திலே இருந்து அந்தியேட்டியில் தொடர்பு நீங்கித் தான் செய்த நல்வினை தீவினைப்படி சுவர்க்க நரகத்தையடைந்து இறையருளால் வினையைத் தொலைக்க மீண்டும் பிறந்திறந்து இருவினையொப்பு, மலபரிபாகம், சத்திநிபாதம் எனும் நிலைகளை அடைந்து இறையடி நீழலிலே சென்று ஆனந்த நிலையில் அடங்குவர்.
அபரக் கிரியைகளைச் செய்வதனால் உயிரின் பாவங்கள் படிப்படியாக அழிக்கப்படுகின்றன. அதற்குத் தக்க அளவு உயிரைப் பற்றிய மலபந்தம் விலகும். மலம் விலகும் அளவுக்குச் சிவத்தன்மை சிறிது சிறிதாகப் பற்றும். கால அடைவில் சரியான பக்குவம் வாய்க்கும் போது முழுமையாக அது சிவத்தன்மை பெற்றுவிடும். *
அந்தியேட்டி வரை செய்யப்படும் கிரியைகள் உடலைத் தொடர்புபடுத்திச் செய்யப்படுவன. பின்பு உயிரைக் கருதிச் செய்யப்படுவன. அந்தியேட்டி வரை செய்யும் கிரியைகளின் பலனை அவர் நேரடியாகவே பெறுகிறார். அந்தியேட்டியின் பிறகு நிகழும் கிரியைகளின் பலனை மேலுலகத்திலுள்ள பிதிரர்கள் என்ற தேவசாதியார் ஏற்று அவர்கள் எங்கிருந்தாலும் அங்கங்கு சேரச் செய்கிறார்கள்.
பிதிரர் படைப்புக் காலத்திலே இறந்தவர் நலன்களைக் கவனிக்கச் சிவபிரானால் நியமிக்கப்பட்டவர்கள். இறந்தவர் பேரில் அவர்களைக் குறித்துச் செய்யும் எள்ளும் தண்ணிரும் இறைத்தற் கிரியையால் (திலதர்ப்பணம்) அவர்கள் திருப்தியுற்று இவரைக் குறித்துச் செய்யும் தான தரும பலன்களை அவர்கள் ஏற்று தவத்தின் மூலம் அவருக்கு நன்மை விளைவிப்பர். அதேவேளை. கிரியை செய்பவர் மேல் அவர் தந்தை தாய் முதலியோர் சொரியும் அன்பையும் ஆசியையும் இவர்கள் பெறும் வகை செய்வர். அதனால்தான் பிதிர்க்கடன் பிரதான கடன் எனப்படுகின்றது.
பிரேதக்கிரியையில், கும்பபூசை அக்கினி காரியங்கள் இறந்தவரைச் சிவமாக்கும் முயற்சிகள், கும்பங்களில் உருத்திரனையும் திக்குப் பாலகர்களையும் எழுந்தருளப் பண்ணிப் பூசிப்பார்கள். அக்கினியிலும் சிவனை எழுந்தருளச் செய்து பூசிப்பார்கள். கும்பங்களிலுள்ள சிவத்தன்மை, உடலை நீராட்டும்போது உடலிற் செறியும்; அக்கினியின் சிவத்தன்மை அதிகரிக்க உதவும்.
இறந்தவர் உயிர்விடும்போது கிடந்த இடத்தில் அன்று தொட்டு இளநீர் அல்லது தண்ணீர்ச்செம்பு வைப்பதும், 'எட்டு
4.

வைபவத்தின் போது அவர் விரும்பியவை சகலவற்றையும் படைத்து வைப்பதும் பாடல் படிப்புகள் முடிந்தபின் படைத்தவற்றிற் சிறிது சிறிதாக எடுத்து முகட்டை நோக்கிக் காட்டுவதும் எரிந்த பின்னும் உடல் இருந்த சூழலில், இறந்தவர் இருக்கிறார் என்ற நம்பிக்கையைக் காட்டுவன.
அந்தியேட்டிக் கிரியைக்கு அமைக்கும் மாக்கோடிட்ட மண்டபத்தில் தென்கிழக்கு மூலையில் ஐந்து நிற மாக்கள் சதுர வடிவில் பரப்பப்பட்டிருப்பது பஞ்ச பூதங்களைக் குறிக்கும். அவ்வப் பூதங்களுக்குரிய தெய்வங்களைப் பூசித்து அவருக்கு அப்பூதங்களோடு இருந்த தொடர்புகளை நீக்கி விடுவதை அந்தியேட்டி காட்டும். தநு கரண புவன போகங்களை எல்லாம் இடித்து நொறுக்கி இல்லாமற் செய்தல் பொற்சுண்ணம் இடித்தல் உணர்த்துவது. இது பிரேதக்கிரியையிலும் அந்தியேட்டியிலும் நடக்கும் கிரியை.
அந்தியேட்டி முடிவில் நடப்பன வீட்டுக் கிரியைகள் எனப் பொதுவாக வழங்கப்படுவன. சபிண்டீகரணம், ஏகோதிட்டம், தசதானம் முதலிய பல கிரியைகள் வீட்டுக் கிரியைகளாகும்.
தேகத் தொடர்பு நீங்கி தனக்குரிய கதியில் செல்பவரின் பாதையில் விக்கினங்களாற் கஷ்டம் ஏற்படாது விமோசனம் அளிக்கும் நோக்கில் இடம் பெறுவன வீட்டுக்கிரியைகள். இக்கிரியைகளில் குடை, செருப்பு, விளக்கு, செம்பு, தண்ணீர் முதலிய எல்லாம் கொடுப்பது அவ்வசதிகள் வேண்டியிருக்கும் பாதையில் அவை அவருக்கு உதவட்டும் என்பதற்காகவே.
சபிண்டீகரணம் வீட்டுக்கிரியையிலே முக்கியமானது. பிதிரர்களின் உதவி வேண்டிச் செய்வது சபிண்டீகரணம். பிதிரர்களுக்கு அறிகுறியாக மாவுடன் எள், அரிசி, தேன், சர்க்கரை, தயிர் குழைத்துருட்டிய பிண்டங்களை இட்டு வைத்து அவற்றுக்கு எதிர் இறந்தவரைக் குறிக்கும் பிண்டம் வைத்து கிரியை செய்பவர் எல்லோரையும் ஒரு சேரப் பூசித்து எல்லோருக்கும் நைவேத்தியம் கதலி பல தாம்பூலம், சமர்ப்பித்து தூபதீபாரதனை செய்து, முடிவில் இறந்தவரைக் குறிக்கும் பிண்டத்தை பிதிரரைக் குறிக்கும் பிண்டத்தோடு ஒன்று சேர்ப்பதைக் காணலாம்.
அந்தியேட்டிக்குப் பின் நிகழும் கிரியை பொதுவாகச் சிரார்த்தம் எனப்படும். சிரத்தையோடு செய்யப்படுவது சிரார்த்தம். ஆட்டைத்திதி, திவசம் இரண்டும் நம்மவர் மத்தியில் சிரார்த்தம் எனச் சிறப்பாகக் குறிக்கப்படும். (பொ.யூ.)
அபரமுத்தி
ஞானத்திற்கேற்ப முத்தியானது அபரமுத்தி, பரமுத்தி என இருவகைப்படும். கேட்டல், சிந்தித்தல், தெளிதலிலே நின்று, அவ்வளவில் யாக்கை நீங்கப் பெற்றவர் அபரமுத்தி அடைவர். அவற்றோடு நிட்டையும் கைவரப் பெற்று, இம்மையிற்றானே சீவன்முத்தராய் விளங்கினவர் தேகாந்தத்திற் பரமுத்தி அடைவர்.
இந்துக் கலைக்களஞ்சியம்

Page 111
ஞானநிட்டை செய்து கொண்டு பிராரத்த தேகத்தோடு பயிலும் சிவஞானிகள் சீவன்முத்தர். அவர் பரமுத்தி அடைதற்குரியவர்.
அபரமுத்தித்தானமாவது சுத்தவித்தை, ஈசுரம், சதாக்கியம், சக்தி, சிவம் எனும் தத்துவங்களாம். கேட்டல் ஞானமுடையோர் சுத்தவித்தையை அடைவர். சிந்தித்தல் ஞானமுடையார் ஈசுர தத்துவத்தை அடைவர். தெளிதல் ஞானமுடையோர் சாதாக்கிய தத்துவத்தை அடைவர். ஞானத்தில் ஞானமாகிய நிட்டை பூரணமுறாது இடையே தேகம் நீங்கப் பெற்றோர் சத்தி சிவதத்துவங்களை அடைவர். ஞானத்தில் முடிந்த ஞானமுடைய சிவானுபூதிச் செல்வர் பரமுத்திக்குரியவர். (பொ.யூ.)
3155 Toréas Tsib
தமிழ் மொழியிலே முதன் முதலாகத் தோன்றிய இலக்கியக் கலைக்களஞ்சியம் அபிதானகோசம் என்று கூறலாம். வடமொழி, தென்மொழி ஆகிய இருமொழிகளிலும் இயற்றப் பெற்ற வேதங்கள், புராணங்கள், இதிகாசங்கள், தரும நூல்கள், இலக்கியங்களிற் காணப்பெற்ற தெய்வம், தேவர், இருடி, முனிவர், அசுரர், அரசர், புலவர், புரவலர் முதலிய விவரங்களை அகர வரிசையிலே தொகுத்தளிக்கும் முயற்சி அபிதான கோசம்.
அபிதான கோசத்தைத் தொகுத்தளித்தவர் மானிப்பாய் ஆ. முத்துத்தம்பிப்பிள்ளை (1858 - 1917) என்பவராவார். பிள்ளை யவர்கள் பல நூல்களைச் சுயமாக எழுதியும் உரையெழுதியும் பதிப்பித்தும் உதவியவர்; சஞ்சிகை நடத்தியவர்; அச்சுக் கூடம் வைத்திருந்தவர்; தமிழில் மட்டுமன்றி ஆங்கிலத்திலும் எழுதியவர்; அகராதி தொகுத்தவர்.
அபிதான கோசம் 1902 ஆம் ஆண்டு யாழ்ப் பாணத்தில் நாவலர் அச்சுக் கூடத்திற் பதிப்பிக்கப்பட்டது. (பொ.பூ)
அபிதான சிந்தாமணி
தமிழ் மொழியிலே கலைக்களஞ்சியம் என்ற அமைதியுடன் முதலிற்றோன்றியது அபிதான கோசம். அபிதானகோசத்திலும் விரிவாகவும் விடயப் பரப்பிலே ஆழமாகவும் அமைந்து வெளிவந்தது அபிதான சிந்தாமணி.
அபிதானசிந்தாமணியைத் தொகுத்தளித்தவர் ஆ. சிங்காரவேலு முதலியார் (1855 - 1931). தமிழ் லெக்ஷிகன் சைவசித்தாந்தக் குழு உறுப்பினராகவும் சென்னை பச்சையப்பா கல்லூரித் தமிழ்ப் பண்டிதராகவும் விளங்கியவர் முதலியார். பட்டினத்தார் பாடலுக்கு விரிவுரை கண்டவர். குப்புசாமி முதலியார் பதிப்பித்த சைவ சித்தாந்த சாத்திரம் மூலத்தைப் பார்வையிட்டுக் கொடுத்தவர்.
அபிதான சிந்தாமணி மதுரைத் தமிழ்ச் சங்க வெளியீடாக 1910 இலே வெளிவந்தது. திருவாரூர்
இந்துக் கலைக்களஞ்சியம்

சோமசுந்தரதேசிகர் உதவியுடன் சிங்காரவேலு முதலியாரின் புதல்வர் ஆ. சிவப்பிரகாச முதலியார் 1934 இலே இரண்டாம் பதிப்பினை வெளியிட்டனர். 1981 இலே தில்லி “ஏசியன் எடுகேஷனல் சர்வீஸஸ்” இரண்டாம் பதிப்பினை மறுபிரசுரம் செய்துள்ளது. (பொ.யூ.)
அபிதான ரத்னமாலா
சமஸ்கிருத மொழியிலுள்ள நிகண்டு நூல்களில் ஒன்றான அபிதானரத்னமாலா ஹாலாயுத என்பாரின் தொகுப்பாகும். அமரதத்த, வரகுசி, பாகுரி, வோபாலித என்போரின் நூல்களை ஆதாரமாகக் கொண்டு அபிதான ரத்னமாலா எழுதப்பட்டது. அமைப்பில் அது அமரகோஷம் போன்றது. ஒரே பொருளைக் குறிக்குஞ் சொற்கள் அடங்கிய பகுதி நான்கு காண்டங்களைக் கொண்டுள்ளது. அவை ஸ்வர்க்க பூமி, பாதாள, சாமான்ய எனப்படும். அநேகார்த்த- காண்டம் என்பது இறுதியான ஐந்தாவது காண்டமாகும். அது பல பொருள்களைக் குறிக்கும் சொற்கள் அடங்கிய பகுதி.
இந்நிகண்டு நூலாசிரியரான ஹாலாயுத(ர்) கவிரஹஸ்ய என்ற நூலையும் பிங்களரின் சந்த சூத்திரத்தின் விருத்திக்கான உரையினையும் எழுதினாரென்று கொள்வர். தாராவிஷய மன்னனாகிய முஞ்ச வாக்பதி (கி.பி 974- 995) என்பனைக் கெளரவிக்கும் வண்ணமாகச் சந்தகுத்திரம் எழுதப்பட்டது. அதன்
உரைநூல் மிருதசஞ்சீவினி என்னும் பெயரால் வழங்குவது.
(f. LJ.)
அபிநவகுப்தர்
காஷ்மீர் தேசத்தவரான அபிநவகுப்தர் தலைசிறந்த இலக்கியவாதிகளில் ஒருவர். அவர் பல பிரதானமான நூல்களின் ஆசிரியர் விமர்சன இலக்கியம், சைவதரிசனம், நாட்டியம் ஆகிய துறைகளைப் பற்றிய பிரபலமான நூல்களின் ஆசிரியர். முற்காலத்துக் கவிஞர், இலக்கியவாதிகள், நாடக நூலாசிரியர் ஆகிய பலரைப் பற்றிய குறிப்புகள் அவரின் நூல்களிலே காணப்படுகின்றன. பிற்காலத்து இலக்கியவாதிகளும் சமயாசிரியர்களும் கலைஞர்களும் அபிநவகுப்தர்மேல் அபிமானங்கொண்டிருந்தனர்.
அபிநவகுப்தர் தனது முன்னோர்களைப் பற்றிப் பராத்ரிம்ஸிக - விவரண என்னும் தனது நூலிற் குறிப்பிடுகின்றார். அவரின் தந்தையாரின் பெயர் சகலர். வராஹகுப்தர்) என்பவர் பிதாமஹர் மநோரதர்) அபிநவகுப்தரின் தமையனார். அபிநவகுப்தர் தனது ஆசிரியர்களின் பெயர்களை லோசனா என்னும் நூலிற் குறிப்பிடுகின்றார். பட்டேந்துராஜா என்பவரைக் குரு என்றும் உத்பல(ர்) என்பவரைப் பரமகுருவென்றும் அவர் அதிலே பாராட்டுகின்றார். அவர் சைவ தரிசனங்களைப் பற்றி லஷ்மணகுப்த(ர்) என்பவரிடமிருந்து கற்றார். அபிநவகுப்தரின் இலக்கிய முயற்சிகள் கி.பி 990-1020 ஆகிய காலத்தவை. பைரவ ஸ்தோத்திர(ம்) என்னும்
65

Page 112
பனுவலை அவர் கி. பி. 993 இலே பாடினார். பிரத்யபிஞ்ஞா விமர்சினி என்னும் நூலை கி. பி. 1015 இல் எழுதி முடித்தார்.
ஆனந்தவர்தனரின் இலக்கியக் கோட்பாடுகளினாற் பெரிதுங் கவரப்பெற்ற அபிநவகுப்தர் த்வன் யாலோகம் என்னும் நூலுக்குச் சிறப்பான ஒரு விரிவுரை எழுதினார். அதற்கு முன்பு அந் நூலுக்கு சத்திரிகா என்னும் உரைநூல் அவரது குடும்பத்தவர் ஒருவரால் எழுதப்பட்டிருந்தது. அந்நூலை அபிநவகுப்தர் கடுமையாக விமர்சித்துள்ளார். "ரஸ(ம்) என்பது காரண காரியப் பொருள்கள், மாற்றமடைந்து செல்லக்கூடிய உணர்ச்சிகள், மனோபாவங்கள் என்பவற்றின் சேர்க்கையால் ஏற்படுவது” என்ற பரதமுனிவரின் கருத்துப் பற்றி அபிநவகுப்தர் முதலான இலக்கியவாதிகள் விரிவான விளக்கங்களையும் விமர்சனங்களையும் எழுதியுள்ளனர். பரதமுனி எட்டு வகையான ரஸங்களைப் பற்றி விளக்கியுள்ளார். எட்டாம் நூற்றாண்டிலே சாந்தரஸம் என்ற மேலதிகமான ஒன்றைப் பற்றியும் பேசுவது வழமையாகியது.
அது மோக்ஷத்திற்கான வழி என்பதாற் சாந்தரஸமே ரஸங்களில் மேலானது என்ற சிந்தனை மேலோங்கியது. மகாபாரதக் குறிப்பொன்றை ஆதாரமாகக் கொண்டு சாந்த ரஸத்தைத் தனியான ஒரு ரஸமாக ஆனந்தவர்த்தனருங் கொண்டனர். தனது ஆசிரியரின் கருத்துக்கமைய சாந்தமே மனிதவாழ்க்கையின் உன்னதமான இலட்சியமென்று அபிநவகுப்தர் கருதினார். இலக்கிய ரசனையால் ஏற்படும் இன்பமெல்லாம் அலெளகிகமானது. அது பிரம்மானந்தமானது என்பது அவரின் கருத்தாகும்.
(பூரணமான அமைதிநிலை) சாந்தரஸத்தின் ஸ்தாயிபாவம் என்று கொள்ளப்படும். அது புலனாசைகள் எல்லாம் ஒடுங்கிய நிலை, பிறவிக்கடலுக்கான வழியிலிருந்து திரும்பும் நிலை; வைராக்கியம், சம்சார அணித்தியத்துவம் என்பன அதன் விபாவங்கள், மோகூடிம் அதன் அநுபாவம்; நிர்வேத மதி, திருதி, ஸ்மிருதி என்பன அதன் வியபிசாரிபாவங்கள். இதனைப் பற்றி மம்மட(ர்), தனஞ்ஜய(ர்), பண்டிதராஜர், ஜகந்நாதர் முதலியோர் கொண்டிருந்த கருத்துக்கள் அபிநவகுப்தரின் கொள்கைக்கு ஏற்புடையவை.
காஷ்மீர சைவம் பற்றிய பிரமாண நூல்களின் ஆசிரியர் வரிசையில் அபிநவகுப்தருக்குச் சிறப்பிடம் உண்டு. காஷ்மீர சைவம் ஸ்பந்த சாஸ்திரம் என்னும் பிரத்ய விஞ்ஞா சாஸ்திரம் என்றும் சொல்லப்படும். வசுகுப்தரின் சிவசூத்திரம் அதன் ஆதியான நூலாகும். வசுகுப்தர் ஒன்பதாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். அவருக்குச் சிவபெருமான் சிவகுத்திரத்தை வழங்கியருளினார் என்பது ஐதீகம். கல்லடர் எழுதிய ஸ்பந்தகாரிகை காஷ்மீர சைவ நூல்களின் வரிசையில் இரண்டாவது நூல். கல்லடர், ஒன்பதாம் நூற்றாண்டிலே, காஷ்மீரத்து அரசனாகிய அவந்திவர்மனின் காலத்தில் வாழ்ந்தவர். வசுகுப்தரின் உபதேசங்களை அடிப்படையாகக் கொண்டு அவர் 51 செய்யுள்கள் அடங்கிய அந்நூலை எழுதினார்.
66

பத்தாம் நூற்றாண்டில் சோமானந்தர், உத்பலர் என்போர் முறையே சிவதிருஷ்டி, பிரத்யவிஞ்ஞா சூத்திர(ம்) என்னும் நூல்களை எழுதினர். இவற்றுள் உத்பலரின் நூலாகிய பிரத்யவிஞ்ஞாசூத்திர என்பதற்கு அபிநவகுப்தர் உரையொன்றை எழுதினார். அது பிரத்யவிஞ்ஞாவிமர்சினி என்னும் பெயரால் வழங்கியது. அவர் தந்திரா லோகம், பரமார்த்த சாரம் என்னும் சைவசமய தத்துவ நூல்களையும் எழுதினார். பதஞ்சலியினால் எழுதப்பட்டவை யென்று சொல்லப்படும் ஆதார காரிகைகளை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட பரமார்த்தசாரம் நூறு காரிகைகளைக் கொண்டது. பரமார்த்தசாரத்தில் அடங்கிய சிந்தனைகள், புதுமையானவை. அவற்றிலே அத்துவைத சிந்தனைகள் சைவம் வைணவம் என்பவற்றைச் சார்ந்த பத்திநெறியோடு கலந்துவிடுகின்றன. சிவஞானம் பற்றிய வித்துவபூர்வமான சிந்தனைகளைப் பொதுவழக்கான சமய நெறியோடு இணைத்துக் கொண்டமை அபிநவகுப்தரின் உன்னதமான சாதனையாகும்.
மறைந்துபோன நூல்கள் சிலவற்றைப் பற்றி அபிநவ குப்தரின் குறிப்புகளிலிருந்து அறிய முடிகின்றது. கலசூரி மன்னனாகிய மயூரராஜ என்னும் அநங்கஹர்ஷ(ன்) எழுதிய உதாத்தராகவ, தாபஸ் வத்ஸ்ராஜ என்னும் நாடக நூல்களைப் பற்றி அபிநவகுப்தரின் குறிப்புகள் மூலமே அறிய முடிகின்றது. அவற்றைப் பற்றி வேறெவருங் குறிப்பிடவில்லை. நரேந்திரவர்த்தனனின் மகனாகிய மயூரராஜர் எட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். அவரது மறைவினாற் தாமோதர குப்தருக்கு ஏற்பட்டிருந்த விசனம் பற்றிக் குட்டநீமதம் என்னும் நூல் வழியாக அறிய முடிகின்றது. உதாத்தராகவ இராமாயணக் கதையினை ஆதாரமாகக் கொண்டு எழுதப்பட்டது. தாபஸவத்ஸ்ராஜ என்பது உதயணன், வாசவதத்தை என்போாைப் பற்றியது. அது கெளமுதீ மகோத்ஸவ என்பதன் அம்சங்களையுங் கொண்டது.
பட்டதெளதர் எழுதிய காவ்யகெளதுக என்னும் நூலைப் பற்றி அபிநவகுப்தர் மூலமாக அறியமுடிகின்றது. அதற்கு விவரணம் ஒன்றை அபிநவகுப்தர் எழுதினார் என்று தெரியவருகின்றது. காவ்யகெளதுகவின் சில பகுதிகள் மேற்கோள்களாக அபிநவகுப்தரின் நூல்களில் வருகின்றன. அவற்றை கூெடிமேந்திரர், ஹேமச்சந்திரர், சோமேஸ்வரர் முதலானோர் மேற்கோள்களாகக் கொள்கின்றனர்.
காஷ்மீர் தேசத்தில் நடனக்கலை பற்றிய அறிவுணர்ச்சி வித்துவப் புலமையாளரிடையே சிறப்புற்று விளங்கியது. அங்கே அக்கலை பற்றிய சிறந்த நூல்களும் உரை நூல்களும் வெவ்வேறு காலங்களில் எழுதப்பட்டன. புராதன காலத்தவரான மாத்ருகுப்தர் நாட்டியக்கலை பற்றிய நூலொன்றை எழுதினார். அதற்கு பூரீஹர்ஷர் எழுதிய உரைநூல் வார்த்திகம் என்னும் பெயரால் விளங்கியது. பரத நாட்டிய சாஸ்திரத்துக்குக் காஷ்மீர தேசத்தவர் பலர் உரை நூல்களை எழுதியுள்ளனர். அவர்களில் உத்படர், சங்குநர், லொல்லடர் என்போர் சிலர். பதினொராம் நூற்றாண்டிலே வித்தியாஜோதியாக விளங்கிய அபிநவகுப்தர்
இந்துக் கலைக்களஞ்சியம்

Page 113
எழுதிய அபிநவபாரதீ நாட்டியம் பற்றி எழுதப்பெற்ற உரைநூல்களிலே தலைசிறந்தது. நடனக்கலை வரலாற்றிலே காலக்கிரமத்தில் ஏற்பட்ட வளர்ச்சிகளையும் மாற்றங்களையும் சிந்தனைகளையும் சமகால மரபுகளையும் அபிநவகுப்தர் போன்றோர் எழுதிய உரைநூல்கள் பிரதிபலித்ததால் அவை மூலநூல்களைப் போல ஆதார நூல்களாகவும் கொள்ளப்படும்.
(fol. U.) அபிநய தர்ப்பணம்
10ரதக்கலை வரலாற்றிலே சிறப்பிடம் பெறுகின்ற அபிநயதர்ப்பணம், பரதார்ணவம் ஆகிய நூல்கள் இரண்டும் நந்திகேஸ்வரர் எழுதியவை. அபிநயதர்ப்பணம் நடன ஆசிரியர்களாலும் நாட்டியம் பயிலுவோராலும் நெடுங்காலமாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. அது அளவிற் சுருக்கமானது. நாட்டியத்தின் பிரதானமான அம்சமாகிய அபிநயம் பற்றி அது தெளிவாக விளக்குவதால் நடனங்களிலும் நாட்டியக் கலையிலும் ஈடுபாடு கொண்டவர்கள் அதனை விரும்பிக் கற்றனர்.
அபிநயதர்ப்பணத்திலுள்ள, சிவபெருமானைப் பற்றிய தியானசுலோகம் நடன நிகழ்ச்சிகளின் ஆரம்பத்தில் இன்றும் படிக்கப்படுகின்றது. 324 சுலோகங்களைக் கொண்டுள்ள அபிநயதர்ப்பணத்தில் நாட்டியங்களும் அவற்றுக்குச் சிறப்பான அபிநயங்களும் விளக்கப்படுகின்றன. முகாபிநயங்களிலும் ஹஸ்தாபிநயங்களும் பாதசாரிகளும் பேதங்களும் அதிலே விவரமாக வர்ணிக்கப்பட்டுள்ளன. ஒன்பது வகையான சிரோபேதங்களையும் எட்டு வகையான சிருஷ்டி பேதங்களையும் நான்கு விதமான கிரீவோ பேதங்களையும் அபிநய தர்ப்பணம் விளக்குகின்றது.
ஹஸ்தாபிநயங்கள் பல வகைப்படும். 28 அசம்யுத ஹஸ்தங்கள், 23 சம்யுத ஹஸ்தங்கள், 14 தேவஹஸ்தங்கள், தசாவதார ஹஸ்தங்கள் 4 ஜாதி ஹஸ்தங்கள், 11 பாந்தவ ஹஸ்தங்கள், நவக்கிரக ஹஸ்தங்கள், 13 நிருத்த ஹஸ்தங்கள் ஆகியவற்றை நந்திகேஸ்வரர் தெளிவாக விளக்குகின்றார். அவற்றைத் தொடர்ந்து பாதபேதங்கள் விளக்கப்படுகின்றன. பத்து (10) மண்டலங்களும் ஆறு (6) ஸ்தானங்களும் ஐந்து (5) உத்பிளவனம் என்பனவும் ஏழு (7) பிரமரிகளும் எட்டு (8)ச் சாரிகளும் பத்து (10) கதிகளும் அபிநயதர்ப்பணத்தில் விளக்கப்படுகின்றன.
நடனக்கலை சாஸ்திரப் பிரமாணங்கள், தேசவழக்கு, நல்லாசிரியர்க்கு உடன்பாடான செய்முறை ஆகியவற்றை ஆதாரமாகக் கொண்டது, நந்திகேஸ்வரரின் கோட்பாடாகும். முற்கால நூல்கள் பற்றியும் குறிப்பாகப் பரதநாட்டிய சாஸ்திரம் பற்றியும் அபிநய தர்ப்பணத்திற் குறிப்புகள் உள்ளன. அது பத்தாம் நூற்றாண்டளவில் எழுதப்பட்டது எனப் பலராலுங் கொள்ளப்படுகின்றது. நூல் எழுதப்பட்ட காலம் பரதக்கலை ஒரு சாஸ்திரீயமான கலையாகப் பெருவளர்ச்சி அடைந்திருந்த காலம்; பரதக்கலை நாகரிகத்தின் அடையாளங்களிற்
இந்துக் கலைக்களஞ்சியம்

சூடாமணியாகு மென்று போற்றப்பட்ட காலம். அந்தக் காலத்திலே கவிவாணரும் பிற இலக்கியகர்த்தாக்களும் தத்தம் நூல்களிலே நடனக் கலையினதும் நர்த்தகிகளினதும் கோலங்களைச் சிறப்பாக வர்ணிப்பது வழக்கமாகிவிட்டது. நடன ஆசிரியர்களும் அவர்களிடம் பயிற்சி பெறுவோரும் பின்பற்ற வேண்டிய அம்சங்களை விளக்குவதற்கென்று நந்திகேஸ்வரர் அபிநயதர்ப்பணத்தை எழுதினாரென்று கருதலாம். இந்திய நடனக்கலையின் சிறப்புகளையும் பிரதான அம்சங்களையும் அறிந்துகொள்வதற்கு அந்நூலைப் பற்றிய அறிவு அவசியம் என்பதாற் சென்ற நூற்றாண்டில் ஆனந்த குமாரசுவாமி அதனை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து விளக்கக் குறிப்புகளோடு வெளியிட்டார்.
6.15p15.31 Julf
சுப்பிரமணியன் என்பது இயற்பெயர்; அமிர்தலிங்க ஐயரின் புதல்வர்; சோணாட்டுத் திருக்கடவூரிலே பிறந்தவர்,சரபோஜி மன்னன் காலத்தவர் என்பது கர்ணபரம்பரை; தஞ்சையில் ஆண்ட மகாராஷ்டிர பரம்பரையில் நால்வர் சரபோஜி என்ற பெயர் தாங்கியவர்; முதலாம் சரபோஜி காலம் 1712 - 1728; நான்காம் சரபோஜிகாலம் 1798 - 1832; நான்காம் சரபோஜிக்குத் தஞ்சைக் கோட்டை உரிமை மட்டும் இருந்தது. அபிராமிப்பட்டருக்கு விளை நிலங்களை மானியமாக அளிக்க அவனுக்கு வசதியிருக்க வில்லை - எனவே பதினெட்டாம் நூற்றாண்டில் ஆட்சி புரிந்த மூன்று சரபோஜி மன்னரில் ஒருவர்தாம் அபிராமிப்பட்டரை ஆதரித்தவராதல் வேண்டும்.
தேவி உபாசனையிற் சிறந்து நின்றவர் அபிராமிப்பட்டர். அமாவாசை தினத்தைப் பெளர்ணமி என்று பட்டர் கூறியதை மன்னனுக்கு நிரூபிக்கும்படி பட்டராற் பாடப்பெற்றது அபிராமி அந்தாதி என்பது கர்ணபாரம்பரியம். பித்தன் என்று எண்ணப் பெற்ற அபிராமிப்பட்டரின் ஞானத்தையும் பக்தியையும் கண்ட சரபோஜி மன்னன், அவரைக் கெளரவித்து மானியங்கள் வழங்கினான்.
அவர் அபிராமியம்மை மீது இருபதிகங்களும் கள்ளவிநாயகர் பதிகம், அமுதகடேசுவரர் பதிகம், காலசங்காரமூர்த்தி பதிகம் எனும் பதிகங்களையும் பாடியுள்ளார். பதிகங்கள் யாவும் திருக்கடவூர் அபிராமிப்பட்டர் பிரபந்தங்கள் என்ற பெயரோடு பதிப்பேற்றப் பெற்றுள்ளன. (பொ.யூ.)
அபிராமி அந்தாதி
தஞ்சை மாவட்டத்திற் காவிரியின் தென் கரையில் மாயூரம் தரங்கம்பாடி இருப்புப் பாதையிற் சிறப்புற்று விளங்கும் திருத்தலம் திருக்கடவூர் மார்க்கண்டேயருக்காகக் காலனை உதைத்தருளிய வீரம் நிகழ்ந்த வீரட்டானத்தலம்; தேவர்கள் அமுத கடத்தை வைத்து எடுக்க முடியாது இறையருள் வேண்டி நின்றது கடவூர். இங்கு அமுத கடேசுவருடன் வீற்றிருந்து அருள்பாலிக்கும் அம்பிகையின் பெயர் அபிராமி.
67

Page 114
அபிராமியம்மை மீது சூட்டப் பெற்றது அபிராமியந்தாதி, ஆதியிற் காப்பும் அந்தத்தில் நூற்பயனும் கொண்ட இந்த அந்தாதியில் நடுவே நூறு கட்டளைக்கலித்துறைப் பாக்கள்
உள்ளன.
தேவி உபாசனையிற் சிறந்து நின்று அபிராமிப்பட்டர் என்ற சிறப்புப் பெயரைப் பெற்றவர் பாடியது அபிராமியந்தாதி, அவர் பதினெட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர்; அபிராமியம்மை மீது அவர் இரு பதிகங்களும் பாடியுள்ளார்.
அருச்சித்துப் பூசிக்கும் உருவத்திருமேனியைக் கண்டு களித்தல் தொடங்கி, ஒளியே வெளியாகித் தன்னை மறந்து கருவி கரணம் சுழன்று நிற்கும் ஆனந்தாநுபவம் வரையிலுள்ள நிலைமைகளையெல்லாம் உணர்ந்து பாடப்பட்டது அபிராமி யந்தாதி. அம்பிகையின் திருவுரு அழகையும் திருமேனிச் சோதியையும் திருநாமங்களையும் வாயாரப் பாடி இன்புறும் பக்தரின் இயல்பு புலப்படுகின்றது.
யாழ்ப்பாணம் மட்டுவில் க. வேற்பிள்ளை உபாத்தியாயர் அபிராமியந்தாதிக்குக் கண்டவுரை பழைமையும் செம்மையும் வாய்ந்தது. அது 1923, 1933, 1970 ஆம் ஆண்டுகளில் வெளிவந்தது. கி. வா. ஜகந்நாதன் இயற்றியவுரை 1944, 1948, 1958 ஆம் ஆண்டுகளிலே வெளிவந்தது. (பொ.யூ.)
©ນມີນາໍ ນຽມnaຫນໍ
அம்பர் பெருந்திருக்கோயில் பற்றிய தலபுராணம்
அம்பர்ப்புராணம்.
அம்பர்ப்புராணம் திரிசிரபுரம் மாகா வித்துவான் சி. மீனாட்சி சுந்தரம்பிள்ளையால் (1815 - 1876) இயற்றப்பட்டது. இது 1965 இலே அச்சிடப்பட்டுள்ளது. (பொ.யூ.)
அம்பலநாதத் தம்பிரான்
19தினான்காம் நூற்றாண்டில் அல்லது பதினைந்தாம் நூற்றாண்டின் முற்பகுதியில் வாழ்ந்தவர்; அம்பலவாணத் தம்பிரான் எனவும் அழைக்கப் பெறுவர்; தமிழ்நாடு திருப்பரங்குன்றை அடுத்த காவனூர் சொந்தவூர்; அவ்வூர்ப் பெயர் காவை என மருவியும் வழங்கும்.
சீகாழி பழுதை கட்டிச் சம்பந்த முனிவரின் மாணவர்; மதுரைச் சிவப்பிரகாசரின் இருபாவிருபஃதுரை மூலம் இவர் சீடர் மதுரை ஞானப் பிரகாசத் தம்பிரான் என்று அறிய முடிகிறது.
மதுரை சிவப்பிரகாசராற் (1489) போற்றப் பெறுபவர்; முக்கூடற் பள்ளில் ஈரிடங்களில் குறிப்பிடப்படுபவர்.
இவர் சிவப்பிரகாசத்திற்குக் குறள் வெண்பாவில் 100 கொளுவும் பகுப்புணர்த்தும் கலிவெண்பாவும் பாடியவர்;
68

பிராசாத அகவல், உரூப சொரூப அகவல், திருவருட்பயன் உதாரணக் கலித்துறை இயற்றியவர்; சத்திநிபாத அகவலும் இவர் பாடியது என்பர் சிலர். (பொ.யூ)
débj6D6JT60 cé19356
பூங்கோட்டு அம்பலவாண அடிகள், திருக்கோவலூர் ஆதீனம் முதல் ஞானியார் ஆறுமுக மெய்ஞ்ஞான சிவாச்சாரிய சுவாமிகளின் ( - 1769) மாணவகர்.
வேதாந்த சாரத்திரட்டு இயற்றியவர்.
அம்பலவாணக் கவிராயர்
சீகாழியைச் சேர்ந்தவர்; சீகாழி அருணாசலக் கவிராயரின் (1712 - 1779) புதல்வர், சதுரகிரி அறப்பளிசுரர் சதகம் பாடியவர்.
(பொ.யூ.)
அம்பலவாணக் கவிராயர்
மருதூரினைச் சேர்ந்தவர்; தருமையாதீனத்தின் பத்தாம் பண்டாரசந்நிதிகள் பூரீ சிவஞான தேசிகரின் (1715 - 1770) மாணவகர்.
ஆதித்த புரிபுராணம், திருக்கருப்பறியலூர்த் தலபுராணம் பாடியவர். (பொ.யூ.)
அம்பலவாணக் கவிராயர்
தமிழ் நாட்டைச் சேர்ந்தவர்; திருக்குறள் மூலத்தினை 1811 இலே பதிப்பித்தவர். (பொ.யூ.)
அம்பலவான தேசிகர்
திருவிடைமருதூரினைப்பூர்வீகமாகவுடையவர்; திருவாவடு துறையாதீனத் தாபகர் பூரீ நமசிவாய தேசிக மூர்த்திகளின் சீடர்; துறைசையாதீனத்திலே மூன்றாம் பண்டார சந்நிதிகளாக வீற்றிருந்தவர்; பதினாறாம் நூற்றாண்டின் பிற்பகுதியிலே வாழ்ந்து கொண்டிருந்தவர்; உலகுடைய நாயனார், சிவபுரம் பெரியபிள்ளை முதலானோரின் ஆசிரியர்.
பதினான்கு பண்டார சாத்திரத்தில் இடம் பெறும் பத்துச் செய்யுணுரல்களை இயற்றியவர்; அவை அதிசயமாலை, உபதேச வெண்பா, உபாயநிட்டை வெண்பா, சன்மார்க்க சித்தியார், சித்தாந்த சிகாமணி, சித்தாந்தப்பஃறொடை, சிவாச்சிரமத் தெளிவு, தசகாரியம், நமச்சிவாய மாலை (பஞ்சாட்சர மாலை), நிட்டை விளக்கம் என்பன; வீரசைவத் தினைக் கண்டிக்கும் பாசாண்ட நிராகரணம் பாடியவர்; பூப்பிள்ளை அட்டவணை (உயிரட்டவணை) எனும் வசனநூல் தந்தவர்;
இந்துக் கலைக்களஞ்சியம்

Page 115
சிவஞானபோத சிந்தனை எனும் உரை நூலும் இயற்றியவர் என்பர்; அனுபோக வெண்பா என்பதுவும் அவருடைய ஆக்கம் என்பர் சிலர். (பொ.யூ.)
அம்பலவான தேசிகர் கலம்பகம்
திருவாவடுதுறையாதீனத்தின் பதினைந்தாம் பண்டார சந்நிதிகள் பூரீ அம்பலவாண தேசிகர் ( -1869) மீது பாடப்பட்ட கலம்பகமிது.
இக்கலம்பகம் காப்புச் செய்யுள் நீங்கலாக 100 பாக்களை யுடையது. நூலிலே முதல் உறுப்பாக ஒருபோகும் வெண்பாவும் கலித்துறையும் தொடர்ந்தமைய, அம்மானை, இடைச்சியார், களி, கார், காலம், குறம், கைக்கிளை, கொற்றியார், சம்பிரதம், சித்து, சிலேடை, தவம், தழை, நாரை, பாண், புயவகுப்பு, மடக்கு, மதங்கு, மறம், வண்டு, வலைச்சியார், விறலி, வெறிவிலக்கல் ஆகிய 23 உறுப்புகளும் தொடர, பாவும் பாவினமுமான பலவித யாப்பமைதிகளிற் பாடப்பட்டுள்ளது.
இக்கலம்பகத்தினைப் பாடியவர் திருவாவடுதுறை யாதீனத்தில் வித்துவானாக விளங்கிய திரிசிரபுரம் சி. மீனாட்சிசுந்தரம் பிள்ளையாவார் (1815 - 1876). அவர் இவ்வாதீன கர்த்தர் மீது பிள்ளைத் தமிழும் பாடியுள்ளார்.
இக்கலம்பகத்தை உ. வே. சாமிநாதையர், தாம் தொகுத் தளித்த திரிசிரபுரம் பூணூரி மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்கள் பிரபந்தத்திரட்டு எனும் தொகையில் (1910, 1926) மீண்டும் பதிப்பித்தனர். (பொ.யூ.)
அம்பலவாண தேசிகர் பிள்ளைத்தமிழ்
திருவாவடுதுறையாதீனத்தின் பதினைந்தாம் பண்டார சந்நிதிகள் பூரீ அம்பலவாணதேசிகர் ( -1869) மீது பாடப்பட்ட பிள்ளைத் தமிழிது.
இப்பிள்ளைத் தமிழில் விநாயகர் துதியை முதலாகவுடைய பாயிரத்தில் இரு பாக்களுள்ளன; காப்புப் பருவம் நீங்கலான, செங்கீரை, தால், சப்பாணி, முத்தம், வாரானை, அம்புலி, சிற்றில், சிறுபறை, சிறுதேர்ப் பருவங்களிற் பருவத்திற்குப் பத்துப் பாடல்க: உள்ளன. காப்புப் பருவத்தில் எடுத்துக் கொண்ட பாட்டுடைத் தலைவனுக்குப் பொருத்தமாகப் பதினொரு பாக்களிலே திருநந்தி தேவர், சனற்குமாரர், சத்தியஞான தரிசனிகள், பரஞ்சோதி முனிவர், மெய்கண்டார், அருணந்தி சிவாசாரியர், மறைஞான சம்பந்தர், உமாபதிசிவாசாரியார், அருணமச்சிவாயர், சித்தர் சிவப்பிரகாசர், நமச்சிவாயமூர்த்திகள் முதலாம் பதினால்வர் காப்பு வேண்டப்படுகின்றனர்; எனவே இப்பிள்ளைத் தமிழிலே 103 பாடல்கள் உள்ளன.
பூனி அம்பலவாணதேசிகர் பிள்ளைத் தமிழ் வாவடுதுறை யாதீனத்திலே வித்துவானாக விளங்கிய (5 துறை 药 函gn
இந்துக்கலைக்களஞ்சியம்

திரிசிரபுரம் சி. மீனாட்சி சுந்தரம்பிள்ளை (1815 - 1876) யவர்களாற் பாடப்பட்டது. அவர் இவ்வாதீன கர்த்தர் மீது கலம்பகமும் பாடியுள்ளார்.
இதனைப் பூவாளூர் சி. தியாகராசச் செட்டியார் ருதிரோற்காரி வருடம் (1863) பதிப்பித்தார். உ. வே. சாமிநாதையர் தொகுத்தளித்த திரிசிரபுரம் பூரீ மீனாட்சிசுந்தரம்பிள்ளையவர்கள் பிரபந்தத் திரட்டு எனும் தொகையிலும் (1910, 1926) இடம் பெறுகின்றது. (பொ.யூ.)
அம்பலவாணநாவலர் ஆ. ( -1932)
சித்தன்கேணி ஆறுமுகப் பிள்ளையின் புதல்வர்; இளமையில் வடலியடைப்பு வி. வேற்பிள்ளையிடம் பயின்றவர்; பின்பு மட்டுவில் க. வேற்பிள்ளை உபாத்தியாயரிடம் தமிழ் இலக்கிய லக்கணங்களையும் நீர்வேலி ச. சிவப்பிரகாச பண்டிதரிடம் சங்கத நூல்களையும் கற்றவர்; ஆறுமுகநாவரைச் சற்குருவாகக் கருதி, அவர் வழி ஒழுகினவர்; விளைவேலி வே. அப்பாத்துரைக் குருக்களிடம் தீகூைடி பெற்றுச் சிவபூசை எழுந்தருளப் பண்ணிக் கொண்டவர்; மதுரை திருஞான சம்பந்தர் மடத்திற் காஷாயம் பெற்று, நைட்டிகப் பிரமசரியம் பூண்டவர்.
வட்டுக்கோட்டையிற் சைவத் தமிழ் வித்தியாசாலை நிறுவி நடத்தியவர்; தமிழ் நாட்டிலே, திருநெல்வேலியிலே திருஞானசம்பந்த சுவாமி மடாலயமும், சிதம்பரத்தில் ஆறுமுகநாவலர் சந்தான ஞானசம்பந்த சுவாமி ஆதீனம் எனும் மடாலயமும் நிறுவியவர்.
பிரசங்க வல்லுநர்; பெரியபுராணம், திருவாதவூரர் புராணம் என்பனவற்றிலே வல்லவர்; திருவாவடுதுறை ஆதீனகர்த்தரால் நாவலர் பட்டம் அளிக்கப்பெற்றவர்.
சிதம்பரத்திலே ஆங்கீரச வருடம் சித்திரை மாதம் 23ஆந் திகதி வியோகமடைந்தவர்.
அருணாசல மான்மியம், திருநாவலூர் மான்மியம், வேணுவனலிங்கோற்பவம், திருவாதிரைத் திருநாள் மகிமைப் பிரபாவம், சிவத்துரோக கண்டனம் முதலியனவற்றை இயற்றியவர்; இவருடைய பிரம தருக்கஸ்தவம் அப்பைய தீட்சிதர் நூலின் மொழி பெயர்ப்பு ஆறுமுக நாவலர் மீது பாடப்பெற்றது, நாவலர் சற்குரு மணிமாலை; திருச்சுழியற் புராணம், சண்முகஷடாசுஷ்ரப் பதிகம், அகோர சிவாசாரியார் பத்ததி நிர்மலமணி வியாக்கி யானம், உமாபதி f6) TFTrfurf 6T பெளவு கர சங்கிதாபாஷியம் முதலியனவற்றைப் பதிப்பித்தவர். (பொ.யூ)
அம்பலவான பண்டிதர், அ.
மூத்தப்பு என அழைக்கப் பெற்றவர்; யாழ்ப்பாணம் தென் கோவை அருளம்பல முதலியாரின் கனிட்ட புதல்வர்; தம்மாசிரியர்
69

Page 116
இருபாலை நெ. சேனாதிராய முதலியார் பாடிய நல்லை வெண்பா, நீராவிக்கலி வெண்பா என்பனவற்றைச் சென்னையிலே 1878 இலே பதிப்பித்தவர்; பீற்றர் பேர்சிவல் பாதிரியாருக்குச் சிலகாலம் தமிழாசிரியராக விளங்கியவர். (பொ.யூ.)
ce b1 JT6JT1-6)
மார்கழி மாதத்தில் நிறைமதி நாளாகிய திருவாதிரையிற் கன்னிப் பெண்கள் சடங்கறிந்த முதிய பெண்களிடம் நோன்பு முறைமையை அறிந்து பணியுடை அருணோதயத்தில் நீராடிப் பூமியானது மழை வளம் பெற்றுக் குளிர்வதாக என்று அம்பாவாடல் செய்தமை பரிபாடலிலே கூறப்படுகின்றது; இவ்வம்பாவாடலை இப்பாடல் தைந்நீராடல் என்றும் கூறுகின்றது. (174 - 92).
அம்பாவாடல் தாயோடு ஆடப் பெறுதலின் பெற்ற பெயர் என்பது பொருத்தமாகத் தெரியவில்லை. அம்பாவாடல் தேவியின் பொருட்டு நிகழ்த்தப்படும் நீராட்டு என்பது பொருத்தமாகத் தெரிகின்றது.
பூனிமத் பாகவதம் தசமஸ்கந்தம் இருபத்திரண்டாம் அத்தியாயத்தில் கோபியர் மார்கழியில் கார்த்தியாயணி பூசையாகிய விரதத்தைத் தொடங்கி யமுனா நதியிலே தோய்ந்து ஈர நுண்மணலாற் கார்த்தியாயணி தேவியின் உருவத்தைச் சமைத்துப் பூசித்துக் கண்ணனை நாயகனாக அருளும்படி வேண்டி ஒரு மாச காலம் பூசை செய்து விரதத்தை விடாமற் செய்தமை கூறப்படுகின்றது.
தைந்நீராடல் நற்றிணை (22, 80), ஐங்குறு நூறு (84), கலித்தொகை (59) என்பனவற்றிலும் கூறப்படுகின்றது. மார்கழி இடையிற் பெளர்ணமிக்குப் பின்வரும் மாதம் மார்கழியின் பிற்பகுதியும் தையின் முற்பகுதியுமாம். இதனால் தைந்நீராடல் என்றும் மார்கழி நீராடல் என்றும் ஒரே நிகழ்ச்சி இருபெயரால் அழைக்கப்பட்டு வந்துள்ளது. இந் நோன்பினைத் திருவெம் பாவையும் திருப்பாவையும் கூறுகின்றன.
கன்னிப் பெண்கள் நடத்திய நோன்பு ஆண்பாலார் பெண்பாலார் எல்லோராலும் சமயாசாரமாகக் கொண்டு அனுட்டிக்கப்பட்டு வருகின்றது. திருவாதிரைக்குப் பத்துநாள் முன் தொடங்கி திருவாதிரையோடு திருவெம்பாவை இருபது பாடலும் சைவர்களாலும், நாளொன்றுக்கு ஒரு பாடலாகத் திருப்பாவை முப்பதும் வைணவர்களால் மாதம் முழுவதும் ஒதப்பட்டு வருகின்றன. (பொ.யூ.)
அம்பிகாபதி
10ாண்டி நாடு வீரசோழனூர் எனும் வீரையைச் சேர்ந்தவர்; வேம்பத்தூர் பிராமண மரபினர்; வீரை கவிராச பண்டிதரின் புதல்வர்.
நெல்லை வருக்கக்கோவை, பராபரைமாலை பாடியவர்.
(பொ.யூ.)
70

célibiólab85UT85 21Jä8ujTuJñ, 6)U.
யாழ்ப்பாணம் இணுவிலைச் சேர்ந்தவர்; இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் வாழ்ந்து கொண்டிருந்தவர்; ஆறுமுகநாவலரிடம் சேனாவரையமும் இணுவில் நடராசையரிடம் சித்தாந்த சாத்திரமும் கற்றவர்; புன்னாலைக்கட்டுவன் மகாவித்துவான் சி. கணேசையருக்குத் தணிகைப் புராணம் பாடஞ் சொன்னவர்; சி. வை. தாமேதரம்பிள்ளையின் நண்பர்; மக்கள் பொன்னம்பலபிள்ளையும் வைத்தியலிங்க பிள்ளையும் செய்யுளியற்றும் வன்மையுடையோர்.
இணுவையந்தாதி பாடியவர்; தணிகைப் புராணம் நகரப்படலம் வரை உரையெழுதியவர். (பொ.யூ.)
©ນ)]aຫມຽນmabor pr.
யாழ்ப்பாணத்துச் சுன்னாகம் சங்கரப்பிள்ளையின் மகன்; மல்லாகத்தில் வாழ்ந்தவர்; யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் இளமையிற் பயின்று பின்பு சென்னை பிரசிடென்சி கல்லூரியிற் கற்றுக் கலைமாணிப் பட்டம் பெற்றவர்; சுன்னாகம் செல்லாச்சி அம்மையார், யோகர் சுவாமிகள் ஆகிய ஞானிகளின் தொடர்பினை இளமையிலேயே பெற்றவர்; கலைப்புலவர் நவரத்தினத்தின் நண்பராகவும், கலாநிலையத்தின் சிறந்த வாசகராகவும் விளங்கியவர்; யாழ்ப்பாணம் இளைஞர் காங்கிரஸ் நிகழ்ச்சிகளில் ஆர்வத்துடன் பங்கு கொண்டவர்; இந்திய சுதந்திர இயக்கம் தீவிரம் அடைந்தபோது தமிழ் நாட்டில் வாழ்ந்ததால் அவ்வியக்கத்தின் சமூக சிந்தனைகள் பலவற்றை ஆதரித்தவர்; சென்னை இராமகிருஷ்ண மடத்தோடு கொண்டிருந்த தொடர்பால் இராமகிருஷ்ண பரமஹம்ஸர், சுவாமி விவேகானந்தர் கோட்பாடுகளை விரும்பித் தழுவியவர்; சுவாமி விபுலானந்தரின் அழைப்பினை ஏற்று மட்டக்களப்பு கல்லடி உப்போடை சிவானந்த வித்தியாலயத்தில் 1934 சனவரி முதல் ஆசிரியராகப் பணி செய்தவர்; சுவாமிகளின் பணிப்புரையின்படி யாழ்ப்பாணம் வண்ணை வைத்தீஸ்வர வித்தியாலயத்தின் அதிபராக 1935 ஆம் ஆண்டு அக்டோபர் முதலாம் தேதி முதல் 1968 ஆம் ஆண்டு மே மாதம் 2ஆம் தேதி வரை, 32 வருடங்களுக்கு மேல், சேவை செய்தவர்; யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற சமய கலாசார நிகழ்ச்சிகளில் முக்கிய பங்கேற்றுக் கொண்டவர்; இந்திய இலங்கை கலாசார பண்பாட்டுக்குப் பாலமாக அமைந்திருந்தவர்.
இலக்கணச் சுவாமிகள் என்னும் பூணீமத் முத்துக் குமாரத் தம்பிரான் நினைவு மலர் (1958), செல்லாச்சி அம்மையார் நினைவு மலர் (1960); விபுலாநந்தர் உள்ளம் (1976) என்பன இவரது தொகுப்புகள்; யோகசுவாமிகள் (1972), கலாயோகி ஆனந்தக் குமாரசுவாமி (1978) முதலியன சுயமாக எழுதியவை. (பொ.யூ.)
61b1DTGir
10ன்னிரண்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும் பதின் மூன்றாம் நூற்றாண்டிலும் வாழ்ந்தவர்; காஞ்சிபுரத்தை அடுத்த
இந்துக் கலைக்களஞ்சியம்

Page 117
நடாதூர் பூர்வீகவூர்; காஞ்சிபுரத்திற் பிறந்து வாழ்ந்தவர்; நடாதூரம்மாள், வரதாசாரி எனவும் அழைக்கப்படுவர்; பெருமாளுக்குச் செய்த பாலமுதின் உஷ்ணத்தைக் குறைக்க, வாயிலிட்டு ஊதியபோது, “எனக்கு நீர் அம்மாளோ” என்று பெருமாள் உகந்தருளியதால் எழுந்த பேர் அம்மாள் என்பர்
வைணவர்.
பூரீ இராமநுசரின் மருகரும் சீடருமான நடாதூராழ்வானின் பேரன், தேவராசப் பெருமாளின் புதல்வர்; எங்களாழ்வானின் சீடர், சுதர்சனபட்டர், கிடாம்பி அப்பிள்ளார், வடக்குத் திருவீதிப் பிள்ளை, வாதிஹம்ஸழம்புதாசார்யர் முதலியோரின் குரு.
சுலோகங்கள், சரார்த்த சதுஷ்டய காரிகைகளுடன் சுலோகத்வயம், தத்வசாரம், தத்வநிர்ணயம், பரத்வாதிபஞ்சகம், பிரபன்னபாரிஜாதம் பிரமேயமாலை என்பனவற்றைச் சங்கதத்தில் இயற்றியவர். (பொ.யூ.)
அமர்நாத்
இந்தியாவின் வடபிரதேசமாகிய காஷ்மீரிற் பிரபல்லியம் மிக்க யாத்திரைத் தலமாக விளங்குவது அமர்நாத் குகையாகும். மலை உயரம் 17,321 அடி; சிகரத்தில் 13,900 அடி உயரத்தில் 150 அடி அகலமும் 90 அடி உயரமும் உள்ள குகை உண்டு. அமர்நாத் குகையினை நோக்கி ஆவணி மாத பூரணைக்கு ஆயிரக்கணக்கான இந்துக்கள் யாத்திரை செய்வது வழக்கமாகும். இங்குள்ள குகையிலே இலிங்க அமைப்பிலே பனிக்கட்டியாலான உருவமொன்று வளர்பிறையின்போது வளர்வதாகவும் தேய் பிறையின் போது குன்றுவதாகவும் நம்பப்படுகின்றது. இவ்வுருவின் தோற்றத்திற்குக் கூரையில் இருந்து ஒழுகும் நீர் காரணம் என்போரும் உளர்.
பூரீ நகரிலிருந்து தென்கிழக்கே அவந்தியூர் அடைந்து, அங்கிருந்து ஆனந்நாக் சென்று, வடக்கு நோக்கித் தொடர்ந்தால் பகல்காம் (PAHALGAM) நகரை அடையலாம். பூரீ நகரிலிருந்து பகல்காம் சுமார் 60 மைல் தொலைவிலுள்ளது. இதனை வாகனம் மூலம் அடையலாம். பகல்காம் எனும் இடத்திலிருந்து சுமார் 27 மைல் தொலைவில் வடகிழக்கே அமைந்தது அமர்நாத்குகை. முதல் நாள் பயணத்தை வாகனம் மூலம் செய்ய முடியுமாயினும் எஞ்சிய பாதையை நடையாகவே கடக்க வேண்டும். பஞ்சதரணி போன்ற புனிதமான ஓடைகளில் முழுகிச் செல்லலாம். (பொ.யூ.)
அமர்நீதிநாயனார்
*அல்லிமென்முல்லையந்தார் அமர்நீதிக்கடியேன்” என்று சுந்தரமூர்த்தி நாயனார் போற்றும் (7.39.7) அமர்நீதிநாயனார் சம்பந்தர் சுவாமிகளுக்கும் (3.121,1) அப்பர் சுவாமிகளுக்கும் (4.977) காலத்தால் முற்பட்டவர்; அக்காலம் ஏழாம் நூற்றாண்டிற்கு முற்பட்டது.
இந்துக் கலைக்களஞ்சியம்

சோணாடு பழையாறையில் வணிகர் குலத்தில் அவதரித்த அமர்நீதியார் திருமடம் அமைத்து நாள்தோறும் அடியாருக்கு உணவளித்து, அவர்கள் கருத்தறிந்து கீழுடை கோவணம் உதவி வந்தவர்; இறைவன் சிவனடியாராக வந்து அமர்நீதியாரால் அமுது செய்ய அழைக்கப்பெற்ற போது, கோவணத்தைக் கொடுத்துவிட்டு, நீராடச் சென்று மீண்டபோது, கோவணம் காணமற் போய்விட்டது. சிவனடியார் தம்மிடமுள்ள வேறொரு கோவணத்திற்கு ஒத்த கோவணத்தை நிறுத்துத் தரும்படி வேண்டினார். அமர்நீதியார் வைத்த கோவணம் நிறை குறைந்ததால் தம்முடைய பொருள் எல்லாம் வைத்தும் நிறை சரியாகாததால் தாமும் மனைவி மக்களுடன் ஐந்தெழுத்தோதி ஏறி நின்றார். கோவணமும் அடியவர் தொண்டும் ஒத்துத் துலை நேர்
நின்றது. இறைவன் காட்சி வழங்கி அருள்புரிந்தார்.
(பொ.யூ.)
அமரகோஷம்
அமரகோஷம் நிகண்டுகளிலே தலைசிறந்தது. அதன் இயற்பெயர் நாமலிங்கானுசாஸன என்பதாகும். வேதகாலம் முதலாக விருத்தி பெற்று வந்த ஒரு மரபின் உன்னதமான வளர்ச்சிக் கட்டத்தை அது பிரதிபலிக்கின்றது. அமரர் தொகுத்த நூலின் சிறப்பினால் அதற்கு முற்பட்ட நிகண்டுகளின் புகழ் மங்கிவிட்டது. அமரகோஷத்தைக் கல்விமான்களும் கவிஞர்களும் விரும்பிக் கற்றனர். சமஸ்கிருத மொழி கற்பவர்களதும் இலக்கியவாதிகளதும் அத்தியா வசியமான தேவையினை அது பூர்த்தி செய்தது. அதற்கு எழுதப்பட்ட உரைகள் பலவாகும்.
வியாடி, தன்வந்திரி, வரகுஷி, காத்யாயனர் வாசஸ்பதி முதலியோரின் நிகண்டுகள் அமரகோஷத்துக்கு முற்பட்டவை. அமரகோஷத்தின் உரைகாரரான ஷீரஸ்வாமி, சர்வானந்தர் என்போர் அவர்களைப் பற்றிக் குறிப்பிடுகின்றனர்.
திரிகாண்டம், உத்பலினி, மாலா என்னும் நிகண்டுகளையும் அவர்கள் குறிப்பிடுகின்றனர். காலப்போக்கில் அவை மறைந்துவிட்டன.
அமரர் பெளத்த சமயத்தவர். மகாயான சம்பிரதாயங்களை நன்கறிந்தவர். காளிதாஸரின் நூல்களை அவர் பயன்படுத்தி யுள்ளார். அவர் காலத்தாற் காளிதாஸருக்குப்பிற்பட்டவர். எட்டாம் நூற்றாண்டுக்கு முற்பட்டவர். விக்கிரமாதித்தனின் அரண்மனையில் நவமணிகளாக விளங்கிய வித்யா ஜோதிகளில் அமரரும் ஒருவர் என்பது ஐதீகம். அவர் ஆறாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் என்பது இக்காலத்து அறிஞர் சிலரின் கருத்தாகும்.
குப்தர் காலத்து இந்து சமுதாயம் பற்றிய ஒர் அறிவுக் களஞ்சியமாக அமரகோஷம் விளங்குகின்றது. மொழி வழக்கிலுள்ள பிரதானமான சொற்கள் எல்லாம் அதில் அடங்கியுள்ளன. அதிலே காணப்படும் விவரங்கள் உலகியல் வாழ்க்கை பற்றியவை; நாகரிகத்தின் அம்சங்களைப் பற்றியவை. தேசங்களின் பெயர்கள், மக்களின் இனப்பெயர்கள், அரச
71

Page 118
குலங்களின் பெயர்கள் ஆகியன அதிலே தொகுக்கப்பட்டுள்ளன. நிலப்பகுதிகள், காலபருவங்கள், மலைகள், ஆறுகள், துறைகள், நகரங்கள் என்பன பற்றிய விவரங்கள் நூலிலும் அதற்கு எழுதப்பட்ட உரைகளிலுங் காணப்படுகின்றன. விவசாய முறைகள், உற்பத்தியான பொருள்கள், உணவு வகைகள், நடை, உடை பாவனைகள் முதலிய யாவும் அவற்றிலே பதிவாகியுள்ளன.
அமர கோஷத்தின் சிறப்புகளை விளக்குவதற்கு உதாரணமாக அதிலே காணப்படும் சில விவரங்களை இங்கு குறிப்பிடலாம். வசன இலக்கியங்களைப் பொறுத்தவரையில் அவை ஆக்யாயிகா, கதா என இருவகைப்படும் என்று அமரகோஷம் கூறும். அவற்றிலே முன்னையவை வரலாறு சம்பந்தமானவை என்றும் மற்றவை கற்பனையின்பாற்பட்டவை என்றுஞ் சொல்லப்படுகின்றது. பெண்களும் ஆசிரியர்களாய் விளங்கினர் என்பதை அந்நூல் மூலம் அறிகின்றோம்.
உபாத்யாயா, உபாத்யாயீ என்பவை பெண்ணாசிரியரைக் குறிக்கும் சொற்களாக விளங்கியவை என்று அதிலே சொல்லப்படுகின்றது. ஆச்சார்யா என்பது வேத மந்திரங்களை உபதேசிக்கும் பெண்களைக் குறிக்கும் என்று அமர(ர்) கொள்வார்.
விதவைகள் மறுமணஞ் செய்தல் பொதுவழக்கம் என்பது அமரகோஷத்தால் அறியப்படும் விவரமாகும். புனர்பூ என்பது அத்தகையோரைக் குறிக்கும். அதன் பொருளை உணர்த்தும் வேறு சொற்களையும் அந்நூல் குறிப்பிடுகின்றது. வைஷ்ணவ நெறியிலுள்ள எல்லா வியூகங்களின் பெயர்களையும் அமரர் குறிப்பிடுகின்றார். ஆண்களும் பெண்களும் அணிந்து கொள்ளும் ஆபரணங்கள் பலவற்றின் பெயர்கள் அவரின் நூலிற் சொல்லப்படுகின்றன. தலை, நெற்றி,கழுத்து, கை, விரல், இடை, கால் ஆகிய எல்லா உறுப்புகளிலும் அணியும் பல வகையான ஆபரணங்களின் பெயர்கள் சொல்லப்படுகின்றன.
ஆடவரும் மாதரும் கோடை காலத்திலும் குளிர்காலத்திலும் அணியும் எல்லா வகையான ஆடைகளின் பெயர்களும் அமரகோஷத்திலே காணப்படுகின்றன. அமரர் குறிப்பிடும் ஆடைகளின் பெயர்கள் காளிதாஸர், பாணபட்டர் ஆகியோர் வர்ணிப்பனவற்றைப் பெரும்பாலும் ஒத்திருக்கின்றன. பல வகையான பருத்தி ஆடைகளின் பெயர்கள் காணப்படுகின்றன. வண்ணச்சாயம் இடப்பட்ட பட்டுவகைகளின் பெயர்களும் சாயமிடாத பட்டுத் துணிகளின் பெயர்களும் அதில் எழுதப் பட்டுள்ளன.
பலவிதமான நெல்வகைகள், கோதுமை, பார்லி, பயறு, பருப்பு வகைகள், எள்ளு, ஆமணக்கு, கடுகு, வாசனைச் சரக்குகள், மருந்து மூலிகைகள் முதலியன நூலிலே குறிப்பிடப்படுகின்றன. மாஷபாணி என்னும் மூலிகை கந்தாரத்துக்கு அப்பாலுள்ள காம்போஜத்திலிருந்து கொண்டு வரப்பட்டதாகச் சொல்லப்படுகின்றது. சில் ஹகம் என்னும் வாசனைத் திரவியம் துருக்கிஸ்தானம், பல்க், ரமட

முதலியவற்றிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டமை இந்நூலின் மூலம் தெரியவருகின்றது. செம்பு மிலேச்சர் தேசத்திலிருந்து கொண்டுவரப்பட்டது என்று குறிப்பிடப்படுகின்றது.
விவசாயம், வாணிபம் போன்ற தொழில்களைப் பற்றியும் தொழிற்கருவிகளைப் பற்றியும் இந்நூல் மூலம் அறிய முடிகின்றது. சந்தைகள், கடைகள், வாணிபச் சரக்குகள் முதலானவை பற்றி வழங்கிய சொற்கள் குறிப்பிடப்படுகின்றன. குப்தர் காலச் சமுதாயம் பற்றி அறிந்து கொள்வதற்கு அமரகோஷம் , பிருஹத்சம்ஹிதா, காளிதாஸர், பாணபட்டர் போன்றோரின் நூல்கள் என்பவற்றிலே காணப்படும் விவரங்கள் மிகவும் பிரயோசனமானவை. (fo. Lu.)
அமராவதி
தீக்குப்பாலகர் எண்மரிற் குபேரன் செல்வத்துக்கு அதிபதியானவன். அவனது நகரமான அமராவதி செல்வ வளத்திலும் வனப்பிலும் இணையிலாதவொன்று. அமராவதி பற்றிய வர்ணனைகள் கவிஞரின் கற்பனையில் எழுந்தவை. ஆந்திரப் பிரதேசத்திலே கிருஷ்ணையாற்றுப் பள்ளத்தாக்கிலே அமராவதி என்றவொரு பெருநகரம் புராதன காலத்திலே சிறப்புற்று விளங்கியது. அது செல்வங் கொளிக்கும் நகரமாக விளங்கியது. உள்நாட்டு வாணிபத்திலும் தூரதேச வாணிபத்திலும் ஈடுபாடு கொண்ட பெருவணிகரின் குடியிருப்புகள் அங்கு அமைந்திருந்தன.
பெளத்த சமயத்தினாற் கவரப்பெற்ற அமராவதி வணிகரும் பிற பிரதானிகளும் அதன் நிறுவனங்களை உருவாக்குவதில் ஈடுபாடு கொண்டனர். சங்கத்தாரின் வசிப்பிடங்களான சங்காராமங்கள், சேதியங்கள், அறச்சாலைகள் என்பன அங்கு அமைக்கப்பட்டன. கி. மு. இரண்டாம் நூற்றாண்டு முதலாக அங்கு கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இக்ஷவாகு குலத்தவரின் ஆட்சியிலே அமராவதி நகரின் வளர்ச்சி உன்னதமான நிலையிற் காணப்பட்டது. அமராவதியிற் போல ஜகய்யபேட்டை, கண்டசாலா, பட்டிப்புறோலு, நாகார்ஜூன கொண்ட ஆகிய தலங்களிலும் பெளத்தசமய நிறுவனங்கள் மிகுந்து காணப்பட்டன. சிற்பக்கலை வரலாற்றில் ஒரு தனியான கலைப்பாணிக்குரியனவாக அங்குள்ள தொல்பொருட் சின்னங்கள் அமைந்துள்ளன.
அமராவதி முதலான வேங்கிநாட்டுப் புராதனமான பெளத்தப் பெரும்பள்ளிகள் காலப்போக்கில் கைவிடப்பட்ட நிலையிலே அழிந்து மண்மேடுகளாகி விட்டன. நவீன காலத்து அகழ்வாராய்வுகளின் மூலமே அவை வெளிக்கொணரப் பெற்றன. சங்காராமங்கள், சேதியங்கள் என்பனவற்றின் அடித்தளங்களையே அடையாளங்காண முடிந்தது. கட்டிடங்களின் மேற்பாகங்கள் யாவும் சிதைவடைந்துவிட்டன. ஆயினும் இடிபாடுகளிடையே மிகுந்து காணப்படும் சிற்பத் தொகுதிகளின் மூலமாகச் சமகாலத்துக் கட்டிடங்களின் வடிவமைப்பினைப் பற்றி அறிய முடிகின்றது.
இந்துக்கலைக்களஞ்சியம்

Page 119
அமராவதிச் சேதியங்களின் சிறப்பம்சங்களை அடையாளங் காண்பதற்குச் சேதியங்களின் பொதுவான அம்சங்களை இங்கு அவதானித்தல் வேண்டும். தூபி என்று சொல்லப்படும் பெளத்த சேதியங்கள் கீழிருந்து மேலாக அடித்தளம், அண்டம், ஹர்மிகா சத்திராவலி என்னும் நான்கு பாகங்களைக் கொண்டிருக்கும். அவற்றில் அடித்தளம் சதுரமானது; விசாலமானது. அது சில சமயங்களில் இருதளக் கோலத்தில் அமைந்திருக்கும். சேதியத்துக்கும் போகும் வாசல்கள் படிக்கட்டுகள் மூலம் ஏறிச் செல்லக்கூடிய வகையில் அமைந்திருக்கும். அடித்தளத்தின் மேல் அண்டம் அமைந்திருக்கும். அது தோற்றத்திற் பிரமாண்டமானது; மிகவுயர்ந்தது; அண்ட வடிவானது. அதுவே கட்டிடத்தின் மிகப்பெரியதும் காண்போரின் கண்களைக் கவருவதுமான பாகமாய் அமைந்திருக்கும். அதன் மேல் ஹர்மிகா என்னும் சதுர வடிவமான பாகம் அமைக்கப்படும். கட்டிடத்தின் உச்சியிலே சத்திராவலி என்னும் உயரமான பாகம் உருவாக்கப்படும். அது மெலிந்த தோற்றத்திலும் கீழிருந்து மேனோக்கி உட்சரிவு கொண்ட விதத்திலும் அமைந்திருக்கும். சேதியத்தின் அடித்தளத்திலும் ஹர்மிகா என்னும் பாகத்திலும் சிற்பவடிங்கள் அமைந்திருக்கும். சாஞ்சி பார்ஹத் போன்ற தலங்களிலுள்ள புராதனமான சேதியங்களில் இப்பண்புகள் எல்லாவற்றையுங் காணலாம்.
அமராவதி முதலான ஆந்திரப்பிரதேசத்து நகரங்கள் பலவற்றிலே பெருந்தொகையான சேதியங்கள் அமைக்கப் பட்டிருந்தன. அவற்றின் அத்திபாரங்களும் கட்டிடங்களும் செங்கல்லினால் அமைந்தவை. காலப்போக்கிலே கட்டிடத்தின் பாரத்தைக் குறைப்பதற்காகவும், பொருட் செலவைக் குறைப்பதற்காகவும் கட்டுமான முறையிற் சில மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டன. வட்டமான வடிவத்தில் மையப்பகுதியிலும் வெளிப்புறத்திலும் சுவர்கள் அமைக்கப்பட்டன. அவற்றைத் தொடுக்கும் விதத்தில், இரண்டுக்கும் இடையிலே சுவர்கள் அமைக்கப்பட்டன. இடைவெளிகள் மண்ணால் நிரப்பப் பெற்றன. இவ்விதமாகச் சேதியத்தின் பிரதான பகுதியான அண்டம் உருவாக்கப்பட்டது. இந்தக் கட்டுமானமுறை ஆந்திரப் பிரதேசத்துப் பெளத்த நிலையங்கள் எல்லாவற்றிலும் பொது வழமையாகியது. கட்டிடத்தின் நடுப்பகுதியிலுள்ள சுவர்களிலே பளிங்குக் கற்கள் பதிக்கப்பட்டன. அவற்றிலே வனப்புமிக்க சிற்பங்கள் செதுக்கப்பட்டிருந்தன. விதானங்கள் சுதைப்பூச்சினாற் செம்மைப்படுத்தப்பட்டன. அண்டத்தின் வெளிப்புறத்திலே, நான்கு திசைகளையும் நோக்கிய வண்ணமாக, அதனையொட்டி முன்றில்கள் அமைக்கப்பட்டன. அவற்றின் முற்பக்கத்தில் வழிபாட்டுக்குரிய அமைப்புகள் இருந்தன. முன்றில்களின் பக்கச்சுவர்களில் மேலே ஏறிச் செல்லக் கூடியவண்ணமாகப் படிக்கட்டுகள் அமைந்திருக்கும். முன்றில்களின் உச்சிப்பகுதி சேதியத்திலுள்ள பிரதசுஷிண பாதையின் மட்டத்துக்குச் சமமான உயரங் கொண்டவை. சேதியத்தின் பிரதசுஷிண பாதையில் ஆயக கம்பம் எனப்படும் ஐந்து தூண்கள் அமைந்திருக்கும். அவற்றின் காரணமாகச் சேதியம் அழகான தோற்றத்தைக் கொண்டிருக்கும்.
இந்துக் கலைக்களஞ்சியம்

அமராவதி போன்ற ஆந்திர தேசத்துப் பெளத்த கட்டிடங்களைப்போல அங்குள்ள சிற்பங்களும் தனிப்பாணிகள் கொண்டவை. வேங்கி தேசத்திலுள்ள மிகப்புராதனமான சிற்பங்கள் அமராவதி, ஜகய்யபேட்டை ஆகியவிடங்களில் உள்ளன. அவை பெளத்த கட்டிடங்களின் அழிபாடுகளிடையிற் கிடைத்தவை. அவை பெரும்பாலும் பளிங்குப் பாளங்களிலுள்ள செதுக்கு வேலைப்பாடுகளாகும். அவை சேதியங்களின் சுவர்களிலும் தளங்களிலும் அமைந்திருந்தன. அமராவதிச் சிற்பங்கள் பெளத்தசமய மரபிலுள்ள கதைகளை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டதால் அவற்றுக்கும் சாஞ்சி பார்ஹாத் முதலிய இடங்களிலுள்ள சிற்பங்களுக்குமிடையிற் பொதுப் பண்புகள் காணப்படும். ஆயினும் அவற்றின் அம்சங்களிலுள்ள விவரங்களைப் பொறுத்தவரையில் வேறுபாடுகள் தெரிகின்றன. ஆந்திரதேசத்துச் சிற்பங்களில் மனிதரின் உருவங்கள் கூடிய உயரமும் மெலிந்த தோற்றமும் வனப்புமிக்க கோலமுங் கொண்டனவாக விளங்குகின்றன. அங்கலக்ஷணங்கள் அவற்றிலே நுட்பமான முறையில் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றிலே ஒருவகையான நெகிழ்ச்சியும் உயிரோட்டமான பாங்கும் தெரிகின்றன. அவற்றிலே மனிதரின் உருவங்களும் விலங்குகளின் வடிவங்களும் மரஞ்செடிகளும் வட இந்தியாவிலுள்ளனவற்றைக் காட்டிலும் கூடியளவு சிறப்புடையனவாகக் காட்சியளிக்கின்றன. சிற்பங்கள் பளிங்குக் கற்களிலே செதுக்கப்பட்டுள்ளமையும் அவை மிகுந்த வனப்புடன் விளங்குவதற்கு ஏதுவானவொரு காரணமாகலாம்.
வேங்கி தேசத்துச் சிற்பங்கள் பெளத்த மரபிலுள்ள கதைகளின் உருவகமானவை. அந்தக் கதைகள் சமூக வாழ்க்கையினைப் பின்னணியாகக் கொண்டவை. கெளதம புத்தரின் வாழ்க்கை வரலாற்றோடு தொடர்புடையவை. அவர் சமூகத்திலுள்ள பலவகைப்பட்டோருடனும் தொடர்பு கொண்டிருந்தார். அரசரோடும், செல்வரோடும் பாண்டித்தியம் பெற்றிருந்தவர்களோடும் அவர் தொடர்பு கொண்டிருந்தார். அவரின் பிறப்பு, இளமைப்பருவ வாழ்க்கை, துறவு,நிர்வாணம், தர்மோபதேசம் முதலியனவற்றை விளக்கும் வண்ணமாகப் பல உருவங்கள் அமைக்கப்பட்டன. அமராவதிச் சிற்பங்களின் காலத்துக்கும் பெளத்த சமயம் தோன்றிய காலத்துக்கும் இடையிலான கால இடைவெளி ஏறக்குறைய ஐந்து நூற்றாண்டுகளைக் கொண்டது. அக் காலப் பகுதியில் புத்தர்பிரானின் அற்புதங்களைப் பற்றிய பல ஜனரஞ்சகமான கதைகள் உருவாகின. ஜாதகக் கதைகளும் இலக்கிய வடிவம் பெற்றன. ஒரு விசாலமானஇலக்கிய பாரம்பரியம் பிரதிபலிக்கும் சமயநெறியும் அதன் பின்னணியாக அமைந்த சமுதாயமும் கலைவடிவில் உருவகம் பெற்றன. நகரங்கள், வீதிகள்,அவற்றின் ஒரமாய் அமைந்த மாடமாளிகைகள். அவற்றிலே வாழ்ந்த மக்கள், அவர்களின் நடையுடை பாவனைகள் முதலானவற்றைச் சிற்பங்களிலே காட்சிப் பொருள்களாக வடிவமைத்தனர். பிடக நெறியின் சிறப்புகளை முதன்மைப்படுத்தும் நோக்குடன் சிற்பங்கள் உருவாக்கப்பட்ட பொழுதும் அவை உலகியல் வாழ்க்கையின் யதார்த்தங்களையும் அதில் ஈடுபாடு கொண்டு இன்பங்களை நுகர்ந்து பொலிவுடன் விளங்கிய ஒரு
73

Page 120
சமூகத்தையே அச் சிற்பங்களிலே பார்க்க முடிகின்றது. அவற்றை வடிவமைத்த கலைஞர்களை ஆதரித்தவர்கள் செல்வம் மிக்கவர்கள், சுகபோகங்களை அனுபவித்தவர்கள். அமராவதிச் சிற்பங்கள் லலிதமானவை; உயிரோட்டமானவை. மனித வடிவங்கள் யாவும் இயல்பான கோலமும் வனப்பும் வாய்க்கப்பெற்றவை.உருவக்காட்சிகளும் அங்க லக்ஷணங்களும் உணர்ச்சி பேதங்களையும் சூழ்நிலைக்கேற்ப மாறுபடும் பாவங்களையும் செம்மையாகப் புலப்படுத்துகின்றன.
இந்திய சிற்பக்கலை சாஞ்சி, பர்ஹாத், மதுரா, தக்ஷசீலம் போன்ற இடங்களிலே அடைந்திராத வளர்ச்சியினையும் சிறப்பினையும் அமராவதி முதலான ஆந்திர தேசத்துத் தலங்களிலே பெற்று விடுகின்றது. வடக்கிலுள்ள தலங்களிற் காணப்படும் சிற்பங்களில் உடலுறுப்புகள் கனதியான தோற்றத்தில் அமைந்துள்ளன. அவற்றிலே உறுப்பசைவுகளின் சுழற்சி, வேகம், என்பன புலப்படுவதில்லை. கதைப் பாங்கினை வெளிப்படுத்தக் கூடிய வகையிலே உணர்ச்சி பேதங்கள் அமைவதில்லை. கட்டமைப்புகளிலே தசை குவிந்தும் செறிந்தும் காணப்படுவதால் உணர்ச்சி பேதங்கள் நன்கு வெளிப்படுவ தில்லை. ரஸ-பாவக் கோட்பாடுகள் பிற்காலத்தில் இந்திய இலக்கியவாதிகளால் உருவாக்கப்பட்டன. உள்ளப்பாங்கு பற்றிய பாவங்களை இந்தியக் கலை வடிவங்களிலே முதன் முதலாகச் செம்மைப்படுத்திய சிறப்பு ஆந்திர தேசத்துச் சிற்பக் கலைஞர்களுக்கு உரியதாகும்.
அமலனாதிபிரான்
திருப்பாணாழ்வாரின் அநுபவரூபமான திருப்பாசுரங்களை உள்ளடக்கி அமலனாதிபிரான்’ என ஆரம்பிக்கும் திருப்பதிகம் அமலனாதிபிரான் ஆகும்.
அமலனாதிபிரான் திருப்பதிகத்திலே ஆசிரியத்துறையில் அமைந்த ஒன்பது திருப்பாசுரங்களும் கலிவிருத்தமான ஒரு திருப்பாசுரமுமாகப் பத்துத் திருப்பாசுரங்கள் உள்ளன.
திருப்பாணாழ்வார் காலத்தினை அறுதியிட்டுக் கூறலரிது. தொண்டரடிப் பொடியாழ்வார் திருப்பாசுரங்களில் இவர் செய்திகள் குறிப்பாகக் கூறப்பட்டுள்ளன என்று சிலர் கருதுவர்.
அமலனாதி பிரான் நாலாயிரத் திவ்விய பிரபந்தத்திலே முதலாயிரம் எனும் பிரிவிலே இடம் பெறுவதாகும்.
பாண் பெருமாள் தம்மைத் தூயராக்கி அருள் செய்த நீலமேனியன் நிர்மல செளந்தரியத்தை நெஞ்சு குளிர, வாய்குளிரப் பாதாதிகேசமாகப் பாடியுள்ளார். திருவரங்கப் பெருமானைப் பாடும்போது திருவேங்கடவனையும் நினைவில் வைத்திருக்கிறார். சரணாகதியின் மாண்பினை உணர்த்துவது அமலனாதிபிரான்.
அமலனாதிபிரானுக்குப் பெரியவாச்சான்பிள்ளை, அழகிய மணவாளப் பெருமாணாயனார், வேதாந்த தேசிகர் என்ற வைணவ
74

ஆசாரியர்களின் வியாக்கியானங்களுள. வேதாந்த தேசிகரின் வியாக்கியானம் முனிவாஹன போகம் உள்ளன எனப்படும்.
நாலாயிரத் திவ்விய பிரபந்தத்தை கே. பூரீநிவாஸ் முதலியார் (1861), முடிச்சூர் அப்பாவு முதலியார் (1865), அ. க. கிருஷ்ணமாசார்யர் (2ம் பதிப்பு: 1890), சி. கே. திருவேங்கடா சார்யர் (1898), பூரீ நீவாச வரதாச்சாரியர் (1898), காரப்பங்காடு பூரீ கோபாலாச்சாரியர் (1908), சே. கிருஷ்ணமாசாரியர் (1928), பி. இரத்தினநாயகர் (1938), ரி. சி. பார்த்தசாரதி அய்யங்கார் (1939), ம. பாலசுப்பிரமணிய முதலியார் (1943) முதலியோர் பதிப்பித்துள்ளனர்.
காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியர் திவ்யார்த்த தீபிகையுரையுடன் திவ்விய பிரபந்தத்தைப் பதிப்பித்துள்ளார். 1955 இலே மர்ரே கம்பெனியார் முதலாயிரம்
மூலத்தை நன்முறையிலே பரிசோதித்துப் பதிப்பித்துள்ளனர்.
(பொ.யூ.)
Ꮿj1ᎠIᏤᎧjnᏤ60Ꭷ8Ꭽ
‘அமா' என்பது ஓரிடத்திற் பொருந்தியது, குவிந்தது, அடுத்தது என்று பொருள்படுவது. ஒரு இராசியிற் சூரியன், சந்திரன் இருவரும் சேர்ந்து உறவாகும் வாசியான நாள் அமாவாசி எனப்படும். திதி என்பது சூரியனுக்கும் சந்திரனுக்கும் உள்ள தூரத்தை - பாகையை - குறிப்பிடுவதாகும். சூரியனும் சந்திரனும் ஒரே பாகையில் பூமிக்கு நேரே வரும்போது அமாவாசைத் திதி உண்டாகும்.
சூரியன் ஞானகாரகன், ஆத்மகாரகன் என்பர். ஆண்மை, ஆற்றல், பராக்கிரமம், வீரம், தீரம், தவம் என்பன சூரியனாலேயே தோன்றுகின்றன என்பர். சந்திரன் மனதிற்கு அதிபதி. மகிழ்ச்சி, தெளிந்த அறிவு, உற்சாகம், இன்பம் முதலியவை சந்திரன் உதவியாற்பெறத்தக்கனவாம். இத்தகைய ஆற்றல் மிக்க சூரிய சந்திரர் இருவரும் ஒரு இராசியில் சஞ்சரிக்கும் தினம் புனிதமான நாள்; உயிர்களின் சுகபோகமாகிய மாறுதலை உணர்த்தும் நாள். மேலும், சகல தேவர்களும் அமாவாசையில் அதிபர்கள். அன்று நோன்பு நோற்றல், விரதங் காத்தல் சிறந்தனவும் இறைவனுக்கு மகிழ்ச்சி அளிப்பதும் பெருமை தருவதுமான நற்செயலாகும்.
இத்தகைய அமாவாசையிற் புண்ணிய தீர்த்தத்திலே படிந்து பிதிர் தருப்பணம் செய்து அதிதிகளோடும் சுற்றத்தாரோடும் உணவு உட்கொண்டு விரத நியமத்துடன் இருப்பது தீர்த்த சிரார்த்தம் எனவும் காமிய சிரார்த்தம் எனவும் பெயர் பெறும்.
ஒருவர் இறக்கும்போது தூலசரீரம் (உருவுடம்பு) அழிந்து போகிறது. சூக்குமசரீரம் (அருவுடம்பு) அழிவதில்லை. சூக்கும சரீரத்தேடு செல்லும் உயிர், பூமியிற் புரிந்த வினைகளுக்கு ஏற்ப, இன்பதுன்பங்களைச் சுவர்க்க நரகத்தில் அனுபவிக்கும். இவ்விதம் அனுபவித்துத் தொலையாது எஞ்சி நின்ற பிராரத்துவ வினைகளினாலேயே உயிர் மீண்டும் பூமியில் வந்து பிறக்கின்றது.
இந்துக் கலைக்களஞ்சியம்

Page 121
அபுத்தி பூர்வமாகச் செய்த வினைகள் அந்தியேட்டி, தகனக்கிரியைகளால் மாறும்; புத்தி பூர்வமாகச் செய்தன அனுபவித்தேயாக வேண்டும். பிதிர் செய்வினை தேய்தற் பொருட்டுப் புதல்வர் செய்வது பிதிர் சிரார்த்தம். பிதிர் வழிபாட்டை ஏற்று இறைவன் பிதிரர் எப்பிறப்பிற் புகுந்தனரோ அப்பிறவியிற் செலுத்திப் பயனடைவித்தற் பொருட்டு பிதிர் தேவரைப் படைத்தனர். பிதிர் தேவர்களைப் பூசிக்க அவர்கள் அவ்வழிபாட்டை ஏற்று இறந்தவர்களுக்கு உபகரிப்பர்.
அமாவாசைகளிலே, ஆடிஅமாவாசை விசேடமானது. தை அமாவாசையும் சிறந்தது என்பர். (பொ.யூ.)
அமிர்தகழி
மட்டக்களப்பு நகரமத்தியிலிருந்து 2 மைல் தொலைவில் அமைந்துள்ளது அமிர்தகழி எனும் கிராமம். இக்கிராமத்தில் அமைந்துள்ளதும் கிழக்கு மாகாணத்தில் பிரசித்தி பெற்றதுமான ஆலயம் அமிர்தகழி மாமாங்கேஸ்வரர் ஆலயமாகும்.
ஆடி அமாவாசை என்று சொன்னாலே, மட்டக்களப்புத் தமிழகத்து மக்கள் அனைவர் மனதிலும் அது மாமாங்கேச்சரத் திருத்தலத்தையே முதல் நினைவிற் கொண்டு வரும். அவ்வளவு தூரம் ஆடி அமாவாசைத் தீர்த்தச் சிறப்புக்குப் பேர்போன திருத்தலமாக இப்பகுதியில் விளங்கும் பெருமை இதற்குண்டு. ஈச்சரம் அல்லது ஈச்சுரம் என்று வழங்கும் பெயர் கொண்டு மாமாங்கக் கோவில், சிவன் கோவில் ஆதல் வேண்டும் எனினும், மாமாங்கப் பிள்ளையார் கோவில் என்றே மட்டக்களப்பு மக்கள் வழங்குவர். மூலத்தானத்தில் உள்ள சிவலிங்கமானது, பெரும்பாலும் விநாயகர் அங்கியினுடனே காட்சியளிப்பதால், விநாயகரே மூலத்தானத்தில் எழுந்தருளியிருக்கின்றார் என்று பக்தர்கள் கொள்கிறார்கள்.
மூர்த்தி, தலம் தீர்த்தம் என்ற மூன்றிலுமே பிரசித்தி பெற்று விளங்கும் மிக்க பெருமை வாய்ந்த புண்ணியப் பழம்பதி, மாமாங்கேச்சுரம். இத்திருத்தலத்து மூர்த்தியைப் பற்றியும், தீர்த்தத்தினைப் பற்றியும் தொன்றுதொட்ட ஐதீகமான கதைகள் பல இங்கு வழங்குகின்றன. இவை இரண்டும் இராமாயண காலத்துடன் சம்பந்தப்படுத்தப் பெறுகின்றன. இராவணனை வென்று சீதையைச் சிறைமீட்டு, மீண்டு செல்லும் வழியில் இராமபிரான் இவ்வழியே வந்தார் என்றும், கடல்முகம் சார்ந்த தூய தனியிடமாய், ஆல், அரசு, திருவாத்தி, நெல்லி, கொக்கட்டி முதலிய மரங்களை ஓரிடத்திற்கொண்டு பஞ்சவடி போன்றமைந்து விளங்கி, காடு நிறைந்திருந்த இப்பகுதியில் ஒரு போது இராமர் தங்கினாரென்றும், அவ்வேளை தனது சிவபூசைக்காக, மணலிற் பிசைந்தமைந்த இலிங்கமொன்றை அவர் ஆக்கி, அதற்கு அபிஷேகம் செய்வதற்காக, தனது கோதண்டத்தை நிலத்தில் ஊன்றிப் பதித்துண்டாக்கிய பெரிய பள்ளத்திலிருந்துண்டான அமுத வெள்ளத்திலிருந்து புனித தீர்த்தத்தைப் பெற்றுச் சிவபூசனையினை முறைப்படி நிறைவேற்றினார் என்றும்
இத்துக் கலைக்களஞ்சியம்

கூறப்படுகின்றது. இதற்கிடையில், இராமருடைய பூசனைக்காக விந்திய மலையிலிருந்து இலிங்கமொன்றைக் கொண்டுவரச் சென்ற அனுமான் சிறிதுதாழ்த்து வந்தமையினால், அந்த இலிங்கமும், பூசனை செய்யப் பெற்று, இராமரால் ஆக்கப்பெற்ற திருக்குளத்தில் நடுவண்புதைத்து விடப்பெற்றதென்றும், அந்தப் புனித லிங்கத்தின் மகத்துவத்தினால் தன்னுட் படிவோர்மீது படிந்துள்ள பாவமனைத்தையும் போக்கவல்ல திருவருட் சக்தி இத்திருக்குளத்திற்கு நிரந்தரமாகக் கிடைக்கலாயிற்றென்றும், இத் தீர்த்தத்தின் மகிமையும் சிலாகிக்கப் பெறுகிறது.
அன்றியும் காசியிலிருந்து வந்த ஒரு முனிவர் தம் கமண்டலத்திற் கொண்டு வந்த கங்கை, யமுனை, சரஸ்வதி, கோதாவரி, துங்கபத்திரை, பவானி, காவேரி, தாமிரபரணி, சேது முதலான ஒன்பது மங்கை (பெண்களின் பெயராலமைந்த) தீர்த்தங்களையும் இத் திருக்குளத்திற் கலந்து, நீராடி, இராமலிங்கத்தை வழிபட்டுப் பெரும் பயன் பெற்றார் என்றும், எல்லா மங்கை நதிகளினதும் தீர்த்தம் கலக்கப் பெற்ற திருக்குளமாதலால், மாமங்கைத் தீர்த்தம் என்று இது பெயர் பெற்றதென்று தீர்த்தப் பெயர்க் காரணமும் ஐதீகமாக வழங்குகிறது. முனிவர் கலந்தது'அவிமுத்தி” தீர்த்தம் ஆதலால், தன்னிடை மூழ்குவாரது வினைப்பயனை அறுக்கும் ஆற்றல் பெற்றது இத்திருக்குளம் என்றும் கூறுவர். 'அவிமுத்தி’ என்பது தன்னை அடைந்தவரை விட்டு நீங்காதது என்ற பொருளுடைய வடமொழிச்சொல் தன்னிடை மூழ்கி எழுந்தார்க்கு நற்பயன் அளித்தலில் மாறாத பெருஞ் சிறப்புடையது மாமாங்கத் தீர்த்தம்.
இத்தீர்த்தச் சிறப்பு, ஆடகசவுந்தரி என்ற இளவரசியின் வரலாற்றினோடும், இணைந்ததாகத் தெரிகின்றது. மூன்று முலைகளையுடையவரும், நூற்றுப்பதினேழு ஆண்டு வரை கன்னிப்பருவம் எய்தாமல், இளம் பெண்ணாகவே இருந்தவருமான இப் பெண்ணரசி மட்டக்களப்பின் தென்கோடியிலிருந்த உன்னரசுகிரியிலிருந்து மட்டக்களப்பு முதலான கிழக்கிலங்கையின் பல இடங்களுக்கு அதிபதியாக ஆண்டு வந்தாளென்றும், இத்திருக்குளத்தின் மகிமையைக் கேள்வியுற்ற இம் மாதரசி தன் பரிவாரங்களுடன் இத் தலத்துக்கு வந்து, இத் திருக்குளத்தில் பயபக்தியோடு, மூழ்கி எழுந்ததும், மூன்றாவது முலைத்தடம் நீங்கப் பெற்றதோடு கன்னித்தன்மையும், பேரழகும், மேலும் இளமையும் அடையப் பெற்றாளென்றும் அதனாலேதான் இத் திருக்குளம் அவளால் மாமங்கை நதி எனப் பெயர் சூட்டப் பெற்றது என்றும் கூறுவர். அவளைப் பின்னர் குளக்கோட்டு மகாராசா என்ற தமிழ் மன்னன் மணந்து கொண்டான் என்றும், குளக்கோட்டு மன்னனன்றி, மகாசேனன் என்ற பெயருடைய சிங்கள மன்னனே அவளை மணஞ் செய்தவனென்றும் கூறுவர். இச் செய்தி மட்டக்களப்பு மான்மியத்திலும் கூறப்படுகின்றது. விட்டுணு மதத்தில் அதிக பற்றுடையவளும், இராம மந்திரவலிமையுடையவளுமாகிய ஆடகசவுந்தரிக்கு ஒரு நாள் கனவிடை இராமன் தோன்றி, இத்திருக்குளத்தைப் பற்றிப் பின்வருமாறு கூறியதாக மட்டக்களப்பு மான்மியம் தெரிவிக்கின்றது. இராவணனைக்
75
ܐܔ S. 您 S.
与

Page 122
கொன்றபின் தானும், சீதையும் அயோத்திக்குச் செல்லும் வழியில் அனுமானை ஏவிக் காசியிலிருந்து அவிமுத்தி தீர்த்தமெடுத்து ஒரு வாவியில் கலந்து இருவரும் ஸ்நானம் செய்து பாவத்தை நீக்கி அயோத்திக்குப் போய் வாழுங்காலம், குசன் பிறந்து வால்மீகரால் உபதேசம் அளிப்பித்து (சீதையாகிய நீ) பரமபதம் அடைந்தாய். அதேபோல் இச் செனனமும் எடுத்தாய். இப்போது காசி அவிமுத்தி நீர் கலந்த நதி உன்னுடைய ஆசிரமத்திலிருக்கிறது. அந்த நதியை அறிய வேண்டில் பசுஞ்சேறாயிருக்கும், குஷ்டரோகிகள் ஸ்நானம் செய்தாலும் உடனே நோய் தீர்ந்து போகும் என்று கூறி மறைந்தனர் அரசியும் விழித்து அந்நதியை ஆராய்ந்து கண்டறிந்து, பார்க்குப் போது, காசி அவிமுத்தி நதிகலந்ததெனவறிந்து மாமங்கை நதி என நாமஞ்சாற்றி ஸ்நானம் செய்து, ஆண்டு தோறும் தீர்த்தமெடுத்துக் கொண்டு, திருக்கோயில் சமுத்திரத்தில் விட்டுக்கலந்து ஆடித்திங்கள் அமாவாசையன்று ஸ்நானம் செய்து கொண்டாடி வந்தனர். தொடர்ந்து வைதூலியமென்னும் சைவ சமயத்தவனான மகாசேனன் என்ற மன்னன் ஆடகசவுந்தரியை மணம் செய்த வரலாறு மட்டக்களப்பு மான்மியத்தில் விரிவாகச் கூறப்படுகிறது. மகாவம்சத்தின் கடைசி மன்னனான மகாசேனன் வைதூலிய மதத்தவனாக இருந்தமை வரலாற்று உண்மை. அவனது ஆட்சிக்காலம் கி. பி. 274-301 ஆகும் ஆடகசவுந்தரியின் காலம் கலியப்தம் 3180க்கும் 3370க்குப் இடைப்பட்டதாக (கி.பி. 78-268) மட்டக்களப்பு மான்மியத்தாலறி கின்றோம். ஒரளவு இக்காலங்களில் ஒற்றுமை இருப்பதை அறியலாம். எனவே ஆடகசவுந்தரி வாழ்ந்த 2ஆம், 3ஆம் நூற்றாண்டு காலத்திலே மாமாங்கத் திருக்குளம் சீரும் சிறப்புப் பேரும் புகழுமுடையதாய் இருந்திருக்கின்றதென்று, நாப் ஒருவாறு துணிந்து கூறலாகும்.
ஆடகசவுந்தரி என்று மட்டக்களப்பிற் புகழப்படும் பேரழகியான இளவரசி, “கிழக்கிலங்கையை ஆண்ட மும்முலை அரக்கி” என்று வேறு பகுதிகளிற் குறிப்பிடப் பெறுகிறாள் ஆடகசவுந்தரியின் அமங்கலமான மூன்றாவது முலைத்தடப் மறைந்தமை மாருதப்புரவீகவல்லி, கீரிமலைத் தீர்த்தத்தில் மூழ்கிக் குதிரைமுகம் நீங்கப்பெற்ற செய்தியினையும், இராமா மாமாங்கத்தில் இலிங்கத்தை அமைத்து வழிபட்டார் என்பது இராமேஸ்வரத்தில் இராமர் வழிபாடாற்றிய செய்தியினையுட் முறையே ஒத்திருப்பதைக் காணலாம்.
மாமாங்கத் தீர்த்தக்குளம், ஆதியில் அதனை அடுத்திருந்த சிறு தோணாக்களுடன் (நெய்தல் நில நீர் நிலைகளுடன் தொடர்பு கொண்டு மாரி காலத்தில் நதிபோன்று கடலுடன் கலப்பதனாற் போலும் மாமங்கை நதி என்றே வழங்கப்பெற்றது மாமங்கை நதி, அனுமார் தீர்த்தம், காக்கைத் தீர்த்தம், பழையாறு நற்றண்ணிர்மடு, பாலமீன்மடு, மட்டிக்களியோடையெனப்படு கிண்ணையடித்தோணா என்ற ஏழுதீர்த்தங்கள் மாமாங்க திருத்தலத்தில் இருந்திருக்கின்றன. இவற்றில் சில காலப்போக்கில் தூர்ந்து மறைந்து போயிருக்கலாம் இலங்கையை எரியூட்டிவந்த தனது வாலை அனுமான்
76

தோய்த்துச் சுகம் பெற்றானாதலின், மாமாங்கத் திருக்குளத்தின் மேற்குப் புறமாகவுள்ள ஒரு பகுதி அநுமார் தீர்த்தம் என்று வழங்கப்படுகிறதென்பர். மாமாங்கத்திருக்குளம் நிறைந்த சந்தனச்சேறு கொண்டது. மெல்லிய பசுமை நிறமான இச்சேறு, உடம்பின் வெளிப்புற நோய்களனைத்தையும் மாற்றிவிடும் சிறப்புடையதாதலால் அமிர்தச்சேறு என்றும், பசும்சந்தனம்போற் குளிர்மையாயிருத்தலால் சந்தனச்சேறு என்றும் வழங்கப்படும், தீர்த்தக் குளத்தை அடுத்துள்ள சிறிய நீர் நிலைகளான தோணாக்களின் அடியிலும், அயலில் உள்ள ஊர்க்கிணறுகளின் அடியிலும் இந்த அமிர்தச் சேற்றின்படிவு உள்ள காரணத்தினாற் போலும், மாமாங்கத்திருத்தலத்தை அடுத்துள்ள ஊரும் அமிர்தகழி என்று பெயர் பெற்றுள்ளது.
"பட்டினப்பாங்கர்ப் பரந்த தோனாமுகமாய் ஐங்கரன் கோவில் அமிர்தகழிக்கணித்தாய்”
என்று யாழ்நூலுள் இப்பெயரை விபுலாநந்த அடிகளாரும் எடுத்தாள்கின்றார்.
ஆடி அமாவாசைத் தினத்தன்று திருக்கோவில் சித்திரவேலாயுத சுவாமி கோவிலைச் சார்ந்துள்ள கடலில் தீர்த்தம் ஆடுதலும், கீரிமலைத் தீர்த்தத்தில் ஆடுதல் போன்று விசேடம் என்பர். ஆடகசவுந்தரி காலத்திலிருந்தே, மாமாங்கத் திருக்குளத்திலிருந்து தீர்த்தம் எடுத்துக்கொண்டு போய்த், திருக்கோவிற் கடலிற் கலந்தே ஆடி அமாவாசைத் தீர்த்தமாடி வந்த வழக்கம், அண்மைக்காலத்திலிருந்து கைவிடப்பட்டுள்ளது. புரட்டாதி மாதத்து, மஹாளய பட்சம் முழுவதும் பிதிரர் கடன் கழிக்க உகந்த காலம் என்பர். அந்த முழுப்பலனையும் ஆடி அமாவாசையன்று விரதமிருந்து மாமாங்கேசுவரத் தீர்த்தத்தில் நீராடினாலே பெறலாகும் என்றும், இறந்துபோனவர்களின் சாதக ஒலைகளை ஆடி அமாவாசையன்று மாமாங்கக் குளத்திலே கிழித்துப்போட்டு விடுவதினால், அன்னார் பரகதி பெறுவர் என்றும் மட்டக்களப்பில் பெரிதும் நம்பப்படுகிறது. இவை மட்டுமன்றி, சந்நியாசிகள் துறவு பூணும் போது இறுதியாகத் தமக்குத் தாமே இறுதிக்கடன்களைச் செய்வது போன்ற பெரும்பயனை மாமாங்கத் தீர்த்தத்தில் ஆடி அமாவாசையின் போது நீராடுவதனால் பிற்சந்ததி பெறாதோரும் மற்றும் எவரும் கூடத் தமக்குத் தாமே பெற்றுக் கொள்ளலாம் என்றும், இப்பகுதியில் ஒரு பெரும் நம்பிக்கை உண்டு, ஆறு அல்லது பன்னிரண்டு ஆண்டுகள் தொடர்ந்து அவ்வாறு நீராடுவோர் வேண்டிய சித்திகளையும் பெறுவர் என்பர். இவ்வாறு இம்மைக்கும் மறுமைக்கும் நற்பயன் அளிக்கவல்ல திருக்குளம் இப்பகுதியில் உள்ள சைவ சமயிகளால் மட்டுமன்றி ஏனைய சமயத்தோராலும், மிகப் பரிசுத்தமானதொன்றாகக் கருதப்பட்டு வருகின்றது.
இத்தலத்திலுள்ள இலிங்கம் இராமபிரானால் ஆக்கப் பெற்றதென்ற ஐதீகத்தை அறிந்தோம். அதனையடுத்து நீண்டகால இடைவெளிக்குள், அந்த இலிங்கம் மரவேர்களாலும்,
பற்றைகளாலும் மறைக்கப்பட்டுப் போயிருத்தல் வேண்டும்.
இந்துக் கலைக்களஞ்சியர்

Page 123
ஒருமுறை காடுகள் நிறைந்த அப்பகுதியில் வாழ்ந்த வேடனொருவன், வேட்டையாடிக் களைப்படைந்து, ஒரு ஆலமரத்தடியில் தனது கோடாரி, வில், அம்பு முதலானவற்றை வைத்து விட்டு, சிறிது துயின்றானென்றும், அப்போது அவன் கனவில் இந்த இலிங்கம்பற்றித் தரிசனம் ஒன்று பெற்றான் என்றும் கூறுவர். தான் கண்ட கனவுப்படி, வில்லைச் சார்த்தி வைத்திருந்த அந்த முள்ளாலமரத்தடியைச் சற்றுகிளறி, அதன் அடி விழுதுகளையும் வெட்டிப்பார்த்த பொழுது குறித்த இலிங்கம் காணப்பட்டதென்பதும், உடனே தனது இனத்தவர்களையும் அழைத்துவந்து காட்டி, சிறு கோவிலொன்றமைத்து அந்த “முள்ளாலிங்கப்” பெருமானுக்குத் தொடர்ந்து பூசனையாற்றி வந்தானென்பதும் கர்ணபரம்பரைக் கதைகள். இப்பகுதியில் வேடர்கள் வாழ்ந்துள்ளார்கள் என்பதற்குச் சான்றாக அவர்களுக்கே உரியதான “குமாரத்தன்” (முருகன்) கோவிலொன்று மாமாங்கத்தின் தென்மேற்கே காட்டுள், இன்னமும் இருக்கக்காணலாம். வேடர் வசத்தில் இருந்த, இலிங்கமும், அதனைச்சார்ந்த இடமும், மக்கட் குடியேற்றம் பெற்றபோது மற்றையோர் கைக்கு மாறியிருக்கின்றன. மாமாங்ககேச்சுரர் கோவில் இன்று இருக்கும் எல்லைக்குட்பட்ட பகுதி மாமாங்கம் என்ற பெயருடைய ஊராகவே அழைக்கப் படுகின்றது. எனினும் மாமாங்கத்தைச் சார்ந்த மக்கட்குடியிருப்பு ஊர்ப்பகுதியின் பெயர் அமிர்தகழி என்பதேயாகும்.
மட்டக்களப்பு நகர மத்தியிலிருந்து வடக்கே சுமார் இரண்டு மைல் தூரத்தில் மாநகரசபை எல்லையினுள்ளேயே அமிர்தகழி என்ற ஊரில், இத்திருத்தலம் இன்று இருப்பினும், முன்னைய வழக்கப்படி, மட்டக்களப்பு நகரமானது புளியந்தீவு, கோட்டைமுனை என்ற இருபெரும் பகுதிகளாகவே வழங்கப்பெற்றிருந்தமையினால், மாமாங்கேச்சுரம், கோட்டைமுனைக்குரிய அரச நிருவாகப் பகுதியையே சேர்ந்ததாகக் கொள்ளப் பெற்றிருக்கின்றது. இதனால், பொது மக்களால், இவ்வாலயம் கோட்டை முனையாருக்கும் அமிர்தகழியாருக்குமே சேர்ந்ததென்று கருதப்பட்டிருக்கின்றது. இன்றும் கோவிற் தலைமை நிர்வாகிகளான வண்ணக்கமார் இருவரும் முறையே கோட்டைமுனை வேளாளரிலிருந்து ஒருவரும், அமிர்தகழிக் குருகுல வம்சத்தாரிலிருந்து ஒருவருமாகத் தெரிவு செய்யப் பெற்று வருதலைக் காண்கின்றோம். காலப்போக்கில் இவர்களின் சந்ததியார் பரந்து குடியேறி வாழ்ந்த வேறு சில ஊர்களிலிருந்தும், உரிமை பூண்டோர் இந்நிருவாகத் தெரிவின்போது கலந்து கொள்கிறார்களென்றும் கூறப்படுகின்றது.
மட்டக்களப்புக் கோட்டைக்கு எதிர்ப்புறமாக இருந்த முனையாதலால், அவ்வாறு குறிப்பிடப்பெற்றதேயன்றி, கோட்டைமுனை என்ற பெயரால் ஒரு ஊர், முன் ஒரு போதும், இருந்ததாகத் தெரியவில்லை. வெட்டுக்காடு, தாண்டவன்வெளி, தாமரைக்கேணி, மோரிசாப்பிட்டி, புளியடிக்குடா, சின்ன உப்போடை, சீலாமுனை என்ற ஊர்களையடக்கிய பகுதியே கோட்டைமுனை என்று இப்போது வழங்கப்பெறுகின்ற தென்பதை இங்கு நாம் அறிந்து கொள்ளுதல் நன்று. இவற்றுள், தாமரைக் கேணியைச் சார்ந்த பகுதியே முதலிற் குடியேற்றம் பெற்றதாகத் தெரிகின்றது.
இந்துக் கலைக்களஞ்சியம்

மாமாங்கேசுரர் கோவில் மட்டுநகரைச் சார்ந்துள்ளதே எனினும் மிக்க அமைதியான சூழ்நிலையில், தென்னை, ஆல், அரசு, வேம்பு, குருந்து, கொக்கட்டி, முதலான மரங்கள் நிறைந்து நிழல் செய்யும் குளிர்ந்த நெய்தல் நிலப்பரப்பில் அமைந்திருக்கின்றது. இதன் தலவிருட்சம் போன்று குருந்தமரமொன்று, பல்லாண்டுகளாகியும் ஒரேபடித்தாகக் கோவிலின் நேர்வாசலில் அருள் நிழல் பரப்பிக்கொண்டு நிற்கின்றது. கோவிலுக்கும் அதன் வடபுறத்தேயுள்ள அமிர்தகழி என்ற ஊர்மனைக்கும் இடையில் அமைந்திருக்கின்றது பளிக்குபோற் தெளிந்த நீர்ப்பரப்பினையுடைய மாமாங்கக்குளம், எந்தக்கொடிய வெயில் வேளையிலும், இக்குளத்திற்படிந்துவரும் தண்ணென்ற பூங்காற்றானது, சூழலையும் அங்கு வரும் அடியார்களையும், குளிர்மையும், அமைதியுமுறச் செய்து நிறைந்த இன்பத்தை எப்போதும் அளித்துக்கொண்டிருக்கும். இவைகளால், மலமயக்கமற்ற மனவளம், நோயில்லாத உடல்வளம் முதலானவற்றை வேண்டும் அடியார்க்கெல்லாம் புகலிடம் தந்து மாமாங்கேச்சுரம் ஆன்மவளம் சுரந்து நிற்கும் காமதேனுவாக இந்நாட்டில் விளங்குகின்றது.
மட்டக்களப்பிலுள்ள பொதுக்கோவில்களில், பல ஊர்களி லுமிருந்து ஏராளமானோர், ஒருமித்துக்கூடும் மிகப் பெரிய தலமாக மாமாங்கப் பிள்ளையார் கோவில் பிரசித்தி பெற்றிருந்த போதிலும், மட்டக்களப்பின் ஏனைய பழங்கோவிலாகப் பிரகடனம் செய்திருக்கப் பெறவில்லை. மட்டக்களப்பினை ஆண்ட பழந்தமிழ்ச் சிற்றரசர்கள் யாவரும், பண்டைய மட்டக்களப்புத் தேசமாக, மண்முனைக்குத் தென்பால், பாணமை வரைக்குமிருந்த பகுதியையே பெரும்பாலும் ஆண்டிருக்கிறார்கள். சிலகாலங்களில் தோப்பாவை (பொலநறுவையின் ஒருபகுதி) வரை அன்னார் ஆட்சி செலுத்தியிருப்பினும், மக்கட் குடியேற்றமற்று நிலவளச் சிறப்புமில்லாது காடு மண்டியதாய் ஒரு புறமாய்க் கிடந்த இப்பகுதியும், சிறிய கோவிலும் மட்டக்களப்புப் பொது மக்களின் தொடர்புக்கு உட்படாது ஒதுங்கியிருந்திருக்க வேண்டும். இதனால் மட்டக்களப்பிலுள்ள திருப்படைக் கோவில்களுக்கு இருப்பது போன்று, மாமாங்கேச்சுரர் கோவிலுக்கும் உரிய வரலாறு, முதலியவற்றைப் பற்றித் திட்டமான குறிப்புகளைப் பெறத்தக்க கல்வெட்டுக்களோ பட்டயங்களோ அன்றி வேறு சாசனங்களோ கிடைக்கக்கூடியதாயில்லை. மூலத்தானத்தில் உள்ள இலிங்கம் மட்டும், நிலைபெயர்க்க முடியாததாய்க் “கைபுனைந்தியற்றாக் கவின்பெறு” சுயம்பு லிங்கமே என்பதை அண்மையில் நடந்த மூலத்தானத் திருத்தம், கும்பாபிஷேக நிகழ்ச்சிகள் என்பவற்றின் போதும் நிரூபித்து விளங்குகின்றது. சிவலிங்கத்துக்கான வழிபாட்டு முறைகள், பிள்ளையாருக்குரிய முறையில் என்று மாற்றம் பெற்றன. அம் மாற்றத்துக்கான புறக்காரணம் யாது என்பனவும் தெளிவாகப் புலப்படவில்லை. மட்டக்களப்புத் துறைமுகத்துக்கு அண்மையில் இருந்தும், இந் நாட்டுட்புகுந்த போத்துக்கீசரோ, ஒல்லாந்தரோ, அன்றி ஆங்கிலேயரோ இக் கோவிலைக் கொள்ளையடிக்கும் நோக்கினோடு எட்டித்தானும் பார்த்ததாகத் தெரியவில்லை. மாமாங்கேச்சுரரது திருவருட் சிறப்பினால், அழிவு நோக்குடன் வந்த அன்னியரது கண்ணுக்கும், காதுக்கும் எட்டாத பெருமான் மாமாங்கேச்சுரர் என்று பக்தியோடு இச்சிறப்பை அன்பர் கூறுவர்.
77

Page 124
மட்டக்களப்பின் சிவசமயப் பொதுமைச் சிறப்பின்படி பிள்ளையாரும், சிவபெருமானும் இருவேறு தெய்வங்களல்லர் என்பதையும், “ஓம்’ எனப்படும் பிரணவமே மூல ஒலி என்றும், விநாயகப் பெருமான் அப் பிரணவமே வடிவானவர் என்றும் கூறுவர். எனவே அனைத்துக்கும் மூலமான பரம்பொருளாகிய சிவமும், பிரணவமும் வேறுவேறானவையல்ல என்ற தத்துவத்தைப் போதிப்பதே விநாயக அங்கியுடன் முள்ளாலிங்கர் அளிக்கும் ஒளிவடிவின் உட்பொருள் என்று ஆன்றோர் கூறுவர். திருவிழாக்களின்போது சிவனும், உமையம்மனும் விநாயகப் பெருமானும் ஒருமித்து வருவதையும், அதே கோலத்துடன் இடப வாகனத்தில் ஊர்ந்த படியே தீர்த்தமாட எடுத்துச் செல்லப்பெறுவர் என்பதையும் இங்கு நாம் நோக்குதல் வேண்டும்.
ஆடி அமாவாசைக்குப் பத்து நாட்களுக்கு முன்னர் கொடியேற்றமும் பின் ஒன்பது நாட் திருவிழாவும் நடந்து அமாவாசைத் தீர்த்தத்துடன் நிறைவுறுதல் ஆண்டுதோறும் இத்தலத்தில் தற்காலம் நடைபெறும் முக்கிய நிகழ்ச்சியாகும். அடுத்த பெருவிழா, விநாயக சஷ்டி விரதமும் கயமுகாசுரன் போர் நிகழ்ச்சியுமாகும். கந்தர் சஷ்டி விரதம், அதற்கான கந்தபுராணப் படிப்பு, என்பனவும் இக்கோவிலில் தவறாது நடைபெறுவன. சித்திரை வருடப்பூசை, தைப்பொங்கல் விழா, தைப்பூச விழா என்பனவும் சிறப்பாக நடைபெறும் விழாக்களாம். எனினும் தைப்பூசத்தன்று நவக்கிரகக் கோவிலில் நவக்கிரகங்களுக்குத் தனித்தனி அபிஷேகமும் செய்து விசேட பூசையொன்றும் நடப்பது, மற்றைய கோவில்களில் நடைபெறாதவொரு தனி நிகழ்ச்சியாகும். கோவிற் பூசனைகளை பிராமணக் குருக்களே வேதாகம முறைப்படி தினம் மூன்று வேளையும் ஆற்றி வருகின்றனர்.
எமக்குக்கிடைத்துள்ள குறிப்புக்களின்படி 1880ஆம் ஆண்டில்தான், தற்போதுள்ள அமைப்பினை மாமாங்கக் கோவில் பெற்று, முதலாவது கும்பாபிஷேகமும் நடைபெற்றிருக்கின்றது. அக்கால முதல், கொடியேற்றத்தினை அடுத்து ஐந்து திருவிழாக்களும், தீர்த்தமும் நடைபெறும் ஒழுங்கு இருந்துள்ளது. அப்போது நடைபெற்ற கோவில் கட்டிட வேலைகளுக்கு வேண்டிய செங்கற்களையும், சிரமதான வேலையினையும் அவ்வாறு வேலை செய்வோர்க்கான உணவு வசதிகள் முதலியவற்றையும், கொத்தியாவலை, கன்னங்குடா, ஊறணி, செங்கலடி முதலான கிராமங்களில் வாழ்ந்த மக்கள் மனமுவந்தளித்துள்ளனர், என்றும் கூறப்படுகின்றது. திருவிழாக்களை மேலும் நடத்துதற்குச் சேர்ந்தோரின் தொகை முதலானவற்றை ஒட்டித் திருவிழாக்கள் பத்து ஆக அதிகரிக்கப் பெற்றுள்ளன. எனினும் இந்த மாற்றம் எப்போதிருந்து இடம்பெற்றதென்பது முதலியனபற்றித் தெளிவாகத் தெரியவில்லை.
இவ்வாறு வளர்ந்து கொண்டேவரும், மாமாங்ககேச்சுரத்தின் மீது முன்பிருந்தே புலவர் பலர், பல பாடல்களை அருளியுள்ளன. வித்துவான் சரவணமுத்தன் அவர்களால் மாமாங்சேச்சுரர்
78

கீர்த்தனை என்ற நூலும், மாமாங்கர் பதிகம் என்ற நூலும் பாடப்பெற்றுள்ளன. இயல், இசை, நாடகம் என்ற மூன்றிலும் வல்லவரான சரவணமுத்தனாரது இசைவளம் இழையோடிய பாடல்களாளமைந்த இந்நூற் பாடல்கள், படிப்போரது கல் மனத்தையும் பக்தியிற் கரைந்துவிடவல்லன. மாமாங்கர் ஊஞ்சல், மாமாங்கர் காவடிச்சிந்து என்ற வேறு இரு நூல்களும் இத்தலத்தின் மீது எழுந்துள்ளன. மாமாங்ககேச்சுரர்மீது பித்துக் கொண்டவர் போன்ற பெரும் பக்தரான காலஞ்சென்ற, பண்டிதர் செ. பூபாலபிள்ளை அவர்கள், மாமாங்கேசுவரர் பதிகம் என்றும், பக்திநலம் சொட்டும் விருத்தப் பாக்களாளமைந்த ஒரு நூலைப் பாடியுள்ளார். புலவர்மணி, பெரியதம்பிப்பிள்ளை அவர்கள் அளித்துள்ள மாமாங்கேச்சுரர் பதிகமும், மண்டூர் பூ சின்னையா ஆசிரியர் அவர்கள் யாத்துள்ள மாமாங்கப் பிள்ளையார் விருத்தம் என்ற பக்திப் பதிக நூலும், மாமாங்கேச்சுரப் பெருமானது திருவருட் பெருக்கினை, நன்கு விளக்குவன. (வி.சி.க.)
அமிர்தநாத உபநிடதம்
கிருஷ்ண யசுர்வேதத்தைச் சேர்ந்த அமிர்தநாத உபநிடதம், முக்திகோபநிடதம் கூறும் 108 உபநிடதங்களில் ஒன்றாகும்; புனிதமான நாத ஒலியாகிய அமிர்தம் பற்றிக் கூறுவது; செய்யுள் நடையிலானது.
தூயமனம் உடையோர் வாழ்வின் முடிவினையும் நோக்கத்தினையும் சிரவணம், மனனம் முதலியவற்றின் மூலம் அடைவர் என்பதையும் தூய்மையற்ற மனத்தினர் உலகியலிலிருந்து விடுதலைபெற, பிரமத்தின் தியானமும் சதாங்கயோகப் பயிற்சியும் அவசியம் என்பதையும் இவ்வுபநிடதம் விளக்குகின்றது. (பொ.யூ.)
அமிர்தபிந்து உபநிடதம்
கிருஷ்ண யசுர் வேதத்தைச் சேர்ந்த அமிர்தபிந்து உபநிடதம் என்பது முக்திகோபநிடதம் கூறும் சங்கதத்திலேயுள்ள 108 உபநிடதங்களிலே ஒன்றாகும். 'அமிர்தத்துளி எனப் பொருள் தரும் அமிர்தபிந்து பெயருக்கேற்பக் கனமான விடயத்தினை நேராகச் செய்யுளில் உணர்த்தும் சிறப்புடையது. அளவிலே சிறியதாயினும் நித்திய வாழ்வின் ஊற்றிலிருந்து சம்சாரத்தின் பலவிதமான தீமைகளை நீக்கவல்ல அல்லது பிறவிச் சக்கரத்தினைச் செயலறச் செய்யும் ஆற்றல்மிக்க ஒரு துளியாக அமைந்துள்ளது. இது வாசுதேவ உபநிடதம்.
அமிர்தபிந்துவின் பாடமும் பிரமபிந்து உபநிடதத்தின் பாடமும் ஒன்றாகவே காணப்படுகின்றது; சொல்லாட்சிகள் மட்டும் ஆங்காங்கே மாறுபடுகின்றது.
அமிர்தபிந்து உபநிடதம் மன அடக்கத்திற்கு முக்கியத்துவம் அளிக்கின்றது. மனமே தளைகளுக்குக் காரணம். மன அடக்கத்தின் மூலம் விடுதலையும் பிரமத்தை அறியும் ஆற்றலும்
இந்துக் கலைக்களஞ்சியம்

Page 125
பெறமுடியும், ஆத்மாவின் உண்மையான இயல்பினை விளக்கி அது பிரம்மம் என்பதை உபநிடதம் உணர்த்துகின்றது. பிரமத்தின் பகுதிகள் ஜீவன்கள் என்ற அத்வைத விளக்கமாக அமிர்தபிந்து உபநிடதம் அமைகின்றது. (பொ.பூ)
அமிர்தரஞ்சனீரஹஸ்யங்கள்
வேதாந்த தேசிகரின் மணிப்பிரவாள ரஹஸ்ய கிரந்தங்கள் வைணவ மரபுப்படி மூன்றாக வகுக்கப் பெற்றுள்ளன. அவ் வகுப்புக்களில் ஒன்றே அமிர்தரஞ்சனரீரஹஸ்யங்கள். அமிர்தத்தைப் போன்று சகலரையும் மகிழ்விப்பனவாக அவை கருதப்படுவன. இத் தொகுப்பில் இடம்பெறும் நூல்கள் மேல்வருவன:
f இரகஸ்யசந்தேசம், 2 இரகஸ்ய சந்தேச விவரணம் 3. இரகஸ்யத்திரயகுளகம், 4. இரகஸ்ய நவநீதம் 5. இரகஸ்ய பதவி, 6. இரகஸ்ய மாத்ருகை, 7 இரகஸ்யரத்நாவலி, 8. இரகஸ்ய ரத்நாவலி ஹிருதயம் 9. சம்பிரதாய பரிசுத்தி 10. சாரதீபம், 11 தத்வசந்தேகம், 12 தத்வத்திரய குளகம் 13 தத்வநவநீதம், 14. தத்வப் பதவி 15. தத்வ மாத்ருகை 16. தத்வரத்நாவலி,
17 தத்வரத்நாவலிப்ரதிபாத்ய சங்கிரகம்
இவற்றிலே முதல் எட்டு நூல்களும் இரகஸியத்திரயம் பற்றியவை. இரகஸ்ய சந்தேகத்தின் ஒரு வசனத்துடைய பொருளை விளக்குவது இரகஸ்ய சந்தேச விவரணம். சம்பிரதாய பரிசுத்தி குரு சிஷ்ய பரம்பரை பற்றியதாகும். சாரதீபம் மறைந்து விட்டது. ஏனையவை தத்வத்திரயம் பற்றியவையாம்; தத்வரத் நாவலீ ப்ரதிபாத்ய சங்கிரகம் என்பது தத்வரத் நாவலீ விளக்கமாகும்.
வடகலை வைணவ ஆசாரியர் வேதாந்த தேசிகர் சகம் 191 இலே (கி. பி. 1269) அவதரித்து நூறு வருடங்களுக்கு மேல் வாழ்ந்தவர். வேங்கடநாதன் என்ற பெயருடன் அனந்தசூரியாரின் புதல்வராகத் தூப்புல் எனும் ஊரிலே தோன்றி திருவரங்கத்திற் பெரும்புகழ் பெற்ற தேசிகர், நூற்றுக்கு மேற்பட்ட நூல்களை வட தென் மொழிகளிலே எழுதியவர். (பொ.யூ.)
அமிர்தலிங்கத் தம்பிரான்
திருவண்ணாமலை யாதீனத்தைச் சேர்ந்த தம்பிரான் சுவாமிகள்; திருமயிலைத் தலபுராணம் பாடியவர்; இதனைக்
இந்துக் கலைக்களஞ்சியம்

காஞ்சிபுரம் கோ. சபாபதி முதலியார் உரையுடன் புரசை அட்டாவதானம் சபாபதி முதலியார் சென்னையிலே 1893 இலே பதிப்பித்துள்ளார். (பொ.யூ.)
அமிர்தலிங்கம்பிள்ளை
ராவ்பகதூர் சி. வை. தாமோதரம்பிள்ளையின் புதல்வர்;
பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியிலே வாழ்ந்து மறைந்தவர்; சென்னை கிறித்தவ கல்லூரியிற் கற்றவர்.
சாலை விநாயகர் பிள்ளைத் தமிழ், திருத்தணிகை முருகக் கடவுள் பேரிற் பாடிய தணிகேசர் மாலை (1881), தில்லையந்தாதி எனும் பிரபந்தங்களையும் தனிப்பாடல்களையும் பாடியவர்
வடதிருமுல்லைவாயில் மும்மணிக் கோவையின் அகவல்களை நல்லூர் சி. கைலாசபிள்ளையும், வெண் பாக்களை சி. தா. அமிர்தலிங்கம்பிள்ளையும், கலித்துறைகளை க. வ. திருவேங்கட நாயுடுவும் பாடியுள்ளனர். இப்பிரபந்தம் சென்னை ஐரிஷ் அச்சுக் கூடத்திற் பிலவ வருடம் சித்திரை மாதம் (1901) அச்சிடப் பெற்றுள்ளது. (பொ.யூ.)
அமிர்தாஸ்வாதினி ரகஸ்யங்கள்
வடகலை வைணவ ஆசாரியர் வேதாந்த தேசிகர் சகம் 191 இலே (கி.பி.1269) காஞ்சிபுரத்தையடுத்த தூப்புல் எனும் ஊரிலே அனந்த சூரியாரின் புதல்வராக அவதரித்துத் திருவரங்கத்திலே பேரும் புகழும் எய்தியவர். வேங்கடநாதன் என்ற இயற்பெயரையுடைய தேசிகர், கிடாம்பி அப்பிள்ளாரின் மருகரும் சீடருமாவார். அவர் வட தென் மொழிகளிலே நூற்றுக்கு மேற்பட்ட நூல்களை எழுதினார்.
அவருடைய மணிப்பிரவாள ரகஸ்ய கிரந்தங்கள் வைணவ மரபுப்படி மூன்றாக வகுக்கப் பெற்றுள்ளன. அவ்வகுப்பில் ஒன்றே அமிர்தாஸ்வாதினி ரகஸ்யங்கள். அமிர்தத்தின் சுவையுடையவை இக்கிரகந்தங்களாம். இத் தொகுப்பில் இடம் பெறுவன :
அஞ்சலி வைபவம் அபயபிரதானஸாரம் இரகஸ்ய சிகாமணி உபகார சாரசங்கிரகம் சாரசங்கிரகம்
FITUTSFATITZió தத்வசிகாமணி பிரதான சதகம் மதுரகவிஹறிருதயம் விரோத பரிகாரம்
f0.
அஞ்சலி வைபவம் பூரீயமுனாசாரியரின் ஸ்தோத்திர ரத்தினத்தின் 28 ஆம் செய்யுளின் உரை, இச்செய்யுளிலே யமுனாசாரியர் ஒருவர் தெரிந்தோ தெரியாமலோ கைகளைக்
79

Page 126
கூப்பி இறைவனைப் பணிந்தால் அவனிடமிருந்து சகல நன்மைகளையும் பெறுவார் என்பர். அபய பிரதான ஸாரம் சரணாகதியை விளக்குவதாகும். இரகஸ்ய சிகாமணி வராகசுலோகத்தின் விளக்கமாகும். உபகார சங்கிரகத்தின் நான்கு அதிகாரங்களிலும் இறைவன் நமக்குச் செய்யும் உதவி ஆராயப்படுகின்றது. சாரசங்கிரகம் பிரமேயம், பிரமாணம், விவேகம் என்பனவற்றை விளக்குவதாகும். இரகஸ்யத்திரயம் பற்றிய சாரசாரம் பிரபத்தி பற்றி ஆராய்கின்றது. தத்வசிகாமணியும் மதுரகவி ஹிருதயமும் மறைந்து விட்டன. வைணவமரபில் முக்கியமான ஒரு அமிசம் பிரதான சதகத்தின் ஒவ்வொரு நூறு வரிகளிலும் ஆராயப்பட்டுள்ளது. விசிஷ்டாத்வைதத்தில் விரோதம் போலத் தோன்றும் விரோத மல்லாதனவற்றை விளக்குவது விரோத பரிகாரம் (பொ.யூ.)
அமுதனார்
தீருவரங்கத்தமுதனார் என்றழைக்கப்படுபவர்; பன்னி ரெண்டாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர்; பெரியநம்பி, இராமநுஜர் சீடராம் அணியரங்கத்தமுதனார் பிள்ளையின் புதல்வர்; கூரத்தாழ்வாரின் சீடர்; 'பெரிய கோயில் நம்பி’ என்று அழைக்கப்பெற்றவர்; மூங்கிற்குடிமரபினர்.
இராமாநுச நூற்றந்தாதி பாடியவர். (பொ.யூ.)
அமுதாம்பிகை பிள்ளைத்தமிழ்
தொண்டை நாட்டிலுள்ளது குளத்தூர் எனும் சிவதலம். இத்தலத்தில் எழுந்தருளியிருக்கும் சிவபிரானைப் பதிற்றுப்
பத்தந்தாதி மூலம் பாடிப் பரவியவர் இறைவியாம் அமுதாம் பிகையைப் பிள்ளைத் தமிழ் மூலம் போற்றியுள்ளார்.
அமுதாம்பிகை பிள்ளைத் தமிழைப் பாடியவர் மாதவச் சிவஞானயோகிகளாவார். அவர் பதினெட்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியிலே வாழ்ந்தவர்.
அமுதாம்பிகை பிள்ளைத் தமிழிலே பாயிரமாக ஆசிரியர் கருத்து, அவையடக்கம், விநாயகர் வணக்கம் கூறும் மூன்று பாக்களுள; காப்புப் பருவத்திலே பதினொரு பாக்களுள. அதனைத் தொடரும் செங்கீரை, தால், சப்பாணி, முத்தம், வாரானை, அம்புலி, அம்மானை, நீராடல், ஊசல் ஆகிய ஒன்பது பருவங்களிலே பருவத்திற்குப் பத்தாகத் தொண்ணுறு பாக்களுள. எனவே இப்பிள்ளைத் தமிழிலே 104 பாடல்கள் அமைந்துள்ளன.
பூரீ ஆறுமுகநாவலர் பதிப்பித்த நூல்களில் அமுதாம்பிகை பிள்ளைத்தமிழும் ஒன்றாகும். (பொ.பூ.)
அயகிரீவ உபநிடதம்
இது அதர்வ வேதத்தைச் சேர்ந்த உபநிடதமாகும்.
முக்திகோபநிடதம் தரும் 108 உபநிடதப் பட்டியலில் இது இடம் பெறுகின்றது. (பொ. பூ)
80

அயக்கிரீவர்
அயக்கிரீவன் என்ற பெயர் குதிரைக் கழுத்தினை யுடையவன் என்ற பொருளினைத் தருவதாகும். அயக்கண்டன், அஸ்வகண்டன் என்ற பெயர்களும் இப்பொருளைத் தருவன. குதிரைத் தலையுடையவன் என்ற பொருளையும் (அயசிரஸ்) தருவதாகக் காணப்படுகின்றது.
இப்பெயருடையவர் வேத காலத்திற்குப் பின் மகா பாரதத்திலும் புராணங்களிலும் குறிப்பிடப்படுவர்.
(1) நரகாசுரனுடைய மந்திரியும் நரகாசுர வதையிற் கண்ணனாற் கொலை செய்யப்பட்டவனுமாகிய அயக்கிரீவன் (பாகவதம்).
(2) விஷ்ணுவாற் கொல்லப்பட்ட திதி புத்திரனாகிய அசுரன்
அயக்கீரீவன்.
(3) பிரமன் உறங்குகையில் வேதங்களைத் திருடிச் சென்று மச்சாவதாரத்திற் கொல்லப்பட்ட அசுரன் அயக்கிரீவன் (பாகவதம்).
(4) தேவிபாகவதம் கூறும் அயக்கிரீவமூர்த்தி வதஞ் செய்த
அயக்கிரீவன் எனும் அசுரன்.
(5) நக்கீரரைப் புசிக்க எடுத்துச் சென்ற பூதமான
அயக்கிரீவன்.
(6) வியாசரால் தருமருக்குக் கூறப்படும் அயக்கிரீவன் எனும்
அரசன் (மகாபாரதம், சாந்திபருவம்).
(7) சண்முக சேனாவீரன்.
விஷ்ணுவுக்கும் அயக்கிரீவன் என்ற பெயர் வழங்குகின்றது. மதுகைடவர் வேதங்களைத் திருடிச் சென்ற காலத்துக் குதிரையின் கழுத்துள்ள திவ்வியவுருக் கொண்டு சென்று அவர்களைக் கொன்று அவற்றைக் கொண்டு வந்து உதவிய அயக்கிரீவராம் விஷ்ணுவை மகாபாரதம் சாந்தி பருவத்திலே காணலாம். பாகவதம் பிரமனின் சத்திரயாகத்துதித்த விஷ்ணுவினம்சமாக அயக்கிரீவரைக் கூறுகின்றது. தேவி பாகவதம் விஷ்ணு அயக்கிரீவர் ஆன வரலாறு கூறுகின்றது.
அசுரரோடு பதினாயிரம் வருடம் பொருது சோர்வடைந்த விஷ்ணு நாணினை முகவாய்க்கட்டையில் ஊன்றிக் கொண்டு ஓரிடத்திலே துயில் கொண்டார். யாகம் செய்ய விரும்பிய இந்திரன் முதலானோர் விஷ்ணுவை வைகுண்டத்திற் காணாது ஞானதிருஷ்டியால் இருக்குமிடம் அறிந்து அங்கு சென்று காத்திருந்தும் விஷ்ணுவின் உறக்கம் தெளியாததினால் விசனமடைந்து நிற்கையில் உருத்திரன் செல்லுருக் கொண்டு நாணினைப் போக்கின் விஷ்ணு துயிலெழுவார் என்றுகூற
இந்துக் கலைக்களஞ்சியம்

Page 127
இந்திரன் அவ்வாறு செய்ய விஷ்ணுவின் சிரம் அறுந்து விழுந்த இடம் தெரியாது வருந்தினர். பிரமன் அறிவுரைப்படி தன்னைத் துதித்து நின்றவர்களுக்குத் தேவி அவ்விதம் நடந்தமைக்குக் காரணம் கூறினாள். தன் முகத்தைப் பார்த்து இகழ்ந்த விஷ்ணுவின் மேல் ஏற்பட்ட கோபத்தால் திருமகள் விஷ்ணுவின் தலை அற்றுவிழக் கடவதென்று சபித்ததால் அவ்வாறு நிகழ்ந்தது. மேலும் அயக்கிரீவன் எனும் அசுரன் வரம் பெற்றபோது அவனுக்கு உன்னை ஒப்பவனால் உனக்கு முடிவு நேர்க என்று கூறினேன். அவன் தேவர் முனிவர்களைக் கொடுமைப்படுத்துவதனால் அவனை ஒத்த ஒருவர் தேவையாதலால் இவ்வாறு நிகழ்ந்தது என்று கூறிப் பிரமன் குதிரையின் சிரத்தை விஷ்ணுவின் தேகத்தில் பொருத்த விஷ்ணு எழுவார் என்று உணர்த்தினார். அவ்வாறே செய்தபோது அயக்கிரீவ மூர்த்தியாக விஷ்ணு எழுந்து அசுரனை அழித்தார் என்று தேவிபாகவதம் கூறுகின்றது.
பக்தமாலா விஷ்ணுவின் பதினெட்டாவது அவதாரமாக அயக்கிரீவ மூர்த்தியைக் கூறுகின்றது. சூரியனுக்கும் குதிரைக்கும் பொதுவான சிறப்பியல்புகளை விஷ்ணுவுக்காக்கி விஷ்ணுவை வித்தைகளுக்கு எல்லாம் தலைவனாகப் படைக்கும் பான்மையை இங்கு காணலாம்.
அயக்கிரீவ உபநிடதம் என அதர்வ வேதத்தைச் சேர்ந்த
உபநிடதம் ஒன்று முக்தி கோபநிடதம் தரும் 108 உபநிடதப் பட்டியலிலே இடம் பெறுகின்றது.
பூரீ வேதாந்ததேசிகர் அயக்கிரீவ மூர்த்தியை இஷ்டமூர்த்தியாக உபாசித்து நிகரற்ற மகாவித்துவானாகிய எதிரிகளின் துர்வாதங்களை எல்லாம் பறக்கச் செய்தார் என்று அவர் வரலாறு கூறுகின்றது. (பொ.யூ.)
©êtນ.
இந்துக்களின் ஏழு புனித நகரங்களில் ஒன்றான அயோத்தி மிகுந்த வரலாற்றுச் சிறப்புடையது. வேதகாலம் முதலாக அதற்கு இடையறாத வரலாறுண்டு. வைதீக கலாசாரத்தின் புகலிடமாகிய மத்திய தேசத்திலுள்ள நான்கு இராச்சியங்கள், மிகச் சிறந்தனவென்று வேதங்களிலும் புராணங்களிலும் போற்றப்படுகின்றன. அவை குரு, பாஞ்சாலம், காசி, கோசலம் என்பனவாகும். அவற்றிலே கோசலம் என்பதை இகூடிவாகு குலத்தவர் ஆட்சி புரிந்தனர். அயோத்தி அவர்களின் இராச தானியாக விளங்கியது.
கோசலம் பாஞ்சால தேசத்தை அடுத்துள்ள இராச்சியமாகும். அதன் கிழக்கில் அமைந்திருந்த சதாநீர நதி கோசலத்தின் கிழக்கெல்லையாகும். தென்பால் சர்ப்பிகா என்னும் ஆறும் வடபால் நேபாளத்துக் குன்றங்களும் எல்லைகளாக விளங்கின. அதன் நடுவிலே அமைந்திருந்த சரயுநதியை அடிப்படையாகக் கொண்டு கோசலம் உத்தரகோசலம், தகூழினகோசலம் என்னும்
இந்துக் கலைக்களஞ்சியம்

இரு பகுதிகளாக அமைந்திருந்தது. மகாவீரர், கெளதமபுத்தர் ஆகியோரின் காலத்தில் ஸ்ராவஸ்தி, குஸாவதி என்னும் நகரங்கள் முறையே உத்தரகோசலம், தகூழினகோசலம் என்பவற்றின் தலைநகரங்களாக விளங்கின. சாசேதம், அயோத்தி என்னும் நகரங்கள் பற்றியும் பெளத்த, சமண நூல்களிற் குறிப்புகள் உள்ளன.
வைதீக மரபிலே சூரியவம்சத்தவரான இஷ்வாகு குலத்தவர் அரசர் குலங்களிலே மேலானவர்கள் என்று போற்றப் படுகின்றனர். வைவஸ்வத மனுவின் மகனாகிய இஷ்வாகு என்பவனால் அயோத்தி இராசதானியாக அமைக்கப்பட்டது. அவனுக்கு பின் அவனது மகனாகிய சசாதன் என்றும் வழங்கிய விகுஷி அயோத்தியில் அரசபதவி பெற்றான். விகுஷியின் மகனாகிய பரஞ்சயன ககுத்ஸ்தன் மகனாகிய பரஞ்சயன ககுத்ஸ்தன் என்ற பெயரையும் கொண்டிருந்தான். அவனது சந்ததியில் ஆறாவது தலைமுறையைச் சேர்ந்தவனாகிய ஸ்ராவஸ்தன ஸராவஸ்தி நகரை உருவாக்கினான். அது பின்னர் வட கோசலத்தின் தலைநகராகியது. அவனது சகோதரனாகிய மாத்தாதா சக்கரவர்த்தி என்றும் சாம்ராட் என்றும் புராணங்களிற் போற்றப்படுகின்றான். அவன் அஸ்வமேதம், ராஜசூயம் போன்ற யாகங்கள் பலவற்றைச் செய்து தானங்கள் வழங்கிப் புகழ் பெற்றான். யாதவகுலத்து சசவிந்து மன்னனின் மகளான விந்துமதி மாந்தாதனின் பெருந்தேவியானாள்.
புருகுத்ஸன், அம்பரீஷன், முசுகுந்தன் என்போர் மாத்தாதாவின் மக்களாவர். சகர(ன்), அம்பரீஷன், திலீபன், ரகு ஆகியோரின் அயோத்தியின் தலைசிறந்த மன்னர்களாகப் போற்றப்படுகின்றனர். தசரதராமரின் கதைகள் மூலமாக அயோத்தி மாநகரம் இலக்கிய மரபிலும் பெளராணிக மரபிலும் பெருஞ் சிறப்புப் பெற்றுள்ளது. இந்திய இலக்கியங்களில் வர்ணிக்கப்படும் நகரங்களில் அயோத்தி உத்தமமானது. அது இயற்கை வளம்மிக்கது; செல்வவளம் கொழிக்கும் நகரமாக விளங்கியது. அது அறம், தவம், தானம் என்பவற்றை இலட்சியங்களாகக் கொண்டவர்களின் புகலிடமாக விளங்கியது. மகாகவிகளான வான்மீகி, காளிதாஸர், கம்பநாட்டாழ்வார், துளசிதாஸர் போன்றோர் அயோத்தியின் சிறப்புகளைப் புகழ்ந்து பாராட்டினார்கள். அதனால் நகரங்களிலே சிறந்தது அயோத்தி என்ற சிந்தனை புராதன காலத்து இந்துக்களின் மனங்களிலே ஆழமாகப் பதிந்து விட்டது. அயோத்தி பற்றிய சிந்தனைகள் உணர்ச்சிபூர்வமானவை. அந்தியேஷ்டி, சபிண்டீகரணம் முதலியவற்றிலே அயோத்தி முதலான ஏழு புனித நகரங்களின் பெயர்களை உச்சரிப்பது வழமையாகிவிட்டது. ஒரு புனித தலம் என்ற வகையில் அயோத்தி புனித யாத்திரைகளுக்குரிய தலமாகவுங் கொள்ளப்பட்டது.
அயோத்தி மாநகரின் சிறப்புகள் பற்றிய மரபுவழியான, உணர்ச்சி பூர்வமான சிந்தனைகளை இணையிலாச் சிறப்புடன் கம்பர் உருவகப்படுத்துகின்றார். அப்புனித நகரைப் பற்றிய அவரின் பாடல்கள் சில மேல்வருவனவாகும்.
81

Page 128
செவ்விய மதுரம் சேர்ந்த நல் பொருளின்
சீரிய கூரிய தீம் சொல், வவ்விய கவிஞர் அனைவரும், வடநூல்
எவ் உலகத்தோர் யாவரும், தவம் செய்து
ஏறுவான் ஆதரிக்கின்ற அவ் உலகத்தோர், இழிவதற்கு அருத்தி புரிகின்றது - அயோத்தி மாநகரம்
நிலமகள் முகமோ திலகமோ! கண்ணோ!
நிறைநெடு மங்கல நானோ! இலகு பூண் முலைமேல் ஆரமோ உயிரின் இருக்கையோ/திருமகட்கு இனிய மலர்கொலோ/ மாயோன் மார்பில் நன் மணிகள் வைத்த பொற் பெட்டியோ வானோர் உலகின் மேல் உலகோ ஊழியின் இறுதி
உறையுளோ? யாது என உரைப்பாம்?
உமைக்கு ஒரு பாகத்து ஒருவனும் இருவர்க்கு
ஒரு தனிக் கொழுநனும் மலர்மேல் கமைப் பெருஞ் செல்வக் கடவுளும் உவமை
கண்டிலா நகர்அது காண்பான் அமைப்பு அருங் காதல் அது பிடித்து உந்த,
அந்தரம் சந்திராதித்தர் இமைப்பு இலர் திரிவர் இது அலால் அதனுக்கு
இயம்பல் ஆம் ஏது மற்று யாதோ
அயில் முகக் குலிசத்து அமரர்கோன் நகரும் அளகையும் என்று இவை அயனார் பயிலுறவு உற்றபடி, பெரும்பான்மை
இப் பெருந் திரு நகர் படைப்பான்; மயன் முதல் தெய்வத் தக்கரும் தம்தம்
மனத்தொழில் நாணினர் மாந்தார், புயல் தொடு குடுமி நெடுநிலை மாடத்து
இந்நகர் புகலுமாறு எவனோ?
பதினாறு மகாஜன பதங்கள் நிலை பெற்றிருந்த காலத்தில் சரயு நதியின் கரையோரத்தில் அமைந்திருந்த சாகேதம் உத்தரகோசத்தின் தலைநகரமாக விளங்கியது. பரத கண்டத்து ஆறு பெருநகரங்கள் என்று பெளத்த நூல்கள் போற்றும் மாநகரங்களில் ஒன்று சாகேதம், அயோத்தி மாநகரம் சாகேதம் என்னும் பெயரால் விளங்கியதென்று அறிஞர் கொள்வர்.
கி. மு. ஆறாம் நூற்றாண்டில், பிரசேனசித்து என்பவனின் ஆட்சிக் காலத்திலே கோசலம் பலமிக்கவொரு இராச்சியமாக விளங்கியது. அவன் காசி நாட்டைக் கைப்பற்றியதோடு கபிலவஸ்து சாக்கியர் மீதும் காலாமர் முதலான கண இராச்சியங்கள் மேலும் தனது மேலாதிக்கத்தை ஏற்படுத்திக் கொண்டான். அவன் கெளதம புத்தரைப் பல தடவைகளிலே சந்தித்தான். இருவருக்கும் இடையில் நடைபெற்ற சம்பாஷணைகள் சிலவற்றை ஆதிகாலப் பெளத்த இலக்கியங்கள் பதிவு செய்துள்ளன. நந்தர்களின் ஆதிக்கம் வட இந்தியாவிலே
82 .

மேலோங்கிய காலத்திற் கோசலம் மகத இராச்சியத்தின் பகுதியாகிவிட்டது. அயோத்தியிலுள்ள நந்தர்களின் படைத்தளம் பற்றிக் கதாசரித்சாகரம் குறிப்பிடுகின்றது. மோரியர் காலத்தில் அயோத்தி அவர்களின் ஆட்சியில் அடங்கியிருந்தது. புஷ்யமித்திர சுங்கன் பாடலிபுரத்தில் அரசனாக விளங்கிய காலத்தில் அயோத்தி சுங்கர் வசமாயிருந்தது. அதன்மேல் யவனர் படையெடுத்துச் சென்றமை பற்றி மகாபாஷ்யம் மூலமாக அறிய முடிகின்றது. சுங்கர் காலத்திலே, அயோத்தியிலே சுங்கரின் இராசப்பிரதிநிதி ஒருவன் அதிகாரம் செலுத்தினான் என்று கொள்வதற்கான சான்றுண்டு. புஷ்யமித்திரசுங்கனின் சந்தானத்தில் ஆறாவது தலைமுறையைச் சேர்ந்த அயோத்தி யிலுள்ள ஆலயமொன்றிலே கேதனம் ஒன்றை உருவாக்கியமை பற்றிய சாசனக் குறிப்புண்டு.
அயோத்தி மாநகரத்துத் தொல்பொருட் சின்னங்களிடையே பெருமளவிலான மிகப்புராதனமான நாணயங்கள் கிடைத் துள்ளன. அவை அயோத்தியிலிருந்து ஆட்சிபுரிந்த பிரதேச மன்னர்களின் நாணயங்களாகும். அவை இரு வகையானவை. கி. மு. முதலாம் நூற்றாண்டின் நடுப்பகுதி முதலாக ஏறக்குறைய இரண்டு நூற்றாண்டு காலத்தில் வெளியிடப்பட்டவை. முதலாவது வகையினைச் சேர்ந்த நாணயங்களின் முற்பகுதியிலே இடபத்தின் உருவம் அமைந்துள்ளது. சில நாணயங்களில் அதற்குப் பதிலாக கஜலக்ஷமியின் வடிவம் காணப்படுகின்றது. அவற்றில் தனதேவ, விசாகதேவ, மூலதேவ, வாசுதேவ நரதத்த, சிவதத்த என்னும் அரசர்களின் பெயர்கள் காணப்படுகின்றன. கோசலத்து அரசனான தர்மராஜ தனதேவனைப் பற்றி அயோத்தியிலுள்ளதும் கி. மு. முதலாம் நூற்றாண்டின் பிற்பகுதிக்குரியதுமான சாசனமொன்று குறிப்பிடுகின்றது. பால்குதேவனின் மகனாகிய தனதேவன் சேனாதிபதி புஷ்யமித்தரனின் வம்சத்தவன் என்றுஞ் சொல்லப்படுகின்றது.
இரண்டாம் வகையினைச் சேர்ந்த நாணயங்கள் பெரும்பாலும் குஷாணர் காலத்துக்குப் பிற்பட்டவை. அவை வடிவமைப்பில் வட்டமானவை. அவற்றின் முன்புறத்தில் இடபத்தின் உருவமும் பின்புறத்திற் சேவல், தம்பம் ஆகியவற்றின் வடிவங்களுங் காணப்படுகின்றன. அவற்றிலே சத்யமித்ர, அஜமித்ர, சங்கமித்ரா, விஜயமித்ர, தேவமித்ர, அஜவர்மன், ராஜா குமுதசேன என்னும் மன்னர்களின் பெயர்கள் காணப் படுகின்றன. கி. பி. நான்காம் நூற்றாண்டின் முற்பகுதியில் அயோத்தி மாநகரமும் கோசல நாட்டின் பிற பகுதிகளும் குப்தப் பேரரசில் இணைந்து விட்டன.
குப்தர் காலத்தில் அயோத்தி மாநகரம் வளநகராக விளங்கியது. அங்கு வாழ்ந்த கலைஞர்கள் பற்றியும் கலாசாலைகள் பற்றியும் சமகால நூல்களிற் குறிப்புகள் உள்ளன. புராணங்களைப் பற்றிப் போதிக்கும் பாடசாலைகள் அங்கிருந்தன. அவற்றிலே சூதர், மாகதர் என்போர் பயிற்சி பெற்றனர். அயோத்தியிலிருந்த நாடக சங்கங்கள் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன. வது சங்க எனப்படும்
இந்துக் கலைக்களஞ்சியம்

Page 129
பெண்களின் கழகங்கள் அங்கு செயற்பட்டன. நாடக சங்கங்களின் ஆதரவிலே உற்சவங்களும் சமாஜங்களும், நகர்ப்புறங்களின் உபவனங்களில் நடைபெற்றதாகச் சொல்லப்படுகின்றது. சூதர், மாகதர், ஆட்சி அதிகாரிகள், கலைஞர், தொழில் வினைஞர் முதலியோர் பயின்ற வித்தியாபீடங்களைப் பற்றி இராமாயணமும் வர்ணிக்கிறது. இந்து நாகரிகத்தின் உன்னதமான வளர்ச்சிக் காலமென்று கருதப்படும் குப்தப் பேரரசரின் காலத்திற் கல்வி வளர்ச்சியிலும் பண்பாட்டு வளர்ச்சியிலும் கவர்ச்சிமிக்க சிறப்புடைய மாநகரமாக அயோத்தி காணப்பட்டது. பிற்காலத்தில் அது அரசியல், பண்பாட்டுத் துறைகளில் மேலுஞ் சிறப்புப்பெற்றது.
அர்ச்சாவதாரம்
வைணவ சமயத்தில் பரம்பொருளை விஷ்ணுவாகக் கண்டு வழிபடும்போது ஒரு குறிப்பிட்ட வடிவம், ஒரு குறிப்பிட்ட நாமம், முதன்மையாகக் கொள்ளப்படுவதுண்டு. அவ்வகையில் வழிபாட்டுக்குரிய திருவுருவங்களே அர்ச்சாவதாரம் எனப்படுவன. வைணவர்கள் திருமாலின் மூர்த்தி பேதங்கள் என்று ஐந்து வகையினைக் குறிப்பிடுவர். அவையாவன,
இருபத்து நான்கு தி
என்ற இலக்கமிட்டவை பத்மபுராணத்திலும் 2 என்ற
கீழ்
1. கேசவன் - நீண்ட முடி உடையவன்
2. நாராயணன் - உலகனைத்திற்குமிருப்பிடமானவன்
3. மாதவன் - ஞானத் தலைவன்
4. கோவிந்தன் - நிலத்தை மீட்டவன்
5. விஷ்ணு - அந்தர்யாமி
6. மதுசூதனன் - மதுவை அழித்தவன்
7. திரிவிக்ரமன் - மூவுலகை வென்றோன்
8. வாமனன் - குள்ள வடிவினன், புகழத் தக்கோன்
9. பூரீதரன் - அதிர்ஷ்டம் உள்ளோன், திருவுடையோன் 10. ரிஷிகேசன் - புலன்களை ஆள்பவன்
11. பத்மநாபன் - உந்தியம் தாமரையோன்
12. தாமோதரன் - தன்னடக்கமுடையோன்
இந்துக்கலைக்களஞ்சியம்
5 (
தாம
தாம சங் சக்க
கை
கை சக்க
சங்
கை சங் சக்க
கை
தாம சக்க சங் சக்க
தாம சக்க
கை
தாம
母回(
தாம

பரசொரூபம்
வியூக சொரூபம்
விபவ சொரூபம்
அந்தர்யாமி சொரூபம்
அர்ச்சாவதார சொரூபம் பகவான் பரமபதத்திலே எழுந்தருளியிருக்கும் மேலான வடிவம் பரசொரூபம் என்பர்; நித்திய விபூதியாம் பூரீ வைகுண்டத்தில் நித்தர்களுக்கும் முத்தர்களுக்கும் அமுதமாய்த் திருமகளோடு திவ்விய மங்கள சொரூபத்துடன் எழுந்தருளி யிருக்கும் திருக்கோலமாம்.
ஞானத் தெளிவு என்ற திருப்பாற் கடலிற் பகவான் தேவர்கள் பலரும் வழிபட வெளிப்பட்ட வடிவம் வியூக சொரூபம் என்பர். இத்திருக் கோலத்தை விஷ்ணு, புருஷன், சத்தியன், அச்சுதன், அநிருத்தன் எனும் ஐந்துநிலை என்றும் சங்கர்ஷணன், பிரத்தியும்நன், அநிருத்தன் எனும் மூன்று நிலை என்றும் வாசுதேவனையும் சேர்த்து நான்குநிலை என்றும் கூறுவர்.
பகவான் அவதாரமெடுத்துத் தோன்றிவந்த வடிவம் விபவ சொரூபம், பரம்பொருள் கருணையினால் உருவம் எடுத்துப் பிறக்கும் திருக்கோலம் என்பர்.
ருக்கோலங்கள் இலக்கமிட்டவை ரூபமண்டலத்திலும் உள்ளபடி
வலம் மேல்வலம் மேல் இடம் கீழ்இடம்
芭 சக்கரம் கதை தாமரை ரை சங்கு சக்கரம் கதை ரை கதை சக்கரம் சங்கு
தாமரை கதை சக்கரம் 5ரம் சங்கு தாமரை கதை
சக்கரம் சங்கு தாமரை தாமரை சங்கு சக்கரம் 5ரம் கதை தாமரை சங்கு சக்கரம் தாமரை கதை 玩 தாமரை சங்கு சக்கரம் 5 தாமரை கதை சக்கரம் ரம் சங்கு தாமரை கதை 玩 சக்கரம் சங்கு தாமரை ரை கதை சக்கரம் சங்கு ரம் கதை தாமரை சங்கு 5 சக்கரம் கதை தாமரை ரம் கதை சங்கு தாமரை ரை சக்கரம் கதை சங்கு ரம் கதை சங்கு தாமரை
சக்கரம் தாமரை சங்கு 60)ij சங்கு கதை சக்கரம் 5 தாமரை சக்கரம் கதை 5 கதை சக்கரம் தாமரை ரை சங்கு கதை சக்கரம்
83

Page 130
13. சங்கர்ஷணன் - ஒடுக்கிக் கொள்பவன்
14. வாசுதேவன் - உள்ளுறைவோன்
15. பிரத்யும்நன் - செல்வன்
16. அநிருத்தன் - எதிரியில்லாதவன்
17. புருஷோத்தமன்-மனிதரிற் சிறந்தோன்
18. அதோக்கூடிஜன்- அண்டங்களை இடமாக உடையவன்
19. நரசிம்ஹன் - சிம்ம முகம் மனித உடல் உடையவன்
20. அச்சுதன் - வீழ்ச்சி இல்லாதான்
21 ஜனார்த்தனன் - பரிசளிப்போன்
22. உபேந்திரன் - இந்திரன் இளவல்
23. ஹரி - துன்பம் துடைப்போன்
24. கிருஷ்ணன் - கரியவன்
இயங்குதிணை, நிலைத்திணைப் பொருள்களில் எல்லா ஊடுருவிப் பரந்து நிற்பது அந்தர்யாமி சொரூபம் என்பர்.
அர்ச்சாவதாரம் வழிபடற்குரிய சொரூபம். விக்கிரகத்தி இறைவன் எழுந்தருளியிருப்பது அர்ச்சாவதாரம். இத்திரு கோலத்திலே வழிபடுதல் பிரசித்தமான முறையாகும் கோயில்களிலும் இல்லங்களிலும் அர்ச்சாவதார நிலையிே நாராயணன் வழிபடப்படுகிறான்.
பரத்துவத்திலே நித்த முத்தர்களுக்கும், வியூகத்திே தேவர்களுக்கும், விபவத்தில் அவதார காலங்களி வாழ்ந்தவர்களுக்கும், அந்தர்யாமியில் பரமபக்தர்களுக்கு அருளும் இறைவன் அர்ச்சாவதாரத்திலே சகல மக்களுக்கு அருள் புரிகின்றார்.
அர்ச்சாவதாரமே இறைவனோடு தெடர்பு கொண்( முறையிட, சரணடைய, வாய்ப்பான ஒன்று எனவும் கூறுவ ஆழ்வார்கள் பிரபத்தி பண்ணினதும் அர்ச்சாவதாரத்தில் தா6 என எடுத்துக்காட்டுவர்.
அர்ச்சாவதாரக் கோலங்கள்
திருக்கோவிலில் பிரதிட்டிக்கப் பெற்றுள்ள மூர்த்தியினை
நின்ற திருக்கோலம், இருந்த திருக்கோலம், கிடந்த திருக்கோல
என மூன்றாகப் பாகுபடுத்திச் சிந்திப்பதுண்டு.
84

1. சங்கு சக்கரம் கதை 2. கதை சங்கு தாமரை சக்கரம் 1. சக்கரம் சங்கு கதை தாமரை 2. கதை சங்கு சக்கரம் தாமரை 1. சங்கு கதை தாமரை சக்கரம் 2. சக்கரம் சங்கு கதை தாமரை 1. கதை சங்கு தாமரை சக்கரம் 2. சக்கரம் கதை சங்கு தாமரை 1. கதை சக்கரம் தாமரை சங்கு 2. சக்கரம் தாமரை சங்கு கதை 1. கதை சங்கு சக்கரம் தாமரை 2. தாமரை கதை சங்கு சக்கரம் 1. தாமரை கதை சங்கு சக்கரம் 2. சக்கரம் தாமரை கதை சங்கு 1. தாமரை சங்கு சக்கரம் கதை 2. கதை தாமரை சங்கு சக்கரம் 1. கதை தாமரை சக்கரம் சங்கு 2. தாமரை சக்கரம் சங்கு கதை 1. சக்கரம் தாமரை கதை சங்கு 2. சங்கு கதை சக்கரம் தாமரை 1. தாமரை சக்கரம் சங்கு கதை 2. சங்கு சக்கரம் தாமரை கதை 1. தாமரை சக்கரம் கதை சங்கு 2. சங்கு கதை தாமரை சக்கரம்
h புளிங்குடிக் கிடந்து வரகுணமங்கையிருந்து
வைகுந்தத்துள் நின்று தெளிந்த என் சிந்தை அகங்கழியாதே என்னை ஆள்வாய் ல் 3795
க் b. என்பது நம்மாழ்வார் பாடல், இத் திருக்கோலங்கள் 60 தொண்டர்களைப் பெரிதும் கவர்ந்தமையினை நின்றதும் கிடந்ததும் இருந்ததும் என்னெஞ்சுளே என்னும் ஆழ்வார் வாக்காலும் அறியலாம்.
6Ս ல் ஒரு முகமும் நான்கு கைகளுமுள்ள திருக்கோலமே பல இடங்களிலும் காண்பதாகவிருந்தாலும் நான்கு முகமும், எட்டுக் t கைகளும் கொண்ட சதுர்மூர்த்தி ஒன்றும் கூறப்படுகிறது. அம் ԼՈ மூர்த்திக்குச் சிரித்தவாறுள்ள கிழக்கு நோக்கிய முகத்தை 'வாசுதேவன்' என்பர். தெற்கிலுள்ள சிங்க முகத்தைச் 'சங்கர்ஷணன்' என்பர். வடக்கிலமைந்த வராக முகத்தை பிரதியும்நன்' என்பர். மேற்கு நோக்கிய உருத்திர முகத்தை T. அநிருத்தன்' என்பர். மேலும் நான்கு முகங்களையும் நான்கு 沉 வியூகங்களாகக் (ManifeStations) கொண்டு ஒவ்வொரு வியூகத்திலிருந்தும் மும்மூன்று மூர்த்திகளாகப் பன்னிரண்டு மூர்த்திகள் தோன்றின என்பர். ஒவ்வொரு வியூகத்திலிருந்து தோன்றிய ஒவ்வொரு மூர்த்தியிலிருந்தும் வேறாக நான்கு T, மூர்த்திகளும், இவற்றிலிருந்து வேறாக நான்கு மூர்த்திகளும்
LAO
தோன்றின என்பர். இவ்வாறு இருபத்து நான்கு மூர்த்தி பேதங்களைக் குறிப்பிடுவர்.
இந்துக் கலைக்களஞ்சியம்

Page 131
பத்ம புராணத்திலும் ரூபமண்டனத்திலும் கண்ட 24 திருக்கோல இயல்புகளைப் பின்வருமாறு விளக்குவர்.
அர்ச்சாவதாரமாகக் கருதப்படும் இம். மூர்த்திகளைப் பிறிதோர் அடிப்படையிலும் பாகுபடுத்துவர். யோகிகள் வழிபடத்தக்க யோக மூர்த்தியாகவும், குடும்பத்தினர்கள் வழிபடத்தக்க போக மூர்த்தியாகவும், வீரர்கள் வழிபடத்தக்க வீர மூர்த்தியாகவும், பகைவர்களை வெல்ல வழிபடத்தக்க அபீசாரிக மூர்த்தியாகவும் அமைப்பதுண்டு. நடைமுறையில், பெரிதும் யோகமூர்த்தி அல்லது போக மூர்த்தியே வழிபடப்படுகிறது.
பொதுவாக நான்கு கைகள் உள்ள மூர்த்தங்களே பலவாகக் காணப்படினும், இரண்டு கைகள், எட்டுக் கைகள், பதினாறு கைகள், இருபத்து நான்கு கைகள் உள்ளனவும் உண்டு என்பர்.
திருமால் வடிவங்கள், சீதேவி பூதேவியோடு கூடிய நிலையில் பலவிடங்களிலும் இன்று காணப்படுகின்றன. இதனைப் பின்னைய வளர்ச்சி என்று கூறுவோருமுண்டு. "ஆயசிர்ஷ” பஞ்சாராத்திரம் வலப்பக்கத்து மேல்கையில் சக்கரம், கீழ் கையில் தாமரைப்பூ; இடப்பக்கத்து மேல்கையில் கதை, கீழ்க்கையில் சங்கு இருபக்கமும் சீதேவியும், பூதேவியும், கையில் தாமரைப் பூவும் வீணையும் பிடித்தவாறு விஷ்ணுவின் தொடையளவிற்குச் சற்றுச் சாய்ந்தவாறு நிற்கும் வகையில் மூர்த்தி அமைக்கப் படுவதைக் கூறுவதாக எடுத்துக் காட்டுவர்.
பொதுவாக - பீடம் தாமரை, கருடன்மேல் நான்கு முகங்களோடு கூடியுள்ள மூர்த்தி அமைக்கப்படும். இரு பக்கங்களிலும் தேவிமார்களோடு விளங்குவதற்கு வேறாக, இலட்சுமி நாராயணமூர்த்தி என்பதொன்று வலக்காலைத் தொங்கவிட்டு, இடக்காலை மடித்து ஆசனத்தின் மேலே வைத்து, அக்காலின் மேலே இலக்குமியை உட்கார வைத்திருப்பது போன்று அமைக்கப்படும்.
திருமாலுக்கு வாகனம் கருடன், ஆயுதம் - சங்கு, சக்கரம், கதை என்பன. வில், கத்தி போன்ற படைகளும் உண்டு. மார்பில் பூரீவத்சமும், கையில் சியமந்தகமணியும், கழுத்தில் கெளத்துப ஆரமும் இவர் அடையாளங்கள் என்பர். சங்கு, சக்கரம், கதை, வில், கத்தி என்பனவற்றைச் சேர்த்துப் 'பஞ்சாயுதங்கள்’ என்பர். இவ்வாறு பலவகையான மூர்த்தி பேதங்களைக் குறிப்பிட்டாலும், இம்மூர்த்தி பேதங்கள் அனைத்தும், இந்துக்கள் வழிபடும் எல்லா மூர்த்திகளுமே, விஷ்ணுவின் - திருமாலின் - மூர்த்திபேதங்களே என்ற சிந்தனையும் திருமாலடியார்களுக்குண்டு.
வணங்கும் துறைகள் பல பலவாக்கி மதிவிகற்பால் பிணங்கும் சமயம் பல பலவாக்கி அவையவை தோறும் அணங்கும் பலபலவாக்கி நின் மூர்த்தி பரப்பி வைத்தாய் இணங்கு நின்னோரை இல்லாய் நின்கண் வேட்கை
எழுவிப்பனே (2573) என்பது ஆழ்வார் பாடல்.
இந்துக் கலைக்களஞ்சியம்

அவதார மூர்த்தங்கள்
அவதார மூர்த்தங்களையும் திருக்கோவிலில் பிரதிஷ்டை செய்து வழிபடுவதுண்டு. அவதாரங்கள் பலவாகச் சில புராணங்களிற் கூறப்படினும் பொதுவாகத் தசாவதாரம் என்னும் வழக்கே உள்ளது. அவை: (1) மச்சம், (2) கூர்மம், (3) வராகம், (4) நரசிம்மம், (5) வாமனன்- திரிவிக்ரமன், (6) பரசுராமன், (7) இராமன், (8) பலராமன், (9) கண்ணன், (10) கல்கி.
வைணவர்கள் சிறப்பாகப் பாராட்டும் திருக்கோவில்களான பூரீ முஷ்ணத்தில் வராகரும், அகோபிலத்தில் நரசிம்மரும், காஞ்சியில் உலகளந்த பெருமாளும் (திரிவிக்ரமன்), அயோத்தியில் இராமரும், துவாரகையில் கண்ணனும் - தாபிக்கப் பெற்றுள்ளனர். திருவரங்கத்தில் தனிப்பட்ட தசாவதாரக் கோவில் ஒன்றுள்ளது. சீவில்லிபுத்தூரில் வடபத்ரசாயி கோவிலிலிருக்கும் தசாவதாரச் சந்நிதியும் குறிப்பிடத்தக்கது. பொதுவாக தசாவதார வடிவங்கள் கருப்பக்கிரக வாயில்களிலும் கோபுர வாயில்களிலும் இடம்பெற்றிருக்கும்.
மேற்கூறிய பத்து அவதாரங்களுக்கு வேறாக வைணவர்கள் கூறுவன.
(1) கபிலர் (அவதாரம்), (2) வியாசர், (3) தன்வந்திரி (4) புருஷர் (5) அயக்கிரீவர், (6) தத்தாத்திரேயர் (7) தருமர் (8) மோகினி என்பன. புத்தரையும் அவதாரமாகக் கொள்வதுண்டு.
மேலும் இதனை அவதாரம், ஆவேசம், அமிசம் எனப்பிரித்துக் கூறுவதுமுண்டு. அவதாரம் என்ற நிலையில் - இராமன் - கண்ணன் ஆவேசம் என்ற நிலையில் - பரசுராமன் - நரசிம்மன் அமிசம் என்ற நிலையில் - திருமங்கையாழ்வார் (சாரங்கம்)
பொய்கையாழ்வார்
(பாஞ்சசன்னியம்) இவர்களைக் குறிப்பிடலாம் என்பர். (பொ.பூ. & ப. அ.)
அர்ச்சிராதி
பூமியில் இருந்து வைகுண்டத்திற்குச் செல்லும், உடல் விட்டு நீங்கிய ஆன்மாவின் பயணத்தை விவரிப்பது அர்ச்சிராதி எனும் மணிப்பிரவாள நூல். அதனுள் ஆன்மா பாதையில் எங்கெங்கே தங்குகின்றது, வைகுண்டத்திலே அது பெறும் வரவேற்பு முதலியன எல்லாம் கூறப்படுகின்றன.
அர்ச்சிராதியை இயற்றியவர் தென்கலை வைணவ ஆசாரியராக விளங்கிய பிள்ளை லோகாசாரியர், (1264 - 1369). முடும்பையிலே வடக்குத் திருவீதிப்பிள்ளையின் புதல்வராக அவதரித்த பிள்ளை லோகாசார்யர், திருவரங்கத்திலே நம்பிள்ளையின் சீடராக அமைந்து உலகாசார்யர், லோகாசார்ய பிள்ளை என்றெல்லாம் சிறப்பிக்கப் பெற்றவர். விளாஞ் சோலைப்பிள்ளை, திருவாய்மொழிப்பிள்ளை, மணவாளமுனிகள் போன்ற பேர் பெற்ற வைணவ ஆசாரியர்களின் குருவாக விளங்கியவர்.
85

Page 132
வேதங்களிலும் ஆழ்வார்களின் திருப்பாசுரங்களிலும் ஆங்காங்கே கிடந்த ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்டு பிள்ளைலோகாசார்யர் இப்பெரும் பயணத்தை விரிவாக வருணித்துள்ளார். தன்னுடைய கருத்துக்களை விளக்கப் போதுமான உவமைகளையும் நூலிலே பயன்படுத்தியுள்ளார்.
அர்ச்சிராதி, பிள்ளைலோகாசாரியரின் அஷ்டாதச ரகஸ்யங்களில் ஒன்றாகும். (பொ.யூ.)
அர்த்த சாஸ்திரம்
அர்த்த சாஸ்திரம் அரசியல் பற்றிக் கூறும்நூல். இதனை ராஜசாஸ்திரம் எனவும் அழைப்பர். இதற்கு நீதி சாஸ்திரம் ராஜநீதி தண்டநீதி என்ற வேறு பெயர்களும் உண்டு. இந் நூலின் ஆசிரியர் கெளடில்யர். அவர் வடநாட்டிலே தக்கசீலத்தில் பிறந்தவர் என்றும் தமிழ் நாட்டில் பிறந்தவர் என்றும் இருவேறு கருத்துக்கள் காணப்படுகின்றன. சந்திரகுப்த மெளரியனின் (கி.மு. 325-297) அமைச்சராக இருந்தவர் எனக் குறிப்பிடுவதால் மெளரியர் காலத்திலேயே இந்நூல் எழுதப்பட்டிருக்க வேண்டும். இதனால் கெளடில்யரின் காலம் கி. மு. நான்காம் நூற்றாண்டு என வரையறுப்பர்.
முடியாட்சி நிலவிய பண்டைய இந்தியாவில் மன்னர் செங்கோலோச்சுவதற்கும், மக்களை நெறிப்படுத்திக் காப்பதற்கும், அவர்களுக்கு அதிகாரங்கள் பல இருந்தன. அரசனின் மேன்மை அவனது அதிகாரம் ஏனைய நாடுகளைக் கைப்பற்ற அவன் கைக்கொள்ள வேண்டிய வழிமுறைகள் ஆகியவற்றைக் கெளடில்யர் மிக விரிவாகக் கூறியுள்ளார்.
அரசியலை அரசன், அமைச்சரவை, நாடு, அரண், படை, செல்வம், நட்பு, பகை ஆகிய எட்டு உறுப்புக்களாகப் பகுக்கிறார். இவ்வெட்டு உறுப்புகளிலும் பொதுவாக அரசியல் தத்துவம் பொருளியல், அரச தந்திரம் வெளிநாட்டுறவு ஆகியன சிறப்புடையன. இந்நூல் அதிகரணம், பிரகரணம், அத்தியாயம் என்ற மூன்று பெரும் பிரிவையுடைய 15 அதிகரணங்களாலும் 150 அத்தியாயங்களாக 180 பிரகரணங்களாக 6000 சுலோகங்களைக் கொண்டுள்ளது.
நூலின் அமைப்பு முறையினை முதலில் நோக்கலாம். ஆசிரியருக்கு வணக்கம் கூறி ஆசிரியர் நூலை ஆரம்பிக் கின்றார். முதல் அதிகாரத்தில் இருபத்தொரு அத்தியாயங்கள் உள்ளன. இவ்வத்தியாயங்களில் மேல்வரும் விடயங்கள் கூறப்பட்டுள்ளன.
பயிற்சி பகர்தல்
வித்தை விளம்பல் பெரியோரினக்கம் பொறியடக்கம் அமைச்சரை நியமித்தல் மந்திரி புரோகிதரை நியமித்தல்

10.
11.
12.
13.
4.
15.
16.
17.
18.
உபாயங்களால் அமைச்சர் முதலியவரின் உள்ளத்து இயல்பை ஆராய்தல்
ஒற்றரை நியமித்தல்
ஒற்றாடல் தன்நாட்டு நல்லவர் தீயவர், குழுக்களைத் கடத்தல் பகைவர் நாட்டு நல்லவர் தீயவர் குழுக்களைத் தன்வயமாக ஆக்குதல் -
மந்திராதிகாரம்
தூது அனுப்புதல்
மன்னரின் மக்கள் காவல் விலக்கப்படும் மக்கள் மன்னனிடம் ஒழுகுதல் விலக்கப்படும் மக்களிடம் மன்னன் ஒழுகுதல் மன்னனின் செயல் முறை
அரண்மனை அமைத்தல்
தற்காப்பு
இரண்டாம் அதிகாரத்தில், தொழில் தலைவர்
செயல்முறைகள் முப்பத்தாறு அத்தியாயங்களிற் கூறப் பட்டுள்ளது.
13.
14.
15.
16.
17.
18.
19.
20.
21.
22.
23.
24.
25.
26.
27.
28.
தொழில் தலைவர் செயல்முறை, நாடு அமைத்தல் வேளாண்மை செய்யப்படாத நிலத்தைப் பயன்பட அமைத்தல்
அரண் இயற்றல்
அரணின் உட்பகுதிகளை அமைத்தல்
பொருள் பண்டாரத்தைக் காப்பவனின் செய்தி வரிப்பொருள் தொகுப்பவன் ஏற்கக் கூடிய பொருள் நெறி பொருட் கணக்கு எழுதுவோர் பொருந்ததிகாரம் செயல் வல்லவர் கவர்பொருள் மீட்டுக் கொணர்வித்தல் தலைமை வினையாளர் இயல்பை ஆராய்தல் முடங்கல் எழுதும் விதிமுறை கருவூலத்திற் சேர்க்கப்படும் பணி முதலியவற்றை ஆய்தல் தங்கம், வெள்ளி, மணி முதலியவை பிறப்பிடத்தின் தொழில் நிலை.
அக்கசாலையின் தலைவன் செயல் அங்காடித் தெருவில் பொன் வினைஞன் செயல் உண்பொருள் நிலையத் தலைவன் விற்கப்படு பொருள் தலைவன்
குப்பியத் தலைவன் படைக்கலக் கருவி நிலைத் தலைவன் துலை முதல் அளவையின் நிலையாய்தல் நிலம் பொழுது அளவை
உலகு பொருள் தலைவன்
நெசவுத் தொழில் தலைவன் வேளாண் தொழில் தலைவன்
கற் தொழில் தலைவன்
இறைச்சித் தொழில் தலைவன் வரைவின் மகளிரை நடத்தும் தலைவன் மரக்கலத் தலைவன்
ஆணினத் தலைவன்
இந்துக் கலைக்களஞ்சியம்

Page 133
29.
30.
31.
32.
33.
34.
35.
36.
37.
38.
குதிரைத் தலைவன் யானைத் தலைவன் தேர்த் தலைவன் காலாட்படைத்தலைவன் படைத்தலைவன் செயல்முறை இலச்சினைத் தலைவன் புல் நிலத் தலைவன் நாட்டின் வருவாய்த் தலைவன் இல்நிலை வாணித்துவக் குறியினராக ஒற்றரை அமைத்தல். நகரத் தலைவன் செயல்.
மூன்றாம் அதிகாரம் அறநிலை மாட்சி பற்றிக் கூறும்
இருபது அத்தியாயங்களைக் கொண்டுள்ளது.
வழக்கியல் நிறுத்தல் வழக்குரை எழுதுதல்
மணஇயல்
தாயபாகம்
நிலவழக்கு
கட்டுப்பாடு கடவாமை கடன் கொள்ளல் அடைக்கலப் பொருள் இயல் அடிமைப் பணியாளரின் தன்மை கூடித் தொழில் ஆற்றுதல் விற்றுக் கொண்டு மாறுபடுதல் நல்கியதை நல்காமை உரிமையற்றவன் விற்றல் உடமைக்கும் உடையவனுக்கும் உரிய தொடர்பு வன்முறைச் செயல்
வன்சொல்
தண்டத்தின் கொடுமை ஆடு பறவை விலங்கு விளையாட்டு ஒழிபு
நான்காம் அதிகாரத்தில் பதின்மூன்று அத்தியாயங்கள்
சிறுபகை களைதல் பற்றிக் கூறுகின்றது.
8
10.
இந்துக் கலைக்களஞ்சியம்
தச்சர் காருகரால் தீங்கு நேராமற் காத்தல் வணிகராலே தீமை உண்டாகாது காத்தல் தெய்வீகப் பேரச்சமாற்றல் ஏமாற்றிப் பிழைப்பவரால் தீமை உண்டாகாமற் காத்தல் சித்த உருவினரால் வஞ்சகரை வெளிப்படுத்தல் ஐயுறல் கொள்ளச் செயல்களால் கள்வரைப் பிடித்தல் விரைவில் (தற்செயலாக) இறந்தவனை சொல் செயல்களால் வினவுதல் அதிகாரிகளால் தீமை உண்டாகாது காத்தல் உறுப்புக்களைத் துண்டித்தில் முதலியவற்றுக்கு ஈடாகப் பொருள் தண்டம்
சுத்தம் சித்திர தண்ட முறை

11. கன்னியைத் துன்பப்படுத்தல் 12. நெறிகடத்தல்
ஐந்தாம் அதிகாரம் வஞ்சித்து ஒறுத்தல் பற்றி ஆறு அத்தியாயங்களிற் கூறப்படுகின்றது.
மறைவாய்த் தண்டித்தல் பொன்முதலியவற்றை மிகுதியாய்க் கொள்ளல் துணைவரைக் காத்தல் அமைச்சர் முதலியவர் இயல்பு ஒழுக்க வரையறை அரசியல் புத்தமைப்பு தனித் தலைமையரசு
ஆளும் அதிகாரம், மண்டலயோனி பற்றி இரண்டு அத்தியாயங்களிற் கூறப்படுகின்றது. 1. அரசுறுப்புக்களின் வரையறை 2. வினை செயல் பயன்துய்க்கும் கருவி
ஏழாம் அதிகாரம், அறுவகைக் குணங்கள் பற்றிக் குறிப்பிடுகின்றது. பதின்மூன்று அத்தியாயங்கள் இதில் அடங்கும். அவையாவன :
அறு குணங்களின் வரையறை குறைவு ஒப்பு மிகுதிகளின் துணிபு வலியதைப் பற்றி ஒழுகுதல் குறைவு ஒப்பு மிகுதியால் வலி நிலைகளுள் குணநலம் பற்றுதல்
5. இழிந்தவன் சந்ததிகளை ஏற்றல் 6. பொருது இருத்தல்
7. நட்பு மேற்கொண்டிருத்தல்
8
9
பொருது மேல் செல்லல்
நட்புப் பூண்டு மேல் செல்லல் 10. கூடி மேல் செல்லல் 11. கலக்கம் உடையவனும் தீங்கு செய்பவனுமான பகைவர்
இருவருள் மேல் செல்வதற்குரியவனைத் துணிதல் 12. பிரக்ருதிகள் குறை பொருள் விருப்பு வெறுப்புக் காரணம் 13. கூடித் தொடர்ந்து செல்பவரை ஆய்தல் 14. சந்தி செய்து கொண்டோர் பிரிந்து செல்லல் 15. வரையறையுடையது வரையறை இல்லாதது பிரிந்தவனைப்
பற்றியது எனும் சந்ததிகள் 16. பிரித்தலைக் காரணமாகக் கொண்ட சந்தி விக்கிரகங்கள் 17. மேற் செல்வதற்குரியவன் செயல் 18. அருள் செய்வதற்குரிய நண்பர்கள் 19. நட்பு, பொருள், நிலம், செயல்களால் ஆகும் சந்ததிகள் 20. பக்கத்து வாழ் பகைவனின் செயல் 21. குறைந்த ஆற்றல்களின் நிறைவு 22. வலியவனுடன் போரிட்டு மறைந்து கொள்வதற்குரிய
காரணங்கள் 23. படைவன்மையால் தாழ்த்தப்பட்டவன் செயல் 24. படைவன்மையால் தன்வயப்படுத்துவோன் செயல் 25. சந்தி கன்மம் 26. சந்தியின் விடுதலை 27 நடுவனிடம் ஒழுகுதல்
87

Page 134
28. நொதுமலன்பால் ஒழுகுதல்
29. மண்டலசரிதம்
8ஆம் அதிகாரம் விதனம் விளம்பல் பற்றிக்
குறிப்பிடுகின்றது. இது பத்து அத்தியாயங்களைக் கொண்டுள்ளது.
அமைச்சர் புரோகிதர்களின் விதனக் குழு அரசனுக்கும் அரசியற்கும் உரிய விதன ஆராய்ச்சி புருட விதனக் குழு
துன்பக் குழு
தடைக் குழு பொருள் கொடாமைக்குரிய காரணக் குழு படை விதனக் குழு
நண்பர் விதனக் குழு
ஒன்பதாம் அதிகாரம் ஏழு அத்தியாயங்களைக் கொண்டது. இது போர்ச் செயல்கள் மேற்கொள்வோர் செய்ய வேண்டியவற்றை விளக்கி நிற்கின்றது.
ஆற்றல், இடம், செயல், காலங்களின் வன்மை மேல் செல்வதற்குரிய காலங்கள் படை செலுத்துவதற்குரிய காலங்கள் சந்நாக குணங்கள்
எதிர்ப்படையினது செயல் பின்னர் நிகழும் கொடிய செயல்களை ஆராய்தல் அகப்புறப் பகுதிகளின் சினம் அடக்கல் குறைவழி ஊதியங்களின் ஆராய்ச்சி அகப்புற இடர்கள் வெறுக்கத்தக்க வரும் பகைவரும் செய்யும் இடர்கள் பொருள் அழிவு ஐயங்களோடு அமைந்த இடர்கள் அவற்றை நீக்கும் உபாய வேறுபாடுகளால் உண்டாகும் சக்திகள்.
பத்தாம் அதிகாரம் போர் நிகழ்ச்சி பற்றி விளக்கி நிற்கின்றது. ஆறு அத்தியாயங்கள் இதில் அடங்கும்.
1.
பாசறையை அமைத்தல் 2. பாசறையை நோக்கிச் செல்லல்
3.
படைத்துன்பம் கடுவழிச் செல்லுங் காலம். இவற்றி னின்றும் படைகளைக் காத்தல் வஞ்சகப் போர் வகைகள் தன் படைகளை ஊக்கப்படுத்தல் தன் படைக்குப் பகைப் படையைவிடச் சிறந்த அமைப்பு போர்க்கள இயல்பு யானை முதலிய படைவரின் செயல்கள்
பக்கம் கக்கம் நடு இடங்களின் படையளவுக்கு ஏற்பப்
பிரித்து அமைத்தல்
10. வன்படை மென்படைகளைப் பிரித்து அமைத்தல்
11. யான்ன, குதிரை, தேர், காலாட்படைகளின் போர் வகைகள்
12. தண்டம், போகம், மண்டலம், அசங்கதம் என்னும் படை
வகுப்பு அமைத்தல்
13. அவற்றுக்குள் எதிர்ப்படை வகுப்பு அமைத்தல்
88

பதினோராம் அதிகாரம் குழுச்செயல் பற்றிக் குறிப்பிடுகின்றது. ஒரு அத்தியாயத்தில் வேறுபடுத்தலை மேற்கோடல், மறைவிற் கோறல் (கொல்லுதல்) என்பன கூறப்பட்டுள்ளன.
பன்னிரண்டாம் அதிகாரம் ஆற்றல் இலானின்
செயல்பற்றிக் குறிப்பிடுகின்றது. இதில் ஐந்து அத்தியாயங்கள் உண்டு.
1. தூதன் செயல்
2. அறிவுப் போர்
3. படைத்தலைவர் கொலை
4. மண்டலத்தை ஊக்குதல்
5. படைக்கலம், தீ, நஞ்சு என்ற இவற்றை மறைவாகப்
பயன்படுத்துதல்
6. கூலம் முதலியவை சுமப்பவர், நட்புப்படை புல், விறகு
கொணர்பவர் ஆகியோரைக் கொல்லல்
7. கபட வழியால் அழித்தல் 8. தண்டத்தால் அழித்தல் 9. தனியனாய் வெல்லல்
பதின்மூன்றாம் அதிகாரம் ஐந்து அத்தியாயங்களை உடையது. பகையரண் எய்தும் வழி இங்கு கூறப்படுகின்றது.
வேறுபடுதல் உபாயத்தால் வெளிப்படுத்தல் ஒற்றர்களை இருத்தல் சூழ இருக்கச் செய்தல் துன்பப்படுத்தல் எய்திய அரணை இனிதின் அடக்கல்
பதினான்காம் அதிகாரம் மறைவுச் செயல் பற்றி நான்கு அத்தியாயங்களிற் கூறப்படுகின்றது.
1. பகைக் கொலைப் பயன்படுத்தல்
வஞ்சித்தல் 3. தன் படைக்கு உண்டாகும் இடர்களுக்கு எதிர்ச்சொல்
இறுதி அதிகாரமான பதினைந்தாம் அதிகாரத்தில் ஒரு அத்தியாயத்தில் தந்திரபுத்தி பற்றிக் கூறப்படுகின்றது. இவ்வாறாக நூற்றைம்பது அத்தியாயத்திலும் அரசியலைப் பற்றி விரிவாக ஆசிரியர் கூறிச் சென்றுள்ளார். இந் நூல் கூறி நிற்கும் முக்கிய விடயங்கள் சில பற்றியும் இங்கு நோக்கப்படுகின்றது. அதாவது வர்ணாச்சிரம தர்மம், பெண்களுக்குரிய உரிமை திருமணம், அரசியல், சொத்துரிமை, நில அமைப்பு ஆகியன பற்றியும் ஆசிரியரின் கருத்துக்கள் சில இங்கு கூறப்படுகின்றன.
இந்நூல் வர்ணாச்சிரம தர்மம் பற்றி குறிப்பிடுமிடத்து நான்கு வர்ணத்தவர்களுக்குமுரிய கடமைகளைக் குறிப்பிடுகின்றது.
இந்துக் கலைக்களஞ்சியம்

Page 135
. அந்தணர்க்கு ஒதல், ஒதுவித்தல், வேட்டல், வேட்பிடித்தல், ஈதல், ஏற்றல் என்னும் ஆறு கடமைகளும் உரியனவாம்.
2. அரசர்க்கு ஒதல் வேட்டல், ஈதல், படைக்கலம் பயிறல்,
உயிர்களைக் காத்தல் என்னும் ஐந்தும் உரியனவாம்
3. வணிகர்க்கு ஒதல், வேட்டல், ஈதல், உழவு, பசுக்காவல்,
வாணிகம் ஆறு கடமைகளும் உரியனவாம்
4. சூத்திரர்க்கு இருபிறப்பாளர் மூவருக்கும் பணியாற்றல் உழவு, பசுக்காவல், வாணிபம், சாரு கன்மம், குசில வகன்மம் முதலியனவாம்.
இக்கடமைகளை மேற்குறிப்பிட்ட நான்கு வருணத்தவரும் தவறாது செய்வதற்கு மன்னனே பொறுப்புடையவன். மன்னனின் தண்ட நீதியால் மக்கள் காக்கப்படுவாராயின் தத்தம் கடமைகளை வழுவாமல் மேற்கொண்டு தங்கள் இல்வாழ்வினை நன்கே நிறைவேற்றுவர்.
அரசன் அமைச்சரை நியமிக்கும்போது அமைச்சருக் குரிய குணச் செல்வத்தையும் காலம் இடம் செயல் என்னும் இவற்றையும் பகுத்துணர்ந்து இங்கு கூறப்பட்ட எல்லோரையும் அமைச்சராக நியமிக்கலாம்.
அமைச்சரின் தலைவர், அதாவது முதல் அமைச்சரை நியமிக்கும்போது அவன் தன் மன்னனின் நாட்டில் பிறத்தல், உயர் குடிப்பிறப்பு, நல்லசுற்றத்தாரை உடைமை, யானை, குதிரை முதலியவற்றில் கலைப்பயிற்சி, பொருள் நூல் உணர்ச்சி, அறிவு நுட்பம், மறதியின்மை, சோர்வில்லாமை, சொல்வன்மை, காலம் இடங்களுக்கு ஏற்ற அறிவுடைமை, எதிர்ச்செயல் மாற்றம், ஆண்மை, பெருமை, துன்பம் பொறுத்தல், தூய்மை, அன்புடைமை, மன்னனிடம் உறுதியான அன்பு, ஒழுக்கம், உடல்வலி, நோய் இல்லாமை, காணுதற்கு இனிமை, பகை செய்யாமை இவற்றை நன்கு அறிந்தே நியமித்தல் வேண்டும்.
அரசன் தன் மகனே ஆனாலும் தன் பகைவனே ஆனாலும் ஒத்தமுறையில் குற்றத்துக்கு தக்க தண்டனையை விதித்தல் வேண்டும். யானை, குதிரை, தேர் காலாற் படை என்ற நால்வகை உறுப்புக்களையுடைய மூலப் படை, கூலிப்படை, நாட்டுப்படை, காட்டுப்படை, பகைப்படை என்ற ஆறு படைகள் மூலம் போருக்குச் செல்லுதல் வேண்டும். குற்றம் களைதல், படையை நிலைப்படுத்தல், காட்டில் இருத்தல், வஞ்சித்தல், இவை படை விதனங்களை நீக்குதற்குரிய கருவிகளாகும்.
பகைவனைக் கொடிய விஷங்களால் நலினப்படுத்தலாம் எனவும் இந் நூல் கூறி நிற்கின்றது. பகைவனை அழிப்பதாயின் முதலில் ஒற்றையடி வழியிலும், மலை, தூண் வேலி தடங்கல், உட்புற நீர் ஆகியவற்றிலும் தன் நிலைப்படையால் கொல்ல வேண்டும். ஆறு ஏரி குளங்களின் அணைக்கட்டினை விரைந்து அழிப்பதால் மிதக்கச் செய்தல் வேண்டும். நிலவரண், காடு, சுரங்கம் ஆகியவற்றுள் உள்ள பகைவனை வஞ்சத்தீ புகை என்பனவற்றால் அழிக்க வேண்டும்.
இந்துக் கலைக்களஞ்சியம்

பூதி ஆஞ்ச இலை, அரிதானம், மனோசிய குன்றிமணி செம்பருத்தி, வைக்கோல் என்பவை சிவப்பெருக்கு லவணசாரம் பசுவின் சாணம் சிறுநீர்களுடன் கூட்டி அரைக்கப்பட்டால் அவற்றினது புகை குருட்டுத் தன்மையை உண்டாக்கும் என்று கூறிய ஆசிரியர் இன்னும் பலவகை விஷத் தீயைப் பற்றியும் புகையைப் பற்றியும் கூறிச் சென்றுள்ளார்.
பெண்களின் திருமணம் பற்றி விரிவாக கூறியுள்ளார். பெண்ணை அலங்கரித்துத் தானம் செய்தல் பிரம்மமணம், உடனிருந்து அறம் இயற்றல் பிரசாபத்தியம், மணமகளிடமிருந்து ஆவும் ஆனேறும் பெற்று பெண்ணைத் தருதல் ஆரிடம், வேள்வியினிடையே வேட்பிப்போனுக்குப் பெண்ணை ஈதல் தைய்வம் தலைவனும் தலைவியும் தம்முட் கூடி இயைவது கந்தருவம், பரியம் பெறுதல் ஆசுரம் வலிதிற் கொள்வது இராக்கதம், துயில்பவளைக் கவர்தல், பைசாசம் என மண முறைகளைப் பற்றிக் குறிப்பிடுகின்றார்.
திருமணம் பற்றிக் கூறிய ஆசிரியர் ஆங்கே அவர்களுக்குரிய உரிமைகள் பற்றியும் குறிப்பிட்டுள்ளார். வேறு கணவனை மணந்த மனைவி முதற் கணவனின் தாயப்பொருளுக்கு உரிமை இல்லாதவள் ஆவாள். குழந்தை உடையவள் வேறு ஆடவனை மணந்தால் சீதனத்துக்கு உரிமை இல்லாதவள் ஆவாள். அந்த உரிமை பிள்ளைகளையே சேரும். கணவன் உயிருடன் இருக்கும்போது இறந்தவளின் சீதனத்தை அவளுடைய ஆண்மக்களும் பெண்மக்களும் பகுத்துக் கொள்ளல் வேண்டும். ஆண் இல்லை என்றால் பெண்ணுக்குச் சேரும். பெண்ணும் இல்லை என்றால் கணவனுக்கே சேரும். மனைவியின் குற்றம் காரணமாக விடுதலை விரும்பும் கணவன் வாங்கியவற்றை அவளுக்குக் கொடுத்து விடுதல் வேண்டும். கணவனின் குற்றம் காரணமாக மனைவி விடுதலை அடைய விரும்பினால் வாங்கியவற்றை அவளுக்குக் கொடுத்துவிட வேண்டியதில்லை. அறத் திருமணம் கொண்டவர்களுக்குள்ளும் விடுதலை இல்லை. நான்கு தலைமுறை வரை பிண்டம் செய்யும் உரிமை தந்தைவழிக்கு உண்டு. தந்தையின் பொருளை பதினாறு வயதுக்கு மேற்பட்ட ஆணும் பன்னிரண்டு வயதடைந்த பெண்ணும் பகுத்துக் கொள்வதற்கு உரிமையுடையவர்கள் இந்நூல் உரிமை பற்றிக் கூறியுள்ளது. .
நில உரிமை பற்றிக் கூறும்போது ஆசிரியர் ஒவ்வோர் இல்லத்துக்கும் எல்லைக் கோடுகளில் (அந்தந்த வீடுகளுக்கென அளவிட்டு எல்லைக்கட்டு அமைத்தல் வேண்டும்) முன்பு இல்லாதவிடத்து பிறனுடைய வீட்டுச் சுவரினின்றும் இரண்டு முழம் அல்லது மூன்று அடிவிட்டு சுவரினை அமைக்கலாம் மூன்றடி அல்லது ஒன்றறை முழம்விட்டு நிலத்தினுள்ளே தடை இல்லாது நீர்வடியும்படி தூம்பையும் அங்ங்ணமே அந்நீர் விழும் இடத்தையும் அமைக்க வேண்டும். எல்லாவகை மனைக் கட்டுக்களிலும் சாலைகள் ஒன்றோடு ஒன்று நெருக்கமாய் அமைக்க நேர்ந்தால் ஒரு முழம் எட்டங்குலமேனும் மூன்றடியேனும் இடைவெளிவிடல் வேண்டும். இவ்வாறு பலவிதிகளை அர்த்த சாஸ்திரம் கூறியுள்ளமையைக் காணலாம். (நா ஞா.)
89

Page 136
அர்த்தநாரீசுவரர்
சிவபிரானின் மகேசுர மூர்த்தங்களிலே (உருவத் திருமேனிகளிலே) ஒன்று அர்த்தநாரீசுவரர். அர்த்தம் என்பது பாதி; நாரீ என்பது பெண். சிவபெருமான் பாதி ஆண் உருவமும் பாதி பெண் உருவமும் கொண்டு விளங்கும் போது அர்த்த நாரீசுவரர் எனப்படுவர். இவ்வடிவிலே ஆண்கூறு வலப் பக்கத்திலும் பெண்கூறு இடப்பக்கத்திலும் அமைகின்றது. இவ் வடிவம் போக மூர்த்தமாகும்.
உலகங்களையெல்லாம் படைத்துக் காத்து ஒடுக்கியருளும் ஒப்புயர்வற்ற பரம் பொருளைச் சிவம் என்றும் அதன் ஆற்றலைச் சக்தி என்றும் ஆன்றோர் வழங்கினர். இறைவனின் அருட்பண்பு சக்தி. பண்பானது பொருளுக்குப் பின்தோன்றாது உடன் நிகழும் தன்மை. ஆதலின் சக்தியும் சிவமும் தம்முள் ஒன்றினொன்று பிரிவில்லனவாகத் திகழும். சிவம் இன்றிச் சக்தியில்லை. சக்தியின்றிச் சிவம் இல்லை. சிவபிரான் கிரியா சக்தியாற் படைத்தலையும், ஞான சக்தியாற் காத்தலையும் இச்சா சக்தியால் ஒடுக்கலையும் ஆதிசக்தியால் மறைத்தலையும் பராசக்தியால் அருளலையும் புரிந்தருள்கின்றார் எனச் சமய ஞான நூல்கள்
கூறுவன.
சிவபிரான் திருவருளாம் சக்தியின் பெண்ணுருக் கொண்ட மூர்த்தம் உமேசர். உமாமகேசுவரர் மூர்த்தத்திலே பிரமன், திருமால், உருத்திரன், மகேசுரன், சதாசிவன் என்னும் ஐவரும் தமது திரு முன்னிலையிலே ஐந்தொழில்களை முறையே செய்யத் தாம் அவற்றைக் கடைக்கணித்துக் கொண்டு அசைவற்று இருக்கும் நிலையில் உமாதேவியாரைச் சிவபிரான் தம் இடப் பாகத்திலே கொண்டு எழுந்தருளியிருக்கிறார். அர்த்த நாரீசுவரர் கோலத்தில் இறைவன் பாதியாகவும் இறைவி பாதியாகவும் காணப்படுவர்.
அர்த்தநாரீசுவரர் மூர்த்தத்தினைப் பழைய பாடல்களிலே காணலாம். "நீலமேனி வாலிழைபாகத்து ஒருவன்" என ஐங்குறு நூற்றுக் கடவுள் வாழ்த்து இவ்வடிவத்தினைக் கூறுகின்றது. "பெண்ணுரு ஒரு திறன் ஆகின்று அவ்வுருத் தன்னுள் அடக்கிக் கரக்கினும் கரக்கும்” என்று புறநானூற்றுக் கடவுள் வாழ்த்து இதனையே கூறும். இக்கடவுள் வாழ்த்துப் பாக்கள் தோன்றிய காலத்தில் எழுந்ததாகக் கருதத்தக்க திருமுருகாற்றுப்படை 'உமையமர்ந்து விளங்கும். முரண்மிகு செல்வன் என்று கூறுகின்றது (153 - 154).
பின்னெழுந்த சிலப்பதிகாரத்திலே 'உமையவள் ஒரு திறனாக ஓங்கிய இமையவன்” குறிப்பிடப்படுகின்றான் (6,42 43), மணிவாசகப் பெருமான்,
தோலும் துகிலும் குழையும் சுருள் தோடும் பால்வெள்ளை நீறும் பசுஞ்சாந்தும் பைங்கிளியும் குலமும் தொக்க வளையும் உடைத் தொன்மைக் கோல:
90 -

எனத் திருவாசகத்திலே அர்த்தநாரீசுவரர் கோலத்தின் வடிவத்தை எடுத்துக் காட்டுகின்றார் (திருக்கோத்தும்பி, 18)
காளிதாசனின் குமார சம்பவத்திலே அர்த்த நாரீஸ்வரர் குறிப்பிடப்படுவதாக உரைப்பர். புஷ்பதந்தரும் சிவமகிம் நஸ்தோத்திரத்தில் இம் மூர்த்தத்தினைக் கூறுவதாகச் சொல்வர்.
காஞ்சி கைலாசநாதர் கோயிலிலே இடம் பெறும் இவ்வடிவம் தென்னாட்டிற் காணப்படும் பழைய வடிவங்களில் ஒன்றாகக் கருதப்படும். இவ்வடிவிலே உமாதேவியார் வீணையுடனும் சிவபிரான் காளையில் ஏறிய கோலத்திலும் காணப்படுவர்.
திருச்செங்கோடு சிவதலத்தில் மூலவர் அர்த்த நாரீஸ்வரராக அமைந்துள்ளார். இங்கு உமாதேவியாருக்கு அர்த்தநாரீஸ்வரி, பாகம்பிரியாள் என்ற பேர்கள் உண்டு.
அர்த்தநாரீஸ்வர மூர்த்தத்துடன் தொடர்புடையது பிருங்கி முனிவரின் கதை. பிருங்கிமுனிவர் சிவனை மட்டும் வழிபடும் தீவிர தரத்தினர். இறைவி இதனாற் கவன்று தவஞ் செய்து இறைவனுடன் அர்த்தநாரீ வடிவம் பெற்ற போதும் பிருங்கிமுனிவர் இறைவியையும் சேர்த்து வழிபட விரும்பாது, வண்டு வடிவத்திலே இறைவன் பகுதியைத் துளைத்துத் தனிப்படுத்தி வழிபட்டாராம். இதனால் கோபமடைந்த இறைவி அவரை வலுவிழந்து போகும்படி சாபமிட்டனர். சாபத்தினால் வலுவிழந்து கொண்டு வந்த போதும் பிருங்கிமுனிவர் தன்னிலையிலிருந்து மாறவில்லை; நடக்க முடியாத கட்டத்தினை அடைந்தனர். சிவபிரான் தன் பக்தனின் நிலை கண்டு இரங்கி அவருக்கு மூன்றாவது ஒரு காலை அருளினார். இதனால் பிருங்கிமுனிவர் மூன்று கால் மூன்று கையடன் அமைக்கப்படுவதுண்டு. இத்தகைய படிமம் பூரீ சைலத்தில் உண்டு. பிருங்கி முனிவரை இறைவி வன்னிமரமாகச் சபித்ததாகவும் அந்நிலையடைந்த பின்பு அம்மையை வணங்கி பழைய உருப்பெற்றதாகவும் கதையுண்டு. (பொ பூ)
அர்த்த பஞ்சக ஞானம்
ஞானத்தின் ஐந்து அமிசங்கள் பற்றிய அறிவாக 6Դ6)I6ÙÛT6)] சம்பிரதாயம் கொள்வது அர்த்த பஞ்சக ஞானமாகும். வைணவ
விசிஷ்டாத்வைத தத்துவ மரபுகள் யாவற்றையும் இவ்வைந்து தலைப்புகளிலே ஆராய முடியும் என்று கருதுவர். அவையாவன:-
(1) பேறு : நாம் அடைய விரும்பும் பொருளின் இயல்பு.
(2) தகுதி பேற்றினை அடைவதற்கு நமக்குள்ள தகுதி.
(3) உபாயம் : பேற்றினை அடையும் மார்க்கங்கள்
(4) பலன் பேற்றினை அடையின் நாம் பெறும் பலன்கள்.
(5) தடை : பேற்றினை அடைய முறியடிக்க வேண்டிய
தடைகள்.
வடக்குத் திருவீதிப்பிள்ளை முதன்முதலாக இவ்வைந்து அமிசங்களையும் அமைத்து, அர்த்த பஞ்சகம் என்ற பெயர்
இந்துக் கேளஞ்சியம்

Page 137
வழங்கி விளக்கினார். அவர் திருவாய்மொழி முழுவதும் அர்த்த பஞ்சகத்தின் விளக்கம் என்று கொண்டு, அதன் புத்துகளை இவற்றுடன் தொடர்புபடுத்திக் காட்டினார். பெரியவாச்சான் பிள்ளையும் இரகஸ்யதிரய தீபிகையில் அர்த்த பஞ்சம் பற்றி விளக்கம் தந்துள்ளார்.
பிள்ளைலோகாசாரியர் அர்த்த பஞ்சகம் என்ற நூலிலே இவ்வைந்து அமிசங்களையும் விரிவாகவும் தெளிவாகவும் விளக்கியுள்ளார். (பொ.யூ.)
அர்த்த பஞ்சகம்
விட்டாத்வைதிக மரபினை அர்த்த பஞ்சக ஞானம் என்ற அமைப்பிலே தொகுத்து விளக்கும் மரபு வடக்குத் திருவீதிப்பிள்ளை முதலாகக் காணப்படுகின்றது. அவர் புதல்வர் பிள்ளை லோகாசாரியர் (1264 - 1369) எழுதிய நூலே அர்த்தபஞ்சகம் ஆகும்.
தென்கலை வைணவ ஆசாரியராக விளங்கிய பிள்ளை லோகாசாரியர் அர்த்தபஞ்சக ஞானத்தை விரிவாகவும் தெளிவாகவும் விளக்கிக்காட்டியுள்ளார். முன்னையோர் பேற்றிற்கான ஐந்து தேவைகளை விளக்கிச் செல்லப் பிள்ளை லோகாசாரியர் ஒவ்வொரு வகையினையும் ஐந்து உபதலைப்புகள் அளித்துத் தெளிவாக்கியுள்ளார்.
அர்த்த பஞ்சகம் பிள்ளைலோகாசாரியர் மணிப்பிரவாள நடையில் எழுதிய அஷ்டாதசரகஸ்யங்களிலே ஒன்றாகும்.
(பொ. பூ)
élÍg55 1DaöTL1Jb
கருவறை அல்லது கர்ப்பக்கிரகத்தின் முன்னுள்ள மண்டபம், அர்த்த மண்டபம் என்று பெயர் பெறும். கர்ப்ப கிரகத்தினைச் சிரமாகவும் அர்த்த மண்டபத்தினைக் கண்டமாகவும் உருவகித்துக் கூறுவர். அர்த்த மண்டபத்தின் முன்னுள்ள மண்டபம் முகமண்டபம் எனப்படும். அர்த்த மண்டபம் என்பது அரைவாசி அளவான மண்டபம் என்ற பொருள் தருகின்றது. அந்தராளம் என்ற பகுதி கருவறைக்கும் அர்த்த மண்டபத்திற்கும் அல்லது அர்த்த மண்டபத்திற்கும் முக மண்டபத்திற்கும் இடையிலே அமையலாம். அர்த்த மண்டபத்தின் வாயிலிலே இருபுறத்திலும் துவாரபாலகர் உருவங்கள் இடம் பெறும்.
பல்லவர் காலம் வரையில் எழுந்த கோயில்களிலே கருவறையும் அர்த்த மண்டபமும் கோயிலமைப்பிலே காணப்படுவன; வேறு மண்டபங்கள் பெரும்பாலும் காணப்படவில்லை. சோழப் பெரு மன்னர் ஆட்சிக் காலத்திலே, பத்தாம் நூற்றாண்டினை ஒட்டியே கருவறையைச் சுற்றிலும் மண்டபங்களும் அர்த்த மண்டபத்தின் முன் மண்டபமும் எழத் தொடங்கின. (பொ.யூ.)
இந்துக் கலைக்களஞ்சியம்

அரங்கநாதக் கவிராயர்
பதினெட்டாம் நூற்றாண்டிலே வாழ்ந்தவர் அட்டாவதானம் அரங்கநாதக் கவிராயர், தொண்டைநாட்டினர், செளப்திக பருவம் சிகாமணிச் சருக்கம் முதல் பதினெட்டாம் பருவமாகிய சொர்க்காரோகணப் பருவம் வரை 45 சருக்கங்களிலே, ஏறக்குறை 2500 பாடல்களிலே மகா பாரதத்தைப் பாடி சகம் 1675 இலே (கி. பி. 1753) அரங்கேற்றியவர்; இதனைத் துறையூர் முத்துவீரம் கோவிந்தபிள்ளை சென்னையிற் சுபகிருது வருடம் (1903) பதிப்பித்தனர். (பொ.யூ.)
அரங்கநாத முதலியார்
பூண்டி என்னுமூரினார்; சுப்பராய முதலியாரின் புதல்வர்; இராய்பகதூர் பட்டம் பெற்றவர்; சென்னை பிரசிடென்சிக் கல்லூரியிலே கணிதப் பேராசிரியராகச் சேவை புரிந்தவர்; அரசாங்க மொழிபெயர்ப்பாளராகக் கடமையாற்றியவர். சென்னைநகர் ஷெரீப் வேலை பார்த்தவர்; தமிழ், தெலுங்கு ஆங்கிலத்திலே கூட்டு முயற்சியாகப் பத்திரிகை ஒன்று (NATIVES PUBLIC OPINION) நடத்தியவர்; கச்சிக்கலம்பகம் பாடி 1889 இலே அரங்கேற்றியவர். (பொ.யூ.)
அரசகேசரி, நல்லூர்
பதினாறாம் நூற்றாண்டின் பிற்கூறிலும் பதினேழாம் நூற்றாண்டின் முற் கூறிலும் வாழ்ந்தவர்; எதிர்மன்னசிங்கன் என்னும் யாழ்ப்பாணத்தை ஆட்சிபுரிந்த ஆரியச் சக்கரவர்த்தியின் (1591 - 1615) தமையனார்; எதிர் மன்ன சிங்கனால் மரணப் படுக்கையிலே தன் மகன் வயதுக்கு வரும்வரை இராச்சிய பரிபாலனம் செய்யும்படி வேண்டப்பட்டவர்; எதிர்மன்னசிங்கனின் நியமனத்தைப் போர்த்துக்கேய தேசாதிபதி ஏற்குமுன் சங்கிலி குமாரனாற் கொல்லப்பட்டவர்; சங்கிலி குமாரன் ஆட்சி 1615-1619.
மகாகவி காளிதாசர் சங்கத மொழியிலே பாடிய இரகு வம்மிசம் என்னும் காவியத்தினை அரசகேசரி தமிழிலே பாடியுள்ளார். இரகு வம்மிசத்தின் மூலத்தினை நல்லூர் வித்துவ சிரோமணி ச. பொன்னம்பலபிள்ளை யாழ்ப்பாணம் வித்தியாநுபாலனயந்திரசாலையில் சர்வசித்து வருடம் ஆவணி மாதம் (1887) பதிப்பித்தனர். (பொ.யூ.)
அரசஞ்சண்முகனார் (1868 - 1915)
1ாண்டிநாட்டு மதுரை மாவட்டம் நிலக்கோட்டையைச் சேர்ந்த சோழவந்தானிற் பிறந்தவர்; அரசப்பபிள்ளையின் புதல்வர் சண்முகம்பிள்ளை, சோழவந்தானில் சிவகங்கை வே. அழகர்சாமி தேசிகரிடம் ஆரம்பக் கல்வி கற்ற பின்பு கிண்ணிமங்கலமடம் சிவப்பிரகாச சுவாமிகளிடம் (கந்தசாமி) உயர்கல்வி கற்றவர்.
மதுரை சேதுபதி உயர்நிலைப் பள்ளித் தலைமைத் தமிழாசிரியராகவும் சேதுபதி செந்தமிழ்க் கலாசாலை
91

Page 138
ஆசிரியராகவும் மதுரைத் தமிழ்ச் சங்க ஆசிரியராகவும் தமிழ் லெக்சிகன் உதவியாளராகவும் பணிபுரிந்தவர்; மாணாக்கர் பலர் இவரிடம் கற்றவர்கள்; கேட்டவர்கள்; பல்வேறு சஞ்சிகை களுக்குக்குக் கட்டுரைகள் வரைந்தவர்; இலக்கண இலக்கிய சர்ச்சைகளில் ஈடுபட்டவர்.
மதுரை மீனாட்சியம்மை மீது சந்தத் திருவடி மாலையும் திருவடிப்பத்தும், சோழவந்தான் சிதம்பர விநாயகர் மாலை, மாலைமாற்று மாலை, முருகக் கடவுள் கலம்பகம், இன்னிசையிருநூறு, வள்ளுவர் நேரிசை, ஏகபாத நூற்றந்தாதி, மதுரைச் சிலேடை முதலிய செய்யுணுரல்களை இயற்றியவர். வேறு நூல்களும் இயற்றியவர். (பொ.யூ.)
அரதத்தாசாரியார்
10ன்னிரண்டாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர்; சோணாடு காஞ்சிபுரத்தில் வைணவ பிராமண குடும்பத்திற் பிறந்து சைவசமயத்தை மேற்கொண்டவர்; கஞ்சனூரிலே வாழ்ந்தவர்; பற்பல அற்புதங்களாற் சைவஸ்தாபனம் செய்தவர்.
இவர் சங்கதத்திலே அரிகரதாரதம்மியம், உஜ்வலயம், சதுர்வேத தாற்பரிய சங்கிரகம், சிவாதித்திய சிகாமணி, சுலோகபஞ்சகம், சீகண்ட பாடிய சமாத்தனம் சைவாகமபூஷணம் ஞானரத்தினாகரம், தத்தவ நீருபணம் பக்தாதிக்ய சிகாமணி விபூதிருத்திராக்க பஞ்சகம் முதலியவற்றை இயற்றினார்.
சுலோக பஞ்சகம் துறைசை சிவஞானமுனிவரால் மொழி பெயர்க்கப்பட்டது; அரிகரதார தம்மியம் தர்க்க குடாரதாலுதாரி வை. திருஞானசம்பந்தபிள்ளையால் மொழி பெயர்க்கப்பட்டது (1895); சதுர்வேததாற்பரிய சங்கிரகம் வடகோவை சு. சபாபதி நாவலரால் மொழி பெயர்க்கப்பட்டது (1876),(பொ.பூ)
அரவிந்தர் (கி. பி. 1871 - 1950)
அரவிந்தர் கி.பி.1872 ஆம் ஆண்டு ஆகஸ்ட் பதினைந்தாம் நாள் கல்கத்தாவில் கிருட்டிணதனகோசிற்கும் சுவர்ணலதா தேவிக்கும் மூன்றாவது மகனாகப் பிறந்தார்.
இங்கிலாந்தில் உயர்தர மருத்துவக்கல்வி பயின்ற கிருட்டிணதனகோஸ், தம் மக்களை மேல் நாட்டு முறையிலேயே வளர்க்க விரும்பினார். அரவிந்தருக்கு ஐந்து வயது ஆகும், அவரையும் அவர் தமையன்மார் இருவரையும் தார்சிலிங்கில் உள்ள உலோரட்டோ கான்வென்டில் சேர்த்தார்.
இரண்டு ஆண்டுகளுக்குப் பின் 1879 ஆம் ஆண்டு கிரட்டிணதன கோஸ் குடும்பத்துடன் இங்கிலாந்திற்குச் சென்று ஏழு வயதான அரவிந்தரையும் அவர் அண்ணன்மார் வினைய பூடணம், மனமோகன் ஆகிய இருவரையும் மான்செஸ்டரில் தமக்கு நெருக்கமான திராயிட்டுக் குடும்பத்தினரின் பொறுப்பில் விட்டுவிட்டுத் தாயகம் திரும்பினார்.
92

செயின்ட்டு பால்ஸ் பள்ளிக்கூடத்தில் சேர்க்கப்பட்ட அரவிந்தர் மிக விரைவாகக் கல்வியில் முன்னேறி இலக்கியத்திற்குரிய பல பரிசுகளைப் பெற்றார். அவருடைய சிறந்த அறிவினை அறிந்து ஆசிரியர்கள் அவரை உயர் படிவத்திற்கு மாற்றினார்கள். இளம் வயதிலேயே ஆங்கிலத்தில் அவர் கவிதைகள் எழுதத் தொடங்கினார். பிரெஞ்சு, செருமன், இலத்தீன், கிரேக்கம் முதலிய மொழிகளையும் கற்றுத் தேர்ந்தார். கேம்பிரிட்சு கிங்ஸ் கல்லூரியில் 1890 ஆம் ஆண்டில் சேர்ந்தார். அவருக்கு இலண்டன் செயின்ட் பால்ஸ் பள்ளி ஆண்டொன்றுக்கு 80 பவுன் இலக்கியச் சிறப்பு உதவுத் தொகையாக அளித்து வந்தது.
பரோடா மன்னரான சயாசிராவ் கெய்க்வார் முதலில் அரவிந்தருக்குச் சமஸ்த்தானத்தின் பல பகுதிகளில் வேலையளித்த பிறகு இறுதியாகப் பரோடாக் கல்லூரியில் ஆங்கிலப் பேராசிரியராக அவரை அமர்த்தினார். இந்த வேலையை மனநிறைவுடன் செய்த அரவிந்தர் மாணவர்களின் உள்ளங்களில் நீங்காத இடம் பெற்றுவிட்டார். இலக்கியப் பற்று மிகுந்த அவர் அப்போது தம் தாய் மொழியை ஆர்வத்துடன் கற்றார். மேலும் பல இந்திய மொழிகளையும் கற்றுக் கொண்டார். வடமொழி இலக்கியத்தில் பேரார்வத்துடன் ஈடுபட்டார். இந்நாட்களில்தாம் அவரது புகழ் பெற்ற இலக்கியப் படைப்புகள் உருவாயின. பர்த்துருகரியின் சதகங்களையும், காளிதாசனின் குமார சம்பவத்தையும் விக்ரமோர்வசீயத்தையும் உதயணன் சரிதத்தையும் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தார்.
பரோடாக் கல்லூரியில் இருந்தவரை, மறைமுகமாக அரவிந்தர் நாட்டுப் பணியில் ஈடுபட்டிருந்தார். பின், 1905 ஆம் ஆண்டு ஏற்பட்ட வங்கப் பிரிவினையின்போது எழுநூறு ரூபாய் வருமானம் தந்த ஆங்கிலப் பேராசிரியர் பணியை உதறிவிட்டு அரசியலில் நேரிடையாக ஈடுபட்டார். இந்நாள்களில் அவர் வங்காளம் முழுவதும் சுற்றுப் பயணம் செய்தார். மக்களின் உள்ளங்களில் விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தினார். பின், 1906 ஆம் ஆண்டு கல்கத்தாவில் துவக்கப்பட்ட தேசியக் கல்லூரியில் 150 ரூபாய் வருமானத்தில் ஆசிரியர் பணியை ஏற்றுக் கொண்டார்.
அவர் மீது ஆங்கிலேயே அரசினர் 1908 ஆம் ஆண்டு பல பொய்க் குற்றங்களைச் சுமத்தி அலிப்பூர் சிறையில் அடைத்தனர். அலிப்பூர் வழக்கில் தேசபந்து என்று பிற்காலத்தில் புகழ்பெற்ற சி. ஆர். தாசுதான் அரவிந்தரின் வழக்கறிஞராக இருந்து
வாதாடினாா.
சிறையிலிருந்து வெளியே வந்தபின் நாட்டு மக்களின் சோர்வுற்றிருந்த உணர்வினை முறுக்கேற்றுவதற்காக ஆங்கிலத்தில் கர்மவீர் என்றும், வங்காளியில் 'தர்ம என்றும் இரண்டு இதழ்களைத் தொடங்கினார். ஆனால் நீண்டநாள் இப்பணியினைத் தொடர அவரால் இயலவில்லை. மீண்டும் அவரைக் கைது செய்ய அரசாங்கம் முயன்று வந்தது. இச் சமயத்தில் திடீரென்று அவருக்குச் சந்திர நாகூருக்குச் செல் என்று ஒரு தெய்வக் கட்டளை பிறக்கவே அதைத் தலைமேற்கொண்டு பிரெஞ்சு ஆதிக்கத்திலிருந்த சந்திர
இந்துக் கலைக்களஞ்சியம்

Page 139
நாகூருக்குச் சென்றார். அங்கே ஏறக்குறைய ஒரு மாதம் தங்கினார். இதற்குள் அவருக்குத் தமது வாழ்வுப் பாதை தெளிவாக விளங்கிவிட்டது. தாம் ஆற்ற வேண்டிய கடமை அரசியற் களத்தில் இல்லை என்பதை உணர்ந்தார். அதைச் செய்யப் பல வல்லுநர்கள் இருக்கிறார்கள். நீ நான் இடும் சிறந்த பணியைச் செய்ய வேண்டியவன்' என்று மிகத் தெளிவாகவே இறைவன் அரவிந்தருக்கு உணர்த்தியிருந்தார். எனவே மறு சிந்தனையின்றி ஆண்டவனிடம் தம்மை முழுவதுமாக ஒப்படைத்து விட்டார் அவர். சந்திர நாகூரிலிருந்து புறப்பட்டுப் புதுவைக்குச் செல்லும்படி மீண்டும் அவருக்குக் கட்டளை பிறந்தது. அதன்படி அவர் 1910 ஆம் ஆண்டு ஏப்பிரல் மாதம் 4ஆம் நாளன்று புதுவைக்கு வந்து சேர்ந்தார்.
புதுவையைத் தமது வாழ்விடமாக்கிக் கொண்டார். ஆன்மீக ஆராய்ச்சியில் தமது முழு நேரத்தையும் செலவிட்டார். அரசியலில் ஈடுபட்டிருந்தபோது அவரைச் சுற்றியிருந்த நண்பர்களில் சிலர் இப்போது அவருடன் புதுவைக்கு வந்தனர். இவர்கள் தங்கியிருப்பதற்கான ஏற்பாட்டை அச்சமயம் புதுவையில் இருந்த மண்டபம் சீனிவாசாச்சாரியார், கவிஞர் சுப்பிரமணிய பாரதியார் ஆகியோர் செய்து கொடுத்தனர்.
ஆழ்ந்த ஆராய்ச்சியின் முடிவாக அரவிந்தர் ஆன்மிக வரலாற்றின் ஒரு புதிய திருப்பத்தைக் கண்டு பிடித்தார். முழுமையான யோகம் (Integral Yoga) என அவர் அதனைக் குறிப்பிட்டார். இந்த யோகத்தைப் பயிலுவதற்கான வழியையும் அவர் மிக விரிவாக விளக்கியுள்ளார்.
‘வாழ்வனைத்தும் யோகம் (Ali Life is Yoga) என்பது அரவிந்தரின் கொள்கையாகும். அதாவது வாழ்க்கையில் தேவையற்றது என்பது எதுவும் இல்லை. வாழ்வின் ஒவ்வொரு சிறு பகுதியும் சிறந்ததே. ஆன்மீக வாழ்வை மேற்கொண் டவனுக்கு உலகமே ஒரு கல்விக் கூடமாக விளங்குகிறது. தான் எதிர்கொள்ளும் எந்த நிகழ்ச்சியையும் மேற்கொள்ள வேண்டிய எந்தத் தொழிலையும் ஆன்மீகக் கண்ணோட்டத்துடன் அணுக வேண்டும். தன் ஒவ்வொரு செயலையும் உணர்ச்சியையும் எண்ணத்தையும் அகந்தையின் மாசு நீக்கி இறைவனுக்குரிய படையலாக ஒப்படைக்கின்றவன்தான் உண்மை யோகி. முழுமையான யோகம் பயிலுபவன் வாழ்வைத் துறக்க வேண்டியதில்லை. வாழ்வைத் தூய்மையாக்குவதே அவனது
55 L60) LO
அரவிந்தர் தம் ஆன்மீக ஆராய்ச்சியில் கண்டறிந்த முடிவு என்ன? அகண்ட அறிவில் நெடுந்தொலைவில் எதிர்காலத்தின் கருவில் பொதிந்து கிடந்த உண்மையை அரவிந்தர் தம் அகக் கண்ணாற் கண்டறிந்தார். அதாவது மனிதப் பிறவியை அடுத்து புதியதொரு படைப்புத் தோன்றப் போகிறது. குரங்கிலிருந்து மனிதன் தோன்றியது போல், மனிதனையடுத்து ஒளியுடல் படைத்த தொன்மை.மானிடப் படைப்புத் தோன்றப் போகிறது. இப் புதிய படைப்பில் இப்போது காணப்படும் குறைபாடுகள் இருக்கமாட்டா, இறப்பு என்னும் விதி மாறிப் போகும். பசியும்
இந்துக் கலைக்களஞ்சியம்

பிணியும் மூப்பும் அந்தப் புதிய படைப்பில் தலை காட்டா. ஆனால் அந்தப் புதிய படைப்புத் தோன்றுவது எப்படி? சிக்கல் இதுதான். அதற்குக் கோடானுகோடி ஆண்டுகள் ஆகலாம். அதை விரைவாக்க வழியேதும் இல்லையா? உண்டு என்கிறார் அரவிந்தர். அந்தப் புதிய படைப்பைத் தோற்றுவிக்க வல்ல ஆற்றலை இந்தப் பூமியில் வந்து இறங்குமாறு செய்யலாம். அதற்கு மிகக் கடுமையான ஒரு முனைப்பட்ட யோகப் பயிற்சி வேண்டும். இறைவனொருவனுக்கே தன் விருப்பங்கள், செயல்கள், எண்ணங்கள் ஆகியவற்றை ஒப்படைத்து வாழ்வையே ஒரு தவமாக்க வேண்டும் என்கிறார். இதற்கான வழியைத் தேடினார் அரவிந்தர்.
பண்டைய யோக வழிகளின் கருத்துக்களையெல்லாம் ஒருங்கிணைத்து வேத வழியை அடிப்படையாகக் கொண்டு புதிய வாழ்வை வரவேற்பதற்கான பாதையை வகுத்தார் அவர். மனிதன் தன் மூன்று அங்கங்களையும், அதாவது அன்ன மய சரீரம் (உடல்), பிராணமய சரீரம் (உணர்ச்சிகளை இயக்கும் நுண்ணுடல்), மனோமய சரீரம் (எண்ணங்களின் மையமாக விளங்கும் மனவுடல்) ஆகிய மூன்று அங்கங்களையும் நன்கு கண்காணித்துத் தூய்மைப்படுத்த வேண்டும். இதற்கு வழியாக ஆர்வம் (ASpiration), புறக்கணித்தல் (Rejection) அடைக்கலம் புகுதல் (Surrender) ஆகிய முறைகளைக் கையாள வேண்டும்.
ஆர்வம் தனது உடல் ஆற்றும் செயல்கள், இதயம் உணரும் உணர்ச்சிகள் மனம் எண்ணும் எண்ணங்கள் யாவுமே இறைவனுக்காக, இறைவனைக் குறித்தே இருக்க வேண்டும் என்கிற ஆர்வம் யோகம் பயில்பவனுக்கு என்றும் குன்றாமல் இருக்க வேண்டும்.
புறக்கணித்தல் தனது குறிக்கோள் வாழ்வுக்குப் பொருந்தாத செயல்கள், உணர்ச்சிகள், எண்ணங்கள் அனைத்தையும் அவ்வப்போது உடனுக்குடன் கண்காணித்து நீக்கி விட வேண்டும்.
அடைக்கலம் புகுதல் : தனது ஒவ்வொரு செயலையும் உணர்ச்சியையும் யோகம் பயில்வோன் முழுமையாக இறைவனிடம் ஒப்படைத்துச் செயலாற்ற வேண்டும்.
இவ்வாறு மனிதன் தன் உடல் முதல் மனம் வரை அனைத்து உறுப்புகளையும் தூய்மைப்படுத்தும் கேள்விக்கு முழுமையான யோகம் எனப் பெயரிட்டார் அரவிந்தர்.
மனித வாழ்வைத் தெய்வவாழ்வாக மாற்றுவதற்காக ஒரு ‘தேவசங்கம் அமைக்க வேண்டும் என்ற கருத்து பல நாட்களாகவே அவருக்கு இருந்து வந்தது. இந்தக் கருத்திற்கு வடிவம் ஏற்படும் காலமும் வந்தது.
93

Page 140
அரவிந்தர் தமது யோக முறையில் தொடர்ந்து முன்னேறிக் கொண்டிருந்தார். மானிட நிலைக்கு அப்பாற்பட்ட உருமாற்றத் திற்காக மிகை மன ஆற்றல் (Supramental Force) பூமியில் வந்து இறங்க வேண்டும் என்று அவர் கூறினாரல்லவா? அந்த முயற்சியில் அவர் மிகக் கடுமையாக முனைந்தார்.
அவருடைய யோகப் பயிற்சி 1926 ஆம் ஆண்டில் பெருவெற்றி பெற்றது. மனத்திற்கும் அதிமனத்திற்கும் இடைப்பட்ட ஆற்றலான மேல்மன (Over mind) ஆற்றல் அரவிந்தர் மூலமாக வந்து இறங்கியது. அதிமன ஆற்றல் புவியில் வந்து இறங்கிய முதல்நிலை இது. இதற்குப் பிறகு அதிமன ஆற்றலை ஈர்க்கும் முயற்சியாக அரவிந்தர் கடும் தவத்தில் ஈடுபட்டார். இதற்கு முழுமையான தனிமை தேவைப்பட்டது. எனவே, தாம் அன்றாடம் பார்த்தும் பேசியும் வந்த மாணவர்களையெல்லாம் விட்டு விலகித் தனி அறையில் மோாத்தவத்தில் இருக்கலானார். ஆசிரமத்தின் முழுப்பொறுப்பும் அன்னையிடம் ஒப்படைக்கப்படடது.
அரவிந்தர் மனங்கடந்த ஆற்றலை ஈர்ப்பதற்காகத் தனித்திருந்து தவம் செய்தார். அந்தத் தவம் தொடர்ந்து இடையறாது நீடித்தது அந்தத் தவத்தின் தன்மை என்னவென்பதை விளக்குவதற்குச் சொற்கள் பயன்படா. எனினும் அரவிந்தர் காமே மாணவர்களுக்கு எழுதியுள்ள கடிதங்கள் மூலமாகவும் அவர் இயற்றியுள்ள 'சாவித்திரி என்னும் பெருங்காப்பியத்தின் வாயிலாகவும் அவர் ஆற்றிய பணியின் தன்மையை அறியலாகும். இப் பெருங்காப்பியத்தில் தம் அறிவுப் பயிற்சியில் தாம் உலவிய இடங்களையும் அனுபவித்த உணர்வு நிலைகளையும் மிக நுணுக்கமாக விவரித்துள்ளார்.
இறுதியில் 1950 ஆம் ஆண்டு திசம்பர் மாதம் அரவிந்தர் அதிமன ஆற்றலையும் ஒளியையும் தமது உடல் மூலமாக இந்தப் பூமிக்குக் கொண்டுவந்தார் என்று கூறப்படுகிறது.
அரவிந்தரின் நாற்பது ஆண்டு யோகப் பயிற்சியில் அவர் குறித்த இலக்கை அடைந்தார். மக்கட் குலம் பெரிய எதிர்காலத்தை நோக்கி முன்னேறுவதற்கான விதையை அவர் இந்த மண்ணுலகில் ஊன்றி விட்டார்.
இந்த விதை முளைவிட்டுத் தளிர்த்து வேரூன்றி வளருவதற்கான முயற்சியை அன்னை மேற்கொண்டார்; ஆசிரமம் என்னும் வேள்விச் சாலையைப் பல துறைகளிலும் வளரச் செய்தார். அவர் 1943 ஆம் ஆண்டில் துவக்கியிருந்த பள்ளிக் கூடத்தை 1956 ஆம் ஆண்டில் அரவிந்தரின் பெயரில் அனைத்துலகக் கல்விமையமாக மாற்றினார். இங்கே அனைத்துலக மொழிகளும் அறிவியலும் பிற பாடங்களும் கற்பிக்கப்படுகின்றன. ஆன்மீக வாழ்விற்கு உறுதியான உடல் வேண்டும் என்பதால் பரந்த விளையாட்டரங்கமும் ஏற்படுத்தினார். இசை, நடனம், ஒவியம் ஆகிய கலைகளும் இங்கே கற்பிக்கப்படுகின்றன. மானிட வாழ்வை முழுமையாக்
94

குவதற்குரிய அனைத்துத் துறைகளும் இங்கே உண்டு. தொடக்கப் பள்ளி முதல் பல்கலைக்கழகக் கல்வித் திட்டம் வரை இங்கே செயற்பட்டு வருகிறது. ஆனால் ஏனைய கல்விக் கூடங்களிலிருந்து மாறுபட்ட நோக்கம் கொண்டதாகையால் இங்கே மனத்திற்கு முழு உரிமை அளிக்கப்பட்டு வருகிறது. தேர்வு இன்மையால் மாணவர்களின் மனம் தேர்வு என்னும் குறுகிய வட்டத்திலிருந்து விலகி வளர்ச்சியுறவாய்ப்பு நிறைய இருக்கிறது. இளம் பருவத்திலிருந்தே மக்களை நல்வழியில் திருப்புவது எளிதாகும் என்ற நோக்கத்தில் அன்னை, ஆசிரமப் பள்ளிக் கூடத்தில் பெரிதும் கவனம் செலுத்தினார்.
ஆசிரமத்தின் வளர்ச்சி புதுவை நகரத்துடன் நின்று விடவில்லை. புதுவைக்கு 10. கி. மீ தொலைவில் புதிய நகரம் ஒன்று உருவாக்கும் திட்டம் 1965 இல் உருவாகியது. இந்த நகரத்திற்கு அரோவில் (Auroville) என்று பெயர் சூட்டினார் அன்னை. இதன்பொருள் ‘வைகறை நகரம்’ என்பதாகும். இந்தநகரம் பழைமைக்கும் புதுமைக்கும் பாலமாக விளங்கும் என்று அன்னை கூறினார். இங்கே மதம், இனம், மொழி என்ற பாகுபாடுகளையெல்லாம் கடந்து மக்கள் யாவரும் ஒருங்கிணைந்து ஆன்மீக வாழ்வு மலர உலகிற்கு வழிகாட்டிகளாக இருக்கவேண்டும் என்பது அன்னையின் கனவு.
அன்னை 1973 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இயற்கை எய்தினார். இருப்பினும் அவரது குறிக்கோளும் அரவிந்தரின் கடுந்தவப்பயனும் ஒரு புதிய உலகத்தை உருவாக்கும் உறுதியான அடித்தளமாக அமைந்துவிட்டது.
அரவிந்தர் 1950 ஆம் ஆண்டு திசம்பர் 4 ஆம் நாள் பூதவுடலை நீத்தார். யோகம் பற்றி அரவிந்தர் தரும் விளக்கங்கள் அடங்கும் நூல்களிற் சில மேல்வருவன :
THE SYNTHESIS OF YOGA (ON YOGA I) COLLECTED LETTERS ON YOGA (ON YOGA II) LIGHTS ON YOGA
BASES OF YOGA
THE YOGA AND ITS OBJECTS THE HUMAN CYCLE
THE LIFE DIVINE THE DEAL OF HUMAN UNITY IDEAS AND PROGRESS
THE SUPERMAN
EVOLUTION THE SUPRAMENTAL MANIFESTATION UPON EARTH.
அரவிந்தர் சனாதன தர்மத்தினை ஆழமாக நோக்கியவர்; வேதம், உபநிடதம், கீதை பற்றியும் இந்தியப் பண்பாடு பற்றியும் தமது கருத்துரைகளை முன் வைத்தவர்; அவற்றிலே சில மேல்
வருவன:
ON THE VEDA THE SECRET O"F THE VEDA ESSAYS ON THE GITA ISHA UPANISAD KENA UPANISAD
இந்துக்கலைக்களஞ்சியம்

Page 141
EIGHT UPNSADS THE SIGNIFICANCE OF INDIAN ART THE FOUNDATIONS OF INDIAN CULTURE
THE RENAISSANCE IN INDIA.
அரவிந்தர் சிறந்த கவிஞராகவும் மொழிபெயர்ப்பாளராகவும், கட்டுரையாசிரியராகவும், அரசியல்வாதியாகவும் விளங்கியவர்; இத்துறைகளிலே அவர் இயற்றியன - எழுதியனவும் பல தொகுதிகளாக வெளி வந்துள்ளன என்பதுவும் குறிப்பிடத் தக்கது. (எஸ். ச. நா.)
அரிகரதாரதம்மியம்
அரிக்கும் அரனுக்கும் இடையேயுள்ள ஏற்றத்தாழ்வுகளைக் கூறுவது அரிகரதாரதம்மியம் எனும் சங்கத நூலாகும்.
அரிகரதாரதம்மியத்தைச் சங்கதத்திலே இயற்றியவர் பன்னிரண்டாம் நூற்றாண்டிற் கஞ்சனூரில் வாழ்ந்த பூரீ அரதத்தாசாரியார்.
அரிகரதாரதம்மியத்திலே அரிக்கும் அரனுக்கும் வேதம், புராணம், பாரதம், இராமாயணம் முதலியவற்றில் குறிப்பாகவும் வெளிப்படையாகவும் கூறப்பட்ட ஏற்றத்தாழ்வுகளை ஒருங்கு திரட்டிக் கூறப்பட்டுள்ளது.
அரிகரதாரதம் மியத்தினைத் தமிழ் மொழியிலே செய்யுள் நடையிலே மொழி பெயர்த்து வழங்கியவர் இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் மறைந்தவரும் யாழ்ப்பாணத்து நல்லூரினருமாகிய தர்க்க குடாரதாலுதாரி வை. திருஞான சம்பந்தப் பிள்ளையாவார். தர்க்ககுடாரதாலுதாரி தர்க்க சாஸ்திர ஆராய்ச்சியிலும் தர்க்க வாதம் செய்வதிலும் வல்லவர்; நாராயணபரத்துவ நிரசனம் முதலியனவும் செய்தவர்.
தர்க்ககுடாரதாலுதாரியின் மொழிபெயர்ப்பிலே ஆதியிலும் அந்தத்திலும் இடம்பெறும் பரசிவ வணக்கப்பாடல் இரண்டும் நீங்கலாக 108 பாடல்கள் உள்ளன.
இம்மொழி பெயர்ப்பு மன்மத வருடம் ஆனி மாதம் (1895) கும்பகோணத்திலே அச்சிடப்பெற்றது. வித்துவான் த. ச. மீனாட்சிசுந்தரம்பிள்ளை அரிகரதாரதம்மியத்தையும் பரப்பிரம விளக்கத்தையும் பரிசோதித்துத் திருவாவடுதுறையாதீன வெளியீடாக விசய வருடம் புரட்டாதி மாதம் (1953) வழங்கியுள்ளார். (பொ.யூ.)
அரிகர புத்திர உபாத்தியாயர்
1ெ9ாய்கைப்பாக்கம் எனுமூரினர்; விவேக சிந்தாமணி பாடியவர்; அந்நூல் நீதிசிந்தாமணி என்றும் வெள்ளைச்
இந்துக்கலைக்களஞ்சியம்

சிந்தாமணி என்றும் அழைக்கப்பெறும், அது சென்னையிலே பிரமோதுரத வருடம் (1871) அச்சிடப் பெற்றது. (பொ.யூ.)
அரிகரபுத்திரன்
அரிகரபுத்திரன், சாத்தன், சாஸ்தா, ஐயன், ஐயனார், ஐயப்பன் என்ற பெயர்களால் வழங்கப்பெறும் தெய்வத்திற்கு நிகண்டுகளிலே அறத்தைக் காப்போன், கடல் வண்ணன், காரி, காரியூர்தி, கோழிக்கொடியோன், சாதவாகனன், செண்டாயுதன், செண்டலங்காரன், புஷ்கலைமணாளன், பூரணைகேள்வன், புறத்தவன், மாசாத்தன், யோகி, வெள்ளையானையூர்தி என்ற
பெயர்களும் காணப்படுவன.
இந்திரன் அடைக்கலப்பொருள் இந்திராணியை அசமுகி யிடமிருந்து காத்தருளியதால் அடைக்கலம் காத்த ஐயனார் என்ற பெயருமுண்டு. திருப்பிடவூர் சாத்தனுக்கு அரங்கேற்றிய ஐயனார் என்ற பெயரும் வழங்குகின்றது. -
தந்திரசமுச்சய தியான சுலோகத்திலும் மூஷக வம்சத்திலும் ஆர்யக என்ற பெயர் காணப்படுகின்றது.
சாஸ்தாவின் காயத்திரி மந்திரத்திலே பூதநாதன் என்றும் அவர் அழைக்கப்படுகிறார். அப்பெயர் பொதுவாக இவருக்கு வழங்கப்படுவதன்று.
தியானரத்னாவலியெனும் ஆகம பத்ததியிற் சாஸ்தாவுக்குப் பதினாறு பேதங்களும் மகாலஷ்மி கல்பத்தில் ஆறுபேதங்களும் கூறப்படுவன.
சைனர்கள் சாத்தையன், மகாசாத்தையன், மாசாத்தையன், யோகசாத்தையன், தர்மசாஸ்தா என்று ஐயனாரை வழங்குவர். பெளத்தர்கள் மகாசாஸ்தா, மாசாத்தன் என்றழைப்பர்.
சாஸ்தா என்பது வடசொல்லாயினும் வேதங்களிலோ பழைய புராணங்களிலோ அப்பெயருடைய தெய்வம் இல்லை. இருக்கு வேதத்தில் இந்திரனுக்குரிய மந்திரங்களில் ஆர்ய என்ற பதம் இடம்பெறும் மந்திரம் சாஸ்தாவுக்குரியதாக வழங்கப்படுகின்றது.
சாத்தன் என்ற சொல் இடுகுறிப் பெயராகவும் காரணப் பெயராகவும் தமிழ் மொழிக்கு உரியதாக விளங்குவதோடு சாஸ்தா என்ற வட சொல்லாகவும் காணப்படுகின்றது. சாஸ்தா ஆணை (சாசனம்) செய்பவர் என்ற பொருளிலே அரிகரபுத்திரனையும் புத்தரையும் குறிப்பதாகக் காணலாம்.
உறையூருக்குக் கிழக்கேயுள்ள பிடவூரில் மூவேந்தர்
காலத்தில் அறப்பெயர்ச்சாத்தான் என்ற தெய்வம் காணப்
95

Page 142
படுகின்றது. (புறநானூறு 395). சுந்தரமூர்த்தி சுவாமிகள் : பேரருளாளன் பிடவூரன் தம்மானே என்று பல்லவர் காலத்தில் இத்தெய்வத்தைக் குறிப்பிடுகிறார். (7.96.6). சேக்கிழார் சுவாமிகள் பெரிய புராணத்திலே சேரமான் பெருமாணாயனார் திருக்கைலாயத்திற் சிவபிரான் முன்னிலையிற் பாடி அரங்கேற்றிய ஆதியுலாவைக் கேட்டறிந்த மாசாத்தனார் அந்நூலைப் பிடவூரிலே வெளிப்படுத்தினார் என்று கூறுவர் (வெள்ளானைச் சருக்கம், 52). பிடவூர் ஐயனார் அரங்கேற்றிய ஐயனார் என்று வழங்கப்படுவர். திருப்பாட்டுர் என இன்று வழங்கும் பிடவூரிலே பாழடைந்த சாத்தன் கோயில் உண்டு. அக்கோயிலின் அடியில் இராசராச சோழனுடைய கல்வெட்டுக் காணப்படுகின்றது.
புறம்பணையான் வாழ்கோட்டம் (வரி, 12), பாசாண்டச் சாத்தன் (வரி,15) கோயில் எனச் சாத்தன் கோயில் இரண்டு சிலப்பதிகாரம் கனாத்திறம் உரைத்த காதையிலே கூறப் படுகின்றன. சூடாமணி நிகண்டு புறத்தவன் எனத் தரும் சாத்தன் பெயர் நினைவு கூரத்தக்கது. சாத்தன் கோயில் ஊர்ப்புறத்தே அமைவதால் சாத்தன் புறம்பணையான் என வழங்கப்பட்டான். பாசண்டம் என்பதற்கு வேறுபட்ட பொருள்கள் கூறப்படுகின்றன. தொண்ணுாற்றறுவகைச் சமய சாத்திரத் தருக்கக் கோவை என்றும் அவற்றைப் பயின்றதால் அவற்கு மகா சாத்திரன் (மகாசாத்தன்) என்பது பெயர் என்றும் அடியார்க்கு நல்லார் சிலம்பிலே கூறுவர். அவைதீகம் பாசண்டம் என்றோர் நிக்கந்தக் கோட்டம் (அருகன் கோயில்) முன்பு குறிப்பிடப்பட்டதால் இது பெளத்தரின் சாத்தன் கோயில் அல்லது பெளத்தர் கோயில் என்று கருதுவர்.
பல்லவர் காலத்திலே பல்லவருக்கும் அனுராதபுர அரசருக்கும் ஏற்பட்ட நெருங்கிய தொடர்புகளாற் பல்லவர் பாணியில் அமைந்த புடைச்சிற்பங்கள் பல ஈழத்திலே காணப்படுவன. அவற்றிலே இசுறுமுனியாவிலுள்ள ஐயனார் புடைச்சிற்பமும் ஒன்று. குதிரைமுகம் தனியாக அமைய, ஐயனார் மானிட ரூபத்திலே உட்கார்ந்த நிலையிலே இசுறுமுனியாவிற் காணப்படுகிறார்.
அப்பர் சாத்தனை மகனா வைத்தார் என்று திருப்பயற்றுார்ப் பதிகத்திலே (4.32.2) கூறுகிறார். சிவபிரான் சாத்தனைத் தனக்கு மகனாகச் செய்ததாகவும் அதைச் சிவனின் சிறப்புச் செயல்களில் ஒன்றாகவும் அப்பர் கூறுவது கவனிக்கத்தக்கது. ஒட்டக் கூத்தரும் தக்கயாகப் பரணியில் மாசாத்தனைச்
சிவபிரானின் மகனானக் கூறுவர்.
இரண்டாம் கரிகாலன் காலத்துச் சாசனம் உத்தரமேரூர்ச் சதுர்வேதி மங்கலத்தின் தென் பகுதியில் அமைந்த ஐயன் மகாசாஸ்தாவுக்குப் பிரசாதத்திற்கும் நித்திய விளக்கிற்கும் புஷ்பாஞ்சலிக்கும் நிலம் தானம் வழங்கியதைக் கூறுகின்றது.
96

பன்னிரண்டாம் நூற்றாண்டில் எழுந்ததாகக் கருதப்படும் மூஷகவம்சத்திலே வல்லப அரசன் வடுகேஸ்வரர் கோயிலில் ஆர்யக தெய்வத்தைப் பிரதிட்டை செய்ததைக் குறிப்பிடுகின்றது.
பிரமாண்டபுராணம் உபசம்ஹாரபாதம் (6.6-9) சாஸ்தாவின் பிறப்பினைச் சுருக்கமாகக் கூறும். பாற்கடல் கடையும்போது தோன்றிய சக்தியின் அழகாற் கவரப்பட்ட சிவன் அவளைக் கூடியதாற் சாஸ்தா தோன்றியதாக அங்கு கூறப்பட்டுள்ளது. குலால சாஸ்திராகமம், சுப்பிரபே தாகமம் என்பனவற்றிலும் சாஸ்தாவின் தோற்றம் கூறப்படுகின்றது என்பர்.
அரிக்கும் அரனுக்கும் புத்திரனாகப் பிறந்து அரிகரபுத்திரன் என்ற பெயரைப் பெற்ற கதை, கச்சியப்ப சிவாசாரியாராற் கந்தபுராணத்திலே கூறப்பட்டுள்ளது. பாற்கடலிலே தோன்றிய அமுதத்தைத் தேவருக்கு அளிக்கவும் அசுரரை ஏமாற்றவும் விஷ்ணு எடுத்த மோகினி வடிவத்துடன் சிவன் இணைந்ததால் அரிகரபுத்திரன் தோன்றினார் என்று அசுரகாண்டம் மகாசாத்தாப்
படலத்திலே கச்சியப்ப சிவாசாரியார் கூறுவர்.
தலைமேல் கைவைத்தால் சாம்பலாகும் வரத்தைச் சிவனிடம் பெற்று அவரிடமே அதனைப் பரீட்சித்துப் பார்க்க முயன்ற பசுமாசுரனிடமிருந்து தப்பியோடி ஒளித்த சிவனைக் காக்க மோகினி வடிவெடுத்து அவனை மயக்கி அவன் பெற்ற வரத்தாலே அவனையே சாம்பலாக்கிய விஷ்ணுவின் பெண் வடிவில் மோகங்கொண்டு சிவன் கூடியபோது தோன்றியவர் சாஸ்தா
என்றும் வேறொருபுராணம் கூறும்.
பிக்ஷாடணர் கோலத்திற் சிவனும் மோகினி வேடத்தில் விஷ்ணுவும் தாருகாவனம் புகுந்து இருடிகளை ஏமாற்றி, ரிஷிபத்தினிகளை நிறையழியச் செய்த பின்பு கூடியபோது சாஸ்தா தோன்றினார் என்றும் கதையுண்டு.
பிரமாண்ட புராணத்திற் பிற்காலத்தில் சேர்ந்த பூதநாத உபாக்கியானத்தில் மகிஷிமுகியை மணிகண்டன் சாஸ்தாவென்று
சபரிமலையிலே கோயில் கொண்ட கதையும் பஞ்சமுகாசுரனை அழித்த கதையும் உள.
சிவபிரான் கிராத சாஸ்தா வேடத்திலே அருச்சுனனுடன் போர் புரிந்து பாசுபதாஸ்திரம் வழங்கிய கதையுமுண்டு. பூரீ ஆதிசங்கரரின் சீடர் ஒருவர் கிராத சாஸ்தாவடிவில் சிவனைக் கண்ட கதையுமுண்டு.
சாஸ்தா, சாத்தன், அரிகரபுத்திரன், ஐயன் என இலக்கிய ஆட்சிபெறும் தெய்வம் பொது மக்களிடையே ஐயனார், ஐயப்பன்
என்ற பெயர்களிலே பிரபல்லியம் பெறுவதைக் காணலாம்.
இந்துக் கலைக்களஞ்சியம்

Page 143
ஐயனார் அறத்தைக் காக்கும் - நிலைநாட்டும் தெய்வமாகக் கருதப்படுகின்றது. அறப்பெயர்ச்சாத்தன், தர்ம சாஸ்தா என்ற வழக்குகள் இவ்வமிசத்தினைச் சுட்டுவன.
மானிடத்தைக் காக்கும் தெய்வமாக, கருணையும் இரக்கமுள்ள தெய்வமாக ஐயனார் கிராமிய மக்களிடம் செல்வாக்குப் பெறுகின்றார். ஐயனார் பல வழிகளிலும் காவல் தெய்வமாகக் கருதப்படுகிறார். இரவு வேளைகளிலே தம் கிராமத்திலே துணைவருடன் குதிரையிலே ஐயனார் சுற்றி வருவதாக மக்கள் நம்புவர். கிராம வழியிலே தனியாகப் பயணம் செய்பவர் ஐயனார் தம் பயணத்தைக் காத்து வருவதாக நம்புகின்றனர். பயணிகள் தம் பயணத்திலே எவ்வித இடையூறும் ஏற்படா வண்ணம் ஐயனாரை வேண்டிச் செல்வது வழக்கம். கிராம மக்கள் தம் மந்தைகளைக் காக்கும் தெய்வமாகவும் ஐயனாரைக் கருதுவர். இதனால் கோமாரி முதலிய நோய்கள் ஏற்படும் போது ஐயனாருக்கு விசேட பூசைகள் செய்து அவர் அருளை நாடி நிற்பர்.
சைனர்களும் சாத்தையனைக் காவல் தெய்வமாகப் போற்றுவது குறிப்பிடத்தக்கது. திருவிளையாடற் புராணம் குலசேகர பாண்டியன் சாத்தனைக் கிழக்குப் பகுதியிற் பாதுகாவலராக வைத்ததைக் கூறுகின்றது. பன்னிரு பாட்டியல் பிள்ளைத்தமிழ்க் காப்புத் தெய்வங்கள் பட்டியலிலே சாத்தனுக்கும் இடம் தந்துள்ளது.
ஐயனார் வழிபாடு தமிழ் நாட்டிலும் கர்நாடகத்திலும் ஈழத்திலும் கேரள நாட்டிலும் காணப்படுகின்றது. தமிழ் நாட்டிலே கிராமங்கள் தோறும், பொதுவாக ஐயனார் கோயில் இடம் பெறுவதைக் காணலாம். ஈழத்திலே தமிழ் மக்கள் மத்தியிலும் ஐயனார் கோயில்கள் உள்ளன. ஆயினும் கேரள நாட்டிற் சபரிமலை ஐயப்பன் செல்வாக்கு மிக்க தெய்வமாக உயர்ச்சி கண்ட பின்பே தமிழ் நாட்டிலும் ஐயனார் வழிபாடு கிராமிய நிலையில் இருந்து நகர நிலைக்கு வந்துள்ளது. சபரிமலை ஐயப்பன் யாத்திரை தமிழ் நாட்டிலே பிரபல்லியமடைந்து வருகின்றது.
தமிழ் நாட்டிற் கிராமங்களிற், சிறப்பாக விவசாயப் பகுதிகளிலே, குடிமனைக்கு வெளியே, பெரும்பாலும் வயல் வெளிகளிலே ஐயனார் கோயில் அமைந்திருக்கும். தென்மேற்கு மூலையிலே ஐயனார் கோயில் அமைவது விதியெனப்படினும் ஏனைய திசைகளிலும் அவை அமைந்து காணப்படுவன. கோயில் பொதுவாகச் செங்கல்லால் அல்லது களி மண்ணாற் கட்டப் பெற்று ஒட்டினால் அல்லது ஒலையால் வேய்ந்து காணப்படும், கர்ப்பக் கிருகத்தில் அமையும் ஐயனார் படிமம் கிராமத்தின் வெளிப் புறத்தை நோக்கி அமைக்கப்படும். படிமம் இல்லாத கோயிலில் செங்கல், ஐயனாரைக் குறித்து நிற்கும்.
இந்துக் கலைக்களஞ்சியம்

வசியம், ஆகர்ஷணம் என்பனவற்றிற் செந்நிறம் கொண்டவராகவும், மோகனத்திற் கருநிறம் கொண்டவராகவும், ஸ்தம்பனத்திற் பொன்னிறம் உள்ளவராகவும் விஷம் போக்கும் வழிபாட்டிலும் ஞானம் பெறுவதற்கான வழிபாட்டிலும் வெண்ணிறமுள்ளவராகவும், துவேஷம், உச்சாடனம், மாரணம் என்பனவற்றில் கருநிறம் உள்ளவராகவும் ஐயனார் வழிபடப் படுகின்றார்.
ஐயனார் படிமங்கள் நின்ற கோலத்திலும் இருந்த கோலத்திலும் காணப்படுவன; இருந்த கோலத்திலே அமைந்தவை யானையில் இருப்பதாகவும், குதிரையில் இருப்பதாகவும், ஆலின் கீழ் சிம்மாசனத்தில் இருப்பதாவும், யோகி நிலையில் இருப்பதாகவும், பீடத்தில் இருப்பதாகவும் காணப்படுவன: ஐயனார் தனியாகவும் மூவராகவும் உள்ள நிலைகளுமுண்டு; மூவராகவுள்ள நிலையில் ஒன்று இடப்பக்கத்தில் புஷ்கலையும் வலப்பக்கத்தில் பூரணையும் அமைந்தது. இவ்விருவரும் ஐயனாரின் தேவியர். சில்பரத்தினம் ஒரு பக்கத்தில் பிரமை என்ற தேவியும் மறுபக்கத்திற் சத்யகன் என்ற மகனும் அமைந்த நிலையைக் குறிப்பிடுகின்றது.
ஐயனார் இருகைகளுடனே பொதுவாகக் காணப்படுவர். செண்டாயும் கையிலே தாங்கிய வடிவங்கள் பலவாயினும்
குதிரைச் சவுக்குடனும் சில படிமங்கள் காணப்படும்.
கோயிலின் முன்றலிலே களிமண்ணாற் செய்து சுடப் பெற்ற பல குதிரைகளும் சில வேளைகளில் யானைகளும் அமைக்கப் பட்டிருப்பதைக் காணலாம். சிலவேளைகளிற் செங்கல்லாற் கட்டிய பெரிய குதிரைகளும் அங்கு காணலாம். பெளத்தர் கருங்குதிரையையும் சைனர் வெள்ளானையையும் சாஸ்தாவின் வாகனங்களாகக் கூறுவர்.
ஐயனார் கோயிலிலே பரிவார தெய்வங்கள் பல காணப் படுவன. இராமநாதபுரத்து பூரீ வில்லிபுத்தூருக்கு அருகுள்ள சுந்தரபாண்டியம் கிராமத்திலுள்ள வையம் தொழுவார் கோயில் எனும் ஐயனார் கோயிலில் வைகுந்த மூர்த்தி எனப்படும் ஐயனாரின் பரிவார தேவதைகளாகக் கறுப்பசாமி, சப்பாணி கறுப்பசாமி, பெரிய கறுப்பசாமி, மாமுண்டிக் கறுப்பசாமி, காளி, பத்திரகாளி, பேய்ச்சி, மாடத்தி, ராக்கச்சி, சன்னாசி, முத்துமாலையம்மன், பூமாலைராஜா, பொன்னோட்டக்காரன், சுளுவடியான், மாடன் முதலியோர் காணப்படுகின்றனர்.
ஐயனாருக்கு மிருகபலி இடுவது வழக்கமில்லை. அகிம்சை அமிசம் ஐயனார் வழிபாட்டில் முக்கியத்துவம் பெறுவதை இது உணர்த்துகின்றது. மதுரை வீரன் உடனமைந்த ஐயனார் கோயிலிலே, வீரனுக்கு மடையிடும்போது ஐயனார் முன்பு திரையிட்டு வீரனுக்குப் படைப்பது நோக்கத்தக்கது. அறுகும்
97

Page 144
சிறுபூளையும் அரிசியும் இட்டுச் சாத்தனைத் தேவந்தி வணங்குவது சிலப்பதி காரத்திலே காணப்படுவதாகும் சாத்தனுக்குச் சந்தனக்காப்பு இடுவது முக்கியமான நிகழ்ச்சியாகும். பஞ்சாமிர்த அபிடேகம் முதலியனவும் சாத்தனுக்குள.
தந்திர சமுச்சயம், சில்பரத்தினம் என்பன சாஸ்தாவின் தியான சுலோகங்களைத் தருவன. சாஸ்தாவுக்குக் காயத்திரி மந்திரமுமுண்டு; அர்ச்சனை மந்திரங்கள், ஸ்தோத்திரங்கள் நாமாவளிகள் என்பனவும் உள்ளன. சுப்பிரபே தாகமம் ஸ்தாபன விதி கூறுகின்றது; பூர்வகாரனாகமப் அர்ச்சனாவிதி கூறுகின்றது.
இவையெல்லாம் தோன்றிவிட்ட போதும் தமிழ் நாட்டி6ே ஐயனார் பூசை கிராமிய வழிபாட்டு முறையிலே நடைபெறுகின்றது பூசாரி ஒவ்வொரு நாளும் மதிய வேளையில் பூசையை நடத்துவார் பூசாரிகளும் வெவ்வேறு வகுப்புகளைச் சேர்ந்தவராகக் காணப்படுவர். பூசைக்கெனத் தனியான - விரிவான கிரியை
முறைகளை அங்கு பின்பற்றுவதாகத் தெரியவில்லை.
ஐயனார் வழிபாட்டிலே குதிரை நேர்த்தி செய்வது பொது வழக்கமாகும். குயவனைக் கொண்டு செய்வித்த குதிரையை ஐயனார் கோயிலுக்குப் பவனியிலே கொண்டு சென்றுவிட்( வழிபடுவர். இதனைக் குதிரை எடுப்பு அல்லது குதிரை விடுத6 என்று தமிழ் நாட்டில் கூறுவர்.
மதுரை மீனாட்சியம்மன் திருமணத்திற்கு மதுரைக்கு சென்ற மாப்பிள்ளை வீட்டாரிற் சாத்தனின் பெயருமுண்டு ஆயினும் சாத்தனின் படிமத்தை முன்பு சிவன் கோயிலி: பிரதிட்டை செய்வது மரபாக இருக்கவில்லை. பாதுகாப்புக்கா ஐயனாரின் வெண்கலப் படிமத்தினைச் சிவன் கோயிலில் வைத்து விட்டு விழாக்களுக்காக ஐயனார் கோயிலுக்கு எடுத்துச் செல்லு வழக்கம் மட்டும் காணப்பட்டது.
கேரள நாட்டிலே ஐயப்பன் வழிபாடு பிரபல்லியம் மிக் வழிபாடாகக் காணப்படுகின்றது. தைமாதம் முதலாம் தேதி வருட முழுவதும் செய்த தியானத்தில் இருந்து அவர் விழித்ததாகவு அந்நாளிலே தரிசனம் செய்பவர் அவர் அருளைப் பெறுவ என்றும் பெரிதும் நம்புவர்.
சபரிமலை ஐயப்பனுக்கு மண்டலபூசை 45 நாள் நடைபெறு சபரிமலை யாத்திரை காலத்தோடு விரிவான ஒழுங்குகளையு முறைகளையும் பெற்று வளர்ந்துள்ளது. தமிழ் நாட்டவரு சபரிமலை யாத்திரையிலே பெருமளவிலே கலந்து கொள்வதை காணலாம். ஐயப்பன் வழிபாடு சபரிமலை சாஸ்தாவில்
செல்வாக்கினால் கேரளத்திலே சிறப்பிடம் பெற்றுள்ளது.
98.

iù
திருவனந்தபுரத்தில் பூரீ அனந்த பத்மநாபசுவாமி கோயிலின் வட பிராகாரத்திலே சாஸ்தாகோயில் உண்டு. காஞ்சிபுரம் காமாட்சி கோயிலிற் செண்டுடன் துவார பாலகராக ஐயனார் காணப்படுகிறார். திருப்பனந்தாளையடுத்த திரைலோக்கிய சுந்தரம் கோயிலில் வெண்கலத்தாலான சாத்தன் படிமங்கள் இரண்டு வைக்கப்பட்டுள்ளன. சிதம்பரம் நடராசப் பெருமான் கோயிலிலே திருமூலட்டானேசுவரர் கோயிலுக்கு வடக்கு நோக்கிச் செல்லும் ஒடையின் வெளிச் சுவரிலே அமைக்கப்பட்டிருந்த சாஸ்தா இன்று கோயில் போல மூடி அமைக்கப்பட்டுச் சிறப்பிக்கப்படுகிறார். கும்பகோணம் கும்பேஸ்வரர் கோயிலின் இரண்டாம் பிராகாரத்தின் வடகிழக்குப் பகுதியில் ஐயனாரும் சூரியன் பைரவருடன் அண்மையிலே பிரதிட்டை செய்யப்பட்டுள்ளார். விழாக் காலங்களில் இவருக்கு
இங்கு வெள்ளிக் கவசமும் இடப்படுகின்றது. (பொ.யூ.)
அரிகேசரி
பாண்டியன் மாறவர்மன் அரிகேசரி ஏழாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ஆட்சி புரிந்தவன்; “நிறைக்கொண்ட சிந்தையான் நெல்வேலி வென்ற நின்றசீர் நெடுமாறன் அடியார்க்கும் அடியேன்” எனச் சுந்தரமூர்த்தி சுவாமிகள் போற்றும் (7.39.8) நின்றசீர் நெடுமாற நாயனார்தாம், அரிகேசரி என்று
வரலாற்றாசிரியர் கூறுவர்.
திருமறைக் காட்டிலே அப்பரும் சம்பந்தரும் உடனிருந்த காலை பாண்டிய அரசி மங்கையர்க்கரசியும் அமைச்சர் குலச்சிறையாரும் அங்கு சென்று, தம்மரசனையும் நாட்டையும் சைனமதத்தின் பிடியிலிருந்து மீட்கும்படி இரந்து நின்றனர். அவர்களுடைய வேண்டுகோளை ஏற்றுச் சம்பந்தப் பெருமான் திருமறைக்காட்டில் இருந்து புறப்பட்டுப் பல தலங்களையும் தரிசித்துக் கொண்டு மதுரைக்கு எழுந்தருளினார். அவர் வருகையை அறிந்த சைனர், அவர் எழுந்தருளிய திருமடத்தை எரிமூட்ட முயன்றனர்; சம்பந்தப் பெருமான் அத்தீயினைப் பாண்டியனைச் சேரும்படி பணித்தார். பாண்டியனுக்கு ஏற்பட்ட வெப்பு நோயை யாராலும் மாற்ற முடியவில்லை. குலச்சிறையார், சம்பந்தர் கடைக் கண்ணோக்கம் பெற்றால் வெப்பு நோய் ஒழியும் என்று உரைக்க பாண்டியன் அவரை அழைத்து வரும்படி செய்தான்; சம்பந்தர் இட்ட திருநீற்றினால் பாண்டியனின் வெப்பு நோயும் அவன் கூனும் நீங்கின; நெடுமாறனும் சிறந்த சிவனடியாராக விளங்கினான்; அவன் மனைவியும் அமைச்சனும் சிவனடியாராகச் சிறந்தனர். (பொ.யூ.)
அரிகேசரி பராக்கிரம பாண்டியன்
தென்பாண்டி நாட்டில் ஆட்சி புரிந்த பாண்டிய மன்னன் ஆட்சிக் காலம் கி.பி.1422-1462 தென்காசியில் இவன் எடுத்த
இந்துக் கலைக்களஞ்சியம்

Page 145
விசுவநாதர் கோயிலின் கோபுர நிலைக் கற்களில் அவனால் பாடப்பட்ட ஆறு கட்டளைக் கலித்துறைப் பாக்களுள்ளன.
(பொ.யூ.)
அரிச்சந்திரபுராணம்
பொய்மைக்கும் பொறுமைக்கும் மனத்திட்பத்திற்கும் இலக்கணமாக அமைந்து இந்திய பாரம்பரியத்திலே சிறந்த கதாபாத்திரமாக விளங்கும் அரிச்சந்திரன் கதையைப் புராணமாக அமைத்துப் பாடுவது அரிச்சந்திர புராணமாகும்.
பாண்டிய நாட்டில் நால்லூரில் பொற்கொல்லர் மரபில் வந்த வீரகவிராயர் என்பவர் பாடியது அரிச்சந்திரபுராணம். இப்புராணத்தை ஆசிரியர் திருப்புல்லாணித் திருமால் கோயிலிலே சகம் 1446 இலே (கி. பி. 1524) அரங்கேற்றியதாகப் பாயிரச் செய்யுள் (14) கூறுவதால் இவர் காலம் பதினாறாம் நூற்றாண்டு என்பது தெளிவாகும்.
அரிச்சந்திர புராணத்தினை ஆசிரியர் அரிச்சந்திர வெண்பாவைத் தழுவி அமைத்துள்ளார் என்பது பாயிரம் உணர்த்தும் செய்தியாகும். இவ்வரிச்சந்திர வெண்பா மு. இராகவையங்கார் 1949 இலே வெளியிட்டதாகலாம் என்று கருத இடமுண்டு.
அரிச்சந்திர புராணத்திலே பாயிரம் (14), நாட்டுச் சிறப்பு (59), நகரச்சிறப்பு (37) எனும் பிரிவுகள் நீங்கலாக விவாக காண்டம் முதல் உத்தர காண்டம் வரை பத்துக் காண்டங் களுண்டு. இப்பத்துக் காண்டங்களிலும் 1111 பாடல்கள் அமைந்துள்ளன. எனவே அரிச்சந்திர புராணத்தில் மொத்தம் 1215 பாக்கள் உள்ளனவென்று கருதலாம்.
இப்புராணம் அரிச்சந்திர சரித்திரம் எனும் பெயரிலே 1838 இலே வெளிவந்துள்ளது. கோலாபுரம் அருணாசல முதலியார் உரையுடன் சென்னையில் யுவ வருடம் (1875) பதிப்பித்துள்ளார். திரிசிரபுரம் வீ. கோவிந்தபிள்ளையின் உரையினைத் திருமயிலை ராமலிங்க முதலியார் பரிசோதனை யுடன் 1901 ஆம் ஆண்டிற் சென்னை சிற்றம்பலம் விலாசம் பிரஸும், ஈக்காடு இரத்தினவேலு முதிலியார் பரிசோதனையுடன் சென்னை வி. இரத்தினநாயகர் ஸன்ஸ் 1932 இலும் பதிப்பித்துள்ளன. பி. நா. சிதம்பர முதலியார் பிரதர்ஸின் சென்னை வித்தியாரத்நாகர அச்சுக் கூடம் 1925 இலே சுந்தரநாதம்பிள்ளை விருத்தியுரையுடன் அரிச்சந்திர புராணத்தைப் பதிப்பித்துள்ளது. (பொ.யூ.)
அரிச்சந்திரன்
தாங்கொணாத் துன்பத்திலும் இளிவந்தன செய்யாது வாய்மைக்கும் மனத் தூய்மைக்கும் ஒருவனாக நின்று உலகம்
தொழ விளங்கியவன் அரிச்சந்திரன். அவன் வரலாறு இந்திய பாரம்பரியத்திலே அன்றும் இன்றும் போற்றிப் பேணப்படுவதாகும்.
இந்துக் கலைக்களஞ்சியம்

ஐதரேய பிராமணத்திலே அரிச்சந்திரன், அவன் மகன் உரோகிதன் பற்றிய செய்திகள் எடுத்துரைக்கப்பட்டுள்ளன. உரோகிதனுக்காக யூபக்கம்பத்திற் கட்டுண்ட சுனச்சேபன் வருணனை வழிபட்டு விடுதலை பெற்றது அங்குண்டு. மகாபாரதம் அரிச்சந்திரன் அவனுடைய வள்ளமைகளுக்காகவும் இடையறா யாகங்களுக்காகவும் சுவர்க்கத்திற்கு உயர்த்தப் பட்டதைக் கூறுகின்றது. அரிச்சந்திரனின் இறையுணர்வை மார்க்கண்டேய புராணம் ஏத்துகின்றது. கந்தபுராணத்தில் அரிச்சந்திரனது சரிதை தனியாக வகுத்துரைக்கப்பட்டுள்ளது.
இக்ஷவாகு மரபிலே திரிசங்குவின் மகனாக அவதரித்த அரிச்சந்திரன் கதை தொன்று தொட்டுக் கூறப்பட்டு வருகின்றதாயினும் அக்கதை பல்வேறு மாற்றங்களுடனே காணப்படுதல் நோக்கத்தக்கது. அக்கதையிலே முக்கிய இடம் பெறுவது விசுவாமித்திரரால் ஏற்படும் சோதனையும் அதன் விளைவுகளுமாம்.
விசுவாமித்திரர் தன் யாகத்திற்குப் பங்கமேற்படுத்தியதாகக் கூறியதை ஏற்று அதற்குப் பிராயச்சித்தமாக அரிச்சந்திரன் அவர் கேட்பதைக் கொடுப்பதாக வாக்களிக்கிறான். அரசுரிமையையும் செல்வத்தையும் இழந்து குடும்பத்தோடு அனாதையாகப் புறப்பட்ட அரிச்சந்திரன் வாரணாசியிலே மனைவியையும் பிள்ளையையும் விற்றும் தன்னை ஒரு சண்டாளனுக்கு அடிமையாக்கியும் அச்செயல்களாலே பெற்ற பொருளை விசுவாமித்திரருக்குக் கொடுக்கிறான். சண்டாளனின் அடிமையாகிச் சுடலை யாண்டியாக எரிக்கும் சடலங்களிலுள்ள பொருள்களை எடுத்து விட்டு அவற்றைத் தீக்கொளுத்தி எடுத்த பொருளை எசமானனிடம் அளிக்கும் அருவருப்பான தொழிலை வெறுப்புடன் செய்து வந்த அரிச்சந்திரன் ஒரு நாள் தற்கொலைக்கே துணிந்து விடுகிறான்.
பாம்பு கடித்து இறந்த தன் மகனை தீயிலிடச் சுடலைக்கு வந்த மனைவியை இனங்கண்டு இருவரும் மகன் சிதையிலே உயிர் துறக்கச் சித்தமாகின்றனர். அந்நிலையிலும் எசமான னிடம் உத்தரவு பெற்றுவர அரிச்சந்திரன் புறப்படுகிறான். அந்நிலையிலே இந்திரன் முதலான தேவர் தோன்றி சுவர்க்கத்தையும் தன்னுடைய எளிமையினாலும் நற்செய்கை யாலும் வென்றுவிட்டதாக வாழ்த்தி வரமளிக்கின்றனர். சண்டாளனாக இயங்கிய தருமதேவதையும் தன்னை இனங்காட்டிக் கொள்கிறது.
அரிச்சந்திரன் தன் மகனை நாடாள நியமித்து விட்டு மனைவியுடனும் விசுவாசமிக்க சில பிரசைகளுடனும் வானுலகம் செல்கிறான். அங்கு நாரதரின் சூழ்ச்சியினால் தற்புகழ்ச்சியில் ஈடுபட்டதால் அரிச்சந்திரன் சுவர்க்கத்திலிருந்து வெளியேற்றப் பட்டான். கீழ் நோக்கி வந்து கொண்டிருந்த போது அவன் தன் தவறை உணர்ந்து வருந்தியதாற் சுவர்க்கத்திற்கும் பூமிக்கும் இடையே அவன் செலவு தடைப்பட்டது. தடைப்பட்ட இடத்திலே நகரமைத்து அரிச்சந்திரன் புதிய பூமி ஆண்டு வருகிறான் என்று புராணம் கூறும்.
99

Page 146
அரிச்சந்திரன் கதை தமிழிலே பல ஆக்கங்களுக்கு கருவாக அமைந்துள்ளது. அரிச்சந்திர வெண்பா எனு நூலொன்று ஆதியும் அந்தமுமின்றி இடைநடுவே சிதைவுடன் மு. இராகவையங்காரால் 1949 இலே பதிப்பிக்கப்பட்டது. இதனுள் 304 வெண்பாக்கள் இன்று கிடைத்துள்ளன; மேலும் இது உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுளாகவும் அமைகின்றது. கி பி. 1524 இலே" திருப்புல்லாணி திருமால் கோயிலி6ே வீரகவிராயரின் அரிச்சந்திரபுராணம் அரங்கேற்றப்பட்டுள்ளது இப்புராணம் முன்னர் குறிப்பிட்ட அரிச்சந்திர வெண்பாவினை தழுவி இயற்றப்பட்டதாகக் கருத இடமுண்டு. இது 1838 இ:ே அச்சிடப் பெற்றுள்ளது.
பத்தொன்பதாம் நூற்றாண்டில் வாழ்ந்த பூ. ஆறுமுக பிள்ளை பாடிய அரிச்சந்திர வெண்பா திருமயிலை முருகே முதலியாரால் சென்னை அஷ்டலஷ்மி விலாச அச்சுக்கூடத்தி 1884 இலே அச்சிடப் பெற்றுள்ளது. சுப்பிரமணியச் செட்டியா என்பவர் பாடிய அரிச்சந்திர கும்மி சென்ற நூற்றாண்டிே பதிப்பிக்கப்பட்டுள்ளது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் வாழ்ந்த செஞ்சி ஏகாம்பர முதலியார் அரிச்சந்தி
அம்மானை பாடியுள்ளார்.
அரிச்சந்திரன் கதை நாடகத்திற்கும் அரிய பொருளா அமைந்துள்ளது. பத்ரசாமி செட்டியார், வரதராசலுநாயு( என்போர் அரிச்சந்திர நாடகம் தனித்தனி தந்துள்ளன நன்னெறி சத்தியபாஷ் அரிச்சந்திரவிலாசம் திரிசிரபுர அப்பாவுப்பிள்ளை இயற்றியது; அது பல பதிப்புகளைக் கண்டது முத்தன் ஆச்சாரி சத்தியவாக்கு அரிச்சந்திரன் நாடக எழுதியுள்ளார். அரிச்சந்திர விலாசம் பழவேற்காடு இரங்க பிள்ளை கவிராயர், புரசைவாக்கம் பரசுராமக் கவிராயர் என்போ தனித்தனியே இயற்றியவை. மணஞ்சேரி நரசிம்மைய அரிச்சந்திர உபாக்கியான நாடகாலங்காரம் வழங்கியுள்ளனர்.
மட்டுவில் க. வே. திருஞானசம்பந்தப் பிள்ளையின் வசனமு வை. இராமநாதன் பாடலும் கூடிய அரிச்சந்திர நாடகம் ஈழத்திே தோன்றியுள்ளது.
பழவேற்காடு இரங்கப்பிள்ளை கவிராயரின் அரிச்சந்தி விலாசத்தினைத் தழுவி சேர் முத்துகுமாரசுவாமி (1834 - 187 g, såléfillaġġ66ò ARICHANDRA THE MARTYR OF TRUTH 6Tgp நாடகத்தை எழுதி லண்டன் மாநகரிலே 1863 இே பதிப்பித்துள்ளார்.
பம்மல் சம்பந்த முதலியார் (1873 - 1964) இயற்றி
ஹரிச்சந்திரன் இரண்டாம் பதிப்பாக 1930 இலே வெளிவந்தது (பொ. பூ
அரித்துவாரம்
அரியின் வாசல் எனப்பொருள் தரும் அரித்துவார (HARDWAR) வைகுண்டத்திற்குக் கொண்டு செலுத்து புனிததலமாம். கங்கைநதி சிவலிக் மலைகளிலிருந்து (SIWAL
100

5
டு
HILLS) இறங்கிச் சமவெளியில் ஒடத் தொடங்கும் இடத்தில் உள்ளதாற் கங்காத்துவாரம் எனவும் பெயர் பெறும். கபிலர் தவஞ் செய்த இடமாதலால் கபிலம் என்றும் அழைக்கப் பெறும். இதற்கு மகபூர் என்ற பெயரும் முன்பு வழங்கியுள்ளது.
திமூர் (TIMUR) 1399 இலே இதனை அழித்த பின்பு மீண்டும் எழுப்பப் பெற்ற காலம் முதல் அரித்துவாரம் என வழங்குகின்றது.
அரியின் திருவடியாகக் கருதப்படும் கல்மேல் உள்ள வடிவம் பக்தர்களின் பெருமதிப்புக்குரிய இடமாகும். தக்ஷன் வேள்வி செய்ததும் சதி தற்கொலை புரிந்ததுமான இடத்திலே அமைந்த கோயில் சிரார்த்தச் சடங்குகளுக்கு முக்கியமான இடமாகக் கருதப்படுகின்றது.
வைகாசி முதல் நாளிலே கங்கா தீர்த்தமாட இங்கு பெருந்திரளாக மக்கள் கூடுவர். அந்நாளிலே தான் கங்கை முதன் முதலாகப் பூமிக்கு இறங்கி வந்ததாக நம்பப்படுகிறது. ஆறு வருடத்திற்கு ஒருமுறை நடக்கும் கும்பமேளமும் பன்னிரு வருடத்திற்கு ஒருமுறை நிகழும் பெரிய மேளமும் இங்கு வெகு
விமரிசையாக நடக்கும்.
அரித்துவாரத்திலிருந்து கங்கை வழி ஏறிச் செல்லின் சுமார் 24 மைலில் ரிஷிகேசத்தினை அடையலாம். மேலும் அரித்து வாரத்திலிருந்து கங்கோத்திரி, கேதாரிநாதம், பதரிநாதம் செல்லும் பாதையும் ஆரம்பிக்கிறது. (பொ.பூ)
அரிதாசர்
பதினாறாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர்; கிருஷ்ணன் எனும் இயற்பெயரினையுடையவர்; ஆற்றுவான்பாடி பூர்வீகவூர்; தொண்டைநாடு அரிவாசபுரத்திற் (அரிதை) பிறந்து அங்குள்ள திருமாலுக்குப் பல கைங்கரியமும் புரிந்து பரமபாகவதராக வாழ்ந்தவர்; ஆவினிகளப்பாளர் திருவேங்கடமுடையாரின் புதல்வர்; திருமலையப்பர், தெய்வங்கள் பெருமாள் முதலியார், கிருஷ்ணதேவராயரின் (1509 - 1529) அமைச்சர் வடமலையார் என்போரின் சகோதரர்.
இருசமய விளக்கம் பாடியவர்; அது பிங்கள வருடம் (1857) அச்சிடப் பெற்றது. (பொ.பூ.)
அரிதாஸ்
வைணவ சித்தரும் ஞானியுமான பூரீ நிம்பார்கர் கி. பி. பன்னிரண்டாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர்; நிமாண்டி எனும் சமயப் பிரிவின் (NIMAND SECT) தாபகர்; துவைதாத்துவிதம் எனும் தத்துவப் பிரிவினை விளக்கியிட்டவர்; பக்தி மார்க்கத்திலே கிருஷ்ணன் - ராதா வழிபாட்டை ஆதரித்தவர்.
நிமாண்டிப் பிரிவில் தாத்தி எனும் சமய உட்பிரிவினைத் (TATT SECT) தாபித்தவர் அரிதாஸ். இவர் பதினாறாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். இவருடைய இந்திப் பாடல்கள் பல இராகங்களிலே பாடப்பட்டு வருகின்றன. இவருடைய டோகா
இந்துக் கலைக்களஞ்சியம்

Page 147
(DOHA) எனும் ஈரடிப் பாடல்கள் அழகும் தெளிவும்மிக்கவை. இவருடைய வைணவ பாசுரங்கள் பல தொகுதிகளாக வெளிவந்துள்ளன. (பொ.யூ.)
அரியக்குடி
இராமநாதபுரம் மாவட்டம் திருப்புத்தூர் வட்டத்திலே காரைக்குடிக்கு இரண்டு மைல் தொலைவிலுள்ளது அரியக்குடி அரியகுடி விஷ்ணு கோயில் தென்னாட்டிலே பிரபல்லியம் மிக்கதாகும்.
இத்திருக்கோயில் சம்பந்தமான பிரபந்தங்களிலே வேலாமூர் கிருஷ்ணமாசாரியர் இயற்றிய அரியகுடித்திரிபந்தாதி, அரியகுடியூர் மென்மங்கை பிள்ளைத்தமிழ், திரு அரியாய் சிலேடை வெண்பாமாலை என்பனவும் அ. இராமநாதன்
செட்டியாரின் அரியகுடி வாகனக் கவியும் இடம்பெறுகின்றன.
(பொ.யூ.)
அரியர்த்தர்
சிவபெருமானின் மகேசுவர மூர்த்தங்களில் (உருவத் திருமேனிகளில்) ஒன்று அரியர்த்தர். அர்த்தம் என்பது பாதி. அரியைப் பாதியாக உடைய திருவுருவம் அரியர்த்தர், அரன் வடிவம் பாதியாகவும் அரிவடிவம் பாதியாகவும் கொண்டு விளங்கும்போது சிவபெருமான் அரியர்த்தர் எனப்படுவர். இவ்வடிவத்திலே அரன் வடிவு வலப்பக்கத்திலும் அரிவடிவு இடப் பக்கத்திலும் அமைந்திருக்கும்.
விஷ்ணு சிவபெருமானுடைய பாதித் திருமேனியைப் பெறவிரும்பிச் சிவபூசை செய்தபோது சிவன் பிரசன்னமாகி மகிழ்ந்து தம்முடைய இடப்பாகத்திலே பொருந்த வரம் தந்து மாயன் என்ற பெயரையும் அளித்ததாகக் காசி காண்டம் கூறுகின்றது.
அரியர்த்தர் திருக்கோலத்திலே வலப் பக்கத்திற் கொன்றைப் பூவும், புலித்தோலாடையும், திருக்கரத்தில் மானும், செந்நிறம் பொருந்திய திருமேனியும் அமைய, இடப்பக்கத்தில் துளசியும், பீதாம்பரமும் திருக்கரத்தில் சக்கரமும், பச்சை நிறம் பொருந்திய திருமேனியும் அமைவன.
இத்திருவுருவம் சங்கரநாராயணர் என்றும் கேசவார்த்தர் என்றும் பெயர் பெறும்.
"வெருவரு கடுந்திறல் இருபெருந் தெய்வத்து
உருவுடன் இயைந்த தோற்றம் போல அந்தி வாணமொடு கடலணிக் கொளாஅ வந்த மாலை”
எனும் அகநானூற்றுப் பாடலடிகளிலே இத்திருக்கோலத்தின் பழைய ஆட்சியைக் காண முடிகின்றது.
இந்துக்கலைக்களஞ்சியம்

"அரியலால் தேவியில்லை ஐயன் ஐயாறனார்க்கே” என்று அப்பர் சுவாமிகள் கூறுவர் (4.915),
அரன்நாரணன்நாமம் ஆன்யிடைபுள்ளுர்தி உரைநூல் மறையுறையும் கோயில் - வரைநீர் கருமம் அழிப்பளிப்புக் கையதுவேல் நேமி உருவமெரி கார்மேனி ஒன்று. பொன்திகழு மேனிப் புரிசடையம் புண்ணியனும் நின்றுலகம் தாய நெடுமாலும் - என்றும் இருவரங்கத்தால்திரிவ ரேலும் ஒருவன் ஒருவனங்கத் தென்று முளன் எனும் பொய்கையாழ்வாரின் முதற்றிருவந்தாதிப் பாடல் களும்,
தாழ்சடையும் நீண்முடியும் ஒண்மழுவும் சக்கரமும் குழரவும் பொன்னானும் தோன்றுமால் - குழும் திரண்டருவி பாயும் திருமலைமேல் எந்தைக்கு இரண்டுருவு மொன்றாய் இசைந்து
எனும் பேயாழ்வாரின் மூன்றாந் திருவந்தாதிப் பாடலும் சங்கரநாராயணர் திருக்கோலத்தைப் பாடுகின்றன.
திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள சங்கரநாராயணர் கோயில் திருக்கோயிலிலே சங்கரநாராயணர் திருவுருவம் சிறப்பாகப் போற்றப்படுகின்றது. (பொ.யூ.)
6 flagbarb
வடமொழியிலுள்ள மகாபாரதத்தின் பத்தொன்பதாவது பருவம் அரிவம்சமாகும். மகாபாரதத்தின் 'கிலமாக அமையும் அரிவம்சம், பாரதக் கதையுடன் நேரடியான தொடர்புடையதன்று.
அரிவம்சத்திலே 16,375 பாடல்கள் உள்ளன. இதனுள் முன்னுரையாக உலக உற்பத்தி, தந்தை வழி மரபுகளும் அரச பரம்பரைகளும் புவியில் ஏற்படுவது, அரியின் வம்சம் என்பன இடம்பெறுகின்றன. அடுத்து கிருஷ்ணாவதாரமும் கிருஷ்ணனின் பாலிய லீலைகளும் விவரிக்கப்படுகின்றன. கடைசிப் பகுதியிலே உலகின் எதிர்காலம், கலியுகத்தின் தீமைகள், மானுடம் தன்னிலை யிலிருந்து இழிந்து செல்லல் என்பன கூறப்படுகின்றன.
பல பெளராணிகக் கதைகளின் தொகுப்பாகக் காணப்படும் அரிவம்சம் ஒருவருடைய படைப்பென ஆய்வாளர் கருதவில்லை. மேலும் இது தென்னாட்டிலே இயற்றப்பட்டதென்றும் சிலர் ஐயுறுவர். இதன் காலம் கிறிஸ்தாப்தத்திற்கு பிற்பட்டதென்று கூறுவர். (பொ.பூ.)
அரிவாட்டாய நாயனார்
தீருத்தொண்டர் புராணம் கூறும் அறுபத்து மூன்று நாயன்மார்களுள் ஒருவர். சோழ நாட்டில் உள்ள கண மங்கலம்
U

Page 148
என்னும் ஊரினர். வேளாளர் குலத்தில் பிறந்த அரிவாள் தாயர் நாள்தோறும் சிவபெருமானுக்கு செந்நெல் அரிசியும் கீரையும் மாவடுவும் கொண்டு படைத்து வழிபாடு செய்து வந்தார். இவர் தம் பெருஞ்செல்வமெல்லாம் இழந்து மிகக் கொடிய வறுமை எய்தியும், கூலிக்கு நெல் அறுப்பவர் ஆகி, தாம் கூலியாகப் பெற்ற செந்நெல்லாற் சிவனுக்கு அமுது செய்வித்து, கார் நெல்லைக் கொண்டு தாம் உணவு செய்து வரும் நாளிலே அச் சிவனது திருவருளினாலே கார்நெற் கிடையாது செந்நெல்லே கிடைக்க, அது அடியேன் செய்த புண்ணியம் என்று சிவனுக்கு 巴州Ugh செய்விப்பவராகி, இலைக்கறி உண்டு, சிவபுண்ணியத்தினை மேற்கொண்டு வந்தார். இலைக்கறியும் அற்றுப்போக தண்ணிர் மாத்திரம் அருந்திக் கொண்டும் இடை விடாது இப் பணியைச் செய்துவந்தார். ஒருநாட் பசியால் உடல் மெலிந்து தளர்ந்த நிலையிற் சிவபெருமானுக்குரிய படையல் பொருட்களை தலைமேற் சுமந்து சென்றார். அவர் மனைவி பஞ்சகவ்வியத்தை மட்கலத்தில் எடுத்துக்கொண்டு பின் சென்றார். இவ்வாறு வயல் வழியே செல்லும்போது பசி மயக்கத்தால் தாயனார் தள்ளாடிக் கீழே விழ அவர் மனைவியார் ஒரு கையால் அனைத்துப் பிடித்ததும் கூடையில் இருந்த பொருட்கள் அனைத்தும் நில வெடிப்பில் சிந்தின. இதனைக் கண்ட நாயனார் இனிக் கோயிலுக்குப் போய் பயனில்லை. உயிரோடிருந்தும் பயனில்லை எனக் கருதி அரிவாளால் தம் கழுத்தை அறுத்துக் கொள்ளத் தொடங்கினார். சிவபெருமான் அதைத் தடுக்க திருவுளங்கொண்டு தாயனாரின் கையைப் பிடித்து நிறுத்தினார். தரையிலிருந்து வெடிப்பு வழியாகச் சிவபெருமான் நீட்டிய கையும் மாவடுவைக் கடிக்கும் விடேல் விடேல் என்னும் ஒலியும் ஒரே நேரத்தில் எழுந்தன. தாயனார், சிவபெருமான் கருணையை வியந்தார். சிவபெருமான் உமையொடு காட்சி கொடுத்து ஆட்கொண்டார்.
தாம் மேற்கொண்ட சிவதொண்டிற்கு ஊறு நேர்ந்தபொழுது உயிர்வாழ விரும்பாமல் தம் கழுத்தை அரிவாளால் அரிந்ததால் தாயனார் அரிவாள் தாயனார் என்று அழைக்கப் பெற்றார். இவர் முத்தியடைந்தது தைத் திங்கள் திருவாதிரை நாளில் ஆகும். இவரைச் சுந்தரமூர்த்தி சுவாமிகள் தம் திருத்தொண்டத் தொகையில் “எஞ்சாத வாட்டாயன் அடியார்க்கும் அடியேன்” எனக் குறிப்பிட்டுப் போற்றியுள்ளார். (தே. ஹ.)
345&iréléi) (1878 - 1945)
ஜோர்ஜ் சிட்னி அருண்டேல் இங்கிலாந்திலே சறேயிற் பிறந்த ஆங்கிலேயர்; இங்கிலாந்து, ஜேர்மனி, இத்தாலி எனும் நாடுகளிலே கல்வி கற்றவர்; எம். ஏ. எல். எல். பி. பட்டங்கள் பெற்றவர்; காசியிலே ஆசிரியராகவும் கல்லூரி முதல்வராகவும் இருந்தவர்; அன்னி பெஸன்ட் அம்மையாருடன் சேர்ந்து அரசியலில் ஈடுபட்டவர்; பிரமஞான சங்கத்தின் முக்கிய உறுப்பினரில் ஒருவர்.
பிரமஞான சங்கம் நிறுவிய நாட்டுக் கல்வி வளர்ச்சிச் சங்கத்தின் ஆதரவில் நடந்த நாட்டுப் பல்கலைக்கழகத்தின்
102

தலைவர்; அடையாற்றில் 1934 இலே பெசன்ட் பிரமஞான உயர்நிலைப்பள்ளி நிறுவியவர்; 1934 முதல் 1945 வரை அடையாறு பிரமஞான சங்கத்தின் தலைவராக விளங்கியவர்;
மனைவி ருக்மணிதேவியாருடன் 1936 இலே கலா ஷேத்திரத்தை அமைத்தவர்.
சமயம், கல்வி, அரசியல் துறைகளிலே பல நூல்களும் கட்டுரைகளும் எழுதியவர். (பொ.பூ)
©ញ6យr៩flញg
19தினைந்தாம் நூற்றாண்டிலே தமிழ் நாட்டில் வாழ்ந்தவர்; “அதலசேடனாராட” என்ற திருப்புகழ்ப் பாடலிலே தம் காலத்திலிருந்த பிரபுட தேவமாராயனைக் குறிப்பிடுகிறார். விசய நகர மன்னர்களிற் பிரபுடதேவராயர் என்ற பெயரினைத் தாங்கிய முதலாம் தேவராயர் (1406 - 1422), இரண்டாம் தேவராயர் (1422 - 1446) மல்லிகார்ஜுனன் (1447 - 1465) என்னும் மூவரில் ஒருவரையே அருணகிரிநாதர் குறிப்பிட்டவராதல் வேண்டும். மதுரைச் சிவப்பிரகாசர் 1489 இலே எழுதிய சிவப்பிரகாச வுரையிலே திருப்புகழ்ப்பாடல் ஒன்றின் பகுதியை எடுத்தாள்வதால் அவ்வுரைக்கு முன்னர் வாழ்ந்தவராகலாம்.
அருணகிரிநாதர் வடஆர்க்காடு திருவண்ணாமலையில் அதிகம் வாசம் செய்தவர். இவருடைய திருப்புகழ்ப் பாடல்களிலே இளமையிலே காமலீலைகளில் ஈடுபட்டு, நோயாற் பீடிக்கப்பெற்று, கழிவுக்கு இரங்கி நிற்கும் நிலையினைக் காணமுடிகிறது. உலகினர் பொருட்டு மெய்யடியார் தம்மேல் ஏறட்டுக் கூறும் வழக்கு உண்டென்பதனால் அந்நிலையினை அருணகிரிநாதர் மேல் ஏற்றிக் கூறல் சிந்திக்க வேண்டிய தொன்று. எவ்வாறாயினும், அவர் தம் சுயசரிதை அறிதற்கரிது, அதனைச் சுற்றிப் பல்வேறு கதைகள் உருவாகிவிட்டன.
முருகப் பெருமானின் அருள் சித்திக்கப் பெற்றவர் அருணகிரிநாதர், குகாலயங்கள் தோறும் யாத்திரை மேற்கொண்டு அவனருளை வாயாரப் பாடியுள்ளார்.
அவர் பாடிய திருப்புகழ் பேர் பெற்றது; 16000 பாடல்களுள என்ற பிற்காலத்து நூல்களின் கூற்றுக்கு ஆதாரம் இல்லை; வடக்குப்பட்டு த. சுப்பிரமணியபிள்ளையின் திருப்புகழ்ப் பதிப்பிலே (1921 - 1926) 1304 பாடல்கள் அடங்கியுள்ளன. சைவசித்தாந்த மகாசமாஜம் 1935இலே வெளியிட்ட அருணகிரிநாதர் நூற்பதிப்பிலே திருப்புகழுக்கு 1361 பாடல்கள் உள்ளன, வ. சு. செங்கல்வராயபிள்ளையின் 5 பாகம் கொண்ட பதிப்பிலே (1952 - 1957) திருப்புகழுக்கு 1307 பாடல்களே உள்ளன. சமாஜப் பதிப்பின் மேலதிகமான பாடல்களிலே சிலவற்றையே செங்கல்வராயபிள்ளை ஏற்றனர். மேலும் திருப்புகழ்ப் பாடல்களாக உலவுவன யாவும் அருணகிரியார் வாக்கு என்று தணிந்து கூறலும் அரிது.
இந்துக் கலைக்களஞ்சியம்

Page 149
அருணகிரிநாதர் கந்தரந்தாதி, கந்தரநுபூதி, கந்தரலங்காரம் என்பனவற்றையும் பாடியுள்ளார்.
வேல்விருத்தம், மயில்விருத்தம், சேவல் விருத்தம் என்பன அருணகிரியார் வாக்கு என்று சித்தாந்தமாகக் கூற முடியுமோ என்பது ஆராயத்தக்கது; சேவல் விருத்தம் 1957 இலேயே முதன்முதலாக அச்சிடப் பெற்றது.
மயில், கொலு, வீரவாள், சிவகிரி, திருச்செந்தில், திருப்பழநி, திருப்பரங்கிரி, பற்றிய ஏழு வகுப்புகளும் அருணகிரியார் வாக்கல்ல என்று ஆறுமுகநாவலர் போன்ற ஆன்றோர் கருதினர்.
அருணகிரிநாதர் பேரால் வேறு சில நூல்களும் பதிப்பிக்கப்பட்டுள்ளன. ஆயினும் அவற்றின் ஆசிரியர் இன்னார் என்று துணிதற்கு ஆதாரமில்லை.
அருணகிரிநாதர் பற்றி நிலவும் செய்திகள்வருமாறு:
இவரது தாய், தந்தை பற்றிய தெளிவான குறிப்புகள் இல்லை. இருப்பினும் நற்குடியில் பிறந்து மனைவி, மக்களோடு இல்லறம் நடத்தி பின் அக்காலச் சமுதாயத்தில் அதிகம் தவறாகக் கணிக்கப்படாத விலை மாதர் தொடர்பேற்பட்டு தன் கைப்பொருள் இழந்து தீராத நோய்க்கும் ஆளானார். இந் நிலையில் மனையவளும், ஊரில் உள்ளவரும் நகைக்க மனம் நொந்து தன்னை மாய்த்துக் கொள்ள முற்பட்ட வேளையில் முருகன் அருள் பெற்று முருகப் பெருமானுடைய திருவடிகளையே துணையாகக் கொண்டு தூய வாழ்வு வாழ்ந்தார்.
அருணகிரிநாதர் தம் காலத்து ஆட்சிபுரிந்த அரசனாகிய பிரபுடதேவ மகாராசனின் பெருமதிப்பையும் பெற்றிருந்தார். இவ் வேந்தனும் முருகப் பெருமான்பால் மிகுந்த பேரன்பு கொண்டிருந்தான். பிரபுட தேவராசனின் அவைப் புலவராக விளங்கியவர் சம்பந்தாண்டான். அவர் பராசக்தியை வணங்குபவர். எல்லார் முன்னிலையிலும் சக்தியைக் கொணர்வேன் எனச் சூளுரைத்துத் தோற்றவர். இச் சந்தர்ப்பத்தில் பிரபுடதேவரின் வேண்டுகோளுக்கிணங்கி அருணகிரி முருகனை மயில்மேல் வரவழைத்துக் காட்டி அவரது இணையற்ற பக்தியை எல்லோரும் உணர்ந்து கொள்ள வைத்தவர். இவ்வற்புத நிகழ்ச்சியை “சயிலம் எறிந்த கை வேற்கொடு மயிலினில் வந்தெனை ஆட்கொளல் சகமறியும்படி காட்டிய குருநாதர்” எனவும் “அருணையில் ஒரு நொடிதனில் வருமயில் வீரா” எனவும் திருமுதுகுன்றிலும் வியந்து பாடியுள்ளார்.
வில்லிபுத்தூரர் என்னும் வைணவப் புலவர், தன்னிடம் தோற்ற புலவர்களின் காதையறுத்துப் பணியச் செய்தலையே தொழிலாகக் கொண்டிருந்தார். இப் புலவர் அருணகிரிநாதரை
திருவண்ணாமலைக்கு வந்தார். அவ்விருவரும் அரசர் முன்னிலையில் அறிஞர் குழாம் சூழ்ந்திருக்க தம் வாதத்தை ஆரம்பித்தனர். ஒருவர் பாட மற்றவர் பொருள் சொல்வது என்ற அடிப்படையில் அருணகிரி கந்தரந்தாதி என்னும் நூலினைப்பாட
இந்துக் கலைக்களஞ்சியம்

வில்லிபுத்தூரர் உரை கூறி வந்தார். அந்நூலின் 54 ஆம் பாடலாகிய “திதத்தத்த” எனத் தொடங்கும் பாடலைப் பாடிய பொழுது வில்புத்தூரர் அதற்குப் பொருள் கூறமுடியாது வாதத்தில் தோல்வியுற்றார். தோற்றவர் காதையறுத்தல் முறையாயினும் அருணகிரிநாதர் அவ் இழி செயலைச் செய்யாது விடுத்தார். அவரது அருட்குணத்தை உணர்ந்த வில்புத்தூரர் அருணகிரிநாதரை வணங்கி மனந் தூயரானார். ஆயினும் அருணகிரிநாதர் வில்லிபுத்தூரருடன் வாது செய்தமைக்கு செவிவழியாக வழங்கும் கதையொன்றைத் தவிர வேறு இல்லை. அவ்வாறே சம்பந்தாண்டானோடு வாது செய்த வேளையில் அவரது தூண்டுதலால் அரசன் பாரிஜாதமலர் வேண்டுமென அருணகிரியாரை வேண்டிக் கொள்ள அவரும் அதற்கிசைந்து கூடுவிட்டுக் கூடுபாயும் முறையால் தம்முடலை ஓரிடத்தில் வைத்துவிட்டுக் கிளியுடலுடன் வானுலகை அடைந்தார். இந்நிலையில் சம்பந்தாண்டன் மன்னனிடம் பாரிஜாத மலர் கொண்டு வரும் திறமையற்றவராய் அருணகிரி நஞ்சுண்டிறந்தார் என மன்னனுக்குப் பொய்யுரைத்து அவரது வெற்றுடலை தீயிலிட்டதாகவும் கிளியுருவுடன் வானுலகு சென்ற அருணகிரி பாரிஜாத மலருடன் திரும்பி வந்து தமது உடலைக் காணாது கிளியுடலுடனே தமது இறுதி வாழ்நாளைக் களித்தார் என்றும் அவ்வேளையில் பாடப்பட்டவையே கந்தரநுபூதி, கந்தரலங்காரம் எனவும் கூறப்படும் செய்திக்கு ஆதாரங்கள் எதுவும் இல்லை. வில்லிபுத்தூரருடன் வாது செய்தமை, சம்பந்தாண்டானை வாதில் வென்றமை, கிளியுருவெடுத்துப் பாரிஜாதமலர் கொணர்ந்து கந்தரநுபூதி, கந்தரலங்காரம் பாடியமை ஆகிய செய்திகளை கந்தப்ப தேசிகர் தாம் பாடிய திருத்தணிகைச் சந்நிதி முறை என்ற நூலிற் குறிப்பிட்டுள்ளார். அருணகிரிநாதர் வரலாற்றைச் சேர்ந்தனவாக இங்கு கூறப்பட்ட செய்திகளுட் பல பிற்காலத்தில் புனைந்து சேர்க்கப் பட்டவையாகும்.
பாடிய திருப்புகழ்ப் பாடல்கள் எல்லாவற்றையும் முருகப் பெருமான் முன்னிலையில் ஒதி நின்று இத் திருப்புகழைப் பாடும் அடியார்கள் எல்லோரும் நல்வாழ்வு பெறும்படி வரம் தரல் வேண்டுமெனக் குறையிரந்து வேண்டினார். முருகப் பெருமான் வேண்டுகோளுக் கிணங்கி வெளிப்பட்டருளாமையால் தாம் பாடிய பாடல்கள் அடங்கிய திருப்புகழ் ஏடுகளைக் கடலில் எறிந்தார் என்றும் அதைக் கண்ணுற்ற அங்கு நின்ற அன்பர்கள் அவ்வேடுகளிற் கடலிற் போனவை போக எஞ்சியவற்றைப் பொறுக்கியெடுத்துச் சேமித்து வைத்துக் கொண்டார்கள் என்றும் கூறப்படும் செய்தியும் செவி வழிச் செய்தியே.
அருணகிரிநாதருக்கு முத்தைத்தரு என முருகப் பெருமான் அடியெடுத்துக் கொடுத்ததாகவும் அவர் நாவில் வேல் கொண்டு எழுதியதாகவும் வரகவி மார்க்க சகாயதேவர் தாம் பாடிய திரிவிரிஞ்சை முருகன் பிள்ளைத்தமிழிற் குறிப்பிட்டுள்ளார். முருகன் தனக்கு உபதேசித்த கருணைத் திறத்தை பல பாடல்களில் உள்ளம் உருகிப் பாடியுள்ளார்.
103

Page 150
“எட்டிரண்டுமறியாத என் செவியில் எட்டிரண்டும் இதுவாமிலிங்கமென எட்டிரண்டும் வெளியா மொழிந்த குரு முருகோனே'
தம் வாழ்நாள் முழுவதும் இயலிசைத் தமிழால் முருகப் பெருமானைப் போற்றும் இயல்புடையவரான அருணகிரிநாதர் தாம் பாடிய பாடல்களில் சைவ சித்தாந்த நுண் பொருளையும் அப் பொருளுணர்வோடு தொடர்புடைய அருள் அனுபவங்களையும் சொல்லும் முறையினை நோக்குங்கால் இவர் முருகப் பெருமானையே சிவனெனத் தெளிந்து வழிபட்டவர் என்பது தெளிவாகின்றது. முருகவேளைப் போற்றும் திருப்புகழில் அவரின் மாமனாரான திருமால் செய்த அருட் செயல்கள் பலவற்றை இடையிடையே சிறப்பித்துப் போற்றியுள்ளார். இதனால் இவ் அனுபூதிச் செல்வருக்கு ஏனைய சமயங்களில் வெறுப்பில்லை என்பதும் ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்னும் தெளிவுடையராய் இருந்தார் என்பதும் புலனாகின்றன. அருணகிரிநாதர் உலக மக்கள் பலரிடம் பெருகிக் காணப்படும் குறைபாடுகளையெல்லாம் தம்மேலேற்றிக் கொண்டு அவற்றை நீக்கியருளும் வண்ணம் குறையிரந்து நிற்பவராக தமது பாடல்களிற் புலனாகிறார். திருப்புகழ் பாக்களிற் பெண்களின் வருணனையும் சிற்றின்பச் செய்திகளும் மிகுதி என்பது சிலருடைய கருத்து. சுவாமிகள் இந்தப் பெண்ணா சையையும் இதன் தன்மைகளையும் அளவிட்டு எடுத்து இடித்துரைத்து “இவ்வளவுதானா சிற்றின்பம்’ என நம் மனதில் தோன்றச் செய்கின்றார்.
மடவார் பால் இரவுபகல் அணுகி நெஞ்ச மறியவழிய உருகுமந்த இருளகல உனது தண்டை - அனிபாதம் எனது தலைமிசை யணிந்து அழுதழுதுன் அருள் விரும்பி இனிய புகழ்தனை விளம்ப - அருள் தாராய்
என அருணகிரிநாதர் வேண்டுவார். முருகன் புகழ்பாடப் பாட பெண்ணாசை நீங்குமென்பதே அவர் கருத்து.
இசைத் தமிழ் வளர்ச்சிக்குரிய தாளவிலக்கண அமைதிகளும் அருணகிரி நாதர் காலத்தில் வழக்கிலுள்ள சிறந்த இராகங்களும் பழந்தமிழ்ப் பண்களும் யாழ் முதலிய நரம்புக் கருவிகளும், தோற் கருவி, துளைக்கருவி, கஞ்சக் கருவி என்பனவும் ஆடல் பாடல் இயல்புகளும் திருப்புகழ்ப் பாடல்களில் குறிக்கப்பட்டுள்ளன. மகாபாரதம், இராமாயணம் ஆகியவற்றில் கூறப்பட்டுள்ள திருமால் அருட் செயல்களும், செந்தமிழ்க் கடவுளான முருகனின் முழுமுதற் தன்மையும் அக் கடவுள் அசுரரை அழித்து அமரர்களை வாழ்வித்த போர்த் திறமையும், சைவ தத்துவ உண்மைகளும், திருமுறை ஆசிரியர்களின் பெருமையும், முருகப் பெருமான் திருத்தலங்கள் தோறும் கோயில் கொண்டருளிய திறனும், அடியார்கள் மனமுருகி வழிபடும்போது முருகன் அவர்களுக்கு அருள் புரியும் திறனும், ஆறுமுகப் பெருமான் வள்ளி தெய்வானை ஆகிய தேவிகளுடன் வேலேந்தி நீல மயில் மீதமர்ந்து அடியார்கள் காண எழுந்தருளிக் காட்சியளிக்கும் அருட் திறனும் திருப்புகழில்
104

விரித்துரைக்கப்பட்டுள்ளது. மேலும், சொல்லறச் சும்மாவிருத்தலாகிய மோன நிலையைப் பற்றியும், ஒங்காரப் பொருள், அத்துவிதவுண்மை முதலிய ஞானப் பொருள்களை உபதேசித்த அருட்செயலைப் பற்றியும், திருவண்ணாமலை, வயலூர், பழநி, திருச்செந்தில், திருத்தணிகை முதலிய திருப்பதிகளில் முருகப் பெருமான் நனவிலும், கனவிலும் தமக்கு முன் தோன்றிக் காட்சியளித்து மெய்ப் பொருளை உரிய நிலையில் உபதேசித்த முறைமையைப் பற்றியும் அருணகிரிநாதர் தாம் பாடிய திருப்புகழ்ப் பாடல்களில் குறித்துப் போற்றுகின்றார்.
திருச்சிராப்பள்ளிக்கருகில் உள்ள வயலூர் என்னும் திருப்பதியினை திருப்புகழ்ப் பாடல்கள் பலவற்றிலும் விதந்து போற்றுவதை நோக்குங்கால் அவ்வூரில் முருகப் பெருமான் அருணகிரி நாதருக்குச் சிறப்புமுறையிற் காட்சி தந்தருளியமை புலனாகின்றது. இவ்வாறே அருணை, பழநி, செந்தில், தணிகை, செங்கோடு என்னும் தலங்களும் திருப்புகழாசிரியரால் பல பாடல்களிற் போற்றப் பெற்றுள்ளன. எனவே இத் தலங்களில் அருணகிரியாருக்கு மிகுந்த ஈடுபாடு உண்டென்பது புலனாகின்றது.
பக்தியை வளர்ப்பதிலும் வெளிப்படுத்துவதிலும் சந்தத் திருப்புகழுக்கு ஒரு தனி இடம் உண்டு. தாயுமானவர் அருணகிரிநாதரைக் கனிவோடு நினைந்து,
"ஐயா அருணகிரி அப்பா உன்னைப்போல் மெய்யாக ஓர் சொல் விளம்பினார் யார்”
என்கின்றார்.
"பக்திநெறி அறிவித்துப் பழவினைகள் பாறும் வண்ணம்’
முருகப் பெருமான் அருளால் பக்திநெறி அருணகிரி நாதப் பெருமானுக்கு வாய்த்தது. அதன் பயனாய் அழகிய பக்தி இலக்கியமாகிய திருப்புகழ் தமிழ்மொழிக்கு வந்தது. அது தமிழ் மக்களுக்கு என்றென்றும் ஒளி காட்டக்கூடியது.
சிவஞானச் செல்வரால் அருள்ஒளி வீசிய அருணகிரிநாதர் ஆனி மாதம் பெளர்ணமி மூல நட்சத்திரத்தில் அவதரித்தவர்.
அதே நாளில் அத்துவித முத்தி பெற்றார் என்பர்.
(பொ.பூ.& நி. நி.)
அருணகிரி முதலியார், சிவமுநீ
சோளங்கிபுரம் சிவபூரீ அருணகிரி முதலியார் மாணிக்க வாசகரின் திருவாசகம் திருக்கோவையார் செய்யுட்டிரட்டினைக் குறிப்புரையுடன் விசுவாசுவருடம் பங்குனி மாதம் (1906) சென்னை வித்தியாபாஸ்கர அச்சுக்கூடத்திற் பதிப்பித்தனர். இதன் இரண்டாம் பதிப்பு அகத்தியர் தேவாரத் திரட்டு முதலியவற்றோடு சேர்ந்து பன்னிரு திருமுறைத் திரட்டுத் தொகுப்பாக 1927 இல் வெளிவந்தது. (பொ.யூ.)
இந்துக் கலைக்களஞ்சியம்

Page 151
அருணகிரியந்தாதி
வட ஆர்க்காடு மாவட்டத்திலுள்ள முக்கியமான சிவதலங்களிலே திருவண்ணாமலைக்குத் தனிச் சிறப்புண்டு. இது தென்னிந்திய இருப்புப் பாதையில் விழுப்புரம் காட்பாடிக் கிளையில் அமைந்தது. அருணகிரி, அருணாசலம், சோணாசைலம், சோணாசலம் முதலிய பெயர்களுடையது திருவண்ணாமலை.
சைவர் நினைக்க முத்தி கிடைக்கும் தலம் என்று கருதும் திருவண்ணாமலையில் எழுந்தருளியுள்ள சிவபிரானுக்கு அண்ணாமலைநாதர் (அருணாசலேசுவரர்) என்றும் அம்பிகைக்கு உண்ணாமுலையம்மை (அபீதகுஜாம்பாள்) என்றும் பெயர்.
அண்ணாமலைநாதரைப் பாடுவது அருணகிரி யந்தாதி. இதற்குச் சோணகிரிமாலை என்ற பெயருமுண்டு. விநாயகர் காப்பினை ஆதியாகவுடைய அருணகிரியந்தாதியில் நூலாக நூறு வெண்பாக்கள் உண்டு; பயன்கூறும் செய்யுள் இரண்டும் ஆக்கியோன் கூறும் செய்யுளும் சில பிரதிகளிலே மேலதிகமாகவுள்ளன.
இதனைப் பாடியவர் திருவண்ணாமலைக் குகை மடத்தில் வாழ்ந்த குகை நமச்சிவாயதேவர் என்பவராவார். அவர் பதினாறாம் நூற்றாண்டிலே வாழ்ந்தவர்; அண்ணாமலை நாதர் மீது திருவருணைத் தனிவெண்பாவும் பாடியவர்.
அருணகிரியந்தாதி உலகினருக்கு அறிவுரை கூறும் பாங்கில் அமைந்த பாடல்களை அதிகமாகவுடையது. தளர்ச்சி காணுமுன் நிலையாமையை உணர்ந்து இறையருளையடைய முனைய வேண்டும் என்ற கருத்தினை அதிகம் வற்புறுத்துவது; தோத்திரமாயமைந்த பாடல்களையும் தன்னகத்தேயுடையது. இலகுவான நடையழகு போற்றத் தக்கதாக அமைகின்றது.
இதனை நல்லூர் க. சதாசிவப்பிள்ளையும் வண்ணை சி. சுவாமிநாத பண்டிதரும் தனித்தனியே பதிப்பித்துள்ளனர். வித்துவான் அடிகளாசிரியர் பொழிப்புரையுடன் 1967 இலே இதனைப் பதிப்பித்துள்ளார்; முன்பு அருணாசலேசுவரர் தோத்திரப் பிரபந்தத்திரட்டிலும் பலமுறை அருணகிரி அந்தாதி இடம் பெற்றுள்ளது.
அண்ணாமலை நாதர் மீது பிறரும் அந்தாதிகள் பாடியுள்ளனர். பதினாறாம் நூற்றாண்டில் வாழ்ந்த எல்லப்ப நயினார் பாடிய அருணையந்தாதி, திம்மப்ப அந்தணனார் பாடிய திருவருணையமகவந்தாதி, பத்தொன்பதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் வாழ்ந்த ஈசானியதேசிகர் கந்தப்பஞான தேசிகர் பாடிய அண்ணாமலையந்தாதி என்பன அவற்றுள் அடங்கும். (பொ.யூ.)
இந்துக் கலைக்களஞ்சியம்

அருணந்தி சிவாசாரியார்
19தின்மூன்றாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர்; தமிழகத்தில் நடுநாட்டிலுள்ள திருத்துறையூரிலே பிறந்தவர்; சீகாழியில் சில காலம் தங்கியதால் “சண்பையர்தலைவர்” எனப்பட்டவர்; திருத்துறையூரிலே சிவபரிபூரணமடைந்தவர்; சகலாகம பண்டிதர், புறச்சந்தான குரவருள் முதல்வரான மெய்கண்ட சிவாசாரியரின் சீடர், புறச்சந்தான குரவருள் இரண்டாமவராகக் கருதப்படுவர். இவர் மாணவர் கடந்தை மறைஞான சம்பந்தர் மூன்றாமவராகக்
கருதப்படுவர்.
பதினான்கு சைவசித்தாந்த சாத்திரங்களில் இருபா விருபஃது, சிவஞானசித்தியார் எனுமிரு நூல்களையும்
பாடியவர். இவ்விரு நூல்களுக்கும் பலர் உரை கண்டுள்ளனர்.
(பொ.யூ.)
dé956KOJ1pštfayT u Jñ
பதினான்காம் நூற்றாண்டில் வாழ்ந்தவர்; சிதம்பரத்தை அடுத்த கொற்றவன்குடியில் வாழ்ந்தவர்; கடந்தை மறைஞானசம்பந்தருக்கும் அவர் சீடர் கொற்றவன்குடி உமாபதிசிவாசாரியருக்கும் சீடர், வேதாரணியம், திருவாவடு துறை ஆகிய இடங்களில் வாழ்ந்த சித்தர் சிவப்பிரகாசரின் குரு, சித்தர் சிவப்பிரகாசரின் சீடர் மூவலூர் நமச்சிவாய மூர்த்திகளே திருவாவடுதுறையாதீனத்தினைத் தாபித்தவர். (பொ.யூ.)
c6456COT3FGD 63691 DTapgo
திருவண்ணாமலை வடஆர்க்காடு மாவட்டத்திலுள்ள திருத்தலமாகும். சைவர்களின் முக்கியமான சிவ தலங்களில் ஒன்று. இத்திருத்தலத்திற் கோயில் கொண்ட சிவபிரானுக்கு அருணாசலேசுவரர், அண்ணாமலை நாதர் என்ற பேர்களுண்டு.
அருணாசலேசுவரரைப் பாடும் பிரபந்தம் அருணாசல அக்ஷரமாலை. விநாயகர் காப்புவெண்பாவையும் 114 இணைக்
குறட்டாழிசைகளையும் உடையது.
அருணாசல அக்ஷரமாலையைப் பாடியவர் பூரீ ரமண
மகரிஷிகள். அவர் இருபதாம் நூற்றாண்டிற் சிறந்த சமய ஞானியாகப் போற்றப் பெற்றவர்.
அருணாசலா என முத்திரை வைத்து அருணாசலேசுவரரை போற்றித் துதித்து வாழி கூறி முடிக்கின்றது அக்ஷரமாலை. சேர்ந்து பாடுவதற்கு ஏற்ற முறையில் அமையும் அக்ஷரமாலை எளிமையான நடையில் காணப்படுகின்றது. (பொ.பூ.)
105

Page 152
அருணாசல உபாத்தியாயர், கா. (1888 - 1969)
அருணாசலசாமி, அருணாசலதேசிகர் என்றழைக்கப் பட்டவர்; தேசிகமணி, சைவப்புலவர், சைவமெய்ப்போதகர், சைவ சித்தாந்த சிகாமணி என்று போற்றப் பெற்றவர்; காசிநாத சாஸ்திரியின் புதல்வர்; நாற்பது வருடங்களுக்கு மேல் மட்டக்களப்பு சிவானந்த வித்தியாலயத்திலும், ஆனைப்பந்தி இராமகிருஷ்ண மிசன் பாடசாலையிலும் ஆசிரியராகப் பணி செய்தவர்; சுவாமி விபுலானந்தர், வித்துவான் சரவணமுத்தன் என்போருடன் ஊர்தோறும் சென்று சைவப் பிரசங்கஞ் செய்து, சைவப் பாடசாலைகள் நிறுவ முன்னின்று பாடுபட்டவர்; மட்டக்களப்பு ஆனைப்பந்தி சித்தி விநாயகர் ஆலயத்தில் சுக்கிரவாரந்தோறும் தவறாது சைவப்பிரசங்கம் செய்து வந்தவர். தனிப்பாடல்கள் பாடியதோடமையாது சைவக் களஞ்சியம் என்ற தொடரிலே பன்னிரு நூல்களைத் தொகுத்தும் சுயமாக எழுதியும் வழங்கியுள்ளார்; அவை மேல்வருவனவாகும்.
சைவசமய ஆரம்ப போதினி (1962), சைவ சமய இளைஞர் போதினி (1958), இந்து மாணவர் பக்திப் பாடற்பாமணிமாலை (1961), இந்து சமய மாதமகத்துவ மான்மியம் (1961), சைவ இலக்கிய கதா மஞ்சரி (1964), சைவசமய சிந்தாமணி (1960), சித்தாந்த சிரோமணி,  ெம ய் ஞ் ஞான தீ ப ம் , சர் வஞா னோத் த ரா க ம சாரசங்கிரகம், அருட்பாத்திரட்டும் அரும் பொருட்பாக்களும் (1968), விநாயக மகத்துவ நுட்பமும் புளியநகர் பூணூரீ விக்கினேஸ்வர ஆலயமான்மியமும் (1968), முருகன் மகத்துவநுட்பம். - (பொ.பூ.)
அருணாசல உபாத்தியாயர், ச. (31.10.1864 - 17.01.1920)
யாழ்ப்பாணம் காரைநகர் சி. சங்கரப்பிள்ளையின் புதல்வர்; வண்ணை சைவப் பிரகாச வித்தியாசாலையிற் கற்றவர்; தெல்லிப்பழை அமெரிக்கமிஷன் ஆசிரியர் பயிற்சிப் பாடசாலையிலே பயிற்சி பெற்றவர்; யாழ்ப்பாணத்திலே தம்மூரிலும் பிறவூர்களிலும் சைவப் பாடசாலைகள் தோன்றக் காரண கர்த்தாவாக விளங்கியவர்; சைவர்களுக்கெனச் சைவாசிரிய பயிற்சிக் கலாசாலை தாபிக்கக் காரை நகரிலும், கீரிமலையிலும், வண்ணையிலும் அரும் பாடுபட்டு இறுதியில் 1916 இலே கத்தோலிக்கர் தவிர்ந்த கிறித்தவர்களோடு சேர்த்து சைவாசிரியர்களை உருவாக்கும் கோப்பாய் ஐக்கிய போதனா பாடசாலையை நிறுவ முன்னின்றவர்; அதன் மூலம் 1918 முதல் சைவப் பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் தோன்றக் காரணமானவர்.
உபாத்தியாயரவர்கள் தோற்றுவித்த போதனா பாடசாலை 1923 இலே இருபாலைக்கு இடமாறியது.
நீதிவெண்பாவுக்கு உபாத்தியாயரவர்கள் எழுதிய உரை அச்சிடப் பெற்றுள்ளது. (பொ.யூ.)
106

அருணாசலக் கவிராயர் (a8. 15) 1712 - 1779)
இசைத் தமிழால் இராமாயணத்தைப் பாடியவர். தஞ்சைமாவட்டத் திருக்கடவூருக்கு அருகில் உள்ள தில்லைபாடியில் பிறந்தவராயினும் பெரிதும் சீர்காழியிலே வாழ்ந்தமையால் சீர்காழி அருணாசலக் கவிராயர் என்றே இவர் புகழ் நிலைத்தது. -
நல்லதம்பி பிள்ளைக்கும் வள்ளியம்மைக்கும் மகனாகிய இவரைத் தருமபுர ஆதீனத்தைச் சார்ந்த அம்பலவாணக்கவிராயர் என்னும் பண்டார சந்நிதி கல்வியில் ஈடுபடுத்தினார். தருமையாதீனத் தம்பிரான்களிடத்தே சைவ சித்தாந்த சாத்திரத் திறப்பாடுகளையும் இலக்கண இலக்கிய மாட்சிகளையும் செம்மையுற அறிந்தார்.
இராமாயணத்தில் மிகச் சிறந்த காட்சிகளைத் தொகுத்து அக் காட்சிகளின் சுவைக்கு ஏற்ற இசையையும் தேர்ந்து, இனிய கீர்த்தனைகளாக அமைத்தார். இவ் இசைப் பாடல்கள் கேட்போரின் உள்ளுணர்வைத் தூண்டிக் கவரும் இசையுடன் பெரிய அளவில் வழக்குச் சொற்களையும் கலந்து ஆக்கப் பட்டுள்ளமையால் பாடும்போதே பாவனையும் அழுத்தமான பொருள் தெளிவும் புலனாகின்றன. இப் பாடல் தொகுதி இசை நாடகக் கீர்த்தனை என வழங்கப் பெறுகின்றது.
இசையறிவும் குரல் வளமும் ஒருங்கே வரப் பெற்றிருந்த மையால் இப் பாடல்களை இவரே இசையமைத்துக் காட்டி, நாடு முழுவதும் பரவ வழியமைத்தார். தஞ்சை மராட்டிய மன்னராகிய துளசி மகாராசாவும் புதுச்சேரி ஆனந்தரங்கம் பிள்ளை என்னும் புகழ் சான்ற பெரியாரும் இக் கீர்த்தனைகளைக் கேட்டுப் பாராட்டி இவருக்குப் பரிசுகள் வழங்கினர்.
இராமாயணச் சொற்பொழிவாளர்களுட் சிலர் பாடுவதற்கும், திறனாய்வு செய்வதற்கும் கம்ப இராமாயணத்தோடு இக் கீர்த்தனைகளையும் எடுத்தாள்கின்றனர். தில்லையாடி மணலி முத்து கிருஷ்ண முதலியார் இராம நாடக கீர்த்தனைகளை அரங்கேற்றுவதற்கு உதவியாக இருந்தார். இக் கீர்த்தனைகளை மட்டுமே துணையாகக் கொண்டு முழுமையான இராமாயண நாடகம் நடத்தி வரப்பட்டமையால் இக் கீர்த்தனை நூல் “இராம நாடகம்” எனவும் குறிப்பிடப்படும். இன்றும் சிற்றுார்களில் இராமாயண நாடக மேடைகளில் இப் பாடல்களைப் பாடுவதுண்டு. இசை அரங்குகளிலும் இக் கீர்த்தனைகளைப் பாடி ஒரு சிலர் மக்களைக் கவருவர்.
சமஸ்கிருதம், தெலுங்கு ஆகிய மொழிகளிலும் பயிற்சி யுடைய இவர்பால் வேங்கடராமைய்யர், கோதண்ட ராமய்யர் ஆகியோர் மாணாக்கராகப் பாடங் கேட்டனர். அவர்கள் வேண்டுகோளை ஏற்று இராம நாடகக் கீர்த்தனையை இயற்றினார். இந்த நூலை இவர் திருவரங்கத்தில் அரங்கேற்றினார். இவர் சீர்காழி தலபுராணம், சீர்காழி கோவை,
இந்துக் கலைக்களஞ்சியம்

Page 153
அனுமார் பிள்ளைத் தமிழ், அசோமுகி நாடகம், தாழி அந்தாதி, காழிக்கலம்பகம் முதலிய நூல்களையும் இயற்றியுள்ளார். இவர்தம் 67 ஆம் வயதில் காலமானார். (தே. ஹ.)
அருணாசலக்கவிராயர், மு. ரா.
பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும் இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் வாழ்ந்தவர்; சேற்றுரை அடுத்த முகவூரிற் பிறந்தவர்; சேற்றுார் சமஸ்தானப் புலவர் ராமசாமிக் கவிராயரின் புதல்வர், மு. ரா. கந்ாசாமிக் கவிராயர், மு. ரா. சுப்பிரமணியக் கவிராயரின் சகோதரர்; திருவாவடுதுறையாதீனம் சின்னப்பட்டம் நமசிவாய தேசிகரிடம் ( - 1883) பயின்றவர்.
குறுக்குத்துறைச் சிலேடை வெண்பா, சிவகாசிக் கலிவிருத்தவந்தாதி, சிவகாசிப்புராணம், சிவகாசி வெண்பா வந்தாதி, யாழ்ப்பாணத்துச் பூனிலழறீ ஆறுமுகநாவலர் சரித்திரம் (1898), தோத்திரச் செய்யுட்கள் பாடியவர்.
திருப்பரங்கிரிப்புராணவசனம், திருச்செந்தூர்த் தல புராண வசனம், திருக் குற்றாலத் தலபுராண வசனம் என்பனவற்றை எழுதியவர்; கம்பராமாயணம் ஆரணிய காண்டமுரை (1900), கம்பராமாயணம் கிஷ்கிந்தா காண்டம் (1919), திருக்குற்றாலத் தலபுராணம் (1910), திருச்செந்தூர்ப் பிள்ளைத்தமிழ், சேதுபர்வதவர்த்தனியம்மைபிள்ளைத்தமிழ், திருப்பரங்கிரிப் பிள்ளைத்தமிழ், பழநிக்குமாரப் பண்டாரம் பிரபந்தங்கள், வேணுவபுராண வுரை (1914) என்பனவற்றைப் பதிப்பித்தவர். (பொ. பூ)
அருணாசலக் கவிராயர்
தஞ்சை மகாராஷ்டிர அரசின் கடைசி மன்னன் சிவாஜி மகாராஜா ( -1855) காலத்தவர், மதனசுந்தரேசராகிய சிவபிரான் சோழனுக்குப் பிறந்த நான்கு பிள்ளைகளுக்கும் அருளும் கதையை மதனசுந்தரப் பிரசாத சந்தான விலாசம் எனப் பாடியவர்; அவ்விலாசம் 1950 இலே அச்சிடப் பெற்றது.
அருணாசல சதகம் திருவண்ணாமலையிலே கோயில் கொண்ட சிவனைப் போற்றித்துதிக்கும் தோத்திர நூலாகும். இச்சதகத்திலே நூற்றொரு பாடல்களுள்ளன. ஒவ்வொரு பாடலும் அருணாசலாவருணாசலா என்ற முத்திரையையுடையது.
அருணாசல சதகம் பாடியவர் காஞ்சிபுரம் மகாவித்துவான் கோ. சபாபதி முதலியாராவார். அவர் பத்தொன்பதாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர்.
அருணாசலசதகம் பிற செய்திகள் எவற்றையும் கூறாது பாட எடுத்துக் கொண்ட தலைவனைப் போற்றித் துதிப்பதாக அமைகின்றது. பக்திச் சுவை நனி சொட்டும் பாடல்கள் பல, அருணாசலசதகத்திலுள்ளன.
இந்துக் கலைக்களஞ்சியம்

மாம்பாக்கம் உபாத்தியாயர் திருச்சிற்றம்பல நாவலர் பாடிய அண்ணாமலைச் சதகமுண்டு. திருவண்ணாமலையிற் கோயில் கொண்ட இறைவியின் மீது வித்துவான் சின்ன கவுண்டர் பாடிய உண்ணாமுலையம்மன் சதகமுமுண்டு. (பொ.யூ.)
அருணாசல சுவாமி
19த்தொன்பதாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் பிறைசை அருணாசலசுவாமி, பிறையாறு என்பதன் மருஉப்பெயர் பிறைசை, அது தமிழ் நாட்டின் கண்ணுள்ளது; திருத்துருத்தி இந்திரபீடம் கரபாத்திர சுவாமிகள் ஆதீனம் திருநாகை அருணாசல சுவாமிகளின் சீடர், ஈசூர் சச்சிதானந்த சுவாமிகளின் ஞானகுரு, கா. ஆறுமுக நாயகர், பாரிப்பாக்கம் முனியப்ப முதலியார் முதலியோரின் ஆசிரியர்.
கை வல்லியநவநீதம், சசிவன்னபோதம், ஞானவாசிட்டம் (1870), வேதாந்த சூளாமணி (1861) என்பனவற்றிற்கு உரை கண்டவர்; இவரும் பிறரும் ஞானவாசிட்ட வமலராமாயணத்திற்கு எழுதிய உரைகள் 1851 இலே சென்னையில் அச்சிடப்பெற்றன. (பொ.யூ.)
அருணாசல தேசிகர்
பத்தொன்பதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் வாழ்ந்தவர்; துறவு ஆண்டவர் எனக் கோவிலூர் ஆதீன சம்பந்தமுடை யோரால் அழைக்கப்பெற்றவர்; தேவகோட்டையில் வினை தீர்த்தான் செட்டியார் புதல்வராகத் தோன்றியவர்; பிள்ளைப் பெயர் அருணாசலம்.
கோவிலூர் ஆதீன தாபகர் பூரீ முத்துராமலிங்க ஞானதேசிகரின் சீடர், சிதம்பரம் கேணி மடத்திலும் சிலகாலம் இருந்தவர்; இறைவழிபாட்டிலும் தியானத்திலும் வேதாந்த பாடம் கற்பித்தலிலும் அடியார் தொண்டிலும் ஈடுபட்டவர்; 1847 இலே பூரீ முத்துராமலிங்கஞான தேசிகர் பரிபூரணம் எய்திய பின்பு, கோவிலூர் ஆதீனத்தின் இரண்டாம் கர்த்தராக விளங்கி 1849 இலே பரிபூரணமடைந்தவர்; இவர் சகோதரர் சிதம்பர ஞானதேசிகர் (கருணாநிதி சுவாமிகள்) மூன்றாம் ஆதீன கர்த்தராக விளங்கியவர். சீடாச்சாரம் எனும் நூலிலே சீடர் பின்பற்ற வேண்டிய ஆசாரங்களைத் தொகுத்தளித்தவர்; கைவல்லிய நவநீதத்திற்குப் பதசாரம் செய்தவர்.
கோட்டாறு நித்தியானந்த சுவாமிகள், சிதம்பரம் கேணிமடம் நித்தியானந்த சுவாமிகள், வளவனூர் சண்முகசுவாமிகள், திருநெல்வேலி சுப்பிரமணியசுவாமிகள், மதுரை சுப்பராய சுவாமிகள், பாகனேரி முத்துக்கருப்பஐயா, மதுரை மெய்யப்பஐயா, சொர்ணநாதபுரம் பழனியப்பஐயா முதலியோர் இவரிடம் வேதாந்தம் பாடம் கேட்டவர்கள். (பொ.யூ.)
107

Page 154
அருட்டிரு அருணாசலதேசிக அடிகளார்
தமிழ் நாட்டில் தமிழ் வளர்த்துச் சிவம் வளர்த்த குன்றக்குடி திருவண்ணாமலை ஆதீனத்து மகாசந்நிதானம் அருட்டிரு அருணாசல தேசிக அடிகளார் “குன்றக்குடியடிகளார்” என்று தமிழ் கூறு நல்லுலகிலே புகழ் பெற்றவர்.
தஞ்சாவூருக்கு அண்மையிலுள்ள நடுத்திட்டு எனும் ஊரிலே தோன்றி, அரங்கநாதன் என்ற பெயருடன் வளர்ந்து, தருமையாதீனத்திற் கணக்கராக வேலை பார்த்து, 1945 இலே தருமையாதீனத்திலே துவராடை பெற்றார்.
தமிழ் அர்ச்சனை இயக்கத்தைத் தமிழ் நாட்டிலே தொடக்கி வைத்தவர் குன்றக்குடியடிகளார் என்பது குறிப்பிடத்தக்கது. இறை சந்நிதானம் பொதுவிடம் என்ற கருத்தினை வற்புறுத்தி தீண்டாதோராக ஒதுக்கப்பட்டோர் கோயிற் பிரவேசம் செய்வதைத் தீவிரமாக ஆதரித்து நின்றவர். நாவன்மையாலும் புலமையாலும் தமிழ்நாட்டில் மட்டுமன்றித் தமிழ்கூறு நல்லுலகம் முழுவதும் தமிழ் மணமும் சைவ மணமும் கலந்து வீசச் செய்தவர்.
தமிழ்க் கல்விக்குத் தம் கல்வி நிலையங்களிலும் தமிழ் மொழிக்குத் தம் கோவில்களிலும் முதன்மை அளித்த குன்றக்குடியடிகளார் தமிழ்ப் புலவர்களை ஆதரித்த ஆதீன கர்த்தர்களிலே சிறப்பிடம் பெறுவர். தமிழகம்' என்ற இதழையும் வெளியிட்டவர். (பொ.யூ.)
அருணாசல புராணம்
அண்ணாமலையில் அருள் புரியும் சிவபெருமானாம் அண்ணாமலை நாதர் திருத்தலத்தின் பெருமை கூறுவது அருணாசலபுராணம். ஸ்காந்தத்தின் உருத்திர சங்கிதையிலுள்ள அருணாசல மகாத்மியத்தின் மூலமாக வுடையது அருணாசல புராணம் என்பர்.
1855 ஆம் ஆண்டிலே வெளிவந்த மழவை மகாலிங்கையர் உரையோடு கூடிய அருணாசல புராணப் பதிப்பிலே பாயிரமும் பன்னிரு சருக்கமும் 586 விருத்தமும் இடம் பெறுகின்றன. அருணாசலவையர் (1873), திருவெண்காடு ஆறுமுகசுவாமிகள் (1873) பதிப்பித்த மழவை மகாலிங்கையர் உரையுடனான அருணாசலப்புராணப் பதிப்புகளிலும் அந்நூலமைப்புக் காணப்படுகின்றது.
ஆயினும் 1886 இலே மழவை மகாலிங்கையர் உரையுடன் தாழம்பேடு அருணகிரிநாயகர் பதிப்பித்த அருணாசல புராணத்திலே புதிதாக எல்லாள மகாராஜன் சருக்கமும் (60 பாடல்) பாயிரத்தில் ஒரு பாடலும் காணப்படுகின்றன. பின் வந்த பதிப்புகளிலே எல்லாள மகாராஜன் சருக்கத்தில் ஒரு பாடலும் பாயிரத்தில் இரு செய்யுளும் புதிதாக இடம் பெறுவன. இதனால்
108

அருணாசல புராணவாசிரியர் பாடாதனவும் மழவை மகாலிங்கையர் உரையெழுதாதவையும் அவர்கள் பேரால் வழங்கப்படுகின்றன என்பது தெளிவாம்.
1930 ஆம் ஆண்டு சென்னை பி. இரத்தினநாயகர் ஸன்ஸ் வெளியிட்ட அருணாசலபுராணத்திலே 23 விருத்தமுடைய பாயிரமும் திருநகரச் சருக்கம் முதல் புளகாதிபன் சருக்கம் ஈறாக 626 பாடல் கொண்ட பதின்மூன்று சருக்கங்களும் இடம் பெறுவன.
அருணாசலபுராணத்தினைப் பாடியவர் சைவ எல்லப்ப நாவலர் என்பது மரபு. ஆயினும் சிலர் எல்லப்பநயினார் என்பவரே ஆசிரியர் என்பர். எல்லப்ப நயினார் காலம் பதினாறாம் நூற்றாண்டு; எல்லப்பநாவலர் காலம் பதினெட்டாம் நூற்றாண்டாகலாம்.
மழவை மகாலிங்கையர் அருணாசலபுராணத்திற்கு உரை கண்டுள்ளார். இவ்வுரை நேத்திரப்பாக்கம் சின்னையர் (1855), அருணாசலவையர் (1873), திருவெண்காடு ஆறுமுகசுவாமிகள் (1873), என்போரால் முன்பு பதிப்பிக்கப்பட்டது. தாழம்பேடு அருணகிரிநாயகர் (1836) இடைச் செருகல்களுக்கும் உரையெழுதுவித்துப் பதிப்பித்தார். சென்னை வித்தியாரத்நாகர அச்சுக்கூட அதிபர் பி. நா. சிதம்பரமுதலியார் வெளியிட்ட அருணாசலேசுரர் தோத்திரப் பிரபந்தந் திரட்டிலும் மழவை மகாலிங்ககையர் உரையுடன் அருணாசல புராணம் இடம் பெற்றது. மேலைப் புலோலி சதாவதானம் நா. கதிரைவேற் பிள்ளை (1871 - 1907) பரிசோதித்த அருணாசலேசுரர் தோத்திரப் பிரபந்தத்திரட்டு 1898, 1902, 1903, 1904, 1905 ஆம் ஆண்டுகளில் வெளிவந்தது. சென்னை பி. இரத்தினநாயகர் ஸன்ஸ் 1930 இல் வெளியிட்ட இப்பிரசுரத்திலே “பூரீலறுரீ ஆறுமுகநாவலர் அவர்கள் மாணாக்கரின் மாணாக்கரொருவரால் பரிசோதிக்கப் பெற்றது” என்று இருப்பது குறிப்பிடத்தக்கது.
சிதம்பரம் கண்கட்டி மறைஞானசம்பந்தர் கி. பி. 1554 இலே பாடத் தொடங்கிய அருணகிரிப் புராணம் 1880 இலே பதிப்பிக்கப் பெற்றது. (பொ. பூ)
céiqiya OT3FGlob, 63-ft 61JT660), b1 JGorb
(1853 - 1924)
பொன்னம்பலம் அருணாசலம் சிறந்த தேசத்தொண்டரும் சமயாபிமானியுமாவர். இலங்கையின் சுதந்திரத்திற்கு அத்தி வாரமிட்ட தலைவர்களுள் இவரே கூடிய சேவை யாற்றினா ரென்றால் மிகையாகாது. தனது சீவியகாலத்தில் வாழ்ந்த தேசப் பெரியார்களின் விசுவாசத்தையும், நன்மதிப்பையும் பெற்ற மாபெருந் தலைவரான பொன்னம்பலம் அருணாசலம் அவர்களின் வாழ்க்கை பெரிய இலட்சியங்களைக் கடைப்பிடித்துச் சேவையாற்றும் தொண்டர்கட்கெல்லாம் ஒர் எடுத்துக்
இந்துக் கலைக்களஞ்சியம்

Page 155
காட்டாயமைந்து புத்துயிரளித்து வருகின்றது. கீழைத் தேயங்களிலிருந்தும் மேலைத்தேயங்களிலிருந்தும் இவர் பெற்ற ஒப்பற்ற கல்வியறிவும் பண்பாடும் தனது உயர்குடிப் பிறப்பிற்கேற்ற பெருந்தன்மையையும் பணியாற்றும் சுபாவத்தையும் மென்மேலும் வளரச்செய்தன.
பொன்னம்பலம் அருணாசலம் 1853ஆம் ஆண்டு, செப்டம்பர் 14ஆம் தேதி பிறந்தார். இலங்கைச் சட்டசபை ஏறி, தேச சேவையாற்றிப் பெரும் புகழீட்டிய மூன்று சகோதரர்களுள் இளையவர் இவரே. துணிவும் சுவாதீனமான கொள்கையும் வாய்ந்த குமாரசுவாமி அவர்கள் சிறந்த தேச சேவையாற்றி 1906இல் இவ்வுலக வாழ்வை நீத்தார். இன்று அவருடைய புகழ் அதிகம் துலங்காதற்குக் காரணம் அவருக்குப் பின் இராமநாதனும் அருணாசலமும் ஈட்டிய பெரும் புகழேயாகும். யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மானிப்பாயில் உள்ள பிரபல குடும்பத்தில் இம்மூன்று தலைவர்களும் பிறந்தனர். அருணாசலம் அவர்களின் தாய்வழிப்பேரன் குமாரசுவாமி முதலியார். இலங்கையில் முதன் முதலாக 1834இல் சட்டசபை அமைக்கப்பட்டது. இச்சபையில் அங்கத்தவராகப் பதவிவகித்த முதலாவது தமிழர் குமாரசுவாமி முதலியாராவார். இம்மூன்று சகோதரர்களின் தாய் மாமன், சேர் முத்துக்குமாரசுவாமி அவர்கள்.
இலண்டன், பாரிஸ் நகரங்களிலுள்ள வித்தியாமன்றங்களில் ஆயிரத்து எண்ணுாற்று அறுபதாம் ஆண்டுகளில், சேர் முத்துக்குமாரசுவாமி அவர்கள் பெரும் புகழீட்டினார். ஹெளட்டன் பிரபு, பாமேஸ்டன், டிஸ்ரயிலி முதலிய பெருமக்களின் நட்பைப் பெற்றனர். டிஸ்ரயிலி எழுதிக் குறையில் விட்டுச்சென்ற நாவல், இலண்டன் டைம்ஸ் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டது. இலங்கை வாசி, குசினாரா என்றொரு பாத்திரம் இக்கதையில் வருகிறது. அநேகமாக, இப்பாத்திரம் சேர் முத்துக் குமாரசுவாமியின் தொடர்பையே சித்திரிக்கின்றதெனக் கொள்கிறார்கள். சேர் முத்துக்குமாரசுவாமி, லிங்கன் இன்’ சட்டக்கல்வி மன்றத்தைச் சேர்ந்து பாரிஸ்டர் பட்டம் பெற்றவர். இலங்கைச் சட்டசபையில், பல வருடங்களாக ஒர் பிரபல அங்கத்தவராகப் பதவி வகித்தவர். நைட்' பட்டம் பெற்ற முதலாவது தமிழரும் இவரே. ஆசியாக் கண்டத்தில் கிறிஸ்தவ சமயத்தைச் சாராதவர்களுள் முதல் முதலாக இங்கிலாந்தில் பாரிஸ்டராக்கப்பட்டவரும் இவரே. இவருடைய நண்பர்களுள் ஒருவரான ஹெளட்டன் பிரபு, அருணாசலம் அவர்கட்கு இவரைப் பற்றி எழுதிய ஒர் கடிதத்தில், கண்ணியமும் பெருமதிப்புமுள்ளவர் என நான் மதிக்கிறேன். இந்தியாவின் சக்கரவர்த்தினியின் கீழைத்தேயப்பிரஜைகளை இங்கிலீஷ் சட்டமன்றத்தில் சேர உரியவராக்குதற்கு ஆற்றிய சேவைக்கேற்ற பிரபலத்தை இவர் பெறவில்லை. இவ்விவாதங்களிலெல்லாம் புறூகாம் பிரபு, சேர் முத்துக்குமாரசுவாமி அவர்கட்குப் பேருதவி புரிந்தனர் எனக் ஹெளட்டன் பிரபு கூறியுள்ளார். அப்சேர்வர் ஆசிரியராயிருந்த பெர்கூசன், இத்தலைவர் இறந்தபொழுது, 'திராவிடர் சாதியிலுள்ள 2 கோடி மக்களுள், இவரே தனிப்பெருமையுடன் விளங்கினார் என எழுதியிருந்தார். இவருக்கு ஒரே ஒரு புதல்வர்.
இந்துக் கலைக்களஞ்சியம்

அவர்தான் கலாயோகி ஆனந்தக்குமாரசுவாமி அவர்கள். உலகப் பிரசித்திபெற்ற மேதையும் கலாவிமர்சகருமாவர். இந்தியா, இலங்கை என்னும் இரு தேசங்களினதும் கலைவளர்ச்சிக்கும் பண்பாட்டின் மறுமலர்ச்சிக்கும், இவ்வறிஞர் எழுதிய நூல்கள் பேருதவிபுரிந்து நிற்கின்றன. கீழைத் தேயக்கலைகளை ஆராய்ந்து அவற்றிலுள்ள தத்துவங்களுக்கெல்லாம் வியாக்கியானம் எழுதியிருக்கிறார் ஆனந்தக்குமாரசுவாமி அவர்கள். அவருடைய ஆராய்ச்சி நூல்களை மேலைத்தேய அறிஞர்களும் வாசித்துக் கீழைத்தேயக் கலைகளில் பெரும் ஆர்வங்கொள்கின்றனர். கலாயோகி ஆனந்தக்குமாரசுவாமி அவர்கள் 1947இல் அமெரிக்காவைச் சேர்ந்த பொஸ்டன் என்னுமிடத்திற் காலமானார்.
சேர் முத்துக்குமாரசுவாமியின் கண்காணிப்பிலேயே குமாரசுவாமி, இராமநாதன், அருணாசலம் ஆகிய மூன்று சகோதரர்களும் வளர்ந்தனர். தன் சகோதரர்களைப் போலவே, அருணாசலம் அவர்களும், றோயல் அக்கடமியில் கல்வி கற்கத் தொடங்கினார். றோயல் அக்கடமியே இப்பொழுது றோயல் கல்லூரியாக இருக்கும் ஸ்தாபனமாகும். இங்கு இவர் இராணி கல்விச்சகாய நிதியைப் பெற்றார். இக்கல்லூரி அதிபர், டாக்டர் பாக்குரப் போக், இவரைப் பற்றி எழுதிய நற்சாட்சிப் பத்திரத்தில், கல்வி கற்பிக்குந் தொழிலில் எனக்கு நாற்பது வருட அனுபவமுண்டு. அருணாசலத்தைப் போல் சாமர்த்தியமும் விவேகமும் வாய்ந்த வாலிபனை நான் கண்டதேயில்லை. அருணாசலத்தின் ஒழுக்கம் என்றும் மிகத்திருப்திகரமானதாகவே இருந்து வருகிறது. எத்துறையிலும் மேலோங்க வல்ல ஒரு வாலிபனென்றே நான் கருதுகிறேன்' எனக் குறிப்பிட்டிருந்தார். அனுபவ முதிர்ச்சியுள்ள ஒரு பிரபல கல்லூரி அதிபரிடமிருந்து இவ்வித நற்சாட்சிப் பத்திரத்தைப் பெறுவது மிகவும் பாராட்டத்தக்கதே. இவ்வாசிரியரே அக்காலத்தில் கல்வி கற்ற பிரபல மாணக்கர்களான சீ. ஏ. லோரன்ஸ், நெல், வில்லியம் குணத்திலக முத்துக்குமாரசுவாமி, டோனோஸ்ட் முதலியவர்களைப் படிப்பித்திருக்கின்றார். 1870இல் ஆங்கிலச் சர்வ கலாசாலைக் கல்விச் சகாய நிதியைப் பெற்று, அருணாசலம் அவர்கள், கேம்பிரிட்ஜிலுள்ள கிறைஸ்ட் கல்லூரியில் உயர்தரக் கல்விபெறச் சென்றார். அக்காலத்திலிருந்த வித்தியாதிகாரி, சேர் வால்டர் சென்டோல் அவர்களே கிறைஸ்ட் கல்லூரிக்குச் செல்லும்படி அவருக்கு ஆலோசனை கூறினார். கேம்பிரிட்ஜிலுள்ள வித்தியாதிகாரிகட்கு, அருணாசலம் அவர்களைப் பற்றி எழுதும்பொழுது விசேஷ தகுதியுள்ள ஒரு கீழைத்தேய இளைஞன், சகல முன்னேற்றங்களையும் அடையக்கூடிய ஆற்றலுடையவன் என்று குறிப்பிட்டிருந்தார்.
சிறிது காலத்திற்குள்ளேயே அருணாசலம் தனது திறமையை விளக்கி, பவுண்டேஷன் கல்விச்சகாய நிதியைப்பெற்று, புராதன இலக்கியங்களிலும் கணித சாஸ்திரத்திலும், வல்லுநராகிப் பெரும் புகழ் ஈட்டினர். கிறைஸ்ட் கல்லூரி மாணவர் வரிசையில் சாமர்த்தியமுள்ள கணித சாஸ்திர நிபுணனும் புராதன இலக்கிய அறிஞனும் என அருணாசலம் அவர்களை விவரித்திருந்தார்கள்.
109

Page 156
கேம்பிரிட்ஜ் கல்லூரியில் இவருக்குக் கல்வி பயிற்றிய ஆசிரியர்களுள், திரு. பிளெச்சர் மோல்டன், (பின் ஐஸ்ரிஸ் பிரபு) பேராசிரியர் ரீட் டாக்டர் பெயில்லே, வண. ஸ்கீட் என்பவர் களுமிருந்தனர். இவருடைய நண்பர்களாக, லிட்டில்ற்றன் இருவர் ஜெரால்ட், ஊஸ்ரேஸ்பல்பர், பேராசிரியர்கள் மெயிட்லன்ட் பொக்ஸ்பெல், வண. கன்னிங்காம் - மகாகவி டெனிஸனின் மூத்த புதல்வர் டெனிஸன் பிரபு, அலெக்ஸாண்டர் ஹரிஸ், எட்வேட் காப்பென்டர் முதலியோர் திகழ்ந்தனர். எட்வேட் காப்பென்டர் சீவிய நண்பராக இருந்து அருணாசலம் அவர்கட்குப் பேருதவி புரிந்துவந்தனர். தனது நட்பின் சின்னமாக, அருணாசலம் அவர்கள் இறந்தபின், அவர் எழுதிய கடிதங்களுள் தெரிந்தெடுத்துச் சிலவற்றைத் தொகுத்து கிழக்குத்திக்கின் சோதி, என்ற பெயருள்ள நூலாக அந்நண்பர் வெளியிட்டார்.
அறிஞர்களின் மத்தியில் வாழ்ந்த அருணசலம், தமது நேரத்தை ஆராய்ச்சிகளில் செலவிடலானார். கேம்பிரிட்ஜில் கல்வி கற்கும்பொழுது ஒரு குறிப்பிடத்தக்க சம்பவம் நிகழ்ந்தது. யோர்க்கிலுள்ள பிரதான அத்தியட்சகுரு, கேம்பிரிஜ் சர்வகலாசாலை மாணவர்கட்கு இடையிடையே மதபோதனை நடத்துவண்டு. ஒரு நாள் ஆற்றிய போதனையில் இந்திய மதங்களை அவமதித்துப் பேசிவிட்டார். அடுத்த நாளே அருணாசலம் அவர்கள், குருவானவருடன் மறுத்து உரையாடத் தொடங்கிவிட்டார். இவர்களுக்கிடையே நடந்த கடிதப் போக்குவரத்து ஸ்பெக்ரேட்டர் பத்திரிகையில் 1874இல் பிரசுரிக்கப்பட்டது. 1875இல் இவருடைய விருப்பத்திற்கு மாறாக, இவருடைய மாமன் சேர் முத்துக்குமாரசுவாமி, சிவில் சர்வீஸ் சோதனை எடுக்கும்படி இவரை வற்புறுத்தினார். நியாய துரந்தரராவதே அருணாசலம் அவர்கட்கு விருப்பமாயிருந்தது. ஆனால் தெய்வசித்தம் வேறாயிருந்தது. சிவில் சர்வீஸ் சோதனையில் முதன் முதலாகச் சித்தியடைந்த இலங்கையர் அருணாசலம் அவர்களே.
1875 ஆம் வருடம் ஏப்ரல் மாதத்தில் இலங்கை திரும்பியதும் கொழும்பிலுள்ள அரசாங்க மாகாண அதிபதி காரியாலயத்தில் அருணாசலம் அவர்கள் நியமிக்கப்பட்டார். பின்பு சில காலம், கண்டிப் பகுதிப் பொலிஸ் நீதிமன்றத்தில் அமர்த்தப்பட்டார். பின்பு இலங்கையில், பல பகுதிகளில் பல நீதிஸ்தல உத்தியோகங்களில் அமர்ந்தார். மட்டக்களப்புப் பகுதியில் டிஸ்திறிக் நீதிபதியாகக் கடமையாற்றியபொழுது அருணாசலம் அவர்கள் சிவில் சர்வீஸ், நான்காம் வகுப்பிலேயே இருந்தார்.
அக்காலத்தில் சேர் ஆதர் கோடன் இலங்கைத் தேசாதிபதியாக இருந்தார். அருணாசலம் அவர்களின் திறமையை அவதானித்த தேசாதிபதி, றிஜிஸ்டார் ஜெனரல் பதவியில் அவரை நியமித்தார். சிவில் சர்வீஸில், அருணாசலம் அவர்களிலும் பார்க்க உயர்ந்த பதவி வகித்த முப்பது அதிகாரிகள் இருக்கவும், அவர்களுக்கு மேலாக அருணாசலம் அவர்களை உயர்த்தியது மிகவும் வியப்பானதோர் காரியமாகும். அருணாசலம் அவர்களின் பதவி உயர்ச்சியை ஆட்சேபித்துச் சிவில் சர்வீஸில் உள்ள பல அதிகாரிகள் தேசாதிபதிக்கு விண்ணப்பம் செய்தனர்.
110

தேசாதிபதி இந்த மறுப்புக்களை எல்லாம் பாராட்டாது, அருணாசலம் அவர்களின் திறமையையே பாராட்டினார்.
அருணாசலம் தமது புதிய பதவியில் அமர்ந்து நிர்வாகத் திறமையுடன் உழைத்து வரலானார். அந்த நாட்களில் பிஸ்கால் இலாகாவில் பல ஊழல்களும் கைலஞ்சமும் தாண்டவமாடின. அந்த ஊழல்களை எல்லாம் நீதிபதிகளும் வழக்கறிஞர்களும் கூட அறிந்திருந்தனர். அருணாசலம் அவற்றையெல்லாம் அவதானித்தே வந்தார். பிரதம பதிவிக் காரியாலயமும் பிஸ்கால் இலாகாவும் அக்காலத்தில் ஒரே இலாகாவாகவே இருந்தன. ஊழல்களை நீக்கிச் சீர்திருத்தம் செய்யும் நோக்கத்துடன் அருணாசலம் அவர்கள் இந்த இரண்டு இலாகாக்களையும் வெவ்வேறு இலாகாக்களாக மாற்றி அமைக்கும்படி ஆலோசனை கூறினார். பிரதம பதிவுக் காரியாலயத்திலும் இரு பிரிவுகளை அமைத்தார். ஒன்று, காணிப் பதிவுப்பிரிவு மற்றது பிறப்பு, மரண, விவாக, பதிவுப்பிரிவு. இப்படி தனித்தனியாக வகுத்து அமைக்கும் வேலை மிகவும் சாமார்த்தியமானதொன்றாகும். இந்த நிர்வாக அலுவல்களை யெல்லாம் அருணாசலம் அரசாங்கத்துக்குப் பூரண திருப்தி உண்டாகும் வகையில் ஆற்றினார். அவற்றை அவதானித்த தேசாதிபதி, சேர் ஆதர் கோடன், உத்தியோக பூர்வமாகவும் தனது பிரத்தியேக முறையிலும் அருணாசலம் அவர்களைப் பாராட்டினார். ஆபத்தான கட்டத்தில் ஊழல்களுக்கு இரையாகி இருந்த பிரதம பதிவுக்காரியாலயத்தைச் சீர்திருத்தி அமைத்த பெருமை அருணாசலம் அவர்களையே சாரும். 1887 ஆம் ஆண்டிற்கு முன்பும் அதன் பின்பும் இந்த இலாகா இருந்த நிலைமைகளை அவ்வாண்டிற் பிரசுரிக்கப்பட்ட நிர்வாக அறிக்கைகள் மூலம் அறியலாம். டைம்ஸ் ஒவ் சிலோன் என்னும் பத்திரிகை இதுபற்றி எழுதுகையில் அருணாசலம் அவர்கள் பதவி ஏற்கும் பொழுது பிரதம பதிவுக்காரியாலயத்திற் பல ஊழல்கள் தாண்டவமாடின. உறுதிகள் பதிவு செய்வதென்றால் எவ்வளவோ காலதாமதமும் அலைக்கழிவும் ஏற்பட்டன. காணிப் பதிவு சம்பந்தமாகவோ கொடுக்கல், வாங்கல் சம்பந்தமாகவோ யாதொரு அட்டவணையும் வைத்திருக்கப்படவில்லை. நேர்மையற்ற முறைகள் பல கையாளப்பட்டன. முக்கியமான இடாப்புக்களும் சாதனங்களும் நிலத்திலேயே கவனமின்றிக் குவிக்கப்பட்டிருந்தன. நேர்மை என்பது அணுவளவேனும் புலப்படவில்லை. நிர்வாகம் இப்படி இருந்த போதிலும் பதிவுச் செலவுகள் இருபத்தையாயிரம் ரூபாவுக்குக் கணக்கிடப்பட்டன. இந்தப் பணம் எல்லாம் எங்கே போனதென்பதே தெரியாது. நிலைமைகளைச் சீர்திருத்த ஒரு அதிகாரியாலும் முடியாமல் போனது. இதற்குக் காரணம் அதிகாரிகட்கு நிர்வாக அறிவு போதாமையே. அருணாசலம் மிகுந்த ஆற்றலும் தளரா ஊக்கமும் உள்ள ஒருவர். காரியாலயத்தில் உள்ள ஒவ்வொரு இலிகிதர் முன்பாகவும் சென்று பொறுமையுடன் அவராற்றும் கடமைகளைக் கற்றுக்கொள்ள ஆரம்பித்தார். சகல இலிகிதர்களின் கடமைகளையும் பூரணமாகக் கற்றுக்கொண்ட பின்பு, சீர்திருத்த வேலையை ஆரம்பித்தார். உறுதிகள் பதிவதில் ஏற்பட்ட காலதாமதத்தை உடனே நீக்க முயன்றார். ஒவ்வொரு இலிகிதரும் நேர்மையாகவும் தளரா ஊக்கத்துடனும் தனது கடமையைப் புரியப்
இந்துக் கலைக்களஞ்சியம்

Page 157
பயிற்றுவித்தார். மேலதிகமாக உள்ள இலிகிதர்களை மட்டுப்படுத்தினார். உத்தியோக பூர்வமாக ஆற்றும் கடமைகட்குத் தனி வேதனம் பெறுவதை நீக்கினார். சாதனங்கள் பதிந்து வைத்திருக்கும் காரியாலாயத்தைச் சீரான முறையிலே திருத்தி அமைத்தார். இன்ன இன்ன அலுவலுக்கு இன்ன இன்ன செலவு என வரையறுத்தார். பதிவு இடாப்புகளைச் செப்பமிட்டு வைத்திருக்க விசேஷ உத்தியோகத்தர்களை நியமித்தார். பதிவுச் சாதனங்களைப் பேணி வைத்திருக்க ஒரு புதிய காரியாலயத்தை அங்குரார்ப்பணஞ் செய்தார். அலுவலல்கள் செவ்வனே நடைபெற ஒரு புதிய முறையை ஏற்படுத்தினார். மேலதிகமாகப் பெற்ற செலவுப் பணத்தை எடுத்துச் சகாய நிதியை ஆரம்பித்தார்.
புள்ளி விபரங்கள் கணிக்கும் துறையில் பிரசித்திபெற்ற அமெரிக்க அதிகாரி, பிரெடரிக் கவ்மன், இலங்கைத் தேசாதிபதிக்கு எழுதிய கடிதத்தில் 1898ஆம் ஆண்டிற்குரிய இலங்கை உயிர்ப் புள்ளி விவர அறிக்கை, என்னும் புத்தகத்தைப் பெற்றுக் கொண்டேன். இவ்வறிக்கையை ஆவலுடன் படித்தேன். இதுபோல் மிகவும் நுணுக்கமாக ஆராய்ந்து எழுதிய ஒர் அறிக்கையை நான் பார்த்ததேயில்லை. அநேகமாகச் சகல பிரிட்டிஷ் குடியேற்ற நாடுகளைப் பற்றியும் நான் அறிந்திருக்கிறேன். இவ்வளவு நுட்பமாகவும் திட்பமாகவும் எழுதப்பட்ட ஒர் அறிக்கையை அமெரிக்காவிலும் நான் கண்டதில்லை எனக் குறிப்பிட்டார்.
அருணாசலம் அவர்கள் பிறப்பு, இறப்புப்பதிவில் ஒரு புதிய முறையை இலங்கையிலே கையாண்டார். அந்த முறை கீழைத் தேசங்களுக்குப் புதிதாக இருந்தது. இலங்கையில் மரண விகிதம் தீவிரமாக அதிகரித்து வந்ததை 1895இல் அரசாங்கத்துக்கு எடுத்துக் காட்டினார். சுகாதார வசதிகள் குன்றிய சேரிகளினாலேயே நோய் பரவுகின்றதென்பதை விளக்கினார். சாக்கடை நீர் ஊருக்குள் தங்காது வெளியே அப்புறப் படுத்துவதற்கு ஆவன முறைப்படி செய்யவேண்டுமென்றும் குடியிருப்பு வீடுகள் சுகாதார வசதிகளுடன் அமைக்கப்பட வேண்டும் என்றும் அரசாங்கத்துக்கு ஆலோசனை கூறினார். இலங்கைத் தேசாதிபதி அவற்றை ஏற்று நடவடிக்கை எடுக்கும் முகமாக இங்கிலாந்தில் இருந்து மான்சேக் என்னும் நிபுணரை வரவழைத்தார். அருணாசலம் அவர்களின் நிர்வாகத்தில் மிகத்திறமையுடன் சேகரிக்கப்பட்ட புள்ளி விவரங்களும் அரிய தகவல்களும் பொருளாதாரத் துறையிலும் சமுதாயத் துறையிலும் தேசம் முன்னேற என்ன என்ன ஆக்க வேலைகள் செய்யவேண்டுமென்பதற்கும் குற்றங்களைத் தடுக்கவும் நோய் பரவாதிருக்கவும் என்ன என்ன முயற்சிகள் எடுக்கவேண்டும் என்பதற்கும் அரசாங்கத்துக்குப் பேருதவி புரிந்தன.
1901ஆம் ஆண்டுக் குடிசன மதிப்பு வேலையை அப்பொழுது ஆண்ட இலங்கைத் தேசாதிபதி, சேர் வெஸ்ட் றிட்ஜ்வே, அருணாசலம் அவர்களிடம் ஒப்படைத்தார். மிகவும் பிரயாசப்பட்டு முன் என்றும் நடந்திராத சிறந்த முறையில் இந்த ஜனசங்கியை நிறைவேற்றினார். தேசாதிபதியும் குடியேற்ற நாட்டுக்
இந்துக்கலைக்களஞ்சியம்

காரியதரிசியும் இவ்வரிய வேலையை மிகவும் பாராட்டினார்கள். குடிசனக் கணக்கெடுப்பு நடைபெற்ற ஒரு வாரத்திற்குள்ளேயே சுருக்கமான புள்ளி விபரங்கள் பிரசுரிக்கப்பட்டன. இதற்குமுன் நடைபெற்ற ஜனசங்கியைகளில் எல்லாம், குறைந்தது மூன்று மாதத்தின் பின்னரேயே புள்ளி விவரங்கள் பிரசுரிக்கப்பட்டு வந்தன. புள்ளி விவரங்களை சேகரித்து இலங்கைக்கு ஒரு குடிசன சூசிகையை முதல் முதல் அளித்த அதிகாரி அருணாசலம் அவர்களே. 1901ஆம் ஆண்டு குடிசன அறிக்கைபற்றி சிலோன் ஒப்சேவர் என்னும் பத்திரிகை மேல்வருமாறு எழுதியது: ' திறமைவாய்ந்த சிவில் சர்வீஸ் அதிகாரியாக திரு. லயன்ஸ் லீ அவர்களையே தேசம் மதித்து வந்தது. ஆனால் அவர் 1891இல் எழுதிய குடிசன மதிப்பு அறிக்கையையும் 1901ஆம் ஆண்டில் அருணாசலம் அவர்கள் எழுதிய குடிசன மதிப்பு அறிக்கையையும் ஒப்பிட்டுப் பார்க்கின்றபொழுது எவ்வளவோ வித்தியாசங்கள் தென்படுகின்றன. அருணாசலம் எழுதிய அறிக்கையில் வாசிக்க ஆர்வந்தரும் பல அரிய தகவல்கள் பொதிந்திருக் கின்றன. இந்த அறிக்கையை வாசிக்கின்ற பொழுது பல அழகுகள் புலப்படுகின்றன. பல்வேறு வகைப்பட்ட தகவல்களைத் தொகுத்துக் கிரகிக்கத் தக்க முறையில் எழுதும் வன்மை, ஆராய்ச்சி ஞானம், ஒவ்வொரு பக்கத்திலும் துலங்கிக் கொண்டே இருக்கின்றன. வாசிக்க இரம்மியமான இவ்வறிக்கை மிகவும் உபயோகமான ஒரு நூலுமாகும். அருணாசலம் அவர்களின் அறிக்கையைப் பற்றி இலண்டனில் உள்ள டைம்ஸ் பத்திரிகை மேல்வருமாறு எழுதியது: இலங்கை வாழ் மக்களின் சரித்திரம், சமயம், பாஷை, இலக்கியம் முதலியன சம்பந்தமான வரலாறுகளை எடுத்துக் கூறும் அதிகார பூர்வமான ஒரு நூலாகும்.' இவர்காலத்திற் பிரசித்திபெற்ற பத்திரிகையான சிலோன் மோர்னிங் லீடர் என்ற இதழின் ஆசிரியர், ஆமன் டீ சூசா அவர்கள், இலங்கையின் பொருளாதார சமுதாய நிலைமைகளையும் சாதிப் பாகுபாடுகளையும் தெளிவாக ஆராய்ந்து காட்டும் ஓர் அரிய நூல். ஓர் அரசாங்க அறிக்கையில் பொதுவாகக் கட்டுரை வன்மையையோ, பாஷை அழகையோ எதிர் பார்க்க முடியாது. இதனால் இப்படியான பிரசுரங்கள் பொதுஜனங்களின் கவனத்தை ஈர்ப்பதில்லை. ஆனால் சேர் பீ. அருணாசலம் அவர்கள் எழுதிய இவ்வறிக்கையில் பாஷை அழகுக்குப் பேர்போன அடிசன் அவர்களின் நடை அழகு துலங்குகின்றது. மாக்கொலே ஆசிரியரின் கெம்பீரம் மிளிர்கின்றது. சரித்திர ஆசிரியர், மொம்செனின் நுண்ணிய ஆராய்ச்சி புலப்படுகின்றது என விவரித்தார்.
பிரதம பதிவுக்காரியாலய இலாகாவில் அருணாசலம் அவர்கள் ஏற்படுத்திய சீர்திருத்தங்களை நடைமுறையிற் கொண்டு வருவதற்குப் பல நிர்வாக மாற்றங்களும் சட்டங்களும் உருவாக்கப்பட வேண்டியிருந்தன. 1895இல் பிறப்புப் பதிவு, இறப்புப் பதிவு என்பனவற்றிற்கும் நொத்தாரிசு சட்டத்திற்கும் முதலாம், இரண்டாம் இலக்கமுள்ள சட்டங்களை அருணாசலம் அவர்களே ஏற்படுத்தினார். இவ்விரு சட்டங்களையும் சட்டசபைக்குக் கொண்டு வந்து உருவாக்கும் வேலை அட்டோனி ஜெனரலினுடையதாக இருப்பதுவும் அரசாங்கம் அருணாசலம் அவர்களிடமே அப்பொறுப்பை ஒப்படைத்தது.
贯

Page 158
காணிகளுக்கும் காணிகளைப் பாதிக்கும் உறுதிகளுக்கும் உரிமைப்பதிவு செய்யும் விஷயம்பற்றி ஆராயும் பொருட்டு அக்காலத்தில் பிரதம நீதிபதி தலைமையில் ஓர் விசாரணைச்சபை கூடியது; இச்சபை சமர்ப்பித்த அறிக்கையில் இது விஷயமாக ஏற்படுத்தப்பட்ட சட்டத்தை உருவாக்குவதற்கு பிரதம பதிவுகார அதிகாரி அருணாசலம் அவர்கள் பொது சனங்கட்கு ஆற்றிய சேவையை இங்கு பாராட்டுகின்றோம் எனக் குறிக்கப் பட்டிருந்தது.
அருணாசலம் உத்தியோகத்தில் இருந்தபொழுது அநேக வருடங்களை நீதிபதியாக இருந்து கழித்தனர். அப்பொழுது இலங்கையில் ஆங்காங்கு கூடிய நீதி விசாரணைச் சபைகளில் பதவிவகித்த அங்கத்தவர்கள் எல்லோரும் அருணாசலம் அவர்களின் சேவையை மிகவும் பாராட்டினார்கள். அப்பொழுது பிரதிப் பிரதம நீதிபதியாகக் கடமையாற்றிய மொன்கிரியவ் அவர்கள் ஒருமுறை அருணாசலம் செய்த ஒரு பிரசங்கத்துக்குத் தலைமை வகித்தார். தமது முடிவுரையில் அருணாசலம் ஒர் பிரபல அறிஞன். புராதன ஆங்கில இலக்கியங்களிலும் கீழைத்தேய இலக்கியங்களிலும் அவருக்கு மிகுந்த பாண்டித்தியம் உண்டு. ஆங்கிலப் பேச்சுவன்மையும் இலக்கிய ஆராய்ச்சியும் அவருடன் பிறந்தனவே எனலாம். அவர் எக்கருமத்தை எடுத்தாலும் இலக்கிய ஆராய்ச்சியாய் இருந்தாலும்சரி கண்ணும் கருத்துமாய் இருந்து மிக நுட்பமாகக் கடமையாற்றும் சாமர்த்தியம் வாய்ந்தவர் எனத் தலைவர் அவரைப் புகழ்ந்தார். அவருடைய நீதித்தீர்ப்பை பிரபல வழக்காகிய ஆதிப்பொல சாஸன வழக்கு மூலம் அறியலாம். அவ்வழக்கில் மிக நுணுக்கமான சட்டங்களை எல்லாம் அவர் ஆராயவேண்டியிருந்தது. இவ்வாராய்ச்சியின் பலனாக இலங்கை சிவில் சட்டச் சுருக்கம் என்ற நூலை எழுதி, தனது மாமனாரின் நண்பர் லாட் ஹெளட்டனது மகன் குருவின் மார்க்குவிஸ் ஞாபக சின்னமாக வெளியிட்டார். இச்சட்ட நூல் ஜெர்மானிய சிவில் சட்டமுறையையும் இலங்கைக்குப் பொருந்தக் கூடிய றோமன் - ஒல்லாந்த சிவில் சட்டமுறைகளையும் பின்பற்றி ஆராய்ந்து எழுதப்பட்ட ஒர் அரிய நூலாகும். சிவில் சட்டங்களையெல்லாம் கிரமப்படுத்தி, பதம் பதமாகப் பிரித்து, தர்க்க ரீதியாக ஒழுங்குசெய்து, அந்தந்தப் பதத்திற்கு அந்தந்தச் சட்டங்களென வகுத்து அவைகட்கு அதிகார பூர்வமான மேற்கோள்களும் வகுத்து அமைப்பதே அருணாசலம் அவர்களின் நோக்கமாயிருந்தது. அதில் முதலாம் பாகத்தையே எழுத முடிந்தது. இதுவே ஆசிரியரின் சாமர்த்தியத்தையும், தளரா ஊக்கத்தையும், ஆழ்ந்த அறிவையும் எடுத்துக்காட்டும். பிரசித்திபெற்ற அத்தியட்சகர் ஹல்ஸ்பரிப் பிரபுவும், இலங்கைப் பிரதம நீதிபதி, சேர் விவின்பீல்ட் பொன்ஸர் அவர்களும் இவர் எழுதிய இந்த அரிய நூலைப் பாராட்டினார்கள். இங்கிலாந்தில் பிரசுரமான சட்ட சஞ்சிகையிலும் சட்டப் பத்திரிகையிலும் மதிப்புரைகள் எழுதப்பட்டன.
1913இல் அருணாசலம் சிவில் சர்வீஸ் உத்தியோகத்தி னின்றும் இளைப்பாறினார். அதன் பிறகுதான் அரசியல்
112

துறையில் அவர் கால்வைத்ததாகப் பொதுவாகப் பலர் கருதுகின்றனர். இது தவறு. கேம்பிரிட்ஜ் சர்வகலாசாலையிற் கல்வி கற்றபொழுதே அரசியற் கல்வியில் ஈடுபடலானார். உத்தியோகத்திலிருந்த பொழுதும் தேசத்தின் அரசியல் முன்னேற்றத்தில் கண்ணுங் கருத்துமாயிருந்து பலவகையில் தொண்டாற்றியிருக்கிறார்.
1919இல் இலங்கைத் தேசீய காங்கிரஸ் முதல் முதலாக ஸ்தாபிக்கப்பட்டது. அதற்குத் தலைமைபூண்ட அருணாசலம் தமது பேருரையில் கேம்பிரிட்ஜ் சவர்கலாசாலையில் கல்வி கற்கும் பொழுது நான் கண்ட கனவைத்தான் இன்று இலங்கைத் தேசீய காங்கிரசாக நனவில் காண்கின்றேன். கிறைஸ்ட் கல்லூரியில் கல்வி கற்ற நாட்களை என்னால் ஒரு காலமும் மறக்கமுடியாது எனக் குறிப்பிட்டார். என்றுமே ஞாபகத்தில் இருக்கும் கேம்பிரிட்ஜ் சர்வகலாசாலை நாட்களில், பேரறிவும் நேரிய இலட்சியமும் வாய்ந்த பேராசிரியர்கள் மத்தியில் மாணவர்களிடம் நட்புப்பூண்டு அருணாசலம் அவர்கள் விளங்கினார். மில்டன், டார்வின் முதலிய சைதன்ய புருஷர்களின் பண்பாடும் கலாசாரமும் ஒளிவிடும் சர்வகலா சாலையில் கல்வி கற்ற இவர், சேர் ஜோன் சீலி போன்ற அரசியல் ஞானிகளுடனெல்லாம் நட்பூப் பூண்டார். இக்காலத்தில் தான் மாஜினி என்ற மாபெரும் அரசியல்வாதி ஐரோப்பாவில் நவ இத்தாலியைச் சிருஷ்டிக்க ஆரம்பித்தார். மாணவராயிருந்த ஒரு அருணாசலத்தின் சிந்தனை இந்தியாவிலும் இலங்கையிலும் மறுமலர்ச்சி உண்டாகவேண்டுமெனக் கனாக்கண்டது, அப்பொழுது அருணாசலம் அவர்களுடன் இந்திய வாலிபர்கள் இருவர் கல்வி கற்றனர். ஒருவர், சையத்ருமுகமத், மற்றவர், ஆனந்த மோகன் போஸ். சையத் முகமத் பின்பு உயர்தர நீதிமன்றத்தில் நீதியரசரானார். ஆனந்த மோகன் போஸ் இங்கிலாந்தில் இந்திய மகாநாடு ஒன்றை ஆரம்பித்தார். அதுவே காலகதியில் இந்திய தேசீய காங்கிரசாக உருப்பெற்றது.
அருணாசலம் சிவில் சர்வீஸில் அதிகாரியாக இருந்த காலத்தில் வில்லியம் டிக்பி என்ற ஆங்கிலேயருடன் அன்னியோன்யமாகப் பழகலானார். நேர்மையும் நீதியும் நிலவவேண்டுமென்ற இலட்சியத்தையே அவ்வாங்கிலேயரும் கடைப்பித்து வாழ்ந்தவர். இவரே சேர் ரிச்சாட் மோகனுடைய வாழ்க்கை வரலாற்றினை எழுதிவைத்தார். இதனால் இலங்கை இன்றும் இவரை ஞாபகத்தில் வைத்திருக்கின்றது. இலங்கைத் தேசீய மாநாட்டில் அருணாசலம் முதலாவது தலைவராயிருந்த பொழுது தமது தலைமைப் பேருரையில் அந்த ஆங்கிலேயருக்கு நன்றி செலுத்தினார். அப்பெரிய ஆங்கிலேய மகானுடன் அருணாசலம் பலப் பல அரசியல் விஷயங்களை ஆராய்ந்து விவாதிப்பதுண்டு. இவ்வாராய்ச்சிகளின் பலனாகவே, சுதந்திரம் உதயமாகப் பண்பட்ட ஒரு கிழக்குக் குடியேற்ற நாடு என்னும் சிறுவெளியீடு பிரசுரமானது. அவ்வெளியீட்டை இவ்வாங்கில மகானே எழுதி 1877ஆம் ஆண்டு, ஜனவரியில் கல்கத்தா ரிவியூ என்னும் சஞ்சிகையில் மலரச் செய்தார். மக்களின் பொறுப்புள்ள ஒரு அரசாங்கத்தை இலங்கையில் நிறுவவேண்டுமென இச்சிறு வெளியீடு தக்க நியாயங்களுடனும்
இந்துக் கலைக்களஞ்சியம்

Page 159
எடுத்துக் காட்டுக்களுடனும் வற்புறுத்தியது. அப்பொழுதிருந்த அரசாங்கமோ இலங்கை மக்களோ இவ்வெளியீடு கொண்ட இலட்சியத்தைப் பொருட்படுத்தவில்லை. செவிடன் காதில் ஊதிய சங்கநாதம் போலானது. 1904இல் இவ்வெளியீட்டிலுள்ள உண்மைகளைச் சிறிது அறியத் தொடங்கினர். அருணாசலம் அவர்களின் முதலாவது-புதல்வன் பத்மநாபா இவ்வெளியீட்டை மறுதரம் பிரசுரஞ்செய்தார். இக்காலத்தில் அருணாசலம் அவர்களோ ஆங்கிலேய எழுத்தாளர் டிக்பி அவர்களோ தங்கள் அரசியல் சீர்திருத்த இலட்சியத்துக்காகப் போராட முடியவில்லை. அரசாங்க அதிகாரியாயிருந்த அருணாசலமே எத்தனையோ கட்டுப்பாட்டுக்கு அடங்கி நடக்கவேண்டியவரானார். ஒப்சேவர் பத்திரிகையில் எழுத்தாளராக நியமிக்கப்பட்ட டிக்பி பத்திரிகையின் தலைமை ஆசிரியரும் சொந்தக்காரருமான ஏ. எம். பெர்கூன் அவர்களின் சொற்படி நடக்கவேண்டியவரானார். அரசியல் சீர்திருத்தத்தைத் துரிதப்படுத்த விரும்பவில்லை. மனவேற்றுமையுடன் டிக்பி அவர்கள் இலங்கையைவிட்டு சென்னை 'டைம்ஸ் பத்திரிகையில் பதவியேற்றார். இந்தியாவில் வந்து தன்னுடன் உழைக்கும்படி அருணாசலத்தை வேண்டிக் கொண்டார். 1878இல் டிக்பி, அருணாசலத்திற்கு மேல்வருமாறு எழுதினார். நீங்கள் இந்தியாவில் இருப்பதை நான் மிகவும் விரும்புகிறேன். விஷேசமானதோர் இலட்சியத்தை நிலைநாட்ட உங்கள் மனம் விரும்புவதை நான் அறிவேன். உங்கள் விவேகத்தையும் பண்புபெற்ற சித்தனையையும் தாராளமான குணங்களையும் பிரயோகிப்பதற்கு இப்பொழுது அமர்ந்திருக்கும் ஸ்தானம் பொருத்தமானதன்று. உங்களைச் சூழ்ந்திருக்கும் இடையூறுகளையும், தடைகளையும் வென்று, இப்பொழுது நீங்கள் மேற்கொண்ட புற நீங்கலான வாழ்வை மாற்றினாலொழிய இலட்சியத்தில் வெற்றிகாண முடியாது. தங்களைப் போல் ஒருதனி மனிதனை இங்கு காணமுடியாமலிருக்கிறது.
இந்தியாவின் அபிவிருத்திக்கான விஷயங்களில் அருணாசலம் காட்டிய கரிசினையை ஈண்டு எடுத்துரைத்தல் தகும். 1878இல் இந்தியாவிற் பெரிய பஞ்சம் ஏற்பட்டது. பஞ்சநிவாரண முயற்சிகளில் டிக்பி தனது சேவையை ஆரம்பித்தார். இதற்கெல்லாம் அருணாசலம் உதவிபுரிந்தார். இந்திய மகாஜனங்களின் சேமலாபங்களைக் கவனியாது அசட்டையாயிருந்த இந்திய வைசிராய் லிற்றன் பிரபுவின் கொள்கையைக் கண்டு மனம் மடிந்தார். இது பற்றித் தனது நண்பன், எட்வேட் காப்பென்டருக்கு மேல்வருமாறு எழுதினார். இந்தியா தேசத்திலும் இந்தியாவிற்கு வெளியேயும், ஆங்கிலேயர் மகாஜனங்கட்குச் செய்துவரும் அட்டூழியங்களைக் கண்ணாரக் கண்டும் எங்கள் அபிப்பிராயத்தைத் தெரிவியாதிருப்பது முடியாத காரியம். ஆங்கிலேயர் ஆட்சிக்கு ஜயகோஷஞ் சொல்லிக்கொண்டு இருப்பதை எப்போதும் அவர்கள் எதிர்பார்க்க முடியுமா? அருணாசலம் உள்ளத்தில் புரட்சி வேகம் அதிகரிக்க ஆரம்பித்தது. இத்தருணத்தில் தனது உணர்ச்சி வேகத்தை மேல்வருமாறு சித்திரித்தார். பூனா போன்ற ஓர் இடத்தில் தங்கி, சமுதாய அரசியல் இயக்கமொன்றை ஆரம்பித்தல் உத்தமமென்று நான் சில வேளை நினைப்பதுண்டு. ஆனால் பிரிட்டிஷ் ஆட்சிக்கு எவ்வளவு விசுவாசமாயிருந்து உழைத்த போதிலும் அரசாங்கம்
இந்துக் கலைக்களஞ்சியம்

என்னைத் துன்புறுத்துமென்றே நினைக்கின்றேன். 1898இல் இந்தியத் தேசபக்தர் திலகர் மேற்கொண்ட முயற்சிகட்கெல்லாம் அனுதாபங் காட்டினார். இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சியைப்பற்றி தனது நண்பன் காப்பென்டருக்குப் மேல்வரும் வார்த்தைகளில் தன் உள்ளத்தைத் தெரிவித்தார்: "நாட்டை ஆளும் கலை இந்தியாவில் அற்றுப்போனது. இந்திய அரசாங்கம் எல்லைப் புறங்களில் உபயோகமின்றித் தொடுத்த போர்களிற் பணத்தை இறைத்தது. இவ்வித வீண் செலவுகளின் பயனாகக் கடும்வரி விதித்தது. நிர்வாக அபரிமிதமான செலவை உண்டாக்கவே, பஞ்சத்தாலும் கொள்ளை நோயாலும் அவதிப்படும் ஏழைமக்கட்கு கஷ்ட வேளையிலும் அனுதாபம் காட்டாது கொடுமை இழைக்கின்றது. அதுமட்டுமன்றித் திலகர் போன்ற தேச பக்தர்களைக் கொடுமையாக நடத்துவதும், அரசாங்க அதிகாரிகளின் செயல்களைக் கண்டு மக்கள் நியாயமான முறையில் நேர்மையாகக் கூறும் அபிப்பிராயங்களைத் தடை செய்வதும் எதைக் குறிக்கின்றது? அரசாங்கம் தன்னால் கூடியவரையில் முயன்று மக்கள் வைத்திருக்கும் இராஜவிஸ்வாசத்தை அழிக்கச் செய்யும் என்பதையே அது குறிக்கும். இதனால் நாளடைவில் பிரிட்டிஷ் ஆட்சி வீழ்ச்சியடையும்.
குடியேற்ற நாட்டுக் காரியதரிசி, றிப்பன் பிரபுவைச் சந்தித்து இலங்கையில் உள்நாட்டு நிர்வாகத்தில் சுதந்திரம் அளிக்கத் தூண்டும்படி தனது நண்பர் டிக்பிக்கு அருணாசலம் 1893, அக்டோபர், 25ஆம் தேதி ஒரு கடிதம் எழுதினார். றிப்பன் பிரபுவை டிக்பிக்கு நன்றாகத் தெரியும். அக்கடிதம் பின்வருமாறு :-
கிழக்கு நாடுகளில் ஆங்கிலேய ஆட்சி ஒருமுகமாக இருந்து எல்லாக்காரியங்களையும் நிர்வகிப்பதனால் உள்நாட்டு மக்கட்குத் தாங்கள் அலுவல்களை நிர்வகிக்கத் தருணம் வாய்க்காது போனதைப் பற்றிப் பலமுறை சிந்தித்துள்ளேன். மக்கள் தங்கள் அலுவல்களை நிர்வகிக்கத் தருணம் வாய்க்காததனால், தங்கள் பொறுப்புக்களை நடத்தும் இயல்பான சுதந்திர வல்லபத்தை இழந்துவிட்டனர். சாமர்த்தியமற்ற குழந்தைகளைப்போல் மக்கள் உற்சாகமற்றனர். ஆங்கிலேய அதிகாரிகள் நாட்டு மக்கட்குச் செய்யவேண்டிய முக்கிய கருமங்களை அசட்டை செய்ததனால் தகுதியற்ற தலைமைக்காரர் கையில் ஒப்படைக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது.
இந்தியாவில் உள்நாட்டு நிர்வாகப் பொறுப்பை, நாட்டு மக்களிடம் கொடுக்க றிப்பன் பிரபு நடவடிக்கை எடுத்தார். இந்த வகையிலேயே இலங்கை நிர்வாகச் சீர்திருத்தமும் அமைந் திருக்கிறது. ஆங்கிலேய அதிகாரிகள் ஏகாதிபத்திய முறையிலேயே ஊறிக்கிடப்பதனால், இவ்வகையான சீர்திருத்தங்களை ஏற்க முன்வரமாட்டார்கள். இப்படியான சீர்திருத்த வேலைகளைக் கையாளவும் ஒரு தருணமளிக்க மாட்டார்கள். இது விஷயமாக முறைக்கு முறை நியமனம் பெறும் தேசாதிபதிகளுடன் விவாதித்து விளக்கியிருக்கிறேன்.
தங்கள் பொறுப்புகளை மக்கள் தாங்களே ஏற்று நடத்த வேண்டும். அவர்கள் பிழை படினும், இந்த விஷயத்தில் ஒரு
13

Page 160
தருணம் அளிப்பின் அபரிமிதமாகப் பெருகும் நிர்வாகச் செலவு குறையும். மக்களில் ஊக்கமும் பொறுப்பு வல்லமையும் பிறக்கும். சூதாட்டத்திலும் வழக்குத் தொடுத்தலிலும் வீணே பிரயோகிக்கும் தங்கள் சக்தியை நாட்டை வளம்படுத்தப் பிரயோகிக்க முன்வாருங்கள்.
ஆங்கிலேயர் தங்கள் நாட்டில் போற்றத்தக்க உள்நாட்டு நிர்வாகத்தை மக்களைக்கொண்டு அமைத்துக் கொண்ட பொழுதும் இங்கே ஏன் அவர்கள் அவ்வாறு செய்யவில்லை? ஆங்கிலேயர் வருமுன் கிராமங்களின் நிர்வாகம் எங்கள் நாட்டில், கிராம மக்களின் கையிலல்லவா இருந்தது. அவர்கள் வந்தல்லவா அதனை நிர்மூலமாக்கினர். அதற்குக் காரணமென்ன? அதிகார மோகமும் அந்நிய தேச மக்களில் வைத்த வெறுப்புமே. அன்றியும், ஆங்கிலேயர் கிழக்கு நாடுகட்கு அதிகாரஞ்செலுத்த வரும்பொழுது சுதந்திர ஆட்சி அனுபவம் இல்லாத வெறும் வாலிபர்களாகவே வந்தனர்.
நண்பர் டிக்பி அருணாசலம் அவர்கட்கு ஊக்கமும் உதவியும் அளித்துவந்தார். 1901இல் டிக்பி மேல்வருமாறு அருணாசலம் அவர்கட்கு எழுதினார்: "ஆயிரத்து எண்ணுாற்று எழுபதாம் வருடங்களில் நான் இலங்கையிலிருந்தபொழுது, நாங்கள் வாலிபர்களாயிருந்தோம். அப்பொழுது நாங்கள் கண்ட கனவுகள் உங்கட்கு ஞாபகமிருக்கலாம். அந்தக் காலத்தில் ஊக்கம் கொண்டிருந்தோம். அதன்பிறகு ஒரு வித மாற்றத்தையும் நான் உணரவில்லை. உள்ளம் விருத்தியடையவே எங்கள் நோக்கமும் விரிவடைந்தது. உத்தியோகத்தினின்றும் நீங்கள் இளைப்பாற வேண்டும். வாலிப வயதில் நாங்கள் கண்ட கனவுகளை, முதிர்ச்சிபெற்ற இந்நாட்களில் ஏன் நனவாக்க முடியாது. இதைவிட வேறு இலட்சியம் என் மனதில் இல்லை. தோழரே! உம்முடன் நின்று இலட்சியத்துக்காகப் போராடத் தயாராயிருக்கிறேன்.
இவ்வித உற்சாகம் உந்தவே அருணாசலம் அரசியல் சீர்திருத்த முன்னணியில் போராடத் தொடங்கினார். இலங்கை ஒப்சேவரின் அதிபர் திரு. ஏ. எம். எப். பெர்கூசன் வயது முதிர்ந்து இவ்வுலகைவிட்டு நீங்கவே, ஜோன் பெர்கூசன் நிர்வாகத்தை ஏற்கத்தொடங்கினார். ஜோன். காலத்திற்கேற்ற கொள்கைகளை ஆதரிப்பவராயிருந்ததினால், அருணாசலம் அவர்களின் முயற்சிகட்கு ஆதரவு கொடுக்கலானார். 1902 6i ஆரம்பத்தில், அருணாசலம் அரசியல் சீர்திருத்தம் சம்பந்தமாக பெர்கூசனுடன் கடிதப் போக்குவரத்து வைக்கலானார். அதன் பயனாக 1902 ஜூன் 7ஆம் தேதி அருணாசலம் அவர்கள் எழுதிய கடிதம் ஒன்று ஒப்சேவரிற் பிரசுரமானது. சீர்திருத்தம் என்ற புனைபெயருடன் எழுதப்பட்ட இக்கடிதத்தில் அருணாசலம் அவர்கள், இலங்கை அரசியல் சீர்திருத்தத்திற்காக, ஒப்சேவர்' ஆசிரியரை முயற்சியெடுக்கும்படியும், ஏழாவது எட்வேட் மன்னரின் முடிசூட்டுவிழாப் பரிசாக இலங்கைக்கு அரசியல் சீர்திருத்தம் பெற ஆசிரியர் தனது செல்வாக்கைப் பிரயோகிக்க வேண்டுமென்றும் அக்கடிதத்தில் குறிக்கப்பட்டிருந்தது. அப்சேவர் ஆசிரியர் அதனைப் பிரசுரித்துப் பின்வரும்
114

குறிப்பையும் அதன்கீழ் சேர்த்தார்; இக்கடிதத்தை எழுதியவர், செல்வாக்கும் விவேகமும் பண்பாடுமுள்ள மேதை. இலங்கை மக்கள் இவரை ஓர் தலைவராகவே மதிக்கின்றனர் இக்கடிதத்தை ஆதரித்து ஆசிரியர் பெர்கூசன் திறமைவாய்ந்த ஆசிரிய வசனமும் ஒப்சேவரில் எழுதியிருந்தார். 1902 ஜூன் 14இல் பின்பும் அருணாசலம் அரசியல் சீர்திருத்த விஷயமாகப் விரிவானதோர் கடிதம் எழுதினார். அக்கடிதமும் ஜனங்களின் உணர்ச்சியைத் தட்டியெழுப்பியதாகக் காணவில்லை.
அருணாசலம் மேற்கொண்ட அரசியல் சீர்திருத்த அலுவல்களையெல்லாம் அரசாங்கம் மறைமுகமாகக் கண்காணித்தே வந்தது. இவ்வித அலுவல்களில் ஈடுபடுவது மனவிரோதத்தைக் கொண்டுவருமென்பதை அரசாங்கம் மறைமுகமாக அருணாசலம் அவர்கட்கு விளக்கி வந்தது. அவற்றைக்கண்டு அருணாசலம் மனச்சோர்வடைய வில்லை. ஆனாலும் தண்டனை சீக்கிரம் வந்தது. கொழும்பிலிருந்து குருநாகலுக்கு நீதிபதியாக மாற்றப்பட்டார். 1913ஆம் ஆண்டு அரசாங்க சேவையினின்றும் அருணாசலம் இளைப்பாறினார். அரசாங்க சேவையில் இருந்தபொழுது அவர் காட்டிய ஆற்றலை அளவிடமுடியாது. அவர் ஈட்டிய வெற்றிகளை இன்னொரு அரசாங்க அதிகாரி பெற்றதும் இல்லை. அவருடைய உத்தியோக வாழ்க்கை இலங்கையில் எல்லோருக்கும் என்றுமே பெருமையை ஈட்டும். முப்பத்தெட்டு வருஷங்களாக அரசாங்க சேவையில் அமர்ந்து மிகத்திறமையுடன் ஆற்றிய சேவைக்கு ஒரு கைம்மாறாக ஐந்தாம் ஜோர்ஜ் மன்னர் பக்கிங்காம் அரண்மனையில் அவருக்கு நைட் பட்டத்தை வழங்கினார். இப்பட்டத்தை இப்பெரியாருக்கு வழங்க இலங்கையர் ஒருவரும் ஆலோசனை கூறவில்லை. குடியேற்ற நாட்டுக் காரியாலயத்திலுள்ள ஆங்கிலேய அதிகாரிகளே அவருடைய ஆற்றலையும் சேவையையும் கருதி அப்பட்டத்தைப் வழங்கத் தீர்மானித்தனர். பொதுசன சேவையிலுள்ள சகல சமூகத்தினருமே ஏகமனதாக இப்பெரியார் அப்பட்டம் பெற்றதையிட்டுத் திருப்தியடைந்தனர். பகிரங்க வரவேற்புகள் இலங்கையிற் சகல பாகங்களிலும் அளிக்கப்பட்டன. இவ்வரவேற்புக் கொண்டாட்டங்களிற் பல தலைவர்களும் சகல சமூகங்களிலுள்ள பிரமுகர்களும் கலந்து நைட்' பட்டம்பெற்ற தேசபக்தருக்குப் புகழ்மாரி சொரிந்தனர். அரசாங்க சேவையிலே தீவிரமாக உழைத்து, தொண்டாற்றிய இப்பெரியார் தனது பிற்காலத்தை அமைதியான வாழ்விலும், அவர் எப்பொழுதும் விரும்பிக் கற்கும் தத்துவஞான ஆராய்ச்சியிலும் கழித் திருக்கலாம். ஆனால் அவர் தனது பிற்கால வாழ்க்கையைத் தேச சேவையிலேயே செலவழித்தார். அரசாங்கசேவைக் கட்டுப்பாடுகளின்றும் விடுதலை பெற்ற இத்தேசபக்தர் தெய்வீகமாகப் பெற்ற ஒப்பற்ற தன் சக்திகளையெல்லாம் நாட்டின் அபிவிருத்திக்குப் பயன்படுத்தலானர். தனது பிற்கால வாழ்வில், சிவில் சர்வீஸில் இருந்து ஆற்றிய சேவையிலும் பார்க்க மிக முக்கியமான ஒர் சேவையைத் தொடங்கினார். சமூக அபிவிருத்தி வேலைகளையும் தர்மஸ்தாபன ஒழுங்குகளையும் தொழிற் சங்க ஸ்தாபன அலுவல்களையும் நகரசபை ஸ்தாபன அமைப்புகளையும் விரிவாக ஆராய்ந்து கற்றுக் கொள்வதற்கு 1913இல் சேர் பொன்னம்பலம் அருணாசலம் ஐரோப்பா சென்றார். இலங்கைத்
இந்துக்கலைக்களஞ்சியம்

Page 161
தேசாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்ட சாமேர்ஸ் பிரபுவை உடனே சந்தித்து இலங்கை சம்பந்தமான முக்கிய பிரச்சனைகளைப் பற்றி ஆலோசனை கூறலானார். 1913இல் ஜூலை 15ஆம் திகதி தேசாதிபதியவர்கட்கு இவர் பின்வரும் கடிதத்தை எழுதினார்.
தலைவரியை நீக்குவதற்கு இலங்கையில் இப்பொழுது ஒரு கிளர்ச்சி உண்டாகிவருகிறது. பெளத்தகுரு, அந்நிய நாட்டுத் தொழிலாளி என்பவர் தவிர இலங்கையிலுள்ள சுயவல்லபம் படைத்த ஒவ்வொரு ஆணும், இன்று தலைவரி கொடுத்து வருகிறார். இது நியாயமற்ற வரி என்று பல முறை அவதானித்துள்ளேன். ஏனென்றால் செல்வர்கள் கொடுக்கும் இந்த வரியையே ஏழைகளும் கொடுக்கவேண்டி இருக்கிறது. இதனை நீக்கப் பல வருஷங்களாக நான் முயற்சி எடுத்து வந்திருக்கிறேன். இலங்கையில் செல்வர்கட்கு ஒரு குறையுமில்லை. அவர்கள் ஆடம்பரப் பொருள்கட்கு மாத்திரமே பணச் செலவு செய்கின்றனர். சில காலத்திற்கு முன் வரி சம்பந்தமாக விசாரணை செய்ய ஒரு சபை நியமிக்கப்பட்டது. அச்சபை அறிக்கை சமர்ப்பிக்காமலே கலைந்துவிட்டது. இலங்கை வரிமுறையில் எவ்வளவு விபரீதங்களும் ஏற்றத்தாழ்வுகளும் நிலவுகின்றன வென்பதை அரசிறை பற்றிய அறிவைக் கொண்டு நீங்கள் விளங்கிக்கொள்வீர்கள். உப்புத்தீர்வையைப் பற்றிய சீர்திருத்தமே மிக அவசியமாக இன்று கவனிக்கப்பட வேண்டும். உப்புத்தீர்வையை நீக்கவேண்டும் அல்லது ஒர் அளவிற்குக் குறைக்கவேண்டும். அரசாங்கமே உப்பு வர்த்தகத்தை இன்று ஒர் ஏகபோக வர்த்தகமாகக் கொண்டுள்ளது. உப்புத்தீர்வையை நீக்கும் கொள்கை ஏழைகட்கு அநுகூலத்தைக் கொண்டுவருவதுமின்றி, விவசாயத்திற்கும் ஊக்கம் அளிக்கும். விவசாய விருத்திக்கு உப்பு பெரிதும் தேவைப்படும். ஆனால் இதன் விலை அதிகமாக இருப்பதன் காரணமாக, இதனை எவரும் உபயோகிப்பதில்லை.
தேயிலை, ரப்பர் பயிரிடும் தோட்ட முதலாளிகள் அபரிமிதமான வருவாயைப் பெறுகின்றனர். இலங்கையிலிருந்து வெளிநாடுகட்குத் தேயிலை, ரப்பர் ஏற்றுமதி செய்யும் வர்த்தகக் குழுவினர் பெருவாரியான இலாபத்தை ஈட்டுகின்றனர். அவர்கள் வருமான வரியோ, நில வரியோ இறுப்பதில்லை. ஏழைக் குடியானவன் கொடுக்கும் தலைவரியையே செல்வம் படைத்த முதலாளி வர்க்கத்தினரும் கொடுக்கின்றனர். வரி சம்பந்தமான விசாரணை செய்ய நியமிக்கப்பட்ட சபை இடையில் சிதைந்து போனதற்கு நியாயம் என்ன? முதலாளி வர்க்கத்தினர் பிரயோகித்த செல்வாக்கே சிதைவுறச் செய்தது எனலாம். அதுவுமல்லாமல் விசாரணைப் பொறுப்பேற்ற சபையினரும் ஏழை மக்களின் பரிதாப நிலைமைகளை உணரவில்லை.
1915ஆம் ஆண்டின் கலகங்கள், அரசியற் சீர்திருத்தங் களுக்கான கிளர்ச்சியை இனிமேலும் தாமதிக்கக் கூடாதென்ற உணர்ச்சியை சேர் பொன்னம்பலம் அவர்களுக்கு ஊட்டின. கலகங்களின் உண்மையான காரணத்தை உசாவித் தெளியவும், சிங்கள மக்களைத் தாறுமாறாகத் தண்டிப்பதைத் தவிர்க்கவும் ஒரு பாரபட்சமற்ற கொமிஷனை நியமிக்கவேண்டும் என்பதை வற்புறுத்தி 1915ஆம் ஆண்டு, ஜூலை மாதம், 6ஆம் திகதி
இந்துக் கலைக்களஞ்சியம்

விரிவான கடிதமொன்று தேசாதிபதிக்கு விடுத்தார். அத்துடன் அவர் இங்கிலாந்திலுள்ள தன் நண்பர்களுக்குத் தன் முயற்சிகளை ஆதரிக்கும்படி கேட்டு எழுதியதுமன்றி விசேஷமாக குடியேற்ற நாட்டுக் கந்தோரைச் சேர்ந்த திரு. (பின்பு சேர் பட்டம் பெற்றவர்) அலெக்சாந்தர் ஹரிஸ் அவர்களுக்கு கலகங்களின் உண்மை நிலைமைகளைத் தெளிவாக விளக்கினார். 1927ஆம் ஆண்டு, மார்ச் மாதம் 3ஆம் திகதியன்று அருணாசலம் அவர்களின் உருவப் படத்தைத் திறந்து வைத்தபொழுது திரு. ஈ. டபிள்யு பெரேரா அவர்கள் இது சம்பந்தமாக அருணாசலம் அவர்கள் செய்த மாபெருஞ் சேவைகளைப் பற்றிப் பொதுமண்டபத்தில் நிகழ்த்திய பிரசங்கத்தில் கூறியதாவது: மகாவம்சத்தில் கூறப்பட்டது போல இராணுவச் சட்ட காலத்தில் இலங்கை முழுவதும் ஒரு இழவு வீடு போல் இருள் அடைந்திருந்தபோது, சேர் பி. அருணாசலம் அவர்கள் சுவாலித் தெரியும் சுடர்போன்று கோபாவேசத்துடன் சீறியெழுந்து இந்த அக்கிரமங்களைத் தடுத்து நிறுத்தவும், மீண்டும் சாதாரண நிலைமைகளை ஏற்படுத்தவும் இயன்றவற்றையெல்லாம் செய்தார். அலெக்சாந்தர் ஹரிஸ் அவர்கள் திரு. பெரேரா அவர்களுடன் பேசியபொழுது நீங்கள் பேசுவதைப்போலவே சரியான உண்மைகளைக் குறிப்பிட்டும் இவ்விடயத்தைப் பற்றிய உங்கள் கருத்தை ஆதரித்தும் எனது நண்பர் சேர் பி. அருணாசலம் எனக்குப் பிரத்தியேகக் கடிதங்கள் எழுதியுள்ளார் என்று கூறியதாக அறியக்கிடக்கின்றது. குடியேற்ற நாடுகளில் காரியதரிசியுடன் அலெச்சாந்தர் ஹரிஸ் நேரடியான தொடர்பு கொண்டிருந்தாரென்றும், இராணுவச் சட்டங்களின் கீழ் மக்களுக்கேற்பட்ட இன்னல்கள் நீங்கும் வகையில் அவர்களுக்குக் கிடைத்த சொற்ப நிவாரணம் சேர் பி. அருணாசலம் அவர்கள் இதில் தலையிட்டு எடுத்துக்கொண்ட முயற்சிகளின் பயனாகத் தோன்றியதென்பதைப் பலர் அறிய மாட்டார் என்றும் திரு. பெரெரா அவர்கள் மேலும் கூறினார்.
1917ஆம் ஆண்டு, ஏப்ரல் மாதம், 2ஆம் திகதி கொழும்பு விக்டோரியா மெசோனிக் மண்டபத்தில் திரு. ஈ. ஜே. சமரவிக்கிரம அவர்கள் தலைமையில் நடைபெற்ற இலங்கைத் தேசீய சங்கத்தின் வருடாந்தக் கூட்டத்தில் அதன் காரியதரிசியான திரு. டி. ஆர். விஜயவர்த்தனா அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க, அருணாசலம் அவர்கள் எங்கள் அரசியற் தேவைகள் என்பதையிட்டு நிகழ்த்திய ஓர் சரித்திரப் பெருமைவாய்ந்த சொற்பொழிவில், சுய ஆட்சிக்கான விவாதங்களைத் தெளிவாக விவரித்தார். முக்கியமான இச்சம்பவத்தைப் பற்றிக் குறிப்பிடும்பொழுது சேர் ஜேம்ஸ் பீரிஸ் கூறியதாவது: காலத்துக்குக் காலம் இலங்கையில் அரசியற் சீர்திருத் தத்துக்காக அநேகர் கிளர்ச்சி செய்தனரெனினும், சேர் பி. அருணாசலம் அவர்கள் “எங்கள் அரசியற் தேவைகள்”என்பதைப்பற்றிச் சொற்பொழிவாற்றிய பின்னரே மக்கள் விடாப்பிடியுடன் உறுதியாகக் கிளர்ச்சி செய்வதன் அவசியத்தைத் தெரிந்து கொண்டனர். இந்தப் பிரசங்கத்தையும் இது சம்பந்தமாக சேர் பி. அருணாசலம் அவர்கள் பிரசுரித்தவற்றையும் வாசிக்கும்படியும், அவற்றை அரசியற் கைநூல்போன்று கருதும்படியும் அரசியலைக் கற்கும் வாலிபர்களை நான் விசேஷமாக வேண்டிக்கொள்கின்றேன்.
115

Page 162
1918ஆம் ஆண்டிற் பிரசுரிக்கப்பட்ட சிலோன் டெயிலிநியூஸ் பத்திரிகையின் முதலாவது இதழில் ஒர் ஆசிச் செய்தியை சேர் பொன்னம்பலம் அவர்கள் விடுத்திருந்தார். அச்செய்தியில் அவர் கூரியதாவது: 'அரசியற் சீர்திருத்தத்தைக் கோரும் ஆர்வத்தில் அதனையே நம் இறுதி இலக்காகக் கருதி விடாது எச்சரிக்கையாக இருக்கவேண்டும். எங்கள் இலக்கை அடைவதற்கு ஒரு கருவியாகவே அரசியல் சீர்திருத்தத்தில் நாட்டங்கொள்ள வேண்டும். எங்கள் உரிமைகளைப் பெற்றுக்கொள்வதற்காக நாம் அரசியல் சீர்திருத்தங்களை நாடவில்லை. ஆனால் எங்கள் கடமைகளை - அதாவது எங்களுக்கும் எங்கள் நாட்டுக்கும் செய்ய வேண்டிய கடமைகளைச் செய்வதற்காகவே நாம் அரசியல் சீர்திருத்தங் களை வேண்டி நிற்கின்றோம். தனிப்பட்டவர்களைப் போலவே, மக்களினமும் கடவுளால் வகுக்கப்பட்ட கடமையொன்றைப் புரிவதற்கு இங்கு தோன்றியுள்ளது. இக்கடமையைச் செவ்வனே நிறைவேற்றுவதற்கு ஒருவர் சுய அபிவிருத்தியையும் பொறுப்பை ஏற்கும் தகைமையையும் உடையவராயிருத்தல் வேண்டும். அவர் மேலும் கூறியதாவது நம்நாட்டு வாலிபர்களின் பொதுவாழ்வில் ஆன்மீக ஆற்றல் செறிந்திருக்க வேண்டும் என நான் எதிர்பார்க்கப்பட்டதுடன் அவர்கள் கட்டாயமாக இதனைப் பின்பற்றுவார்களென்றும் நான் நம்புகின்றேன். அவர்களுள் ஒவ்வொருவரும் எல்லோருடைய நல்வாழ்வின் மூலமும் தத்தம் நல்வாழ்வை நாடுவர்; பிறருடைய வாழ்க்கையைக் கொண்டு தம் வாழ்வைக் கணிப்பர்; எல்லோருடைய சிரத்தையை முன்னிட்டும் தம் சிரத்தையை நாடுவர். எங்கள் அன்புக்குரிய தாயகத்தின் பாதாரவிந்தங்களில் அவர்கள் தமது ஆர்வமிக்க சேவைகளை ஆவலுடன் அர்ப்பணஞ் செய்வர். மகாகவி தாந்தே கூறியவாறு, மனிதர்கள் மத்தியில் வியாபிக்கும் பகுத்தறிவு, ஆத்மீக சக்திகள், சிந்தனையுலகிலும் செயலுலகிலும் உயர்ந்த அபிவிருத்தியைப் பெறக்கூடும் என்பதற்கிணங்க, நம்நாட்டு வாலிபர்கள் ஒற்றுமையுடன் உழைப்பார்கள். இத்தகைய உற்சாகத்தினாலும் இலட்சியத்தினாலும் உந்தப்பட்ட நம்நாட்டு வாலிபர்களி னுதவியால், நம் நாடு புதிய தேஜஸ் வுடன் வளர்ந்து மகா பராக்கிரமபாகுவின் பெரும் புகழ், தினகரனின் முன் தீபம் போல மறையத்தக்கதாகவும், சகல நாடுகளுக்கும் ஒரு கலங்கரை விளக்கம் போல் இது அமையத்தக்கதாகவும் முன்னேறுமென நான் எதிர்பார்க்கிறேன். ஒரு மனிதனிடமுள்ள சிறந்த இயல்புகளைத் தொழிற்படுத்தும் அற்புத சக்திவாய்ந்த வார்த்தைகளே இவை; சிந்தனையிலிருக்கத் தக்கனவும் ஊக்கமளிக்கத்தக்கனவுமாய இவ்வார்த்தைகள், இந் நாட்டுக்காகச் சேவை புரிவதற்குத் தம் வாழ்க்கையைத் தியாகஞ்செய்யுமாறு இலங்கையிலுள்ள ஒவ்வொரு வாலிபரையும் அறைகூவி அழைப்பனவாகும்.
சுயாட்சி பெறும் நோக்கத்துடன் 1917ஆம் ஆண்டு, மே மாதத்தில் இலங்கைச் சீர்திருத்தச் சங்கமொன்றை அருணாசலம் அவர்கள் நிறுவினார்கள். அத்துடன் 1917ஆம் ஆண்டு, டிசம்பர்
116

மாதத்திலும், 1918 ஆம் ஆண்டு, டிசம்பர் மாதத்திலும் முறையே இரு அரசியல் மகாநாடுகளை ஒழுங்குசெய்தார். 1919 ஆம் ஆண்டு, ஆகஸ்ட் மாதத்தில் 'இலங்கையில் அரசியற் சீர்திருத்தம் ஏற்பட வேண்டியதற்குரிய காரணங்கள் என்பதையிட்ட ஒரு அறிக்கையைத் தயாரித்து, அடுத்த மாதத்தில் இலங்கைச் சீர்திருத்தச் சங்கத்தினதும், இலங்கைத் தேசீய சங்கத்தினதும் கூட்டுக் கமிட்டியின் பெயரில் அதனைப் பிரசுரித்தார். இத்தீவின் சிங்களப் பகுதிகள் எங்கணும், அரசியல், சமுதாய, பொருளாதார அபிவிருத்திக்காக மக்கள் சங்கங்களை ஸ்தாபிக்கும் நோக்கத்துடன் 1919ஆம் ஆண்டு, செப்டெம்பர் மாதம், 2ஆம் திகதி திரு.எப். ஆர். சேனநாயகா அவர்கள் தலைமையில் நடைபெற்ற ஒரு சிங்கள மகாநாட்டில் அவர் ஒர் சொற்பொழிவாற்றினார். இந்த இயக்கம் தான் லங்கா மகாசனசபை உடனடியாகத் தோன்றுவதற்குக் காரணமானது. இது தொடங்கியபொழுது இதற்குச் சகல வெற்றிகளும் ஏற்படவேண்டுமென்று விரும்பி அருணாசலம் கூறிய வார்த்தைகளை நாம் நினைவுகூருதல் பொருத்தமானது. அவர் கூறியதாவது: 'உங்கள் நன்மைக்காகவும், உங்கள் குடும்பங்களின் நன்மைக்காகவும், எங்கள் அன்புக்குப் பாத்திரமான இலங்கையன்னையின் நன்மைக்காகவும், இந்த இயக்கம் பூரணமான வெற்றியீட்டும் வகையில் நீங்கள் யாவரும் உற்சாகத்துடன் உழைப்பீர்களென்று நான் நிச்சயமாக நம்புகின்றேன்.
இந்தக் கூட்டத்தைத் தொடர்ந்து, 1919ஆம் ஆண்டு, செப்டெம்பர் மாதம், 24ம் திகதி, கொழும்பு ரவர் ஹோலில் நடைபெற்ற கூட்டத்தினால் அருணாசலம் அவர்கள் தற்போதைய அரசியல் நிலைமை என்பதுபற்றி ஓர் சொற்பொழிவாற்றினார். இத்தகைய பூர்வாங்க வேலைகளின் பயனாக 1919ஆம் ஆண்டு, டிசம்பர் மாதம், 11ஆம் திகதியன்று இலங்கைத் தேசிய காங்கிரஸ் அங்குரார்ப்பணஞ் செய்யப்பட்டது அருணாசலம் அவர்களே காங்கிரஸுக்கு முதலாவது தலைவராக ஏகமனதாகத் தெரிவு செய்யப்பட்டார். காங்கிரஸ் நிறுவப்பட்டதை திரு. ஸி. ஈ.கொறயா அவர்கள் மேல்வருமாறு தெட்டத்தெளிவாக வர்ணித்துள்ளார்: கடந்த சில வருடங்களுள் சகல முயற்சிகளுக்கும் மத்திய ஸ்தானமாகிய இவ்விடத்தில் (கொழும்பு) கூர்ந்து அவதானிக்கும் கண்களையுடைய ஒரு பெரியார் ஆங்காங்கு பரந்து கிடந்த தனிப்பட்ட ஆர்வப்பொறிகள், தனித்தனியாகக் கிடந்து பிரகாசமிழந்து அணைந்துபோகும் தறுவாயிலிருப்பதைக் கண்ணாரக் கண்டார். இதனைக் கண்ணுற்ற அப்பெருமகனார் எழுந்து விரைந்து சென்றார். சென்று பரந்து கிடந்த அப்பொறிகளை ஒன்று சேர்த்து கொழுந்துவிட்டெரியும் தமது தேசாபிமான உணர்ச்சியால் அவற்றுக்குச் சக்தியூட்டித் தேசிய முயற்சியெனும் பெருந்தீயாக மாற்றினார். இப்பெருந்தீயில் புடமிடப்பட்டு உருவாகியதே இலங்கைத் தேசிய காங்கிரஸ். இந்தக் காங்கிரஸ் காலஞ்சென்ற சேர் பொன்னம்பலம் அவர்களின் புனித ஊக்கத்திலிருந்து பிறந்ததொன்றாகும்.
அரசியல் சீர்திருத்தத்துக்காக அருணாசலம் அவர்கள் லங்கைக்குச் செய்த சேவைகளை மாத்திரம் கணிக்குமிடத்து,
கு த 函g”
இந்துக் கலைக்களஞ்சியம்

Page 163
அவரது நாட்டு மக்களின் என்றென்றுமழியா நன்றி பாராட்டுதல்களுக்கு அவர் உரிமையுடையவராயிருந்திருப்பார். ஆனால் அவரது அபார அறிவாற்றலும் அளவற்ற ஊக்கமும் பலரிடத்தும் பரந்து நின்ற இரக்கமும் ஏனைய துறைகளிலும் அவரைத் தொண்டாற்றத் தூண்டின. இலங்கையின் அரசியல் விடுதலைக்காகப் போராடும் ஆர்வத்தை அருணாசலம் அவர்கள் நாட்டு மக்களிடையே தட்டியெழுப்பியபோதும், மக்களின் சமுக நிலைமைகளைச் சீர்திருத்த வேண்டியதன் அவசியத்தை மறந்திருக்கவில்லை. அது மாத்திரமன்றி செல்வந்தர்கள் துரதிர்ஷ்டத்தின்பாற் சிக்குண்டு வாழும் தங்கள் சகோதரர்கள் விஷயத்தில் நிறைவேற்ற வேண்டிய ஒரு கடமையுண்டென்பதை வலியுறுத்தத் தவறியதுமில்லை. இலங்கை றொடிய சமுகத்தினரின் கல்விக்காக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகளை ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிப்பதற்கான ஒரு கொமிஷனுக்குத் தலைமை வகிக்கும்படி 1904 ஆம் ஆண்டளவில் தேசாதிபதி பிளேக் அருணாசலம் அவர்களைக் கேட்டார்கள். வித்தியாபதி திரு. ஹாவேட், சட்ட நிரூபணசபையில் கண்டிப் பிரதிநிதியாகவிருந்த எஸ். என். டபிள்யு. ஹாலுகல்ல, ஒரு கிறிஸ்தவ பாதிரியாரான வண. ஆர். ஸி. ஒலிவர் ஆகியோர் அருணாசலமவர்களுடன் அக்கொமிஷனில் கடமையாற்றினார். கொமிஷனர்கள் தங்கள் விசாரணைகளைச் செய்து அறிக்கை சமர்ப்பிக்க ஐந்து மாதங்கள் சென்றன. இவ்வறிக்கை, றொடிய சமுகத்தினர் வாழ்ந்த நிலைமைகளையும், அவர்களைச் சிறந்த பிரசைகளாக்குதற்கு அவர்களுக்குக் கல்வியூட்ட எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகளையும் விரிவாகக் விளக்குவ தாயிருந்தது.
1913ஆம் ஆண்டில் அவர் இங்கிலாந்துக்கு விஜயஞ் செய்த பொழுது சமூகசேவை வேலைகளைக் கற்றறிய அவருக்குச் சந்தர்ப்பம் வாய்த்தது. லண்டன் மாகாணசபைகளையும் ஸ்தல ஆட்சிச்சபைகளையும், வித்தியா கந்தோரையும் அவர் தரிசித்து ஆரம்பக்கல்வி, வறியவர்களுக்கு வீடமைத்தல் என்பவை சம்பந்தமாக அவை பின்பற்றும் முறைகளைக் கற்றதுடன் அங்குள்ள ஆஸ்பத்திரிகளையும், வேலைத் தலங்களையும் பரிசீலனை செய்தார். அவரது தினக்குறிப்புப் புத்தகத்தில் 1913ஆம் ஆண்டு, மேமாதம் 12ம் திகதி அவர் எழுதியுள்ள குறிப்பு மேல்வருமாறுள்ளது: ஸ்தல ஆட்சிச்சபையைத் தரிசித்தேன். திரு. பேர்ண்ஸ் அவர்கள் அழைத்துச் சென்று யாவற்றையும் காண்பித்தார். அங்கிருந்து ஹம்மர்சிமித் ஆஸ்பத்திரிக்கும், வேலைத்தலத்துக்கும் சென்றேன். வறியவர்களுக்கு உன்னதமான வசதி வழங்கப்படுகின்றது. தங்கியிருக்கும் நோயாளர் தொகை 779. பின்பு லண்டன் மாகாண சபையின் வித்தியா கந்தோருக்குச் சென்றேன். மக்களின் கல்வியைப் பற்றி அதிக தகவல்களைப் பெற்றேன். இலங்கையிற் சமூகசேவைகளுக்கு அத்தியாவசியமானவற்றை அறிந்தேன். மக்கள் சேவைக்காக ஒரு இயக்கத்தை ஆரம்பிக்க வேண்டும். கொழும்பில் வறியவர்களுக்கு வீடமைக்கவும், மக்களின் ஆரம்பக்கல்விக்கும், கூலியாட்களைத் தற்போதைய அடிமைத் தனத்தினின்று விடுவிக்கவும் அதிக கருமங்கள் செய்யப்பட வேண்டியிருக்கின்றன.
இந்துக்கலைக்களஞ்சியம்

அவர் திரும்பி வந்ததும், தம் நாட்டு மக்களில் அநேகரைச் சீர்திருத்துவதற்குப் பெரும் வேலைகளை ஆரம்பிக்கத் தாமதிக்கவில்லை. ஒரு நாட்டின் வாலிபர்கள் தாம் எதிர்காலச் சந்ததிக்குப் பொறுப்பானவர்கள் என்பதை உணர்ந்து, ஆர்வமுள்ள இளைஞர் குழுவொன்றை அவர் திரட்டி சமூகசேவை உணர்ச்சியை அவர்களுக்கு ஊட்டினார். ஹோட்டன் பிளேஸிலிருந்த 'பொன் கிழர் என்னும் அவரது கொழும்பு வாசஸ்தலத்துக்கு 1914 ஆம் ஆண்டு, நவம்பர் மாதம், 19ஆம் திகதி சிலரை அழைத்து தம் கருத்துக்களை வெளிப்படுத்தியதுடன் வறியவர்களுக்காக தம் மனதில் கொழுந்துவிட்டெரிந்த உணர்ச்சியைப் மேல்வருமாறு எடுத்துரைத்தார் மக்களின் தேவைகளை நாம் நன்கு அறிந்து, அறிவு, பொழுதுபோக்கு என்பவற்றை அவர்களுக்குக் கிடைக்கச் செய்து அவர்களது வாழ்க்கையைத் துலக்கி அழகுபடுத்த வேண்டும். அத்துடன் கற்றவர்கள், செல்வந்தர்கள், குறைந்த நிலைமையிலுள்ள சகோதரர்கள் என்போரிடையே இனிய மனித உறவுகளை நிலவச் செய்தல் வேண்டும். இந்த வேலை மிகப் பாரியதொன்றெனினும், மக்களின் கல்வி, வைத்திய செளகரியம், பொருளாதாரச் சீர்திருத்தம், அவர்களின் வீட்டுத்திட்டங்களை அபிவிருத்தி செய்தல், அவர்களின் இல்லங்களுக்குச் சென்று நேரடியாகத் தொடர்பு கொள்ளுதல் மூலம் துப்புரவாகவும் சிறப்பாகவும் வாழ அவர்களுக்குக் கற்பித்தல், வைத்திய செளகரியங்களை அளித்தல், கட்டாயமான வீமாத்திட்டங் களாலும், குறைந்த பட்ச சம்பள நிர்ணயத்தாலும் பயன்களைப் பெற்றுக் கொடுத்தல் என்பவற்றையும் தன்னகத்தே கொண்டிருக்கும்.
1915ஆம் ஆண்டு, ஜனவரி மாதம், 29ஆம் திகதி நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் சேர் ஜேம்ஸ் பீரிஸ் அவர்களின் உறுதியான ஒத்துழைப்புடன் சேர் பொன்னம்பலம் அவர்கள் இலங்கைச் சமூகசேவைச் சங்கத்தை அங்குரார்ப்பணஞ் செய்தார். அருணாசலம் அதன் முதலாவது தலைவராகத் தெரிவு செய்யப்பட்டதுடன் அவரால் வகுக்கப்பட்ட பிரமாணங்களும் சங்கத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டன.
செயல் புரிவதில் நாட்டமும் விருப்பமும் கொண்ட பல தொண்டர்களைக் கூட்டி அவர்களிடையேயும் தம்மைப் போலவே சமூகசேவையிற் பேரார்வம் கொழுந்து விட்டெரியும்படி செய்தார். சேர் அருணாசலம் அவர்கள் வெறும் ஆலோசனைகளையும், புத்திமதிகளையும் கூறிவிட்டு அதிலே திருப்தி கொண்டிருக்க வில்லை. சங்கத்தின் தலைமைக் காரியாலயத்தில் நாளொன்றுக்கு 8 மணி நேரம், 10 மணி நேரம் வேலை செய்தும் சங்கம் ஆரம்பிக்கவிருந்த பெரும் பணிக்கு அங்கத்தினர்களைப் பயிற்றுவதற்காகச் சமூகக் கல்வி வகுப்புகளை நடத்தியும் ஒரு உண்மையான சமூக ஊழியர் எப்படியிருக்கவேண்டுமென்பதற்கு உதாரண புருடராக அவர் விளங்கிவந்தார். இராப் பாடசாலைகள் பலவற்றைத் தொடங்கினார். சேரிகள் தோறும் சென்று தொழிலாளரிடையே கல்வியைப் பரப்பினார். சுகாதாரம், சுத்தம் சம்பந்தமாக ஒளிப்படவிரிவுரைகளை நிகழ்த்த ஏற்பாடுகள்
17

Page 164
செய்தார். சேரிச் சிறாரின் நலனுக்காக விளையாட்டுச் சங்கங்களையும் சாலைகளையும் நிறுவினார். தம் வாழ்க்கைக்கு வேண்டிய வருவாயைப் பெற்றுக் கொள்ளத்தக்க முறையில் சிறுவர், சிறுமியருக்குக் கைத்தொழிற் கல்வி தரும் விஷயமும் கவனிக்கப்பட்டது. இறந்துபடும் தறுவாயிலிருந்த குடிசைக் கைத்தொழில்களுக்குப் புத்துயிர் அளிக்கப்பட்டது. இந்நோக்கத்துடன் கைத்தொழில் விவசாய முற்சிகளை அபிவிருத்தி செய்வதற்கு உதவுவதற்காக கூட்டுறவு, கடன் உதவிச் சங்கங்களை நிறுவும்படி அவர் சிபார்சு செய்தார். அச் சங்கங்கள் விவசாயிகளுக்கும் தொழிலாளருக்கும் மூலப் பொருட்களையும், உபகரணங்களையும் பெறுவதற்கும் பானைவனைதல், கூடைமுடைதல், வெள்ளி, பித்தளை வேலைப்பாடு, ரேந்தை பின்னல், பருத்தி நெசவு என்பவற்றுக்கு வேண்டிய யந்திரங்களைப் பெறுவதற்கும் கடன் கொடுத்து உதவவேண்டுமென்று அவர் ஆலோசனை கூறினார்.
அவர் ஏழை மக்களின் நலனுக்காகச் செய்த சேவைகளை பாராட்டுமுகமாகத்தான் பிரதம நீதியரசர் சேர் அன்டன் பேட்ரம். (அவரது திருவுருவப்படத்தை கவர்ணர் திறந்து வைத்த பொழுது) தாம் பேசுகையில் குறிப்பிட்டதாவது: பரந்ததும் பல்தரப்பட்டதுமான பண்பாடு வாய்க்கப் பெற்றவர் சேர் பொன்னம்பலம். இந்த நாட்டிலே அவரிலும் பார்க்கச் சிறந்த பண்பாடு வாய்க்கப் பெற்றவர் யாரும் எப்போதும் இருந்ததே கிடையாது. தம் கல்வியிலும் நூற்குவியலிலும் கட்டுண்டு புத்தகப் பூச்சியாக அவர் வசிக்கவில்லை. பொதுமக்களின் துயரங்களை அவர் உணர்ந்தார். அவர் சமூகசேவை இயக்கத்தைத் தோற்றுவித்தது. அது ஒரு நவநாகரிக இயக்கம் என்பதற் காகவன்று. அவர் ஏழை மக்களின் துன்பங்களை உணர்ந்தார். வோர்ட்ஸ் வோர்த் என்னும் ஆங்கிலக் கவிஞன் கூறியவாறு: “மனிதகுலத்தின் துக்கந்தோய்ந்த மெளனக் குரல்’ அவரது காதுகளில் ஒலித்துக் கொண்டிருந்தது. சேரி மக்களுக்காக அவர் உள்ளம் துடித்தது. சேரிவாசிகள் ஒவ்வொருவரும், சேர் பொன்னம்பலத்தின் முன் மாதிரியைப் பின்பற்றுவதனைத் தமது அரும் பெரும் இலட்சியங்களில் ஒன்றாகக் கருத வேண்டும்.
சமுகசேவை வேலைகளில் ஈடுபட்ட அதே நேரத்தில், அவர் தொழிலாளர் நலனையும் மறந்தாரில்லை. இலங்கையின் முதலாவது தொழிலாளர் சங்கம் சேர் பொன்னம்பலம் அவர்களாலேயே தோற்றுவிக்கப்பட்டது. இது 1919, ஜூன் மாதம், 25 ஆம் தேதியன்று நிகழ்ந்தது. இத்தேதிக்கு முன்னர் தொழிலாளர் நலனை இலங்கைச் சமுகசேவா சங்கமே கவனித்து வந்தது. புதிதாகத் தோற்றுவிக்கப்பட்ட இத் தொழிலாளர் சங்கத்தின் பெயர் இலங்கைத் தொழிலாளர் சேமாபிவிருத்திச் சங்கம் என்பதாகும். இதன் முதலாவது தலைவராக சேர் அருணாசலம் தெரியப்பட்டார். திரு. பெரிசுந்தரம் இதன் முதலாவது காரியதரிசியாவார். இச்சங்கத்தின் நோக்கம் அதன் விதிகளில் மேல்வருமாறு கூறப்பட்டுள்ளது:-
இலங்கையிலுள்ள தொழிலாளர் வர்க்கங்களின் நலன்களைப் பாதுகாத்தலும், அவர்களது சேமாபிவிருத்தியை
118

அதிகரித்தலும்; அவர்களது சமுக, தொழில் நிலைமைகளைச் சீர்திருத்துதலும், அன்னாரது லெளகீக, ஆத்மீக அபிவிருத்திக்கு உதவுதலும்; மக்களின் சமுக பொருளாதார நிலைமைகள் பற்றிய பிரச்சினைகளைக் கற்றறிதலை ஊக்குவித்தலும்.
இச்சங்கம் 1921 ஆம் ஆண்டில் நடைபெற்ற ரெயில்வே, துறைமுக வேலை நிறுத்தங்களில் தொழிலாளருக்கும் அதிகாரிகளுக்குமிடையே நடந்த சமரசப் பேச்சுவார்த்தைகளில் ஒரு முக்கிய பங்கை வகித்தது. இச்சங்கத்தின் வேண்டுகோட் பிரகாரம் வண. ஸி. எப். அன்ட்ரூஸ் இலங்கையிலுள்ள இந்தியத் தோட்டத் தொழிலாளரின் நிலைமைகளைப் பரிசீலனை செய்வதற்காக இங்கு வந்தார். திரு. அன்ட்ரூஸ் 1920 ஆம் ஆண்டு, செப்டெம்பர் மாதத்தில் சேர் பொன்னம்பலம் அவர்களின் தலைமையில் ரவர் ஹாலில் தொழிலாளரும் பிறரும் திரளாகக் குழுமிய ஒரு கூட்டத்தில் பேசினார். 1921ஆம் ஆண்டில் தொழிலாளர் இயக்க வீரர்களில் இன்னொருவரான கேர்ணல் ஜோ சையா வெட்ஜ்வூட் என்பாரும் இலங்கை வந்து பல விரிவுரைகள் நிகழ்த்தினார். 1920 ஆம் ஆண்டு, பெப்ரவரி மாதத்தில் சேர் அருணாசலம் தனது தொழிலாளர் சங்க இயக்கத்தை மிகவும் விரிவடையச் செய்து முடிவில் இலங்கைத் தொழிலாளர் சம்மேளனத்தையும் தோற்றுவித்தார். தொழிலாளர்களின் நலன்களுக்காக, அவர்களின் வாழ்க்கை நிலைமைகளின் உயர்வுக்காக இவ்வியக்கம் சளையாது முயன்று வரவேண்டுமென ஊக்குவிப்பதற்கு அவர் எப்போதும் மறந்ததில்லை. அவர் தன்னை மக்களோடு ஒன்றிய ஒருவராக ஆக்குதற்கு எப்பொழுதும் முயன்று வந்தார். இவரது முயற்சிகளின் பெரும் பயனாகவே தொழிலாளர் சட்டத்தில் இருந்த தொழிலாளரைத் தண்டிக்கும் ஏற்பாடுகள் நீக்கப்பட்டன. இந்தியத் தொழிலாளருக்குப் பாதகமானமுறையில் நிலவிவந்த துண்டு முறையை ஒழிப்பதற்காக அவரின் சங்கங்கள் பெரிதும் போராடின. இச்சங்கங்கள் மட்டுமே தொழிலாளரின் நலவுரிமைகளுக்காக அக்காலத்தில் இந்நாட்டில் போராடிவந்த ஸ்தாபனங்களாகும். கேர்ணல் வெட்ஜ்வூட் பிரித்தானிய பாராளுமன்றத்தில் ஜூலை 14ம் திகதியன்று பேசும் போது சேர் பொன்னம்பலத்துக்கு ஒரு புகழ்மாலை சூட்டினார். அவர் கூறியதாவது: இலங்கையில் ஏறக்குறைய அடிமைகள்போல் வசித்துவரும் இத்தொழிலாளர் சார்பில் இருவர் பெருந்தொண்டாற்றி வருகின்றனர். ஒருவர் திரு. அன்ட்ரூஸ், மற்றவர் முன்னை நாள் அரசாங்க ஊழியரான சேர் பொன்னம்பலம் அருணாசலம். திரு அருணாசலம் பல வருடங்களாக இப்பிரச்சினைபற்றிச் சங்கங்கள் தோறும் சென்று பலவித முயற்சிகளைச் செய்து வருகின்றார். அவர் அரசாங்க அதிகார உத்தியோகத்தராக முன்னர் இருந்தவர் ஆதலின் அதிகார உத்தியோகத்தர் அவரை விரும்புவதில்லை. அவர் கல்விமான். தொழிலாளரின் நிலைமைகளுக்குப் பரிகாரம் தேடும் அவர், தனது நாட்டுத் தொழிலாளரில் ஒரு பெரும் பகுதியினருக்கு விடுதலையைத் தேடித்தருகிறார். அவருக்கு இச்சபையில் எனது நல்வாழ்த்துக்களை நான் தெரிவித்துக் கொள்கிறேன். வெட்ஜ்வூட், சேர் பொன்னம்பலத்தின் மீது மிகவும் பெருமதிப்புப் பூண்டிருந்தார். சேர் பொன்னம்பலத்தின்
இந்துக் கலைக்களஞ்சியம்

Page 165
சொற்பொழிவுகளும் கட்டுரைகளும் நூல்வடிவில் வெளிவந்த ஞான்று அதற்கெழுதிய முகவுரையில் அவர் மேல்வருமாறு கூறுகிறார். ஒரு அருணாசலத்தையும், ஒரு ஜே. ஸி.ஸ்மட்சையும் அளித்த கேம்பிரிட்ஜ் சர்வகலாசாலைபற்றி எவ்வளவு சிறப்புரைகள் கூறினும் தகும். குருப் பிரபு 1922 ஆம் ஆண்டு, ஜூலை மாதம் 27ஆம் திகதியன்று சேர் அருணாசலத்துக்கு மேல்வருமாறு எழுதினார்:- இந்தியத் தொழிலாளர் சார்பில் நீங்கள் நீண்டகாலமாகச் செய்தமுயற்சிகள் வெற்றிகரமாக முடிந்துள்ளமை தங்களுக்குப் பேருவகை நல்கியிருக்கவேண்டும். நம் எல்லோரிடமிருந்தும் நன்மை பெறுதற்குப் போதிய தகுதி வாய்ந்த இம்மக்கள் வாழ்வில் திருப்தி அளித்தமை,
சாம்ராஜ்யத்துக்குச் செய்த ஒரு உண்மையான சேவையாகும்.
சேர் அருணாசலம் கல்வித்துறையிலும் கண்ணோட்டம் செலுத்தினார். நடைமுறையிலிருந்த கல்வித்திட்டத்தில் அதிருப்தி கொண்ட அவர், அதனைச் சீர்திருத்துதற்கான எத்தனையோ ஆலோசனைகளைப் பல தடவைகளிற் கூறினார். 1900 ஆம் ஆண்டில் சேர் அருணாசலம் இது சம்பந்தமாக கல்வி அதிபர், எஸ் எம். பரோஸ் என்பாருடன் ஒரு நாள் சில முக்கிய விஷயங்களைப் பேசினார். இப்பேச்சு திரு. பரோஸ் அவர்களின் உள்ளத்தைப் பெரிதும் கவர்ந்ததன் காரணமாக அன்னார் சேர் அருணாசலத்திடம் அக்கருத்துக்களை ஒரு அறிக்கையாகத் தயாரித்துத் தரும்படி வேண்டிக்கொண்டார். இதன் பிரகாரம் 1900 ஜூலை 8 ஆம் திகதி யன்று தம் அறிக்கையைச் சமர்ப்பித்தார். அவ்வறிக்கையில் அவர் கொழும்பில் வழங்கப்பட்டு வந்த ஆரம்ப கல்வி முறையில் அடிப்படையான குறை ஆங்கிலத்தின் மூலம் கல்வி பயிற்றப்படுதலே என்று குறிப்பிட்டார். உண்மையில் அவர்தான் இலங்கையில் தாய்மொழிக் கல்வி இயக்கத்தின் தந்தையாவார். அவர் கல்வி அதிபரிடம் மேல்வருமாறு கேட்கிறார்:- இங்கிலாந்திலுள்ள ஆரம்பப் பாடசாலைகளில் ஆங்கிலத்தைத் தள்ளிவிட்டு, ஜெர்மானிய மொழியைப் போதனா மொழியாக்கினால் எவ்வாறிருக்கும் என யோசித்துப் பாருங்கள்! ஆங்கிலத்துக்கும் சிங்களத்துக்கும் (அல்லது தமிழுக்கும்) இருக்கும் ஒற்றுமையிலும் பார்க்க ஜெர்மானிய மொழிக்கும் ஆங்கிலத்துக்கும் அதிக ஒற்றுமை இருக்கின்றது. எனவே சிங்களச் சிறார்களும் தமிழ்ச் சிறார்களும் ஆங்கிலம் கற்பதைவிட ஆங்கிலச் சிறார் ஜெர்மானிய மொழியை இலகுவில் கற்கமுடியும்.
கல்வித்திட்டத்தில் காணப்படும் குறைகளை அகற்ற அவர் பலவித நடவடிக்கைகளை எடுக்கும்படி சிபார்க செய்தார். திரு. பரோஸ், சேர் அருணாசலத்துக்கு இதற்காக நன்றி கூறினார். எனினும் இந்தச் சிபார்சுகளை அமுல்நடத்த அவர் முன்வரவில்லை என்பதைப் பிந்திய கடிதப் போக்குவரத்து நன்கு விளக்கியது. சேர் அருணாசலம் உடனே திரு. பரோஸிலும் பார்க்க உயர்ந்த மேலதிகாரிகளுக்கு மனுச்செய்தார். தமது அறிக்கையின் ஒரு பிரதியைத் தேசாதிபதி சேர் வெஸ்ட்ரிட்ஜ்வே அவர்கட்கு அனுப்பி, கல்வித்தேவைகளை ஆராய ஒரு கொமிஷன் நியமிக்கவேண்டுமென்றும் கடிதமூலம் கேட்டுக்கொண்டார். இக்கடிதம் 1900 ஏப்ரில் 30ஆம் தேதியன்று எழுதப்பட்டது. இந்த
இந்துக் கலைக்களஞ்சியம்

அறிக்கையிலே இலங்கையில் ஒரு பல்கலைக்கழகத்தை நிறுவவேண்டுமென்றும், அதைச் செய்யமுடியாதவிடத்து, ரோயல் கல்லூரியை ஒரு பல்கலைக்கழகக் கல்லூரியின் அந்தஸ்துக்கு உயர்த்த வேண்டுமென்றும் அவர் கேட்டுக்கொண்டார். இவ்விதம் ஒரு கழகம் அமைத்தால் அது மக்களுக்கு அழியா நன்மை பயக்கும். அத்துடன் இலங்கையில் தேசாதிபதி அவர்களின் ஆட்சிக்கு ஒரு நல்ல ஞாபகச் சின்னமாகவும் விளங்கும் என்று அவர் குறிப்பிட்டார். இவ்வேண்டுகோளுக்கு அவருக்குக் கிடைத்த பதில் அவரது நம்பிக்கைகள் யாவற்றையும் சிதறடித்தது. அதில் மேல்வருமாறு கூறப்பட்டிருந்தது - கல்வி பற்றிய உங்கள் அறிக்கை நிர்வாகக் கவுன்சிலில் முறையாகக் கவனிக்கப் பெற்றது. தேசாதிபதி அவர்கள் இது பற்றி எவ்வித நடவடிக்கையும் எடுப்பதில்லை என்று அக்டோபர் 15 ஆம் தேதி முடிவுசெய்தார். சேர் அருணாசலம் இத் தோல்வியை ஒப்புக்கொள்ளவில்லை. மீண்டும் திரு. பரோசுடன் அவர் கடிதப் போக்குவரத்து நடத்தினார். கல்வி முறையின் அபிவிருத்திக்கான பல ஆலோசனைகளையும் அவர் கூறிவந்தார். உதாரணமாக ஆங்கிலச் சரித்திரம், பூமிசாத்திரம் என்பனவற்றுக்குப் பதிலாக, இலங்கை, இந்தியா ஆகிய நாடுகளின் சரித்திரம், பூமிசாத்திரம் என்பனவற்றைப் படிப்பித்தலே உகந்தது என அவர் ஆலோசனை கூறினார். ரோயல் கல்லுரியின் அபிவிருத்தியில் அவர் மிகவும் சிரத்தை காட்டினார். உயர்தர பாடசாலைகளுக்கு இது ஒரு முன்மாதிரியாக விளங்கவேண்டுமென அவர் கூறிவந்தார். இக்காலத்திற் சேர் அருணாசலம் இலங்கைச் சரித்திரம் சம்பந்தமாகப் பல பிரசங்கங்களை நிகழ்த்தி, பாடசாலைகளிலும் வெளியிலுள்ள படித்த மக்களிடையேயும் இலங்கைச் சரித்திரத்தில் புதியதோர் ஆர்வம் பிறக்கும்படி செய்தார்.
சேர் பொன்னம்பலம் இலங்கைப் பல்கலைக்கழக இயக்கத்தின் பிதா என அழைக்கப்படுகின்றார். அது முற்றிலும் பொருத்தமுடையதே. அவரது பெருமுயற்சியாலேயே 1906 ஆம் ஆண்டு, ஜனவரி மாதம், இலங்கைப் பல்கலைக்கழகச் சங்கம் தொடங்கப்பட்டது. இச்சங்கத்தினர் வெளியிட்ட சஞ்சிகை மிகவும் உன்னதமான ஒரு வெளியீடு. சேர் பொன்னம்பலம் பல்கலைக்கழகத்தோடு கொண்டிருந்த தொடர்பு எத்தகையது என்பதை இலங்கைப் பல்கலைக்கழகக் கல்லூரியின் முதலாவது அதிபரும் சிறந்த அறிஞருமான பேராசிரியர் மார்ஸ் அவர்களின் சீரிய கூற்று நன்கு விளக்குகிறது. மதுரையில் சேர் அருணாசலம் இறந்தார் என்ற செய்தியைக் கேள்வியுற்ற பேராசிரியர் மார்ஸ், கல்லுரியின் மகாமண்டபத்தில் மாணவர்களைக் கூட்டி ஒரு சொற்பொழிவு நிழ்த்தினார். மறக்கவொண்ணாத இவ்வரிய சொற்பொழிவில் அவர் கூறியதாவது: இலங்கையில் பல்கலைக்கழகங்காணும் திட்டத்தின் உண்மையான பிதாவாய் விளங்கிய ஒருவரது ஞாபகத்திற்கு நம் மரியாதைகளைச் செலுத்துதற்காகவே நான் உங்களை இங்கே கூடும்படி கேட்டுள்ளேன். அரசாங்க ஊழியர், அரசியல்வாதி, கல்விமான், கல்வித்துறையில் தொண்டாற்றியவர், சமூக சீர்திருத்தக்காரர், ஞானி என்ற தம் பல்துறைவாழ்வில் அவர் செய்த சேவைகளைப்
119

Page 166
பற்றியும், அடைந்த பலவித வெற்றிகளைப் பற்றியும் பலரும் பலபட எழுதியுள்ளார்கள். ஆனால் அவரது பிந்திய நாட்களில் அவரைச் சார்ந்தார் எவர்க்கும் ஊக்கமும் உணர்ச்சியும் நல்கிய ஒரு துறைபற்றி, அவர் உள்ளத்திற்கு மிகப்பிரியமானதும், என்னோடும் உங்களோடும் தொடர்புகொண்டு விளங்குவதுமான இப்பல்கலைக்கழகக் கல்லூரி என்னும் ஸ்தாபனம் சம்பந்தமாக அவர் எடுத்துக்கொண்ட நடவடிக்கைகள் பற்றி அதிகம் கூறப்படவில்லை. ஒன்றும்கூறப்படுவதில்லை என்று கூடக் கூறிவிடலாம். 1906 ஆம் ஆண்டு, ஜனவரி 19 அம் தேதியன்று இலங்கையில் ஒரு பல்கலைக்கழகம் நிறுவுதல் வேண்டும் என்ற பிரச்சனை சம்பந்தமாக நடாத்தப் பெற்ற பொதுக் கூட்டத்திற்கு சேர் அருணாசலமே தலைமை தாங்கினார் என்பதை நான் ஞாபகமூட்டுகிறேன். இலங்கைப் பல்கலைக்கழகச் சங்கம் உருவாதற்குக் காரணமான பொதுக் கூட்டத்தில் அவர் முடிவுரையாகக் கூறிய சில வார்த்தைகளை நான் எடுத்துக்காட்ட விரும்புகிறேன். ஆகவே, இலங்கைப் பல்கலைக்கழகச் சங்கத்தை ஸ்தாபிக்க முயற்சி செய்வதில், நம் முன்னோர்களின் அடிச்சுவட்டைப் பின்பற்றுவதோடல்லாமல் இன்றியமையாத ஒரு பணியையும் நாம் செய்கிறோம். பல்கலைக்கழகம் எவ்வாறு அமைய வேண்டும், படிப்பித்தல், பரீட்சை ஆகியன எவ்விதம் அமையவேண்டும் என்பதை நாம் வரையறுக்கவில்லை. அவை வருங்காலத்தில் படிப்படியாக விருத்தியடையவேண்டியவை, அவை குறித்து இப்பொழுது பலதரப்பட்ட அபிப்பிராயங்கள் இருக்குமேயல்லாமல், ஏகோபித்த அபிப்பிராயம் இருக்கமுடியாது. நிற்க, கேம்பிரிட்ஜ் லண்டன் அல்லது சென்னைப் பல்கலைக்கழக முறைகள் சம்பந்தமாக இப்பொழுது பொதுமக்கள் முன்னிலையிலுள்ள உயர்தரக் கல்வித்திட்டம் எதையும் தங்குதடையின்றிப் பின்பற்றலாம். இத்திட்டங்கள் காலத்திற்கேற்ப மாறுபடுந்தன்மையனவாகையால் நமது சூழ்நிலைக்கிணங்க சில மாறுதல்கள் இவைகளில் ஏற்படவேண்டும் எனப் பொதுவாகக் கருதப்படுகின்றது. நிலைமாறும் காலம் நீண்டதாகவோ, பயனற்றதாகவோ இல்லாதிருக்கச் செய்வதே நமது சங்கத்தின் நோக்கம். தற்பொழுது பாடசாலைகளிலும் ஏனைய தொழிற்கல்வி நிலையங்களிலும் சிதறிக் கிடக்கும் சக்திகளை ஒரு முகமாக ஒழுங்குபடுத்தும் ஆரம்ப, உயர்தரப் பாடசாலைகளின் சிகரமாகத் திகழக்கூடியதும் நமது பாடசாலைகளும் கல்லூரிகளும் சக்தியிழந்து சோர்வுற்ற ஒரு முறையிற் செல்லாது தடுத்து மக்களின் பண்பைப் படிப்படியாக உயர்த்திவரக் கூடியதுமான பல்கலைக்கழகத்தை அமைப்பதே நமது சங்கத்தின் நோக்கம்.
சேர் அருணாசலம் அன்று முதல் அவரது அந்திய காலம் 6716ն) Ս தூரதிருஷ்டியற்றவர்களிள் சந்தேகங்களால் தடுக்கப்படாதும்,பழைய சம்பிரதாயங்களைப் பேணுபவர்களால் புதிய திட்டங்களுக்கேற்படும் தாமதத்தைப் பொருட்படுத்தாதும் தங்குதடையின்றி தான்கொண்ட கொள்கையைத் தொடர்ந்து நிறைவேற்றினாரென நான் கருதுகிறேன். பல்கலைக்கழகத்தை நிறுவினால், அவரது நாட்டின் அரசியல் முன்னேற்றத்திற்கு, அது எவ்வளவு தூரம் அடிகோலும் என்பதைப்பற்றி தீர்க்க தரிசனமான கொள்கையில் ஒரு மனத்துடனும் சலியா
20

உற்சாகத்துடனும் உழைத்தவர் இந்நாட்டில் இவரேயன்றி வேறொருவருமிலர். அவர் எவ்வித சிரத்தை காட்டினார் என்பதை வெளிச்சான்றுகளின் மூலமாகக் கல்லூரியிலுள்ள நாம் அறிவோம். முதலாவதும் மிகவும் முக்கியமானதுமான அவரது சிறந்த நன்கொடை பத்மநாப நூல் நிலையத்தை நமக்களித்ததாகும். அதன் உண்மையான மதிப்பை இன்னும் போதியளவு தெரிந்துகொள்ளவில்லையென நான் கருதுகிறேன். சேர் குமாரசுவாமி விஞ்ஞானப் பரிசையும் யூனியன் மாணவர் விடுதிக்கு அவரளித்த பெரு நன்கொடையையும் நாம் அறிவோம். பல்கலைக்கழகச் சங்கத்தினதும், கலைக்குழுவினதும் அங்கத்தினராக விருந்ததோடல்லாமல், கல்லூரி விவகாரங் களுக்காக அதன் எதிர்கால விருத்தியை நிலை நாட்டப் பொறுப்பேற்றவர்களுக்கு விலைமதிக்க வொண்ணா ஆலோசனைகள் கூறவும், பல்கலைக்கழகத்தை ஆரம்பிப் பதற்காக உழைக்கவும் அவர் செலவழித்த பொன்னான நேரத்தையும் சிரமத்தையும் சிந்தனையையும் அவற்றோடு ஒப்பிடும்பொழுது அவை அவ்வளவு கவனத்திற்குரியவையாகா. இத்துறையில் நான் இவரைப்பற்றி மற்றவர்களைவிட நன்கு தெரிந்தே பேசுகிறேன். அவர் அன்னையெனப் போற்றிப் பேணிய இந்நாட்டை அடைந்ததும் எனக்கு அவரோடு நெருங்கிப் பழகும் சந்தர்ப்பம் கிடைத்தது. அப்பொழுது அவர் நமது திட்டத்தின் முழுப்பயனையும் பெற தனது நேரம், சிரமம், சிந்தனை ஆகிய எல்லாவற்றையும் செலவழித்தார் என நான் உறுதியுடன் கூறுகிறேன். விருத்திக்குப் பாதகமான நிலையேற்பட் டபொழுதெல்லாம் அவர் எதிர்காலத்தில் நம்பிக்கையற்ற தொடை நடுங்கிகளை வெறுத்துத்தள்ளி புதிய முயற்சிகளுக்கு அளவற்ற ஊக்கம் காட்டினார். இக்கல்லூரியின் அதிபர் என்ற முறையில், அவர் எனக்குக் காட்டிய அன்புக்கும் ஆதரவுக்கும் ஊக்கத்துக்கும் அவருக்கு நான் எவ்வளவு கடமைப் பட்டிருக்கின்றேன் என்று கூறுவதோ, அவர் மறைந்துவிட்ட செய்தி கேட்டதும் எனக்கு ஏற்பட்ட ஆற்றொனாத் துயரத்தை வெளியிடுவதோ இலகுவான காரியமல்ல. அன்பர்களே! அவருடைய வாழ்க்கை எமக்கு ஒரு உதாரணமாகவும் உணர்ச்சியூட்டுவதாகவும் விளங்குகிறது. சமயத்துறையில் அல்லது அரசியற்துறையில் அவருக்கும் மற்றவர்களுக்கு மிடையே எவ்வளவுதான் வித்தியாசமிருந்தாலும் சான்றோர் களைத் தோற்றுவிக்கும் சில மனிதப்பண்புகளின் எடுத்துக் காட்டாக அவர் விளங்கினார். அப்பண்புகளை நீங்களும் பின்பற்றுவீர்களானால் நீங்கள் நன்மை அடைவீர்கள். அவரிடம் காணப்பெற்ற சிறப்பொழுக்கங்களில், திடசித்தம், சுதந்திர மனப்பான்மை, எண்ணியதைச் செய்துமுடிக்கும் ஏகாக் கிரகசித்தம் ஆகியவற்றை நான் விசேஷமாக எடுத்துக்காட்ட விரும்புகிறேன். தமது இலட்சியத்தைப் பெறுவதற்காக அவர் அறப்போர் புரிந்தார். பல்கலைக்கழகத்தை உருவாக்கல் அவரது இலட்சியமாகும். பல்கலைக்கழகத்தின் மூலமாகப் பன்னெடுங் காலமாகத் தோற்றுவித்து இந்நாட்டு மக்களின் தரத்தை உயர்த்தவேண்டுமென்பதே அவரது இறுதி இலட்சியமாகும். அதுவே எங்கள் இலட்சியமுமாகும்.
இந்துக் கலைக்களஞ்சியம்

Page 167
சேர் பொன்னம்பலம் அருணாசலம் அவர்களின் வாழ்க்கையைப் பற்றிக் கூறும்பொழுது அவரது சிறந்த பாண்டித்தியத்தையும், கலாஞானத்தையும் குறிப்பிடாது விட்டால் அது பூரணமான வாழ்க்கை வரலாறாகாது. அவர் தனது ஒய்வு நேரம் முழுவதையும் கலைகளுக்காக அர்ப்பணித்தார். தனது பொறுப்புவாய்ந்த அரசாங்க சேவையின் மத்தியிலும் பண்டைய இலக்கியங்களையும், சரித்திரம், புதைபொருள் ஆராய்ச்சி, மேல்நாட்டு, கீழ்நாட்டு தத்துவஞானம் ஆகியவைகளையும் ஆராய்வதில் ஈடுபடத்தவறியதில்லை. அவர் இலங்கைச் சரித்திரச் சுருக்கம் என்ற சிறு நூலை வெளியிட்டார். இந்நூல் அவராற்றிய சொற்பொழிவுகளை ஆதாரமாகக் கொண்டு எழுதப்பட்டதோடு, இத்தகைய ஆராய்ச்சிகளில் இலங்கையர் ஈடுபடாத காலத்தில் இது எழுதப்பட்டதால் மிகவும் உபயோகரமான நூலாயிற்று. இலங்கையர் தங்கள் நாட்டின் சரித்திரத்தை அறியாதிருந்ததற்காக அவர்களைச் சேர் அருணாசலம் கடுமையாகக் கண்டித்தார். சிவில் சேவையாளராகவிருந்த அவர் ஆளுந்திறனும், ஆழ்ந்த கல்வியறிவும் படைத்து விளங்கினார். இத்தகைய திறமைகள் வாய்ந்த ஒரு சில ஐரோப்பிய சிவில் சேவையாளர் இவருக்கு முன்பிருந்தபோதிலும், அருணாசலம் பெரியாருக்குப் பின் சேர் போல், ஈ. பீரிஸ் போன்ற திறமையாளர்கள் தோன்றியபோதிலும், இவர் காலத்தில் திறமையாகக் கடமையாற்றிய இலங்கையர் இவர் ஒருவரேயாகையால், திறமையாளர்களின் முன்வரிசையில் இவர் வைக்கப்படுகின்றார். இவர் பண்பாடு நிறைந்த வாழ்க்கை நடத்தினார். இவர் றோயல் ஆசியச்சங்கத்தின் தலைவராக விருந்து சேவை புரிந்ததோடு தமிழ் இலக்கியத்தைப் பற்றியும், இலங்கைச் சரித்திரத்தைப் பற்றியும் பல கட்டுரைகள் வரைந்தார். இந் நாட்டில் மாத்திரமல்ல பிறநாட்டிலும் இவர் கலைவல்லுநராக மதிக்கப்பட்டார். இங்கிலாந்தில் கலை அறிஞர்கள் குழுவில் இவர் பெரிதும் மதிக்கப்பட்டதோடு, மிகவும் அரிய, பெருமை வாய்ந்த பதவியாகிய அத்தீனியன் கிளப்பின் அங்கத்தவர் பதவிக்கும் இவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
ஒரு சமயம் சேர் பொன்னம்பலம் அருணாசலம் அவர்களைப் பற்றி சேர் அன்ரன் பேட்றம் அவர்கள் இவ்விதம் குறிப்பிட்டார்கள். மிகவும் அரிய இலட்சணங்களான அறிவும், சான்றாண்மையும் அவரிடத்தே ஒருங்கே பொதிந்திருப்பது கண்டு பெருமை யுறுகிறேன். அவரோடு நெருங்கி உறவாடியவர்கள், உண்மையில் அவரது தாராள மனப்பான்மையையும், தோற்றப் பொலிவையும், வசீகரமிக்க ஒப்புரவையும் நன்கு அறிவர். எட்வர்ட் கார்பென்டர் தனது அருமை நண்பரின் குணாதிசயங்களைப் பற்றிக் கூறுவதாவது மிகக் கடினமானதும் ஆழ்ந்த கருத்துள்ளதுமான பல திறப்பட்ட விஷயங்களை மிக விரைவாகவும் எளிதாகவும் அவர் புரிந்து கிரகித்துக் கொண்ட முறையைக் கண்டு நான் அடிக்கடி வியப்புற நேர்ந்தது. அன்னியருக்கு இரட்டிப்புக்கடினம் என்று சொல்லக்கூடிய விஷயங்களை, உதாரணமாக பிரிட்டிஷ் ஜனப் பிரதிநிதி சபையின் நடைமுறை போன்றவற்றை அவர் விரைவில் கிரகித்த முறை குறிப்பிடத்தக்கது. இக்கிரகிப்பு சுபாவத்தோடு சில சமயங்களில் போலியை எதிர்த்து நின்று கேலி
இந்துக் கலைக்களஞ்சியம்

செய்யும் சுபாவமும் அவரிடம் காணப்பட்டது. களுத்துறை நீதவானாக அருணாசலம் அவர்கள் கடமை பார்த்தபொழுது கேர்ணல் ஒல்கொட் அவர்கள் அவரைச் சந்தித்ததைப் பற்றி நனது பழைய தினக்குறிப்பு எனும் நூலில் இவ்விதம் தறிப்பிட்டிருக்கிறார். இன்று கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த கிறைஸ்ட் கல்லூரியின் பட்டதாரி ஒருவரைச் சந்தித்தோம். நாம் ஆசியாவில் சந்தித்தவர்களுள் மிகவும் அறிவாற்றலும் நாகரிகமும் வாய்ந்தவர்களில் இவர் ஒருவர்.
அன்னார் பல மதக் கருத்துக்களையும், தத்துவஞானக் கொள்கைகளையும் கிரகித்திருந்த போதிலும் வைதீக சைவராகவே விளங்கினார். சேர் அருணாசலம் அவர்களின் மறைவுக்குப் பின்னர் வெளியிடப்பட்ட சமயதத்துவ ஆராய்ச்சிக் கட்டுரைகளும் மொழிபெயர்ப்புகளும் என்ற நூலுக்கு முன்னுரை எழுதிய சேர். கி. பி. இராமசுவாமி ஐயர் கூறுவதாவது: "தமிழ்த்தத்துவ ஞானக்கருத்துக்களையும், இலக்கியங்களையும் முற்றாகவேனும் சிறிதளவாகவேனும், அறியாதவர்களுக்கு சேர் பொன்னம்பலம் அருணாசலம் அவர்கள் தமது நூற்றொகுதியில் அவற்றைத் தந்திருப்பதற்கு உலகம் செய்யத்தக்க கைம்மாறும் உண்டுகொல். மிகவும் புராதன தமிழ்ப் புலவர் பெருமக்கள் எளிய, விளக்கமான தமிழ் நடையைப் பின்பற்றியபோதிலும், காலஞ் செல்லச் செல்லக் கருத்துக்கள் மிகவும் கடினமான மொழியில் எழுதப்பட்டமையால், அவைகளில் பொதிந்து கிடக்கும் மாண்புமிக்க கருத்துக்களை எடுத்துக் காட்டுபவர் தேவைப்பட்டனர். தேவி வணக்கம், முருகன் வழிபாடு ஆகியவைகளைப் பற்றிய சில கட்டுரைகளிலும், மாணிக்க வாசகர், தாயுமானவர், மற்றும் சமய குரவர்கள், நக்கீரர் போன்ற பக்தர்கள், புறநானூறு ஆசிரியர் ஆகியோரின் மணிமொழிகள் அடங்கிய மொழிபெயர்ப்புகளிலும் எல்லோரும் விளங்கிக் கொள்ளும் முறையில் தெளிவுபடுத்தியிருக்கின்றார். இச்சிறந்த இலக்கியங்களை மொழிபெயர்த்தல் எவ்வளவு கடினமான வேலையென்பதை அளவிட்டுக் கூறமுடியாது. சேர் பொன்னம்பலம் அருணாசலம் அவர்களது மொழிபெயர்ப்புகள் மூல நூல்களின் உட்கருத்தையும் அழகையும் நன்கு எடுத்துக்காட்டுகின்றன எனக் கூறுவதிலும் பார்க்கச் சிறந்த மதிப்புரை வேறில்லை. ஈண்டு இரண்டு உதாரணங்கள் தருகின்றோம்.
கண்ணிற் காண்பதுன் காட்சி கையாற்றொழில் பண்ணல் பூசை பகர்வது மந்திரம்
மண்ணொடைந்தும் வழுங்குயிர் யாவுமே யண்ணலே நின்னருள் வடிவாகுமே
'Whatsoever the eye seeth is Thou. Whatsoever the hand doeth is thy worship. What the mouth uttereth is Thy praise. The earth and other elements and all living things are Thy gracious forms, O Lord'
121

Page 168
நதியுண்ட கடலெனச் சமயத்தை யுண்டபர
ஞான வானந்த வொளியே
நாதாந்தரூபமே வேதாந்த மோனமே
நானெனு மகந்தை தீர்த்தென்
"Light and Bliss of Knowledge supreme, that Swallowes religious as Ocean rivers, O Stillness. The Vedas goal, Thy form seen where vibration ends: O Wisdom, consumer of me and thought
கீழைத்தேச இலக்கியங்களிலும் ஐரோப்பியர் பண்டைய இலக்கியங்களிலும் நவ இலக்கியங்களிலும் இவருக்கிருந்த ஒப்பற்ற பரிச்சயத்தை வெளிப்படுத்துகின்ற முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு வியாசத் தொகுப்பில், அறிதுயில்' என்ற விஷயத்தைப் போன்ற பலதரப்பட்ட விஷயங்களைச் கையாண்டுள்ளார். 'அறிதுயில்’ என்பது நினைப்பற்ற நிலையெனினும் நித்திரையற்ற நிலையாகும். நினைப்பற நினைத்தல், சும்மா விருத்தல் என்பனவும் இந்நிலையையே குறிக்கும். இவ்வித நிலை பிளேட்டோ, டெனிஸன் ஆகியோரால் குறிப்பிடப்பட்டு இந்திய யோகிகளால் எய்தப்பட்டிருந்தது.
பொலனறுவையில் கண்டெடுக்கப்பட்ட வெண்கல விக்கிரகங்களை விசேஷமாகக் குறிப்பிட்டு அவர் சிவ வழிபாட்டின் தத்துவார்த்தத்தை விளக்கியுள்ளார். ஒரு திறனாய்வாளன் முன்கூட்டியே தனது மனச்சாய்வுகளைக் களைந்து அந்த மக்களின் எண்ணத்தை நன்கறிய முயலுவதோடு அவர்கள் எவ்வித நோக்கத்தையுடையவர்களாக உள்ளார்களே அதே நோக்கத்தைத் தானும் கொண்டிராத பட்சத்தில் ஒரு நாட்டின் கலையைச் சரியாக நிதானிக்க முடியாது. என்ற தமது நூலில் அவர் சுட்டிக் காட்டுகிறார். சாதாரண மனித உருவங்களைப் போலவே தெய்வங்களின் உருவங்களையு அமைத்தல் நியாயத்துக்கு விரோதமானதென்று வைதீக இந்து மதபோதனை விளக்குகிறதென்று அவர் காட்டியுள்ளார். மேலு ஆத்மீகக் கண்ணோட்டமே மிகவும் சிறந்ததும் மிகவு உண்மையானதுமான தரம் என்ற ஆழ்ந்த கருத்தையும் அவ வெளியிடுகின்றார். கிரேக்க கலைக்கும் இந்திய கலைக்குமிடையிலுள்ள வித்தியாசங்களைச் சுட்டிக்காட் கிழக்கின் சிற்ப, கட்டட தத்துவார்த்தத்தின் உண்மையான கருத்தை உணர்ந்துகொள்ள அவர் வசதியளித்துள்ளார். இந்: நூலில் சேகரிக்கப்பட்டுள்ள வியாசங்களில் கல்விபற்றி கீழ்நாட்டு இலட்சியங்களும் இக்காலப் பிரச்சனைகளில் அவற்றின் செல்வாக்கும்’ என்ற சொற்பொழிவு மிகவு சிறந்ததாகவும் உணர்ச்சியூட்டுவதாகவும் விளங்குகின்றது இதில் சேர் பொன்னம்பலம் அருணாசலம் அவர்கள் இந்தியாவின் 5T60T, சர்வகலாசாலைகளின் (குருகுலங்களின் சரித்திரத்தையும் நோக்கத்தையும் விளக்குவதோடு உண்மையான அறிவைப் பெறுவதற்கு அவர்கள் எவ்வித முயற்சி எடுக்கிறார்களென்பதையும் காட்டுகிறார். மேலும் இம்மைக்கு மறுமைக்குமான கல்வியின் பிரச்சினைகளைச் சமாளிப்பதற்கு கிழக்கிலும் மேற்கிலும் எடுத்துக்கொள்ளப்படும் நடவடிக்ை
122

)
களுக்கிடையிலான வித்தியாசத்தையும் அவர் இதில் காட்டியுள்ளார். இந்தப் புத்தகம் சமய தத்துவ ஆராய்ச்சிக் கட்டுரைகளும் மொழிபெயர்ப்புகளும் என்று நாமஞ்சூட்டப் பட்டிருந்த போதிலும், கிரேக்க, லத்தீன், சமஸ்கிருத, தமிழ் இலக்கியங்களைக் கசடறக் கற்றுணர்ந்த ஒருவரின் ஏராளமான சொந்தக் கருத்துக்களும் அதில் பொதிந்து கிடக்கின்றன. இவர் ஆராய்ந்து வெளியிட்ட கட்டுரைகளினதும் சொற்பொழிவு களினதும் பெருஞ்சிறப்பும் பெறுமதியும், இவர் ஒரு கிணற்றுத் தவளைபோல் இராது ஒரு பிரசித்திபெற்ற நியாயவாதியாகவும் ஆளுந்திறமையுடையவராகவுமிருந்து தமது சொந்த வாழ்க்கையிலேயே இம்மைக்கும் மறுமைக்குமான சாதனைகளை ஒருங்கே ஈட்டியதன் பெறுபேறாக இன்னும் பன்மடங்கு தலைசிறந்து விளங்குகின்றன. மிதிலையில் வாழ்ந்த ஜனக மகாராசனைப் போன்று இவர் வையத்தில் வாழ்வாங்கு வாழ்ந்தார். சேர் பொன்னம்பலம் அருணாசலம் அவர்களையும் அவரைப்போலவே புகழ்பெற்ற அவரின் சகோதரரான சேர் பொன்னம்பலம் இராமநாதன் அவர்களையும் நேரில் அறிந்திருக்கும் பெரும்பாக்கியம் எனக்குக் கிடைத்தது. பல அம்சங்களைத் தன்னகத்தே அடக்கிய பண்பாட்டைப் பற்றி அறிந்து கிரகித்துக் கொள்வதால் நற்பயனடையும் ஒரு உலகத்திற்கு இத்தொகுப்பு நூலை அறிமுகப்படுத்தும் பாக்கியம் எனக்குக் கிடைத்தது எனது நல்லதிர்ஷ்டமென்றே கருதுகிறேன். இந்நூலாசிரியர் மேலே காட்டிய பண்பாட்டை விளக்கிக் கூறுபவரும் அந்தப் பண்பாட்டின் உருவாயமைந்தவருமாவார்.
திரு.ஸி. நமசிவாயம், திரு. என். இரத்தினசபாபதி, திரு (இப்பொழுது இராசவாசல் முதலியார்) ஸி. தியாகராஜா ஆகியோரின் உதவியுடன் அருணாசலம் அவர்கள், இந்து மதக் கல்வியையும் அனுட்டானத்தையும் ஊக்குவித்த, கொழும்பு சைவ பரிபாலன சபை என்றழைக்கப்பட்ட இந்துமத ஸ்தாபனத்தை இலங்கைச் சைவபரிபாலன சபையெனப் புனருத்தாரணஞ் செய்தார். இச்சபையின் முதலாவது தலைவரும் இவரே. பல வழிகளில் அவர் கதிர்காம கூேடித்திரத்தையும் அதற்குரிய காணிகளையும் பாதுகாப்பதில் உதவி புரிந்தார். தம்மை அறிந்த எல்லோராலும் நன்கு மதிக்கப்பட்ட தென்னிந்தியாவிலுள்ள தஞ்சாவூரைச் சேர்ந்த இலக்கணம் இராமசாமிப்பிள்ளை என்னும் பூநீலபூரீ அருள்பரானந்த தேசிகர் அவர்களைத் தமது ஞானாசிரியராகப் பெறும் பாக்கியம் இவருக்குக் கிடைத்தது. இவர் தமது சிநேகிதரான எட்வேர்ட் காப்பென்டர் என்பவரை இந்த ஞானிக்கு அறிமுகம் செய்துவைத்தார். எனவே இவர்கள் மூவரும் ஆத்மீக விஷயங்களைப் பற்றி விவாதிப்பதற்கு அருணாசலம் பெரிய கோட்டு நீதவானாகவிருந்த காலத்திற் குருநாகலில் அடிக்கடி சந்தித்தார்கள்.
1883ஆம் ஆண்டில் அருணாசலம் அவர்கள் மானிப்பாயைச் சேர்ந்த நமசிவாயம் முதலியார் அவர்களின் செல்வப் புதல்வியாரான சொர்ணம் என்பாரைத் திருமணஞ் செய்தார். அவர்களுக்குப் புதல்வர் மூவரும் புதல்விகள் ஐவருமாக எட்டுக் குழந்தைகள் பிறந்தன. மூத்தப் பிள்ளையான பத்மநாபன் என்பார் தம் தகப்பனார் இறப்பதற்குமுன்பே காலமானார். இளைய
இந்துக் கலைக்களஞ்சியம்

Page 169
புதல்வரான இராமநாதன் 1939 ஆம் ஆண்டில் காலமானார். சேர் அருணாசலம் அவர்களின் புதல்விகளுள் இருவரான பூரீமதி மகேஸ்வரி செகராஜசிங்கமும், பூரீமதி மனோன்மணி பூரீ பத்மநாதனும் அவர் இறப்பதற்கு முன்பே காலஞ்சென்று விட்டார்கள். பர்த்தாவுக்கேற்ற பதிவிரதையான லேடி அருணாசலம் அவர்கள் 1940 ஆம் ஆண்டு விண்ணுல கேகினார்கள்.
கேர்ணல் வெட்ஜ்வூட் மக்கள் முன்னிலையில் பேசுவதற்குச் சந்தர்ப்பம் அளிப்பதற்காக 1921 ஆம் ஆண்டு, பெப்ரவரி மாதம் இலங்கைத் தேசியக் காங்கிரஸின் ஆதரவில் நடைபெற்ற ஒரு பொதுக்கூட்டத்தில் சேர் பொன்னம்பலம் காங்கிரஸ் மேடையில் கடைசியாகச் சமூகமளித்து அக்கூட்டத்துக்கு தலைமை வகித்தார். அதை அடுத்து 1921 ஆம் ஆண்டு, மார்ச் மாதம், 15 ஆம் தேதி தற்போதைய அரசியல் நிலைமை' என்னும் பொருள்பற்றி அவர் ஒரு கூட்டத்திற் பேசினார். அங்கு அவர் மேல்வருமாறு கூறினார்:- இப்பொழுது நான் இலங்கைத் தேசிய காங்கிரஸின் தலைமைப் பதவியில் இல்லாதிருப்பதால் என்னால் அதிக சுதந்திரத்துடன் பேச முடிகிறது. அரசியல் சீர்திருத்த இயக்கத்தை ஸ்தாபிப்பதற்கும், பொதுமக்களுக்கு அரசியல் அறிவை கூட்டுவதற்கும், எமது அரசியற் திட்டத்தில் ஒரு நியாயமான சீர்திருத்தத்துக்கான ஆகக் குறைந்த கோரிக்கையின் பேரில் ஒரு உடன்பாட்டை ஏற்படுத்து வதற்குமென 1916 ஆம் ஆண்டில் நான் மேற்கொண்ட கடமையை முடித்துவிட்டு கடந்த ஒக்டோபர் மாதம்தான் அப்பதவியைத் துறந்தேன். அப்படிச் செய்தபின் மக்களுக்கும், சீர்திருத் தத்துக்கும் உத்தியோக பற்றுக்களின்றி தனிப்பட்டவனென்ற முறையில் மிகவும் திறமையாக வேலை செய்ய முடியுமென்பதை நான் உணர்ந்தேன். விஷயங்களைச் சமர்ப்பிப்பதில் காங்கிரஸிலுள்ள சிங்கள அங்கத்தவர்களுக்கும் தமிழ் அங்கத்தவர்களுக்குமிடையில் ஒரு அபிப்பிராய பேதம் ஏற்பட்டது. அது அவருக்கும் காங்கிரஸ்"க்குமிடையில் பிளவை ஏற்படுத்தியது. ஆனால் அதை அவர் சிறிதளவேனும் பொருட்படுத்தவில்லை. தமிழ் மக்களின் அபிப்பிராயத்தைச் சரியான வழிகளில் ஸ்தாபிப்பதற்கும் கூடுமானால் அதற்கு வழிகாட்டுவதற்கும் 1923 ஆம் ஆண்டில் சேர் பொன்னம்பலம் இலங்கைத் தமிழர் சபையை ஸ்தாபித்தார். இந்த ஸ்தாபனம் பிரதானமாக இலங்கையிலும் தென்னிந்தியாவிலும் தமிழர் குடியேறியுள்ள நாடுகளிலுமுள்ள தமிழ் நடவடிக்கைகளைக் கொண்ட ஒரு கலாசார ஸ்தாபனமாக இருக்க வேண்டுமென்பதே அவரது விருப்பம். தமிழர் சபையின் கலாசார நடவடிக்கைகளை அபிவிருத்தி செய்வதற்கும், அதே நேரத்தில் அவர் மனப்பூர்வமாக விரும்பிய சிங்களவர்களுடன் ஒரு உடன்பாட்டை ஏற்படுத்துவதற்கும் அவர் அவ்வளவு காலம் உயிர் வாழவில்லை.
1923 ஆம் ஆண்டின் கடைசியில் அவர் இந்தியாவிலுள்ள புனிதஸ்தலங்களுக்கு யாத்திரை செய்தார். அங்கு ஒரு ஆழ்ந்த மதப்பற்றுள்ளவருக்கான தகுந்த சூழ்நிலையில் அவரது வாழ்க்கையின் இறுதிச் சம்பவம் நிகழ்ந்தது. செல்வங்கள்
இந்துக் கலைக்களஞ்சியம்

எல்லாவற்றிற்கும் விலை மதிக்கவொண்ணாத செல்வமான, தமது நாட்டிற்கும் அதன் மக்களுக்கும் சேவை செய்வதில் செலவு செய்யப்பட்ட ஒரு புனித வாழ்க்கையின் ஞாபகத்தை விட்டு விட்டு 1924 ஆம் ஆண்டு, ஜனவரி மாதம் 9ஆம் தேதி தமது தெய்வ வழிபாடுகளின் மத்தியில் மதுரையம்பதியில் இறைவன் திருவடிநீழலை எய்தினார். அவரது மறைவு அபிப்பிராய பேதங்களின் கூக்குரலை ஒயச் செய்தது. நண்பர்களைப் போலவே அரசியல் விரோதிகளும் கூட, மறைந்த தங்கள் தலைவருக்கு இறுதி மரியாதை செய்வதில் ஒருவரோடொருவர் போட்டியிட்டுக்கொண்டு முன்வந்தனர். அவரது மறைவு ஈடுசெய்ய முடியாத ஒன்றாகும். துக்க சாகரத்தில் மூழ்கிய ஜனசமுத்திர முன்னிலையில் கொழும்பு பொது மயானத்தில் அவரது ஈமக்கிரியைகள் நிறைவேறின.
இவர் காலகதியடைந்தவுடன் இவரது ஞாபகார்த்தத்தை என்றும் நிலைநாட்ட சேர் ஜேம்ஸ் பீரிஸ் அவர்களின் தலைமையில் அருணாசலம் சிலைக்கமிட்டியென ஒரு கமிட்டி ஆரம்பிக்கப்பட்டது. 1930 ஆம் ஆண்டு, ஏப்பிரல் மாதம், 3ஆம் தேதியன்று அரசாங்கசபை மைதானத்தில் அவரது வெண்கல உருவச்சிலையொன்று தேசாதிபதியவர்களாற் திறந்து வைக்கப்பட்டது. இச்சிலையின் மேல்வரும் வாசகம் பொறிக்கப்பட்டுள்ளது.
நிரம்பிய கல்விப் புலமையும் அரசியல் வன்மையும், ஆளுந்திறனும் வாய்ந்த பூரீமான் சேர் பொன்னம்பலம் அருணாசலம் 1853 - 1924 தேச சேவைக்கென்றே நந்நாட்களை அர்ப்பணஞ்செய்த பெருந்தகையாளர் - சட்டமன்றத் திருத்தத்தினை அரிதின் முயன்று முற்றுவித்த வீரர்- இலங்கையிற் சர்வகலா சாலை அமைப்பதற்காய் அருந்தவம் ஆற்றித் தளராதுழைத்த பெருமகன், அவரது நன்றிகளை மறவா இலங்கைவாசிகளால் நிறுவிய நடுகல்,
சேர் அருணாசலம் அவர்களின் உருவப் படங்கள் அவரது பழைய பாடசாலையான றோயல் கல்லூரியிலும் இலங்கைச் சமுகசேவைச் சங்கம், இலங்கைத் தேசிய காங்கிரஸ் முதலியவற்றின் காரியாலயங்களிலும் திறந்து வைக்கப்பட்டன. பேராதனையில் இலங்கைச் சர்வகலாசாலையின் விடுதி மண்டபங்களில் ஒன்றிற்கு அவரது பெயர் சூட்டப்பட்டது. அருணாசலம் அவர்களின் நன்கொடைகளுள் இலங்கைச் சர்வகலாசாலைக்கு அவரால் வழங்கப்பட்ட பெறுமதியான நன்கொடைகளும் இருக்கின்றன.
அவர் பல துறைகளில் ஈடுபட்டுழைத்த உத்தமர். பிரசித்திபெற்ற அவரது கீர்த்திப் பிரதாபம் காலஞ் செல்லச் செல்ல சரித்திர ஏடுகளில் மேன் மேலும் பிரகாசிக்கும். இவர் கடமையுணர்ச்சி மிக்குடையவர். மானம், மரியாதையைப் பேணி நடப்பவர். ஒரு அரசியல் ஞானிக்குத் தேவையான எல்லாக் குணாதிசயங்களும் அவரிடத்திற் காணப்பட்டன. அவர்
123

Page 170
குறிப்பிடத்தக்க தூரதிருஷ்டியுடையவராக விளங்கினார். தூரதிருஷ்டி இல்லாத இடத்தில் மக்கள் அழிந்து போவார்கள் என்று தீர்க்கதரிசி சொலமன் கூறியதைப் போல் இவரும் அடிக்கடி கூறிவந்துள்ளார். தைரியம் அவர் நெஞ்சில் குடிகொண்டிருந்தது. அசையாத நம்பிக்கையும் அவரிடத்திற் காணப்பட்டது. அவருடைய உற்சாகம் அவரைச் சாரும் எல்லோரிடத்தும் பரவுந்தன்மையதாக இருந்தது. நாட்டின் பல்வேறு சக்திகளையும் அவர் ஒருமுகப்படுத்தினார். மேலும் தமது தனித்தன்மையால் அவற்றையெல்லாம் ஒருங்கிணைத்துப் பொதுசன சேவை உணர்ச்சியையும் தேசாபிமான ஓர்மையையும் அச்சக்தி களிடத்திற் புகுத்தினார். இந்நாட்டின் ஆண், பெண் ஒவ்வொருவர் மனதிலும் என்றும் அழியாத ஒரு தேசிய உணர்ச்சியைத் தூண்டியுள்ளார்.
சேர் பொன்னம்பலம் அருணாசலம் அவர்களின் வாழ்க்கையை நாம் தனியாக எடுத்துக் கொள்வோமானால் திடசித்தம், தெளிவான தூரதிருஷ்டி, ஒழுக்கம், உழைப்பு, திறமை முதலிய எல்லாக் குணநலன்களும் ஒருங்கே அமையப்பெற்ற ஓர் உத்தம புருடரைக் காண்போம். இவர் தம் காலத்திலிருந்த அறிஞர்கள் எல்லோரிலும் தலைசிறந்து விளங்கியதோடு இலங்கையின் பிற்கால சந்ததிகளுக்கும் ஒரு முன்மாதிரியாகவும், உற்சாகமூட்டும் ஒரு சக்தியாகவும் இன்னும் இருந்து வருகிறார். இலங்கையின் முன்னேற்றத்துக்கான பல்வேறு மூல காரணங்களைக் கண்டுபிடிக்க இலங்கையர் முயலும் போதெல்லாம், இலங்கை மறுமலர்ச்சியின் பிதாவான சேர் பொன்னம்பலம் அருணாசலம் அவர்களின் பெயரே முதற்கண் தென்படும். அவருடைய நண்பரும் அவரது காலத்தில் வாழ்ந்தவருமான சேர் ஜேம்ஸ் பீரிஸ் இவரைப் பற்றிப் மேல்வருமாறு கூறுகிறார். அவர் இத்தீவின் அரசியல் புனருத்தாரணத்துக்கும் மக்களின் சமூக முன்னேற்றத்துக்கும் முற்காலத்திலோ சமீபகாலங்களிலோ வாழ்ந்த எவரையும்விட அதிக சேவை செய்துள்ளார்.
அருணாசலம், மு
சர், அனவரதவிநாயகம் பிள்ளை (1877 - 1940) உடன் முப்பதுகளிலே சென்னையில் ஏடுகள் பரிசோதனையில் ஈடுபட்டவர் அருணாசலம். சென்னை சைவ சித்தாந்த மகாசமாஜத்துடன் 1934 இலே சென்னை எழுமூரில் ஞானியாரடிகள் தங்கிய காலத்து அவர் இருக்கையில் நடத்தப் பெற்ற சித்தாந்த வகுப்புக்காலம் முதலாகத் தொடர்புடையவராய் இருந்தவர். சமாஜத்தின் வெளியீடுகளிலே இவர் பணியும் கலந்திருந்தது. ரசிகமணி டி. கே. சிதம்பர முதலியாரின் (1882 - 1954) இலக்கிய வட்டத்தினாலே கவரப்பட்டவர்.
சென்னையிலிருந்து 1945 ஜனவரியிலே புறப்பட்டுக் காசி சென்றவர். அங்கு இரு ஆண்டுகள் இருந்தவர். பின்பு சேவாக்கிராமம், சிதம்பரம் எனும் இடங்களில் இருந்து விட்டுத்
124

திருச்சிற்றம்பலம் வந்தவர். 1945 இலிருந்து பன்னிரு வருடம் பெரும்பான்மையும், குழந்தைப் பராமரிப்பு, காந்தியக்கல்வி முறை ஆகிய துறைகளில் ஈடுபட்டிருந்தவர். அதற்கு முன்பு, 1944 வரை, இலக்கிய சமய விடயங்களில் அவர் கவனம் செலுத்தியவர். ஐம்பதுகளிலிருந்து மீண்டும் இலக்கிய சமய விடயங்களில் அவர் கவனம் சென்றது. பத்தாம், பதினோராம், பன்னிரண்டாம், பதின்மூன்றாம் நூற்றாண்டுகளின் தமிழ்ப் புலவர் வரலாறுகளை 1970 இலிருந்து தொடர்ந்து வெளியிட்டுள்ளமை கவனிக்கத் தக்கது. தமிழிலும் ஆங்கிலத்திலும் பல அரிய கட்டுரைகளைத் தொடர்ந்து எழுதி வருபவர்.
1940ஆம் ஆண்டு சைவசித்தாந்த மகாசமாஜம் வெளியிட்ட சைவ சித்தாந்த சாத்திரம் பதினான்கின் மூலமும் உரையும் கொண்ட இரண்டாம் பதிப்பு அருணாசலம் பார்வையில் வந்தது. 1942 இலே தருமபுரப் பதிப்பாக வந்த மெய்கண்ட சாத்திர மூலப் பதிப்பும் இவர் பார்வையில் வந்ததேயாம். திருவானைக்கா வுலாவினைக் குறிப்புரையுடனும் முக்கூடற் பள்ளினையும் 1940 இலும் திருமலை முருகன் பள்ளினை 1944 இலும் வெளியிட்டவர். தத்துவப் பிரகாசத்தைப் பழையவுரையுடன் பதிப்பித்தவர்; திருக்களிற்றுப்படியார் பழைய அனுபூதியுரையினை 1962 இலே வெளியிட்டவர்; திருவாசகம் தொடர்பாக முன்னர் எழுதிய கட்டுரைகளை 1965 இலே திருவாசகம் சில ஆராய்ச்சிக் குறிப்புகள் எனத் தொகுத்தளித்தவர்.
அருணாசலம் 1970 முதல் வெளியிட்ட தமிழ்ப் புலவர் வரலாறு எனும் தொடர் நூல்கள் விரிவாகவும் கனமாகவும் ஆய்வுக் கண்ணோட்டத்தில் எழுதப்பட்டுள்ளன.
தமிழ்முரசு, குமரன், குமரிமலர், சக்தி, சித்தாந்தம்
முதலிய தமிழ்ச் சஞ்சிகைகளிலும் SAIVA SIDDHANTA,
BULLETIN OF THE INSTITUTE OF TRADITIONAL CULTURES
(MADRAS) முதலிய ஆங்கிலச் சஞ்சிகைகளிலும் அவர் பல விடயங்களைச் சிறப்பாகச் சமய விடயங்களை எழுதியுள்ளார்.
(பொ.யூ.)
ceigB600 T3FGOrb, cup (1907 - 1988)
யாழ்ப்பாணம் கொக்குவில் கிழக்கில் 1907 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் பதினேழாம்தேதி சண்முகம் முத்துத்தம்பி, அன்னப்பிள்ளையின் சிரேட்ட புதல்வராகத் தோன்றியவர் அருணாசலம், கொக்குவில் இந்து ஆங்கில பாடசாலையிலும் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியிலும் பயின்று கொழும்பு பல்கலைக்கழகக் கல்லூரியிற் சேர்ந்து 1929 இலே இலண்டன் பல்கலைக்கழக "இண்டர்சயன்சு” தேர்விலே சித்தியடைந்தவர்.
கொக்குவில் இந்து ஆங்கிலப் பாடசாலையில் ஆசிரியராக வேலை ஆரம்பித்து யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரிக்குக் கணிதம், புவியியல் பாடங்களின் ஆசிரியராக மாற்றம் பெற்றுச் சென்றவர். வேறு கல்லூரிகளிலும் சிறிது காலம் ஆசிரியராகப் பணிபுரிந்துள்ளார். 1935 இலே திருமணம் புரிந்தார்.
இந்துக் கலைக்களஞ்சியம்

Page 171
கொக்குவில் கிழக்கு நாமகள் இந்து தமிழ்ப் பாடசாலையின் தோற்றத்திலும் நந்தாவில் அம்மன் கோயில் நடைமுறைகளிலும் அவருக்குப் பெரும் பங்குண்டு. இந்தியாவுக்குப் பலமுறை தல யாத்திரை செய்தவர்.
இருபதுகளிலே பூரீ யோகர் சுவாமிகளின் போதனைகளாற் கவரப்பட்டு அவர் கருத்துக்களை நன்குணர்ந்து அவற்றை உலகினரின் நன்மை கருதி ஆங்காங்கே வெளிப்படுத்தி வந்தவர்.
1969 முதல் பெரும்பாலும் கொழும்பிலே வசித்தவர். 1987 இலே தென்னாபிரிக்கா சென்று வாழ்ந்து கொண்டிருந்தபோது 1988 ஆம் ஆண்டு ஜூலாய் மாதம் இருபத்தேழாம் தேதி சிவபதமடைந்தார்.
அருணாசலமவர்கள் பூரீ யோகர் சுவாமிகளின் போதனைகளை விளக்குவதிலே பெரும்பங்கு கொண்டவர். சுவாமிகளுடைய போதனைகளின் உள்ளர்த்தங்கள் பலருக்குப் புரியாது. சித்தர்களுடைய கூற்றுக்களின் தன்மையை யோகர்சுவாமிகளின் சிந்தனைகளிற் காணலாம். எனவே உலகினருக்கு நன்மை செய்யும் நோக்குடன் அவருடன் நெருங்கிப் பழகிய அருணாசலமவர்கள் சுவாமிகளின் நற்சிந்தனைக்கு விரிவான விளக்கவுரை எழுத முற்பட்டார்.
அருணாசலமவர்கள் எழுதிய நற்சிந்தனை அரும்பொருள் உரையின் முதலாம் பாகம் 1978 இலே அச்சிடப்பெற்று 1979 இலே வெளிவந்தது; இரண்டாம் பாகம் 1979 இலே அச்சிடப் பெற்று 1980 இலே வெளிவந்தது; 1981 இலே இந்து விவகாரங்களின் அமைச்சு அருணாசலமவர்கள் எழுதிய யோகர்சுவாமிகளின் கிளிக்கண்ணி உரையினை வெளியிட்டுள்ளது.
பூரீ யோகர் சுவாமிகளின் நற்சிந்தனையைச் சிறப்புற விளக்கியிட்ட அருணாசலமவர்கள் 1985இலே சிவயோக சுவாமியார் வரலாறும் சாதனைகளும் எனும் நூலினை எழுதி வெளியிட்டனர். இந்நூல் மிகவும் விரிவாக அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. சுவாமிகளின் வாழ்க்கையில் நடந்த உலகியல் ஆன்மீக நிகழ்ச்சிகளை வரலாற்று ரீதியில் தொடர்ச்சியாக அமைத்து தேவையான விளக்கங்களை அளித்துச் சுவாமிகளின் போதனைகளுக்கு வளஞ் சேர்த்துள்ளார் ஆசிரியர். (பொ.யூ)
அருணாசல முதலியார்
19த்தொன்பதாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் தமிழ்நாடு திருமயிலையைச் சேர்ந்த தாச்சி அருணாசல முதலியார்.
கொடியிடைமாலை, சிதம்பரஞ் சிவகாமி யம்மை பதிகம், திருமயிலை கபாலீசர் பதிகம், திருமயிலை கற்பிகாம்பிகை பதிகம், திருமுல்லைவாயில் மாசிலாமணிசர் பதிகம் என்பனவற்றைப் பாடியவர். (பொ.யூ.)
இந்துக் கலைக்களஞ்சியம்
 

அருணாசல முதலியார்?
வீரவநல்லூரினர்; அவ்வூரும் வீரை என மருவி வழங்கும்.
விரைப்பூமிநாதர் கலித்துறையந்தாதி
வீரைப் பூமிநாதர் ஆசிரிய விருத்தம்
வீரை மரகதவல்லியம்மன் ஆசிரிய விருத்தம் என்பனவற்றைப் பாடியவர். (பொ.பூ)
அருணாசல முதலியார்
பத்தொன்பதாம் நூற்றாண்டிலே தமிழ் நாட்டில் வசித்தவர் கோகுலாபுரம் அருணாசலமுதலியார்; அந்நூற்றாண்டின் கடைக்கூறிலே தமிழ் நூல்கள் பலவற்றைப் பதிப்பித்தவர்.
அரிச்சந்திரபுராணவுரை (1875), அஸ்வமேத பர்வம் (1875), இராமநாடகம், நந்தனார் சரித்திரக்கீர்த்தனையும் சிதம்பரக் கும்மியும் (1882), நல்லதங்காள் நாடகம் (1875), முத்தையன் விலாசமென்னும் வள்ளியம்மன் விலாசம் (1895), வானாசுர நாடகம் (1890), சாரங்கதரன் கதை என்பன
அவற்றிற் சிலவாம். (பொ.யூ.)
அருணாசலேசுரர் சாரப்பிரபந்தம்
திருவண்ணாமலை அருணாசலேசுரர் மீது பாடப் பெற்றது சாரப்பிரபந்தம். காப்பு வெண்பாவையும் பதினைந்து ஆசிரிய விருத்தங்களையுமுடையது சாரப்பிரபந்தம்.
அருணாசலேசுரர் சாராப்பிரபந்தம் நமசிவாய சுவாமிகள் பாடியதாகும்.
எளிமையான மொழிநடையிலே இறைவனுக்கும் புலவருக்கும் இடையே நிகழும் சம்பாஷணைப் போக்கிலே அமைந்தது சாரப்பிரபந்தம். (பொ.யூ.)
9 f 5) 용 d வத்ஸராஜன்
19தின்மூன்றாம் நூற்றாண்டின் முற்பகுதியில் வாழ்ந்தவர்; சோணாட்டு குன்றவத்தனக் கோட்டத்து இல்லத்தூர் நாட்டு அரும்பாக்கமுடையார், நந்தா விளக்கு வைத்துச் சிவநெறியில் ஒழுகியவர்; பாரதத்தைத் தமிழ்ப்படுத்தியவர்.
இச் செய்திகள் மூன்றாம் குலோத்துங்க சோழனின் (1178 - 1216) ஆட்சியின் 32ஆம் ஆண்டு (1210) எழுந்த திருவாலங்காட்டு சாசனம் மூலம் அறியப்படுவன. (பொ.யூ.)
125

Page 172
அருந்ததி
சப்த ரிஷிகளில் வசிட்டரின் மனைவி; அருந்ததி பதி
விரதைகள் யாவரிலும் சிறந்து விளங்கினாள். கற்பும் கணவன்
சேவையும் அவளுக்கு அளவில்லா ஆற்றலை அளித்தன.
இமயத்திலே சப்தரிஷிகள் தங்கியிருந்தபோது பன்னிரு வருடம் தொடர்ந்து மழை பெய்யாததால் இருடிகள் மிகவும் அல்லற்பட்டனர். அப்பொழுது அருந்ததி கடுந்தவம் மேற்கொண்டு, பிராமண வேடத்தில் அதிதியாக வந்த சிவபிரானுக்கு எளிய கிழங்கு வகைகளை விருந்தாக வழங்கி, அவர் ஆசீர்வாதம் பெற்றதோடு மழை வளமும் ஏற்படக் காலானாள் என்று மகாபாரதம் சாலிய பருவம் கூறும்.
சரஸ்வதி தீரத்திலே கணவனுடன் தவமிருந்து அருந்ததி சமாதி அடைந்ததாகப் பாரதம் வனபருவம் கூறும்.
சப்தரிஷிகளின் மனைவியர்பால் ஏற்பட்ட ஆசையால் அக்கினி பகவான் வனத்திலே அலைந்தபோது, அவனை அடைய விரும்பிய சுவாகா ஏனைய ரிஷிபத்தினிகளுடைய வடிவங்களை எடுத்து அக்கினியுடன் கூடிய போதும் அருந்ததியினுடைய வடிவத்தை எடுக்க முடியவில்லை.
சிவகருப்பத்தை இந்திரனிடமிருந்து பெற்ற சப்தரிஷிகள் அதனை முத்தீயிற் பெய்து பின்பு எடுத்துத் தம் மனைவியரிடம் கொடுத்தபோது அருந்ததி ஒழிய ஏனைய அறுவரும் உண்டு சூன் முதிர்ந்து சரவணப் பொய்கையிற் பயந்ததாகப் புராணங்கள் கூறும் கதை பரிபாடலிலும் உண்டு (5.27-45).
அருந்ததியின் கற்பினைப் புகழ்ந்தும் அவள் வானத்தின் வடதிசையில் நட்சத்திரமாக ஒளிவிடுவதைக் குறித்தும் பண்டைய தமிழ்ப் பாடல்கள் கூறுவன.
(1) வானத்து அணங்கு அருங்கடவுள் (அகநா. 1617-18) (2) வடமீன் புரையும் கற்பின் (புறநா. 1228), (3) “பெருநல் வானத்து வடவயின் விளங்கும் சிறுமீன் புரையுங் கற்பின் நறுநுதல்” (பெரும்பாண். 302,303), (4) "அருந்ததி அனைய கற்பின்’ (ஐங், 442) (5) "வடமீன் போல தொழுதேத்த வயங்கிய கற்பினாள்” (கலி 2.21), (6) 'செம்மீனனையள் நின் தொன்னகர்ச் செல்வி (பதிற். 3128), (7) கடவுள் ஒரு மீன் சாலினி (பரி 5,44), (8) தீதிலா வடமீனின் திறம் இவள் திறம் என்றும் (சிலப் 1.27) (9) வடமீன் கற்பின் (சிலப். 5.229).
அருந்ததியின் கற்புத்திறனைத் திருமண நாளிலே ஒவ்வொரு மணமகளுக்கும் காட்டும் மரபு போற்றப்பட்டு வருகின்றது. சீவகசிந்தாமணியிலே இம் மரபின் பழைய ஆட்சி காணப்படுகின்றது (2469), தமக்குரிய வாழ்நாள் கெடுதலை யுற்றவருக்கு அருந்ததி மீன், தெரியாது ஒளிக்கும் என்ற நம்பிக்கையும் உண்டு (சிந்தாமணி 2141). (பொ.பூ.)
126

அரும்பாத்தை வேதவிநாயகர் பிள்ளைத்தமிழ்
இது தென்னார்க்காடு திருக்கோவலூர் வட்டத்திலுள்ள அரும்பாத்தை என்னும் சிற்றுாராம் திருத்தலத்திற் கோயில் கொண்ட வேதவிநாயகர் மீது பாடப் பெற்ற பிள்ளைத் தமிழ்ப்பிரபந்தமாகும்.
இப்பிள்ளைத் தமிழ்ப் பிரபந்தத்திலே காப்புப் பருவம் நீங்கலான செங்கீரை, தால், சப்பாணி, முத்தம், வருகை, அம்புலி, சிறுபறை, சிற்றில், சிறுதேர்ப் பருவங்களிற் பருவத்திற்குப் பத்துப் பாடல்களாகத் தொண்ணுறு பாடல்கள் உள்ளன. இப்பருவத்திலே தனித்தனியே திருமால், சிவபெருமான், உமை, திருமகள், சரஸ்வதி, பிரமன், இந்திரன், சத்த மாதர்கள், துர்க்கை, முப்பத்து முக்கோடி தேவர்கள் காப்பு வேண்டப்பட்டுள்ளனர். எனவே இப் பிள்ளைத்தமிழிழ் 101 பாடல்களைக் கொண்டது.
அரும்பாத்தை வேத விநாயகர் பிள்ளைத் தமிழ் ஆசிரியரை அறியமுடியவில்லை. ஆயினும் அவர் காலம் அபிராமிப்பட்டருக்கும், கவிராகூடிஸ கச்சியப்பருக்கும் பிற்பட்டது என்பது தெளிவாகும். கச்சியப்பரின் விநாயக புராணத்திற் பயிற்சியுடையவராய் ஆசிரியர் காணப்படுகிறார். அபிராமிப்பட்டர் செய்தி அம்புலிப் பருவத்திலே (செய்யுள் - 7) காணப்படுகின்றது.
சென்னை அரசின் கீழைத்தேய சுவடிகள் நிலையத்திற்காகத் தி. சந்திரசேகரன் தொகுத்து 1956 இலே பதிப்பித்த பிள்ளைத் தமிழ்க் கொத்தில் அரும்பாத்தை வேத விநாயகர் பிள்ளைத்தமிழ் இடம் பெறுகின்றது. (பொ. பூ)
அருள்பரானந்த சுவாமிகள்
தமிழ்நாடு தஞ்சாவூரினைச் சேர்ந்தவர்; இலக்கணம் இராமசாமிப்பிள்ளை எனப் பூர்வீகத்தில் வழங்கப் பெற்றர்; தஞ்சை அரசிலே பணிபுரிந்தவர்; ஆண் சந்ததி இன்றித் தஞ்சை மன்னன் இறந்தபோது ஆங்கிலேயர் பறித்துக் கொண்ட அரசைத் தம் பேரனுக்குப் பெற்றுக் கொடுக்கும்படி சேர். முத்துக்குமார சுவாமியிடம் (1834 - 1879) தஞ்சை மகாராணியாலே தூது அனுப்பப்பெற்றவர்; அரச குடும்பப் பிளவாற் சித்தியாகாத காரியத்தைப் பிளவு நீங்கியபோது நிறைவேறறித் தரும்படி சேர். பொன்னம்பலம் இராமநாதனிடம் (1851 - 1930) மீண்டும் அரசியாலே தூது அனுப்பப் பெற்றவர்; அக்காலத்தில் இராமநாதனும், அருணாசலமும் இவர் அறிவாற் கவரப் பெற்றுச்
சீடர்களானார்கள்.
ஈழத்தின் இரு பெருந் தலைவர்களின் சமய, தத்துவ, யோக நெறிகளின் வழிகாட்டியாக விளங்கிய பெருமையுடையவர்; இவருடைய மேதா விலாசத்தை அருணாசலம் மூலம் அறிந்து எட்வேட் காப்பென்டர் நேர்முகமாகச் சந்திக்க ஈழம் வந்தவர்.
இந்துக் கலைக்களஞ்சியம்

Page 173
அருள்பரானந்தர் பரிபூரணமடைந்த போது இராமநாதனும் அருணாசலமும் தஞ்சாவூரிலே அவருக்குச் சமாதி எடுத்து அதனைப் பராமரிக்கவும் வசதிகள் செய்து வைத்தனர்; அருள்பரானந்தர் மரபினரான சு. நடேசபிள்ளையை ஈழத்திற்கு வரவழைத்து அவரை நன்னிலைக்கு உயர்த்தி வைத்தனர்.
அருளம்பல சுவாமிகள் 1865 - 1925
யாழ்ப்பாணம் வண்ணார்பண்ணையிலே பிறந்தவர்;
இராமநாதர், சின்னாச்சிப்பிள்ளை என்போரின் புதல்வர்.
மற்றிக்குலேஷன் தேர்விலே சித்தியடைந்து இளம் வயதிலே அரசாங்க உத்தியோகம் பெற்றவர். பகுத்தறிவுவாதிகளுடன் சேர்ந்து அவர்களுடைய நூல்களை நன்கு கற்றவர். யாழ்ப்பாணம் கச்சேரியிலே பிரதம லிகிதராகக் கடமை புரிந்த காலத்திலே குழந்தைவேற் சுவாமிகளின் சீடரானவர்.
மட்டக்களப்பிலும் சில காலம் உத்தியோகம் பார்த்தவர். அப்போது சேர். பொன்னம்பலம் அருணாசலம் அவருடைய மேலதிகாரியாக விளங்கியவர். மட்டக்களப்பிலே கிறித்தவப் பரம்பலைத் தடுக்குமுகமாக மார்க்கண்டு முதலாளியின் பண உதவியோடு சில பாடசாலைகளைத் திறந்து நடப்பித்தவர்.
நாற்பத்தொன்பது வயதிலே வேலையிலிருந்து ஒய்வு பெற்று யாழ்ப்பாணம் மீண்டு ஆத்மீக சாதனையிலே தீவிரமாக ஈடுபட்டவர்.
சுத்தாத்வைத அச்சியந்திரசாலை நிறுவி நற்பணி ஆற்றியவர். மட்டக்களப்பிற் கல்விப் பணிமுட்டுப்படாமல் நடைபெற அங்கு இடையிடையே சென்று அதனைக் கவனித்து வந்தவர். வடக்கிலும் கிழக்கிலும் தம் ஆத்மீகப் பணிகளைத் தொடர்ந்து மேற் கொண்டவர். தனது குருநாதருடைய சமாதித் திருப்பணியிலே முக்கிய கவனம் செலுத்தியவர். (பொ.யூ.)
அருளம்பல சுவாமிகள் பிறப்பு
அருளம்பல சுவாமிகள் வேலுப்பிள்ளை, இலட்சுமி அம்மாள் ஆகியோரின் புதலவராவர். வேலுப்பிள்ளை, வியாபாரி மூலையைச் சேர்ந்தவர். இலட்சுமி அம்மாள் வதிரியைச் சேர்ந்தவர். வேலுப்பிள்ளை தமது முதலாந்தார மனைவி செல்வம் இறந்தபின்னர் இலட்சுமியை இரண்டாம் தாரமாக மணம்புரிந்தவர். அருளம்பல சுவாமிகளுடன் கூடப்பிறந்த சகோதரி பொன்னாச்சி. அருளம்பலம் சிறுவனாக இருக்கும்போதே தந்தை வேலுப்பிள்ளை இறந்துவிட்டார். இலட்சுமி அம்மாள் இரண்டாந்தாரமாக, வதிரியில் வதிந்த வாரித்தம்பி என்பவரை மணஞ் செய்து சின்னப்பிள்ளை, அன்னப்பிள்ளை எனும் இரு பெண் மக்களைப் பெற்றெடுத்தார். அன்னப்பிள்ளை முன்னர் இறந்துவிட்டார். சின்னப்பிள்ளை சமீபத்திலதான் இறந்தார்.
பிறந்ததினம்
சுவாமி அருளம்பலம் அவர்களுடைய பிறந்த தினத்தினை இதுதான் எனத் திட்டவட்டமாகச் சுட்டக்கூடிய சான்றுகள்
இந்துக் கலைக்களஞ்சியம்

எதுவும் இல்லாவிடினும் மேலைப் புலோலி சைவப் பிரகாச வித்தியாசாலையிற் பெறப்பட்ட அக்காலத்துச் சேர்வுடாப்பு சுவாமி ஏறத்தாழ 1880 ஆம் ஆண்டிற் பிறந்தார் என்பதனை உறுதி செய்கின்றது. அதில் 01.08.1890 இல் வயது பத்து எனக் குறிப்பிட்டுள்ளது.
1927ஆம் ஆண்டு ஆடி மாதத்தில் அச்சிடப்பெற்ற அருவாச தேவ ஆரத்தின் முகவுரையில் சுவாமிகள் “எனக்கு இப்போ ஏறக்குறைய 45 வயதாகிறது” எனக் கூறுவதைக் கொண்டும், 1926 ஆம் ஆண்டு கார்த்திகையில் வெளியிடப்பட்ட கற்புநிலை நூலில் சுவாமிகள். “இப்போ ஏறத்தாழ 45 வருடங்களுக்கு முன் அண்டப் பூட்டிற்கும் எனக்கும் கொடுக்கப்பட்ட பாசம் அறுந்து விட்டது” எனக் கூறுவதைக் கொண்டும் பார்க்கும்போது அவர் 1880 ஆம் ஆண்டிலே பிறந்தார் என்பது பெரிதும் பொருந்துவது போல அமைகிறது. அருவாச தேவ ஆரம் 1927ஆம் ஆண்டு அச்சிடப்பெற்றாலும் வெளியிடப்பெறுவதற்கு ஒரு சில காலம் முற்படவே அந்நூல் எழுதப்பெற்றிருக்கும் சாத்தியத்தினை அந்நூல் முகவுரை மூலம் ஊகிக்க முடிவதால் சுவாமிகள் பிறந்த ஆண்டு 1880 எனக் கொள்வது பொருத்தமானதாகலாம்.
தந்தை சின்னையா வேலுப்பிள்ளை அவர்கள் மீதும் தாயார் இலட்சுமிப்பிள்ளையவர்கள் மீதும் பாடப்பெற்று சுவாமிகளின் படத்துடன் வெளிவந்துள்ள தோத்திரத்துண்டுப் பிரசுரத்தின் மூலம் சுவாமிகள் சித்திரை மாதத்திற் பிறந்தார் என்பது அறியக் கூடியதாகும். அத்துடன் பிரசுரமாகாத கையெழுத்துப் பிரதி ஒன்றின் மூலம் சுவாமிகள் ரேவதி நட்சத்திரத்திற் பிறந்தார் என்பதும் அறியலாம். ஆதலால் சுவாமிகளின் பிறப்பு 1880 ஆம் ஆண்டு சித்திரை மாதத்து ரேவதி நட்சத்திரத்தன்று எனக் கொள்ளலாம். 1880ஆம் வருடமான விக்கிரம ஆண்டுப் பஞ்சாங்கத்தின்படி இத்தினம் 07.05.1880 என அமைவதால் இத்தினமே அருளம்பல சுவாமிகள் பிறந்த தினமாகக் கொள்ளக் கூடியதாகும்.
கல்வி
வீட்டுச் சூழ்நிலை காரணமாக இளம் பிராயத்திலிருந்தே அருளம்பலம் பாட்டியார் (தந்தையின் தாயார்) காளியம்மையின் ஆதரவில் வியாபாரி மூலையில் வளர்ந்தார். அவரது ஆரம்பக் கல்வி எங்கு ஆரம்பித்தது என்பது தெளிவில்லாவிடினும் பத்து வயதில் 1.8.1890இல் மேலைப் புலோலி சைவப்பிரகாச வித்தியாசாலையிற் சேர்ந்து 23.10.1894 வரை நான்காண்டுகள் படித்தார் என்பது தெளிவு. மேலும் சுவாமிகள் தமது நூலொன்றில் தம்பசிட்டிப் பள்ளிக் கூடத்திற் படித்தமையைச் சுட்டுவதினின்று மேற்படி பாடசாலையிலேயே அவர் படித்தார் என்பது உறுதியாகின்றது. மேலைப் புலோலி சைவப்பிரகாச வித்தியாசாலையிற் கல்வி கற்கும்போது சதாவதானி நா. கதிரவேற்பிள்ளை அங்கு 1893 ஆம் ஆண்டுவரை ஆசிரியராகக் கடமையாற்றியுள்ளார். படிக்கின்ற காலத்திற் சுவாமிகளுக்குக் கதிரவேற்பிள்ளையுடன் நெருங்கிய தொடர்பிருந்தமை ஊரவர்களாற் கூறப்படுகின்றது. பாடசாலையிலிருந்து விலகுவதற்குக் காரணம் பிறவூர் எனப்
127

Page 174
பாடசாலையில் உள்ள ஆவணத்திற் குறிப்பிடப்பட்டிருக்கின்றது. எனினும் அருவாசகதேவ ஆரத்தின் முகவுரையிலே சுவாமிகள் “தனது நடைவழிக்கு அந் நாளைய கல்வி நடப்பு ஒத்துவராததால் அது தன்னில் ஏறவில்லை” எனக் குறிப்பிட்டுள்ளமையும் அப்போது பள்ளிக் கூடத்தை மதித்துப் போகாது விடுவதானேன் எனக் குறிப்பிட்டுள்ளமையும் கருதத் தக்கமையாகும். பெரும்பாலும் இந்நிலையினால்தான் ஐந்தாம் வகுப்புச் சித்தி எய்திய நிலையில் சுவாமிகள் பாடசாலைக் கல்வியில் நாட்டமின்றி வெளியேறினார் என எண்ணத் தூண்டுகிறது. இத்துடன் பிறவூர் (கம்பளை) செல்வதும் காரணமாயிருந்திருக்கலாம்.
அருளம்பல சுவாமிகளின் பள்ளிக்கூடக் கல்வி பாரதியைப் போல ஐந்தாம் வகுப்பு வரையே அமைந்திருந்தாலும் அவர் பின்பு பல நூல்களைக் கற்றுணர்ந்தமையை ஊகிக்க முடிகின்றது. கைவசம் கிடைத்த நூல்களூடாக நோக்கும்போதே பல பாடல்களைப் பாடிய புலமையினைச் சுவாமிகள் கொண்டிருந்தார் என்பது தெளிவாகும். அருளம்பலம் சந்தேக நிவர்த்தியில் வருகின்ற பாடல்கள் கருத்துக்களூடாக அவர் இராமாயணம், பாரதம், புராணங்கள், திருமந்திரம், அருணகிரிநாதர் பாடல்கள், பட்டினத்தார் பாடல்கள், தேவாரப் பாடல்கள், திருக்குறள், சித்தர் பாடல்கள், சித்தாந்த சாஸ்திரங்கள், வேதாந்த நூல்கள் போன்றனவற்றிலே பரிச்சயம் பெற்றிருந்தமை புலனாகின்றது. இதனைப் பின்னர் விரிவாகக் காண்போம்.
கல்வியானது மெய்யுணர்வினை உடைய இறைவனது தாள்களைப் பணிகின்ற தன்மையைத் தராவிடின் அந்தக் கல்வியினால் ஏதும் பயனில்லை என்ற கருத்தினைப் பொய்யா மொழிப்புலவன்,
"கற்றதனால் ஆயபயன் என்கொல் வாலறிவன்
நற்றாள் தொழார்அர் எனின்’ என அழகுற எடுத்துரைத்தான். கல்வியானது இறைவனது உண்மையினை எடுத்தியம்பும் வகையில் அமைய வேண்டுமென எண்ணங் கொண்ட அருளம்பல சுவாமிகள் வள்ளுவரின் மேற்கூறிய கருத்தினையே மேலும் விரிவுபடுத்தி நிற்கின்றமையைக் காணலாம். கல்வியின் பயனால் இறைவன் தாள்களை வணங்குவதுடன் அவ்விறைவன் யாரென அமையும் தத்துவ விசாரத்தினைத் தருவதாக அமைய வேண்டி,
"கற்றதனாலாய பயன் கணித்துநிற்கும் வாலறிவு நற்றாழைத தொழுவதெனின் நற்றாள்யார் வாலறிவார்”
எனக் கூறும் வகையில் குறளைக் கற்று விளக்கம் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
அருளம்பலசுவாமிகள் “எழுத்து, இலக்கணம், நிகண்டு, இலக்கியம் என்பன தாம் கற்றறிந்ததல்ல” என ஏற்கின்ற போதிலும் “பொய்யுலகை நடப்பைக் கைக்கொண்டு நடக்கப் புகுந்தவர்கள் தங்கள் நடப்புக்கேற்ற வழியாகப் பல சாத்திரங்களையும் செய்திருக்கலாம். ஆகையால் அவை எனது
28

நடைவழிக்கு ஒத்துவராததால் நானும் எனது நடைக்கு ஏற்ற வகையில் நூல் செய்தேன்’ எனக் கூறுகின்றார். “இறையனாரகப் பொருள் போன்ற நூல் ஞான முடிவான நூலாயிருக்கலாம் என எண்ணி எடுத்து விரித்துப் பார்த்த போது அதில் எழுத்துக்களைப் பிய்த்துப் பிடுங்கி அடுத்துத் தொடுத்திருந்ததால் அது எனக்குக் கற்றுக்கொள்ளச் சுகப்படவில்லை ஆனதால் விட்டு விட்டேன்’எனக் குறிப்பிட்டுள்ளமையும் காணலாம். இதிலிருந்து இறையனாரகப் பொருள் போன்ற நூல்களைத் தனது சொந்த முயற்சியிலேயே கற்க முற்பட்டாரென்பது பெறக்கூடிய தாகும். இவ்வாறே இதர நூலறிவினையும் பெற்றிருக்கலாம் எனக் கொள்வது பொருத்தமாகும்.
தொழில்
அருளம்பலம் தமது இளமையில் இன்னல் பலவற்றை எதிர்கொள்ள வேண்டி இருந்தது. அவரது பாட்டியார் காளியம்மையும் செல்வச் செழிப்போடு இருந்தாரில்லை. இளமைக் காலத்தில் விவசாயம் செய்வதற்கும் வாணம், மத்தாப்பு போன்ற சிறுதொழில் செய்வதற்கும் பிறருக்கு உதவியாய் இருந்தார். கம்பளையில் வாழ்ந்த தமது உறவினர் பரமுப்பிள்ளையின் பலசரக்குக் கடையில் சிறிது காலம் வேலை செய்தார். சில காலத்தின் பின்னர் கம்பளையை விட்டு வியாபாரி மூலைக்குத் திரும்பி வந்தார். கடையிற் பெற்றிருந்த அனுபவத்தால், தனியாக ஒரு கடை வைத்துத் தொழில் செய்ய விரும்பினார். அதன் நிமித்தம் தமது சொத்துக்களை ஈடுவைத்தும் விற்றும் மட்டக்களப்பிற் புகையிலை வியாபரம் செய்தார். ஆனால் சுவாமிகள் எதிர்பார்த்த வகையில் தொழில் வளர்ச்சியடையாது வீழ்ச்சியடையவே பெரும் ஏமாற்றத்திற்கும் துன்பத்திற்கும் உள்ளானார்.
இறை நாட்டம்
அருளம்பலம் தொழில் முயற்சிகளினால் ஏமாற்றமடைந்த
வேளை நோயினாலும் பீடிக்கப்பட்டுத் துன்புற்றிருந்தமையை
அவரது பாடல்கள் மூலம் அறிகின்றோம்.
"சுட்டபணி காரமெல்லாம் சுமையாக வந்திறங்க மட்டக் கிளப்பதனில் வாங்கியபுண் னென்றாரே'
என நாகை நீலலோசனி அம்மை ஊஞ்சலிலும், “.நோய் கொண்டே தேக மெங்கும் மான்படு புள்ளி போல வடுக் கொண்டே வருத்த முற்றேன்” எனவும்
"என்னரசேநான் படும்பாட்டை யார்க்குரைப்பேன்
யார்க்குரைப்பேன் மின்னலான தேகத்துள்வெந்து துள்ளி யாடுகின்றேன் இன்னலினைத் தீர்த்தென்னை யிச்சிறைச்சாலையில்
நின்று பின்னலற நின்கருணைப் பேர்நோக்காற் பிரிப்பாயே’
எனவும் அருவாச தேவ ஆரத்திலும் சுவாமிகள் குறிப்பிட்டார்.
இந்துக் கலைக்களஞ்சியம்

Page 175
துன்பச் சுமையின் காரணமாகவே சுவாமிகளின் மனம் அதிகம் ஆன்மீக நாட்டத்தில் மூழ்கியதென எண்ணக்கூடியதாக உள்ளது. அவனின்றி ஒர் அணுவும் அசையாது என்பது போல அனைத்துச் செயல்களுக்கும் இறைவனே காரண கர்த்தா என்பதனை உணர்ந்தார். எல்லாச் செயலும் இறைவனது செயலாக நோக்க முற்பட்டார். இந்நிலையினை,
“எச்செயலும் நீ செய்கின்றாய் எனைக் குற்றம் செய்த தென்றாய்” எனச் சீவதரிசியிலும், “எல்லாம் கடவுள் செய லெப்படியாய் நடக்குதம்மா’ என நீல லோசனி அம்மை ஊஞ்சலிலும், அழகாகக் குறிப்பிடுகின்றார். மேலும்,
'வஞ்சகமும் நோய் பேய்களும் வந்ததுன்றன்
செயலினாலோ
மிஞ்சுதலாய் வேறோர்செய்த மிகையாதனா லுதித்திட்டதோ' எனத் தீமையான செயல்களுக்கும் இறைவனே பொறுப்பானவன் என எடுத்தாள முற்படுவதும் நோக்கத் தக்கதாகும்.
தொழில் முயற்சிகளின் பிற்பட, முப்பது வயதுக்குட்பட்ட காலப்பகுதியில் சுவாமிகளின் உலகியல் நாட்டம் இறையியல் நாட்டமாக நன்கு மலரத் தொடங்கியது. உள்ளூர் ஆலயங்களை வழிபட்டதுமன்றி கதிர்காமம், திருக்கேதீஸ்வரம், திருகோணமலை போன்ற தலங்களுக்குச் சென்று தரிசித்துள்ளார். வியாபாரி மூலையில் உறவினர் ஒருவரின் வீட்டு முற்றத்தில் சில கோலங்கள் வரைந்து பூக்கொண்டு தினமும் பூசைசெய்து வழிபட்டமையையும் அயலவர்கள் பலரும் அவருக்குப் பூக்கொய்து கொடுப்பது வழக்கமாய் இருந்தமை யையும் வாய்வழிச் செய்தியாக அறிகின்றோம்.
மேலும்,
பூசைக னேசம் செய்தேன் புண்ணியா வுன்னவுக்குத் தேசைச் செய் வயித்தியத்தின் திறம் கண்ட கூலிபீவாய்” எனவும்
தலமெல்லாம் சுற்றியாடித்
தாள்வலி கொண்டலைந்தேன் நிலமெல்லாம் மெழுகிப்பூசை
நிவேதனம் படைத்து நின்றேன் கலமெனக் காட்டும் யோகக்
கடுநடை கொண்டேயேங்கி உலகெங்கும் பழிப்பதாக
வுன்மத்த னாயலைந்தேன்’ எனவும்
“வான்படு முனதுசேவை வழிநடைப் படிநடந்தேன் ஏன்பட்டே னிந்தப்பாட்டை இறையவா விளம்புவாயே’
எனவும் சுவாமிகள் பலவாறாகப் பாடுவது அவரின் இறை பூசை, தலயாத்திரை போன்றவற்றை உறுதி செய்வதாக உள்ளது.
இந்துக் கலைக்களஞ்சியம்

சுவாமிகள் இறை நாட்டத்தில் ஒன்றி உலக வாழ்வினின்றும் துறவு வாழ்வினை நாடி நின்றார்.
“ஐந்துவயதுதொடங்கி யையாறு வயதுவரை பந்தமெனக் கும்பிட்டேன் பரமசிவனோர் பெண்தரலை”
எனக் கூறுகின்றார். இந்த அடிகள் முப்பது வயது வரை இறைவனைப் பக்தி சிரத்தையோடு பரவிய தன்மையினை எடுத்துக் காட்டுவதுடன் தமக்கு இல்லறவாழ்வை இறைவனே தரவில்லை என நையாண்டியாகச் சுட்டுவதனையும் உணரலாம். இதனையே பிறிதோரிடத்தில், -
“மங்கையாள் பாகமென்றும் மதிச்சடையோர்
பெண்ணென்றும்
சங்கையா யுள்ளதென்ற சங்கர மூர்த்தியாரே
பாங்காக வுலகருக்குப் பதியாளை நீக்கு மென்னப்
பொங்கவே வுரைத்த வுன்றன் புதுமையே தாகுமையா”
"எனக் கிண்டல் செய்வது போலக் கூறுவதும் காணலாம்.
ஆன்மீகத்தில் சுவாமிகள் நிலை
இறை நாட்டம் கொண்டிருந்த சுவாமிகள் தமது புலன்களை
அடக்கியாளமுற்பட்ட வேளை தாம் பட்டி துயரத்தினைத் தெளிவாகச் சுட்டுகின்றார். . ',
"சிதம்பரத்திற் தரிசனம் நேர் செய்யச் சொன்னா
ه م-دg, "",
سیار, ۸۹ 臀
,,、 1.ணிலங்கையர்கள்
பதம் பெறலா யங்கு போகிப் பார்த்தாலங்கும் செம்புகல்லு"
, ' ۔۔۔۔۔۔۔۔ i ra,
எனக் குறிப்பிடும் முறையில் தமது பக்குவமில்லாத தன்னைமயை வெளிப்படையாகவே புலப்படுத்துகின்றார்.
முன்னோர்கள் ஒருவன் முப்பது வயதினுள் ஆணவம், கன்மம், மாயை எனும் மூன்று மலங்களின் பீடிப்பிலிருந்து விடுபட்டு ஒப்பில்லாத உண்மைப் பொருளான இறைவனைத் தன்னுள்ளே நாடுதல் வேண்டுமெனக் கூறிவைத்தனர். இவ்வகையான அனுபூதி ஞானமானது நிட்டையினாலல்லது பெறப்படாதமையால் நிட்டை உடம்பும் அறிவும் வளர்ச்சியடைந்த முதுமைப் பருவத்தில் கூடும் சாத்தியம் பெரிதுமின்மையால் குருவின் துணை கொண்டே கேட்டல், சிந்தித்தல், தெளிதல், நிட்டை எனும் ஞான நிலைகளை ஒருவன் கைவரப்பெறுவது சிறந்ததாகும். இதனையே ஒளவையாரும்,
'முப்பதா மாண்டளவில் மூன்றற் றொரு பொருளைத் தப்பாமற் றன்னுட் பெறானாயிற் - செப்புங் கலையளவே யாகுமாங் காரிகையர் தங்கள் முலையளவே யாகுமா மூப்பு” என அழகுறக் கூறுதல் காணலாம்.
இதனை உணர்ந்திருந்த அருளம்பல சுவாமிகள்,
129

Page 176
'முப்பதான வாண்டினுக்குள் மூன்றுவிட வேணுமென்றாய் தப்பான மும்மலத்தைத் தள்ளிற்தேகம் நின்றிடுமோ 罗列
என இறைவனிடமே தனது இயலாமையினைக் கேள்விக் கணையாகத் தொடுக்கின்றமை காணலாம். மேலும் இவ்வாறான
இயலாத வகையில் இறைவனையே உதவிக்கு அழைக்கின்ற பாங்கையும் காணலாம்.
"பஞ்சகீர்த்யம் செய்பவனே படித்தகல்வி வீரங்கொண்டு மிஞ்சுங்காம மடக்கமாட்டேன் மீறிலடக்கிடுவாய் நீயே’
என்று சீவதரிசியில் குறிப்பிடுகின்றார். அதேவேளை இதனையே,
"என்செயலால் முடியாதவை யென்னைச் செய்ய
சொல்வாயானால் உன் செயலால் முடியாதெனவுரைத்திட்டாயோவாகமத்தில்’
என நையாண்டியாகச் சுட்டுவதுடன் தமது இயலாத நிலை யையும் வெளிப்படுத்துவதைக் காணலாம்.
மேலும் "நான் தேகத்துள் இருந்து எப்படிப் புறப்படுவது என்ற கவலையாகவும் அதனுள் இருந்து படும் வேதனையால் அச்சம் கொண்டும் அப்படி என்னைத் தேகத்தால் மூடிப்பிடித்த பின் நானாகவே துறக்கப் புகின் என்னை அடிப்பார்கள் என அஞ்சி, நான் தேகத்துட் சும்மா இருக்கவும் என்னை ஆட்டி அலைக்கும் எண்ணங்கொண்டு பூமியிலிருந்து ஒர் விசையான பாசமாகிய பேய் எழுந்து உந்தியிலடித்துச் சுழன்றபடி அந்த மூச்சுத் தூக்கலாக ஏறியிறங்கும் நடைப்படி பல எண்ணமுண்டாகிறது. அதைத் தடுக்கின் அந்த ஆவி நீற்றுச் சேடமாகி அந்த விந்தே கபமாகக் கழியப்படுகிறது. அப்படி நடை நேர்வதாகப் பூமி உந்நியிலடித்து மேற் தூக்கலாகக் கிழம்பக் குத்தவும் மேகம் தலையிலூன்றியபடி கீழ் அமர்த்திக்குத்துகிறது” எனச் சுவாமிகள் அருவாச தேவ ஆரத்தில் கூறுகின்றார். மேலும் "இந்த நிலையில் அப்படியே என்னைத் தேகத்துள் அடைத்துவிட்டு மேளத்திற்கு இருபக்கமும் அடிப்பது போல் அடித்தும் சிலகாலம் கஞ்சாவும் எட்டிவிரையும் சேர்ந்த மயக்கமான புகையை உள்ளிட்டு மயக்கம் செய்தும், சிலபோது கள்ளுச் சாராயம், அபின் என்பனவற்றை உள்விட்டுக் கலக்கியும் ஆட்டியபோது தேகச் சுமையும் சுமந்தபடி ஆட்டங்கொண்டபோது பைத்தியம் ஏறிவிட்டது. அதனால் ஆடியபடி பல தலங்களையும் சுற்றியாடி அந்த மயக்கத்தால் நாகபட்டினத்திற் சிலகாலம் ஓர் தூக்கமாகவே தூங்கினேன்” எனக் குறிப்பிடுதலையும் காணலாம். பிறிதொரிடத்தில்,
'நிலைகொண்டு நிற்பதற்கு நிஷ்டைகொண்டே யிருப்பதற்கு
விலைகொண்டு வேண்டும்பொருள் விளங்கும் நாகபட்டினமே"
எனச் சுவாமிகள் குறிப்பிடுவதும் மேற்குறித்த செயல் சார்ந்ததாக இருக்கலாம்.
ஞான நிலையை எட்டியவர்களின் வாழ்வில் இடம்பெறும் நிகழ்வுகள் அனைத்திற்கும் பொருள் கூறுவதோ விளக்குவதோ
130

சாதாரண அறிவுடைய மாந்தர்களுக்கு இயலாததொன்றாகும். பொதுவாக ஞானிகள் சம்பிரதாயங்கள் சங்கற்ப விகற்பங்களுக்கும் அப்பாற்பட்டவர்கள்.
"ஞாலமதில் ஞானநிட்டை யுடையோருக்கு
நன்மையொடு தீமையில்லை நாடுவதொன்றில்லைச்
சிலமிலைத் தவமில்லை விரதமோ டாச்சிரமச்
செயலில்லைத் தியானமில்லைச் சித்தமலம் இல்லை”
என விதிக்கப்பட்ட பல விதிமுறைகளையும் தாண்டி நின்றவர்கள் இவர்கள் என்பது அறிதற்குரியதாகும்.
உதாரணமாக மது மாமிசங்களை விலக்காது ஏற்றுக் கொண்ட தன்மையை கடையிற் சுவாமிகள், பெரியானைக்குட்டிச் சுவாமிகள் போன்ற பலரது வாழ்வில் இடம்பெற்றமை அறியலாம். அவர்களின் நடத்தைகளுக்கு எல்லாம் விளக்கம் கூற முனைவதும் இயலாத நிலைக்கே இட்டுச் செல்லும் என்பது தெளிவு. இதுபோலவே அருளம்பல சுவாமிகளின் மேற்கூறிய நிலையும் நம்மனோரால் எளிதில் விளங்கிவிட முடியாததாக அமைந்துள்ளது.
நிஷ்டை கற்க இந்தியா செல்லல்
அருளம்பல சுவாமிகள் 1910ஆம் ஆண்டளவில், அதாவது அவர் தம் முப்பதாவது வயதில் தமது ஆத்மஞான ஈடேற்றத்தின் பொருட்டுச் சிதம்பரம் செல்ல எண்ணங்கொண்டு இந்தியா புறப்பட்டார் என ஊரவர்களால் நம்பப்படுகின்றது. இவ் வெண்ணத்தினைச் சுவாமிகள்,"சிதம்பரத்திற் தரிசனம்நேர் செய்யச்சொன்னா ரிலங்கையர்கள்’ எனச் சீவதரிசியில் குறிப்பிடுகின்றார். சுவாமிகள் ஊரவர்கள் பலருக்கும் கூறாமலேயே இந்தியா சென்றதாக ஊரவர்கள் கூறுவதுண்டு. நாகை நீலலோசனி அம்மன் தோத்திரத்தின் முகவுரையில் சுவாமிகள் தமது நிலையைப் மேல்வருமாறு எடுத்துரைக்கின்றார்கள்!
“நாகபட்டணம் மவுணசுவாமி எனப் பெயர் பூண்ட நான் யாழ்ப்பாணம் அல்வாய் வடக்கு என்னும் தலத்திலிருந்து புலன்பொறி கரணம் சீறியாடும் நிலைப்படி காவடியாக அலைந்து திரிந்தபோது தன்நிலை படியாததால் நிஷ்டை நிலையைப் படிக்க வேணும் என எண்ணிச் சிதம்பரம் போவதாக நாகபட்டணம் வந்தேன்."எனக் கூறுகின்றார்.
நாகபட்டணத்தில் ஞான நிஷ்டை
அருளம்பல சுவாமிகள் நாகையிற் கொடியாக, குவலயம் படைத்திட்ட நீலாச்சி அம்பாள், சிதம்பரம் போக இருந்த தன்னை அங்கே ஏன் போகின்றாய், என்னிடத்திலே ஞான நிஷ்டையைக் கற்றுக்கொள் என வேண்டியபடி அவ்விடத்திலேயே ஞான நிலையான ஞான நிஷ்டையைக் கற்றுத் தேர்ந்ததாக நாகை நீலலோசனி அம்மன் பேரில் பாடிய தோத்திரத்தில் குறிப்பிடுகின்றார். நாகை நீலலோசனி அம்மன் ஆலய வாயிலில்
இந்துக் கலைக்களஞ்சியம்

Page 177
சுவாமிகள் 1910 ஆம் ஆண்டு முதல் 1914 ஆம் ஆண்டு வரையில் நான்காண்டுகள் உணவின்றி நிஷ்டையில் இருந்தார். அவர் தம் ஞானநிஷ்டையின் கடுமையை அக்காலத்தில் புலித்தோல் விரித்த கதிரையில் இருக்க எடுக்கப்பட்ட புகைப்படம் விளக்கி நிற்கின்றது. சுவாமிகளின் மூன்று புகைப்படங்களின் விவரங்களும் சபாபதிப்பிள்ளை குலசபாநாதனுக்கு எழுதிய மடலூடாக அறியக் கிடக்கின்றது.
1914 ஆம் ஆண்டளவில் நிஷ்டையிலிருந்து எழுந்த பின்னர் சுவாமிகள் வேதாரணியம், அகத்தியான் பள்ளி, மாயவரம், சிதம்பரம், காரைக்குடி, பாண்டிச்சேரி (புதுவை) முதலிய இடங்களுக்குச் சென்றிருந்தார்.
நாகபட்டணம், புதுவை ஆகிய இடங்களில் அதிககாலம் நிலையூன்றியிருந்தமையை அறிகிறோம். சுவாமிகள் எழுதிய நூல்கள் பெரும்பாலானவை இவ்விரு இடங்களிலேயே பதிக்கப்பெற்றவை. சுவாமிகள் ஆரம்பத்திலும் இறுதிக் காலங்களிலும் பெரிதும் நாகபட்டணத்திலேயே காலங் கழித்திருந்தார். அருளம்பல சுவாமிகள் நாகபட்டணத்தில் குறிப்பிடத்தக்க காலம் வாழ்ந்தமையினால் நாகபட்டணம் சுவாமி எனவும் நாகையில் மெளனத்தில் ஆழ்ந்திருந்த காரணத்தினால் நாகை மவுனசுவாமி எனவும் மெளனகுரு எனவும் யாழ்ப்பாணத்தினைப் பிறப்பிடமாகக் கொண்டிருந்தமையால் யாழ்ப்பாணத்துச் சுவாமி எனவும் நாகபட்டணத்தில் உள்ள நீலலோசனி அம்மன் பூந்தோட்டத்தில் இருந்தமையால் பூந்தோட்டத்து ஐயா எனவும் அழைக்கப்பட்டமையை அறியமுடிகின்றது.
நாகையில் ஏற்பட்ட அனுபவங்கள்
யாழ்ப்பாணம், அல்வாய் வடக்கினை விட்டு இந்தியாவிற்குச் சென்றபோது அங்கு சுவாமியைப் பலரும் மதித்து நடந்ததாகத் தெரிகின்றது. நாகையில் வைத்திலிங்கச் செட்டியார் போன்றோர் சுவாமிகளுக்குப் பெரிதும் துணையாக இருந்தனர் என ஊரவர் கூறுவர். சுவாமிகளே ஒரிடத்தில் தன்னைப் பலரும் சாமியென மதித்தார்களேயன்றி பைத்தியக்காரன் என மதிக்கவில்லையெனக் குறிப்பிடுகின்றார். நாகையில் நிஷ்டையை ஆரம்பித்த காலப்பகுதியில் அவரது உண்மைநிலை புரியாத சிலர் இவரை வேடதாரி, பொய்ச்சாமி என எண்ணித் தகாத செயல்கள் செய்ததாகவும் சொல்லப்படுகின்றது. ஒரு தடவை தீயில் காய்ச்சிய இரும்பினை அவரது பாதத்தில் சுட்டபோது சுவாமி மெளனமாக இருந்ததாகவும் கூறப்படுகின்றது.
நிஷ்டை ஆரம்ப நாட்களில் நீலலோசனி அம்மன் ஐயர் இவர் மீது சினமுற்று இருந்தார். சுவாமிகள் ஒரு கொட்டிலில் இருந்தார். சுவாமியைத் தரிசிக்க வந்த பெண்மணி வழமையாக மூடியிருக்கும் சுவாமிகள் கண்கள் திறந்திருந்தமை கண்டு ஐயரிடம் கூறினார். ஐயர் வந்து பார்த்தபோது கண் பழையபடி மூடி இருந்தது. இவர் வேடதாரி எனக் கருதிய ஐயர் தாசிகளை இவரது குடிசைக்கு அனுப்பினார். காசிகள் வந்தமையால் சுவாமிகள்
இந்துக் கலைக்களஞ்சியம்

வேறிடம் சென்றார். சுவாமிகள் இருந்த கொட்டிலும் தீ பற்றி எரிந்தது. ஐயர் சுவாமிகளுக்கு எதிராக தீமூட்டிக் கொட்டகையை எரித்தார். சுவாமிகள் பெண்களைப் பார்க்கின்றார் எனப் பொலிஸில் முறைப்பாடு கொடுத்தனர். பொலிஸார் சுவாமியைத் தமது இடத்துக்குக் கூட்டிச்சென்று ஒர் அறையில் பூட்டிவைத்தனர். சற்று நேரத்தில் அவர் அறையில் இல்லாமையையும் கடற்கரையோரத்தில் நிஷ்டையில் இருந்தமையையும் குதிரையில் இருந்த நீதிபதி கண்ணுற்று இவரது உண்மை நிலையை உணர்ந்து கொண்டார். நீதிபதி அவரை எவரும் தொந்தரவு செய்யக்கூடாது எனப் பணித்ததாகவும் தெரிகின்றது.
இந் நிகழ்வினையே சுவாமிகள் ஒரிடத்தில்,
“கொட்டகை சுட்டபழிக்கு- சிறையிட்டும் கூடலாய் நிற்குது சாமீனொன்று செட்டியார் பாதுகாப்புள்ளே எமன்வந்து சேட்டைகள் செய்திட முடியாது 多夕
என நொண்டிச் சிந்தில் குறிப்பிடுவதாகக் கொள்ளக் கிடக்கின்றது.
கொட்டகை சுட்ட நிகழ்ச்சியைச் சுவாமிகள் பிறிதோரிடத்தில் கீழ் வருமாறு விளக்குதல் நோக்கலாம்.
“நான் இருந்த கொட்டகையை மூலாக்கினி எழுந்து சுட்டது குற்றம் என வகுத்த நீ மூலக் கனலை மதி மண்டலத்தின் மேலெழுப்ப மாட்டாய் போல் தெரியப்படுகிறது. அதை விட்டாயாயின் பரவெளியான நீயே உன் இயல்பு தற்போது சுதந்திரமாகப் பரவெளியாய் விட்டாயானால் நான் அந்த வேலையைச் செய்ய எத்தனிக்க வேண்டியதில்லை. இனி நீ உனது செயலை என்னிடம் ஏவிச் செய்விக்க நியாயம் இன்மையால் நான் என் மட்டிற் சும்மா இருக்கின்றேன். உனது செயலை நீயே செய்து கொள்”
இந்த நிகழ்வு சுவாமிகளை வருத்தியுள்ளதென்பது புலனாகின்றது. இதனால் தான் “நான் செய்த நிட்டை பிழை என என்னைப் பிடித்துச் சிறையில் வைத்துச் சாமினில் விட்டாய். இப்போ என்னை நிட்டை செய்யும்படி சொன்னாய்; செய், செய் என்கின்றாயே, ஒருவன் முடிவாகச் செய்யவேண்டிய செயல் இன்னதெனப் பெரியவளாகிய உனக்கு இன்னும் தெரியவில்லையே” என நாகை நீலாட்சி அம்மன் மீது அலட்டிக் கொண்டார் போலும்,
கொட்டகை சுட்டது எனும் நிகழ்வின் பின்னர் சுவாமிகள் தாம் நாகபட்டணத்திலிருந்து வேதாரணியம் சென்றதாகச் சுட்டுகின்றார். இது பற்றிக் குறிப்பிடுகையில், “பரமசிவனின் கொடுமையால் அவ்விடம் திரும்பிச் செல்லுவதில்லை என இருக்க அவனே தன் மனைவியினைக் கள்ள வேடமிட்டுப் பணிவிடை செய்து தனது பழைய இடத்திற்கு அழைத்து வந்தான்” எனக்
131

Page 178
குறிப்பிடுவது நோக்கத் தக்கது. இங்கு சுவாமிகள் வெருண்டபடி காடடைந்த பசுவைப் பிடிப்பதற்கு ஆடவர்கள் பெண்களை விட்டே கோடிக் காட்டில் வெருள் அடக்கிப் பிடிப்பார்கள் எனும் உதாரணத்தினை எடுத்தாண்டு வெருண்ட பசுவாகிய தம்மைப் பணிவிடை எனும் பாசக் கயிற்றைக் கொண்டு பரமசிவன் பிடித்தமையைச் சுட்டுவது நயக்கத்தக்கதாகும்.
மெளனநிலை
அருளம்பல சுவாமிகள் ஏகமே நிலையாமெனக் கண்டபடி ஆட்டமின்றிச் சும்மா இருப்பதே எச் செயலிற்கும் முடிவான முடிவாகும் எனக் கருதினார். இப்போக்கே அவரை இலங்கையிலும் சரி, இந்தியாவிலும் சரி பெரிதும் மெளனமாக இருக்கத்தூண்டியது எனலாம்.
மெளனத்தின் தன்மையினைச் சுவாமிகள் அழகுற எடுத்தாள்வது நயக்கத்தக்கதாகும். 'கைலாயத்தின் பார்வதி, பரமசிவன், இந்திரன் முதலிய தேவர்கள், பக்தர், சித்தர், முனிவரவர்கள் கூடிப்பேசிய சபையில் ஒர் ஞானி எழுந்து இப்போ நான் சொல்லப் போகின்றது தங்களுக்குத் தெரியுமா எனக் கேட்டார். அதற்குச் சபையோர் சொல்லப்போகின்றதைத் தெரியமாட்டாது என்றார்கள். இப்போ ஞானி நான் சொல்லப்போகின்றதை தாங்கள் அறியமாட்டார்களாயின் சொன்னதாலும் தாங்கள் அறியப்போகின்றதில்லை; ஆதலால் நான் சொன்னதாற் பயனில்லை என்றபோது, தாங்கள் சொல்லப்போகின்றது எங்களுக்குத் தெரியும் என்றார்கள். அப்போ ஞானி நான் சொல்லப்போகின்றதைத் தாங்கள் அறிவீர்களாயின் நான் அதைச் சொல்ல வேண்டியதே யில்லையென்றான். அப்போ சித்தர்கள் தன் நிலையில் தான சைந்து தன் இயைபாகத் தான் அறிவதே தன் நிலையிற்கான அறிவும் ஒருவர்க்கொருவர் சொல்வது புறச்செயலான எழுத்தொலி, நாதமாகிய பாசமும் அதன் செயலின் இயைபான பொருளாகிய பாசமும் அவரைப் பற்றி ஆட்டச் செயலை மூட்டும் பண்ணாகுமானாற் பரமசிவன் நாலுவேதம், இருபத்தெட்டு ஆகமங்களை யாது காரணம் பற்றிச் சொன்னாரோ என எண்ணலும் ஞானி அவர்களை நோக்கி அநாதி என்ற இடத்தில் ஓர் முதலெனக் காணலான காலமும் வெளியின் எல்லை முடியும் நேராகக் காட்டிச் சொல்ல முடியாததால் வெளியே வெளியாக நின்றபோது ஒன்றுமில்லை யென்பதே முடிவாகக் காணப்படும்” என விளக்கி நின்றார். இவ்வாறு மெளனத்தின் சிறப்பினை எடுத்தாளுதல்,
"மோனங்கை வந்தோர்க்கு முத்தியும் கைகூடும் மோனங்கை வந்தோர்க்கு சித்தியும் முன்னிற்கும் மோனங்கை வந்ததுரமை யாமொழி முற்றுங்கான் மோனங்கை வந்ததைங் கருமமும் முன்னுமே” எனும் திருமூலரின் வாக்கினை நினைவுறுத்தி நிற்கின்றது.
இலங்கைக்குத் திரும்பியமை
சுவாமிகள் 'தாயிற் சிறந்ததொரு கோயிலுமில்லை” எனும் வாக்கிற்கு ஏற்ப குடியிருந்த கோயிலை மேவிவரும் நோக்குடன்
132

1929ஆம் ஆண்டில் இந்தியாவிலிருந்து தமதுர் வந்தார். வியாபாரி மூலையிலும் வதிரியிலுமாகத் தங்கியிருந்தார். வதிரியில் சகோதரி சின்னப் பிள்ளையுடனும் வியாபாரி மூலையில் பெரும்பொழுதை சித்திவிநாயகர் ஆலயத் தெற்கு வீதியில் உள்ள மகிழமரத்தின் கீழும் கழித்தார். இவ்வேளையில் ஆலய வசந்த மண்டபத்துச் சுவரில் சுவாமிகள் தெய்வப்படங்கள் சில வரைந்தார் என அறிகின்றோம். இக்காலப் பகுதியில் சுவாமிகளிடம் பலர் தங்கள் குறைகளைக் கூறி நலங்கள் நாடித் தரிசிக்கச் சென்றமையையும் அறிகின்றோம். சுவாமிகள் அன்பர்களின் வேண்டுதல்களை இறைவனிடம் சமர்ப்பிப்பதாகக் கூறுவதே வழக்கமாகும். இவ்வகையில் புலவரோடையில் அவரது சகோதரி மகள் ஒருவர் பலகாலமாகப் பிள்ளைப் பேறற்று விளங்கிய காலை சுவாமியிடம் விண்ணப்பித்தார். சுவாமிகள் அவர் பொருட்டு அதனை இறைவனுக்குப் பாரப்படுத்தியமையும் அவ் வேண்டுதல் பலித்து அப்பெண் ஒரு பெண் குழந்தைக்குத் தாயாகியமையும் ஊரில் பேசப்படுகின்றது. சுவாமிகளிடம் பலர் தங்கள் தங்கள் அன்றாடப் பிரச்சினைகள், எதிர்கால நிலைமைகள் பற்றிப் பல கோரிக்கைகளை விடுப்பதுண்டு. சுவாமியை நாடிவந்த பலர் தங்கள் குறை நீங்கியமையை இன்றும் நன்றியுடன் கூறுவதைக் காணலாம். சில அன்பர்களின் பிற்காலம் பற்றிச் சுவாமிகள் கூறிய வாக்குகள் பலித்தமை அவர்களுக்குச் சுவாமிகள் மீதிருந்த மதிப்பினை உயர்த்தியது. சுவாமிகள் தன்னைச் சேவிக்கும் அடியவர்கள் வேண்டுதல்களுக்கு “என் செயலால் நடப்பது ஒன்றுமில்லை; எல்லாம் இறைவன் செயல். நான் ஒரு கருவியாக இருந்து உங்கள் வேண்டுதலை இறைவனுக்குக் கூறுகின்றேன்’ எனக் கூறுவாராம். சுவாமிகளின் உறவினர்கள், அன்பர்கள் சிலர் தற்போதும் தாங்கள் வணங்கும் இதர தெய்வப் படங்களுடன் சுவாமிகளின் புகைப்படத்தினையும் வைத்துப் பூஜிப்பது சுவாமிகள் மீது அவர்கள் கொண்டிருக்கும் பக்தியோடு கூடிய மதிப்பிற்குச் சான்று பகர்வதாகும்.
சுவாமிகள் பயன்படுத்திய கட்டில், படுக்கை விரிப்பு போன்றன வதிரியில் அவரது சகோதரி வசித்த வீட்டில் புனிதப் பொருட்களாகப் பேணப்பட்டு வருகின்றன. அத்துடன் சுவாமிகள் செய்த கைப்பணிப் பொருட்களாவன யாகசாலை அகப்பை போன்ற மர அகப்பை, சந்தணமரைக்கும் கல், வடலிமட்டை யிலான கைத்தடி போன்றவற்றினையும் பேணி வருகின்றனர். அண்மைக்கால இராணுவ நடவடிக்கைகளினால் சுவாமிகளால் செய்யப்பட்ட மண் விளக்கு, சட்டி, செம்பு போன்ற பொருட்களும் புத்தகங்கள் சிலவும் கைதவறிவிட்டன என அறிகிறோம். சித்திரங்கள் வரையும் திறமை கொண்டிருந்த சுவாமிகள் கம்பளையில் கடையில் இருந்தபோது வரைந்த இலட்சுமி உருவப்படமும் தொலைந்து விட்டதாக அறிகிறோம்.
அற்புதங்களும் சித்துக்களும்
சுவாமிகள் ஒருநாள் பொலிகண்டிக் கடலிலே தீர்த்தம் ஆடச்சென்றபோது கடல் நீரில் பல்வேறு இடங்களிலும் தமது தோற்றத்தைக் காட்டினார் என்றும் அடியார்கள் கடல்நீருள் நின்றபோது சுவாமி மேற்பரப்பில் காட்சி கொடுத்தார் என்றும் ஊரவர்கள் கூறுகிறார்கள்.
மேலும் நாகை நீலலோசனி அம்மன் ஆலய வாயிலில் நான்கு வருடம் ஞான நிஷ்டையில் இருந்த சுவாமிகள் நிஷ்டை
இந்துக் கலைக்களஞ்சியம்

Page 179
முடிந்து எழுந்து நாற்பத்தொரு நாட்கள் வாயுறு நீரில் இருந்தார் எனும் செய்தி அவரின் அன்பர்களால் அற்புதம் எனக் கருதப்படுகிறது. ஆனால் சுவாமிகள் சித்துக்களில் அதிக நாட்டம் கொண்டவராக இருக்கவில்லை. அன்பர் ஒருவருக்கு எழுதிய மடலில் சுவாமிகள் "கடவுள் தொண்டையில் உள்ள நஞ்சாற் கொண்ட ஒர் மரத்தை, ஒரு சரீரத்தை எழுப்பிக்காட்ட என்னால் முடியும். நான் அந்த வேலையில் பிரவேசித்தாற் தம்பி அக்கினி கோபிப்பான். ஆனதால் அக் காரியத்தில் நான் தலையிடுவதில்லை” எனக் குறிப்பிடுகின்றார். இதிலிருந்து சுவாமிகள் சித்துக்களைத் தாம் செய்ய விரும்பியதில்லை என்பதை அறிய முடிகின்றது.
செத்தாரை யெழுப்பிடுமோ சேயிழை நூற் கம்பளங்கள் எனவும் "சாம்பலது பெண்ணாகத் தங்கிடுமோ வெம்பரனே’ எனவும் சுவாமிகள் கேட்பதும் “சாம்பல் பெண்ணாயுறிற் கலையாம்” எனக் குறிப்பதும் நோக்கத்தக்கவை. இவை நாயன்மாரால் செய்த செயல்களைக் குறிப்பதாக அமையுமோ என்பது கருதற் குரியதாகும். மேலும் சுவாமிகளது காலத்தில் வாழ்ந்த ஒருவரின் இவ்வாறான செயல்களைச் சுவாமிகள் குறிப்பால் சுட்டுவதும் பின்வரும் பாடல் மூலம் தெரியவருகிறது.
"சாத்திரப் புரட்டுகள் பேசி - அவர் அங்கே இருக்கிறார். சாற்றுவதை நம்பிப் பூசியெனவே நேத்திரம் கட்டிய வித்தை - வாய்மொழி நிச்சயமாகாது உச்சியிலேறினும்’
எனக் குறிப்பிடும் அடிகள் சுவாமிகளின் உள்ளக் கிடக்கையைப் பிரதிபலிப்பதாகக் கொள்ளலாம்.
மீண்டும் இந்தியா செல்லல்
1929 ஆம் ஆண்டு இலங்கை வந்த சுவாமிகள் குறுகிய காலத்தினுற் அதாவது 1930ஆம் ஆண்டின் பிற்பகுதியில் மீண்டும் நாகபட்டணம் சென்றார். சுவாமிகள், சபாபதிப்பிள்ளைக்கு எழுதிய கடிதத்தின் மூலம் ஊரில் இருந்தகாலம் அவருக்குத் திருப்திகரமானதாய் அமையவில்லையோ என எண்ணத் தூண்டுகின்றது.
சுவாமிகளின் பக்தர்கள்
சுவாமிகளை மறவாத அன்புகொண்ட பக்தர்கள் இலங்கையில் இருந்திருக்கிறார்கள் என்பதில் ஐயமில்லை. சுவாமிகள் இந்தியாவில் இருந்தவேளைகளிலும் அன்புக் கரிசனைகொண்டு பல அன்பர்கள் அவருக்குக் கடிதங்கள் எழுதியமையை அறியலாம். அன்பர்களின் கடிதங்களுக்குப் பதில் எழுதுவதற்கு அக்காலத்தில் மூன்று சத முத்திரை வாங்க முடியாத நிலைமையில் சுவாமிகள் இருந்தமை அவரது கடிதங்கள் மூலம் தெரியவந்துள்ளமை சுவாமிகளின் பெருளாதாரக் கஷ்டநிலை அறிந்த அன்பர்கள் இங்கிருந்து பழவகைகள், உணவு, காவிவேட்டி போன்ற உடைகள், காசு போன்றவற்றை அவ்வப்போது அனுப்பி வைத்தமையை அறிய முடிகின்றது. மேலும் சில அன்பர்கள் சுவாமிகளின் ஆசி வேண்டியதிலிருந்து சுவாமியை ஊருக்கு வந்தபோது அன்பர்கள் தங்களது குறைகளை மனந்திற்ந்து சுவாமிகளுக்குத் தெரிவிப்பதுடன் சுவாமிகளுக்கிருந்த அடியவர்களைப் போலத் தங்களையும்
இந்துக் கலைக்களஞ்சியம்

ஆட்கொள்ளுமாறு வேண்டியமையும் அறியக் கூடியதாகும். சுவாமிகள் அன்பர்களின் பக்குவத்திற்கேற்ப புத்திமதிகள் வழங்கியுள்ளமை அவரின் கடிதங்களூடாகக் காணலாம்.
சுவாமிகளின் ஈழத்து அடியார் குழாத்தில் சிறப்பிடம் பெற்றவர் செல்வந்தரான சிவப்பிரகாசபிள்ளைகளாவர். நீண்டகாலமாக சுவாமிகளின் அன்பராக இருந்ததுடன் பலவகைகளில் சுவாமிகட்கு வேண்டிய உதவிகளைத் தாமே முன்வந்துதவினார். வேதாரண்யத்திற்கும் பருத்தித்துறைக்கும் இடையிலான கப்பல் மூலமாக வர்த்தகத்தினை நடத்தியமையால் சுவாமிகளை அடிக்கடி சந்திக்கும் வாய்ப்பினைக் கொண்டிருந்தார்.1930 ஆம் ஆண்டிற்கு முன்னதாக நாகபட்டணத்தில் காணி வாங்கி சுவாமிகள் தங்குவதற்காக ஒரு மடமும் கட்டிக் கொடுத்தார். இம் மடம் இன்றும் பேணப்பட்டு வருகின்றது. 1929 ஆம் ஆண்டிலேயே சபாபதிப்பிள்ளை யவர்களுக்கு அருளம்பலசுவாமிகள் மீதான பிணைப்பு ஏற்பட்டது. “மானிட சென்மம் எடுத்தவர்களுள் பதரும், பிரபஞ்சக்கடலுள் தத்தளித்துக் கொண்டிருந்த தன்னை, தமது பக்தொன்பதாவது வயதில் ஆட்கொண்டதாக”த் தமது கட்டுரையில் சபாபதிப்பிள்ளை குறிப்பிட்டிருப்பது காணலாம். அருளம்பலநம என்பதனைத் தமது வாழ்நாளில் பெரிதும் கடைப்பிடித்த சபாபதிப்பிள்ளை என்பவரும் குறிப்பிடத்தக்க அன்பராவர். இவர், புற்றளைக்கரசே, குழந்தை அருளம்பலம், அம்பலமே' எனும் பாடல்களினைச் சுவாமிகளை நோக்கிப் பாடியுள்ளார். இவர் புற்றளைக்கரசே எனும் நூலை நினைவாக வெளியிட்டதுடன் நாகை நீலலோசனி என்னும் ஊஞ்சல்களின் இரு நூல்களையும் மறுபதிப்புச் செய்து வெளியிட்டார். பாரதியின் ஞான குருவான யாழ்ப்பாணத்துச் சாமி எனும் கட்டுரையும் பூணூரீ லங்கா (04-1962) ஆத்மஜோதி (15.05.63) ஆகியவற்றில் வெளி வந்ததுடன் புற்றளைக்கரசிலும் மறுபிரசுரமாகியுள்ளது. இவர்களைவிட விஸ்வலிங்கம், தம்பிப்பிள்ளை, கணபதிப்பிள்ளை, சொக்கநாதப்பிள்ளை போன்றோரும் சுவாமிகளின் அன்பர்களாக விளங்கினார்கள்.
இறுதி விஜயம்
1942 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 27 ஆம் திகதி சுவாமிகள் அன்பர் சிவப்பிரகாசம் பிள்ளையவர்களோடு இந்தியாவிலிருந்து இலங்கைக்கு வந்தார். அவ்வேளை வியாபாரி மூலையில் சிவப்பிரகாசம் பிள்ளையவர்களின் இல்லத்திலேயே தங்கியிருந்தார்.
தமது தேகம் இறுதிக் காலத்தினை நோக்குகின்ற தென்பதனைச் சுவாமிகள் தெளிவாக உணர்ந்திருந்தார். அவ்வேளையிலும் தமது தாயாருக்கு ஆற்றும் கடமை ஒன்று இருப்பதனையும் மறந்து விடவில்லை. தனது பாட்டியார், காளிப்பாட்டியினது இறுதிக்காலத்துக் கடமைகளை முறையாகச் செய்தவர் சுவாமிகளாவர். இதனை,
திதிசெய்தே னந்தணர்க்குச் சேவடி பபிஷேகித்து விதியுறப் பூசைசெய்து விண்னோர்க்கும் பூசைசெய்தேன் பதியினிற் தானமீந்தேன் பாட்டியின் கடமையெல்லாம்
கதிபெறக் காட்டிச் செய்தேன் கடனுமுன் டோவெனக்கே’
133

Page 180
எனக் கேட்பதிலிருந்து உணரலாம். அவ்வகையில் தமது இறுதிக் காலத்தில் தமது தாயாரிடம் தம் கடமைகளைச் செய்வதற்கு இருக்க வேண்டுமோ என வினவினார். தாயார் வேண்டாம் எனக் கூறியதற்கமைய தனக்காகச் சிவப்பிரகாசம் பிள்ளையவர்களே தமது தாயின் இறுதிக் கடனை ஆற்றுமாறு கூறினார். இவற்றையெல்லாம் உற்றார் உறவினர்களிடம் இருந்து அறிகிறோம்.
சுவாமிகள் சமாதி அடைதல்
இறுதிக் காலத்தினை உணர்ந்து தமது சொந்தவூரிலேயே சமாதி அடைவதனை நாடிய சுவாமிகள் வியாபாரி மூலைக்கு வந்தமை அவர் அம் மண்ணுக்கு அளித்த பெருமை எனக் கூறலாம். சுவாமிகள் 1942 ஆம் ஆண்டு மார்கழி அத்தத்தில் மூன்றாந் திகதி சம்மாணங்கொட்டியபடியே நிஷ்டையில் அமர்ந்திருந்து மகாசமாதி அடைந்தார். அவரது பூதவுடல் மார்கழி மாதம் 5ஆம் திகதி முறைப்படி வியாபாரிமூலை வீரபத்திர சுவாமி கோயிலுக்கு ஈசான திசையில், ஈழத்தில் உள்ள இதர சமாதி ஆலயங்களிலிருந்து வேறுபட்ட கட்டிட அமைப்புடன் பெருங்கற்களால் அழகுற அமைந்தது. இவ்வருளம்பல சுவாமிகள் சமாதி ஆலயமும் ஆ. வே. சிவப்பிரகாச பிள்ளையவர்களின் அன்பின் பரிமாணமே என்றால் மிகையாகாது. சமாதி ஆலயம் நித்திய பூசையுடன் ஆரம்பித்து அவரது மார்கழி அத்தத்தில் சிறப்பாகக் குருபூசையுடன் பேணப்பட்டு வருகின்றது.
பாரதி போற்றிய யாழ்ப்பாணத்துச் சுவாமிகள்
யாழ்ப்பாணத்துச்சாமி மகிமை
சுப்பிரமணிய பாரதியார் தமது பாரதி அறுபத்தாறு என்னும் பாடலில் யாழ்ப்பாணத்துச் சாமி என ஒருவரைக் குறிப்பிட்டுப் பாடியுள்ளார். பாரதியார் யாழ்ப்பாணத்துச் சாமி பற்றிப் பாடிய பாடல்கள்,
கோவிந்தசாமி புகழ்சிறிது சொன்னேன்
குவலயத்தின் விழிபோன்ற யாழ்ப்பாணத்தான் தேவி பதம் மறவாத திர ஞானி
சிதம்பரத்து நடராஜ மூர்த்தியாவான் பாவியரைக் கரையேற்றும் ஞானத் தோணி பரமபத வாயிலெனும் பார்வையாளன் காவி வளர்தடங்களிலே மீன்கள் பாயும்
கழனிகள் குழ் புதுவையிலே அவனைக் கண்டேன்
தங்கத்தாற் பதுமை செய்தும் இரதலிங்கம்
சமைத்துவமற் றினிலீசன் தாளைப் போற்றும் துங்கமுறு பக்தர் பலர் புவிமீதுள்ளார்
தோழரே எந்நாளும் எனக்குப் பார்மேல் மங்களஞ் சேர் திருவிழியால் அருளைப் பெய்யும்
வானவர் கோன் யாழ்ப்பாணத்தீசன் தன்னைச் சங்கரனென் றெப்போதும் முன்னே கொண்டு
சரணடைந்தால் அதுகண்டீர் சர்வசித்தி
134

என அமைந்துள்ளன. இவற்றைவிட குவளைக் கண்ணன் புகழ்கூறும் அடுத்துவரும் பாடல்களிலும் யாழ்ப்பாணத்துச் சுவாமி பற்றிய செய்தியைக் காணலாம்.
"யாழ்ப்பாணத் தையனையென் னிடங்கொணர்ந்தான்” எனவும்,
மகத்தான முனிவரெல்லாம் கண்ணன் தோழர்
வானவரெல்லாங் கண்ணன் அடியா ராவார் மிகத்தானு முயர்ந்த துணிவுடைய நெஞ்சின்
வீரர்பிரான் குவளையூர்க் கண்ணன் என்பான் ஜகத்தினிலோர் உவமையிலா யாழ்ப்பாணத்துச்
சாமிதனை யிவன்னெறன் மனைக் கொணர்ந்தான் அகத்தினிலே அவன்பாத மலரைப் பூண்டேன்
அன்றேயப் போதேவீ டதுவே வீடு எனவும் குறிப்பிட்டுள்ளார்.
dé9iq561Tjib1J6oib, 85f. (191O — 19ese5)
யாழ்ப்பாணம் காரைநகர் சுவாமிநாதனின் புதல்வர்; பயிற்றப் பெற்ற ஆசிரியர்; பண்டிதர்; காரைநகர், புத்தளம், கொட்டாஞ்சேனை, காலி, களுத்துறை, யாழ்ப்பாணம் எனும் இடங்களில் ஆசிரியராகப் பணிபுரிந்தவர்; சங்கநூற் செல்வர், பண்டிதமணி எனும் பட்டங்களாற் கெளரவிக்கப் பெற்றவர்; கட்டுரைகள் எழுதும் திறமைமிக்கவர்; அவருடைய திருமுருகாற்றுப்படை ஆராய்ச்சியுரை 1937 இலே வெளிவந்தது; திருவாசக ஆராய்ச்சியுரை இருபாகங்களாக முறையே 1967, 1973 ஆம் ஆண்டுகளில் வெளிவந்தன. உலகியல் சம்பந்தமான வேறு நூல்களுக்கும் உரை கண்டவர். (பொ.பூ.)
அருளாளதாசர்
நெல்லிநகர் வரதராஜ ஐயங்கார் எனும் இயற்பெயரினை உடையவர், பதினாறாம் நூற்றாண்டிலே தமிழகத்தில் வாழ்ந்தவர்; பூரீ மகாபாகவதத்தை கி. பி. 1543 இலே இயற்றியவர்.
அருளாளதாசரின் பாகவதத்தின் முதலாம் பகுதி திரிசிரபுரம் கோவிந்தபிள்ளை, பரங்கிப்பேட்டை இலட்சுமணப்பிள்ளை என்பவராற் பரிசோதிக்கப்பட்டு 1885 இலே பதிப்பிக்கப்பட்டது; இரண்டாம் பகுதி பவானி பாலபாரதி முத்துசாமிஜயர், ச. திருச்சிற்றம்பலபிள்ளை, ல. வெ. திருமலை கொண்ட நாயக்கர் என்பவராற் பரிசோதிக்கப்பட்டு 1891 இலே பதிப்பிக்கப்பட்டது. பதினாறாம் நூற்றாண்டில் வாழ்ந்த வேம்பத்தூர் செவ்வை சூடுவாரும் பூணூரீமத் பாகவதபுராணம் பாடியுள்ளார்; அது கோமளபுரம் இராசகோபாலப் பிள்ளையால் 1881 இலே
‘ஆரியப்பபுலவர் பாடியதெனப் பதிப்பிக்கப்பட்டுள்ளது.(பொ.யூ)
இந்துக் கலைக்களஞ்சியம்

Page 181
அருளாளப்பெருமாள்
அருளாளப் பெருமாள், அருளாளப் பெருமாள் எம்பெருமானார் ஜியர் என்றும் வைணவரால் அழைக்கப் பெற்றவர்; முன்பு வேதாந்தியாக விளங்கியபோது யக்ஞமூர்த்தி என்ற பெயர் தாங்கியவர்; பூரீ பெரும்பூதூர் இராமநுசரை எதிர்த்துப் பதினேழுநாள் வாதஞ் செய்து, அவர் சீடர் ஆனவர்; அம்மங்கியம்மாளின் குரு.
ஞானசாரம், பிரமேயசாரம் எனும் தமிழ் நூல்களை இயற்றியவர். (பொ.பூ.)
ć9056fiš 613uj6ö J856ipub
ஆழ்வார்களின் திருப்பாசுரங்களை அருளிச் செயல்' என்று வழங்கல் வைணவ மரபு. ஆழ்வார்களின் அருளிச்செயல்களில் வைணவர் கோட்பாடுகளில் முக்கியமான இரகஸியத் திரயம் இடம் பெறுவதாகக் கூறுவதை நோக்காகவுடையது அருளிச் செயல் ரகஸ்யம்.
இதனை இயற்றியவர் அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் என்பவராவார். அவர் திருவரங்கத்திலே வடக்குத் திருவீதிப்பிள்ளையின் புதல்வராக பதின்மூன்றாம் நூற்றாண்டின் பிற்பகுதியிலே அவதரித்தவர்; அவர் தமையனார் தென்கலை வைணவ ஆசாரியராக விளங்கிய பிள்ளைலோகாசாரியர். ܢ
அருளிச்செயல் ரகஸ்யத்திலே திருமந்திரம், துவயம், சரமசுலோகம், தாத்திரீக மரபிலிருந்து வந்த மந்திரங்கள் என்பனவற்றோடு புருஷகாரமும் (சேரவிடுவோர்) கைங்கரியமும் விளக்கப்படுகின்றன.
ஆசார்ய ஹ்ருதயத்தின் நடையிலே அருளிச் செயல் ரகஸ்யம் அமைகின்றது. பேச்சுத்தமிழும் சங்கத ஆட்சிகளும் மணிப்பிரவாள நடையும் கலந்தமைந்த நூலிலே ஒவ்வொரு இயலும் அறிமுகமும் பொழிப்பும் கொண்டு ஒழுங்காக அமைதல் குறிப்பிடத்தக்கது. (பொ.யூ.)
அருளையர்
காலம் பதினேழாம் நூற்றாண்டின் பிற்பகுதி அல்லது பதினெட்டாம் நூற்றாண்டின் முற்பகுதி; திருமறைக்காட்டிலே பிறந்தவர்; தாயுமான சுவாமிகளின் சிறிய தாயாருடைய புதல்வர்; தாயுமான சுவாமிகளின் சீடர்களிலே முதன்மையானவர்; குரு பாடிய பாடல்களை எழுதிப் போற்றிப் பேணியவர்; அவர் மீது தாயுமானவர் பாடிய பாடலொன்று பெருந்தொகையிலுண்டு (1964).
தாயுமானவர் மீது அருள்வாக்கிய அகவல் பாடியவர்.
அவர் சீடரும் தாயுமானவரின் புதல்வருமான கனகசபாபதிப் பிள்ளை அன்னப்பன் பேட்டையில் மெளனகுருமடம் தாபித்தவர்.
(பொ.யூ.)
இந்துக் கலைக்களஞ்சியம்

அரையர் சேவை
அரையர் சேவை என்பது வைணவத் திருக்கோயில்களில் ஆழ்வார்களின் அருளிச் செயல்களை இசையுடன் பாடி அபிநயம் செய்து அழகுறப் பேசி நடிக்கும் முத்தமிழ்க் கலையாகும். இது நாலாயிரத் திவ்வியப் பிரபந்த இலக்கியவிழா எனத்தகும். நாத முனிகள் உடன்பிறந்தாள் மக்களும் மாணவர்களுமாகிய கீழை அகத்தாழ்வானும் மேலை அகத்தாழ்வானும், திருவரங்கத்து அழகிய மணவாளப் பெருமாள் திருமுன்பு இச்சேவை செய்தபோது பெருமாள் உகந்து இவர்களுக்கு அரையர் என்ற சிறப்புப் பெயரை அளித்தார் எனக் கூறப்படுகிறது. இவர்களை 'விண்ணப்பம் செய்வார்', 'நம்பாடுவான்' என்று கோயிலொழுகு, குரு பரம்பரை என்ற நூல்களும் கல்வெட்டுகளும் கூறும்.
அரையர் சேவை கொண்டாட்டம், பாசுரம் பாடுதல், அபிநயம் செய்தல், உரை கூறுதல், கொண்டாட்டம் என்று ஐந்து பிரிவுகளாக அமையும். கொண்டாட்டம் என்பது இறைவன் புகழ்பாடுதல் என்பதாகும். இது 'கண்ணும் மனமும் அழகிய பெருமாள்' என்பது போன்ற பாசுரங்களில் வரும் சொற்றொடர்களால் அமையும். பெருமாளைப் UTG) in கொண்டாட்டம் 'ப்ெருமாள்' என்றும் நாச்சியாரைப் பாடும் கொண்டாட்டம் நாச்சியார்' என்றும் முடியும். அரையர் சேவையில் சில பாசுரங்கள் உரையோடு வழங்கப்பெறுவதுண்டு. அவ்வுரை தம்பிரான்படி என்று கூறப்படுகிறது. அரையர் தம்பிரான்மார் எனப்படுவதால் அவர்கள் கூறும் உரை தம்பிரான்படி எனப்பட்டது.
திருவரங்கப் பெருமாளும் நாச்சியார்களும் எழுந்தருளி யிருந்த திருவோலகத்தில் ஒரு கார்த்திகைத் திருவிழாவின்போது திருமங்கையாழ்வார் தம்முடைய திருநெடுந்தாண்டகம் முதலிய ஆறு பாசுரங்களையும் பண்ணுடன் அபிநயித்துப் பாடியருளினார். அதனைக் கேட்டு உகந்தபெருமாள் ஆழ்வாருக்குச் சிறப்புகள் செய்து, வேண்டும் வரம் கேட்கப் பணித்தார். அவர் பெருமானிடம் மார்கழி மாத ஏகாதசி முதல் பத்து நாட்கள் நம்மாழ்வாரின் திருவாய்மொழியை வேதத்திற்கு ஒப்பாகக் கேட்டருளவேண்டும் என்று வரம் வேண்டினார். பெருமாளும் அருளினார்.
நம்மாழ்வார் திருநாட்டை அலங்கரித்த பிறகு, ஆழ்வார் திரு நகரியில் மதுரகவியாழ்வார், நம்மாழ்வார் திருமேனியை நிறுவி வழிபட்டுத் திருவாய் மொழி முதலிய பிரபந்தங்களை உலகோர் அறியப் பரப்பும் தொண்டு மேற்கொண்டிருந்தார். திருவரங்கர் அழைப்பினைப்பெற்ற மதுரகவியாழ்வார், நம்மாழ்வார் திருமேனியோடு, மார்கழித் திங்கள் வளர்பிறை பத்தாம் நாளன்று திருவரங்கம் வந்தடைந்தார். மறுநாள் ஏகாதசி தொடங்கி வேதம் விண்ணப்பித்ததற்குப் பின் நாளொன்றுக்கு ஒரு பத்தாகப் பத்துநாள் இரவுகளில் திருவாய்மொழி முழுவதையும், பெருமாள் திருமுன்னர் இன்னிசையில் வழங்கினார். இறுதியில் பெருமாள், ஆழ்வாரைத் தமக்கு ஒப்பாக ஒரே இருக்கையில் அமரச் செய்து, வரிசைகள் நல்கி மறுநாள் ஆழ்வார் திருநகரி போக விடுத்தார்.
135

Page 182
இவ்வாறு பல ஆண்டுகள் தொடர்ந்து நடைபெற்ற இவ்விழா இடையில் நின்று போயிற்று. கோயிலொழுகு கூறும் இவ்வரலாற்றின் அடிப்படையில், இக்கலை வழிபாட்டு விழாத் தோன்றிய காலம் திருமங்கை ஆழ்வார் காலம் (கி. பி. 8- ஆம் நூற்றாண்டு) ஆகும்.
நாதமுனிகள் இதனைத் தோற்றுவித்தார் என்பதை வைணவ குருபரம்பரை நூல்கள் கூறுகின்றன. ஆழ்வார்கள் காலத்திற்குப் பின் சில நூற்றாண்டுகளுக்குள் அவர்களுடைய அருளிச் செயல்களை ஒதுவாரும் ஒதுவிப்பாரும் அருகி இலராயினர். கி. பி. 10 - ஆம் நூற்றாண்டில் விளங்கிய நாதமுனிகள் அரிதின் முயன்று, திவ்வியப் பிரபந்தப் பாசுரங்களைத் தொகுத்தார். அவற்றை அழியாமற் காக்க வேண்டித் திருவரங்கத்தில் அப்பாசுரங்களை ஆண்டுதோறும் சேவிக்கும் முறையை உருவாக்கினார். நம்மாழ்வாரை ஆண்டுதோறும் திருக் குகையிலிருந்து எழுந்தருளப் பண்ணும், வழக்கத்தை மீண்டும் உண்டாக்கினார். அதனால் இவர் 'வலம்புரி அன்ன நற்காதல் அடியவர்க்குத் தாளம் வழங்கித் தமிழ்மறை இன்னிசை தந்த வள்ளல் என்று வேதாந்த தேசிகரால் பாராட்டப் பெற்றார். மார்கழித் திங்கள் அமாவாசை நாளுக்கு மறுநாள் பிரதமை முதல் தசமி முடியப் பத்து நாட்களில் முதலாயிரம் பெரிய திருமொழி, திருநெடுந்தாண்டகம் ஆகியவற்றைப் பண்ணுடன் பாடி, அபிநயிக்கும் மரபினைத் தோற்றுவித்தார். பத்து நாட்கள் பகல் வேளையில் நடைபெறுவதால் இவ்விழா பகல் பத்து எனவும், திருமொழித் திருநாள் எனவும் அழைக்கப்பெற்றது. திருமங்கையாழ்வாரால் தொடங்கப் பெற்று மார்கழித் திங்கள் ஏகாதசி (பதினோராம் நாள்) முதல் உள்ள பத்து நாட்களில் நம்மாழ்வாரின் திருவாய் மொழியைப் பண்ணுடன் பாடி அபிநயிக்கும் மரபினையும் நாதமுனி தொடர்ந்து நடைபெறச் செய்தார். பத்து நாட்கள் இரவு வேளையில் நடைபெற்றதால் இவ்விழாப் பகுதி இராப்பத்து எனவும், திருவாய்மொழித் திருநாள் எனவும் பெயர் பெற்றது. இவ்வாறு இருபது நாட்கள் அத்தியயன உற்சவம்' என்னும் திவ்வியப் பிரபந்த இலக்கியப் பெருவிழாவைத் தோற்றுவித்துப் பலகாலம் தொடர்ந்து நிகழ்த்தி வந்தார் நாதமுனிகள். தமக்குப்பின் இக்கலை தொடர, இதனைத் தம் மருமக்களும் சீடர்களுமாகிய கீழையகத்தாழ்வான், மேலையகத்தாழ்வான் ஆகிய இருவருக்குப் பயிற்சியளித்தார். அவ்விருவரும் மணவாளப் பெருமாள் அரையர், நானாவினோத அரையர் என்னும் சிறப்புப் பெயர் பெற்றனர். இறைவன் நம்பெருமாளே இவ்விருவருக்கும் அரையர் என்ற பட்டமும், தலையில் அணியும் தலையணியும், தொங்கும் பரிவட்டமாகப் பட்டும் பருத்தியும், சாத்திக் களைந்த திருமாலையும் ஆகியவற்றை அளித்தார்.
உற்சவரின் முன்பு மட்டுமே அரையர் சேவை நடைபெறும். அப்போது பெருமாளுடன் ஆழ்வார்கள் அனைவரும் எழுந்தருளியிருப்பர். இவ்விழா மார்கழித் திங்கள் வளர்பிறை முதல்நாள் தொடங்கிப் பகல் பத்து, இராப்பத்து என இருபது நாட்கள் நிகழும். ஒரு காலத்தில் தமிழக வைணவக் கோயில்கள் அனைத்திலும் நடைபெற்ற இவ்விழா, இப்போது ஆழ்வார்
136

திருநகரி, திருவில்லிபுத்தூர், திருவரங்கம் ஆகிய மூன்று இடங்களில் மட்டும் நடைபெறுகிறது. மைசூரில் உள்ள மேல்கோட்டையில் அரையர் இசையுடன் பாடுவது மட்டும் உண்டு; அபிநயம் இல்லை.
அரையர் பாசுரங்களை உணர்ச்சியோடு பாடி அபிநயம் செய்வர். அப்போது அவர் தம்மை ஆழ்வாராகவே கருதுவர். தாய், தோழி முதலியவர் கூற்றாக வரும் துறைப் பாசுரங்களில் அரையரே அந்தந்த மாந்தரோடும் நிகழ்ச்சிகளோடும் மனம் மொழி மெய்களால் ஒன்றிவிடுவர். அதனைக் காண்பவர்களும் அரையரை ஆழ்வாராகவும் தாயாகவும் தோழியாகவும் கருதி ஈடுபடுவர். பாசுரங்களை அரையர் மனமுருகப் பாடுவர்.
சேவைக்காகத் தனியே ஒப்பனை, உடை ஏதும் அரையர் அணிவதில்லை. கூம்பு வடிவிலான தலையணி (குல்லாய்) ஒன்றை அவர் தலையில் அணிகிறார். இறைவன் சூடிக்களைந்த இருமாலைகளை அவர் அணிகிறார். அரையர் தம் கைகளில் இருதாளங்களை வைத்துள்ளார். தாளத்தை ஆழ்வார் என்றே அழைப்பர். ஆழ்வார் திருநரியில் அரையர் பயன்படுத்தும் தாளத்தை நாதமுனி பயன்படுத்திய தாளம் என்பது வைணவ மரபு. அத்தாளம் வடிவில் பெரியது. இவை தவிர, வேறு உடையோ, ஒப்பனையோ அணிகலன்களோ துணை இசைக்கருவிகளோ சேவையின்போது இடம்பெறா. பள்ளுப்பாட்டுப் பாடும்போது மட்டும் அரையர் மத்தளத்தைப் பயன்படுத்துவர்.
சேவை நிகழ்த்தும்போது, பாசுரத்தைப் பண்ணுடன் பாடி, அதற்கேற்பத் தாளங்களைத் தட்டி இசைக்கிறார். அடுத்து, பாசுரத்தின் முழு விளக்கம் வெளிப்படுமாறு அபிநயம் செய்கிறார். கால்களால் தாள அறுதியிடுவது, கைகளால் முத்திரை காட்டுவது, முகபாவம், அங்க அசைவு ஆகியவற்றால் முழுமையான அபிநயம் வெளிப்படுகிறது. முன்னும் பின்னும் பக்கவாட்டிலும் தாள அறுதியிட்டுக் கைகளை இயக்கி அரையர் அபிநயம் செய்கிறார். பரதரின் நாட்டிய சாத்திரம் கூறும் நுட்பமான அபிநய வகைகளை ஆழ்வார் திருநகரி அரையரிடம் காணமுடிகிறது. திருவரங்கத்தில் அரையர் இருந்தவிடத்திலே இருந்து அபிநயம் செய்கிறார்.
பாசுரத்தினைப் பாடுகையில் இரு அரையர்களும் பாடினாலும், ஒருவர் மட்டுமே அபிநயம் செய்கிறார். அப்போதும் மற்றவர் பாடுகிறார். அபிநயம் செய்த பின், அரையர் உரை கூறுகிறார். இடையிடையே வரும் உரையாடல்களைக் குரலில் ஏற்ற இறக்கம் தந்து அரையர் பேசுகிறார். ஒருவரே பல பாத்திரங்களாக மாறிமாறிப் பேசும் பாங்கில் இது அமைகிறது. உரை கூறிவருகையில் மற்றவர் அதனை மூலத்துடன் சரிபார்த்து வருவார், தடங்கல் ஏற்படின் மட்டும் அடியெடுத்துக் கூறுவார்.
அரையர் கூறும் உரையில் காட்சி மாற்றம், நிகழ்ச்சி இயைபு நிகழ்ச்சித் தொடர்பு, நிகழ்ச்சி முடிபு, உரையாடல் இயைபு, உரையாடல் தொடர்பு ஆகியன சொற்களின் வழியே காட்டப்படுகின்றன. நாட்டுப் புறக் கூத்து மரபில் மாந்தரின் கூற்று வழியே புலப்படுத்தப்படும் இவ்வியல்புகளை, அரையர் சேவையிலும் அரையரின் (அவர் மாறிக்கூறும் மாந்தரின்) கூற்று
இந்துக் கலைக்களஞ்சியம்

Page 183
வழியே காணமுடிகிறது. அரையர் சேவை நிகழும்போது, அவர் உற்சவரின் முன்னே நிகழ்த்த, பார்வையாளர் மூன்று புறமும் அமர்ந்து இருப்பர். அரையர் நடுவில் இருந்து நடித்துப்பாட அதனை அடியார்கள் முப்புறங்களிலும் இருந்து காண்பதால் அரையர் அடியார் ஆகியோர்க்கிடையே நெருக்கம் ஏற்படுகிறது. இப்பாங்கு நாட்டுப்புறக் கூத்தரங்கின் கூறாகும். சரிசமமாக இருந்து காணும் சனநாயகப் பண்பை - நாட்டுப்புறக் கூத்து மரபை - அரையர் சேவையில் இன்றும் காணலாம். முத்துக்குறி நிகழ்ச்சியில் அரையர் ஒருவரே தாயாகவும் மகளாகவும் குறத்தியாகவும் மாறிமாறி அபிநயம் செய்கிறார். வேடப்புனைவு ஏதுமின்றி, தம்முடைய அபிநயம் வழி இதைச் செய்கிறார். மகள் நிலையிலிருந்து கூடல் இழைக்கிறார்; தாயாக நின்று மருகுகிறார்; குறத்தியாகப் பேசுகிறார். தம் கையில் உள்ள பட்டுத் துண்டைத் தலைவியாக எண்ணி, உற்சவரிடம் (தலைவனிடம்) காட்டிக் காட்டிப் பேசும் தாயாக அரையர் உருகுகிறார். ஒரு தட்டில் அரிசி பரப்பி வைக்கப்பட்டுள்ளது. தலைவியாக நின்று கூடலிழைக்கையில் அது தவள மண்ணாகவும், கட்டுவிச்சியாக நின்று குறி சொல்லுகையில் முத்தாகவும் கொள்ளப்படுகிறது.
அரையரின் நடனம் நாடகமுறையில் பொதுவியல் நெறி சார்ந்தது; முத்திரை, அடவு, தாளஒத்து 'சதி, அபிநயம், முகபாவம் முதலியவற்றால் விளக்கும் ஆடற்கலை முறையில் அமையும். பேரின்பத்தை மையமிட்ட அரையர் சேவையில், கட்டுவிச்சி தத்துவக் குறியீடாக, உயிரையும் இறையையும் இணைக்க உதவும் ஞானாசிரியராகச் செயற்படுகிறாள்.
அரையர் சேவையில் பாசுரத்திற்கு மட்டுமே அபிநயம் உண்டு. ஆனால் முத்துக்குறி நிகழ்ச்சியில் மட்டும் பாசுரத்துடன் உரைக்கும் அபிநயம் உண்டு. திருமங்கையாழ்வாரின் திருநெடுந்தாண்டகப் பாசுரத்தைப் பாடும் நிகழ்ச்சி முத்துக்குறி. இந்நிகழ்ச்சியின்போது அரையர் குறத்தியாக முத்துக்குறி பார்ப்பார். அக்குறி பார்க்க அரையர் பெருமாளிடம் தீர்த்தமும், திருவடி நிலையான திருச்சடகோபமும் பெற்று அங்குக் கூடியுள்ள ஆழ்வார் ஆசாரியர்களுக்கும் குழுவினர்க்கும் வழங்குவர். இது, பகல் பத்தின் ஒன்பதாம் நாளில் திருவரங்கத்திலும், பத்தாம் நாளில் ஆழ்வார் திருநகரி, திருவில்லிபுத்தூர் ஆகிய தலங்களிலும் நிகழும். இப்பாசுர உரை மிக நீண்டதாயிருப்பதால், ஏனைய நாட்களைவிட அரையர் சேவை நிகழும் காலமும் நீண்டதாக இருக்கும். திருவில்லிபுத்தூரில் மட்டும் முத்துக்குறி நிகழ்ச்சி, மூன்று பிரிவுகளாக நிகழும். ஆடித்திங்களில் தேர் நிலைக்கு வந்து சேர்ந்த மறு நாளிலும், மார்கழித் திங்களில் அத்யயன உற்சவத்தில் பகல்பத்தின் இறுதி நாளிலும், தைத்திங்களில் பொங்கலுக்கு மறுநாளிலும் நடைபெறும். திருமங்கையாழ்வாரின் திருநெடுந்தாண்டகத்தில் உள்ள பதினோராம் பாசுரமான பட்டுடுக்கும் என்பதன் ஈற்றடியில் கட்டுவிச்சி சொல் என்னச் சொன்னாள் என்று வருகிறது. இப்பாசுரத்திற்கு அரையர் கூறும் தம்பிரான்படி உரையில் குறம், குறவஞ்சிக் கூறுகள் மிக்குள்ளன. பாசுரத்தின் அமைப்பு அகப்பொருள் இயல்பிலானது. கடல் வண்ணன் மையலில் சிக்குண்ட தலைவி நிலைகண்டு தாய் புலம்புவது, கட்டுவிச்சியை
இந்துக் கலைக்களஞ்சியம்

அழைத்துக் கட்டுப்படுத்தித் தன் மகளுக்கு மையல் செய்தவன் திருமால் என உணர்வது ஆகியன ஆழ்வார் பாடலிலே உள்ளன. அரையர் கூறும் தம்பிரான் படியில் பல்வேறு நிலைகள் நாடகப் பாங்குடன் உள்ளன. குறத்தியாக வந்து பேசுமிடங்களில் அரையர் கூறும் உரைமுழுவதும் வடசொற் கலப்பு ஏதுமின்றி, வழக்குச் சொற்கள் மிக்க பேச்சுத் தமிழில் உள்ளது. உடையில் - புனைவில் - மாற்றம் ஏதுமின்றித் தம்முடைய அபிநயம், உரை வழியே தாயாகவும் மகளாகவும் குறத்தியாகவும் அரையர் நடிக்கிறார்.
பகல்பத்து, இராப்பத்து நாட்களில் அரையர் சேவைக்கு எடுத்துக் கொள்ளும் பாசுரங்கள் மாற்றம் பெற்று வந்துள்ளன. முன்னர் அளவில் மிகுதியாகவிருந்து பின்னர்க் குறைந்துள்ளது. இச்செய்திகளைக் குருபரம்பரை நூல்கள், உரைகள் வழி அறியலாம். ஆழ்வார் திருநகரி, திருவில்லிபுத்தூர் ஆகிய இரு தலங்களிலும் இன்று அரையர் சேவை நடைமுறையில் மாற்றம் ஏதுமில்லை. திருவரங்கத்தில் பகல் பத்தில் மட்டும் அரையர் சேவிக்கும் பாசுரங்கள், ஏனைய இரு இடங்களுடன் சிறிது மாறுபடுகின்றன. திருவரங்கத்தில் பகல்பத்தின் நான்காம் நாளில் கம்சனைக் காய்ந்த கருவில்லி’ என்னும் தொடர் வரும்போது அப்பதிகத்தை அதனோடு நிறுத்தி அடுத்த பதிகத்தைத் தொடர்வர். பிற்பகலில் கம்சனைக் காய்ந்த கருவில்லை என்ற பாசுரத்திற்குத் தம்பிரான்படி கூறிக் கம்ச வதத்தினை அரையரே நாடகமாக நடித்துக் காட்டுவார். ஏழாம் நாள், மண்ணளந்த தாளான்' என்னும் பகுதி வரும்போது நிறுத்தி, பிற்பகலில் அதற்குத் தம்பிரான்படி கூறி வாமன அவதார நிகழ்ச்சியையும், எட்டாம் நாள் ஆயிரம் தோளால் அலைகடல் கடைந்தான் என்னுமிடத்தில் நிறுத்திப்பிற்பகுதியில் கடல் கடந்த நிகழ்ச்சியினையும் நடித்துக் காட்டுவர். இறுதிநாள் பிற்பகலில் குன்றாத வலி அரக்கர்கோனை மாளக் கொடுஞ்சிலைவாய்ச்சரம் துரந்து குலம் களைந்து வென்றான்' என்னும் பாசுரம் வரும்போது இராவண வதம் நிகழ்ச்சி நடித்துக் காட்டப்பெறும்.
அரையர் சேவையில் பள்ளுப்பாட்டு பாடும் வழக்கம் உள்ளது. இன்றும் இவ்விழா நடைபெறும் மூன்றிடங்களிலும் இது வழக்கில் உள்ளது. அரையர் ஒருவர் கூடா ஒழுக்கத்தால் ஊரிலிருந்து வெளியேற்றப்பட்டுப் பறைச்சேரியில் தங்கியிருந்தார். அங்கிருந்தே அவர் பள்ளும் பறையும் சூழ இசையுடன் பாடுவதனை அரங்கப்பெருமாள் கேட்டுகந்து, அவரை வரவழைத்து வரம் தரும் பெருமாள் அரையர்' எனப் பட்டப் பெயர் வழங்கினார். அன்றுமுதல் பறை இசையுடன் பள்ளுப்பாட்டுப் பாடும் பழக்கம் அரையர் சேவையில் இடம்பெற்றது. இப்பள்ளுப்பாட்டு இன்றும் மூன்றிடங்களிலும் படியேற்றம், திருமுடிசேவை, திருவூறல் ஆகிய விழாக் காலங்களில் பாடப்படுகின்றன. இப்பள்ளுப்பாடல்கள் எளிய சொற்களில் திருமால் புகழ் பாடும் பாடல்கள். கவிஞன் கூற்றாகவும், அகப் பொருள் அமைப்பில் தலைவி கூற்றாகவும் அமைந்த பாடல்கள் இவை. இப்பள்ளுப்பாட்டிற்கும் தமிழ் இலக்கிய வகைகளுள் ஒன்றான பள்ளு இலக்கியத்திற்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை.
137

Page 184
இன்று ஆழ்வார் திருநகரியில் அரையர் ஒருவர் உள்ளார். அவருடன் அவருடைய மூத்த மைந்தரும் இணைந்து இச்சேவையில் பங்காற்றுகிறார். திருவரங்கம், திருவில்லிபுத்தூர் ஆகிய ஈரிடங்களிலும் இரு அரையர் குடும்பங்கள் உள்ளன. விழா நாட்களில் இவ்விரு குடும்பங்களும் தம்முள் முறைவைத்துக் கொண்டு, நிகழ்ச்சிகளில் பங்கேற்கும். நாள்தோறும் நாள்வழிபாட்டில் திவ்வியப் பிரபந்தம் பாடும் பணியையும் அரையர் செய்கிறார், விழா நாட்களில் (பகல்பத்து, இராப்பத்து) அரையர் பாசுரத்தைப்பாடி, அபிநயம் செய்து உரை கூறியபின், குழுப்பாடலாகப் பாடும் வைணவர்கள் தொடர்ந்து ஒதுவர். முடித்து வைப்பதும் அரையரின் பணி. அரையர் பண்ணுடன் இசைக்க, வைணவர்கள் குழுப்பாடலாகப் பாடுகையில் இசையின்றி ஒதுவர். இராமாநுசர் காலம் வரை, நாலாயிரம் முழுவதும் கோயிலுள் ஒதும் உரிமை அரையர்களிடம் இருந்தது. இராமாநுசர் காலந்தொட்டு, இயற்பா மட்டும் திருவரங்கத் தமுதனார் மரபினரால் பாடும் முறை வந்தது. இன்றும் இசையுடன் கூடிய மூவாயிரம், அரையராலும், இயற்பா ஆயிரம் மட்டும் அமுதனார் வழித்தோன்றல்களாலும் பாடும் மரபு தொடர்கிறது.
அரையர் சேவை நிகழ்த்தத் தலைப்படுமுன் 12 முதல் 18 ஆண்டுகள் வரை அரையர் பயிற்சி பெறுகின்றார். தந்தைவழி மைந்தருக்கு என்று தலைமுறை மரபு வழியில் - பயிற்சி அளிக்கப் பெறுகிறது. நாலாயிரம் பாசுரங்கள், அவற்றின் உரை, கொண்டாட்டம், பள்ளுப் பாடல்கள் ஆகியவற்றை மனனம் செய்வது, பண்களை முறையாகப் பயில்வது, அபிநயம் கற்பது என்பன பயிற்சியில் அடங்கும். பயில்பவர் தம் ஆசிரியராகிய தந்தையுடன் இணைந்து அரையர் சேவை நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பயிற்சி பெறுகிறார். அரையர் சேவையாகிய இக்கலை மரபாகத் தந்தையிடமிருந்து அவருடைய மூத்த மைந்தருக்கு என்று தொடர்கிறது. ஆண்களுக்கு மட்டுமே இக் கலையில் பயிற்சி அளிக்கப்படுகிறது. ஆண்பிள்ளை இல்லாதபோது, தக்க ஒரு ஆண்பிள்ளையை எடுத்து அவனுக்குப் பயிற்சி அளித்து அவனைச் சேவைக்கு உரியவனாக்குவர். விழாவில் பாடப்பெறும் திவ்வியப் பிரபந்தம் பூசைக்குரிய மந்திரமாக இருந்தாலும் விழா நடைபெறுமிடம் தூய்மையும் புனிதமும் மிக்க இறைவன் திருமுன்பாக இருத்தலாலும் பெண்களுக்கு இதில் பயிற்சி அளிப்பதில்லை. அரையர்களுக்கு முற்காலத்தில் மன்னர்கள் முற்றுாட்டுகளாக நிலங்களை அளித்த செய்திகளைக் கல்வெட்டுகள் கூறுகின்றன. இப்போது அரசு இவர்களுக்கு மானியம் வழங்கி வருகிறது.
அரையர் சேவை என்னும் பத்திக் கலையின் நோக்கம், எளிய மக்களும் உணரும் வண்ணம் ஆழ்வார் பாசுரங்களைப் பண்ணும் கூத்துமாக வெளியிட்டு அவர்களைப் பத்தி நெறியில் ஈடுபடச் செய்வதேயாகும். இந்த நோக்கத்தை நிறைவு செய்யும் வகையில் ஆழ்வார் திருநகரி, திருவில்லிபுத்தூர், திருவரங்கம் ஆகிய ஊர்களில் ஆண்டு தோறும் மார்கழித் திங்களில் பகல் பத்து இரவுப்பத்து என்னும் பெயரில் இலக்கியப் பெருவிழா சிறப்புற நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது. (சு. வே.)
138

அல்லமயிரபு
பிரபு தேவர் என்றும் பிரபுலிங்கர் என்றும் வழங்கப்படுபவர்; பன்னிரண்டாம் நூற்றாண்டிற் பசவாசாரியருடன் சேர்ந்து வீரசைவத்தின் வளர்ச்சிக்குக் கன்னட தேசத்திற் பணிபுரிந்த பெரியார்; பசவர் இவரைக் கல்யாணமடத்திற்கு அதிபதியாக நியமித்தார், சாமராசர் இவர் மீது கன்னடத்திலே பிரபுலிங்கலீலை பாடியுள்ளார். பிரபுலிங்கலீலை தெலுங்கிலும், தமிழிலும் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது; துறைமங்கலம் சிவப்பிரகாச சுவாமிகள் 1652 வரையிலே தமிழிலே பிரபுலிங்கலீலையை மொழி பெயர்த்துப் பாடியுள்ளார்; பீடுபர்த்தி
பசவகவி தெலுங்கிலே பிரபுலிங்கலீலை பாடியுள்ளார்.
(பொ.யூ.)
அல்லாகாபாத்
இந்துக்களின் ஏழு புனித தலங்களில் ஒன்றான பிரயாகை அல்லது திரிவேணியின் தற்காலப் பெயர் அல்லாகாபாத் ஆகும். கங்கை, யமுனா, சரஸ்வதி நதிகள் சந்திக்கும் இடமாதலால் திரிவேணி என்று பெயர் பெற்றது. இழந்த வேதங்களைப் பெற்றதைக் கொண்டாட பிரமன் தன் முதல் அஸ்வமேதயாகத்தை நடத்திய இடம் பிரயாகை.
தீர்த்தராஜ் என்று போற்றப்படும் யாத்திரிகைத்தலம் பிரயாகை. உதிட்டிரன் சகோதரருடன் பிரதிஷ்டத்தின்போது வாழ்ந்த பிரதிடானம் அல்லாகாபாத்தின் அண்மையில் உள்ளது.
இசுலாமியர் 194 இலே இப்புனித தலத்தினைக் கைப்பற்றியதை அடுத்து அல்லாகாபாத் என்ற பெயரினைப் பெற்றது.
ஆண்டுதோறும் நடைபெறும் மாகமேளம் எனும் விழாவின்போது பல்லாயிரக்கணக்கான மக்கள் திரிவேணி சங்கமத்திலே தீர்த்தமாடுவர்; பன்னிரு வருடத்திற்கு ஒருமுறை நிகழும் கும்பமேளம் எனும் விழாவின்போது திரிவேணி சங்கமத்திலே பெருந்திரளான பக்தர் தீர்த்தமாடுவர்.
பிதுர்க்கடன் செய்வோர் தரிசிக்கும் முக்கிய தலங்களிற் பிரயாகையும் ஒன்றாகும். பிரயாகையைக் காண்பதும் அதன் பெயரைக் கூறுவதும் அதன் புனித மண்ணை உடலிற் பூசுவதும் ஒருவருடைய சகல பாவங்களையும் நீக்கும் என்பது ஐதீகம். பிரயாகையில் பிராமணருக்குத்தானம் வழங்கின் புண்ணியம் ஆயிரம் மடங்கு அதிகரிக்கும் என்று நம்புவர். ஊழி முடிவிலும் பிரயாகை அழியாது நிலை பெற்று நிற்கும் என்பது பக்தர் நம்பிக்கை. (பொ.யூ.)
dej6ö6luJjb
சிலப்பதிகார ஆசிரியர் இளங்கோவடிகள் கடலாடு
காதையிலே கண்ணபிரான் ஆடல்களுள் ஒன்றாகக் கூறுவது
இந்துக் கலைக்களஞ்சியம்

Page 185
அல்லியம். இது நின்று ஆடுவது என்றும் ஆறுறுப்புகளை யுடையது என்றும் உரையாசிரியர்களாற் கூறப்படுகின்றது.
கண்ணபிரான் ஆடிய ஆடல்கள் பத்தில் ஒன்றான அல்லியம் கஞ்சனுடைய வஞ்சகத்தின் வந்த யானையின் கோட்டை ஒசித்தற்கு நின்று ஆடிய கூத்தாகும்.
இதனை ஆடத்தொடங்குமுன் முகநிலையாகத் திருமாலுக்கும் சிவபிரானுக்கும் சந்திரனுக்கும் தேவபாணி பாடப்படும் என்பர் உரையாசிரியர். (பொ.யூ.)
அவத்தை
அவத்தை எனும் சங்கத மொழிச் சொல் நிலை எனப்பொருள் தருவது. ஆன்மாவின் நிலையை - தங்கும் இடத்தை - குறிக்கச் சிந்தாந்தத்தில் அவத்தை பயன்படுகின்றது. இது காரணாவத்தை, காரியாவத்தை என இரு வகைப்படும்.
காரணாவத்தை கேவலம், சகலம், சுத்தம் என மூவகைப்படும். காரியாவத்தையிலே கேவலம், சகலம், சுத்தம் ஒவ்வொன்றும் சாக்கிரகம், சொப்பனம், சுழுத்தி, துரியம், துரியாதீதம் என ஐந்து அவத்தைகளை உடையதாயிருக்கும். இதனால், காரியாவத்தை பதினைந்தாகும்.
கேவலம் - தனிமை, மனம் முதலிய மாயா கருவிகளுள் ஒன்றோடும் கூடாதிருக்கும் நிலை, கேவலம். கேவலத்தில் ஆணவமலம் ஒன்றேயுண்டு. சகலம் - கலையோடு கூடியது. கலை, மாயையின் ஆக்கப்பொருள். மனம் முதலிய கருவிகள் எல்லாவற்றோடும் கூடியிருக்கும் நிலை சகலம். இங்கு மும்மலமும் உள. சுத்தம் - துய்மை, ஆணவம், கன்மம், மாயை எனும் மும்மலங்களும் அற்றது சுத்தாவத்தை அறிவே வடிவாய் இருத்தல்,
சாக்கிரகம் - நனவு, சொப்பனம் - கனவு; சுழுத்தி - உறக்கம்; துரியம் - பேருறக்கம், துரியாதீதம் - உயிர்ப்படங்கல். சாக்கிரகம் முதலிய ஐந்திலும் அறிவு புருவநடு, கழுத்து, இதயம், உந்தி, மூலாதாரம் எனும் இடங்களில் விளங்கி நிற்கும்.(பொ.பூ)
அவதாரக் கொள்கை
10ாகவத நாராயணனும் வீரக்கடவுளான வாசுதேவ, கிருஷ்ணனும் ஒன்றாகி, நாராயணனின் அவதாரமே வாசுதேவ கிருஷ்ணன் என்ற நோக்குடன் பரிணமித்த அவதாரக் கொள்கை வைணவக் கோட்பாட்டின் அடிப்படை. சிலசமயம் இக்கோட்பாட்டின் மூலத்தை இருக்கு வேதத்தில் காணமுற்படுவர்; அதிலுள்ளதோர் பகுதி விஷ்ணு போரிடும்போது வேறொரு உருவை ஏற்றுக் கொண்டார் என்று குறிப்பிடுகிறது. நிருத்தம் என்ற நூலில் விலங்கு வடிவிலும் விலங்கு இல்லாத வேறு வடிவங்களிலும் கடவுளர் பலர் இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்திரன் பல உருவங்களில் சுற்றித் திரிவதாக
இந்துக்கலைக்களஞ்சியம்
இ

இருக்கு வேதத்தில் குறிப்பிடப்படுவதைக் கோண்டா எடுத்துக் காட்டியுள்ளார். எவ்வாறாயினும் வைணவ அவதாரக் கொள்கை கடவுள் பல்வேறு வடிவங்களை எடுப்பார் என்ற வெறும் நம்பிக்கை மட்டுமன்று; இக்கொள்கையை முதலில் விளக்கிய பகவத் கீதை கடவுள் தீயவரை அழித்து நல்லவரைக் காப்பாற்றும் பொருட்டு அவதாரம் செய்கின்றார் என்று தெளிவாக விளங்குகின்றது. இவ்விதப் பிறப்புகள் பல கடவுள் எடுத்து விட்டார்; எப்பொழுது தர்மம் குலைந்து அதர்மம் பெருகுகிறதோ, அப்போது இறைவன் தம்மைத் தாமே படைத்துக் கொள்ளுகிறார். இரக்கமே தலையாய பண்பாக அமைந்த முந்தைய புத்தர்களைப் பற்றிய பெளத்தக் கொள்கை அவதாரக் கொள்கையை உருவாக்கியிருப்பதாகத் தோன்றுகிறது. காலக் கணக்குப்படி பெளத்த மதக் கொள்கையானது சற்று முந்தியதாய் அமைகிறது; கி. மு. மூன்றாம் நூற்றாண்டிலேயே முக்கால புத்தர்கள் சிலர் வழிபடப்பட்டதாகத் தெரிகிறது.
சக்தி, வலிமை, வளம் ஆகியவற்றை எவை உடையனவோ அவையனைத்தும் இறைவனது சக்தியின் ஒரு பகுதியிலிருந்து தோன்றுகின்றன என்று பகவத்கீதை உரைக்கிறது. இந்தப் பொருளில் நல்லது வல்லது எதுவோ அது இறைவனின் பகுதி வெளிப்பாடு. போதி சத்துவர்களைப் போல விஷ்ணுவினுடைய அவதாரங்களைக் கணக்கிட முடியாது எனலாம். ஆனால், இழிதருதல் எனப் பொருள்படும் அவதார் என்னும் வேர்ச் சொல்லிலிருந்து பெறப்படும் அறிந்த சொல்லான அவதாரம் ஆரம்பகால நூல்களில் பயன்படுத்தப்படவில்லை. அவதாரம் என்னும் கருத்தையும் கடவுள் வேறு உருவமடைந்தார் அல்லது மனித உடலில் புகுந்தார் என்பதனை இயம்ப ஜன்மம் (பிறப்பு) சம்பவம் (தோன்றல், உயிர்ப்பொருளாய் வருதல்) ஸ்ரஜனா படைப்பு பிராதுர்பாவா (தோற்றம், என்பன போன்ற சொற்களைப் பகவத்கீதையும், நாராயணியமும் நாடுகின்றன. இடைச் செருகலான ஓரிடத்தைத் தவிர, விஷ்ணு தருமோத்திரம் வேறெங்கும் அவதாரா என்ற சொல்லைப் பயன்படுத்தவில்லை. ஹரிவம்சம் விஷ்ணுவினது அவதாரங்களைப் பிராதுர்பாவங்கள் என விவரிக்கிறது. அவதாரம் என்னும் சொல் குறிப்பிட்டதொரு உருவத்தில் அவதரிப்பதற்கு இயைந்து இறங்கி வரும் பெருங்கடவுளான நாராயண விஷ்ணுவின் இயல்பான உயர்வைச் சுட்டுகிறது; ஆனால், ஆரம்ப காலத்தில் மக்களிடையே செல்வாக்குப் பெற்றிருந்த பல்வேறு தெய்வங்களான கூர்மம், நரசிம்மம், வாசுதேவ கிருஷ்ணன் போன்றவர்களை நாராயணனின் பல்வேறு வெளிப்பாடுகளாக அங்கீகரித்து ஏற்கும் போக்கிருந்தது
நாராயண விஷ்ணுவின் முக்கியமான சிறப்புமிக்க அவதாரங்களில் மகாபாரதம் நாராயணப்பகுதி இரண்டு பட்டியல்களை, முதற்பட்டியலில் ஆறு அவதாரங்களையும், இரண்டாவது பட்டியலில் நான்கு அவதாரங்களையும் மட்டுமே குறிப்பிடுகின்றது. பத்து அவதாரங்களை வரிசையாகக் கூறும் செய்யுள் பிற்கால இடைச்செருகல் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. வராஹம் (பன்றி), நரசிம்மம் (மனித - சிங்கம்), வாமனம்
139

Page 186
(குள்ளன்), மனுஷம் (மனிதன் அதாவது கிருஷ்ணா) என்ற இறைவனது நான்கு அவதாரங்களைக் குறிப்பிடுகின்ற இரண்டாவது பட்டியலே ஆதியிலிருந்த மூலப்பட்டியல் என்று தோன்றுகிறது. இது மகாபாரதத்தின் ஆரண்ய பர்வத்திலும் மார்க்கண்டேய புராணத்திலும் குறிப்பிடப்பட்டுள்ளது; எனினும் இப்புராணத்தில், மனுஷா என்பதற்குப் பதிலாக மாதுரா அதாவது கிருஷ்ணா என்று குறிப்பிடப்பட்டுள்ளது. பின் எழுந்த நூல்களில் படிப்படியாக அவதாரங்களின் எண்ணிக்கை கூடிச் செல்கிறது; எனவே, பாகவத புராணமும் பாஞ்சராத்திரமும் முறையே 24,29 அவதாரங்களை இறைவன் எடுத்தாகக் குறிப்பிடுகின்றன.
ஆரியருக்கு முற்பட்ட புனிதப் பன்றி வழிபாட்டை வராகாவதாரம் இணைத்துக் கொண்டதாகத் தெரிகிறது. ஆரியர்களுக்குப் பகையாக இருந்த பன்றி இந்திரனாற் கொல்லப்பட்டது என்று இருக்குவேதம் கூறுகிறது; அசுரர்களின் செல்வத்தைப் பன்றி ஒன்று குன்றின் மறுபக்கத்தில் பாதுகாத்து வைத்திருந்ததென்று தைத்திரேய ஸம்ஹிதை புகல்கின்றது. முதலூழிக் காலத்தில் எங்கும் படர்ந்து நிரம்பியிருந்த நீரிலிருந்து நிலத்தை பன்றியொன்று வெளிக்கொணர்ந்தது என்றும் அப்பன்றியும் படைப்புக் கடவுளான பிராஜாபதியும் ஒன்றே என்றும் சதபத பிராமணம் குறிப்பிடுகிறது. பிராமணங்கள் உருவான காலத்தில் பிராமணமயமாகிக் கொண்டிருந்த ஆரியரல்லாத வலிமை பெற்றதொரு இனத்தின் மரபுச் சின்னமாக ஏற்கப்பட்ட பன்றியாக இருக்கலாம். பன்றிக்கும் பூமாதேவிக்கும் இடையிருந்த சிற்றின்பத் தொடர்புகள் அவற்றால் சாணம், சகதி ஆகியவற்றின் உருவகமாக நரகன் என்னும் மகனைப் பற்றிய கதைகளை எடுத்துக்காட்டி பன்றிக்கும் வளத்துக்கும் இடையேயுள்ள தொடர்பை கோண்டா மிக விரிவாக விவாதித்துள்ளார். வேளாண் பணிகளைத் தொடங்கும் முன் விஷ்ணுவினுடைய வராஹ அவதாரத்தை வழிபட வேண்டுமென்று விஷ்ணு தருமோத்திரம் விதி வகுத்திருப்பதையும் இங்குக் கூறவேண்டும். சுருண்டு படுத்திருக்கும் சேஷனை மிதித்துக் கொண்டிருப்பது போலப் பன்றி அவதாரம் சிற்பங்களில் தீட்டப்பட்டுள்ளது. இவ்விரு கடவுள்களுக்கிடையேயுள்ள நெருங்கிய தொடர்பிற்கு வேளாண்மையுடன் உள்ள தொடர்பினைச் சான்றாகக் கூறலாம். கிரேக்க நாட்டிலும் பன்றி வளமையுடனும் வளப்புத் தேவதையான டெமீட்டருடனும் தொடர்புபடுத்தப்பட்டது.
விந்திய மலைகளைச் சுற்றிலும் அமைந்த நிலம் பன்றி வழிபாட்டின் வலிமையும் செல்வாக்கும் மிக்க இடம் எனத் திகழ்ந்தது. விஷ்ணுவின் வராக அவதாரம் வழிபடத்தக்க இடம் கயாசீரசம் என்றும், கந்த மாலாகுன்று இறைவனின் இவ்வுருவ வழிபாட்டிற்கும் தனிச் சிறப்பமைந்த புனித இடம் என்றும் விஷ்ணு தருமோத்திரம் கூறுகின்றது. இது, சிரார்த்தச் சடங்கு செய்யும்போது வராகத்தையும் வழிப்படுதல் வேண்டுமென்று மேலும் பரிந்துரை செய்கிறது. பிதுரர்களுக்கு வழிபாடு செய்து படைக்கப் புனிதமான இடம் கயை என்பதை நாமறிவோம். கி. பி. 500 ஆம் ஆண்டைச் சார்ந்த சாசனமொன்று மத்தியப் பிரதேசத்திலுள்ள சாகர் மாவட்டத்தில் கூர்மக் கடவுளுக்குக் கோயிலொன்று எழுப்பப்பட்டதைக் குறிப்பிடுகிறது.
140

புத்த-குப்தர் காலத்தைச் சார்ந்த சாசனமொன்று கோகாமுகஸ்வாமி, ஸ்வேதராஹ சுவாமி என்னும் இரு கடவுள்களைப் பற்றிப் பேசுகிறது. அறிஞர் சிலரால் கோகாமுகஸ்வாமி சிவன் அல்லது நரசிம்மருடன் ஒன்றுபடுத்திப் பேசப்படுகின்றது; ஆனால் வராக புராணத்தின் பகுதி ஒன்றை ஆதாரமாகக் கொண்டு இரண்டும் விஷ்ணுவின் பன்றி அவதாரத்தையே குறிக்கின்றன எனத் தெளிவாக ராய்சவுத்திரி நிறுவியுள்ளார். இந்த அவதாரம் பூவராகம் அல்லது ஆதிவராகம் யஞ்யவராகம், பிரளயவராகம் என்று மூன்று வடிவினது என்று டி.எ. ஜி. ராவ் கண்டுள்ளார்; ஸ்வேதவராக சுவாமியும், கோகா முகஸ்வாமியும் முறையே பின்னிரு கடவுளரைச் சுட்டும் என்பது எம்கருத்து. சர்க்கார் விளக்கவுரைப்படி இச்சாசனம் வராக சத்திரத்தில் (நேபாளம்) இக்கடவுள்களுக்குக் கோயில்கள் இருந்ததையும் வங்காளதேசம் தினஜ்பூர் மாவட்டத்தில் அவர்களைச் சிறப்பிக்கும் பொருட்டு இரு கோயில்களைத் தனவான் ஒருவர் கட்டியதையும் மெய்ப்பிக்கிறது. வராக வழிபாடு குப்தர்கள் காலத்தில் செல்வாக்குப் பெற்று வளர்ந்திருந்ததென்று தெரிகிறது; கடவுளின் மதுரவராகம், ஆதிவராகம் என்னும் வடிவங்களைப் பற்றி இரகுவம்சமும் இராவண வசவ ஹம் குறிப்பிடுகின்றன.
தைத்ரீய ஆரண்யகத்தின் பிற்பட்ட பகுதியொன்றைத் தவிர வேத இலக்கியம் எதிலும் நரசிம்மம் குறிப்பிடப்படவில்லை. இதன் பத்தாம் பிரபாதகம் இவரை வலிமை வாய்ந்த நகங்களையும் கூர்மையான பற்களையும் உடையவரென்று வருணிப்பதோடு, வாசுதேவ விஷ்ணுவுக்கு அடுத்து உடனடியாக இவரை வழிபட காயத்திரி மந்திரத்தை ஒத வேண்டும். இது, இருவரும் ஒன்றே என்ற நிலை இல்லையெனினும் இருவரிடையே நெருங்கிய தொடர்புண்டு. ஆர். ஆட்டோ என்பார் கருத்துப்படி, நரசிம்மம் பண்டைக் காலத்தில் தெய்வ ஆற்றலின் தனி முழு உருவம்,
எம் கருத்துப்படி நரசிம்மம் கதைக்கு சிங்கக் கடவுள் வழிபாடு கருவாக அமைகிறது; இச்சிம்மக் கடவுளை வாசுதேவ விஷ்ணுவுடன் ஒன்றாக்கியதனால் பாதி சிங்கம் பாதி மனிதன் உருவமைந்த கருத்தாக்கம் எழுந்தது. இந்நிகழ்ச்சிப் போக்கின் தொடக்கத்தையும் முதற்கட்டங்களையும் குறிப்பிடுகின்ற ஹரிவம்சம் 'அ' விஷ்ணு முற்காலத்தில் சிம்மத்தின் உருவத்தைப் பெற்றார். பின்னர் பலம் பொருந்திய அரக்கனான இரண்யகசிபுவைக் கொல்ல பாதி மனிதன் பாதி சிம்மம் என்னும் ஈருருவைத் தாங்கினார் என்று தெளிவாக கூறுகிறது. கூர்ம புராணம், இதே கதையை முழுதும் வைணவ மயமாக்கிச் சொல்லும்பொழுது, 'ஆ' இரண்யகசிபுக்கும் நரசிம்மத்திற்கும் நடந்த சண்டையில் நரசிம்மத்தின் உடலிலிருந்து எண்ணற்ற சிங்கங்கள் தோன்றி அனுலாதனையும் பிற அரக்கர்களையும் கொன்றதாகக் கூறுகிறது. இக்கதை இக்கடவுளின் நரவிலங்குத் தன்மையைப் பிரதிபலிக்கிறது.
ஆந்திரப் பிரதேசம் குண்டூர் மாவட்டம் கொண்டமோடு என்னுமிடத்தில் கண்டு பிடிக்கப்பட்ட உயர்ந்த சிற்பத் தொகுதி எம்கருத்தை உண்மையென நிலை நாட்டுகிறது. வலப்பக்கம் இரு மனிதர் இடப்பக்கம் மூவர் புடைசூழ உள்ள சிம்மக் கடவுளின்
இந்துக் கலைக்களஞ்சியம்

Page 187
சிற்பம் செதுக்கப்பட்டுள்ளது. அவர்கள் தாங்கியுள்ள அடையாளச் சின்னங்களிலிருந்து வலப்பக்கம் பிரத்யும்னனும் விஷ்ணுவும், இடப்பக்கம் கிருஷ்ணனும் சங்கர்ஷணனனும் அநிருத்தனும் உள்ளனர் என நம்பப்படுகிறது. இதே சிற்பத் தொகுதியில் ஏழாவது மானிட உருவம் இருந்ததெனவும் அது சாம்பனின் உருவாக இருக்கலாம் எனவும் ஆனால் இது இப்பொழுது காணப்படவில்லை எனவும் கருதப்படுகிறது. கடவுளின் மார்பில் பூரீவத்சமும் கழுத்தருகிலிருந்து இரு கைகளும் அவ்விரு கைகளிலும் விஷ்ணுவின் அடையாளங்களான சக்கரமும் தண்டும் காணப்படுவதனால் இது நரசிம்மம் என்பதில் ஐயமில்லை; இல்லையேல் முழுவதும் விலங்குருவமாக இருக்கும். இறைவன் குனிந்த உருவினன். இச்சிற்பம், சிம்ம கடவுள் விஷ்ணு பஞ்ச வீரர் ஆகியோர் வழிபாடுகள் கலந்து ஒன்றாக இணைந்து முழு உருவம் பெற்ற நிலையைக் காட்டுகிறது எனலாம். இச்சிற்பத் தொகுதி நரசிம்மரின் முதற்காலப் படிமம், கி. பி. நாலாம் நூற்றாண்டைச் சார்ந்தது என்பது நமக்கு ஆர்வமூட்டும் செய்தி.
விநாயகரைப் போலவே சிம்மக் கடவுளும் பயங்கரக் கடவுளாக அவருடைய கோபாவேசத்திற்கு வணங்கத் தக்கவராக இருந்திருக்க வேண்டும். இத்தன்மை விஷ்ணுவின் நரசிம்ம உருவில் காணப்படுகிறது. விஷ்ணு தருமோத்திர புராணம் இடையூறுகளை நீக்குவதற்கும் கெட்ட உடுக்கள் கிரகங்கள் இயற்கை இகந்த சக்திகள் ஆகியவற்றால் உண்டாகும் தீங்குகளை மிதமாக்கவும், கள்ளர் பகைவர் காட்டு விலங்குகள் இராக் காலங்களில் உண்டாக்கும் அபாயத்தைத் தடுக்கவும் நரசிம்மம் வணங்கப்பட வேண்டும் எனச் சொல்லுகிறது. அரசனொருவன் முடிசூட்டிக் கொள்ளும் பொழுது புரந்தர சாந்திக் காலத்தில் அவர் வணங்கப்பட வேண்டும். நோய் நொடிகளைப் போக்கவும் பேராபத்துக்களைத் தடுக்கவும் நரசிம்ம ஸ்தோத்திரமும் நரசிம்ம மந்திரமும் சக்தி வாய்ந்தவை என்று கருதப்படுகின்றது. ஒருவன் குடியிருக்கும் வீட்டில் தீய ஆவிகள் சேராவண்ணம் புருஷ சிம்மம், விஷ்ணு, விஸ்வகர்மன், கிருஷ்ணன், பவன், ஷபவன் என்னும் பல்வேறு கடவுள்கள் வணங்கப் பெற வேண்டும் எனக் கூறும் இந்திர ஜால வாய்ப்பாடு ஒன்று சரகசம்ஹிதையில் இடம் பெற்றுள்ளது. நரசிம்மனைப் போன்றதே புருஷ சிம்மம்; காளிதாசன் அபிக்ஞான சாகுந்தலத்தில் நரசிம்மத்தைப் புருஷ கேசரி என்று வழங்குகிறார்.
சிம்மக் கடவுள் முதன் முதலில் சித்திய அல்லது கூர்ஜரக் கடவுளாக இருந்திருக்க வேண்டும் என்று பரிந்துரைக்கப் படுகிறது. "மேலை ஷத்ரபர்களின் அடையாளக் குறியாக தென் மேற்கு ஆசியாவின் அரச விலங்கு” சிம்மம் கீழைத் தக்காணத்தில் ஆண்டு வந்த விஷ்ணு குண்டின் அரசர்களும் பொதுவாக தங்கள் முத்திரைகளில் சிம்மத்தைப் பொறித்தனர் என்பதை நாம் சுட்டிக்காட்ட வேண்டும். அவர்கள் தம்மை பூரீபர்வதஸ்வாமியின் பக்தர்கள் என்று வழங்கிக் கொண்டனர். இறைவன் பூரீ சைல மலையைச் (இக்கால நல்ல மலைப் பகுதிகள்) சார்ந்த சிவமல்லிகார்ஜுனர் எனக் கருதப்படுகிறது. ஆனால் இது எவ்வாறாயினும் உறுதியானதன்று. இதே நல்ல மலைத் தொடரில்
இந்துக் கலைக்களஞ்சியம்

வேறு பல தெய்வங்களின் கோயில்கள் இருந்ததற்கு கல்வெட்டுச் சான்று உண்டு. இஷ்வாகு கல்வெட்டொன்று, பூரீ பர்வதத்தில் பகவான் புத்தரின் கற்சிலை நாட்டப் பெற்றதென கூறுகிறது: கி. பி. மூன்றாவது, நான்காவது நூற்றாண்டுகளைச் சார்ந்த கல்வெட்டுகள் இதே மலைத் தொடரில் வைணவக் கோயில்கள் இருந்ததற்கும் சான்று தருகின்றன. விஷ்ணு குண்டின் அரச வம்சத்தினர் குலப் பாதுகாப்புத் தெய்வம், பெயர் பரிந்துரைப்பதையொட்டி, சிவ அன்று ஆனால் நரசிம்ம வடிவினனான விஷ்ணுவாக இருக்கலாம். உண்மையில், விஷ்ணுகுண்டின் வம்சம் தோன்றிய இடம் விஷ்கொண்டா, மலைக் கடவுள்; இவரை பூரீ பர்வதஸ்வாமி என்று கூறுவதற்கு ஆசையாக உள்ளது; விஷ்ணு கொண்டாவின் மரூஉ வினு கொண்டா "விஷ்ணுமலை' தெலுங்கில் கொண்டா என்னும் சொல்லுக்கு மலை என்று பொருள். இவ்வாறு, நாகார்ஜுன கொண்டா, பைரவ கொண்டா என்னும் சொற்கள் பிறந்தது போல வினு கொண்டாவும் பிறந்தது எனலாம். ஆனால் அண்மைக் காலத்தில் விஷ்ணுகுண்டின் அரச வம்சத்தினர் கர்நூல் மாவட்டம், பூரீ சைலமலை சார்ந்த இடத்திலிருந்து தோன்றியவர்கள் என்றும் குண்டூர் மாவட்டத்தைச் சார்ந்த வினுகொண்டா அன்றென்றும், நான்காம் தலைமுறையில் இரண்டாம் மாதவர்மன் காலத்தில்தான் வினுகொண்டாவை வந்தடைந்தனர் என்றும் வாதிக்கப்படுகிறது. விஷ்ணு குண்டின் அரசர்களின் பிறப்பிடமும் காலமும் இன்னும் விவாதப் பொருளாகவே இருந்து வருகின்றன. ஆனால் எம் கருத்துப்படி, நரசிம்மம் அவர்களுடைய காப்புக் கடவுளாக இருந்திருக்க வேண்டும் என்பதனை நிராகரிக்க முடியாது.
நூற்று அறுபத்து ஒன்பது நரசிம்மக் கோயில்களுள்ள ஆந்திராவில் அந்நாட்டை இந்து மயமாக்கும் பொருட்டு 'நரசிம்மம்' என்னும் கருத்து மிகப் பெரும் பங்காற்றியுள்ளது என்று அண்மைக்காலத்தில் காட்டப் பெற்றுள்ளது. இவ்வெண்ணிக்கையில் நூற்றுக்கு எழுபது விழுக்காடு இந்து மயமாக்கப்பட்ட இன வழிபாட்டு முறைகள் இனக்குழு மக்கள் வழிபடும் மலையுச்சியிலுள்ள ஒற்றைக் கூம்புச் சின்னங்களைச் சேர்த்துக் கொள்ளுவதற்கு மலையில் பிறந்த நரசிம்ம உருவம் ஏற்றதென்று அனைவரும் ஏற்கத் தக்கவாறு வாதிக்கப்படுகிறது. இத்தகைய ஆராய்ச்சிகளின் பலனாக, பூரீ பர்வதஸ்வாமி விஷ்ணுவின் நரசிம்ம வடிவத்தைச் சுட்டுகிறது எனக் கருதுதல் தவறன்று.
பிறிதோரிடத்தில், சிம்மக் கடவுள் மலைகளோடும் குகைகளோடும் கொண்ட தொடர்பை வலியுறுத்தியுள்ளோம். பல சிற்ப சாத்திர நூல்களில் கூறப்படும் கிரிஜ நரசிம்ம வடிவம் எழுவதற்கு இத்தொடர்பு காரணம் எனலாம். சிம்மக் கடவுள் விஷ்ணுவின் நரசிம்மாவதாரமாக மாற்றமடைந்ததனால், குகைக் கல்லில் மலையிலிருந்து வெளிவரும் கருத்து இரண்யகசிபு பிரகலாதனுக்கு விடுத்த அறைகூவலை ஏற்றுத் தூண் வெடித்து வெளி வந்த கதைக்குக் காலத்தால் முந்தியதாகலாம். இக்கதையை மிக அழகாகப் பாகவத புராணம் எடுத்தியம்புகிறது. ஆனால் இதன் முன்னெழுந்த ஹரிவம்சத்திலும் மத்தியஸ் புராணத்திலும் இக்கதை இடம் பெறவில்லை. ஹரீவம்சமும்
141

Page 188
மத்ஸ்ய புராணமும் பத்ம புராணமும் கூறும் விவரங்கள் மொழி, பொருள் இரண்டில் ஒரே மாதிரி உள்ளன; ஒரே மூலத்திலிருந்து பெறப்பட்டன. இரண்யகசிபுவின் கடுந்தவத்தை ஏற்று பிரம்மன் அவனுக்களித்த வரம் அவனை வெல்ல முடியாதவனாக ஆக்கிற்று. இக்கதைக்கு மூலம் தேவேந்திரன் அசுரநமுகி கதையிலிருந்து எடுக்கப்பட்டது என்று பி. வி. கானே மிகச் சரியாகச் சுட்டிக் காட்டுகிறார். நரசிம்மம் இரண்யகசிபு கதை கலைப்பண்பின் இடமாற்றம் சிம்மக் கடவுள் விஷ்ணுவின் அவதாரமென்று அங்கீகரிப்பதற்கு உடனடியாகக் கிடைத்த விளக்கமாக அமைந்துவிட்டது. பிரகலாதன் விஷ்ணுவிடம் கொண்ட பக்தியின் கலைக்கூறு நரசிம்மக் கதை வளர்ச்சியின் இரண்டாம் கட்டத்தைப் பிரதிபலிக்கிறது. மேலே குறிப்பிட்ட நூல்களின் ஆரம்பக் கால ஏடுகளில் நரசிம்மம் இரண்யகசிபுவின் அரசிருக்கையில் தைத்தியர்களும் தெய்வ அணங்குகளும் பார்த்திருக்க நுழைந்தார் எனக் காணப்படுகிறது. விஷ்ணுவின் அவதாரமென்று பிரகலாதன் தெரிந்து கொள்ளுகிறான்; ஆனால் இது செய்யுளில் இடம்பெறவில்லை. பிரகலாதனைத் தந்தையின் சினத்திலிருந்து காப்பாற்றுவதற்காகவன்று தேவர்கள் அசுரர் அரசனை அழிக்க வேண்டும் என்று விடுத்த வேண்டுகோளை நிறைவேற்றும் பொருட்டே விஷ்ணு நரசிம்மாவதாரம் எடுத்தார். கூர்மபுராணத்தின்படி பிரகலாதன் தந்தையின் சொற்படி கீழ்ப் படிந்து நரசிம்மத்தை எதிர்த்துப் போரிடுகிறான். ஆனால் தோல்வியுற்ற பின் வாசுதேவ விஷ்ணுவின் அவதாரமென்றறிந்து இரண்யகசிபுவையும் பிற அரக்கர்களையும் சண்டையிட வேண்டாமென்று வேண்டுகிறான். பக்தியின் மிக உயர் கருத்தை இயம்பும் பாகவத புராணத்தில் முதன்முதலில் தந்தையின் கொடுமையிலிருந்து பிரகலாதனைக் காப்பாற்றுவதும் அதன்பின் நிகழ்ச்சிகளும் இடம் பெறுகின்றன.
இரண்யகசிபு வீற்றிருந்த மண்டபத்தின் தூணிலிருந்து வெடித்து நரசிம்மம் தோன்றும் கலைநயம் பாகவத புராணத்தில் குறிப்பிடப்படுகிறது; ஆனால் இதற்கு முன் எழுந்த நூல்களில் இது இடம் பெறவில்லை. இக்கதை, எம் கருத்தில் ஏதாவதொரு பழங்குடி மக்களினத்தின் தூண் கடவுளை வைணவம் அடிமையாக்கிச் சேர்த்துக் கொண்டதைக் குறிப்பிடுகிறது. விஷ்ணு தருமோத்திர புராணம் பக்தனைக் காப்பாற்ற சிவலிங்கத்திலிருந்து நரசிம்மம் வெடித்தெழுவதாக கதையொன்று கூறுகிறது; சிம்மாசலத்திலுள்ள நரசிம்மர் கோயிலை இது சுட்டியதாகலாம் என்பது எம் கருத்து. ஆனால் இக்கதை இப்புராணத்தின் கடைசி இரு அத்தியாயங்களில் கூறப்படுவதனால் பின் இடைச் செருகலாக இருக்கலாம்.
சிம்மக் கடவுள் அல்லது நரசிம்ம வழிபாடு கிறித்துவ அப்தத்தின் தொடக்க நூற்றாண்டுகளில் மிக்க செல்வாக்குப் பெற்றிருந்தது; இக்காலத்தில் எழுந்த ப்ராக்கிருத கல்வெட்டுகள் இக்கடவுளின்பால் இருந்த பக்திக்கு அறிகுறியாக இப்பெயரைப் பலர் தாங்கியிருந்தனர் என்று சொல்லுகின்றன. மதுரா மாவட்டத்தில் சோங்க் என்னுமிடத்தில் கண்டெடுக்கப்பட்ட குஷாண வெண்கல பெயர்ப் பலகையொன்றில் சிம்மத் தலையுடைய தாய்க் கடவுளொன்று ஆண்தெய்வத்தினருகே
142

இடக்கையில் குழந்தை ஏந்திய வண்ணம் வர்ணம் தீட்டப் பெற்றுள்ளது. மதுராவில் கண்டெடுக்கப்பட்ட இதே குஷாணர் காலத்தைச் சார்ந்த புடை உருவமொன்றில் மூன்று தேவதைகள் உருவம் இரண்டு வராகி ஒன்று நாரசித்தி வராக நரசிம்ம முகங்கள் தீட்டப்பெற்ற உருவம் காணப்படுகிறது. ஆனால், இவ்வுருவங்கள் சக்திகள் அல்லது வராக, நரசிம்ம கடவுளர்களின் தேவிமார்கள் என்று பிறகின்னங்கள் எவையும் இல்லாத நிலையில் இவற்றை இனம் காணத் தயங்க வேண்டியதில்லை. மிருகங்கள், பறவைகள், முகங்களுடைய தாய்க் கடவுள்கள் பற்றி செந்நெறி இலக்கியங்களில் குறிப்பிடப்படுகின்றன; இச்சிற்பங்கள் இவ்வாறு மிருக முகமுடைய தாய்க்கடவுள்களின் ஆரம்பகால மரபை பிரதிபலிக்கின்றன எனலாம். என்றாலும் ஜெயாக்ய சம்ஹிதை நரசிம்மஹி நரசிம்மரின் பெண் துணைத்தேவதையின் விரிவான விளக்கத்தைத் தருகிறது; ஆனால், சப்தமாதர்களின் முதற் பட்டியலில் அவள் சேர்க்கப்படவில்லை.
நரசிம்ம வழிபாடு தக்கணம் மதுரா அடங்கிய நிலப்பகுதிகளில் மட்டுமே நடைமுறையிலிருந்ததன்று விஷ்ணு தருமோத்திரம் தரும் சான்றை நம்ப வேண்டுமானால் அது பஞ்சாபின் சில பகுதிகளிலும் செல்வாக்குப் பெற்றிருந்தது என்று தெரிகிறது. விஷ்ணுவின் நரசிங்க அவதாரம் மத்ர நாட்டில் நிகழ்ந்ததாக விஷ்ணு தருமோத்திரம் குறிப்பிட்டுக் காட்டுகிறது. மத்ரகர்கள் சியால்கோட்டையைத் தலைநகராகக் கொண்டு மத்திய பஞ்சாபில் வாழ்ந்த மக்களாவர். நரசிம்ம வழிபாடு, பஞ்சாபில் குறிப்பாக, தங்கரா மாவட்டத்தில் மிக்க செல்வாக்குடன் விளங்குகிறது. அங்கு ஞாயிற்றுக்கிழமையில் ஆடவரும் பெண்டிரும் இக்கடவுளைப் புனித தேங்காய் உருவத்தில் வழிபட்டு வருகின்றனர்.
வழிபடத்தக்க சக்திவாய்ந்த பொருளொன்றிலிருந்து தோன்றி உருவடைந்த நரசிம்ம அவதாரம் போலல்லாமல் ரிக்வேதம் சொல்லும் விஷ்ணுவினது மூன்று அடிகளைப் பற்றிய கருத்துடன் மக்களிடைச் செல்வாக்குப் பெற்றிருந்த கூறுகள் சில கலப்புற்றதன் விளைவாகத் தோன்றியதே விஷ்ணுவின் வாமன அவதாரக்கருத்து. மாக்டொனல், கீத் வேறு அறிஞர்கள் பலர் அதைப்பற்றி விரிவாக விவாதித்துள்ளனர். அசுர அரசனான பலி உலகம் முழுவதையும் வென்று பின் தேவர்களை அச்சுறுத்தினான். அவன் வேள்வி நிகழ்த்தியபோது விஷ்ணு குள்ள உருவத்துடன் அவன்முன் தோன்றி, மூன்று காலடி அளக்குமளவிற்கு நிலம் தானமாகத் தருமாறு வேண்டினார். அதைப்பலி ஏற்றுக்கொள்ள, விஷ்ணு ப்ேருரு எடுத்து உலகங்கள் அனைத்தையும் மூன்றடிகளில் அளந்த பின் அவனைப் பாதாள உலகிற்கு அனுப்பிவிட்டார். இந்தக் கதை பலி வழிபாட்டு முறை ஒடுக்கப்பட்டதைக் குறிப்பால் உணர்த்தக் கூடும். ஏனெனில் பலிச் சக்ரவர்த்தியின் வழிபாட்டுச் சிலையொன்றைச் செய்ய வேண்டுமென்று வராஹமிகிரர் கட்டளை இடுகிறார்; அவ்வசுர மன்னனும் ஏதோவொரு விதத்தில் வழிபடப்பட்டான் என்று தெரியவருகிறது. ஸ்கந்த குப்தனுடைய காலத்தைச் சார்ந்த ஜூனாகத் சாசனம் விஷ்ணுவுடைய வாமன அவதாரத்தை வழிபட்டுத் தொடங்குகிறது.
இந்துக் கலைக்களஞ்சியம்

Page 189
நாராயணியத்தின் சிறு பட்டியல் ஒரே ஒரு மனித அவதாரத்தைக் குறிப்பிடுகிறது. அது வாசுதேவரன்றி வேறொருவருமில்லை. இவ்வுண்மை வைணவத்தில் அவதாரக் கொள்கையின் வளர்ச்சிக்குக் காரணம் வாசுதேவ கிருஷ்ணரையும் நாராயணனையும் ஒன்றாக்கியதே என்ற நம் கருத்துக்கு அரணாகின்றது. எனினும், நாராயணியத்தின் நீண்ட பட்டியல் ஆதியிலிருந்த நான்கு அவதாரங்களுடன் ராம பார்க்கவன், ராம தாசரதி என்ற மேலும் இரண்டு அவதாரங்களையும் சேர்த்துக் கொள்ளுகிறது. ஹம்சன் ஹயக்கிரீவன் என்னும் அவதாரங்கள் சற்றுக் காலத்தால் பிந்தி அறிமுகப்படுத்தப்படுகின்றன.
பரசுராமன் என நன்கறியப்பட்ட பார்க்கவராமனைத் தெய்வமாக ஆக்கியது, மகாபாரதத்துக்கு உருக்கொடுத்த வர்களாகிய பிருகு பிராமணர்களின் வேலையாகும்; ஏனெனில், பார்க்கவ வட்டத்துக்கு வெளியில் அவருக்கு ஆதரவு இருந்ததாகத் தெரியவில்லை. அவரையும் விஷ்ணுவையும் ஒன்றாக்கிப் பேசுவது மகாபாரதத்தில் மேலே சொன்ன பட்டியலில் ஓரிடத்தில் மட்டும் காணப்படுகிறது; மற்றபடி, அவர் கூடித்திரியர்களை இருபது முறைக்குக் குறையாமல் நிர்மூலமாக்கிய மாபெரும் புராண புருஷராக தோன்றுகிறார். சுக்தாங்கர் என்பார் எடுத்துக் காட்டியுள்ளவாறு பிராமணர்களின் ஒரு பகுதியினர், இராமாயண காவியத்தின் காப்பாளர்கள் அவரை தெய்வமாகப் புகழ்ந்தேத்துவதை அங்கீகரிக்கவில்லை. அக்காவியம் பார்க்கவர்களை முக்கியமாகப் பரசுராமரை நன்னோக்கில் காணவில்லை. அதே கடவுளின் பேரவதாரமாகிய கூடித்திரிய இராமனிடம் பரசுரிாமன் தோல்வியுற்ற கதையை அது பேசுகிறது. காளிதாசரும் அதைக் குறிப்பிடுகின்றார், பரசுராமனை இறைவனாக்கியதும் மதிப்பிழக்கச் செய்ததுமான கதைகள் கி. பி. இரண்டாவது நான்காவது நூற்றாண்டுகளின் இடைப்பட்ட காலத்தில் தோன்றியிருக்க வேண்டும்; கி. பி. இரண்டாம் நூற்றாண்டைச் சார்ந்த நாசிக் குகைச் சாசனமொன்று மகாபாரதம் அறிவிக்கும் இராம பார்க்கவரின் புனித உறைவிடமான இராம தீர்த்தத்தைக் குறிப்பிடுகிறது.
செல்வாக்குமிக அறநெறிப் பண்புமிளிர இலங்கிய இராம கதைகள் இஷ்வாகு வமிச இராமனைப் போதிசத்துவர் அல்லது விஷ்ணுவின் அவதாரத்துக்குப் பெரிதும் பொருத்தமுடைய பாத்திரமாக ஆக்கிவிட்டன; பாலி தசரத ஜாதகத்தில் இராமன் போதிசத்துவராகக் காட்சி தருகிறான். கி. பி. 251 ஆம் ஆண்டு சீன மொழியில் மொழி பெயர்க்கப்பட்ட அநாமக ஜாதகம் சீதையைக் கவர்ந்தது வானர அரசன் உதவி பெற்றது என்னும் நிகழ்ச்சிகளைக் கூறும் இராமாயணத்தை அறிந்திருந்ததுடன் இராமனைப் பற்றியும் பெயரில்லாத அரசனொருவனைப் போதிசத்துவரென்றும் பேசுகிறது.
கி. பி. 472 ஆம் ஆண்டு சீன மொழியில் மொழி பெயர்க்கப் பட்ட தசரத சுதானம் இராமாயணத்தோடு ஒப்புமையுடையது; இராமனுக்கு நாராயென் (சமஸ்கிருதம் நாராயணன்) என்னும் இறைவனுக்குள்ள வீரமும் ஆற்றலும் உண்டு என்று கூறுகிறது.
இந்துக் கலைக்களஞ்சியம்

இந்நூல் கனிஷ்கரைப் பற்றிக் குறிப்பிடுவதால், கி. பி. இரண்டாம் நூற்றாண்டிற்கு முன் இந்திய மூல நூல் வரையப்பட்டிருக்க முடியாது என்று பல்கி சுட்டிக் காட்டியுள்ளார். இதற்கடுத்த காலத்தைச் சார்ந்த பெளத்த நூல்கள் இராமனைப் பற்றிக் குறிப்பிடவில்லை. கி. பி. இரண்டாம் நூற்றாண்டின் இறுதியில் இராமர் விஷ்ணுவுடன் ஒன்றாக்கிப் போனது பெருவழக்காகி இருக்க வேண்டும்; எனவே, பெளத்தர்கள் இராமனைப் புறக்கணித்து விட்டனர் எனலாம். இராமாயணத்தில் முதற் காண்டத்திலும், கடைசி காண்டத்திலும் இராமர் விஷ்ணுவின் அவதாரமாகத் தோன்றுகிறார்; கி.பி. இரண்டாம் நூற்றாண்டளவில் இவை புதிதாக இணைக்கப் பட்டிருக்கலா மென்று பொதுவாகக் கருதப்படுகிறது; ஆனால், ஆதிமூல நூலில் இராமன் சிறந்த இலட்சிய வீரனாக வருணிக்கப்படுகிறான். இதன் விளைவாகப் புராணக் கதைகளுக்கு வரலாற்று அடிப்படையிலான பல அறிவு சார்ந்த விளக்கங்கள் தரப்பட்டன; இவற்றுக்கு சிறந்ததோர் எடுத்துக்காட்டாகப் பர்கிட்டரின் விளக்கத்தைக் கூறலாம். இராமாயணத்தில் வரும் வானரங்கள் இலங்கை இராக்கதரைப் போன்றதொரு திராவிட இனக்குழு என்று கருதுகிறார்; கதைகளின் புராணத் தன்மையை முழுதும் நிராகரிக்கிறார். இதே போன்ற முயற்சியை விமலசூரி கி.பி. மூன்றாம் நூற்றாண்டில் மேற்கொண்டார்; வலிமைமிக்க இராவணனைக் குரங்குகளின் உதவியால் கொல்ல முடியும் அல்லது தொடர்ச்சியாக ஆறு மாதத்திற்குக் கும்பகர்ணனால் உறங்க முடியும் என்று நினைக்கின்ற புலவர்களை எள்ளி நகையாடுகின்றார். இராம கதையின் இராக்கதர்களும், வானரங்களும் குரங்குகளோ அரக்கர்களோ அல்லர், அவர்கள் மனித வடிவையும் மனித ஆற்றலுக்கு மேம்பட்ட ஆற்றலையும் பெற்றிருந்த வித்தியாதரர்கள் என்பது அவரது கருத்து. இராமரைச் சுற்றிய கதைவட்டம் முழுவதையும் அறிவு நோக்கில் பின்னால் ஜைன வண்ணத்தில் விமலசூரி அமைத்தார் என்பது தெளிவு; இதனை அவர் அநுமன் பிறப்பைப் பற்றிய கதை கூறுவதிலிருந்து அது எடுத்துக் காட்டப்படுகிறது. தசரத ஜாதகக் கதையில் வரும் இராமகதை கிடைத்துள்ள கதைகளில் மிகப் பழமையானது; அது வால்மீகியின் இராமாயணத்திலிருந்து சில முக்கியமான நிகழ்ச்சிக் குறிப்புகளில் மாறுபடுகிறது. தசரதன் அயோத்தி அரசனல்லன் வாரணாசி மன்னன் என்று கூறுவதுடன் இராமன் இலக்குமணனை, பரதன், சீதை ஆகியோரையும் குறிப்பிடுகிறது. ஆனால், இராமன்இலக்குவன சீதை ஆகியோர் தசரதனுடைய முதல் மனைவிக்கு பிறந்தவர்கள். பரதன் அவர்களுக்கு மாற்றாந்தாய் மகன் என்று குறிப்பிடுகிறது. மாற்றாந் தாயின் தீய சதித் திட்டங்களிலிருந்து தப்புவிக்கும் பொருட்டு தசரதன் இராமனையும் இலக்குவனையும் இமயமலைப் பகுதிக்கு நாடு கடத்துகிறான். சீதை உடன் பிறந்தாரோடு தானும் செல்ல வேண்டுமென்று வற்புறுத்துகின்றாள். அவர்கள் நாடு கடத்தப் பட்டது. வால்மீகி இராமாயணம் கூறுவது போல பதினான்கு ஆண்டுகளல்ல, பன்னிரண்டு ஆண்டுகளே. நாடு கடத்தப்பட்ட காலக்கெடு முடிந்த பின், தன் சகோதரியான சீதையை, இராமன் மணம் புரிந்து கொண்டு பட்டத்தரசியாக ஆக்குகின்றான். சீதை கவர்ந்து செல்லப்பட்டது, இலங்கைப் படையெடுப்பு அதில்
143

Page 190
சொல்லப்படவில்லை. எனவே, நாடு கடத்தப்பட்டதற்கு ஈராண்டுகள் கூட்டியும் நிகழிடத்தை இமயத்திலிருந்து தக்கணத்துக்கு மாற்றியும் இராமாயண கதாசிரியர் முழுக்கதையைக் கற்பனையிலிருந்து உருவாக்கியிருப்பதாக அல்லது ஏதோ வேறொரு மூலத்திலிருந்து பெற்றிருப்பதாகத் தோன்றுகிறது. அயோத்திக்கருகான இடத்திலிருந்து வால்மீகி வந்தவராதலால் இராமனது பிறப்பிடத்தை வாரணசியிலிருந்து அயாத்திக்கு மாற்றி விட்டார் என்னும் வெபர் (Webber) கூற்றில் வலிமை இருப்பதாகத் தோன்றுகிறது. இராம கதைகள் சிலவற்றில் தசரதன் வாரணாசி மன்னன் என்று கூறப்படுவதை குணபத்திரர் வரைந்த உத்தரபுராணம் மெய்ப்பிக்கிறது; தசரத ஜாதகத்தின் சில நிகழ்ச்சிக் குறிப்புகளுடன் ஒத்தும் ஆனால், விமலசூரி ஆதாரமாகக் கொண்ட மூல நூல்களிலிருந்து பல வழிகளில் மாறியும் இருந்ததொரு ஜைன மரபு வழிக் கதைக்கும், வால்மீகி கதைக்கும் இணக்கம் காண தசரதன் தலைநகர் முதலில் வாரணாசியிலிருந்தது என்றும் பின்னர் அயோத்திக்குக் குடிபெயர்ந்து சென்றார் என்றும் சொல்லுகிறார். ஆனால், சீதையை இராமனது சகோதரியாகத் தசரத ஜாதகம், ஜப்பானிய மலேயா இராமாயணம், ஹிகாயத மகாராஜ இராவணம் குறிப்பிடுகின்றன. இராம கதைகளில் மிகப் பழைய தன்மைகளைக் கொண்டவை இவையே.
தசரத ஜாதகம் சீதை பெயருடன் தேவியைச் சேர்க்கிறது. இச்சொல் அடிக்கடி சாதாரணமாக மரியாதை அல்லது கிளைப் பெயரைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. எனினும், இவ்விடத்தில், அச்சொல் கதஜாதகம், அஞ்ஞான தேவியைப் போல சீதையின் தெய்வீகத் தன்மையைப் பரிந்துரைப்பதாக அமைகிறது. உழு சால் என்று பொருள்படும் சீதா கிருக சூத்திரங்களில் முக்கியமான வேளாண்மைத் தெய்வம் ஹாலாபியோகச் சடங்கில் வணங்கப்படுகிறாள். அவளை உழவர்களின் தெய்வமாக ஹரிவடமிசம் பேசுகின்றது. தேவதை ஏகானம்சா போல சீதையும் காலப்போக்கில், முதன்முதலில் உடன்பிறந்தோராகக் கருதப்பட்ட ஈராஸ் தெய்வங்களுடன் தொடர்புபடுத்திப் பேசப்பட்டாள். பின்னர், சகோதரர்களுள் ஒருவர், தசரத ஜாதகம் சான்று தருவதுபோல், கணவனாகி இருக்கலாம். ஆனால், இராமாயண ஆசிரியரால், அவர் வாழ்ந்த காலத்து ஒழுக்கத்தின்படி இராமனை ஒரே சமயத்தில் சீதையின் கணவனாகவும், உடன் பிறந்தோனாகவும் நினைத்துப் பார்க்க இயலவில்லை. எனவே, சீதையின் பெற்றோரை மாற்றி விட்டார். என்றாலும், இதிகாசத்தில் சீதையைச் சித்திரிக்கும்போது, அதே பெயரை உடைய வேளாண்மைக் கடவுளையே அவர் நினைவில் கொண்டிருந்திருக்க வேண்டுமென்பதில் யாதொரு ஐயமுமில்லை. மேலும் அவர் கலப்பையைக் கொடியாகக் கொண்ட (சீராத்துவஜ) ஜனகருடைய மகளாகச் சீதையை ஆக்கிவிட்டார். ஜனகர் அவளை உழவுச் சாலினின்றும் கண்டெடுத்தார். எனவே அவள் அயானிஜா (கர்ப்பப் பையினின்றும் பிறக்காதவள்) என்று அழைக்கப்பட்டாள். இறுதியில் அவள் இறக்கவில்லை. பூமியின் கருவறைக்கே அவள் மீண்டும் திரும்பி விட்டாள். எகனாம்சாவும் வளமையோடு தொடர்பு கொண்டவளாதல் வேண்டும். ஏனெனில்,
144

ஹரிவIமிசம் உமி நீக்கப்படாத அரிசி தானியப் பொறி, பூ இவை படைத்து இவள் வணங்கப்பட்டதாக எடுத்துக் காட்டுகிறது. அவளோடு சேர்த்துப் பேசப்படுகின்ற சகோதரனாகிய பலராமர் வேளாண்மைத் தெய்வம் என்பதில் யாதொரு ஐயமுமில்லை; ஆனால் வெபரது கூற்றுக்களை ஒப்புக் கொள்வோமேயாயின், தசரத இராமன் தன்மையும் அதே பெயரைத் தாங்கிய வேளாண் காப்புக் கடவுளிடமிருந்து வளர்ந்திருக்க வேண்டும். மகாபாரதமும் பழைய புராணங்களும் ஏகானம்சாவுக்கும் அவருடைய சகோதரர்களுக்கு இடைத் திருமண உறவுகளைக் குறிப்பிடவில்லையெனினும், ஸ்கந்தபுராணம், பழைய வழக்காற்றின்படி, பூமியில் பலதேவருடனும், வாசுதேவருடனும் வழிபடப்படும் சுபத்திரை வாசுதேவரின் சகோதரியாகவும் மனைவியுமாகவும் அவருடைய சக்தியைத் தான் பெற்றவளாகவும் இருந்ததைச் சுட்டிக் காட்டுவதாகத்தான் தெரிகிறது. பெயர்கள் வேறுபடலாம். கதைகள் திரிபடையலாம்; ஆனால் ஆண் தெய்வங்கள் இவருடன் கொண்டிருந்த தாய்த் தெய்வ வழிபாட்டு முறை வழக்காற்றிலிருந்ததென்பதில் ஐயமேதுமில்லை; மிகப் பெரிய தாய்க்கடவுள் மகேந்திரன், விஷ்ணு ஆகிய தெய்வங்களின் சகோதரி என்று சிறப்பாக வருணிக்கப்படுவது ஈராஸ் தெய்வங்களுடன் பெண் தெய்வமொன்று வணங்கப்பட்டதைக் கருத்தில் கொண்டதாகத் தோன்றுகிறது. இருந்தபோதிலும் ஏகானம்சா, சீதை ஆகிய தெய்வ வழிபாட்டு முறைகளும் ஒன்றல்ல; இரு வேறு நிலப்பகுதிகளில் ஒரே மாதிரியான சமுதாயச் சூழ்நிலையில் தோன்றி, வளர்ந்த இணைப்போக்குகள் ஏகானம்சா மேற்குத் திசைத் தேவதை, ஆனால், சீதை வழிபாடு வாரணாசி சுற்றுப் பகுதியிலும், அதன் கிழக்குப் பகுதியிலும் நிலவியதாகத் தோன்றுகிறது. மக்களிடைச் செல்வாக்குப் பெற்ற இராமசீதை கதைகளை வால்மீகி திறமையாகப் பயன்படுத்தி அழகான காப்பியத்தைப் படைத்தார்; இருவரையும் இலட்சியத் தம்பதியாகத் தீட்டியுள்ளார். கிறித்துவ அப்தத்தின் ஆரம்ப நூற்றாண்டுகளில் விஷ்ணுவின் அவதாரமாக இராமன் ஏற்றுக் கொள்ளப்பட்டான், இராமாயணத்தில் முதற் காண்டமும் ஏழாம் காண்டமும் சேர்க்கப்பட்டன. கிறித்துவ அப்தத்தின் ஆரம்ப நூற்றாண்டுகளுக்கு முன்னரேயே இராமதாசரதி விஷ்ணுவின் அவதாரமாக வழிபடப்பட்டார் என்பது உறுதி. கி. பி. ஐந்தாம் நூற்றாண்டைச் சார்ந்த சாசனமொன்று, அவரை இராமகிரியின் தலைவர் (தற்போதைய ராம்தேக்) என்று குறிப்பிட்டுப் பேசுகிறது; காளிதாசர் இராமனை ராம கிரிக் குன்றுகளோடு தொடர்புபடுத்திப் பேசுகிறார். தசரதனின் நான்கு மைந்தர்களையும் விஷ்ணுவினுடைய அவதாரங்களின் ஒரு பகுதியென்றே கருதுகின்றார். இராமருக்குச் சிலை வடிக்கும் முறைகளைப் பற்றிப் பிரகத் சம்ஹிதையில் சில குறிப்புரைகள் காணப்படுகின்றன. அவதான சதகம் இராமதேவதா என்னும் தெய்வத்தைப் பற்றிக் குறிப்பிடுகின்றது. சுஸ்ருத சம்ஹிதை மூலிகைகளைச் சேகரிக்கும்போது, மகேந்திரர், இராமர், கிருஷ்ணர் ஆகிய தெய்வங்களைப் பற்றிய மந்திரத்தை உச்சாடனம் செய்ய வேண்டுமென்று விதிக்கிறது; ஆனால், அம்மந்திரம் இராமன் தசரதன் மைந்தரை கிருஷ்ணன் சகோதர பலராமனா என்று குறிப்பிடவில்லை.
இந்துக் கலைக்களஞ்சியம்

Page 191
மனுவைக் காப்பாற்றிய மச்சத்தைப் பற்றியும் பாற்கடலைக் கடைந்தபோது உலகை முதுகின் மீது தாங்கிய ஆமையைப் பற்றியும் மகாபாரதம் கூறுகின்றது; ஆனால், அவர்களை விஷ்ணுவுடன் தொடர்புபடுத்தவில்லை. பிராமணங்களில் இவ்விரண்டும் தேவர்களைப் படைத்த பிரஜாபதியின் உருவங்களாகப் பேசப்படுகின்றன; அவையிரண்டும் ஆதியில் சில பழங்குடி இன மக்களின் குலக்குறி தெய்வங்களாக இருந்திருக்க வேண்டுமெனவே தோன்றுகிறது. இருக்கு வேதத்துக்கு மத்ஸ்ய- மக்கள் தெரிந்திருந்தனர். காஸ்யபர் என்னும் ஆமை அதர்வ வேதத்தில் குறிப்பிடப்படுகின்றார். புராணங்களில் இவ்விருவரும் விஷ்ணு அவதாரங்களாகத் தோன்றுகின்றனர்; இராமாயணம் பாலகாண்டம், ஆமையையும் நாராயணரையும் ஒன்றாக்கிப் பேசுகின்றது. விஷ்ணுவின் ஹயச்சீர்வ அவதாரம் விவரமாக ஆராயப்படவில்லை; ஆனால் பின் தள்ளிக் குஷாணர் காலத்தில் இக்கருத்து உருவாயிற்று என்று குறிப்பிடலாம்.
விஷ்ணுவுடைய முக்கிய அவாதாரங்களின் எண்ணிக்கை பத்து என்று ஆதியிலேயே கருதப்பட்டதாகத் தோன்றினாலும், புராணப் பட்டியல்களில் அவற்றின் பெயர்கள் வேறுபடுகின்றன. கி. பி. எட்டாம் நூற்றாண்டிற்கு மிக முந்திய காலத்தில் தரப்படுத்தப்பட்ட பத்து அவதாரங்களின் பட்டியல் பொதுவாக ஒப்புக் கொள்ளப்படவில்லை. வாயு புராணமானது, நாராயணன், நரசிம்மம், வாமணன், தத்தாத்திரேயர், மாந்தாதர், ஜமதக்னி, இராமன், வேதவியாசர், கிருஷ்ணன், கல்கி முதலியோரைக் குறிப்பிட்டு முதல் மூன்றையும் திவ்விய சம்பூதிகளெனவும் (தேவ அவதாரங்கள்) பிறவற்றை மனித அவதாரங்கள் எனவும் குறிப்பிடுகின்றது. மத்ஸ்ய புராணத்தில் உள்ள பட்டியலில் கிருஷ்ணருக்குப் பதிலாகப் புத்தருடைய பெயர் இடம் பெறுகின்றது. பிரம்மாண்ட புராணப் பட்டியலில் பிரதுவைன்யர், நரசிம்மம், வாமனம், தத்தாத்திரேயர், மாந்தாதா, கல்கி போன்ற அவதாரங்கள் உள்ளன. எனவே, கல்கி வெகுகாலத்துக்கு முன்பு பத்தாவது அவதாரமாக ஏற்றுக் கொள்ளப்பட்டார் என்பது இதிலிருந்து நன்கு தெரிகின்றது. கல்கி விஷ்ணு யாசகதை மகாபாரதத்தின் ஆரண்யக பர்வத்தில் இடம் பெற்றுள்ளது. கலி முடிவடையும் காலத்தில் மிலேச்சர்களைப் பூண்டோடு ஒழித்து தர்மத்தை நிலை நாட்டும் பொருட்டுக் குதிரை மேலேறிய வண்ணம் தோன்றுவார் எனக் கருதப்படுகிறது. வருங்கால புத்தராகிய, மைத்திரேயரைப் பற்றிய கருத்தையொட்டி இக்கலி அவதாரக் கருத்தாக்கம் உருவாக்கப்பட்டிருக்கலாம்; அது புராணங்களில், பிராமணியத்தின் இறுதி வெற்றியின் சின்னமாகிறது. அவர் கதையிலுள்ள கூறுகள் சில வரலாற்று நிகழ்ச்சிகளைப் பிரதிபலிப்பதாகப் பரிந்துரைக்கப்படுகிறது.
முக்கிய அவதாரமாக தத்தாத்திரேயர் ஆரம்ப காலப் பட்டியல்களில் தோன்றுகிறார். போதை தரும் மதுவைப் பருகிச் சுற்றிலும் பெண்கள் சூழ எப்போதும் பரவச நிலையில் இருக்கும் காட்டுவாசியாக அவரைப் புராணங்கள் சித்திரிக்கின்றன. இசைக்கருவிகள் முழங்க, புலால், மது, வாசனைப் பொருள்கள், மாலைகள் ஆகியவற்றைப் படைத்துத் தம்மை வழிபட
இந்துக் கலைக்களஞ்சியம்

வேண்டுமென்று அவர் கூறுவதாக மார்க்கண்டேய புராணத்தில் சொல்லப்பட்டுள்ளது. மரபு வழியாக தாந்திரீக நூல்கள் பலவற்றின் ஆசிரியராக அவர் கருதப்படுகிறார். அவரது வழிபாட்டு முறையும் பெரும்பாலும் தாந்திரிகமானதாகவே இருந்து வந்துள்ளது. மகாராட்டிரப் பகுதியில் அவருடைய வழிபாட்டு முறை மிகவும் செல்வாக்குடன் விளங்குகிறது. வைணவத்தின் மூலம் பிராமணிய மயமாக்கப்பட்ட அரைகுறை நாகரிகத்திலிருந்த அவ்விடம் சார்ந்த இனக்குழு மக்களின் கடவுளாக அவர் இருந்திருக்கலாம்.
அவதாரக் கொள்கையின் கலப்புத்தன்மை புத்தர் வாழ்க்கை எடுத்துக்காட்டுவது போல வேறெங்குமே அவ்வளவு தெளிவாக எடுத்துக் காட்டப்படவில்லை. மகாயான பெளத்த மதம் தோன்றியவுடன் ஏனைய தெய்வங்களைப் போன்று புத்தரும் உள்ளார்ந்த பக்தியோடு வழிபடத் தக்க தெய்வமானார். புத்த மதத்தில் பிராமணியக் கருத்துகள் ஊடுருவின; பெளத்தர்கள் வருணாசிரம தருமத்தையும் பிராமணர்களையும் மதிக்கலாயினர்; அவர்களுக்கு அதிக காணிக்கைகளைச் செலுத்தினர். மகாயான பெளத்த அறிஞர்களான பெரும் புகழ் பெற்ற அசுவகோஷர், நாகார்ஜுனர், ஆரியதேவர், அசாங்கர், வசுபந்து ஆகியோர் பிறப்பால் பிராமணர்கள் என்பது இங்கே முக்கியமாகக் குறிப்பிடத்தக்கது. குப்தர் காலத்திய பெளத்த சாசனங்கள் , எவனொருவன் தானம் பற்றிய விதிகளை மீறுவானோ அவன் பிராமணனைக் கொலை செய்த பாவத்திற்கு ஆளாவான் என்ற அச்சுறுத்தலுடன் முடிவடைகின்றன. கி. பி. ஐந்தாம் நூற்றாண்டில் உண்மையான முற்றறிவு பெற்ற (சம்யக்சம் புத்தர்) புத்தரை வழிபட்டவனான ஆனந்த அரசன் தாமோதரவர்மன் புராணங்களில் சொல்லப்படுகின்ற பதினாறு தானங்களில் கோசகஸ்ரம், ஹிரண்ய கர்ப்பம் என்னும் இரு வேள்விகளைச் செய்வதாகக் கூறுவதோடு பிராமணர்களுக்குத் தாராளமாக நிலங்களையும் கொடையாக வழங்கினான். இவ்வாறு வைஷ்ணவம், மகாயான பெளத்தம் இரண்டுக்கும் சமுதாய அடிப்படையில் யாதொரு வேறுபாடும் இல்லாமல் போயிற்று. தொன்மை வைதீகத் தன்மை காரணமாக பகவத் நாராயணரது புகழ் ஏற்கனவே நன்கு நிலை நாட்டப்பட்டு விட்டது; குப்தர் ஆதரவில் புகழ் உச்ச நிலையினை அடைந்தது. இந்தக் காலத்தில் பாமர மக்கள் எண்ணத்தில் மீட்பராகிய புத்தரும், நாராயணனும் ஒன்றென்ற கருத்துத் தோன்றிற்று. புத்தரையும், நாராயணரையும் ஒன்றாக வைத்து எண்ணத் தொடங்கியது பெளத்த மதத்தைத் தம்முடைய மதத்திற்குள் சேர்த்து இணைத்துக் கொள்ள வேண்டுமென்று நினைத்து பிராமணர்கள் செய்த தந்திரமான சூழ்ச்சியின் விளைவன்று; மாறாக பிராமணியத்துக்கும் பெளத்தத்துக்கும் இடையிருந்த வேற்றுமைகளைத் தனித்து மகாயான பெளத்தம் வளர்வதற்கு சமுதாயச் சூழலில் வேர் விட்டிருந்ததோரியக்கமெனக் கருதல் தகும். பெளராணிக நடையும் அதனால் மக்களிடைப் பெருஞ் செல்வாக்குப் பெற்றதுமான லலிம விஸ்தாரம் என்னும் புத்தமத நூலில், நாராயணனின் வல்லமையுடைய நாராயணஸ்தாமவான் என்று புத்தர் மீண்டும் விவரிக்கப் பெறுகின்றார்; மேலும் அவர் எளிய முறையில் நாராயணர் என்றும், மகாநாராயணர் என்றும் அடிக்கடி
145

Page 192
சுட்டப் பெறுகின்றார். "மகாபுருஷன்” என்னும் அடைமொழியை லலிதாவிஸ்தாரம் புத்தருக்கும் மகாபாரதம் நாராயணருக்கும் வழங்குகின்றன. எனவே, வாசுதேவரை நாராயணருடன் ஒன்றாக்கியதற்கு இணையாகப் புத்தரையும் அதே தெய்வத்துடன் ஒன்றாக்கியது எனக் கருதுவது தவறானதாகும். உண்மையில், முதலிணைப்பு, பிராமணர்கள் பிறிதோரிடத்தில் விவரிக்கப் பட்டுள்ள உள்நோக்கங்களுடன் திட்டமிட்டு மேற்கொண்ட முயற்சிகளின் விளைவாக ஏற்பட்டது; ஆனால் இரண்டாம் இணைப்பு கிளர்ந்தெழுந்த தன்னிச்சையியக்கம், மக்களிடைச் செல்வாக்குப் பெற்ற புராணக் கதைகளின் விளைவு; எனவே, புத்த சமயத்தினர் நாராயணருடன் 'தம் ஆசானை ஒன்றாக்குவதைப் புறக்கணித்தனர்” என்று ராய் சவுத்திரி கூறுவது போலக் கருதுதல் தவறு; ஏனெனில் இவ்விணக்கத்தை மக்களிடைச் செல்வாக்குப் பெற்ற பெளத்தமே நாடித் தொடங்கியதாகத் தெரிகிறது.
புத்தர் நாராயணரிணக்கத்தை முதன் முதலில் வைணவப் புரோகித வகுப்பார், அசுரர்களுக்கும் தவறான கொள்கைகளைப் போதித்து வழி தவறச் செய்து அழிவைத் தேடித்தந்த தேவகுரு பிரகஸ்பதி கதையைப் புத்தருக்காக்கிக் கண்டதனால், ஆர்வமாக வரவேற்கவில்லை. சில சமயம் புறச் சமயமொன்றைத் தோற்றுவித்தவர் தம் தெய்வாவதாரமே என்ற குழப்பத்திலிருந்து வைணவப் புரோகிதர்கள் புத்தருக்கு வேறொரு கால் வழி தத்து தப்ப முயன்றனர்; நாராயணன் புத்தராக மகத தேசத்தில் அஜனாவின் மகனாக அவதரித்தார் என்று பாகவத புராணம் கூறுகின்றது. ஆழ்ந்த வைதீகப் பற்றுடைய குமாரிலர் போன்றவர்கள் நாராயணனுடைய புத்த அவதாரத்தை ஒப்புக் கொள்ளவில்லை; விருத்தஹாரீக ஸ்மிருதி புத்த வழிபாட்டை விளக்குகிறது. ஆனால், சாத்துவத சம்ஹிதை தரும் அவதாரப் பட்டியலில் - இப்பட்டியல் அஹிர்புதன்ய சம்ஹிதையில் மீண்டும் கூறப்படுகிறது - புத்தர் சாந்தாத்மா என்று குறிப்பிடப்படுகிறார்; வராஹமிகிரரின பிருஹத் சம்ஹிதையில் சாந்தமனஸ் என வழங்கப்படுகிறார். அக்கினி புராணமும் புத்தரைச் சாந்தாத்மா என விவரிக்கிறது; ஜெயதேவருடைய கீத கோவிந்தத்தில் பிராணிகளிடம் கொண்ட கருணையினால் நாராயணன் தாமே புத்தராக அவதரித்ததாகச் சொல்லப்படுகிறது. (சு. ஜெ)
அவதாரம்
அன்பர்களை வாழ்விக்கவும் துஷ்டர்களை ஒழிக்கவும் அறநெறியை நிலைநிறுத்தவும் அந்த அந்தக் காலங்களில் தான் அவதரிப்பதாகக் கீதாசிரியன் கூறியுள்ளான். பூரீ கிருஷ்ண பரமாத்துமா பரம்பொருள் கருணையினால் உருவெடுத்துட் பிறப்பதை இவ்வாறு கூறியுள்ளார். இந்நிகழ்ச்சியினையே அவதாரம் என்று கூறுவர். நித்திய விபூதியில் இருந்து பகவான் இறங்கி வருவது அவதாரம் என்று பரமபாகவதர் கூறுவர்.
இவ்வவதாரத்தின் ஸாட்சாத் அவதாரம் என்றும் கூறுவர் ஆவேச அவதாரம் என்றும் அம்சாவதாரம் என்றும் வேறிரு வகையினவற்றிலிருந்து வேறுபடுத்தவே இவ்வாறு கூறுவர் ஆவேச அவதாரத்திலே குறிப்பிட்ட நேரகாலத்திற்குத் தெய்வீச
146

சக்தி ஆவேசித்து அருள்புரியும். அம்சாவதாரத்திலே சில அம்சங்கள் மட்டும் அவதாரம் பெறுகின்றன.
திருமால் பத்து அவதாரங்களை எடுத்ததாகக் கூறல் மரபு. திருமாலின் மூர்த்தி பேதங்களில் ஒன்றான விபவ சொரூபம் பகவான் அவதாரமெடுத்துத் தோன்றிவந்த வடிவமாகும். பூரீ வேதாந்த தேசிகர் தமது பூரீ தசாவதார ஸ்தோத்திரத்திலே தசாவதாரங்களைப் பாடியுள்ளார். ஆயினும் அவதாரப் பட்டியல் வேறுபடுவதையும் அதிகரிப்பதையும் நாம் காண முடிகின்றது. ஜயதேவர் கீதகோவிந்தத்திலே தரும் தசாவதாரங்களிலே பலராம அவதாரத்திற்குப் பதிலாகப் புத்தர் அவதாரம் இடம் பெறுகின்றது.
விஷ்ணு புராணத்திலே இருபத்து நான்கு அவதாரங்கள் கூறப்பட்டுள்ளன. பூரீ மகாதேவி பாகவதம் இருபத்தாறு அவதாரங்களைக் கூறுகின்றது.
பூரீ மகாதேவி பாகவதம் கூறும் 26 அவதாரங்கள் மேல்வருவன:
1 சனகர் 2 சனந்தனர் 3 சனாதனர் 4. சனத்குமாரர் 5. வராகம் 6. நாரதர்
7 நரநாராயணர் 8. கபிலர்
9. தத்தாத்திரேயர் 10. யஜ்ஞர் 11. இடபம் 12. பிருது 13. Lਰੰਥ 14. மோகினி
15. கூர்மம் 16. கருடன் 17. தன்வந்தரி 18. நரசிம்மன் 19. வாமனன் 20. Ugly IILogiT 21. 6)][LIाgा 22. இராமன் 23. UgoTITLD6iT 24. கிருஷ்ணன் 25. புத்தன் 26. கல்கி
பூரீ மகாதேவி பாகவதம் தரும் அவதாரங்களிலே ஸாட்சாத் அவதாரம் மட்டுமன்றி அம்சாவதாரம், ஆவேச அவதாரம் என்பனவாகக் கருதத்தக்கனவும் இடம்பெறுவதாகத் தெரிகின்றது. சனகர், சனந்தனர், சனாதனர், சனற்குமாரர் முதலியவை அம்சாவதாரம் என்றும் மோகினி ஆகியன ஆவேச அவதாரம் என்றும் கருத இடமுண்டு.
பதினென் புராணங்களிற் பழமையுடைய இலிங்க புராணம் திரிபுரசம்ஹாரப் பகுதியிற் புத்தரை விஷ்ணுவின் அவதாரமாகக் கூறுகின்றது. பதினோராம் நூற்றாண்டினரான ஜயதேவர் கீத கோவிந்தத்திலே பலராமருக்குப் பதிலாகப் புத்தர் அவதாரத்தைத் தசாவதாரத்திற் கூறியுள்ளார். ஜிவகாருண்ய மூர்த்தியான புத்த பகவான் இம்சையைக் கண்டித்து வேத வேள்விகளைத் தடுத்ததை அவதார நோக்காக ஜயதேவர் கூறுவார். ஆயினும் புத்த அவதாரம் பற்றி வேறு கருத்தும் உண்டு. பொய்ச்சமயம் ஒன்றினைத் தோற்றுவித்துக்
இந்துக் கலைக்களஞ்சியம்

Page 193
கெட்டவர்களை வேதங்களை ஒதுக்கிவிட்டுத் தெய்வங்கள் இல்லை என்று கூறித் தாமே தம்முடைய அழிவுக்குக் காரணமாவதற்கு வழி செய்யும் முகமாகப் பகவான் புத்தனாக அவதரித்ததாகக் கூறுபவருமுளர். இக்கொள்கையினாற் போலும் பின் வந்தோர் தசாவதாரப் பட்டியலிலே புத்தரைச் சேர்க்கவில்லை.
தசாவதாரங்களிலே மச்சாவதாரம் பகவான் மீனாகத் தோன்றியதாகும். இவ்வவதாரத்திலே மச்சாவதார மூர்த்தி இரு முக்கிய காரியங்களைச் சாதித்தார். வைவஸ்வதமனு எனும் சத்திய விரதனை மகாப்பிரளயத்திலிருந்து காத்தது ஒன்றாகும். ஏனையது வேதங்களைப் பிரமணிடமிருந்து திருடிக்கொண்டு கடலுக்குள் மறைந்த சோமுகன் எனும் அசுரனைத் தேடி, அவனை அழித்து வேதங்களைப் பழையபடி பிரமணிடம் ஒப்புவித்தது. மச்சமாய் மறைகளை மீட்ட திருமால் அன்னவடிவமாய் அந்த மறைகளைப் பிரமனுக்கு உபதேசித்ததை ஆழ்வார்கள் போற்றிப் புகழ்ந்துள்ளனர்.
துர்வாசர் சாபத்தினின்று தப்புவதற்காகத் தேவர் அசுரர் துணையுடன் பாற்கடலைக் கடைந்தபோது மத்தாக விளங்கிய மந்தரமலை கீழே நிலையான தாபனம் இல்லாததாலே தாழத் தொடங்கியபோது பகவான் கூர்மாவதாரம் எடுத்தார். ஆமையாக மந்தரமலைக்குக் கீழே சென்று அதனைத் தன் முதுகிலே உயர்த்தினார். அது மேலே மேலே சென்றதால் விஷ்ணு கருடனாகி மலைமுகட்டில் இருந்து அம்மலை சிறிது கீழே வந்து சரியான நிலையில் தங்கச் செய்தார்.
சநகாதி முனிவரின் சாபம் பெற்று வைகுண்ட பதவி இழந்து அசுரராகப் பிறந்து இன்னல்கள் விளைவித்த இரு சகோதரரைத் தண்டித்து மீண்டும் அருளும் பொருட்டு எடுத்த அவதாரங்கள்
வராக அவதாரம், நரசிம்மாவதாரம் என்பன.
இரணியாட்சகன் பூமியைப் பாய்போலச் சுருட்டிக் கடலுக்கு அடியில் ஒளித்துவைத்தான். விஷ்ணு பன்றியுரு எடுத்துத் தன் கோரப்பல்லினாலே பூமியை வெளியே கொண்டு வந்ததோடு இரணியாட்சனையும் அழித்தார். இரணியாட்சகனோடு தொடர்புறுத்தாது பிரளய காலத்தில் மூழ்கிக்கிடந்த பூமியை வராகமூர்த்தி எடுத்து வெளிக்கொணர்ந்தார் என்றும் கூறுவர். இதனைத் திருமங்கையாழ்வார் கூறியுள்ளார். பிராமணங்களிலே பிரஜாபதி (பிரமா) கறுத்த நூறு கையுடைய பன்றி வடிவிலே பூமியை ஆதி நீரிலிருந்து மீட்ட கதையுண்டு.
இரணியாட்சனின் தம்பி இரணியனின் வரலாறு அவனுடைய மகன் பிரகலாதனின் பிரபத்தியாலே சிறந்து விளங்குவதாகும். இரணியனிடமிருந்து உலகினைக் காக்கவும் பக்தனுக்கு அருள் புரியவும் திருமால் நரசிம்மாவதாரம் எடுத்தார்.
பிரகலாதனின் பேரன் மகாபலியின் வண்மைச் செருக்கு என்ற மதத்தை ஒழித்து ஆட்கொண்ட அருளைக் குறிப்பது வாமனாவதாரம். பழந்தமிழ் இலக்கியமான முல்லைப்
இந்துக் கலைக்களஞ்சியம்

பாட்டிலும் பரிபாடலிலும் வாமனன் திரிவிக்கிரமனான செய்தி போற்றப்படுகின்றது. காசிபர் மனைவி அதிதிக்கு மகனாகத் தோன்றி வாமனர் மகாபலியின் யாகத்திலே மூன்றடிமண் கேட்டார். வாமனரையே மகாபலி அளந்து எடுத்துக் கொள்ளும்படி தாரை வார்த்துக் கொடுத்தபோது பகவான் திரிவிக்கிரமனாக, உலகளந்த பெருமாளாக ஈரடியிலே சொர்க்கம், பூமி, பாதாளம் என்பனவற்றை அளந்துவிட்டு மூன்றாம் அடியை மகாபலியின் தலையில் வைத்து அவன் மமதையை அழித்தார்.
கார்த்தவீர்யார்ச்சுனன் ஆயிரம் கைகளை வரமாகப் பெற்றவன். வேட்டைக் களைப்பினால் ஜமதக்கினி முனிவரின் ஆசிரமத்திற்குச் சென்றபோது காமதேனுவால் சிறந்த விருந்து அளிக்கப் பெற்றவன். அதனாற் காமதேனுவை முனிவர் விருப்புக்கு மாறாகப் பிடித்துக்கொண்டு சென்றவன். வீடு திரும்பிய புதல்வன் பரசுராமன் காத்த வீரியன் நகருக்குச் சென்று சண்டையிலே அவனைக் கொன்றுவிட்டுக் காமதேனுவை மீட்டு வந்தான். வஞ்சம் தீர்க்க வழிபார்த்து நின்ற கார்த்தவீரியன் பிள்ளைகள் பரசுராமன் இல்லாதபோது ஆசிரமத்துட் புகுந்து ஜமதக் கினியைக் கொன்று அவர் தலையையும் எடுத்துச் சென்றனர். வீடு திரும்பிய பரசுராமனிடம் தாய் ரேணுகா நடந்ததைக் கூறி 21 முறை மார்பிலடித்துக் கதறியழுதாள். தந்தையின் சொற்படி முன்பு தாயை வெட்டி அவரிடமே தாயின் உயிரை மீட்கும்படி வரம் பெற்ற பரசுராமன் தாயின் துயர் தீர்க்க 21 முறை உலகினைச் சுற்றி எல்லாச் கூடித்திரிய அரசரையும் கொன்று குவித்தான். கெட்ட அரசரை அழிக்கத் தோன்றிய அவதாரம் தன் எல்லை கடந்து விட்டது. இந்நிலையிலே அதன் மமதையை அகற்ற இராமபிரான் மிதிலையிலிருந்து மணாளனாக மீண்டான். எதிர்ப்பட்ட பரசுராமன் விடுத்த சவாலை ஏற்று வில்லை வளைத்து அவனுடைய தவத்தை இலக்காகக் கொண்டு அவன் மமதையை அழித்தான்.
அறத்தை நிலைநிறுத்தி உலகத்தைச் செந்நெறியில் செலுத்தத் தோன்றியது இராமாவதாரம். கிருஷ்ணாவதாரத்திற்கு அடுத்ததாகத் தசாவதாரத்திலே சிறப்பிடம் பெறுவது இராமாவதாரம். ஆதி காவியத்திற்குப் பொருளான இராமசரிதை பல்வேறு மொழிகளிலும் இடம்பெற்றுச் சிறந்து நிற்பதாகும்.
பூரீ வேதாந்த தேசிகர் தசாவதார ஸ்தோத்திரத்தில் எட்டாவது அவதாரமாகக் கூறுவது பலராம அவதாரமாகும். நம்பி மூத்தபிரான் என்று போற்றப்படும் பலராமன் அவதாரம் கைங்கரிய நெறியே பெரிது என்பதை விளக்குவது. பண்டைய தமிழ்ப் பாடல்களிலும் பலராமன் செய்திகள் இடம்பெறுவது குறிப்பிடத்தக்கது.
அதர்வ வேதத்தின் உபநிடதமான பூரீ கிருஷ்ண உபநிடதம் கிருஷ்ணாவதாரத்திற் பங்கு கொள்பவரைப் பல்வேறு தேவர்களின் அம்சாவதாரங்களாகக் காட்டுகின்றது. தசாவதாரங்களிலே பிரபல்லியமானதும் செல்வாக்குமிக்கதும் கிருஷ்ணாவதாரமாகும். கிருஷ்ணனின் பாலிய லீலைகள்,
147

Page 194
குசேலர் நட்பு, பாண்டவர் தோழமை, திரெளபதி மானங்காத்த சரணாகதி வரலாறு, பார்த்தசாரதியின் பகவத்கீதை என்பன கிருஷ்ணாவதாரத்திலே பலரையும் கவரும் அமிசங்களாகும்.
கலியுகத்திலே அறங்குன்றிப் பாவம் தலைநிமிர்ந்து படாடோபமாய் கொலுவீற்றிருக்கும் போது வர இருப்பது கல்கி அவதாரம். இவ்வவதாரத்தின் கற்பனையை அக்கினி புராணத்திலே காணலாம்.
அவதார மூர்த்தங்களைக் கோயில்களிலே பிரதிஷ்ட்டை செய்யும் வழக்கம் உண்டு. விஷ்ணு கோயில்களிலே பொதுவாகத் தசாவதார வடிவங்கள் கருப்பக்கிருக வாயில்களிலும், கோபுர வாயில்களிலும் இடம்பெறுவதைக் காணலாம். திருவரங்கத்திலே தனிப்பட்ட தசாவதாரக் கோயில் உண்டு. பூரீ வில்லிபுத்தூரிலே வடபத்திரசாயி கோயிலிற் தசாவதார சந்நிதியுண்டு.
சில கோயில்களிலே அவதார மூர்த்திகள் மூலட்டான மூர்த்திகளாகவும் சிறப்பிக்கப் பெற்றுள்ளனர். வராகமூர்த்தி பூரீ முஷ்ணத்திலும், பூநீ நரசிம்ம மூர்த்தி பூரீ அகோபிலத்திலும் திரிவிக்கிரமனான உலகளந்த பெருமாள் காஞ்சிபுரத்திலும் இராமபிரான் அயோத்தியிலும் கிருஷ்ணபரமாத்துமா துவாரகையிலும் மூலமூர்த்திகளாக அருள்பாலித்து வருகின்றனர். (பொ. பூ)
©ລ.
மகாவீரர், கெளதம புத்தர் ஆகியோரின் காலங்களில் வடஇந்தியாவில் நிலைபெற்ற பதினாறு மகாஜனபதங்களில் ஒன்று அவந்தி. அத்துடன் அக்காலத்து வலிமிக்க நான்கு இராச்சியங்களில் ஒன்றாக அது விளங்கியது. கோசலம், மகதம், வத்ஸ என்பன ஏனைய மூன்றுமாகும். வேத்திரவதி ஆறு, அதனை இரண்டு பகுதிகளாகப் பிரித்தது. மிகப்பரந்த இராச்சியமான அவந்தியின் வடபகுதி வடஇந்தியப் பிரதேசமாகும். அதன் தென்பகுதி தகூறினாபதத்திலுள்ள நிலப்பகுதியாகும்.
ஆதியில், பரதவம்சத்தவனான வெசபு அவந்தியின் அரசனாகவிருந்தான். ஆரம்பத்திலே தெற்கிலுள்ள மாஹிஷ்மதி இராசதானியாக அமைந்திருந்தது. புராதனமான பெளத்த நூல்கள் அவந்தியின் தலைநகரமான உஜ்ஜைனியைக் குறிப்பிடுகின்றன. மத்தியப் பிரதேசத்திலுள்ள மால்வா, நிமார் என்னும் பிரததேசங்களும் அவற்றை அடுத்துள்ள பகுதிகளும் அவந்தியில் அடங்கியிருந்தன.
உஜ்ஜையினி, மாகிஷ்மதி என்னும் நகரங்கள் இராஜ கிருகத்திலிருந்து பிரதிஸ்தானத்துக்குச் செல்லும் பெருவழியில் அமைந்திருந்தன. விதிஸா அவந்தியிலுள்ள மற்றுமொரு பிரதானமான நகரமாகும். மகாபாரதத்திலும் காளிதாசராலும் அது
148

தஸார்ண என்று குறிப்பிடப்படுகின்றது. குரரகர(ம்), சுதர்ஸனபுர(ம்) என்னும் வேறு இரு நகரங்களைப் பற்றிய குறிப்புகள் சமண, பெளத்த நூல்களிற் காணப்படுகின்றன.
அச்சுதகாமி என்னும் அரசனின் காலத்தில் உஜ்ஜையினி இராசதானியாகியது என்று இலங்கை நூலான தீபவம்சம் கூறும். கெளதம புத்தரின் காலத்திற் பிரத்யோதன் அவந்தியில் அரச பதவியினைப் பெற்றிருந்தான். அவன் சேனாபலம் மிக்கவன். ஆக்கிரமிப்பு நோக்குடையவன். அதனால் அவனையுற்று அயல்நாட்டு மன்னர்கள் அச்சங் கொண் டிருந்தனர். வத்ஸராஜனான உதயணனைப் பிரத்யோதன் ஒரு சமயத்திலே சிறைப்பிடித்தான் என்றொரு கதையுண்டு. தனது இராசதானி மேல் அவந்திராசன் படையெடுப்பான் என்று கருதியதால் அஜாதசத்துரு இராஜகிருகத்தின் அரண்களை விசாலமாக்கிப் புனரமைத்தான்.
புராண நூல்கள் பிரத்யோதனை சண்டம காசேன என்னும் அடைமொழிகளால் வர்ணிக்கின்றன. அவன் அயல்நாடுகளின் அரசர்களை அடக்கினான் என்றும் அந் நூல்கள் கூறும். அவனது ஆட்சி 23 வருடங்கள் நிலைபெற்றது. அவனுக்கு பின்பு பாலக(ன்), விசாக யூப(ன்), அஜக, நந்திவர்த்தன(ன்) ஆகியோர் எல்லாமாக 15 ஆண்டுகள் ஆட்சி புரிந்தனரென்று புராணங்கள் கூறும்.
மகதமன்னர்களின் ஆதிக்கம் இந்தியாவிலே பரவிய காலத்தில் அவந்தி மன்னர்கள் அதிகாரம் இழந்துவிட்டனர். சந்திரகுப்த மோரியரின் காலத்தில் அவந்தி மோரியர் வசமாகிவிட்டது. விந்துசாரனின் ஆட்சியில் அவனது மகனாகிய அசோகன் விதிஸாவிலே சிலகாலம் இராசப்பிரதிநிதியாக அதிகாரம் பெற்றிருந்தான். அசோகனின் ஆட்சிக் காலத்தில் பாடலிபுரத்திற்கு அப்பால் நான்கு பிரதானமான நிர்வாக மையங்கள் இருந்தன. தக்ஷசிலா, விதிஸா, தோசலி (கலிங்கம்), சுவர்ணகிரி என்பனவே அந்நான்கு நகரங்களாகும். விதிஸாவிலே தங்கியிருந்த இராசப் பிரதிநிதிகளின் கண்காணிப்பில் மத்திய இந்தியப் பிரதேசங்களின் நிர்வாகம் இயங்கியது.
சுங்கரின் ஆட்சிக்காலத்திலும் அவந்தி மகதப் பேரரசின் பாகமாயிருந்தது. முதலாவது சுங்கமன்னனாகிய புஷ்யமித்திர சுங்கனின் காலத்தில் அவனது மகனாகிய அக்னிமித்திரன் விதிஸாவில் இராசப் பிரதிநிதியாக நியமனம் பெற்றிருந்தான். காளிதாசரின் நாடக நூல்களில் ஒன்றான மாலவிகாக்னி மித்திர அக்னிமித்திரனைப் பற்றிய சில முக்கியமான விவரங்களைக் குறிப்பிடுகின்றது. சுங்கரின் காலத்தில் விதிஸா அவர்களின் இரண்டாவது இராசதானியாக விளங்கியதென்று கருதலாம். அங்கு பாகவதசமயம் பரவியிருந்தமைக்கு அங்குள்ள கழுகுத் தூண்கள் சான்றாகின்றன.
தஷிணா பதத்திற் சாதவாகனர் எழுச்சி பெற்றதன் விளைவாக முறகாலத்து அவந்தி இராச்சியத்தின் பகுதிகளிற்
இந்துக் கலைக்களஞ்சியம்

Page 195
சாதவாகனரின் ஆதிக்கம் பரவியது. மேற்கிந்தியாவிலே குஷாணரின் சாமந்தரான கூடிஹராத கூடித்திரப்பர் மிகப்பரந்த இராச்சியமொன்றை உருவாக்கினார்கள். அவர்களுக்கும் சாதவாகனருக்கும் இடையில் ஏற்பட்ட போட்டிகளின் விளைவாக அவந்தி இராச்சியத்தின் பகுதிகளை இரு சாராரும் மீண்டும் மீண்டும் கைப்பற்றினார்கள். கூடித்திரப்பனாகிய நகபாணனின் காலத்தில் குஜராத், கத்தியவார், மால்லா, கொங்கணம், வடமகாராஷ்டிரம் ஆகியன கூடித்திரய்யர் வசமாகிவிட்டன. சாதவாகன அரசனாகிய கெளதமீபுத்திர சாதகர்ணி நடத்திய போர்களின் விளைவாக கூடிஹராத கூடித்திரப்பரின் ஆதிக்கம் ஒழிந்தது. சுராஷ்டிரம், ஆகர (கிழக்கு மால்வா), அவந்தி (மேற்கு மால்வா) முதலான தேசங்கள் அவன் வசமாகிவிட்டன என்று சாதவாகரின் சாசனங்கள் குறிப்பிடுகின்றன.
கர்தமாக வம்சத்தைச் சேர்ந்த சஷ்டனன் என்னும் சககூடித்திரபன் மேற்கிந்தியாவில் சகரின் ஆதிக்கத்தைப் புனருத்தாரணஞ் செய்தான். அவன் உஜ்ஜைனி நகரத்தைச் சாதவாகனரிடமிருந்து கைப்பற்றி விட்டான். கி. பி. இரண்டாம் நூற்றாண்டிலே தொலமி என்னும் யவனர் எழுதிய ஜியோகிரபியா என்ற நூலில் உஜ்ஜையினி நகரம் சஷ்டனனின் தலைநகராக விளங்கியதென்று கூறப்படுகின்றது. சஷ்டனின் பின்பு மகாகூடித்திரப்ப என்னும் பதவியைப் பெற்ற உருத்திரதாமனின் காலத்தில் சக கூடித்திரப்பரின் ஆதிக்கம் மீண்டும் உன்னத நிலையினை அடைந்தது. ஆகர, அவந்தி, அநூப, அபராந்த, சுராஷ்டிர, ஆநர்த்த ஆகிய பிரதேசங்களின் அதிபனாக உருத்திரதாமன் விளங்கினா னென்று அவனது கிர்நார் பிரசஸ்தி வர்ணிக்கிறது. குப்தர் காலம்வரை அவந்தி முதலான மத்திய இந்தியப் பிரதேசங்கள் பல சகரின் வசமாயிருந்தன. சக கூடித்திரப்பர் இந்திய மயமாகிவிட்டனர். இராசதானியிலே சமஸ்கிருதம் தொடர்பு மொழியாகக் கொள்ளப்பட்டது. கவிஞர்களையும் கலைஞர் களையும் சக மன்னர் கவர்ந்தனர். அம் மன்னர்கள் இந்திய சமயநெறிகளுக்கும் ஆதரவு வழங்கினர். சகரின் ஆட்சியில் வித்தியாபீடங்களும் சமய நிறுவனங்களும் உஜ்ஜையினி நகரிலே பெருவளர்ச்சி அடைந்தன.
அவந்திநாட்டுப் பகுதிகள் இரண்டாம் சந்திரகுப்தனின் காலத்தில் (376-415) குப்தப் பேரரசில் அடங்கிவிட்டன. சக கூடித்திரப்பர்களுக்கு எதிராகச் சந்திரகுப்தன் நடத்திய போர்கள் அங்கிருந்து ஆரம்பமாகின. போருக்கான நடவடிக்கைகளைக் கவனிப்பதற்கு குப்தப் பேரரசன் மால்வாவிற் சிலகாலம் நிலைகொண்டிருந்தமைக்கான சான்றுகள் உள்ளன. விதிஸா நகரத்து உதயகிரியிலே சந்திரகுப்தனின் சாந்தி விக்கிரகியான வீரசேன என்னும் பேரமைச்சன் அங்கு தங்கியிருக்கும் சமயத்தில் வழங்கிய தானமொன்றினைப் பற்றிய சாசனக்குறிப்பு உண்டு. உதயகிரியிலுள்ள மற்றுமொரு சாசனம் சந்திரகுப்தரின் சாமந்தனாகிய சனகாணிக மகாராஜனைக் குறிப்பிடுகின்றது. அது குப்தவர்ஷம் 82 ஆவதில் (கி.பி 401-2) எழுதப்பட்டது. குப்த வர்ஷம் 93 ஆவதில் எழுதப்பட்ட
இந்துக் கலைக்களஞ்சியம்

சாசனமொன்று குப்தரின் சேனாதிபதியான ஆம்ரகார்தவ என்பனவற்றினைக் குறிப்பிடுகின்றது. குப்தர் சகரின் இராச்சியம் முழுவதையும் கி. பி. 409 ஆம் ஆண்டளவிலே கைப் பற்றிவிட்டனர்.
குப்தராதிக்கப் நிலைதளர்ந்த காலத்தில் வாகாடகர், ஹதணர் ஆகியோரின் ஆதிக்கம் மால்வரவில் ஏற்பட்டது. ஆயினும் குப்தரின் சாமந்தராகிய பிந்திய குப்தர் எனப்படுவோர் அங்கு அதிகாரம் பெற்றனர். ஏழாம் நூற்றாண்டிலே குர்ஜர வம்சத்தவர் மாளவத்தைக் கைப்பற்றி அவந்தி நகரை இராசதானியாக அமைத்தனர். அவந்தியிலுள்ள குர்ஜரப்பிரதீகாரர் காலப் போக்கிலே பலம்மிக்க இராச்சியமொன்றை வடஇந்தியாவில் அமைத்தனர். (åf.L.)
அவந்திவர்மன்
அவந்திவர்மன் என்னும் பெயருடைய மன்னர் இருவரைப் பற்றி நூல்கள் மூலமாகவும் சாசனக்குறிப்புகளினாலும் அறியமுடிகின்றது. அவர்களில் ஒருவன் கன்னோசி வேந்தன். மெளகரி வம்சத்தவன். ஆறாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் அரசுபுரிந்தவன் (580-600). மற்றவன் காஷ்மீர தேசத்தவன். நல்லாட்சி புரிந்து, அதன் காரணமாக வரலாற்றாசிரியரான கல்ஹணரின் பாராட்டைப் பெற்றவன்; கவிஞர் பலருக்கும் இலக்கியவாதிகளுக்கும் ஆதரவு வழங்கியவன்.
குப்தப் பேரரசு நிலைதளர்ந்த காலத்திலே எழுச்சிபெற்ற இராச்சியங்களிற் கன்னோசி பிரதானமானது. குப்தர்களின் சாமந்தராவிருந்த மெளகரி வம்சத்தவர், கன்னோசி நகரத்தை மையமாகக் கொண்டு புதிய இராச்சியமொன்றை உருவாக்கி னார்கள். அவர்களைப் பற்றிய விவரங்கள் சாசனங்களிலும் நாணயங்களிலும் முத்திரைகளிலும் காணப்படுகின்றன. அவந்திவர்மன் மெளகரி குலத்தவர்களில் ஆறாவது அரசன், அவனை மகாராஜாதிராஜ என்று g Tg T156T வர்ணிக்கின்றன. அவன் மகாராஜாதிராஜனான சர்வவர்மன். இந்திரபட்டாரிகா என்போரின் குமாரன். அவன் சந்தானவழி உரிமையாகக் கன்னோசியில் ஆட்சியதிகாரம் பெற்றவன்.
பாணபட்டருடைய ஹர்ஷசரிதத்திலே அவந்திவர்மனைப் பற்றிய குறிப்புகள் உள்ளன. மெளகரி மன்னர் அரசகுலங்களில் முதன்மையானவர்கள் என்றும் அவர்களில் அவந்திவர்மன் வம்சதிலகமாக விளங்கினான் என்றும் பாணபட்டர் புகழ்ந் துரைக்கின்றார்.
அவந்திவர்மனின் குமாரனாகிய கிரஹவர்மன் தங்கள் மகளான ராஜபூரீயைத் திருமணஞ் செய்துகொள்ள விரும்புகிறானென்று அவந்திவர்மன் தனது தேவியிடம் கூறியதாக ஹர்ஷசரிதத்திலே சொல்லப்படுகின்றது. கல்யாணம் பற்றிப் பேசுவதற்கென்று கிரஹவர்மன் ஸ்தான். வீஸ்வரத்திற்கு உயரதிகாரிகளைத் தூதுவராக அனுப்பியிருந்தான்.
149

Page 196
கிரஹவர்மனுக்கும் பிரபாகரவர்த்தனின் மகளான ராஜ்யபூரீ என்பவளுக்கும் கல்யாணச் சடங்கு நடைபெறுவதற்கு முன்பு அவந்திவர்மன் இறந்துவிட்டான்.
காஷ்மீர தேசத்து அரசனாகிய அவந்திவர்மன் ஒன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் கி.பி 854-883 ஆகிய காலப்பகுதியில் ஆட்சி புரிந்தான். கார்க்கோட வம்சத்தவரின் ஆட்சி முடிவுற்றதும் அவன் அதிகாரம் பெற்றான். உத்பல வம்சத்து அரசரில் அவன் முதலானவன். தனது குடியானவர்களின் முன்னேற்றம் கருதி அவந்திவர்மன் பொருளாதாரத்தை வளம்படுத்தும் முயற்சிகளில் ஈடுபட்டான். மிகுந்த மழைவீழ்ச்சியின் காரணமாகப் பத்மதடாகத்தில் நீர் நிரம்பி வழிந்தோடுவதால் வெள்ளப்பெருக்கு மீண்டும் மீண்டும் ஏற்படுவதுண்டு. அதனாற் பயிர்கள் அழிந்தன. விவசாயி களுக்குப் பெருஞ்சேதம் ஏற்படுவதுண்டு. முன்பு, மேலதிகமான நீரை வெளியேற்றுவதற்கெனச் சில நடவடிக்கைகளை வலிதாதித்ய முக்தபீடன் மேற்கொண்டான். ஆயினும் அவனுக்குப் பின்வந்த அரசர்கள் இவ்விடயந் தொடர்பாகக் கவனஞ் செலுத்தவில்லை. வெள்ளப்பெருக்கினால் ஏற்படும் அபாயங்களை முற்றாகத் தவிர்ப்பதற்கான பணிகளை நிறைவேற்றுவதற்கென்று சுய்ய என்னும் அமைச்சனிடம் பொறுப்புகளை அவந்திவர்மன் வழங்கினான். அவனுடைய கண்காணிப்பில், மலைகளிலிருந்தும் உருண்டு வந்து வீழ்ந்த பெருங்கற்பாறைகள் விதஸ்தா நதியிலிருந்தும் அகற்றப்பட்டன. அதனால் விதஸ்தா நதியிலே தடையின்றி நீர் பாய்ந்தது. மலைகளிலிருந்து உருண்டு வரும் பாறைக்கற்கள் ஆற்றிலே விழுவதைத் தடுக்கும் வண்ணமாக ஆற்றோரங்களிலே விசாலமான கல்லறைகள் அமைக்கப்பட்டன. விதஸ்தா, சிந்து ஆகிய ஆறுகளின் படுக்கையைத் திசைதிருப்பி அவை சங்கமாகுந் தலத்தை அவந்திவர்மன் மாற்றியமைத்தான். அதனாற் பரந்த நிலப்பரப்பிலே வயல் நிலங்கள் உருவாக்கப் பட்டன. அதன் விளைவாகத் தானிய உற்பத்தி பன்மடங்காகியது. விலைகளில் வீழ்ச்சி ஏற்பட்டது. அவந்திவர்மன் ஈட்டிய சாதனை மகத்தானது.
அவந்திவர்மன் கல்வி வளர்ச்சியிலும் வித்துவப் புலமையாளர் மீதும் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தான். ஆனந்தவர்த்தனர், சிவஸ்வாமி, ராஜரத்னாகரர், முகுலபட்டர், கல்லடர் முதலோர் அவந்திவர்மனது காலத்து இலக்கிய கர்த்தாக்கள். பெளத்தரான சிவஸ்வாமி கப்பனர் ப்யுதய என்னும் காவிய நூலை எழுதினார். அது கப்பண என்னும் அரசனுக்கு பிடகநெறி போதித்தமையினை இருபது காண்டங்களில் வர்ணிக்கிறது. கப்பண கோசல நாட்டு மன்னனாகிய பிரசேனசித்துவுக்கு எதிராகப் படையெடுத்தவன்; கெளதம புத்திரரின் காலத்தவன். அவன் உபதேசம் பெற்றதும் பெளத்த சமயத்தைத் தழுவிக் கொண்டான் என்று காவியத்திலே சொல்லப்படுகின்றது. சிவஸ்வாமியின் காவியத்தில் மாகர், பாரவி ஆகியோரின் செல்வாக்கு மிகுந்து காணப்படுகின்றது.
அவந்திவர்மனின் காலத்தவரான ராஜானக ரத்னாகரர் ஹரிவிஜயம் என்னும் பெருங்காவியத்தை எழுதினார். அது
150

அந்தகாசுரனோடு போர் செய்து, சிவபெருமான் அவனை அழித்தமை பற்றிய புராணக்கதையினை ஐம்பது காண்டங்களிலே இதிகாசப் பாங்கில் வர்ணிக்கின்றது.
கல்லடரின் மகனாகிய முகுலபட்டர் அவந்திவர்மனின் காலத்தவர். சொற்களுக்குரிய அபிதா, லஷனா என்னும் சக்திகளை அவர் அபிதா விருத்திமாத்திரிகா என்னும் நூலில் ஆராய்கின்றார். அது 15 காரிகைகளைக் கொண்டது. விருத்தி என்னும் உரையுடன் கூடியது. அவந்திவர்மனால் அமைக்கப்பட்ட வைணவக்கோயில் ஒன்றிலே இலக்கணம் போதிப்பதற்கு ஆசிரியர் ஒருவர் நியமிக்கப்பட்டமை பற்றிய சாசனக் குறிப்புண்டு. (f. L.)
அவிநாசிநாத சுவாமிகள்
கொங்கு நாட்டில் அந்தியூரிலே பிறந்தவர்; பதினெட்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் வாழ்ந்தவர்; இளமையிலே தமிழையும், சைவத்தையும் கற்றுத்தேர்ந்து துறவு மேற்கொண்டு தாம்பிரவேணியில் ஒடுக்கத்தில் வாழ்ந்தவர்; தில்லைத் தரிசனத்தின்போது சிற்றம்பலப்பத்தரின் அழைப்பை ஏற்று வேதபுரி சென்று மடத்தில் இருந்து உபதேசம் செய்து வந்தவர்; பின்பு திருக்கோவலூர் ஆதீனம் முதல் ஞானியாரை அடைந்து ஞானோபதேசம் பெற்றவர்; சிவகுன்றம், செஞ்சி, விருத்தாசலம் முதலிய இடங்களில் வாழ்ந்து பூரணமடைந்தவர். தம் ஞானாசிரியர் ஆறுமுகமெய்ஞ்ஞான சிவாசாரிய சுவாமிகள் (1769) மீது அட்டகம், அபிடேகமாலை, சிகாமணிப்பதிகம், நெஞ்சுவிடுதூது, மங்களம் பாடியவர். இவை அவிநாசிநாதர் தோத்திரக் கொத்து என்ற பெயரில் 1939 இலே பதிப்பிக்கப்பட்டுள்ளன. (பொ.யூ.)
அவிநாசிலிங்கம், தி. சு. (1903 - )
திருப்பூரிற் பிறந்த அவிநாசிலிங்கஞ் செட்டியார் பி. ஏ., பி. எல். பட்டதாரி, திருப்பூரிலே வழக்கறிஞராக விளங்கியவர்; மகாத்மா காந்தியுடன் நெருங்கிப் பழகியவர்; சென்னை மாநிலக்கல்வியமைச்சராக விளங்கியவர்; 1946 இலே தமிழ் வளர்ச்சிக் கழகம் தோன்றியபோது அதன் தலைவராகப் பணிபுரிந்தவர்; கோவையில் பூரீ இராமகிருஷ்ண மிஷன் வித்தியாலயத்தை நிறுவுவதிலே முன்னின்று உழைத்தவர்; அவ்வித்தியாலயத்தின் பெருவளர்ச்சிக்கு முக்கிய கார ண கர்த்தாக்களாக விளங்கியவருட் சிறப்பிடம் பெறுபவர்.
வாழ்க்கையின் அடிப்படை (1950) எனும் அவரது கட்டுரைத் தொகுப்பு உன்னத சமூகம் உருவாவதற்கு வேண்டிய அடிப்படைப் கொள்கைகள் சிலவற்றைத் தெளிவாக எடுத்துரைக்கின்றது. நான் கண்ட மகாத்மா காந்தியின் சிறப்பியல்புகள் சிலவற்றை உள்ளத்திற்படுமாறு உரைப்பதாகும்.
இந்துக் கலைக்களஞ்சியம்

Page 197
திருக்கேதாரயாத்திரை புண்ணிய பாரத யாத்திரை
நூல்களின் முன்னோடி. சுவாமி விவேகானந்தர், காந்தியின்
ஆக்கங்கள் சிலவற்றையும் மொழி பெயர்த்துத் தந்துள்ளார்.
(பொ.யூ.)
அவிரோதவுந்தியார்
சமய நூல்களுக்கு விரோதமின்றிக் கூறியதால் அவிரோதவுந்தியார் என்ற பெயர் பெற்றது அவிரோத
வுந்தியார். உந்தீபற என்ற மகுடத்தை யுடையதால் உந்தியார் எனப்பட்டது.
அவிரோதவுந்தியார் திருப்பேரூர் சாந்தலிங்க தேசிகர் இயற்றியதாகும். இவர் பதினேழாம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும் பதினெட்டாம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் வாழ்ந்தவர். இவர் துறையூர் சிவப்பிரகாசதேசிகரின் சீடர் திருப் பேரூரிலே வீரசைவம் சார்பான ஆதீனம் நிறுவியவர்; இவர் சீடர் விருத்தாசலம் குமாரதேவர்.
அவிரோதவுந்தியார் 100 பாடல்களையுடையது. திருப்பேரூர் சிதம்பர சுவாமிகள் இதற்கு உரை கண்டவர். சிதம்பரசுவாமிகள் பதினெட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர்.
நல்லூர் க. சதாசிவப்பிள்ளை ( - 1910) அவிரோதவுந்தியாரைப் பதிப்பித்துள்ளார். அவருடைய இரண்டாம் பதிப்பு 1873 இலே வெளி வந்தது. (பொ.யூ.)
໒໑໔ນລະແນກນີນງົaນສ ະຫຼ5)
சென்னை, திருச்சி நேர்வழியில் மாயூரம் அல்லது மாயவரம் ஒரு சந்திப்பு. சந்திப்பிலிருந்து கிழக்கே இரு மைல் தூரத்திலுள்ளது மாயூரநாதர் திருக்கோயில். இச்சிவதலம் முன்பு மயிலாடுதுறை எனப் பேர்பெற்றிருந்தது.
மாயூரம் சிவ தலத்திற் கோயில் கொண்ட இறைவிக்கு அபயாம்பிகை, அஞ்சல்நாயகி என்றுபேர். அபயாம்பிகை எனும் பெயர் 1913 இலே பதிப்பிக்கப் பெற்ற சதகத்திலே அவையாம்பிகை என்று காணப்படுகின்றது. அபயாம்பிகை மீது பாடப்பட்டது அவையாம்பிகை சதகம்.
அவையாம்பிகை சதகத்திலே விநாயகர் காப்பு வெண்பாவும் நூறு ஆசிரிய விருத்தமும் இடம் பெறுகின்றன.
இதனைப் பாடியவர் மாயூரம் நல்லதுக்குடி கிருஷ்ணையர் என்பவராவார். அவர் காலம் பத்தொன்பதாம் நூற்றாண்டு என்பர்.
அவையாம்பிகை சதகம் அம்பிகையின் அருட்கொடை யையும் கருணைத்திறத்தையும் பலபடப் பாராட்டிப் போற்றும் துதி நூலாகும். இச் சதகம் சென்னையில் சென்னை ரிப்பன்
அச்சியந்திர சாலையில் 1913 இல் அச்சிடப்பெற்றுள்ளது.
(பொ.பூ.)
இந்துக் கலைக்களஞ்சியம்

அழகர் கலம்பகம்
மதுரைக்கு வட கிழக்கே 12 மைல் தொலைவில் உள்ளது அழகர் கோயில் எனும் திருத்தலம். திருமாலிருஞ்சோலை, சோலைமலை என்னும் பெயர்களாலும் வழங்கப் பெறுவது. இங்கு நின்ற திருக்கோலத்தில் அருள்பாலிக்கும் திருமாலுக்கு அழகர், கள்ளழகர், மாலலங்காரர், செளந்தரராஜர் என்ற பெயர்களுண்டு; திருத்தாயாருக்குக் கல்யாணவல்லித்தாயார், பூதேவி என்று பேர்.
அழகரைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு பாடப் பெற்றது அழகர் கலம்பகம்; இதற்குத் திருமாலிருஞ் சோலைக் கலம்பகம் என்றும் பேருண்டு. சேனை முதலியார், நம்மாழ்வார் ஆகியோரிடம் தனித்தனியாகவும் பன்னிரு ஆழ்வாரிடம் ஒரு சேரவும் மூன்று செய்யுளிற் காப்பு வேண்டப்பட்டுள்ளது. காப்பினைத் தொடர்வது அவையடக்கப் பாடல்; தொடரும் நூலிலே 101 பாக்கள் பாவாலும் பாவினங்களாலும் இயன்று செல்வன.
அம்மானை, இடைச்சியார், இரங்கல், ஊசல், களி, காலம், குறம், கைக்கிளை, சந்துரோபாலம்பனம். சம்பிரதம், சித்து, தவம், தழை, தூது, பாண், பிச்சியார், புயவகுப்பு, மடக்கு, மதங்கு, மறம், வலைச்சியார் முதலிய உறுப்புகளை அழகர் கலம்பகத்திற் காணலாம்.
அழகர் கலம்பகம் கவி குஞ்சரம் ஐயர் என்னும் வேம்பத்தூர்ப் புலவராற் பாடப்பட்டதென்பர் சிலர்; அழகர் கலம்பகத்தினை உரையுடன் பதிப்பித்த வை. மு. சடகோபராமா நுசாரியர் இதனை அழகர் பிள்ளைத் தமிழ் பாடிய வேம்பத்தூர்ச் சங்கப் புலவர்கள் செய்தது என்று சொல்லுகின்றனர் என்பர்.
(பொ.யூ.)
அழகர் கிள்ளைவிடுதூது
அழகர் மீது பாடப் பெற்ற பிரபந்தங்களில் ஒன்றே அழகர்
கிள்ளைவிடுதூது. அதனுள் நம்மாழ்வாரைத் திருவருள் புரிய வேண்டும் காப்பு வெண்பா நீங்கலாக 239 கண்ணிகளுள்ளன.
இதனைப் பாடியவர் பலபட்டடைச் சொக்கநாதபிள்ளை. அவர் பதினெட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். அவர் சிவபிரான் மீதும் பல பிரபந்தங்களைப் பாடியவராவர். இத்தூதிலே தூதுப் பொருளாம் கிளியின் பெருமையும் அழகர் சிறப்பும் தலைவி அழகரைக் கண்டு காமுற்ற வரலாறும் முறையே கூறப்படு கின்றன. மடக்கு, திரிபு, சிலேடை முதலியவை அமைந்த இடங்கள் சற்றுக் கடினமாக இருப்பினும் ஏனைய பகுதிகள் தெளிவான செய்யுள் நடை உடையவை. இதன் மூலத்தை 1905 இலே மு. வேணுகோபாலசாமி நாயுடு பதிப்பித்தார். உ. வே. சாமிநாதையர் குறிப்புரையுடன் 1938 இலே வெளியிட்டார்;
அவருடைய பதிப்பின் ஆறாம்பிரசுரம் 1957 இலே வந்தது.
(பொ.யூ.)
151

Page 198
அழகர் கோவில் (அழகர்மலை)
மதுரைக்கு அருகிலுள்ள வைணவத் திருப்பதிகளுள் ஒன்று. ஆண்டுதோறும் சித்திரை மாத முழு நிலவு நாளன்று காலையில் அழகர் கோயில் இறைவனான அழகர், மதுரை நகரத்தே வைகையாற்றில் இறங்கும் விழாவினைக் காண இலட்சக் கணக்கான மக்கள் கூடுகிறார்கள். கி. பி. 1971 - ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணிப்பு, அழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சியைக் காண ஆண்டுதோறும் ஐந்து லட்சம் மக்கள் கூடுகிறார்கள் என்று கூறுகிறது. இவர்களில் பெரும்பாலோர் கிராமப் புறத்து மக்களே. தமிழ் நாட்டின் மிகப்பெரிய திருவிழாக்களில் இதுவும் ஒன்று.
அழகர் கோயில் மதுரை நகருக்கு வடக்கு - வடகிழக்குத் திசையில் பன்னிரண்டு கல் தொலைவில் அழகர்மலை அடிவாரத்தில் நிலக்குறுங்கோடு (Latitude) 10.5° பாகையிலும், நில நெடுங்கோடு (Longitude) 78.14 பாகையிலும் அமைந்துள்ளது. சங்க இலக்கியத்தில் இம்மலை இருங்குன்றம் என வழங்கப்பட்டுள்ளது. சிலப்பதிகாரம் இம்மலையைத் திருமால் குன்றம் எனக் கூறுகிறது. ஆழ்வார்களின் பாசுரங்கள் "திருமாலிருஞ்சோலை” எனக் குறிப்பிடும். அழகர் கோயில் என்னும் பெயர் 'அதிர்குரல் சங்கத்து அழகர் தம் கோயில் என்னும் நம்மாழ்வாரின் பாசுரத்திலிருந்து பெறப்பட்டதாகும். கல்வெட்டு ஒன்று இந்நிலப் பகுதியைக் "கீழிரணியமுட்டநாடு” என்று குறிக்கிறது.
ஏறத்தாழ 15 வேலிப் பரப்பில் அமைந்த கோட்டைக்குள் இக்கோயில் அமைந்துள்ளது. கோயில் அமைந்துள்ள பகுதிக்கு உட்கோட்டை அல்லது இரணியன் கோட்டை என்பது பெயர். வெளிக் கோட்டை கி. பி. 14-ஆம் நூற்றாண்டில் மாவலி வாணாதிராயர் என்ற சிற்றரசர் வழியினரால் கட்டப்பட்டது. இன்று இக்கோட்டை அழிவுற்ற நிலையிலே காணப்படுகிறது. மதுரை நாயக்க மன்னர் காலத்தில் இக்கோட்டைக்குள் ஒரு சிறு அரண்மனை இருந்தது; அதுவும் இப்போது அழிந்து விட்டது.
முதல் ஆழ்வார் மூவருள் ஒருவரான பூதத்தாழ்வாரும் பெரியாழ்வார், ஆண்டாள், நம்மாழ்வார், திருமங்கையாழ்வார் ஆகியோரும் தம் திவ்வியப் பாசுரங்களில் இக்கோயிலைப் பாடியுள்ளனர். இக்கோயில் கி. பி. 6-ஆம் நூற்றாண்டு முதல் புகழ்பெற்ற கோயிலாக விளங்கி வருகிறது.
இக்கோயில் கருவறை வட்ட வடிவமானது. தமிழ்நாட்டுப் பழங்கோயில்களுள் அழகர் கோயில், காஞ்சிகரபுரீசுவரர் கோயில், நார்த்தாமலை விசயாலயச் சோழீச்சரம் ஆகிய மூன்றுமே வட்ட வடிவில் கருவறை உடையன. பொதுவாகக் கோயில் கருவறைக்குத் தனிப்பெயர் இருப்பது வழக்கமில்லை. இக்கோயில் கருவறைக்கு நங்கள் குன்றம் என்னும் பெயர் வழங்கி வருகிறது. கோயில் இறைவன் பெயர் 'கள்ளழகர்,
152

சுந்தரராசப் பெருமாள்' என்பனவாகும். கருவறையில் கிழக்கு நோக்கித் தேவியருடன் நின்ற திருக்கோலத்தில் இறைவன் எழுந்தருளியுள்ளார். கையிலுள்ள சக்கரம் அணி நிலையில் (ஆத்தான சக்கரமாக) அமையாது, பயன்படுநிலையில் (பிரயோக சக்கரமாக) அமைந்துள்ளது. இது ஒரு விதிவிலக்கான செய்தியாகும். தலமரம் சந்தன மரம். தீர்த்தம் சிலம்பாறு.
இக்கோயில் கோபுர வாசல் நிரந்தரமாக அடைக்கப்பட்டு அதன்மேல் பதினெட்டாம்படிக் கருப்பசாமி என்னும் சிறு தெய்வத்தின் கோயில் அமைக்கப்பட்டுள்ளது. கோயில் இறைவனின் அருட் களையினைத் திருட வந்த பதினெட்டுப் பேரை இக்கோயில் கோபுர வாயிலில் வெட்டிப் புதைத்திருப்பதால் கோபுர வாசல் அடைக்கப்பட்டதாகக் கூறுவர். இதற்கு வடக்கேயுள்ள மற்றொரு வாசலே இப்போது பயன்படுத்தப் படுகிறது.
இத்தலம்பற்றிக் கி. பி. 17-ஆம் நூற்றாண்டு தொடங்கி எழுந்த சிற்றிலக்கியங்கள் பல. அழகர் அந்தாதி, அழகர் கலம்பகம், அழகர் கிள்ளை விடுதூது, அழகர் பிள்ளைத் தமிழ், அழகர் குறவஞ்சி, சோலை மலைக் குறவஞ்சி, திருமாலிருஞ்சோலைப் பிள்ளைத் தமிழ், அலங்காரர் மாலை ஆகியவை அச்சிடப்பட்டவையாகும். இவை தவிர அழகர் வருகைப் பத்து எனும் ஆசிரியர் பெயர் அறியப்படாத சிறு நூலும் உள்ளது. சென்னையிலுள்ள கீழ்த்திசைச் சுவடி நூலகத்தில் அழகர் மாலை, அழகர் அகவல் எனும் அச்சிடப்படாத இரு நூல்களும் உள்ளன. வருணிப்பு என்ற பெயரில் இத்தலத்திறைவன் மீது நாட்டுப்புற மக்கள் பாடும் பாடல்கள் பலவாகும். அழகர் வருணிப்பு, தசாவதார வருணிப்பு, கூர்மாவதாரன் வர்ணிப்பு, இராமாவதார வருணிப்பு என்னும் பெயரில் அவை சித்திரைத் திருவிழாவில் பாடப்படுகின்றன. இவை பெரும்பாலும் வாய்மொழிப் பாடல்களே.
பரிபாடல் காலத்தில் இத்தலத்தில் பலராம வழிபாடு சிறப்பாக நிகழ்ந்துள்ளது. "பாண்டிய நாட்டில் இந்திர வழிபாட்டிற்கு மாற்றாகப் பலராம வழிபாடு வளர்க்கப் பெற்றது. அதன் வழி உழவர்களை வைணவ நெறிக்குள் ஈர்க்கத் தமிழ்நாட்டு வைணவம் முயன்றுள்ளது' என்பர் ஆய்வாளர். தமிழ்நாட்டில் பலராம வழிபாடு நிகழ்ந்த இடமாக இக்கோயிலை மட்டுமே சான்றுடன் காட்ட முடியும்.
இக்கோயில் படியேற்ற மண்டபத்தில் அமைந்துள்ள யாளிச் சிற்பங்களும் திருக்கல்யாண மண்டபத்தில் அமைந்துள்ள நரசிம்மர், வேணுகோபாலர், பூமிவராகர், இரதி மன்மதன் சிற்பங்களும் கலையழகு மிகுந்தவை. வசந்த மண்டபத்தில் இராமாயணக் காட்சிகள் மேற்கூரை ஒவியமாகத் தீட்டப்பட்டுக் கி. பி. 17-ஆம் நூற்றாண்டுத் தமிழ் எழுத்துக்களில் விளக்கத்துடன் அமைந்துள்ளன. இந்த ஒவியங்கள் திருமலை நாயக்கர் காலத்தனவாகும்.
இந்துக்கலைக்களஞ்சியம்

Page 199
முற்றுப்பெறாத இராயகோபுரம் இக்கோயிலுக்குத் தெற்கில் அமைந்துள்ளது. தமிழிலும் வடமொழியிலுமாக இக்கோயிலில் 123 கல்வெட்டுகள் படியெடுக்கப் பெற்றுள்ளன. கருவறையைச் சுற்றிக் கல்வெட்டுகள் ஏதும் காணப்படவில்லை. கல்வெட்டுகளின் மூலம் வெளிக்கோட்டைப் பகுதியில் 'சாமந்த நாராயணச் சதுர்வேதிமங்கலம்' என்னும் அக்கிரகாரம் இருந்ததையும், இக்கோயில் தேரின் பெயர் அமைந்த நாராயணன்' என்பதையும் அறிய முடிகிறது. நம்மாழ்வார், ஆண்டாள் ஆகியோர்தம் பாசுரங்கள், இக்கோயிற் கல்வெட்டுகளில் முறையே சடகோபன் பாட்டு, 'கோதைப்பாட்டு என்று குறிப்பிடப்பட்டுள்ளன. -
அழகர் கோயில் சித்திரைத் திருவிழாவினால் புகழ்பெற்ற
கோயிலாகும். மதுரை மன்னர் திருமலை நாயக்கர் காலத்திற்கு முன் சித்திரைத் திருவிழாவில் இக்கோயில் இறைவன், சோழ வந்தானுக்கு அருகில் உள்ள தேனூரில்தான் வைகையாற்றில் இறங்கித் தலபுராணக் கதையின்படி மண்டூக முனிவருக்குக் காட்சி அளிப்பது வழக்கம். வைணவரான மன்னர் திருமலை நாயக்கரே தம் ஆட்சிக் காலத்தில் சைவ, வைணவ ஒற்றுமை கருதி இத்திருவிழாவினை மதுரைக்கு மாற்றி அமைத்தார். இதற்காகவே மாசி மாதத்தில் நடைபெற்று வந்த மதுரை மீனாட்சி அம்மன் திருமணம் திருத்தேர் விழாக்களையும் சித்திரை மாதத்திற்கு மாற்றி அமைத்தார். இன்றும் மதுரையில் மீனாட்சி அம்மன் திருமண ஊர்வலமும் திருத்தேர் விழாவும் சித்திரை வீதியில் நடைபெறாது மாசி வீதியிலேயே நடைபெறுவது குறிப்பிடத்தக்கதாகும்.
இப்பொழுது அழகர் ஆற்றிலிறங்கும் சித்திரை முழுநிலவு நாளுக்கு இரண்டு நாட்கள் முன்னதாக மதுரை மீனாட்சி அம்மன் திருமணவிழா நடைபெறுகிறது. இது குறித்து மக்களிடையே பரவலாக ஒரு கதை வழங்கி வருகிறது. “தங்கையான மீனாட்சி அம்மன் திருமணத்திற்காகவே அண்ணனாகிய அழகர் சீர்வரிசைகளுடன் அழகர் கோயிலிலிருந்து புறப்பட்டு வருகிறார். அவர் வைகை ஆற்றிலிறங்கியவுடன் தங்கை மீனாட்சியின் திருமணம் இரண்டு நாள்களுக்கு முன்னரே அவர் இல்லாமல் நடந்துவிட்ட செய்தி அவருக்குத் தெரிகிறது. உடனே மதுரைக்குள் வராமல் சினங் கொண்டு கிழக்கே வண்டியூர் நோக்கித் திரும்பி விடுகிறார். அங்குத் தம் காதலியான துலுக்க நாச்சியாருடன் தங்கிவிட்டு மலைக்குத் திரும்பி விடுகிறார்.” என்பது கதையாகும். இக்கதைக்குப் புராண வரலாற்றுச் சான்றுகள் இல்லை என்றாலும் மக்கள் இக்கதையினை நம்புகின்றனர்.
அழகர் கோயில் சித்திரைத் திருவிழா மேலோர் மரபுகளும் JET("GlüLIJD LDJL 565th (Elites and folk Tradition) 56u55) விளங்கும் திருவிழாவாகும். இதுவே, இத்திருவிழாவின் தனிப்பெருமையாகும். இத்திருவிழாவில் அழகர், மதுரை மாவட்டம் மேலூர்ப் பகுதியில் வாழ்கிற மேலைநாட்டுக் கள்ளர் என்னும் இனத்தாரின் ஆடையணிகளோடு'கள்ளர் திருக்கோலம்
இந்துக் கலைக்களஞ்சியம்
 

பூண்டு ஊர்வலம் வருவார். கையில் வளரி எனப்படும் வளைதடி, சாட்டை, காதுகளில் வண்டக் கடுக்கன், தலையில் கொண்டை இவற்றோடு கள்ளழகராக (கள்ளர் அழகராக) சித்திரைத் திருவிழாவில் மூன்றாம் திருநாளன்று அழகர் கோயிலிலிருந்து புறப்பட்டு, மீண்டும் ஒன்பதாம் திருநாளன்று கோயிலுக்குத் திரும்புவார். அழகர் கோயிலிலிருந்து இறைவன் வண்டீயூர் சென்று திரும்பும் தூரம் ஏறத்தாள முப்பது கல் ஆகும். திருவிழாவில் உச்சக் கட்டமான அழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி ஐந்தாம் திருநாளன்று (சித்திரைத் திங்கள் நிறைமதியின்) காலையில் நிகழும்.
இத்திருவிழாவில் நாட்டுப்புற அடியார்களில் சிலர் போர்வீரரைப் போன்று வேடம் பூண்டு ஆட்டுத் தோலால் செய்த தோற்பைகளில் தண்ணீரை நிரப்பி ஊர்வலப் பாதையில் அழகர் மீது பீய்ச்சி அடித்துக் கொண்டே வருவர். வேறு சிலர், சாமியாடியாக வேடமிட்டு மிகக் கனமான திரிகளை எரியவிட்டுப் பிடித்துக் கொண்டு ஆடி வருவர். இவர்கள் திரியாட்டக்காரர்கள் எனப்படுவர். மற்றுஞ் சிலர் சாமியாடி வேடமிட்டுத் தம்மைச் சாட்டை கொண்டு அடித்துக் கொண்டு வருவர். இவர்கள் சில நாட்கள் விரதமிருந்து மார்பில் துளசிமாலை அணிந்து, நெற்றியிலும் மார்பிலும் திருநாமமிட்டு ஆடி வருவர். கி. பி. 1979 - இல் நடத்தப்பட்ட ஒரு கள ஆய்வு மூலம் இவ்வாறு வேடமிட்டு ஆடுவோரில் கோனார், அரிசனர், சேர்வை ஆகிய சாதியினர் முறையே 34, 20, 16 விழுக்காட்டினராக இதில் பங்கு பெற்றனர் என்பதனை அறிய முடிந்தது. தேவர், பிள்ளை, நாயுடு, நாயக்கர், ஆசாரி, செட்டியார், வேளார் (குயவர்) குறவர், சக்கிலியர் ஆகிய சாதியினரும் இதில் பங்கு பெறுவர். இக்கோயிலை வழிபடும் நாட்டுப்புற அடியார்கள் பெரும்பாலும் மதுரை, சிவகங்கை, முதுகுளத்தூர், அரும்புக்கோட்டை, வட்டங்களிலிருந்தே அதிக அளவில் வருகின்றனர் என்பது கள ஆய்வின் மூலம் தெரிந்தது. தமிழ் நாட்டில் தாழ்த்தப்பட்ட மக்களை அதிகமாக ஈர்த்த பெருந்தெய்வக் கோயில் இதுவாகுமென்று அழகர் கோயிலைக் கூறலாம்.
வைணவ ஆசாரியர்களான இராமானுசர், கூரத்தாழ்வான், திருமலையாண்டான் ஆகியோர் இக்கோயிலோடு நெருங்கிய தொடர்புடையவர்களாவர். திருமாலையாண்டான் வழியினர் இக்கோயில் புரோகிதராகக் கருதப்படுகின்றனர். கூரத்தாழ்வார் அழகர் மீது சுந்தரபாகூத்தவம்’ என்னும் நூலை வடமொழியிற். பாடியுள்ளார்.
இன்றைய முகவை மாவட்டத்தின் சில பகுதிகளை ஆண்டு வந்த மாவலி வாணாதிராயர் என்னும் குறுநில மன்னர் வழியினர் இக்கோயிலோடு நெருங்கிய தொடர்புடையவராவர். இவர்களுடைய கல்வெட்டுகளுள் சில அழகர் திருவுள்ளம் என்பதையே மங்கலச் சொல்லாகக் கொண்டு தொடங்குகின்றன. திருமாலிருஞ் சோலை நின்றான், சுந்தரத் தேருடையான் என்னும் பெயர்களை இவ்வழியினர் பலமுறை சூடிக் கொண்டுள்ளனர். இக்கோயிலில் உள்ள கல்திரிகையிலும் வெள்ளியால் ஆன ஒரு
153
217903

Page 200
கலசப் பானையிலும் திருமாலிருஞ் சோலை நின்றான்' என்னும் பெயர் காணப்படுகிறது. கி. பி. 1464 - இல் இம் மன்னனின் ஆணைப்படி இக்கோயிலில் ‘உபானம் முதல் தூபி வரை திருப்பணி செய்யப்பட்டதாக ஒரு கல்வெட்டால் அறிகிறோம். கி. பி. 1757 - இல் ஐதர் அலி இக்கோயிலில் அமைந்த கோட்டைப் பகுதியைச் சில நாட்கள், கைப்பற்றி இருந்தார் என்பர். நாட்டுப்புற மக்கள் தரும் கால்நடைகளும் பல்வகைத் தானியங்களுமே இக்கோயிலின் மிகப்பெரிய வருவாயாகும். இத்தலத்து இறைவன் நெடுங்காலமாகவே கால்நடை வளர்ப்போர், உழுதொழில் செய்வோர் ஆகியோரின் தெய்வமாகக் கருதப்பட்டார் என்பது அறிஞர்கள் கருத்தாகும்.
(தொ.ப.பொ.)
அழகரந்தாதி
திருமாலிருஞ்சோலை அழகர் மீது பாடப்பெற்றது அழகர் அந்தாதி. இதனுள் சிறப்புப்பாயிரச் செய்யுள், காப்புச் செய்யுள், பிற்சேர்க்கைப் பாடல் நீங்கலாக நூறு செய்யுளுண்டு. இதனைப்
பாடியவர் திருமங்கை ஊரினரான மணவாளதாசர் என்பவராவர்.
தோத்திரமாகவும் போதனையாகவும் அமையும் அழகர் அந்தாதி, அணிநலம் மிகுந்து, சொல்லாட்சிகளாற் சிறந்து காணப்பெற்றதாயினும் எளிமைப் பண்பினாற் போற்றத்தக்கதாய் விளங்குகின்றது. அழகர் அந்தாதி அஷ்டப்பிரபந்தத்துள் ஒன்றாகத் தொகுக்கப் பெற்றுள்ளது. அதற்குத் திருவல்லிக் கேணி வைத்தமாநிதி முடும்பை சடகோப ராமாநுஜாசாரியர் சிறந்தவுரை எழுதியுள்ளார்.
பதினான்காம் நூற்றாண்டின் முற்பகுதியில் வாழ்ந்த வில்லிபுத்தூராழ்வாரும் அழகரந்தாதி பாடியுள்ளார்.
(பொ. பூ)
அழகிய சொக்கநாதபிள்ளை
19த்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் வாழ்ந்தவர்; திருநெல்வேலி தச்ச நல்லூர் எனுமூரினர்; வன்னியப்ப பிள்ளையின் புதல்வர்; திருநெல்வேலி முன்சீபு நீதிமன்றத்தில் எழுதுவினைஞராகப் பணி செய்தவர். -
நெல்லைக்காந்திமதியம்மை மீது கலித்துறையந்தாதி, பிள்ளைத்தமிழ் பதிகம் என்பன பாடியவர்; பூரீ வில்லிபுத்தூர்க் கோதை மீது அந்தாதியும் கும்மியும் இயற்றியவர்; சங்கரநயினார் கோயிலந்தாதி, நெல்லை நாயகமாலை
முதலியனவும் யாத்தவர்; பதசாகிந்தியங்களும் பாடியவர்.
(பொ. பூ)
154

அழகிய சொக்கநாதவரோதயன்
சைவநெறி மாட்சியும் தோத்திர இலக்கணமும் ஆசாரமும் கூறும் சிவபூசையந்தாதி பாடியவர். (பொ.பூ.)
©pສິນ ຫຼືຫຼ5.pນມີນ60 65fl5ff
பதினேழாம் நூற்றாண்டின் பிற்குதியில் வாழ்ந்தவர்; தருமபுரவாதீன எட்டாம் பண்டார சந்ததிகளாக அருளாட்சி புரிந்தவர் (1680 - 1700). அருட்பாமாலை, அறிவானந்த சமுத்திரம் என்பனவற்றின் ஆசிரியர். (பொ.பூ.)
அழகிய திருச்சிற்றம்பல தேசிகர் ( - 1748)
அம்பர் மாகாளம் எனுமூரினர்; தருமையாதீன எட்டாம் பண்டார சந்நிதிகள் அழகிய திருச்சிற்றம்பல தேசிகரின் சீடர்; சொர்க்கபுர ஆதீனத்தினை நிறுவிய முதல்வர்; அழகிய
திருச்சிற்றம்பல தேசிகர் கிளிவிடுதூது பாடியுள்ளார்.
(பொ. பூ)
©ນpສິນ 51bນນີ້
பதினெட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த வைணவர்; குருபரம்பரை வரலாறு இயற்றியவர். (பொ.யூ.)
அழகிய மணவாளதாசர்
வைணவசமயி, அஷ்டப்பிரபந்தம் எனும் தொகுப்பில் இடம் பெறும் திருவரங்கக் கலம்பகத்தைப் பாடியவர்; பராசரபட்டருக்குக் காப்புக் கூறியுள்ளார். (பொ.யூ.)
dépaug 1D6 OT GT6T1 61J951DTGir நாயனார்
19தின்மூன்றாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர்; தமிழ்நாடு திருவரங்கரத்திற் பிறந்து வாழ்ந்தவர்; நம்பிள்ளையின் சீடர்; வடக்குத் திருவீதிப்பிள்ளையின் கனிட்ட புதல்வர்; தந்தையிடம் திவ்விய பிரபந்தத்தையும் வியாக்கியானங்களையும் கற்றவர்; பிள்ளைலோகாசாரியரின் தம்பி; தமையனாரிடமும் கற்றவர்; அவருக்கு முன்பு பரிபூரணமானவர்; பிரமசரியம் அனுட்டித்தவர்; கிடாம்பி திருமலைநாயனார் முதலானோரின் குரு.
அருளிச் செயல் ரஹஸ்யம், ஆசார்ய ஹிருதயம் என்பனவற்றோடு திருப்பாவை ஆறாயிரப்படி, அமலனாதிபிரான் வியாக்கி யானம், கண்ணிநுண் சிறுத்தாம்பு வியாக்கி யானம் என்பன இயற்றியவர்; பட்டோலை செய்தவர்; திருவந்தாதி வியாக்கியானமும் மாணிக்கமாலை வியாக்கி யானமும் இவர் பேரால் வழங்குகின்றன. (பொ.யூ.)
இந்துக் கலைக்களஞ்சியம்

Page 201
©pຮົນ ມaຫລTaTນໍ 6ານຫຼຽນprah ອົນກໍ
19தின்மூன்றாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர்; வாதிகேசரி என்று சிறப்பிக்கப் பெற்றவர்; சொட்டை எனுமூரினர்; திருவரங்கத்தில் வாழ்ந்தவர்; வரதராஜர், சுந்தரஜாமாத்ருமுனி எனவும் அழைக்கப் பெற்றவர்; பெரியவாச்சான்பிள்ளைக்குப் பணிவிடை செய்து அவர் சீடரானவர்.
திருவாய்மொழிக்குப் பன்னிராயிரப் படி என்ற உரை எழுதியவர்; பகவத்கீதை வெண்பா பாடியவர்; அத்யாத்ம சிந்தை இருபத்து நாலாயிர பிரமாணத்திரட்டு, கீதாசாரம், பூனிகீதை மணிப்பிரவாள வியாக்யானம், சதுசுலோகி, சாரீரகைக் கண்டியம், ஞானார்ணவம், தத்துவ சங்கிரகம், தத்துவதீபம், தத்துவதீப சங்கிரககாரிகை, தத்துவநிரூபணம், தத்துவ பூஷணம், திருவாய் மொழிக்கு சங்கதி, திருவிருத்தம் பாவனதத்வப் பிரபோதிகை, தீபசங்கிரகம், தீபப்பிரகாசிகை, நருசிம்மாஷ்டகம், ரகஸ்யதிரகாரிகை, ரகஸ்யாமிருத விவரணமாலை, ரகஸ்ய திரவிய விவரணம்
இயற்றியவர்; முஸலகிஸலயம் எனும் நாடகம் செய்தவர்.
(பொ. பூ)
அழகு முத்துப்புலவர்
சோணாடு நாகபட்டினம் எனுமூரினர்; அருட்கவி என்று சிறப்பிக்கப் பெற்றவர்; அம்பலவாணச் செட்டியாரின் புதல்வர், பூணூரீ மெய்கண்ட வேலாயுத உலா, பூனி மெய்கண்ட வேலாயுத சதகம், பூணு மெய்கண்ட வேலாயுத திருப்புகழ், காயாரோகணக் குறவஞ்சி என்பனவற்றைப் பாடியவர். (பொ. யூ.)
அழுகணிச்சித்தர்
தமிழ்நாட்டுச் சித்தர்களில் ஒருவர்; தத்துவப் பொருளை உருவகமாகப் பாடியவர்; துன்பச் சுவை மிகைப்படப் பாடுவதால் அழுகணிச்சித்தர் என்று பெயர் பெற்றனர் போலும்,
அழுகணிச் சித்தர் பாடிய பாடல்கள் அழுகணிச் சித்தர் பாடல் எனத் தொகுக்கப்பட்டுள்ளன.அழுகணிச் சித்தர் வரலாறோ அன்றிக் காலமோ துணிய முடியாதனவாக அமைகின்றன.
அழுகணிச் சித்தர் பாடலிலே 32 கலித்தாழிசைப் பாடல்கள் இடம்பெறுவன. கண்ணம்மா என விளித்துச் சித்தர் பாடும் பாடல்களிலே துன்பச் சுவை மிகுந்து காணப்படுகின்றது. உலகியல்பினையும், தத்துவ அறிவையும் புலபபடுத்தும் பாடல்களிலே உருவகமாக அமையும் செய்திகள் அதிகமாகவுள்ளன.
பதினெண் சித்தர்கள் பெரிய ஞானக் கோவை எனும் தொகுப்பில் இடம் பெறுவது அழுகணிச்சித்தர் பாடல். முருகேசநாயகர் 1899 இலே இத்தொகுப்பினைப்
இந்துக் கலைக்களஞ்சியம்
 

பதிப்பித்துள்ளார்; 1907 இலே இரு பாகங்களாகச் சென்னையில் வி. சரவணமுத்துப்பிள்ளை வெளியிட்டார். பதினெண் சித்தர் பெரிய ஞானக் கோவை என வழங்கும் சித்தர் பாடல்கள் என்ற பெயரிலே 1959 இலே அரு. ராமநாதன் அச்சிடுவித்தனர்.
(பொ.யூ.)
அளவை
பெரும்பாலும் எல்லா இந்திய தத்துவ முறைகளிலும் அறிவைப் பற்றிய பிரச்சினை முக்கிய விடயமாய் எடுத்துப் பேசப்படுகின்றது. மனிதனுடைய தளைக்கும் இழிவுக்கும் துன்பத்திற்கும் அறியாமையே காரணம் என்று தத்துவ முறைகள் கருதுவன. அறிவு நுண்ணிய ஆய்வின்போது நிலைபேறு உடையதாக இருக்கவும் மனதிலே ஆழமாக வேரூன்றவும் ஒழுங்கான முறையிலே ஆராயப்படவேண்டும். அறிவைப் பெறுவதற்குரிய வழிகளும் நுண்மையாக ஆராயப்பட வேண்டும். அப்பொழுதுதான் தவறினை நீக்கி உண்மையைப் பெறமுடியும். எனவே அறிவுஅல்லது உண்மையும் அதனைப் பெறும் வழிகளும் தத்துவ முறைமைகளில் முக்கிய இடத்தினைப் பெறுகின்றன.
அறிவைப் பெறும் வழிகள் தமிழிலே அளவை என்றும் சங்கதத்திலே பிரமாணம் என்றும் வழங்கப்படுவன. யாது பொருள்களை அளந்து கூறுகின்றதோ அது அளவை அல்லது பிரமாணம். சைவசித்தாந்தி எதுவின்றி அறிவைப் பெற முடியாதோ, அது இலக்கணம் கூறும்போது, அறிவைப்பெற உதவுவதாகக் கருதப்படும் சில வழிமுறைகள் ஒதுக்கப் படுகின்றன.
காண்டல் (பிரத்தியட்சம்) ஒன்றுமே பிரமாணம் என்பவர் உலோகாயதர் காண்டல், கருதல் (அனுமானம்) எனும் இரண்டும் பிரமாணம் என்பர் வைசேடிகரும் பெளத்தரும். காண்டல், கருதல், உரை (சப்த்ம்) எனும் மூன்றும் பிரமாணம் என்பர் சாங்கியர் காண்டல், கருதல், உரை, ஒப்பு (உபமானம்) எனும் நான்கும் பிரமாணம் என்பர் நையாயிகர் காண்டல், கருதல், உரை, ஒப்பு , பொருள் (அருத்தாபத்தி) எனும் ஐந்தும் பிரமாணம் என்பர் பிரபாகரர். காண்டல், கருதல், உரை, ஒப்பு, பொருள், இன்மை (அபாவம்) எனும் ஆறும் பிரமாணம் என்பர் மீமாஞ்சகர் காண்டல், கருதல், உரை, ஒப்பு, பொருள், இன்மை, ஒழிபு (பாரிசேடம்), உண்மை (சம்பவம்), உலகுரை (ஐதிகம்), இயல்பு (சகசம், சுபாவம்) எனும் பத்தும் பிரமாணம் என்பர் வியாதனார்.
சைவசித்தாந்தி காண்டல், கருதல், உரை என மூன்றினுள் ஏனைய ஏழையும் அடக்குவர். இன்மையைக் காண்டலிலும், உலகுரையை உரையிலும், ஏனைய ஐந்தினையும் கருதலிலும் அவர் அடக்குவர்.
இன்மையைச் சித்தாந்தி போலச் சாங்கியரும் பிரபாகரரும் தனிப்பிரமாணமாகக் கொள்ளாத போதும் அத்வைதிகளும் மீமாஞ்சகரும் (பாட்டர்) தனிப்பிரமாணமாகக கொள்வர். ஞாபக
155

Page 202
அநுபவம் மூலம் இன்மை உணரப்படுவதால் காண்டலில் இன்மையை அடக்குதல் சிந்திக்கப்பட வேண்டியதாகின்றது. கருதலின் சிறப்பியல்பான ஊடக அறிவு ஒப்புக்கு வேண்டிய தில்லை. அது பொது இயல்புகளுடைய ஒப்புமையேயாகும். இதனால் வேதாந்தி ஒப்பைத் தனிப் பிரமாணமாகக் கொண்டது பிழையில்லை என்று கருதுவர் சிலர். 'பகலுண்ணான் பருத்திருக்கிறான்” எனும் எடுத்துக் காட்டிலே அருத்தாபத்தியில் இரு உண்மைகளின் வேறுபாடு காணப்படுவதால் அதனை முரணாதவாறு கொள்ள இரவிலும் உண்பதாகக் கொள்ள வேண்டியுள்ளது. முரணும் உண்மைகளுக்கிடையே சமனிலை யுண்டுபண்ணுவதால் அருத்தாபத்தியை மீமாஞ்சகர் தனிப் பிரமாணமாகக் கொண்டுள்ளனர். பாரிசேடத்தைச் சிலர் அருத்தாபத்தியில் வைத்தெண்ணுதல் பொருத்தமாகும் என்பர். உண்மையையும் இயல்பையும் தனிப்பிரமாணமாகக் கொண்டுள்ளனர். பாரிசேடத்தைச் சிலர் அருத்தாபத்தியில் வைத்தெண்ணுதல் பொருத்தமாகும் என்பர். உண்மையையும் இயல்பையும் தனிப்பிரமாணங்களாகக் கொள்ளும் அளவிற்கு அவற்றிற்குத் தகுதியுளதோ என்பது சிந்திக்கத்தக்கது.
பொதுவாகக் காண்டல், கருதல், உரை, இன்மை, ஒப்பு, பொருள் என்பனவற்றை அளவைகளாகக் கொள்வதில் பலர் ஒருப்படுவர்.
சைவசித்தாந்தி அறிவது ஆன்மாவின் ஞானசக்தி (உயிரது அறியுமாற்றல்) ஆதலின் அச்சக்தியே பிரமாணம் என்றும் காண்டல் கருதல் உரை என்பது ஆன்ம ஞான சக்தியின் சாதனங்கள் என்றும் கூறுவர்.
காண்டல் (பிரத்தியட்சம்) ஐம்பொறிவாயிலாக விடயங்களை நேரே அறிவது. இதனைச் சித்தாந்தம் வாயிற்காட்சி, மாணதக்காட்சி, தன்வேதனைக் காட்சி, யோகக் காட்கி என நாலாகக் கூறும்.
கருதல் (அனுமானம்) புகையானது தீயைவிட்டு நீங்காது இருப்பது போல யாண்டும் பொருளை விட்டு நீங்காதிருக்கும் காரிய காரணங்களைக் கெண்டு காணப்படாது மறைவாக இருக்கும் பொருளை அறிவது. இதனைத்தன் பொருட்டு, பிறர் பொருட்டு எனச் சித்தாந்தம் இருவகையாகக் கூறும்.
உரை (சப்தம்) நம்பிக்கைக்கு உகந்த ஒருவரின் சான்றுரை. உரை வேதத்தைச் சேர்ந்ததாகவோ ஆகமத்தைச் சேர்ந்ததாகவோ உலகியற் கூற்றாகவோ இருக்கும். மந்திரக்கலை, தந்திரக்கலை, உபதேசக்கலை என்று சித்தாந்தி இதனைப் பகுப்பர்.
ஒப்பு (உபமானம்) என்பதில் ஒரே மாதிரியாய் இருத்தல் பற்றிய அறிவே கருவியாய் அல்லது வழியாய் அமைகின்றது.
பொருள் (அருத்தாபத்தி) என்பதில் நேர்ப்பொருளுடன் வேறொரு அருத்தமும் தந்து நிற்பது.
156

இன்மை (அபாவம்) என்பது பொறிக்கு இலக்காகாத உள் பொருளின் நிலைமை.
ஒழிபு (பாரிசேடம்) மிஞ்சியது. ஒழிந்த பொருளை அறிதல்.
உண்மை (சம்பவம்) என்பது முழுப் பொருளைக் கொண்டவிடத்து அதனுள் அதன் உறுப்பும் அடங்கி யிருத்தலாகும்.
உலகுரை (ஐதிகம்) பரம்பரை உபதேசமாகும்.
இயல்பு (சகசம், சுபாவம்) உலக வழக்காலும் செய்யுள் வழக்காலும் அவ்வக் காலத்துக்கு ஏற்றபடி பல பொருட்குப்
பொதுவான சொல் ஒரு பொருளையே சிறப்பிப்பது.
(பொ.யூ.)
அற்புதத் திருவந்தாதி
சைவநாயன்மாரில் இறைவனைப்புாடி மகிழ்ந்து பரவிய பெருமைமிக்க ஒரே ஒரு பெண்பாலார் காரைக்காலம்மையாராவர். இவர் ஆறாம் நூற்றாண்டிலே வாழ்ந்தவர் என்று கருத இடமுண்டு.
காரைக்காலம்மையார் சிவபிரான் மீது பாடிய பிரபந்தங்களில் ஒன்றே அற்புதத்திருவந்தாதியாகும். நூற்பயன் கூறும் பாடலுடன் 101 வெண்பாக்களையுடையது அற்புதத் திருவந்தாதி.
பிறந்து மொழி பயின்ற காலம் முதல் சிவனடியே சிந்தித்து நின்ற செம்மையுடைய அம்மையாரின் பாடல்களிலே அவர்தம் தீவிரதரம் சிறப்பாக வெளிப்படும் பாடல்கள் பல உள; தாயின் பாவத்தைப் புலப்படுத்தும் பாடல்கள் பல உள; இயற்கையிலே இறைவனைக் கண்டு மகிழும் மனப்பாங்கினைக் காட்டும் பாடல்களுள.
எளிமையும் சுயஉணர்வு நிலைகளும் அற்புதத் திருவந்தாதிக்குச் சிறப்பளித்து நிற்கின்றன; அம்மையார் வெண்பாவிலே உணர்வுகளைச் சிறப்பாக வெளிப்படுத்திய முன்னோடியாக விளங்குகிறார்.
அற்புதத் திருவந்தாதி பதினோராம் திருமுறையிலே தொகுக்கப்பட்டுள்ள பிரபந்தங்களில் ஒன்றாகும். பதினோராம் திருமுறையை முதன் முதலாக யாழ்ப்பாணம் பூரீ ஆறுமுகநாவலர் சுக்கில வருடம் வைகாசி மாதம் (1869) சென்னை வர்த்தமான
தரங்கிணிசாகையச்சுக் கூடத்திற் பதிப்பித்தார்.
பூர்வீகத்தில் யாழ்ப்பாணம் ஆறுமுகம்பிள்ளையாகிய திருவண்ணாமலையாதீனம் ஆறுமுகத்தம்பிரான் அற்புதத் திருவந்தாதிக்குப் பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில்
இந்துக் கலைக்களஞ்சியம்

Page 203
உரை கண்டனர். சிவக்கவிமணி சி. கே. சுப்பிரமணிய முதலியாரின் (சம்பந்த சரணாலயத்தம்பிரானின்) காரைக்கா லம்மையார் புராணமும் அவரது அருணுால்களும் எனும் தொகுப்பிலும் (1944) அற்புதத் திருவந்தாதி உரையுடன் இடம் பெறுகின்றது. (பொ.பூ)
t
அற்புத பிராமணம்
சாமவேதத்தின் எட்டுப் பிராமணங்களில் ஒன்றாகக் கருதப்படுவது. சிலவேளைகளில் சத்விம்சபிராமணத்தில் ஒரு பகுதியாகக் கருதப்படுவதோடு அதனோடு அடிக்கடி தொகுத்து வழங்கப்படுவது. சகுனம், நிமித்தம், அதிசயம், அற்புதம் பற்றி விளக்குவது. (பொ.யூ.)
அறப்பளிசுரசதகம்
சேலம் மாவட்டத்தில் நாமக்கல் நகரிலிருந்து ஆறுமைல் தொலைவில் உள்ளது சதுரகிரி எனும் கொல்லிமலை, கொல்லி மலையிலுள்ள சிற்றுார் அறப்பள்ளி. அறப்பள்ளி சிவதலத்தில் வீற்றிருக்கும் அறப்பளிசுரனை முன்னிலைப்படுத்தும் பிரபந்தம் அறப்பளிசுர சதகம்.
அறப்பளிசுர சதகத்திற் காப்புச் செய்யுள் நீங்கலாக நூறு பாடல்கள் அமைந்துள்ளன.
அதனைப் பாடியவர் சீகாழி அம்பலவாணக் கவிராயராவார். அவர் இராமநாடகம் பாடிய சீகாழி அருணாசலக்கவிராயரின் புதல்வர்; பதினெட்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் வாழ்ந்தவர்; மதவேள் என்ற வள்ளலின் ஆதரவினைப் பெற்றவர் என்று தெரிகின்றது. சதகத்திலே பாடல் தோறும் மதவேள் குறிக்கப்பட்டுள்ளார்.
அறப்பளிசுரசதகம் வள்ளுவர் முதலாம் அறநீதி நூலாசிரி யர்களின் கருத்துக்களை அமைத்து, மக்கள் தம் வாழ்க்கையில் மேற்கொள்ள வேண்டிய ஒழுகலாறுகளை
விரித்துக்கூறும் நீதி நூலாகும். அறநீதி நூலாயினும் கருத்து வளமும் கவிதை நயமும் உடையது.
இது 1897இலே சென்னையில் அச்சிடப்பட்டுள்ளது. காஞ்சி இராமசாமி நாயுடுவின் சதகத் திரட்டுப் பதிப்பிலும் (1905) இடம் பெறுகின்றது.
பின்பு பலரும் பல்வேறு காலங்களிற் பதிப்பித்துள்ளனர்.
曹
(பொ. யூ.)
அறுபத்து நான்கு திருவிளையாடல்
சிவபிரான் அடியவருக்கு அருள்பாலிக்க, மேற்கொண்ட செயல்கள், அவனுடைய திருவிளையாடல்களாகக் கருதப்படுவன. அவை பெரும்பாலும் பல்லவர் காலத்தில் வாழ்ந்த
இந்துக் கலைக்களஞ்சியம்
 

நாயன்மார்களின் திருப்பாடல்களிலே ஆங்காங்கு எடுத்துரைக்கப் பெற்றுள்ளன. அவற்றை அறுபத்து நான்காகத் தொகுத்துரைக்கும் மரபு கல்லாடத்திலே காணப்பெறுகின்றது (9912 - 14). பழைய திருவிளையாடலிலேயே அறுபத்து நான்கு திருவிளையாடல்கள் யாவை என்பதை முதன்முதலாகத் தெளிவாக உணர முடிகின்றது. பழைய திருவிளையாடலின் ஆசிரியர் பெரும்பற்றப்புலியூர் நம்பி பதின்மூன்றாம் நூற் றாண்டின் பிற்பகுதியிலும் பதினான்காம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் வாழ்ந்தவர்.
அநதாரியப்பர் 1564 இலே பாடிய சுந்தரபாண்டியமும் சொக்கநாதக் கடவுளின் திருவிளையாடல்களை எடுத்துரைப்ப தாகக் கருதப்படுகின்றது.
இலம்பூர் வீமநாதபண்டிதரின் கடம்பவன புராணத்திலே இலீலாசங்கிரக அத்தியாயத்தின் முதல் 64 செய்யுளும் திருவிளையாடல்களைப் பழைய திருவிளையாடலை ஒட்டி அமைத்துக் கூறுவன. அதேபோன்று, பதினேழாம் நூற்றாண்டில் வாழ்ந்தவராகக் கருதப்படும் வீரபத்திரக் கம்பரின் திருவிளை யாடற் பயகரமாலையும் பழைய திருவிளையாடலைப் பின்பற்று கின்றது. மதுரைச் சொக்கநாதர் தமிழ்விடு தூதும் பெரும்பாலும் பழைய திருவிளையாடலைத் தழுவியே திருவிளையாடல்களைக் குறிக்கின்றது.
புராணத் திருமலைநாதரின் மதுரைச் சொக்க நாதருலாவும் பரஞ்சோதி முனிவரின் திருவிளையாடற் புராணமும் பழைய திருவிளையாடலிலிருந்து பட்டியலிலும் வரிசைக் கிரமத்திலும் வேறுபடுவன. புராணத் திருமலைநாதர் பதினாறாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர்; பரஞ்சோதி முனிவர் பதினெட்டாம் நூற்றாண்டின் முற்பகுதியில் வாழ்ந்தவரென்று கருத இடமுண்டு. பரஞ்சோதி முனிவர் மதுரை அறுபத்துநான்கு திருவிளையாடற் போற்றிக் கலிவெண்பா எனும் பிரபந்தமும் பாடியுள்ளார்.
தொட்டிக்கலை கேசவ முதலியாரின் மதுரை அறுபத்து நான்கு திருவிளையாடல் சற்குரு மாலை அச்சிடப்பெற்ற போதும் கிடைத்தற்கரிதாம்.
பழைய திருவிளையாடலில் 64 திருவிளையாடல்கள் இடம்பெறும் வகையில் அமையும் மேல்வரும் பட்டியலிலே பரஞ்சோதி முனிவர் புராணத்தில் இடம் பெறுவனவற்றின் ஒழுங்கும் பெயர் வேற்றுமையும் அடைப்புக் குறிகளிடையே மேலே தரப்பட்டுள்ளன.
இந்திரன் பழி தீர்த்த திருவிளையாடல் (1) வெள்ளானைக்குச் சாபந்தீர்த்த திருவிளையாடல் (2) தடாதகையார் அவதரித்த திருவிளையாடல் (4). மணஞ் செய்த திருவிளையாடல் - 5).
157

Page 204
10.
11.
12.
13.
14.
15.
16.
17.
18.
19.
20.
21.
22.
23.
24.
25.
26.
27.
28.
29.
30.
31.
158
பதஞ்சலிக்கு நடஞ் செய்த திருவிளையாடல் (வெள்ளியம் பலத்திருக்கூத்தாடிய திருவிளையாடல் - 6.) பூதமுண்ட திருவிளையாடல் (குண்டோதரனுக்கு அன்னமிட்ட திருவிளையாடல் - 7). ஆறழைத்த திருவிளையாடல் (அன்னக் குழியும் வையையும் அழைத்த திருவிளையாடல் - 8) கடலழைத்த திருவிளையாடல் (எழு கடலழைத்த திருவிளையாடல் - 9). மலையத்துவசனை அழைத்த திருவிளையாடல் (10). உக்கிரன் பிறந்த திருவிளையாடல் (உக்கிர பாண்டியன் திருவவதாரத் திருவிளையாடல் - 1). வளை வேல் செண்டு கொடுத்த திருவிளையாடல் (உக்கிர பாண்டியனுக்கு வேல்வளை செண்டு கொடுத்த திருவிளையாடல் - 12). நான்மாடக் கூடலான திருவிளையாடல் (வருணன்விட்ட கடலைவற்றச் செய்த திருவிளையாடல், 18; நான்மாடக் கூடலான திருவிளையாடல் - 19). சித்தரான திருவிளையாடல் (எல்லாம்வல்ல சித்தரான திருவிளையாடல் - 20). கல்லானைக் கரும்பு வாங்கின திருவிளையாடல் (கல்லானைக் குக் கரும்பருத்திய திருவிளையாடல் - 21) சங்கப் பலகை கொடுத்த திருவிளையாடல் (51). கிழியறுத்த திருவிளையாடல் (தருமிக்குப் பொற்கிழியளித்த திருவிளையாடல் - 52) நக்கீரனைக் கரையேற்றின திருவிளையாடல் (53) குறுமுனிக்குத் தமிழுரைத்த திருவிளையாடல் (கீரனுக்கு இலக்கணம் உபதேசித்த திருவிளையாடல் - 54)
ஊமை தமிழறிந்த திருவிளையாடல் (சங்கத்தார் கலகம் தீர்த்த திருவிளையாடல் - 55) இடைக்காடன் பின்போன திருவிளையாடல் (இடைக்காடன் பிணக்குத் தீர்த்த திருவிளையாடல் - 56) கடல் சுவற வேலெறிந்த திருவிளையாடல் (13). வலைவீசின திருவிளையாடல் (57). வளையல் விற்ற திருவிளையாடல் (32). இலச்சினையிட்ட திருவிளையாடல் (விடையிலச்சினையிட்ட திருவிளையாடல் - 34) மாணிக்கம் விற்ற திருவிளையாடல் (17).
ஆனை எய்த திருவிளையாடல் (22). ஞானோபதேசஞ் செய்த திருவிளையாடல் (வாதவூரடி களுக்கு உபதேசித்த திருவிளையாடல் - 58) நரிகுதிரையான திருவிளையாடல் (நரிபரியாக்கிய திருவிளையாடல் - 59) குதிரை நரியான திருவிளையாடல் (பரிநரியாக்கி வையை அழைத்த திருவிளையாடல் - 60). மண்சுமந்த திருவிளையாடல் (61). விருத்த குமார பாலரான திருவிளையாடல் (23).

32.
33.
34.
35.
36.
37.
38.
39.
40.
41.
42.
43.
44.
45.
46.
47.
48.
49.
50.
51.
52.
53.
54.
55.
56.
57.
58.
59.
60.
61.
மாறியாடின திருவிளையாடல் (கால்மாறியாடின திரு விளையாடல் - 24).
பழியஞ்சின திருவிளையாடல் (25). மகாபாதகந் தீர்த்த திருவிளையாடல் (26). அங்கம் வெட்டின திருவிளையாடல் (27).
மதுரையான திருவிளையாடல் (நாகமெய்த திருவிளையாடல், 28, மாயப்பசுவை வதைத்த திருவிளையாடல் - 29). வெப்புத் தீர்த்த திருவிளையாடல் (பாண்டியன் சுரம் தீர்த்த
திருவிளையாடல் - 62).
கழுவேறின திருவிளையாடல் (சமணரைக் கழுவேற்றிய திருவிளையாடல் - 63). மெய்க் காட்டிட்ட திருவிளையாடல் (30). உலவாக்கிழி கொடுத்த திருவிளையாடல். (31) மாமனாக வந்து வழக்குரைத்த திருவிளையாடல் (39). அட்டமா சித்தி பகர்ந்த திருவிளையாடல் (33) தண்ணிர்ப் பந்தர் வைத்த திருவிளையாடல் (35). இந்திரன் முடிமேல் வளையெறிந்த திருவிளையாடல் (14) பொன்னனையாளுக்கு அருள் புரிந்த திருவிளையாடல் (இரசவாதம் செய்த திருவிளையாடல் - 36) சோழனைக் கொண்டாழியிற்றாழ்த்த திருவிளையாடல் (சோழனை மடுவில் வீழ்த்திய திருவிளையாடல் - 37), திருவாலவாயான திருவிளையாடல் (49). வரகுணனுக்குச் சிவலோகங் காட்டின திருவிளையாடல்
(40). விடைக்குறியம்பெய் திருவிளையாடல் (சுந்தரப்பேரம்பு எய்த திருவிளையாடல் - 50) உலவாக்கோட்டை வைத்த திருவிளையாடல் (உலவாக் கோட்டை அருளிய திருவிளையாடல் - 38). மூர்த்தியாருக்கு அரசளித்த திருவிளையாடல். காரியார் நாரியார் பாப்பகுந்த திருவிளையாடல். புலிமுலை புல்வாய்க்கருளிய திருவிளையாடல் (இதன் பகுதி திருநகரங்கண்ட திருவிளையாடல் - 3). சாதாரி பாடின திருவிளையாடல் (விறகு விற்ற திருவிளையாடல் - 41). திருமுகங் கொடுத்த திருவிளையாடல் (42). பலகையிட்ட திருவிளையாடல் (43). இசை வாது வென்ற திருவிளையாடல் (44). பன்றிக் குட்டிகளுக்குத் தாயான திருவிளையாடல் (பன்றிக்குட்டிக்கு முலை கொடுத்த திருவிளையாடல் - 45). பன்றிக் குட்டிகளுக்கு அருள் புரிந்த திருவிளையாடல் (பன்றிக்குட்டிகளை மந்திரிகளாக்கிய திருவிளையாடல் - 46). கரிக்குருவிக்கு அருள் புரிந்த திருவிளையாடல் (கரிக்குருவிக்கு உபதேசம் செய்த திருவினையாடல் - 47). மாமேருவிற் கயல்செண்டு பொறித்த திருவிளையாடல் (மேருவைச் செண்டால் அடித்த திருவிளையாடல் - 15).
இந்துக் கலைக்களஞ்சியம்

Page 205
62. சான்றழைத்த திருவிளையாடல் (வன்னியும் கிணறும்
இலிங்கமும் அழைத்த திருவிளையாடல் - 64).
63. நாரைக்கு அருள் புரிந்த திருவிளையாடல் (நாரைக்கு முத்தி
கொடுத்த திருவிளையாடல் - 48).
64. வேதம் உணர்த்திய திருவிளையாடல் (வேதத்துக்குப்
பொருளருளிச் செய்த திருவிளையாடல் - 16)
முற்கிளந்தனவற்றாற் பழைய திருவிளையாடலில் இடம் பெறும் 51ஆம், 52 ஆம் திருவிளையாடல்கள் பரஞ்சோதியார் புராணத்தில் இல்லாதபோதும், அதன் 12 ஆம், 36 ஆம் திருவிளையாடல்களை இவ்விரண்டாகக் கொண்டமையால் அக்குறை ஈடு செய்யப்படுகின்றது என்பது தெளிவாகும். மேலும் பழைய திருவிளையாடலின் 53 ஆம் திருவிளையாடலில் இடம்பெறுவதன் பகுதி மட்டுமே பரஞ்சோதியார் திருவிளை யாடலின் 3 ஆம் திருவிளையாடல் என்பதும் நோக்கத்தக்கது.
திருவாரூர்த் திருத்தலத்திற் கோயில் கொண்ட பூரீ செல்வத்தியாகேசப் பெருமான் லீலைகளாக 364 திருவிளை யாடல்கள் கூறப்படும் மரபுண்டு. இவற்றிலே சில சுந்தரர், கலிக்காமர், தண்டியடிகள், விறன்மிண்டர் எனும் நாயன்மார்களுடன் தொடர்புடையவை; மனுநீதிகண்ட சோழன், மாணிக்கநாச்சியார், கொண்டியம்மாள், பெரும் புகழுர் நாவிதன், திருமாகாளம் சோமாயாஜி முதலியோருடன் தொடர்புடையவை வேறு சில.
திரிசிரபுரம் மகாவித்துவான் சி. மீனாட்சிசுந்தரம்பிள்ளை (1815 - 1876) 1845 இலே "திருவாரூர் தியாகராசலீலை’ யை இயற்றத் தொடங்கினார். அது முற்றுப்பெறவில்லை. உ. வே.
சாமிநாதையர் அதனை 1905 இலே பதிப்பித்துள்ளனர்.
(பொ.யூ.)
அறுபத்துமூன்று நாயன்மார்
சைவரிடையே அறுபத்து மூவரைச் சிறந்த திருத்
தொண்டராகக் கருதி நாயன்மார் என்று அழைத்தல் மரபு. சுந்தர
மூர்த்தி சுவாமிகள் காலம் முதலாக இம்மரபினைக் காணலாம்.
சுந்தரமூர்த்தி சுவாமிகள் பல்லவர் ஆட்சிக் காலத்தில் வாழ்ந்தவர். ஆயினும், இவர் எம் மன்னன் காலத்தில் வாழ்ந்தவர் என்ற கருத்திலே ஆய்வாளர் வேறுபடுவர். அவர்கள் இரண்டாம் நரசிம்மவர்மன் (690 -729), நந்திவர்மன் (796 - 846) அல்லது மூன்றாம் நந்திவர்மன் (846 - 869) காலத்திலே சுந்தரர் வாழ்ந்தனர் என்பர்.
கடல் சூழ்ந்த உலகெலாம் காக்கின்ற பெருமான் காடவர் கோன் கழற் “சிங்கன்” (7.39.9) இரண்டாம் நரசிங்கவர்மன் பெயரிலேயே காணப்படுகிறான். பல்லவருக்குத் திறைகொடா மன்னர் நிலவிய கட்டம் (7.90.4) நரசிம்மவர்மன் காலத்திற் குரியதன்று என்று துணியவோ மறுக்கவோ ஆதாரமில்லை. நாயன்மார்களில் ஒருவராகப் போற்றத்தக்க நிலையிலே
இந்துக் கலைக்களஞ்சியம்

நரசிங்கவர்மன் காணப்படுகிறான். பரமேச்சுரனே இராசசிங்க பல்லவனாக அவதரித்ததாகக் காசாக்குடிச் செப்பேடுகள் கூறுவன; சிவசூடாமணி, சங்கரபக்தன், ஈசுவரபக்தன், பரமமாகேச்சுரன் என்று அவன் சாசனங்களிலே போற்றப் பெறுகிறான், கைலாயத்தை ஒத்த கோயிலைக் காஞ்சியிலே கட்டிப் புகழ் பெற்றவன்.
பிறிதாதாரம் கிடைக்கும் வரை சுந்தரர் போற்றும் கழற்சிங்கன் இரண்டாம் நரசிம்மவர்மன் என்று கொள்வதே பொருத்தமாகத் தெரிகின்றது.
சுந்தரர் பாடிய திருத்தொண்டத் தொகையிலே தான் முதன் முதலாக அறுபத்திரண்டு சிவனடியார்கள் தொகுத்துக் கூறப்படுகின்றனர். திருத்தொண்டத் தொகை, ஏழாம் திருமுறையில் 39 ஆம் திருப்பதிகமாகத் தொகுக்கப்பட்டுள்ளது. சுந்தரர் தரும் பட்டியல் ஒழுங்கு மேல் வருமாறு :
1. திருநீலகண்ட நாயனார்
2. இயற்பகை நாயனார்
3. இளையான்குடிமாற நாயனார் 4. மெய்ப்பொருள் நாயனார்
5. விறன்மிண்ட நாயனார்
6. அமர்நீதி நாயனார்
7. எறிபத்த நாயனார்
8. ஏனாதிநாத நாயனார்
9. கண்ணப்ப நாயனார் 10. குங்குலியக்கலய நாயனார்
11. மாணக்கஞ்சாற நாயனார் 12. அரிவாட்டாய நாயனார் 13. ஆனாயநாயனார் 14. மூர்த்தி நாயனார் 15. முருக நாயனார் 16. உருத்திரபசுபதி நாயனார் 17. திருநாளைப் போவார் நாயனார் 18. திருக்குறிப்புத் தொண்ட நாயனார் 19. சண்டேசுவர நாயனார் 20. திருநாவுக்கரசு சுவாமிகள் 21. குலச்சிறை நாயனார் 22. பெருமிழலைக்குறும்பநாயனார் 23. காரைக்காலம்மையார் 24. அப்பூதியடிகள் நாயனார் 25. திருநீலநக்கநாயனார் 26. நமிநந்தியடிகள் நாயனார் 27. திருஞானசம்பந்தமூர்த்தி சுவாமிகள் 28. ஏயர்கோன்கலிக்காமநாயனார் 29. திருமூலநாயனார் 30. தண்டியடிகள் நாயனார் 31. மூர்க்க நாயனார்
159

Page 206
32. சோமாசிமாற நாயனார் 33. சாக்கிய நாயனார் 34. சிறுப்புலி நாயனார் 35. சிறுத்தொண்ட நாயனார் 36. சேரமான் பெருமாணாயனார் 37. கணநாதநாயனார் 38. கூற்றுவ நாயனார் 39. புகழ்ச்சோழ நாயனார் 40. நரசிங்கமுனையரைய நாயனார் 41. அதிபத்த நாயனார் 42. கலிக்கம்ப நாயனார் 43. கலிய நாயனார் 44. சத்தி நாயனார் 45. ஐயடிகள் காடவர்கோன் 46. கணம்புல்ல நாயனார் 47. காரி நாயனார் 48. நின்றசீர் நெடுமாற நாயனார் 49. வாயிலார் நாயனார் 50. முனையடுவார் நாயனார் 51. கழற்சிங்க நாயனார் 52. இடங்கழி நாயனார் 53. செருத்துணை நாயனார் 54. புகழ்த்துணை நாயனார் 55. கோட்புலி நாயனார் 56. பூசலார் நாயனார் 57. மங்கையர்க்கரசியார் 58. நேசநாயனார் 59. கோச்செங்கட்சோழநாயனார் 60. திருநீலகண்ட யாழ்ப்பாண நாயனார் 61. சடைய நாயனார் 62. இசை ஞானியார்
நம்பியாண்டார் நம்பியின் காலத்தைத் திட்டவட்டமாக அறுதியிடுதல் எளிதன்று. முதலாம் ஆதித்தன் (871 - 907) காலத்திற்கும் முதலாம் இராஜராசன் (985 - 1016) காலத்திற்கும் இடையிலே அவர் வாழ்ந்தார். அவர் பாடிய திருத்தொண்டர் திருவந்தாதி பதினோராம் திருமுறையில் இடம் பெறுவதாகும். சுந்தரர் கூறிய 62 தனியடியாரையும் அதே ஒழுங்கில் அமைத்தவர் சுந்தரரை அமர்நீதியாருக்கு அடுத்து ஏழாமவராக வைத்ததே அவர் செய்த மாற்றமாகும். நம்பியாண்டார் நம்பி காலத்தில் அறுபான்மும்மை நாயன்மார் எனும் வழக்கு உருவாகி விட்டதைக் காண்கிறோம். மாணிக்கவாசக சுவாமிகளையும் அவருடைய படைப்புகளையும் அறிந்திருந்தும் கூட நம்பியாண்டார் நம்பி அவரைத் திருத்தொண்டர் பட்டியலிலே சேர்த்துக் கொள்ளவில்லை.
சுந்தரரும் நம்பியாண்டார் நம்பியும் பாடிய 63 நாயன் மாரையும் சேக்கிழார் சுவாமிகள் திருத்தொண்டர் புராணத்திலே
160

பாடுகிறார். இப்புராணம் இரண்டாம் குலோத்துங்க சோழன் (133 - 1150) காலத்திலே இயற்றப் பெற்றதாகும்.
அறுபான்மும்மை நாயன்மார்களிலே மேல்வருவோர் கி. பி.
நான்காம், ஐந்தாம், ஆறாம் நூற்றாண்டுகளிலே வாழ்ந்தவராகத்
தெரிகின்றது.
1. மூர்த்தி நாயனார் 2. கூற்றுவநாயனார் 3. கோச்செங்கட் சோழ நாயனார் 4. புகழ்ச்சோழ நாயனார் 5. எறிபத்த நாயனார் 6. காரைக்காலம்மையார் 7. திருமூல நாயனார் 8. கண்ணப்ப நாயனார் 9. சண்டேசுவர நாயனார் 10. கணம்புல்ல நாயனார் 11. நமிநந்தியடிகள் 12. தண்டியடிகள் 13. சாக்கிய நாயனார் 14. அமர்நீதி நாயனார் 15. புகழ்த்துணை நாயனார்
மேல்வருவோர் அப்பர் - சம்பந்தர் காலகட்டத்திலே, ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்தவராவர்.
1.
அப்பூதியடிகள்
கணநாத நாயனார் குங்குலியக்கலய நாயனார் குலச்சிறை நாயனார் சிறுத்தொண்ட நாயனார் திருஞானசம்பந்த மூர்த்தி சுவாமிகள் திருநாவுக்கரசு சுவாமிகள் திருநீலகண்ட யாழ்ப்பாண நாயனார் திருநீலநக்க நாயனார் நின்றசீர்நெடுமாற நாயனார் மங்கையர்க்கரசியார் முருக நாயனார்.
மேல் வருவோர் அப்பர் - சம்பந்தரராற் பாடப் பெறாமையால் அவர்களுக்குப் பிற்பட்டவர் என்று கருதத்தக்கவர்கள்; ஆயினும் சுந்தரராற் பாடப்பெறுவதால் அவருக்கு முற்பட்டவராவர்;
அதிபத்த நாயனார் அரிவாட்டாய நாயனார் ஆனாயநாயனார் இடங்கழி நாயனார் இயற்பகை நாயனார் இளையான்குடிமாற நாயனார் உருத்திரபசுபதி நாயனார்
இந்துக் கலைக்களஞ்சியம்

Page 207
10.
11.
12.
13.
14.
15.
16.
17.
18.
19.
20.
21.
22.
ஏனாதிநாத நாயனார் ஜயடிகள் காடவர்கோன் கலிகம்ப நாயனார் கலிய நாயனார்
காரி நாயனார்
சத்தி நாயனார் சிறுப்புலி நாயனார் திருக்குறிப்புத் தொண்ட நாயனார் திருநாளைப்போவார் நாயனார் திருநீலகண்ட நாயனார் நேச நாயனார் முனையடுவார் நாயனார் மூர்க்க நாயனார் மெய்ப் பொருள் நாயனார் வாயிலார் நாயனார்
மேல் வருவோர் சுந்தரமூர்த்தி சுவாமிகள் காலத்திலே வாழ்ந்தவராவர் :
1.
இசைஞானியார் ஏயர்கோன் கலிக்காமநாயனார் சேரமான் பெருமாணாயனார் கழற்சிங்கநாயனார் கோட்புலி நாயனார் சடைய நாயனார் சுந்தரமூர்த்தி சுவாமிகள் செருத்துணை நாயனார் சோமாசிமாற நாயனார் நரசிங்கமுனையரைய நாயனார் பூசலார் நாயனார் பெருமிழலைக் குறும்ப நாயனார் மானக்கஞ்சாற நாயனார்
விறன்மிண்ட நாயனார்.
அறுபத்துமூன்று நாயன்மார்களிலே அறுவருடைய சாதி மரபுகள் கூறப்படவில்லை. அவர்கள் எறிபத்தர், கணம்புல்லர்,
காரியார், குலச்சிறையார், தண்டியடிகள், திருமூலர் என்பவராவர். மூலன் உடலிற் புகுந்திருந்ததால் திருமூலரை இடையர் என்றும் கூறுவர்; வேளாளர் மரபினராக அறியப்படும் 13 திருத்தொண்டர்
மேல்வருவோர் :
அரிவாட்டாயர் இளையான்குடிமாறர் ஏயர்கோன் கலிக்காமர் கோட்புலியார் சத்தியார் சாக்கியர் செருத்துணையார் திருநாவுக்கரசர் மாணக்கஞ்சாறர் முனையடுவார் மூர்க்கர் வாயிலார் விறன்மிண்டர்
அரசர் மரபினராக அறியப்படும் 12 திருத்தொண்டர் :-
இந்துக் கலைக்களஞ்சியம்

இடங்கழியார் ஐயடிகள் காடவர்கோன்
சேரமான் பெருமாள் கழற்சிங்கர்
கூற்றுவர் கோச்செங்கட்சோழன் நரசிங்க முனையரையர் நின்றசீர் நெடுமாறன் புகழ்ச்சோழர் பெருமிழலைக் குறும்பர் மங்கையர்க்கரசியார் மெய்ப்பொருள் நாயனார்
அந்தணர் மரபினராக அறியப்படும் 12 திருத்தொண்டர் :
அப்பூதியடிகள் உருத்திரபசுபதி
கணநாதநாயனார் குங்குலியக்கலயனார்
சண்டேசுவரர் சிறுப்புலியார்
சோமாசிமாறர் திருஞானசம்பந்தமூர்த்தி சுவாமிகள் திருநீலநக்கர் நமிநந்தியடிகள்
பூசலார் முருகநாயனார்
சிறுத்தொண்ட நாயனார் மாமாத்திரர் என்று கூறப்படினும் அவர் குலம் அந்தணர் குலம் என்பர். வணிகர் மரபினராக அறியப்படும் 6 திருத்தொண்டர் :
அமர்நீதியார் இயற்பகையார் கலிக்கம்பர் கலியர் காரைக்காலம்மையார் மூர்த்தி நாயனார்
ஆதிசைவர் மரபினராக அறியப்படும் 4 திருத்தொண்டர் :
இசைஞானியார் சடையனார் சுந்தரமூர்த்தி சுவாமிகள் புகழ்த்துணையார்
ஏனைய ஒன்பது திருத்தொண்டர் மரபுகள் மேல்வருமாறு :
அதிபத்தர் நுளையர்மரபு ஆயனார் இடையர்மரபு ஏனாதிநாதர் சான்றார்மரபு கண்ணப்பர் வேடர்மரபு திருக்குறிப்புத் தொண்டர் ஏகாலியர்மரபு திருநீலகண்டநாயனார் குயவர் மரபு திருநீலகண்ட யாழ்ப்பாணர் பாணர் மரபு திருநாளைப்போவார் புலையர் மரபு நேசர் சாலியர் மரபு
அறுபான்மும்மை நாயன்மார்களிலே மேல்வருவோர் பாடிய திருப்பாடல்கள் திருமுறைகளிலே தொகுக்கப் பெற்றுள்ளன:
ஐயடிகள் காடவர்கோன்
சுந்தரமூர்த்தி சுவாமிகள்
திருஞானசம்பந்த மூர்த்தி சுவாமிகள்
திருமூலர்
5T6DIJE55T6)LD60)LDLLJITIT
161

Page 208
சேரமான் பெருமாள் திருநாவுக்கரசு சுவாமிகள்
கன்னட மொழியிலே எழுந்த வசவ புராணத்தின் பெரும் பகுதி சைவ நாயன்மார்களைப் பற்றியது என்பது குறிப்பிடத்தக்கது. கன்னட வசன கர்த்தாக்களைத் திருமுறைத் திருப்பாடல்கள் மிகவும் கவர்ந்துள்ளன என்பதை அவர்களுடைய ஆக்கங்கள் மூலம் அறிந்து கொள்ள முடிகின்றது. (பொ.பூ )
அறுவகைச் சமயம்
அறுவகைச் சமயம் என்றொரு ஆட்சி தமிழ் இலக்கிய வழக்கிலே நீண்ட காலமாக வழங்கி வந்துள்ளது. பெருங்கதை ஆசிரியர் கொங்குவேளிர் அறுவகைச் சமயம் (136.242) என்ற ஆட்சியினை வழங்குவதோடு, தம் சமயமாம் சைனத்தை விடுத்து ஐம்பெருஞ்சமயம் என்றும் (1.36.249) கூறுகின்றார். ஆயினும் அவர் அவற்றை இன்னவென்று விரிந்துரைக்கவில்லை.
கி. பி. ஆறாம் நூற்றாண்டில் எழுந்ததாகக் கருதத்தக்க மணிமேகலையில்,
'பாங்குறும் உலோகாயதமே பெளத்தம்
சாங்கியம் நையாயிகம் வைசேடிகம்
மீமாஞ்சமாம் சமயம் . (27:78-80) என்று அவை கூறப்படுகின்றன. மணிமேகலை கூறும் அளவை வாதம், சைவ வாதம், பிரமவாதம், வைணவ வாதம், வேதவாதம், ஆசீவகவாதம், நிகண்டவாதம், சாங்கியவாதம், வைசேடிகவாதம், பூதவாதம் என்பனவற்றிலே (27.83 - 276) பூதவாதத்தை உள்ளடக்கிய உலகாயதம் பெளத்தம், சாங்கியம், அளவை சைவ வைணவ வாதங்களை உள்ளடக்கிய நையாயிகம், வைசேடிகம் என்பனவும், பிரம வேத வாதங்களை உள்ளடக்கிய மீமாம்சமும் முன்னர் ஆறாகத் தொகுக்கப் பட்டுள்ளன. ஆசீகவாதமும், நிகண்ட வாதமும் அதனுள் இடம் பெறவில்லை. மணிமேகலையிற் பெளத்தத்தைத் தவிர்த்து ஐவகைச் சமயம் என்று கூறும் ஆட்சியுமுண்டு (27.289, 29.43).
மணிமேகலை தோன்றிய காலத்தினை ஒட்டி எழுந்ததாகக் கருதப்படும் திருமந்திரத்திலே புறச்சமயம் ஆறு (1530, 1533), அகச்சமயம் ஆறு (1557, 1558) என்ற பகுப்புத் தோன்றி விட்டது என்று கருத இடமேற்படுகின்றது. ஆயினும் அவற்றின் விபரம் கூறுதற்கில்லை.
கி. பி. ஒன்பதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் வாழ்ந்த மாணிக்கவாசக சுவாமிகளின் திருவாசகமும் அறுவகைச் சமயத்தையும் (திருவண்டப் பகுதி, 17), இருமுச் சமயத்தையும் (திருவண்டப் பகுதி, 79) கூறுகின்றது. இங்கும் முன்னைய
162

ஆட்சி அகச்சமயம் என்றும் பின்னைய ஆட்சி புறச் சமயம் என்றும் ஐயுற இடமுண்டு.
ஆயினும் ஒன்பதாம் நூற்றாண்டில் எழுந்த திவாகரம் நையாயிகம், வைசேடிகம், உலோகாயதம், மீமாம்சம், ஆருகதம், பெளத்தம் எனும் ஆறனையே அறுவகைச் சமயமாகக் கூறுகின்றது.
திவாகரத்தின் பின்பு, பன்னிரண்டாம் நூற்றாண்டிற்கு முன்பு எழுந்த பிங்கலந்தை புறச்சமயம் ஆறும் அகச் சமயம் ஆறும் கூறுகின்றது. இந்நிகண்டிலே உலகாயதம், பெளத்தம், சமணம், மீமாஞ்சம், பாஞ்சராத்திரம், பட்டாசாரியம் எனும் புறச் சமயங்களும், வைரவம், வாமம், காளாமுகம், மாவிரதம், பாசுபதம்,
சைவம் எனும் அகச் சமயங்களும் கூறப்படுகின்றன.
பதின்மூன்றாம் நூற்றாண்டினரான திருத்துறையூர் அருணந்தி சிவாசாரியர் “மெய்தரு சைவமாதி இரு மூன்று” என்ற இடத்திலே சைவம் முதலான அகச் சமயங்கள் ஆறினையும் கூறுகிறார். ஆயினும் "அறுவகைச் சமயத்தோர்க்கும் அவ்வவர் பொருளாய்” எனும் பாடலில் எதனைக் குறிப்பிடுகிறார் என்பதிற் கருத்து வேறுபாடுண்டு.
பதினான்காம் நூற்றாண்டின் இரண்டாம் தசாப்தத்தில் எழுந்த சங்கற்பநிராகரணத்தின் பாயிரத்திலே சைவமுள்ளிட்ட அகச்சமயம் ஆறு குறிப்பிடப்படுகின்றன. இவை சைவம், பாசுபதம், மகாவிரதம், காளாமுகம், வாமம், வயிரவம் என்று பழையவுரை கூறும்.
இவற்றை நோக்கும்போது நையாயிகம், வைசேடிகம், உலோகாயதம், மீமாம்சம், சாங்கியம், புத்தம் என்பனவற்றை அறுவகைச் சமயம் என்று கூறும் வழக்கு, அகச்சமயம் ஆறு, புறச்சமயம் ஆறு என்ற வழக்கிற்கு வழி செய்தமை புலப்படுகின்றது. புறச்சமயப் பட்டியலிலே ஆருகதமும், பின்பு பாஞ்சராத்திரமும் பட்டாசாரியமும் இடம் பெற்றுள்ளன. அப்பொழுது முதலிற் சாங்கியமும் பின்பு நையாயிகம், வைசேடிகமும் ஒதுங்கிக் கொண்டன.
சங்கற்பநிராகரணம் நிராகரிப்பவை மாயாவாதம், ஐக்கியவாதம், பாடானவாதம், பேதவாதம், சிவசமவாதம், சங்கிராந்தவாதம், ஈசுவர அவிகாரவாதம், சிவாத்துவிதம், சுத்த சைவம் என்பனவாம். இவற்றிலே மாயாவாதம் பின்பு புறச்சமயமாகவும் ஐக்கிய வாதம் அகப்புறச் சமயமாகவுமாயின. சுத்தசைவம் நீங்கலானவை அகச் சமயமாகக் கருதப்பட்டுள்ளன. சங்கற்ப நிராகரண ஆசிரியர் இவற்றில் எவற்றையும் அகச் சமயம் என்று குறிப்பிடவில்லை என்பது நோக்கத்தக்கது.
சீகாழி தத்துவப் பிரகாசர் பதினைந்தாம் நூற்றாண்டின் கடைக்கூறுக்கு முன்பு வாழ்ந்தவர். அவர் இயற்றியது தத்துவப்
இந்துக் கலைக்களஞ்சியம்

Page 209
பிரகாசம். தத்துவப்பிரகாசத்திலே சைவமாதி இரு மூன்றினையும் உட்சமயமாகக் கொண்டு, ஏனைய 56 சமயங்கள் கண்டிக்கப் படுகின்றன. இவற்றிலே இருபத்து நான்கு வேதாகமங்களைக் கொள்ளாத புறச்சமயங்கள்; உட்சமயங்கள் ஆறின் பிறழ்வுகள் இருபத்து நான்கு; சங்கற்பநிராகரணம் நிராகரிக்கும் ஒன்பதிலே மாயாவாதம் ஒழிந்த எட்டு.
பதினாறாம் நூற்றாண்டில் எழுந்த சூடாமணி நிகண்டிலே உலகாயதம், புத்தம், சமணம், பீமாம்சம், பாஞ்சராத்திரம், மாயாவாதம் புறச் சமயங்கள், பிங்கலந்தை கூறும் ஆறு அகச் சமயங்களும் அகச் சமயங்கள்.
அகச்சமயம் ஆறு, புறச்சமயம் ஆறு என விரிவடைந்த பட்டியல், மேலும் விரிவடைந்துள்ளது. புறப்புறம், புறம், அகப்புறம், அகம் என நான்கு தொகையாக்கி ஒவ்வொன்றுக்கும் ஆறாறாக இருபத்து நான்காக விரித்து அமைத்துள்ளனர்.
இவற்றிலே புறப்புறம் வேத உபநிடதங்களை நிராகரிப்ப தாகும். இப்பட்டியலிலே இடம் பெறுபவை :
1. உலோகாயதம் (காட்சிவாதம்) 2. மாத்தியமிகம் (சூனியவாதம்) 3. யோகசாரம் (விஞ்ஞானவாதம்) 4. செளந்திராந்திகம் (சமுதாயவாதம்) 5. வைபாடிகம் (சமுதாயவாதம்) 6. ஆருகதம் (சமணம், அநேகாந்தவாதம்)
புறம் எனும் பிரிவில் இடம் பெறுபவை வேதஉபநிடதங்களை முழுவதாக ஏற்காதவை என்பர். இப்பட்டியலில் இடம் பெறுபவை:
1. தருக்கம் (வைசேடிகம், நையாயிகம் என இரு பிரிவு) 2. மீமாம்சை (பாட்டம், பிரபாகரம் என இரு பிரிவு) 3. ஏகான்மவாதம் (மாயாவாதம், பாற்கரிய வாதம், கிரீடாப்
பிரதமவாதம், சத்தப் பிரமவாதம் என நான்கு பிரிவு). 4. சாங்கியம்
5. யோகம்
6. பாஞ்சராத்திரம்
அகப்புறம் எனும் பிரிவின வேதம் சிவாகமம் என்பனவற்றை பொதுவாக ஏற்பினும், வேறாகிய நூல்களைச் சிறப்பு வகையாற் பிரமாணமாகக் கொள்வன. இவற்றில் ஐக்கியவாதம் வேதம், சிவாகமத்தைச் சிறப்பு வகையால் ஏற்பினும் ஆணவ மலத்தை மறுத்து அதனுண்மையைச் சாதிக்கும் சிவாகமங்களை இகழும்.
பாசுபதம் (சங்கிராந்தசமவாதம்) மாவிரதம் (உற்பத்திவாதம்) காபாலம் (ஆவேசவாதம்)
வாமம் (சாக்தம்)
இந்துக்கலைக்களஞ்சியம்

5. வைரவம் 6. ஜக்கியவாதம்
அகம் சித்தாந்த சைவத்தின் பதி முதலிய ஆறு பதார்த்தங்களையும் ஒப்புக் கொண்டு அவ்வப்பொருள்களுக்குக் கூறும் பொது இயல்பு மாத்திரையே கொண்டு தன்னியல்பு கொள்ளாது மாறுபடுவன:
பாடானவாதம் பேதவாதம் சிவசமவாதம் சிவசங்கிராந்தவாதம் ஈசுவரவவிகாரவாதம்
சிவாத்துவிதசைவம் (நிமித்த காரண பரிணாமவாதம்).
சிலர் அறுவகைச் சமயம் என்பதன் விரி சைவம், வைஷ்ணவம், சாக்தம், செளரம், காணபத்தியம், கெளமாரம் என்பர். இவ்வாறு கொள்ளும் ஆட்சியின் பழமை ஆராயப்பட வேண்டியதொன்று. இம்மதங்கள் முறையே சிவனையும் விஷ்ணுவையும் சக்தியையும் சூரியனையும் கணபதியையும் முருகனையும் முழுமுதற் கடவுளாக கொள்வன. இத்தகைய நிலை இன்று காணப்படுவதாக இல்லை.
வேறு சிலர் நியாயம், வைசேடிகம், சாங்கியம், யோகம், மீமாஞ்சை, வேதாந்தம் என்பனவற்றை அறுவகைச் சமயம் என்பர். இவை உண்மையில் தரிசனங்களாம். (பொ.பூ.)
அறுவகைத் தரிசனம்
இந்திய தரிசன வரலாற்றிலே ஷட்தரிசனங்கள் என வழங்கப்படும் தொகுதியொன்று பழைய ஆட்சியுடையதாக விளங்குகின்றது. "தரிசனம்’ என்பது பார்வை, மனக்காட்சி என்ற பொருள்களைத் தருவதாகும். இவ்வறுவகைத் தரிசனங்களிலே இடம் பெறுவன நியாயம், வைசேடிகம், சாங்கியம், யோகம், மீமாஞ்சை, வேதாந்தம் என்பனவாம். இவை ஆஸ்திகப் பிரிவைச் சேர்ந்தவை. வேதத்தின் மேலாணையில் நம்பிக்கை வைக்கும் காரணத்தால் இவை ஆஸ்திகப் பிரிவினைச் சேர்ந்தவை.
நியாயம் என்பது ஒரு பொருளின் உள்நுழைந்து காண்பது என்ற பொருளினையுடையது. நியாய முறைமை பதினாறு பதார்த்தங்கள் எனக் கொள்கின்றது. அவை :
1. ஏற்புடை அறிவை அடையும் வழிகள் (பிரமாணம்) 2. ஏற்புடை அறிவுக்குரிய பொருள்கள் (பிரமேயம்) 3. ஐயம் (சமுசயம்) 4. நோக்கம் (பிரயோசனம்) 5. எடுத்துக் காட்டுகள் (திருட்டாந்தம்) 6. உறுதிப்படுத்தப்பட்ட முடிவுகள் (சித்தாந்தம்)
163

Page 210
முக்கூற்று முடிவின் உறுப்புகள் (அவயவம்)
பிழைக்கு ஒடுக்கல் (தர்க்கம்) முடிவு செய்யப்பட்ட அறிவு (நிர்ணயம்) 10. உண்மைக்காக வாதிடல் (வாதம்)
11. வெற்றியை அடைய ஆக்க முறையிலும்
அழிவு முறையிலும் வாதிடல் (ஜல்பம்) 12. வெற்று அழிவு முறை வாதம் (விதண்டம்) 13. தவறான காரணங்கள் (ஏதுவாபாசம்) 14. சொற்புரட்டு (சலம்) 15. பயனற்ற போலியான எதிர்ப்புகள் (ஜாதி) 16. சேதமுண்டாக்கும் குறிகள் (நிக்கிரகத்தானம்)
இப்பதார்த்தங்கள் பட்டியலில் எண்ணம் பற்றியனவும் அனுமான நுட்பங்கள் பற்றியனவுமே மிகுந்து காணப்படுகின்றன. அளவையில், முரண்நிலைத் தருக்கவியல் பற்றிய பதார்த்தங் களாகவே இவை காணப்படுகின்றன. நியாயமுறை ஒரு அளவையியல் முறைமை என்றே சொல்லத்தக்கது. அறிவளவை
யியலையும் இப்பட்டியல் தழுவியுள்ளது.
பிரமாணம் என்பது பிரத்தியட்சம், அனுமானம், ஆகமம், அபாவம், அருத்தாபத்தி, உபமானம், பாரிசேடம், சம்பவம், ஐதிகம்,
சுபாவம் எனப் பத்து வகையில் நோக்கப்படுவதாகும்.
ஆத்மா, சரீரம், இந்திரியம், அர்த்தம், புத்தி, மனம், பிரவிருத்தி, தோஷம், பிரேத்தியபாவம், பலம், துக்கம், அபவர்க்கம் எனப் பிரமேயம் பல வகைப்படும்.
பிரதிஞ்ஞை, ஏது, திருட்டாந்தம், உபநயம், நிகமனம் என அவயவம் பகுக்கப்படும். இவற்றுடன் ஜிஞ்ஞாசம், சம்சயம், சக்யபிராப்தி, பிரயோசனம், சம்சயவீயூதாசம் என்பனவற்றையும்
சேர்ப்பதுண்டு.
இறைவன் இருத்தலை நிரூபிக்க முயல்வது நியாயமுறைக் கோட்பாட்டில் ஒரு சிறப்பான அமிசமாகும். உதயணார் தரும்
முக்கியமான வாதங்கள்.
(1) காரியமாகவுள்ள உலகுக்கு அறிவாலும் சக்தியாலும் உலகைப் படைக்கும் தொழிலைச் செய்வதற்கும் ஈடு கொடுக்கக் கூடியதான ஆற்றல்மிக்க காரணமொன்று
தேவைப்படுகின்றது.
(2) படைக்கப்பட்ட உலகு குழப்பக் குவியலாய் அமையாது ஒழுங்குடன் நிலவ மதிநுட்பத்தோடு கூடிய, அமைப்பின் ஒழுங்கினைக் கட்டுப்படுத்தி நடத்தும் கருத்தா ஒருவன் வேண்டும்.
164

(3) புறவுலக ஒழுங்குக்கேற்ப அறவுலகில் தகுதிக்கேற்ப நியாயம் வழங்கும் அறிவியல் ஒழுங்கு நிலவ ஒருவர் வேண்டும்.
(4) கடவுள் இன்மையை நிரூபித்துக் காட்ட எந்தப்
பிரமாணத்தையும் காட்ட முடியாது. நியாய தத்துவ முறைமையின்படி இறைவன் பரமாத்துமன்; பிரபஞ்சத்தின் நிமித்த காரணன், ஆன்மாக்களைப் போன்று எங்கும் நிறைந்தவன்; என்றும் உள்ளவன்; ஆன்மாக்களுக்கு அறிவு சில வேளைகள் இல்லாமற் போயினும் அது இறைவனுக்கு என்றுமுள்ள ஓரியல்பு.
ஆன்மா பழம்பிறவியின் கரும பலன்களின் தொடர்பால் கட்டுப்படுத்தப்பட்டுப் பிறவிப் பெருங்கடலில் நீந்தித் தளை நீங்கப் பெறும் வரை உழலுகின்றது. பதினாறு பதார்த்தங்களையும் அறிந்து கொள்ளப் பிறவித்தளை நீங்கும். அஞ்ஞானம் மெஞ்ஞானத்தால் விரட்டப்படும்போது ஆன்மாவின் குறை பாடுகள் அழிந்து வினை தீர்ந்து பிறவியும் நின்றுவிடும்.
கெளதமர் இயற்றிய நியாய சூத்திரம் நியாய முறைமைக்கு ஆதாரநூல். வாத்சாயன் இதற்கு வியாக்கியானம் தந்துள்ளார். உத்தியோதகரர், வாஸ்பதிமிசிரர், உதயணர், சயந்தர், கங்கேசர், வாசுதேவசார்வபெளமர், அன்னம் பட்டர் முதலியோரும் இம்முறைமையினை விளக்கி நூல்களை எழுதியுள்ளனர்.
நியாய முறைமையின் சிறப்பு அதன் அடிப்படைத் தத்துவத்தில் இல்லை; அறிவைக் கொணரும் வழிகளைத் தருவதிலே தான் அதன் சிறப்பு அடங்கியிருக்கிறது. அது கையாளும் அளவையியல் நுணுக்கத்தை எல்லாத் தத்துவ முறைகளும் எடுத்துப் பயன்படுத்தியுள்ளன.
நியாய முறைமையினின்று வேறுபட்டவொரு தனிச் சிந்தனை முறைமையாகத் தோன்றிய வைசேடிகம், இருமுறைமைகளுக்கும் இடையே அமைந்துள்ள நெருங்கிய அடிப்படைத் தத்துவ உறவு காரணமாக, நியாயமுறைமையுடன் இணைந்து கொண்டது.
வைசேடிகம் அணு முதற் பன்மைக் கொள்கை, உண்மைப் பொருள்கள் பல என நம்புவது; பெளதிக உலகு அணுக்களாகப் பிரியக் கூடிய பல பொருள்களையுடையது என்று கருதுவது; ஒரு பொருளைப் பிறபொருள்களினின்று பிரித்து உணர்த்தும் விசேடத் தன்மைகள் பற்றி ஆராய்ந்து விளக்குவது.
பதார்த்தங்களின் தன்மை பற்றி ஆராய்வதில் காட்டப்படும் நுண்ணறிவே வைசேடிகத் தத்துவ முறைமையில் சிறந்த பயனுள்ள பகுதியாகும். வைசேடிகம் ஏழு பதார்த்தங்களைக் கூறுகின்றது. அவை பொருள் (திரவியம்), இயல்பு (குணம்),
இந்துக் கலைக்களஞ்சியம்

Page 211
செயல் (கர்மம்), பொதுமை (சாமானியம்), சிறப்பியல்பு (விசேடம்), உள்ளார்ந்ததன்மை (சமவாயம்), இன்மை (அபாவம்).
பொருளை ஒன்பது வகையாக வைசேடிகம் நோக்குகின்றது. அவை நிலம், நீர், தீ வளி, விண், காலம், திசை, ஆன்மா, மனம்; இருபத்துநான்கு இயல்புகள் கூறப்படுகின்றன. அவற்றுட் சில சடச்சார்புடையன; மற்றவை உளச்சார்புடையன. சாதாரண குணங்களும் சிறப்புக் குணங்களும் இப்பட்டியலிலே வருகின்றன. நிறம், சுவை, நாற்றம், ஊறு, ஒசை, எண், அளவு, தனித்திருத்தல், சேர்த்தல், பிரித்தல், சேய்மை, அண்மை, அறிவு, இன்பம், துன்பம், விருப்பம், வெறுப்பு, முயற்சி, மந்தம், நீர்மை, ஒட்டுறவு, கலைத்திறமை, நன்மை, தீமை என்பனவேயவை; கருமம் எழும்பல், ஈதல், வளைதல், நிமிர்தல், நடத்தல் எனப் பகுக்கப்பட்டுள்ளது. ஒரு இனத்தைச் சேர்ந்த அத்தனை உறுப்பினரிடமும் இருக்கும் பொதுக்குணம் சாமானியம். வைசேடிகத்தின் முக்கிய பதார்த்தம் விசேடம். இம்முறைமையின் பன்மைக் கொள்கை இதனை ஆதாரமாகக் கொண்டது. இரண்டனுக்கிடையேயுள்ள பிரிக்க
முடியாத உறவு சமவாயம். அபாவம் எதிர்மறை நிகழ்ச்சிகள்.
இன்றைய நிலையில் வைசேடிகத்தின் அணுக்கொள்கை தவறென்று ஒதுக்கப்படக் கூடியதாகும். அதன் காரணக் கொள்கையும் ஏற்றுக் கொள்ள இயலாததாக இருக்கலாம்.
எழுவகைப் பொருள்களின் சிறப்பு, பொது, வேற்று இயல்புகளை உணர, உடம்பு முதலியவற்றின் வேறாகிய ஆன்மாவின் இயல்பு விளங்கும்; விளங்கவே உடம்பு முதலியவற்றை நான் என்று எண்ணிய மயக்கவுணர்வு கழியும்; கழியவே முயற்சியின்மையின் பிறவி ஒழியும்; பிறவி ஒழியவே துன்பம் இல்லையாம்; இல்லையாக முகந்து கொண்ட வினைப்பயன் நுகர்ச்சியால் கழியும் போது அறிவு இன்றிக் கல்போலக்கிடப்பதே முத்திநிலை என்று வைசேடிகம் விளக்குகின்றது.
கணாதமுனிவரின் வைசேடிக சூத்திரம் வைசேடிக தத்துவ முறைமைக்கு ஆதாரமாயமைந்த நூலாகும். பிரசஸ்தபாதர், வியோமசிவர், பூரீதரர், உதயணர், சிவாதித்தியர் முதலியோர் இம்முறைமை பற்றி விளக்கி எழுதியுள்ளனர்.
சாங்கியம் இந்திய தரிசனங்களிலே மிகப் பழமையானது. இருபத்தைந்து தத்துவங்களை எண்ணிக்கையிட்டு விளக்கு வதால் வந்த பெயர் என்றும் தத்துவச் சிந்தனைகளை ஆராய்ந்து விளக்குவதால் வந்த பெயர் என்றும் சங்கா என்பவர் தோற்றுவித்த கொள்கையாதலால் வந்த பெயர் என்றும் பலவாறு கூறுவர்.
உலக மக்களுக்கு வரும் துன்பம் தம்மைப் பற்றி வருவன (ஆதியான்மிகம்), பிற உயிர்களைப் பற்றி வருவன (ஆதிபெள திகம்), தெய்வத்தைப் பற்றி வருவன (ஆதிதைவிகம்) என முதன் முதலிற் குறிப்பிட்டது சாங்கியம். உள்ளது அழியாது இல்லது
இந்துக் கலைக்காரீசியம்

தோன்றாது என்ற சற்காரியவாதக் கொள்கையை முன் வைத்ததும் சாங்கியமாகும். குணங்களைச் சத்துவம், இராட்சதம், தாமசம் என மூவகைப்படுத்தி விளக்கியதும் சாங்கியமே.
ஆன்மாவின் தொடர்பின்றியே உள்ள ஒரு பொருள் இவ்வுலகு என்பதால் காட்சிப் பொருட் கொள்கை என்றும், சடம், ஆன்மா என வேறுபட்ட இரு உள்பொருள்கள் உள என்பதால் இருமைக் கொள்கை என்றும் ஆன்மாக்கள் பல என்பதால் பன்மைக் கொள்கை என்றும் சாங்கியத்தைக் கூறுவர்.
அக்கினி, பிருதிவி, அப்பு, தேயு, வாயு எனும் ஐம்பூதங்களும் சப்தம், பரிசம், ரூபம், ரசம், கந்தம் எனும் ஐந்து தன்மாத்திரைகளும், வாக்கு, பாதம், பாணி, பாயு, உபத்தம் எனும் ஐந்து கன்மேந்திரியங்களும், சுரோத்திரம், துவக்கு, சட்சு, ஆக்கிராணம், சிங்யுவை எனும் ஐந்து ஞானேந்திரியங்களும் மனம், புத்தி, அகங்காரம் எனும் மூன்றுமான 23 தத்துவங்களும் தோன்றுதற்கு மூலகாரணம் பிரகிருதி, இம்மூலப் பிரகிருதியும் புருடனும் (ஆன்மா) சேரின் 25 தத்துவங்களாம்.
மூலப்பிரகிருதியும் புருடனும் தனித்தனியானவை; அதனை உணர்ந்தால் அவித்தை நீங்கும்; அந்நிலையையே முத்தி என்கின்றது சாங்கியம். இதுவே ஜீவன் முக்தியாம். பிராரர்த்தம் காரணமாக இவ்வுடலானது ஒரு சிறிது காலத்திற்கு இருந்து கொண்டே வரலாம். பிராரர்த்தம் தீர்ந்தவுடன் ஆன்மா உடலினின்று விடுபடும். வீடுபேறு அடைதற்கான பயிற்சி முறைகள் பற்றி சாங்கியம் கூறவில்லை. அவற்றை யோக முறைமை கூறுகின்றது.
கபிலரைச் சாங்கிய முறைமையின் மூல ஆசிரியராகக் கூறுவர். ஆயினும் ஈஸ்வர கிருஷ்ணர் எழுதிய சாங்கிய காரிகையே முன்னே தோன்றியதாகக் கருதப்படும். வாசஸ்பதி மிசிரர், சாங்கிய நாராயணர், அநிருத்தர், மகாதேவர், நாகேசர், விஞ்ஞான பிட்சு முதலியோரும் இவ்வழியிலே குறிப்பிடத்தக்கவர். விஞ்ஞான பிட்சு எழுதிய சாங்கிய பிரவசன பாஷ்யம் சாங்கியத்தை ஆஸ்திக முறைமையாகச் செய்த பெருமையுடையது.
சாங்கிய தத்துவத்தினை ஏற்றுக் கொள்ளும் யோக முறைமை உயிரும் இறைவனும், சீவாத்துமாவும் பரமாத்துமாவும் ஒன்று சேர துணைபுரியும் நெறியை விளக்குவதாகும். பதஞ்சலியாரின் யோகசூத்திரம் இந்நெறியைப் பெரிதும் விளக்கிய முன்னூலாகும். அட்டாங்க யோகம் மூலம் உண்மை நிலை உணர்ந்து உய்தி பெறலாம் என்று கீாட்டுவது யோக முறைமை. திருமந்திரத்திலே திருமூல நாயனார் அட்டாங்க யோகத்தினை விளக்கிக் காட்டுவர்.
165

Page 212
வியாசர், போஜராசன், வாசஸ்பதிமிசிரர், விஞ்ஞான பிட்சு என்பவர்கள் பதஞ்சலி யோகசூத்திரத்தினை விளக்கியும் விரித்தும் எழுதிப் போந்தனர்.
நியாயம், வைசேடிகம், சாங்கியம், யோகம் என்பன வேதத்தின் மேலாணையை ஏற்றுக் கொண்ட போதிலும், அவற்றின் கோட்பாடுகளுக்கு வேதத்தின் கூற்றுகளை ஆதாரமாகக் கொள்ளவில்லை. மீமாம்சை (பூர்வமீமாம்சை), வேதாந்தம் (உத்தர மீமாம்சை) என்பவையே வேத மூலங்களை அடிப்படையாகக் கொண்டவை.
ஆராய்தல் எனும் பொருள் தரும் மீமாம்சை எனும் பெயரினை இறுதியாகவுடையவை பூர்வ மீமாம்சை, உத்தரமீமாம்சையாம். வேதத்தின் பூர்வ (முந்திய) பகுதிகளில் (கருமகாண்டத்திலே) கண்ட கோட்பாடுகளை ஆராய்வது பூர்வ மீமாம்சை, உத்தர (பிந்திய) பகுதிகளில் (ஞான காண்டத்திலே) கண்ட கோட்பாடுகளை ஆராய்வது உத்தரமீமாம்சை. பூர்வமீமாம் சையைப் பொறுத்தவரை வேதத்தின் முக்கிய பகுதி பிராமணம் எனும் பகுதியே. உத்தரமீமாம்சை உபநிடதங்களை முக்கிய பகுதியாகக் கொள்ளுகின்றது. உத்தரமீமாம்சை வேதாந்தம் என்று பெரும்பாலும் வழங்குவதால் பூர்வமீமாம்சை வசதிக்காக மீமாம்சை என வழங்கும்.
இவை இரண்டும் வேத மூலங்களை அப்படியே எடுத்துக் கொண்ட போதிலும் ஒரு தனியறிவு ஆய்வு முறை அல்லது அளவை இயல் ஆய்வு முறையைப் பின்பற்றுவதால் தனித்தத்துவ முறைகள் எனப்படுவன.
மீமாம்சையின் முக்கிய குறிக்கோள் வேதத்தின் மேலாணையை நிலை நாட்டுவதும் வேதங்கள் கூறும் சடங்குகளைப் புரிந்து கொள்ளுவதுமேயாம். இதனால் இம்முறைமை கர்மமீமாம்சை எனவும் வழங்கப்படும்.
வேதக் கிரியைகளையும் சடங்குகளையும் முறையாகச் செய்வதில் அக்கறை கொண்டது மீமாம்சை. அதனால் வேதத்தின் சரியான பொருளை வெளிக் கொணர்வதற்கு உதவியாக விளக்கம் தரும் விதிகளை அமைத்துத் தருவதே மீமாம்சையின் முக்கிய நோக்கமாம். தத்துவத்திலும் சடங்குகள் மீமாம்சையில் முக்கியத்துவம் பெறுகின்றன. வேதங்களுக்கு மேற்பட்ட பிரமாணமில்லை. அவை சுயம்பு என்று மீமாம்சை கருதும். வேதங்களைத் தெளிவாக அறிந்து சரியாக உச்சாடனம் செய்தல் வேண்டும். வேதத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் மீமாம்சை அங்கு இறைவனுக்கு இடம் கொடுக்கவில்லை. ஆன்மா முத்தியை, அறிவினை மட்டும் கொண்டு அடைய முடியாது; செயல் மூலம் அல்லது சமயக் கிரியைகள் மூலம் அடைய முடியும். ஆன்மா தான் செய்வினைப் பயனை அனுபவிக்கிறது; பரமான்மா என்றொன்றில்லை, உலகம் தோன்றி மறையும் என்பது பொய் என்று மீமாம்சை கூறும். வேதத்தின் சிறப்பினைப் போற்ற எழுந்த மீமாம்சை நாஸ்திக தன்மை பெற்றதாகக் காணப்படுகின்றது.
166

வேதத்தின் இறுதி வேதாந்தம். பெரும்பாலும் வேதத்தின் கடைசிப் பகுதிகளாக அமைந்திருப்பதாலும் வேதத்தினுடைய சாரம் அங்கே கிடப்பதாலும் உபநிடதங்கள் வேதாந்தம் எனப் பெற்றன. உபநிடதங்களை அடிப்படை நூல்களாகக் கொண்ட தத்துவமுறையும் வேதாந்தம் எனப்பட்டது.
வேதாந்தம் உத்தரமீமாம்சை, பிரமமீமாம்சை, ஸாரீரக மீமாம்சை என்றும் அழைக்கப் பெறும். வேதத்தின் உத்தர (பிந்திய) பகுதிகளிலுள்ள (ஞானகாண்டம்) கோட்பாடுகளை ஆராய்வதால் உத்தரமீமாம்சை, பிரமத்திற்கு அளிக்கும் முக்கியத்துவத்தால் பிரமமீமாம்சை, பிறிவியெடுத்த ஆன்மாவின் தன்மை பற்றிக் கூறுவதால் ஸாரீரகமீமாம்சை,
வாதராயணரின் வேதாந்தசூத்திரம் உபநிடதங்களை முறைப்படுத்திக் கூறிய முதனூலாம். இங்குள்ள நான்கு அத்தியாயங்களில் மூன்று அத்தியாயம் பிரமம் பற்றியும், பிரமத்தை அடையும் வழிகள் பற்றியும், பிரமத்தை அடைவதால் ஏற்படும் பலன்கள் பற்றியும் கூறுவன. இரண்டாம் அத்தியாயம் கோட்பாடுகளுக்கு எதிரான கூற்றுகளுக்குச் சமாதானம் கூறுவதோடு வேதாந்தம் அல்லாத முறைமைகளை மறுத்துரைக்கின்றது.
வேதாந்த சூத்திரத்தில் மறைபொருள் கெண்ட சூத்திரப் பாக்கள் நிரம்ப வருகின்றன. வேதாந்தத்தின் ஒவ்வொரு கோட்பாட்டுக்கிளையும் இதற்கு ஒவ்வொரு விளக்கம் தருகின்றது. அந்த ஒவ்வொரு விளக்கத்திற்கும் பல துணை விளக்கங்களுண்டு. ஒவ்வொரு கோட்பாட்டுக்கிளையும் மூல நூலுக்குச் சற்றும் மாறுபடாதது என்று தன்னைப் பற்றிச் சொல்லிக் கொள்ளுகின்றது. ஒவ்வொரு வேதாந்தக்கிளையும் வேதாந்த சூத்திரத்தையும் உபநிடதங்களையும் பகவத் கீதையையும் பிரஸ்தானத் திரயமாகக் கொள்வன.
வேதாந்தம் பல பிரிவுகளையுடையதாயினும் கேவலாத் துவிதம், ஏகான்மவாதம், மாயாவாதம், பிரச்சின்ன பவுத்தம் எனப் பலவாறு வழங்கும் ஆதி சங்கரரின் அத்வைதமே வேதாந்தம் என்ற பெருவழக்கினைப் பெற்றுள்ளது. (பொ.யூ.)
ć965TGOIDT38"TruЈЛ
இந்து சமயம் சார்ந்த மெய்யடியார்களுள் ஒருவர்; இவர் பக்தி
மார்க்கத்துக்கும் தெலுங்கு மொழிக்கும் கர்நாடக சங்கீதத்திற்கும்
வளம் சேர்க்கும் உன்னதமான பாடல்களைத் தந்த அருட்கவிஞர்.
அன்னமாச்சார்யா திருப்பதிக்கு அருகேயுள்ள தாள்ளபாக்கம் என்ற கிராமத்தைச் சார்ந்தவராதலாற் பெரும்பாலும் தாள்ளபாக்கம் அன்னமாச்சார்யா என்றே அழைக்கப்பட்டார். தாள்ளபாக்கம் என்பது அவரது முன்னோர்கள் காலம்
இந்துக் கலைக்களஞ்சியம்

Page 213
தொடக்கமாகவே அவர்களது குடும்பப் பெயராக நிலவி வந்தது. அன்னமாச்சார்யா நந்தவரீகப் பிரிவுசார்ந்த அந்தணர்களான பெற்றோருக்கு (நாராயண சூரி + இலக்கமாம்பா) கி.பி. ஆயிரத்து நானூற்று எட்டில் வைகாசி மாதம் (மே, 22) பிறந்தார் என்று கணிப்பிடப்படுகின்றது.
அன்னமாச்சார்யாவின் பெற்றோர்கள் சிவன், திருமால் ஆகிய தெய்வங்களை வணங்கும் ஸ்மார்த்தப் பிரிவைச் சேர்ந்தவர்களாயினும் திருமாலிடத்தே தீவிர பக்தி கொண்டவர்களாய் விளங்கினர். தாள்ளபாக்கம் கிராமத்தில் பழமைவாய்ந்த, சென்னகேசவர் என்ற நாமங்கொண்ட, கண்ணன் கோயிலோடு அன்னமாச்சார்யா குடும்பத்தினர் பல தலைமுறையாகக் கொண்டிருந்த தொடர்பே இதற்குக் காரணமெனப்படுகிறது.
அன்னமாச்சார்யாவின் பெற்றோர்கள் ஆண்குழந்தை ஒன்று வேண்டும் என்ற பிரார்த்தனையோடு திருப்பதி வேங்கடேஸ்வரர் கோயிலுக்கு யாத்திரை மேற்கொண்ட வேளை அவர்களது அகக்காட்சியில் திருமாலின் பஞ்சாயுதங்களுள் ஒன்றான நாந்தகம் என்னும் வாளைக் கண்டார்கள் என்று கூறப்படுவதன் மூலம் அவரை நாந்தக அம்சமாகக் கருதுவர். (ஆழ்வார்களும் இவ்வாறே திருமாலோடு தொடர்புபட்ட சங்கு முதலானவற்றின் அவதாரங்களாகக் கொள்ளப்படுவது கருதத்தக்கது. இராமாயண பாத்திரங்களாகிய அனுமன், வாலி, சுக்கிரீவன் முதலானவும் அவ்வாறு கொள்ளப்படுவனவே).
திருமால் அருளாற் பிறந்த குழந்தைக்கு, பெற்றோர் அன்னமய்யா என்ற பெயரை இட்டனர். அச்சொல் திருமாலையே குறிப்பதாம். அது திருமாலின் ஆயிரம் நாமங்களுள் ஒன்று. இறைவன் உண்பவன், உண்ணப்படுபவன் என்னும் இரு கருத்திலும் அன்னமாக விளங்குகிறான் என்பர் பெரியோர். திருமால் அடியவர்களுக்கு உண்ணும் பொருளாயும் பிரளய காலத்தில் பிரபஞ்சத்தை உண்பவனாயும் விளங்குகிறான். ஆண்டாள் 'உண்ணுச் சோறும், பருகும் நீரும், தின்னும் வெற்றிலையும் எல்லாம் கண்ணனாகவே கண்டமை ஈண்டு கருதத்தக்கது. தமிழில் 'சோறு என்ற சொல்லுக்கு முத்தி என்ற பொருள் இருப்பதும் ஈண்டு கருதத்தக்கதே.
அன்னமாச்சார்யா சிறுவராயிருந்த காலத்திலேயே பக்தியும், ஞானமும், கல்வியும் கைவரப் பெற்று விளங்கினார். சென்னகேசவப் பெருமாள் கோயிலுக்கு அடிக்கடிச் சென்று பாடியும், ஆடியும் பக்தி செய்தார். எட்டு வயதுப் பராயத்திலேயே அவருக்கு உலக வாழ்வில் வெறுப்பேற்பட்டுவிட்டது. பக்தியிலும் பாடுவதிலும் அன்னமாச்சார்யாவுக்கிருந்த அளவுகடந்த ஈடுபாடு அவரை வீட்டுவேலைகளிற் கவனமில்லாதவராக்கிவிட்டது. அதனால் பெற்றோர்களதும், அண்ணியினதும் கண்டிப்புக்கு ஆளாக நேரிட்டது. அது வளர்ந்து இவரைக் குடும்பத்தில் வெறுப்படையச் செய்தது. குடும்ப உறவை அறுத்துக்கொண்டு வீட்டிலிருந்து வெளியேறிய அன்னாமாச்சார்யா எங்கு செல்வது
இந்துக் கலைக்களஞ்சியம்

என்று தெரியாது திரிந்தவேளை திருமால் நாமங்களைப் பாடிக் கொண்டு சென்ற அடியார் கூட்டத்தைக் கண்டமை, போகவேண்டிய இடம் எது என்பதை அவருக்கு உணர்த்துவதாக அமைந்தது.
யாத்திரிகர் குழுவைப் பின்தொடர்ந்தார் அன்னமாச்சார்யா. யாத்திரிகர்கள் வேங்கடமலைக் குன்றுகளில் ஏறினர்; சிறுவரான அன்னமாச்சார்யா பசியாலும், களைப்பாலும் ஏறமுடியாதவராய்ப் பின்தங்கினார். பாறை ஒன்றிலே படுத்து உறங்கிவிட்டார். அவ்வேளை வேங்கடேஸ்வரரின் தேவி பத்மாவதித்தாயார் அவர் முன்தோன்றி அன்புடன் உரையாடினார் என்று அற்புத வரலாறு கூறப்படுகின்றது.
பாறையிற்படுத்திருந்த அன்னமாச்சார்யா துயிலெழுந்ததும், கண்பார்வை போய்விட்டதை உணர்ந்தார், கதறியழுதார். பத்மாவதித்தாயார், வேங்கடமலை தெய்வீகமானதாதலால் அதனைச் செருப்புக் காலால் மிதித்தல் தகாது என்றும் அவ்வாறு மிதித்ததால் தான் கண்பார்வை போனது என்றும் உணர்த்தினார். அதைக்கேட்டதும் தமது செருப்புக்களைக் கழற்றி எறிந்த அன்னமாச்சார்யாவுக்கு உடனே கண்பார்வை வந்தது. பத்மாவதித்தாயார் திருமாலுக்குப் படைத்த நிவேதனத்தை சிறுவன் அன்னமாச்சார்யாவுக்கு ஊட்டி, வேங்டேசர் கோயிலுக்கு வழியும்காட்டி மறைந்துவிட்டார்.
தமக்கேற்பட்ட அந்த அனுபவத்தின் உணர்ச்சிப் பெருக்கில் அன்னமாச்சார்யா நூறு பாக்களைக் கொண்டதான பூரீ வெங்கடேஸ்வர சதகமு' என்ற சிறு காவியத்தைப் பாடினார். அது திருமாலையே விளிப்பதாகக் காணப்படினும் பத்மாவதித்தாயாரின் கருணையையே புகழ்ந்து பாடுவதாகக் கொள்ளப்படுகிறது. அன்னமாச்சார்யா பற்றிய அற்புத வரலாறாகக் கூறப்படும் இந்நிகழ்ச்சி பின்பு அன்னமாச்சார்யா பின்பற்றிய விசிஷ்டாத்வைதத்தின் கொள்கைகளுள் ஒன்றை உணர்த்துவ தாயமையக் காணலாம். அதாவது தன் தவறை உணர்ந்து திருந்தும் பக்தனுக்கும், பரம்பொருளான திருமாலுக்கும் இடையே இலக்குமி தேவி நடுவராக விளங்குகிறாள் என்ற தத்துவம் இக்கதைமூலம் விளக்கம் பெறுகின்றது. விசிஷ்டாத்வைத தத்துவத்தின்படி இறைவனை அடைய வழிகாட்டும் அருகதையுடைய ஆசாரியர்களிலே திருமகளே முதன்மையான ஆசாரியராகக் கொள்ளப்படுவதும் கருதத் தக்கதே.
அன்னமாச்சார்யா வேங்கட மலைக்கு முதன்முதலாக வந்து அங்கு தங்கிய பொழுது பல அற்புதங்கள் நிகழ்ந்ததாகக் கூறப்படுகின்றது. அன்னமாச்சார்ய வேங்கட மலையில் தங்கிய இரண்டாம் நாள் வைணவர்களுக்கு விசேடமானதான ஏகாதசியாக அமைந்தது. அன்று அன்னமாச்சார்யா புனித தீர்த்தத்தில் நீராடி ஆடைகளை உலர்த்திக் கொண்டிருக்கும் போதே வேங்கடேஸனைப் பற்றி நூறு பாடல்கள் பாடிவிட்டார். ஆடைமாற்றி விட்டுக் கோயிலுக்கு வந்தபோது கோயிற்கதவு சாத்தப்பட்டிருந்தது. அப்பொழுது தாமியற்றிய பாக்களைப் பாடக் கோயிற் கதவு தானாகவே திறந்து வழிவிட்டது. பாக்களைப் பாடி
167

Page 214
முடித்தவுடன் வேங்கடேஸனின் கழுத்திற்கிடந்த முத்துமாலை யொன்று நழுவி விழுந்தது, அன்னமாச்சார்யாவின் பாடலால் இறைவனுக்கேற்பட்ட திருப்தியை உணர்த்துவ தாயமைந்தது. கோயில் அர்ச்சகர்கள் இந்நிகழ்ச்சிகளைக் கண்டு அதிசயித்து அன்னமாச்சார்யாவின் தெய்வபக்தியை மெச்சினார்கள்.
சிறிது காலத்தின்பின் வேங்கடேஸர், கணவிஷ்ணு என்னும் வைணவத் துறவியின் கனவிலே தோன்றி அன்னமய்யா என்ற சிறுவனைத் தேடிக்கண்டு அவனை வைணவ சமயத்திற் சேர்த்துக்கொள்ளுமாறு கட்டளையிட்டார் என்றும் அதன்படியே கணவிஷ்ணு அன்னமய்யாவைத் தேடிக்கண்டு நடந்ததைத் தெரிவிக்க அவர் மகிழ்ந்து உடனடியாக உரிய கிரியைகளோடு, வைணவ சமயத்தைத் தழுவிக் கொண்டதாகவும் கூறப்படுகிறது. தள்ளபாக்கம் குடும்பத்தில் முதன் முதலில் வைணவரானவர் அன்னமாச்சார்யாவே, வைணவத்தைத் தழுவிய பின்பே அவர் அன்னமய்யா என்ற தம் இயற்பெயரோடு போதனையாளர் அல்லது வழிகாட்டி - விசேடமாக வைணவ வழிகாட்டி என்று பொருள்படுவதான ஆச்சார்யா என்ற சிறப்புப் பெயரும் சேர்ந்து அன்னமாச்சார்யா எனலானார்.
அன்னமாச்சார்யா, வேங்கடேசன் கோயிலில் இனிமையாகப் பாடல்களைப் பாடிக் கொண்டும் வைணவத்தின் அடிப்படைக் கோட்பாடுகளைக் கற்றுக் கொண்டும் நாட்களைக் கடத்தி வருகையில் ஒருநாள் அவரது தாய் அவரைக் கண்டு கொண்டு அவரது ஆன்மீக நடவடிக்கையை எந்தவித இடையூறும் இல்லாமல் வீட்டிலேயே தொடர வகைசெய்வதாகக் கூறி திரும்பவும் வீட்டுக்கு அழைத்துச் சென்றார்.
வீட்டிலே இருந்தபோதிலும் அன்னமாச்சார்யாவின் பக்தி குறையவில்லை; மாறாக தீவிரமாக வளர்ந்ததென்றே கொள்ளப்படுகிறது. அன்னமாச்சார்யாவுக்குப் பதினாறு வயது ஆனபோது அவருக்கு வேங்கடேஸ்வரரின் காட்சி கிட்டியது எனப்படுகின்றது. அந்நாளிலிருந்து அன்னமாச்சார்யா மிகுதியாகப் பக்திப்பாடல்களை இயற்றத் தொடங்கினார் என்றும் அவ்வழக்கம் அவரது இறுதிக்காலம் வரையில் இடம்பெற்றது என்றும் திருப்பதி கோயிலருகாமையிற் கண்டெடுக்கப்பட்ட செப்பேடு ஒன்றிலே கூறப்பட்டுள்ளது.
அன்னமாச்சார்யா தம் பெற்றோர்களது விருப்பத்தின்படி திருமலம்மா, அக்கலம்மா என்னும் இரு பெண்களை மணந்தார். அவர்களுள் திருமலம்மா திம்மக்கா என அழைக்கப்படுபவரும் தெலுங்கர்களின் மனங்கவர்ந்த முதற் பெண் கவிஞர் என்று புகழப்படுபவரும் 'ஸபத்ரா கல்யாணம்' என்ற நூலின் ஆசிரியருமானவர். அவர்களுக்குப் பிறந்த புதல்வனாகிய நரசிங் கண்ணாவும் ஒரு கவிஞரே என்றே அறிய வருகிறது. அக்கலம்மாவின் வயிற்றிலே பிறந்த பெரிய திருமலாச்சார்யாவும் தம் தந்தையைப் போலவே இறைபக்தியிலும், பாடலியற்றுவதிலும் இசைப்பதிலும் சிறந்து விளங்கினார். அவர்களுடைய பிள்ளைகளும் புகழ்பூத்த கவிஞர்களாக விளங்கினர் நூற்றைம்பது ஆண்டுகளுக்கு மேலாக அன்னமாச்சார்யாவின்
168

சந்ததி தெலுங்கு இலக்கியத்தை வளம்படுத்தும் கவிபரம்பரையாக விளங்கியமை குறிப்பிடத்தக்கது.
திருமணமாகிச் சிலகாலத்துக்குள்ளாகவே, விசிஷ்டாத் வைத தத்துவத்தை உணர்ந்துகொள்ள வேண்டும் என்ற அவா உந்தப்பெற்றவராக, அஹோபலம் மடத்தின் நிறுவனரும் வைணவ ஆசாரியர்களிற் புகழ் பெற்ற வருமான ஆதிவண்ண சடகோபயதி என்பவரை அணுகி அவரோடே தங்கியிருந்து விசிஷ்டாத் வைத தத்துவ நூல்களை - குறிப்பாக ஆழ்வார்களின் திவ்யப் பிரபந்தங்களையும் வான்மீகி இராமாயணத்தையும் - பல ஆண்டுகளாகக் கற்று சரணாகதி தத்துவத்தை நன்கு உணர்ந்து கொண்டார். -
அன்னமாச்சார்ய எங்கிருந்தாலும் திருப்பதி வாசனான வேங்கடேஸனை என்றும் மறந்ததில்லை. நாளுக்கு ஒரு பாடலாவது பாடுவது என்ற தனது கொள்கையை விடாது கடைப்பிடித்தார். வேறு தலங்களுக்கு யாத்திரை செய்து அவ்வத்தலத்து இறை நாமங்களிற் பாடல் பாடியபோதிலும் வேங்கடேஸனைப் பற்றிய செய்தியுடனேயே பாடல்களை நிறைவு செய்துகொண்டார். அவ்வகையில் வேங்கடேஸரின் நாமம் அன்னமாச்சார்யாவின் பாடல்களுக்கான முத்திரையாகத் திகழ்கின்றது.
அன்னமாச்சார்ய பாடல்களையியற்றும் வெறுங் கவி மாத்திரம் அல்லர். அவற்றை இனிமையோடு பாடவும் செய்பவர். அவருடைய பக்தியும், அதை வெளிப்படுத்தும் உணர்வு பூர்வமான அவரது மொழியும், இனிய குரலிற் பாடுந்திறமையும் சேர்ந்து அவரை மனித உருவில் நடமாடும் தும்புருவோ, நாரதரோ, கந்தர்வனோ என்று எண்ண வைத்ததாகக் கூறுவர். இசைத்துறையைப் பொறுத்தவரையில் அன்னமாச்சார்யா ஒரு உத்தமவாக்கேயகாரர் என்று சுட்டத்தக்கவர் என்பது வலியுறுத்தப்படவேண்டிய உண்மையாகும்.
அன்னமாச்சார்யாவின் பெருமையை உள்ளபடி உணர்ந்து மதிப்புச் செய்துவந்த பெனுகொண்டாவின் சமஸ்தானா திபதியான நரசிம்ஹராயா என்பவன் ஒரு கட்டத்தில் ஆற்றல்மிக்க கவியும் பாடகருமான அன்னமாச்சார்யாவின் வாயால் தனக்கும் ஒரு புகழ்ப்பாடல் வேண்டும் என்ற விபரீத ஆசைக்குள்ளாகி தன்னைப் புகழ்ந்து பாடுமாறு கேட்டுக்கொண்டான். மறந்தும் மானிடம் பாடாத மகானாகிய அன்னமாச்சார்யா அதனைத் தெளிவாக மறுத்துவிட்டார். இச்சம்பவம் நடந்தது சமஸ்தான பிரமுகர்களின் முன்னிலையிலாதலால் நரசிங்ஹராயா அதனை ஒரு அவமானமாகக் கருதி ஆணவம் மிகுந்து அன்னமாச் சார்யாவை இரும்புச்சங்கிலியாற் கட்டிச் சிறையிலிடுவித்தான். அன்னமாச்சார்யா வெங்கடேஸனைப் பாடியதும் தளை அறுந்தது. அதைக்கண்ட காவலாளிகள் நரசிம்ஹராயாவிடம் ஒடிச்சென்று நடந்ததைக் கூறினார்கள். ஆனால் அதை அவன் நம்பத் தயாராக இருக்கவில்லை. பொருளுக்கு ஆசைப்பட்ட காவலாளிகளே சங்கிலிகளை அறுத்திருக்க வேண்டும் எனக்கருதி மீண்டும் சங்கிலிகொண்டு அன்னமாச்சார்யாவைப் பிணித்தான். ஆனால் அன்னமாச்சார்யா அதே பாடலைத்
இந்துக் கலைக்களஞ்சியம்

Page 215
திரும்பப்பாட அவன் கண்முன்னாலேயே சங்கிலிகள் மீண்டும் அறுந்து விழுந்தன. நரசிங்ஹராயாவின் ஆணவமும் அறுந்தது.
இச்சம்பவத்தின்பின் அன்னமாச்சார்யா உலகியலில் ஈடுபட்டிருப்பவர்களோடு தொடர்பு வைத்துக்கொள்ளலாகாது என்ற எண்ணங்கொண்டவராய் திருப்பதி சென்று அமைதியாக வாழலானார். அன்னமாச்சார்யா பின்பு விஜயநகர சாம்ராச்சியத்தின் அரசனாகப் பதவியேற்ற நரசிங்ஹராயர் உட்பட எந்த மானிடரையும் எச்சந்தர்ப்பத்திலும் எதற்காகவும் பாடினாரில்லை. அவரது சந்ததியில் வந்தவர்களும் இறைபுகழன்றி மானிடவரைப் பாடாதவர்களாக அருட்கவி களாகவே விளங்கினார்கள் என்பது விதந்து கூறத்தக்கது.
அன்னமாச்சார்யா யாத்திரை செய்யுமிடமெல்லாம் வேங்கடேஸர் விக்கிரகத்தை எடுத்துச் சென்று காலந்தவறாது பூசை வழிபாடுகள் செய்யும் வழக்கமுள்ளவரென்றும் ஒரு சமயம் அவர் பூசை புரியும் விக்கிரகங்கள் தொலைந்துவிட்டன என்றும் அந்நிலையில் துன்புற்று இந்துமத புராண பாத்திரங்களான அனுமன், கருடன் முதலானோரிடம் அவற்றை மீட்டுத் தருமாறு முறையிட்டு ஒரு பாடலைப் பாடினார் என்றும் ஒரு கதை வழங்குகின்றது. அவ்விக்கிரகங்கள் மீளக்கிடைத்தனவா இல்லையா என்பது பற்றிய செய்திகள் எதுவும் அக்கதைகளில் இல்லை. ஆயினும், அன்னமாச்சார்யா குடும்பத்துக்குச் சொந்தமானவை எனப்படும் வெங்கடேஸர், பூரீதேவி, பூதேவி விக்கிரகங்கள் திருப்பதிக்கருகிலுள்ள பூரீநிவாஸமங்காபுரம் என்ற கிராமத்திலுள்ள ஆலயமொன்றிற் பேணப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
அன்னமாச்சார்யா தமது இறுதிநாட்களில் தாள்ள பாக்கத்திலும் திருப்பதியிலுமாக மாறிமாறி வாழ்ந்தார். திருப்பதி கோயில் பிரம்மோற்சவத்தில் தவறாது கலந்துகொள்வார். அன்பர்கள் வழங்கிய தானங்களைக் கொண்டு திருவிழாக்கள் நடாத்தியும் நிவேதனங்கள் செய்தும் மகிழ்ந்தார். பல அற்புதங்கள் நிகழ்த்தினார் என்றும் கூறப்படுகிறது.
அன்னமாச்சார்யாவின் வரலாற்றின் முக்கிய சம்பவங்களி லொன்று புரந்தரதாஸர் அவரைச் சந்தித்தமையாகும். மெய்யடியாரும் கர்நாடகத்தின் சிறந்த கவிஞரும் கர்நாடக சங்கீதத்தின் பிதாமஹரில் ஒருவருமான புரந்தரதாஸருக்கு அன்னமாச்சார்யா முன்னோடியாகக் கொள்ளப்படுவர். இருவரும் சந்தித்துக் கொண்ட வேளையில் பக்திபற்றிய உணர்வுகளைப் பகிர்வதிலும் சங்கீதசாஸ்திரம் பற்றிய விடயங்களை விவாதிப்பதிலும் மகிழ்ச்சி கண்டார்கள் என்று தெரியவருகிறது.
அன்னமாச்சார்யா மிக முதிர்ந்த வயதுவரை வாழ்ந்து முப்பத்திரெண்டாயிரம் பாக்களைப் பாடினார் என்று கூறப்படு கின்றது. வெங்கடேஸருக்கு நாள்தோறும் புதிய துதிப்பாடலைப் பாடும் தமது பணியைத் தமது பேரனான பெரிய
இந்துக்கலைக்களஞ்சியம்

திருமலாச்சார்யாவிடம் ஒப்படைத்துவிட்டு அன்னமாச்சார்யா திருமால் திருவடியடைந்தார் என்றும் கூறப்படுகின்றது. அது நிகழ்ந்தது 1503 பெப்ரவரி 23 ஆம் திகதி என்று கணிக்கப் படுகின்றது.
அன்னமாச்சார்யா சிறந்த பக்தர் என்ற போதிலும் அவரது முக்கியத்துவம் அவர் சிறந்த வாக்கேயக்காரர் என்ற வகையிலேயே அதிகம் உணரப்படுகின்றது. கலியுகத்துக்குரிய சிறந்த வழிபாட்டு முறையாக இறைவனுடைய பெருமையை இசையுடன் பாடும் நாதோபாசனை முறைமை கீதையுட்பட இந்துசமய நூல்கள் பலவற்றாலும் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. அவ்வகை வழிபாட்டு முறையை அன்னமாச்சார்யாவுக்கு உணர்த்திய சிறப்பு தென்னாட்டுப் பக்தியியக்கத்துக்கே உரியது எனலாம். அன்னமாச்சார்யா மாத்திரமன்றி கர்நாடக தேசத்து பக்திக் கவிஞர்களான பூரீபாதராயர், புரந்தரதாஸர் முதலானோர்க்கும் தென்னாட்டுப் பக்தியியக்கம் மூலவித்தாக அமைந்தமை கலை, இலக்கிய வரலாற்றாய்வாளர்களால் உணரப்பட்டுள்ளது.
அன்னமாச்சார்யா தமிழக ஆழ்வார்களின் துதிப்பாடல்களை நன்கு அறிந்தவராக விளங்கினார். அன்னமாச்சார்யா பின்பற்றிய விஷிட்டாத்வைத தத்துவமே ஆழ்வார் பாசுரங்களின் அடிப்படையிலேயே இராமானுஜரால் நிறுவப்பட்டது. ஆழ்வார் பாசுரங்களை வேதத்துக்குச் சமமானவை என்றே இராமானுஜர் கொண்டார். வைணவர்கள் ஆழ்வார் பாசுரங்களைத் திராவிட வேதமென்றும் பஞ்சாகம (ஐந்தாவது வேதம்) என்றும் போற்றுவர். சின்னண்ணா என்று அழைக்கப் பெறுபவரும் அன்னமாச்சார்யாவின் பெயரளும் தெய்வீகக் கவிஞருமான சின்ன திருவேங்கள நாதா தன் தாத்தா அன்னமாச்சார்யாவைப் பற்றிக் கூறும்போது பஞ்சாகம சார்வபெளம (ஐந்தாம் வேதத்தின் தலைசிறந்த விற்பனர்) என்று போற்றுவார். சங்கீதத் துறையைப் பொறுத்தவரையில் திரிமூர்த்திகளுள் ஒருவராகப் போற்றப்பெறும் தியாகராஜசுவாமிகள் புரந்தரதாஸரைக் கர்நாடக சங்கீதத்தின் மூலவர்களுள் ஒருவராகப் போற்றுவார். புரந்தரதாஸர் அன்னமாச்சார்யாவை அவ்வாறு போற்றுவார். இவ்வாறு நோக்கும்போது இவர்களுக்கெல்லாம் மூலவர்களாகத் தமிழகத்து ஆழ்வார்கள் விளங்குவது உணரப்படும். இசைத்தன்மைவாய்ந்த பக்திப்பாடல்களைப் பொறுத்தவரையில் தெலுங்கில் அன்னமாச்சார்யாவே முதல் ஆசிரியர் என்பது குறிப்பிடத்தக்கது.
அன்னமாச்சார்யாவின் மகனும் சிறந்த கவிஞருமான பெரியதிருமலாச்சார்யா அன்னமாச்சார்யாவின் பாடல்களை செப்பேடுகளிற் பொறித்து, கோயிலிலுள்ள சங்கீர்த்தன பண்ட (துதிப்பாடல்களின் பொக்கிஷம்) என்ற சிறிய அறையில் சேர்த்துவைத்திருந்தார். அவற்றைத் திருவிழாக் காலங்களிற் பாடகர்களைக் கொண்டு பாடுவிக்க பெரிய திருமலாச்சார்யா நன்கொடை வழங்கியிருந்ததாகவும் சாசனங்கள் தெரிவிக்கின்றன.
169

Page 216
அன்னமாச்சார்யாவின் காலத்திலிருந்து இரண்டு நூற்றாண்டுகளுக்கு மேலாக அவருடைய பாடல்கள் மிகுந்த பிரசித்தமாக விளங்கினவெனினும் பின் இடைக்காலத்தில் அவை பெரிதும் வழக்கொழிந்து அன்னமாச்சார்யாவும் மறக்கப் பட்டவரானார். தெலுங்கு வித்துவ உலகம் எளிமைத் தன்மை வாய்ந்த அன்னமாச்சார்யாவின் பாடல்களைப் பாமரத்தன மானவையாகக் கருதினமை அதற்கு முக்கிய காரணமா யிருக்கலாம் என்று கருதப்படுகின்றது. திருப்பதியில் அவர் பாடல்கள் அடங்கிய செப்பேடுகள் கூட மறக்கப்பட்ட நிலையில் முன்னூறு ஆண்டுகள் கழித்து 19ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலேயே இங்கிலாந்தைச் சேர்ந்த அரச ஊழியர் எடுத்துக்கொண்ட அக்கறையினாலேயே அச்செப்பேடுகள் மீண்டும் கவனிக்கப்படலாயின.
திருப்பதி தேவஸ்தானம் அச்செப்பேடுகளைத் தனது உடைமையாக்கி பிரதிபண்ணி பல புத்தகங்களாக வெளியிடு வதற்கு நூறு ஆண்டுகள் பிடித்தனவாம். பாடல்களைப் பதிக்கும்போது வரிசையாக எண்ணிக்கையிடப்பட்டிருந்த செப்பேடுகளிற் பல காணாமற் போயிருந்தமையும் அறியப்பட்டது. இறுதியில் 14,358 பாடல்களே எஞ்சின. 19 ஆம் நூற்றாண்டில் அவற்றின் பாதுகாப்புப் பொறுப்பை ஒரு நிறுவனத்திடமிருந்து மற்றோர் நிறுவனத்துக்கு மாற்றியதாலும் பல பாடல்கள் தொலைந்திருக்கக்கூடும் என உணரப்படுகின்றது.
அன்னமாச்சார்யாவால் ஆக்கப்பட்ட பாடல்கள் பல்லவி, சரணம் என்னும் இரண்டு உறுப்புக்களைக் கொண்டது. அருமையாகச் சில பாடல்கள் அனுபல்லவி என்ற மூன்றாவது உறுப்பையும் கொண்டுள்ளன. அன்னமாச்சார்யா, தன் காலத்திலும் அதற்கு முன்பும் தெலுங்கில் செல்வாக்கோடு நிலவிய சிக்கல் நிறைந்த வடமொழி இலக்கிய மரபைக் கைவிட்டு உள்நாட்டு மரபை அனுசரித்து, பேச்சுமொழியை ஒட்டிய நடையிலே பக்திப் பாடல்களை இயற்றினார். அவற்றின் இசையைக் கூட உள்நாட்டு மெட்டுக்களின் அடிப்படையிலேயே
அமைத்துக் கொண்டார்.
அன்னமாச்சார்யாவின் பாடல்களை அவற்றிற் கையாளப்படும் உத்தியை அல்லது பொருளை அடிப்படையாகக் கொண்டு இருபெரும் பிரிவுகளாக வகுக்கலாம். அவற்றுள் ஒரு பிரிவு பக்தியை காதலூடாகக் கூறும் பாடல்கள். அவை தமிழின் அகத்திணை மரபுப் பக்திப் பாடல்களை ஒத்தன. சங்கீத பரிபாஷையில் இத்தகைய சாஹித்தியங்களைப் பதம் என்பர். தெலுங்கைப் பொறுத்தவரையில் இத்தகைய பாடல்களை முதன்முதலிற் பாடியவர் அன்னமாச்சார்யாவே. ஆகையால் அவரை பதகவிதப் பிதாமஹ' என்று அழைப்பர்.
இரண்டாவது பிரிவுப் பாடல்கள் பக்தியை நேரடியாகப் பாடும் பாடல்கள். அவற்றை அத்யாத்ம கீர்த்தனலு என அழைப்பர்.
170

அன்னமாச்சார்யா சங்கீத உலகுக்கு இலக்கண நூலொன்றையும் படைத்தளித்தமை குறிப்பிடத்தக்கது. ஸங்கீர்த்தன லக்ஷணம்' என்ற நூல் அவரால் வடமொழியில் ஆக்கப்பட்டது. - (க.இர.)
அனந்த சுப்பையர், க.
பத்தொன்பதாம் நூற்றாண்டில் யாழ்ப்பாணம் வண்ணார் பண்ணையில் வாழ்ந்தவர்; பிராமண முதலியார் எனவும், கொச்சிக்கணேசையர் எனவும் அழைக்கப்பெற்ற ஆதிநாராயண கணேசையர் என்பவரின் மரபினர்; பெளத்திரன் வண்ணை பாரத்துவாசி ஆ. சண்முகரத்தினையர் ( - 1921).
வண்ணைநகர் தையல்நாயகி கலிவெண்பா, திருவூஞ்சல், பூணி முத்துக்குமாரசுவாமி திருவூஞ்சல் முதலிய பிரபந்தங்களைப் பாடியவர்; பதங்கள், கீர்த்தனங்கள் பல இசைத்தவர்; யாழ்ப்பாணம் வண்ணை வைத்தீஸ்வரசுவாமி கோயில் சந்நிதானத்தில் மார்கழி மாதத் திருவாதிரையிலே ஒதப்படும் திருவூடலைக் கோவை செய்தவர்; அது ஆ. சண்முகரத்தினையரால் 1911 இலும் ச. அம்பிகை பாகனால் 1972 இலும் வெளியிடப் பெற்றுள்ளது. (பொ.யூ.)
அருந்த விரதம்
இவ்விரதம் விஷ்ணு மூர்த்தியைக் குறித்து அநுட்டிக்கப் பெறுவது. இதனை அநந்த பத்மநாப விரதம் என்றும் அழைப்பர்.
அநந்த பத்மநாப மூர்த்தியான பூரீமந் நாராயணனை வழிபட்டு, வறுமை நீங்கி, செல்வம் பெறுவதற்காக இவ்விரதம் கைக்கொள்ளப்படுகின்றது. இதனைப் பாண்டவர்கள் வனவாசத்தின் பொழுது பூரீ கிருஷ்ண பரமாத்மாவிடம் உபதேசம் பெற்று அநுட்டித்தனர். கெளண்டின்யர் போன்ற முனியுங்கவரும் இவ்விரதத்தைக் கைக்கொண்டு பெரும் பேறு பெற்றனர்.
புரட்டாசி மாதம் வளர்பிறை சதுர்தசியன்று பூஜை முதலியனவற்றை நதிக்கரையில் மேற்கொள்வர். விரதத்திற்குரிய இடத்தைத் தூய்மை செய்து, கலசத்தை அமைப்பர். மஹா விஷ்ணுவே அனந்த (பாம்பு) வடிவத்தில் இப்பூமியைத் தாங்குவதைக் குறிப்பதற்கு தர்ப்பையை ஐந்து முடிச்சுக்களிட்டு அனந்தனாகப் பாவித்து, அதனைக் கலசத்தின் மீது வைத்து விஷ்ணு மூர்த்தியை ஆவாகனம் செய்து பூஜிப்பர். பதினான்கு முடிச்சுக்களுடன் கொண்ட காப்பு நாணைக் குங்குமத்தில் நனைத்து விரத முடிவில் இஷ்டசித்தியை வேண்டி வலதுகரத்திற்
கட்டிக் கொள்வர்.
இவ்விரதத்தினை பதினான்கு ஆண்டுகள் கைக்கொள்ள வேண்டும் என்பது நியதியாகும். (வ. வை.)
இந்துக் கலைக்களஞ்சியம்

Page 217
அனந்தாழ்வான்
முநீ இராமாநுசரின் சீடர்; வைணவர்களின் 74 சிம்மாசநாதிபதிகளில் ஒருவர்; திருவேங்கடத்தில் ஏரிவெட்டி, நந்தவனம் அமைத்துப் புஷ்பகைங்கரியம் செய்தவர்; திருவாய் மொழிக்குத் தனியன் பாடியவர். (பொ. பூ.)
அனலைதீவு
ஈழ நாட்டின் வடதிசையிலுள்ள யாழ்ப்பாணக் குடா நாட்டின்
மேற்றிசையிலுள்ள தீவுகளில் அனலைதீவு ஒன்றாகும்.
இத்தீவிலே பல திருக் கோயில்கள் அமைந்துள்ளன.
துறைமுகத்தில் பூரீ கெளரியம்மாள் கோயில் வருவோரை வாழ்த்தி வரவேற்கின்றது. போர்த்துக்கேயர் சிதைத்த கோயில்களில் ஒன்றாகக் கருதப்படும் இத்திருக்கோயிலிலே நித்திய பூசையும் விசேட பூசைகளும் இன்று ஒழுங்காக நடைபெற்று வருகின்றன.
ஒல்லாந்தர் காலத்திற்கு முற்பட்டதாகக் கருதப்படும் புளியந்தீவு பூரீ நாகேஸ்வரன் கோயில் நயினை நாகம்மாள். கோயிலுடன் தொடர்புடையதாகக் கருதப்படுவதாகும். இவ்வாலயத்திலிருந்து நாகம் நாகம்மாளுக்குப் பூக்கொண்டு சென்றதாக ஐதீகமுண்டு. இங்கு எழுந்தருளியுள்ள இறைவனுக்கு நாகேஸ்வரன் என்பது திருநாமம். சந்திரசேகரர், நடேசர், சோமாஸ்கந்தர், சிவகாமியம்பாள், பிள்ளையார், வைரவர், சனீஸ்வரர் பரிவார தெய்வங்களாக எழுந்தருளியுள்ளனர். நித்திய பூசைகளும் விசேட பூசைகளும் நடைபெறுகின்றன.
அரசன்புலம் பூரீ சங்கரநாதர் கணபதிப்பிள்ளையார் கோயில் வருடாந்த மகோற்சவம் ஆனி உத்தரத்தன்று தீர்த்தோற்சவம் நடக்கும் முறையில் பத்து நாள் நடைபெறும். பிள்ளையாருக்கு நித்தியபூசை ஒழுங்காக நடக்கும் இத்திருக்கோயிலிற் பிள்ளையார்கதை சிறப்பாகப் படிக்கப்பட்டு வருகின்றது.
ஆறாம் வட்டாரத்தில் அமைந்த பூரீ சங்கரநாதர் முருகமூர்த்தி கோயிலில் முருகப் பெருமானோடு பிள்ளையார், முத்துக்குமார சுவாமி, தண்டாயுதபாணி, வைரவர் ஆகிய மூர்த்திகளுமுளர். நித்திய பூசை ஒழுங்காக நடைபெறும் இத்திருக்கோயிலிலே கந்தசஷ்டி விழா சிறப்பாக நடைபெறும்.
இவ்வட்டாரத்தில் பூரீ எழுமங்கை நாச்சிமார் அம்பாள் கோயில்’ எனும் திருக்கோயில் கேதார கெளரி விரதத்திற்கு பேர் பெற்றது. தான்தோன்றி மூர்த்தியான அம்பாளுக்கு மனோண்மணி அம்பாள் என்றும் பேர். நவராத்திரியின் போது அலங்கார உற்சவம் நடைபெறும். நித்திய பூசை கிரமமாக நடைபெறுகின்றது.
இந்துக் கலைக்களஞ்சியம்

நான்காம் வட்டாரத்தில் "பூரீ இராஜராஜேஸ்வரி அம்பாள் கோயில்’ அமைந்துள்ளது. தான் தோன்றி மூர்த்தியான அம்பாளுக்கு நித்திய பூசையும் புரட்டாதி மாதத்தில் மகோற்சவமும் நடை பெறுகின்றன.
இரண்டாம் வட்டாரத்திலே “றுீபத்திரகாளியம்மன் கோயில்” எனும் திருக்கோயில் அண்மையில் அமைக்கப்பட்டது. நித்திய பூசையும் விசேட பூசைகளும் ஒழுங்காக நடைபெறுகின்றன.
ஐந்தாம் வட்டாரத்திலுள்ள ஐயனார் கோயிலில் ஆடிப்பூரத்தில் கொடியேறி ஆடிப்பெளர்ணமியில் தேர், தீர்த்தோற்சவம் நடைபெறும். நித்திய பூசையும் ஒழுங்காக நடைபெறுகின்றது. அராலி முத்துக்குமாரப் புலவர் அனலைதீவு ஐயனார் குறவஞ்சி பாடியுள்ளார். (பொ.யூ.)
அனவரத விநாயகம்பிள்ளை, சு. (1877 - 1940)
தமிழ்நாடு திருநெல்வேலியிற் பிறந்தவர்; எம். ஏ. எல். ரி. பட்டங்கள் பெற்றவர்; சென்னை கிறித்தவ கல்லூரித் தமிழாசிரியராகவும், தமிழ் லெக்சிகன் பிரதம ஆசிரியராகவும் (1922 - 1923) இலங்கைப் பல்கலைக்கழகக் கல்லூரி தமிழ் விரிவுரையாளராகவும் பணி செய்தவர்.
சைவசித்தாந்த வரலாறு, தமிழ்ப் பெரு மக்கள் வரலாறு எழுதியவர்: சைவசித்தாந்த மகாசமாஜம் 1934 இலே பதிப்பித்த சைவசித்தாந்த சாத்திரம் பதினான்கின் மூலமும் உரையும் எனும் பிரசுரத்தினைப் பார்வையிட்டவர்; ஒழிவிலொடுக்கம் உரை, கல்வளையந்தாதியுரை, சிவநெறிப் பிரகாசமுரை (1936), சிவானந்த மாலை (1910), துகளறு போதக்கட்டளை (1935) என்பனவற்றைப் பதிப்பித்தவர்; வேறு நூல்களை எழுதியும் பதிப்பித்தும் வெளியிட்டவர். (பொ.பூ.)
அனாவர்த்தம்
குடமுழுக்கு, குடநன்னீராட்டு விழா, கும்பாபிஷேகம், பிரதிஷ்டை என்பன ஒரு பொருட் கிளவிகள். ஆலயத்தில் நிறுவப்படும் மூர்த்தியில் எழுந்தருளி அல்லது நிறுவப் பெற்றிருந்த மூர்த்தியில் சாந்நித்தியம் மிகுந்து உயிர்களுக்கு அருள்புரியும்படி பிரார்த்தித்து அபிஷேகஞ் செய்தலே குடமுழுக்கு எனும் பிரதிஷ்டைக் கிரியையாகும்.
குடமுழுக்குச் சில காரணங்களின் அடிப்படையில் நான்காகப் பிரிக்கப்பட்டுள்ளது. அவை ஆவர்த்தம், அனா வர்த்தம், புனராவர்த்தம், அந்தரிதம் எனப்படும்.
171

Page 218
நீண்டகாலமாகப் பூசை சரிவரச் செய்யப்படாததனாலும், மந்திரக் குறைவு சிரத்தைக் குறைவு போன்றவற்றினாலும் சாந்நித்தியம் குறைந்துள்ள கோயில்களையும், காடுபடர்ந்தும், சிதைந்தும், மண்மூடியும், தீயினால் சேதமாகியும் பெருமழை புயல் பூகம்பம் இவற்றினால் இடிபாடுகள் ஏற்பட்டுமுள்ள பழைய கோயில்களையும் புதிதாக நிர்மாணம் செய்து அதே மூர்த்திகளுக்குச் செய்யும் குடமுழுக்கு விழா அனாவர்த்தம்.
கர்ப்பக்கிரகம், விமானம், பிரகாரம், கோபுரம், பலிபீடம் முதலியவைகளில் பழுது ஏற்பட்டாலும், அட்டபந்தனத்தில் பழுது உண்டானாலும், விமானத்திலுள்ள விக்கிரகங்களில் பழுது நிகழ்ந்தாலும், வர்ணம் அழிந்து இருந்தாலும் பாலாலயம் செய்து ஆலயத்தைப் புதிப்பித்து மூலத்தானத்தில் பிரதிட்டை செய்து குடமுழுக்குச் செய்வது புனராவர்த்தம் எனப்படும்.
ஆலயத்தில் மரணம் உண்டானாலும் ஆசௌசமுள்ளவர்கள், ஆசாரக் குறைவானவர்கள் பிரவேசித்தாலும், நாய், கழுதை, பன்றி, குரங்கு முதலிய விலங்குகள் நுழைந்து விட்டாலும் செய்யப்படும் தோஷ நிவர்த்தியாம் சாந்தி, அந்தரிதப் பிரதிட்டை எனப்படும்.
ஆவர்த்தம் புதிய கோயில் அமைப்புடன் தொடர்புடைய குடமுழுக்காகும். (பொ.யூ.)
அனுமன் (அநுமான்)
வைணவ தெய்வங்களின் பட்டியலிலே அனுமன் சிறப்பான இடத்தைப் பெறுகின்றான். திருமாலுக்கு எப்போதும் அடிமை செய்யும் கருடன் பெரிய திருவடி என அழைக்கப் பெறுவது போல் இராம அவதாரத்தில் திருமாலுக்கு தொண்டு செய்த அனுமன் சிறிய திருவடி என்று அழைக்கப் பெறுவது மரபு. இராமாயண காவியத்தில் இன்றியமையாத கதை மாந்தருள் ஒருவர்.
திரேதாயுகத்தில் குஞ்சரன் என்பவன் வெகு காலமாக மக்கட் பேறின்றி வருந்தினான். அக் குறை நீங்கச் சிவபெருமானைக் குறித்துத் தவமிருந்தான். கைலாசநாதர் பக்தன் மீது கருணை கொண்டு அவன் முன் தோன்றி, "உனக்கொரு பெண் பிறப்பாள். அப் பெண்ணுக்கு நீ வேண்டியபடி மைந்தன் பிறப்பான்’ என்றருளி மறைந்தார். அஞ்சனை பிறந்தாள். அவள் கேசரி என்னும் வாணர வீரனை மணந்தாள். தருமதேவதை குறத்தி உருவில் அவனிடம் வந்து வேங்கட மலைக்குச் சென்று பரந்தாமனைக் குறித்துத் தியானம் செய். அவன் அருளால் விண்ணவரும் போற்றும் பிள்ளை உனக்குப் பிறப்பான். அவனால் உன் குலம் விளங்கும், நீயும் புகழ் பெறுவாய் எனக் கூறியது.
அஞ்சனை கணவனை வணங்கி ஆசிபெற்று திருமலை புறப்பட்டாள். ஆகாய கங்கையில் நீராடி அதன் கரையில்
172
 

ஜம்புலன்களையும் அடக்கித் தவம் புரிந்தாள். அஞ்சனா தேவியின் கடும் விரதங்கண்ட வாயு பெருவியப்பு அடைந்தான். காற்றே உணவாகக் கொண்டு பகவத் தியானத்தில் ஈடுபட்டுள்ள அவளுக்குத் தன்னாலான உதவி செய்ய விழைந்தான். மரங்களிலிருந்து நன்கு கனிந்த பழமொன்றைத் தினமும் கொண்டுவந்து அஞ்சனையின் கரங்களில் போட்டு வந்தான். அஞ்சனை அதனை இறைவனின் அருளாக எண்ணி மகிழ்ந்து தினமும் உண்டு வந்தாள். ஈசனுடைய கருணையால் அவன் கருவே அவள் வயிற்றில் வளர்ந்தது. நாட்கள் கழிய அஞ்சனையும் அழகிய ஆண்மகவொன்றுக்குத் தாயானாள். அக் குழந்தையும் வாணர வடிவிலேயே இருந்தது. அஞ்சனாதேவியின் மைந்தன் என்ற பொருள்பட ஆஞ்சநேயன் எனப் பெயரிட்டு வளர்த்தனர்.
சிவன் அம்சமாக கருதப்பெறும் அனுமன் அஞ்சனைக்கு நேயமகன் என்பதாலும் சீதை சிறையுற்ற இடத்தை ஆய்ந்த நேயன் என்பதாலும் ஆஞ்சநேயன் என்று அழைக்கப் பெற்றான். பிறந்தவுடனேயே இளஞ் சூரியனைப் பிடிக்கப் பாய்ந்தபோது இந்திரன் வச்சிராயுதத்தால் கன்னத்தில் அடிபட்டவன். இதனால் வந்த பெயரே அனுமான். அனு - கன்னம்; மான் - சிறப்புடையவன்.
அனுமான் உடல் வலிமை, கல்வி, அமைதி ஆகிய பண்புகளுக்கு உருவமாக வடிக்கப் பெற்றவன். பரம்பொருள் என்றும் பரமபதம் என்றும் போற்றப் பெறுபவன். இவன் காலை முதல் மாலை வரை சூரியனை நோக்கியபடி இருந்தே நவ வியாகரணம் முதல் எல்லா நூல்களையும் கற்றான். வாய்மையுடையோன். மாதரைக் கனவிலும் கருதாதவன். நித்திய பிரமசாரி எனப் போற்றி வழிபடப் பெறுபவன். ஈண்டிய கொற்றத்து இந்திரன் முதல் யாரும் பின்பற்றும் ஒழுக்கம்
உடையவன்.
அனுமனை வணங்குவோர் அறிவும் திறனும் உடல் வலுவும் பெறுவர் என்ற நம்பிக்கை நிலவுகின்றது. இந் நம்பிக்கை பற்றியே மகா பாரதத்திலே பீமன் அனுமனைச் சந்தித்து இராமாயணம் கூறி வாழ்த்துப் பெற்றான் என்பது கூறப்பட்டுள்ளது. சாவா மூவாத் தன்மை கொண்ட சிரஞ்சீவிப் பதம் பெற்ற எழுவருள் அனுமன் ஒருவன். மற்றையோர் அசுவத்தாமா, மாபலி, வியாசர், வீடணன், குருபன், பரசுராமன் ஆகியோராவர்.
மகாபாரதத்திலும் அக்கினி புராணத்திலும் அனுமன் பற்றிய செய்திகள் காணப்படினும் இராமாயணத்திலேயே அனுமான் பற்றிய வரலாறு விரிவாக இடம்பெறுகின்றது. இராமாயணத்திலே இராம பக்தனாக அனுமான் சித்தரிக்கப்படுகின்றான். இராமனின் புகழுக்கும் காரண மானவன். இராமனையே பரம்பொருளாகக் கொண்டு இராம சேவையையே தன் இலட்சியமாகக் கொண்டவன்.
இந்துக் கலைக்களஞ்சியம்

Page 219
ஆஞ்சநேயனை வடைமாலை சாத்துதல், வெற்றிலை மாலை சாத்துதல், வெண்ணெய் இடுதல், குங்குமப் பொட்டு இடுதல் மூலம் வழிபாடு நடத்துவர்.நினைத்த காரியம் நிறைவடை வதற்காக வாலில் குங்குமப்பொட்டு வைத்து வழிபடுவர். இவ்வாறு விரதம் அனுஷ்டிக்கும்பொழுது வாலின் ஆரம்பத்தில் இருந்து வால் முடியும் வரை (நுனி) வரை குங்குமப்பொட்டு இட்டு வழிபடுதல் முறை. வால் முனையில் பொட்டு பூர்த்தியடைகின்ற சுபதினத்தில் வடை மாலை சாத்தி, உப்பில்லாத் திருவமுது நிவேதித்தல் வேண்டும். காரியம் சித்தியாகும் வரை இவ்வண்ணம் செய்தல் வேண்டும்.
அருள் வடிவமாக எழுந்தருளும் ஆஞ்சநேயர் பல்வகை நிலைகளில் திருக்கோயில்களில் எழுந்தருளியுள்ளார். கூப்பிய திருக்கரங்களுடன் ஆஜானுபாகுவாக நின்ற திருக் கோலத்துடனும், கூப்பிய கரத்துடனும் சஞ்சீவி மலையைத் தூக்கிவரும் நிலையிலும், சதுர்புஜ ஆஞ்சநேயராகவும், பக்த ஆஞ்சநேயராகவும், வீர ஆஞ்சநேயராகவும் காட்சி தருகின்றார். இவ் நிலைகளிலே பஞ்சமுக தோற்றம் சிறப்புடையதாகும். பஞ்சமுக அனுமார் ஐந்து முகங்களையும் பதினைந்து கண்களையும் தெற்றுப் பற்களோடு கூடிய அச்சந்தரும் தோற்றமும் வராகர், கருடர், ஆஞ்சநேயர், நரசிம்மர், ஹயக்ரீவர் என்ற ஐந்து முகங்களோடும் பத்துக் கரங்களோடும் காட்சியளிக்கின்றார். அரக்கர்களை வதைத்துப் பிரமனுக்கு வேதங்களை மீட்டுக் கொடுத்த ஹயக்ரீவருடைய முகம், பக்தர்களுடய அஞ்ஞானம் அகற்றி ஞானம் அளிக்க வல்லது. நரசிம்ம முகம் பக்தர்களை பூத பிரேத பிசாசுகளை அகற்றும் சம்ஹார திருமுகமாகும், பாம்பின் கொடிய நஞ்சு போன்றவற்றிலிருந்து காக்க வல்லது கருடாழ்வார் முகமாகவும் நோய் நொடியிலிருந்து மக்களை காக்கும் முகமாகவும் பக்தர்களை பகைவர்களிடமிருந்து காக்கும் முகமாகவும் ஆஞ்சநேயர் திருமுகம் அமைகின்றது.
தமிழ்நாட்டு விஷ்ணு கோயில்களிலே பொதுவாக ஆஞ்சநேயர் திருமேனி எழுந்தருளப் பெற்றிருத்தல் காணத்தக்கது. குருந்தமலை, குரக்குக்கா, சண்பகாரண்யம், சிவன்மலை, சுசீந்திரம், குடந்தை, காஞ்சிபுரம், திருவல்லிக் கேணி, திருக்கரம்பனூர், திருக்கண்ணங்குடி, திருச்சிராப்பள்ளி, திருநாராயணபுரம், நைனா மலை, பட்டீசுவரம், இராமேஸ்வரம், மணிமங்கலம், பூரீ வைகுண்டம் ஆகிய இடங்களில் ஆஞ்சநேயர் திருமேனியைக் காணலாம். மைசூர், மங்களூர், முல்பாகல், வேலூர் கேசவப் பெருமாள் கோயில் போன்ற இடங்களிலும் ஆஞ்சநேயருக்குச் சந்நிதிகள் உள்ளன.
அனுமன் வழிபாடு தொடர்பாகப் பல்வேறு விதமான கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன. அனுமன் வழிபாடு இந்து மதத்தின் புராதனமான ஒன்று அன்று. வைணவ சமய வளர்ச்சியின் ஒரு நிலையாக இடைக்காலத்தில் தோன்றியது என்றும் இராமாயணத்திற்கு முன்னால் இராமகாதை
இந்துக்கலைக்களஞ்சியம்

கூறுவதாக அமைந்த தசரத ஜாதகக் கதைகளில் இராவணன் சீதையை தூக்கிச் சென்ற நிகழ்ச்சியோ, இராம இராவண யுத்தமோ இல்லையென்பதுடன் அனுமன் பற்றிய குறிப்பும் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. அனுமன் கடல் கடந்ததும் இமயம் சென்று மருந்து கொண்டு வருதலும் பிற் சேர்க்கையே. ஆயினும் காவியங்களில் இடம்பெறும் பாத்திரங்களின் பெயரை விளக்க எழுந்த கதைகள் அவர்கள் தனிப்பண்புகளை விவரிக்கும் நிலையில் பிற்காலத்திற் புகுத்தப்பட்டன. இவ்வாறு தோன்றியவை அனுமனின் ஆற்றலை விளக்கும் செயற்கரிய செயல்கள், படிப்படியாக இராமாயணத்தில் இன்றியமையாத பாத்திரமாக மாறிய அனுமன் தன் சிறப்பால் வைணவர்களின்
மனதில் தெய்வமாகக் கொள்ளப்பட்டான்.
இடைக் காலத்தில் வைணவ சமயம் வீழ்ச்சியடைந்தபோது அதன் எழுச்சிக்கு வைணவ ஆச்சாரியர்கள் அனுமன் வழிபாட்டைப் புகுத்தினர் என்பர். திடீரென்று அனுமனை மக்கள் தெய்வமாக ஏற்றுக் கொண்டனர் என்ற கருத்து ஏற்புடையது அன்று. அடியவர்களை வழிபாட்டுக்குரியவர்களாக ஆக்குவது இந்து மரபு. எனினும் இன்று அனுமன் பெற்றுள்ள உயர்ந்த நிலையை வேறு எந்த அடியவரும் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இராமபிரான் வைணவர்களின் முதன்மைத் தெய்வம். இத் தெய்வத்தின் அருளைப் பெறவேண்டுமாயின் ஆஞ்சநேயனின் அருளைப் பெற வேண்டும் என்று தோற்றுவிக்கப்பட்ட கருத்து அனுமன் வழிபாடு மிக விரைவாக பரவவும் நிலைத்து நிற்பதற்கும் காரணமாயிற்று. இன்று இந்து மதத்தில் அனுமன் வழிபாடு முக்கியம் பெற்றுள்ளது.
14ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த இராமானந்தரும் அவரது சீடர்களும் அனுமனை வழிபட்டுள்ளனர். இவர் வழிபாட்டை பூரீமத்வரும், பூரீ வியாசரும் பரப்பினர். ஆஞ்சநேயரை வழிபடின் மக்கட்பேறு, புகழ், கல்வி, செல்வம் போன்றன பெறலாம்.
அநுமன் பற்றிய குறிப்புக்கள் இராமாயணம் தவிர்ந்த பிற இலக்கியங்களிலும் பரவிக் காணப்படுவதைக் காணலாம். சிலப்பதிகாரத்தில் "உரக்குரங்கு உயர்த்த ஒண்சிலை உரவோன்' என்ற குறிப்பு உள்ளது.
இங்கு உரக்குரங்கு எனக் குறிப்பிடப்படுவது
அனுமனையே. ஆழ்வார்களும் அனுமனைப் பாடியுள்ளனர்.
காருடை நஞ்சுண்டு காத்து அருள் செய்த எம் சீருடை சேடர் வாழ் திரு உசாத்தானமே
(திருமுறை 3 பக் 33)
முருகன் மீது பாமாலை பாடிப் புகழ்பெற்ற அருணகிரிநாதர் தம் திருப்புகழில் அனுமனைப் பற்றியும் பாடியுள்ளார்.
173

Page 220
கருதி இருபது கரம் முழ ஒருபது கனக மவுலி கொள் புரிசை செய் பழையது கடிய வியன்நகர் புக அற கணபதி கனல் மூழ்கக் கவச அனுமனோடு எழுபது கவி விழ அணையில் அலை ஏறி எதிர் அமர் பொருத்தி
களரிதனில் ஒரு கனை விடும் அடல் அரிமருகோனே
என்று இலங்கையை எரித்த செயலைப் பாடுகின்றார்.
இராகவன் பிள்ளைத் தமிழ் நூலாசிரியர், ஒரு காப்புச் செய்யுள்
பாடியுள்ளார். இராமன் அருள் பெற முதற்கண் திருவடியின் அருள்
பெற
வேண்டும் என்பது வழக்கு.
"ஒதமா கடலைக் கடந்து ஏறி
உயர்கொள் மாக்கடிகாவை இறுத்து
காதல் மாக்களும் சுற்றமும் கொன்று
கடி இலங்கை மலங்க எரித்து
தூது வந்ந குரங்கு'(நாலாயிரம் திரு மங்கை 1025)
பெரியாழ்வார் "முன்னோர் தூது வானரத்தின் வாயில்
மொழிந்தது” என்றும்
'திக்கு நிறை புகழாளன் தி வேள்விச் சென்ற நாள் மிக்க பெரும் சபைநடுவே வில் இறுத்தான் மோதிரம் கண்டு ஒக்குமால் அடையாளம் அனுமான் என்று உச்சி மேல் வைத்து உகந்தனனால் மலர்க்குழலாள் சீதையுமே”
(நாலாயிரம் பெரியாழ்வார் 310.9)
என்றும் பாடுகின்றார்.
திருஞானசம்பந்தர் தன்னுடைய தேவாரத்தில் அனுமன்
திருவுசாத்தனத்தில் இறைவனை வழிபட்டதாகப் பாடியுள்ளார்.
174
'நீரிடை துயின்றவன் தம்பி நீள் சாம்புவான் போருடைச் சுக்கிரீவன் அனுமான் தொழ (I:33:1)
"போர் கற்ற வச்சிரப்படை ஏந்து செங்கை புரந்தான் முதல் ஆகிய புத்தேள் குலம்பரவ நின்ற மாருதி பதம் போற்றி அஞ்சலி செங்குவாம் பேர் தந்த உலகினிய தருமமொடு தானமும் பிழைத்து மனு வேள்வியும் பீடுபெறு மாதவமும் மேலான வாய்மையும் பிறழாமல் ஓங்க அருள்வாய்! ஏர் தந்த சங்கமொடு திகிரி பரம்பனை காத்து எழிலி தவம் இஞ்சி புடை குழ் இசை மலி அயோத்திநகர்வரு இராமன் மீது இயம்பு செந்தமிழ் தழையவே"

அனுமன் வழிபாடு இலங்கையிலும் காணப்படுகின்றது. அனுமனுக்கு இலங்கையிலும் சந்நிதிகள் அமைக்கப்பட்டுள்ளன. இலங்கையில் ரம்பொடையில் அனுமனுக்கு கோயில் அமைக்கப்பட்டுள்ளது. (தே. ஹ.)
381JT 51-arib
தஞ்சை மாவட்டத்திலுள்ளது திருவாரூர் என்னும் திருத்தலம். இது சப்தவிடங்கத் தலங்களுள் ஒன்றாகும். இங்கு எழுந்தருளியுள்ள விடங்கருக்கு வீதிவிடங்கர் என்று பெயர் வீதி விடங்கராம் பூரீ செல்வ தியாகேசப் பெருமான் ஆடும் நடனத்திற்கு அஜபா நடனம் என்று பெயர்.
அஜபா என்பது ஜெபிக்கப்படாதது என்ற பொருளைத் தருவதாகும். மூச்சை வெளிவிடும்போது ஹம் என்றும் உள்ளிழுக்கும் போது சம் என்றும் எண்ணிச் செய்தல் அஜபா என்றும் கூறுவர். அப்பொழுது தோன்றுவது ஹம்ச என்பதாகும். இதற்கு நான் அவன் என்பது பொருளாம். ஆன்மா நான் சிவமாகிறேன் என்று தியானித்தலைச் சுட்டுகின்றது; இடைவிடா இத்தியானம் சிவமாம் தன்மையை ஆன்மாவுக்குக் கொடுக்கின்றது.
இத்தகைய சிறந்த நடனத்தைத் திருவாரூரிலே தியாகேசர் திருமாலின் இருதயக் கமலத்தில் வீற்றிருந்து ஆடுகிறார். திருமாலின் பிராணவாயுவின் இயக்கத்திற்கேற்ப தியாகேசர் மேலெழுந்தும் கீழ்த்தாழ்ந்தும் முன்னோடியும் பின்னோடியும் அங்கு ஆடுகின்றார்.
அசபையின் பொருளாகவும் அதனை இடமாகவும் கொண்டு தியாகர் அசைந்து ஆடுவதால் அவர் அஜபா நடேசப் பெருமான் என்றும் அழைக்கப்படுவர். (பொ.யூ)
அஷ்டப் பிரபந்தம்
நாலாயிரத் திவ்விய பிரபந்தம் தோன்றிய பின்னர் வைணவச் சார்பாக எழுந்த பிரபந்தத் தொகுதி அஷ்டப் பிரபந்தம். அதனுள் இடம்பெறும் பிரபந்தங்கள் ஒரு தொகுதியாக அஷ்டப் பிரபந்தம் என ஏடுகளிற் சேர்த்து எழுதப்பெறவில்லை. ஒவ்வொரு பிரபந்தமும் ஏட்டுப் பிரதிகளிலே தனித்தனியாகவே உள்ளன. பதிப்பாசிரியர்கள் தாம் அஷ்டப் பிரபந்தம் என்ற பெயரை வழங்கியிருக்கிறார்கள் என்று தோன்றுகின்றது. திரிசிரபுரம் கோவிந்தபிள்ளை என்பவரே அஷ்டப் பிரபந்தம் எனும் தொகுதியை முதன்முதலாக வெளியிட்டவர் என்று கருதுவர்.
அஷ்டப் பிரபந்தத்திலே திருவரங்கம் பற்றியவை திருவரங்கக் கலம்பகம், திருவரங்கத்துமாலை, திருவரங்கத்தந்தாதி, சீரங்கநாயகர் ஊசல் எனும் நான்காகும்; திருவேங்கடம் பற்றியவை திருவேங்கட மாலை,
இந்துக் கலைக்களஞ்சியம்

Page 221
திருவேங்கடத்தந்தாதி எனும் இரண்டு மாகும்; அழகர் கோயில் பற்றியது அழகர் அந்தாதி, எஞ்சிய நூற்றெட்டுத் திருப்பதியந்தாதி வைணவ திருப்பதிகள் நூற்றெட்டினையும் தொகுத்துப் பாடுவதாகும்.
அஷ்டப் பிரபந்தத்தில் இடம் பெறும் பிரபந்தங்கள் யாவற்றையும் ஒருவரே பாடினார் என்ற கருத்தினையே திரிசிரபுரம் கோவிந்தபிள்ளை, கல்குளம் குப்புசாமி முதலியார் போன்ற பதிப்பாசிரியர்கள் கொண்டிருந்தனர். அவர்கள் பிள்ளைப் பெருமாளையங்கார் எனும் மணவாளதாசர் பாடியனவாகக் கருதினர். தமிழ்ப் புலவர்கள் வரலாறு (பதினேழாம் நூற்றாண்டு) ஆசிரியர் ச. சோமசுந்தரதேசிகர் அஷ்டப் பிரபந்தத்தில் இடம்பெறும் பிரபந்தங்கள் நால்வருடைய ஆக்கங்கள் என நிறுவ முற்பட்டனர். அவர் கருத்துப்படி திருவரங்கக் கலம்பகம் பாடியவர் அழகிய மணவாளதாசர், திருவரங்கத்துமாலையும் அழகர் அந்தாதியும் பாடியவர் மங்கை மணவாளதாசர், சீரங்கநாயகர் ஊஞ்சல் பாடியவர் வெண்மணி பிள்ளைப்பெருமாள்; ஏனையவையை பாடியவர் வேறொரு
மணவாளதாசர்.
அஷ்டப் பிரபந்தம் கற்றவன் அரைப்பண்டிதன்' என்ற பழமொழியுண்டு. தமிழ் இலக்கியப் பயிற்சியிற் புகும் முதற் படியினராலும் புலவர்களாலும் இப்பிரபந்தத் தொகுதி போற்றிக் கற்கப்படுவது. இதன் பயிற்சி, தமிழ்ப்புலமைக்கு ஒர் அளவு கோலாகவும் கருதப்படுவது. அந்தாதிச் செய்யுள்களும் யமகம், திரிபு, சிலேடை முதலிய அணிகளும் இத்தொகுதியிற் பொதிந்துள்ளன.
ஆழ்வார்களின் அருளிச் செயல்களின் சாரமாகவும் ஆசாரியர்கள் அருளிய ரகஸ்யகிரந்தங்களின் சாரமாகவும் இப்பிரபந்தங்கள் வைணவராற் போற்றப்படுவன.
வை. மு. சடகோபராமாநுஜாசாரியர் (1871 - 1910) நூற்றெட்டுத் திருப்பதியந்தாதி, ஊசல் நீங்கலாக ஏனைய பிரபந்தங்களுக்குச் சிறந்த முறையில் உரை வழங்கியுள்ளார். வை. மு. கோபாலகிருஷ்ணமாசாரியரும் (1882 - 1956) அஷ்டப் பிரபந்தத்திற்கு உரை கண்டுள்ளார்.
சென்னை மர்ரே அண்டு கம்பெனியினர் 1957 இலே அஷ்டப் பிரபந்த மூலத்தினை நன்முறையிலே பதிப்பித்தனர். இப்பதிப்பிலே முன்னைய பதிப்புகள் போற்றாத பாடங்கள் பல மேற்கொள்ளப் பெற்றுள்ளன. (பொ.யூ.)
é96g 15pJa5JaxOrib
சங்கத மொழியிலே செய்யுணடையிலே நான்கு சிவாசாரியர்கள் இயற்றிய சிறு நூல்கள் எட்டு அஷ்ட
இந்துக் கலைக்களஞ்சியம்

பிரகரணம் எனப்படுவன. அவை தத்துவப் பிரகாசிகை, தத்துவ சங்கிரகம், தத்துவதிரய நிர்ணயம், ரத்தினதிரயம், போக காரிகை, நாதகாரிகை, மோக்ஷகாரிகை, பரமோக்ஷ நிரசகாரிகை என்பனவாம்.
இவற்றிலே தத்துவப் பிரகாசிகை போஜதேவர் இயற்றியது: ரத்தினத்திரயம் பூரீ கண்டர் இயற்றியது; ஏனையவற்றிலே ஐந்தினை இயற்றியவர் சத்யோஜோதி; எஞ்சியவொன்றின் ஆசிரியர் இராமகண்டர். (பொ.யூ.)
ċe965g1953, 1-qU TaxOT 1b
பண்டைக் காலத்திற் சூதர் எனும் இசைமரபினர் வட இந்தியாவில் இருந்தனர். அவர்கள் பழைய ஐதீகக் கதைகளைப் பாடுபவராக விளங்கினர். மக்கள் அதிகமாகக் கூடுகின்ற யாகம் ஆதியாம் நிகழ்ச்சிகளின்போது சூதர் ஐதீகக் கதைகளைச் சொல்லி, அவற்றின் மூலம் மக்களிடையே நல்லொழுக்கக் கோட்பாடுகளையும் சமய தத்துவங்களையும் அறிவுறுத்தினர். மேலும் அவர்கள் மன்னர் அவையிலும் இடம்பெற்று, அவர்களுடைய குலவரலாறுகளையும் பாடுபவர்களாக விளங்கினர்.
சூதர் மரபினர் வட இந்தியாவிலே தம் நிலையினை இழந்து மறைந்தபோது, அவர்கள் செய்த ஐதீகக் கதைகளைப் பாடும் பணியினைப் பெளராணிகர் திறமையாக மேற்கொண்டனர்.
சங்கத நூலார், புராணம் எனும் சொல் பழமையைக் குறிப்பதாகக் கொள்வர். எனவே புராணம் பழமையான ஐதீகக் கதையைக் கூறுவது என்பது அவர்கள் கருத்தாகும். வடமொழிப் புராணங்களின் மையமாக அமைவன ஐதீகமானவையும், சமய சம்பந்தமானவையுமாக இருப்பினும், அவை குப்தர் காலம் வரையிலான வட இந்திய வரலாற்றுச் செய்திகளைத் தருவதோடமையாது இந்திய அறிவின் களஞ்சியமாகவும் விளங்கும் தன்மையுள்ளன. இலக்கியம், இலக்கணம், நுண்கலைகள், வைத்தியம், அரசியல், கட்டடக்கலை, போர்க்கலை முதலிய பல்வேறு துறைகள் பற்றிய செய்திகள் புராணங்களில் இடம் பெறுகின்றன.
புராணம் "பஞ்ச லக்ஷணம்” என்பது அமரம் அவையாவன சர்க்கம், பிரதிசர்க்கம், வம்சம், மந்வந்தரம், வம்சாநுசரிதம் என்பனவாம். சர்க்கம் உலகத்தின் தோற்றத்தையும், பிரதிசர்க்கம் உயிர்த் தோற்றத்தையும் ஒடுக்கத்தையும் வம்சம் மன்னர் பரம்பரையையும், மந்வந்தரம் காலவரையறையினையும் மனுக்களது ஆட்சிக் காலங்களையும் வம்சாநுசரிதம் மன்னர் பரம்பரையோடு தொடர்புடைய கிளைக்கதைகளையும் குறிப்பன. சிலர் முற்கிளந்த ஐந்துடன் ஸ்திதி, ரக்ஷணம், சமுஸ்தை, ஏது, ஆசிரயம் என்பனவற்றையும் சேர்த்துப் புராணங்களின்
175

Page 222
இலக்கணம் பத்தென்பர். உலகத் தோற்றஒடுக்கம், தேவாசுர யுத்தங்கள், மன்னர் பரம்பரையின் எழுச்சி வீழ்ச்சி முதலிய விவரணங்கள் மூலம் புராணங்கள் இறைவனின் முழு முதல் தன்மையையும், அறநெறி, இறையன்பு ஆகியனவற்றின் மூலம் மக்கள் இறைவனை அடைதலே வாழ்க்கையின் இலட்சியம் என்பதையும் வற்புறுத்துவன.
பிராமணங்களும் உபநிடதங்களும் புராண இதிகாசங்களை வேதங்களோ டொத்த மதிப்புடையனவாகவும் தெய்வீகத் தோற்றமுடையனவாகவும் கருதுவன. புராணத்தை ஐந்தாம் வேதம் எனும் வழக்கும் கவனித்தற்குரியது. தரும சூத்திரங்கள் அறநெறியின் அறிவுக் களஞ்சியமாகப் புராணங்களைக் கூறுவன. வேதக்கல்வி புராணக்கல்வியாலே தொடரப்படுதல் வேண்டும் என்பது மரபு.
சைவருக்குரிய இருபத்துமூன்று சிறப்பிலக்கணங்களுள் ஒன்றாகச் சிவபுராணங்களைக் கேட்டல் உபதேச காண்டம் போன்ற நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. உபதேச காண்டம், பிரமோத்தர காண்டம் முதலியன சிவபுராணம் வாசித்தல், கேட்டல் முதலியன எவ்விதம் செய்யப்படல் வேண்டும் என்பதை விரித்துரைத்தல் ஈண்டு குறிப்பிடத்தக்கது.
கோமதி நதிக்கரையில் நைமிச வனத்தில் முனிவர்கள் பன்னிரு வருடம் செய்து வந்த யாகத்தின் இடைவேளைகளிற் புராணங்கள் யாவும் சொல்லப்பட்டன என்று கருதும் வகையிற் சங்கதத்தில் உள்ள பழைய புராணங்கள் அமைக்கப்பட்டுள்ளன. புராணங்கள் வியாச முனிவரால் வகுக்கப்பட்டன எனல் சங்கதமரபு வியாசர் எனும் சொல் வகுப்பவர் அல்லது ஒழுங்கு செய்பவர் என்ற பொருளைத் தருவதாகும்.
சங்கதத்தில் அஷ்டாதச புராணங்கள் என்று பதினெட்டு மகாபுராணங்கள் கூறப்படுவன. மகாபுராணங்களுக்கு இணைய பதினெண் உபபுராணங்கள் கூறும் மரபும் அங்கு உண்டு. இவற்றைவிட வேறு புராணங்களும் சங்கதத்திலுள்ளன. சங்கதத்திலே பின்னெழுந்த புராணங்களிலே தலமகிமை, அடியார் வரலாறு என்பனவும் முக்கிய கருவாகக் காணப்படுதல் குறிப்பிடத்தக்கது.
அஷ்டாதச புராணம் எனப்படும் பதினெண் மகா புராணங்களை விஷ்ணு புராணம், பிரமபுராணம், சிவபுராணம் என மூன்றாக வகுக்கும் மரபுண்டு. இம் மரபுப்படி முப்பிரிவில் இடம் பெறும் புராணங்கள் மேல்வருவன - (1) விஷ்ணு புராணங்கள்
1. விஷ்ணு புராணம்
பாகவத புராணம் நாரத புராணம் கருட புராணம் பத்ம புராணம்
வராக புராணம்
176

(II) பிரம புராணங்கள்
பிரம புராணம் (ஆதி புராணம்) பிரமாண்ட புராணம் பிரமவைவர்த்த புராணம் மார்க்கண்டேய புராணம்
பவிஷ்ய புராணம்
வாமன புராணம்
(II) சிவ புராணங்கள்
வாயு புராணம் இலிங்க புராணம் காந்த புராணம் அக்கினி புராணம்
மத்ஸ்ய புராணம்
கூர்ம புராணம்
இப்பதினெண் மகாபுராணங்களையும் அவற்றிற் சிறப்பிடம் பெறும் தெய்வத்தின் அடிப்படையில் ஐந்து பிரிவாகவும் வகுப்பர். அப்பிரிவுகள் மேல்வருமாறு :-
(1) விஷ்ணு
f விஷ்ணு புராணம் 2 பாகவத புராணம் 3. நாரதீய புராணம் 4. கருட புராணம்
(II) LîN U LID GõT
1. பத்ம புராணம் 2 பிரம புராணம் (ஆதிபுராணம்)
ஒ
6) I
60
(III)
வராக புராணம் Lýl/L0/T60óTL L//TIT600TLó மார்க்கண்டேய புராணம் பவிஷ்ய புராணம் வாமன புராணம் வாயு புராணம் இலிங்க புராணம் காந்த புராணம்
மத்ஸ்ய புராணம்
70.
கூர்ம புராணம்
(IV) சூரியன்
பிரம வைவர்த்த புராணம்
(v) அக் கினி
அக்கினி புராணம்
இந்துக் கலைக்களஞ்சியம்

Page 223
விஷ்ணு புராணத்தைச் சுப்பிராய ஐயர் தமிழிலே மொழிபெயர்த்துள்ளார். அவர் மொழி பெயர்ப்பு 1883,1904 ஆம் ஆண்டுகளில் இருமுறை வெளிவந்துள்ளது. பாகவத புராணத்தைத் தமிழிலே இருவர் மொழி பெயர்த்துப் பாடியுள்ளார். பதினாறாம் நூற்றாண்டில் வாழ்ந்த வேம்பத்தூர் செவ்வைச் சூடுவார் பாடிய பூணூரீமத் பாகவதபுராணம் கோமளபுரம் இராசகோபாலபிள்ளையால் 1881 ஆம் ஆண்டு பதிப்பிக்கப் பெற்றது. நெல்லிநகர் வரதராஜ ஐயங்கார் (அருளாளதாசர்) 1543 இலே இயற்றிய பூஞரீ மகாபாகவதம் இரு பிரிவுகளாக 1885, 1891 ஆம் ஆண்டுகளிற் பதிப்பிக்கப் பெற்றது. பத்தொன்பதாம் நூற்றாண்டில் புதுச்சேரியில் வாழ்ந்த வீ. குழந்தைவேலுக் கவிராயர் பாடிய மார்க்கண்டேய புராணம் திரிசிரபுரம் கோவிந்த பிள்ளையின் பொழிப்புரையுடன் 1871 இலே வெளிவந்தது. அதிவீரராம பாண்டியன் (1564 - 1604) பாடிய இலிங்கபுராணம் 1876 இலும் கூர்மபுராணம் 1877 இலும் அச்சிடப் பெற்றன. கச்சியப்ப சிவாசாரியரின் கந்தபுராணம் 1869 இலே யாழ்ப்பாணம் ஆறுமுகநாவலரால் வெளியிடப் பெற்றது. குகனேரியப்ப நாவலரின் உபதேச காண்டம் 1887 இலும் ஞானவரோதய பண்டாரத்தின் உபதேச காண்டம் 1950 இலும் வெளிவந்தன. இரசை வடமலையப்ப பிள்ளைபாடி 1706 இலே அரங்கேற்றிய மச்சபுராணம் 1900 இலே அச்சிடப்பட்டது.
பதினெண் உபபுராணப் பட்டியல் வேறுபடுவதாகக் காணப்படுகின்றது. இப் பட்டியலிலே மேல்வரும் புராணங்களைக் கூறுதல் மரபு :-
ஆதித்திய புராணம் உஸனஸ் புராணம் காபில புராணம் காளிகா புராணம் சனத்குமார புராணம் சாம்ப புராணம் சிவ புராணம் செளர புராணம் துர்வாச புராணம் தேவீ பாகவதம் நாரசிம்ம புராணம் நாரதீய புராணம் நீலமத புராணம் மாகேஸ்வர புராணம் மாணவ புராணம் வாசிஷ்ட புராணம் வாருண புராணம் விஷ்ணு தர்மோத்தர
புராணம் (பொ.யூ.)
©ລgນກg5 ຫລpahouນມີ
தென்கலை வைணவ ஆசாரியராக விளங்கிய பிள்ளை லோகாசாரியர் (1264 - 1369) மணிப்பிரவாள நடையிலே எழுதிய பதினெட்டு நூல்கள் அஷ்டாதச ரஹஸ்யம் என்ற தொகைப்
பெயரினைப் பெறுவன.
முடும்பையிலே வடக்குத் திருவீதிப்பிள்ளையின் புதல்வராக அவதரித்த பிள்ளை லோகாசார்யர் திருவரங்கத்திலே
இந்துக் கலைக்களஞ்சியம்
 

நம்பிள்ளையின் சீடராக அமைந்து லோகாசார்யபிள்ளை, உலகாசாரியர் எனச் சிறப்பிக்கப் பெற்றவர்; விளாஞ்சோலைப் பிள்ளை, திருவாய் மொழிப்பிள்ளை, மணவாளமுனிகள் போன்ற
சிறப்படைந்த சீடர்களின் குரு.
இரகஸ்ய கிரந்தங்களை சூத்திர நடையிலே மணிப் பிரவாளத்தில் எழுதிய முதல் ஆசாரியர் பிள்ளை லோகா
சாரியராவர்.
அஷ்டாதச ரஹஸ்யம் தொகுப்பில் இடம் பெறும் நூல்களாவன :
1
அர்ச்சிராதி 2. அர்த்த பஞ்சகம் 3. சம்சாரசாம்ராஜ்யம் 4. சார சங்கிரகம் 5. தத்துவ சேகரம் 6. தத்துவத்ரயம் 7. தனிச்சரமம் 8. தனித்வயம் 9. தனிப்ரணவம் 10. நவரத்தினமாலை 11. நவவித சம்பந்தம் 12. பரந்த நாடி 13. பிரபந்நபரித்ராணம் 14. பிரமே யசேகரம் 15. (peup3;. " 'ı Lu Lą 16. யாத்ருச்சிகப்படி 17. பூனியப் பதிப்படி 18. பூணீவசனபூஷணம்
இவற்றிலே பூனி வசனபூஷணம் ஆசாரியரின் தலைசிறந்த நூலாகக் கருதப்படுவதாகும். வைணவ தத்துவம் முழுவதையும் , 465 சூத்திரங்களில் பூgவசனபூஷணம் தெளிவாக எடுத் துரைக்கின்றது. விசிஷ்டாத்வைதத்தின் முக்கியமான கோட்பாடுகளுக்கிடையிலான தொடர்புகளை ஒழுங்கான அமைப்பு மூலம் துணிவதற்கு வகை செய்வதாக அமையும் சிறந்த நூல் அர்த்த பஞ்சகமாகும்.
இரகஸ்யந்திரயம் பற்றி ஆசாரியர் எழுதியவை சாரசங்கிரகம், தனிச்சரமம், தனித்வயம், தனிப்ரணவம், L_u U i5g5 Lu Lq-, மு மூ ஷ"ப்படி, யாத்ருச்சிகப்படி, பூனியப்பதிப்படி என்பனவாம்; தத்துவத்திரயம் பற்றியவை தத்துவசேகரமும் தத்துவத்திரயமுமாம்.
அர்ச்சிராதி பூமியிலிருந்து வைகுண்டத்திற்குச் செல்லும் ஆன்மாவின் பயணத்தை விவரிப்பதாகும். உலக போகங்களிலே மூழ்கி இறைவழியை நாடாது நிற்கும் மனிதன் கடைசியிலே ஆசாரியரின் உதவியுடன் இறைவனை அடைவதைக் கூறுவது சம்சார சாம்ராஜ்யம். சரணாகதியடையும் மனிதன் தெளிவாக உணர வேண்டிய ஒன்பது விடயங்களைக் கூறுவது நவரத்தினமாலை. இறைவனுடன் மனிதனுக்குரிய ஒன்பது வகையான தொடர்பினை விளக்குவது நவவிதசம்பந்தம்.
கடவுளிடம் முற்றாகச் சரணாகதியடையும் ஒருவருக்கு இருக்க
177

Page 224
வேண்டிய இரு அத்தியாவசியமான தகுதிகளை விளக்குவது பிரபந்ந பரித்ராணம். இம்மையிலும் மறுமையிலும் நடைபெறும் நல்ல காரியங்களுக்கு எல்லாம் இறையருளே அடிப்படை என்பதையும் இவ்வருளின் உதவியுடனே மனிதன் வைகுண்டம் அடைகிறான் என்பதையும் விளக்குவது
பிரமே யசேகரம். (பொ.யூ.)
66io61.DTLJT858uj Ta Tib
இது அஸ்மகிதை எனவும் வழங்கப்படும். இது சனகராசன் அஸ்மன் எனும் பெரும் ஞானியிடம் ஒருமுறை செல்வம் வரும்போதும் போகும் போதும் மனிதரிடம் ஏற்படும் மாறுதல்களைப் பற்றிக் கேட்டபோது அஸ்மரிஷி கூறிய தத்துவம். இதனைக் குரு கூேடித்திரப் போருக்குப் பின்பு வியாசர் தருமபுத்திரனுக்குக் கூறினார். இது மகாபாரதத்திலே சாந்தி பர்வத்தில் இருபத்தெட்டாம் அத்தியாயமாக இடம் பெறுவாதாகும். (பொ. யூ.)
96io6.j635T6gf
குஷாணர் காலத்துக் கவிஞர்களிற் பிரசித்தமானவர்
அஸ்வகோஷர். சமஸ்கிருத இலக்கிய வரலாற்றிலே குஷாணர் காலம் சிறப்புமிக்கவொரு காலம். அது கலாசாரப் பரிவர்த்தனைகளின் பயனாகப் பல புதிய மரபுகள் தோன்றிய காலம். கிரேக்க காலாசாரத்தின் செல்வாக்கு கணிசமான அளவிலே இந்தியாவின் வடமேற்குப் பகுதிகளில் ஏற்பட்டது. அதன் விளைவாக உருவ வழிபாடும் ஆலய வழிபாடும் இந்திய சமயங்களிலே தோன்றின. உருவ வழிபாடு பெளத்த சமயத்திலே முதன் முதலாகப் பரவியது. அதனால் காந்தாரக்கலை என்னும் சிற்பக்கலை மரபு தோன்றியது. சமஸ்கிருத மொழியில் நாடக இலக்கியம் வளர்ச்சி பெறுவற்கும் இயற்கை விஞ்ஞானம் பற்றிய சிந்தனைகள் முனைப்புப் பெறுவதற்கும் யவன கலாசாரத்தின்
செல்வாக்கு ஏதுவாகவிருந்தது.
குஷாணர் காலத்திலே பெளத்த சமயப் பிரிவுகளிடையே சார்வாஸ்திவாதம், மகாயானம் என்பன சிறப்புப் பெற்றன. அவ்விரு பிரிவினரும் சமஸ்கிருத மொழியை இலக்கிய மொழியாகக் கொண்டனர். பெளத்தப்பெரும் பள்ளிகளிலே சமஸ்கிருத மொழிக் கல்விக்குச் சிறப்பிடம் வழங்கப்பட்டது. பெளத்த மரபிலுள்ள பல உன்னதமான சமயநூல்களும் தத்துவநூல்களும் குஷாணர் காலத்தில் எழுதப்பட்டன. சங்கத்தாரும் உபாசகரும் சமஸ்கிருத இலக்கண இலக்கியங் களைக் கற்றனர். பாணினியின் இலக்கணத்தையும் மகா பாடியத்தையும் வான்மீகியாரின் ஆதி காவியத்தையும் பரதரின் கலா தத்துவத்தினையும் பாட்டியல் நூல்களையும் பெளத்தரும்
178

விரும்பிக் கற்றனர். அத்தகைய கல்விமுறையின் காரணமாக இலக்கிய மரபுகள் வளர்ச்சியுற்றதோடு ஒப்பியல் நோக்கும் வைதீகமான சிந்தனைகளின் செல்வாக்கும் பெளத்தரிடையே ஏற்பட்டன. அதன் பிரதிபலனாக மகாயான சிந்தனைகள்
அழுத்தம் பெற்றன.
பெளத்தநெறி தழுவிய கவிஞரில் அஸ்வகோஷர் தலை சிறந்தவர். மகா கவிகளின் வரிசையில் அவர் ஆதிகவியான வான்மீகியாருக்கு அடுத்தவர். நாடக ஆசிரியர்களில் அவர் பிறர் எல்லோருக்கும் முன்னோடியானவர். அவரது மகா காவியங்களான புத்த சரிதம், செளந்தரநந்த என்பவை வனப்புமிக்க நடையில் அமைந்த மகாகாவியங்களாகும். அவை
இலக்கிய நயமும் வசீகரத்தன்மையும் மிக்கவை.
புத்தசரிதம், 28 காண்டங்களைக் கொண்டிருந்ததென்று சீன யாத்திரிகரான ஈசிங் கூறுவார். ஆயினும் புத்தசரிதம் என்ற பெயருடன் வழங்கும் நூலில் 17 காண்டங்கள் மட்டுமே உள்ளன. அவற்றுள் முதற் பதின் மூன்று காண்டங்களே அஸ்வகோஷர் எழுதிய நூலின் பகுதிகளென்று கொள்ளப்படுகின்றன. ஏனையவற்றைப் பிற்காலத்தில் அமிர்தானந்தர் என்பவர் எழுதினார். இந்நூலிற் புத்தர்பிரானின் வாழ்க்கை வரலாறு பற்றி மரபுவழியாக வந்த கதைகள் காவியமாக இலக்கிய நயத்துடன் அமைக்கப்பட்டுள்ளன. சிலவிடங்களில் நூலாசிரியர் தனது கவிதா சக்தியினையும் கலையுணர்ச்சி யினையும் பிரதிபலிக்கும் வண்ணமாக உணர்ச்சிபூர்வமான அம்சங்களைப் புகுத்தியுள்ளார். இராமகாதையின் செல்வாக்கு புத்தசரிதத்திலே படிந்துள்ளது. இரு நூல்களின் கதைகளும் சில அம்சங்களில் ஒத்திருக்கின்றன. புத்தசரிதத்தின் பிரதான கதாபாத்திரங்களான சுத்தோதனரும் சுந்தரியும் தசரதனையும் சீதையையும் ម៉ាល பிரதானமான அம்சங்களில்
ஒத்திருக்கின்றனர்.
செளந்தரானந்த என்னும் நூல் கெளதம புத்தரிடம் தர்மோபதேசம் பெற்ற அவரது சகோதரரான நந்த பெளத்த சமயத்திற் சேர்ந்து கொண்டமையினைக் காவியப் பாங்கிலே பதினெட்டுக் காண்டங்களில் வர்ணிக்கின்றது. நந்த தனது மனைவியின் பேரழகில் அபிமானங் கொண்டவர். உலக வாழ்க்கையில் இன்பங் கண்டவர். அவர் தன் மனைவிமேற் கொண்டிருந்த காதலை மறக்கும்படி செய்வதற்கு அவருக்கு தேவலோகத்துக் கன்னியரின் இணையிலாத செளந்தரியம் பற்றியும் அவர்கள் அளிக்கவல்ல மிகுதியான இன்பங்கள் பற்றியும் அவருக்கு விளக்கப்பட்டன. அத்தகைய இன்பங்களும் நிலையற்றவை என்பதும் அவருக்கு உணர்த்தப்பட்டன.
ஞானோபதேசம் பெற்றதும் நிலையாமை பற்றிய தத்துவத்தைப்
இந்துக் கலைக்களஞ்சியம்

Page 225
புரிந்துகொண்ட நந்த, பிடகநெறியின் போதனைகளை ஒப்புக் கொண்டார். அஸ்வகோஷரின் சமயாபிமானமும் பிடகநெறி பற்றிய தெளிந்த ஞானமும் கவிதாசக்தியும் கலையுணர்ச்சியும் அவரது காவியங்களிலே அழுத்தம் பெற்றுள்ளன.
காவிய நூலாசிரியரான அஸ்வகோ ஷர் நாடக ஆசிரியர்களில் முதல்வராகவும் விளங்குகின்றார். மத்தியா சியாவிலே துர்பான் என்னும் இடத்திலே மூன்று நாடக நூல்களின் ஏட்டுச் சுவடிகள் கண்டெடுக்கப்பட்டன. அவற்றி லொன்று சாரிபுத்திர பிரகரண என்னும் நாடக நூல். அது ஒன்பது அங்கங்களைக் கொண்டது. இறுதியாகவுள்ள அங்கத்தின் பாயிரச் செய்யுளில் அஸ்வகோ ஷரின் பெயர் காணப்படுகின்றது. சமஸ்கிருத மொழியிலுள்ள நாடக நூல்களில் மிகப் பழையதான சாரி புத்திர பிரகரண சில சிறப்பம் சங்களைக் கொண்டுள்ளது. பரதநாட்டிய சாஸ்திரத்திலே சொல்லப்பட்ட விதிகளுக்கமைய அஸ்வகோஷர் பிரகரணத்தை அமைத்துள்ளார். நூலின் முடிவில் வரும் வாழ்த்துப்பாடல் கெளதம புத்தரின் அருள்வாக்காக அமைந்துள்ளது.
கெளடில்யர் போன்றோர் அரச நெறி பற்றிக் கூறிய கருத்துக்கள் அஸ்வகோஷரைப் பெரிதும் கவர்ந்தன. செளந்தரநந்த என்ற காவிய நூலில் முடியாட்சியின் இன்றியமையாத தேவையினை அவர் வலியுறுத்துகின்றார். அரசன் மக்களை நெறிப்படுத்துப வனாகவும் ஆதரிப்பவனாகவும் விளங்க வேண்டும் என்பது அவரின் கருத்தாகும். இலக்கணம், எழுத்தாற்றல், நாவன்மை, வாதத்திறன், வேதம், இலக்கியம், மருத்துவம், வானியல், யாகாதி கருமங்கள், இசை, பாட்டு, நடனம், கணக்கியல், சூது, சிற்பம், ஒவியம், நிமித்தகாரணம், சோதிடம், ஹஸ்திசாஸ்திரம், அஸ்வசாஸ்திரம், ஆயுதப் பயிற்சி, யுத்தவியல், உற்பத்தி பற்றிய அறிவியல் போன்ற துறைகளில் பயிற்சி பெற்றிருக்க வேண்டுமென்று அஸ்வகோஷர் எழுதியதாகக் கொள்ளப்படும் சூத்ராலங்கார என்னும் நூலிற் சொல்லப்படுகின்றது.
துர்பானிலிருந்து கிடைத்துள்ள மூன்று நாடக நூல்களின் ஏட்டுச் சுவடிகள் ஒரு தொகுதியாகி இருந்தமையால் அம் மூன்றையும் அஸ்வகோஷரே எழுதினார் என்று கொள்வர். ஆயினும், சாரி புத்திர பிரகரண தவிர்ந்த நூல்களை அஸ்வகோஷர் எழுதினார் என்று கொள்வதற்குத் தகுந்த ஆதாரங்கள் இல்லை. இரண்டாவது நூல் ஒர் உருவகக் கதையாகும். அதிலே கதாபாத்திரங்கள் புத்தி, கீர்த்தி, திருதி என்பனவாகும். சம்பாஷணைகள் சமஸ்கிருத மொழியில் அமைந்துள்ளன. மூன்றாவது நூலின் சில பாகங்கள் மட்டுமே கிடைத்துள்ளன. அதிலே கதாநாயகன், கணிகை, விதூஷகன், துஷ்டன், இராசகுமாரன், சாரிபுத்ர, மெளத்கல்யாயன என்போர் பாத்திரங்களாக வருகின்றனர்.
இந்துக் கலைக்களஞ்சியம்

இந் நாடக நூல்கள் செம்மையான மொழிவழக்கினைப் பிரதிபலிக்கின்றன. அவற்றிலே எழுத்துப் பிழைகளும் சொற் பிழைகளும் மிக அரிதாகவே காணப்படுகின்றன. சம்பாஷணை களில் மாகதி, அர்த்த மாகதி, செளரசேனி என்ற மூன்றுவகைப் பிரதேச வழக்கான பிராகிருத மொழி பயன்படுத்தப்பட்டுள்ளது.
முதலாம் கனிஷ் கனின் ஆதரவில் நடைபெற்ற நான்காவது பெளத்த மகாநாட்டிலே அஸ்வகோ ஷர் பிரதானமான பங்கினை வகித்தார் என்பது ஐதீகம். அது நவீன வரலாற்றாசிரியர்களால் உருவாக்கப்பட்ட கதை. அது நாடக ஆசிரியரான அஸ்வ கோஷரையும் அவருக்குப் பின் வாழ்ந்தவரான மகாயான தத்துவ போதகாசிரியரான அஸ்வகோஷரையும் ஒருவராகக் கொண்டதன் விளைவாக
ஏற்பட்ட தவறான சிந்தனையாகும்.
இவர்களிற் காலத்தாற் பிற்பட்டவர் ஸ்ரத்தோத்பாதசூத்திரம் என்னும் மகாயான நூலின் ஆசிரியர். அது மகாயான யோகசார நெறி சார்ந்த கருத்துக்களைச் சுருக்கமாக விளக்கும் நூலாகும். கெளசாம்பியிற் கிடைத்துள்ள மிகவும் புராதனமான நாணயங்களில் அஸ்வகோஷ என்னும் அரசனொருவனின் பெயர் காணப்படுகின்றது. (áfo. LU)
அஹறிச்சத்திரம்
10ாஞ்சால தேசம் இந்தியாவிலுள்ள மிகப் புராதனமான இராச்சியங்களில் ஒன்றாகும். பிராமணங்கள், உபநிடதங்கள் என்பவற்றிலே பாஞ்சால மன்னர்களைப் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன. மத்திய தேசத்துப் பகுதிகளிற் குரு பாஞ்சால தேசங்களே மிகவுஞ் சிறந்தனவாகப் போற்றப்படுகின்றன. அங்கு வைதீகப் பண்பாடு சிறந்து விளங்கியதென்று சொல்லப்படுகின்றது. மகாபாரதக் கதையிலே பாஞ்சால தேசம் பற்றிப் பல இடங்களிலே சொல்லப்படுகின்றது. பாஞ்சாலத்து அரச குடும்பத்தவர் சிலர் மகாபாரதக் கதையிலே பிரதானமான பாத்திரங்களாக வருகின்றனர்.
புராதன காலத்துப் பாஞ்சால தேசம் இரு பகுதிகளைக் கொண்டிருந்தது. ஒன்று கங்கா நதிக்கு வடக்கிலுள்ளது. அதன் பிரதானமான நகரம் அஹிச்சத்திரம், மற்றையது கங்கையின் தென்பாலானது; கம்பில்யா அதன் தலை நகரம். அஹிச்சத்திரம் சத்திராவதி என்னும் பெயராலும் வழங்கி வந்தது. உத்தரப் பிரதேசத்து பறைலி மாவட்டத்திலுள்ள ராம் நகர் என்னும் ஊரே புராதன காலத்து அஹிசத்திரம்.
அஹிச்சத்திரத்திலிருந்து அரசு புரிந்த மன்னர்கள் வழங்கிய நாணயங்கள் பல கிடைத்துள்ளன. அவற்றின்
179

Page 226
முற்பக்கத்தில் அரசனின் பெயரும் பட்டப்பெயரும் காணப்படுகின்றன. மித்திர என்னும் சொல் அப்பெயர்களின் பின்னொட்டாக வருகின்றது. சூர்யமித்ர, பால்குனிமித்ர, பானுமித்ர, பூமித்ர, த்ருவமித்ர, அக்னிமித்ர, விஷ்ணுமித்ர, ஜயமித்ர, இந்திரமித்ர, ப்ருஹத்ஸ்வாதிமித்ர, பத்ரகோஷ, விஸ்வபால, ருத்ரகுப்த, ஜயகுப்த என்னும் பெயர்கள் அந்நாணயங்களிலே எழுதப்பட்டுள்ளன. மேலதிகமாகப் பின்பு கண்டெடுக்கப்பட்டுள்ள நாணயங்களில் வங்கபால, தமகுப்த, வசுசேன, யக்ஞபால, பிரஜாபதிமித்ர, வருணமித்ர என்னும்
பெயர்களும் காணப்படுகின்றன.
இந்நாணயங்கள் சிலவற்றின் பின்புறத்தில், அவற்றை வழங்கியவர்களின் பெயர்கள் குறியீடுகளால் உணர்த்தப் படுகின்றன. அக்னிமித்ரனின் நாணயங்களிலே நெருப்பின் அடையாளமும் சூர்யமித்திரன், பானுமித்திரன் என்போரின் நாணயங்களிற் சூரியனின் அடையாளமுங் காணப்படுகின்றன. அவை தேவர்களைக் குறிக்கும். அடையாளங்களாகக்
கொள்ளத் தக்கவை.
பவோஸாவிலுள்ள குகைச் சாசனங்கள் அஹிச்சத்திர மன்னர் இருவரின் பெயர்களைக் குறிப்பிடுகின்றன. அவை ஆஷாடசேன என்னும் இளவரசனது தானங்கள் பற்றியவை. அவன் திரைவர்ணி புத்திர பாகவத என்னும் அரசனதும் கோபாலிகா வைஹிதரீ என்னும் மகாராணியினதும் குமாரன் என்று அவற்றிலே சொல்லப்படுகின்றது. திரைவர்ணிபுத்திர பாகவதனை அஹிச்சத்திரத்து அரசன் வங்கபாலனின் மகனென்று சாசனங்கள் குறிப்பிடுகின்றன. பாகவதனின்
மகளான கோபாலி என்பவள் கோசாம்பி மன்னனின்
மனைவியானவள். பிருஹஸ்வாதி மித்திரன் என்னும் அரசன் அவளுடைய குமாரன் மித்திர மன்னர்களின் நாணயங்கள் கி. மு. முதலாம் நூற்றாண்டுக்குப் பிற்பட்ட மூன்று நூற் றாண்டுகளைச் சேர்ந்தவையென்று கருதப்படுகின்றது.
அச்சுத என்னும் பெயர் பொறித்த இரண்டு வகையான நாணயங்களும் அஹிச்சத்திரத்திலே கிடைத்துள்ளன. அவற்றின் பின்புறத்தில் மகாவிஷ்ணுவின் அடையாளமான சுதர்சன சக்கரத்தின் உருவம் அமைந்துள்ளது. ஒரு வகையான நாணயங்களின் முன்புறத்தில் அரசனுடைய தலையின் உருவம் வலப்புறம் நோக்கிய கோலத்திற் காணப்படுகின்றது.
180 --

வடிவமைப்பின் சில அம்சங்கள் சகரின் நாணயங்களை ஒத்திருக்கின்றன. சமுத்திரகுப்தனால் அதிகாரத்திலிருந்து நீக்கப்பட்ட ஆர்யா வர்த்த அரசருள் அஹிச்சத்திரத்து அச்சுதனும் ஒருவனாதல் வேண்டும்.
அஹிச்சத்திரம் பெருநகராக அமைந்திருந்தமை அகழ் வாராய்ச்சிகளினாலே தெளிவாகியுள்ளது. அதன் மதில்கள் 40 - 50 அடி உயரமானவை. அவை செங்கல்லினால்
அமைந்தவை. நடுவிலே பிரமாண்டமான கோயிலொன்று அமைந்திருந்தது.
நகரின் பெருந்தெருக்கள் அதனை மையமாகக் கொண்டு அமைக்கப்பட்டிருந்தன. மண்ணாலான படிமங்களும் வேறு பல கலாசார சின்னங்களும் அகழ்வுகளின் மூலம் கிடைத்துள்ளன. கி.மு. 600-100 ஆகிய காலத்து மட்பாண்டங்கள் அங்கு பெருமளவிற் கிடைத்துள்ளன. கருமையான பூச்சுடைய நரைநிறமான பாண்டங்களும் சிவப்பு நிறமான பாத்திரங்களும் அங்கிருந்து கிடைத்துள்ளன. பளபளப்பான, வடபுலத்துக் கருநிறப் பாத்திரங்களும் அங்கு காணப்பட்டன. அஹிச்சத்திரத்திலே காணப்படும் கலவோடுகள் குடியிருப்புக்களின் ஆரம்பகாலம், நகரவளர்ச்சி, பண்பாட்டின் முன்னேற்றம் என்பவற்றை ஆராய்வதற்கான ஆதாரங்களாகும். (fl. 4.J.)
cé862guiba 1.5
கார்த்திகை மாதத்துச் சுக்கிலபட்சத்தின் ஒன்பதாம் நாள்
மகாவிஷ்ணுவுக்குப் புனிதமான நாளாகும். இந்நாளிலே அடையும் எந்த நன்மையும் முடிவடையாத சிறப்பினையுடையது.
தனஞ்ஜயன், கிருஷ்ணசர்மா எனும் இரு சகோதரர்கள் உலகினரை ஏமாற்றியும் களவெடுத்தும் சீவனம் செய்து வந்தார்கள். அவர்கள் மரணித்தபோது தனஞ்ஜயன் மோட்சத் திற்கும் கிருஷ்ணசர்மா நரகத்திற்கும் இட்டுச் செல்லப்பட்டனர். இச்செயலை ஒரவஞ்சகம் என்று கருதி கிருகூடின சர்மா யமனிடம் நியாயம் கேட்டபோது தர்மராசன் தனஞ்ஜயன் அக்ஷயநவமியிலே யமுனையில் நீராடியதால் அவனுக்கு வைகுண்டப் பதவி கிடைத்ததாகக் கூறினான் என்னும் கதை
அக்ஷய நவமியின் சிறப்பினை எடுத்துரைப்பதாகும். (பொ.பூ)
இந்துக் கலைக்களஞ்சியம்

Page 227
໒ງ85pນb
சைவம், சாக்தம், வைணவம் ஆகிய சமயங்களின் சிறப்பு நூல்கள் ஆகமங்கள் எனப்படுவன. ஆகமம் என்ற சொல் வருவது எனும் பொருளைத் தருவதாகும்; இறைவனிடம் இருந்து வருவது, இறைவன் அருளியது என்று அதன் பொருளை விவரிப்பதுண்டு.
சைவர்களுடைய ஆகமம், சைவாகமம், சிவாகமம், சித்தாந்தம், மாந்திரம், தந்திரம் என்ற பெயர்களைப் பெறும். ஆகமம் என்ற சொல்லுக்கு முப்பொருள் உணர்த்தும் நூல் என்றும் ஆன்மாக்களுக்கு மலத்தை நாசம் பண்ணி சிவஞானத்தை உதிப்பித்து மோட்சத்தைக் கொடுப்பது என்றும் சைவர்கள் பொருள் கூறுவர்.
சைவாகமங்கள் இருபத்தெட்டு என்பர். அவை அசிதம், அஞ்சுமான், ஆக்கினேயம், காமிகம், காரணம், கிரணம், சகச்சிரம். சந்தானம், சந்திரஞானம், சர்வோக்தம், சித்தம், சிந்தியம், சுப் பிரபேதம், சுவாயம்புவம், சூக்குமம், தீப்தம், நிச்சுவாசம், பாரமேசுவரம், புரோற் கீதம், மகுடம், முக விம்பம், யோகஜம், ரெளரம், லளிதம், வாதுளம், விசயம், விமலம், வீரம் என்பனவாம். இவற்றிலே காமிகம் பிரபல்யமானதாகும். இவை சங்கதத்திலே எழுதப்பட்டவை.
சைவாகமத்திலே ஞானபாதம், யோகபாதம், கிரியாபாதம், சரியாபாதம் என நான்கு உட்பிரிவுகளுண்டு. பதிபசு பாசம் எனும் முப்பொருள் உண்மை உணர்த்துவது ஞானபாதம், பிரணாயாமம் முதலிய அங்கங்களோடு கூடிய சிவயோகத்தை விளக்குவது யோகபாதம், மந்திரம், சந்தியாவந்தனம், பூசை, செபம், ஒமம், சமய விசேட நிருவாண ஆசாரிய அபிஷேகம் முதலியனவற்றைக் கூறுவது கிரியாபாதம், சமயாசாரங்களை விளக்குவது சரியாபாதம்.
நாரசிங்கம் (மிருகேந்திரம்) முதல் விசுவான்மகம் ஈறாக 207 நூல்களைச் சைவர் உபாகமங்களாகக் கூறுவர். சிவதருமோத்
தரமும் அவற்றில் ஒன்றாகும்.
வேதங்களையும் சிவாகமங்களையும் ஒப்ப மதித்துப் போற்றுவர் தத்துவம் வல்லோர். "வேத சிவாகமங்களுக்குப் பேதம் காண்கின்றிலம், வேதமும் சிவனாற் செய்யப்படுதலின் ஆகமம் எனப்படும்” என்பர் நீலகண்ட சிவாசாரியார். "இனி வேதமும் சிவாகமும் ஒன்றேயாயினும் இரு பகுதிப்பட்டது, வேதம் மூன்று வருணத்தாருக்கும், சிவாகமம் நான்கு வருணத்தாருக்கும் பொதுவாதல் பற்றி ஆதலால், சிவாகமங்கள் பிரமாணமென்பது தெற்றென உணர்க” என்பர் சிவஞான முனிவர். இவ்விரண்டையும் "வேதம் பசு அதன்பால் ஆகமம்" என்று ஒப்பிட்டுப் பேசுவதும் உண்டு.
இந்துக் கலைக்களஞ்சியம்

படைப்புக் காலத்தில் இறைவன் ஆன்மாக்களுக்கு உறுதிப் பொருள்கள் கிடைக்கும் பொருட்டு ஐந்து வகைப்பட்ட ஞானத்தை வெளிப்படுத்தினார். தம்முடைய சத்யோசாதம், வாமதேவம், அகோரம், தத்புருடம், ஈசானம் ஆகிய ஐந்து திருமுகங்களி னின்றும் இருபத்தெட்டு ஆகமங்களைத் தோற்றுவித்தருளினார் என்று காரணாகமம் கூறுகிறது. சத்யோசாதம்' என்ற திருமுகத்தினின்றும் காமிகம். யோகம், சிந்தியம், காரணம், அசிதம் என்ற ஐந்து ஆகமங்கள் தோன்றின. "வாமதேவம்’ என்ற திருமுகத்தினின்றும் தீப்தம், சூக்குமம், சகசுரம், அம்சுமான், சுப்பிரபேதம் என்ற ஐந்து ஆகமங்கள் தோன்றின. அகோரம் என்ற திருமுகத்தினின்றும் விசயம், நிச்சுவாசம், சுவாயம்புவம், அநிலம், வீதம் என்ற ஐந்து ஆகமங்கள் தோன்றின. 'தத்புருடம் என்ற திருமுகத்தினின்றும் இரௌரவம், மகுடம், விமலம், சந்திரஞானம், பிம்பம் என்ற ஐந்து ஆகமங்கள் தோன்றின. ஈசானம்' என்ற திருமுகத்தினின்றும், பிரோத்கீதம், இலளிதம், சித்தம், சந்தானம், சருவோக்தம், பாரமேச்சுவரம், கிரணம், வாதுளம் என்ற எட்டு ஆகமங்கள் தோன்றின. இவற்றுள் முதற்பத்து ஆகமங்கள் சிவபேதம்’ எனப்படும். பின்னுள்ள பதினெட்டும் உருத்திரபேதம் எனப்படும்.
இவ்வாகமங்கள் கூறும் சிறப்புச் செய்திகளாவன: சிவ சிருட்டியின் தொடக்கக் காலத்தில் சிவசக்தியின் சேர்க்கையி னின்றும் இச்சா சக்தியினால் புவனங்களின் உற்பத்தியின் பொருட்டு யோக மாயையினால் சிருட்டிபீசம் கலக்கப்பட்டது. அதிணின்றும் நாதம் தோன்றிற்று. அதினின்றும் சரத்காலத்துச் சந்திரன் போன்று விந்து தோன்றிற்று. அதினின்றும் அம்பிகை என்ற சக்தி தோன்றிற்று. பின்னே வாமை, சியேட்டை இரெளத்திரி என்ற மூன்று சக்திகள் தோன்றின. வாமாசக்தியின் அபர ரூபமாக சயாவிசயா, அசிதா, அபராசிதா, நிவிருத்தி, பிரதிட்டா, வித்தியா, சாந்தி, இசந்திகா, தீபிகா, உரோசிகா, மோசிகா, வியோமரூபா, அநந்தா, அனாதா, அனாச்சுருதா என்ற சக்திகள் தோன்ற அவர்களாலேயே உலகங்கள் விரிந்தன. அவர்களிடமிருந்தே ஐம்பது அட்சரங்கள் தோன்றின. இவ்வாறு பெளட்கராகமம் கூறுகிறது. திருமந்திரத்தில் (தமிழாகமம் என்றும் ஆகமசாரம் என்றும் கூறப்பெறும் திருமுறை) ஆகமக் கருத்துகள் தெளிவாக்கப் பட்டுள்ளன.
வேதங்களைப் போன்றே ஆகமங்களையும் இறைவனே அருளினான் என்று ஆகமங்களிற் கூறப்பெறும் கருத்துத் தமிழாகமமாகிய திருமந்திரத்திலும் உரைக்கப்பட்டுள்ளது.
மூன்று பதார்த்தங்களுடனும் நான்கு பாதங்களுடனும் கூடிய மகாதந்திரத்தைப் பரமேசுவரன் செய்தார். சரியை, கிரியை, யோகம், ஞானம் என்பன நான்கு பாதங்கள். சிரவுதம், அச்சிரவுதம் என்பன இரண்டு பிரிவுகள். வேதசாரமாக உள்ளது சித்தாந்தம், சித்தாந்தத்தாற் கூறப்படும் ஆசாரம் வைதிகாசாரம்
181

Page 228
என்று மகுடாகமம் கூறும். ஞானபாதத்தால் பதி, பசு, பாச இலக்கணங்கள் அறியப்படும். கிரியா பாதத்தால் சருடயம் (உழுதல்), பிரதிட்டை வரையுள்ள கிரியைகளும், உத்சவ, பிராயச்சித்த, நித்திய, நைமித்திக, காமிய பூசைகளும், சமய, விசேட நிருவாண தீக்கைகளும், வருணாசிரம தருமங்களும் அறியப்படும். யோக பாதத்தால் பிராணாயாமம் முதலியவற்றின் இலக்கணங்களும் ஆத்துமசுத்தி, அந்தர்யாகம் முதலியவையும் அறியப்படும். பதி, பசு, பாச இலக்கணங்களுடன், முப்பத்தாறு தத்துவங்கள் பற்றிய விளங்கங்கள், தத்துவ ரூபம், தத்துவ தரிசனம், தத்துவ சுத்தி, ஆத்தும ரூபம், ஆத்தும தரிசனம், ஆத்தும சுத்தி, சிவரூபம், சிவ தரிசனம், சிவயோகம், சிவபோகம் ஆகிய தசகாரியங்களின் விளக்கங்கள் ஆகியவையும் ஞான பாதத்திற் காணப்படுகின்றன.
கிரியா பாதத்தில், மந்திரம், கிரியை, பாவனை ஆகிய மூவகைப்பட்ட செய்திகள் விளக்கப்பட்டுள்ளன. குருமுகமாக உணரத்தக்க பஞ்சாக்கரம், சடாட்சரம், சம்கிதை மந்திரம், அத்திர மந்திரம் முதலியவை உணர்த்தப்பட்டுள்ளன. தேவதா தாபனம் முதலிய எல்லாக் கிரியைகளும் மந்திரத்தினாலேயே செய்யப் பெற வேண்டும் என்று ஆகமங்கள் அறிவுறுத்துகின்றன.
கோயில் கட்டுதற்குரிய நிலத்தை உழுதல் முதலாக அனைத்தும் கூறப்படுகின்றன. கீழ்த்திசையில் சூரியன் கோயிலையும், தென்கிழக்கில் சண்முகன் கோயிலையும், தென் மேற்கில் ஐயனார் கோயிலையும், மேற்கில் விட்டுணு கோயிலையும், வடமேற்கில் துர்க்கையின் கோயிலையும், வடக்கில் சப்த மாதாக்கள் கோயிலையும், வடகிழக்கில் சிவாலயத்தையும் கட்ட வேண்டும் என்கிறது காரணாகமம்.
மானாங்குலம், மாத்ராங்குலம், தேகலப்தாங்குலம் என்ற அளவு மூவகை ஆகமங்களிற் கூறப்படும். இனி, கர்ப்ப நியாசம், சிவா சங்கிரகணம் (இலிங்கம், பிம்பம் செய்வதற்கு வேண்டிய சிலையை எடுக்கும் முறை) முதலியன மிகத் தெளிவாக உரைக்கப்பட்டுள்ளன.
திருக்கோயில்களின் விமானங்கள், வேசரம்', 'திராவிடம், நாகரம்' என்று மூவகையாக மொழியப்பட்டுள்ளன. கண்டம் முதல் விருத்தமாக உள்ளவைவேசரம்' எனப்படும். கழுத்து முதல் எண்கோணமான விமானங்கள் திராவிடம் எனப்படும். பீடம் முதல் அனைத்தும் சதுரமாக உள்ளவை 'நாகரம்' எனப்படும். இவ்விமானங்களின் கீழ்ப்புறம் குமாரனையும், தென்புறம் தட்சணாமூர்த்தியையும், மேல்புறம் விட்டுணுவையும், வடபுறம் பிரமாவையும் சுதையால் செய்ய வேண்டும் என்றும், மேல்தளத்தில் மூலைகளில் இடபமாவது, பூதமாவது அமைக்கப்பட வேண்டும் என்றும் கூறப் பெற்றுள்ளது. விமானம், தூலலிங்கம்; சிவன், சூக்கும லிங்கம்; பலிபீடம், பத்ரலிங்கம்; ஆலயம், மண்டபம், கோபுரம், பிரகாரம் முதலிய யாவும் இலிங்கத்தின் அளவு கொண்டு செய்யப்பெற வேண்டும் என்பதும் ஆகமவிதி.

மணி ஓசை போன்ற நாதமுடைய கல் ஆண்’ என்றும், தாளத்தின் ஒலி போன்ற நாதமுடைய கல் பெண்’ என்றும், நாதமற்றது 'அலி' என்றும் கூறப்பெற்றுள்ளது. ஆண் உருவங்கள் ஆண் கல்லினாலும், பெண் உருவங்கள் பெண் கல்லினாலும், அடிப்பீடங்கள் அலிவகைக் கல்லினாலும் அமைக்கப்பட வேண்டும் என்று காரணாகமம் கூறும். இரேகை, பிந்து, களங்கம் என்ற குற்றமுள்ள கற்கள் கடவுட் படிமங்கள் அமைக்க ஏற்றவை அல்ல என்பதும் ஆகமத் துணிவு.
இவ்வாறு பரிசோதனை முறைகளால் தேர்ந்தெடுக்கப் பெற்ற கற்களால் இலிங்கம், பிம்பம் ஆகியவற்றை அமைப்பர். சமகண்டம், வர்த்தமானம், சைவாதிக்கியம், திரிராசிகம் என்று இலிங்கங்களை நால்வகையாகப் பகுப்பர். இது இலிங்கங்களின் வடிவ அமைப்புப் பற்றியதாகும். சைவாகமங்களிற் கூறப்படும் சிறப்புச் செய்திகளை இவ்வாறு சுருக்கிக் கூறலாம்.
சக்தியை முழுமுதற் கடவுளாக வழிபடும் சாக்தத்தில் ஆகமங்கள் தந்திரங்களெனவும் வழங்கப்படுவன. சாக்த ஆகமங்கள் 77 ஆகும். ஆயினும் இதற்கு மேலும் சில தந்திரங்கள் உள என்பர்.
இவற்றிலே சனகம், சனத்குமாரம், சனாதனம், சுகம், வசிட்டம் எனும் ஐந்தும் சுப ஆகமங்கள் எனப்படுவன. ஞானத்திற்கும் மோட்சத்திற்கும் உரிய வழிவகைகளைக் கூறும் அவை தட்சிணாசாரம் (வலதுகை மார்க்கம்) எனும் வகையினைச் சேர்ந்தவை. 64 ஆகமங்கள் கெளல ஆகமங்கள் எனப்படுவன. மந்திர வித்தைகளையும் இடக்கரான வழிபாடுகளையும் கூறும் இவை வாமாசாரம் (இடதுகை மார்க்கம்) எனும் வகையினைச் சேர்ந்தவை. ஏனைய எட்டும் மிசிர ஆகமங்கள் எனப்படுவன. இவை தட்சிணா சாரம், வாமாசாரம் ஆகிய இருவகை களையும் உள்ளடக்குபவை. இவற்றிலே சந்திரகலை, சோதீஸ்வரி, புவனேசுவரி, துர்வாசமாதா, பர்கஸ் பதியா என்பன குறிப்பிடத்தக்கவை.
வைணவர் ஆகமங்களைத் தந்திரம், சம்கிதை, பாகவத சாத்திரம் என்பர் நாராயணனால் அருளப்பட்ட ஆகமங்கள், வேதங்களின் விரிவை விளங்கிக் கொள்ள முடியாதவர்களுக்கு அவற்றின் சாரத்தை எடுத்துக் கூறுவதாக அமைந்தவை என்பர். ஆளவந்தாரின் ஆகமப் பிரமாணியமும் வேதாந்த தேசிகரின் பாஞ்சராத்திர ரட்சையும் ஆகமங்கள் வேதங்களுக்குப் புறம்பானவையல்ல என்பதை விளக்க எழுந்தவை. ஆகம உண்மைகளை இறையருளாலேயே விளங்கிக் கொள்ள முடியும் என்பது வைணவர் நம்பிக்கை.
வைணவ ஆகம மரபினைப் பாஞ்சராத்திர மரபு, வைகானச மரபு என இரண்டாகப் பாகுபடுத்திக் கூறினும் இவ்விரண்டிற்கும் அடிநிலையான தத்துவம் ஒன்றே என்பர். ஆயினும் பாகவத சாஸ்திரத்தைப் பாஞ்சராத்திரம் என்றும் பாகவத தருமத்தைப் பின்பற்றுவோரைப் பாஞ்சராத்திரிகள் என்றும் கூறல் பெரு
இந்துக் கலைக்களஞ்சியம்

Page 229
வழக்கு. தத்துவ விசாரம் (ஞானம்), தியானம் (யோகம்), விக்கிரக வழிபாடு (கிரியை), ஆசாரங்கள் (சரியை) எனப் பாகுபடுத்தும் மரபும் உண்டு.
பாஞ்சராத்திர சம்கிதைகள் 108 என்பதே மரபு. ஆயினும் சிலர் 218 வரை கண்டு கூறியுள்ளனர். இவற்றிலே :
1. அகஸ்திய சம்கிதை, 2. அகிர்புத்ணிய சம்கிதை, 3. அனிருத்த சம்கிதை, 4. ஈஸ்வர சம்கிதை, 5. காசிப சக்கிதை, 6. சாத்வத சம்கிதை, 7. சுதர்சன சம்கிதை, 8. பரமேஸ்வர சம்கிதை, 9. பராசர சம்கிதை, 10. மகாசநத்குமார சம்கிதை, 11. மாக்கண்டேய சம்கிதை, 12. வசிஷ்ட சம்கிதை, 13. விசுகேந்திர சம்கிதை, 14. விசுவாமித்திர சம்கிதை, 15. விஷ்ணு சம்கிதை, 16. விஷ்ணுதத்துவ சம்கிதை, 17. விஷ்வக் சேநா சம்கிதை, 18. ஜெயாக்ய சம்கிதை, 19. ஹயசீர்ஷ சம்கிதை,
20. ஹிரண்யகர்ப்ப சம்கிதை,
என்பன சிலவாகும். ஆயினும் ஒவ்வொரு கோயிலும் ஒவ்வொரு சம்கிதையைப் பின்பற்றி வரும்போது மாறுபாடுகளை வன்மையாக எதிர்க்கும் நிலைகள் தோன்றல் எதிர்பார்க்க வேண்டியதாகும். பூநீரங்கம் கோயில் பரமேஸ்வர சம்கிதையையும் காஞ்சீபுரம் ஜெயாக்ய சம்கிதையையும் பின்பற்றின.
(பொ.பூ. & சொ.சி.)
dob3T15)uJjb
செம்பிற் களிம்பு போல ஆணவத்தாற் பற்றப்பட்டு அறிவு மயங்கி இருளில் அழுந்திச் செயலற்றுக் கிடக்கும் ஆன்மாவின் பாசத்தை அறுக்கும் பொருட்டு அருள் நோக்குடைய இறைவன் நிமித்த காரணனாய்த் தனு, கரண, புவன, போகங்களைப் படைக்கிறான். உயிர் உடம்போடு கூடிய வழி ஆகந்துகமலமாம் கன்மம் செயற்படுகின்றது. மனம், வாக்கு, காயம், எனும் மூவழியிலும் நல்வினை தீவினை எனும் இரு வினைகளும் நடந்தேறுகின்றன. உயிர் சம்பாதிக்கும் இவ்வினைகளை மூன்றாகச் சைவசித்தாந்தம் கூறுகின்றது.
மூவினைகள் பிராத்தம், சஞ்சிதம், ஆகாமியம் எனப்படுவன. பிராரத்தம் அனுபவத்தாலும் சஞ்சிதம் தீக்கை யாலும் ஆகாமியம் ஞானத்தாலும் தொலையும்.
பிராரத்தத்திற்கு இசைய எடுத்த தேகத்திலே அதன் பலனைப் புசிக்கையில் விருப்பு வெறுப்புகளால் உண்டாய நல்வினை தீவினைகள் ஆகாமியம் எனப்படுவன. (பொ.யூ.)
இந்துக்கலைக்களஞ்சியம்

ஆங்கோர் வாத்
8ம்பூசிஜா என இன்று வழங்கும் நாடு சில வருடங்களுக்கு முன்பு கம்போடியா என வழங்கியது. இவ்விரு பெயர்களும் கம்புஜ (காம்போஜம்) என்ற வட சொல்லிலிருந்து பெறப்பட்டவை. இங்கு வாழும் கெமர்மொழி பேசும் பெரும் பான்மையினமான கெமர் மக்கள் இதனைக் கெமர் நாடு என்று வழங்குவர்.
இந்நாட்டின் வடகிழக்கில் லாவோஸ் நாடும் கிழக்கிலும் தெற்கிலும் வியட்நாம் தேசமும் வடக்கிலும் மேற்கிலும் தாய்லாந்து (சயாம்) தேசமும் தென் மேற்கிலே சயாம் குடாவும் அமைந்துள்ளன.
கெமர் இன மக்கள் சனத்தொகையில் 85 முதல் 90 வீதம்வரை உள்ளனர்; சிறுபான்மையினருட் சீனரும் வியட்நாமியரும் அதிகமாக உள்ளனர்; இந்தியா, தாய்லாந்து, லாவோஸ், ஜப்பான், மலாயா, பிலிப்பைன்ஸ் முதலிய நாடுகளைச் சேர்ந்தவரும் ஆதிவாசிகளும் சிறுபான்மையருள் இடம் பெறுகின்றனர்.
கெமர் மொழி பெரும்பான்மையினர் பேசும் மொழி. பிரஞ்சு, வியட்நாமிய மொழி, சீன மொழி என்பனவும் வழங்குகின்றன. பாளியும் சங்கதமும் பெளத்த குருமார் பயன்படுத்தும் மொழிகளாகக் காணப்படுவன.
இன்று பெளத்தம் கெமர் மக்கள் பின்பற்றும் பிரதான சமயம். கிறித்தவம், இஸ்லாம், சீன பெளத்தம் முதலியன வற்றைப் பின்பற்றும் மக்கள் சிறுபான்மையினர்.
கம்பூசிஜா கிறிஸ்தாப்தத்திற்கு முன்பிருந்தே இந்திய பண்பாட்டின் செல்வாக்கின் கீழ் வந்துவிட்டது என நம்பப்படுகின்றது. கிறிஸ்தாப்தம் முதல் சுமார் அறுநூறு வருடம் விளங்கிய புநான் அரசு (FUNAN) இந்து அரசாகக் காணப்படுகின்றது. இதனை அடுத்து வந்த சென்லா அரசும் இந்துமதச் செல்வாக்கினை உடையதாகக் காணப்படுகின்றது. தமிழ் நாட்டிற் பல்லவர் செல்வாக்குப் பெற்ற காலத்திலே தமிழ் நாட்டிற்கும் கம்போஜத்திற்கும் தொடர்புகள் பல ஏற்பட்டன என்று கருதச் சான்றுகளுண்டு. அடுத்துவரும் ஆங்கோர் அரசின் கால கட்டம் (802 - 1432) இந்திய பண்பாட்டின் உச்சக் கட்டமாகத் தெரிகின்றது.
இரண்டாம் ஜெயவர்மன் (802 - 850) சிவலிங்க வழிபாடு வழங்கிய நாட்டிலே தன்னைச் சிவபிரானின் அவதாரமாகக் கொண்டு இராசலிங்கத்தை எழுப்பித் தேவராஜ வழிபாட்டினைத் தோற்றுவித்தான். இலிங்கத்தில் ஆவேசித்த அரசனின் சக்தி அவன் சந்ததியில் இறங்கிச் செல்வதால் அவன் தெய்வீகம் உடையவன் என்று கருதப்பட்டான். தேவராஜ வழிபாட்டினை நடத்தும் உரிமை ஒரு பிராமணக் குடும்பத்தின் பரம்பரை உடைமையாக வழங்கப்பட்டது.
சிவலிங்கம் மட்டுமன்றி விஷ்ணுவும் தேவராஜ வழிபாட்டில் இடம் பெறுகிறார். தேவராஜ வழிபாட்டினைப் பெளத்தனான முதலாம் சூரியவர்மன் (1002 - 1049) ஆதரித்தமைக்குச் சான்றில்லை. ஏழாம் ஜெயவர்மன் (181 - 1201) தேவராஜ
183

Page 230
வழிபாட்டிற்குப் பதிலாகப் புத்தராஜ வழிபாட்டினைத் தொடங்கியுள்ளான். அவன் தன்னைக் கெளதம புத்தரின் அவதாரமாகக் கருதினான்.
தேவராஜ வழிபாடு சிவவழிபாட்டின் செல்வாக்கினைக் காட்டுவதாகலாம். யசோவர்மன் (899 - 910) நாட்டின் பல்வேறு பகுதிகளில் சிவலிங்கங்களை அமைத்துத் தன் சிவபக்தியை வெளிக் காட்டினான். உதயாதித்தவர்மன் சைவத்தை நாட்டின் அரசமதமாக அமைக்க முயற்சி எடுத்துள்ளான்.
விஷ்ணு வழிபாடும் சிவவழிபாட்டுடன் முரணான வகையில் நடந்து வந்துள்ளது. இரண்டாம் சூரியவர்மன் தன்னை விஷ்ணுவின் அவதாரமாகக் கருதியவன் என்று சிலர் கூறுவர் இவன் ஆட்சியின்போது விஷ்ணு வழிபாடு முன்னையோ ஆட்சியிலும் செல்வாக்குடையதாகக் காணப்பட்டது.
பிரமா, சக்தி, கணேசர், கார்த்திகேயர், இலட்சுமி, சரஸ்வதி முதலிய தெய்வங்களும் காம்போஜ மக்கள் வழிபாட்டில் இட பெற்றுள்ளன.
இந்து மதத்துடன் நெடுங்காலமாகத் தொடர்ந்து வழங்கி வந்த பெளத்தம் காலகதியில் பிரதான மதமாக மாறியது பதின்மூன்றாம் நூற்றாண்டிலிருந்து இந்துமதம் தன் செல்வாக்ை இழக்கத் தொடங்குகின்றது. பெளத்தம் பதினான்கா நூற்றாண்டிலே ஏகபோக உரிமை பெற்று விடுகின்றது.
ஆயினும் இந்துமதத்தின் தாக்கம் கம்போஜத்தின் மதவழிபாட்டில் தொடர்ந்து காணப்பட்டது. அரசு கிரியைகள் தொடர்ந்தும் இந்து மதச் செல்வாக்குடையனவாக விளங்கி வந்தன. இந்துமத தெய்வங்கள் பெளத்தர் வழிபாட்டி6ே தொடர்ந்து இடம் பெற்றன. பிரமனுக்கு அவர்களி6ே சிறப்பான இடம் தரப்பட்டது.
காம்போஜத்தின் பொற்காலமான ஆங்கோர் கால தாய்லாந்து படையெடுப்புகளால் முடிவடைந்தது. சுமார் 1430 1431 ஆண்டிலே ஆங்கோர் கைவிடப்பட்டது. ஆங்கோர் வா இயற்கையில் மறைந்து கொண்டது. பெளத்தர்கள் இந்து மதத்திற்கு முக்கியத்துவம் அளித்த திருக்கோயிலைப் பேணாம விட்டுவிட்டனர்.
பதினாறாம் நூற்றாண்டின் மத்தியில் போர்த்துக்கே மிஷனரி ஒருவர் முதன்முதலாக ஆங்கர் வாட் எனும் கோயிலை கண்டுபிடித்தார். பின்பு 1604 இலே வேறொரு போர்த்துக்கே மிஷனரியும் 1672 இலே பிரஞ்சு மதகுரு ஒருவரும் இக்கோயிலின் அழிபாடுகளைக் கண்டனர். ஆயினும் அவர்களுடை கூற்றுக்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை. 186 ஜனவரியில் ஹென்ரி மெளகோ (HENRI MOUHOT) எனு பிரஞ்சு ஆய்வாளர் தற்செயலாகக் கண்டு விபரமாகத் தன் கண்டுபிடிப்பை விவரித்து எழுதியதை அடுத்துக் காலனித்து அரசான பிரான்சு அக்கறை எடுத்துக் கொண்டது. 1866 முத பல ஆய்வுக் குழுக்கள் அங்கோர்வாத் எனும் கோயிலை நாடி
184

T
Ս
ல்
i
ச்
சென்றன. அவர்களிலே பலர் அங்குள்ள அருஞ் செல்வங் களைக் கொள்ளையடித்த போதும் பண்டைய இந்து நாகரிகச் சின்னம் ஒன்றினை உலகுக்கு எடுத்துக் காட்டவும் செய்தனர்.
அங்கோர் வாத் அங்கோர் அரச மரபினரின் அதியுன்னத கலையாக்கமாகப் போற்றப் பெறுவதாகும். சியம்றிப் (SIEM REAP) எனும் நகரத்திற்குத் தென்கிழக்கே இத்திருக்கோயில் அமைந்துள்ளது.
இதனை அமைத்த பெருமை இரண்டாம் சூரிய வர்மனுக்கு (1113 - 1150) உரியதென்பர் சிலர். சூரியவர்மன் தன்னை விஷ்ணுவின் அவதாரமாகக் கருதியவன் என்பர்.
அங்கோர் வாத் வழிபாட்டுத் தலமாக அல்லது அரசனின் பள்ளிப் படையாக அமைக்கப்பட்டது என்பர். அங்கு மத்திய கருவறையில் விஷ்ணு கருட வாகனத்தில் எழுந்தருளியுள்ளார். விஷ்ணுவின் படிமம் பொன்னாலானது. அரசன் திருவுருவமே விஷ்ணுவின் திருவுருவமாக - தேவராஜ வடிவமாக - எழுந்தருளுவிக்கப்பட்டுள்ளது என்பர்.
அங்கோர்வாத் அதன் பிரமாண்டமான தோற்றத்தால் பார்ப்போரைத் திகைப்படையச் செய்வதாகும். திருக்கோயிலின் பரப்பளவு 4130,000 சதுரவடி என்பர். இதனைச் சுற்றி அகலமான அகழி ஒன்று அமைந்துள்ளது; அதன் அகலம் சுமார் 600 அல்லது 650 அடி என்பர். பிரதான வாசல் மேற்கு நோக்கியமைந்துள்ளது. அகழியைப் பாலம் மூலம் தாண்ட வேண்டும். திருக்கோயில் மூன்று சதுரப்பரப்புகளை யுடையது. அகழியோடமையும் பரப்பிலும் அடுத்தது பரப்பளவு குறைய, அதற்கடுத்தது அதனிலும் பரப்பளவு குறைந்ததாக வுள்ளது. ஆயினும் ஒவ்வொரு பரப்பும் ஒன்றிலிருந்து மற்றது உயர்ந்ததாக அமைந்துள்ளது. நடுவிலே உள்ள பரப்பிலே மத்தியில் அமைந்து கருவறையின் கோபுரமும், அப்பரப்பின் நான்கு மூலைகளில் அமைந்த கோபுரங்களும் ஆக ஐந்து கோபுரங்கள் தாமரை மொட்டின் அமைப்பிலே உயர்ந்தோங்கி அழகாகத் தோற்றம் அளிக்கின்றன. இந்தியாவிலுள்ள புவனேஸ்வர் கோயிலின் கோபுரங்களை இவை ஓரளவு ஒத்துக் காணப்படுவதாகச் சிலர் கருதுவர். அங்கோர்வாத் கோயிலின் சிறப்பு அதன் புடைச் சிற்பங்களிலே தங்கியிருப்பதாகக் கருதுவர். இராமாயணம், மகாபாரதம், அரிவம்சம் என்பனவற்றின் நிகழ்ச்சிகளும் அரசனின் போர் வெற்றிகளும் நடன மகளிர் காட்சிகளும் பெருவளவிலே அமைந்து காட்சியளிக்கின்றன. திருக்கோயிலின் பகுதிகளிற் பல வீணாக இடம் பெற்றுள்ளன என்ற குற்றச் சாட்டினைச் சிலர் கூறினும் அதன் பாரிய அமைப்பின் தன்மையை வியந்துரை யாதவர் குறைவென்றே சொல்லலாம்.
இந்துக் கோயிலான ஆங்கோர் வாத் ஏழாம் ஜெயந்த வர்மன் (181 - 1201) காலத்திலே பெளத்தர்களின் செல்வாக்கின் கீழ் வந்தது. இன்று அது பெளத்தப் பள்ளிபோல பெளத்தத் துறவிகள் தங்குமிடமாகி விட்டது. - (பொ.யூ.)
இந்துக் கலைக்களஞ்சியம்

Page 231
ஆச்சான்
காஞ்சீபுரத்திற் பிறந்தவர் கிடாம்பி ஆச்சான்; பிரணதார்த்திகராசாரியர், ஆத்திரேயாசாரியர், வேதாந்ததோ தயணர் என்ற பெயர்களாலும் வழங்கப் பெறுவர்; பெரிய திருமலை நம்பியின் மருகர்; பூரீ பெரும்பூதூர் இராமாநுசரின் சீடர்; இராமனுஜப் பிள்ளானின் தந்தை, பூரீ ரங்கராஜரின் பாட்டனார்; கிடாம்பி அப்பிள்ளாரின் பூட்டனார்; கிடாம்பி திருமலை நயினாரின் மாமனார். (பொ.யூ.)
ஆச்சிரமம்
ஆச்சிரமம் என்பது வாழ்க்கை ஒழுங்கு அல்லது படிமுறைகள். பிரமசரியம், கிருகஸ்தம், வானப் பிரஸ்தம், சன்னியாசம் எனும் நான்கு கட்டங்களையுடையது.
உபநயனம் பெற்ற இளைஞன், பிரமசரிய விரதம் பூண்டு, பஞ்சேந்திரியங்களை அடக்கி, குருவின் இல்லத்திலே உறைந்து, வேதக் கல்வியில் ஈடுபடுதல் பிரமசரியம் எனும் கட்டமாகும். செளசம், ஆசாரம், விரதம் என்பனவற்றில் வழுவாது குருவின் பணிவிடைகளைச் சீடன் பணிவோடு செய்தல் வேண்டும். வழுவற்ற நெறியிலே விரதங்களை அநுட்டித்து ஆழ்ந்த கவனத்துடன் பிரமசாரி வேதக் கல்வியில் ஈடுபட வேண்டும். இரு சந்தியிலும் சூரியனையும் அக்கினியையும் ஆழ்ந்து வழிபட்டு விட்டுக் குருவைப் பணிந்து வணங்க வேண்டும். குருவுக்கு மரியாதை செய்யும் முகமாக அவர் எழுந்து நிற்கையில் எழுந்து, நடந்து செல்கையிற் பின் தொடர்ந்து, அமரும்போது அவர் ஆசனத்திலும் தாழ்ந்த இடத்தில் அமர்ந்து ஒழுக வேண்டும். சீடன் குருவுக்கு எதிராக எதுவுமே செய்யக் கூடாது. குரு தானாகவே கேட்கும்போதுதான் அவர் முன்னிலையில் அமர்ந்து புலன்களை அலையவிடாது வேதங்களை ஒத வேண்டும். அதன் பிறகு குருவின் அனுமதியோடு, தான் இரந்து பெற்ற உணவை உண்ணலாம். குரு குளித்த பின்பே சீடன் குளிக்கலாம். ஒவ்வொரு நாளும் சீடன் குருவுக்குத் தேவையான சமிது, தர்ப்பை, நீர், பூ முதலியவற்றைத் தேடிக் கொண்டு வந்து கொடுக்க வேண்டும்.
வேதக் கல்வி முடிந்த பின்பு புத்தி பெற்ற சீடன் குரு தட்சணை வழங்கிவிட்டு அவருடைய அனுமதியோடு கிருகஸ்தா சிரமத்திலே நுழைவான். தன்னுடைய தகுதிக்கேற்றவாறு, கிரகஸ்தன் செய்ய வேண்டிய சகல கடமைகளையும் அவன் மணம் புரிந்தபின் பார்க்கும் தொழில் மூலம் பெறும் ஊதியத்தில் இருந்து செய்ய வேண்டும். பிதுரரைப் பிண்டதானம் மூலமும், தேவரை யாகங்கள் மூலமும், இருடிகளைச் சுவாமியாயம் மூலமும், பிரஜாபதிகளைப் புத்திர சந்தானம் மூலமும், ஆவிகளைப் பல மூலமும் உலகத்தை அன்பு மூலமும் வழிபடும் கிரகஸ்தன் தன் மாசற்ற சுயமான செய்கைகள் மூலம் புனிதலோகத்தை அடைவான். சன்னியாசிக்கும் பிரமசாரிக்கும் உணவளிக்கும் ஆதாரமாகவுள்ளவன் கிருகஸ்தன். நாடு நாடாக வேதங் கற்பதற்கும் யாத்திரைக்காகவும் செல்பவர்களுக்கு கிருகஸ்தனே தஞ்சம். விருந்தினரை அன்புடன் வரவேற்று உணவும்
இந்துக் கலைக்களஞ்சியம்

உறையுளும் அளித்து மகிழ்விக்காது, அவர்களை ஏமாற்றத்தோடு வெளியேறச் செய்பவன் அவர்களுடைய பாவங்களைச் சுமந்து கொண்டு தன்னுடைய புண்ணியங்களை எல்லாம் அவர்களுக்கு இழந்து விடுகிறான். விருந்தினனை அவமதியாது, கொடுர மாகவும் வஞ்சகமாகவும் பேசாது, கொடுத்ததற்காக வருந்தாது கொடுப்பவரைத் தடுத்தேசாது இருத்தல் அவசியம். கிருகஸ் தாஸ்ரம கடமையை முறையே செய்யும் ஒருவன் உலகியற் பந்தங்கள் சகலவற்றிலும் இருந்து விடுதலையடைந்து உயர்ந்த
லோகங்களை அடைவான்.
தன் கடமைகளை மனத்திருப்தியோடு செய்து முடித்த கிருகஸ்தன் முதுமை ஆரம்பிக்கும்போது வனவாசம் செய்ய வேண்டும். மனைவியைப் பிள்ளைகளின் பராமரிப்பிலே விட்டோ அல்லது தன்னோடு கூட்டியோ செல்லலாம். இலை குழைகளையும் கிழங்கு வகைகளையும் பழங்களையும் உண்டு, மான் தோலாகவும் தர்ப்பைப் புல்லாகவும் அமைந்த ஆடைகள், விரிப்புகள், போர்வைகளோடு வெறுந்தரையிலே துயில வேண்டும். முடிவளர்த்து தாடி வைத்து தாபதர் ஆக, வரும் விருந்தினரை உபசரித்து வாழ வேண்டும். தெய்வ வழிபாடு, ஓமம் வளர்த்தல் வைத்தியம் செய்தல், தவமியற்றல் என்பன வானப்பிரஸ்தனின் முக்கிய கடமைகள். நாளுக்கு மும்முறை தோய்தல் வேண்டும். எந்தவகை எண்ணெய் காட்டிற் கிடைத்தாலும் அதனை முழுக்குக்குப் பயன்படுத்த வேண்டும். வெயிலையும் குளிரையும் தாங்க வேண்டும். இவ்வாறு வாழ்பவன் தன் தீமைகள் யாவும் நெருப்பிலிட்டவை போல அவிந்து போக நிரந்தர லோகங்களை அடைவான்.
சன்னியாசம் எனும் நான்காம் ஆச்சிரமத்திற் புகுமுன் பயணம், செல்வம் முதலானவற்றிலும் மனைவி, மக்களிலுமுள்ள பற்றுகளைத் துறந்து, போட்டி மனப்பான்மையைக் கைவிட்டு, தர்ம அர்த்தகாமமாம் புருஷார்த்தங்களை அடையும் முயற்சிகளை மறந்து, நட்பையும் பகையையும் ஒருசேர எண்ணி, சகல ஜீவராசிகளிடமும் அன்பு செலுத்த வேண்டும். எந்தவொரு ஜீவனும் சிந்தனை, சொல் அல்லது செயலால் துன்புறக் கூடாது. சகல ஆசைகளையும் நீத்து, சகல பந்தங்களையும் பற்றுகளையும் துறக்க வேண்டும். ஒரு கிராமத்தில் ஒரிராவுக்கு மேலும் ஒரு நகரத்தில் ஐந்து இரவுக்கு மேலும் தங்கக்கூடாது. அதுவும் மற்றையோர் அன்போ அல்லது வெறுப்போ காட்டும் வகையில் அமையக்கூடாது. எல்லோரும் உண்டு உலை அடுப்பு அணைந்த பின்பு, பிராமண, கூடித்திரிய, வைசிய வீடுகளில் யாசித்துப் பெற்ற உணவை உயிரைத் தாங்குவதற்காக உண்ண வேண்டும். காமம், குரோதம், கர்வம், லோபம், மோகம் எனும் தீயனவற்றை எல்லாம் தள்ளிவிடுவதோடு நான் எனும் முனைப்பு இல்லாதிருக்க வேண்டும். சகல ஜீவராசிகளுக்கும் தஞ்சம் தரும் சன்னியாசி எந்தவொரு ஜீவராசிக்கும் பயப்படத் தேவையில்லை. தூய உள்ளத்தோடும் கஷ்டமின்றியும் சன்னியாச தருமத்தைப் பின்பற்றும் பிராமணன் எண்ணெய் இன்றி ஒளிரும் தீயே போல ஒளி மயமாக பிரம லோகத்தை அடைவான்.
வேதத்தின் நான்கு பகுதிகளான மந்திரம், பிராமணம், ஆரணியகம், உபநிடதம் என்பன முறையே பிரமசரியம்,
185

Page 232
கிருகஸ்தம், வானப்பிரஸ்தம், சந்நியாசம் எனும் ஆச்சிரமங் களுக்கு உரியன என்பர்.
நாற் பாதங்களிலே சரியை பிரமசாரிக்கும், கிரியை கிருகஸ்தனுக்கும், யோகம் வானப்பிரஸ்தனுக்கும், ஞானம்
சந்நியாசிக்கும் சிறப்பானவை என்பதும் மனங்கொளற்பாற்று.
(பொ.பூ.)
€3FTñu Jñ
தம்முடைய மதத்திற்குரிய ஆசாரங்களைப் பின்பற்றுபவர் ஆசார்யர் எனப்படுவர். ஆன்மீக அல்லது சமயாசாரியரையும் வைதிகநெறியைப் போதனை செய்பவரையும் தீகூைடி வழங்கும் அதிகாரம் உடையவரையும் ஆசாரியர் என்று வழங்குவர்.
ஆசாரியர் மரபு வைதிகரிடம் மட்டுமன்றி அவைதிகரிடமும் உண்டு. அவைதிகரிடையே சைனரிடம் இம் மரபு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.
சைவரிடையே ஆசாரியர் மரபு பெரும்பாலும் சமயானுட் டானங்களுடனே தொடர்புடையதாகக் காணப்படும். குருவையும் ஆசாரியர் என்று கொள்ளும் போது அம்மரபு சைவரிடையே மிக முக்கியத்துவம் பெறுகின்றது. ஏனெனிற் சைவத்திற் குருமரபு மிகவும் முக்கிய இடம் வகிப்பதாகும்.
ஆயினும் வைணவ மரபிலே ஆசாரியர் மரபு மிக முக்கிய இடம் வகிக்கின்றது. இதம் என அவர்கள் கூறும் திருமகள் கொழுநனான நாராயணனை அடையும் நெறியிலே பிரபத்தியோகத்தின் விரிவாகக் கொள்ளப்படுவது ஆசாரிய அபிமானம். இறைவனைச் சரணடைதலான பிரபத்தியிலே திருமகளும் ஆசாரியரும் முக்கிய இடம் பெறுகின்றனர். இவர்களுடைய உதவியின்றி பூரீமத் நாராயணனை அடைய முடியாது. விஷ்ணுவுக்கு ஊடகமாகத் திருமகளும் அவளுக்கு ஊடகமாக ஆசாரியரும் அமையும் படிநிலை ஒன்றினை அம்மரபிலே காணலாம். இதனைப் புருஷகாரம் என்பர்.
பூரீ நாதமுனிகளிலிருந்து பூரீ இராமாநுசர் வழியாக ஆசாரிய மரபு விரிந்து வருகின்றது. பூரீ இராமாநுசர் 74 குடும்பங்களுக்கு ஆசாரியராக இருக்கும் உரிமையை வழங்கியதாக மரபு கூறும்.
பெரிய வாச்சான்பிள்ளை மாணிக்கமாலையிலே ஆசாரியார் இலக்கணத்தைத் தெளிவாக விளக்கியுள்ளார். ஆசாரியர் வகைகளை விளக்கும் பெரிய வாச்சான்பிள்ளை பிரபன்னத்திற்கு ஆசாரியராவார் பிரபத்திக்கு அறிமுகப்படுத்தும் தகுதியுள்ளவர் என்றும், கடவுளை அடையத் தடையாயுள்ள செயலிலிருந்து பின் வாங்கிக் கொள்வதை உபதேசிப்பவர் என்றும், இறைவன்தான் துணையென்று போதிப்பவர் என்றும் கூறியிருக்கிறார். மாணிக்கமாலையின் கரு ஆசாரியருக்கும் சீடருக்கும் இடையேயுள்ள தொடர்பாகும்.
குருபரம்பரையை விளக்கும்போது 'பெருமாளையே முதற்குருவாகக் கொண்டாலும், வரலாற்று நிலையில்
186

நம்மாழ்வாரையே குலபதியாக, ஆசாரியர்களுக்கு முதல்வராகக் குறிப்பிடுவர். நம்மாழ்வாரையடுத்து நாதமுனிகளைக் கூறுவர். குருபரம்பரையில் பல குருமார்களைப் பற்றி நாம் அறிய முடிந்தாலும், முக்கியமானவர்களாகக் கருதப்ப்டும் சிலரை இங்குச் சிந்திப்பது நலம்.
1. நாதமுனிகள் :
வீரநாராயணபுரத்தில், சொட்டைக்குலத்தில் பிறந்த ஈச்சுவர முனிகளின் மைந்தர்; காட்டு மன்னார் கோயிலில் பிறந்தவர். முனிகள் எனக் கூறப்படினும் மனைவி மக்களோடு இல்லறம் நடத்தி வந்தவரே. பல திருப்பதிகளையும் சேவித்து வந்த இவர் தம் ஊருக்குத் திரும்பிவந்து பகவத் கைங்கரியத்தில் ஈடுபட்டு வந்தார். தம் ஊர்த் திருக்கோவிலில் அன்பர் இருவர் திருவாய்மொழிப் பாடல்களைப் பாடக் கேட்டு, ஆழ்வார் திருநகரி சென்று திருவாய்மொழியினைப் பெற விரும்பி, இறையருளால் பிரபந்தம் அனைத்தையும் பெற்று வந்தார். யோகமார்க்கத்தில் நம்மாழ்வாரையே நேரிற் கண்டு அவரிடமே பிரபந்தங்களைக் கேட்டவர் எனக் கூறுவதும் உண்டு. பிரபந்தங்களை நான்காகப் பாகுபடுத்தியதோடு இசை வகுத்தவரும் இவரே. இவருக்கு எட்டு மாணாக்கர்களைக் கூறுவர். யோகம் வல்ல இவர், மாணாக்கர்களுக்கு யோகத்தைப் பயிற்றுவித்ததோடு வைணவத்தையும் நாலாயிரத்தையும் பரப்பக் கூறினார். இவர் இராமபிரான் திருவுருவை நாடிச் சென்று, காணாது உயிர்விட்ட தாகக் கூறுவர்.
ஆணித்திங்கள் அனுஷ நாள் இவர் திருநட்சத்திரம், இவர் எழுதிய நூற்கள் யோக ரகசியம், நியாய தத்துவம் முதலியவை.
2. ஆளவந்தார் :
யமுனாசாரியர் எனவும் இவரைக் கூறுவர். இவரை நாதமுனிகள் பேரர் என்றும் இராமானுசரை ஆசாரிய பீடத்துக்குத் தேர்ந்தெடுத்தவர் என்றும் கூறுவர். விசிட்டாத் துவிதத்திற்கு இவர் எழுதிய நூற்கள் முக்கியமானவை. ஆடி உத்திராடம் இவர் திருநாள். இவர் எழுதிய நூற்கள் : சித்தித் திரையம், ஆகமப் பிரமாணியம், கீதார்த்த சங்கிரகம் முதலியவை.
3. இராமாநுசர் :
'உடையவர் என வழங்கப்பெறும் இப்பெரியாரை முன்வைத்தே இன்று பூரீ வைஷ்ணவம், இராமாநுசர் தரிசனம் என வழங்கப் பெறுகிறது. இவர் பூரீ பெரும்புதூரில் ஆசூரி கேசவ சோமயாஜி' என்பவருக்கும் காந்திமதியம்மைக்கும் மகனாகப் பிறந்தவர். இவர் தாயார் யமுனாசாரியரின் பேர்த்தி என்பர். இராமாநுசர் தம் பதினேழாவது வயதில் திருமணம் செய்து கொண்டார். மணம் செய்து கொண்ட சில நாட்களில் தந்தை இறந்து போகவே காஞ்சியில் குடியேறினார்.
தாம் ஆசிரியராக ஏற்றுக் கொண்ட யாதவப் பிரகாசரோடு கருத்து வேறுபாடு ஏற்படவே அவரைவிட்டு விலகி விட்டார்; விலகிவந்த இராமாநுசருக்குத் திருக்கச்சி நம்பிபால் உள்ளம் சென்றது. அவரது தெய்வ - அனுபவம் இவரைக் கவர்கிறது. திருக்கச்சிநம்பி யமுனாசாரியரின் நேர் சீடர் யமுனாசாரியரின்
இந்துக் கலைக்களஞ்சியம்

Page 233
ஐந்து மாணவர்களிடமிருந்தும் இராமாநுசர் பூரீ வைஷ்ணவ உண்மைகளை அறிந்ததாகக் கூறுவர். இவர்கள் எல்லோரும் அந்தணர்களல்லர் எந்த வகுப்பினரும் வைணவராகலாம்; அப்போது அவர்கள் பண்டைக்குலத்தை விட்டுத் தொண்டர் குலத்தினர் ஆகின்றனர் என்ற உறுதி இராமாநுசருக்கிருந்தது. திருமாலடியார் பார்ப்பனரல்லாதாராகவிருந்தும் அவர் எச்சிலையும் உண்ணவிரும்பியவர் இராமாநுசர்.
வானுளார் அறியலாகா வானவர் என்பராகில் தேனுலாம் துளபமாலைச் சென்னியாய் என்பராகில் ஊனமாயினகள் செய்யும் உளன காரகர்களேனும் போனகம் செய்த சேடம் தருவரேல் புனிதமன்றே (91)
என்னும் தொண்டரடிப் பொடியாழ்வாரின் பாடலும் இங்குக் கருதத்தக்கது. இச்சிந்தனையின் விளைவாகப் பண்டைய சாதீய உணர்ச்சியில் திளைத்து நின்ற மனைவியையும் துறந்து யதிராசனாக வெளியேறினார்.
இளங்குழவியாயிருந்தபோதே இராமாநுசரிடம் தெய்வீகத்தைக் கண்ட ஆளவந்தார், தம் காலத்துக்குப் பின் அவரை அழைத்து ஆசாரிய பீடத்துக்கு அதிபர் ஆக்க விழைந்தார். இராமாநுசர், ஆளவந்தாரின் இறுதி விருப்பங்களாகிய (1) முனிபுங்கவர்களின் பெயரைக் குழந்தைகளுக்கு இட்டு வழங்குதல். (2) திருவாய்மொழிக்கு விரிவுரை காண்டல், (3) பிரமசூத்திரத்திற்கு விசிட்டாத்து விதத்தை ஒட்டி விரிவுரை எழுதல் என்பனவற்றை நிறைவேற்று வதற்கு உறுதிகூறியதோடு நிர்வாகத்தை ஏற்றதும் அதனைத் திருத்தி அமைத்து, நித்திய நைமித்திய பூசைகளுக்கு ஏற்பாடு செய்தார். இவர் மேற்கொண்ட திருத்தத்தை விரும்பாத சிலர் இவரை நஞ்சூட்டிக் கொல்லவும் முயன்றனர்.
இவர் தாம் பிரம சூத்திரத்திற்கு உரை எழுதியதோடு திருக்குருகைப்பிரான் பிள்ளையைக் கொண்டு திருவாய் மொழிக்கு ஆறாயிரப் படி எழுதுவித்தார். தம் சீடரான பராசரப்பட்டரைக் கொண்டு சகஸ்ரநாம பாஷ்யத்தை வெளியிட்டார்.
வைணவர்களிடம் பேரன்பு கொண்ட இராமாநுசர் திருக்கோட்டி நம்பிகளிடமிருந்து பெற்ற உபதேச மந்திரத்தைக் கேட்பவர்கள் அனைவருக்கும் நன்மை என அறிந்தபோது, அவ்வாறு பிறருக்குச் சொல்வதால் தமக்குப் பெருந்தீங்கு வரும் எனக் கூறியபோதும் அதனைப் பொருட்படுத்தாமல், கோபுரத்தின் மேலேறி நின்று பலரும் அறிய அவ்வுபதேச மந்திரத்தைக் கூறியவர். தீண்டத்தகாதாராகக் கருதப்பட்டவர்களையும் திருக்குலத்தார் ஆக்கியவர். பல்வேறு சமுதாயத்தவர்களும், ஏழையாயினும் செவ்ராயினும், வைணவர் என்ற நிலையில் இவரால் அன்பாகப் பாராட்டப்பட்டனர். இவர், பார்ப்பன ரல்லாதாரிடம் உபதேசம் பெற்றதுமுண்டு. பார்ப்பனரல்லாத சீடர்களும் இவருக்குண்டு; மாறனேரிநம்பி திருக்குலத்தாரே.
அரசாங்கத்தின் துன்புறுத்தலால் பன்னிரண்டாண்டுகள் மைசூர் எல்லையில் - மேல்கோட்டைப் பகுதியில் - வாழ்ந்து வைணவநெறியைப் பரப்பி வந்தார். அங்குத் தாழ்த்தப் பட்டவர்களை ஒவ்வோராண்டும் சிலநாட்கள் திருக்கோவில்
இந்துக்கலைக்களஞ்சியம்

செல்லவும். குளங்களில் குளிக்கவும் அனுமதித்தார். வேதங்களைக் கற்கவும் பஞ்ச சமஸ்காரம் பெறவும் உதவினார். தாழ்ந்த நிலையில் உள்ளவர்களைத் தெய்வீக அன்பினால் உயர்ந்த நிலைக்கு இட்டுச் செவ்தே இராமநுசர் சிந்தனை யாகவிருந்தது.
இராமாநுசரை, உபயவேதாந்தத்தை வெளிப்படுத்தியவராகக் கூறுவர். பிரஸ்தானத்திரையமும் ஆழ்வார் பிரபந்தங்களும் கூறியவற்றைச் சமரசப்படுத்தினார் என்பர். பக்தியும் ஞானமும் ஒன்றே எனப் பாரத நாடெங்கணும் சுற்றி வந்து பிரசாரம் செய்தார். பின் திருவரங்கம் திரும்பி ஆசாரியராக விளங்கி கி. பி. 1137 இல் பெருமாள் திருவடி சேர்ந்தார் என்பர்.
சித்திரைத் திருவாதிரை இவர் திருநாள்.
இவர் செய்த நூற்களாக - வேதாந்த சங்கிரகம், வேதாந்த தீபம், வேதாந்த சாரம், கத்தியத்திரையம் - பூநீரங்ககத்தியம், வைகுண்ட கத்தியம், சரணாகதி கத்தியம், பூரீபாஷியம், கீதாபாஷியம். முதலியன.
4. வேதாந்த தேசிகர் :
இவர், இராமாநுசருக்குப் பின் வைணவ சித்தாந்தத்தை மிகச் சிறப்பாக விளக்கம் செய்தவர், என்பர். காஞ்சிபுரத்தை அடுத்த 'தூப்புல் என்னும் இடத்தில் தந்தை அனந்த சூரிக்கும் தாய் தோதாத்ரி அம்மையாருக்கும் மகவாய்த் தோன்றியவர். இவரைக் கண்டையின் அம்சமாகக் கூறுவர். இவர் இயற்பெயர் வேங்கடநாதன்' என்பது.
திருமங்கை' என்பாரை மணந்து இல்லறம் நடத்திவந்த இவர், இருபது வயதுக்குள்ளாகவே தமது மாமாவான கிடாம்பி அப்புள்ளாரிடம் சகல கலைகளையும் கற்றுத் தேர்ந்தார். அவரிடமே கருட மந்திரோபதேசமும் பெற்றார். தென்னாற்காடு மாவட்டத்திலுள்ள திருவயிந்திபுரத்தில் எழுந்தருளியுள்ள ஹயக்கிரீவனையும் கருடாழ்வானையும் வணங்கி மந்திர ஆவிருத்தி செய்து அவர்கள் அருள் பெற்றுச் சிறந்தார். ஹயக்கிரீவர் அருள்பெற்றதை,
வெள்ளைப் பரிமுகர் தேசிகராய் விரகால் அடியோம் உள்ளத்து எழுதியது ஒலையிட்டனம் யாம்
எனத் தேசிகரே குறிப்பிடுவர். மேலும் கருடன் ஹயக்கிரீ வரோடு நேரில் தோன்றித் தேசிகருக்கு மந்திரோபதேசம் செய்வித்துத் தம்மைப் பற்றியும் பாடும்படி ஆணையிட்டுச் சென்றதைத் தேசிகர் பாடிய கருட பஞ்சாசத்தின் முடிவில் காணலாம் என்பர்.
தேசிகர், தமிழ்ப் பிரபந்தங்கள் வடமொழி வேதம் போன்ற பெருமை உடையனவே என்பதை நிலைநாட்டியதாகவும் இதனைக் கண்டுகந்து திருவரங்கப் பெருமானே இவருக்கு ‘உபய வேதாந்தாசாரியர்' என்ற விருதை அளித்ததாகவும் கூறுவர். செய்ய தமிழ் மாலைகள் நாம் தெளியவோதி தெளியாத மறைநிலங்கள் தெளிகின்றோமே என்பது தேசிகர் பாடல்.
187

Page 234
இவர் தமிழிலும், வடமொழியிலும் இவ்விரண்டும் கலந்த மணிப்பிரவாள நடையிலும் பல நூற்கள் இயற்றியுள்ளார். இராமாநுசர் சித்தாந்தத்தை நிலைநாட்டுவதையே நோக்கமாகக் கொண்டவர். இவரை,
1. சரணாகதியினைத் தனிப்பட்ட மோட்ச உபாயமாக
நிறுவியர், 2. திருவுடன் கூடிய திருமாலே பரத்ெய்வம் என
எடுத்துக்காட்டியவர்,
3. உபயவேதாந்த ஒற்றுமையை உணர்த்தியவர், என்பர்.
இவர் நூறு வயதுக்கு மேலும் வாழ்ந்தவர். 'தேசிகன்’ என்பது பொதுவாக ஆசாரியனைக் குறிப்பிட்டாலும் வைணவ உலகில் இவரையே சிறப்பாகக் குறிக்கும்.
இவருடைய கொள்கைகளை முழுவதும் பின்பற்றுவோர் வடகலை வைணவர்கள். இவர்கள் தம் குருவணக்கத்திலும் சங்கல்பத்திலும் இவரை நினைவு கூர்வர். தென் கலைச் சீடர்களும் இவருக்குண்டு என்பர். புரட்டாசி - திருவோணம் - இவர் திருநாள். இவரியற்றிய நூற்கள் - ரகஸ்ய - த்ரைய சாரம், பாஞ்ச ராத்திர ரகூடிா, திராவிட வேதோபநிஷத் முதலியவை.
5. மணவாளமாமுனிகள் :
வைணவர்களில் ஒருசாரார் - தென்கலையினர் - இராமாநு சருக்கு அடுத்த நிலையில் இவருக்கே ஏற்றமளிப்பர். நம்மாழ்வார், இராமாநுசர், மணவாள மாமுனிகள் இம்மூவரும் பிரணவத்துக்கு (ஒம்) ஒப்பானவர்கள் என்றும் அகரத்தினால் ஆழ்வாரும் உகரத்தினால் உடையவரும் (இராமாநுசர்) மகரத்தினால், மணவாள மாமுனிகளும் உறைபொருளாகத் தெரிவிக்கப்படுகிறார்கள் என்றும் கூறுவர்.
இவர் ஆழ்வார் திருநகரியில் திருநாவீறிடைய பிரான் தாசரண்ணர் என்பவருக்கு மகனாகப் பிறந்தவர். அழகிய மணவாளன் என்பது இவர் பிள்ளைத் திருநாமம். பலகலை களையும் கற்றுத் தேர்ந்த இவர், பிள்ளை லோகாசாரியர் மாணாக்கரான திருவாய்மொழிப்பிள்ளையிடம் இரகசியப் பொருள்களையும் சம்பிரதாயப் பொருள்களையும் கேட்டறிந்தார் என்பர். இல்லறவாழ்வைத் தொடங்கித் துறவியாகவும் வாழ்ந்த நிலையில் இவரை மணவாள மாமுனிகள் எனக் குறிப்பிட்டாலும் ஜியர் எனத்தனியே குறிப்பிட்டால் அச்சொல் இப்பெரியாரையே சுட்டி நிற்கும்.
தென்கலையினர் நித்தியானுசந்தானம் செய்யும்போது, ஆழ்வார் திருவடிகளே சரணம்; எம்பெருமானார் (இராமாநுசர்) திருவடிகளே சரணம் ஜியர் திருவடிகளே சரணம் எனக்கூறுவர். இது தென்கலையினர், அவர் பால் கொண்டுள்ள மதிப்பை நன்கு காட்டும். இவர் திருநாள் ஐப்பசி - மூலம்,
இவர் நூற்களில் ஆசாரிய ஹிருதயம் உரையினைச் சிறப்பாகக் கூறுவர்.
188

பல நூற்களுக்கு உரை எழுதிய இப்பெரியார், இறுதியில் பரமபதத்தில் ஆசை பிறந்து 'ஆர்த்திப் பிரபந்தம் செய்து பரமபதம் அடைந்தார் என்பர். (பொ. பூ. & ப. அ.)
ஆசார்யஹ்ருதயம்
நம்மாழ்வாரின் பெருமையைப் போற்றும் மணிப்பிரவாள நடையிலமைந்த நூல் ஆசார்ய ஹ்ருதயம் ஆகும்.
அதனை இயற்றியவர் அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் என்பவராவார். அவர் வடக்குத் திருவீதிப்பிள்ளையின் புதல்வராகத் திருவரங்கத்திலே பதின்மூன்றாம் நூற்றாண்டின் பிற்பகுதியிலே அவதரித்தவர்; இவர் தமையனார் தென்கலை வைணவ ஆசாரியராக விளங்கிய பிள்ளைலோகாசாரியர்.
ஆசார்யஹ்ருதயம் அழகிய மணவாளப் பெருமாள் நாயனாரின் நூல்களிலே பெரியது மட்டுமன்று; அதிமுக்கிய மானதுமாகும்.
ஆசிரியர் தாம் இந்நூலை எழுதியதன் நோக்கம் திருவாய்மொழியின் சாரத்தைப் பக்தர்களுக்கு எவ்வித வர்ணப்பாகுபாடுமின்றி வெளியிடுவதே என்று கூறியுள்ளார். நம்மாழ்வார் பிறப்பால் உயர்ந்தவராக இல்லாவிடினும் தம் பக்தியாலும், பற்றினாலும், அறிவினாலும் எந்த ஆழ்வாருடனும் ஒப்பிட்டுக் கூறமுடியாத உயர்நிலையைப் பெற்றவர் என்பதை ஆசிரியர் நிறுவ முற்பட்டுள்ளார். வேதவியாசரிலும் கிருஷ்ண பரமாத்மாவிலும் பார்க்க, நம்மாழ்வார் பெரியர் என்பது ஆசிரியர் கருத்து.
ஆழ்வார்களின் அருளிச் செயல்களிலும் ஆசாரியர்களின் சம்பிரதாயக் கிரந்தங்களிலும் இருந்து தொடர்களை அப்படி அப்படியே எடுத்து புது விகுதிகள் கொடுத்து எழுதிய முறை தெளிவேற்படுத்துவதாக இல்லை. உரையின்றி உணரமுடியாத நடை நூலிலே காணப்படுகின்றது.
திருநாராயணபுரத்து ஆயி, மணவாளமாமுனிகள் முதலியோர் ஆசார்யஹ்ருதயத்திற்கு வியாக்கியானம் எழுதி யுள்ளனர். பிரதிவாதி பயங்கரம் உ. வே. அண்ணங்கராசாரியர் 1948 இலே ஆசார்ய ஹ்ருதயம் தாத்பர்யஸாரம் எழுதினார்.
வித்துவான் பு. ரா. புருஷோத்தம நாயுடு மணவாள மாமுனிகளின் வியாக்கியானத்தைத் தமிழாக்கம் செய்துள்ளார். நான்கு பாகம் கொண்ட தமிழாக்கத்தினைச் சென்னைப் பல்கலைக்கழகம் இரு நூல்களாக 1965 இலே வெளியிட்டுள்ளது. (பொ.யூ.)
ஆசாரக்கோவை
ஒழுக்கங்களைத் தொகுத்துரைப்பதான ஹ நூல் ஆசாரக் கோவை. இத்தகைய தன்மையையுடையவை சங்கத நூலாரின் ஸ்மிருதிகள். ஆசாரக் கோவையின் சிறப்புப் பாயிரம் ஆரிடத்து இருந்து தொகுக்கப்பட்டதென்று கூறுகின்றது. அதன்
இந்துக் கலைக்களஞ்சியம்

Page 235
பதிப்பாசிரியர் திருமணம் செல்வகேசவராயமுதலியார், பெரும்பான்மையானவை சுக்ரஸ்மிருதியிலிருந்து தொகுத்தவை என வடநூற் புலவர் கருதுவதாக முன்னுரையிற் கூறுவர். எஸ். வையாபுரிப்பிள்ளை ஆசாரக் கோவையின் பொருள்கள் பல ஸ்மிருதிகளில் இருந்து தொகுக்கப்பெற்றன எனக் கொள்வதே தக்கதென்று எடுத்துக் காட்டியுள்ளார். (இலக்கிய மணிமாலை, 1957, பக். 105 - 106). ஆயினும் ஆசாரக் கோவையிலே சங்கத ஸ்மிருதிகள் போன்று சாதிக்கொரு ஆசாரம் என்று பிரித்துக் கூறப்படாமை நோக்கத்தக்கது.
வைகறையிலே துயில் நீங்குதல் முதல் இரவில் துயில் கொள்ளுதல் வரையிலான நித்திய கருமங்களை விதித்தும் விலக்கியும் காட்டுவதோடு பொதுவான ஒழுங்கங்களையும் தொகுத்துரைக்கும் ஆசாரக்கோவை, அகத்தூய்மையையும் புறத்தூய்மையையும் வற்புறுத்துவதாகும்.
கயத்தூர்ப் பெருவாயின் முள்ளியார் எனும் சைவர் ஆசாரக்கோவையின் ஆசிரியர் என்பது சிறப்புப் பாயிரத்தாற் புலனாகும். இவர் வாழ்ந்த காலத்தைத் துணிந்துரைத்தலரிது.
பதினென் கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்றான ஆசாரக் கோவையில் 100 வெண்பாவுள.
இதனைப் பழைய பொழிப்புரையுடன் தில்லையம்பூர் சந்திரசேகரகவிராஜர் ( -1883) 1857 இலே பதிப்பித்தார்; திருத் தணிகை விசாகப் பெருமாளையரும் பழைய பொழிப்புரையுடன் 1883 இலே பதிப்பித்துள்ளார்; திருமணம் செல்வகேசவராய முதலியார் பழைய பொழிப்புரை, புதியபதவுரை, குறிப்புரைகளுடன் 1893, 1898, 1916, 1918 ஆம் ஆண்டுகளிலே பதிப்பித்தனர்; அவர் வியோகத்தின் பின்பு 1934 இலும் அவர் பதிப்பு பிரசுரிக்கப்பட்டது. சுன்னாகம் அ. குமாரசுவாமிப் புலவர் 1900 இல் ஆசாரக் கோவையினைப் பதிப்பித்துள்ளார். பு, சி. புன்னைவனநாத முதலியாரின் விருத்தியுரையுடன் பழையவுரை கூடிய மூலத்தினைத் திருநெல்வேலி தென்னிந்திய சைவ சித்தாந்த நூற் பதிப்புக்கழகம் 1939 இலே வெளியிட்டது. (பொ.யூ.)
ஆசிரியமாலை
ஆசிரியமாலை என்பது ஆசிரியப்பாக்களைக் கொண்ட தொகுப்பு நூல் என்று கருத இடமுண்டு. இந்நூல் இன்று கிடைப்பதாக இல்லை. இந்நூற் பெயரும் இதன் பாடல்களிலே பதினாறும் புறத்திரட்டு எனும் தொகை நூலால் அறியப் படுகின்றன.
புறத்திரட்டு பதினைந்தாம் நூற்றாண்டளவிலே தொகுக்கப் பெற்றதென்று கருத இடமுண்டு.
ஆசிரிய மாலையிலிருந்து பெறப்படும் பதினாறு பாடலிலே நான்கு இராமாயணப் பாடல்கள். இதன் கடவுள் வாழ்த்து
சிவசம்பந்தமானது. அறன்வலியுறுத்தல், தவம், நிலையாமை
இந்துக் கலைக்களஞ்சியம்

முதலிய அறநீதிக் கருத்துக்கள் அமைந்த பாடல்கள் இதனுட் காணப்படுகின்றன; அரசியல் தொடர்பான புறப்பாடல்களுமுள.
(பொ.யூ.)
ஆசிரியர் நல்லந்துவனார்
திருப்பரங்குன்றத்திலே எழுந்தருளியிருக்கும் முருகப் பெருமான் மீது இவர் பாடிய பரிபாட்டு ஒன்று கிடைத்துள்ளது. திருப்பரங்குன்றத்தின் பெருமையையும், அதிற்கடம்பமரத்தின் அடியிற் கோயில் கொண்டு எழுந்தருளியிருக்கும் முருகப் பெருமானின் திருவருட் சிறப்பையும் உள்ளமுருகி வாழ்த்தியுள்ளார்.
திருப்பரங்குன்றிலே கோயில் கொண்ட முருகனைப் பாடிய "அந்துவன்’ எனும் புலவரை மதுரை மருதனிள நாகனார் குறிப்பிட்டுள்ளார் (அகநானூறு 59).
கலித்தொகையுரையாசிரியர் நச்சினார்க்கினியர் பாலைத் திணையை ஆசிரியர் நல்லந்துவனார் கோத்ததோடு "புரிவுண்ட புணர்ச்சியுள்’ எனும் நெய்தற்கலிப் பாடலையும் பாடினார் என்ற கருத்தினையுடையவர்.
நல்லந்துவனார், மதுரையாசிரியர் நல்லந்துவனார் எனும் பெயர்கள் பண்டைய சான்றோர் பெயர்ப்பட்டியலிலுள.
(பொ.யூ.)
ஆசௌச தீபிகை
ஆசௌச தீபிகை பிறப்புகளால் உண்டாகும் விலக்குகளை விளக்குவதொரு நூல், சைவ நன்மக்கட்குரியது.
அதனை இயற்றியவர் தமிழாகரமுனிவர். சிதம்பரம் குகைமடம் ஞானப்பிரகாசரிடம் கற்று, ஞானோபதேசம் பெற்று, ஆன்மானந்தவாதியாக விளங்கி, முதுமையிலே தருமையாதீனம் அடைந்து அவ்வாதீன அடியவருள் ஒருவரானவர் தமிழாகர முனிவர். அவர் பதினேழாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர்.
ஆசௌச தீபிகையை யாழ்ப்பாணம் வண்ணை மா. வைத்தியலிங்கபிள்ளை ( - 1902) யாழ்ப்பாணம் சைவப்பிரகாச யந்திரசாலையில் 1882 இலே அச்சிட்டு வெளிப்படுத்தினார்.
எழுதுமட்டுவாள் மாப்பாண முதலியார் பத்தொன்பதாம் நூற்றாண்டின் ஆரம்ப தசாப்தங்கள் வரை யாழ்ப்பாணப் பிரதேசத்தில் வாழ்ந்தவர். அவர் ஆசூசவிதி என ஒரு நூல் எழுதியுள்ளார். வட்டுக்கோட்டை மு. ஆறுமுகம்பிள்ளை பத்தொன்பதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் வாழ்ந்தவர். அவர் ஆசௌச விதியொன்று இயற்றியுள்ளார். அது அச்சிடப் பட்டுள்ளது. மாதகல் சு. ஏரம்பையர் ( - 1914) எழுதிய ஆசௌச வினாவிடை வட்டுக்கோட்டையில் 1912இலே பதிக்கப்பட்டுள்ளது.
துன்னாலை ஆ. சபாரத்தினக்குருக்கள் தமிழ் ஆசௌச தீபிகைக்குத் தாத்பரிய உரை தந்துள்ளார். அது பருத்தித்
189

Page 236
துறையிலே அச்சிடப் பெற்றுள்ளது. கொக்குவில் இ. சி. இரகுநாதையரும் ஆசௌச தீபிகைப் பதிப்பொன்றினை வெளியிட்டுள்ளார். (பொ.பூ.)
ஆடல் வல்லான்
இசையும் ஆடலும் கலைஞர்களுக்கு உரிய கலைத் தொழில். இறைவனுக்கு உரிய தொழிலும் ஆடல் பாடலே ஆகும். கடவுளுக்கு இப்படி ஒரு நடனப் புலவனாகக் கலை உருவம் தந்து, வழிபட்டுப் பெருமையடையும் நாகரிகம் உலகிலேயே தமிழ் நாட்டில் மட்டுமே உண்டு.
ஆடல் வல்லான் வடிவங்கள் உலக மக்களைக் கவர்ந்தது போல் வேறு எந்த உருவமும் கவர்ந்ததில்லை. இத்தெய்வத் திருவுருவத்திற்கு உரிய கவர்ச்சி உலகம் முழுவதும் பரவியிருப்பதை, மேலை நாடுகளில் பல காட்சிக் கூடங்களிலும் காணலாம். தமிழ் மக்களுடைய வழிபாட்டிற்குரிய நடராச வடிவம், முற்றிலும் வேறுபட்ட நாகரிகத்தைக் கொண்டுள்ள மக்களையும் கவர்ந்துள்ளது.
உலக இயக்கங்களின் உயிர்த்துடிப்பு, ஆடல் வல்லானின் ஆடலால் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. உயிர்கள் பிறப்பதும் வாழ்வதும் இறப்பதும் பேரின்ப நிலையில் சாவா மூவாப் பெருவாழ்வில் பொருந்துவதும் ஆடல் வல்லானின் அசை வினாலேயே நிகழ்கின்றன. நுண்ணிய அணுக்கூட அசை வற்றிருப்பதில்லை. இயக்கம் என்பது உலகின் மாபெரும் அறிவியல் தத்துவம். இதனைக் காட்டும் இணையற்ற இறை வடிவம் நடராச வடிவமாகும்.
இறைவன் தன் அடியார்களைப் பாதுகாத்து, அரக்கர் முதலிய எதிர்ப்பாற்றல்களை வென்று வெற்றிக் களிப்பில் ஆடிய ஆடல்களே தாண்டவங்களாகும்.
தட்டுதலை உடையது தாண்டவமாகும். தட் - பூமியைத் தட்டுதலாகிய சதியே இதன் சிறப்பு அம்சம். பரதம் என்ற சொல் பாவம், ராகம், தாளம் என்ற மூன்றின் முதல் எழுத்தொலியான ப, ர, த, என்பதன் இணைப்பு என்பர். இதனை நாட்டியம் எனவும் கூறுவர்.
நாட்டியமானது தாண்டவம், இலாசியம் என இரண்டு வகைப்படும். மென்மையான கூத்துகள் இலாசியம் அல்லது இலளிதம் எனப்படும். காமச் சுவையைச் சிறப்பாகக் கொண்டவை இவை. இவை சுத்த இலாசியம் முதலான ஏழுவகைகளைக் கொண்டவை. சுத்த இலாசியம், சிவபெருமான் ஆடியதாகும். அது வலப்பக்கமாகச் சுழலுதல், பாம்புபோலச் சுழன்று ஆடுதல், மின்கொடி போல அசைந்தாடுதல், கொடி போல் ஆடுதல் காலை மேலே தூக்கி நின்றாடுதல் முதலிய ஏழுவகைப்படும்.
சிவபெருமானின் ஏழுவகை ஆடல்கள் ஆகமங்களில் சிறப்பாகப் பேசப்படுகின்றன. அவை 1. ஆனந்தத் தாண்டவம் (இது தில்லையில் ஆடிய திருச்சிற்றம்பலத்தாண்டவம்), 2 சந்தியா
190

தாண்டவம், 3. உமா தாண்டவம், 4. கெளரி தாண்டவம், 5. காளிகா தாண்டவம், 6. திரிபுர தாண்டவம், 7. சங்கார தாண்டவம் எனப்படும்.
சிவனின் தாண்டவங்கள் அனைத்துள்ளும் முதன்மையாகத் திகழ்வது நடராசர் தாண்டவ அமைப்பாகும். இவ்வடிவம் தில்லைச் சிதம்பரத்தில் சிறப்பாகவும் ஏனைய தலங்களில் பொதுவாகவும் அமைந்துள்ளது.
காளிகா தாண்டவம் படைத்தல் தொழிலையும், கெளரி தாண்டவம் காத்தல் தொழிலையும், சம்கார தாண்டவம் அழித்தல் தொழிலையும், திரிபுர தாண்டவம் மறைத்தல் தொழிலையும், ஊர்த்துவ தாண்டவம் அருளுதலையும் ஆனந்தத் தாண்டவம் ஐம்பெருந் தொழில்களையும் குறிப்பதாகப் பொருள் கொள்வர்.
ஆடல் வல்லான் பின் வலக்கையில் உள்ள உடுக்கையை அடிப்பதால் ஒலி பிறக்கிறது. பெருவெளியில் உண்டான ஓங்கார ஒலியினின்றும் உலகம் தோன்றியதாகக் கருதப்படுகிறது. எனவே ஒலியை உண்டாக்கும் உடுக்கை, படைத்தல் தொழிலைக் குறிப்பதாகக் கொள்ளப்படுகிறது. முன் வலக்கை அபய முத்திரையில் உள்ளது; அது தன்னைப் புகல் அடைந்தாருக்கு அபயம் அளிக்கிறேன். என்று கூறுவது போல் உள்ளதால், அது காத்தல் தொழிலைச் சுட்டிக் காட்டுகிறது. பின் இடக்கையில் உள்ள தீ, அழித்தல் தொழிலைச் சிவபெருமான் மேற் கொண்டுள்ளார் என்பதைக் காட்டுவதாகக் கொள்ளப்படுகிறது. அவரது ஊன்றிய வலக்கால் மறைத்தல் தொழிலைக் காட்டுகிறது. இடக்கால் தூக்கி இருக்க முன் இடக்கை தண்டமுத்திரையாய்த் தூக்கிய காலைச் சுட்டிக் காட்டுகிறது. அதாவது, தனது காலில் அடைக்கலம் அடைந்தவர்கள் அருளப்படுவார்கள் என்று சொல்வதுபோல் உள்ளதால் அது அருளல் தொழிலை எடுத்துக் காட்டுகிறது. இவ்வாறு ஐம்பெருந் தொழில்களையும் ஒருங்கே காட்டும் ஆடல்வல்லான் திருவுருவினராகிய சிவபெருமான்தான், முத்தொழிலையும் புரியும் மூவரில் ஆதியும் அந்தமும் அற்ற முழுமுதற் பொருள் என்னுங் கருத்து வலியுறுத்தப்படுகிறது. நமசிவாய என்னும் ஐந்தெழுத்து மந்திரமும் ஆடல் வல்லான் திருவுருவும் ஒன்றே என்பதை உண்மை விளக்கம் வலியுறுத்துகிறது.
சிவபெருமானது நடன வடிவம், அவர் வல்லமை யாவற்றையும் பெற்றவர்; எங்கும் நீக்கமற நிறைந்தவர்; அவர் இன்றி அணுவும் அசையாது என்ற உண்மைக்கேற்ப எல்லாவற்றையும் இயக்குபவர்; காலத்தைக் கடந்தவர் என்பதையெல்லாம் காட்டுகிறது. அவர் செய்த எட்டு வீரச்செயல்கள் அட்டவீரட்டம் எனப்படும். திரிபுரங்களைச் சிரித்து எரித்தபின் ஆடிய நடனம் அவரது பேராற்றலைக் குறிக்கிறது. இதனை எல்லாம் வல்ல ஆற்றல் (Omnipotence) என்பர். அவர் எட்டுத் தோள்களையும் வீசி ஆடுவது, எட்டுத் திசைகளைக் குறிப்பதாகவும் அவருடைய நீக்கமற நிறைந்துள்ள தன்மையைக் காட்டுவதாகவும் கொள்ளலாம். இதனை எங்கும் நிறைந்திருத்தல் (Omnipresence) என்பர். வட இந்தியாவில்
இந்துக் கலைக்களஞ்சியம்

Page 237
ஆடல் வல்லான் வீணையைக் கையில் ஏந்தி நடனம் ஆடுவதைப் போன்று காணப்படுகிறார். வீணை இசைக்கருவிகளையும் இசையையும் மட்டுமின்றி எல்லாக் கலைகளையும் குறிக்கிறது. கூற்றுவனை மாய்த்தபின் அவர் ஆடிய நடனம் காலத்தை வென்றதைக் காட்டும்.
சங்க இலக்கியங்களில் இறைவனின் பாண்டரங்கம், கொடுகொட்டி, காபாலம் என்னும் ஆடல்கள் குறிக்கப் பெறுகின்றன. உமையொரு பாகனாக இறைவன் நின்று அச்சம், வியப்பு, விருப்பு, அழகு முதலியன பொருந்த அவுணர்கள் இறந்த போர்க்களத்தில் ஆடியது கொடுகொட்டி; இது காத்தற் பொருளைக் கொண்டது. இறைவன் திரிபுரம் எரியும் காலத்துக் கைகொட்டி ஆர்த்து ஆடியதால் அப்பெயர் பெற்றது. இது கொட்டிச் சேதம் என்று சிலப்பதிகாரத்தில் கூறப்படுகிறது.
ஆடல் வல்லானை அகத்தேயும் புறத்தேயும் கண்டு இன்புற்ற திருமூலர், இறைவனது கூத்தினைச் சிவானந்தக் கூத்து, சுந்தரக் கூத்து, பொற்பதிக் கூத்து, பொற்றில்லைக்கூத்து, அற்புதக் கூத்து என ஐந்து வகையாகக் காட்டுகிறார். இவற்றையன்றித் திருக்கூத்துத் தரிசனம் என்னும் தலைப்பில், ஆடல் வல்லானின் திருக்கூத்தின் தத்துவத்தையும் திருவுருவ அமைப்பையும் நன்கு விளக்குகிறார். காரைக்காலம்மையார் தமது திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகத்தில் அறவா நீ ஆடும்போதுன் அடியின் கீழ் இருக்க வேண்டும் என்று ஆடல் வல்லானைப் பரவுகிறார். தேவார ஆசிரியர்களும் தில்லைக் கூத்தனைத் தெய்வத் தமிழில் தித்திக்கப் பாடுகிறார்கள். சேரமான் பெருமாள் நாயனார், பொன் வண்ணத்தந்தாதியில் ஆனந்தக் கூத்தனின் அழகு வெள்ளத்தில் நம்மைத் திளைக்கச் செய்கிறார். பட்டினத்தார் பாடியுள்ள கோயில் நான்மணிமாலையும் நம்பியாண்டார் நம்பிகளின் திருப்பண்ணியர் திருவிருத்தமும் ஆடல்வல்லானை அனுபவித்துப் பாடியனவாகும். தில்லைக் கூத்தனின் இன்பவெள்ளமே பெரிய புராணமாகும்.
ஆடுவதில் வல்லான் ஆடல் வல்லான் எனப்பட்டார். இப்பெயரை உலகறியச் செய்தவன் மாமன்னன் முதலாம் இராசராசன். அவன் தன் நாட்டில் பயன்படுத்தப்பட்ட எடைக் கல்லுக்கும் மரக்காலுக்கும் ஆடல்வல்லான் எனப் பெயரிட்டு அழைத்தான். கோயில் அமைப்பில் ஆடல் வல்லானுக்கு என்று தனியாக மண்டபம் கட்டுவது இவன் காலத்திலேதான் தொடங்கியது. இவன் காலம் முதற்கொண்டு, ஆடல் வல்லானின் செப்புப் படிமங்கள் உன்னத வளர்ச்சி பெற்று உலகப்புகழ் அடைந்தன.
சிவபெருமான் 108 வகை நடனங்களை ஆடியதாகக் கூறப்படுகிறது. பரத நாட்டிய நடன வடிவங்களைச் சிதம்பரம் நடராசர் கோயில், கும்பகோணம் சாரங்கபாணி கோயில், விருத்தாசலம் விருத்தகிரீசுவரர் கோயில், திருவண்ணாமலை அருணாசலேசுவரர் கோயில், தஞ்சாவூர்ப் பெரிய கோயில் ஆகியவற்றிற் காணலாம். இந்தியாவில் முதன்முதலாகத் தஞ்சாவூர்ப் பெரிய கோயிலேதான் நடன வடிவங்கள் கல்லிற் செதுக்கப்பட்டன என்பது ஆராய்ச்சியாளர் முடிவு.
இந்துக் கலைக்களஞ்சியம்

பல்லவர் காலத்துக் குடவரைக் கோயில்களில் அமைக்கப்பட்ட ஆடல்வல்லான் வடிவங்களில் திருவாசி இல்லை. காலடியில் முயலகன் இல்லை. திருவாசியும் முயலகனும் அமைப்பது பிற்காலத்தில் ஏற்பட்ட வளர்ச்சி என்பது அறிய முடிகிறது. ஆடல் வல்லானுக்குச் சிறப்பாக அமைந்த அம்பலங்கள் ஐந்து, அவை: திருவாலங்காடு - மணி அம்பலம் (இரத்தினசபை); சிதம்பரம் - பொன் அம்பலம்; மதுரை - வெள்ளியம்பலம்; திருநெல்வேலி - தாமிர அம்பலம்; திருக்குற்றாலம் - சித்திர அம்பலம் என்பனவாகும்.
இவ்வாறாக உலகப் புகழ் பெற்ற ஆடல் வல்லானின் அற்புதத் திருவுருவம் கலை உலகில் மிக உயர்ந்த இடத்தில் வைத்துப் போற்றப் பெறுகிறது. சமயம், கலை, தத்துவம், அறிவியல் ஆகிய பலதுறையினரும் போற்றும் வகையில் அமைந்த அரிய படைப்பு
ஆடல்வல்லான் திருவுருவம். (இரா. கி.)
ඒ%lg ඊilipmබiffගහr
*அமா என்பது ஒரிடத்திற் பொருந்தியது, குவிந்தது, அடுத்தது என்ற பொருள் தருவதாகும். ஒரு இராசியிற் சூரியன், சந்திரன் இருவரும் சேர்ந்து உறவாகும் வாசியான நாள் அமாவாசி எனப்படும்.
சூரியனும் சந்திரனும் ஆற்றல்மிக்கவர்கள். சூரியன் ஞானகாரகன், ஆத்மகாரகன், சந்திரன் மனதிற்கு அதிபதி. ஆற்றல் மிக்க இவ்விருவரும் ஒரு இராசியில் சஞ்சரிக்கும் தினம் புனிதமான தினமாகக் கொள்ளப்படுகின்றது. மேலும் சகல தேவர்களும் அமாவாசையில் அதிபர்கள். அன்று நோன்பு நோற்றல், விரதங்காத்தல் இறைவன் அருளை, பிரீதியைப் பெறப் பேருதவியாவன.
அமாவாசையிற் புண்ணிய தீர்த்தத்திலே படிந்து பிதிர் தருப்பணம் செய்து அதிதிகளோடும் சுற்றத்தாரோடும் உண்டு விரத நியமத்துடன் இருப்பது தீர்த்த சிரார்த்தம் எனவும் காமிக சிரார்த்தம் எனவும்படும்.
மரணத்தின் போது தூல சரீரம் (உருவுடம்பு) அழகிய சூக்குமசரீரம் அருவுடம்பு) பெறும். உயிர் பூமியிற் செய்த வினைகளுக்கு ஏற்ப இன்ப துன்பங்களைச் சுவர்க்க நரகத்தில் அனுபவிக்கும். அனுபவித்துத் தொலையாது எஞ்சி நின்ற பிராரத்துவ வினைகளினாலேயே உயிர் மீண்டும் பிறப் பெடுக்கின்றது.
அந்தியேட்டி, தகனக்கிரியைகளால் அபுத்தி பூர்வமாகச் செய்த வினைகள் மாறும்; புத்தி பூர்வமாகச் செய்தவற்றை அனுபவித்தேயாக வேண்டும். பிதிர் வழிபாடு அவ்வினையின் முனைப்பு தேய்தற்பொருட்டுப் புத்திரர் செய்வதாகும். பிதிர் தேவர்கள் பிதிர் தருப்பணத்தை ஏற்று பிதிரர் எப்பிறவி புக்கணரோ அப்பிறவியிற் செலுத்திப் பயனடையச் செய்வர்.
191

Page 238
அமாவாசைகளிலே ஆடி அமாவாசை மிகவும் புனிதமும் விஷேசமுமானதாம். சைவர்களும் வைணவர்களும் ஆடி அமாவாசையை முக்கிய தினமாகக் கொள்வர். ஏனெனில் வடக்கு நோக்கிச் சஞ்சரிக்கும் சூரியன் தெற்கு நோக்கிச் சஞ்சரிக்கும் ஆரம்பகாலம் ஆடிமாதமாகும். தென்புலத்தார் கடன் இறுக்க விசேடமானகாலம் சூரியன் தெற்கு நோக்கும் ஆடிமாதம் என்ற நம்பிக்கை ஆடி அமாவாசைக்குத் தனியிடம் அளிக்கின்றது.
திருக்கேதீஸ்வரம், மாமங்கேஸ்வரம், நகுலேஸ்வரம் முதலிய திருத்தலங்கள் ஆடி அமாவாசைக்குப் பேர் பெற்ற ஈழத்துத் திருத்தலங்களாம். திருக்கேதீஸ்வரம் மன்னார் மாவட்டத்திலே அமைந்துள்ள தேவாரம் பெற்ற திருத்தலமாகும். இங்கு பாலாவித் தீர்த்தம் சிறப்புமிக்கது. மாமாங்கேஸ்வரம் மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டுநகரை அடுத்து அமைந்துள்ளது. இங்கு ஆடி அமாவாசைத் தினம் வருடாந்த தீர்த்தோற்சவமாகும். நகுலேஸ்வரம் பெயர் பெற்ற கீரிமலை எனும் திருத்தலமாகும்; யாழ்ப்பாண மாவட்டத்திலுள்ளது; மாவைக்கந்தன் ஆடிய மாவாசையன்று கீரிமலைக்குத் தீர்த்தமாட எழுந்தருளுவது சிறப்பாகும். கொழும்பிலே முகத்துவாரக் கடல் ஆடியமா வாசையின் போது தீர்த்தத் தலமாகப் பிரசித்தி பெற்றுள்ளது.
தமிழ் நாட்டிலே இராமேஸ்வரம் ஆடி அமாவாசை விரதத்திற்குப் பேர் பெற்ற தலமாக அமைகின்றது. வட நாட்டிலே கங்கை நதியின் புண்ணியத்துறைகள் இத்தினத்தில்ே பெருந்
திரளான மக்களைக் கவரும் தீர்த்தக் கரைகளாக அமைவன.
(பொ. யூ.)
ஆடிப்பூரம்
ஆடி மாதத்திலே பூரநட்சத்திரம் உச்சத்தில் இருக்கும்போது கொண்டாடப்படுவது ஆடிப்பூரம் எனும் விழா. இது தேவிக்குரிய திருநாள். மானிடத்தை இன்னல்களில் இருந்து மீட்பதற்கு உலகன்னை இப்பூவுலகிலே தோன்றிய நாள் ஆடிப்பூரம் என்று கருதுவா.
ஆடிப்பூரம் வெள்ளிக்கிழமையில் நேர்ந்துவிட்டால் அவ்விழா சிறந்த பலன்களைத் தரும் என்று கருதி விழாவினை விரிவாக அமைத்துக் கொண்டாடுதல் மரபு.
தேவிக்குரிய திருநாளாகிய ஆடிப்பூரத்திலே பூரீ வில்லிபுத்தூரிலே தோன்றியவர் பூீ ஆண்டாள். இதனால் பூரீ வில்லிபுத்தூரிலே வைணவர்கள் ஆடிப்பூரவிழாவை மிகவும் சிறப்பாகக் கொண்டாடுவர்.
மதுரை, திருநெல்வேலி, வேதாரணியம், நாகபட்டினம், சிதம்பரம் முதலான திருத்தலங்களிலே ஆடிப்பூரம் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றது. )کی ?rr/7 ۔ ھے۔ (
ஆடிவேல் விழா
ஈழத்தின் தென்பகுதியிலுள்ள கதிர்காமம் முருகப் பெருமான் கோயிலில் வருடந்தோறும் நான்கு திருவிழா நடைபெறும் முதற்
192

திருவிழா சித்திரைவருடப் பிறப்புத் தினத்தன்று நடைபெறுவது. இரண்டாந் திருவிழாவான பந்தற் கால் நடும் திருவிழா ஆணி அல்லது ஆடியிற் கொண்டாடப் பெறுவது. மூன்றாம் திருவிழா ஆடி அல்லது ஆவணியிற் பதினைந்து அல்லது பதினாறு நாள் திருவிழாவும் தீர்த்தோற்சவமுமாக நிகழ்வதாகும். நான்காம் திருவிழா திருக்கார்த்திகை விளக்கீட்டுத் திருவிழா.
கதிரை முருகப் பெருமானின் மூன்றாம் திருவிழாவின் அந்தத்திலே கொழும்பு மாநகரிலே கோலாகலமாகக் கொண்டாடப்படும் விழா ஆடிவேல் விழாவாகும். இவ்விழா பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ஆரம்பமானது என்று கருத இடமுண்டு. கொழும்பிலுள்ள நாட்டுக்கோட்டை நகரத்தார் 1850இலே புதுக்கோவில் நகரம் என்ற பெயருடன் ஒரு சங்கம் நிறுவி புதுக் கதிரேசன் கோயில் என்ற பெயருடன் இருகோயில்களைக் கட்ட ஆரம்பித்தனர். அவற்றில் ஒன்று கொழும்பு செட்டியார் தெரு பூரீ கதிரேசன் கோவில்; ஏனையது வெள்ளவத்தை பூரீ கதிரேசன் கோயில் எனப்படும் பம்பலப்பிட்டி பிள்ளையார் கோயில், ஏற்கனவே செட்டியார் தெருவில் விளங்கிய கதிரேசன் கோயில் பழைய கதிரேசன் கோயில் (பூரீ கதிர் வேலாயுத சுவாமி கோவில்) என்று பெயர் பெற்றது. பழைய கதிரேசன் கோயிலார் பம்பலப்பிட்டியிலே பூரீ கதிரேசன் கோவில் (பிள்ளையார் கோயில்) ஒன்றினை அமைத்தனர். புதிய கதிசேரன் கோயிலுக்கு வெள்ளவத்தைப் பிள்ளையார் கோயிலும் பழைய கதிரேசன் கோயிலுக்கு பம்பலப்பிட்டிப் பிள்ளையார் கோயிலும் உபய கதிர்காமம் என வழங்கப் பெற்றன. இந்நான்கு கோயில்களும் ஆடிவேல் விழாவுடன் நெருங்கிய தொடர் புடையவை. எனவே ஆடிவேல் விழாவின் தோற்றம் பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதி என்பது தெளிவாகின்றது.
ஆடிவேல் விழாவின் தோற்றத்திற்கான காரணம் யாதெனச் சித்தாந்தமாகக் கூறல் அரிதாயினும் பொதுவாகக் கூறப்படும் காரணம் பொருத்தமாகத் தெரிகின்றது. கதிரை முருகனைத் திருவிழாவின் போது தரிசிக்க முருக பக்தர்கள் பல்வேறு இடங்களிலிருந்தும் காவடி ஏந்தியும் வேலேந்தியும் செல்வது மரபாகும். அத்தகைய சந்தர்ப்பங்களிலே ஒருபோது தென் மாகாணத்திலே உண்டுபட்ட அநர்த்தத்தால் யாத்திரைகள் தடைப்பட்டதால் பக்தர்கள் யாத்திரையைத் தொடர முடியவில்லை. இந்நிலையை அநுபவித்த கொழும்பு நகரத்தார் கதிர்காமத் திருவிழாவின் அந்தத்திலே கொழும்பிலே வேல்விழாவினைக் கொண்டாடத் தொடங்கினராதல் வேண்டும்.
வேல்விழாவின் முன் காவடிவிழா கொழும்பிலே ஆரம்பிப்பது கண்கூடு. சம்மாங்கோடு பூரீ கதிர்வேலாயுத சுவாமி கோயிலிலிருந்து முருகப் பெருமான், ஆடிவேல் விழாவுக்கு முதல்நாட்காலை, தேன், பன்னீர் முதலிய அபிஷேகத் திரவியங்களைத் தாங்கிய காவடி முன்னே செல்ல, இரதத்திலே வெள்ளவத்தை பூரீ மாணிக்கப் பிள்ளையார் கோயிலுக்கு எழுந்தருளுவது வழக்கமாகிவிட்டது. இவ்வழக்கத்திற்கும் கதிர்காமம் செல்லமுடியாது போயினமை காரணமாகலாம்.
இந்துக் கலைக்களஞ்சியம்

Page 239
பண்டைய தமிழ் மரபிலே அரசன் தன் குடையையோ வாளையோ அன்றி முழவினையோ முன்னனுப்பித் தன் வரவை உறுதிப்படுத்தும் மரபு காணப்படுகின்றது. குடைநாட்கோள், (குடைநிலை), வாள்நாட்கோள் (வானிலை) என்பன புறத்துறை களாக இடம் பெற்றுள்ளன. அம்மரபினை உணர்ந்த தமிழ் மக்கள் கதிர்காமம் எழுந்தருளமுடியாத போது முருகனின் ஆயுதத்தைப் பவனியிலே கொண்டு சென்று எழுந்தருளச் செய்து கதிரை மலைக் கந்தனை அங்கு தரிசித்து நிறைவு பெற்றனர்.
ஆடிவேல்விழா கதிர்காமக் கந்தன் திருவிழாவின் கடைசி நாளிலே வேற்பவனியுடன் ஆரம்பித்த போதும் அதற்கு முதல் நாள் காவடி விழாத் தொடங்குகின்றது. சம்மாங்கோடு பூரீ கதிர்வேலாயுதசுவாமி, ஆடிவேல் செட்டித்தெருவிலிருந்து புறப்படுவதற்கு முதல் நாள், அபிடேகத் திரவியங்களைத் தாங்கிய காவடி முன் செல்ல, இரதத்திலே எழுந்தருளி வெள்ளவத்தை பூரீ மாணிக்கப் பிள்ளையார் கோயிலுக்கு அருளாட்சி செய்ய வருவார். பூரீ மாணிக்கப் பிள்ளையார் கோயிலிலே அடுத்த இருநாளும் பக்தருக்குக் காட்சி நல்கி, நான்காம் நாள் மாலை புறப்பட்டுச் சம்மாங்கோட்டுக்கு எழுந்தருளுவார்.
சம்மாங்கோட்டு பூரீ கதிர்வேலாயுதசுவாமி பவனி புறப்பட்ட மறுநாள் வேல் உலாப் புறப்படும். ஒருவருடம் பழைய கதிரேசன் கோயிலில் இருந்து பம்பலப்பிட்டிப் பிள்ளையார் கோயிலுக்கும் அடுத்த வருடம் புதிய கதிரேசன் கோயிலிலிருந்து வெள்ள வத்தைப் பிள்ளையார் கோயிலுக்கும் வேல் உலாவரும். வேலை வைத்து முருகன் திருவுருவமாக அலங்கரித்து இரதத்திலே
கொண்டு செல்வர்.
ஆடிவேல் விழாவின் முதனாள் வேலவர் செட்டித்தெருக் கோயிலிலிருந்து காலையிற் புறப்பட்டு உபயகதிர்காமத்திற்கு எழுந்தருளுவார். அடுத்த இருநாளும் அங்கு வீற்றிருந்து பக்தர்களுக்குக் காட்சியருளி அவர்கள் அளிக்கும் காணிக்கையை ஏற்றருளுவார். நான்காம் நாள் மாலை புறப்பட்டு வரும் வேலவர் காலிமுகத்திடலிலே பக்தர்களுக்குக் காட்சி கொடுத்து அவர்களுடைய அஞ்சலியை ஏற்று நிற்பர். ஐந்தாம் நாள் அதிகாலையில் வேலவர் செட்டியார் தெருவிலுள்ள கோயிலுக்கு எழுந்தருளுவார்.
ஆடிவேல்விழா கொழும்பு மாநகரிலே சைவர்களுக்கு மட்டுமன்றி ஏனைய மதத்தினருக்கும் சிறப்பாகப் பெளத்த மதத்தினருக்கும் குதூகலமும் மகிழ்ச்சியும் அளிக்கும் பெருவிழாவாகும். (பொ.யூ.)
ஆண்டாள்
ஆண்டாள், தமிழில் பக்திநலம் செறிந்த அருட் பாடல்களைப் பாடிய வைணவ ஆழ்வார்கள் பன்னிருவரில் ஒருவர் மற்றோராழ்வாரான பெரியாழ்வாரின் வளர்ப்பு மகள். மாலுக்கன்றி மானிடவருக்கு வாழ்க்கைப்பட்டேன் என்று திருமால்மேற் காதல்கொண்டு வாழ்ந்த பெண்ணடியார். இவரது அவதார காலம் அவர் இயற்றிய திருப்பாவையில் வரும் 'புள்ளின் வாய் கீண்டானை’ என்று தொடங்கும் பாடலின் இடையில் வரும்
இந்துக் கலைக்களஞ்சியம்

"வெள்ளி எழுந்து வியாழன் உறங்கிற்று” என்ற சொற்றொடரை ஆராய்ச்சி செய்து அறுதியிடப்பட்டுள்ளது. புள்ளின் வாய் கீண்டானை' என்ற பாடலின் திரண்ட கருத்து - "உடனொத்த கன்னியரெல்லாம் மார்கழி நீராடுதற்குரிய களத்தை அடைந்துவிட்டனர். வெள்ளி எழுந்தது. வியாழனும் உறங்கியது; புட்களும் ஒலியெழுப்பின. இங்ங்னமாகவும், நீ இன்னும் பள்ளியிலிருந்து எழுந்திராமல் உறங்கலாமோ? பெண்ணே! துயிலெழுந்து எம்முடன் வருக” என்பதாம்.
திருப்பாவையில் பொழுது விடிவதற்குரிய அடையாளங்கள் பல கூறப்பட்டுள்ளன. அவை கீழ்வானம் வெளுப்பதும், கோழி கூவுவதும், பறவைகள் ஒலிப்பதும், முனிவர்களும், யோகிகளும் துயிலெழுந்து அரியின் பெயரை முழங்குவதும் போன்ற பலவாம். இவை நிகழ்வதற்கு முன்பே விரத நியமத்தை முடிக்க வேண்டி, மகளிர் விரைதல் கூறப்படுதலின் பொழுது விடியுமுன்பே ஆய்ப்பாடிப் பெண்டிர் - நீராட்டம் செய்தார்கள் என்று அறிய முடிகிறது.
அதிகாலையில் சுக்கிரன் உதயத்தைக் கண்டு எழுந்து தங்கள் வேலைகளைத் தொடங்குவது கிராமத்து வழக்கமாகும். எனவே ஆண்டாளும் ஆய்ப்பெண்டிர் பாவனையில் நீராட்டத்துக்கு மற்றவர்களை எழுப்புகிற பாசுரத்தில், இந்த வெள்ளி எழுச்சியையும் வியாழன் அத்தமிக்கும் தன்மையையும் ஒருசேர வைத்துப் பாடியுள்ளார். அதாவது அவ்வுத யாத்தமனங்கள் உடன் நிகழ்வனவாயின. இவ்வாறு ஒருவரும் கூறாத முறையில் வெள்ளி வியாழங்களின் உதயாத்தமனங்களை ஒருசேர வைத்துக் கோதையார் கூறுதலை வானசாத்திர அறிஞர்கள் ஆராய்ந்து மார்கழிப் பெளர்ணமியன்று வைகறையில் வெள்ளியெழ வியாழமுறங்கிய காலம் கி. பி. 731 டிசம்பர் மாதம் 18 ஆம் நாள் என்று முடிவு செய்துள்ளனர். இந்தக் காலம் பெரியாழ்வாரின் காலத்தை ஒட்டி பின்பழகிய சீயர் குருபரம்பரை நூலோடு மாறுபடாமலிருப்பதால் ஏற்புடையதே என்று அறிஞர்கள் கூறியுள்ளனர். எனவே திருப்பாவை அவதரித்த காலமும் இதுவே என்று உணரத் தட்டில்லை என்கிறார் திரு. மு. இராகவையங்கார்.
ஆண்டாளது அவதார நாள் - நளவருடம் ஆடிமாதம் சுக்கில சதுர்த்தசியும் செவ்வாய்க்கிழமையுங் கூடின பூரநக்ஷத்திரம் - என்று குருபரம்பரை நூல்கள் சில கூறுகின்றன. இக்காலக் குறிப்பைக் கொண்டு கி. பி. 776 ஆம் வருடம் ஜூன் மாதம் 25ஆம் தேதியே ஆண்டாள் அவதார காலம் என்று திருவாளர் சுவாமிக் கண்ணுபிள்ளையவர்கள் கூறியுள்ளார்கள். எது எப்படியாயினும் ஆண்டாள் காலம் கி. பி. எட்டாம் நூற்றாண்டின் இடைப்பட்ட காலம் என்பதில் ஐயமில்லை.
பெரியாழ்வார் தம் காலத்து மன்னனைக் கோனெடு மாறன் என்று கூறுவர், குருபரம்பரை பெரியாழ்வார் காலத்து மன்னன் ரீ வல்லபதேவன் என்று கூறுகின்றது. பூரீமாற பூரீவல்லபன் (815 - 862) எனும் பாண்டியனுக்கு மாறன் எனும் பெயரும் வல்லபன் எனும் பெயரும் உளவாதலால், அவனே பெரியாழ்வார் காலத்து மன்னன் என்று துணிவதால் ஆண்டாள் காலம் ஒன்பதாம் நூற்றாண்டு என்று கொள்வாரும் உளர்.
193

Page 240
கோதையின் பிறப்பும் வளர்ப்பும்
முத்தமிழ் வளர்க்க முச்சங்கம் நிறுவிய பாண்டி நாட்டிலே பூரீவில்லிப்புத்தூர் என்று சிறப்புடன் விளங்கும் ஊரே ஆண்டாளின் பிறப்பிடமாகும். ஆண்டவனது பேரன்புப் பூஞ்சோலையிற் பூத்த ஒரு கற்பக நறுமலரே ஆண்டாள். அவனுடைய அன்புத் தொட்டிலிலே தாலாட்டப்பட்டு அவனையே நாயகனாக அடைய வேண்டும் என்றாசைப்பட்டு அவ்விருப்பம் நிறைவேறப் பெற்றவள் ஆண்டாள். இவளுடைய தோற்றம் வினோதமானது. வேயர் குலத் தோன்றலாகிய விட்டுசித்தரே பெரியாழ்வார் என்றழைக்கப்படுபவர். இவர் திருநந்தவனம் அமைத்துப் பூச்செடிகளைப் பயிராக்கி அவற்றினின்றும் நறுமணங் கமழும் நறுமலர்களைக் கொய்து, வியத்தகு மாலைகளாகத் தொடுத்து பூரீவில்லிபுத்தூருறைவானான வடபெருங்கோயிலுடையானுக்குச் சமர்ப்பித்து வழிபாடியற்றி வாழ்ந்து வந்தவர். ஒருநாள் மலர் கொய்யும்போது திருத்துழாய்ப் பாத்தியின் நடுவே ஒரு பெண் மகவைக் கண்டு அகமிக மகிழ்ந்து அச் சிசுவை வாரியெடுத்தனைத்துத் தம் மனையாளிடம் கொடுத்து அன்போடு வளர்த்து வரலானார்.
மிதிலா நகரத்தில், அரசனான சனகன் வேள்வி செய்ய எண்ணி, நிலத்தை உழுதபோது ஏர்ப்படைச்சாலில் சீதை கிடைத்ததைப் போலே, இப்பெரியாழ்வாருக்கும் மகப் பேறில்லாக்குறை நீங்க ஆண்டாளாகிய இப்பெண் மகவு திருத்துழாய்ப் பாத்தியிலே கிடைத்தது. முளைக்கும்போதே நறுமணத்துடன் முளைக்கும் திருத்துழாயினைப் போலவே இப்பெண் மகவும் எம்பெருமானிடம் பேரன்பு பூண்டு நன்ஞானப் பூங்கொடியாய் வளர்ந்தது. ஓர் ஆடி மாதத்துப் பூர நட்சத்திரத்திலே கிடைத்தமையால் திருவாடிப் பூரமே பாவனமான நன்னாளாயிற்று. இந்த நன்னாளை இன்றோ திருவாடிப்பூரம்; எமக்காகவன்றோ ஆண்டாள் இங்கவதரித்தாள்’ என்று வைணவ ஆசாரியப் பெரியாரான பூரீமணவாள மாமுனிகள் கொண்டாடிப் பாராட்டினார்.
பெரியாழ்வார், அப்பொற்பாவைக்குக் கோதை என்று தாமே பெயரிட்டழைத்தார்.
கோதிலாக் கோதை நாச்சியாராகிய ஆண்டாளும், குழவிப் பருவ மழலை பேசியும், சப்பாணி கொட்டியும், மலர் போன்ற கன்னங்களில் முத்தமிட்டு மகிழ்வூட்டியும், கழங்கு, அம்மானை என்ற ஆட்டங்களில் ஈடுபட்டும் தன் பெற்றோரை மகிழ்வித்து வந்தார். திருத்துழாய்ச் செடி நறுமணத்துடன் வளர்வது போலவே கோதையும் மெய்ஞ்ஞானத்துடன் வளர்ந்து வந்தாள்.
ஆறுகள் கடலையே நாடி ஒடுகின்றன. தாமரையும் சூரியனையே நோக்குகின்றது. உயிர்கள் தருமனையே நண்ணுகின்றன. அதேபோல கோதையாரின் மனம் ஒண்டாமரை யாள் கேள்வனாகிய ஒருவனையே நோக்குவதாயிற்று. மலர்களில் மணமும் தேனும் ஒருங்கமைந்து நிற்றல்போலக் கோதை நாச்சியாரிடம் மெய்ஞ்ஞானமும், பாம்பணைப் பள்ளியானிடம் பேரன்பும் ஒருங்கமைந்து சிறந்து விளங்கின. இதற்கெல்லாம் காரணம் தந்தையாகிய பெரியாழ்வார் பரமனுக்குப் பூமாலை
194

கட்டும் பொழுதெல்லாம், தன்னருமைச் செல்வியை அருகழைத்து அவளுக்குக் கண்ணன் கதைகளையெல்லாம் நெஞ்சிற் பதியும் வண்ணம் அழகாகக் கூறி வந்ததுதான். கிருஷ்ணலீலைகளைச் செவிமடுத்து மகிழ்ந்த ஆண்டாளுக்கு கண்ணபிரானிடம் அளவிறந்த அன்பு மேலோங்க அதுவே பக்தி மிகுந்த காதலாகப் பரிணமித்தது. கண்ணனைக் காண வேண்டும், அவனுடன் பேச வேண்டும், கட்டியணைத்திட வேண்டும் என்றெல்லாம் எண்ணலானாள். அவ்வெண்ணம் மேன்மேல் பெருகி வளர்ந்து உள்ளத்தில் ஆசைக்கனலை மூட்டிவிட்டது.
ஒரு சமயம் கோதை மலர் கொய்து வரத் தந்தையாருடன் நந்தவனம் சென்றபோது, அங்கோர் கொழு கொம்பைச் சுற்றிப் படர்ந்திருந்த கொடியினைக் கண்டாள். சில நாட்களுக்கு முன் அதே கொடி, பற்றேதுமின்றித் தரையிலே படர்ந்திருந்ததை நினைவு கூர்ந்தாள். சில தினங்களிலே ஏற்பட்டிருந்த இம் மாற்றத்தை உணர்ந்த கோதை, இதுபோல் யானும் பற்றி நிற்கும் படியான - பற்றி நின்று படரும்படியான என் கண்ணன் எனக்குக் கிடைப்பானா? என்ற ஏக்கம் அவளுக்குப் பிறந்தது. அதனால்,
என்றுகொலோ என் கண்ணனைக் கண் குளிரக்
。 "ク கானும நாள
என்று அரற்றலானாள். தோட்டத்தில் காயா மலர்களைக் காணும் போதெல்லாம் மாயனே வந்தருளாய்' என்று கூப்பிடுவாள். விண்ணில் கருநிற மேகங்களைக் கண்டவுடன் கண்ணன் நினைவு வரத் தன் வண்ணம் மாறித் தவிக்கலானாள். பொய்கைகளில் செந்தாமரை மலர்களைக் கண்டபோதெல்லாம் 'இம்மலர்கள் கண்ணனுடைய கண்களைக் காட்டி என்னை மயக்குகின்றனவே என்று கூறித் தளர்வாளாயினாள். இவ்விதமாகக் காண்கின்ற பொருள்களிலெல்லாம் கண்ணனைக் கண்டு பெரும் பித்தம் பிடித்தவள் போலானாள். கண்ணன் திருப்பெயர்களைக் கேட்ட மாத்திரத்தில் கண்ணிர் ததும்ப நெஞ்சுருகி நிற்பாள்.
பெரியாழ்வார், கோதைக்குத் தந்தையாக மாத்திரமிருக்க வில்லை, ஆசானாகவும் விளங்கினார். அவர் கண்ணன் கதைகளோடு மற்றும் உயர்ந்த தத்துவ ஞானக் கொள்கைகளையும் போதிப்பார். விட்டுணு சித்தராகிய பெரியாழ்வாரும் மற்றும் திருமாலடியார் பலரும் கூடி உரையாடுவதையும், பக்தி பரவசத்துடன் அவர்கள் பஜனை செய்வதையும், மனமுருகிப் பாடும் பாசுரங்களையும், அப்பாடல்களுக்கேற்ப ஆனந்தக் கூத்தாடுவதையும், குழந்தைப் பருவமுதலே பார்த்தவளாதலால், கோதையின் விளையாட்டுக்களும், விருப்பமும் இலட்சியமும் எல்லாம் பக்திப் பரவசமூட்டுவனவாகவே முதிர்ந்து வளர்ந்தன. அவளும் திருமாலடியார்களான பக்தர்கள் குழுவில் இணைந்து ஆடிப்பாடி அகமிக மகிழ்வதைக் கண்ட பெரியாழ்வாரும் பெருமகிழ் வடைந்தார்.
தன் மகள் ஞானப் பூங்கொடியாக வளர்ந்து வருவதைக் கண்டு பேருவகை கொண்ட விட்டுணுசித்தர் மனம் பூரித்து, தம்மையும் விஞ்சிநிற்கும் ஆண்டாளின் ஞான, பக்தி
இந்துக் கலைக்களஞ்சியம்

Page 241
பரவசங்களைக் கொண்டாடினார். பூரீ வில்லிப்புத்தூர் வாழ்வாரனைவரும் போற்றும் வகையில் ஆண்டாளின் அழகும், உருவும், பேச்சும், செய்கையும் பெருமிதத்துடன் விளங்கின.
"கோல் தேடி ஒடும் கொழுந்ததே போன்றதே மால் தேடி ஒடும் மனம்’
என்ற நம்மாழ்வாரின் அநுபவம் ஆண்டாளுக்கும் ஏற்பட்டது. மாயோனாகிய கண்ணன்மேல் காதல் பெருகி வளர்ந்தது. இந்த மனநிலையில் அந்த மாயக் கள்வன் மாமாயனுக்குத் தான் ஏற்றவள்தானா? என்ற கேள்வியும் அவளது உள்ளத்தில் அரும்பியது. ஒரு நாள் நிலைக்கண்ணாடியில் தன் உருவத்தைக் கண்டு மகிழ்ந்து கொண்டிருந்தாள் கோதை, அப்போது அவள் மனதில் சிறந்த பட்டுப் பீதாம்பரங்களை உடுத்திக் கொண்டும், நவரத்தின மணிமாலைகளுடன் முத்து வடங்களையணிந்து கொண்டும், தலையில் பலவகைச் சுட்டிகளைச் சூடிக்கொண்டும், மயிற் பீலிகளாலலங்கரித்துக் கொண்டும் மனோகரனாய் விளங்கும் அம்மாயவனைப்போல் நாமும் அலங்காரஞ் செய்து கொண்டாலென்ன என்ற எண்ணம் எழுந்தது. தன் எண்ணத்தை நிறைவேற்றத் துணிந்தனள் ஆண்டாள்.
உள்ளே சென்று நீலநிறப் பட்டாடை உடுத்தி காறை முதலான ஆபரணங்களைக் கழுத்திலனிந்து, கைகள் நிறைய வளையல்களையும் அணிந்து அவை ஒசையெழ, குலுங்க நடந்து பார்த்து உளம் பூரித்தாள். கொவ்வைச் செவ்வாய் திருத்தினாள். இயல்பாகவே சிவந்த நிறமுடைய அவளது வாய் மேலும் பொலிவுடன் திகழ்ந்தது. ஒருவாறு தேறித் தன் காதலன் கண்ணன் பெயரைப் பலவாறு சொல்லி மகிழ்ந்து ஆனந்தக் கூத்தாடி மகிழ்ந்தாள். இச்செய்தியைப் பெரியாழ்வாரே பேசக் காண்போம்.
காறை பூணும் கண்ணாடி காணும் தன்
கையில் வளை குலுக்கும் கூறை உடுக்கும் அயர்க்கும், தன்
கொவ்வைச் செவ்வாய் திருத்தும் தேறித் தேறிநின்று ஆயிரம் போத்
தேவன் திறம் பிதற்றும் மாறில் மாமணி வண்ணம் மேல்இவள்
மால் உறுகின்றாளே”
கோதையாரின் இத்தகைய செய்கைகளும் மனநிலையும் ஆழ்வாரின் உள்ளத்தில் பெருங்கவலையைத் தோற்றுவித்ததில் வியப்பில்லை. பெரியாழ்வாரின் கவலையெல்லாம் இம்மங்கைக் கேற்ற மணாளன் கிடைக்க வேண்டுமே என்பதுதான்.
சூடிக் கொடுத்த சுடர்க்கொடி
கோதையின் உருவும் திருவும் வளர்ந்ததற்கேற்பவே அவளது திருமாலன்பு பெருகி வளர்ந்தது. ஓங்கி உலகளந்த உத்தமனிடத்துப் பேரன்பு பூண்ட அம்மங்கைநல்லாள் ஒருநாள் தந்தையாகிய பெரியாழ்வார் வீட்டில் இல்லாத சமயம் பார்த்து,
இந்துக்கலைக்களஞ்சியம்

அவர் வடபெருங்கோயிலுடையானுக்குச் சாத்துவதற்காகத் தொடுத்து வைத்திருந்த பூமாலைகளை எடுத்து அணிந்து கொண்டு, புட்பாலங்கார பூஷிதையாய் நிலைக் கண்ணாடியின் முன்நின்று தன் அழகை ரசித்துப் பார்த்தாள். கார்முகில் வண்ணனாகிய கண்ணனுக்குத் தான் ஏற்புடையவள்தானா? என்று தன்னைத்தானே கேட்டுக் கொண்டு, தன் உள்மனத்தின் கிடக்கை யாது என உசாவினாள். 'நம்பிக்கேற்ற நங்கை நீயே” என்று அவளது உள்ளம் சொல்லியது. அகமிக மகிழ்ந்து நின்ற அம்மாதரசி தந்தை திரும்பி வரும் நேரமாயிற்று என்பதை உணர்ந்து அவசரம் அவசரமாகத் தான் சூடி மகிழ்ந்த பூமாலைகளைக் களைந்து பூக்குடலையில் முன்பு போலவே வைத்து விட்டாள். இவ்வாறு சூடிக்களைந்து வைக்கும் வழக்கம் தொடர்ந்து நிகழ்ந்து வந்தது. ஆண்டாள் சூடிக் களைந்து வைப்பதை அறியாதே ஆழ்வார் அம்மாலைகளைப் பெருமானுக்குச் சமர்ப்பித்து வந்தார்.
இவ்விதமாக எம்பெருமானுக்குச் சாத்தப்படும் மலர் மாலைகள் நறுமணம் மிக்கிருப்பதாகவும், மாலைகளைச் சூடும் எம்பெருமான் திருக்கோலம் முன்னிலும் பேரொளி பெற்றுத் திகழ்வதாகவும் அர்ச்சகர்களும், பிறரும் கண்டு வியந்து இதற்குக் காரணம் விட்டு சித்தரின் பரம பக்தியே என எண்ணினர். இதனால் ஆழ்வாரிடம் அவர்கள் கொண்டிருந்த நன்மதிப்பும் பக்தியும் மேலும் பன்மடங்காகப் பெருகலாயின. நடப்பது இன்னதென்பதை ஆழ்வாரே அறியாதபோது மற்றையோர் எங்ங்ணமறிவர்!
ஒருநாள் கோதை வழக்கம் போல மாலைகளையணிந்து நிலைக்கண்ணாடியில் அழகு பார்த்துக் கொண்டிருந்த சமயத்தில் வெளியே சென்று திரும்பிய பெரியாழ்வார் கண்டு விட்டார். செய்வதறியாது கோதையும் திகைத்து நிற்க, ஆழ்வார் பெரிதும் வருந்தி, "கோதாய்! என்ன காரியம் செய்யத் துணிந்தாய்; எம்பெருமான் திருவடிகளுக்கு அபசாரம் செய்து விட்டாயே, இனி மலர் கொய்து மாலை கட்டி எடுத்துப் போய்ச் சமர்ப்பிக்கவும் போதிய அவகாசம் இல்லையே அம்மா! நான் என்ன செய்வதென்றறியாமல் அலமருகின்றேனே!” எனப் பலவாறு சொல்லி வருந்தி சந்நிதிக்கு மாலைகளை எடுத்துச் செல்லாமல் ஆழ்ந்த வருத்தத்தில் இருந்து விட்டார். சிறிது நேரம் சென்றது.
மாலையில் திருவாராதனத்திற்கான வாத்தியங்களின் ஒலிகேட்ட ஆழ்வார் நந்தவனம் சென்று கிடைத்த மலர்களைக் கொய்து அவசரம் அவசரமாக மாலை கட்டி எடுத்து போய் எம்பெருமானுக்குச் சமர்ப்பித்துப் பின், தான் அபசாரப்பட நேர்ந்ததே என்று மனம் கசிந்து உருகி அபசாரங்களைப் பொறுத்தருள வேணும் என்று பிரார்த்தித்து வீடு திரும்பினார். அன்றிரவு ஆழ்வார் கண்ணுறக்கம் கொள்ளவில்லை. ஆண்டாள் செய்த அபசாரச் செயலை எண்ணியெண்ணி வருந்திப் புரண்டு புரண்டு படுத்தும் பெருமூச்செறிந்து கொண்டுமிருந்தார். வைகறைப் போதில் அவரறியாமலே கண்ணயர்ந்து விட்டார்.
அந்நிலையில் வடபெருங்கோயிலுடையான் ஆழ்வாரது கனவில் காட்சி தந்து, "ஆழ்வீர், நும் திருமகளாகிய
195

Page 242
சுடர்க்கொடியாம் கோதை சூடிக்களைந்த திருமாலைகளுக்கு ஆசைப்பட்டன்றோ நாம் இங்கு பள்ளி கொண்டிருப்பது; நமக்காகப் பூத்திருக்கும் கற்பக நறுமலரல்லவோ கோதை, அவள் சூடிக்களைந்தனுப்பும் மாலைகளே நம் மனதுக்குகந்த நறுமணம்மிக்கவை. ஆதலின் நாளை முதல் அவள் சூட்டிக் கொண்டு களைந்த மாலைகளையே நமக்குக் கொணர்ந்து சமர்ப்பியும்” என்று அருளி மறைந்தான்.
தூக்கம் கலைந்த பின் ஆழ்வார்'என்னே அற்புதம்! எனக்குச் சேவை சாதித்த அந்த நீல மேக சியாமளனான கண்ணன் எங்கு மறைந்தான்? நான் கண்டது வெறுங் கனவுதானா' என்று வியந்தார். கண்களை மூடிய வண்ணம் தியானித்தார். அக் கருநிறக் கண்ணன் மறுமுறை வந்திலன்; மீளவும் நினைத்து நினைத்து உளங்குழைந்தார். நெஞ்சென்னும் உட்கண்ணால் அக்கண்ணனைக் காணமுடியவில்லையே என நினைந் துருகினார். கோதையின் பெருமையை எம்பெருமான் உணர்த்த உணர்ந்து என்ன பேறு பெற்றேன்! என்ன பேறு பெற்றேன்! என்று தமக்குத் தாமே சொல்லிக் கொண்டு மகிழ்ந்தார். கோதையின் பெருமையால் தமக்குப் பேரருட் பரிசல்லவா கிடைத்தது எண்றெண்ணி ஆனந்த சாகரத்தில் அழுந்தினார்.
பட்டர்பிரானாகிய ஆழ்வார் விரைவாக கோதையின் முன்வந்து நின்று ஒருகணம் அவளை உற்று நோக்கினார். 'அம்மா கோதாய். நீ என்னை மட்டும் ஆளவில்லை; வடபத்ரசாயியான அந்த, ரங்கமன்னராம் எம்பெருமானையே ஆண்டு கொண்டாய்” என்று சொல்லி அவளது பெருமையை நினைந்து வணங்கப் போனார். கோதை துணுக்குற்று, தந்தையே, என்ன இது? என்னை நீர் வணங்கலாகுமா? என்று அவரைக் கட்டி அணைத்தெடுத்து நிறுத்திக் கண்ணிருகுத்தாள். அப்போது ஆழ்வார் "அம்மா கோதாய், நீ எம்பிரானுக்காகவே பூத்த கற்பக நறுமலர், நீ சூடிக் களைந்த மாலைகளையே எம்பெருமான் திருவுள்ளம் பற்ற விரும்புகிறான். நீ என்னை மாத்திரமன்று - இந்த உலகத்தையே மாத்திரமுமன்று - சர்வலோக சரண்யனான ஆண்டவனையே ஆண்டு விட்டாய், எனவே இன்று முதல் உனது பிள்ளைப் பெயராகிய கோதை என்பது மாறி ஆண்டாள் என்றே உலகத்தாரால் அழைக்கப் படுவாய். அன்றியும் நீ சூடிக் களைந்த திருமாலைகளையே இறைவன் விரும்புவதால் சூடிக் கொடுத்த சுடர்க்கொடி என்றும் போற்றப்படுவாய்” என்று சொல்லி ஆனந்த சாகரத்திலIமிழ்ந்தார்.
அன்று முதல் நறுமணமிக்க நாண் மலர்களால் அழகுற மாலைகளைத் தொடுத்து, அவற்றை ஆண்டாள் சூடிய பின்பே எடுத்துச் சென்று வடபெருங்கோயிலுடையானுக்குச் சாத்தி, மங்களா சாசனஞ் செய்து பல்லாண்டு பாடி வரலாயினார். இறைவன் வெளிப்படுத்திய இவ்வைபவத்தால் கோதைக்கு சூடிக் கொடுத்த சுடர்கொடி என்றும், ஆண்டாள் என்றும் சிறப்புப் பெயர்கள் நிலை பெற்று வழங்கி வரலாயின.
பாடவல்ல நாச்சியார்
சூடிக்கொடுத்த சுடர்க் கொடியாகிய ஆண்டாள் பூமாலைகளை மட்டுமேயன்றி பாமாலைகளையும் பாடிக் கொடுத்துப் பாடவல்ல
196

நாச்சியார் என்றும் பெயர் பெற்றார். பாவை நோன்பு என்பதை அடிப்படையாகக் கொண்டு ஆண்டாளால் இயற்றப்பட்ட திருப்பாவை முப்பது பாசுரங்களும், ஆற்றாமையாலெழுந்த உள்ளத்து வேட்கையை வெளிப்படுத்தும். அங்ங்ணமே மற்றொரு திவ்வியப் பிரபந்தமான நாச்சியார் திருமொழியில் இறைவனைக் குறித்துப் பாடப்பட்ட 143 பாசுரங்களுடன் சேர்ந்து மொத்தம் 173 பாசுரங்கள் ஆண்டாள் அருளிச் செய்தவையாகும்.
(கே. ஏ. ம.)
ஆண்டாள் பிள்ளைத்தமிழ்
வைணவ ஆழ்வார்களிலே பெண்ணாக விளங்கும் பெருமைமிக்கவர் பூரீ ஆண்டாள். அவர் கி. பி. ஒன்பதாம் நூற்றாண்டிலே வாழ்ந்தவர். அவருடைய திருப்பாவையும் நாச்சியார் திருமொழியும் நாலாயிரத் திவ்விய பிரபந்தத்திலே முதலாயிரத்தில் இடம் பெறுவன.
பூரீ ஆண்டாள் மீது பாடப்பெற்ற பிரபந்தமே ஆண்டாள் பிள்ளைத்தமிழாகும். இதனுள் ஏழாவது அம்புலிப்பருவத்தினை அடுத்துச் சிற்றிற் பருவம், சிறுசோற்றுப் பருவம், பொன்னூசற் பருவம், காமன்நோன்பு பருவம் எனும் நான்கு பருவங்கள் இடம் பெறுகின்றன. இப்பருவங்கள் யாவும் பன்னிருபாட்டியலில் இடம் பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
நாச்சியார் திருமொழியிலே திருமாலையே காதலித்து அவரையே அடைதல் வேண்டிக் காமனை நோக்கி நோன்பு இருந்த ஆண்டாளுக்கு இங்கு ஆசிரியர் காமன்நோன்புப் பருவம் அமைத்துள்ளார்.
இந்நூலாசிரியர் இன்னார் என்று தெரியவில்லை. ஆயினும் நாலாயிரத் திவ்விய பிரபந்தம், அதன் வியாக்கியானங்கள், வைணவ சம்பந்தமான நூல்கள் ஆகியனவற்றிலே நல்ல பயிற்சியுடையராகக் காணப்படுகிறார் என்பதை உணரமுடிகின்றது. (பொ.யூ.)
36 or (5 65g|T
திருக்கோயில்களில் நடைபெறும் விழா, கொண்டாட்டம் அல்லது உற்சவம் சைவ மரபுப்படி நித்தியோற்சவம், நைமித்தியோற்சவம், காமியோற்சவம் எனப் பொதுவாய் மூவகையாகக் கொள்ளப்படும். வைணவ மரபுப்படி கால உற்சவம், சிராத்த உற்சவம், சாந்தி உற்சவம் என்று பகுக்கப்படும். வைணவர் கூறும் கால உற்சவத்திலே நித்தியோற்சவம், பட்சோற்சவம், சம்வத் சரோற்சவம் என்பன அடங்குவன.
தினந்தோறும் நித்திய பூசாந்தத்திற் செய்வது நித்தியோற்சவமாகும். வருடந்தோறும் குறித்த மாதத்தில் வரும் திதி, நட்சத்திரம், சங்கிராந்தி என்பவனவற்றுள் ஒன்றை அந்தமாகக் கொள்வது நைமித்தியோற்சவமாகும். நைமித்தி யோற்சவம் பொதுவாக இருவகைப்படும். ஒன்று கோயிலுக்குரிய ஆண்டுவிழாவாகும். அது மகோற்சவம், பிரமோற் சவம், சம்வத்சரோற்சவம் என்று பெயர் பெறும். ஏனைய வகையின
இந்துக் கலைக்களஞ்சியம்

Page 243
பண்டிகை, விரதம் போன்றன தொடர்பாக இடம்பெறும் விசேட விழாக்களாம். வைணவர் கூறும் சாந்தி உற்சவமும் இதனுள் அடங்கலாம். காமிகோற்சவம் (வன போஜனம்) ஒருவருடைய விருப்பின்படி எடுக்கப்படும் விழா. அப்பொழுது மூர்த்தி கருவறையிலிருந்து வெளியே எழுந்தருளி அபிடேக ஆராதனை வழிபாடு பெற்று இரவிலே மீண்டும் மூலத்தானத்தை அடைவர். வைணவர் கூறும் சிரார்த்த உற்சவம் பொருளடிப்படையில் காமிகோற்சவத்தைச் சார்ந்தது எனலாம்.
பிரமோற்சவம், மகோற்சவம் என்று அழைக்கப்பெறும் ஆண்டுவிழா, கொடித்தம்பம் இல்லாத கோயில்களில் அலங்காரத் திருவிழா என்று பெயர் பெறும்.
நித்திய பூசையில் ஏற்படும் குறைபாடுகள் நைமித்திய பூசையாகிய திருவிழாக்களிலே தீர்கின்றன என்று சாத்திரங்கள் கூறுவன. கோயிலுக்குச் செல்ல முடியாத நோயாளிகள், கர்ப்பிணிகள் முதலியோர் வீதிவலம் வரும் உற்சவ மூர்த்தியைத் தரிசிக்கும் பேறு பெறுவர். மேலும் தீட்சை பெறாதவர், தீயோர் முதலியோரும் உற்சவ மூர்த்தியைத் தரிசித்துச் சாம்பவதீட்சை பெறுவதாகச் சைவாகமங்கள் கூறுவன. ஊர் மக்கள் வேறுபாடுகளை மறந்து ஒன்று சேர்ந்து, ஜம்புலன்களையும் நல்வழிச் செலுத்தி நற்பண்புகளை வளர்க்க ஆண்டுவிழா உதவுகின்றது என்று நம்புவர்.
உற்சவ காலத்திற் செய்யப்படும் ஒவ்வொரு கிரியையும் சிருஷ்டி முதலிய ஒவ்வொரு கிருத்தியங்களையறிப்பதால், அக்கிரியைகள் ஒவ்வொன்றும் ஆன்மாக்களது மலத்தை நீக்கி வீடுபேறு அருளுதற்காக வைக்கப்பட்டன என்று சைவாகமங்கள் கூறுகின்றன.
ஆண்டுவிழா ஒருநாள் முதல் பல நாட்களுக்கு நடை பெறலாம். தஞ்சைப் பெருவுடையார் திருக்கோயிலிலே பிரமோற்சவம் 30 நாளுக்கு மேல் நடைபெற்றதாம். ஆயினும் பத்துநாள் விழா நடைபெறுவதே சைவ வைணவாலயங்களிற் பெருவழக்காகக் காணப்படுகின்றது.
ஒரு பிரமோற்சவத்திற்குப் பல திருக்கோயில்களும் இடமளித்தபோதும் சில திருக்கோயில்களிலே ஒன்றுக்கு மேற்பட்ட பிரமோற்சவங்களும் ஒரு வருடத்திலே இடம் பெறுகின்றன. உதாரணமாகச் சிதம்பரம் நடராசப் பெருமான் கோயிலிலும் ஆழ்வார் திருநகரி பெருமாள் கோயிலிலும் இரு பிரமோற்சவங்களும் பூரீரங்கத்திலே மூன்று பிரமோற்சவங்களும் நடைபெறுகின்றன.
சைவாகமங்கள் மகோற்சவம் துவஜா ரோகணம், பேரீதாடனம் அல்லது அங்குரார்ப்பணத்தை முதலாகக் கொண்டு ஆரம்பமாகும் என்று கூறுகின்றன. ஆயினும் விக்கினேசுவர அனுஜ்ஞையுடன் மகோற்சவ ஆயத்தங்கள் ஆரம்பமாகும். விக்கினேசுவரன் அருளின்றி எடுத்துக் கொண்ட கருமம் விக்கினம் இன்றி நடைபெறாதாகலின் அவனை வணங்கி நிவேதித்து விசேட பூசை செய்து அவனுடைய அணுக்கிரகம் பெற்று ஆயத்தங்கள் நடைபெறும். பின்பு ஊர் நன்மை நோக்கி கிராமசாந்தி செய்யப்படும். கிராம சாந்தி பொதுவாக வைரவ
இந்துக்கலைக்களஞ்சியம்

பூசையாக அமைகின்றது. இதனை அடுத்து வாஸ்து சாந்தி நடைபெறும். மகோற்சவம் நடைபெறும் இடத்தினைச் சுத்தி செய்வதாக இக்காரியம் நடைபெறும். இது வாஸ்து புருஷன், வாஸ்து பிரமன், விராட்புருஷன் என்று பெயர் பெறும். வாஸ்துவின் ஆதரவை நாடிச் செய்யப்படுவது. வைக்கோல், தருப்பை முதலியனவற்றால் செய்யப்பட்ட உருவமொன்றை சிவாக்கினியோடு சேர்த்து வீதிவழியே இழுத்து வீதியைச் சுத்திகரிப்பதை இச்சாந்தியின் போது காணலாம். மிருத்சங்கிரகணம் (மண் எடுத்தல்) எனும் கிரியை சுத்தமான மண்ணெடுத்து அங்குரார்ப்பணம் எனும் கிரியையை செய்ய இடமளிக்கிறது. நவதானியங்களை, எடுத்து வந்த மண்ணிலே முளைகொள்ளச் செய்யும் இக்கிரியை எடுத்துக் கொள்ளும் கருமத்திற்குச் சகுனம் பார்ப்பதாக மட்டுமன்றி சிவசக்தி, ஞானசக்தி, கிரியாசக்திகளைக் குறிப்பாக உணர்த்துவதாகவும் படைத்தல் தொழிலை உணர்த்து வதாகவும் கருதப்படும். அடுத்தது இரட்சாபந்தனம் எனும் காப்புக்கட்டல் கிரியை. அடுத்தது பேரீதாடனம். ஆசாரியர் உலகெங்கும் நன்மை உண்டாக வேண்டும் என்று கருதி மும்முறை மேளம் அடிப்பது பேரீதாடனம்.
துவஜாரோகணம் எனும் கொடியேற்றத் திருவிழாவுக்கு முன்பு நடைபெறும் முக்கியமான கிரியைகள் விக்கினேசுவர அனுஜ்ஞை, கிராமசாந்தி, வாஸ்துசாந்தி, மிருத் சங்கிரணம், அங்குரார்ப் பணம், இரட்சாபந்தனம், பேரீதாடனம் என்னும் முற்கூறியவையாம். துவஜாரோ கணத்தோடு ஆரம்பமாகும் மகோற்சவத்திலே கொடியேற்றவிழா முதல் நாள் திருவிழாவாகும். கொடியேற்றமும் அதற்கு முற்பட்ட கிரியைகளும் படைத்தல் தொழிலைக் குறிப்பதாகச் சைவாகமங்கள் கூறுவன. ஆணவம் வலியிழந்து, ஆன்மா மலநீக்கம் பெறுதற் பொருட்டு திருவரு ளாகிய கொடியை ஏற்றுவதையே கொடியேற்றம் குறிக்கின்றதாம்.
கொடிமரம் பதியெனவும் கொடிக்கயிறு சக்தியெனவும் கொடிச்சீலை பசுவெனவும் தர்ப்பக்கயிறு பாசம் எனவும் கருதப்படும்.
பிரமோற்சவம் நடைபெறும் நாட்களில் யாகசாலையில் ஒவ்வொரு நாளும் யாகம் நடைபெறும். யாகசாலையிலுள்ள சிவாக்கினியில் ஆகுதி செய்தல் ஆன்மாக்கள் செய்த கன்மங்களை அநுபவத்துக்கு வரவொட்டாது சுத்தமாக்கும் பாவனையாகும். லாஜபுஷ்பத்தை (நெற்பொரி) ஆசாரியர் சுவாமிக்குச் சமர்ப்பிப்பது மலநீங்கிய ஆன்மாக்களைச் சிவத்தோடு சேர்க்கும் பாவனையாம்.
பிரமோற்சவ நாட்களிலே உற்சவ மூர்த்தி பொருத்தமான வாகனங்களிலே வீதிகள் வழியே திருவுலா எழுந்தருளுவார். வாகனத் திருவிழாக்கள் காத்தல் தொழிலை உணர்த்துவன என்பர். இரண்டாம் நாள் திருவிழாவிலே பகலில் சூரிய பிரபாவிலும் இரவில் சந்திரப்பிரபாவிலும் இறைவன் உலாவருவார். மூன்றாம் நாளிற் பகலில் அதிகார நந்தியிலும் இரவில் பூதவாகனத்திலும் உலாவருவார். நான்காம் நாளில் பகலில் பல்லக்கிலும் இரவில் ஐந்தலை நாக வாகனத்திலும் எழுந்தருளுவார். ஐந்தாம் நாள் திருவிழா சப்பரத்திருவிழா.
197

Page 244
அன்று பிரபாவிற் பகலும் இடபத்தில் இரவும் இறைவன் பவனி வருவார். ஆறாம் நான் இரவு இறைவன் யானையை வாகனமாகக் கொள்வர்.
ஏழாம் நாள் திருவிழா திருக்கல்யாணம் ஆகும். அருள்வடிவான சக்தி, அறிவுமயமான சிவத்தோடு கலந்து, பிரபஞ்சத்தை இயக்க வைப்பதையே திருக்கல்யாணம் குறிக்கின்றது என்பர். திருக்கல்யாணத்தின் பின்பு கைலாச வாகனத்திலே ஊர்வலம் நடைபெறும்.
எட்டாம் நாள் திருவிழா பரிவேட்டை மும் மலங்களையும் இறைவன் வேட்டையாடுவதாக இது அமைகின்றது.
ஒன்பதாம் நாள் பிக்ஷாடணர் திருவிழா. அவன் அருளின்றி யாதும் நிறைவேறாமையை இவ்விழா உணர்த்தும்.
தேர்த்திருவிழா பத்தாம் நாள் திருவிழாவாகும். அழித்தல் தொழிலை இவ்விழா உணர்த்துகின்றது என்பர். சிவன் பொதுவாக சோமாஸ்கந்தராக எழுந்தருள, சக்தி, கணேசர் சுப்பிரமணியர், சண்டேசர் ஆகியோர் உடன்வரத் தேர்த்திருவிழா நடைபெறும்.
தீர்த்தத்திருவிழா ஆண்டு விழாவின் கடைசி நாள் விழாவாக அமையும். தீர்த்தம் சில கோயில்களிலே பெளர்ணமி தினத்திலும் சில கோயில்களிலே அமாவாசை தினத்திலும் நடக்கும். இவ்விழா இறைவனின் அருளல் தொழிலை உணர்த்துவதாம்.
மயிலாப்பூர் கோயில் முதலிய சில திருக்கோயில்களிலே நடராசப் பெருமானின் ஆனந்த தாண்டவ விழா ஒருநாள் விழாவாகக் காணப்படுகின்றது. நடராசர் விழாவோடு சில திருக்கோயில்கள் ஊடல் உற்சவத்தினையும் கொண்டாடுகின்றன.
சண்டேச உற்சவம் அல்லது பக்தோற்சவம், ஆசார்யோத் சவத்துடன் ஆண்டு விழா நிறைவு பெறும்.
ஆண்டுவிழாவில் இடம்பெறும் மெளனோற்சவம் மறைத்தல் தொழிலை உணர்த்துவதாம்.
விஷ்ணு கோயில்களிலே பிரமோற்சவம் நடக்கும்முறை மேல்வருமாறு கூறப்படுகின்றது :
ஆசாரிய வரணம் (தகுதியான ஒருவரை ஆசாரியராக நியமித்தல்.) மிருத்சங்கிரகணம், அங்குரார்ப்பணம் திருமஞ்சனம், ஆராதனம், நைவேத்தியம் துவஜாதண்டசுத்தியும் சமஸ்தாபனமும் வாஸ்து ஹோமம், துவஜா படபிரதிஷ்டை கருட விஷ்வக்சேன, சுதர்சன அர்ச்சனை
பேரீதாடனம்
198

8. துவஜாரோகணம் 9. திக்குப் பாலகர் ஆவாகனமும் பூசையும் 10. கும்பதாபனம்
11. அக்ரஹோமம்
12 நவமூர்த்தி பூசை 13. யாகதிக்ஷை கெளதக பந்தனம்
14. ஒமம் 15. தேவபூசை 16. உற்சவபலி
17. உற்சவ பிரமணம் 18. உற்சவஸ்நாபன அபிஷேகம், ஹவிர் நிவேதனம் 19. இராஜோ பசாரம்
20. நிருத்தியாதி தர்சனம் 21. பள்ளியறைக்கு எழுந்தருளச் செய்தல் 22. புஷ் பாஞ்சலி
23. பிரணாமம்
வைணவ கோயில்களில் இடம்பெறும் மேற்படி கிரியைகளை நோக்கும்போது சைவக் கோயில்களில் இடம்பெறுவனவற்றிலே பல இப் பட்டியலில் காணப்படுவதை உணர்ந்து கொள்ளலாம்.
விஷ்ணு கோயில் பிரமோற்சவங்களிலே காலையிலும் மாலையிலும் ஒவ்வொரு நாளும் அபிஷேகம், வழிபாடு, நைவேத்தியம், திருவுலா, திருப்பாசுரமோதல் முதலியன நடைபெறுவன. உற்சவ மூர்த்தி சேஷவாகனம், அன்னவாகனம், சிம்மவாகனம், கல்பவிருட்ச வாகனம், கருட வாகனம், அனுமான் வாகனம் முதலிய வாகனங்களிலே திருவுலாவுக்கு எழுந் தருளுவார். தேர்த் திருவிழாவும் தீர்த்தத் திருவிழாவும் இங்கும் இறுதியில் நடப்பன. தீர்த்தம், சதாரி, துளசி என்பனவற்றைப்
பக்தர்களுக்கு வழங்கி விழாவினை முடித்துக் கொள்வர்.
(பொ.யூ.)
රතිෂ්ඨfගJ1b
சைவசித்தாந்தத்தில் முக்கியமான இடத்தைப் பெறுவது ஆணவம். இதனை வேதாந்திகளின் அவித்தியையுடனோ அல்லது வைணவருடைய அகங்காரத்துடனோ இணைத்து நோக்கினும் அவற்றிலும் சித்தாந்தி கூறும் ஆணவம் பலவழிகளிலும் முக்கியத்துவம் பெற்றுத் தத்துவ தரிசனத்திலே சிறப்பிடம் பெறுகின்றது.
உயிரைக் கட்டுவது பாசம், பந்தம், தளை, கட்டு; உயிரை மாசுபடுத்துவது மலம், ஆணவம் மும்மலங்களில் (ஐந்து மலங்களில்) ஒன்றாய்ச் சித்தாந்தியாற் கொள்ளப்படுவது. சிவாத்துவிதம் ஆணவப் பேச்சே எடுக்கவில்லை. பாசுபதம், ஐக்கியவாதம் என்பன ஆணவம் என்பதொன்றில்லை என்று சாதிப்பன.
மூவகை உயிர்களிலும் செம்பிற் களிம்பு போல அநாதியாய்க் கலந்திருப்பதால் சகசமலம் என்றும் மூலமலம் என்றும் ஆணவம்
இந்துக் கலைக்களஞ்சியம்
ܬܐ .

Page 245
அழைக்கப்படும். இருள் போல உயிரின் அறிவை மறைத்து வைப்பதால் இருண்மலம் என்றும் அதற்கொரு பெயருண்டு.
அணுவின் தன்மையுடையது, மிக்க சிறுமையுடையது என்ற பொருள் தருவது ஆணவம், விபாவமான ஆன்மாவை மிக நுண்ணியதாய், சிறுமைப்படுத்துவது என்றும் பொருள் கூறுவர். சிறுமைப்படுத்தல் சிற்றறிவும் சிறுதொழிலும் உளதாகச் செய்தல்.
ஆணவத்தின் இயல்பு மறைப்பதாகும். ஆன்மாவின் அறிவை மறைத்து, ஆசை, கோபம், அகங்காரம், மமதை முதலிய தீயகுணங்களையும் தீய எண்ணங்களையும் தீய செயல்களையும் எழுப்பி விடுவது அதன் தொழில். ஆயினும் அறிவை அது அழித்துவிடாது.
இருள் தன்னைக் காட்டும். ஆணவம் தன்னையும் காட்டாது பிறபொருளையும் காட்டாது. இதனால் ஆன்மா தன்னை ஆணவம் பிடித்திருப்பதை உணராது கிடக்கும்.
ஆணவத்தை அடக்கிச் செய்வது நல்ல கருமம்; அடக்காமல் செய்வது தீயகருமம். நற்செயல் தீச் செயலால் உண்டாகும் புண்ணிய பாவம் கன்மமலம். அது அனுபவித்தே தொலைக்க வேண்டியது. கன்மத்தைச் செய்யக் கருவியாவது மாயை. அது தநு கரண புவன போகங்களை அளித்து அக்காரியத்தைச் செய்கிறது.
மாயை, கன்மம் என்பனவற்றின் பின்பே ஆணவம் அறும். அதற்கு இறைவனது ஞானசக்தி உதவுகின்றது.
பெத்த நிலையில் ஆணவம் அறிவை முற்றாக மயக்க, ஆன்மா செயலின்றிக் கிடக்கும். சகல நிலையில் சிவம் அருளால் மாயை தநு கரண புவன போகங்களைத் தரும். இவற்றால் ஆன்மா வினைகளைச் செய்து, சிறிது சிறிதாக உண்மையை உணர்ந்து, இருவினைகளையும் சமமாகக் காணத் தொடங்கும். முத்தி நிலையில் திருவருள் சேர்வதால் ஆன்மா மலமுனைப்பில் இருந்து விடுபட முனையும். -
முத்தியில் ஆணவம் உண்டா இல்லையா என்பதிற் கருத்து வேறுபாடு உண்டு. பாசாண்டவாதம் முத்தியிலும் ஆணவம் நிலைத்திருப்பதாகக் கூறும். ஆணவம் இருக்குமட்டும் பிறப்பிறப்பு தொடரும் என்னும் சித்தாந்தம் இதற்குச் சமாதானமாக ஆணவம் முற்றாக நீங்காது நெல் உமி போல
ஒட்டிக் கொண்டு பலம் இழந்து கிடக்கும் என்று கூறும்.
(பொ. பூ)
ஆத்தான்
மணவாள மாமுனிகளின் சீடர் வானமாமலை ராமா
நுஜஜியர்; அவர் சீடர் ஆத்தான் பதினைந்தாம் நூற்றாண்டின் முற்பகுதியில் வாழ்ந்தவராகலாம்.
பகவத் விஷயத்திற்கும் திருப்பாவை வியாக்கியானத்திற்கும் சங்கிரகமாக அரும்பதவுரை செய்தவர்; அது ஆத்தான் அரும்பதம் என வழங்கும்.
இந்துக் கலைக்களஞ்சியம்

ஆத்தான் ஜீயர்
ஆந்திர வைணவர்; திருவரங்கப் பெருமாள் கோயிலில் இருந்தவர்; ஆத்தான்யதி எனவும் அழைக்கப்படுவர்.
பவத் விஷயத்திற்கு அடையவளைந்தான் அரும்பதம் எனும் அரும்பதவுரையும் திருப்பல்லாண்டு வியாக்கியானம் அரும்பதமும் தந்தவர்.
ஆத்திசூடி
காப்புச் செய்யுட் காரணமாகப் பெயர் பெறும் நூல்களில்
ஒன்று ஆத்திசூடி கொன்றை வேந்தன், வாக்குண்டாம்
முதலியனவும் இவ்வாறே பெயர் பெறல் நோக்கத்தக்கது.
ஆத்திசூடியாம் சிவபிரான் விரும்பும் விநாயகரின் காப்பு நீங்கலாகப் பொதுவாக 108 அல்லது 109 நூற்பாக்களை யுடையது. ஆத்திசூடி, காப்பொழிந்த நூற்பா யாவும் ஒரடியில் அமைவன என்பது குறிப்பிடத்தக்கது.
ஒளவையார் இயற்றியது ஆத்திசூடி, ஆத்திசூடி யாசிரியரே கொன்றை வேந்தன், வாக்குண்டாம் (மூதுரை), நல்வழி என்பனவற்றையும் இயற்றினார் என்று கருத இடமுண்டு. "தேவர் குறளும்” எனும் வெண்பாவிலே தேவார முதலிகளையும் மணிவாசகரையும் குறிப்பிடும் நல்வழியாசிரியர் ஒன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதிக்கு முற்பட்டவராகார். கொன்றைவேந்தனின் காப்புச் செய்யுள் பேராசிரியர் (தொல். பொருள். செய். சூத். 149 உரை), யாப்பருங்கல விருத்தியுரைகாரர் (சூத். 63 உரை) என்பவர்களால் எடுத்தாளப்படுகின்றது. மூதுரையின் அட்டாலும் பால்சுவை' எனும் செய்யுள் பேராசிரியரால் எடுத்தாளப்படுகின்றது (தொல், பொருள். செய். சூத், 72). இம் மேற்கோளாசிரியர் பதினோராம் பன்னிரண்டாம் நூற்றாண்டுகளில் வாழ்ந்தவரென்று கருத முடியும். எனவே முற்கிளந்த நூல்களின் ஆசிரியரான ஒளவையார் ஒன்பதாம் நூற்றாண்டின் கடைக்கூறுக்கும் பதினோராம் நூற்றாண்டின் முற் கூறுக்கும் இடையில் வாழ்ந்தவராகலாம்.
சன்மார்க்க சாரத்தைச் சுருங்கச் சொல்லி விளங்க வைத்து, அகரமாதிய அட்சர நிரையே கோத்தெழுதப்பட்ட ஆத்திசூடி, அகரவரிசையைக் கற்பதில் ஆர்வமேற்படுத்தவும், மனனம் செய்யும் பழக்கத்தினை விருத்தி செய்யவும் இளமையில் உதவியதோடமையாது, ஆழ்ந்த கருத்துகளை அடிமனத்தே இட்டு முதிர்ச்சியிற் பயனடையவும் உதவிற்று. நற்பண்புடன் கூடிய நல்லொழுக்கம் இறையநுபவத்திற்கு இன்றியமையாதது என்பதை வலியுறுத்தியது தமிழர் மதம். இதன் காரணமாகத் தோன்றிய அறநீதி ஆசார நூல்களிற் சிறுவர் முதல் முதியோர் வரை மறவாது போற்றும் நூல் ஆத்திசூடி
ஆத்திசூடியகவல், ஆத்திசூடிச்சிந்து, ஆத்தி சூடித் திறவுகோல், ஆத்திசூடிப் புராணம் முதலான நூல்கள் ஆத்திசூடியின் பெயர் தாங்கி அதன் செல்வாக்கிற்குச் சான்று பகர்ந்து நிற்கினறன.
199

Page 246
ஆத்திசூடியின் சூத்திரப் பொருளை விளக்கும் முகமாக ஆத்திசூடி வெண்பா என்ற பெயரிலே இரு நூல்கள் எழுந்தன. ஒன்றின் ஆசிரியர் இராமபாரதி; ஏனையதின் ஆசிரியர் இரட்டணை அசலாம்பிகையம்மையார். ஆத்திசூடியின் சூத்திர விளக்கமாக நவீன முறையிலே தெ.பொ. கிருஷ்ணசாமிப் பாவலர், கடலூர் ந. பலராமையர், யாழ்ப்பாணம் நா. மகேசன் முதலானோர் பல கதைகளை எழுதியுள்ளனர்.
ஆத்திசூடிக்கு முகவை இ. இராமாநுசக்கவிராயர், திருத்தணிகை க. சரவணப் பெருமாளையர், யாழ்ப்பாணம் பூரீ ஆறுமுகநாவலர் (1850), கா. பச்சையப்ப முதலியார் (1868), அரியலூர் எஸ். சாமிநாதையர் (1898), காஞ்சிபுரம் மகாவித்துவான் இராமசாமிநாயுடு, ந. மு. வேங்கடசாமி நாட்டார் முதலியோர் உரை கண்டனர். காவேரிப்பாக்கம் நமச்சிவாய முதலியார் 1930 இலே பழைய உரைகளுடன் புதிய உரைகளையும் சேர்த்து ஆத்திசூடியையும் கொன்றை வேந்தனையும் பதிப்பித்தார். ஆங்கிலத்திலே ஜே. சுக்தென் (Rev. J. Sugden) பாதிரியார் (1848) முதலாகப் பலர் மொழி பெயர்த்து வழங்கியுள்ளனர். மாகறல் கார்த்திகேய முதலியார் ஆத்திசூடி முதற்சூத்திர விருத்தியுரை தந்துள்ளார். (பொ.பூ.)
ஆத்மபோத உபநிடதம்
இருக்கு வேதத்தைச் சேர்ந்த ஆத்மபோத உபநிடதம் முக்திகோபநிடதம் கூறும் சங்கதத்திலுள்ள 108 உபநிடதங்களில் ஒன்றாகும். ஆத்மபோதக உபநிடதம், ஆத்மபிரபோத உபநிடதம் என்றும் அது அழைக்கப்பட்டுள்ளது. ஆத்ம விளக்கமாக அமையும் இவ்வுபநிடதம் நாராயண உபநிடதம்.
ஓம் நமோ நாராயணாய எனும் மந்திரம் வைகுந்தத்தை அளிப்பதாகும். நாராயணனைத் தியானிப்பவர்கள் எவ்வித துன்பங்களையும் அனுபவிக்க மாட்டார். இருமை நிலையிலிருந்து இருமையற்ற நிலையை அடைவதை இவ்வுபநிடதம் விளக்கும். தன்மையிலே சிந்தனைக் கூற்றுகளாக அமையும் இதனை ஒரு முகூர்த்தம் உச்சாடனம் செய்வோர் பிறவிப்பிணியிலிருந்து காப்பாற்றப்படுவர். (பொ. யூ.)
ජී%ණීup ෆිෂිglyê
ஈழத்தின் மலைநாட்டிலுள்ள நாவலப்பிட்டி எனும் நகரிலிருந்து 1948 ஆம் ஆண்டு திருக்கார்த்திகைத் திருநாளிலே சிவனொளிபாதமலைச் சித்திரத்தைத் தாங்கி வெளிவரத் தொடங்கிய ஆன்மீக வெளியீடு ஆத்மஜோதியாகும். அப்பொழுது வருட சந்தா மூன்று ரூபாய், ஆயுள் சந்தா 75 ரூபா. இம்மாசிகை 1973 இலே வெள்ளி விழாக் கொண்டாடிய பெருமையுடையது.
ஆத்மஜோதியைக் கெளரவ ஆசிரியராக இருந்து வழிநடத்தியவர் க. இராமச்சந்திரா எனும் சமரசஞானி. ஏழாலை நா.முத்தையா ஆசிரியர் ஆரம்பகாலம் முதல் நிர்வாக ஆசிரியராக இருந்து அதன் வளர்ச்சியிலே பெரும் பங்கு கொண்டவர்.
200

ஆத்மஜோதி ஆன்மீக வெளியீடுகளிலே சமரச நெறியினைப் பின்பற்றி வந்த சிறப்புடையது. அதன் வளர்ச்சிப் பாதையிலே ஆன்மீக நெறியை எவ்விதக் கலப்புமின்றி வழங்கிய பெருமையுடையது. எத்தனையோ மகான்களின் பிரமிக்கத்தக்க வாழ்க்கை வழிகளைத் தொட்டுத் தொட்டுக் காட்டி வந்த சிறப்புடையது. இலகுவான மொழியிலே தெளிவாகவும் ஜனரஞ்சகமாகவும் சுருக்கமாகவும் விடயங்களை அளித்துச் சாதாரண கல்வி அறிவுடையோருக்கு ஆன்மீக அறிவினை வழங்கியது ஆத்மஜோதி.
1960 இலே ஆத்மஜோதி அச்சகம் நிறுவப்பட்டதை அடுத்து ஆத்மஜோதியில் வெளிவந்தனவும் வெளிவராதனவுமான பல விடயங்கள் நூலுருப் பெற்றன. அதன் பத்தாம், பதினைந்தாம் இருபத்தைந்தாம் ஆண்டுகளிலே விசேட மலர்களும் வெளியிடப் பெற்றுள்ளன. (பொ.பூ.)
ஆத்மோபநிடதம்
அதர்வ வேதத்தைச் சேர்ந்த ஆத்மோபநிடதம், முக்திகோப உபநிடதம் கூறும் 108 உபநிடதங்களில் ஒன்றாகும். பிரமன் தேவரிஷிகளுக்கு அதர்வ வேதத்தில் மறு பிறப்பின் உண்மைபற்றி விளக்கிய பின்பு, அங்கிரஸ் இவ்வுப நிடதத்திலே மறுபிறப்பி லிருந்து நீங்கும் மார்க்கத்தை, சம்சாரபந்தத்திலிருந்து நீங்கும் மார்க்கத்தை, பரமாத்துமனைப் போற்றி அடைவதைக் கூறும்.
ஆத்மாவின் உண்மை இயல்பு இங்கு உணர்த்தப் படுகின்றது.
(பொ. பூ)
ஆதிசங்கரர்
8கத்குரு ஆதிசங்கர பகவத்பாதர் தென்னிந்தியாவில் வடதிருவிதாங்கூர் பிரதேசத்திற் காலடி எனும் கிராமத்திலே அவதரித்தவர்; நம்பூதிரி பிராமணர் வகுப்பில், ஆத்ரேய கோத்திரத்திலே சிவகுரு ஆரியாம்பா தம்பதிகளின் ஏக புதல்வராகத் தோன்றிய அவருக்குப் பிள்ளைப் பெயர் சங்கரன் என்பர்.
ஆதிசங்கராசாரியர் காலம் பற்றி வேறுபட்ட கருத்துக்கள் நிலவுகின்றன; நேபாள நாட்டுக் காலவரிசை நூல் ஒன்றின் மூலம் அவர் காலம் கி. மு. 509 முதல் கி. மு. 477 வரை என்று தீர்மானிக்கக் கூடியதாக இருக்கின்றது என்பர் சிலர். கெளதம புத்தருக்குப் பின் வந்தவராகக் கருதக் கூடிய ஆதிசங்கரர், புத்தர் நிர்வாணம் அடைந்த கி. மு. 473க்கு முன்பே மறைந்து விட்டதாகக் கூறல் பொருந்தாது. சிருங்ககிரிமடத்தின் குறிப்புகளின் உதவியுடன் சிலர் ஆதிசங்கரர் காலம் கி. பி. 788 முதல் கி. பி. 820 வரை என்று அறுதியிட்டுக் கூறியுள்ளனர். இக்குறிப்புகளால் அறியப்படுபவர் காஞ்சிபுரம் பூரீ சாரதா மடத்தின் பீடாதிபதிகளில் ஒருவர் என்றும் ஆதிசங்கரர் அல்லர் என்றும் கூறுபவர் உளர். செளந்தரியலகரியின் 75ஆம் பாடல் குறிப்பிடும் “திராவிடசிசு"திருஞானசம்பந்தரே என்றும் அதனால் அந்நூலின் ஆசிரியராகிய ஆதிசங்கரர் காலம் ஏழாம் நூற்றாண்டுக்குப் பிற்பட்டது என்றும் சிலர் கூறுவர். ஆயினும் செளந்தரியலகரியின் ஆசிரியர் இன்னார்தாம் என்று துணிந்து
இந்துக் கலைக்களஞ்சியம்

Page 247
கூறுவதற்கு ஆதாரமில்லை என்னும் கருத்தும் கவனித்தற் குரியதாம். சங்கரர் பெயரால் வழங்கும் சிவபுஜங்க ஸ்தோத்திரத்திற் சுந்தரமூர்த்தி சுவாமிகளும் சிறுத்தொண்ட நாயனாரும் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் கூறுவர்.
சங்கராசாரியர் வாழ்ந்த காலம் பற்றிய தெளிவு ஏற்படாத போதும் அவர் 32 வருடங்கள் இம்மாயாவுலகிலே வாழ்ந்தவர் என்பதைச் சங்கர விஜயங்கள் ஒரு சேரக் கூறி நிற்கின்றன.
ஏகான்மவாதிகளின் சந்தான பரம்பரை சதாசிவம், நாராயணர், பிரம்மா, வசிஷ்டர், அவர் மகன் சக்தி, அவர் மகன் பராசர், அவர் மகன் வேதவியாசர், அவர் மகன் சுகர், அவர் சீடர் கெளடபாதர் வழிவருவது; கெளடபாதரின் சீடர் கோவிந்த பகவத்பாதரே ஆதிசங்கரரின் குருவாவார்.
ஆதிசங்கரர் ஏகான்மவாதத்தின் சிறந்த பிரசாரகராக விளங்கியவர்; அவருக்கு முன்பே இந்திய தத்துவ தரிசனங்களில் ஏகான்மவாதம் இடம் பெற்றுவிட்ட போதும், சங்கரரே அதனைத் தெளிவாக்கி, விரிவாக்கி, விளக்கிப் பிரபல்லியப்படுத்தியவராவர்.
“ஏகம் ஏவ அத்துவிதீயம் பிரமம்” என்ற வேத மகா வாக்கியத்தில் வரும் அத்துவிதீயம் என்ற சொல்லிலுள்ள அகரத்திற்கு ஏகான்மவாதிகள் இன்மைப் பொருள் கொண்டு, பிரமம் ஒன்றே உள்பொருள்; இரண்டாம் பொருள் ஒன்றும் இல்லை என்பர்; ஏகான்மவாதிகள் கண்ணுக்குப் புலனாகும் பல உயிர்களும் இவ்வுலகும் எல்லாம் மாயத்தோற்றமே, ஒரு சூரியனே பல குடங்களில் உள்ள நீரிற் பிரதி விம்பித்துப் பலவற்றைத் தோற்றுவிப்பது போல ஒர் ஆன்மாவே பல உடல்களில் நின்று பலவாகத் தோன்றுகின்றது; அந்த ஆன்மாவே பிரமம் என்று விளக்குவர். இரண்டில்லை எனும் ஏகான்மவாதிகள் முத்தியில் இறைவன் ஒன்றேயுண்டு ஆன்மா இல்லையாகி விடும் என்பர்.
ஆதிசங்கரர் கன்னியாகுமரி முதல் காஷ்மீரம் வரை யாத்திரை செய்து தம் ஏகான்மவாத தத்துவத்தைப் போதித்தும் வாதிட்டும் நிலைநாட்டுவதிலே முன்னின்றவர்.
துவாரகையிலே துவாரகா மடத்தையும், பூரி ஜகந்நாதத்திற் கோவர்த்தன மடத்தையும், பதரிகாசிரமத்தில் ஜோதிர் மடத்தையும், காஞ்சிபுரத்தில் பூரீ சாரதா மடத்தையும் நிறுவித் தம் சீடர்களான பத்மபாதர், சுரேச்வராசாரியார், தோடகாசாரியர், ஹஸ்தாமல காசாரியர் முதலானோரை அவற்றின் பீடாதிபதிகளாக நியமித்து ஏகான்மவாதப் பரம்பலுக்கு வேண்டிய தசநாமிகளை உருவாக்கியவர்.
தசோபநிஷத்துகள், பிரம்மசூத்திரம், பகவத் கீதை என்பனவற்றிற்கு ஆதிசங்கரர் இயற்றியனவாக வழங்கும் சங்கத மொழிப் பாடியங்கள் அவர் தம் ஆக்கங்கள் என்பதிலே கருத்து வேறுபாடில்லை; ஆனால் அவர் பெயரால் வழங்கும் ஏனைய சங்கத நூல்கள் பற்றி அவ்வாறு கூறுவதற்கில்லை; அவற்றிலே சில மேல்வருவன:
சிவானந்த லஹரி
செளந்தரிய லஹரி
இந்துக் கலைக்களஞ்சியம்

அன்னபூர்ணா ஸ்தோத்திரம் தஷிணாமூர்த்தி ஸ்தோத்திரம் சிவநாமாவலி ஸ்தோத்திரம் லசுஷ்மீநரஸிம்ம ஸ்தோத்திரம் துவாதசலிங்க ஸ்தோத்திரம் ஷட்பதி ஸ்தோத்திரம் காலபைரவ அஷ்டகம் மநீஷா பஞ்சகம் மாத்ருகா பஞ்சகம் சுப்பிரமணிய புஜாங்கம் கனகதாரா ஸ்தவம் வேத ஸாரசிவஸ்தவம் அபரோக்ஷாநுபூதி உபதேசஸாஹ ஸ்ரீ பிரபோதஸ"தாகரம் ஆத்மபோதம் விவேகசூடாமணி சதசுலோ கீ பஜகோவிந்தம் விஷ்ணுஸ்கஸ்ரநாமம் பாஷ்யம் நைத்ஸ"ஜாதீயம் பாஷ்யம் ஹஸ்தமலகீய பாஷ்யம்
(மேலதிக விபரங்களுக்கு பார்க்க சங்கரர்)
(பொ.யூ.)
3,855 é8-Typair (8. 15). 871-907)
ஆதித்த சோழன் விசயாலயனின் மகன். விசயாலயன் சோழப் பேரரசரின் குல முதல்வன். போராற்றல் மிக்கவன். சாதுரியத்தினாலும் போர் வெற்றிகளின் விளைவாகவும் சோழமண்டலம் முழுவதிலும் தனது ஆட்சியை ஏற்படுத்தியவன். பாண்டியர்களையும் முத்தரையரையும் போர்களில் வெற்றி கொண்டவன். தஞ்சாபுரியை முத்தரையரிடமிருந்து கைப்பற்றி அதனை விசயாலயன் தனது இராசதானியாக அமைத்துக் கொண்டான். அவனது சாதனைகள் பின்வந்த அரசர்களின் பட்டயங்களிற் பெரிதும் பாராட்டப்பட்டுள்ளன. தென்னிந்தியக் கட்டிடக்கலை வரலாற்றிலும் அவனுடைய ஆட்சியோடு ஒரு புதிய சகாப்தம் உருவாகியது.
அவனது குமாரனாகிய ஆதித்த சோழன் தந்தை இறந்ததும் சோழ நாட்டு அரசனாக 881ஆம் ஆண்டளவில் முடிசூடிக் கொண்டான். அவன் இராசகேசரி என்னும் அபிஷேக நாமத்தைப் பெற்றான். அவனுடைய ஆட்சியிற் சோழ இராச்சியம் விசாலமாகிப் பெருவலி பெற்றது. பல சிவாலயங்களைக் கற்றளிகளாக அமைத்தமையால் அவன் கவிவாணரினாற் புகழ்ந்து பாடப்பெற்றவன்.
இளங்கோப்பிச்சி, திரிபுவனமுழுதுடையாள் என்னுமிருவர் ஆதித்தனின் தேவிகளாவர். இளங்கோப்பிச்சி பெருவலிபடைத்த தக்கணத்துப் பேரரசனாகிய இரண்டாம் கிருஷ்ண தேவனின் மகள். அவளின் குமாரன் கன்னரதேவன். திரிபுவன மாதேவி பல்லவர் வம்சத்தவள் என்பதை திருப்பழனத்துச் சாசன மொன்றினால் அறிய முடிகின்றது.
201

Page 248
பராந்தக சோழன் ஆதித்தனின் புதல்வரில் ஒருவன். அவனே தந்தையின் பின்பு அரசனாக முடிசூடிக்கொண்டான்.
கோதண்டராமன், பல்யானைக் கோக் கண்டன், தொண்டை நாடு பரவின சோழன் என்பன ஆதித்தனின் சிறப்புப் பெயர்களிற் குறிப்பிடத்தக்கவை. ஆதித்தனின் காலத்திலே பல்லவரின் ஆட்சி ஒழிந்தது. அவர்கள் வசமிருந்த தொண்டை நாடு முழுவதும் சோழர் இராச்சியத்தின் பாகமாகிவிட்டது. பல்லவர் மிகவும் பலவீனமாகி விட்டனர் என்பதை உணர்ந்த ஆதித்தன் தொண்டை நாட்டின் மீது படையெடுத்துச் சென்று அதனைக் கைப்பற்றிக் கொண்டான். 'யானை மேலிருந்து கொண்டு போர் புரிந்த அபராஜிதவர்மன் மீது ஆதித்தன் பாய்ந்து அவனைக் கொன்றான்” என்று கன்னியாகுமரிக் கல்வெட்டு உணர்த்துகிறது.
பல்லவராசனாகிய அபராஜித வர்மனின் கல்வெட்டுகள் அவனது 18ஆம் ஆண்டுகளுக்குப் பின் தொண்டை நாட்டிலே காணப்படவில்லை. எனவே 890/1 ஆகிய காலப்பகுதியிற் தொண்டை நாடு சோழர் வசமாகிவிட்டதென்று கருதலாம். ஆதித்தன் தொண்டை நாட்டைக் கைப்பற்றியதால் அவனுக்கு தொண்டை நாடு பரவின சோழன் என்னும் சிறப்புப் பெயர் கிடைத்தது.
ஆதித்த சோழன் தொண்டை நாட்டில் ஆட்சி புரிந்தமைக்கு ஏதுவாக அவனுடைய ஏற்பாடுகளைக் குறிப்பிடும் சாசனங்கள் சில அங்கு கிடைத்துள்ளன. அவற்றிலொன்று திருக்கழுக் குன்றத்துச் சிவன் கோயிலுக்கு முன்பு பல்லவர்களான கந்தசிஷ்யன், வாதாபி கொண்ட நரசிம்மவர்மன் என்போர் வழங்கிய இறையிலியான நிலதானத்தைஅவன் 27ஆம் ஆண்டில் உறுதிப்படுத்தியமையாகும். ஆதித்தன் திருமாற்பேற்றி றைவனுக்கு தேவதானமாக நிலம் வழங்கியமை பற்றிய விவரங்கள் செங்கற்பட்டு திருமால்புரத்துச் சாசனமொன்றிலே காணப்படுகின்றன. அந்த நன்கொடை பராந்தக சோழனின் நான்காம் ஆண்டில் இறையிலி நிலமாக வரிப்பொத்தகத்திலே பதிவு செய்யப்பட்டது.
ஆதித்த சோழன் கொங்கு தேசத்தைக் கைப்பற்றி யமையினை கொங்கு தேச இராசாக்கள் என்னும் நூல் கீழ்வருமாறு வர்ணிக்கின்றது.
“சோழ வம்சத்திலே விசயாடராயன் மகன் ஆதித்தவர்மராயன் சோழ தேசம் தஞ்சாவூரிலே பட்டங் கட்டிக் கொண்டு கொங்க தேசத்துக்கு வந்து ராசா வேடர்களைச் செயம் பண்ணித் தலைக்காடு என்ற பட்டணங் கட்டிக்கொண்டு இந்த இராச்சியங்களிலேயே அநேக அக்கிரகாரம் சர்வமானிய மாய்த தருமம் பண்ணி அந்த அரசை ஆண்டனன்”
கொங்குதேச இராசாக்கள் குறிப்பிடும் விவரம்
நம்பியாண்டார் நம்பியின் பாடற் குறிப்பொன்றினால் உறுதியாகின்றது.
202

“சிங்கத்துருவனைச் செற்றவன் சிற்றம்பல முகடு கொங்கிற் கனகம் அணிந்த ஆதித்தன்”
கொங்கினை வென்று அங்கு இறைகொண்ட பொன்னால் தில்லைப் பேரம்பலவாணர் கோயில் முகட்டினை வேய்ந்து அதனை ஆதித்தன் பொன்னம்பலம் ஆக்கிய திருப்பணி திருத்தொண்டர் திருவந்தாதியின் ஆசிரியரைப் பெரிதுங் கவர்ந்தது. பராந்தக சோழனது ஆட்சியின் ஆரம்பகாலந் தொடக்கம் அவனது கல்வெட்டுகள் கொங் நாட்டிலே காணப்படுவதால் அந்நாடு அதற்கு முன்பு சோழராதிக்கத்தின் கீழ் அமைந்துவிட்டது என்பது உணரப்படுகின்றது.
ஆதித்தனின் ஆட்சியின் முடிவிலே தமிழகத்திலே மலை மண்டலம், பாண்டி மண்டலம் தவிர்ந்த மற்றைய எல்லாப் பகுதிகளிலுஞ் சோழரின் ஆட்சி ஏற்பட்டுவிட்டது. ஆதித்த சோழன் சேரலனாகிய தாணு இரவியோடும் கங்கபாடி மன்னனாகிய இரண்டாம் பிருதுவீபதி என்பவனோடும் நல்லுற்வுகளைக் கொண்டிருந்தான். விக்கியண்ணன் என்னும் பிரதானி ஒருவனுக்கு ஆதித்தன் சீர்வரிசைகளை வழங்கினான். அவனுக்குச் செம்பியன் தமிழவேள் என்னும் பட்டமும் சாமரை, சிவிகை, திமிலை, எக்காளம் முதலான வரிசைகளும் கொடுத்தமை பற்றித் திருநெய்த்தானம் கல்வெட்டுக் குறிப்பிடுகின்றது. விக்கியண்ணன் குறுநில மன்னன் ஒருவனுக்குரிய பதவியையும் விருதுகளையும் ஆதித்தனிடமிருந்து பெற்றான். அவன் அவ்வரிசைகளைப் பெற்ற சமயத்திலே சேரலனும் சோழனோடு கூடவிருந்தன. ஏதோ போரொன்றிலே மூலவருங் கூடிச் செயற்பட்டனர் என்றும் விக்கியண்ணன் புரிந்த தீரச்செயல்களின் காரணமாக அவன் சேர, சோழ மன்னரின் பாராட்டைப் பெற்றான் என்றுங் கருதுவதற்கு இடமுண்டு.
ஆதித்தனின் 24 ஆம் ஆண்டிலே கங்க மன்னனாகிய இரண்டாம் பிருதுவிபதி தொண்டை நாட்டிலே சில நாட்கள் தங்கியிருந்தான். அவன் தக்கோலம் என்னுந் திருவூறற் கோயிலுக்கு ஒரு வெள்ளிக் கெண்டியினைத் தானம் பண்ணினான். பல்லவருக்கெதிரான போரில் கங்கரின் ஆதரவினை முன்பு ஆதித்தன் பெற்றிருத்தல் கூடும் என்பது ஆராய்தற்குரியது.
காவிரியாற்றின் இருமருங்கும் பல சிவாலயங்களைக் கற்றளிகளாக ஆதித்தன் அமைத்தானென்று அன்பிற் செப்பேடுகள் கூறும். பாடல்பெற்ற தலங்களிலுள்ள கோயில்களைக் கற்றளிகளாகப் புனர்நிர்மாணஞ் செய்தது முற்காலச் சோழர்களின் சாதனையாகும். அத்தகைய திருப்பணிகள் ஆதித்த சோழனின் காலத்தில் ஆரம்பமாகி விட்டன. பழைய திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர் மாவட்டங் களிலுள்ள முப்பத்தெட்டுக் கோயில்களை ஆதித்தன் காலத்தனவாகச் சாசனங்களின் அடிப்படையில் பாலசுப்பிரமணியம் அடையாளங் கண்டுள்ளார். அவற்றுள் திருப்பராய்த்துறைத் தாருகாவனேசுவரம், குமாரவயலுர் திருக்கற்றளிப்பரமேசுவரம், திருவிடைமருதூர் மகாலிங்கர் கோயில் முதலான சில ஆலயங்கள் பிற்காலத் திருப்பணிகளில் உருமாறி ஆதித்த சோழன் காலத்துக் கட்டுமான அமைப்பு மாற்றமாகி விட்டது.
இந்துக் கலைக்களஞ்சியம்

Page 249
திருச்சோற்றுத்துறை ஒதவனேசுவரம், திருப்பூந்துருத்தி புஷ்பவனேசுவரம், திருவேதிகுடி வேதபுரீசுவரம், திருப்பழனம் ஆபத்சகாயேசுவரம், குடந்தை நாகேசுவரம், திருவையாறு பஞ்சநதீஸ்வரம், திருக்கட்டளை சுந்தரவேஸ்வரம், திருக்காட்டுப் பள்ளி, அக்கினீசுவரம், கீழையூர் தென்வாசல் பூரீ கோயில், லால்குடி சப்தரிஷி ஈஸ்வரம், திருஎறும்பியூர் எறும்பீசுவரம், திருப்புறம்பியம் சாட்சிநாதர் கோயில், திருச்செந்துறை சந்திரசேகர் ஈஸ்வரம் முதலிய கோயில்கள் ஆதித்த சோழன் காலத்தவை என்பதைச் சாசனங்களை ஆதாரமாகக் கொண்டு அடையாளங் காணமுடிகின்றது.
ஆதித்தன் “திருப்புறம்பியத்தில் எழுந்தருளியுள்ள இறைவன் பால் எல்லையற்ற அன்புடையவனாய் அப்பெருமானது திருக்கோயிலை அரிய சிற்பத்திறங்கள் அமைந்த பெருங் கற்றளியாய் எடுப்பித்து அதற்கு ஆதித்தேச்சுரம் என்ற பெயரும் வழங்கினான்’ என்று ஒரு வரலாற்றாசிரியர் சொல்வார். அவனுடைய தேவியரும் ஆலயத் திருப்பணிக்குச் சில தானங்களை வழங்கியுள்ளனர். இளங்கோப்பிச்சி 897இல் திருமழபாடிக் கோயிலில் ஒரு திருநுந்தா விளக்கினைத் தானம் பண்ணி, அதனை எரிப்பதற்கென்று திருவிளக்குப்புறமாகப் பத்துக் கழஞ்சு பொன் வழங்கினாள். திருச்சோற்றுத் துறை, திருப்பூந்துருத்தி என்ற ஊர்களிலுள்ள சிவன் கோயில்களிலே நுந்தா விளக்குகளை எரிப்பதற்குத் திரிபுவனமாதேவி ஏற்பாடுகள் செய்தாள். அவற்றுக்கு வேண்டும் நிவந்தமாகப் பொன்னும் இருப்பு முதலாக வழங்கினாள்.
கி. பி. 907ஆம் ஆண்டிலே சித்தூர் ஜில்லாவிலுள்ள திருக்காளத்திக்கு அண்மையிலே தொண்டைமான் பேராற்றுார் என்னும் கிராமத்திலே ஆதித்தன் இறந்தான். அவனின் நினைவாக ஆதித்தேஸ்வரம் என்னுங் கோயில் ஒரு பள்ளிப் படையாக முதலாம் பராந்தகனின் காலத்தில் அமைக்கப்பட்டது. அது கோதண்டராமேஸ்வரம் என்னும் பெயராலும் வழங்கிற்று. “தன் தந்தையின் பள்ளிப்படையாகிய கோதண்டராமேசுவரத்தில் புரட்டாசித் திங்களில் ஏழு நாட்கள் திருவிழா நடத்துவதற்கும் மாவிரதிகளுள்ளிட்ட அறுசமயத் தவசிகள் இருநூற்றுவர், அந்தணர் முந்நூற்றுவர், அன்பரான பல சமய ஐந்நூற்றுவர் ஆகிய ஆயிரவர்க்கும் அவ்விழா நாட்களில் நாள்தோறும் உணவளிப்பதற்கும் முதற்பொருளாக நூற்றைம்பது கழஞ்சு பொன் பராந்தக சோழனாற் கொடுக்கப்பட்டுள்ளது.”
கொங்கு தேசத்திலே பிரம்மதேயங்களை ஆதித்தன் உருவாக்கினானென்று கொங்கு தேச ராசாக்கள் கூறும். தஞ்சாவூர் ஐயன்வேட்டைக்கு அண்மையிலுள்ள இராசகிரி என்னும் ஊர் ஆதித்தன் பெயரால் இராசகிரிச் சதுர்வேதிமங்கலம் என வழங்கியது. (f. LJ.)
ஆதித்தர்
அதிதியின் மக்களாதலால் ஆதித்தர் எனப்பட்டனர்.
இருக்கு வேதத்தில் இவர்கள் ஒன்றாகத் தொகுத்துக் கூறப்படும்
தெய்வங்கள். ஒரு பாடலிலே அவர்கள் அறுவர் என்றும் அவர்கள்
இந்துக் கலைக்களஞ்சியம்

பெயர்கள் மித்திரன் ஆரியமன், பகன், வருணன், தனன், அம்சன் என்றும் கூறப்படுகின்றது. ஏழு பேர் என்று வேறொரு இடத்தில் சுட்டப்பட்ட போதும் அவர்கள் இன்னாரென்று கூறப்படவில்லை. பத்தாவது மண்டலத்தில் எட்டாம் ஆதித்தனாக மார்த்தாண்டன் கூறப்படுகின்றான். அதர்வ வேதம் ஆதித்தர் எண்மர் என்று கூறுகின்றது. பிராமணங்கள் பன்னிரண்டு ஆதித்தரைக் கூறுகின்றன.
ஆதித்தரின் பெயர்கள் வெவ்வேறு நூல்களில் வெவ்வேறாக உள்ளன. ஆயினும், பல பெயர்கள் சூரியனின் பெயர்களாக இருப்பது நோக்கத்தக்கது. முடிவற்ற வெளியின் உருவமாகக் காணும் ஆதித்தர் பற்றி பல பாடல்கள் இருக்கு வேதத்திலுள.
(பொ.பூ.)
ஆதியப்பநாவலர்
பொன்விளைந்தகளத்தூர் எனும் ஊரினர்; திருக்களர்ப் புராணம், திருக்கொள்ளம் பூதூர்ப்புராணம், மாயூரப்புராணம் என்பன வற்றைப் பாடியவர்;
திருக்களர்ப்புராணம் பின்னத்தூர் அ. நாராயண சாமி ஜயராற் கும்பகோணத்தில் 1902 இலே பதிப்பிக்கப் பெற்றது.
(பொ.யூ.)
©ួup
தமிழிலே திருக்கைலாய ஞானவுலாவிற்கு முன்பு தோன்றியனவாக உலாக்கள் எதுவும் கிடைக்கப் பெறவில்லை. இக்காரணத்தினால் இவ்வுலா ஆதியுலா என்று அழைக்கப் படுகின்றது.
திருக்கைலாயத்திற் கோயிற் கொண்ட சிவபிரானின் பவனி கண்டு ஏழு பருவமகளிர் காமுற்றதாக அமையும் திருக்கைலாய ஞான வுலாவினைப் பாடியவர் சேரமான் பெருமான் நாயனார். அவர் சுந்தரமூர்த்தி சுவாமிகள் காலத்தவராதலால் அவர் வாழ்ந்த காலமாகிய ஏழாம் நூற்றாண்டின் கடைக்கூறும் எட்டாம் நூற்றாண்டின் முற்பகுதியும் இவர் காலம் எனலாம்.
ஆதியுலாவிலே 197 கண்ணிகளுள. கண்ணிகளையடுத்து வெண்பாவொன்று உலா நிகழ்ச்சியினைக் கூறுகின்றது. பாட்டுடைத் தலைவனைப் போற்றி, உலாவிற்குக் காரணம் கூறி, உலாவினை நடாத்தும் ஆசிரியர், பேதை முதற் பேரிளம் பெண் ஈறாக மகளிர் குழாம் முதலிற் கூடி நின்றும், பின்பு தனித்தனியாகவும் செய்வனவற்றை விரித்துரைக்கின்றார்.
ஆதியுலா பதினோராம் திருமுறையிலே தொகுக்கப் பெற்ற பிரபந்தங்களிலே ஒன்றாகும். பதினோராம் திருமுறை யாழ்ப்பாணம் பூரீ ஆறுமுகநாவலராற் சென்னை வர்த்தமான தரங்கிணி சாகை அச்சுக்கூடத்திற் சுக்கில வருடம் வைகாசி மாதம் (1869) பதிப்பிக்கப் பெற்றது. (பொ.யூ.)
203

Page 250
ஆதீனங்கள்
இந்து சமய அடிப்படையில் சில நிறுவனங்கள் தோன்றிச் சமயப் பணியும் சமூகப் பணியும் புரிந்து வந்துள்ளன. இவ்வாறு தோன்றிய நிறுவனங்கள் மடங்கள் ஆதீனங்கள் என்பனவாகும். மடம் என்பது துறவிகளின் இருப்பிடம் என்ற கருத்தில் வழங்கியது. ஒரு சமயத்தைச் சார்ந்த துறவிகள், ஞானிகள் போன்றோர் தங்கியிருந்து கல்வி அறிவு, ஒழுக்கம் ஆகியவற்றைப் போதிக்கும் இடமாக மடம் விளங்கி வந்துள்ளது. சத்திரங்கள், மடங்கள் ஆகியவற்றை நிறுவுவது சிறந்த புண்ணியச் செயலாகக் கருதப்பட்டமையால் வசதி படைத்த பிரபுக்கள் இவற்றை நிறுவியதோடு இவற்றின் பராமரிப்புக்கென பொருளுதவியும் செய்து வந்துள்ளனர். இம்மடங்கள் மனிதாபிமான அடிப்படையில் தோன்றின என்பதிலும் பார்க்க சமய அடிப்படையில் தோன்றின எனக் கொள்வது பொருத்தமாகத் தோன்றுகிறது. இவை பெரும்பாலும் கோயில்களைச் சார்ந்த இடங்களில் நிறுவப்பட்டன. எனவே இவை சமயப் போதனைக்கும், சமயப்பிரசாரத்துக்கும், சமய வளர்ச்சிக்கும் ஒத்த இடங்களாக அமைந்ததில் வியப்பில்லை. இம் மடங்கள் பின் சமயப் பணியையே முக்கிய நோக்காகக் கொண்டு ஆதீனங்கள் என்ற பெயரோடு தம் பணிகளை மேற் கொண்டு வருகின்றன. தற்போது இவ் ஆதீனங்களில் சமய, சாத்திரக் கல்வி போதிக்கப்படுவதுடன் ஆய்வுகள் பல நடத்தப்பட்டு புதிய நூல் வெளியீடு, அரிய நூற்சுவடிகளைத் தேடிப் பெறுதல், பாதுகாத்தல், கோயில்களைப் பராமரித்தல் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.
ஆதீனங்களின் தோற்றம் வளர்ச்சியும் அவற்றின் சில மரபுகளும்
சங்கமருவிய காலத்தில் தமிழ் நாட்டிலே சைவம், வைணவம், பெளத்தம், சமணம் ஆகிய மதங்கள் வழக்கில் இருந்தன. இக் கால அரசியல் பற்றி விரிவாக அறிய முடியாது இருப்பினும் இக் கால அரசர்கள் பெரும்பாலும் சமண, பெளத்த மதச் சார்புடையவர் என்று கருத இடமுண்டு. சமண, பெளத்த துறவிகள் பள்ளி அமைத்து அங்கு தங்கியிருந்து சமயப் பணியாற்றினர். இப் பள்ளிகளே இத் துறவிகளின் இருப்பிடம். இப் பள்ளிகளில் வழிபாட்டு மண்டபங்கள், போதனா நிலையங்கள், நூல் நிலையங்கள் போன்றன அமைக்கப்பட்டன. துறவற வாழ்க்கையை மேற்கொண்ட சங்கத்தவர் தத்தம் மதக் கோட்பாடுகளைப் போதித்ததோடு அவற்றைச் சார்ந்த கல்வியினையும் கற்பித்து வந்தனர். அவர்களோடு துறவிகளான பல்வேறு பராயங்களிலுமுள்ள மாணாக்கரும் வாழ்ந்து வந்தனர். இத்தகைய பள்ளிகளுட் பிரசித்திபெற்ற சில பிரதான கல்வி நிலையங்களாக வளர்ச்சி பெற்று நாட்டின் பல இடங்களிற் செல்வாக்குப் பெற்றன. நாலந்த, விக்கிரமசீல என்பன இவ்வாறு பிரசித்தி பெற்ற பெளத்த பள்ளிகளாகும். சமண, பெளத்த துறவிகள் மடங்கள் வாயிலாக மதப் பிரசாரங்களில் ஈடுபட்டு மக்களிடம் தம் செல்வாக்கைச் செலுத்தினர். வைதீக சமயங்களைப் பொறுத்த அளவில் இத்தகைய அமைப்புக்கள் இருக்கவில்லை. எனினும் பிற்காலங்களில் சமயப் போட்டிகளும் வாதப் பிரதிவாதங்களும் காரணமாக மடங்கள் இந்து சமய அடிப்படையில் தோன்ற ஆரம்பித்தன.
204

வேத காலத்தில் சமயக் கல்வி போதிக்கும் சில அமைப்புக்கள் இருந்திருக்கின்றன. இவை பர்ணசாலைகள் எனப்படும். இவற்றில் துறவிகளும் அந்தணர்களும் கூடி இருந்து சமய ஆசாரங்களைப் பின்பற்றி முன் மாதிரியான வாழ்க்கை நடத்தியதோடு கல்வி போதித்தும் வந்தனர். மாணாக்கர் குருகுல வாசம் செய்து கல்வி கற்றனர். பிரசித்தி பெற்ற வடமொழிக் கவியாகிய வான்மீகி, வியாச முனிவர் போன்றோர் இத்தகைய அமைப்புகளின் தலைவராக இருந்தனர் என்பது மரபு. இந்த அமைப்புகள் சமண, பெளத்த காலங்களுக்கு முற்பட்டன.
கிறிஸ்துவுக்குப் பிற்பட்ட நூற்றாண்டுகளில் சைவ, வைணவ மதங்கள் பக்தி நெறியை அடிப்படையாகக் கொண்டு இந்தியாவில் குறிப்பாக வடபகுதியில் பெருவளர்ச்சியடைந்த காலத்தில் மடங்கள் ஆங்காங்கு அமைக்கப்பட்டன. தென்னிந்தியாவில் பல்லவராட்சிக் காலத்தில் சமயப் பிரசார முறைகள் புதிய வழியிற் செல்லத் தொடங்கின. இக் காலத்தில் தோன்றிய சைவ, வைணவ அடியார்கள் மன்னர்களையும், மக்களையும் தம் வழித்திருப்ப முயன்று நாடெங்கும் சென்று கனிவு, தெளிவு, ஒசைச் சிறப்பு, பக்திச் சுவை ஆகியன பொருந்திய அருட்பாக்களைப் பாடி வந்தனர். அத்துடன் தல யாத்திரை, ஆலயத் தொண்டு ஆகியனவும் புரிந்தனர். ஆகையால் பல்லவர் காலப் பகுதியின் கடைக் கூற்றில் கூடிய அளவில் மடாலயங்கள் தோன்றிச் சமயம் நிலை பெறுவதற்குத் தொண்டாற்றத் தொடங்கின. மடங்கள் ஆலயங்களைச் சார்ந்திருந்தமையால் மடாலயங்கள் எனப் பெயர் பெற்றிருக்கலாம். மடாலயங்களின் தோற்றத்தால் இந்து சமயத்தில் நிறுவன ரீதியான பிரசாரமுறை ஏற்பட்டது. இவ்வாறு பல்லவர் காலத்தில் தோன்றிய சில மடங்கள் சமயக்கல்வி, ஆசாரம், ஒழுக்கம் என்பனவற்றைப் போதித்து நின்றதோடு பொதுமக்களுக்கு சிறந்த வழிகாட்டிகளாகவும் இருந்தன. திருமந்திர ஆசிரியரான திருமூலர் சன்மார்க்க சைவத்தைப் பின்பற்றிய ஏழு மடங்கள் பற்றிக் குறிப்பிடுகின்றார். ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு குருநாதர் இருந்தார் என அறியப்படுகின்றது. அவர்கள் மூலர், காளங்கர், அகோரர், மாளிகைத் தேவர், நாதாந்தர், பரமானந்தர், போகதேவர் என்போராவர். திருமூலர் மடத்து வழிவந்த சீடர்கள் மூலன் மரபினர் எனப்பட்டனர். அவர்கள் பல நூற்றாண்டுகளாகத் தமிழ் நாட்டில் இருந்து வந்திருக்கின்றனர். இவ் விபரங்கள் மூலம் திருமூலர் காலத்துக்கு முன்பே பல மடங்கள் இருந்திருக்கின்றன என்பது தெளிவாகின்றது. திருமூலர் சுந்தரமூர்த்தி நாயனார் காலத்துக்கு முற்பட்டவர்.
மடங்கள் சில வேளைகளில் சில சமயப் பெரியாரின் கருத்துக்களையும், வியாக்கியானங்களையும் பின்பற்றுவனவாய் நிறுவப்பட்டன. வேறு சில குறிப்பிட்ட தத்துவப் பிரிவைச் சார்ந்தவை. இந்திய நாட்டிலே தொன்றுதொட்டு நிலவிவரும் சைவ மடங்கள் பதினைந்து. அவையாவன, கைலாசமடம், பெளட்ரகமடம், வலாகமடம், கற்பகிராமடம், பதfமடம், தேவதாருவனமடம், கந்தர்ப்பமடம், உத்தராரண்யகம், தசஷ்ணாரண்யகம், கோவிதாரமடம், ஆமந்தகமடம், மத்தமடம், மாயூரமடம், ரனபத்திரமடம், சோழகமடம். இவற்றுள் சோழகம், மாயூரம், தசஷ்ணாரண்யகம் என்பன தமிழ் நாட்டில் இருந்த
இந்துக் கலைக்களஞ்சியம்

Page 251
மடங்கள். ஏனையவை அதற்கு வடக்கிலுள்ள தேசங்களிலிருந்த மடங்கள். தென்னிந்தியாவில் இருந்த மடங்களுக்குச் சில நேரங்களில் வட இந்தியாவில் இருந்து மடாதிபதிகள் வரவழைக்கப்பட்டனர் என்பது முதலாம் ராஜ ராஜன் காலத்துக் கல்வெட்டு மூலம் அறியப்படுகின்றது.
சோழர் கால மன்னர் பிரமாண்டமான கோயில்களைக் கட்டியபடியால் கோயில் விழாக்கள் முதலியன வளர்ச்சி பெற்றன. இவற்றைப் போலவே மடங்களும் பலவாகப் பெருகின. அவற்றுட் சில இறைவன் பெயர் கொண்டவை. சில அரசர் பெயர் கொண்டவை. சில நாயன்மார் பெயர் கொண்டவை. வேறுசில பல திறப்பட்ட பெயர் கொண்டவை. இறைவன் பெயர் கொண்ட மடங்களுட் சில ஆவடுதுறை நீலவிடங்கன் மடம், திருவீழிமிழலை அழகிய சிற்றம்பலமுடையார் மடம், அரசர் பெயர் கொண்ட மடங்கள், ஒற்றியூர் ராஜேந்திர சோழன் மடம், ஒற்றியூர் குலோத்துங்க சோழன் மடம் ஆகியன. நாயன்மார் பெயர் கொண்ட மடங்கள், திருவீழிமிழலை திருநாவுக்கரசர் மடம், செங்காட்டங்குடி சிறுத்தொண்டர் திருமடம், பல்வேறு வகைப்பட்ட பெயர்களைக் கொண்ட மடங்களுட் சில ஆவடுதுறை திருவீதிமடம், அண்ணாமலை தன்மவாணிகர் மடம், திருவாரூர் நாலாயிரவன் திருமடம்.
சோழர் காலத்திற் சைவ சமயத்தில் பல கிளைச் சமயங்கள் பரவிச் செல்வாக்குப் பெற்றிருந்தன. காளாமுகர், காபாலிகர், வீரசைவர் போன்ற கிளைச் சமயத்தினரும் தத்தம் சமயக் கொள்கைப் பிரசாரத்துக்கென மடங்களை நிறுவியிருக் கின்றனர். செங்கற்பட்டை அடுத்த களத்தூர்க் கோயில், ஆலக்கோயில் என்ற கோயில்களையடுத்துக் காளாமுகர் மடங்களைக் கட்டி வாழலாயினர். திருவொற்றியூரில் காபாலிகர் செல்வாக்குப் பெற்றிருந்தனர். கன்னர தேவன் (கி. பி. 950) காலத்தில் சேரநாட்டுச் சிற்றரசர் மரபில் வந்த வல்லவர் சதுரானன பண்டிதர் என்னும் பெயருடன் திருவொற்றியூரில் ஒரு மடத்தை ஏற்படுத்திக் கொண்டார். திருமூலர் காலத்திலேயே வீர சைவம் நிலவியது. பன்னிரண்டாம் நூற்றாண்டில் கும்பகோணத்தில் வீரசைவ மடம் ஒன்றிருந்தது. ஒட்டக்கூத்தர் தாம் பாடிய கலிங்கத்துப் பரணியில் இதனைக் கோதிலாப் பெரு மடம்' என்று குறிப்பிடுவதனால் இது அளவில் பெரியதாகவோ அன்றி பல கிளை மடங்களுக்குத் தலைமை மடமாகவோ இருந்திருக்க வேண்டும் என்று கருத இடமுண்டு.
ஒன்பதாம் நூற்றாண்டில் வாழ்ந்த சங்கராச்சாரியார் மடாலயங்களைப் பொறுத்தவரையில் ஒரு சாதனையே ஏற்படுத்தினார். பெளத்தர்களோடு வாதிட்டுப் பல சந்தர்ப்பங்களில் வெற்றியீட்டியவர் இவர். அவர்களின் நிறுவன அமைப்புக்களையும் இந்து சமுதாயத்தில் வழமைக்குக் கொண்டு வருவதில் கவனம் செலுத்தினார். பரத கண்டத்தின் நான்கு கோணங்களிலும் நான்கு மடங்களை இவர் அமைத்தார். அவையாவன வரிதி, துவாரகை, பூரி, காஞ்சிபுரம் என்பன. இவற்றோடு சிருங்கேரியிலும் ஒரு மடம் அமைத்தார். பிரமச்சரிய விரதத்தை மேற்கொண்டு தீட்சை பெற்ற சந்நியாசிகள் இம் மடங்களில் தங்கியிருந்து அத்வைதக் கோட்பாடுகளைப் போதித்து வந்தனர். இவர்களுக்கென
இந்துக் கலைக்களஞ்சியம்

பிரத்தியேக வர்ணத்தில் ஆடையும் ஒழுக்க ஆசாரமும் விதிக்கப்பட்டிருந்தன. இதன் பின்னர் இவரின் முன் மாதிரியைப் பின்பற்றிப் பல்வேறு இந்து சமயப் பிரிவுகளைச் சேர்ந்தவர்கள் மடாலயங்களை அமைத்து அவற்றைச் சார்ந்த சந்நியாசிகளின் வாழ்க்கை முறைகளையும் வகுத்துக் கொடுத்தனர். அத்வைத வேதாந்த மடங்கள் விருத்திபெற ஏனைய தத்துவப் பிரிவுகளைச் சார்ந்தவர்கள் தம் கொள்கைகளைப் பரப்பவும் நிலைநாட்டவும் மடங்கள் அமைத்தனர். அத்வைதம், துவைதம், விசிஷ்டாத்வைதம் என்னும் மூவகை வேதாந்தப் பிரிவுகளை வரையறை செய்தவர் தென்னிந்தியர் என்பதனால் தென்னிந்தியாவிலே இப்பிரிவுகளைச் சார்ந்தவர்கள் மத்தியில் வித்துவ அடிப்படையில் போட்டி, விவாதம் என்பன வளர்ச்சியடைந்தன. இத்தகைய சூழ்நிலையில் சைவர்கள் மடங்களை ஒழுங்காகவும், கிரமமாகவும் தத்துவார்த்த நோக்குடையனவாகவும் அமைக்க வேண்டியதாயிற்று. சைவாதீனங்கள் தோன்றுவதற்கு இதுவே பிரதானமான காரணம்
ஆகும்.
பதின் மூன்றாம் நூற்றாண்டில் சோழராட்சியம் வலிகுன்றியது. இன்நிலையில் வடக்கே வலுப்பெற்று விளங்கிய முகமதியர் தெற்கு நோக்கிப் படையெடுத்தனர். தமது அரசை விஸ்தரிப்பதும் மதத்தைப் பரப்புவதும் அவர்களது முக்கிய நோக்காக இருந்தது. இக் கால கட்டத்திலேதான் விசயநகர ராச்சியம் தோன்றியது. இவ்விராட்சியம் முகம்மதியரின் படையெடுப்புத் தென்னாட்டில் ஏற்படாதவாறு தடுத்து வந்தது. விசயநகர மன்னர்கள் சைவர்களாக இருந்தபோதும் அவர்கள் சமய சம்பந்தமான விடயங்களில் அதிக கவனம் செலுத்த முடியாதபடி போர்கள் நிகழ்ந்தன. போருக்குப் படைகளைத் திரட்டுவதும் ஆயத்தம் செய்வதும் முக்கிய விடையங்களாக விளங்கின. எனினும் இந்து சமூக அமைப்பிற்கு ஏற்பட்ட ஆபத்துக்களினால் அது அழிந்து போகாவண்ணம் காப்பாற்றுவதைக் குறிக்கோளாகக் கொண்டு விசயநகரப் பேரரசு செயற்பட்டது. இத்தகைய சூழ்நிலையில் மதச் சார்பான மடங்கள் பெருமளவில் தோன்றியதில் வியப்பில்லை. இன்று பிரசித்தி பெற்று விளங்கும் மடாலயங்களுட் பல இக் காலத்தில் தோன்றியவையே. மடாலயங்கள் ஆதீனங்கள் என்ற பெயரால் குறிப்பிடப்படும் வழக்கமும் இக் காலத்தே தான் ஆரம்பித்திருத்தல் வேண்டும். ஆதீனம் என்ற வடசொல்லுக்கு உரிமை என்பது பொருள். சிவஞானோபதேசத்தை வழிவழியாக உரிமையோடு
போற்றிப் பாதுகாத்து வருவதால் இவை ஆதீனங்கள் என்று
குறிப்பிடப்பட்டன.
இஸ்லாமியப் படையெடுப்பு காரணமாக வடக்கே தக்கணத்திற் கோயில்கள் மடங்கள் போன்றன சிதைவுற்றுச் சீர்குலைந்த நிலையில் அப் பிரதேசங்களிலிருந்து பாண்டித்தியம், சமயாபிமானம் ஆகியவற்றை உடைய அறிஞர் பலர் பெருமளவில் சமயம் தத்துவம் ஆகியன பற்றிய ஏட்டுச் சுவடிகளைக் கொண்டு தமிழகததுக்கு வந்தனர். அதனால் தமிழ் நாட்டு இந்து சமய மரபில் ஒரு புதிய உத்வேகம் ஏற்பட்டது. இத்தகைய உத்வேகம் ஆகமங்கள், வேதங்கள் முதலியன பற்றிய பாஷ்யங்களைப் புதிய சிந்தனையின் அடிப்படையில் எழுத வழிகோலின.
205

Page 252
தமிழகத்தில் இஸ்லாமியப் படையெடுப்புக் காரணமாக இந்து சமுதாயம் ஓரளவு ஈடாட்டம் கண்டிருந்தது. இந்தச் சூழ்நிலையில் இந்துப் பண்பாட்டையும், சமயக் கோட்பாடுகளையும் கட்டிக்காக்கும் நிலைக்களன்களாக ஆதீனங்கள் விளங்கின. இதனால் புதியனவாகத் தோன்றிய ஆதீனங்களுக்கு மன்னர்களும், பிரதானிகளும் செல்வந்தர்களும் பெருமளவில் மானியங்களை வழங்கினர். சோழ மன்னர்கள் கோயில்களுக்கு நிலம், காசு, பொன் முதலியவற்றைக் கொடுத்து ஆதரித்தது போலப் பிற்காலப் பாண்டியர், விசயநகர மன்னர், பின்வந்த நாயக்கர், தஞ்சாவூரில் ஆட்சி புரிந்த மராட்டியர் ஆகியோர் ஆதீனங்களுக்கு நன்கொடை வழங்கி அவை சீரிய முறையில் செயல்பட ஆதரவு நல்கினர்.
பின்வந்த ஐரோப்பியர் ஆட்சிக் காலத்தில் ஆதீனங்களில் சில தளர்ச்சிகள் குறைபாடுகள் ஏற்பட்டாலும் பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஏற்பட்ட சமய விழிப்புணர்ச்சி இவற்றை நிவர்த்தி செய்ய ஏதுவாக அமைந்தது. இவ் வாதீனங்களில் ஆசாரிய பரம்பரை உருவாகி இன்றும் தொடர்ந்து வருகின்றன.
இவ் வாதீனங்கள் யாவற்றிற்கும் சில பொதுவான மரபுகள் சம்பிரதாயங்களும், தனித்தனியே சிறப்பான மரபுகள் சம்பிரதாயங்களும் உண்டு. ஒரு ஆதீனத்தின் தலைவர் அல்லது மடாதிபதி ஞானதேசிகர் எனப்படுவார்.
இவர் தேசிகர் எனவும் பண்டார சந்நிதிகள் எனவும் வழங்கப்பெறுவர். ஒரு தேசிகர் தம் காலத்திலேயே தமக்கு அடுத்தபடியாக மடாதிபதியாக வருவதற்குத் தகுதியுடையவரைத் தேர்ந்தெடுப்பது வழக்கம். இவர் சின்னப்பட்டம் எனவும் இளவரசர் எனவும் குறிப்பிடப்படுவர். ஆசாரிய அபிடேகம் பெறாது துறவு பெற்றுள்ள திருத்தொண்டர்கள் தம்பிரான்கள் எனப்படுவர். இவர்களை விடச் சீடர்கள் ஆதீன வித்துவான்கள், ஒதுவார்கள், இசை வாணர்கள், கட்டளைத் தம்பிரான்கள் எனப்பலர் ஆதீனத்தில் இருப்பார்கள். சிறந்த கல்விமான்கள் ஆதீன வித்துவான்களாக நியமிக்கப்படுவர். வேறு அறிஞர்களுக்குப் பட்டமளித்துச் சிறப்புச் செய்வதும் மரபு. திருவாவடுதுறை ஆதீனம் யாழ்ப்பாணத்து அறிஞரான ஆறுமுகம் என்பவருக்கு நாவலர் என்ற பட்டமளித்துச் சிறப்புச் செய்தது.
திருவாவடுதுறை ஆதீனம்
சைவ சமய ஆலயங்களில் பழமையும் முதன்மையும் வாய்ந்தது திருவாவடுதுறை ஆதீனம். திருவாவடுதுறையில் உள்ள சிவன் கோயிலை அடுத்துத் தென்பால் அமைந்துள்ளது இவ்வாதீனம். திருக்கயிலையில் சீகண்ட தேவரால் மெய்யுணர்த்தப் பெற்ற திருநந்தி தேவரின் ஞான மரபில் வந்த மெய்கண்ட தேவரின் வழித்தோன்றலாகிய குருநமசிவாய தேசிகரால் கி. பி. 14ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் இவ்வாதீனம் தோற்றுவிக்கப்பட்டது. அதனால் திருக்கயிலாய பரம்பரை எனவும் நந்திமரபு எனவும் இவ்வாதீனத்து ஞானாசிரியர் மரபினைக் குறிப்பிடுவர்.
206

குருநமச்சிவாய தேசிகரே இவ் ஆதீனத்தின் குருமுதல் வராவார். இங்கு குருபீடத்தில் அமர்ந்தருளும் ஞானாசிரியரைப் பண்டாரம் என்றும் பண்டார சந்நிதி என்றும் மதித்து வழங்குவர். பிற்காலத்தில் பரமாச்சாரிய சுவாமிகள் என்றும் வழங்குவராயினர். இவ்வாதீன நிறுவிய குருநமசிவாய தேசிகர் பிரதம பரமாசாரியராக இருக்கும் காலத்தில் உபதேச பரம்பரை ஒன்று உருவாவதற்கு ஏதுவாக இரண்டாவது ஆசாரியராய் விளங்கியவர் அம்பலவாண தேசிகர் எனப்படுவர். இக் காரணத்தால் இவ் வாதீனத்தில் பெரிய பட்டத்தில் எழுந்தருளியிருப்பவர் தாம் அனுப்பும் கடிதங்களில் நமச்சிவாயம் எனவும் சின்னப்பட்டத்தில் எழுந்தருளியிருப்பவர் அம்பலவாணர் துணை எனவும் கைச்சாத்திடுதல் சம்பிரதாயமாக இன்றுவரை நிகழ்ந்து வருகின்றது. பெரிய பட்டத்தில் எழுந்தருளியிருப்பவரை நமச்சிவாய மூர்த்தியாகவும் சின்னப்பட்டத்து ஆசிரியரை அம்பலவாண தேசிகராகவும் போற்றுவது இவ்வாதீன மரபு.
சமய நிறுவனமாக அமைந்த அவ்வாதீனத் தலைவர்கள் சமுதாய வாழ்வின் ஒரு முக்கிய கூறு. சமயம் என்பதைக் கருத்திற் கொண்டமையால் மக்களின் இம்மை, மறுமைகளாகிய இருவகை வாழ்வுக்கும் சீரிய பணிகள் பல சிறக்கச் செய்து வந்துள்ளனர். மரபு வழியில் தமக்குரிய சிவஞான போதம் முதலாகிய மெய்நூல்களைக் கற்றுக் கேட்டு உணர்ந்தும் தேவாரம் முதலான சைவத் திருமுறைகளில் ஈடுபாடுடையவராய் அவற்றை ஒதி உணர்ந்தும் சிவயோக நிட்டையில் திளைத்தவராய் இருந்து வந்துள்ளனர்.
தமிழகம் முழுவதும்-சிறப்பாகத் தென்பகுதியில் ஆங்காங்கு பலவிடங்களில் நாயக்க மன்னர் சேது மன்னர் போன்றவர் முன்வந்து உதவிய முறையில் ஆதீனத்தில் கிளை மடங்கள் தோற்றுவிக்கப்பட்டன. மொழி, சமய, சமுதாயப் பணிகள் ஆங்காங்கே பொறுப்பில் அமர்த்தப்பட்ட தம்பிரான்களால் சிறப்பாகச் செய்து வரப்பட்டன. முன் வேலப்ப தேசிகர், பின் வேலப்ப தேசிகர் போன்ற பண்டார சந்நிதிகள் மக்களுக் குண்டான குன்மம், குட்டம் போன்ற நோய்களை அருளாற்றல் கொண்டே தீர்த்து நலம் செய்துள்ளனர்.
இங்கு ஒன்பதாவது குரு மகா சன்னிதானமாக எழுந்தருளியிருந்த இராமலிங்க தேசிகர் தேவாரத் திருமுறையில் நல்ல பயிற்சியும் இசையறிவும் பெற்றிருந்தார். தேவாரம் முதலிய அருட்பாக்களை இன்னிசையுடன் பூசைக் காலங்களில் ஒதி வருமாறு ஒதுவார்களை நியமித்தார். தான் பிறந்த ஊராகிய திருமழபாடியில் இருந்து ஒரு குடும்பத்தினரை அழைப்பித்துத் திருவாவடுதுறையில் நிலையாக இருந்து தேவாரம் ஒதிவரப் பணித்தார். இக் குடும்பத்துச் சந்ததியினரே தொடர்ந்தும் இன்றுவரை இப் பணியினைச் செய்து வருகின்றனர். அத்துடன் ஆதீனத்திலும் பல ஒழுங்கு நடைமுறைகளைச் செவ்வைப்படுத்தி அமைத்துள்ளார். இவருக்கு அடுத்தவராகப் பட்டத்துக்கு வந்த பூரீ வேலப்ப தேசிகர் காலத்தில் திருவாவடுதுறைப் புராணம் இயற்றப்பட்டது.
இந்துக் கலைக்களஞ்சியம்

Page 253
சைவ சித்தாந்தத்திற்கு முதன்மையான நூலாகிய மெய்கண்டாரின் சிவஞான போத நூலுக்கும், அதன் வழி வந்த பிற நூல்களுக்கும் அவர் வழிமுறையிலே வந்த இவ் வாதீனத்தின் பண்டார சந்நிதிகள் பலர் தம் அனுபவம் கொண்டு பிறருக்குப் பாடம் சொல்லி உணர்த்தினர். சிலர் நூல்கள் அருளி உணர்த்தினர். ஒரு சிலர் சிலவற்றிற்கு உரையெழுதியும் விளக்கம் தந்தனர். 11ஆம் பட்டம் பின் வேலப்ப தேசிகர் காலத்தில் இன்றும் ஒப்பற்ற நூலாகப் போற்றப்பட்டு வரும் சிவஞான யோகிகள் செய்தருளிய சிவஞான மாபாடியம் என்ற சிவஞான போதப் பேருரையும் அதன் சிற்றுரையும் தோன்றின.
மகாவித்துவான் திரிசிரபுரம் மீனாட்சி சுந்தரம் பிள்ளை, டாக்டர் உ. வே. சாமிநாதையர், சபாபதி நாவலர், யாழ்ப்பாணம் ஆறுமுகநாவலர், சேற்றுார் கவிராயர் போன்ற தமிழ்ப் புலவர் பலரைக் கொண்டு நூல்கள் எழுதியும் பாடம் சொல்லியும் தமிழிற்கும் சமயத்திற்கும் இவ் வாதீனம் செய்துள்ள பணிகள் மிகப் பலவாகும். பதினாறாம் பட்டத்தில் வீற்றிருந்த மேலகரம் திரு சுப்பிரமணிய தேசிகப் பண்டார சந்நிதிகள் காலம் ஆதீனத்தின் பொற்காலம். இவர் சிவஞான சுவாமிகள் எழுதிய சிவஞான சித்தியார் பொழிப்புரைக்குத்தக, சித்தியாருக்குப் பதவுரை எழுதினார். புலவர், பலரை ஆதரித்துப் பாராட்டினார். இசைப் புலவர் பலரை ஆதரித்து ஊக்கப்படுத்தினார். உண்மை யறிவோடும் உலகியலறிவும் ஒருங்கே சிறக்கப் பெற்றிருந் தமையால் அன்னார் ஒரு துறவரசு என்ற பாராட்டுக்குரியராக இருந்தார்.
பதினேழாம் பட்டத்தில் அமர்ந்தருளிய திரு அம்பலவாண தேசிகர் மும்முறை தம் திருக்கைகளால் படியெடுத்து அழகுறப் பாதுகாத்து வைத்துள்ளார். ஆதீனத்து நூலாகிய சரசுவதி மகால் கி. பி. 1895 இல் விரிவாக்கப்பட்டுப் பாஸ்கர சேது மன்னரால் திறக்கப்பட்டது. இருபதாம் மகா சந்நிதிகள் காலத்தில் பாரத நாடு சுதந்திரம் பெற்றது. அதன் நினைவாக ஆதீனத்திலிருந்த தம்பிரான் சுவாமிகளை அனுப்பி 1945 இரவு 1.45 மணிக்குப் பிரதமர் நேருவிடம் விடை இலச்சனை பொறித்த பொன்னாலான செங்கோல் ஒன்று கொடுக்கப்பட்டது. பாரத வரலாற்றில் இது முக்கியமானதொன்றாகும். இருபத்தோராம் பட்டத்தில் வீற்றிருந்த திரு சுப்பிரமணிய தேசிகர் காலத்திற்கேற்ற பணிகள் பலவற்றைச் சிறப்புடன் செய்தார். இவர் காலத்தில் நமச்சிவாயமூர்த்தி அச்சகம் நிறுவப்பட்டது. அன்று முதல் அழகிய செம்மையான ஆதீனப் பதிப்பு வெளியீடுகள் வரத் தொடங்கின. சித்தாந்த சைவமாநாடு, பாவை மாநாடு, திருமந்திர மாநாடு, திருவாசக மாநாடு முதலிய மாநாடுகள் ஆண்டுதோறும் நடத்திச் சைவ விளக்கம் செய்யப்பட்டது. திருவாசகம், திருமந்திரம், பண்டார சாத்திரங்கள் ஆகியவை உரையெழுதி வெளியிடப்பட்டன.
இருபத்து மூன்றாம் குருமகா சந்நிதானமாக இருந்த சிவப்பிரகாச தேசிய பண்டார சந்நிதியவர்கள் பல வழிகளிலும் அரிய பணிகளை மேற்கொண்டார். இவர் இளமையிலேயே திருக்குறளிலும் திருமுறைகளிலும், புராணங்களிலும் சித்தாந்த சாஸ்திரங்களிலும் அழுத்தமான அறிவும் தோய்வும் உடைமை
இந்துக் கலைக்களஞ்சியம்

காரணமாக ஆதீனத்தின் நிருவாகத்திலும் ஆக்கப் பணிகளிலும் பெரும் பணியாற்றினார். ஆதீனத்து சரசுவதி மகால் நூல் நிலையத்தில் ஒலைச் சுவடிகள், கையெழுத்துப் படிகள், செப்பேடுகள் மற்றும் நூல்கள் அனைத்தையும் தக்கவரைக் கொண்டு ஆய்வு செய்வித்து இங்கு வரும் ஆராய்ச்சியாளருக்குப் பயன்படுமாறு செய்துள்ளனர். திருக்கழுக்குன்றத்தில் இசை விழாவில் ஆண்டு தோறும் தம்புராப் பரிசளிப்பு, மெய்கண்டார் சமய இலக்கியத் திங்கள் இதழ் வெளியீடு, நமச்சிவாய சைவ சித்தாந்த அஞ்சல் வழிக்கல்வி வாயிலாகப் பாரத நாடு முழுமையும் சைவசித்தாந்த சமய மொழியறிவினைப் பரப்பி வருதல், பள்ளிகளில், கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கு பொருளுதவி நூலுதவிகள் செய்தல், சமய விரிவுரைகள் மூலம் சமயப் பயிற்சியும் சமய அறிவும் வழங்குதல், பள்ளி அரசுத் தேர்வுகளில் முதன்மை பெற்றவருக்குப் பணம், தங்கப்பதக்கம், பரிசில் ஆகியவை கொடுத்தல், வசதியில்லாதவருக்கு உணவும் இருப்பிடமும் கொடுத்துக் கல்வி பயிலச் செய்தல் ஆகியவை இவ் வாதீனம் மேற்கொண்டுவரும் குறிப்பிடத்தக்க பணிகளாகும். இவற்றைவிட தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தோடு தொடர்பு கொண்டு சில சுவடிகளை நுண்படச் சுருளாக எடுத்து ஆய்வினை மேற்கொண்டுள்ளது.
மழலைப் பள்ளி, தொடக்கப் பள்ளி, நடுநிலைப்பள்ளி, மேனிலைப்பள்ளிகளாக 8 பள்ளிக் கூடங்கள், 4 நூல் நிலையங்கள், இலவச தட்டச்சு பயிற்சி நிலையங்கள் நடத்தப்படுகின்றன. தமிழ் நாட்டின் பல்வேறு பகுதிகளிலுள்ள திருக்கோயில்களில் 13 கட்டளைகள் நிறுவப்பெற்றுள்ளன. 72 திருமடங்களை அமைத்து நாடெங்கும் சமய சமுதாயப் பணிகளைச் செவ்வனே நடத்திவர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அரிசன மக்கள் திருமணத்திற்கும், கல்விக்கும் பலவகை உதவிகள் செப்யப்படுகின்றன. மேலும் சமய, சமுதாயப் பணிகளுக்கு நிதி உதவியும் தானிய உதவிகளும் வழங்கப்பட்டு வருகின்றது.
தர்மபுர ஆதீனம்
தமிழகத்து தொன்மையான ஆதீனங்களில் இதுவும் ஒன்று. இவ்வாதீனம் 1560 ஆம் ஆண்டு பூரீ குருஞான சம்பந்தரால் தோற்றுவிக்கப்பட்டது. மூவேந்தர் ஆட்சி முடிவுக்கு வந்தபின் அன்னியர் ஆட்சியின் போது தமிழ்நாட்டின் மொழி, சமயம், பண்பாடு பாதிப்புக்குள்ளான ஒரு சூழலில் இவ்வாதீனம் தோன்றியது. தமிழுக்கும், சிவநெறிக்கும் பெருமையும், வளமையும் சேர்க்கும் நூல்கள் எட்டு, குருஞானசம்பந்த தேசிக சுவாமிகளால் அருளிச் செய்யப்பட்டன. அவை சொக்கநாதக் கலித்துறை, சொக்கநாத வெண்பா, சிவபோகசாரம், பண்டாரக்கலித்துறை, நவரத்தினமாலை, பிரசாத யோகம், திரிபதார்த்த ரூபாதி தசகாரிய அகவல், முத்தி நிச்சயம் ஆகியவையாகும். இவரின் பக்குவ நிலை கண்டு தர்ம புரீஸ்வரர் கோயிலின் நிர்வாகம், அங்குள்ள மடங்களின் நிர்வாகம் ஆகியன இவரிடம் ஒப்படைக்கப்பட்டன.
குருஞானசம்பந்தருக்குப் பின் வந்தவர்களும் கல்வி, கேள்வி ஒழுங்குகளில் தலைசிறந்தவர்கள். திருவருளையும்,
2O7

Page 254
குருவருளையும் நிறைவாகப் பெற்று அற்புதங்கள் பல புரிந்தவர்கள். இவர்களுள் சான்றோராய், மொழித்திறன் மிக்கவராய், இசைத்துறையில் எல்லைகண்டவராய் நன் மாணாக்கர் பலரை உருவாக்கி உலகுக்களித்தனர், நான்காவது குருமூர்த்தியாக விளங்கியவர் பூரீ மாசிலாமணி தேசிகர். இவரே குமரகுருபர சுவாமிகளுக்கு ஞான தீட்சை செய்து அவரைக் காசி சென்று சித்தாந்த சைவ சமய ஸ்தாபனம் செய்து வருமாறு பணித்தார். குமரகுருபரர் அங்கு நிறுவிய குமாரசாமி மடம் இன்று வரை புகழ்பெற்று விளங்குகிறது. ஏழாவது குருமூர்த்தியாகிய திருவம்பல தேசிக சுவாமிகள் “வருணாசிரம சந்திரிகை” என்ற நூலை வடமொழியில் எழுதினார். பத்தாவது குருமூர்த்தி பூரீ சிவஞானதேசிக சுவாமிகள் காசி விசுவநாதகோயில் முதலிய பல கோயில்களிற் பாடிய பாடல்கள் திருவருட்பா என வழங்குகின்றன. இருபத்து நான்காவது குருமகா சன்னிதானம் பூரீ சண்முக தேசிக சுவாமிகள் “ஞானசம்பந்தம்” என்னும் சமய இதழை மாதந்தோறும் வெளிவரச் செய்தவர். பூரீ மெய்கண்டான் சித்தாந்த மாநாட்டையும், கூட்டியவர். இவர் காலத்தில் வேத சிவாகமப் பாடசாலை, தேவாரப் பாடசாலை, பூரீ குருஞான சம்பந்த தொடக்கப்பள்ளி முதலிய கல்வி நிலையங்கள் தொடங்கப் பெற்றன. இவர் தருமையாதீனத் திருக்கோயில்கள் பலவற்றிற்குத் திருப்பணிகள் மேற்கொண்டார். ஆதீன இசைப் புலவராக திரு. எம். தண்டபாணி தேசிகரையும் ஆதீன தமிழ்ப் புலவர்களான திருவாளர்கள் ஈசான சிவாச்சாரியார், ச. தண்டபாணி துரைசாமிப் பிள்ளை, வயிநாகரம், வே. இராமநாதன் செட்டியார் போன்றோர்களையும் பட்டமளித்துச் சிறப்பித்து ஆதீனப் பணிகளில் அவர்களை ஈடுபடுத்தினார். இருபத்தைந்தாவது குருமூர்த்தி பூரீ கயிலை சுப்பிரமணிய தேசிக சுவாமிகள் தருமையாதீனக் கோயில்கள் இருபத்தேழையும் குடமுழுக்குச் செய்வித்தார். திருமுறைகளுக்கு உரை கண்டவர். திருக்குறள் உரைவளம் என்று குறள் உரைகள் அனைத்தையும் தொகுத்து வெளியிட்டவர். 1946 ஆம் ஆண்டு தமிழ்க் கல்லூரி தொடக்கியவர். ஆரம்பத்தில் இக் கல்லுரியில் தமிழ் வித்துவான் வகுப்புகள், வடமொழி சிரோமணி வகுப்புகள், இசை வகுப்புகள் நடைபெற்றன. காலப் போக்கில் பிற துறைகளும் சேர்க்கப்பட்டன. இருபத்தாறாவது குருமகா சந்நிதானம் பூரீலறுநீ சண்முக தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் மேற்குறிப்பிட்ட கல்லூரியில் பயின்று அங்கு தமிழ்ப் பேராசிரியராகத் திகழ்ந்தவர். தேவாரத் திருமுறைகளில் முறையான பயிற்சி மிக்கவர். சமய, சமூக வளர்ச்சி நோக்கில் பூரீ குருஞான சம்பந்தர் பணிமன்றம் ஏற்படுத்தியவர். ஞானசம்பந்த அச்சுக்கூடம் நிறுவியதுடன் அரிய நூல்களை வெளியிடுவதற்கென ஞான சம்பந்த பதிப்பகம் என ஒன்றையும் அமைத்து தமிழ் நூல் வெளியீட்டை மேலும் விரிவுபடுத்தினார். ஆவணி மூலம் தோறும் பெரும்புகழ் மிக்க பேரறிஞர் ஒருவருக்குப் பட்டமளித்துப் பாராட்டி வருவதும் குறிப்பிடத்தக்கதொன்றாகும்.
தமிழுக்கும், சைவத்திற்கும் அரிய பல தொண்டாற்றிவரும் இவ்வாதீனம் ஆங்கிலத்திலும், ஆங்கில மொழி பெயர்ப்புடனும் பல நூல்களை வெளியிட்டுள்ளது. வடமொழியில் இருந்து பத்து நூல்களுக்குமேல் தமிழில் மொழிபெயர்த்து வெளியிடப்
208

பட்டுள்ளன. சிவபோகசாரம், சொக்கநாத வெண்பா என்பன இந்தி மொழிபெயர்ப்போடு வெளிவந்துள்ளன. அறிவியல் தொடர்பாகப் பரமாணுப் புராணம் என்ற நூல் வெளிவந்துள்ளது. இசைக்கலை, மருத்துவம் தொடர்பான நூல்களும் வெளியிடப்பட்டுள்ளன. சில நூல்களுக்கான பதிப்புரிமையும் இவ்வாதீனம் பெற்றுள்ளது. தருமையாதீன வெளியீட்டுப் பணி 1924ஆம் ஆண்டு முதல் இடையறாது நிகழ்ந்துவருகின்றது. இதுவரை ஏறத்தாழ 918 நூல்கள் வெளியிடப்பெற்றுள்ளன.
தருமையாதீனத் தேவாரப் பாடசாலை குறிப்பிடத்தக்க தமிழ்ப்பணி ஆற்றி வருகிறது. 24ஆம் குருமகாசந்நிதானத்தால் இப் பாடசாலை நிறுவப்பட்டது. சைவமரபில் வரும் அடிப்படைத் தமிழ்க் கல்வி பெற்ற சிறுவர்கள் இப் பாடசாலையில் சேர்க்கப்படுகின்றனர். ஐந்தாண்டுகள் முறையாகப் பயின்று தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு தேவார இசைமணி என்ற பட்டம் வழங்கப்பெறுகிறது. இங்கு மிகப் பெரிய நூலகம் ஒன்று சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதில் அரிய பல நூல்கள் உட்பட ஏறக்குறைய 1200 நூல்கள் இடம்பெற்றுள்ளன. இங்கு கி. பி. 17, 18 ஆம் நூற்றாண்டுகளில் அச்சிடப் பெற்ற தொன்மையான நூல்களும் உள்ளன. இருபது மொழிகளில் இங்கு நூல்கள் இருக்கின்றமை ஆய்வாளர்களுக்குப் பேருதவியாக இருக்கின்றது. அரிய ஏட்டுச் சுவடிகளும் இங்கு பாதுகாக்கப்பட்டு வருகின்றது. தேவாரத் திருமுறைப் பாடல்களை இசைத் தட்டுகளில் பதிவு செய்து வழங்கிய பெருமையும் இவ் வாதீனத்திற்கு உரியது. ஆண்டுதோறும் நடைபெறும் ஆதீன குரு முதல்வர் குருபூசைத் திருநாளை ஒட்டிப் பத்து நாட்களுக்குத் தமிழ் மாநாடு ஒன்று சிறப்பாக நடத்தப்பட்டு வருகின்றது. தருமையாதீனத் திருமடம் , திருக்கோயில்களின் சார்பில் சென்னையில் சமயம் பரப்பும் நிலையம் இயங்கி வருகின்றது. தலைநகரில் வாழும் மக்களுக்கு சமய விழிப்புணர்ச்சியை இந் நிலையம் ஏற்படுத்தி வருகின்றது. சேரிவாழ் மக்களுக்கு அறிவு புகட்டுதல், நோயாளிகளை மருத்துவமனையில் சென்று கண்டு ஆறுதல் கூறி உதவுதல், சிறைக் கைதிகளைச் சென்று சந்தித்து அவர்களுக்கு அறிவுணர்வு ஊட்டுதல் முதலிய பணிகளையும் இந் நிலையம் செய்து வருகின்றது. இவ்வாறு தருமையாதீனம் கடந்த 450 ஆண்டுகளுக்கு மேலாக அரிய பல சமய, சமூகப் பணிகளை ஆற்றி வருகிறது.
மதுரை திருஞானசம்பந்தர் ஆதீனம்
மதுரை ஆதீனம் இற்றைக்கு 1400 ஆண்டுகளுக்கு முன்பு சீர்காழியில் தோன்றிய தமிழ்த் திருஞான சம்பந்தரால் நிறுவியருளப்பட்டது. இவர் சைவ சமய குரவர் நால்வருள் முதல்வர். சைவசமயத்தையும் திருநீற்றின் பெருமையையும், ஐந்தெழுத்து மந்திரத்தின் சக்தியையும் தமிழ்மொழியின் அருமை பெருமைகளையும் உலகறியப் பரப்பியருளிய பெருமகனார்.
இவ் வாதீனத்தில் 292 ஆம் குருமகா சந்நிதானம் தத்துவப் பாடத்தில் பட்ட மேற்படிப்புப் படித்தவர். எழுச்சி மிகுந்த பேச்சாளரும், எழுத்தாளரும் சிந்தனைச் செயலாளருமாவார். சைவசித்தாந்தத்திலும், சிவபூசையிலும் ஆழ்ந்த ஈடுபாடுடைய
இந்துக் கலைக்களஞ்சியம்

Page 255
வராகத் திகழ்ந்தவர். இவர் தமிழுக்கும், சைவத்திற்கும் செய்த பணிகள் குறிப்பிடத்தக்கவை.
அமெரிக்க ஐக்கிய நாடுகளுக்கும் ஐரோப்பிய நாடுகளான இங்கிலாந்து, பிரான்ஸ் ஆகிய நாடுகளுக்கும் 1984 ஆம் ஆண்டு சென்று பொதுமக்களிடையே சைவசமயப் பற்றையும் தமிழ்மொழி ஆர்வத்தையும் ஊட்டினார். அதே ஆண்டில் சீன நாட்டில் சைவ சமயத்தையும் இஸ்லாம் மார்க்கத்தையும் இணைத்து உரை நிகழ்த்தினார்கள். மேலும் சிங்கப்பூர், ஹொங்கொங் ஆகிய நாடுகளுக்குச் சென்று சைவசமயச் சொற்பொழிவுகள் பல நிகழ்த்தியதுடன் சிவ தீட்சையும் செய்வித்தார்கள். உலகெங்கும் சைவ சமயத்தின் செந்நெறியைச் சிறப்பாகப் பரப்பிட வேண்டும் என்பதும், அனைத்து மத மக்களிடையே ஒற்றுமை நிலவச் செய்ய வேண்டும் என்பதும் இவ் வாதீனத்தின் தலையாய கொள்கையாகும். உலகத்தில் உள்ள எல்லாமதங்களைச் சார்ந்த மக்களும், இறைவன் ஒருவனே, எனவே எல்லோரும் சகோதர, சகோதரிகள் என்ற அடிப்படையில் இஸ்லாம் மார்க்க மேடைகளிலும் எழுந்தருளி சைவ சித்தாந்தம் - திருக்குர்ஆன், திருஞான சம்பந்தர் நபிகள் நாயகம் இப்படிப்பட்ட நிலையில் ஒப்புவமைகளோடு அருளுரை நிகழ்த்தி மிகப்பெரிய புரட்சியை உருவாக்கி நாட்டில் அமைதியான வாழ்வுக்கு வழி ஏற்படுத்த முனைந்தார். சைவசித்தாந்தத்தின் கடுமைத் தன்மையை எளிமைப்படுத்திப் பாமரர்களும் எளிதில் விளங்கிக்கொள்ளும் வகையில் விளக்கம் அளிப்பதில் வல்லவராகத் திகழ்ந்தார். இவர்களின் ஆட்சியில் ஆதீனத்தின் சொத்துக்கள் பல மீட்கப்பட்டு ஆதீன வருவாய் மிகுந்துள்ளது. தஞ்சை மாவட்டத்தில் நான்கு பெரிய சிவாலயங்கள் இவர்களுடைய அருளாட்சியில் இயங்கி வருகின்றன.
இராமநாதபுரம் அரசர் பாஸ்கர சேதுபதி முதல் அனைத்து மன்னர்களும் மதுரை ஆதீனத்தின் சீடர்கள். மகா சந்நிதானங்களிடம் மிகுந்த பக்தியும் பாசமும் கொண்டவர்கள். இங்கிலாந்து அரசுக்கும் மதுரை ஆதீனத்துக்கும் நெருங்கிய தொடர்பிருந்த காரணத்தால் 289 ஆம் குருமகா சந்நிதானம் அவர்களுக்கு இராவ்பகதூர் என்ற சிறப்புப் பட்டத்தை இங்கிலாந்து அரசு வழங்கியது. மதுரை ஆதீனத்தை நிறுவியருளிய குருமுதல்வர் தமிழ்த்திருஞானசம்பந்த சுவாமிகள் முதல் அனைத்து குருமகா சந்நிதானங்களும் மிகச் சிறந்த மேதைகளாக, ஆற்றல் பெற்றவர்களாக பன்மொழிப் புலவர்களாக ஞானிகளாகத் திகழ்ந்து வருகிறார்கள்.
திருப்பனந்தாள் காசிமடம்
திருப்பனந்தாள் காசிமடத்தை நிறுவியவர் குமரகுருபரர். பூரீ வைகுண்டத்தில் அவதரித்து திருச்செந்தூர் முருகன் அருளால் ஊமைத் தன்மை நீங்கப் பெற்றுக் கந்தர் கலிவெண்பா பாடி, தலயாத்திரை மேற்கொண்டு மதுரையில் மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் பாடுங்கால் அம்பிகையால் முத்தாரம் அணிவிக்கப்பட்டு, தருமையாதீன நான்காம் குருமகாசந்நிதி தானத்தால் ஆட்கொள்ளப்பட்ட சிறப்புப் பெற்றவர் குமரகுருபரர். காசியில் ஒளரங்கசீப்பின் மகன் பாதுஷாவின் அவைக்கு சிங்கத்தின் மீதமர்ந்து சென்று முகலாய மன்னரின் நன்மதிப்பைப்
இந்துக் கலைக்களஞ்சியம்

பெற்று குமாரசாமி மடம் அமைத்து, அறம்பல செய்து வட இந்தியாவில் தமிழின் அருமையை நிறுவியவர். இவ்வாதீன முதலாம் அதிபர் குமரகுருபரர். இவர் இயற்றிய 16 சிற்றிலக்கியங்களுள் கந்தர் கலிவெண்பா முதல் 14 நூல்கள் இப்போது கிடைக்கின்றன.
குமர குருபர சுவாமிகள் காசியில் அமைத்த காசிமடத்துத் தலைமை ஐந்து தலைமுறைகளின் பின்னர் திருப்பனந்தாளில் அமைந்த காசி மடத்தை அடைந்தது. அது முதல் காசிமடத்து அதிபர்கள் திருப்பனந்தாளில் இருக்கத் தொடங்கினர். காசியில் இயங்கி வந்த மூல மடத்திற்குத் திருப்பனந்தாளில் அமைந்த தலைமை மடத்திலிருந்து தம்பிரான் ஒருவரை அனுப்பிவைப்பர். அந்தத் தம்பிரான் திருப்பனந்தாளில் உள்ள ஆதீனத் தலைவருக்கு அடங்கி நடப்பர்.
காசிமடத்தின் அதிபர்கள் பழுத்த தமிழ்ப் புலமை பாலிக்கப் பெற்றவர்கள். எசமான் சுவாமிகள் என மக்களால் மரியாதையுடன் அழைக்கப் பெறுபவர்கள். தஞ்சை மராட்டிய மன்னர்களால் மதிக்கப் பெற்றவர்கள். திருக்கயிலாய பரம்பரைத் தருமபுர ஆதீன தம்பிரான்களில் ஒருவரே காசிமடம் அதிபராக வரும் மரபுள்ளது. காசி குமாரசாமி மடத்துடன் இராமேசுவரம், சிதம்பரம், ஆச்சிராமம் முதலிய இடங்களிலும் இதன் கிளை மடங்கள் உள்ளன. தீபெத்தில் மோராங்கியிலும் ஒரு கிளை இருந்ததாகவும் ஒரு உருத்திராக்கக் காடு சொந்தமாக இருந்ததாகவும் தெரிய வருகிறது.
காசி மடத்தின் அறக் கட்டளைகளின் வாயிலாக எண்ணற்ற நற்பணிகளை இவ்வாதீனம் மேற்கொண்டு வருகிறது. அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தஞ்சை இராசராச அபயகுல சேகரன் நினைவு சித்தாந்தப் பரிசுகள் முதலிய பல பரிசுகள் அளிக்க இத் திருமடம் நிதி அளித்துள்ளது. அப் பல்கலைக்கழக வாயிலாக தமிழ் நூல்களை அடக்கவிலையில் அச்சிட்டு வெளியிடுவதற்காக 120 ஏக்கர் நிலம் ஒதுக்கப் பட்டுள்ளது. காசிமடத்தில் பன்னிரு திருமுறைப் பதிப்பு நிதி, திருக்குறள் பதிப்பு நிதிகளின் வாயிலாகப் பல நூல்கள் வெளியிடப்படுகின்றன. அவை யாவும் அடக்க விலையிலேயே தரப்படுகின்றன. காசி மடத்தின் தம்பிரான்கள் காசியிலிருந்து சிறந்த நூல்களைப் படியெடுத்தும் விலைக்கு வாங்கியும் தஞ்சைக்கு அனுப்புவது வழக்கம். தமிழ் வளர்ச்சிக்காகவும் தமிழிலக்கிய வளர்ச்சிக்காகவும் திருப்பனந்தாளில் சாமிநாத சுவாமிகளால் செந்தமிழ்க் கல்லூரி நிறுவப்பெற்றுள்ளது. குமரகுருபர சுவாமிகள் அவதாரத் தலமாகிய பூரீ வைகுண்டத்தில் குமர குருபர சுவாமிகள் கலைக் கல்லூரி நிறுவப்பெற்றுள்ளது. அன்னதான மடம் என்றே ஆன்றோர் புகழும் வண்ணம் கேதாரம் முதல் குமரி வரை 281 அன்னதானக் கட்டளைகள் நிறுவப்பட்டுள்ளன. காசிப் பல்கலைக்கழகத்தில் சித்தாந்த இருக்கை அமைத்து ஆய்வுகளும் சொற்பொழிவுகளும் நிகழ்த்தப் பெறுகின்றன. தமிழ் வளர்ச்சிக்காகவும் சைவ மேம்பாட்டிற்காகவும் பூரீ குமரகுருபரர் என்னும் திங்களிதழ் நடத்தப் பெறுகின்றது. கல்விப் பணிகள், சமுதாயப் பணிகள் ஆகிய வகைகளில் முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டு தம் பணிகளைச் செவ்வனே ஆற்றி வருகிறது திருப்பனந்தாள் காசி மடம்.
209

Page 256
சாந்தலிங்கம் அடிகளார் பேரூராதீனம்
திருப்பேரூர் கொங்கு நாட்டிலுள்ள திருத்தலங்களுள் சிறப்பு மிகுந்த தலமாகத் திகழ்கிறது. இப் பேரூரை நம்பியாரூரரும், சேக்கிழார் பெருமானும் சிறப்பித்துப் பாடிஉள்ளனர். மெய்கண்ட மரபில் வந்த திருவாவடுதுறை ஆதீனக் குருமுதல்வர் நமச்சிவாய தேசிகரின் மாணவரான சிவப்பிரகாசரின் மாணவராக முழுஞான வீரராகத் திகழ்ந்தவர் தவத் திரு சாந்தலிங்கம் அடிகளார். இவரால் கொங்குவள நாட்டில் மடம் ஒன்று அமைக்கப்பட்டது. இவரது திருமடம் கிழக்குக் கடற்கரைக்கும் மேற்கு மலைத் தொடருக்கும் இடைப்பட்ட தமிழகத்தில் சிவஞானப் பயிர் வளர்த்த சிறப்பிற்குரியது. சாந்தலிங்கர் தம்முடன் அடியவர்களையும் மாணாக்கர்களையும் இருக்கச் செய்து தவமியற்றி அருளுரை வழங்கி வந்தார். பிற சமயத்தவரும் சைவ சமயத்தின் மேன்மையை விளங்கிக்கொள்ள வேண்டும் என்ற கருத்துடையவராக இருந்தார். இதனை அவர் எழுதிய கொலை மறுத்தல் என்னும் நூலால் அறியலாம். வைராக்கிய சதகம், வைராக்கிய தீபம் அவிரோத உந்தியார் ஆகிய நூல்கள் வேதாந்த சித்தாந்த திருமடங்கள் ஏற்றுப் போற்றுவனவாக விளங்குகின்றன. சமயக் காழ்ப்பை நீக்கி ஒற்றுமையுணர்வை உண்டாக்கும் வகையில் அமைந்த நூலாக அவிரோத உந்தியார் விளங்குகிறது. இவருக்குப் பின் இத் திருமடம் அன்னிய மதத்தினர் ஆட்சியாலும் அன்பர்களின் கவனக் குறைவாலும் சிறப்புக்குன்றியிருந்தது. பிற்காலத்தில் வந்த அருளாளர்கள் மீண்டும் திருமடத்தை வளப்படுத்தினர். இப் பணியில் குறிப்பிடத்தக்கவர் தவத்திரு இராமலிங்க சுவாமிகள் ஆவார்.
இத் திருமடம் சமய, சமூக கல்விப் பணியும் ஆற்றி வந்துள்ளது. திருமடத்தைச் சார்ந்த அன்பர்கட்குச் சமய நெறியினை விளக்குவதற்காக 1916 ஆம் ஆண்டு தவத்திரு சிதம்பர மெய்ஞ்ஞான சுவாமிகளாலும் மற்றும் பல பெரியார் களாலும், சதவித்யா சன்மார்க்க சங்கம் தோற்றுவிக்கப்பட்டது. அதன் சார்பில் சங்கத்தில் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை 3 மணிக்கு சொற்பொழிவுகள் நடைபெறும். இச் சங்கத்தினால் கோவை நகரில் சமய உணர்வு அரும்பியது. மடத்தின் சார்பில் 1951 இல் உயர்நிலை தொடக்கப்பள்ளி தொடங்கப் பெற்றது. சென்னைப் பல்கலைக்கழக ஒப்புதலுடன் 1953 ஆம் ஆண்டு தமிழ்க் கல்லூரி தொடங்கப்பட்டது. அன்று பேரூர்பட்டிப் பெருமான் கோயிலில் தவத்திரு சிவஞானபாலய சுவாமிகள் குன்றக்குடி அடிகளார் முதலியோர் முன்னிலையில் முதன் முதலாக தமிழில் அர்ச்சனை செய்யப்பட்டது. காட்டம்பட்டிமுதலி பாளயத்தில் 1958இல் சாந்தலிங்கம் அடிகளார் பெயரில் ஒர் உயர்நிலை தொடக்கப் பள்ளியும் 1969இல் பேரூரில் உயர்நிலைப்பள்ளியும், 1977இல் மழலையர் பள்ளியும் தொடங்கப் பெற்றன. இவ் வாதீனம் தமிழகத் திருமடங்களை ஒருங்கிணைக்கும் பணியினை மேற்கொண்டது. துறவியர் பேரவை ஒன்றை உருவாக்கிய பெருமை இதற்குரியது.
பேரூர் ஆதீனத்தின் பணியால் கொங்கு நாட்டில் சிவநெறி வளர்ச்சி மேலோங்கியது. திருமடத்தின் சார்பில் நிறுவப்பட்ட சத்
210

வித்யா மார்க்க சங்கம் சிவநெறிப் பண்புகளையும் செந்தமிழ் உணர்வினையும் வளர்த்து வருகிறது.
தமிழ்நாட்டில் இராமகிருஷ்ண மடம்
சங்கங்கள்
தமிழ்நாட்டில் இப்போது சென்னை, காஞ்சிபுரம், செங்கற்பட்டு, சேலம், கோயமுத்தூர், ஊட்டி, மதுரை ஆகிய இடங்களில் இராமகிருஷ்ண மடமும், சங்கமும் சேவை செய்து வருகின்றன. சென்னையில் ஏழைப்பிள்ளைகளுக்கு உணவு, தங்குமிடமும் தொழிற்கல்வியும் தருகிறது. பூரீ இராமகிருஷ்ணர் மாணவர் இல்லமும் விவேகானந்தாக் கல்லூரியும் இம் மடத்தின் சார்பில் நடைபெறுகின்றன. இம் மாணவர் இல்லத்தின் கிளையாக செங்கற்பட்டு மாவட்டத்தில் ஏழை மாணவர்களுக்கு குறிப்பாக அரிசன மாணவர்களுக்கு பள்ளியும் விடுதியும் நடத்தப்படுகின்றன. சென்னை, மயிலூர், நாட்டறம்பள்ளி, சேலம் ஆகிய மடங்களில் மருத்துவ சேவை செய்யப்படுகிறது. சென்னை, மயிலாப்பூர்மடம், நாட்டறம்பள்ளி மடம் ஆகியன மருத்துவ வசதிகள் உடனடியாக எளிதாகக் கிடைக்கப் பெறாத ஏழைகளுக்காக நடமாடும் மருத்துவமனைகளும் நடத்தப்படுகின்றன.
தமிழகத்தில் பூரீ இராமகிருஷ்ணரின் கொள்கைகளைப் பரப்புவதிலும் ஆன்மீகச் சேவைகளைச் செய்வதிலும் மருத்துவமனை நடத்துதல், முதலான சேவைகள் செய்வதிலும் சென்னை, மயிலாப்பூர் இராமகிருஷ்ண மடங்கள் முன்னின்று செயற்படுகின்றன. ஆண்டுதோறும் பூரீ இராமகிருஷ்ணர், விவேகானந்தர், அன்னை சாரதா தேவியார் ஆகியோரின் பிறந்த தின விழாக்கள் சிறப்பாக இம் மடங்களாற் கொண்டாடப்படுகிறது. இந்திய அரசு விவேகானந்தரின் பிறந்த நாளை தேசிய இளைஞர் நாளாக அறிவித்த பிறகு ஒவ்வோர் ஆண்டும் ஜனவரி 12 ஆம் நாள் விவேகானந்தரின் பிறந்த நாள் விழா, இளைஞர் அனைவரின் மனத்திலும் விவேகானந்தரின் முழக்கங்களும் சேவை மயமான அவருடைய நிகழ்ச்சிகளும் நன்கு பதியும் படியாகக் கொண்டாடப்படுகின்றன. ஊர்வலங்கள், சொற்பொழிவுகள், கட்டுரை, ஒவியப் போட்டிகள் இளைஞர் மாநாடுகள் முதலியன புதிய அமைப்போடும் உற்சாகத்தோடும் நடத்தப்படுகின்றன. ஆண்டிற்கு ஒரு முறை மூன்று நாட்கள் தமிழகம் முழுவதிலுமிருந்து வந்து பக்தர்கள் நூற்றுக்கணக்கில் வந்து தங்கிப் பெரிதும் பயன்பெறும் அந்தர் யோகம் ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. மடத்தின் மூலம் பூரீ இராமகிருஷ்ண விஜயம் என்ற ஆன்மீக மாத இதழ் நடத்தப்பட்டு வருகிறது. அதில் இளைஞர் முதல் முதியவர் வரை விரும்பிப்படிக்கும் பூரீ இராமகிருஷ்ணர், விவேகானந்தர், அன்னை சாரதா தேவி ஆகியோரின் வரலாறுகள், உபதேசங்களும் இந்து சமயம், உலக சமயங்களின் சாத்திரங்களும் சிறப்பாக வெளியிடப்படுகின்றன. இம் மடம் சிறந்த நூல்கள் அடங்கிய நூல் நிலையம் ஒன்றையும் நடத்தி வருகிறது.
சென்னை பூரீ இராமகிருஷ்ண மடத்தின் மிகச் சிறந்த பணியாகத் திகழ்வது நூல் வெளியீட்டுப் பணியும் விற்பனைப் பணியுமாகும். தமிழ், ஆங்கிலம், தெலுங்கு ஆகிய மொழிகளில் சமய நூல்கள் இங்கு வெளியிடப்படுகின்றன. வேதங்கள்,
இந்துக்கலைக்களஞ்சியம்

Page 257
உபநிடதங்கள், பூரீ இராமகிருஷ்ணர், விவேகானந்தர் உபதேசங்கள், வாழ்க்கை வரலாறுகள் முதலியன மிக முக்கியமான நூல்களாகும். பூரீ இராமகிருஷ்ணரின் வங்காள மொழியில் அமைந்த உபதேசங்களைத் தமிழில் மொழி பெயர்த்து பூரீ இராமகிருஷ்ணரின் அமுத மொழிகள் என்ற பெயரில் மூன்று பகுதிகளாக இரண்டாயிரத்துக்கு மேற்பட்ட பக்கங்களில் அழகுற அமையும்படி வெளியிடப்பட்டுள்ளது. விவேகானந்தரின் ஞானதீபம்’ என்பது 16 தொகுதிகளாக மிகச் சிறந்த தமிழில் படிப்பவர் மனம் கொள்ளும் நடையில் வெளியிடப்பட்டுள்ளது.
தமிழ்நாடு முழுவதும் நூற்றுக்கும் மேற்பட்ட இராமகிருஷ்ண சங்கம், விவேகானந்தர் மன்றம், பூரீ சாரதா சங்கம் ஆகியன அமைக்கப்பட்டு அவை இவ் அருளாளர்களின் உபதேசப்படி ஆன்மீகப் பணிகளையும் மனிதகுலச் சேவைகளையும் செய்து வருகின்றன. சென்னை மயிலையிலுள்ள பூரீ இராம கிருஷ்ண மடம், தமிழ்நாடு பூரீ இராமகிருஷ்ண விவேகானந்தர் பேரவை என்னும் ஒர் அமைப்பிற்குள் இணைத்து அவைகளின் செயல்களில் பங்கு கொண்டு அவைகளுக்கு வழிகாட்டி வளர்த்து வருகிறது. இவ்வமைப்பில் உள்ள சங்கங்கள் ஐம்பதுக்கு மேற்பட்ட பள்ளிகளைத் தமிழ் நாடு முழுவதும் நடத்தி வருகிறது. இம் மடங்கள் சங்கங்கள் இந்துக்களுக்கு மட்டுமன்றி மனிதகுலம் முழுவதற்கும் ஓர் வரப்பிரசாதமாகும்.
சிருங்கேரி மடம்
இது அத்வைத கோட்பாட்டினை உருவாக்கிய ஆதி சங்கரரால் (கி. பி. 788-820) துங்கா ஆற்றின் கரையில் உருவாக்கப்பட்ட மடம். சிருங்கேரி என்னும் ஊரில் அமைந்துள்ளதால் சிருங்கேரி மடம் எனப்பட்டது. தமிழகத்தில் காஞ்சியிலும், குஜராத்திலும் , துவாரகையிலும், ஒரிசாவில் பூரி என்னுமிடத்தில் இமயச் சாரலிலும் பத்திரி நாத்திலும் இவரால் உருவாக்கப்பட்ட பிற மடங்களைப் போல் இம் மடமும் புகழ்வாய்ந்த ஒன்றாகும். இந்து சமயத்துடன் வைதீக நெறிகளையும் மீண்டும் இந்துக்களிடையே வலுப் பெறச் செய்யும் நோக்குடன் இம் மடம் தோற்றுவிக்கப் பட்டது. இம் மடத்தினை நிருவகித்தற் பொருட்டு சுரேசுவராசிரியர் என்ற தம்முடைய மாணவரை முதல் பீடாதிபதியாக ஆதி சங்கரர் நியமனம் செய்தார். அவருக்குப் பின் வழிவழியாக பீடாதிபதி ஒருவராலேயே இம்மடம் நிருவகிக்கப்பட்டு வருகிறது. இம் மடப் பீடாதிபதிகள் 14 ஆம் நூற்றாண்டு முதல் அரசியலோடு தம்மைப் பிணைத்துக் கொண்டனர். குறிப்பாக வித்தியாசாரன் சுவாமிகள் சங்கம சகோதரர்களுக்கு உதவி செய்து துங்க பத்திரை ஆற்றின் கரையில் இந்து தர்மத்தை நிலை நாட்டும் பொருட்டு விசயநகரப் பேரரசு உருவாக வழிகோலினார். அரசியலில் அவர்கள் கொண்ட தொடர்பு காரணமாக இம் மடத்தின் நிருவாக அமைப்பு சீராக உள்ளது. இம் மடம் குருகுல முறையில் கல்வி புகட்டும் பணியிலும் ஈடுபட்டுள்ளது. உழைப்பு மூலம் கல்வி என்ற நோக்கில் இலவச உணவு, உடை, இருப்பிடம் ஆகியன தரப்படைக் கல்வி வழங்கப்படுகிறது. வேதங்கள் வேத தத்துவங்கள், சமயக் கோட்பாடுகள் ஆகியன அங்கு கற்பிக்கப்படுகின்றன. இம் மடத்தில் எண்ணற்ற சமய நூல்கள் அடங்கிய நூல் நிலையம் ஒன்றுள்ளது. இம் மடத்தின் கிளைகள்,
இந்துக் கலைக்களஞ்சியம்

இந்தியத் துணைக் கண்டத்தின் பல இடங்களிலும் அமைந்துள்ளன. அவை சமயப்பணி, கல்விப்பணி போன்ற பணிகளை நிறைவேற்றி வருகின்றன. ஆதி சங்கரரின் கோட்பாடுகளைப் பரப்பும் பணிகளைச் செய்வதில் இம் மடம் பெரும் பங்கு வகிக்கின்றது. (நி. நி.)
ஆந்திரப் பிரதேசம்
ஆந்திரப் பிரதேசம் இந்தியக் குடியரசில் உள்ள ஒரு மாநிலமாகும். இதன் தலைநகர் ஐதராபாத்து. மாநிலத்தின் பரப்பளவு 2.75 இலட்சம் ச. கி. மீ. மக்கள் தொகை 5,34,03,619 (1981) பரப்பளவிலும் மக்கள் தொகையிலும் ஆந்திரப் பிரதேசம் (Andhra Pradesh) இந்தியாவில் ஐந்தாம் பெரிய மாநிலமாகும். இங்கு தெலுங்கு சிறப்பு மொழியாகப் பேசப்படுகிறது. உருது முதலிய மொழிகளைப் பேசுபவர்களும் உள்ளனர். இந்தி மொழிக்கு அடுத்தபடியாகத் தெலுங்கு பேசுபவர்களே இந்தியாவில் மிகுதியாக உள்ளனர். இம்மாநிலத்தில் 88% இந்துக்கள், 8% முகம்மதியர்கள் 4% கிறித்தவர்கள் வாழ்கிறார்கள்.
நிலவியல்
இந்தியக் குடியரசின் தென்பகுதியில் உள்ள இம்மாநிலத்தின் வடக்கே ஒரிசா, மத்தியப் பிரதேசம் மற்றும் மகாராட்டிரமும், மேற்கே கருநாடகமும், தெற்கே தமிழ்நாடும் கிழக்கே வங்கக் கடலும் எல்லைகளாக உள்ளன. நிலவியல் அடிப்படையில் இம்மாநிலம் 1. கடற்கரைச் சமவெளிப் பகுதி 2 கிழக்குத் தொடர்ச்சி மலைகள் 3 மேற்கே உள்ள மேட்டு நிலம் என மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்படுகிறது. கடற்கரையை அடுத்துள்ள சமவெளிப் பகுதியில் வளமான நிலங்கள் உள்ளன. கோதாவரி, கிருட்டிணா, வடபெண்ணை முதலான ஆறுகளின் மூலம் கால்வாய்ப் பாசனம் நடைபெறுகிறது. கிழக்கு நோக்கிப் பாயும் பல ஆறுகளினால் பள்ளத்தாக்குகள் ஏற்பட்டுள்ளன. மேட்டு நிலப்பகுதி கடல் மட்டத்திலிருந்து 534மீ உயரத்தில் உள்ளது.
கோதாவரி, கிருட்டிணா, வடபெண்ணை முதலான பெரிய ஆறுகளாலும், துங்கப்பத்திரா, பாகக்னி, முசி, மஞ்ரா, சித்ரா, வம்சதாரா, இலங்குல்யா முதலான மற்றய ஆறுகளாலும் இம்மாநிலத்திற்குத் தேவையான தண்ணீர் கிடைக்கிறது.
மார்ச்சு மாதம் முதல் ஜூன் மாதம் வரை இம் மாநிலத்திற்குக் கோடைக் காலம். அப்பொழுது பொதுவாக 75பா. முதல் 85பா. வரை வெப்பம் நிலவுகிறது. சில இடங்களில் மே மாதம் 115 பா. வரை வெப்பம் உயர்கிறது. ஜூலை மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை தென் மேற்குப் பருவ மழையினால் 90 முதல் 130 செ. மீ. வரை இப்பகுதி மழையைப் பெறுகிறது. அக்டோபர் முதல் பெப்ரவரி மாதம் வரை குளிர் காலம். இக்காலத்தில் 45பா. முதல் 55பா. வரை வெப்பம் நிலவுகிறது. அக்டோபர், நவம்பர் மாதங்களில் வடகிழக்குப் பருவ மழையினால் 40 முதல் 65செ.மீ. வரை இப்பகுதி மழையைப் பெறுகிறது. இவ்விரு மாதங்களில் வங்கக்கடலில் தோன்றும் புயலினால் இம்மாநிலத்தின் கடற்கரை
211

Page 258
மாவட்டங்கள் தாக்கப்படுகின்றன. அதனால் உயிரிழப்பும், பொருளிழப்பும் ஏற்படுகின்றன.
மக்கள் வாழ்க்கை முறை
இம்மாநிலத்தில் வாழும் மக்களுள் 74% பகுதியினர் வேளாண்மைத் தொழிலைச் செய்கின்றனர். நெல், சோளம், கேழ்வரகு, பருப்பு வகைகள், வாழை, வேர்க்கடலை, சர்க்கரை, பருத்தி மற்றும் புகையிலை முதலானவை பெருமளவு இம்மாநிலத்தில் விளைகின்றன. இந்திய ஆமணக்கு உற்பத்தியில் 55 விழுக்காடும் புகையிலை உற்பத்தியில் 94 விழுக்காடும் இங்கேயே கிடைக்கின்றது.
நிலத்தடிச் செல்வங்களை எடுப்பதில் பல ஆயிரம் மக்கள் ஈடுபட்டுள்ளனர். பச்சைக் கல்நார் ஆந்திராவில் மட்டுமே மிகுதியாக எடுக்கப்படுகிறது. மங்கனிசுத் தாது உற்பத்தியில் இம்மாநிலம் ஆறாம் இடத்தைப் பெறுகிறது. சிங்கரோணி வயல்களிலிருந்து நிலக்கரி மிகுதியாகக் கிடைக்கிறது. செம்புத்தாது, மைக்கா மற்றும் சுண்ணாம்புக்கல் போன்றவையும் இம்மாநிலத்தில் எடுக்கப்படுகின்றன. ஐதராபாத்திலும் விசாகப்பட்டினத்திலும் பல தொழிற்சாலைகள் உள்ளன. விசாகப்பட்டினத்தில் ஒர் இரும்பாலையும் உள்ளது. இராமகுண்டத்தில் ஒர் இரசாயன எரு உண்டாக்கும் தொழிலகம் அமைக்கப்படுள்ளது.
வேளாண்மைக்கும் தொழிற் கூடங்களுக்கும் வேண்டிய மின்சாரம் இரண்டு வகைகளில் உண்டாக்கப்படுகிறது. மச்குந்து, மேல்சைலேரு, கீழ்சைலேரு, துங்கபத்திராஅணை, நாகார்ச் சுனசாகர், நைசாம்சாகர் போன்ற இடங்களில் நீர்மின் சக்தியும், நெல்லூர், இராமகுண்டம், கோதகுண்டம், விசயவாடா, ஐதராபாத்துப் (உசேன்சாகர்) போன்ற இடங்களில் அனல் மின்சக்தியும் உண்டாக்கப்படுகின்றன.
போக்குவரத்து வசதிகள் தேவையான அளவு உள்ளன. ஐதராபாத்து, விசயவாடா, விசாகப்பட்டினம் ஆகிய இடங்களில் விமான நிலையங்கள் உள்ளன. மாநிலத்தில் 8000 கி. மீ.க்கு மேல் இருப்புப் பாதைகள் உள்ளன. 88,000 கி.மீ.க்கு மேல் சாலைகள் உள்ளன. கோதாவரி, கிருட்டிணா ஆகிய ஆறுகளில் சில இடங்களில் மக்களை ஏற்றிச் செல்லப் படகுகள் பயன்படுத்தப்படுகின்றன.
எழுதப்படிக்கத் தெரிந்தவர்கள் இம்மாநிலத்தில் மிகக் குறைவு. ஆண்களில் 39.26% பகுதியினரும் பெண்களில் 20.39% பகுதியினரும் எழுத்தறிவுள்ளவர்கள். உயர்நிலைப் பள்ளிவரை இலவசக் கல்வி தரப்படுகிறது. உயர்கல்வி தரும் ஒன்பது பல்கலைக்கழகங்கள் இம்மாநிலத்தில் உள்ளன. அவை உசுமானியாப் பல்கலைக்கழகம் (ஐதராபாத்து - 1918) ஆந்திரப் பல்கலைக்கழகம் (வால்டேர் - 1926), வெங்கடேசுவரா பல்கலைக்கழகம் (திருப்பதி - 1954), ஆந்திரப்பிரதேச வேளாண்மைப் பல்கலைக்கழகம் (ஐதராபாத்து - 1964), சவகர்லால் நேரு தொழில் நுணுக்கப் பல்கலைக்கழகம்
212

(ஐதராபாத்து - 1972), ஐதராபாத்துப் பல்கலைக்கழகம் (ஐதராபாத்து - 1974) காகதியப் பல்கலைக்கழகம் (வாரங்கல் - 1976), நாகர்ச்சுனா பல்கலைக்கழகம் (குண்டூர் - 1976), கிருட்டிண தேவராயா பல்கலைக்கழகம் (அனந்தபூர் - 1981) ஆகியவையாம்.
பொதுவாக ஆந்திரர்கள் கடவுள் பக்தி மிக்கவர்கள். அவர்கள் திருப்பதி, பத்திராசலம், பூரீசைலம், அகோபிலம் முதலான புனித நகரங்களில் உள்ள கோயில்களுக்குத் திரளாகச் செல்கின்றனர். திருப்பதிக்கு இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பக்தர்கள் வருகின்றனர். இங்குள்ள வேங்கடவனின் நின்றகோலம் பற்றிச் சிலப்பதிகாரத்தில் குறிப்புகள் உள்ளன.
ஆந்திரர்களிடையே சமூசச் சீர்திருத்தங்களைப் பரப்பியவர் கந்துகூரி வீரேசலிங்கம் பந்துலு (கி. பி. 1848 - 1919) ஆவார். ஊழல், ஒழுக்கக்குறைவு, மாதர் தொடர்பு, குழந்தைகள் திருமணம், சிலைவழிபாடு முதலியவற்றை அவர் எதிர்த்தார். விதவைகள் மறுமணத்தை ஆதரித்தார். தெலுங்கு மொழியில் கால இதழ்களை நடத்தியும் பல நூல்களை எழுதியும் தம் சீர்திருத்தக் கருத்துகளை மக்களிடையே பரப்பினார். அதே நேரத்தில் தெலுங்கு மொழியின் மறுமலர்ச்சிக்கும் அரும் பாடுபட்டார்.
ஆந்திரப் பிரதேசத்தில் பழம்பெரும் வரலாற்றுச் சின்னங்கள் பல உள்ளன. ஐதராபாத்துக்குத் தென்கிழக்கே 150 கி. மீ. தூரத்துக்கு அப்பால் கிருட்டிணா ஆற்றின் கரையில் உள்ள நாகார்ச்சுனகொண்டாவில் புத்த சமயத் தூபிகளும் மண்டபங்களும் புத்தரின் சிற்பங்களும் உள்ளன. மகாயான புத்த சமயத்தை நிறுவிய நாகார்ச்சுனர் கி. பி. 2 அல்லது 3ஆம் நூற்றாண்டில் இங்கு வாழ்ந்தார். இங்கே புத்தசமயப் பல்கலைக்கழகமும் அக்காலத்தில் இருந்தது. விசயவாடாவுக்கு மேற்கே கிருட்டிணா ஆற்றின் தென்கரையில் உள்ள அமராவதி மற்றொரு மகாயான புத்தசமயச் சின்னங்கள் மிகுந்த இடமாகும். ஐதராபாத்துக்கு 8 கி. மீ. மேற்கே உள்ள கோல்கொண்டா கோட்டை, குத்பு சாகிச் சுல்தான்களால் கி. பி. 16 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. ஐதராபாத்தில் கி. பி. 1591 இல் கட்டப்பட்ட, சார்மினார் கட்டடம் இஸ்லாமியக் கட்டடக் கலையின் மேன்மையை விளக்குகிறது. ஐதராபாத்தில் பார்க்கத்தக்க அருங்காட்சியகமும் உள்ளது. இவை தவிர ஏற்கனவே கூறப்பட்ட இந்துக் கோயில்கள், சிற்பம் கட்டடக்கலை ஆகியவற்றின் முதிர்ச்சியைக் காட்டும் மையங்களாக உள்ளன. இவற்றை யெல்லாம் பார்த்து மகிழ உள்நாட்டிலிருந்தும் அயல் நாடுகளிலிருந்தும் சுற்றுலாப் பயணிகள் ஆயிரக்கணக்கில் வருகின்றனர்.
வரலாறு
கி. மு. 500க்கு முன்னர் எழுதப்பட்ட வடமொழி நூலாகிய அய்திரேய பிராமணத்தில் ஆந்திரர்கள் என்ற சொல்
இந்துக் கலைக்களஞ்சியம்

Page 259
பயன்படுத்தப்பட்டுள்ளது. அவர்கள் விசுவாமித்திரரின் மக்கள் என்றும், ஆரியர்கள் அல்லாதவர்கள் என்றும் அதனால் அவர்கள் விரட்டப்பட்டார்கள் என்றும் அந்நூல் கூறுகிறது. முதலில் விந்திய மலைகளுக்குத் தெற்கே அவர்கள் வாழ்ந்து வந்தனர் என்றும் பின்னர் இன்றைய ஆந்திரப் பகுதிக்கு இடம் பெயர்ந்தனர் என்றும் கூறப்படுகிறது. ஆந்திரர்கள் என்ற மக்களைக் குறிக்கும் சொல்லிலிருந்துதான் அவர்கள் வாழ்ந்த நிலப்பகுதிக்கு ஆந்திரா என்ற பெயர் வந்தது.
வட இந்தியாவில் சந்திரகுப்த மெளரியர் (கி. மு. 322 -298) ஆட்சி செய்து கொண்டிருந்தபோது ஆந்திரர்கள் தனியரசு ஒன்றை அமைத்துக் கொண்டிருந்ததாகக் கிரேக்க வரலாற்றாசிரியர் பிளினி (கி. பி. முதல் நூற்றாண்டு) எழுதியுள்ளார். அவ்வரசில் முப்பது கோட்டை நகரங்களும், ஒரு இலட்சம் வீரர்களைக் கொண்ட பெரும்படையும் இரண்டாயிரம் குதிரைவீரர்களும், ஆயிரம் யானைகளும் இருந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார். சந்திரகுப்த மெளரியருக்குப்பின் ஆட்சிசெய்த பிந்துசாரரும், அசோகரும் போர் செய்து ஆந்திராவை வென்றதாகச் சான்றுகள் இல்லை. எனினும் மாசுகி, எர்ரகுடி, சித்தபுரம், சாடிங்கா, ஆகிய இடங்களில் அசோகரின் பாறைக் கல்வெட்டுகள் உள்ளன. மேலும் ஆந்திராவில் புத்த சமயத்தைப் பரப்பச் சமயக் குழுக்களை அசோகர் அனுப்பியதாகச் சான்றுகள் உள்ளன. எனவே ஆந்திர அரசர்கள் அசோகரின் மேலாதிகத்தை ஏற்றுக் கொண்டிருக்கக்கூடும் என்பது தெளிவு.
அசோகருக்குப்பின் ஆந்திராவில் சாதவாகனர்களின் ஆட்சி தோன்றியது. அவர்கள் கி. மு. மூன்றாம் நூற்றாண்டிலிருந்து கி. பி. மூன்றாம் நூற்றாண்டுவரை ஆட்சி செய்தார்கள். அவர்களுள் சிமுகர் (கி.மு. 235 - 212), அலா (கி. பி. 20 - 24), கவுதம புத்திர சதகர்ணி (கி. பி. 70 -95), இரண்டாம் புலமாயி (கி.பி. 96 -19) முதலானவர்கள் குறிப்பிடத்தக்கவர்கள். பிரதிசுதானம் அவர்களின் தலைநகரம்; இப்பொழுது மகாராட்டிர மாநிலத்தில் அவுரங்காபாத்து நகரத்திற்குத் தெற்கே கோதாவரி ஆற்றின் கரையில் உள்ள பைதான் நகரமே அக்கால பிரதிசுதானம் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆந்திராவின் பெரும் பகுதிகளைச் சாதவாகனர்கள் ஆட்சி செய்தார்கள். அவர்கள் கட்டடக்கலை முதலான கலைகளின் வளர்ச்சிக்குத் துணைசெய்தார்கள். உரோமானியப் பேரரசுடன் வாணிக உறவுகளையும் அவர்கள் கொண்டிருந்தார்கள்.
சாதவாகனர்களின் ஆட்சிக்குப் பின்னர்க் கிருட்டிணா ஆற்றின் தெற்கேயுள்ள பகுதிகள் பல்லவர்களின் ஆதிக்கத்திற்கு உட்பட்டன.
கீழைச் சாளுக்கியர்கள் கி. பி. 7 ஆம் நூற்றாண்டிலிருந்து 12 ஆம் நூற்றாண்டு வரை வேங்கியைத் தலைநகராகக் கொண்டு ஆந்திராவின் பல பகுதிகளை ஆட்சி செய்தார்கள். கி.பி. 11ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த நன்னய பட்டரால்தான் தெலுங்கு, பேசும் மொழியாகவும் எழுதும் மொழியாகவும் முழு வடிவம் பெற்றது. கீழைச் சாளுக்கிய அரசரான முதலாம் இராசராசன் (கி.பி. 1019 - 61) நன்னயபட்டரை ஆதரித்தார்.
இந்துக் கலைக்களஞ்சியம்

காகதீயர்கள் கி. பி. 12, 13 ஆம் நூற்றாண்டுகளில் வாரங்கலைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்தார்கள். அவர்கள் கிழக்காசிய நாடுகளுடன் வாணிக உறவுகளை வைத்திருந்தனர். அம்மரபின் கடைசி அரசரான பிரதாபருத்திர தேவரை, கி. பி. 1323 ஆம் ஆண்டு தில்லி சுல்தானியத்தின் துக்ளக்குமரபுச் சுல்தான் கியாசுதீன் துக்ளக்கினால் அனுப்பப்பட்ட படைகள், தோற்கடித்து ஆந்திராவைத் தில்லிச் சுல்தானியத்துடன் இணைத்துக் கொண்டன.
முகம்மதியர் ஆட்சியில் இந்து சமயத்திற்கும் தெலுங்கு மொழிக்கும் இடர் ஏற்பட்டது. எனவே கி. பி. 1336 ஆம் ஆண்டு அரிஅரர், புக்கர் ஆகிய இரண்டு சகோதரர்கள் துங்கபத்திரா ஆற்றின் தென்கரையில் விசயநகரத்தை நிறுவினார்கள். விசயநகரத்தைத் தலைநகராகக் கொண்டு கி. பி. 1336 முதல் 1565 வரை சங்கமம் சாளுவ, துளுவலமிச அரசர்களும் பெனுகொண்டாவைத் தலைநகராகக் கொண்டு கி. பி. 1565 முதல் 1759 வரை ஆரவீடு மரபு அரசர்களும் ஆட்சி செய்தனர். துளுவ வமிசத்தைச் சேர்ந்த கிருட்டிணதேவராயர் (கி.பி. 1509 - 29) மிகச் சிறந்த அரசர், அவர் காலத்தில் கிருட்டிணா ஆற்றின் தெற்கேயுள்ள தென்னகம் முழுவதும் அவராட்சியின் கீழ்க் கொண்டுவரப் பட்டிருந்தது. அக்காலத்தில் இந்து சமய மறுமலர்ச்சி ஏற்பட்டது. தெலுங்கு கன்னடம், வடமொழி முதலிய மொழிகள் ஏற்றம் பெற்றன. தென்னகத்தின் பல சிறந்த இடங்களில் பல கோயில்கள் கட்டப்பட்டன. பல புதுப்பிக்கப்பட்டன.
முகம்மதுபின் துக்ளக்கு தில்லிச் சுல்தானாக இருந்தபோது பேரரசின் பல இடங்களில் கலகங்கங்கள் நடைபெற்றன. தக்காணத்தில் கி. பி. 1347 ஆம் ஆண்டு ஆசன் என்பவர் புரட்சிக்கொடி ஏந்தி அலாவுதீன் பாமன்சா என்ற பெயருடன் தம்மைச் சுதந்திர அரசர் என அறிவித்துக் கொண்டார். குல்பர்கா அவருடைய தலைநகரம், இங்ங்ணம் பாமினி அரசு நிறுவப்பட்டது. கோதாவரி - கிருட்டிணா ஆகிய ஆறுகளுக்கிடையே உள்ள ஆந்திராவின் பல பகுதிகள் பாமினிச் சுல்தான்களின் ஆட்சிக்குட்பட்டிருந்தன. பாமினிச் சுல்தான்களுக்கும் விசயநகர அரசர்களுக்கும் இடையே பல போர்கள் நடைபெற்றன. பாமினி அரசு கி. பி. 1481ஆம் ஆண்டு வீழ்ச்சியுற்றுப் பீசப்பூர், அகமது நகர், பேரார், கோல்கொண்ட, பீடார் ஆகிய ஐந்து அரசுகள் தோன்றின. இவ்வரசுகளின் சுல்தான்களும் அடிக்கடி விசயநகரைத் தாக்கினார்கள். இறுதியாகக் கி.பி 1565 இல் நடைபெற்ற தலைக்கோட்டைப் போரில் விசயநகரப் படைகள் மிகக் கடுமையாகத் தாக்கப்பட்டுத் தோற்கடிக்கப்பட்டன. விசயநகரத்தில் இருந்த பல கட்டடங்களும் கோயில்களும் இடித்துத் தள்ளப்பட்டன. அதையடுத்து விசயநகர அரசு சரிவடையத் தொடங்கியது.
பாமினி அரசின் அழிவுக்குப் பின்னர்த் தோன்றிய ஐந்து அரசுகளின் கோல்கொண்டா அரசு தலை சிறந்தது. அதை ஆட்சி செய்த குத்பு சாகி மரபுச் சுல்தான்கள் (கி. பி. 1518-1867) கோல்கொண்டாவிலும் அவர்களால் உருவாக்கப்பட்ட புதிய நகரமாகிய ஐதராபாத்திலும் அழகுமிகு பள்ளிவாசல்களையும் கட்டடங்களையும் கட்டினார்கள். தெலுங்கான பகுதியின்
213

Page 260
வளர்ச்சிக்கு ஆவன செய்தார்கள். மொகலாயப் பேரரசர் அவுரங்கசீப்புக் கி. பி. 1687 ஆம் ஆண்டு கோல்கொண்டாவை வென்றதன் பின்னர் ஆந்திரா முழுவதும் அவராட்சியின் கீழ் வந்தது.
அவுரங்கசீப்பின் மறைவுக்குப் பின்னர் மொகலாயப் பேரரசு அழியத் தொடங்கியது. நைசாம் உல்-முல்கு என்பவர் கி. பி. 1725ஆம் ஆண்டு அசப்சா என்ற பெயருடன் ஐதராபாத்தைத் தலைநகராகக் கொண்டு உரிமைபெற்ற அரசராகச் செயற்பட்டார். அவரும் அவருக்குப் பின் ஆட்சி செய்தவர்களும் நைசாம் என்றே அழைக்கப்பட்டார்கள்.
ஆங்கிலேயர்களும் பிரெஞ்சுக்காரர்களும் கி.பி.18ஆம் நூற்றாண்டில்- தென்னகத்தில் தங்கள் ஆதிக்கத்தை விரிவுபடுத்தும் முயற்சியில் நைசாமின் அரசியல் விவகாரங் களிலும் தலையிட்டார்கள். அத்தகைய தலையீட்டில் ஆங்கிலேயர்கள் வெற்றி பெற்றுக் கி. பி. 1765 - 66 ஆம் ஆண்டுகளில் நைசாமிடமிருந்து வடசர்க்கார் மாவட்டங்கள் என்று அழைக்கப்பட்ட கஞ்சம், விசாகப்பட்டினம், கோதாவரி, கிருட்டிணா முதலிய மாவட்டங்களைப் பெற்றார்கள். வெல்லெசுலி பிரபு இந்தியாவில் தலைமை ஆளுநராகப் இருந்தபோது பிரெஞ்சுக்காரர்களின் அரசியல் செல்வாக்கை முறியடிக்கத் துணைப்படைத் திட்டத்தைக் கொண்டுவந்தார். அத்திட்டத்தை ஐதராபாத்து நைசாம் ஏற்றுக்கொள்ளும்படி செய்து அவரிடமிருந்து கி. பி. 1800ஆம் ஆண்டு ஆனந்தபூர், பெல்லாரி, கடப்பை, கர்நூல் ஆகிய மாவட்டங்களை ஆங்கில அரசு பெற்றது. அவை நைசாமினால் கொடுக்கப்பட்டதினால் 'கொடை மாவட்டங்கள் என்று அழைக்கப்பட்டன. ஏற்கனவே கருநாடகப் போர்கள், மைசூர்ப் போர்கள் ஆகியவற்றில் ஆங்கிலேயர்கள் வெற்றிபெற்றுத் தென்னகத்தில் பல பகுதிகளைக் கைப்பற்றிக் கொண்டிருந்தனர். அவை எல்லாம் வெல்லெசுலி காலத்தில் ஒன்றாக இணைக்கப்பட்டுச் சென்னை மாநிலமாக அமைக்கப்பட்டது. எனவே, வெல்லெசுலி, சென்னை மாநிலத்தை உருவாக்கியவர் என்று சிறப்பிக்கப்பட்டார்.
இந்திய விடுதலை இயக்கத்தின்போது ஆந்திரத் தலைவர்கள் ஆங்கில ஆட்சியை எதிர்த்துப் போரிட்டனர். துக்கிராவு கோபாலகிருட்டிணையா 1921ஆம் ஆண்டு குண்டூர் மாவட்டத்தில் ஆங்கில ஆட்சியை எதிர்த்துச் சத்தியாக்கிரகம் நடத்தினார். மேற்குக் கோதாவரியைச் சேர்ந்த அல்லூரி சீதாராமராசு 1922-24ஆம் ஆண்டுகளில் ஆங்கிலேயரை எதிர்த்துப் புரட்சிக்கொடி ஏந்தினார். அதன் விளைவாக அவர் சுட்டுக் கொல்லப்பட்டார். காந்தியடிகள் 1930 - 34 ஆம் ஆண்டுகளில் நடத்திய சட்டமறுப்பு இயக்கத்தின்போது ஆந்திராவின் சிங்கம்' என்று சிறப்புப் பெயர்பெற்ற தங்குதூரி பிராகசம், நாகேசுவராவ் பந்தலு, திருமதி துர்க்காபாய் முதலானவர்கள் கலந்துகொண்டு நாட்டின் விடுதலைக்காகப் போராடினார்கள்.
மவுண்டுபேட்டன் பிரபு 1947ஆம் ஆண்டு வெளியிட்ட சூன் திட்டத்தின்படி இந்தியத் துணைக் கண்டத்தை இந்தியா, பாகிஸ்த்தான் என்ற இரண்டு நாடுகளாகப் பிரித்துச் சுதந்திரம்
214

கொடுக்கப்போவதாக அறிவிக்கப்பட்டது. மேலும் அப்பொழுது இருந்த 562 சுதேச அரசுகள் 1947ஆம் ஆண்டு ஆகஸ்டு 15ஆம் நாளுக்குள் இந்தியாவுடன் அல்லது பாகிஸ்தானுடன் இணைந்துவிட வேண்டும் என்றும், எந்த ஒர் அரசும் தனி நாடாக இயங்குவதை ஆங்கில அரசு அனுமதிக்காது என்றும் திட்டவட்டமாக அறிவிக்கப்பட்டது. அதன்படி இந்தியா சுதந்திரம் பெற்றபோது ஐதராபாத்து, காச்மீரம், சூனாகத்து ஆகிய மூன்று சுதேச அரசுகளைத் தவிர மற்ற எல்லா அரசுகளும் இந்தியா அல்லது பாகிஸ்தானுடன் இணைந்துவிட்டன. ஐதராபாத்து அரசு தனிநாடாக இயங்கும் என நைசாம் அறிவித்தார். இந்தியா சுதந்திரம் பெற்ற பின்னரும் அது தனி நாடாகவே இயங்கிவந்தது. ஆனால் உலக நாடுகளில் எதுவும் அதைத் தனிநாடாக ஏற்றுக்கொள்ளவில்லை. அதே நேரத்தில் ஐதராபாத்துத் தனி நாடாக இயங்குவதை இவ்வரசில் வாழ்ந்த மக்களும் ஏற்றுக் கொள்ளவில்லை. அங்கு வாழ்ந்த ஆறுகோடி மக்களில் 85 விழுக்காட்டினர் இந்துக்கள். ஆனால், நைசாம் மட்டும் முகம்மதியர் ஆட்சித்துறையில் இருந்தவர் பெரும்பகுதியினர் முகம்மதியர். இந்த நிலையில் நைசாமின் துணையுடன் காசிம் ரசுவி தலைமையில் இயங்கிய இராசாக்கர்கள் என்ற சமயநெறி கொண்ட முகம்மதியத் தீவிரவாதிகள் இந்துக்களின் உயிருக்கும் உடைமைக்கும் ஊறுவிளைவித்தனர். ஐதராபாத்து அரசில் சட்டம் ஒழுங்கு ஆகியவை சீர்குலைந்தன. இந்திய சுதந்திர அரசு நைசாமுக்கு இறுதி எச்சரிக்கை விடுத்தது. அதை நைசாம் புறக்கணித்தார். இந்தியாவின் தலைமை ஆளுநர் சி. இராசகோபாலாச்சாரியும் தலைமை அமைச்சர் நேருவும், சுதேச அரசுகளின் இணைப்பு அமைச்சர் சர்தார் பட்டேலும், ஐதராபாத்து அரசில் சட்டம் ஒழுங்கை நிலை நாட்டுவது இந்திய அரசின் கடமை என முடிவு செய்தனர். எனவே, 1948ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 13ஆம் நாள் படைத்தலைவர் செ. என். சவுதிரி தலைமையில் இந்தியப் படைகள் ஐதராபாத்து அரசில் நுழைந்தன. ஐதராபாத்தின் படைத்தலைவர் செப்டம்பர் மாதம் 18ஆம் நாள் சரணடைந்தார். அடுத்து சில மாதங்களில் சட்டம் ஒழுங்கு ஆகியவை நிலைநாட்டப்பட்டன. பின் 1950ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 26ஆம் நாள் ஐதராபாத்து அரசு இந்திய அரசுடன் இணைந்தது. நைசாம் பெயரளவில் நிருவாகத் தலைவராக இருக்க இசைந்தார்.
இந்தியா சுதந்திரம் பெற்றபோது, தெலுங்கர்கள் வாழ்ந்த ஒன்பது மாவட்டங்கள் ஐதராபாத்து அரசிலும் மற்றப் பன்னிரண்டு மாவட்டங்கள் சென்னை மாநிலத்திலும் இருந்தன. தெலுங்கு பேசும் மக்களுக்குத் தனி மாநிலம் வேண்டுமென தெலுங்கர்கள் கோரினார்கள். அக்கோரிக்கையை வலியுறுத்திப் பொட்டி சீராமுலு 1952ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் உண்ணா நோன்பிருந்து இறந்தார். தெலுங்கு மாவட்டங்களில் பதட்டநிலை நிலவியது. எனவே சென்னை மாநிலத்தில் இருந்த தெலுங்கு மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு 1953ஆம் ஆண்டு அக்டோபர் முதல் நாள் ஆந்திர மாநிலம் அமைக்கப்பட்டது. கர்நூல் புதிய ஆந்திர மாநிலத்தின் தலைநகராயிற்று.
ஆந்திர மாநிலம் அமைக்கப்பட்ட பின்னர் மொழிவழி மாநிலங்களை உருவாக்கும் பணியை இந்திய அரசு
இந்துக்கலைக்களஞ்சியம்

Page 261
மேற்கொண்டு ஒரு குழுவை நியமித்தது. அக்குழு தன்பணியைச் செய்து கொண்டிருந்தபோது ஆந்திராவிலும், ஐதராபாத்து அரசிலும் வாழ்ந்த எல்லாத்தெலுங்கர்களும் இணைந்து விசால ஆந்திராவை அமைக்க வேண்டுமென விரும்பினர். மேற்கூறப்பட்ட குழு இந்திய மாநிலங்களை மொழி வழியாக மாற்றியமைக்கலாம் என்று பரிந்துரைகளை வழங்கியது. மாற்றி அமைத்தற்குரிய வழி முறைகளையும் அது குறிப்பிட்டது. அப்பரிந்துரைகளை இந்திய அரசு ஏற்று 1956ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மாநில எல்லைகளை மாற்றும் சட்டத்தை இயற்றியது. அச்சட்டம் நவம்பர் முதல் நாள் நடைமுறைக்கு வந்தது. அதன்படி இந்தியாவில் 14 மொழிவழி மாநிலங்களும் 6 மத்திய அரசின் நேரடி ஆட்சிக்குட்பட்ட பகுதிகளும் அமைக்கப்பட்டன. அவற்றுள் ஆந்திரப் பிரதேசம் ஒன்று. இவ்வாறு அமைக்கப்பட்ட ஆந்திராவுடன், ஐதராபாத்து அரசு கலைக்கப்பட்டு அதிலிருந்த தெலுங்கானா என்ற தெலுங்கு மாவட்டங்கள் இணைக்கப்பட்டன. புதிய விசால ஆந்திரப் பிரதேசத்தின் தலைநகரம் கர்நூலிலிருந்து ஐதராபாத்துக்கு மாற்றப்பட்டது.
ஆந்திரத்தில் 1953 ஆம் ஆண்டிலிருந்து காங்கிரசுக் கட்சி ஆட்சி செய்து வந்தது. எனினும் பொருளாதார முன்னேற்றத்திலும், அரசியல் செல்வாக்கிலும் ஆந்திரப் பகுதியைச் சேர்ந்தவர்களே ஏற்றம் பெற்றிருப்பதாக தெலுங்கானா மக்கள் குறைப்பட்டார்கள். எனவே தெலுங்கானாவைச் சேர்ந்த தெலுங்கர்கள் டாக்டர் எம். சென்னாரெட்டி தலைமையில் தெலுங்கானாவைச் தனி மாநிலமாக அமைக்கப்பட வேண்டுமென 1969-1972ஆம் ஆண்டுகளில் போராட்டம் நடத்தினார்கள். ஆனால், அக்கோரிக்கையை மத்திய அரசு ஏற்க மறுத்தது. அதே நேரத்தில் தெலுங்கானாப் பகுதியின் வளர்ச் சிக்கு முன்னுரிமை தருவதற்காக மத்திய அரசு ஆறு அம்சத் திட்டத்தை வழங்கியது. அதைத் தெலுங்கானா மக்கள் ஏற்றுக் கொண்டனர். ஆந்திரப் பிரதேச மாநிலம் துண்டாடப்படாமல் ஒருங்கிணைந்த மாநிலமாகத் தொடர்ந்து இயங்கி வருகிறது. (நா. ப )
cébůJg)JTřůgUTa2OTib
ஆப்பனூரிற் கோயில் கொண்டுள்ள சிவபிரானுக்கு ஆப்பனூர்க் காரணர், ஆப்பனூரீசுரர் திருவாப்புடையார் என்றும் உமைக்கு அம்பிகையம்மை, குரவங்கமழ் குழலம்மை என்றும் பேர்.
ஆப்பனூர்ப் புராணம் பாடியவர் திருப்பூவணம் கந்தசாமிப் புலவர். அவர் பதினேழாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர்.
கடவுள் வணக்கம், நைமிசாரணிய வருணனை, சுகரை வினாவிய காதை, மூர்த்தி மகிமை எனும் முற்பகுதியை அடுத்து ஆப்பனூர்ச்சருக்கம் முதலாகத் தீர்த்த மகிமைச் சருக்கம் ஈறாக ஒன்பது சருக்கம் உள; 515 விருத்தமுள.
இந்துக் கலைக்களஞ்சியம்
(

ஆப்பனூர்ப் புராணம் செளமிய வருடம் (1909- 1910) அச்சிடப் பெற்றுள்ளது. (பொ.யூ.)
8,15)J35Tib 1J6öTigg5ít
கி.பி. 20ஆம் நூற்றாண்டில் தஞ்சையில் பெரும் புகழ் பெற்று வாழ்ந்த இவர் தென்னக இசைத் துறையிலும் சித்த ருத்துவ துறையிலும் | | 60 ஆராய்ச்சிகளை மேற்கொண்டவராவார். இவர் முத்துச்சாமி என்பவருக்கும் அன்னம்மாளுக்கும் புதல்வனாக 1859 ஆம் ஆண்டு ஆகஸ்ட் ாதம் 2ஆம் திகதி பிறந்தார். உயர்நிலைப் படிப்பை முடித்தபின் 884 ஆம் ஆண்டு தொடக்க ஆசிரிய பயிற்சியைத் திண்டுகல்லில் மேற்கொண்டார். பயிற்சி முடிந்ததும் அங்கிருந்த மாதிரிப் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றினார். ஆசிரியராகப் பணியாற்றும்பொழுதே மருத்துவத் துறை, சோதிடத் துறை, புகைப்படத் துறை முதலிய பல கலைகளிலும் ஈடுபாடு கொண்டு அவற்றைக் கற்று முன்னேறி வந்தார். மேலும் புகழ் பெற்ற வயலின் மேதை சடையாண்டிப் பெரியாரிடம் முறையாக வயலின் இசைப் பயிற்சி பெற்றார். இப் பயிற்சி பண்டிதரின் பிற்கால இசை ஆராய்ச்சிக்குப் பெரிதும் துணை நின்றது.
திண்டுக்கல்லில் ஆசிரியராகக் கடமை புரிந்த காலத்தில் திண்டுக்கல், வழியாக பவனி செல்லும் துறவியர்கள், சாதுக்கள், மருத்துவர்கள் முதலியோரைச் சந்தித்து பல மருந்துகளைத் தயாரிக்கும் முறைகளை அறிந்து வந்தார். தம் தந்தையாருடன் பிறந்த பதினொருவர் காலரா நோயினால் இறந்துவிட்ட செய்தியின் நினைவு அவருக்கு எப்பொழுதும் துயரத்தைக் கொடுத்து வந்தது. கொடும் நோய்களைத் தீர்க்கும் மருந்துகளைக் கண்டு பிடிக்க வேண்டும் என்ற எண்ணமும் ஆவலும் இளமையிலிருந்தே அவரிடம் இருந்து வந்தன.
சிறந்த மருந்துகளை கண்டுபிடிக்க வேண்டும் என்னும் சீரிய எண்ணம் ஆபிரகாம் பண்டிதரின் உள்ளத்தில் அரும்பிக் கொண்டேயிருந்தது. மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் உள்ள சுருளிமலையிலே தவநெறி கொண்டிருந்த சித்தர் பெருமானாகிய கருணானந்தரின் திருவருள் கிடைக்கப் பெற்றுப் பல்வேறு மருந்துகளின் செயன்முறையை அவரிடம் கற்றார்.
ஆபிரகாம் பண்டிதர் திண்டுக்கல்லை விட்டுத் தஞ்சைக்கு சென்று ஆசிரியப் பணி புரிய விரும்பினார். நேப்பியர் பாடசாலையிலே தமிழாசிரியராகப் பணி புரியும் வாய்ப்புக் கிடைத்தது. அவரது மனைவிக்கும் அப் பாடசாலையில் தலைமை ஆசிரியராக பணி புரியும் வாய்ப்புக் கிடைத்தது. அப்போது சங்க இலக்கியங்கள் முதலான, தமிழ்நூல்கள் பற்றிய அறிவையும் பெற்றுக் கொண்டார்.
சில ஆண்டுகளுக்குப் பின் ஆசிரியப் பதவியை விடுத்து மருத்துவ சாலையை திறந்தார். மருந்து வகைகளை திருந்தச் செய்து எளிய (குறைந்த) விலைக்கே எல்லோருக்கும் விற்றார். தமிழகத்தில் கி. பி. 1898 ஆம் ஆண்டு பிளேக் என்னும்
215

Page 262
கொள்ளை நோய் பரவி ஏராளமானவர்கள் இறந்தனர். பண்டிதர் முயன்று கண்டு பிடித்த மூலிகை மருந்துகளால் ஊர் தோறும் மாந்தர் உயிர் பிழைத்தனர்.
தஞ்சையிற் பெரிய வளமனை கட்டினார். அதற்கருகில் புதிய முறையில் பண்ணை அமைத்தார். பயிர் வகைகளையும் கனி மரங்களையும் காய்கறி வகைகளையும் விளைவித்து மக்களிடையே புதுமுறை வேளாண்மையில் பற்றுதலை உண்டாக்கினார். சென்னை மாநில ஆளுனர் பண்டிதரின் இல்லம் வந்து தங்கிப் பயன் மிகத் தரும் பண்ணையையும் மருந்து செய் மாபெரும் சாலையினையும் மின் அச்சகத்தையும் கண்டு வாழ்த்தினார். 'இராவ் சாகிபு என்னும் பட்டத்தை ஆங்கில அரசு வழங்கியது.
இவர் தமிழிசையை முதன் முதலில் நெறிமுறையாக ஆராய்ந்து 1917 இல் கருணாமிருத சாகரம் என்னும் நூலை வெளியிட்டார். இதன் முதற் பாகம் பண்டைத் தமிழரின் இசையிலக்கணத்தை விரிவாக விளக்குகின்றது. இதன் இரண்டாம் பாகம் பன்னிரு நரம்புகட்கும் உரிய அலகுகள் (சுருதிகள்) 22 அல்ல என்றும் அவை 24 என்றும் மிக விரிவாக தருக்க நெறிமுறையில் வாதிட்டு நிறுவுகிறது. கருனாமிருத சாகரம் மேலும் பல இனிய இசைச் செய்திகளையும் விளக்கியுள்ளது. இது இணை, கிளை, நட்பு நரம்புகளைக் கண்டு பிடிக்கும் முறையை நிலைநாட்டியுள்ளமை பெரிதும் பாராட்டுதற்குரியது.
"இணை கிளை பகை நட்பு என்றிந் நான்கின்” என்று சிலப்பதிகாரம் கூறியுள்ள பகுப்பினைத் தமிழகத்தில் தெளிவுற முதன்முதல் விளக்கிப் பயன்படுத்திக் காட்டிய பெருமை ஆபிரகாம் பண்டிதரையே சாரும்.
மேலும் ஆளத்தியின் (இராகம் பாடுதல்) இலக்கணம், பண்களைப் புடமிடல், ஆங்கில இசை முறையில் தமிழிசையை எழுதுதல், கீர்த்தனைகட்கு இசையமைக்கும் நெறிமுறைகள், வட மொழியிசையியலோடு தென்னக இசையியலை ஒப்பிடுதல் முதலியவை பற்றியும் விவரித்துள்ளார். பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, சிலப்பதிகாரம் முதலிய நூல்களிற் காணப்படும் தென்னக இசை பற்றிய குறிப்புகளைத் தொகுத்து அதன் தொன்மையை விளக்கியுள்ளார்.
இவர் தென்னக இசை தோன்றி வளர்ந்த வரலாற்றைத் தொகுத்தார். தான் வாழ்ந்த காலத்து இசை மேதைகளின் வரலாற்றுச் சுருக்க அகராதி ஒன்றையும் தயாரித்தார்.
கருணாமிர்தசாகரம் இசை இலக்கணங்கள் அனைத்தையும் திரட்டித் தருவதாக அமைந்துள்ளது. இந்நூலே விபுலானந்தரின் யாழ் நூலுக்கு வழிகாட்டியாக அமைந்தது என்று தென்னக இசையியல் என்னும் நூலில் அதன் ஆசிரியர் குறிப்பிட்டுள்ளார்.
கருணாமிர்த சாகரம் என்னும் நூலின் இரண்டாம் பாகம் இவரது மகள் மரகதவல்லி துரை பாண்டியனால் எழுதப்பட்டது.
216

ஆபிரகாம் பண்டிதரின் குடும்பம் வழி வழியாக இசைக் குடும்பமாகத் திகழ்ந்து வருகின்றது.
தமிழில் கீதங்களையும் வர்ணங்களையும் இயற்றியது
மட்டுமல்லாமல் அவற்றை மாணவ மாணவியருக்குக் கற்பிக்க வேண்டும் என்று அழுத்தமாகக் கூறித் தமிழிசை இயக்கத்திற்கு வழிகோலியவர் ஆபிரகாம் பண்டிதர். (தே. ஹ.)
ஆமுக்தமால்யதா
'ஆடிக்கொடுத்தாள்’ எனப்பொருள் தரும் ஆமுக்த
மால்யதா, பூரீ ஆண்டாள் வைபவம் பற்றித் தெலுங்கு
மொழியிலே எழுந்த காவியமாகும்.
இதனைப் பாடியவர் கிருஷ்ண தேவராயர் (1509- 1529) எனும் விஜயநகர வேந்தர். கிருஷ்ண தேவராயர் வைணவத்தைத் தழுவிய போதும் பிற வைதிக சமயக் கடவுளரை வணங்கியும் தானங்கள் பலவற்றை அளித்தும் பொது நோக்குடையவராக விளங்கியவர்.
ஆழுக்தமால்யதாவினைக் கிருஷ்ண தேவராயரின் அவைப் புலவர் அல்ல சானி பெத்தன்ன இயற்றியதாகவும் சிலர் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
ஆமுக்தமால்யதாவில் ஆழ்வார் ஆசாரியார்களுடைய அவதார மகிமைகள் அழகாகக் கூறப்பட்டுள்ளன என்றும் பூரீ ஆண்டாள் பாசுரங்களின் கருத்துக்களை விளக்கும் வகையிலிருந்து திவ்விய பிரபந்தங்களில் ஆசிரியருக்கு மிகுந்த ஈடுபாடு இருந்தமை தெளிவாகின்றது என்றும் கூறுவர்.
(பொ. யூ.)
ஆய்ச்சியர்குரவை
ஆயர்மகளிர் ஆடும் குரவைக் கூத்து ஆய்ச்சியர் குரவை எனப்பட்டது. தீய உற்பாதங்கள் தோன்றியபோது ஆய்ச்சியர் திருமாலை நோக்கி இக்கூத்தினை ஆடியதாகத் தெரிகின்றது. இக்கூத்தினை முன்னர் ஆயர்பாடியிற் கண்ணனும் பலராமனும் நப்பின்னையும் ஆடியதாக ஐதீகம். எனவே அதனை ஆடினால் தீமையகலும் என்று நம்பினர்.
சிலப்பதிகாரத்திலே ஏழு மகளிர் ஆடுவதாக ஆய்ச்சியர் குரவை காணப்படுகின்றது. அப்பொழுது அவர்கள் வட்டமாக நின்று கைகோர்த்து ஆடுவர். அவர்களிலே மூவர் கண்ணனாகவும் பலராமனாகவும் நப்பின்னையாகவும் பாவனை செய்யப்படுவர். எழுவரும் ஏழிசைகளான குரல், துத்தம், கைக் கிளை, உழை, இளி, விளரி, தாரம் எனப் பெயர் பெறுவதிலிருந்து இக்குரவையில் இசை பெறும் முக்கியத்துவம் உணரப்படும்.
இக்கூத்தில் இடம்பெறும் பாடல்களின் தன்மையை
இளங்கோவடிகளின் சிலப்பதிகாரத்தின் ஆய்ச்சியர் குரவையிற் காணலாம். (பொ. யூ.)
இந்துக் கலைக்களஞ்சியம்

Page 263
திரு ஆய்ப்பாடி
வட நாட்டிலே யமுனாநதி தீரத்திலே மத்ரா என்னும் இருப்புப் பாதை நிலையத்திற்கு நான்கு மைல் தொலைவிலுள்ளது கோகுலம் என்றும் ஆய்ப்பாடி என்றும் போற்றப்படும் வைணவ திவ்விய தலம்.
இங்கு நின்ற திருக்கோலத்தில் எழுந்தருளியுள்ள நவமோஹன கிருகூடிணன் உருக்மிணி பிராட்டியுடனும் சத்திய பாமை பிராட்டியுடனும் அருள் புரிகின்றார்.
பெரியாழ்வார், ஆண்டாள், திருமங்கையாழ்வார் ஆகியோர் மங்களாசாசனம் செய்த பெருமையுடையது திரு ஆய்ப்பாடி (பெரியாழ்வார் திரு. 112, 114, 22.5; திருப்பாவை 1. நாச்சியார்
திருமொழி, 12.2; பெரிய திருமொழி 18,4, 5.5.5).
(பொ. பூ)
ஆயி
பதினான்காம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும் பதினைந்தாம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் வாழ்ந்தவர்; திருநாராயணபுரத்து ஆயி என அழைக்கப் பெறுவர்; திருத்தாழ்வரை தாசர், பூரீ வாசுதாஸர், ஜநந்யாசாரியர் எனவும் வழங்கப் பெறுவர்; பூரீ மணவாள மாமுனிகளின் காலத்தவர்; கிடாம்பி திருமலை ஐயங்காரின் சீடர், நாலூராச்சான் பிள்ளை சீடர் என்பாரு முளர்; மைசூரில் திரு நாராயணபுரத்தில் வாழ்ந்தவர்.
திருப்பாவை, திருமாலை, ஆசார்ய ஹிருதயம், பூனி வசனபூஷணம் என்பனவற்றிற்கு வியாக்கியானம் செய்தவர்.
(பொ. யூ.)
cé8,í 11, 1912. Lí
புராதன காலத்து இந்திய விஞ்ஞானிகளிற் தலைசிறந்தவர் ஆரியபட்டர். அவர் சகாப்தம் 398 இல் (கி. பி. 476) குசுமபுரம் என்னும் பாடலிபுரத்திலே பிறந்தவர். அவர் எழுதிய நூல்களில் ஆர்யபட்டீய, தசகீதிகாசூத்ர, ஆர் யாஷ் டசத என்பன கிடைத்துள்ளன. அவற்றுக்குப் பிற்காலத்திலே சிலராற் பாடியங்கள் எழுதப்பட்டன. அவர் கணக்கியல், வானியல் ஆகிய துறைகளிலே பெருமேதையாக விளங்கினார். புராதன கால இந்திய விஞ்ஞானத்துறையின் வளர்ச்சியில் ஆர்யபட்டரின் சிந்தனைகள் உன்னதமான நிலையினைப் பிரதிபலிக்கின்றன.
ஆர்ய பட்டரே முதன்முதலாகக் கணக்கியலை ஒரு தனித்துவமான அறிவியல்துறையாகக் கொண்டவர். அக்ஷர கணிதம், கேத்திர கணிதம் ஆகிய துறைகளின் வளர்ச்சியில் அவர் கொண்டிருந்த பங்கு மகத்தானது. கணக்கியலின் வளைவு, விரிவு, பரப்பு, கன அளவு, பெருக்க ஏற்ற இறக்கத் தொடர்பு, சமானங்கள் முதலிய விடயங்கள் தொடர்பான அவரின் கருத்துகள் மிக நுட்பமானவை. C என்பதன் பெறுமானம் 3, 1416 என்று அவர் கணித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்துக் கலைக்களஞ்சியம்

பூமி உருண்டை வடிவமானது, அது இயல்பாகவே சுழன்று செல்வது என்ற கருத்துக்களை முதன்முதலாக ஆர்யபட்டர் கூறினார். ஆயினும், அவருக்குப் பின்வந்த வராஹமிஹிரர், பிரம்மகுப்தர் போன்ற வான சாஸ்திர விற்பன்னர்கள் அவற்றை நிராகரித்துப் பாதகமாக விமர்சித்தனர். பல நூற்றாண்டுகளின் பின்பு, வித்துவபூர்வமான ஆய்வுகளின் அடிப்படையில் ஐரோப்பிய விஞ்ஞானிகள் கண்டறிந்தனவற்றால் ஆர்யபட்டரின் கருத்துக்கள் உறுதியாகிவிட்டன.
கணக்கியலிலே தசமதான முறையினை உறுதிப்படுத்தியமை ஆர்யபட்டரின் சிறப்புமிக்க சாதனையாகும். விஞ்ஞானத் துறையின் வளர்ச்சியிலும் குறிப்பாகக் கணக்கியலிலும் தசமதான முறையின் முக்கியத்துவம் மகத்தானது. அது அவற்றில் ஏற்பட்ட அபரிமிதமான வளர்ச்சிகளுக்கு ஆதாரமாகி விட்டது. புராதன கால இந்துக்களே சூன்யத்தை எண்கணித முறையிலே பயன்படுத்தினார்கள். அந்த வழக்கம் ஆர்யபட்டரின் சாதனைகள் மூலம் உறுதியாகிவிட்டது. அது மத்திய காலத்திலே அராபிய உலகிற் பரவி அங்கிருந்து ஐரோப்பிய தேசங்களை அடைந்தது.
கிரகணங்கள் பற்றி வித்துவபூர்வமான கருத்தினை முதன்முதலாகச் சொல்லிய சிறப்பும் இந்திய விஞ்ஞானி களிடையே ஆர்யபட்டருக்கு உரியதாகும். இராகு பூமியைப் பற்றிக் கொள்வதாற் கிரகணங்கள் ஏற்பட்டன என்பது புராதன காலத்து இந்தியர்களின் நம்பிக்கையாகும். இதனை நிராகரித்த ஆர்யபட்டர் சந்திரனிலே பூமியின் நிழல் படிவதாற் கிரகணங்கள் ஏற்பட்டன என்று கூறினார்.
இந்திய விஞ்ஞானிகளிற் பலர் ஆர்யபட்டரின் சிந்தனை களை ஒப்புக்கொண்டனர். அவரின் நூல்கள் வித்தியா பீடங்களிலும் ஆய்வாளராலும் பெரிதும் போற்றிப் பேணப்பட்டன. அவை ஏட்டு வடிவிலே கிடைத்துள்ளமையும் அவற்றுக்கு உரைநூல்கள் எழுதப்பட்டுள்ளமையும் இதற்கான சான்றுகளாகும். ஐந்தாம் நூற்றாண்டின் முடிவிலே வாழ்ந்தவரான வராஹமிஹிரர் முற்காலத்து விஞ்ஞானிகள் பலரைக் குறிப்பிடுகின்றார். சிங்க, லாட்ட பிரத்யும்bன, விஜயநந்தி, ஆர்யபட்டர் என்போர் அவர்களிற் பிரசித்த
கிடைத்துள்ளன. (f. L.)
©ួយflugh
வைதிக மொழியிலுள்ள வேதம் அறிவின் இருப்பிடமாகக் கருதப்படும். வேதமானது மந்திரம் (சங்கிதை), பிராமணம், ஆரணியகம், உபநிடதம் என்னும் நான்கு பிரிவுகளையுடையது. அவற்றிலே முதலிரண்டையும் கர்ம காண்டம் என்றும், அடுத்த இரண்டையும் ஞான காண்டம் என்றும் வழங்குவதுண்டு. வேறெரு வழக்கிலே கர்ம காண்டம் முன்னையது போல அமைய, ஆரணியகம் உபாசனா காண்டமாகவும் உபநிடதம் ஞானகாண்டமாகவும் பிரிக்கப்பட்டுள்ளன.
ஆரணியகம் பிராமணங்களின் இறுதியில் வரும் பகுதியாக அமையும். மிகப் பழைய உபநிடதங்கள் எல்லாம் ஆரணிய கங்களுள் அவற்றின் ஒரு உறுப்பாக அமைந்துள்ளன; அங்கெல்லாம் ஆரணியகங்களையும் உபநிடதங்களையும்
2

Page 264
தனித்தனியே பிரித்து வரையறுத்தல் எளிதன்று.
வேதாந்தம் என உபநிடதம் பெயர் பெறுவதால்
அதனிலிருந்து பிரிக்க முடியாதபடி ஆரணியகம் இடம்
பெறும்போது அதுவும் வேதாந்தம் என்றழைக்கப்பட்டது.
ஆரணியகத்தை வன நூல் என்று வழங்குவர். வானப்பிரஸ்தர்களுக்கென எழுந்தவை ஆரணியகம் என்ற கருத்து இதற்கு ஒரு காரணம். ஆரணியகத்திலுள்ள இரகசிய கருத்துக்களைத் தகுதியற்றவர் அறிந்தால் பெருங்கேடு விளையும் என்ற நம்பிக்கையில் மக்கள் வாழ் இடங்களில் அவற்றை ஒதாமல், காடுகளிலேதான் அவை படிக்கப்பட்டன. இதனாலும் ஆரணியகம் வனநூல் எனப்பட்டது.
ஞானிகள் வனத்திலே செபம், தவம், தியானம் என்பனவற்றை மேற்கொண்டு வெளியிட்ட கருத்துக்கள் ஆரணியகத்தில் அடங்கியுள்ளன என்பர். வனத்தினை வாசமாகக் கொண்டோரின் அகநிலைத் தியான வழிபாட்டிற்கு ஆரணியகம் உதவியாகின்றது. மதச் சடங்குகள் பற்றிய தத்துவ விளக்கங்களைத் தொடர் உருவகக் கதைகளாக அமைத்துக் கூறும் பாங்கினை ஆரணியகத்திற் காணலாம்.
ஐதரேய ஆரணியகம், கெளவீதகி ஆரணியகம், தைத்திரீய ஆரணியகம் முதலான சில ஆரணியகங்களே இன்று கிடைப்பனவாகவுள்ளன. (பொ. பூ)
cé, fluj 3-1DTegid
UIỗ தயானந்த சரஸ்வதி 1875 ஆம் ஆண்டிலே பம்பாயில் நிறுவியது ஆரியசமாஜமாகும். அதன் ஆரம்பதசைகளிலே பஞ்சாப் பிரதேசத்தில் மிகுந்த செல்வாக்குப் பெற்றதால், லாகூர் ஆரியசமாஜத்தின் தலைமைப் பீடத்தின் இருப்பிடமாகியது.
மூலசங்கர் என்ற பெயருடன் தோன்றி, தயானந்த எனும் துறவுப் பெயரை மேற்கொண்டு, சுவாமி விராஜானந்தரின் சீடராகி, நான்கு வருடம் வேதங்களை அவற்றின் தூய வடிவிலே கற்று, வேதத்தின் பிரசாரகராய்த் தயானந்த சரஸ்வதி என்ற பெயருடன் பல்வேறு இடமும் யாத்திரை மேற் கொண்டார். 1874 இலே இந்தியில் தாம் எழுதிய சத்தியார்த்த பிரகாசிகையில் அவர் தம் சமாஜத்தின் கோட்பாடுகளை எல்லாம் விரிவாகக் காட்டியுள்ளார்.
ஆரிய சமாஜத்தினர் வேதங்களையே முக்கிய வைதிக நூல்களாகக் கொண்டவர்கள். "வேதத்தை நோக்கித் திரும்புதல்” என்பது தான் அவர்களின் தாரகமந்திரம் வேதசமயத்தை உயிர்ப்பிப்பதையே நோக்கமாக உடையவர்கள்.
வேதத்தை நித்தியமானதாகவும், மாசற்றதாகவும், பூரணத்துவம் உடையதாகவும், கடவுள் முழுமையுடன் வெளிப் படுத்தியதாகவும் சமாஜத்தினர் நம்பினர். ஏனையவை வேதத்தோடு தொடர்புடையனவாக இருப்பினும் அவற்றை அவர்கள் ஏற்கவில்லை.
218

இந்தியாதான் சகல பண்பாடுகளுக்கும் மூல காரணம் என்றும், சங்கதமே உலக மொழிகளுக்குத் தாய்மொழி என்றும், உலகியலறிவு சமய அறிவு யாவும் வேதத்திலிருந்தே தோன்றியவை என்றும், விஞ்ஞானக் கோட்பாடுகளும் கண்டுபிடிப்புகளும் வேதத்திலே குறிப்பிடப்பட்டுள்ளன என்றும் ஆரியசமாசத்தினர் நம்பினர்.
ஆரியசமாசத்தினர் கருமத்தினையும் மறுபிறவியையும் ஏற்றனர்; வேதாந்தி போல விடுதலையின் போது தனித்தன்மை இழக்கப்படுவதாகக் கருதவில்லை; ஆத்மா சுதந்திரமானது என்றும் கடவுளிலிருந்து வேறுபட்டது என்றும் தொடர்ந்து செய்யும் நன்மையினால் மோட்சம் அடைகின்றது என்றும் கொள்வர்.
இருக்கிலே 33 தெய்வம் குறிப்பிடப் பெற்ற போதும் அங்குள்ளது ஒரு தெய்வ வழிபாடு என்றும் அப்பெயர்கள் யாவும் அதன் தன்மைகளைச் சுட்டுவனவாகவும் சமாசத்தினர் கூறுவர். விக்கிரக வணக்கத்தை வேதம் கூறாததால் அதனை அவர்கள் எதிர்த்தனர்.
வைதிக சமயத்திலே புகுந்து விட்ட மாசுகளைத் துடைத்தெறிய முற்பட்டவர்களிலே ஆரிய சமாசத்தினரும் குறிப்பிடத்தக்கவர்.
பல தெய்வ வணக்கம், விக்கிரக வழிபாடு, மிருகபலி, சிராத்த சடங்குகள், நீண்ட யாத்திரை, பிறப்படிப்படையிலான சாதிப்பாகுபாடுகள், தீண்டாமை, பிள்ளைமணம், பெண்ணின் பின்தங்கிய நிலை, முகத்திரை முதலியனவற்றை ஆரிய சமாஜத்தினர் கண்டித்தனர். விதவை மீண்டும் மணம் செய்வதை ஆதரிக்காத போதும் பிள்ளைப் பேற்றுக்காக விதவையுடன் உடலுறவு கொள்வதை அனுமதித்தனர்.
கிறித்தவப்பரம்பலை ஆரியசமாஜத்தினர் வன்மையாக எதிர்த்தனர். ஆரிய துண்டுப்பிரசுரசங்கம், மகளிர் ஆரிய சமாஜம், இளைஞர் ஆரிய சமாஜம், வேத சாரணர்படை முதலிய அமைப்புகள் மூலமும் பள்ளிக்கூடம், கல்லூரி, அனாதாசிரமம், விதவாவிடுதி, உதவிநிலையம் மூலமும் கிறித்தவ பரம்பலைத் தடுக்க முற்பட்டனர். சுத்தக்கிரியை மூலம் கிறித்தவத்தைத் தழுவிய வைதிகரை மட்டுமன்றிக் கிறித்தவர்களையும் வைதிகசமயத்துள் கொண்டுவர முயன்றனர்.
ஆரிய சமாசத்தினர் ஞாயிற்றுக்கிழமைகளிலே வழிபாடு செய்வதைக் கிரமமாகக் கொண்டவர்கள் வேதக்கல்விக்கும் குருகுலகல்விக்கும் சிறப்பிடம் அளித்தவர்கள், தீகூைடி பெறுவது இன்றியமையாதது என்று கருதியவர்கள், ஓமம் வளர்ப்பதற்கும் சந்தியாவந்தனம் முதலியவற்றிற்கும் சிறப்பிடம் கொடுத்தவர்கள்; காயத்திரி மந்திரத்திற்கு தனியிடம் தந்தவர்கள்; அக்கினிக்கு கிரியைகளில் முக்கியத்துவம் தந்த போதும் அதற்கெனத் தனிப்பட்ட குருமாரை உருவாக்காது சுதந்திரமாக நடத்தியவர்கள்.
ஆரியசமாஜம் தன்னுறுப்பினரிடம் பத்து நியமங்களைப் பின்பற்றுவதோடு தபம், சத்தியம், இறைபக்திக்கு முக்கியத்துவம் அளிப்பதை எதிர் பார்த்தது. திருமணமாகாத ஆரியன்
இந்துக் கலைக்களஞ்சியம்

Page 265
பிரமச்சரியத்தை வளர்க்க வேண்டும் என்று எதிர் பார்த்தது. தம் வருமானத்தில் ஒரு வீதத்தை அவர்கள் சமாஜத்திற்கு அளிக்க வேண்டும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது.
தயானந்தருக்கும் (1824- 1883) பின்பு, சுமார் பத்தாவது வருடத்திலே ஆரியசமாஜம் இரண்டாகப் பிளவுபட்டது. லாஜ்பத்ராயின் தலைமையில் ஒரு பிரிவு நவீன கல்வி முறையை வற்புறுத்தி, உணவு வகையிற் சுதந்திரம் அளித்து, ஆரிய சமாசத்தின் கதவுகளை எல்லோருக்கும் திறந்து விட முன்வந்தது. இதனை மறுத்தவர்கள் தாவர போசனத்தையும் பண்டைய குருகுல கல்வியையும் வற்புறுத்தி இந்துக்களை மட்டும் தம் சமாஜத்துள் சேர்க்க முடியும் என்று துணிந்தனர்.
(பொ.யூ.)
©ួfiយ
இந்திய வரலாற்றில் ஆரியர், ஆரியம் என்ற சொற்கள் பயின்று வருகின்றன. ஆரியர்கள் இந்திய நாட்டைச் சேர்ந்தவர்களா, வெளிநாடுகளில் இருந்து இங்கே வந்து குடியேறியவர்களா என்ற கேள்விகள் வரலாற்று அறிஞர்களாலும் மொழியியல் வல்லுநர்களாலும் ஆராயப்பட்டுள்ளன. பொதுவாக, ஆரியர்கள் என்ற சொல் ஆரிய இனத்தையும், ஆரியம் என்ற சொல் ஆரியர்களுடைய மொழியாகிய சமசுகிருதத்தையும் குறிப்பனவாகும். விந்தியமலைக்கு வடக்குப் பகுதியில் ஆரியர்கள் குடியேறியதால் அப்பகுதிக்கு ஆரியாவர்த்தம் என்ற பெயரும் வழங்கியது. விந்திய மலைக்குத் தெற்குப் பகுதியிலும், ஆரியர்கள் பரவிக் குடியேறிய போதிலும் பெரும்பாலோர் திராவிட இனத்தைச் சேர்ந்தவர்களாகக் கருதப்பெறுகிறார்கள். ஆரியர்களுடைய வரலாற்றை அறிந்து கொள்ளுவதற்கு வேதகால இலக்கியங்களே சிறந்த சான்றுகளாக உள்ளன.
வேதகால இலக்கியங்கள்
சமசுகிருத மொழியில் உள்ள இருக்கு, யசுர், சாமம், அதர்வணம் என்ற நான்கு வேதங்களும் அவற்றின் பாகுபாடுகளாகிய சம்கிதை, பிராணம், ஆரண்யம், உபநிடதங்கள் என்ற பகுதிகளும் வேதகால இலக்கியங்கள் என்று சொல்லப் பெறுகின்றன. வேதம் என்ற சொல் 'வித் என்ற பகுதியிலிருந்து தோன்றியது என்றும், அது உண்மையான ஞானத்தைப் போதிக்கும் நூல் என்றும் அறிஞர் கூறுவர். வேத இலக்கியங்களில், சம்கிதையும் பிராமணமும் கர்மகாண்டம் என்றும், ஆரண்யகமும் உபநிடதங்களும் ஞான காண்டம் என்றும் கருதப்பெறுகின்றன. நான்கு வேதங்களின் பகுதிகளாகிய சம்கிதை, பிராமணம், ஆரண்யகம், உபநிடதங்களைப் போன்றவை சுருதிகள் அல்லது இறையருள் பெற்ற இலக்கியங்கள் எனக் கூறுவர். இவற்றிற்கு 'அபுருசேயா (மனிதர்களால் இயற்றப்பெற்றவையல்ல) என்ற பெயர் இருந்தபோதிலும், வேத காலத்தில் வாழ்ந்த முனிவர்களால் இவை அருளப் பெற்றவை என்ற கருத்து நிலவுகிறது. இந்திய நாட்டில் குடியேறிய ஆரியர்களால் இந்த வேத இலக்கியங்கள் இயற்றப் பெற்றுப்பிறகு செவிவழியாக மனனம் செய்யப் பெற்றுப் பின்னர் பஞ்சநதி
இந்துக் கலைக்களஞ்சியம்

தீரத்தில் ஆரியர்கள் நிலை பெற்ற பிறகு நூல்வடிவில் எழுதப்பெற்றனவெனக் கூறலாம். இந்த வேத இலக்கியங்கள் ஒரே காலத்தில் முழுமையாகத் தொகுக்கப் பெற்றவையல்ல. பல்வேறு காலங்களில் பல இருடிகளால் இயற்றப் பெற்றுப் பின்னர் முழுமையான வடிவைப் பெற்றனவாகும்.
நான்கு வேதங்களில், இருக்கு, யசுர், சாமம் என்ற மூன்றும் திரியை என்ற சிறப்பான பெயரில் குறிக்கப் பெறுகின்றன. ஆரியருடைய வரலாற்றை அறிவதற்கு, இருக்கு, யசுர், அதர்வணம் என்ற மூன்று வேதங்கள் சிறப்பாகப் பயன்படுபவையாகும். அதர்வண வேதம் முதல் மூன்று வேதங்களுக்குப் பிறகு தோன்றியதாயினும், இருக்குவேத காலத்திற்கு முற்பட்ட ஆரியர்களுடைய வரலாற்றைக் கூறும் பல வரலாற்றுண்மைகளைக் கொண்டுள்ளது. பண்டைக் கால ஆரியர்களுடைய வாழ்க்கை வரலாற்றை இருக்குவேதத்தில் காணமுடிகிறது. ஆரண்யகத்திலும் உபநிடதங்களிலும் பிற்கால ஆரியர்களுடைய வரலாற்றை உய்த்துணரலாம்.
ஆரியர்களின் ஆதி இருப்பிடம்
வேதகால இலக்கியங்களைக் கொண்டு ஆரியர்கள் வெளி நாட்டிலிருந்து இந்தியாவிற்கு வந்தனரா அல்லது இந்தியாவிலிருந்து வெளிநாடுகளுக்குச் சென்றனரா என்று ஆராய்வது அமைவுடைத்தாகும். ஆரியர்களின் ஆதி இருப்பிடம் ஐரோப்பியக் கண்டம் என்றும் ஆசியப் பெருங்கண்டத்திலுள்ள நாடுகள் என்றும் இருவேறு கொள்கைகளை ஆராய்ச்சியாளர் பின்பற்றியுள்ளனர். வடதுருவத்திலிருந்து பஞ்சநதி தீரம் வரையில் உள்ள நாடுகளில் சில பகுதிகளில் ஆரியர்களின் ஆதி இருப்பிடம் இருந்திருக்கக்கூடும் என்று கருதியுள்ளனர். பேராசிரியர் கைல்ஸ் (Giles) என்பார் அங்கேரி நாடு ஆரியர்களுடைய ஆதி இருப்பிடமாக இருக்கலாம் என்று கூறினார். மொழியியல் துணைக்கொண்டு ஆரிய மொழியான சமஸ்கிருதம், இந்தோ - ஐரோப்பிய மொழியினத்தைச் சேர்ந்தது என்றும், உருசியாவிற்கு அருகில் உள்ள இலிதுவேனிய மொழிக்கும், சமஸ்கிருத மொழிக்கும் ஒற்றுமையுள்ளது என்றும், ஆகையால் வடக்கு ஐரோப்பாவில் ஆரியர்கள் ஆதிமுதல் இருந்திருக்கலாம் என்றும் கூறுவர். மற்ற ஐரோப்பிய ஆராய்ச்சியாளர் பிரான்சு நாட்டின் வடபகுதியிலிருந்து யூரல் மலைகள் வரை பரவியுள்ள செருமன் சமவெளியிலும் கருங்கடலுக்கு வடக்கில் உள்ள உருசியப் பகுதியிலும் ஆரியர்கள் பரவி வாழ்ந்திருக்கவேண்டுமெனக் கூறுவர். உலோகமான்ய பாலகங்காதர திலகர் என்பார் தாம் எழுதிய 'ஆரியர்களின் வடதுருவ ஆதி இருப்பிடம் என்னும் நூலில் வடதுருவத்தில் ஆரியர்கள் வாழ்ந்தனர் என்று கூறுவர். ஐரோப்பியக் கண்டத்திலேதான் இந்தோ - ஐரோப்பிய மொழிகள் வழங்கும் இடங்கள் மிகுதியாக உள்ளன; ஆரிய மொழியாகிய சமஸ்கிருதமும் இந்தோ - ஐரோப்பிய மொழி இனத்தைச் சேர்ந்ததாகையால் ஆரியர்கள் ஐரோப்பாக் கண்டத்தைச் சேர்ந்தவர்கள் என்று இவர்கள் நம்பினர். இந்தோ - ஐரோப்பிய மொழிகள் வழக்கத்திலுள்ள பகுதிகள் ஐரோப்பாக் கண்டத்தில் மிகுதியாகவும், ஆசியாக் கண்டத்தில் குறைவாகவும் இருப்பதால், இவர்களுடைய கொள்கை வலிவுடையதாகத் தோன்றுகிறது.
219

Page 266
ஆரியர்கள் ஆசியாக் கண்டத்தில் இருந்தவர்கள் என்ற கொள்கைப்படி, மத்திய ஆசியாவும் இந்தியத் துணைக்கண்டமும் ஆரியர்களின் ஆதி இருப்பிடம் ஆகும் எனக் கூறுவர். மத்திய ஆசியாவில் இருந்த தங்களுடைய ஆதி இருப்பிடத்திலிருந்து, உலக வரலாற்றின் தொடக்கக் காலத்தில் ஆரியர்கள் ஐரோப்பாவிற்குக் குடியேறினர் என்றும் கூறுவர். இருக்குவேத காலத்து இந்தியா என்ற நூலை எழுதிய ஏ. சி. தாஸ் (A.C.Doss) என்ற வரலாற்று அறிஞர், சிந்து, சீலம், சீனாபு, ரவி, பியஸ், சட்லஸ், சரசுவதி என்னும் ஆறுகளால் வளம்பெற்ற சப்த சிந்து நாடே (Sapta sindhu) ஆரியர்களுடைய ஆதி இருப்பிடம் எனக் கூறுவர். இருக்குவேதத்தில் கூறப்பெற்ற நிலவியல் அமைப்பும், மரம்செடி கொடிகளும் சப்த-சிந்துப் பகுதியில் அடங்கிய காசுமீரப் பள்ளத்தாக்கும், காந்தாரம், பஞ்சாப் கங்கை ஆற்றின் மேற்குப் பகுதியையும் அங்குள்ள உயிர் விலங்குகளையும் ஒத்துள்ளன. வேதங்களில் ஆரியர் என்ற சொல் தஸ்யு அல்லது தாசர்கள் என்ற திராவிடர் என்பவர்களை வேறுபடுத்திக் காட்டுவதற்கு வழங்கியது. சப்தசிந்துப் பகுதிக்கும், மேற்கு ஆசிய நாடுகளுக்கும் நிலவழித் தொடர்பிருந்தமையால், ஆரியர்கள் இந்தியாவில் இருந்து ஈரான் - ஈராக் ஆகிய நாடுகளுக்குச் சென்றிருக்க வேண்டும் என்றும் கூறுவர். ஆனால் இக்கொள்கையை வரலாற்று அறிஞர்கள் பெரும்பாலோர் ஒப்புக் கொள்ளவில்லை.
வேதகால ஆரியர்களின் ஆதி இலக்கியங்களிற் கூறப்பெற்ற பொருள்களும், உயிரின் வகைகளும் இந்தியத் துணைக் கண்டத்தில் இருந்தனவாகத் தெரியவில்லை. ஆதி இலக்கியங்களில் கூறப்பெற்றுள்ள பைன் (Pine), ஒக்கு (Oak), வில்லோ, பர்ச்சு முதலிய மரங்கள் இந்தியாவில் இல்லை. சிங்கம், யானை, ஆலமரம், அரிசி முதலியவைகள் பற்றிய செய்திகள் காணப்பெறவில்லை. இந்தியாவில் இருந்த மற்ற இனத்தவர்களின் மொழி பழக்கவழக்கங்கள் முதலியவை ஆரியர்களுடைய மொழி பழக்க வழங்களிலிருந்து வேறு பட்டுள்ளன. ஆரியர்களின் வேதங்களும், ஈரானிய மக்களின் வேதமாகிய செண்ட் அவஸ்தம் (Zend Avesta) என்பதும் பலவிதங்களில் ஒற்றுமையாக உள்ளன. இவ்விரு இலக்கியங்களுக்கும் ஐரோப்பிய மொழிகளாகிய கிரேக்கம், இலத்தீன், செருமன், ஆங்கிலம் முதலிய மொழிகளில் உள்ள இலக்கியங்களுக்கும் பல ஒற்றுமைகள் காணப்பெறுகின்றன. மேற்கூறப்பெற்ற மொழிகள் இந்தோ - ஐரோப்பிய மொழிகள் என்னும் பெரும் பிரிவில் அடங்கியவையாகும். மத்திய ஆசியாவில் வழக்கத்தில் உள்ள சக (Saka), தெக்காரியன் (Tokharian) மொழிகளுக்கும், கிரேக்கம், இலத்தீன் முதலிய மொழிகளுக்கும் இடையே பல ஒற்றுமைகள் காணப் பெறுகின்றன. ஆகவே, முற்கூறப்பெற்ற மொழிகள் இந்தோ - ஐரோப்பிய மொழிகளுக்கும், வேதங்கள், அவஸ்தம் முதலிய இலக்கிய மொழிகளுக்கும் பிறப்பிடமாகிய ஓர் ஆதிமொழியெனக் கருதலாம். எனவே வேதகால சமஸ்கிருத மொழியைப் பேசிய ஆரியர்கள் பெரும்பாலும் மத்திய ஆசியப் பிரதேசத்திலிருந்து இந்தியாவிற்குக் குடிபெயர்ந்திருக்க வேண்டும்.
220

பலுசிசுத்தானத்தில் உள்ள ஒரு பகுதியில் பிராகுவி (Brahui) என்னும் திராவிட இனமொழி இன்றும் வழக்கில் உள்ளது. இதிலிருந்து ஆரியர்கள் இந்தியாவின்மீது படையெடுத்து வருவதற்குமுன் பலுசிசுத்தானத்தில் திராவிட மொழி வழங்கியிருந்ததெனக் கொள்ளலாம். மேலும், மேற்கு ஆசியாவில் உள்ள கப்படோசியாவில் (Cappadocia) போகாசு-காய் (Bogoa z-Koi) என்னுமிடத்தில் செருமானிய நாட்டுத் தொல்லியல் ஆய்வாளர்கள் கி.மு. 1400ஆம் ஆண்டிற்கு முன் பொறிக்கப்பெற்ற சில கல்வெட்டுகளைக் கண்டுபிடித்துள்ளனர். இக்கல்வெட்டுகள் அங்கு வாழ்ந்த மக்கள் கூட்டத்தினர்களுக்கு இடையே தோன்றிய சில உடன்படிக்கை களைப் பற்றிக் கூறுகின்றன. இவ்வுடன்படிக்கைகளில் இந்திரன், வருணன், நசாத்தியர் போன்ற ஆரியக் கடவுளர்களின் பெயர்கள் சாட்சிகளாகக் கூறப்பட்டுள்ளன. ஆகவே, கி.மு.1400 ஆம் ஆண்டிற்கு முன்னர் இந்தோ - ஈரானிய ஆரியர்கள் மேற்கு ஆசியாவில் குடியேறி இருக்க வேண்டும் என்ற செய்தி உய்த்துணரப் பெறுகிறது. இதனால், ஆரியர்கள் இந்திய நாட்டிற்கு எப்பொழுது குடிபெயர்ந்தனர் என்பது புலனாகாமற்போனாலும் அவர்கள் இந்திய நாட்டின் பழங்குடிகள் அல்லர் என்பது தெளிவாகிறது.
இருக்குவேத காலத்திய ஆரியர்களுடைய புவியியல் அறிவு, அவர்கள் இந்தியாவில் முதன்முதல் எங்குக் குடியேறினர் என்பதைத் தெளிவாக்குகிறது. அவர்களின் இலக்கியங்களில் சிந்து ஆற்றின் கிளை ஆறுகளும் மற்றைய ஆறுகளும் சுமார் இருபத்தைந்திற்குமேல் கூறப்பெறுகின்றன. இந்த ஆறுகள் பாயப்பெற்ற இடங்கள், தென்கிழக்கு ஆப்கானிஸ்தானம், வடமேற்கு எல்லை மாகாணம், பஞ்சநதிதிரம் முதலியவை. இவை இக்காலத்திய பாகிஸ்தான் பகுதிகளாகும். யமுனை ஆறும் கங்கையும் சிற்சில சமயங்களில்தாம் குறிப்பிடப்பெறுகின்றன. இந்த ஆற்றங்கரைகள் ஆரியர்கள் மேற்கிலிருந்து கிழக்கே பரவிய எல்லைகளைக் குறிப்பிடுவதாகக் கொள்ளலாம். இருக்கு வேதத்தில் ஆரியர்களுக்கும் திராவிடர்களுக்கும் இடையே நடந்த போராட்டங்கள் விவரிக்கப்பெற்றுள்ளன. வடமேற்கு இந்தியப் பகுதிகளில் வாழ்ந்த பழங்குடிமக்களை ஆரியர்கள் வென்று அடக்குவதற்கும், அவர்களிடமிருந்து தங்களைக் காப்பாற்றிக் கொள்வதற்கும் தங்கள் தெய்வங்களை வணங்கியுள்ளனர். இறுதியாகக் காசுமீரம், பஞ்சாபு, இராசபுதனம் முதலிய் பகுதிகளில் வாழும் மக்களின் உடலமைப்பும், நிறமும், திராவிட இனத்து மக்களுடைய உடலமைப்பிலிருந்தும், நிறத்தில் இருந்தும் வேறுபட்டுள்ளன. ஆகவே ஆரியர்கள் மத்திய ஆசியப் பகுதியில் இருந்து இந்தியாவில் குடியேறினர் என்பது பகுத்தறிவிற்கேற்ற கொள்கையாகும். ஆரியரின் அரசியல்
சப்தசிந்துப் பிரதேத்தில் ஆரியர்கள் குடியேறிய பிறகு தங்கள் நாடோடி வாழ்க்கையை விட்டு வீடுகளை அமைத்துக்கொண்டு நிலையான வாழ்க்கையைத் தொடங்கினர். அவ்வில்லங்களில்
இந்துக் கலைக்களஞ்சியம்

Page 267
திருமணம் செய்துகொண்டு இல்லற வாழ்க்கையை நடத்தினர். கணவன் மனைவி உறவு அன்புடைமையை அடிப்படையாகக் கொண்டிருந்தது. மனைவி, இல்லத்து அரசியாகக் கருதப் பெற்றாள். பெண்களுக்குக் கல்வியறிவும் போதிக்கப்பட்டது. (3513T (Gosha) 2 (36)r LIII (pj556). J (Lopamuda), 9, UGT (Apala), முத்கலனி (Mudkalani) முதலிய பெண்கள் சிறந்த கல்வியறிவைப் பெற்றிருந்தனர். ஆரியர்களிடையே பலதார மணங்களும் நடைபெற்றன. திருமண வயது வந்தபிறகே பெண்களுக்குத் திருமணம் நடைபெற்றது. குழந்தைகளை வளர்ப்பதில் தாயும், அவர்களுக்குக் கல்வியையும் நன்னடத்தையையும் போதிப்பதில் தந்தையும் முதன்மைப் பங்கு கொண்டனர். இரத்தத் தொடர்புடைய பல குடும்பங்கள் சேர்ந்தது இனக்குழு (Clan) ஆகும். பல இனக்குழுக்கள் சேர்ந்து வாழ்ந்த இடம் கிராமம் என்றும் பல கிராமங்கள் சேர்ந்தது மக்கள்(Jana) அல்லது மக்கள் கூட்டம் (Tribe) என்றும் கருதப்பட்டது. இருக்கு வேதத்தில் பரதர்கள், மத்சயர், கிரிவிசு, திரித்சுசு முதலிய பல கூட்டங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. இக்கூட்டங்களுள் துர்வாசகர்கள், யதுக்கள், புரூக்கள், துருகூசு, அனுசு என்ற இனக் குழுக்கள் பெருமை பெற்றிருந்தன.
இனக் கூட்டங்களின் தலைவர்கள் போர்க் காலங்களில் தலைமை வகித்துப் போர் செய்தனர். இத்தலைவர்களே நாளடைவில் அரசர்கள் என்று குறிக்கப் பெற்றனர். அரசு பதவி வகிப்பதில் தந்தைக்குப் பிறகு மகன் அரசுரிமை பெறுவது வழக்கமாயிற்று. சில இனக்குழுக்களில் பிரபுக்கள் சிலர் சேர்ந்து (Oligarchy) ஆட்சி நடத்தினர்; சில இனக் குழுக்களில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பெற்ற தலைவர்கள் மக்களின் விருப்பப்படி ஆட்சிபுரிந்தனர். அரசன், பிரபுக்கள், மக்கள் தலைவர்கள் ஆட்சிபுரிந்த நிலப்பகுதிகள் நாடு என்று பெயர் பெற்றது. அரசனால் ஆளப்பெற்ற நாடுகளை முடியாட்சி நாடுகள் எனக் கொள்ளலாம். மன்னர்களுக்கு முடிசூட்டு விழாவும் நடைபெற்றது. அரசன் பல அணிகலன்களையும், உயர்ந்த ஆடைகளையும் அணிந்து கொண்டு வீற்றிருந்தான். பல சிற்றரசர்களை அடக்கி ஆட்சிபுரிந்த பேரரசனுக்குச் சாம்ராட் (Samra) என்ற பெயர் வழங்கியதாக இருக்கு வேதத்திலிருந்து அறியலாம்.
ஓர் இனக்கூட்டத்தின் அரசன் இனக்குழுக்களிடையே நடந்த போர்களில் தலைமை வகித்துப் போர் செய்வது வழக்கம். மற்ற இனக் குழுவினரின் தாக்குதலுக்கு ஆளாகாதபடி அவர்களுடைய உடைமைகளையும், உயிரையும் காப்பாற்றினான். அரசனின் புரோகிதன் மக்களுக்கு நீதி வழங்கினான். புரோகிதனும், படைத்தலைவனும், கிராமணியும் அரசன் நியமித்த அதிகாரிகளாவர். அரசனுக்கு உதவி செய்வதற்குத் தூதர்களும் ஒற்றர்களும் நியமனம் செய்யப் பெற்றனர். மேற்கூறப்பெற்ற அலுவலாளர்கள் அன்றியும் சபை, சமிதி என்ற இரு அமைப்புகளும் இருந்தன என்று இருக்கு வேதத்திலிருந்து அறியலாம். சபைகளில் கல்வி கேள்விகளிலும் செல்வத்திலும் உயர்ந்த பெருமக்கள் அங்கம் வகித்தனர். சமிதியில் எளிய
இந்துக் கலைக்களஞ்சியம்

குடிமக்களும் இடம்பெற்றிருந்தனர். நாட்டில் நடைபெற்ற அன்றாட அரசியல் அலுவல்களில் சமிதி முதன்மைப் பங்கு கொண்டதெனக் கூறலாம்.
சமூக - பொருளாதார வாழ்வு
இருக்குவேத காலத்திய ஆரியர்களின் தலைமைத் தொழில் உழவாகும். உழவுத் தொழிலுக்கு அச்சாணியாக இருந்தவை பசுக்களும் மற்ற ஆடு மாடுகளும் ஆகும். பசுக்கள் முதன்மை யான செல்வங்களாகக் கருதப்பெற்றன. நிலத்தை உழுது பயிரிடுவதற்கு ஏற்ற காளைமாடுகள் பயிர்த் தொழிலுக்கு இன்றியமையாதனவாக இருந்தன. பசுக்களிடமிருந்து பெற்ற பால், தயிர், வெண்ணெய் முதலியன சிறப்பான உணவுப் பொருள்களாயின. சிற்றுார்களிலும் நகரங்களிலும் பருத்தி, கம்பளம், பட்டு முதலியவற்றைக் கொண்டு ஆடைகள் நெய்யப்பெற்றன. பருத்தி, கம்பளம் முதலியவற்றைக் கொண்டு ஆடைகள் நெய்யப்பெற்று, சாயம் ஏற்றி, பூவேலைகள் புனைந்து பலவித ஆடைகள் தயார் செய்யப்பெற்றன. இல்லங்களை அமைப்பதற்குக் கொத்தர்களும் தச்சர்களும் கொல்லர்களும் இருந்தனர். மகளிர்க்கு வேண்டிய அணிகலன்களைச் செய்வதற்குப் பொற்கொல்லர்களும் இருந்தனர். தச்சர்களும் கொல்லர்களும் வண்டிகள், தேர்கள், போர்க்கருவிகள் முதலியவற்றைச் செய்தனர். மதுபானங்களைச் சேமித்து வைப்பதற்குத் தோற்பைகளையும், காலணிகளையும் செய்வதற்குத் தொழிலாளர்கள் இருந்தனர். பிணி நீக்கும் மருத்துவர்களும், மந்திரவாதிகளும் இருந்தனர் எனத் தெரிகிறது. பொருள்களை விற்பதும் வாங்குவதுமாகிய வாணிகம் பண்டமாற்று முறையிலும் நிஸ்கா (Nishka) என்ற தங்க நாணயங்களாலும் நடைபெற்றது.
தொழில் முறையால் தோன்றிய சாதிப்பிரிவினைகள் இருக்கு வேதகாலத்தில் தொடக்க நிலையில் இருந்ததெனக் கூறலாம். வேதங்களைப் பயின்று யாகங்கள் செய்வதும் கடவுள் வணக்கம் கூறும் மந்திரங்களை மனனம் செய்வதும் பார்ப்பனர்களுடைய தொழில்களாயின. போரில் ஈடுபடுவதும், அரசியல் நடத்துவதும் சத்திரியர்களுடைய தொழில்களாயின. இவ்விருவருடைய தொழில்களும் மற்ற மக்களுடைய தொழில்களை விட உயர்ந்தவை என்ற கருத்துத் தோன்றியது. இத்தொழில்களைச் செய்யாத மக்கள் 'விசு என்றழைக்கப் பெற்றனர். ‘விசு என்ற சொல்லிலிருந்து வைசியர் என்ற சொல் தோன்றியதெனக் கூறுவர். மேலே கூறப்பெற்ற தொழில்கள் குலத்தொழிலாகக் கருதப்பெறவில்லை. ஒரே குடும்பத்தில் பிறந்த பலர் பலவகைத் தொழில்களைப் பின்பற்றினர் என்று கூறலாம்.
ஆரிய இனத்தைச் சேராதவர்களும், மற்றப் பழங்குடி மக்களும் தாசர்கள் என்று ஆரியர்களால் அழைக்கப்பெற்றனர். இவர்களைச் சூத்திரர்கள் என்று அரியர்கள் அழைத்தனர் என்று ஆராய்ச்சியாளர் கூறுவர். சாதிவேற்றுமை இருக்குவேதத்தின் இறுதிப்பகுதியாகிய புருச சூக்தத்தில்தான் கூறப்பட்டுள்ளது என்றும், இருக்குவேதத்தில் பிறப்பிற்கும் சாதிவேற்றுமைக்கும் இடமில்லை என்றும் ஆராய்ச்சியாளர் கூறுவர். இருக்குவேத காலத்தின் இறுதிக் காலத்தில்தான் சாதிப் பிரிவுகளும்
22

Page 268
குலப்பிரிவுகளும் தோன்றியிருக்கக்கூடும் என்றும் கருதப் பெறுகிறது. புருச சூக்தம் என்ற பாசுரத்தின் இறுதியில்தான் சாதிகள் கூறப்பெற்றுள்ளமையால் பார்ப்பனர் சத்திரியர், வைசியர் என்ற பிரிவுகள் இருக்குவேத காலத்தின் முடிவில்தான் தோன்றி யிருக்க வேண்டுமெனத் தெரிகிறது.
ஆரியர்களின் சமய வாழ்க்கை
இருக்கு வேத காலத்து ஆரியர்களின் சமயம் உலகத்திற் காணப்பெறும் இயற்கை சக்திகளைத் தெய்வங்களாகக் கொண்டு அவற்றைத் துதித்து அக்கினியின் வாயிலாக யாகங்களைச் செய்து பல நைவேத்தியங்களை வழங்குவதாகும். பிருதிவி, அப்பு தேயு, வாயு ஆகாயம் என்ற ஐம்பூதங்களையும் வணங்கினர். ஆகாயத்தில் வசிப்பதாகக் கருதப்பெறும் இந்திரன், வருணன், அசுவினி தேவதைகள், சூரியன், சாவித்திரி, மித்திரன், வருணன் முதலிய தெய்வங்கள் ஒருவரே என்ற கொள்கையும் நிலவியது. இந்திரன், இடி மின்னல், மழையாகிய இயற்கை மாறுபாடுகளுக்குத் தலைவனாக வணங்கப் பெற்றான். தேவர்களுக்குத் தலைவனாகக் கருதப்பெற்ற இந்திரன், ஆகாயத்தில் இருந்து மழைத்துளிகள் விழாத வண்ணம் செய்த விருத்திராசுரனைக்கொன்று மழை பெய்யும்படி செய்தான். அக்கினி, யாகங்களுக்குத் தலைவனாகக் கருதப் பெற்று, அவன் வாயிலாகத் தேவர்களுக்கு உரிய அவிர்ப்பாகங்கள் வழங்கப்பெற்றன. உச்சு, ஆரண்யாணி, மன்யூ முதலிய மானசீகத் தெய்வங்களும் வணங்கப்பெற்றன. இதிகாச காலத்தில் பெருமை பெற்ற உருத்திரன், விஷ்ணு, பிரம்மன் முதலிய கடவுளர்கள் இருக்குவேத காலத்தில் பெருங்கடவுளர்களாகக் கருதப் பெறவில்லை. யாகங்களைச் செய்து அவற்றின் வாயிலாகத் தெய்வங்களுக்கு நைவேத்தியம் அளித்துப் பலவகைப் பேறுகளைப் பெற முடியும் என்று ஆரியர்கள் நம்பினர். "மரணத்திற்குப்பின் ஆன்மாவின் நிலை?” என்பது பற்றி ஆதிகால ஆரியர்கள் ஆராய்ச்சி செய்யவில்லை. வேதகால ஆரியர்களால் வணங்கப் பெற்ற தெய்வங்கள் அவர்களைப் போலவே ஆண்மை, அதிகாரம், செயல் திறமை, வண்மை முதலிய குணங்களை உடையவர்களாகக் கருதப்பெற்றனர். பிற்காலத்தில் சிவனாகக் கருதப் பெற்ற உருத்திரன், திராவிடக் கடவுளாக இருக்கலாம் என்று கூறுவர். யாகங்களைச் செய்வதே முதன்மையான இறைவழிபாடு என்றும் பலர் கருதினர்.
இருக்குவேத காலத்தில் இறுதிக் கட்டத்தில் தோன்றிய உபநிடதங்களில் பல தெய்வ வணக்கம் குறைந்து ஒருவனே தேவன்' என்ற கருத்தும் மேலோங்கியது. 'தத்துவம் அசி என்ற மகாவாக்கியத்தில் சீவாத்மாவும் பரமாத்மாவும் ஒன்றே என்ற மெய்ப்பொருட் கொள்கையும் வளர்ச்சியுற்றது. புண்ணியம், பாவம் ஆகிய கர்மங்களினால் பிறவி ஏற்படுகிறது. இவ்விரண்டிலிருந்து விடுபடுவதே மோட்சம் அல்லது வீடு என்பது உபநிடதங்களிலும் பிராமணங்களிலும் கூறப்பெற்றுள்ளது. (அ. கி.)
ஆருத்திரா
மார்கழி மாதத்திலே வரும் திருவாதிரைத் திருநாளே ஆருத்திரா தரிசன நாள் எனப்படுவது. திருவாதிரை சிவனுக்கு
222

உரிய நட்சத்திரம்; திருவெம்பாவை விரதத்தின் இறுதி நாள் திருவாதிரை.
எனவே மார்கழித் திருவாதிரை சிவபிரானுக்குரிய புண்ணிய நாட்களில் ஒன்றாகப் போற்றப்படுகின்றது. இந்நாளிலே நடேசர் அபிடேகத் திருவிழா நடைபெறும்.
சிதம்பரத்திலே ஆருத்திரா நாள் மிகவும் விசேடமாகக் கொண்டாடப்படும். ஆருத்திரா தரிசனம் பெறுதல் கிடைத்தற் கரியதாகக் கருதப்படுவதாகும். தில்லை ஆருத்திரா தரிசனத்திற்காக ஈழத்தில் இருந்து சைவப் பெருமக்கள் தமிழ்நாடு செல்லும் வழக்கம் நீண்ட காலமாக இருந்து வந்தது.
தில்லையிலே ஆருத்திரா நாளிலே களி செய்து நிவேதிக்கப் படுவது குறிப்பிடத்தக்க அமிசமாகும்.
தில்லைக்கு அடுத்ததாகத் திருவாரூர், பேரூர், குற்றாலம், மதுரை முதலிய சிவதலங்களிலும் ஆருத்திரா திருநாள் சிறப்பாகக் கொண்டாடப்படும். ஈழத்துச் சிதம்பரம் எனப் போற்றப்படும் காரைநகர் சிவன் கோயிலிலே மார்கழித் திருவாதிரையின் போது பெருவிழா எடுக்கப்படும். (பொ.யூ.)
ඒ%60හිෆිඝfruilâo
திருநாவுக்கரசுசுவாமிகள் திருவடைவு திருத்தாண்டகத்திலே, கரக்கோயில், ஞாழக்கோயில், கொகுடிக்கோயில், இளங்கோயில், மணிக்கோயில், ஆலக்கோயில் எனச் சில கோயில்களைக் கூறியுள்ளார். திருநாவுக்கரசர் குறிப்பிடும் இக்கோயில்களின் விளக்கம் இப்போது தெளிவாகத் தெரியவில்லை.
ஆலக்கோயில் என்பது ஆலமரத்தினாற் கட்டப் பெற்ற கோயில் என்பர் சிலர். கட்டடம் கட்டுவதற்கு ஆலமரம் ஏற்ற உறுதியான மரமன்று. மேலும் ஆலமரத்தினாற் கட்டடம் கட்டும் வழக்கமும் இல்லை.
ஆலக்கோயில் ஆலமரத்தின் கீழ் அமைந்த கோயில் என்றும் சிலராற் கருதப்படுகின்றது. ஆலமரத்தினைத் தல விருட்சமாக உடைய கோயில் ஆலக்கோயில் என்பது அவர்களுடைய கருத்து.
ஆலமர் கடவுள் (புறநா.1989), ஆலமர் செல்வன் (கலித், 83:14, சிலப். குன்றக்குரவை, மணி,3144), ஆல்கெழு கடவுள் (திருமுரு. 256) எனச் சிவபிரான் குறிப்பிடப்படுவர். கடவுள் ஆலம்' என ஆலமரம் குறிப்பிடப்பட்டுள்ளது. (புறநா. 1991, நற். 343.4). ஆலமரத்தைப் பரவுவதும் அணி செய்வதும் பழைய பாடல்களிற் குறிப்பிடப்படுவன (கலித். 1013 - 14. கலித், 106.28-29).
தக்ஷணாமூர்த்தியாகச் சிவபிரான் ஆலின் கீழ் வீற்றிருக்கும் பான்மையில் அமைப்பது மரபாகும். கலித்தொகையில்
தக்ஷணாமூர்த்தியின் திருக்கோலம் காட்டப்படுகின்றது (1331-4).
வேறு சிலர் ஆலக்கோயில் என்பது விமானத்தின் அடிப்படையில் ஏற்பட்ட பெயர் என்று கருதி ஆணைக்கோயில்
இந்துக் கலைக்களஞ்சியம்

Page 269
என்பது ஆலக்கோயிலாக மருவியது என்பர். சிற்ப சாத்திரம் கஜ பிரிஷ்ட விமானக்கோயில், ஹஹ்தி பிருட விமானக்கோயில் என்று குறிப்பிடும் கோயிலே ஆனைக்கோயில் என்பர். யானையின் முதுகுபோன்று விமானம் அமைந்திருப்பதால் ஆனைக்கோயில் எனப்பட்டது என்பர்.
சுந்தரமூர்த்திநாயனார் திருக்கச்சூர் ஆலக்கோயிலைக் குறிப்பிடுவர். திருவொற்றியூர், வடதிருமுல்லை வாயில், திருவேற்காடு, திருக்கழுக்குன்றத்து பக்தவத்சல ஈஸ்வரர் கோயில், திருவானைக்கா முதலியவை கஜபிருஷ்ட விமானக் கோயில்கள்.
கஜபிருஷ்டம் தூங்கானைமாடம் எனப் பெயர் பெறும் என்று கருதுவோர் சிலர். திருத்தணி வீரட்டானேசுவரர் கோயிலைத் தூங்கானை மாடம் என்பது கவனிக்கத்தக்கது. (பொ. பூ)
ඒ%ශofüෆිහිගof]
திருக்கோணமலை நகரிலிருந்து பத்து மைல் தொலைவிலும் தம்பலகாமத்திலிருந்து ஐந்து மைல் தொலை விலும் அமைந்தது ஆலங்கேணி திருமலையிலிருந்து கிண்ணியாக்கிராமத்தைக் கிண்ணியாத்துறையின் கடலைத் தாண்டி அடைந்து, அங்கிருந்து ஆலங்கேணியைச் சேரலாம்; அல்லது திருமலையில் இருந்து தம்பலகாமம் சென்று அங்கிருந்து தரை மார்க்கமாகவும் (SFUGlorio.
தம்பலகாமம் பூரீ ஆதிகோணைநாயகர் ஆடியமாவாசைத் தீர்த்தத்திற்குக் கங்கைத் துறைக்கு எழுந்தருளும் போது ஆலங்கேணி பூரீ விநாயகர் ஆலயத்தில் தங்கிப் போதல் மரபாகிவிட்டது.
ஆலங்கேணியில் யாழ்ப்பாணம், காரைநகரைச் சேர்ந்த குடும்பமொன்று விநாயகர் ஆலயம் என்ற பெயரிலே திருக்கோயில் அமைத்தது. விநாயகர் என்ற பெயர் குடும்பத்தின் குரவர் பெயராம்; ஆனால் கருவறையிலே பிரதிட்டை செய்யப்பட்டது தான்தோன்றி லிங்கமாம். ஆயினும் பிள்ளையாருக்குரிய பூசை முறைகளே நடைமுறையில் இருந்து வருகின்றன.
அர்த்த மண்டபத்தில் விநாயகர் எழுந்தருளியுள்ளார். வீதியில் ஆலமரத்தடியில் நாகதம்பிரானும் ஈசானதிக்கில் வில்வமரத்தடியில் வைரவரும் எழுந்தருளியுள்ளனர். கோயில் கர்ப்பக் கிருகம், அர்த்தமண்டபம், மகாமண்டபம், தரிசன மண்டபங்களோடு மடாலயமாக அமைந்துள்ளது.
தனியொரு குடும்பத்தினரால் அமைக்கப் பெற்றுப் பரம்பரை பரம்பரையாக அக்குடும்பப் பராமரிப்பில் இருந்து வந்த கோயில் இன்று இந்து இளைஞர் மன்றமொன்றை தாபனத்தின் பராமரிப்பிலேயுள்ளது.
மார்கழித் திருவாதிரையைத் தீர்த்தமாகக் கொண்டு 10 நாள் பிரமோற்சவம் சிறப்பாக நடைபெறுகின்றது. (பொ.யூ.)
இந்துக் கலைக்களஞ்சியம்

໒ງobibງຫ້
ஆந்திரப் பிரதேச மாநிலம் கர்நூல் மாவட்டத்தில் இருக்கும் ஊர். இவ்வூர் துங்கபத்திரை ஆறு கிருட்டிணா ஆற்றுடன் கலக்கும் இடத்திற்கு அருகில் உள்ளது. இங்கு 8ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பல கோவில்கள் உள்ளன. இவை முற்கால மேலைச் சாளுக்கியரின் கோயிற் கட்டிடக் கலை அமைப்பைப் பெற்றுத் திகழ்கின்றன. மேலும், இக்கோயில்களின் அமைப்பு, கருநாடக மாநிலப் பட்டடக்கல் கோயில்களின் அமைப்பைப் போன்று காணப்படுகிறது. ஆலம்பூரில் உள்ள கோயில்கள் எண்கோண வடிவமான சிகரங்களைக் கொண்டுள்ளன. இவ்வமைப்புச் சிகரங்கள், தென்னகக் கோயில் கலைப்பாணி வகையைச் சார்ந்தனவாகும். இதன் மேல் உச்சியில் அமலகா என்று சொல்லப்படும் வரிவரியாக உள்ள உருண்டைகள் காணப்படுகின்றன. இவை வட இந்தியக் கோயில்களில் குறிப்பாக ஒரிசாக் கோயில்களில் காணப் படுகின்றன. தென்னகக் கோயில் கலைப்பாணியும் வட இந்தியக் கோயில் கலைப்பாணியும் இணைந்து, ஆலம்பூர்க் கோயில்களில் காணப்படுவது குறிப்பிடத்தக்கதாகும்.
ஆலம்பூரில் இருக்கும் ஒன்பது கோவில்கள் சிவன் கோவில்களாக இருப்பினும் இவற்றின் பெயர்கள் பிரமாவின் பெயர்களைக் கொண்டுள்ளன. 1. பாலபிரமா, 2. குமர பிரமா, 3. ஆர்க்க பிரமா, 4. வீர பிரமா, 5. விசுவ பிரமா, 6. தர்க்க பிரமா, 7. கருட பிரமா, 8. சுவர்க்க பிரமா, 9. பத்மபிரமா என்பன இக்கோயில்களின் பெயர்களாகும். மக்கள் இக்கோவில்களைச் சிறந்தனவாகக் கருகின்றனர். கி. பி. 12ஆம் நூற்றாண்டைச் 5 Tij55 U6) (50jë 5ë (35 TLD JE T5i (Palkuriki Somanatha) 6TsiTu6)i UTGaoTig 55 Tigbalut g-f55lyth (Panditardya Charitra) என்னும் தமது நூலில் ஆலம்பூரைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளார்.
இக்கோவில்கள் பொதுவாகக் கருவறையையும் அதனைச் சுற்றி நடைபாதையையும் (சுற்றுப் பிராகாரம்) கருவறைக்கு முன்பு இரண்டு தூண்களுடைய முகவறையையும் கொண்டு காட்சியளிக்கின்றன. இத்தூண்களிலும் இவற்றின் மேலுள்ள கூரைகளிலும் கலைநுட்பம் மிக்க சிற்பங்கள் செதுக்கப் பட்டுள்ளன. கோவிலைச் சுற்றியுள்ள மாடக் குழிகள் மகர அமைப்புகளுடன் காணப்படுகின்றன. அம்மாடக் குழிகளில் மாடத் தெய்வங்களாகக் கங்காதரர், திரிபுராந்தகர், தட்சிணாமூர்த்தி, கிராதர், நடராசர் ஆகிய உருவங்கள் காணப்படுகின்றன. இவை தவிர மேலும் பல மாடத் தெய்வங்களும் இடம் பெற்றுள்ளன. கோவிலின் முன்கூடத்தில் அமைந்திருக்கும் இலாட வடிவமான சாளரங்களில் நடராசரின் சிற்பங்கள் வைக்கப்பட்டுள்ளன. வீரபிரமன் கோவிலின் முகப்பில் நடராசர் தம் தேவியுடன் இசைவாணர்கள் புடைசூழக் காணப்படுகிறார். 16 கைகளையுடைய சிவன் போர்க் கோலத்துடன் ஆலம்பூர்ச் சுவர்க்க பிரமன் கோவிலில் காட்சி தருகிறார்.
இங்குள்ள கோயில்களில் வீரபத்திரர், ஏழு பெண் தெய்வங்களுடனும் தாய்த் தெய்வத்துடனும் (Mother Goddess) காட்சி அளிக்கிறார். தாய்த் தெய்வம் தலையில்லாமலும்,
223

Page 270
தலையிருக்க வேண்டிய இடத்தில் தாமரை விளங்க, பிறந்த மேனியாகவும் விளங்குகிறது. கோயில்களில் காணப்படும் கல் வெட்டுகள், பட்டடக்கல் கோயில்களில் காணப்படும் இரண்டாம் விக்கிரமாதித்தனின் கல்வெட்டுக்களைப் போன்றும், அவர் மனைவி திரிலோக்கியமகாதேவியாருடைய கல்வெட்டுக்களைப் போன்றும் உள்ளன. இக்கோயில்களைக் கட்ட மேலைச் சாளுக்கிய அரசன் இரண்டாம் விக்கிரமாதித்தன் சிற்பிகளைத் தென்னகத்தில் இருந்து கூட்டிச் சென்றான் என்று கூறுகின்றனர். இக்கோயில்களில் குப்த வாகாடகர் கோயில் பாணிகளும் காணப்படுகின்றன.
ஆலம்பூரில் உள்ள அருங்காட்சியகம் சீரிய சிற்பங்களைக் கொண்டு விளங்குகிறது. இவ்வருங் காட்சியகம் ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் தொல்லியல் துறையின் கண்காணிப்பில் இருந்து வருகிறது. (பொ. பூ)
ஆலாலசுந்தரஞ்செட்டியார், பூ
சென்னையிலே பிறந்தவர்; பூரிப்பாக்கம் வேலுசெட்டியாரின் புதல்வர்; முத்தியாலுப்பேட்டை உயர்நிலைப் பள்ளியிலும், சென்னை பச்சையப்பன் கல்லூரியிலும் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திலும் பயின்றவர். பி.ஏ, எம். ஏ. பட்டங்கள் பெற்றவர்; தாம்பரம் கிறிஸ்தவ கல்லூரியிலே தமிழ்ப் பேராசிரியராகப் பணிபுரிந்தவர்; கோயில் திருப்பணிகளிலே மிகுந்த ஈடுபாடுடையவர்: சைவசமயம் சம்பந்தமாகப் பல கட்டுரைகள் எழுதியவர்.
இவருடைய தமிழ் மந்திரம் எனும் நூலிலே (1965) திருமந்திரத்திலிருந்து தெரிந்த திருப்பாடல்களுக்கு விளக்கமும் சில கட்டுரைகளும் இடம் பெறுவன. (பொ. பூ)
ஆலாலசுந்தரம்பிள்ளை (1852-1922)
தமிழ்நாடு காஞ்சீபுரத்தில் பிறந்தவர்; அச்சுதானந்தர் எனும் துறவியின் சீடர், காஞ்சி முத்துக் கச்சபேச சிவாசாரியாரிடம் தீட்சை பெற்றவர்; புராணச் சொற்பொழிவுகளிலே வல்லவர்; திருவொற்றியூரிலே சமாதியடைந்தார்.
சிவஞானபோத நுட்பம், ஞானவாசிட்டத் தெளிவு, பகவத்கீதாசாரம் என்பவற்றை எழுதியவர்; தேவி பாகவதம் மொழி பெயர்த்தவர்; எம். பைரவ சிவாச்சாரியாருடன் சேர்ந்து காமாட்சி லீலா பிரபாவம் மொழி பெயர்த்தவர்.
காஞ்சிப்புராணம், திருப்போரூர்ச் சந்நிதி முறை, திருக்களிற்றுப்படியார், திருவுந்தியார் என்பனவற்றிற்கு உரை எழுதியவர்; பெரியபுராணத்தில் ஒரு பகுதிக்கும் உரை கண்டவர்.
காஞ்சி கூேடித்திர மஞ்சரியை 1906 இலே பதிப்பித்தவர்.
(பொ.யூ.)
366 of 365.11b
உபநயனம் செய்து கொண்ட பிராமணர் பொதுவாக ஆவணிப் பெளர்ணமியில் கொண்டாடும் உபாகர்மம் எனும் ஆண்டுச் சடங்கு
224

ஆவணி அவிட்டத்தில் இடம்பெறும். இது யசுர்வேதிகள் கொண்டாடும் தினமாகும். இத்தினத்தில் கொண்டாட முடியாதிருந்தால் ஆடிப் பெளர்ணமியிலோ அல்லது புரட்டாதிப் பெளர்ணமியிலோ யசுர் வேதிகள் கொண்டாடுவர். இருக்கு வேதிகளும் சாம வேதிகளும் வேறு தினங்களிற் கொண்டாடுவர்.
ஆவணி அவிட்டத்தில் உபநயனம் செய்தோர் தங்கள் பூணுரலைப் புதுப்பிப்பதோடு வேதங்களைப் படிக்கவும் தொடங்குவர். மேலும் பிதுர்களையும் இருடிகளையும் குறித்துத் தர்ப்பணமும் செய்வர். (பொ. பூ.)
ஆவணி சதுர்த்தி
ஆவணி சதுர்த்தி என்பது ஆவணி மாதத்து சுக்கில பட்சத்தில் வரும் சதுர்த்தியில் (வளர்பிறை நான்காம் நாள்) அநுட்டிக்கும் விநாயக சதுர்த்தி விரதமாகும்.
ஆவணிச்சதுர்த்தியில் விடியற்காலையில் எழுந்து நீராடிச் சங்கற்பித்துப் பூசைக்குரிய சாதனங்களைச் சேகரித்துக் கொண்டு கும்பம் வைத்து, அதன் முன்பு விநாயகரின் திருவுருவை எழுந்தருளச் செய்து பூசித்து, அர்க்கியம் அளித்து, அர்ச்சனை செய்து, தூபதீபம் சமர்ப்பித்து வழிபடுதல் முறை. சந்திரனைப் பூசித்து விநாயக பூசையை முடித்துக் கொள்ள வேண்டும். ஆனால் இரவில் சந்திரனைப் பார்க்கவே கூடாது. சதுர்த்தியன்று சந்திரனைப் பார்த்த குற்றத்தால் விஷ்ணு அவமானம் அடைந்தாராம்.
வீடுகளில் தைப்பொங்கல், சித்திராபெளர்ணமி போன்ற தினங்களிற் பசுஞ்சாணியாலே பிள்ளையாரை அமைத்து அறுகுசாத்தி வழிபடுவர். திருமணம் முதலிய மங்கள காரியங்களின்போது ஆரம்பத்தில் அரைத்த மஞ்சளாற் பிள்ளையார் செய்து வைத்துப் பூசிக்கத் தொடங்குவர். சில நாட்களிலே மாவினாற் செய்த பிள்ளையாரையும் வைத்து வழிபடுவது உண்டு. விநாயக சதுர்த்தியன்று புற்று மண்ணாற் பிள்ளையார் பிடிப்பது வழக்கம்.
விநாயகருக்கு அறுகும் வன்னிப்பத்திரங்களும் மந்தாரைப் பூவும் மிகச் சிறந்தவை. புட்பவிதி சதுர்த்தி விரத காலத்தில் விநாயகரை அர்ச்சிக்க வேண்டிய பத்திரங்களாக பாசிப் பச்சை, கையாந்தகரை, வில்வம், ஊமத்தை, நொச்சி, நாயுருவி, சுத்தரி, அலரி, காட்டாத்தி, எருக்கு, மருது, விஷ்ணுகரந்தை, மாதுளை, தேவதாரு, மரு, நெல்லி, சிறுசண்பகம், செந்தாளி, பாதிரி என்பனவற்றையும் கூறுகின்றது. சதுர்த்தியில் அறுகுக்கு முதலிடம் தரப்படுகின்றது.
இவ்விரதத்தின் போது பகலில் ஒருவேளை உண்டு, இரவில் பால் அல்லது பழம் மட்டும் உட்கொண்டு வழிபடுவர்.
கதிரவன் சிங்கராசியில் இருக்கும் போது, அதற்குரிய ஆவணி மாதமே ஆண்டின் முதல் மாதமாகக் கருதப்பட்ட ஒரு காலத்தில் ஓங்காரத் தெய்வ வணக்கம் சிறப்பாக அத்திங்களில்
இந்துக் கலைக்களஞ்சியம்

Page 271
எல்லோராலும் நடத்தப் பெற்று வழக்கத்தில் வந்ததை விநாயகசதுர்த்தி உணர்த்துவதாகச் சிலர் கருதுவர்.
விநாயகபுராணம் இந்த விரதத்தை ஆவணி சுக்கில பட்ச சதுர்த்தி தொடங்கிப் புரட்டாதி சுக்கில பட்ச சதுர்த்தி வரை ஒருமாதம் அநுட்டிக்க வேண்டும் என்று கூறும். ஒரு மாதம் இருக்க இயலாதவர்கள் விரத ஆரம்பத்திலே அநுட்டித்து மற்ற நாட்களில் அவிசு, பால், பழம் முதலிய சாத்துவிக உணவை உட்கொண்டு வரவேண்டும் என்று அநுமதிக்கின்றது. விநாயகசதுர்த்தியன்று விதி பிறழாமல் அநுட்டிக்க வேண்டும் என்று வற்புறுத்துகின்றது. (பொ.பூ.)
3,636 of epGob
ஆவணி மாதத்து மூலநட்சத்திரத்திலே சிவபெருமானை போற்றி எடுக்கப்படும் விழா ஆவணி மூல விழாவாகும்.
ஆவணி மூல நாளிலே மதுரையில் கோயில் கொண்டிருக்கும் சொக்கநாதப் பெருமான் ஆடிய திருவிளையாடல் மக்களை மிகவும் கவர்வதாகும். செம்மனச் செல்விக்கான வரம்புப் பங்கினைத் தாம் அடைப்பதாக அவரிடம் பிட்டினைக் கூலியாகப் பெற்று, கூலிக்குரிய வேலையைச் செய்யாது நின்று சொக்கன் பிரம்படிபட்ட திருவிளையாடல் ஆவணி மூலத்திற்குரியது.
மதுரையிலே இவ்விழா விமரிசையாகக் கொண்டாடப்படும். பிட்டுத் திருவிழா என்றும் அங்கு இதனைக் கூறுவர். சுந்தரேசர் பொற்கூடையுடனும் பொன் மண்வெட்டியுடனும் இந்த விழா நாளில் வைகை ஆற்றிலிருந்து பக்தர் சூழக் கோயிலுக்கு எழுந்தருளுவார்.
மூல நட்சத்திரத்தின் அதி தேவதை நிருதி எனும் அசுரனாதலால் அசுர சக்தியின் செல்வாக்கினை சொக்கனின் மேல் ஏற்படும் பக்தி உணர்ச்சியின் மூலம் ஒழிக்க வேண்டும் என்று கருதுவர். தெய்வ பக்தியை வற்புறுத்துவதாகத் திருவிளையாடல் அமைதல் குறிப்பிடத்தக்கது. (பொ.யூ.)
ஆவர்த்தம்
குடமுழுக்கு, குடநன்னீராட்டு விழா, கும்பாபிஷேகம், பிரதிஷ்டை என்பன ஒரு பொருட்கிளவிகள். ஆலயத்தில் நிறுவப்படும் மூர்த்தியில் எழுந்தருளி அல்லது நிறுவப் பெற்றிருந்த மூர்த்தியில் சாந்நித்தியம் மிகுந்து உயிர்களுக்கு அருள் புரியும்படி பிரார்த்தித்து அபிஷேகஞ் செய்தலே குடமுழுக்கு எனும் பிரதிஷ்டைக் கிரியையாம்.
இது சில காரணங்களின் அடிப்படையில் ஆவர்த்தம், அனாவர்த்தம், புனராவர்த்தம், அந்தரிதம் என வகைப்படுத்தப்படும்.
ஆவர்த்தம் புதிய கோயில் அமைக்கும் போது நிகழும் குடநன்னீராட்டு விழாவாகும். புதிதான ஒர் இடத்தில் மூர்த்தியை
இந்துக் கலைக்களஞ்சியம்

வைத்துப் பாலப்பிரதிட்டை செய்து பூசித்துப் புதிதாகக் கோயில் கட்டி, பாலாலய மூர்த்தியைக் கும்பத்தில் எடுத்து, பின்னர் மூலஸ்தானத்தில் இருக்கும் மூர்த்தியில் சேர்த்து அபிடேகம் செய்வது ஆவர்த்த கும்பாபிஷேகம்.
ஏனைய மூன்று வகையினவும் பழைய கோயிலோடு தொடர்புடைய பிரதிட்டையாம். (பொ.யூ.)
ஆழ்வார்
ஆழ்வார் எனும் சொல் தமிழிலே இரு வகையான பொருள்களை ஒரு காலத்திலே தந்து நின்றுள்ளது என்று கருத
இடமுண்டு. ஒரு வகைக்கு ஆழ் என்பதும் ஏனைய வகைக்கு ஆள் என்பதும் அடியாகக் காணப்படுகின்றது.
ஆள் என்ற அடியில் தோன்றிய சொற்கள் பிறரை அடிமை கொண்டு ஆள்பவர், மக்களிற் சிறந்த இருபாலார், கடவுளர், அரசர் என்ற பிரிவினரைச் சுட்டி நிற்கின்றன. சாசனங்களிலே வைணவ, சிவ மூர்த்தங்கட்கும் அரசருக்கும் ஆள்வார் என்ற பெயர் ஆளப்பட்டுள்ளமை இதனை எடுத்துக் காட்டுகின்றது. ழகர, ளகர வேற்றுமை ஒலிப்பில் மறைந்ததை இங்கு காணமுடிகின்றது.
ஆழ் எனும் அடியில் தோன்றியவை ஆழ்ந்தவர், அடியார் என்ற பொருள் தந்த சொற்கள். ஆயினும் இன்று ஆழ்வார் எனும் சொல் வைணவ சமயப் பெரியாருக்குரியதாகவே பெரும் பாலும் வழங்குகின்றது.
ஆழ்வார் திருமாலின் கல்யாண குணங்களில் ஈடுபட்டு அழுந்தினவர்கள், திருமாலின் வடிவழகிலே ஈடுபட்டு அழுந்தினவர்கள், மக்களின் துக்கத்தைக் கண்டு பொறாமல் அத்துக்கத்தில் அழுந்தினவர்கள் என்று பலவாறு விளக்கப்படும்.
1. பொய்கையாழ்வார் 2. பேயாழ்வார் 3. பூதத்தாழ்வார் 4. திருமழிசையாழ்வார் 5. பெரியாழ்வார் 6. ஆண்டாள் 7. தொண்டரடிப்பொடியாழ்வார் 8. குலசேகராழ்வார் 9. திருப்பணாழ்வார் 10. திருமங்கையாழ்வார் 11. நம்மாழ்வார் 12. மதுரகவியாழ்வார்
பன்னிருவரை ஆழ்வாரெனக் கருதல் பொது மரபாகும். இவர்களிலே சமகாலத்தவரான பொய்கையாழ்வார், பூதத் தாழ்வார், பேயாழ்வார் எனப்பெறும் முதலாழ்வார் மூவரும் முதலாம் நரசிம்மவர்மனாம் (680-668) மகாமல்லன் காலத்திற்குப் பிற்பட்டவராதல் வேண்டும். ஏனெனிற் பூதத்தாழ்வார் மகாமல்லனாற் பெயர் பெற்ற மகாமல்லாபுரம் (மாமல்லபுரம்) என்பதன் மரூஉப் பெயரான மாமல்லையைக் குறிப்பிடுவர். (இரண்டாம் திருவந்தாதி, 7.0) ஏனைய ஆழ்வார்களிலே திருப்பாணாழ்வார் ஒழிந்தோர், எட்டாம் நூற்றாண்டின் பிற்பகுதிக்கு முற்பட்டவராகாராதலின் இவர்கள் காலம் ஏழாம் நூற்றாண்டின் பிற்பகுதிக்கும் எட்டாம் நூற்றாண்டின் முற்பகுதிக்கும் உட்பட்டதாகலாம்.
225

Page 272
திருமழிசையாழ்வார் முதலாழ்வார் மூவரிற் பேயாழ்வாரின் சீடர் ஆதலின் அவர்களுடைய காலத்தவர் எனல் வேண்டும். திருமங்கையாழ்வார் தந்திவர்மன் (796 -846) காலத்தவராவார். திருமங்கையாழ்வார் திருவரங்கத் திருமதிலைக் கட்டும் போது தொண்டரடிப் பொடியாழ்வாரின் துளசி நந்தவனம் இடையிட்டதாக, அந்த இடத்தைத் தவிர்த்து மங்கை மன்னன் மதிலை அமைத்தார் என்பது குருபரம்பரை திருவரங்கத்துத் திருமுற்றத்தடியார் குழுவிலே ஒருவராய் இருந்த தொண்டரடிப் பொடியைக் குலசேகராழ்வார் தேட்டருந்திறல் எனும் திருமொழியிலே போற்றுகிறார் (பெருமாள் திருமொழி). எனவே திருமங்கையாழ்வார், தொண்டரடிப்பொடியாழ்வார், குலசேக ராழ்வார் என்போர் எட்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும் ஒன்பதாம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் வாழ்ந்தவராதல் தகும்.
பெரியாழ்வார் காலம் பூரீமாற பூரீவல்லபன் (835-862) காலமாகும். எனவே அவரால் வளர்க்கப் பெற்ற ஆண்டாள் காலமும் அதுவேயாகும்.
நெடுஞ்சடையன் பராந்தகன் ஆட்சிக் காலத்துக்கும் (765790) முதலாம் ஆதித்தன் ஆட்சிக் காலத்திற்கும் (871-907) இடைப்பட்ட காலம் நம்மாழ்வார் காலம் என்று துணியச் சான்றுகளுண்டு. நம்மாழ்வார் சீடர் மதுரகவியாழ்வார்.
திருப்பாணாழ்வார் காலம் முதலாழ்வாருக்குப் பின்னும் நாதமுனிகளுக்கு முன்னும் என்று கூற முடியுமே அன்றிச் சித்தாந்தமாக உரைப்பதற்குச் சான்றில்லை.
எனவே பன்னிரு ஆழ்வார்களும் ஏழாம் நூற்றாண்டின் பிற்பகுதிக்கும் பத்தாம் நூற்றாண்டின் முற்பகுதிக்கும் இடையே வாழ்ந்தவர் என்று கொள்ள முடியும்.
ஆழ்வார் சரிதங்களைக் கூறும் சங்கத நூல்களிலே பழமையுடையது திவ்யசூரிசரிதம். இதனாசிரியர் கருடவாகன பண்டிதர் பூரீ இராமானுசர் காலத்தில் வாழ்ந்தவர் என்பர். பூரீ அநந்தாசார்ய ஸ்வாமிகளின் பிரபந்நாம்ருதமும் சங்கதத்திலே எழுந்ததாகும். மணிப்பிரவாள நடையிலே எழுந்த குரு பரம்பரையின் பிரபாவம் கூறும் சில நூல்களிலும் ஆழ்வார் சரிதங்கள் கூறப்பட்டுள்ளன. பின்பு அழகிய பெருமாள் ஜியரின் ஆறாயிரப்படி குருபரம்பரா ப்ரபாவம், துரு தீய பிரம தந்திர சுவதந்திர சுவாமியின் மூவாயிரப் படி குருபரம்பராப்ரபாவம் (வடகலை), திருமழிசை கோயில் கந்தாடை அண்ணாவப்பங்கார் சுவாமிகளின் பழநடை விளக்கம் எனும் மூவாயிரப்படி குரு பரம் பராப்ரபாவம் (தென்சுலை) என்பன அவற்றிலே குறிப்பிடத்தக்கவை.பூரீமணவாள மாமுனிகளின் உபதேசரத்ந மாலை, கீழையூர் சடகோபதாசரின் அரிசமய தீபம், உறை விசயராகவபிள்ளையின் குருபரம் பரைப் புராணம், திருவரங்கம் கோயிலொழுகு என்பனவும் ஆழ்வார் சரிதங்களை அறிய உதவுவன.
ஆழ்வார்களை வைணவர் அவதார புருஷராகக் கருதி வழிபடுவர். ஆண்டாளைப் பூமாதேவியின் அம்சம் என்றும் பொய்கையாழ்வாரைப் பாஞ்ச சன்னிய அம்சம் என்றும்
226

பூதத்தாழ்வாரைக் கதாயுத அம்சமென்றும் பேயாழ்வாரை நந்தகத்தின் அம்சமென்றும் வைணவ சரிதங்கள் கூறுவன. ஆழ்வார்கள் அவதரித்த தலங்களிலே மூலவரிலும் அவர்களுக்குச் சிறப்பு அளிக்கப்பட்டது. அத்தியாயனோற்சவம் எனும் ஆழ்வார்விழா திருவரங்கம், ஆழ்வார் திருநகரி, பூரீவில்லி புத்தூர் முதலான திருப்பதிகளிலே சிறப்பாகக் கொண்டா டப்படுதல் குறிப்பிடத்தக்கது.
ஆழ்வாருடைய திருப்பாசுரங்களை பூரீ நாதமுனிகள் நாலாயிரப் பிரபந்தமாகத் தொகுத்துள்ளார். இத் தொகுப்பிலே பன்னிருவரின் அருளிச் செயல்களும் அடங்கியுள்ளன.
இவ்வாழ்வார்கள் பாடியனவற்றில் நம்மாழ்வார் அருளிய நான்கு பிரபந்தங்களையும் நான்கு வேதங்கள் என்றும், திருமங்கை மன்னன் பாடிய ஆறு பிரபந்தங்களையும் ஆறு அங்கங்கள் என்றும், மற்றை எண்மரும் (ஆண்டாள், மதுரகவி நீங்கலாக) பாடியனவற்றை உபாங்கங்கள் என்றும் கூறுவர். இவர்கள் ஏற்றிய ஞானவிளக்கு, இராமாநுசர் காலத்தில் பாரத நாடெங்கணும் ஒளி வீசத் தொடங்கிற்று; முத்திக்கு ஒரு வித்தாயிற்று எனவும் விளக்குவர்.
'தொண்டர்க்கமுதுண்ணச் சொன் மாலைகள் சொன்னேன் என்பது போன்ற தொடர்களால் பூரீவைஷ்ணவர்களையும் வாழ்வித்தருளிய இவ்வாழ்வார்கள், தமது திவ்வியப் பிரபந்தமாகிற விளக்கை ஏற்றி நிலவுலகமனைத்தையும் இருள்நீங்கி விளங்கச் செய்தவர்கள் எனப் பாராட்டுவர்.
முதலாழ்வார் மூவர் :
பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார் என்னும் மூவரையும் முதலாழ்வார் என்பர். இவர்கள் வரலாறு பற்றிய விளக்கங்கள் கிடைக்கவில்லை. இறைவனோடு தொடர்புள்ள பொருள்களின் அம்சமாக இவர்களைக் கொள்வர். இவர்கள் பிறப்புக்கு மக்களினத்தில் பெற்றோர்களைக் கூறுவதில்லை.
திருமாலின் சங்காகிய பாஞ்ச சன்னியத்தின் அம்சமாய் இவ்வுலகில் அவதரித்த பொய்கையார் காஞ்சியில் பொய்கை ஒன்றில் தாமரை மலரிலிருந்து வெளிப்பட்டதாகக் கூறுவர். இவர் பிறந்த நாள் ஐப்பசித் திருவோணம் என்றும், இயல்பிலேயே உலகியல் நாட்டமற்றுத் திருமாலிடம் பேரன்பு கொண்டு வாழ்ந்தார் என்றும் கூறுவர்.
ஐம்படையுள் ஒன்றாகிய 'கௌமோதகி எனப்படும் திருமாலின் ‘கதை’ யின் அம்சமாக இவ்வுலகில் தோன்றிய பூதத்தாரும் கடல்மல்லையில் குருக்கத்தி மலரிலிருந்து வெளிப்பட்டதாகக் கூறுவர். இவரும் ஐப்பசித் திங்களிலேயே தோன்றினும் இவர் பிறந்தநாள் 'அவிட்டம். இவ்வாழ்வாரும் இளமையிலேயே திருமாலிடம் பேரன்புடையராய் அவரைப் பாடிவரலானார்
பேயாழ்வார், திருமாலின் கையிலுள்ள நாந்தகம் என்னும் வாளின் அம்சமாகத் தோன்றியவர் என்பர். இவ்வாழ்வாரும் திருமலையிலுள்ள கிணறு ஒன்றில் செவ்வல்லிப் பூவிலிருந்து வெளிப்பட்டதாகக் கூறுவர். இவரும் ஐப்பசித் திங்களில் தோன்றியவரே. இவர் பிறந்த நாள் சதயம். இவ்வாழ்வாரும்
இந்துக் கலைக்களஞ்சியம்

Page 273
இளமையிலேயே இறையருனாற் கவரப்பட்டு அவர் பெருமையைப் பாடி வரலானார்.
முதலாழ்வார் மூவரும் ஒரு காலத்தில் வாழ்ந்து வந்தவர்கள் என்றும், இம்மூவருக்கும், திருக்கோவலூரிலுள்ள இடைகழி ஒன்றில் பெருமாள் காட்சி கொடுத்தருளினார் என்றும் கூறுவர். இவர்கள் பாடிய அந்தாதி, இக்காட்சியின் விளைவாக எழுந்தன என்பர். முற்றமுடிய, தெய்வீகத்தில் திளைத்து நின்றவர்கள் எனக் கூறுவதற்கு மேல், இவர்கள் உலகியல் வாழ்க்கை பற்றித் தெளிவாக அறிய முடியவில்லை.
இவர்கள் பாடியன: முதல் திருவந்தாதி, இரண்டாம் திருவந்தாதி, மூன்றாம் திருவந்தாதி என்பன.
திருமங்கை யாழ்வார்:
திருமங்கை ஆழ்வாரையும், திருமாலின் வில்லாகிய சார்ங்கம் என்பதன் அம்சமாக அவதரித்ததாகக் கூறினும் இவர் பெற்றோர்களைக் குறிப்பிடுவர். சோழ நாட்டில் திருக்குறையலூரில் 'ஆலி நாடர் என்ற தந்தைக்கும் வல்லித்திரு என்ற தாய்க்கும் பிறந்தவராகக் கூறுவர். இவர் கார்த்திகைத் திங்கள் கார்த்திகை நாளில் பிறந்தவர். இவர் பெயர் நீலன் என்பது. இவர் மனைவியார் பெயர் குமுதவல்லி; இவர் சிறப்பாகக் கவிபாடவல்ல புலவர் ஒருவரை, வாதில் வென்று நாற்கவிப் பெருமாள்' என்னும் பட்டத்தையும் அதற்குரிய விருதுகளையும் சோழ அரசரிடமிருந்து பெற்றவர். ஆலிநாட்டைத் திருமங்கை என்னும் பதியைத் தலைநகராகக் கொண்டு ஆண்டு வந்தவர்; பரகாலன் என்னும் பட்டம் பெற்றுச் சோழன் படைத் தலைமையும் மேற்கொண்டு வாழ்ந்தார். திருமாலிடம் கொண்ட பத்தித் திறத்துக்குச் சான்றாகத் திருமங்கை மன்னன் சோழ அரசனுக்குச் செலுத்தவேண்டிய திறைப்பொருளை, இறைவனே வேகவதியாற்றங்கரையினின்றும் வெளிப்படுத்திக் கொடுத்தான்
6T6TL T.
திருமாலடியார்களை வழிபடுவதிலேயே தம் செல்வத்தை யெல்லாம் செலவிட்டவர்; அடியவர்களுக்கு வழங்கப் பொருளில்லாமையால் களவுத் தொழிலையும் - வழிப்பறி - செய்யத் தலைப்பட்டார் என்றும், இத்தொழிலில் மூண்டு நிற்கும் போதே இறைவனால் மந்திரோபதேசம் செய்யப் பெற்று ஆட்கொள்ளப் பெற்றார் என்றும் கூறுவர். இறைவனே மணவாளக் கோலத்திலும், தேவி மணப்பெண் கோலத்திலும், பேரளவில் நகைகள் அணிந்து வழிச்செல்வதை அறியாது, அவர்கள் நகையினையும் அடியார் பணிக்காக வழிப்பறி செய்ய, இறைவன் திருவிளையாடலால் அந்நகைகள் யாராலும் தூக்கவியலாமற் போகவே இவ்வாறு நீ செய்த மந்திரத்தை எனக்குக்கூறு என வற்புறுத்தி மந்திரோபதேசம் பெற்றதாகக் கூறுவர். இறைவன் திருவெட்டெழுத்தினை உபதேசித் தருளினான். மணமக்கள் மறையவே - திருமங்கை மன்னருக்கு ஞானம் பிறந்தது. மந்திரத்தின் பெருமையைப் பாடத் தொடங்கினார்.
இந்துக் கலைக்களஞ்சியம்

வாடினேன் வாடி வருந்தினேன் மனத்தால் பெருந்துயர்
இடும்பையிற் பிறந்து கூடினேன் கூடி இளையவர் தம்மோடவர் தருங் கல்வியே
கருதி ஒடினேன் ஒடி உய்வதோர் பொருளால் உணர்வெனும்
பெரும்பதம் தெரிந்து நாடினேன் நாடி நான் கண்டுகொண்டேன் நாராயணா
என்னும் நாமம்.
இவ்வாறு பாடியவர். திருமந்திரத்திற்கு விளக்கமாகவுள்ள திருப்பதிகள் பலவற்றையும் சென்று பணிந்தார்.
இவ்வாழ்வார் திருவரங்கம் பெரிய கோவிலுக்குச் சுற்றுத் திருமதில் எடுத்ததாகவும், நம்மாழ்வார் திருவடியடைந்த பின், அவருக்குத் திருவத்தியயன - உற்சவத்தைச் செய்தார் என்றும் கூறுவர். நூற்றைந்து வயதுவரை வாழ்ந்த இவர் திருக்குறுங்குடியில் சிலகாலம் தங்கியிருந்து தன்னடிச் சோதிக்கு எழுந்தருளினார் என்பர்.
இவர் பாடிய ஆறு பிரபந்தங்களையும் மாறன் பணித்த தமிழ்மறை நான்கிற்கும் ஆறங்கமாகப் பாடினார் என்பர்.
பாடியன பெரிய திருமொழி, திருக்குறுந்தாண்டகம், திருநெடுந்தாண்டகம், பெரிய திருமடல், சிறுத் திருமடல், திருவெழுகூற்றிருக்கை.
குலசேகராழ்வார் :
சேரர் மரபில் மாசித்திங்கள் புனர்வசு நட்சத்திரத்தில் தோன்றியவர். 'குலசேகரன்' என்பது இவர் இயற்பெயர். செந்தமிழ் வடமொழிகளை நன்கு கற்று, இரு மொழிகளிலும் கவிபாட வல்லவராக வாழ்ந்தார். அரசேற்று, மணம் புரிந்து வாழ்க்கை நடத்தினும் திருமகள் கேழ்வன்பால் மாறாத அன்புடையவராக வாழ்ந்து வந்தார். எல்லா ஆழ்வார்களுக்கும் போல, இறைவனே இவருக்கு மயர்வற மதிநலம் அருளியதாகக் கூறுவர். பகவத் பாகவத கைங்கரியங்களிலே ஈடுபட்டு வாழ்ந்த இவ்வரச அடியவருக்கு இராம காதையில் ஈடுபாடு மிகலாயிற்று. இவர் பாடியது பெருமாள் திருமொழி என வழங்கப்பெறும்; இதில் இராமகாதையை ஒரு பதிகத்தும், தயரதன் புலம்பலை ஒரு பதிகத்தும் பாடியுள்ளார். இராமகாதையைக் கேட்டுக் கொண்டிருக்கும் போதே, தன்னை மறந்த நிலையில் இராமன் உதவிக்குப் படையுடன் புறப்படத் தொடங்கினார் என்பர். தம் வாழ்வின் பிற்பகுதியில் முடிதுறந்து தெய்வத் திருப்பணியிலேயே வாழ்ந்தார்.
இவர் பாடியது. பெருமாள் திருமொழி.
ஆண்டாள்
முதலாழ்வார் மூவரைப்போல் இவரும் தாய் வயிற்றில்
பிறந்ததாகக் கூறும் மரபில்லை. பெரியாழ்வார் திருநந்தவனப் பணியின்போது திருத்துழாய்ச் செடியின் அடியில் இவரைக்
227

Page 274
கண்டெடுத்ததாகக் கூறுவர். சீதா தேவியினையும் நிலத்தி லிருந்து கண்டெடுத்ததாகக் கூறலே மரபு.
இவர் இயற்பெயர் 'கோதை என்பது. ஆடிப்பூரத்தன்று தோன்றியவர். இளமையிலேயே பெருமாளிடத்தே பெருங்காதல் கொண்டு வாழ்ந்தார். தாம் கண்ணனுக்கே உரிமை என்ற உணர்வு அவரிடம் எப்போதும் இருந்தது. தம் தந்தையார் - பெரியாழ்வார் - பெருமாளுக்கு என்று கட்டி வைத்திருந்த மாலையைத் தாமே அணிந்து, தாம் பெருமாளுக்கு ஏற்றவர்தாமா எனப் பார்த்துக் கொள்வதுண்டு. இதனையறியாது பெரியாழ்வாரும் பெருமாளுக்குச் சாத்துவார். ஒருநாற் அதனைக் கண்டுவிட்ட பெரியாழ்வார் மகளனிந்து விட்ட மாலையைப் பெருமாளுக்குச் சார்த்துவது தகுதியன்று என அன்று அம்மாலையைத் திருக்கோவிலுக்குக் கொண்டு கொடுக்க வில்லை. இறைவனோ பெரியாழ்வார் கனவிலே தோன்றி கோதை சூடிய மாலையே தான் உகப்பது எனக் கூறியருளினான். இதனாலேயே சூடிக்கொடுத்த சுடர்க்கொடி எனப்பட்டார். இதன் பின் பெரியாழ்வாரே, கோதையை நோக்கி என்னை ஆண்டாளே எனக் கூறியதாகக் கூறுவர்.
ஆண்டாள் காதல், அரங்கநாதரிடம் முறுகி வளரலாயிற்று. பெருமாளை அடைவதற்கென்று நோன்பிருந்து பாடிய பாடல்களே திருப்பாவை, நாச்சியார் திருமொழி என்பன. தம் வாழ்வில் இறுதியில் திருவரங்கம் சென்று அவன் மணவாட்டியாக அவனோடு இரண்டறக் கலந்து விட்டாள் என்பர்.
இவர் பாடியன. திருப்பாவை, நாச்சியார் திருமொழி.
பெரியாழ்வார் :
சீவில்லிப்புத்தூரில், திருமாலடியாராக வாழ்ந்த சோழியப் பிராமணர் ஒருவருக்கு மகனாகப் பிறந்தவர். இவர் இயற்பெயர் விட்டுணுசித்தன்' என்பது. ஆனிச் சுவாதி - இவர் திருநட்சத்திரம், திருநந்தவனம் அமைத்து மாலை தொடுத்துப் பெருமாளுக்குச் சூட்டுவதையே தம் பகவத் கைங்கரியமாகக் கொண்டு வாழ்ந்தவர். பாண்டி மன்னன் அவையிலே பல பேரறிஞர்கள் முன்னிலையில் உண்மைப் பொருள் இதுவெனத் திருமாலருளால் நிச்சயம் செய்து பொற்கிழி பெற்றார் என்றும், அதனைச் சீவில்லிப்புத்தூரிலுள்ள வட பெருங்கோவிலில் எழுந்தருளியுள்ள திருமகள் கேழ்வனுக்கே ஆக்கினார் என்றும் கூறுவர். பாண்டி மன்னன் இவர் திறம் கண்டு வழங்கிய பட்டப் பெயரே பட்டர் பிரான் என்பது. பலருக்கும் நிலையான பேரின்பம் தரும் பெருமாளுக்கே பல்லாண்டு பாடியமையின் இவரைப் பெரியாழ்வார் என வழங்கலாயினர் என்பர்.
இவர் பாடியன. திருப்பல்லாண்டு, பெரியாழ்வார் திருமொழி.
திருமழிசையாழ்வார்
திருக்கச்சிப்பதியின் அருகேயுள்ள திருமழிசை என்னும் ஊரில் தோன்றியவர் இவ்வாழ்வார். தை - மகம் - இவர் திருநட்சத்திரம். பார்க்கவ முனிவருக்கு மகவாய்த்தோன்றிய இவர், தோன்றியபோது வெறும் பிண்டம் என்ற அளவில் இருந்ததால் பிரம்புத் தூற்றில் எறியப்பட்டார் என்றும்,
228

திருமாலருளால் அழகுள்ள குழந்தையாகிப் பிரம்புத் தொழில் புரிவோன் ஒருவனால் வளர்க்கப்பட்டு வந்தார் என்றும் கூறுவர்.
இளமையிலேயே யோக நெறியில் ஈடுபாடு கொண்டிருந்த இவர், முதற்பொருளை உறுதிசெய்யப் பலசமயங்களிலும் புகுந்து ஆராயத் தலைப்பட்டார் என்றும் இறுதியில் திருமாலருளால் பேயாழ்வாரைக் குருவாக அடைந்து உண்மை உணர்ந்தார் என்றும் கூறுவர். திருமந்திர உபதேசம் பெற்று, யோகத்திலேயே திளைத்திருந்தார். இவருக்குத் திருமகள் கேழ்வன் சேவையளித்தருள திருவல்லிக்கேணியில் திருமாலைத் தியானித்தவாறு பல ஆண்டுகள் யோகத்திலிருந்தார். பல அரிய செயல்களைச் செய்து திருநாடு எழுந்தருளினார். தம்மை இகழ்ந்த வேள்விச் சடங்கர்களுக்குத் திருமாலோடு தமக்குள்ள சாரூபத்தைக் காட்டியருளியதாகவும் கூறுவர். பத்திரசாரர் என இவரைப் பலரும் வழங்குவர்.
இவர் பாடியருளியன நான்முகன் திருவந்தாதி, திருச்சந்த விருத்தம் என்பன.
தொண்டரடிப் பொடியாழ்வார் :
இவரைத் துளசிமாலையின் அமிசமாகக் கூறுவர். சோழ நாட்டில் மண்டங்குடியில் வாழ்ந்த சோழியப் பார்ப்பனரான வேதவிசாரதருக்கு மகனாகத் தோன்றியவர். விப்பிரநாராயணன் என்பது இவர் இயற்பெயர்; மார்கழி - கேட்டை நாளில் பிறந்தவர். இவர் திருவரங்கத்தில் நந்தவனம் அமைத்து மலர்த்தொண்டு செய்து வந்தவர். தேவதாசி உறவில் இவர் வாழ்க்கை இடையே திரிபடைந்ததாயினும் இறையருளால், மனம் திருந்தி பகவத் தொண்டில் உறைந்து நிற்கலானார். தொண்டர்களிடம் கொண்ட பேரன்பால் தம்மையும் 'தொண்டரடிப் பொடி' எனப் பிறர் வழங்குமாறு வாழ்ந்தார்.
இவர் பாடியன, திருமாலை, திருப்பள்ளி எழுச்சி என்னும் பிரபந்தங்கள்.
நம்மாழ்வார் :
இவரைச் சடகோபர் என்பர். நெல்லை மாவட்டத்தில் ஆழ்வார் திருநகரியில் (திருக்குருகூர்) தோன்றியவர். இவரைச் சேனை முதலியாரின் அம்சமாகக் கூறுவர். இவர் பிறந்தநாள் வைகாசி விசாகம்; அன்று பெளர்ணமியும் உடனிருந்தது. இவர் தந்தையார் பெயர் காரியார்; தாயார் உடைய நங்கையார். இவர் இயற்பெயர் மாறன் என்பது, பிறந்தது முதல் உலகியல் நாட்டமற்றிருந்த இவரைப் பிறந்த பன்னிரண்டாம் நாளிலேயே இறைவன் திருமுன்பு கொண்டு விட்டனர் என்றும் அங்குள்ள புளிய மரத்தடியில் பதினாறு வயதுவரை இறைவனையே நினைத்தவாறிருந்தார் என்றும் கூறுவர்.
வடக்கே தல யாத்திரை சென்ற மதுரகவியாழ்வாருக்குத் தெற்கே ஒரு பேரொளி தோன்றிற்று. அவ்வொளியினையே வழிகாட்டியாகக் கொண்டு திரும்பி வரும்போது ஆழ்வார் திருநகரியில் நம்மாழ்வார் தரிசனம் கிடைத்தது. மதுரகவிகள் நம்மாழ்வார் பக்கம் ஒரு சிறுகல்லை எடுத்துப் போட்டு ஒலியெழுப்ப, நம்மாழ்வார் கண்விழித்துப் பார்த்தார். கண்விழித்த நம்மாழ்வாரிடம் செத்ததன் வயிற்றில் சிறியது பிறந்தால் எத்தைத்
இந்துக் கலைக்களஞ்சியம்
ܒ

Page 275
தின்று எங்கே கிடக்கும்? என மதுரகவிகள் வினவ, அத்தைத் தின்று அங்கே கிடக்கும்?' என நம்மாழ்வார் பதில் கூறினார். (சிறிய வடிவினதாகிய உயிர் உடம்பெடுத்தால் எதனை அனுபவித்து எங்கு வாழும்? என்பது வினா, வினைப்பயனை அனுபவித்து அவ்வுடம்பிலேயே வாழும் என்பது பதில்) அப்பதில் மதுரகவிகளுக்குப் பெருமகிழ்ச்சியைத் தந்தது. அவரையே குருவாக ஏற்றுத் தொண்டு செய்தற்குத் தொடங்க, நம்மாழ்வாரும் மதுரகவிகளுக்கு வைணவ நெறியினை உபதேசித்தருளினார்.
பின்னர் இறைவனை நினைத்துப் பாடத் தொடங்கினார். இவர் முப்பத்தைந்து ஆண்டுகள் வாழ்ந்து இறுதியில் பரமபதம் அடைந்தார் என்பர்.
வைணவர்களால் ஆழ்வார்கள் அனைவரும் பாராட்டப் படினும், அவர்களுள் நம்மாழ்வாரே சிறப்பாகப் பாராட்டப்படுபவர். ஏனைய ஆழ்வார்களை அவயவம் என்றும் நம்மாழ்வாரை அவயவி (உயிர்) என்றும் கூறுவர். ஏனைய ஆழ்வார்களைப் பிரபந்தர் (பிரபத்தி நெறியில் சென்றவர்கள்) எனக்கூறி நம்மாழ்வாரைப் பிரபந்த கூடஸ்தர் (முதல்வர்) எனக் கூறுவதும் உண்டு. இவரையே வைணவத்திற்குப் பரமாசாரியார் மூல புருஷர், குலபதி என்பர். பூரீ வைஷ்ணவத்திற்கு நம்மாழ்வாரை முதல் - தாய் என்றும் இராமாநுசரை இதத்தாய் என்றும் கூறும் வழக்கும் கருதத்தக்கது.
அருமறைகள் தமிழ் செய்தான் தாளே கொண்டு துன்புற்ற மதுரகவி தோன்றக்காட்டும் தொல்வழியே நம்வழிகள் துணிவார்கட்கே!
என வேதாந்த தேசிகர் பூரீ வைஷ்ணவத்தை விளக்குவதையும் குறிப்பிட வேண்டும். மேலும் நம்மாழ்வார் அருளிய திவ்வியப் பிரபந்தத்தில் திளைத்தலையும் பேரின்பமாகக் கருதுவர். 'அறிவிலிகள் சிலர் க, ப, ச, ட என்று வியாகரணத்தில் (இலக்கணம்) உள்ள அகூடிர வரிசைகளைப் படித்துக் கொண்டிருக்கட்டும். பேசுவதில் திறமை பெற்றவராக எண்ணிக் கொண்டிருக்கும் சிலர் கடம் படம் என்று உரக்கக் கத்திக் கொண்டிருக்கட்டும். நாமோவெனில் மகிழம்பூ மாலையில் நின்றும் பெருகுகிற, குறைவற்ற செந்தேன் பெருக்கின் சிறப்புடைய, குணபூர்த்தி உள்ள நம்மாழ்வாரின் திவ்வியப் பிரபந்தங்களைக் கொண்டு ஆனந்திக்கிறோம் என்பர்.
இவர் பாடியன. பெரிய திருவந்தாதி, திருவிருத்தம், திருவாசிரியம், திருவாய்மொழி.
திருப்பாணாழ்வார் :
சோழ நாட்டு உறையூரில், பாணர் வகுப்பில், கார்த்திகைத் திங்கள் உரோகிணியில் பிறந்தவர், தம்குலத்தை எண்ணிக் காவிரிக்கரையில் நின்றவாறு திருவரங்கத்தைத் திசை நோக்கித் தொழுவார்; பாடுவார்; இவரைப் பாண் பெருமாள் என்பர். இறைவன் இவர் பெருமையை உணர்த்தப் போக சாரங்க முனிவரை ஏவிப் பாண்பெருமாளைத் தோளிற் சுமந்து வரப் பணித்தான். அவரும் அவ்வாறே திருமுன்பு அழைத்துவர, அவ்வாழ்வார் பாதாதி
இந்துக் கலைக்களஞ்சியம்

கேசமாகப் பெருமாளை அனுபவித்த அனுபவமே அமலனாதிப்பிரான் என்னும் பிரபந்தமாக வெளி வந்தது.
வேர் சூடுமவன் மண்பற்றுக்கழற்றாதாப்போலே, அத்திருமேனியோடே அங்கீகரித்தருள, ஆழ்வாரும் அனைவரும் காண அரங்கன் அடியிணையில் சென்று சேர்ந்தார், என்பர். இவர் பாடியது அமலனாதிப்பிரான் என்னும் பாசுரம்,
மதுரகவியாழ்வார் :
நெல்லை மாவட்டத்தில் திருக்குருகூரின் அருகேயுள்ள திருக்கோளூரில், சித்திரைத் திங்களில் சித்திரை நாளில் பிறந்தவர். திருமால் பத்தியில் சிறந்து நின்ற இப்பெரியார், தலயாத்திரை செய்யத் தொடங்கித் திருவயோத்தியில் இருந்த போதுதான் தென்திசையில் தோன்றிய பேரொளி, வழி காட்ட நம்மாழ்வாரை வந்தடைந்து உபதேசம் பெற்றார் என்பர். நம்மாழ்வார் பரமபதமடைந்தபின் அவர் திருவுருவையே பிரதிட்டை செய்து வழிபட்டு வந்தார். இவர் பாடியது கண்ணினுண் சிறுத்தாம்பு என்னும் பாசுரமே. அதுவும் தம் ஆசாரியராகிய நம்மாழ்வாரைப் பாடியதே.
தேவு மற்றறியேன் குருசுடர்நம்பி பாவின் இன்னிசை பாடித்திரிவனே
எனப் பாடினாலும் குருநாதரால் பெருமாளையே கண்டதாகக் கூறுவர். (பொ.யூ.)
ஆழ்வார் திருநகரி
திருநெல்வேலி மாவட்டத்தில் திருநெல்வேலி திருச்செந்தூர் இருப்புப் பாதைக் கிளையில் ஆழ்வார் திருநகரி இருப்புப் பாதை நிலையத்திற்கு ஒரு மைல் தொலைவிலுள்ளது திருக்குருகூர் என்றும் ஆழ்வார் திருநகரி என்றும் அழைக்கப்படும் திருத்தலம்.
தவம் செய்ய இடம் தேடிய பிரமனுக்கு ஆகாயவாணி இவ்விடத்தைக் காட்டி குரு (செய்) என்று கட்டளை இட்டபடியால் குருகூர் ஆயிற்று என்பர். நம்மாழ்வார் திருவவதாரம் செய்த திருத்தலம். வைகாசிப் பூரத்தில் எட்டுத் திருப்பதிகத்திலிருந்து பெருமாள் கருடாரூடராக இங்கு எழுந்தருளும் பெருமையுடைய தலம.
இங்கு நின்ற திருக்கோலத்தில் எழுந்தருளும் விஷ்ணுவுக்கு ஆதிநாதன், பொலிந்து நின்றநாதன் என்றும் பெரிய பிராட்டியாருக்கு ஆதிநாதவல்லி என்றும் பேர். கிழக்கே திருமுக மண்டலம். தாம்பரபர்ணிநதி, பிரமதீர்த்தம். பிரமா, நம்மாழ்வார், மதுரகவி யாழ்வாருக்குப் பிரத்தியகூஷம், இங்குள்ள திருப்புளியடியில் உள்ள நம்மாழ்வார் சந்நிதி மிகப் பிரபல்லியமுடையது.
நம்மாழ்வார் மங்களாசாசனம் செய்த திருப்பதியிது (திருவாய்மொழி, 4.10).
இங்கு திருக்காந்தீச்சுரம் எனும் சிவதலமும் உண்டு.
(பொ.யூ.)
229

Page 276
ஆழ்வான்
கூரத்தாழ்வான் என்று அழைக்கப் பெற்றவர்; கூரநாதர், கூராதிபதி, கூராதிபர், கூரேசர், நடையாடு பதஞ்சலி, யதீந்திரசரணன், பூரீவத்சசின்னமிச்ரர், பூரீ வத்ஸசிஹ்நர் எனும் சிறப்புப் பெயர்களையு முடையவர்; தமிழ் நாடு காஞ்சிபுரத்தை அடுத்த கூரம் எனும் ஊரினர்; பதினோராம் நூற்றாண்டிலும் பன்னிரண்டாம் நூற்றாண்டின் ஆரம்பத்திலும் வாழ்ந்தவர்;
இராமசோமயாசியின் புதல்வர்; கூரத்தாண்டாளின் கணவன்; பெரியபட்டர், சீராமப்பிள்ளையின் தந்தை; பூரீ பெரும்பூதூர் இராமாசகரின் சீடர்; அவர் பூரீபாஷ்யம் எழுத உதவியவர்; திருவரங்கத்தமுதனார், பிள்ளைப்பிள்ளை யாழ்வான், நாலூரான், அகளங்க ப்ரஹ்மராயன் முதலானோரின் குரு.
அதிமாநுஷஸ்தவம், பூரீ ஸ்தவம், சுந்தரபாஹ"ஸ்வதவம், வரதராஜஸ்தவம், பூரீ வைகுண்டஸ்தவம், யமரத்நாகரம், அபிகமனசாரம், கத்தியத்திரய வியாக்கியானம், எனும் சங்கத நூல்களை இயற்றியவர். (பொ. யூ.)
ஆளவந்தார்
யமுனைத்துறைவர், யமுனாசாரியர், யாமுநேயர், சிம்மேந்திரர், பெரியமுதலியார் எனவும் அழைக்கப்பெற்றவர்; வீரநாராயணபுரத்திற் பிறந்தவர். பத்தாம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும் பதினோராம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் வாழ்ந்தவர்;
நாதமுனிகளின் புதல்வர் ஈசுரமுனிகள், அரங்கநாயகி யம்மையின் புதல்வர்; சொட்டைநம்பி, தெய்வத்துக்கரசு நம்பி, பிள்ளையரசுநம்பி, திருவரங்கப்பெருமாள் என்போரின் தந்தை; திருவெள்ளரை உய்யக் கொண்டார், குருகைக் காவலப்பன், மணக்கால்நம்பி என்போரின் சீடர்; பெரியநம்பி, திருக் கோட்டியூர்நம்பி, பெரியதிருமலைநம்பி, திருமாலையாண்டான், திருமோகூரப்பன், மாறனேரிநம்பி, திருக்கச் சிநம்பி முதலானோரின் குரு,
ஆகமப் பிராமாண்யம்
கீதார்த்த சங்கிரகம்
சதுஸ்லோகி
சித்தித் ரயம்
ஸ்தோத்ரரத்நம்
முதலான நூல்களைச் சங்கதத்திலே எழுதியவர்; விசிட்டாத் வைதம் எனும் வைணவ தத்துவ தரிசனத்தின் வளர்ச்சியில் இராமாநுஜருக்கு முன்னோடியாக விளங்கியவர்; மாயாவாதம் எனப்படும் ஏகான்ம வாதத்தினைக் கண்டனஞ் செய்தவர்.
(பொ. பூ.)
ஆளவந்தார்
10ாண்டியநாடு வீரசோழனூர் (வீரை) எனுமூரினர்; வேம்பத்தூர் பிராமண மரபினர்; வேதாந்தச்சார்பினர்; காலம்
230

துணியுமாறில்லை; ஞானவாசிட்டம் எனும் சங்கத நூலை மொழி பெயர்த்துத் தமிழிலே பாடியுள்ளார்; இதற்குப் பிறைசை அருணாசலசுவாமிகள் இயற்றிய உரை 1870 இலே பாரிப்பாக்கம் முனியப்ப முதலியாராற் பதிப்பிக்கப் பெற்றது. (பொ. பூ.)
ஆளுடைய பிள்ளையார் திருக்கலம்பகம்
ஆளுடைய பிள்ளையார் எனும் சிறப்புப் பெயரினை யுடையார் ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்த திருஞானசம்பந்தமூர்த்தி நாயனாராவர். சம்பந்தப் பெருமான் மீது திருநாரையூர் நம்பியாண்டர் நம்பி சூட்டிய ஆறு பாமாலைகளில் ஒன்றே
ஆளுடையபிள்ளையார் திருக்கலம்பகம். நம்பி
யாண்டார் நம்பி ஒன்பதாம் அல்லது பத்தாம் நூற்றாண்டில்
வாழ்ந்தவராகலாம்.
ஆளுடைய பிள்ளையார் திருக்கலம்பகத்திற் பாவாலும் பாவினங்களாலும் இயன்ற நாற்பத்தொன்பது பாடல்களுள்ளன. அகமும் புறமுமான பொருள்களிலே களி, சம்பிரதம், மறம், மதங்கியார், பாண், காலம், இரங்கல் முதலிய உறுப்புகளுடன் அமைந்தது. பிற்காலத்துக் கலம்பக உறுப்புகள் பல திருக்கலம்பகத்தில் இடம்பெறவில்லை என்பது நோக்கத்தக்கது. ஆளுடையபிள்ளையார் திருக்கலம்பகம் பதினோராம் திருமுறையிலே தொகுக்கப் பெற்ற பிரபந்தங்களில் ஒன்றாகும். (பொ.யூ.)
ஆளுடைய பிள்ளையார் திருச்சண்பை விருத்தம்
ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்த திருஞானசம்பந்த மூர்த்திநாயனார் பெற்ற சிறப்புப் பெயர்களில் ஒன்று ஆளுடைய பிள்ளையார்.
சம்பந்தப் பெருமான் மீது திருநாரையூர் நம்பியாண்டார் நம்பி பாடியது ஆளுடைய பிள்ளையார் திருச்சண்பை விருத்தம். அதனுள் பதினொரு விருத்தங்கள் இடம் பெறுகின்றன.
நம்பியாண்டார்நம்பி ஒன்பதாம் அல்லது பத்தாம் நூற் றாண்டில் வாழ்ந்தவர் என்று கருத இடமுண்டு. அவர் சம்பந்தப் பெருமான் மீது ஆறு பிரபந்தங்களைப் பாடியவர்.
திருச்சண்பை விருத்தம் திருஞானசம்பந்தரின் அருட் செயல்களைத் தொகுத்துக் கூறுவதாகும். "சண்பையர் காவலன் சம்பந்தனே' என்ற முத்திரையுடன் பத்துப் பாடல்கள் இடம் பெறுகின்றன.
திருச்சண்பைவிருத்தம் பதினோராம் திருமுறையில் இடம் பெறுவதாகும். (பொ. பூ.)
இந்துக் கலைக்களஞ்சியம்

Page 277
ஆளுடைய பிள்ளையார் திருத்தொகை
திருநாரையூர் நம்பியாண்டார்நம்பி சம்பந்தப் பெருமான் மீது பாடிய ஆறு பிரபந்தங்களில் ஒன்றே திருத்தொகையாகும். 65 அடிகளாலான திருத்தொகையிலே நம்பியாண்டார் நம்பி தம் பாட்டுடைத்தலைவனின் வரலாற்றுச் சிறப்புகளையெல்லாம் தொகுத்தளித்துள்ளார். (பொ.யூ.)
3,656.Dlug 156ira D6TuJITs gob.pub1D6 of 35635T&D6)
சம்பந்தப் பெருமான் மீது திருநாரையூர் நம்பியாண்டார் நம்பி பாடிய பிரபந்தமே ஆளுடைய பிள்ளையார் திருமும்மணிக் கோவையாகும். இது ஆசிரியப்பா, வெண்பா, கட்டளைக் கலித்துறை எனும் மூவகை யாப்பமைதிகளால் அந்தாதித் தொடை அமைய முப்பது பாடல்களால் இயன்றது.
இம்மும்மணிக்கோவையைப் பாடிய நம்பியாண்டார்நம்பி ஒன்பதாம் அல்லது பத்தாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் என்று கருத இடமுண்டு. இவர் ஆளுடைய பிள்ளையார் மீது ஆறு பிரபந்தங்களைப் பாடியுள்ளார்.
இம்மும்மணிக்கோவையிலே அகப் பொருளிலும் புறப் பொருளிலும் அமைந்த பாடல்கள் உள்ளன. புறப்பாடல்களிற் சம்பந்தர் பெருமை எடுத்து இயம்பப்பட்டுள்ளது.
ஆளுடையபிள்ளையார் திருமும்மணிக் கோவை பதினோராம் திருமுறையில் இடம் பெறுவதாகும். (பொ. யூ.)
ஆளுடைய பிள்ளையார் திருவந்தாதி திருநாரையூர் நம்பியாண்டார் நம்பி, சம்பந்தர் மீது பாடிய
பிரபந்தமே ஆளுடைய பிள்ளையார் திருவந்தாதியாகும். இதனுள் நூறு கலித்துறைப்பாக்கள் இடம் பெறுகின்றன.
ஆளுடைய பிள்ளையார் திருவந்தாதியில் அகத்துறைப் பாக்கள் பல இடம் பெறுகின்றன. அகக்துறைப்பாக்கள் நீங்கலாக உள்ளனவற்றிலே ஒரு பாடல் சம்பந்தர் தம் தண்பதி கூறுவது; ஒரு பாடல் சீகாழியின் பன்னிரு திருப்பெயர்களையும் தொகுத்து தருவது; ஏனையவை புகலிவேந்தரின் பொன்றாப் புகழையும் பூங்கழல் திறத்தையும் போற்றுவன.
இவ்வந்தாதி நீங்கலாக நம்பியாண்டார் நம்பி சம்பந்தப் பெருமான் மீது ஐந்து பிரபந்தங்களைப் பாடியுள்ளார்.
நம்பியாண்டார் நம்பி ஒன்பதாம் அல்லது பத்தாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் என்று கருத இடமுண்டு. (பொ.பூ)
éb(656ODLuj 1ólar6CD6ITUUTTñ திருவுலாமாலை
சைவசமயகுரவருள் ஒருவரான திருஞானசம்பந்தநாயனார், ஆளுடையபிள்ளையார் என்று சிறப்பிக்கப்படுவார். அவர் மீது
இந்துக் கலைக்களஞ்சியம்

திருநாரையூர் நம்பியாண்டார் நம்பி பாடிய ஆறு பிரபந்தங்களில் ஒன்றே ஆளுடைய பிள்ளையார் திருவுலாமாலையாகும்.
காவியமரபு செல்வாக்குப் பெற்ற சோழப் பெருமன்னர் காலத்திலே தோன்றிய திருவுலாமாலையிலே, சம்பந்தர் தம் நாட்டையும் பின்பு நகரத்தையும் காவிய பாணியிலே வருணித்து விட்டு, பின்பு பாட்டுடைத் தலைவனைச் சிறப்பித்து, தொடர்ந்து உலாவிற்கான காரணம் கூறி உலாவை நடாத்தும் ஆசிரியர், பின்னெழு நிலையில் அடங்கும் நிகழ்ச்சிகளைச் சுருக்கமாகக் கூறியுள்ளார். இவ்வுலாவிலே 143 கண்ணிகளுண்டு. ஆதியுலாவிற் காணப்படும் ஈற்று வெண்பா நம்பியின் திருவுலா மாலையில் இல்லை. (பொ.யூ.)
ஆறாந்திருமுறை
சைவர்களின் பன்னிரு திருமுறைகளிலே நான்காம்,
ஐந்தாம், ஆறாம் திருமுறைகள் திருநாவுக்கரசு சுவாமிகள் பாடியருளிய திருப்பதிகங்களின் தொகுப்புகளாகும்.
திருநாவுக்கரசர், முதலாம் மகேந்திரவர்மன் (610-630) எனும் பல்லவ மன்னனை விபசுஷவிருத்தியிலிருந்து மீட்டவர்; மாறவர்மன் அரிகேசரி (640-690) காலத்திலும் இவர் வாழ்ந்தவர் என்று பெரியபுராணம் மூலம் அறிய முடிகின்றது.
ஆறாந்திருமுறை திருத்தாண்டகம் எனவும் அழைக்கப் பெறும். இத் திருமுறையிலே அப்பர் பாடிய 99 திருப்பதிகங்கள் இடம் பெறுகின்றன; 983 திருப்பாடல்கள் காணப்படுவன: இத்திருப்பதிகங்களிலே 91 தலப்பதிகங்கள், 8 பொதுப் பதிகங்கள்.
தலப்பதிகங்களிலே 65 திருத்தலங்கள் பதிகம் பெற்றுள்ளன; ஆறாம் திருமுறையில் இடம் பெறும் திருப்பாடல்கள் தாண்டகம் எனும் யாப்பமைதியினால் அமைந்தவை; தொல்காப்பியத்தின் செய்யுளியலின்படி எண் சீரான் வந்த கொச்சக ஒரு போகு தான் இந்த யாப்பமைதி என்பர். அப்பரின் தாண்டகம் ஒற்றும் குற்றியலுகரமும் நீக்கி எழுத்தெண்ணி வகுக்கப்பட்ட ஐவகை அடிகளுள் கழிநெடிலடிக்கு மேலெல்லையாகிய 20 எழுத்து என்னும் அளவினைக் கடந்து 27 எழுத்திற்கு உட்பட்டு வருவதாகும்; தேவாரத்தில் 20 எழுத்து என்னும் வரையறையைக் கடந்து வருவன பிறவும் உளவேனும் அவையனைத்தும் பண்ணோடு கூடிய இசைப்பாடல்களாதலின் இயல்வகை குறித்த தாண்டகம் எனும் பெயரைப் பெறலாயின.
திருநாவுக்கரசு நாயனார் திருப்பதிகங்கள் 1867 இலே காஞ்சிபுரம் மகாவித்துவான் கோ. சபாபதி முதலியாராற் பதிப்பிக்கப் பெற்றன. தேவாரம் தலமுறையை மதுரை இராம சுவாமிப்பிள்ளை (1881), திருமயிலை செந்தில்வேலு முதலியார் (1893), வண்ணை சி. சுவாமிநாத பண்டிதர் (1911) என்போர் பதிப்பித்தனர்; காஞ்சி நாகலிங்க முதலியாரும் கயப்பாக்கம் சதாசிவச் செட்டியாரும் வெளியிட்ட பதிப்பு விவரங்கள் கிடைக்கவில்லை. சென்னை சைவ சித்தாந்த மகாசமாஜம் திருநாவுக்கரசு சுவாமிகள் தேவாரத்தை 1930,1935 ஆம் ஆண்டுகளிற் பதிப்பித்துள்ளது. திருப்பனந்தாள் பூரீ காசிமடம் 1957 இலே திருநாவுக்கரசர் தேவாரம் தலமுறையை
231

Page 278
வெளியிட்டுள்ளது. தருமபுரவாதீனம் 1963 இலே ஆறாம் திருமுறையைச் சி. அருணைவடிவேல் முதலியார் குறிப்புரையுடன் பதிப்பித்துள்ளது. (பொ.பூ.)
ஆறாறு தத்துவங்கள்
திருமந்திரத்திலே திருமூலநாயனார் “ஆகின்ற ஆறாறு அருஞ்சைவர் தத்துவம்” என்று கூறுவார் (2179), திருவதிகை மனவாசகங் கடந்தார். “ஆறாறுதத்துவமேது” என்று உண்மைவிளக்கத்திலே (2) வினவித் தொடர்ந்து விளக்குவார்.
இம் முப்பத்தாறு தத்துவங்களும் ஆன்மதத்துவம், வித்தியாதத்துவம், சிவதத்துவம் என மூவகைப்படுவன. அவற்றுள் ஆன்மதத்துவம் இருபத்து நான்காம், அவை பூதங்கள் ஐந்து, தன்மாத்திரைகள் ஐந்து, ஞானேந்திரியங்கள் ஐந்து, கன்மேந்திரியங்கள் ஐந்து, அந்தக்கரணங்கள் நான்கு. ஆன்மாவுக்குத் தூலவடிவில் நேரே தொடர்புற்றுப் பயன்படுவன வாதலின் ஆன்மதத்துவங்கள் எனப் பெயர் பெறுவன. ஆன்மதத்துவத்தைப் போக்கிய காண்டம் என்பர். இவற்றை அசுத்தம் எனச் சிவப்பிரகாசம் கூறும்.
நிலம், நீர், தீ, வளி, விசும்பு (பிருதுவி, அப்பு, தேயு, வாயு, ஆகாசம்) ஐம்பூதங்கள். அவை இந்திரியங்களுக்குப் பற்றுக் கோடாவன.
ஓசை, ஊறு, ஒளி, சுவை, நாற்றம் (சப்தம், பரிசம், ரூபம், ரசம், கந்தம்) ஐந்து தன் மாத்திரைகள், தன்மாத்திரைகள் ஐம்பூதங்களின் சூக்கும நிலையாகும். தன்மாத்திரைகளிலிருந்து ஐம்பூதங்களும் தோன்றுகின்றன. தன்மாத்திரைகள் பூதாதி யாங்காரத்திலிருந்து பிறக்கின்றன. தன்மாத்திரையும் ஐம்பூதமும் இந்திரியங்கட்கு ஆற்றல் விளைவித்து நிற்கும்.
செவி, தோல்,கண், நாக்கு, மூக்கு (சுரோத்திரம், துவக்கு, சுட்சு, சிங்நுவை, ஆக்கிராணம்) அறிகருவிகளான ஞானேந் திரியங்கள். இவை ஐம்பூதங்களைப் பற்றுக் கோடாகக் கொண்டு தன்மாத்திரைகளை அறிவன.
வாய், கால், கை, எருவாய், கருவாய் (வாக்கு, பாதம், பாணி, பாயுரு, உபத்தம்) தொழிற் கருவிகளாகிய கன்மேந்திரியங்கள். ஐம்பூதங்களைப் பற்றுக் கோடாகக் கொண்டு இவை பேசல், நடத்தல், கொடுத்தல், விடுத்தல், இன்புறல் (வசனம், கமனம், தானம், விசர்க்கம், ஆனந்தம்) எனும் தொழில்களைச் செய்வன.
அந்தக் கரணங்கள் மனம், புத்தி, அகங்காரம், சித்தம் ஆவன. கண்ணுக்குக் காட்டாகிய விளக்குப்போல ஆன்மாவுக்குக் காட்டாக நிற்பது அந்தக்கரணம்.
வித்தியாதத்துவங்கள் ஏழாகும். அவை காலம் நியதி, கலை, வித்தை, அராகம், புருடம், மாயை என்பனவாம். இவை ஆன்மாவுக்கு வித்தையை - அறிவை- எழுப்பும் தத்துவங் களாதலின் வித்தியாதத்துவங்கள் எனப் பெயர் பெற்றன.
232

இவற்றிலே காலம், நியதி, கலை, வித்தை, அராகம் என்பன ஆன்மாவினுடன் கஞ்சுகம் ( சட்டை போர்வை) போல பந்தித்து நிற்றலின் பஞ்ச கஞ்சுகம் என வழங்கப்படுவன. வித்தியா தத்துவத்தை போசயித்ருகாண்டம் என்பர். சிவப்பிரகாசம் இவற்றைச் சுத்தாசுத்தம் என்று கூறும்.
அசுத்த மாயையினின்று அநந்ததேவரால் காலமும் நியதியும் கலையும் தோற்றும், கலையினின்று வித்தையும் வித்தையினின்று அராகமும் தோன்றுவன.
காலம் எனும் தத்துவமானது செல்காலம் ஆன எல்லையும், நிகழ்காலமான பலனும், எதிர் காலமான புதுமையும் ஆக மூன்று வகைப்பட்டிருக்கும்.
அவரவரால் ஈட்டப்படும் வினையின் பயனை அவரவரே
நுகருமாறு நியமித்து நிறுத்துவது நியதித் தத்துவம். இதனை ஊழி, விதி, பால், தெய்வம் என்றெல்லாம் கூறுவர்.
கலை மலத்தை நீக்குதலால் அப்பெயர் பெற்றது. மூலமலத்தால் மறைப்புண்டு சூனியம் போல் நின்ற ஆன்மாக்களுக்குப் போக நுகர்ச்சியின் பொருட்டு மலசக்தியிற் சிறிதே நீக்கி, ஆன்மாக்களுக்குக் கிரியா சக்தியை விளக்குவது கலை, கலை ஆன்மாக்களின் கிரியா சக்தியை விளக்கிப் புத்தி தத்துவத்திற்குச் செலுத்துவது.
கலையிலிருந்து தோன்றி ஆன்மாக்களுக்கு ஞான சக்தியை விளக்கி, எவ்விதமான உணர்வும் ஆன்மாவிற் சென்று விடாதவாறு கருவியாக நிற்பது வித்தியாதத்துவம். உயிரினிடத்தே அறிவினை முதன்முதல் எழுப்புதல் வித்தியா தத்துவத்தின் சிறப்பியல்பு. -
அராகம் என்பது இச்சை, விருப்பம் எனப் பொருள் தருவது. வித்தியாதத்துவத்திலிருந்து அராகதத்துவம் தோன்றி ஆன்மாவுக்குப் பொருள்களில் விருப்பத்தை உண்டாக்கும். இச்சை ஞானவிசேடம். இச்சை ஏற்பட்டாலன்றி போக நுகர்ச்சி செல்லாது.
ஆன்மா போகம் நுகர முற்படும் நிலை புருட தத்துவமாகும். அப்பொழுது காலம், நியதி, கலை, வித்தை, அராகம் எனும் பஞ்சகஞ்சுகங்களோடு அவிச்சை, அகங்காரம், அவா, ஆசை, வெகுளி ஆகிய பஞ்சகிலேசம் எனும் போக நுகர்ச்சிக்குரிய மலத்தோடு ஆன்மா இயைந்து நிற்கும்.
மூலப் பிரகிருதி ஆன்மாக்களைப் போக நுகர்ச்சியிற் செலுத்தியும் அவற்றிற்குப் போக்கியப் பொருள்களாக அமைந்தும் மயங்கி நிற்றலின் மாயை எனப்பட்டது. மும்மலத்தில் ஒன்றான மாயை வேறு.
சிவதத்துவம் ஐந்து. சுத்த மாயையிலிருந்து சுத்த தத்துவங்கள் ஆகிய சிவதத்துவங்கள் ஐந்தும் தோன்றுகின்றன. மாயை தூலமாய் நின்ற அவத்தையிற் பிரகிருதிமாயை என்றும், சூக்குமமாய் நின்ற அவத்தையில் அசுத்த மாயை என்றும், பரமாய்
இந்துக் கலைக்களஞ்சியம்

Page 279
(அதிசூக்குமமாய்) நின்ற அவித்தையிற் சுத்த மாயை என்றும் வழங்கப்படும். சுத்தவித்தை, ஈசுரம், சாதாக்கியம், சத்திதத்துவம், சிவதத்துவம் என்பன ஐந்து பிரிவுகளாம். இது பிரேரககாண்டம். சிவப்பிரகாசம் இவற்றைச் சுத்தம் என்று கூறும்.
சுத்த மாயையில் தூலகாரியம் தோன்றுவதற்கு ஏதுவாக முதல்வனின் ஞானசக்தி மிகுந்தும், கிரியாசக்தி குறைந்தும் நிகழ்வது சுத்தவித்தை உருத்திரன், மால், அயன், இந்திரன் முதலியோர்க்கும் அவர்களின் தனு கரணாதிகளுக்கும் இது இடமாகும்.
சுத்த மாயையிற் சூக்குமமாய்க் காரியம் தோன்றுவதற்குக் கிரியை மிகுந்து, ஞானம் நிகழ்வது ஈசுரம், அநந்ததேவர் முதலிய வித்தியேசுரர் எண்மருக்கும் பிறருக்கும் இது இடமாகும்.
சுத்தமாயையைக் காரியப்படுத்த, முதல்வனின் ஞானசக்தியும் கிரியாசக்தியும் தம்முள் ஒத்து நிகழ்வது சாதாக்கியம். பிரணவர், அணுசதாசிவர் முதலியோருக்கும் அவர்தம் தனு கரணாதிகட்கும் இது இடமாம்.
சுத்தமாயை காரியப்படுமாறு முதல்வனது கிரியா சக்தி வெளிப்பட்டு நிற்பது சக்தி தத்துவம். மலபந்தம் நீக்கித் தூலலய வாசனை மட்டும் உடைய முத்தர்களுக்கும் அவர்களுக்குரிய புவனபோகங்களுக்கும் இத்தத்துவம் இடமாக நிற்கும்.
சுத்தமாயை காரியப்படுதற்கு ஏதுவாகும் வண்ணம் இறைவன் தனது ஞானசக்தி மாத்திரையால் நோக்கி நிற்கப் பெறுவது ஐந்தாவதான சிவதத்துவம். சூக்கும லய வாசனை மட்டும் உடைய முத்தான்மாக்களுக்கும் அவர்களுக்குரிய புவன போகங்களுக்கும் இஃது இடமாகும். (பொ.யூ.)
ஆறுபடைவீடு
ஆறுபடைவீடு (அறுபடைவீடு) எனவும் முருகப் பெருமானின் திருத்தலங்கள் தொகுத்துரைக்கப்படும் மரபுண்டு. இத்தொகுப்பிலே தனித்தலமும் தொகைத்தலமுமாக ஆறு இடம் பெறுகின்றன.
ஆற்றுப்படைவீடு எனும் வழக்கே காலாந்தரத்தில் ஆறுபடைவீடு என மருவிற்று என்பார் கூற்று நோக்கத்தக்கது. முருகாற்றுப்படுத்தும் மரபு பழைய மரபு (அகநானூறு 22). இம்மரபுடன் ஆற்றுப்படை எனும் இலக்கிய வடிவத்தின் வழக்கினை அநுசரித்து எழுந்த திரு முருகாற்றுப்படையிலே கூறப்பட்ட தனித்தலமும் தொகைத்தலமுமாக ஆற்றுப்படைவீடு என்று வழங்கப் பெற்றுப் பின்பு ஆறுபடைவீடு என குறிப்பிடப் பெற்று தலத்தின் அடிப்படையில் மருவிற்றுப்போலும். திருச்சீரலைவாய் ஒழிந்த திருத்தலங்கள் படைவீடாக அமையாமை இக்கருத்தினை ஆதரிக்கின்றது.
இத் தொகுப்பில் திருப்பரங்குன்றம், திருச்சீரலைவாய், திருவாவினன்குடி, திருவேரகம், குன்றுதோறடல், பழமுதிர்ச்
சோலை என்பன இடம் பெறுகின்றன.
இந்துக் கலைக்களஞ்சியம்

திருப்பரங்குன்றம் மதுரை மாநகருக்குத் தென் மேற்கிற் சில மைல் தொலைவில் உள்ளது; கடல் மட்டத்திற்கு 1050 அடி உயரத்திலுள்ளது. அகநானுற்றிலும் (59, 149) பரிபாடலிலும் (6, 8, 9, 17, 19) பரங்குன்றிற் கோயில் கொண்ட முருகப் பெருமான் பற்றிய செய்திகள் உள்ளன. மதுரைக் காஞ்சியிலும் (263) பரங்குன்று குறிப்பிடப்படுகின்றது. பின்னெழுந்த தேவாரமும் திருப்புகழும் கந்தபுராணமும் முருகன் எழுந்தருளிய பரங்குன்றினை வாயாரப் போற்றியுள்ளன.
திருப்பரங்குன்றிலே மலையிலே குடைந்து அமைக்கப் பெற்ற உருவுடன் மூலமூர்த்தி காட்சியளிக்கிறார். இது பிருதிவி மயமென்று கூறுவதால் மூல மூர்த்திக்குத் தீர்த்தத்தினாலும் ஏனைய திரவியங்களாலும் அபிடேகம் செய்வதில்லை; வருடத்திற்கு இருமுறை புனுகு சட்டம் சேர்ந்த வாசனைக் குழம்பினால் அபிடேகம் செய்வார்கள். இத் திருத்தலத்திலே தெய்வயானையம்மையாரை முருகன் திருமணம் புரிந்தார் என்பது புராணம், நக்கீரர் இங்குள்ள குகையிலே அடைபட்டுக் கிடந்து முருகப் பிரானாற் காப்பாற்றப்பட்டவராம். பங்குனி பிரமோற்சவத்தின் நான்காம் திருவிழாவின் போது நக்கீரரைச் சிறைமீட்ட உற்சவம் விமரிசையாக இங்கு கொண்டாடப்படும்.
நிரம்ப வழகிய தேசிகர் திருப்பரங்கிரிப்புராணம் இயற்றியுள்ளார். இதனைத் தழுவி மு.ரா. அருணாசலக் கவிராயர் திருப்பரங்கிரிப் புராண வசனம் எழுதியுள்ளார். திருப்பரங்கிரிப் பிள்ளைத் தமிழ், திருப்பரங்கிரி மும்மணிக் கோவை, திருப்பாங்கிரி முருகன் வரப்பிர சாதமாலை முதலிய பிரபந்தங்களுமுள
திருச்சீரலைவாய் திருநெல்வேலி மாவட்டத்திலே திருநெல்வேலி நகருக்குக் கிழக்கே முப்பத்தைந்து மைல் தொலைவிற் காயல் பட்டணத்திற்குத் தெற்கே கடற்கரையில் அமைந்தது. அலைவாய் என்ற ஆட்சி அகநானுற்றிலுண்டு (266); ஆயினும் செந்தில் என்ற பெயர் புறநானூற்றிலும் (55) சிலப்பதிகாரத்திலும் (248.1) காணப்படுகின்றது. திருச்சீரலைவாய் என்றும் திருச்செந்தில் என்றும் வழங்கிய இத்திருத்தலம் இன்று திருச்செந்தூர் என்ற பெயரால் அறியப்படுகின்றது. சூரபதுமனை வென்று ஜெயாபிடேகம் செய்த இடமாதலால் ஜயந்திரபுரம் என்றும் இத்தலம் பெயர் பெறுகின்றது.
திருச்செந்தூர்ப்புராணம் பாடியவர் வென்றிமாலைக் கவிராசர். இதனைத் தழுவி மு.ரா. அருணாசலக்கவிராயர் திருச்செந்தூர்த்தல புராண வசனம் எழுதியுள்ளார். திருச்செந்தூர்ப் பிள்ளைத் தமிழ், திருச் செந்தூர்க் கோவை, திருச்செந்தினி ரோட்டகய மகவந்தாதி, திருச் செந்தில் ய மகவந்தாதி, திருச்செந்தில் திருக்கந்தாதி, திருச்செந்திற் கலம்பகம் முதலிய பல பிரபந்தங்கள் இத்தலத்திற்குண்டு.
திருவாவினன்குடி மதுரை மாவட்டத்திலுள்ள பழனி மலையின் அடிவாரத்திலுள்ளது. திண்டுக்கல்லுக்கு மேற்கே முப்பத்தாறு மைல் தொலைவில் உள்ளது பழநிமலை. திருவாவினன்குடிக்குச் சித்தன் வாழ்வு என்ற பெயருமுண்டு. பழநிக்கு முன்பு பொதினி என்ற பெயருமுண்டு.
233

Page 280
திருவேரகம் எனும் திருத்தலம் யாதென்பதிலே கருத்து வேறுபாடுண்டு. செந்திலும் செங்கோடும் வெண் குன்றும் ஏரகமும் என்ற தொடரில் (சிலப். 24.81) வரும் வெண்குன்றம் சுவாமிமலை என்பர் அரும்பதவுரைகாரர். அருணகிரிநாதர் சுவாமிமலையை ஏரகம் என்று கருதினார். சுவாமிமலை கும்பகோணத்திற்கு மேற்கில் நான்கு மைல் தொலைவில் உள்ளது. தென்கன்னட மாவட்டத்துப் புத்தூர் வட்டத்தில் (துளுநாட்டில்) குமாரசேத்திரம் அல்லது சுப்பிரமணிய கூேடித்திரம் என இன்று வழங்கும் ஊரே ஏரகம் என்றும், நாகர் கோயிலுக்கு அண்மையிலுள்ள வேள்மலைதான் ஏரகம் என்றும் கூறுவார்கள்.
குன்றுதோறாடல் சுட்டுவது திருத்தணிகை என்போர்க்கு ஆதாரம் போதா. எல்லா மலைகளையும் ஒரே தொகுதியாகக் கொண்டு தொகைத் தலமாகக் கருதலே பொருத்தமாகத் தெரிகின்றது.
பழமுதிர்சோலையையும் குன்று தோறாடல் போன்று தொகைத்தலம் என்பர் சிலர். வேறு சிலர் அது மதுரைக்கு வடகிழக்கில் பன்னிரு மைல் தொலைவிலுள்ள அழகர் மலை என்று கருதுவர். அழகர்மலைக்குத் திருமாலிருஞ்சோலை, சோலைமலை எனும் பெயர்களும் உள்ளன.
பரிபாடல் (15), சிலப்பதிகாரம் (1187-138) என்பனவற்றிலே திருமாலிருஞ்சோலை மலையிலே முருகன் கோயில் இருந்த செய்தி கூறப்படவில்லை. அருணகிரிநாதர் சோலைமலை முருகனைப் பாடியுள்ளார். அழகர் கலம்பகம் அழகர் மலையை முருகன் தலமாகவும் கூறுகின்றது.
சிலர் அழகர் மலையின் மறுபக்கத்திற் சுமார் இரண்டரை மைல் தூரத்திற் சரிவின் மேடான ஒரு பகுதியில் அமைந்த முருகன் கோயிலே அருணகிரிநாதர் பாடியது என்பர்.
அழகர் மலையிலே ஒரே பீடத்தில் மூலவிக்கிரகமும் அதற்கு இரு புறத்தில் இரு தேவி விக்கிரகங்களும் நின்ற திருக்கோலத்திலே எழுந்தருளியிருப்பதையும், ஆலயத்தின் தம்பங்களிலும் ஏனைய பகுதிகளிலும் காணப்படும் உருப்படிகளில் ஒன்றாவது இன்னதென நிச்சயிக்க முடியாதவாறு உளியினாற் செதுக்கப்பட்டிருப்பதையும், இத்தலத்திலுள்ள பதினெட்டாம் படிக்கறுப்பண்ண சுவாமி கோயிலின் அடிப்படையிலும், அழகர், சோமசுந்தரவிமானம், விருஷபகிரி என்ற பெயர்களின் அடிப்படையிலும் இக்கோயில் முருகன் கோயிலாய் விளங்கிப் பின்பு விஷ்ணு கோயிலாக மாற்றப்பட்டது என்று சிலர் கருதுவர்.
கேரள நாட்டிலே சாஸ்தா அல்லது ஐயப்பனுக்கு ஆறுபடைவீடு கூறும் மரபுண்டு. குளத்தூர்புழம், எருமெலி, ஆரியன்காவு, அச்சன் கோயில், சபரிமலை, காந்தமலை எனுமிடங்களிலே சாஸ்தா முறையே சிறுவனாகவும் வேடனாகவும் கிரகஸ்தனாகவும் வானப்பிரஸ்தனாகவும் சன்னியாசியாகவும் ஜீவன்முக்தராகவும் தொடர்புடையவராகக் காணப்படுவர் என்பர். (பொ.பூ.)
234

ஆறுமாமுகன் அருட்பேராயிரம்
ஒரு நாமம் ஒருருவம் இல்லாத இறைவனை நூற்றுக் கணக்கில் நாமம் கூறித் துதிப்பதை யசுர் வேதத்து பூரீ ருத்திரத்திலே காணலாம். பின் புராணங்களிலே இம்மரபு ஆயிரம் திருநாமங்களை அடுக்கிப் போற்றுவதாக வளர்ந்தது. இதனைச் “சகஸ்ர நாமஸ்தோத்ரம்” என்று சங்கதத்திலே கூறுவர்.
“ஒரு நாமம் ஒருருவம் ஒன்றுமில்லாற் காயிரந் திருநாமம் பாடி நாந் தெள்ளேணங் கொட்டாமோ” என்றார் மணிவாசகப் பெருமானார். ஆயிரம் திருநாமம் என்பதிலே ஆயிரம் அளவின் மையைக் குறிப்பிட்டதாதல் வேண்டும். ஆயினும் ஆயிரம் (பெரும்பாலும் 1008) பெயர் சொல்லி அருச்சனை செய்வது மரபாய்விட்டது. இறைவனின் அருட்குணங்களைக் கூறும் பெயர்களை எண்ணி எண்ணி அகங்குளிர அங்கு கூறப்படும் பெயர்களின் பொருளறிவு இன்றியமையாதது. சொல்லிய பாட்டின் பொருளுணர்ந்து சொல்லுவது அவசியம்.
முருகப்பெருமான் பெயர்களைக் கூறிய பூரீ சுப்ரமண்ய சக்ஸரநாம ஸ்தோத்திரத்தினை தமிழிலே அமைத்துக் கூறுவதே ஆறுமாமுகன் அருட்பேராயிரம். அதனுட் காப்பும் தியானப் பாடலும் ஆதியிலும் பயன் வேண்டும் பாடல் அந்தத்திலும் அமைய இடை நடுவே 126 விருத்தங்களிலே முருகப் பெருமானுக்கு ஆயிரம் திருநாமம் கூறப்பட்டுள்ளது. இது 1983 இலே வெளிவந்தது.
இதனைப் பாடியவர் புத்தூர் ஆவரங்கால் பண்டிதர் ச.சுப்பிரமணியம் (1924-). சிவானந்தலகரியையும் செளந்தரிய லகரியையும் கனகதாரஸ்தவத்தையும் மொழி பெயர்த்து உதவியவர் பண்டிதர் சுப்பிரமணியம்.
முன்பு க. வை. ஆத்மநாதசர்மா லலிதா சகஸ்ரநாமத்தை அன்னை லலிதாம்பிகை அருட்பேராயிரம் (1964) என்றும், விஷ்ணு சகஸ்ரநாமத்தைப் புலவர் சிவம். கருணாலய பாண்டியனார் நெடுமால் பெயராயிரம் (1979) என்றும் வழங்கியுள்ளனர். (பொ.பூ.)
ஆறுமுக உபாத்தியாயர்
19ாழ்ப்பாணத்து உடுப்பிட்டி என்னுமூரினர்; பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும் இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் வாழ்ந்தவர்; சுப்பர் என்பவரின் புத்திரர்; தாயார் கமலம் உடுப்பிட்டி அ. சிவசம்புப் புலவரின் சகோதரி, மாமனார் சிவசம்புப் புலவரிடமும் வல்வை ச.வயித்தியலிங்க பிள்ளையிடமும் தமிழ் இலக்கியலக்கணங் கற்றவர்; பாஸ்கர சேதுபதி முன்னிலையில் திருவுத்தரகோசமங்கையிற் சிவசம்புப் புலவர் இயற்றிய பிரபந்தங்களை வாசித்து அரங்கேற்றியவர்; ஏராளமான தனிப்பாடல்களைப் பாடியவர்; கதிரைவேலர் பதிகம், சந்நிதி வள்ளி நாயகி பதிகம், திருச்செந்தூர்ப் பதிகம், வல்லிபுர சுவாமி பதிகம், வல்வை வாலாம் பிகைபதிகம் என்பன வற்றையும் பாடியவர். (பொ.யூ.)
இந்துக் கலைக்களஞ்சியம்

Page 281
ஆறுமுகசுவாமி
திருவெண்காடு எனுமூரினர்; பத்தொன்பதாம் நூற்றாண்டில், வாழ்ந்தவர், ஏகாம்பரநாதர் விருத்தம் பாடியவர்; அருணாசலபுராணவுரை (1873) கைவல்லிய நவநீதவுரை (1880), திருப்புகழ், மதுரை வீரசுவாமிகதை (1881), மாரியம்மன் தாலாட்டு (1882) முதலிய நூல்களைப்
பதிப்பித்தவர்; சமய சம்பந்தமற்ற நூல்களையும் பதிப்பித்தவர்.
(பொ.யூ.)
ஆறுமுகத்தம்பிரான்
19த்தொன்பதாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர்; பூர்வா சிரமத்தில் ஆறுமுகப்பிள்ளை என்ற பெயரினர்; ஆறுமுகநாவலர் சைவப்பிள்ளைகளைச் சேர்த்து 1846 ஆம் ஆண்டிலே கல்வி கற்பிக்கத் தொடங்கிய போது, அவர்களிடம் பயின்றவர்களிலே ஒருவர். வண்ணார் பண்ணையிலே ஆறுமுக நாவலர் சைவப்பிரகாச வித்தியாசாலையை 1848 ஆம் ஆண்டில் நிறுவிய போது அங்கு பணிபுரிந்த ஆசிரியர்களில் ஒருவர்; அங்கு சில ஆண்டுகள் பணிபுரிந்துவிட்டு, திருவண்ணாமலை ஆதினம் அடைந்து காஷாயம் பெற்றுத் தம்பிரானானவர்; அற்புதத் திருவந்தாதி, மூத்தநாயனார் இரட்டை மணிமாலை, சேக்கிழார் நாயனார் புராணம், திரு முறைகண்ட புராணம் என்பனவற்றிற்கு உரை கண்டவர்; ஏயர்கோன் கலிக்காமநாயனார் 234 ஆம் செய்யுள் வரை பெரிய புராணத்திற்கு உரை எழுதியவர்; எஞ்சிய செய்யுள்களுக்குப் பொம்மபுரம் சிவஞானபாலையதேசிகர் ஆதீனம் சிதம்பரம் இராமலிங்கசுவாமிகள் உரையெழுதி முற்றுவித்தனர்; இவ்வுரை சென்னையிலே இருபாகங்களாக முறையே 1885, 1898 ஆம் ஆண்டுகளிலே வெளிவந்தன. (பொ.யூ.)
ஆறுமுகநயினார் பிள்ளை - 1925
தீருநெல்வேலி எனுமூரினர்; ஈழத்திலே கொழும்பில் சிலகாலம் இருந்தவர்; அப்பொழுது மெய் கண்டான் எனும் மாசிகை நடத்தியவர்.
சாலிய அந்தணர் புராணம், சிவகலைப் புராணம் பாடியவர்; கிறிஸ்துவர் ஆராய்ச்சியும் சைவ நன்மக்கள் கொள்கையும், திருக்குறள் கடவுள் வாழ்த்து மூலமும் உரையும் என்பன எழுதியவர். (பொ.பூ.)
ஆறுமுகநாவலர் (1822 - 1879) 01. நாவலர் பிறப்பு :
1சுவதைக்கு அஞ்சி சிதம்பரம் சென்ற ஞானப் பிரகாச சுவாமிகளின் மரபினரான க. கந்தப்பிள்ளை, சிவகாமி தம்பதிக்கு ஆறாவது பிள்ளையாக யாழ்ப்பாணம் நல்லூரில் 1822 டிசம்பர் 18ஆம் திகதி அவதரித்தவரே பின்நாளில் நாவலர்’ என்ற பெயரால் பெரிதும் அறியப்பட்ட ஆறுமுகப்பிள்ளை ஆவார்.
இந்துக் கலைக்களஞ்சியம்

(தமிழ்வருடம் சித்திரபானு, மார்கழி ஐந்தாம் நாள், புதன்கிழமை, அவிட்ட நட்சத்திரம், சிங்கலக்கினம்.)
ஐந்தாம் வயதில் வித்தியாரம்பம் செய்யப்பெற்ற ஆறுமுக நாவலர் சுப்பிரமணிய உபாத்தியாயர், வேலாயுத முதலியார், சரவணமுத்து உபாத்தியாயர், சேனாதிராய முதலியார் ஆகியோரிடம் மரபு ரீதியான குருகுல முறையில் தமிழ்க் கல்வி கற்றார். ஆங்கிலக் கல்வியை யாழ். வெஸ்லியன் மிஷன் கல்லூரியில் பெற்றுக்கொண்ட இவர் வேதாகமங்களை மூலமொழியிற் கற்கும் விருப்பினராய், சமஸ்கிருத மொழியிலும் தேர்ச்சியுடையவரானார்.
02. நாவலர் - தோன்றிய காலப்பின்னணி :
ஆரியச் சக்கரவர்த்திகளின் ஆட்சிக்குப்பின்பு 17ஆம் நூற்றாண்டின் தொடக்க காலத்திலிருந்து ஈழத்தமிழ்ப் பிரதேசங்களில் போர்த்துக்கேயர் ஆட்சி புரிந்தனர். 17ஆம் நூற்றாண்டின் பிற்குதியில் அவர்களை வென்று மேற்படி பிரதேசங்களின் ஆட்சியைக் கைப்பற்றிய ஒல்லாந்தர் கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டு காலம் அரசோச்சினர். ப்ோர்த்துக்கேயர், ஒல்லாந்தரைப் பொறுத்தவரை அவர்கள் மிக மோசமான முறையில் சுதேசிய வழிபாட்டிடங்ளை இடித்தல் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டபோதும், தொடர்ச்சியாக இலங்கை முழுவதையும் கைப்பற்ற வேண்டிய அரசியற்போரில் இறங்க வேண்டியிருந்ததனாலும் ஆங்காங்கே வெடித்த சிறுசிறு கலகங்களை அடக்குவதில் கவனம் செலுத்த வேண்டியிருந்த தினாலும் ஏலவே இலங்கையில் இருந்த நிர்வாகக் கட்டமைப்பில் பாரிய மாற்றம் எதனையும் செய்யாமையினாலும், அவர்களால் சுதேசிய மதங்களுக்கு பாரியளவிலான அச்சுறுத்தல் ஏற்படவில்லை. கட்டாயமாக மதம்மாற்றப்பட்ட சுதேசியர்கள் கூட மதம் மாறியவர்கள் போல் நடித்தார்களேயன்றி உண்மையாகவே கிறிஸ்தவர்கள் ஆகிவிடவில்லை. இத்தகைய போலிநிலை மெல்ல நாத்திகத்தைத் தலை எடுக்கப் பண்ணுவதாயுமிருந்தது.
ஒல்லாந்தரிடமிருந்து ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றிய ஆங்கிலேயர் இதுவரை வெல்லப்படாதிருந்த கண்டிராச்சி யத்தையும் 1815 இல் தமது ஆட்சியின்கீழ்க் கொண்டு வந்தனர். இவர்கள் ஆட்சிக் காலத்தில் ஈழத்தின் சுதேசிய மதங்கள், மொழிகள், கலாசார பண்பாட்டு அடையாளங்கள் என்பன பாரியளவிலான நெருக்குதலுக்கு ஆளாகின. ஈழத்தின் அரசியல் நிர்வாகக் கட்டமைப்பை மாற்றியதன் மூலம் ஆங்கிலேய ஆட்சியாளர்கள் தமது மதம், மொழி முதலியவற்றை பரப்புவதற்கான தக்க சூழலை அமைத்துக் கொண்டனர். கிறிஸ்தவ மதப் பரப்புகைக்கான வெஸ்லியன் மிஷன் (1814) அமெரிக்கன் மிஷன் (1816), சேர்ச் மிஷன் (1818) முதலிய சங்கங்கள் ஈழத்திற்கு வருகை தந்தன.
விதேசிய மதப் பரப்புகை நடவடிக்கையை ஊக்குவிக்கும் பொருட்டு யாழ்ப்பாணம் துண்டுப் பிரசுர சங்கம் (1823) ஆட்சியாளர்களால் நிறுவப்பட்டது. அவ்வாறே, உதயதாரகை (1841) என்னும் பத்திரிகை வெளிவரத் தொடங்கியது. இதே ஆண்டு நியமிக்கப்பட்ட கல்வி ஆய்வுக்குழு கிறிஸ்தவ பள்ளிக்கூடங்களுக்கு மட்டும் அரச நிதியுதவி கிடைக்க வேண்டுமெனப் பரிந்துரை
235

Page 282
செய்தது. மதம் மாறுகின்றோர் தமது குடும்பச் சொத்துரிமை யிலிருந்து விலக்கப்பட்டவர் ஆகார் என்கின்ற சட்டம் இந்தியாவில் 1850இல் இயற்றப்பட்டது. இத்தகைய நடவடிக்கைகளால் கிறிஸ்தவ மதத்தை வளர்க்க உகந்த சூழல் உருவாக்கப்பட்டது.
இதேபோல ஆங்கிலமொழியை ஸ்திரப்படுத்தக்கூடிய நடவடிக்கைகளையும் அக்கால ஆங்கில அரசு மேற்கொண்டது. தலைமைப் பொறுப்புத் தவிர்ந்த உத்தியோகங்களை ஆங்கிலம் படித்த சுதேசியர்களுக்குக் கொடுக்கலாம் என்று கோல்புறுக் ஆணைக்குழு விதந்துரை செய்ததனால் சுதேசியர் ஆங்கிலம் படிக்கத் தூண்டுதல் பெற்றனர். இந்தியாவிலே கல்விக்குழுத் தலைவராக இருந்த மெக்காலே 1835இல் வெளியிட்ட ஆங்கிலக்கல்வி பற்றிய அறிக்கையினால் இந்திய இலங்கை நாடுகளில் ஆங்கிலக் கல்வி பெரிதும் முக்கியத்துவம் பெறலாயிற்று. ஆங்கிலப் பாடசாலைகள் தோன்றின. தொழில் புரிகின்ற மத்தியதர கற்றோர் குழாம் ஒன்று உருவானது.
இவ்வாறு கிறிஸ்தவ மதமும் ஆங்கில மொழியும் சுதேசியமதம் மற்றும் மொழி ஆகியவற்றைப் பாதித்து வளர்ச்சியடைந்து வந்த காலப்பகுதியிலேயே நாவலருடைய வரலாறு தொடங்குகிறது. சமகாலத்தில் தமிழ்நாட்டில் இருந்த ஆதீனங்கள், மடங்கள் போன்ற ஒரு சமய நிறுவனந்தானும் இலங்கையில் இல்லாத நிலையில், அந்நியரால் சுதேசியத்திற்கு ஏற்பட்டு வந்த அச்சுறுத்தலை நீக்கி, பாரம்பரிய கலாசாரம் அழிந்து போகாமற் காக்க வேண்டிய மிக முக்கியமான வரலாற்றுத் தேவையை நிறைவு செய்ய உருவாகியவராகவே நாவலர் விளங்குகிறார். 1835இல், ஆங்கில அரசால் அச்சியந்திர சாலை நிறுவவும் பத்திரிகை வெளியிடவும் சுதேசியர்க்கு அனுமதியளிக்கப்பட்டதானது நாவலருடைய வரலாற்றுப் பணியை மிகுந்த உத்வேகம் உடையதாக்கியது என்பது மனங்கொள்ளத்தக்கது.
03. நாவலர் பணிகள் - சமயம் :
ஆறுமுகநாவலரின் வாழ்க்கை இலட்சியம் சைவசமயத்தை மீட்டுருவாக்கம் செய்வதே ஆகும். "எனக்கு இங்கிலிஷ் கற்பித்த பீற்றல் பார்சிவல் துரைக்குச் சில வருஷ காலம் தமிழ்ப் பண்டிதனாய் இருந்த நான், தமிழ்க் கல்வியையும் சைவத்தையும் வளர்த்தலிற்றானே என்வாணாள் முழுவதையும் போக்கல் வேண்டும் என்று எழுந்து முறுகி வளர்ந்த பேராசையினாலே கீலக வருடம், புரட்டாதி மாதம் அந்த விருத்தியைப் பரித்தியாகஞ் செய்து விட்டேன். நான் இல்வாழ்க்கையிற் புகாமைக்குக் காரணம் அதுவே"
र त्
நான் இல்வாழ்க்கையிற் புகவில்லை. இவைக ளெல்லாவற்றிற்கும் காரணம் சைவசமயத்தையும் அதன் வளர்ச்சிக்குக் கருவியாகிய கல்வியையும் வளர்த்தல் வேண்டும் என்னும் பேராசையேயாம்.” என்று இரு வேறிடங்களில் நாவலர் குறிப்பிட்டவையிலிருந்து அவரின் நோக்கம் சைவத்தை வளர்ப்பதென்றும் அதற்கு உதவக்கூடிய முறையில் தமிழ்க் கல்வியையும் அவர் வளர்க்க முற்பட்டாரென்றும், அறியமுடிகிறது.
236

இவ்வாறு பொதுவாழ்வில் ஈடுபட்டவர் மேற்குறித்த பணிகள் தவிரவும் வேறு சமுதாயப்பணிகளும் ஆற்றியிருப்பாரென்றும் எதிர்பார்ப்பது நியாயமானதே.
தன்னை ஒரு சைவன் என்று சொல்லிக் கொள்வதில் பெருமிதம் கொண்ட நாவலர், "வேதம் பொது நூல், ஆகமம் சிறப்புநூல் என்பதை ஏற்றுக் கொண்டவர். ஆகமங்கள் கூறும் வழிபாட்டு முறைகளைப் பின்பற்றுபவராயும் பிறர்க்கு வெளிப்படுத்துபவராகவும் விளங்கிய அதேவேளை சாத்திரங்கள் கூறும் சைவசித்தாந்தத்தை ஏற்றுக் கொண்டவராகவும் பிறர்க்குச் சித்தாந்தத்தைப் போதிப்பவராயும் விளங்கி வந்தார்.
மேலும், சைவ சமயத்தை உடன்பாட்டு நிலையிலும் (தொண்டுகள்) எதிர்மறை நிலையிலும் (கண்டனங்கள்) வளர்ப்பதற்கான நடவடிக்கைகளை அவர் வாழ்நாள் முழுமையும் செய்து வந்தார்.
3.1 தொண்டுகள் :
3.1.1 சைவப் பிரசங்கங்களை ஆற்றியமை !
31.12.1847 முதலாக வண்ணார்பண்ணைச் சிவன் கோயிலில் வெள்ளிக்கிழமை தோறும் சைவசமயப் பிரசங்கம் நிகழ்த்தி வந்தார். கடவுள் வாழ்த்து, சிவபக்தி, வேதாகமங்கள், திருவிழா, சிவலிங்கோபாசனை முதலிய தலைப்புக்களிலே அவர் ஆற்றிவந்த பிரசங்கங்கள் வேண்டியளவு ஆன்றோர் மொழிகளாகிய மேற்கோள்களைக் கொண்டு பலநூல்களின் சாரங்களாயும், சைவசித்தாந்த உண்மைகளாயும் விளங்கின. இப்பிரசங்கங்களால், மாமிசபோசனம் செய்த அநேகர் அது செய்யாது விட்டார்கள். மதுபானம் பண்ணின அநேகர் அது பண்ணாது விட்டார்கள். தீஷை பெற்றும் சந்நியாவந்தனம் செய்யாத அநேகர் மீண்டும் தீஷை பெற்றுக் கிரமமாய்ச் சந்தியாவந்தனம் செய்து வந்தார்கள். (வே. கனகரத்தினம் உபாத்தியாயரின் நூல்).
3.1.2 புராண படனங்கள் நிகழ்த்தியமை !
யாழ்ப்பாணத்து சமய பாரம்பரியத்தில் புராண படனங்கள் மிகுந்த முக்கியத்துவம் பெறுவதற்கு நாவலருடைய புராணபடன பயன்சொல்லலே பிரதானமான காரணம் எனல் வேண்டும். நல்லூர்க் கந்தசாமிகோவில் உள்ளிட்ட பல ஆலயங்களிலும் அவர் நிகழ்த்திய புராணபடனப் பயன்சொல்லல்கள் மக்களுக்குச் சைவமத உண்மைகளைத் தெளிவாக அறிவுறுத்தின.
3.1.3 நூல்கள் வெளியிட்டமை !
ஆங்கிலேயர் காலத்தில், சைவ சமயிகள் தமது மத நூல்கள் பெரிதும் கிடைக்கப் பெறாமலும், அதனால் மத உண்மைகளைத் தெரிந்து கொள்ளவும் கடைப்பிடிக்கவும் வாய்ப்பில்லாமலும் இருந்த வேளையில் நாவலர் சைவ சமய நூல்கள் பலவற்றையும் வெளியிடுவது மிகுந்த நன்மையைத் தருமென்றெண்ணி அம்முயற்சியில் ஈடுபடலானார். நாவலர் வெளியீடுகள் பல்திறப்பட்டவை. அவரே எழுதிப் பதிப்பித்தவை சில (சைவ வினாவிடை - முதற்புத்தகம், இரண்டாம் புத்தகம்), உரையெழுதிப்
இந்துக் கலைக்களஞ்சியம்

Page 283
பதிப்பித்தவை சில (திருமுருகாற்றுப்படை உரை), வசன ரூபத்தில் எழுதிப் பதிப்பித்தவை சில (பெரிய புராண வசனம்), தொகுத்துப் பதிப்பித்தவை சில (தேவாரத்திரட்டு), பதிப்பித்தவை பல (கந்தபுராணம்).
நூல்கள் தவிரவும் பல பிரசுரங்கள் (கீரிமலைச் சிவன் கோயில்), பக்திப்பாடல்கள் (கதிர்காமசுவாமி மீது கீர்த்தனங்கள்) முதலியவற்றையும் ஆக்கியளித்தவர் நாவலர்.
3.1.4 கல்வி நிறுவனங்கள் தொடங்கியமை !
விபூதி அணிதல் முதலிய சைவமத பண்பாட்டு வழக்கங்க ளோடு அப்போதைய பாடசாலைகளில் கல்வி பெற முடியாதிருந்த சைவச்சிறார்களின் நன்மை கருதி, சைவமதச் சூழலில் அவர்கள் கல்வி பெறவேண்டும் என்பதற்காக சைவப்பிரகாச வித்தியா சாலைகளை இலங்கையிலும், தமிழ் நாட்டிலும் நிறுவினார்.
3.1.5 ஆலய புனருத்தாரணம் :
பாடல்பெற்ற ஈழத்துத் திருத்தலங்களுள் ஒன்றான திருக்கேதீச்சரம் இருந்த இடம் மண்மூடிக் காடுவளர்ந்து போயிருப்பதனை உணர்ந்து, அந்த ஆலயத்தை வெளிப்படுத்த வேண்டும் என்று மக்களுக்கு அறிவுறுத்தினார் நாவலர். திருக்கேதீச்சரம் அழிந்து காடாகக் கிடக்கின்றதே! புதிது புதிதாக இவ்விலங்கையில் எத்தனையோ கோயில்கள் கட்டப்படு கின்றனவே! நீங்கள் இந்த மகாஸ்தலத்தைச் சிறிதும் நினையாததென்னையோ!...” என்பது அவர் கூற்று (யாழ்ப்பாணச் சமயநிலை). இந்தியத் தொண்டை நாட்டிலுள்ள தேவாரம் பெற்ற ஆலயங்களைத் திருத்தம் செய்யும் பொருட்டு நியமிக்கப்பட்ட திருத்தொண்டைநாட்டுப் பதிபுண்ணிய பரிபாலனசபைக்குத் தலைவராக விளங்கிப் பணியாற்றினார். கீரிமலைச் சிவன் கோயிலுக்குச் செய்ய வேண்டியன குறித்து மக்களுக்கு எழுதினார்.
3.1.6 பண்ணிசை வளர்த்தமை !
நல்லூர் கந்தசுவாமி கோயில் திருவிழாக் காலங்களில் எழுந்தருளும் சுவாமிக்குப் பின்னாக தமிழ் வேதப் பாக்களை ஒதுவிக்கவென திருவாவடுதுறையிலிருந்து ஒதுவார் சிலரை அழைப்பித்து யாழ்ப்பாணத்தில் தங்குமாறு செய்தார்.
3.1.7 பிறரைக் கெளரவித்தமை :
நந்தனார் சரித்திரக் கீர்த்தனையை பக்திரசம் சொட்டப்பாடிய கோபாலகிருஷ்ண பாரதியாரை நாவலர் சன்மானம் வழங்கிக் கெளரவித்தார்.
3.1.8 சிவவாழ்வு வாழ்ந்து காட்டியமை !
எழுதியும், பேசியும் வந்ததோடமையாமல் சிவநெறியில் தம்வாழ்க்கையை அமைத்துக் காட்டிப் பிறருக்கு முன்னுதாரணமாய்
இந்துக் கலைக்களஞ்சியம்

விளங்கியவர் நாவலர் உத்தியோகத்தின் பொருட்டும் கல்வியின் பொருட்டும் பலரும் சைவத்தை விட்டகன்று கிறிஸ்தவ பாடசாலையிற் பணியாற்றிய போதும் தமது சிவ வாழ்வைக் கைவிடவோ சிவசின்னங்களை அணியாது விடவோ மாட்டாதவராய், தம் சமயத்தை விட்டுக் கொடாதவராய் இருந்தார் நாவலர்.
மேலும், தெய்வீகப் பொலிவு தரும் சிவவேடத்தவராய் அவர் விளங்கியமை பிறருக்குச் சைவத்தின்பால் ஈர்ப்பைத் தந்தது. "அவரும் விபூதி உத்தூளனம் செய்து திரிபுண்டரந் தரித்துத் தலையிலே சிரமாலையும் கழுத்திலே கண்டிகையும் கையிலே பெளத்திரமும் தரித்து, யாவருக்கும் பக்தியை விளக்கத்தக்க சிவவேடப் பொலிவோடு திருக்கூட்டத் தலைவராய் நின்றார்.” (வே. கனகரத்தின உபாத்தியாரின் நூல்)
3.2 கண்டனங்கள் :
நெஞ்சில் உரமும், நேர்மைத் திறனும் பெற்றிருந்த நாவலரின் கண்டனங்கள் அவர்க்கென்ற தனித்துவ ஆளுமையை உருவாக்கின. கூடவே பலரின் பகையையும் அவர் பெற்றுக் கொண்டார். சுதேசிய மதங்களை ஆக்கிரமித்த விதேசிய மதமான கிறிஸ்துவத்துக்கெதிரான கண்டனங்கள் இவ்வகையில் முக்கியமானவை. அதேவேளை அகச் சமயங்களுள் ஒன்றான வைணவத்தின் மீதும் வேத ஆகம மரபுக்கு முரண்படுகின்ற சைவசமயிகளின் நடவடிக்கைகள் மீதும் நாவலர் கண்டனங்கள் தொடுத்ததும் உண்டு. 3.2.1 பிற சமயக் கண்டனம் :
3.2.1.1 சைவ சமயத்தை இழித்துரைத்த கிறிஸ்தவ பிரசுரங்களுக்குப் பதிலாக கண்டனப் பிரசுரங்கள் பல நாவலரால் வெளியிடப்பட்டன. வேண்டிய இடங்களில் பிரசங்கவிக்கவும் பட்டன. பிறர் சைவசமயம் மீது சாட்டிய குற்றங்களுக்கான ஆணித்தரமான, தெளிவான மறுப்புகளும் வேண்டிய இடங்களிற் காணப்படும். இவ்வகையில், கிறிஸ்தவர்களாற் பரப்பப்பட்ட சைவசமய தூஷணங்களை மறுத்து வெளியிட்ட வச்சிரதண்டம், சைவதுஷண பரிகாரம் என்பன முக்கியமானவை. முருகப் பெருமான் சாதாரண மனிதர்போல்வரென்ற கிறிஸ்தவர்க்கு கண்டனமாக நாவலர் சுப்பிரபோதம் என்ற பெயரில் மறுப்பை வெளியிட்டார். பிறசமயகண்டன இயல்பு குறித்து “பரசமய கோளரி எனும் சிறப்புப்பெயர் பெற்றவர் நாவலர்.
3.2.1.2 தானே கண்டனங்கள் எழுதியும் பேசியும் வெளிப்படுத்தியதோடு அமையாமல் பிறரால் எழுதப்பட்ட தரமான கண்டனங்களையும் பதிப்பித்து, வெளிப்படுத்தினார். இவ்வகையில் சுன்னாகம் முத்துக்குமார கவிராயரால் எழுதப்பெற்ற, கிறிஸ்தவ மத அபத்தங்களை வெளிப்படுத்திக் காட்டிய ஞானக்கும்மி எனும் நூல் நாவலரினால் விநாயகமூர்த்தி செட்டியார் பெயரில் வெளிப்படுத்தப்பட்டது.
3.2.2 அகச் சமயக் கண்டனம் :
சிவபெருமான் ஒருவரே பிறப்பு, இறப்பு இல்லாக் கடவுள் என்பதை நிரூபிக்கும் பொருட்டு விஷ்ணுவை முழுமுதற்
237

Page 284
கடவுளாகக் கொள்ளும் வைணவ மதக்கருத்துகள் சிலவற்றை
மறுத்தவர் நாவலர் தருமபுர ஆதீனத்தில் அவராற்றிய சொற்பொழிவொன்று இவ்வகையிலே குறிப்பிடத்தக்கது.
3.2.3 சுவசமயக் கண்டனம் :
தனது காலத்து சைவ சமயிகளால் பின்பற்றப்பட்டு வந்த வேத, ஆகம விரோத நடவடிக்கைகளைக் கடுமையாகச் சாடியவர் நாவலர்.
3.2.3.1 ஆகமப் பிரமாணங்களுக்கு எதிராக சைவ ஆலயங்கள் இருத்தல் கூடாதென்ற கருத்துடைய நாவலர், நல்லூர்க் கந்தசுவாமி கோயில் ஆகமப் பிரமாணங்களுக்குப் புறம்பாக இருப்பது கருதி நல்லூர்க் கந்தசுவாமி கோயில் முதலாம் பத்திரிகை', 'நல்லூர்க் கந்தசுவாமி கோயில் இரண்டாம் பத்திரிகை முதலாம் கண்டனங்களை வெளியிட்டார்.
3.2.3.2 கோயில்களில் கேளிக்கை நிகழ்ச்சிகள் மிகுந்து, பக்தி உணர்ச்சி குன்றிவருவதையுணர்ந்த இவர் அங்கு இடம்பெற்று வந்த பொது மகளிர் நடனம், வாணவேடிக்கை, சிற்றின்பப் பாடல் முதலியவற்றைக் கண்டித்ததோடு வழிபாட்டிற்கு வருவோர் அதிகளவில் நகைகள் முதலிய அலங்காரப் பொருட்கள் அணிந்துவருவதையும் கண்டித்தார்.
3.2.3.3 சிவாகம உணர்ச்சி இல்லாத, சிவதீகூைடி பெறாத, சைவ அனுஷ்டானம் கடைப்பிடிக்காத வைதிக பிராமணர்கள், தீட்சிதர்களைக் கடுமையாகக் கண்டித்தார். உ+ம் - சிதம்பரம் சைவப் பிரகாச வித்தியாசாலைக் கண்டனம்) தன்மறுப்பைச் செயலிலும் காட்டிய நாவலர் சிவதீட்சை பெறாத பிராமணர் களிடம் விபூதி வாங்க மறுத்தார். இவருடைய கண்டனங்களைப் பொறுக்க மாட்டாதவரான சிதம்பரம் தீட்சிதர்கள் நாவலர் மேல் பொய் வழக்குத் தொடுத்ததும் உண்டு. 3.2.3.4 சமய குரவர்களின் அருளிச் செயல்கள்தாம் அருட்பாக்கள்’ என்று நம்பிப் போற்றி வந்தவர் நாவலர். இந்நிலையில் இராமலிங்க வள்ளலாரின் பாடல்கள் அருட்பா என்ற பெயரில் அச்சிட்டு வெளிப்படுத்தப்பட்டமை நாவலருக்கு உடன்பாடானதாக இருக்கவில்லை. இதேவேளை இராமலிங்கர் செய்ததாகக் கருதப்பட்ட அருட்செயல்களை முன்னிட்டு, கிறிஸ்தவர்கள் நாயன்மாரையும் அவர்களுடைய அருட் செயல்களையும் கேலி பேசியதும் நாவலரை இவ்விடயத்தில் கண்டிக்கத் தூண்டியது. எனவே போலியருட்பா மறுப்பு எனும் கண்டன நூலை வெளிப்படுத்தினார்.
3.2.3.5 வேத ஆகமங்கள் பரவுகின்ற மூலப்பரம் பொருள் சிவபெருமான் என்ற கருத்தை உச்சிமேற்கொண்ட நாவலர், மானுடப் பெண்ணாய்ப் பிறந்து பத்தினி நிலைக்கு உயர்ந்த கண்ணகி வழிபாட்டையும் கண்டித்தார். மேலும் பலியிடலை ஊக்குவிக்கின்ற சுடலைமாடன், காட்டேறி முதலிய சிறுதெய்வ, கிராமிய தேவதை வழிபாடுகளையும் கண்டித்தார்.
3.2.3.6 கோயில்களில் இடம்பெற்று வந்த உயிர்ப் பலியிடலைக் கண்டித்த நாவலர், நல்லூர்க் கந்தசுவாமி கோயில்
238

மகோற்சவத்தின்போது சப்பரத் திருவிழாவன்று தேர்முட்டுப் பறிக்கையில் ஆட்டைப் பலியிட்டமையைக் கண்டித்து அன்று தொட்டு அக்கோயிலுக்குப் போகாது விடுத்தார்.
04. நாவலர் பணிகள் - மொழி :
4.1 பேச்சுப்பணி : 4.1.1 பிரசங்கம் :
ஆறுமுகப்பிள்ளை எனும் இயற்பெயருடையவரை நாவலர் என்னும் சிறப்புப் பெயருக்குரியதாக்கியது அவருடைய பிரசங்கவன்மையேயாகும். முதியோர், கல்லாதார் உள்ளிட்ட சமூகத்தினரைக் கேள்வியறிவு மூலம் வழிப்படுத்த இவர் கைக்கொண்ட மார்க்கமே பிரசங்கமாகும். கடினமான விஷயங்களைக்கூட கேட்போருக்கு எளிது விளங்கும்படி உரையாற்ற வல்லவராயிருந்த நாவலருடைய பிரசங்கங்கள் நூற்களின் சாரங்களாயும், இம்மை, மறுமைப் பயன்களைத் தருவனவாயும் காதுக்கு இனியனவாயும் விளங்கின. 1847 ஆம் ஆண்டு டிசம்பர் முதலாக ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் வண்ணை வைத்தீஸ்வரன் கோயிலில் அவராற்றி வந்த பிரசங்கங்களைக் கேட்க பல இடத்திருந்தும் பலரும் கூடினர். சைவ சமய விடயங்களோடு கொல்லாமை, பேதைமை முதலிய நீதி நூற் கருத்துக்களையும் பிரசங்கம் செய்து மக்களை நெறிப்படுத்தினார். தமிழ்நாட்டுப் பயணங்களின்போதும் வல்லபல பிரசங்கங்களை இவராற்றியுள்ளார். முரண்பட்ட கருத்துக் கொண்டிருந்தவர்களும் இவரின் பிரசங்கங்களைக் கேட்டதன்பின் பதில் சொல்ல முடியாதவர்களாய்த் தம் கருத்துக்களை மாற்றிக் கொண்டதுமுண்டு.
சமய, மொழிப் பணிகளுக்காக மட்டுமல்லாமல் சமூகப் பணிகளுக்காகவும் (சிதம்பரத்தில் சைவப் பிரகாச வித்தியாசாலை அமைக்கவென வண்ணார்பண்ணையில் ஆற்றியது) பிரசங்கங்களைக் கைக்கொண்ட இவரின் பிரசங்கப் பணி, பல்லவர்கால நாயன்மார் பதிகங்களை அருளிச் செய்த பணியோடு ஒப்பிடத்தக்கது என்பர்.
4.1.2 புராண படனம் :
ஏடு வாசிப்பவரைப் பாடலுக்கும், சந்தர்ப்பத்துக்கும் ஏற்ற இராகத்தில் படிக்கச் செய்து தானும் அதே இராகத்தில் பயன் சொல்லுவது நாவலர் வழக்கமாயிருந்தது. இவரின் பயன்சொல்லுதலில், பொழிப்புரை, கருத்துரை, அருஞ்சொற் பொருள், நயங்கள், சாத்திர தோத்திர மேற்கோள்கள், இலக்கணக் குறிப்புகள் முதலியன உள்ளடங்கியிருந்தன.
வழுவில்லாமலும், வெற்றுச்சொல் கலவாமலும் நாவலர் செய்த புராணபடன பயனுரைகளை அவ்வாறே பதிவு செய்திருந்தால் சிறந்த பல நூல்கள் உருவாகியிருக்குமெனக் கூறுவர். பின்னாளில் பயன்சொல்லுதலில் மிகப் புகழ் பெற்று விளங்கிய வித்துவசிரோமணிபொன்னம்பலபிள்ளை முதலியோர் நாவலருக்கு ஏடு வாசித்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. யாழ்ப்பாண கலாசாரத்தில் புராணபடனத்துக்கு மிகுந்த முக்கியத்துவத்தை உருவாக்கியது இவரின் புராணபடனச் செயற்பாடேயாம்.
இந்துக் கலைக்களஞ்சியம்

Page 285
4.2 எழுத்துப்பணி :
4.2.1 உரைநடை செய்யுள்நடை :
4.2.1.1 உரைநடை :
நாவலர் காலத்தில் வழக்கிலிருந்த தமிழ் உரைநடை தவறுகள் மலிந்ததாயும் செம்மையற்றதாயும் இருந்தது. பதிலாக இலக்கண வழுவற்ற, தூய்மையான, வாசிப்பவர் தரத்துக்கேற்ற உரைநடையை அவர் கையாளத் தொடங்கினார். சிறுவர்க்கான நூல்களில் எளிமையான, சிறுசிறு வாக்கியங்களினால் ஆன இலகு நடையையும், பெரியோர்க்கான நூல்களில் அவர் தரத்துக்கேற்ப இறுக்கமான, நீண்ட வாக்கியங்களாலாய தகுதி நடையைக் கையாண்டார். தகுதி நடையில் செய்யுள் தொடர்களை இணைத்து வாக்கியமாக்கியிருப்பதனையும் சிறுபான்மை காணமுடியும்.
(உ+ம்) சிவபெருமான் எப்படிப்பட்டவர்?’ என்ற வினாவுக்கு, என்றும் உள்ளவர், எங்கும் நிறைந்தவர், எல்லாம் அறிபவர், எல்லாம் வல்லபர்” என்பது முதலாம் சைவ வினாவிடையில் தரப்பட்டுள்ள பதில், அதே வினாவுக்கு இரண்டாம் சைவ வினாவிடையில், நித்தியரும், சர்வவியாபகரும், அநாதிமல முத்தரும், சருவஞ்ஞரும், சருவகர்த்தாவும், நித்தியானந்தரும், சுவ தந்திரருமாய் உள்ளவர் என்று பதில் தரப்பட்டுள்ளது.
புத்தகத் தமிழ் வேறு வெகுசனத் தொடர்பு சாதனங்களில் பயன்படுத்தும் பத்திரிகைத் தமிழ் வேறு என்ற வேறுபாட் டுணர்ச்சியோடு உரைநடைப்பணியாற்றினார். வெளியிட்ட பிரசுரங்களின் உள்ளடக்கத்துக்கேற்ற நடையைக் கையாண்டார். கண்டனங்கள் இவருடைய உரைநடைக்கு உயிர்ப்பையும் தனித்துவத்தையும் வழங்கின.
ஆங்கிலத்திற் காணப்பட்ட குறியீடுகளை முதன்முதற் செம்மையுறப் பயன்படுத்தத் தொடங்கிய இவர், தேவைக்கேற்ப வடமொழி, ஆங்கிலம் முதலிய பிறமொழிச் சொற்களைப் பயன்படுத்தினார். சில சொற்களை தமிழ் நடைப்படுத்திப் பயன்படுத்தினார். (உ+ம் - College - கலிசு). பெரும்பாலும் வாசகரை விளித்து முன்னிலைப்படுத்திக் கூறுவது போன்ற பாணியில் இவர்நடை விளங்குகின்றது. இந்நடை இயற் சொற்கள் பெரும்பான்மையும் நிரம்பியது; இயற்கையோட்டம் உள்ளது; நேரடித்தன்மை வாய்ந்தது. தனது சமகாலத்தில் ஆதீனப்புலவர்கள், வித்துவான்கள் முதலியோர் பலருக்கும் புரிய அரிதான வித்துவநடையைப் பயன்படுத்தியமையையும், பாமர மக்கள் தவறுகள் மலிந்த கொடுந்தமிழ் நடையைப் பயன்படுத்தியமையையும் அவதானித்த நாவலர் இரண்டு நடைகளையும் தவிர்த்து, எத்திறத்தார்க்கும் புரியும்படியான தவறுகளில்லாத புதியநடையை அறிமுகம் செய்து வைத்தார். பயன்படுத்தப்படும் விடயத்துக்கேற்ப நடை அறிவுமயமாகவும், உணர்ச்சிமயமாகவும் விளங்கியது. இவ்வகையில் புதிய, அவசியமான மாற்றங்களுடன் கூடிய நடையைத் தமிழுக்கு அறிமுகம் செய்தமையினால், வசனநடை கைவந்த வல்லாளர், தற்கால உரைநடையின் தந்தை' என்ற சிறப்புப் பெயர்களாற் போற்றப்படுகிறார்.
இந்துக் கலைக்களஞ்சியம்

4.2.1.2 செய்யுள்நடை :
உரை நடையை நவீனத்துவ மாற்றங்களுடன் பயன்படுத்திய நாவலர் செய்யுள் நடையை அக்கால மரபுச் செய்யுட் பாணியிலேயே எவ்வித மாற்றமுமற்றுக் கையாண்டுள்ளார். மக்கள் வாசிப்பதற்கு இலகுவாக பத்தியரூப நூல்களை கத்தியரூபமாக்கி வந்த நாவலர் செய்யுளியற்றுதலைத் தன் தலையாய பணிகளுள் ஒன்றாகக் கொள்ளவில்லை. ஆயினும், கடவுளர் மீதும், கோயில்கள் மீதும் சில செய்யுள்களாக்கியுள்ளார். இவ்வகையில், கதிர்காமக்கந்தன் மீது பாடப்பெற்ற கீர்த்தனைகள் முக்கியமானவை. இராகத்தோடு பாடப்படக் கூடியனவாக இருக்கும் இவற்றைச் சிலர் பக்தியுணர்ச்சியோடு ஒதி நோய் நீங்கப் பெற்ற வரலாறும் உண்டு.
பெரிதும் மானுடரைப் பாடாத நாவலர் தமது குரு சரவணமுத்துப்புலவர், தம்மாணாக்கர் வி. சுப்பிரமணியபிள்ளை ஆகியோர் மீது மட்டும் சரம கவிதைகள் பாடியுள்ளார். இப்பாக்களுள் நாவலரின் கவித்துவ உள்ளதைக் காணக்கூடும்.
(g) + h):
என்னுடைய கண்மணியே எனதன்பர் சிகாமணியே பின்னமறு புகழ்பொலி சுப்பிரமணிய பெருந்தகை நீ என்னை உனக்(கு) அன்னைபிதா இனியகுரு என்றுமுன்னர்ச் சொன்னதென்னை பின்னர்என்னைத் துறந்ததென்னை
சொல்லாயே (மானவர் வி சுப்பிரமணியபிள்ளை சரமகவி)
4.2.2 இலக்கியப் பணி, இலக்கணப்பணி :
4.2.2.1 இலக்கியப் பணி :
சைவசமயப் பணியைத் தலையாய பணியாகக் கொண்டு அதன் வளர்ச்சிக்குத் துணை செய்யும் பொருட்டே தமிழ்ப்பணியாற்றப் புகுந்த நாவலர், சில சந்தர்ப்பங்களில் மதஎல்லை கடந்தும் மொழிப்பணி - அதிலும் குறிப்பாக இலக்கியப்பணி புரிந்ததுமுண்டு. 'தமிழ்ப்புலமை’ என்ற கட்டுரையில் ஆரம்பத்தில் கற்றறிய வேண்டிய நூல்களாகத் திருக்குறளோடு நாலடியாரையும் குறிப்பிட்ட நாவலர், பதிப்பிக்க உள்ள நூல்களுள் சமணசார்புடைய சீவகசிந்தாமணியையும் குறிப்பிட்டுள்ளார் என்பது நோக்கத்தக்கது.
தமிழ்நாட்டுப் பாதிப்பிலிருந்து விலத்திய ஈழத்துக்குரிய தனித்துவ தேசிய இலக்கியப் போக்குக் குறித்த உணர்ச்சியின் ஆரம்பகர்த்தாவாகவும் நாவலரே உள்ளார். தமிழ்நாடு சென்று பலபணிகள் ஆற்றியுள்ள போதும், தான் ஈழத்தவர் என்ற எண்ணமும் ஈழத்தவர்க்கென்று திறமைமிக்க தனித்துவமான புலமைப் பாரம்பரியம் உள்ளதென்ற பெருமித உணர்ச்சியும் நாவலரிடம் இருந்தன. இவ்வகையில் அவரின் நல்லறிவுச்சுடர் கொளுத்தல் ஈழத்தமிழ் இலக்கிய வரலாற்றில் மிகுந்த முக்கியத்துவமுடையது.
நாவலர் காலத்துக்குச் சற்றுமுன்வரை - ஆதீனங்கள் வளர்த்து வந்த தமிழில், பிரபந்தங்கள், தலபுராணங்களே
239

Page 286
முக்கியத்துவம் பெற்றிருந்தனவேயன்றி சங்க இலக்கியங்கள் உள்ளிட்ட நூல்கள் பலவும் முக்கியத்துவம் பெற்றிருக்கவில்லை. இந்நிலையில் திருமுருகாற்றுப்படைக்கு உரையெழுதிப் பதிப்பித்தமையும், இலக்கியச்சுவை மிகுந்த பிறநூல்களைப் பதிப்பிக்க விழைந்தமையும் மிகுந்த அவசியமான இலக்கியப் பணிகளாக இருந்தன.
மேலே பேச்சு, உரைநடைப் பணிகளாய்ச் சொல்லப்பட்டவை பலவும் இலக்கியப் பணிகளாகவும் விளங்கின. இவ்வகையில் இலக்கிய இரசனைக் குறிப்புகளை வெளிக்கொணர்ந்து புராணபடன பயன் சொல்லல்கள் சிறப்பிடம் பெற்றன. வேதக்காட்சி என்ற கந்தபுராணப் பாடலுக்கான பயன்சொல்லல் பெரிதும் சிலாகித்துச் சொல்லப்படுவதுண்டு. பல இலக்கிய நூல்கள் திருத்தமான பாடங்களோடு செம்பதிப்புகளாக வெளிப்படுத்தப்பட்டன. (உ+ம் - திருக்குறள் பரிமேலழகர் உரை) பல நூல்கள் இவராலேயே எழுதப்பட்டன. (உ+ம் - பாலபாடம் முதலாம், இரண்டாம், நான்காம் புத்தகங்கள்) புலமை வித்துவம் உணர்த்தும் இலக்கியவுரைகளும் செய்யப்பட்டன. (உ+ம் - திருச்செந்தினிரோட்டகயமகவந்தாதியுரை). இலக்கியச் சிறப்புடைய நூல்கள் யாவரும் வாசித்துணரும் பொருட்டு வசனநடையில் வெளிப்படுத்தப்பட்டன. (உ+ம் - பெரியபுராணம்). மொழி பெயர்ப்பும் மேற்கொள்ளப்பட்டது. (உ+ம் - விவிலியம்).
மிக அதிகளவில் இயற்றமிழ் இலக்கியத்துக்குப் பணியாற்றிய இவர் இசைத்தமிழ், நாடகத்தமிழ், இலக்கியத்துறைகளிலும் ஈடுபட்டதுண்டு. கதிர்காமக்கந்தன் மீது கீர்த்தனைகள் பாடியமையும், தந்தையாரால் தொடங்கப்பெற்ற 'இரத்தின வல்லிவிலாசம்’ நாடகத்தைப் பூரணமாக்கியமையும் உதாரண சம்பவங்கள்.
4.2.2.2 இலக்கணப்பணி :
"அங்கே (கிறிஸ்தவப் பாடசாலைகளில்) படிப்பிக்கப்படும் புத்தகங்களில் பெரும்பாலான சுத்தத் தமிழ் நடையின்றி இலக்கணப் பிழைகளினால் நிறைந்தவைகளும் சைவ தூஷணங்களினால் பொதிந்தவைகளுமாய் உள்ளவைகள்” என்று நாவலரே தன் காலத்துப் பெரிதும் முக்கியத்துவமற்றிருந்த இலக்கண அறிவு பற்றிக் குறிப்பிட்டுள்ளார். இந்நிலை மாற்றி சிறுவர் உள்ளிட்ட அனைவரும் எழுதும் போதாயினும், பேசும் போதாயினும் இலக்கண சுத்தமான தமிழைக் கையாள வேண்டுமென்பதற்காகத் தமது பாடசாலைகளில் நடைமுறைப் படுத்தியதோடு அவசியமான இலக்கண நூல்களை வெளியிட்டும் உதவினார். மேலும் எவ்வாறு இலக்கண சுத்தமாயும் தெளிவாயும் எளிமையாயும் பேசலாம், எழுதலாம் என்பதற்கு முன்னுதாரண ராய்த் தாமே விளங்கினார்.
இவர் வெளியிட்டுதவிய இலக்கண நூல்களுள் சில
இவராலேயே எழுதப்பெற்றன. (உ+ம் - இலக்கணச் சுருக்கம், இலக்கண வினாவிடை), சில இவரால் உரையெழுதப் பெற்றன.
240

(உ+ம் - நன்னூல் காண்டிகையுரை). சில இவராலேயே முதன்முதல் பதிப்பித்து தமிழ் உலகில் வெளிப்படுத்தப்பட்டன. (உ+ம் - இலக்கணக் கொத்து மூலமும் உரையும்). பிறரால் வெளிப்படுத்தப்பட்ட சில நூல்களையும் இவர் பரிசோதித்து உதவியுள்ளார். (உ+ம் - சி. வை. தாமோதரம்பிள்ளை வெளிப்படுத்திய தொல்காப்பியம் சொல்லதிகாரம் சேனாவரையருரை).
4.3 கல்விப்பணி :
4.3.1 பதிப்பு :
பாதிரிமார் தத்தம் மதநூல்களைத் தமிழில் மொழி பெயர்த்து மக்களுக்கு வழங்கி மதமாற்றத்துக்கு முயன்றவேளை சைவசமய உணர்ச்சி மிகும்பொருட்டு நூல்களைப் பதிப்பிக்கத் தொடங்கினார் நாவலர். பஞ்சதந்திரம் முதலிய நூல்கள் வாசிக்கமுடியாதவாறு, சந்திபிரியாமலும் செம்மையாகக் குறியீடுகள் பயன்படுத்தப்படாமலும் பதிப்பிக்கப்பட்டு வந்த காலத்தில், சந்திபிரித்தும், கட்புலனுக்கு இனிமை பயக்கும்படி அச்சுருவாக்க நேர்த்தி பேணியும், பிழைகள் நேராதவாறும் நாவலர் நூல்களைப் பதிப்பித்தமையானது, பின்னாளில் அறிஞர் பலருக்கு பதிப்புத்துறையிலீடுபட்டுத் தமிழ் நூல்கள் பலவற்றை அழியாது காக்க வேண்டுமெனும் ஊக்கத்தையளித்தது. பதிப்புச் செயற்பாடுகளுக்காக நாவலர் ஈழத்தில் வண்ணார் பண்ணையிலும், தமிழ்நாட்டிற் சிதம்பரத்திலும் வித்தியாநுபாலன யந்திரசாலைகளை நிறுவினார். மிக்க அவசியமாக விளங்கிய நூல்கள் சிலவற்றைத் தாமாகவே உணர்ந்து வெளிப்படுத்திய நாவலர், ஆதீனகர்த்தர்கள் முதலிய சிலரின் வேண்டுகோள்களை ஏற்று நூல் பதிப்பித்ததுமுண்டு. இவர் எழுதுப் பதிப்பித்த நூல்கள் பெரும்பான்மையும் கட்டுரை வடிவின. சிறுபான்மை வினா - விடை வடிவின.
இவராற் பதிப்பித்து வெளிப்படுத்தப்பட்ட நூல்கள் அறிவுத்துறையின் பலகூறுகளையும் சார்ந்தவையாயிருந்தன. சில அகராதிகள் (உ+ம் - சூடாமணி நிகண்டு) சில இலக்கண நூல்கள் (உ+ம் - இலக்கணவிளக்கச் சூறாவளி), சில தருக்க நூல்கள் (உ+ம் - தருக்கசங்கிரகம்) சில இலக்கிய நூல்கள் (உ+ம் - மகாபாரதம்) பல சமய நூல்கள் (உ+ம் - தேவாரத்திரண்டு). மிகச் சிறுபான்மைய அறிவியல் நூல்கள் (உ+ம் - இலங்கைப் பூமி சாத்திரம்).
நூல்களைப் பதிப்பித்து வெளிப்படுத்திய பணியில் நாவலரின் பங்களிப்பு பலதிறப்பட்டதாயிருந்தது. சில நூல்களை முதன்முதல் ஏட்டுச் சுவடிகளிலிருந்து அச்சுவாகனமேற்றினார் (உ+ம் - தொல்காப்பியச் சூத்திரவிருத்தி), சில நூல்களைத் தனிநூல்களாக மீளப் பதிப்பித்தார் (உ+ம் - சேதுபுராணம்), சிலநூல்களைத் தொகுத்துப் பதிப்பித்தார் (உ+ம் - அருட்பா), சில நூல்களை இலக்கணக் குறிப்புகள், அருஞ்சொல் அகராதி, சொல்லிலக்கண சூசி முதலியவற்றோடு ஆராய்ச்சிப் பதிப்புகளாக வெளிப்படுத்தினார் (திருக்குறள் பரிமேலழகர் உரை), சிலவற்றுக்கு உரை எழுதிப் பதிப்பித்தார் (உ+ம் - ஒளவையார் அருளிச் செய்த
இந்துக் கலைக்களஞ்சியம்

Page 287
நல்வழி), சில செய்யுள் நூல்களை வசனநடையில் எழுதிப் பதிப்பித்தார் (உ+ம் - திருவிளையாடற் புராண வசனம்). அப்பியாசங்களோடு பாடநூல்கள் சிலவற்றையும் எழுதிப் பதிப்பித்தார். (உ+ம் - இலக்கணச் சுருக்கம்)
இலக்கண, இலக்கியப் பிழைகள், அச்சுப்பிழைகள் இல்லாத பதிப்புகளை நாவலர் வெளியிட்டதனால், அவர் பதிப்பை நாவலர் பதிப்பு நல்லபதிப்பு என்று பாராட்டுவது அறிஞர் வழக்காகும்.
4.3.2 பாடசாலை ஸ்தாபிதம் :
விபூதி அணிந்தவர்களாய், கிறிஸ்தவப் பாடசாலைகளில் சைவச்சிறுவர்கள் கல்வி கற்க முடியாதிருந்தமையாலும், அங்கு கட்டாயமாக கிறிஸ்தவ நூல்களைக் கற்க வேண்டியிருந்த தனாலும், சைவ சமயச்சூழலில் சிறுவர்க்கு கல்வி போதிக்க வென சைவப் பிரகாச வித்தியாசாலைகளை நாவலர் அமைத்தார். 1848 இல் வண்ணார்பண்ணையிலும், 1864 இல் சிதம்பரத்திலும், 1872 இல் கோப்பாய் மற்றும் புலோலியிலும் இவ்வித்தியாசாலைகள் அமைக்கப்பட்டன. முதன்முதல் 1871 இல் சைவ ஆங்கில வித்தியாசாலையையும் அமைத்தார். ஸ்தாபகராக மட்டுமன்றி சில வித்தியாசாலைகளுக்கு முகாமையாளராயும் இருந்து பணியாற்றினார். இவ்வித்தியா சாலையில் தனது மாணவர்களை இலவசமாகக் கல்வி கற்பிக்க நியமித்தார். பிடியரிசி பெற்று அவர்க்கு வேதனம் வழங்கியதுமுண்டு. மேலும், சைவபிரசாரகர்களையும், ஆசிரியர்களையும் உருவாக்கும் பொருட்டு, கல்விநிறுவனம் ஒன்றைச் சிதம்பரத்தில் நிறுவுவதற்கும் ஆசை கொண்டிருந்தார். எனினும் இது நிறைவேறவில்லை.
4.3.3 கற்பித்தல் :
மரபு முறையில் இலவசமாக மாணாக்கருக்கு தமிழ் கற்பித்த நாவலர், சதாசிவப்பிள்ளை, சுவாமிநாதையர், நடராசையர், விசுவநாதையர், ஆறுமுகப்பிள்ளை, சபாபதிநாவலர், பொன்னம்பலபிள்ளை, கந்தசுவாமிப்பிள்ளை, ஆறுமுகம் செட்டியார் முதலிய பல மாணவர்களை உருவாக்கி விட்டவர்.
தான் கற்ற வெஸ்லியன் மிஷன் கல்லூரியிலேயே 1841 இல் இருந்து சிலகாலம் மேல் வகுப்புகளுக்குத் தமிழாசிரியராகவும், கீழ்வகுப்புகளுக்கு ஆங்கில ஆசிரியராகவும் பணிபுரிந்தவர்.
மாணாக்கரல்லாதவராய் இருந்தபோதும் தன்னை அணுகி ஐயங்கேட்டோர்க்குத் தெளிவு ஏற்படுத்தியவர். இவ்வகையில் தமிழ்நாட்டு ஆதீன வித்துவான்கள், இளம் சந்நிதானங்கள் உள்ளிட்ட பலரும் நாவலரால் சந்தேகம் தெளியப் பெற்றவர்கள். கற்பித்தல் தேவையை இலகுபடுத்தவென பிறருக்கு வழிகாட்டியாய் அமைந்து மாணாக்கருக்கேற்ற பாடநூல்களையும் ஆக்கியுள்ளார். மாணவர் தரத்துக்கேற்ற விடயத்தையும், நடையையும் கொண்ட அவருடைய பாடநூல்கள் பின்னிணைப்பாகப் பரீட்சை வினாக்கள், அப்பியாசங்களைக் கொண்டிருந்தன.
தாம் கற்பித்ததோடு அமையாமல் கற்பிக்க வேண்டிய பாடத்திட்டமொன்றை அக்காலத் தேவைக்கேற்ப அமைத்தவர்.
இந்துக் கலைக்களஞ்சியம்

இத்திட்டத்தில் சமய, மொழி நூல்களோடு பூகோள நூல், ககோளநூல், வைத்தியம், சோதிடம், வேளாண்மைநூல், வாணிகநூல், அரசநீதி, சிற்பநூல் முதலியவற்றையும் கற்பிக்க வேண்டுமெனக் குறித்திருப்பது அவருடைய பரந்த கல்விக் கொள்கையை எடுத்துக் காட்டுகிறது.
4.3.4 விவாதம் :
அறிவுத்துறையில் முரண்பாடான கருத்தொன்று முன்வைக்கப்படுகையில் சர்ச்சைகளைத் தொடர்வதன்மூலம் தெளிவு நோக்கி நகர்வதில் விருப்புடையவராக நாவலர் விளங்கினார். ‘நயனசாத்திரம் தொடர்பான கருத்தாடலில் 'உதயதாரகையில் பங்கெடுத்த இவர், தம் ஆசிரியரான சரவணமுத்துப் புலவருடன் கூடி களத்தூர் வேதகிரி முதலியாரோடு இலக்கண, இலக்கிய சர்ச்சையிலும் ஈடுபட்டார்.
5. நாவலர் பணிகள் - சமூகம் :
வெறுமனே ஒர் அறிஞராக மட்டும் விளங்காமல் பொதுவாழ்வில் ஈடுபட்டு சமுதாயத்தின் பிற அங்கத்தினர் களுக்கு வேண்டியபொழுது இயன்ற உதவிகளைத் திறம்படச் செய்தவராக நாவலர் விளங்குகின்றார். பொதுப்பணிகளில் ஈடுபட்ட பொழுது சாதி, சமய பேதம் நோக்காமல் பணியாற்றிய நாவலர், மக்கள் பணிகளில் ஈடுபட்டோர் தம்மோடு முரண்பட்டவர்களாய் இருந்தபோதும், அவர்களைப் பாராட்டப் பின் நிற்காத பண்பையும் கொண்டிருந்தார். கொள்கையளவில் வேதாகமங்கள் கூறும் வருணாச்சிரம தர்மத்தை ஏற்றுக்கொண்டு தமது நூல்கள் சிலவற்றில் எடுத்தாண்டவரும், கிறிஸ்தவ மதம் மாறியவர்களைக் கடுமையாக எதிர்த்தவருமான நாவலர் கஞ்சித் தொட்டித்தர்மம், பேதிநோய்காலப் பணி போன்ற நடவடிக்கை களின்போது சாதி, சமய பேதம் பாராமல் அனைத்து மக்களுக்கும் நன்மை செய்தமையானது அக்கால கட்டத்தில் மிகுந்த புரட்சிகரமானதேயாகும்.
இவ்வகையில் 1876 / 77 ஆண்டுகளில் இலங்கையில் நிலவிய கடும் வரட்சியால் ஏற்பட்ட பஞ்சவேளையில் அவர் ஆற்றிய கஞ்சித் தொட்டித் தருமம் மிக முக்கியமானது. தமது சொந்தப் பணத்தையும் இட்டு மக்களது பசிதீர்க்க அவர் ஆரம்பித்த இந்த நடவடிக்கையே பின்னர் கஞ்சித் தொட்டி கூட்டம் இடம் பெறவும் அதன்மூலம் பலபிரபுகள் மக்கள் பணியில் ஈடுபடவும் காரணமாயிற்று.
யாழ்ப்பாணம் கரையூர் உள்ளிட்ட இடங்களில் பேதி நோய் பரவி மக்களிற் பலர் உயிராபத்தை எதிர்நோக்கிக் கொண்டிருந்த வேளையிலும் நாவலராற்றிய பணி விதந்து கூறத்தக்கது.
விவசாயிகள் போதியளவு விதைநெல் கிடையாமல் துன்புற்ற பொழுது அவர்களுக்காக சட்ட நிரூபண சபைக்கு விண்ணப்பஞ் செய்தார். மேலும் விதை நெல் வழங்காத அரசாங்கத்தின் மீது கடுமையான கண்டனங்களை வெளியிட்டார். (இது நல்ல சமயம்) சட்ட நிரூபண சபை உறுப்பினராகவிருந்த முத்துக்
241

Page 288
குமாரசாமி மூலம் விதை நெல் பற்றிய விவாதத்தின்போது விவசாயிகளின் துன்பத்தைத் தெரியப்படுத்தினார்.
சமகாலத்துத் தமிழ் மக்கள் ஒற்றுமையின்றிச் செயற் பட்டமையை கண்ட நாவலர் சமூக ஒற்றுமை குறித்து அடிக்கடி போதனைகளை ஆற்றியமையும் குறிப்பிடத்தக்கது. “தமிழர் களாகிய நம்மவர்கள் யாதாயினும் ஒரு கருமத்தை நடத்துதற்கு ஒருங்குகூடுதல் அரிது. ஒரே வழிக் கூடினும் ஐக்கியத்தோடு நிலைபெற்று எடுத்த கருமத்தை நிறைவேற்றல் மிக அரிது.” (திருத்தொண்டை நாட்டுப் பதிபுண்ணிய பரிபாலன சபைப் பிரசங்கம்) என்பது நாவலர் ஆதங்கம். இவ்வாறே, சமுதாயத்தைப் பாதிக்கின்ற மதுப்பாவனை, சூதாடல் முதலியவற்றை ஒழித்துவிட வேண்டும் என்பதனையும் வலியுறுத்தினார் நாவலர். "வறுமைக்கும் துன்பத்திற்கும் சகல பாவங்களுக்கும் பிறப்பிடம் மதுபானம். ஆங்கிலேயத் துரைத்தனத்தார். சாராயத்தை ஒழிப்பாராயின் இலங்கைச் சனங்கள் செல்வமும் ஆரோக்கியமும் அடைவார்கள்.” (இலங்கைப் பூமி சாத்திரம்)
இவ்வாறு சமூக அக்கறையோடு செயற்பட்ட நாவலர் யாழ்ப்பாணக் கச்சேரி நிர்வாகம் ஊழல் மிகுந்ததாயும் மக்களைப் போதியளவு கவனியாமலும் இருந்தபோது அக்கச்சேரி நிர்வாகம் பற்றித் தேசாதிபதிக்கு முறைப்பாடு செய்தார். கூடவே ஊழல் குறித்து மக்கள் விழிப்புணர்ச்சிக்காக பகிரங்கப் பிரகடனங் களையும் வெளியிட்டார். அநீதி, பொய், கோள் முதலிய புத்தகங்கள் படிப்பிக்கின்ற கலீசு (College) என்று கச்சேரியை வர்ணித்தார். 1878 இல் தேசாதிபதி யாழ்ப்பாணம் வந்தபோது மக்களுக்கு அவசியமானவை எவை என்பது குறித்த விண்ணப்பம் ஒன்றும் இவரால் வழங்கப்பெற்றது.
அரசியலில் நேரடியாக நாவலர் ஈடுபடவில்லை என்றபோதும் அக்காலத் தமிழ் அரசியல்வாதிகளால் மிக உயர்வாக மதிக்கப்படுகின்ற ஒருவராக அவர் விளங்கியுள்ளார். 'தென்னிலங்கையில் பெளத்த எழுச்சியை உருவாக்கும் சுமங்கலதேரர் சுபிதிதேரர், மொகத்துவந்த குணானந்ததேரர் போல தமிழ்ப் பிரதேசங்களில் சுதேசிய எழுச்சிக்காகப் பாடுபடும் தேசிய வீரர் நாவலர்” என சட்ட நிரூபண சபையில் அதன் உறுப்பினர் முத்துக்குமாரசாமியால் பலமுறை சுட்டிக் காட்டப் பெற்றவர்.
மேலும் முத்துக் குமாரசாமிக்குப் பின் சட்ட நிரூபணசபைக்கு பிறிற்றோவை எதிர்த்துப் போட்டியிட்ட பொன். இராமநாதனுக்கு தான் வழங்கிய ஆதரவின் மூலம் வெற்றியைப் பெற்றுக் கொடுத்தவர் நாவலர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
6. நாவலரும் தமிழ்நாடும் :
தாம் ஓர் இலங்கையர் என்பதனைத் தெளிவாகவே உணர்ந்திருந்த நாவலர் தமிழ்நாடு உள்ளிட்ட இந்தியாவை வேறு நாடெனவே கருதியிருந்தார். என்றபோதும் சைவசமயமும் தமிழ் மொழியும் வளர்ச்சியுறாது தேங்கியிருந்த நிலைகண்டு, தமிழ்

நாட்டிலும் தமது பணிகளை மேற்கொள்ள விரும்பினார். இவர் அறிவையும் பணியையும் நோக்கிப் பல ஆதீனங்களும் தனிப்பட்டவர்களும் வேண்டியளவு ஆதரவையளித்ததோடு கெளரவங்கள் வழங்கிப் போற்றிச் சிறப்புக்களையும் செய்தனர். தமிழ் நாட்டிலும் மாணவர் பரம்பரையொன்றும் நாவலர் பாரம்பரியமும் உருவாகின. தமது கண்டனங்களால் சிறுபான்மை எதிர்ப்புகளையும் அவர் சந்திக்க நேர்ந்தது. கிடைத்த வரலாற்றுத் தகவல்களின்படி நாவலர் ஐந்துமுறை தமிழ் நாட்டிற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார் என அறியமுடிகின்றது.
1848
மொழி பெயர்த்த விவிலியநூலை அச்சிட்டு தென்னிந்திய தேவாலயத்தில் ஒப்படைப்பதற்காக பார்சிவல் பாதிரியாரோடு பயணம்.
1849 - அச்சியந்திரம் வாங்கவென மாணவர் சதாசிவம் பிள்ளையுடன் பயணம்; திருவாவடுதுறை ஆதீனத்தால் நாவலர் பட்டம் வழங்கப் பெறல்.
1854 - சதாசிவம்பிள்ளையுடன் பயணம்; பிரமச்சரியம் ஏற்று சிவபூசை எழுந்தருளப் பண்ணச் சென்றமை, பூசை பண்ணுதற்கேற்ற படிகலிங்கத்தைக் குறுநாட்டிற் பெறுதல்.
1858 - சென்னையில் வித்தியாநுபாலன யந்திரசாலை நிறுவவும் சில நூல்களை அச்சிடவும் பயணம். திருவண்ணாமலையில் உருத்திராக்கம் சூட்டப் பெறல் (1860). திருவாவடுதுறை ஆதீனத்திலே நிரந்தரமாகத் தங்கும்படி விடுக்கப்பட்ட கோரிக் கையைப் பணிகள் நோக்கி நிராகரித்தல்.
1863 - இராமேஸ்வரத்தில் சேதுஸ்நானம், தலயாத்திரை. சிதம்பல சைவப் பிரகாச வித்தியாசாலை ஸ்தாபித்தல் (1864), இராமநாதபுரம் பொன்னுச்சாமி தேவருடன் பிணக்கும் பின் சந்திப்பும். தொடர்ந்து சாதுரா சாத்தி கெளரவிக்கப் பெறல். -
7. நாவலர் பண்பு நலன்கள் :
“நமக்கு இந்தச் சரீரம் கிடைத்தது நாம் இறைவனை வணங்கி முக்தியின்பம் பெறும் பொருட்டேயாம்” என்று தமது சைவ வினாவிடையில் எழுதிய நாவலர் அதனைத் தம் வாழ்க்கையின் பிரதான குறிக்கோளாகக் கடைப்பிடித்து வந்ததோடு சான்றாண்மைப் பண்புகள் பல பொதிந்தவராகவும் விளங்கினார்.
எவ்விதத்திலும் சுயநலமற்று பொதுவாழ்வில் ஈடுபட்ட இவர் வேண்டியபொழுதெல்லாம் தம் வாழ்வியல் இன்பங்களைத் தியாகம் செய்யப் பின்நிற்காதவராக விளங்கினார். தாம் பார்த்து வந்த ஆசிரியர் உத்தியோகத்தை அவர் (சமய, மொழிப் பணிகளுக்காக) பரித்தியாகம் செய்ததோடு இல்வாழ்க்கையில் புகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்துக் கலைக்களஞ்சியம்

Page 289
அந்நியராட்சிக் காலத்தில் அவர்களிடமோ அன்றேல் உள்ளூர்ப் பிரமுகர்களிடமோ உத்தியோகம், பரிசில் முதலிய நன்மைகள் பெறும் பொருட்டு தத்தம் ஆளுமையைத் தொலைத்துவிட்டு பிறர் பலரும் வாழ்ந்த காலத்தில் இறைவன் தவிர வேறு எவர்க்கும் எவ்விடத்திலும் அஞ்சாமல் இவர் மிக்க ஆளுமையோடு பொதுப்பணிகளை முன்னெடுத்துள்ளமையை இவரின் வாழ்க்கை வரலாற்றுச் சம்பவங்கள் பலவற்றின் மூலம் அறிந்துகொள்ள முடியும். இராமநாதபுரம் பொன்னுச் சாமித் தேவரைப் பிறரின் வேண்டுகோளுக்கிணங்க சந்திக்கச் சென்றபோது பின்வரும் நிபந்தனைகளை விதித்தே சந்திக்கச் சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது. "அங்கவஸ்திரம் தரித்துக் கொண்டும், பாதகுறடு இட்டுக் கொண்டும் தம்மோடு கூடப் போகும் எல்லோரும் அரண்மனையிற் சேரல், தேவரிடத்திலே பரிசு பெறாது விடுதல்; தேவர் எழும் பொழுதெல்லாம் எழாதிருத்தல்” என்று இவர் விதித்த நிபந்தனைகள் இவருடைய ஆளுமையையும் திமிர்ந்த ஞானச் செருக்கையும் காட்டவல்லன.
சைவமதம், தமிழ்மொழி ஆகியவற்றின் வளர்ச்சிக்கு இடையூறு செய்தவர்கள் மீது மிகக் கடுமையான கண்டனங் களைத் தொடுத்த நாவலர் எவர்மீதும் எப்பொழுதும் துவேசம் கொள்ளாதவராகவே விளங்கினார். கிறிஸ்தவ மதத்தினரின் மதமாற்ற நடவடிக்கைகளை கடுமையாகச் சாடிய நாவலர் அதேவேளை அவர்களுடைய சமுதாயப் பணிகளை பாராட்டத் தவறவில்லை. இவ்வாறே, சைவம் சாராத சீவகசிந்தாமணி, மணிமேகலை முதலிய நூல்களையும் பதிப்பிக்க எண்ணி யிருந்தவர் என்பதும் இவருடைய இப்பண்பு நலனை எடுத்துக் காட்டுகிறது.
தாம் வரித்துக் கொண்ட அறப்பணியை நிறைவேற்றி வருகையில் இடையில் ஏற்படக் கூடிய அச்சுறுத்தல்கள் குறித்து அச்சம்கொள்ளாதவராகவே நாவலரை இனங்காண்கிறோம். "ஞானஸ்நானம் பெற்று கிறிஸ்தவராக மாறுவோம்’ என்று பார்சிவல் பாதிரியாருக்கு ஏலவே உறுதியளித்திருந்த தம் நண்பர் இருவரை அழைத்து சைவத்தின் மகிமைகளைக் கூறி கிறிஸ்தவர்களாகவிடாது தடுத்தார். இதனால் பாதிரியாரிடம் தாம் பார்த்துவந்த உத்தியோகம் இல்லாது போய்விடும் என்பது குறித்து நாவலர் அஞ்சினார் அல்லர்.
அநீதிகண்டு பொறாத நாவலரின் உள்ளமே இவரைக் கண்டனக்காரர் ஆக்கிற்று. அறநூல்கள் எடுத்துரைத்த தருமநெறியில் பிறர் - குறிப்பாக பொதுவாழ்வு வாழ்கின்ற பிரமுகர்கள் தமது வாழ்க்கையை அமைத்துக் கொள்ளாதபோது முதலில் அவர்கட்கு குற்றங்களைச் சுட்டிக் காட்டுபவராகவும் அதுகண்டும் திருந்தாதவிடத்து ஏனைப் பொதுமக்களும் அறியும்படி அவர்தம் குற்றங்களைப் பகிரங்கம் செய்பவராகவும் நாவலர் விளங்கினார். நல்லூர்க் கோயில் முதலாளிக்கெதிரான கண்டனம் இவ்வகையிற் குறிப்பிடத்தக்கது.
பொதுவாழ்வில் ஈடுபட்ட இவர் பிறரைக் கண்டித்தது போலவே, தமக்கு நெருக்கமானவர்கள் தவறிழைத்தபோதும்
இந்துக் கலைக்களஞ்சியம்

கண்டிக்கின்ற நடுவுநிலைமை கொண்டிருந்தார். தாம் மிகவும் நேசித்த தமது மருகரான வித்துவசிரோமணி பொன்னம்பல பிள்ளை சிறைத் தண்டனை பெறுவதற்கு இவருடைய நேர்மையும் நடுவு நிலைமையும் வாய்மையுமே காரணங்களாம்.
தொடுத்த கண்டனங்கள் வாயிலாக கோபக்காரராகவே பெரிதும் அறியப்படுகின்ற நாவலர் உண்மையில் மனிதாபிமானம் மிகுந்தவராகவே விளங்கினார். தம் குடியிருப்புக்கு அருகி லிருந்த வீடொன்று எரிந்த பொழுது உடன்சென்று பிறருடன் சேர்ந்து நெருப்பை அணைப்பித்தார் என்று இவர் சரித்திரம் தெரிவிக்கும் சம்பவம் இதற்குச் சான்று.
பிறருக்கு தர்மம் போதித்ததோடு அமையாமல் அத்தரு மங்களை தம்வாழ்விற் கடைப்பிடித்து ஒழுகும் முன்னுதாரணராக நாவலர் வாழ்ந்தார். அருட்பாக்களான தேவாரம் முதலியவற்றோடு பிறர் பாடல்களை வைத்தலாகாது என்று இராமலிங்கர் பாடல்களைக் கண்டித்ததுபோலவே, தன்னை ஐந்தாம் குரவர் என்று பாராட்டிய தமது மாணவரைக் கண்டித்தவர். அவ்வாறு தம்மைப் புகழ்ந்து கூறிய பிரசுரங்களை எரிக்கப் பண்ணியதுமுண்டு.
அறிவிற் சிறந்த நாவலர் உள்ளத்தன்பு மிக்கவராகவும் விளங்கியிருந்தார். தம் மாணவர் ஒருவர் தொற்றுநோய்க்கு ஆளாகியிருந்த சமயம் பலர் செல்லவிடாது தடுத்தபோதும் மாணவர் மீதான அன்புமீதூர நேரே சென்று நலம் பார்வையிட்டவர் இவர்.
பழி, பாவங்கள் விளைவிக்கக்கூடியன என்று அறநூல்கள் விளக்கும் எந்தவொரு செயலையும் செய்வதற்கு நாணம் கொண்டவராக விளங்கிய நாவலர் ஒழுக்கமுடைமை முதலிய குணங்கள் சிறந்த தூய வாழ்க்கை வாழ்ந்தவர். இவருடைய வசன நடையை விடவும் 'அழியாநல் ஒழுக்க நடை விதந்து பிறரால் பாராட்டப்பட்டதுண்டு.
வேண்டிய காலத்தில் சமுதாய மக்களுக்கு அவசியமான ஒப்புரவுச் செயற்பாடுகளை முன்னெடுத்தவர் நாவலர் தாது வருஷ பஞ்சகாலத்தில் இவரால் மேற்கொள்ளப்பட்ட கஞ்சித் தொட்டித்தர்மம் இதனை உறுதி செய்யும்.
மேலும், தமர்சிலரின் வேண்டுகோளையேற்று அவர்மீது கண்ணோட்டம் கொண்டு சில புதிய பணிகளை ஆரம்பித்தது முண்டு. இராமலிங்கர் மீதான கண்டனம் இவ்வகையில் தியாககேச முதலியார் என்பாருடைய கோரிக்கையை ஏற்றும் தொடங்கப் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
உள்ளத்து உண்மையும் பேச்சில் வாய்மையும் செயலில் மெய்மையும் கடைப்பிடித்தவர் நாவலர் கோயிற் சொத்தை அபகரித்த தனவந்தரை ஏசியதற்காக நீதிமன்றத்திற்கு அழைக்கப்பட்ட நாவலர், நீதிபதி தம்மைச் சந்தேகிக்காத போதும் சிவசொத்தை அபகரித்தவரை தாம் ஏசியது உண்மை என்றுகூறி தண்டப்பணம் கட்டியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
243

Page 290
இவ்வாறு பல சான்றாண்மைக் குணங்கள் பெற்று, எழுத்திற்கும் வாழ்விற்கும் பேதமில்லாத சிவவாழ்வு வாழ்ந்தவர் நாவலர்.
8. நாவலர் சிறப்பு :
தனிமனித நிறுவனமாகச் செயற்பட்டு சைவ சமயத்தினதும், தமிழ் மொழியினதும் ஒரு காலகட்டத்துக் காவலராக விளங்கிய நாவலரின் சிறப்பை மேற்காட்டிய பணிகள் எடுத்துக் காட்டப் போதுமானவை என்றபோதும் அவரின் சமகாலத்து சான் றோர்கள், அறிஞர்கள் முதலியபலரும் அவர் பற்றி வெளிப் படுத்தியுள்ள கருத்துக்களை அவதானிப்பதும் அவர் சிறப்பை உணர்ந்து கொள்ள நல்வழியாகிறது.
'நாவலரைப்போல முன்னும் இப்பொழுதும் தமிழ் வித்துவான்கள் இல்லை. ஒருவேளை இருந்தாலும் அவரைப் போலத் தமிழ் மொழியையும் நல்லொழுக்கத்தையும் சைவ சமயத்தையும் வளர்த்துத் தமிழ் வசனநடையில் நூல்களை எழுதி அச்சிட்டு வெளிப்படுத்தித் தமிழ் நாட்டார்க்கு உதவி செய்தவர் வேறொருவரும் இல்லை. பொருள் வரும்படிக்காகப் பிறரை வணங்காதவர்களும் அவரைப்போல் ஒருவரும் இல்லை.”
- சென்னை உயர்நீதிமன்றத் தலைவர்
நீதிபதி சதாசிவ ஐயர் -
“யாழ்ப்பாணத்து நல்லூர் ஆறுமுகநாவலர் அவர்கள் ஒரு அவதார புருஷர். இடையிருட் கடைக்காலத்தில் விடியுமுன் விசும்பில் விளங்கும் வெள்ளிபோல தமிழகத்தில் தளரும் சைவமும் தமிழும் தழைய, அவ்விரண்டிற்கும் புத்துயிர் வழங்கப் பிறந்த வள்ளலாவார். முன்னே பல பாகங்களிலும் தமிழகத்திடமிருந்து தான்பெற்ற சிறு சிறு நன்மைகளை வட்டியுடன் பெருக்கி, ஒரு காலத்து ஒருமுகமாகப் பழங்கடனைத் தீர்த்து, என்றும் தீர்க்கொனாவாறு தமிழகத்தை ஈழநாட்டுக்குக் கடமைப்படுத்திய பேருபகாரி நாவலர் என்றால் அது மிகையாகாது.”
- எஸ். சோமசுந்தரபாரதியார் -
"தமிழ்க் குருகுலத்தில் பிரமசாரிகள் படிக்கப் பாடப்புத்தகம் தேடினோம். நாவலர் பாலபாடத்தைவிட நயமான புத்தகம் உண்டா? அதையே மாணவர் படிப்பது சிறந்தது என்றார் வ. வே.
சு. ஐயர்.”
- சுத்தானந்த பாரதியார் -
"இச்சென்னையிலுள்ள வித்தியா சங்கத்தார் வெளியிடும் வசனப்பாடப் புத்தகங்களைக் காட்டினும் நாவலர் பாலபாடங்கள் எவ்வாற்றானும் சிறந்தவையாகும். வித்தியா சங்கத்தார் வெளியிட்ட புத்தகங்களை நாவலரவர்கள் எழுதிய பாலபாடங்களோடு ஒப்பிட நினைத்தமைதானும் தவறெனலாம்.” - நேட்டிவ் பப்ளிக் ஒப்பீனியன் பத்திரிகை -
"இலக்கண இலக்கியப் பிழைகளும் அச்சுப் பிழைகளும்
இல்லாமல் உயர்ந்த தமிழிலக்கண இலக்கிய நூல்களையும் சைவ சமய நூல்களையும் பதிப்பித்து உதவுவார் அரியரான எமது
244

இளமைக் காலத்தில் ஆறுமுக நாவலரவர்களே அந்நூல்களைப் பிழையறப் பதிப்பித்து உதவினவர்கள். எழுத்துச் சொல்லா ராய்ச்சிக்கு நாவலரவர்கள் தாம் நன்னூலுக்கு வரைந்த அரிய காண்டிகையுரையும், தொல்காப்பியச் சொல்லுக்குச் சேனாவரையர் சொற்பொருட்டிட்பம் வாய்ந்தவுரையும் அவர்களாற் பதிப்பித்து வெளியிடப்படாவிடில் எம்போல்வார் அஞ்ஞான்று தமிழிலக்கண அறிவு பெறுதல் இயலாமலே போயிருக்கும்.”
- மறைமலை அடிகள் -
சுமங்கல விசேடச் சுருதியா மூலா கமங்களின் முப்பொருள் கருதுபே ரருளான் யுத்தியின்மைத்துணர்ந் தோங்கனு பூதி சித்தியுற் றமைந்த சிவசிந் தாமணி கற்றுனர் புலவ ருட்களிக்கு முற்றுன ராறு முகநாவலனே - திரிசிரபுரம் பூரீமத் மீனாட்சி சுந்தரம்பிள்ளை -
நல்லைநகராறுமுக நாவலர்பிறந்திலரேல் சொல்லுதமி ழெங்கே சுருதியெங்கே - எல்லவரும் ஏத்துப்புரா னாகமங்க ளெங்கேபிர சங்கமெங்கே ஆத்தனறி வெங்கே யறை
- சி. வை. தாமோதரம்பிள்ளை.
9. நாவலர் நிறைவு !
1879 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 2ஆம் திகதி சுகயினப்பட்ட நாவலர் 5ஆம் திகதி தனது 56 ஆவது வயதில் இறையடி சேர்ந்தார். (தமிழ் வருடம் பிரமாதி, கார்த்திகை மாதம் 21 ஆம் நாள், மக நட்சத்திரம்.) அடுத்தநாள் ததனக்கிரியைகள் இடம்பெற்றன. (பூணூரீ.பி.)
ஆறுமுகப்பிள்ளை,சி.
யாழ்ப்பாணத்து உடுப்பிட்டி என்னுமூரினர்; பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் வாழ்ந்து கொண்டிருந்தவர், அப்புக்குட்டி உபாத்தியாயர் என்றழைக்கப் பெற்றவர்; வல்வை ச, வயித்தியலிங்க பிள்ளையிடம் தமிழ் இலக்கியலக்கணங் கற்றவர், வைமன் கதிரைவேற் பிள்ளையின் அகராதி வேலையில் உதவியாக விளங்கியவர்; அவர் தந்தையாரின் பாடல்களை குமாரசாமி முதலியார் கவித்திரட்டு என 1887 ஆம் ஆண்டிலே தொகுத்து வெளியிட்டவர்; கிறித்துப் பல பிரிவினை, கிருஸ்துசமய பேதம் (1889) விவிய நூல் வரலாறு (1889) எனும் கண்டன நூல்களைக் கிறித்தவருக்கு எதிராக எழுதியவர்; நெற்கொலு வைரவர் பதிகம் (1889) பாடியவர்.
(பொ.பூ.)
໒ງdp51b grs
ஆறுமுக முதலியார் எனவும் அழைக்கப்பெறுவர்; சிதம்பரநாதர் சுப்பிரமணியனார் எனும் புலவரின் புதல்வர்;
இந்துக் கலைக்களஞ்சியம்

Page 291
திரிகோணமலை சைவ சந்தானத்தைச் சேர்ந்தவர்; இவருடைய திரிகோணமலையந்தாதி இராக்கத வருடம் கன்னி மாதம் (1856) நிறைவு பெற்றது என்ற குறிப்பு ஏட்டிலுண்டு. (பொ. பூ.)
ຂຶpkp5fh @@ g,
பத்தொன்பதாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர், பூலாருசுவாமிப் பிள்ளையின் புதல்வர்.
கொடும்பாளூர்ப் பதிற்றுப்பத்தந்தாதி, மதுரையமகவந்தாதி, விநாயகர் திரிபுவெண்பா அந்தாதி முதலிய சமய சம்பந்தமாக இவர் இயற்றிய 16 பிரபந்தங்கள் சோடசப்பிரபந்தம் என்ற பெயரில் 1899 இலே அச்சிடப் பெற்றன; இவர் பாடிய அரிச்சந்திர வெண்பா திருமயிலை முருகேசமுதலியாரால் 1884 இலே அச்சிடப் பெற்றது. (பொ. பூ.)
ஆறுமுகம் பிள்ளை, மு.
யாழ்ப்பாணத்து வட்டுக்கோட்டை என்னுமூரினர்; பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் வாழ்ந்து கொண்டிருந்தவர், சைவப்பிரசங்கியாகப் பேரெடுத்தவர்; ஆசௌசவிதி கடவுள் வழிபாடு, திருவாதிரை விரத வரலாறு, விரதமான்மியம் எழுதியவர்; யாழ்ப்பாணம் வட்டுக் கோட்டை கிழக்கு துறட்டிப்பனையில் கோயில் கொண்டெழுந்தருளிய முத்துமாரியம்மன் பேரில் திருவூஞ்சல் பாடியவர்; செய்யுளும் வசனமுமாக சிறுதொண்ட நாயனார் புராணம் இயற்றியவர் (1894). (பொ. பூ)
ஆறுமுகம்பிள்ளை வைத்தியர், சி. (1869-1933)
திரிகோணமலையைச் சேர்ந்தவர்; கதிரைமலைக் கந்தவேளை 1903 ஆம் ஆண்டிலிருந்து யாத்திரை செய்து தரிசனம் செய்யும் வழக்கம் பூண்டிருந்தவர்; கதிர்காம மாலை (1922), கதிரைமலைப் பதிகம் (1918) என்னும் பிரபந்தங்களைப் பாடியவர்; இவ்விரு பிரபந்தங்களையும் மூன்றாம் பதிப்பாக 1969 ஆம் ஆண்டு ஆறுமுகம்பிள்ளையின் புதல்வர் சி. ஆ. கந்தையா வெளியிட்டுள்ளார். (பொ.யூ.)
ஆறுமுகமெய்ஞ்ஞான af6).jpg|Trful
சுவாமிகள் (1769)
தென்னார்க்காடு மாவட்டம் திருக்கோவலூரிலே 1672 இலே ஞானியார் மடாலயம் தாபித்த முதல் ஞானியார் ஆறுமுக சுவாமிகள்; 97 வயது வரை வாழ்ந்தவர்; திருவண்ணாமலை குகைநமச்சிவாயரின் சீடர், பூங்கோட்டு அம்பலவாண அடிகள், மதுரைசட்டைமுனிகள், அவிநாசநாத சுவாமிகள், அம்பலவான சுவாமிகள், சம்பூரணபிரகாசசுவாமிகள் முதலியோரின் ஆசிரியர்.
இந்துக் கலைக்களஞ்சியம்

நிஷ்டானுபூதி முதலாம் முப்பத்தொரு நூல்கள் இயற்றியவர்; நிஷ்டானுபூதிக்கு முத்துக்கிருஷ்ண பிரமம் இயற்றிய உரை சென்னையில் 1875 இலே அச்சிடப் பெற்றது என்பர்.
இரண்டாம் ஞானியார், சிவசண்முக மெய்ஞ்ஞான சிவாசாரிய சுவாமிகள் ( - 1832) திருப்பாதிரிப் புலியூரிலே மடம் நிறுவி அங்கு தங்கத் தொடங்கியவர். (பொ.யூ.)
ஆறுமுக மெய்ஞ்ஞான சிவாசாரியதேசிகர் நெஞ்சு விடுதூது
தென்னார்க்காடு மாவட்டத்திலே திருக்கோவலூரிலே 1672ஆம் ஆண்டு ஆதீனம் அமைத்தவர் ஆறுமுகமெய்ஞ்ஞான சிவாசாரிய சுவாமிகள் என்பவர்; இவ்வாதீனத்தின் தலைவர்கள் ஞானியார் என்றழைக்கப்படுவர், ஆறுமுகசுவாமிகள் 97 வயது வரை வாழ்ந்து 1769 இலே பரிபூரணமடைந்தவர். இவருடைய சீடர்களிலே குறிப்பிடத்தக்கவர் பூங்கோட்டு அம்பலவாண அடிகள், மதுரை சட்ட முனிகள், அவிநாசிநாதசுவாமிகள், அம்பலவாண சுவாமிகள், சம்பூரண பிரகாச சுவாமிகள் என்பவராவர். இரண்டாம் ஞானியரான சிவசண்முகமெய்ஞ்ஞான சிவாசாரிய சுவாமிகள் (- 1832) திருப்பாதிரிப் புலியூரிலே மடம் நிறுவி அங்கேயே தங்கியவராவார். இம் மடமே திருக்கோவலுர் ஆதீனம் திருப்பாதிரிப் புலியூர் ஞானியார் மடாலயம் என்று அழைக்கப்பெறுவதாகும்.
அவிநாசிநாதசுவாமிகள் தம்குரு மீது பாடியதே ஆறுமுக மெய்ஞ்ஞான சிவாசாரிய தேசிகர் நெஞ்சுவிடுதூது. இந் நெஞ்சுவிடுதூதிலே ஆதியிற் காப்பு வெண்பாவும் அந்தத்திலே வெண்பாவும் வாழிச் செய்யுளும் அமைய இடைநடுவே 303 கண்ணிகளிலே தூது பாடப்பட்டுள்ளது.
* இந் நெஞ்சுவிடு தூது 1939 இலே பதிப்பிக்கப் பெற்ற அவிநாசிநாதர் தோத்திரக் கொத்து எனும் தொகுப்பில் இடம் பெறுகின்றது.
அவிநாசிநாதர் தோத்திரக் கொத்திலே ஆசிரியர் தம் குரு மீது பாடிய சிகாமணிப்பதிகம், அபிடேகமாலை, அட்டகம் என்பனவும் இடம் பெறுகின்றன; பத்துப் பாடல்களையும் வாழிச் செய்யுளையுமுடையது சிகாமணிப்பதிகம்; காப்பு வெண்பா வினையும் பதினொரு பாடல்களையும் உடையது அபிடேகமாலை; எட்டுப் பாக்களையுடையது அட்டகம், (பொ.யூ.)
ஆறுமுகன்
பண்டைத் தமிழ் இலக்கியத்திலே சிறப்பிடம் பெறுபவன் முருகப் பெருமான். நெடுவேள், நெடியோன், செவ்வேள், செய்யோன், சேஎய், சேயோன், முருகு என்ற பெயர்களாலும் அங்கு அவன் அழைக்கப்படுகிறான். பின்தோன்றிய திருமுருகாற்றுப்படை, பரிபாடல், சிலப்பதிகாரம் முதலாக அவனுக்கு ஆறுமுகன் என்ற பெயரும் வழங்கப்படுவதை அறியலாம். பெரும்பாணாற்றுப்படையிலே,
245
بر ፌn w¶ ቺይይቻ6o" དུ། ཞིམ་པར་
*、*

Page 292
வெண் திரைப் பரப்பின் கடுஞ்சூர் கொன்ற பைம்பூண் சேஎய் பயந்த மாமோட்டு துணங்கையாம் செல்வி. (457-459)
குறிப்பிடப்படுகிறாள். ஆயினும் அவனைச் சிவகுமாரனாகக் கூறுவன பிற்பட்ட கலித்தொகை, பரிபாடல், திருமுரு காற்றுப் படை, சிலப்பதிகாரம் முதலி யனவே என்பது நோக்கத்தக்கது.
'ஆலமர் செல்வன் அணிசால் மகன் விழா”
(கலி. 83.14) “காஅய் கடவுள் சேஎய்” (பரி, 5.13) "ஆல்கெழு கடவுட் புதல்வ” (திருமுருகு 256) “கயிலைநன் மலையிறை மகனை’ (சிலப். 24.16)
ஆறுமுகனின் தோற்றம் பற்றிய கதையொன்று பரிபாடலிலே காணப்படுகின்றது (5ம் பாடல்). சிவபிரான் உமையை மணஞ்செய்த காலத்து இந்திரன் புணர்ச்சி தவிர வேண்டும் என்று வேண்டியதால் அவரும் அதற்கு உடம்பட்டுக் கருப்பத்தை இந்திரன் கையிற் கொடுக்க அதனை இருடிகள் உணர்ந்து, அவனிடம் இருந்து வாங்கி, இறைவன் கூறாகிய முத்தீயில் பெய்து, அதனைத் தம் மனைவியர் கையிற் கொடுக்க, அருந்ததி தவிர்ந்த அறுவரும் உண்டு. சூன் முதிர்ந்து, சரவணப் பொய்கையில் பயந்தாராக, இந்திரன் தான் இருடிகளுக்குக் கொடுத்த நிலையை மறந்து அங்கு வந்து வச்சிரத்தால் எறிய அவ்வாறு வடிவும் ஒன்றாய் அவனுடன் பொருது அவனைக் கெடுத்த பின் சூரசம்மாரம் செய்யப் புறப்பட்டது. ஆறுமுகன் தோற்றம் வேறு வகையில் புராணங்களிற் கூறப்பட்டுள்ளது.
ஆறுமுகம் பற்றிய விளக்கம் பலவாறு அமைந்துள்ளது. பஞ்சமூர்த்திகளை நிலைக்களமாகச் செலுத்திப் பஞ்ச கிருத்தியத்தைச் செய்யும் பரமசிவனது சுத்த குணங்களாகிய ஈசானம், தற்புருஷம், அகோரம், வாமதேவம், சத்தியோஜாதம் எனும் ஐந்தும் கரும சாதாக்கியராகிய சதாசிவ மூர்த்திக்குத் திருமுகங்கள். இவ்வைந்து முகங்களுடன் சித்சக்தியாகிய சிவசக்தியின் அதோமுகமும் சேர்ந்து ஆறுமுகமானது என்பர் சைவர். சம்பு பக்கமாக முருகனை வழிபடுபவர், சிவபரம்பொருள் ஐந்து முகத்தோடு அதோ முகமும் தாங்கி இருந்த நிலையை நினைத்து இறைவனே முருகன் என்று வழிபடுவர்.
திருமுருகாற்றுப்படையிலே திருச்சீரலைவாய் பற்றிய பகுதியில் (91-102) ஆறுமுகம் பற்றிய விளக்கம் ஒன்று காணப்படுகின்றது. ஒருமுகம் உலகை மூடிய இருளை அகற்ற ஒளிவீசும்; ஒருமுகம் அடியாருக்கு வரம் நல்கும்; ஒருமுகம் அந்தணருடைய வேள்வி இடையூறின்றி நடைபெற நினைந்து நிற்கும்; ஒருமுகம் ஞானப் பொருளை உணர்த்தித் திங்கள் போல பிரகாசிக்கும்; ஒருமுகம் அசுரர் முதலியோரை அழித்துக் களவேள்வி வேட்கும்; ஒருமுகம் வள்ளியிடம் போன உணர்வினைப் புலப்படுத்தும். அருணகிரி நாதரின் “ஏறு மயில் ஏறி விளையாடுமுகமொன்றே" என்ற திருப்பாடலும் இங்கு நோக்கத்தக்கது.
246

ஷட்குண சம்பன்னன் என்பதை ஆறுமுகம் உணர்த்துவ தாகக் கருதுபவர் ஞானம், ஐசுவரியம், திரு. வீரியம், வைராக்கியம், புகழ் எனும் ஆறும் உணர்த்தப்படுவதாகக் கொள்வர்.
சரீரத்திலே அமைந்த ஆறாதாரம் அல்லது ஷட்சக்கரம் யோக நெறியிலே முக்கியத்துவம் வாய்ந்தது. ஆறுமுகம் ஆறாதாரத் தைக் குறிப்பதாகவும் கொள்வர்.
ஐம்பொறியையும் மனத்தையும் ஆறுமுகம் குறிப்பிடு வதாகவும் சிலர் கருதுவர்.
ஆறுமுகன் எனும் பெயர் முருகப் பெருமானுக்கு ஒன்றாக அமையினும் ஆறுமுகம் கொண்ட திருக்கோலங்கள் பலவாகக் காணப்படுவன.
ஆறுமுகன் அல்லது சண்முகன் எனும் திருக்கோலம் ஆறுதிருமுகமும் பன்னிரு திருக்கையும் கொண்டு வலப் பக்கத்திலே வள்ளியம்மையாரும் இடப்பக்கத்திலே தெய்வாணையம்மையாரும் அமைய மயில்மிது அமர்ந்தோ அல்லது உடனிருக்கவோ குங்குமநிறத்தனாகக் காட்சி தருவதாகும். வள்ளியம்மையும் தெய்வாணையம்மையும் முறையே இச்சா கிரியா சக்திகளை உணர்த்துபவராவர். வலக்கையில் ஒன்று அபயமும் இடக்கையில் ஒன்று வரதமும் முத்திரையாகக் கொள்ள ஏனையவை ஆயுதங்களையும் கோழிக் கொடியையும் பற்றி நிற்பன.
தெய்வயானையம்மையின் கணவனாகிய திருக்கோலம் தேவசேனாதிபதியாகும். "மறுவில் கற்பின் வாணுதல் கணவன்’ என்று திருமுருகாற்றுப்படை போற்றுகின்றது (6). ஆறு திருமுகமும் பன்னிரு திருக்கரங்களும் உடைய இத்திருக் கோலத்திலே இடப் பக்கத்திலே தாமரையைக் கரத்தில் ஏந்திய தெய்வயானையை தொடையின் மீது உட்கார வைத்து அனைத்துக் கொண்டுள்ள திருக்கரமும் வலப்பக்கத்திலே அபயமுத்திரை காட்டும் ஒரு திருக்கரமும் ஒழிந்தவை ஆயுதங்களைத் தாங்கிநிற்பன.
நளினத்துப் பிறவியை எனப் பரிபாடல் போற்றும் (5.12) சரவணபவன் எனும் திருக்கோலம் சரவணப் பொய்கையிற் பிறந்ததால் பெற்றது. இத் திருக்கோலத்திலும் 6 திருமுகமும் பன்னிரு திருக்கரமும் காணப்படுவன. அபயம், வரதம் உணர்த்தும் இரு திருக்கரங்கள் ஒழிந்தவை தாமரைப்பூ, சேவல், மணி என்பனவற்றையும் ஆயுதங்களையும் தாங்கியுள்ளன. அன்றலர்ந்த தாமரை போன்ற திருமுகங்களோடு காட்சி தரும் சரவணபவன் சிலவேளை தாமரைப்பூவில் வீற்றிருக்கும் கோலத்திலும் காணப்படுவர்.
GG
அறுவர் பயந்த ஆறமர் செல்வன்” (திருமுருகு 255) கார்த்திகேயன், கார்த்திகைப் பெண்களால் வளர்க்கப் பெற்றவன். நண்பகற் சூரியன் போன்ற நிறத்தோடு காட்சி தரும் கார்த்திகேயன் ஆறுமுகத்தோடு ஆறுகைகள் உடையவனாகக்
இந்துக் கலைக்களஞ்சியம்

Page 293
காணப்படுபவன். அபயம், வரதம், வேல், வாள், சூலிசம், கேடயம் என்பனவற்றைத் திருக்கரங்களிலே காணலாம்.
சூரனின் தம்பி தாரகனை அழித்த திருக்கோலம் தாரகாந்தர் அல்லது தாரகாரி. கோடி சூரியர் பிரகாசத்தோடு ஆறுதிருமுகமும் பன்னிரு திருக்கரமும் இத்திருவடியிற் காணப்படுவன. வலக்கரங்களிலே வரதம், கொடி, கேடயம், அங்குசம், பாசம், குலிசமும் இடக்கரங்களிலே அபயம், வாள், சூலம், சக்கரம், முசலம், வேல் என்பனவும் காணமுடியும்.
கிரவுஞ்சபேதனர் தாரகன் மலையாம் கிரவுஞ்சத்தைப் பிளந்த முருகனின் திருக்கோலம் “குருகொடு பெயர் பெற்ற மால்வரை உடைத்து” என்று அச்செய்தி பரிபாட்டுக் கூறுவது (5.9) இத் திருக்கோலத்திலே ஆறு திருமுகமும் எட்டுத் திருக்கரமும் உள்ளன. அபயம், சுத்தி, சக்தி, பாணம், வலப்பக்கத்திலும் வரதம் குலிசம், வில், கேடகம் இடப்பக்கத்திலும் திருக்கரங்கள் காட்டுவனவாம்.
சேனைக்குத் தலைவனான சேனானி அல்லது சேனாதிபதி எனும் திருக்கோலத்திலே ஆறுதிருமுகமும் பன்னிரு திருக்கரமும் உள்ளன. “வானோர் தானைத் தலைவன்’ என்று முருகாற்றுப் படை கூறும் (260) முருகன் அபயம், வரதம் உணர்த்தும் திருக்கரங்கள் ஒழிந்தனவற்றிலே கத்தி, சக்கரம், அங்குசம், சூலம், சக்தி, வச்சிரம், பத்மம், பாசம், தண்டம், கதை என்பனவற்றைத் தாங்கிநிற்கிறார்.
சிகிவாகனர் எனும் மயில்வாகனர் திருக்கோலத்திலே பல வடிவங்களுள்ளன. இவற்றிலே மூன்று வடிவங்களிலே ஆறுமுகத்துடன் காட்சி தருகிறார். இவற்றிலே பன்னிரு திருக்கரங்களோடு கூடிய திருக்கோலம் இரண்டிலே ஒன்றில் முக்கண்ணுடைய திருமுகங்களோடு பிறைசூடி மயில் வாகனத்திற் காட்சி தருகிறார். நான்கு திருக்கரங்களோடு ஆறுதிருமுகம் கொண்ட சிகிவாகனர் திருக்கோலத்திலே வள்ளி தேவசேனை சமேதராய். நவவிரர்சூழ, மகரகுண்டலம் அணிந்து, கரண்டமசூடம்சூடி, தோள்வளையும் ஆரமும் போட்டு, கடகம் பூட்டி, அரைஞாண் கட்டி, சிலம்பு அணிந்து, காளைப்பருவத்தினராக வரதம், அபயம், கமண்டலம், அட்ச மாலையுடன் காட்சி தருகிறார். செம்மாதுளைப்பூ, குங்குமம் போன்ற மேனியழகுடன் வெண்பூணுால் அணிந்து அழகாக இவ்வடிவம் அமைகின்றது.
- (பொ.யூ.)
ஆறெழுத்தந்தாதி
சடக்கரவந்தாதி என்றும் வழங்கப் பெறும்
ஆறெழுத்தந்தாதி சரவணபவ எனும் ஆறெழுத்தின் சிறப்பினைப் பல வகைகளிற் புலப்படுத்துவதாகும்.
கடவுள் வாழ்த்தினையும் 102 கட்டளைக் கலித்துறைப்
பாக்களையும் உடைய ஆறெழுத்தந்தாதி, அகத்தியர் பாடியதாக வழங்குகின்றது.
இந்துக் கலைக்களஞ்சியம்

முருகப்பெருமானின் பெருமைகளை விளக்கும் தோத்திர நூலாக விளங்கும் ஆறெழுத்தந்தாதியிற் சரியை, கிரியை, யோகம், ஞானம் எனும் நாற்பாதங்களும் விளக்கப் பெற்றுள்ளன. மந்திரங்கள் பல கூறப்பட்டுள்ளன. பல பாடல்களுக்குப் பொருள் நன்கு விளங்கவில்லை.
ஆறெழுத்தந்தாதி சென்னை அரசின் கீழைத்தேயச் சுவடிகளின் 51 ஆம் தொடராகத் தி. சந்திரசேகரன் 1956 இலே வெளியிட்ட முதல்ாம் அந்தாதிக்கொத்துத் தொகுப்பில் இடம் பெறுகின்றது.
ஆன்மதத்துவம்
ஆன்மாவோடு சம்பந்தப்பட்டிருத்தலால் ஆன்ம தத்துவம் எனப்படும். அகத்தத்துவம், போக்கிய காண்டம் எனவும் வேறு பெயர் பெறும். ஆன்மாக்களுக்குச் சாத்துவிகம் முதலிய குணங்களினாலே சுகதுக்க மோகங்களை உண்டாக்குவதால் அசுத்தம் எனப்படும். புசிக்கப்படும் வஸ்துக்களாயிருந்தலாற் போக்கிய காண்டம் எனப்படும்.
ஆன்மதத்துவம் இருபத்துநான்கு, அதன்விரி அந்தக்கரணம் நான்கு; தன்மாத்திரை ஐந்து, ஞானேந்திரியம் ஐந்து; கர்மேந்திரியம் ஐந்து பூதம் ஐந்து.
அந்தக்கரணம் மனம், புத்தி, சித்தம், அகங்காரம்; தன்மாத்திரை (புலன்) சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம்; ஞானேந்திரியம் (பொறி) மெய், வாய், கண், மூக்கு, செவி, கர்மேந்திரியம் நா, கை, கால், குதம், குறி, பூதம் நிலம், நீர், தீ, வளி, வான். (பொ.யூ.)
ஆன்ம விசாரம்
நாத்திகராயிருந்து கொடிய நோய்வாய்ப்பட்டு ஆத்திகராய் மாறிய பிராமண சாது ஒருவரின் சிந்தனைத் துளிகள் ஆன்மவிசாரம், உலகநிலையாமையையும், ஆன்மாக்களிடத்து இயல்பாகவுள்ள அகங்கார முனைப்பாகிய மலபந்தத்தையும், அதன் சேட்டைப் பிரிவுகளையும் அவை செய்யும் கொடுமைகளையும், அவற்றை நீக்குதற்கான சாதனைங் களையும் அவற்றை நீக்காவழி உயிர்கட்கு நேரும் இடர்களையும் இன்பதுன்பங்களின் இயல்பையும், அவற்றுள் உயிர்க்கிதஞ் செய்வதிது. அகிதஞ் செய்வதிது என்பதையும் பிறரிடத்துக் காணப்படும் தோஷங்களைப் பரிகரிக்கும் முறைகளையும், சகலரிடத்து சமபாவனை பண்ணுதற்கியைந்த உபாயத்தையும், இன்ன பிறவற்றையும் வேதாந்தசித்தாந்த விரோதமின்றித் தெள்ளிதில் எடுத்துக்கூறும் ஒர் அனுபவ நூலாகும்.
வசன நடையில் எழுந்த ஆன்ம விசாரத்தின் மூன்று கையெழுத்துப் பகுதிகளே இருபாகமாக அச்சிடப் பெற்றுள்ளன. ஆசிரியர் 1903 ஆம் ஆண்டிலே மன்னிரண்டாம் , பதின்மூன்றாம் இலக்கம் இடப்பட்ட கையெழுத்துப் பிரதிகளை எழுதினார் என்று அறியமுடிகின்றது. இன்று மூன்றாம், பன்னிரண்டாம்,
247

Page 294
பதின்மூன்றாம் இலக்கமிட்ட கையெழுத்துப் பிரதிகளே கிடைத்து அச்சிடப் பெற்றுள்ளன.
ஆன்ம விசாரம் செய்தவர், யாழ்ப்பாணம் கொழும்புத்துறை வாசரும் ஹேரம்பையர் புதல்வருமான சுப்பிரமணிய ஐயர் (1857 - 1912) என்பவராவார்.
ஆன்மவிசாரத்தின் பன்னிரண்டாம், பதின்மூன்றாம் பாகங்கள் இந்துசாதனம் பத்திரிகையில் 1923 இலே சஞ்சிகைகளாக வெளிவந்து, 1924 இலே நூல் வடிவில் முதன்முதலாக வெளிவந்தன. மூன்றாம் பாகம் 1930 இலே ஆன்மவிசாரம் இரண்டாம் பாகம் என்ற பெயரிலே வெளியிடப் பெற்றது. 1935 இலே ஆன்மவிசாரம் மீண்டும் அச்சிடப்பட்டது. மகாதேவ சுவாமிகள் நூற்றாண்டு நினைவு விழாக்குழுவினர் 1975 இலே வெளியிட்ட மகாதேவ சுவாமிகள் நினைவு மலரின் பின்னிணைப்பாக ஆன்மவிசாரம் மீண்டும் வெளிவந்துள்ளது. (பொ.யூ.)
රක්‍ෂුණිriplf
ஆன்மா, உயிர்ப்பது என்னும் பொருளுடைய 'அன்' என்னும் வேர்ச் சொல்லிலிருந்து பிறந்ததாகும். இது உயிர் என்னும் பொருளுடைய பிராணன் என்னும் சொல்லுடனும் தொடர்புடையது. ஆன்மாவை வட மொழியில் ஆத்மா என்பர். இந்தச் சொல் இருக்கு வேதத்தில் ஏறக்குறைய முப்பது முறை பல பொருளில் வந்துள்ளது. பொதுவாக ஆன்மா என்பது, உடலினின்று வேறுபட்டதும், உடல் இறந்த பிறகும் உள்ளதும், உடல் போனவின் பூமியில் செய்த செயல்களின் பலன்களைத் துய்ப்பதுமான மனித ஆவியையே குறிக்கிறது. உபநிடதங் களிலும் ஆன்மா இந்தப் பொருளிலேயே ஆளப்பட்டிருக்கிறது. சில வேள்ைகளில் இது உபநிடதச் சொல்லான பிரமம் என்பதற்கு மாற்றுச் சொல்லாக வந்துள்ளது. அப்பொழுது இதன் பொருள் உலகத்தின் மூலதத்துவம் என்பதாகும்.
கண்களாற் காணப்படாமையால் ஆன்மா என்ப தொன்றில்லை; அதுவெறும் சூனியமே என்பர் ஒரு சாரார். ஆயினும் ஒவ்வொன்றையும் ஆராய்ந்து முடிவு செய்யும் அறிவினை அவர்கள் சூனியமென்று கூறவில்லை. தேகமே ஆன்மா, தேகத்தின் வேறாக ஆன்மா என்பதொன்று காணப்படவில்லை என்பர் ஒரு சாரார். ஆனால் பருவுடல் அறிவற்ற சடமன்றோ, மெய், வாய், கண், மூக்கு, செவி எனும் இந்திரியங்களே ஆன்மா என்பர் ஒரு சாரார். ஆனால் அவை ஒன்று அறிந்ததைப் பிறிதொன்று அறிவதில்லை. அவற்றைத் தனித்தனியாக இயக்கிப் பயன் கொள்வதாகிய ஆன்மா வேறுண்டு, மனம், புத்தி, சித்தம், அகங்காரம் எனும் அந்தக் கரணங்களே ஆன்மா என்பர் ஒரு சாரார். ஆயினும் அவை தத்தமக்குரிய தொழிலைச் செய்யுமேயன்றி யான் இதனைச் செய்தேன் என்று உணரும் தன்மை அவற்றில் ஒன்றுக்கும்
248

இல்லை. சூக்குமதேகமே ஆன்மா என்பர் ஒரு சாரார். ஆனால் கனவு நிலையில் இயங்கும் நுண்ணுடல் நனவு நிலையில் இயங்கக்காணோம். உயிர்க்கப்பெறும் பிராணவாயுவே ஆன்மா என்பர் ஒரு சாரார். உறக்கத்திலும் விழிப்பிலும் ஒரு தன்மையாகப் பிராணவாயு இயங்கினும் விழிப்பிலேதான் இன்பதுன்ப நுகர்ச்சியுள்ளது. இவ்வேறுபாட்டுக்குக் காரணம் ஆன்மா, தேகம், இந்திரியம், அந்தக்கரணம், சூக்குமதேகம், பிராணவாயு இவையாவும் கலந்து நின்ற திரட்சியாகிய சமூகம்தான் ஆன்மா என்பர் ஒரு சாரார். ஆனால் இவை மாயா காரியப் பொருள்கள், நித்தப்பொருள் ஆன்மா, அநித்தப் பொருள்களின் திரட்சியாகாது.
ஆன்மா அருவம், அருவுருவம், உருவம் என்று கூறுவோரும் உளர், ஆகாசம் போல அருவமாய் அவிகாரமாய் இருக்கும் ஆன்மா என்பர் பாதஞ்சலர். ஆனால் ஆன்மா உடம்பினை யாத்து நின்று அதனை இயக்குவது அன்றோ. கவுளமதம் அருவருவப் பொருள் ஆன்மா எனும், மற்றொன்றாகாத நிலையினையுடையது அருவுருவமாகாதன்றோ. உருவமென்போர் ஆன்மா காணமுடியாததும் பரிணமித்து அழியாததும் உருவமாதல் இல்லையே என்பதை மறுத்தலரிது.
சைவசேடிகர் ஆன்மா சடப்பொருளாய் நின்று அறியும் தன்மைபெறும் என்பர். சடப்பொருள் சித்தாதலும் சித்துப்பொருள் சடமாதலும் இல்லை. பட்டாசாரியர் சடப்பொருளன்று சித்துப்பொருள் ஆன்மா என்பர். ஆனால் உயிரானது ஐம்பொறி, அந்தக்கரணம் என்பன துணை போகாது எதனையும் அறியாது. சாங்கியர் குணகுணித்தன்மை இல்லாமல் முழுவதும் அறிவு மாத்திரையாய் நிற்கும் என்பர். உயிரிடத்து அறிவு, இச்சை, செயல் எனும் மூவகைக் கூறும் அறிவு மாத்திரையாய் நிற்கும் என்பது பொருத்தமாகத் தெரியவில்லை.
ஆன்மா உடம்பினுள்ளே பரமாணு அளவிற்றாய் இருக்கும் என்பர் பாஞ்சராத்திரிகள். உயிர் உடலில் நில்லாது ஒடிப்போகும் இயல்புடையது. அதனை நிற்பது என்று கூறமுடியாதன்றோ. உடம்பில் புல்நுனி பனித்துளி போல ஏகதேசமாய் இதயத் தானத்தில் நின்று தன்னறிவு விளக்கொளியைப்போல எங்கணும் வியாபித்துப் பரவியிருப்பது என்பது மிருதி, ஆன்மா உருவப்பண்பு இல்லாதது.
எல்லாப் பொருள்களையும் இயக்கிநின்று தொழிற்படுத்தும் கடவுளாகிய பிரம்மம்தான் ஆன்மா என்பர் பிரமான்மவாதிகள். பிரமம் பேரறிவுப் பொருள்; அறியாமலும் ஒரு சிறிது அறிந்தும் அறிந்ததை மறந்தும் மயங்கி வருத்துவதன்றோ ஆன்மா. பிரம்மப் பொருளின் பரிணாமமாகத் தோன்றி, அறிவு இச்சை செயல்களை அடைந்து, தீயும் சூடும்போல பேதாபேதம் ஆகிய குணகுணத் தன்மைகளையுற்றுப் பல்வேறு வகைப்பட்டு ஆன்மா நிற்கும் என்பர் பரிணாம வாதிகள். கருவிகளின் துணையின்றி ஒன்றினையும் அறியாத சீவாத்மா, பேரறிவுப் பொருளான பிரமத்துடன் ஒத்ததாகுமா? ஐக்கியவாதியும் இறைவனைப் போலவே ஆன்மாவும் எங்கணும் வியாபித்துப் பரவி நின்று அறிவது என்பர். ஆனால் இறைவனுக்கும் ஆன்மாவுக்கும் பேதம் அதிகம்.
இந்துக் கலைக்களஞ்சியம்

Page 295
ஏகான்மவாதம் ஒரு ஆன்மா மட்டும் கூறுகின்றது. ஒருவருக்கு உற்ற இன்பதுன்பம் பிறர்பால் செல்லாமையின் ஒவ்வொரு உடலிலும் தனித்தனியே உயிர் உள்ளது என்பர் எதிர்வாதிகள்.
ஆன்மா என்பது சடப் பொருள்களாகிய பருவுடல், ஐம்பொறிகள், நுண்ணுடம்பு, பிராணவாயு முதலியவற்றுள் ஒன்று அன்று; வெறுமையும் அன்று அறிவே வடிவாகிய பரம்பொருளும் அன்று; அது ஒரு தனி முதல் என்று சைவ சித்தாந்தம் கூறும்.
இயற்கையில் ஆணவத்தால் கட்டுண்டு கிடக்கும் ஆன்மா, அக்காரணம் பற்றிப் பசு' என்று குறிக்கப்படுகிறது. பசு என்பதற்குப் பாசத்தால் கட்டப்பட்டது என்பது பொருள்.
உயிர்கள் எண்ணில்லாதவை. ஒர் உயிர் ஒர் உடம்பில் நின்று அனுபவிக்கும் இன்ப துன்பங்கள் மற்றோர் உயிருக்கு இல்லாமையால், ஒவ்வோர் உடம்பில் உள்ளதும் வேறு வேறு உயிரே என்பது விளங்கும். ஆதலால் உயிர் ஒன்றன்று; பல என்பது தெளிவாகும்.
பதியாகிய கடவுட் பொருளும் அறிவுடையது. பசுவாகிய உயிரும் அறிவுடையது. ஆயினும், பதி எல்லாவற்றையும் ஒருங்கே இடைவிடாது அறிந்து நிற்பதாகிய முற்றறிவு உடையதாகும். பசுவினது அறிவு அவ்வாறன்றி ஒவ்வொன்றாகவே அறியும்; அதனையும் விட்டு விட்டு அறியும்; அதனால் அவ்வறிவு சிற்றறிவு ஆகும். பதியின் அறிவு, தானே அறிவது; மேலும், உயிரின் அறிவுக்கும் அறிவாய் நின்று அதனையும் அறியச் செய்வது. அதனால் அது சூக்கும சித்து எனப்படும். பசுவின் அறிவு அவ்வாறன்றி அறிவித்தல் அறியும் தன்மை மட்டுமே உடையது. அதனால் அது தூல சித்து எனப்படும்.
பதியின் அறிவு ஒன்றை அறியுங்கால் அதில் அழுந்தி அதன் தன்மையைப் பெறாது. தன்னியல்பினின்றே அறியும். பசுவின் அறிவு அறியப்படும் பொருளில் அழுந்தி அதன் தன்மையைப் பெறுவது இவ்வியல்பு சார்ந்ததன் வண்ணமாதல் எனப்படும். இவ்வியல்பை விளக்குவதற்குப் படிகத்தையும் கண்ணையும் உவமைகளாக எடுத்துக்காட்டுவர் சைவ சித்தாந்திகள். பளிங்கு நீலமணியைச் சார்ந்தால் நீலமாயும் செம்மணியைச் சார்ந்தால் செம்மையாயும் மாறுகிறது. ஆயினும் கண்ணிற்கென்று ஒர் ஒளிஉண்டு. அவ்வாறே பசுவாகிய உயிருக்கும் ஓர் அறிவு உண்டு. அவ்வறிவு அறியப்படும் பொருளின் தன்மையாய் மாறும் இயல்புடையது.
இவ்வாறு பதியாகிய இறைவனுக்கும் பசுவாகிய உயிருக்கும் இடையே இத்துணை வேற்றுமை இருத்தலால் பதி அறியுடையதாகலின், வேறோர் அறிவு உண்டு என்றல் மிகை என்னும் குற்றமாம் என்னும் கருத்துப் பொருந்தாது என்று சைவ சித்தாந்தம் கூறுகிறது.
சைவ சித்தாந்தத்தில், அசத்து' என்பதற்குத் தோன்றியும் அழிந்தும் வருதலாகிய மாற்றத்தை உடையது என்பதே பொருள்.
இந்துக் கலைக்களஞ்சியம்

சத்து என்பதற்கு அத்தகைய மாற்றம் இல்லாமல் என்றும் ஒரு பெற்றியாய் உள்ளது என்பதே பொருளாகும். பாசம் நிலைமாற்றத்தை உடையதாகலின் அசத்து எனப்படும் பதி என்றும் மாறாத செம்பொருளாதலின் அது சத்து எனப்படும். உயிருக்குத் தோற்றமும் அழிவும் இல்லையாயினும் அது பாசத்தோடு கூடி அறிவு கெட்டும் தோன்றியும் வருதலால் சத்து எனப்படாது. அசத்து எனத்தக்கதாயும், பதியைச் சார்ந்தபின் அத்தகைய மாற்றம் அடையாமல் ஒரு நிலையாய் இருத்தலால் சத்து எனத்தக்கதாயும் உள்ளது. சார்ந்ததன் வண்ணமாம் தன்மை உடைமையினால் ஆன்மா சத்தைச் சார்ந்தபோது சத்தாயும் அசத்தைச் சார்ந்தபோது அசத்தாயும் நிற்கும். அதுபற்றி ஆன்மா சதசத்து எனப்படும்.
ஆன்மா கருவிகளோடு கூடியும் பிரிந்தும் ஐந்து அவத்தைகளை அடையும். அவத்தை என்பதற்கு நிலை என்பது பொருள். அவ்வைந்தவத்தைகள் சாக்கிரம், சொப்பனம், சுழுத்தி, துரியம், துரியாதீதம் என்பன. அவை முறையே நனவு, கனவு, உறக்கம், பேருறக்கம், உயிர்ப்படக்கம் எனத் தமிழில் வழங்கப்படும்.
ஆன்மாவின் இயல்பு பற்றிப் பல்வேறு சமயத்தார் பலபடக் கூறுவர். 'ஆன்மா' இயற்கையில் சடமே; அது மனத்தோடு கூடியபொழுது அறிவுடையதாய் நிற்கும் என்பர். தருக்க நூலார். 'ஆன்மா அறிவேயாகிய குணமாவதன்றி அறிவினை உடைய குணி அன்று என்பர் சாங்கியர். 'ஆன்மா எடுத்த உடம்பின் அளவினதாய் நிற்கும் என்பர் சமணர். 'ஆன்மா அணுவளவிதாய் நிற்கும் என்பர் பாஞ்ச ராத்திரிகள். இக்கொள்கைகள் எல்லாம்
சைவ, சித்தாந்த நூல்களில் மறுக்கப்படுகின்றன.
(பொ.பூ. & அ.ச.)
ஆன்மார்த்த பூசை
சிவபூசையானது ஆன்மார்த்த பூசை, பரார்த்த பூசை என இருவகைப்படும்.
ஆசாரியர் தீகூைடிபண்ணி அருள் சுரந்து சீடனைப் பார்த்து நீ இறக்கும் வரை கைவிடாது அவரை நாடோறும் பூசி என்று அனுமதி செய்து "அடியேன் இச்சரீரமுள்ள வரையும் சிவார்ச்சனை செய்தன்றி ஒன்று முண்ணேன்' என்று சம்மதி செய்வித்துக் கொண்டு கொடுக்க அவன் வாங்கிப் பூசிப்பது இட்டலிங்கபூசை எனும் ஆன்மார்த்த பூசையாகும். எல்லா ஆன்மாக்களுக்கும் அனுக்கிரகம் செய்யும் நோக்குடன் கோயில்களிற் பிரதிட்டை செய்து பூசிப்பது பரார்த்தலிங்க பூசையாகும்.
ஆன்மார்த்த பூசை செய்யாது பரார்த்த பூசை செய்தவர்கள் பூசையின் பயனை இழப்பதுமின்றி நரகத்துன்பத்தையும் அடைவார்கள். பரார்த்தபூசை செய்யும் அர்ச்சகரைத் தூய்மைப்படுத்துவது ஆன்மார்த்தபூசை மரணப்படுக்கையிற் கூட ஆன்மார்த்தபூசையைக் கைவிடக் கூடாது. ஆன்மார்த்த பூசை செய்யமுடியாத நிலையில் அர்ச்சகர் தனக்குப் பதிலாக கோயிலுக்குச் செல்பவர் கிரிகைகளைச் செய்யத் தான் மந்திரங்களை உச்சாடனம் செய்தல் வேண்டும்.
249

Page 296
தாம் தீட்சை பெறுவதற்கு முன் குருவையும் சிவலிங்கத்தையும் குணகுற்றங்களைப் பெரியோர் பலருடனே சந்தேக விபரீதமற ஆராய்ந்து கொண்ட பின்பே சற்குரு எனத் துணியப்பட்டவனிடத்திலேயே தீட்சை பெற்று நல்லிலக்கணம் என்று துணியப்பட்ட உடையவரை எழுந்தருளப்பண்ணிக் கொள்ள வேண்டும்.
சிவபூசையை மூன்று காலம் அல்லது இரண்டு காலமாவது செய்தல் வேண்டும். சக்தியற்றவர்கள் ஒரு தரமாவது செய்ய வேண்டும்.
ஆன்மார்த்த பூசை அல்லது இட்டலிங்கபூசை அல்லது சிவபூசை என்று வழங்கப்படும் பூசையின் பெருமையை உலகுக்குணர்த்த உமாதேவியார் காஞ்சியிலும் விநாயகப் பெருமான் திருசெங்காட்டிலும் முருகப் பெருமான் திருத்தணியிலும் கர்மசாதாக்கியத் திருவுருவைப் பூசித்துப் பேறு பெற்றனர். - (பொ. பூ)
ஆன்மானந்தவாதம்
சைவத்தில் அடங்குவதாயினும் சித்தாந்த சைவத்துள் அடங்காததும் ஆன்மாவுக்கு வேறு முத்தி கூறுவதானதுமான மரபினை உடையவர்களிலே ஆன்மானந்தவாதிகளும் அடங்குவர்.
சைவசித்தாந்தம் ஆன்மா தனித்து நிற்பதில்லை; பதியையேனும் பாசத்தையேனும் சார்ந்து நிற்கும்; சார்ந்த பொருளின் தன்மையதாய் நிற்கும் என்று கருதுகின்றது. இத்தகைய ஆன்மா அடையம் முத்தி திருவருள் பதிவால் மலம் வலிகெடச் சிவாநந்தத்துத் திளைக்கும் பேறு. ஆதலால் ஆன்மாவுக்கு ஆனந்தம் இயற்கையன்று; இறைவனிடத்து இருந்து பெற்ற பேறு என்று கொள்வது சைவ சித்தாந்தம். ஆன்மா சத்சித்ரூபி, இறைவன் சத்சித் ஆனந்தரூபி. சத், நித்தியமான பொருள்; சித், அறிவுப்பொருள்; ஆனந்தம், இன்ப உருவான பொருள். தான் வேறு சிவன் என்ற வேற்றுமையும் தான் என்ற முனைப்புமற்று சிவானந்தத்தை அனுபவிக்கும் நிலையையே சித்தாந்த சைவம் சித்தாந்த முத்தியாகக் கொள்ளுகின்றது.
ஆன்மானந்தவாதி சித்தாந்த சைவம் கூறும் முத்தியை மறுத்து, ஆன்மாவுக்கு இயற்கையாக ஆனந்தம் உண்டென்றும், அது மலத்தாலே தடைப்பட்டிருக்கின்றது என்றும், தடைநீங்க வெளிப்படும் ஆனந்தத்தை ஆன்மா தானே நுகருகின்றது என்றும் கூறுவர். எனவே ஆன்மானந்தவாதியின் கருத்துப்படி ஆன்மாவும் சிவனை ஒப்ப சச்சிதானந்தரூபியாகும்.
ஆன்மானந்தவாதத்தின் கோட்பாடுகளை விளக்கியவர் சிதம்பரம் கண்கட்டி மறைஞானசம் பந்தர். இவர் பதினாறாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். முத்திநிலை என்ற இவருடைய ஆன்மானந்தவாத நூலினை மறுத்துத் தருமையாதீன ஆதிகுரு
250

பூநீலழரீ ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் இயற்றியது முத்தி நிச்சயம். அது பண்டாரசாத்திரங்களுள் ஒன்றாக இடம் பெறுவது; வெள்ளியம்பல வாணத்தம்பிரான் பேருரை கண்டது.
- (பொ.யூ.)
ஆனந்தக் கூத்தர்
10ாண்டியநாட்டு வீர நல்லூர் எனும் ஊரினர்; பதினாறாம் நூற்றாண்டில் வாழ்ந்தவராகக் கருதப்படுவர்;
திருக்காளத்திப் புராணம் பாடியவர்; உ.வே. சாமிநாதையர் அதனை 1912 இலே பதிப்பித்துள்ளார்.
ஆனந்த கெ. குமாரசுவாமி (1877-1947)
கலாயோகி என்றும் கலை வரலாற்று அறிஞர்களாலும் விமர்சகர்களாலும் பாராட்டப்படும் ஆனந்த குமாரசுவாமி புராதனமான இந்திய கலைஞானம் பற்றிய புரிந்துணர்வும் அபிமானமும் நவீன உலகில் ஏற்படுவதற்கு மூலகாரணமாக விளங்கியவர். பன்மொழிப் பயிற்சியும் கீழைத்தேய மேலைத்தேய நாகரிகங்களைப் பற்றிய புரிந்துணர்வும் சமயநெறிகளைப் பற்றிய ஒப்பியலறிவும் கலாதத்துவம் பற்றிய நுண்ணறிவும் அவருடைய இணையிலாப் பெருந் தகைமைக்கும் அதன் பயனாகிய
சாதனைகளுக்கும் அடித்தளங்களாக அமைந்தன.
அவரின் தந்தையார் முத்துக்குமாரசுவாமி இலங்கையிலே புகழ்மிக்க குடும்பம் ஒன்றினைச் சேர்ந்தவர். அவர் கொழும்பிலே பொன்னம்பலவாணருக்கு ஆலயமெடுத்த பொன்னம்பல முதலியாரின் குமாரர். அவர் பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியிலே இங்கிலாந்திலே கல்வி கற்றவர். தனது மேதாவிலாசத்தினாலும் சான்றாண்மையினாலும் இங்கிலாந்திலே பெருமக்களைக் கவர்ந்தவர். அங்கு பிரதமர்களாயிருந்த பாமேர்ஸ்ற்றன், டிஸ்றைலி போன்ற அரசியல் ஞானிகளுக்கும் ரென்னிசன் முதலான இலக்கியவாதிகளுக்கும் அறிமுகமானவர். பிரித்தானிய சாம்ராச்சியத்திலே கிறிஸ்தவரல்லாதோரிடையே, மகாராணியிடமிருந்து கெளரவப் பட்டம் முதன்முதலாகப் பெற்ற சிறப்பு அவருடையதாகும். முத்துக் குமாரசுவாமி இலங்கைச் சட்டசபையிலே தமிழரின் பிரதிநிதியாகத் தேசாதிபதியால் நியமிக்கப்பட்டவர். கொழும்பிலுள்ள அருங்காட்சியகம் அவரது முயற்சிகளின் பயனாக அரசாங்கத்தால் நிறுவப்பட்டமை இங்கு குறிப்பிடற்குரியது.
முத்துக் குமாரசாமி இங்கிலாந்தில் வாழ்ந்த காலத்தில் 6T6ÓlenoG615 51(36IT Li Si (Elizabeth Clay Beeby) 6T söTg) ஆங்கிலேயப் பெண்மணியைத் தனது துணைவியாராகத் தேடிக் கொண்டார்.அவர்களின் குமாரரான ஆனந்த குமாரசுவாமி 1877 ஆம் ஆண்டிலே ஒகஸ்ற்று மாதம் 22 ஆம் திகதி கொழும்பிற் பிறந்தார். குமாரனின் இரண்டாவது வயதிலே தந்தையார்
இந்துக் கலைக்களஞ்சியம்

Page 297
இறந்துவிட்டதால் தாயார் பிள்ளையுடன் சுவதேசம் போனார். இளமையிலே பத்தாண்டுகள் குளஸ்ற்றஷையர் பிரதேசத்து ஸ்ரோன் கவுஸ் (Stonehouse) என்னுமிடத்திலுள்ள வைக்கிளிஃப் கல்லுரியிலே குமாரசாமி தனது பதினேழாவது வயதிலே,1895 இலே கல்லூரிச் சஞ்சிகையிலே தனது முதலாவது கட்டுரையை வெளியிட்டார். அக்காலத்தில் வில்லியம் மொறிஸ் (William Morris) (gTirpaiod, air (John Ruskin). 9,51(ELITfair சிந்தனைகள் அவரைப் பெரிதுங் கவர்ந்தன.
லண்டன் பல்கலைக்கழகத்தில் 1900 வருடம் பி. எஸ். சி (B.Sc) பரீட்சையிலே முதலாம் வகுப்பிலே சித்திபெற்ற அவர் பின்பு 1905 இலே டி. எஸ். சி பட்டத்தையும் பெற்றார்.
பத்தொன்பதாவது வயது முதல் அவர் இலங்கைக்கு வருடாவருடம் பிரயாணஞ் செய்தார். ஆனந்த குமாரசுவாமி 1903 இல் இலங்கையின் கணிப்பொருள் வள ஆராய்ச்சித் துறையின் பொறுப்பாளராக அரசாங்கத்தால் நியமிக்கப்பட்டார். அதனை ஏற்றுக்கொண்டதும் தனது மனைவியான எதெல் மேரி பாட்றிஜ் (Ethel Mary Partridge) 3 diglong, gauri GO)55(5& Gla Giro மூன்றாண்டுகள் அப்பதவிக்குரிய கடமைகளில் ஈடுபட்டார். தொறியனைற்று (Thorianite) என்னும் புதிய கணிப்பொருளை அவர் அடையாளங் கண்டார்.
இலங்கையிலே வாழ்ந்த குறுகிய காலப்பகுதியில் நாட்டின் பல பாகங்களுக்குப் பிரயாணங்களை மேற்கொண்ட பொழுது சமுதாயத்தையும் அதன் பாரம்பரியமான கலாசார நெறிகளையும் அவரால் அவதானிக்க முடிந்தது. அவற்றைப் பற்றிய ஆழமான சிந்தனைகள் அவருக்கு மனமாற்றத்தை ஏற்படுத்தி விட்டன. புராதனமான கலைச்சின்னங்கள் அவரைக் கவர்ந்தன. அவற்றைச் சேகரிப்பதிலும் ஆராய்வதிலும் ஈடுபாடு கொண்டார். அவரது ஆர்வம் கணிப்பொருள்களை விட்டுக் கலைச்சின்னங்கள் மீது ஏற்பட்டது. அது இந்திய துணைக்கண்டத்திலே தேசியவாதம் முனைப்புப் பெற்ற காலமாகும். பூர்வீகமானதும் ஆன்மீக நேயத்தை ஆதாரமாகக் கொண்டதும் வளமானதுமான இந்தியப் பண்பாடு மேனாட்டு மோகத்தினாலும் போலியான நவீனமயமாக்கத்தினாலும் சீர்குலைவதை அவர் அனுபவரீதியாக அறிந்துகொண்டார். புராதனமான தென்னாசிய கலாசாரத்தின் உன்னதமான பண்புகளைப் புரிந்து கொள்வதற்கான நெறிமுறைகளை வித்துவ பூர்வமாக இணையிலாத மேதாவிலாசத்துடன் வரையறை செய்வதில் ஈடுபாடு கொண்டார். அவரது ஆரம்பகால ஆக்கங்கள் சிங்கள கலாசாரம் பற்றியனவாகும். சில கண்டியர் கைப்பணித் தொழில்கள் (Some Kandyan Crafts) என்னும் கட்டுரையினை 1905 இல் 96) if G 616sfuS LIT if. (Ceylon National Review) 6T6arr) சஞ்சிகையினை 1906 ஆம் ஆண்டிலே வெளியிடத் தொடங்கினார். அதன் பதிப்பாசிரியராகக் கடமையாற்றியதோடு பாரம்பரிய கலாசாரம் பற்றிய பல கட்டுரைகளை மிகக் கவர்ச்சியான முறையில் அதன்மூலம் வெளியிட்டார். அந்தச் சஞ்சிகை 1911 சனவரிவரை வெளிவந்தது. ஆனந்த குமாரசுவாமி 1905 ஆம் வருடத்தில் இலங்கைச் சமூக சீர்திருத்தச் சங்கத்தை
இந்துக் கலைக்களஞ்சியம்

உருவாக்கினார். அச் சங்கத்தின் முதலாவது தலைவராக அவரைத் தெரிவு செய்தனர்.
1906 ஆம் வருடம் திசெம்பர் மாதத்தில் கனிவள ஆய்வுப் பகுதியின் தலைமைப் பதவியைத் துறந்துவிட்டு, ஆனந்த குமாரசாமி இந்தியாவுக்கும் இங்கிலாந்துக்கும் பிரயாணங்களை மேற்கொண்டார். அவர் இங்கிலாந்திலே தாயாரின் பிறப்பிடமான குளொஸ்ற்றர் கூடியரிலே வசிக்கத் தொடங்கினார். அங்குள்ள Broad Campden GTGöTSOLSL551(a) 960)LD555/55 (ESSeX House Press) என்னும் வெளியீட்டு நிறுவனத்தை விலைகொடுத்து வாங்கினார். அது 1911 வரை இயங்கியது. ஆனந்த குமாரசாமியின் பேரால் 11 நூல்கள் அந்நிறுவனத்தின் மூலமாக வெளிவந்தன. மத்தியகாலத்துச் சிங்களக் கலைகள் (Mediaeval Sinhalese Art) GT GÖTUgi அவற்றிலொன்று.
அவரின் இளமைக் காலத்திலே ஆனந்த குமாரசுவாமி இந்தியாவிலே கலாரசிகர்களிடையிலும் ஆய்வாளரிடையிலும் நன்கு அறிமுகமாகிவிட்டார். அலகபாத் நகரில் 1911 ஆம் ஆண்டில் நடைபெற்ற பொருட்காட்சியின் கலைப்பகுதிக்குப் பொறுப்பாக அவரை நியமித்தனர். இந்தியாவின் பல பகுதிகளுக்குப் பிரயாணங்களை மேற்கொண்ட சமயங்களிலே புராதனமான கலைப் பொருட்கள், தொல்பொருட் சின்னங்கள் பலவற்றை அவர் சேகரித்தார். அவற்றை நுணுக்கமாகப் பரிசீலனை செய்து நூல்கள் சிலவற்றை வெளியிட்டார். இந்திய இலட்சியங்கள் பற்றிய கட்டுரைகள் (Essays in Indian Idealism) 1909, 3,60 Gould 3,61G 53 guidisciplo (Art and SWadeshi) 1912 என்பவை அவற்றிலே குறிப்பிடத்தக்கவை. கலாசார சின்னங்களைப் பற்றிய தத்துவார்த்தமான விளக்கங்கள் மூலம் தேசாபிமானத்தை ஏற்படுத்துவதில் அவை குறிப்பிடத்தக்க செல்வாக்கினைச் சமுதாயத்தில் ஏற்படுத்தக் கூடியனவாக அமைந்திருந்தன.
இந்திய கலைச் சின்னங்களைப் பேணுவதற்கென்று ஒரு அருங்காட்சியகத்தை இந்தியாவில் அமைப்பதற்கு அவர் மேற்கொண்ட முயற்சிகள் பலனளிக்கவில்லை. நாட்டார் பாங்கிலான இசை நாடகங்களை அரங்கேற்றுவதிற் கொண்டிருந்த அனுபவத்தின் காரணமாக ராதன் தேவி என்ற சிறப்புப் பெயர் கொண்டிருந்த ஆங்கிலப் பெண்மணியான தனது இரண்டாவது மனைவியாருடன் குமாரசுவாமி 1912 இல் இங்கிலாந்துக்குத் திரும்பிச் சென்றார்.
வொஸ்ற்றன் (Boston) நகரிலுள்ள நுண்கலைப் பொருட்கள் அருங்காட்சியகத்து அறங்காவலரான டென்மன் வால்டோ GlpT6ño (Denman Waldo Ross) 6T 6ôTgOpế5 GleF 6ù6Jurf gyGOT sig குமாரசுவாமி சேகரித்த கலைப்பொருள்களை அவரிடமிருந்து வாங்கி, அவற்றை 1917இல் அந்நிறுவனத்துக்கு நன்கொடையாக வழங்கினார். அவற்றை அடிப்படையாகக் கொண்டு அந் நிறுவனத்திலே இந்தியா பற்றிய தனியான பிரிவொன்று அமைக்கப்பட்டது. அதன் பொறுப்பாளராக ஆனந்த
251

Page 298
குமாரசுவாமியை நியமித்தனர். அக்காலம் முதலாகத் தொடர்ச்சியாக 30 வருடங்கள் அவர் வொஸ்ற்றன் நகரிலே வாழ்ந்தார். இந்தியாவினதும் தென்கிழக்காசியாவினதும் கட்டிடக் கலை, சிற்பக்கலை, நடனங்கள், ஒவியங்கள் ஆகியவற்றைப் பற்றி ஆராய்ந்து கட்டுரைகளையும் நூல்களையும் வெளியிடுவதில் அவர் ஈடுபட்டார்.
1920 இல் ஆனந்த குமாரசுவாமி உலகப் பிரயாணம் ஒன்றைத் தொடங்கினார். அவரது மூன்றாவது மனைவியான ஸ்ரெலா வுளொக் (Stella Block) அம்மையாரும் அவரோடு கூடிச் சென்றார். இந்தியா, இலங்கை ஆகியவற்றுக்கும் போனார்கள். இராசபுத்திரர் ஓவியங்கள் என்னும் 96 (560) LLL LET6) (Rajput Paintings) 19169 (6) வெளியிடப்பட்டது. இந்திய ஓவியக்கலை வரலாற்றிலே இராசபுத்திரர் ஓவியங்களுக்குரிய சிறப்புகளைச் சமுதாயப் பின்னணியின் அடிப்படையில், மிக நுட்பமான முறையில் அவர் ஆராய்ந்து விளக்கியுள்ளமை குறிப்பிடற்குரியது. இந்து சமய, தத்துவ கலாசார மரபுகளை இராசபுத்திர ஒவியங்கள் ஆதாரமாகக் கொண்டவை என்பதை ஆனந்த குமாரசுவாமி விளக்கும் திறனும் வித்துவ மேதாவிலாசமும் ஈடிணையற்றனவாகும். இந்திய, (g)ị5Gog5 TC36ũT6ìuld, J565) GỦ6)IUGUITU)I (History of Indian and Indonesian Art) என்ற மகத்தான நூலை அவர் 1927 இல் வெளியிட்டார். புராதன காலத்து இந்திய கட்டிட சிற்பக் கலை மரபுகளையும் சாவகத்து மரபுகளையும் விரிவாக அந்நூலில் ஆராய்ந்துள்ளார்.
அமெரிக்காவில் வாழ்ந்த காலத்தில் ஆனந்த குமாரசுவாமி மனித குலத்தின் ஒருமைப்பாட்டிற்கு அழுத்தங் கொடுக்கும் வகையிலே தனது ஆக்கங்களை உருவாக்கினார். எல்லோருக்கும் பொதுவான ஆன்மீக தத்துவத்தின் வேறுபடுத்தப்பட்ட அம்சங்களையே வெவ்வேறான சமயநெறிகளும் அவற்றைச் சார்ந்த கலைமரபுகளும் பிரதிபலிக்கின்றன என்று அவர் கருதினார். அவையெல்லாம் பரஸ்பரத் தொடர்பு கொண்டவை என்பது அவரின் ஆழ்ந்த நம்பிக்கையாகும். மனித சமுதாயத்தின் இறுதியான குறிக்கோளையும் இலட்சியங்களையும் கலைப் பொருட்கள் மூலமாகவும் கலாதத்துவத்தின் ஊடாகவும் விளக்குவதே அவருடைய சிறப்புமிகு பணியாக விளங்கியது. மனித சமுதாயத்திற்குப் பொதுவான ஒரு ஆன்மீக தத்துவத்தின் அம்சங்களானவை வெவ்வேறான கலைமரபுகள் என்ற சிந்தனையினை மார்க்கோ பல்லிஸ் (Marco Palis) றெனே குன்னோன் (Rene Guemen) ஃபிறித்ஜேரஃப் ஷாஒன் (Frothjof Schuon) போன்ற பேரறிஞர்களுங் கொண்டிருந்தமை கவனித்தற்குரியது.
தனது வாழ்க்கையின் இறுதிக் காலத்தில் கலை மரபுகளுக்கு ஆதாரமான நூல்களை மொழி பெயர்ப்பதிலும் விளக்குவதிலும் ஆனந்தகுமாரசுவாமி ஈடுபட்டார். வைதீக மரபிலும் பெளத்த பாரம்பரியத்திலும் கிரேக்க மரபிலும் உள்ள நூல்களைத் தத்துவார்த்தமாக விளக்குவதில் அவர் கவனஞ் செலுத்தினார். “வீட்டிலும் வழமையான நிகழ்ச்சிகளிலும் கண்டறியாத தத்துவங்களை எம்மால் வேறெங்கும் காணமுடியாது. எங்கள்
252

அனுபவம் என்னும் கூேடித்திரமே புனித திருத்தலமாகும். எல்லாவற்றிலும் எல்லாம் உண்டு. அழகினை நன்கறிந்தனவற்றுட் காணாதவிடத்து அதனை வேறெங்கும் காணவியலாது இவ்வாறு இராசபுத்திரர் ஓவியங்கள் என்ற நூலின் முன்னுரையில் அவர் குறிப்பிடுகின்றார்.
ஆனந்த குமாரசுவாமி இடையறாத ஊக்கத்துடனும் நலிவற்ற உற்சாகத்துடனும் கடமைபுரியும் விற்பன்னராக விளங்கினார். பல தேசங்களுக்கும் பிரயாணஞ் செய்த காலங்களில் விரிவுரை களையும் விளக்கவுரைகளையும் வழங்கும் பழக்கமுடையவர். பல தேசத்து அறிஞரோடும் வித்தியா விற்பன்னர்களோடும் கடிதத் தொடர்புகளை அவராற் பேணிக்கொள்ள முடிந்தது. கட்டுரை வடிவிலும் நூல் வடிவிலும் அவரின் பெயரால் வெளிவந்த ஆக்கங்கள் எண்ணுறுக்கும் அதிகமானவை.
இறுதிக் காலத்தில் அவர் எழுதி வெளியிட்ட பிரதானமான நூல்களிற் சில மேல்வருவனவாகும்.
1. வேதங்கள் பற்றிய புதிய பார்வை - (A new approach
to the Vedas, 1933)
2. கலையில் மாற்றம் பெறும் இயற்கை - (The
Transformation of Nature in Art)
3. பெளத்த படிமக்கலையின் அம்சங்கள் - (Elements
of Buddhist Iconography) 1935;
4. இந்திய அரசியற் கோட்பாட்டில் ஆன்மீக தத்துவமும் லெளகீக அதிகாரமும் - (Spiritual Authority and Tempord Power in the Indian theory of Government), 1942;
5. கலைச்சின்னங்களை ஏன் காட்சிக்கு வைக்க
Golgor(S - (Why Exhibit Works of art?), 1943;
6. இந்து சமயமும் பெளத்தமும் - (Hinduism and
Buddhism) 1943;
7. பேச்சில் அணிவடிவங்களும் சிந்தனையில் .9600 floIL-Guil G(Gi5úd - (Figures of speech and figures of thought), 1946;
8. காலமும் அனந்தரமும் - (Time and Eternity), 1947;
இந்திய தேசத்திலும் அதன் கலாசார மரபுகளிலும் குமாரசுவாமி மிகுந்த அபிமானங் கொண்டவர். ஆசியாவுக்கான வழிகள் எல்லாம் இந்தியாவுக்கே இட்டுச் சென்றன என்று அவர் பல தடவை கூறியுள்ளார். இந்தியப் பிரயாணங்களைச் சொந்த வீட்டுக்கான பிரயாணங்களாக அவர் கருதினார். அவர் பிறந்தது இலங்கையில்; இளமையில் வளர்ந்தது இங்கிலாந்தில்; அவருடைய இறுதிக்காலம் அமெரிக்காவிலே கழிந்தது. அவரின்
இந்துக் கலைக்களஞ்சியம்

Page 299
தகப்பனார் இலங்கைத் தமிழர். தாயார் இங்கிலாந்து நாட்டவர். அவர் தனது ஆக்கங்களை ஆங்கில மொழியில் எழுதினார். அவரது மொழிநடை அலங்காரமானது. கவர்ச்சிகரமானது. அவர் இந்து நாகரிகம் மகோன்னதமானது என்பதை கலைச் சின்னங்கள் மூலமாக உணர்ந்தார். தத்துவ சாஸ்திரங்களையும் சமய நூல்களையும் சிற்ப சாஸ்திரங்களையும் கற்றுத் தெளிந்ததன் பயனாக இந்திய கலை ஞானம் பற்றி நவீனகாலத்து உலகோர் புரிந்து கொள்வதற்கான சாதனங்களான கருவி நூல்களை அவராற் படைக்க முடிந்தது. கலை ஞானம் தொடர்பான ஒரு சிந்தனைப் புரட்சியை அவரால் ஏற்படுத்திக் கொள்ள முடிந்தது.
அபிநவகுப்தரின் நூலான அபிநய தர்ப்பணத்தை ஆங்கில மொழிபெயர்ப்போடும் விளக்க உரைகளோடும் வெளியிட்டமை அவரது பெருஞ் சாதனைகளில் ஒன்றாகும். கூத்தப் பெருமானின் ஆனந்த நடனத்தை படிமக் கோலத்திற் கண்டு வித்துவபூர்வமாக விளக்கியமை அவரது அபூர்வமான சாதனையாகும். அவரது வர்ணனைகள் சிவதரிசனங்களில் அடங்கிய சிந்தனைகளின் தெளிவாக்கமாகத் திகழுகின்றன. இராசபுத்திரன் ஒவியங்கள் பற்றிய அவரது நூலும் அவ்வண்ணமானது. ஆனந்த குமாரசுவாமியை ஆதாரமாகக் கொண்டு இந்து நாகரிகத்தையும் புராதன இந்திய கலைஞானத்தையும் பற்றிய விசாரங்களை ஆரம்பிக்க வேண்டுமென்ற நிலை உருவாகிவிட்டது. (சி. ப.)
ஆனந்த தாண்டவம்
உயிர்களிடத்திற் படிந்திருக்கும் மலத்தினை, உயிர்கள் தாமே நீங்கிக் கொள்ளும் ஆற்றல் உடையனவல்ல என்பதால் இறைவன் தன் பெருங்கருைைணயினால் அவற்றை மழுங்கச் செய்து உயிர்களைத் தூய்மைப்படுத்துகிறார். இவ்வருஞ்செயல் பஞ்சகிருத்தியம் அல்லது ஐஞ்செயல் எனப்படும். அவை ஆக்கல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் என்பன. அவற்றைச் சங்கதமொழியிலே முறையே சிருஷ்டி, திதி, சங்காரம், திரோபவம், அநுக்கிரகம் என வழங்குவர்.
பஞ்சகிருத்தியம் இறைவனால் இடைவிடாது நடைபெறு வதாகும். அதனை எல்லாம் வல்ல இறைவன் சர்வசாதாரணமாக விளையாடல் போன்று இயற்றுவதாகக் கருதிப் பஞ்ச கிருத்தியத்தைக் கூத்து என்றும் நடனம் என்றும் தாண்டவம் என்றும் கூறுவர்.
சிவபிரான் செய்தருளிய தாண்டவங்கள் 108 என்று கூறப்படுவன. இவற்றிலே பஞ்சகிருத்தியம் பற்றியவை எழுதாண்டவங்களாம். இவற்றிலே ஆக்கல், அழித்தல், மறைத்தல், அருளல் என்பனவற்றிற்கு முறையே காளிகாதாண்டவம், சங்கராதாண்டவம், திரிபுர தாண்டவம், ஊர்த்துவ தாண்டவம் என்பன தனித்தனியாகக் கூறப்படுவன. காளிகாதாண்டவம் முனிதாண்டவம் என்றும் ஊர்த்துவதாண்டவம் காளிகா தாண்டவம் என்றும் வேறு பெயர் பெறுவன.
இந்துக் கலைக்களஞ்சியம்

காத்தலுக்கு இரு தாண்டவங்கள் கூறப்படுகின்றன. கெளரிதாண்டவம், சந்தியாதாண்டவம், ரக்ஷா தாண்டவம் எனும் பொதுப் பெயரை உடைய காத்தலுக்கு உரியதாண்டவம் இன்பக் காத்தலைக் குறிக்கும் போது புஜங்கலலிதம் என்றும் துன்பக் காத்தலை குறிக்கும் போது புஜங்கத்திராசம் என்றும் இருவகை ஆகின்றது.
ஆனந்தம் தாண்டவம் ஐஞ்செயல்களையும் ஒருங்கே காட்டுகின்ற தாண்டவமாகும். இத்தாண்டவம் நாதாந்த தாண்டவம், பஞ்சகிருத்திய பரமானந்த தாண்டவம் என்றும் பெயர் பெறும்.
துடி ஏந்திய கை ஆக்கல் செயலையும், அபயக்கை காத்தல் செயலையும், தீச்சுடர் ஏந்தியகை அழித்தல் செயலையும், ஊன்றிய திருவடி மறைத்தல் செயலையும் தூக்கிய திருவடி அருளல் செயலையும் குறிக்கின்றன என்று பெரியோர் கூறுவர்.
ஆனந்த தாண்டவப் பெருமான் திருவுருவம் நான்கு கைகளையும், மூன்றுகண்களையும், பரந்த சடையையும் பொன்னிறத்தையும், மயில் தோகையையும், முடியின் வலது பக்கத்திற் பிறையையும், ஊமத்த மலரையும், வலப்பக்கச் சடையின் நுனியில் கங்கையையும், வலக்காதில் மகர குண்டலத்தையும், இடக்காதில் பத்திர குண்டலத்தையும், பூனூலையும் அணிகள் பலவற்றையும் உடையதாக, புலித்தோலாடை புனைந்ததாக, கால்களில் கிண்கிணிமாலை அணிந்ததாக, வலக்கை அபயமாகவும் இடக்கை குறுக்காக நீட்டியதாகவும் வலக்கையில் உடுக்கையும் இடக்கையில் தீயகலும் உடையதாக, வலக்காலை முயலகன் மேல் ஊன்றி, இடக்காலை மேலே தூக்கி வலப்பக்கமாக நீட்டியாடுவதாகப் பொதுவாக அமைந்துள்ளது. இத்தாண்டவ உருவத்தின் கீழேயுள்ள பீடம் தாமரைமலர் போன்று அமைந்திருக்கிறது. கூத்தப்பெருமானைச் சூழ்ந்து திருவாசி அழகாக அமைந்துள்ளது. திருவாசியில் இடையிடையே தீச்சுடர்கள் அழல் விட்டெரிகின்றன. அழல் வட்டத்தினுள்ளே பேரொளியாய் கூத்தப்பெருமான் ஆனந்த தாண்டவம் செய்கிறார்.
ஆனந்ததாண்டவப் பெருமானின் திருவுருவத்திற் காணப்பெறும் அமிசங்கள் எல்லாவற்றிற்கும் அவற்றின் மறைபொருளை விளக்கிக் கூறும் முயற்சிகள் பல உள்ளன. ஆகமங்களில் இவ் விளக்கங்களைக் காண முடியும். ஆனந்த தாண்டவ மூர்த்தியை ஆனந்ததாண்டவர், ஆடல் வல்லநாயனார், ஆடல் வல்லான், கூத்தப் பெருமான் என்று பலவாறு அழைப்பர்.
திருப்புத்தூர்ப்புராணம் இறைவன் தில்லையில் ஆடியது ஆனந்தத் தாண்டவம் என்று கூறுகின்றது. ஆயினும் சிவன்கோயில்களிற் பொதுவாகக் காணப்படும் நடராசத் திருவுருவம் ஆனந்த தாண்டவ மூர்த்தியின் அழகுக் கோலமேயாகும். வலதுகாலைத் தூக்கி இடது காலை முயலகன் மீது ஊன்றியாடுகின்ற உருவமும் ஆனந்த தாண்டவத்திலுண்டு. இது மதுரையிலே குலசேகரபாண்டியன் வேண்டுகோளுக்காக இறைவன் கால்மாறி ஆடிய திருவிளையாடல் கூறும்.
253

Page 300
திருவாரூருக்குக் கிழக்கே ஏழுமைல் தொலைவிலுள்ள கீழ்வேளூரில் சிவபிரான் அகத்தியருக்குக் காட்சியளித்தபோது வலதுகாலைத் தூக்கி ஆடியருளியதாகவும் கூறலுண்டு.
(பொ. பூ)
ஆனந்ததீர்த்தர் (197-1276)
தென்கன்னட தேசத்திலே உடுப்பி தாலுகாவிற் கல்யாண புரத்தில் அவதரித்தவர்; மாத்தியகேஹபட்டர், வேதவதி என்போரின் புதல்வர், வாசுதேவன் என்ற பிள்ளைப் பெயரினர்; புருஷோத்தம தீர்த்தரின் (அச்சுதபிரேக்சாசாரியரின்) சீடர், மடாதிபதியானபோது குரு சூட்டிய திருநாமம் ஆனந்த தீர்த்தர், மாத்துவாசாரியர் என்ற பெயராலே பொதுவாக வழங்கப் பெற்றவர்; வேறு பெயர்களும் உடையவர்: 79வயது வரை வாழ்ந்தவர் என்பர்.
மாயா வாதத்தை மறுத்து பக்தி மார்க்கத்தின் மூலம் விஷ்ணுவாம் முதல்வனை அடையும் நெறியினை நிலைநாட்ட இந்திய உபகண்டத்தின் பல்வேறு பிரதேசங்களுக்கும் யாத்திரை மேற்கொண்டு தம் எதிரிகளை வாதத்திற்கழைத்து வாதம் புரிந்தவர்; துவைதம் என்ற தத்துவ தரிசனத்தை முன் வைத்தவர்; பேதவாதம் மூலம் அதனை விளக்கியவர்.
பதரிகாஸ்ரமத்திலிருந்தும் ஜகந்நாதத்திலிருந்தும் படிமங் களைக் கொண்டு வந்து கன்னட தேசத்தில் நிறுவியவர்; உடுப்பியில் கிருஷ்ண பரமாத்மாவுக்குச் சிறந்த கோயில் எடுப்பித்தவர், உத்தராதி மடத்தினைத் தாபித்து அதன் தலைவராக விளங்கியவர்; பத்மநாப தீர்த்தர், நரஉறரிதீர்த்தர், மாதவதிர்த்தர், அக்சோபய தீர்த்தர் முதலாம் சீடர்கள் உதவியுடன் 'சத் வைணவர் தொகையை அதிகரித்தவர்; (இவர் போதனைகளையும் மார்க்கத்தையும் பின் பற்றியவர் சத்வைணவர்)
ஆனந்த தீர்த்தர் 37 நூல்களை இயற்றியதாகக் கூறப்படுகின்றது. அவற்றிலே தசோபநிஷத்துகள், கீதை, பிரம்மசூத்திரம், இருக்குவேதம் (பகுதி), பாகவதபுராணம் என்பனவற்றிற்குத் துவைதபாரமாக இயற்றிய பாடியங்களும் அடங்குவன: மகாபாரததாத்பர்ய நிர்ணயம், மாயாவாதி சதுதூஷணி என்பன ஏனையவற்றில் அடங்குவன. (பொ. பூ)
ஆனந்த மாயீ (1896-1982)
முநீ ஆனந்தமாயீமா கிழக்கு வங்காளத்தை சேர்ந்த பிராமணர் மரபிலே தோன்றியவர்; நிர்மலாசுந்தரி எனும் பூர்வீகப் பெயரினையுடையவர்; இரண்டு வருடங்கள் மட்டுமே பள்ளிக்கூடம் சென்றவர்; பிறந்து மொழி பயின்ற கால முதலாக இறைவழியே நின்றவர்.
பதின்மூன்றாம் வயது முடியுமுன்பே திருமணம் செய்விக்கப் பட்டவர்; பதினெட்டு வயதிற் கணவனுடன் வாழச் சென்றவர்;
254

அவரைச் சூழ்ந்திருந்த புனிதத்துவத்தைக் கண்டு கணவன் மணவுறவினை நாடாது தொண்டு செய்ய முற்பட்டார். ஆறு வருடம் எண்ணற்ற சமய மார்க்கங்களில் ஈடுபட்டுச் சாதனையிற் பூரணத்துவம் அடைந்தார். 1922 இலே கணவரே இவருடைய சீடரானார். போலாநாத் என்றும் பிதாஜி என்றும் அழைக்கப்பெற்ற அவர், சன்னியாசியாகி 1938 இலே மறையும் வரை குருவின் விசுவாசமிக்க பாதுகாவலராக விளங்கினார்.
டக்காவின் சாபக் தோட்டத்திலே பூரீ ஆனந்த மாயீமாவின் அருட்கோலங்களைக் கண்டு பெருகத் தொடங்கிய பக்தர் கூட்டம் 1929இலே அவருக்கு ஆசிரமம் ஒன்றினை அமைத்துக் கொடுத்தது; வங்காளத்திற்கு அப்பால் 1927 முதல் யாத்திரை செல்லத் தொடங்கிய ஆனந்தமாயீ 1932இலே தெஹ்ராடுன் எனும் இடத்திலே தங்கினார். 1936 இலே கிசென்பூர் ஆசிரமம் ஆரம்பிக்கப்பட்டதை அடுத்து அங்கேயே அதிகம் தங்கினார்.
ஐம்பது வருடங்களுக்குமேல் இந்தியாவின் பல்வேறு இடங்களுக்கும் சென்று இறை பக்தியை வளர்த்தவர்; இந்தியாவின் வைதீக மரபுகளைப் போற்றியவர்; யாகங்களுக்குப் புத்துயிர் கொடுத்தவர்; குருகுலக் கல்வி முறைக்கும் சங்கதக் கல்விக்கும் ஊக்கமளித்தவர்; புராணக் கல்வியையும் வேதக்கல்வியையும் வளர்க்க முற்பட்டவர்; தன்னைத்தானே அறிந்து சுய பூரணத்துவம் அடைவதே மானிடத்தின் லட்சியம் என வற்புறுத்தியவர்; சொற்பொழிவுகள் ஆற்றாது தன்னைக் காணவந்த பக்தர்களின் ஐயங்களைப் போக்கி அவர்களுக்குத் தெளிவு ஏற்படுத்தியவர், கீர்த்தனைக் கூட்டங்களையும் தியான சம்பிரதாயங்களையும் ஊக்குவித்தவர்.
ஆனந்தமாயிமாவின் ஆசிரமங்கள் இருபதிற்கு மேல் இந்தியாவிலுள்ளன. வைத்தியசாலைகளும், மருந்துச் சாலைகளும் கல்வி நிலையங்களும் அவற்றின் ஆதரவில் ஒழுங்காக நடைபெற்று வருகின்றன.
அவருடைய போதனைகள் பல தொகுதிகளாக வெளி 6)jög|6ir 61T60T. (Svakriya SVarasamrita); 96)J(560Lu போதனைகளையும் அடியார் விளக்கங்களையும் தாங்கி ஆனந்த வார்த்தா எனும் சஞ்சிகை வங்காளி, இந்தி, ஆங்கில மொழிகளில் வந்து கொண்டிருக்கின்றது.
1982 ஆம் ஆண்டில் ஆகஸ்டு மாதம் 27ம் திகதி பூரீ ஆனந்தமாயிமாவின் பூதவுடல் 29ஆம் தேதி காங்கள் ஆசிரமத்தில் அடக்கம் செய்யப்பட்டது. (பொ. பூ)
ஆனந்தருத்திரேசர் வண்டு விடுதூது
செங்கட்பட்டு மாவட்டத்தில் உள்ள காஞ்சிபுரத்தில் உள்ள சிவதலங்களுள் ஆனந்தருத் திரேசம் ஒன்றாகும். உருத்திரர் நூற்றுப்பதினெண்மருள் முதல்வராகிய ஆனந்த உருத்திரராற் பூசிக்கப்பெற்றதால் ஆனந்தருத்திரேசம் என பெயர் பெற்றது.
இந்துக் கலைக்களஞ்சியம்

Page 301
ஆனந்தருத்திரேசரிற் கோயில் கொண்டருளும் ஆனந்த ருத்திரேசராம் சிவபிரான்மீது பாடப்பெற்றது கச்சியானந் தருத்திரேசர் வண்டுவிடுதூது. விநாயகர் காப்பு வெண்பா, ஆனந்தரூத்திரேசர் துதி G6) 600TLJIT நீங்கலாகப் கலிவெண்பாவிலே 504 கண்ணிகள் உள்ளன.
ஆனந்தருத்திரேசர் வண்டுவிடுதூதினைப் பாடியவர் கவிராக்ஷய கச்சியப்ப முனிவர் (-1790). இவர் ஆனந்த ருத்திரேசர் மீது பதிற்றுப்பத்தந்தாதியும், கழிநெடிலும் பாடியுள்ளார்.
பாட்டுடைத் தலைவன் பெருமை, உலாக்கண்ட தலைவியின் விரகவேதனை, தூதுப்பொருளின் பெருமை என்ற முறையிலே தூது அமைந்துள்ளது. தல சம்பந்தமான பற்பல சரிதங்கள் விரிவாக இடம்பெறுகின்றன. சைவசித்தாந்தக் கருத்துக்களும் சைவாகம முறைக்கேற்ப அமையும் திருவிழாப் பூசை என்பனவற்றின் விளக்கங்களும் தெளிவாகக் காணப்படுகின்றன. பொருளணிகளும், சொல்லணிகளும் மலிந்துள்ளன.
இத்தூதின் மூலத்தை ஊ.வே. சாமிநாதஐயர் 1888இலே பதிப்பித்தார். 1931இலே குறிப்புரையுடன் ஐயரவர்கள் வெளியிட்டனர். (பொ.யூ.)
ஆனந்த வர்த்தனர்
நாகரிகத்தின் பிரதானமான அடையாளங்களில் ஒன்று இலக்கியம். இலக்கியத்துறையிற் புராதன காலத்து இந்திய சமுதாயம் ஈட்டிய சாதனைகள் மகத்தானவை. நவீன காலத்துக்கு முற்படட உலக வாலாற்றில் அவை இணையில்லாதவை. வரலாறு தவிர்ந்த ஏனைய துறைகளில் இந்தியர்கள் படைத்த இலக்கியங்கள் மிகுந்த சிறப்புடையவை. சமஸ்கிருதமொழி இலக்கிய வரலாற்றிலே வளர்ச்சிக் காலம் குப்தர் காலத்தின் முடிவிலே நிறைவடைந்தது. அதற்குப் பிந்திய காலம் இலக்கியவாதிகளின் காலமாகும்.
விமர்சன இலக்கியம் சமஸ்கிருத இலக்கியப் பரப்பிலே ஒரு சிறப்புமிக்க துறையாகும். அத் துறையைச் சேர்ந்த பல நூல்கள் உள்ளன. அவற்றுக்கு நிகரானவை நவீனகாலம் வரை வேறெந்தத் தேசத்திலும் உருவாக்கப்படவில்லை. இலக்கிய வாதிகளிலே தலைசிறந்தவர் ஆனந்தவர்த்தனர். அவர் எழுதிய நூல்களிற் பிரசித்தமானது த்வந் யாலோகம். அவரது கோட்பாடுகளின் முக்கியத்துவத்தை மதிப்பீடு செய்வதற்குப் பிறரான இலக்கியவாதிகளைப் பற்றியும் குறிப்பிடுவது அவசியமாகின்றது.
உத்பட(ர்), வாமன(ர்), ருத்திட(ர்), அபிநவகுப்தர்), குந்தலர் முதலியோரும் இக் காலத்தைச் சேர்ந்த சிறந்த இலக்கிய வாதிகளாவர். குப்தர் காலம் முதலாக அரசர்களின் ஆதரவில் இயங்கிய வித்தியாபீடங்களும் சமய நிறுவனங்களோடு கூடிய
இந்துக்கலைக்களஞ்சியம்

கல்லூரிகளும் பரதகண்டத்திலே பலவாகிப் பெருகின. சிறந்த இலக்கியங்களைப் படித்து, நயந்து சுவைக்கும் வழக்கம் கல்விமான்களிடையிலும் செல்வர்களிடையிலும் மிகுந்து காணப்பட்டது. இலக்கியச் சுவை நயங்களைப் பற்றிய விமர்சன நுல்கள் எழுதப்படுவதற்கு அந்த வழக்கம் ஏதுவாகவிருந்தது. விமர்சன நூல்களை எழுதியவர்கள் மகாகாவியம், நாடகம், இதிகாசம், வாழ்க்கைச் சரிதங்கள், இலக்கணம், பாட்டியல் நூல்கள் முதலியவற்றிலே மகாபண்டிதராய் விளங்கினர். இரசபாவங்களைப் பற்றி அனுபவபூர்வமான உணர்ச்சி கொண்டிருந்தனர். அவர்கள் தத்துவ தரிசனங்களின் நுட்பங்களை இலக்கியக் கோட்பாடுகளுடன் இணைத்துக் கொள்ளும் மேதாவிலாசங் கொண்டிருந்தனர். அவர்களிற் சிறந்தவர்கள் காஷ்மீர தேசத்தவர்கள். அவர்களின் சிந்தனைகள் இந்து நாகரிகத்தின் நுட்பங்களை விளக்கும் தன்மையானவை.
அலங்காரம், ரீதி (நடை), த்வனி (தொனி), வக்ரோக்தி (சிலேடை மொழி) என்னும் இலக்கியப் பண்புகளைப் பற்றிப் பல கோட்பாடுகள் உருவாக்கப்பட்டன. அலங்கார சாஸ்திரத்தின் பிரதான நிபுணராக விளங்கியவர் உத்படர். பொருள் வேற்றுமை, சொல் வேறுபாடு எனச் சிலேடையில் வரும் இரு வகைகளை அவர் பிரதானமாக விளக்கினார். அணிகளைக் காட்டிலும் அவை முக்கியமானவை என்ற கருத்து அவர் மூலமாக அழுத்தம் பெற்றது. உத்படரின் கோட்பாடுகள் சமஸ்கிருத இலக்கிய வாதிகளிடையே பெருஞ்செல்வாக்கு பெற்றன. அவரது புகழ் பாமகருடையதைக் காட்டிலும் மிகப் பெரிதாகிவிட்டது.
அலங்காரசார சங்கிரகம் உத்படரின் நூல்களில் மிகவும் பிரசித்தமானது. அதில் 41 அணிகள் 72 செய்யுள்களில் விளக்கப்படுகின்றன. அவர் தனது கோட்பாடுகளை விளக்குவதற்கு ஏறக்குறைய 100 செய்யுள்களை ஆதாரமாகக் கொள்கின்றார். மேற்கோளாக அவர் கையாண்டுள்ள செய்யுள்கள் அவர் எழுதிய குமாரசம்பவம் என்னும் நூலிலிருந்து தெரிவு செய்யப்பட்டுள்ளன. அது காளிதாசரின் நூலிலிருந்தும் வேறுபட்டது. எனினும் அவற்றிடையே பொதுப் பண்புகள் பலவாகும். உத்படரின் குமாரசம்பவம் ஏழு வர்க்கங்களைக் கொண்டது. பத்தாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் பிரதீஹாரேந்துராஜ என்பவர் அதற்கு எழுதிய உரையொன்று உளது. உத்படர் காஷ்மீரத்து அரசன் ஐயபீடனது அரண்மனையிலே சபாபதியாக விளங்கினாரென்று கல்ஹணர் குறிப்பிடுவதால் அவரின் காலம் எட்டாம் நூற்றாண்டின் நடுப்பகுதியாதல் வேண்டும். அவரது செய்யுள்கள் சில மேற்கோள்களாக த்வன்யாலோகத்தில் வருகின்றன.
காலக்கிரம வரிசையில் உத்படரை அடுத்து வருபவர் காவியாலங்காரம் என்பதன் ஆசிரியரான ருத்திரர். சாஹித்திய சாஸ்திரம் பற்றிய எல்லா அம்சங்களையும் ஆராயும் அந்நூல் 16 அத்தியாயங்களையும் 734 செய்யுள்களையும் கொண்டது. காவியத்துக்கு இரசம் அடிப்படையானது என்பது அவரின் பிரதானமான கோட்பாடாகும். குணங்களை அவர் முற்றாகப் புறக்கணித்துள்ளார். ரீதி (நடை) பற்றியும் அவர்
55

Page 302
அதிகம் பொருட்படுத்தவில்லை. அவரது நூலில் அவர் அணிகளையே முதன்மைப்படுத்துகின்றார். அவர் விளக்கும் அணிகள் பாமகர், தண்டி, உத்படர் ஆகியோர் விளக்குவன வற்றைக் காட்டிலும் எண்ணிக்கையிற் கூடுதலானவை. அத்துடன் அணிகளைப் பற்றிய உத்படரின் விளக்கங்கள் தெளிவானவையாகவும் நியாயபூர்வமானவையாகவும் அமைந்துள்ளன.
சாலிபத்திரரின் சீடரான நாமசித்து என்னும் சுவேதாம்பர ஜைனர் கி. பி. 1068/9 ஆகிய வருடத்திலே காவியா லங்காரம் என்பதற்கு உரையொன்றை எழுதினார். அபிநவகுப்தர், ராஜசேகரர் ஆகியோர் பிரதீஹாரேந்துராஜர், தனிகர், மம்மடர் ஆகியோர் உத்படரைக் குறிப்பிடுவதோடு அவரின் செய்யுள்களைச் சில சமயங்களிலே உதாரணங்களாகக் கொண்டுள்ளனர். உத்படர் ஒன்பதாம் நூற்றாண்டின் முன்னரைப் பகுதியில் வாழ்ந்தவர் எனக் கருதலாம். அவரின் மறுபெயர் சதானந்தர்) என்பதும் அவரின் தந்தையாரின் பெயர் வாமுக(ர்) என்பதும் நாமசித்து எழுதிய உரைநூல் வழியாக அறியப்படும்.
ருத்திரபட்ட(ர்) எழுதிய சிருங்காரதிலகம் காவியலங் காரத்தைப் பின்பற்றி எழுதப்பட்ட நூலாகும். மூன்று பரிச்சேதங்களைக் கொண்ட சிருங்கார திலகம் இரச பாவங்களைப் பற்றியது. பலவகையான நாயகர், நாயகிகளைப் பற்றிய வர்ணனைகள் அதில் அடங்கியுள்ளன. விப்பிரலம்ய சிருங்காரத்தின் வெவ்வேறான நிலைகளும் விரக்தியடைந்த காதலரைக் கவர்வதற்கான ஒன்பது வகையான உபாயங்களும் வேறுவகையான இரசங்களும் நான்கு விருத்திகளும் அதிலே விளக்கப்படுகின்றன. ஒப்பியல் நோக்கில் ருத்திரபட்ட(ர்) ருத்திரடருக்குப் பிந்திய காலத்தவர் என்பதும் அவர் பத்தாம் நூற்றாண்டிலே வாழ்ந்தவர் என்பதும் புலனாகின்றன. அவரைப் பற்றிக் குறிப்பிடுவோரில் ஹேமச்சந்திரர் காலத்தில் முற்பட்டவர் என்பதும் கவனித்தற்குரியது.
இலக்கியவாதிகளில் மற்றொருவரான வாமனர் ரீதி என்னும் சொற்பிரயோகமே கவிதைக்கு உயிர்நாடி என்ற கோட்பாட்டை முதன்முதலாக முன்வைத்தார். சொற்களைத் தெரிந்து பொருத்தமான வகையிற் கோவைப்படுத்துவதன் மூலமே நயம் பிறக்கின்றது என்பது அவரின் அடிப்படைச் சிந்தனை. மலர்களைச் செம்மையாகத் தொடுப்பதன் மூலம் மாலை அலங்காரம் பெறுவதைப் போன்று சொன்மாலைகளாற் கவிதை அலங்காரம் பெறும். வாமனரின் காவியாலங்கார விருத்தி 5 பரிச்சேதங்களில் 319 சூத்திரங்களைக் கொண்டுள்ளது. அதில் விருத்தி, உதாரணம் என்னும் பகுதிகளும் இணைக்கப் பட்டுள்ளன. அலங்காரம், குணம் என்பனவற்றுக்கிடையில் வேறுபாடு உண்டென்பது பாமகரின் கருத்தாகும்.
மாக, பவபூதி, போன்றோரை வாமனர் குறிப்பிடுகின்றார். ராஜசேகர், பிரதீஹாரேத்துராஜா முதலானோர் வாமனரின் காஷ்மீரத்து ஐயபீடனின் அமைச்சராக இருந்தவரென்று கல்ஹணர் கூறுவார். எனவே வாமனரும் உத்படரும் ஒரே
256

காலத்தவர் இலக்கியவாதிகள் என்ற வகையில் வேறுபட்ட கருத்துகளை அவர்கள் கொண்டிருந்தனர்.
இலக்கியவாதிகளில் மிக முக்கியமான பிரிவினர் த்வனி (தொனி) பற்றிய கோட்பாடுகளை உருவாக்கிய சிந்தனை யாளராவார். அவர்களில் முதன்மையானவர் ஆநந்தவர்த்தனர். அவர் எழுதிய த்வன்யாலோகம் மிகவும் பிரசித்தமானது. அதிலே காரிகை, விருத்தி உதாஹரணம் என்னும் மூன்று பகுதிகள் சேர்க்கப்பட்டுள்ளன. தேவீசதகம், திரிதசானந்த ஆநந்தகதா என்பன அவர் எழுதிய மற்றைய சில நூல்கள். அவற்றுட் பின்னைய இரண்டும் அர்ஜ"னசரித விஷம பாணலிலா என்னும் பெயர்களாலும் வழங்கி வந்தன. ஆநந்தவர்த்தனர் தர்மோத்தமா என்னும் நூலை எழுதியவரென்று அபிநவகுப்தர் குறிப்பிட்டுள்ளார். அது தர்மகீர்த்தி எழுதிய பிரமாண விநிஷ்சய என்பதன் உரை நூலாகும். மேலும், காவியநயம், சாஸ்திரநயம் என்பவற்றுக் கிடையிலான தொடர்பினை விளக்கும் நூலாக தத்வாலோக என்னும் நூலினையும் ஆனந்தவர்த்தனர் எழுதினார்.
இலக்கிய விமர்சன நூல்களில் மிகுந்த சிறப்புடையதான தத்வாலோக(ம்) நான்கு அத்தியாயங்களையும் (உத்யோத) 129 காரிகைகளையுங் கொண்டது. தொனி பற்றிய தனது சொந்தக் கருத்துகளையும் இலக்கியவாதிகளிற் பிறர் சொன்ன கருத்துக்களையும் ஆநந்தவர்த்தனர் தொகுத்துக் கூறுகின்றார். வியங்கியம் வியஞ்சகம் என்பவற்றின் அடிப்படையில் தொனி பற்றிய கோட்பாடுகளை அவர் வகைப்படுத்துகின்றார். இலக்கியத்திற் குணம் அலங்காரம் என்பவற்றுக்குரிய சிறப்பினையும் வரையறை செய்வதற்கு முயற்சிக்கின்றார். கவிதைக்கு உயிர்நாடியாக அமைவது தொனி என்பது அவரின் அழுத்தமான சிந்தனையாகும். தொனி பற்றிய கருத்துகள் இடையிடையே முற்காலத்து நூல்களிலே காணப்பட்ட பொழுதிலும் அதன் முக்கியத்துவத்தையும் அதனைச் சார்ந்த கோட்பாடுகளையும் அழுத்தமாகவும் தெளிவாகவும் விரிவாகவும் முதல் முதலாக விளக்கிய சிறப்பு அவருக்குரியதாகும்.
வான்மீகியாருக்கு ஆதிகவி என்ற முத்திரையினை வழங்கியவர் ஆனந்தவர்த்தனர். இலக்கியகர்த்தாக்களில் மிகச் சிலரையே சிறந்தவர்களென்று அவர் பாராட்டினார். வான்மீகி, வியாசர், காளிதாசர் என்போரே மகாகவிகளில் முதன்மை யானவர்கள் என்பது அவரது கருத்தாகும். த்வனி பற்றிய அநந்தவர்த்தனரின் கோட்பாடுகள் மரபுவழியான ரஸ்பாவங்களைப் பற்றிய கருத்துக்களோடு தொடர்புடையவை. இலக்கியங்கள் தொடர்பான சுவைநயம் பற்றிய மேதாவிலாசமான சிந்தனைகளின் கனிவான நிலையினை அவை பிரதிபலிக்கின்றன.
ரஸ-பாவங்கள் பற்றிய ஆனந்தவர்த்தனரின் கருத்துக்கள் குறிப்பிடத்தக்கவை. மகாபாரதக் குறிப்பொன்றை ஆதாரமாகக் கொண்டு சாந்த ரஸம் தனியான வகைக்குரியதென்று அவர் கொள்வர். ஆசைகள் எல்லாம் அழிந்த நிலையில் (த்ரிஷ்ணகூடிய- சுக) அது பேரின்பமான நிலைக்கு இட்டுச்
இந்துக் கலைக்களஞ்சியம்

Page 303
செல்கின்றது என்பர். ரஸங்களிற் சிருங்கார ரஸ்மே காவியங்களில் முதன்மை பெறவேண்டும் என்பது ஆநந்த வர்த்தனரின் கொள்கை. அதன் மிகுந்த சுவையின் காரணமாகவும் அதன் சாரங்களைச் சாதாரணமான மக்களும் சுவைத்து அனுபவித்திருப்பதாலும் சுவைநயத்தில் அதுவே மிகவுங் கவர்ச்சியானதென்றும் அவர் கொள்வார்.
ஆனந்தவர்த்தனரின் கருத்துகளை ஆரம்பத்திலே இலக்கியவாதிகள் பலவாறு விமர்சித்தனர். ஆனால் காலப்போக்கில் அவரது சிந்தனைகளே இலக்கிய விமர்சனத் துறையிலே மிகவும் சிறந்தவை என்ற கருத்து மேலோங்கியது. இலக்கிய ரசனை தொடர்பான இலக்கியவாதிகளின் வாதப்பிரதிவாதங்களுக்கு ஆனந்தவர்த்தனர் முடிவு கட்டினார் என்பது ஜகந்நாதரின் கூற்றாகும். ஆனந்தவர்த்தனரின் அபிமானிகளில் ஒருவர் அபிநவகுப்தர். ஆனந்தவர்த்தனர் ஒன்பதாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். காஷ்மீரத்து அரசனான அவந்திவர்மனின் காலத்தில் அவர் வாழ்ந்தவரென்று ராஜதரங்கினியிற் சொல்லப்படுகின்றது.
ஆனாயநாயனார்
9າດ மலிந் புனல்மங்கை ஆனாயற்கடியேன்” எனச் சுந்தரமூர்த்தி நாயனார் (7.39.2) போற்றும் ஆனாயர் மழநாட்டு மங்கலவூரினர்; ஆனிரைகளை மேய்த்து வாழ்ந்த ஆனாயர் சிறந்த சிவனடியாராக விளங்கியதோடு நாடோறும் ஆனிரைகளை மேய்க்கும், போது ஐந்தெழுத்தைத் தம் புல்லாங்குழலில் அமைத்து வாசித்து வந்ததால் இறைவன் அருளைப் பெற்றவர்.
ஆனைக்குட்டி சுவாமிகள்
ஆனைக்குட்டி சுவாமிகள் என்ற பெயரிலே இருவர் ஈழத்திலே ஆத்மீக சாதனையிலே சிறந்து விளங்கியுள்ளனர். அவர்கள் பெரியானைக் குட்டி சுவாமிகள், சித்தானைக்குட்டி சுவாமிகள் என முறையே அழைக்கப் பெறுவர்.
பெரியானைக்குட்டி சுவாமிகள் கண்டியிலே சிறு வயதிலே சலவைத் தொழிலாளி ஒருவரின் பராமரிப்பிலே வளர்ந்தவர் என்றும் பின்பு அவ்வுறவினைச் சுதாகரித்துக் கொண்டு கண்டி பூரீ கதிரேசன் கோயிற் படிகளிலே தங்கிக் கொண்டு சாதனைகளில் ஈடுபட்டு வந்தனர் என்றும் கூறுவர். அங்கிருந்து புறப்பட்டு இந்தியா சென்றவர். இந்தியாவிலே நவநாத சித்தரின் நட்பினையும் சித்தானைக்குட்டி சுவாமிகளின் தொண்டினையும் பெற்று, பல சாதனைகளைச் செய்து விட்டு நவநாத சித்தர், சித்தானைக்குட்டி சுவாமிகளோடு ஈழம் மீண்டவர்.
ஈழம் மீண்ட பின்பு பெரியானைக்குட்டி சுவாமிகள் கொழும்புப் பிரதேசத்திலேயே அதிகம் தங்கியிருந்தனர். கொழும்பு கப்பித்தாவத்தையில் வாசஞ் செய்து கொண்டு பெருஞ்சித்தராக,
இந்துக் கலைக்களஞ்சியம்

விசுவாசிகளுக்கு அருள் பாலித்து வந்தனர். கொழும்பு வீதிகளிலே அதிகமாக நடமாடியவர்.
நாவலப்பிட்டியை அடுத்த குயீன்ஸ்பரி தோட்டத்திற் சிறப்புடன் விளங்கிய நவநாத சித்தரின் நண்பரான பெரியானைக்குட்டி சுவாமிகளின் சீடர்களிலே சித்தானைக்குட்டி சுவாமிகளும் மொட்டைச்சி அம்மையாரும் குறிப்பிடத்தக்கவர்கள். பெரியானைக்குட்டி சுவாமிகளைப் பெரிதும் மதித்துப் போற்றிய வர்களிலே சேர் பொன்னம்பலம் அருணாசலமும் ஒருவராவர்.
இவருடைய சீடர்களிலே ஒருவரான மொட்டைச்சி அம்மையார் திருக்கேதீச்சரத்திற் கொட்டில் அமைத்து வாழ்ந்து வந்தவர்.
பெரியானைக்குட்டி சுவாமிகள் சாதாரண வருடம் மாசி மாதம் (1911) சமாதி நிலையடைந்தார். அவருடைய சமாதி கொழும்பு முகத்துவாரத்தில் அமைந்துள்ளது. அதனை உள்ளடக்கி ஒரு பிள்ளையார் கோயில் எடுப்பிக்கப்பட்டுள்ளது. இக்கோயிலின் கடற்கரையிலே ஆடி அமாவாசைத் தீர்த்தம் வெகு விமரிசையாக வருடா வருடம் கொண்டாடப்பட்டு வருகின்றது.
சித்தானைக்குட்டி சுவாமிகள் பூர்வாசிரமத்திற் கோவிந்த சாமி என்ற பெயரினையுடையவர் என்றும் இராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள பெருநாளி சமஸ்தானத்தின் தலைவரின் புதல்வர், என்றும் கூறுவர். இராமநாதபுரத்திலே தமது சமஸ்தானத்தில் ஏற்பட்ட தொற்று நோய்ப் பரம்பலைத் தடுக்க முயன்ற பெரியானைக்குட்டிச் சுவாமிகளையும் நவநாத சித்தரையும் சந்தித்த கோவிந்தசாமி அவர்களுடைய சீடராகி, அவர்களோடு ஈழம் வந்து பெரியானைக்குட்டிச் சுவாமிகளுடன் கொழும்பிலே தங்கியிருந்தனர். பின்பு குருவின் ஆணைப்படி முன்னேஸ்வரம் அடைந்து அங்கு சாதனை புரிந்து வந்தனர். அங்கு தங்கியிருந்த போது தம் குருவின் சமாதி நிலையை உணர்ந்து முகத்துவாரம் மீண்டனர். பின்பு நவநாத சித்தரின் சமாதியைக் காண குயீன்ஸ்பரி சென்றனர். அங்கு சிறிது காலம நிட்டை கூடியும் மக்களுக்கு அருள் புரிந்தும் ஆத்மீக நெறி நின்றவர் கதிர்காம யாத்திரை செய்தனர். திசமகாரகம எனும் இடத்திற் சிறிது காலம் தங்கியவர் பின்பு மட்டக்களப்பினை அடைந்தனர்.
மட்டக்களப்பிலே தம்மை நாடி வருபவர்களுக்கு அவர்களுடைய பக்குவ நிலைக்கு ஏற்ப எளிமையாக உபதேசங்களைச் செய்து வந்தனர். அங்கு வாழ்ந்த காலத்திலே பல சித்துக்களைக் காட்டி மக்களிடம் இறை பக்தியை வளர்த்தனர். காரைதீவிலே 1951 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் சமாதியடைந்தார். அவருடைய சமாதிக் கோயிலிலே ஆண்டு தோறும் ஆடிச் சுவாதி நட்சத்திரத்திலே குருபூசை சிறப்பாக நடைபெற்று வருகின்றது. (பொ.யூ.)
257

Page 304
இசைஞானியார்
தீருமுனைப்பாடி நாட்டிலே திருநாவலூரில் வாழ்ந்த சடையனார் எனும் வேதியரின் மனைவி; நம்பியாரூரரைப் பிள்ளையாகப் பெற்றெடுத்த பெருமை மிக்கவர்; அறுபத்து மூன்று நாயன்மார்களிலே ஒருவராகத் துதிக்கப்பெறும் பேறு பெற்றவர். (பொ.பூ.)
இட்டலிங்கக் குறுங்கழிநெடில்
ஆன்மலிங்கத்தைத் துதித்து எழுசீர்க்கழிநெடிலடி ஆசிரிய விருத்தத்தாற் டாடப் பெற்றது இட்டலிங்கக் குறுங்கழி நெடில்.
துறைமங்கலம் சிவப்பிரகாசசுவாமிகள் பாடிய பிரபந்தங்களில் இட்டலிங்கக் குறுங்கழிநெடில் ஒன்றாகும். இவர் பிரபு லிங்க லீலையைச் சகம் 1574 இலே (கி.பி.1652) இயற்றியதாகப் பாடல் கூறுவதாற் பதினேழாம் நூற்றாண்டில் வாழ்ந்தவராவர்.
இட்டலிங்கக் குறுங்கழி நெடிலிலே பத்து ஆசிரிய விருத் தங்கள் உள்ளன. “என் கரத்து இருக்கும் ஈசனே மாசிலாமணியே’ என்ற முத்திரையுடன் எல்லாப் பாடல்களும் காணப்படுவன.
தோத்திரமாலையாக அமையும் இட்டலிங்கக் குறுங்கழி நெடில் மணிவாசகரின் திருவாசகத் திருப்பதிகங்களை ஞாபக மூட்டுகின்றது. உள்ளத்து உணர்வுகளையும் ஐயங்களையும் இறைவனிடம் எடுத்துரைக்கும் பாங்கிலே அமைந்துள்ளது.
இது சிவப்பிரகாசசுவாமிகள் தம் ஆன்மலிங்கம் மீது பாடிய ஐந்து பிரபந்தங்களில் ஒன்றாகும். அவர் வீர சைவமதத்தவராயினும் சுத்த சைவத்தில் வெறுப்புடையவரல்லர் என்பது இப்பிரபந்தம் உணர்த்தும் செய்தியாகும்.
இட்டலிங்கக் குறுங்கழிநெடில் சிவப்பிரகாச சுவாமிகள் பிரபந்தத்திரட்டில் இடம் பெறுவதாகும். இப்பிரபந்தத் திரட்டினை முதல் முதலாகத் தில்லை ஈசானிய மடம் இராமலிங்க சுவாமிகள் (- 1906)இல் பதிப்பித்தார்; 1941 இலே பாகனேரி மு. காசிவிசுவநாதன் செட்டியார் வெளியிட்டார். (பொ.யூ.)
இட்டலிங்க நெடுங்கழிநெடில்
ஆன்மலிங்கத்தைத் துதித்துப் பதினான்கு சீர்க்கழிநெடிலடி யாசிரியவிருத்தத்தாற் பாடப்பெற்றது இட்டலிங்க நெடுங் கழிநெடில்.
துறைமங்கலம் சிவப்பிரகாசசுவாமிகள் பாடிய பிரபந்தங்களில் இட்டலிங்க நெடுங்கழிநெடில் ஒன்றாகும். அவர் பிரபுலிங்க
258

லீலையைச் சகம் 1574 இலே (கி.பி 1652) இயற்றியதாகப் பாடல் கூறுவதாற் பதினேழாம் நூற்றாண்டில் வாழ்ந்தவராவார்.
இப்பிரபந்தத்திலே பத்து ஆசிரிய விருத்தங்கள் உள்ளன. “என் கரத்து இருக்கும் ஈசனே மாசிலாமணியே” என்ற முத்திரையுடன் எல்லாப் பாடல்களும் காணப்படுவன.
வீரசைவ சமயாசாரியர்களை ஈற்றுப் பாடலிலே போற்றிப் பேணிய ஆசிரியர் ஏனைய பல பாடல்களிளே சைவ நாயன்மார்கள்
பலருடைய செய்திகளை அமைத்து இறையருளை நாடி நிற்கிறார்.
சிவப்பிரகாசசுவாமிகள் தம் ஆன்மலிங்கம் மீது பாடிய ஐந்து பிரபந்தங்களில் இட்டலிங்க நெடுங்கழி நெடில் ஒன்றாகும். அவர் வீரசைவ மதத்தவராயினும் சுத்த சைவத்தில் வெறுப்பு டையவர் அல்லர் என்பது இப் பிரபந்தத்தால் அறியப்படுகின்றது.
இட்டலிங்க நெடுங்கழிநெடில் சிவப்பிரகாச சுவாமிகள் பிரபந்தத்திரட்டில் இடம் பெறுவதாகும். சிவப்பிரகாச சுவாமிகள் பிரபந்தத் திரட்டினை முதன் முதலாகப் பதிப்பித்தவர் தில்லை ஈசானிய மடம் இராமலிங்கசுவாமிகள் (- 1906); பாகனேரி மு.காசி விசுவநாதன் செட்டியார் பிரபந்தத்திரட்டினை 1941 இலே வெளியிட்டனர். (பொ.யூ.)
இட்டலிங்கவகவல்
ஆன்மலிங்கத்தைத் துதித்துப் பாடிய அகவல், இட்டலிங்க வகவல். அதனைப் பாடியவர் கருணைப் பிரகாசர். வெங்கனூரிலே வாழ்ந்து மறைந்த கருணைப்பிரகாசர், பதினேழாம் நூற்றாண்டில் வாழ்ந்த துறைமங்கலம் சிவப்பிரகாச சுவாமிகளின் தம்பியாவர்.
இட்டலிங்கவகவல் 196 அடிகளையுடையது. வீர சைவத்தின் உண்மைகள் பல, அகவலிலே கூறப்படுவன. இட்ட லிங்கமாகவும் பிரணலிங்கமாகவும் பாவலிங்கமாகவும் கண் டோர்க்கு வினைத் தொடர்பு அகலப் பல்பெரும் பதிகளனைத் தினும் வீற்றிருக்கும் சிவபிரான் அகவலிலே துதிக்கப்படுகிறார்.
கருணைப்பிரகாசர் வீரசைவ மதத்தவராயினும் சுத்த சைவத்தில் வெறுப்புடையவரல்லர் என்பது சீகாளத்தி புராணத் தால் அறிய முடிகின்றது. இட்டலிங்கவகவல் சிவப் பிரகாச சுவாமிகள் பிரபந்தத் திரட்டில் இடம் பெறுவதாகும். இத் திரட்டினை முதன் முதலாகத் தில்லை ஈசானிய மடம் இராமலிங்க சுவாமிகள்(- 1906) பதிப்பித்தனர்; 1941 இலே பாகனேரி மு.காசிவிசுவநாதன் செட்டியாரும் வெளியிட்டனர்; இட்டலிங்கவகவல் வண்ணை சி. சுவாமிநாத பண்டிதராலும் பதிப்பிக்கப்பட்டுள்ளது. (பொ.பூ)
இந்துக் கலைக்களஞ்சியம்

Page 305
இட்டலிங்கவயிடேகமாலை
ஆன்மலிங்கத்தை அபிடேகமாடியருள வேண்டிப் பாடப் பெற்றது இட்டலிங்கவயிடேகமாலை. துறைமங்கலம் சிவப் பிரகாசசுவாமிகள் பாடிய பிரபந்தங்களில் இட்டலிங்கவயிடேக மாலை ஒன்றாகும். அவர் பிரபுலிங்க லீலையைச் சகம் 1574 இலே (கி.பி. 1652) இயற்றியதாகப் பாடல் கூறுவதாற் பதினேழாம் நூற்றாண்டில் வாழ்ந்தவராவர்.
இட்டலிங்கவயிடேகமாலையிலே பன்னிரு சீர்க்கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் பத்துள. “அபிடேகம் ஆடியருளே, அறிவுற்று என்
அங்கை மலர் செறிவுற்று அமர்ந்த இறை, அபிடேகம் ஆடியருளே’ என்ற முத்திரையுடன் எல்லாப் பாடல்களும் காணப்படுவன.
சிவலிங்கத்தின் சிறப்பு, எழுவகைத் தீகூைடிகள், அபிஷேகம் கொள்ளுமுறைமை, சிவானந்தத்தின் இயல்பு முதலான விடயங்கள் சுருக்கமாக அபிடேகமாலையில் எடுத்துரைக்கப் பட்டுள்ளன; வீரசைவம் சார்ந்தது அபிடேகமாலை. (பொ.பூ)
இடங்கழிநாயனார்
"மடல் சூழ்ந்த தார் நம்பி இடங் கழிக்கும். அடியேன்” எனச் சுந்தரமூர்த்தி நாயனார் போற்றும் இடங்கழியார் (7.39.9) கோனாட்டினைக் கொடும்பாளூரிலிருந்து ஆட்சி புரிந்த அரசர், சிவதொண்டே கருமமாகக் கொண்டவர்; தொண்டர் வேண்டிய செய்பவர்; சிவாலயம் தோறும் வழிபாடு கிரமமாக நடக்கும்படி அரசு புரிந்தவர்.
அடியார் பொருட்டு அரசனின் பண்டகசாலையில் நெல் திருடினவருக்கு, அவர் நோக்கம் அறிந்தபோது, மேலும் பொருளும் நெல்லும் கொடுத்ததோடு அமையாது, பறையறைந்து ஏனைய
அடியாரையும் அழைத்துக் கொடுப்பித்து மகிழ்ந்தவர்.
(பொ.யூ.)
இடபாந்திகர் (இடபாரூடர்)
சிவபெருமானின் மூர்த்தங்களிலே (திருவுருவத் திருமேனி களிலே) இடபாரூடர் மூர்த்தம் ஒன்றாகும்.
ஊழியின் போது உலகங்களும் உயிர்களும் ஒடுங்கி அழியும் போது தானும் அழிய நேரிடும் என்று அஞ்சிய அறக்கடவுள் (தருமதேவதை), எருது வடிவம் கொண்டு, தம்மைத் தஞ்சமடையச் சிவபிரான் அதனை ஏற்று அதன்மீது ஏறி இவர்ந்து அருள் புரியும் நிலையே இடபாந்திக மூர்த்தமாகும்.
அன்புடன் தம்மை வழிபடும் அடியவருக்கு இறைவன் தரும தேவதை முதுகில் அமர்ந்து காட்சி நல்கி அருள்புரிவர் என்பர்.
இடபாரூடர் மூர்த்தத்திலே விஷ்ணு இடபமாகச் சிவபெருமானைத் தாங்கி நின்றனர்.
இந்துக்கலைக்களஞ்சியம்

திரிபுர சங்காரத்தின் போது சூரியசந்திரர்கள் சக்கரமாகவும் பூமி தேவராகவும் மேருமலை வில்லாகவும் கொண்டு, சிவபிரான் போருக்குப் புறப்பட்டுத் தேரின் மீது ஏறும்போது, தேவர்கள் விநாயகர் வழிபாடு செய்யாததால் தேரச்சு ஒடிந்து முறிந்தது. அந் நிலையிலே விஷ்ணு இடப வடிவம் கொண்டு அவரைத் தாங்கி நின்றனர். இவ்வடிவமே இடபாரூடர் எனப்படுகின்றது.
"கடகரியும் பரிமாவும் தேருமுகந் தேறாதே இடபமுகந் தேறிய வா றெனக்கறிய வியம்பேe தடமதில்க ளவைமூன்றுந் தழல்எரித்த வந்நாளில் இடபமதாய்த் தாங்கினான் திருமால்கான் சாழலோ' என்று மணிவாசகர் திருவாசகத்திலே சாழல் பாடியுள்ளார்.
(பொ.யூ.)
இடும்பன்
தமிழ் நாட்டிலும் ஈழத்திலும் வழிபாடு பெறும் தெய்வங்களில் ஒன்றாக இடும்பன் காணப்படுகிறான். பழனி, குன்றக்குடி முதலாம் தமிழ் நாட்டுத் திருத்தலங்களில் இடும்பனுக்கு விசேட மரியாதைகள் அளிக்கப்படுகின்றன. கொழும்பு, மலைநாடு, மட்டக்களப்புப் பிரதேசங்களில் இடும்பன் பரிவார தெய்வமாகத் தனிக்கோயில் பெற்று விளங்குவதைக் காணலாம். கொழும்பிலே வெள்ளவத்தை சம்மாங்கோடு பூரீ மாணிக்கப்பிள்ளையார் கோயில், வெள்ளவத்தை பூரீ கதிரேசன் கோயில் ஆகிய திருக் கோயில்களிலே இடும்பன் தனிக்கோயில்களிலே எழுந்தருளு வதைக் காணலாம். இரத்தினபுரி பூரீ கதிர் வேலாயுதசுவாமி கோயில், நாவலப்பிட்டி பூரீ கதிர்வேலாயுத சுவாமிகோயில், கொஸ் லாந்தை பூரீ கதிர்வேலாயுத சுவாமி கோயில் போன்ற மலை நாட்டுத் திருக்கோயில்களிலும் பரிவார தெய்வமாக அவர் எழுந் தருளியுள்ளார். மட்டக்களப்புப் பிரதேசத்திலே ஒரிரு கோயில் களிலே பரிவார தெய்வங்களில் இடும்பன் இடம் பெறுகிறான்.
திரிகோணமலை மாவட்டத்திலே பறையன்குளம் எல்லைக் காளியம்மன் கோயிற் பகுதியிலே இடும்பன்மலை என ஒரு குன்று பெயர் பெறுகின்றது.
தமிழ் நாட்டிலே இடும்பாவனம் , திருக்கன்றாப்பூர் எனும் இடங்களிலே இடும்பன் சிவனைப் பூசித்து வரம் பெற்றதாக ஐதீகம் உண்டு. இடும்பாவனம் எனும் பெயர் இடும்பனால் வந்ததாம். இடும்பாவனம் தஞ்சாவூர் மாவட்டத்திலேயுள்ள திருத்தலமாகும். இடும்பாவனத்துக்கு அண்மையில் இடும்பன் தலைநகரம் குன்றளுர் அமைந்திருந்ததாகக் கூறுவர்.
இடும்பன் வரலாறு பழநித் தலபுராணத்திலே கூறப் பட்டுள்ளது. அகத்திய முனிவர் கந்தமலையின் சிகரங்களிற் சத்தி சிகரம், சிவசிகரம் எனும் இரண்டனையும் சக்தி சிவமாகப் பாவித்துப் பூசித்துக் கந்தவேளின் உத்தரவின்படி அவற்றைக் பொதிய மலைக்குக் கொண்டு வந்து பூசிக்கக் கருதிப் பெயர்த்து வந்தார். பூர்ச்சவனம் எனும் தலத்திலே முருகனின் திருவருளினாலே அச்சிகரங்களை வைத்து விட்டுப் பொதிகை நோக்கி வந்து கொண்டிருந்தார்.
259

Page 306
சூரபன்மன், சிங்கமுகன், தாரகன் என்ற அசுரர்களின் சேனைகளுக்கும் அக்குலத்தாருக்கும் வில்வித்தை முதலிய அத்திர சத்திர வித்தைகளைப் பயிற்றிய இடும்பாசுரன் முருகப் பெருமானின் வேலால் அசுரர்கள் அழிந்தமையால் மனைவி இடும்பியுடன் மகேந்திரபுரியைவிட்டு வனசஞ்சாரஞ் செய்யச் சென்றான். அவ்வழியிலே திருக்குற்றாலத்திற்கு அருகே அகத்திய முனிவரைக் கண்டு வணங்கித் தன் வரலாறு கூறி ஆட்கொள்ள வேண்டினான்.
அகத்தியர் திருக்கேதாரத்திற்குப் பக்கத்திலுள்ள பூர்ச்ச வனத்திலே இருக்கும் இரு சிகரங்களையும் எடுத்துக் கொண்டு பொதியமலைக்கு வருவாயானால் பெறற்கரும் பேற்றை யடைவாய் என இடும்பனுக்குக் கூறி அவற்றை அடையும் வழிகளை உணர்த்தி மூலமந்திரமும் வழிபாடும் உபதேசித்து அனுப்பினார். இடும்பன் மனைவியோடு அகத்தியர் கூறியவழியே சென்று இரு சிகரங்களையும் கண்டு மகிழ்ந்து பூசித்து மூலமந்திரத்தை விதிப்படி உளத்தழுத்தித் தவஞ்செய்தான்.
அப்பொழுது பிரமதண்டம் புயதண்டாகவும் அட்டதிக்கு நாகங்கள் கயிறாகவும் தன் பக்கத்தில் வந்தமர்ந்தமை கண்டு அதிசயித்துக் கைகுவித்து இரு சிகரங்களையும் பாம்புகளால் உறி போலச் செய்து அகப்படுத்திப் பிரமதண்டுடன் பிணித்து மூல மந்திரத்தை எண்ணிப் புயதண்டத்தைத் தோளில் வைத்து முழங் காலை ஊன்றி எழுந்து அவற்றைக் காவிக் கொண்டு காவடி எடுப்
வராகமலை சென்று தங்கி பொதிகை செல்லும்படி கூறினான்.
பழனியை அடைந்தபோது முருகன் திருவிளையாடலால் இடும்பனுக்குக் காவடி அதிபாரமாகத்தோன்ற இளைத்து அங்கே இறக்கி வைத்து இளைப்பாறினான். பின்பு காவடியைத் தூக்க முயன்றபோது முடியாமற் போகவே சுற்றிப் பார்த்த போது சிவகிரியின் ஒரு சாரிலுள்ள குராமர நிழலிலே தண்டாயுத பாணியைக் கண்டு அவனை யாரென்று அறியாது விலகும்படி பயமுறுத்தினான். முருகன் வலிமை உளதேல் கொண்டு செல் என்று விளையாடினான். கோபம் கொண்ட இடும்பன் குராவடியிற் பாய்ந்த போது அங்கு வீழ்ந்து இறந்தான். பிரமதண்டும் நாகங் களும் அஞ்சி அகன்று அகத்தியருக்குச் செய்தி கூறிவிட்டு தத்த மிருக்கை சேர்ந்தன. இடும்பியின் அழுகுரலுக்கு இரங்கிய முருகப் பெருமான் மாங்கலியப் பிச்சை அருளினான்.
இடும்பன் துயில் விட்டு எழுந்தவன் போல எழுந்து வணங்கித் துதித்து அம்மலையடியில் இருந்து குற்றேவல் புரிய வரம்கேட்டு இரப்பப் பெருமானும் அவ்வாறு அருளினார். இடும்பன் தான் இருமலைகளையும் எடுத்து வந்தது போல காவடி எடுத்து வரும் அடியவர்களுக்கு அருளும் படியும் கேட்டதாகக் கூறுவர்.
முருகன் சந்நிதிக்குக் காவடி எடுக்கும் வழக்கம் இடும்பன் கதையுடன் தொடர்புபடுவதைக் காணலாம். இடும்பன் காவடி எடுக்கும் கோலத்திலே கோயில்களில் இடம் பெறுவது இங்கு மனங் கொள்ளத்தக்கது.
260

முருகபக்தனான இடும்பனுக்கு முருகன் கோயில்களிலே சிறப்பிடம் அளித்தனர். பின்பு அவனுக்கு முருகன் பரிவார தெய்வமாக எழுந்தருளிய தலங்களிலும் இடம் தந்தனர். இடும்பன் பூசை பல திருத்தலங்களிலே மகோற்சவத்தை அடுத்து நடை பெறல் வழக்கிலே காணப்படுவதாகும்.
இடும்பன் கவசம் என்றொரு கவசமும் காணப்படுகின்றது.
இடைக்காட்டுச் சித்தர் பாடல்
இடைக்காட்டுச் சித்தர் என்பவர் பாடிய பாடல்கள் இடைக்
காட்டுச் சித்தர் பாடல் எனும் நூலிலே இடம்பெறுகின்றன. இடைக் காட்டுச் சித்தர் வரலாறோ அன்றிக் காலமோ துணிதற்கில்லை.
காப்புச் செய்யுள் நீங்கலாக 130 பாடல்களையுடையது இடைக்காட்டுச் சித்தர் பாடல். பரம்பொருளைப் பாவம் அழியக் காதலுடன் கருத்தில் வைப்பதாகக் கூறும் காப்பினை அடுத்துவரும் பாடல்கள் எளிமையான நடையினையுடையவை; பொதுவாக நேர்ப்பொருள் தருவதாக அமையும் நூலிலே சில பாடல்கள் குறிப்புப் பொருள் உணர்த்துவனவாகவும் காணப்படுகின்றன; இப்பாடல்கள் நாட்டுப் பாங்கான இலக்கிய அமைதிகளைப் பின்பற்றுவது குறிப்பிடத்தக்கது. தும்பீபற, ஊதுகுழல், பால்கற முதலிய அமைதிகளும், கோனே, கோனாரே, தாண்டவக்கோனே, பசுவே, குயிலே, மயிலே, மடவனமே என விளித்தமையும் பாங்கானவையும் நாட்டுப்பாடல் மரபுகளைக் காட்டுகின்றன. பலரொடுகிளத்தல், நெஞ்சொடுகிளத்தல், அறிவோடு கிளத்தல் எனும் பொருளமைதியுடன் காணப்படுவன இலக்கியவமைதிகளை எளிமையாக்கியுள்ளன.
உலகவியல்பினை, நிலையாமையை, உணர்ந்து இறைவன் அருளை நாடும் இன்றியமையாமையைப் பொதுவாக அடிப்படைக் கருத்தாக உடையன இடைக்காட்டுச் சித்தரின் பாடல்கள்.
பதினெண்சித்தர்கள் பெரிய ஞானக்கோவை எனும் தொகுப்பிலே இடம் பெறுவது இடைக்காட்டுச் சித்தர் பாடல். 1899 இலே முருகேசநாயகர் இத் தொகுப்பினை வெளியிட்டுள்ளார். 1907 இலே சென்னையில் வி. சரவணமுத்துப் பிள்ளை இருபாகமாகப் பதிப்பித்தார். அரு. ராமநாதன் பதினெண்
சித்தர் பாடல்கள் எனும் பெயரிலே 1959 இலே வெளியிட்டனர்.
(பொ. பூ)
இணுவிற் கோயில்கள்
ஈழ நாட்டின் வட மாகாணத்தில் யாழ்ப்பாண மாவட்டத்தில் உடுவிற் பகுதியிலுள்ள இணுவில் பல திருக்கோயில்களைத் தன்னகத்தேயுடைய திருப்பதியாகும்.
இணுவில் தெற்கிலுள்ள மடத்துவாசலில் அமைந்த பூரீ பரராசசேகரப்பிள்ளையார் கோயிலிற் சிற்ப ஒவிய வேலைப்பாடுகள் சிறப்பாகவுள்ளன. ஆரியச்சக்கரவர்த்திகளின் சிம்மாசனப்
இந்துக் கலைக்களஞ்சியம்

Page 307
பெயருடன் விளங்கும் இத்திருக்கோயிலிலே மூல மூர்த்தியாம் விநாயகருடன் பஞ்சமுக விநாயகர், இலட்சுமிதேவி, சுப்பிரமணியர், வைரவர், சண்டேஸ்வரர், நவக்கிரகம் என்போர் பரிவார மூர்த்தி களாக உள்ளனர். இங்கு காளிங்க நர்த்தன கிருஷ்ண விக்கிரகமு
தேரும் அடுத்துத் தீர்த்தோற்சவமும் நடைபெறுவன. இங்கு மூன்று தேர் பவனியிற் கலந்து கொள்வன. அ.க. பொன்னம்பல பிள்ளை பாடிய திருவூஞ்சல் இத் திருக்கோயிலுக்குண்டு.
ஆரியச் சக்கரவர்த்திகளின் அடுத்த சிம்மாசனப் பெயருடன் விளங்குவது செகராசசேகரப் பிள்ளையார் கோயில், இங்கு மூலவருடன் பரிவாரமூர்த்திகளாக உற்சவ விநாயகர், வேல், சந்தான கோபாலர், வைரவர், சண்டேஸ்வரர் ஆகியோர் காணப்படுகின் றனர். சித்திரை பூரணையைத் தேராகக் கொண்டு முதல் பதினொரு நாள் மகோற்சவம் நடைபெறும். திருச்செந்தூர்ப்புராணம் , பிள்ளையார்கதை வருடாவருடம் இங்கு படிக்கப்படுகின்றன.
இன்னுமொரு பிள்ளையார் கோயில் இணுவில் கிழக்கில் உண்டு. கப்பனைப் பிள்ளையார் கோயில் என்றும் அரசோலைப் பிள்ளையார் கோயில் என்றும் பெயர் பெறும் இக்கோயிலிற் பிள்ளையாருடன் பரிவார மூர்த்திகளாகச் சுப்பிரமணியர், மாரியம்மன் ஆகியோர் எழுந்தருளியுள்ளனர். நித்திய பூசைகளோடு வருடாந்த உற்சவமும் ஒழுங்காக நடை பெறுகின்றன.
இக்கோயிலுக்கு அண்மையில் உள்ளது பூரீ அருணகிரிநாத சுப்பிரமணியசுவாமிகோயில். ஐம்பொன்னாலான வேல் மூர்த்தியாகவும் பிள்ளையார், வைரவர் பரிவார மூர்த்திகளாகவும் இங்கு எழுந்தருளியுள்ளனர்.
ஒல்லாந்தர் காலத்தில் அமைக்கப் பெற்றதாகக் கருதப் படுவது இணுவில் கந்தசுவாமி கோயில், ஆதியில் மூலவர் வேலாகப்
சுப்பிரமணியர் பிரதிட்டை செய்யப்பட்டார். பரிவார தெய்வங் களாகக் கல்யாண வேலவர் , சிவலிங்கம், நடராஜமூர்த்தி, சந்திரசேகரர், முத்துக்குமாரசுவாமி, சந்தான கோபாலர், தண்டாயுதபாணி, உற்சவவைரவர், வைரவர் எழுந்தருளியுள்ளனர். இங்கு மிகப் பழைய மஞ்சம் ஒன்றுண்டு. நித்திய, விசேட பூசைகள் ஒழுங்காக நடைபெறுகின்றன. ஆனி அமாவாசையைத் தீர்த்தமாகக் கொண்டு முதல் 25 நாள் மகோற்சவம் நடைபெறு கின்றது. திருக்கல்யாண விழாவினை அடுத்துப் பூங்காவனத் திருவிழாவும் இங்குண்டு. கந்த புராணம் வருடாவருடம் இங்கு படிக்கப்பட்டு வருகின்றது.
உடுப்பிட்டி அ. சிவசம்பு புலவர் இணுவிற் சுப்பிர மணிய சுவாமி பதிகமும் அ.க. வைத்தியலிங்கம் பிள்ளை இணுவில் பூரீ கல்யாணவேலவர் திருவூஞ்சலும் பாடியுள்ளனர்.
இணுவில் சிவகாமிசுந்தரியம்மை மீது இணுவிற் சி. சின்னத்தம்பிப்புலவர் பல பிரபந்தங்களைப் பாடியுள்ளார். இவற்றில் இணுவை சிவகாமி சுந்தரியம்மை பதிகமும் இணுவை சிவகாமியம்மை பிள்ளைத் தமிழும் பாவலர் சரித்திர தீபகத்திலே (1886) குறிப்பிடப்பட்டுள்ளன. இணுவில் சிவகாமி யம்மை
இந்துக் கலைக்களஞ்சியம்

சதகம், ஊஞ்சல், இரட்டைமணிமாலை என்பன ஆ.சி. நாகலிங்கம் பிள்ளையாற் குறிப்பிடப்பட்டுள்ளன (செந்தமிழ்ப் பூம்பொய்கை, 3ம் பா கம், 1949). சிவகாமியம்மை துதி முதலிய வேறு பிரபந்தங்களும் அவராற் பாடப் பெற்றுள்ளன.
இளந்தாரிகோயில் எனவொரு கோயில் இணுவிலிலுண்டு. இளந்தாரி புராணம் எனவொரு புராணமும் கேட்கப் படுகின்றது. இப்புராணம் இளந்தாரிகோயிலில் எழுந்தருளி யவரைப் பற்றியதாகலாம். இளந்தாரிகோயிலில் எழுந்தருளி யிருப்பவர் கைலாயநாதன் என்பவராவர். இவர் யாழ்ப்பாணத்திற் பறங்கியர் ஆட்சியின் போது வாழ்ந்தவர் என்று தெரிகின்றது. இவர் மீது இணுவில் சின்னத்தம்பிப் புலவர் பஞ்ச வன்னத்தூது, கயிலாயநாதர் தோத்திரம் முதலியனவற்றைப் பாடியுள்ளார்.
இணுவில் பொ. அம்பிகைபாகர் பாடிய இணுவையந்தாதி, வறுத்தலைவிளான் க. மயில் வாகனப்புலவர் பாடிய இணுவைப் பதிற்றுப்பத்தந்தாதி, இணுவைப் பதிகம் முதலிய பிரபந்தங்களின் விவரங்கள் அறியுமாறில்லை. (பொ.யூ.)
இதிகாசங்கள் இதிகாச காலம்
வேதங்களின் முடிவாகவும் சாரமாகவும் அமைந்த உபநிடதங்களின் காலத்துக்கும், சமயச் சார்புடன் உலகியலையுங் கூறும் காவியங்கள், நாடகங்கள், உரை நூல்கள் என்பன எழுந்த காலத்துக்குமிடையே தோன்றிய இலக்கிய ஆக்கங்கள் இதிகாசம் என வழங்கலாயின. இதிகாசம் என்ற சொல் "இதி-ஹ-ஆஸ” - இப்படி முன் இருந்தது- என்ற பொருளை விளக்கி நிற்கின்றது. இந்த இதிகாசம் என்னும் இலக்கிய ஆக்கத்தில் இராமாயணமும் மகாபாரதமும் அடங்கும். இவை முன்பு மக்கள், தேவர், அரசர் முதலியோருக்கிடையே நடந்த நிகழ்ச்சிகள் கதைகள் என்பவற்றை உரைப்பனவாக அமைந்திருக்கின்றன. இவை ஆதியில் அரச சபைகளிற் பாடப்பட்டன.
சூதரின் காலம்
இந்த இதிகாசங்களை அரச சபைகளிற் பாடி அரசனை வாழ்த்திப் பரிசு பெற்றவர்கள் சூதர் என அழைக்கப்பட்டனர். இவர்கள் பாணரைப் போன்றவர்கள். அரச அவையில் வாழ்ந்து அவனைப் புகழ்ந்துபாடி வந்தனர். அரசன் போருக்குச் செல்லுங் காலத்தில் இந்தச் சூதரும் சேனையோடு சென்று யுத்தத்தில் நடப்பவற்றை அவதானித்து அரசனுடைய வீரத்தைப் பாடு வார்கள். இவர்களும் சேனையில் ஒர் அங்கமாகக் கணிக்கப் பட்டார்கள். சில சமயம் சேனைத் தலைவர்க்குச் சாரதிகளாகவும் இவர்கள் கடமைபுரிவதுண்டு. விழாக்களிலும் வெற்றி வைபவங் களிலும் வேள்விகளிலுமே சூதர் தம் பாடல்களைப் பாடினார்கள். அரசனுடைய சபைகளில் ஆதியிற் சூதாட்டம் பெருவழக்கா யிருந்தது. பின்னர் அரச வாழ்வு நாகரிகமடையத் தொடங்கியதும் புலவர்கள் தோன்றிக் காவியங்கள் புனையத் தலைப்பட்டனர். சூதருடைய காலம் மறையக் கவிகளின் காலம் உதயமாகியது.
261

Page 308
யுத்தகளத்துக்குச் சென்று போரின் போக்கை நேரிற்கண்டு பாடும் முறை மாறிற்று. புலவர்கள் போர்க் களத்துக்குப் போகாமல் கேள்வி வாயிலாக நிகழ்ச்சிகளை அறிந்து புலனெறி வழக்கின்படி கவிதை இயற்றினர். இலக்கணத்துக்கமைய அணிகளை அடுக்கிப்பாடும் வழக்கம் பெரிதாக மதிக்கப்பட்டது. கவியின் புதிய கற்பனை வளமோ, கவிதாசக்தியோ பெரிதாக மதிக்கப்படவில்லை. அரசனின் புகழை நயமாகப்பாடுவதே கவிதையென மதிக்கப்பட்டது. அரசவைகளிலும் செல்வருடைய இல்லங்களிலும் நரஸ்துதி பாடுவதே (பாடாண்திணை) கவிதையின் பொருளாகப் பெரிதும் வழக்கிலிருந்தது. இது காவியத்தின் தோற்றம், பல்லலங்காரப் பண்புகளும் கடினமான சொற் பிரயோகங்களும் விளங்க உருவத்துக்குச் சிறப்புக் கொடுத்தது காவியம். இதிகாசமோ வெனில் இவ்வாறு நடந்ததெனக் கதையைக் கூறுவது.
முப்பெரும் கவிகள்
புராதன இந்தியாவின் சரித்திர சாரம் எங்கேயிருக்கின்ற தென்று பார்த்தால் மூன்று மகா கவிகளின் கவிதைகளில் உறைந்து கிடப்பதைக் காணலாம். ஆதிகவி வால்மீகி, பாரதம் பாடிய வியாசர், குமாரசம்பவம் முதலிய அற்புதமான காவியங்களை அருளிய காளிதாசர் என்ற இம்மூவரும் இந்தியக் கலைச் சரித்திரத்தின் கருவூலங்கள் எனலாம். இந்தியாவில் மற்றெல்லாம் அழிந்து போனாலும் இம்மூவரின் இலக்கியப் படைப்புகளிருந்தாலே போதும். இவை இந்தியச் சரித்திரத்தை அடக்கிய மணிப்பெட்டகங்கள். மூன்று பெரிய அமிசங்களை இம்முப்பெரும் புலவர்களும் வெளிப்படுத்துகிறார்கள். ஒன்று தருமத்தைச் சீவசுருதியாகக் கொண்டது. மற்றது அறிவையே சீவசுருதியாகக் கொண்டது. மூன்றாவது உலக இன்பங்களைச் சீவசுருதியாகக் கொண்டது. இவை வாழ்வின் புருடார்த்தங்கள். வால்மீகி அறத்தைப் போதித்தார். மகாபாரதம் பொருளை, அரசியல் நெறியைத் தன் கருதுகோளாகக் கொண்டது. காளிதாசன் இன்பத்தையும் ஆனந்தத்தையும் தன் கவிதா விலாசத்துக்குப் பொருளாகக் கொண்டார். இவை மூன்றும் வீட்டுக்கு வழிவகுப்பன. வீடு என்ற நோக்கமில்லா விட்டால் இம்மூன்றும் பயனற்றனவாய் முடியும். வீடு என்ற ஆன்மீக நோக்கம் ஊடே பின்னிக் கிடந்தபோதிலும் அறம், பொருள், இன்பம் என்ற மூன்றுமே முக்கிய அமிசங்களாக இம்முப்பெருங் கவிகளின் கவிதைகளில் மிளிர்வதைக் காணலாம். கவிதையின் பலவகைத் தன்மைகளையும் இக்கவிகள் வெளிப்படுத்தி யுகபுருடர்களாய் விளங்கினர். தம் காலத்தைக் கண்ணாடியிற் பிரதிபிம்பமாகக் காட்டினர். மானிடத்துவத்தை விளக்கினர்.
இராமாயணம்
இதிகாசங்களுக்கு ஆரம்பம், வேதத்திலுள்ள சம்வாதங் களும் பிராமணத்திலுள்ள கதைவடிவான ஆக்கியானங் களுமே. வேள்வி செய்யும் காலங்களில் செய்யப்பட்ட நீண்டவேத பாராயணம் இதிகாசத்துக்கான பொருளையும் உருவத்தையும் வழங்கியிருக்க வேண்டும். வேதத்திலே புரூரவசுக்கும் ஊர்வசிக்குமிடையில் உரையாடல் நடைபெறுகிறது. அவ்வாறே யமனுக்கும் யமிக்குடையிற் சம்வாதம் காணப்படுகிறது. சுனச்சேபனுடைய கதையும் அது போன்ற வேறு கதைகளும்
262

பிராமணங்களிலுண்டு. இங்கே நாடகம் இதிகாசம் என்பன ஆரம்ப தசையில் முளைகொள்வதைக் காணலாம்.
இதிகாசங்களின் இரு பெரும் பிரிவுகள்
சம்ஸ்கிருத இதிகாச இலக்கியம் இரண்டு பெரும் பிரிவுகளையுடையது. இவற்றுட் பழைய கதைகளாகிய இதிகா சங்கள், ஆக்கியானங்கள், புராணங்கள் ஒரு பிரிவாகவும், காவியம் மற்றொரு பிரிவாகவும் கருதப்படும். மகாபாரதமும் புராணங்களும் முன்னைய பிரிவைச் சேர்ந்தவை. இராமாயணம் ஆதிகாவியம் என வழங்கப்படும். இராமாயணத்தை இதிகாசம் என்று கூறுவாருமுளர். இவ்விரு இதிகாசங்களும் சுலோகமெனும் பாவாலாக்கப்பட்டுள்ளன. மகாபாரதம் புராணங்களுக்கு வழி காட்டியாயிருந்தது. இராமாயணம் பிற்காலத்துக் காவியங்களுக்கு வழிகாட்டிற்று. இராமாயணம் தனியொரு புலவரால் இயற்றப்பட்ட நூல்; அது கிழக்கு இந்தியப் பிரதேசத்திலே செய்யப்பட்டது. உருவத்திலும் அமைப்பிலும் ஒருமைப்பாடுடைய காவியம். பிற்காலக் காவியங்கட்கெல்லாம் வழிகாட்டியதால் ஆதிகாவியம் எனப் புகழ்பெற்றது. அது 24,000 சுலோகங்களைக் கொண்டதாய் ஏழு காண்டங்களையுடையதாய் விளங்குகிறது. ஆதியில் ஆறு காண்டங்களேயிருந்தனவென்றும், ஏழாவது காண்டம் பிற்காலத்ததென்றும் ஜாக்கோபி என்ற பேராசிரியர் கூறுவர்.
இராமாயணத்திலுள்ள ஏழு காண்டங்களுள் இரண்டு முதல் ஆறுவரைதான் முதலில் தோன்றின. ஏனைய இரு காண்டங்களும் பின்னர் சேர்க்கப்பட்டவை. பழைய பகுதிகளில் இராமன் ஒரு மனிதனாகவே கருதப்படுகின்றான். முதலாம், ஏழாம் காண்டங்களில் அவனை விஷ்ணு அவதாரமாகக் கவி வருணிக்கிறார். இவ்வாறு மனிதனாகக் கணிக்கப்பட்ட இராமன் தேசிய வீரனாகவும் பின்னர் விஷ்ணுவின் அவதாரமாகவும் வளர்ந்து வருவதற்குப் பல நூற்றாண்டுகள் சென்றிருக்கும். இராமாயணம் எழுதிய வால்மீகி,
காண்டத்திலும் கூறப்படுகிறார். எனவே நூலின் பழைய பகுதிகளுக்கும் பின்னாற் சேர்க்கப்பட்ட பகுதிகளுக்கும் தொடர்பு ஏற்படப் பல நூற்றாண்டுகள் கழிந்திருக்கும்.
கால ஆராய்ச்சி
இராமாயணத்தின் மிகப் பழைய பகுதி, மகாபாரதக் கதையின் பிரதான பாகம் உருப்பெறு முன்னரே கதைவடிவில் அமைந்து விட்டதெனத் தெரிகிறது. ஏனெனில் மகாபாரத வீரர்களைப் பற்றி இராமாயணம் பேசவில்லை. ஆனால் மகாபாரதத்திலே இராமகதை கூறப்படுகிறது. வால்மீகியைப் பற்றி மகாபாரதம் பல இடங்களில் "மகரிஷி” என்று குறிப்பிடுகிறது. இராமாயணம் சுந்தரகாண்டத்திலே காணப்படும் இரண்டு வரிகள் மகா பாரதத்திலே ஏழாவது பர்வத்திற் காணப்படுகின்றன. எனவே வால்மீகி இராமாயணத்தை மகாபாரத ஆசிரியர் அறிந்திருக்கிறார் என்பது துணிபு. மகாபாரதம் மூன்றாம் பருவத்திலே இராமோ பாக்கியானம்' என்ற பெயரோடு ஒரு கதை கூறப்படுகிறது. அதிலே வால்மீகி இராமாயணச் சுலோகங்கள் பல காணப் படுகின்றன. இதனின்று அறியப்படுவது என்னவென்றால்
இந்துக்கலைக்களஞ்சியம்
--
ܘܢ

Page 309
மகாபாரதம் கடைசி உருவம் பெறுவதற்கு முன்னரே இராமா யணத்தைப் பற்றிப் பொதுவாகப் பரவலாக எங்கும் அறியப் பட்டிருந்ததென்பதே. கி. பி. நான்காம் நூற்றாண்டில் மகாபாரதம் இன்றுள்ள உருவத்தைப் பெற்றிருக்குமானால், இராமாயணம் அதற்கு இரண்டொரு நூற்றாண்டுகளுக்கு முன்னரே அதைப் பெற்றிருக்க வேண்டும்.
பெளத்த சாதகத்தில் இராமாயணக் கதை
இராமாயணக் கதை பெளத்த ஜாதகக் கதையொன்றிலே தசரத ஜாதகம் என்ற பெயரோடு விளங்குகிறது. இராமாயணம் ஆறாவது காண்டத்திலுள்ள ஒரு சுலோகத்தின் உரைக் கருத்து இந்தப் புத்த சாதகக் கதையிற் காணப்படுகிறது. புத்தரைப் பற்றி இராமாயணத்திலே தனியோர் இடத்திலேதான் பேசப்படுகிறது. அதுவும் பிற்காலத்து இடைச்செருகல் எனவே கூறக்கூடிய தாயிருக்கிறது. எனவே வால்மீகி இராமாயணம் புத்தர் காலத்துக்கு முற்பட்டதெனக் கூற இடமளிக்கிறது.
இராமாயணத்தில் யவனர் பற்றிய குறிப்பு
இராமாயணம் இரண்டு இடத்திலே கிரேக்கரைப் (யவனரைப்) பற்றிக் குறிப்பிடுகிறது. ஆனால் அவ்விரண்டும் பிற்காலச் சேர்க்கையென்பர் ஜாக்கோபி ஆசிரியர். இதிலிருந்து ஆதிக் கிரந்தத்திலே இடைச்செருகல் புகுந்த காலம் கி. மு. 300 க்குச் சற்றுப் பின்னரெனக் கூறுவதேயொழிய வேறெம் முடிவையும் கொள்ள வகையில்லை. தற்போதிருக்கும் இராமாயணத்தின் உள்ளிடாயுள்ள பகுதி கி.மு. 500 இற்கு முன் இயற்றப்பட்டிருக்கிறது. பிற்காலத்து இடைச்செருகலெல்லாம் கி.மு. இரண்டாவது நூற்றாண்டளவிலேதான் சேர்க்கப்பட்டுள்ளன.
இராமாயணத்திலே பயின்றுவரும் மொழிநடை பாணினிக்கு முற்பட்ட காலத்து மொழியமைதியைக் காட்டுகிறது. இதைப் பாணினி தமது இலக்கணத்திலே குறிப்பிட்டுச் சொல்லாததற்குக் காரணம் இதிகாச மொழிப் போக்கை அவர் சான்றோரின் செம்மொழியாகக் கொள்ளாமையே, ஊரூராகச் சென்று எல்லார்க்கும் விளங்கக்கூடிய ஒரு பொதுப்பாஷை நடையில் இதிகாசக் கதைகளைப் பாடிய பாணர், சூதர் என்போரின் மொழியமைப்பைப் பார்க்கிலும் பழைமையும் திருத்தமும் உடையது பாணினி இலக்கணம் வகுத்த சம்ஸ்கிருதச் செம்மொழி, இதனால், இதிகாசமெழுதப்பட்ட பாஷையை அவர் கருத்திற் கொண்டு இலக்கணமமைக்காதது புதுமையன்று. இன்று தமிழிலே பேச்சுவழக்கிலும் எழுத்துவழக்கிலுமுள்ள பொதுப் பாஷைக்கு இலக்கணம் வகுக்கப்படவில்லை. அதைச் செம்மொழிக் கணக்கிலே எவரும் சேர்த்துக் கொள்வதில்லை. இராமாயணம் எழுதப்பட்ட பகுதிகளில் அசோகன் காலத்திலே, அதாவது பாணினிக்கு அரை நூற்றாண்டுக்குப் பின்னர் பாளி மொழியே மக்களுடைய பாஷையாகக் கைக்கொள்ளப்பட்டு வந்தது. பாணினி வகுத்த இலக்கணத்துக்கமைய இராமாயணம் உருப்பெற்றிருந்தால், அது மக்களின் பொது இலக்கியமாகப் பரவியிருக்க முடியாது. எனவே இராமாயணம் பாணினிக்கு முற்பட்டதெனக் கூற இடமுண்டு. அன்றியும் அது பாணினிக்குப் பிற்பட்டதாயிருந்தால் பாணினியின் இலக்கணச்செல்வாக்கைப் பெற்றிருக்கும். எனவே இதிகாச மொழிநடை பாணினிக்கு முந்தி
இந்துக் கலைக்களஞ்சியம்

யதென ஒருவாறு ஊகிக்க இடமுண்டு. அன்றியும் பிற்காலத்திலே யெழுந்த காவியங்களின் நடைக்கும், இதிகாசங்களின் நடைக்கும் மொழியமைப்பிலே நெருங்கிய தொடர்பிருப்பதையும் காணலாம். அவை பாணினிக்குப் புறம்பான போக்கைப் பெரிதும் உடையனவாயிருத்தலையுங் காணலாம்.
இலக்கியப் பண்பு
இராமாயணம் இலட்சியச் சமூகமொன்றைக் காட்டுவதால் அது கற்பனை உலகம் எனச் சிலர் கருதலாம். ஆனால் பிரத்தி யட்சமான ஒரு யதார்த்த சமூகத்தைத்தான் இலட்சிய சமூகமாக உருவகஞ் செய்தார் வால்மீகி என்றுங் கூறலாம். பெரிய வற்றையும் சிறியவற்றையும் நுட்பமாக வருணிக்கும் திறமை வெறுங் கற்பனையிலுண்டாகுமா என்பதையுங் கருத்திற் கொள்ள வேண்டும். இராமாயணம் தனியொரு புலவரின் பிரமாண்டமான படைப்பு: மகாபாரதம் எத்தகைய அரசியற் சமூகச் சூழ்நிலையில் எழுதப்பட்டதோ அதேபோன்ற அரசியற் சூழ்நிலையிலேதான் இராமாயணமும் எழுதப்பட்டிருக்கிறது. பெரிய அரசியற் புரட்சிகளும், சத்திரியர் போட்டிகளும் நிறைந்த ஒரு காலத்திலே வால்மீகி வாழ்ந்தார், சத்திரிய தர்மமே மேலான தர்மம் என்ற கொள்கையை அரச குலத்தவர் தமது மிருக பலத்தினால் நிலைநாட்டி வந்த காலம், வால்மீகி இந்தத் தத்துவத்தைத் தீவிரமாக எதிர்த்தார். அதை இராமன் மூலம் பிரசாரஞ் செய்தார். ஆண்கள், பெண்கள் விடயத்தில் ஒழுக்கங் குன்றியவர்களாக வேயிருந்தனர். மிருகபலத்தில் அதிகம் நம்பினார்கள்.
உள்ளத் தூய்மையும், நயமான பண்பாடும், ஒழுக்கக் கட்டுப்பாடும், கற்பனை வளமும், கொடுமை தாங்கமாட்டாத தன்மையும், உற்சாகமும், இலட்சியத்தெளிவும், உயர்வாழ்வின் அலெளகீகமான பிரகாசமும் பெற்ற வால்மீகி இத்தகைய போக்கைக் கண்டு திகிலடைந்து “கொடுமை கொடுமை” யென வெறுத்தார். ஆனால் கற்பனை வளமிக்க கவிதையுள்ளம் படைத்தவரல்லவா? உலகப் படைப்பில் நல்லது கெட்டது, கோலம் அலங்கோலம் எல்லாம் அவருடைய உள்ளமென்ற பல்லாயிரம் உணர்ச்சி நரம்பமைந்த வீணையிற் சுருதி கிளப்பின. எல்லாப் படைப்பையும் பார்த்து அவற்றின் போலியை உருவாக்கும் பொழுது ஒவ்வொன்றின் குணதோஷங்களிலும் நிரம்பிய அனுதாபங் கொள்ளும் கவியின் மனவிலாசம் அவரிட மிருந்ததல்லவா? இருந்தும் வால்மீகியின் அறிவுக்கும் சாந்த சுபாவத்துக்கும் அது இணங்கவில்லை. ஆதலால் பழையதொரு காலத்தைச் சிருட்டித்தார். தேசம் பெருவாழ்வு வாழ்ந்ததொரு காலம்; ஒழுக்கம் நிரம்பிய மக்கள் தெய்வவாழ்வு வாழ்ந்த காலம்; தாம் கற்பனை செய்த ஒரு நாகரிகத்தைத் தாராளமாக வருணிப்பதற்கு உகந்த காலம்; இலட்சியமாக உருவகப்படுத்தக் கூடிய அளவுக்குப் பழைய காலம், பெரிய சாம்ராச்சியத்தைச் சக்கரவர்த்திகள் பரிபாலித்த காலம், இலக்கியங்களில் ஆங்காங்கு வருணிக்கப்பட்டுள்ள மரபை விளக்கும் காலம், இத்தகையதொரு சிறப்பு வாய்ந்த காலத்தில், வால்மீகியின் விசித்திரமான கற்பனை ஓர் அற்புதமான மனித உலகத்தையும், அசுர உலகத்தையும் படைத்தது. இவ்விரு உலகங்களையும் ஒன்றோடொன்று மோதச் செய்தார். ஒவ்வோர் உலகின்
263

Page 310
தலைசிறந்த பிரதிநிதிகளையும் கொண்டு வந்து கவி அரங்கிலே நிறுத்தினார். மரபு பற்றி வந்த கலைச் சம்பிரதாயங்களை யெல்லாம் கடந்தார். கவி மனத்திற்கொண்ட இலட்சியம் என்ற பொற்கிரணங்களால் எல்லாம் முலாம் பூசப்பட்டிருக்கின்றன. “பற்றற்ற மனோபாவத்துடன் கடமைகளைச் செய்; பயனை எதிர்பார்க்காதே; வெற்றி, தோல்வி, நன்மைதீமை எல்லா வற்றையும் சமமாகக் கொண்டு கடமையைச் செய்’ என்ற கீதையின் உயர்ந்த ஆன்மார்த்தம் வால்மீகியிடம் கிடையாது.
வால்மீகி படைத்த பாத்திரங்களின் தன்மை
வால்மீகியின் பாத்திரங்கள் உணர்ச்சி வசப்பட்டும் கற்பனை வசப்பட்டும் கடமை புரிகின்றனர். அறிவினாற் சீர்தூக்கிப் பார்த்துச் சரியெனக் கண்டு ஒரு காரியத்தைச் செய்வதில்லை. தந்தையின் வாக்கைப் பரிபாலிக்க வேண்டுமென்ற உற்சாகத்தினால் இராமன் அரசைத் துறந்து காட்டுக்குச் செல்கிறான் குழந்தை போல. இராவணன் காமவசப்பட்டவனாய் மோகத்தினால் ஆட்கொள்ளப்பட்டுக் கருமங்களைச் செய்கின்றான். சாத்திரங்கள் விதித்தவை நல்லவை. அவை எல்லார்க்கும் பிரமாணமானவை. சுருதியில் சொன்னவை, மிருதியில் விதிக்கப்பட்டவை, உயர்ந்தவருடைய ஒழுக்கம் - இவையே வால்மீகிக்கு உவப்பானவை. சர்வ சாதாரணமான தினசரி வாழ்வைச் சுமுகமாய் நடத்தி நல்லவனாயிருக்கும் நியதி: இதற்கு மாறாக ஆன்றோர்களின் கோட்பாடுகளுக்குக் குந்தகம் விளைவிக்கும் விவேகபூர்வமான ஆராய்ச்சிகள் வால்மீகியின் போக்குக்கு ஏற்றவையல்ல. பாரதத்தின் வீரயுகத்துக்கு இதுவே ஏற்ற ஒழுக்கமும் நியதியுமாயிருந்தது. அதையே வால்மீகி
பாடினார்.
இராமாயணம் பிற்கால இலக்கியங்களுக்கு வழிகாட்டி
இராமாயணம் ஆதிகாவியம் என்றும், வால்மீகி ஆதிகவி யென்றும் கூறுவது மரபு இராமாயணத்திற் காவியச் சிறப்புள்ள பகுதிகள் உண்டு என்பது உண்மையே. இராமாயணத்திற் காணப்படும் காவியச்சிறப்பு மகாபாரதத்தில் குறைவு. இந்தக் காவியநடை பின்னர் சம்ஸ்கிருத இலக்கியச் சரித்திரத்திலே செந்நெறிக் காலத்திலே அதன் உச்ச நிலையை யடைகிறது. பின்னர் அகப்பாட்டுத் துறையிலும் நீதித் துறையிலும், நாடகத் துறையிலும் ஆக்கியானங்களிலுங் கூடப் புகுந்து விடுகிறது. பெளத்த சமண மதப்பாடல்களிலும் காவிய நடை கலப்பதைக் காணலாம். காவிய நடையின் முக்கியமான தன்மை உவமை களையும் உருவகங்களையும் சுருக்குவதே.
காவிய அமிசங்கள்
வேதகாலந் தொட்டே உவமை, இந்திய இலக்கியத்தில் பெருவழக்காயிருந்து வருகிறது. யாஸ்கர், பாணினி என்போர் இலக்கணத்துறையில் உவமையைப் பற்றி ஆராய்ந்துள்ளார்கள். சைவ பெளத்த நூல்களில் அறத்தைப் போதிப்பதற்கு உவமை
அபூர்வமான உவமைகளைக் காவியங்களில் அமைத்து இரசிகர்களை ஆச்சரியத்தில் மூழ்க வைப்பதைக் கவிகள் செய்து
264

வந்தனர். பருவ காலம், சூரியோதயம், சந்திரோதயம் முதலிய வற்றைப் பற்றி மாமூலான வருணனைகள் காவியங்களிற் சாதாரணமாகக் காணக்கூடியவை. கூறவந்த விடயம் சிறிதா னாலும் இத்தகைய வருணனைகள் பெரிதும் இடம் பெறுகின்றன.
ளுடைய நீண்ட சமாசங்கள், சுற்றி வளைத்து விடயங்களைக் கூறுதல் - இவை காவியத்துக்குச் சிறப்பாகக் கருதப் பட்டன. பல பொருள் தரும் ஒரு சொல்லையோ சொற்கூட்டங் களையோ அடுக்குவதனாலும் ஒரே வாக்கியத்தில் அல்லது செய்யுளிற் பல பொருளுக்கு இடமளிப்பதாலும் காவியம் உயர் நிலையடையும் என்று கவிகள் கருதினர். இந்தக் காவிய அமிசங்கள் எல்லாம் அமைந்திருக்காவிட்டாலும், இவற்றில் பெரும்பாலான காவிய அம்சங்களைத் தன்னகத்தே கொண்டுள்ளது இராமாயணம்.
இராமாயணத்திற் காவிய அமிசங்கள்
சாதாரணமான இதிகாசக் கதைகளைவிட இராமாயணம் காவிய அமிசங்கள் பெற்றிருப்பது அதன் தனிச்சிறப்பாகும். அதனாலேதான் வால்மீகியை ஆதிகவியென்றும், இராமாயணத்தை ஆதிகாவியம் என்றும் கூறுவர். பொது மக்களின் மனத்தைக் கவர்ந்த அக்கால இதிகாசங்கள் கதையையே பிரதான அமிசமாகக் கொண்டிருந்தன. இராமாயணம் காவிய உருவத்திலும் சிரத்தை செலுத்திற்று. அதனால் வால்மீகி உவமை, உருவகம் முதலிய அணிகளை மிகத் திறமையாக ஆண்டார். பிற்காலக் காவியங்களிற் பெருவழக்காய் வந்த ஏனைய அணிகளையும் அவர் தமது ஆதிகாவியத்தில் ஆங்காங்கு பயன்படுத்தினார். எனவே காவிய உதயத்தை இராமாயணத்திலே காண்கிறோம். வால்மீகியின் இராமாயணத்தை அரச அவைகளிலும், வள்ளல்களின் இலக்கியங்களிலும் பாடிய சூதர், பாணர் என்போரின் கதாப்பிரசங்கங்களிலே காவிய இலக்கியத்தின் ஆதியிசையை நாம் வெகு தூரத்திலிருந்து கேட்பது போலக் கேட்கலாம்.
இராமாயணக் கதையின் முதற் பிரிவு
இராமாயணக் கதை இரண்டு பிரிவுகளையுடையது. அயோத்தியிலே தசரத மகாராசனுக்கு நடந்த சம்பவங்களையும், இராமன் முடிதுறந்து காடுசெல்லும் நிகழ்சிகளையும் முதற்
பட்டஞ் சூட்டச் செய்யும் சூழ்ச்சியொன்றும் இங்கே மனித இயற்கைக்கு மாறுபடாத நிகழ்ச்சியாய் வருணிக்கப்படுகிறது. இதில் அற்புதமொன்றுமில்லை. அசம்பாவிதம் எதுவுமில்லை. புராணக் கதைகளோ, தெய்வங்களின் தலையீடோ கிடையா, பரதன் திரும்பி நாட்டுக்கு வந்த அளவில் கதை முடியுமானால், அது சரித்திரக் கதையாக முடிவு பெற்றிருக்கும்.
இரண்டாம் பிரிவு
இரண்டாம் பிரிவிலே புராணக் கதைகளும், அற்புதக் கதைகளும் கலந்து கொண்டன. அசுரர், குரங்குகள், வேடர், சீதையை அபகரித்தல், சடாயுவின் தீரச்செயல், இலங்கேசுவரன் அரண்மனை வாழ்க்கை, கும்பகர்ணன் என இன்னோரன்ன நூதனமான பாத்திரங்களும் சூழ்நிலைகளும் வந்து சேர்ந்து
இந்துக் கலைக்களஞ்சியம்

Page 311
கொள்ளுகின்றன. இதனாற் சில மேனாட்டு ஆசிரியர் தென்னகத்தை ஆரியர் வெற்றி கொண்ட சரித்திரத்தையே உருவகித்து வால்மீகி கதையாகக் கூறினார் என எண்ணத் தலைப்பட்டனர். சிறீ ராமனுடைய தெற்கு விசயத்தால் தென்னக மக்களின் வாழ்வில் மாற்றம் எதுவும் ஏற்பட்டதாக இராமாயண காவியத்தில் எங்கேனும் கூறப்படவில்லை.
வேத ஆக்கியானங்களிலிருந்து 6õJ5u TGITILILL60) LD.
வேறு சிலர் வேதங்களிற் காணப்படுஞ் சில ஆக்கியானங் களைத்தான் உருவகப்படுத்தி சீதாபகரணக் கதை எழுதப்பட்ட தென்பர். சீதை உழவுசாலிற் பிறந்த சம்பவம் இருக்கு வேதத்திற் பேசப்படுகிறது. சீதை மருத நிலத்துத் தெய்வமாகவும், அழகிற் சிறந்த இந்திரன் மனையாளாகவும், மழைக்கடவுளின் பத்தினியாகவும் கிருஹ்ய சூத்திரம் பேசுகிறது. இராமனுக்கும் இராவணனுக்கும் நடந்த போர் வேதத்திலே கூறப்படும் இந்திர விருத்திரர் போர் எனவும், இந்திரன் மருத்துக்களோடு உறவுபூண்டு விருத்திரனைக் கொன்றமை மாருதி புத்திரனான அனுமானின் துணையை இராமன் பெற்றதை நினைப் பூட்டுமென்றும் ஜக்கோபி என்ற பேராசிரியர் கருதுகிறார்.
இராமாயணக் கதை
சிறப்புமிக்க தசரதச் சக்கரவர்த்தியின் செங்கோலாட்சியில் அயோத்திமா நகரம் பூமியிலே ஒரு சுவர்க்கம்போல விளங்குகிறது. தசரதனுக்கு மூன்று மனைவியர். கோசலைக்கு மகனாக இராமன் பிறக்கிறான். கைகேயி பரதனைப் பெறச் சுமித்திரை இலக்கு மணனைப் பெறுகிறாள். விதேக நாட்டு மன்னனான சனகன் மகளை இராமன் மணந்த பின்னர், அரசபாரத்தை இராமனுக்கு வழங்கத் தசரதன் நிச்சயிக்கிறான். இதைக் கேள்விப்பட்ட கைகேயி தன்மகனுக்குப் பட்டஞ் சூட்ட விரும்பிச் சூழ்ச்சி செய்கிறர்ள். தசரதன் முன்னர் தனக்கு அளித்த இரண்டு வரங்களைக் கேட்கிறாள். தசரதன் உடனே அவற்றைத் தருவதாக வாக்குறுதி செய்கிறான். கைகேயி தன் மகன் பரதனுக்குப் பட்டஞ் சூட்ட வேண்டுமென்றும், இராமனைக் காட்டுக்கனுப்ப வேண்டு மென்றும் கேட்கிறாள். இடியேறு கேட்ட நாகம் போலத் தசரதன் மயங்கி விழுகிறான். கைகேயி தான் விரும்பிய வரங்களை மாற்ற விரும்பாதபடியால், தசரதன் இராமனையழைத்து நடந்ததைக் கூறிவிடுகிறான். இராமன் மகிழ்ச்சியோடு சீதையும் இலக்கு மணனும் உடன் செல்லக் காட்டுக்குப் போகிறான். துக்கத்தில் மூழ்கிய தசரதன் கைகேயியை விட்டுக் சோசலையோடு போய் வாழ்கிறான். ஈற்றிலே தனயனின் பிரிவுத் துயர் தாங்க முடியாமல் இறந்து விடுகிறான். இராமன் தண்டகாரணியத்திலே துன்பமின்றிக் காலங் கழிக்கிறான். தசரதன் இறந்ததும், கைகேயியின் பெற்றோரோடு உறைந்துவந்த பரதனுக்குச் செய்தியனுப்பி அவனையே அரசு கட்டிலேற்ற நிச்சயிக்கிறார்கள். அதையறிந்த பரதன் பெருங்கோபமடைந்து, அண்ணனுக்கு முடிசூட்ட வேண்டுமென்ற எண்ணத்தால் தண்டகாரணியத் துக்குச் செல்கிறான். தந்தையின் சொல்லைக் காப்பாற்ற வேண்டுமென்ற உறுதிபூண்ட இராமன் பரதனிடம் தன் பொற் பாதுகைகளை தன்னுடைய இராச்சியத்தை அவனுக்கு
இந்துக் கலைக்களஞ்சியம்

வழங்குவதற்கு அறிகுறியாகக் கொடுக்கிறான். பரதன் அவற்றை வாங்கிச் சென்று சிங்காசனத்தில் எழுந்தருளச் செய்கிறான். வெண்கொற்றக் குடை அவற்றின் மேல் நிழல்செய்ய, மந்திரிகளோடிருந்து நீதி செலுத்தி அரசாளுகிறான்.
இராமன் தீயோரை அழிக்குந் தொழிலை மேற்கொண்டு, தண்டகாரணியத்திலேயுள்ள தவத்தோர்க்கு இடுக்கண் விளைத்துத் துயர் செய்துவரும் அரக்கரையழிக்கத் திட்டமிடுகிறான். அகத்தியராணைப்படி இராமன் இந்திரனிடம் திவ்விய படைக்கலங்களைப் பெற்றுக்கொண்டு அரக்கரைக் கொன்று குவிக்கிறான். வஞ்சந்தீர்க்க நினைத்த இராவணன் தன் மாமனான மாரீசனை மான் வடிவத்திலே சீதை முன் போகச் செய்கிறான். அந்தப் பொன்மானிலே ஆசைகொண்ட சீதையின் விருப்பத்தை நிறைவேற்றுவதற்காக இராமனும் இலக்குமணனும் அம்மாயமான் பின்னாற் செல்கிறார்கள். அவ்வமயம் இராவணன் சந்நியாசி வேடத்திலே வந்து சீதையைத் தூக்கிச் செல்கிறான். வழியிலே அவனோடு சண்டையிட்ட சடாயுவென்னும் கழுக ரசனைக் கொன்றுவிடுகிறான். இராம இலக்குமணர் திரும்பி வந்து பெருந் துயரடைகின்றனர். சடாயுவின் அந்தியக் கிரியைகளைச் செய்யும் பொழுது எரியும் சிதையிலிருந்து, அசரீரி சீதையை எவ்வாறு தேடியடையலா மென்று கூறுகிறது. இராமன் சுக்கிரீவனையும் அனுமானையும் சந்தித்துச் சீதையைத் தேடத் திட்டமிடுகிறான். சுக்கீரீவன் வேண்டுகோட்படி வாலியை இராமன் வதஞ் செய்கிறான். பின்னர் அனுமன் சீதையைத் தேடி இலங்கைக்கு ஆகாயமார்க்கமாகச் சென்று அங்கே சீதையைக் கண்டு சிறீராமர் விரைவில் வந்து மீட்பார் என்ற செய்தியைக் கூறுகிறான். பின்னர் அரக்கர் பலரைக் கொன்று இலங்கை யையும் தீமூட்டி எரித்தபின் அனுமன் இராமனுக்குச் சீதையிருக்கு மிடத்தை அறிவிக்கிறான். குரங்குச் சேனையோடு இராமன் இலங்கைக்குச் சென்று இராவணனைக் கொன்று சீதையை மீட்கிறான். பின்னர் சீதையோடு அயோத்திக்குச் சென்று இராமராச்சியம் நடத்துகிறான்.
இராமாயணத்தில் உபகதைகள்
மகாபாரதத்தைப் போலவே இராமாயணமும் பல உபகதை களைக் கொண்டுள்ளது. கங்கை உலகில் வந்த கதை முதற் காண்டத்திலுண்டு. விசுவாமித்திரர்க்கும் வசிட்டருக்கும் ஏற்பட்ட பிணக்கு மற்றோர் அழகிய சிறுகதை, வால்மீகி இராமாயணத்தைப் பாடிய வரலாறு அழகாகக் கூறப்பட்டுள்ளது. 'மலைகள் நிலைக்கும்வரை உலகில் ஆறுகள் பாயும் வரை இந்த இராமாயணம் மக்கள் வாயில் அகலாது நிலவும்” என்ற ஒரு சுலோகம் இராமாயணத்தின் அமரத் தன்மையை விளக்கி நிற்கின்றது.
மகாபாரதம்
மகாபாரதம் பல புலவர்கள் எழுதிய தொகுப்புப் போன்றது. அது வியாசரால் ஆக்கப்பட்டதென்பது கர்ணபரம்பரை வியாசர் என்றதன் பொருளே தொகுத்தவர் என்பதாகும். மகாபாரதத்தின் பிரதானமான கதை, இப்போதிருக்கும் நூலின் ஐந்திலொரு பகுதியேயாகும். ஏனையவெல்லாம் அதைச் சுற்றியெழுந்த
265

Page 312
உபகதைகளும் உபாக்கியானங்களும் அறிவுரைகளுமேயாகும். எனவே மகாபாரதமும் ஒரு கலைக்களஞ்சியமாகக் காட்சி யளிக்கிறது. நான்கு வேதங்களிலுமுள்ள கருத்துக்கள் கதை மூலமாக மகாபாரதத்திற் கூறப்படுவதால் அது ஐந்தாம் வேதம் எனவும், இதிகாசமெனவும் அழைக்கப்படும். வர்ணாச்சிரம தர்மமுறை கல்பசூத்திரம், மனுதர்மம் முதலியவற்றில் கூறப்பட்டது போலப் பாரதத்திலும் சொல்லப்பட்டுள்ளது. பிரசார நோக்கமாக இது பொதுமக்கள் அறிய எழுதப்பட்டது. அதே சமயத்தில் ஐந்தாம் வேதம் எனவும் இதைக் கூறிக் கொண்டனர். பாரதத்திற் கூறப்படாததெதுவும் வேதங்களில் இல்லை எனவும் சொல்லுவர். வேள்வி, போர்முறை, சுயம்வரம் என்பன போன்ற பாரதத்தின் பண்டைக்காலக் கலாச்சாரப் பண்பாடுகள் கூறப்படுகின்றன. பாரதத்தின் காலத்தை ஆராயுமிடத்து, மகாபாரதத்தில் வரும் சில தனிப்பட்ட கதைகளும் ஆக்கியானங்களும் வேதகாலத்தைச் சேர்ந்தனவாய்க் காணப்படுகின்றன. பாரதம் அல்லது மகாபாரதம் என்ற ஓர் இதிகாசம் வேதகாலத்தில் இருக்கவில்லை.
கால ஆராய்ச்சி
மகாபாரதத்தில் வரும் அறநெறிகளைப் போதிக்கும் கதைகள் புத்த சைனக் கதைகளைப் போலக் கி.மு. ஆறாம் நூற்றாண்டைச் சேர்ந்தவை. கி. மு. ஆறாம் நூற்றாண்டுக்கும் கி. மு. நாலாம் நூற்றாண்டுக்குமிடையில் மகாபாரதம் பிரபலமடைந்திருந்தால், புத்த அறநூல்கள் அதைப்பற்றிப் பேசும். ஆனால் இந்த இதிகாசத்தைப் பற்றிப் புத்த அறநூல்கள் குறிப்பிட்டிருக் காதபடியால் அஃது அக்காலத்தில் அவ்வளவு பிரபலமடைய வில்லை என்றே கூறலாம். கி. மு. நாலாம் நூற்றாண்டுக்கு முன் மகாபாரதம் இருந்ததாகச் சான்றுகள் இல்லை. கி. மு. நான்காம் நூற்றாண்டுக்கும் கி. பி. நான்காம் நூற்றாண்டுக்குமிடையிலே தான் மகாபாரதம், இதிகாசம் என்ற உருவத்தைப் பெற்று இன்று காணப்படும் வடிவத்தில் உருவாயிற்று. அதுவும் படிப்படியாகவே வளர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கி. பி. நான்காம் நூற்றாண்டளவில் மகாபாரதம் அதன் பொருளடக்கத்திலும் தன்மையிலும் இன்றிருக்கும் நிலையைப் பெற்றுவிட்டது. ஆனால் கி. பி. நான்காம் நூற்றாண்டின் பின்னரும் சில சில மாற்றங்களும் சேர்க்கைகளும் செய்யப்பட்டே வந்தன. மகாபாரதம் இத்தனையாம் நூற்றாண்டில் எழுதப்பட்டதென்று திட்ட வட்டமாகக் கூறுவதற்கில்லை. அதில் பல நூற்றாண்டுகளைச் சேர்ந்த பற்பல பகுதிகள் உண்டு. ஆகையால் அவ்வப் பகுதிகளையெடுத்து ஆராய்ந்து அவ்வவற்குரிய நூற்றாண்டைக் கணிப்பதே உசிதம்.
மகாபாரத நூல் அமைப்பு
இப்போது மகாபாரதம் 1,00,000 சுலோகங்களையுடையதாய், உலக இலக்கியத்திலேயே மிகப் பெரிய பாடலாய் விளங்குகிறது. இது அறம், பொருள், இன்பம், வீடென்னும் நான்கு உறுதிப் பொருள்களையுமுணர்த்தும் நீண்ட அறிவுரைகளையுடைய காவியமாய்ப் பதினெட்டுப் பருவங்களையும், ஹரிவம்சம் என்ற ஒர் அனுபந்தத்தையுமுடையதாய் விளங்குகிறது. பன்னி ரண்டாவது பருவம் 14,000 சுலோகங்களையுடைய நீண்ட பருவமாகவும், பதினேழாவது பருவம் 312 சுலோகங்களைக் கொண்ட மிகக் குறுகிய பருவமாகவும் விளங்குகின்றன.
266

வால்மீகி தமது கற்பனையால் எத்தகையதோர் உலகைச் சிருட்டித்தாரோ அதனையே நடைமுறையிற் கொண்டுவருவதை மகாபாரதம் நோக்கமாய்க் கொண்டது. சத்திரிய குலத்தின் மகோன்னதமான ஒரு காலத்தைப் பாரதம் சித்திரிக்கிறது. வால்மீகி தம்மைச் சூழ்ந்துகிடந்த யதார்த்த உலகத்தைக் கண்டு பொறுக்க முடியாது கற்பனையிற் பழைய உலகமொன்றைப் படைத்தார். வியாசரோ யுகபுருடர். தங்காலத்தில் மிக அனுதாபங் கொண்டவர். அதனால் உந்தப்பட்டவர். வருங்காலத்தில் நிரம்பவும் நம்பிக்கை கொண்டவர். தம் காலத்துத் திட்டங்களெல்லாம் எதிர்காலத்திலே நல்ல பயனைத் தருமென்ற கொள்கையுடன் பாரத காவியத்தைப் படைத்தார். வால்மீகி வைதிக இலட்சியவாதி, உலகம் பழைய தன் சிறப்பைப் பெறவேண்டும் என்று கனவு கண்டவர். வியாசர் முற்போக்குடையவர். எதிர்காலம் மிக்க சிறப்புடன் மலருமென்ற நம்பிக்கையுடைவர். சத்திரிய தர்மத்துக் கெதிராக அவர் புரட்சி நடத்த விரும்பவில்லை. பற்றற்ற கருமஞ் செய்தல் என்ற புதியதொரு பாவனமான கொள்கையினாற் பரிசுத்தமாக்கப்பட்டு மாற்றப்பட்ட பழைய அரசதருமத்தை அவர் உற்சாகத்துடன் வரவேற்றார்.
வியாசரின் ஆராய்ச்சி மனோபாவம்.
வியாசருடைய உள்ளம் விடயங்களை நுணுகி ஆராயும் தன்மையுடையது. புதுமையைப் பெரிதும் வரவேற்றது. ஆராய்ச்சி யென்ற அக்கினியில் எல்லாவற்றையும் புடம்போட்டுச் சுத்தமாக்க வேண்டுமென்ற ஆர்வமுடையது. எண்ணங்கள், கருத்துக்கள், பிரமவித்தை, ஒழுக்கப் பிரச்சினைகள் என்பவற்றில் நிரம்பிய ஆர்வமுடையது. ஆன்றோர் ஒப்புக்கொண்டதை ஆராய்வது எதற்கு? அது அனாசாரம் என்ற மனோபாவம் நிரம்பியது வால்மீகியின் உள்ளம், வியாசரோ, ஆராய்ச்சியிலும் விவேகத்திலும் நம்பிக்கையுடையவர். அறிவிலே கெட்டியாகத் தாபிக்கப்பட்ட ஒழுக்கமே சிறந்தது; அதுவே நிலையான ஒழுக்கத்தைக் கொடுக்கும்; வாழ்க்கைக்குப் பயன்படாத ஒழுக்க விதியால் என்ன இலாபம் என எண்ணினார். எத்தனையோ விடயங்களை அவர் தொட்டார். தொட்ட அனைத்தையும் புதுமை சூழ்ந்த ஆராய்ச்சி, நிதானமான உறுதியுள்ள காட்சி என்பவற்றால் கவர்ச்சியும் பயனுமுடையவவையாக்கினார். எந்த நாகரிகத்தை அவர் படம் பிடித்துக்காட்டினாரோ அதே நாகரிகத்தின் பிரதிநிதியாகவும் இருந்தார். அறமும் பெருளுமென்ற இவ்விரண்டையும் விவேகம் என்ற சாதனையிற் போட்டுத் தீட்டிய நாகரிகமே அவர் காட்டும் நாகரிகம். ஒரு யுகத்தின் பலதிறப்பட்ட சேதன விருத்தியின் தன்மையை அவர் தரும் நாகரிகத்திற் காணலாம். பாரதத்திலே, மகத்தானதொரு புரட்சியும் புதிய உலகமொன்றின் பிரசவ வேதனையும் தோற்றமளிக்கின்றன. இராமாயணத்திற் சாந்தமும் ஒழுங்கும் நிலவும் ஒரு யுகத்தைக் காணுகிறோம்.
மகாபாரதத்தின் முக்கிய கதை பாரதயுத்தம் சம்பந்தமானது. பதினெட்டு நாள் கெளரவர்க்கும் பாண்டவர்க்குமிடையில் நடந்த போரைப் பற்றி மகாபாரதம் 20,000 சுலோகங்களிற் கூறுகிறது. இந்தக் கதையமைப்புக்குள்ளே பலகதைகள் சங்கிலித் தொடராகத் தொடுக்கப்பட்டுள்ளன. தேவர், அசுரர், இருடிகள் சம்பந்தமான பல கதைகள் கோக்கப்பட்டுள்ளன. தத்துவம்,
இந்துக்கலைக்களஞ்சியம்

Page 313
சட்டம், சமயம், சத்திரிய தர்மம் என்பன பற்றிப் பல அறவுரைகள் ஆங்காங்குண்டு. இந்த நீண்ட இடைச் செருகல்களினாலே, முக்கியமான கதையின் தொடர்பு சிக்கலாகிவிடுகிறது. ஒரு நீதிவாக்கியத்துக்கு உதாரணங் காட்டும் பொருட்டுப் பல பெரிய கதைகள் இடையிலே செருகப்படுகின்றன. கெளரவ சேனையும் பாண்டவ சேனையும், குருக்களத்திலே போர் செய்யத் திரண்டு ஆயத்தமாய் நிற்கின்றன. அத்தருணத்தில் 18 அத்தியாயத்தைக் கொண்ட பகவத்கீதை புகுத்தப்படுகிறது. தன்னுடைய சுற்றமித்திரரோடு சண்டை செய்ய இணங்காது துயருற்ற அருச்சுனனுக்கு உபதேசஞ் செய்வதற்காகவே இந்தப் பகவத்கீதை இடையிற் செருகப்பட்டுள்ளது. இதனால் மகாபாரதத்தை இதிகாசமென்றும், ஐந்தாம் வேதமென்றும், மிருதி என்றும் கூறவேண்டியேற்படுகிறது. மகாபாரதத்துக்குக் கிருஷ்ண வேதம் எனவும் ஒரு பெயருண்டு. வைணவ பத்தியைப் பெரிதும் எடுத்தோதுவதால் இது வைணவமிருதியெனவுங் கருதப்படுகிறது.
மகாபாரதக் கதை
மகாபாரதக் கதையின் சுருக்கம் பின்வருமாறு : பாரத நாட்டிலே குரு நாட்டிலே திருதராட்டிரன் பாண்டு என அரசரிருவரிருந்தனர். தமையனான திருதராட்டினன் குருடனான படியால் தம்பியே அரசையேற்று நடத்தினான். அவனுக்கு ஐந்து மக்களிருந்தனர். இவர்கள் பஞ்சபாண்டவரெனப் புகழடைந் தனர். மூத்தவன் தருமன் எனவும், உதிட்டிரன் எனவும் பெயர் பெற்றான். அவனுக்கு அடுத்தவன் பீமன்; அவன் தம்பி அருச்சுனன்; மற்றவரிருவர் நகுலசகாதேவர். திருதராட்டிரனுக்கு நூறு மக்கள். அவர்களைக் கெளரவர் என அழைத்தனர். இவர்களில் மூத்தவன் துரியோதனன். பாண்டுவின் அகால மரணத்தின் விளைவாக இராச்சியத்தைத் திருதராட்டிரனே கையேற்று நடத்தினான். பஞ்சபாண்டவர்களையும் தன் மக்களைப் போலவே கல்வி, கலை முதலியவற்றைப் பயிற்றுவித்து வளர்த்து வந்தான். பாண்டு புத்திரர்கள் சகல வித்தைகளிலும் சிறப்புடைய வராய் விளங்கியதால், துரியோதனனுக்கு அவர்கள் மாட்டுப் பொறாமையுண்டாகியது. அதனால் அவர்களைக் கொன்றுவிடத் துரியோதனனும் அவன் மாமனான சகுனியும் திட்டமிட்டுச் செயலாற்றினார்கள். பாண்டவர் ஊரைவிட்டுத் தப்பியோடிப் பாஞ்சால நாட்டரசவைக்குச் சென்றனர். அங்கே பாஞ்சாலன் மகளான திரெளபதியை, அருச்சுனன் வில்வளைத்துச் சுயம் வரத்திலே வெற்றிகொண்டான். திரெளபதி பாண்டவர்க்கு மனைவியானாள். அங்கே யாவத குலத்தலைவனான கண்ணனுடைய நட்பு பாண்டவர்க்குக் கிடைத்தது. இவ்வாறு பாஞ்சாலரும் யாதவரும் பாண்டவர்க்கு நட்பானதை யறிந்த திருதராட்டிரன் இராச்சியத்தைப் பிரித்துத் துரியோதனனுக்கு ஒரு பகுதியைக் கொடுத்தான். பாண்டவர் பெற்ற பகுதியிலே அவர்கள் இந்திப் பிரஸ்தம் என்ற ஒரு புதிய நகரைக்கட்டி அதிலே இருந்து இராச்சிய பரிபாலனஞ் செய்தனர்.
பாண்டவர் மனுமுறை தவறாது ஆட்சி நடத்தியபடியால், குடிகள் அவர்களுக்கடங்கி மகிழ்ந்து வாழ்ந்தனர். பாண்ட வருடைய மகிமையும் புகழும் பெருகுவதையறிந்த துரியோதனன் சகுனியோடு மறுபடியும் சூழ்ச்சி செய்தான். தந்திரத்தாற்
இந்துக் கலைக்களஞ்சியம்

சூதாடித் தருமனை வெல்ல வேண்டுமெனத் திட்டமிடப்பட்டது. சூதாட்டத்திலே தருமன் நாடு, செல்வம், சேனை எல்லாவற்றை யுமிழந்து, ஈற்றில் தம்பியரையும், திரெளபதியையுமிழந்தான். பாண்டவர் பன்னீராண்டு வனவாசஞ் செய்யவேண்டுமென்றும், ஓராண்டு அஞ்ஞாத வாசஞ் செய்யவேண்டுமென்றும், இந்தக் கால அவதியின் பின்னர் அவர்கள் தம் நாடு திரும்பித் தமது உரிமையைப் பெறலாம் என்றும் உடன்படிக்கை செய்யப்பட்டது.
வன பருவம்
அதன்படி திரெளபதியையுங் கூட்டிக்கொண்டு பஞ்ச பாண்டவர் காமிய வனத்துக்குச் சென்றனர். அங்கே அவர்கள் வனவாசஞ் செய்தவரலாறும், அப்பொழுது முனிவர்கள் வந்து அவர்கள் ஆறுதலடைவதற்காகச் சொன்ன கதைகளும் வன பருவம் என ஒரு பெரிய பிரிவாக மகாபாரதத்திற் காணப் படுகின்றன. பதின்மூன்றாமாண்டில் அவர்கள் மாறுவேடம் பூண்டு மச்சநாட்டரசனான விராடனுடைய அவைக்களத்திற் பணியாட் களாகக் காலம் கழித்தனர். இச்சமயம் கெளரவர் வேறு அரச னொருவனுடைய துணையோடு விராடன்மீது படையெடுத்தனர். அருச்சுனன் இந்தப் போரிலே ஈடுபட்டு வெற்றியீட்டினான். கரந்துறையுங்காலம் நீங்கிய படியாற் பாண்டவர்கள் வெளிப் பட்டுத் தமது நாட்டைத் திருப்பித் தருமாறு துரியோதனனிடம் தூது அனுப்பினார். ஓர் ஈ இருக்கும் இடந் தானும் இப்புவியிற் கொடுக்க முடியாதெனத் துரியோதனன் கூறவே போருக்கு ஆயத்தஞ் செய்தனர்.
குருசேத்திரப் போர்
தருமசேத்திரமான குருசேத்திரத்திலே பெரும் போர்செய்ய இருதரப்படையுங் குழுமின. கெளரவர்க்குத் துணையாகக் கோச லரும் விதேகரும், அங்க வங்க கலிங்க நாட்டவரும். சிந்து, காந் தாரம் முதலிய தேசத்தவரும் கூடினர். பாண்டவர்க்குக் கண்ணன் சாரதியாக அமைந்தான். பாஞ்சாலன், விராடன், காசிராசன், சேதி மன்னன், மகத நாட்டரசன் ஆகியோர் படைத்துணை வழங்கினர்.
போர் பதினெட்டு நாளாக நடைபெற்றது. மிகக் கொடிய போர் நடந்தது. கெளரவர் அழிந்தார்கள். பஞ்சபாண்டவரும் கண்ணனும் சாத்தகியுமே உயிர் பிழைத்தனர். இந்தப் போரின் வரலாறு ஐந்து பருவங்களாகப் பிரித்துக் கூறப்படுகிறது. பின்னர் இறந்தவர்க்குக் கிரியைகள் செய்யப்படுகின்றன. பிதாமகரான பீஷ்மர் மரணப்படுக்கையிலே யிருந்துகொண்டு அரச நீதி முதலிய விடயங்களைப் பற்றி உதிட்டிரனுக்குக் கூறுகின்றார். இது 20,000 சுலோகங்களில் வரையப்பட்டுள்ளது.
பாண்டவர் அரசுரிமை பெறல்.
உதிட்டிரன் அத்தினபுரியில் அரசனாக முடிசூட்டப்படுகிறான். அவன் அசுவமேத யாகஞ் செய்கிறான். திருதராட்டிரன் வானப் பிரத்த ஆச்சிரமத்தை மேற்கொண்டு தன் பட்டத்துத் தேவியான காத்தாரியோடு காடு செல்கிறான். அங்கே ஒரு காட்டுத் தீயிற் சிக்கி இருவரும் இறக்கிறார்கள். யாதவ குலத்திலே பாண்டவர்க்குத் துணை செய்த பிரிவினர் கெளரவர்க்குத் துணை செய்தவரோடு போரிட்டு அழிகிறார்கள். கண்ணனும் வேடனொருவனாலே தற்செயலாகக் கொல்லப்படுகிறான்.
267

Page 314
வாழ்க்கையில் வெறுப்படைந்த பாண்டவர் அருச்சுனனுடைய பேரனான பரீட்சித்து அரசகுமாரனுக்குப் பட்டஞ் சூட்டிவிட்டு வானப்பிரத்த ஆச்சிரமத்தை மேற்கொள்கிறார்கள். அவர்கள் ஈற்றிலே கைலையை அடைவதற்குப் பிரயாணமாகி உயிர்துறந்து துறக்கத்தையடைகின்றனர். திரெளபதியும் அவர்களோடு வானுலகமடைகிறாள்.
பரீட்சித்து மன்னன் பாம்பு தீண்டியிறக்கவே அவனுடைய மகனான ஜனமேஜயன் சர்ப்பமேதயாகஞ் செய்கிறான். அந்த வேள்வியிலே வியாசரிடமிருந்து மகாபாரதத்தைக் கேட்ட வைசம்பாயனர் அதைப் படித்துக்காட்டுகிறார். வியாசமுனிவர் நான்கு வேதங்களையுந் தொகுத்த பின்னர் பாண்டவரின் குணவிசேடங்களையும், கண்ணன் மகிமையையும், திருதராட்டிர புத்திரருடைய கொடுமையையுங் கூறும் மகாபாரதத்தை எழுதினார் எனக் கூறப்படுகிறது.
மகாபாரதத்தில் உபகதைகள்
மகாபாரதத்துக்கு அனுபந்தமாயுள்ள ஹரிவம்சம் கண்ணன் திரு அவதார சரிதத்தைக் கூறுவது. மகாபாரதத்து முக்கிய கதை சிறிது. அதன் ஐந்தில் நாலு பகுதி பற்பல ஆக்கியானங்களையும், உபாக்கியானங்களையும் கொண்டது. இவற்றுட் சில மிக அழகான உருவத்திற் காவியச் செம்மையுடன் செய்யப் பட்டுள்ளன. சகுந்தலையுடைய கதை முதலாம் பருவத்திலுண்டு. இந்த மகா பாரதக் கதையையே அடிப்படையாகக் கொண்டு பிற்காலத்திலே காளிதாசர், சாகுந்தலம் என்ற அற்புதமான நாடகத்தை எழுதினார். பாண்டவர் வனவாசஞ் செய்தபொழுது பொழுது போக்குக்காக அவர்களுக்குச் சொல்லப்பட்ட பல கதைகள் மூன்றாவது பருவத்திலேயுண்டு. இங்கே மத்ஸ்யோபாக்கியானம் என்ற கதையுண்டு. இராமாயணக் கதையுங் காணலாம். கங்கை பூமிக்கு வந்த கதையும் இங்கே காணப்படுகிறது.
ரிஷ்யசிருங்கர் என்னும் கலைக்கோட்டு முனியுடைய அழகிய கதை இங்கேயும் காணப்படுகிறது. அங்கநாட்டு லோமபாதன் வேண்டுகோளின்படி அங்கே மழை பெய்யச் செய்த இம் முனிவர்க்கு அம்மன்னனுடைய மகளான சாந்தையைத் திருமணஞ் செய்து வைக்கிறார்கள். அவரே தசரத மன்னன் அவையிலே வந்து புத்திரகாமேட்டியாகத்தைச் செய்து இராம லட்சுமணர் பிறப்புக்குக் காரணமாகிறார். இந்தக் கதை இராமாயணம், கந்தபுராணம், பதுமபுராணம் முதலிய பிற நூல்களிலேயும் காணப்படுகிறது. சிபிச் சக்கரவர்த்திக் கதையும் அவனுடைய மகனான உசீனரணுடைய கதையும் ஆங்காங்கு காணப்படு கின்றன. இக்கதை பெளத்தச் சார்புடையதானாலும் பல இலக்கியங்களிலும் இடம் பெற்றிருப்பதைக் காணலாம்.
சிந்து ராசனான ஜயத்ரதன் திரெளபதியை அபகரிக்க முயன்ற கதையும் பாண்டவர் காட்டிய வெற்றியும் இங்கே கதையாக அமைந்துள்ளன. இந்திரனுலகுக்கு அருச்சுனன் சென்ற கதையும் காணப்படுகிறது.
268

சாவித்திரி உபாக்கியானம்
மற்றோர் அழகிய கதை சாவித்திரி உபாக்கியானம். மந்திரதேசத்து அரசன் மகளான சாவித்திரி சத்தியவானைத் தன் கணவனாக வரித்துக் கொள்கிறாள். அவன் தந்தை நாடிழந்து குருடனாய்க் காட்டிலே வசிக்கிறான். சத்தியவானுக்கு ஒரு வருடத்தில் ஆயுள் முடிவடையுமென்று நாரத முனிவர் எச்சரிக்கை செய்தும், சாவித்திரி அவனையே கணவனாகத் தேர்ந்து கொள்ளு கிறாள். சத்தியவான் சாவித்திரியை அழைத்துக் கொண்டு தன் தந்தையின் ஆச்சிரமத்துக்குச் செல்கிறான். அங்கே இருவரும் இன்ப வாழ்க்கை நடத்துகின்றனர். ஆனால் சத்தியவானுடைய நாட்கள் முடியும் அவதி அணுக அணுகச் சாவித்திரி மனத்திலே துயர் பெருகுகிறது. அந்திய நாளும் வந்து விட்டது. தன் கணவ னோடு சாவித்திரி காட்டுக்கு விறகு வெட்டப்போகிறாள். சத்திய வான் களைத்து அயர்ந்து விடுகிறான். காலன் அவனுடைய உயிரைக் கவர்ந்து செல்ல, சாவித்திரி அக்காலனைத் தொடர்ந்து செல்கிறாள். “பெண்ணே சத்தியவானுடைய ஆயுட்கணக்கு முடிந்து விட்டது. அவன் உயிரை மீட்கமுடியாது. உனக்கேதாவது வரம் வேண்டுமானாற் கேள்’ என்று சில வரங்களை வழங்குகிறான். சாவித்திரி இயமனை விடவில்லை. தொடர்ந்து சென்று மாங்கலியப் பிச்சை கேட்கிறாள். ஈற்றில் யமன் சத்தியவானுடைய உயிரை வழங்குகிறான்.
நளோபாக்கியானம்
மகாபாரதத்திலே மற்றொரு பழைய உபாக்கியானம் நளோ பாக்கியானம் என்பது. இது நள தமயந்தி கதையைக் கூறுவது. சாவித்திரியைப் போலவே தமயந்தியும் கற்பிற் சிறந்த பதிவிரதை, இங்கே காவியச் சுவை ததும்ப இந்தக் கதையை மகாபாரத ஆசிரியர் கூறுகிறார்.
பிருகதஸ்வர் என்ற முனிவர் நாடிழந்து கவலை கொண்டிருந்த தருமனுக்கு மன ஆறுதலளிப்பதற்காக இந்தக் கதையைச் சொல்லு கிறார். நிடத நாட்டரசன் நளன். அவனை விதர்ப்ப நாட்டிளவரசியான தமயந்தி தன் கணவனாகச் சுயம்வரத்திலே தேர்ந்து கொள்கிறாள். பின்னர் கலியினால் நளன் பீடிக்கப்பட்டுச் சூதாடி நாடு நகரமெல்லா வற்றையும் இழக்கிறான். அப்பால் காட்டிலே சஞ்சரிக் குங்காலை, தமயந்தியை நள்ளிரவிற் கைவிட்டு மறைந்து விடுகிறான். துயில் நீங்கிய தமயந்தி கணவனைக் காணாது புலம்பும் கட்டம் மிகப் பரிதாபகரமானது; அவலச் சுவைக்கு எடுத்துக் காட்டாய மைவது. கடமையுணர்ந்த வீரதருமமறிந்த தீரமானாபிமானனே!உலகுக்கு அரசனே! நீர் இந்தக் காட்டிலே இருப்பீரானால் உமது சுயவடி வத்தைக் காட்டும் அமிருத பானம் போன்ற நள மகாராசனின் குரலைக் கேட்பேனா? கம்பீரமான மெல்லிய இசை பொருந்தியதும் மேகத்தின் அசனி போன்றதுமான அந்தக் குரலைக் கேட்பேனா? விதர்ப்ப ராசன் மகளே! வைதர்பீ’ என்று கூறும் தெளிவான மங்களத் துவனியைக் கேட்பேனா? வேதகீதம் போல என் துன்பமெல்லாந் தீர்க்க ஒழுகும் அந்த இனிய ஓசையைக் கேட்பேனா?” என்று தமயந்தி காட்டிலே புலம்புகிறாள்.
தமயந்தி அலைந்து திரியும் காட்டின் அழகையும் கொடுமை யையும் வியாசர் அழகாக வருணிக்கிறார். ஈற்றில் தன் தந்தை
இந்துக் கலைக்களஞ்சியம்

Page 315
யுடைய பட்டினமான குண்டினபுரத்துக்குச் செல்லும் பாதையை அறிகிறாள். தன் பதியைப் பிரிந்து வாடும் தமயந்தி,
"வானத்திலே கறுத்த மேகங்களால் மறைக்கப்பட்ட இளமதி போலத் தோன்றினாள். தண்டோடு பிடுங்கி எறியப்பட்ட தாமரைமலர் குரிய வெப்பத்தால் வாடி வதங்கியது போலத் தோற்றமளித்தாள். இராகு கவ்விய சந்திரனின் ஒளியை இழந்த இரவு போலத் தோன்றினாள்' என்றெல்லாம் கவி தமயந்தியின் பிரிவு நிலையை வருணிக்கிறார்.
நளன் மாறுவேடத்திலே அயோத்தி மன்னனுக்குச் சாரதி யாகிறான். இதைத் தமயந்தி கேள்விப்பட்டு நளனைத் தன்னகருக்கு அழைக்கச் சூழ்ச்சி செய்கிறாள். அயோத்தியிலிருந்து 500 மைல் தூரத்திலுள்ள குண்டினபுரத்துக்கு ஒரே பகலில் தேரையோட்டி வர முடியுமானால் தான் அம்மன்னனை மணஞ் செய்வதாகக் கூறு கிறாள். நளன் அந்த அற்புதச் செயலைச் செய்யவே, அயோத்தி மன்னன் நளனுக்குச் சூதாட்டத்தில் வெல்லும் யுக்தியைப் போதிக் கிறான். தமயந்தி நளனைக் கண்டு கொள்கிறாள். அவன் தன்னு டைய சுய உருவத்தைப் பெறவே இருவரும் இன்பாக வாழ்க்கை நடத்துகின்றனர்.
பரத சாவித்திரி
மகாபாரதம் உலகுக்கு விடுக்குஞ் செய்தி பாரதத்தின் சனாதனமான செய்தியாகும். புலன்களையடக்கி, பற்றின்றித் தருமத்தைச் செய்க. அதுவே உலகுக்கு நன்மை தரும். வீட்டுக்கு மார்க்கம் அதுவே. அறத்திலிருந்தே பொருளும் இன்பமும் உண்டா கின்றன. அறிவாளி பயமின்றி வாழ்வான். சிற்றின்ப வேட்கை யாலோ, பயத்தினாலோ, உலோபத்தினாலோ, உயிர்வாழும் ஆசை யாலோ அறத்தைக் கைவிடாதே. தருமமே நிலையானது. இன்ப துன்பங்கள் நிலையற்றன. உயிர் என்றுமுள்ளது. உடம்பு அழிந்து போகும். இது மகாபாரதத்தின் ஈற்றில் பரதசாவித்திரியென்ற பெயராற் பிரசித்தி பெற்ற போதனையாகும். அதை இங்கே தருகிறோம்.
ஹர்ஷஸ்தான சகஸ்ராணி பயஸ்தான சதானிச திவசே திவசே மூடமாவிசந்தி நபண்டிதம் ஊர்த்வபாகு விரெளம்பேதத் ந கச்சிஸ்ருனோதிமாம் தர்மாதர்த்தச்ச காமச்ச கிமாத்தம் நசேவ்யதே நஜாது காமாந்ந பயாந்தலோபாத் தர்மோநித்ய சுகதுஃகேத்வநித்யே ஜீவோநித்யோ ஹேதுரஸ்யத்வநித்ய'
'மகிழ்ச்சிக்கேதுவான ஆயிரம் காரியங்களும் பயத்துக் கேதுவான நூறு கருமங்களும் தினமும் மூடரைத்தான் பற்றிக் கொள்ளுகின்றன. அறிவாளிகளை அவை பற்றமாட்டா. இரண்டு கைகளையும் மேலே உயர்த்திக் கொண்டு தருமத்திலிருந்துதான் பொருளும் இன்பமும் உண்டாகின்றன என்று ஒலமிட்டுக் கூறுகிறேன். ஆனால் ஒருவரும் கேட்பாரில்லை. சிற்றின்ப வேட்கையாலோ, பயத்தினாலோ, உலோபத்தினாலோ அறத்தைக் கைவிடாதே. அறமே நிலையானது. இன்ப துன்பமழியும். உயிர் அழியாது. உடல் அழிந்துபோகும். (சோ. ந.)
இந்துக் கலைக்களஞ்சியம்

ෂීලීෂWüෆිෂර්rib
இதோபதேசம் என்பது இதம், உபதேசம் எனும் சொற்களின் சேர்க்கையாகும். இதம் - நன்மை, தகுதி; உபதேசம் - போதனை. நன்மைதரும் போதனைகளையுடையது இதோபதேசம். இது சங்கத மொழியிலே இயற்றப்பட்டது.
இதனைச் சங்கத்திலே இயற்றியவர் விட்டுணு சர்மர் எனும் வேதியர். அவர் சங்கதத்திலே சகல நீதி சாத்திரங்களையும் நன்கு கற்றுப் பண்டிதராய் விளங்கியவர்.
சுதர்சனன் எனும் அரசனுடைய குமாரருக்கு அரசியலுண ருமாறு உபதேசிக்கப்பட்ட நீதிச் சுலோகங்களும் அவற்றுக் கியைந்த கதைகளும் அமைந்துள்ள நீதி நூல் இதோபதேசம். நீதிச்சுலோகங்கள் மகாபாரதம், மாகம் முதலிய காவியங்களிலும், மநுஸ்மிருதி, சாணக்கிய சதகம், பர்த்திருகரிசதகம் முதலிய நீதி சாத்திரங்களிலுமிருந்து பெறப்பட்டவை. கதைகளுள்ளே பல பஞ்சதந்திரத்திலுள்ளவை.
பண்டைக்காலம் தொட்டு சங்கதம் படிப்பவர் பலராலும் ஆரம்பத்தில் இதோபதேசம் படிக்கப்பட்டு வருகின்றது.
இதோபதேசத்தில் மித்திரலாபம் (நண்பரை அடைதல்), சுகிர்ப்பேதம் ( நண்பரைப்பிரித்தல்), விக்கிரகம் (போர்), சந்தி (சமாதானம்) எனும் நான்கு பிரிவுகள் உண்டு.
இதோபதேசம் இந்தியமொழிகள் சிலவற்றிலும் பிற மொழி களிலும் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. பாரசீக மொழியிலும், அதிலிருந்து கீபுரு, கிறீக்கு முதலிய மொழிகளிலும், அதன் பின்னர் ஆங்கிலம் முதலிய மொழிகளிலும் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. ஆங்கிலத்தில் இதனைப் பலர் மொழி பெயர்த்துள்ளனர்.
இதனைத் தமிழிலே சுன்னாகம் அ. நாகநாத பண்டிதர் (-1884) மொழிபெயர்த்துள்ளார். அம்மொழிபெயர்ப்பை, அவரிடம் சங்கதம் கற்ற சுன்னாகம் அ. குமாரசுவாமிப் புலவர் (1854-1992) விய வருடம் ஆவணி மாதம் (1886) பதிப்பித்துள்ளார்.
நாகநாத பண்டிதரின் மொழி பெயர்ப்பிலே விரவியிருக்கும் வட சொற்களையும் வட மொழி வாக்கிய நடையையும் சிற்றின்ப சம்பந்தமான கதைகளையும் மிகையாகவரும் நீதி வாக்கியங் களையும் விலக்கிச் சுருக்கிப் பாடசாலைகளுக்கு இயையுமாறு எழுதி சுன்னாகம் அ. குமாரசுவாமிப்புலவர் 1920 இலே அச்சிட்டனர். இச்சுருக்கம் 1940, 1949 ஆம் ஆண்டுகளிலும் வெளிவந்தது.
நவாலியூர் சோ. நடராசன் (1910-1988) மொழி பெயர்த்த “விட்டுணு சன்மாவின் இதோபதேசம்” 1961 ஆம் ஆண்டிலும் 1963 ஆம் ஆண்டிலும் வெளிவந்தது.
எஸ். எச். ரி. தெயிலர் (தெல்லிப்பழை அ.துரையப்பாபிள்ளை) இதோபதேச கீதரச மஞ்சரி பாட இதோபதேசம் காலாக அமைந்துள்ளது. இதோபதேச கீதரசமஞ்சரி 1901 ஆம் ஆண்டில் தனியாகவும், 1960 இலே சிந்தனைச் சோலையிலும் வெளிவந்தது. (பொ.யூ.)
269

Page 316
இந்திரநீல பர்வதரம்
இத்திருத்தலம் நேபாள தேசத்திலுள்ளது. காட்மாண்டு தலைநகரிலிருந்து வடகிழக்கில் மலைமேலேறி ஏறக்குறைய 100 மைல் தொலைவு சென்றால் இந்திரநீலப்பருப்பதம் செல்லலாம். இது கடல் மட்டத்தின் மேல் சுமார் 18,000 அடி உயரமுள்ளதெனக் கணிக்கப்பட்டுள்ளது.
கேதாரம், கயிலாயம் செல்வது போலவே பணிக்கட்டியின் மீது செல்ல வேண்டிய இடங்களுமுண்டு. ஒருமலை நாகப்படம் போல் கவிந்து ஈசானதிக்கை நோக்கியிருக்கிறது. கட்டப்பட்ட கோயில் இல்லை. "ஸ்தலம் சுயம்பு’ ஆகிய மலையின் பகுதியே. குழிவான கீழ்ப்பகுதியே பீடம். இந்தக் கீழ்ப்பகுதி நீல மயமான கற்பாறை. இதற்கு வடமேற்கில் ஒரு பள்ளத்தாக்கில் ஒடுவது நீலகங்கா என்னும் சிறிய ஆறு. ஈசன் சந்நிதிக்குச் சிறிது வடகிழக்கில் பச்சை நிறமுள்ள சுயம்பு கற்பாறையே சுயம்பு அம்பிகை. சுவாமியின் அருகில் அர்த்தசித்திர வடிவில் ஒருபாறையில் இந்திரன் . இத்தலத்தில் சுவாமியை இந்திரன் பூசித்தான். சம்பந்தர் காளத்தியிலிருந்தே பதிகம் அருளினார். திருஞான சம்பந்தர் பாடிய தலம்.
வடநாட்டிலுள்ள ஐந்து தேவாரப் பாடல்பெற்ற தலங்களுள் ஒன்று.
சுவாமி - நீலாசலநாதர் அம்பிகை - நீலாம்பிகை தீர்த்தம் :- இந்திர தீர்த்தம் 彎 நீலப் பருப்பதம் நீலா சலநாதர்
நீலாம் பிகையெனும் நிமலி நன்னீலம் குலவு பாரிடம் போற்ற வீற்றிருந் திலகும் மான்மழு வேந்தும் அங்கையன் நிலவும் இந்திர நீலப் பர்ப்பதத் துலவி னான்அடி யுள்க நல்குமே.
(உ.வே.சா)
இந்திரன்
இருக்கு வேதத்திலே அதிகம் பாராட்டப்படும் தெய்வம் இந்திரன். அதனுள் இடம் பெறும் பாடல்களிலே தனியொரு தெய்வத்திற்கு இவனுக்கு பாடப்பட்டளவு பாடல்கள் இல்லை; சுமார் 250 சூக்தங்கள் அங்கு இந்திரனுக்குரியவை.
இந்திரனுக்குப் பெற்றோர் சுட்டப்படுகின்றனர். தியெள
பிருத்துவியின் மகனாகவும் அக்கினியின் இரட்டைச் சகோதரனாகவும் இந்திரன் கூறப்படுகிறான்.
வருணனுக்குப் ஆதி வேதத் தெய்வத் தொகுதியில் இருந்த தலைமையை இந்திரன் காலகதியிலே தனதாக்கிக் கொள்கிறான். காற்று மண்டலத்திற்கும் காலநிலைக்கும் இடிக்கும் மின்னலுக்கும் மழைக்கும் பனிக்கும் தெய்வமாக அமையும் இந்திரன்
270

விருந்தினரை உபசரிப்பவரின் தலைவனாகவும் தேவரின் தலைவனாகவும் சுவர்க்கத்தின் அரசனாகவும் காணப்படுகிறான். ஆரியரின் விரோதிகளை அழித்து அவர்களிடையே பெரும் செல் வாக்கினை அடைகிறான். ஆயினும் இவ்வுயர் நிலையிலிருந்து இந்திரன் பின்னிலைக்குத் தள்ளப்படுகிறான். விஷ்ணு, சிவன், கிருஷ்ணன் என்போராலும் ஏனையோராலும் வெல்லப்படும் ஒருவனாக அவன் காட்டப்படுகிறான்.
இந்திரன் கோயில்கள் தமிழ் நாட்டிலும் காணப்படுகின்றன. புறநானூற்றிலே வச்சிரத் தடக்கை நெடியோன் கோயில் குறிப்பிடப்படுகின்றது (241.3). புகார் நகரத்திலே சித்திரைத் திங்களில் சித்திரை நாள் தொடங்கி இருபத்தெட்டு நாள் நடைபெற்ற இந்திர விழா பற்றி இளங்கோவடிகள் சிலம்பின் இந்திர விழாவூரெடுத்த காதையிலே குறிப்பிடுகிறார்.
அகத்தியர் கட்டளைப்படி, தொடித்தோட் செம்பிய்னாலே தொடங்கப்பட்டு வருடம் தோறும் காவிரிப் பூம்பட்டினத்திற் சோழராற் கொண்டாடப்பட்டு வந்த இந்திர விழாவை நெடுமுடிக் கிள்ளி தொடர்ந்து செய்யாததாற் புகார்நகரம் கடல் கோட்பட்டது என்று மணிமேகலை கூறும்.
இந்திரதுவாதசி விழா காஷ்மீரத்திலே இன்றும் வராக க்ஷேத்திரத்திற்கு யாத்திரை செய்யும் நாளாகக் கொண்டாடப்பட்டு வருகின்றது. முன்னாளில் அங்கு இது பெரும் கலைவிழாவாக அமைந்திருந்தது. (பொ.யூ.)
இந்து
தோற்றக் காலத்திலே இந்து என்னும் சொல் நிலப்பரப்புக்கு அந்நியரால் வழங்கப் பெற்ற பெயராம். சிந்துநதி பாயும் நிலப்பரப்பே இப்பெயராற் சுட்டப்பட்டிருக்கின்றது. மக்களுக்கோ அல்லது சமயத்திற்கோ அச்சொற் பொருள் விரிவு பெற்றது பின்பாகும். சிந்துப்பிரதேச மக்களையும் அவர்களுடைய மதத்தையும் உள்ளடக்கி இந்திய நாடு முழுவதனையும் சுட்டுவதாக விரிவு பெற்றது அதனிலும் பின்பாகும்.
இப்பின்னணியில் நோக்கும் போது இந்து மதம் எனக் கூறப்படும் பிரிவிற்கு ஒர் இலக்கணம் கூறல் பெருமலைப்பினை ஏற்படுத்தலாம். இதனைச் சார்ந்தோர் அனைவரும் ஒப்புக் கொள்ளக் கூடிய வகையில் இதற்கு ஒர் இலக்கணம் கூறுவதும் செயற்கரியதாகலாம். பலருக்கு இந்துமதம் எனும் பதம் பொருளற்ற வெற்றோசையாகக் கூடத் தோன்றலாம்.
ஆனால் பலவகையான வழிபாட்டு முறைகளுக்கு இடையே பொதுவான ஒருமைப்பாடு ஒன்று இல்லாமலா ஆயிரமாயிரம் ஆண்டுகள் நிலைத்திருந்தது? பரமதங்களின் மூர்க்கத்திற்கு ஈடுகொடுத்து மாய்ந்து போகாமலும் சிதறிப் போகாமலும் எவ்வாறு நிலைக்க முடிந்தது? சனாதனதர்மம்- என்றுமுள்ள தர்மம் - எனப் பெயர் வாங்கியிருக்க முடியுமா? சுமார் ஈராயிரம் மைல்கள் வடக்குத் தெற்காகவும் 1800 மைல்கள் கிழக்கு மேற்காகவும் அமைந்த பாரிய நிலப்பரப்பிலே வேற்றுமைகளுக்கு சிறந்த இடம் தரும் பூமியிலே பல்வேறு இனங்களையும் பல்வேறு
இந்துக் கலைக்களஞ்சியம்

Page 317
மொழிபேசுவோரையும் இணைத்து நின்ற சக்தியெது? இக்கேள்விகளைச் சிந்திக்குமிடத்து இந்து மதம் என்ற குறியீடு பொருளற்ற வெற்றோசை என்று கொள்ள முடியாமலிருக்கும்.
சைவம், வைணவம், சாக்தம், வேதாந்தம் முதலிய பல்வேறு சமயங்களை எல்லாம் இணைத்த ஒருமைப்பாடு ஒன்று காணப்படுவதை மறுத்தலளிது. இந்தியாவில் தோன்றிய சமய பண்பாட்டு இயக்கங்களை எல்லாம் உள்ளடக்கிச் சுவீகரித்துக் கொண்டு பரிணாம முறைப்படி அவசரமின்றி அது வளர்ந்து வந்துள்ளது.
வேதத்தைச் சிறப்பாகவோ அல்லது பொதுவாகவோ ஏற்றுக்கொள்வதில் இந்துக்கள் ஒருமைப்பாடு தெளிவாகக் காணப்படும். தன் மதச்சடங்குகளுக்கும் ஆசாரமுறைகளுக்கும் வேதத்தில் ஆதாரம் இல்லாதபோதும் தாந்திரிகம் வேத வழிவந்ததாகக் கூறிக்கொள்ளும். இன்று கிட்டாத வேதப் பகுதிகளிலிருந்து அவை கிட்டியதாக நம்புவது மரபாகும். சைவம் ஆகமத்தினைச் சிறப்பாகவும் வேதத்தைப் பொதுவாகவும் கொள்ளுவதாகும்.
கர்மக் கொள்கையிலும் இந்துக்கள் சேர்ந்து நிற்பதைக் காணமுடியும். நல்லது செய்ய வேண்டும் கெட்டது செய்யக் கூடாது என்று எடுத்துக் கூறும் சமயங்கள் பலவாயுள்ளன. கெட்டது செய்தால் கிடைக்கும் பரிசு எத்தகைய கொடூரமானது என்பதை விவரிப்பதிலே பெரும் பொழுதினைச் செலவழிக்கும் சமயங்களும் பலவாய் உள்ளன. ஆயினும் ஒருவருடைய நல்வினை தீவினைகளுக் கேற்பவே அவருக்கு இன்பமும் துன்பமும் அமைகின்றன என்றோ அவர் செய்த வினையை அனுபவித்தே தொலைக்க வேண்டும் என்றோ இந்துமதம் போன்று அவை வற்புறுத்திக் கூறவில்லை. பிராரத்தம், சஞ்சிதம், ஆகாமியம் என்ற மூவகைப் பிரிவினை இந்திய மதங்கள் எல்லாம், தெளிவாகச் சித்தாந்தம் போன்று விளக்கிக் காட்டாவிடிலும் அவற்றின் வேறுபட்ட தன்மைகளை உணர்ந்தனவாகவே காணப்படுகின்றன.
கர்மக் கொள்கையோடு தொடர்புடையது மறுபிறப்புக் கோட்பாடு. இதனை இந்துக்கள் பொதுவாக ஏற்றுக் கொள்வார்கள். கர்மம் அனுபவித்துத் தொலைக்க வேண்டியது. ஒரு பிறவியை எடுத்து பிராரத்தத்தை அனுபவிக்கும்போது ஆகாமியமாகப் புதுவினையை ஈட்டிக் கொள்கிறோம். மேலும் பிராரத்தமாக நாம் பண்ணிய பாவ புண்ணியம் எல்லாவற்றையும் கடவுள் ஒரே நேரத்தில் நம்மை அனுபவிக்கும்படி விட்டுவிட வில்லை. அவன் பேரருளால் ஒரு பகுதியையே பிராரத்தமாகக் கொண்டு எஞ்சியவற்றை சஞ்சிதமாக வைத்துக் கொண்டுள் ளோம். எனவே நாம் சம்பாதித்ததைச் செலவு செய்வதற்குப் பல பிறவிகள் எடுக்கிறோம். எடுக்க வேண்டும். இதனாலேயே மறுபிறப்புக் கோட்பாடு இந்துக்களுடைய பொதுச் சொத்தாகக் காணப்படுகின்றது.
இந்துக்கள் அறநெறிவாழ்வின் தேவையை வற்புறுத்து வதிலே மிகவும் அக்கறையுள்ளவர்கள். மனம், வாக்கு, காயம் என
இந்துக் கலைக்களஞ்சியம்

மூவழிகளிலும் அந்நெறியினைப் பின்பற்ற வேண்டும் என வற்புறுத்தல் இந்துக்களின் பொதுப் பண்பு கொள்கையிலும் அல்லது தத்துவத்திலும் நடத்தைக்கு முக்கியத்துவம் கொடுப்பதனை இக்கருத்தின் முக்கியத்துவமாக நாம் காணுகின்றோம். வர்ணாசிரமதர்மம், புருஷார்த்தம், அகிம்சை முதலியவை எல்லாம் அறவாழ்வினைச் சம்பாதிக்கும் மார்க்கங்கள். இவற்றிற்கெல்லாம் வெவ்வேறு வழிகளிலே இந்து மதத்தின் பிரிவுகள் தனி முக்கியத்துவம் கொடுத்துள்ளன என்பதை மறுத்தலளிது.
இந்து மதத்திலே குருவுக்கு இன்றியமையாத முக்கியத் துவமுண்டு. கடவுளுக்குச் செய்யப்படும் மரியாதை அனைத்தையும் குருவுக்கும் செய்வதைக் காணலாம். குரு மனிதனுக்கும் இறைவனுக்கும் ஊடகமாக அமைந்த தன்மையை அதிகம் வற்புறுத்தும் பண்பு இந்துக்களிடையே காணப்படும். மாகேசுர பூசை, ஆசாரிய உற்சவம் போன்ற நிகழ்ச்சிகளிலே இத் தன்மை யினைத் தெளிவாக அவதானிக்க முடியும்.
இந்துக்களின் அதிமுக்கிய சிறப்பியல்பு சமயத்தில் அவர்கள் பின்பற்றும் பரந்த மனப்பான்மையாகும். சமய சர்வாதிகாரப் போக்கினை இந்துக்கள் பொதுவாக ஆதரிப்பதில்லை. இந்துமதம் என ஒன்றினைத் தெளிவாக இன்ன இன்ன இலக்கணங்களை யுடையது என வகுத்துக் கூற இயலாமைக்கு இப்பண்பு முக்கிய காரணம் என்று கூறுவதிற் பிழையில்லை. ஆங்காங்கே தோன்றிய சமயசம்பந்தமான இயக்கங்கள் தம்முடைய தாக்கங் களை இந்துக்களிடையே தோன்றிய பெளத்தம், சைனம், சீக்கியம் என்பனவும் தாய்ச் சமயத்தின் மீது தம் தாக்கங்களை விட்டுச் செல்லாமலில்லை. திடீர் திடீரெனத் தோன்றும் பிரிவுகள் இந்துக்களிடையே மற்ற மதானுசாரிகளிலும் அதிகம் காணப் படுவதையும் நாம் மறந்து விடல் சாலாது. எல்லா மதங்களும் கடவுளிடம் இட்டுச் செல்லும் பாதைகள் என்ற கோட்பாடு இந்துக் களுடைய சமயத்தை இறுக்கமான ஒழுங்கமைவு உள்ள கூட்டாக வளர இடந்தரவில்லை. இந்நிலையினை ஒரு குறைபாடாகச் சிலர் கருதலாம். ஆனால் அதுவே இந்து மதத்தின் வலிமையின் அடிப்படை என்பதை மறுத்தல் அரிதாகும். பல்வேறு எதிரெ திரான குழுக்களை எல்லாம் உள்ளடக்கிக் கொண்டு சிதைந்து விடாமல் அவற்றிடையே ஒரு ஒருமைப்பாடு உருவாகி வளர இந்துமதத்தின் பொறுமைத் தத்துவமும் பரந்த மனப்பான்மையும் பெரும் பங்காற்றியுள்ளன.
இறைவன் இந்து சமயத்தில் வெவ்வேறு பெயர்களோடு வழங்கப்படினும் ஒவ்வொரு பிரிவிலும் ஏனைய பிரிவுகளில் இடம் பெறும் தெய்வங்களைக் காணமுடியும். இந்நிலையும் பல்வேறு காலகட்டங்களிலே சமரச மனப்பாண்மை வளரக் காலாக இருந்துள்ளது. சைவத்திலே விஷ்ணுவுக்கு இடமுண்டு: வைணவத்திலே சிவனுக்கு இடமுண்டு : சாக்தத்திலே இருவருக்கும் இடமுண்டு. இவ்வாறு பல்வேறு பிரிவுகளிடையே ஒற்றுமை காணப்படுகின்றது. அர்த்தநாரீஸ்வரர், சங்கர நாராயணர் போன்ற மூர்த்தங்கள் இங்கு சிந்திக்கத்தக்கவை.
271

Page 318
இறைவன் திருவருளின் காரணமாக உலகிற்கு அவதாரம் எடுத்து வருகிறான் என்ற கருத்து இந்துக்களுக்குப் பொதுவான சிறப்பியல்பு. சிவபெருமான் அவதாரம் செய்ததாகக் கூறுவதில்லையாயினும் அவருடைய மூர்த்தங்கள் எனும் தத்துவத்தில் அவதார இயல்பு இல்லை என்று கூறிவிடமுடியாது. இறைவனைக் கண்முன்னே எழுந்தருளச் செய்து வழிபடும் இந்துக்களுக்குப் பூரண அவதாரமோ அம்சாவதாரமோ ஆவேச அவதாரமோ கற்பனைக்கும் கருத்துக்கும் அப்பாற்பட்டதில்லை.
விக்கிரக ஆராதனை இந்துக்களின் வழிபாட்டு முறையில் குறிப்பிடத்தக்கது. விக்கிரகத்தைக் கல்லாகவோ உலோகப் பொருளாகவோ எண்ணி இந்து வணங்குவதில்லை. தன் இஷ்ட மூர்த்தி அங்கு ஆவேசித்திருப்பதாக எண்ணியே-நம்பியே அவன் வழிபாடு செய்கிறான். ஆத்மார்த்த பூசைகளிலே இக் கருத்தினைத் தெளிவாக உணரலாம். பரார்த்த பூசைகளும் இதனைத் தெளிவாக்குவன.
பிரமம், ஆன்மா, மாயை என்ற முப்பொருள் வெவ்வேறு வடிவங்களிலே வெவ்வேறு இயல்புகளைக் கொண்டனவாக இந்துக்களிடையே வழங்கப்படுவதை நாம் காணலாம். நிர்க்குண பிரமம் கூறியவர்கள் சகுண பிரமம் கூற வேண்டியிருந்தமை மறக்கொண்ணாதது. முப்பொருட் கோட்பாடு அறிவியல் சார்ந்த அருமையான கோட்பாடு அறிஞர் போற்றிய பெருமையுடையது.
இந்துக்கள் கர்மக் கொள்கையிலும் மறு பிறப்பிலும் அவதாரங்களிலும் கொண்ட நம்பிக்கைகள் அவர்களுடைய சிராத்தக் கிரியைகளிலே தெளிவாகப் புலனாகும். இந்துக்கள் சிராத்தத்தை மரியாதைக்கு உரியதாகவும் பவித்திரமானதாகவும் கடமையாகவும் போற்றி வருவதைக் கண்கூடாக அறிய முடியும்.
இந்துக்களை இனங்காட்டும் முக்கியமான அமிசங்கள் சிலவற்றை மட்டுமே இங்கு கண்டோம். ஒரு பிரிவினருக்கு முன்பு தெரியாத ஒரு அமிசத்தை இன்னொரு பிரிவிடம் ஒரு முறை கண்ட போதும் கூட அதனைத் தம்முடைய இயல்பொன்றோடு இணைத்துப் பார்க்கும் நிலையைத் தோற்றுவிக்கத் தக்கனவான பல அமிசங்களுண்டு. தொடர்புச் சாதனங்கள் மலிந்து வரும் காலத்திலே வேற்றுமைகள் குறைந்து வருவதை மறுத்தலளிது. ஆயினும் அடிப்படையான முக்கிய கோட்பாடுகளிலே பிரிவு களிடையே நிலவும் வேற்றுமைகள் தொடர்ந்து கொண்டிருக்கும் போது வேற்றுமைகளை உள்ளடக்கிய ஒருமைப்பாட்டினையே நாம் காணமுடியும் என்பதை மனங் கொளல் வேண்டும். (பொ.பூ)
இந்து சாதனம்
யாழ்ப்பாணத்திலிருந்து சைவபரிபாலனசபை 1889 ஆம் ஆண்டு முதலாக இந்து சாதனம் எனும் தமிழ்ப் பத்திரிகை யையும் The Hindu Organ எனும் ஆங்கிலப் பத்திரிகையையும் வெளியிட்டு வந்துள்ளது. 1889 ஆம் ஆண்டு செப்தெம்பர் மாதம் பதினோராம் தேதி முதல் வெளியீடு வந்தது. அப்பொழுது டெமி பிராமணங் கொண்ட தாளிலே அகத்தில் தமிழும் புறத்தில் ஆங்கிலமும் கொண்ட ஒரு கூட்டுப் பத்திரிகையாகப் பட்சத்திற்கு
272

ஒரு முறை புதன்கிழமையில் வெளிவந்தது. சைவபரிபாலன சபையார் அதனைத் தம் சைவப்பிரகாச அச்சியந்திரசாலையிற் பிரசுரம் செய்தனர்.
ஆரம்பத்திலே தமிழ்ப் பத்திராசிரியராக விளங்கியவர் ஆறுமுகநாவலரின் பெறாமகன் நல்லூர் த. கைலாசப்பிள்ளை, ஆங்கிலப் பத்திராசிரியராக இருந்தவர் திருவனந்தபுரம் பிரதம நீதியரசராக முன்பு விளங்கிய தா. செல்லப்பாபிள்ளை.
அக்காலத்திற் சைவர்கட்குரிய ஆங்கில தமிழ்ப் பத்திரிகை இதுவாக அமைந்ததனால் அபிமானிகள் பலர் இப்பத்திரிகையை ஏற்று வாசித்தும், அறிஞர் பலர் அரிய பல விடயதானங்கள் செய்துதவியும் வளர்த்து வந்துள்ளனர்.
1899 ஆம் ஆண்டு The Hindu Organ வாரம் ஒருமுறையும் இந்து சாதனம் பட்சத்திற்கு ஒரு முறையும் தனித்தனியாக வெளிவரத் தொடங்கின.
இவ்விரு பத்திரிகைகளும் சமய சம்பந்தமான கட்டுரை களையும் செய்திகளையும் கருத்துக்களையும் தாங்கி வந்தன. சமய சம்பந்தமான நிகழ்ச்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்துப் பிரசாரஞ் செய்தன. திருக்கேதீஸ்வரம், திருக்கோணேஸ்வரம் முதலிய தேவாரம் பெற்ற திருத்தலங்களின் புனருத்தாரணத் திருப்பணிகளுக்கு இவை அளித்து வந்த ஊக்கம் குறிப்பிடத் தககது.
மனேஜர் த. கைலாசப்பிள்ளையை அடுத்துத் தமிழ்ப் பத்திராசிரியர்களாகப் பெ. கார்த்திகேய பிள்ளை, பண்டிதர் ம. வே. திருஞானசம்பந்த பிள்ளை, கு. சிற்சபேசன், மு. மயில்வாகனம் என்போர் விளங்கியுள்ளனர். செல்லப்பாப்பிள்ளையைத் தொடர்ந்து அ. சபாபதி, ச. சிவகுருநாதர், தெ. அ. துரையப்பா பிள்ளை, எம்.எஸ். இராஜரத்தினம், எம். எஸ். இளையதம்பி, வி. நாகலிங்கம், ஏ.வி. குலசிங்கம், த. முத்துசாமிப்பிள்ளை என்போர் ஆங்கிலப்பத்திரா சிரியர்களாக விளங்கியுள்ளனர். இவர்களை அடுத்து நம. சிவப்பிரகாசம் இரு பத்திரிகைகளுக்கும் ஆசிரியராக விளங்கினார். (பொ. பூ)
இந்தோனீசியா
இந்தோனீசியா சுமார் ஈராயிரம் தீவுகளைக் கொண்ட ஒரு தீவுக் கூட்டமாகும். இத்தீவுகள் பூமத்தியரேகைப் பிரதேசத்திலே வரிசையாக இருக்கின்றன. மலேயா தீபகற்பகத்திலிருந்து ஆஸ்திரேலியாவிற்கு செல்லும் பாதை போல இவை அமைந்துள்ளன. கலிமந்தான் (போர்னியோ), சுமாத்ரா, ஜாவா, செலிபீஸ் முதலிய பெரிய தீவுகளும் இங்குள்ளன. ஐம்பது சத வீதத்திற்கு மேற்பட்ட சனம் ஜாவாத் தீவிலேயே வசிக்கின்றனர். இசுலாமிய மதமும் மலாய் மொழியும் (இந்தோனீசிய மொழி) முக்கியத்துவம் உடையனவாயினும் கிறித்தவம் போன்ற வேறு சில மதங்களும் இருநூறுக்கு மேற்பட்ட வேறு மொழிகளும் கிளை மொழிகளும் அங்குள்ளன. 1945 ஆம் ஆண்டிலே இந்தோனீசியா தன்னுடைய சுதந்திரத்தினைப் பிரகடனப்படுத்தியது.
இந்துக் கலைக்களஞ்சியம்

Page 319
அங்குள்ள பாலித்தீவிலே இந்து சமயம் இன்றும் நடைமுறையில் காணப்படுகின்றது. இதனை ஆகமதீர்த்த என்று அங்கு வழங்குவர். ஜாவாவில் பின்பற்றப்படும் சமய நெறியிலே ஆதி வழிபாடும் இந்து சமய எச்சங்களும் இசுலாமிய செல் வாக்கும் காணப்படுகின்றன என்பர். கலிமந்தான் (போர்னியோ) தீவும் இந்து சமய எச்சங்களையுடையதாகக் காணப்படுகின்றது.
தென்சுமாத்திராவிலே தோன்றிய பூரீ விஜயம் எனும் அரசும் பின் வந்த சைலேந்திர இராச்சியமும் இந்தியச் செல்வாக்கினைச் சுமாத்திராவில் மட்டுமன்றி சூழவுள்ள பிரதேசங்களிலும் செலுத்தியுள்ளன. இந்தோசீனம் வரை சைலேந்திரர் ஆட்சி விரிவு பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. இவ்விரு பரம்பரையினர் ஆட்சியிலும் பெளத்தம் செல்வாக்கு மிக்கதாகக் காணப்படினும் இந்துசமயமும் இப்பிரதேசங்களிற் பரவியுள்ளது. பூரீ விஜய அரசின் காலமுதல் இராம சரிதத்தினை உணர்த்தும் அகழ்வுகள் பல காணப்படுகின்றன. பதின்மூன்றாம் நூற்றாண்டு வரை இவற்றின் செல்வாக்கு இப்பிரதேசங்களிலே காணப்படுகின்றது.
ஜாவாவிலே கி. பி. எட்டாம் நூற்றாண்டு முதல் பதினாறாம் நூற்றாண்டின் ஆரம்பம் வரை இந்துசமயச் சார்பு மிக்க அரசுகள் நிலவியுள்ளன. எட்டாம் நூற்றாண்டில் மத்திய ஜாவாவில் சஞ்சயன் தோற்றுவித்த மாதரம் (Mataram) அரசு சைவ அரசாம். பழமை மிக்கனவாக டியங் பீடபூமியில் (Dieng Plateau) கிடைக்கும் ஜாவா கோயில் எச்சங்களிற் சில இவ்வரசின் காலத்திற்குரியனவாம். சஞ்சயன் தோற்றுவித்த அரசு சிறிது காலம் பெளத்தச் சார்பினரான சைலேந்திரர் வசம் சிக்கிய காலத்திலே போராபுதூர் (Borobodur) பெளத்த ஆலயம் தோன்றியது. ஒன்பதாம் நூற்றாண்டிலே மீண்டும் மாதரம் அரசு சைவ அரசாக விளங்கிய போதும் பூரீ விஜயத்தின் தாக்குதலுக்கு ஈடுகொடுக்க முடியவில்லை. பின்பு கிழக்கு ஜாவாவிலே இந்து அரசுகள் உருவாகின. சிங்காசாரி (Singhasai) அரசும் பின்பு மட்ஜபகித் (Majapahi) அரசும் இவற்றிலே பேர் பெற்றவை. இசுலாமியமதத்தின் வருகையுடன் சிதைவடையத் தொடங்கிய இந்து அரசு பதினாறாம் நூற்றாண்டின் முற் பகுதியில் முடிவடைந்தது.
ஜாவாவில் உள்ள இந்துக் கோயில்களிலே பிரம்பனம் (Prambanam) எனுமிடத்தில் சிவன், விஷ்ணு, பிரமன் முதலிய தெய்வங்களுக்கு அமைந்த கோயில்கள் சிறப்பு மிக்கனவாகப் போற்றப்படுவன. -
இந்தோனீசியாவிலே இராமாயணம் அந்நாட்டு மொழியிலே gQ6ADëséâulu gjög56ñogii Guibgpj6T6ITgil (Kakawin Ramayana, Serat Ram, Carit Ramayana Javanese Uttarakanda, Serat Kanda, Rama King). இராமாயணமும் மகாபாரதமும் வயாங் (Wayang) எனும் கிராமிய கதைகளுக்கும் இந்தோனீசிய நிழற் கூத்துகளுக்கும் (Shadow Play) ஜாவா - பாலி நடனங்களுக்கும், பற்றிக்வேலைப் பாடுகளுக்கும் (Baik designs) கருப்பொருளாக அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்து மதத்தின் செல்வாக்கு உருவாக்கிய நிர்வாக அமைப்பு முறையும் அதிகார வர்க்கமும் இந்தோனீசியாவிலே தொடர்ந்து இயங்க முற்பட்டு வந்துள்ளன. (பொ.யூ.)
இந்துக் கலைக்களஞ்சியம்

இயற்பகை நாயனார்
“இல்லையே என்னாத இயற்பகைக்கும் அடியேன்” எனச் சுந்தரமூர்த்தி சுவாமிகள் போற்றும் இயற்பகையார் (7.39.1) சோணாட்டுக் காவிரிப்பூம் பட்டினத்திலே வாணிபஞ் செய்து வாழ்ந்தவர்; சிவனடியார் வேண்டும் யாவையும் இல்லை என்னாதே கொடுக்கும் விரதமுடையவர்; சிவபிரான் தன் தொண்டர் மறாத
வண்ணம் காட்டும் பொருட்டு வேதியர் வடிவில் அவர்மனை அணைந்து அவர் மனைவியை வேண்டித் தாம் மனை வந்ததாக இயற்பகையாரிடம் கூறிய போது, அவர் முன்னையின் மகிழ்ந்து, தம் மனைவியை அழைத்துக் கொண்டு வந்து, வேதியருடன் விட, அவர் தம் பயணத்துக்குத் துணைவரும்படி கேட்ட போது, சம்மதித்துத் துணை செல்கையில், சுற்றத்தினர் தடை செய்ய முற்பட்டதால், அவர்களைத் தம் வாளாற் கொன்று வேதியரையும் மனைவியையும் பயமின்றித் தொடர்ந்து மேற் செல்லும்படி கூறி விட்டு, இயற்பகையார் தம்வழித் திரும்பி நடக்கலானார். அக் காலை ஒலம் என்ற குரல் கேட்டுத் திரும்பி ஓடி வந்த இயற்பகையாருக்கு இறைவன் தன் கோலங்காட்டி, இயற்பகை யாரையும் அவர் மனைவியையும் வாழ்த்தி அருள் புரிந்தார். சேக்கிழார் சுவாமிகள் பெரிய புராணத்திலே கூறியுள்ள கதையிது.
(பொ.பூ)
இயற்பா
ஆழ்வார்களின் அருளிச் செயல்கள் நாலாயிரத்திவ்விய பிரபந்தமாகத் தொகுக்கப்பட்டுள்ளன. நாலாயிரத்திவ்விய பிரபந்தத்தின் மூன்றாம் ஆயிரம் இயற்பா என வழங்கப்படும்.
இயற்பாவிலே பத்து பிரபந்தங்கள் இடம் பெறுவன. அவையாவன:
1. பொய்கையாழ்வார் அருளிச் செய்த முதற்றிரு வந்தாதி.
2. பூதத்தாழ்வார் அருளிச் செய்த இரண்டாந் திருவந்தாதி. 3. பேயாழ்வார் அருளிச் செய்த மூன்றாந் திருவந்தாதி. 4. திருமழிசையாழ்வார் அருளிச் செய்த நான்முகன்
திருவந்தாதி. 5. நம்மாழ்வார் அருளிச் செய்த திருவிருத்தம். 6. நம்மாழ்வார் அருளிச் செய்த திருவாசிரியம். 7. நம்மாழ்வார் அருளிச் செய்த பெரிய திருவந்தாதி. 8. திருமங்கையாழ்வார் அருளிச் செய்த திருவெழுக்
கூற்றிருக்கை. 9. திருமங்கையாழ்வார் அருளிச்செய்த சிறிய திருமடல். 10. திருமங்கையாழ்வார் அருளிச் செய்த பெரி திருமடல்.
வெண்பாவாற் பாடப் பெற்ற இயற்பாத்திருவந்தாதிகளிலே முதலாழ்வார் பாடியவற்றில் ஒவ்வொன்றிலும் நூறு பாடல்கள் உள்ளன நான்முகன் திருவந்தாதியிலே 96 பாடலும் பெரிய திருவந்தாதியில் 87 பாடலும் உள்ளன; நம்மாழ்வாரின் திருவிருத்தத்திலே 100 பாடலும் திருவாசிரியத்தில் ஏழு பாடலும் உள்ளன. திருமங்கையாழ்வாரின் திருவெழு கூற்றிருக்கை 46 அடிகளை உடைய ஆசிரியப்பாவாகும்; திருமடல்கள் கலிவெண்பாவாலானவை.
273

Page 320
இயற்பாவிலே நம்மாழ்வாரின் திரு விருத்தத்தின் ஈற்றுப் பாடல் பல் சுருதிப் பாட்டு.
பூதத்தாழ்வார் மாமல்லையைத் தம் திருப்பாசுரத்திலே குறிப்பிட்டுள்ளார் (70), மகாமல்லன் எனும் நரசிம்மவர்மன் (630 - 668) காலத்திற்கு முன்பு மாமல்லபுரம் (மாமல்லபுரம்) மாமல்லை என்ற பெயரைப் பெற்றதெனல் சாலாது. எனவே ஏழாம் நூற்றாண்டின் நடுப்பகுதிக்கு முற்பட்டவர் பூதத்தாழ்வார் எனல் பொருந்தாது. பொய்கையாழ்வாரும் திருக்கோவலூரிலே சந்தித்ததாக வைணவ குருபரம்பரைக் கதைகள் கூறுவன. எனவே முதலாழ்வார் மூவரும் சமகாலத்தவராவர். திருவல்லிக் கேணியிலே முதலாழ்வார் மூவரும் திருமழிசை யாழ்வாரைச் சந்தித்ததாகவும் அவர் பேயாழ்வாரின் சீடர் என்றும் வைணவ சம்பிரதாயம் கூறுகின்றது. திருமங்கையாழ்வார் வைரமேகன் காலத்தவர் (பெரிய திருமொழி 2.8.10), வைரமேகன் என்பவனாகிய நந்திவர்மன் (796-815) ஆட்சியில் ஏற்பட்ட சீவர மங்கலத்தை நம்மாழ்வார் பாடியுள்ளார் (திருவாய்மொழி, 5.711). முதலாம் ஆதித்தனின் (871-907) மூன்றாம் ஆட்சியாண்டுத் தஞ்சை திருக்கண்ணபுரம் சாசனம் சடகோபன் எனும் பெயர் மக்களுக்கு வழங்கப்பட்டதைக் காட்டுகின்றது.
இயற்பாவில் இடம் பெறும் பிரபந்தங்களுக்குப் பெரிய வாச்சான்பிள்ளை வியாக்கியானமுண்டு. முதலாழ்வார் திருவந்தாதிகளுக்கு நஞ்ஜியர் வியாக்கியானமும் நம்மாழ்வாரின் திருவிருத்தத்திற்கு வடக்குத் திருவீதிப்பிள்ளை ஈடுமுண்டு.
கே. பூரீநிவாஸ் முதலியார் (1861), முடிச்சூர் அப்பாவு முதலியார் (1865), அரசாணிபாலை கந்தாடை கிருஷ்ணமாசார்யர் (2ம் பதிப்பு: 1890), சி. கே. திருவேங்கடாசார்யர் (1898), பூரீநிவாச வரதாச்சாரியர் (1898), காரப்பங்காடு பூரீ கோபாலாச்சாரியர் (1908), சே. கிருஷ்ணமாச்சாரியர் (1928), பி இரத்தினநாயகர் ஸன்ஸ் (1938), ரி. சி. பார்த்தசாரதி அய்யங்கார் (1939), வை. மு கோபாலகிருஷ்ணமாசாரியர், மயிலைமாதவ தாஸன் (1943) முதலியோர் திவ்விய பிரபந்தத்தைப் பதிப்பித்துள்ளனர். காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங் கராசாரியர் திவ்யார்த்த தீபிகையுரைடன் திவ்விய பிரபந்தத்தைப் பதிப்பித்துள்ளார்.
இரகஸ்ய கிரந்தங்கள்
இரகசியங்களை உள்ளடக்கிய நூல்கள் இரகஸ்ய கிரந்தங்கள் எனப் பொதுப் பெயர் பெறினும், வைணவ விசிஷ்டாத்வைத சம்பிரதாய கிரந்தங்களில் ஒரு பிரிவைச் சிறப்பாக இரகஸ்ய கிரந்தங்கள் எனப்படுவன. இவை வைண வத்தின் பிரதான கோட்பாடுகளைத் தெளிவாக்கி, வைணவ சமூகத்திற்கு முமூட்சுக்குத் தேவையான விடயங்களைக் கூற மணிப்பிரவாள நடையில் எழுந்தவை. இவற்றிலே பொதுவாக,
(1) நித்திய பொருள் மூன்று (தத்வத்திரயம்):
சித், அசித், ஈஸ்வரன்
(2) இரகஸ்ய மந்திரம் மூன்று (இரகஸ்யத்திரயம்):
திருமந்திரம், துவயம், சரம சுலோகம்
274

(3) சேரவிடுவோர் (புருஷகாரம்): பிராட்டியார் (4) சரணடைதல் (பிரபத்தி, சரணாகதி) (5) இறைவனுக்கும் இறையடியாருக்கும் சேவை (கைங்கரியம்) (6) போதனைகளின் சுருக்கம் (அர்த்த பஞ்சகம்) (7) ஆசார்யர்
(8) வைணவர் இலக்கணம்
என்பன இடம் பெறுவன.
இரகஸ்ய கிரந்தங்களிலே விசிஷ்டாத்வைத தத்துவம் நான்கு கோட்பாடுகளை அடிப்படையாகக் கொண்டது என்று கூறப்படும்.
(1) ஆன்மா - உடல் உறவு (சரீரசரீரிபாவம்)
(2) இறைவன் சேவை ; அடியார்களுக்கும் நீடிக்கப்படுவது
(கைங்கரியம்)
(3) சரணடைதல் (பிரபத்தி)
(4) இறைவனை அடையப் பிராட்டியார், ஆசாரியர் உதவி
(புருஷகாரம்)
பிராட்டியார், ஆசாரியர் உதவியுடன் இறைவனைச் சரணடைந்தால் மோட்சத்தை அடையலாம் என்றும் மோட்சம் இறைவனுக்கும் இறையடியார்களுக்கும் சேவை செய்தல் என்றும் இரகஸ்ய கிரந்தங்கள் கூறுவன.
இரகஸ்ய கிரந்தங்களில் வைணவ சம்பிரதாயம் அர்த்த
பஞ்சகம் மூலமும் ஆராயப்படுகின்றது. இங்கு கூறப்படும் ஐந்து பொருள்கள் :
(1) பேறு (பிராப்பியம்) (2) தகுதிகள் (பிராப்தம்) (3) உபாயங்கள் (பிராபகம்) (4) பலன்கள் (5) தடைகள் (பிராப்திவிரோதம்)
பெரியவாச்சான்பிள்ளை, பிள்ளை லோகாசாரியர், வேதாந்ததேசிகர் என்போர் மணிப்பிரவாள நடையிலே பல இரகஸ்யகிரந்தங்களை எழுதியுள்ளனர். பரந்தரகஸ்யமும் மாணிக்கமாலையும் பெரியவாச்சான்பிள்ளையின் பிரதான இரகஸ்ய கிரந்தங்களாம். பிள்ளை லோகாச்சாரியரின் பதினெட்டு ரகஸ்ய கிரந்தங்கள், அஷ்டாத சரகஸ்யம் என்ற பேரிலே வழங்குவன. இவற்றிலே பூரீ வசன பூஷணம், முமூகூரப்படி, தத்வத்திரயம், அர்த்தபஞ்சகம் என்பன பிரதான நூல்களாம். வேதாந்த தேசிகர் மணிப்பிரவாள நடையிலே 34 இரகஸ்ய கிரந்தங்களை எழுதியுள்ளார். இவை தனிரகஸ்யங்கள் அமிர் தரஞ்சனிரகஸ்யங்கள், அமிர்தாஸ்வாதினிரகஸ்யங்கள் என மூன்று தொகுதிகளாக வைணவ மரபிலே வழங்குவன. இவற்றிலே இரகஸ்யதிரயசாரம், அபய பிரதான சாரம், பரமதபங்கம், இரகஸ்ய
சிகாமணி என்பன பிரதான நூல்களாகக் கருதப்படுவன.
(fo. LU)
இந்துக் கலைக்களஞ்சியம்

Page 321
61856iouj gyujib
வைணவ மரபிலே விசிஷ்டாத்வைதிகள் முக்கியத்துவம்
அளிக்கும் மூன்று இரகசிய மந்திரங்கள் திருமந்திரம், துவயம், சரமசுலோகம் என்பனவாம்.
திருமந்திரம் “ஓம் நமோ நாராயணாய’ எனும் திருவெட் டெழுத்தாகும். ஆழ்வார்களின் அருளிச் செயல்களிலே திருவெட்டெழுத்துக் குறிப்பிடப்பட்டுள்ளது (பெரிய திருமொழி 18.99, 8.10.3). அஷ்ட சுலோகி எனும் நூலிலே பட்டர் திருமந்திரத்தின் பொருளை முதன் முதலாகச் சுருக்கமாக விளக்கினார். வடக்குத் திருவீதிப்பிள்ளை ஈட்டிலே அதன் பொருளை விரிவாக விளக்கியுள்ளார்.
துவயம் வைணவ மரபிலே திருமந்திரத்திலும் உயர்ந்ததாக மதிக்கப்படுவது. ஆயினும் ஆழ்வார்களின் திருப்பாசுரங்களிலே அது நேரடியாகக் குறிப்பிடப்படவில்லை என்பர். ஆயினும் வியாக்கியானம் செய்த ஆசாரியர்கள் துவயத்தின் பொருளை ஆழ்வார்கள் குறிப்பாகத் தந்துள்ளனர் என்பர். துவயம் இரு தொடராக அமைவது;
பூரீமத் நாராயண சரணெள சரணம் பிரபத்யே பூரீமதே நாராயணாய நம:
துவயத்தின் மூலம் பிரபத்தி (சரணாகதி) யும் புருஷகாரமும் குறிப்பிடப்படுகின்றன. பிராட்டியார் உதவியுடன் பூரீமத் நாராயணனுடைய பாதாரவிந்தங்களைச் சரணடைந்து அவருக்குச் சேவை செய்ய வேண்டும் என்பதே இதன் பொருள். பராசரபட்டர் துவயத்தின் பொருளை அஷ்டசுலோகியில் தெளிவாக முதன் முதலில் விளக்கினார்; வடக்குத் திருவீதிப்பிள்ளையின் ஈடும் விரிவாக விளக்குகின்றது.
சரமசுலோகம் என்று கொள்ளப்படுவது பகவத் கீதையில் வரும் மேல்வரும் சுலோகம் (18:66). சர்வதர்மாந் பரித்யஜ்ய மாம் ஏகம் சரணம்வரஜ அஹம்த்வா ஸர்வபாடுபப்ய: மோகூடியிஷ்யாமி
LOT GIGF:
இராமாநுசர் கீதாபாஷ்யத்திலே தெளிவாக இதனைச் சரமசுலோகம் என்று குறிப்பிடாவிடினும் பின்வந்த ஆசாரியர்கள் சரமசுலோகம் எனக் கொண்டனர். பட்டர் தாம் அஷ்ட சுலோகீயில் சரமசுலோகம் என்ற பெயரை இதற்கு முதன் முதலாக வழங்கினார். பின்பு பிள்ளை லோகாசார்யரும் வேதாந்த தேசிகரும் மேலும் இரு சரம சுலோகங்களைச் சேர்த்துள்ளனர். அவற்றில் ஒன்று வால்மீகி ராமாயணத்தில் இராமபிரான் விபீஷணனுக்கு உரைத்தது.
ஸக்ருதேவ ப்ரபந்நாய தவாஸ்மீதி ச யாசதே அபயம்ஸர்வ பூதேப்யோ ததாம் யேதத் வரதம் மம.
ஏனையது வராக புராணத்தில் வராகப் பெருமான் பூமாதேவிக்குக் கூறியதாக வரும் மேல்வரும் சுலோகம்
இந்துக் கலைக்களஞ்சியம்

ஸ்த்திதே மநாசி ஸுஸ்வஸ்த்தே சரீரே
ஸ்தியோ நர; தாது ஸாம்யே ஸ்த்திதே ஸ்மத்தா விச்வரூபஞ் சமாமஜம் ததஸ்தம் ம்ரிய மரணம் துகாஷ்ட்ட பாஷண ஸந்நியம்
அஹம்ஸ்மராமி மத் பக்தம் நயாமி பரமாம்கதிம்:
இவை இரண்டும் முன்னையது போலவே இறைவனிடம்
சரணடைந்து அவனுக்கு அடிமையாக, இறைவன் அவனுடைய நல் வாழ்வினைப் பொறுப்பேற்பர் என்ற பொருளையுடையன என்பர்.
பெரியவாச்சான்பிள்ளையின் பரந்தரகஸ்யம், பிள்ளை லோகாசாரியரின் முமூகூரப்படி, வேதாந்த தேசிகரின் இரகஸ்யதிரயசாரம் என்பன இரகஸ்யதிரயம் பற்றிய நூல்களிலே மிகவும் போற்றப்படுவனவாம். (பொ.யூ.)
இரகுநாதையர், சந்
யாழ்ப்பாணத்துக் கொக்குவில் சந்திரசேககர ஐயரின் புதல்வர்; இவரது தத்தயுத்திரன் கொக்குவில் ச. இ. சிவராமலிங்கையர், சகாப்தம் 1781 க்குச் சமமான காலயுத்தி வருடம் (1858 - 59) முதல், வாக்கிய பஞ்சாங்கம் கணித்தவர், சு. நடராசையருடன் சேர்ந்து போசராச பண்டிதரின் சரசோதிமாலை எனும் சோதிட நூலைப் பரிசோதித்துக் கொக்குவில் சோதிடப் பிரகாச யந்திர சாலையிற் கர வருடம் பங்குனி மாதம் (1892) பதிப்பித்தவர்; செக ராசசேகர மாலையைப் பரிசோதித்தவர்; அதனைச் ச. இ. சிவராமலிங்கேயர் விசுவாவசு வருடம் ஆவணி மாதம் (1905) பதிப்பித்தனர். (பொ. பூ)
இரகுநாதையர், இ,சி,
யாழ்ப்பாணத்துக் கொக்குவில் சந்திரசேகர ஐயரின் புதல்வர் இரகுநாதையர், சகாப்தம் 1781 க்குச் சமமான காலயுத்தி வருடம் (1858 -1859) முதல், வாக்கிய பஞ்சாங்கம் கணித்தவர்; சந். இரகுநாதையரின் தத்த புத்திரன் ச. இ. சிவராமலிங்கையர், ஐய வருடம் (1894- 1895) முதல் வாக்கிய பஞ்சாங்கம் கணித்தவர்; சிவராமலிங்கையர் மகன் இ.சி. இரகுநாதையர், விக்கிரம வருடம் (1940- 1941) முதல் வாக்கிய பஞ்சாங்கம் கணித்தவர்.
ஆசௌசதீபிகை, கந்தர்சஷ்டிகவசம், சுப்பிர மணியர் கவசம், சந்தானதீபிகை பொழிப்புரை (1940) சனிதுதி, சிவசிராத்தவிதி, சிவாலய தரிசனவிதி, நல்லைச்சுப்பிரமணியசுவாமி பேரில் பரமானந்தர் கீர்த்தனை, பரகிதம், பிள்ளை யார்கதை முதலிய பல நூல்களைக் கொக்குவில் சோதிடப் பிரகாச யந்திரசாலையிற் பதிப்பித்து வெளியிட்டவர்.
செகராசசேகரமாலையைத் தம்முரையும் சித்திரபானு வருடம் புரட்டாதி மாதம் (1942) பதிப்பித்தவர்; நல்வழிக்குத் தத்துவார்த்த விளக்கவுரை கண்டவர். (பொ. பூ)
275

Page 322
இரகுவம்சம்
இரகுவின் மரபினைப் பாடுவது இரகுவம்சம். இரகுவின் தந்தை திலீபன் வரலாற்றுடன் இரகுவின் மரபுக் கதை தொடங்கு கின்றது. திலீபன், இரகு, அயன், தசரதன், தசரதராமன், குசன் என்போர் வரலாறுகள் விரிவாகவும் குசன் பின் வந்த அதிதி முதல் அக்கினி வருணன் வரையிலான இருபத்து மூவர் வரலாறுகள் சுருக்கமாகவும் இரகுவம்சத்திலே இடம்பெறுவன.
சங்கத மொழியிலே காளிதாச மகாகவி இயற்றிய இரகு வம்சம் மகா காவியமாகக் கருதப்படுவதாகும்.
காளிதாசனின் இரகு வம்சத்தினை அதர்ப்பட மொழி பெயர்த்துத் தமிழிலே செய்யுணடையிலே பாடிய முதல்வர் அரசகேசரி எனும் ஈழத்து அரச மரபினராவர். அரசகேசரி ஈழத்தின் வட பிரதேசங்களை ஆட்சி புரிந்த ஆரியச் சக்கரவர்த்திகள் பரம்பரையினரில் எதிர்மன்ன சிங்கனின் (1591- 1615) தமையனாரும், அவன் புதல்வனின் ஆட்சிப் பொறுப்பாளரும் சங்கிலிகுமாரனாற் கொல்லப்பட்டவருமாவார். பதினாறாம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் அரசகேசரி வாழ்ந்தவர்.
அரசகேசரி பாடிய இரகு வம்சத்திலே முதற் பதினாறு படலமும் பொதுக்காண்டம் என்றும், அடுத்துவரும் ஆறு படலமும் சிறப்புக் காண்டம் என்றும், கடைசி நான்கு படலமும் பொதுச் சிறப்புக்காண்டம் என்றும் 1887 ஆம் ஆண்டுப் பதிப்பிற் குறிப்பிடப்பட்டுள்ளன. இப்பகுப்புக்குப் பாயிரத்திலோ அல்லது காண்டப் பிரிவின் ஈற்றுப் படலங்களிலோ ஆதாரம் இல்லை. மேலும் இருபத்தாறாவது குலமுறைப்படலத்தின் 33 ஆம் செய்யுள் மூலம் இரகுவம்மிசம் முழுவதாகக் கிடைக்கவில்லை என்று கருத இடமேற்படுகின்றது. இதனைப் பதிப்பாசிரியர் வித்துவ சிரோமணி ச. பொன்னம்பலபிள்ளையும் உணர்ந்திருக்கிறார். ஆயினும் இரகுவின் வம்மிசத்திலே குசனுக்குப் பின் வந்தவர்கள் சுருக்கமாகக் குறிப்பிடப்படும் படலத்திலேயே பாடல்கள் தவறிப் போயிருப்பதாற் சில பாடல்களே மறைந்தனவாதல் வேண்டும்.
அரசகேசரியின் இரகுவம்மிசத்திலே காப்புச் செய்யுளையும் ஒன்பது பாடலுடைய பாயிரத்தையும் அடுத்து ஆற்று, நாட்டு நகரப் படலங்கள் 165 பாடல்களிலே இடம் பெறுவன. இவற்றைத் தொடர்ந்து திலீபன் அரசியற்றுவதும், புத்திர பாக்கியம் இல்லாது வசிட்டரிடம் தன்குறை கூறுவதும், வசிட்டர் ஆலோசனைப்படி காமதேனுவின் கன்றாகிய நந்தினியை வழிபட்டு ஒழுகுவதும், நந்தினி அருளால் இரகு உற்பத்தியாவதும், திலீபன் யாகம் இயற்றுவதும், இரகுமுடிசூடித் திக்கு விசயஞ் செய்வதும், அவனுக்கு அயன் புத்திரன் பிறப்பதும், அயன் எழுச்சி பெறுவதும், சுயம்வரம் செய்வதும், கடிமணஞ் செய்து மீள்வதும், தந்தை இரகு கதியடைவதும், மனைவி இந்துமதி பிறப்பு நீங்குவதும், அயன் மகன் தசரதன் அரசியற்றி முனிபுதல்வனைக் கொன்று சாபமேற்றதும், புத்திர காமயாகம் இயற்றிப் புதல்வர் நால்வர் திருவவதாரஞ் செய்ததும், இராமன் தாடகையை வதைத்து வேள்வி காத்து அகலிகை சாபம் நீக்கி, சீதையை மணந்து, வனம் புகுந்ததும் இராவணனை வதஞ்செய்து, அயோத்தி மீண்டு அரசு
276

புரிந்து சீதையை விலக்கி இராமன் துன்புறும்போது சத்துருக்கன் இராவணனை வதைத்ததும், இராமன் சம்புகனை வதைத்ததும் இராமபிரான் முதலானோர் அவதாரம் நீங்கியதும் அடுத்து ஆறு படலங்களிலே 570 பாடல்களிற் கூறப்படுவன. இவற்றை அடுத்து குசன் அயோத்தி சென்றதும், வாகு வலயத்தைத் தொலைத்து மீளப் பெற்றதும் முடிசூடி அரசியற்றியதும் மூன்று படலங்களிலே 335 பாடல்களிலே கூறப்படுவன. குசன் பின் வந்தோர் வரலாறுகள் கூறும் குலமுறைப் படலத்திலே 33 பாடல்கள் கிடைத்துள்ளன. எனவே அரசகேசரியின் இரகுவமிசத்திலே 2444 பாடல்கள் இன்று கிடைக்கின்றன.
வித்துவசிரோமணி ச. பொன்னம்பலபிள்ளை இரகு வம்மி சத்தின் மூலத்தினை யாழ்ப்பாணம் வித்தியாநுபாலன யந்திர சாலையிற் சர்வசித்து வருடம் ஆவணி மாதம் (1887) பதிப்பித்தார். புன்னாலைக்கட்டுவான் மகாவித்துவான் சி. கணேசையர் முதற் பதினாறு படலங்களுக்கு எழுதிய உரை இரு பகுதிகளாக 1915 ஆம் 1932 ஆம் ஆண்டுகளிற் பதிப்பிக்கப் பட்டுள்ளன. சுன்னாகம் அ. குமாரசுவாமிப்புலவர் சில அருஞ் செய்யுட்களுக்கு விளக்கம் தந்து இரகுவமிசக் கருப்பொருள் எனும் நூலினை 1901 இலே வெளியிட்டார். புலோலி இ. கனகசபாபதிப் பிள்ளை அயனெழுச்சிப் படலத்தினை உரையுடனும் ஆங்கில மொழி பெயர்ப்புடனும் 1932 இலே பதிப்பித்தனர்.
மகாவித்துவான் ரா, ராகவையங்கார் (1870-1946) காளிதாசனின் இரகுவம்மிசத்தின் சில சருக்கங்களைத் தமிழிலே பெயர்த்துப் பாடியுள்ளார்.
சுன்னாகம் அ. குமாரசுவாமிப்புலவர் (1854-1922) எழுதிய இரகுவமிச சரிதாமிர்தம் 1930 இலே வெளிவந்தது.
புலோலி வ. கணபதிப்பிள்ளை (-1895) இரகுவம்ச காவியத் தினை வசனமூபத்திலே தமிழில் வழங்கியுள்ளார். முதலைந்து சருக்கத்தின் மொழிபெயர்ப்பு சென்னையில் 1874 இலே வெளி
வந்தது; ஏனையவை அச்சிட்ட விவரங்கள் அறியுமாறில்லை.
(பொ.பூ)
இரட்டையர்
இயற்பெயர் மறைந்து போயினமையால் இரட்டையர் என வழங்கப் பெற்றவர்; தமிழ் நாவலர் சரிதை வழங்கியுள்ள இளஞ்சூரியர், முதுசூரியர் எனும் பெயர்களும் (13) இயற்பெயர்கள் எனத் துணிதல் அரிது. இரட்டையர் என்ற சொல்லின் அடிப் படையிற் சிலர் ஒருதாய் வயிற்றுப்பிள்ளைகள் என்று கருத்து ரைத்துள்ளனர். ஒருவர் அம்மான் மகன் என்றும் மற்றவர் அத்தை மகன் என்றும் வழங்கும் கதை இரட்டையர் என்ற கருத்தை ஏற்பதற்குத் தடையாகவுள்ளது.
இரு புலவர் ஒருங்கு சேர்ந்து யாண்டும் போய் வருவதற்கான காரணத்தைக் கூற முனைந்தோர் ஒருவரைக் குருடராகவும் மற்றவரைச் சப்பாணியாகவும் படைத்துக் கொண்டனர்; இவ்வாறு கூறுவதற்கு எவ்விதமான சான்றுகளும் காணப்பெறவில்லை. புலமையால் நட்புரிமை பூண்டு ஒருவருக்கு மற்றொருவர் இன்றிய
இந்துக் கலைக்களஞ்சியம்

Page 323
மையாதவராய் இணை பிரியாமல் போய்ப் பாடி புகழுடன் வாழ்ந்த இரண்டு புலவர்களே இரட்டைப் புலவர் என்று வழங்கப் பெற்றனர்.
இரட்டையர் சோணாட்டினர் என்று சோழ மண்டலச் சதகம் கூறும். அதனுள் இடம் பெறும் வாகாம் பதியாமிலந் துறை (செய்யுள் 58) என்பதன் அடிப்படையிற் சிலர் இரட்டையர் ஊர் இலந்துறை என்றும் ஆமிலந்துறை என்றும் கூறுவர்.
இரட்டையர் ஏகாம்பரநாதருலாவிலே மல்லிநாதன், திருமல்லி நாதன் என்ற பெயர்களைப் பெற்ற சம்புவராயன் ஒருவன் செய்த திருப்பணிகளைக் குறிப்பிடுவர். ஏகாம்பரச் சம்புவராயன் காலத்தில் இரட்டையர் இருந்தார் என்று தொண்டை மண்டலச் சதகத்தில் இடம் பெறும் " மேதைப் புலவர்எண்” என்ற பாடல் உணர்த்துகின்றது. அப்பெயர் கொண்டவன், வென்று மண் கொண்ட சம்புவராயர் (1321-1339) என்பர்.
இரட்டையர் காலத்தவர் வில்லிபுத்தூராழ்வார். வில்லி புத்தூராழ்வாராற் பாரதம் பாடுவதற்குத் தூண்டுகோலாக அமைந்த வக்கபாகை வரபதி ஆட்கொண்டானை இரட்டையர் போற்றிப் பாடியுள்ளனர் (தமிழ் நாவலர் சரிதை, 107).
தெய்வீகவுலா எனவும் கச்சியுலா எனவும் அழைக்கப்படும் காஞ்சி ஏகாம்பரநாதருலா, தில்லைக் கலம்பகம், திருவாமாத்தூர்க் கலம்பகம் என்பன வற்றையும் தனிப்பாடல்களையும் இரட்டையர் பாடியுள்ளனர்.
திருவொற்றியூர் தியாகேசர் பஞ்சரத்தினமும் வடிவுடையம்மை பஞ்சரத்தினமும் தெய்வீக இரட்டைப்புலவர் பாடியவை யெனப் பதிப்பிக்கப்பட்டுள்ளன. வடிவுடை யம்மை பஞ்சரத்தினம் அபிராமியந்தாதியைக் குறிப்பிடுவதால் இரட்டையர் பாடியதெனல் பொருந்தாது. கச்சிக்கலம்பகம் ஒன்றினை இரட்டையர் பாடினார் எனப் புலவர்புராணமுடையார் கூறுவதற்கு ஆதார மில்லை. காஞ்சி ஏகாம்பரநாதர் வண்ணமும் மூவரம்மானையும் இரட்டையராற் பாடப்பட்டவை என்பர் சிலர். (பொ.யூ.)
இரண்டாம் ஆயிரம்
ஆழ்வார்களின் அருளிச் செயல்கள் நாலாயிரத் திவ்விய பிரபந்தமாகத் தொகுக்கப்பட்டுள்ளன. நாலாயிரத் திவ்விய பிரபந்தத்தினை முதலாயிரம், இரண்டாயிரம், மூன்றாம் ஆயிரம், நான்காம் ஆயிரம் என வகுத்துரைக்கும் மரபுண்டு. இவற்றிலே இரண்டாம் ஆயிரம் பெரிய திருமொழி எனவும், மூன்றாம் ஆயிரம் இயற்பா எனவும் நான்காம் ஆயிரம் திருவாய் மொழி எனவும் அழைக்கப்படுதலுமுண்டு.
இரண்டாம் ஆயிரத்திலே தந்திவர்மன் காலத்தில் (796-846) வாழ்ந்த திருமங்கையாழ்வார் பாடிய பெரிய திருமொழி, திருக்குறுந்தாண்டகம், திருநெடுந்தாண்டகம் எனும் முன்று பிரபந்தங்கள் இடம் பெறுவன. பெரிய திருமொழியிலே பதினொரு பத்துகளில் நூற்றெட்டுப் பதிகங்களிலே 1084 திருப்பாசுரங்கள் இடம் பெறுவன; பத்தாம் பத்தின் ஏழாம் திருப்பதிகத்திற்
இந்துக் கலைக்களஞ்சியம்

பதினான்கு திருப்பாசுரமுள. ஏனைய 107 திருப்பதிகங்களிலும் பத்துப் பாசுரமுறை ஒழுங்காகவுள்ளது; இத்திருப்பதிகங்கள் அறுசீர் ஆசிரிய விருத்தம், ஏழுசீர் ஆசிரிய விருத்தம், எண்சீர் ஆசிரிய விருத்தம், ஆசிரியத்துறை, வெண்டுறை, கலிவிருத்தம், சந்தக்கலிவிருத்தம் , கலிநிலைத்துறை, கலித்தாழிசை, கொச் சக்ககலிப்பா, வஞ்சிவிருத்தம் எனும் யாப்பமைதிகளாற் பாடப்பட்டுள்ளன.
திருக்குறுந்தாண்டகத்தில் இருபது அறுசீர் ஆசிரிய விருத்தங்களும் திருநெடுந்தாண்டகத்தில் முப்பது எண்சீர் ஆசிரிய விருத்தங்களும் இடம் பெறுகின்றன. அப்பர் சுவாமி களின் தாண்டக யாப்பினைத் திருநெடுந்தாண்டகத்திலும் திருநேரிசையாப்பினைத் திருக்குறுந்தாண்டகத்திலும் காணலாம்.
பெரிய திருமொழியின் பதிகங்களின் ஈற்றுப் பாடல்களும் தாண்டகங்களின் ஈற்றுப் பாடல்களும் பலசுருதிப் பாட்டு அல்லது திருநாமப்பாட்டு எனப்படும் வகையின; சம்பந்தப் பெருமானின் திருக்கடைக் காப்பினை ஒத்தவை.
இரண்டாம் ஆயிரத்திற்குப் பெரியவாச்சான் பிள்ளை எழுதிய வியாக்கியானம் உண்டு. திருநெடுந்தாண்டகத்திற்கு பராசரபட்டர் வியாகியானம் எழுதியுள்ளார்.
பூரீ சர்மாசாரியர் 1856 இலே பெரிய திருமொழியைப் பதிப்பித்துள்ளார். கே. பூரீ நிவாஸ் முதலியார் (1861), முடிச்சூர் அப்பா முதலியார் (1865), ஊ, புஷ்பரதச் செட்டியார் (1885), அரசபணி பாலை கந்தாடை கிருஷ்ணமாசார்யர், சி. கே. திருவேங்கடாசார்யர் (1898),பூரீ நிவாச வரதாசாரியர் (1898) முதலியோர் பத்தொன்பதாம் நூற்றாண்டிலே பதிப்பித்தவர்கள்; இருபதாம் நூற்றாண்டிலே காரப்பங்காடு பூரீ கோபாலச்சாரியர் (1908), அ.க. கிருஷ்ணமாசார்யர் (1912), சே. கிருஷ்ண மாச்சாரியர் (1928), பி. இரத்தினநாயகர்ஸன்ஸ் (1938), ரி.சி. பார்த்தசாரதி அய்யங்கார் (1939), ம. பாலசுப்பிரமணிய முதலியார் (1943) முதலியோர் திவ்வியப்பிரபந்தத்தைப் பதிப்பித்துள்ளனர். மர்ரே அண்டு கம்பெனி 1956 இலே பெரிய திருமொழி மூலத்தினை நன்முறையிலே பரிசோதித்துப் பதிப்பித்தனர். காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியர் திவ்யார்த்த தீபிகையுரையுடன் பல முறை பதிப்பித்துள்ளார். (பொ.யூ.)
இரண்டாம் திருவந்தாதி
பொய்கையாழ்வாரின் திருவந்தாதியை அடுத்துத் தொகுக்கப் பெற்றமையால் இரண்டாம் திருவந்தாதி என்ற பெயரினைப் பெற்றது. வைணவ திருப்பாசுரங்களின் தொகுப்பாகிய நாலாயிரத்திவ்விய பிரபந்தத்திலே இயற்பா எனும் பிரிவிலே இடம் பெறுவது. இதனுள் நூறு வெண்பாக்கள் உள்ளன.
இரண்டாம் திருவந்தாதியை பாடியவர் பூதத்தாழ்வார். இவர் ஏழாம் நூற்றாண்டின் கடைக்கூறிலும் எட்டாம் நூற்றாண்டின் முற்கூறிலும் வாழ்ந்தவர்.
277

Page 324
தமிழ் வைணவ பக்தி இலக்கியத்தின் முன்னோடிகளில் ஒன்றான இரண்டாம் திருவந்தாதி சுய உணர்வுகளை எடுத்துக் காட்டும் ஆக்கமாக மிளிர்கின்றது. திருமாலின் அவதாரங்களையும் அவற்றின் நிகழ்ச்சிகளையும் போற்றிப் பாடுவதுடன் அவர் எழுந்தருளிய கோயில்களையும் அவற்றின் இயற்கை அழகினையும்
வியந்து கூறுவதையும் வெண்பாக்கள் காட்டுகின்றன.
(பொ.பூ)
இரண்டாவது திருமுறை
சைவர்களின் பன்னிரு திருமுறைகளிலே முதல் மூன்று
திருமுறைகளும் திருஞானசம்பந்த மூர்த்திநாயனார் பாடியருளிய திருப்பதிகங்களின் தொகுப்புகளாம்.
திருஞானசம்பந்தரும் திருநாவுக்கரசரும் சமகாலத்தவராவர். அரசியலிலிருந்து ஒய்வு பெற்றுச் செங்காட்டங்குடியிலே சிறுதொண்டர் தங்கியிருந்த போது சம்பந்தர் அவரைச் சந்தித்ததாகப் பெரிய புராணம் கூறும் (வார்வன, சரு. 3148), சிறுத்தொண்டர் பல்லவன் படைக்குத் தலைமை தாங்கி வாதாபி கொண்டது, கி.பி. 642 இல் என்று கூற இடமுண்டு. எனவே சந்திப்பு நிகழ்ந்தது 642க்குப் பின்பாகும். பெரியபுராணம் சிறுதொண்டரைச் சந்தித்துவிட்டுச் சம்பந்தர் திருமருகல் சென்று, பின்பு திருப்புகலூரிலே தங்கியிருந்த காலை அப்பரைச் சந்தித்ததாகக் கூறும். திருமறைக் காட்டிலே அப்பரையும் சுந்தரரையும் மங்கையர்க்கரசியும் குலச்சிறையாரும் சந்தித்ததை அடுத்தே சம்பந்தர் பாண்டியநாடு ஏகிப் பாண்டியனைச் சைனத்தி லிருந்து மீட்டனர் என்றும் பெரிய புராணம் கூறுகின்றது. சம்பந்தர் மீட்ட பாண்டியன் அரிகேசரி மாறவர்மன் (640-690). எனவே சம்பந்தர் ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்தவராவர்.
சம்பந்தர் பாடிய திருப்பதிகங்களையுடைய இரண்டாம் திருமுறையிலே 122 திருப்பதிகங்களுள்ளன. இத்திருப்பதி கங்களிலே 1326 திருப்பாடல்கள் முழுப் பாடல்களாகவும் ஐந்து திருப்பாடல்கள் அடி குறைந்த பாடல்களாகவும் காணப்படுவன. இத் திருப்பதிகங்களிலே 103 திருப்பதிகங்கள் பதினொரு திருப்பாடல்களையுடையவை என்பது நோக்கத்தக்கது.
இந்தளம், சீகாமரம், காந்தாரம், பியந்தைக் காந்தாரம், நட்டராகம், செவ்வழி எனும் ஆறு பண்களிலமைந்த திருப்பதி கங்கள் இரண்டாந் திருமுறையிலே தொகுக்கப் பெற்றுள்ளன.
இத்திருமுறையில் இடம்பெறும் திருப்பதிகங்களிலே 120 தலப்பதிகங்கள்; இருபதிகம் பொதுப்பதிகங்கள். தலப்பதிகங்கள்
90 திருத்தலங்கள் பற்றியவை.
சம்பந்தர் திருப்பதிகங்களிலே பொதுவாக ஒரு அமைப்புப் பேணப்பட்டுள்ளது. முதலேழு திருப்பாடல்களிலே தலமூர்த்தியின் அருமை பெருமை ஆற்றல் முதலிய பண்புகளும் அடியார் தொண்டின் சிறப்பும் தல இயற்கை வனப்புடன் கூறப்படுகின்றது. எட்டாவது திருப்பாடல் இராவணன் மலையெடுத்து வருந்தி இறைவனைப் போற்றும் செய்தி கூறுவது இங்கு காணப்படு
278

கின்றது; ஒன்பதாவது திருப்பாடல் பிரமனும் திருமாலும் அடிமுடி தேடிய செய்தி கூறுவது; பசு ஞானத்தாலும் பாச ஞானத்தாலும் இறைவனை உணர்தல் முடியாது என்பதையும் அவன் அருளாலேயே அவனை உணர முடியும் என்பதையும் இங்கு காணலாம். பத்தாவது திருப்பாடல், புறச்சமயத்தாரைக் கூறுவது; அவர்களின் நெறி துயர் விளைவிப்பன என்பதை இங்கு வற்புறுத்தல் காணலாம். பதினோராவது பாடல், திருக்கடைக் காப்பு பக்தியுடன் பயின்று பாடுவோர் அடையும் நற்பயன்களைக் கூறுவது.
திருஞானசம்பந்த சுவாமிகளின் திருப்பதிகங்களைக் காஞ்சிபுரம் மகாவித்துவான் கோ. சபாபதிமுதலியார் 1864 இலே பதிப்பித்தனர்; தேவாரம் தலமுறையை மதுரை இராம சுவாமிப்பிள்ளை (1881), திருமயிலை செந்தில் வேலு முதலியார் (1893), வண்ணை சி. சுவாமிநாதபண்டிதர் (1911) என்போர் பதிப்பித்தனர். காஞ்சி நாகலிங்கமுனிவர், கயப்பாக்கம் சதா சிவச்செட்டியார் பதிப்பு விவரங்கள் தெரியவில்லை. சென்னை சைவ சித்தாந்த மகாசமாஜம் திருஞானசம்பந்த மூர்த்திசுவாமிகள் தேவாரத்தை 1931, 1936 ஆம் ஆண்டுகளிற் பதிப்பித்துள்ளது. திருப்பனந்தாள் பூரீ காசிமடம் 1950 இலே தி, பட்டுச்சாமி ஒதுவார் குறிப்புரையுடன் திருஞானசம்பந்தசுவாமிகள் அருளிச் செய்த தேவாரப் பதிகங்களைப் பதிப்பித்தது. தரமபுர ஆதீனம் முத்து சு. மாணிக்கவாசக முதலியாரின் குறிப்புரையுடன் இரண்டாவது திருமுறையை 1954 இலே பதிப்பித்துள்ளது. (பொ.யூ.)
இரணியவர்மன்
தென்னார்க்காடு மாவட்டத்திற் சிதம்பரம் தாலுகாவின் தலைமைப்பட்டணம் சிதம்பரம், சைவர்களால் கோயில் என்று சிறப்பிக்கப்படுவது தில்லை, புலியூர், பெரும்பற்றப் புலியூர் முதலிய பல பெயர்களையுடையது.
தில்லையில் எழுந்தருளியிருக்கும் நடராஜப் பெருமான் ஆனந்த தாண்டவமூர்த்தியாக அருள் புரிந்து கொண்டிருக்கிறார். கூத்தப் பெருமானின் பெருமையைப் போற்றிப் புகழும் தேவாரமும் திவ்விய பாடல்களும் பலவுள. நடராசமூர்த்தியின் திருத்தலம் பற்றிய மான்மியம் கூறும் பிரபந்தங்களும் பலவுள.
தில்லைக்கூத்தனின் சந்நிதியிலே சித்சபை, கனகசபை, தேவசபை, நிருத்தசபை, இராஜசபை எனும் ஐந்து திருச் சபைகளுண்டு. சித்சபையே சிற்றம்பலம் என்றும் பொன்னம்பலம் என்றும் போற்றப்படுவதாகும். இங்கு கருவறையிலே நடராஜப் பெருமான் சிவகாமி சுந்தரியம்மையுடன் எழுந்தருளியிருக்கிறார். சிற்றம்பலத்திற்கு எதிரேயுள்ளது கனகசபை, தேவசபையே பேரம்பலம் என்று பேர் பெற்றது. நிருத்தசபை தேர் அமைப்பினை உடைய சிற்பாலயம், இராஜசபை ஆயிரங்கால் மண்டபம்,
தில்லைச் சிற்றம்பலத்தைப் பொன்வேய்ந்தவன் இரணிய வர்மன் எனப்படும் சிங்கவர்மன் என்று கோயிற் புராணம், சிதம்பரமான்மியம் முதலியன கூறுவன. இவற்றிலே உடம்பிலே தோன்றியிருந்த சிங்கம் போன்ற வெண்ணிற நோயை அடைந்த சிங்கவர்மன் தீர்த்த யாத்திரை புறப்பட்டு, தில்லைக்
இந்துக் கலைக்களஞ்சியம்

Page 325
குளத்தில் நீராடி நோய் நீங்கி இரணியவர்மனாய் சிற்றம்பலத்தைப் பொன் வேய்ந்தும் வேறு திருப்பணி செய்தும் வாழ்ந்த செய்திகள் கூறப்படுவன.
இவை கூறும் இரணியவர்மனுக்கு முன் பொன் வேய்ந்த செய்தி அறியுமாறில்லை. சிம்மவர்மன் என்ற பெயரில் பல்லவர் மூவர் கி.பி. ஏழாம் நூற்றாண்டிற்கு முன்பு அறியப்படுகின்றனர். இவர்களிலே இரண்டாம் சிம்மவர்மன் வைணவச்சார்பு மிக்கவன். முதலாம் சிம்மவர்மன் ஆட்சிக்காலம் கி.பி. 436-458, மூன்றாம் சிம்மவர்மன் ஆட்சிக் காலம் கி.பி. 580-586. இவ்விருவருள் ஒருவனே கோயிற் புராணம் முதலியவை சுட்டும் சிம்மவர்மனாதல் தகும்.
எனவே தில்லைச்சிற்றம்பலம் கி.பி. ஐந்தாம் அல்லது ஆறாம் நூற்றாண்டிலே பொன்னம்பலமாக மாறியது எனலாம். சோழப்பேரரசரும் பாண்டியப்பேரரசரும் பல்லவருக்குப் பின் தில்லைத்திருக்கோயிலை அணிசெய்து பெரு மையடைந்தனர். பின்வந்த அரசமரபினரும் தில்லைக்குத் திருப்பணி செய்ய முந்தி நின்றுள்ளனர்.
தேவாரமுதலிகளுக்கு முன் வாழ்ந்த திருமூலநாயனார் பொன்னம்பலத்தைப் போற்றும் முன்னோடியாவார் (2740, 2777). (பொ. பூ)
இரணியன் வதைப்பரணி
திருச்சிக்கு வடக்கே மூன்று மைல் தொலைவிலுள்ளது வைணவர் கோயில் எனப் போற்றும் திருவரங்கம். திருவரங் கத்தின் வடக்குக் கோபுர வாசலால் உள் நுழைந்ததாற் புலப்படும் சந்திர புட்கரணிக்குத் தெற்கேயுள்ள சந்நிதியில் நின்ற திருக் கோலத்தோடு வடக்கு நோக்கியுள்ள மேட்டழகிய சிங்கப் பெருமானைப் பாட்டுடைத் தலைவனாக வைத்து இரணிய சம்ஹாரத்தையும் பிரகலாதன் வைண பக்தியையும் புலப்படுத்தும் பிரபந்தம் இரணியன் வதைப்பரணி.
தக்கயாகப் பரணி போன்று புராணச் சார்புடையது இரணியன் வதைப்பரணி. கடவுள் வாழ்த்து, கடைதிறப்பு, காடு பாடியது, கோயில் பாடியது, தேவியைப் பாடியது, பேய்களைப் பாடியது, இந்திரசாலம், பேய்முறைப்பாடு, கூளிகூறியது, போர் பாடியது, களம் காட்டல், கூழடுதலும் இடுதலும், வாழ்த்து எனும் பதின்மூன்று உறுப்புகள் 693 கண்ணிகளிலே பாடப் பெற்றுள்ளன.
இரணியன் வதைப்பரணி ஆசிரியர் இன்னார் என்று துணிந்து கூறலரிது, பதினாறாம் நூற்றாண்டில் வாழ்ந்த திருக்குருகைப் பெருமாள் கவிராயர்தாம் ஆசிரியர் என்று சிலர் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
சு. நல்லசிவன்பிள்ளை இரணியன் வதைப்பரணியைச்
“செந்தமிழ்" சஞ்சிகையின் 15 ஆம் 16 ஆம் தொகுதிகளிலே வெளிப்படுத்தியுள்ளார். (பொ.யூ.)
இந்துக் கலைக்களஞ்சியம்

இரத்தினம் நவரத்தினம் , திருமதி
திருமதி இரத்தினம் நவரத்தினம் யாழ்ப்பாணத்திலே பிறந்தவர் ச. செல்லையா தம்பதிகளின் புதல்வி, காசிப்பிள்ளை நவரத்தினம் அவர்களை 1947 இலே திருமணஞ் செய்தவர்.
சென்னை பிரசிடென்சி கல்லூரி, அண்ணாமலைப் பல்கலைகழகம், இலண்டன் கல்விக்கழகம் என்பனவற்றிலே கற்று பி.ஏ.எம். ஏ, எம்.லிட் முதலான பட்டங்களைப் பெற்றவர்; பாரதிதாசன் பல்கலைக்கழகத்தினரால் 1984 இலே கெளரவ கலாநிதிப்பட்டம் வழங்கப் பெற்றவர்.
யாழ்ப்பாணம் மருதனார் மடம் இராமநாதன் கல்லூரியிற் பத்து வருடம் வரை அதிபராகச் சேவை புரிந்தவர்; 1944 இலே கல்வித் திணைக்களத்திலே பணிபுரியத் தொடங்கி, வடபிராந்திய கல்விப் பணிப்பாளராக உயர்ந்து 1968 இலே ஒய்வு பெற்றவர்.
உலக அரங்கிலே பல மாநாடுகளிலே பங்கு பற்றியதோடு அமையாது அரிய சொற்பொழிவுகளுமாற்றியவர்; சிறப்புச் சொற்பொழிவுகளுக்கென அழைத்துக் கெளரவிக்கப் பெற்றவர்; அகில இலங்கை சைவமங்கையர் சபைத் தலைவராகப் பணி புரிந்தவர்.
யாழ்ப்பாணம் கொழும்புத்துறையில் வசித்த அம்மையார், பூரீ யோகர் சுவாமிகளின் பிரதான சீடர்களில் ஒருவர்.
குருவின் பாடல்களையும் வசனங்களையும் நற்சிந்தனை எனத் தொகுத்தளித்தவர்; சிவ யோகசுவாமிகள் பிள்ளைத் g, 6 p (1965) LITig L 6)Jf; 1972 966.) Saint Yogaswami and The Testament of Truth எனும் ஆங்கில நூலை எழுதியவர்; இந் நூலிலே நற் சிந்தனையிலுள்ள போதனைகள் சிலவற்றை ஆங்கில உலகுக்கு அறிமுகப்படுத்துவதோடு சுவாமிகளின் வாழ்க்கையின் சுருக்கத்தையும் அவர் வரலாற்றின் முக்கியாம்சங்களையும் ஆசிரியர் எடுத்துக் காட்டியுள்ளார்.
திருவாசகத்தினை நுண்மையாக ஆய்ந்து புதுமுறையில் விளக்கிய பெருமை அம்மையாருக்குண்டு (A New Approach To TiruvaSakam; Tiruvasakam, The Hindu Testament of Love) அண்மையிலே பெரியபுராணத்தின் அடிப்படையிற் சிவ தத்துவத்தை அணுகும் ஆய்வொன்றினைச் செய்துள்ளார். (The Vision of Siva. In Periyapuranam 1987).
முருகனைப் பற்றியும் பிள்ளையாரைப் பற்றியும் கிடைக்கும் சான்றுகளைத் துருவியெடுத்து விளக்கமளித்துள்ளார். (Kartikeya, The Divine Child 1973, Aum Ganesha, The Peace of God 1978)
சைவசித்தாந்தத்தினை எளிமையாகவும் தெளிவாகவும் ஆங்கிலத்தில் விளக்கி அம்மையார் ஆற்றிய சொற்பொழிவுகள் (Siddhanta Saivam in Essence And Manifestation 1979) 6T66T60)th நூல் வடிவம் கொண்டுள்ளது. (பொ.பூ.)
279

Page 326
இரத்தினவேலு முதலியார்
தமிழ்நாடு ஈக்காடு என்னும் ஊரினர்; பத்தொன்பதாம் நூற்றாண்டின் கடைக்கூறிலும் இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் வாழ்ந்தவர்.
குகனேரியப்பரின் உபதேச காண்டத்திற்கு உரை கண்டவர்; கச்சியப்பமுனிவரின் விநாயக புராணம், அதிவீரராம பாண்டியனின் காசிகண்டம், பரஞ்சோதி முனிவரின் திருவிளையாடற் புராணம் என்பனவற்றை உரையுடன் பதிப்பித்தவர்; வீரகவிராயரின் அரிச்சந்திர புராணத்திற்குத் திரிசிரபுரம் வீ. கோவிந்தப்பிள்ளை எழுதிய உரையையும் காணியம் பாக்கம் மு. சண்முகமுதலியார் பதிப்பித்த கம்பனின் ஆரணிய காண்டத்தையும் பரிசோதித்தக் கொடுத்தவர்; சிவ
மகாபுராணத்தை வசனமாக மொழி பெயர்த்துத் தந்தவர்.
(பொ.யூ)
இரத்தினேசுவரஐயர், வ,மு.
யாழ்ப்பாணம் உடுவிலைச் சேர்ந்தவர்; வண்ணார் பண்ணையில் வசித்தவர்; தமிழ்ப் பண்டிதர்; பிரசங்கசபாமணி எனப் போற்றப் பெற்றவர்; சுன்னாகம் அ. குமாரசுவாமிப் புலவரிடம் வண்ணை சைவப்பிரகாச வித்தியாசாலையிலே தமிழ் இலக்கியலக்கணங் கற்றவர்.
இலங்கை, இந்தியா, பர்மா முதலிய நாடுகளில் ஆசிரியராகப் பணிபுரிந்தவர், செட்டி நாட்டிலே சிவநேசன் பத்திரிகையில் நீண்டகாலம் சேவையாற்றியவர்; புராணங்களுக்குப் பயன் சொல்லும் யாழ்ப்பாணத்துப் பரம்பரையை இந்நூற்றாண்டின் அறுபதுகளிலும் பேணிப் பல இடங்களிலும் புராணங்களுக்குப் பயன் சொல்லி வந்தவர்.
நல்லூர் கந்தசுவாமி பஞ்சரத்தினமும் தனிமுதற் பாக்களும் பாடியவர்; வரதபண்டிதரின் கண்ணியவளை குருநாதசுவாமி கிள்ளைவிடுதூதை முதன் முதலாகப் பதிப்பித்தவர்.
இவர் தம் பிரசங்கங்கள், கட்டுரைகள் ஆகியனவற்றிற் சில நூலுருவம் பெற்றுள்ளன. (பொ.யூ.)
இரதோற்சவம்
தேர் பண்டைக் காலம் முதல் தமிழர் பண்பாடு உள்ளிட்ட இந்திய பண்பாட்டிற் குறிப்பிடத்தக்க இடம் பெற்று வந்துள்ளது. போர்க் கருவியாகவும் போக்குவரத்து வாகனமாகவும் அதற்கு இடமிருந்து வந்துள்ளது. தேர்ப்படை இந்திய அரசர் படை வகுப்புகளில் முக்கியத்துவம் பெற்றது. மகாபாரதத்தில் கிருஷ்ணபரமாத்மா பார்த்தனின் தேர்ச்சாரதியாக நின்று போதித்ததே பகவத்கீதை, பத்துத் திசைகளிலும் தேரோட்டிப் பேர் பெற்றவன் தசரதன், தேர்வண்கிள்ளி, தேர்வண்பாரி, தேர்வண்மலையன் பழைய தமிழ்ப் பாடல்களிலே இடம் பெறுவர். வேள்விக் குடிச்சாசனம் மான்தேர் மாறனைக் கூறுகின்றது. முல்லைக்குத் தேர் கொடுத்த பாரியைப் பண்டைய சான்றோர்
280

போற்றிப் புகழ்ந்துள்ளனர். மனுநீதிகண்டசோழன் தன் மகனைத் தன் கோல்வளையாது நிற்கத் தன் தேர்ச்சில்லாலேயே தண்டித்த நிகழ்ச்சி கற்றோராற்ப் போற்றப்படுவது. பண்டைய தமிழ் அகப்பாடல்களில் முல்லைத்திணைப் பாடல்கள் தேரிலே மீளும் தலைவனைப் பலவாறு சித்திரித்துள்ளன.
உலகியலிற் பயன்பட்ட தேர் இறைவனுக்கும் ஊர்தியாக மாறுகின்றது. அவ்வூர்தியிலே அவன் எழுந்தருளித் திருக் கோயில் ஆண்டுவிழா, மகோற்சவம் அல்லது பிரமோற்சவம் எனும் நைமித்திய உற்சவத்திலே, தேர்வீதிகளிலே பவனி வருவது, தேர்த்திருவிழா அல்லது இரதோற்சவம் எனப்படும். இரதோற் சவம் பிரமோற்சவத்தில் அதி முக்கியத்துவம் வாய்ந்ததும் பிரபல்லியம் மிக்கதுமான திருவிழாவாகும்.
மணிமேகலையிலே விழாக் காலத்துப் புகார் நகரக் காட்சிகளைக் கூறுமிடத்து முருகன் தேர்த்திருவிழா குறிப்பிடப் படுகின்றது. கி.பி. ஐந்தாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் இந்தியா வந்த சீன யாத்திரிகன் பாஹியன் தான் கண்ட தேரோட்ட விழா வினைத் தன் நூலிலே குறிப்பிடுகிறான். சோழப் பெருமன்னர் காலத்திலே தேர்த்திருவிழா பெருஞ் செல்வாக்குப் பெறுவதைச் சாசனங்கள் உணர்த்தி நிற்கின்றன.
முதலிலே கோயில் வடிவிலேயே தேர் கோயிலுக்கு அமைக்கப்பட்டுள்ளது, என்பது தேரின் இலக்கணக் குறிப்புகளில் இருந்து அறியமுடிகின்றது. மாமல்லபுரத்துக் கற்றளிகள் இரதம் என வழங்கப்படுவது கவனிக்கத்தக்கது. மேலும் காரணாகமமும் குமரா தந்திரமும் தேரின் பல்வேறு பகுதிகளையும் சிவபிரான், முருகப் பெருமான் பரிவாரங்களிலுமுள்ள ஒவ்வொரு தெய்வத் தோடும் தொடர்புறுத்திக் கூறலும் நோக்கத்தக்கது.
கடோபநிடதத்தில் மனிதனுடைய உடலைத்தேராகவும் உயிரைத் தேர்த்தலைவனாகவும் புலங்களைக் குதிரைகளாகவும் புத்தியைத் தேர்ப்பாகனாகவும் புலங்கள் பற்றும் விடயங்களைத் தேரோடும் வீதியாகவும் வருணிக்கும் முற்றுருவகம் ஒன்று காணப்படுகின்றது. ஞானாமிர்த ஆசிரியர் உடலாம் தேரில் உயிராம் அரசன் உலகமாம் மாடவீதியில் உலா வருதலை அழகுற உருவகப்படுத்தியுள்ளார். (14)
சைவநூல்கள் இரதோற்சவம் பஞ்சகிருத்தியங்களில் அழித்தல் தொழிலை உணர்த்துவதாகக் கூறுவன. சிவபிரான் திரிபுராந்தகரைத் தேரிலேறி அழித்த வீரட்டம் இதனை உணர்த்துகின்றது. தாரகாட்சன், கமலாட்சன், வித்யுன்மாலி எனும் அசுரர் இரும்பு, வெள்ளி, பொன்னாலமைந்த மூன்று கோட்டை களுக்கு உரியவர்களாகிச் சகலரையும் நலிவித்து வந்தபோது சிவபிரான் நலிந்தோரைக் காக்கத் திருவுள்ளம் பற்றிப் பூமியைத் தேராகவும் விண்மீன்களை விதானமாகவும், சூரிய சந்திரரைச் சக்கரமாகவும், வேதங்களைக் குதிரை களாகவும் பிரமனைச் சாரதியாகவும் மேருவை வில்லாகவும், வாசுகியை நாணாகவும், விஷ்ணுவை அம்பாகவும் கொண்டு புறப்பட்ட போது, தேவர் தம் துணையாலே சிவன் அசுரரை வெல்லப் போகிறார் என்று செருக்குற்றதை அறிந்து அவர்களின் அறியாமையை நினைந்து
இந்துக் கலைக்களஞ்சியம்

Page 327
புன்னகை புரிந்த மாத்திரத்தே அசுரர் எரிந்து சாம்பராயினர்; இக்கதை யசுர்வேதம், இலிங்க புராணம், ஸ்கந்த புராணம், மகாபாரதம், வால்மீகி இராமாயணம் முதலிய வடமொழி நூல்களில் மட்டுமன்றிப் பழந்தமிழ்ப் பாடல்களிலும் கூறப் பட்டுள்ளது. (புற 55.1-5; பரி. 5.22-27, கலி. 2,4-6; திருமுருகு, 154). சிலப்பதிகாரம் திரிபுராந்தகரை அழித்த வீரட்டத்தோடு தொடர்புடைய கொடுகொட்டி, பாண்டுரங்கம் என்ற இரு சிவ நடனங்களைக் கூறுகின்றது. (6.40-). திருமூலர் திரிபுரதகனம் மும்மலத்தை அழித்தன் குறியீடு என்று கூறுவர். ("அப்பணி செஞ்சடை').
கோயிலுக்குச் செல்ல முடியாத நோயாளிகள், கர்ப்பிணிகள் முதலியோர் வீதிவலம் வரும் உற்சவமூர்த்தியைத் தரிசித்துப் பலன் பெறும் வாய்ப்பினை இரதோற்சவம் அளிக்கின்றது. தீட்சை பெறாதோர், தீயோர் முதலியோர் உற்சவ மூர்த்தியைத் தரிசித்து சாம்பவ தீட்சை பெறவும் இரதோற்சவம் உதவுகின்றது என்பர். ஊர்மக்களைச் சாதிபேதம், உயர்வு தாழ்வு இன்றி ஒன்றுபட்டுச் செயலாற்ற இரதோற்சவம் வழிகாட்டுகின்றது. தேர் வடத்தின் முன்னே எல்லாப் பேதங்களும் ஒழிந்து நிற்கும் காரியத்தை வியக்காமல் இருக்கமுடியாது.
தேர்த்திருவிழா பொதுவாக மகோற்சவத்தின் கடைசி நாளாகிய தீர்த்தத் திருவிழாவுக்கு முன்தினம் நடைபெறும். காமிகாகமமும் காரணகாமமும் ஏழாம் நாள் திருவிழா, தேர்த்திருவிழா என்றும் சுவாயம்புவாகமம் எட்டாம் நாள் திருவிழா, தேர்த்திருவிழா என்றும் கூறுவன.
காரணாகமமும் குமாரதந்திரமும் இரதோற்சவத்தினை விரிவாக விவரிக்கின்றன. குமாரதந்திரம் மூன்று சக்கரம் முதல் பத்துச் சக்கரம் வரையுள்ள எட்டு வகைத் தேர்களைக் கூறுகின்றது. குமாரதந்திரம் இருசக்கரத்தேரினைக் கூறா விடினும் காமிகாகமமும் காரணாகமமும் அதனைக் கூறுவன. மானசாரம் எனும் சிற்பநூல் தேரமைப்பினை விரிவாகக் கூறுகின்றது. சதுரவடிவமான தேரை நாகரம் என்றும் எண் கோண வடிவமான தேரைத் திராவிடம் என்றும் வட்டவடிவ மான தேரை வேஸரம் என்றும் அறுகோணவடிவமான தேரை அந்திரம் என்றும் கூறுவர்.
பெரும்பான்மையான தேர்கள் மரத்தேராக இருப்பினும் பொன், வெள்ளி முதலிய உலோகங்களால் ஆகிய தேர்களும் அரிதாக உள்ளன. இவற்றைவிட அகலமாக அமையும் கற்றேர் களும் பாரம்பரியத்தின் விளக்கமாக அமைக்கப்பட்டுள்ளன. சிதம்பரம், கடம்பூர், திருவாரூர், தாராசுரம், கோனாரக், அம்பி ஆகிய இடங்களில் கவர்ச்சிமிக்க கற்றேர்கள் சிற்ப வடிவிலே அமைந்து சிறந்து நிற்கின்றன.
மதுரை, சிதம்பரம், பூரீரங்கம், திருவாரூர் போன்ற இடங்களிலே தேர்த் திருவிழா ஒரு வடத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட முறை நடைபெறுகின்றது. இவ்விடங்களிலே மகோற்சவம் ஒன்றுக்கு மேற்பட்ட முறை நடைபெறும். திருக்கோயிலில் ஒரு தேர் முதலாக ஐந்து தேர்வரை அவற்றின் வசதிக்கு ஏற்ப இருப்பதைக் காணலாம். சைவக் கோயிலிலே பஞ்ச மூர்த்திக்குத்
இந்துக் கலைக்களஞ்சியம்

தேர்த் திருவிழா உரியதாதலால் வசதியுள்ள சைவக் கோயில்களில் ஐந்து தேர் காணப்படலாம். ஈழத்திலே மாவை முருகன் கோயிலிலும் ஐந்து தேர்கள் இருந்தன. சுதுமலை அம்மன் கோயிலிலும் கொக் கட்டிச் சோலை தான்தோன்றீசுவரர் கோயிலிலும் மூன்று தேர் இருந்தன. “திருவாரூர் தேர் அழகு" என்ற முதுமொழி அவ்வூர்த் தேரின் சிறப்பினை உணர்த்தியது. இத்தேர் எரிந்து போன பின்பு, அதனிலும் சிறியதொரு தேர் பின்பு செய்யப்பட்டது. ஈழத்திலே நயினை நாகம்மாள் தேரும், நல்லைமுருகன் தேரும் கொக்குவில் கிருபாகர சிவசுப்பிர மணியசுவாமி தேரும் அழகுமிக்க தேர் வரிசையில் இடம் பெறத்தக்கவை. வட இந்தியாவில் ஒரிஸ்ஸா பூரி ஜகன்னாதர் கோயில் தேர் பிரசித்தமானது. அங்கு விஷ்ணு, சுபத்திரா, பலராமனுக்கு ஒவ்வொரு வருடமும் புதிதாக மூன்று தேர் அமைக்கப்படும் என்பர்.
தேர்த்திருவிழாவின் முதனாள் மாலை அல்லது தேர்த்திரு விழாவன்று காலை உற்சவமூர்த்தியை மஞ்சத்திலே அழைத்துச் சென்று தேரிலே எழுந்தருளச் செய்வது மரபு. சிவன் கோயிலிலே பொதுவாக உற்சவமூர்த்தி சோமாஸ்கந்தராக அமைவார். இங்கு பஞ்சமூர்த்திக்கு உரியதாகத் தேர்த்திருவிழா அமையும். சோமாஸ்கந்தர், சக்தி, கணேசர், தெய்வானை வள்ளி சமேத முருகன், சண்டேசர் என்போரே பஞ்சமூர்த்திகள். கணேசப் பெருமான் வழிகாட்ட மற்றையோரும் தொடர்வது சிவன் கோயில் தேர்த் திருவிழாவில் கண்கொள்ளாக் காட்சியாகும்.
தோரணங்களாலும் கொடிகளாலும் விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்ட தேர் மணிகளின் ஒசைகளோடு, பக்தர் வடங்கொண்டு இழுத்துச் செல்ல தேர் வீதிகளிலே பவனிவரும் போது ஆயிரக்கணக்கான பக்தர் தரிசனம் பெற்றுத்தம்மை மறந்து ஆனந்த நிலையடைதல் கண் கொள்ளாக் காட்சி.
தேர் தங்கி நிற்கும் இடம் தேர் முட்டி அல்லது தேரடி எனப்படும். இது பொதுவாகக் கிழக்கு இராஜவீதியிலே கோயில் வாசல் எதிரே அமைந்திருக்கும்.
சப்பரம் என்பதும் தேர் போன்ற அமைப்பினை உடையதாகும். இதனைச் சில இடங்களில் தெரு அடைச்சான்' என்றும் வழங்குவர். தெருவின் அகலமளவு அமைவதால் இப்பெயர் பெற்றது போலும், சப்பரத் திருவிழா பொதுவாக ஐந்தாம் நாள் திருவிழா. நிரந்தரமான அடிப்பாகத்தின் மீது அல்லது தற்காலிகமாகச் சட்டங்களைக் கொண்டு அமைக்கப்படும். அடிப்பாகத்தின் மீது தென்னை, பனைக் குருத்துகளையும் மாவிலைகளையும் கொண்டு கோபுரம் போல சப்பரத் தேர் அமைப்பது பொது வழக்கமாகும். (பொ.பூ)
6J DaCT passflag), (1879 -1950)
சுந்தரமையர், அழகம்மாள் புதல்வராகத் திருச்சூழியிலே தோன்றியவர் பூரீ இரமண மகரிஷி அவர் பிள்ளைப் பெயர் வேங்கடராமன். மதுரையில் அமெரிக்க மிஷன் உயர்நிலைப் பள்ளியிற் படித்துக் கொண்டிருந்த போது பதினேழு வயதிலே (1896), சமய நூல்களைக் கற்காது, யோகநெறிகளில் ஈடுபடாது
281

Page 328
அத்வைதானுபவத்தை மின்னல் போலப் பெற்றவர். இவ்வனுப வத்தினை அடுத்துப் பற்றற்றவராகத் திருவண்ணாமலை அடைந் தவர். அங்கு கோயிலிலும், அதன் சூழலிலும் குகைகளிலுமாக நிட்டை கூடிநின்றவர். சீடர்கள் தம்மை நாடி ஐயங்களைக் கேட்ட போது விடைகளைக் கரிக்கட்டியால் எழுதிக் காட்டியவர். விரு பாசஷ குகையில் தங்கியிருந்த போது தாயும் தம்பியும் அவரை நாடினர். அடியவர் எண்ணிக்கை அதிகரிக்கவே ஸ்கந்தாஸ்ரமத்தை வாசஸ்தலமாகக் கொண்டவர். தாயார் 1922 இலே இறந்து பலி தீர்த்தத்தருகிலே அடக்கம் செய்யப்பட்டதை அடுத்துச் சில மாதங் களிலே அவ்விடத்திற்கருகே குடிசையில் வசிக்கத் தொடங்கியவர். அக்குடிசையே பின்பு இரமணாசிரமமாக வளர்ந்தது.
இங்குதான் மகரிஷிகள் கடைசிக்காலத்தைக் கழித்தார்.
உலகின் பலபாகங்களிலிருந்தும் தம்மை நாடிவருவோருக்கு மெளனத்தின் மூலமும் வார்த்தைகள் மூலமும் அவர்கள் சந்தேகத்தினை நீக்கியருளியவர். போன்ற மேனாட்டறிஞர் பலர் இரமண மகரிஷியைத் தரிசனம் செய்தவராவர்.
1950 ஆம் ஆண்டு ஏப்பிரல் மாதம் பதினான்காம் தேதி இரமண மகரிஷிகள் சோதியுட் கலந்தார். மகரிஷியவர்கள் போதித்த தத்துவம் சங்கர அத்துவைதமாகும். பூரீ சங்கரர் பெய ரால் வழங்கும் தகூறினாமூர்த்தி பாடல், ஆத்மபோதம், விவேக சூடாமணி திருக்திருஷ்ய விவேகம் என்பனவற்றைத் தமிழிலே மகரிஷியவர்கள் வழங்கியுள்ளார். விசாரசங்கிரகம் உபதேசசாரம் உள்ளது நாற்பது என்பன மகரிஷிகளின் தத்துவங்களைத் தெளி வாக உணர்த்துவன. மகரிஷிகள் பேரால் வழங்கும் அருணாசல அக்ஷரமாலை சிறந்த பஜனைப் பாடலாக அமைவது குறிப்பிடத்தக்கது. (பொ. பூ)
இரஹஸ்ய திரய ஸாரம்
வடகலை வைணவ ஆசாரியராக விளங்கிய வேதாந்த தேசிகர் சகம் 1191 இலே (கி.பி. 1269) அவதரித்து நூறு வருடங் களுக்கு மேல் வாழ்ந்தவராகக் கருதப்படுவர். காஞ்சிபுரத்தினை யடுத்து தூப்புல் எனும் ஊரிலே அனந்த சூரியாரின் புதல்வராகத் தோன்றிய வேங்கடநாதன் திருவரங்கத்திலே பேர்பெற்ற தேகிகரானார். கிடாம்பி அம்பிள்ளாரின் மருகரும் சீடருமான வேதாந்த தேசிகர் வடதென் மொழிகளிலே நூற்றுக்கதிகமான நூல்களை இயற்றியவராவர்.
இவருடைய மணிப்பிரவாள நடையில் அமைந்த நூல்களிலே பெரியதும் பிரபல்லியமுடையதும் இரஹஸ்யத் திரய்ஸாரமாகும். நூற்பெயர் இரகஸ்யத்திரயம் பற்றியது என்ற கருத்தினைத் தரினும் வைணவ மரபின் பல்வேறு அமிசங்களையும் நூலிலே காணமுடியும். ஆசார்யார் யார்? சிஷ்யன் யார்? அர்த்த பஞ்சகம் என்பது யாது? கைங்கர்யம் என்பது யாது? புருஷார்த்தங்கள் எவை? முதலிய பல விடயங்களுக்கும் நூலிலே விளக்கமுண்டு. புருஷகாரம், பிரபத்தி என்பனபற்றியும் விரிவான விளக்கமுண்டு. (பொ. பூ)
282

இராகவர் பிள்ளைத்தமிழ்
தசரதராமனைப் பாட்டுடைத் தலைவராக வைத்துப் பாடப் பெற்றது இராகவர் பிள்ளைத் தமிழ், இராமபக்தனான அனுமான் துதியினை ஆதியாகவுடையது. இராகவர் பிள்ளைத் தமிழ், காப்புப் பருவமும் சிறுதேர்ப்பருவமும் நீங்கலாக இடை நடுவேயுள்ள செங்கீரை, தால், சப்பாணி, முத்தம், வருகை, அம்புலி, சிற்றில், சிறுபறை, எனும் எட்டுப் பருவங்களிற் பருவத் திற்குப் பத்துப் பாடலாக எண்பது செய்யுள்கள் உள்ளன; சிறு தேர்ப்பருவத்தில் ஒன்பது பாடலுள்ளன; காப்புப் பருவத்திலே தனித் தனியாகத் திருமால், சிவன், பிரமன், இலக்குமி, உமை, சரசுவதி, கணபதி, முருகன், இந்திரன் , வைரவர், சத்தமாதர்கள், முப்பத்து முக்கோடிதேவர் 12 பாடல்களிற் காப்பு வேண்டப் படுகின்றனர். எனவே அனுமான் துதியுடன் இராகவர் பிள்ளைத் தமிழிலே 102 செய்யுள்கள் உள்ளன.
இராகவர் பிள்ளைத்தமிழைப் பாடியவர் குற்றாலம் குழந்தை முதலியார் என்பவராவர்.
சென்னை அரசின் கீழைத்தேய சுவடிகள் நிலையத்திற்காகத் தி. சந்திரசேகரன் தொகுத்து 1956 இலே பதிப்பித்த பிள்ளைத் தமிழ்க் கொத்திலே இராகவர் பிள்ளைத் தமிழ் இடம் பெறுகின்றது. (பொ.பூ)
இராகவேந்திரர் , (-167)
வெங்கண்ண பட்டர் என்ற பிள்ளைப் பெயரினர்; பரிமளா சாரியார் என்றும் வழங்கப்பெற்றவர்; திம்மண பட்டின் புதல்வர் மாத்துவ வைணவர், கும்பகோணத்திலே வேதம் பயின்றவர்.
மாத்துவ பாஷியங்களுக்குப் பதவுரையும், பகவத்கீதைக்குத் தெளிவுரையும் பரிமளம் எனும் நியாயசுகத்திற்கு விளக்கவுரையும் தத்துவ மஞ்சரியும் பட்டசங்கிரகமும் செய்தவர். (பொ. பூ)
61JT856)6]uj Trija, Ti, JT63 Taf (p. (1878 -1960)
தமிழ் நாடு இராமநாதபுரத்து அரியக்குடியிலே பிறந்தவர்;
சேதுசமஸ்தானம் சதாவதானம் முத்துசாமி ஐயங்காரின் புதல்வர்; மதுரைத் தமிழ்ச் சங்கத்தின் தமிழ்க்கலாசாலை ஆசிரியராகவும் செந்தமிழ் சஞ்சிகையின் உதவியாசிரியராகவும், ஆசிரியராகவும் தமிழ் லெக்சிகனின் தமிழ் பண்டிதராகவும் பணி புரிந்துவிட்டு 1944 முதல் 1951 வரைத் திருவிதாங்கூர்ப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேராசிரியராக விளங்கியவர்; பின்பு அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் கம்பராமாயணப் பதிப்பாசிரியர் குழுவிற் சிலவருடம் சேவையாற்றினார்.
ஆழ்வார்கள் காலநிலை (1931) மூலம் ஆழ்வார்களின் காலங்களை ஆராய்ந்து நிறுவமுற்பட்டவர்; சாஸனத்தமிழ்க் கவி சரிதம் மூலம் (1937) முன்னர் புலப்படாத புலவர்களின் செய்திகள் சிலவற்றை முன்வைத்தவர்; சமய சம்பந்தமான
இந்துக் கலைக்களஞ்சியம்

Page 329
இலக்கியம் பற்றியும் அவற்றை இயற்றிய புலவர் பற்றியும் பல கட்டுரைகள் எழுதியவர்; இலக்கியம், இலக்கணம், வரலாறு
பற்றியும் எழுதியவர்.
அரிச்சந்திர வெண்பாவுரை (1949), கேசவப் பெருமாள் இரட்டைமணிமாலை, திரிசிராமலை யந்தாதி (1957), திருவைகுந்தநாதன் பிள்ளைத் தமிழ் (1933) முதலிய சமய சம்பந்தமான நூல்களையும் ஏனைய நூல்களையும் பரிசோதித்துப் பதிப்பித்தவர்; பெருந்தொகை
எனத் தனிப்பாடலாகியனவற்றைத் தொகுத்தளித்தவர்.
(பொ.பூ)
இராகவையங்கார், ரா (1870 - 1946)
மகாவித்துவான், பாஷாகவிசேகரர் இராகவையங்கார் சிவகங்கைச் சீமை தென்னவராயன் புதுக்கோட்டையிற் பிறந்தவர்; ராமாநுஜயங்காரின் புதல்வர். தாய்மாமன் சேது சமஸ்தானம் சதா வதானம் முத்துசாமி ஐயங்கார் ஆதரவில் வளர்ந்து, அவரிடமும் ஏனையோரிடமும் கற்றவர்; சங்கதமும் ஆங்கிலமும் அறிந்தவர்.
தமிழாசிரியராக வாழ்க்கையைத் தொடங்கி சேதுசமஸ்தான மகாவித்துவானாக உயர்ந்தவர்; பின்பு மதுரைத் தமிழ் சங்கத்திலே நூற்பதிப்பு ஆராய்ச்சித் துறைகளின் தலைவராகவும் செந்தமிழ் சஞ்சிகை ஆசிரியராகவும் பணி செய்தவர்; பின்பு தேவகோட்டையிலும் இராமநாதபுரத்திலும் சில காலம் தங்கியிருந்து விட்டு அண்ணாமலைப் பல்கலைக்கழத்திலே தமிழ் ஆராய்ச்சி யாளராக விளங்கியவர். மீண்டும் 1941 முதல் இராமநாதபுரத்தில் வசித்தவர்.
கடவுள் மாலை, சீராமநாமப்பாட்டு, திருப் புல்லாணி யமகவந்தாதி, திருவேங்கட மாயோன் மாலை முதலிய செய்யுணுரல்களை இயற்றியவர்; இரகுவம் மிசம், பல்லடசதகம், வால்மீகி இராமாயணத்தின் சில பகுதிகளை மொழி பெயர்த்துப் பாடியதோடு பாரதநீதி வெண்பா, பகவத்கீதைப் பாடல் என்பனவற்றை முழுமை யாக மொழி பெயர்த்து வழங்கியவர்; அபிஜ்ஞான சாகுந்தலம் நாடகத்தை செய்யுளும் வசனமுமாக மொழி பெயர்த்துத் தந்தவர்; வேறு பாடல்களும் இயற்றியவர்.
வசனமாகவும் எழுதியவர்; உரைகளும் கண்டவர்; இலக்கியலக்கண நூல்களைப் பரிசோதித்துப் பதிப்பித்தவர்.
(பொ.யூ)
இராகு
சோதிட சாத்திரத்திற்கு நடுநாயகர் நவக் கிரகங்கள். இவை சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், வியாழன் (குரு), வெள்ளி (சுக்கிரன்), சனி , இராகு, கேது என்பனவாம்.
இறைவனின் கருத்தை ஒட்டி மனிதகுலத்தை இயக்க வேண்டிய பொறுப்பு நவக்கிரங்களைச் சேருகின்றது. நவக்கிரகங்
இந்துக் கலைக்களஞ்சியம்

களாகிய பாசங்களைக் கொண்டு சீவராசிகளைப் பிணைத்து இறைவன் ஆட்டி வைக்கிறான். அர்ச்சனை, ஆராதனை போன்ற பரிகாரங்களைச் செய்து ஊழின் வலியைப் புறங்காணச் செய்யும் நோக்கோடு திருக்கோயில்களிலே நவக்கிரகப் பிரதிட்டை செய்யப்படுகின்றது.
விரிவாகவும் மிக்க பிரயாசையோடும் செய்ய வேண்டிய நவக்கிரக சாந்தி கர்மாக்களைச் செய்ய முடியாதவர்கள் பரிகாரம் தேடுவதற்காக மூல மூர்த்தியோடு சேர்த்துப் பிரதிட்டை செய்யப்பட்டுள்ள ஒவ்வொரு கிரகத்திற்கும் பிரதானமாய் அமைந்த எட்டு ஆலயங்கள் குறிப்பிடப்படுகின்றன. அவ்வக் கிரகத்திற்குச் சாந்தி செய்ய வேண்டியவர்கள் அவ்வக்கிர கத்திற்குப் பிரதானமான தலத்திற்கு யாத்திரை செய்து தல மூர்த்திகளை வழிபட்டும் சாத்தியமான அளவிற் பிரார்த்தனைகள் செய்தும் பரிகாரம் தேடலாம்.
தெய்வபலமே சூரியன் முதலாம் நவக்கிரகங்களும் இராச்சியபாரம் நடத்த முதற் காரணமாகின்றது. தங்களுக்கு வேண்டிய சக்தியையும் நீதி மதியையும் கொடுத்து இரட்சிக்கும் தங்கள் இட்ட தெய்வங்களைப் பூசிக்க ஒன்பது கிரகங்களும் தங்களுக்கெனத் தனித்தனி கூேடித்திரங்களைத் தாபித்து அந்த அந்த மூர்த்தியின் காலடியில் உயிர்த்தானமாகிய தங்கள் யந்திரங்களைத் தாபித்திருக்கின்றன. எனவே இத்தலங்கள் நவக்கிரகப் பிரீதியில் சிறப்பிடம் பெறுவன.
சூரியனார் கோயில் சிவசூரிய நாராயணசுவாமி சூரியனுக்கும், திருப்பதி வேங்கடாசலபதி சந்திரனுக்கும், பழனி தண்டாயுதபாணி செவ்வாய்க்கும், மதுரை சொக்கநாதர் புதனுக்கும், திருச்செந்தூர் பாலசுப்பிரமணியர் வியாழனுக்கும் திருவரங்கம் அரங்கநாதர் வெள்ளிக்கும் திருநள்ளாறு சனிச்சுவரர் சனிக்கும் காளஹஸ்தி காளஹஸ்தீச்சுவரர் இராகு கேதுவுக்கும் இட்ட தெய்வங்கள்.
இராகு கேதுவின் இட்டதெய்வம் காளஹஸ்தீச்சுவரர் வாயுலிங்கமாகும்.
இராகுவையும் கேதுவையும் சாயாக்கிரகங்கள் என்பர் சோதிடர். இராகு ஞானகாரகன் என்றும் கேது மோக்ஷகாரன் என்றும் அவர்கள் கூறுவர்.
இராகுவின் சகஸ்ரநாமம் திருமூலர் நாடியிற் சொல்லப் பட்டுள்ளது. இராகு காயத்திரி,
நகத் வஜாய வித்மஹேபத்மஹஸ்தாய தீமஹி தன்னோ ராஹு ப்ரசோதயாத் என்பதாகும்.
தேவர் பாற்கடலைக் கடைந்த போது புறப்பட்ட அமுதைத் தானவனாகிய இராகு, தேவர் வேடத்தில் உண்டதைக் கண்டு சூரிய, சந்திரர் விஷ்ணுவுக்குக் கூற அவர் கோபித்து தலையை அறுத் தார். தலை விண்ணிலெழுந்து உரத்த கூச்சலிட்டது. இதனால் அப்ரபிசாசு என்ற பெயர் இராகுவுக்கு உண்டானது. தன்னைக் காட்டிக் கொடுத்தவரைப் பிடித்து விழுங்கும் முயற்சியில்
283

Page 330
அன்றிலிருந்து இராகு ஈடுபடுகின்றது. இதனையே கிரகணம் என்பர். இது ஸ்வர் பாகு செயலாக இருக்கு வேதத்தில் கூறப்படுகின்றது. தலையோடு பிரிந்த தேகம் கேது வென்றும் கேது இராகுவின் சகோதரன் என்றும் இரு கருத்து களுண்டு. இராகுவும் கேதுவும் விஷ்ணுவை நோக்கித் தவம் செய்து கரும் பாம்பு செம்பாம்பு உருவெடுத்தனர் என்பர். விப்பிரசித்தி எனும் தானவனுக்கு சிம்மிகை வயிற்றில் பிறந்தவர்கள் இராகுவும் கேதுவும் என்றும் கூறுவர். இராகுவின் மக்கள் 32 கேதுகள் என்றும் அவர்கள் தோற்றமளிப்பின் தீமை என்றும் கூறுவர்.
ஒவ்வொரு நாளும் ஒன்றரை மணித்தியாலம் இராகு காலமாகக் கருதப்படும். இக்காலத்தில் சுபகாரியங்கள் நீக்கப்படும். (பொ.யூ.)
இராசகோபாலப்பிள்ளை
கோமளபுரம் இராசகோபாலப்பிள்ளை பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியிலே சென்னை கோமளிசுவரன் பேட்டையில் வாழ்ந்தவர்; தெலுங்குயாதவர் மரபினர்; வைணவர்; புரசை அட்டாவதானம் இ. சபாபதி முதலியார். அட்டாவதானம் வீரசாமிச்செட்டியார் என்போரிடம் தமிழ் கற்றவர்; திருமயிலை சண்முகப்பிள்ளை, கேசவசுப்பிராய முதலியார், தி செல்வகேசவராய முதலியார், ஆ. சிங்காரவேலு முதலியார், வாசுதேவ முதலியார் முதலியோரின் ஆசிரியர்
சென்னை நார்மல் ஸ்கூல் தமிழ்த் தலைமைப் புலவர்; சென்னைப் பிரசிடென்சி காலேஜ் தமிழ்ப்பண்டிதர், சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்த்தலைமைப் புலவர்.
திருவெவ்வுளூர்வீரராகவப் பெருமாள் பதிகம் பாடியவர்; கம்பராமாயணவசனம் எழுதியவர்; திருவாய்மொழி, நளவெண்பா முதலியனவற்றிற்கு உரைகண்டவர்; கம்ப ராமாயணம், தென்திருப்பதிப் புராணம், பாகவதம், பாரத வெண்பா, வில்லிபாரதம் முதலியனவற்றைப் பதிப்பித்தவர், இலக்கியலக்கண நூல்களைப் பதிப்பித்தும் உரையெழுதியும் உள்ளார். (பொ.யூ.)
இராசசிம்மபல்லவன்
இரண்டாம் நரசிம்மவர்மன் (690-729) எனும் பல்லவ மன்னன் இராசசிம்மபல்லவன் என வழங்கப் பெற்றவன்; பரமேச் சுரனே இராசசிம்மபல்லவனாக அவதரித்ததாகக் காசாக் குடிச் செப்பேடுகள் கூறுவன; சிவசூடாமணி, சங்கரபக்தன், ஈசுவர பக்தன், பரமமாகேஸ்வரன், பூரீ ஆகமப்பிரியன், ரிஷபலாஞ்சனன் என்று சாசனங்களிலே போற்றப் பெற்றவன், சைவசித்தாந் தத்தைப் பின்பற்றித் தன்னுடைய பாவங்களைத் தீர்த்துக் கொண்டவன் என்று ஒரு கல்வெட்டுக் கூறுகின்றது.
கைலாயத்தை ஒத்த கோயிலைக் காஞ்சியிலே கட்டிப் புகழ் பெற்றவன்; மாமல்லையிலும் பனைமலையிலும் திருப்பணி செய்தவன்.
284

சுந்தரமூர்த்திநாயனார் போற்றும் கடல்சூழ்ந்த உலகெலாம் காக்கின்ற பெருமான் காடவர்கோன் கழற்சிங்கன் (7.39.9) இராசசிம்மன் என்று கொள்வதே பொருத்தமாகத் தெரிகிறது; நாயன்மார்களில் ஒருவராகப் போற்றப் பெறத்தக்க நிலையில் இராசசிம்மன் காணப்படுகிறான்.
இராசசிம்மபல்லவனின் தந்தை முதலாம் பரமேஸ்வரவர்மன் (669-691) சிறந்த சிவபக்தன் என்று சாசனங்கள் உணர்த்துவன: ஐயடிகள் காடவர்கோன் நாயனார், முதலாம் பரமேஸ்வர
வர்மனாகலாம் என்ற கருத்தும் ஈண்டு குறிப்பிடத்தக்கது.
(பொ.பூ)
இராசப்ப நாவலர்
இராசப்ப உபாத்தியாயர் எனவும் இராசப்பகவிராயர் எனவும்
அழைக்கப் பெற்றவர்; திருவெண்ணெய் நல்லூரில் வாழ்ந்தவர்;
பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தவர்.
திருநாவலூர்ப்புராணம், திருவெண்ணெய்க் கலம்பகம், சித்திநகரந்தாதி முதலிய நூல்களைப் பாடியவர். (பொ.யூ.)
6ễUT51.DTGOOfìẩ5851), 1.DT. (1eOz- 1eez)
எம். ஏ. எம்.ஓ.எல், எல்.ரி.பிஎச்.டி. முதலிய பட்டங்களைப் பெற்று மதுரை தியாகராயர் கல்லூரியிலே தமிழ்த்துறைத் தலைவராகவும் சென்னைப் பல்கலைக் கழகத்திலே தமிழ் ரீடராகவும் விளங்கியவர்; கர்நூல் எனும் ஊரிலே பிறந்தவர்.
கலாநிதி இராசமாணிக்கம் தமிழ் இலக்கியம், வரலாறு, பண்பாடு, நாகரிகம் பற்றிச் சில நூல்களையும் பல கட்டுரைகளையும் எழுதியதோடு, பெரியபுராண ஆராய்ச்சி (1948), சைவசமய வளர்ச்சி (1958) எனும் சைவசமய சம்பந்தமுடைய முக்கியமான நூல்களையும் அளித்துள்ளார். (பொ. பூ)
61JT8Féu.JT851D
யோகப் பயிற்சி நான்கு வகைப்படும். அவை இராச யோகம், கர்மயோகம், பக்தியோகம், ஞானயோகம் என்பனவாம்.
இயமம், நியமம், ஆசனம், பிராணாயாமம், பிரத்தியாகாரம், தாரணை, தியானம், சமாதி எனும் எட்டுச் சாதனங்களாலே மனதைவென்று, உள்ளமைதி பெற்று, உள்ளத்தானுடனென்றும் ஒருமை வழி இராசயோகமாகும். விளக்கத்துக்கு அட்டாங்கயோகம் பார்க்கவும். (பொ. பூ)
இராசரத்தினம் சு. (1884 - 1970)
இந்து போர்டு இராசரத்தினம் என்று சிறப்பிக்கப் பெற்ற இராசரத்தினம் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்; சுப்பிரமணியம் என்பவரின் புதல்வர்; வழக்கறிஞராகத் திகழ்ந்தவர்; காரைநகர் ச. அருணாசல உபாத்தியாயர் முதலானோரின் தொடர்பினாலே சைவ வித்தியாவிருத்தியிலே கவனம் செலுத்தியவர்.
இந்துக் கலைக்களஞ்சியம்

Page 331
1923 ஆம் ஆண்டு திசம்பர் மாதம் ஒன்பதாம் தேதி சேர் பொன்னம்பலம் இராமநாதன், சேர். வைத்திலிங்கம் துரைசாமி போன்றோரது ஆதரவுடன் ஆரம்பிக்கப்பெற்ற சைவ வித்தியா விருத்திச் சங்கத்தின் வளர்ச்சியிலே முக்கிய பங்கு எடுத்துக் கொண்டவர், சைவ வித்தியாவிருத்திச் சங்கம் தமிழ்ப் பிரதேசங் களிலே புதிய பள்ளிக்கூடங்களைத் தாபித்ததோடு பிறர் ஆரம்பித் தனவற்றையும் பொறுப்பேற்றுத் திறம்பட நடத்தி வந்ததாகும்.
சைவப் பள்ளிகளுக்கு வேண்டிய சைவாசிரியர்களை அரசாங்கம் நடத்திய கோப்பாய் பயிற்சிக் கல்லூரி முழுவதாக நிறைவேற்ற முடியாத நிலையிலே சைவ வித்தியாவிருத்திச் சங்கம் 1928 ஆம் ஆண்டு ஒக்தோபர் மாதம் திருநெல்வேலியிலே சைவாசிரியர் பயிற்சி நிறுவனத்தைத் தொடங்கியது; அது பயிற்றிய ஆசிரியர்கள் பணி மூலம் அக்காலத்திற் சைவ கல்வி உயிருடன் இயங்கக் கூடியதாயிற்று.
1928 ஆம் ஆண்டிலே சைவ அநாதசாலை திருநேல்வேலி டாக்டர் எஸ். சபாபதிப்பிள்ளை போன்றோர் உதவியுடன் ஆரம்பிக் கப்பட்டது; 1938 இலே அநாதைப் பெண்களும் சேர்க்கப்பட்டனர்; சைவ அநாதசாலை ஏழு மாணவருடன் வாடகை வீடொன்றில் ஆரம்பிக்கப்பட்டதாகும்.
1924 இலே சட்டசபைப் பிரதிநிதியான இராசரத்தினம் ஏழு வருடம் நீடித்த அச்சபையிலே சைவருக்குத் தீமையான, பட்ச பாதகமான, கல்விச் சட்டங்கள் பல மாற்றமடைய காரணமாயிருந்தவர்களில் ஒருவராவார். கிறித்தவ பள்ளிக்கு அருகிற் சைவப் பள்ளி தொடங்கவும், ஆரம்பகாலம் முதல் உதவி நன்கொடை பெறும் வாய்ப்பினை அடையவும் இக்கால கட்டத்திய சட்டசபை காரணமானது என்பது குறிப்பிடத்தக்கது. (பொ.பூ)
இராதாகிருஷ்ணன், எஸ். (1888-1975) 1ாக்டர் சர்வபள்ளி இராதாகிருஷ்ணன் சென்னையை அடுத்த திருத்தணியிலே தெலுங்குப் பிராமணர் மரபிலே தோன்றியவர். திருப்பதி லூதரன் மிஷன் உயர்நிலைப் பள்ளியிலும் வேலூர் வர்கீசு கல்லூரியிலும் சென்னை கிறிஸ்தியன் கல்லூரியிலும் கற்று 1909 இலே தத்துவத்தில் முதுமாணிப் பட்டம் பெற்றவர்.
சென்னை பிரசிடென்சி கல்லூரி ஆசிரியராகவும் (1909 -1917) இராஜமுந்திரி கலைக்கல்லூரி தத்துவ விரிவுரை யாளராகவும் மைசூர்ப் பல்கலைக் கழகத்தத்துவப் பேராசிரி யராகவும் பணி புரிந்துவிட்டு 1921 இலே கல்கத்தாவில் ஐந்தாம் ஜோர்ஜ் தத்துவப் பேராசிரியரானவர். பின்பு ஆந்திர பல்கலைக் கழகத்தின் துணைவேந்தராகச் சேவை புரிந்ததை அடுத்து ஒக்ஸ் போர்டு பல்கலைக் கழகத்திலே ஸ்பால்டிங் அறக் கட்டளையின் கீழ்க் கீழைத்தேய சமயம், அறம் என்பனவற்றிற்குப் பேராசிரியராக விளங்கியவர். பின்பு வாரணாசி இந்துப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகச் சேவை செய்தவர்.
1926 இலே இவர் நிகழ்த்திய உப்ரன் விரிவுரைகள் (Upton lectures) 1927 g(6) The Hindu view of Life ST6arr) பெயரிலே நூலுருவம் பெற்றன. 1929 இலே ஆற்றிய ஹிபேட்
இந்துக் கலைக்களஞ்சியம்

6SirfloGOT66ir (Hibbert Lectures) An Idealist view of Life 6T6arr) பெயரிலே நூலாகியுள்ளன. 1940 இலே இராதாகிருஷ்ணன் பிரித்தானிய கழகத்தினால் அறிஞராகக் கெளரவிக்கப்பட்டார். (Fellow of the British Academy).
1946 முதல் சில வருடங்கள் யுனெஸ்கோ (Unesco) தாபனத்திற்கான இந்தியக் குழுவுக்கு இராதாகிருஷ்ணன் தலைமை தாங்கியவர் 1949 இலே மஸ்கோவுக்கான இந்திய தூது வராக நியமனம் பெற்றவர். பின்பு இந்திய உப ஜனாதிபதியாகவும் திகழ்ந்தவர். 1975 இலே ரெம்பில்ரன் விருதினை (Templeton Award) Glufip6) it.
ஆசிரியராகவும் பேராசிரியராகவும் கலாசார தூதுவராகவும் தத்துவஞானியாகவும் நாட்டின் முதல்வராகவும் கல்வி, கலாசாரமும், பண்பாடு தத்துவம் , அரசியல் முதலிய பல்வேறு துறைகளிலே திறமை காட்டியவர் டாக்டர் சர்வபள்ளி இராதாகிருஷ்ணன்; இந்திய விடுதலைத் தலைவர்களிலே, சிறப்பாக, மகாத்மா காந்தியின் நம்பிக்கைக்குப் பாத்திரமாக விளங்கியவர்; ரவீந்திர நாத் தாகூர், பூரீ அரவிந்தர் என்போருடன் நெருக்கமாக இருந்தவர். அவர்களுடைய கருத்துக்கள் பலவற்றை ஏற்றுக்கொண்டவர். ஆரம்பத்தில் இவர் எழுதிய நூல்களில் ஒன்று தாகூரின் தத்துவம் Lipplug, Teguh, (The Philosophy of Ravindranath Tagore 1918).
நவீன இந்திய தத்துவ வரலாற்றிலே இராதாகிருஷ்ணனுக்கு முக்கியமானதொரு இடமுண்டு.
Indian Philosophy Vol. I
Indian Philosophy Vol. II
The Principal Upanisads
The Bhagavad Gita
The Brahma Sutra
The Dhammapada Contemporary Indian Philosophy (With J. H. Muirhead)
என்பன இராதாகிருஷ்ணன் இந்திய தத்துவ வரலாற்றிலே பெறும் சிறப்பிடத்தை விளக்கப் போதுமானவை என்று கூறலாம். இந்திய தத்துவத்தினை, மேனாட்டார் ஏற்றுக் கொள்ளும் முறையில் விளக்கி அதனை உலகின் தத்துவப் படத்தில் இடம் பெறச் செய்த பெருமை அவருக்குண்டு. மேனாட்டாருக்கு இந்திய தத்துவம் பற்றிய தெளிவினை ஏற்படுத்தியதில் பெரும்பங்கு அவருக்குண்டு.
கீழைத்தேயங்களுக்கும் மேலைத்தேயங்களுக்கும் பாலமாக அமைந்து இருபகுதிகளிலும் ஒன்றினை மற்றது புரியும் வண்ணம் செய்தவர்களிலும் இராதாகிருஷ்ணனுக்குச் சிறப்பிடம் உண்டு.
East And West: Some Reflections East And West In Religion Eastern Religions And Western Thought என்பன இக்கண்ணோட்டத்தினை விளக்குவன.
தத்துவஞானியான இராதாகிருஷ்ணன் சமயப் பற்று மிக்கவராகவும் விளங்கியவர். தாம் சங்கர அத்துவிதத்தினை ஆதரித்த போதும் இந்திய சமயங்களைப் பற்றியும் அவற்றின் இயல்புகளைப் பற்றியும் தெளிவாகச் சிந்திக்க முற்பட்டவர்.
285
2.1793

Page 332
The Reign of Religion in Contemporary, Philosophy The Religion We Need Indian Religions Religion in a Changing World Recovery of Faith The Present Crisis of Faith Religion And Culture Religion And Society Religion And Society Kalki or the Future of Civilization
முதலியன இக்கருத்தினை ஆதரிப்பன. தத்துவ ஞானியும் சமயவாதியுமான பேராசிரியரின் சிந்தனைகள் இந்திய பாரம் பரியத்தின் சிறப்பினையும் குறைபாடுகளையும் நோக்கத் தவறவில்லை.
The Creative Life To wards a New World True Knowledge Is This Peace? Freedom and Culture
முதலிய நூல்களில் இராதாகிருஷ்ணன் நோக்கு அடையும் பரிணாமத்தினைக் காணமுடியும். பதினான்கு இந்தியப் பெரியார்களின் சரிதங்களை அணுகும் போது அவர் எடுத்துக் காட்டும் பண்புகளை இந்தியபண்பாடாக கருத முடிகின்றது 6TGÖTLUGODg5 Loglġ5g56orf göl. (Living With A Purpose) (6 LUTT.)
இராமகிருஷ்ண இயக்கம்
ஆன்மீக வாழ்க்கையினாற் பண்பட்டுத் தெளிவு பெறும் தெய்வீகம் அளிக்கும் சக்திக்கு உதாரணமாக அமைந்து சனாதன தர்மத்தின் அடிப்படையை விளக்கிப் பண்டைய பாரம் பரியத்தினை மதிப்புடையதாகக் கருத வைத்துச் சமுதாயத்திலே புரையோடி நின்ற தளைகளை நீக்கிச் சகோதரத்துவத்தினை உருவாக்கப் பத்தொன்பதாம் நூற்றாண்டில் அவதரித்தவர் பூரீ இராமகிருஷ்ணபரமஹம்சர் (1836 - 1886) எனும் மகாபுருஷராவர். அவர் ஆன்மீக அனுபவங்கள் மூலம் தாம் கண்ட உண்மைகளை எடுத்துக் கூறி உலகினருக்கு நன்மைபுரியக் கூடிய பக்குவம் பெற்றவர்களை நாடிநின்ற காலத்திலே, பிரம்மசமாசத் தலைவர் களில் ஒருவரான கேசப் சந்திர சென் என்பவரும் அவருமைய நண்பர்களும் அவரை 1875 இலே சந்தித்தனர்.
இவர்கள் பூரீ இராமகிருஷ்ணரின் கருத்துகள் சிலவற்றிற்குச் சிறந்த பிரசாரகரமாக அமைந்தபோதும் அவருடைய தத்துவங்கள் முழுவதையும் முற்றாக ஏற்றுக் கொள்ளவில்லை. ஆயினும் இவர்களுடைய தொடர்பு மத்தியதர வர்க்கத்திலுள்ள அறிவுஜீவி களை பூரீ இராமகிருஷ்ணருடைய சித்தாந்தத்திற் கவனம் செலுத்தக் காரணமாயமைந்தது. இவர்களிலே 1881ஆம் ஆண்டின் கடைக்கூறிலே பரமஹம்சரைக் காண வந்த நரேந்திர நாத்தத்தா எனும் சுவாமி விவேகானந்தர் ( 1863-1902) மிகவும் முக்கிய மானவர். இவரும் இவர் போன்ற ஏனையோர் சிலரும் பூரீ
286

இராமகிருஷ்ணரை அதிதீவிரமாகப் பின்பற்றும் குழுவாக உருவாகத் தொடங்கினர்.
பூரீ இராமகிருஷ்ணர் நோய்வாய்ப்பட்டுப் படுக்கையில் விழுந்து கல்கத்தா சியாம்புகூரிலும் பின்பு கொசிபூரிலும் தங்கியிருந்த காலத்திலே சிறப்பாகக் கொசிபூரில் இருந்த போது (1 திசம்பர் 1885 -16 ஆகஸ்டு 1886) அவருடைய சீடர்கள் ஒன்று கலந்து சகோதரத்துவத்துடன் ஒழுகும் சூழல் உருவாகியது. உண்மையில், கொசிபூர் தோட்ட வீடே முதல் இராமகிருஷ்ண மடம் என்று கருதத்தக்கது.
பரமஹம்சர் 1886 ஆகஸ்டு 16 ஆம் தேதி மறைந்ததை அடுத்து அவர் சீடர்களிற் சிலர், பர்நாகூரிற் (Bamagore) செப்தம்பர் 1886 முதல் ஒன்று கூடி இருந்தனர். இங்கிருந்து மடம் ஆலம்பா சார் எனும் இடத்திற்கு 1891 நவம்பரில் இடமாற்றம் பெற்றது.
பர்நாகூரை விட்டு சுவாமி விவேகானந்தர் 1890 ஜூலையிற் புறப்பட்டு இந்திய உபகண்டத்தின் பல்வேறு இடங்களுக்கும் யாத்திரை செய்தார். 1893 மே மாதம் அவர் பம்பாயில் இருந்து கப்பலிற் புறப்பட்டு கொழும்பு ஹாங்கொங், யப்பான் வழியாக அமெரிக்கத் துறைமுகமான வன்கூவரைத் ஜூலை மத்தியில் அடைந்தனர். சிகாகோ நகரத்திற் சமய சம்பந்தமாக நடைபெற இருந்த மாநாட்டிற் கலந்து கொள்வதை நோக்கமாகக் கொண்டே அவர் மேனாட்டுப் பயணத்தை மேற்கொண்டார். அங்கு செப்தம்பர் மாதம் நிகழ்ந்த மாநாட்டிலே சுவாமிஜி தன் மதத்திற்கும் தன்னாட்டிற்கும் பெரும் மதிப்பினையும் செல்வாக்கினையும் சம்பாதித்துத் தந்தார். உண்மையில் இராமகிருஷ்ண இயக்கத்தின் விதை சிகாகோவில் இடப்பட்டது என்று கொள்வதே பொருத்த மாகும். சிகாகோவிலும் ஏனைய அமெரிக்க பட்டினங்களிலும் இங்கிலாந்திலும் சுவாமிஜி நிகழ்த்திய சொற்பொழிவுகளும் ஆற்றிய விரிவுரைகளும் வழங்கிய விளக்கவுரைகளும் நடத்திய சமய தியான வகுப்புகளும் பூரீ இராமகிருஷ்ணரின் சித்தாந்தங் களுக்குப் பெரும் மதிப்பினை ஈட்டிக் கொடுத்தன.
1897 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 15 ஆம் தேதி ஈழம் வந்து சுமார் பத்து தினங்கள் கொழும்பு, கண்டி, மாத்தளை, அனுராதபுரம், வவுனியா, யாழ்ப்பாணம் எனும் ஊர்களிலெல்லாம் சிறப்புரைகள் வழங்கிவிட்டுச் சென்னை வழியாகப் பெப்ரவரி மாதம் கல்கத்தா அடைந்த சுவாமிஜி ஒரு புதிய நிறுவனத்தை அமைக்கும் நோக்குடன் இரு கூட்டங்களை மே மாதம் ஒழுங்கு செய்தனர். இரண்டாவது கூட்டம் மே மாதம் ஐந்தாம் தேதி நடை பெற்றது.
இக்கூட்டமே சுவாமிஜியின் 'இராமகிருஷ்ணமிசன்’ எனும் நிறுவனத்தின் நோக்கங்களைத் தெளிவாக முதன் முதலில் முன்வைத்ததாகும். இக்கூட்டத்தின் தீர்மானங்களிலே முக்கியமானவை மேல்வருவன:
1. பூரீ இராமகிருஷ்ணர் மானிடத்தின் நன்மை கருதி வாழ்ந்து காட்டி அளித்த போதனைகளை அறிவுறுத்தி அவற்றைத் தம் வாழ்வின் முன்னேற்றத்திற்குப் பயன்படும் வகையிற் செயல்முறையில் மேற்கொள்ள உதவுவது.
இந்துக் கலைக்களஞ்சியம்

Page 333
2.
பூரீ இராமகிருஷ்ணரின் சமய சமரச நோக்கின் அடிப் படையிலே கருமங்களை ஆற்றுவது. 3. மக்களின் பொருளாதார, ஆன்மீக நன்மைக்குகந்த அறிவை அல்லது விஞ்ஞானத்தைக் கற்பிக்க வல்லவரைப் பயிற்றுவித்தல். 4. கலைகளுக்கும் தொழில்களுக்கும் வழி செய்து
ஊக்குவிப்பது. 5. வேதாந்தக் கருத்துக்களையும் ஏனைய கருத்துக்களையும்
இராமகிருஷ்ணர் போன்று அறிமுகஞ் செய்து பரப்புவது 6. இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் மடங்களையும் ஆசிரமங்களையும் நிறுவி சன்னியாசிகளையும் ஏனை யோருக்கு உதவ விரும்பும் குடும்பஸ்தரையும் பயிற்றுவித்தல். 7. இம்முயற்சிகளுக்கான வழிதுறைகளைத் தேடுதல்.
இந்தியாவுக்கு வெளியே பயிற்றப்பட்டவர்களை அனுப்பி வைப்பது.
அரசியற் சார்பு இல்லாது இருப்பது.
சுவாமி விவேகானந்தர் 1897 இலே முன்வைத்த கருத்துக்கள் ஆங்காங்கே செயல்முறையில் மாற்றம் பெற்ற போதும் அடிப்படையில் பெருமாற்றம் இன்றியே வந்துள்ளன. ஆயினும் இராமகிருஷ்ணமிஷனும் இராமகிருஷ்ண மடமும் தனித்தனித் தாபனங்களாக நெடுங்காலம் செயற்பட முடியாது போயிற்று. இரு தாபனங்களையும் வழிநடத்தியோர் ஒரே பிரிவினராகவும் இரு தாபனங்களின் செயல்களும் பெரும்பாலும் தனிப்படுத்த முடியாதனவுமாக இருந்தமையும் இந்நிலைக்குரிய முக்கிய
மிஷன் தனிச் சட்ட விதிகளுடன் பதிவு செய்யப்பட்டமை நோக்கத்தக்கது.
ஆலம்பாசாரிலிருந்து பேலூருக்கு 1898 ஆம் ஆண்டு இராமகிருஷ்ணமடம் இடமாறியதை அடுத்து 1899 முதல் அது வேகமாகச் செயற்படத் தொடங்கியது. பேலூர் மடமே இராமகிருஷ்ண இயக்கத்தின் கேந்திரமாகவும் தலைமைத் தானமாகவும் உருப்பெற்றது. சுவாமி விவேகானந்தர் (1897-1902), சுவாமி பிரமானந்தா (1902 - 1922), சுவாமி சிவானந்தா (19021934), சுவாமி அகந்தானந்தா (1934 - 1937), சுவாமி விஜ்நாநானந்தா (1937 -1938), சுவாமி சுத்தானந்தா (1938), சுவாமி விரஜானந்தா (1938 -1951), சுவாமி சங்கரானந்தா முதலியோர் தலைமையில் இராமகிருஷ்ணமிசனும் , இராமகிருஷ்ண மடமும் இந்திய உபகண்டத்திலும் அப்பாலும் பல்வேறு பணிகளிலே ஈடுடலாயின.
இந்தியாவிலே சென்னை, திருவனந்தபுரம், புவனேஸ்வர்,
ராஞ்சி, கல்கத்தா, உதகமண்டலம், கோயம்புத்தூர், நாட்டிறம் பள்ளி, சார்காச்சி, மாயாவதி பரிசல், ரிஷிகேசம் முதலான இடங்களிலே இராமகிருஷ்ணமிஷனும் மடமும் அத்வைத ஆசிரமம், சேவாஸ்ரமம், மடம், இல்லம் முதலிய பல்வேறு அமைப்புகளை நிறுவி நடத்தி வருகின்றன. இவை சன்னியாசி களை உருவாக்கும் நிறுவனங்களாக மட்டுமன்றி சமூகத்தின்
இந்துக்கலைக்களஞ்சியம்

பல்வேறு தேவைகளையும் பூர்த்தி செய்யும் புண்ணிய தலங்களா கவும் விளங்குகின்றன.
ஆரம்பகாலத்திலிருந்து இராமகிருஷ்ண இயக்கம் மனிதாபிமான நடவடிக்கைகளிலே முக்கிய கவனம் செலுத்தி வந்துள்ளது. பஞ்சம், வெள்ளம், தொற்றுநோய், தீ, பூமி,அதிர்ச்சி, நிலச்சரிவு முதலிய துன்பகரமான நிகழ்ச்சிகள் ஏற்பட்டபோது அவற்றால் மக்கள் படும் துன்பங்களைத் தவிர்க்க இராமகிருஷ்ண இயக்கம் முன்னின்றுள்ளது. வைத்தியசாலைகளையும் மருந்து நிலையங்களையும் நிறுவி மக்களுக்கு இலவசமாக வைத்திய உதவி செய்ய முன்வந்துள்ளது. அனாதைகளை ஆதரித்து அவர்கள் முன்னேற்றத்திலே அக்கறை காட்டி வந்துள்ளது.
இந்துமதச் சார்பான பிள்ளைகளின் கல்வி வளர்ச்சியில் அக்கறை கொண்டு ஆண்களுக்கும் பெண்களுக்கும் பல பாடசாலைகளை அமைத்து அவற்றை இன்னல்கள் மத்தியிலும் பராமரித்து வந்துள்ளது. சகோதரி நிவேதிதா கல்கத்தாவில் பெண்களுக்காக 1899 இலே ஆரம்பித்த பாடசாலையைத் தொடர்ந்து இராமகிருஷ்ண இயக்கத்தினர் பேணி வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. தி.சு. அவிநாசலிங்கம் தமிழ்நாட்டிலே தோற்றுவித்த வித்தியாலயம் இராமகிருஷ்ண இயக்கத்தின் தென்னாட்டுத் தாபனங்களிலே குறிப்பிடத்தக்கதாக விளங்குவது காணத்தக்கது.
பிரமவாதின் (1895), பிரபுத்தபாரதா (1896), உத்போதன் (1899) முதலாகப் பல சஞ்சிகைகளையும் பத்திரிகைகளையும் இராமகிருஷ்ண இயக்கத்தினர் ஆதரவு தந்து வெளியிடக் காரணமாயிருந்துள்ளனர்.
சுவாமி விவேகானந்தர் முக்கிய இடம் வகித்த இராமகிருஷ்ண இயக்கம் அவர் 1902 இலே மறைந்த பின்பும் தொடர்ந்து பல்வேறு துறைகளிலே பரவி வளர்ந்து வந்தது. பூரீ சாரதா தேவியம்மையார் அதற்கு ஒரு முக்கிய காரணமாக விளங்கினார். பூரீ இராம கிருஷ்ணருக்குப் பின்பு அவருடைய சீடர்களுக்கு எல்லாம் தோன்றாத் துணையாக எல்லோரையும் ஒன்றிணைக்கும் பாலமாக நின்று அவர்களுடைய சேவைக்கு ஆசிகூறித் தூண்டிநின்றவர் அவரே. அவர்கள் 1920 இலே மறைந்த போது இராமகிருஷ்ண இயக்கம் தொடர்ந்தும் செயற்படக்கூடிய் முறையிலே வழி நடத்த பரமஹம்சரின் சீடர்கள் இருந்தார்கள்.
வங்காளப் பிரிவினையினை அடுத்து இராம கிருஷ்ண இயக்கம் அரசியற் கொந்தளிப்பினால் பெரும் பாதிப்புக்கு உள்ளாகும் நிலையை அடைந்தபோதும் அப்பப்போது சிற்சில இன்னல்களை எதிர்நோக்க வேண்டியிருந்தபோதும் பூரீ இராமகிருஷ்ணரின் சீடர்கள் பின்பற்றிய ஆன்மீக, மனிதாபிமானக் கோட்பாடுகள் அவர்களுக்கு உறுதுணையாக அமைந்து நின்றன.
கர்மமும் ஞானமும் யோகமும் ஒன்றித்து இணையும் பொழுது பரமாத்மனின் அனுபவம் கிடைக்கின்றது என்பது இயக்கத்தின் தாரக மந்திரம்; அதுவே சின்னத்தின் உட்பொருளுமாம். கடவுளுண்மையையும் ஆன்மாவின் தெய்வீகத்தையும் வாழ்க் கையின் ஒருமைப்பாட்டினையும் சமயங்களின் சமரசத் தினையும்
287

Page 334
வற்புறுத்தும் இராமகிருஷ்ண இயக்கம் இந்திய எல்லைகளையும் தாண்டிப்பரவியுள்ளது.
சுவாமி விவேகானந்தர் சிகாகோ மாநாட்டிற் பங்கு பற்றியதைத் தொடர்ந்து அமெரிக்காவிலே பல்வேறு நகரங் களிலும் சொற்பொழிவுகளும் விரிவுரைகளும் விளக்கவுரைகளும் சமயவகுப்புகளும் தியான வகுப்புகளும் நடாத்தி அமெரிக்க மக்களின் மனத்தைக் கவர்ந்தார். 1896 இலே நியூயோர்க் நகரிலே வேதாந்தசபையொன்று நிறுவப்பட்டது. இதனைத் தொடர்ந்து பொஸ்டன், வாசிங்கடன், லொஸ் அன்சலிஸ், சான்பிரான்சி ஸ்கோ முதலான பல்வேறு இடங்களிலும் இராமகிருஷ்ண நிலையங்கள் அமைக்கப்பட்டன. சாந்தி ஆசிரமம் எனும் தியானப் பகுதி ஒன்று கலிபோர்னி யாவிலே நெடுங்காலம் செயற்பட்டது. சுவாமி சாரதானந்தா, சுவாமி அபேதானந்தா, சுவாமி தூரியானந்தா, சுவாமி பரமானந்தா, சுவாமி போதானந்தா, சுவாமி திரிகுணாதிதா போன்ற இராமகிருஷ்ணமிஷனைச் சேர்ந்த சுவாமிகள் பலர் அமெரிக்காவிலே பூரீ இராமகிருஷ்ணரின் போதனைகளைப் பரப்பி வந்துள்ளனர். சகோதரி தேவமாதா, சுவாமி யோகானந்தா போன்ற மேனாட்டார் இராமகிருஷ்ண இயக்கத்திலே அமெரிக்காவிலே பங்குகொண்டுள்ளனர். சுவாமி ULDITGOrigit "égé, élair Gaig' (The Message of the East) என்று பொருள் தரும் சஞ்சிகை ஒன்றினையும் சிலகாலம் அமெரிக்கா விலே நடாத்தியுள்ளார்; சுதந்திரக் குரல் (Voice of Freedom) என்ற சஞ்சிகையும் இராம கிருஷ்ண இயக்கத்தினரால் அமெரிக் காவில் வெளியிடப் பட்டுள்ளது. 1906 இலே இந்துக் கோயில் கலிபோர்னியாவிலே அமைக்கப் பட்டுள்ளது. இராமகிருஷ்ண இயக்கத்திற்கு மேனாடுகளிலே அமெரிக்கா முக்கிய விளை நிலமாகக் காணப்படுகின்றது.
இங்கிலாந்தும் 1895 ஆம் ஆண்டளவிலே இராமகிருஷ்ண இயக்கத்தின் செல்வாக்கினைக் கண்டபோதும் பத்தொன்பதாம் நூற்றாண்டின் அந்தத்திற்குப்பின் இயக்க நடவடிக்கைகளிலே முக்கிய இடம் பெறாமற் போய்விட்டது. அண்மைக் காலத்திலேயே மீண்டும் இயக்கத்தின் பார்வையிலே இங்கிலாந்து பட்டுள்ளது. பிரான்ஸ், ஜேர்மனி, ஆர்ஜென்ரீனா, தென்னாபிரிக்கா, பர்மா, மலேசியா, சிங்கப்பூர், பிஜி, பாகிஸ்தான், பங்களாதேஷ் போன்ற நாடுகளிலும் இராமகிருஷ்ண இயக்கம் அக்கறை கொண் டுள்ளது. தென்னாபிரிக்கா, மலேசியா,சிங்கப்பூர், பிஜி ஆகிய வற்றிலுள்ள நிலையங்களின் இயக்கத்தின் வளர்ச்சி குறிப்பிடத் தக்கதாகவுள்ளது. அதன் பணிகளும் பரந்து காணப்படுகின்றது.
ஈழம் இராமகிருஷ்ண இயக்கத்தின் ஆரம்ப காலம் முதல் அதன் செல்வாக்கினை எதிர் நோக்கியுள்ளது. சுவாமி விவேகானந்தர் சிக்காகோ நகரத்திற்குப் புறப்பட்ட போது ஈழத்திற்கு முதன்முதலாக 1893 ஆம் ஆண்டு மே மாதம் ஒருநாள் கப்பலிலே வந்திருந்தார். அப்பொழுது அவர் வருகை கவனிக்கப்பட்டவொன்றாக அமையவில்லை. 1893 செப்தம்பர் மாதத்திலே சுவாமிஜி சிக்காகோவில் நிகழ்த்திய சொற் பொழிவினையும் ஏனைய இடங்களில் ஆற்றிய விரிவுரைகளையும் யாழ்ப்பாணம் சைவ பரிபாலன சபை நடாத்திய இந்து சாதனம் பத்திரிகை தொடர்ந்து வெளியிட்டதோடு உதயதாரகை போன்ற
288

கிறித்தவ பத்திரிகைகள் சுவாமிக்கு எதிராக எழுப்பிய கண்டனங் களையும் எதிர்த்து நின்று சுவாமியின் சமயப் பணியை ஈழம் வாழ் மக்களிடையே பிரபல்லியப்படுத்தி அவருடைய பெருமையை எடுத்து உணர்த்தி நின்றது. 1897 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 15 ஆம் தேதி சுவாமி ஈழத்தில் காலடி வைத்த போது அவருக்கு மாபெரும் வரவேற்பு அளிக்கப்பெற்றது. அப்பொழுது பரமஹம் சரின் மற்றொரு சீடரான சுவாமி நிரஞ்ஜநானந்தா அவர்களும் சுவாமிஜியை வரவேற்க இங்கு வந்திருந்தார். ஈழத்திலே சுமார் பத்துத் தினங்கள் தங்கியிருந்த சுவாமிஜி கொழும்பு, கண்டி, மாத்தளை, அநுராதபுரம், வவுனியா, யாழ்ப்பாணம் எனும் இடங்களுக்குச் சென்று இராமகிருஷ்ணரின் சித்தாந்தங்களை விளக்கி அரும்பெரும் சொற்பொழிவுகளை ஆற்றினார். சுவாமி தாயகம் மீண்ட பின்பு பரமஹம்சரின் மற்றொரு சீடரான சுவாமி சிவானந்தா (1854-1934) 1897 ஜூலை மாதம் கொழும்பு வந்து சுமார் ஏழு அல்லது எட்டு மாதம் விரிவுரைகளும் விளக்கங்களும் செய்தனர். சுவாமி விவேகானந்தர் சுவாமி தூரியானந்தாவுடன் 1899 இலே மேனாட்டுப் பயணத்தின் போது மீண்டும் வந்தார்.
1902 ஆம் ஆண்டு ஜூலை மாதம் நான்காம் தேதி சுவாமி விவேகானந்தர் பூதவுடலை நீத்தார். 1902 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 13ம் தேதி ஈழத்தின் முதல் விவேகானந்த சபை கொழும்பிலே அமைக்கப்பட்டது. இச்சபை இராமகிருஷ்ண இயக்கத்திற்கு ஆரம்ப காலத்தில் நல்லுதவியாக அமைந்திருந்தது.
பரமஹம்சரின் சீடர்களில் 1903 இலே சுவாமி திரிகுண திதானந்தாவும் 1906 இலே சுவாமி அபேதானந்தா, சுவாமி இராமகிருஷ்ணானந்தா, சுவாமி பரமானந்தாவும், ஈழத்திற்கு வந்தனர். சுவாமி விவேகானந்தரின் சிஷ்யை சகோதரி அவபாமியா 1910 இலே ஈழம் வந்திருந்தார். 1915 முதலாகச் சுவாமி சர்வானந்தா ஈழத்திற்கு தொடர்ந்து வந்தார். இவருடன் தொடர்பு கொண்ட பண்டிதர் மயில்வாகனம் யாழ்ப்பாணம் ஆனைப் பந்தியில் விவேகானந்த சபை ஒன்றினை ஆரம்பித்தார். 1917 இலே வண்ணை வைத்தீஸ்வர வித்தியாலயத்தைப் பொறுப்பேற்று இராமகிருஷ்ணமிஷன் கல்வி முயற்சிகளில் ஈழத்திலே ஈடுபடத் தொடங்கியது. சுவாமி சர்வானந்தாவுடன் நெருங்கிப் பழகிய பண்டிதர் மயில்வாகனம் இராமகிருஷ்ண மடத்தை அடைந்து 1924 இலே சுவாமி விபுலானந்தராகப் புறப்பட்டார். 1926 இலே வைத்தீஸ்வர வித்தியாலயம் சுவாமி விபுலானந்தரின் பொறுப்பிலே விடப்பட்டது. சுவாமி அவி நாசானந்தா உதவியோடு சுவாமி விபுலானந்தர் இராமகிருஷ்ண இயக்கத்தின் கேந்திரமாக வைத்தீஸ்வர வித்தியாலயத்தை அமைத்துக் கொண்டார். 1926 இலே வண்ணை வெள்ளிக்கிழமை மடத்திலே மாணவர் இல்லம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டது.
சுவாமி விபுலானந்தர் மனேஜராக பதவி வகித்த போது 1925 இலிருந்து கிழக்கிலே திரிகோணமலை, மட்டக்களப்பு மாவட்டங்களிலே பல பழைய பாடசாலைகளைப் பொறுப்பேற்றும் சில புதிய பாடசாலைகளை நிறுவியும் இராமகிருஷ்ணமிஷன் இந்துசமயிகளின் கல்வி வளர்ச்சிக்குப் பெருந்தொண்டாற்றக் காலாக விளங்கினார். 1926 இலே யாழ்ப்பாணத்திலே தொடங்கிய மாணவர் இல்லம் 1929 இலே மட்டக்களப்புக்கு இடமாற்றப்பட்டது.
இந்துக் கலைக்களஞ்சியம்

Page 335
ஈழத்தில் முதல் முதலாக 1925 ஆம் ஆண்டு மே மாதம் திரிகோணமலையிலேதான் இராமகிருஷ்ண ஆசிரமம் அமைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
1929 ஜூலை மாதம் இராமகிருஷ்ணமிசனின் இலங்கைக் கிளை பதிவு செய்யப் பெற்றது. வெள்ளவத்தையில் 1930 ஆம் ஆண்டு ஒக்தோபர் மாதம் இராமகிருஷ்ண ஆசிரமம் ஆரம்பிக்கப் பட்டது. சுவாமி கணாநந்தா, சுவாமி அசங்கானந்தா, சுவாமி சித்தாத்மானந்தா ஆகியோரைத் தொடர்ந்து சுவாமி பிரேமானந்தா 1954 இலே ஆசிரமத்திற்கு பொறுப்பேற்றார்.
கொழும்பு ஆசிரமம் தோன்றிய பின்பு அதுவே ஈழத்தின் இராமகிருஷ்ண மிஷன் தலைமைத் தானமாகியது. பேலூர் மடத்தின் தலைவர் போஷகராக அமைய, அதன் பொதுச் செயலாளர் தலைவராக விளங்க, போஷகர் நியமிக்கும் உதவித் தலைவர் ஆசிரமத்திற்குப் பொறுப்பான சுவாமிகளாகப் பணி புரிவது வழக்கம்.
1960 இலே அரசாங்கம் சட்டம் மூலம் பாடசாலைகளைப் பொறுப்பேற்ற போது மிசன் பராமரிப்பிலே 26 பாடசாலைகள் இருந்தன. 1952 ஆம் ஆண்டு முதல் வெள்ளவத்தை ஆசிரமம் ஞாயிறு சமய வகுப்புக்களைத் தொடர்ந்து நடத்தி வருகின்றது. கதிர்காமத்தில் யாத்திரிகர் மடம் ஒன்றினை 1953 இலே ஆரம்பித்துச் சாதிமத பேதமின்றி அருஞ் சேவை செய்தமையும் குறிப்பிடத்தக்கது. இலங்கை அரசு அம்மடத்தினை 1976 இலே எடுத்துக் கொண்டது. அகில உலக பண்பாட்டு நிலையம் ஒன்றினை 1962 இலே விருந்தினர் அறைகளுடன் மிஷன் கொழும்பிலே அமைத்ததோடு 1969 இலே சுவாமி விவேகானந்தர் நூற்றாண்டு ஞாபகார்த்த மண்டபத்தையும் கட்டியுள்ளது. மட்டக்களப்பிலே மூன்று சேவாஸ்ரமங்களையும் கண்டி அம்பிட்டியில் வலமிழந்த தொழிலாளர் விடுதியையும் இது சிறப்பாக நடத்தி வருகின்றது. 1970 இலே பூரீ இராம கிருஷ்ணாசாரதா சமிதி ஆரம்பிக்கப்பட்டது. (பொ.பூ)
இராமகிருஷ்ணர் (1836 - 1886)
மேற்கு வங்காளத்தில் ஹூக்ளி மாவட்டத்திலுள்ள காமார்புகூர் எனும் கிராமத்திற் பிராமணக் குடும்பத்திலே அவதரித்தவர்; குடிராம் சட்டோபாத்தியாய, சந்திராதேவி என்போரின் புதல்வர்; கதாதரர் என்ற பிள்ளைப் பெயரினர்.
பதினாறு வயதிலே கல்கத்தாவுக்குத் தமையனாரின் மதகுரு வேலையில் உதவி புரியச் சென்றவர்; தமையனார் தகூழிணேஸ் வரம் காளிகோயிலுக்கு அர்ச்சகராகச் சென்ற போது அவருடன் . சென்று உதவியவர். சிறிது காலத்திலே ராதாகாந்த கோயிலுக்கு அர்ச்சகரானார். தமையனாரின் மறைவினை அடுத்துக் காளி கோயில் அர்ச்சகரானவர்.
தகூழிணேஸ்வரத்திற் பணிசெய்த காலத்திலே முன்னை
யிலும் அதிகமாக யோகநெறியில் ஈடுபட்ட வந்தகாலை தேவியின் அருளுக்குப்பாத்திரமானவர். கண்டோராற் சுவாதீனமற்றவராகக்
இந்துக் கலைக்களஞ்சியம்

கருதப்படும் அளவிற்கு ஆன்மீக நிலையில் உயர்ந்தவர்; இதனாற் கோயிற் பொறுப்பினை ஏற்று நடத்த முடியாதவராகக் கருதப்பட்டு ஊருக்கு அனுப்பப்பட்டவர்.
ஊர் சென்று தங்கியிருந்த காலத்தில் சாரதாமணியைப் பெற்றோர் இவருக்குத் திருமணஞ் செய்து வைத்தனர் (1859); ஆயினும் அவர் மீண்டும் தகூழிணேஸ்வரம் சென்று பழையபடியே யோகநிலையிலே ஈடுபட்டு வந்தார்; அக்காலத்திலே சன்னி யாசினி ஒருவரும் சாதனங்களிலே சித்தியடைந்த தோதாத்திரி எனும் பக்தரும் பல்வேறு சமயங்களின் உண்மைப் பொருளையும் உணர்ந்து கொள்ள உதவினர். சாரதாதேவி தகூழிணேஸ்வரம் சென்று கணவனின் நிலையறிந்து, அவருடைய பிரமசரியத்திற்குத் துணையான சிகூடியையாகி அவருக்குத் தொண்டு செய்து வந்தனர்.
நரேந்திரதத்தா (சுவாமி விவேகானந்தர்) சசிபூசன், (சுவாமி இராமகிருஷ்ணானந்தா) முதலாம் சீடர்கள் பூரீ இராமகிருஷ்ண பரம ஹம்ஸரின் போதனைகளைக் கேட்டு அவர் நெறியினைப் பின்பற்றும் சீடராக உருவாகினர்.
எல்லாச் சமயங்களும் ஒலே இலட்சியத்தை அடையப் பின்பற்றும் பல்வேறு பாதைகளே என்னும் விளக்கிப் பத்தொன்பதாம் நூற்றாண்டிலே சமரச சன்மார்க்கத்தை முன்வைத்தவர் பரமஹம்சர், ஆன்மீக வாழ்க்கையினாற் பண்பட்டுத் தெளிவுபெறும் தெய்வீகத்தன்மை அளிக்கின்ற சக்திக்கு உதாரணமாக அமைந்து சனாதன தர்மத்தின் அடிப்படையை விளக்கியவர் பூரீ இராமகிருஷ்ணர் வைதீக தத்துவங்களை எளிமையாகவும் விளக்கமாகவும் எடுத்துக் காட்டி அவற்றிற்குப் புத்துயிர் அளித்தவர் இப்புனிதர்; அந்நிய பண்பாட்டின் மயக்கினைப் பின்னே தள்ளிப் பண்டைய பாரம்பரியத்தினை மதிப்புடையதாகக் கருத வைத்த பெருமையுடையவர் பூீ இராமகிருஷ்ணர், இந்திய சமுதாயத்திலே புரையோடி நின்ற சமூகத்தளைகளை நீக்கி மக்களிடையே சகோதரத்துவத்தை உருவாக்க உழைத்த சீர்திருத்தவாதி பூரீ இராமகிருஷ்ணர்.
வராஹ நகரிலும் பின்பு ஆலம்பாஜாரிலும் மடங்களை நிறுவிய பூரீ இராமகிருஷ்ணரின் சீடர்கள் பின்பு விரிவான முறையிலே பூரீ இராமகிருஷ்ண சங்கத்தை அமைத்து இந்தியாவிலும் ஏனைய தேசங்களிலும் பூரீ இராமகிருஷ்ணரின் போதனைகளைப் பரப்பியதோடு சிறந்த தொண்டினையும் ஆற்றி வந்துள்ளனர்.
பூரீ இராமகிருஷ்ணரின் உபதேச மொழிகளை மகேந்திரநாத்
குப்தா வங்காள மொழியிலே தொகுத்தளித்தனர்; அவற்றின்
மொழி பெயர்ப்புகள் பல்வேறு மொழிகளிலே இன்று காணப்படுவன.
இராமகிருஷ்ணானந்த சுவாமிகள்
(1863 - 1911)
மேற்கு வங்காளத்தில் ஹூக்ளி மாவட்டத்திலுள்ள மயால் -
இச்சாபுரம் எனுமூரிலே பிறந்தவர்; ஈசுவரசந்திரர், பாவசுந்தரி
289

Page 336
தேவி என்போரின் புதல்வர், சசிபூஷண் என்ற பிள்ளைப் பெயரி னையுடையவர்; கல்கத்தாவிலே படிக்கும் காலத்திற் பிரம்ம சமாஜத்தை சேர்ந்திருந்தவர்; பூரீ இராமகிருஷ்ண பரமஹம்ஸரின் தொடர்பினால் அவருடைய பிரதான சீடர்களில் ஒருவரானவர்; பூரீ இராமகிருஷ்ணரின் கடைசி நாட்களிலே காசீபுரத்தில் அவருக்குப் பணிவிடை செய்வதையே கருமமாகக் கொண்டு சுயமுன்னேற்றத்திற்கான வழிதுறைகளைக் கைவிட்டவர்; தம் குரு பரிபூரணமடைந்ததை அடுத்து அவருடைய ஞாபகச்சின்னங் களைக் கண்ணுங் கருத்துமாகக் காத்து வந்ததோடு அவருடைய ஏனைய சீடர்களைப் பேணும் தாதா போலவும் விளங்கியவர்.
வராஹநகர் மடத்தையும் (1886 - 1892) பின்பு ஆலம் பாஜார் மடத்தையும் (1892 - 1897) அக்கறையுடன் கவனித்து வந்தவர்; சசிமகராஜ் என்று பூரீ இராமகிருஷ்ணரின் சீடர்களாற் போற்றப் பெற்றவர்; சுவாமி விவேகானந்தராலும் சுவாமி பிரம்மானந்த ராலும் பெரிதும் மதிக்கப் பெற்றவர்; அன்னை சாரதாதேவியின் அன்புக்குப் பெரிதும் பாத்திரமானவர்; சுவாமி சாரதானந்தரின் (சரத்சந்திரசக்கரவர்த்தி) நெருங்கிய உறவினர்.
சுவாமி விவேகானந்தர் இராமகிருஷ்ண மடத்தினைத் தாபித்த போது அவருக்கு உறுதுணையாக நின்றவர்; இராமகிருஷ்ண பரமஹம்சரின் போதனைகளைத் தென்னிந்தியா, பம்பாய், இலங்கை, பர்மா முதலிய இடங்களுக்கு எல்லாம் சென்று எடுத்துப் பேசியவர், மைசூரிலும் கேரளாவிலும் மிசன் வேலைகள் ஆரம்பிக்கக் காரணகர்த்தாவாக விளங்கியவர்.
1897 ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் சென்னைக்குச் சுவாமி சதானந்தருடன் வந்து இராமகிருஷ்ண மடத்தை நிறுவி அதற்குப் பொறுப்பாகப் பதினான்கு வருடம் விளங்கித் தமிழ் நாட்டிலே பூரீ இராமகிருஷ்ணரின் போதனைகளைப் பரவ வைத்தவர்.
பூரீ இராமகிருஷ்ணரை அவதார புருஷராகக் கண்டு வழி பட்டவர்; அவர் பேரையும் சிந்தனைகளையும் பக்தி சிரத்தையோடு எடுத்துக் கூறிவந்த பரம பக்தர், குருதேவருடைய பூசை சம்பிர தாயத்தை நிறுவி அதைத் திருமடத்தின் நித்திய செயலாக ஆக்கி வைத்தவர்.
இராமகிருஷ்ணானந்தர் வங்காளி மொழியிலே இராம கிருஷ்ண சங்கத்தினர் வெளியிடும் உத்போதன் சஞ்சிகைக்குப் பல கட்டுரைகள் எழுதியுள்ளார்.
பூரீ பெரும்பூதூர் இராமாநுசரின் சரிதத்தை வங்காள மொழியிலே எழுதி 1899 முதல் உத்போதன் சஞ்சிகையிற் சில ஆண்டுகளாகப் பகுதி பகுதியாக வெளியிட்டுள்ளார்; சுவாமி களின் மறைவுக்குப்பின்புஅது புத்தக வடிவிலே வங்காள மொழியில் வெளிவந்தது; இந்நூலின் ஆங்கில மொழிபெயர்ப்பும் வெளிவந்துள்ளது.
இராமகிருஷ்ணானந்தர் வெளியிட்ட முதல் நூலும் அவர் ஆங்கிலத்தில் ஆற்றிய உரையுமாகிய பிரபஞ்சமும் மனிதனும் சென்னை மடத்தின் முதற் பிரசுரமாக 1908 மார்ச்சு மாதத்தில் வெளிவந்தது.
290

Sri Krishna The Pastoral And King-Maker GT Sgth இராமகிருஷ்ணானந்தரின் நூலும் பிரசித்தமானதாகும்.
பண்டையோர் நாடியது, நித்திய ஞானபோதனை, சுகத்தைத் தேடுதல், ஞானமும் பக்தியும், மனிதனுடைய நிஜசொரூபம், பூரீ இராமகிருஷ்ணரும் அவருடைய சங்கமும் என்பன சுவாமிகள் ஆற்றிய சொற்பொழிவுகளின் பிரசுரங்களாம். (பொ.பூ)
இராமகீர்த்தி
தாய்லாந்து தேசம் முன்பு (SAM) என அழைக்கப் பெற்றது. இது கிழக்கில் லாவோஸாலும் தென்கிழக்கில் கம்புச்சியாவாலும் மேற்கிலும் வடக்கிலும் பர்மாவாலும் தெற்கிலே மலேசியாவாலும் சூழப்பட்ட நாடு.
தென் சீனத்திலுள்ள யுந்நான் மாகாணத்திலிருந்து (Yuman Province) தாய் மக்கள் தாய்லாந்துக்குள் வந்தவராகக் கருதப் படுவர். பதின்மூன்றாம் நூற்றாண்டிற்கு முன்பு தாய்லாந்து சுதந்திரமுடைய தனிநாடாக விளங்கவில்லை. அண்மையிலிருந்து அரசுகளின் ஆதிக்கத்தின் கீழ் தாய்லாந்தின் பிரதேசங்கள் அப்பொழுது இருந்தன. கம்போஜத்தின் புநான் அரசு (Funan Kingdom) Golē5LDsf sg). Tēji (Khmer Kingom) LuffLDT 66ůT மொன்ஸ் (Mon) அரசுகள், இந்தோனிசியாவின் பூரீ விஜய ராச்சியம் என்பன தாய்லாந்தின் பகுதிகளைத் தம் ஆதிக்கத்தின் கீழ் வைத்திருந்தன.
1238 அளவிலே முதலாவது தாய் அரசு SukhothaiKingdom) தோன்றியது. அதன் பின்பு அயோத்தி அரசு (Ayuthia Kingdom) 1767 வரை நிலவியது. இப்பொழுது வழங்கும் சக்ரி அரச மரபு (Chakri Dynasty) Î782 (g)(ö6u (ög)IT6ürflug,ff(5ử.
மத்திய தாய்லாந்து தேராவாத பெளத்தத்தின் கேந்திர மாகவும், தென் தாய்லாந்து மகாயண பெளத்தத்தின் கேந்திர மாகவும், கிழக்கு தாய்லாந்து சைவ -வைணவ கேந்திரமாகவும் ஒரு காலத்தில் வழங்கியுள்ளன. பிரமன், சிவன், நாராயணன், இந்திரன், வருணன் என்போர் தாய் மக்களிடம் செல்வாக்குப் பெற்ற இந்துத் தெய்வங்களாகக் காணப் படுகின்றனர். இன்றும் அரச குடும்பச் சடங்குகளிலே பிராமணர் முக்கியத்துவம் பெறு வதையும் அவர்களுடைய கிரியை முறைகள் சிறப்பிடம் பெறு வதையும் காணலாம். தாய் மக்கள் 94 வீதம் வாழும் தாய்லாந்திலே பெளத்தம் பெரும்பான்மையோர் பின்பற்றும் சமயமாக இன்று காணப்படினும் பெளத்த கோயில்கள் பலவற்றிலே இந்துத் தெய்வங்களின் படிமங்களும் புடைச் சிற்பங்களும் திரைச் சீலைகளும் இடம் பெறுவதைக் காணக்கூடியதாகவுள்ளது.
சக்ரி அரச பரம்பரையைத் தோற்றுவித்த முதலாம் ராமா (1782 - 1809) என்பவர் பாடியதே இராமகீர்த்தியாகும். இது இராமாகியன் என்று பொதுவாக வழங்கப்படுகின்றது. இது கொன் (KHON) என வழங்கும் முகமூடி நாடகத்திற்காக இயற்றப் பெற்றது என்று கருதுவர். இரண்டாம் ராமா (1809-1824) முற்றுப் பெறாத இராம சரிதம் ஒன்றினை எழுதியதாகவும்
இந்துக் கலைக்களஞ்சியம்

Page 337
அறியப்படுகின்றது. இவற்றைவிட இராம சரிதம் தொடர்பான வேறு ஆக்கங்களும் தாய்லாந்திலுள. நான்காம் ராமா (1851 -1861) நாட்டிய நாடகம் ஒன்றையும் ஐந்தாம் ராமா (1868 - 1910) பவள பெளத்தர் கோயிலிலுள்ள இராமசரிதம் தொடர்பான திரைச் சீலைகள் பற்றி இயற்றிய செய்யுள் விளக்கங்களும் அறியப் படுகின்றன.
இராமசரிதம் தாய்லாந்தில் வாய் மொழி இலக்கியமாக நெடுங்காலம் வழங்கிவந்து நிழல் நாடகத்திலும் பின்பு முகமூடி நாடகத்திலும் இடம் பெறத் தொடங்கி பின்பு இலக்கிமாகி யிருத்தல் வேண்டும் என்பர். சில சுதேசிய நிகழ்ச்சிகள் இவற்றிலே முக்கியத்துவம் பெறுவது இக்கருத்தினை ஆதரிக்கின்றது என்பர்.
கி. பி. நான்காம் நூற்றாண்டு முதல் மத்திய தாய்லாந்திலே நிலவிய துவாரவதி இராச்சியத்தின் தலைநகரான லோப்புரி (LOppuri) இராமபிரான் அமைத்து அனுமானுக்குப் பரிசாக வழங்கியதாம். மத்திய தாய்லாந்தில் நிலவிய இரண்டாம் பிரதான தாய் அரசான அயோத்தியா இராமபிரானின் சின்னங்கள் பலவற்றையுடையது. பாங்கொக்கிலுள்ள வாட்பூ (Wat po) எனும் பெளத்த கோயிலிலே இராமசரிதத்தை உணர்த்தும் 150 புடைச் சிற்பங்கள் உள. பாங்கொக்கின் பிரதான பெளத்த கோயிலான பவள புத்தர் கோயில் கலரிகளிலெல்லாம் இராமகதை கூறும் திரைகளால் மூடப்பட்டுள்ளன.
இராமகீர்த்தியின் முற்பகுதி இராமனின் முன்னைய மூன்று தலைமுறைகளையும் இராமானாதியோர் சீதை தோற்றங்களையும் இராவணாதியராம் அசுரர் தோற்றத்தையும் வானரர் தோற்றத் தையும் கூறும் இரண்டாம் பகுதி தாடகை வதம் முதல் வனவாசம் நீங்கி இராமன் அயோத்தி மீளும் வரையிலான கதை கூறுவ தாகும். மூன்றாம் பகுதி இலங்கைப் புரட்சி, சீதை நாடு கடத்தப் படல், சீதை பிள்ளைகளைப் பெறுதல், அப்பிள்ளை களோடு இராமன் போர்புரிதல், இராமர் சீதையை மீளப் பெற முயலல், சீதையை பூமாதேவி ஏற்றுக் கொள்ளல், இராம சீதையைத் தேவர் சமாதானம் செய்தல், இராமபுத்திரரின் துணிகரமான செயல்கள் என்பனவற்றை அடக்கி உள்ளது.
இராமகீர்த்தியில் இடம்பெறும் நிகழ்ச்சிகளிற் சில ஆதி காவியத்தில் இல்லாதவை. சூர்ப்பனகை மகளின் வஞ்சகத்தால் தூண்டப்பட்டு, சீதை இராவணன் படத்தை வரைந்ததைக் கண்ட இராமன், சீதை கற்பில் ஐயங் கொண்டு அவளைக் கொன்று விடும்படி இலக்குமணனிடம் கூற, அவன் அவளைக் காட்டில் விட்டுவிட்டு மானொன்றின் இதயத்தைக் கொண்டுவந்து இராமனிடம் காட்டி, அவனை நம்பச் செய்ததாக இராமகீர்த்தி கூறும். ஆசார்ய ஹேமச்சந்திரா எழுதிய சைன இராமாயணத்தில் சீதை இராவணனின் பாதங்களை மட்டும் வரைந்ததாகக் குறிப்புண்டு.
சீதை காட்டிலே ஒரு பிள்ளையை மட்டும் பெற்றாள் என்றும் மற்றப் பிள்ளை இருடியால் உருவாக்கப்பட்டதென்றும் இராம கீர்த்தி கூறும். இருடியின் பாதுகாப்பில் பிள்ளையை விட்டுச் சென்ற சீதை வானரத்தாய்மார் கண்மூடி இருக்கும் இருடியின் பாது காப்பில் பிள்ளையை விட்டு வந்ததை சுட்டிக் காட்ட, சீதை திரும்பி
இந்துக் கலைக்களஞ்சியம்

வந்து பிள்ளையையும் எடுத்துச் செல்கிறாள். கண் விழித்த இருடி பிள்ளையைக் காணாது வேறொரு பிள்ளையை உருவாக்குகிறார். மீண்டு வந்த சீதை கையில் பிள்ளை இருப்பதைக் கண்ட இருடி அதனை விளையாட்டுத் துணையாகக் கொள்ளும்படி கூறுகிறார்.
இராமன் இறந்து விட்டதாகக் கூறி சீதையைத் திரும்பி வரச் செய்தபோது அவள் உண்மையறிந்த பூமாதேவியிடம் தன்னை ஏற்கும்படி கூற, அவளும் சீதையை ஏற்கிறாள். இராமனால் அனுப்பப்பட்ட அனுமானுக்கும் செவி சாய்க்காத சீதை சிவபிரான் சமாதானத்தால் ஒன்றுபட்டு சந்தோஷமாக வாழ்ந்ததாக இராமகீர்த்தி கூறும்.
தசரதனின் யாகத்தில் புறப்பட்ட சோற்றுத்திரளின் ஒரு பகுதியைக் காகம் ஒன்று எடுத்து இலங்கை சென்று மண்டோ தரியிடம் போட, அதனை உண்டு அவள் கர்ப்பிணியாகிச் சீதையைப் பெற்றாள். சீதையால் இராவணனுக்கு அழிவு ஏற்படும் என்று கூறப்பட்டதால் அவளைத் தாழியில் இட்டு ஆற்றிலே விட்டார்கள். மணிமேகலா தெய்வம் சனகன் தியானம் செய்த இடத்திற்கு அத் தாழியை இட்டுச் சென்றது. சனகன் அவளை எடுத்துச் சீதை என்று பெயர் கொடுத்து வளர்த்தான் என்று இராமகீர்த்தி கூறும். சைன இராமாணயமும் சீதையை மண்டோதரி மகளாகவே கூறு கின்றது. இராமனின் சகோதரியாகத் தசரத ஜாதகக் கதை கூறும்.
இராவணன் முற்பிறவியிற் சிவன் வாசல் காவலனாகக் கைலாசத்தில் இருந்ததாக இராமகீர்த்திகூறும். இந்திர சாபத்தாலேயே தசகண்டனாக இராவணன் பிறந்ததாகவும் இந்திரனே இராமனாகத் தோன்றியதாகவும் அது கூறும்.
இராமகீர்த்தியில் இடம் பெறும் நிகழ்ச்சிகளிற் சில கம்பராமாயணத்தோடு ஒத்தனவாகக் காணப்படுவன. இராமன் கண்களும் சீதையின் கண்களும் திருமணத்தின் முன்பு சந்தித்தமை, சிறு வயதில் இராமன் குறும்பினால் ஆத்திரமுற்றி ருந்த கூனி அவனை அரசனாகாமல் தடுக்க முயன்றமை, தசரதன் பரதனையும் கைகேயியையும் தன் ஈமக்கிரியைகளில் பங்கு கொள்ளக் கூடாது என்று கட்டளையிட்டிருந்தமை, சூர்ப்பனகை அழகிய பெண் வடிவில் இராமனை ஏமாற்ற முயன்றமை, அனுமான் இராமனுக்கு வாலி சுக்கீரீவன் பகைமை கூறல், இராமன் அடையாளமாகக் கூறிவிட்ட இரகசிய நிகழ்ச்சிகள் என்பன தமிழ் இராமாயணத்திலேயே முதலில் காணப்படுவன. இவை இராமகீர்த்தியிற் இடம் பெறுதல் குறிப்பிடத்தக்கது.
திருஞானசம்பந்தரின் தோடுடைய செவியன் பதிகத்தையும் சுந்தரரின் பித்தாப்பிறைசூடி பதிகத்தையும் சிவாலய வாசம் திறத்தல் என்ற சடங்கிலும் அப்பரின் கூற்றாயினவாறு பதிகத்தினை கைலாச வாசல் அடைத்தல் எனும் சடங்கிலும் தங்கள் ஊஞ்சல் விழாவை திருப்பாவை திருவெம்பாவை விழா என்று கொள்பவருமான "தாய் மக்கள் கம்பராமாயணத்தின் சிறப்பமிசங்களைத் தங்கள் இராமகீர்த்தியிற் பேணி அமைத்துக் கொண்டமை வியப்பிற்குரியதல்ல.
இராமனை விஷ்ணு அவதாரமாகக் கருதினும் சிவனுக்கு அடுத்த நிலையிலேயே தாய் சமூகம் வைத்திருக்கிறது. இதனால்
291

Page 338
இராமகீர்த்தி இந்திய இராமாயணங்கள் இராமனுக்கு அளிக்கும் அதியுன்னத நிலையை அளிக்கவில்லை. இராவணன் சீதை மீது கொண்ட ஆசையை உன்னதமான காதலாகக் காட்டவும் அவன் காதலுக்காக எல்லாவற்றையும் இழந்து நின்றதை உணர்த்தி இரக்க உணர்ச்சி அவன் மீது ஏற்படுத்தவும் இராமகீர்த்தி முயல் கின்றது. அனுமான் பாத்திரம்கூட இராமகீர்த்தியில் வேறு படுகின்றது. அவனைத் தூயோனாகவோ பிற பெண்ணை நோக்காதவனாகவோ இராம பக்தனாகவோ இராமகீர்த்தி படைக்கவில்லை. இராமகீர்த்தியில் போர் முக்கிய இடம் பெறு கின்றது. அறநீதியுணர்த்தவோ தர்மவாழ்வினைக் காட்டவோ இராமகீர்த்தி முயலாது போருக்கு முக்கியத்துவம் தருகின்றது.
(பொ.யூ.)
இராமச்சந்திரன், ச.
யாழ்ப்பாணம் நல்லூர் சங்கரப்பிள்ளையின் புதல்வர் பண்டிதர் இராமச்சந்திரன். இவர் பாடிய திருக்கேதீச்சரப் புராணம், சேர். கந்தையா வைத்தியநாதன் (1896 - 1965) காலத்துத் திருப்பணிச் சபையார் திருப்பணி வரை கூறுகின்றது; இடைக்காடு தமிழ் மன்றம் 1966 இலே பதிப்பித்தது. (பொ.பூ)
இராமச்சந்திரா, க. (26.04.1976)
யாழ்ப்பாணம் நயினாதீவு கதிரேசுவின் புதல்வர்; கொழும் பிலே தலங்கமையிற் பிற் காலத்தில் வாழ்ந்தவர்; இலங்கை அரசாங்கப் புகையிரதப் பகுதியிலே உயரதிகாரியாகி ஓய்வு பெற்றவர் 'ரமணசரணானந்தன்” என்றும் வழங்கப் பெற்றவர்; பூரீ ரமண மகரிஷிகளை ஞானகுருவாகக் கொண்டவர்; கொழும்பிலே அரசாங்க ஊழியரிடையே சத்சங்கம் ஆரம்பித்து சமய நிகழ்ச்சிகளை நடத்துவித்தவர்; காலத்திற்குக் காலம் சமயப் பெரியார்களை ஈழத்துக்கு அழைத்து, ஈழநாட்டு மக்களுக்கு அவர்களுடைய தரிசனமும் கருத்துரைகளும் கிடைக்கச் செய்தவர்; சமயசமரச நோக்குடையவர்; அகில உலக சமய மகாநாடுகளிற் கலந்து சிறப்பித்தவர்; Religious Digest எனும் ஆங்கிலச் சஞ்சிகையை ஆசிரியராக வழிநடத்தியவர்; நா. முத்தையா தொடங்கிய ஆத்மஜோதி ஈழத்தின் ஆத்மீக வாழ்வின் வளர்ச்சிக்கு உதவ உறுதுணையாகக் கெளரவ ஆசிரியராக விளங்கியவர்.
தமிழிலும் ஆங்கிலத்திலும் ஏராளமான கட்டுரைகளையும் நூல்களையும் எழுதியவர்; தமிழிலே செய்யுள்களும் பாடியவர்; தமிழ் நூல்களிற் சில மேல் வருபவை; பகவான் பூணுரீ ரமணமகரிஷிகளின் அவதார மகிமையும் சந்நிதானப் பெருமையும் (1942), ரமணத் தியானம், ரமண ஸ்தோத்திரமஞ்சரி, பூணூரீ ஆதி சங்கரரின் அவதார மகிமையும் அவர் காட்டிய அருள் நெறியும், அன்னை கிருஷ்ணபாய் பெரியார் தோத்திர மஞ்சரி (1948), பெரியார் அர்ச்சனை மாலை, சமரசஞானக் கோவை, உதிர்ந்த மலர்கள், முருகன் புகழ்மாலை, பூனி கதிர்காமப்பதிகம் (1961) செல்வச் சந்நிதிப் பதிகம், ஆங்கில நூல்களிற் சில மேல்வருவன;
292

Hinduism. In A Nutshell In The Company Of Saints Religions Of The Tamils - Past And Present The Message Of Saint Thayumanavar Astrology. As A Science - A Challenge To
Church And Scientists. (பொ. பூ) SUTTADSFTT1ólaj 6)3Ftigu JITTñ
தமிழகம் செட்டிநாடு கானாடு காத்தான் எனுமூரினர்; பத்தொன்பதாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர்; சா. ரா. ம. முத்தைய செட்டியாரின் புதல்வர்; சிதம்பரம் நா. சிவராமச் செட்டியாரிடம் தமிழ் கற்றவர்.
கருவூர்ப் பசுபதீச்சுவரர் பேரில் ஆநிலை வெண்பா பாடியவர்; இந்நூல் சிதம்பரம் சித்தாந்த வித்தியாநூபாலன யந்திர சாலையில் 1893 இலே பதிப்பிக்கப்பட்டது. (பொ.யூ.)
@SUTTI1.DBFT 1ólst 603Ft1gu JITTñ
19த்தொன்பதாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர்; தொண்டை நாடு திருவெவ்வுளூர் (திருவள்ளூர்) எனும் ஊரினர்; வேங் கடாசல செட்டியாரின் புதல்வர்; திருத்தணிகை வீரசைவ மரபினர் கந்தசுவாமியாரின் மாணவர்; பாலசுந்தர செட்டியார், சலசலோசன செட்டியார் ஆகியோரின் தந்தை.
சீகாளத்திக் கலம்பகம், திருக்கழுக்குன்றக் கலம்பகம், திருவிடை மருதூர்க் கலம்பகம், சிறுத் தொண்டர் சரித்திரக் கீர்த்தனை, திருப்பரங்கிரிக் குமாரவேலர் தாலாட்டு, முருகக் கடவுள் துதி மஞ்சரி முதலியனவற்றை இயற்றியவர். (பொ. யூ.)
இராமசாமி சுவாமிகள்
19த்தொன்பதாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர்; கோயிலூர்
ஆதீனம் சிதம்பர சுவாமிகளின் மாணவர்
இலட்சணாவிருத்தி, ஒழிவிலோடுக்கமூலம், கீதா சாரத் தாலாட்டு, சசிவர்ண சரித்திரம், சசிவர்ண போதம், சீவன்முத்திப் பிரகரணம், துவாதச நாம சங்கீர்த்தனம், நானாசீவவாதக் கட்டளை எனும் நூல் களைப் பதிப்பித்தவர்; அத்வைத போததிபிகை இயற்றியவர் என்பர் சிலர். (பொ. பூ)
இராமசாமி நாயுடு
காஞ்சிபுரம் இராமசாமிநாயுடு தெலுங்கர் ஆயினும் சிறந்த தமிழ் வித்துவான்; கா. நமச்சிவாய முதலியார் முதலானோர் தமிழ்க் கோவைகளையும் திருக்குறளையும் அவரிடம் பாடங் கேட்டவர்கள்; “கோவைநாயுடு” என்று சிறப்பிக்கப் பெற்றவர்; வைணவ ராயினும் சைவப்பற்று உடையவர்; இராமனந்த யோகி, இராமானந்தசாமி என்று பின்பு வழங்கப் பெற்றவர்.
இந்துக் கலைக்களஞ்சியம்

Page 339
பலநூல்களுக்கு உரையெழுதியவர்; அவற்றிலே திருவாய் மொழி (1899), கம்பராமாயணம், திருவிசைப்பா - திருப் பல்லாண்டு (1938), சுந்தரர் தேவாரம், திருவெங்கைக் கோவை, சீகாளத்திபுராணம், சின்மயதீபிகை, தனிப்பாடற்றிரட்டு என்பன சில: கல்லாடத்திற்கு முன்னைய வுரைகளோடு அகலவுரையும் உரையின்றி இருந்த மூன்று பாடலுக்கு அரும்பதவுரையும் கண்டவர் (1911).
பூனி பக்தலீலாம்ருதவசனம், பிரபுலிங்க லீலை வசனம், பிரபோதசந்திரோதயவசனம் எழுதியவர்.
கந்தரனுபூதி, திருப்பாவையுரை, அரிசமய்தீபம் என்பன வற்றை முறையே திருமயிலை சண்முகம்பிள்ளை, அ. தி. ல, பூரீ நிவாஸ்தாதா சாயர், முத்துக்கிருஷ்ண நாயுடு என்பவரோடு சேர்ந்து பதிப்பித்துள்ளார். (பொ, பூ.)
SUTT1D3Fů 1óUT1D6COflul Jøör
தமிழ்நாடு இராமநாதபுரத்தைச் சேர்ந்தவர்; ஞானசம்பந்தப் பிள்ளை எனும் தீட்சாநாமமுடையவர்; திரிசிபுரம் சி. மீனாட்சிசுந்தரம் பிள்ளையின் மாணவகர், பூரீ ஆறுமுக நாவலரிடமும் பாடம் கேட்டவர்.
கம்பரந்தாதி, முல்லையந்தாதி, திருவிளையாடற் புராணம் மதுரைக் காண்டம் முதலியனவற்றிற்கு உரையெழுதியவர்.
கச்சியானந்த ருத்திரேசர் பதிற்றுப் பத்தந்தாதியும் கழி நெடிலும் (1879), காஞ்சிப் புராணம் (1878). தேவாரம் தலமுறை (1881), சிவஞான முனிவர் பிரபந்தத் திரட்டு (1889), திருப்பூவணப் புராணம் (1896), பேரூர்ப் புராணம் முதலியவற்றைப் பதிப்பித்தவர்.
காஞ்சிநாகலிங்கமுனிவர் பதிப்பித்த மெய்கண்ட சாத்திரம் பதினான்கின் மூலத்தையும் உரையையும் பார்வையிட்டவர். (1897). (பொ. பூ)
இராமதாசர்
19தினைந்தாம் நூற்றாண்டின் பிற்பகுதி அல்லது பதினாறாம் நூற்றாண்டின் முற்பகுதியில் வாழ்ந்தவராகலாம் காஞ்சோலா கோபன்ன என்ற இயற்பெயரினையுடையவர்; தெலுங்குதேசத்து பத்திராசலத்தைச் சேர்ந்தவர், கபீரின் சீடர், இராம பக்தர்; தெலுங்கில் இன்னிசைப் பாடல்கள் பல பாடியவர்; இவர் தெலுங்கு
மொழியில் இயற்றிய தாசரதி சதகம் பிரபல்லியமானது.
(பொ. பூ)
&UTID:5Taio (j6os – 168)
19காராட்டிர சமய ஞானிகளிலே பெருஞ்செல்வாக்குடன் திகழ்ந்தவர் ரீ இராமதாஸ், மராத்தி இலக்கிய கர்த்தாக்களிலும் அவருக்கு இடமுண்டு.
இந்துக் கலைக்களஞ்சியம்

கோதாவரி தீரத்திலே ஜம்பா எனும் ஊரிலே பிராமணர் மரபிலே இவர் தோன்றியவர். பாலியத்திலே தந்தையை இழந்து, இளமையிலே வீட்டைத்துறந்து, நாசிக் நகரை அடுத்த தக்ளி எனும் இடத்திலே நிட்டைகூடி, இராமபிரானின் அருளுக்குப் பாத்திரமானார். தக்ளியிலே பன்னிரு வருடத்தைக் கழித்தவர். அங்கிருந்து புறப்பட்டு யாத்திரை மேற்கொண்டு பன்னிரு வருடம் கழிந்த பின்பு கிருஷ்ணாநதிக்கரையிலே கபாலம் (Caphala) எனும் இடத்திலே தங்கி மடம் தாபித்தார். அங்கு இராமபிரானைப் பிரதிட்டை செய்து வழிபட்டு வந்தனர்.
இங்கு தங்கியிருந்த காலத்திலே மகாராட்டிர மன்னன் சிவாஜியின் (1627 - 1680) நட்பும் ஆதரவும் இராமதாஸ் சுவாமிகளுக்குக் கிடைத்தன. மகாராட்டிரத்திற் பல இடங்களிலும் அவர் மடங்களைத் தாபித்தார்; அழிந்து கிடந்த கோயில்களைப் புதுக்குவித்தார்; பலசீடர்களுக்குக் குருவாக விளங்கினார்.
பூரீ இராமதாஸ் சுவாமிகள் தாஸ்போதம் எனும் சமயக் கடமைகளைக் கூறும் நூலையும் வேறு சில சிறிய நூல்களையும் இயற்றியுள்ளார். அபங்கா எனப்படும் பாசுரங்கள் பல பாடியுள்ளார்; கீர்த்தனைகளும் இயற்றியுள்ளார்.
பராலியிலே 73 பராயத்திலே பூரணமடைந்தார். பொ. பூ.
@gmກຫລຽນທີ
முநீ இராமபிரான் அவதரித்த திருநாள் விழாவாகக் கொண்டாடப்படுவது பூரீ ராமநவமி. சித்திரை மாதத்திற் புணர்வசு நட்சத்திரம் உச்சத்தில் இருக்கும்போது சுக்கில பட்சத்தின் ஒன்பதாம் நாள் இராமநவமியாகக் கொண்டாடப்படுகின்றது.
இது வட இந்தியாவிலே பிரபல்லியமான விழாவாகும். ஒன்பது நாட்களுக்கு விழாக் கொண்டாடுவார்கள். அப்பொழுது இராமசரிதங்களைப் படிப்பதும் காலாட்சேபம் செய்வதும் சிறப்பாக நடைபெறும்.
உத்தரப் பிரதேசத்திற் பைசாபாத்துக்குச் சுமார் நான்கு மைல் தொலைவில், கோக்ரா நதிக் கரையில், அமைந்த அஜோத்யாவிலே இராமநவமிக்கு மக்கள் பெருந்திரளாகக் கூடிப் புனித சரயுநதியிலே தீர்த்தமாடுவர்.
தமிழ் நாட்டிலும் இராமநவமி கொண்டாடப்படுவதாகும். திருவரங்கப் பெருமாள் கோயிலிலுள்ள கல்வெட்டொன்று இராமநவமி கொண்டாடுவதற்குக் கிராமம் ஒன்றைத் தானமாக அளிக்கப் பெற்ற செய்தியைக் கூறுகின்றது. செங்கற்பட்டு மாவட்டத்திலுள்ள உரகடத்துக் கோதண்ட ராமசுவாமி கோயில் சாசனம் ஒன்று இராமநவமி கொண்டாடுவதற்கு நிலக் கொடை வழங்கியதைச் சுட்டுகின்றது.
வெற்றியும் செல்வமும் நல்லின்பமும் நல்லறிவும் நீண்ட வாழ்க்கையும் சித்திக்க வேண்டும் என்று பக்தர்கள் இவ் விழாவினைக் கொண்டாடுவர் என்பர். (பொ. பூ)
293

Page 340
இராம நாடகக் கீர்த்தனை
கீர்த்தனைகளைச் சிறப்பியல்பாகக் கொண்டு இராமாயணக் கதையை நாடகமாக அமைத்துப் பாடப் பெற்றது இராமநாடகக் கீர்த்தனையாகும்.
இதனை இயற்றியவர் சீகாழி அருணாசலக் கவிராயர் (1712 - 1779) என்பவராவர். கவிராயரவர்கள் தம் இராமநாடகக் கீர்த்தனையை 1771 இலே அரங்கேற்றியுள்ளார்.
கம்பருடைய இராமாயணக் கதையைத் தழுவி, அவர் கருத்துக்களையும் மொழியையும் பேணி இராமநாடகக் கீர்த்தனை இயற்றப்பட்டுள்ளது. இந்நாடகம் இராம பட்டாபிஷேகத்துடன் முடிவடைகின்றது.
இராம நாடகக் கீர்த்தனை நாடகத்திலே 197 தருவும் அறுபது திபதையும் ஒரு தோடயமும் இசைப் பாடலாக அமைய 268 விருத்தமும் ஆறு கொச்சகமும் இரு வெண்பாவும் ஒரு கலித் துறையும் ஒரு வசனமும் இடம் பெறுவதாகப் பி. இரத்தினநாயகர் ஸன்ஸ் பதிப்பு (1964) கணக்கிட்டுக் கூறுகின்றது.
கீர்த்தனைகள் 1718 இலே அரங்கேறிய திருக்குற்றாலக் குறவஞ்சியில் இடம் பெறினும் பெருமளவில் இடம் பெறத் தொடங்குவது இராம நாடகக் கீர்த்தனையில் என்று கூறலாம். சீகாழி முத்துத் தாண்டவரும் பதினெட்டாம் நூற்றாண்டிலே பல தனிக் கீர்த்தனைகளைப் பாடியுள்ளார்.
இராமநாடகக் கீர்த்தனையைப் பின்பற்றி மழவை சுப்பிரமணிய பாரதியாரின் திருவிளையாடற் கீர்த்தனை, நரிமணம் கோபால கிருஷ்ணபாரதியாரின் நந்தனார் சரித்திரக் கீர்த்தனை, கவிகுஞ்சரபாரதியாரின் கந்த புராணக் கீர்த்தனை, இராமசாமி சிவனின் பெரியபுராணக் கீர்த்தனை முதலியன பத்தொன்பதாம் நூற்றாண்டில் வெளிவந்துள்ளன.
செம்மையான பேச்சுத்தமிழிலே, சுவைமிக்க நடையிலே, துடிப்பான சொல்லாட்சியுடன் அபாரமான வர்ணனைத்திறனைப் புலப்படுத்தி அற்புதமான நகைச்சுவையுடன் அமைந்து பெரும் கீர்த்தி பெற்றது இராமநாடகக் கீர்த்தனை. இராமனைப் பாமர பாஷையிற் பேச வைத்துத் தன்னேரில்லாத தலைவனாக அருணாசலக் கவிராயர் படைத்துள்ளார்.
திருத்தொட்டிக்கலை வையாபுரி முதலியார் சென்னையிற் பிரபவ வருடம் (1867) இராமநாடகக் கீர்த்தனையைப் பதிப்பித் துள்ளார். அவர் பதிப்பு முன்னர் ரி. வேங்கடாசல முதலியாரும் பி. ராமசாமி நாயகரும் வெளியிட்ட பதிப்பினைத் தழுவியது. ஆயினும் முன்னைய பதிப்பு வெளியான ஆண்டு தெரியவில்லை. சிற்றேரி அருணகிரி முதலியார் பதிப்பு ஒன்று பழைய பதிப்பாகக் கேட்கப்படுகின்றது. அப்பதிப்பு வேங்கடாசல முதலியார், ராமசாமி நாயகர் என்போர் பதிப்புக்கு முந்தியதோ அல்லது பிந்தியதோ என்பதும் அறியுமாறில்லை. வையாபுரி முதலியார் பதிப்பினை அடுத்துப் பத்தொன்பதாம் நூற்றாண்டிலே 1870, 1875, 1880 1883, 1893 முதலிய ஆண்டுகளிலும் இராம நாடகக் கீர்த்தனை வெளிவந்துள்ளது.
294

இராமநாடகக் கீர்த்தனைப் பதிப்புகளிலே பட்டுர் ராஜசேகர முதலியார் பாடிய இராமாயண ஒரடிக் கீர்த்தனை ஒன்றும் இடம் பெறுகின்றது. இது இராமவதாரக் கதையினைச் சுருக்கமாக அமைத்துக் கூறும் பாயிரம் போன்றதாகும்.
செகநாதகவி என்பவர் இயற்றிய இராமாயண ஒரடிக் கீர்த்தனை ஒன்றும் சென்ற நூற்றாண்டின் பிற்பகுதியில் அச்சிடப்பட்டுள்ளது. (பொ. பூ)
இராமநாதஞ் செட்டியார், அ. (1855 - 1944)
அமராவதிப் புதூரில் வயிநாகராம் குடும்பத்திற் பிறந்தவர்; தருமபுர ஆதீன வித்துவ சிரோமணி எனப் பாராட்டப் பெற்றவர்; மயூரகிரிக்கலம்பகம் நாட்டரசன் கோட்டைக் கன்னுடையம்மன் பதிகம் கொன்னையூர் மாரியம்மன் பதிகம் அரியக்குடி வாகனக் கவி திருப்பரங்கிரி மும்மணிக்கோவை எனும் பிரபந்தங்களைப் பாடியவர். (பொ. யூ.)
இராமநாதபிள்ளை, ப. (1890)
திருவள்ளுவரகம் சித்தாந்த பண்டிதர் இராமநாதபிள்ளை திருநெல்வேலி மாவட்டத்தைச் சார்ந்த குலசேகர பட்டினத்திற் பிறந்தவர்; சு. பரமசிவன்பிள்ளையின் புதல்வர்; தமிழ் நூல்களை முறையாகக் கற்றவர்; ஆங்கிலமும் கற்றவர்; வணிகத்திலே ஈடுபட்டவர்; 1916 இலே கொழும்பு வந்து ராம, ப, செந்திலாறுமுகம் பிள்ளையுடன் வணிகம் செய்தவர்; 1946 முதல் திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகத்திலே புலவராகப் பணியாற்றியவர்.
திருமந்திரம் விளக்கவுரை, திருவாசகம் விளக்கவுரை, சிவஞான போதச் சிற்றுரை விளக்கம் முதலிய உரைகளை எழுதியவர். (பொ. யூ.)
இராமநாதன், சேர். பொன்னம்பலம் (1851 - 1930)
இராசவாசல் முதலியார் அ. பொன்னம்பலத்தின் இரண்டாம் புதல்வர், குமாரசுவாமி முதலியாரின் தம்பி, சேர். பொன்னம்பலம் அருணாசலத்தின் தமையனார்; சேர். முத்துக் குமாரசுவாமியின் மருகர்; கொழும்பிலே பிறந்தவர்.
கொழும்பு இராணி கல்விக் கழகத்திலும் சென்னை பிரசிடென்சி கல்லூரியிலும் கற்றவர்; சேர் றிச்சட் மோர்கனின் கீழ் சட்டக் கல்வி பயின்று 1873 இலே உயர் நீதிமன்ற வழக்கறிஞர் ஆனவர்; இலங்கை அரசியலில் 1879 முதல் ஐம்பது வருடங்கள் தமிழ் பேசும் மக்களின் பிரதிநிதியாகவும் அரசின் உத்தியோகப் பிரதிநிதியாகவும் கற்ற இலங்கையர் தேர்ந்தெடுத்த பிரதி நிதியாகவும் அரசு தேர்ந்த அங்கத்தவராகவும் முக்கிய பங்காற்றிய தேசீயத் தலைவர்.
இந்துக் கலைக்களஞ்சியம்

Page 341
அருள்பரானந்த சுவாமிகளின் தொடர்பால் சமயம், தத்துவம், யோகநெறி என்பனவற்றைத் தெளிவாகக் கற்றுணர்ந்தவர்.
கீழைத்தேய மெய்யியல் தூதுவராக 1905 - 1906 இலே அமெரிக்கா சென்று சொற்பொழிவுகளாற்றிப் பேரெடுத்தவர்.
சைவசித்தாந்த மகாசமாஜத்தின் முதல் மாநாட்டிற்குத் தலைமை வகித்தவர் (1906).
தந்தை கொழும்பு கொச்சிக்கடையிற் கட்டி 1857 நவம்பரிலே கும்பாபிஷேகம் செய்வித்த, பூரீ பொன்னம்பலவாணேசர் கோயில் எழுந்தருளிய இடத்திலே புதியதோர் கோயிலை 1907 இலே கருங்கற் பணியாக ஆரம்பித்துப் பெரும்பான்மையான வேலை முடிந்ததை அடுத்து 1912 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 21 ஆம் தேதி கும்பாபிஷேகம் செய்வித்தவர்.
பெருந்தொகையான பொருட் செலவிலே 1913 இலே சைவப் பெண்களுக்காக மருதனார் மடத்திலே இராமநாதன் கல்லூரி யையும் 1921 இலே சைவ ஆண்களுக்காகத் திருநெல்வேலியிலே பரமேஸ்வரா கல்லூரியையும் கட்டி வித்தியாதானம் செய்தவர்.
1923 இலே யாழ்ப்பாணத்திற் சைவ வித்தியா விருத்திச் சங்கம் தோன்றுவதற்குக் காலாக இருந்ததோடு அதன் முதல் தலைவராகவும் பள்ளிக் கூடங்களின் மனேஜராகவும் 1926 வரை சேவை செய்தவர்; தொடர்ந்து அதன் போஷகராக விளங்கியவர்.
AN EASTERN EXPOSITION OF THE GOSPEL OF JESUS ACCORDING TO ST MATHEW (1898) AN EASTERN EXPOSITION OF THE GOSPEL OF JESUS ACCORDING TO ST. JOHN (1902) THE CULTURE OF THE SOUL AMONG WESTERN
NATIONS (1907) THE SPIRIT OF THE EAST CONTRASTED WITH THE
SPIRIT OF THE WEST (1905)
ON FAITH OR LOVE OF GOD (1897)
பகவத்கீதா தமிழ்மொழி பெயர்ப்பும் விருத்தி யுரையும் (1914), திருக்குறள் பாயிரமும் இராமநாதீயம் எனும் விருத்தியுரையும் (1919).
பூனி இராமநாத தர்மசாஸ்திர பாடம் என்பன இராம நாதன் சிறப்பாக ஒப்பியல் நோக்கிலே எழுதிய நூல்களாம்.
(பொ.யூ.)
இராமநாதன், வை.
யாழ்ப்பாணம் வண்ணார்பண்ணை மேற்கினைச் சேர்ந்தவர்; மட்டுவில் க. வே. திருஞானசம்பந்தபிள்ளை ( -1955) வசனமெழுதிய அரிச்சந்திர நாடகம், இராமாயணம் அயோத்தியா காண்டம் பாதுகாபட்டா பிஷேகம், இராமாயணம் ஆரணிய காண்டம் அல்லது சீதாபகரணம், சீதா கலியாணம் எனும் நாடகங்களுக்குப் பாட்டெழுதியவர்.
இந்துக் கலைக்களஞ்சியம்

திருநல்லைத் திருப்புகழந்தாதி பாடியவர்; அது யாழ்ப்பாணம் நாவலர் அச்சுக் கூடத்திற் பிரபவ வருடம் ஆடி மாதம் (1927) அச்சிடப் பெற்றது. (பொ. பூ)
இராமநாதன் செட்டியார், கா.
(1899 - 1966)
இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்; மலேசியாவிலே வழக்கறிஞராகவும் அரசியல்வாதியாகவும் விளங்கியவர்; பல இடங்களுக்கும் சென்று சமயச் சொற்பொழிவுகள் ஆற்றியவர்.
ஆழமும் அகலமும், ஏன் பிறந்தோம், சைவத்தின் சிறப்பு, ஞானச் செய்தி, பார்ப்பது எது, மலேசியா இந்தியா யாத்திரை, வாழ்க்கையும் சமயமும், வேலன் விளையாட்டு முதலிய நூல்களை
இயற்றியவர்.
இராமநாதன் செட்டியார் - வே.
இருபதாம் நூற்றண்டில் வாழ்ந்தவர்.
ஆவினன்குடியந்தாதி (1939), கோமதியம்மை பஞ்சரத்தினம், திருப்பரங்கிரி மும்மணிக் கோவை,
திருவேரகவருக்கமாலை என்பனவற்றைப் பாடியவர்.
(பொ. யூ.)
6D811ਓ
காஞ்சிபுரத்தைச் சேர்ந்தவர்; பிரபோத சந்திரோதய வசன மொழிபெயர்ப்புச் செய்தவர்; தாயுமானவர் பாடலுக்குக் குறிப்புரை எழுதியவர். (பொ.யூ.)
@p605 ឧយរ៉ា, ស (e49)
இராமலிங்க முனிவர் எனவும் அழைக்கப்பெறுவர். சந்திரசேகர ஐயரின் புதல்வர்; யாழ்ப்பாணம் நல்லூரைச் சேர்ந்தவர்; அராலி மேற்கில் வசித்தவர்.
சகம் 1590 க்குச் சமமான பிலவங்க வருடம் வைகாசி மாதம் (1667) ஈழத்தில் முதல் முதலாக வாக்கிய பஞ்சாங்கம் கணித்துக் கரலிகிதமாய் வெளிப்படுத்தியவர்.
சந்தானதீபிகை எனும் சோதிட நூலை 1713 இலே சங்கதத்திலிருந்து மொழி பெயர்த்துப் பாடியவர்; அது புரசைப் பாக்கம் விவேக விளக்க அச்சுக்கூடத்தில் 1868 இலே அச்சிடப் பெற்றது. அதனைச் சு. நடராசையர் பரிசோதித்துப் பொழிப்புரை செய்ய, ச. இ. சிவராமலிங்கையர் 1901 ஆம், 1940 ஆம் ஆண்டுகளில் இருமுறை பதிப்பித்தனர். (பொ.யூ.)
295

Page 342
  

Page 343
&ITID6ól'É851b, 85. (isso - 1953)
யாழ்ப்பாணம் சரசாலை கந்தையா பிள்ளையின் புதல்வர் வித்துவான் இராமலிங்கம்; மட்டுவில் க. வேற்பிள்ளை உபாத்தி யாயரிடம் தமிழ் கற்றவர்; யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் ஆங்கிலம் கற்றவர்; நீராவியடியில் வாழ்ந்த வேதாரணியம் ஐயாசாமிக் குருக்கள், புத்துவாட்டிச் சோமசுந்தரம் என்போரிடம் இசை கற்றுத் தேறியவர்; யாழ்ப்பாணத்திலே தோன்றிய சரஸ்வதி விலாச சபை எனும் நாடக சபையிலே முக்கிய பங்கு கொண்டிருந்தவர்; மட்டுவில் வடக்கு கமலாசனி வித்தியாசாலை நிறுவுவதிலே முன்னின்றுழைத்தவர்; இசைப் பாடல்கள் ஏராளம் பாடியவர்; பிரபோத சந்திரோதய மொழி பெயர்ப்பினைத் தழுவி, சமய உருவக நாடகமாக நமசிவாயம் அல்லது நான் யார்?
இயற்றியவர்; அது 1929 இலே அச்சிடப் பெற்றது. (பொ.யூ.)
இராமலிங்கம், வ. (1885)
யாழ்ப்பாணம் சுதுமலை என்னுமூரினர்; குலநீதி வல்ல மாப்பாண முதலியார் மரபினர்; ஆணைக்கோட்டை கு. வயிரமுத்து உடையாரின் புதல்வர்; நவாலி கா. முத்துக்குமாரு என்பவரின் மாணவர்; தமிழும் ஆங்கிலமும் கற்றவர்; மாணாக்கருக்குப் பாடஞ் சொல்வதையும் புராணப் பிரசங்கம் செய்வதையும் கருத்துடன் செய்தவர்; கொழும்பிலே மறைந்தவர்.
சுதுமலை சங்களை அம்மன் மீது சங்களை யந்தாதி பாடியவர்; தனிப் பாடல்களும் இசைப்பாடல்களும் இயற்றியவர்; தமயந்தி விலாசம் (நளச்சக்கரவர்த்தி விலாசம்), மாணிக்கவாசகர் விலாசம் நவாலி மு. அப்பாத்துரை பிள்ளையால் 1876 இலே பதிப்பிக்கப் பெற்றது. (பொ.யூ)
இராமலிங்கம் பிள்ளை, வெ. (1888)
நாமக்கல் கவிஞர் என்று போற்றப்படுபவர்; தமிழ்நாடு சேலம் மாவட்டத்திலே தாயூராகிய மோகனூரிற் பிறந்தவர், பரனூர் வெங்கட்ராம பிள்ளையின் புதல்வர், குமாஸ்தாவாகவும் பள்ளியா சிரியராகவும் ஒவியராகவும் வாழ்க்கையின் ஆரம்ப கட்டங்களில் விளங்கிப் பின்பு இந்திய காங்கிரஸ் அரசியல் வாதியாகப் பணிபுரிந்து, ஆஸ்தான கவிஞராகச் சிறப்புப் பெற்றவர்.
கவிதை, கீர்த்தனம், நாடகம், நாவல், கட்டுரை, இலக்கிய உரை முதலிய துறைகளிலே பல்வேறு ஆக்கங்களை அளித்தவர்; தேசீயக் கவிஞர், காந்திபக்தர், தமிழ்க்கவிஞர், சமுதாய சீர்திருத்தவாதி எனப் போற்றப்பெற்ற நாமக்கல் கவிஞர் இறைவன் மீதும் இறையடியார் மீதும் பல பாமாலைகளைச் சூட்டி யுள்ளார்; பஜகோவிந்தத்தையும் பகவத்கீதையின் சாங்கிய யோகத்தையும் தமிழிலே பாடியுள்ளார்.
கவிஞருடைய பாடல்களிற் பெரும்பான்மையானவை இந்நூற்றாண்டின் முப்பதுகளிலிருந்து புத்தகங்களாக வெளி வந்துள்ளன. தி லிட்டில் பிளவர் கம்பனி புலவர் தணிகை உலக நாதனைக் கொண்டு அவருடைய பாடல்களை நாமக்கல்
இந்துக் கலைக்களஞ்சியம்

கவிஞர் பாடல்கள் எனத் தொகுப்பித்து 1960 இலே பதிப்பித்துள்ளது.
திருக்குறளுக்கு நாமக்கல் கவிஞர் எழுதிய புத்துரை 1954 இலே வெளிவந்தது. (பொ. பூ.)
இராறன்
மகாவிஷ்ணுவின் தசாவதாரங்களிலே இராமாவதாரங்கள் மூன்றாம். பரசுராமன், தசரதராமன், பலராமன் என்பனவேயவை, தசரதராமனின் கல்யாண குணங்கள் அவனுக்குத் தசாவ தாரங்களில் உன்னத இடத்தை அளிக்கின்றன.
இராமபிரான் ஒழுக்கசீலன், அறம் வழுவாத கர்மவீரன், ஏக பத்தினிவிரதன்; தன்னலமற்ற தூயோன், செருக்கும் மிடுக்கும் இல்லாத உத்தமன், பெரியோர் சொல்லைத்தட்டாது கீழ்ப்படிந்து நடக்கும் பணிவுடையவன்; பிறர்பால் கருணை காட்டும் பண்பாளன்.
நடத்தையால் - ஒழுக்கத்தால் - உலகை நல்வழிப்படுத்த இறங்கி வந்தவன் இராம பிரான், ஒழுக்கம் குறைந்து போகும் காலங்களில் ஒழுக்கத்தைக் கடைப்பிடித்து ஒழுகி, உலகுக்குக் காட்டப் பகவான் அவதாரம் செய்வார் என்று நம்மவர் நம்புகின்றனர்.
வைணவர் இராமாயணத்தைச் சரணாகதி சாஸ்திரம் என்று போற்றுவது குறிப்பிடத்தக்கது. பரம்பொருளே இராமனாக அவதரித்ததால் இராமனிடம் பரம பக்தியும் மகா விசுவாசமும் கொண்டு, அன்பு பாராட்டி, இராமனையே சரணாகதி அடைந்து வாழ வேண்டும் என்பது அவர்கள் கொள்கை. இராமநாமமே மும்மைசால் உலகுக்கு எல்லாம் மூலமந்திரம், முற்றும் தம்மையே தமக்கு நல்கும் தனிப் பெரும் பதம், இம்மை மறுமை நோய்க்கு மருந்து என்று கம்பர் கூறுவது காணத்தக்கது.
வால்மீகியின் இராமன் உன்னதமான கர்மவீரன்; அவன் கம்பராமாயணத்திலே அவதார மூர்த்தியாக மெய்ப் பொருளாகிய பரம் பொருளாகக் காட்சி தருகிறான். அத்யாத்துமராமாயணம் முதலானவை இந்நிலையை விரிவாக எடுத்துரைக்கின்றன. கடவுளே இராமனாகத் தோற்றம் எடுத்தார் என்பதை அத்யாத்தும ராமாயணம் தெளிவாகக் கூறுகின்றது. இராமதாபனியோப நிடதம் பிரதான கடவுளாக இராமபிரானைக் கொள்ளுகின்றது. துளஸிதாசரின் ராமசரிதமானஸ் பக்தி இலக்கியத்திலே மிகச் சிறந்த நூலாகக் கருதப்படுவது.
கம்பனுக்கு முன்பே ஆழ்வார்கள் இராம பக்திக்குச் சிறப்பிடம் தந்துள்ளனர். குலசேகர ஆழ்வார் அவ்வழியிலே சிறந்து நிற்கிறார். வைணவ ஆசாரியர்களிலே பூரீ இராமாநுசரை இராமாயணம் எனும் பக்தி வெள்ளம் குடி கொண்ட கோயில் என்று இராமாநுஜ நூற்றந்தாதி கூறுகின்றது.
வட நாட்டிலே அயோத்தியில் அமைந்துள்ள இராமபிரான் திருக்கோயில் பிரசித்தமான திருக்கோயிலாகும்; முத்தித் தலங்களுள் ஒன்றாகப் போற்றப்படுவது.
297

Page 344
தமிழ் நாட்டிலே இராமபிரானுக்குப் பல திருக்கோயில்கள் இருந்துள்ளன. இவற்றிலே பல இன்று சாசனங்கள் மூலம் மட்டுமே அறியக் கூடியனவாகவுள்ளன; ஆயினும் சில இன்றும் நின்று நிலைத்துள்ளன. வட ஆர்க்காடு படவேடு ராமச்சந்திரப் பெருமாள் கோயில், வடஆர்க்காடு நெடுங்குணம் ராமச்சந்திரப் பெருமாள் கோயில், குடந்தை இராமஸ்வாமி கோயில், தஞ்சை பருத்தியூர் இராமர் கோயில், திருநெல்வேலி சேர்மாதேவி இராமசாமி கோயில் என்பன அவற்றிலே சில,
திருநெல்வேலி நான்குநேரி விஜயநாராயணம் பூரீ ராகவப் பெருமாள் கோயில், காஞ்சி புள்ளலூர் திரு அயோத்தி நின்று அருளுகின்ற பூரீ ராகவப் பெருமாள் கோயில், தஞ்சை ஆலம்குடி பூரீ ராகவப் பெருமாள் கோயில், தஞ்சை அம்மங்குடி ராததேவப் பெருமாள் கோயில் முதலிய பல திருக்கோயில்கள் இன்று சாசன மூலமாகவே அறியப்படுகின்றன.
தமிழ் நாட்டிலே கோயில் கொண்ட இராமபிரான் பல திருநாமங்களைப் பெறுகிறார். இராமஸ்வாமி, ராமச்சந்திரப் பெருமாள், பூரீ ராகவப் பெருமாள், ராமதேவப் பெருமாள், பூரீ ராகவச்சக்கரவர்த்தி, திரு அயோத்திப் பெருமாள், பூரீ ராகவதேவர், திரு அயோத்திசக்கரவர்த்தி, திரு அயோத்தி ஆள்வார், கருணாகரர் என்பன அத்திருப்பெயருட் சில.
தமிழ் நாட்டிலே இராமபிரானின் திருக்கோயில்கள் பல சோழர் காலத்திலே, கி. பி. ஒன்பதாம் நூற்றாண்டு முதல் வரும் காலகட்டத்திலே தோன்றியுள்ளன என்று அறியப்படுகின்றது. ஆயினும் அவற்றிற் பல பிற்காலத்திலே காணப்படவில்லை என்பதும் நோக்கத்தக்கது. கிருஷ்ணாவதாரத்தின் முக்கியத் துவம் இதற்கு ஒரு காரணமாய் அமைந்ததோ என்பது ஆராயத்தக்கது.
(பொ. பூ)
இராமனநீச்சுரம்
இத்தலம் நன்னிலம் இரயில்வே நிலையத்திலிருந்து 4% மைல் தொலைவில் உள்ளது. இத்தலத்திற்கு மேற்கில் திருக் கண்ணபுரம் என்னும் விஷ்ணுதலம் இருக்கிறது. இராமன தீச் சுரமும் கண்ணபுரமும் சேர்ந்து இருக்கின்றன. திருப்புகலூருக்குக் கிழக்கே ஒரு மைலில் உள்ளது இராமர் பூசித்த தலம்.
சுவாமி இராமநந்தீசுவரர், இராமநாதேசுவரர், இராமலிங்கேசுவரர்.
அம்பிகை கருவார்குழலியம்மை, சூடிகாம்பாள்,
சரிவார் குழலி
தீர்த்தம் சூரியபுட்கரணி, சூரிய பூசை
நந்தி பூசித்த தலம். சோமாஸ்கந்தர். அம்பிகை கையில் ரிஷபம் இருக்கிறது. துர்வாச முனிவர் தபசு செய்த இடம். சிவலிங்கம் சுப்பிரமணியர் விசேடம்.
இராமநந்தீசுவரம் என்பதன் மரூஉ. சுவாமி கையில் நந்தி குழந்தையின் உருவமாக இருக்கிறார்.
298

திருஞானசம்பந்தர் பாடிய தலம்.
துதிரா மனந்திச் சுரம்ராம நாதர் குதிகொளும் சரிவார் குழன்மணி கங்கை 9ിഖ്,
சங்கொளிர் முன்கையர் தம்மிடை മേ அங்கிடு பலிகொளும் அவன்கோபப் பொங்கர வாடலோன் புவனியோங்க எங்குமன் இராமன திச்சரமே.
திருஞா. 1ஆம் திரு . (உ.வே.சா)
இராமாநந்த அடிகள் (1858 - 1956)
கொங்குநாடு கோவையை அடுத்த கணபதி எனும் ஊரிற் பிறந்தவர்; இராமகுட்டி என்ற பிள்ளைப் பெயரினர்; வேலப்பக் கவுண்டரின் புதல்வர்; தண்டபாணி சுவாமிகளின் சீடர்; ரவணபுரத்தில் வாழ்ந்தவர்.
அந்தாதி, ஆத்து மராமசரித்திரம், உந்தி, கீர்த்தனை, குறள், சன்மததோத்திரம், சண்முகமாலை, சற் குரு பதிகம், தயாநிதிக் கண்ணி, தியானசெபம், திருப்புகழ், நீதிவாக்கியம் என்பனவற்றை இயற்றியவர்.
இராமானந்தர்
இராமதத்தர் என்ற பிள்ளைப் பெயரினர்; பிரயாகையிற் பிறந்தவர்; புண்ணியசாதனர் என்பவரின் புதல்வர்; கி. பி. 1299 இலே பிறந்து 100 வருடங்களுக்கு மேல் வாழ்ந்து கி. பி. 141 இலே பூரணமடைந்தவர் என்பது மரபு,
விசிட்டாதுவைத மரபினராம் இராகவானந்தரின் சீடர்; குருவினால் இராமானந்தர் என்ற பெயர் சூட்டப் பெற்றவர்.
பிராமண வகுப்பிலே தோன்றிய போதும், கெளதம புத்தருக்குப் பின்பு, பிராமணியத்தின் செல்வாக்கை முறியடிக்க முற்பட்டவர்களிற் குறிப்பிடத்தக்கவர்; வடநாட்டு யாத்திரையின் போது, தம் வகுப்பினர் உண்ணக் கூடாத இடத்திலே உணவுட்கொண்ட குற்றத்தை ஏற்றுப் பிராயச்சித்தம் செய்ய மறுத்துக் குருவை விட்டு நீங்கி விசிட்டாத்துவைத மார்க்கத்திற் புதிய மரபினைத் தோற்றுவித்தவர்.
வைணவ அடியார் யாவரும் சமம் என்றும் அவர்களில் யாரும் குருத்துவம் அடைய முடியும் என்றும் கருதியவர்; பிராமணரல்லாத பல சீடர்களை ஏற்று அவர்களைக் குருத்துவநிலைக்கு உயர்த்தியவர்; கிரியைகளுக்கு முக்கியத்துவம் அளிக்காது பக்தி மார்க்கத்திற்கும் யோக நெறிக்கும் முக்கியத்துவம் கொடுத்தவர்; தசாவதாரங்களில் இராமாவதாரத்திற்கு முக்கியத்துவம் அளித்தவர்; சங்கதத்திற்குச் சிறப்பளிக்காது தத்தம் பிரதேச மொழிகளைப் பயன்படுத்துவதற்கு வழிகாட்டியவர்.
கபீர், ரவிதாஸ், சேனா, தன்னா, பீபா முதலியோர் இராமனந்தர் வழியினைப் பின்பற்றியவர்கள். (பொ. பூ)
இந்துக் கலைக்களஞ்சியம்

Page 345
இராமாநுசக்கவிராயர்
இயற்றமிழாசிரியர் இராமாநுசக் கவிராயர் பத்தொன்பதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் வாழ்ந்தவர்; இராமநாதபுரம் முகவை எனும் ஊரினர்; இரங்கையக் கவிராயரின் புதல்வர்; வைணவர்; போர் வீரனாகப் பட்டாளத்தில் வேலை செய்தவர்; இராமநாதபுரம் நெல்லையப்பர் சோமசுந்தரக் கவிராயரிடம் பிற்காலத்திலே தமிழ் கற்றவர்; சென்னை வண்ணாரப்பேட்டையில் (சஞ்சீவிராயன் பேட்டையில்) வசித்தவர்.
சென்னையிலே தமிழ் இலக்கிய சங்கம் நிறுவியவர்; சொந்தத்திலே அச்சகம் நிறுவி நடத்தியவர்; களத்தூர் வேதகிரி முதலியார், திருத்தணிகை சரவணப் பெருமாளையர், அட்டாவதானம் வீராசாமி செட்டியார் முதலியோரின் ஆசிரியர்; கிறித்தவ பாதிரிமாருக்கும் ஆங்கிலேய அதிகாரிகளுக்கும் தமிழ் கற்பித்தவர்.
திருவேங்கடவநுபூதி (1847), பார்த்தசாரதி பதம்புணைமாலை, வரதராசப் பெருமாள் பதிற்றுப்பத்தந்தாதி முதலியனவற்றைப்
பாடியவர்; வட மொழியிலிருந்து ஆத்மபோதப் பிரகாசிகையை மொழி பெயர்த்தவர்.
திருக்குறளுக்குப் பரிமேலழகர் தந்தவுரைக்கு விளக்கவுரை எழுதியவர்; ஆத்திசூடி, கொன்றை வேந்தன், வெற்றி வேற்கை என்பனவற்றைத் தம்முரையுடனும், இனியவை நாற்பதைப் பழைய உரையுடனும் பதிப்பித்தவர்.
தமிழிலக்கண நூல்களும் செய்தவர். கண்டனங்களும் இயற்றியவர். (பொ.யூ)
இராமாநுசதாசர்
இராமாநுசதாசர் என்ற பெயரிலே ஒருவருக்கு மேற் காணப்படுகின்றனர்; இவர்களுடைய வரலாற்றுச் செய்திகள் தெளிவாகக் கிடைப்பதரிது.
(i) இராமாநுசதாசர் - நூற்றெட்டுத் திருப்பதிகப் பாடல்
(i) இராமாநுசதாசர் - வான்மீகி ராமாயண சாரம்
(i) குறவை இராமநுசதாசர் - நூற்றெட்டுத் திருப்பதித் திருப்புகழ், (பொ.யூ.)
இராமாநுசநாவலர்,ஏ. வெ.
புதுச்சேரியிற் பிறந்தவர்; பத்தொன்பதாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர்; விலக்ஷணகவி எனப் போற்றப்பட்ட போத காசிரியர்; தீவிரமான வைணவ பக்தர், வெங்கடராம நாயுடுவின் புதல்வர்.
சுதர்சனகிரிப் புராணம், திருச் சித்திரகூட புராணம், பூரீ முஷ்ணப்புராணம், பாத்மோத்தர புராண மொழிபெயர்ப்பு, எதிராஜசதகம், தேசிகன் திருப்பதிகம், பெருந்தேவித்தாயார் திருப்பதிகம் போற்றித் திருப்பதிகம் பூரீ மணவாள மாமுனிகள்
இந்துக் கலைக்களஞ்சியம்

திருப்பதிகம், நம்மாழ்வார் பஞ்சரத்தினம், பூரீ வரதராஜப் பெருமாள் திருமாலை, பூரீ வரதராஜப் பெருமாள் பதிற்றுப் பத்தந்தாதி ஆண்டாள் விஷயம் தொண்டரடிப் பொடியாழ்வார் பிரபாவம், பேரன்கூரத்தாழ்வான் பிரபாவம் முதலியன இயற்றியவர்.
புருடார்த்ததீபிகை என்னும் பாலவினாவிடை, பூனி வைஷ்ணவ தத்துவம், பூணூரீவைஷ்ணவ கம்பீரஜோதி முதலியனவும் செய்தவர். (பொ.யூ.)
இராமாநுச நூற்றந்தாதி
பிரபந்த காயத்திரி என்று சிறப்பிக்கப்படும் இராமாநுச நூற்றந்தாதி பூரீ பெரும்பூதூர் இராமாநுசர் (1017 - 1137) மீது பாடப் பெற்றதாகும். விசிட்டாத்வைத தத்துவத்தை நிலை நாட்டிய பெருமை மிக்க வைணவ ஆசாரியர் அவர்.
இதனைப் பாடியவர் திருவரங்கத்து அமுதனார் எனும் வைணவராவர். அவர் அணியரங்கத்த முதனார் பிள்ளையின் புதல்வர். அணியரங்கத்த முதனார்பிள்ளை பூரீ இராமாநுசருக்கும் சீடராவர். பூரீ இராமாநுசரின் சீடராம் கூரத்தாழ்வாரின் சீடர் அமுதனார்.
இராமாநுச நூற்றந்தாதியிலே 108 கட்டளைக் கலித்துறைப் பாக்கள் உள்ளன. நாலாயிரத் திவ்விய பிரபந்தப் பதிப்புகளிலே இராமாநுச நூற்றந்தாதி இணைக்கப்படும் சிறப்புடையது.
ஏட்டூர் சிங்கராசாரியர், பிள்ளைலோகார்ய ஜியர், முடிச்சூர்
அப்பாவு முதலியார் முதலியோர் இராமநுச நூற்றந்தாதிக்கு வியாக்கியானம் செய்துள்ளனர்.
இராமாநுசர்
இளையாழ்வார், எம்பெருமானார், உடையவர், கோயில் அண்ணன், சடகோபன் பொன்னடி, தேசிகேந்திரர், பூரீ பாஷ்யக் காரர், பூதபுரீசர், திருப்பாவைஜியர், யதிராஜர், லக்ஷமணமுனி என்றெல்லாம் வழங்கப்படுபவர்; தொண்டை நாடு காஞ்சியை அடுத்த பூரீ பெரும்பூதூர் எனும் ஊரிலே பிறந்தவர்; கி. பி. 1017 இலே பிறந்து கி.பி. 1137 வரை 120 வருடங்கள் வாழ்ந்தவர் என்று வைணவ பரம்பரை கூறும்; கேசவ சோமயாஜியின் புதல்வர்; சிறிய தாயாரின் புதல்வர் எம்பார்; தாய்மாமனார் பெரிய திருமலைநம்பி; மருகர் முதலியாண்டான், நடாதூராழ்வான்.
அத்வைதியாம் யாதவப் பிரகாசரிடம் எம்பாருடன் கற்றவர்; பெரியநம்பி, பெரிய திருமலைநம்பி, திருக்கோட்டியூர் நம்பி, திருமாலையாண்டான், திருக்கச்சிநம்பி, திருவரங்கப் பெருமாள ரையர் என்போரிடம் பூரீ ஆளவந்தார் போதித்த விசிட்டாத்து வைதத்தைக் கற்ற சீடர்.
பூரீ இராமாநுசரின் சீடர் பலராவார்; தென்னாட்டிலே வைணவ பரம்பரையை வளர்த்துப் பத்தி நெறிக்கு முக்கியத்துவம்
299

Page 346
கொடுத்து விசிட்டாத்துவைதத்தை நாட்டியவர்கள் அவர்கள்; இவர்களிலே எம்பார், கிடாம்பியாச்சான், திருக்குருகைப் பிரான்பிள்ளான், நடாதூராழ்வான், சுந்தரத்தோளுடையார், முதலியாண்டான், கோவித்தஜியர், அருளாளப் பெருமாள், எம்பெருமான் ஜியர், கூரத்தாழ்வான், கந்தாடையாண்டான், புண்டரீகாக்ஷர், சொட்டைநம்பி, வடுகநம்பி, தெற்காழ்வான், அணியரங்கத்த முதனார்பிள்ளை முதலியோர் குறிப்பிடத்தக்கவர்.
பூரீ இராமாநுசர் பெரிய திருவந்தாதி, பெரிய திருமொழி, திருவெழுகூற்றிருக்கை என்பனவற்றிற்குத் தனியன்கள் பாடியுள்ளார்; எம் பெருமானார் எண்பத்திரண்டு வார்த்தை என்ற நூலும் அறியப்படுகிறது.
பூரீ இராமாநுஜர் சங்கதத்திலே கத்தியத்திரயம், நித்தியக் கிரந்தம், வேதாந்தசங்கிரகம், வேதாந்த சாரம், வேதாந்ததீபம் என்பனவற்றையும் பூணூரீ பாஷ்யம், கீதாபாஷ்யம் எனும் பாடியங்களையும் இயற்றியுள்ளார்.
உலகமும் உயிருமாகிய விசேஷங்களையுடையது பிரமமாகிய விசேஷியம்; இந்த விசேஷணம், விசேஷயம் ஆகிய இரண்டும் சேர்ந்த விசிஷ்டமே இராமாநுசரின் தத்துவம் விசிஷ்டாத்வைதம் என வழங்கப்படுகின்றது. (பொ.யூ.)
இராமாநுஜாசார்யர்
தமிழ் நாட்டு வைணவ பரம்பரையில் ஆசாரியர்களில் ஒருவராகக் கருதப்படும் நம்பிள்ளையின் புதல்வர்; சோணாடு நம்பூர் சொந்தவூர்; பதின்மூன்றாம் நூற்றாண்டு அல்லது பதினான்காம் நூற்றாண்டு வாழ்ந்த காலம்; தந்தையிடமே சீடராக இருந்தவர்.
சாரார்த்தசங்கிரகம், ரகஸ்யத்திரயம் என்பன வற்றைச் சங்கதத்தில் இயற்றியவர். (பொ.பூ.)
6ЈлupлuJaотtф
இந்தியப் பாரம்பரியத்திலே சிறப்புற்றோங்கும் மாபெரும் ஆக்கங்களாகக் கருதப் பெறுவன மகாபாரதமும் இராமாய ணமுமாம். ஆயினும் இராமாயணம் பரவியிருக்கும் அளவுக்கு மக்களிடையே பாரதம் பரவவில்லை.
மகாபாரதம் அளவிலே பெரிய நூல்; பல வகையான பாத்திரப் படைப்புகளையும் பலவிதமான தத்துவ விசாரங் களையும் அடிப்படையாகக் கொண்ட நூல்; மனிதனுக்கு வாழ்க்கையில் எத்தகைய சிக்கல்கள் தோன்றும். அவற்றைச் சமாளிக்க மனிதன் என்ன என்ன செய்தாற் பயன் உண்டு என்பதை எல்லாம் கூறும் நூல்; ஞானம் எனும் பெரியதொரு களஞ்சியத்தை உள்ளடக்கிய ஞானநூல்; உபதேசங்களால் அறிவுரை கூறும் உத்தியை அதிகம் பின்பற்றும் நூல்.
300

ஆனால் இராமாயணத்தில் மகாபாரதத்திற் காணப் படுவதைப் போன்ற சிக்கல்களுக்கு இடமில்லை. மனிதன் ஒழுக்க சீலனாய் அறம் வழுவாத கர்மவீரனாய் இருந்தால் மட்டும் போதும் எனும் உண்மையை மிக அழகாகவும் எளிமையாகவும் இனிமையாகவும் அழுத்தமாகவும் வாழ்ந்து காட்ட வைக்கின்றது இராமாயணம்.
வால்மீகி முனிவர் இயற்றிய இராமாயணம், கதாநாயகர் காலத்திலே இயற்றப் பெற்றது என்று அதன் தோற்றுவாய் கூறும். நாரத முனிவரிடம் வீரர்களுக்குள் எல்லா நற்குணங்களும் பெற்ற உத்தம புருஷன் யார் எனக் கேட்ட வால்மீகி முனிவருக்கு அவர் அயோத்தியில் அப்பொழுது ஆட்சிபுரியும் இராமனே அவ்வுத்தமன் என்று கூறி அவன் சரிதத்தையும் சுருக்கமாகக் கூறுகிறார். இராம சரிதத்திலே லயித்திருந்த வால்மீகி முனிவர் நீராட ஆற்றுக்குச் சென்றவிடத்து அங்கு கூடிக்குலவி நின்ற அன்றிற் சோடியைக் கண்டு மகிழ்ந்திருந்த போது வேடனின் அம்பு தைத்து ஆண் பறவை பூமியில் விழுந்து துடித்துப் புரள்வதைக் கண்டு பெண் பறவை அலறிய போது துக்கமேலிட்டு வால்மீகி வேடனைச் சபித்தார். அச்சாப மொழிகள் தாளக்கட்டும் சந்தமும் பொருந்திச் சுலோகமாக உருவெடுத்தது. துயருடன் ஆசிரமம் மீண்ட வால்மீகிக்குப் பிரமதேவன் அச் சுலோக அமைப்பிலே இராம காதையைப் பாடும்படி கூறினார். அதன்படி முனிவர் இராமாயணத்தைப் பாடினார்.
இக்கதைக்கு மாறாக இராமசரிதம் கதைப்பாடல்களாக வழங்கி வந்ததுவென்றும் பின்புதான் இலக்கியமாக உருவம் பெற்றது என்றும் கருதுபவர் உளர். பெளத்தர், சைனர் ஆகிய அவைதிகர் மத்தியிலும் இராமசரிதம் காணப்படல் இக்கருத்தினை ஆதரிப்பதாகக் கருதுவர். மணிப்பிரவாள நடையில் எழுந்த பூரீ புராணத்திலே சைன இராமாயணத்திலிருந்து சில பாடல்கள் மேற்கோள் காட்டப் பெறல் இங்கு கவனிக்கத்தக்கது. தசரத ஜாதகக் கதை பெளத்தரிடையுள்ள இராமாயண உணர்வுகளைக் காட்டுகின்றது. சீன நாட்டிலே காணப்படும் இராமாயணக் கதைகள் பெளத்தர் மூலமாகவே அங்கு சென்றன என்று கொள்ள இடமுண்டு. பிராகிருத மொழிகளிலே அவைதிகர் வழங்கிய இராம சரிதங்கள் வைதீகர் சங்கத மொழியிலே தம் கருத்துக்களுக்கு அமைய இயற்றிய இராமாயணங்களுக்கு முன்னோடி என்று அவர்கள் கருதுவர்.
கம்பர் தேவபாடையில் (சங்கதத்தில்) இக்கதை செய்தவர் மூவர் என்றும் அவர் தம்முளும் முந்திய நாவினார் உரைப்படி தாம் தமிழிலே பாடியதாகவும் கூறுவர். கம்பர் கூறும் மூவர் வால்மீகி, வசிட்டர், போதாயனர் என்பர் சிலர்; வேறு சிலர் வசிட்டரை நீக்கி வியாசரைக் கூறி அவர் செய்தது அத்தியாத்தும ராமாயணம் என்றும் கூறுவர்.
கம்பர் கூறும் மூவர் யாராயினும் வால்மீகி சங்கதத்திலே இயற்றியதாகக் கூறப்படும் இராமாயணமே ஆதிகாவியமாக இந்திய உபகண்டத்திலும் அப்பாலும் பேர் பெற்றுள்ளது. சம்பாவிலே திரகெயின் (Tra-Kien) எனுமிடத்திலே வால்மீகிக்குக் கோயிலுண்டு என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
இந்துக் கலைக்களஞ்சியம்

Page 347
வால்மீகி இராமாயணம் 24,000 சுலோகங்களை ஏழு காண்டங்களிலே கூறுகின்றது; இதற்கு மூன்று பிரதான பாடாந்தரங்கள் உள்ளன. அவற்றிலே வடபிரதி பழமையுடைய தோடு கலப்பினால் அதிகம் பாதிக்கப்படாததுமாகும். வங்காளப் பிரதி இடைச் செருகல் மலிந்த பிரதியாகும். பம்பாய் பிரதி ஏனைய இரண்டிற்கும் இடைப்பட்ட நிலையினது. இப்பிரதிகளிலே பிரதேச தாக்கம் காணப்படுவதுடன் பல வேறுபாடுகளும் இடம் பெறு கின்றன. ஒவ்வொரு பிரதியின் மூன்றிலொரு பகுதி ஏனைய பிரதிகளில் இல்லை என்பது கவனிக்கத்தக்கது.
வால்மீகி இராமாயணத்தில் இடம் பெறும் சுலோகங்கள் யாவும் ஒருவரால் இயற்றப்பட்டவை என்ற கருத்தினை ஆய்வாளர் ஏற்கத் தயங்குவர். காலத்திற்குக் காலம் பல இடைச் செருகல்கள் ஏற்பட்டுள்ளன. உதாரணமாகப் பால காண்டத்தின் பெரும்பகுதியும் உத்தர காண்டமும் ஆதி காவியத்தில் இருக்கவில்லை என்பர்.
இதனால் வால்மீகி இராமாயணத்தினைக் கால வரையறை செய்தல் அரிதாக அமைகின்றது. கி. மு. ஐந்தாம் நூற்றாண் டிலிருந்து கி. மு. மூன்றாம் நூற்றாண்டுவரை ஆதிகாவியத் திற்கும் கி. மு. மூன்றாம் நூற்றாண்டிலிருந்து கி. பி. இரண்டாம் நூற்றாண்டுவரை சேர்க்கைகளுக்கும் காலம் வரைந்துள்ளனர் சிலர். இராமாயணம் மகாபாரதத்திற்கு முந்தியதா அல்லது பிந்தியதா என்பதிலும் கருத்து வேறுபாடு உண்டு.
வால்மீகி இராமாயணத்தினை அதர்ப்பட மொழி பெயர்த்த மொழிகள் இந்திய மொழிகளிலே பல. தமிழ் மொழியிலே பலர் அவ்வாறு செய்துள்ளனர். ரா. ராகவையங்கார் சில பகுதிகளைத் தமிழிலே மொழி பெயர்த்துள்ளார். திருச்சிற்றம்பல தேசிகளின் இராமாயணத்து உத்தரகாண்டக் கதை வால்மீகி இராமாயண உத்தரகாண்டத்தின் பழைய தமிழ் மொழி பெயர்ப்புகளில் ஒன்று. ச. ம. நடேசசாஸ்திரிகள், தி.த.கனகசுந்தரம்பிள்ளை ஆகியோரும் வால்மீகி இராமாயணத்தினைத் தமிழிலே மொழி பெயர்க்க முற்பட்டவர்கள். இராஜ கோபாலாச்சாரியரின் சக்கர வர்த்தித் திருமகனும் (1956), அ.லெ.நடராஜனின் வால்மீகி இராமாயணமும் (1965) அண்மைக் காலத்தில் வெளிவந்த தமிழ் வசன மொழி பெயர்ப்புகளாம்.
வால்மீகி இராமாயணம் நீங்கலான இராமாயணங்களும் சங்கத மொழியிலே உள்ளன. வாசிஷ்டராமாயணம், அத்யாத்தும ராமாயணம், பால ராமாயணம், ஆனந்த ராமாயணம் முதலிய அவற்றுட் சிலவாம். இராமோதந்தம், இராமோபாக்கியானம் முதலிய இராம சரிதச் சுருக்கங்களும் சங்கதத்தில் உள்ளன. காளிதாசனின் இரகுவம்சம் முதலான வற்றிலே இராம சரிதமும் இடம் பெறுகின்றது.
இந்திய மொழிகள் பலவற்றிலே இராமசரிதம் இலக்கியப் பொருளாக அமைந்துள்ளது. இந்தி, வங்காளி, ஒரியா, அசாமிய மொழி, நேபாளம், தெலுங்கு, மராத்தி,மலையாளம், கன்னடம், தமிழ் முதலிய மொழிகளிலெல்லாம் இராமாயணம் பாடப்பட்டுள்ளது.
துளசிதாசர் (1532 - 1623) இயற்றிய ராம சரிதமானசம்
பக்தி இலக்கியத்திலே பேர் பெற்றதாகும். இந்தி மொழியிலே இதனை அவர் அயோத்தியிலே 1575 இலே பாடத் தொடங்கினார்.
இந்துக் கலைக்களஞ்சியம்

எழுத்தச்சன் பதினேழாம் நூற்றாண்டிலே பாடிய இராமாயணம் அத்யாத்தும ராமாயணத்தை ஒட்டிச் செல்வதாகக் கூறுவர். பன்னிரெண்டாம் நூற்றாண்டிலே அபிநவபம்பா கன்னடத்தில் இயற்றிய பம்பா ராமாயணம் சைனப் பின்னணியினைக் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் இலக்கிய வரலாற்றிலே இராமாயணச் செய்திகள் பண்டைக் காலம் முதலாக் கிடைக்கின்றன. அகநானூறு, புறநானூறு, கலித்தொகை, பரிபாடல், சிறுபா ணாற்றுப்படை என்பனவற்றிலே இராமாயணச் செய்திகள் இடம் பெறத் தொடங்கிவிட்டன. சிலப்பதிகாரம், மணிமேகலை, பெருங்கதை என்பனவற்றிலே அவை தொடர்ந்து வருகின்றன. பல்லவர் காலப் பக்திப் பாடல்களிலே இராம சரித நிகழ்ச்சிகள் பல இடம் பெறுகின்றன. பெருமாள் திருமொழியிலே எட்டாம், ஒன்பதாம், பத்தாம் திருமொழிகள் இராம சரித நிகழ்ச்சிகள் பலவற்றைத் தருகின்றன. இராம சரிதச் சுருக்கமே பெருமாள் திருமொழியில் இடம் பெறுதல் குறிப்பிடத்தக்கது.
சோழர் காலத்தினை ஒட்டி இராமசரிதம் தமிழிலே தனி இலக்கியப் பொருளாகி விட்டது என்பது தெளிவு. நச்சினார்க் கினியர், ஆசிரியர் மாலைத் தொகுப்பாசிரியர், யாப்பருங்கல விருத்தியுரைகாரர், வீரசோழிய உரைக்காரர் பெருந்தேவனார் ஆகியோர் இராமசரித இலக்கியங்களையும் இராம சரிதப் பாடல்களையும் மேற்கோள் தந்துள்ளனர்.
தமிழ் இலக்கியத்திலே தலை சிறந்த பேரிலக்கியமாகப் போற்றப் பெறுவது கம்பன் தந்த இராமாயணமாகும். இராமாவதாரம் என்றும் இராமகாதை என்றும் பெயர் பெறும் காவியம் காலப் போக்கிற் கம்பராமாயணம் என்றே நிலைத்து விட்டது. வால்மீகி ராமாயணத்தைத் தழுவித் தமிழிலே இராம காதை பாடிய கம்பன் அதனைத் தமிழ் மரபிற் கிணங்க அமைத்துத் தமிழ்க் காவியமாக வழங்கிக் கவிச்சக்கரவர்த்தி என்ற சிறப்பினைப் பெற்று விட்டான். பதின்மூன்றாம் நூற்றாண்டின் முற்பகுதிக்கு முன்பும் சீவக சிந்தாமணி, சூளாமணி ஆகியனவற்றிற்குப் பின்பும் வாழ்ந்தவன் கம்பன் என்பது தெளிவாகின்றது.
தமிழ் இராமாயணத்திலே உத்தர காண்டம் கம்பன் வாக்கன்று என்பது பொருத்தமாகவே தெரிகின்றது; வாணிதாதன் பாடியது என்பர் சோழ மண்டல சதகமுடையார் ஏனைய ஆறு காண்டங்ே களையும் நோக்குமிடத்து காண்டப்பிரிவினை, படலப்பாகுபாடு என்பன ஆசிரியர் காலத்திற்குப் பின்பே எழுந்திருத்தல் கூடும் என்று ஐயுற வேண்டியுள்ளது.
பலதரத்திலுள்ள பலராலும் பல இடங்களிற் பிரதி செய்யப் பெற்று, பல பிரதேசங்களிலும் பரவியிருந்த கம்பராமாயணத் திற்குப் பாடபேதங்களும் இடைச் செருகல்களும் அதிகமாகக் காணப்படுகின்றன. கம்பன் எத்தனை பாடல்களைப் பாடினான் என்று அறுதியிட்டுக் கூற முடியாத நிலைமை காணப்படுகின்றது.
சென்னைக் கல்விச் சங்கத் தமிழ்ப்புலவர் திரு. வேங்கடாசல முதலியார் 1840 - 1843 ஆண்டுகளிற் பிரசுரஞ் செய்த ஏழு காண்டங்களின் மூலப் பதிப்புக்களே இப்போது தெரிகின்ற வரை
301

Page 348
முதன் முதல் வெளிவந்த இராமாயணப் பதிப்புகளாம். மழவை மகாலிங்கையர் (1845) முதற் பலர் தனித்தனிக் காண்டங்களைப் பதிப்பித்துள்ளனர். வித்துவான் இராமசாமி நாயுடு, வை. மு. கோபாலகிருஷ்ண மாசாரியர், வை. மு. சடகோபராமாநுஜாசாரியர், சே. கிருஷ்ணமாசாரியார் முதலியோர் பலர் கம்பராமாயணத்தின் பகுதிகளுக்கு உரை கண்டுள்ளனர்.
இராமாயணம் இந்திய மொழிகளில் மட்டுமன்றி தென்கிழக் காசிய மொழிகளிலும் தூர கிழக்கு மொழிகளிலும் கூட இடம் பெற்றுள்ளது. சீன மொழியிலே ஜாதக கதையிலும் நிதான (Nidana) என்னும் நூலிலும் இராமாயணம் உண்டு. தாய் மொழியிலே இராமாயணம் பல்வேறு மாற்றங்களுடன் காணப்படுகின்றது.
இராமாயணம் நாடக இலக்கியத்திற்கும் இசை இலக்கியத் திற்கும் வசன இலக்கியத்திற்கும் வளஞ் சேர்ந்துள்ளது. தமிழ் மொழியிலே தமிழ் நாட்டவரும் ஈழ நாட்டவரும் பல நாடகங்களை இராமாயணத்தைக் கருப்பொருளாகக் கொண்டு எழுதியுள்ளனர். கும்மி, அம்மானை, சிந்து முதலிய நாட்டுப்பாங்கான செய்யு ளமைதி களிலும் இராமாயணம் போற்றப்பட்டுள்ளது.
இராமாயண கூத்துக்கள் இந்தோனேசியாவிலே பேணப் படுதல் சுட்டத்தக்கது. யாவாத்தீவிலுள்ள பிரம்பணன் (Prambanan) எனும் இடத்திலே இராமாயண நிகழ்ச்சிகள் அழகு பொருந்திய சிற்பங்களாக அமைக்கப் பெற்றுள்ளன. (பொ.யூ.)
இராமீசுரக் கோவை
இராமநாதபுரம் மாவட்டத்தில் வட இந்தியரும் கொண்டாடும் சிவசேத்திரம் இராமேச்சுரம். இங்குள்ள இராமநாதலிங்கம் பன்னிரு சோதிலிங்கங்களில் ஒன்றாகப் போற்றப் பெறுவதாகும். தேவை என்றும் இத்திருத்தலத்திற்குப் பெயருண்டு. இங்குள்ள இறைவனுக்கு இராமநாதர் என்றும் இறைவிக்குப் பர்வத வர்தனியம்மை என்றும் பெயர்.
இராமநாதராம் சிவபிரான்மீது பாடப் பெற்றது இராமீசுரக் கோவை. இக்கோவை மறைந்துவிட்டது. இக்கோவை பற்றிய செய்தி ஆசிரியர் இயற்றிய கயாதர நிகண்டுச் செய்யுளிலே இடம் பெறுகின்றது.
இதன் ஆசிரியர் கயாதரர். அவர் பதினைந்தாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். (பொ.யூ.)
இராமேசுவரம்
இரயில்வே நிலையம் உள்ள கடற்கரைத் தலம். தீவில் இருக்கிறது. காசிக்குச் செல்கின்றவர்கள் கங்காதீர்த்தம் கொண்டு வந்து இராமநாதேசுவரருக்கு அபிஷேகம் செய்து காசி யாத்திரையை முடிப்பார்கள். 36 தீர்த்தங்கள். இங்குச் சிவ ராத்திரியை ஒட்டி 10 நாட்கள் அயநோற்சவம் நடை பெறுகிறது. இராமன் இங்குச் சிவபூசை செய்தார். ஆஞ்சநேயர் கொண்டுவந்த ஒரு லிங்கமும் உண்டு. அவர் காசி விசுவநாதர் என்று வழங்கப் படுகிறார். இராமேசுவரம் - தேவை என்றும் வழங்கும்.
302

நிரம்பவழகியதேசிகர் என்னும் புலவர் சேதுபுராணம் என்ற நூலை இயற்றியுள்ளார். இராமேசுவரம் பிரபந்தத் திரட்டு என்ற நூலும் உண்டு. திருஞான சம்பந்தரும், அப்பரும் பாடிய தலம்.
சுவாமி இராமநாதேசுவரர் அம்பிகை மலைவளர்காதலி, பர்வதவர்த்தினி
அம்பிகை பற்றித் தாயுமானவர் பாடியுள்ளார். தீர்த்தம் தநுஷ்கோடி
சேதுமாதவர் சந்நிதி இராமலிங்கம், லவன் லிங்கம், விபீஷண லிங்கம்-கற்பூர சோதியில் ஸ்படிக ரூபமாக விளங்குகின்றன.
பாசமும் கழிக்க கில்லா அரக்கரைப்படுத்துத் தக்க வாசமிக்கலர்கள் கொண்டு மதியினால் மால்செல் கோயில் நேசமிக் கன்பினாலே நினைமின்நீர் நின்று நாளும் தேசமிக்கான் இருந்த திருஇராமேச்சுரமே
திருநா. 4 திரு.
அலைவளர்தண்மதி யோடய லேயடக் கியுமை முலைவளர் பாகம்முயங்கவல் லமுதல் வன்முனி இலைவளர் தாழைகள் விம்முகானல் இராமேச்சுரம் தலைவளர் கோலநன் மாலையன் தானிருந்தாட்சியே.
திருஞா. 3ஆம் திரு.
இராமநாதசுவாமி கோயில் கீழ்வாசல் அநுமார் மண்டபம்
இந்த மண்டபத்தின் கீழைக்கோடியில் வடபுறத்தில் அநுமார் ஆலயம் இருக்கின்றது. இவர் சந்நிதி தெற்கு நோக்கியது. அநுமார் திருமேனி முற்றும் செந்நிறமாய் இருக்கிறது. இதற்குக் காரணம் கோயில் திட்டத்தில் சனிக்கிழமை தோறும் சாத்தப்படும் ஈயச்செந்தூரத்தோடு விராய வெண்ணெயும் என்று தெரிகிறது. வெண்ணெய் இருபங்கும், செந்தூரம் ஒரு பங்கும் சாத்துவது வழக்கமாம். அநுமாரால் நர்மதையிலிருந்து கொண்டுவரப்பட்ட இரண்டு லிங்கங்களுள் ஒன்று அநுமார் கோயிலின் மேற்கு மடவிளாகத்தில் உள்ள அறையில் கிழக்கு நோக்கி எழுந்தருளி யிருக்கின்றது. பெயர் மாரூதீசுவரர் (ஆத்மலிங்கம்)
அநுமார் இரண்டு லிங்கங்கள் கொண்டு வருகையில், நாரதர் "நீ பூஜை பண்ணுதற்கு ஒரு லிங்கம் வேண்டாமா? என்று கூற அநுமார் மீண்டும் சென்று வேறொரு லிங்கம் கொண்டு வந்தமையால் பூசித்தற்குக் காலம் தாழ்ந்தது. இராமர் அநுமார் வரக்காணாமையால் சீதை வண்டலாடுமிடத்தில் மணலால் பிடித்துவைத்த லிங்கத்தையே முனிவர்கள் வாக்கின்படி பூசித்தார். பூசித்தமையை அறிந்து தாம்கொண்டு வந்த லிங்கம் பூசிக்கப் படாமையை நினைந்து பூசித்த லிங்கத்தை விசுவரூபம் கொண்டு வாலைச் சுற்றி இழுக்குங் காலத்தில் வால் அறுந்து விட்டது. இழுத்ததின் குறிப்பும், கோபத்தின் குறிப்பும்தான் மேனி சிவந்ததற்குக் காரணம் என்று சொல்லுகிறார்கள்.
இலக்குமி தீர்த்தம்
இது அநுமார் மண்டபத்தின் தென்பக்கத்தில் உள்ளது. படித்துறை நன்றாயிருக்கிறது. இத்தீர்த்தத்தின் மேல்கரையில்
இந்துக் கலைக்களஞ்சியம்

Page 349
திருமகள் ஆலயம் இருக்கின்றது. வடிவம் மகாலட்சுமி வடிவம் விநாயகரும், இரண்டு லிங்கங்களும், அம்பிகை வடிவமும் கோயிலின் கீழ்ப்புற மண்டபத்தில் உள்ளன.
அநுமார் மண்டபத்தின் மேற்புறத்தே கிழக்கு மேற்காக அதை யொட்டி ஒரு பெரிய மண்டபம் இருக்கின்றது. அது அனுப்பு மண்டபம் என்று சொல்லப்படும். சுவாமி அங்கே வந்து வெளியே செல்லுவதும், திரும்ப அங்கே வந்து காட்சியளித்து உள்ளே செல்லுவதும், வழக்கமாதலின் அப்பெயர் பெற்றது.
மேற்புறம் கீழைக் கோடித் தூணில் அகோர வீரபத்திரர் எழுந்தருளியிருக்கின்றார். அதே தூணில் மேற்புறத்தில் காளி உருவம் இருக்கிறது. அதற்கு நேர் தெற்குத் தூணில் அகோர வீரபத்திரர் இருக்கிறார். இம்மண்டபத்தின் இருபுறத் தூண் களிலும் (எவ்வெட்டுத் தூண்களிலும்) பல வடிவங்கள் உள்ளன. அவை இம்மண்டபம் கட்டுவித்த பிரபுக்களுடைய உருவங்கள் என்று சொல்லுகிறார்கள்.
அனுப்பு மண்டபத்தின்மேல் புறமுள்ள பிராகார மண்டபம் சொக்கட்டான் மண்டபம் என்று சொல்லப்படும். இது இராம நாதபுரம் சமஸ்தானம் பதினொன்றாம் பட்டத்தில் இருந்த காத்த தேவராகிய முத்து விஜய ரகுநாத சேதுபதி (1729-1795) முதல் பதினைந்தாம் பட்டமாகிய முத்துராமலிங்க சேதுபதி முடிய ஐந்து பட்டத்தார் காலங்களில் முத்திருளப்ப பிள்ளையால் கட்டி முடிக்கப் பெற்றது. இம்மண்டபம் போன்று நான்கு பக்கத்தும் சொக் கட்டான் சாரியுள்ள மண்டபம் வேறு எவ்விடத்தும் இல்லை. கிருஷ்ண அய்யங்கார் உருவச்சிலை சுவாமி சந்நிதி கீழை வாசலின் தெற்குக் கோடியில் உள்ளது.
அம்மன் சந்நிதியில் சொக்கட்டான் மண்டபத்தின் தென்புறத்தில் மூன்றாவது தூணில் முத்துவிஜயரகுநாதசேதுபதி உருவச் சிலை இருக்கிறது. அதற்கு மேல்புறத் தூணில் வடுக நாததேவர். அதற்கு அடுத்த தூணில் ஹிரண்யகர்ப்பயாஜி ரகுநாத சேதுபதி சொர்ணயக்ஞோபவிதமும், காலில் வீர கெண்டையும் சேதுபதி உருவங்களுக்கு அடையாளமாய் இருக்கின்றன. அவர்கள் உறவினர்கள் உருவச் சிலைக்கு அடை யாளங்கள் இல்லை. மற்றத்தூண்களில் அவர்கள் உறவினர்கள் உருவச்சிலைகள் இருக்கின்றன.
ஆறாவது மேற்புறத்தூணில் உலகநாதமுனிவர் ஆதியில் இருந்த தருமகருத்தா, இவர்கள் வம்சத்தார்கள் திருவாடா னையைச் சார்ந்த ஊரணங்குடி, மும்முடிகாத்தான் என்ற ஊர் களில் உள்ளார்கள். இவர்கள் கார்காத்த வேளாளர்கள். வட புறத்தின் ஆறாவது மேற்புறத்தூணில் இராவாகுமாமுனி காஷாயம் தரித்தவர்கள் இவர்கள் வம்சத்தவர்களே இராமேசுவரம் தேவஸ்தானம் தருமகர்த்தர்களாய் இருந்தார்கள். இவர்களில் யாரேனும் சிவபதம் அடைந்துவிட்டால், அந்தப் பரம்பரையில் உள்ள வெள்ளைவேட்டிக்காரர்களுள் யாரேனும் தகுந்தவர் களுக்குத் திருவாடுதுறை ஆதினத்தார்கள் காஷாயம் கொடுத்த னுப்புவது முன்பு வழக்கமாயிருந்து வந்தது.
இந்துக் கலைக்களஞ்சியம்

உலகநாதமுனி, இராவாகுமாமுனி, இராமநாதமாமுனி, இம்மூவரும் ஜடாதாரிகள். இவர்களுக்குச், சேதுபதிகளால் கிராமங்கள் விட்டுக் கோவில் விசாரணையும் சர்வசுதந்திர பாத்தியதையும் கொடுக்கப்பட்டு மேற்பார்வை மாத்திரம் வைத்துக் கொண்டார்கள். சேதுபுராணத்தில் ஆசிரியரால் செய்யப்பட்ட குருஸ்துதியில் இராமநாதமுனிவர் என்று கூறப் பெற்றவர் இந்தப் பரம்பரையினரே. அவருடைய மடமும், கிராமங்களும் தேவஸ் தானத்தாரால் ஏலத்திற்கு எடுக்கப்பட்டன. முன்பு தர்மகர்த்தாமடம் என்று வழங்கப்பட்டு வந்தது. தேவ ஸ்தானத்திற்கு வந்த பிறகு இராமமந்திரமடம் என்று பெயர் வழங்கப்பட்டு வருகிறது.
கலியாணமண்டபம்:- இது அம்மன் சந்நிதியில் சொக்கட்டான் மண்டபத்திற்குக் கிழக்கே உள்ளது. இதன் மேலைக்கோடியில் கிழக்குப்பார்த்த தூண்கள் இரண்டிலும் தர்மகர்த்தர்களாகிய இரண்டு முனிவர் உருவங்கள் உள்ளன. இதன் தெற்கு வரிசையில் கிழக்கிலிருந்து ஆறாவது தூணில்
முத்துவிஜயரகுநாத சேதுபதி காத்ததேவர் உருவம் உள்ளது.
இவர்காலிலுள்ள வீரகெண்டையின் இடையில் ஒருதலையும் உடைவாளும் சொர்ணயக்ஞோபவிதமும் இருக்கின்றன. மற்றைத்தூண்களில் சேதுபதிகளுடைய அடைப்பைக்காரர்கள் உருவங்கள் உள்ளன. இம்மண்டபம் மகாலசுஷ்மி கோயிலுக்குத் தென்பக்கத்தில் உள்ளது. இம்மண்டபத்தின் தென்புறம் பசுமடம் உள்ளது. இது முன்பு பண்டிதாஸ்' என்ற மகாராட்டிரர் ஒருவர் பெயரால் வழங்கப்பட்டு வந்தது. பண்டிதாஸ் என்பவர் சந்யாசி. இம்மடத்தின் தெற்கே சோமவாரக்கட்டளை என்ற கட்டடம் இருக்கிறது. கிழக்குச் சொக்கட்டான் மண்டபத்தின் வடபுறம் சபாபதி கோயிலும் தென்புறம் பத்ரகாளி கோயிலும் உள்ளன. சொக்கட்டான் மண்டபத்து நாற்புறத்திலும் இராமாயணம், பாரதம், பாகவதம் என்பவற்றிலுள்ள சரித்திரப் பகுதிகள் சித்திர வடிவங்களாக எழுதப்பெற்றுள்ளன. மிகவும் நன்றாக வுள்ளன. சில வடிவங்கள் மாத்திரம் அழிந்துள்ளன.
கட்டளை - திருவனந்தபுரம் மகாராசா கட்டளை ; இதற்குரிய கட்டளைகள் உதயமார்த்தாண்டன் கட்டளை, உச்சிக்காலக் கட்டளை, சாயரகூைடிக்கட்டளை ஆடி, மாசி உற்சவத்தில் இரண்டாம் திருநாள் மண்டகப்படிச்செலவு சம்ஸ்தானத்தைச் சார்ந்தது. இதற்குரிய வரும்படி மூவாயிரம் ரூபாய். இதை நான்கு முறையாகத் திருவனந்தபுரம் அரசர் கொடுத்து வருகிறார்.
இராயர் கோபுரங்கள்:- இரண்டு உள்ளன. அவை வடக்கும் தெற்கும் உள்ளன.
மாதவ தீர்த்தம் :- இது தெற்குச் சொக்கட்டான் மண்டபத்தின் வடபுறம் சேதுமாதவசுவாமி கோயில் தென்புறம் உள்ளது. இதனைச் சுற்றி வைகாசி வசந்தோற்சவத்தில் சுவாமியும் அம்பிகையும் பத்தியுலாத்துவது வழக்கம். இச்சொக்கட்டான் மண்டபத்தின் தென்மேற்கு மூலையில் கன்னிமூலை மண்டபம் இருக்கின்றது. இது கன்னிமூலைக் களஞ்சியம் என்று சொல்லப்படும். இதன் வடபுறம் மேல்புறம்,தென்புறம் நந்தவனம் ஒன்றுள்ளது. மேற்குச்
303

Page 350
சொக்கட்டான் மண்டபத்தின் மேல்புறம் மூன்று கோயில்கள் உள்ளன. இந்தப் பிராகாரம் கட்டுவதற்கு முன்பே அமைக்கப் பட்டிருந்தன. மூன்று கோயிலிலுள்ள லிங்கங்களின் பெயர்கள் கிருஷ்ணதேவராயலிங்கம், மேற்குச்சொக்கட்டான் மண்டபத்திற்கு மேலைத்துறவை மண்டபம் என்பது பெயர். மேற்குச் சொக்கட்டான் மண்டபத் தென்சிறகினிடையில் மூன்று சேதுபதிகள் உருவச் சிலைகள் உள்ளன. இப்பட்டத்திருந்த சேதுராமநாதபண்டாரம் என்பவருடைய உருவச் சிலையும் அமைக்கப்பட்டுள்ளது. இவர்களில் முத்துராமலிங்க சேதுபதி ஒருவர் உற்சவத்தின் ஆறாந் திருநாளில் சுவாமி எழுந்தருளி மண்டகப் படிகொள்வது வழக்கம்,
சேதுமாதவர் கோயில் :- இதைச்சுற்றி முறையே நளதீர்த்தம், நீலதீர்த்தம், கலாகூடிதீர்த்தம் என்று மூன்று தீர்த்தங்கள் இருக்கின்றன. வடக்குச் சொக்கட்டான் மண்டபத்தின் தென்புறம் கலாயதீர்த்தம் இருக்கிறது. சேதுமாதவர் கோயிலுக்கு வடபுறம் 1. பாபபக்ஷேசுரர் 2 புண்யதானேவகரர் ஆலயங்கள் இருக்கின்றன. அதற்கு நேரே கிழக்கில் தசரதர்கோயில் இருக்கின்றது. அதன் அருகில் வடக்கே கந்தமாதனதீர்த்தம் இருக்கின்றது. இவை யாவும் கிணற்று வடிவங்களே, தனித்தனி உள்ளன (1) கிழக்கு நோக்கியது (2) மேற்கு நோக்கியது
இந்தத் தலத்தில் அறுபத்துநான்கு தீர்த்தங்கள் உள்ளன. சொக்கட்டான் மண்டபத்து வாயு மூலையில் ராமலிங்கப் பிரதிஷ்டை முதலியன உள்ளன. இது பாஸ்கர சேதுபதி மானேஜ் மெண்டு காலத்தில் செய்யப்பட்டது.
உப்பூர் வெய்யிலுகந்த விநாயகர் பூரீ இராமராற் பூசிக்கப் பட்டவர்.
தேவிப்பட்டினம்:- இங்கே இராமர் நவக்கிரகப் பிரதிட்டை செய்து திலகேசுவரத்தையும் பூசித்தார். இங்கு ஜகந்நாதப் பெருமாள் கோயில் இருக்கின்றது, இராமநாத சுவாமி கோயில் நந்தி மண்டபத்தின் தென்பாரிசத்தில் சக்தி விநாயகர் உள்ளார். அஷ்டதிக்கிலும் பாதுகாவலுக்கு முன்னோரால் நியமிக்கப்பட்ட எட்டுத்தெய்வங்களுள் "சேதுமாகாளி'என்பவளும் ஒருவர்.
1 கிழக்கு உஜ்ஜயினி மாகாளி (2) தென்கிழக்கில் முனீசுவரர் (3) தெற்கில் சேய்த்தாக நம்பநாயகி என்னும் காளியும் தெற்குக் கோபுர வாயிலில் கருப்பண்ணசுவாமியும் (4) மேற்கே துர்க்கை யம்மன் (5) வடக்கே சேதுமாகாளி. நான்கு நேர் திசைகளில் நான்கு காளிபிரதிஷ்டை
தீர்த்தங்கள் :- 1. சக்ர தீர்த்தம் - இது சுவாமி கோயிலுள்ளிருந்து இரண்டாம்
பிராகாரத்து அம்மன் சந்நிதிக்கும், சுவாமி சந்நிதிக்கும் மத்தியில் கிணற்று வடிவமாய் உள்ளது.
2. வேதாள தீர்த்தம்- மண்டபத்தின் மேற்கே ஐந்து மைலில் தில்லைநாயகி அம்மன்கோயில் தென்புறத்தில் ஊருணி வடிவமாய்
உள்ளது.
304

3. பாபவிநாச தீர்த்தம் :- மண்டபம் என்ற ஊருக்குள் சேதுபதி சத்திரத்திற்கு வடக்கே ஊருணி வடிவமாயுள்ளது.
4. சீதா குண்டம் :- தங்கச்சிமடம் சத்திரத்திற்கு வடபுறம் ஊருணி வடிவமாயுள்ளது. இப்பொழுது மணல் மூடிஇருக்கின்றது. சீதையின் கோயில் கரையில் உள்ளது.
5. மங்கல தீர்த்தம் :-பாம்பன் இராமேசுவரம் ரோட்டில் தங்கச்சிமடம் சத்திரத்திற்குக் கிழக்கே ஊருணி வடிவமாக உள்ளது.
6. அமுத தீர்த்தம் - ஏகாந்தராமசுவாமி கோயிலுக்குள் கிணற்று வடிவமாய் உள்ளது. ஏகாந்தராமசுவாமி கோயிலுள் இலக்குமணன் அநுமார்சுக்ரீவன் சகிதராய் இராமர் இருக்கிறார்.
7. பிரம குண்டம் :- இராமேசுவரம் மேலைவீதியிலிருந்து நேர் வடக்கே ஒரு மைல் தூரத்தில் ஊருணி வடிவமாய் உள்ளது.
8. அநுமகுண்டம் தீர்த்தம் - அதே மார்க்கத்தில் அரைமைல் தூரத்தில் கல்வெட்டுக்குளமாய் உள்ளது.
9. அகத்திய தீர்த்தம்:- அக்னி தீர்த்தத்திற்கு வடக்கே குள வடிவமாய் உள்ளது.
10. இராம தீர்த்தம் - ஆலயத்திற்கு மேற்கே பாம்பன் ரோட்டின் தென்புறம் குளவடிவமாக உள்ளது.
11. இலக்குமண தீர்த்தம்:- இந்தத் தீர்த்தத்திற்கு மேற்கே அதே ரோட்டின்(பாம்பன்) தென்புறம் குளவடிவம். இராம தீர்த்தம், இலக்குமணதீர்த்தம் என்ற இரண்டிலும் இராமர்கோயிலும் இலக்குமணக் கோயிலும் உள்ளன.
12. சடாயு தீர்த்தம்- இராமேசுவரத்திற்குத் தென்புறம் மூன்று மைலுக்குள் குளவடிவம்.
13. இலக்குமி தீர்த்தம்:- சுவாமி கோயில் அனுப்பு மண்டபத்தின் தென்பக்கத்திலும் அம்பாள் கலியாண
மண்டபத்திற்கு வடபக்கத்திலும் கல்வெட்டுக்குளமாய் உள்ளது.
14. அக்னி தீர்த்தம்:- சுவாமி சந்நிதிக்குக் கிழக்கே சமுத்திர வடிவமாயுள்ளது.
15. சிலகெங்கை:- சுவாமி சந்நிதி நந்தி மண்டபத்திற்குத் தென்புறம் கல்வெட்டுக் குளவடிவமாய் உள்ளது.
16.சங்க தீர்த்தம்:- சுவாமி சந்நிதி இரண்டாம் பிராகாரத் திற்கு வடபுற மூலையில் கிழக்குப்பக்கமாகக் கிணற்று வடிவில் உள்ளது.
17 முத்தீர்த்தம்:- சுவாமிகோயில் இரண்டாம் பிரகாரம் வட புறம் மேற்குக் கோடியில் தென்பக்கத்தில் கிணற்று வடிவமாய் உள்ளது.
இந்துக் கலைக்களஞ்சியம்

Page 351
18. கோடிதீர்த்தம்:- சுவாமி சந்நிதி முதல் பிரகாரம் வட புறம் விசாலாகூழியம்மன் கோயில் கீழ்ப்பக்கம் கிணற்று வடிவமாய் உள்ளது. இராமநாதர் அபிஷேகத்திற்கும் இத்தீர்த்தமே.
19. சாத்தியா மிருத தீர்த்தம்-பர்வதவர்த்தினி அம்பாள் சந்நிதி நவசக்தி மண்டபத்தின் தென்பாகம் கிணற்று வடிவமாய் உள்ளது.
20. சர்வ தீர்த்தம்:- சுவாமி கோயில் முதல் பிராகாரம் தென் புறம் கிணற்று வடிவமாய் உள்ளது.
21. தனுஷ்கோடி தீர்த்தம்:- ரத்னாகரம் மகோததி சங்கமம்,
22. பாலோடை (தேவதீர்த்தம்) நம்பநாயகிஅம்மன் கோயிலுக்குப் போகும் வழியில் ஒடை வடிவமாய் உள்ளது.
23. கவிகுண்டம் (கவிதீர்த்தம்) பாம்பன் பைரவ சுவாமி கோயிலுக்குத் தென்புறம் குளவடிவமாய் உள்ளது.
24. சரசுவதி காயத்திரி -சுவாமி கோயிலில் உள்ள தாமோதரவிலாசம் என்ற தோப்பின் வடபாகத்தில் கிணற்று வடிவ மாய் உள்ளது. இத்துடன் சாவித்திரி தீர்த்தமும் சேர்ந்திருக்கிறது.
பற்றுஞ் சகனிற் பதினைந்து நூற்று முப்பான் பருவ நற்றும் புவியினையாள் வீர பூபதி நாளிற் றோன்ற குற்றம் கடிந்தவர் ராமநாதன் கோயிலென்பார் கற்றும் கடுந்தவங்கள் புரிராமநாதனமைத்தனனே.
பூரீபர்வதவர்த்தினி அம்மன் சந்நிதிக்குமுன் முதற்பிராகாரத்தில் தென்பக்கத்தில் சாத்தியாமிருதம் என்ற தீர்த்தம் ஒன்றிருந்ததாயும், அது கட்டிட நிர்மாணத்துக்கு இடைஞ்சலாக இருந்ததை உத்தேசித்தும் அதற்கு நேர்கிழக்கில் நவசக்திமண்டபத்திருப்பதாகவும் சேதுசமஸ்தானம் பூர்வீக சாஸ்திரத்தில் விஜயரகுநாத சேதுபதி காலத்தில் நடந்ததாக எழுதப்பட்டி ருக்கின்றது.
நந்திதேவர் மிகப்பெரியவர், அவருக்கு முன்புள்ள இரண்டு தூண்களில் இரண்டு நாயகர் வடிவங்கள் இருக்கின்றன. வடபால் வீரப்பநாயகர் தென்பால் விசுவநாத நாயக்கர். (பொ.யூ.)
இராமோதந்தம்
இராம உதந்தம் இராமனுடைய சரித்திரம், இலகுவுஞ் சுருக்கமும் இயைந்து வடமொழி பயிலும் மாணவர்களாற் பெரும்பாலும் முதற் பாடமாகக் கொண்டு படிக்கப்பட்டு வருவது இராமோதந்தம்.
இதனைச் சுன்னாகம் அ. குமாரசுவாமிப்புலவர் (1854 - 1922) தமிழ் மொழியிற் செய்யுள் நடையிலே மொழி பெயர்த்து வழங்கி யுள்ளார். பெரும்பாலும் விருத்தப்பாவிலே இயங்குகின்ற தமிழ் இராமோதந்தத்திலே ஆதியில் விநாயகர் வணக்கமும் அந்தத்தில் வாழிப்பாடலும் அமைய இடைநடுவே ஏழு காண்டங்களிலே 118 பாடல்கள் உள்ளன. ஏழு காண்டங்களும் முறையே பால,
இந்துக் கலைக்களஞ்சியம்

அயோத்தியா, ஆரணிய, கிட்கிந்தா சுந்தர, யுத்த, உத்தர காண்டங்களாம். இராமோதந்தத்திலே சில கதைகள் கம்ப
ராமாயணத்திற்கு மாறாய் வருதல் குறிப்பிடத்தக்கது.
புலவரவர்களின் இராமோதந்தம் 1922 இலே மதுரைத் தமிழ்ச் சங்க முத்திராசாலையிலிருந்து செந்தமிழ்ப் பிரசுரமாக வெளிவந்தது. மீண்டும் 1931, 1932, 1933, 1940, 1949 ஆம் ஆண்டுகளிலும் ஐந்துமுறை வெளிவந்துள்ளது. (பொ.பூ)
6T61.DTLJT858u-JTGOrb
வட மொழியிலுள்ள மகாபாரதத்தின் மூன்றாவது பருவமான வனபர்வத்திலே இடம் பெறுவது இராமோபாக்கியானமாகும்.
உதிஷ்டிரன் பேரரசு இழந்து பெருந் திருவையும் கைவிட்டு வெங்கானம் அடைந்தமைக்குத் துன்புற்றுவருந்தும் போது மார்க் கண்டேய முனிவர் கூறியது இராமன் கதை. இக்கதையே இராமோ பாக்கியானம் என வழங்குகின்றது.
இராமோபாக்கியானம் இராமாயணக்கதையின் சுருக்கமாக அமைகின்றது. அதனுள் இராமன் பெரு வீரனாகக் காட்டப்படுகிறானே ஒழியத் தெய்வமாகக் காட்டப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. (பொ.யூ.)
61T63635T1JTGOT33-yfuss, af.
பாரதரத்னா சக்கரவர்த்தி இராஜகோபாலாச்சாரியர் சேலம் மாவட்டத்தில் ஒசூர் தாலுகாவில் துறைப்பள்ளி எனும் ஊரிலே தோன்றியவர்; பி. ஏ. பி. எல். பட்டங்களைப் பெற்றவர்; வழக் கறிஞராக விளங்கியவர்; இந்திய விடுதலை இயக்கத்தில் முன்னின்ற தமிழரில் முக்கியமானவராகக் கருதப்படுவர்; “ராஜாஜி” என்று மக்களால் மதிக்கப் பெற்றவர்; சென்னை முதல் மந்திரியாகவும் வங்கக்கவர்னராகவும் சுதந்திர இந்தியாவின் இரண்டாவது தேசாதிபதியாகவும் பணிபுரிந்தவர்; விடுதலை இயக்க காலத்திலே கல்கி கிருஷ்ணமூர்த்தி உதவியுடன் விமோசனம்' எனும் சமூக சீர்திருத்த இதழைச் சிறிது காலம் நடத்தியவர்; கடைசி காலத்தில் ஒரு புதிய அரசியற் கட்சியை உருவாக்கி வழி நடத்தியவர்.
வைதீக மதத்திலே ஆழ்ந்த பற்றுடைய ராஜாஜி வியாசர் மகா பாரதத்தை வியாசர் விருந்து என்றும், வான்மீகி ராமாயணத்தைச் சக்கரவர்த்தித் திருமகன் (1956) என்றும் எளிமையும் தெளிவும் மிக்க நடையில் இளைஞரும் விரும்பும் வண்ணம் வசனத்திலே தந்தவர். கண்ணன் காட்டிய வழியிலே பகவத்கீதையைத் தெளிவாக விளக்கியவர். பூரீ இராமகிருஷ்ண பரமஹம்சரின் பொன் மொழிகளை ராமகிருஷ்ண உபநிஷதம் (1950) எனச் சுவையாக எழுதியவர். ஆதி சங்கரர் பேரால் வழங்கும் பஜகோவிந்தத்தைத் தமிழ்ப்படுத்தி விளக்கமும் தந்தவர். மகாத்மா காந்திஜியின் கடவுளைப் பற்றிய ஆங்கிலத் தொகுப்பான சத்தியமே கடவுள் (TRUTHIS GOD 1955) என்பதை ரகுபதிராகவ என்ற பெயரிலே மொழி பெயர்த்தவர். அம்மொழி பெயர்ப்பு 1958 இலே வந்தது.
305

Page 352
நம்மாழ்வாரின் திருவாய் மொழிப் பாசுரங்கள் சிலவற்றை பக்திநெறி என்ற தொடரிலே எழுதியவர். அத்தொடர் 1961 இலே நூலாக வெளிவந்தது. கல்கியில் சோமு (மீ. ப. சோமசுந்தரம்) உடன் சேர்ந்து திருமூலர் தவமொழி என்ற தொடரிலே திருமந்திரவிளக்கம் செய்தார். அத்தொடர் 1964 இலே நூலாக வந்தது. ஆத்மசிந்தனையிலே ராஜாஜி மேனாட்டுச் சிந்தனை யாளரை அறிமுகம் செய்துள்ளார்.
ஏராளமான கதைகளையும் கட்டுரைகளையும் ராஜாஜி எழுதியுள்ளார். அவற்றிற் பெரும்பான்மையானவை நூலுருவம் பெற்றுள்ளன. (பொ.யூ.)
இராஜராம் கோவிந்தராவ்
பத்தொன்பதாம் நூற்றாண்டில் வாழ்ந்த மராட்டிய மரபினர்; தஞ்சாவூர் மராட்டிய அரசரின் கீழ் அலுவல் பார்த்த குடும்பத்தினர்; மராட்டிய மொழியில் இருந்த 82 வடநாட்டுப் பக்த சரிதங்களை பூரீ பக்தலீலாமிர்தம் என ஐயாயிரத்திற்கு மேற்பட்ட பாடல்களாற் பாடியவர்.
ஆசிரியரின் தம்பி மாதுசாமி சூரியவம்சி பூரீ பக்தலீலா மிர்தத்தைத் திரிசிபுரம் வீ. கோவிந்தபிள்ளை, தஞ்சை மதுரை முத்து உபாத்தியாயர் என்போரைக் கொண்டு பார்வையிடச் செய்து 1888 இலே தமது தஞ்சை திவாகர முத்திராட்சரசாலையிற் பதிப்பித்தார்.
இராஜராஜ சதுர்வேதிமங்கலம்
சேரிகளும், பிடாகைகளும்
சோழராட்சியிலே பாண்டிநாட்டில் அமைந்திருந்த பிரம்ம தேயங்களில் முதன்மையானது தென்பாண்டி நாட்டிலுள்ள இராஜராஜசதுர்வேதிமங்கலம், அது முள்ளிநாட்டின் ஒரு பகுதி யாகும். முள்ளிநாடு முடிகொண்ட சோழ வளநாடு என்னும் பிரிவின் ஒரு பகுதியானது. இராஜராஜப் பாண்டிநாட்டு முடி கொண்ட சோழ வளநாட்டு முள்ளிநாட்டு பிரம்மதேயம் பூரீ ராஜராஜ சதுர்தேதிமங்கலம் என்பது சாசனக்குறிப்பு. அதனைப் பற்றிய விவரங்கள் அடங்கிய சாசனங்கள் பல உள்ளன. அவற்றுட் பெரும்பாலானவை சோழபாண்டியரின் காலத்தவை. பன்னி ரண்டாம், பதின்மூன்றாம் நூற்றாண்டுகளைச் சேர்ந்த கல்வெட்டு களிலும் அதனைப் பற்றிய விவரங்கள் காணப்படுகின்றன.
திருநெல்வேலி மாவட்டத்து அம்பா சமுத்திரம் தாலுகாவைச் சேர்ந்த மன்னார் கோயில் என்னும் ஊரிலுள்ள கோபால நாதசுவாமி கோயில், அம்பாசமுத்திரம் திருமூலநாதர் கோயில், அங்குள்ள திருவாலீஸ்வரம் கோயில், அம்பாசமுத்திரம் எறிச் சாவுடையார் கோயில், சேர்மாதேவியிலுள்ள அம்மைநாத சுவாமி கோயில், திருச்செந்தூர் தாலுகாவைச் சேர்ந்த ஆத்தூரிலுள்ள சோமநாதர் கோயில் என்பவற்றிலே ராஜராஜ சதுர்வேதி மங்கலத்தைப் பற்றிக் குறிப்பிடும் சாசனங்கள் பல உள்ளன. சதுர் வேதிமங்கலத்துச் சேரிகள், அதன் பிடாகைகள், அதன் ஆளுக் கணமாகிய சபையார், அதிலுள்ள கோயில்கள், கோயில்களுக்
306

குரிய தேவதானங்கள், கோயில்களிற் சேவைபுரிந்த சமூகப் பிரிவுகள், அவற்றிலே நடைபெற்ற விழாக்கள், வழிபாடுகள், சடங்குகள் முதலியன பற்றிய விவரங்கள் அச்சாசனங்களில் அடங்கியுள்ளன. சோழப்பேரரசில் ஏற்பட்டிருந்த ஆட்சி முறை பற்றிய அரிய விவரங்கள் எழுதப்பட்டுள்ளதால் அவை வேறொரு பரிமாணத்தையும் பெறுகின்றன.
இராஜராஜ சதுர்வேதிமங்கலத்தில் அடங்கிய குடியிருப்பு களின் பெயர்கள் மேல்வருவனவாகும் :
அருமொழிதேவச் சேரி ராஜராஜ சேரி பூரீ மும்முடி சோழச் சேரி பூரீ நித்த வினோதச் சேரி பூரீ சோழேந்திர சிங்கச் சேரி பூரீ சுந்தரசோழச் சேரி பூரீ வானவன்மாதேவிச் சேரி பூரீ குந்தவைச் சேரி பூரீ செம்பியன்மாதேவிச் சேரி உத்தமசோழச் சேரி பூரீ பஞ்சவன்மாதேவிச் சேரி 12. ஒலொகமாதேவிச் சேரி
சாசனங்களிற் பெயர் குறிப்பிடப்படும் 12 சேரிகளின் பெயர்களும் அரச குடும்பத்தவர்களின் பெயர்கள், பட்டப் பெயர்கள், சிறப்புப் பெயர்கள் என்பவற்றை அடிப்படையாகக் கொண்டு அமைக்கப்பட்டவை. அவற்றுள் ஐந்து பெயர்கள் அரசகுலத்துப் பெண்களின் பெயர்கள் என்பது குறிப்பிடத் தக்கது. அவர்களிற் செம்பியன் மாதேவியார் சிவபக்தியிற் சிறந்து விளங்கிய கண்டராதித்த சோழனின் பட்டத்தரசியானவர். நெடுங்காலம், இராஜராஜ சோழனது இளமைப் பருவம் வரை, வாழ்ந்தவரான செம்பியன் மாதேவியார் சோழப்பேரரசர் காலத்துப் பெண்களில் முதன்மையானவர். சைவாபிமானம் மிருந்தவரான செம்பியன் மாதேவியார் புரிந்த திருப்பணிகள் அளவிலாதனவாம். அவர் வைணவ, சமண சமயங்களுக்கு ஆதரவு புரிந்த சிறப்பினையும் பெற்றனர். தென்னிந்திய சிற்பக்கலை வளர்ச்சியில் செம்பியன்மாதேவியார் கலைப்பாணி ஒன்றைப் பற்றிப் பேசுவது பன்னாட்டு அறிஞரிடையே இன்று வழமையாகி விட்டது. உலோகமகாதேவி என்பது இராஜராஜனின் பட்டத்தரசியின் பெயராகும். உலோக மாதேவீஸ்வரம் என்னுங் கோயில் அவனது சமயத் திருப்பணிகளில் முதன்மையானது. பஞ்சவன் மாதேவி, வானவன் மாதேவி என்பவை இராஜராஜ சோழனின் தேவியரின் பெயர்களாகும். குந்தவை என்பது அவனது தமக்கையாரின் பெயர். ஏனைய ஏழு சேரிகளின் பெயர்களில் இரண்டு பெயர்கள் இராஜராஜனின் தகப்பனாகிய சுந்தரசோழன், சிறிய தகப்பனாகிய உத்தமசோழன் என்போரின் நினைவாக அமைந்தவை. மிகுதியான ஐந்தும் இராஜராஜனோடு தொடர்புடையவை.
இராஜராஜனது ஆட்சிக் காலத்திலே, இராஜராஜத் தென்னாடு என்னும் பாண்டிநாட்டிலே இளங்கோக்குடி என வழங்கிய பிரம்மதேயம் புனராக்கம் பெற்று ராஜராஜ சதுர்வேதி மங்கலம் என்று பெயரிடப்பட்டது என்று கருதலாம். அதன்
இந்துக் கலைக்களஞ்சியம்

Page 353
அமைவிடம் சிறப்பானது; அது தண்பொருந்தாறு பாயும் வளமான பகுதி, அங்கு திருவாலிஸ்வரம், கோபாலநாதசுவாமி கோயில் என்னும் புராதனமானவையும் முதன்மை வாய்ந்தனவுமாகிய திருத்தலங்கள் உள்ளன. சோழரின் ஆதிக்கத்தை நிலைப்படுத்து வதற்கு வேண்டிய ஒரு நிறுவனமாக இச்சதுர்வேதிமங்கலத்தை அமைத்தனர் என்று கருதலாம். சோழரின் இராசதானிகளோடும், பிரதேச சமுதாயத்தோடும் நெருங்கிய தொடர்புகளை ஏற்படுத்து கின்ற ஒர் அமைப்பாக இச்சதுர்வேதிமங்கலம் அமைந்துவிட்டமை குறிப்பிடற்குரியது. பல சிறிய கிராமங்கள் அதன் பிடாகைகளாக ராஜராஜசதுர்வேதி மங்கலத்தோடு இணைக்கப்பட்டிருந்தன. கோனாடு, கடையம், இராஜசிகாமணி, மேல்பிடாகை மேரூர், பாம்புநாறி இடைக்குன்ற வெட்டி, காக்கலூர், தென்பிடாகை முதலானவை அதனைச் சேர்ந்த பிடாகைகளாகும். அவை தொடர்பாக “இவ்வூர்பிடாகை”, “எங்கள் பிடாகை”, “எங்களூர்ப் பிடாகை” என வரும் சாசனக் குறிப்புகள் குறிப்பிடத்தக்கவை.
திருவாலீஸ்வரம், திருமூலநாதர் கோயில், மூலஸ்தான முடையார் கோயில், திருப்போத்துடைய மகாதேவர் கோயில், இராஜேந்திரசோழ விண்ணகரம், இராஜராஜ விண்ணகரம் என்னுங் கோயில்கள் தொடர்பாக இராஜராஜ சதுர்வேதிமங்கலத்துச் சபையார் பல நடவடிக்கைகளை மேற் கொண்டிருந்தனர்.
கோயில்களும், தேவஸ்தானங்களும்
ராஜராஜ சதுர் வேதிமங்கலத்துச் சைவாலயங்களிலே திருவாலிஸ்வரம் முதன்மையானது. அது இராஜராஜனது காலத்திலே வனப்புமிக்க விசாலமான கற்றளியாகப் புனர் நிர்மாணம் பெற்றது. அங்கு சைவசமய மரபிலும் புராணங் களிலும் வர்ணிக்கப்படும் திருவுருவங்கள் பல கட்டுமானத்தின் அம்சங்களாக அமைந்துள்ளன. சோழ மன்னர்கள் நன்கொடை களை வழங்கி ஆலயத்திற்கு ஆதரவு புரிந்தனர். தஞ்சாவூரிலுள்ள சோழ மகாராசனின் கட்டளைப்படி ஒரு சமயத்திலே மதுரையில் இராஜேந்திரசோழபுரம் என்னும் இராசதானியில் நிலை கொண்டிருந்த சோழபாண்டியனாகிய சடையவர்மன் சுந்தரசோழ பாண்டிய தேவர் ஐந்து வேலி நிலத்தை கோயிலுக்குத் தானமாக வழங்கினான். அத்தானம் பற்றிய விவரங்கள் திருவாலீஸ்வரம் கோயிலிற் சாசனமாக எழுதப்பட்டன. அச்சாசனம் மிகவும் நீளமானது. அது சோழராட்சியின் பிரதான அம்சங்களைத் தெளிவுறுத்தும் வகையில் அமைந்துள்ளது.
சடையவர்வன் சுந்தரசோழபாண்டியன் சோழப்பேரரசனை அம்மான் என்று குறிப்பிடுகின்றான். அம்மான் என்பது ஈஸ்வரனையும் சக்கரவர்த்தியாகிய பேரரசனையும் குறிக்கும் என்பதை மொழிவழக்கால் உணரமுடிகின்றது. 'அம்மான் அருளிச் செய்தமையால் ஐந்து வேலி நிலத்தைச் சதுர்வேதி மங்கலத்துச் சபையாரிடம் விலை கொடுத்து வாங்கி அதை இறையிலித் தேவதானமாகக் கோயிலுக்குச் சோழ பாண்டியன் வழங்கினான். சோழ மன்னனின் ஆணைப்படி அந்நிலம் திரு வாலீஸ்வரமுடையார் கோயிலிலே திருவிழா எடுப்பதற்கும் நாள்தோறும் 25 பிராமணருக்கு அன்னதானம் கொடுப்பதற்கும், சிவதர்மம் வாசிப்பவன் ஒருவனுக்கும் வேண்டும் நிவந்தங் களுக்கு மானியமாக வழங்கப்பட்டது.
இந்துக் கலைக்களஞ்சியம்

சோழபாண்டியன் வழங்கிய தேவதானம் பற்றிய விவரங்கள் அடங்கிய சாசன வாசகப் பகுதி மேல்வருமாறு அமைந்துள்ளது:
'இவ்விசைத்த பெருநான் கெல்லையுள் அகப்பட்ட நிலம் ஐவேலியும் பிரம்மதேயமாய் வருகின்றபடி யாண்டு 18ஆவது முதல் தவிர்ந்து வெள்ளான் வகையில் முதலாக்கி இந்நிலம் இவ்வூர்த் திருவாலீஸ்வரமுடைய மகாதேவற்குத் திருவிழாப் போத்தவும் நித்தம் இருபத்தைவர் பிராமணர் உண்ணவும், சிவதர்மம் வாசிப்பான் ஒருவனுக்கும் மற்றும் இத்தேவற்கு வேண்டும் நிவந்தங்களுக்கு இறுப்பதாகக் குடுக்க
வென்று அம்மான் அருளிச் செய்தமையில் இந் நிலத்தால் இந்நாடு வெள்ளான் வகைவரிசைக்கீழ் இறைகடன் ஜஞ்ஞாழி நாராயத்தால் நெல்லு அறு நூற்று நாற்பத்திரு கலனே அறுகுறுணி இருநாழி மூவுழக்கேய் இரு செவிடரையும் உருவுகோல்) நிலன் காசு முப்பத்தஞ்சே காலே முக்காணியும் காட்சி எருது. காசு ஜஞ்சும் இறை கட்டின இவ்விறை இவ்வூர் திருவாலிஸ்வரமுடைய மகாதேவற்கு. வேண்டும் நிவந்தங்களுக்கு யாண்டு பதினாறாவது முதல் இறுப்பதாகவும், இந்நிலத்தால் வந்த இறை ராஜராஜச் சதுர்வேதிமங்கலத்துச் சுருக்கவும், இந்நிலம் முன் பெயர் தவிர்ந்து சிவ சரணசேகர நல்லூர் என்னும் திருநாமமாகவும் வரியிலிட்டுக் குடுக்கத் திருவாய் மொழிந்து அருளினார்.”
இச்சாசன வாசகத்தின் மூலம் பல முக்கியமான விவரங்கள் தெளிவாகின்றன. அவற்றிலொன்று கோயிலுக்குத் தானமாக வழங்கப்பட்ட 5 வேலி நிலமும் சிவசரணசேகர நல்லூர் என்ற பெயரால் வழங்கவேண்டும் என்பது சோழபாண்டியனின் கட்டளை. அது முன்பு ராஜராஜசதுர்வேதிமங்கலத்தின் உடைமை என்பதால் அது பிரம்மதேயம் என்ற வகைக்குரியதாக இருந்தது. நாட்டு வரியில் அது அவ்வகையின் கீழ்ப் பதிவாகியிருந்தது. அரசரின் கட்டளைப்படி தேவதானமாகி விட்டமையால் அது பிரம்மதேயக் காணி என்ற நிலையிலிருந்து நீங்கிவிட்டது. சபையார் அதனை விலைகொண்டு விற்றுவிட்டனர். எனவே, அந்நிலம் ஐவேலியினையும் பிரம்மதேய வரிசையிலிருந்து நீக்கி வெள்ளான் வகை என்ற நிலங்களின் வரிசையிலே சேர்த்துக் கொள்ளவேண்டும் என்பது அரசனின் ஆணை.
இரண்டாவது பிரதானமான விவரம் ஐவேலி நிலத்திற்குரிய இறை கடமைகளைப் பற்றியதாகும். முன்பு இறைகடமைகள் அவற்றின் பேராற் சபையாரால் வசூலிக்கப்பட்டன என்பதும் அவ்வாறு சேகரிக்கப்பட்ட முதல் அரசனுக்குரியது என்பதும், “இந்நிலத்தால் வந்த இறை ராஜராஜசருப்பேதி மங்கலத்துச் சுருக்கவும்” என்னும் தொடரால் உணரப்படுகின்றது. மூன்றாவது அம்சம் திருவாலிஸ்வரமுடையார் கோயில் தேவஸ்தானம் மூலமாக அதற்குக் கிடைத்த வரிகள் பற்றியது. நிலத்தின் மீதான சொத்துரிமைகள் கோயிலுக்கு வழங்கப்படவில்லை. காணியாளர், செய்கைக்காரர் என்போரின் உரிமைகள் நீக்கப்பட்டமை பற்றிய குறிப்பெதுவும் இல்லை. நிலத்துக்குரிய இறை கடமைகள் மட்டுமே
307

Page 354
கோயிலுக்குரியவை. “வெள்ளான் வகை வரிசைக்கீழ் இறைக்கடன் ஐஞ்ஞாழி நாராயத்தால் நெல்லு, அறுநூற்று நாற்பத்திரு கலனே அறுகுறுணி இருநாழி மூவுழக்கே இரு செவிடரையும். காசு முப்பத்தஞ்சே காலே முக்காணியும் காட்சி எருது காசு ஜஞ்சும் இறை கட்டி இவ்விறை இவ்வூர் திருவாலிஸ்வரமுடைய மகாதேவற்கு. வரியிலிட்டுக் குடுக்கத் திருவாய் மொழிந்தருளினார்’ என்ற குறிப்பால் இது தெளிவாகின்றது. தனது 16ஆவது ஆட்சியாண்டு நிறைவெய்திய பின் புதிய ஏற்பாடுகள் நடைமுறையாக வேண்டும் என்பது பூரீ சுந்தரசோழபாண்டிய தேவரின் கட்டளையாகும்.
திருவாலீஸ்வரம் கோயிலுடன் வணிகரும் சில தொடர்புகளைக் கொண்டிருந்தனர். இராமன் கேணியான தன்மச்செட்டி என்பவன் பராக்கிரம சோழபாண்டிய தேவரின் மூன்றாம் ஆண்டிலே திருவிளக்கொன்றையும் 25 ஆடுகளையுந் தானம் பண்ணினான். நாசகன் கூவாணை என்பவன் ஆடுகளைப் பொறுப்பேற்றுக் கொண்டு விளக்கெரிப்பதற்கான நெய்யினை அளந்து கொடுப்பதற்கு உடன்பட்டான். பாண்டியனார் பூரீ வல்லவதேவரின் ஆறாவது ஆண்டில் எழுதப்பட்ட சாசனமொன்று ராஜராஜ எறிவீரபட்டினத்திருக்கும் வியாபாரி கண்ணங்குடையானான திருவேகம்பம் உடையானைக் குறிப்பிடுகின்றது. சந்தன் கற்பூரத்துக்கு விருத்தியாக அவனுக்குச் சிவசரணசேகர நல்லூரில் இரண்டு மரக்காணி நிலம் சுந்தர பாண்டிய தேவரின் கட்டளைப்படி கொடுத்தமை பற்றி அதிலே குறிப்புண்டு. நாள்தோறும் பூரீ கண்டஞ் சந்தனம் முக்கழஞ்சும் கற்பூரமும் கொடுப்பதற்கு உடன்பட்டான். வணிகர் தலமாகிய எறிவீரபட்டினம் ராஜராஜ என்ற சொல்லை தனது பெயரின் முன்னொட்டாகக் கொண்டுள்ளதால் அப்பட்டினம் பாண்டி நாட்டிலே சோழராட்சி ஏற்பட்டிருந்த காலத்திலே, 11ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் உருவாகியிருந்ததென்று கருதலாம். அந்த வணிகர் தலம் “இவ்வூர் ராஜராஜ எறிவீரபட்டணம்” என்று சாசனத்திலே சொல்லப்படுவதால் அது ராஜராஜசதுர்வேதி மங்கலத்தோடு இணைந்திருந்தது என்பதை உணர்ந்து கொள்ள முடிகின்றது. கோயில் வளாகத்தில் மடமொன்றும் இருந்தது. “இக்கோயில் மாடாபத்யம் ஆட்கொண்ட பிச்சனான கந்நரனும் சைவசிகாமணி பிச்சனும்” என்ற தொடர் சாசனத்திலுண்டு.
முன்பு சோழபாண்டியனால் உருவாக்கப்பட்ட தேவதான மாகிய சிவசரணசேகர நல்லூர் பற்றிய விவரங்கள் கோச்சடைய வர்மரான பூரீ வல்லனின் 17ஆம் ஆண்டில் எழுதப்பெற்ற சாசனமொன்றிலுஞ் சொல்லப்படுகின்றன. சிவசரணசேகர நல்லூரைத் தேவதானமாக உறுதிப் படுத்தியதோடு அதன் காணியாளர் தொடர்பாகச் சில நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டன. சாசனப்பகுதி சிதைவுற்றுள்ளதால் அதனைப் பற்றிய விவரங்கள் தெளிவில்லை. முன்பு திருவிளக்குப்புறமாக உமை அம்மை என்பவர் வைத்த இரண்டு மா நிலமும் அரசரின் ஆணைப்படி சங்கரப்பாடியான் மானாபரண வைகுந்த நாடாழ்வானுக்கும் அவன் வர்க்கத்தார்க்கும் காணியாக வழங்கப்பட்டது. அவர்கள் நித்தம் ஒருழக்கு ஒராழாக்கு என்ற வண்ணமாக விளக்கெரிப்பதற்கு எண்ணை அளந்து கொடுக்கவேண்டும் என்பது நிபந்தனை. திருமுகம் சேனாபதிகள்
308

ராஜராஜ வெள்ளப்ப நாடாழ்வாரால் அனுப்பப்பட்டது. அது பராக்கிரம பாண்டியப் பெருந்தச்சனாற் கல்வெட்டாக அமைக்கப்பட்டது. அகநாழிகையார், திருப்பதியம் விண்ணப்பஞ் செய்வார், பன்மாயேஸ்வரக் கண்காணி என்னும் வகைகளைச் சேர்ந்தவர்களின் பெயர்களும் சாசனத்தில் உள்ளன.
இராஜராஜசதுர்வேதி மங்கலத்துக் கோயில்களில் திருச்சாயைத்துறை திருமூலநாதர் கோயில் புராதனமானது. அதைப்பற்றிக் கிடைக்கின்ற சாசனங்களில் மிகப் புராதனமானது மாறன் சடையனது காலத்ததாகும். அது வரகுணபாண்டியனின் காலத்துக்குரியது என்பது சாசனவியலாளரின் கருத்தாகும். திருச்சாலைத்துறைத் திருமூலத்தானத்துப் பட்டாரகர்க்கு இரண்டு திருநந்தா விளக்கெரிப்பதற்கு 30 பழங்காசு வெண்பைக் குடி நாட்டு இளவெண்பைக் கடத்திருக்கை என்னுமிடத்தைச் சேர்ந்த காவிது என்பவனால் வழங்கப்பட்டது. இருப்புமுதலாக வழங்கப்பட்ட முதலை ஏற்றுக்கொண்ட இளங்கோக்குடிச் சபை யார் அதன் வருமானங்கொண்டு நாள்தோறும் ஒரு நாழியாக நெய் வார்த்து விளக்கு எரிப்பதாக உத்தரவாதம் செய்தனர். இதனைப் பற்றிய சாசனம் எழுதப்பட்ட காலத்திலே திருச்சாலைத்துறை இளங்கோக்குடி என்னும் பிரம்மதேயத்துடன் இணைந்திருந்தது போலத் தெரிகின்றது. சடையன் மாறன் என்னும் பாண்டியனின் 1ஆவது ஆண்டிலே இளங்கோக்குடியின் மேற்கிலே புற்றுந் தெற்றியுமாகிக் கிடந்த நிலமொன்றைச் சபையாரிடமிருந்து விலை குடுத்து வாங்கிய அரையன் அணுக்கன் பூவன் என்பவன் அந்நிலத்தைத் திருத்திக் குளமும், வாய்க்காலும் வெட்டி, அதனைத் திருவிளக்குப் புறமாகத் திருமூலநாதர் கோயிலுக்கு வழங்கினான்.
“சோழன் தலைகொண்ட வீரபாண்டியனின் எட்டாவது ஆண்டில் எழுதப்பட்ட கல்வெட்டில் முள்ளிநாட்டுப் பிரம்ம தேயம் இளங்கோக்குடித் திருச்சாலைத் துறை நின்ற ருளின எம்பெருமான் என்னும் தொடர் காணப்படுகின்றது. பூரீ கரண திருச்சித்திரகூடம் என்னும் கோயில் மண்டபத்திலே பிராமணர்கள் வேதம் ஒதினார்கள். அவர்கள் பொருட்டு வேண்பு நாட்டு நால்கூர் திணைக்களத்தான் சாத்தன் விலைகுடுத்து வாங்கிய நிலத்தை இறையிலியாக நன்கொடை செய்தான். அதனைச் சபையார் பொறுப்பேற்றனர். சோழரின் ஆட்சி ஏற்பட்ட தன் விளைவாக முள்ளிநாட்டுப் பிரம்மதேயங்களில் ஒன்றான இளங்கோக்குடி ராஜராஜசதுர்வேதி மங்கலம் என்ற பெயரிலே புனராவர்த்தனம் பெற்றது. சடையவர்மன் சுந்தரசோழ பாண்டி யனின் ஆறாம் ஆண்டிலே கூடித்திரியசிகாமணிபுரத்தில் இருக்கும் வியாபாரி சேந்தன் இருகையன் என்பனின் மேற் பார்வையி லிருந்த சேந்தன் நம்பி, நங்கை என்போர் திருமூலநாதர் கோயிலில் விளக்கெரிப்பதற்குத் தானம் வழங்கினார்கள்.
சுந்தரசோழ பாண்டியனுடைய பத்தாம் ஆண்டில் இராஜராஜ சதுர்வேதிமங்கலத்துப பிடாகையான இராயசிகாமணியில் இருக்கும் புவனிப்பெருவழியான் சங்கரநாராயணப் பேரரையன் திருநத்தாவிளக்கு எரிப்பதற்குத் தானம் வழங்கினான். அவன் வழங்கிய விளக்கு நாற்சாண் நீளமும் 80 பலம் நிறையுங் கொண்டது. விளக்கெரிப்பதற்கு 15 காசும் அதற்குத் திரியிடுவதற்கு ஒரு காசும் வழங்கினான். ஆலயத்தில் ஆராதனை பண்ணும்
இந்துக் கலைக்களஞ்சியம்

Page 355
அகநாழிகையார் தானத்தை ஒப்புக் கொண்டனர். முள்ளிநாட்டு நகரமான கூடித்திரியசிகாமணி புரத்து வணிகன் ஒருவன் சடைய வர்மன் சுந்தரசோழ பாண்டியனின் ஆட்சியிலே திருச்சாலைத் துறை கருமாணிக்க தேவருக்கு விளக்கெரிப்பதற்குத் தானம் வழங்கினான். அதனைப் பற்றிய சாசனம் திருமூலநாதர் கோயிலில் எழுதப்பெற்றது.
முள்ளிநாட்டுப் பிரம்மதோயம் ராஜராஜசதுர்வேதிமங்கலத்து பெருங்கோயில்களில் ஒன்று எறிச்சாவுடையார் கோயில் என இந்நாட்களில் வழங்கும் திருப்போத்துடையார் கோயிலாகும். அரசரின் மானியங்களையும், நன்கொடைகளையும் மிகுந்தளவிற் பெற்ற சிறப்பு அதற்குண்டு ஒரு சமயத்திலே வரகுண பாண்டியன் 290 காசினைக் கோயிலுக்கு வேண்டும் நிவந்தங்களுக்கு வழங்கினான். அதனைப் பற்றிய சாசனக் குறிப்பின் ஒரு பகுதி மேல்வருமாறுள்ளது:
"பூரீபட்டாரர் அநுக்கிரகத்தினால் முள்ளிநாட்டு இளங்கோக்குடி திருப்பொத்துடையார் பூரீகோயில் பட்டாரர்க்கு முதல்கொடாமை பொலிகொண்டு நான்கு காலமும் திருவமிர்து செலுத்துவதாக வரகுண பாண்டியராஜர் தொண்டைநாட்டுப் பெண்ணைக்கரை அரைசூர் வீற்றிருந்து இளங்கோய்க்குடிச் சபையார் கைய்யிற் குடுத்த காசு இருநூற்றுத்தொண்ணுாறு இவற்றாற் காசின்வாய் இருகலமாக ஆண்டு ஆண்டுவரை சவையார் அளக்கும் ஐந்நூற்றெண்பதின் கலம். இவை கொண்டு பட்டாரர் பணிமக்களும் இளங்கோயக்குடி சவைவாரியரும் உடனின்று வரகுண மகாராஜர்க்கு ராஜ்யவர்ஷம் நான்காவதுக்கு எதிர் பன்னிரண்டாம் யாண்டு துலா ஞாயிறு முதலாக நிசதியாக நான்கு காலமும் திருவமுது செலுத்தும்படி. இப்பரிசு நியதிப்படி முட்டாமை நெடுங்காலமுஞ் செலுத்துவதாக வைத்தார் பூரீ வரகுண மகாராஜர்.”
திருபொத்துடையார் கோயிலில் நாள்தோறும் நான்கு காலமும் நடைபெறும் ஆராதனையில் சுவாமிக்கு படைக்கும் நிவேதனங்களின் பொருட்டு அரசரால் 290 காசு நன் கொடையாக வழங்கப்பட்டது. அது பிரம்மதேயச் சபையாரிடன் இருப்புமுதலாக வழங்கப்பட்டது. அதன் வருமானங் கொண்டு சபை வாரியப் பெருமக்களும் கோயிற் பணிமக்களும் அரசனிட்ட கட்டளையின் படியே நிவந்தங்களுக்கு வேண்டுவன வற்றை ஒப்படைக்க வேண்டும். ஒவ்வொரு பொழுதும் ஒப்படைக்க வேண்டியனவும், அதற்கு வேண்டிய நெல்லின் அளவும் அரசனின் கட்டளையிலே வரையறையாகிச் சிலாசாசனத்தில் எழுதப் பட்டுள்ளன. ஒன்பதாம் நூற்றாண்டில் ஆலயவழிபாட்டில் இடம் பெற்ற அம்சங்களை விளக்கும் சிறப்பு இந்தச் சாசனத்திற்குண்டு.
இந்துக் கலைக்களஞ்சியம்

மாறன் சடையன் என்னும் பாண்டியனின் காலத்தில் எழுதப் பெற்ற வட்டெழுத்துச் சாசனமொன்று வேளாநாட்டுப் பாப்பார் இருக்கைப் பாரதாயன் சேந்தன் நாகன் என்பவன் திருநத்தா விளக்கு எரிப்பதற்குச் செய்த ஏற்பாட்டினைப் பதிவுசெய்கின்றது. திருப்பொத்துடையார் சந்நிதியில் எரிப்பதற்குத் திருநத்தா விளக்கு ஒன்றும் ஐம்பது ஆடுகளும் வழங்கப்பட்டன. இளங் கோய்க்குடிச் சபை வாரியரும் பன்மாயே சுரரும் தானத்தை ஒப்புக்கொண்டனர்.
“சோழன் தலைகொண்ட” வீரபாண்டிய தேவரின் 12 ஆண்டிலே (946-47) பத்து வேலி நிலம் திருப்பொத்துடையார் கோயிலின் நிவந்தங்களின் பொருட்டு குடிநீங்காத் தேவ தானமாக அரசரால் வழங்கப்பட்டது. அத்தானம் பற்றிய கட்டளை அரசரும், அதிகாரிகளும் கோயில் மண்டபத்திலே கூடியிருந்த பொழுது பிரகடனப்படுத்தப்பட்டது. திருப் பொத்துடைய தேவர், திருவேங்கடநிலைத் தேவர், திருமூலத் தானத்துத் தேவர், கணவதியார் ஆகியோரின் சந்நிதானங்களில் நித்தநி வேதனத்தக்கு வேண்டும் நிவந்தங்களுக்காகத் தானம் வழங்கப் பெற்றது. அத்துடன் கோயிலிற் சேவை புரிவோருக்கும் மானியமாக மேல்வரும் வரிசைப்படி நிலம் வழங்கப்பட்டது:
1) ஆச்சாரியன் முந்நூற்றுவன் சேத்தனுக்கு அரை நிலம் 2) கணக்க பண்டாரஞ் செய்கின்ற சோலை பெரியானுக்கு அரை
நிலம் 3) மாண் எட்டினுக்கு நிலம் ஒன்றரையே யிரண்டுமா 4) உவைச்சன் கணவதி குமாரடி முதல் பத்தாளுக்கு நிலம்
ஒன்றே கால். 5) பூரீ கார்யம் ஆராய்வானுக்கு நியதம்
அரிசி நானாழியினால் நிலம் ஏழு மா 6) குசவனுக்கு நிலம் இரண்டு மா 7) திருவிழாப்புறம் நிலம் வேலி 8) விறகிடுவானுக்கு நிலம் இரண்டு மா 9) திருமெழுக்குப்புறம் நிலம் இரண்டு மா 10) ஈரங்கொல்லிக்கு நிலம் இரண்டு மா 1) புதுக்குப்புறம் இத்திருக்கற்றளி செய்த ஆசாரியன்
மானாபரணன் சேத்தனுக்கு நிலம் கால்.
தேவதானம் ஒன்றினைப் பற்றிய தெளிவான விவரங்கள் இச்சாசனத்திலே காணப்படுகின்றன. வீரபாண்டியன் தேவதானமாக வழங்கிய பத்துவேலி நிலமும் கோயிலின் நான்கு சந்நிதானங்களிலே நித்தல் நிவேதனத்துக்கு வேண்டும் நிவந்தங்களுக்கும் கோயிற் சேவைகளுக்கும் வெவ்வேறு பங்குகளாக வழங்கப்பட்டது. சேவைமானியமாகத் தேவதானம் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடற்குரியது.
திருப்பொத்துடையார் கோயில் ராஜராஜசதுர்வேதி மங்கலத்துத் தென்பிடாகையில் அமைந்திருந்ததென்று சடைய வர்மன் சுந்தரசோழபாண்டியனின் காலத்துச் சாசனமொன்று குறிப்பிடுகின்றது. சோழபாண்டியன் மடம் என்ற பெயரால் மடமொன்று அக்கோயிலில் அமைந்திருந்தது. சோழபாண்டி யனால் அமைக்கப்பெற்ற காரணத்தினால் அது அப்பெயரைப் பெற்றிருத்தல் கூடும்.
309

Page 356
சடையவர்மன் பூரீவல்லவனது 20ஆம் ஆண்டிலே கோயிலின் வடக்கிலும் மேற்கிலும் பிரம்மதேயமாய் இருந்த நிலப்பிரிவொன்று திருப்படிமாற்று முதலான நிவந்தங்களுக்கென்று அரசனது கட்டளைப்படி கோயிலுக்கு வழங்கப்பட்டது. பிரம்மதேய வரிசையினின்றும் நீக்கி நாலாயிர விளாகம் என்னும் பெயரோடு அது வழங்கப்பெற்றது.
ராஜராஜ சதுர்வேதிமங்கலத்து ராஜேந்திரசோழ விண்ணகர் என்னும் வைணவக்கோயிலைப் பற்றிச் சோழபாண்டியர் காலம் முதலாகச் சொல்லப்படுகின்றது. அது சேரமான் ராஜசிம்மனால் ராஜேந்திரசோழனின் காலத்தில் அமைக்கப்பெற்றதென்பது சாசனக்குறிப்புகளாலே தெரியவருகின்றது. சடையவர்மன் சுந்தரசோழ பாண்டியனின் 13ஆம் ஆண்டிலே சபையார் அக்கோயிலுக்குப் பல நிலங்களை விற்று விலையாவணம் எழுதிக் கொடுத்தனர். அவ்வாறு விற்கப்பெற்ற நிலப்பகுதிகளில் ஒன்று ஆற்றுநீர் பாய்ச்சி இருபோகம் செய்கை பண்ணுகின்ற நிலம் 6 வேலி. அது மேற்கிலே ராஜராஜ விண்ணகர் தேவதானத்தையும் கிழக்கிலே இடைக்குன்றவெட்டி என்பதனையும் எல்லைகளாகக் கொண்டிருந்தது. தண்பொருந்தமான முடிகொண்ட சோழப் பேராறு அதன் தென்னெல்லை; வடவெல்லை பூரீ ராஜராஜப் பேராறு. ஏனைய நிலப்பிரிகள் கோனாடு, கடையம், புல்குளமான வாரிமாயிலெட்டி என்னும் பிடாகைகளைச் சேர்ந்தனவாகும்.
சுந்தரசோழ பாண்டியனது 14ஆவது ஆண்டிலே முள்ளிநாட்டுப் பிரம்மதேயமான நிகரிலிசோழ சதுர்வேதி மங்கலத்து கோவிந்தன் மாதவபட்டனும் அவனுடைய தம்பியான கோவிந்தன் திருவிக்கிரமனும் தாங்கள் குருபரம்பரமாகப் பெற்றிருந்த ஊரான பிரம்மதேயம் மானாபரண சதுர்வேதி மங்கலத்தை ராஜேந்திரசோழ விண்ணகரத்துக்கு விற்றுக் கொடுத்தனர். அதன் காரணமாக மானாபரணசதுர்வேதிமங்கலம் பிரம்மதேய வரிசையிலிருந்து நீங்கித் தேவதான வகைக்குரிய தாகியது. "ஆக நிலன் பதினாலேய் முக்காலே இரண்டு மாவும் பிரம்மதேயமாய் வருகின்றபடியாண்டு பதின்மூன்றாவது தவிர்ந்து சோழபாண்டியன் நல்லூரென்றும் பெயராய். ஆக நிலன் பதினாலேய் இரண்டு மாவினால் யாண்டு பதின்மூன்றாவது முதல் இறைகட்டின முதலான நெல்லு ஆயிரத்து இருநூற்று முப்பத்து முக்கலனே இருதூணி பதக்கு ஒரு நாழியும் காசு எழுபத்து நாலே அரைமாவும் இராசராச சருப்பேதிமங்கலத்து இராஜேந்திரசோழ விண்ணகர் தேவர்க்கு வேண்டும் நிவந்தங்களுக்கு யாண்டு பதின்மூன்றாவது முதல் தேவதானமாய் இறுப்பதாகவும்” என்பது அதைப் பற்றிய அரசராணை. அது சோழபாண்டிய நல்லூர் என்னும் புதிய பெயரைப் பெற்றது.
பத்து வேலி நிலமான சோழபாண்டிய நல்லூரின் பேரால் மூவாயிரத்தெண்ணுாற்று நாற்பதின் கலனே இரு தூணி ஏழு நாழி நெல் கடமையாகக் கோயிலுக்கு வழங்கவேண்டுமென்று நிச்சயிக்கப்பட்டிருந்தது. ஆயினும் அவ்விதமாகக் கடமை செலுத்தப்படாத காரணத்தால் சேரமானார் ராஜராஜதேவரின் கட்டளைப் படி நிலம் காணியாளரிடம் மேல்வரும் அடிப்படையிற் பகிர்ந்து குடி நீங்காக் காராண்மையாக வழங்கப்பட்டது:
310

1) பூரீ சேரகுல சுந்தரனுக்கு 2 வேலி, 2) மாதவன் சயபாலனுக்கு 2 வேலி. 3) இலக்குவணன் உத்தம பாண்டியனான பரகேசரி மூவேந்த
வேளானுக்கு 2 வேலி, - 4) வீரசோழனான மனுகுலராம மூவேந்த வேளானுக்கு 2 வேலி. 5) சொம்பொன் ஆடவல்லானுக்கு 1 வேலி. 6) குருந்தன் காரிக்கு 1 வேலி.
ராஜேந்திரசோழ விண்ணகரம் சேரமான் ராஜசிங்கனால் அமைக்கப்பட்ட கோயில் போலவே தெரிகின்றது. அதன் நிர்வாகந் தொடர்பான விடயங்களிற் சேரமான் நிறைவேற்ற திகாரங்களைக் கொண்டிருந்தமை குறிப்பிடற்குரியது. ஆலயத்தில் விளக்கெரிப்பதற்கு ஒரு சமயத்திலே சேரமானின் தேவி தானம் வழங்கினாள். 'றுரீ ராஜேந்திரசோழ விண்ணகர் ஆழ்வார்க்கு சேரமானார் இராசிங்கதேவர் நம்பிராட்டியார் சேரலன் மாதேவியார். வைச்ச விளக்கு அரை. இதுக்கு வைச்ச விளக்கு சாணேய் இருவிரல் உசரத்தில் நிலை விளக்கு ஒன்றுக்கு 16 பசு, இதிற்றினுக்கு வெட்டிக்குடி இடையன் சரியாப்புகழ்ச்சிலை வீரன் நிசதப்படி அட்டுவதான நெய் ஆழாக்கு.” என்பது அதனைப் பற்றிய சாசனப்பதிவாகும்.
விண்ணகரத்திற்கு வேண்டிய மலர்களைப் பெறுவதற்கு நந்தாவனங்கள் அமைக்கப்பட்டிருந்தன். அவற்றைச் செய்கை பண்ணுவதற்கென்று நந்தவ(ா)னக் குடிகள் இருந்தன. ஆராதனை வேளைகளிற் கடமை புரிவதற்கு உவச்சரும் குசவரும் நியமிக்கப்பட்டிருந்தனர். திருவிளக்குப் பிடிப்பதற்கும் திருப் பள்ளித்தாமம் தொடுப்பதற்கும் தேவரடியாரான பெண்டுகள் நியமிக்கப்பட்டிருந்தனர். திருவிளக்கெரிப்பதற்கான நெய்யினை அளந்து கொடுப்பதற்கு வெட்டிகுடிகளான இடையர்களோடு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. கோயிலின் சுற்றுப்புறங்களில் அவர்களுக்கு வீடுகளும், நிலங்களும் வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடற்குரியது.
பாண்டியர் காலத்து இளங்கோய்க்குடிச் சதுர்வேதிமங்கலம் சோழபாண்டியரின் காலத்தில் ராஜராஜசதுர்வேதிமங்கலம் என்னும் பெயரைப் பெற்றிருந்தது. அதன் பிடாகைகளாகப் பல சிற்றூர்களும் வணிகர் குடியிருப்புகளும் அமைந்திருந்தன. குறிக்கப்பட்ட நிலங்கள் மீது பிரம்மதேயச் சபையார் உடைமை உரிமை பெற்றிருந்தனர். அவற்றை விற்றுக்கொள்ளும் உரிமையும் அவர்களுக்குண்டு. தேவதானம், வெள்ளான் வகை முதலிய வேறு வகையான நிலங்களும் அங்கிருந்தன. சபையார் நிறைவேற்றுக் குழுக்களான வாரியங்களை அமைத்திருந்தனர். ஒவ்வொரு சேரியிலிருந்தும் தெரிவான அங்கத்தவர்கள் கூடி சபையாராகச் செயற்பட்டனர் போலத் தெரிகின்றது. சபையாரோடு நெருங்கிய தொடர்புகளை ஏற்படுத்தியிருந்த சோழர் கோயில்கள், நிலங்கள், இறை கடமைகள் தொடர்பான தங்கள் கட்டளைகளைச் சபையார்
மூலமாக நிறை வேற்றினார்கள்.
இந்துக் கலைக்களஞ்சியம்

Page 357
இராஜராஜ சோழன் (985-1014)
தமிழக மன்னர்களில் ஒப்பிலாதவனாகிய அருண் மொழிவர்மன், சுந்தரசோழன் (957-970), அவனது பட்டத் தரசியான வானவன் மாதேவி என்போரின் குமாரன், உத்தம சோழனின் ஆட்சிக் காலத்திலே, தமையனாகிய ஆதித்த சோழன் இறந்துவிட்டதால், அருண்மொழிவர்மன் அரசுரிமை பெற்ற இளவரசனாகப் பட்டங்கட்டப் பெற்றான். சைவசமயத்திலும், கலைகளிலும் பேரபிமானங் கொண்டிருந்த செம்பியன் மாதேவியாரும் அவனுடைய தமக்கையாரான குந்தவைப் பிராட்டியாரும் அவனை இளமைப் பருவத்தில் நெறிப்படுத்தினர்.
அருண்மொழிவர்மன் 985 ஆம் ஆண்டிலே சோழர் வேந்தனாகப் பதவிபெற்றான். அவனது மூன்றாவது ஆட்சி யாண்டு முதல் இராஜராஜன் என்ற பெயரால் அவன் விளங்கினான். முதலாம் பராந்தகனின் ஆட்சியின் பிற்பகுதியிலே சீர்குலைந்த சோழப் பேரரசு இராஜராஜனின் தலைமையிற் புனருத்தாரண மாகியது. அதனைக் காட்டிலும் அது மிகப் பெரிதாகிவிட்டது. இராஜராஜன் உருவாக்கிய சோழப் பேரரசு ஒரு நூற்றாண்டுக்கு மேலாக நிலைபெற்றதோடு பரதகண்டத்திலே செல்வத்திலும், கலைவளத்திலும் முன்னணியிலுள்ள பேரமைப்பாக விளங்கியது. அதன் படைபலமும் சோழ மன்னர் போர்களில் ஈட்டிய சாதனைகளும் அவர்கள் புரிந்த தீரச் செயல்களும் தமிழக வரலாற்றில் வேறெக்காலத்திலும் காணப்படாதவை.
சோழப்பேரரசின் நிர்வாக அமைப்பிலே மாறிவரும் சூழ் நிலைக்கு ஏற்றவாறு புதிய ஏற்பாடுகள் சிலவற்றை உருவாக்கிய சிறப்பு முதலாம் இராஜராஜனுக்குரியது. பேரரசில் அடங்கிய நிலங்கள் எல்லாம் அவனது ஆணைப்படி அளக்கப் பட்டு, இறை கடமைகளைப் பற்றிய ஏற்பாடுகள் புதிதாக அமைக்கப்பட்டன. அந்தப் பணிகளுக்குப் பொறுப்பாகவிருந்த அதிகாரிக்கு உலகளந்த மாராயன் என்னும் பட்டத்தை அரசன் வழங்கினான். தென்னிந்திய கட்டுமான முறையில் அவனுடைய ஆட்சியிலே மிகுந்தளவு முன்னேற்றம் ஏற்பட்டது. தஞ்சாவூரில் அவன் எடுப்பித்த விமானம் உத்தம வர்க்கத்தைச் சேர்ந்தது. அது அளவிலும், வனப்பிலும் பரதகண்டத்தில் நிகரிலியாக விளங்கியது. அது சோழ மன்னர்கள் ஈட்டிய சாதனைகளை உலகத்தவருக்கு உணர்த்தும் சாதனமாக விளக்குகின்றது.
சைவாபிமானம் மிக்கவனாகிய அருண்மொழிவர்மன் திருமுறைத் தொகுப்போடு தொடர்புடையவன். இராசராச னென்றும் அபயகுலசேகரனென்றும் திருவாரூர் மன்ன னென்றும் திருமுறை கண்ட புராணம் தெளிவற்ற முறையிலே குறிப்பிடும் சோழனை முதலாம் இராஜராஜனென்று கொள்வதே பொருத்தமானது. அத்தகைய மன்னனின் ஆதரவில் நம்பியாண்டார் நம்பி தேவாரங்களைத் திருமுறையாகத் தொகுத்தனர் என்பது ஐதீகம். அது அடங்கன்முறை பற்றிய மரபுவழிக் கதையென்று கொள்ளத்தக்கது. ஏழு திருமுறைகள் பன்னிரண்டாகியமை பிற்காலத்துச் சோழர்களின் வரலாற்றோடு இணைந்த ஒரு வளர்ச்சியாகும்.
இந்துக் கலைக்களஞ்சியம்

தனி மன்னர்களின் சாதனைகளைச் சுருக்கமாகவும் இனிய சந்தங்களிலமைந்த இலக்கிய வடிவமாகவும் அமைத்துக் கூறும் மெய்க்கீர்த்தி என்னும் இலக்கிய வகையின் உற்பத்திக்கு மூலகாரணனனாக விளங்கியவன் முதலாம் இராஜராஜன் என்பது குறிப்பிடற்குரியது. அவனது மெய்க்கீர்த்தி திருமகள் போலப் பெருநிலச் செல்வியும் என்னும் அடியோடு ஆரம்பமாகின்றது. அவனது காலம் முதலாக மெய்க்கீர்த்தியினை அரச ஆவணங்களில் முன்னுரையாக எழுதுவது ஒரு மரபாகச் சோழமன்னர்களாற் பின்பற்றப்பட்டது. முதலாம் இராஜேந்திரன் காலம் முதலாக மெய்க்கீர்த்தி நீளமான வாசகத்தைக் கொண்டதாக அமைக்கப்பட்டது. ஒவ்வொரு அரசனின் வெவ்வேறு மங்கலமொழிகளுடன் தொடங்கும் மெய்க்கீர்த்தி வடிவங்கள் பல உருவாக்கப்பட்டன. அரசனின் சிறப்புக்குரிய சாதனைகள் மெய்க்கீர்த்தியில் இடம்பெறுவதால் ஆட்சி யாண்டுகள் மிகுந்து செல்ல மெய்க்கீர்த்தியும் அமைப்பிலே பெரிதாக வளர்ந்து சென்றது. சோழ இராச்சியத்தின் வரலாற்றையும் சோழமன்னர் புரிந்த சாதனைகளையும் ஆராய்ந்து அறிந்துகொள்வதற்கு அடிப்படையான ஆதாரங்களாக மெய்க்கீர்த்திகள் அமைகின்றமை குறிப்பிடற்குரியது.
இராஜராஜன் அருஞ்சாதனைகள் புரிந்தவன்; மன்னரிற் சிறந்தவன். எனவே அவனை “இந்திர சமானன், இராஜ சர்வக்ஞன்” என்று சாசனங்கள் பாராட்டுகின்றன. இராஜராஜனது ஆட்சியின் ஆரம்பத்திலே சோழராச்சியத்தின் ஆதிக்கப்படர்ச்சி ஆரம்பமாகியது. நெடுங்காலமாக, பல நூற்றாண்டுகளாக, தனி அரசுகளாக நாவலத்தீவின் தென்திசையில் நிலைபெற்ற தேசங்கள் பல ஒன்றன் பின் ஒன்றாகச் சோழராச்சியத்தின் மண்டலங்களாகி விட்டன. கோ என்றும் உடையார் என்றும் பட்டம் பெற்றிருந்த சோழன் அரசர்க்கரசனாகிச் சக்கரவர்த்தி என்னும் நிலையை அடைந்தான்.
இராஜராஜன் தனது ஆட்சியின் மூன்றாம் ஆண்டளவிலே சேர, பாண்டிய நாடுகள் மீது படையெடுத்து அவற்றைக் கைப்பற்றிக் கொண்டான். அதன் பயனாக மும்முடி சோழன் என்னும் சிறப்புப் பெயர் அவனது உரிமையாகியது. அவனது சாசனங்கள் குறிப்பிடும் முதலாவது போர் மலைநாட்டின் கரையோரத்திலே காந்தளூர்ச்சாலையில் நடைபெற்றது. அவனது ஆட்சியின் நான்காம் ஆண்டின் ஆரம்பத்தில் எழுதப்பட்ட சாசனங்களிலே காந்தளுர்ச் சாலை கலமறுத்தருளிய கோ இராசகேசரி வர்மன் என்று இராஜராஜனை வர்ணித்துள்ளனர். எனவே கி.பி.988 ஆம் ஆண்டில் அப்போர் நடைபெற்று முடிந்துவிட்டது என்று கருதலாம். சேரலன் வேலைகெழு காந்தளூர்ச்சாலை என்ற சாசனக் குறிப்பினாற் காந்தளூர்ச்சாலை என்பது சேரநாட்டிலுள்ள கடற்கரைப்பட்டினம் என்பது தெளிவாகின்றது.
அக்காலத்திலே பாஸ்கர ரவிவர்மன் (978-1036) சேரநாட்டில் அரசு புரிந்தான், உதகையைக் கைப்பற்றியமை சேரநாட்டில் நடந்த போரில் ஒரு பிரதான நிகழ்ச்சியாகும். பிற்காலத்தில் அதனை இராஜராஜன் அடைந்த பெரு வெற்றிகளுள் ஒன்றாக
311

Page 358
ஒட்டக்கூத்தரும் சயங்கொண்டாரும் புகழ்ந்து பாராட்டினர். இராஜராஜனது தூதுவனைச் சேரன் கைப்பற்றிச் சிறைப் படுத்தியதாற் சோழமன்னன் மலைநாட்டின்மீது படையெடுத்துச் சென்றான் என்று கருதுவதற்கு விக்கிரம சோழன் உலாவிற் காணப்படும் மேல்வரும் தொடர்கள் ஆதாரமாகக் கொள்ளப்படும்.
S S S S S S SL S S S S S S S LSS SS SS LS LS LS LS S S LSS SS SS LS S S S LSC LS LS LS LS LS LS SC S S S S S S SS SS SS SS தூதற்காப் பண்டு பகலொன்றில் ஈரொன்பது சுரமும் கொண்டு மலைநாடு கொண்டோனும்’
“உதகை என்பது கன்னியாகுமாரி ஜில்லாவிலுள்ள கல்குளந் தாலுகாவில் நாகர்கோயிலுக்கு வடமேற்கேயுள்ள ஒரு நகரமாகும். அஃது அக்காலத்தில் மாபெரும் மதில்கள் சூழ்ந்ததாய் மாளிகை களும் சூளிகைகளும் தன்பாற்கொண்டு உயரிய கோபுரங்கள் அமைந்த வாயில்களையுடையதாய்ச் சேரற்குரிய சிறந்த நகரங்களுள் ஒன்றாக நிலவியது. அந்நகர்க்குத் தன் படையுடன் சென்ற இராசராசசோழன் அங்கு எதிர்த்த சேரன் படையைப் போரிற் புறங்கண்டு அதிலிருந்த கோட்டை மதில்கள், கோபுரங்கள், மாளிகைகள் முதலானவற்றைத் தன் படைகளால் தகர்ப்பித்து எஞ்சியவற்றை எரிகொளுவிச் சூறையாடினான். அங்குச் சிறையில் வைக்கப்பட்டிருந்த தன் தூதனையும் விடுவித்தான்.”- இத்தனையும் சதாசிவ பண்டாரத்தார் கொண்ட முடிபாகும். அவரின் கருத்துகளுக்கு ஆதாரமான விவரங்கள் இராசராசனது மெய்க்கீர்த்தி வாசகமொன்றிலுள்ள மேல்வரும் பகுதியாகும்.
"சாரல் மலையட்டுஞ் சேரன்மலை ஞாட்டுத் தாவடிக் குவட்டின் பாவடிச் சுவட்டுத் தொடர்நெய்க் கனகம் துகளெழ நெடுதற் கோபுரங் கோவை குலைய மாபெரும் புரிசை வட்டம் பொடிபடப் பரிசைச் சுதைகளின் படைத்த குளிகை மாளிகை உதைகை முன் னொள்ளெரி கொளுவி உதைகை வேந்தைக் கடல்புக வெகுண்டு '
சேரநாட்டுப் போரிலே பொன்னையும், பிற பொருள்களையும் யானைப் படைகளையும் சோழர் கவர்ந்து சென்றனர். கடவுட் படிமங்கள் பலவற்றையுங் கவர்ந்து சென்றனர். அங்கு சென்ற படைத்தலைவர்களில் ஒருவன் கம்பன் மணியனான விக்கிரம சிங்க மூவேந்த வேளான். அவன் மரகத தேவர் படிமத்தை அரசனிடமிருந்து பெற்று, அதனைத் திருப்பழனத்திலுள்ள சிவன் கோயிலில் எழுந்தருளுவித்தான் என்று அவ்வூர்க் கல்
வெட்டொன்று குறிப்பிடுகின்றது.
சோழரின் மலைநாட்டுப் படையெடுப்பு பாண்டிநாட்டுப் போருடன் தொடர்புடையது போலத் தெரிகின்றது. இராஜராஜன் தனது திக்குவிசயத்தைத் தென் திசையிலிருந்து தொடங்கினான் என்றும் தென்னவனாகிய அமரபுயங்கனைத் தோற்கடித்துப் பாண்டிநாட்டைக் கைப்பற்றிக் கொண்டான் என்றும் கங்கை கொண்ட சோழனின் திருவாலங்காட்டுச் செப்பேடுகளிற் கூறப்பட்டுள்ளது. பாண்டியர்களை வெற்றி கொண்டதால் இராஜராஜசோழனை அவனது சாசனங்கள் எல்லாம் செழியரைத்
312

தேசுகொள் கோ இராசகேசரிவர்மன் என்று வர்ணிக்கின்றன. போரிலே பாண்டியரை வெற்றி கொண்டதனால் பாண்டிய குலா சனி என்னும் சிறப்புப்பெயர் அவனுக்குரியதாகியது. பாண்டி நாடு சோழரின் இராச்சியத்தின் ஒரு மண்டலமாகியது. அதனை இராசராசத் தென்னாடு என்றும் இராஜராஜப் பாண்டி மண்டலம் என்றும் சாசனங்கள் குறிப்பிடுகின்றன. இராஜ ராஜனது எட்டாவது ஆண்டு முதல் அவனது சாசனங்கள் பாண்டி நாட்டின் பல பகுதிகளிற் காணப்படுகின்றன.
சேர, பாண்டிய நாடுகள் கைப்பற்றப்பட்டதோடு சோழரின் கவனம் வடமேற்கிலுள்ள கொல்லம், குடமலைநாடு என்பவற்றின் மீது சென்றது. கொல்லம் மலையாள தேசத்திலுள்ள சிறிய இராச்சியங்களில் ஒன்றாகும். அங்குள்ள துறைமுகப் பட்டினங் காரணமாக அது மிகுந்த முக்கியத்துவம் பெற்றிருந்தது. அதுவே அக்காலத் தென்னிந்தியத் துறைமுகப் பட்டினங்களில் முதன்மை யானது. கடல்வழிப் பிரயாணங்களை மேற்கொள்ளும் பன்னாட்டு வணிகர் கூடும் தலமாக விளங்கியது. வியாபாரக் கப்பல்களின் தரிப்புநிலையங்கள் அங்கிருந்தன. சர்வதேச வாணிபத்தின் பிரதான மையங்களில் ஒன்றாக அது விளங்கியது. வாணிபத்தால் வரும் வருமானங்களைப் பெறும் நோக்கத்துடன் சோழர் கொல்லத்தைக் கைப்பற்றினர் என்று கருதலாம்.
குடகு என வழங்கும் குடமலைநாட்டிலே அரசு புரிந்த கொங்காள்வானைத் துரத்திவிட்டுத் தமக்கு ஆதரவு புரிந்த மனிஜா என்பவனுக்கு ஆட்சியுரிமையைச் சோழர் வழங்கினர். அவனுக்குச் கூடித்திரிய சிகாமணி கொங்காள்வான் என்னும் பட்டமும் வழங்கப்பெற்றது. அவனது வழிமுறைச் சந்ததியினர் சோழருக்கு அடங்கிய பிராந்திய மன்னர்களாகக் குட மலைநாட்டிலே தங்கள் மேலாதிக்கத்தை ஏற்படுத்திக் கொண்ட சோழர் கர்நாடக தேசத்துத் தென்பகுதியிலுள்ள இராச்சியங் களான கங்கபாடி, நுளம்பபாடி என்பவற்றைக் கைப்பற்றிக் கொண்டனர். அவை முறையே மேற்றிசைக் கங்கர், நுளம்ப பல்லவர் என்போரின் ஆட்சியில் அமைந்திருந்தன. அவை இரண்டும் விரிவடைந்த சோழ இராச்சியத்தின் மண்டலங்களாகி விட்டன. கங்கபாடி முடிகொண்ட சோழ மண்டலம் என்னும் புதிய பெயரைப் பெற்றது. அதே போல நுளம்பபாடி நிகரிலிச் சோழ மண்டலம் என வழங்கியது. கங்கபாடி 991 இலே சோழரின் ஆதிக்கம் ஏற்பட்டுவிட்டமைக்கு ஆதாரமாக மைசூர் பிரதேசத் திலுள்ள சோழ நாராயணன் கல்வெட்டுக் கொள்ளப்படுகின்றது.
சோழ இராச்சியத்தின் படர்ச்சிக்கு இராஜராஜன் அமைத்த அரசியல் வியூகங்களும் இளவரசனாகிய மதுராந்தனின் இணையிலாப் போராற்றலும் ஏதுவாயிருந்தன. சோழநாட்டிற்கு வடக்கில் நடைபெற்ற படையெடுப்புகளுக்கு மதுராந்தகனே தலைமைதாங்கிச் சென்றான்.
மும்முடி சோழன் பெற்ற களிறுமலையம், கொண்காணம், துளுவம் முதலான நாடுகளை வென்று கைப்பற்றியமையோடு சேரனையும் நாட்டை விட்டோடும்படி செய்தது'
இந்துக் கலைக்களஞ்சியம்

Page 359
என்று மைசூர் இராச்சியத்திலுள்ள இராசராச சோழனது எட்டாம் ஆண்டுக் கல்வெட்டொன்று கூறுவதும் குறிப்பிடற்குரியது. மதுராந்தகன் பஞ்சவன் மாராயன் என்ற பட்டத்தைப் பெற்றி ருந்தான். அவனைக் கங்கமண்டலம், வேங்கிமண்டலம் என்ப வற்றின் மாதண்ட நாயகனாக நியமித்தனர். கங்கபாடிக்கு வடக்கிலமைந்த இரட்டபாடியினையும் சோழர் கைப்பற்றி விட்டதாற் சாளுக்கியரோடு போர்கள் ஆரம்பமாகின. அவை ஒரு நூற்றாண்டுக் காலமாக நடைபெற்றன. சோழமன்னர் நடத்திய பெரும்போர்கள் தக்கிணத்தில் நடந்தவை; அவை சாளுக் கியருக்கு எதிரானவை.
சோழநாட்டில் இராஜராஜன் அதிகாரம் பெற்ற சமயத்திலே, வடக்கிலே, தக்கிணத்தில் இராஷ்டிரகூடரின் ஆதிக்கம் ஒழிந்தது. சாளுக்கியர் மீண்டும் சத்தியாஸ்ரயனின் தலைமையில் எழுச்சி பெற்றனர். வடக்கிலே உருவாகிய சூழ்நிலைகளைச் சாதகமாகக் கொண்டு இராஜராஜன் தென்திசையிற் சோழராதிக்கம் உறுதிபெறுவதற்கான ஏற்பாடுகளைச் செய்தான். பெரு வலியடைந்த தகூதிணாபதபதிகள் தென்திசையிற் படை யெடுத்துச் செல்வதற்கான வாய்ப்புக்களைச் சோழர் அகற்றி விட்டனர். அவர்களின் பெரும்படைகள் கங்கபாடி, நுளம்பபாடி ஆகியவற்றில் நிலைகொண்டிருந்தன. சத்தியாஸ்ரயன் தென் கர்நாடகத்தைக் கைப்பற்றுவதற்கு மேற்கொண்ட போர்கள் தோல்வியில் முடிந்தன. ஒரு சமயத்திலே மதுராந்தகன் பெரும்படையோடு சாளுக்கியர் வசமுள்ள பகுதிகளில் நுழைந்து கடுஞ்சமர் புரிந்தான். அதனைப் பற்றிச் சாளுக்கியரின் சாசனங்கள் குறிப்பிடுகின்றன. “சோழர் குலத்திற்கு அணியாக விளங்கி யவனும் இராஜராஜ நித்தவிநோதனின் மகனும் ஆகிய நூர்மடிச் சோழ இராசேந்திர வித்தியாதரன்’ ஒன்பது லட்சம் வீரர்கள் அடங்கிய படையுடன் தோனூர் வரை முன்னேறிச் சென்று அளவற்ற பொருள்களைக் கவர்ந்துகொண்டு தன் நாட்டிற்குத்
தக்கிணத்திலே வேறொரு பகுதியிலும் சாளுக்கியருக்கு எதிராகச் சோழர் போரிட வேண்டிய நிலையொன்று ஏற்பட்டது. வேங்கி தேசத்து அரசியலே அதற்கு ஏதுவாக அமைந்தது. அங்கு பல வருடங்களாக அரசுரிமை தொடர்பாக அரசகுலத்தின் கிளை மரபுகள் இரண்டு தகராறு கொண்டு போர்களில் ஈடுபட்டன. அங்கு இரண்டாம் வீமனின் மகனாகிய அம்மராசன் (945-970) ஆட்சிபுரிந்த காலத்திலே யுத்தமல்லனின் மகனாகிய பாதபன் இராஷ்டிரகூடரின் உதவியுடன் அம்மராசனை நாட்டிலிருந்து வெளியேற்றிவிட்டு அதிகாரத்தைக் கைப்பற்றிக் கொண்டான். அவனுக்குப் பின் அவனது தம்பியான இரண்டாம் தாழன் அரசனாக முடிசூடினான். அம்மராசன் தென்கலிங்க மன்னனின் ஆதரவோடு வேங்கிமேற் படையெடுத்துச் சென்று, தாழனைக் கொன்றுவிட்டு ஆட்சியைக் கைப்பற்றிக் கொண்டான். அம்ம ராசனின் சகோதரர்களில் ஒருவனை தானார்ணவன் வடகலிங்க மன்னனின் உதவியோடு அம்மராசனைப் போரிற் கொன்று வேங்கியில் அரசபதவி பெற்றான். அம்மராசனின் மைத்துன னாகிய தெலுங்குச் சோழன் ஜடாசோடவீமன் 973 இல் வேங்கி மீது படையெடுத்துச் சென்று, தானார்ணவனைக் கொன்றுவிட்டு
இந்துக் கலைக்களஞ்சியம்

ஆட்சியைக் கைப்பற்றிக் கொண்டான். அக்காலகட்டத்திலே தானார்ணவனின் மக்களான சக்திவர்மன், விமலாதித்தன் என்போர் வடகலிங்கத்திற்கு ஒடிச்சென்று அங்கு புகலிடம் பெற்றனர்.
தானார்ணவனின் புதல்வர்களுக்கு ஆதரவளித்தமையால் வடகலிங்க மன்னர்களான காமார்ணவன், விநாயதித்தன் என்போரை சோடவீமன் போரிலே 978, 981 ஆகிய ஆண்டுகளிற் கொலை செய்துவிட்டு, கலிங்க நாட்டையுங் கைப்பற்றிவிட்டான். அதனால் சக்திவர்மனும் விமலாதித்தனும் தென்புலஞ் சென்று சோழரின் இராசதானியிலே புகலிடம் பெற்றனர். அங்கு இளையோனாகிய விமலாதித்தனை இராஜராஜனது மகளான குந்தவைக்கு விவாகஞ் செய்தனர். தொண்டை நாட்டிற்கு வடக்கிலுள்ள சீட்புலி நாடு, பாகி நாடு என்பனவற்றைச் சோழர் இராஜராஜனின் ஆட்சியின் ஆரம்பத்திலே கைப்பற்றிவிட்டனர். எனவே, சோழரின் படை அவற்றினூடாக வேங்கி தேசத்தை யடைந்து, ஜடாசோட வீமனைத் துரத்திவிட்டுச் சக்திவர்மனுக்கு முடிசூட்டியது. ஆயினும் ஈராண்டுகளில் வீமன் கலிங்கரின் உதவி யோடு வேங்கியிற் புகுந்து சக்திவர்மனைத் தென்திசைக்குத் துரத்திவிட்டான். சோழர் மீண்டும் வேங்கிமேற் படையெடுத்துச் சென்று, போரிலே வீமனைக் கொன்றுவிட்டு சக்திவர்மனின் ஆட்சி உறுதியாக நிலைபெறுவதற்கு ஏற்பாடுகள் செய்தனர். அவன் கி.பி.101ஆம் ஆண்டளவில் இறந்த பின்பு விமலாதித்தன் அரசபதவி பெற்றான். இராஜராஜன் வேங்கி தொடர்பாக மேற்கொண்ட நடவடிக்கையால் சோழரோடு நட்புறவும், மணவுறவுங் கொண்ட வம்சத்தவரின் ஆட்சி அங்கு ஏற்பட்டது. அது சோழ-சாளுக்கியர் என்னும் வம்சமொன்று உருவாகு வதற்கும், பின்பு இராஜேந்திரனாகிய குலோத்துங்க சோழனின் காலத்தில் இரண்டும் ஒன்றாகிவிடுதற்கும் வேங்கிதேசம் சோழ விராச்சியத்தோடு இணைந்து கொள்வதற்கும் வழிகோலியது.
தங்கள் ஆதரவில் வேங்கியில் ஆட்சிபுரிந்த அரசரைப் பாதுகாப்பதற்காக பல சமயங்களிலே அவர்களின் பகைவர் களுக்கு எதிராகப் போர்புரிய நேர்ந்தது. எனவே முதலாம் இராஜராஜன் காலம் முதலாக விக்கிரம சோழனின் ஆட்சிக்காலம் (1118-1135) வரை இடையிடையே நடைபெற்ற போர்களிற் சோழர் பங்குகொள்ள நேர்ந்தது.
இராஜராஜனாற் கைப்பற்றப்பட்ட தேசங்களில் ஈழமும் ஒன்றாகும். அனுராதபுரத்தில் அரசனாகவிருந்த ஐந்தாம் மகிந்தன் இராசதானியில் ஏற்பட்ட படைக்கலகம் ஒன்றின் விளைவாக அதிகாரமிழந்து, பின் தென்னிலங்கையிற் புகலிடந் தேடிக் கொண்டான். எனவே, இலங்கை நிலைமைகளைச் சாதகமாகப் பயன்படுத்திய சோழர் இலங்கையின் வடபகுதியை இலகுவாகக் கைப்பற்றிவிட்டனர். பதவியா, திருகோணமலை ஆகிய இடங்களில் அவனுடைய காலத்துச் சாசனங்கள் கிடைத்துள்ளன. சோழர் கைப்பற்றிய இலங்கையின் பகுதிகள் சோழ இராச்சியத்தின் ஒரு மண்டலமாக அமைக்கப்பட்டன. அது ஈழமான மும்முடிச் சோழ மண்டலம் என்று வழங்கியது. சோழரின் ஆட்சியில் முன்பு படைத்தளமாக அமைந்த பொலனறுவை பிரதான நிர்வாக
313
tg守

Page 360
நிலையமாகியது. அது ஜனநாதமங்கலம் என்னும் புதிய பெயரைப் பெற்றது. வடமேற்குக் கரையோரத்திலுள்ள துறைமுகப் பட்டினமாகிய மாந்தை இராஜராஜபுரம் எனப் பெயரிடப்பட்டது. அங்குள்ள பாடல்பெற்ற தலத்திலுள்ள ஆலயத்தைப் புனரமைத்த சோழர் அதற்கு இராஜராஜேஸ்வரம் என்று பெயரிட்டார்கள். திருகோண மலையிலே பெரியகுளம் என்னுமிடத்திற் புராதனமான பெளத்த தலமொன்றிலே, அங்குள்ள தமிழ்ப் பெளத்தர்கள் பெளத்தப் பெரும் பள்ளி ஒன்றினை அமைத்து, அதற்கு இராஜராஜப் பெரும் பள்ளி என்று பெயரிட்டனர். சோழரின் நிர்வாகத்திலே கடமை புரிந்த சில பிரதானிகளும் அதற்குத் தானங்களை வழங்கியமை குறிப்பிடற்குரியது. மலையாள நாட்டிற்கு தென்மேற்கிலுள்ள “முந்தீர்ப்பழத்தீவு பன்னீராயிரம்” என்னும் தீவுகளையும் சோழர் கைப்பற்றிவிட்டதாக இராஜ ராஜனது மெய்க்கீர்த்தி குறிப்பிடுகின்றது.
தங்கள் சிறப்புக்களையும், சாதனைகளையும் புலப்படுத்தும் வண்ணமாக விருதுப்பெயர்களை மன்னர்கள் சூடிக்கொள்வது வழமை. தமிழகத்திலே பல்லவர் காலம் முதலாக வந்த வழமை தொடர்ந்தது. ஜனநாதன், கூடித்திரியசிகாமணி, மும்முடிச் சோழன், முடிகொண்ட சோழன், நிகரிலிச்சோழன், இராஜேந்திர சிங்கன், நித்தவினோதன், சயங்கொண்டசோழன், உய்யக் கொண்டான், இரவிகுல மாணிக்கம், தெலுங்ககுல காலன், சிவ பாதசேகரன் என்பன இராஜராஜனுடைய விருதுப்பெயர்களிற் பிரதானமானவை. பல நிர்வாகப் பிரிவுகளும், நகரங்களும், பிரம்ம தேயங்களும், தேவதான ஊர்களும் அப்பெயர்களால் வழங்கி வந்தன.
சயங்கொண்ட சோழன், முடிகொண்ட சோழன், நிகரிலிச் சோழன், மும்முடிச்சோழன் என்னும் சிறப்புப் பெயர்கள் சயங்கொண்ட சோழ மண்டலம், முடிகொண்ட சோழ மண்டலம், நிகரிலிச் சோழ மண்டலம், மும்முடிச் சோழ மண்டலம் என முறையே தொண்டைநாடு, கங்கபாடி, நுளம்பாடி, ஈழம் என்பவற்றின் பெயர்களாக வழங்கப் பெற்றுள்ளன. அவ்விதமாக சோழ நாட்டின் பிரிவுகளான வளநாடுகளும் பெயரிடப்பட்டன. அப்பிரிவுகள் கீழ்வருவனவாகும் :
அருண்மொழிதேவ வளநாடு கூடித்திரியசிகாமணி வளநாடு உய்யக்கொண்டார் வளநாடு நித்தவினோத வளநாடு பாண்டிய குலாசனி வளநாடு கேரளாந்தக வளநாடு இராசாசிரய வளநாடு இராஜராஜ வளநாடு இராஜேந்திரசிங்க வளநாடு
வேறு மண்டலங்களில் அமைக்கப்பட்ட வளநாடுகளும் இத்தகைய பெயர்களைப் பெற்றன. இராஜராஜ வளநாடு, இராஜாஸ்ரய இராஜேந்திரசிங்க வளநாடு என்னும் பெயர்களைக் கொண்ட நிலப்பிரிவுகள் இலங்கையிலும் இருந்தன.
314

இராஜராஜனது காலத்திலே சோழர் கலைப்பாணி பெருவளர்ச்சி கண்டது. அதற்கு முற்பட்ட சோழர் காலக்கோயிற் கட்டுமானங்கள் பல்லவர் காலத்திலுள்ளவற்றை ஒத்தனவாகும். பாடல்பெற்ற தலங்களிலே கோயில்கள் கற்றிகளாகப் பத்தாம் நூற்றாண்டு முதலாக அமைக்கப்பட்டன. முதலாம் இராஜ ராஜனது காலத்திலே கோயில்களைப் பிரமாண்டமான அளவிலும் நிகரிலாத வனப்புடனும் அமைக்கும் முறை விருத்தியடைந்தது. சிற்ப நூல்களிலும், ஆகமங்களிலும், தேவாரங்களிலும் ஆழ்வார் பாசுரங்களிலும் வர்ணிக்கப்படும் இறைக் கோலங்கள் அவனது காலத்திலே பெருமளவிலும் மிகுந்த வனப்புடனும் கட்டடப் பகுதிகளிலும் கருவறைகளிலும் அமைக்கப்பட்டன. அவனது காலத்திருப்பணிகளிற் பிரம்மதேசத்துத் திருவாலீஸ்வரமும், தஞ்சைப் பெருங்கோயிலும் சாலவும் சிறந்தனவாகும்.
திருவாலீஸ்வரம் அதிற் காணப்படும் வனப்புமிக்க உன்னதமான சிற்பங்களின் காரணமாக மிகுந்த முக்கியத் துவத்தைப் பெறுகின்றது. அதன் சில பகுதிகள் புதுமையான முறையிலும் மிக நுட்பமாகவும் அமைந்துள்ளன. கர்ப்பகிருகம் சதுரமானது. அதிஷ்டானத்திலுள்ள யாளி வரிசையில் யாளியின் உருவங்கள் முழுமையாகவும் கம்பீரமான கோலத்திலும் அமைந் துள்ளன. கபோதத்தின் கீழ்ப் பாகத்திலுள்ள பூதகண வரிசையும் புதுமையான முறையில் அமைந்துள்ளது. நானாவிதமான நாட்டியங் கோலங்களிலும் வேறுவிதமான கோலங்களிலும் மனித உருவங்களும் இங்கு அமைந்துள்ளன. சிலர் சிங்க முகங்க ளோடும் வேறு சிலர் குரங்கு முகங்களோடும் காணப்படுகின் றனர். உருவங்களின் பேளை வயிறும் ஆனந்தக் களிப்பினால் ஆடிப்பாடி ஆர்ப்பரிக்கும் கோலமும் கவர்ச்சிமிக்கவை. கபோதத்தில் அழகுவாய்ந்த சிங்கமுகக் கூடுகள் அமைந்துள்ளன.
விமானத்தின் முதலாவது தளச் சிற்பங்கள் அவற்றின் பிரதிமா லக்ஷணங்களின் காரணமாக மிகுந்த முக்கியத்துவம் பெறுகின்றன. தெற்கிலே நடுவில் நடராசரும், இடப்பக்கத்திலே விருஷபாரூடர், கங்காதரர் ஆகியோரும், வலப்பக்கத்திலே வீர பத்திரர், உமாதேவியார் ஆகியோரும் அமர்ந்துள்ளனர். மேற்கிலே பிரமன், விஷ்ணு ஆகியோர் பக்கங்களிலும் நடுவில் இலிங் கோத்பவரும் காணப்படுகின்றனர். அவர்களின் இடப்புறத்தில் காலாரிமூர்த்தி, கிராதாமூர்த்தி என்போரும் வலப்பக்கத்தில் யோகதசஷிணாமூர்த்தி, உமாசகிதர் என்போரும் உள்ளனர். வடக்கிலே நடுவில் கஜாரிமூர்த்தியும் வலது பக்கத்திற் சண் டேசானுக்கிரக மூர்த்தி, சுகாசனமூர்த்தி என்போரும் இடப் பக்கத்திலே சோமஸ்கந்தரும் வேறொருவரும் உள்ளனர்.
விமானத்தின் இரண்டாவது தளத்திலுள்ள சிற்ப வேலைப்பாடுகளும், அலங்காரச் சிற்பங்களும் கர்ப்பகிருகத் திலுள்ளவற்றைப் பெரிதும் ஒத்துள்ளன. அதிலே பூதகணவரியும், யாளிவரியும் அமைந்துள்ளன. அதன் மேற்புறத்து நான்கு மூலைகளிலும் அளவிற் பெரியனவும், கவர்ச்சியான வடிவழகு பொருந்தியனவுமாகிய நான்கு நந்திகள் அமைந்துள்ளன. எண்கோணமான பீடத்திலே கிரீவம் அமைந்துள்ளது. அதன் தெற்கிலும் மேற்கிலும் வியாக்கியான தகூதிணாமூர்த்தி, யோக
இந்துக் கலைக்களஞ்சியம்

Page 361
நரசிம்மர் ஆகியோரின் உருவங்கள் உள்ளன. வடக்கிற் பிரமனும் கிழக்கில் இந்திரனும் உள்ளனர். மிகவும் அலங்காரத் தோற்றங் கொண்ட சிகரத்தில் மகாபத்மமும் பட்டிகையும் தூபியும் உள்ளன. திருவடி, உத்தரகைலாசம், திருமழவாடி வைத்தியநாதர் கோயில், தரதரபுரத்து ஈஸ்வரம், விண்ணகரம் ஆகிய இரட்டைத் தளிகள், பொலனறுவையிலுள்ள வானவன்மாதேவீஸ்வரம் ஆகியவை இராஜராஜனது காலத்துக் கோயில்களிற் குறிப்பிடத்தக்கவை. ஆயினும் சிற்பக்கலையினைப் பொறுத்தவரையிலே திருவாலிஸ் வரத்தின் உன்னதமான வனப்பினைப் பெற்றிருக்கவில்லை.
தென்னிந்தியக் கோயிலமைப்பின் உன்னதமான வளர்ச்சிக் கட்டத்தைத் தஞ்சைப் பெருவுடையார் கோயிலிற் காணலாம். பரத கண்டத்தில் அமைந்த கோயில்களிலுள்ள விமானங்களில் அதுவே மிகவும் உயரமானது. வனப்பில் உன்னதமானது. 216 அடி உயரங்கொண்ட அதன் விமானம் பதினைந்து தளங்களைக் கொண்டு வானத்தில் முகில்கள் தோயும் வண்ணமாக எழுகின்ற அற்புதக் கோலமானது. அதன் பிரகாரச் சுவர்களை ஒட்டி இருதளத் திருச்சுற்று மாளிகை அமைந்திருந்தது. இருதளச் சுற்று மாளிகை முன்னொரு காலத்திலும் இடம்பெறாத புதியவோர் அமைப்பாகும். கோயிலின் இரு பிரகாரச் சுவர்களிலும் ஒன்றன் பின் ஒன்றாக இரு பிரமாண்டமான கோபுரவாசல்கள் அமைந் திருந்தன. அவை கேரளாந்தகன் திருவாசல், இராஜராஜன் திருவாசல் என்னும் பெயர்களால் வழங்கிவந்தன. பெருவுடையார் கோயிலின் வனப்பையும், வினோதங்களையும் விவரிக்கும் முயற்சி பெருநூலாக விரியும். அதனை வேறிடத்திலே கண்டு கொள்ளலாம்.
இராஜராஜேஸ்வரம் ஒரு உன்னதமான கலைக்கூடமாகவே நிர்மாணிக்கப்பட்டுள்ளது. அங்கு அரசனும், அரசகுடும்பத் தவரும், அதிகாரிகளும் செய்த திருப்பணிகளும், அறக் கட்டளைகளும் அநேகமானவை. அவற்றின் விவரங்கள் அடங்கிய
சாசனங்கள் அதிஷ்டானப் படைகளில் எழுதப்பட்டுள்ளன.
(áfo. LU)
இராஜேந்திர சோழன் (1012-1O44)
முதலாம் இராஜராஜன், கோப்பெருத்தேவி என்னும் வானவன்மாதேவி ஆகியோரின் மகனாகிய இராஜேந்திரன் பிறப்பிலே மதுராந்தகன் என்னும் பெயரைப் பெற்றவன். தந்தையாகிய இராஜரானின் அரசியற் சாதுரியமும் மதுராந்த கனின் இணையிலாத போராற்றல்களும் சோழப்பேரரசு பத்தாம் தூற்றாண்டின் முடிவிலே எழுச்சி பெற்றுப் பரதகண்டத்திலே மிகுந்த செல்வாக்குப் பெறுவதற்கு ஏதுவாகவிருந்தன. கொங் கணம், துளுவம், கங்கபாடி, நுளம்பபாடி ஆகியவற்றைக் கைப் பற்றிய படைகளுக்கு மதுராந்தகனே தலைமை தாங்கியவன். சாளுக்கியருக்கு எதிரான போர்களிற் பெருஞ்சாதனைகள் புரிந்து இரட்டபாடி வனவாசி என்பவற்றையும் அவனது படைகள் கைப்பற்றிவிட்டன.
மதுராந்தகனின் சாதனைகளின் காரணமாக அவனைக் கங்கபாடி, வேங்கி என்பவற்றின் மாதண்டநாயகனாக இராஜ
இந்துக் கலைக்களஞ்சியம்

ராஜன் நியமித்தான். அப்பதவியினைப் பெற்றதன் விளைவாகச் சோழ நாட்டின் வடதிசையிலுள்ள விவகாரங்களைக் கவனிப்பது அவனது பொறுப்பாகியது. பஞ்சவன் மாராயன் என்ற பட்டமும் அவனுக்கு வழங்கப்பெற்றது. அது சோழபாண்டியன் என்னும் பதவிக்கு முன்னோடியானது போலும், மதுராந்தகனை 1012 இல் முடிக்குரிய இளவரசனாகப் பட்டங்கட்டினார்கள். பின்பு 1014 இல் இராஜராஜ சோழன் இறந்த பின்பு மதுராந்தகனைச் சோழராச்சியத்தின் வேந்தனாக முடிசூட்டினார்கள். இராஜேந்திர சோழனின் ஆட்சியிலே சோழப்பேரரசின் வளர்ச்சி நிறைவு பெற்றது.
கங்கை கொண்ட சோழன், கடாரங்கொண்ட சோழன், முடிகொண்ட சோழன், பண்டித சோழன், விக்கிரம சோழன், உத்தம சோழன், சோழேந்திர சிங்கன் முதலியன இராஜேந்திர னுடைய விருதுப்பெயர்களாகும். அவை அவனுடைய புகழுக்குரிய சாதனைகளையும், சிறப்புகளையும் விளக்கும் தன்மையனவாகும். அவனது கங்கைப் படையெடுப்பும், கடாரப் படையெடுப்பும் அருஞ் சாதனைகளாக அரண்மனை அதிகாரிகளினாலும், கவிவான ராலுங் கருதப்பட்டன. பூர்வதேசமும், கங்கையும் கடாரமுங் கொண்ட கோப்பரகேசரி வர்மன், என்னுந் தொடர் அவனுடைய காலத்துச் சாசனங்களிற் காணப்படுகின்றது.
தென்னிந்திய மன்னர்களில் வேறெவரும் செய்து முடிக்காத பல சாதனைகளை அவன் புரிந்தான். அவனது வெற்றிகரமான கங்கைப் படையெடுப்பு, கடாரப் படையெடுப்பு என்பன குறித்துத் தென்னாட்டவர் வியப்புற்றனர். கர்நாடக தேசத்திற்கப்பாற் படைசெலுத்திய சிறப்பு தமிழக மன்னரில் வேறெவருக்கும் இல்லை. இமயத்திலே சேரன் செங்குட்டுவன் வில் பொறித்தான், அங்கு கரிகாலன் புலியின் இலச்சினையைப் பொறித்தான் என்ற புனைககைகள் மட்டுமே உண்டு. இவற்றை நன்குணர்ந்த கவிச்சக்கரவர்த்தி ஒட்டக்கூத்தர் இராஜேந்திர சோழனை மேல்வருமாறு வர்ணிக்கின்றார்:
"கங்கா நதியுங் கடாரமுங் கைக்கொண்டு சிங்கா தனத்திருந்த செம்பியர்கோன்”
இராஜேந்திர சோழனது ஆட்சிக் காலத்துச் சாசனங்கள் பல நூற்றுக்கணக்கில் உள்ளன. சோழப்பேரரசின் மண்டலங்கள் எல்லாவற்றிலும் அவை எழுதப்பட்டிருந்தன. ஆந்திரநாடு, கலிங்க தேசம் ஆகியவற்றிலும் அவனைக் குறிப்பிடுஞ் சாசனங்கள் உள்ளன. ஆனைமங்கலச் செப்பேடுகள், திருவாலங்காட்டுச் செப்பேடுகள், கரந்தைச் செப்பேடுகள் என்பன அவனால் வழங்கப் பெற்றவை. அவை மிகவும் நீளமானவை. சோழரின் வம்ச வரலாறு, ஆட்சிமுறை, நாட்டுப்பிரிவுகள், இயற்கைவளம், சமுதாய நிலைகள், சமய நிலைகள், பிரம்மதேயம், பள்ளிச்சந்தம் முதலானவற்றைப் பற்றிய மிக விரிவான விவரங்கள் அவற்றில் அடங்கியுள்ளன. தமிழக வரலாற்று மூலங்கள் என்ற வகையில் அவற்றுக்கு நிகரான ஆவணங்கள் வேறில்லை. தமிழக வரலாற்றில் வேறெந்த மன்னராலும் அவற்றுக்கு நிகரான
315

Page 362
சிறப்புடைய ஆவணங்கள் உருவாக்கப்படவில்லை. அவற்றுக்கு இணையான பட்டயங்கள் தகூறினாபதத்திலும் காணப்படு வதில்லை. பரதகண்டத்தைப் பொறுத்தவரையில் உத்தராபத நாதனாகக் கன்னோசியிலே, மன்னர் பேரவையொன்றிலே, ஒப்புக்கொள்ளப் பெற்ற தர்மபாலனின் மகனாகிய தேவ பாலனுடைய நாலாந்தா செப்பேடுகள் மட்டுமே சில அம்சங்களில் அவற்றுக்கு ஒப்பானவை.
இராஜேந்திரனுடைய மெய்க்கீர்த்தி
திருமன்னி வளர இருநில மடந்தையும் போர்ச்சயப் பாவையுஞ் சீர்தனிச் செல்வியுந் தன் பெருந் தேவியராகி இன்புற "
என்னும் அடிகளோடு தொடங்கும். அது இராஜராஜனது மெய்க்கீர்த்தியோடு ஒப்பிடுமிடத்து மிகவும் நீழமானது. அதிலும் பெரும்பான்மையும் வரலாற்று நிகழ்ச்சிகள் பற்றிய விவரங்களே இனிய நடையிற் கவிநயம் மிக்க வண்ணமாக வர்ணிக்கப் படுகின்றன. சோழப்படைகள் படையெடுத்துச் சென்ற நாடுகள், போர் வெற்றிகள், அவற்றின் விளைவாகக் கைப்பற்றிய அரும் பொருட்கள் முதலியன பற்றிய விவரங்களே அவற்றில் சொல்லப்படுகின்றன. வளர்ந்து செல்லும் அரசின் வரலாற்று நிகழ்ச்சிகள் அதில் நிரல்பட வைத்துச் சொல்லப்படுகின்றன.
இராஜேந்திர சோழனுடைய காலத்துக் கல்வெட்டுக்கள் எல்லாம் அவனது மூன்றாவது ஆட்சியாண்டு முதலாக எழுதப்பட்டனவாகும். மூன்றாம் ஆண்டுக் கல்வெட்டுக்களிலே இடைதுறை நாடு, வனவாசி, கொள்ளிப்பாக்கை, மண்ணைக் கடக்கம் என்பவற்றைச் சோழர் கைப்பற்றியமை பற்றிச் சொல்லப்படுகின்றது. அவற்றைப் பற்றிய மெய்க்கீர்த்திப் பகுதி மேல்வருமாறுள்ளது:
"நெடிதியல் ஊழியுள் இடைதுடை நாடும் தொடர்வண வேலிப் படர்வன வாசியும் சுள்ளிகுழ் மதிற் கொள்ளிப் பாக்கையும் நண்ணற் கருமுரண் மண்ணைக் கடக்கமும்’
இவ்வாறு சொல்லப்படுகின்ற நாடுகள் எல்லாம் சாளுக் கியரின் ஆதிக்கம் நிலவிய தென்மண்டலத்து நாடுகளாகும். இடைதுறை நாடு என்பது கிருஷ்ணை, துங்கபத்திரை என்னும் ஆறுகளுக்கு இடைப்பட்டது. அதனை எடதோர் ஈராயிரம் என்று சொல்வது கன்னடமொழி வழக்காகும். வனவாசி என்பது கங்கபாடிக்கு வடக்கிலும் நுளம்பாடிக்கு மேற்கிலும் அமைந்திருந்த ஒரு நாடாகும். அது வனவாசிப் பன்னிராயிரம் என்று அதிலுள்ள சாசனங்களிலே குறிப்பிடப்படும். அரண்களாற் சூழப்பட்ட கொள்ளிப்பாக்கை சாளுக்கியரின் பிரதான நகரங்களி லொன்று. ஆறாம் விக்கிரமாதித்தனுடைய மகனாகிய மூன்றாம் சோமேஸ்வரன், பிற்காலத்திலே, அங்கு அரசப்பிரதிநிதியாக நிலை கொண்டிருந்தான் என்பர். அது இக்காலத்தின் குல்பாக் என வழங்கும்; ஆந்திரப் பிரதேசத்திலே ஹைதாரபாத்திற்கு வட கிழக்கில் 45 மைல் தூரத்தில் அமைந்துள்ளது.
316

இராஜேந்திர சோழனின் ஆட்சியின் ஆரம்பத்தில் ஈழம் மீதான படையெடுப்பு நடைபெற்றது. அதைப் பற்றிய விவரங்கள் அவனது ஐந்தாம் ஆண்டு முதலாக எழுதப்பட்ட சாசனங்களிற் காணப்படுகின்றன. ஜயங்கொண்ட சோழ மூவேந்த வேளான் என்னும் அதிகாரத் தண்டநாயகன் தலைமையில் அப்படை யெடுப்பு நடைபெற்றது. முன்பு, இராஜராஜனின் ஆட்சியின் முற்பகுதியிலே ஈழநாட்டின் வடபகுதியைச் சோழர் கைப்பற்றி விட்டனர். தென்பகுதியில் அந்நாட்டு மன்னனாகிய ஐந்தாம் மகிந்தன் ஆட்சிபுரிந்தான். இராஜேந்திரனது காலத்தில்,1017ஆம் ஆண்டளவிலே இலங்கைக்குச் சென்ற படை தென்னிலங்கைக்குச் சென்று அங்கிருந்த அரசனையும் அவனது பட்டத்தரசியையும் அவர்களின் முடி முதலான அரச சின்னங்களையும், முன்பு தென்னவனாகிய இராஜசிம்மன் அநுராதபுர மன்னரிடம் அடைக்கலமாக வைத்த பாண்டியரின் குலதனமாகிய அரச சின்னங்களையுங் கைப்பற்றியது. அப்படையெடுப்பின் விளை வாக ஈழம் முழுவதையும் கைப்பற்றிவிட்டதாகச் சோழர் உரிமை பாராட்டினார்கள். ஈழப்போர் குறித்த விவரங்களை திருமன்னி வளர எனத் தொடங்கும் மெய்க்கீர்த்தி மேல்வருமாறு வர்ணிக்கின்றது:
"பொருகடல் ஈழத்து அரசர்தம் முடியும் ஆங்கவர் தேவியர் ஒங்கெழில் முடியும் முன்னவர் பக்கல் தென்னவர் வைத்த சுந்தர முடியும் இந்திரன் ஆரமும் தென்திரை ஈழ மண்டலம் முழுவதும்.”
இவ்விவரங்களும் அவற்றுக்கு ஏதுவான சூழ்நிலையும் சற்று விரிவாக மகாவம்சம் என்னும் ஈழநாட்டு வரலாற்று நிகழ்ச்சி களைத் தொகுத்துக் கூறும் புராதனமான நூலிற் சொல்லப் படுகின்றமை குறிப்பிடற்குரியது. சென்ற நூற்றாண்டிலே காணப்பெற்றதும் ஊராத்துறை ஹம்மென்கீல் கோட்டையில் உள்ளதுமான சாசனமொன்று ஈழத்து அரசனையும் அவனது தேவியையும் ஜயங்கொண்டசோழ மூவேந்தவேளான் என்னும் அதிகாரத் தண்டநாயகன் கைப்பற்றிச் சென்றானென்று குறிப்பிடுகின்றது. இராஜேந்திரனின் காலத்தில் நடைபெற்ற படையெடுப்பின் விளைவாக ஈழத்திலே சோழராதிக்கம் வலுப்பெற்றது; அதன் ஆட்சிப்புலம் விரிவடைந்தது. மாதோட்டம், திருகோணமலை, பொலநறுவை முதலிய இடங்களில் அவனது ஆட்சியில் எழுதப்பட்ட சாசனங்கள் கிடைத்துள்ளன. சில ஆண்டுகளின் பின்பு, சோழ இராசகுமாரன் ஒருவனை ஈழத்து அரசனாக முடிசூட்டினார்கள். அவன் சோழ இலங்கேஸ்வரன் என்னும் பட்டம் பெற்றான். சோழ இலங்கேஸ்வரனது ஆட்சி யாண்டுகளில் எழுதப்பெற்ற சாசனங்கள் இலங்கையிலே கந்தளாய், மானாங்கேணி என்னும் ஊர்களிற் கிடைத்துள்ளன.
இராஜேந்திரனுடைய காலத்திலே பாண்டி நாட்டிற் சோழராத்திக்கம் வலுப்பெற்றது. முன்பு, இராஜராஜனின் காலத்திலே கைப்பற்றப்பட்ட இராச்சியங்கள் சோழராச்சியத்துடன் இணைக்கப்பட்டன. அவற்றுள் ஒவ்வொன்றும் மண்டலம் என்னும் பிரிவாகக் கொள்ளப்பட்டது. பாண்டிநாடு இராஜராஜத் தென்னாடு என்று சோழரின் ஆவணங்களிற் குறிப்பிடப் பெற்றது. இராஜேந்திர சோழனுடைய காலத்திற் சோழரின்
இந்துக் கலைக்களஞ்சியம்

Page 363
அரசியலிற் புதிய மரபுகள் உருவாக்கப்பட்டன. முடியாட்சி முறையில் அரசியற் கருமங்கள் அனைத்தும் அரசனை ஆதாரமாகக் கொண்டவை. முன்பு தனித்தனி இராச்சியங்களாக விளங்கிய மண்டலங்களில் வாழ்ந்த பிரதானிகளும் குடியான வர்களும் பூர்வீகமான அரசகுலங்கள்மீது அபிமானமும் விசுவாசமுங் கொண்டவை. சோழர்குலம் அவர்களுக்கு அன்னியமானது. பழைய மன்னர்குலங்களைச் சோழர் அதிகாரத்திலிருந்து நீக்கிவிட்டனர். பிரதானமான மண்டலங்கள் ஒவ்வொன்றிலும் சோழர் குலத்தவருள் ஒவ்வொருவரை அரசனாக முடிசூட்டிக் கொள்வதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இராஜேந்தினின் ஆட்சியில் அவனது மக்களுள் ஒருவனாகிய சுந்தரசோழனைப் பாண்டி நாட்டிலே மன்னனாக அபிஷேகஞ் செய்தனர். அவனைச் சோழபாண்டியனென்று பட்டஞ் சூட்டினார்கள். மதுரைமாநகரிலே இராஜேந்திரசோழபுரம் என்னும் பெருமாளிகை சோழர்களால் அமைக்கப்பட்டது. “பாரது நிகழப் பாண்டி மண்டலத்து மதுரையில் மாளிகை எடுப்பித்துத் தன் மகன் சோழ பாண்டியன் என்றபிஷேகஞ் செய்து தண்டாற்சாலைக் கலமறுத்த கோப்பரகேசரி’ என்று சில சாசனங்கள் இராஜேந்திர சோழனை வர்ணிக்கின்றன.
இராஜேந்திர சோழபுரத்து மாளிகை பற்றிய சில விவரங்கள் சோழபாண்டியரின் சாசனங்களில் வருகின்றன. யாண்டு பதினேழு நாள் ஏழினால் உடையார் பூரீ சுந்தரசோழ பாண்டிய தேவர் ராஜேந்திரசோழபுரத்துக் கோயிலினுள்ளால் ஆட்டத்து வெளி மேலை மண்டபத்து எழுந்தருளி இருந்து உத்தமசோழ வளநாட்டு முள்ளிநாட்டு தென்கைலாயமுடைய மகாதேவற்கு வேண்டும் நிவந்தங்களுக்கு இருப்பதாக முடிகொண்ட சோழவளநாட்டு மேல் வேம்பா நாட்டுக் கல்லூரிலே நிலங் கொடுக்க வேண்டுமென்று அம்மான் அருளிச் செய்தமையில் இந்நிலத்துக்குக் கீழெல்லை. இந்நிலம் சிவபாதசேகர நல்லூர் என்னும் திருநாமமாகவும் ஆக இப்படி யாண்டு பதினாறாவது முதல் தேவதான இறையிலியாக வரியிலிட்டுக் குடுக்கத் திருவாய் மொழிந்தருளிய-எழுத்தினாலும் என்னும் சாசனத்தொடர் மூலம் சோழபாண்டியன் ரஜேந்திரசோழபுரத்து அரண்மனையின் மேல்மண்டபத்து ஆட்டத்து வெளியரங்கிலே அதிகாரிகள் சகிதமாயிருந்த அரசியற் கருமங்களை ஆராய்ந்து ஆணைகளை வெளிப்படுத்தினான் என்பது தெளிவாகின்றது.
கங்கபாடி முடிகொண்ட சோழமண்டலம் என்னும் பெயரால் வழங்கியது. அங்கு சோழப்பேரரசரின் இராசப் பிரதிநிதியாகச் சென்றிருந்த இராசகுமாரன் சோழகங்கன் என்னும் பட்டப் பெயரைப் பெற்றான். வேங்கி தேசத்திலே மணத்தொடர்பின் காரணமாக நெருங்கிய உறவினராகிவிட்ட கீழைச் சாளுக்கியர் சோழரின் ஆதரவோடும், பாதுகாப்புடனும் ஆட்சிபுரிந்தனர். சகோதரியான குந்தவையின் மகனாகிய இராஜராஜ நரேந்திர னுக்குத் தனது மகளான அம்மங்காதேவியை இராஜேந்திர சோழன் மணம்முடித்து வைத்தான். அதிராஜேந்திரன் 1070இல் இறந்தபின் அம்மங்காதேவியின் குமாரனான இராஜேந்திரன் சோழச் சக்கரவர்த்தியாகிக் குலோத்துங்க சோழன் என்னும் பெயருடன் விளங்கியமை கவனித்தற்பாலது.
இந்துக் கலைக்களஞ்சியம்

இராஜேந்திர சோழனுடைய ஒங்கிய பெரும்புகழுக்கு ஏதுவான சாதனைகள் வடஇந்தியாவின் மீதும் கடாரத்து அரசனுக்கு எதிராகவும் அவன் மேற்கொண்ட படையெடுப்புகளாகும். கங்கைப் படையெடுப்பு ஒரு திக்குவிசையமாக மேற்கொள்ளப் பட்டதென்று திருவாலங் காட்டுச் செப்பேடுகள் வர்ணிக்கின்றது. அதனை அவனது மெய்க்கீர்த்தி மேல்வருமாறு நயம்பட வர்ணிக்கின்றது:
"விக்கிரம வீரர் சக்கரக் கோட்டமும் முதிர்பட வல்லை மதுர மண்டலமும் காமிடை வளைஇய நாமனைக் கோணமும் வெஞ்சின வீரர் பஞ்ச பள்ளியும் பாசடைப் பழன மாசுணி தேசமும் அயர்வில்வண் கீர்த்தி ஆதிநக ரகவையிற் சந்திரன் தொல்குலத்திந்திர ரதனை விளையமர்க் களத்துக் கிளையொடும் பிடித்துப் பலதனத் தொடுநிறை குலதனக் குவையும் சிட்டருஞ் செறிமிளை யொட்ட விஷயமும் பூசுரர் சேருநற் கோசல நாடும் தன்ம பாலனை வெம்முனை யழித்து வண்டுறை சோலைத் தண்ட புத்தியும் இரண சூரனை முரணறத் தாக்கித் திக்கனை கீர்த்தித் தக்கின லாடமும் கோவிந் சந்தன் மாவிழிந் தோடத் தங்காத சாரல் வங்காள தேசமும் தொடுகழற் சங்குகொ டடல்மகிபாலனை வெஞ்சமர் வளாகத் தஞ்சுவித்தருளி ஒண்டிறல் யானையும் பெண்டிர்பண் டாரமும் நித்தில நெடுங்கட லுத்தர லாடமும் வெறிமலர்த் தீர்த்தத் தெறிபுனற் கங்கையும்.”
இம்மெய்க்கீர்த்திப் பகுதியிலே பல நாடுகளின் பெயர்களும் அவற்றில் அதிகாரம் செலுத்திய மன்னர்களின் பெயர்களும் சொல்லப்படுகின்றன. அவை வித்தியத்திற்கும் கலிங்க தேசத்திற்கும் அப்பாலானவை. சக்கரக்கோட்டம் என்பது மத்தியப்பிரதேசத்து வத்ச இராச்சியத்தில் இருந்த ஒரு நகரமாகும். நாக வம்சத்தவர் அங்கிருந்து ஆட்சி புரிந்தமையால் அவர்களின் ஆட்சிப்புலத்தைத் தமிழில் மாசுணி தேசம் என்றனர். சக்கரக்கோட்டத்தை அடுத்துச் சொல்லப்படும் மதுரை மண்டலம், நாமணைக் கோணம், பஞ்சபள்ளி ஆகியவை அதனைச் சேர்ந்த பகுதிகளாதல் வேண்டும்.
அதன் பின்பு கோசல வேந்தன் இந்திர ரதன், தண்ட புத்தி அரசன் தன்ம பாலன், தக்கிணலாடத்து, இரண சூரன், வங்காள தேசத்துக் கோவிந்த சந்திரன் உத்திரலாடத்து மகீபாலன் முதலியோரைச் சோழப்படைகள் போரில் வென்றனர் என்று சொல்லப்படுகின்றது. நாட்டுப் பெயர்களும், அரசரின் பெயர்களும் ஆதாரபூர்வமானவை. வேங்கியிலிருந்து சோழப்படை வடக்கு நோக்கி வங்காள தேசம் வரை சென்று வெற்றியோடு திரும்பியது என்பதில் ஐயமில்லை. ஆயினும் அந்தப் படையெடுப்பிற்கு
317

Page 364
ஏதுவான காரணங்கள் தெளிவாகத் தெரியவில்லை. அது திக்குவிசையமாக அமைந்தது என்பது திருவாலங்காட்டுச் செப்பேடுகளிற் சொல்லப்படும் குறிப்பாகும். அப்படையெடுப்பு செல்வங்களைக் கொள்ளையிடுவதனை நோக்கமாகக் கொண்டது என்பது அண்மையில் அமெரிக்க நாட்டு ஆராய்ச்சியாளரின் கருத்தாகும். கங்கைப் படையெடுப்பின் காரணமாகச் சோழப் படைகள் அரும்பொருட்களைக் கவர்ந்துசென்றன என்பதில் ஐயமில்லை. ஆயினும், அத்தகைய நிகழ்ச்சிகள் எல்லாத் தேசங்களிலும் எல்லாக் காலங்களிலும் இடம்பெறுவனவாகும். அப்படையெடுப்புகளினாற் சோழரின் ஆதிக்கப் படர்ச்சி ஏற்பட வில்லை. ஆயினும், அதனாற் சோழராதிக்கத்தின் படையாற்றல் பரதகண்டத்தின் உத்தராபதத்திலும் அறிமுகமாகியது. வட இந்தியாவில் ஏற்பட்டிருந்த அரசியல் உறவுகள் தெளிவாகத் தெரியவில்லை. சோழருக்கும் கன்னோசி வேந்தருக்கும் உறவுகள் நிலைபெற்றமைக்கு சில சான்றுகள் இருப்பதாற் சோழரின் வட நாட்டுப் படையெடுப்பு அங்குள்ள ஆதிக்கப் போட்டியிலே தலையிட்டமையின் ஒரு வெளிப்பாடாகலாம். அது இந்தியா விற்கும் சுவர்ணபூமிக்கும் இடையிலான வாணிபத்திலே தென்னிந்திய வணிகர் கணங்களுக்கு ஒரு வாய்ப்பான சூழ்நிலையினை உருவாக்கும் நோக்கத்தோடு நடத்தப்பட்ட ஒன்றாதலுங் கூடும்.
வடநாட்டுப் படையெடுப்பு ஒரு முக்கியமன நிகழ்ச்சியாகக் சோழராற் கருதப்பட்டது. அதனால் ஏற்பட்ட வெற்றிகளைப் பலவாறு கொண்டாடினார்கள். தென் திசைக்குத் திரும்பிய சோழப்படை ஆலயங்கள் பலவற்றிலே வழிபாடு செய்து, இறைவர்க்கு நன்றிக் கடனாகத் தானங்கள் பலவற்றை வழங்கியது. “இராசேந்திர சோழ தேவர் கங்கை கொண்டு எழுந்தருளுகின்ற இடத்துத் திருவடி தொழுது” என்ற குறிப்பு திரைலோக்கிய மாதேவிச் துர்வேதிமங்கலத்திலுள்ள சாசன மொன்றில் காணப்படுகின்றது. சோழப்படைகள் வடநாட்டி லிருந்து கவர்ச்சிமிக்க கடவுட் படிமங்கள் சிலவற்றையுங் கவர்ந்து சென்றன. அவற்றிலொன்று கும்பகோணம் நாகேஸ்வரத்திலே உடையார் திருவுருவத்தின் முன்பு வைக்கப்பட்டுள்ள கங்கை விநாயகர் படிமமாகும்.
வடதேசத்திலே போர்களில் வெற்றி பெற்று அவற்றின் பயனாகக் கங்கா தீர்த்தத்தை எடுத்தமை யுத் தோத்சவ விபவம் என்று சாசனமொன்றிலே வர்ணிக்கப்படுகின்றது. போரில் அடைந்த வெற்றிகளைக் கொண்டாடும் விழாவின் ஒரம்சமானது கங்கா பரிக்கிரகணம். நதிகளிற் சிறந்தது கங்கை, அது புனித நதிகளில் முதன்மையானது. வடதிசையிலே வளத்துக்கும், வாழ்விற்கும் ஆதாரமானது. கங்காபரிக்கிரகணம் அடையாளபூர்வமானது; அது உத்திர திசையிலே ஆதிக்க பலத்தை வைபவ ரீதியாக நிகழ்ச்சியாகக் கொள்ளத்தக்கது. அது அஸ்வமேதத்திற்கு ஒப்பானது. பாரதத்து முதன்மை வேந்தன் செம்பியன் என்பதை அறிவுறுத்தும் வண்ணமானது. இக் காரணங்களினாற் போலும் வங்காள தேசம் வரையான படை யெடுப்பினைத் திக்குவிசையமென்று சோழரின் அரண்மனை அதிகாரிகள் கொண்டனர்.
318

அந்த வைபவத்தின் ஒரம்சமான நிகழ்ச்சி பற்றித் தென்னாற் காடு ஜில்லாவிலுள்ள எண்ணாயிரம் என்னும் ஊரிலுள்ள சாசனமொன்றில் மேல்வரும் தொடர் காணப்படுகின்றது.
"உடையார் பூரீ இராசேந்திர சோழதேவர் உத்தராபதத்தில் பூபதியரை ஜயித்தருளி யுத்தோத்ஸவ விபவத்தால் கங்கா பரிக்கிரகம் பண்ணியருளின கங்கை கொண்ட சோழனென்னுந் திருநாமத்தால் இத்திருமுற்றத்தில் வைத்தருளின உத்தமாக்ரகம் கங்கைகொண்ட சோழனின் உண்ணும். வைஷ்ணவர்.”
கங்கைகொண்ட உற்சவத்தின் காரணமாக இராஜேந்திரன் கங்கைகொண்ட சோழன் என்னும் சிறப்புப் பெயரைப் பெற்று விட்டான் என்பதும் எண்ணாயிரம் ஊரிலுள்ள விண்ணகரிலே கங்கைகொண்ட சோழன் என்னும் பெயரால் வைஷ்ணவர் களுக்கு அன்னதானம் அளிக்கும் தானசாலையொன்று அக்கோயிலில் அமைக்கப்பட்டதென்பதும் இச்சாசனக் குறிப்பால் உணரப்படும். இராஜேந்திரச் சோழன் புதிதாக அமைத்த இராசதானி கங்கைகொண்ட சோழபுரம் என்னும் பெயரால் வழங்கியது. சோழகங்கம் என்னும் பெருந்தடாகமும் அவனுடைய காலத்து அருஞ்சாதனைகளில் ஒன்றாகும். கங்கைகொண்ட சோழபுரத்திலே கங்கை கொண்ட சோழ - ஈஸ்வரம் என்னும் பிரமாண்டமான கோயில் இராஜேந்திரன் காலத்தில் அழைக்கப் பட்டது. பத்து நிலைகளில் அமைந்து 190 அடி உயரத்துக்கு எழுகின்றது. அதன் விமானம் உத்தம வர்க்கத்திலுள்ள அமைப் பாகும், தஞ்சைப் பெருவுடையார் கோயிலின் விமானம் மட்டுமே அதனைக் காட்டிலும் அளவிற் பெரியது. ஆயினும், கங்கை கொண்ட சோழ ஈஸ்வரத்தில் அரமியச் சுவர்கள் நேராகவன்றி முன்னோக்கிய வில்வளைவுடன் அமைந்திருப்பதாலும் நிலை நிறுத்தப்பட்டிருப்பதாலும் விமானம் மிகுந்த கல்யாணத் தோற்றத்துடன் விளங்குகின்றது. விமானச் சுவர்களில் அமைந் துள்ள சிற்பங்கள் பல இணையிலாத வனப்பும் மிகுந்த சிறப்புங் கொண்டவை.
இராஜேந்திர சோழனுடைய கடாரப் படையெடுப்பின் காரணமாக அவனுக்குக் கடாரங்கொண்ட சோழன் என்னும் சிறப்புப் பெயரும் உரிமையாகியது. சைலேந்திர வம்சத்து பூரீமாற விஜயோத்துங்கவர்மன் இராஜேந்தினது காலத்திலே கடாரத்து மன்னனாக விளங்கினான். சோழர் முன்பு நட்புறவு கொண்டிருந்த கடாரத்து அரனுக்கெதிராகப் படையெடுத்தமைக்கான காரணங்கள் புலப்படவில்லை. இராஜேந்திரனது மெய்க்கீர்த்தி அவனுடைய 13ஆம் ஆண்டு முதலாக அப்படையெடுப்பினைப் பற்றிய விவரங்களைக் குறிப்பிடுகின்றது. பூரீ விசயம், பண்ணை, மலையூர், மாயிருடிங்கம், இலங்காசோகம், பப்பாளம், இலிங்கம், வளைப்பத்தூர், தக்கோலம், தமாலிங்ம், இலாமுரிதேசம், நக்கவாரம், கடாரம் ஆகியவற்றைக் கைப்பற்றிய சோழப்படை கடாரத்தரசனாகிய சங்கிராம விஜயோத்துங்கவர்மனைப் போரிலே வென்று அவனது பட்டத்து யானையையும் அதிக
இந்துக் கலைக்களஞ்சியம்

Page 365
செல்வங்களையும் அவனது அரண்மனை வாசலை அழகு செய்த வித்தியாதரதோரணம் என்னும் அலங்கார வடிவத்தையும் கவர்ந்து வந்ததாகச் சாசனங்கள் குறிப்பிடுகின்றன. பின்பு கடாரங்கொண்டமையினைப் பெரும்புகழுக்குரிய சாதனையாகக் சயங்கொண்டாரும் ஒட்டக்கூத்தரும் சொன்மாலைகளாற் பாராட்டினர். கடாரத்திலே சோழராட்சி ஏற்பட்டமைக்கு எதுவித ஆதாரமுமில்லை. ஆயினும் சீனக்கடல் வரை சோழர் கடற்படையின் நடமாட்டங் காணப்பட்டதாகச் சீன நூல்களிற் குறிப்பிடப்பட்டுள்ளது. சீனாவிற்கும் சோழப்பேரரசுக்கும் இடையிலான வாணிபத் தொடர்புகளின் காரணமாக ஏற்பட்ட தகராறுகள் சாவகத்தின் மீதான சோழரின் படையெடுப்புக்கு ஏதுவாயிருந்தன என்று கருதலாம்.
இராஜேந்திர சோழனுடைய ஆட்சியிலே சோழப்பேரரசின் வளர்ச்சி நிறைவெய்திவிட்டது. பரதகண்டத்திலுள்ள இராச்சியங்களில் ஆற்றலிலும், செல்வ வளத்திலும், ஆட்சித் திறனிலும், கலாவிருத்திகளிலும் அதுவே முதன்மை பெற்றி ருந்தது. தென்னிந்தியாவிலே கடற்படை கொண்டு ஆதிக்கம் செலுத்திய சிறப்பு சோழருக்கு மட்டுமே உண்டு. தென்மேற் கிலுள்ள செங்கதிர்மாலை, பழந்தீவு முதலான தீவாந்தரத்திற்கும் மாநக்கவாரத்திற்கும் அதற்கப்பால் அமைந்த சாவகத்திற்கும் சென்று மீண்ட வரலாறு அதற்குண்டு.
இராஜேந்திரசோழனின் பெயர்களால் வழங்கிய கோயில்கள், மண்டபங்கள், ஊர்கள், நகரங்கள், தேவதானங்கள், நாடுகள், ஆறுகள், கால்வாய்கள், வதிகள், சேரிகள் என்பன பலநூற்றுக் கணக்கானவை. பிரம்ம தேயங்களின் வளர்ச்சியில் அவனுடைய காலம் குறிப்பிடத்தக்கவோர் காலகட்டமாகும். ஆலயங்களிலே திருப்பதியம் ஒதும் ஏற்பாடுகளைக் கவனிப்பதற்கென்று தேவார நாயகம்'என்னும் பதவிப்பெயர் கொண்டவர்கள் அவனுடைய காலத்தில் நியமிக்கப்பட்டனர். சைவ சமயத்திலே மிகுந்த பற்றுக்கொண்டவனாகிய கங்கைகொண்ட சோழன் வைணவம், பெளத்தம், சமணம் ஆகிய சமயங்களுக்கும் ஆதரவு புரிந்துள்ளமை குறிப்பிடற்குரியது. வைணவ சமயத்தின் ஆதரவாளனாக அவனைப் புகழ்ந்துரைக்கும் குறிப்புகள் வைணவ இலக்கிய மரபில் உள்ளன. நாகபட்டினத்துப் பெளத்த விகாரமான இராஜராஜப்பள்ளி என்னும் சூளாமணிவர்ம விகாரத்துக்கு ஆனைமங்கலச் செப்பேடுகள் அவனால் வழங்கப்பட்டன. பள்ளிச்சந்தம் என்பதைப் பற்றிய முழு விவரங்களும் அதில் அடங்கியுள்ளன. அந்த விகாரத்திலே இராஜேந்திர சோழப் பெரும்பள்ளி என்னும் ஒர் அமைப்பும் பின்பு அமைக்கப்பட்டது.
சர்வசிவ பண்டிதர் என்னும் ஆச்சாரியார் அவனது காலத்தில் இராச குருவாக விளங்கினார். ஆசாரியபோகமாக அவருக்கு 2000 கல நெல் கிடைக்கும்படியாக அரசனால் மானியம் வழங்கப்பட்டது. காளாமுகப்பிரிவின் தலைவரான லகுளிச
பண்டிதரும் இராஜேந்திரனுடைய ஆதரவைப் பெற்றவர்.
இந்துக் கலைக்களஞ்சியம்

இருக்கு வேத காலம்
சுற்றாடலும் சமுதாயமும்
இந்திய இலக்கியங்களிலே காலத்தால் மிகவும் புராதனமான பாடல்களின் தொகுப்பு என்றவகையில் இந்திய வரலாற்று மூலங்களில் இருக்கு வேதம் முதன்மை பெறுகின்றது. அது ஒரு வாழ்வியற் களஞ்சியமாகவும் அமைகின்றது. மலைகள், ஆறுகள், நிலப்பிரிவுகள், நாட்டுப் பெயர்கள், சமூகப் பிரிவுகள், இனக்குழுக்கள், சமூகவழமைகள், போர்கள், உணவு, உடை என்பன பற்றிய நடைமுறைகள், அறம், சீலம், தானம், அறிவு என்பன பற்றிய சிந்தனைகள் முதலியனவற்றைப் பற்றிய விவரங்கள் அதில் அடங்கியுள்ளன. அவற்றை விளக்குவது அதிலிடம் பெறும் பாடல்களின் நோக்கமாக அமையவில்லை. ஆயினும் தேவர்களையும் வழிபாட்டு முறைகளையும் வர்ணிக்கும் பொழுது வாழ்வியலோடு தொடர்பான பிரதானமான விவரங்களைக் குறிப்பிடுவது தவிர்க்கமுடியாத ஒன்றாகும்.
நதிகள்
மலைகளைப் பொறுத்தவரையில் இமயம் பற்றியே நேரடியான குறிப்புகள் காணப்படுகின்றன. அதன் குன்றுகளில் ஒன்றான மூஜவந்த் என்பது சோமபாணம் தயாரிப்பதற்கு வேண்டிய சோம என்னும் மூலிகை உற்பத்தியாகும் இடம் என்று இருக்கு வேதப் பாடல்களிலே சொல்லப்படுகின்றது. அவற்றிலே நதிகள் பலவற்றைப் பற்றிய குறிப்புக்கள் காணப்படுகின்றன. வேதங்கள் முழுவதிலும் குறிப்பிடப்படும் 31ஆறுகளில் 25 ஆறுகளைப் பற்றிய வர்ணனைகள் இருக்குவேதப் பாடல்களில் உள்ளன. அந்நாட்களில் நதிகளைத் தெய்வீக சக்தி கொண்டனவாகப் பாவனை செய்து அவற்றை வழிபட்டனர். நதிஸ்துதி என்னும் தோத்திரப் பாடல்கள் பத்தாவது மண்டலத்தில் 75 இலக்கமுடைய பகுதியாக வருகின்றன. அதிற் போற்றப்படும் ஆறுகளிற் பல சிந்து நதியின் கிளை நதிகளாகும்.
கங்கை, யமுனை, சரஸ்வதி, சரயு என்பன பற்றியும் சொல்லப் படுகின்றது. யமுனா நதி மூன்றிடங்களிலே குறிப்பிடப்படுகின்றது. தாஸரக்ஞம் என்னும் பெரும்போர் யமுனா நதியின் கரை யோரத்தில் நடைபெற்றதென்று சொல்லப் படுகின்றது. சரஸ்வதி நதிகளிற் சிறந்ததென்று (நதீதமா) கொள்ளப்பட்டது. ஆறுகளைப்பற்றி இருக்கு வேதத்திலே காணப்படும் குறிப்புகளில் அதனைப் பற்றியனவே மிகக் கூடுதலானவை. அக்காலத்திலே அதுவே மிகவும் புனிதமான நதியாகக் கொள்ளப்பட்டது. நதிஸ்துதிப் பாடல்களில் அது யமுனை, சதுத்திரி என்பவற்றுக்கிடையில் வைத்துச் சொல்லப் படுகின்றது. நவீன காலத்திலே சர்சுதி என வழங்கும் ஆறாக அதனை அடையாளங் காண்பர். அது காலப்போக்கிலே வனாந்தரத்தில் வற்று நதியாகிவிட்டது. திருஷத்வதி என்னும் நதியொன்று சில பாடல்களிற் சரஸ்வதியோடு இணைத்துச் சொல்லப்படுகின்றது. அதனை கக்கர் நதியென்று சிலர் கொள்வர்; வேறு சிலர் அது இக்காலத்துச் சிந்தாங் நதியாகும் என்று கருதுவர். வேதப் பாடல்கள் வர்ணிக்கும் கோமதி ஆறு, குபா, குர்மு என்பவற்றுக்கு இடைப்பட்டது. எனவே அதனை சிந்து நந்தியின்
319

Page 366
மேற்குக் கிளைகளில் ஒன்றான கோமல் ஆறு எனக் கொள்ளலாம். சரயு நதியின் பெயர் அதிக மாறுபாடின்றி இன்றும் நிலைபெறுகின்றது. அது அயோத்தியினூடாகப் பாய்கின்றது. சரயுவின் கிழக்குக் கரையிலே சித்திரரத, அர்ண ஆகியோரை யது-துர்வாசர்கள் தோற்கடித்தனரென்று சொல்லப்படுகின்றது.
சிந்துநதியின் பெருங் கிளை நதிகளான சுதுத்திரி(Sulaj), விபஸ்(Beas), பருஷ்ணி(Ravi). அஸிக்னி(Chenab), விதஸ்தா (Jhelum) ஆகியன பாடல்களிற் குறிப்பிடப்படுகின்றன. நதிஸ்துதியில் விபஸ் என்பதற்குப் பதிலாக மருத்விருதா என்னும் ஆறு பற்றிச் சொல்லப்படுகின்றது. அது அஸிக்னி, விதஸ்தா என்பவற்றுக்கிடையில் வைத்துச் சொல்லப்படுகின்றது. அதனை காஷ்மீரத்திலே வடக்கிலிருந்து தெற்குநோக்கிப் பாய்கின்ற மருவர்த்வான் என வழங்கும் நதியென அடையாளங் கண்டுள்ளனர். ரஸா, குபா, க்ருமு முதலிய ஆறுகள் பற்றியும் வேதப் பாடல்களிற் குறிப்புகள் வருகின்றன. சப்தசிந்தவ என்பது பலமுறை குறிப்பிடப்படுகின்றது. அது ஒரு பிரதேசத்தைக் குறிக்கும் தொடராகவே கொள்ளத்தக்கது. சிந்து நதியில் இணைகின்ற ஏழு நதிகளும் அமைந்துள்ள பிரதேசமே அவ்வாறு கொள்ளப்படுவது என்பது நவீனகால அறிஞர் பலரின் கருத்தாகும். நதிகளைப் பற்றிய குறிப்புகளை அடிப்படையாகக் கொண்டு அப்கானிஸ்தான் முதல் அயோத்திவரையுள்ள பகுதிகளே இருக்குவேத காலத் தவருக்கு நன்கு அறிமுகமான பகுதிகளாகும். பஞ்சாப், காஷ்மீர், வடமத்திய மாகாணம், சிந்து, உத்தர பிரதேசத்தின் மேற்குப் பகுதி, இராஜபுதனம் என்பன அடங்கிய பரந்த பகுதியில் இருக்குவேடப் பாடல்கள் குறிப்பிடும் ஜனக்குழுக்களின் நடமாட்டங்கள் அமைந்திருந்தன.
சமுத்திரம் பற்றியும் சில குறிப்புகள் காணப்படுகின்றன. சரஸ்வதி நதி சமுத்திரத்தோடு கலப்பதாகச் சொல்லப்படுகின்றது. மேற்குச் சமுத்திரம், கிழக்குச் சமுத்திரம் என்பனவற்றையும் அறிந்திருந்தனர். ஆயினும் இருக்கு வேத கால மக்கள் கடற்பிரயாணங்களை மேற்கொண்டமைக்கு இக்குறிப்புகளை ஆதாரமாகக் கொள்ளமுடியவில்லை.
ஜனக் குழுக்கள்
வேதப்பாடல்களிற் பல இனக்குழுக்கள் பற்றிய விவரங்கள் காணப்படுகின்றன. வரையறையான எல்லைகளைக் கொண்ட ஜனபதங்கள் அக்காலத்திலே வளர்ச்சி பெற்றிருக்கவில்லை. ஜனக்குழுக்களும் நிலையாக ஓரிடத்திலே குடியிருப்புகளை அமைத்துத் தங்கியிருக்கவில்லை. தாஸ்ரக்ஞம் என்பது வேதகாலத்தில் நடைபெற்ற ஒரு பெரும் போராகும். பத்து ஜனக்குழுக்களின் தலைவர்கள் பங்குகொண்டமையால் அது தாஸரக்ஞம் என்று வழங்கியது. அது பிற்காலத்து நூல்கள் வர்ணிக்கும் மகாபாரதப் போருக்குச் சமமானது.
பிற்காலத்திற் பிரமாவர்த்தம் என்று வழங்கிய நிலப் பகுதியில் மேலாண்மை பெற்றிருந்த பரத குலத்து அதிபனாகிய சுதாஸ் என்பவனின் பெருவெற்றிகளுக்கு அப்போர் ஏதுவாயி
ருந்தது. அவன் திருத்சு கோத்திரத்தவன். கெளஸிக கோத்திரத்
320

தவரான விஸ்வாமித்திரர் அவனுடைய குலகுருவாக அமைந்தவர். விபஸ், சதுத்திரி ஆகியவற்றின் கரையோரங்களில் சுதாஸன் படை நடத்திச் சென்று, அங்கு பெற்ற வெற்றிகளுக்கு விஸ்வா மித்திரர் காரணரானவர். ஆயினும், ஒரு சமயத்திலே விஸ்வாமித் திரரைப் பதவியிலிருந்து நீக்கிவிட்டு, வசிஷ்டரை அப்பதவிக்குச் சுதாஸன் நியமித்தான்.
இரு பெருங் குரவருக்கும் இடையிலே பெருந் தகராறு ஏற்பட்டது. பழிவாங்கும் நோக்கத்தோடு பரத குலத்தவருக்கு எதிராக பத்து இராசர்கள் அடங்கிய முன்னணி ஒன்றை விஸ்வாமித்திரர் உருவாக்கினார். அதிலே பூரு, யது, துர்வாஸ, அணு, துருக்யு என்னும் பிரபலமான குழுக்களின் தலைவர் களும் அலின, பக்த பலான, சிவ, விஷாணி என்னும் குழுக்களும் இணைந்து கொண்டன. அவர்கள் பதின்மரும் ஒருமித்து சுதாஸனை எதிர்த்தபொழுது அவன் அமோக வெற்றி பெற்றான். அணு, துருஹ்பு அரசர் ஆற்று நீரில் மறைத்து விட்டனர். பூரு குலத் தலைவனான புருகுத்சன் போரிலே மடிந்து பட்டான். தாஸரக்ஞம் பருஷ்ணி ஆற்றங்கரையில் நடைபெற்றது. அதிலே வெற்றியடைந்த சுதாஸன் வேறொரு போரிலே, வேதன் என்பனின் தலைமையில் இணைந்துகொண்ட அஜா, சிக்ரு, யகூஷ்ா என்னுங் குழுக்களையும் தோற்கடித்தான். அப்போர் யமுனையின் கரையில் நிகழ்ந்தது.
இருக்குவேதம் குறிப்பிடும் இனக்குழுக்களில் முதன்மை பெற்றிருந்த பரத குலத்தவர் சரஸ்வதி, யமுனை என்பவற்றுக்கு இடைப்பட்ட பகுதியில் ஆதிக்கம் பெற்றிருந்தனர். அவர்கள் சரஸ்வதி, திருஷட்வதி, ஆபயா என்பவற்றின் கரைகளில் யாகங்கள் பலவற்றைச் செய்தனர். அவர்கள் புரிந்த சடங்குகளும் கிரியை நெறிகளும் மிகச் சிறப்புடையனவென்று பாராட்டப்பட்டன.
சேதி, உஸிநார, காந்தாரி, பாராவத முதலிய ஜனக் குழுக்களும் சில பாடல்களிற் குறிப்பிடப்படுகின்றன. சேதி என்போர் யது என்போரின் கிளையினர் என்பது ஐதீகம். யமுனை நதிக்கும் விந்திய மலைக்கும் இடைப்பட்ட பகுதியில் சேதி குலத்தவர் ஆதிக்கம் பெற்றிருந்தனர். கசு என்னும் சேதிகுல ராசன் தானஸ்துதி ஒன்றிலே பாராட்டுகளைப் பெற்றுள்ளான். அவன் பத்து இராசர்களைத் தனது குலகுருவிடம் அடிமைகளாக ஒப்படைத்தானென்று சொல்லப்படுகின்றது.
உசீநர எனப்படுவோர் மத்திய தேசத்திலே வச, குரு, பாஞ்சால என்போருடன் வாழ்ந்தனரென்று ஐதரேய பிராமணம் கூறும். காந்தாரிகள் எனப்படுவோர் இருக்கு வேத காலத்தில் இந்தியாவின் வடமேற்குப் பகுதியில் மேற்கெல்லையில் வாழ்ந்தவர்கள். அவர்களின் செம்மறியாட்டு மயிர் தரமானதென்று இருக்கு வேதம் குறிப்பிடுகின்றது. அவர்கள் குபா நதியின் தென் கரையோரம் முதலாகச் சிந்து நதியின் கிழக்குப் பக்கம் வரை பரந்திருந்தனர் என்பது சிலரின் கருத்தாகும். இருக்கு வேதம் குறிப்பிடும் பாராவத(ர்) என்னும் குழுவினர் யமுனையின் கரை யோரம் வரை பரந்திருந்தனர். அவர்கள் தொடர்பாகச் சரஸ்வதி
குறிப்பிடப்படுகின்றது. பஞ்சவிம்ச பிராமணமும் அவர்கள்
இந்துக்கலைக்களஞ்சியர்

Page 367
அப்பகுதியில் நிலைகொண்டிருந்தமை பற்றிக் குறிப்பிடுகின்றது. பிரமகண்டன் தலைமையிலான கிகாதரைப் பற்றிய குறிப்புண்டு. அவர்களைப் பாடலாசிரியர் தமக்கு விரோதமானவர்களென்று சொல்வதால் அவர்கள் ஆரியரல்லாத மகதநாட்டு வாசிகள் என்று கொள்ளப்படுகின்றனர்.
பணி என்போரைப் பற்றிய விவரங்கள் வேதப்பாடல்களிற் காணப்படுகின்றன. தாஸ, தஸ்யு என்போருடன் இணைத்தே அவர்களைப் பற்றிச் சொல்லப்படுகின்றது. அவர்கள் செல்வம் மிக்கவர்கள். ஆயினும், அவர்கள் தேவர்களை வழிபடுவதில்லை; பிராமணருக்குத் தகூழினை கொடுப்பதில்லை. அவர்கள் யாகங்கள் செய்வதில்லை. அவர்கள் மந்தைகளைப் பெருமளவிலே வைத்திருப்பவர்கள். மந்தைகளைக் கவரும் வழக்கமுடை யவர்கள். வல என்னும் தெய்வத்தை அவர்கள் வணங்கினார்கள்.
தாஸ் என்போர் வைதிக கலாசாரத்தின் விரோதிகளாகக் கொள்ளப்பட்டனர். அவர்கள் அரண்கள் சூழ்ந்த நகரங்களில் வாழ்ந்தனர். (ஆயஸிஹ் புரஹ்); விஸஹ் என்னும் பல கிளை களாகப் பிரிந்து வாழ்ந்தனர். அவர்கள் கருமையான தோற்றமுடை யவர்கள் என்றும் (க்ருஷ்ணத்வச்) நீளங் குறைந்த மூக்கு டையவர்கள் என்றும் (அனாஸ்) கடுமையான பேச்சுடையவர்கள் (ம்ருத்ரவாச்) என்றும் சொல்லப்படுகின்றனர். அவர்கள் செல்வமுடையவர்கள். இலிவிஸ, துணி, சுமுரி, சம்பர(ன்), வர்ச்சின், பிப்ரு முதலிய தாஸ் மன்னர்களின் பெயர்கள் குறிப்பிடப்படுகின்றன. தாஸர்கள் தனியான இனத்தைச் சேர்ந்தவர்கள். வைதீக கலாசாரம் பரவுவதற்கு முன்பு கங்கைச் சமவெளியில் வாழ்ந்தவர்கள். உற்பத்திமுறையிலும், சமூக உருவாக்கத்திலும் ஓரளவிற்கு முன்னேற்றம் அடைந்தவர்கள். கிராத, திகாட, பர்ணாக என்னும் பெயர்களை உடையோர் தாஸ இனத்தைச் சேர்ந்த இனக்குழுக்களாவர்.
தாஸர்கள் வேற்றினத்தவர்; வேறு கலாசார மரபுகளைக் கொண்டவர்கள், உடற்கட்டமைப்பில் வேறுபட்டவர்கள் என்பன மேல்வரும் வர்ணனைகளால் உணரப்படும் தாஸவர்ண (தாஸ் இனத்தவர்கள்); அகர்மன் (கிரியை செய்யாதவர்கள்); அ-தேவயு (தேவர்களை வணங்காதவர்கள்); அ-பிரஹ்மன் (பிரமன்மீது பற்றில்லாதவர்கள்), அ-யஜ்வன் (யாகஞ் செய்யாதவர்கள்); அ-வ்ரத (நெறிமுறை அற்றவர்கள்); அன்யவ்ரத (அன்னியமான நெறிமுறை உடையவர்கள்). வேதகால ரிஷிகள், தாஸர்கள் பிரதானமான எல்லா அம்சங் களிலும் தமக்கு அன்னியமானவர்கள் என்றே வேதகால ரிஷிகள் கருதினார்கள். வேத காலசாரம் பரவுவதற்கு முன் வடஇந்தியா விலே பல வகைப்பட்ட மக்கள் வாழ்ந்தமைக்குத் தொல்பொருட் சின்னங்கள் சான்றாய் உள்ளன.
தொழில், குலம், கோத்திரம், வர்ணம்
இருக்கு வேத கால மக்கள் விவசாயம், மந்தை வளர்ப்பு
ஆகியவற்றை ஆதாரமாகக் கொண்டு வாழ்ந்தனர். யவதானியம்
பற்றிய குறிப்புகள் மிகுந்து காணப்படுகின்றன. அவர்கள்
இந்துக்கலைக்களஞ்சியம்

கோதுமைச் செய்கையில் ஈடுபட்டனர். நெல் விளைச்சல் பற்றி எதுவித கதையுமில்லை. சிறியளவில் உற்பத்தி செய்த தானியத் தோடு பால், வெண்ணெய், நெய் முதலியவற்றை மிகுதியாகக் கலந்து பலவகையான உணவுப் பண்டங்களைச் செய்தனர். இருக்குவேத காலத்து மக்கள் பெரும்பாலும் இடையர்களாகவே வாழ்ந்தனர். பெருமளவிலான உணவுப் பண்டங்கள் மந்தை வளர்ப்பின் மூலமாகவே கிடைத்தன. பசுக்களும், காளைகளும் அவர்களின் செல்வமாகக் கருதப்பட்டன. யாகங்களிலும் பிராமணக் குருமாருக்கு அவற்றையே தகூழிணையாக வழங்குவது ஆதியான வழமை. ஆனிரை கவர்தல் போர்களில் ஒரு முக்கியமான குறிக் கோளாகும். பசுவதை தவிர்க்கப்பட வேண்டிய ஒன்றாகக் கருதப் பட்டது. பசுக்கள் நன்கு பராமரிக்கப்பட்டன. இரவிலும் வெப்பமான காலத்திலும் அவற்றைத் தொழுவங்களிலே கட்டிவைத் திருந்தனர். மற்ற வேளைகளில் அவை மேய்ச்சல் நிலங்களிலே சுற்றித் திரிந்தன. கறவைப் பசுக்களில் தினமும் மூன்று தரம் பால் கறக்க முடிந்தது. இருக்கு வேதத்திலே கையாளப்படும் உபமான உபமேயங்கள் பல மந்தை வளர்ப்போடு தொடர்புடையனவாகும். மாடுகளை அடையாளங் காண்பதற்காக அவற்றின் காதுகளைத் துளைத்து இலச்சினையிடுவது வழமை. காளைகள் வண்டி இழுப்பதற்கும் நிலங்களை உழுவதற்கும் பயன்படுத்தப்பட்டன.
மரவேலை, உலோகத் தொழில், நெசவுத் தொழில், மட்பாண்டங்களை வனைதல் என்பன பற்றிய விவரங்கள் வேதப்பாடல்களில் உள்ளன. இரதங்கள் பயன்பாட்டில் இருந்தமையால் மரவேலை செய்வோரை ரதகார(ர்) என்று சொல்வது வழமையாகிவிட்டது. இரதங்கள், வண்டிகள், அவற்றின் சக்கரங்கள் என்பனவற்றை அவர்கள் உருவாக்கி னார்கள். வேலைப்பாடுகள் அமைந்த தூண்களையும், கட்டடங் களையும் அவர்கள் செய்தனர். உலோகங்களைப் பொதுவாக ஆயசம் என்று அக்காலத்தில் வர்ணித்தனர். இரும்பின் உபயோ கத்தை அக்கால மக்கள் அறிந்திருக்கவில்லை. கனிவளத்தை உருக்கி, செம்பினை உற்பத்தியாக்கி அதில் உபகரணங்கள் பலவற்றைச் செய்யும் முறைகளை அறிந்திருந்தனர். ஆயினுங் கம்மாளரைப் பற்றிய குறிப்புகள் அதிகம் காணப்படுவதில்லை. மண், மரம் ஆகியவற்றாலான கலங்களையே உணவுப் பாத்திரங் களாக உபயோகித்தனர்.
தோற்கருவிகள் குறிப்பிடத்தக்க அளவிற் பயன்படுத்தப் பட்டன. அவற்றை உற்பத்தி செய்வதிற் பலர் ஈடுபட்டனர். தோற் புட்டிகள், கவசங்கள், வார்கள், படுக்கை விரிப்புகள், குளிர்கால மேலாடைகள் போன்றவற்றை பதனிடப்பட்ட மாட்டுத் தோல், ஆட்டுத்தோல், மான் தோல் ஆகியன கொண்டு உருவாக் கினார்கள். கம்பளி நூலிழைத்தல், புற்பாய்களை இழைத்தல் முதலியவற்றிலும் பலர் பயிற்சி கொண்டிருந்தனர். வேட்டை யாடுதல் மூலமும் தேவையான மாமிசம், சருமங்கள் முதலிய வற்றை வேதகால மக்கள் பெற்றுக் கொண்டனர். அம்பு, வில்லு போன்ற கருவிகளை அதற்குப் பயன்படுத்தினார்கள்; சில வேளை களில் வலைகள் மூலமாகவும் பொறிக்கிடங்குகளின் மூலமாகவும் வனவிலங்குகளை வேட்டையாடினார்கள்.
321

Page 368
மந்தை வளர்ப்பு வாழ்க்கையின் பிரதான அம்சம் என்பதால் இருக்கு வேத கால மக்கள் பசும்புற்றரைகளுக்கு அண்மையான கிராமங்களிற் குடிசைகளை அமைத்து வாழ்ந்தனர். நகர வாழ்க்கை அவர்களுக்குப் பெரும்பாலும் அன்னியமானது. பாது காப்புக் கருதிக் குடிசைகள் எல்லாம் கிராமங்கள் தோறும் ஒன்றுக்கொன்று சமீபமாக அமைக்கப்பட்டன. குடிசைகள் சிலவற்றை மட்டுமே கொண்டிருந்த கிராமங்கள் முள்வேலிகளாற் சூழப்பட்டிருந்தன. இனக்குழுத் தலைவரும் அவர்களை அண்டிய மேற்குடி மக்களும் புர(ம்) எனப்படும் அரண் சூழ்ந்த தலங்களில் வாழ்ந்தனர். போர்கள் பற்றிய வர்ணனைகளில் அவற்றைப் பற்றிய குறிப்புகள் அநேகமாய் உள்ளன. களிமண், கல் என்பனவற்றால் அடைத்த சுவர்களால் அவை சூழப்பட்டிருந்தன. அரண்களை அமைக்குமிடத்து மரக்குற்றிகளையும், தூண்களையும் பயன் படுத்தினார்கள். வீடுகள், குடிசைகள் போன்றவற்றை அமைப் பதற்கு மரம், மூங்கில் என்பவற்றையே அதிகமாகப் பயன் படுத்தினார்கள்.
போக்குவரத்துப் பாதைகளைப் பற்றிப் பல குறிப்புகள் பாடல்களிற் காணப்படுகின்றன. சில நடைபாதைகள்; வேறு சில வண்டிப் போக்குவரத்துக்கான பாதைகள், பூஷன் என்னும் தேவனை வழிப்பாதைகளின் காவலனென்று கருதினார்கள். வண்டிகள், இரதங்கள் என்பன போக்குவரத்து வாகனங்களாகப் பயன்பட்டன. அவற்றை இழுப்பதற்கு மாடு, கழுதை, குதிரை ஆகியன பயன்படுத்தப்பட்டன. இரதங்களின் பல்வேறு பாகங்களின் பெயர்களும், அவற்றின் வேலைப்பாடுகளின் வனப்பும் பாடல்களிலே சொல்லப்படுகின்றன. வாகனங்கள் மூலமாகச் சில சமயங்களில் நெடுந்தூரப் பிரயாணங்கள் மேற் கொள்ளப்பட்டன. குதிரைகளையும், குதிரைகள் பூட்டிய இரதங் களையும் போர்களிற் பயன்படுத்தியமையால் இருக்கு வேத காலத் தவர்கள் மிக வேகமாக முன்னேறி இந்துஸ்தான் சமவெளியில் வளமான பல பகுதிகளிலே தங்கள் மேலாதிக்கத்தை ஏற்படுத்திக் கொண்டனர்.
இருக்கு வேத காலச் சமுதாயம் குடும்ப வாழ்க்கையினை அடிப்படையாகக் கொண்டு அமைந்திருந்தது. அதிலே தாய்வழி உரிமைகள் தந்தை வழியானவை. தகப்பனே குடும்பத்தின் தலை வனாக விளங்கினான். ஆண் சகோதரர்களில் மூத்தவனுக்கே பொதுவாக எல்லா விடயங்களிலும் முன்னுரிமை வழங்கப்பட்டது. குடும்பத்தலைவன் என்றதனால் மனைவி, மக்கள் மீது தகப்பன் அதிகாரம் கொண்டிருந்தான். குடும்பத்தவரிடையே பாச உணர்வு களும், புரிந்துணர்வும் காணப்படுமிடத்தும் தகாதன புரியும் சமயங்களில் மக்களைத் தகப்பன் கண்டிப்பதும், தண்டிப்பதும் வழக்கம் என்பதைப் பல பாடல்கள் மூலம் அறிய முடிகின்றது.
பெண் பிள்ளைகள் பெரும்பாலும் பருவமடைந்து, அறிவு முதிர்ச்சி பெற்ற பின்பே திருமணஞ் செய்தனர். அவர்கள் வஸ்திராபரணதாரணங்கள் மூலம் தாம் விரும்பும் இளைஞரைக் கவர்வதற்கு மேற்கொள்ளும் முயற்சிகள் பற்றியும் குறிப்புண்டு. பெற்றோரின் சம்மதமின்றிப் பெண்கள் தாம் விரும்பியவாறு விவாகஞ் செய்துகொள்வதற்கு அனுமதி வழங்கப்படுவதில்லை.
322

வரனைப் பொறுத்தவரையில் அவனுடைய புருஷ லக்ஷணங் களோடு குலம், கோத்திரம் என்பனவும் முக்கியமான வையாகக் கொள்ளப்பட்டன. சகோதரர்களும், சகோதரர் முறையானவர் களும் ஒன்றுகூடிக் குடும்பம் நடத்துவது தவிர்க்கப்பட வேண்டிய தாகும். மிக நெருங்கிய உறவினரான ஆணும் பெண்ணும் விவாகஞ் செய்வதும் தவிர்க்கப்பட்டது. ஆணும் பெண்ணும் ஒருவரையொருவர் விரும்பிக் காதல்கொண்டு விவாகஞ் செய்யும் முறையுங் காணப்பட்டது.
கலியாண விவரங்கள் இருக்கு வேதப் பாடலொன்றிலே காணப்படுகின்றன. கலியாணச் சடங்கினைப் பற்றிய மிகப் புராதனமான குறிப்பு அதிற் காணப்படுகின்றது. மணமகனும் அவனது தரப்பினரும் முதலில் மணமகளின் வீட்டுக்குப் புறப்பட்டுச் செல்வதாகச் சொல்லப்படுகின்றது. அங்கு அலங்கார மான ஆடை, ஆபரணங்களோடு மணப்பெண் கலியாணக் கொண்டாட்டங்களிற் பங்குகொள்வதற்கு ஆயத்தமாக இருப்பாள். அங்கு விருந்துபசாரங்கள் நடைபெறும். மணமகன் மணமகளின் கையைப் பிடித்த வண்ணமாக அக்கினியை வலம் வருவதாகச் சொல்லப்படுகின்றது. சடங்கு முடிந்ததும் மணமகன் மணமகளை ஊர்வலமாக வாகன மொன்றிலே ஏற்றிச் செல் வான். மணமகன் வீட்டிலும் பிராயச்சித்தமான சில கிரியைகள் நடைபெறும். கலியாண வைபவத்தில் மணமக்களை நோக்கி மங்கல வாழ்த்துப் பாடுவர்.
கலியாணம் முடிந்த பின்பு கணவனின் வீட்டிலே பெண் வாழ்வது முறை. மணமாகிய பெண் குடும்பத்திலே கெளரவமான நிலையைப் பெறுவாள். மணமகனின் வீட்டிலே அவள் எல்லா அதிகாரங்களையும் பெறுவாள். அங்கு புருஷனின் பெற்றோர், சகோதரர் ஆகியோரின் நலவுரிமைகளிலும் அவளுக்கு அதிகாரமுண்டு. ஆண்பிள்ளைகள் இல்லாதவிடத்துப் பெண் தனது கணவனின் சகோதரனோடு கூடி ஆண்பிள்ளைகளைப் பெற்றுக்கொள்ள முடியும் என்றுங் கருதப்பட்டது. ஆண்கள் சில சந்தர்ப்பங்களில் ஒருவருக்கு மேற்பட்ட பெண்களை விவாகஞ் செய்துகொள்ள முடியும்.
ஆண்களும், பெண்களும் அணியும் வஸ்திரம் (வஸன) இரு பாகங்களை உடையது. ஒன்று அரையிலிருந்து உடம்பின் கீழ்ப் பாகத்தைச் சுற்றி அணிவது; மற்றது மேலாடை (அதிவாஸ). காலப்போக்கில் நீவி என்னும் உள்ளாடை ஒன்றையும் அணிந்தனர். அத்க என்னும் வஸ்திரம் உடம்பின் உறுப்புகளுக்குப் பொருத்த மான அளவுடையதாகத் தைக்கப்பட்டிருக்கும். திராபி என்னும் மூடுவஸ்திரம் ஒன்றைப் பற்றி சில பாடல்களிற் கூறப்படுகின்றது. கம்பளி வஸ்திரங்களே புழக்கத்தில் இருந்தன. நாட்டியூப் பெண்கள் கரையில் வண்ண நூல் இழைத்த ஆடைகளை அணிவது வழக்கம். கலியாண வைபவத்தில் மணப்பெண் வாதூயம் என்னும் வனப்பு மிகுந்த வஸ்திரம் அணிவது வழக்கம். வனப்புடைய வஸ்திரங்களை சவாஸ் என்றும் சுவஸன என்றுங் குறிப்பிட்டனர்.
இருக்கு வேதத்திலே பலவிதமான ஆபரணங்கள் குறிப்பிடப்படுகின்றன. கர்ணசோபனம் (காதணி), ஹிரண்ய
இந்துக் கலைக்களஞ்சியம்

Page 369
கர்ணம் (பொற்றோடு), குரீர(ம்) (நெற்றிப்பட்டம்), நியோசனி, காதீ (கேயூரம்), நிஷ்க (கழுத்தணி), மணி, ருக்ம முதலியன பாவனையிலிருந்தன.
வர்ணம், சாதி என்பனவற்றின் உற்பத்தி பற்றிய பல சிந்தனைகள் பிந்திய வேத இலக்கியத்திலே காணப்படுகின்றன. ஏற்றத்தாழ்வுகளைக் கொண்ட வர்ணப்பாகுபாடு பற்றிய வரை யறையான கருத்துக்கள் இருக்கு வேதப் பாடல்களிற் காணப் படவில்லை. பிராமணர், கூடித்திரியர், வைசியர், சூத்திரர் என்னும் நான்கு சமூகப் பிரிவுகள் இருக்கு வேதத்திலே சொல்லப் படுகின்றன. அதன் பத்தாம் மண்டலத்து 90ஆவது பிரிவில் புருஷ சூக்தம் என்னும் பாடற்பகுதி இந்நான்கு பிரிவினரும் ஆதி புருஷனின் முகம், புஜம், தொடை, பாதம் ஆகியவற்றினின்றும் தோன்றினார்கள் என்று விளக்குகின்றது. இந்நான்கு பிரிவுகளும் சமுதாயம் இயங்குவதற்கு இன்றியமை யாதவை. அவை தனித்தனியாக இயங்க முடியாதவை என்ற சிந்தனை புருஷ சூக்தத்தின் விளக்கத்திற்கு அடிப்படையானது. அந்தப் பாடற் பகுதி சமூக ஏற்றத் தாழ்வுகளுக்கு ஆதாரமானது என்பது பிற் காலத்து விதண்டாவாதமாகும். ராஜன்ய, வைஷ்ய, சூத்திரர் என்னும் சொற்கள் இருக்கு வேதத்திலே புருஷ சூக்தத்தில் மட்டுமே வருகின்றன. எனவே அவை பொது வழக்கி லுள்ளவை என்று கொள்ளமுடியவில்லை. சமயச் சடங்குகளிற் குருமாராகக் கடமை புரிந்தவர்களையும், சாதுரியமானவர்களையும் அறத் தினைக் கடைப்பிடித்தவர்களையும் பிராமணர் என்று குறிப் பிட்டுள்ளமை குறிப்பிடற்குரியது. வர்ணம் என்ற சொல்லும் ஆதியிற் சமுதாயப் பிரிவுகளையன்றி நிறத்தினையே குறித்தது.
இருக்கு வேத காலத்தைப் பொறுத்தவரையில் வரையறையான எல்லைகளையும் நிர்வாக முறையினையுங் கொண்ட அரசுகளைப் பற்றிப் பேசுவது பொருத்தமற்றதாகும். இனக்குழுக்களின் உறவு முறைகள், அவற்றின் தலைமை, பாதுகாப்பிற்கான ஒழுங்குகள் என்பன பற்றிய விவரங்களாகவே இருக்கு வேதப்பாடற் குறிப்புகள் கொள்ளத்தக்கவை. பிந்திய வேத காலத்தில் மட்டுமே ஜனபதங் களான இராச்சியங்களும் முடியாட்சிமுறையும் உருவாகியிருந்தன.
ராஜன் என்னும் சொல் பலவிடங்களிலே காணப்படுகின்றது. அது அக்காலத்தில் இனக்குழுவொன்றின் தலைவனுக்குரிய பதவிப் பெயராகவே வழங்கியது. பிற்காலத்தில் அது அரசனைக் குறித்தது. கண(ம்), கணபதி, ஜேஷ்ட் என்னும் சொற்களும் பலவிடங்களிலே காணப்படுகின்றன. கணம் என்பது இனக்குழு ஒன்றைக் குறிக்கும். கணபதி என்பது அக்குழுவொன்றின் தலைவனுக்குரிய பதவிப்பெயராகும். ஜேஷ்ட என்பது கிழான், கிழவன் என்னும் தமிழ்ச் சொற்களைப் போன்றது. பிற்காலத்துக் கணராச்சியங்கள் வேதகாலத்துச் சமுதாய அமைப்பினை அடிப்படையாகக் கொண்டு வளர்ச்சி பெற்றவை எனக் கருதலாம்.
ராஜன் என்னும் பதவி சில சமயங்களிலே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த பல தலைமுறையினருக்கு உரியதாகிவிட்ட பொழுதும் அது ஒரு பரம்பரை உரிமையாகிவிட்டதென்று கொள்ளமுடியாது. ராஜன் என்போர் சமிதி என்னும் அமைப்பின் தீர்மானங்களுக்கு அமைவாகத் தங்கள் கடமைகளைச் செய்யவேண்டும். வீரம்,
இந்துக் கலைக்களஞ்சியம்

போராற்றல், தலைமை தாங்கும் தகைமை என்பனவே ராஜனுக்கு வேண்டிய பண்புகளாகும். தகைமையற்ற ராஜர்களைப் பதவியிலிருந்து நீக்கி அவர்களுக்குப் பதிலாகப் புதியவர்களைத் தெரிவு செய்வதற்குச் சமிதி அதிகாரங் கொண்டிருந்தது. ராஜன் என்பவனை ஜனஸ்ய கோபா (சனங்களின் காவலன்) என்றும் தர்மஸ்ய கோபா (தர்மத்தின் காவலன்) என்றும் வர்ணித்தனர். ஒரு சமுதாயத்தின் தலைவன் என்ற வகையிலே பகைவர்களிடமிருந்து சமூகத்திலுள்ளவர்களைக் காப்பாற்று வதும் அவர்களுக்கிடையில் ஏற்படக் கூடிய தகராறுகளைத் தவிர்த்துச் சமூகவழமைகளைப் பேணுவதும் ராஜனுடைய பொறுப்பாகக் கொள்ளப்பட்டன. ஜனக்குழு ஒவ்வொன்றும் விஷா என்னும் கிளைகளைக் கொண்டிருந்தது. விஷா என்பதிற் கிராம என்னும் பல சிறு பிரிவுகள் அடங்கும். அவற்றிடையே சமூகத்தொடர்புகள் இன உறவினை அடிப்படையாகக் கொண்டவை. இராச்சியங்களின் பெயர்களை யன்றி இனக் குழுக்களின் பெயர்களையே இருக்கு வேதம் குறிப்பிடுகின்றது. இறைவரிகளைச் சேர்ப்பதற்கான ஒழுங்குகள் அக்காலத்தில் இருந்தமைக்குச் சான்றில்லை. பிற சமூகத்தவரின் சொத்துடை மைகளையும், மந்தைகளையுஞ் சூறையாடிய பொழுது கணிசமான ஒரு பாகம் ராஜனுக்கும் அவனது சுற்றத்தவர்க்கும் பலியாகக் கிடைத்தது. அவ்வாறு கிடைத்தவற்றையே யாகங்களிலும், சடங்குகளிலும் பிராமணருக்கும், பிறருக்கும் தானமாக வழங்கினார்கள்.
சமிதி, சபா என்பன பற்றிய குறிப்புகள் அநேகமானவை. இவற்றுட் சபா என்பது ஒரு சிறிய குழுவையும் அவர்கள் கூடும் அரங்கினையும் குறிக்கும் வகையிலே வழங்கியுள்ளது. அது ராஜன் என்பவனது நெருங்கிய சுற்றத்தவரைக் குறித்தது போலும், பிற்காலங்களில் அது அரச சபை முதலானவற்றைக் குறிக்கும் வண்ணமாகப் பயன்படுத்தப்பட்டது. சமிதி என்பது பெருமளவிலானோர் பங்குபற்றிய பெருமன்றமாகும். அது இனக்குழுவினர் அனைவரும் ஒன்றுகூடும் மன்றம்; அது ராஜனின் தலைமையிலே கூடியது. அவனுக்கும் சமிதிக்கும் இடையிலே கருத்தொற்றுமையின் அவசியம் வலியுறுத்தப் படுகின்றது. சமிதியிலுள்ள எல்லோரிடையிலும் ஒருமிதமான சிந்தனையும், தீர்மானங்களும், செயற்பாடுகளும் அவசிய மானவை என்று கருதப்பட்டது. மேல்வரும் குறிப்புகள் மூலம் இதனை உணர்ந்து கொள்ளலாம்.
"எல்லோரும் ஒன்றாகக்கூடி ஒருமிதமாகப் பேசுங்கள்; உங்கள் மனங்கள் இணக்கமான கருத்துடையனவாக அமையட்டும்.”
"இடம் பொதுவானது; கூட்டம் பொதுவானது; மனமும்
ஒருமிதமானது; ஆதலாற் கருத்துகளும் ஏகமனதாக அமைதல் வேண்டும்.”
“உங்கள் தீர்மானம் ஏகமனதானதாய் இருக்க வேண்டும்; உங்கள் மனங்கள் ஒரு பொதுவான இணக்கத்தை நோக்கிச் செல்லவேண்டும்; எல்லோரும் மனமுவந்து ஏகமனதாக முடிவெடுக்க வேண்டும்.”
323

Page 370
இனக்குழுவொன்றின் பொதுநலன்கள் தொடர்பான விடயங்களைப் பொறுத்தவற்றில் சமிதி அதிகாரங் கொண்டிருந்தது என்பதும், அதனால் முடிபுகள், நடவடிக்கைகள், குறிக்கோள்கள் என்பன குறித்துத் தகராறுகளைத் தவிர்த்து ஒருமிதமாக எல்லோரும் செயற்பட வேண்டும் என்பது வேதகால
ரிஷிகளின் அறிவுரையாகும்.
இருக்கு வேதம்
நான்கு வேதங்களில் முதலில் வைத்து எண்ணப்படுவது இருக்கு வேதம். இருக்கு எனும் பாடல்களாலானது இருக்கு வேதம். இதன் பாடல்கள் பலவற்றை ஏனைய வேதங்கள் உள்ளடக்கியுள்ளமையாலும் இதனுள் மிகப் பழமையான பாடல்கள் அதிகம் காணப்படுவதாலும் இது முக்கியத்துவம் பெறுகின்றது. இது வைதிக மொழியில் அமைந்தது.
இருக்கு வேதத்திற்கு இருபத்தொரு பாடாந்தரம் மரபிலே கூறப்படுகின்றது. சரணவீயூகம் இருக்கு வேதத்தின் ஐந்து சாகைகளைக் குறிப்பிடுகின்றது. இவற்றிலே சாகல பாடாந்தரம் பேணப்பட்டு வந்துள்ளது; ஏனைய பாடாந்தரங்களில் இருந்து சிற்சில பாடல்களே மண்டலங்களிற் சோர்க்கப்பட்டுள்ளன. எட்டாவது மண்டலத்திற் கிலமாக இடம் பெறும் பதினொரு வாலகில்ய சூக்தம் இவற்றில் அடங்குவன.
இருக்கு சங்கிதை பத்து மண்டலங்களையுடையது; 1017 சூக்தங்களும் கில சூக்தம் பதினொன்றுமாக 1028 சூக்தங்கள் இடம்பெறுவன; இக்குக்தங்களிலே 10.417 பாடல்கள் உள்ளன.
முதலாவது மண்டலத்தைப் பதினெட்டு ரிஷிகளின் ஆக்கங்களாகக் கூறல் மரபு. இரண்டாவது முதல் ஏழாவது வரையுள்ள மண்டலங்களுக்கு சிருஸ்தமர், விசுவாமித்திரர், வாமதேவர், அத்திரி, பாரத்துவாசர், வசிட்டர் எனும் ரிஷிகள் ஆசிரியர்களாகக் கருதப்பட்டுள்ளனர். கண்வர், அங்கிரஸ் என்போர் எட்டாவது மண்டலத்து ஆக்கியோராகக் கொள்ளப் படுவர். ஒன்பதாவது, பத்தாவது மண்டலங்கள் பலருடைய ஆக்கங்களாகக் கருதப்படுவன. இங்கு கூறப் பெற்றவர்கள் தாம் பாடல்களின் ஆசிரியர்கள் என்ற கருத்தினை ஆய்வாளர்கள் பலர் ஆதரிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இருக்குப் பாடல்களை பாடியவர்களில் இடம் பெறுவோர் சிலர் பெண்கள்; சிலர் சூத்திரர், சிலர் ஒதுக்கப்பட்டோர் என்று கருதுவர்.
பத்து மண்டலங்களிலே இரண்டு முதல் ஏழு வரையிலான மண்டலங்களிலே மிகப் பழைய பாடல்கள் இருப்பதாகக் கருதப் படுகிறது. அவெஸ்தாவுக்கும் இருக்குக்கும் சிற்சில ஒற்றுமைகள் காணப்படுதல் நோக்கத்தக்கது. முதலாம், பத்தாம் மண்டலங் களிலே பிற்பட்ட காலத்தன அதிகம் இடம் பெறுவதாகக் கருதுவர். பிராகிருத மொழிகளும் திராவிட மொழிகளும் இருக்கு வேதத்தில் தம் செல்வாக்கினைச் செலுத்தியுள்ளமை குறிப்பிடத் தக்கது. இந்தோ ஐரோப்பிய பகுதிகளையும் இந்தியப் பகுதி களையும் இன்று இருக்கிலே பிரித்துணர்வது அரிது.
324

பெரும்பான்மையான இருக்கு வேதப் பாடல்கள் அக் காலத்தில் வழிபடப் பெற்ற தெய்வங்களின் பண்புகளைப் போற்றி, அவர்களை விளித்து, தாம் அளிக்கும் ஆகுதிகளை விவரித்து, அவற்றை ஏற்றுக் கொண்டு, தாம் வேண்டும் பொருள்களை இரந்து கேட்கும் பான்மையில் அமைந்தவை. உலகியல் விடயங்கள், அரசர்களைப் போற்றிக் கூறும் பகுதிகள் (தானஸ்துதிகள்). கதைப்பண்புடைய உரையாடல்கள் (சம்வாதசூக்தங்கள்), தத்துவக் கருத்துக்களைக் கூறும் பாடல்கள் முதலியன சிறு பான்மையினவாக அங்குமிங்கும் சிதறுண்டு கிடக்கக் காணலாம்.
இருக்கு வேதம் கூறும் வழிபாட்டு முறை எளிமையானது. ஆகுதிகளை அளித்து வேண்டியதை இரந்து கேட்பதாக
அமைவது.
இருக்குவேதம் கூறும் வழிபாட்டினைச் சிலர் இயற்கை வழிபாடு என்பர். இக்கூற்றிலே ஓரளவு தான் உண்மை யடங்கியுள்ளது. இயற்கைக் கூறுகளை வேதகாலத்து மக்கள் வழிபட்டு வந்தனர் என்பதை அநுவதிக்கும் முகமாய் பாடல்கள் பல காணப்படுகின்றன. ஆயினும் இயற்கைப் பொருள்கள் தம் இயல்பான நிலையுடன் தெய்வப் பண்புகளும் சிறிது சிறிதாக விரவப் பெற்று நாளடைவில் தெய்வீக நிலை எய்திய வளர்ச்சியினையும் இருக்கு வேதம் தெளிவாக்குகின்றது. இதைத் தொடர்ந்து இத் தெய்வங்களின் பண்புகளைக் கூறும் அடைமொழிகள் தனியே பிரிந்து அடைமொழிகள் எனும் தன்மை நீங்கப் பெற்று வேறு தனித் தெய்வங்களின் பெயராக அமைந்து வேறு தெய்வங் களையும் குறித்து நிற்பதையும் இருக்கு வேதம் காட்டுகின்றது.
உலகியல் வாழ்க்கை இயற்கை நெறி சார்ந்தது என்று இருக்குவேதப் பாடல்களின் ஆசிரியர்கள் கருதினார்கள். வாழ்க்கை இயற்கையினை ஆதாரமாகக் கொண்டது; அதற்குக் கட்டுப்பட்டது என்பது அவர்களின் நம்பிக்கை. பன்முகமான இயற்கைச் சக்திகள் எல்லாம் பிரபஞ்சத்திற்கு ஆதாரமான சத்தியின் அம்சங்கள் என்ற சிந்தனை அந்த நம்பிக்கைக்கு ஏதுவானது. இயற்கை சக்திகளை உருவகிக்கும் மரபொன்றின் வெளிப்பாடுகளே தேவர்களைப் பற்றி வேதப்பாடல்களில் வரும் வர்ணனைகள், இயற்கையின் அம்சங்களைத் தேவர்களாக வர்ணிக்கின்ற பொழுது அவர்களை மானிடக் கோலத்தில் உருவகித்தனர். தேவர்கள் மனிதர்களைக் காட்டிலும் ஆற்றல் பொருந்தியவர்கள். அறிவு மிக்கவர்கள். நன்மை செய்பவர்கள். அவர்கள் அழிவற்றவர்கள். ஆயினும் மனிதர்களைப் போல அவர்களும் உற்பத்தி உடையவர்கள்; அவர்களின் பெற்றோர் நிலம், வானம் என்பனவற்றின் உருவகமான தேவர்கள் (தியாவா பிருதுவீ). அவர்களை அன்பினாலும் நிவேதனங்களினாலும் வழிபாடு செய்து, அவர்களின் ஆதரவைப் பெற்றுக்கொள்ளலாம் என்று கருதினார்கள். வேதகாலத் தேவர்கள் மனிதர்களைப் போல ஆசாபாசங்களை உடையவர்கள். சோமபாணத்திற் பிரியமுடை யவர்கள். அவர்களின் அனுசரணையோடும் அனுகூலத்தோடும் சுகபோகங்களையும், வேறுநன்மைகளையும் பெற்றுக்கொள்ள முடியுமென்பது அக்காலத்து நம்பிக்கை, காலப்போக்கிலே தேவர் களைப் பற்றிய எளிமையான கருத்துக்கள் மாற்றமடைந்தன. அவற்றிலிருந்து ஆழமான தத்துவ சிந்தனைகள் உருவாகின.
இந்துக் கலைக்களஞ்சியம்

Page 371
பூலோகம் அடங்கிய பிரபஞ்சமானது ஒரு சாஸ்வதமான நெறிக்கு அமைவாகி இயங்குகின்றது என்பது ஒரு அடிப்படைக் கருத்தாகும். பிரபஞ்சத்தின் இயைபாற்றலுக்கும் ஆதாரமாக அமைவது ரிதம். பூலோகத்திலே அந்த ரிதம் தர்மமாகப் பிரதிபலிக்கின்றது.
தேவர்களிற் பெரியவர்கள் சிறியவர்கள் என்ற வேறுபாடுகள் எதுவுமில்லை. ஒரு தேவரை வழிபடுமிடத்து அவரை எல்லா ஆற்றல் களும் பொருந்தியவராகக் கருதி வழிபாடு செய்தனர் என்பதை வேதப்பாக்கள் மூலம் அறியமுடிகின்றது. சிலசமயங்களில் தேவர் களிற் சிலரைக் கூட்டமாகவும் வழிபட்டனர். அஸ்வினி தேவர்கள், மருத்துக்கள், ஆதித்தியர்கள் அத்தகையோர் இருக்குவேதப் பாடல் களிலே தேவர் முப்பத்து மூவரைப் பற்றிய குறிப்புகள் உள்ளன.
மூவகைத் தேவர்கள்
கி.மு. ஆறாம் நூற்றாண்டளவில் வாழ்ந்தவரான யாஸ்கர் தேவர்களை மூன்று பிரிவினராக வகைப்படுத்தினார். அவர்களின் இயல்புகள், ஆற்றல்கள், அவர்களைப் பற்றிய வர்ணனைகள் என்பவற்றின் அடிப்படையில் யாஸ்கர் அந்தப் பாகுபாட்டினைச் செய்தார். யாஸ்கரின் பாகுபாட்டில் அவர்கள் பூலோக நிலை (பிருதுவீஸ்தான), இடையுலக நிலை (அந்தரிகூடி ஸ்தான), திவ்யலோக நிலை (த்யுஸ்தான) என்னும் மூன்று நிலைகளில் உள்ளவர்கள். பிருதுவீ, அக்கினி, சோமன், பிருகஸ்பதி, நதிகள் என்போர் பூலோகத் தேவர்கள். இந்திரன், அபாம்-நபாத், உருத்திரன், வாயு-வாத, பர்ஜன்ய, ஆபாஹ், மதரிஸ்வான் ஆகியோர் இடையுலகத்தவர். விஷ்ணு, ஆதித்தர், உஷா, அஸ்வினி தேவர், வருணன், சூரியன், மித்திரன், பூஷன், சவித்ரி, தியெளஸ் என்போர் விண்ணகத்தேவர். இந்தப் பாகுபாடும் சில சமயங்களிலே பொருத்தமானதாக அமைவதில்லை. எனினும், அது தேவர்களின் இயல்புகளை அடிப்படையாகக் கொண்ட ஒரு யதார்த்தபூர்வமான பாகுபாடாகும்.
விண்ணகத் தேவர்கள்
விண்ணகத் தேவர்களில் மிகப் புராதனமானவர் தியெளஸ் என்பவர்; இந்து ஐரோப்பியர்கள் வழிபட்ட தேவர்களில் ஒருவர்; கிரேக்க பெளராணிகவியலிலும் ஒத்த பெயரும் பண்புங் கொண்ட தேவர் ஒருவரைப் போற்றுவர். வானகத்தின் உருவகமானவர் தியெளஸ், தேவர்களின் பிதாவானவர். கீணோக்கிய பார்வை கொண்ட சீற்றமுடைய காளையென்று தியெளஸைப் பாடல்கள் வருணிக்கின்றன. மின்னல் வண்ணனென்றும் வானத்தில் உறுமுகின்ற இடிமுழக்கமென்றும் மழைக்கு உரமூட்டுவா னென்றும் பாடல்கள் வர்ணிக்கும். சில சமயங்களிலே இத்தேவரை முத்துக்களை அணிகளாகக் கொண்ட கருங்குதிரை என்று உருவகித்தனர். பிருதுவி, தியெளஸ் என்னும் இருவரையும் தேவர்களின் பெற்றோர்களாகக் கொண்டனர். தியாவா பிருதுவீ என்ற இருவர் மீதும் பாடப்பெற்ற ஆறு பாடல்கள் இருக்கு வேதத்தில் உள்ளன.
வேதப்பாடல்களில் வருணனைப் பற்றிய உருவகம் தெளிவு பெற்றுள்ளது. அதற்கு அடிப்படையான இயற்கையின் அம்சங்கள் பெரிதும் மறைந்துவிட்டன. பெயரளவில் ஒளறானோஸ் என்னும்
இந்துக் கலைக்களஞ்சியம்

கிரேக்கத் தெய்வம் வருணனுக்கு ஒப்பானது. வருணன் அறக்கடவுள்; ஒழுக்கநெறியின் காவலன், ரிதம் என்பதோடு நெருங்கிய தொடர்புடையவன். வருணன் மகாராசன், சர்வலோகங்களுக்கும் அதிபதியானவன். ஆயிரம் தூண்களும், வாயில்களும் பொருந்திய அவனுடைய மாளிகை விண்ணுலகில் உள்ளது. அவன் அலங்காரமான வஸ்திரங்களோடு விளங்குபவன். அவனிடம் ஒற்றர்கள் உள்ளனர். அவர்களை எவராலும் ஏமாற்றிவிடமுடியாது. அவன் மாயாசக்தி கொண்டு ஆட்சி புரிபவன்; அதனால் அவனுக்கு அசுரனென்றும் பேர். அவனுடைய அந்த ஆற்றலினால் பொழுது கிரமமாக விடிகின்றது; அவன் சூரியனை உலகினை வலம்வரச் செய்கின்றான். வருணன் நிலம், காற்று, வானம் என்பவற்றுக்கு ஆதாரமானவன். அவன் காலபருவங்களை உருவாக்குபவன்; மழைக்குக் காரணமானவன். அவனுடைய கட்டளைகளை மனிதர்களும், தேவர்களும் அனுசரிக்க வேண்டும்; அவற்றை மீறும் ஆற்றல் அவர்களுக் கில்லை. அவன் நதிகள் பெருகுவதற்குக் காரணமானவன், ஆறுகள் எல்லாம் சமுத்திரத்திலே கலக்கின்ற பொழுதும் சமுத்திரம் பொங்கிப் பெருகாது நிலைபெறுவதற்கு வருணனே காரணமானவன்; அவனது மாயையினாற் சமுத்திரம் தளம்பாது நிலைபெறுகின்றது. அதனால் "வருணன் மேய தீம்புனல் உலகம்” என்றார் தொல்காப்பியனார். வருணன் த்ருதவர்தன். உலக நியதிகளின் காவலன்; அவனது ஆற்றலி னால் வானத்திலே தத்தமக்குரியனவென்று நிர்ணயிக்கப் பெற்ற வழிவழியே கோள்கள் செல்கின்றன. வேதப்பாடல்களில் அறக்கடவுளாக வருணன் விளங்குகின்றான். பாவமன்னிப்பு வழங்குமாறு வருணனை வழிபட்டனர். அவனது பாசத் தழைகளிலிருந்து விமோசனம் வேண்டி வழிபாடு செய்தனர். பரம்பெருளாகிய ஈஸ்வரனுக்குரிய இயல்புகள் பலவற்றை வருணனுக்குரியனவாக வேதகாலத்தவர் கொண்டனர்.
மித்திரனை வருணனோடு சேர்த்து வழிபடுவது வழக்கம். மித்திரன் மீது தனியாகப் பாடப்பெற்ற பாடல் ஒன்று மட்டுமே இருக்கு வேதத்தில் உண்டு. யாதயஜ்-ஜன (ஜனங்களை ஊக்கப்படுத்துவோன்) என்பது அவனுக்குரிய அடைமொழி யாகும். மித்திரன் ஒளியுடன் தொடர்புடைய தேவர்களில் ஒருவன்; சூரியனோடு தொடர்புடையவன்; சனங்களுக்கு நன்மை செய்பவன். ஒளியுடன் தொடர்புடைய தேவர்களிற் பிரதான மானவன் சூரியன். ஒளிமயமான கிரணங்களையுடைய கதிர வனாகிய கோளையும் அதன் உருவகமான தேவனையும் சூரியனென்று குறிப்பிட்டனர். சூரியனைப் பொறுத்தவரையில் இயற்கைத் தோற்றத்திற்கும் அதனைப் பற்றிய உருவக மயமாக்கத்திற்கும் இடையில் அதிக இடைவெளி காணப்பட வில்லை; அவற்றுக்கிடையிலான தொடர்புகள் மிகத் தெளிவாகத் தெரிகின்றன. சூரியன் புவனத்திலுள்ள யாவற்றையும் பார்க்கும் வல்லமை கொண்டவன்; அவன் அக்கினி, வருணன், மித்திரன் ஆகிய தேவர்களின் விழியாக அமைந்தவன் என்று வேதப் பாடல்கள் வர்ணிக்கும். உஷையின் மூலம் சூரியன் உதயமாவதால் அவனை தியொஸ், அதிதி ஆகியோரின் குமாரனென்று வேதப்பாடல்கள் வர்ணிக்கும். சவித்ரி என்னும் தேவன் பொன்மயமானவன்; அவனது கண்கள், புஜங்கள், கைகள், நாக்கு
325

Page 372
ஆகியன எல்லாம் பொன்வண்ணமானவை. அவனுடைய ரதமும் அதன் அச்சும் அவ்வண்ணமானவை. அவன் மின்னொளி பரப்புபவன். காயத்திரி மந்திரத்திலே அதனை உபாசிப்பவருக்கு ஒளி வழங்குமாறும் சிந்தனைகளைத் தூண்டுமாறும் கேட்கப்படுகின்றது. சவித்ரி சூரியனுடைய கிரணங்களோடு பிரகாசம் பெறுபவன்; மனிதர்கள் சூரியனுக்குப் பகை செய்யாதவர்களென்று சூரியனுக்குத் தெரிவிப்பவன். சில பாடல்களிலே சூரியன், சவித்ரி என்போருக்கு இடையிலான வேற்றுமை தெளிவாகத் தெரிகின்றது. வேறு சில பாடல்களில் அவர்களை வேறுபடுத்திக் காணமுடியவில்லை.
பூஷன் என்னும் தேவனின் உருவகம் பாடல்களிலே தெளிவாகத் தெரியவில்லை. அவன் தாடியும், தாழ்சடையுங் கொண்டவன். அவன் பொன்னிட்டி, அங்குசம் என்பவற்றைக் கையிற் பிடித்த கோலமானவன். அவனுடைய ரதத்தினை ஆடுகள் இழுத்துச் செல்லும், கரம்பு (கஞ்சி) பூஷனுக்கு உவப்பான நிவேதனப்பொருளாகும். அவன் மணவினையோடு தொடர்பு டையவன் என்பது கல்யாணப் பாடல்கள் மூலம் அறியமுடிகின்றது. தங்கமயமான விமானங்களில் அவன் சூரியனது தூதுவனாக வருவான். அவன் சாரதியாகிச் சூரியனின் பொன்மயமான நேமியைக் கீணோக்கிச் செலுத்துவான். அவன் வீதிகள், பாதைகள் என்பவற்றின் காவலன், விக்கினங்களை நீக்குபவன்; மந்தைகளின் காவலன். அக்றிணி, "ஒளிமய மானவன்” என்பது அவனுக்குரிய விருதுப்பெயராகும்.
விஷ்ணுவைப் பற்றிய தோத்திரப் பாடல்கள் வேதத்தில் மிகக் குறைவாகும். விஷ்ணுவின் மூன்று அடிகள் பற்றிச் சொல்லப் படுகின்றது. உலகளந்த பெருமாள் என்ற கோட்பாட்டிற்கு வேதகாலச் சிந்தனைகள் ஆதாரமானவை. விஷ்ணுவின் பாதங்கள் இரண்டு காட்சிப்புலனுக்கு அகப்பட்டவை. உயர்ந்த மூன்றாவது பாதம் கட்புலனுக்கு அப்பாலானது; அது பறவை களும் சென்றடைய முடியாத உயரத்தில் உள்ளது. அது விண்ண கத்தில் நிலையிட்ட கண்ணொளி போன்றது. மூன்று அடிகளாற் புவனத்தை நிரப்புவதால் உரு-காய என்றும் உரு-க்ரம என்றும் விஷ்ணுவைக் குறிப்பிடுவதுண்டு. விஷ்ணு தனது 90 குதிரைகளையும் அவற்றின் நான்கு பேர்களையும் சூழலும் நேமியால் இயக்குபவன் என்று வர்ணிக்கப்படுகின்றது. 360 நாட்களையும் நான்கு காலபருவங்களையும் கொண்டு வருஷக் கிரமத்தை இயக்கும் ஆற்றலை இது குறிப்பதாக அமைகின்றது.
அதிதி என்னும் தேவதை பாசத்தழைகளை நீக்குபவன். அதிதியின் புதல்வர்கள் ஆதித்தியர் (அதிதே புத்ராஹ்). ஒளித் தேவர் அறுவரைப் பற்றி இருக்கு வேதத்தின் இரண்டாவது மண்டலத்திலே சொல்லப்படுகின்றது. வருணன், மித்திரன், ஆர்யமன், பகன், தக்ஷன், அம்ஸ்(ன்) என்போர் அவர்கள். பத்தாவது மண்டலத்தில் ஏழு ஆதித்தியர்கள் பற்றியும் ஆதித்தியர் எண்மரைப் பற்றியுஞ் சொல்லப்படுகின்றது. சூரியனையும் மார்த் தாண்டனையும் முறையே ஏழாம், எட்டாம் ஆதித்தியர்களாகக் கொண்டனர்.
326

எழில் வடிவமாகிய உஷாவினைப் பற்றிய வர்ணனைகள் கவிநயம் மிக்கவை. இயற்கைக் காட்சிகளைப் பின்னணியாகக் கொண்டவை. உஷா கிழக்குத் திசையிலே ஒளிமயமான ஆடையோடும், அலங்காரக் கோலத்தோடும், நாட்டியப் பெண்ணின் உருவத்திலே தோன்றுவாள். உஷாவின் கோலம் கன்னிமைக் கோலமானது. அவள் புராதனமானவள்; ஆயினும் அவள் மீண்டும் மீண்டும் அவதரிப்பவள். உஷா சூரியனோடு நெருங்கிய தொடர்பு கொண்டவள்; சூரியனே அவளது காதலன். அவள் இராத்திரியின் சகோதரி, அவள் அக்கினியோடும் நெருங்கிய தொடர்புடையவள்.
இந்திரன், அக்கினி, சோமன் ஆகியோருக்குப் பின் மிகக் கூடுதலான தோத்திரப் பாடல்களை அஸ்வினி தேவர்களே பெற்றுள்ளனர். அவர்கள் இணைபிரியாதவர்கள். என்றுமே கூடியிருப்பவர்கள். அவர்கள் செல்லும் பாதைகள் பொன் மயமானவை. அவர்கள் ஒளியுடன் தொடர்புடையவர்கள். அவர்கள் தேனை மிகவும் விரும்புபவர்கள். அஸ்வினி தேவர் தேனைத் தங்கள் ரதத்திலே கொண்டு செல்வதோடு அதனை மனிதருக்கும், வண்டுகளுக்கும் உவந்து கொடுப்பர். அவர்கள் சோமபானத் தையும் மிகவும் விரும்புபவர்கள். உஷா அவர்களின் சகோதரி; சூர்யா அவர்களின் தேவி, அவளை அவர்கள் தங்கள் விமானத்தில் ஏற்றிச் செல்வர். துன்பங்களிலிருந்து மனிதரைக் காப்பாற்றுவதே அவர்களின் சிறப்பியல்பாகும். அவர்களைத் தேவலோகத்து மருத்துவராகவுங் கொள்வர்.
இடையுலகத் தேவர்
இருக்கு வேதத்திலுள்ள பாடல்களில் மிகக் கூடுதலானவை இந்திரனைப் பற்றியவை; அதில் இந்திரனைப் பற்றி 250 பாடல்கள் உள்ளன. இந்திரனைப் பற்றிய கதைகளும் கோட் பாடுகளும் மிகவும் புராதனமானவை. அவை ஆதியான இந்துஐரோப்பியர் சமுதாயத்தின் பண்பாட்டில் உற்பத்தியாகி இருந்தவை. இந்திரன் தேவர்களில் ஆற்றல்மிக்கவன்; தோற்றத்தில் மிகவும் பெரியவன். இந்திரன் பிரதானமான போர்க்கடவுள்; வச்சிரம், அம்பு, வில்லு என்பவற்றை ஏந்திய கோலமானவன். அவன் மகாரதன், அவனது பொன்மயமான இரட்டைச் சில்லுத் தேரினை இரண்டு குதிரைகள் இழுத்துச் செல்கின்றன.
இந்திரன் சோமபானத்தில் ஈடுபாடு கொண்டவன். ஏனைய தேவர்களைக் காட்டிலும் அவன் அதை அதிகம் விரும்புபவன். அதனால் சோமபா (சோமபாணம் பருகுபவன்) அவனுக்குச் சிறப்பாக உரிய பெயராகும். சிலவிடங்களில் அவனுடைய தகப்பன் தியெளஸ் என்று சொல்லப்படுகின்றது. வேறுசில இடங்களில் துவஷ்த்ரி என்னும் தேவனை இந்திரனின் பிதாவாகக் குறிப்பிட்டுள்ளனர். அக்கினி இந்திரனின் சகோதரன். மருத்துக் கள் இந்திரனின் நண்பர்கள்; அவனுக்கு உதவி புரிபவர்கள். அதனால் மருத்வன் என்னும் சிறப்புப் பெயரும் இந்திரனுக்குண்டு.
இந்திரன் விருத்திரனைத் தாக்கி, அவனால் அடைக்கப் பட்டுள்ள வெள்ளத்தை பெருகச் செய்கின்றமை அவனுடைய
இந்துக் கலைக்களஞ்சியம்

Page 373
சிறப்பான சாதனையாகப் பல பாடல்களிற் போற்றப்படுகின்றது. விருத்திரனை ஒரு பாம்பாக உருவகிப்பது வழமை. சோம பானத்தை அருந்தி, அதனால் மிகவும் உற்சாகங் கொண்டு, மருத்துக்களின் ஆதரவோடு இந்திரன் விருத்திரனை அடித்து அழிப்பான். அதன் விளைவாக நதிகள் பாய்கின்றன. இச்சாதனை புரிவதால் அப்ஸ"-ஜித் என்னும் சிறப்புப் பெயர் அவனுக் குரியதாகும். மந்தைகளை அடைத்து வைப்பதுபோல மலைகளில் வெள்ளத்தை விருத்திரன் தடுத்து வைத்திருப்பான். விருத்திரனை வீழ்த்துவதால் மலைகளில் அடைபட்டிருந்த வெள்ளம் பாய்கின்றது. பர்வதங்களில் இந்திரனுடைய போர்கள் நடைபெறுகின்றன. மழைமேகங்கள் தோத்திரப்பாடல்களிலே அரண்களாக உருவ கிக்கப் பெற்றுள்ளன. அவை இலையுதிர் காலத்தவை என்றும் 99 புரங்கள் என்றும் வர்ணிக்கப் படுகின்றன. புரங்களை அழிப்பதால் புரவித் என்றும் விருத்திரனைக் கொலை செய்வதால் விருத்திரகன் என்றும் இந்திரனை வர்ணிப்பர். இந்திரன் ஒளியினையும் சூரியோதயத் தையும் ஏற்படுத்துபவன். அவன் மின்னல் மழையோடு தொடர்புடையவன். அவன் விண்ணகத்திலே மின்னலை உருவாக்கி அதன் மூலம் நிலவுலகில் மழைபெய்யச் செய்பவன். ஒரு வகையில் அவன் மழைக்கடவுள்.
இந்திரன் அசுரர்களை அழிப்பவன்; அவன் போராற்றல் கொண்டவன். அவன் ஆரிய வர்ணத்தைக் காப்பவன்; தஸ்யுக்களை அடக்குபவன்; வழிபடுவோருக்கு அருள்புரிபவன். உஷாவின் விமானத்தை உடைத்தமை, சூரியனின் புரவிகளைத் தடுத்து நிறுத்தியமை என்பன இந்திரனின் பிரதாபச் செயல்களாகும். திரித ஆப்த்ய அபாம் நபாத், மாதரிஸ்வன் அஜஏகபாத் என்போர் அதிக முக்கியத்துவம் பெறுவதில்லை. உருத்திரன் வேதகாலத் தேவர்களிலே தனிச்சிறப்புடையவன். உருத்திரன் செம்மை நிறத்தோன்; விரிசடையோன்; தங்க ஆபரணங்களும், கழுத்துமாலையும் அணிந்தவன். அவன் மருத்துக்களின் பிதாவானவன். அவன் விண்ணகத்து வராகம்; அளவிலாத ஆற்றல் கொண்டவன்; மிகப் பெரியவன்; எல்லோருக்கும் மேலானவன்; அவன் புவனத்தின் பிதாவானவன் (புவனஸ்ய பிதரம்); ஈசானன்; மருந்து மூலிகைகளைக் கொண்டவன்; மன்னுயிர்களையும், விலங்குகளையும் நோயிலிருந்து காப்பாற்றுபவன்; வைத்தியநாதன். உருத்திரனை மிகுந்த பயபக்தியோடு வழிபட்டனர்.
புயலுடன் தொடர்புடைய தேவர்கள் மருத்துக்கள். அவர்கள் ஒரு பெருங் கணமாக இயங்குபவர்கள். மருத்துக்கள் பதினெண்மரைப் பற்றிப் பேசுவர். சில சமயங்களில் அவர்களை இருபத்தொருவராகவுங் கொள்வர். உருத்திரன், பிரீஷ்ணி ஆகியோர் மருத்துக்களின் பெற்றோராவர். சில சமயங்களில் அவர்கள் வாயுவின் மக்களாகவும் போற்றப்படுகின்றனர். மருத்துக்கள் எல்லோரும் ஒரே காலத்திற் பிறந்தவர்கள்; அவர்கள் ஒரே இடத்திலே தோன்றியவர்கள்; அவர்கள் வசிக்கும் இடமும் பொதுவானது. மருத்துக்கள் மின்னொளிரும் விமானங்களிற் பிரயாணம் செய்யும் வழக்கமுடையவர்கள். காற்றின் ஒசையும், இடியோசையும் அவர்களின் உரத்த சத்தங்களாம். கிரீடம், மாலை, கேயூரம், வீரக்கழல் என்பன அவர்களுக்குச் சிறப்பாக உரிய அணிகலன்களாகும். இந்திரனின் துணைவரென்ற நிலையில்
இந்துக் கலைக்களஞ்சியம்

அவர்கள் அவனுக்கு என்றும் ஆதரவு புரிகின்றனர். அவர்களால் மழை ஒழுங்காகப் பெய்கின்றதென்று கருதப்பட்டது.
வாயு-வாத என்னும் இணைத் தேவரைப் பற்றியும் வேதப்பாடல்கள் குறிப்பிடுகின்றன. வாயு காற்றின் உருவகமான தேவனையும் வாத என்பது இயற்கையின் அம்சமான காற்றினையும் குறிப்பதாகக் கொள்பவர்.
பூலோகத் தேவர்
இருக்குவேத காலத்தவர் தங்கள் வழிபாட்டு முறையில் அக்கிணிதேவனை தேவர்களிற் பிரதானமானவராகக் கொண்டனர். வேள்வித் தீயின் உருவகமான தேவனே அக்கினி பகவான். அக்கிணிதேவனின் பின்புறத் தோற்றம் வெண்ணெய் போன்றது. அவனது தலைமயிர் தீச்சுவாலை போன்றது. யாகத்தில் இடப்படும் படையல்களை அக்கினி நாவினாற் சுவைப்பான். நெய்யும், வெண்ணெய்யும் அக்கினி விரும்பும் உணவுகளாகும். நாள்தோறும் அவனுக்கு மூன்று முறை நிவேதனம் வழங்கப்படும். வேள்வியிலே படைக்கும் உணவுப் பொருட்களை அக்கிணிதேவனே தேவர் பிறருக்கு எடுத்துச் செல்வான். இரவும் பகலும் அக்கினி பிரகாசத்துடன் விளங்குவான். தூமகேது (புகைக் கொடியோன்) என்பது அவனது சிறப்புப் பெயராகும். அவனிடமிருந்து கிளரும் நறும்புகை விண்ணைத் தாங்கி நிற்கின்றது. அவன் தனது விமானத்திலே தேவர்களை யாகத்திற்கு அழைத்து வருவான். அக்கிணிதேவன் தியாவா, பிருதுவீ என்போரின் புதல்வன்.
அக்கிணிதேவரின் தூதன்; அவர்களுக்கு அவிப்பொருள்களை எடுத்துச் செல்வதால் அவனுக்கு ஹவிய-வாஹன என்று பேர். அவன் தேவர்களின் புரோகிதன், அவனை அத்வர்யு என்றும் பிரமன் என்றும் வர்ணிப்பர். அவன் எங்கும் உள்ளவன்; எல்லாம் தெரிந்தவன். அவன் உருவாகியுள்ள எல்லாவற்றையும் அறிந்தவன்; அதனால் அவனுக்கு ஜாத-வேதஸ் என்னும் பேருண்டு.
சோமன் என்போன் பூலோகத் தேவரில் ஒருவன். அவனைப் பற்றிய சிந்தனைகளும், வர்ணனைகளும் சோமபாணம் செய்யும் மூலிகை, சோமயாகம் என்பவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இருக்கு வேதத்திலுள்ள ஒன்பதாம் மண்டலத்துப் பாடல்கள் அனைத்தும் சோமனைப் பற்றிவை, அவனது ஆயுதமான வில், விமானம் என்பன பாடல்களில் வர்ணிக்கப் படுகின்றன. சோமபாணம் தயாரிக்கும் முறைகள் சோமனைப் பற்றிய பாடல்களில் விரிவாக விளக்கப்படுகின்றன.
பிருதுவீ பற்றிய குறிப்புகள் பெரும்பாலும் தியெளஸ், பிருதுவீ ஆகியோரை இணைத்துப் போற்றும் பாடல்களில் வருகின்றது. பிருதுவீயைத் தனியாகப் போற்றும் பாடல் ஒன்று மட்டுமே இருக்கு வேதத்தில் உண்டு. பிரிதுவீ பற்றிய கருத்துகள் பூலோகத்தின் இயல்புகளின் உருவகமானவை.
இருக்கு வேதம் பல தெய்வங்களைக் கூறுகின்றனவாயினும் ஒரு தெய்வத்தை வழிபடும் வேளையில் அத்தெய் வத்தின் மீது
உயரிய பண்புகளை எல்லாம் ஏற்றி ஒப்புயர்வற்ற ஒரே தெய்வமோ
327

Page 374
என்று நினைக்கும் வண்ணம் உயர் நிலைக்கு இட்டுச் சென்று அத் தெய்வத்திடம் தான் விரும்பும் பொருளை யாசிப்பதைக் காண்கிறோம். பிறிதொரு தெய்வத்தை வழிபடும் போதும் இம்முறைமை பின்பற்றப்படுகின்றது. ஒரே கடவுட் கொள் கையின் தோற்ற நிலைக்கு இம்முறைமை இட்டுச் செல்கின்றது.
தத்துவக் கருத்துக்கள் நிரம்பிய பாடல்களைப் பத்தாவது
மண்டலத்திற் காணலாம். இந்திய தத்துவத்தின் தோற்ற நிலையை இங்கு அவதானிக்கலாம்.
இருக்கு வேதத்தின் பிராமணங்கள் ஐதரேய பிராமணம், கெளஷிதகி பிராமணம் என்பனவாம். கெளஷதகி பிராமணத் திற்குச் சாங்காயன பிராமணம் என்றும் பேர்.
பஞ்சிகைக்கு ஐந்து அத்தியாயமுடைய எட்டுப் பஞ்சிகை கொண்ட ஐதரேய பிராமணம் சோம யாகம், அக்கினி ஹோத்திரம், இராஜசூயம் பற்றிக் கூறுகின்றது.
கெளவீதகி பிராமணம் முதலாறு அத்தியாயத்தில் அக்கினிசயனம், அக்கினிஷ்டோமம், தர்ச பூரண மாசம், சாதுர்மாஸ்யம் முதலியனவற்றையும் தொடரும் 24 அத்தியாயத்தில் சோமயாகம் பற்றியும் கூறும்.
வேள்விக்கு முக்கியத்துவம் அளிக்கும் பிராமணங்களிலே தேவர்கள் நிலை பெருமை குன்றிக் காணப்படும். உருத்திரனும் விஷ்ணுவும் பிராமணங்களிலே பெருந்தெய்வ நிலையினை அடைகின்றனர். பிராஜாபதியும் இங்கு முக்கியத்துவம் பெறுகின்றார்.
ஐதரேய பிராமணத்துள் அடங்கியது ஐதரேய ஆரணியகம்; ஐதரேய ஆரணியகத்துள் அடங்கியது ஐதரேய உபநிடதம். இதே போன்று கெளஷrதகி பிராமணத்துட் கெளSதகி ஆரணியகமும் அவ்வாரணியகத்துள் கெளவுtதகி உபநிடதமும் அடங்குவன. (பொ.பூ & சி.ப)
இருசமய விளக்கம்
சைவ வைணவ சமயக் கொள்கைகளை ஆகமவல்லி, ஆரணவல்லி என்ற பெண்களிருவர் கூற்றிலே வைத்து விளக்கி முடிவிலே திருமாலே பரம்பொருள் என்பதை நிலைநாட்ட எழுந்தது இருசமய விளக்கம்.
இருசமய விளக்கம் பாடியவர் அரிதாசர் என்பவர். கிருஷ்ணன் எனும் இயற்பெயருடன் களப்பாளர் மரபிலே தொண்டை நாட்டு அரிவாசபுரத்திற் (அரிதையிற்) பிறந்து அங்குள்ள திருமாலுக்குப் பல கைங்கரியமும் புரிந்து பரமபாகவதராகி வாழ்ந்த அரிதாசர், கிருஷ்ணதேவராயரின் (1509 - 1529) அமைச்சர் வடமலையாரின் சகோதரராவர்.
இரு சமய விளக்கம் பிங்கள வருடம் (1857) பதிப்பிக்கப்பட்டது.
(பொ.பூ)
328

இருவினையொப்பு
ஆன்மா கருவிகரணங்களைப் பெற்று அவற்றால் வரும் சிற்றறிவு சிறு செயல்களால் வினைகளைச் செய்தும், வினைப் பயனை அனுபவித்தும் பிறந்திறந்து வரும்பொழுது, சத்துவ குண சம்பந்தம் முதலியவற்றாலும், திருவருளின் துணையினாலும் சரியை கிரியா யோகங்களைச் செய்ய நேரும். அப்படிச் செய்து முதிர்ச்சி பெற அத்தவ விசேடத்தால் இருவினையொப்பு வந்தெய்தும்.
நல்வினை தீவினைகளிலும், அவற்றின் விளைவாகிய புண்ணிய பாவங்களிலும், இவற்றின் பயனாகிய இன்ப துன்பங்களிலும் ஒன்றில் விருப்பும் ஒன்றில் வெறுப்புமின்றி ஆன்ம அறிவின் கண் ஒப்ப வெறுப்பு நிகழ்தல் இருவினையொப்பு.
இதனால் மலபரிபாகமும் சத்திநிபாதமும் வந்தெய்தும். ஆன்மா இறைவன் திருவடியைத் தாரகமாகத் தலைப்படும்.
(பொ.யூ)
இரேவணசித்தர்
சிதம்பரரேவணசித்தர் என்றும் அழைக்கப் பெறுவர்;
பதினாறாம் நூற்றாண்டிலே தமிழகத்திலே வாழ்ந்தவர்; அகராதி நிகண்டினை கி. பி. 1594 இலே இயற்றியவர்.
திருமேற்றளிப்புராணம், திருவலஞ்சுழிப் புராணம், பட்டீச்சுரப் புராணம் எனும் புராணங்களை இயற்றியவர்; இப்புராணங்கள் மறைந்து போன நூல்கள்; சிவஞான தீபம் என்றொரு நூலும் இயற்றியவர் என்பர். (பொ.பூ)
இரேவணசித்தர்
கன்னட இலிங்காயத நூல்களில் அடிக்கடி கூறப்படும் ஐந்து ஆசாரியர்களில் ஒருவர் இரேவணர் அல்லது இரேணுகர் அல்லது இரேவணசித்தர். இவர் சீடர் சொன்னாலிகை சித்தராமர் பசவேசுவரரோடு பணி புரிந்தவராதலால் இவர் காலம்
பன்னிரண்டாம் நூற்றாண்டாகும்.
இவர் வரலாறு கன்னடத்தில் ஹரீஸ்வரருக்குப் பின் மல்லண்ணர் ரேவண சித்தேஸ்வரகாவியத்திலும், சதுர்முக பொம்மராசர் ரேவணசித்தேஸ்வர புராணத்திலும் கூறப்படுகின்றது. (பொ.பூ)
இலக்கணமுத்தையா (1861 - 1912)
தமிழ்நாடு கோவில்பட்டி பொம்மையபுரம் எனுமூரினர்; சோழவந்தான் கிண்ணிமடம் சிவப் பிரகாச சுவாமிகளிடம் இலக்கணலக்கியங் கற்றவர்.
சுங்குரும்பை அந்தாதி, சுங்குரும்பை பதிற்றுப் பத்தந்தாதி பாடியவர். (பொ. பூ)
இந்துக் கலைக்களஞ்சியம்

Page 375
இலக்குமண பாரதியார் (1769 - 1859)
கொங்குநாடு மடவளாகம் எனுமூரினர்; தேவராஜ பண்டிதர் எனும் சிவப்பிராமணரின் புதல்வர், மடவளாகத்திலும் ஊதியூரிலும் வாழ்ந்தவர்.
சிவமலைக் குறவஞ்சி, மடவளாகத்துப் புராணம் என்பன வற்றைப் பாடியவர்; தி. அ. முத்துசாமிக்கோனார் சிவமலைக்குறவஞ்சியை 1918 இல் பதிப்பித்தார். (பொ.பூ)
இலக்குமணப்பிள்ளை,தி. (1864 -1950)
திருவனந்தபுரத்திற் பிறந்தவர்; திரவியம் பிள்ளையின் புதல்வர்; கலைமாணிப் பட்டம் பெற்றவர்; தலைமைப் பொக்கிஷ அதிகாரியாக உயர்ந்து ஒய்வு பெற்றவர்; முத்தமிழ் ஆர்வலர்; தமிழிசை இயக்கத்தில் ஈடுபட்டவர்.
இவர் கீர்த்தனைகள் சிலவற்றை அண்ணாமலைப் பல்கலைக் கழகம் பதிப்பித்துள்ளது; ஆலயத்திறப்பு, ஞானானந்தன் அடிமாலை, புத்தர் பெருமான் சிந்து முதலியவற்றைப் பாடியவர்; நாடகங்களும் இயற்றியவர். (பொ.பூ)
இலக்குமி
8சுவரியத்தைக் குறிப்பிடுவதாக இருக்கு வேதத்தில் இடம் பெற்ற லசுஷ்மி, அதர்வ வேதத்திற் பெண்ணுருவம் பெற்று, பிராமணங்களிலே தெய்வமாகக் காணப்படுகிறாள். பூரீஸ9க்தம் திருமகளின் குணங்களைக் கூறுகின்றது.
இலக்குமி இராமாயணத்திலே தாமரைப்பூவினைக் கையிலே தாங்கிக் கொண்டு கடல் நுரையிலிருந்து தோன்றுகிறாள்; அக்கடல் பாற்கடல் என்ற கதையுமுண்டு. பிருகுமுனிவரின் மகளாகப் பிறந்த கதையும் உண்டு. சதபத பிராமணத்திற் பிரஜாபதியிலிருந்து தோன்றியவளாகவும் கூறப்படுகின்றது.
சதபத பிராமணத்தில் ஆதித்தரின் இருமனைவியராக லக்ஷ்மி குறிப்பிடப்படுவர்; பிருகுவின் மகளாகத் தோன்றித் தவஞ் செய்து விஷ்ணுவை மணாளனாக அடைந்த கதையமுண்டு.
திருவோடு சேர்ந்த மால், திருமாலாகப் போற்றப்படுதல் மரபு. லக்ஷமி நாராயணன் எனும் வடமொழி மரபும் இதனையே சுட்டுகின்றது. விஷ்ணு அவதாரம் எடுத்ததுபோல லக்ஷமியும் சீதையாகவும் ருக்மிணியாகவும் அவதாரம் எடுத்துள்ளாள்.
பூரீ என்ற பதமும் திரு என்ற சொல்லும் ஒரே பொருளின; ஐசுவரியத்தைக் குறித்து நிற்பன. இருக்கிலும் லக்ஷமி ஐசுவரியத் தைச் சுட்டி நிற்பது மனங்கொளத்தக்கது. இதனால் லசுஷ்மி செல்வத்திற்குத் தெய்வமாகப் பொதுவாகக் கருதப்படுவாள். ஆயினும் இன்று மகாலசுஷ்மிக்கு வழங்கும் பெயர்களை நோக்கையில் அவள் பல்வேறு காரியங்களுக்கும் கருத்தாவாகக் கருதப்படுதல் தெளிவாகும்.
இந்துக் கலைக்களஞ்சியம்

தனலக்ஷமி, தானியலசுஷ்மி, சந்தானலக்ஷமி, செளபாக்கிய லசுஷ்மி, பாக்கியலக்ஷமி, வித்தியாலசுஷ்மி, ஞானலக்ஷமி, தைரிய லசுஷ்மி, வீரலக்ஷமி, கீர்த்திலசுஷ்மி, கிருகலசுஷ்மி, வாணிஜயலக்ஷ்மி, ராஜ்யலக்ஷமி, சுதந்திரலசுஷ்மி, சுவர்க்க லக்ஷ்மி, கஜலக்ஷ்மி என் றெல்லாம் மகாலசுஷ்மி வழங்கப்படுகின்றாள். முற்கிளர்ந்த பெயர் களிலே எட்டினை வைத்து அஷ்டலசுஷ்மி என்று கூறும் மரபுண்டு.
கஜலக்ஷ்மி தோற்றம் ஒன்று கலித்தொகைப் பாடலிலே இடம் பெறுவது ஈண்டு குறிப்பிடத்தக்கது (44.1-7).
துர்க்காலஷ்மி, லக்ஷமிதுர்க்கை, அஷ்டாதச புஜ பூரீ மகா லக்ஷமி துர்க்காதேவி எனும் வழக்குகளிலே ரெளத்திர பாவமும் சாந்த பாவமும் உணர்த்தும் வெற்றியும் பொருளும் இணைந்த தன்மைகளைக் காணலாம். தாந்திரிகர்களின் சண்டிகா தேவியிலே துர்க்கை, லக்ஷ்மி, சரஸ்வதி என்போர் இணைந்து காணப்படுவர்.
நவராத்திரி விரதத்தின்போது முதல் மூன்று நாள் துர்க்கைக்கும் அடுத்த மூன்று நாள் லக்ஷ்மிக்கும் கடைசி மூன்று நாள் சரஸ்வதிக்கும் என வைத்து வழிபடும் முறையிலே மகாசக்தியின் மூன்று நிலைகளைக் காண்கிறோம்.
வைணவரிடையே லசுஷ்மிக்கு மிகவும் முக்கியமான இடமுண்டு. பெரிய பிராட்டியார், பெருந்தேவித் தாயார் என்று அவரிடையே லசுஷ்மி பேர் பெறுவாள். பூரீ வைஷ்ணவம் என்பது பூரீ (லக்ஷமி) சம்பந்தமுடைய வைணவம் என்ற பொருளுடையது. இவர் சேர்ப்பித்தால் ஒழிய விஷ்ணு அடியார்களுக்கு அருளுவ தில்லை என்று வைணவர் கருதுவர். லசுஷ்மி திருமாலிடம் பூரஷகாரமாக நிற்பதாக வைணவதத்துவம் கூறும். லக்ஷமியைத் தொழுதுவிட்டே விஷ்ணுவைத் தொழுவது வைணவர் மரபு.
திருவரங்கத்துபூநீரங்கநாயகியும் திருவேங்கடத்து அலர்மேல் மங்கையும் வைணவரிடையே பெருமதிப்புப் பெற்ற லக்ஷ்மியாம்.
ஆழ்வார்களும் ஆசாரியர்களும் வைணவர்களும் பெரிய பிராட்டியாரைத் துதித்து அதிகம் பாடியுள்ளனர். நாலாயிரத் திவ்விய பிரபந்தத் திருப்பாசுரங்கள் ஆழ்வார்கள் பெரிய பிராட்டியார் மீது செலுத்திய பத்தியைத் தெளிவாக உணர்த்துவன. ஆளவந்தாரின் சதுஸ்லோகி, கூரத்தாழ்வாரின் பூரீஸ்தவம், பட்டரின் பூரீ குணரத்னகோசம், வேதாந்த தேசிகரின் பூரீஸ்துதி போன்றவை ஆசாரியர்கள் பூரீதேவிக்கு அளித்த முக்கியத் துவத்தை எடுத்துக் காட்டுவன. பிரபந்த வித்துவான் கொ. பள்ளிகொண்டான்பிள்ளை (யதிராஜதாசர்) போன்றோர் இலட்சுமி மீது தமிழிலே பல பிரபந்தங்களைப் பாடியுள்ளனர்.
இலக்குமி தோத்திரங்கள் பல தமிழிலே உள்ளன. ஆறுமுகநாவலர் 1868 இலே இரண்டாம் பதிப்பாக விநாயகர் கவசம் முதலியனவற்றுடன் இலக்குமி தோத்திரம் ஒன்றினைப் பதிப்பித்துள்ளார். வீரவைணவர் அல்லாதோர் திருமகளை, செல்வத்தின் தெய்வத்தை, பாடிப் பரவிய பாடல்களும் பிரபந்தங்களும் பல தமிழிலேயுள்ளன. (பொ.யூ.)
329

Page 376
இலட்சுமி கணபதி
விநாயகப் பெருமானின் திருக்கோலங்களில் இலட்சுமி கணபதி ஒன்றாகும். இத்திருக் கோலத்திலே கிளி, மாதுளம்பழம், கலசம், அங்குசம், பாசம், கற்பகக் கொடி, கடகம், வரதம் என்பனவற்றை எண் திருக்கரங்களிலே தாங்கியிருக்கிறார். அமுதப் பிரவாகம் போன்ற வெண்மை நிறத்தோடு நீலத்தாமரைப்பூவை ஏந்திய இரு பெருந்தேவிமார்களுடன் திகழும் திருக்கோலமிது. (பொ.யூ.)
656o1bệD1Jä5 &35T1 (Bñ
செங்கற்பட்டு மாவட்டத்திலே திருவிற்கோலத்திலிருந்து தென்மேற்கே இரு மைல் தொலைவிலுள்ள திருத்தலமிது.
இங்கு கோயில் கொண்ட சிவபிரானுக்குச் சந்திரசேகரர் என்றும் அம்மைக்குக் கோடேந்து முலையம்மை என்றும் பேர். தீர்த்தம் சந்திரதீர்த்தம். அரம்பாதியர் பூசித்த தலம், அரம்பையங் கோட்டூர் என்றிருந்து இலம்பையங் கோட்டுராகத் திரிந்தது என்பர்.
திருஞான சம்பந்த மூர்த்தி சுவாமிகளின் திருப்பதிகம் ஒன்று இத்திருத்தலத்திற்குண்டு. (176). (பொ.பூ.)
Saó)Í8 14yTaWúb
சங்கத மொழியிற் சுட்டப் பெறும் பதினெண் மகா
புராணங்களில் இலிங்கபுராணம் ஒன்றாகும். அது அவற்றுள்
இடம் பெறும் பத்துச் சிவபுராணங்களில் ஒன்றாகும்.
பூர்வ பாகத்தில் 108 அத்தியாயமும் உத்தர பாகத்தில் 55 அத்தியாயமுமாக 163 அத்தியாயமுடையதாக இலிங்கபுராணம் பதிப்பிக்கப்பட்டுள்ளது. இலிங்கபுராணப் பதிப்புகளிலே சுமார் 9000 பாடல்கள் இடம் பெறுகின்றன.
இலிங்க புராணம் அதற்குரிய மூல வடிவத்திலே கிடைக்க வில்லை என்றும் திருத்தப் பெற்றதும் அதிகரித்ததுமான வடிவத்தி லேயே கிடைக்கின்றது என்றும் கூறுவர். அதன் உத்தரபாகம் பிற் பட்ட சேர்க்கை என்றும், வேறு புராணங்களில் இருந்து பெறப் பட்ட பாடல்கள் பல அதனுள் இடம் பெறுகின்றன என்றும் கூறுவர்.
இலிங்கபுராணம் கி. பி. ஏழாம் நூற்றாண்டிற்கும் பத்தாம் நூற்றாண்டிற்கும் இடைப்பட்ட காலத்தில் இயற்றப் பெற்றதாக ஆய்வாளர் கூறுவர்.
கோயில், கோயில் வழிபாடு, தெய்வ பிரதிட்டையும் வழிபாடும், இலிங்கப் பிரதிட்டையும் வழிபாடும், சிவ வழிபாட்டு விவரங்கள், சிவதோத்திரங்கள், இரு சிவ சகஸ்ரநாமப் பட்டியல்கள், இருவேறுபட்ட சிவமூர்த்த பட்டியல்கள், சிவமகிமை உணர்த்தும் நிகழ்ச்சிகள் என்பனவற்றிற்கு முக்கியத்துவம் அளிக்கும் இலிங்கபுராணத்திலே பஞ்சலகூடிணம், யுக தர்மங்கள, தர்மசாத்திரப் பொருள்கள், தத்துவங்கள் (அத்வைத வேதாந்தம், சாங்கியம் யோகம், பாசுபதம்) என்பனவும் இடம் பெறுகின்றன.
330

நாரதர் இசையில் தேர்ச்சி பெற்றதும் விவரிக்கப்படுகின்றது. வானவியல், சோதிடம் பற்றி ஒன்பது அத்தியாயங்கள் கூறுகின்றன. மரணத்தினை உணர்த்தும் நிமித்தங்கள் ஒரு அத்தியாயத்திலே விரிவாகக் கூறப்படுவன.
இலிங்கபுராணம் பம்பாயில் 1858 இல் முதன்முதலாக அச்சிடப் பெற்றது என்பர். அண்மையில், 1960 இலே, கல்கத்தாவிலே ஒரு புதிய பதிப்பு வெளிவந்துள்ளது.
இந்தி, குஜராத்தி, தெலுங்கு, கன்னடம், ஆங்கிலம், தமிழ் எனும் மொழிகளிலும் இலிங்க புராணம் மொழி பெயர்க்கப் பட்டுள்ளது.
அதிவீரராம பாண்டியன் (1564 - 1604) தமிழிலே மொழி பெயர்த்த இலிங்க புராணம் சென்னையிலே 1876 இலே அச்சிடப் பெற்றுள்ளது. அதன் ஆசிரியர் குலசேகர பாண்டியன் என்று பாயிரம் கூறும். அதனுள் உத்தரபாகத்துள் மாற்றங்கள் சில காணப்படுகின்றன.
66)&6)
பல்வேறு கருத்து மோதல்களுக்கு இடமான விடயமாக இலிங்க வழிபாட்டின் தோற்றம் காணப்படுகின்றது. இலிங்கவழிபாடு, ஆண் உறுப்பு வழிபாடாக ஆரம்பித்தது என்பர் மேனாட்டார்; ஆதிவாசிகளின் வழிபாட்டு முறை என்பர் வேறுசிலர்; கந்து வழிபாடு என்பர் சிலர்; யூபஸ்தம்ப வழிபாடு தோற்றுவித்தது என்றார் சிலர்; இலிங்கம் குறியீடு என்பர் சிலர்.
இருக்கு வேதத்திற் சிசுஷ்ணதேவ இருமுறை இடம் பெறுகின்றது. சாயனர் சிக்ஷண என்ற உறுப்பினால் விளையாடு பவர் சிக்ஷணதேவர் என்று உரை எழுதினார். சிக்ஷணம், பால் அடையாள உறுப்பு என்று சங்கத அகராதி கூறும். பேராசிரியர் மக்டொனால்ட் இருக்கு வேதத்தில் வரும் சிக்ஷணதேவ என்ற பதத்திற்குப் பிறவிக்குக் காரணமான ஆண் உறுப்பு என விளக்கம் தந்து அதன் மூலம் இலிங்கவழிபாடு ஆண்உறுப்பு வழிபாடு என்று கருதினார். இலிங்கத்தின் வடிவம் ஓரளவுக்கு ஆணுறுப்புப் போன்று அமைதல் இக்கருத்தினை மேலும் ஆதரிப்பாகக் கருதப்பட்டது. ஆனால் ஆண் உறுப்பை மட்டும் குறிப்பது இரு உறுப்புகளின் இணைப்பைச் சுட்டுமா என்பதை நோக்காது விட்டு விட்டனர். அகழும் தடி அல்லது பண்டைய ஏரினைச் சுட்டிய ஒஸ்ரிக் மொழிச் சொல்லே இலிங்கம் என்ற சொல்லுக்கு மூலம் என்பார் சிலர் என்பதும் இங்கு கவனிக்கத்தக்கது.
ஆதிவாசி வழிபாட்டு முறை என்பவர் சிவவழிபாட்டின் பண்டைய வடிவம்மான ஆண்குறி வழிபாடு என்று கருதினர்.
கந்து, கந்தம் என்ற சொற்கள் பழந்தமிழ் இலக்கியங்களிலே இடம் பெறுகின்றன. யானையைக் கட்டிய தறி அல்லது குற்றி, கந்து என வழங்கப்பட்டுள்ளது. (நற். 62.2, மதுரைக். 383) “மரையேறு சொறிந்த மாத்தாள் கந்து ஆதீண்டு குற்றி என்று கருத முடியும் (அகநா. 287, 4-6). கந்து, கந்தம் வழிபடப் பெற்ற பொருளாகவும் காணப்படுகின்றது (பட்டி, 246 - 249, புறநா.
இந்துக் கலைக்களஞ்சியம்

Page 377
5212-13, அகநா. 307.11-12). இக்கந்து (கந்தம்) பொதியிலில் அமைந்திருக்கின்றது ‘கந்துடைநிலை திருமுருகாற்றுப்படையில் இடம் பெறுகின்றது (226), கந்திலே கடவுள் உறைந்த செய்தி சில பாடல்களில் உண்டு (புறநா. 52, 12-13, அநா. 307.11-12).
தெய்வீகம் உடையதாக வழிபடப் பெற்ற மரம் அழியும்போது, அதன் அடிமுதல் நிலைத்திருக்கையில், அதனைச் சுற்றிக் கட்டித் தொடர்ந்து வழிபட்டனர். மரத்தின் தெய்வம் அதில் நிலைத் திருப்பதாகக் கருதினர். அவ்வடிமுதல் கந்து என்றும் அதன் வழிபாடு 'கந்துடை நிலை என்றும் வழங்கப்பட்டன என்பர் சிலர். கந்து அழிந்தபோது கற்றுாண் அவ்விடத்தில் நாட்டப்பட்டு வழி படப்பட்டது. அப்போது அது கந்தழி எனப்பட்டதாம். கந்து அழிந்த இடத்தில் வைக்கப்பட்டது கந்தழி என்றார் இவர். இக்கந்தழி சிவலிங்க வடிவம் பெற்றுத் தொடர்ந்து கந்தழியாக வழங்கியதாம்.
அதர்வவேத சம்கிதையில் யூபஸ்தம்பத்தினைப் போற்றும் பாசுரம் உண்டு. இப்பாசுரம் சிவலிங்க வழிபாட்டுக்குக் காரணமாய் அமைய, யூபஸ்தம்பம் சிவலிங்கத்திற்கு இடம் விட்டு ஒதுங்கியது என்பர் சிலர். யூபஸ்தம்பத்தைப் பயன்படுத்தியவர் ஆரியர் என்பர். தாஸ்யுஸ் (Dasyus) என்று அவர்கள் மதித்த வர்கள் இலிங்க வழிபாட்டினராயின், இரண்டினையும் இணைத்து நோக்குதல் பொருந்துமோ என்பது சிந்திக்க வேண்டியது.
இலிங்கத்தினைக் குறியீடு என்பவர்கள் சிவபெருமானைக் குறிப்பதாக இலிங்கம் அமைந்தது என்பர். இறைவனின் அளவிறந்த ஆற்றலைச் சுட்டுவதாக லிங்கத்தினைக் கருதிய வர்கள் கந்தழியும் அப் பண்பினையே சுட்டுவதாகக் கருதினர். இலிங்கபுராணம், வாயுபுராணம், கூர்மபுராணம்
முதலியன குறியீட்டுக் கொள்கையை ஆதரிப்பன.
சிவபெருமானுக்கு அருவம், அருவுருவம், உருவம் என மூன்று வடிவங்கள் கூறப்படுவன. இவை முறையே நிஷ்களம், சகளநிஷ் களம், சகளம் எனச் சாத்திரங்கள் கூறுவன. இவற்றிலே அருவுருவமான வடிவம் சதாசிவம் என்று வழங்கப்படும். இதுவே சிவலிங்க வடிவமாகும். இதனைச் சோதி சொரூபம் என்றும் கூறுவர். கந்தழி இப்பொருள் தருவதாகவும் சிலர் கூறுவர். லிங் - ஒடுக்கத்தையும், கம் - தோற்றத்தையும் உணர்த்துவதால் இலிங்கவடிவம் ஒடுக்கத்தையும் தோற்றத்தையும் சுட்டுமென்பர் சிலர். லிங்க - சித்திரித்தல் எனக் கொண்டு படைத்தல் முதலியவற்றால் உலகைச் சித்திரிப்பதாகிய பரமேசுவரப் பிரபாவம் லிங்கம் என்றும் கூறுவர்.
இலிங்கம் என்ற பொருள் பண்டைக் காலத்திலேயே காணப்படுகின்றது. சிந்து வெளியிலே சிவலிங்கங்கள், யோக நிலையிலுள்ள மும்முகவடிவம், எருது வடிவங்கள் முதலியன கண்டெடுக்கப்பட்டுள்ளன. ஆனால் அதைக் குறிக்கும் சொல் தமிழிலே எதுவென்று துணிய முடியவில்லை. கந்தழி தான் அச் சொல் என்பார் கூற்று ஆராயத்தக்கது.
சிவம் அல்லது சிவன் என்ற சொல்லால் எதனை உணர்ந்து கொள்கிறோமோ அந்தப் பொருள் பண்டைய தமிழர் காலத்திலும் இருந்தது. ஆனால் அவர்கள் அந்தப் பொருளைச் சிவம் என்ற
இந்துக் கலைக்களஞ்சியம்

சொல்லாற் குறிப்பிட்டுக் கூறினார்கள் என்று சொல்ல முடிய வில்லை. பொதுச் சொற்களும் உருவுடைக் கடவுளை உணர்த்தும் சொற்களும் பண்டைய தமிழ் இலக்கியத்திலே சிவபிரானைக் குறித்துள்ளன. பேரெயில் முறுவலார், உருத்திரன் கண்ணனார் முதலிய பெயர்கள் பண்டைய புலவர் பட்டியலிலே காணப்படுகின்றன.
சிவலிங்கத்திலே அடிப்பகுதி பீடம் அல்லது ஆவுடை என வழங்கப்படும். அதனுள் கீழ் நோக்கி அமையும் உறுப்பு கோமுகி எனப்படும். ஆவுடையின் நடுவிலே நீண்டு விளங்கும் உறுப்பு லிங்கமாகும். இதன் அடிப்பாகம் பிரமபாகம் என்றும் மத்தியபாகம் விஷ்ணுபாகம் என்றும் மேற்பாகம் சிவபாகம் என்றும் கூறப்படுவன. (பொ.யூ.)
இலிங்காயதம்
இலிங்காயதமதம், வீரசைவம் என்றும் சக்தி விசிஷ்டாத் வைதம் என்றும் வழங்கப் பெறும். இது சைவசமயப் பிரிவுகளில் ஒன்றாகும்.
வீரசைவர் இலிங்கதாரணம் உடையவர்களாதலால் இலிங்காயதர்கள் எனப்படுவர். அவர்கள் இலிங்கத்தைக் கழுத்திலே பூண்பவர்கள் கையிலே வைத்துப் பூசிப்பவர்கள்; இஷ்ட லிங்கத்தை அன்றி வேறொன்றையும் வழிபட வேண்டுவதில்லை என்னும் கொள்கையுடையவர்; இலிங்க தாரணம் செய்யாதவர்களிடம் உணவு முதலியன உட்கொள்ளார்; இலிங்க தாரணம் செய்தவர்களிடம் சாதி குலம் முதலிய வேற்றுமை பாராட்டமாட்டார்கள்.
வீரசைவத்திலே முக்கிய இடம் பெறும் தீகூைடியின் போது சங்கமக் குரு வழங்கும் இஷ்டலிங்கத்தை அன்றி ஸ்தாவர லிங்கத்தைக் கூட வணங்காத தீவிரம் வீரசைவரிடமுண்டு. விக்கிரகவழிபாட்டினையும் பலதெய்வ வணக்கத்தையும் கண்டிப்ப தோடு கோயில் வழிபாட்டையும் அவர்கள் ஆதிரிப்பதில்லை. ஒவ்வொரு இலிங்காயதரும் ஏதோவொரு வீரசைவ மடத்தைச் சேர்ந்தவர்களாகவே இருப்பார்கள்.
சிவபிரானின் ஐந்து முகங்களிலிருந்து தோன்றிய ஐந்து ஆசாரியர்கள் இலிங்காயத மதத்தை நிறுவியவர்கள் என்றும் ஐந்து குரவர்களும் ஐந்து சிவலிங்கங்களிலிருந்து தோன்றி யவர்கள் என்றும் வீரசைவமரபு கூறுகின்றது.
ரேணுகாசார்யர் (ரேவணாராத்தியர், ரேவணசித்தர்) கொள்ளிப்பாகை சோமேஸ்வரலிங்கத்திலிருந்தும், தாருகாசாரியர் (மருளாராத்தியர், மருளசித்தர்) வட க்ஷேத்திரசித்தேஸ்வர லிங்கத்திலிருந்தும், ஏகோராமராத்தியர் (சங்குகன்னர்) திராட்சாராமத்து இராமலிங்கத்திலிருந்தும், விஸ்வாராத்தியர் (விஸ்வகர்னர்) காசிவிசுவேஸ்வரலிங்கத்திலிருந்தும், பண்டிதாராத்தியர் பூரீசைலம் மல்லிகார்ஜுனலிங்கத்திலிருந்தும் தோன்றியதாகவும் அவர்கள் ரம்பாபுரி, உஜ்ஜயினி, கேதாரம், காசி, பருப்பதம் எனுமிடங்களிலே ஐந்து மடங்களை நிறுவியதாகவும் இலிங்காயதத்தின் தோற்றம் கூறப்படுகின்றது.
331

Page 378
கி.பி. பன்னிரண்டாம் நூற்றாண்டில் இலிங்காயதம் கர்நாடக தேசத்தில் மறுமலர்ச்சி கண்டது. பசவேசர் தலைமையிற் பிரபுதேவர், சென்னபசவர், மகாதேவியக்கா, பீமகவி பேன்றோர் இலிங்காயத மதத் தத்துவங்களை வரையறை செய்து கர்நாட கத்திலே வீரசைவம் செல்வாக்கு அடையவும் நிலைபெறவும் வழி செய்தனர். கர்நாடகத்திற்கு செல்வாக் கடைந்த வீரசைவம் அரச பரம்பரைகளின் ஆதரவுடன் ஆந்திரப் பிரதேசத்திலும் தமிழ் நாட்டிலும் பரவிற்று. விஜயநகர சாம்ராஜ்யம் தோன்றியபோது தமிழ்நாட்டிலே வீரசைவம் ஆளுநர் ஆதரவு பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. ஈழநாட்டிலும் மாகன் ஆட்சியின் போது வீரசைவம் அவனுடைய ஆதரவினைப் பெற்றுள்ளது என்று கருதச் சான்றுகளுள. ஈழநாட்டின் கிழக்குப் பிரதேசத்திலே இச் செல்வாக்கினைச் சுட்டும் எச்சங்கள் காணப்படுகின்றன.
கர்நாடக மறுமலர்ச்சிக்கு முன்பு ஆந்திராவிலும் தமிழ் நாட்டிலும் வீரசைவம் நிலைபெற்றிருக்கவில்லை எனல் பொருந்தாது. திருமூலர் சுட்டும் கடுஞ்சுத்த சைவம் வீரசைவமாயி ருத்தல் கூடும். கும்பகோணம் பெரியமடம் என்றும் வீரசிம்மாசன பீடம் என்றும் சாரங்கதேவர் மடம் என்றும் பலவாறு அழைக்கப் பெறும் மடத்தினை பன்னிரண்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த ஒட்டக் கூத்தர் தக்கயாகப் பரணியிலே குறிப்பிட்டுள்ளமை மனங் கொள்ளத்தக்கது. தமிழ்நாட்டு வீரசைவர் தாம் வீராகம நெறியிலே ஒழுகுபவர் என்று கூறுவர். மேலும் வீரபத்திரக் கடவுளுக்கு அவர்கள் முக்கியத்துவம் கொடுத்தலும் குறிப்பிடத்தக்கது.
ஆயினும், வீரசைவம் தமிழ் மக்களிடையே எத்தகைய செல்வாக்கினைப் பன்னிரண்டாம் நூற்றாண்டுக்கு முன்பு பெற்றிருந்தது என்று துணிய முடியவில்லை. கர்நாடக மறுமலர்ச்சி அதன் வளர்ச்சிக்கு உதவியதாதல் வேண்டும்.
தமிழ்நாட்டிற் கும்பகோணம் பெரியமடம் நீங்கலாக மயிலம் பொம்மபுரம் சிவஞான பாலையதேசிகர் ஆதீனம், துறையூர் சிவப்பிரகாசதேசிகர் ஆதீனம், திருப்பேரூர் சாந்தலிங்க தேசிகர், விருத்தாசலம் குமாரதேவர்மடம், திருப்பேரூர் சிதம்பர சுவாமிகள் மடம், பாண்டிச்சேரி அம்பலத்தாடுவார் மடம், திருப்பாதிரிப்புலியூர் ஞானியார் சுவாமிகள் மடாலயம் (திருக்கோவலூர் ஆதீனம்), சிதம்பரம் ஈசானிய மடம், திருவண்ணாமலை குகை நமக்சிவாயர் மடம் முதலிய வீரசைவ மடங்கள் உள்ளன. சிதம்பரம் மெளனசாமி மடம் ஒரு காலத்தில் வீரசைவமடமாக விளங்கியது.
வீரசைவ சித்தாந்தத்தை ஷட்ஸ்தலசித்தாந்தம் என்பர். ஷட்ஸ்தலம் என்பது ஆறு இடம் என்ற பொருள் தருவது. பரம்பொருள் எல்லாப் பிரபஞ்சங்களும் தோன்றவும் ஒடுங்கவும் இடமாக இருப்பதால் பரசிவத்தலம் எனப்படும். இத்தலம் இலிங்கஸ்தலம், அங்கஸ்தலம் என இரண்டாகப் பிரிக்கப் படுகின்றது. இலிங்கம் இறையையும் அங்கம் உயிரையும் குறிப்பிடுகின்றன.
அங்கஸ்தலத்தில் பக்தி, மாகேசுவரம், பிரஸாதம், பிராண லிங்கம், சரணம், ஐக்கியம் என ஆறுபடிகள் உண்டு. உயிர் பக்தி முதல் ஒவ்வொரு படிகளிலே உயர்ந்து இறையுடன் ஆறாவது
332

படியிலே ஐக்கியமாகின்றது. இலிங்கஸ்தலமும் ஆசாரலிங்கம், குருலிங்கம், சிவலிங்கம், சங்கமலிங்கம், பிரசாதலிங்கம், மகா லிங்கம் என ஆறு படிகளையுடையது.
வீரசைவத்திலே குறிப்பிட்ட கடமைகளை முறையாகப் பின்பற்றினால் ஆன்மா தூய்மையடைந்து படிப்படியாக ஏறி மாயையில் இருந்து விடுதலை பெற்றுச் சிவத்தோடு ஐக்கியமாகி விடுகின்றத. ஆரம்பத்தில் பதியிடம் இருந்து வேறுபட்டு நிற்கும் ஆத்மா படிப்படியாக ஏறிப் பதியுடன் ஐக்கியமாகும்போது தன் தனித்தனிமையை இழந்து விடுகின்றது. இதனை விசேஷாத் வைதம் என்பர்.
இலிங்காதயர்கள் இறைவனோடு ஐக்கியம் அடைவதற்குரிய நெறிமுறைகளை வீரசைவம் அஷ்டாவரணம், பஞ்சாசாரம் என
இரு தொகுப்பிலே வகுத்துக் காட்டுகின்றது. இவற்றிலே அஷடாவரணம் என்பது :
1. குரு குரு வழிபாடு
2. இலிங்கம் ஆன்மலிங்க வழிபாடு
3. சங்கமம் சிவனடியார் வழிபாடு
4. விபூதி விபூதியணிதல்
5. உருத்திராக்கம் உருத்திராக்கமணிதல்
6. தீர்த்தம் இலிங்க வபிடேக தீர்த்தத்தையும் குருபாத தீர்த்தத்தையும் உட்கொள்ளல்.
7. பிரசாதம் இறைவனுக்கும் குருவுக்கும் சிவனடி யாருக்கும் படைத்த 9-6ÙÛT 60) 6)] உண்ணல்,
8. மந்திரம் பஞ்சாட்சர மகாமந்திரம்
(சடாட்சர மகாமந்திரம்)
பஞ்சாசாரம் என்பது மேல் வருவன :
ஞ து (5
1. இலிங்காசாரம் :
இஷ்டலிங்கத்தையன்றி வேறெதையும் உயர்வாகக்
கருதாததோடு இஷ்டலிங்கத்திற்கு நிவேதனம் செய்யாத
எவற்றையும் ஏற்காது இருத்தல்.
2. சதாசாரம் :
அறவாழ்க்கையில் வழுவாது நின்று, நல்வழியில் உழைத்துப்
பொருளிட்டி, ஒரு பகுதியை மட்டும் துய்த்து, ஏனையவற்றைச்
சமுதாயத் தொண்டுக்குப் பயன்படுத்தல்.
3. சிவாசாரம் :
ஏனையோரிடத்து அமைந்த சிவத்தைக் காணுதலும் சிவம்
பெருக்கும் தொண்டில் ஈடுபடுதலும், இலிங்காயதருள் உயர்வு
தாழ்வு கருதாமையும்.
4. பிருத்யாசாரம் :
விலங்கு முதல் தாவரம் வரையுள்ள உயிர்களிடத்து அன்பு
கொண்டு சீவகருணையை வளர்த்தல்.
5. கனாசாரம் :
சிவத்தை விளக்கத் தடையான எல்லா ஒழுக்கத்தையும் நீக்கி ஒழுகுதல்.
இந்துக் கலைக்களஞ்சியம்

Page 379
வேதக்கிரியைகளை வீரசைவர் ஏற்பதில்லை. வீரசைவர் தம் கிரியைகளுக்கு சங்கமர் எனும் தம் குருமாரையே நியமிப்பர். அவர்களைப் பெரிதும் மதித்து நடத்துவர். பிராமணர்களுக்கு வீரசைவரின் கிரியைகளிலோ அல்லது வழிபாடுகளிலோ இடமில்லை. அக்கினி காரியத்திற்குப் பதிலாக வீரசைவர் கலச ஸ்தாபனம் செய்வர். கலசஸ்தாபனம் இலிங்கத்தை குறிப்பதாகும். நாற்றிசைகளிலும் நான்கு கலசமும் நடுவிலே ஒரு கலசமும் வைத்து அவற்றை இணைத்து பஞ்சாசாரிய மரபில் தம்மதம் வந்தமையை வீரசைவர் புலப்படுத்துவர்.
வீரசைவர் தாவரபோஷணிகள், மது, போதை வஸ்துகள், புகையிலை முதலியனவற்றை ஏற்காதவர்கள், சாதிப் பாகுபாட்டினை ஏற்காததோடு தீண்டத்தகாதவர்கள் என ஒதுக்கப்பட்ட மக்கட் குழுவினரையும் தம் சமூகத்திற் சேர்த்துக் கொள்பவர்கள்; பெண்களுக்கு சம அந்தஸ்து அளிப்பவர்கள்; பஞ்சசூதங்களை மறுப்பவர்கள்.
இலிங்கதாரணம் செய்யும் உரிமையைப் பெண்களுக்கும் அளிப்பவர்கள்; விதவைக் கல்யாணத்தை அனுமதித்துப் பிள்ளைத் திருமணத்தைக் கண்டிப்பவர்கள்; இறந்தோரை அடக்கஞ் செய்பவர்கள், மந்திரதந்திரங்களை ஆதரிக்காதவர்கள்.
(பொ.யூ.)
இலிங்கோத்பவர்
சிவபெருமானின் மகேசுவர மூர்த்தங்களில் (உருவத் திருமேனிகளிலே) இலிங்கோத்பவர் முக்கியமானதாகும். சிவன் கோயில்களிலே கருவறையில் அமைந்துள்ள மூல மூர்த்திக்குப் பின்பக்கத்திலே வெளி விமானத்திலே மேற்கு நோக்கி இலிங் கோத்பவர் வடிவம் அமைக்கப்பட்டிருக்கும். கருவறையிலுள்ள மூர்த்திக்கும் இலிங்கோத்பவருக்குமான நேரடித் தொடர்பினை உணர்த்துவதாக இவ்வமைப்புக் காணப்படுகின்றது.
இலிங்கோத்பவர் வடிவம் சிவலிங்கத்தின் நடுவே வளர்ந்து தோன்றி நிற்கும். இறைவனின் சிரசும் பாதங்களும் கண்களுக்குப் புலப்படாத முறையில் வடிவம் அமைந்திருக்கும். நான்கு கரத்திலே பின்கரம் இரண்டும் மான் மழுத்தாங்கிய வடிவிலும் முன்கை யிரண்டும் அபயவரத முத்திரையிலமைந்தும் காணப்படும். இலிங்கோத்பவரின் முடிக்கயலிலே அன்ன வடிவத்திலே பிரமனும் கீழே பன்றி உருவிலே விஷ்ணுவும் இடம் பெறுவர்.
இலிங்கோத்பவரின் தோற்றத்தின் கதை கந்தபுராணம் தட்சகாண்டத்து அடிமுடி தேடிய படலத்திலே விரிவாக விளக்கப்பட்டுள்ளது. சிவபெருமானின் பரத்துவத்தை இக்கதை உணர்த்துகின்றது. பிரமனும் விஷ்ணுவும் யாமே பரப்பிரமம் யாமே பரப்பிரமம்' என்று வாதிட்டுப் போரிட்ட போது அக்கினி தோன்றி அகிலம் எல்லாம் பரவி அண்டசராசரங்கள் அனைத்தையும் பாதித்தது. அப்போது சோதிமயமான மலை ஒன்று அவ்விருவரிடையே தோன்றியது. அப்போது எழுந்த அசரீரி அச்சோதி வடிவின் அடிமுடியைக் காண வல்லவர் எவரோ அவரே பரப்பிரமம் என்று கூறியது. திருமால் வராக வடிவத்தில் அடியையும் பிரமா அன்னவடிவத்தில் முடியையும் தேடிக் களைத்து
இந்துக் கலைக்களஞ்சியம்

அகந்தை நீங்கி உண்மையறிவு பெற்றனர். தம்மில் மேலான பரம்பொருள் பரமசிவனே என்ற உணர்வு பிறக்கவே இறைவனைத் துதித்து நின்றனர். சிவபிரான் சோதி வடிவத்திடையே தோன்றிக் காட்சியளித்தார். இறைவனை வணங்கி தம்பிழை பொறுத்தருள வேண்டிய பிரமனுக்கும் விஷ்ணுவுக்கும் அருள்புரிந்து சிவன் மறைந்தார். சோதிப் பிழம்பு தோன்றிய இடத்திலே ஒரு மலை உருப்பெற்றது. அதுவே அருணாசலம். அரியும் அயனும் இலிங்கோத்பவராகத் தோன்றிய சிவனை வழிபட்ட இரவே சிவராத்திரி எனச் சிறப்பிக்கப்படுவது.
காஞ்சி கைலாசநாதர் கோயிலில் இடம் பெறும் இலிங்கோத்பவர் வடிவம் சிற்பத்திற் காணப்படும் பழைய வடிவமாகக் கருதப்படுகின்றது. தஞ்சாவூரிலுள்ள முதலாம் இராசராசன் கல்வெட்டொன்றிலே இலிங்கோத்பவர், லிங்கபுராணதேவர் என்று குறிப்பிடப்படுகின்றார்.
திருமூலரும் தேவார முதலிகளும் இலிங்கோத்பவர் மூர்த்தத்தைப் பாடிப் பரவியுள்ளனர். புஷ்பதந்தரின் சிவமகிம்மநஸ்தோத்திரத்திலும் சங்கராசாரியரின் சிவானந்த லகரியிலும் இம்மூர்த்தம் போற்றப்படுகின்றது.
இலிங்கோத்பவர் தோன்றிய சிவராத்திரி சிவபெருமானுக் குரிய விரதங்களிலே சிறப்பு வாய்ந்தது. இது நித்திய சிவராத்திரி, பட்ச சிவராத்திரி, மாத சிவராத்திரி, யோக சிவராத்திரி, மகாசிவராத்திரி என்று ஐந்து வகைப்படும்.
ஆண்டின் 24 சதுர்த்தசிகளிலும் செய்யும் சிவபூசை நித்திய சிவராத்திரி. தைமாதம் கிருஷ்ணபட்சப் பிரதிமை முதல் 13 நாள் பூசை பட்ச சிவராத்திரி மாசி கிருஷ்ண சதுர்த்தசி, பங்குனி முதல் திருதியை, சித்திரைகிருஷ்ண அட்டகம் முதலியன மாத சிவராத்திரி. திங்கட்கிழமை முழுவதும் அமாவாசையாக இருத்தல் யோக சிவராத்திரி. மாசி மாதம் கிருஷ்ண சதுர்த்தசியில் நள்ளிரவில் இலிங்கோத்பவர் தோன்றிய நாள் மகா சிவராத்திரி. (பொ.பூ)
@gນໍ@ນນໍນາະ(ປີ
இலுப்பைப்பட்டு எனத் தற்போது வழங்கும் திருத்தலம் திருப்பழமண்ணிப்படிக்கரை என்று முன்பு பெயர் பெற்றிருந்தது. தஞ்சாவூர் மாவட்டத்தில் வைத்தீஸ்வரன் கோயிலுக்கு மேற்கேயுள்ள மண்ணிப்பள்ளத்தை அடைந்து, அங்கிருந்து வாழ்கொளி புத்தூருக்கு மேற்கே ஒரு மைல் சென்றால் இத்திருத்தலத்தை 960)LLIGOTLs).
இங்கு எழுந்தருளிய சிவபிரானுக்கு நீலகண்டர் என்றும் இறைவிக்கு அமிர்தகரவல்லி என்றும் பேர். சிவபிரான் ஆலகாலவிடத்தை அருந்தியபோது உமாதேவியார் கண்டத்தைக் கையால் பற்றி விடம் உள்ளே போகாது செய்ய, இறைவன் நீலகண்டம் காட்டியருளியபதி இதுவாம். இங்கு பாண்டவர் பூசித்த பஞ்சலிங்கங்கள் உள்ளன.
இத்திருத்தலத்திற்குச் சுந்தரர் பாடிய திருப்பதிகம் ஒன்றுண்டு (7.22) (பொ.பூ.)
333

Page 380
இளங்கோயில்
திருநாவுக்கரசு சுவாமிகள் திருவடைவு திருத்தாண்டகத்திலே கரக்கோயில், ஞாழற்கோயில், கொகுடிக்கோயில், இளங்கோயில், மணிக்கோயில், ஆலக்கோயில் எனச் சில கோயில்களைக் குறிப்பிடுவர். அப்பர் குறிப்பிடும் இக்கோயில்களின் விளக்கம் இப்போது தெளிவாகத் தெரியவில்லை.
இளங்கோயிலைச் சிலர் பாலாலயம் என்று கருதுவர். கோயிற்றிருப்பணி முடியும்வரை மூர்த்தியைத் தற்காலிகமாக எழுந்தருளுவித்து வழிபாடு செய்யும் ஆலயத்தினையே பாலாலயம் என்று வழங்குவர்.
சிலர் முருகப் பெருமான் கோயிலே இளங்கோயில் என்று வழங்கப்படுவது என்பர்.
நெல்லூர் மாவட்டம் நெல்லூரிலுள்ள சங்கதச் சாசன மொன்று இளங்கோயில் ஒன்றினைக் குறிப்பிடுகின்றது. இளங் கோயில் பாலாலயமாக இருந்தால் இச்சாசனம் வடமொழிப் பெயராகிய பாலாலயம் என்பதைக் கூறியிருக்கும். கடம்பூர் இளங்கோயிலை அப்பரும் கூறுகிறார்; இராஜராஜன் காலத்துச் சாசனமும் கூறுகின்றது. கி.பி. ஏழாம் நூற்றாண்டிலிருந்து பத்தாம் பதினோராம் நூற்றாண்டு வரை கடம்பூர் கோயில் பாலாலயமாக இருந்ததெனல் பொருந்துமோ என்பது சிந்திக்கத்தக்கது. மேலும் சித்தூர் மாவட்டம் சந்திரகிரி தாலுகா திருச்சோகினூரில் இருந்த இளங்கோயில் பெருமானடிகள் என்ற பெயர் காணப்படுவதும் சிந்திக்கத்தக்கது.
இளங்கோயில் என்பது விமான அமைப்பினை ஒட்டியெழுந்த பெயர் என்பர் வேறு சிலர். சிற்ப நூல்களில் பூரீ கரக்கோயில் எனப்படுவது இளங்கோயிலாக இருக்கலாம் என்பது அவர்களுடைய கருத்து.
அப்பர் சுவாமிகள் சோணாட்டு திருமீயச்சூர் (பேரளம்) கோயிலையும் இளங்கோயில் என்பர். பதின்மூன்றாம் நூற்றாண்டில் எழுந்த இரத்தினகிரி சாசனமொன்றிலே திருவாலிசுரமுடைய நாயனார் இளங்கோயிலும், திருக்கயிலாய முடையநாயனார் இளங்கோயிலும் குறிப்பிடப்படுகின்றன. (பொ.பூ.)
இளசைப் பதிற்றுபத்தந்தாதி
சென்னையை அடுத்த தொட்டிக்கலை எனும் ஊருக்கு அணித்தாக உள்ளது இளங்காடு எனும் ஊர். இவ்விளங்காடு எனும் திருத்தலத்தில் எழுந்தருளியுள்ள அகத்தீஸ்வரராம் சிவ பிரான் மீது பாடப் பெற்றது இளசைப் பதிற்றுப் பத்தந்தாதி.
காப்பும் பஞ்சாக்கர தேசிகர் வணக்கமும் நீங்கலாக நூறு பாடல்களையுடையது இளசைப் பதிற்றுப் பத்தந்தாதி. பதிற்றுப்பத்தந்தாதியின் இயல்புக்கேற்பப் பல்வேறு பாவகைகளிற் பாடப்பட்டுள்ளது.
இதனைப் பாடியவர் துறைசை மாதவச் சிவஞான யோகிகள் (-1785) எனும் முனிவராவர்.
334

தோத்திரப் பண்பும் தத்துவார்த்தச் சிறப்பும் அடியார் பெருமையும் வழிபாட்டின் பயனும் இளசைப் பதிற்றுப் பத்தந்தாதியின் சிறப்பியல்புகளாம். (பொ.பூ)
இளம்பிளிசைப்பிள்ளை
19த்தாம் அல்லது பதினோரம் நூற்றாண்டிலே தமிழகத்தில் வாழ்ந்த வைணவர்; திராவிட வேதாந்த தேசிகர் எனப்படுபவர்; வங்கி புரத்தாச்சியின் சீடர், கேசவாசாரியர், கருடாசாரியர் முதலியோரின் குரு.
குருபரம்பராப்பிரபாவம், விரோதி பரிகாரம் இயற்றியவர். (பொ.பூ.)
இளம்பெருமானடிகள்
19தினோராம் திருமுறையில் இடம் பெறும் சிவபெருமான் திருமும்மணிக்கோவை எனும் பிரபந்தத்தைப் பாடியவர். பதினோராம் திருமுறை பூரீ ஆறுமுகநாவலரால் முதன் முதலாகச் சுக்கில வருடம் வைகாசி மாதம் (1869) சென்னையில் வர்த்தமான தரங்கிணிசாகையச்சுக் கூடத்திற் பதிப்பிக்கப்பட்டது. (பொ.யூ.)
இளம்பெருவழுதியார்
இவர் திருமாலிருஞ்சோலை மலையில் எழுந்தருளி யிருக்கும் திருமால் மீது பாடிய பாடலொன்று பரிபாடலிலே உண்டு. பாண்டியர் மரபினர் என்பதற்குமேல் யாதும் புலப்படுமாறில்லை.
பெருவழுதி, கடலுண்மாய்ந்த இளம்பெருவழுதி எனும் பெயர்கள் பண்டைச் சான்றோர் பட்டியலிலுள. (பொ.யூ.)
இளமுருகனார், சோ. (1908 - 1975)
யாழ்ப்பாணம் நவாலி சோமசுந்தரப் புலவரின் சிரேட்ட புதல்வர்; நவாலியூர் சோ. நடராசனின் தமையனார்; பண்டிதை பரமேசுவரியாரின் கணவன்; தமிழ் மரபு பேணுவதிலே கண்ணுங் கருத்துமாக விளங்கிய பண்டிதர்; பண்டிதர்களுள் மணியாகப் போற்றப் பெற்றவர்; வவுனியா பண்டிதர் சு. இராஜ ஐயனார் முதலானோரிடம் தமிழ் கற்றவர்.
திருத்திண்ணபுரச் சுந்தரேசர் புராணம் எனும் ஈழத்துச் சிதம்பர புராணம் பாடியவர்; அது பண்டிதை பரமேசுவரியாரின் உரையுடன் 1972 இலே வெளி வந்தது; உசன்பதித் திருமுகன் கப்பற் பாட்டும் (1961) பாடியவர்; திருமுருகாற்றுப்படைக்கு விளக்கவுரை கண்டவர்.
அரசியல் சார்பான - தமிழுணர்ச்சி மிக்க - ஆக்கங்களையும்
இயற்றியவர்; நாடகாசிரியர், கண்டன ஆசிரியர், உலகியல் சார்ந்த நூல்களுக்கும் உரையாசிரியர். (பொ.பூ.)
இந்துக் கலைக்களஞ்சியம்

Page 381
இளையான்குடிமாற நாயனார்
“இளையான்குடிமாறன் அடியார்க்கும் அடியேன்” எனச் சுந்தரமூர்த்தி நாயனார் போற்றும் (7.39.1) மாறனார் இளை யான்குடியிலே வேளாண்மை செய்து வாழ்ந்தவர்; சிவனடியாரை வரவேற்றுப் பணிந்து திருவமுது செய்விக்கும் பண்பினர்; வறுமை வந்துற்றபோதும் அடியவருக்கு அமுது செய்விக்கும் பணியை இன்னல்கள் மத்தியிலும் விடாது பின்பற்றியவர்.
பெரிய புராணத்தில் சிறப்பிக்கப்படும் அறுபத்து மூன்று நாயன்மார்களுள் ஒருவர். பெரிய புராணத்தில் இவரது வரலாறு கூறும் பகுதி 27 பாடல்கள் கொண்டமைந்துள்ளது.
“மன்னிய வேளாண்மை தொன்மை இளசை மாறர் வறுமையால் உணவு மிக மறந்து வைகி உன்னரு தள்ளிருள் மழையில் உண்டி வேண்டி
உம்பர் பிரான் அனை வயல் உழுதுவித்துஞ் செந்நெல் முளை அமுது மனை அலக்கால் ஆக்கிச்
சிறு பயிரின் கறியமுது திருத்தஞ் செய்து பன்னலரும் உணவருந்தற்கெழுந்த சோதிப்
பரலோகம் முழுதாண்ட பான்மையாரே タタ
(திருத்தொண்டர் புராண சாரம்)
இவர் இளையான் குடிப்பதியிலே வேளாளர் மரபிலே பிறந்தவர். அவர் மாறனார் என்னும் பெயருடையவர். ஏர்த்தொழிலால் வளம்பெருக்கி எல்லையில்லாச் செல்வம் படைத்தார். அச் செல்வத்தை அடியார்க்கு அமுதூட்டப் பயன்படுத்தினார். இவர் சிவனடியார் எவராயினும் அவருக்கு இன்முகம் காட்டி மனைக்கு அழைத்துச் சென்று சோறிடுவதையே ஒரு பெரும் தொண்டாகக் கொண்டு வாழ்ந்து வந்தார்.
இத் திருத்தொண்டின் பயனாக மாறனார்க்கு செல்வம் பெருக லாயிற்று. இளையான் குடியில் இவர் அளகேசனைப் போல வாழ லானார். அவர் வறியவராய் வருந்தினுஞ் சோறிடுந் திருத் தொண் டைத் தளராது செய்யும் உறுதி உடையவர் என்பதை உலகுக்கு உணர்த்தச் சிவபெருமான் திருவுளங் கொண்டார். அதனால் மாறனார்க்கு வறுமை எய்திற்று. எய்தியும் தொண்டில் அவர் சிறிதும் சலிப்புற்றுத் தளர்ச்சியுற்றாரில்லை. அவர் தம் பொருள்களை விற்று தம் தொண்டினைச் செய்து வந்தார். இவரது பெருமையை உலகத் தார்க்கு உணர்த்த இறைவன் நற்றவ வேடங்கொண்டு வந்தான்.
மாரிகாலத்து இரவில் வந்த தவவேடத்தினரை இளையான் குடிமாற நாயனார் பண்புற எதிர்கொண்டார். மழை பெய்து கொண்டிருந்தது. மாறனார் வந்த விருந்தினரின் ஈரமேனியைத் துடைத்தார். மனைவியிடம் அடியார்க்கு அமுதுண்ணச் செய்ய வேண்டும் என்றார். தமக்குணவில்லை யாயினும் அடியாரை உண்பிக்கும் கடமை அவர்களின் முன் நின்றது. வீட்டிலும் உணவில்லை. கடன் தருவாரும் இலர். வேறு எங்கும் செல்லவும் இயலாத மாரிக்கால இரவு. ஆகவே பகலில் வயலில் விதைத்த செந்நெல்லை வாரிக் கொண்டு வந்தால் அமுதாக்கலாம் என மாறனார் மனைவி கூறினார். அவ்வுரை மாறனார்க்கு வரம்பிலா இறும்பூதெய்துவித்தது. அவர் பெருஞ் செல்வம் பெற்றது போன்றவரானார். அவருள் பெருமகிழ்ச்சி பொங்கி வழிந்தது.
இந்துக்கலைக்களஞ்சியம்

மழை பொழியும் நள்ளிரவிலே ஒரு கூடையைக் கவிழ்த்துக் கொண்டு மாறனார் புறப்பட்டார். கால்களினால் தடவிச் தடவிச் சென்று தம் வயலை அடைந்தார். மழை நீரிலே மிதந்திருந்த நெல் முளைகளை கோலி வாரினார். அவைகளால் கூடையை நிரப்பி னார். கூடையை தூக்கிச் சுமந்து வந்தார். நாயகியார் நாயனார் வரவை பேராவலோடு எதிர்பார்த்து வாயிலில் நின்று கொண்டிருந்தார். கூடையை அன்புடன் வாங்கினார். நெல் முளையைக் கழுவினார். நாயனாரைப் பார்த்தார். 'விறகில்லையே என்றார் அன்பிற் பெரியவர் சிலமாய்க் கிடந்த தம் இல்லத்தின் வரிச்சுக்களை அறுத்துத் தள்ளினார். மனைவியார் அவைகளை அடுப்பில் வைத்து அரிசிகொண்டு சோறாக்கினார். கறியமுதுக்கு என்ன செய்வது என்று துணைவனாரைக் கேட்க, தொண்டர் பெருமானும் புறக்கடை போந்து புன் செய்க் குறும் பயிர்களைத் தடவிப் பிடுங்கிக் கொணர்ந்தார். இல்லக் கிழத்தியார் அவை களைக் கழுவித் தூய்மை செய்தார். கைத் திறமையால் பலதிறக் கறியமுதாக்கினார். ஆக்கியதை இணையில்லாத் தவமுடையாரை அமுது செய்விப்போம் என எண்ணி உறங்கும் அடியவரை எழுப்பச் சென்றார். அடியவர் உரை கேட்ட இறைவன் சோதிவடிவாகத் தோன்றினான். ஏலவார் குழலியோடு இடபவாகனத்தில் தோன்றிய இறைவன் 'அன்பனே நீ என் பெரும்உலகம் எய்துவாய் இருநிதிக் கிழவன் எனச் சிறப்புறுவாய்” என வாழ்த்தி அருளினான்.
பெரியபுராண பதிப்பாசிரியராகிய ஆறுமுகநாவலர் இவரது புராணத்தைப் பற்றித் தம் கருத்தாக மேல்வருமாறு கூறியுள்ளார். “சிவபூசையிலும் சிறந்தது மாகேசுவர பூசை. இத்துணைப் பெருஞ் சிறப்பானதாகிய மாகேசுவர பூசையை எந்நாளும் சிறிதாயினும் தவறாது சிவாகம விதிப்படி மெய்யன்போடு செய்தமையால் பெருஞ்சிறப்புற்றவர் இவ்விளையான்குடிமாற நாயனார். தாம் நல்லோர்க்கு வறுமையைக் கொடுத்தல் அவர்கள் நயத்தின் பொருட்டே என்பதையும் அக் கருத்தறியாது அதற்குள் புண்ணியம் செய்த எமக்கு கடவுள் இடர் தந்தாரே என்று தம்மை நோதல் பழுதாம் என்பதை சர்வான்மாக்களும் உணர்ந்து உய்யும் பொருட்டு பரமசிவன் இவர்கட்கு வறுமையைக் கொடுத்து
இவர்களது செயற்கரும் செய்கையை வெளிப்படுத்தினார்.
(ஹ. தே.)
660ogpao5riġ 1 qJ Tacorb
தென்னார்க்காடு மாவட்டம் திருக்கோவலூர் தாலுகாவில்
உள்ள இறைவானாறையூர் இன்று எலவானாசூர் எனவும்
இறைசை எனவும் வழங்கப்படும்.
இறைசையில் எழுந்தருளிய சிவபிரானுக்குத் திருமயிலை நயினார் சந்திரசேகரன் என்ற புலவர் புராணம் பாடியுள்ளார். இவர் மெய்கண்ட சந்தானத்தைச் சேர்ந்தவர்.
இப்புராணத்தினைப் பாடியமைக்காக இவருக்குச் சகம் 1432 இலே (கி.பி.1510) தானம் வழங்கப்பட்ட செய்தி அவ்வூர்க் கோயில் முதற் பிராகாரம் மேலைச் சுவரிலுள்ள சாசனத்தாற் பெறப்படும்.
இறைசைப் புராணம் மறைந்துவிட்டது.
335

Page 382
இன்னம்பர்
தஞ்சை மாவட்டத்திற் கும்பகோணத்திலிருந்து சாமி மலைக்குச் செல்லும் பெருவழியிலுள்ள புளியஞ்சேரிக்கு வடக்கே திருப்புறம் பயம் போகும் வழியில் ஒரு மைல் தொலைவிலுள்ளது இன்னம்பர்.
இங்கு கோயில் கொண்ட சிவபிரானுக்குத் தான் தோன்றியீசர், எழுத்தறிந்தநாதர் என்றும் இறைவிக்குக் கொந்தார் பூங்குழல் அம்மை என்றும் பேர். தீர்த்தம் ஐராவத தீர்த்தம்.
அகத்தியர் பூசித்து இலக்கணம் உபதேசிக்கப்பட்ட தலம். சிவபெருமான் கணக்கராய்க் கோயிற்கணக்கை அரசனிடம் ஒப்பு வித்த தலம். ஐராவதம் பூசை செய்த தலம் கர்ப்பக் கிருகத்தின் மேற் பாகம் யானையின் உருவம் போல் செய்யப்பட்டுள்ளது. கோயிலுக்குள் பலாமரமும் சண்பகமரமும் இருக்கின்றன. நர்த்தன விநாயகர் கோயில் கம்பத்தில் இருக்கிறார். அம்மன் சந்நிதி இரண்டு. வெளிப் பிரகாரத்தில் சுகந்த குந்தளம்பா சந்நிதி. கஜப் ருஷ்ட விமானம். வைகாசி சிவராத்திரியில் வேடனுக்குக் காட்சி கொடுத்த தலம் . யமனைச் சம்ஹாரம் செய்த இடம் என்பர். நந்தி திரும்பியி ருக்கிறது. திருஞானசம்பந்தரும் திருநாவுக்கரசரும் பாடிய தலம்.
எண்டிசைக் கும்புகழ் இன்னம்பர் மேவிய வண்டிசைக் குஞ்சடை யிரே வண்டிசைக் குஞ்சடை யிருமை வாழ்த்துவார் தொண்டிசைக் குந்தொழி லோரே.
திருஞா. 3-ஆம் திரு. விண்ணவர் மகுடகோடி மிடைந்த சேவடியர் போலும் பென்னொரு பாகர் போலும் பேடலி ஆணர் போலும் வண்ணமால் அயனும் கானா மால்வரை எரியர் போலும் எண்ணுரு அநேகர் போலும் இன்னம்பர் ஈசனாரே,
திருநா. 4-ஆம்-திரு.
இன்னா நாற்பது
இன்னது இன்னது இன்னா என ஒவ்வொரு வெண்பாவும் கூறலின் இன்னா நாற்பது எனப் பெயர் பெற்றது. இந்நூலிலே துன்பத்தின் மூலங்கள் இன்னின்னவை என்று கண்டு தொகுக் கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பாடலிலும் நான்கு இன்னாப் பொருள் கூறப்படும் ஒழுங்கான அமைப்பினை இன்னா நாற்பதிற் காணலாம். அமைப்பினைச் செவ்விதாக அமைக்க முற்பட்டதாற் சிற்சில பொருள் மீண்டும் வருதலைத் தவிர்க்க முடியவில்லை போலும்.
நாற்பது வெண்பாக்களையுடைய இன்னா நாற்பதின் புறவுறுப்பாக அமையும் கடவுள் வாழ்த்திலே சிவன், பலராமன், திருமால், முருகன் ஆகிய நால்வரும் போற்றப்பட்டுள்ளனர்.
இன்னா நாற்பதின் ஆசிரியர் கபிலதேவர். ஊனையும், கள்ளையும் இன்னா எனும் ஆசிரியர் (22, 12, 33) அவற்றை இனியவையாகப் பாடிய சங்கச் சான்றோராம் கபிலரிலும் (புறநானூறு 14, 113, 119) வேறாவார். மேலும் அந்தணரை இழித்துரைப்பன போன்ற செய்திகளைக் கூறும் இன்னா
336

நாற்பதின் ஆசிரியர் (12, 21) யானே பரிசிலன் மன்னுமந்தணன் (புறநானூறு 200) என்று பெருமைப்பட்டிருக்க மாட்டார்.
பிறப்பொக்கும் எல்லாவுயிர்க்கும் என்ற அடிப்படையிலே சாதிவேற்றுமையை வன்மையாகக் கண்டித்த கபிலரகவலாசிரியர் குடிப்பிறப்பால் உயர்வு தாழ்வுண்டென்று ஒத்துக் கொள்ள மாட்டார். (இன்னநாற்பது, 19). தீவிரமான சிவபக்தியைப் புலப்படுத்தும் கபிலதேவநாயனார் (சிவபெருமான் திருவிரட்டைமணி மாலை, 35) நால்வருக்குத் துதிபாடுதல் பொருத்தமாக இல்லை.
இன்னா நாற்பதின் காலத்தினைத் துணிதலரிது. ஆயினும் அது மூவேந்தர் காலத்தினை அடுத்துத் தோன்றியது என்று கருத இடமுண்டு.
இன்னா நாற்பதுக்குப் பழையவுரை உண்டு. கா. ரா. கோவிந்தராச முதலியார், ந. மு. வேங்கடசாமி நாட்டார் போன்றோர் புத்துரையெழுதிப் பதிப்பித்துள்ளனர். 1944 இலே எஸ். வையாபுரிப்பிள்ளை பழையவுரையுடன் மூலத்தினைப் பரிசோதித்துப் பதிப்பித்துள்ளார். (பொ.பூ)
இனியவை நாற்பது
இன்னது இன்னது இனிது என்று ஒவ்வொரு செய்யுளிலும் கூறப்படுவதால் இனியவை நாற்பது எனப் பெயர் பெறுகின்றது. இந்நூல் இனியா நாற்பது, இனியது நாற்பது, இனிது நாற்பது என்ற பெயர்களிலும் அச்சிடப் பெற்றுள்ளது. இன்பத்திற்கு மூலங்கள் இன்னின்னவை என்று தொகுத்துக் கூறப்பட்டுள்ளது; மூன்று ‘இனிது பெரும் பான்மையான பாடல்களிற் கூறப்படுகின்றது. நான்கு பாடலில் மட்டும் நான்கு இனிது கூறப்படுகின்றன.
சிற்சில பொருள்கள் மீண்டும் கூறப்படுதல் நோக்கத்தக்கது.
நாற்பது வெண்பாவுடைய இனியவை நாற்பதின் புறவுறுப்பான கடவுள் வாழ்த்திற் சிவன், திருமால், பிரமா துதிக்கப்படுகின்றனர்.
இதனைப் பாடியவர் மதுரைத் தமிழாசிரியர் மகனார் பூதஞ்சேந்தனார்; அவர் காலம் துணிதற்கரிது.
இனியவை நாற்பது பொருளமைப்பிலே திரிகடுகத்தையும் நூலமைப்பில் இன்னா நாற்பதையும் ஒத்ததாகக் காணப் படுகின்றது.
இதற்குப் பழையவுரையுண்டு. அதனை ரா. ராகவையங்கார், எஸ். வையாபுரிப்பிள்ளை (1949) முதலியோர் பதிப்பித்துள்ளனர். முகவை இ. இராமாநுசக் கவிராயர், இராயவேலூர் ஆறுமுக முதலியார் (1863), வா. மகாதேவமுதலியார் (1922), கா. ரா. கோவிந்தராச முதலியார் (1926) முதலியோர் புத்துரை எழுதியுள்ளனர். தி. ச. ஆறுமுகநயினார் 1904 இலே மூலப் பதிப்பொன்றினை வெளியிட்டனர். எஸ். வையாபுரிப்பிள்ளையின் பதிப்பு மூலத்தினைப் பரிசோதித்த பதிப்பாகும். (பொ.யூ.)
இந்துக் கலைக்களஞ்சியம்

Page 383
இகஷ்வாகு வம்சம்
அரச குலங்களில் இக்ஷவாகு வம்சமே மேலானது என்ற சிந்தனை இந்து சமுதாயத்தில் அழுத்தம் பெற்றிருந்தது. அது சூரியவம்சத் தொடர்புடையது என்பது பெளராணிகமான மரபு. இக்ஷவாகு குலத்து மன்னர்கள் அறம் வளர்த்த மன்னர்களாகவும் உதாரண புருஷர்களாகவும் கொள்ளப்பட்டனர். வேதகாலத் தொடர்புடையோரான இகூடிவாகு மன்னர் அயோத்தியை இராசதானியாகக் கொண்டிருந்தனர். வான்மீகியாரின் ஆதிகாவியத்தின் செல்வாக்கினால் இகூடிவாகு குலத்தவரைப் போற்றுவது பரதகண்டம் முழுவதிலும் ஒரு மரபாகிவிட்டது. மகாகவிகளான காளிதாஸர், கம்பநாடாழ்வார், துளசிதாசர் என்போர் அவர்களைப் பற்றிய அபிமான உணர்வுகளை வளர்த்துவிட்டனர். சூரியவம்சத்தவரான இசுஷ்வாகு குலத்தவரின் பெருமைகளைப் பெளத்தர்களும் பாராட்டுவோராயினர்.
இசுஷ்வாகு என்னும் பெயர் கொண்ட அரசகுலத்தவர் ஆந்திரதேசத்திலும் ஆட்சிபுரிந்தனர். வாதாபிச் சாளுக்கியரும் கல்யாணிச் சாளுக்கியரும் வேங்கி தேசத்துச் சாளுக்கியரும் புராதன காலத்திலே தங்குல முன்னோர்களான இசுஷ்வாகு குலத்தவர் அயோத்தியில் ஆட்சிபுரிந்தனரென்று செப்பேடுகளிற் குறிப்பிட்டுள்ளனர். ஆயினும், அவர்களைப் பற்றிய நினைவுகள் காலப்போக்கில் மறைந்து மகாகவியின் பாராட்டுகளைப் பெற்ற அயோத்தி மன்னரான இக்ஷவாகு குலத்தவரே சமயதாயத்தின் அபிமானத்தையும் பாராட்டுகளையும் பெற்றுள்ளனர்.
கோசலம், விதேக என்பன பற்றி முதன்முதலாகப் பிராமணங்களிற் சொல்லப்படுகின்றது. இருக்குவேதப் பாடல் களில் அவற்றைப் பற்றிய குறிப்பெதுவுங் காணப்படவில்லை. விதேக மாதவன் தனது புரோகிதரான கோதம ராஹாகனருடன், யாகாக்கினையை எடுத்துக் கொண்டு, கோசலத்தின் ஊடாகப் போய், சதாநீர நதியைக் கடந்து, அதன் கிழக்கிலே குடியிருப்பு களை உண்டு பண்ணினான் என்று சதபதபிராமணங் கூறும். மாதவனால் உருவாக்கப்பட்ட குடியேற்றம் விதேக என்னும் பெயருடைய இராச்சியமாக வளர்ந்தது.
கோசல அரசனாகிய பர அத்நார ஹிரண்ய நாபன் அஸ்வ மேத யாகஞ் செய்தமை பற்றிச் சதபத பிராமணத்திலிருந்து அறிய முடிகின்றது. காசி, கோசலம், விதேக என்னும் இராச்சியங்களின் லைவர்கள் மூவரும் ஒருவரையே புரோகிதராகக் கொண்டி ருந்தனரென்று சாங்காயன சிரெளத சூத்திரம் கூறும்.
வைவஸ்வத மனுவின் மூத்த குமாரனாகிய இசுஷ்வாகு அயோத்தி நகரத்தை இராசதானியாக அமைத்தானென்று சொல்லப்படுகின்றது. இகூடிவாகு வம்சத்தைச் சேர்ந்த 31 அரசரின் பெயர்கள் புராணங்களிற் காணப்படுகின்றன. சாக்ய, சுத்தோதன, சித்தார்த்தர் என்போரும் இசுஷ்வாகு குலத்த வரென்று புராணங்களிலே கொள்ளப்படுகின்றது. கபிலவஸ்துவில் அதிகாரம் பெற்றிருந்த சாக்கியர்கள் மணத் தொடர்புகளின் விளைவாக இக்ஷவாகு வம்சத்தவராகினர் என்று கருதலாம். ஒன்பதாம், பத்தாம் நூற்றாண்டுகளில், இலங்கையில், அநுராத
இந்துக் கலைக்களஞ்சியம்

புரத்து அரசர்கள் தங்கள் முன்னோர்கள் இகூடிவாகு மரபில் வந்தவர்களென்றும் சுத்தோதனரின் வழிமுறைச் சந்ததியின ரென்றும் உரிமை பாராட்டியமை குறிப்பிடற்குரியது.
காசி, கோசலம் ஆகியவற்றுக்கிடையிலே போட்டிகள் நிலவியமையினைப் பெளத்த நூல்கள் வாயிலாக அறியமுடிகின்றது. முதலாவது கட்டத்திலே வலி பொருந்திய காசிராசனாகிய பிரமதத்தன் கோசல மன்னனாகிய திகிதி என்பவனைத் தோற் கடித்தான். ஒழிவு மறைவாக வாழ்ந்த கோசராசனையும் அவன் தேவியையும் கைப்பற்றியதும் பிரமதத்தன் அவர்களைக் கொலை செய்துவிட்டான். பின்பு, கோசல இளவரசனாகிய தீகாயு பிரமதத் தனுக்கு அடங்கியிருந்து, அவனுடைய விசுவாசத்திற்கு உரிய வனாகி, சேனாதிபதி என்னும் பதவியைப் பெற்றான்.அதன் பின்பு அவன் காசியில் அரசனாகி விட்டான். இரண்டாவது கட்டத்திலே பிரமதத்தனும் கோசலத்து மல்லிகனும் சமபலங்கொண்ட மன்னராக விளங்கினர் என்பதை ராஜோவாத ஜாதகம் மூலமாக அறிய முடிகின்றது. மூன்றாவது கட்டத்திலே கோசல ராசன், காசிராசன் அமைதியான சுபாவங் கொண்டிருந்தமையினால் காசிமீது படையெடுத்தான் என்பதை மகாசீலவ ஜாதகம் மூலமாக அறிய முடிகின்றது. இறுதியில் மகாகோசலனின் காலத்திலே காசி கைப்பற்றப்பட்டது. அது கோசல இராச்சியத்தின் ஒரு பகுதியாக இணைத்துக் கொள்ளப்பட்டது. மகதநாட்டு பிம்பிசாரன், அஜாதசத்துரு என்போரின் காலத்தவனாகிய பிரசேனசித்து என்பவன் இக்ஷவாகு வம்சத்தவரிலே சிறப்புமிக்க இறுதி அரசனாவான். மோரியப் பேரரசு நிலைகுலைந்த பின்பு அயோத்தியிலே பிராந்திய அரசொன்று உருவாகியது. அங்கு வேறு வம்சங்களைச் சேர்ந்தவர்களே ஆட்சி புரிந்தனர்.
ஆந்திர தேசத்தின் மத்திய பகுதியில், கி. பி. மூன்றாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில், இக்ஷவாகு என்னும் பெயருடைய குலமொன்றைச் சேர்ந்தவர்களின் ஆட்சி ஏற்பட்டது. சாத வாகனரின் ஆட்சி இறுதிக் கட்டத்தில், கிருஷ்ணா, கோதாவரி ஆகிய ஆறுகளுக்கு இடையில் அமைந்துள்ள நிலப்பகுதியில் அடங்கிவிட்டது. அப்பகுதியில் இக்ஷவாகு வம்சத்தினர் சாத வாகனரிடமிருந்து ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றிவிட்டனர்.
முதலாம் சாந்தமூலன் என்பவன் ஆந்திர தேசத்து இசுஷ்வாகு மன்னரில் முதலாவது அரசன். அவனது ஆட்சிக் காலம் மூன்றாம் நூற்றாண்டின் இரண்டாம் காற்பகுதியாகும். சுதந்திரமான புதிய இராச்சியமொன்றை உருவாக்கியதன் அடையாளமாக அவன் செய்வித்த அஸ்வமேத யாகம் அமைந்தது. ஆந்திர தேசத்து இக்ஷவாகு மன்னர்களைப் புராணங்கள் பூரீ பர்வதீய ஆந்திரர்களென்று வர்ணிக்கின்றன. புராதன காலத்திலே பூரீ பர்வதம் என்னும் பெயரால் வழங்கிய நல்லமலூர் மலைத் தொடரின் ஒரமான நாகார்ஜுன கொண்ட சமவெளியில் அமைந்த விஜயபுரி இசுஷ்வாகு மன்னர்களின் இராசதானியாக விளங்கியது.
சாந்தமூலன் வைதீக சமயநெறியில் ஈடுபாடு கொண்டவன். அவன் குமாரக் கடவுளின் பக்தனாக விளங்கியவன். அவன் அஸ்வமேதம், வாஜபேகம் முதலான வேள்விகளைச் செய்வதில் ஆர்வங் கொண்டவன்.
337

Page 384
இசுஷ்வாகு குலத்தவர்கள் ஏற்படுத்திய மணத் தொடர்புகள் அவர்களின் செல்வாக்கு மேலோங்குவதற்கு ஏதுவாக இருந்தன. சாந்தமூலனின் சகோதரிகளில் ஒருத்தி புகீயகுலத்து மகா சேனாதிபதி மகாதலவர என்பவனை மணம்புரிந்தாள். அவளுடைய கணவன் நெல்லூர்ப் பகுதியிலுள்ள சாமந்தர் குலமொன்றைச் சேர்ந்தவன். சாந்தமூலனின் மகளான அடவி சாந்தியூரீ தனக குலத்தைச் சேர்ந்த மகாசேனாதிபதி மகாதண்டநாயகன் என்பவனின் மனைவியானாள். ஹிரண்யக வம்சத்தைச் சேர்ந்த பிரதானிகளும் இக்ஷவாகு வம்சத்தவரோடு இன உறவு கொண்டி ருந்தனர். அவர்கள் தெற்கிலே நெல்லூர், கடப்பா என்னும் நிலப் பகுதிகள் அடங்கிய ஹிரண்யராஷ்டிரத்தைச் சேர்ந்தவர்கள். சாத வாகனர் காலத்தில் ஆந்திர தேசத்தின் பல பகுதிகளிற் சாமந்தராக அதிகாரம் பெற்றிருந்த குடும்பத்தவர் பலருடன் நெருக்கமான உறவுகளை ஏற்படுத்திக் கொள்வதன் மூலம் சாந்த மூலன் தனது அதிகாரத்தையும் செல்வாக்கையும் பலப்படுத்திக் கொண்டான்.
சாந்தமூலனுக்கு பின்பு அவனது மகனாகிய மடாரிபுத்திர வீர புருஷதத்தன் அரசுபதவி பெற்றான். அவன் மூன்றாம் நூற்றாண்டின் மூன்றாவது காற் பகுதியில் ஆட்சி புரிந்தான். மைத்துணிகள் மூவர் அவனது தேவியராகினர். அவர்கள் சாந்தமூலனது சகோதரிகளின் மக்கள். ஆண்களும் பெண்களும் தங்கள் மைத்துணிகளையும் மைத்துனரையும் திருமணம் புரிவது தென்னாட்டவரின் வழமை. அது புராதன காலம் முதலாக நிலவிவரும் வழமை. பெளதாயன தர்ம சூத்திரமும் அதனைப் பற்றிக் குறிப்பிடுகின்றது.
இக்ஷவாகு மன்னர் அவந்திநாட்டு அரசர்களோடு மணத் தொடர்புகளை ஏற்படுத்தியிருந்தனர். பட்டத்தரசியான மகாதேவி ருத்திரபட்டாரிகா என்பவள் உஜ்ஜயினி மகாராசனின் மகளென்று சொல்லப்படுகின்றது. அவள் மேற்கிந்தியாவில் மகாகூடித்திரபனாக விளங்கிய இரண்டாம் உருத்திரசேனனின் (255-77) மகளென்று சிலர் கருதுகின்றனர். வீரபுருஷதத்தன் தனது மகளொருத்தியை வனவாசி மகாராசனுக்குத் திருமணஞ் செய்து வைத்தான்.
வீரபுருஷதத்தனுடைய ஆட்சியில் எழுதப்பட்ட சாசனங்கள் அமராவதி, நாகார்ஜுன கொண்ட, முதலிய புராதனமான பெளத்த தலங்களிற் காணப்பட்டன. அவை அவனது இருபதாவது ஆண்டு வரையான காலப்பகுதிக் குரியவை. அவை பலர் பெளத்த நிறுவனங் களுக்கு வழங்கிய தானங்களைப் பற்றியவை. நாகார்ஜூன கொண்டவிற் காணப்படும் சாசனங்களின் பெரும்பாலானவை அரசகுடும்பத்துப் பெண்கள் விஜயபுரிக்குச் சமீபமாகவுள்ள பெரும்பள்ளிக்கு வழங்கிய தானங்களைப் பதிவு செய்துள்ளன.
338

ஆந்திரப் பிரதேசத்து வரலாற்றில் இகூடிவாகு மன்னரின் ஆட்சிக்காலம் ஒரு பிரதானமான கால கட்டமாகும். அசோகனது காலம் முதலாகப் பரவியிருந்த பெளத்தசமயம் அங்கு மூன்றாம் நூற்றாண்டிலே உன்னதமான நிலையிற் காணப்பட்டது. உற்பத்திப் பெருக்கம், வாணிப அபிவிருத்தி என்பவற்றின் விளைவாகச் செல்வவளம் கணிசமான அளவிலே பெருகியிருந்தமையாற் பிரமாண்டமான கட்டங்களையும் வனப்பு மிகுந்த சிற்பங்களையும் உருவாக்கிக்கொள்ள முடிந்தது. இகூடிவாகு மன்னர் காலத்திலே கலைத்துறையில் ஏற்பட்ட வளர்ச்சிகள் பெளத்தசமயச் சார்புடையவை. அமராவதி, நாகார்ஜுன கொண்ட ஐக்கய்யபேட்டை என்பனவற்றிலே பெளத்தப் பெரும் பள்ளிகள் பல அமைந்திருந்தன. அவற்றை மையமாகக் கொண்ட வேங்கி தேசத்திற்குச் சிறப்பாகவுள்ள பிராந்திய கலைப்பாணி ஒன்று முதிர்ச்சி பெற்றது. அதன் செல்வாக்கு தென்னிந்தியப் பிரதேசங்களிலும் ஈழம் சுவர்ணபூமி ஆகியவற்றிலும் பரவியிருந்தது. இசுஷ்வாகு மன்னர் காலத்து பிராமி வரிவடிவங்களின் கோலமும் சிறப்பானது. அதன் சாயல்கள் வல்லிபுரம் போன்ற இலங்கையிலுள்ள தலங்களிலும்
காணப்பட்டன.
வீரபுருஷ தத்தனுக்குப் பின் அவனது மகனாகிய இரண்டாம் எஹுவுல சாந்தமூலன் பதினொரு வருடங்கள் வரை ஆட்சிபுரிந்தான். குந்தூர் மாவட்டத்திலே, குர்ஸாலா என்னுமிடத்திலே காணப்படுஞ் சாசனமொன்று மஹாராஜா ருளுபுருஷதத்த என்ற அரசனொருவனைக் குறிப்பிடுகின்றது. பல்லவரின் ஆதிக்கப்படர்ச்சியின் விளைவாக மூன்றாம் நூற்றாண்டின் முடிவில் இகூடிவாகு குலத்தவரின் ஆதிக்கம் கிருஷ்ணா நதியின் பள்ளத்தாக்கில் அழிவுற்றது. நான்காம் நூற்றாண்டின் ஆரம்பத்திலே காஞ்சிப் பல்லவரின் பிரதிநிதியான ஒருவன் தான்யகடகத்திலிருந்து ஆந்திராபதத்தைப் பரிபாலனஞ் செய்தான். பல்லவ இளவரசனாகிய சிவஸ்கந்தவர்மன் வழங்கிய மயிடவொலு செப்பேடு காஞ்சியிலிருந்து ஆந்திராபத வியாப்பிரிதனுக்கு (ஆளுனர்) அனுப்பப் பெற்ற ஆவணமாகும்.
பல்லவரின் ஆதிக்கம் ஏற்பட்டபின் இக்ஷவாகு வம்சத்தவர் சிலர் சாமந்தராக அமைந்திருந்தனர். ஐந்தாம் நூற்றாண்டுச் சாசனமொன்று கர்நாடகத்திலுள்ள கேகய வம்சத்தவருக்கும் இக்ஷவாகு குலத்தவருக்கு இடையிலான மணத்தொடர்பினைக் குறிப்பிடுகின்றது.
இந்துக் கலைக்களஞ்சியம்

Page 385
ஈங்கோய்மலை எழுபது
திருச்சி - ஈரோடு இருப்புப் பாதையிலுள்ள குழித்தலை நிலையத்திற்கு வடக்கே காவிரிக்கு அப்பால் உள்ளது ஈங்கோய்மலை எனும் திருத்தலம். இப்போது திருவிங்கநாதமலை என மருவி வழங்குகின்றது. அகத்தியர் ஈ உருவமெடுத்துப் பூசித்துப் பேறு பெற்றமையால் இப் பெயர் வந்ததென்பர். திருக்கோயில் சிறு குன்றிலே அமைந்துள்ளது.
ஈங்கோய்மலையில் உறையும் சிவபிரானுக்கு மரகதாசலர் என்ற திருநாமமுண்டு. மரகதாசலர் மீது பாடப் பெற்ற பிரபந்தமே திரு ஈங்கோய்மலையெழுபதாகும்.
இதனைப் பாடியவர் நக்கீரதேவர். இவர் காலம் தெளிவாகவில்லை. நம்பியாண்டார் நம்பிக்கு முற்பட்டவர் என்பது தெளிவு. நம்பியாண்டார் நம்பி காலம் ஒன்பதாம் அல்லது பத்தாம் நூற்றாண்டாகும்.
முதலாம் பாடல் நீங்கலாக இப்பிரபந்தம் ஈங்கோய்மலையின் இயற்கைக் காட்சிகளை வருணித்து அம்மலைக்கு உரியவன் சிவன் என்ற அமைப்பினையுடையது. இயற்கைக் காட்சிகளை மிகவும் அநுபவித்து, அவற்றின் இயக்கத்திலே இறைவன் திருவருளைக் கண்டு போற்றுகிறார்.
இப்பிரபந்தம் பதினோராம் திருமுறையில் இடம் பெறுவதாகும். பதினோராம் திருமுறை முதன் முதலாக 1869 இலே யாழ்ப்பாணம் பூரீ ஆறுமுகநாவலராற் சென்னையிற் பதிப்பிக்கப்பட்டது.
இப்பதிப்பிலும் பின் வந்த பதிப்புகளிலும் பதின்மூன்று முழுப் பாடல்கள் இடம் பெறவில்லை; இரு பாடல் குறையாகவே இடம் பெற்றது. மு. அருணாசலம் செப்பறை மடத்தின் ஏட்டின் உதவியுடன் அவற்றைச் சில ஆண்டுகளின் முன் வெளிப் படுத்தினார். (பொ.யூ.)
ਜਲੰਲ ਉਲੰਲu
மானுடவிவேகம் காலத்துக் காலம், தேயத்துக்குத் தேயம் அருகியும் பெருகியும் பல நெறிப்பட்டு வருகின்றது. மானிடத் தொகுதியுட் பலர் கடவுளுண்மையை விசுவாசித்து அவ்விசு வாசத்தின் வழியே ஒழுகி வருகின்றனர். இந்த விசுவாசத்தின் மீது ஆட்சேபம் ஒரு நெறிப்படாது காலதேய பேதங்களுக்கு அமையப் பலநெறிப்பட்டு வருவதால் உலகுக்குப் பல பெருங்கேடுகள் விளைவதற்கு ஏதுவாயின. தற்காலத்தே மலிந்துள்ள உலகியல் நாட்டமும் உலகியல் சாத்திர விருத்தியும் பதியுண்மை விசுவாசத்தைப் பாதித்துள்ளன. பெளதிகவாத விருத்தியும் செல்வாக்கும் நாத்திகத்திற்கு இட்டுச் சென்றுள்ளன.
இந்துக் கலைக்களஞ்சியம்

சார்ள்ஸ் பிறட்லோ (Charles Bradlaugh) போன்றவர் அதன் சிறந்த பிரசாரகராக விளங்கியுள்ளனர். இச்சூழலிலே எழுந்ததுதான் ஈச்சுர நிச்சயம் எனும் அரிய நூல்.
ஈச்சுர நிச்சயம் இயற்றியவர் யாழ்ப்பாணம் கொக்குவில் குகதாசர் ச. சபாரத்தின முதலியார் (1858 - 1922); அரசாங்க இலிகிதராக ஆரம்பித்துக் கச்சேரி முதலியாராக உயர்ந்து துணை பிசுக்கால் அதிகாரியாக ஒய்வு பெற்றவர்; இராசவாசல் முதலியார் என்ற உயர்ந்த கெளரவப்பட்டமும் பெற்றவர்; சித்தாந்த மாநாடுகளில் இந்தியாவிலும் இலங்கையிலும் மதித்துத் தலைமையாசனம் அளிக்கப் பெற்றவர்; உதயபானு, இந்து சாதனம் என்னும் பத்திரிகைகளுக்கு அரிய சமய விடயதானம் செய்தவர்; தல சம்பந்தமான பிரபந்தங்களும் பாடியவர்; சீவான்ம (GL15th, ESSENTIALS OF HINDUISM (p565u & Lou ஆய்வுகளையும் எழுதியவர்.
ஈச்சுர நிச்சயத்திற்கு மறுதலையாயுள்ள மதங்கள் பூர்வத்துள்ள உலோகயதம், நிரீச்சுர சாங்கிதம், பெளத்தம் முதலியனவும், காலத்தனவாகிய பெளதிக வாதம், சந்தேவகாதம், மித்தியாவாதம் முதலியனவுமாம். இவற்றின் கண்ணே ஈச்சுரவுண்மைக்கு விரோதமாகவுள்ள துறைகளை எடுத்துக் கண்டித்துச் சுபட்சத்தைத் தாபிப்பது ஈச்சுர நிச்சயம் எனும் நூல். தர்க்க முறையிலும் சுருதி முறையிலும் விவரமாக, நல்ல தமிழ் வசன நடையில் இது அமைந்துள்ளது.
ஈச்சுர நிச்சயம் பொதுவியல், சிறப்பியல் என இரு இயல்களாகப் பகுக்கப்பட்டுள்ளது. பொதுவியலுக்கு இரு சூத்திரமும் சிறப்பியலுக்கு மூன்று சூத்திரமுமாக ஐந்து சூத்திரம் அமைக்கப்பட்டுள்ளன. கடவுள் உண்டென்ற உலக வழக்கைக் கைக்கொண்டு ஒழுக வேண்டிய கடப்பாடுடைமை, கடவுள் இல்லை என்பதிலும் உண்டெனக் கொள்வதே யுத்திக் கிசைந்தமை, கடவுளுண்மை நையாயிக தர்மத்துக்கு இனிது அமைவுடைத்தாய் அதனால் தாபிக்கப்படுதல், கடவுளுண்மை சந்தேக விபரீதமற நாட்டப்படல், கடவுளுண்மைக்கு மறுதலையான ஆட்சேப சமாதானம் என்பன இதனுள் அடங்குவன.
இந்நூல் 1896 இலே ஆசிரியரால் அச்சிடுவிக்கப்பெற்றது. திருமலை சே. வெ. ஜம்புலிங்கம்பிள்ளை 1954 இலே சென்னையில் மறுபதிப்புச் செய்தனர். இப்பதிப்பிலே ஆசிரியரின் பிரபஞ்ச பிசாரம் எனும் நூலிலிருந்து ஒரு பகுதி அநுபந்தமாகச் சேர்க்கப்பட்டுள்ளது.
குகதாசர் சபாரத்தின முதலியார் ஈச்சுர நிச்சயத்தின் இரண்டாம் பாகமாக 1918 இலே பிரபஞ்ச விசாரம் என்ற நூலை எழுதிச் சென்னையிற் பதிப்பித்தார். இந்நூலிலே சைவ சித்தாந்தமே சற்சமயமென்று நாட்டப்பட்டுள்ளது. (பொ.யூ.)
339

Page 386
ஈசுரமூர்த்தியாபிள்ளை, மு. பொ.
(18e1 - 194ᏅᎧ
திருநெல்வேலி முந்நீர்ப்பள்ளத்திற் பிறந்தவர்; பொன்னம்பல பிள்ளையின் புதல்வர்; தமிழ், ஆங்கிலம், சங்கதம் கற்றவர்; தமிழாசிரியராகப் பல ஊர்களிலே பணி செய்தவர்; மாணவர் போதம் எனும் சஞ்சிகையைத் தூத்துக் குடியில் நடத்தியவர்.
அகராதிமாலை, சதுர்வேத இயல்முறை, பிரம சபையின் கருத்து, சிவபரத் தவநிச்சயம் முதலிய நூல்களை இயற்றியவர். (பொ. பூ)
ஈசோபநிடதம்
“ஈஸாவாஸ்யம்' எனும் ஆதித்தொடரால் ஈஸாவாஸ்யம், ஈசோபநிடதம் என்ற பெயர் பெறுவது இவ்வுபநிடதம். இதற்குச் சங்கிதோபநிடதம் என்றும் பெயருண்டு. முக்திகா உபநிடதம் தரும் 108 உபநிடதப் பட்டியலிலே முதலாவதாக வைக்கப்பட்டது இதுவாகும்.
யசுர் வேதத்தின் ஐந்தாம் பிரிவான சுக்கில யசுர் வேதமாகிய வாஜச நேயி சங்கிதையின் நாற்பதாம் அத்தியாயத்தில் உள்ளது ஈசோபநிடதம்.
இது அளவிலே மிகவும் சிறிய உபநிடதம், பதினெட்டுச் சிறிய பாடல்களை உடையது. ஆயினும் முக்கியமான விடயங்களைப் பொருளாக உடையது. ஞானமார்க்கம், கருமமார்க்கம், ஆத்மாவின் முரணிய இயல்பு பற்றற்ற துறவியின் இயல்பு என்பனவற்றின் தன்மைகளைப் பற்றிப் பேசுகின்றது. உண்மையான ஞானத்திற்கு அமானுஷ்ய அறிவோ அல்லது இயற்கை அறிவோ மட்டும் போதாது என்று இவ்வுபநிடதம் குறிப்பிடுகின்றது.
F(3
நம்மாழ்வார் பாடிய திருவாய் மொழிக்கு வடக்குத் திருவீதிப் பிள்ளை எழுதிய உரைபொதுவாக ஈடு என்று வழங்கப் பெறும்.
இவ்வுரை ஈடு எனப் பெயர் பெற்றதற்குச் சில காரணங்கள் கூறப்பட்டுள்ளன. திருவாய்மொழி ஈடுபாட்டினால் எழுந்த உரையாதலின் ஈடு எனப்பட்டது என்பர் சிலர் பூரீ பாஷயத்திற்கு எழுந்த சுருத பிரகாசிகை எனும் சங்கத வியாக்கியானம் போன்று 36,000 கிரந்தமுளதாற் சுருதப் பிரகாசிகைக்கு ஈடானது எனும் பொருளிலே இவ்வியாக்கியானம் ஈடு எனப் பட்டதென்பர் சிலர். சுயமான முயற்சியின்றி முன்னைய ஆசாரியர்களின் உபந்நியாசங் களைப் பதிவு செய்தது போன்று இட்டு வைத்திருப்பதால் ஈடெனப்பட்டது என்பர் வேறு சிலர்.
வடக்குத் திருவீதிப்பிள்ளை திருவிருத்தத்திற்குக் கண்ட
உரையும் ஈடென அழைக்கப்பெற்ற போதும் அம்மரபு போற்றப் படுவதாகக் கூறுவதற்கில்லை.
340

பூரீ கிருஷ்ணபாதன், திராவிட வேதாந்த தேசிகர் எனவும் அழைக்கப் பெறும் வடக்குத் திருவீதிப்பிள்ளை பூரீ ரங்கத்திலே பிறந்து, நடாதூரம்மாள், நம்பிள்ளை எனும் ஆசாரியர்களின் சீடராக விளங்கியவர். அவர் காலம் 1217 - 1312 என்பர்.
வடக்குத் திருவீதிப்பிள்ளை எழுதிய ஈடு, முப்பத்தா றாயிரப்படி எனவும் வழங்கப் பெறும். முப்பத்தாறாயிரம் கிரந்தம் உள்ளதால் அவ்வாறு அழைக்கப் பெறுவது. ஒற்று நீக்கி 32 எழுத்துக்களையுடையது ஒரு கிரந்தமாகும்.
சங்கதத்தில் எழுந்த ஆரியவேதம் போன்று திருவாய்மொழி திராவிட வேதமாதலின் அங்குள்ளவாறு கிரந்தம் எண்ணும் மரபு தோன்றியது. திருக்குகைப் பிரான்பிள்ளான் முதன்முதலாக விஷ்ணு புராணத்தினைப் போன்று ஆறாயிரம் கிரந்தத்தில் திருவாய் மொழிக்கு ஆறாயிரப்படி எனுமுரை எழுதினார். அவர் பன்னிரண்டாம் நூற்றாண்டின் பிற்கூறிலே அவதரித்தவர். நஞ்ஜியர் திருவாய் மொழிக்குச் சொன்ன உரையை நம்பிள்ளை (1207 - 1312) ஒன்பதினாயிரப்படி என எழுதினார். நஞ்ஜியர், நம்பிள்ளையின் சீடர் பெரியவாச்சான் பிள்ளையும் நடா தூரம்மாள், நம்பிள்ளையின் சீடர் வடக்குத் திருவீதிப்பிள்ளையும் சமகாலத்தவர்; வியாக்கியான சக்ரவர்த்தி பெரியவாச்சான் பிள்ளை திருவாய் மொழிக்கு எழுதிய உரை, இருபத்து நாலாயிரப்படி என வழங்கப் பெறும். பெரிய வாச்சான் பிள்ளையின் சீடர் வாதிகேசரி அழகிய மணவாளப் பெருமாள் ஜியர் திருவாய்மொழிக்கு எழுதிய உரை, பன்னிராயிரப்படி என அழைக்கப்பெறும்.
ஆறாயிரப் படியிலே திருக்குருகைப் பிரான்பிள்ளனின் மணிப்பிரவாள நடை ஒரு பாடலில் நான்கு வட சொல்லுக்கு இரண்டு தமிழ்ச்சொல் என்ற வீதத்தில் அமைந்ததாகத் தெரிகிறது. மேலும் வினைகளிலன்றி ஏனைய வடிவங்களிலே சங்கத விகுதிகளையும் அவர் போற்றியுள்ளார். நஞ்ஜியரின் மணிப்பிரவாள நடை ஒரு பாடலில் மூன்று வட சொல்லுக்கு ஐந்து தமிழ்ச் சொல் என்ற வீதாசாரத்தைப் பெறுவதோடு வடசொல் விகுதிகளையும் தவிர்ப்பதாகக் காணப்படுகின்றது. பெரியவாச்சான் பிள்ளையும் வடக்குத் திருவீதிப்பிள்ளையும் ஒரு வட சொல்லுக்கு இரு தமிழ்ச்சொல் எனும் வீதத்திலே மணிப்பிரவாள நடையைப் பின்பற்றுகின்றனர்.
வடக்குத் திருவீதிப்பிள்ளை ஈட்டிலே பட்டர், நஞ்ஜியர், நம்பிள்ள என்போர் உபந்நியாசங்களில் இடம்பெற்ற சிறப்புரைகளைப் பேணிப்போற்றியிருப்பதைக் காணலாம். மேலும் பேச்சு மொழியைப் பல இடங்களிலே பொருத்தமாகப் பயன்படுத்தும் தன்மையையும் காணலாம். இலக்கிய அழகையும் பண்டைய தமிழ் இலக்கியப் பாரம்பரியத்தையும் பேணும் நோக்கையும் அவதானிக்க முடியும், திருவாய் மொழிக்கெழுந்த பழைய மணிப்பிரவாள உரைகளில் இதுவே நீண்டதாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
வித்துவான் பு: ரா, புருஷோத்தம நாயுடு (1901 - ) ஈட்டின் தமிழாக்கத்தைப் பத்துப் பாகமாகத் தந்துள்ளார். (1952 - 1959). (பொ. பூ)
இந்துக் கலைக்களஞ்சியம்
ܓܠ

Page 387
ஈழத்துச் சிதம்பர புராணம்
ஈழ நாட்டின் வடபாலுள்ள யாழ்ப்பாணக் குடாநாட்டிற் காரைநகர் என இன்று வழங்கும் காரைதீவிலே திண்ணபுரம் எனும் பிரிவிலுள்ள சுந்தரேசர் திருப்பதி, ஈழத்துச் சிதம்பரம் என்று பிரபல்யம் பெற்ற திருத்தலமாகும்.
ஈழத்துச் சிதம்பரத்திற் கோயில் கொண்டருளிய சுந்தரேசராம் சிவபிரான்மீது பாடப்பட்டதே திருத்திண்ணபுரச் சுந்தரேசர் புராணம் என்னும் ஈழத்துச் சிதம்பரபுராணம். இதனுள் பாயிரச் சருக்கம் முதல் விழாவயர் சருக்கம் ஈறாகவுள்ள பத்துச் சருக்கங்களிலே 806 பாடல்கள் இடம்பெறுகின்றன.
ஈழத்துச் சிதம்பர புராணத்தைப் பாடியவர் நவாலி பண்டிதர் சோ. இளமுருகனார் (1908 - 1975). சைவ மரபையும் தமிழ் மரபையும் பேணுவதிலே மிகுந்த அக்கறை காட்டிய பண்டிதர் இளமுருகனாரின் பல்வேறு ஆக்கங்களிலே நின்று நிலைத்துப் பெருமை தரக்கூடியது ஈழத்துச் சிதம்பர புராணமாகும்.
சுந்தரேசர் திருக்கோயில் தோன்றிய முறைமையும், இறைவன் திருவருள் பாலித்த திருப்பணிக்குக் கருவியாயிருந்து அப்பணிக்கே வாழ்நாளை அர்ப்பணித்த அடியார்களது வரலாறு களையும், அவர்களுடைய பரம்பரையினரின் வரலாறுகளையும், இறைவனை அருச்சித்த அந்தணர் பரம்பரைச் சரிதங்களையும், அறநெறிக் காவலரதும் அருச்சகர்களதும் வரலாறுகளையும் மையமாக வைத்து இப்புராணம் இயற்றப்பட்டுள்ளது. ஐதீகமான பெளராணிக் கதைகள் காணப்பெறாத திருத்தலங்களின் புராணங்கள் எவ்வாறு அமையலாம் என்பதற்கு இப்புராணம் ஒரு வழிகாட்டி போலத் தோன்றுகின்றது.
புராண காவியங்களின் அமைப்பினைப் போற்றிச் சிறந்த செய்யுள் நடையிலே கற்பனை நயம் மிளிர ஆசிரியர் புராணத்தில் இயற்றியுள்ளார். சைவ சித்தாந்தக் கருத்துக்கள் பொருத்தமான இடங்களில் இடம் பெறுதல் குறிப்பிடத்தக்கது. மொழி பெயர்ப்பாக அமையாத இப்புராணத்திலே இறைபக்தி ஊட்டும் சுவைமிக்க பாடல்கள் மலிந்துள்ளன.
ஈழத்துச் சிதம்பர தேவத்தானத்தார் விரோதிகிருது வருடம் மார்கழி மாதம் (1972) ஈழத்துச் சிதம்பர புராணத்தைப் பதிப்பித்தனர். இப்பதிப்பிலே பண்டிதரவர்களின் பாரியார் பண்டிதை பரமேசுவரியார் புராணத்திற்கு இயற்றிய உரையும் இணைக்கப்பட்டுள்ளமை நோக்கத்தக்கது. (பொ.யூ.)
இந்துக்கலைக்களஞ்சியம்

ஈழத்துச் சிதம்பரம்
யாழ்ப்பாண மாவட்டத்திலே யாழ்ப்பாண நகருக்கு வடமேற்கே பத்து மைல் தொலைவிலுள்ளது காரைதீவு என முன்னர் வழங்கிய காரைநகர். காரைநகரிலே திண்ணபுரம் பிரிவிலே அமைந்த பூரீ சுந்தரேஸ்வரர் திருக்கோயில் ஆகிய சிவன் கோயில், ஈழத்துச் சிதம்பரம் என்று சிறப்பிக்கப்படுவதாகும். சிதம்பரத்திலே நடைபெறுவது போன்றே பெரும்பாலும் உற்சவங்கள் திண்ணபுரம் சிவன் கோயிலில் நடைபெறுவதால் அது ஈழத்துச் சிதம்பரம் என அழைக்கப்பட்டு வருகின்றது. இது பத்தொன்ப தாம் நூற்றாண்டின் இடைப்பகுதியிலே அமைக்கப்பட்டது.
ஈழத்துச் சிதம்பரத்தில் எழுந்தருளியுள்ள சிவபிரானுக்கு சுந்தரேஸ்வரர் என்றும் அம்பிகைக்குச் செளந்தராம்பிகை என்றும் பேர். இங்கு எழுந்தருளியுள்ள ஐயனார் பழமையும் சிறப்பும் மிக்க மூர்த்தியாவர். ஐயனார் கோயிலை அமைப்பதிலே முன்னின்ற அம்பலவி முருகர் என்ற பக்தரே பின்பு சிவன் கோயிலை அமைப்பதிலும் முன்னின்றவர். கர்ப்பக்கிருகத்தில் எழுந்தருளியுள்ள சிவலிங்க மூர்த்திக்குப் பரிவார தெய்வங்களாக அம்பாள், நடேசர், சந்திரசேகரர், சோமாஸ்கந்தர், விநாயகர், சுப்பிரமணியர், சண்டேஸ்வரர், சமயகுரவர் என்போர் எழுந்தருளியுள்ளனர்.
நித்திய பூசைகள் ஒழுங்காக நடைபெறும் இத்திருக் கோயிலில் நடைபெறும் உற்சவங்களிலே மிகப் பிரசித்தி பெற்றது திருவெம்பாவை உற்சவமாகும். நடராஜர் இரதாரோகணமும் ஆர்த்திராபிஷேகமும் குறிப்பிடத்தக்கவை. அபிஷேகத்தன்று மாலையில் திருவூடல் நடைபெறும். பங்குனி உத்தரத்தில் நிறைவடையும்படி சிவபெருமான் திருவிழா பத்துத் தினங்களும் ஆடிப்பூரத்தில் நிறைவடையும்படி அம்பாள் திருவிழா பத்துத் தினங்களும் நடைபெறுவன. தைப்பூசம், மாசிமகம், ஆவணிச் சதுர்த்தி, நவராத்திரி, கார்த்திகைத் தீபம் என்பனவும் விசேடமாக இங்கு போற்றப்படுகின்றன.
ஈழத்துச் சிதம்பரபுராணம் பண்டிதர் சோ. இளமுருகனார் பாடியது. காரைநகர் மு. கார்த்திகேய ஐயர் திண்ணபுர வந்தாதியும் காரைநகர் த. நாகமுத்துப் புலவர் சுந்தரேசர் திருப்பதிகமும் திருவூஞ்சலும் காரைநகர் ச. பஞ்சாஷரக்குருக்கள் திண்ணபுர வெண்பாவும் பாடியுள்ளனர். (பொ.யூ.)
341

Page 388
O1.
O2.
O3.
O4.
Ꭴ5.
O6.
O7.
O8.
O9
O.
11.
12.
13.
14.
15.
16.
17.
18.
19.
2O.
21.
22.
23.
24.
25.
26.
27.
28.
29.
3O.
31.
32.
33.
34.
35.
36.
37.
39.
40.
41.
42.
43.
44.
342
சொல்
அக்கமகாதேவி
அக்கினி
அக்கினி புராணம்
அகச் சமயம்
அகத்தியத்தாபனம் அகத்தியர் அகத்தியர் தேவாரத் திரட்டு அகத்தியான்பள்ளி
அகப்புறச் சமயம் அகப்பேய்ச்சித்தர்
அகலிகை
அகலிகை வெண்பா
அகளங்கன் அகிலேசபிள்ளை, வே.(1853 - 1910) அகிலேஸ்வரசர்மா சி.
அகோ. 1615 - 1675
அகோபிலம்
அகோரசிவசாரியார் அகோர பத்ததி அகோரமுனிவர் அகோரமூர்த்தி
91 files 600IIT6Odupies L606).
அங்கதேசம்
அங்காரக சதுர்த்தி
அங்காரகன்
அங்காளம்மன்
அங்காளேஸ்வரி அந்தாதி அச்சிறுபாக்கம் அச்சுதாநந்தசுவாமி அசலாம்பிகை அம்மையார்
அசாம்
அசுத்தமாயை அசுவமேத யாகம் அசுவினிதேவர் அஞ்சைக்களம் அஞ்ஞானக் கும்மி மறுப்பு அஞ்ஞைவதைப் பரணி அட்ட சுயம்புதலம் அட்டதிக்குப் பாலகர் அட்டமா சித்தி அட்டமூர்த்தி அட்டவீரட்டானம்
அட்டாங்க நமஸ்காரம்
அட்டாங்க யோகக்குறள்

6bᏛᏈᎠᏝ 60Ꮭ
Ο
O2
O5
Ꭴ5
O6
O6
O7
O7
O8
O8
1O
11
12
14
15
15
15
15
16
16
16
17
17
17
19
19
19
2O
21
21
23
23
25
26
26
27
27
28
28
28
29
31
31
இந்துக் கலைக்களஞ்சியம்
ܠܐ

Page 389
45.
46.
47.
48.
49.
50.
51.
52.
53.
54.
55.
56.
57.
58.
59.
60.
61.
62.
63.
64.
65.
66.
67.
68.
69.
7Ο.
71.
72.
73.
74.
75.
76.
77.
78.
79.
80.
81.
82.
83.
84.
86.
87.
88.
89.
இந்துக் கலைக்களஞ்சியம்
அட்டாங்க யோகம்
அடங்கன்முறை அடயோகம் (ஹதயோகம்) அடைக்கலங்காத்த முதலியார் அண்ணங்கராசாரியர், உ.வே.
அண்ணன்
அண்ணாசாமிஜயர் அண்ணாமலைச் சதகம் அண்ணாமலைச் செட்டியார், ராஜா சேர். மு. (30.09.188 அண்ணாமலைச் செட்டியார், இராசா (1881-1948) அண்ணாமலை ரெட்டியார் அண்ணாமலை வெண்பா


Page 390
90.
91.
92.
93.
94.
95.
96.
97.
98.
99.
1OO.
1Ο 1.
1O2.
103.
104.
105,
106.
1O7.
108.
1O9.
11O.
11.
甘2。
113.
114.
1贯5。
116.
117.
118.
119.
120.
21.
122.
123.
124.
125.
126.
127.
128.
129.
13O.
131.
132.
133.
134.
135.
344
அநுபூதி
அநுமான்
அநுராதபுரம் அனுபலப்திப் பிரமாணம் அப்பய்ய தீகூஷிதர் அப்பர் தேவாரம் அப்பர் பிள்ளைத்தமிழ் அப்பன் சுவாமி அப்பாக்குட்டி, வே. அப்பாச்சாமி ஐயர், கா. அப்பாத்துரைப்பிள்ளை, மு. அப்பாவுப்பிள்ளை அப்பாவுப்பிள்ளை அப்பாவு முதலியார் அப்பாஸ்வாமிப்பிள்ளை
sit Sloirot IITir
- očitolóтбобт அப்புக்குட்டி ஐயர், சி. (1788-1863) அப்புமுதலியார் அப்பூதியடிகள் நாயனார்
9IUU Slug, ITGOronomyth அபரக் கிரியைகள்
அபரமுத்தி
அபிதானகோசம் அபிதான சிந்தாமணி அபிதான ரத்னமாலா அபிநவகுப்தர்
அபிநய தர்ப்பணம் அபிராமிப்பட்டர் அபிராமி அந்தாதி அம்பர்ப் புராணம் அம்பலநாதத் தம்பிரான் அம்பலவான அடிகள் அம்பலவாணக் கவிராயர் அம்பலவாணக் கவிராயர் அம்பலவாணக் கவிராயர் அம்பலவாண தேசிகர் அம்பலவாண தேசிகர் கலம்பகம் அம்பலவாணதேசிகர் பிள்ளைத்தமிழ் அம்பலவாணநாவலர் ஆ. ( -1932) அம்பலவான பண்டிதர், அ. அம்பாவாடல்
அம்பிகாபதி அம்பிகைபாக உபாத்தியாயர், பொ. அம்பிகைபாகன், ச. (3.5.1908-)
அம்மாள்

5O
51
51
56
61
61
62
62
62
62
62
62
62
62
62
63
63
63
63
63
63
64
64
65
65
65
65
67
67
67
68
68
68
68
68
68
68
69
69
69
69
7Ο
7Ο
7Ο
7Ο
7Ο
இந்துக் கலைக்களஞ்சியம்

Page 391
இந்துக் கலைக்களஞ்சியம்
அமர்நாத்
அமர்நீதி நாயனார் அமரகோஷம்
əsəHLDUT6)ğ5l
அமலனாதிபிரான்
EGHU DIT 6OJIT GOD EF
அமிர்தகழி அமிர்தநாத உபநிடதம் அமிர்தபிந்து உபநிடதம் அமிர்தரஞ்சனிரஹஸ்யங்கள் அமிர்தலிங்கத் தம்பிரான்
அமிர்தலிங்கம்பிள்ளை அமிர்தாஸ்வாதினி ரகஸ்யங்கள்
அமுதனார் அமுதாம்பிகை பிள்ளைத்தமிழ் அயகிரீவ உபநிடதம் அயக்கிரீவர்
அயோத்தி
அர்ச்சாவதாரம்
அர்ச்சிராதி
அர்த்த சாஸ்திரம் அர்த்தநாரீசுவரர்
அர்த்த பஞ்சக ஞானம்
அர்த்த பஞ்சகம் அர்த்த மண்டபம் அரங்கநாதக் கவிராயர் அரங்கநாத முதலியார் அரசகேசரி, நல்லூர் அரசஞ்சண்முகனார் (1868-1915) அரதத்தாசாரியார் அரவிந்தர் (கி.பி. 1871- 1950) அரிகரதாரதம்மியம் அரிகர புத்திர உபாத்தியாயர் அரிகரபுத்திரன்
அரிகேசரி
அரிகேசரி பராக்கிரம பாண்டியன்
அரிச்சந்திரபுராணம் அரிச்சந்திரன்
அரித்துவாரம்
அரிதாசர்
அரிதாஸ்
அரியக்குடி
அரியர்த்தர்
அரிவம்சம்
அரிவாட்டாய நாயனார்

了1
71
7世
72
74
74
75
78
78
79
79
79
79
8O
8O
8O
8O
81
83
85
86
90
90
91
91
91
91
91
9.
92
92
95
95
95
98
98
99
99
1OO
OO
1OO
O
1Օ 1
1Ο 1
1O1
345

Page 392
181.
182.
183.
184.
185.
186.
187.
188.
189.
190.
191.
192.
193.
194.
195.
196.
197
198.
199.
2OO.
2O1.
2O2.
2O3.
2O4.
2O5.
2O6.
2O7.
2O8.
209.
21O.
211.
212.
213.
214.
215.
216.
217.
218.
219.
22O.
221.
222.
223.
224.
225.
226.
34-6
அருண்டேல் (1878-1945)
அருணகிரிநாதர் அருணகிரி முதலியார், சிவபூநீ அருணகிரியந்தாதி
அருணந்தி சிவாசாரியார்
அருண்மச்சிவாயர்
அருணாசல அகூடிரமாலை அருணாசல உபாத்தியாயர், கா.(1888-1969) அருணாசல உபாத்தியாயர், ச. (31.10.1864 - 17.01.19 அருணாசலக் கவிராயர் (கி.பி 1712-1779) அருணாசலக்கவிராயர், மு. ரா. அருணாசலக் கவிராயர்
அருணாசல சுவாமி
அருணாசல தேசிகர் அருட்டிருஅருணாசலதேசிக அடிகளார் அருணாசல புராணம் அருணாசலம் சேர்,பொன்னம்பலம் (1853-1924) அருணாசலம், மு அருணாசலம், மு (1907-1988) அருணாசல முதலியார் அருணாசல முதலியார் அருணாசல முதலியார்’ அருணாசலேசுரர் சாரப்பிரபந்தம் அருணிலை விகாசன் திரைலோக்யமல்லன் வத்ஸ்ராஜ அருந்ததி அரும்பாத்தை வேதவிநாயகர் பிள்ளைத்தமிழ் அருள்பரானந்த சுவாமிகள் அருளம்பல சுவாமிகள் 1865 - 1925 அருளம்பல சுவாமிகள் அருளம்பலம், சு. (1910- 1966) அருளாளதாசர்
அருளாளப்பெருமாள் அருளிச் செயல் ரகஸ்யம்
அருளையர்
அரையர் சேவை
அல்லமபிரபு
அல்லாகாபாத்
அல்லியம்
அவத்தை
அவதாரக் கொள்கை
அவதாரம்
அவந்தி
அவந்திவர்மன்
அவிநாசிநாத சுவாமிகள் அவிநாசிலிங்கம், தி. சு. (1903- ) அவிரோதவுந்தியார்

2O)
}GöT s
1O2
1O2
104
105
O5
1O5
106
1O6
O6
O6
O7
O7
O7
1O7
O8
108
108
124
124
125
125
125
125
125
126
126
126
127
127
134
134
135
35
135
135
138
138
138
39
139
146
148
149
15O
150
使51
இந்துக் கலைக்களஞ்சியம்

Page 393
227.
228.
229.
23O.
231.
232.
233.
234.
235.
236.
237.
238.
239.
240.
241.
242.
243.
244。
245.
246.
247.
248.
249.
250.
251.
252.
253.
254.
255.
256.
257.
258.
259.
26O.
261.
262.
263.
264.
265.
266.
267.
268.
269.
27O.
271.
இந்துக் கலைக்களஞ்சியம்
அவையாம்பிகை சதகம்
அழகர் aboobUebb அழகர் கிள்ளைவிடுதூது அழகர் கோவில் (அழகர்மலை) அழகரந்தாதி அழகிய சொக்கநாத பிள்ளை அழகிய சொக்கநாதவரோதயன் அழகிய திருச்சிற்றம்பல தேசிகர் அழகிய திருச்சிற்றம்பல தேசிகர் (-1748) அழகிய நம்பி அழகிய மணவாளதாசர் அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் அழகிய மணவாளப் பெருமாள் ஜீயர் அழகு முத்துப்புலவர் அழுகணிச்சித்தர்
96IT606)
அற்புதத் திருவந்தாதி அற்புத பிராமணம் அறப்பளிசுரசதகம் அறுபத்து நான்கு திருவிளையாடல் அறுபத்து மூன்றுநாயன்மார் அறுவகைச் சமயம் அறுவகைத் தரிசனம்
அன்னமாச்சார்யா
அனந்த சுப்பையர், க. அனந்த விரதம்
அனந்தாழ்வான்
அனலைதீவு அனவரத விநாயகம்பிள்ளை, சு.(1877-1940) அனாவர்த்தம் அனுமன் (அநுமான்) அஜபா நடனம்
அஷ்டப் பிரபந்தம் அஷ்ட பிரகரணம்
அஷ்டாதச புராணம்
அஷ்டாதச ரஹஸ்யம் அஸ்மோபாக்கியானம்
அஸ்வகோஷர்
அஹிச்சத்திரம்
அகூடியநவமி
ஆகமம்
ஆகாமியம்
ஆங்கோர் வாத்
ஆச்சான்
ஆச்சிரமம்

15 1
151
151
152
154
154
154
154
飞54
154
154
飞54
155
155
155
155
贯56
157
157
157
159
162
163
166
17Ο
17Ο
171
171
171
171
172
174
174
175
175
177
178
178
179
18O
181
183
183
185
185
347

Page 394
272.
273.
274.
275.
276.
277.
278.
279. 280.
281.
282.
283.
284.
285.
286.
287.
288.
289.
29O.
291.
292.
293.
2.94.
295.
296.
297
298.
299.
3OO.
301
3O2.
3O3.
3O4.
305.
306.
3O7.
3O8.
309
31O.
311.
312.
313.
314.
3飞。
316.
348
ஆசார்யர் ஆசார்யஹ்ருதயம் ஆசாரக்கோவை ஆசிரியமாலை ஆசிரியர் நல்லந்துவனார் ஆசௌச தீபிகை ஆடல் வல்லான்
ஆடி அமாவாசை ஆடிப்பூரம் ஆடிவேல் விழா ஆண்டாள் ஆண்டாள் பிள்ளைத்தமிழ் ஆண்டு விழா
ஆணவம்
ஆத்தான்
ஆத்தான் ஜீயர் ஆத்திசூடி ஆத்மபோத உபநிடதம் ஆத்மஜோதி ஆத்மோபநிடதம் ஆதிசங்கரர் ஆதித்த சோழன் (கி.பி. 871-907) ஆதித்தர் ஆதியப்பநாவலர் ஆதியுலா
ஆதீனங்கள் ஆந்திரப் பிரதேசம் ஆப்பனூர்ப்புராணம் ஆபிரகாம் பண்டிதர் ஆமுக்தமால்யதா ஆய்ச்சியர்குரவை திரு ஆய்ப்பாடி
ஆயி
ஆர்யபட்டர்
ஆரணியகம் ஆரிய சமாஜம்
ஆரியர்
ஆருத்திரா ஆலக்கோயில் ஆலங்கேணி
ஆலம்பூர் ஆலாலசுந்தரஞ்செட்டியார், பூ ஆலாலசுந்தரம்பிள்ளை (1852-1922) ஆவணி அவிட்டம் ஆவணி சதுர்த்தி

186
188
188
189
189
189
190
191
192
192
193
196
196
198
199
199
199
2OO
2OO
2OO
2OO
2O1
2O3
2O3
2O3
2O4
211
215
2飞
216
216
217
217
217
217
218
219
222
222
223
223
224
224
224
224
இந்துக் கலைக்களஞ்சியம்

Page 395
317.
3.18.
319.
32O.
321
322.
323.
324.
325.
326.
327.
328.
329.
33O.
331.
332.
333.
334.
335.
336.
337.
338.
339.
34O.
341.
342.
343.
344.
345.
346.
347.
348.
349.
35O.
351.
352.
353
354.
355.
356.
357.
358.
359
36O
361.
இந்துக் கலைக்களஞ்சியம்
ஆவணி மூலம்
ஆவர்த்தம்
ஆழ்வார்
ஆழ்வார் திருநகரி
ஆழ்வான்
ஆளவந்தார்
ஆளவந்தார் ஆளுடையபிள்ளையார்திருக்கலம்பகம் ஆளுடைய பிள்ளையார் திருச்சண்பை விருத்தம் ஆளுடைய பிள்ளையார் திருத்தொகை ஆளுடைய பிள்ளையார் திருமும்மணிக்கோவை ஆளுடைய பிள்ளையார் திருவந்தாதி ஆளுடைய பிள்ளையார் திருவுலாமாலை ஆறாந்திருமுறை
ஆறாறு தத்துவங்கள்
ஆறுபடைவீடு
ஆறுமாமுகன் அருட்பேராயிரம் ஆறுமுக உபாத்தியாயர்
ஆறுமுகசுவாமி
ஆறுமுகத்தம்பிரான் ஆறுமுகநயினார் பிள்ளை - 1925 ஆறுமுகநாவலர் (1822-1879) ஆறுமுகப்பிள்ளை,சி.
ஆறுமுகம், சு.
ஆறுமுகம்பிள்ளை, பூ.
ஆறுமுகம் பிள்ளை, மு. ஆறுமுகம்பிள்ளை வைத்தியர், சி. (1869-1933) ஆறுமுகமெய்ஞ்ஞான சிவாசாரிய சுவாமிகள் (1769) ஆறுமுக மெய்ஞ்ஞான சிவாசாரியதேசிகர் நெஞ்சு விடு: ஆறுமுகன்
ஆறெழுத்தந்தாதி
ஆன்மதத்துவம்
ஆன்ம விசாரம்
Ję,6öTUDIT
ஆன்மார்த்த பூசை
ஆன்மானந்தவாதம்
ஆனந்தக் கூத்தர் ஆனந்த கெ. குமாரசுவாமி (1877-1947) ஆனந்த தாண்டவம் ஆனந்ததீர்த்தர் (197-1276) ஆனந்த மாயீ (1896-1982) ஆனந்தருத்திரேசர் வண்டு விடுதூது ஆனந்த வர்த்தனர்
ஆனாயநாயனார்
ஆனைக்குட்டிசுவாமிகள்

தூது
225
225
225
229
23O
23O
23O
23O
23O
231
231
231
231
231
232
233
234
234
235
235
235
235
244
244
245
245
245
245
245
245
247
247
247
248
249
250
250
250
253
254
254
254
255
257
257
349

Page 396
362.
363
364.
365.
366.
367.
368.
369.
37O.
371.
372.
373.
374.
375.
376.
377.
378.
379.
380.
381,
382.
383.
384。
385.
386.
387.
388.
389.
390.
391.
392.
393.
394.
395
396.
397.
398.
399.
4OO.
4O1.
402.
403.
4O4.
405.
4O6.
350
இசைஞானியார் இட்டலிங்கக் குறுங்கழிநெடில் இட்டலிங்க நெடுங்கழிநெடில் இட்டலிங்கவகவல் இட்டலிங்கவயிடேகமாலை இடங்கழிநாயனார் இடபாந்திகள் (இடபாரூடர்) இடும்பன் இடைக்காட்டுச் சித்தர் பாடல் இணுவிற்கோயில்கள் இதிகாசங்கள்
இதோபதேசம் இந்திரநீல பர்வதரம்
இந்திரன்
இந்து
இந்து சாதனம்
இந்தோனீசியா இயற்பகை நாயனார்
இயற்பா
இரகஸ்ய கிரந்தங்கள் இரகஸ்ய திரயம் இரகுநாதையர், சந் இரகுநாதையர், இசி, இரகுவம்சம்
இரட்டையர் இரண்டாம் ஆயிரம் இரண்டாம் திருவந்தாதி இரண்டாவது திருமுறை இரணியவர்மன் இரணியன் வதைப்பரணி இரத்தினம் நவரத்தினம் , திருமதி இரத்தினவேலு முதலியார் இரத்தினேசுவரஐயர், வ.மு. இரதோற்சவம் இரமண மகரிஷி, (1879-1950) இரஹஸ்ய திரய ஸாரம் இராகவர் பிள்ளைத்தமிழ் இராகவேந்திரர் , (-1671) இராகவையங்கார், ராவ்சாகிப் மு.(1878-1960) இராகவையங்கார், ரா (1870-1946) இராகு இராசகோபாலப்பிள்ளை இராசசிம்மபல்லவன் இராசப்ப நாவலர்
இராசமாணிக்கம், மா. (1907-1967)

258
258
258
258
259
259
259
259
26O
26O
261
269
27O
27O
27O
272
272
273
273
274
275
275
275
276
276
277
277
278
278
279
279
28O
28O
28O
281
282
282
282
282
283
283
284
284
284
284
இந்துக்கலைக்களஞ்சியம்

Page 397
4O7.
408.
4O9.
41O.
411.
412.
413.
414.
4飞。
416.
417.
418.
419.
42O.
421.
422.
423.
424.
425.
426.
427.
428.
429.
430.
431.
432.
433.
434.
435.
436.
437.
438.
439.
44O.
441.
442.
443.
444.
445.
446.
447.
448.
449.
450.
451.
இந்துக் கலைக்களஞ்சியம்
இராசயோகம்
இராசரத்தினம் சு. (1884 - 1970) இராதாகிருஷ்ணன், எஸ். (1888-1975) இராமகிருஷ்ண இயக்கம் இராமகிருஷ்ணர் (1836-1886) இராமகிருஷ்ணானந்த சுவாமிகள்(1863-1911) இராமகீர்த்தி
இராமச்சந்திரன், ச. இராமச்சந்திரா, க. (26.04.1976) இராமசாமிச் செட்டியார் இராமசாமிச் செட்டியார்
இராமசாமி சுவாமிகள் இராமசாமி நாயுடு இராமசுப்பிரமணியன்
இராமதாசர்
இராமதாஸ் (1608 - 1681)
இராமநவமி
இராம நாடகக் கீர்த்தனை இராமநாதஞ் செட்டியார், அ. (1855-1944) இராமநாதபிள்ளை, ப. (1890) இராமநாதன், சேர்.பொன்னம்பலம் (1851-1930) இராமநாதன், வை. இராமநாதன் செட்டியார், கா. (1899-1966) இராமநாதன் செட்டியார்-வே. இராமயோகி இராமலிங்க ஜயர், ச. (1649) இராமலிங்க சுவாமிகள் (1823-1874) இராமலிங்க சுவாமிகள் (-1906) இராமலிங்க சுவாமிகள் (- 1968) இராமலிங்க சுவாமிகள் பிள்ளைத்தமிழ் இராமலிங்கம், க. (1880-1953) இராமலிங்கம், வ. (1885) இராமலிங்கம் பிள்ளை, வெ. (1888) இராமன்
இராமனதிச்சுரம் இராமாநந்த அடிகள் (1858-1956) இராமானந்தர்
இராமாநுசக்கவிராயர்
இராமாநுசதாசர் இராமாநுச நாவலர், ஏ.வெ. இராமாநுச நூற்றந்தாதி
இராமாநுசர்
இராமாநுஜாசார்யர்
இராமாயணம்
இராமீசுரக் கோவை

284
284
285
286
289
289
29O
292
292
292
292
292
292
293
293
293
293
294
294
294
294
295
295
295
295
295
296
296
296
296
297
297
297
297
298
298
298
299
299
299
299
299
3OO
3OO
3O2

Page 398
487.
438.
489.
490.
491.
492.
493.
494.
452.
453.
454,
455.
456,
457.
458.
459.
46O.
461.
462.
463.
464.
465.
466.
467.
468.
469.
47O.
471.
472.
473.
474.
475.
476.
478.
479.
480.
481.
482.
483.
484.
485.
486.
495.
352
இராமேசுவரம்
இராமோதந்தம்
இராமோபாக்கியானம்
இராஜகோபாலாச்சாரியார், 8ી. இராஜராம் கோவிந்தராவ் இராஜராஜ சதுர்வேதிமங்கலம் சேரிகளும், பிடாகைகளு இராஜராஜ சோழன் (985– 1014) இராஜேந்திர சோழன் (1012-1044) இருக்கு வேத காலம்
இருக்குவேதம்
இருசமய விளக்கம் இருவினையொப்பு
இரேவணசித்தர்
இரேவணசித்தர் இலக்கணமுத்தையா (1861-1912) இலக்குமண பாரதியார் (1769-1859) இலக்குமணப்பிள்ளை,தி. (1864-1950) இலக்குமி
இலட்சுமி கணபதி இலம்பைக் கோட்டூர் இலிங்க புராணம்
இலிங்கம்
இலிங்காயதம்
இலிங்கோத்பவர்
இலுப்பைப்பட்டு
இளங்கோயில் இளசைப் பதிற்றுபத்தந்தாதி இளம்பிளிசைப்பிள்ளை இளம்பெருமானடிகள் இளம்பெருவழுதியார் இளமுருகனார், சோ. (1908-1975) இளையான்குடிமாற நாயனார் இறைசைப் புராணம்
இன்னம்பர்
இன்னா நாற்பது
இனியவை நாற்பது இசுஷ்வாகு வம்சம் ஈங்கோய்மலை எழுபது *
ஈச்சுர நிச்சயம்
ஈசுரமூர்த்தியாபிள்ளை, மு.பொ. (1861- 1940) இ. ஈசோபநிடதம்
ஈடு
ஈழத்துச் சிதம்பர புராணம்
ஈழத்துச் சிதம்பரம்
 

3O2
305
305
305
3O6
தம் 3O6
3.11
315
319
324
328
328
328
328
328
329
329
329
33O
330
- 33O
33O
331
333
333
334
334
334
334
334
334
335
335
336
336
336
y 337
{ ༣༽ ′) 339 339 ::تقابلوچی باقت:۔ գ***մ: 34O
34O
340
341
217 3341 نت لا
இந்துக் கலைக்களஞ்சியம்

Page 399


Page 400


Page 401


Page 402