கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: இந்துக்கலைக்களஞ்சியம் 7

Page 1


Page 2
முக்கிய
ئېggyd-سة-قه
பொதுசன 6
நீங்கள் எடுத்து வாசிக்கும் அழித்தல் வெட்டுதல் மற்றும் இரு கேட்டுக் கொள்கிறோம். புத்தக 178 ைேற பாடுகளைத் துண்ட தெரிவிக்கவும் இல்லாவிடில் இவ் பட்டதென்று கருதப்படுவதுடன் விவிசயையும் ஏற்க நேரிடும்
 

அறிவித்தல்
គឺជាប្រិយខ្មាំ
Dash ug ng pl LP 59 a.
பத்தகத்தில் கீறுதல், கிறுக்குதல், ாறுபாடுகளைச் செய்யவேண்டாமென 5ங்களை எடுக்கும்பொழுது இப்படி நூலகப் பொறுப்பாளருக்கு உடன் வூறுபாடுகள் தங்களாலேயே செய்யப் நூலகத்தில் விதிக்கப்படும் தண்ட

Page 3
இதனு சன இல


Page 4


Page 5
பிரதம பதிப் பேராசிரியர் சி.
GloJ6ífil இந்து சமய, கலாசார அலு
இந்து சமய அலுவ
இலங்ே
2OO
 
 

ése/-
ܡܠ ܐ பாசிரியர்
பத்மந தன்
சிரியர் ۱ C\سبک خا خدا هم
ய்வநாயகம்
484 199 سے
பீடு வல்கள் திணைக்களம் ல்கள் அமைச்சு
5

Page 6
முதற்பதிப்பு
வெளியீடு
பதிப்புரிமை
அச்சு
តាង៉ាoooo
ஆகஸ்ட், 20
இந்து சமய, இந்து சமய 248 - 1/1, கால கொழும்பு - 04 இலங்கை,
இந்து சமய ே
யுனி ஆர்ட்ஸ் 48 பீ, புளூமென கொழும்பு - 13 இலங்கை,
BUIT. SO/-
ISBN No 955
 

D5
கலாசார அலுவல்கள் திணைக்களம் ஆலுவல்கள் அமைச்சு  ெவீதி,
கலாசார அலுவல்கள் திணைக்களம்
(பிரைவேட்) லிமிட்டெட். ண்டால் வீதி,
5 - 9233-07-6

Page 7
HINDUIENCY
Volum
Managir S. THEIVA
Publi Department of Hindu Relig
Ministry of Hindu
Sri L.
20
 

"CLOPAEDIA
e - VIII -
lisher rious and Cultural Affairs Religious Affairs
anka
05

Page 8
First Edition
Published By
Copyright
Printed By
Price
July, 2005
Department of Hil Ministry of Hindu 248 I/1, Galle Ro Colombo- 04, Sri Lanka.
Department of Hiu
Unie Arts (Private 48B, Bloemendhal Colombo - 13. Sri Lanka.
Rs... (/-
ISBN No 955 - 9233-07-6

du Religious and Cultural Affairs,
Religious Affairs. ad,
hdu Religious and Cultural Affairs.
) Limited,
Road,

Page 9
፴1
功 伊
 
 

இந்துக் கலைக்களஞ்சியம்
(தொகுதி - ஏழு)
எழுத்தாளர் குழு
பேராசிரியர் சி. பத்மநாதன்
பேராசிரியர் வி. சிவசாமி
பேராசிரியர் சோ. கிருஷ்ணராஜா
கலாபூஷணம் வசந்தா வைத்தியநாதன்
பேராசிரியர் தி. ஞானகுமாரன்
திரு. க. இரகுபரன்
திருமதி இந்திரா சதானந்தன்
திருமதி தேவகுமாரிஹரன்
திருமதி நித்தியவதி நித்தியானந்தன்
டுரைகளின் இறுதியில் அவ்வக் கட்டுரைகளின் ஆசிரியர் பெயர்
சுருக்கித் தரப்பட்டுள்ளது. மேற்படி கட்டுரையாளர்களின் பெயர்ச் சுருக்கங்கள் முறையே வருமாறு அமையும். (வி.சி), (சோ.கி) (வவை), (தி. ஞா), (க.இர), (இ. ச), (தேஹ), (நிநி)

Page 10
கட்டுரை ஆசிரியர்கள்
Dr. மு. வரதராசன்
Dr. g. s. d5565.16so
அரங்க இராமலிங்கம்
சு. இராசவேலு
பேராசிரியர் மு. சண்முகப்பிள்ளை
சி. பூரீதரன்
தி. சுப்பிரமணியம்
கலாநிதி நா. சுப்பிரமணியன்
கலாநிதி எஸ். சிவலிங்கராஜா
Dr. ச. சம்பசிவம்
Dr. இரத்தின கிட்டிணமூர்த்தி
வீ. சொக்கலிங்கம்
இரா. சங்கரன்
அ.மா. பரிமணம்
தி. சுப்பிரமணியம்
புலவர் இ.இளங்குமரன்
Dr. ஜி.வி. சரோஜா
Dr.இரா. கோபாலப்பிள்ளை
எஸ். கிருஷ்ணசாமி ஐயங்கார்
Dr. பி. தட்சணாமூர்த்தி
Dr. தெ. ஞானசுந்தரம்
மா. இராமச்சந்திரன்
மேற்படி அறிஞர்களின் கட்டுரைகள் இத்தொகுதிக்கென எழுதப்பட்டவை அல்ல. வேறு நூல்களிலிருந்து பெறப்பட்டவை மேற்படி கட்டுரையாளர்களின் பெயர்ச் சுருக்க
முறையே வருமாறு அமையும். (மு.வ.), (டி.பி.சி) (அ.இ.), (சு.இரா), (மு.ச), (சிறுநீ), (திசு), (நா.சு), (எஸ். (சச), (இ.கி) (வீ. சொ).(இரா. ச), (அ.மா.ப), (திசு), (இ.இ), (ஜி.வி.ச), (இரா. கோ), (கி.ஐ), (பி. த),(தெஞா), (மா.இரா.)

ங்கள்
சி),

Page 11
அணிந்துரை
டக்ளஸ் கே. என். தேவானந்தா மாண்புமிகு அமைச்சர், கமத்தொழில் சார்ந்த விற்பனை அபிவிருத்தி, கூட்டுறவு அபிவிருத்தி, இந்துசமய அலுவல்கள், கல்வி, வாழ்க்கைத் தொழிற்பயிற்சி
இந்துசமய, கலாசார அலுவல்கள் திணைக்களத் இந்துக்கலைக்களஞ்சியத்தின் தொகுதிகள் வெளியிடப்பட்டு வரு ஏழாவது தொகுதியாகும். இந்துக்கலைக்களஞ்சியம் இந்து வரலாறு, கலைகள், ஆலயங்கள், புராதனச்சின்னங்கள் போன்ற ப நூலாக விளங்குகின்றது. இதுவரை வெளியிடப்பட்டுள்ள ஆறு ( அமையும் எழுத்துக்களுக்குரிய சொற்களுக்கு கட்டுரைகள் எழுத்துக்களுக்கான கட்டுரைகளைக் கொண்டதாகும். இத்ெ விரிவான கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. அத்துடன் குறி சொற்களுக்குரிய கட்டுரைகளும் காத்திரமான தகவல்களைக்
கலைக்களஞ்சியம் வெளியிடும் முயற்சி மிகவும் சிரமமான பt இதற்குத் தேவை. பேராதனைப் பல்கலைக்கழகத்தின் சரித்தி அவர்களும், அவரது தலைமையின் கீழ் இயங்கும் குழுவினரு வருகின்றனர். முதலாம் தொகுதி தவிர்ந்த ஏனைய ஐந்து ெ கொண்டே வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். இ ஆய்வு முயற்சிகளுக்கும் கலைக்களஞ்சிய நூல்கள் மிகவும் வகுப்புக்களிலும், பல்கலைக்கழகங்களிலும் இந்து சமயத்தையு கொண்டு பயில்கின்ற மாணவர்களுக்கு இந்நூல்கள் மிகவு கலைக்களஞ்சியம் தொடர்பான பணிகளை முன்னெடுத்துச் செ பணிப்பாளர் திருமதி சாந்தி நாவுக்கரசன் அவர்களின் பாராட்டிற்குரியதுமாகும்.
கடந்த பல ஆண்டுகளாக இப்பணியில் ஈடுபட்டு வருகின்ற அவர்களையும், பதிப்புப் பணியில் சிறப்பாகப் பணியாற் திரு. எஸ். தெய்வநாயகம் அவர்களையும் மற்றும் ஆய்வுக்க அறிஞர்கள், ஆராய்ச்சி உத்தியோகத்தர்கள் அனைவரையும் ம
இப்பணி தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு ஏனைய ( நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
Vii

தின் ஆராய்ச்சிப்பிரிவின் வெளியீடாக கின்றன. அந்த வரிசையில் இந்தத் தொகுதி சமயத்துடன் தொடர்புடைய தத்துவங்கள், ல்வேறு அம்சங்களையும் உள்ளடக்கிய ஆய்வு 司 தொகுதிகளிலும் அகரவரிசையிற் தொடங்கி 3 எழுதப்பட்டுள்ளன. இத்தொகுதி ஞா - தி தாகுதியில் பல்வேறு தலங்கள் தொடர்பான வித்த எழுத்துக்களில் அமையும் ஏனைய கொண்டவையாக விளங்குகின்றன.
னியாகும். நீண்ட காலமும், பலரது உழைப்பும் ரத்துறைப் பேராசிரியரான சி. பத்மநாதன் நம் இப்பணியைச் செவ்வனே நிறைவேற்றி தாகுதிகளும் அவரைப் பதிப்பாசிரியராகக் ந்து சமயம் தொடர்பான கருத்துக்களுக்கும்,
அத்தியாவசியமானவை. குறிப்பாக உயர் ம், இந்துப் பண்பாட்டையும் ஒரு பாடமாகக் ம் துணைபுரிவனவாக அமையும். இந்துக்
) பதிப்பாசிரியர் பேராசிரியர் சி. பத்மநாதன் றும் திணைக்கள உதவிப்பணிப்பாளர் இே ட்டுரைகளைத் தொகுத்து வழங்குகின்ற YS னமாரப் பாராட்டுகின்றேன்.
தொகுதிகளும் சிறப்பாக வெளிவர என

Page 12
வெளியீட்டுரை
சாந்திநாவுக்கரசன்
பணிப்பாளர்,
இந்துசமய, கலாசார அலுவல்கள் : ஏழாவது தொகுதி இந்நூலாகும்.
அகர வரிசைக்கிணங்க ஞா முதல் : கட்டுரைகள் இந்நூலில் இடம் பெறுகின்ற
இதற்கு முன் வெளியிடப்பட்ட ஆறு ெ தொடர்புடைய வரலாறு, சடங்குகள், பன தொடர்பான அம்சங்கள் விளக்கப்பட்டுள்ள
இந்துக் கலைக்களஞ்சியத்தைத் தொ எனினும் இரண்டாம் பதிப்பிலிருந்து இத் டி பல்கலைக்கழக சரித்திரத்துறைப் பேராசிரி ஒத்துழைப்பும் மிகவும் மகத்தானவையாகுப் அவை அனைத்தையும் பேராசிரியர் அவர்க காரணமாக இத்தொகுதிகள் எமது சக்திக்
மேலும், இந்துக் கலைக்களஞ்சியத் தொ ※ 2 உறுப்பினர்கள் அளிக்கும் ஒத்துழைப்பும் ப
கலைக்களஞ்சியத் தொகுதிகளுக்க எம்மிடம் மிகவும் குறைவாகவே உள்ளன அறிஞர்களும், பல்கலைக்கழகப் பேராசிரிய >Sஉத்தியோகத்தர்கள் தம்மாலான முயற்: வருகின்றனர். இதனால் இத்தொகுதிக கட்டுரையாளர்களுக்கு எமது மனமார்ந்த
கல்வி, வாழ்க்கைத் தொழிற் பயிற்சிக்கு 2 அவர்களுக்கும், அமைச்சின் செயலாளர் தி செல்வி மகேஸ்வரி வேலாயுதம் அவர்களுக்
இத்தொகுதியின் பதிப்புப்பணியிலு PS உதவிப்பணிப்பாளர் திரு. எஸ். தெய்வநாயக கலைக்களஞ்சிய ஆலோசனைக்குழு உறு பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கின்
݂ ݂ 翁 >> இந்துசமயம், இந்துப் பண்பாடு போன்ற இதற்கு முன்னைய தொகுதிகளைப் போ 2 پیغڈ
நம்பிக்கையாகும்.
 
 
 
 

$67(b
நினைக்களம் வெளியிட்டுவரும் இந்துக் கலைக்களஞ்சியத்தின்
தி வரையிலான எழுத்துக்களில் தொடங்கும் சொற்களுக்குரிய 可。
தாகுதிகளைப் போலவே, இத்தொகுதியிலும், இந்து சமயத்துடன் ண்பாட்டுப் பெருமைகள், கலாசார, சின்னங்கள் முதலானவை T6UT.
குக்கும் பணி மிகவும் சிரமம் நிறைந்ததும் காலம் எடுப்பதுமாகும். தொகுதிகளின் பதிப்பாசிரியராகக் கடமைபுரியும் பேராதனைப் யர் சி. பத்மநாதன் அவர்கள் எமக்கு அளித்துவரும் ஊக்கமும் 2. ஆய்வாளர்கள் ஆய்வுக்கட்டுரைகளை எழுதிச் சமர்ப்பித்தபின் 1ள் உரிய முறையில் செப்பம் செய்து வழங்கி வருகின்றார். அதன் குட்பட்ட வகையில் சிறந்த முறையில் அமைகின்றன.
ாகுதிகளை அச்சிட்டு முழுமைப்படுத்துவதற்கு ஆலோசனைக்குழு Tராட்டிற்குரியதாகும்.
ான கட்டுரைகளை ஆராய்ந்து எழுதுவதற்கான அறிஞர்கள் ர், எனினும் திணைக்களத்துடன் நீண்டகாலம் தொடர்புடைய ர்கள், மற்றும் விரிவுரையாளர்கள் எமது திணைக்கள ஆராய்ச்சி சிகளை மேற்கொண்டு எமக்கு கட்டுரைகளைச் சமர்ப்பித்து ளை இடைவெளியின்றி வெளியிடுவது சாத்தியமாகின்றது. நன்றி உரியதாகும்.
வதற்கு எமக்கு ஆலோசனைகளையும், அறிவுரைகளையும் வழங்கி பிவிருத்தி கூட்டுறவு அபிவிருத்தி, இந்துசமய அலுவல்கள் மற்றும் உதவும் அமைச்சர் மாண்புமிகு கே. என். டக்ளஸ் தேவானந்தா திரு. கே. மகானந்தன் அவர்களுக்கும், அமைச்சின் மதியுரைஞர் தம் எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.
ம், வழமைபோல சிறப்புற பணியாற்றியுள்ள திணைக்கள ம், தென்கிழக்குப் பல்கலைக்கழக தமிழ்த்துறை விரிவுரையாளரும், பப்பினருமாகிய திரு. க. இரகுபரன் ஆகியோருக்கும் எனது rறேன்.
துறைகளில் உயர்கல்வி பெறுவோரும் ஆய்வு மேற்கொள்வோரும், லவே இத்தொகுதி மூலமாகவும் பயன்பெறுவர் என்பது எமது
Viii

Page 13
尊 பதிப்புரை
சிரேஷ்ட பேராசிரியர்
வரலாற்றுத்துறை, பேராதனைப் பல்கலைக்கழகம்,
இந்துசமய, கலாசார திணைக்களத்தின் வெளியீடான தொகுதியாக இத்தொகுப்பு நூல் வெளிவருகிறது. அரசாங்கத்தா வெளியீடுகளோடு ஒப்பிடுமிடத்து இது ஒரு மகத்தான சாத6ை தொகுதிகளுக்குக் கிடைக்கின்ற வளங்கள், வசதிகள், ஆ6 கிடையிலான வேற்றுமைகள் மலைக்கும் மடுவிற்கும் இடையிலும்
ஆரம்பத்திலிருந்தே பெளத்த கலைக்களஞ்சியம் பற்றி அத்திட்டத்துக்கமைய நிறைவேற்றப்படுகின்றன. அதற்கென்று துணைப் பதிப்பாசிரியர் பலரும் பணிபுரிகின்றனர். இலங்கையிலு பேரறிஞர்களிடமிருந்து கட்டுரைகள் பெறப்படுகின்றன. அர் அலுவலகமும் பெருமளவிலான நிதி ஒதுக்கீடும் உண்டு.அதன் மு கதை. அதனைப் பற்றி இங்கு கவனிப்பது தேவையற்றது.
இந்துக் கலைக்களஞ்சியத் தொகுதிகளுக்கு கட்டுன் சிரமமாகவுள்ளது. சமய சிந்தனைகள், தத்துவ தரிசனங்கள், தந்திரம், திருமுறைகள், தர்ம சாஸ்திரங்கள், கோயிற் கலைகள், ச் மரபுகள், தான தர்மங்கள், தொல்பொருட் சின்னங்கள் மு தெளிந்தவர்களை இந்நாட்களில் இலங்கையிலே தேடிப்பிடித்த திருவாசகம், திவ்வியப் பிரபந்தம், சித்தாந்த சாஸ்திரம், த நூல்களையேனும் ஆர்வமோடு கற்று, அவற்றிலுள்ள விவரங்க6ை தொடர்பான விடயங்களை விளக்குவோரையுங் காண்டல் அரி.
கலைக்களஞ்சியத்தில் வெளியாகும் கட்டுரைகள் பல அவசியமாகும். பிரதானமான புண்ணிய கூேடித்திரங்கள்-கோயில் கோபுரங்கள், மண்டபங்கள் முதலியவற்றையும் கடவுட் படிமங்கள் வண்ணப்படங்கள் மூலமாக விளக்குமிடத்துக் கட்டுரைகளு வாசகர்களின் உள்ளங்களில் சித்திரங்களோடு விளக்கமாக ஆழமாகப் பதிந்துவிடும். கோயில்கள், சிற்பங்கள் போன் திருத்தலங்களிலும் அங்குள்ள அருங்காட்சியகங்களிலும் அ பெற்றுக் கொள்ளலாம். அவ்விதமாக அவற்றைப் பெற்று கிடைக்கவில்லை. ஏழாம் தொகுதியில் அடங்கும் கட்டுரைகளி தலங்களைப் பற்றியவை.
ஆறாம் தொகுதியின் வெளியீட்டு வைபவத்திலே கட்டுை நூலிற் காணப்படவில்லை என்று குறை சொல்லப்பட்டது. அது நிவர்த்தி செய்யப்படுமென்று அமைச்சின் செயலாளர் உறுதியளி பதவியிலிருந்தும் நீங்கிவிட்டார். பின்பு குறையைப் பே
ix

ா இந்துக் கலைக் களஞ்சியத்தின் ஏழாம் ல் வெளியிடப்படும் பெளத்த கலைக்களஞ்சிய னயாகும். இந்த இரண்டு கலைக்களஞ்சியத் ாணிகள், நிதி ஒதுக்கீடுகள் என்பவற்றுக் ள்ளவற்றுக்கு ஒப்பானவை.
|ய விவகாரங்கள் நன்கு திட்டமிடப்பட்டு முழுநேர ஊழியராகப் பிரதம பதிப்பாசிரியரும் ம் வெளிநாடுகளிலுமுள்ள பட்டவர்த்தனரான ந்தக் கலைக்களஞ்சியத்துக்கெனத் தனி நன்னேற்றம் பற்றிய விவகாரங்கள் வேறொரு
ரைகளைப் பெற்றுக் கொள்வது மிகவும் சமயாசாரங்கள், வேதம்,ஆகமம், புராணம், கிரியை நெறிகள், சமூக வழமைகள், இலக்கிய தலியவற்றிற் பலவற்றைப் பற்றிக் கற்றுத் ல் இமாலயப் பிரயத்தனமாகிவிடும். தேவார லபுராணம் போன்ற தமிழ் மொழியிலுள்ள ா ஆராய்ந்து சைவசமயம், வைணவம் என்பன தாகும்.
வற்றை நிழற்படங்களோடு விளக்குவது கள் அவற்றின் வனப்புமிகுந்த விமானங்கள், ளையும் கலைவனப்பு மிகுந்த சிற்பங்களையும் _ நம் நூலும் கலியாணக் கோலம் பெறும். RS க் கட்டுரைகளிற் பொதிந்த சிந்தனைகள் rறவற்றின் படங்களைத் தென்னிந்தியத் திகாரிகளின் அனுசரணையோடு மட்டுமே |க் கொள்ளக்கூடிய வசதிகள் எமக்குக் گھر گلوفيره ற் பெரும்பாலானவை பாடல்பெற்ற சைவத்
ரகளுக்குத் தேவையான விளக்கப்படங்கள் து
ஏழாம் தொகுதி உருவாக்கப்படும் பொழுது 활
த்தார். அரசாங்கம் மாறிய பொழுது அவரும் 瑾 ாக்குவதற்கு எதுவிதமான முயற்சியும்

Page 14
மேற்கொள்ளப்படாமையால் ஏழாம் தொகுதி தார தம்மியங்களைப் பொறுத்த வரையி மாணவர்களுக்கும், வாசகர்களுக்கும் சம இத்தொகுதியில் அடங்கியுள்ளமை அதன் அமைந்துள்ளமை இத்தொகுதியின் மற்றுெ
இதுவரை வெளிவந்துள்ள தெ முதன்மைப்படுத்தியுள்ளன. சைவசமய அகலப்பார்வையும் ஒப்பியல் நோக்கும் ( சமுதாயத்திலே வளர்ச்சிபெற்றது என்பதை சமயநெறிகளுக்கும் இடையிலே நெருங்கி அறிகிலர்.
இந்நாட்களிலே கிரியை, துதி, தோ கிரியைகள், சடங்குகள் என்பனவும் வர்த்த கோயிலிற் பூசை பண்ணுவதற்குத் தகுதி ெ பலரும் நாட்டின் பல பாகங்களிலும் கேட்கும் இக்கதி நேர்ந்துவிட்டமையை நோக்குமி சொல்லிப் பெருமை பேசிக்கொள்ள முடியும்
பாடல்பெற்ற தலங்களான ஈஸ்வரங்கை நிறைந்த தமிழ்க் கிராமங்களில் இந்நாட் புதியவை. சமீப காலத்திலே ஏற்பட்ட இ தொழிலிழப்புகள் என்பனவற்றாலே துயருறு சர்வதேச மட்டத்திற் கிடைக்கும் பெருப நடைபெறுகின்றது. மலையகத்திலே வசதி இஸ்லாம் ஆகிய சமயங்களைச் சேர்ந்துவி
வண்ணமாய் உள்ளன.
சைவசமயத்தின் பேரால் சங்கங்கை மெளனமாகிவிடுகின்றனர். இன்னுமொ
১৯ছ- வேற்றுமைகளை ஏற்படுத்துவதில் ஈடுபடுக
பாபா சமிதிகளும் சைவர்கள் மத்தியிலே ஏற்படுத்திக் கொண்டவர்கள் எவரும் சைவ அதற்கு மாறாக அவர்களின் சமயாபிமான நாவலர் பெருமானுக்குப் பின்பு சைவர்களின சாதனைகளே ஏதுவாயிருந்தன என்பதை எ தரிசனங்களையும் படிப்பதோடு நிற்காது க கூவினார். இந்து சமயநிறுவனங்களும் ெ சமயத்தை சமூகமயப்படுத்த வேண்டும் என்
ஈழமணித் திருநாட்டிலே சைவருக்கு சைவசமயம் நிலைபெற்றுத் தழைக்க வேண் - பெண் சமத்துவம், பெண்களின் விடுதலை
 

பும் முன்னயதைப் போலவே வருகின்றது. ஆயினும் கட்டுரைகளின் ல் படிப்படியான ஒரு முன்னேற்றத்தைக் காண முடிகின்றது. பாபிமானிகளுக்கும் தேவையான பெருமளவிலான கட்டுரைகள் சிறப்பம்சமாகும். அவை விரிவாகவும் வித்துவப் புலமை நோக்கிலும் மாரு சிறப்பம்சமாகும்.
ாகுதிகள் சைவசமயம் தொடர்பான விடயங்களையே வரலாற்றையும் தத்துவங்களையும் தெளிந்து கொள்வதற்கு இன்றியமையாதவை. சைவசமயம் பல சமயங்கள் நிலைபெற்ற யும் அதற்கும் வேதங்களை ஆதாரமாகக் கொள்ளுகின்ற பிற பல ய தொடர்புகள் உண்டென்பதையும் இந்நாட்களில் எம்மிற் பலர்
த்திரம் என்ற லஷ்ணங்களிற் சமயத்தை அடக்கிவிட்டார்கள். தகமயமாகிவிட்டன. இந்து சமயத்தைப் படிப்பதால் என்ன பயன்? பறப்போகிறீர்களா? இவை கல்லூரி மாணவர்களும் ஆசிரியர்கள் வினாவாகும். இலங்கையில் வாழும் சைவராகிய இந்துக்களுக்கு டத்து ஈழத்திரு நாட்டைச் சிவபூமி என்று எவ்வளவு காலஞ்
என்ற ஏக்கம் இயல்பாகவே எழுகின்றது.
ளத் தரிசிக்கச் செல்லுமிடத்து வழி நெடுகிலும், செழிப்பும் வனப்பும் களில் கிறிஸ்தவ தேவாலயங்களே காணப்படுகின்றன. அவை டப்பெயர்வுகள், துன்பங்கள், வீடுவாசல்களின் சிதைவுகள், றும் மக்களே அத்தேவாலயங்களில் இணைந்து கொண்டுள்ளனர். 0ளவு பணஉதவிகளை ஆதாரமாகக் கொண்டே மதமாற்றம் நியின்மை காரணமாகச் சைவக் குடும்பங்கள் பல கிறிஸ்தவம், விடுகின்றன. இவற்றைப் பற்றிய செய்திகள் தினசரிகளில் வந்த
ளயும் பேரவைகளையும் நடத்தும் பெரும்புள்ளிகளிற் பலரும் ரு சாரார் குட்டையைக் குழப்புவது போல இந்துக்களிடையே கின்றனர். இராமகிருஷ்ண மிஷனும், சின்மயா மிஷனும், பூரீசாயி பணிபுரிகின்றன, அவற்றோடு உணர்ச்சிவசமான உறவுகளை சமயத்திலிருந்து வேறெந்தச் சமயத்திற்கும் மாறிய வரலாறில்லை. Tம் அழுத்தமாக வலுவடைந்துள்ளது. இலங்கையிலே ஆறுமுக டயே சமயாபிமானம் மேலோங்குவதற்கு சுவாமி விவேகானந்தரின் வரும் மறுக்கமுடியாது. இந்துக்களை நோக்கி மறைநூல்களையும் ளத்தில் இறங்கவேண்டும் என்று சுவாமி சின்மயானந்தர் அறை பருமக்களும் வித்துவாதிகளும் போதனைகளை நிறுத்திவிட்டு பது அவரின் சிந்தனையாகும்.
இன்று தேவைப்படுவது சமயத்தை சமுதாய மயப்படுத்தலாகும். டுமாயின் அது சம உரிமைகள், மனித உரிமைகள், சமநீதி, ஆண் என்பன பற்றிய சிந்தனைகளோடு இணைந்துகொள்ள வேண்டும்.
Χ

Page 15
தான தருமங்களைப் பற்றிய சிந்தனைகளிலே தெளிவாக்கம் ே சார்ந்தனவாக அமைதல் வேண்டும். ஆன்மீகமும் உலக வாழ்க்6 சமய நெறிகள் பற்றிய சாஸ்திரங்களின் முடிவு என்பதும் இங்கு L
ஏழாம் தொகுதியோடு முதலாம் தொகுதியின் இரண்டாம் இதுவரை வந்த தொகுதிகளில் மிகவும் விரிவான கட்டுரைக எழுதுவதில் ஆர்வமுடன் செயற்பட்ட ஆய்வாளர்களின் பங்களிப்
இத்தொகுதிக்கென எழுதப்பட்ட கட்டுரைகள் தவிர சிலவற் நூல்களிலிருந்தும் பெற்றுக்கொண்டோம். அதுபோலவே இ வண்ணப் படங்கள் திரு. தேவமணி ரஃபேல் அவர்களின் தமிழ் ந g(1555th Henri Stierlin 96) life,6flair Hindu India 6T66T60)th நூல்களின் பதிப்புரிமையாளர்கள், பதிப்பாசிரியர்கள், கட்டுை நன்றியறிதலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
பல வசதியீனங்களுக்கு மத்தியில் இத்தொகுதிகள் தொடர்ட சமய கலாசார அலுவல்கள் திணைக்களப் பணிப்பாளர் சாந்தி கலைக்களஞ்சியத் தொகுதிகளுக்குக் கல்லூரிகளிலும் சமய உண்டென்பதை அறிந்துகொண்ட அவர் இத்தொகுதிகளின் வெளி ஆர்வத்தோடு செய்தார்.
திணைக்களத்திலே வெளியீடுகளுக்குப் பொறுப்பாகவுள்ளது பொறுமையும், ஊக்கமும் அன்பும் பாராட்டிற்குரியவை. இத்தொ அலுவலகத்திலும் யுனி ஆர்ட்ஸ் நிறுவனத்தினருடனும் கண்ணி
துணைப் பதிப்பாளர் க. இரகுபரன் செய்த உதவி பேருதவி. க. சென்று செம்மைப்படுத்தியும் நிழற்படங்களைத் தெரிவுசெய்து கவர்ச்சியான தோற்றத்தைப் பெறுவதற்கு அவரே காரணரானார் செய்வதில் மகிழ்ச்சியடைகின்றோம்.
Χi

வண்டும். அவை மக்களின் மேம்பாட்டைச் கையும் இணைபிரியாதவை என்பதே இந்து மனங்கொள்ளத்தக்கது.
பதிப்பும் வெளிவருகின்றது. இவ்விரண்டும் 1ள் பல அடங்கியவை. இக்கட்டுரைகளை பு மிகவும் போற்றுதலுக்குரியது.
றை வாழ்வியற் களஞ்சியம் முதலான வேறு த் தொகுதியில் அடங்கும் பெரும்பாலான ாட்டுக் கலைக்கோயில்கள் என்னும் நூலில் நூலில் இருந்தும் பெறப்பட்டவை. மேற்படி ரயாசிரியர்களுக்கு எமது மனப்பூர்வமான
ான பணிகளை நிறைவேற்றுவதற்கு இந்து
நாவுக்கரசன் உறுதுணையாக இருந்தார். பாபிமானிகளிடையிலும் மிகுந்த ஈடுபாடு யீடுகளுக்கு வேண்டிய ஏற்பாடுகளை மிகுந்த
ணைப்பணிப்பாளர் எஸ். தெய்வநாயகத்தின் ாகுப்புகள் தொடர்பான வேலைப்பாடுகளை யத்துடனும் ஆர்வத்தோடும் கவனித்தார்.
ட்டுரைகளைப் பல நாட்களாக அச்சகத்திலே வனப்புடன் வடிவமைத்தும் தொகுதிகள் . இம்மூவருக்கும் எமது நன்றிகளைப் பதிவு

Page 16


Page 17
ஞானதேவர்
இவர் இந்து மெஞ்ஞானியர்களுள் ஒருவர். மராட்டிய தேசத்தைச் சார்ந்தவர். இவரது காலம் கி. பி. 1275-1296. அக்காலத்தில் அதிகம் வளர்ச்சியுறாத நிலையிலிருந்த மராட்டிய மொழியில் தன்னுடைய நூல்களை எழுதி அந்நாட்டுச் சாதாரண மக்களோடு தொடர்பாடி மராட்டிய மொழிக்கும் மக்களுக்கும் புத்துணர்ச்சியை ஏற்படுத்தியவராக மராட்டியர்களாற் போற்றப் பெறுபவர். பகவத்கீதைக்கு விளக்கம் செய்வதாக அமைந்த "ஞானேஸ்வரி என்னும் நூலும் தத்துவக் கருத்துக்கள் செறிந்த 'அநுபவாம்ருதம்' என்னும் நூலும் 'சங்கதேவ சஷ்டி என்னும் நூலும் பக்திப் பாடல்களான அபங்கப் பாடல்கள் சிலவும் இவரால் அருளிச் செய்யப்பட்டவையாகக் கொள்ளப்படுகின்றன. ஞானதேவர் தமது பதினெட்டு, பத்தொன்பது வயதுக்குள்ளாகவே இவற்றை எழுதிவிட்டார்.
ஞானேஸ்வரியை அவர் தமது பதினைந்தாவது வயதில் எழுதினார் என்று ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். ஞானதேவர்,பொருள் பண்டங்களையன்றி ஞானத்தையே சம்பத்தாகக் கொண்ட ஒரு குடும்பத்தில் பிறந்தவர். ஞானதேவரின் கொள்ளுப்பாட்டனார் நாத பந்த் என்ற குருபரம்பரையைச் சார்ந்த ஆன்மிக நெறியைக் கடைப்பிடித்த ஞானியான கோரக்நாத் என்பவரிடம் ஞானதீட்சை பெற்றவர். அவர் த்ரியம்பக் பந்த் என்று பெயர் பெற்றார். த்ரியம்பக் பந்தின் புதல்வரும் ஞான தேவரின் பாட்டனாருமான கோவிந்தபந்தும் அவரது மனைவியும் (நிராயி) அதே குருபரம்பரையைச் சார்ந்த பற்றொரு ஞானியாரான ‘கஹநீநாத் என்பவரிடம் ஞான தீட்சை பெற்றவர்கள். கோவிந்தபந்தின் புதல்வரும் ஞானதேவரின் தந்தையுமான விட்டல் பந்த் பிறவியிலேயே வைராக்கியம் வாய்க்கப் பெற்றவர்.
சிறுபராயத்திலிருந்தே மெஞ்ஞான நாட்டத்தோடு ஞான நூல்களைப் பயின்றுவந்த விட்டல்பந்த் புண்ணியஸ்தல யாத்திரை மேற்கொண்டவராய் புணே நகரத்தை ஒட்டிய ஆலந்தி என்ற கிராமத்தை அடைந்தார். அங்கே அவர் ‘சித்தோபந் குல்கர்ணி’ என்பவரின் விருந்தாளியாகத் தங்கிய காலத்தில் குல்கர்ணியின் மகளான ருக்மணியைத் திருமணஞ் செய்ய நேர்ந்தது. ஆயினும் அவர் தமது வைராக்கியத்தினின்றும் விடுபடாதவராய் ஆலந்தி கிராமத்தை விட்டுக் காசிக்குச் சென்றார். காசியில் ‘பூgபாத ஸ்வாமிகள்’ என்ற ஞானியிடம் சீடராக தன் பூர்வீகம் பற்றி எதுவும் தெரிவிக்காமலே தனக்குச் சன்னியாச தீட்சை அருளும்படி வேண்டி சைதன்யாச்ரமர்' என்ற தீட்சாநாமம் பெற்று தலயாத்திரை மேற்கொண்டார்.
இவ்வாறான வேளையில் ஒரு சமயம் விட்டல் பந்தின் குரு பூரீபாதஸ்வாமிகள் ஆலந்தி கிராமம் செல்ல நேர்ந்தது. அங்கே விட்டல் பந்தின் மனைவிமூலம் அவரது பூர்வாசிரம உண்மை வெளிப்பட்டது. காசி திரும்பிய குரு, தமது சீடரிடம் துறவைக் கைவிட்டு மனைவியோடு சேர்ந்து இல்லற தருமத்தை
இந்துக்கலைக்களஞ்சியம்

நிறைவேற்றும்படி கட்டளையிட்டார். குருவின் கட்டளைக்குப் பணிந்து ஆலந்தி திரும்பிய விட்டல் பந்' அங்கேயுள்ள வைதீகர்களால் ஒதுக்கி வைக்கப்பட்டார். தன் அன்பு மனைவியோடு வாழ்ந்தபடியே மெய்ஞ்ஞானம் தேடும் நெறியில் விட்டல்பந் நிற்கத் தொடங்கினார். சம்சாரத்தில் இருந்தபடியே அன்பும் துறவும் இணைந்திட வாழலாம் என்ற உண்மையை உணர்ந்தார். இப் புதுநெறியின் பயனாக அவருக்கு மூன்று ஆண்களும் ஒரு பெண்ணுமாக நான்கு பிள்ளைகள் பிறந்தார்கள்.
நிவ்ருக்தி, ஞானதேவர், ஸோபானர், முக்தா என்ற அந்த நான்கு மக்களும் சிறிதுகாலமே வாழ்ந்தார்கள் எனினும் ஞான நாட்டம் கொண்டவர்களாக வாழ்ந்து சிறந்தார்கள். இந் நால்வரும் சிறுகுழந்தைகளாக இருக்கையில் புண்ணியத்தலமொன்றான த்ரியம்பகேஸ்வரம் சென்றிருந்தார்கள். அங்கே மூத்தவரான நிவ்ருத்தி, யாரிடமும் சொல்லிக்கொள்ளாமல் ஆலயத்தருகில் அமைந்த குகையொன்றினுட் சென்றார். அங்கே தம் பாட்டன் பாட்டியர்க்கு ஞான தீட்சையளித்த குருவான கஹிநீ நாதரிடம் நிவ்ருத்தி தீட்சை பெற்றார். அதுபோலவே நிவ்ருத்தியிடம் ஞானதேவர் தீட்சை பெற்றார். ஞானதேவரிடம் ஸோபானரும் முக்தாவும் ஞானதீட்சை பெற்றனர். அதன்பின்னர் அவர்களுக்கிடையே இருந்த சகோதரர்கள் என்ற இரத்தத் தொடர்பு அகன்றது. குரு - சீடர் என்ற ஞானத் தொடர்பே நிலைபெற்றது. ஞானதேவர் நிவிருத்தியைத் தம் குருதேவராகப் போற்றித் துதிக்கிறார். தம்முடைய வாக்கும் போக்குமாகிய யாவும் குருவின் அருள் என்றே அவர் கொண்டார்.
தந்தையான விட்டல்பந்தினுடைய வரலாறே ஞானதேவர் என்ற சிறந்த ஞானியின் தோற்றத்துக்கு அடிப்படையாய் அமைந்தது என்று அறிஞர்கள் கொள்வார்கள். பற்றற்ற நிலையிலிருந்தபோதிலும் திருமணம் முடித்தாக வேண்டிய நிர்ப்பந்தம்; பின் அத்திருமண பந்தத்தை உதறிவிட்டுச் சந்நியாச வாழ்க்கை; பின் குருவின் கட்டளைப்படி மீண்டும் மனைவியுடன் வாழவேண்டிய கட்டாயம்; அந்நிலையில் துறவிகளாலும் ஏற்கப்படாமல் வைதிக இல்லறத்தாராலும் ஏற்கப்படாமல் இரண்டுங்கெட்ட நிலை; இந்நிலையில் தாமும் மனைவியுமே ஒருவரையொருவர் நம்பிவாழவேண்டியவரானார் விட்டல்பந்த். 奥g” அவருக்குப் புதியதொரு அனுபவத்தை ஏற்படுத்துவதாயமைந்தது. தாமும் தமது மனைவியும் மூன்றாம் நபரின் துணையே இன்றி சமூகப் பாதுகாப்பு எதுவுமின்றி உண்மையை அறியும் நாட்டத்துடன் வாழ்ந்த அவருக்கு இருள் சூழ்ந்த பழைய உலகு அழிந்து புதியதொரு படைப்பாகப் பரிணமித்தது. அப்புதிய உலகு முதிர்ந்த அனுபவத்தை அவருக்குக் கொடுத்தது. அந்த அனுபவத்தோடு நான்கு அற்புதக் குழந்தைகளைப் பெற்றெடுத்தார் விட்டல் பந்த்.
புதிய அனுபவத்தால் முற்றும் உணர்ந்த ஞானநிலையில் இருந்த விட்டல்பந்த் தம் மக்களுக்கு இட்ட பெயர்களான நிவ்ருக்தி, ஞானதேவன்,ஸோபானன், முக்தி என்பவை ஆன்மிக நெறியில் அவர் அடைந்த அல்லது அடைய விரும்பிய அனுபவ
f

Page 18
நிலைகளைச் சுட்டுவனவாய் அமைந்தன. இப்பெயர்கள் வரலாற்றாய்வாளர்களிடையே விட்டல்பந்த் தொடர்பான பல ஊகங்களைத் தோற்றுவித்தன. இந்தப் பெயர்கள் உண்மையாக உயிருடன் வாழ்ந்த வேறு வேறு நபர்களின் பெயர்கள் அல்ல. குணங்களையே குறிப்பனவாகும் என்பர் சிலர். அதன்படி அவை விட்டல்பந்த் அடைந்த நான்கு பரிணாமங்களைக் குறிப்பனவாகலாம். விட்டல்பந்துக்கு உண்மையில் குழந்தைகள் என்று ஒதுக்கப்பட்டமையால் குழந்தை குட்டி எதுவுமின்றி தனித்தே வாழ்ந்தார் என்று கொள்ளும் வரலாற்றாய்வாளர்கள் ஞானதேவர் இயற்றியதாக வழங்கும் நூல்களை விட்டல்பந்தே இயற்றினார் என்று ஊகிப்பர். ஆனால் பெரும்பாலான ஆர பச்சியாளர்கள் தக்க சான்றுகளால் இத்தகைய ஊகங்களைப் புறந்தள்ளியுள்ளார்கள்.
துறவறத்தைக் கைவிட்டு இல்லறத்துக்கு மீண்டமை காரணமாக வைதீக சமூகத்தால் தமக்கு விதிக்கப்பட்ட விலக்கு தம் பிள்ளைகளுக்காவது இல்லாமற் போகவேண்டும் என விரும்பிய விட்டல்பந்த் வெறும் ஆசாரத்தையே வலியுறுத்துபவர்களான அந்த வைதீக புரோகிதர்களை நாடி தம் பிள்ளைகளை மீண்டும் அச் சமூகம் ஏற்றுக் கொள்ள வேண்டும் என வேண்டிக் கொண்டார். ஆனால் அவ் வைதீகர்களோ கல் நெஞ்சத்தவர்களாய் 'சந்நியாசி ஆனவன் மறுபடியும் இல்லறத்தானாக மாறியதற்குத் தண்டனை அவன் தன் உயிரை விடுவதுதான்' என்றார்கள். விட்டல்பந்த் இதை எதிர்பார்க்கவில்லையாயினும் தம் குழந்தைகள் நல்லபடியாக வாழவும் சமுதாய ஒழுங்கு சீர்குலையாமல் இருக்கவும் அந்த வைதீகர்கள் வழங்கிய தீர்ப்பை ஒரு மனதாக ஏற்றுக்கொண்டார். திரிவேணிசங்கமத்தில் வீழ்ந்து தம்மை மாய்த்துக் கொண்டார். கூடவே அவர் மனைவியும் நீரில் மூழ்கி மாண்டார்.
தம் தாய் தந்தையர் எதற்காகத் தம் உயிரைப் பணயம் வைத்தார்களோ அந்த இலட்சியத்தை ஞானதேவர் நிறைவேற்ற முற்படலாயினார். ஞானதேவரின் தமையனாராயும் பின் குருவாயும் விளங்கிய நிவ்ருக்தி, சமுகம் பற்றிய இந்தச் சர்ச்சையைக் கைவிட்டுவிடவேண்டும் எனக் கூறினார். எனினும் ஞானதேவர் தமது தாய் தந்தையரின் இலட்சியத்தின் உட்கருத்தை இறுதிவரையில் தொடர்ந்து கண்டறிந்திட வேண்டும் என்பதில் வைராக்கியத்தோடு திகழ்ந்தார். அதனால் நிவ்ருக்தியும் தமது தம்பியும் சீடருமான ஞானதேவர் விரும்பியபடியே நடந்துகொள்ள அனுமதித்தார்.
விட்டல்பந்தின் நான்கு பிள்ளைகளும் வைதீகர்களிடம் சென்று “முன்புபோலவே எங்களுக்கு உங்கள் மரபின் படியும், சமூக மரபின் படியும் வாழ உரிமை தரவேண்டும்’ எனக் கோரினார்கள். ஞானதேவரே தம் கோரிக்கை குறித்து பின்வருமாறு வாதாடினார்: "நீங்களே தர்மாதிகாரிகள்; அனைவரும் உங்களை மதித்துப் போற்றுகிறார்கள்; அப்படியிருந்தும் எங்கள் தந்தையை அவரது வாழ்நாள் முழுவதும் சமூகத்தினின்றும் ஒதுக்கிவைத்து விட்டீர்களே! அவர், நீங்கள்
2
 

இட்ட கட்டளையை ஏற்றுக் கொண்டபோதும் அவரை விலக்கியே வைத்தீர்கள். இத்தனைக்கும் தாமே தம்மிடம் குறைகாணும் அளவுக்கு தம் மனச்சாட்சிக்கு மாறாக நடக்காதவர் ஆவர். நீங்கள் விதித்த கடுந்தண்டனையை ஏற்று, அவர் தமக்கு எதுவும் வேண்டுமென விரும்பாமல், எங்களுக்காக எங்களை வைதீக சமூகம் மீண்டும் ஏற்றுக்கொள்ளும்படி உங்களை வேண்டிக்கொண்டார். தர்மாதிகாரிகளான நீங்களோ அதற்கும் மேலே போய் அவர் செய்யாத பாவத்துக்காக உயிரையே மாய்த்துக் கொள்ள வேண்டும் என்ற கடுந்தண்டனையை விதித்தீர்கள். அவரும் அவ்வாறே செய்தார். ஆனால் இதோ அவர் பிராயச்சித்தம் செய்தபின்னும் எங்களை நீங்கள் மீண்டும் சாதியில் சேர்க்கவேண்டும் என்று கேட்டும் இப்போதும் ஏன் தயங்குகிறீர்கள். தர்மம் என்பது வாய்மையை நிலை நிறுத்துவதேயாகும். அதற்கு மாறாக நடப்பது பொருத்தமா?”
ஞானதேவரின் வாதத்திறமைக்கு ஈடு கொடுக்க முடியாத நிலையிலும் அந்த வைதிகர்கள் “நீங்கள் நாலு பேரும் தூய்மையாக வாழ்ந்து வருகிறீர்கள் என்பதற்கு அத்தாட்சி காட்ட முடியுமா?’ என்றும் "உன் தந்தை தன் உயிரைப் பணயமாக வைத்துத் தன்னை மாய்த்துக் கொண்டு தன் தூய்மையை உலகம் அறியும்படி செய்தது உண்மைதான் என்று நீ நம்புவாயாகில் உன் ஆற்றலைக் காட்டு பார்ப்போம்” என்றும் விதண்டாவாதம் பேசினார்கள். ஞானதேவரும் உடனே "நீங்கள் வேண்டியதைக் கேளுங்கள்; இறைவன் அருளால் அப்படியே செய்வேன்” என்றார். வைதீகர்கள் எருமை ஒன்றைக் காட்டி "இந்த எருமைமாடு வேதம் ஒதும்படி செய்வாயா?” என்றார்கள். ஞானதேவர் உடனே எருமையைத் தட்டிக்கொடுத்து அதை வேதம் ஒதும்படி செய்தார் என்று அற்புத வரலாறு கூறப்படுகிறது.
வைதீக சமூகத்தவர்கள் தம்மையும் அவர்களது சமூகத்தவர்களாக அங்கீகரிக்க வேண்டும் என்பதற்காக ஞானதேவர் காட்டிய அதீத அக்கறையையும் எடுத்துக்கொண்ட முயற்சியையும் நோக்கிய சிலர் ஞானதேவரும் பழைய வைதீகக் கிரியைகளைக் கடைப்பிடிக்கும் மரபினைச் சேர்ந்தவர் தாம் என்று விமர்சிப்பர். ஆனால் இத்தகைய செயல்மூலம் பழைய வைதீகர்களைப் பார்த்து சாதாரண மக்களும் பரிகசிக்கும்படியாகவே ஞானதேவர் செய்தார் என்பதே புரிந்துகொள்ளப்படவேண்டிய உண்மையாகும்.
வைதீகர்களால் அங்கீகரிக்கப்பட்ட ஞானதேவர் மூன்று ஆண்டுகளாக வேதம் முதலான நுல்களை முறைப்படி கற்றார். பின் "தர்மத்தை அதன் பழமையான தூய்மை, அழகு என்பவற்றுடன் மக்களுக்கு விளக்கம் செய்வதற்கு அனுமதியுங்கள்” என்று தமது தமையனும் ஞானகுருவுமாகிய நிவருக்தியிடம் அனுமதி பெற்றுக்கொண்டு அத்தகைய தர்மோபதேசத்துக்கு ஆதாரமான நூலாக பகவத்கீதையைத் தேர்ந்தெடுத்து அதற்கு உரை செய்வதன் மூலம் தம் உயரிய நோக்கை நிறைவேற்றலானார். ஆதிசங்கரர் முதலான பலரால்
இந்துக்கலைக்களஞ்சியம்

Page 19
ஏலவே பல முரண்பட்ட (ஒன்றை ஒன்று கண்டிப்பதான) உரைகளைப் பெற்றிருந்த பகவத்கீதைக்கு முரண் பாடுகளற்றதான ஒர் உரையாக ஞானதேவரின் உரை அமைந்தது. ஞானதேவரின் கீதை விளக்கம் செய்யுள் வடிவில் அமைந்ததாகும். ஞானதேவர் அதற்கு பாவார்த்த தீபிகை என்று பெயரிட்டார். அதுவே இன்று "ஞானேசுவரி' என்று வழங்குகிறது.
ஞானேசுவரி என்ற கீதையின் உரை, மூலநூல் என்று கூறத்தக்க சிறப்புடையதாகக் கொள்ளப்படுகிறது. பரம்பொருளுக்கும் ஆன்மாவுக்கும் உள்ள உறவை எடுத்துரைக்கும் அதிகார பூர்வமான ஒருநூலாக ஞானேசுவரி விளங்குகிறது.
- "பேரறிவாளர்களான மற்றைய உரையாசிரியர்கள் இதுதான் (தம்முடையது தான்) கீதையின் உட்பொருள்; அது அல்ல' என்றெல்லாம் தம் கருத்தையே வலியுறுத்துவார்கள். ஆனால் அவ்வாறெல்லாம் தம் கருத்துக்களைத் திணிக்காமல் இயல்பான போக்கில் எதையும் எடுத்துச் சொல்வதாலேயே ஞானதேவரது விளக்கம் தனிச் சிறப்புடையதாக எமக்குத் தோன்றுகிறது. மற்றைய உரையாசிரியர்கள் போலன்றி தாம் முற்றும் அறிந்த நிலையிலும் மிகப் பணிவுடன் தமக்கு ஏதும் தெரியாதது போலவே கீதையின் பொருளை விளக்குகிறார்.”
ஞானதேவரின் கீதை உரையின் சிறப்பு இதுமட்டுமன்று. மக்கள் மொழியிலேயே அந்த உரை எழுதப்பட்டது என்பது முக்கியமாக விதந்துரைக்கத் தக்கதாகும். (மஹாபாரதத்தில்) வியாசர் அருஞ்சொற்களைக் கொண்டு பூரீ கிருஷ்ண பகவானின் உபதேசங்களை எடுத்துரைக்கிறார். சமஸ்கிருத மொழியை நன்கு கற்றவர்கள் கூட அவற்றைப் புரிந்து கொள்வது சிரமந்தான்; அப்படியிருக்க, சமஸ்கிருதத்தில் பேசவோ, எழுதவோ இயலாத சாமானிய மக்கள் அதை எவ்வாறு புரிந்து கொள்ள முடியும்? கீதையை முதன்முதலாக மகாராஷ்டிர மக்களின் மொழியான மராட்டியிலே, துணிந்து விளக்கியவர் ஞானதேவர். சமஸ்கிருதம் தவிர வேறு எந்த மொழியிலும் கீதையை எடுத்துரைக்கக் கூடாது; அப்படிச் செய்வது பெரிய அபசாரம் என்று வைதீகர்கள் கருதிவந்தார்கள். எனவே ஞானதேவர் இவ்வாறு செய்ததைப் பெரும் புரட்சி என்றே குறிப்பிட வேண்டும். அதுமட்டுமில்லை; இப்படித் துணிந்து மராட்டியில் எடுத்துரைத்ததோடு, 'நான் மராட்டியில் எழுதியது தேவாம்ருதத்திற்கு ஒப்பானது. என்னுடைய இம்மொழிகள் மனிதனுடைய நேர்மையான புலனறிவின் மூலம் நிரந்தரமான தெய்வ அனுபவத்தை நுகர வைக்கும் என்று முற்றும் உறுதியுடனும் நம்பிக்கையுடனும் கூறி முடிக்கின்றார்!
ஞானேஸ்வரி பற்றி ஞானதேவர் இவ்வாறு குறிப்பிட்டாலும்
அவர் தமது கீதை உரை குறித்துப் பூரண திருப்தி கொண்டாரில்லை. அதை எழுதி முடித்ததும் ஏற்பட வேண்டிய மனநிறைவுக்குப் பதிலாக மனத் துயரம் கொண்டவராகவே
இந்துக்கலைக்களஞ்சியம்
இத்துச் ெ

ஞானதேவர் தென்பட்டார். அவதானித்த குரு நிவ்ருத்தி நாதர் 'உனக்கு ஏன் இந்த மனச் சோர்வு? என்று அவரை வினவினார். அதற்கு அவர் கீதையின் உட்பொருளைச் சாதாரண மக்களும் அறிய வேண்டும் என்ற எண்ணத்தில் அதை விளக்க என்னால் ஆனவரை முயன்றேன்; ஆனால் மக்கள் என் சொல்லலங்காரத்தைக் கண்டு வியக்கிறார்களேயல்லாமல் நான் விளக்கமுயன்ற விடயத்தை விளங்கத் தவறிவிடுகிறார்கள். என் கீதை உரையில் கீதைக்கே பெரும் இழுக்கு நேரிடுமோ? என்று அச்சத்தால் எனது சொந்தப் போக்கை அடக்கிக்கொண்டு வியாசரையே பின்பற்ற வேண்டியதாயிற்று. அடக்க முடியாமற் பீரிட்டு எழும் என் உள்ளக் கருத்தைச் சிலவேளைகளிற் சொல்ல முற்பட்டாலும் மெய்ப்பொருளுக்கும் எனக்கும் திருப்தியேற்படும்படியாக நான் நடந்துகொண்டேனா என்று ஐயப்படுகிறேன். அதனால் தான் இந்த மனச்சோர்வு என்று பதில் கூறினார்.
ஞானதேவரின் இச் சங்கட நிலையை உணர்ந்த நிவ்ருக்தி நாதர். "நீயே உன் விருப்பம்போல் தங்குதடையின்றி உன் ஆத்ம அனுபவத்தை எழுது” என்று கூறினார். அவ்வாறு ஞானதேவரால் எழுதப்பட்டதே 'அம்ருதாநுபவம்' என்று பெரும்பாலும் வழங்கும் 'அநுபவாம்ருதம்’ என்னும் நூலாகும். அநுபவாம்ருதம் தனிப்பெருஞ் சிறப்புடைய ஒரு நூலாகும். கவிதை, தத்துவம், வாழ்வியல் யாவும் இணைந்த நேரடி அனுபவ நூல் என இதைக் கொள்ளலாம். இந்த அனுபவம் ஒன்று மாத்திரமே உண்மை எனக் கொள்ள வேண்டாம் என்று கூறிப் பல்வேறு வகை அனுபவங்களை ஏற்றுக் கொள்ளும் மனப்பாங்கு இந்நூலிற் புலப்படுவதே அதன் ஒப்பற்ற சிறப்பு எனலாம்.
ஞானதேவர் நூல்களை மாத்திரம் உலகுக்கு விட்டுச் செல்லவில்லை. நாமதேவர் போன்ற சீடர்கள் வழியாக ஒரு ஞான பரம்பரையையே விட்டுச் சென்றார். ஞானதேவர் கடைசியாக அருளிய நூல் 'ஹரிபதம்’ என்பதாகும். ஞானேஸ்வரியுடன் இதுவும் இணைந்து மகாராஷ்டிரத்து வர்க்கரி சம்பிரதாயத்தினரின் பக்தி மார்க்கத்துக்கு இட்டுச் செல்லும் திருமறையாக விளங்குகிறது.
ஞானதேவரும் அத்வைத நிலைபற்றியே பேசுகிறார். எனினும் சங்கரர் பேசும் அத்வைதத்தினின்றும் அது வேறுபட்டதாகும். இந்த உலகமே பொய்' என்ற மாயாவாதத்தை ஞானதேவர் ஏற்கவில்லை. "இந்த உலகம் உள்ளபடியே மெய்யொளிவீசி நிலைபெற்று விளங்குகிறது; இதைப்போய்ப் 'பொய்யானது (மித்யை) மாயை' என்றெல்லாம் குறிப்பிடுவது மெய்ப் பொருளை உணராததன் விளைவேயாகும். மெய்ப்பொருளைக் கண்டிட வேண்டுமானால் இத்தகைய கற்பனை அல்லது யூகங்களுக்கு இடம் அளிக்கக்கூடாது. மெய்ப்பொருள் என்பது உண்டு, 'இல்லை என்ற இரண்டையுமே தன்னுள் அடக்கி, எதனையும் சாராமல் எதனாலும் பாதிக்கப் பெறாமல் விளங்குவது” என்கிறார் ஞானதேவர். -
ஞானதேவரின் மறைவு முன்கூட்டிய அவரது அறிவுப்புடனேயே நிகழ்ந்தமை குறிப்பிடத்தக்கது.

Page 20
உடலைவிட்டுத் தாம் நீங்கப்போவதான அறிவிப்பை அவரது அன்பர்கள் யாவரும் திடுக்கிடும்படியாக விடுத்து ஆலந்தியில் சித்தேஸ்வரர் கோயிலுக்கு அருகில் நிலத்திலே பள்ளம் தோண்டி அதனுள் நுழைத்து யோகாசனத்தில் அமர்ந்து சக ஆண்டு 1281 இல் (கி.பி. 25-10-1296) சமாதி கூடினார். (கஇர.
ஞானப்பிரகாசர், திருநெல்வேலி
இலங்கையிலே குறிப்பாக யாழ்ப்பாணத்திலே சைவசித்தாந்த மரபு நீண்டகாலமாக நிலவி வந்துள்ளது யாழ்ப்பாணத்தை மையமாகக் கொண்டு சுமார் கி. பி. 1250-161 வரை நிலவிய தமிழரசிலே தமிழும், சைவமும் நன்கு போற்றப்பட்டு வந்தன. இதுபற்றி யறியச் சமகால நூல்களான கைலாயமாலை, தக்ஷண கைலாச புராணம், பரராச சேகரப் முதலிய நூல்களும் இவ் அரசை 1619 இலே வென்று தமது ஆதிக்கத்தை ஏற்படுத்திய போர்த்துக்கீசரின் செயற்பாடுகளை விவரிக்கும் அவர்களின் தலைவர்கள் சமய குருமார் முதலியோ சிலர் எழுதிய நூல்களும், யாழ்ப்பாண மன்னர் வெளியிட்ட சேது வாசகமும் நந்தியும் (எருதும்) பொறித்த நாணயங்களும், பிறவுப் துணை புரிகின்றன. சைவ சமய அறிஞர் மட்டுமன்றி சைவசித்தாந்த வித்தகர்கள் சிலரும் அக்காலத்தில் வாழ்ந்தன எனக் கொள்ளுவது தவறாகாது. எனினும் இக் காலப் பகுதியிலே குறிப்பாகப் போர்த்துக்கீசர் ஆட்சி ஏற்பட்டிருந்த கால பகுதியிலே (கி. பி. 16ம் நூ. முடிவு - 17ம் நூ. முற்பகுதி வாழ்ந்தவராகிய ஞானப்பிரகாச சுவாமிகள் குறிப்பிடற்பாலர் இவரின் வாழ்க்கை வரலாறு பற்றிய சான்றுகள் நன்கு கிடைக்காவிடினும் இவர் பற்றி ஒரளவு கூறக் கூடியதாக உள்ளது
须
多 క్లబ్తో
BØR ދު ދުޗާޕުތަރަރުޗް ޗާޕުދުޘް
8 இ శ్లో
ఢ
须
貓
 
 
 

இவர் காலத்திற்கு முன்பே தமிழிலுள்ள சைவசித்தாந்த சாத்திர நூல்கள் பதினான்கும் வடமொழியிலுள்ள அஷ்ட பிரகரணங்கள், சைவாகமங்களின் ஞானபாதம் (இப் பகுதி சைவசித்தாந்தம் பற்றிக் கூறும்) முதலியனவும் எழுந்துவிட்டன. இவர் காலத்திலே மேற்குறிப்பிட்ட சாத்திர நூல்களுக்கு பல்வேறு விளக்கவுரைகளும், பிறவும் எழுதப்பட்டன. இத்தகைய போக்கினை ஞானப்பிரகாசரின் நூல்களிலே காணலாம். இது பற்றிப் பின்னர் கூறப்படும்.
இன்று கிடைத்துள்ள சான்றுகளின்படி சைவசித்தாந்த சிந்தனை மரபிற்குச் செழுமையளித்த யாழ்ப்பாணத்தவர்களில் இவரே காலத்தால் முந்தியவராகக் கருதப்படுகிறார். சைவசித்தாந்த முதன்நூல்களிலே முக்கியமான ஒன்றான சிவஞானசித்தியார் சுபக்கத்திற்குத் தமிழிலே சிறந்த உரை எழுதிய அறுவர்களிலே மூன்றாமவராக இவர் விளங்குகின்றார். இவரின் பின் இலங்கையினைச் சேர்ந்த பலர் சைவ சித்தாந்தத்தில் ஈடுபட்டுக் குறிப்பிடத்தக்க பங்களிப்புகள் அதற்குச் செய்துள்ளனர். மேலும் சைவசித்தாந்த முதனூலான சிவஞானபோதத்திற்கு (இங்கு வடமொழியிலுள்ள சிவஞானபோதத்திற்கு) வடமொழியிலே விருத்தியுரை எழுதியுள்ளார்.
இவர் யாழ்ப்பாணத்திலுள்ள திருநெல்வேலியில் கார்காத்த முடி தொட்ட வேளாளராய்ப் பாண்டிமழவர் குலத்தில் சுமார் 450 ஆண்டுகளுக்கு முன் பிறந்தார் என அறியப்படுகின்றது. இவர் அக் காலச் சூழ்நிலையிலே தமிழையும், வடமொழியையும் கற்றிருப்பார் எனக் கொள்ளலாம். அத்துடன் மிகுந்த சைவ சமயப் பற்றுடையவர். இவரின் காலத்திலேதான் போர்த்துக்கீசர் ஆட்சி ஏற்பட்டிருந்ததாக அறியப்படுகின்றது. மரபுவழிக் கதை ஒன்றின்படி போர்த்துக்கீசத் தலைவனுக்கு உணவுக்காக ஒவ்வொருவரும் ஒவ்வொரு பசுவை வழங்க வேண்டிய கட்டளை பிறப்பிக்கப்பட்டிருந்தது. இந்த ஆணையை ஞானப்பிரகாசர் மிகவும் வெறுத்தார். பசுவதைக்கு உடந்தையாக இருக்க அவரின் மனச்சாட்சி இடமளிக்கவில்லை. எனவே தமக்குரிய நாள் வருவதற்கு முன் இரவே தமது இருப்பிடத்தை விட்டுப் புறப்பட்டு கடல் மார்க்கமாகத் தமிழ் நாட்டுக்குச் சென்றார். இக் கதையின் உண்மைத் தன்மை எவ்வாறாயினும், வரலாற்றிலே துணிகரமான சுதந்திர சிந்தனையுடையோர் தம்முடைய மனச்சாட்சிக் கெதிரானவற்றைப் பொறுக்க (Uplg. LLIFT ğ சொந்த இருப்பிடங்களைக் கைவிட்டு கஷ்டங்களையும் பொருட்படுத்தாது வேறிடங்களுக்குச் சென்றமை பற்றி அறியலாம். எடுத்துக்காட்டாக (கி.பி 17ம் நூ) இங்கிலாந்திலே தம்முடைய சமயக் கருத்திற்கு கடும் எதிர்ப்பு இருப்பதையுணர்ந்து (Pilgrim fathers) என்போர் இன்றைய ஐக்கிய அமெரிக்காவுக்குச் சென்று குடியேறித் தாம் கருதியவாறு சமயத்தைப் பின்பற்றினர். எனவே ஞானப்பிரகாசரும் ஏறக்குறையச் சமகாலத்தில் இவ்வாறு செய்திருப்பர் எனக்கொள்ளலாம்.
சண்முகசுந்தர முதலியார் இவருடைய உரை உட்பட சிவஞானசித்தியார் சுபக்கத்திற்கான ஆறு உரைகளைப் பதிப்பித்துள்ளார் (1880), இந் நூலிலே இவரைப் பற்றிக்
இந்துக்கலைக்களஞ்சியம்

Page 21
கூறுகையில் (தமிழகம் சென்று) இவர் திருப்புகலூரையடைந்து ஆதி சைவராகிய பெரிய அண்ணாசாமிக் குருக்களிடம் தீகூைடி பெற்றுச் சிதம்பரவாசியாகச் சிலகாலமிருந்து அங்கிருந்து கெளடதேயமடைந்து அவ்விடத்திலுள்ள சமஸ்கிருத பாண்டியத்திலே உள்ள ஒர் பிராமண சந்நியாசியார் தமது சீடர் கட்குத் தர்க்க, மீமாம்ச, வேதாந்த சாத்திரங்களைக் கற்பிப்பதைக் கண்ணுற்று அவ்விடத்தே அவர்கள் வாசிக்கும் தோறும் சென்று, அப் பொருள்களைச் சிந்தித்து வந்தனர். ஒர்நாள் அவ்வாசிரியர் இவரை நோக்கி “நீவிர் யாவிர்? நீர் இச் சாத்திரங்களின் சாரத்தைக் காலம் தோறும் கவனிப்பதில் நன்கு புலப்படுகின்றனவா?’ என்று வினவியதற்கு, இவர் கூறிய விடைகளைக் கேட்டு ஆச்சரியமுற்று, இவருக்கு அச் சாத்திரங்கள் முற்றும் கிரமமாய்க் கற்பித்து வந்தனர். ஞானப்பிரகாசர் ஒரு வருடத்திற்குள் வித்யா பாரங்கதரானமை கண்டு ஆசிரியர் விடையளிக்க மீண்டும் திருவண்ணாமலை ஆதீனத்தையடைந்து அக் காலத்து மடாதிபரிடத்துச் சந்நியாசம் பெற்றுச் சிவாகமங்களை ஒதி உணர்ந்தனர். பின் அங்கிருந்து சிதம்பரமடைந்து பெளஷ்கராகம விருத்தி, சிவஞானபோத விருத்தி, சித்தாந்த சிகாமணி, பிரமாண தீபிகை, பிராசாத தீபிகை, அஞ்ஞான விவேசனம், சிவயோக சாரம், சிவயோகரத்னம், சிவசமாதி மான்மிய சங்கிரகம், ஒமாத்ரிகற்பம் என்பவைகளை வடமொழியில் இயற்றினார். இவர் வடமொழியில் மட்டுமன்றித் தமிழிலும் சிறந்த தேர்ச்சி பெற்றிருந்தார் என்பது இவர் சிவஞானசித்தியாருக்கு எழுதிய உரை தக்க சான்றாகும்.
சண்முகசுந்தர முதலியாரின் கூற்றுப்படி “ஓர் நாள் இவரின் அன்பளிலொருவர் இவர் இருக்கும் மடத்திற்கு அடுத்த நிலத்தில் நிதிக் குவையிருப்பதாய்த் தெரிவிக்க அவர் அதனைக் கொண்டு ஓர் திருக்குளமும், அதனருகில் திருமடங்களும் அமைப்பித்தனர். இக் குளம் ஞானப்பிரகாசர் குளமென வழங்கப் பெற்றிருக்கின்றது. அவர் சாயுச்சியமுற்றது பங்குனி மாதம் பூச நட்சத்திரம்” என்பதாகும்.
தம்முடைய வாழ்நாளின் இறுதிக் காலத்தில் ஞானப்பிரகாசர் சிதம்பரத்திலே தங்கி அவ்விடத்து அக்கினி (தென்கிழக்கு) திக்கிலுள்ள மிகப் பெரியதாகிய ஞானப்பிரகாசர் குளம் என வழங்கும் குளத்தை வெட்டி அப்பக்கத்திலேயே இருந்து வந்தார் என்ற செய்தி இன்றும் அங்கே நிலவுவதாகவும் கூறப்படுகின்றது.
இவர் தாம் சிவஞானபோத விருத்தி, பிரமாண தீபிகை, சித்தாந்த சிகாமணி முதலான சம்ஸ்கிருத நூல்கள் இயற்றியதைத் தமது சித்தியார் உரையிலே கூறுகின்றார். சிவயோக ரத்னம், சிவயோக சாரம், பிராசாத தீபிகை ஆகியன சிவாகமப் புதையலாகவுள்ள சிவயோகம் பற்றியவை. இவர் தமக்குமுன் உரையெழுதிய பெரியோர்கள் இருவரையும் நன்கு மதித்துப் போற்றியுள்ளார். முன்னவர்களின் (சிதம்பரம் மறைஞான தேசிகர், சிவாகிரயோகிகள்) உரைகள் அகலவுரைகளாகவே, தனது உரை சுருக்கமானதாயமையும் எனக்குறிப்பிட்டு “நவமுறு உரையுரைப்பாம்” எனக் கூறியுள்ளார்.
இந்துக்கலைக்களஞ்சியம்

இவரின் உரை சிவசமவாதவுரை என்று குறிப்பிட்டுச் சிவஞான சுவாமிகள் இதன் சில பகுதிகளுக்கு ஒரு மறுப்புரையும் எழுதியுள்ளார். ஞானப்பிரகாசரின் உரையினைப் பதிப்பித்த சண்முக சுந்தரமுதலியார் இவர் உரையில் சைவசித்தாந்தத்திற்கு மாறாக எதுவும் இல்லை என எழுதியிருக்கிறார். மு. அருணாசலமும் அவ்வாறே கருதுகிறார். இவரின் உரையினை நன்கு பயின்றார். ஆன்றோர், பிறர் உரையில் கிடைக்காத சமய நுட்பங்களும், தெளிவும் இவருரையில் அதிகம் கிடைக்கின்றன எனக் கூறப்படுகின்றது. மேலும் இவர்தாமே, பிறர் தாம் கூறும் சித்தாந்தக் கருத்துக்களைக் சிவசமவாதக் கருத்தாக மாற்றியும் சொல்வர் என்று தமது உடன்பாடின்மையைக் குறிப்பிடுகிறார்.
இவர் ஆகமங்களிலும் வடமொழி நூல்களிலும் அஷ்ட பிரகரண சம்பிரதாயங்களிலும் பத்ததி ஆராய்ச்சியிலும் மிகவும் திறனுடையவர். தமது உரையில் அகோரசிவம், சோமசம்பு ஆகியோரின் பத்ததிகளையும், இரத்தினத்திரயம் மோட்சகாரிகை போன்ற பிரகரண நூல்களையும், 18 ஆகம நூல்களையும், இராமாயணம், பிரமாண்ட புராணம், ஞான சித்தி, சதுர்வேதாத்பரியம் போன்ற பிற வடமொழி நூல்களையும், பதஞ்சலி, இராமகண்ட குரு முதலியோரையும் அதிகமாக எடுத்துக் காட்டுகிறார். ஆகமங்களைச் சிவ வசனம் எனக் கூறுவர். எமது கர்த்தாவினது சைவசித்தாந்த மார்க்கம் என்பார். சிவசைவாசாரியர், சைவமதானுசாரியர் போன்ற சொற்றொடர்களைப் பயன்படுத்தியுள்ளார். இவர் வட இந்தியாவிலுள்ள கெளட (வங்காள) தேசம் சென்று மிகப் பரந்த வடமொழி நூலறிவு, தர்க்கம் போன்றவற்றைப் பெற்றார் எனலாம். சிவஞான சுவாமிகள் இவரைக் குறை கூறுவதற்கு இவரின் வடமொழிப் புலமையும் ஒருகாரணமாயிருக்கலாம் என மு. அருணாசலம் கூறியுள்ளார். இவர் தமிழகத்திற்குச் செல்லுமுன்பே ஓரளவாவது தமிழும், வடமொழியும் சைவமும் அறிந்திருந்தார் எனக் கொள்ளலாம். ஏறக்குறையச் சமகால போத்துக்கீச மத குருவான போலோ த. திரினிதாதே தமது நூலிலே சமகாலத்திலே கிரந்தம் நன்கு கற்ற அறிஞர்கள் இங்கு இருந்தனர் எனக் குறிப்பிட்டுள்ளார். அக்காலத்திலே வடமொழி தமிழ் நாட்டிலும், இலங்கையிலும் கிரந்தவரிவடிவத்திலேதான் எழுதப்பட்டு வந்தது.
தமிழ் நூல்களில் இவர் தொல்காப்பியம், நன்னூல், திருமந்திரம், தேவாரம், திருவாசகம், ஞானாமிர்தம், கோயிற்புராணம், சிவப்பிரகாசம், சிவதருமோத்தரம், தத்துக் கட்டளை திருவாதவூரர் புராணம் ஆகியனவற்றிலிருந்து மேற்கோள்கள் தமது நூல்களிலே பயன்படுத்தியுள்ளார். இவற்றுள்ளே கடவுண் மாமுனிவரின் திருவாதவூரர் புராணமும், சிவதருமோத்தரமும் இவரின் காலத்தை அறிய ஒரளவு உதவுவன. கடவுண் மாமுனிவர் (15ம் நூ.) இவருக்கு முற்பட்டவர். சிவதருமோத்தர ஆசிரியரான மறைஞான சம்பந்தரும் (16ம் நூ முற்பகுதி) இவருக்கு முற்பட்டவர். அவரது மாணவரான மறை ஞானதேசிகரையும், சிவாக்ரயோகியையும் இவர் குறிப்பிடுகிறார். ஞானப்பிரகாசர் நிரம்பவழகிய தேசிகருக்குச் சற்றுமுற்பட்டவர் எனக் கருதப்படுகிறது. இவரைப்பற்றி ஞானப்பிரகாசர் குறிப்பிட்டிலர். எனவே இவர் கி. பி. 16 நூற்றாண்டு பிற்பகுதி,
ܓܕܡ
5

Page 22
17ஆம் நூற்றாண்டு முற்பகுதியில் வாழ்ந்தார் என எற்கனவே தொடக்கத்திலே கூறியவாறு கொள்ளலாம்.
ஏற்கனவே குறிப்பிட்ட வடமொழி நூல்களையும், தமிழிலே சிவஞான சித்தியார் உரையுடன் தீட்சாலக்ஷணம், தத்துவ வியாபார விவரணம், அவஸ்தா நிரூபணம், மகாவாக்கிய நிரூபணம் முதலிய நூல்களையும் எழுதியுள்ளார் என க. சி. குலரத்தினம் குறிப்பிட்டுள்ளார். பிற்குறிப்பிட்ட தமிழ் நூல்கள் இன்று கிடைத்தில, வடமொழி நூல்களில் சிலவும் கிடைத்தில. இவ்வாறு இவ்விரு மொழிகளிலும் சைவசித்தாந்தம் தர்க்கம், பிற தத்துவங்கள் முதலியனவற்றிலே இவர் பெரும் புலமை பெற்றிருந்தார். இன்று கிடைக்காத இவரின் நூல்கள் தேடிப் பெற்றுப் பிரசுரிக்கப்படல் வேண்டும். ஏனைய நூல்களும் மறுபதிப்புச் செய்யப்பட்டு, இவை அனைத்தும் பற்றிய முழுமையான ஆய்வு மேற்கொள்ளப்பட வேண்டும்.
ஞானப்பிரகாசர் பெயரிலே பல சைவப் பெரியார்கள் வாழ்ந்துள்ளனர். அவர்களுள் காஞ்சி ஞானப்பிரகாசர், சிவபுரம் ஞானப்பிரகாசர், களத்தை ஞானப்பிரகாசர், மதுரை ஞானப் பிரகாசர், கமலை ஞானப்பிரகாசர், பனையூர் ஞானப்பிரகாசர் போன்றோரைக் குறிப்பிடலாம். இங்கு கூறப்படும் ஞானப்பிரகாசர், சிதம்பரம் ஞானப்பிரகாசர், சாலிவாடிபுர (திருநெல்வேலி) ஞானப்பிரகாசர், திருவண்ணாமலை ஞானப்பிரகாசர் என அழைக்கப்படுகிறார். சாலிவாடிபுரம் இவரின் பிறப்பிடம். திருவண்ணாமலையில் தீகூைடியும் உபதேசமும் பெற்று இவர் ஆதீன முதல்வராகவிளங்கியவர். சிதம்பரத்திலே தங்கியிருந்து சிவப்பணிகள் செய்தவர். மேலுமிவர் ஞானப்பிரகாசத் தம்பிரான் சுவாமிகள், ஞானப்பிரகாச முனிவர் எனவும் அழைக்கப்படுகிறார்.
இவருடைய நெருங்கிய உறவினர் வழியிலே தோன்றியவர்தான் 19ஆம் நூற்றாண்டு இலங்கையிலேற்பட்ட இந்து சமய மறுமலர்ச்சியின் தந்தையான பூரீலழரீ ஆறுமுகநாவலர் என்பது குறிப்பிடற்பாலது. ஞானப்பிரகாசரின் நூல்களை தம்பு கைலாசபிள்ளை பல வித்துவான்களைக் கொண்டு பரிசோதித்து கிரந்தத்தில் அச்சிடுவித்தார். இவற்றில் சித்தாந்தசிகாமணி, பிரமாண தீபிகை, சிவஞானபோதவிருத்தி, சிவயோகசாரம், சிவயோகரத்தினம் ஆகிய நூல்கள் இன்றும் கிடைக்கக் கூடியதாயிருக்கிறது. சிவயோகரத்தினம் என்ற நூல் நாகரத்தில் பாண்டிச்சேரியிலுள்ள பிரெஞ்சு இந்தியவியல் நிறுவனத்தினரால் பதிப்பிக்கப்பட்டு (1975இல்) G616sfuSLU'L60) in குறிப்பிடத்தக்கது. சிவஞான சித்தியாருக்கு ஞானப்பிரகாச முனிவர் எழுதிய சுபக்க உரையானது யாழ்ப்பாணம் இணுவிலைச்
சேர்ந்த நடராஜ ஐயரால் பரிசோதிக்கப்பட்டு சி. பெருமாள்
நாடாரால் 1882 இல் பதிப்பிக்கப்பட்டது. சண்முகசுந்தர முதலியாரின் சித்தியார் அறுவருரையிலும் ஞானப்பிரகாசரின் சுபக்க உரை உள்ளடக்கப்பட்டுள்ளது. இவை தவிர யாழ்ப்பாணம் ம. அமரசிங்கப் புலவரால் பரிசோதிக்கப்பட்டு சண்முக ஐயரால் விரோதி வருடம் ஆனிமாதம் (1889-90 இல்) பதிப்பிக்கப்பட்ட உரையொன்றும் உள்ளது. ஞானப்பிரகாசரால் எழுதப்பட்ட ஏனைய நூல்கள் இன்று கிடைப்பதாயில்லை.
6

சிவஞானசித்தியாருக்கு ஞானப்பிரகாச முனிவர் எழுதிய சுபக்க உரையின் சிறப்பியல்பு பற்றி க. சி. குலரத்தினம் மேல்வருமாறு குறிப்பிடுவார்.
சிவ வணக்கம் கூறிய பாடலுக்கு விளக்கங் கூறுபவர் பிரமா, விஷ்ணு, ருத்திரன், மகேஸ்வரன், சதாசிவன், பரவிந்து, பரநாதம், பராசக்தி, பரசிவம் என்கின்ற நவதத்தவங்கள் சிவனிடம் உன் முகமாகத் திரும்பும் வகையை விளக்குவர். இங்ங்னமே சிவசக்தி வணக்கத்திலும் இலயம் போகம், அதிகாரம் முதலானவற்றை விரித்து விளக்குவர். தேவி போக சக்தியாய், வீரசக்தியாய் நிலவுவதைக் குறிப்பார். தேகம் என்பது பரதேகம், சூக்கும தேகம், தூல தேகம் என மூவகை என்பர். சத்தியோ நிர்வான தீட்சையிலே தேசிகனுக்கு ஞானம் வேண்டுவது, சாதகனுக்கு ஞானம் வேண்டுவதில்லை என்றும் தேசிகனுக்கு ஞானம் பிரதானம், சாதகனுக்குத் தீட்சை பிரதானம் என்றும் விளக்குவர்.
அளவை பற்றிக் கூறும் போது அது ஆறுவகை என்றும் பிரமாணங்கள் என வழங்கும் என்றும் அவை காண்டல் = பிரத்தி யட்சம், கருதல் = அநுமானம், உரை = ஆகமம், அபாவம் = அனு பலப்தி, பொருள் = அர்த்தாபத்தி, ஒப்பு = உவமானம். இவ்வாறான அளவை மேலும் ஒழிவு = பாரிஷிேயம், உண்மை = சம்பவம், ஐதீகம் = உலகவாதம், இயல்பு = சுபாவம் எனவும் உள்ளன என விளக்குவர். இவற்றை விட இன்னும் அளவைகள் உண்டென்றும் அவையாவும் சாங்கிய தத்துவத்தில் உள்ளபடி சைவத்திலும் மூன்றனுள் அடங்கும் என்றும் கூறுவர். அவை மூன்றும் காண்டல், கருதல், உரை என்பனவாம்.
இனிச் சைவசமயத்தின் சிறப்பியல்புகளைச் சிவஞானசித்தியார் சொன்ன வழியில் விளக்கும்போது காரியோற்பத்தியில் காரணம் மூன்றும் முறையாயிருக்கும் என்பர். இன்னும் ஓரிடத்தில் “சிவத்வம் என்கிற சிவகுண விளக்கமே சிவானந்தமென்ற சித்தாந்தம் சித்திருக்கவும், சிவகுணமே சிவானந்தமென்று சிலர் சொல்லுவார்கள். 9ےj5jj[ மாறுபடுமென்பது பிரமாண தீபிகை, சித்தாந்த சிகாமணி, சிவஞானபோதவியாக்கியானம் இவைகளிலே காண்பித்துக் கண்டித்தனம் ” என்று தாம் செய்த தமிழ் நூல்களின் வரிசையின் பெயர்களையும் அகச்சான்றாக நாமறியத் தந்துள்ளார். இன்னும் சைவ சித்தாந்தம் பசு வர்க்கம் கூறும் போது அவை விஞ்ஞானகலர், பிரளயாகலர், சகலர் என்றும் இவர்களுடன் விஞ்ஞானகலர் ஒரு மலத்தார் என்றும் கூறும். இவ்வாறாக, ஒரு மலத்தாரும் மலம் நீங்கிய வழி, மந்திரர்கள், மந்திர மகேசுவரர்கள், அணு சதாசிவர்கள் என்னும் பெயர் பெறுவார்கள் என்று யாரோ விளக்கியதை இவர் மறுத்து எழுதுவர்.
“இது முன் பின் மலையும்” என்றும் “ஒரு மலத்தார் விஞ்ஞானகலர் என்று சொல்லியிருக்க, மலம் நீங்கி அதிகார மலமாத்திரர்களாய் அபரபதிகளாய்க் கடந்து போனவர் எப்படி விஞ்ஞானகலராவார்கள்? ஆகார்கள்” என்பர். இன்னும் மூவகை அணுக்களாவார். விஞ்ஞானகலர், பிரளயாகலர், சகலர் ஆகார்
இந்துக்கலைக்களஞ்சியம்

Page 23
என்பர். பிரபஞ்சம் தோற்று முறை கூறும்போது, சிவசங்கற்பத்தால் மாயையின் விகாரமாய்ச் சிவனுக்கு விகாரமின்றி அது தோற்றும் என்பர். சிவன் கிருத்திய கிருத்தனானாலும் விகாரியல்லன் என்பர்.
இனி, பஞ்சகிருத்தியம் என்னும் ஐந்தொழில் விளக்கம் கூறும் போது, “சிருஷ்டியாவது சாத்துவிக குணாதிக்கத்தால் கர்த்திரு சங்கற்பத்தால் முற் காரணத்திற் காரியப்பொருள் வெளியாதல். திதியாவது ராசத குணாதிக்கத்தால் தோற்றிய அந்தந்தப் பொருள் அந்தந்தத் தொழிலமைந்து முதற் காரணம் பற்றாக நிற்றல். சங்காரமாவது தாமத குணாதிக்கத்தால் தனது தொழில்களை விட்டு முதற் காரணத்தில் முழுகி மறைதல். திரோபாவமாவது மிகுதியும் நிந்திதமாகிய போக்கியப் பொருளினுமிது நன்றென்று நழுவாதிருத்தல். அணுக்கிரகமாவது பாச வீடு சிவத்துவ விளக்கமென அறிக” என்பர்.
இன்னும் சிருஷ்டி விளக்கத்தின்போது பிரதம மகாசிருஷ்டி, அந்தமகா சிருஷ்டி, மத்திய மகா சிருஷ்டி என்பன கூறி, முறையே பரமசிவன், அனந்தேசுரர், பூரீ கண்டருத்திரர் சிறப்புக்களைக் கூறுவர். மகாப்பிரளயத்தில் பரமசிவமொன்றுமே பதிகளுக்குட் பரிசேஷிக்கும் என்பதையும் விளக்குவர். இங்கெல்லாம் பெளஷ்கர ஆகம வசனங்களைச் சான்றாகக் காட்டுவர்.
சிவநாம சதாசிவரூபங்கள் என்பனவற்றை விளக்கும் போது வாதுளாகமத்திலிருந்து பத்தொன்பது அடிகளை மேற்கோளாகக் காட்டுவர். திருவுருவச் சிவனை என்பதற்கு பூரீ கண்டசரீரியாயிருக்கும் சிவன் என்பர். போகியாயிருந்து என்பதை தேவி தேவனாயிருந்து என்பர். யோகியாய் என்பதை ட்சிணா மூர்த்தியாயிருந்து என்பர். தீட்சாவான்களுக்கே நிராலம்ப, சாலம்ப சிவத்தியான விளக்கஞ் செய்வர் என்பர். இறைவனுக்கு உருவமும் அருவமும் எப்படியானவையெனில் தரிக்கப்படுவது உரு என்றும், தரிப்பது அரு என்றும் விளக்குவர். ஈசானி, பூரணி, ஆர்த்தி, வாமை, மூர்த்தி என்பன பஞ்ச சக்திகள் என்பர். ஆரணி, சனனி, ரோதயித்திரி உள்ளுருவுடைத் தாயிருக்கும் என்பர். இவைகளையே திரிசக்தியுமாம் என்பர்.
புரியட்டகம் என்பதை விளக்கும்போது, புரி என்பது சூக்கமதேகம், அஷ்டகம் என்பது எட்டுக்கொத்து. அவை பூதக்கொத்து, தன்மாத்திரைக் கொத்து, கன்மேந்திரியக் கொத்து, ஞானேந்திரியக்கொத்து, அந்தக்கரணக்கொத்து, குணக் கொத்து, பிரகிருதிக் கொத்து, கலாதிக்கொத்து என்றும் இவைகளை தன்மாத்திரை அந்தக் கரணங்களாகிய எட்டினுள் அடக்கி முப்பது தத்துவம் என்றும் கூறுவர்.
சைவ புராணிக மதானுசாரியார் கோட்பாடுகளை மதித்து, சாங்கிய மத தத்துவங்கள் சில எமக்குப் பொருந்தா என்பர். அதாவது பிரகிருதி, அசுத்த மாயை, சுத்த மாயை, நித்தியம் என்று சாங்கியம் கூறியது எமக்குப் பொருந்தாது என்பர்.
மறு சமயங்களின் முத்தித் தானங்களை வகுத்துக் கூறும் பாடலுக்கு விளக்கந்தரும் போது, உலோகாயத மத முதன்
இந்துக்கலைக்களஞ்சியம்

விவர்த்த வேதாந்த மீறாக முத்திப் போலிப்புறச் சமயமென்பர். மெய்தருஞ் சைவமாதி இருமூன்றும் என்பதற்கு, சிவமே தெய்வம் என்று கொள்ளலாற் சத்தியமாகும் சைவம், பாசுபதம், மாவிரதம், வாமம், காளாமுகம், வைரவம் என்கிற அறுவகைச் சமயங்கள் என்பர் (சிவஞான முனிவரோ, பாடானவாதி மதம், பேதவாதம், சிவசமவாதம், சங்கிராந்தவாதம், ஈசுவரவ விகாரவாதி, நிமித்த காரண பரிணாமவாதி முதலான அறுவகைச் சமயங்களே அகச் சமயங்கள் எனக் குறிப்பிடுவர்).
எமது கர்த்தாவினது சைவ சித்தாந்த மார்க்கத்துக்குப் பெருமை கூறும் சிந்திய விசுவசாதாக்கிய வசனம் ஒன்றை எடுத்துக் காட்டுவர். நவந்தருபேதம் உரைத்த பாடலில் சக்திபேதம் ஏழு என்பதும் சிவபேதம் ஒன்பது என்பதும் வழக்காயிருப்ப, இவை எவ்வாறு பொருந்துமெனில் “சொல்லுவோங் கேள்” என்று விளித்து விளக்குவர்.
பரமசிவம், பராசக்தி, பரநாதம், பரவிந்து இவை நான்கும் தனித்தனி சிவபேதம் சக்தி பேதம் என்பர். இன்னும் சிவபேதம் நான்கோடு சதாசிவமுதற் பிரமா வீறாகும் சிவபேதம் ஐந்தும் சேர சிவபேதம் ஒன்பதாகும். இவ்வாறு சத்திபேதம் நான்கோடு மனோன்மணி முதல் சரஸ்வதியீறாகும் சத்திபேதம் ஐந்தையும் சேர்க்கச் சத்திபேதம் ஒன்பதாகும் என்பர். இவ்வாறு கூறுபவர் ஆசாரியார் சொன்னதில் தோஷமில்லை என்று வற்புறுத்துவர். இது ஞானவான்களுக்கு விளங்குமென்பர். மானுட சரீரமெடுத்தவர் சிவபூசை செய்தல் வேண்டும் என்பர்.
ஞானப்பிரகாச முனிவர் சிவஞான சித்தியாரில் பல ஏடுகளை ஒப்பு நோக்கி ஆராய்ந்தவர் என்பதற்கும் பல சான்றுகள் உள்ளன. உதாரணமாக “கணத்திடைத் தோன்றியுமாயும் காயம்” என்பது “கணத்திடைத் தோன்றி நின்று கழியும்” எனவும் உள்ளது எனக் காட்டுவர். இனிப் பாடல்களுக்கு விளக்கம் தருவதற்கு முன் அப் பாடல்கள் என்ன சொன்னவை என்பதை முதலில் விளக்குந் திறனும் முனிவர் உரையில் உச்சமாயுள்ளது. ஒரு பாடலை முகங் செய்தபோது, “பாச ஞானத்தை நீங்கி நின்ற இடம் பசுஞானம் என்றும், பசு ஞானத்தை நீங்கி நின்ற இடம் பதி ஞானம் என்றும் பகர்கின்றார்” என்பர்.
ஞானப்பிரகாச முனிவர் சிவசமவாதியென்றும், அவர் தனது சித்தியார் உரையை சிவசமவாத நிலைப்பாட்டிலிருந்து வகுத்தாரெனவும் ஒரு குற்றச்சாட்டு தெரிவிக்கப்படுவதுண்டு. சிவஞான சுவாமிகள் ஞானப்பிரகாசரைச் சிவசமவாதியென விமர்சிப்பது மட்டுமல்லாது, சிவசமவாதவுரை மறுப்பு என்ற பெயரில் நேரடியாகவே ஞானப்பிரகாசருரையை மறுத்துரைத்தமை குறிப்பிடத்தக்கது. ஞானப்பிரகாசர் பற்றிய சிவஞான சுவாமிகளின் குற்றச்சாட்டு ஏற்புடையதல்ல. ஈழத்து சைவ சித்தாந்த புலமை மரபு இக் குற்றச்சாட்டை அங்கீகரிப்பதுமில்லை. சிவஞான சுவாமிகளின் திருவாவடுதுறை ஆதீனத்தைச் சேர்ந்தவரும் யாழ்ப்பாணத்தவருமான சபாபதி நாவலர் அகோர சிவாச்சாரியார் பத்ததியை நிராகரிக்கப்போய் ஈழத்தவர்களால்
7

Page 24
எவ்வாறு கண்டிக்கப்பட்டாரென்பதை ஆறுமுகநாவலர் பிரபந்தத் திரட்டிற் கண்டு கொள்ளலாம்.
சித்தாந்த சாஸ்திர செய்யுளிற்கு உரை எழுதுங்கால் சொற்களை இடம்மாற்றிப் பொருள் கொள்ளுதல் வேண்டுமெனக் கூறியதும், அகோர சிவாச்சாரியார் பத்ததியை அங்கீகரித்தமையும் சிவசாதிருச்யம் பேசியமையும் வேண்டுமென்றே விகாரப்படுத்தப்பட்டு ஞானப்பிரகாசரை சிவ சமவாதியென குற்றம் சாட்டியமை ஆதீனங்களிற்கிடையேயிருந்த வித்துவக்காச்சலேயென்பது ஈழத்தவர் நிலைப்பாடாகும். தான் சிவசமவாதியல்லவென்றும், சிவசமவாதம் கண்டிக்கத்தக்க தென்றும் ஞானப்பிரகாச முனிவர் தனது சித்தியாருரையில்
தெளிவுபடுத்தியிருப்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
(ബി.fി & 690.കി.)
ஞானம்
ஞானம் என்ற சொல்லானது அறிவு, மெய்யறிவு, புரியும் திறன் எனப் பல்வகை அர்த்தத்தைப் பெறும். அது ஞான ஆபாஸம் அல்லது தவறான அறிவு, ஞான அபாவம் அல்லது அறிவு இன்மை என்பனவற்றிலிருந்து வேறுபட்டது. ஞான ஆசிரயமென்பது அறிவின் நிலையிடத்தைச் சுட்டும்.
மீமாம்சகர்களின் கொள்கைப்படி அறிவென்பது ஆன்மாவிற்குரியதொரு பாங்காகும். கிரியை அல்லது வியாபாரம் எனக் குறிப்பிடப்படும் ஒருவகைச் செயலாக ஞானம் விபரிக்கப்படுகிறது. புலன் நுகர்வெல்லை கடந்ததும், முழுநிறைவுடையதுமான அறிவே ஞானமாகிறது. நேரல் வழிமுறைப்படி - அனுமானத்தினூடாகவே, இது அறியப்படுகிறது. நியாய வைசேடிகர்கள் கூறுவது போல, ஞானமானது உள்ளுணர்வு மூலம் நேரடியாக அறியப்படுவதில்லை.
அத்வைத வேதாந்தத்தின்படி விடுதலைக்கான அடிப்படை மார்க்கம் ஞானமாகும். அவித்யா அல்லது அறியாமை என்பதற்கெதிரானதாயும், பற்றுக்களிலிருந்து விடுதலை பெறுவதற்கான ஒரே வழிமுறையாகவும் இருப்பது ஞானமாகும்.
விஷிட்டாத்வைதத்தின்படி ஞானமானது வேறு எப்பொருளினதும் உதவியின்றி தானே தன்னை உருவெளிப் படுத்தக் கூடியது. இது தன்பொருட்டு தன்னை வெளிப்படுத்துவதில்லை. பிறிதின் பொருட்டே வெளிப்படுகிறது. ஞானம் இன்னதென அறியப்படக் கூடியதல்ல. எனினும் அதன் வழியேதான் அறிவு கிடைக்கிறது. அதாவது வெளிச்சம் போல தன்னையல்லாது பிறவற்றையே காட்டும் இயல்பினது.
நியாயவைஷேடிகருடைய அபிப்பிராயப்படி ஞானமென்பது பொருட்கள் பற்றிய அறிவுமட்டுமல்ல. ஞானம் இன்னதென்பது பற்றிய அறிவும் அதிலடங்கும்.
8

சமணர்களுடைய அபிப்பிராயப்படி ஞானமென்பது விபரமான அறிவென்பதைச் சுட்டும்.
சைவசித்தாந்திகளின் அபிப்பிராயப்படி ஞானமென்பது விடுதலை அல்லது முத்திக்கான மார்க்கமாகும். அதாவது ஆன்மாக்களை நேரடியாக இறைவனிடம் இட்டுச் செல்லும் மார்க்கமென்பது இதன் பொருள். சாயுச்சியமென்ற இலக்கையடையும் வழிமுறையாக, இறைவனுடன் இரண்டறக் கலப்பதற்கான வழிமுறையாக இருப்பதே ஞானமாகும். சரியை, கிரியை, யோகம் என்ற வரிசையில் இறுதியானதும், பரமுத்திக்கான மார்க்கமாகவும் இருப்பது ஞானம். ஞானம் தொடர்பான சைவசித்தாந்த நிலைப்பாடு மிக விபரமான முறையில் தத்துவப்பிரகாச சுவாமிகள் இயற்றிய தத்துவப் பிரகாசம் என்ற நூலில் ஆராயப்பட்டுள்ளது. (இந் நூலானது மூலமும் உரையுமாக வேலணையைச் சேர்ந்த வி. கந்தப்பிள்ளை என்பாரால் பரிசோதிக்கப்பட்டு, 1892ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டுள்ளது.) இதன் படி சரியை, கிரியை, யோகம் என்ற வரிசையில் ஞானம் இறுதியானதாய் வரினும், சரியையில் ஞானம், கிரியையில் ஞானம். யோகத்தில் ஞானம் என்பதாகவும், ஞானத்தில் சரியை, ஞானத்தில் கிரியை, ஞானத்தில் யோகம், ஞானத்தில் ஞானம் எனவும் வகையிடப்பட்டுள்ளது. (சோ.கி.)
ஞான மார்க்கம்
ஞானம் என்பது அறிவாகும். சாதாரணமாக அறிவெனக் குறிப்பிடப்படுவதிலிருந்து இதன் அர்த்தம் வேறுபட்டது. அனுபூதி எனும் சமஸ்கிருதச் சொல் ஒரளவு இதற்குச் சமனான அர்த்தம் கொண்டது. மார்க்கம் என்பது வழி, பாதை, சாதனம் என்னும் அர்த்தங்களில் பயன்படுத்தப்படுகிறது. எனவே ஞானமார்க்கம் என்பது அறிவு வழி அல்லது அறிவுச் சாதனம் என்பதனையே குறிக்கிறது. சாதனம் அல்லது வழி எனும் போது அது ஏதோவொன்றை நோக்கியதாயிருத்தல் வேண்டும். அது கடவுளை அல்லது இறுதி இலக்கை அடைவதற்குரிய மார்க்கங்களுள் ஒன்றினையே கருதுகிறது. இதுவே சிறந்த மார்க்கமாகவும் கருதப்படுகிறது. எல்லா வினைகளையும் எரிக்கக் கூடிய நெருப்பு ஞானமே எனவும், அறியாமையால் எழும் ஐயத்தை அழிப்பது எனவும் பகவத்கீதை விளக்குகிறது.
பிரமத்தை அடைதல் இறுதி இலட்சியமாக இருக்கையில் இதற்குத் தடையாயமையும் முக்கிய காரணி அறியாமை அல்லது அஞ்ஞானம் எனப்படும். அஞ்ஞானத்தால் ஜீவன் தன்னை பிரமத்திலிருந்து வேறுபட்டதாக நினைக்கிறது என்பது அத்வைதக் கொள்கை. மோட்சமே ஆன்மாவின் என்றுமுள்ள தன்மை என்பதை உணர்வதற்கு ஞானம் வேண்டும். ஞானம் கொண்டு பிரமத்தை அறிந்தவன் பிரமமாகிறான் என்பதன் மூலம் ஞானமார்க்கத்தின் முக்கியத்துவம் உணரப்படுகிறது. இவ்வாறு பெறப்படும் அறிவானது மனத்தினால் பெறப்படுவதன்று. அது ஆன்மீக உள்ளொளியினால் பெறப்படுவது. அதனை தாழ்ந்த நிலையறிவு, (பரா) உயர்ந்த நிலையறிவு என இரு வகைக்குள்
இந்துக்கலைக்களஞ்சியம்

Page 25
அடக்குவர். தாழ்ந்த நிலையறிவு என்பது நூல்கள் தரும் அறிவாகும். உயர்ந்த நிலையறிவு என்பது அறியவியலாப் பிரமத்தை அறிய உதவும் அறிவாகும்.
ஞானம் பெறுவதற்கான படிமுறைகள் இரு கட்டங்களில் நடைபெறும், முதல் கட்டத்தில் அறிவு, அறம், உணவுசார் விடயங்களில் தன்னை ஆயத்தப்படுத்திக் கொள்ளுதல். இரண்டாவது கட்டத்தில் பற்றியறிதல், தெளிவு காணல், தியானித்தல் எனும் ஞான நிலை கூடலுக்கான செயற்பாட்டில் ஈடுபடலாகும். முதலாவது கட்டத்தில் நிலையான நிலையற்ற விஷயங்களினைப் பிரித்தறிதல், தன்னடக்கம், தன்னலமின்மை, பொறுமை, மனவடக்கம், மனவொருமைப்பாடு என்பவற்றைக் கடைப்பிடிப்பான். அத்துடன் பிரம நிலையிலுள்ள குருவிடமிருந்து போதிய நூலறிவும் பெற்றுக் கொள்வான். இரண்டாம் கட்டத்திலுள்ள பற்றியறிதலை சிரவணம் என்பர். இதன் கீழ் முத்திநிலைத் தன்மையுடைய ஒருவரிடமிருந்து விஷயங்களைப் பற்றிக் கொள்ளுதலாகும். தெளிவு காணுதல் என்பது மனனம் எனப்படும். சிரவணத்தின் மூலம் பெற்ற விடயங்களில் ஐயமிருப்பின் அவற்றை நீக்கி தெளிவு பெறுதலாகும். தியானித்தலை நிதித்தியாசனம் என்பர். இதன் கீழ் பழைய விஷயங்களிலிருந்து உளம் விடுபட்டு பரம் பொருளைப் பற்றிய நேரடியான அறிவைப் பெறும். இந் நிலையடைய ஒருவன் ஜீவன் முத்தனாகிறான் என்பது வேதாந்த நிலைப்பாடாகும். பிரமத்தை உணர்தல் அல்லது கடவுளை அடைதல் என்பதற்கு ஞானம் கைவரப் பெறல் அவசியமாகிறது.
இந்த வகையில் கடவுளை அடைதல் எனும்போது பல்வேறு சமய அல்லது தர்சன நிலைகளையும் பொறுத்து அது இயல்பளவில் வேறுபாடுடையது. சைவசித்தாந்த நோக்கில் தாடலை போல் கூடல் அல்லது பதியுடன் ஒன்றாதல் எனும் சாயுச்சிய முத்தியைக் குறிக்கிறது. வைஷ்ணவத்தைப் பொறுத்தளவில் வைகுந்தம் சேர்வதை அல்லது விஷ்ணுவின் பாதார விந்தங்களை அடைதலைச் சுட்டுகிறது. எனினும் அதற்குரிய மார்க்கத்தைப் பொறுத்தளவில் ஒரளவு ஒற்றுமையிருக்கும். இறுதி இலட்சியத்திற்காக முக்கிய இரு வழிகள் கைக்கொள்ளப் படுகின்றன. ஒன்று செயல் வழி (கிரியை முதலான) மற்றது அறிவு வழி. சாதனங்களைக் கைக்கொள்ளுதல் சிரமமானதல்ல. ஒவ்வொருவரும் தமது தகுதிக்குரிய சாதனத்தைக் கடைப்பிடிக்கலாம். அறிவு நிலை கைவரப் பெறாதவர் செயல் வழியைக் கைக்கொள்வர். இது அனைவரும் கைக்கொள்ளக் கூடிய இலகு வழியாகும். ஆனால் மனதைத் தடுத்து தன்னிலை உணர்ந்து கொண்டவர்களுக்கு உரியதாக உள்ள ஒரு கடின மார்க்கமே ஞான மார்க்கமாகும். இதற்கு ஒப்பாக எம் மார்க்கத்தையும் கூற முடியாது எனப்படுகிறது.
சைவ சித்தாந்தம் இறுதி இலட்சியத்திற்கான மார்க்கத்தை சரியை, கிரியை, யோகம், ஞானம் என நான்காகப்
படிமுறைப்படுத்துகிறது. இதில் ஞானம் இறுதிப் பகுதியாகும். இது
இந்துக்கலைக்களஞ்சியம்

இறைவனை அறிவாலறிந்து உணர்கிற நிலையாகும். இந் நிலையில் ஆன்மாவை இறைவனிடத்தில் அர்ப்பணித்தல் நிகழுகிறது. உருவம், அருவம், அருவுருவம் என்னும் நிலைகளுக்கு அப்பால் திருமேனி கடந்த முழுமுதலை அறிவுத் தொழில் கொண்டு அடைகிற மார்க்கமாக இது உள்ளது.
ஏனைய மார்க்கங்களான தவம், செபம், தியானம் முதலியன ஒரே இலட்சியத்தை அடைய வழி செய்வனவாயினும் அவை படிப்படியாகவே போதத்தை ஊட்டுவன. இதனாலேயே வீடுபேறடைய விரும்புவர்கள் ஞான நெறியைக் கைக்கொள்ளுகின்றனர். இதன் மூலம் கிடைப்பதே பதியோடு இரண்டறக்கலத்தலாகிய ஞான முத்தியாகும். ஞான நூலை ஒதுதலும், ஒதுவித்தலும், அதன் பொருளைக் கேட்பித்தலும், தான் கேட்டலும், அதன் பொருளைச் சிந்தித்தலும் இறைவனடியை அடைவிக்குமென சிவஞான சித்தியார் குறிப்பிடுகிறது.
நாற்பாதங்களின் இறுதிப் பகுதியாகிய ஞான மார்க்கத்தை சைவ சித்தாந்திகள் மேலும் நான்கு வகையாகப் பிரிப்பர். அவை ஞானத்தில் சரியை, ஞானத்தில் கிரியை, ஞானத்தில் யோகம், ஞானத்தில் ஞானம் என்பனவாகும். ஞான நூல்களைக் கேட்டல் ஞானத்தில் சரியையாகும். தனது தூல, சூக்கும உடல்களின் இயல்பறிந்து, முப்பத்தாறு தத்துவங்களும் நீங்கும் முறைமையறிந்து செய்யும் செயல்கள் இதனுள் அடங்கும். ஞானாசிரியனிடம் விஷயங்களைக் கேட்டலால் இவை நிகழும்.
ஞானத்திற் கிரியை என்பது கேட்டவற்றை சிந்திப்பதனைக் குறிப்பிடுகிறது. இச் செயற்பாட்டினுள் பஞ்ச சுத்திகளும் இடம்பெறும். அவை பூதசுத்தி, ஆன்மசுத்தி, திரவிய சுத்தி, மந்திர சுத்தி, இலிங்க சுத்தி என்பனவே அவையாகும். இவ்வறிவினால் சிவத்தோற்றமே உணரப்பெற்று தன்னிலை மறையும் நிலை தோன்றுமென சிவஞான சித்தியார் குறிப்பிடுகிறது.
ஞானத்தில் யோகம் என்பது சிந்தித்தவற்றைத் தெளிதலாகும். இறைவன் அருள்புரிந்த போதும் அதன் பொருளினை புரியாதவிடத்து பயன் ஏற்படாது. எனவே ஆசிரியன் திருவருளால் இருவகைப் பாசங்களும் நீங்கி கேட்கும் முறைமையில் கேட்டு, சிந்திக்கும் முறைமையில் சிந்தித்து, பின்பு அன்பு செய்து அடங்கி நிற்கப் பெறுபவர்க்கு கடவுளது இயல்பு கேட்கிற பொழுதில் பொருளின் தன்மை பற்றி பேதமாய்த் தோன்றித் தெளிந்த பின்பு இவ்விரண்டு பற்றி ஒன்றிலும் பற்றில்லாது உடனடியாய்த் தோன்றும் என சிவஞான சித்தியார் குறிப்பிடுகிறது. இறையருளாளருக்கே இந்நிலை சாத்தியமாகும்.
இன்பொடுக்கத் தூண்டல் நிலையாகிய நிட்டை கூடுதலே ஞானத்தில் ஞானமாகும். அருள் மேலிட்டினால் உலக வாசனை முற்றும் தோன்றாது. சிவத்தோடு இரண்டறக் கலக்கும் நிலையே முத்தர்கள் பெறும் ஞான நிலையாகும். உருகித் தீயிலிட்ட மெழுகு போல் ஆசையற்று உடலும் உயிரும் ஒருவழிப்பட்டு
9

Page 26
மனம் ஒடுங்கி ஞான உணர்ச்சி பெற்று முத்தர் நிலை அடைவர். இந் நிலையே இறுதி முத்தி நிலையாகும். இதனை பரமுத்தியெனவும் அத்துவித முத்தியெனவும் சாயுச்சிய முத்தியெனவும் கூறுவர். இம் முத்தியடைந்தவர்க்கு உதாரணமாக மாணிக்கவாசகரைக் கூறுவர். ஞான மார்க்கமே முத்தியடைதலுக்குச் சிறந்த நெறியாகும். ஏனைய நெறி நின்றவர்களும் ஞானமார்க்கத்தைக் கைக்கொண்டே வீடு பேறடைவர். இந் நிலையிலேயே இறைவனுடன் இரண்டறக் கலந்த நிலை ஏற்படுகிறது எனக் கூறப்படுகிறது. (67வ. அ.)
ஞானயோகம்
இறைவனோடு இரண்டறக் கலத்தலே ஞான யோகம் ஆகும். அறிவினால் இறைவனுடன் கலக்க முயல்வதே இவ் யோகத்தின் இயல்பாகும். மனிதனையும், கடவுளையும் இணைக்கும் பாதையே யோகம். ஒவ்வொரு மதமும் கொள்கை, செயல்முறை என்ற இரு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. யோகம் என்பது மதத்தின் செயல்முறைப்பகுதி.
பல வஸ்துகளோடு நாம் வாழ்க்கையில் சேர வேண்டி உள்ளது. ஆனால் இந்தச் சேர்க்கை எதுவும் நிரந்தரமானது இல்லை. அதனால்தான் மனசு கிடந்து ஆடிக்கொண்டே இருக்கின்றது. இப்படியில்லாமல் முடிந்த முடிவான ஒரே வஸ்துவுடன் எந்த நாளும் சேர்ந்து விட்டால் அதற்கு அப்புறம் நாம் என்ற ஒன்று அதிலிருந்து பிரிந்து வரவே முடியாது. இதுவே உண்மையான யோகம். நம் மனசுக்கெல்லாம் மூலமாக இருக்கிற பரமாத்மாதான் அந்த ஒன்று. மனசை மூலத்தில் திருப்புவதற்காகவே யோகிகள் சுவாசத்தை அடக்குகிறார்கள். ஏனென்றால் எண்ணம் உதிக்கிற வேர் எதுவோ அதுவே சுவாசத்தின் வேரும் ஆகும். எனவே சுவாசம் மூலத்தில் நின்றால் மனமும் அதன் மூலத்துக்குப் போய் அடங்கி விடுகிறது.
நான் யார் என்னும் தத்துவ விசாரத்தில் ஈடுபடுபவன் ஞானி. அவன் பரம்பொருளைத் தன்னுள்ளே தேடுகின்றான். பொதுவாக உலகியலில் உடம்பை நான் என்பர். ஞானியோ தன்னுடைய அறிவால் இவற்றையெல்லாம் நான் அல்லன் என்று ஒதுக்கிவிட்டு நான் எது என்று தேடுவான். இத்தகைய தேட்டமே ஞானியை இறைவனிடம் சேர்க்கிறது.
ஞான யோகமானது துறவு நெறி, நிவர்த்தி மார்க்கம் என்றும் கூறப்படுகின்றது. மெய்ப்பொருளில் நாட்டம், புலன் ஒடுக்கம், மெய்ப்பொருளைத் தவிர ஏனையவற்றைப் பொய் என்று உணர்தல், முத்தியிற் பேரவா என்பனவாகும். ஞானியின் அடையாளத்தை கீதையில் பகவான் கூறுகிறார் “எவ்வுயிரிடத்தும் பகைமை பாராட்டாதவனாய், நட்புப் பூண்டவனாய், கருணை உடையவனாய் என்னுடையது என்ற எண்ணம் இல்லாதவனாய், இன்பத்தையும் துன்பத்தையும் சமமாகக் கருதுபவனாய் பொறுமையுடையவனாய் அடங்கிய மனத்தினனாய், திடமான சித்தம் உடையவனாய், மனத்தையும்
fÓ)

புத்தியையும் என்னிடம் அர்ப்பணம் செய்தவனாய், யோகத்தில் விருப்புடையவனாய் உள்ளவன் எவனோ அவனே பக்தன் என்கிறார். மேலும் எவனிடத்தில் உலகம் துன்பம் பெறுவதில்லையோ எவன் உலகத்திடமிருந்து துன்பம் அடைவதில்லையோ எவன் மகிழ்ச்சி, சினம், அச்சம், மனக்கிளர்ச்சி இவற்றினின்று விடுபட்டவனோ எதையும் விரும்பாதவனாய் தூயவனாய் சுறுசுறுப்புடையவனாய் இன்ப துன்பங்களைப் பொருட்படுத்தாதவனாய் தனது நலனைப் பெருக்கும் முயற்சியை விட்டவனாய் இகழ்ச்சியையும் புகழ்ச்சியையும் சமமாகக் கருதுபவனாய் மெளனியாய் ஆழ்ந்த சிந்தனை உடையவனாய் கிடைத்ததைக் கொண்டு திருப்தியுற்றுக் களிப்புடன் இருப்பவனாய் வீடு வாசல் இன்றி உலகமே தன் வீடு என்று நினைப்பவனாய் தன் கொள்கையில் திட சித்தம் உள்ளவனாய் இருக்கிறானோ அவனே எனக்கும் பிரியமான பக்தன் (கீதை 12, 13, 19) என்கிறார். இவற்றைத் தொகுத்து நோக்குமிடத்து சாத்வீகப் பண்பில் வாழ்பவனுக்கே ஞான நாட்டம், தன்னை அறியும் உந்துதல் ஏற்படும் என்பது புலனாகின்றது.
ஞான சாதனம் கைகூடுவதற்கு சில படிமுறைகள் கூறப்பட்டுள்ளது. சிரவணம் (கேட்டல்); இங்கே எதைக் கேட்பது என்ற வினா எழுகின்றது. எதனை அறிந்தால் எல்லாவற்றையும் அறியலாமோ அதைக் கேட்டலே அறிவை வளர்ப்பதாகும். ஒருவன் சிறிது சிறிதாக இப் பிரஞ்சத்திலுள்ள ஒவ்வொன்றையும் அறிய விரும்பினால் எல்லையில்லாக் காலம் கிடைத்திடினும் அவனால் அறிய முடியாது. அவ்வாறாயின் ஞானம் எவ்வாறு உண்டாகும். எப்படி எல்லாம் அறிந்தவனாக முடியும்? அண்டங்கள் யாவும் தொகுத்து ஒரு பொருளாக வேதங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதனை அறிந்தவன் எல்லாவற்றையும் அறிந்தவன் ஆவான். ஆகவே கேட்டல் என்பது வேதங்களைக் கேட்டல், உபநிடதங்களைக் கேட்டல், ஞானப் பகுதியின் முடிவாகவுள்ள மகா வாக்கியங்களைக் குரு மூலமாகத் தெரிந்து கொள்ளல், தெரிந்தவற்றை அறிந்தவற்றை மனதில் இருத்திக் கொள்வதே மனனம் அல்லது சிந்தித்தல் ஆகும். இது ஞான யோகத்தின் இரண்டாம் படிநிலை. சிந்தித்துத் தெளிந்த மனதைத் தியானத்தின் வழி செலுத்துதலே மூன்றாம் நிலையாகும்.
ஞானத்தைப் பெறுவதற்குள்ள ஒரே உபாயம் மனதை ஒருமுகப்படுத்துவதே. ஒரு இரசாயன விஞ்ஞானி தன் ஆராய்ச்சிக் கூடத்தில் ஆராயும் பொருள்கள் மீது மனதை ஒருமுகப்படுத்தி ஆராய்ச்சிகளை நடத்தி அவற்றின் இரகசியங்களைக் காண்கிறான். நாம் பேசும்போது எவ்வளவுக்கு எமது எண்ணங்களை ஒருமுகப்படுத்துகிறோமோ அவ்வளவுக்கு அவ் விஷயத்தைத் தெளிவு படுத்துவோம். அவ்வாறே கேட்கும் போது எவ்வளவுக்கு மனம் ஒருமைப்படுகின்றதோ அவ்வளவுக்குத் தெளிவாக நாம் விஷயங்களைப் புரிந்து கொள்ளலாம். ஒருமுகப்படுத்திய மனத்தால் ஊடுருவினால் உலக இரகசியங்களை அறிந்து கொள்ளலாம். ஊடுருவலின் வலிமையும் வேகமும் மனதைக் குவிப்பதிலேயே கிடைக்கின்றது.
இந்துக்கலைக்களஞ்சியம்

Page 27
மனதைப் புறப்பொருளில் குவிப்பது இலகு. இயல்பாகவே மனம் வெளிநோக்குக் கொண்டதாக உள்ளது. புறப்பொருளில் குவிகின்ற மனத்தை அகப்பொருளில் குவிப்பதே தியானம் ஆகும். அதாவது மனதைக் கொண்டு மனதை நோக்க வேண்டும். ஆராய வேண்டும். அவ்வாறு செய்தால் காரிருளில் கதிரவன் கதிர்கள் புகுந்தால் அங்குள்ள மறை பொருட்கள் யாவும் புலனாவது போல் குவிந்துள்ள மனம் தனக்குள் மறைந்திருக்கும் இரகசியங்களை வெளிப்படுத்துகின்றது. உண்மையான சமய உணர்ச்சி வெளிப்படுகிறது. நம்மிடம் ஆன்மா உண்டா இல்லையா? வாழ்வு நித்தியமானதா? அநித்தியமானதா? பிரபஞ்சத்தை ஆளக் கடவுள் உண்டா இல்லையா? என்ற விடயங்கள் அனைத்தும் தெளிவு பெறுகின்றன. தியானத்தின் முதல் நிலை பிராணாயாமம்; இதன் நோக்கம் பிராணனை வசப்படுத்துவதே. பிராணனை வசப்படுத்தும்போது குண்டலினி சக்தி எழுகின்றது. மூலாதாரத்தில் சுருண்டு கிடக்கும் சக்திக்கு குண்டலினிசக்தி என்று பெயர். தெய்வீக ஞானம் பெறுவதற்கும், உணர்வு கடந்த காட்சிக்கும் பரமாத்மனை அடைவதற்கும் ஒரே வழி குண்டலினி சக்தியை எழுப்புவதே. பகவானிடம் செலுத்தும் தூய அன்பினாலும் பரிபூரண நிலை எய்திய முனிவர்களின் அருளினாலும், தத்துவஞான ஆராய்ச்சியின் வலிமையினாலும் குண்டலினி சக்தி எழுப்பப்படும். இந்தச் சக்தியைப் பயன்படுத்தும் முறையை ஒவ்வொருவரும் அறிந்து கொண்டால் பேரானந்தப் பொருவாழ்வைப் பெறலாம்.
ஞானயோகப் பயிற்சிக்கு குருட்டு நம்பிக்கை வேண்டியதில்லை. உண்மைகளை ஆராய்ந்து உணர்ந்த பின் அவற்றின் மீது நம்பிக்கை வைக்கலாம். நாம் ஒழுக்க சீலர்களாய் சாத்வீகப் பண்புகளை வளர்ப்பதோடு பயிற்சியின் மூலம் புலன்களைக் கட்டுப்படுத்தி மனதைக் குவியவைத்து தியானத்தை மேற்கொள்ளும்போதும் ஞான யோகம் கை
கூடுகின்றது. நி.நி)
c65/76O7776-177 6/1667 Ug56-65ub அல்துை ஞான சரிதை
இது உமாபதி சிவாசாரியாரால் எழுதப்பட்டதாகக் கருதப்படுவது. இப்பஞ்சகம், (1) ஞான பூஜாகரணம் (2) ஞான பூஜை (3) ஞான தீட்சை அல்லது ஞான தீட்சா விதி (4) ஞானாந்தியேட்டி (5) போஜன விதி
என்னும் ஐந்து சிறு நூல்களைக் கொண்டது இதனைத் தருமபுர ஆதீனம் வெளியிட்டுள்ளது (1934).
இதனை உமாபதிசிவம் இயற்றவில்லை என்பாருமுண்டு. தருமபுர ஆதீனத்தைச் சேர்ந்த வெள்ளியம்பலவாணத்தம்பிரான்
இந்துக்கலைக்களஞ்சியம்

முத்தி நிச்சயம், ஞானாவரண விளக்கம் என்னும் நூல்களுக்குத் தாம் எழுதிய உரையில் இந்தப் பஞ்சகத்தைப் பல இடங்களில் மேற்கோளாகக் காட்டியிருக்கின்றார். அவர் இந்நூலின் ஆசிரியர் உமாபதி சிவாச்சாரியார் என்று தெளிவாகக் குறிப்பிடுகின்றார். மதுரைச் சிவப்பிரகாசர் தாம் சிவப்பிரகாசத்துக்கு எழுதிய உரையில் இவ்வைந்து நூல்களையும் மேற்கோளாக எடுத்தாள்கிறார்.
(1) ஞான பூஜாகரணம்: சிவஞானத்தை எய்திய ஒருவர் கிரியைகளை ஏன் செய்ய வேண்டும் என்னும் வினாவுக்கு விடையளிக்கிறது. இதில் 30 செய்யுட்கள் உள்ளன.
(2) ஞான பூஜை 18 செய்யுட்களைக் கொண்ட இந்நூல் சீவன் முத்தர்கள் மேற்கொள்ளும் வழிபாடுகளைப் பற்றிச் சொல்கிறது. இது ஞான பூஜாவிதி எனவும் அழைக்கப்படுகிறது.
(3) ஞான தீட்சாவிதி : எட்டுச் செய்யுட்களைக் கொண்டது. தீட்சையினுடைய விளக்கங்களைத் தருகிறது இந்நூல். இது ஞானதீக்கைத் திருவிருத்தம் எனவும் வழங்கப்படும்.
(4) ஞானாந்தியேட்டி இரண்டே செய்யுட்களைக் கொண்ட
இந்நூல் சீவன் முத்தனாகிய இல்லறத்தானுக்கு உரியது.
(5) போஜனவிதி : நான்கு செய்யுட்களைக் கொண்ட இந்நூல் பிட்சை ஏற்பதைப் பற்றியும், தியானம் செய்வதைப் பற்றியும் கூறுகிறது.
தருமபுரம் மடத்தைச் சேர்ந்த சட்டைநாதத் தம்பிரான் இந் நூலுக்கு உரை எழுதியுள்ளார். (டி.பி சி)
ஞானாமிர்தம்
மெய்கண்ட சாத்திரங்களிற்கு காலத்தால் முந்திய சைவசித்தாந்த நூல்களிலொன்றே ஞானாமிர்தம். இதனாசிரியர் வாகீச முனிவர் என அறியப்படுகிறது. சங்கக் செய்யுளை ஒத்த நடையில் இந் நூலிலுள்ள செய்யுள்கள் அமைந்துள்ளன. இந் நூலின் முதற்பதிப்பு மதுரைத் தமிழ் சங்கத்தின் வாயிலாக வெளிவந்தது. சேற்றுார் சுப்பிரமணியக் கவிராயர் என்பவரே இதன் பதிப்பாசிரியராவார். இதன் திருந்திய பதிப்பு ஒளவை சு. துரைசாமிப் பிள்ளையினால் மேற்கொள்ளப்பட்டு அண்ணாமலைப் பல்கலை வெளியீடாக 1954 இல் வெளிவந்தது. வாசீக முனிவர், கோளகி சந்தான மடத்தைச் சேர்ந்தவர். அம் மடத்தின் திருவொற்றியூர் கிளையில் வசித்த காலை சோமசம்பு பத்ததியையும், அதற்குரிய சிவாகமங்களையும் அறிவுறுத்தியமையால் இவர் சோம சித்தாந்தம் வக்காணிக்கும் வாகீச பண்டிதர் என அழைக்கப்பட்டார். பின்னர் கோளகி மடத்து ஞானாமிர்தவாசிரியர் சந்தானம் என்றே தம்மை அழைத்துக் கொண்டமை இந் நூலின் சிறப்பை உணர்த்தும். இரண்டாம்
ff

Page 28
இராசாதிராசனின் 9ஆம் ஆட்சியாண்டின் திருவொற்றியூர் கல்வெட்டில் சோமசித்தாந்தம் வக்காணிக்கும் வாகீஸ்வர பண்டிதன் எழுத்து என்று வரும் வரிகள் இவரது காலத்தை உறுதிசெய்யும்.
ஞானாமிர்தம் முழுவதும் இன்று கிடைப்பதாயில்லை ஞானபாதம் மட்டுமே கிடைத்துள்ளது. பதிப்பிற்கு கிடைத்த பிரதிகளில் கருத்துரையும், உரையும் காணப்படுகிறது பதிப்பாசிரியர் இவற்றையும் உள்ளடக்கியே நூலைட் பதிப்பித்துள்ளார். இந்நூலில் கிரியாபாதப்பகுதி இருந்ததென்பது உரையாசிரியர் குறிப்புகளாலும், சிவஞான முனிவரின் பாடியத்தினாலும் அறியப்படுகிறது.
ஆகமங்கள் ஞானம், யோகம், கிரியை, சரியை என நான்கு பாதங்களைக் கொண்டதென ஆரம்பிக்கும் இந் நூலின் பாயிரமொழிந்த ஏனைய விடயப் பொருளை சம்மிய ஞானம், சம்மிய தரிசனம், பாசபந்தம், தேகாந்தரம், பாசவனாதி, பாசச் சேதம், பதியுண்மை, பாசமோசனம் என வகுத்து கருத்துரையும் தரப்பட்டுள்ளது.
சம்மிய ஞானம் என்ற முதற்பகுதியில் ஞானபாதத்தின் உள்ளடக்கமான பசு, பாசம், பதி என்ற மூன்றையும் ஆராய்ந்தறியலாமெனக் கூறி முதலிற் பசுவினது கேவல, சகல, சுத்தாவத்தை இலக்கணம் கூறப்படுகின்றது. பசு என்பது உயிர் அது பாசத்தாற் கட்டப்பட்டிருப்பது பற்றி பசு எனப்படுகிறது. மலம், மாயை, வினை என பொதுவகையால் பாசம் மூன்று வகைப்படும். மலமென்பது ஆணவமலத்தைச் சுட்டும். உடல், உலகு மற்றும் உலகியற் பொருட்களும், அவை தரும் இன்பங்களும் மாயையாம். அதனால் மாயையை உலகென்றும், உடலென்றும் ஏற்றவாறு வழங்குவதுண்டு. உயிர்க்கு கேவலம், சகலம் சுத்தம் என மூவகை நிலையுண்டு. மலமாகிய கட்டோடு உயிரிருப்பது தன்னிலையென்னும் கேவல நிலையாகும். உடம்போடு கூடிநிற்றல் உடநிலையென்னும் சகலம், மலமுதலிய மூன்றின் தொடர்பின்றி தனித்து தூயதாய் விளங்கும் நிலை சுத்தம் எனப்படும். தன்நிலையில் உள்ள உயிர் உடனிலையை எய்தி வினைகள் புரிந்து இன்பமும் துன்பமுமாகிய பலா பலன்களை அனுபவித்து சத்திநிபாதத்தினால் அருள்ஞானம் பெற்று சுத்தநிலை எய்தும். தன்னிலையில் உயிருக்குள்ள மலத்தொடர்பு அன்ாதியானது. அதனால் அத் தொடர்பு எக்காலத்திலேற்பட்டதென வினவுதற்கு இடமில்லை. மலத் தொடர்பினால் மாயையின் காரியமாகிய உடம்பொடு கலந்து உலகுடன் தொடர்புறுகிறது. உயிர் மலத்தொடு மருவாதாயின் வினைத் தொடர்பு கொண்டு மலம் நீங்கி வீடுபேறு எய்தும் சாத்தியம் இல்லை. உவர் மண்ணும் சாணமும் ஆகிய அழுக்குகள் உடையில் பற்றிய கறையை நீக்குவதுடன் தாமும் நீங்குவதுபோல மலத்தோடு கூடிய உயிர் மாயையுடனும் வினையுடனும் தொடர்புற்று உயிரிலிருந்து தாமும் நீங்கி மலத்தையும் நீக்குவதானால் அனாதியான ஆன்மா அறிவே சொரூபமான தன்னியல்பைப் பெறும் அறிவுடையது சேதனம்
12
 
 

என அழைக்கப்படும். மலம், மாயை, கன்மம் ஆகிய மூன்றும் அறிவற்றதாகையால் அசேதனம் என அழைக்கப்படும். மாயையிலிருந்து உலகும் உடலும் இறைவனால் படைக்கப்படுகின்றன. கேவலத்திலுள்ள உயிர் முத்தியடையும் பொருட்டே இவை படைக்கப்படுகின்றன.
சம்மிய தரிசனப்பகுதியில் ஆகமங்களின் ஞானபாதப் பொருளான பதி, பசு, பாசம், என்ற மூன்றையும் ஆராய்தறியலா மெனக் கூறி முதலில் பசுவினது கேவல, சகல, சுத்தாவத்தைகள் கூறப்படுகின்றன. உயிர்க்கு இடமாகிய உடல் தூலம், சூக்குமம் என இருவகைப்படும். அது அசேதனப் பொருளாகும். அசேதனம் உயிரில்லாது இயங்காது. உயிர் புருவநடு முதல் உந்தியின் கீழுள்ள ஆதாரம் வரை மேலும் கீழுமாக உலவிக் கொண்டிருக்கும். ஊடலில் மேலும் கீழுமாகச் செல்லும் வகையில் உயிர்க்கு 5 வகை நிலையும் (அவத்தை) உண்டு. அவை முறையே நனவு, கனவு, உறக்கம், பேறுறக்கம், கழிபேருறக்கம் எனப்படும். துரியத்தில் ஆன்மா மலத்தொடர்பின்றி சுத்தனாயிருக்குமென சிலர் கூறுவதுண்டு. இதனை மறுத்து துரியத்திலும், அதீதத்திலும் ஆன்மா சுத்தன் அல்லவென சைவநுால் கூறும்.
பாசபந்தம் பகுதியில் மலம் போல மாயையும், வினைகளும் உயிரைப் பிணிப்பதால் மலம் எனப்பட்டது. இதனால் மலம் ஆணவம், கன்மம், மாயை என மூன்றாகிறது. செம்பிற் களிம்புபோல் ஆணவம் அறிவை மயக்கும். தத்துவங்களோ முதலில் ஆன்மதத்துவம், வித்தியாதத்துவம், சிவதத்துவமென மூன்றாகவும், பின்னர் 36 ஆகவும் விரியும், கன்மம் நல்வினை தீவினை என இரண்டாகும்.
ஆணவமலம் ஒன்றாயினும் உயிர்களின் தன்மைக்கேற்ப அதன் மறைக்கும் சக்தி வேறுபடும். வினை நல்வினை, தீவினை என இருவகைப்படும். மாயை உடலாய் உலகாய்த் தோன்றி நிலைத்து ஒடுங்கும். மாயை அசேதனமாதலால் அதனைத் தோற்றுவிப்பதும் ஒடுக்குவதும் இறைவனாகும். உயிர்களின் பொருட்டே இது நிகழ்கிறது. வினைகளினூடான உயிர்களின் போக நுகர்ச்சியின் பொருட்டே நிகழுகிறது.
மாயாகாரியமாகிய உடலும் உலகமும் மாயையிலிருந்து தோன்றி மாயையில் ஒடுங்கும். மாயை உள்பொருளாகும். அது ஆற்றல் வடிவினது. இதுவே சத்காரியவாத அடிப்படையெனக் கூறப்படுகிறது.
குற்றமற்ற மெய்யுணர்வு, அருளோடு புணர்தல், தன்னுயிர்போல பிற உயிர்களிடத்து கருணையுடைய வனாயிருத்தல், பொறுத்தற்கரிய வெகுளியும் துன்பமும் வந்தால் பொறுத்தல், பிறன் பொருள் விழையாமை, நன்றி மறவாதிருத்தல், தீயன சிந்தியாதிருத்தல், நடுநிலையுடையனாயிருத்தல், அழுக்காறின்மை, பிற உயிர்களின் துன்பத்தைக் கண்டு துக்கித்தல், எண்ணுதற்கரிய பெரும் குணமுடையவனாயிருத்தல் முதலியன மனதால் எற்படும் நல்வினைகளாம்.
இந்துக்கலைக்களஞ்சியம்

Page 29
அறம் பெரிதும் மொழிவன, புறங்கூறாமை, வாய்மை, கல்வி, தீமை கூறாமை, இன்சொல் கூறல், வன்சொல் மொழியாமை, அறிவு நூல் விரித்தல், அருமறையோதுதல், கடும்சொல் ஒழித்தல், பொய் சொல்லாமை ஆதியன வாயால் வரும் நல்வினைகளாம்.
தவம், தானம் செய்தல், தேவர்களை அர்ச்சித்தல், ஒழுக்கம் ஒம்பல், ஐம்பெரும் பாவம் நீங்குதல், புலன்களை அடக்குதல், பகுத்துண்ணுதல், நிழல் மரம் நடல், நீர்நிலை ஏற்படுத்தல், ஆதுலர்சாலை அமைத்தல், துறவோர்க்கு மடம் அமைத்துக் கொடுத்தல், கோயில்கள் கட்டுதல் முதலிய புண்ணியம் செய்தல் முதலியன உடலால் வரும் நல்வினைகளாகும்.
அருள், அறம், தவம் முதலியவற்றிற்கு மாறானவை தீவினையாம். நல்வினை இன்பத்தையும் தீவினை துன்பத்தையும், உயிர்களிற்குப் பயக்கும். வினையால் விளையும் துன்பம் துக்கம் ஆதிதைவீகம், ஆதிபெளதீகம், ஆதி ஆத்தியான்மிகம் என மூவகைப்படும்.
ஆதி ஆத்தியான்மிகம் உடலாலும் மனதாலுமென இருவகைப்படும். நோய், சத்துரு. விலங்கு, பறவை, பேய், கள்வர், இராட்சதர், மைந்தர், மகளிர், செல்வமிகுதி, நுகர்வு என்பனவற்றால் ஏற்படும் துன்பம் உடலால் வருவதாகும். பெண்டிர், மைந்தர் பிரிதலாலும், சொத்திழப்பினாலும், ஆற்றாமையினாலும், அழுக்காற்றினாலும் இச்சையினாலும், வஞ்சினத்தினாலும் வருவது மனம் சம்பந்தப்பட்டதாகும். இயற்கை அனர்த்தங்களால் வருவது ஆதி பெளதீகம், கருப்ப வேதனை, ஆச்சரியமான பிரசவ வேதனை, மூப்பால் வரும் வேதனை, அஞ்ஞானத்தால் வரும் வேதனை, மரண வேதனை, எவராலும் விரும்பப்படாத் துன்பம் ஆகியவை ஆதிதைவீகம் எனப்படும்.
தேகாந்தரம் என்னும் பகுதியில் முன்னை வினைப்பயன்களை
நுகருவதும், அவற்றை நுகரும்போதே வேறு வினைகளைச் ܐܵܟ
[r செய்வதால் அவ்வினை காரணமாக பிறப்பிறப்புகள் உண்டாகிறது
என்பதும் பல புவனங்களிலும், பலவகைப் பிறப்புக்களிலும் வினை
< ಆಗ ಇಂಗ್ರಹ உயிர்கள் பிறந்தும் இறந்தும் வருவதென்பதும்
விளக்கப்படுகிறது.
பாசனாதித்துவம் எனும் பகுதியில் பிறப்பிறப்புகளிற்குக் காரணமாகிய வினையும் மாயையும் மலம்போல் அனாதியானவை. மாயையினால் கருவியும், வினையால் செயலும் நிகழ்தலால் இவ் விரண்டினதும் தொடர்பின்றி உயிரின் மலத் தொடர்பு நீங்காது. மாயையும் வினையும் ஒன்றிற்கொன்று இன்றியமையாதவை. இதனால் இவற்றிற்கு முன் பின் கூறமுடியாது. அத்துடன் மாயாகாரியமாகிய உடலாலேயே வினை நிகழுகிறது. வினையால் மேன்மேலும் பிறப்புகள் உண்டாகின்றன. இவ்வாறு தொடர்ச்சியாய் வந்து கொண்டிருக்கும் இவற்றின் தொடர்பு அறமுயலுவது தான் மலத் தொடர்பு நீங்கி சுத்தநிலை அடைவதற்கான ஏதுவாகுமென்பது விளக்கப்படுகிறது.
இந்துக்கலைக்களஞ்சியம்
 

அடுத்துவரும் பாசச் சேதவியலில் பாசமாகிய மாயை, வினை என்பனவற்றின் தொடர்பை அறுக்க முயலுவதே மலத் தொடர்பு நீங்கும் நன்நெறியென்பது விளக்கப்படுகிறது. அதாவது ஞானத்தின் சிறப்பு விளக்கப்படுகிறது. நன்நெறியென்பது மனத்தின் மாசை அறக் களைவதேயாம். மாயையினாலும், வினையினாலும் பிறக்கும் அழுக்காறு, அவா வெகுளி என்பனவற்றாற் பிறக்கும் சிற்றின்பத்தில் உயிர் மயங்கும். அஞ்ஞானம் எழுந்து உயிரை ஜம்புல இன்பங்களில் அழுத்தி ஞானநெறி உணராது தடுமாறச் செய்யும். கருவாகத் தரித்தல், பிறப்பு, இறப்பு ஆகிய மூன்றும் வினை தொடர்வதற்குக் காலாகிறது. வினைகள் உயிரால் தேடிக் கொண்டவையாதலால் அவற்றை நுகர்ந்தே கழித்தல் வேண்டும். பிறரை நோதல் ஆகாது. இருவகை வினைகளையும் விருப்பு வெறுப்பின்றி நுகர்வோர் ஞானவான்களாவர். இவர்கள் தமக்கு நன்மை செய்தோரையும், தீமை செய்தோரையும் வேறுபாடு காட்டாது அன்பு செய்வர்.
ஞானவான்கள் முதலாக அனைவரும் செய்வினைப் பயன்களை அனுபவித்தேயாதல் வேண்டும். அதனால் ஒவ்வொருவர்க்கும் தீவினைக்காலம், நல்வினைக் காலம் என இரண்டும் அறியாமலே வந்துசேரும். இவ்விருவகை வினைகளையும் நுகர்ந்து கழிப்பதைவிட வேறுவழியில்லை. உண்ணல், உறங்குதல், அஞ்சுதல், இன்பநுகர்வு என்பனவற்றில் ஞானிகளும் அஞ்ஞானிகளும் ஒரே தன்மையினராயிருப்பினும், அவர்களது உளம் தூய்மை கெடுவதில்லை.
மலத் தொடர்பு நீக்குதலை மறந்து இன்பத்திற்கு அடிமையாகி மேன்மேலும் வினைகளைப் பெருக்குதல் பந்த காரணம். அவற்றை வெறும் கருவியென ஞானத்தால் தெளிந்து, வீடுபேறு நோக்குவது ஞானியர் வாழ்க்கை. குயவன் சுற்றிவிட்ட சக்கரம் அவன் செயல் நீங்கியவிடத்தும் சுற்றுவதுபோல, வினை செய்து வந்த உடல் வினை நீங்கிய்விடத்தும், வினைவழி இயங்குகிறதெனக் கூறி ஞானியர் வினைக்குக் காரணர் ஆகாரென விளக்கப்படுகிறது.
பக்குவமுடையோர்க்கு எய்திய ஞானம் நற்பலனும், அவ்வாறல்லாதார்க்கு வேறு பயனும் விளைவிப்பதற்கு பசுவுண்ட நீர் பாலாவதையும், பாம்புண்ட நீர் விடமாதலையும் எடுத்துக் காட்டுகிறார். அது பற்றியே யாக்கை நிலையாமையும், தீமைகளும் விரித்துரைக்கப்படுகிறது. வினையின் இயல்பும், அதன் காரணமும் பயனும் நோக்க வினைத்தொடர்பு நீங்குகிறது. சிவஞானம் விளங்கித் தோன்றுதலால் மலத்தின் தொடர்பும் கெடுகிறது. மலம், மாயை, வினை ஆகிய மூன்றும் அனாதியேயாயினும் உயிருக்கு அதனுடன் உள்ள தொடர்பு நித்தியமானதல்ல. இரசத்தினால் களிம்பு நீங்குவதுபோல தேற்றாங் கொட்டையால் நீரின் கலங்கல் நீங்குவதுபோல இவை நீங்கும்.
பதி நிச்சயம் என்ற பகுதியில் மாயையின் பற்றுக்கோடு நீங்குகிற உயிர்களுக்கு இறைவன் திருவடியே பற்றுக் 3ಣ-*"ತಿ காட்டப்படுகிறது. பிருதுவி முதலான 36
13 199484

Page 30
தத்துவங்களிற்கு அப்பாற்பட்டவன், சர்வ வியாபகமாய் நிறைந்த ஒருவன், வண்ணங்கள் இல்லாதோன், நிர்மலன், புலனோடு புணராதவன், தனக்குவமையில்லாதோன், பிறப்பிலி, தனக்கென்ற நாமம் இல்லாதோன், சர்வகர்த்தா, பற்றில்லாதவன், காலம் கடந்தோன், முதல் இடை கடை இல்லாதோன், மேலோன், கலக்கமில்லாதோன், கோபமில்லாதோன், மோகமில்லாதோன், பயமற்றவன், பங்கப் படாதோன், நடுக்கமில்லாதோன், சலனமில்லாதவன், நித்தன், முத்தன், சுத்தன், சுதந்திரன், பெத்தமும் முத்தியும் இல்லாதோன், சுகதுக்கமில்லாதவன், புலனின்றி யாவும் அறிவோன், கீழோரை நிக்கிரகித்தலும் மேலோரை அணுக்கிரகித்தலும் இல்லாதவன், தானே பரவத்துவாயுள்ளோன், துரியம் தொடராத் தூயோன், அளவைகட்கு அப்பாற்பட்டோனென பதியிலக்கணம் கூறப்பட்டு, பதியின் வியாபகம் அடுத்துக் கூறப்படுகின்றது. மாணிக்கமும் அதன் ஒளியும் போல, சந்திரனும் அதன் தட்பமும் போல, தீக்கடைக்கோலும் தீயும்போல, பாலும் நெய்யும்போல, பழமும் சுவையும் போல, உடலும் உயிரும் போல, சொல்லும் பொருளும் போல, எள்ளும் நெய்யும்போல, மலரும் மணமும் போல வியாபித்திருப்பினும் விரவா வீரியம் உடையோன் சிவன்.
இத்தகைய பதியின் உண்மைக்கு மூவகை அனுமானங்கள் தரப்படுகின்றது. முதலில் கேவலான்னுவய அனுமானப் பிரமாணத்தின்படி நிச்சயிக்கப்படுகிறது.
பக்கம் பிரதிஞ்ஞை பிருதிவி முதலாய தத்துவங்களும், மலை முதலிய பொருள்களுமாகிய பிரபஞ்சம் கருத்தா ஒருவனையுடையது.
ஏது : 5LLh GUITG).
திட்டாந்தம் குடத்தையும் குயவனையும் ஒருங்கே கண்டவன், பல குடத்தைக் கண்ட பொழுது குயவனில்லாத போதும் அவற்றை வனைபவன் ஒருவன் இருத்தல் வேண்டுமென நிச்சயித்தாற் போல குடம்போல ஆக்கப்பட்டவை
அழிவதுபோல.
உபநயம் அழிவுடைய பிரபஞ்சத்திற்கு கர்த்தா
ஒருவன் உண்டு.
நிகமனம் அவன் இறைவன்.
அடுத்து அன்னுவயவெதிரேகியினால் நிறுவப்படுகிறது.
பக்கம் பிரதிஞ்ஞை பிரபஞ்சம் அசேதனமாயிருத்தலான் சிருட்டியும் சங்காரமும் இருத்தல் வேண்டும். அதற்கு சைதன்யனான கருத்தா ஒருவன் வேண்டும்.
ஏது தேர் போல.
திட்டாந்தம் தேர் தானே உற்பத்தியாவதில்லை. உற்பத்தி செய்பவனொருவன் வேண்டும்.
உபநயம் அதுபோல பிரபஞ்சத்தையும் உற்பத்தி
செய்யும் ஒரு கருத்தா வேண்டும். நிகமனம் அவன் பதியாகும்.
A.
 

மூன்றாவதாக கேவலவெதிரேகி அனுமானத்தினால் பதியுண்மை நிறுவப்படுகிறது.
நின்றவிடத்தே ஒரு படித்தாய் நிற்க அமைந்தது யாதொன்று அஃது அனாதியாயுள்ளது. ஒருவராற் செய்யப்பட்டதன்று
பதி தனக்கென ஒரு உருவமில்லாதவன். உருவமில்லாத உயிர் உடலை இயக்குவதுபோல அவன் அருவமாயிருந்து உலகம் தோன்றி நின்று ஒடுங்குமாறு செய்வன். கருவியில்லாது சங்கற்ப மாத்திரத்தினாலேயே செய்யும் இயல்பினன். சகளம், நிட்களம், சகளநிட்களம் என நின்று ஐந்தொழில் புரியினும் அவன் விகாரம் அடையான்.
முதல்வனாகிய சிவனை 'உள்ளமொடு உணர்வு சூழ் ஒடுக்கி உள்ளுர் உணருவது உணர்வின் பாலே' எனப்படுகிறது. பதியின் சகளவடிவம் புலன்களால் அனுபவிக்கத் தக்கதே யாயினும், நிட்களம் தியானத்திற்கும் அகப்பட்டதால் தியான பாவனைக்குத் துணையாக நின்று தன்னைத் தரிசிக்க விரும்பும் ஆன்மாவிற்குப் பக்குவம் விளைவிப்பது கருதியது சகளம். பக்குவம் எய்தியவழி நிட்களம் தியானப் பொருளாம்.
இரு வினையொப்பும், சத்திநிபாதமும் எல்லா உயிர்க்கும் ஒரு படித்தாக நிகழாமைக்குக் காரணம் அவற்றின் மெய்யுணர்வு ஒருசேர நிகழாமையேயாகும். முத்திப் பேற்றிற்குரிய ஞானமும், பிறவிக்கேதுவாகிய அஞ்ஞானமும் விறகிடைத் தீ இருப்பதுபோல ஆன்மாவிலிருக்கிறது. விறகைக் கடைய தீ பிறப்பதுபோல தீக்கையால் ஞானம் வெளிப்படும்.
இறுதிப் பிரிவான பாசமோசனம் என்ற பகுதியில் ஞானவான்கள் சிவமாந்தன்மை எய்துவரென்பது கூறப் படுகின்றது. பசுத்துவம் இன்றிப் பதித்துவம் எய்துவர். இதனை இருள் நீக்கமும், ஒளி விளக்கமும் ஒரு சேர நிகழ்வது போல நிகழும் எனத் தெரிவிக்கப்படுகிறது. உயிர்கள் வினை செய்யும் வழியால் (அத்துவா வழி) ஞானநலம் பெறும். அத்துவா வழியை செம்மை நெறியால் செலுத்தும் நலம் தீக்கைக்கு உண்டு. தூய்மை காண்டலும், தூய்மை செய்தலும் தீக்கையின் சிறப்புடைச் செயல்களாகும். தீக்கையால் அத்துவா நலம் பெற்ற உயிர், ஞானத்தால் சிவபோகத்தைப் பெறும். இவ்வாறு வாகீச முனிவரின் ஞானாமிர்தம் சைவசித்தாந்தச் செம்பொருளைப் போதிக்கிறது. (്ff.കി.)
ஞானாஹரன விளக்கம்
இந் நூலை இயற்றியவர் குருஞான சம்பந்தராவார். வெள்ளியம்பலவாண சுவாமிகளால் இதற்கான பாடியம் இயற்றப்பட்டுள்ளது. ஞானாவரண விளக்கமும் அதற்கான பாடியமும் 1975ஆம் ஆண்டு தருமபுர ஆதீன வெளியீடாகப் பிரசுரிக்கப்பட்டது. இராசகோபால சாஸ்திரி இதன் பதிப்பாசிரியராவார். ஞானாவரண விளக்கமும் ஒரு மூல
இந்துக்கலைக்களஞ்சியம்

Page 31
நூலன்று. அருள் நந்தி சிவாச்சாரியார் சித்தியாரில் குறிப்பாலுணர்த்திச் சென்ற விடயங்களிற்கு விளக்கமாக ஆங்காங்கு சில செய்யுள்களை இயற்றிச் சித்தியாருடன் இணைத்து உருவாக்கிய நூலே ஞானாவரண விளக்கமாகும். பரபக்கம், ஞானாந்தம், அளவையியல், சுபக்கம் என இந் நூல் நான்கு பாகங்களாலானது. தமிழும் சமஸ்கிருதமும் கலக்கப்பட்டு இரு மொழியும் கலந்த நடையில் இந் நூல் ஆக்கப்பட்டுள்ளது.
இதன் முதற்பகுதியில் அகப்புறச் சமயமாயுள்ள வாமம், வைரவம், தஷிணம் என்ற மூன்று மதங்களும் அம்மதங்களின் பூர்வ பக்கங்களாயுள்ள மதங்களும் அம்மத சித்தாந்தங்களும் உணர்த்தப்படுவதோடு, உரைப் பிறழ்வால் கெளளமதம் முதலியனவும் கூறப்படுகின்றன. தஷிண சைவ சித்தாந்தத்தை அனுசரிக்கும் வீர சைவமும், அதன் பிரமாணமாயுள்ள நவலிங்கலீலை முதலியனவும் விரிவாகக் கூறப்பட்டிருக்கிறது. தொடர்ந்து அகச் சமயமும் அதன் மறுப்பும் இடம் பெறுகின்றன. அகச் சமயங்களுள் காளாமுகம் (இதனை சோம சைவம் சோம சித்தாந்தம் எனவும் அழைப்பர்) கபாலம், தாந்திரிக பாசுபதம், வைதீக பாசுபதம், மாவிரதி என்ற சுவதந்திரபேதமாயுள்ள மதங்களும் அவற்றின் மறுப்பும் இடம்பெற்றுள்ளன.
சரியையிற் சரியை, சரியையிற் கிரியை, சரியையில் யோகம்,சரியையில் ஞானம் என்ற நான்கு பாகுபாடுடைய தாசமார்க்கம், இம் மாதிரியே சகமார்க்கம், சற்புத்திர மார்க்கம், சன்மார்க்கம் என்பவையும் பாகுபாடுடையன. இம் மார்க்கங்கள் நான்கும் சங்கரனையடையும் நன்மார்க்கங்களாகுமெனினும் சன்மார்க்கமே மேலானது.
மேற்கூறப்பட்ட மதங்களை கன்மாந்தம் ஞானாந்தம் என்று இருவகையினவாக்கி கன்மாந்தத்தை பதமுத்தி தரும் மதம், பரமுத்தி தரும் மதம் என இரு கூறாக்கிச் சொல்லப்படுகிறது. யோகத்தில் சரியை, யோகத்தில் கிரியை, யோகத்தில் யோகம் வரையிலான மதம் கன்மாந்தத்தில் பதமுத்தி மதம் எனவும் கூறப்படுகிறது. யோகத்தில் ஞானம் பரமுத்தி மதம், எனவும் கூறப்படுகிறது. நிஷ்களயோகமதம், சைவசாங்கிய மதம் பரமுத்தி வாதமதம், யோக ஞானமதம் எல்லாம் ஒன்றேயாம். அது சைவசித்தாந்தத்திற்கு அங்கமாகும்.
பரமுத்தி மதங்களில் ஐக்கிவாதி மதம், பாஷாணவாதி மதம், பேத வாதி மதம் மற்றும் நான்கு வகையான சீமசமவாதி மதங்கள், சங்கிராந்தி மதம், ஈஸ்வர அவிகாரிவாத மதம், பரிணாமவாதி மதம், இலயசைவர், சிவசமவாதியான அபிவியக்தி சமவாதியின் அவாந்தரபேதமான மதங்களும் அவற்றின் முத்தி நிலைகளும் பிரமாணங்களும் எடுத்துக் காட்டப்படுகிறது.
நூலின் இரண்டாம் பகுதியில் ஞானாந்தம் சுருக்கமாக விளக்கப்படுகிறது. அது ஞானத்திற் சரியை, ஞானத்திற் கிரியை, ஞானத்தில் யோகம், ஞானத்தில் ஞானம் என நால்வகைப்படும். ஞானத்தில் ஞானாதி நான்கிற்கும் உரியவர்கள் சத்தினிபாத
இந்துக்கலைக்களஞ்சியம்

முடையவர்களாகும். இவர்கள் சாம்பவி தீக்கையால் சுத்தி பெற்றவர்களாவர். ஞானத்தில் ஞானமே நித்தியமான ஞானமாகும். அதுவே நித்தியமான வீடுபேற்றைத் தரவல்லது. மற்ற மூன்றும் அநித்தியமான கன்மத்தால் அநித்திய பதமுத்திக் கேதுவாதலின் சன்மார்க்கமன்றாயினும் ஞானமான சன்மார்க்கத்திற் கேதுவாதலின் உபசாரத்தால் சன்மார்க்கமாகும்.
மூன்றாவது பகுதியில் சிவஞான சித்தியாரை ஒட்டி அளவையியல் இலக்கணம் கூறப்படுகிறது. முதலில் பிரமாணத்தின் சாமான்யலட்சணமும் கூறி, விசேட லட்சணமும் கூறி பிறமதத்தினர் கூறும் அளவைகளெல்லாம் சித்தாந்தத்தினால் பிரத்தியட்சம், அனுமானம், ஆப்த வாக்கியம் என்ற மூன்றிலும் உள்ளடக்கப்படும் முறை கூறி இவற்றைப்பற்றிய விரிவான விளக்கம் தரப்படுகிறது. அனுமானம் தொடர்பாக மாற்றுக் கருத்துடையவர்களின் நிலைப்பாட்டைக் கண்டிக்கும் வகையில் பக்கப்போலி, ஏதுப்போலி, திட்டாந்தப்போலி முதலான தருக்கப் போலிகள் பற்றி ஆராயப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து விவாதித்தலில் ஏற்படக்கூடிய தோல்வி நிலைகள் பற்றிய விரிவான விளக்கம் உதாரணங்களுடன் தரப்படுகிறது.
நான்காவது பகுதி சுபக்கம் எனப் பெயரிடப்பட்டுள்ளது. இப் பகுதி சித்தியார் சுபக்கத்தின் விளக்கமாக அமைந்துள்ளது. இப் பகுதியின் பல இடங்களில் சுபக்க உரையாசிரியர்களான மறை ஞானதேசிகர், சிவாக்கிரகயோகி ஆகியோர்களின் உரையை கண்டித்தும் பெயர் சுட்டாது தருமையாதீன மரபைச் சாராத ஞானப்பிரகாசர் முதலானோர் உரையைக் கண்டிப்பதுடன் ஏற்புடை விளக்கம் எதுவென்றும் கூறப்பட்டுமுள்ளது. இவை தவிர காலமே தனு கரண புவன போகங்களிற்கு கர்த்தா என்ற கால வாதம், அணுவாதம் முதலான விளக்கங்களும் கண்டிக்கப்பட்டு சத்காரிய அடிப்படையில் விளக்கம் தரப்படுவதும் குறிப்பிடத்தக்கது. சுத்தமாயை, அசுத்தமாயை, முப்பத்தாறு தத்துவங்கள் ஆகியவை மிகவும் விரிவாக ஆராயப்படுகிறது.
ஞானாவரண விளக்கம் பொதுவாக LJ J. G. LDUI நிலைப்பாடுகளை விமர்சித்து அவை தவறெனச் சுட்டிக் காட்டுவதும், மூல ஆகமங்கள், உப ஆகமங்கள் மற்றும் அஷ்டப் பிரகரண நூல்கள், தேவாரம், திருவாசகம், வடமொழி சைவசித்தாந்த நூல்கள் என்பனவற்றை ஆதாரம் காட்டி சைவசித்தாந்த விளக்கம் தருவதும், சித்தியார் கூறும் கருத்துக்களைத் தெளிவுபடுத்துவதும் என்ற இலக்குகளை ஆதாரமாகக் கொண்டு இயற்றப்பட்டுள்ளது. இரு பாகங்களாக பதிப்பிக்கப்பட்ட இந்நூலின் இரண்டாம் பாகத்தின் இறுதியில் நூலின் பிரதி முழுவதும் கிடைத்தில என்றும் கிடைத்த மட்டும் அச்சிடப்பட்டுள்ளதென்றும், முற்றுமுள்ள பிரதி கிடைப்பின் அடுத்த பதிப்பாக வெளியிடலாமென்றும் அன்பர்கள் ஞானாவரணம் என்னும் அந்த ஞானசாத்திரம் உள்ள இடம் அறிந்து கிடைக்கச் செய்ய வேண்டுமென்ற குறிப்புடனும் பதிப்புருவம் பெற்ற இந் நூல் முற்றுப் பெறுகிறது. (്കff.കി.)
方5

Page 32
ஞானியார் அடிகள்
இவர் தமிழகத்தில் கும்பகோணத்தை அடுத்த திருநாகேச்சுரத்தில் அண்ணாமலை பார்வதி என்பவர்களின் மகனாக வீர சைவ மரபிலே பிறந்தார். இவருக்குப் பெற்றார் இட்ட பெயர் பழனியாண்டி
சிறந்த சிவபக்தர்களான அண்ணாமலை, பார்வதி தம்பதியினர் திருப்பாதிரிப் புலியூரில் உள்ள வீரசைவமடத்தின் நான்காம் குருமூர்த்தியிடம் தம் மகனை ஒப்டைத்தனர். மிக இளட் வயதிலேயே குருமூர்த்தியின் சீடனாக இருந்து மடத்தின் பணிகளைக் கவனித்து வந்த பழனியாண்டி தமது பதினேழாம் வயதில் மடத்தின் ஐந்தாம் குருமூர்த்தியாகப் பதவியேற்றார் மடாலய மரபுப்படி சிவசண்முக மெய்ஞ்ஞான சிவாச்சாரிய சுவாமிகள் எனப் பெயர் பெற்றார்.
தமிழுக்கும் சைவத்தின் மேன்மைக்கும் தொண்டாற்றிய ஞானியார் அடிகள் ஐம்பத்திரண்டு ஆண்டுகள் குருபீடத்தில் இருந்தார். இவர் தமிழகம் எங்கும் சென்று சொற்பொழிவுகள் மூலம் மக்களுக்கு சைவ சமயம் பற்றிய பல விளக்கங்களையும் அறிவுரைகளையும் நல்கினார். இவரது பன்மொழிப் பாண்டித்தியம் சேவைகள் பலவற்றிற்கு கை கொடுத்தது. தமிழ் வடமொழி, தெலுங்கு, ஆங்கிலம் ஆகிய மொழிகளை துறைபோகக் கற்றறிந்திருந்தார். கருத்தாழம் மிக்க இவரது சொற்பொழிவுகளால் ஈர்க்கப்பட்ட பாலவந்தம் சமீன்தார் பாண்டித்துரைத் தேவர் இவரது வேண்டுகோளுக்கு இணங்கி 1901 ஆம் ஆண்டு மதுரையில் ஒரு தமிழ்ச் சங்கத்தை நிறுவினார். 1903 ஆம் ஆண்டு தம் திருமடத்திற்கு வந்த பாண்டித்துரைத் தேவரைக் கொண்டு வாணி விலாச சபை என்ற சபையைத் தோற்றுவித்து வாரந்தோறும் சொற்பொழிவு செய்து வந்தார்.
சைவசித்தாந்தக் கொள்கைகளில் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்த அடிகள் அவர்கள் சென்னையில் இருந்து பணியாற்றும் நிறுவனமாக சைவமகாசமாசத்தை 1905 ஆம் ஆண்டு தென்னார்க்காடு மாவட்ட நடுவராக இருந்த சே. எப் நல்லசாமிப் பிள்ளை, மறைமலையடிகள், ஆகியவர்களின்
த்வன்யாைோகம்
கலையழகின் கூறுகளிலொன்றான அலங்காரப் தொடர்பாக எழுந்த இந்திய அழகியல் நூல்களில் த்வன்யாலோகம் தலைசிறந்தது. ஒன்பதாம் நூற்றாண்டிலே காஷ்மீரத்தில் அவந்திவர்மன் சபையில் இருந்த புலவர்களில் ஒருவரான ஆனந்தவர்த்தனரால் இது எழுதப்பட்டது த்வன்யாலோகம் 121 1/2 செய்யுள்களையும் (காரிகை) வசன நடையிலுள்ள விருத்தியையும் கொண்டது. காரிகையை
f6

துணையுடன் திருமடத்திலேயே தொடக்கிவைத்தார். சித்தாந்தம் என்ற இதழையும் இச் சபையின் பெயரால் ஆரம்பித்து வைத்தார். கரந்தையில் வாழ்ந்த வழக்கறிஞர் த. வே. உமாமகேசுவரம் பிள்ளையின் துணைக் கொண்டு திருவையாற்றில் இருந்த வடமொழிக் கல்லூரியை வடமொழி, தமிழ் என்ற இரு மொழி போதிக்கும் கல்லூரியாக மாற்றினார். மேலும் அரசர் கல்லூரி என்ற பெயர் வழங்கவும் அரும்பாடு பட்டார். இத்தகைய அரிய சேவைக்கு தனக்கு பேருதவியாக இருந்த வழக்கறிஞர் த. வே. உமாமகேசுவரத்துக்கு தமது அறுபதாம் ஆண்டு நிறைவு விழாப் பேரவையில் 'செந்தமிழ்ப் புலவர் என்ற பட்டமளித்துச் சிறப்பித்தார்.
முதன் முதலில் தொடக்கப்பள்ளி ஒன்றை ஆதீனத்தின் சார்பில் ஆரம்பித்து வைத்தவர் ஞானியார் அடிகளே. சிறந்த செயலாற்றுத் திறன்வாய்ந்த அடிகளார் தான் மேற்கொள்ளும் காரியங்களில் காலம் தவறாமை என்ற பண்பைக் கொண்டிருந்தார். மிகவும் எளிமையான வாழ்க்கையை மேற்கொண்டிருந்த அடிகள் தாமே நேரில் பல மடாலயங்களுக்குச் சென்று மடாதிபதிகளைச் சந்தித்து செய்யவேண்டிய முக்கிய கருமங்கள் பற்றிக் கலந்துரையாடி அவற்றை நிறைவேற்றும்படி தூண்டி நின்றார். இவர் 1916இல் மயிலம் 18ஆம் பட்டம் சிவஞானபாலய சுவாமிகளையும் 1925 இல் பேரூர்ச் சாந்தலிங்க அடிகளையும் கண்டு தமிழ்க் கல்லூரி அமைக்கவும் சைவசமயம் தழைக்கவும் வழிவகை காணுமாறு செய்தார். இன்று அங்கெல்லாம் தமிழ்க் கல்லூரிகள் தமிழ்த் தொண்டு புரிகின்றன.
ஞானியர் அடிகள் நூல் எதனையும் எழுதவில்லை. தம் குருநாதர் மேற்பாடிய குருதுதி 49 பாட்டுகளும் ஞான தேசிகமாலை 23 பாட்டுகளும் திலகவதி துதி 7 பாட்டுகளும் இன்று இவரது பாடல்களாகக் கிடைக்கப்பட்டுள்ளது. திருப்பாதிரிப் புலியூர் புராணம், திருப்பாதிரிப் புலியூர் தோத்திரக் கொத்து, கந்தர் சட்டிச் சொற்பொழிவுகள், நிட்டானுபதி சாரமும் மூலமும் உரையும் ஆகியவை ஞானியர் அடிகளாற் பதிப்புச் செய்யப்பட்டன. (நி நி)
ஸஹ்ருதயர் என்பவரும், விருத்தியை ஆனந்தவர்த்தனரும் இயற்றினரென்ற அபிப்பிராயமொன்றுண்டு. ஆனால் இருவரும் ஒருவரேயென்பது வக்கிரோதிஜீவிதம், வியக்தி விவேகம், லோசனவுரை, அபிநவபாரதி என்ற நாட்டியசாஸ்திரவுரை, ஸாகித்திய தர்ப்பணம் முதலிய நூல்களிலிருந்து அறியப்படுகிறது.
த்வன்யாலோகத்திற்கு சந்திரிகை என்றும், லோசனம் என்றும் இரு உரைகள் உள்ளன. அவற்றில் லோசனம் 10-11
இந்துக்கலைக்களஞ்சியம்

Page 33
நூற்றாண்டிலே அபிநவகுப்தரால் எழுதப்பட்டது. அவரது உரை மிகச் சிறந்ததென்பது அறிஞர் கூற்று. பட்டலொல்லடர், சங்குகநர், பட்ட நாயகர் ஆகிய மூவரும் த்வனிக் கொள்கையை குறைகூற அதனை மறுத்து இக் கொள்கையை நிலைநாட்டியவர் அபிநவகுப்தராவார்.
இந்நூல் நான்கு பிரிவுகளைக் (உத்யோதங்கள்)கொண்டது. முதலாவது பிரிவில் த்வனியே காவியத்தின் ஆன்மாவாகக் கொள்ளத்தக்கதென பரம்பரையாகப் பெரியோராற் போற்றப்பட்டதென்பதும், அதற்கு இலக்கியம் வான்மீகி இராமாயாணம், வியாசரின் மஹாபாரதம், முதலிய நூல்களென்றும் கூறப்படுகிறது. மகளிரின் இலாவண்யம் போல த்வனி விளங்குகிறது. அது வஸ்துதொனி, அணித்தொனி, சுவைத்தொனி என மூவகைப்படும். அதனை சுவைஞரே அறிதல் கூடுமென்றும், அது வாச்சியப் பொருளிலிருந்து முற்றிலும் வேறுபட்டதென்றும் கூறப்பட்டு, அதன் இலக்கணமும் கூறப்பட்டது. தொனி இல்லையென்ற கொள்கையும், அது பாக்தமே என்ற கொள்கையும் அதனை உணரலாமேயன்றி இலக்கணமுகத்தான் கூறமுடியாதென்ற கொள்கையும் பொருத்தமில் கூற்றென உணர்த்தப்பட்டது.
இரண்டாவது பிரிவில் தொனியானது கருதாவாச்சியத் தொனி, கருதி வேறினை நோக்கும் வாச்சியத்தொனி என இருவகைப்படும். கருதாவாச்சியத்தொனி பிறிது பொருட்கண் மாலை நூல் போல தன்னகத்துச் செல்லும் வாச்சியத்தொனி, முற்றிலும் மறைந்த வாச்சியத்தொனி என இருவகைப்படும். கருதிவேறினை நோக்கும் வாச்சியத்தொனி முறையான தோற்றத் தொனி, முறையில் தோற்றத் தொனி என இரு வகைப்படும். சிறந்து விளங்கும் சுவை, பாவம், சுவைப்போலி, பாவப்போலி முதலியன முறையற்ற தோற்றத் தொனியின் பாற்படும். சிறவாதிருப்பின் அவை அணியாகக் கொள்ளப்படும். சுவைகட்கு பொதுவான குணம் யாது? சிறப்பான குணம் யாது? என்பதும் அணியின் உடலாகிய சொல், வாச்சியப்பொருள் இவற்றைப் பற்றியன என்பதும், அவ்வணிகள் சிறந்து விளங்க எவ்வாறு இணைக்கப்பட வேண்டுமென்பதும் இப்பகுதியில் கூறப்படுகிறது.
சத்தசத்தி மூலத்தொனி, அர்த்த சத்தி மூலத்தொனி என முறையான தோற்றத்தொனி இருவகைப்படும். சத்தசத்தி மூலத் தொனிக்கும் சிலேடைக்கும் வேறுபாடு யாதென்பதும், அர்த்த சத்தி மூலத் தொனியில் வஸ்துவும் அணியும் வியங்கிய மாயிருத்தல் கூடுமென்பதுவும் எடுத்துக் காட்டப்படுகிறது. சிறந்து எளிதில் புலப்படும் வியங்கியமே தொனியின் பாற்படுமென்பது எடுத்துக் காட்டப்பட்டது. இவையனைத்தும் இப்பிரிவில் தக்க உதாரணங்களுடன் விரிவாக விளக்கப்படுகிறது.
மூன்றாவது பிரிவில் கருதாவாச்சியத் தொனியிலும் முறையான தோற்றத் தொனியிலும் சொல்லும் தொடரும் வியஞ்சகமாகலாமென்று எடுத்துக் காட்டப்படுகிறது. எழுத்து, சொல், சொற்பகுதி, தொடர், சங்கடனை, பிரபந்தம் என்பன
இந்துக்கலைக்களஞ்சியம்

முறையில் தோற்றத்தொனி தோன்ற நிமித்த காரணமெனக் கூறப்படுகிறது. எவ்வெவ்வெழுத்து எவ்வெச் சுவைக்கு நிமித்தமாகலாமென்பதுவும் கூறப்படுகிறது. சங்கடனை மூவகைப்படும். அது குணங்கட்கு அடக்கி, கூறுவோன் கூற்று முதலியவற்றின் அவசியத்தை ஒட்டி இணைக்கப்படினே சுவை தோன்ற நிமித்தமாகுமென்பது எடுத்துக் காட்டப்படுகிறது. பிரபந்தத்தில் சுவை தோன்றுவதற்குரிய நிபந்தனைகள் யாவையென்பது விரிவாக ஆராயப்படுகிறது. வேற்றுமை மரபு, வினைவிகுதி முதலியனவும் வியஞ்சகமாகலாம். விரோதிச் சுவைகளை எங்கெங்கு கொள்ளவேண்டும்? அதற்குரிய நிபந்தனைகள் யாவை? எங்கெங்கு தவிர்க்க வேண்டும்? என்பன பற்றிப் பேசப்படுகிறது. சொற்களின் வாச்சியப் பொருளும் சுவைக்குத் தக்கவாறு இருத்தல் வேண்டும்.
வாச்சியத்திற்கும் வியங்கியத்திற்கும் உள்ள இயைபு குணகுணித்தன்மையோ அல்லது லிங்க லிங்கித் தொடர்போ அல்ல. அது சரீரசரீரித் தன்மையாகும். வியங்கியத்தின் அறிவு வாச்சிய அறிவின் பின்னரே ஏற்படும். வியங்கியப் பொருள் கருத்துப் பொருளாதலின் தொடர்க்கு வியஞ்சகத்துவம் வியாபாரம் இல்லை. வாசகத்துவமென்றே உளதென்ற கொள்கை ஏற்புடையதல்ல. குணவிருத்தியே வியஞ்சனையெனக் கொள்ளலாகாது. வியங்கியம் வாச்சியப் பொருளுக்கு அழகூட்டின் அது குணபூதவியங்கியம் எனப்படும் தொனி குணபூதவியங்கியமேயாகும். இவற்றின் பாற்படாத காவியம் சித்திரம் எனப்படும். அது சொல்லழகையும், வாச்சியப் பொருளழகையும் கொண்டதெனினும் சிறந்ததன்று. ஒரு செய்யுளிலே தொனி, குணபூதவியங்கியம் இவற்றின் சங்கரம், சம்சிருட்டி நேரலாம். அக் காரணத்தால் காவியம் பலவகைப்படுகிறது.
நான்காவதும் இறுதியானதுமான பிரிவில் தொனியும், குணபூதவியங்கியமும் பலவகைப் பட்டதனால் ஏலவே கவிஞராற் கூறப்பட்ட கருத்தையும் புதியதாகக் கூறலாம். அவற்றுக்கு எல்லையில்லை. கவி சுவையிலேயே ஈடுபடவேண்டும். காலம், தேசம், நிலை ஆகிய வேறுபாட்டால் செய்யுளை பல்வகையாக இயற்றலாம். உத்தரராமாயணமும், ஹரிவம்சமும் முறையே இராமாயணம், மகாபாரதம் என்பனவற்றின் இறுதிப் பகுதியே. அறிஞர்கள் சுவைமயமான நூல்களில் மனம்தளராது ஈடுபடவேண்டும். அவ்வாறு ஈடுபடின் சரஸ்வதியின் அருள் கிடைக்குமெனக் கூறுவதுடன் நான்காம் பகுதி முடிவடைகிறது. (647.462)
தக்கயாகப் பரணி
சோழப்பெருமன்னரின் அவைக்களப் புலவரான ஒட்டக்கூத்தராற் பாடப்பெற்ற நூல்களில் ஒன்று தக்கயாகப் பரணி. அது வீரபத்திரப் பரணி என்னும் பெயராலும் வழங்கும். அது தக்கன் வதை பற்றிய பரணி என்பதால் தக்கயாகப் பரணி என்னும் பெயரினைப் பெற்றது. பரணி என்னும் வகைக்குரிய முதலாவது நூலாகிய கலிங்கத்துப் பரணி ஜயதரனாகிய முதலாங் குலோத்துங்கனின் காலத்திலே
f7

Page 34
அவைக்களப் புலவரான சயங்கொண்டாரால் இயற்றப்பட்டது. குலோத்துங்கனது கலிங்கத்துப் போரின் பின் களத்தில் நடந்த நிகழ்ச்சிகளை கற்பனைக் கதைகளின் வடிவிலும் இலக்கிய ரசனையோடும் வர்ணிக்கும் பாங்கில் அது அமைந்துள்ளது.
தக்கயாகப் பரணி முற்றிலும் பெளராணிகமான கதைகளை அடிப்படையாகக் கொண்டது. சிவபெருமானை அவமதிக்கும் வகையிலே வேள்வி செய்த தக்கனை அழித்தமையினைக் கூறுவதே தக்கயாகப் பரணி கவிச்சக்கரவர்த்தியாக விளங்கிய ஒட்டக்கூத்தர் தலைசிறந்த சிவபக்தர். சோழமன்னர்மீது பேரபிமானங் கொண்டவர்; சைவ சமய மரபுகளை நன்கறிந்தவர். அவருடைய சமயஞானமும் சமயாபிமானமும் சோழமன்னர் மீது அவர் கொண்டிருந்த அபிமான உணர்வுகளும் நூல் முழுவதும் இளையோடுவதனை அவதானிக்கலாம்.
தக்கனைப் பற்றி ஒட்டக்கூத்தர் சொல்லும் கதை பெளராணிக மரபிலிருந்து சற்று வேறுபட்டதாகும். அதிலே காணப்படும் ஆளுடைய பிள்ளையாரைப் பற்றிய கதையும் பெரியபுராணக் கதையிலிருந்து வேறுபட்டதாகும். தக்கன் மகாவிஷ்ணு முதலான தேவர்களை வரவழைத்து, சிவனை அவமதிக்கும் வண்ணமாக மகாயாகம் ஒன்றினைச் செய்தான். அதனைப் பார்க்கச் சென்ற தாட்சாயணியையும் தக்கன் அவமதித்தான். அதனாற் கோபமுற்ற மகேஸ்வரன் தக்கனுக்குத் தண்டனை வழங்குவதென்று தீர்மானித்தார். அதனால் வீரபத்திரக் கடவுள் அவதாரமாகித் தக்கனைக் கொன்று யாகத்தை அழித்து களக்கூத்து நிகழ்த்தினார் என்பது புராணக்கதை.
கடவுள் வாழ்த்து, கடை திறப்பு, காடு பாடியது, தேவியைப் பாடியது, பேய்களைப் பாடியது, கோயில் பாடியது, பேய் முறையீடு, காளிக்குக் கூளி கூறியது, கூழடுதலும் இடுதலும், களங்காட்டல், வாழ்த்து என்னும் பதினொரு பிரிவுகள் தக்கயாகப் பரணியில் உள்ளன.
கடவுள் வாழ்த்தில் வைரவக் கடவுள், பார்வதி பரமேஸ்வரர், விநாயகர், குமாரக் கடவுள், ஆளுடைய பிள்ளையார் ஆகியோருக்கு துதிப்பாடல்களைப் பாடியுள்ளார். வாழ்த்துப் பகுதியில் இரண்டாம் இராசராசனது சிறப்புக்களை ஆசிரியர் நயம்படப் போற்றுகின்றார். சோழனுக்கு வெற்றியுண்டாக வேண்டுமென்று வேண்டுகின்றார்.
காடு பாடியது என்ற பகுதியிலே பாலை நிலத்தின் வெம்மை பற்றியும் அங்குள்ள காளி கோயிலைப் பற்றியும் வர்ணிக்கப்படுகின்றது. வாமம் எனப்படும் சம்பிரதாயத்தைக் கடைப்பிடிப்போரின் இயல்புகளும் சொல்லப்படுகின்றன. கோயில் பாடியது என்ற பகுதியில் காளி கோயிலைப் பற்றிய விவரங்கள் காணப்படுகின்றன. திருஞானசம்பந்தரைப் பற்றிய நாட்டார் வழக்கான கதையின் சில அம்சங்கள் இந்நூலில் விவரிக்கப்பட்டுள்ளன. முருகப் பெருமான் திருஞானசம்பந்தராக
፲8
 

அவதாரஞ் செய்து பாண்டி நாட்டிலே சைவ சமயத்தை மேன்மைபெறச் செய்தமை நயம்பட வர்ணிக்கப்பட்டுள்ளது. பாண்டியனைத் திருநீற்றுப் பதிகம் பாடி வெப்பு நோயிலிருந்து மீட்டமை, அனல்வாதம், புனல்வாதம் என்பன புரிந்து அற்புதங்கள் நிகழ்த்தியமை முதலான விடயங்கள் நூலில் விளக்கப்பட்டுள்ளன.
நூலின் முடிவிலே சோழ மன்னனாகிய இராசராச தேவரைப் புகழ்ந்து பாடுவதோடு உறையூர், காவேரி என்பனவற்றையும் ஆசிரியர் போற்றிப் பாடுகின்றார். அத்துடன் தமிழோடு கலை மகளையும் வாழ்த்திப் பாடுகின்றார். (* L.)
தக்கன்
தக்கன் (தக்ஷ) எனும் பெயரில் இருவர் இருந்ததாகப் புராணங்கள் பலவற்றிலே குறிப்புகள் உள்ளன. சில புராணங்களில் இருவரும் ஒருவரே எனும் கருத்தும், வேறு சிலவற்றில் இருவர் எனும் கருத்தும் காணப்படுகின்றன. தக்கன் பற்றிய கதைகள் ஒன்றோடொன்று பிண்ணிப்பிணைந்து சிக்கலாக உள்ளபடியாலேயே ஒருவர் கதை இருவர் கதை போலக் காணப்படுவதாகக் கருதப்படுகின்றது. முதலாவது தக்கன் வேள்வியிலே கொல்லப்பட்டான். இதன்பின் இரண்டாமவன் வாழ்க்கை வரலாறு தொடங்குகிறது. மேற்குறிப்பிட்ட இரண்டினையும் சுருக்கமாகக் குறிப்பிடலாம்.
பிரமா தனது மனத்திலிருந்து மரீசி, அங்கிரஸ், அத்ரி, புலஸ்தியர், வசிஷ்டர், புலக, கிரது எனும் ஏழு மஹா முனிவர்களை உண்டாக்கினார். இதன்பின் அவரின் கோபத்திலிருந்து ருத்திரனும், சில உறுப்புகளிலிருந்து நாரதர், தக்கன், வீரணி முதலியோரும் தோன்றினர். காளிகா புராணத்திலே வீரணியின் பெயர், அசிக்னி எனக் கூறப்படுகின்றது. தக்கன் நீண்டகாலமாக விந்தியமலையிலே தவம் செய்தான். மஹாவிஷ்ணு அவன் முன் தோன்றி அசிக்னியை மனைவியாக அவனுக்குக் கொடுத்தார்.
அசிக்னீயிடத்துத் தக்கனுக்குப் பல ஆண் பிள்ளைகள் பிறந்தனர். கடைசியாகச் சிவபெருமானின் மனைவியான சதீ தோன்றினாள். தக்கன் ஒரு பெரிய வேள்வி (யாகம்) செய்தான். ஆனால் அதற்கு மகளையோ, மருமகனையோ வரவழைத்திலன், இதனால் கோபமுற்ற சிவபிரான் வீரபத்திரரையும், பத்திரகாளியையும் அனுப்பி வேள்வியை அழித்துத் தக்கனையும் கொல்லுவித்தார். பின்னர் தேவர்களின் வேண்டுகோளின்படி தக்கனை உயிர்ப்பித்தார். ஆனால் ஏற்கனவே அவனது தலை கொய்யப்பட்டுக் கிடைக்காமையால், அவனுக்கு ஆட்டுத் தலை பொருத்தப்பட்டது. இத்துடன் முதலாம் தக்கனின் வரலாறு முடிவடைகிறது.
பிராசேத செஸ்கள் (பர்ணிஸ் என்பவரின் 10 பிள்ளைகள்) தவம் செய்தனர். பூமியிலே பயிர்ச்செய்கை கைவிடப்பட்ட படியால் மரங்கள் அடர்ந்த காடு வளர்ந்தது. மரநுனிகள் வானத்தைத் தொட்டன. மரங்களுக்கு ஊடாகக் காற்றே வீச
இந்துக்கலைக்களஞ்சியம்

Page 35
முடியவில்லை. பிராசேத செஸ்கள் தவம் முடிந்து, கடலிலிருந்து கரைக்கு வந்தனர். காடு நன்கு வளர்ந்திருப்பதைக் கண்டு கடுங் கோபமுற்றனர். தம்முடைய முகங்களிலிருந்து அக்கினியையும், வாயுவையும் தோற்றுவித்தனர். காற்று மரங்களை வேரோடு பெயர்த்து வீழ்த்திற்று. அக்கினி அவற்றை உலரச் செய்தது. மரங்கள் அழிக்கப்பட்டமையை அறிந்த மருத்துவ மூலிகைகளின் அரசனான சந்திரன் அங்கு வந்து அவர்களின் கோபத்தை தணிக்குமுகமாக மரங்களுடன் அவர்களுக்கு ஓர் ஒப்பந்தம் செய்வித்தான். அதாவது மரங்களுக்குப் பிறந்த மாரீசா எனும் அழகிய பெண், தன்னுடைய வளர்ப்பு மகள் என்றும் பிராசேத செஸ்களின் மனத்தின் அரைவாசியிலிருந்தும் தனது மனத்தின் அரைவாசியிலிருந்தும் பெரிய ஞானியாகிய பிரஜாபதி தக்ஷன் தோன்றுவான் என்பதுமே அவ்வொப்பந்தமாகும். அவர்கள் கோபத்தை அடக்கி இதனை ஏற்றனர். மாரீசா அவர்களின் மனைவியாகி பிரஜாபதி தக்கனைப் பெற்றாள். இத்துடன் தக்கன் வரலாற்றின் இரண்டாவது கட்டம் ஏற்பட்டது. தக்கன் பற்றிய பலதிறப்பட்ட கதைகளைப் மேல்வருமாறு ஒழுங்குபடுத்திக் கூறலாம்.
பிரமாவின் பணிப்பின்படி தக்கன் தேவர்கள், துறவிகள், கந்தர்வர்கள், அசுரர்கள் முதலியோரை உண்டாக்கினான். ஆனால் அவர்கள் மத்தியில் எதிர்பார்த்தவாறு இனப் பெருக்கம் ஏற்படவில்லை. பின்னர் ஆண்கள் பெண்கள் சேர்க்கையால் பிள்ளைகள் தோன்றினர். அசிக்னி மூலம் ஹர்யஸ்வஸ் என்றழைக்கப்படும் 5000 பிள்ளைகள் பிறந்தனர். ஆனால் நாரதர் அவர்களுக்கு உபதேசம் செய்து பல திசைகளுக்கும் அலையச் செய்தார். இவ்வாறு இவர்கள் திசைமாறிச் செல்ல சபலாஸ்வஸ் என்றழைக்கப்படும் 1000 பிள்ளைகள் பிறந்தனர். அவர்களையும் நாரதர் திசை திருப்பி விட்டார். இதனாற் கோபமுற்ற தக்கன் நிரந்தரமான இடமின்றி அலைந்து திரியுமாறு நாரதரைச் சபித்தான். இதன்பின் பிரஜாபதி தக்கன் 60 பெண் பிள்ளைகளைப் பெற்றான். அவர்களிலே 10 பேர் தர்மதேவனையும், 13 பேர் காஸ்யபரையும் 27 பேர் சோமனை (சந்திரனை)யும் 4 பேர் அரிஷ்டநேமியையும் ஏனையோரில் இவ்விருவர் பாகுபுத்திரர், அங்கிரஸ், அறிஞரான கிருஷாஷ்வர் ஆகியோரையும் திருமணம் செய்தனர். அதிதி, திதி, தனு, அரிஷ்டா, சுர, கசா, சுரபி, வினதா, தாம்ரா, குரோதஸ், இரா, த்ரு. முனி என்போரே காஸ்யபரின் மனைவியராவர். இவர்களில் அதிதி தேவர்களின் தாய். திதி அசுரர்களின் தாய். இவ்வாறே ஏனையோரும் வேறு பலரின் தாய்மார்கள் ஆயினர். இவர்களை விட, தக்கன் பிரசூதி எனும் மனைவி மூலம் 24 பெண்பிள்ளைகளைப் பெற்றான். அவர்களிலே ஒருவரான சதீயைச் சிவபெருமான் திருமணம் செய்தார். தக்கன் பிருஹஸ்பதிஸவன எனும் பெரிய வேள்வி செய்தான். அதற்குத் தன்னுடைய மகள் சதீயையும், மருமகன் சிவபிரானையும் வரவழைத்திலன். அழைக்காமலே சதி அங்கு சென்றாள். தக்கன் அவளைப் பார்க்கவே இல்லை. இதனால் கோபமுற்ற சதி யாகாக்னியிலே பாய்ந்து இறந்தாள். இதைக் கேள்வியுற்ற சிவபிரான் கடுங்கோபமுற்று வீரபத்திரரையும், பத்திரகாளியையும்
இந்துக்கலைக்களஞ்சியம்

தோற்றுவித்துத் தக்கனைத் தண்டிக்குமாறு பணித்தார். அவர்கள் அவ்வாறே சென்று யாகத்தைச் சிதைத்தனர். தக்கனுடைய தலை கொய்யப்பட்டது. அங்கு சமூகமளித்தவர்களும் தண்டிக்கப் பட்டனர். இதன் பின்னர் தேவர்களின் வேண்டுகோளின்படி சிவபெருமான் தக்கனை உயிர்ப்பித்தார். அவனுடைய தலை கிடைக்காமையால் ஆட்டுத்தலை அவனுக்குப் பொருத்தப்பட்டது. இதே கதை சில மாற்றங்களுடன் கச்சியப்பரின் கந்தபுராணத் திலும் காணப்படுகின்றது.
தக்கனுடைய 27 கன்னியரை (நக்ஷத்திரங்களை)திருமணம் செய்த சந்திரன் அவர்களில் ரோஹிணியைத் தவிர்த்து ஏனையோரைக் கவனித்திலன். அவர்கள் இது பற்றித் தந்தையிடம் சென்று முறையிட்டு அவர் வீட்டிலே தங்கினர். தக்கன் சந்திரனை அழைத்து அனைவரையும் ஒரே மாதிரிக் கவனிக்குமாறு அறிவுறுத்தினான். சந்திரன் அவ்வாறு நடப்பதாகக் கூறினும் முன்னர் போலவே நடந்தான். இதனால் 26 பேரும் தந்தையிடம் மீண்டும் சென்றனர். இதனால் தக்கன் கடுங் கோபமுற்று சந்திரன் எலும்புருக்கி நோயினால் பீடிக்கப்பட்டுத் தேயும் வண்ணம் சபித்தான். சந்திரன் இவ்வாறு தேய உலகிலுள்ள தாவரங்களும், உயிர்வர்க்கங்களும் பாதிப்படைந்தன. இதைக் கண்ணுற்ற தேவர்கள் தக்கனிடம் சென்று தக்கனை மன்னித்துச் சாபவிமோசனமளிக்குமாறு கூறினர். இதனால் தக்கன், சந்திரன் மாதத்தில் அரைவாசி நாட்கள் வளரவும் அரைவாசி நாட்கள் தேயும் வண்ணமும் சாபத்திற்கு நிவர்த்தி செய்தான். இதே கதை சைவ மரபிலே சந்திரன் தேய்ந்து சிவபிரானைச் சரணடைந்து சாப விமோசனம் பெற்றான் எனக் கூறப்படுகிறது. அவனுடைய பரிதாப நிலையைக் கண்ட சிவபிரான் அவன் மீது கருணை கூர்ந்து அவனைத் தன் திருமுடியிலே தூக்கி வைத்து அருள் செய்தார். அந் நிகழ்ச்சியினைக் குறிக்கும் வகையில் அவருடைய திருமுடியில் என்றும் இலங்கும் வகையில் சந்திரன் பெரும் பாக்கியம் பெற்றான் எனக் கூறப்படுகின்றது. மேலும் தக்கன் பின்னர் சிவகணங்களில் ஒருவன் ஆனான் எனவும் (சைவமரபிலே) மஹாபாரதம் கூறும்.
இவ்வாறு இந்து பெளராணிக மரபில் ஒரு முக்கிய இடத்தைப் பெற்றவனாகத் தக்கன் விளங்குகிறான். உலகத்திலுள்ள பல்வேறு உயிர் வர்க்கங்கள் முதலியன தோன்றத் தக்கன் காரணமாயிருந்தான் எனக் கூறப்படுகின்றது. (வி சி)
தசக்கிரீவன் (இராவணன்)
பத்துத் தலைகள் கொண்ட இராவணனே தசக்கிரீவன் என்றழைக்கப்பட்டான்.இவன் இராமாயணம் என்ற இதிகாசத்தின் எதிர்நிலை நாயகனாக விளங்குபவன். வட மொழியில் வான்மீகி பாடிய ஆதி காவியத்திலும் தமிழில் கம்பன் பாடிய இராமகாதையிலும் பிறவற்றிலும் இராவணன் இலங்கை வேந்தனாகக் குறிப்பிடப் பெறுகிறான்.

Page 36
புலத்தியன் மரபிலே வந்த இராவணன் இலங்கையைத் தலை நகராகக் கொண்டு ஆட்சி செய்தவன். அவன் ஆட்சியின் மாட்சியை "ஊர் தேடும் படலம்” என்னுமொரு படலத்தினூடாக எமக்குக் கூறுகிறார் கம்பர். அதன் கண் இலங்கையின் சிறப்பு பலவாறு விபரிக்கப்படுகிறது. மன்னன் எவ்வழி குடிகளும் அவ்வழி' என்ற வாக்கிற்கு அமைய இராவணன் சிறந்த
செங்கோல் ஆட்சியாளனாக செல்வம் கொளிக்க கலைகள்,
வளம் பெறத் தன் ஆட்சியை நடத்தியிருக்கிறான் என்ற உண்மை மக்கள் வாழ்க்கையின் வளப்பத்திலிருந்து உணரக் கூடியதாக உள்ளது. பன்னெடுங்காவதம் அகன்றும் விரிந்தும் உள்ளது அப்பழம் பெருநாடு. நாட்டின் இடையே திகழ்வது நகரம். நகரில் அமைந்துள்ள வீடுகள் செல்வச் செருக்கைக் காட்டி நிற்கின்றன. உலகம் முழுவதையும் வென்று அடிமைப்படுத்தி உள்ள வீரன் ஒருவனின் நகரம் செல்வத்தில் செழித்திருக்கும் என்பதில் ஐயம் இல்லை. வீடுகள் பொன்னினால் கட்டப்பட்டு மணிகள் அழுத்தப்பட்டுள்ளன. அவை வீசும் ஒளி மின்னலையும், கதிரவனையும் தோற்கச் செய்கின்றன. இத்தகைய அரு நகரைச் சமைத்த தேவதச்சனைப் புகழுதல் ஒல்லுமோ என்கிறார் ஆசிரியர். இத் தருணத்தில் இராவணனே ஒரு கலைஞன் என்பதை அறிய வேண்டும்.
இலங்கையில் மக்கள் வாழும் பகுதிகளை வருணித்த ஆசிரியர் குதிரைகளும் யானைகளும் கட்டப்படும் கொட்டிலைக் கூறுகிறார். மிருகங்கள் கட்டப்படும் இடங்கள் மிகச் சிறப்புடையனவாய் இருப்பதற்கில்லை. ஆகவே அவற்றின் சிறப்பைக் கூறின் மற்றவற்றைப் பற்றிக் கூற வேண்டா என நினைத்துப் போலும் அதனைக் கூறுகிறார். மரகதம் முதலான வற்றால் செய்யப்பட்ட தேர்கள் நிறுத்தப்படும் கொட்டிற் சாலைகள் சூரியனும் வெக்கும்படி ஒளிர் வீசுகின்றனவாம்.
இவ்வரிய நகரைச் சுற்றி மதில்கள் காணப்படுகின்றன. தேவருலகையே சென்று முட்டுவனவாய் உள்ளன அவை, கதிரவன் இராவணன் ஆணைக்கு அஞ்சி இலங்கை மீது செல்வதில்லை என்பது தவறு. இவ்வுயர்ந்த மதிலைத் தாண்டிச் செல்ல இயலாததால் அன்றோ அவன் இலங்கை மேல் செல்வதில்லை என இயம்பி அனுமான் வியந்ததாகக் கூறுகின்றார் கம்பர். இப்பெருமதிலிடைக் காணப்படும் வாயில் மேருமலையை நிறுத்தி அதன் நடுவே ஒரு வெளி செய்தது போலவும், தேவர்கள் ஒரு சேர வந்து புகுதற்கமைந்த பெருவெளி போலவும், கடல் நீர் வந்து புகுதற்குச் செய்த பாலம் போலவும் அகன்றும் உயர்ந்தும் காணப்படுகின்றது. ஓயாது பகைவர்க்கு அஞ்சும் நாடே சிறு வாயிலை உடையதாய் இருக்கும். இலங்காபுரி வேந்தனோ எட்டுத் திக்குகளையும் மூவுலகையும் தன் ஆளுகைக்கு உட்படுத்திய வீரன். அவனது நாட்டின் வாயில் மிகப் பிரமாண்டமாய் இருப்பதில் வியப்பில்லை. இப் பெரும் மதிலை அடுத்து வளைந்து கிடப்பது அகழி. உலகினை வளைத்துள்ள ஏழு கடல்களும் இராவணன் ஆணைக் கஞ்சி அவனை நேரே காணத் திறனற்று அவனது மதிலைச் சுற்றி உலாவி வருவன போன்றுள என்று ஆசிரியர் கூறுமுகத்தால் அவனது புஜவலிமையையும் ஆணையின் பரப்பளவையும் நாம் உணரக்கூடியதாக உள்ளது.
2ó

இத்தகைய சிறப்புவாய்ந்த நகரில் வாழ்ந்தவர் எத்தகையவர் என்பதைக் காணல் வேண்டும். மக்களைப் பொறுத்தே ஒரு நாட்டின் பெருமையும், சிறுமையும் ஏற்படுகின்றன என்பது பொதுவான உண்மை. அதிலும் நாட்டின் உண்மை வளர்ச்சியைக் குறிக்க வல்லார் பெண்டிரே, பெண்டிர் நல்லவராய் இராத நாட்டிலும் அடிமைகளாயுள்ள நாட்டிலும் வீரம் முதலியன கிடையா. இலங்கை மாநகரப் பெண்டிர் மென்மொழி பேசும் மடவார். அழகியற் கலையை நன்குணர்ந்த அவர்கள் இசையிலும், இன்பத்திலும் பொழுதுபோக்குகின்றனர். பலர் பாடுகின்றனர். பாடலுக்கேற்ப ஆடுகின்றனர் சிலர். அவ்வாட்டத்திற்கேற்ப வாத்தியங்கள் முழங்குகின்றன. தேவ மகளிரால் மஞ்சன மாட்டப்பெற்ற இம் மாதர் உணவுண்டு பின்னர் இசையின்பம் துய்த்து இறுதியில் கணவரோடு இன்பக் கேளிகையிற் பொழுது போக்குகின்றனர். இப் பெண்களை ஒவியம் அனைய மாதர் என்கிறார் கம்பநாடார். இத்தகைய வாழ்க்கையை மகளிர் நடத்தினரென்றால் அது மன்னவன் சிறப்பாலேயே நடைபெற்றிருக்க வேண்டும். அச்சம் என்பது ஒரு சிறிதும் இல்லாது செல்வம் கொழிக்கும் நாட்டிலேயே இஃது இயலும், அது மட்டுமா? இவையிரண்டும் இருந்துங் கூடக் கலையறிவு இல்லை என்றால் அங்கு இசைக்கும், நடனத்திற்கும் இடமேது? ஆகவே இலங்கை மாந்தர் நன்கு வாழத் தெரிந்தவர். இன்பத்தை அனுபவிக்கத் தெரிந்தவர். சிந்தையில் நிறைவோடு வாழ்ந்தனர் என்பது புலனாகிறது. சீதையைக் கவரு முன் அவன் செங்கோலனாகவே திகழ்ந்தான் என்று எண்ண வேண்டியுள்ளது. இத் துணை சிறப்பாக ஒரு கொடுங்கோலன் ஆட்சியில் வாழ முடியுமா? வாழத்தான் விரும்புவார்களா? ஒருவேளை வாழ வேண்டிய இன்றியமையாமை ஏற்படினும் அவ் வாழ்க்கையை உதறித்தள்ள முற்படுவார்களேயன்றி மகிழ்ச்சியோடு அங்கு தங்கியிருப்பார்களா?
"நித்த நியமத் தொழிலராய் நிறையுஞ் ஞானத்து உத்தமர் உறங்கினார்கள் யோகியர் துயின்றார் மத்தமத வெங்களிறு உறங்கின மயங்கும் பித்தரும் உறங்கினர் இனிப்பிறரிது என்ஆம்?"
(கம்பன் - 4999) இப் பாடல் இராவணன் ஆட்சியின் மாட்சிக்கு சிறந்த எடுத்துக்காட்டாக உள்ளது.
இராவணன் புஜபலம் பொருந்திய வீரன் மட்டுமல்லாது சிறந்த ஆன்மீக பலமும் பொருந்தியவன். மூன்று கோடி வானாளையும் முயன்று பெற்ற அரிய தவத்தையும் உடையவன்.
"முக்கோடி வாழ்நாள் முயன்றுடைய பெருந்தவமும் முதல்வன் முன்நாள் எக்கோடி யாராலும் வெல்லப்படாய் எனக்கொடுத்த வரமும் ஏனைத் திக்கோடும் உலகனைத்தும் செருக்கடந்த புயவலியும்"
(கம்பன் 9899)
என்று அவன் வன்மைகள் எல்லாவற்றையும் சுவைபடப் பாடுகிறார் கம்பர். இராவணனின் கல்வியறிவை கும்பகர்ணன் வாயிலாகக் காட்டுகிறார் கம்பர். மிகப் பரந்தும் ஆழ்ந்தும் உள்ளது, ஆயிரம் மறைபொருளைக் கண்டது. மறையை அப்படியே உருச் செய்து
இந்துக்கலைக்களஞ்சியம்

Page 37
ஒப்பிப்பவன் அல்லன். மறையின் பொருளையும் நன்கறிந்தவன், உணர்ந்தவன், உணர்ந்த அளவோடு நில்லாமல் வாழ்க்கையில் அவற்றைப் பயன்படுத்தி அமைதி கண்டவன். இதனால்தான் கும்பகர்ணன் இராவணனைப் பார்த்து “ஆயிரம் மறைபொருள் உணர்ந்து அறிவு அமைந்தாய்” என்று சொல்லுகின்றான். மூவரும் அஞ்சத்தக்க போரினைச் செய்பவனும், வெள்ளியங்கிரியினை விடையின் பாகனொடு அள்ளி விண் தொட எடுத்த ஆற்றலோனுமாகிய நீயா குரங்கொன்று ஊரைச் சூறையாடி விட்டதென்று தன்னிரக்கம் கொள்கிறாய், பிறன் மனைவியை விரும்பிச் சிறை வைத்தாயே. இதனால் உனக்கு ஏற்படும் பழியை நீ சட்டை செய்யவில்லையாயினும் குலத்துக்கு வரும் பழியைக் கூடவா மறந்து விட்டாய் என்கிறான் கும்பகர்ணன். இதனால் இராவணன் இவை இரண்டையும் பெரிதும் மதிக்கின்றவன் என்பது பெறப்படுகின்றது.
காமத்தின் வயப்பட்டு நின்ற இராவணன் எத்தகைய அறிவுரைகளையும் செவிமடுக்காது இறுதியில் இராமனோடு போருக்கு ஆயத்தமாகின்றான். இராமனும், இராவணனும் சந்தித்தபோது நல்லதோர் பகையைப் பெற்றேன்' என்று இராவணன் கூறுவதால் அவன் வீரம் இராமன் வீரத்திற்கு சிறிதும் சளைத்ததன்று என்று உணர முடிகின்றது.
பல இடங்களில் மிக உயர்ந்தவனாகக் காட்சியளிக்கும் அவன் சிற்சில இடங்களில் மிகத் தாழ்ந்தவனாகக் காட்சி அளிக்கின்றான். அனைவருக்கும் பொதுவாக நன்மை, தீமை கலந்த பண்புகள் உண்டு. முழுவதும் நன்மையுடையவராகவோ, தீமையுடையவராகவோ இவ்வுலகில் இருத்தற்கில்லை. பெரும்பாலும் ஒருவன் நல்லவன் ஆவதும் தீயவன் ஆவதும் சூழ்நிலையை பொறுத்ததே. இராவணனும் அச் சூழ்நிலையாலேயே பெரும் பழியேற்கின்றான். அகம்பனன், சூர்ப்பனகை ஆகியோரின் சூழ்ச்சியால் தன் நிலையிழந்தான் இலங்கை வேந்தன். சீதையின் வர்ணனையை சூர்ப்பனகைபாற் கேட்டதும் அவளை இதயமாம் சிறையில் வைத்தான். சீதை பற்றிய கற்பனையை வளர்த்தான். நற்பண்புகள் பல கொண்டிருந்த இராவணனிடத்து பிறன்மனை நயத்தல் என்ற தகாத பண்பு குடிகொண்டு விட்டது. இத் தீமையை அறிவுடைய அவனே போக்கிக் கொண்டிருக்கலாம். அன்றேல் பிறர் கூறிய விடத்து திருந்தி இருக்கலாம். விபீஷணன் பலவாறு இடித்துரைத்தும் உணரவில்லை. அவனது அழிவோடு வீரம், தவம், வானமும், வையமும் வளர்ந்த புகழையும் அறிவையும் பலியிட்டு விடுகிறான்.
தவறான செயலில் இராவணன் ஈடுபடினும் தன்பாலுள்ள சிறந்த பண்புகளால் இராவணன் ஒரு தலைவனுக்கு வேண்டிய சிறப்புகள் அனைத்தும் பெற்றிருந்தான். இறுதியில் அவன் இறக்கும் போது தகுந்த தண்டனை அனுபவித்தான் என்று கூறுவதிலும் உயர்ந்தோன் ஒருவனின் வீழ்ச்சியில் உலகம் ஒரு படிப்பினையை மேற்கொள்கிறது என்று கருதிக் கொள்வதே பொருத்தமானது. (நி.நி)
இந்துக்கலைக்களஞ்சியம்

தசகாரியம்'
தசகாரியம் என்பது உயிர் உலகத் துன்பங்களிலிருந்து விடுபட்டு இறைவனோடு இரண்டறக் கலந்து இன்புற்றிருக்க மேற்கொள்ளும் பத்துச் செயல்முறைகளாம். சைவசித்தாந்தம் விளக்கும் இந்தத் தசகாரியம் தத்துவ ரூபம், தத்துவ தரிசனம், தத்துவ சுத்தி, ஆன்ம ரூபம், ஆன்ம தரிசனம், ஆன்ம சுத்தி, சிவ ரூபம், சிவ தரிசனம், சிவ யோகம், சிவ போகம் என்னும் பத்தினையும் குறிக்கும்.
மக்கள் பல்வேறு நிலையினர். உலக ஆசையில் உழன்று கணக்கற்ற துன்பங்களால் துயர் உறுவோர் ஒருவகையினர். மற்றொரு சாரார் துன்பந் துடைக்கும் வழி யாது என எண்ணி உலக இயல்பு பற்றியும் (பாசம்) அதில் வாழ்கின்ற உயிர்களின் தன்மை (பசு) பற்றியும் நூல்கள் வாயிலாயும் தக்க ஆசிரியர்கள் வாயிலாயும் கேட்டுச் சிந்தித்துத் தெளிவு பெறுவர். அப்பால் இறைவன் (பதி) இயல்பு பற்றித் தெரிந்து சிந்தித்துத் தெளிவுபெற்று நிட்டை கூடிச் சிவானந்தத்தில் ஆழ்ந்திருப்பர். இவ்விரண்டாம் பகுதியினர் மேற்கொள்ளும் செயல்முறைகளே தசகாரியமாகும்.
தத்துவங்கள் மண்முதல் நாதம் ஈறாக முப்பத்தாறு என்று சைவசித்தாந்த நூல்கள் கூறும். இத் தத்துவங்கள் உயிரொடு கூடிய வழி நிகழும் செயற்பாட்டைப் பற்றி அறிதல் தத்துவரூபம். இத் தத்துவங்களைப் பற்றிப் பலவாறு ஆராய்ந்து இவை உயிருணர்வு இன்றிச் செயற்படாத சடம் என உணர்தல் தத்துவதரிசனம், பின்னர், இத் தத்துவங்கள் யாவும் மாயையில் தோன்றி நின்று செயற்பட்டுப் பின் அதனிடமே ஒடுங்கும் தன்மையன எனும் உண்மையை உணர்தல் தத்துவ சுத்தி,
அப்பால் ஆன்மாவைப் பற்றி நூல்கள் கூறுவன யாவை என்று எண்ண வாய்ப்பு ஏற்படுகிறது. மன்னியதானே முதல் என நிற்றல் மாசு உயிர்க்குரு' எனும் தணிகைப் புராணக் கூற்றுப்படி தானே எல்லாம் என உயிர் நினைத்து நிற்றல் ஆன்ம ரூபம். பின் உயிர் தன்னைப் பற்றி நீள நினைத்து ஆராய்ந்து தனக்கு வேறாக இருந்து இறையருள் உணர்த்துகிறது எனத் தெரிதல் ஆன்ம தரிசனம் இறுதியாக ஆன்மா தன்னைப்பற்றித் தெளிந்த அறிவைப் பெறுகிறது. ‘என் செயலாவது யாதொன்றுமில்லை. எல்லாம் உன் செயலே என்னும் உணர்வில் அழுந்துதல் ஆன்ம சுத்தி
ஆன்மசுத்தியால் எல்லாம் இறைவனால் நிகழ்வன, தன்னால் ஒன்றும் இயலாது என்ற நிலை ஏற்பட்டபின் நான், எனது என்னும் செருக்குகள் கூடா என்னும் உண்மையைத் தெரிந்து உயிர் பக்குவமடைகிறது. அப்பால் இறைவனைப் பற்றிய நாட்டத்தை உயிர் மேற்கொள்கிறது. இறைவனைப் பற்றியும் அவன் பெருமை பற்றியும் கேட்டு அவனே முதல்வன் என்பதை உணர்கிறது. இது சிவரூபம். இவ்வாறு இறைவன் பற்றிய உண்மைகளைத் தெரிந்ததும் எல்லாம் அவனருளே கண்ணாகக் காணும் நிலை பெறுதலே சிவ தரிசனம். அந்நிலை பெற்றதும் இறையருள் கிட்டி உயிர் சீவபோதம் கெட்டுச் சிவபோதம் பெற்று அவனருளில் தோய்ந்திருத்தலே சிவயோகம்.

Page 38
இவ்வாறு இறையருளில் தோய்ந்த உயிர் பெறும் பலன் சிவானந்தமாகும். இதையே பேரானந்தப் பெருவாழ்வு என்று பல நூல்களும் கூறுகின்றன. இதனால், உயிர் இறைவனோடு ஒன்றுமாகாமல் வேறும் ஆகாமல் அவனுடன் பொருந்தியும் பொருந்தாமலும் இல்லாமல் ஞான மயமாய் சிவஞானத்துள் அழுந்திச் சிவத்தை உணரும் உண்மை ஞானம் கைவரப்பெற்றுப் பேரின்பத்தைத் துய்க்க மேற்கோள்ளும் படிமுறைகள் பத்து என்றும், அவையே தசகாரியம் என்றும் பெறப்படும். இரா. ச)
தசகாரியம் "
சைவ சித்தாந்தம் கூறும், தத்துவரூபம், தத்துவ தரிசனம், தத்துவ சுத்தி, ஆன்ம ரூபம், ஆன்மதரிசனம், ஆன்மகத்தி, சிவரூபம், சிவதரிசனம், சிவ யோகம், சிவபோகம் என்னும் பத்தினையும் பற்றித் தசகாரியம்' என்னும் பெயரிலேயே பிற்காலத்தில் சில நூல்கள் தோன்றின. சைவ சித்தாந்த சாத்திரச் செய்திகளைக் கூறும் அந்நூல்களில் சில, திருவாவடுதுறை ஆதீனத்து அறிஞர்கள் செய்த சைவ சித்தாந்த நூற்தொகுப்பாகிய பண்டார சாத்திரம்' எனப் பெயரிய பதினான்கு நூல் தொகுப்பில் இடம் பெற்றுள்ளன.
திருவாவடுதுறை ஆதீனத்தைச் சார்ந்த அம்பலவாண தேசிகர் ஒரு தசகாரியம் இயற்றியுள்ளார். அது, அவ்வாதீனத் தொகுப்பாகிய பண்டார சாத்திரம்' என்பதனுள் ஒரு நூலாகத் திகழ்கிறது. முற்கூறிய தத்துவரூபம் முதலிய பத்தினையும் இந் நூல் தெளிவாக விளக்குகிறது. கடவுள் வணக்கப் பாடலோடு 55 செய்யுள்கள் இதன்கண் உள. ஈசான தேசிகர் என்னும் சுவாமிநாத தேசிகர் என்பவரும் தட்சிணாமூர்த்தி தேசிகரும் தனித்தனி தசகாரியம் இயற்றியுள்ளனர் எனத் தெரிகிறது.
மேலும், கி.பி. 15ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவராகக் கருதப் பெறும் களந்தை ஞானப்பிரகாசரும் ஒரு தசகாரியம் இயற்றியுள்ளார். நூல் முழுதும் கிடைக்கவில்லையாயினும், கிடைத்த வரையிலான நூலிற்குப் பல பதிப்புகள் வெளிவந்துள்ளன. இந் நூல் பாயிரம், இலக்கணப் பகுதி, குருபூசை, ஞானதீக்கை ஆகிய பகுதிகளுக்குப் பின்னர்த் தத்துவரூபம் தொடங்கிப் பத்துச் செய்திகளையும் கூறுகிறது. ஞானப்பிரகாசரின் ஆசிரியர் சத்திய ஞானியாவார். இந் நூற் பாடல் சிலவற்றை வெள்ளியம்பலவாணர் தம் முத்தி நிச்சய உரையில் எடுத்துக் காட்டியுள்ளார். இச் செய்தியினைப் பேராசிரியர் மு. அருணாசலம் தம் இலக்கிய வரலாற்றிற் குறிப்பிட்டுள்ளார். (த. இ. வ. 15 நூ. ப. 167). மேலும் சிலர் இப்பெயரில் தனி நூல்கள் எழுதியுள்ளன ரென்பது தெரிகிறது.
தசகாரியச் செய்திகள், சிவஞான சித்தியார், சைவசித்தாந்தக் கட்டளை போன்ற சில சைவ சாத்திர நூல்களிலும், உரைகளிலும் பல்வேறு கோணங்களில் விளக்கப்பெற்றுள்ளன. வேதாந்தியாகக் கருதப்பெறும் சிவஞான வள்ளல், தாம் இயற்றிய பதி, பசு, பாச விளக்கம் என்னும் நூலில் மூன்று செய்யுள்களிலும், உபதேச மாலை என்னும் நூலின்
பத்துச் செய்யுள்களிலும் தசகாரியம் பற்றி விளக்கியுள்ளார்.
(gy, MOIT. LV.)
22

தசகுமார சரிதம்
இது தண்டி என்பவரால் எழுதப்பெற்ற ஒரு சமஸ்கிருத காவியமாகும். சமஸ்கிருத உரைநடை வேத, உபநிடதங்கள் காலத்தில் தான் முதன் முதலில் தோன்றியது. தண்டி, பாணர் ஆகியோர் கி. பி. 6, 7ஆம் நூற்றாண்டுகளில் இதே முறையைப் பின்பற்றி உரைநடையை எழுதினர். ஆனால் இவர்களுடைய முறை முந்தைய முறையை விடக் கடுமையானதாகும்.
தண்டி என்பவர் எழுதிய தசகுமாரசரிதம் பத்து இளவரசர்களின் கதைகளைக் கூறுகிறது. இக் கதைகள் உயிரோவியம் போலப் பாமர மக்களின் வாழ்க்கை நிகழ்ச்சிகளை எடுத்துக் காட்டுகின்றன.
இந்நூலில் பண்டைய சமுதாயத்தின் தாழ்ந்த நிலையும் இளவரசர்களின் வீரச் செயல்களும் இவர்களுக்கும் குடியானவர்களுக்குமிடையே இருந்த உறவும் விளக்கிக் காட்டப்படுகிறது. மலைவாழ் மக்களைப் பற்றியும், வணிகரைப் பற்றியும் இது தெளிவாகக் கூறுகிறது.
இந்திய சமுதாயம் கி. பி. 6 ஆம் நூற்றாண்டில் ஊழலுக்கு முதன்மையிடம் கொடுத்ததைப் பற்றியும் இந்நூல் கூறுகிறது. பத்து இளவரசர்களின் தலைவன் ஒரு அரசனாகவும், ஏனைய ஒன்பது இளவரசர்களும் தங்களது வீரச் செயல்களை ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொண்டும், போட்டி போட்டுக்கொண்டு சொல்லும் பாங்கு அழகாகவும், நகைச்சுவையுடனும் உள்ளது. இக் காவியம் மகாபாரதத்திற்கு ஒப்பாகக் கருதப்படுகிறது. வரலாற்றறிஞர்கள் பயன்படுத்தும் இலக்கியச் சான்றுகளுள் இதுவும் ஒன்று. (%. (,)
6561/6607
தசரதன் கோசல நாட்டை அயோத்தியிலிருந்து அரசாண்ட சூரியகுலத்துப் பேரரசன். அவன் அறிவு, அருள், அறம், சால்பு, வலிமை, கொடை, நீதி போன்ற அரசர்க்கமைவுடையன வெல்லாம் பெற்றவன். அரசர்கள் இயற்றும் யாகங்கள் எல்லாவற்றையும் செய்து முடித்தவன். உலகத்தவர்க்குத் தாய் போல் அன்பும், தவம் போல் பயனும், மகன் போல் இம்மை மறுமைப் பேறும், மருந்து போல் துன்ப நீக்கமும், உதவும் தன்மையும் பொருந்தியவனாய் வாழ்ந்தவன்.
தசரதன் வேட்டையாடக் காட்டுக்குச் சென்றபொழுது கண்ணற்ற வயோதிபத் தாய்தந்தையருக்குத் தண்ணிர் எடுப்பதற்காக ஆற்றில் இறங்கி நீர் எடுத்த சிரவண குமாரனை யானையென எண்ணி அம்பெய்தான். சிரவண குமாரன் மாண்டான். அதனால் புத்திர சோகத்தால் உயிர்விடும் சாபம் பெற்றான். மகப்பேறில்லாக் குறைக்கு வருந்தித் தன் குலகுரு வசிட்டரிடம் கூற அவரின் ஆலோசனையின் பேரில் மக வேள்வி செய்தான். அவ் வேள்வியிலே தோன்றிய பிண்டத்தை மனைவியர் மூவருக்கும் பகிர்ந்தளித்து இராமர், பரதன், இலக்குமணன், சத்துருக்கன் என்போரைப் புதல்வராகப் பெற்றான்.
இந்துக்கலைக்களஞ்சியம்

Page 39
மக்கள் நால்வரும் வளர்ந்து, தக்கபிராயத்திலே வசிட்ட முனிவரிடம் கல்வி கற்கத் தொடங்கியதோடு, வில்வித்தை, வாட் பயிற்சி, யானையேற்றம், குதிரையேற்றம் முதலியனவும் பயின்றார்கள். அந் நாளில் விசுவாமித்திர முனிவன் தன் வேள்வி காக்கும் பொருட்டு, இராமனைத் துணையாக அனுப்புமாறு தசரதனை வேண்டினார். முனிவனின் வேண்டுகோளை மறுக்கமுடியாமையால் தன்னுயிரிலும் மேலாக நேசித்த இராமனை முனிவருடன் அனுப்பிவைத்தான். மிதிலையில் இராமன் சிவதனுசை நாண் பூட்டி ஒடித்தான் என்று கேட்டு உவந்து சீதைக்கும், இராமனுக்கும் நிகழ்ந்த திருமணத்திற்குச் சென்று கண்டு களித்தான். பரசுராமன் இராமன் சிவதனுசை ஒடித்ததைக் காரணமாக்கித் தன் குலப் பகையைப் புதுப்பித்து இராமனைப் போருக்கழைத்தபோது நடுங்கிப் பரசுராமனை வழிபட்டான். பின் இராமன் பரசுராமனை வென்றான் என்பதனை அறிந்து மகிழ்ந்தான்.
இராமனுக்கு முடி புனையக் கருதி அமைச்சரவை கூட்டி அவையோர் கருத்தினை அவாவி, அவர்தம் உடன்பாடு கேட்டுப் பெற்று பின் பல தேசத்து அரசர் அவையைக் கூட்டி, அவர்தம் உடன்பாடு பெற்றும் இடர் ஒன்று கழிந்ததாகக் கருதி மகிழ்வு கொண்டு இராமனை அழைத்து தான் தரும் அரசியலைப் பெரும் பாரமாகக் கருதாது ஏற்றுக்கொள்ள வேண்டுமென்றும் இஃது இம்மை மறுமை பயக்கவல்ல உத்தமமான மகனைப் பெற்றதால் வரும் பயனென்றும், தான் பெற்ற மூப்பு காரணமாக தவம் என்னும் தன் கருமம் செயற்குப் போவதாகவும் கூறித், தன் அரசியலை இராமன் ஏற்றுக்கொள்வதாக கூறும் வகையில் செய்தவன். அவனே கூனியும் கைகேயியும் சூழ்ந்து, இராமன் காடேகவும், பரதன் நாடாளவும் வரம் கேட்டபொழுது துணுக்குற்றான், கைகேயி பெற்ற வரத்தால் இராமன் காடேகாது இருக்க அரும்பாடு பட்டான். பிடிவாதமாக இருந்த கைகேயியை திருத்தப் பெண்களுக்கான அறங்கள் பல கூறினான். அவள் கேளாத பொழுது அவளைக் கொல்லத் துணிந்து பெண்கொலை புரிவதற்கு அஞ்சி விடுத்தான். இராமன் காடேகா வகையில் வசிட்டன்வழி முனைந்தும் அது பயனளிக்காதபோது கைகேயியை மனைவி அல்லள் என்றும், பரதன் தனக்கு மகன் அல்லன், அவன் தனக்கு இறுதிக்கடன் ஆற்றவும் தகுதியற்றவன் என்றும் கூறியவன். கோசலையிடம், தான் பெற்றிருந்த சாப வரலாறு கூறித் தான் இறப்பது உறுதி எனக் கூறி உயிர் நீத்தான்.
இராவண வதை முடிந்தபின் சீதையை மீட்டு அவள் கற்பு நெறியை மெய்ப்பித்து காட்ட எரிபுகச் செய்தபொழுது சிவபிரான் துறக்கத்திலுள்ள தசரதனை அழைத்து இராமனைச் சீதையை ஏற்குமாறு செய்யச் சொல்லப் பூதலம் போந்தான். தசரதனை இராமர் வணங்க இராமனை மார்புறத் தழுவி அன்று கைகேயி கொண்ட வரமென்னும் வேல் நெஞ்சுறுத்தி நின்றது. இராமன் மார்பிலுள்ள காந்த மணியால் பறிப்புண்டதென்று கூறித் தன்னைத் தேவர்கள் தொழும் காட்சியை இராமனுக்கு காட்டி மகிழ்ந்தான். தன்னை வணங்கிய சீதையை நோக்கித் தன் மகன் எரிபுகச்
இந்துக்கலைக்களஞ்சியம்

சொன்னதை மனதுட் கொண்டு சினமடையாதிருக்க வேண்டினான்.
இலக்குவனைத் தன்னைத் தானே தழுவியது போல் கண்ணிர் ததும்ப தழுவி இந்திரசித்தனை வென்று அறம் நிறுத்தியதைக் கூறிப் பாராட்டினான். தசரதன் மகிழ்ச்சிப் பெருக்கில் இராமனை நோக்கி, இரு வரங்கள் கேட்கச் சொன்னபோது தசரதனால் மனைவி அல்லள் என்று அன்று புறக்கணிக்கப் பெற்றவள் தனக்கு மீண்டும் தாயாகுமாறும், மகன் அல்லன் என்று துறக்கப் பெற்ற பரதன் தம்பியாகுமாறும் வரம் கேட்க, கைகேயின் பால் தனக்கிருந்த சினம் நீங்கவில்லை எனக்கூறி வானகம்புக்கான். (தே. கு. ஹ.)
தசாவதாரங்கள்
இந்து சமயத்தில் அவதாரக் கோட்பாடு வைணவத்திற்குச் சிறப்பானதாகும். உலகிலே தர்மம் கெடுகின்ற காலங்களில் தர்மத்தை மீண்டும் நிலைநாட்டுவதற்கும், கொடியோரை ஒடுக்கி நல்லோரைப் பேணுவதற்கும் கடவுள் பூலோகத்திலே தோன்றுவாரென்று பகவத்கீதை சாற்றுகின்றது. வைணவத்தில் இறைவனை உலகியல் வாழ்க்கையோடு இணைக்கும் சாதனமாக அவதாரக் கோட்பாடு அமைந்துவிடுகின்றது. மனித உருவில் வந்து மக்கள் வாழ்க்கையிலே மனிதர்களின் இன்ப துன்பங்களில் இறைவன் பங்குகொள்கின்றான் என்ற மகத்தான சிந்தனை பண்டைக்கால இந்துக்களைப் பெரிதுங் கவர்ந்தது. பக்திமார்க்கம் மேலோங்குவதற்கும் வைணவம் கவர்ச்சிமிக்க சமயநெறியாக வளர்ச்சி பெற்று வேகமாகப் பரவுவதற்கும் அவதாரக்கோட்பாடு ஆதாரமாய் அமைந்தது.
திருமாலின் அவதாரங்கள் பத்து என்பது ஒரு மரபுவழியான கருத்தாகும். சில இடங்களில் பத்து அவதார புருஷர்களின் பெயராற் கோயிலமைத்து வழிபாடு செய்யும் வழக்கமிருந்தது. அத்தகைய ஆலயங்களைத் தசாவதாரக் கோயில் என்பர். வட இந்தியாவிலுள்ள தியோகார் என்னுமிடத்து வைணவக் கோயில் தசாவதார என்னும் பெயரால் வழங்கியது. தக்கிணத்திலே எல்லோராவில் அமைந்துள்ள பிரமாண்டமான குடபோகமொன்றைத் தசாவதாரக் கோயிலென்று குறிப்பிடுகின்றனர்.
திருமாலின் அவதாரங்களைப் பற்றிய கதைகள் மகாபுராணங்களில் மிகுதியாகக் காணப்படுகின்றன. ஆயினும், அவற்றிலே அவதாரபுருஷர்களின் பெயர்கள் வெவ்வேறு விதமாகக் கூறப்படுகின்றன. நாராயணர், நரசிம்மர், வாமனர், தத்தாதிரேயர், மாந்தாதாதர், ஜமதக்னி, இராமர், வேத விநாயகர், கிருஷ்ணர், கல்கி என்னும் பதின்மரின் பெயர்கள் வாயுபுராணத்தில் உள்ளன. மத்ஸ்யபுராணம் கிருஷ்ணருக்குப் பதிலாகப் புத்தரைக் குறிப்பிடுகின்றது. மச்சம், கூர்மம், வராகம், நரசிம்மம், வாமனம், பரசுராமர், தசரதராமர், பலராமர், கல்கி என்னும் அவதாரங்களைப் பற்றி மகாபாரதத்திலே கூறப்படுகின்றது.
23

Page 40
மகாபாரதங் குறிப்பிடும் அவதார புருஷர்களின் பெயர்கள் மாமல்லபுரத்து ஆதிவராகர் கோயிற் சாசனத்திலும் சொல்லப்படுகின்றன. அச்சாசனக் குறிப்பு மேல்வருமாறுள்ளது:
'மத்ஸ்ய கூர்ம வராஹஸ்ய (ச) நரசிம்மஞ்ச வாமனாமோ ராமஸ்ய (ஸ்ச) ராமஸ்ய (ஸ்ச) புத்த கல்கி சதே தஸா'
மகாபாரதமும் குப்தர் காலத்து வடஇந்திய வைணவ நூல்களும் புத்தரை அவதாரபுருஷர்களில் ஒருவராகக் கொண்டுள்ளபோதும் தென்னிந்தியாவில் ஆழ்வார்கள் அந்தக் கருத்தை ஒப்புக்கொண்டதாகத் தெரியவில்லை. பொய்கையாழ்வார், பேயாழ்வார், பூதத்தாழ்வார் ஆகிய மூவரும் கூர்ம, வராக, நரசிம்ம, வாமன, பலராம, கிருஷ்ண அவதாரங்களையே தங்கள் பாசுரங்களிற் போற்றுகின்றனர். திருமங்கையாழ்வார் பலராமனுக்குப் பதிலாக கம்ச அவதாரத்தைக் குறிப்பிடுகின்றார்.
1. மச்சாவதாரம்
பேரூழிக் காலத்திலே திருமால் பெருமீனாக உருவெடுத்துப் பேராழியில் மிதந்து உயிர்களுக்குப் புகலிடமளித்து அவற்றை அழிவிலிருந்து காப்பாற்றியமை பற்றியதே மச்சாவதாரம் பற்றிய புராணக்கதை. சதபத பிராமணத்திலுள்ள கதையொன்று இதற்கு மூலமாய் அமைந்தது போலத் தெரிகின்றது. கொம்புடைய மீனொன்று மனுவையும், வேதங்களையும் காப்பாற்றியதென்று சதபத பிராமணங் கூறும். ஹயக்கிரீவன் என்னும் அசுரன் வேதங்களைக் கவர்ந்து கொண்டு கடலுக்குள் மறைந்துவிட்டான். அந்தச் சமயத்தில் மகாவிஷ்ணு மீனாக அவதரித்துக் கடலினுட் புகுந்து, ஹயக்கிரீவனைத் தேடிப்பிடித்து, அவனை வதைத்து, வேதங்களை மீட்டார்.
ஊழிக்காலத்திலே பிரளயம் ஏற்பட்டபொழுது, மகாவிஷ்ணு பெருமீனமாகிக் கடலிலே தோன்றி மன்னுயிர்களைக் காப்பாற்றினார் என்பது புராணக்கதை. இக்கதை வேறு வடிவத்திலே சில புராணங்களில் வருகின்றது. சத்தியவிரதன் என்னும் அரசன் கிரிதமலை என்னும் ஆற்றங்கரையிலே தன் முன்னோர்களுக்கான பிதிர்கடன்களைச் செய்யும்பொழுது அவனது கையிலே சிறிய மீனொன்று அகப்பட்டது. தனக்கு அபயமளிக்குமாறு வேண்டியதால் அந்த மீனை அரசன் பாத்திரமொன்றில் இட்டான். அது மிக வேகமாக வளர்ந்தபடியால் அதனைக் கடலில் விட நேர்ந்தது. பிரளயமொன்று ஏற்படப்போவதாக அந்த மீன் அரசனுக்கு அறிவுறுத்தியது. விதை தானியங்களோடும், சப்தரிஷிகளோடும் உடனடியாகவே கப்பலொன்றில் ஏறிவிடுமாறு அது அரசனிடங் கூறியது. உடனே அரசன் அவ்வாறு செய்தான். திருமாலின் அவதாரமாகிய மச்சமே கப்பல் வடிவு கொண்டு சத்தியவிரதனைக் காப்பாற்றியது. மத்ஸ்யபுராணம் சத்திய விரதனுக்குப் பதிலாக மனுவைக் குறிப்பிடுகின்றது. பிரஜாபதியே மச்சாவதாரமானார் என்பது மகாபாரதக் கதை.
24

மச்சாவதாரத்தின் உருவகமான சிற்பங்கள் கோயில்களின் தூண்களிலும், விமானத்திலும், கோபுரங்களிலும் அமைக்கப்படும். அவற்றிலே சில மீனுக்குரிய உடலையும் மனிதருக்குரிய தலையினையுங் கொண்டிருக்கும். வேறு சிலவற்றிலே மீனுருவத் தலையும், மானிடக்கோலமான உடலமைப்பும் பொருந்தியிருக்கும்.
2. கூர்மவதாரம்
"பருவரை ஒன்று நின்று முதுகில்
பரந்து குழக் கிடந்து துயிலும் அருவரை அன்ன தன்மை அடலாமை
ஆன திருமால் நமக்கோர் அரனே.
- திருமங்கையாழ்வார் இந்தப் பாசுரம் கூர்மவதாரம் பற்றிய புராணக்கதையைக் குறிப்பிடுகின்றது. அது வேறொரு புராணக்கதையினையும் நினைவுபடுத்துகின்றது. திருமால் பாற்கடலில் அநந்த சயனத்திலே அமைந்துள்ளார் என்பது ஒரு பெளராணிகமான கோட்பாடு. நீரின்றமையாதுலகு என்பது வள்ளுவர் வாய்மொழி. பிரபஞ்சத்திலே நீரின்றி ஜீவராசிகளுக்கு வாழ்வில்லை. நீராழி உலகிற்கு மூலகாரணன் நாராயணன். நாயகனாகிய நாராயணன் அதனை நிலைப்படுத்துவதால் நீராழி உலகம் நிலைபெறுகின்றது. ஜீவராசிகளுக்கு ஆதாரமான நீராழி பிரளயத்திலே பெருவெள்ளமாகிவிடுவதால் அதுவே அழிவுக்குங் காரணமாகிவிடுகின்றது. அந்தச் சமயத்திலும் நாராயணன் மன்னுயிர்களின் காவலனாகிவிடுகின்றான். அத்தகைய திருமால்
s
தேவாசுரர்கள் அமிர்தம் பெறுவதற்கென்று பாற்கடலைக் கடைந்தபொழுது மேருமலை மத்தாகியது. பெருமலையின் சுழற்சியால் பூலோகம் நிலைகுலையாதிருக்கும் வண்ணமாகத் திருமால் ஆமை வடிவாகி அம்மலையினைத் தாங்கி உலகினைக் காப்பாற்றினார். அத்தகைய அளப்பருங் கருணைக் கடலாகிய நாராயணனே உயிர்களின் பற்றுக்கோடாவான் என்பது ஆழ்வாரின் அருள்வாக்கு.
கூர்மாவதாரம் பற்றிய கதை புராணங்களில் மேல்வருமாறு கூறப்படுகின்றது. தேவர்களும், அசுரர்களும் நெடுங்காலமாகப் போர் புரிந்தனர். தங்கள் தவவலிமையாலும் கடவுளிடமிருந்து பெற்றிருந்த வரங்களின் காரணமாகவும் அசுரர்கள் பேராற்றல் பெற்றிருந்தனர். தம்மில் இறந்தோரையும் மீண்டும் உயிர்பெறச் செய்யும் ஆற்றலினையுங் கொண்டிருந்தனர். அதனால் அவர்களைத் தேவர்களால் வெற்றிகொள்ள முடியவில்லை. ஆற்றாமையினால் விஷ்ணுவைத் தேவர்கள் நாடித் தாங்கள் வெற்றி பெறுவதற்கு வழிவகை செய்யுமாறு வேண்டினர். சாவாமருந்தான அமிர்தத்தை உண்டு மீண்டும் வலிபெறவேண்டுமென்று பெருமாள் தேவர்களுக்கு அறிவுரை செய்தார். அதனால் அமரர்கள் திருப்பாற்கடலைக் கடைய முற்பட்டனர். அதற்கென அசுரருடன் ஒர் உடன்படிக்கை செய்தனர். மந்தர மலையை மத்தாகக் கொண்டு பாற்கடலைக் கடைந்தனர். வாசுகி என்னும் பாம்பை நாணாகக் கொண்டு தேவர்களும் அசுரர்களும் ஒவ்வொரு பக்கமாக நின்று இழுத்தனர். அச்சமயத்திலே, மத்தாகக் கொள்ளப்பட்ட
இந்துக்கலைக்களஞ்சியம்

Page 41
மந்தரமலை கடலில் மூழ்கத் தொடங்கியது. உடனே மகாவிஷ்ணு ஆமை வடிவமாகி அதனைத் தன் முதுகிலே தாங்கிக்கொண்டார். நீராழி உலகம் நிலைபெறுவதற்கு நாராயணனே ஆதாரமானவர் என்ற கருத்தினை இக்கதை விளக்குவதாய் அமைகின்றது.
கூர்மாவதாரத்தின் அம்சங்களை உருவகப்படுத்தும் சிற்பங்கள் சில புராதனமான கோயில்களிற் காணப்படுகின்றன. ஆமையின் தலையோடு கூடிய மானிட உடலமைப்புக் கொண்ட வடிவத்திலும் மணிதத்தலை பொருந்திய ஆமையின் கோலத்திலும் கூர்மவதார புருஷரைச் சிற்பங்களில் வடித்துள்ளனர். தெலுங்கு தேசத்தில் பூரீகாகுளம் மாவட்டத்து பூரீகூர்மம் என்னும் ஊரிலே பூரீகூர்மமூர்த்தியை மூலவராகக் கொண்டுள்ள தலத்திலே வழிபாடு நடைபெறுகின்றது. கூர்ம வடிவிலுள்ள மூர்த்தியை மூலவராகக் கொண்ட கோயிலொன்றைப் பற்றி மத்தியப் பிரதேசத்துச் சாகர் மாவட்டத்திற் கிடைத்துள்ள கல்வெட்டொன்றிலே கூறப்படுகின்றது. அக்கல்வெட்டு ஐந்தாம் நூற்றாண்டின் இறுதிப் பகுதிக்குரியதாகும். தமிழகத்திலே காஞ்சிபுரம் கச்சப்யகேசுவரர் கோயிலிலும் திருக்கச்சூர் ஆலக்கோயிலிலும் சிவனை வழிபடும் கோலத்திற் கூர்மவதார சிற்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அரியலூர் குடுமியான் மலை, தாடிக்கொம்பு என்னுமிடங்களிலும் திருவெள்ளறை புண்டரீகாக்ஷ பெருமாள் கோயிலிலும் கூர்மவதார வடிவங்கள் சிற்பங்களாக அமைந்துள்ளன.
3. வராக அவதாரம்
வராகாவதாரம் பற்றிய கதையின் மூலங்களை வேதங்களிற் காணமுடிகின்றது. சதபத பிராமணத்திற் பிரஜாபதியின் சீடனாகிய எமூசன் என்ற பன்றி பூமியை வெளிக்கொணர்ந்தமை பற்றிக் கூறுகின்றது. காலப்போக்கில் இக்கதை வைணவத் தொடர்புடையதாகிப் பின்பு இதிகாச புராணங்களில் வராக அவதாரம் பற்றிய பெருங்கதையாகி விட்டது. அதிலே, அக்கிரமங்களைச் சகித்துக்கொள்ள முடியாத காலத்திற் பூலோகமானது நிலைகுலைந்து மறைந்துபோகும் நிலை ஏற்பட்ட காலத்திலே திருமால் வராகத்தின் வடிவில் அவதாரமாகி மீண்டும் அதனை நிலைபெறச் செய்தமை வர்ணிக்கப்படுகின்றது.
வராக அவதாரம் பற்றி எல்லாப் புராணங்களிலுங் கூறப்படுகின்றது. ஹிரண்யகசிபு, அரக்கியான திதி என்போரின் மகன் ஹரண்யாக்ஷன். அவன் பெற்ற வரங்களின் பயனாக அடங்காத பலத்துடன் விளங்கினான். அதனால் அவன் பல கொடுமைகளைப் புரிந்தான். பிரம்மனாற் படைக்கப்படும் எந்த மிருகத்தினாலும் மானிடராலும் தனக்கு மரணம் வரக்கூடாதென்று வரம் பெற்றிருந்தான். மிருகங்களின் பெயர்களைச் சொல்லி வரங்கேட்டபொழுது அவன் பன்றியினைக் குறிப்பிடத் தவறிவிட்டான்.
ஹிரண்யாக்ஷனது கொடுமைகளைப் பொறுக்க முடியாது பூமி நீரில் மூழ்கியது. பூமியைப் பாதுகாத்தற் பொருட்டு மகாவிஷ்ணு வராகமாகிக் கடலிற் புகுந்து பூமியை மீட்டார்.
இந்துக்கலைக்களஞ்சியம்

அத்துடன் ஹிரண்யாக்ஷனையும் வதை செய்தார். ஆழ்வார் பாசுரங்களில் வராகாவதாரச் சிறப்புப் போற்றப்படுகின்றது. அதனைப் பற்றிப் பொய்கையாழ்வார் மேல்வருமாறுபாடுகின்றார்:
“பிரான் உன் பெருமை பிறர் ஆர் அறிவார் உராஅய் உலகளந்த ஞான்று - வராகத்து எயிற்றளவு போதாவாறு என்கொலோ எந்தை அடிக்களவு போந்தபடி’
வராகர் சிற்பங்கள் இந்தியாவின் பல பகுதிகளிற் காணப்படுகின்றன. அவற்றுட் குஷாணர் காலத்தவை மிகவும் புராதனமானவை. அவை மதுராவிற் கிடைத்துள்ளன. மத்தியப் பிரதேசத்தில், உதயகிரியிலுள்ள வராகர் வடிவம் சிறப்பு மிக்கது. அதில், பூமியை வலது கொம்பிலே தாங்கிய வண்ணம் வராகர் கடலிலிருந்து உதயமாகும் காட்சி வனப்பு மிகுந்த கோலத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. சிற்பத்திலே பூமியைக் கன்னியின் உருவமாக அமைத்துள்ளனர். மிகவும் நுட்பமான முறையிற் கடல் அலைவரிசைகளாற் சித்திரிக்கப்பட்டுள்ளது. வராகத்தின் பக்கத்திலே தேவர்கள், நாகதேவதைகள் என்போரின் வடிவங்கள் காணப்படுகின்றன. பூமியைத் தாங்கிய கோலத்தில் அமைந்திருக்கும் வராகரின் வடிவத்தைப் பூவராகர் என்று சொல்வது வழமை. குப்தர் காலத்துப் பூவராகரின் பெரிய சிற்பமொன்று ஏரான் என்னுமிடத்தில் உள்ளது. அது ஸ்தானகக் கோலமானது. பூமாதேவியைக் கொம்பிலே தாங்கிய நிலையிலும், இடக்கரம் தொங்குகரமாக அமைந்த நிலையிலும் பூவராகரின் உருவம் வடிவமைக்கப்பட்டுள்ளது. சாளுக்கியர் காலத்து வாதாபிக் குடபோகத்திலும் மாமல்லபுரத்து வராக மண்டபங்களிலும் அமைந்துள்ள பூவராகர் வடிவங்கள் வனப்பு மிக்கவை.
தமிழகத்துக் கோயில்கள் பலவற்றிலே ஆதிவராகரின் சிற்பங்கள் காணப்படுகின்றன. திருப்பரங்குன்றத்திலே, மகாவிஷ்ணுவின் கருவறைச் சுவரிலே பூவாகரின் உருவம் காணப்படுகின்றது. சோழர் காலத்தின் முற்பகுதிக்குரிய கோயில்கள் சிலவற்றின் சுவர்களின் வெளிப்புறத்திற் பூவராகர் வடிவங்கள் காணப்படுகின்றன. திருவிடந்தையிலும் பூரீமூவ்டிணத்திலும் பூவராகருக்குத் தனிக்கோயில்கள் உள்ளன. திருநெல்வேலி மாவட்டத்திலே கல்லிடைக்குறிச்சி என்னுமூரில் இலட்சுமி வராகப்பெருமாள் கோயில் என்னும் பெயரால் வழங்கும் ஆலயமொன்று உள்ளது.
பிரபலமான அரசகுலங்கள் சில பூவராகரைத் தமது குலதெய்வமாகக் கொண்டன. அரச முத்திரைகளிலும், நாணயங்களிலும் பூவராகரின் உருவம் பொறிக்கப்பட்டது. சாளுக்கிய மன்னர்கள் தங்கள் ஆதிக்கத்தின் சின்னமாக வராகலாஞ்சனத்தைப் பெற்றமை பற்றிய பெளராணிகமான கதைகள் அவர்கள் வழங்கிய பட்டயங்களிற் காணப்படுகின்றன. வாதாபிச் சாளுக்கியரைப் போல கல்யாணிச் சாளுக்கியரும் வேங்கிச் சாளுக்கியரும் வராகத்தின் வடிவத்தைத் தங்கள்
25

Page 42
இலச்சினையாகக் கொண்டிருந்தனர். ஆந்திரப் பிரதேசத்துக் காகதிய மன்னர்களும் கொண்ட வீடு என்னுமிடத்து ரெட்டிகளும் வராகத்தின் உருவத்தை அரச சின்னமாகக் கொண்டனர். அவர்களின் முத்திரைகளிலும், கொடிகளிலும் வராக இலச்சினை வடிவமைக்கப் பெற்றது. விஜயநகர ராயர்களும் வராகத்தை அரச சின்னமாகக் கொண்டனர். அவர்கள் வழங்கிய நாணயங்களிலும் வராகத்தின் உருவம் அமைக்கப்பட்டது. அதனால் அவற்றை வராகன் என்று சொல்வது வழமை. இலங்கையின் வடபகுதியிலும் வராகன் நெடுங்காலம் புழக்கத்தில் இருந்தது. அங்கு விலையாவணங்கள் 19ஆம் நூற்றாண்டின் முற்பகுதிவரை வராகனைப் பெறுமதிக்குரிய நாணயமாகக் குறிப்பிட்டன.
4. நரசிம்ம அவதாரம்
நரசிம்ம அவதாரக் கதை இரணிய சங்காரம் பற்றியது. அதன் அம்சங்கள் வராக அவதாரக் கதையோடு தொடர்பானவை. இரணியன் என்னும் ஹிரண்யகசிபு வராக அவதாரம் பற்றிய கதையில் வரும் ஹிரண்யாக்ஷன் என்னும் பெருவலி படைத்த அசுரனின் தமையன் என்று சொல்லப்படுகின்றது. இருவரைப் பற்றிய கதைகளும் ஒரே பாங்கில் அமைந்தவை.
இரணிய சங்காரம் பற்றிய கதை முதன் முதலாக மகாபாரதத்தில் வருகின்றது. ஆயினும், பிரகலாதன் பற்றி, மகாபாரதம் எதனையுஞ் சொல்லவில்லை. விஷ்ணு புராணம், பாகவத புராணம் என்பவற்றிலே பிரகலாதனைப் பற்றிய கதை இடம்பெறுகின்றது. தமிழிலக்கியப் பரப்பிலே மிகப் பழமையான குறிப்பு பரிபாடலிற் காணப்படுகின்றது. ஆழ்வார் பாசுரங்களில் இரணியசங்காரம் பற்றிய விவரங்கள் சொல்லப்படுகின்றன. கம்பராமாயணத்தில் இரணியன் வதைப் படலம் என்றொரு தனிப்பிரிவு உண்டு.
நரசிம்ம அவதாரத்தில் ஏற்பட்ட இரணிய சங்காரம் பற்றிய கதையின் சாரம் மேல்வருமாறுள்ளது. அவன் பிரம்மாவிடமிருந்து ஐந்து வரங்களைப் பெற்றான். அவையாவன: 1) பிரம்ம தேவனாற் படைக்கப்பட்ட எந்த உயிரினத்தாலும் தான்
கொல்லப்படக் கூடாது. 2) வீட்டிலோ, மாளிகையிலோ அவற்றுக்கு வெளியிலோ
கொல்லப்படக் கூடாது. 3) இரவிலோ, பகலிலோ கொல்லப்படக் கூடாது. 4) பூமியிலோ, தேவலோகத்திலோ உள்ள எந்த
ஆயுதத்தினாலுங் கொல்லப்படக்கூடாது. 5) மனிதராலோ, மிருகங்களாலோ, தேவர்களாலோ
கொல்லப்படக் கூடாது. இவ்வரங்களின் மூலம் பெருவலி பெற்ற இரணியன் இறுமாப்பெய்தி, தர்மங்கள் யாவற்றையுந் துறந்தவனாகி, அளவிலாத ஆணவங்கொண்டு மன்னுயிர்களைக் கொடுமைப்படுத்தினான். வராக அவதாரமாகித் தனது தமையனை வதைத்த நாராயணனைப் பூவுலகில் எவரும் போற்றிப் பரவக்கூடாதென்று ஆணையிட்டான். ஆயினும் இரணியனது மகனாகிய பிரகலாதன் நாராயணனின் மீது
26

பக்திமிக்கவனாக விளங்கினான். தந்தையின் கட்டளையினை அனுசரிக்கத் தனயன் மறுத்துவிட்டான். அழிவுகாலம் வருமுன்னே புத்தி விபரீதமாகிவிடும் என்ற முதுமொழிக்கமைய இரணியன் ஆவேசமுற்றான். பெறற்கரிய திருப்புதல்வனை அழிக்க முடிவு செய்தான். நாராயணன் தூணிலும் இருப்பான், துரும்பிலும் இருப்பான் என்று பிரகலாதன் பகர்ந்த பொழுது இரணியன் அரண்மனைக்கு முன்பாக அமைந்திருந்த தூணைப் பலமாக உதைத்தான். அச்சமயத்திலே அதிசயமாக மகாவிஷ்ணு நரசிம்ம வடிவிலே தூணிலிருந்து வெளிப்பட்டு இரணியனை வதம் செய்தார். பகலவன் மறைந்து இருள் சூழாத வேளையிலும், அரண்மனைக்கும் வெளிப்புறத்திற்கும் இடையிலான வாயிற்படியிலும் பூமியோ வானுலகோ இல்லாது நரசிம்மர் மடியிலும் எந்த ஆயுதங்களாலும் இல்லாது நரசிங்கரது நகங்களாலும் இரணிய சங்காரம் நிகழ்ந்தது.
யோக நரசிம்மராகவும் இரணியனோடு மோதும் கோலத்திலும், நரசிம்மரின் சிற்பங்களை வடிப்பது வழக்கம். மிகப் புராதனமான நரசிம்மர் வடிவங்கள் குப்தர் காலத்திற்குரியவை. அத்தகைய சிற்பங்கள் ஏரானிலும் தியோகாரிலுள்ள தசாவதாரக் கோயிலிலுங் கிடைத்துள்ளன. தசவதாரக் கோயிற் சிற்பம் ஆசனக் கோலத்திற் பத்மாசனத்தின் மேல் அமைந்திருக்கின்றது. சங்கு, சக்கரம், கதை என்னும் படைக்கலங்கள் கைகளிற் காணப்படுகின்றன. நரசிம்மரின் உருவம் முகம் சிங்கமும், உடல் மனிதவடிவிலும் அமைக்கப்பட்டுள்ளது.
தக்கிணத்திலே சாளுக்கியரின் வாதாபிக் குடபோகம் ஒன்றில் நரசிம்மரின் உருவமொன்று அமைக்கப்பட்டுள்ளது. எல்லோராவிலுள்ள சிற்பமொன்றிலே இரணியனைத் தாக்கி, அவனை இறுகப் பிடித்திருக்கும் நரசிம்மரின் வடிவம் தெரிகின்றது. வலக்கரம் ஒன்று அவனை அடிப்பதற்கென உயர்த்திய கோலத்தில் அமைந்துள்ளது. இதனைப் போன்ற சிற்பம் திண்டுக்கல் மாவட்டத்துத் தாடிக்கொம்பு என்னுமிடத்திற் காணப்படுகின்றது.
ஆந்திரப்பிரதேசத்திற் கொண்டமேடு என்னுமிடத்திலுள்ள நரசிம்மரின் சிற்பங்கள் வேறுவிதமானவை. அவற்றிலே சிங்க வடிவத்தில் நரசிம்மரின் உருவம் அமைக்கப்பட்டுள்ளது. சிம்மக் கடவுளின் மார்பிலே பூரீவத்சம் தெரிகின்றது. அந்த உருவத்திலே, கழுத்தின் கீழே இரண்டு கைகள் அமைந்துள்ளன; அவை திருமாலின் சின்னங்களான சக்கரம், கதை என்பவற்றைப் பிடித்த வண்ணமாய் உள்ளன. சிம்மப் பெருமானின் வலப்பக்கத்திலே விஷ்ணுவும், பிரத்யும்னனும் உள்ளனர்; இடப்பக்கத்திலே கிருஷ்ணர், சங்கர்சணர், அனிருத்தர் ஆகியோரின் உருவங்கள் தெரிகின்றன.
நரசிம்மர் வழிபாடு முற்காலங்களில் இந்தியாவின் பல பகுதிகளிலே நிலவியது. பஞ்சாப்பின் மத்திய பகுதிகளில் வாழ்ந்த வைணவர் நரசிம்மரை வழிபட்டனர். இந்நாட்களிலும் அந்த முறை பின்பற்றப்படுகின்றது. ஞாயிற்றுக்கிழமைகளில் ஆண்களும், பெண்களும் நரசிம்மரை வழிபடுகின்றனர்.
இந்துக்கலைக்களஞ்சியம்

Page 43
நரசிம்மர் வழிபாடு ஆந்திரப்பிரதேசத்தில் மிகுந்த சிறப்பினைப் பெற்றுள்ளது. அங்கு 169 நரசிம்மர் கோயில்கள் உள்ளன. ஆதிகாலத்தில் ஆந்திர தேசத்தின் ஒரு பகுதியில் ஆட்சிபுரிந்த விஷ்ணு குந்திவம்ச மன்னர்கள் நரசிம்மரைக் காவல்தெய்வமாகப் போற்றினார்கள். வாரங்கல், அகோபிலம், சிம்மாசலம் ஆகியவிடங்களிலுள்ள நரசிம்மர் கோயில்கள் மிகவும் பிரசித்தமானவை.
தமிழகத்திலே நரசிம்மரின் வடிவங்கள் அதிகம் உள்ளன. அவை வெவ்வேறு காலங்களைச் சேர்ந்தவை; வெவ்வேறு வகையானவை. அவற்றுள் மிகவும் புராதனமானவை பல்லவர் காலத்தவை. மகேந்திரவாடி, ஆனைமலை, நாமக்கல், மாமண்டூர் போன்ற இடங்களிலுள்ள குடபோகங்களில் நரசிம்மர் விக்கிரகம் மூலமூர்த்தியாக அமைந்துள்ளது. திருப்பரங்குன்றத்திலே நரசிம்மர் வடிவம் பக்கச்சுவர் ஒன்றிலே காணப்படுகின்றது. திருவெள்ளறையிலுள்ள நரசிம்மரின் சிற்பம் உட்குடிகாசனக் கோலமானது. நாமக்கல்லில் நரசிம்மரின் போர்க்கோலந் தெரிகின்றது. அங்குள்ள வேறொரு சிற்பத்திலே இரணிய சங்காரத்தின் பின்பு, சாந்தமாகி நரசிம்மர் யோகாசனக் கோலத்தில் அமர்ந்துள்ள காட்சி வனப்புடன் விளங்குகிறது. பாண்டியர் காலத்து மலைதளியான வெட்டுவான் கோயிலில் நரசிம்மரின் வடிவம் சுகாசனக் கோலத்தில் அமைந்துள்ளது. அது வேலைப்பாட்டில் வாதாபிக் குடபோகத்திலுள்ள வடிவத்தை ஒத்திருக்கின்றது.
சோழர்களதும் பிற்காலப் பாண்டியர்களதும் காலத்துக் கோயில்களில் விமான கிரீவத்தின் மேற்குப்புறக் கோட்டங்களில் யோகநரசிம்மர் உருவம் அமைக்கப்பட்டுள்ளது. விஜயநகர, நாயக்கர் காலங்களிற் சில சமயங்களிற் கதைத் தொடர்பினைக் குறிக்கும் வகையில் நரசிம்மரின் உருவங்கள் வடிவமைக்கப்பட்டன. உதாரணமாக மதுரைக் கள்ளழகர் கோயிற் கல்யாண மண்டபத்துச் சிற்பங்களைக் குறிப்பிடலாம். அங்குள்ள முதலாவது தூணில் நரசிம்மர் இரணியனோடு மோதுகின்ற காட்சி தெரிகின்றது. இரண்டாவது தூணிலே இரணியனுடைய குடலை மாலையாக அணிந்துள்ள கோலம் வடிக்கப் பெற்றுள்ளது. இச்சிற்பங்கள் ஆளுயரங் கொண்டவை. காஞ்சிபுரம் வரதராசப் பெருமாள் கோயிலிலும் இவற்றைப் போன்ற சிற்பங்கள் காணப்படுகின்றன.
தென்னாற்காடு மாவட்டத்து முன்னூரிலுள்ளதும் பல்லவர் காலத்துக்குரியதுமான சிற்பமொன்றில் நரசிம்மரின் வடிவம் சுகாசனக் கோலத்தில் அமைந்திருக்கின்றது. நரசிம்மரின் பக்கத்திலே சிவலிங்கமும் பிரமன், பார்வதி, குமாரக் கடவுள் ஆகியோரின் உருவங்களுந் தெரிகின்றன. ஸ்தானகக் கோலமான நரசிம்மரின் வடிவமொன்று காஞ்சிபுரம் வைகுந்தப் பெருமாள் கோயிலிற் காணப்படுகின்றது.
5. வாமன அவதாரம்
இருக்கு வேதத்திலுள்ள மகாவிஷ்ணுவின் சர்வ வியாபகத்தன்மை பற்றிய கருத்து வாமன அவதாரம் தொடர்பான
இந்துக்கலைக்களஞ்சியம்

புராணக் கதைகளுக்கு ஆதாரமாகியது. விஷ்ணு மூவடிகளால் உலகனைத்தையும் அளந்தமை பற்றி வேதப்பாடல் குறிப்பிடுகின்றது. வாமணரைப் பற்றிய குறிப்பு முதன்முதலாகச் சதபத பிராமணத்தில் வருகின்றது. சர்வலோக ஆதிபத்தியம் தொடர்பாக அசுரரும் தேவரும் தகராறு கொண்டனர். தேவர்கள் அளந்துகொள்ளக்கூடிய பிரபஞ்சத்தின் பகுதியை அவர்களிடம் ஒப்படைப்பதற்கு அசுரர் உடன்பட்டனர். வாமனக் கோலமாகி வந்த மகாவிஷ்ணு ஒரடியிலே பிரபஞ்சத்தை அளந்து கொண்டார். இக்கதை புராணங்களிலே பெருங்கதையாகிவிட்டது. இராமாயணத்தில் அசுரர் பற்றிய குறிப்பில்லை; அது அவர்களுக்குப் பதிலாக மாவலியைக் குறிப்பிடுகின்றது.
அக்கினி புராணம், மத்ஸ்ய புராணம், பாகவத புராணம், விஷ்ணுதர்மோத்தரம் முதலானவற்றிலே வாமன அவதாரம் பற்றிய கதை ஒரளவு விரிவாகக் கூறப்படுகின்றது. பிரகலாதனின் பேரனான மாவலிச்சக்கரவர்த்தி பேராற்றல் கொண்டவனாக விளங்கினான். அவன் பூலோகத்தையும், வானுலகத்தையும் கைப்பற்றிவிட்டான். அவனது வலி கண்டு தேவர்கள் அச்சமுற்றனர். மாவலி பெருவள்ளலாகவும் விளங்கினான். அவனை வதம் செய்யுமாறு தேவர்கள் திருமாலை வேண்டினர். எனவே, வாமனக் கோலத்தில் அவதாரஞ் செய்வதற்கும், முன்பு தான் காசிய முனிவரின் பிள்ளையாகப் பிறப்பதென்று சொல்லியருளிய வரத்தினை நிறைவேற்றுதற் பொருட்டும் விஷ்ணு பூவுலகில் அவதாரஞ் செய்வதற்கு நாட்டங் கொண்டார். அதற்கமைய முனிவரின் மனைவியின் வயிற்றிலே கருவாகிப் பிள்ளையாகப் பிறந்து வாமனராக விளங்கினார்.
வாமனக் கோலம் கொண்ட பெருமாள் ஒரு சமயத்திலே மாவலியிடம் சென்று தானம் கேட்டார். மூன்றடி மண் தருமாறு கேட்டார். மாவலியின் இராசகுருவான சுக்கிராச்சாரியார் இறைவரே மறுவடிவு கொண்டு வந்திருப்பதாகவும் கேட்ட வரத்தைக் கொடுக்கலாகாது என்றும் அறிவுரை பகன்றார். ஆயினும், மாவலி வாமனர் கேட்டதை வழங்கினான். உடனே வாமனர் மகாவிஷ்ணுவாகக் காட்சியளித்தார். அவர் அளப்பரிய வடிவமானார்; விக்கிரமனாகிய அவரின் உருவம் உலகெலாம் வியாயகமாகி, நீக்கமற நிறைந்திருந்தது. சக்கரம், சாரங்கம் என்ற பெயருடைய வில், கதை, வாள் என்னும் படைக்கலங்களைத் தாங்கிய கோலத்துடன் திருவிக்கிரமர் காட்சியளித்தார். அவரின் ஊன்றிய பாதம் பூலோகத்தினை நிறைத்தது; தூக்கிய பாதம் விண்ணுலகில் வியாபித்தது. மாவலி அஞ்சி, அடங்கி வழிபட்டான். மூன்றாவது அடியைத் தன் தலைமேல் வைக்குமாறு வேண்டினான். மாவலி சிரஞ்சீவிகளில் ஒருவராகப் பதம் பெற்றான். முன்னொரு காலத்தில் மாவலிச் சக்கரவர்த்தி ԼՈ60)6Սկ IIT 6IT தேசத்தை ஆட்சிபுரிந்தானென்று மலையாளத்தவரிடையே நம்பிக்கை யுண்டு. திருமாலின் திருநசுஷத்திரமான திருவோணத்தில் ஆண்டொன்றுக்கு ஒருமுறை மாவலி மலையாள தேசத்திற்கு வருகிறான் என்ற நம்பிக்கையுண்டு. எனவே, அவனை வரவேற்கும் பாவனையில் வீட்டு முற்றங்களிற் கோலம் போட்டு அலங்களிப்பது அங்குள்ள வழமை.
27

Page 44
வாமன அவதாரம் பற்றிய கதையின் காரணமாக உலகளந்த பெருமாள் என்னுஞ் சிறப்புப் பெயர் மகாவிஷ்ணுவின் பெயர்களில் ஒன்றாகியது. உலகளந்த பெருமாளின் சிறப்பை ஆழ்வார்கள் எல்லோரும் போற்றிப் பாடியுள்ளனர். திரிவிக்கிரமரின் சிற்பங்கள் கோயில்கள் பலவற்றில் அமைக்கப்பட்டிருந்தன. அவை இந்தியாவின் பல பாகங்களிலுங் காணப்பட்டன. குப்தப் பேரசர், வாதாபிச் சாளுக்கியர் ஆகியோரின் காலத்துச்சிற்பங்கள் அவற்றுள் மிகவும் புராதனமானவை. மதுராவிலுள்ள குப்தர்காலச் சிற்பமொன்றிலே திரிவிக்கிரமரின் உருவத்தில் நான்கு கைகள் அமைந்திருக்கின்றன. முன்புறத்திலே மாவலிச்சக்கரவர்த்தி குடத்திலிருந்து நீரை வார்க்குங் கோலந் தெரிகின்றது. அண்மைக்காலத்திலே திரிவிக்கிரமரின் சிலையொன்று நைனிதாலிற் கிடைத்துள்ளது. அதை உருவாக்கிய கலைஞனின் பெயர் குப்தர் காலத்துக்குரிய வரிவடிவங்களில் எழுதப்பட்டுள்ளது. திரிவிக்கிரமரின் உருவம் அமைந்துள்ள வாதாபியிற் காணப்படும் மூன்றாம் குடபோகம் கி.பி.578 ஆம் ஆண்டளவில் உருவாக்கப்பட்டது. இராசபுதனத்துச் சிதோர் என்னுமிடத்தில் அமைக்கப்பட்ட கோயிலொன்றிலே கோட்டச் சிற்பமாகத் திரிவிக்கிரமரின் வடிவம் வைக்கப்பட்டுள்ளது.
ஆலம்பூரிலுள்ள திரிவிக்கிரமர் வடிவம் தனிச்சிறப்புடையது. ஆலம்பூர்க் கோயில்கள் வாதாபிச் சாளுக்கியர் காலத்தவை. அங்குள்ள சுவர்க்க பிரம்மா கோயிலின் முகப்பு ஜன்னலில் திரிவிக்கிரமரின் வடிவம் அமைந்துள்ளது. அதில் மகாவிஷ்ணுவின் வடிவம் பிரதானமானது. அதன் கரங்களில் அம்பு, வில், கத்தி, கதை, கேடயம் ஆகியன அமைந்துள்ளன. கரங்களில் ஒன்று திரிவிக்கிரமரின் தூக்கிய காலின் துடைமேற் படிந்துள்ளது. அருகிலே, கலசத்தை ஏந்திய கோலத்தில் மாவலியின் வடிவந் தெரிகின்றது. சுக்கிராசாரியார் முதலாயினோர் பக்கத்தில் உள்ளனர். எல்லோராவிலுள்ள தசாவதாரக் குடபோகத்திலும் திரிவிக்கிரமரின் சிற்பங் காணப்படுகின்றது. பால மன்னர்களின் காலத்தில் உருவாக்கப்பெற்ற திரிவிக்கிரமரின் வடிவங்கள் பல வங்காளத்திலே கிடைத்துள்ளன. வட இந்தியாவிற் காணப்படும் திரிவிக்கிரமரின் சிற்பங்கள் பெரும்பாலும் அக்கினிபுராணத்தில் வரும் சிற்பசாஸ்திர விதிகளுக்கமைய உருவாக்கப்பட்டுள்ளன.
தமிழகத்திலே மிகப் பழமையான திரிவிக்கிரமர் வடிவங்கள் மாமல்லபுரத்து வராகர் குடைவரைகளிலும் நாமக்கல்லிலுள்ள இரண்டு குடைவரைகளிலுங் காணப்படுகின்றன. வராக மண்டபத்திலுள்ள வடிவம் எட்டுக் கரங்கள் பொருந்தியது; அவற்றிலே சங்கு, சக்கரம், கதை, வில், வாள், கேடயம் முதலிய படைக்கலங்கள் அமைந்துள்ளன. திரிவிக்கிரமரின் வலப் பக்கத்திலே சிவபெருமானின் உருவம் அமைந்திருக்கின்றது; அவரின் கரமொன்று விஸ்மய முத்திரையில் உருவாக்கப் பட்டுள்ளது. சூரியன், சந்திரன், பலி, சாம்பவான் முதலியோரின் உருவங்களும் சிற்பத்திலே தெரிகின்றது. காஞ்சிபுர்ம் கைலாசநாதர் கோயிலிலுள்ள திரிவிக்கிரமரின் வடிவம்
28

சுதைப்பூச்சினால் மறைக்கப்பட்டுள்ளது. வாமன அவதாரக் கதை வைகுந்தப் பெருமாள் கோயிலில் இரண்டு சிற்பத் தொகுதிகளில் உருவகமாகியுள்ளது. அவற்றிலொன்றிலே விஷ்ணுவின் வாமனக் கோலம் குடையினை ஏந்திய கோலத்திற் காணப்படுகின்றது. பெருவடிவங் கொண்ட மாவலி கம்பீரமாக நின்று நீர் வார்க்கும் கோலம் அமைந்திருக்கின்றது. அருகிலே சுக்கிராசாரியாரின் உருவந் தெரிகின்றது. மற்றச் சிற்பத்திலே திரிவிக்கிரமர் பிரமாண்டமான வடிவங் கொண்டுள்ளார். அருகில் நிற்பவர்கள் வாமனக் கோலமாகிவிடுகின்றனர். திரிவிக்கிரமரின் உயர்த்திய பாதத்திற்கு அருகிலே நின்று வழிபடும் கோலத்திற் பிரம்மாவின் உருவந் தெரிகின்றது.
நாமக்கல் நரசிம்மர் குகையிலே, திரிவிக்கிரமர் சிற்பத் தொகுதியின் குதிரை முகம் தெரிகின்றது. அரங்கநாதர் குடைவரையிலுள்ள திரிவிக்கிரமர் வடிவம் வாதாபியிலுள்ளதைப் போன்றதாகும். திருவெள்ளறைப் புண்டரீகாக்ஷப் பெருமாள் கோயிலிலுள்ள உருவம் சோழர் காலத்துக் கண்ட சிற்பங்களைப் போன்றது. கோயம்புத்தூருக்கு அண்மையிலுள்ள சிங்க நல்லூரிற் காணப்படும் விஷ்ணு ஆலயத்திற் பல்லவர் காலத்துக்குரிய திரிவிக்கிரமரின் செப்புப் படிமமொன்று காணப்படுகின்றது.
காஞ்சியிலுள்ள உலகளந்த பெருமாள் கோயிலைப் பற்றிப் பொய்கை ஆழ்வார், பேயாழ்வார், பூதத்தாழ்வார் ஆகியோர் பாடியுள்ளனர். திருவரங்கத்திலே 19ஆம் நூற்றாண்டு வரை தேவதான நிலங்களின் எல்லைக் கற்களில் வாமனரின் உருவம் குடை, கமண்டலம் என்பவற்றோடு பொறிக்கப்பட்டுள்ளமை கவனித்தற்குரியது.
6. பரசுராமர் அவதாரம்
திருமாலின் அவதாரங்களில் ஆறாவது பரசுராமர் அவதாரம். மழு (கோடாரி) ஆயுதங்தாங்கியவர் என்பதனால் அவர் பரசுராமர் என்னும் பெயருடன் விளங்கினார். பிருகு வம்சத்திலே தோன்றியதால் அவரை பார்கவராமர் என்று குறிப்பிட்டனர். பரசுராமரைப் பற்றிய கதைகள் புராணங்களிலன்றி இராமாயணம், மகாபாரதம் ஆகியவற்றிலேயே கூடுதலாகக் காணப்படுகின்றன. பரசுராமர் ஜமதக்கினி, இரேணுகாதேவி என்போரின் புதல்வர். பரசுராமரின் தந்தையான ஜமதக்கினி முனிவரைக் கார்த்தவீர்யஅர்ச்சுனனின் புதல்வர்கள் கொன்று விட்டனர். மீளாத்துயரில் இரேணுகாதேவி புலம்பினாள். தாயின் துயர்கண்டு பொறுக்கமுடியாதவராய், ஆவேசமுற்ற பரசுராமர் கூடித்திரிய குலங்களை அழிப்பதென்று சபதஞ் செய்தார். இருபத்தொரு தலைமுறைகளாக அவர் கூடித்திரியர்களை வதை செய்தார் என்பது புராணக்கதை.
தசரதராமனின் பெருமை கண்டு பரசுராமர் அடங்கிவிட்டார். மிதிலையிலே சுயம்வரம் முடிந்து, சீதாராமர் திருக்கலியாணம் நிறைவேறிய பின் இராமரைக் கண்ட சமயத்திலே பரசுராமர் ஆவேசமடைந்து, தனது வில்லினை முடியுமானால் வளைக்குமாறு இராமருக்குச் சவால்விட்டார். இராமர் அந்த
இந்துக்கலைக்களஞ்சியம்

Page 45
வில்லை இலகுவாக வளைத்து அதிலே அம்பினைத் தொடுத்ததும் பரசுராமரின் கர்வம் மறைந்தது.
அகநானூற்றுப் பாடலொன்றிலே அரசகுலத்தவரைப் பரசுராமர் அழித்தவர் என்று குறிப்பிடப்படுகின்றது. மாமல்லபுரத்து ஆதிவராகர் குடபோகத்திலுள்ள சாசனமொன்று பரசுராமர் அவதாரம் பற்றிக் குறிப்பிடுகின்றது. பெரிய திருமொழியிற் காணப்படும் மேல்வரும் பாடலிற் பரசுராமரைப் பற்றிச் சொல்லப்படுகின்றது.
"முனியாய் வந்து மூவெழுகால்
முடிசேர் மன்னர் உடல் துணியத்
தனிவாய் மழுவின் படை ஆண்ட தாரார் தோழான்.”
இராசேந்திர சோழனுடைய மெய்க்கீர்த்தியில் பரசுராமரைப் பற்றிய கதை குறிப்பிடப்படுகின்றது. பெருங்கோபமுற்று இருபத்தொரு தடவையாக அரசுகளைப் பரசுராமர் அழித்தமையும், அத்தகைய பரசுராமர் சாந்திமத்தீவிலே பொன்முடியினைப் பாதுகாப்பாக வைத்தமையும் அதனையும் சோழர் கைப்பற்றிக் கொண்ட சிறப்பினையும் மேல்வருமாறு அது வர்ணிக்கின்றது:
"செருவிற் சினவி இருபத்தொருகால் அரசுகளை கட்ட பரசுராமன் மேவருஞ் சாந்திமத் தீவரன் கருதி இருத்திய செம்பொற் றிருத்தகு முடியும் மாப்பெருந்தண்டாற் கொண்ட கோப்பரகேசரி வன்மரான உடையார் பூரீராசேந்திர சோழதேவர். 岁岁
பரசுராம விண்ணகரம் என்னும் கோயிலைப் பற்றி இரண்டாம் ஆதித்தனின் காலத்துச் சாசனம் ஒன்றிலே சொல்லப்படுகின்றது. சோழர் காலத்துக் கோயில்களிற் சிலவற்றிலே பரசுராமரின் உருவம் கோட்டச் சிற்பமாக அமைந்திருந்தது. தஞ்சாவூர் மாவட்டத்துத் திருக்கண்ண மங்கையிலுள்ள கோயிலொன்றின் வெளிப்புறச்சுவரில் அமைந்த கோட்டத்திற் பரசுராமரின் உருவம் காணப்படுகின்றது. மழு, வில் என்பவற்றை ஏந்திய கோலத்தில் அவரின் உருவம் அமைந்துள்ளது. திருச்சி மாவட்டத்து அரியலூர் கோதண்ட ராமசாமி ஆலயத்திற் பரசுராமரின் படிமம் நான்கு கரங்களுடன் வடிவமைக்கப் பட்டுள்ளது. மேலிரு கரங்களிலும் சங்கு, சக்கரம் ஆகியன காணப்படுகின்றன.
மலையாள தேசம் பரசுராமரால் உருவாக்கப் பட்டதென்ற ஐதீகம் கேரளத்திலே பரவலாகக் காணப்படுகின்றது. அதனைப் பற்றிய கதை முதலாம் இராசேந்திர சோழனுடைய திருவாலங்காட்டுச் செப்பேட்டு வாசகத்திலுங் காணப் படுகின்றது. பரசுராமர், ஜமதக்கினி, இரேணுகாதேவி ஆகியோரை வழிபடும் வழக்கம் கர்நாடக தேசத்தின் சில பகுதிகளிலே காணப்படுகின்றது. தமிழகத்திலே திருச்சி, மதுரை மாவட்டங்களில் இரேணுகாதேவியை எல்லம்மா என்னும் பெயரால் வழிபடுகின்றனர். ஜமதக்கினி வழிபாடு
இந்துக்கலைக்களஞ்சியம்

கர்நாடகத்திலும், கொங்கணத்திலும் பிராமணரல்லாதோரிடையே காணப்படுகின்றது. ஆந்திரப் பிரதேசத்திலும் சில இடங்களிற் பரசுராமர் இரேணுகாதேவி என்போரை வழிபடும் வழக்கமுண்டு.
7. இராம அவதாரம்
இராம காதை மிகவும் தொன்மையானது. அதன் சாராம்சங்கள் வெவ்வேறு வடிவங்களில் வைதீக, பெளத்த, சமண இலக்கியங்களிற் காணப்படுகின்றன. புராதனமான கதையொன்றை பெருங்காப்பியமாக உருவாக்கிய சிறப்பு “ஆதிகவி’ என்று பாராட்டப்படும் வான்மீகியாருக்கு உரியதாகும். அவரின் ஆதிகாவியம் தொடர் கதையாக விரிந்தவொன்று; அது இணையிலாத சொல்லோவியம்; இலக்கிய ரசனை மிகுந்தது; இணையிலாச் சுவை நயம் பயப்பது.
ஆதிகாவியத்திலே கதாநாயகனாகவரும் இராமன் புருஷோத்தமன். அழகிலே காமனுக்கு நிகரானவன்; ஆண்மையில் உதாரண புருஷன்; கருணையில் போதிசத்துவருக்கு நிகரானவன்; தியாக சிந்தனையிற் சிபிச் சக்கரவர்த்திக்குச் சமமானவன். அரசன் என்ற வகையில் மனுநெறிக்கு இலக்கணம் வகுத்தவன். இராமனது கோதண்டம் பூதலத்திலுள்ள இணையிலாத படைக்கலம். வான்மீகியாரின் இராம காதை, இராமன் கடமை என்பதை அறமாகக் கொண்டதால் மிகப் பெரிதாக விரிந்த கதை. புருஷோத்தமனாகிய இராமனை அறம் வளர்த்த நம்பியென்று ராஜாஜி வர்ணித்துள்ளமை சாலவும் பொருத்தமானது. புராதன காலத்து இந்து சமுதாயத்தின் பண்பாட்டுக் கோலங்களை இணையிலாத ரசனையோடும் கவர்ச்சிமிக்க பாங்கிலும் உணர்த்தும் உன்னதமான இலக்கியம் ஆதிகாவியம்.
வான்மீகம் பண்பாட்டுக் கருவூலமாகிவிட்டது. அதனை அரண்மனைகளிலும் வித்யாபீடங்களிலும் விரும்பிக் கற்றனர். கவிஞரிடையிலும் சிந்தனையாளரிடையிலும் அதனால் ஏற்பட்ட செல்வாக்கு அதீதமானது. தசரதராமனை தங்கள் உதாரண புருஷனாக அரசகுலத்தவர் கொண்டனர். கவிஞரின் மத்தியில் அவன் தர்மப்பிரவர்த்தகனாகி விட்டான். இலக்கிய மரபுவழியாகப் பரவிய இராமரின் சிறப்பு தர்மாசோகனின் வரலாற்றுப் பெருமைகளையும் மறைத்து விட்டது. இராமனை அறத்தின் காவலனாகக் கொண்ட பாமரரும் அமைதி கொண்டனர்.
வான்மீகியாருக்குப் பின்பு சில நூற்றாண்டுகள் கழிந்ததும் இராமனைப் பூலோகத்திலே தோன்றிய கடவுளின் வடிவமாக ஒப்புக்கொள்ளும் மனப்பான்மை ஏற்பட்டுவிட்டது. இராமரை அவதார புருஷர்களில் ஒருவராகக் கொள்ளும் மரபு தோன்றியது. இராம அவதாரம் பற்றிய முதன் முதலான குறிப்பு நாராயணியம் என்னும் நூலிற் காணப்படுகின்றது. அது கி.பி. மூன்றாம், நான்காம் நூற்றாண்டுகளை அடக்கிய காலத்தின் ஒரு கட்டத்தில் எழுதப்பட்டது. மகாகவி காளிதாஸர் இராமரை மகாவிஷ்ணுவின் அவதாரமானவர் என்று இரகுவம்சத்திலே போற்றுகின்றார். அவதார புருஷரான இராமரைப் படிமக் கோலத்தில் உருவாக்கும் வழக்கம் குப்தப்பேரரசர் காலத்தில்
29

Page 46
ஏற்பட்டது. தியோகாரிலுள்ள தசாவதாரக் கோயிலில் அவ்வடிவம் அமைந்துள்ளது. இராம அவதாரம் முதலான தசாவதாரங்களை மாமல்லபுரத்து ஆதிவராகர் குடபோகத்திலுள்ள சாசனமொன்று குறிப்பிடுகின்றது. வாதாபிச்சாளுக்கியர் இராஷ்டிரகூடர் ஆகியோரின் காலத்துப் பட்டதகல், எல்லோரா என்னும் ஊர்களிலுள்ள கோயில்களில் இராம அவதாரம் தொடர்பான சிற்பங்கள் பல காணப்படுகின்றன. தமிழ் நாட்டில் இராமரைப் படிமக் கோலத்தில் அமைக்கும் வழக்கம் சோழப்பெருமன்னரின் காலத்தில் ஆரம்பமாகியது. பராந்தக சோழன் காலம் (907-955) முதலாக இராமர் கோயில்களைப் பற்றிய சாசனக் குறிப்புகள் காணப்படுகின்றன. மதுராந்தகத்திலிருந்த கோதண்டராமர் கோயிலைப்பற்றி அவனது ஏழாவது வருடத்துக் கல்வெட்டுக் குறிப்பிடுகின்றது. இராகவதேவருக்குத் தானம் வழங்கியமை அவனுடைய காலத்துச் சாசனம் ஒன்றினால் அறியப்படுகின்றது. சங்கிராமராகவன் என்பது பராந்தகனின் விருதுப் பெயர்களில் ஒன்றாகும்.
திருநெல்வேலி மாவட்டத்து விசய நாராயணத்தில் உள்ள இராசகோபாலசாமி கோயிற் சாசனமொன்று மூன்று சன்னதிகளைக் குறிப்பிடுகின்றது. அவற்றிலொன்று இராகவச்சக்கரவர்த்திகள் சன்னதியாகும். இச்சாசனம் 12ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்திலே, பூரீவல்லவ பாண்டியனின் ஆட்சியில் எழுதப்பட்டது. தசரதராம விண்ணகரம் பற்றித் திருநெல்வேலி மாவட்டத்து அத்தாள நல்லூரில் உள்ள பாண்டியர் காலத்துக் கோயிலான கஜேந்திரவாதப் பெருமாள் ஆலயத்துக் கல்வெட்டுக்கள் குறிப்பிடுகின்றன.
இராம காதை தமிழகத்திலே, சோழர்காலத்திற் பெருஞ்செல்வாக்குப் பெற்றிருந்ததால் இராமாயணக் கதையின் அம்சங்கள் கோயில்களிற் சிற்பங்களாக உருவாக்கப்பட்டன. அவை பெரும்பாலும் அதிஷ்டானத்தின் கண்டப்பகுதியில் அமைந்துள்ளன. கும்பகோணம் நாகேசுவரசுவாமி கோயில், கண்டியூர் வீரட்டானேஸ்வரம், புஞ்சை நல்துணை ஈஸ்வரம், புள்ளமங்கை பிரம்ம புரீஸ்வரம், திருக்கோடிகாவல் திருக்கோட்டீஸ்வரம், குத்தாலம் சோழீஸ்வரம், காமரசவல்லி கார்கோடகேஸ்வரம் என்பன அக்கோயில்களாகும். அவற்றுட் பல சைவாலயங்கள் என்பது கவனித்தற்குரியது.
சீதா-இராம-லக்ஷ்மணரின் சோழர் காலத்து உலோகப் படிமங்கள் வனப்பு மிக்கவை. பராந்தக சோழனின் காலத்திற் பருத்தியூரில் வார்க்கப்பட்ட இராமர், லக்ஷமணர், சீதை, அனுமன் ஆகியோரின் செப்புத் திருமேனிகள் கிடைத்துள்ளன. பத்தாம் நூற்றாண்டில்உற்பத்தியான இத்தகைய படிமங்கள் இராமேஸ்வரத்திலும் உள்ளன. திருக்கடையூர் பெருமாள் கோயிலில் இராமர், லக்ஷ்மணர், சீதை ஆகியோரின் படிமங்கள் காணப்படுகின்றன. தஞ்சை மாவட்டத்துச் திருச்சேறையிலும் இராமர் முதலியோரின் சிற்பங்கள் காணப்படுகின்றன.
விஜய நகர - நாயக்கர் காலத்து இராமர், லக்ஷ்மணர் காலத்துக் கற்சிற்பங்கள் பல தலங்களிற் காணப்படுகின்றன.
3ó

பூரீவைகுண்டம் ஆலயத்தில் இராமர், சீதை, இலக்குமணன், அனுமன், சுக்கிரீவன், அங்கதன் ஆகியோரின் ஆளுயரச் சிற்பங்கள் உள்ளன. பூரீவில்லிபுத்தூர், நாங்குனேரி, ஆழ்வார் திருநகரி, தாடிக்கொம்பு, மன்னார்கோயில், திருமோகூர், மதுரை கூடல் அழகர் கோயில் முதலியவற்றிலே இராமர் வழிபாடு தொடர்பான சிற்பங்கள் பல உள்ளன. இக்காலத்தில் இராமர் பட்டாபிஷேகம் சுவரோவியமாகப் பல தலங்களிலே வரையப்பட்டது.
8. பலராமர் அவதாரம்
கிருஷ்ணரின் மூத்த சகோதரரான பலராமரையும் அவதார புருஷராகக் கொள்வது வழமை. பல சாசனங்களும் நூல்களும் பலராமர், கிருஷ்ணர் ஆகிய இருவரையும் கூட்டாகவே குறிப்பிடுகின்றன. பலராமரை பெருவீரனாகக் கொண்டனர். கி.பி.150 ஆண்டுக்குரிய நாஸிக் சாசனம் சாதவாகனரின் பெருமன்னனாகிய கெளதமீ புத்திர சாதகர்ணியை வீரத்திலே பலராமர், கேசவர் ஆகியோருக்கு நிகரானவன் என்று புகழ்ந்துரைகின்றது.
பழந் தமிழ் நூல்கள் பல பலராமரைக் குறிப்பிடுகின்றன. பாண்டிய மன்னனொருவனை சிவன், பலராமன், கிருஷ்ணன் ஆகியோருடன் ஒப்பிடுகின்றார் நக்கீரர். பனைக்கொடியுடைய பலதேவரின் வழிபாடு பற்றித் தொல்காப்பியம் குறிப்பிடுகின்றது.
'பால்நிற உருவின் பனைக்கொடியோனும் நீலநிற உருவின் நேமியோனும்'
என்று பலராமர், கிருஷ்ணர் ஆகிய இருவரையும் புறநானூறு குறிப்பிடுகின்றது. நற்றிணை என்ற நூல் அவ்விருவரின் வேறுபட்ட வண்ணங்களைக் குறிப்பிடுகின்றது. சங்கர்சணன், பிரத்யும்னன், அனிருத்தன் ஆகியோரைப் பற்றிய குறிப்பு பரிபாடலிற் காணப்படுகின்றது. அழகர் மலையில் அவர்கள் இருவரும் பள்ளிகொண்டுள்ளமை பற்றியும் அந்நூல் கூறும். புகார் நகரிலிருந்த பலராமன் கோயில், திருமால் கோயில் என்பனவற்றைச் சிலப்பதிகாரம் மேல்வருமாறு குறிப்பிடுகின்றது.
"வால் வளர்மேனி வாலியோன் கோயிலும் நீலமேனி நெடியோன் கோயிலும்"
ஆழ்வார்களின் பாடல்களிற் பலராமரைப் பற்றிய குறிப்புகள் அரிதாகவே காணப்படுகின்றன. பலராமர் விஷ்ணுவின் எட்டாவது அவதாரமானவர் என்று திருமங்கை ஆழ்வார் குறிப்பிடுகின்றார்.
பலராமருக்குக் கோயில்கள் அமைப்பதும் அவரின் உருவத்தைச் சிற்பங்களில் வடிப்பதும் புராதன காலத்து வழமை. சங்கர்சணரின் மிகப் பழைய சிற்பம் மதுராவுக்கு அண்மையிலே கிடைத்துள்ளது. அவ்வுருவத்தின் கையிலே கலப்பையும் தலைக்குமேல் நாகபடம் போன்ற குடையுங் காணப்படுகின்றன. வடஇந்தியாவில் மது என்னுமிடத்திலே குப்தர்காலத்துக்
இந்துக்கலைக்களஞ்சியம்

Page 47
குரியனவான பலராமரின் வடிவங்கள் காணப்பட்டன. சிற்ப சாஸ்திர நூல்களில் வியூக, விபவ (அவதாரம்) என்னுமிரு வகையான பலராமரின் வடிவங்கள் பற்றிய விவரங்கள் காணப்படுகின்றன. மாமல்லபுரத்துக் கோவர்த்தன மண்டபத்துச் சிற்பங்களில் கிருஷ்ணர், நப்பின்னை என்போரின் உருவங்களோடு பலதேவரின் கோலமும் வடிவமைக்கப்பட்டுள்ளது. திருநாரையூரிலே யெளவனக் கோலமான விருஷ்ணி குலத்தவரின் உருவங்களோடு பலராமரின் கோலமுந் தெரிகின்றது. மதுரை மாவட்டத்திலே, தாடிக்கொம்பு என்னுந் தலத்திலே ஆளுயரமான பலராமரின் சிற்பம் உள்ளது. ஒரு கையில் கலப்பையும், மற்றக் கையில் வில்லும் ஏந்திய கோலத்தில் அவர் காட்சியளிக்கின்றார். திருச்சிராப்பள்ளி மாவட்டத்து அரியலூரில் அமைந்துள்ள பலராமரின் வடிவம் நான்கு கரங்கள் பொருந்தியது. மேலிரு கரங்களும் சங்கு, சக்கரம் என்பவற்றை ஏந்திய கோலமானவை; கீழிரு கரங்களும் கலப்பை, கதை என்பவற்றைத் தாங்கிய வண்ணமாய் அமைந்துள்ளன. பூரீரங்கத்திலே குதிரைக் களரியிற் பலராமர் அடங்கிய தசாவதாரச் சிற்பங்கள் உள்ளன.
பலராமர் கோயிலைப் பற்றிய ஆதியான குறிப்பு பதஞ்சலி எழுதிய மகாபாஷ்யத்திலே வருகின்றது. கி.மு. முதலாம் நூற்றாண்டைச் சேர்ந்த சங்கர்சணர் ஆலயங்களை 6u குவாலியர் பிரதேசத்தில் இருந்தனவென்று சிலர் கருதுவர். பகவான் பலபுத்திரசாமி கோயில் பற்றி அஸ்ஸாமிலே கெளஹதியிலுள்ள ஐந்தாம் நூற்றாண்டுக் கல்வெட்டொன்றிலே குறிப்புண்டு. தமிழகத்திலே பலராமருக்கென்று அமைக்கப்பட்ட கோயில்கள் ஏழாம் நூற்றாண்டுக்கு முற்பட்டவை.
9. கிருஷ்ண அவதாரம்
'சேயன் அணியன் சிறியன் மிகப் பெரியன் ஆயன் துவரைக் கோனாய் நின்ற-மாயன் அன்று ஒதிய வாக்கதனை கல்லார் உலகத்தில் ஏதிலராம் மெய்ஞானம் இல்'- திருமழிசையாழ்வார்.
கிருஷ்ணன் பாலகன்; அவன் அணுவிலும் நுண்ணியவன்; அவன் மிகப் பெரியவன்; ஆயர் குலத்தவன்; துவாரகையில் அரசு புரிந்தவன்; அவன் மாயோனாகிய நெடுமால், அவன் திருவாய் மலர்ந்தருளிய கீதை மெய்ஞானத்தின் கருவூலம். கிருஷ்ண அவதாரத்தின் சிறப்புகள் பற்றி வழங்கும் கதைகளின் பிரதான அம்சங்களைத் தெளிவுபடுத்தும் சிறப்புடையது திருமழிசையாழ்வாரின் பாடல். அது ஒரு அளப்பரிய பெருங்கதையின் அம்சங்களை மிகச் சுருக்கமாகச் சொல்கின்றது.
கிருஷ்ணரைப் பற்றிய கதைகள் அளவிலாதவை. அவை புராணங்கள் பலவற்றிலே விரிவாகச் சொல்லப்படுகின்றன. பிரம்ம புராணம், மத்ஸ்ய புராணம், அக்னி புராணம், விஷ்ணு புராணம், பாகவத புராணம் என்பனவற்றில் அவை காணப்படுகின்றன. கிருஷ்ணர் ஆயர்பாடியில் வாழ்ந்த காலத்திலே, பாலமைப் பருவத்தில், பராக்கிரமச் செயல்கள் புரிந்து,
இந்துக்கலைக்களஞ்சியம்

அற்புதங்கள் பல நிகழும்படி செய்து, அவதார புருஷரின் மகிமையினை உலகுக்கு உணர்த்திய சிறப்பினை விளக்கும் கதைகள் பல அவற்றிலே காணப்படுகின்றன. மகா பாரதக் கதையிலே பிரதானமான கதாபாத்திரம் கிருஷ்ண பகவான். தர்மக்ஷேத்திரமாகிய குருக்ஷேத்திரத்தில் நடைபெற்ற போரை முடித்து தர்மத்தை நிலைநாட்டிய பெருமை கிருஷ்ணரைச் சார்ந்தது. மகாரதர்களான வீஷ்மரும், துரோணரும், கர்ணனும் போரிலே மடிந்து, தர்மராசன் தலைமையிலான பாண்டவர் தங்கள் தாய்வழி உரிமையான இராச்சியத்தைப் பெறுவதற்குக் கிருஷ்ணரே துணைபுரிந்தார். வில்லுக்கு விசயன் எனப் போற்றப்படும் அர்ச்சுனன் காண்டீபத்தின் மூலமாக எய்த கணைகள் செஞ்சோற்றுக் கடன் கழிப்பதற்கென களம் வந்த துரோணர் முதலான குரவரின் உயிர்களை மாய்த்தன. இராச தர்மங்களை உதாசீனஞ் செய்து வஞ்சனை புரிந்த துரியோதனாதியோர் மடிந்தனர். பாஞ்சாலியின் சபதம் நிறைவேறியது. இராச சபையில் அவளுக்கு அவமானம் நிகழ்ந்த பொழுது வீஷ்மர், துரோணர் முதலானோர் மெளனமாய் இருந்தனர். தர்மோபதேசஞ் செய்பவர்கள் மெளனமாகிவிட்டனர். அறம் கூற்றாகிய பொழுது தர்மதேவதை அவர்களையும் பலிகொண்டது. கிருஷ்ணர் மகாபாரதப் போரில் அர்ச்சுனனின் தேர்ச்சாரதியாக நின்று அவனைக் காவல் புரிந்தார். அதனால் பார்த்தசாரதி என்றும் அவரைக் குறிப்பிடுவது வழக்கம்.
பிரஸ்தான திரயங்களில் ஒன்றாகிய பகவத்கீதை கிருஷ்ணரின் உபதேசமாகும். அதன் ஆசிரியர் என்ற வகையில் ஞானிகளில் முதன்மையானவர் என்ற சிறப்பு அவருக்குரியது. அவரின் சிறப்பு வேதகால ரிஷிகளின் சிறப்பினைக் காட்டிலும் மேன்மையானது. வேதங்களின் ஞானகாண்டப் பகுதியின் சாராம்சங்களை ஆதாரமாகக் கொண்ட சமயஞானத்தை பகவத்கீதை விளக்குகின்றது. அத்துடன் அது இந்துசமய வரலாற்றிலே புதிய சிந்தனைகளையும், மரபுகளையும் உருவாக்கி விடுகின்றது. அன்புநெறியான பக்தி நெறியின் சிறப்பினை அது வலியுறுத்துகின்றது. இந்துசமய மரபிலுள்ள வெவ்வேறான சமயநெறிகளிடையே சமரசம் காண்பதற்கான கோட்பாடுகளுக்கு அது களம் அமைத்துவிடுகின்றது. கிருஷ்ணரைப் பற்றிய கதைகள் 5LD 600T, பெளத்த இலக்கியங்களிலுங் காணப்படுகின்றன. தன்னை அழிப்பதற்கென்று பல உபாயங்களை வகுத்த தாய்மாமனாகிய கம்சனைக் கிருஷ்ணர் வதஞ் செய்தமை பற்றிய கதைகள் அவற்றிலே காணப்படுகின்றன. சமணக் கோயில்கள் சிலவற்றிலே கிருஷ்ணருக்குத் தனிக்கோட்டம் அமைத்தனர். தமிழகத்துக் கோயில்களில் அதனை வாசுதேவனார் கோட்டம் என்றனர். பெளத்த கவிஞரான அஸ்வகோஷர் செளந்தராநந்த என்னும் காவியத்திற் கிருஷ்ணர் புரிந்த வீரச்செயல்கள் பற்றிக் குறிப்பிடுகின்றார். குப்தர் காலத்துச் சாசனங்களில், கிருஷ்ணரைப் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன. மிகப் புராதனமான தமிழ் நூல்களிற் கிருஷ்ணரைப் பற்றிய கதைகள் சுருக்கமாகக் கூறப்படுகின்றன. ஆயர்பாடியிலே கிருஷ்ணர் புரிந்த அற்புதச் செயல்கள் பலவற்றை ஆழ்வார்கள் போற்றிப்
31

Page 48
பாடியுள்ளனர். ஒரு சமயத்திலே சண்ட மாருதம் சுழித்தடித்தார்த்த வேளையில் ஆயர்பாடியில் ஆயர்கள் செய்வதறியாது திகிலடைந்தனர். உடனே கிருஷ்ணர் கோவர்த்தன மலையினை உயர்த்தி ஆயர்களுக்கும், ஆனிரைகளுக்கும் பாதுகாப்பு வழங்கினார் என்பது கதை. அதனைப் பற்றிய காட்சியைத் திருமங்கையாழ்வார் மேல்வருமாறு வர்ணிக்கின்றார்:
'கோகுலங்கள் தளராமல் குன்றம் ஏந்திக் காத்தானை எம்மானைக் கண்டுகொண்டேன் கடிபொழில் சூழ் கடல் மல்லைத் தலசயனத்தே'
கிருஷ்ணர் கோவர்த்தன மலையைக் குடையாகப் பிடித்துக் கோகுலங்களைக் காப்பாற்றியமை பற்றித் திருமங்கையாழ்வார் குறிப்பிடுங் காட்சி மாமல்லபுரத்துக் கோயிலொன்றிலுள்ள சிற்பக்காட்சி, மாமல்லபுரத்திலே கிருஷ்ணா மண்டபம் என்று சொல்லப்படும் குடபோகத்தில் அத்தகைய காட்சி இணையிலா வனப்புடன் உருவாக்கப்படுள்ளமை இங்கு கவனித்தற்குரியது.
கிருஷ்ணரின் உருவங்களும் கிருஷ்ண அவதாரக் கதைகளும் புராதனகாலம் முதலாகச் சிற்பங்களாக இந்தியப் பிராந்தியங்கள் பலவற்றிலே வடிக்கப்பட்டுள்ளன. குப்தர் காலத்துக்குரிய கோவர்த்தனதாரி வடிவம் வாரணாசியிற் கிடைத்துள்ளது. வங்காளத்திற் பகர்ப்பூரிலுள்ள கோயிலொன்றிலே அதே காலத்துக்குரிய கிருஷ்ணரின் படிமங்கள் உள்ளன. விஸ்வரூபக் கோலமான கிருஷ்ணரின் வடிவங்கள் ஏழாம் எட்டாம் நூற்றாண்டுகளில் மத்திய இந்தியாவிலுள்ள கோயில்களில் அமைக்கப்பட்டிருந்தன. நவநீதகிருஷ்ணர், வேணுகோபாலர் ஆகியோரின் கற்சிற்பங்களும், உலோகப் படிமங்களும் தமிழகத்து வைணவக் கோயில்களிற் காணப்படுகின்றன.
கிருஷ்ணர் வழிபாடு சம்பந்தமான ஜயதேவரின் கீதகோவிந்தம் வைணவர்களிடையே பெருஞ் செல்வாக்குப் பெற்றது. இராசபுத்திர ஒவியங்களில் அது மிகுந்து காணப்படுகின்றது. கிருஷ்ணரின் வாழ்க்கை பற்றிய கதைகள் அந்த ஒவியங்களில் மிகுந்த வனப்புடன் அமைந்துள்ளன.
கல்கி அவதாரம்
பத்தாவது அவதாரமான கல்கி அவதாரம் வருங்காலத்துக்கு
உரியதாகும். எனவே அதனைப் பற்றிய கதைகள் உருவாக்கம்
பெறவில்லை. ( சிL)
தஞ்சாவூர்
தென்னிந்தியாவின் நெற்களஞ்சியம் என்று போற்றப்படுகின்ற தஞ்சாவூர் பழம்பெருமை வாய்ந்த நகரங்களுள் ஒன்றாகும். தஞ்சாவூரின் பெயர்க் காரணத்தை வடமொழியில் உள்ள 'வராக மான்மியம்’ என்னும் நூல் விவரிக்கின்றது. சமீவனப் பகுதியில் தஞ்சாசுரன் என்னும் அரக்கன்
32

எல்லோரையும் துன்புறுத்தி வந்தான். இப் பகுதியில் கோயில் கொண்டுள்ள ஆனந்தவல்லி, சக்தி உருவம் எடுத்துத் தஞ்சாசுரனைப் போரில் வென்று கொன்றாள். இத் தருணத்தில் அவன் இருந்த பகுதி தஞ்சாசுரன் என்ற பெயரால் தஞ்சாபுரி என்று வழங்கியதாகக் கூறப்படுகின்றது. தஞ்சாபுரியே மருவித் தஞ்சாவூர் ஆனது. தண்செய்' என்ற சொல்லின் மருவு வடிவமே தஞ்சாவூர் என்பர். தண்செய்' என்பதற்குக் குளிர்ந்த அழகிய சோலை, வயல் நிறைந்த பகுதி என்று பொருள் கொள்வாரும்
9-5HTT
திருச்சி உச்சிப் பிள்ளையார் மலைக் கோயிலில் உள்ள கல்வெட்டில் தஞ்சையைப் பற்றிய குறிப்பு வருகின்றது. இதனுடைய காலம் கி. பி. 6-7ஆம் நூற்றாண்டுகள் என்று கூறுகின்றனர். கி. பி. 7ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த அப்பரடிகள் தஞ்சையைப் பற்றிப் புகழ்ந்து பாடியுள்ளார். எனவே இந்நகர் கி.பி.6ஆம் நூற்றாண்டில் இருந்தே சிறப்புற்று விளங்கியிருக்கின்றது என்பது தெளிவு. கி. பி.7ஆம் நூற்றாண்டிற்குப் பின்னர் 9ஆம் நூற்றாண்டு வரை தஞ்சை முத்தரையர்களின் ஆட்சியின்கீழ் வந்தது. முத்தரையர்கள் தங்களைத் தஞ்சைக் கோன்' என்று செந்தலைக் கல்வெட்டுகளில் கூறிக் கொள்கின்றனர். தஞ்சையில் அகழி, கோட்டை, அரண்மனை போன்ற பகுதிகள் முத்தரையர்களின் காலத்தில் எடுக்கப்பட்டன என்பதை வல்லத்தில் நடைபெற்ற அகழாய்வினைக் கொண்டு ஆய்வாளர்கள் உறுதிப் படுத்துகின்றனர். தஞ்சை குபேரபுரி, அழகாபுரி, விசயாபுரி என்றெல்லாம் கூறப்பட்டுள்ளது என்பதைக் கல்வெட்டுகளின் வாயிலாக அறிய முடிகின்றது.
தஞ்சாவூரை முத்தரையர்களிடமிருந்து விசயாலய சோழன் கி. பி. 846 இல் கைப்பற்றினான் என்பதைத் திருவாலங்காட்டுச் செப்பேடு கூறுகின்றது. அற்குப் பின்னர் சுமார் 400 ஆண்டுகள் சோழர்களின் ஆதிக்கத்தின்கீழ் தஞ்சை இருந்தது. விசயாலய சோழன் தஞ்சையைத் தலைநகராக மாற்றி அமைத்தான். விசயாலயன் வெற்றியின் அடையாளமாக நிசும்பசூதிணிக்குக் கோயில் எடுத்தான். இக்கோயில் எது என்பதில் ஆய்வாளர்களிடையே கருத்து வேறுபாடுகள் காணப்படுகின்றன. முதலாம் இராசராசனின் காலத்தில் தஞ்சை பெரிய நகரமாக வளர்ச்சி பெற்றது. புகழ்வாய்ந்த பிரகதீசுவரர் கோயிலை அவன் கட்டிமுடித்தான். இக் கோயிலின் எழிலும் சிற்பங்களின் வனப்பும் புகழ்வாய்ந்தனவாகும். இக்கோயிலின் உட்பகுதியில் உள்ள ஒவியங்கள் அழகுடன் விளங்குகின்றன. முதலாம் இராசராசனின் காலத்தில் பல புதிய தெருக்கள், பேரங்காடிகள், வேளங்கள் போன்றவை புதிதாக ஏற்படுத்தப்பட்டன. இத் தஞ்சை மாநகர் சோழர்களின் காலத்தில் உள்ளாலை, புறம்படி என்ற இரு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டிருந்தது. உள்ளாலை என்பது அரச குடும்பத்தினர் வாழ்ந்த பகுதிகளாகும். புறம்படி, கடைகள் மற்றும் பொதுமக்கள் வாழ்ந்த பகுதியாக இருந்தது.
சோழர் காலத்தில் அரண்மனைப் பகுதிகள் மிகுதியான அளவில் புதிதாக எழுப்பப்பட்டிருந்தன என்பதைக் கல்வெட்டுக்களின் வாயிலாக அறிய முடிகின்றது. தஞ்சையைச்
இந்துக்கலைக்களஞ்சியம்

Page 49
கல்லாலின் புடையமர்ந்து
நான்மறை ஆறங்கமுதற் கற்ற கேள்வி வல்லார்கள் நால்வருக்கும் வாக்கிறந்த பூரணமாய் மறைக்கப்பாலாய் எல்லாமாய் அல்லதுமாய் இருந்ததனை இருந்தபடி இருந்துகாட்டிச் சொல்லாமற் சொன்னவரை நினையாமல் நினைந்து பவத் தொடக்கை வெல்வாம்.
 


Page 50


Page 51
கோயிலின்
 

சிகரமும் கலசமும்

Page 52
வாயிற் கோட
கோயிலை
 
 
 
 

a புரங்கள் இரண்டு
ச் சூழவுள்ள அகழி

Page 53

ற்றம்
தோற்
耶函

Page 54
தஞ்சைப் பெருங்ே
 

ங்கள் சில
காயிற் சிற்ப

Page 55
கருவறையின்
 


Page 56
கோயிற் சுவரோவியத்
 

ராஜராஜன்

Page 57


Page 58
கருவறை - 6
குதிரைகள் இழுத்துச் செல்லும் ே
 
 

நர் வடிவிலான ராஜகம்பீரன் மண்டபம்

Page 59

qiri-Iingom 199úsiqso &suae;

Page 60
கருவறையும் விமான
 

மும் - பின்புறத் தோற்றம்

Page 61
݂ ݂ - ܡܨܘܡܐ படிச்சுவர் - ஒரே தலைகொண்ட யானையும், மாடும்
புராணக் கதைக:
 
 

ர் சிற்பங்களாக

Page 62
:'?
பெரிய புராணக் காட்சி - சுந்தரர் சங்கிலியார்
சாட்சியாக மகிழ மரம்
 
 
 
 
 

முதலை உண்ட பாலகனை மீட்கும் சுந்தரர்

Page 63


Page 64
சசு
திரு
 


Page 65
சுற்றி அகழியும், மதிற்கவரும் நல்ல முறையில் பராமரிக்கப்பட்டு வந்துள்ளன. இப்போதும் அந்த அகழியின் ஒரு பகுதியைக் காணலாம். இந்த அகழியின் ஒரு பகுதியிலே தான் இப்போதைய பேரூந்து நிலையம் இயங்கி வருகின்றது. மற்றப் பகுதிகள் அப்படியே இடிபாடுகளுடன் காணப்படுகின்றன. மற்ற மதிற் பகுதிகளும் இடிபாடுகளுடன் கருந்தட்டான்குடிக்கு அருகில் அகழியை ஒட்டிச் சில இடங்களில் இடிந்த நிலையில் காணப்படுகின்றன. இவ்வூருக்கு இரண்டு வாயில்கள் இருந்தன எனத் தெரிய வருகின்றது. தஞ்சையில் இருந்த மதில் பற்றி இஞ்சிசூழ் தஞ்சை என்றும், மாமதில் தஞ்சை என்றும் இலக்கியங்கள் கூறுகின்றன. மதிலின் எட்டுத் திசைகளிலும் காவல் தெய்வங்களுக்குக் கோயில்கள் இருந்தன. இத்தகைய சிறப்புடன் விளங்கிய தஞ்சையில் சோழர்களின் அரண்மனைப் பகுதிகள் என்று கூறுவதற்கு இப்போது எதுவும் இல்லை. பிற்காலச் சோழர்களின் ஆட்சிப்பரப்பு மிகுதியாக இருந்ததாலும், வலிமை அற்ற அரசர்கள் ஆட்சியை மேற்கொண்டதாலும், பாண்டியர்கள் சோழர்களின் மீது படையெடுத்து கி. பி. 1220இல் சோழ நாட்டைக் கைப்பற்றினர். முதலாம் மாறவர்மன் சுந்தர பாண்டியனின் கல்வெட்டில் தஞ்சையும் உறையூரும் செந்தணல் கொளுத்தி என்றும், மாடமாளிகை, கூடகோபுரங்கள், மணிமண்டபங்கள் பல இடித்தனர் என்றும் வருகின்றன. எனவே, தஞ்சையை முழுமையாகப் பாண்டியர்கள் அழித்து விட்டனர் என்பது தெளிவாகின்றது. இப் பகுதிகளைக் கண்டறியும் பொருட்டுத் தமிழ்நாடு தொல்பொருள் ஆய்வுத் துறையினர் குறும்பன்மேடு என்ற இடத்திலும், தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் கல்வெட்டுத் துறையினர் தஞ்சைக்கு அருகில் உள்ள வல்லம் என்னும் இடத்திலும் அகழாய்வு மேற்கொண்டனர். இந்த அகழாய்வில் சோழர் காலத்திய கூரை ஒடுகளும் செங்கற்கள் போன்ற தொல் பொருள்களும் கண்டெடுக்கப்பட்டன. குறும்பன் மேடு சோழர் காலத்தில் சிறப்புற்று இருந்தது என்பதும் தெளிவாகின்றது.
ജ
தஞ்சைப்பெருங்கோயில்
சோழர்களின் ஆதிக்கத்திற்குப் பின் தஞ்சை பாண்டியர்களின் கீழ் வந்தது. பின்னர் விசயநகர மன்னர்கள் தஞ்சையைக் கைப்பற்றினர். விசயநகர மன்னனான அச்சுதராயனிடமிருந்து தஞ்சாவூரைச் சீதனமாகச் செவப்ப நாயக்கன் பெற்றான். தஞ்சாவூர்ச் சிவகங்கைப் பூங்காவை உள்ளடக்கிய கோட்டையைக் கட்டியவன் செவப்ப நாயக்கன். இது
இந்துக்கலைக்களஞ்சியம்
 

சிறிய கோட்டை என்று கூறப்படுகின்றது. இங்குள்ள குளம் செவப்ப நாயக்கன் என வழங்குகிறது. அருகில் உள்ள ஏரியும் இவனால் எடுக்கப்பட்டது. ஏரியின் மேற்குப் பக்கத்தில் ஒரு மண்டபம் நாயக்கர் காலத்திற் கட்டப்பட்டது. இதனைக் கழுவேற்று மண்டபம் என்று மக்கள் இன்றும் சொல்கின்றனர். தஞ்சை நாயக்க மன்னனான விசயராகவ நாயக்கன் இரகுநாத நாயக்க அப்யுதயமு' என்ற நூலை எழுதியுள்ளான். இது தஞ்சை அரண்மனையைப் பற்றிய முழு விவரத்தினையும் எடுத்து இயம்புகின்றது.
நாயக்க மன்னர்களுக்குப் பின்னர் மராட்டிய மன்னர்கள் தஞ்சையைக் கைப்பற்றினர். ஏகோசி என்னும் வெங்கோசி மன்னனே தஞ்சையில் மராட்டியர் ஆட்சிக்கு வித்திட்டவனாவான். மராட்டிய மன்னர்கள் சுமார் பன்னிருவர் தஞ்சையை ஆண்டனர். தஞ்சை நாயக்கர் காலத்தில் எழுப்பப்பட்ட அரண்மனைப் பகுதிகளே இப்போது காணப்படுகின்ற அரண்மனைப் பகுதிகளாகும். தஞ்சை அரண்மனையில் அரசவை, அரசர்கள் அதிகாரிகள் வாழ்விடம், அந்தப்புரம், ஆயுதகோபுரம், கந்தககோபுரம், மணிமண்டபம், நாயக்கர் திருவோலக்க (தர்பார்) மண்டபம், சரசுவதி மகால் நூல் நிலையம், சங்கீத மண்டபம், ஏழு அடுக்கு மாளிகை, மராட்டிய தர்பார் மண்டபம், குதிரை யானை இலாயங்கள், சுதை உருவங்களுடன் கூடிய இருட்டறைப் பகுதிகள் போன்றவை இப்போது காணப்படும் அரண்மனைப் பகுதிகளுள் முக்கியமானவை ஆகும்.
அரண்மனை
அரண்மனையின் தெற்குப்புற வாயிலில் நுழைந்தால் இலக்குமி விலாசம், அச்சுதரங்க கூடம், மதன கோபால விலாசம் ஆகியவை இருந்தனவாகக் கூறப்படுகின்றன. தஞ்சைக் கலைக் கூடத்தில் நுழைந்தால் மேற்குப்புறமுள்ளது நாயக்கர் தர்பார் மண்டபம் ஆகும். இது விசய ரகுநாத நாயக்கனால் கட்டப்பட்டதாகும். "சீஇராம செளதம்' என்றும் 'இராமன் மாளிகை’ என்றும் இதற்குப் பெயர்கள் காணப்படுகின்றன. இதனுடைய மேற்குச் சுவரில் இராமனின் பட்டாபிஷேகச் சுதை உருவங்கள் வடிக்கப்பட்டுள்ளன. இராமபிரானும், சீதாதேவியும்
33

Page 66
அமர்ந்திருக்க அருகில் அனுமனும் காட்டப்பட்டுள்ளான் இங்குள்ள பெரிய கருங்கல்லின் பொன் வேலைப்பாடுகள் செய்யப்பட்டுப் பட்டாபிஷேகம் நடைபெற்றுள்ளது. மண்டபத்தின் நடுப் பகுதியில் படிகளுடன் கூடிய மேடையும் அதன் மேல் உள்ள ஒரு பெரிய கல்லின் மேல் சலவைக்கல்லால் செய்யப்பட்ட மராட்டிய மன்னன் இரண்டாம் சரபோசியின் சிலையும் காணப்படுகின்றன. விதானப் பகுதியில் ஆங்கிலேயர்களின் வண்ண ஒவியங்கள் தீட்டப்பட்டுள்ளன. மேலும் தஞ்சை பகுதியில் இருந்து கொண்டுவரப்பட்ட செப்புத் திருமேனிகள் காட்சிப் பொருளாக உள்ளன. நடராசர், சோமாஸ்கந்தர் திரிபுராந்தகர், திருமால், முருகன், அப்பர் போன்றோர் சிலைகள் குறிப்பிடத்தக்கவையாகும்.
நாயக்கர் திருவோலக்க மண்டபத்திற்கு மேற்குப் பகுதியில் உள்ளது வழிபாட்டு மண்டபமாகும். இதன் எதிரில் கோயில் விமானம் போன்று காணப்படுகின்ற அமைப்புடையது ஆயுத கோபுரம், இங்கு இராணுவ தளபாடங்கள் வைக்கப்பட்டிருந்ததனால் இப்பெயர் ஏற்பட்டது. ஒன்பது அடுக்குகள் கொண்ட இந்தக் கோபுரத்தில் ஏறப் படிக் கட்டுகள் உள்ளன. மேலே எண்பட்டை வடிவச் சிகரமும் செப்புக் கலசமும் காணப்படுகின்றன.
கலைக்கூடத்தின் அருகில் அமைந்துள்ள உயரமான மண்டபம், மாடமாளிகை என்றும் தொள்ளைக் காது மண்டபம் என்றும் கூறப்படுகின்றது. இது ஏழு அடுக்குகளைக் கொண்டதாக விளங்குகின்றது. இதன் மேற்பகுதியில் சதுரமாகக் கட்டப்பட்டிருந்த பகுதியில் மணி ஒன்று வைக்கப்பட்டிருந்த தாகவும் கூறப்படுகின்றது.மணி இருந்த காரணத்தால் மணி மண்டபம் என்ற பெயர் வழங்கி வந்தது. இது இப்போது தமிழ் நாடு அரசு தொல்பொருள் ஆய்வுத் துறையின் கீழ் இருக்கின்றது
கலைக்கூடத்தின் எதிரில் உள்ள கட்டடப் பகுதி சங்கீத மகால் ஆகும். இது செவப்ப நாயக்கனால் கட்டப்பட்டதாகக் கூறப்படுகின்றது. நீண்ட சதுர அமைப்புடைய இம் மண்டபத்தில் பல வகையான இசை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இை நிகழ்ச்சிகளைக் கேட்கும்போது எதிரொலி வாராமல் இருக்க இங்கிருந்த தொட்டிபோன்ற பகுதியில் தண்ணிர் நிரப்பி வைத்திருந்ததாக் கூறப்படுகின்றது. மேற் பகுதியில் இருந்து கீழ்ப்பகுதியில் இருந்தும் பார்ப்பதற்கு ஏதுவாக இக் கட்டடட் அமைக்கப்பட்டிருப்பது நாயக்க மன்னர்களின் கட்டடக்கலைக்கு ஒரு சிறந்த எடுத்துக் காட்டாகும். இதனை நாடகசாலை என்று கூறுவர்.
கலைக் கூடத்திற்கு அருகில் உள்ள சரசுவதி மகால் நூல் நிலையம் உலகப்புகழ் வாய்ந்தது. உலகிலேயே மிகுதியான ஒலை சுவடிகளைக் கொண்டுள்ள நூலகம் இதுவாகும். நாயக்க மராட்டிய மன்னர்களின் காலங்களில் மேலும் விரிவடைந்துள்ளது. இரகுநாத நாயக்கனின் ஆட்சிக் காலத்தில் தமிழ், தெலுங்கு, கிரந்தம், நாகரி, கன்னடம், வடமொழி சுவடிகள் ஆகியவை இடம் பெற்றன. இரண்டாம் சரபோச்
34

மன்னனால் சேகரிக்கப்பட்ட ஆங்கிலம், இலத்தீன், கிரேக்கம், பிரெஞ்சு, இத்தாலி ஆகிய மொழி நூல்கள் இந்நூல் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளன. மற்றும் இலக்கியம், தத்துவம், இசை, மருத்துவம், அறிவியல், தாவரவியல் தொடர்பான மராட்டியச் சுவடிகளும், L60 6) 6ð) 55 LLUIT 6T புகைப்படங்களும்
தஞ்சாவூர் கலைக்கூடம்
சேகரிக்கப்பட்டுள்ளன.
மராட்டியர் திருவோலக்க மண்டபம் சரசுவதி மகால் நூல் நிலையத்திற்கு அருகில் அமைந்துள்ளது. இது மராட்டிய மன்னன் சகாசி என்பவனால் கட்டப்பட்டதாகும். இம் மண்டபத் தின் முன் பகுதியில் மரத் தூண்களும் உட் பகுதியில் கருங்கல், சுதை ஆகியவற்றால் எழுப்பப்பட்ட தூண்களும் உள்ளன. சுவர்ப்பகுதிகளிலும், விதானப் பகுதிகளிலும் ஒவியங்கள் தீட்டப்பட்டுக் கண்ணாடிகள் பதிக்கப்பட்டுக் காணப்படுகின்றன. தமிழ்நாடு தொல்பொருள் ஆய்வுத் துறையின் கீழ் உள்ள இந்தத் திருவோலக்க மண்டபத்தின் ஒவியங்கள் இத்துறையினரால் சுத்தம் செய்யப்பட்டு வருகின்றன. இதில் பிற்கால நாயக்கர் ஒவியங்கள் காணப்படுகின்றன. இம் மண்டபத்தின் மத்திய பகுதியில் ‘செருவாணி ஆடை அணிந்து (நீண்ட ஆடை) ஊஞ்சல் ஆசனத்தில் கம்பீரமாக அமர்ந்திருப்பது போன்று மராட்டிய மன்னன் சிவாசியின் ஒவியம் வரையப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்க ஒன்றாகும். மேலும், முருகன், பண்டரிபுரப் பாண்டுரங்கன் திருவுருவம், பள்ளிகொண்ட பெருமாள், வேணுகோபாலர் போன்ற ஒவியங்களும் தீட்டப்பட்டுள்ளன. இங்கு சுரங்கப் பாதை ஒன்று இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது.
மராட்டியர் திருவோலக்க மண்டபத்தின் வடகிழக்குப் பகுதியில் இருட்டறைகள் உள்ளன. இந்த இருட்டறைகளில் சுதை உருவங்களும், ஒவியங்களும் உள்ளன. விநாயகர், நடராசர், பிரமன், பைரவர், உலகளந்த பெருமாள் போன்றவை குறிப்பிடத்தக்க உருவங்களாகும். இரண்டாம் சரபோசி
இந்துக்கலைக்களஞ்சியம்

Page 67
காசிக்குச் சென்று ஐ வ ந் த த ன் நி  ைன வ |ா க ஏ ழ டு க் கு மா எரி  ைக  ைய க்
க ட் டி ன ர ன் . த ஞ்  ைச அர ண் ம  ைன க் கட்டடப்பகுதிகளுள் இதுவே மிகவும்
9) — LLI IJ LD PT 60T ğ5I . அரண்மனை மேல் இருந்தே எல்லாப் பகுதி க  ைள யும் பார்க்க இயலும், இது இப்பொழுது இடிபாடுகளுடன் காணப்படுகின்றது.
தஞ்சைப் பெருங்கோயில் சிற்பம்
LD IJ IT L’ g. LLI ff காலத்தில் தஞ்சைக் கோட்டை கருடன் கோட்டை' என்று கூறப்பட்டது. இக் கோட்டையின் அமைப்பு, கருடனுடைய சிறகில் அரண்மனையும், கோட்டைகளும் உள்ளடங்கியனபோல் இருந்ததாம். எனவே, இப்பெயர் பெற்றது. மதிற்கவர் அகலமாக இருந்தது.
அரண்மனையில் காளிகோயிலும், ஆஞ்சநேயர் கோயிலும் சிறப்புடையன. இவற்றுடன் மராட்டிய இளவரசர்கள் இப்போது வாழ்ந்து வருகின்ற பகுதிகளும் அரண்மனைப் பகுதியைச் சார்ந்தனவாகும். அரண்மனைப் பகுதியில் சுமார் 32 அரச அலுவலகங்கள் இயங்கி வருகின்றன. மேலும் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழக அருங்காட்சியகம், இராசராசன் அருங்காட்சியகம், மராட்டியர் (தர்பார்) அருங்காட்சியகம் ஆகியவைகளும் இயங்கி வருகின்றன. அரண்மனைப் பகுதிகள் தமிழ்நாடு அரசு தொல் பொருள் ஆய்வுத் துறையினரால் பராமரிக்கப்பட்டு வருகின்றன.
தஞ்சாவூர் மாவட்டத் தலைநகரமாகவும் இயங்கி வருகின்றது. இந் நகரில் நெற் கிடங்குகள் பல உள்ளன. தஞ்சாவூரில் மருத்துவக் கல்லூரி ஒன்றும் இரண்டு கல்லூரிகளும் உள்ளன. மேலும் இங்கு தமிழ்ப் பல்கலைக்கழகம் ஒன்று 1981 இல் தொடங்கப்பட்டு, இயங்கி வருவது பெருஞ் சிறப்புக்குரியது. )ޕޒީ ޕޯy.(
தஞ்சை நாயக்கர்கள்
விஜயநகர அரசு ஏற்பட்டதும் தமிழகம் அதன் பகுதியாக்கப்பட்டது. விஜயநகரத்தினுடைய நிர்வாக அமைப்பின் வழி தமிழகத்தில் நாயக்கர் ஆட்சி தோன்றியது. விஜயநகரத்தில் ஏற்பட்ட ஓயாத அரசுரிமைப் போட்டி நாயக்கர்களின் சுயாட்சிக்கு வழிகோலியது.
இந்துக்கலைக்களஞ்சியம்
 

தஞ்சாவூர் ஆந்திர ராஜஸ்சரிதம், தஞ்சாவூரி சரிதம் ஆகிய தெலுங்கு நூல்களின் கூற்றின்படி அச்சுதராயர் (விஜயநகரப் பேரரசர்) தஞ்சாவூரைச் சேவப்ப நாயக்கரின் மனைவிக்குச் சீதனமாகக் கொடுத்தார். இதனால் அச்சுதராயர் காலத்தில் தஞ்சை நாயக்கர்கள் ஆட்சி தொடங்கியது. அதைத் தொடக்கியவர் சேவப்பநாயக்கர்.
கிருஷ்ண தேவராயரிடம் வாயிற் காப்போனாகப் பணிபுரிந்த திம்மப்ப நாயக்கரின் புதல்வரே செவ்வப்ப நாயக்கர். அச்சுதராயரின் மைத்துனியான மூர்த்திமாம்பாளை அவர் திருமணம் செய்து கொண்டார். அவருக்குச் சீதனமாகத் தஞ்சையைக் கொடுத்து செவ்வப்பரை ஆட்சி புரிய வைத்தார். செவ்வப்பர் 1532இல் தஞ்சை, வடவாற்காடு மாவட்டங்கள் உள்ளிட்ட சோழ மண்டலத்தை ஆண்டார். அவர் பேரரசர் அச்சுதராயரிடம் பெருமதிப்புக் கொண்டிருந்தார். அவருடைய புதல்வனுக்கு அச்சுதராயரின் பெயரையே இட்டார். 1560இல் செவ்வப்ப நாயக்கரின் காலத்தில் ஞானப்பிரகாச பண்டாரம் திருவாரூர் ஆலயத்துக்குச் சொந்தமான மூன்று கிராமங்களின் கண்காணியாக அமர்த்தப்பட்டார். செவ்வப்ப நாயக்கர் 1580 வரை வாழ்ந்தார். என்றாலும் 1560இல் ஒய்வு பெற்றார். இவர் தஞ்சையிலுள்ள சிவகங்கையைச் சீர்படுத்தியும் மூவாலூரில் ஒரு சத்திரம் கட்டி வைத்தும் பொதுப்பணிக்கு ஆதரவு தெரிவித்தார்.
அச்சுதப்ப நாயக்கரும்மூர்த்திமாம்பாவும் (புள்ளிருக்குவேளூர்)
செவ்வப்பரைப பின்பற்றி அவரது புதல்வர் அச்சுதப்பர் ஆட்சிக்கு வந்தார். இவரது காலத்தில்தான் தலைக்கோட்டைப் போர் நடைபெற்றது. கோவிந்த தீட்சிதர் என்பவர் இவரது
35

Page 68
அமைச்சராவார். அச்சுதப்பர் திருவண்ணாமலைக் கோயிலைக் கட்டி முடித்தும் மகா மகக் குளத்தினைப் புதுப்பித்தும் பல கோயிற் பணிகளை மேற்கொண்டார். அச்சுதப்பருக்கு 370 மனைவியர் இருந்தனர் என்றும் அவரின் மறைவின் பின் அனைவரும் தீக்குளித்து இறந்தனர் என்றும் கூறப்படுகின்றது.
அச்சுதப்ப நாயக்கரைப் பின்பற்றி அவரது மகன் ரகுநாத நாயக்கர் 1600இல் ஆட்சிக்கு வந்தார். தந்தையால் சிறைவைக்கப்பட்டிருந்த சகோதரனைக் கொலை செய்துவிட்டு ரகுநாத நாயக்கர் ஆட்சிக்கு வந்தார். இவர் எப்பொழுதும் விஜயநகரப் பேரரசுக்கு ஆதரவளிப்பது என்ற கொள்கையைக் கொண்டிருந்தார். தலைக்கோட்டைப் போரினால் நலிவடைந்த விஜயநகர அரசிற்கு எதிராக உள்நாட்டுக் கலகம் ஏற்பட்டது. 1617இல் தொப்பூர்ச் சண்டையில் விஜயநகர அரசு மேலும் நலிவுற்றது. இப்போரில் தஞ்சையை ஆண்ட ரகுநாத நாயக்கர் நன்றி மறவாமல் பேரரசுக்கு ஆதரவளித்தார். இத் தொப்பூர்ச் சண்டை மூன்றாண்டு காலம் தொடர்ந்து நடைபெற்றது. இதனால் பொருளாதாரம் நலிவுற்றது. பஞ்சத்தின் கொடுமையால் தங்கள் பிள்ளையையே விற்று வாழ்க்கை நடத்த வேண்டிய அவலமும் ஏற்பட்டது. ஒரு குழந்தையை ஐந்து ஷில்லிங்கிற்கு வாங்கி நாற்பது ஷில்லிங்கிற்கு மசூலிப்பட்டிணத்தில் விற்றனர் என்று ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பெனி வணிகரான மெத்வோல்டு கூறுகிறார்.
இரகுநாத நாயக்கர் காலத்தில் போர்த்துக்கேயர் கிழக்குக் கடற்கரையோரப் பகுதிகளில் வாணிபத் தலங்களை அமைத்துக் கொண்டனர். நாகபட்டணத்திலும் சென்னையிலும் தமது வாணிபத் தலங்களை அமைத்ததோடு சமயத்தினையும் பரப்ப எத்தனித்தனர். டச்சுக்காரர்களும் டேனிஷ்காரர்களும் தங்கள் வாணிபத் தலங்களை நிறுவினர். ஆங்கிலேயர்களும் தமது வாணிபத் தலங்களை அமைக்க முற்பட்டனரேனும் அம் முயற்சி கைகூடவில்லை. போர்த்துக்கேயர் கடற்கரைப் பகுதிகளில் தங்கள் வாணிபத்தலங்களை அமைத்து தம் செல்வாக்கைப் பெருக்கியதுடன் யாழ்ப்பாண மன்னரையும் விரட்டியடித்தனர். யாழ்ப்பாண மன்னன், இரகுநாதரின் உதவியை நாடி நின்றான். இருப்பினும் போர்த்துக்கேயரால் தோற்கடிக்கப்பட்டான். இரகுநாதரது ஆட்சிக்காலத்தில் கல்விமான்கள் போற்றப்பட்டனர். கலைகள் வளர்க்கப்பட்டன. வெளிநாட்டு வாணிபம் ஊக்குவிக்கப்பட்டது.
இரகுநாத நாயக்கரின் பின் அவரது புதல்வரான விஜயராகவ நாயக்கர் 1833ஆம் ஆண்டு அரியணை ஏறினார். இவருடைய ஆட்சிக் காலத்துடன் தஞ்சைப் பேரரசு முடிவுற்றது. இரண்டாம் சீரங்கன் தமிழக நாயக்கர்களை அடக்கும் பொருட்டு படையெடுப்பை மேற்கொண்டபோது, திருமலை நாயக்கர் செஞ்சி, தஞ்சை ஆகியவற்றுடன் ஒரு முக்கூட்டுறவை ஏற்படுத்திக் கொண்டு பேரரசை எதிர்க்கத் திட்டம் தீட்டினார். ஆனால் அத் திட்டத்தை தஞ்சை நாயக்கரான விஜயராகவ நாயக்கர் சீரங்கனுக்குத் தெரிவித்தார். அதனால் திருமலை நாயக்கர்
36
 

பீஜப்பூர், கோல்கொண்டா ஆகிய சுல்தான்களின் உதவியை நாடினார். அவர்களின் படையெடுப்பின் போதெல்லாம் தஞ்சை தாக்கப்பட்டது. மேலும் 1662-1664 காலப்பகுதியில் தஞ்சை முகமதியர்களின் கீழ்வந்தது. மீண்டும் விஜயராகவ நாயக்கர் தஞ்சையைக் கைப்பற்றினார். மதுரை சொக்கநாதர், விஜயராகவ நாயக்கரின் மகளைத் திருமணம் செய்ய விரும்பிச் செய்தி அனுப்பினார். ஆயினும் தஞ்சை நாயக்கர் மறுத்துவிட்டார். 1673ஆம் ஆண்டு மதுரைச் சொக்கநாதர் தஞ்சை மீது படையெடுத்தார். விஜயராகவ நாயக்கர் இப் போரில் ஈடுபட்டு இறந்ததோடு தனது குடும்பத்தினரையும் கோட்டைக்குள்ளே வைத்து வெடிவைத்துத் தகர்த்து விட்டார். பின் தஞ்சைப் பகுதி சொக்கநாதர் வசம் வந்தது.
இரகுநாதநாயக்கரும், கலாவதியும் (இராமசாமித் திருக்கோயில் - கும்பகோணம்)
தஞ்சை நாயக்கர்களின் ஆட்சிக் காலத்தில் ஆட்சியிலும், சமுதாயத்திலும் மாற்றம் ஏற்பட்டது. அக்காலத்தில் முடியாட்சி முறை நிலவியது. தந்தைக்குப் பின் தனயன் ஆட்சிப் பொறுப்பேற்றான். மன்னர்கள் யதேச்சாதிகாரிகளாக இருந்தனர். அவர்கள் இடும் ஆணையே இறுதியானது. பாளையப்பட்டு முறை இருந்ததால் ஸ்தல ஆட்சி முறைக்கு வழிவகுத்தது. (பாளையக்காரர் என்போர் ஒரு படை நிலைக்குத் தலைமை வகித்தவர்கள். அத்துடன் தங்களுக்கென ஒதுக்கப்பட்ட இடத்தில் நிர்வாகம் புரிந்தனர்) வரி வசூலித்தல், நீதி வழங்கல், மன்னருக்குத் தேவையானவேளை படைகளை வழங்கல் என்பன இவர்களால் மேற்கொள்ளப்பட்டது. நாயக்க அரசர்களுக்கு உதவியாக அமைச்சர் குழு செயற்பட்டது.
இந்துக்கலைக்களஞ்சியம்

Page 69
தலைமை அமைச்சர், படைத்தலைவர் பதவியும் இணைந்த பதவி தளவாய்' என அழைக்கப்பட்டது. இது முதன் முறையாகப் புகுத்தப்பட்டது. அரசாங்கத் துறை அனைத்துக்கும் இவரே அதிகாரி. மேலும் நிதி அமைச்சர், அரசாங்கக் கணக்கர், வெளிநாட்டு உறவு அமைச்சர் (ஸ்தானாதிபதி) திருமந்திர ஓலை நாயகம் போன்ற சில அதிகாரிகளும் இருந்தனர். பாளையப்பட்டுக் காரருக்கும் அரசிற்கும் இடையே தொடர்பினை ஏற்படுத்த மாநில அதிகாரிகளான கவர்னர்கள் செயற்பட்டனர். நிலவரி, சொத்துவரி, வணிகவரி, தொழில்வரி, படைக்கொடை, சமுதாயக் குழுவரிகள் போன்றவை முக்கியவரிகள். இவற்றை அறவிட மணியகாரர், அம்பலக்காரர் போன்றோர் நியமிக்கப்பட்டனர்.
தலைநகரில் நீதிமன்றம் இருந்தது. பொதுவாக மக்களால் உயர்வாக மதிக்கப்பட்ட இருவர் கிராமத்தில் இருந்து நீதி வழங்கினர். தீர்க்கமுடியாத வழக்குகளை மன்னரே கேட்டு இறுதி முடிவு அளித்தார். குற்றவாளிகளுக்குச் சிறைத் தண்டனை உண்டு. யானைக் காலில் மிதிக்க விடுவது, அங்கங்களை வெட்டுதல், சித்திரவதைகள் என்பனவும் இடம் பெற்றுள்ளன.
அக்காலச் சமுதாயத்தில் பல்வேறு சாதியினர் காணப்பட்டனர். ஒருவன் பல பெண்டிரைத் திருமணம் செய்து கொள்ளும் பழக்கம் இருந்தது. கணவர் இறந்தபோது மனைவி உடன் கட்டை ஏறும் வழக்கம் (சதி) இருந்தது. நாயக்க காலப் பெண்கள் பெரும் கல்வி கற்கவில்லையாயினும் மானமும் வீரமும் பொருந்தியவர்களாக இருந்தனர். இவர்களில் சிலர் போர்த் தொழில் வல்லவர்களாகவும் இருந்தனர். ஆண்களும், பெண்களும் பலவகை அணிகலன்களை அணிந்திருந்தனர். தெலுங்கு மொழி சிறப்பான இடத்தைப் பெற்றிருந்த போதிலும் தமிழ் கவிதைகள் பலவும் இக் காலத்தில் எழுந்தது. சைவ மடங்களும் மொழிவளர்ச்சிக்குப் பெரிதும் உதவிபுரிந்தன.
நாயக்கர்கள் சைவத்திற்கும் வைணவத்திற்கும் பெருந்தொண்டாற்றினர். கிறிஸ்தவமும், இஸ்லாம் சமயமும் அவர்கள் காலத்தில் பெருவளர்ச்சியடைந்தன. வைணவத்தில் வடகலை தென்கலை என்ற இரு பிரிவுகள் வளர்ச்சியடைந்தன. அத்துடன் இரு பிரிவுகளுக்குமிடையில் ஒயாத பூசலும் நிலவியது. இந்துக்களின் முக்கிய சமய விழாக்கள் பலவும் கொண்டாடப்பட்டது.
தஞ்சை மாவட்டம் ஆற்று நீர்ப்பாசனத்துக்குட்பட்ட நிலமாக இருந்ததால் செழிப்புடன் இருந்தது. விவசாயத்தைவிட முத்துக்குளித்தல், நெசவு, கால்நடை வளர்த்தல் முதலிய பிற தொழில்களும் இடம்பெற்றன. 1679இல் மார்ட்டின் அடிகளார் கடற்கரையோர மக்களின் தொழில் பற்றியும் வணிகத்தைப் பற்றியும் குறிப்பிட்டுள்ளார். வணிகத்தொழில் புரிந்த செட்டிமார் வரித்தொல்லைகளாலும், கள்வர் பயத்தாலும் அதிக வருவாயைப் பெறவில்லை என்று கூறியுள்ளார். தஞ்சை அரிசிக்கும் வண்ணம் தீட்டிய துணிகளுக்கும் நல்ல மதிப்பு இருந்தது.
இந்துக்கலைக்களஞ்சியம்

நாயக்கர்களின் காலத்தில் நுண்கலைகளும் சிறப்பான நிலையில் பேணி வளர்க்கப்பட்டது. திராவிட பாணிக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து நாயக்கர் சில கோயில்களை அமைத்தனர். மேலும் பல கோயில்களில் பிராகாரங்கள், கோபுரங்கள், மண்டபங்கள் போன்ற பலவற்றைக் கட்டி மெருகூட்டினர். நிநி)
தஞ்சைப் பெரிய கோயின்
தமிழ் நாட்டு மாவட்டங்களில் ஒன்று தாராசுரம். தமிழ் நாட்டில் இருந்து 334 கி. மீற்றர் தெற்கே அமைந்த இந்த மாவட்டம் தமிழ் நாட்டின் தானியக் களஞ்சியம் என்று போற்றப்படுகின்றது. இங்கு தான் ராஜராஜசோழனால் கட்டப்பட்ட உலகப் பிரசித்தி பெற்ற ராஜராஜேஸ்வரம் அமைந்துள்ளது.
சூரிய குலத் தோன்றல்கள் எனத் தம்மை அழைத்துக் கொண்ட இவர்கள் தமிழக வரலாற்றில் ஆரம்ப காலத்தில் குறுநில மன்னர்களாக இருந்து பின் காணாமல் போய்விட்டனர். ஆயினும் இவர்கள் உறையூர், பழையாறை போன்ற பழைய தலைநகரங்களில் தொடர்ந்தும் வாழ்ந்தனர் என்பதற்குச் சான்றுகள் உண்டு. கி. பி. 850இல் தஞ்சாவூரில் முத்தரையரின் ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வந்த விஜயாலயசோழன், சோழர் ஆட்சியை மீண்டும் தமிழ் நாட்டில் நிறுவினான்.
விஜயாலயனின் வழியில் வந்த நான்காம் தலை முறையினனான சுந்தர சோழனுக்கு மூன்று பிள்ளைகள். இரண்டு ஆண் மக்களும், ஒரு பெண் மகவும். இளையவர் அருண்மொழி; இவரே ராஜராஜன் என்ற பெயரில் வீறு கொண்டு எழுந்து அரும் பெரும் சாதனைகள் புரிந்தவர். ராஜராஜன் ஆட்சிப் பொறுப்பேற்றபோது சோழ நாடு ஒரு சிறிய மண்டலமாக இருந்தது. ராஜராஜன் அதனை விரிவுபடுத்தியதுடன் இலங்கை உட்பட கடல் கடந்த நாடுகள் பலவற்றையும் தன் ஆளுகையின் கீழ் கொணர்ந்தார். இவரது ஆட்சிக் காலச் சிறப்பினையும் ஆழ்ந்த சமயாபிமானத்தையும் கலை உணர்வையும் இன்று வரை எமக்கு பறைசாற்றி நிற்பது தஞ்சைப் பெரிய கோயிலாகும்.
இராசராசன் - தஞ்சை - இராசராசேச்சுவரம்
இராசராசன் காலம் வரையில் கோயில்கள் மிகவும் சிறிய அளவில் கட்டப்பட்டன. கற்கோயிலாக அமைந்தவை சுமார் 30 அடி உயரமே எழுந்தன. சில கோயில்களில் விமானங்கள் பிரஸ்தரத்திற்கு மேல் செங்கல்லால் கட்டப்பட்டன. மேல் தளங்கள் செங்களால் கட்டப்பட்ட கோயில்கள் சற்று அதிக உயரமாக இருந்த போதிலும் 40 அடிக்கு மேல் எந்தக் கோயிலும் கட்டப்பட்டவில்லை. இராசராசன் அரியணை எறிய பின்னரும் இது போன்று எளிய, அதிக உயரமற்ற கோயில்களே பல இடங்களில் கட்டப்பட்டன.
இராசராசன் தமிழகத்தை ஆண்ட ஒப்பற்ற பெருமன்னன் ஆவான். தமிழகத்தை ஆண்ட மன்னர்களிலேயே தலையாய
37

Page 70
மன்னன் அவனே. சுருங்கச் சொன்னால் இந்தியாவிலேே அன்று ஆண்ட மன்னர்களில் அவனை ஒப்பவர் யாரும் இல்6ை அவனது அறிவையும், ஆற்றலையும், பக்திப் பெருக்கையுட பெருமிதத்தையும், பிரதிபலிக்கும் வகையில் எடுப்பித்தது தா6 தஞ்சைப் பெரிய கோயில்.
உலகமே கண்டு வியக்கும் வண்ணம் திராவிடக் கலை பாணிக்குத் தலைசிறந்த எடுத்துக்காட்டாகத் தட்சிணமேரு என்று அழைக்கப்படுகின்ற பெரிய கோயிலை பெருவுடையாருக்குத் தோற்றுவித்தான் முதலாம் இராசரா சோழன். சுற்று வட்டாரத்தில் எங்கும் மலைகள் இல்லா தஞ்சையில் கருங்கல்லைக் கொண்டு 216 அடி உயரத்திற்கு 1 அடுக்குகளைக் கொண்ட விமானத்தை எடுப்பித்து அதற் இராசராசேச்சுவரம் என்று பெயர் அளித்து மகிழ்ந்தான் இப்பெரும் கோயிலை அமைக்க நீண்ட ஆழத்தில் அடித்தள அமைத்தாகத் தெரியவில்லை. குறைந்த அளவு ஆழத்தி அடித்தளம் அமைக்கப்பட்டுள்ளது. இயற்கையான கற்பாறையில் மீது அடித்தளம் அமைந்திருப்பதால் தான் இவ்வள பெரும்பாரத்தைத் தாங்கும் சக்தி அதற்கு உள்ளது என்ப இராசராசன் இப்பெருவுடையார் கோயிலைத் தன்னுடைய 25வது ஆட்சி ஆண்டிலே (கி.பி. 1010இல்) கட்டி முடித்துள்ளான். இ இன்றும் பெரிய கோயில் என்று வழங்கப்படுகின்றது.
இராசராசனது ஆணையை மேற்கொண்டு திருச்சுற்றையு கோபுரத்தையும் அமைத்தான் அவனது சேனாதிபதி கிருட்ணன் இராமன் என்னும் மும்முடிச் சோழப் பிரும்மமாராயன் இக்கோபுரத்தை உள்ளடக்கிய சுற்று மதில் இரு மாளிகைக:ை உடையதாகக் காட்சியளிக்கின்றது. ஆதலால் கலவெட்டி 'இரட்டைத் திருமாளிகை’ என்று வழங்கப்பெறுகிறது இத்திருமதில் கிழக்கு மேற்கில் 800 அடி நீளமும், தெற்( வடக்கில் 400 அடி அகலமும் உடையதாக விளங்குகிறது.
கிழக்குப் பார்த்து அமைந்துள்ள இக்கோயிலுக்கு இரண்( திருவாயில்கள் உள்ளன. முதல் திருவாயில் கேரளாந்தகடு திருவாயில் என்றும் இரண்டாவது திருவாயில் இராசராச6 திருவாயில் என்றும் வழங்கப்படுகிறது. இதன் இ பக்கங்களிலும் கம்பீரமான தோற்றத்துடன் துவாரபாலக சிற்பங்கள் நிற்கின்றன.
இத்திருச்சுற்று மாளிகையில் பரிவாரத் தேவதைகளில் ஆலயங்கள் காணப்படுகின்றன. அவ்வாறு அக்னி, எமன், நிருதி வருணன், வாயு, குபேரன், ஈசானன், இந்திரன் ஆகி எண்திசைக் காவலர்களுக்கும் ஆலயங்கள் எடுக்க பெற்றுள்ளன. இச்சிற்றாலயங்கள் இருதள விமான உடையனவாகத் தோற்றமளிக்கின்றன. இதன் மற்றொ சிறப்பாக விமானத்தின் மீது எண்திசைக் காவலர்களுக்குரி வாகனங்கள் இடம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இக்கோயிலுக்குத் தெற்கு வடக்கு, கிழக்கு ஆகி திசைகளில் முறையே மூன்று நுழைவாயில்கள் உள்ளன
38

缸
h,
LLI
கிழக்குப்பக்கம் அமைந்துள்ள நுழைவாயில் பிற்காலத்தில் அமைக்கப்பட்டதாகும். மகாமண்டபத்தின் நுழைவாயிலின் இரு பக்கங்களிலும் வாயிற் காவலரின் சிலைகள் காணப்படுகின்றன. மகாமண்டபத்தைச் சோழர் கால எளிய தூண்கள் தாங்கி நிற்கின்றன. இம்மண்டபத்தின் மேற்குப் பக்கச் சுவரும் தெற்குப் பக்கச் சுவரும் இணையும் இடத்தில் மண்டபத்தின் மேற்பகுதிக்குச் செல்வதற்குப் படிகள் உள்ளன. இப்பகுதி அர்த்தமண்டபத்தின் மேற்பகுதியைப் போன்று மூன்று தளங்களுடன் அமைந்திருக்க வேண்டும் எனத் தோன்றுகின்து.
மகாமண்டபத்தின் மேற்புறவாயில் வழியாக உள்ளே சென்றால் அர்த்தமண்டபம் காணப்பெறுகிறது. இம்மண்டபம் மூன்று தளங்களை உடையது. அர்த்தமண்டபத்தின் அகலமும், விமானத்தின் ஆதிதளத்தின் அகலமும் சமமாக உள்ளன. அர்த்தமண்டபத்தின் தெற்குப் பக்கத்தில் உள்ள மாடங்களில் தேவியருடன் விநாயகர், திருமகள், நிலமகள் ஆகிய தேவியருடன் திருமால் ஆகிய சிற்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன. வடக்குப் பக்கங்களில் உள்ள மாடங்களில் கொற்றவை, வீரபத்திரர் சிற்பங்களும் அமைக்கப்பட்டுள்ளன. மேற்குப் பக்கச் சுவரின் வெளிப்புற மாடங்களில் தென்திசையில் கஜலட்சுமி சிற்பமும் வடக்குத் திசையில் கலைமகள் சிற்பமும் இடம் பெற்றுள்ளன. இவற்றின் கீழே கருவூர்த் தேவரும், இராசராசனும் அமர்ந்திருக்கும் வகையில் சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. அடுத்து இடைநாழி என்னும் இடைக்கட்டு வடக்கிலும் தெற்கிலும் வாயில்களை உடையதாக அமைந்துள்ளது. இதன் நுழைவாயில் இரு துவார பாலகர்களால் அணி செய்யப்படுகிறது.
இப்பகுதியின் மேலுள்ள இரண்டாம் தளத்தின் வழியாக விமானத்தின் உட்பகுதியை அடையலாம். இத்தளத்தில் உள்ள சாந்தார நாழியில் இறைவன் ஆடிய 108 தாண்டவ கரணங்களைப் புடைச்சிற்பமாகச் செதுக்க முற்பட்டு 81 சிற்பங்கள் மட்டும் முழுமையாக வடிக்கப்பட்டுள்ளன.
இடைநாழியைக் கடந்து உள்ளே சென்றால் கருவறையை அடையலாம். கருவறையில் காணப்பெறும் பெருவுடையார் இந்தியாவில் காணப்படும் அனைத்து இலிங்கங்களை விடவும் மிகப் பெரியதாகும். பெருவுடையார் திருமேனியை நீராட்ட, மேனிலை ஆளாடிகள் 960) LDLL, உண்ணாழியில் மேனிலையிலேயே தென்பக்கச் சுவரில் நீர்த்தொட்டி அமைக்கப்பட்டு இருப்பதுபோல் வேறு எங்கும் காணமுடியாது.
இங்குள்ள இலிங்கத்தின் அளவிற்கேற்பக் கோயில் விமானம் அமைக்கப்பட்டுள்ளது. விமானத்தின் உட்புற அழகை இரண்டாம் தளத்திலிருந்து கண்டு களிக்கலாம். விமானத்தின் அளவு சிறுக, சிறுகக் குறைந்து மேலே செல்லும் எழிலைக் காணும்போது சோழர் கட்டக் கலையின் மாட்சியை வியக்காமல் இருக்க
(plg. LLITġjl.
இக்கருவறையில் உட்சுவர், புறச்சுவர் ஆகிய இரு சுவர்களின் மேல் விண்துஞ்சு விமானம் எழுப்பப்பட்டுள்ளது.
இந்துக்கலைக்களஞ்சியம்

Page 71
தஞ்சைப் பெருங்கோய
இடைப்பகுதியில்தான் சோழர் கால வண்ண ஒவியங்கள் இடம் பெற்றுள்ளன.
விமான வடிவமைப்பு
திராவிடக் கட்டடக் கலையின் இலக்கணமாக விளங்கும் இவ்விமானத்தின் வடிவமைப்பு குறிப்பிடத்தக்கது. இவ்விமானம் பரந்து விரிந்த பரப்பில் துணைப்பீடம் முதல் சிகரம் வரை கம்பீரமான கற்றளியாக எழும்பியுள்ளது. இவ்விமானம் அதிட்டானம், சுவர், கூரை, கீரவம், சிகரம், தூபி என்ற ஆறு அங்கங்களைப் பெற்றுத் திகழ்கிறது.
துணைப்பீடம்
இதன் துணைப்பீடம் உபானம், கண்டம், கபோதம், வியாளம் என்ற வரிகளைப் பெற்றுத் திகழ்கிறது. உயர்ந்து விளங்கும் இவ்வுபானத்தின் கண்டப்பகுதி செங்குத்தான பல அடுக்குகளைப் பெற்றுத் திகழ்கிறது. கட்டடத்தின் உயரத்தை அதிகப்படுத்துவதற்கும் அழகு அளிப்பதற்கும் இவ்விதம் அமைப்பர்.
அதிட்டானம்
துணைப்பீடம் என்னும் துணைத்தளத்தின் மேல்
உள்ளடங்கிய நிலையில் அதிட்டானம் அமைந்துள்ளது. இது
பிரதிபந்த அதிட்டான வகையைச் சார்ந்தது. அதிட்டானத்தின்
இந்துக்கலைக்களஞ்சியம்
 

பில்-முன்புறத் தோற்றம்
அங்கமான உபானம், ஜகதி, யாளி, குமுதம் ஆகிய நான்கு வரிகளைப் பெற்றுள்ளது. ஒவ்வொரு வரியும் பல சிற்றுறுப்புகளைக் கொண்டு திகழ்கிறது. யாளிவரியின் திருப்பு முனைகளில் மகரக் கட்டு அமைய அம்மகரங்களின் வாயில் இரு வீரர்கள் ஆயுதங்களோடு தோன்றும் காட்சியும், இரு யாளியின் மீது சவாரி செய்யும் உருவங்களும் காட்டப்பட்டுள்ளன. இக்கோயில் அதிட்டானம் உறுப்பு மாற்றம் இன்றி எளிய அதிட்டானமாக அமையப்பெற்றுள்ளது. அதிட்டானமானது முன்னும் பின்னும் பத்தி பிரிப்பாகக் காட்டப்பட்டுள்ளது. இது கட்டடக்கலையின் எழிலைக் கூட்டுகிறது. இவ்வகை அமைப்பினைச் சிறீகரம் என்பர்.
பாதச்சுவர்
அதிட்டானத்தின் மேல் காணப்படும் பாதச்சுவர் வேதிகை, தேவகோட்டம், தூண்கள், கும்பபஞ்சரம், மகரதோரணம் மற்றும் வாயிற் காவலர் போன்ற சிற்பங்களையும் கொண்டு அழகுற எழுப்பப்பட்டுள்ளது. இப்பாதச்சுவரின் மையப்பகுதியில் வழக்கமாகத் தேவ கோட்டங்களும் அதற்கு உரிய தெய்வவடிவங்களும் அமைக்கப்பெறும். இங்கு துவார பாலகர்களுடன் கூடிய வாயில் காணப்படுவது தனிச்சிறப்பாகும். மேலும் இங்கு இராசராசன் காலக் கட்டடக்கலையை அடையாளம் காணச் சில ஆதாரங்களைக் காணமுடிகிறது. எடுத்துக்காட்டாகச் சுவரில் அமைந்த கர்ணகூடு பத்தியிலும்
39

Page 72
பஞ்சர பத்தியிலும் சட்டத்தலையுடன் கூடிய தூண்களைக் கொண்ட தேவகோட்டங்களை அமைத்து அதன் நடுவே நடராசன் காலசம்ஹாரர் போன்ற தெய்வ உருவங்களைப் பெரிய அளவில் அமைத்துள்ளமை இக்காலக் கட்டடக்கலையின் ஒர் அம்சமாகும். அவ்வாறு சுவரில் அமையும் கர்ணக்கூடு பத்திக்கும், பஞ்சர பத்திக்கும் இடையே உள்ள அகாரைப் பத்தியில் வேலைப்பாடு மிக்க கும்பபஞ்சரம் இடம் பெற்றுள்ளதையும், இப்பஞ்சரங்களின் இரு பக்கங்களிலும் சிற்றுருவச் சிற்பத் தொகுதிகள் இடம் பெற்றுள்ளமையும் இக்காலக் கட்டடக்கலையின் ஒரு வளர்ச்சியாகக் கூறலாம். இராசராசனுக்கு முந்திய உத்தமசோழன், பராந்தகன், ஆதித்தன் காலக் கோயில்களில் அகாரைப் பகுதியில் நிஷ்கராந்த பஞ்சரம் இடம் பெற இங்குக் கும்பபஞ்சரத்தின் தோற்றத்தைக் காண இயலுகிறது. இப்பஞ்சரம் வேதிகைப் படையின் மேல் மட்டத்தில் தொடங்கி உத்திரத்தின் கீழ் மட்டம் வரை உயர்ந்து நிற்கிறது. கலசம், கால் என்றவாறு அமைந்து போதிகை மட்டத்தில் இரு குதிரை வீரர்கள் இருபுறமும் காட்டப்பட்டு இதன் மேல் மகரக்கட்டும் பூரிமமும் அலங்கரிக்கக் காண்கிறோம்.
கோமுகி
பொதுவாகக் கோமுகி சுவரின் வடதிசையில் அதிட்டானத்தின் முகசாலைப் பத்தியில் இடம் பெறுவதே மரபாகும். மாறாக இங்கு அகாரைப் பத்தியில் இடம் பெற்றுள்ளது. மேலும் அதிட்டானத்தின் இறுதிப் பகுதியான யாளமட்டத்தில் கோமுகி இடம் பெறுவதும் இக்கோயில் கட்டடக்கலையின் தனிச்சிறப்புகளில் ஒன்றாகக் கருதலாம். கோமுகியின் நாணுதலுக்குக் கீழ், கூடுதலாக நீண்ட நீர்த் தாரையைக் கல்லில் வடிவமைத்து அதனைச் சங்கூதும் பூதகணம் தாங்க அமைத்துள்ளதை இங்கு மட்டுமே காண இயலும்.
தேவ கோட்டம்
பாதச் சுவரில் மையசாலையைத் தவிர பிற பகுதிகளில்
திசைக்கு நான்கு கோட்டங்கள் வீதம் தெற்கு, வடக்கு மேற்கு
ஆகிய திசைகளில் முறையே 12 தேவகோட்டங்கள் அமைந்துள்ளன.
9 ഞ ]്
பாதச்சுவரினை மூடும் வகையில் அமையும் கூரையானது உத்திரம், எழுதகம், கபோதகம், யாளம் என்ற உறுப்புகளைப் பெற்றுள்ளது. உத்திரத்திற்குக் கீழ் இரு போதிகைகளுக்கு இடையே நீண்ட கம்பு போன்ற சிற்றுறுப்பு இடம் பெறுவது இங்குக் குறிப்பிடத்தக்க அம்சமாகும். எழுதக வரியில் பூதகணங்களும், கபோதக வரியில் கீர்த்தி முக நாசிக்கூடுகளும் அதன் மையப்பகுதியில் தெய்வ உருவங்களும் இடம் பெற்றுள்ளன. இங்கு தான் கூடுகளில் தொடர்ச்சியாகத் தெய்வ வடிவங்களில் சிற்பங்களைக் காணமுடிகிறது. கபோதகத்தின் வரம்புகளில் வட்டங்கள் வரிசையாக அமைந்து வனப்பூட்டுகின்றன. கபோதகத்தின் மேல் வீரர்களோடு தோன்றும் யாளி வரிசையைக் காணலாம்.
40
 

தஞ்சைப் பெருங்கோயில்-பின்புறத் தோற்றம்
விமானத்தளங்கள்
விமானத்தின் மூலத் தளமானது ஆதித்தளத்தைப் போன்றே அமைந்துள்ளது. இதன் சுவர்ப்பகுதியில் கர்ணகூடு, முகசாலை மற்றும் பஞ்சரபத்திகளில் முறையே தேவகோட்டங்களை அமைத்து அவை அனைத்திலும் முப்புரம் எரித்த சிவனின் உருவங்களை மீண்டும் மீண்டும் வைத்துள்ளனர். இத்தளத்தில் ஒரு பக்கத்திற்கு 6 உருவம் வீதம் மூன்று திசைகளிலும் 18 உருவங்கள் இடம் பெற்றுள்ளன. ஆதித்தளத்தின் முகசாலையில் துவாரபாலகரின் உருவங்கள் காட்டப்பெற, முதல் தளத்தில் திரிபுரம் எரித்த விரிசடைக் கடவுளின் உருவங்களைக் காண்கிறோம். இங்குள்ள முகசாலை வாயில் முகப்பில் கஜலட்சுமியின் உருவமும் இடம் பெற்றிருப்பது காணத்தக்கது. இங்குள்ள சிலையின் அழகு, கட்டடத்தின் கம்பீரத்தில் இணைந்து மறைந்து தெரியாது நிற்கின்றது. சிற்பங்கள் எல்லாம் கட்டடத்தின் அங்கங்களாகக் காணப்படும். ஆதலின் இராசராசனின் கோயிலைக் காணும்போது கட்டடத்தின் மாபெரும் தோற்றம் தான் நம் கண்முன் நிற்கிறது.
முதல் தளத்தின் கூரையை நாசிக்கூடுகளும் இடையில் அலுங்குகளும் வரம்புகளில் கண்ணாடிச் சட்டமும் அலங்கரிக்கின்றன.
மேல் தளம்
இக்கூரையின் மேல் மட்டத்தில், கர்ணகூடு, பஞ்சரம், சாலை ஆகிய உறுப்புகள் மாறி மாறி இடம் பெற்றுள்ளன. கர்ணக்கூடு மற்றும் பஞ்சர முகப்புகளில் தெய்வச்சிலைகள் அமைய, முகசாலையில் மட்டும் வாயில் அமைக்கப்பட்டுள்ளது. இவ்வாயிலின் இருபுறமும் அரைக்கால்கள் அலங்கரிக்க மேல் மட்டத்தில் கூரை இடம் பெறுகிறது.
இந்துக்கலைக்களஞ்சியம்

Page 73
கர்ணகூடு பத்தியையும் பஞ்சரபத்தியையும் இணைக்கும் அகாரைச் சுவரின் கபோத மேல் மட்டத்தில், அமர்ந்த நிலையில் காளை வாகனம் இடம் பெறுகிறது. இதே போன்று காளை வாகனத்தை இதற்கு மேல் உள்ள தளத்திலும் காணமுடிகிறது. இவ்விதம் முதல் மற்றும் இரண்டாம் தளங்களில் இடம் பெறும் காளை வாகனம் நான்கு திசைகளிலும் திசை நோக்கும் நிலையில் அமைக்கப்பட்டுள்ளதைக் காணமுடிகிறது. இவ்விரு தளங்களைத் தவிர வேறு தளங்களில் இவ்வாகனம் காட்டப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. பொதுவாக விமானத்தின் இறுதித் தளத்தின் மேல் வேதிகை மட்டத்தில் தான் காளை வாகனம் அமைக்கப்படுவது மரபாகும். மாறாகப் பெரிய கோயில் விமானத்தில் மேல் மட்டமின்றி கீழ் முதலிரு தளங்களிலும் இவ்வாகனம் காணப்பெறுவது இக்கோயில் கட்டடக்கலைக்குரிய தனித்தன்மையை எடுத்துக் காட்டுகிறது.
பூத கணம்
இரண்டாம் தளத்தில் முகசாலையின் இருபக்கங்களிலும் இசைக்கருவியைப் பற்றிய நிலையிலும் விஸ்மய முத்திரை காட்டும் நிலையிலுமாகப் பக்கத்திற்கு இரு பூதகணங்கள் வீதம் நான்கு திசைகளிலும் எட்டுப் பூதகணங்கள் மாறுபட்ட நிலையில் இடம் பெறுகின்றன. இதுவும் இக்கோயில் கட்டடக்கலையில் புதிய வரவாக அமைந்து அழகினைக் கூட்டிக் காட்டுகிறது.
பெருநாசி
இவ்விரு பூதகணங்களுக்கு இடையே இடம் பெறும் முகசாலையில் கிரீவக்கோட்டத்தினைத் தென்திசைச் செல்வனின் அமர்ந்த திருக்கோலம் அலங்கரிக்கின்றது. சாலையின் மையத்தில் வேலைப்பாடு மிக்க கீர்த்தி முகப் பெருநாசி பெரிய அளவில் அமைந்து வனப்பூட்டுகிறது. இதனை விமானத்தளத்தின் நாற்புறங்களிலும் காணலாம். இவ்விமானத்தை அலங்கரிக்கும் 13 தளங்களில் இரண்டாம் தளத்தில் மட்டுமே சிற்பச் செறிவு மிக்க இப்பெரு நாசியைக் காண இயலுகின்றது.
பஞ்சரக்கால்
விமானத்தின் முதல் தளத்தில் காட்டப்பட்ட பஞ்சரம் இரண்டாம் தளத்திலும் மூன்றாம் தளத்திலும் காட்டப்படாமல் மாறாக அவ்விடத்தில் சாலை அமைப்பு இடம் பெறுவதும், சாலையின் இருபுறத்திலும் கர்ணகூடுகள் கூடுதலாக அமைத்து அலங்கரிக்கும் அமைப்பினையும் இங்கு மட்டுமே காணமுடிகிறது. இக்கலை மரபு இதற்கு மேலுள்ள தளங்களான 4,6,7,8,9 ஆகிய தளங்களில் பின்பற்றப்படாது. 10,11,12,13 ஆகிய தளங்களில் பின்பற்றப்பட்டுள்ள முறை விமானத்தின் கட்டடக்கலையழகை உயர்த்துகிறது.
விமானத்தளத்தின் உயரத்தை உயர்த்திக் காட்டும் வகையில் ஆங்காங்கே கர்ணக்கூடு மற்றும் பஞ்சரங்களின் கிரீவத்தினை உயர்த்திக் காட்டியுள்ளமை இங்கு காணத்தக்கது.
இவ்வாறு விமானத்தின் தளங்களிலும் உறுப்புகள் மாறி மாறி அமைந்து நீட்டியும் குறைந்தும், அளவோடும் அழகோடும்
இந்துக்கலைக்களஞ்சியம்

அமைந்துள்ள பாங்கு இராசராசேச்சுவரத்துத் தனிச்சிறப்பாகக் கருதலாம், இது கட்டடக்கலையின் மாட்சியை எடுத்துக் காட்டுகிறது.
கிரீவம் (கழுத்து)
13ஆ" தளத்தின் மீது எண்பட்டை வடிவுடைய கிரீவத்தைக் காணமுடிகிறது. கிரீவத்தின் நான்கு திசைகளிலும் அமைந்த மாடங்களில் தெய்வீக உருவங்கள் இடம் பெற்றுள்ளன. வேதிகை மட்டத்தில் நான்கு திசைகளிலும் காளை வாகனம் இடம்பெற்றுள்ளது.
சிகரம்
கிரீவத்தின் மேல் எண்பட்டை வடிவிலான திராவிடச் சிகரத்தைக் காணலாம். சிகரத்தின் நான்கு புறங்களிலும் விசிறியை ஒத்த பெருநாசிகள் வனப்புடன் விரிந்துள்ளன. சிகரத்தைச் சுற்றிலும் அலுங்குகள், தொங்குமாலை, கண்ணாடிச் சட்டம் ஆகிய உறுப்புகள் அமைந்து அழகு செய்கின்றன. சிகரத்தின் மேல் மட்டத்தில், மகாபத்மமும் அதன் நடுவே தூபியும் இடம்பெற்றுள்ளது.
இராசராசன் தனது ஆட்சியைப் போல், ஆற்றலைப்போல்; அழகுக்கலைகளில் கொண்ட ஈடுபாட்டைப் போல் ஓங்கி வானளாவிய விமானத்தை எடுக்க வேண்டும் என்ற பெருவிருப்பத்தோடு இக்கோயிலைப் படைத்துள்ளான்
என்பதற்கு இவ்விமானமே சிறந்த சான்றாக அமைகிறது.
(தே. ஹ)
தஞ்சை மராட்டியர்கள்
பீஜப்பூர் சுல்தானின் ஆதரவுடன் பெங்களூர், ஆரணி, செஞ்சி ஆகிய இடங்களில் சாகீர்களைப் பெற்று அனுபவித்த வீரம் மிக்க மராட்டியப் படைத் தலைவர்கள் தஞ்சை, மதுரை நாயக்கரிடம் ஏற்பட்ட பூசலில் தலையிட்டுச் சந்தர்ப்ப வசத்தால் தஞ்சைப் பகுதிக்கு அரசராக அமர்ந்தனர்.
பிரதாப சிம்மன் - தஞ்சை மூலை அனுமார் கோயில்
1676ஆம் ஆண்டு சாசி போன்சலேயின் இரண்டாம் மகனும், மாவீரர் மராட்டிய சிவாஜியின் பெரியம்மா மகனுமாகிய முதலாம்
4f

Page 74
ஏகோசி தஞ்சையில் மராட்டியர் ஆட்சியை நிறுவினார். 1855 வரை 180 ஆண்டுகள் பதின்மூன்று மராட்டிய அரசர்கள் தஞ்சையில் ஆட்சிபுரிந்தனர். 1855 வரை ஆட்சி புரிந்த தஞ்சை மராட்டிய மன்னர்கள் தொடர்புடைய கல்வெட்டுகளும், செப்பேடுகளும் கோயில்கள், சமாதிகள், சத்திரங்கள், கிறிஸ்தவ தேவாலயங்கள், கல்லறைகள், எல்லைக் கற்கள், பாலங்கள், படித்துறைகள், மண்டபங்கள், ஆபரணங்கள், யாகசாலைகள், அரண்மனை, கோட்டை, மருத்துவமனை போன்ற இடங்களில் கிடைக்கப் பெற்றுள்ளன. இவ் ஆவணங்களின் மூலம் தஞ்சை மராட்டிய அரசர், அரசியர், ஆட்சிமுறை அலுவலர், பிற மராட்டிய மக்கள் தொடர்பான பல செய்திகளை அறியக் கூடியதாக உள்ளது.
முதலாம் ஏகோசி தஞ்சையில் ஆட்சிப் பொறுப்பை ஏற்ற போது தெற்கே சொக்கநாத நாயக்கரின் பகைமையும் வடக்கே மொகலாயரின் அச்சுறுத்தலும் இருந்தன. வேறுவழியின்றி பெங்களூரை சிக்க தேவராயருக்கு மூன்று லட்சம் ரூபாய்க்கு விற்று விட்டுத் தஞ்சையில் முழுக்கவனத்தையும் செலுத்தினர். தம் வலிமையைப் பெருக்க பல மராட்டியர்களை வரவழைத்து முக்கிய பதவிகளைக் கொடுத்தார். வருமானத்தைப் பெருக்க விளைச்சலின் முக்கால் பங்கை வருமானமாகப் பெற்றார். கோயில் நிலங்களின் முழுவிளைச்சலையும் பெற்றுக் கொண்டார். ஏகோசிக்கு மூன்று புதல்வர்கள் ஷாஜி, சரபோஜி, துக்கேஜி ஆகியோர் இருந்தனர். ஏகோசியின் இறுதிக் காலத்திலேயே ஷாஜி (மூத்தமகன்) ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக் கொண்டார்.
ஷாஜி இராமநாதபுரம் சேதுபதியுடன் சேர்ந்து கொண்டு மதுரை நாயக்கருடன் போரிட்டார். இதனால் அறம்தாங்கி, பட்டுக்கோட்டைப் பகுதிகளில் சில சில இடங்களை இனாமாகப் பெற்றார். இவர் காலத்தில் பட்டுக்கோட்டையில் பெரிய கற்கோட்டை கட்டப்பட்டது. பல இடங்களில் ஊர்கள் ஏற்படுத்திப் புதிதாக மக்கள் குடியேற்றப்பட்டனர்.
ஷாஜி 1712 இல் காலமானதால் அவரைப் பின்பற்றி அவரது சகோதரர் சரபோஜி ஆட்சிக்கு வந்தார். இவரது காலத்தில் வணிகர்களுக்கு வணிக இடங்கள் ஒதுக்கப்பட்டது. உயர் அலுவலர்கள் நாடு முழுவதும் சுற்றி வந்தனர். கோயிலுக்குக் கொடுக்கப்படவேண்டிய வரிகள் நிர்ணயம் செய்ப்பட்டன. அழிவு நிலையில் இருந்த திருவாரூர்க் கோயில் புதுப்பிக்கப்பட்டது. பல கோயில்களுக்கு மன்னரே நேரிற் சென்று கொடைகள் கொடுத்தார். தஞ்சைப் பெரிய கோயில் குடமுழுக்கு விழா இவர் காலத்தில் நடைபெற்றது.
சரபோஜியைப் பின்பற்றி அவரது புதல்வர் துக்கோஜி ஆட்சியில் அமர்ந்தார். மகாதேவப் பட்டணத்தில் மிகப் பெரிய கோட்டை கட்டி வாழ்ந்து வந்தார். மிகப் பெரிய பக்தராகவும், இசை மேதையாகவும் வைத்திய நிபுணராகவும் திகழ்ந்தார். இவருடைய காலத்தில் பல கோயில்கள் திருப்பணி செய்யப்பட்டது.
துக்கோஜியைத் தொடர்ந்து ஆட்சிப் பொறுப்பேற்ற பிரதாப் சிங் காலத்தில் வலங்கை, இடங்கை சாதித் தகராறுகள்
42
 

சுமூகமாகத் தீர்த்து வைக்கப்பட்டது. பல கோயில்கட்கு கொடைகள் அளிக்கப்பட்டன. கோயிற் கொடை நிலங்கள் அதிகாரிகளாலும், பொது மக்களாலும் அளந்து பார்த்துச் சரிபார்க்கப்பட்டது.
1763 இல் பிரதாப் சிங்கின் ஆட்சி முடிவடைய துளர்சா தஞ்சையின் ஆட்சிப் பொறுப்பை ஏற்றார். இவரது காலத்தில் சமூக மேம்பாட்டிற்காகப் U6) கைங்கரியங்கள் மேற்கொள்ளப்பட்டது. திருப்பூந்துருத்திப் பகுதியில் குடமுருட்டியாறு சரியாகப் பாசனத்திற்குப் பயன்படுத்தாததால் புது ஆறு வெட்டப்பட்டது. இவரது உறவினர்கள் பலர் உயர் அதிகாரிகளாக நியமிக்கப்பட்டனர். இவரது காலத்தில் பல கோயில்கள் திருப்பணிக்குட்படுத்தப்பட்டன. தருமபுர ஆதீனத்துடன் இவர் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தார். இவரது காலத்தில்தான் இடிந்த பிற கோயில்களின் கற்களைக் கொண்டு தஞ்சை நகரம் மேலவிதி பங்காரு காமாட்சியம்மன் கோயில் புதிதாகக் கட்டப்பட்டது. மேலும் வழிபாடுகள் நின்றிருந்த கோயில்கட்கு இவரது உயர் அதிகாரிகள் சென்று வழிபாடுகள் தொடர்ந்து நடைபெறுவதற்கு ஒழுங்குகள் செய்தனர்.
துளர்சாவின் வளர்ப்புமகனான இரண்டாம் சரபோஜிக்கு பாதுகாவலாளராக நியமிக்கப்பட்ட அமர்சிங் பின்னர் ஆட்சியைக் கைப்பற்றிக் கொண்டார் என்பர். இவர் பிரதாப் சிங்கின் பட்டத்து இராணியின் புதல்வர் அல்லர். கத்தி கட்டி மணம் செய்து கொண்ட மனைவியின் புதல்வர். சுதந்திர தன்னாட்சி வேட்கை கொண்ட இவர் ஆங்கிலேயர்களைத் தஞ்சையில் இருந்து விரட்ட விரும்பினார். அதனால் வெள்ளையர்களால் பலவாறு துன்புறுத்தப்பட்டார். ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பனியாரும் இவர் மீது பல குற்றச் சாட்டுகளைத் தெரிவித்து பதவி நீக்கம் செய்து இரண்டாம் சரபோஜி மன்னனை ஆட்சியில் அமர்த்தினர்.
அமர்சிங்கின் ஆட்சி முடிவுக்கு வந்ததும் ஆட்சிப் பொறுப்பை ஏற்ற இரண்டாம் சரபோஜி தஞ்சை மராட்டியரின் பெயர் நின்று நிலைக்கத் தக்க வண்ணம் பல கைங்கரியங்களைச் செய்தார். தஞ்சை அரண்மனையில் பழைய பகுதிகள் பழுதுபார்க்கப்பட்டு புதிய பகுதிகள் இணைக்கப்பட்டது. இவரது காலத்தில் தஞ்சையில் பல கோயில்களில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டது. விட்டோபா கோயில் புதிதாகக் கட்டப்பட்டு பாண்டு ரங்கர் வழிபாடும், மராட்டிய பக்தி மரபும் பெருகுமாறு செய்தார். காசி யாத்திரை மேற்கொண்ட பின் தஞ்சையில் காசி விசுவநாதர் கோயில், மணிகர்ணிகேசுவரர் கோயில்களைக் கட்டினார். சைவ வைணவ வேறுபாடு இன்றி ஆலயத் திருப்பணி செய்தார்.
நர்த்தன மண்டபம் கோயில்களில் அமைப்பது இவருக்கு மிக விருப்பமான செயல். இவர் மட்டுமல்ல இவரது சகோதரியும் அரண்மனைப் பெண்கள் பலரும் கோயில்களைப் புதிதாகக் கட்டிச் சத்திரங்களையும், அக்கிரகாரங்களையும் உண்டாக்கினர். திருவையாற்றில் காவிரி வடகரையில் கல்யாண மகால் என்னும்
இந்துக்கலைக்களஞ்சியம்

Page 75
மிகப் பெரிய மாளிகையை உருவாக்கினார். தஞ்சைப் பெரிய கோயிலில் தளவரிசை அமைத்து சுற்று மண்டபங்களைப் பழுதுபார்த்து, விநாயகர் கோயில் கட்டி தூர்ந்து போயிருந்த மண்டூகத் தீர்த்தத்தை அழகிய கிணறாகக் கட்டிக் கோயிலின் பல பகுதிகளில் மிகப் பெரிய திருப்பணிகளைச் செய்தார். எண்ணற்ற அணிகலன்களையும், பாத்திரங்களையும், வாகனங்களையும் பெருவுடையாருக்கு அளித்தார்.
இரண்டாம் சரபோஜி மன்னனால் மேற்கொள்ளப்பட்ட மிகச் சிறப்பான பணி தஞ்சை மராட்டிய மரபின் பழைய வரலாற்றையும், 1803ஆம் ஆண்டு வரை தஞ்சையில் நடைபெற்ற நிகழ்ச்சிகளையும் ஆண்டு, தேதி வாரியாகச் சான்றுகளுடன் எழுதி அதைத் தஞ்சைப் பெரிய கோயில் தெற்குச் சுவர் முழுவதுமாக வெட்டச் செய்தார். மிகப் பெரிய அக் கல்வெட்டு இன்று மராட்டியர் வரலாற்றைத் தொகுப்பதற்கும் ஆய்வதற்கும் நிலைக்களனாக உள்ளது. சுவாட்சு பாதிரியாரால் வளர்க்கப்பட்ட இம் மன்னன் சிறந்த ஆங்கிலப் புலமை கொண்டவனாகத் திகழ்ந்தான். தனது உருவத்தையும் பாதிரியாரின் உருவத்தையும் உலகின் தலைசிறந்த சிற்பிகளில் ஒருவரான பிளாச்சு மேனைக் கொண்டு வெண் பளிங்குக் கற்களில் வடிக்குமாறு செய்தான். இன்றும் அச் சிற்பங்கள் காண்பவர்கள் கண்ணையும் கருத்தையும் கவர்வனவாக உள்ளன.
காஞ்சி சங்கராச்சாரிய சுவாமிகளுடன் நெருங்கிய தொடர்புடையவராக இருந்தார். அவர்களின் வழிபடு கடவுளாகிய சந்திர மெளலீசர் கோயிலைக் கும்பகோணம் சங்கர மடத்தில் கட்டினார். நாட்டின் பல்வேறு பகுதிகளில் கற்றறிந்த அந்தணர்களைக் கொண்டு யாகங்கள் பல செய்தார். ஓய்வுபெற்றுத் தஞ்சை அரண்மனையில் வசித்து வந்த சரபோஜி, சுவார்ட்ஸ் பாதிரியாரின் அரவணைப்பில் வாழ்ந்ததால் நற்குணங்கள் பல அவரிடம் காணப்பட்டன. ஆடம்பர மன நாட்டமின்றி அறிவை வளர்ப்பதில் ஆர்வமாக இருந்தார். பல துறைகளில் அவர் நாட்டம் சென்றது. பழைய ஆவணங்களையும், புத்தகங்களையும் திரட்டினார். கிட்டியவற்றைச் சரசுவதி மகால் நூலகத்தில் சேர்ப்பித்தார். வேதாந்தம், காவியம், இசை, இலக்கியம், நடனம், கட்டடக்கலை, வானஇயல், மருத்துவம் முதலிய பல் துறைகளைச் சார்ந்த 2200 சுவடிக்கு மேல் அங்கே குவிந்தன. நாயக்கர் காலத்திலும், மராட்டியர் காலத்திலும் இயற்றப்பட்ட ஒலைச் சுவடிகளைப் பெற்றிருந்த சரஸ்வதி மகால் ஒரு பல்துறை ஆய்வுக் கூடமாக விளங்கியது. இம் மன்னன் மருத்துவத் துறையில் அதிக கவனம் செலுத்தியதால் தற்காலத்திலும் சரபோஜி மன்னன் கால மருத்துவ நூல்கள் கிடைக்கக் கூடியதாக உள்ளது. இந்துக்கள், கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர் ஆகியோர் உயர் கல்வியுடன் ஆய்வு நடத்தும் கல்வி நிலையம் இயங்கியது.
கி. பி. 1826இல் ஈபர் பாதிரியாருடன் சரசுவதி மகாலைப் பார்வையிட்ட ரொபின்சன் அந்த ஆய்வுக் கூடத்தைப் பற்றி
விபரித்துள்ளார்.சரசுவதி மகால் மேனாட்டு முறையில்
இந்துக்கலைக்களஞ்சியம்

ஒழுங்குபடுத்தப்பட்டிருந்தது. அழகிய நூலகத்தின் மூன்று வரிசையாகத் தூண்கள் காணப்பட்டன. ஒரு புறத்தில் சாஜி முதல் சிவாஜி வரையிலும் உள்ள மராட்டிய மன்னர்களின் உருவப்படங்கள் ஆங்கிலம், பிரெஞ்சு, ஜேர்மன், கிரேக்கம், இலத்தீன் ஆகிய மொழிகளாலான நூல்களைக் கொண்ட 10 அலுமாரிகள், மராட்டிய சமஸ்கிருதச் சுவடிகளைக் கொண்ட இரண்டு அலுமாரிகள் ஆகியவற்றை ரொபின்சன் விபரித்துள்ளார். மேலும் சரபோஜி மன்னன் மிகுந்த ஆர்வத்துடன் விரும்பிப் படித்துச் சேகரித்த மருத்துவ நூல்களைத் தாங்கிய பல அலுமாரிகளைக் குறிப்பிட்டுள்ளார். சேர்த்து வைக்கப்பட்ட நாணயங்கள், ஓவியப் பூக்கள், உயிரியல் சம்பந்தமான ஒவியங்கள் முதலியனவும் இடம் பெற்றிருந்ததாகக் குறிப்பிட்டுள்ளார். தஞ்சை சரசுவதி மகால் சரபோஜி மன்னனின் சாதனைக்கு ஒரு விளக்கமாகும். அது அம் மன்னனுக்கு இறவாப் புகழைத் தந்துள்ளது.
சரபோஜின் ஒரே மகன் சிவாஜி, ஈபர் பாதிரியாரைக் காப்பாளராகப் பெற்றிருந்தார். தாயாரின் செல்லப் பிள்ளையான அவர் தன் வழியில் சென்றார். உயர் கல்வியும் பெறவில்லை. இவருக்கு தஞ்சையில் இருந்த ஆங்கிலப் பாதிரிமாருடன் நெருங்கிய தொடர்பிருந்தது. ஜி. யு. போப் தஞ்சையில் எட்டாண்டுகள் இருந்தபோது அவருக்குப் பல உதவிகளைச் செய்தார். இவர் காலத்தில் தஞ்சைப் பெரிய கோயில் குடமுழுக்கு விழாப் பெற்றது. இவருக்கு ஆண் வாரிசு இல்லாததால் டெல்கவுசிப் பிரபு தஞ்சை மராட்டிய அரசுக்கு முடிவு கட்டினார். 1856 தஞ்சை ஆங்கிலேயரின் ஆட்சிக்கு வந்தது. மராட்டிய அரசிகளும் எண்ணற்ற கோயிற் திருப்பணிகள் செய்துள்ளனர். சத்திரங்கள் கட்டி, அருகில் கோயில்களையும், அக்கிரகாரங்களையும் ஏற்படுத்தி அங்கு பல அறச்செயல்கள் நடைபெறுமாறு செய்துள்ளனர். நற்பணிகள் புரிந்த தஞ்சை மராட்டிய அரசியருள் தலைசிறந்து நிற்பவர் கடைசி அரசர் சிவாஜியின் மனைவியார் காமாட்சியம்பாபாயி ஆவார்.
மாரியம்மன் கோயில், தஞ்சைபுரீஸ்வரர் கோயில், மேலவிதி காசி
விசுவநாதர் கோயில் ஆகிய சைவக் கோயில்களிலும், வரதராஜப் பெருமாள் கோயில், மணிக்குன்றப் பெருமாள் கோயில், கலியாண வெங்கடேசர் கோயில், இராசகோபால் சுவாமி கோயில், புன்னை நல்லூர் கோதண்டராமன் கோயில் ஆகிய வைணவக் கோயில்களிலும் பல்வேறு திருப்பணிகள் செய்து அறக் கொடைகள் பலவற்றை அளித்துள்ளார்.
நாட்டை ஐந்து சுபாக்களாகப் பிரித்தனர். ஒவ்வொன்றும் அதிகாரம் அதிகம் பெற்ற சுபேதாரின் கீழ் இருந்தது. ஒவ்வொரு சுபாவும் பல சீமைகளாகப் பிரிக்கப்பட்டு சீமைகள் மாகாணங்களாகப் பிரிக்கப்பட்டன. அரசவையில் இருந்த அறிஞர்கள் உயர் வகுப்பினராகவே இருந்தனர். பிரதானி,
வரிவசூல் செய்யும் அதிகாரி, கீழ்நாட்டுக் கணக்கு என்ற
துணைக் கணக்கர்கள், புரோகிதர், தலைமை நீதிபதி போன்றவை உயர் அரச பதவிகளாகக் கணிக்கப்பட்டது. மராட்டியர் தஞ்சையை ஆண்டபோது தக்கணத்தில் இருந்து பல குடியேற்றங்கள்
43

Page 76
நடைபெற்றன. மன்னர்கள் பல பெண்களைத் திருமணம் செய் போகவாழ்க்கையில் ஈடுபட்டனர்.
நில வருமானமே முக்கிய வருமானமாக இருந்தது. வ வசூலில் ஊழல் மலிந்திருந்தது. வெள்ளத்தாலும், பஞ்சத்தாலு மக்கள் வாடிய போதிலும் ஐந்தில் நான்கு பகுதியை பெற்று கொள்ளத் தவறவில்லை. நெல், கரும்பு, பயறு, உளுந்து, மிள என்பன முக்கிய விளைபொருள்கள். மிளகு, நெல், வாசனை பொருள்கள், துணிகள் ஏற்றுமதி செய்யப்பட்டன.
மராட்டிய மன்னர்கள் இந்து சமய வளர்ச்சிக்கு பெரிது ஊக்கம் கொடுத்தனர். இந்துக்கள் வசிக்கும் தெருக்களிலு இந்துக் கோயில்களுக்கு அருகிலும் கிறிஸ்தவர்கள் தங் அனுமதி இருக்கவில்லை. சாதிக் கொடுமை அதிகம் இருந்தது தாழ்ந்த சாதியினர் தீண்டத்தகாதவர் என்று சமுதாயத்தில் குை இருந்தது. இக் குறை ஆலய வழிபாட்டையும் பாதித்தது. இதனா கிறிஸ்தவம் வளர்ச்சியுற்றது. ஸ்வர்ட்ஸ் பாதிரியாரும் சரபோஜி மன்னனும் நெருங்கிய நண்பர்கள். இப் பாதிரியார் அமைத் ஜெர்மனிய சங்கம் தஞ்சையில் கிறிஸ்தவம் வளர ஆதாரமா இருந்தது. எனினும் சரபோஜி மன்னன் மதம் மாறாமல் இருக் ஆரம்பத்திலேயே பிராமணர்கள் கிறிஸ்தவத்தைச் சாடின கிறிஸ்தவர்கள் சாதியின் பெயரைக் கூறிக் கொண்( பிராமணர்களை அடக்க முற்பட்டனர். அத்துடன் போர்த்துக்கீசி சங்கத்தவர் தம்மை உரோமானிய பிராமணர்கள் என்று கூறிக்கொண்டனர். 1706இல் டென்மார்க்கில் இருந்: கிறிஸ்தவ சமயத்தைப் பரப்ப பெருங்குழு வந்தது. நான்கா பிரடெரிக் அனுப்பிய இக் புரட்டஸ்தாந்து மதம் வள வழிவகுத்தது. கிறிஸ்தவர்களுக்கும், பிராமணர்களுக்கும் ஏற்பட் பெரும் பூசலால் மன்னனே தலையிட்டு கிறிஸ்தவர்களை நா( கடத்திய சந்தர்ப்பமும் இடம் பெற்றது.
மராட்டியர் காலத்தில் வடமொழி வளர்ச்சி பெற்றது. ஷாஜி மன்னன் காலத்தில் கற்றறிந்தவர்கள் போற்றப்பட்டனர். பூலோ தேவேந்திர விலாசம், அதிரூபாவதி கல்யாணம், சங்கர நாராயண கல்யாணம், சந்திரஹாச விலாச நாடகம், விஷ்ணு சகரா விலாசம், குறவஞ்சி ஆகிய நாடகங்கள் ஷாஜியை அரசிகள் காதல் வயப்படுத்திய முறையைக் கூறுகின்றன. ஷாஜி அரசவையிலிருந்த வெங்கடேச கிருஷ்ண தீட்சிதர் என்பவ நடேச விஜயம், பூரீ ராமச்சந்திரோதய காவியம், உத்தர சாம்! குசலவ விஜய நாடகம் ஆகியவற்றை எழுதினார். திருவா நல்லூரில் சகஜிராஜபுரம் பன்மொழி பேசுவோர் இடமாக திகழ்ந்தது. இங்கு 46 புலவர்கள் இருந்தனர். இவர்களி ராமபத்திரர் சிறந்த இலக்கண வல்லுநராகத் திகழ்ந்தார்.
இரண்டாம் சரபோஜி மன்னன் காலத்தில் மருத்து வசதிக்கென தன்வந்திரி மஹால் கட்டப்பட்டது. சரபேந்தி வைத்திய முறைகள் என்ற மருத்துவசாலை ஒன்றை ஏற்படுத் அங்கு மருத்துவம், சிற்பம், வானநூல், இசை போன்றவற்றோ( பாரசீகம், அராபி, வடமொழி, மராத்தி, ஆங்கிலம், ஹிந்தி ஆகி மொழிகள் போதிக்கப்படுவதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டது.
44
 

趾
B
LU
தஞ்சையில் மராட்டியரின் ஆட்சிக்காலத்தில் தான் தஞ்சைப் பெரிய கோயிலில் உள்ள கணேச கோயிலின் அர்த்த மண்டபம், மகா மண்டபம், கர்ப்பக்கிருகம் ஆகியன சரபோஜியினால் நிர்மாணிக்கப்பட்டது. தஞ்சை அரண்மனையிலும் சரஸ்வதி மஹாலிலும் ஒவியங்கள் தீட்டப்பட்டன. இராமாயணக் கதையில் வரும் காட்சிகள் பலவும் ஒவியங்களாகத் தீட்டப்பட்டன. கிருஷ்ணனின் சிறு குழந்தைப் பருவமும், பாமா, ருக்மணியுடன் கிருஷ்ணன் இருப்பதும் ஓவியமாக வரையப்பட்டுள்ளது. பெண்களின் முகம், அவர்கள் அணிந்துள்ள உடையின் அமைப்பு, ஆண்களின் ஆடைகள் என்பவற்றில் தமிழ்ப் பண்பாடு அதிகம் தெரியவில்லை.
தமிழ்ப் பண்பாட்டு வளர்ச்சியின் மையமாக விளங்கிய தஞ்சை, கர்நாடக இசையின் களஞ்சியமாக மிளிர்ந்தது. பதினெட்டு பத்தொன்பதாம் நூற்றாண்டுகளில் பல்வகை இசைக் கவிஞர்கள் கர்நாடக இசையில் சிறந்து விளங்கினர். தியாகராஜர், முத்துசாமி தீட்சிதர், ஷியாமா சாஸ்திரி என்ற முப்பெரும் இசைக் கலைஞர்கள் இசை உலகில் புதுமை படைத்தனர். (நி நி)
தஞ்சை மாமணிக்கோயில்
தஞ்சை பழமையான விஷ்ணு ஆலயங்களைக் கொண்டு ஆழ்வார்கள் இருவரால் பாடப் பெற்ற பெருமையுள்ள தலம். தஞ்சை இரயில் நிலையத்திலிருந்து நான்கு கிலோ மீற்றர் தூரத்தில் இத்தலம் உள்ளது. விண்ணாற்றங்கரையில் உள்ள மூன்று கோயில்கள் ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப் பெற்ற திவ்விய தேசமாக விளங்குகின்றன. பூதத்தாழ்வார், நம்மாழ்வார், திருமங்கையாழ்வார் - மூவரும் இத்தலத்திற் கோயில் கொண்டுள்ளன்ர்.
தமருள்ளம் தஞ்சை தலையரங்கம் தண்கால் தமருள்ளுந் தண்பொருப்பு வேலை தமருள்ளும் மாமல்லை கோவல் மதிட்குடந்தை யென்பரே ஏவல்ல வெந்தைக் கிடம்
என்பது பூதத்தாழ்வார் பாடல். அந்தாதிப் பாடல் இறைவன் ஆச்ரிதர்கள் (நாடியவர்கள்) இதயத்திலும் தஞ்சை முதலான திருப்பதிகளிலும் சந்நிதி பண்ணி எழுந்தருளியிருக்கிறான் என்பது பாட்டின் கருத்து. எல்லாத் தலங்களுக்கும் முற்பட்ட தஞ்சையை வைத்துக் கூறுவதால் இத்தலத்தின் சிறப்பு விளங்கும். பூதத்தாழ்வாரின் காலம் கி. பி. ஆறாம் நூற் றாண்டிற்கும் கி. பி. ஏழாம் நூற்றாண்டிற்கும் இடைப்பட்டதாகும். இவர் காலத்திற்கு முன்னரே இத்தலம் சிறப்புற்றிருந்தமை இதனால் விளங்குவதாகும்.
கி. பி. எட்டாம் நூற்றாண்டு முழுவதும் வாழ்ந்திருந்த திருமங்கை மன்னன் பெரிய திருமொழியின் தொடக்கத்தில் திருமந்திரப் பக்கத்தில் இத்திருப்பதியைக் குறித்துள்ளமையும் இத்தலச் சிறப்பிற்குச் சான்று பகர்வதாய் உள்ளது.
இந்துக்கலைக்களஞ்சியம்

Page 77
அம்பினால் அரக்கர் வெருக்கொள நெருக்கி
அவருயிர் செகுத்த எம் அண்ணல் வம்புலாஞ் சோலை மாமதிள் தஞ்சை
மாமனிக் கோயிலே வனங்கி நம்பிகாள் உய்யநான் கண்டு கொண்டேன்
நாராயணா வென்னும் நாமம்
(பெரியதிருமொழி 1-7-6)
தஞ்சை மாநகரத்தை பராசரசேதிதிரம் என்று புராணங்கள் பெருமையாகப் பேசுகின்றன. ஆதிகாலத்தில் இது குபேரனியால் தஞ்சையாளி நகர், தஞ்சை மாமணிக்கோயில் என்று ஆழ்வார்களால் சிறப்பாகப் பேசப்பட்டது. திருமால் தஞ்சகன் என்ற அசுரனைக் கொன்று, அவனது வேண்டுகோளின்படி இந்நகருக்குத் தஞ்சாவூர் என்று பெயர் ஏற்படும்படி அனுக்கிரகித்துள்ளார் என்று தல புராணம் கூறுகிறது.
தல புராணம் இத்தலத்தில் பராசர முனிவர் தவம் புரிந்துவந்தார். இதற்கு இடையூறு விளைவிக்க அரக்கர்களான தண்டகன், தாரகன், தஞ்சகன் என்ற மூவரும் முற்பட்டனர். பராசரரின் தவ வலிமையால் அவர்களைத் தடுத்து நிறுத்த முடியவில்லை. அதற்கு ஒரு காரணமும் இருந்தது.
பராசரர் அருகிலிருந்த திருக்குளத்தில் அமிர்தத்தைக் கலந்துவிட்டு அதன் வாடையில் கடும் தவமியற்ற அமர்ந்தார். அந்நீரைப் பருகியவர்கள் அழிக்கமுடியாத பலம் பெற்று வாழ்ந்தார்கள். இந்த இரகசியம் அரக்கர்களுக்குத் தெரிந்து அவர்கள் இந்நீரைப் பருகியமையால் எல்லையற்ற வலிமை பெற்று பராசரரையே திணற அடித்தார்கள். மக்களையும் துன்புறுத்தினார்கள்.
பராசரர் சிவபெருமானிடம் சென்று முறையிட்டார். பரமன் காளியை அனுப்பி வைத்தார். அரக்கர்கள் அமிர்தம் உண்டு. பலம் பெற்ற அவர்களை காளியால் வெல்ல முடியவில்லை. பின்னர் பராசரர் மகாவிஷ்ணுவிடம் தஞ்சம் அடைந்தார். திருமால் கார்முகிலாய்த் தோற்றம் கொண்டு அமிர்தபுஷ்கரணியின் நீரைப் பருகி விட்டார். நீர் அடியோடி வற்றி விட்டதால் அரக்கர்களால் அமிர்தத்தைப் பருக முடியவில்லை.
தனது சாரங்க வில்லினால் அசுரப்படையை நிர்மூல மாக்கினார் பகவான். தஞ்சன் யானையுருக் கொண்டு அவரை எதிர்த்து வந்தான். விஷ்ணு நரசிங்க உருவெடுத்து அவனைக் கொல்ல முயன்றபோது அவன் மீண்டும் மானுட வடிவம் பெற்று எதிர்க்க வந்தான். பகவான் அவனைத் தன் மடியிற் கிடத்தி மார்பைப் பிளந்தார். அப்போது அவன் பகவானிடம் இரண்டு வரங்கள் வேண்டினான். தன் பெயரால் அந்நகர் வழங்க வேண்டுமென்றும், தன்னைக் கொல்ல வந்த நரசிங்க கோலத்திலே பகவான் அங்கே எழுந்தருளியிருந்து பக்தர்களுக்கு அனுக்கிரகம் புரிய வேண்டுமென்றும் வேண்டிக் கொண்டான். அதன்படி திருமால் அந்நகருக்கு தஞ்சாபுரியென்று பெயரிட்டு அங்கே நரசிங்க வடிவிலே எழுந்தருளியிருந்தார். இது தஞ்சை பற்றிய புராண வரலாறு. தஞ்சகன் கொல்லப்பட்டதை அறிந்து தண்டகன் பூமிக்குள் ஒடி ஒழிந்து கொண்டான். பகவான் பன்றி
இந்துக்கலைக்களஞ்சியம்

வடிவங் கொண்டு பூமியைக் கீறிச் சென்று அவனைப் பற்றிக் கொன்றார். அவன் விருப்பப்படி வராகரூபியாய் எழுந்தருளியிருந்தார். மூன்றாமவனான தாரகனைக் காளிதேவி சம்சாரம் செய்தாள்.
பராசர முனிவர் இத்தலத்திலேயே சித்தி பெற்றார். புராண ரத்னம் என்று பூரீ ஆளவந்தார் போற்றிய விஷ்ணு புராணத்தின் ஆசிரியர் பராசரர். தஞ்சை மாமணிக்கோயில் மூலவரான நீலமேகப் பெருமாள் வீற்றிருந்த கோலத்தில் கிழக்கு நோக்கிச் சேவை தருகின்றார். இத்தலத்துத் தாயார் செங்கமலவல்லித் தாயார். கருவறையில் மூலவர் பூரீதேவி, பூதேவியுடன் காட்சியளிக் கின்றார். இக்கோயிலில் லட்சுமி நரசிம்மர், லட்சுமி ஹயக்ரீவரும் காணப்படுகின்றனர். மண்டபத்தூணில் பூரீ யோக நரசிம்மர், பூரீ ஆஞ்சநேயர் சிற்பங்கள் காணப்படுகின்றன. திருமங்கையாழ்வார், நம்மாழ்வார், உருவச் சிலைகளும் உள்ளன. இக்கோயிலில் பூரீ நீலமேகப் பெருமாள் பூரீலட்சுமி சமேதராய் கருட சேவை சாதிப்பது ஒரு சிறப்பான நிகழ்ச்சியாகும். சாதாரணமாக மற்ற எல்லாத் தலங்களிலும் பன்னிரண்டு கருட சேவை உண்டு. இங்கு வைகாசி திருவோணத்தன்று பதினெட்டு கருட சேவை நடைபெறுவது கண் கொள்ளாக் காட்சியாகும். இக்கோயிலின் புஷ்கரணிகளாக உள்ளவை அமிர்ததீர்த்தம், கன்னிள புஷ்கரணி, வெண்ணாறு ஆகியவை ஆகும். இக்கோயிலின் விமானம் செளந்தர்ய விமானம் ஆகும்.
தஞ்சை மணி குன்றப் பெருமாள் கோயில் மூலவரான மணிக்குன்றப் பெருமாள் வீற்றிருந்த கோலத்துடன் கிழக்கு நோக்கிச் சேவை தருகின்றார். மார்க்கண்டேய மகரிஷிக்கு இவர் பிரத்தியட்சம் ஆனவர். இத்தலத்துத் தாயார் அம்புஜவல்லி ஆவார். இங்குள்ள தீர்த்தம் இராமதீர்த்தம் ஆகும். இக்கோயில் கோபுரத்தின் விமானம் மணிக்கூட விமான அம்சம் ஆகும்.
தஞ்சை யாழிநகர் கோயில் மூலவர் நரசிம்மர் ஆவார். வீற்றிருந்த கோலத்துடன் கிழக்கு நோக்கி காட்சி தருகின்றார். தாயார் தஞ்சை நாயகி ஆவார். இங்குள்ள தீர்த்தம் சூரியபுஷ்கரணி, இராமதீர்த்தம் என்பன ஆகும். இக்கோயில் கோபுர விமானம் வேதசுந்தர விமானமாகும். இக்கோயிலை நம்மாழ்வார் ஒரு பாசுரத்தாலும் பூதத்தாழ்வார் ஒரு பாசுரத்தாலும் திருமங்கையாழ்வர் மூன்று பாசுரங்களாலும் மங்களாசாசனம் செய்துள்ளர்.
என்செய்கேன் அடியேன் உரையீர் இதற்கு என்னும் என் மனத்தே இருக்கும் புகழ்த் தஞ்சை யாளியை பொன் பெயரோன் நெஞ்சம் அன்று இடந்தவனை தழலேபுரை மின் செய்வாளரக்கன் நகர்பாழ்பட சூழ் கடல் சிறை வைத்து இமையோர் தொழும் பொன் செய்மால் வரையை மணிக்குன்றினை அன்றி என்மனம் போற்றி என்னாதே. (1576)
இக்கோயில் மூன்றுமே வடகலை சந்நிதிகளாக உள்ளவை. தஞ்சை மாமணிக் கோயில் என்பது மணிகுன்றப் பெருமாளைக் குறிப்பதாகக் கூறப்பட்டாலும் இந்த மூன்று சந்நிதிகளையும் சேர்த்தே குறிப்பிடுவதாகக் கொள்ளலாம். (தே. ஹ)
45

Page 78
6t6607 6066D/76 unavub
இது ஈழத்தில் எழுந்த தலபுராணங்களில் முதன்மையானது. இதன் சிறப்புபாயிரம் இந்நூல் பற்றிய சில செய்திகளை உள்ளடக்கியுள்ளது.
பாடபேதங்களும் ஆசிரியரும்
கைலாச புராணத்துச் சிறப்புப் பாயிரம் பற்றிச் சில சுவாரஸ்யமான வினோதங்கள் உள்ளன. இதுவரை வெளிவந்துள்ள இரு பதிப்புகளிலும் இதன் ஆசிரியரின் பெயரைப் பதிப்பாசிரியர் இருவரும் மாறுபடக் கூறியுள்ளனர். அதனை யாழ்ப்பாணத்து நல்லூர் இராசதானியைச் சேர்ந்த மகாவித்துவான் அரசகேசரி பாடினார் எனச் சிவசிதம்பர ஐயர் குறித்துள்ளனர். ஆயினும் சிறப்புப் பாயிரம் பாடியவர் கவி வீரராகவர் என்பர். பு, பொ. வைத்தியலிங்க தேசிகரின் இரு பதிப்புகளிலுமுள்ள வாசகங்கலிலுஞ் சில வேறுபாடுகள் உள்ளன. முந்திய பதிப்பில் 34 வரிகளும் மற்றையதில் 37 வரிகளும் உள்ளன. அவற்றின் அமைப்பிலுஞ் சில மாறுபாடுகள் காணப்படுகின்றன. மற்றைய அம்சங்களைப் பொறுத்த வரையில் அவற்றிடையில் எதுவித வேறுபாடும் இல்லை.
அரசகேசரி இயற்றியது எனப்படும் சிறப்புப் பாயிரம் இரு வசனங்களைக் கொண்டது. அது மூன்று பிரதான விடயங்களை விளக்குகிறது. முதலாவது வசனம் ". புராண நூற்கதையை ஆசறு தமிழில் அறைகுதி என்றனன். செப்பருஞ் சைவராச பண்டிதன்” என்னும் பொருளை அடிப்படையாகக் கொண்டது. அது 19 வரிகளை உள்ளடக்கியது. அதிலே இரு அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. அவற்றுளொன்று புராணநூற் கதையின் பிரதான விடயங்களை 12 அடிகளிலே வர்ணிக்கின்றது. மற்றைய அம்சம் சைவராச பண்டிதர் என்னும் குருவினை 7 அடிகளில் வர்ணிக்கின்றது.
இரண்டாவது வசனம் “அந்தாதித் தொடை அடிகொடு தொடுத்து நந்தா விருத்தம் நவையறக் கூறினன்” என்னுந் தொடர்களுடன் தொடங்கிச் "செப்பருஞ் செகராசசேகரனே' என்னும் மொழிகளுடன் முடிகின்றது. சுருங்கக் கூறின் அரசகேசரி பாடியது எனப்படும் சிறப்புப்பாயிரம் கைலாசபுராணத்தின் பொருள் மரபினைப் பற்றியும் அதனைத் தமிழிற் பாடிய செகராசசேகரனைப் பற்றியும் அவனுடைய குருவாகிய சைவராச பண்டிதரைப் பற்றியுஞ் சிறப்பித்துக் கூறுகின்றது.
கவிவீரராகவர் இயற்றியதாகக் கொள்ளப்படும் சிறப்புப் பாயிரமும் இரு வசனங்களால் அமைந்தது. அதிலுள்ள முதற் பன்னிரு வரிகளும் மற்றைய வாசகத்திற் போலவே எதுவித வேறுபாடுமின்றிக் காணப்படுகின்றன. “மணிநிறக்கண்டன்” என்னும் மொழிகளுடன் ஆரம்பமாகித் "தெய்வமாமுடிச் செகராசசேகரன்’ என்னுந் தொடருடன் நிறைவுபெறும் முதலாம் வசனம் நூலினைப் பற்றியும் நூலாசிரியரைப் பற்றியும் வர்ணிக்கின்றது.
46

"அவனது காலத்துத் திரிகோணைச் சிவனது கோயிற்
சிவமறை முதலோன். செப்பரும் பண்டிதராச சிகாமணி என்னு நாமத்தெங்குரு பெருமான் மன்னு நாற்கவியும் வல்ல நாவலனே' என்னும் வசனம் பண்டிதராசர் என்பவரைப் பற்றியதாய் அமைகின்றது. பண்டிதராசர் கைலாச புராணத்தைப் பாடினார் என்று பொருள் கொள்ளத்தக்க வகையில் இதன் வாசகம் அமையவில்லை என்பதுங் குறிப்பிடத்தக்கது. செகராசசேகரனது காலத்திலே பண்டிதராசர் கோணேஸ்வரத்தில் முதன்மை நாயகராக விளங்கினார் என்பதையே அது குறிக்கின்றது.
சிறப்புப் பாயிரத்தின் பிரதியொன்று சைவராசபண்டிதர், செகராசசேகரன் ஆகிய இருவரைப் பற்றிக் கூற அதன் மற்றைய பிரதி தேசிகன், செகராசசேகரன், பண்டிதராசர் என்னும் மூவரைப் பற்றிச் சொல்கின்றது. இம் மாறுபாடுகள் எவ்வாறு ஏற்பட்டுள்ளன என்பது சிந்தனைக்குரியதே. இவ்விரண்டினுள் எதன் வாசகம் ஆதார பூர்வமானது, எக் காரணங்களால் மூலப்பிரதியில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன என்பனவும் ஆராய்ந்து தெளிவுறுத்துதற்கு உரியவை.
அரசகேசரி பாடிய சிறப்புப் பாயிரத்திற் சைவராச பண்டிதர் பற்றிக் கூறப்படும் செய்திகள் கவிவீரராகவர் பாடியதாகச் சொல்லப்படும் வாசகத்திலே பண்டிதராசருக்கு உரியனவாகக் கூறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. அரசகேசரியின் பாடல் சைவராச பண்டிதரை மேல்வருமாறு வர்ணிக்கின்றது.
“அருமறை உபநிடம் ஆகமச் சோதிடம் விரிகலை பலவும் விளங்கிய குரவன் சேயினுந் திறலான் சிவநெறித் தவனுளான் தாயினும் இனியான் தயாநிதி அனையான் முப்புரி நூற்பயன் முளரிரியந்தாமன் செப்பருஞ் சைவராச பண்டிதன்”
இத்தகைய சைவராச பண்டிதரின் வேண்டுகோளினாற் செகராசசேகரன் புராணநூற் கதையைத் தமிழிற் பாடினான் எனப்படுகின்றது. கவிவீரராகவர் பாடியதாகச் சொல்லப்படும் பாடலிற் பண்டிதராசரைப் பற்றிய பகுதி சைவராச பண்டிதரைப் பற்றிய விபரங்கள் அனைத்தையும் அடக்கியதாக மேல்வருமாறு அமைந்துள்ளது.
"அவனது காலத்துத் திரிகோனச் சிவனது கோயிற் சிவமறை முதலோன் அருமறை ஆகமஞ் சோதிடம் விரிதமிழ் வரையற விளங்கிய குரவோன் சேயினுந் திறலான் சிவநெறிதவறான் தாயினும் நல்லான் தயாநிதியனையான் முப்புரிநூற் பயன் முளரியந்தாமன் செப்பரும் பண்டிதராச சிகாமணி என்னு நாமத் தெங்குரு பெருமான் மன்னுநாற் கவியும் வல்ல நாவலனே.”
இந்துக்கலைக்களஞ்சியம்

Page 79
6D守6u町T于 பண்டிதற்குரிய அடைமொழிகளைப் பண்டிதராசருக்கு உரியனவாக மாற்றியவர்கள் சைவராசபண்டிதர், பண்டிதராசர் என்னுமிரு பெயர்களும் ஒருவருக்கு உரியனவாயிருந்தன என்று கருதினார்கள் என்று கொள்வதற்கு இடமில்லை. தேசிகன் என்னும் ஒருவரைப் பற்றியும் வைத்தியலிங்க தேசிகரின் பதிப்பிலுள்ள வாசகம் குறிப்பிடுகின்றது. அக்குறிப்பு மேல்வருமாறு உள்ளது.
பூசையொடு இறைஞ்சிய புராணநூற் கதையைத் தேசிகன் சொற்படி தென்கலைப்படுத்தி அந்தாதித் தொடை யடைவொடு தொடுத்து நந்தா விருத்தம் நவையறக் கூறினன்
தெய்வமாமுடிச் செகராசசேகரன்."
சைவராசபண்டிதரையே தேசிகன் என்று இப் பகுதியிற்
குறிப்பிட்டுள்ளனர் என்று கருத முடிகின்றது. இதனையுற்று வைத்தியலிங்க தேசிகர் மேல்வருமாறு கூறுகின்றமையுங்
குறிப்பிடத்தக்கது. “இந்த மகாஷேத்திரத்தின் அதியற்புதங்களைத் தமிழிலெடுத்துக் கூறுவது பூரீ தக்ஷிண கைலாசபுராணம். இதனைச் சிங்கைச் செகராஜ
சேகரனாஞ்ஞைப்படி சைவராச பண்டிதர் கட்டளையிட பிரம்மபூரீ பண்டிதராசர் அருளிச் செய்தனர்'
இதுவரை கவனித்தவற்றின் மூலம் கிடைக்கின்ற முடிபுகளை மேல்வருமாறு அமைத்துக் கொள்ளலாம். 1. ஒரே சிறப்புப் பாயிரமே வேறிருவராற் பாடப்பெற்றதென்று சொல்லப்படுகின்றது. 2. அரசகேசரி பாடியதாகச் சொல்லப்படும் வாசகம் புராணநூற் கதையின் அம்சங்களையும் சைவராச பண்டிதர், செகராசசேகரன் என்போரையும் சிறப்பித்துக் கூறுகின்றது. அதன் அமைப்பு இயல்பானதாயும் பிறழ்வின்றியும் காணப்படுகின்றது. வைத்தியலிங்க தேசிகரின் பதிப்பிலுள்ள வாசகத்திற் சில திரிபுகள் ஏற்பட்டுள்ளன. மற்றைய வாசகத்திலே இருவர் வர்ணிக்கப்பட்டிருக்கையில் இதிலே தேசிகர், செகராசசேகரன், பண்டிதராசர் ஆகிய மூவரைப் பற்றிக் கூறப்பெற்றுள்ளது. சைவராசபண்டிதரை நீக்கிவிட்டு அவரின் இடத்திலே தேசிகர் என்றொருவரைப் புகுத்தியுள்ளனர். ஆயினும் தேசிகன் சொற்படியே புராணநூற் கதையைச் செகராசசேகரன் தமிழிற் பாடியதாகச் சொல்லப்படுகின்றது. மற்றைய பதிப்பிலுள்ள சிறப்புப் பாயிரத்திலே குறிக்கப்பெறாத ஒருவரை - பண்டிதராசரை - கவிவீரராகவர் பாடியதென்று சொல்லப்படும் சிறப்புப்பாயிரம் புகழ்ந்துரைக்கின்றது. முன்கண்டவாறு சைவரTச பண்டிதருக்குரிய அடைமொழிகள் யாவும் பண்டிதராசருக்கு உரியனவாய் அமைக்கப்பட்டுள்ளன. பண்டிதராசரைப் பற்றிக் கூறும் சிறப்புப் பாயிரமானது வைசராசபண்டிதரைத் தேசிகரென்று சொல்வதாலும் அவரைப்பற்றிய பாடற்பகுதியைப் பண்டிதராசருக்கு உரியதாக அமைத்துக் கொள்வதாலும் பண்டிதராசரைப் பற்றி இயல்பாக ஐயம் எழுகின்றது. மேலும் அவரைப் பற்றிய பாடற்பகுதி சிறப்புப் பாயிரத்திற்குப் பொருளாக அமைந்த பகுதியோடு பொருந்துவதாக அமையவில்லை.
இந்துக்கலைக்களஞ்சியம்

நூலைப்பற்றியும் நூலாசிரியரைப் பற்றியும் கூறுவதற்கென அமைந்த பாடலிற் கோணேஸ்வரத்து முதன்மை நாயகரைப் பற்றிச் சொல்லவேண்டிய தேவையைப் புரிந்து கொள்ளுமாறில்லை. சிறப்புப் பாயிரத்தின் மூலப்பிரதியை ஒரு காலத்தில் யாரோ மாற்றி அமைத்தனர் என்றும் பண்டிதராசர் என்னும் பெயரை எக்காரணம் பற்றியோ சேர்த்துக் கொண்டனர் என்றும் எண்ணத் தோன்றும்.
சைலாச புராணத்துப் பாயிரச் செய்யுள்களிற் பண்டிதராசர் என்பவரைப் பற்றி எதுவுமே காணப்படவில்லை. அந் நூலின் இரு பதிப்புக்களிலும் பாயிரச் செய்யுள்களைப் பொறுத்தவரை எதுவித மாறுபாடுங் காணப்படவில்லை. நூலாசிரியர் தன் குருவான சைவராச பண்டிதரைப் பற்றி மேல் வருமாறு நயம்படக் கூறுவார்.
வைப்பான வடகயிலை தென்கயிலை யென்றிரண்டு
வரைக்கு முன்னாட் செப்பாதி வடமொழியின் புராணநடை தென்மொழியாற்
செப்புகென்றா னிப்பாரி லயனான்குமுகமு மொருமுகமாகி
யியைந்ததென்ன மெய்ப்பான குருச் சைவராச பண்டிதனென்னும்
நால்வேத நூலோன் வேதமுதலுபநிடமுஞ் சிவாகமமும் புராணமுதல்
விரிநூல்யாவுஞ் சோதிடமு மந்திரமு முனர்ந்துணராதவர் தெளியச் சொல்லவல்லோ னாதலினாலக் குருவின்மொழி கேட்ப
வேண்டுமெனுமன்பினாலே யோதினனிவ் வடமொழியின் புராணநடை
தென்மொழியுலகமீதே
இச் செய்யுள்களில் நூலாசிரியன் தன்குருவான சைவராச பண்டிதரைப் பெரிதும் புகழ்ந்து கூறுகின்றான். அக் குருவின் வேண்டுகோளிற்கிணங்கி வடமொழியிலுள்ள புராண நூற் கதையத் தான் தமிழிலே பாடுவதாகவுங் குறிப்பிடுகின்றான். அரசகேசரி பாடிய சிறப்புப் பாயிரம் சைவராச பண்டிதரைப் பொறுத்தவரையிற் கைலாசபுராணத்துப் பாயிரச் செய்யுள்களை ஒட்டிச் செல்கின்றது. கவி வீரராகவர் இயற்றியது எனப்படும் சிறப்புப் பாயிரத்து வாசகம் பாயிரச் செய்யுள்களிலிருந்து மாறுபட்டு பிறழ்ந்து நிற்கின்றது. எனவே முன்னையதே ஆதாரபூர்வமானது என்றும் பிறழாத மரபு தழுவியது என்றும் மூலப்பிரதியின் சரியான வாசகம் என்றுங் கொள்ளத்தக்கது. வைத்தியலிங்க தேசிகரின் பதிப்பிலுள்ள வாசகம் காலத்தாற் பிந்தியது என்றும் நூலைப் பற்றியும் அதன் ஆசிரியரைப் பற்றியும் நூல் எழுந்த கால வரையறை குறித்தும் மயக்கம் ஏற்பட்ட காலத்திலே மாற்றி அமைக்கப்பட்டது என்றும் கருதலாம்.
சிறப்புப் பாயிரம் பற்றிக் கவனிக்க வேண்டிய இன்னுமோர் அம்சம் அதன் இருவேறான வாசகங்களுடன்
47

Page 80
பின்னடையாகவரும் செய்யுள்கள் பற்றியதாகும். சிவசிதம்பர ஐயரின் பதிப்பில் ஒரு செய்யுளும் வைத்தியலிங்க தேசிகரின் பதிப்பில் மூன்று செய்யுள்களும் சிறப்புப் பாயிரத்தின் வாசகத்தோடு இணைக்கப்பட்டுள்ளன. இவை சிறப்புப் பாயிரத்தின் பகுதிகளாகவன்றி வேறு ஆசிரியர்களாற் பாடப்பெற்ற தனிச் செய்யுள்களாகவே கொள்ளத்தக்கவை. தேவராலும் புகழப்படும் செகராசசேகர மன்னன் தென்கயிலாய மான்மியத்தைத் தமிழ் செய்தானென்று முன்னவர் பதிப்பிலுள்ள தனிச் செய்யுள் கூறுகின்றது. வைத்தியலிங்க தேசிகரின் பதிப்பிற் காணப்படும் மூன்று பாடல்களிலொன்று கவிவீரராகவர் சிறப்புப் பாயிரம் பாடியமை பற்றிக் குறிப்பிடுகின்றது. இரண்டாவது செய்யுள் இருக்குமொழிச் சைவசிகாமணி என்னும் பண்டிதராசன் மச்சகேச்சுர புராணந்தன்னைத் தமிழ்படுத்தி 7 சருக்கங்களாகவும் 635 செய்யுள்களாகவும் வகுத்தனன் என்கின்றது. இச்செய்யுள் ஒன்று மட்டுமே பண்டிதராசர் கைலாசபுராணத்தைப் பாடினார் என்று கொள்வதற்கு ஆதாரமாகும். இப்பாடலைப் பிற் சேர்க்கையாகக் கொண்டுள்ள சிறப்புப் பாயிரம் புராணநூலைச் செகராசசேகரன் பாடினான் என்று கூறுவதால் இச் செய்யுள் சிறப்புப் பாயிரத்தினின்றும் வேறுபட்டதென்பதும் அது ஆசிரியர் வேறொருவராற் புனையப் பெற்றது என்பதும் தெளிவாகின்றது. இச்செய்யுளானது யாரால் எப்போ பாடப்பெற்றது என்பதை இப்போ அறியுமாறில்லை. கைலாசபுராணத்தைப் பாடியவர் பண்டிதராசர் என்ற கருத்து நவீன காலத்திலே மேலோங்கி நிலை பெறுவதற்கு இப்பாடல் ஆதாரமாய் அமைந்துவிட்டது.
கவிராஜர் சொன்ன கவி' என்று வைத்தியலிங்க தேசிகரால் வர்ணிக்கப்படும் மூன்றாம் செய்யுள் மேல்வருமாறுள்ளது.
நடிக்கும் பரதமியலிசை நாடக நாற்கவிதை நொடிக்குமுன் பாடப் ப்ரபந்தங் கணித நன்நூல் சிவநூல் படிக்க நிகழ்த்தப் புராணமேஞ் சொல்பரம்பரையாய் வடிக்கும் தமிழ் வல்லபண்டிதராசன் வரவித்தையே,
பரதம், முத்தமிழ், நாற்கவிதை, கணிதம், நன்னூல், புராணம், ஆகமம் ஆகிய துறைகளிலே பண்டிதராசர் பாண்டித்தியம் பெற்ற வித்தகராய் விளங்கினார் என்பதையே இது நயம்படக் கூறுகின்றது. வைத்தியலிங்க தேசிகர் கூறியவாறு கோணேசர் கல்வெட்டின் ஆசிரியரான கவிராசர் இப் பாடலைப் புனைந்திருப்பின் அதற்கும் சிறப்புப் பாயிரத்திற்கும் எவ்விதத் தொடர்புமில்லை என்பதும் இச்செய்யுள் பிற்பட்ட காலத்திலே அதனுடன் இணைக்கப்பெற்றது என்பதும் உணரப்படும்.
அரசகேசரியும் கவிவீரராகவரும்
சிறப்புப் பாயிரத்தின் வாசகங்களைப் பொறுத்த வரையில் அவற்றிலே காணப்படும் மொழித்தொடர்களுஞ் சீர்களும் பெரும்பான்மையும் ஒத்திருப்பதால் அவற்றை இருவர் வெவ்வேறாகப் பாடினர் எனக் கொள்வது எவ்வகையிலும் பொருந்தாது. அவ்வாறாயின் சிறப்புப் பாயிரத்தை அரசகேசரி
48

பாடினாரா? கவிவீரராகவர் பாடினாரா? என்பது ஆராய்ந்து அறிதற்குரியது. இவர்களுள் அரசகேசரி யாழ்ப்பாணத்து நல்லூர் இராசதானியைச் சேர்ந்தவர். அவரைப்பற்றி யாழ்ப்பாண வைபவமாலை மேல்வருமாறு கூறும்.
“பரநிருபசிங்கத்தின் மைத்துனனும் பரராசசேகரன் மருமகனுமாகிய அரசகேசரி என்பவன் இரகுவம்சமென்னும் நூலை வடமொழியிலிருந்து மொழி பெயர்த்துப் புராண நடையாகப் பாடித் திருவாரூரிலே கொண்டுபோய் அரங்கேற்றிப் பெருங் கீர்த்தியடைந்தான். இப்படியே யாழ்ப்பாணம் கல்வியறிவிலே தலைப்பட்டுப் பல வித்துவான்கள் அங்குமிங்கும் எழும்பினார்கள்."
அரசகேசரி ஆழ்வார் திருநகரி அட்டாவதானி இராமானுஜ கவிராயரிடம் கல்வி பயின்றவர் என்பது ஐதிகம். தமிழ் இலக்கண இலக்கிய நூல்களிற் புலமை பெற்றவரான அரசகேசரி சமஸ்கிருத மொழிக் கல்வியிலும் பெரும் வித்தகராக விளங்கினார். அவருடைய கவிநடை கனமானது. பாட்டியல் இலக்கணங்களைப் பயின்று இலக்கியங்களிற் புலமை பெற்றவர்களினால் மட்டுமே புரிந்து கொள்ளக்கூடிய செய்யுள் நடையில் இரகுவம்சத்தை அவர் பாடியுள்ளார்.
அரசகேசரி 16ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும் 17ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் வாழ்ந்தவர். அவருடைய காலத்திலே யாழ்ப்பாண மன்னரின் ஆதிக்கம் போர்த்துக்கேயரின் நெருக்குதல்களினால் வலிகுன்றி வந்தது. எதிர்மன்னசிங்கம் என்ற இயற்பெயரும் பரராசசேகரன் என்னும் பட்டமும் பெற்றிருந்த அரசன் இறந்தபின், 1615 ஆம் ஆண்டிலே அரச காவலராக அரசகேசரி நியமனம் பெற்றிருந்தார். யாழ்ப்பாண தேசத்து இறுதி மன்னனாகிய சங்கிலிகுமாரன் அரசகேசரியைக் கொன்று அதிகாரத்தைக் கைப்பற்றினான் என்று சொல்லப்படுகின்றது. அரசகேசரி முதலாஞ் சங்கிலியின் ஆட்சிக் காலத்துக்கும் (1519-60) சங்கிலி குமாரனின் காலத்துக்கும் இடைப்பட்டவர் என்பது தெளிவாகின்றது.
கவிவீரராகவர் என்பவர் யாழ்ப்பாண மன்னர்களோடு தொடர்பு கொண்டவர் என்பது பல தனிப்பாடல்களினால் அறியப்படுகின்றது. பிறவிக் குருடர் என்பதால் அந்தகக் கவிவீரராகவர் என இவரைக் குறிப்பிடுவர். வடுகநாத முதலியார் என்பவரின் மகனாகிய இவர் காஞ்சியிற் பிறந்து அங்கு கல்வி பயின்றவர். இயல்பாகவே கவிதாசக்தி கைவரப் பெற்றவர். கவிவீரராகவரின் பாடல்கள் சொன்னயமும் பொருணயமும் மிக்கவை. சிலேடை, மடக்கு என்னும் அணியலங்காரங்கள் பொருந்தியவை.
கவிவீரராகவர் தமிழகத்துத் தலங்கள் பலவற்றுக்குச் சென்றவர். அரசராயும் பிரதானிகளாயும் விளங்கிய பலரின் பாராட்டுக்களைப் பெற்றவர். திருவாரூர் உலா, சேயூர் முருகன் பிள்ளைத்தமிழ், திருக்கழுக்குன்றப் புராணம், சேயூர்க்கலம்பம்,
இந்துக்கலைக்களஞ்சியம்

Page 81
சந்திரவாணன் கோவை, கயத்தாற்றரசன் உலா என்னும் நூல்களை அவர் பாடினார் என்பர். மேலும் பல சீட்டுக் கவிகளும் அவரின் பெயரால் வழங்குகின்றன.
தமிழ் வித்தகரான யாழ்ப்பாண மன்னர்கள் கவிஞரைப் போற்றிப் பாராட்டி ஆதரிக்கும் பண்புடையோராய் விளங்கினர். தமிழகத்திலுள்ள கல்வி நிறுவனங்களோடுங் கலா நிலையங்களோடும் நெருங்கிய தொடர்புகளை ஏற்படுத்தியிருந்தனர். தமிழகத்துப் புலவருட் சிலர் அவர்களின் பாராட்டுக்களையும் ஆதரவினையும் பெற்றனர். அத்தகையோரில் அந்தகக் கவிவீரராகவரும் ஒருவர். பரராசசேகரனின் அரண்மனைக்குச் சென்றபோது அவர் மேல்வரும் கவிதையைப் பாடினார் என்பர்.
நரைகோட் டிளங்கன்று நல்வள நாடு
நயந்தளிப்பான்
விரையூட்டு தார்புய வெற்பீழ மன்னவனென்றே
விரும்பிக்
கரையோட்ட மீதின் மரக்கலம் போட்டுன்னைக்
கானவந்தால்
திரைபோட்டு நீயிருந்தாய் சிங்க பூப சிரோமணியே’
பரராசசேகரன் கவிவீரராகவரின் புலமையைக் கண்டு வியந்து பாராட்டிப் பரிசிலாகப் பொற்கிழி வழங்கிய போது கவிவீரராகவர் மேல்வரும் பாடலைப் பாடினார் என்றும் சொல்லப்படுகின்றது.
“பொங்குமிடி யின்பந்தம் போயதே என் கவிதைக் கெங்கும் விருதுபந்தம் ஏற்றதே - குங்குமந்தோய் வெற்பந்தமான புயவீர பரராசசிங்கம் பொற்பந்தம் இன்றளித்த போது”
கவிவீரராகவர் யாழ்ப்பாணஞ் சென்று அங்குள்ள பரராசசேகரன் ஒருவனைப் பாடினார் என்பது ஐதீகமாயினும், பரராசசேகரன் என்னும் பட்டப்பெயர் மன்னர் பலருக்குரியதால் அவருடன் தொடர்புகொண்ட அரசன் அவர்களுள் எவர் என்பது புலனாகவில்லை. கவிவீரராகவரின் காலம் 16ஆம் நூற்றாண்டென்று பொதுவாகக் கொள்ளப்படுகின்ற போதும் அதனை உறுதிப்படுத்துவதற்கும் தக்க சான்றுகளில்லை.
அரசகேசரி, கவிவீரராகவர் ஆகிய இருவருள் எவராற் சிறப்புப் பாயிரம் பாடப்பெற்றது என்பதனைத் தெளிவுபடுத்துவதற்கான போதிய ஆதாரங்கள் காணப்படவில்லை. வைத்தியலிங்க தேசிகரின் பதிப்பிலுள்ள சிறப்புப் பாயிரத்திற் பிறழ்வு ஏற்பட்டுள்ளமையால் அதிற் காணப்படுங் குறிப்புக்களை ஆதாரமானவை என்று கொள்ள முடியாதுள்ளது. பண்டிதராசரைச் சிறப்புப் பாயிரத்திலே புகுத்தியவர்கள் அரசகேசரியின் பெயரை நீக்கி கவிவீரராகவரின் பெயரைப் புகுத்தியுள்ளனர் என்று எண்ணத் தோன்றும்.
இந்துக்கலைக்களஞ்சியம்

சிறப்புப் பாயிரத்திலே செகராசசேகரனைப் பற்றி வரும் பாடற் பகுதியானது அவனைப் பற்றியும் அவன் முன்னோர்களைப் பற்றிய கதை மரபுகளையும் தெளிவாக விளங்கியிருந்த ஒருவராற் பாடப்பெற்றது எனக்கருத முடிகின்றது. அத் தகுதியினை அரசகேசரியே பெற்றிருந்தார் என்பதில் எதுவித ஐயமுமில்லை.
நூலாசிரியன் பற்றிய
மாறுபாடான மரபுகள்
ஈழத் தமிழ்க் கவிஞரின் சிகாமணியாக விளங்கும் கைலாச புராண ஆசிரியரைப் பற்றி மாறுபாடான கருத்துக்கள் நிலவிவருகின்றமை விசனத்துக்குரிய விடயமாகும். இருபதாம் நூற்றாண்டைச் சேர்ந்த ஈழத்து மகாவித்துவான்களாகிய பலர் இத்தடுமாற்றத்தின் காரணமாய் அமைந்தமையும் கவலைக்குரிய ஒன்றாகும். கைலாச புராணம் முதன் முதலாகக் காரைநகர்க் கார்த்திகேயஐயர் குமாரர் சிவசிதம்பரஐயராலே பதிப்பிக்கப் பெற்றுச் சென்னையிலுள்ள கலரத்நாகரம் அச்சுக் கூடத்தினரால் 1887 ஆம் ஆண்டிலே வெளியிடப் பெற்றது. தக்கூழிணகைலாச புராணம் என்ற பெயருடன் நூலை வெளியிட்டனர். நூலின் முதற் பக்கத்திலே இஃது யாழ்ப்பாணத்து நல்லூர் சிங்கைச் செகராசசேகரன் இயற்றியது' என்று கூறப்பெற்றுள்ளது. கொக்குவிற் பண்டிதரான சச்சிதானந்த நமச்சிவாயர்) இதற்குச் சிறப்புக்கவி வழங்கியுள்ளனர். அவர் நூலாசிரியரைப் பற்றி மேல்வருமாறு சிறப்பித்துள்ளனர்.
இந்த மேன்மை பெற்றுயர்மலைச் சரிதங் கூரினிய முந்து செந்தமிழ்ப்பாவினான் மொழியெனப் பணித்தான் கந்தநாண் மலர்க் கமலமிதுறைந்தவற்கடுப்ப வந்து தோன்றினோன் வராதராயண முனிவன். மேலை ஞான்றினின் வகுத்த மூவாறெனும் புரான நாலுவேத மார்மிருதிகள் யாவது நம்பன் காலவாதியருள் புரியாகமங் கற்றுச் சீலமேவு சைவராசப் பெயர்கொள் பண்டிதனே அருளும் வாசகமது துணையாகவே கொண்டு பரவு திப்பிய நவரசந் துலங்கவே பாரில் விரவு நாவலர் விருந்தென வேண்டியுட்கொள்ள வுரவு தக்கின கயிலை மான்மியமென வுரைத்தான் எண்ணெழுத் தென்னுநூற் கரைகண்டோனிருநிலன்
புரந்திடுசிர்த்தி நண்ணியவரசர் முடியுழுது நள்ளொளிகாலு செந்தாளன் கண்ணகன் சேது வுயர்கரைக் காவல் பூண்டவன்
கறைகெழுவேலான் றிண்ணிய சிங்கையாரியன் சீர்த்திசெறி செகராசசேகரனே
சச்சிதானந்த நமச்சிவாயரின் பாடல்கள் இனிய சத்தங்களிலமைந்த அருமையான பாடல்கள். அவை இனிய செந்தமிழில் எளிமையான நடையில் அமைந்தவை. இப்பாடல்கள் கைலாச புராணத்துச் செய்யுள்களை ஆராய்ந்தறிந்து, அவற்றிலுள்ளவற்றை நன்கு தெளிந்து, அவற்றிலுள்ள
49

Page 82
கருத்துக்களுக்கு முரண்படாத வகையிலே பாடப்பெற்றவை என்பது கவனித்தற்குரியது. நூல்களுக்கு முன்னுரைகளை வழங்குவோருக்கும் சாற்றுகவி பாடுவோருக்கும் அன்னாரின் பாடல்கள் முன்னுதாரணமாய் அமையத்தக்கவை.
கைலாச புராணத்தின் இரண்டாம் பதிப்பு யாழ்ப்பாணத்துப் புலோலியூரிற் பிறந்தவரும் மட்டக்களப்புக் காரைத்தீவு வாசியுமாகிய பு: பொ. வைத்தியலிங்க தேசிகரின் நவமான சாதனையாகும். இது பருத்தித்துறைத் தும்பைநகர் கலாநிதி யந்திரசாலையிற் பதிப்பிக்கப்பெற்று 1916 ஆம் ஆண்டிலே வெளியாகியது. “பல ஏட்டுப் பிரதிகளைக் கொண்டு பரிசோதித்து(த்) திருத்தியும் விளக்கியும் புதுக்கி’ப் பதிப்பிக்கப்பெற்றதென்று நூற்பிரதியின் முதற் பக்கத்திலே கூறப்பெற்றுள்ளமை அவதானமாக எல்லோராலுங் கவனித்தற்குரியது. இப்பதிப்பு பிரம்மபூரீ பண்டிதராசரருளிச் செய்த பூரீ தக்ஷிண கைலாச புராணம் என்னும் தலைப்புடன் வெளிவந்துள்ளது.
கைலாச புராணம் 19ஆம் நூற்றாண்டிலே வெளியிடப் பெற்ற பொழுதிலும் தேசிகர் அதன் முதலாம் பதிப்பினைப் பற்றிக் கூறாதொழிந்தமை புரிந்துகொள்ள முடியாத மர்மமாகவே உள்ளது. சிவசிதம்பர ஐயரைப் பின்பற்றியே தேசிகர் நூலினை பூரீ தகூரிண கைலாச புராணம் என்று பெயரிட்டுள்ளமையும் குறிப்பிடற்குரியது. பண்டிதராசரை பிரம்மபூீ என முதன் முதலாக வர்ணித்த சிறப்பினையும் தேசிகர் தேடிக் கொண்டனர். ஏட்டுப் பிரதிகளைப் பரிசோதித்து திருத்திப் புதுக்கிய பொழுது நூலின் எவ்வெப் பகுதிகளிலே மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டன என்பதையும் அவர் கூறத் தவறி விட்டனர். ஏட்டுப் பிரதிகளின் வாசகத்திலுள்ள பகுதிகளை எக் காரணங்களினாலே திருத்திப் புதுக்கினார் என்றும் அவர் குறிப்பிடவில்லை. இதனால் மூலப்பிரதிகளைச் சரியாகப் பிரதிபலிக்கும் நூலாக அவரின் பதிப்பினை ஒப்புக்கொள்ள முடியவில்லை. இச் சமயத்திலே சிவசிதம்பரஐயர் தனது பதிப்பினைப் பற்றிக் கூறியுள்ளமை யினையும் கருத்திற் கொள்வது அவசியமாகின்றது. அவர் மேல்வருமாறு கூறுவர்.
"இப் புராணத்தைப் பலர்க்கும் உபயோகமாகும் பொருட்டு அடியேன் பிதாவாகிய, ரீலழரீ மு. கார்த்திகேயையரவர்களைக் கொண்டு பெரும்பான்மையும் கண்ட பிரதிகளின் வண்ணமே பரிசோதிப்பித்து அச்சிடுவித்தேன். ஆனால் அர்த்தம் புலப்படாத விடங்களிற் பிரதிகளிற் கண்டவண்ணமே பிரசுரிக்கப் பட்டது. என்னை? ஆசிரியர் கருத்தை யறியாது ஒன்றை விலக்கலும், நூதனமானவொன்றைச் சேர்த்தலும், ஒன்றையொன்றாக மாற்றுதலும் அறிவுடையோர்க் கழகன்று ஆதலின்'
முன்னே கவனித்தவற்றிலிருந்து இதுவரை வெளிவந்துள்ள கைலாசபுராணத்துப் பதிப்புக்களில் எது மூலப்பிரதிகளை ஆதாரமாகக் கொண்டதென்பது வெள்ளிடைமலை. பதிப்பாசிரியர்களின் கூற்றுக்களினாலே இது தெளிவாகின்றமையும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும்.
5う

தேசிகரின் பதிப்புக்கு இந் நூற்றாண்டிலே இலங்கையில் மகாவித்துவான்களாகப் போற்றப்பட்ட பலர் சாற்றுகவிகள் வழங்கியுள்ளனர். புலோலியம்பதி ம. சுப்பிரமணிய சாஸ்திரிகள், புன்னாலைக்கட்டுவன் மகாவித்துவான் சி. கணேசையர், தும்பைநகர் தம்பையாக் குருக்கள், மந்திகை வை. சபாபதிக் குருக்கள், புலோலி வ. குமாரசாமிப் புலவர், மட்டக்களப்புக் காரேறுமூதூர் சாமிதாஸ் மயில்வாகனனார், க. வேற்பிள்ளை, வயாவிளான் சுதேசநாட்டிய அச்சியந்திரசாலையார் ஆகியோரே கைலாச புராணத்து ஆசிரியரின் பெயரைக் குறிப்பிட்டுள்ளனர். பண்டிதராசர் என்னும் பெயர் கொண்டவரே கைலாசபுராணத்தின் ஆசிரியர் என்பது இவர்கள் அனைவரதும் துணிபாகும். நூலையும் அதன் சிறப்புப் பாயிரத்தையும் படித்துத் தெளிந்தபின் இவர்கள் சாற்று கவிகளைப் பாடியதாகத் தெரியவில்லை. இவர்களின் சாற்றுவிகள் ஆராய்வு நோக்கின்றிப் பாடப்பெற்ற புனைந்துரைகளாகும்.
கலாரத்நாகரம் இயந்திரசாலையார் வெளியிட்ட நூலின் பிரதிகள் கிடைத்தற்கு அரிதாகி மறைந்துவிட்டன. இந் நூற்றாண்டின் முற்பகுதியில் யாழ்ப்பாணத்தில் வெளிவந்த தகூழிண கைலாச புராணப் பிரதிகளே கல்வி நிலையங்களைச் சேர்ந்த நூலகங்கள் சிலவற்றிலும் இலக்கிய சைவசமய அபிமானிகள் சிலரின் வீடுகளிலும் பேணப்பட்டு வந்தன. ஆதலினால் நூலினைப் பற்றியும் நூல் ஆக்கியோனைப் பற்றியும் வைத்தியலிங்க தேசிகரின் பதிப்பிலுள்ள கருத்துக்கள் இலங்கையில் நிலைபெறலாயின. தமிழ்ப் பண்டிதர்களிடையிலும் பல்கலைக்கழக மட்டத்திலும் இக் கருத்துக்கள் மேலோங்கி வந்துள்ளமைக்கு ஈழத்து தமிழ்க் கவிதைக் களஞ்சியம் என்னும் நூலிற் பண்டிதராசரைப் பற்றிக் காணப்படும் மேல்வருங் குறிப்பு தக்கதோர் உதாரணமாகும்.
"இவரது ஊர் திருக்கோணமலை, தென்மொழி, வடமொழி ஆகிய இரண்டையும் அறிந்த இவர் கோணேசராலயத்து அருச்சகராயிருந்தார். சிங்கைச் செகராசசேகர மன்னனின் வேண்டுகோட் கிணங்கித் தகூகிண கைலாச புராணம் எனப்படும் கோணாசல புராணத்தை இயற்றினார். எனவே அவரது காலம் சிங்கைச் செகராசசேகரனது காலமாகும்.”
கைலாசபுராணத்து ஆசிரியரைப் பற்றிய செய்திகள் முற்றிலும் விபரீதமாகி விட்டமைக்கு இக்கூற்று நல்லதோர் எடுத்துக் காட்டாகும். இக்கூற்று மிக உன்னதமானதொரு தானத்திலிருந்து வெளிவந்துள்ளமை வியப்பிற்குரியது. இதன் ஆசிரியர் பல்கலைக்கழகப் பேராசிரியர், அதுவும் தமிழ்த்துறைப் பேராசிரியர், நூலை வெளியிட்டோர் இலங்கை அரசாங்கத்தினால் அமைக்கப் பெற்றதும் வித்தியாதர்சிகளை உறுப்பினர்களாகக் கொண்டதுமான சாகித்திய மண்டலம் என்னும் பேரவை, முன்னே மேற்கோளாகக் காட்டிய குறிப்பின் விபரீதம் யாதெனின் அது சிங்கைச் செகராசசேகர மன்னனின் வேண்டுகோட்கிணங்கித் தக்ஷண கைலாசபுராணம் எனப்படும் கோணாசல புராணத்தை இயற்றினார் என்று அன்னார் கூறியமையாகும்.
இந்துக்கலைக்களஞ்சியம்

Page 83
சிங்கைச் செகராசசேகரனின் வேண்டுகோட்கிணங்கிப் பண்டிதராசர் புராணம் பாடினார் என்பதற்கு ஆதாரம் யாது? கைலாச புராணத்துப் பாயிரச் செய்யுள்களும் சிறப்புப் பாயிரமும் சைவராச பண்டிதர் என்போரின் வேண்டுகோட்கிணங்கி நூலாசிரியர் புராணத்தை பாடியதாகச் சொல்கின்றனவே. செய்திகளை முற்றிலும் மாறுபடத் திருத்திக் கூறுவது கற்கை நெறிகளுக்கு முரண்பாடான பொறுப்பற்ற செயலே. தக்ஷண கைலாச புராணம் எனப்படும் கோணாசல புராணம்' என்று கூறுவது இலக்கிய வரலாற்று ஆராய்ச்சிகள் சில சமயங்களிற் பெரு விபத்துக்குள்ளாகி விட்டமையைக் குறிக்கும் ஒரு பெரும் விபரீதக் கூற்றாகும். கைலாச புராணம், கோணாசல புராணம் என்று எங்கு வர்ணிக்கப் பெற்றுள்ளது? திரிகோணாசல புராணம் என்னும் பெயரிற் கோணேஸ்வரம் பற்றிய வேறுமொரு புராணம் வெளியிடப் பெற்றுள்ளதன்றோ. “தகூதிண கைலாச புராணம் எனப்படும் கோணாசல புராணம் என்னுமிடத்து” வெவ்வேறு பெயர்களால் வழங்கும் இரு வேறு நூல்களும் ஒன்றே எனப் பொருள்படுமே!
பண்டிதராசர் பண்டிதராசர் கைலாச புராணத்தைப் பாடினார் என்பதற்கு அடிப்படையான காரணங்கள் யாவை என்பதை இங்கு சற்றுக் கவனிப்போம். அக் கருத்தினை முன் வைத்தவரான வைத்தியலிங்க தேசிகர் தனது உபோற்காதத்திலே இதனைப் பற்றி மேல்வருமாறு கூறுவர்.
“இதனைச் சிங்கைச் செகராசசேகரனாஞ்ஞைப்படி சைவராச பண்டிதர் கட்டளையிட பிரம்மபூீ பண்டிதராசரருளிச் செய்தனர்.”
இக் கூற்று எத்துணைப் பொருத்தமானது என்பதை நூலின் பாயிரச் செய்யுள், சிறப்புப் பாயிரம் என்பன கூறுஞ் செய்திகளின் அடிப்படையிலே நோக்குதல் அவசியமானது. முன் கண்டவாறு வைத்தியலிங்க தேசிகரின் பதிப்பிலுள்ள பாயிரச் செய்யுள் செகராசசேகரனின் ஆணைப்படி நூலாசிரியர் கைலாச புராணத்தைப் பாடினார் என்று கூறவில்லை. சைவராச பண்டிதர் என்னும் குருவின் வேண்டுகோளின்படியேதான் புராணநூற் கதையைத் தமிழ்ப்படுத்தியதாக அவர் பாடியுள்ளார். மேலும் அவரின் பதிப்பிலுள்ள பாயிரச் செய்யுள்களிற் செகராசசேகரன், பண்டிதராசர் ஆகியோரைப் பற்றி எதுவுமே காணப்படவில்லை.
அவருடைய பதிப்பிலுள்ள சிறப்புப் பாயிரமே தேசிகரின் சொற்படி புராணநூற் கதையைச் செகராசசேகரன் தமிழிற் பாடினான் என்று கொள்ளத்தக்க வகையில் மேல்வருமாறு அமைந்துள்ளது.
திருமலை தழுவிய தெசமுக நிருதனும் பொருமலை மதகரிப் புரவலர் பலரும் பூசையோடிறைஞ்சிய புராணநூற் கதையை தேசிகன் சொற்படி தென்கலைப் படுத்தி நந்தா விருத்த நவையறக் கூறினன் அந்நாட்டரசன் ஆசிரியர் கோமான் பொன்னா ட்டைந்தரு பொருவரு கரதலன்
இந்துக்கலைக்களஞ்சியம்

மறுநில நிருபரை வானிலத்திருத்தி யுறுநில முழுவது மொருதணி புரப்போன் றென்னிலங்காபுரித் திசைதொறு மருவும் மின்னிலங்கிய வேல் மேலவர் புயத்துப் படவரா முடித்தலைப் பார்முழுதாண்ட இடபவான் கொடி யெழுதிய பெருமான் சிங்கையாதிபன் சேதுகாவலன் கங்கைநாயகன் கருங்கடற் சேர்ப்பன் பெளவமேற்றுயில் பராபரன் சூட்டிய தெய்வமாமுடிச் செகராசசேகரன்'
எனவே செகராசசேகரன் புராணநூற் கதையை தமிழ் செய்யுமாறு சைவராச பண்டிதருக்கு ஆணையிட்டான் என்றும் அப்பணியை நிறைவேற்றுமாறு சைவராச பண்டிதர் பண்டிதராசருக்குக் கட்டளையிட்டார் என்றும் அதன்படியே பண்டிதராசர் செய்தார் என்றும் தேசிகர் சொல்லுகின்றமை ஆதாரமற்ற பொருந்தாக் கூற்றுக்களாம். அவரின் கருத்துக்கள் புராணமும் அதன் சிறப்புப் பாயிரமும் குறிப்பிடுஞ் செய்திகளோடு முரண்பட்டவையாகும். தேசிகர் இம் முரண்பாடுகளை அவதானித்ததாகவோ பொருட்படுத்தியதாகவோ தெரியவில்லை. சிறப்புப் பாயிரப் பகுதிகளையே அவர் செம்மையாகப் புரிந்து கொண்டதாகத் தெரியவில்லை. பண்டிதராசரைப் பொறுத்தவரையிற் புராண நூலைப் பாடிய செகராசசேகரன் காலத்திலே அவர் கோணேஸ்வரத்திலே பிரதம குருவாக விளங்கினார் என்பதை மட்டுமே தேசிகரின் பதிப்பிலுள்ள சிறப்புப் பாயிரம் குறிப்பிடுகின்றது. இக் கருத்து மேல்வரும் சிறப்புப் பாயிரப் பகுதியினாலே தெளிவாகின்றது.
"அவனது காலத்துத் திரிகோணைச் சிவனது கோயிற் சிவமறை முதலோன் அருமறை யுபநிட மாகமஞ் சோதிடம்
விரிதமிழ் வரையற விளங்கிய குரவோன் சேயினுந் திறலான் சிவநெறிதவறான் தாயினு நல்லான் தயாநிதி யனையான் முப்புரிநூற்பயன் முளரியந்தாமன் செப்பரும் பண்டிதராச சிகாமணி என்னுநாமத் தெங்குரு பெருமான் மன்னுநாற் கவியும் வல்ல நாவலனே'
கைலாசபுராணத்துப் பாயிரமும் சிவசிதம்பர ஐயரின் பதிப்பிலுள்ள சிறப்புப் பாயிரமும் சைவராச பண்டிதருக்கு உரியனவாகக் கூறும் செய்திகளையும் அடைமொழிகளையுந் தேசிகரின் பதிப்பிலுள்ள சிறப்புப் பாயிரம் பண்டிதராசர் என்பவருக்கு உரியனவாக மாற்றியமைத்துள்ளமையினை முன்னர் அவதானிக்க முடிந்தது. தேசிகர் வெளியிட்டுள்ள சிறப்புப் பாயிரத்திலே பிறழ்வு ஏற்பட்டுள்ளது என்றுங் கொள்ள முடிகின்றது.
சிறப்புப் பாயிரத்திலே பிறழ்வு ஏற்படுத்துவதற்குத் தேசிகரின் பதிப்பிலே, அதன் பின்னடையாக வரும் தனிச் செய்யுளொன்றே
காரணமாயிருந்தது என்று கருத முடிகின்றது. அச்செய்யுள் மேல்வருமாறுள்ளது.
5f

Page 84
'திருக்கிளரு மச்சகேச்சுர புராணஞ் செந்தமிழா லெல்லோருந் தெளியத்தானே பெருக்கமுடன் கைலாசபுராண மென்னப் பேருமிட்டுச் சீருமிட்டுப் பெருமை தன்னாற் சருக்கமெழு வகையாக்கி விருத்தப்பாக்கள் தானு மறுநூற்று முப்பத்தைந்தாச் செய்தா னிருக்கு மொழிச் சைவசிகாமணியே யென்ன வெண்டிசையெண் பண்டிதவிராசன் தானே.”
இச்செய்யுள் ஒன்றுமட்டுமே பண்டிதராசர் கைலாச புராணத்தைப் பாடினார் என்று கொள்வதற்கு ஆதாரமாயுள்ளது. ஆயினும் இதிற் காணப்படும் செய்திகள் எத்துணை ஆதார பூர்வமானவை என்பது ஆராய்தற்குரியது. இரண்டு பதிப்புகளுள் ஒன்றில் மட்டுமே இப் பாடல் இடம்பெற்றதென்றும் பிற் சேர்க்கையாய் அமைந்ததென்றும் அனுமானிக்க முடிகின்றது. இதனைச் சிறப்புப் பாயிரச் செய்யுள் என்று கொள்வோர் உண்மையில் அதன் அமைப்பை நன்கு அவதானிக்காமலே அவ்வாறு கருதுவர். புராணத்தளவு நூலாசிரியர் ஆகிய இரு விடயங்களைப் பற்றியுமே இச் செய்யுள் குறிப்பிடுகின்றது. நூலின் பதினாலாவது பாயிரச் செய்யுள் கூறும் விடயங்களையே இச் செய்யுளும் கூறுகின்றமை குறிப்பிடத்தக்கது. சிவசிதம்பர ஐயரின் பதிப்பிலுள்ள அப்பாயிரச் செய்யுள் மேல் வருமாறுள்ளது.
பாரிலங்கு கைலாச புராணத்திற் கேழ்சருக்கம்
பயில்வித்தோங்கு மாரமுதவிருத்தகவியறுநூற்று முப்பத்திரளவேயாக்கிச் சீரெழுத்துச் சொற்பொருள் யாப்பலங்கார முதலிய
நூறெரிக்குஞ் சீர்த்திப் பேரிலங்கு சிங்கை யந்தார்ச் செகராசசேகரனாம் பெருமான்
மாதோ.
வைத்தியலிங்க தேசிகரின் பதிப்பிலே இச் செய்யுளின் நான்காவது அடியை நீக்கிவிட்டனர். தேசிகர் அதைச் செய்தாரா அல்லது ஏட்டுப் பிரதிகளை முன்னெழுதிய சிலர் இவ்வாறு செய்தனரா என்பதனை இப்போ அறிந்துகொள்ள முடியவில்லை. பிரதிகளைத் திருத்தியும் புதுக்கியும் நூலினை அவர் பதிப்பித்துள்ளதாலும் அவ்வாறு செய்தவிடங்களையுங் காரணங்களையும், அவர் விளக்காமையாலும் தேசிகரே இவ்விடயத்திற் பிழை செய்தனர் என்று எண்ணுவதைத் தவிர்க்க முடியவில்லை. அவரின் பதிப்பிலே இப் பாடலிலுள்ள “பேரிலங்கு சிங்கையந்தார்ச் செகராசசேகரனாம் பெருமான் மாதோ' என்னும் அடியை நீக்கிவிட்டு அதனிடத்திலே “பேரிகழா வகை பகர்ந்தேன் தென்கியிலைமலை நிலைமை பெரிதுந் தோன்ற” என்னுந் தொடர்களைச் சேர்த்துள்ளனர். இதனாற் பாயிரச் செய்யுளில் நூலாக்கியோனின் பெயர் நீங்கி விட்டது.
தேசிகரின் சிறப்புப் பாயிரத்துடன் பிற்சேர்க்கையாக இணைந்துள்ளதும் புராணத்தைப் பண்டிதராசர் பாடினார் என்று பகர்வதுமான தனிப்பாடலை ஆதாரமாகக் கொண்டே நூலாசிரியரின் பெயரைக் கூறும் பாயிரச் செய்யுளின் அடியினை
52

மாற்றினர் என்று கருத முடிகின்றது. அத் தனிப்பாடலிற் காணப்படும் கருத்திற்கேற்பச் சிறப்புப் பாயிரத்தையும் மாற்றியமைத்துள்ளனர். ஆயினும் சிங்கையாரியனாகிய செகராசசேகரனே புராண நூற் கதையைத் தமிழ் செய்தான் என்ற அதன் அடிப்படைக் கருத்தினை அவர்களால் மாற்றிக்கொள்ள முடியவில்லை.
தேசிகரின் பதிப்பிலுள்ள சிறப்புப் பாயிரத்தோடு கூடிவருஞ் செய்யுளானது கைலாசபுராணம், அதன் சிறப்புப் பாயிரம் என்பவற்றுக்குக் காலத்தால் மிகவும் பிற்பட்டது என்று கொள்ளக் கூடியது என்பதாலும், நூலாசிரியரைப் பற்றி அதிலே கூறப்படும் விபரங்கள் ஆதார பூர்வமானவையன்றிப் புனைந்துரைகளாகவே கொள்ளத்தக்கவை. எனவே பண்டிதராசர் செகராசசேகரனின்றும் வேறுபட்டவர். அவராலே கைலாசபுராணம் பாடப்பெற்றது என்ற கருத்துக்களைச் சரியான மரபு தழுவியனவாகக் கொள்ளமுடியவில்லை.
மேல்வரும் காரணங்களினாலே பண்டிதராசர் என்ற பெயருடைய ஒருவர் உண்மையில் வாழ்ந்தாரா என்பது பற்றி ஐயங்கள் எழுகின்றன. 1. கைலாச புராணத்துப் பிரதிகளிலே பண்டிதராசரைப் பற்றி
யாதுங் குறிப்பிடவில்லை. 2. முதன் முதலாக வெளிவந்த நூலின் பதிப்பிலுள்ள சிறப்புப்
பாயிரத்திலும் அவரைப் பற்றி எதுவுமில்லை. 3. வைத்தியலிங்க தேசிகரின் பதிப்பிலுள்ள சிறப்புப் பாயிரம் பிறழ்வுடையது. அதிலே சைவராச பண்டிதருக்குரிய செய்திகளும் அடைமொழிகளும் பண்டிதராசருக்கு உரியனவாகச் சொல்லப்படுவதால் அதனை ஒரு ஆதாரமாகக் கொள்ள முடிவதில்லை. 4. அச்சிறப்புப் பாயிரத்திலே வரும் பண்டிதராசரைப் பற்றிய பாடல் பிற்பட்ட காலத்தில், நூலாசிரியரைப் பற்றிய செய்திகள் குறித்துத் தடுமாற்றம் ஏற்பட்டவொரு காலத்திலே புனையப்பட்டது போலத் தோன்றுகின்றது.
பண்டிதராசர் என்பதை ஒரு இயற்பெயராகவன்றி அதனைச் சிறப்புப் பெயராகக் கொள்வோமாயின் கைலாசபுராணத்து ஆசிரியரைப் பற்றி ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடுகளை மேலும் தெளிவுபடுத்திக்கொள்ள முடியும். அது அரசனாகிய செகராசசேகரனுக்குரிய சிறப்புப் பெயர் என்று வித்துவான் எவ், எக்ஸ். சி. நடராசா ஒரு சமயத்திற் கூறியுள்ளார். “கற்றவர் திலகன்’ என்று போற்றப்படும் செகராசசேகரனுக்குப் பண்டிதராசன் என்னும் சிறப்புப் பெயர் மிகப் பொருத்தமானது. பாண்டித்தியம் மிக்க மன்னர் சிலருக்கு அவர்களின் வித்துவப் புலமையினைக் குறிக்குஞ் சிறப்புப் பெயர்கள் உரியவனாயிருந்தன. பண்டித சோழன் என்பது முதலாம் இராசேந்திர சோழனுக்குரிய விருதுப் பெயர்களுள் ஒன்றென்பது குறிப்பிடத்தக்கது. இலங்கை மன்னனாகிய இரண்டாம் பராக்கிரமபாகு (1236-71) கலிகால சர்வக்ஞபண்டிதன் என்னும் சிறப்புப் பெயரைக் கொண்டிருந்தான் என்பர். எனவே “கற்றவர் திலகன்” எனவும் “முத்தமிழ் சேர் செகராசசேகரமன்' எனவும்
இந்துக்கலைக்களஞ்சியம்

Page 85
பாவலராற் புகழப்படுஞ் சிங்கைச் செகராசனொருவன் பண்டிதராசன் என்னுஞ் சிறப்புப் பெயருக்கு உரியவனாயிருந்தான் என்று கொள்ள முடிகின்றது. இதனைப் புரிந்து கொள்ளாதவர்கள் பண்டிதராசர் செகராசசேகரனின்றும் வேறுபட்டவர் என்றும் அவரே நூலைப் பாடினார் என்றும் கருதலாயினர் போலும். அவ்வாறாயின் “அவனது காலத்துத் திரிகோணச் சிவனது கோயிற் சிவமறை முதலோன்’ என்ற பண்டிதராசரைப் பற்றிய வர்ணனை ஆதாரமற்றவோர் புனைந்துரையாகும்.
செகராசசேகரன்
கைலாச புராணத்தைப் பாடியவன் செகராசசேகரன் என்பது நீண்டகால மரபாகும். கைலாசபுராணத்துப் பாயிரச் செய்யுளும் சிறப்புப் பாயிரமும் இக் கருத்தினை வலியுறுத்துகின்றன. முன்னே மேற்கோளாகக் கையாண்ட பாடற் பகுதிகளைத் திரும்பக் கூறுவது குற்றமாயினும் இங்கே எடுத்துக் கொள்ளப்படும் விடயம் ஈழத்தமிழ் இலக்கிய வரலாற்றிலே முக்கியமானவோர் அம்சமென்பதால் அப்பாடற் பகுதிகளுட் சிலவற்றை இங்கு மீண்டும் பயன்படுத்துவது அவசியமாகின்றது.
"சீரெழுத்துச் சொற்பொருள் யாப்பலங்கார முதலிய
நூறெரிக்குஞ்சீர்த்திப் பேரிலங்கு சிங்கையந்தார்ச் செகராசசேகரனாம் பெருமன் மாதோ'
(பூீதக்ஷிண கைலாசபுராணம் பாயிரம் செய்யுள்")
எழுத்து, சொல், பொருள், யாப்பு, அலங்காரம் என்னும் ஐவகை இலக்கணங்களையும் கற்றுத் தேர்ந்த புகழ் மிக்க வித்தகனாகிய செகராசசேகரன் புராணநூற் கதையை கைலாச புராணமாகத் தமிழ் செய்தான் என்பது இப்பாடற் பகுதியிலே சொல்லப்படுகின்றது.
நூலாசிரியரைப் பொறுத்தவரை கைலாச புராணத்துப் பாயிரச் செய்யுள் கூறுவதனையே நூலின் சிறப்புப் பாயிரமும் அழுத்திக் கூறுகிறது. அதன் பகுதி மேல்வருமாறுள்ளது.
"அந்தாதித் தொடை யடிகொடுதொடுத்து நந்தா விருத்த நவையறக் கூறினன் னன்னாடடைந்த வாரியார் கோமான் பொன்னாட்டைந்தரு பொருவரு கரதலன் மருவலர் தங்களை வானிலத்திருத்திப் பொருவரு புவியை யொருகுடை புரப்போன்
ஒப்பிலா முத்தமிழோர்ந்த செப்பருஞ் செகராச சேகரனே'
பாயிரச் செய்யுளிலே ஐவகை இலக்கணங்களையும் கற்றுத் தேர்ந்து பெருங் கீர்த்தி பொருந்தியவன் என்று வர்ணிக்கப்படும். அரசனை “ஒப்பிலா முத்தமிழோர்ந்த செப்பருஞ் செகராசசேகரனே’ என்று சிறப்புப் பாயிரம் புகழ்ந்துரைக்கின்றது. சிறப்புப் பாயிரத்தின் பிற்சேர்க்கையாக அமைந்துள்ள தனிப்பாடல் ஒன்றும் தென்கயிலாய
இந்துக்கலைக்களஞ்சியம்

மான்மியத்தைச் செகராசசேகரனே தமிழிற் பாடினான் என்று குறிப்பிடுவதுங் கவனித்தற்குரியதாகும். அப்பாடல் மேல்வருமாறுள்ளது.
“தேவரும் புகழ் செகராச சேகரக் காவலன் கருனையிற் கடவுண் மாநிதி மாவுறை தென்கயிலாய மான்மியம் பாவியறமிழினாற் பகர்ந்திட்டானரோ”
கைலாச புராணத்தைச் செகராசசேகரன் பாடினான் என்பதைக் குறிப்பதாய் அமையக்கூடிய மொழித் தொடரொன்று கோணேசர் கல்வெட்டிலே புலவர் வரவு என்னும் பகுதியிலே காணப்படுகின்றது. "செகராசரடி பரவு திருக்குளக் கோட்டு மகராசன்” என்பதே அம்மொழித் தொடர். சிவனடியார்களின் சிறப்புக்களைப் பெரிய புராணத்திலே பாடியதாற் சேக்கிழாரைத் “தொண்டர் பரவுவார்’ என்பர். பெரிய புராணத்தைப் படிக்கும் வழக்கமுடையோரான கோணேசர் கல்வெட்டின் தொகுப்பாசிரியர் செகராசசேகரனாற் புகழ்ந்து பாடப்பெற்ற குளக்கோட்டனைச் “செகராசரடிபரவு திருக்குளக்கோட்டு மகாராசன்” என்று வர்ணித்தார் என்று கருதலாம். குளக்கோட்டனைப் புகழ்ந்து பாடும் நூல்களிலே கைலாச புராணமே காலத்தால் மிக முற்பட்டதாகும். அதன் பாயிரத்திலே ஆசிரியர் குளக்கோட்டன் சீரினைப் பரவிப் பாடியுள்ளார். நூலின் இறுதிச் சருக்கமான திருநகரச் சுருக்கத்திலே குளக்கோட்டன் திருப்பணிகள் விரித்துரைக்கப்பட்டுள்ளன.
செகராசசேகரன் என்பது யாழ்ப்பாணத்து அரசர்களாகிய ஆரியச் சக்கரவர்த்திகளின் மாறிவருஞ் சிங்காதனப் பெயர்களுள் ஒன்றாகும். அப்பட்டப்பெயர் அவர்களுட் பலருக்கு உரியதாகவிருந்தது. அத்தகையோருட் கைலாசபுராணத்தைப் பாடியவன் எவனென்பது ஆராய்ந்து துணிதற்குரியது. பெரும்பான்மையும் இலக்கியக் குறிப்புகளை ஆதாரமாகக் கொண்டே இதனைத் தெளிவுபடுத்த வேண்டிய கடினமான நிலையுள்ளது. செகராசசேகரனைப் பற்றிய செய்திகளைக் கொண்டுள்ள அத்தகைய குறிப்புகளும் அரிதானவை.
கைலாச புராணத்துப் பாயிரச் செய்யுளானது நூலாசிரியனைச் சிங்கைச் செகராசசேகரன் என்றும் ஐவகை இலக்கணங்களிலும் பெரு வித்தகனாய் விளங்கியவன் என்றுங் குறிப்பிடுகின்றது. மேல்வரும் சிறப்புப் பாயிரப்பகுதி இவனைப் பற்றி வேறு சில பிரதானமான செய்திகளையுங் குறிப்பிடுகின்றது.
'நன்னாடடைந்த வாரியார் கோமான் பொன்னாட்டைத்தரு பொருவரு கரதலன் மருவலர் தங்களை வானிலத்திருத்திப் பொருவரு புவியை யொருகுடை புரப்போன் தென்னிலங்காபுரி திசைதொறு மருவும் மின்னிலங்கிய வேல் மேலாம் புயத்து படவரா முடித்த பார்முழு தாண்ட விடலாண் வயமா விளங்கிய கொடியான்
53

Page 86
சிங்கை யாரியன் சேது காவலன் கங்கை நாடன் கற்றவர் திலகன் ஆயுள் மறையுட னரிய சோதிடம் பாய்திரை கடலுட் பலவு முணர்த்தோன் ஒப்பிலா முத்தமிழோர்ந்த
செப்பருஞ் செகராசசேகரனே'
இதிலே செகராசசேகரனுடைய விருதுப் பெயர்கள், வித்துவச் சிறப்பு, கொடைத்திறன், பராக்கிரமம் என்பன புகழ்ந்துரைக்கப்படுகின்றன. செகராசசேகரன் கற்றவர் திலகனாகவும் முத்தமிழ் விரகனாகவும் விளங்கியவன். அவன் ஆயுள்வேதம், சோதிடம் ஆகிய கலைகளை நன்குணர்ந்தவன். கொடையிலே அவன் விண்ணகத்து ஐந்தருக்களுக்கு நிகரானவன். அவன் போரிலே பகைவர்களை வென்றடக்கித் தென்னிலங்கைத் திசைகளில் எல்லாம் ஆதிபத்தியஞ் செலுத்தியவன். இத்தகைமைகள் யாவும் பொருந்திய ஒருவனையே செகராசசேகரமாலை புகழ்ந்துரைக்கின்றது.
செகராசசேகரமாலையிற் புகழ்ந்து போற்றப்படும் செகராசசேகரனின் ஆட்சியிலே கல்வி, இலக்கியம் ஆகிய துறைகளிலே பெரு விருத்திகள் ஏற்பட்டன. இலக்கணம், ஆயுள்வேதம், ஆகமம், சோதிடம், புராணம், காவியம் முதலான துறைகளைச் சேர்ந்தனவும் தமிழ், சமஸ்கிருதம் ஆகிய மொழிகளிலுள்ளனவுமான ஏட்டுவடிவிலுள்ள நூல்கள் பெருந்தொகையானவற்றைத் தேடிச் சேர்த்து அரண்மனையின் ஆதரவிலே அறிஞருங் கவிவாணருங் கூடி ஆராய்ந்தனர். அம் முயற்சியின் பயனாகவே செகராசசேகரமாலை என்னுஞ் சோதிட நூலும் செகராசசேகரம் என்னும் மருத்துவ நூலும் உருவாக்கம் பெற்றன. செகராசசேகரனின் ஆதரவிலும் அவனது ஆணைப்படியும் அவை எழுதப் பெற்றதால் அவை அவன் பெயரால் வழங்குகின்றன. ஆயுள்மறையுடன் அரிய சோதிடம் பாய் திரைக்கடலுட் பலவுமுணர்ந்தோன்' என்று சிறப்புப் பாயிரம் போற்றுகின்ற செகராசசேகரன் இவனேயாதல் வேண்டும்.
செகராசசேகரனின் வித்துவத் திறமையினைப் பற்றிய செய்திகள் எல்லாப் பாடல்களிலும் ஒத்தனவாகக் காணப்படுகின்றமையும் கருத்திற் கொள்ளப்பட வேண்டியதொன்றாகும். கைலாச புராணத்துப் பாயிரச் செய்யுள் சீரெழுத்துச் சொல் பொருள் யாப்பலங்காரம் முதலிய நூல் தெரிக்குஞ் சீர்த்திப் பேரிலங்கு சிங்கையந்தார்ச் செகராசசேகரன்' என்று நூலாசிரியனைக் குறிப்பிடுகின்றது. கற்றவர் திலகன் என்றும் ஒப்பிலா முத்தமிழோர்ந்த செப்பருஞ் செகராசசேகரன்' என்றும் அவனை அரசகேசரி சிறப்பித்துள்ளனர். செகராசசேகரமாலையும் 'முத்தமிழ் சேர் செகராச சேகரமன்' என அவனைச் சிறப்பிக்கின்றது.
செகராசசேகரனின் கொடைத்திறனைச் செகராச சேகரமாலையும் கைலாசபுராணத்துச் சிறப்புப் பாயிரமும் ஒரே
வண்ணமாகப் புகழ்ந்துரைக்கின்றன. சிறப்புப் பாயிரமானது
54

அவனைப் பொன்னாட் டைந்தரு பொருவரு கரதலன் எனப் போற்றுகின்றது. செகராசசேகரமாலையினைப் பாடுவதற்கு ஏதுவாயிருந்த செகராசசேகரனைச் சோமவர்மன் மேல்வருமாறு புகழ்ந்து பாடியுள்ளார்.
ஐந்தரு நவநிதியுங் குலமணியும் பொன்முகிலு
மாவுமொன்றாய் வந்தனைய கொடைக்குரிசில் வரியளிக
ளிசைகுலவு வனசத் தாமன் சந்ததமுந் தருமநெறி கோடாத தவப்பெருமான்
றழைத்த கீர்த்திக் கந்தமலை யாரியர்கோன் செகராசசேகரமன்
கங்கை நாடன்' யாழ்ப்பாண இராச்சியத்தின் ஆதிக்கம் உன்னத நிலையிலிருந்த காலத்துச் செகராசசேகரன் ஒருவனைப் பற்றியே கைலாசபுராணத்துச் சிறப்புப் பாயிரம் குறிப்பிடுகின்றது. அவன் பராக்கிரமம் மிகுந்தவனென்றும் பகையரசர்களை வென்று தென்னிலங்கையிலே ஆதிக்கஞ் செலுத்தியவனென்றும் கூறப்படுகின்றது. செகராசசேகரமாலை, செகராசசேகரம் என்பனவும் அத்தகைய மன்னனொருவனைப் பற்றியே புகழ்ந்துரைக்கின்றன.
"சேது காவலன் விஞ்சை விஞ்சு செகராசசேகரன்”
"சீத மலர் நறுந்தெரியற் செகராசசேகரமன்
சிறந்த கீர்த்தி
மேதினிமேல் வளர்ந்துலவுந் தகைமையெனத்
தானியங்கள் மிகுக்கு மன்னே"
"பீடும் பெருக வென்றிசே
ரரிய வாரியர் குலாதிபன் 罗外
திணைமடந்தையும் புயத்தொடைப் புயத்திடைத்
திகழ்செக ராசசேகரமன்
மணவை தந்தமா லிருபதாம் புயமென
மருவினர்க் காத்துயிரளிக்கும்”
"தெண்டிரைகுழ் மனவையர்கோன் செகராச சேகரமன் செவ்வேல் வென்றி
கண்டுதிறை புரிந்தவர்போ லுரம்பகரா தஞ்சலிப்பர் கருதலரே”
"பன்னொன்று சததனத்தார்ச் செகராச
சேகரமன் பகைஞர் தம்மிற்
றுண்னென்று வெருவுதல்போல் விழியினைக
டுயிலாவாந் துன்னலர்க்கே’
இவை செகராசசேகரமாலையில் மன்னனைப் பற்றி வரும் புகழுரைகள். மருத்துவ நூலான செகராசசேகரத்திலே அங்காதி பாதம் என்னும் பகுதியிலே, இறந்துபட்டவர்களின் உடலங்களை அறுத்து, எலும்பு, நாடி, நரம்பு முதலியவற்றைப் பற்றிய
இந்துக்கலைக்களஞ்சியம்

Page 87
விடயங்களைச் செகராசசேகரன் ஆராய்ந்து அறிந்து கொண்டமை பற்றிக் கூறப்படுகின்றது. இதனைப் பற்றிய பாடல் மேல்வருமாறு அமைந்துள்ளது.
இயம்பிய குடலு மூணு மென்புநாடிகளு மற்றுஞ் செயம்பெறு சிங்க நாடன் செகராச சேகரன்றா னுயர்ந்த வாள் வடக்க ராக முருட்டிய களத்தின் மீதே அயஞ்சிறிதளது தீர அளந்துகண்டறிந்த தாமே.
ஆயுள்வேத வித்தகனாகிய செகராசசேகரனின் காலத்திலே ஆரியச்சக்கரவர்த்திகளின் ஆதிக்கம் தென்னிலங்கையில் ஏற்பட்டிருந்தமையினை மேல்வரும் பாடல் உணர்த்துகின்றது.
"பாரிலுள்ள குத்திரனாம் பாம்பு புற்றிற்
பரந்திருக்கு மிரையெடுக்கிற் பலவுந் தின்னு மேருடனேதானாடிற் பத்மராக
மிலங்குமணி முடிபுனையு மிலங்கை வேந்தர் சீரியபொன்றிறையளக்கச் செங்கோ லோச்சுஞ்
செகராச சேகரமன் சிங்கை மேவு மாரியர் கோன் வெண்குடையி னழலே செய்யு
மவனிதனைப் பார்த்து நின்றே யமர்ந்தாடும்மே”
கைலாச புராணத்து ஆசிரியரான செகராசசேகரன் “கற்றவர் திலகன்' 'ஆயுள்மறையுடன் அரிய சோதிடம் பாய்திரைக் கடலுட் பலவும் உணர்தோன்”, “சீர் எழுத்துச் சொல் பொருள் யாப்பலங்கார முதலிய நூல்றெரிக்கவல்ல சீர்த்திப் பேரிலங்கு சிங்கையந்தார்ச் செகராசசேகரன்'; அவன் தென்னிலங்கையிலும் ஆதிக்கம் பெற்றவன், கொடைத்திறனாற் பெரும்புகழ் பெற்றவன். இத்தகைய சிறப்புக்கள் அனைத்துங் கொண்ட செகராசசேகரன் ஒருவனையே செகராசசேகரமாலை செகராச சேகரம் ஆகியன சிறப்பித்துப் பாடியுள்ளன. எனவே, இப்போ கிடைக்கின்ற குறிப்புக்களின் அடிப்படையிலே, நோக்குமிடத்து செகராசசேகரமாலை, செகராசசேகரம் ஆகியவற்றிலே புகழ்ந்துரைக்கப்படும் மன்னனே கைலாசபுராணத்தைப் பாடினான் என்று கொள்ள முடிகின்றது. அவனுடைய காலம் பதினாலாம் நூற்றாண்டின் நடுப்பகுதியாகும். நான்காம் பராக்கிரமபாகுவின் ஆட்சியிலே (1302-26) தேநுவரைப் பெருமாள் சரசோதிமாலை என்னுஞ் சோதிட நூலைப் பாடியுள்ளதால் அதற்குச் சிறிது பிந்திய காலத்தில் ஆரியச்சக்கரவர்த்திகள் ஏற்படுத்திய வித்தியாவிருத்தியின் விளைவாகச் செகராசசேகரம் என்னும் மருத்துவ நூலும் சோதிடநூலான செகராசசேகரமாலையும் சைவசமய இலக்கியமான கைலாசபுராணமும் எழுந்தமை வியப்பிற்குரிய விடயமன்று.
சைவராச பண்டிதர் கைலாச புராணத்துப் பாயிரச் செய்யுள்கள் இரண்டு சைவராச பண்டிதரைப் பற்றியவை. குருவணக்கமாக அமையும் வண்ணமாய் அப்பாடல்கள் அமைந்துள்ளன. குளக்கோட்டனைப் பற்றிய பாடலுக்குப் பின்பாக அவை அமைந்துள்ளமை குறிப்பிடத்தகுந்தது; அவரைப் பற்றிய பாடல் மிகுந்த அபிமானத்தோடும் அடக்க உணர்வோடும் பாடப்பெற்றவை.
இந்துக்கலைக்களஞ்சியம்

சைவராச பண்டிதர் நூலாசிரியரின் பெருமதிப்பிற்குரியவராக விளங்கினார் என்பதிற் சிறிதும் ஐயமில்லை.
'நால்வேத நூலோன்’ எனப்படுவதினாலே சைவராச பண்டிதர் குலத்தாற் பிராமணர். பிரமதேவனின் பூலோக அவதாரமென்று அவரைப் புகழ்ந்து பாடியுள்ளனர். அவர் பல்கலை விற்பன்னராக விளங்கியவர். "வேதமுதல் உபநிடமுஞ் சிவாகமும் புராணம் முதல் விரிநூல் யாவுஞ் சோதிடமும் மந்திரமும் உணர்ந்து உணராதவர் தெளியச் சொல்லவல்லோன்” என்ற பாடற்பகுதி அவரைப் பற்றிய வர்ணனைகள் பொருந்தியது. சைவராச பண்டிதரின் வேண்டுகோளினாலே வடமொழியிலுள்ள புராணநடை தமிழிலே கைலாசபுராணம் என்னும் பெயரிற் பாடப்பெற்றது.
கைலாச புராணத்து ஆசிரியரான செகராசசேகரன் அவரை "அக்குரு' என்று குறிப்பிடுவதினாலே அவர் இராசதானியிலே புரோகிதராயும் இராசகுருவாயும் விளங்கினார் என்று சிந்திக்கலாம். யாழ்ப்பாண மன்னர்களின் தலைநகரான சிங்கைநகரிலே வேதம், உபநிடதம், ஆகமம், புராணம், சோதிடம், இலக்கணம், காப்பியம், பாடியம் என்பவற்றைப் பயின்று ஆராய்ந்த வித்தியாதர்சிகளின் மத்தியிலே வித்துவசிரோமணியாக விளங்கியவராகவே சைவராச பண்டிதர் காணப்படுகின்றனர்.
கைலாச புராணமும் அதன் பொருண்மரபும்
நூலின் பெயர்
தகூகிண கைலாச புராணம் என்னும் பெயர் ஏற்படுவதற்கு இந் நூலினை முதன் முதலாகப் பதிப்பித்து வெளியிட்ட சிவசிதம்பர ஐயரே காரணராவார். இந்த வகையில் மட்டும் வைத்தியலிங்க தேசிகர் அவரைப் பின்பற்றியுள்ளனர். ஆயினும் கைலாசபுராணம் என்பதே நூலுக்கு அதன் ஆசிரியரால் வழங்கப்பெற்ற பெயர் என்பது மேல்வரும் பாயிரச் செய்யுள் மூலமாகத் தெளிவாகின்றது.
மீதுயர்ந்த வுருத்திரரும் விரிபதுமப் பெருமலரின்
விரிஞ்சர் தாமும்
போதுதிரு மாதவரும் மாதவர்க்கு ளொருபெரிய
புனித மீனும்
மாதரவி னிறைஞ்சுகதை கைலாச புராணமென
வறையலுற்றேன்
மாதுரிய மச்சேந்திய வடபுராணத் தியல்பு
மருவத்தானே
கைலாசபுராணம் என்னும் பெயரால் இத் தலபுராணம் நெடுங்காலமாக வழங்கிவந்தமையும் குறிப்பிடத் தகுந்தது. வைத்தியலிங்க தேசிகரின் பதிப்பிலுள்ள சிறப்புப் பாயிரத்திலே பிற்சேர்க்கையாகவுள்ள தனிப்பாடலொன்றும் கைலாச புராணம் என்னும் பெயர் அதன் ஆசிரியரால் நூலுக்கு வழங்கப் பெற்றது என்று குறிப்பிடுகின்றது. பிற்பட்ட காலத்தில் எழுந்த
55

Page 88
திருகோணமலைப் புராணமும் அதற்கு மூலமாக அமைந்த நூல்களுட் கைலாசபுராணம் என்பதையுங் குறிப்பிடுகின்றது. அதனைப் பற்றிய செய்யுள் மேல்வருவது:
மச்ச புராணக் கதையுங் கயிலாய புராணத்தின்
வாய்மை தானு முச்சமம் போற்றிடு மறிஞர் முன்னுரைத்த மரபுகளின் முறையுந் தூக்கி மெச்சிய சீர்தென் கயிலைப் பெரியோர்கள் கூறென
முன்விதியி னாராய்ந் திச்சகத்திற் கோணவரைப் புராணமெனத் தமிழ்ப் பாவி னியம்பலுற்றேன்.
கயிலாய புராணம், மச்ச புராணம் ஆகிய நூல்களும் நெடுங்காலமாக நிலைபெற்று வரும் நாட்டார் வழக்கிலுள்ள கதைகளும் திருகோணமலைப் புராணத்திற்கு ஆதாரமாய் அமைந்தன என்பது இதனாலே தெளிவாகின்றது. தகூழின என்னும் சமஸ்கிருதச் சொல்லைச் சேர்த்துக் கைலாச புராணத்தின் பெயரைத் தகூதிண கைலாசபுராணம் என்று புனராக்கஞ் செய்தமை அந் நூலினை வெளியீடு செய்த முதலிரு பதிப்பாசிரியர்கள் ஏற்படுத்தியுள்ள திரிபாகும்.
கைலாச புராணத்தின் மூல நூல்
முன்னே கவனித்தவாறு கைலாச புராணத்தின் ஆசிரியர் மூல நூலை மாதுரிய மச்சேந்திய வடபுராணம் என வர்ணிக்கின்றனர். வடபுராணம் எனப்படுவதால் அது சமஸ்கிருத மொழியில் அமைந்தவொன்றாகும். அந் நூலினைப் பூசையோடு இறைஞ்சிய புராண நூற் கதை எனச் சிறப்புப் பாயிரஞ் சுட்டுகின்றது. ஒரு பதிப்பிலுள்ள சிறப்புப் பாயிரத்தோடு பின்னடையாக வருந் தனிச் செய்யுள் அப் புராண நூற் கதையைத் தென் கயிலாய மான்மியம் எனச் செப்புகின்றது. மற்றைய பதிப்பிலுள்ள சிறப்புப் பாயிரத்தோடு கூடிய தனிப்பாடலொன்று மூலமாகிய நூலைத் திருக்கிளரும் மச்சசேக்சுர புராணம் எனக் குறிப்பிடுகின்றது. திருகோணமலைப் புராணத்திலே அது மச்சபுராணம் என்று கூறப்பெற்றுள்ளது.
கைலாச புராணத்துக்கு ஆதாரமாய் விளங்கிய நூலை மச்சேந்திய புராணம், புராண நூற் கதை, தென்கயிலாய மான்மியம், மச்ச கேச்சுரப் புராணம், மச்ச புராணம் எனப் பலவாறு ஆசிரியர் பலரும் வேறுபடக் கூறியுள்ளமையால் அதனைப் பற்றித் தெளிவற்றவோர் நிலை தோன்றியுள்ளது. திருகோணமலைப் புராணம் குறிப்பிடும் மச்ச புராணம் பிரசித்தமான வேறிரு நூல்களை நினைவுபடுத்துகின்றது. அவற்றுளொன்று மகா புராணங்களுள் ஒன்றாகிய மத்ஸ்ய புராணம் என்பதாகும். மற்றையது அதனை அடிப்படையாகக் கொண்டு 18 ஆம் நூற்றாண்டிலே இரசை வடமலையப்ப பிள்ளையான் தமிழிற் பாடிய மச்ச புராணமாகும். இவற்றுக்கும் மச்ச புராணம் எனத் திருகோணமலைப் புராணம் வர்ணிக்கும் நூலுக்குமிடையிலே நெருங்கிய ஒற்றுமைகள் இருந்ததாகக்
56

கொள்ள முடியவில்லை. பொருளமைப்பிலே கைலாச புராணத்தின் மூலநூல் அவற்றிலிருந்து வேறுபட்டதாகும்.
மூல நூலானது தென்கயிலாய மான்மியம் என்று ஒரு பாடலில் வர்ணிக்கப்படுவதால் அது ஒரு ஸ்தல மகாத்மியமாய் அமைக்கப்பட்டதென்று கொள்ள முடிகின்றது. அதனை மச்சகேச்சுரப் புராணம் என வேறொரு பாடல் குறிப்பிடுவதால் இக் கருத்து மேலும் வலுப் பெறுகின்றது. எனவே கைலாச புராணத்தின் மூலநூல் மச்சகேஸ்வரமாகிய கோணேஸ்வரத்தைப் பற்றிச் சமஸ்கிருத மொழியில் எழுதப் பெற்ற தலபுராணம் எனக் கொள்வது சாலவும் பொருந்தும்.
மச்சேந்தியம் எனப்படும் மச்சகேச்சுர புராணம் எத்தகையது, அது எப்போ எழுதப்பட்டது என்பவற்றை அறிந்து கொள்வதற்குக் கைலாச புராணத்துப் பாடல்கள் சில மட்டுமே ஏதுவாகவுள்ளன. கைலாச புராணத்திலே திருநகரச்சருக்கத்து இருபத்தோராம் பாடல் வரையுள்ள பகுதி மூல நூலைத் தழுவி எழுதப்பட்டது என்பது மேல்வரும் பாடலினால் அறியப்படுகின்றது.
மேதினியில் மச்சேந்தியத்துள் மாசூதமுனி
விதித்த இந்த ஆதிபுராணக் கதையும் அன்றியும் பின்நடந்த
கதை அநேகம் உண்டால் நீதியின் அக்கதை கருதித் தென்கைலைத்
திருப்பதியின் நிலைமை எல்லாம் ஒதுவன் இச் செந்தமிழ்நூல்
தொடையால் நடைசேர் உலகமீதே
எனவே கைலாச புராணத்துப் பாயிரச் செய்யுள்களும் திருநகரச் சருக்கத்திலே குளக்கோட்டன், கயவாகு என்போரைப் பற்றியுள்ள செய்திகளுந் தவிர்ந்த பிற விடயங்கள் பெரும்பான்மையும் மூலநூலாகிய மச்சகேஸ்வர புராணத்தை ஆதாரமாகக் கொண்டவை. அது குளக்கோட்டனுக்குக் காலத்தால் முற்பட்டதால் அவனைப் பற்றிய செய்திகளைக் கூறாதிருந்தது என்றுங் கொள்ளலாம். மூலநூலாகிய மச்சேந்தியம் என்னும் மச்சகேச்சுர புராணம் குளக்கோட்டனுக்கு முற்பட்ட காலத்துக்குரியது என்ற ஐதிகம் கைலாசபுராணச் செய்யுள்கள் சிலவற்றிலே காணப்படுகின்றது. குளக்கோட்டனின் தந்தையாகிய வரராமதேவன் என்னும் பெரும் போர் வேந்தன் மச்சேந்திய புராணம் படிப்பதைக் கேட்டான் என்று சொல்லப்படுகின்றது. மேல்வரும் பாடல்கள் இதனை விவரிக்கின்றன.
சோனாடு முதலிய தென்மதுரை வடமதுரையெனச்
சொல்லும் நாட்டில் சான்நாடும் பிறர்க்கமையா நிலமடந்தைதனை
வரைந்த தகுதியாலும் மாணாகுந் திறத்தாலும் அபையனெனும் பெயராலும்
ஐயனென்றும் கோணாத கருணையினால் அன்னையென்றும்
பல்லுயிர்க்குங் கூறலாமே.
இந்துக்கலைக்களஞ்சியம்

Page 89
கூறுநவ கண்டத்துச் சிவதானம் அனேகம்
பொற்கோயிலாக்கிப் பேறுதர முடிதரித்த வரராமதேவன் எனும்
பெரும்போர் வேந்தன் மாறில் புராணம் ஒருநாளிற் புரோகிதன்
மெய்வருத்தமாகி வீறு அபையன் அவைக்குத் தான் வராது மகனை
வரவிடுத்தோன் மேலோன்.
மேல் அமைத்த மச்சகேச்சுரக் கதையை
மேலேட்டில் நூலமைத்து அங்கு அடையாளம் நுவற்சி செய்து
படியாமல் ஞாலம் முற்றும் சிவதானக் கதை படியாமல் தாதை
நவின்றதற்குள் கோலமுற்ற குறையென்று குமரன் அது படித்தானே.
படித்தபொழுது இருசெவியும் பாட்டு உதவுஞ்
சுவை அமுதும்
குடிக்கும் இருநாவாகிக் குடிகொண்டது எனக்கேட்டு
முடித்தலை நேர்கம்பித்து முகம் மலர்ந்து மயிர்ப்புறங்கள்
பொடுத்து உள்முங் களிந்து உருகிப் புளகம் எறிந்து
உரை செய்வான்.
இப் பாடல்களிலே வர்ணிக்கப்பெறும் அரசனைப் (LT៩fluff வேலுப்பிள்ளை கூறியுள்ளவாறு சோழச்சக்கரவர்த்தியென்று கொள்வோமாயின் மச்சகேச்சுர புராணம் பற்றிய விசாரம் ஒரு புதிய பரிமாணத்தைப் பெறும். கோணேஸ்வரம் பற்றிய தென் கயிலாய மான்மியம் என்னும் சமஸ்கிருத நூல் மிகப் பழையது என்றும் பதினோராம் நூற்றாண்டுக்கு முற்பட்டது என்றுங் கொள்ளத்தக்கதாக ©ងថាLDL.
நூலமைப்பு இடைச்செருகல்கள்
பாயிரமும் ஏழு சருக்கங்களுங் கொண்டு அமைக்கப் பெற்றுள்ளது. இதுவரை வெளிவந்த பதிப்புகளில் இவற்றின் விவரங்கள் மேல்வருமாறுள்ளன.
தலைப்பு செய்யுள் எண்கள்
1887 1916
1. LTjü 15 甘5 2. இலங்கை மண்டலச் சருக்கம் 39 39 3. திருமலைச் சருக்கம் 94. 94. 4. புவனோற்பத்திச் சருக்கம் 39 39 5. அர்ச்சனாவிதிச் சருக்கம் 86 86 6. மச்சாவதாரச் சருக்கம் 48 48 7 தெரிசனாமூர்த்திச் சருக்கம் 195 195 8. திருநகர்ச் சருக்கம் 16 19
632 635
இந்துக்கலைக்களஞ்சியம்

பாயிரத்திலே முதலாறு செய்யுள்களும் கடவுள் வாழ்த்தாக அமைந்துள்ளன. முதல் மூன்று செய்யுள்களும் கோணேசப் பெருமானைப் பற்றியவை. நான்காவது அம்மனைப் பற்றியது. ஏனையவற்றுள் ஒவ்வொன்றும் முறையே பிள்ளையார், முருகன், ஆகியோரைப் பற்றியவை. ஏழாவது பாடல் சமயகுரவர் நால்வரையும் பற்றியது. அடுத்த பாடல் குளக்கோட்டனைப் பற்றியது. அவனைச் சோழகங்கன் என்றும் இப்பாடல் கூறும். ஏனைய பாடல்கள் சைவராசபண்டிதர், நூலாசிரியனாகிய செகராசசேகரன் ஆகியோரைப் பற்றியும் நூலின் அமைப்பினைப் பற்றியுங் கூறுகின்றன.
இத்தல புராணத்தின் முதலாவது சருக்கமாகிய ஈழமண்டலச் சருக்கம் நாட்டுச் சிறப்பினை இலக்கிய ரசனையோடு சுவை நயம்படக் கூறுகின்றது. ஈழம், இலங்கை என்னும் நாட்டுப் பெயர்களை ஆசிரியர் விளக்கும் வண்ணமானது புதுமையானது. “அமைத்த பொன்மலை ஆதலின் அப்பெயர் சமைத்த ஈழமிதென்று தழீஇயதால்” என வரும் அடிகள் ஈழம் என்னும் பெயர் ஏற்படுவதற்கான காரணத்தை விளக்குகின்றன. பொன்மலையான மேருவின் சிகரங்களுள் ஒன்றான திரிகூடம் என்னும் தென்கைலாசம் அமைவுற்றதால் இலங்கை ஈழம் என்றாகியது.
இமைத்த மாமணி எங்கும் இலங்கலால் உழைத்த நீர் வயலூரும் இலங்கையே’
எங்கும் பரந்து சிதறிக் காணப்படும் மணிகளின் ஒளியானது வயல்களிலெல்லாம் பரந்து பாய்கின்ற நீரிலே பிரகாசிக்கும் பான்மையால் இலங்கை என்னும் திருநாமம் நாட்டிற்கு உரியதாகியது என்பர். ஈழம், இலங்குதல் என்னும் சொற்களின் பொருளை அடிப்படையாகக் கொண்டு நாட்டுப் பெயர்களை முதன்முதலாக விளக்கிய சிறப்பு செகராசசேகரனுக்கே உரியது என்பதும் இங்கு குறிப்பிடற்குரியது.
இரண்டாம் மூன்றாஞ் சருக்கங்களிலே மகாபுராணங்களின் மரபினைப் பின்பற்றியும் சைவசமயக் கோட்பாடுகளின் அடிப்படையிலும் ஊழியான பிரளயம், ஊழிக்காலத்தில் உயிர்கள் அனைத்தும் ஈசனுடன் ஒடுங்குதல், திருமலையின் தோற்றம், புவனங்களின் படைப்பு ஆகிய விடயங்கள் நயம்பட வர்ணிக்கப்படுகின்றன. பிரம்ம விஷ்ணுக்களும் உருத்திரர்களும் இந்திராதி தேவர்களும், முனிவர், கின்னரர், நாகர் கணத்தோரும் தென்கைலாசத்திலே L(L០១២៣ ចាប់ பூசித்தமை விரித்துரைக்கப்படுகின்றது. மச்சாவதாரம் பற்றிய கதைகள் திரிகூடத்தினை அடிப்படையாகக் கொண்டு மறுசீராக்கம் பெற்று மச்சாவதாரச் சருக்கத்திலே கூறப்படுகின்றன. அதில் வரும் கதைகள் மச்சகேஸ்வரம் என்னும் தலப் பெயரின் விளக்கமாகவுங் கொள்ளத்தக்கவை. இதிற் காணப்படும் கதைகளை ஆதாரமாகக் கொண்டு மச்சகேஸ்வர புராணம் என்னும் தென்கயிலாய மான்மியம் மத்ஸ்யபுராணக் கதைகளைக் குறிப்பிடத்தக்க அளவிலே பயன்படுத்தியுள்ள தென்று கருத முடிகின்றது.
57

Page 90
அகத்தியர் முதலான முனிவர்களும் வானவர்களும் சித்தர் கணத்தோரும் இலங்கேஸ்வரனாகிய இராவணனும் தென்கயிலாயத்திலே தரிசனம் கண்டு வரம்பெற்ற சிறப்புக்களை விவரிப்பது ஆறாம் சருக்கம். முதலாறு சருக்கங்களிலுஞ் சொல்லப்படுவன ஆதியுகங்களுக்கும் கிருத, திரேதா யுகங்களுக்கும் உரியவை. அவை வரலாற்றுக்கு அப்பாற்பட்டவை. திருநகரச் சருக்கத்திலுள்ளவை பெரும்பான்மையும் கோணேசர் கோயில் வரலாற்று அம்சங்களைப் பற்றியவை. வரலாற்று ரீதியாக விமர்சிக்கத்தக்கவை. அவை கோணேசர் கோயிலின் வரலாற்றோடு நெருங்கிய தொடர்பு கொண்ட குளக்கோட்டன், கயவாகு என்னும் மன்னர்களின் திருப்பணிகளைப் பற்றியவை.
கைலாசபுராணத்திலே இடைச் செருகல்கள் போல அமைந்திருக்கக் கூடிய பாடல்களைப் பற்றிச் சிறிது கவனிப்பது இங்கு அவசியமாகின்றது. இரு பதிப்புக்களிலும் முதலாறு சருக்கங்களில் வரும் செய்யுள்களின் கூட்டுத்தொகையில் வேறுபாடு காணப்படவில்லை. இந்த வகையிலே திரு நகரச் சருக்கத்தில் மட்டுமே வேறுபாடு காணப்படுகின்றது. முதலாவது பதிப்பில் 16 பாடல்களும் தேசிகரின் பதிப்பில் 19 பாடல்களும் உள்ளன. இவற்றுள் 12 பாடல்கள் பொதுவானவை. முதலாவது பதிப்பிலுள்ள நான்கு பாடல்கள் தேசிகரின் பதிப்பிலே இடம்பெறவில்லை. தேசிகரின் பதிப்பிலுள்ள ஏழு பாடல்கள் மற்றைய பதிப்பிலே காணப்படவில்லை. நூலின் ஏட்டுப் பிரதிகள் யாவும் மறைந்தொழிந்து விட்டமையால் இவற்றுள் எவை இடைச் செருகலானவை. எப்போ யாராற் சேர்க்கப் பெற்றவை என்பவற்றை நிச்சயிப்பது இப்போ சிரமமாகவுள்ளது. இப்பாடல்கள் பிரதானமான செய்யுள்களைக் கொண்டுள்ளதால் அவற்றை ஒதுக்கித் தள்ளவும் முடியவில்லை.
முதலாவது பதிப்பிலுள்ள இத்தகைய நான்கு பாடல்களும் யாழ்ப்பாணம் என்னும் பெயரின் உற்பத்தியை விளக்கும் தன்மையுடையவை. இவை யாழ்பாடி கதையின் மறு வடிவமானவை. இராவணன் திரிகூடத்திலே மீட்டிய யாழோசையினாலே கவரப் பெற்ற சுசங்கீதன் என்னுங் கந்தருவன் அவனுடைய யாழினைக் கவர்ந்து கொள்வதற்குத் தருணம் பார்த்திருந்தான். இராவண சங்காரத்திலே அதைக் கைப்பற்றிவிட்ட கந்தருவன் கீரிமலைச் சிவாலயத்திற்குப் போய் அங்கிருந்து யாழ் வாசித்து மகேஸ்வரனைத் துதி செய்தனன். வடக்கிலுள்ள மணற்றிடரை வரமாகப் பெற்று அங்கு காடு கொன்று, குடிகளையிருத்தி நாடாக்கி, நகரமுண்டுபண்ணிச் சிவதானங்கள் அநேகம் உருவாக்கினான். யாழ் வாசினை புரியுங் கந்தருவனால் உருவாக்கப்பெற்ற நகரம் வீணாபணம் என்னும் பெயரைப் பெற்றது. இதுவே இப்பாடல்கள் கூறுங் கதை. வீணாகானபுரம், வீணாபணம் என்பன யாழ்ப்பாணம் என்பதன் சமஸ்கிருத வடிவங்களாகும். திரிகூடமான தென்கயிலாயத்திற்கும் யாழ்ப்பாணத்திற்கும் எதுவித தொடர்புமின்மையாற் சுசங்கீதனைப் பற்றிய நான்கு செய்யுள்களும் இடைச் செருகலாக வந்துள்ளன எனக் கொள்வாருமுளர். ஆயினும் கைலாச புராணத்தைப் பாடிய யாழ்ப்பாணத்து ஆசிரியச் சக்கரவர்த்தியான
58

செகராச சேகரன் யாழ்ப்பாணம் என்னும் பெயரின் உற்பத்தியை விளக்குவதான கதையைப் பாடல்களாகப் புனைந்து நூலிற் சேர்த்திருப்பது வியப்பிற்குரியதன்று.
தேசிகரின் பதிப்பிலே மேலதிகமாக வரும் ஏழு செய்யுள்களுள் ஒன்று கயவாகுராசனைப் பற்றியது. அது இடைச்செருகல் என்பது அதன் வாசகத்தினாலேயே புலனாகின்றது. ஏனையவற்றுள் நான்கு செய்யுள்கள் செகராசசேகரனைப் பற்றியவை. அவை மேல்வருமாறுள்ளன.
அம்புயத்து உதரத்து அண்ணல் அமைத்த ஆரியர்தம் கோமான் உம்பர் வந்து இறைஞ்சும் சேது உயர்கரைக்
காவல் வேந்தன் செம்பொன்மாமவுலிச் செகராசசேகரன்
றும்பையஞ் சடையான் சைவத் தோன்றிடத்
தோன்றினனால்,
தோன்றிய காலை வேதம் தொனித்தன
சிவனூற் சைவம் ஆன்று அமர் வெண்ணறள்ளி அணிந்தனர்
அலங்கல் வாகை வான் தனிச் சிங்கை காவல் மன்னனோர்
சிங்கம் தோன்ற ஏன்றபல் சமயமெல்லாம் கரியென விரிந்து போன
போனது வனங்கார் செல்வம் புகுந்தது புகுந்
தோர்க்கு இன்பம் ஆனது சிவனூல் ஒசை அழிந்தது பிறநூல் அந்த மானதன் நடத்தும் பூசை வயங்கு தென்கயிலைச் சென்னி ஞானமா மூர்த்தி கொள்ளச் சிறந்தது நன்னாடு எங்கும் நாடுறும் இலங்கை நாடு நாற்றிசை நாடும் அன்னா நீடுறு கவிதைத் திங்கள் நிழலிடைப் பழந்தது எங்கும் வாடுறு கலியுகமில்லை மனத்துறு துயருமில்லை ஆடுறு பதாகைச் சேவும் அனுதினம் விளங்கு மாதோ,
இப் பாடல்கள் செகராசசேகரனைப் போற்றிப் பாடிய, மெய்க்கீர்த்தியின் பாங்கிலமைந்த பாடல்கள் போலவே அமைந்துள்ளன. கோணேஸ்வரத்துக்கு அவன் ஆற்றிய திருப்பணிகள் விவரமின்றிப் பொதுவாகக் குறிக்கப்பட்டுள்ளன. அரசனைப் பற்றிப் புகழ்ந்து யாரோ பாடிய பாடல்கள் பிற்காலத்திலே நூற்பிரதிகள் சிலவற்றிலே இடைச் செருகலாகி விட்டன என்று சிந்திக்கலாம்.
தேவர்கோன் செகராசசேகரன் வழிவந்த குமாரசூரியன் என்போன் ஒருவனைக் குறிப்பிடும் பாடலொன்றும் தேசிகளின் பதிப்பிலுள்ளது. தனக்கு உயிரினும் மேலான கல்வியைப்
இந்துக்கலைக்களஞ்சியம்

Page 91
போதித்தமையால் அதற்கு நன்றிக் கடனாகத் தான் புனைந்த காப்பியத்தைச் சமர்ப்பணம் செய்வதை ஆசிரியர் கூறுமாப்போல் இப்பாடல் அமைந்துள்ளது. அரசகுமாரனாகிய குமாரசூரியனைப் பற்றி வேறு செய்திகள் யாண்டுங் கிடைக்கவில்லை.
தொகுப்புரை
மிகப்புராதனமான தல புராணங்களுள் ஒன்றாகிய கைலாசபுராணம் திருக்கோணேஸ்வரம் சிறப்புற்றிருந்த வொரு காலத்திலே எழுதப் பெற்றது. தென்கயிலாய மான்மியமான மச்சகேச்சுர புராணம் என்னும் சமஸ்கிருத நூல் அதற்கு மூலமாய் அமைந்தது. தென்கயிலாய மான்மியம் குளக்கோட்டன் காலத்துக்கு முற்பட்டது. இராசகுருவாக விளங்கியவர் என்று கொள்ளத்தக்கவரும் வித்துவ சிரோமனியாக விளங்கியவருமான சைவராச பண்டிதரின் வேண்டுகோளினாலே சிங்கைச் செகராசசேகரன் கைலாசபுராணத்தைப் பாடினான். ஐவகை இலக்கணங்களிலும் ஆயுள்வேதம், சோதிடம் போன்ற துறைகளிலும் வித்தகனாக விளங்கிய இவனே ஈழத்தமிழ்க் கவிஞரிற் சிகாமணியாவான்.
இலக்கியப் பண்பிலே கைலாசபுராணம் அரசகேசரியின் இரகுவம்சத்தினின்றும் பெரிதும் வேறுபட்டது. இனிய சந்தங்கள் பொருந்திய விருத்தப்பாக்களில் அமைந்த கைலாசபுராணம் படிப்பதற்கும் கேட்பதற்கும் இனிமையானது. இலகுவிலே புரிந்துகொள்ளக் கூடியது. சிலேடை மடக்கு முதலிய இலக்கியப் பண்புகள் விரவிய வண்ணமாகவும் பாட்டியல் இலக்கணங்களுக்கு அமையவும் அது பாடப்பெற்றுள்ள போதும் கவர்ச்சியான இலக்கியமாகவே காணப்படுகின்றது. இலக்கியப் பண்புகளைப் பொறுத்தவரையில் இதற்கு நிகரான நூலெதுவும் இலங்கையிலே தோன்றியதாகத் தெரியவில்லை. இலங்கையிலே தமிழரின் ஆதிக்கமும் வித்துவத்திறனும் சைவசமயமும் உன்னத நிலையிலிருந்த காலமொன்றினைக் கைலாசபுராணம் பிரதிபலிக்கின்றது.
தென்கயிலாயத்தின் தலபுராணம் என்ற வகையிலும் அது ஈழநாட்டுச் சைவர்களின் பாரம்பரியத்திலே தனிச் சிறப்பான வோர் இடத்தைப் பெறுகின்றது. இலங்கையிலே எழுந்த சைவசமய நூல்களிலே இதுவே பழமையானது. பாடல்பெற்ற தலமான திருக்கோணேஸ்வரத்தைப் பற்றிய பேரிலக்கியம். திருகோணமலை பற்றிய தனியானவோர் இலக்கிய மரபு உருவாகி மலர்வதற்கும் இதுவே ஆதாரம். அத்தல வரலாற்றை ஆராய்வதற்கான மூலங்களிலும் கைலாசபுராணமே முதன்மையானது. திருக்கோணேஸ்வரத்திலே குளக்கோட்டனும் கயவாகுராசனும் ஆற்றிய திருப்பணிகளைக் கூறும் நூல்களிலும் இதுவே மிகப் பழமையானது. மறைந்தும் மறைக்கப்பட்டும் போய்விட்ட சில சிறப்பான வரலாற்றுச் செய்திகளை
வெளிக்கொணர்ந்து ஆராய்ச்சிக் களத்திலே நிலைப்படுத்துவதற்கும் மூலமாய் அமைகின்ற அரியதொரு நூலாகும். (fff)
இந்துக்கலைக்களஞ்சியம்

தட்சிணாமூர்த்தி
சிவபெருமானுக்குப் பல வடிவங்கள் உள்ளன. அவற்றுள் ஒன்று தட்சிணாமூர்த்தி வடிவம். தட்சிணாமூர்த்தி வடிவத்தில் நான்கு வகையான சிற்பங்கள் கிடைக்கின்றன. அவை,
1 வியாக்கியான தட்சிணாமூர்த்தி 2.ஞான தட்சிணாமூர்த்தி 3. யோக தட்சிணாமூர்த்தி 4.வீணாதர தட்சிணாமூர்த்தி என்பனவாகும்.
தமிழ் இலக்கியங்கள் தட்சிணாமூர்த் தி யைத் 'தென்முகக் கடவுள்' எனக் குறிக்கின்றன. சிவன் கோயிலின் கருவறையின் தெற்குப் பகுதியில் உள்ள மாடக் குழியில் (தேவ  ேக |ா ட் ட த் தி ல் ) தட்சிணாமூர்த்திச் சிற்பம் பொதுவாக இடம்பெறும்.
அத்துடன் தென்முகமாக அமைந்திருக்கின்ற காரணத்தால் தென்முகக் கடவுள் என்றும், இவர் பெயர் பெற்றுள்ளார். சிலப்பதிகாரம், கலித்தொகை முதலான நூல்கள் இவரை "ஆல் அமர் செல்வன்' என்றும் புறநானூறு 'ஆலமர் கடவுள் என்றும் குறிப்பிடுகின்றன. தேவாரப் பாடல்கள் பாடப்பட்ட காலங்களில் தட்சிணாமூர்த்தி வழிபாடு பெரும் அளவிற் காணப்பட்டுள்ளது. சுந்தரர் தேவாரத்தில் ஆல் நிழற் கீழிருந்து அருள்புரியும் செல்வன்' என்று குறிப்பிடப் பட்டுள்ளது. இக் காலத்தில் பலவகையான தட்சிணாமுர்த்திகள் வழிபாட்டில் இருந்தமை அறிய முடிகிறது.
வியாக்கியான தட்சிணாமூர்த்தி உருவம் மிகுந்த அளவில் கோயில்களிற் காணப் படுகின்றது. இவர் கோயிலின் தேவகோட்டத்தில் அமர்ந்த நிலையில் காட்டப்படுவார். இமயமலையில், ஆலமரத்தின்கீழ், புலித்தோலின் மேல் அல்லது பதுமாசனத்தில் இவர் அமர்ந்துள்ளாரென ஆகமங்கள் கூறுகின்றன. இவருடைய வலக்கால் தொங்கியபடியும், இடக்கால் மடக்கி வலக்காலின் மேல் வைக்கப்பட்டிருக்கும் நிலையிலும், தொங்கவிடப்பட்ட காலின் கீழ் முயலகன் இன்றியும் சில முயலகனுடனும் காட்டப்படுவதுண்டு. பொதுவாக இவர் நான்கு கைகளுடன் காணப்படுவார் முன் வலக் கையில் ஞான முத்திரை (சின் முத்திரை) காணப்படும். முன் இடக்கை ஏட்டினைத் தாங்கியபடி அமைவதுமுண்டு. அல்லது வலதுகாலில் மடித்துப் போட்ட இடதுகாலில் முழங்கை Lடியுமாறு தொங்கப்போட்டவாறு அமைவதுமுண்டு. அவ்வாறு அமையும் போது முன் இடக்கையின்விரல்கள் திருவடியைச் சுட்டியவாறாக அமையும். பின் வலக் கையில் அட்சமாலையும், இடக்கையில் நெருப்பு அல்லது பாம்பும் காணப்படும். சில சிற்பங்களில் புத்தகம், நெருப்பு, மலர் ஆகியனவும் காட்டப் படுவதுண்டு. உடம்பில்
59

Page 92
எந்தவிதமான வளைவும் காணப்படாது. தலை அலங்காரம், சடாபாரம், சடாபந்தம், சடாமண்டலம், சடா மகுடம் போன்றவைகளில் ஏதேனும் ஒன்றாக அலங்கரிக்கப்பட்டிருக்கும். தலையில் சந்திரன், கபாலம், கங்கை ஆகியவற்றை அணிந்திருப்பார். கங்கை சிவந்த முகத்துடன் காணப்படும். பூனூலும், காதுகளில் குண்டலமும், சங்கபத்திரா ஆகியனவும் இவர் அணிந்திருப்பார். உருத்திராட்ச மாலையைக் கழுத்தில் அணிந்துள்ளவாறும் இவருடைய பார்வை மூக்கின் நுனி மேல் அமைந்திருக்குமாறும் காட்டப்பட்டிருக்கும்.
வியாக்கியான தட்சிணாமூர்த்தியைச் சுற்றி முனிவர்கள் இருப்பர். சிவபெருமான், சாத்திரங்களின் உண்மைப் பொருளை முனிவர்களுக்கு எடுத்துரைக்கும் முறையிலும், அதை முனிவர்கள் கவனமாகக் கேட்கும் முறையிலும் இச்சிற்பம் வடிக்கப்பட்டிருக்கும். முனிவர்கள், பெயர், எண்ணிக்கை ஆகியவற்றில் கருத்து வேறுபாடுகள் காணப்படுகின்றன. காமிகாகமம் இவர்கள் ஏழு முனிவர்கள் என்று கூறுகிறது. அவர்களுள் ஐந்து முனிவர்களின் பெயர்கள் மட்டுமே கூறப்பட்டுள்ளன. இவர்கள் கெளசிகர், காசிபர், பாரத்துவாசர், அத்திரி, கெளதமர் ஆகிய முனிவர்கள் ஆவர். காரணாகமம் என்னும் நூலில் அகத்தியர், புலத்தியர், விசுவாமித்திரர், ஆங்கிரசர் ஆகிய நான்கு முனிவர்களின் பெயர்கள் மட்டும் கூறப்பட்டுள்ளது. அம்சும பேதாகமத்தில் ஏழு முனிவர்கள் இருப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அவர்கள் நாரதர், சமதக்கினி, வசிட்டர், பிருகு, பாரத்துவாசர், சங்கரர், அகத்தியர் ஆகியோராவர். ஆனால் தமிழ்நூல்களில் முனிவர்கள் நால்வர் என்றே பெரும்பாலும் குறிப்பிடப்படுகின்றது. அந்நான்கு முனிவர்களும் சநகர், சநந்தனர், சநாதனர், சநற்குமாரர் என்றே கொள்ளப்படுகின்றது. முனிவர்கள் சடாமகுடம், உருத்திராட்ச மாலை, பூனூல் ஆகியவற்றுடன் காணப்படுவர். இவர்கள் உடல் முழுவதும் திருநீறு பூசியிருப்பர். இவர்கள் தட்சிணாமூர்த்தியின் காலடியில் இரண்டு பக்கங்களிலும் காட்டப்படுவார்கள். முனிவர்களைக் காட்டும்போது இருவர் ஒரு பகுதியிலும் மூன்று பேர் எதிர்ப் பகுதியிலும் இருவர் அல்லது மூன்று முனிவர்கள், ஒரு பகுதியில் நான்கு பேர் எனக் காட்டப்படுவர். தட்சிணாமூர்த்திச் சிற்பத்தினருகில் தேவர்களும் கின்னரர்களும் காட்டப்படுவதுண்டு.
தட்சிணாமூர்த்தி கையிலுள்ள புத்தகம் அறிவையும், அட்சமாலை தவத்தையும் குறிக்கின்றன. அமர்ந்துள்ள வியாக்கியான தட்சிணாமூர்த்தியின் கீழ் மான்களும், விலங்குகளும் காணப்படுகின்றன. காட்டிலுள்ள விலங்குகளும் இவருடைய உபதேசத்தைக் கேட்பது போல் இச் சிற்பங்கள் அமைந்திருக்கின்றன. ஞான தட்சிணாமூர்த்திக்கும் வியாக்கியான தட்சிணாமூர்த்திக்கும் மிகுந்த வேறுபாடுகள் இல்லை. இவர் வியக்கியான தட்சிணாமூர்த்தியைப் போல் அமர்ந்து நான்கு கைகளுடன் காணப்படுவார். பின் இரு கைகளில் அட்சமாலையும் நீலோற்பல மலரும் காணப்படுகின்றன. முன்னிரு கைகளில் வலக்கையால் ஞானமுத்திரையும் இடக்கையால் அபயம் அல்லது தண்ட முத்திரையும் இவர் காட்டுவார்.
6う

யோக தட்சிணாமூர்த்தி சிற்பங்கள் மூன்று வகைகளில் காணப்படுகின்றன. முதல் வகையில் கால்கள் இரண்டும் மடக்கிச் சுவஸ்திக (Swastika) அமைப்புப் போன்று காணப்படும். நான்கு கரங்களில் முன் வலக்கை மார்புக்கு அருகில் யோக முத்திரையிலும் இடக்கை யோகியைப் போல் தொடையிலும் வைக்கப்பட்டிருக்கும். பின்னிரு கைகளில் அட்சமாலையும் தாமரை மலரும் காணப்படும். சபாபாரம் தோள்களின்மேல் இருக்கும் யோக தட்சிணாமூர்த்தியைச் சுற்றிலும் முனிவர்கள் காட்டப்படுவர். இரண்டாம் வகையில் இவரது இடக்கால் மடங்கி உட்குடிகாசனத்தில் இவர் காணப்படுவார். இடக்கால், உடம்பு ஆகியவற்றைச் சுற்றி யோகபட்டம் காணப்படும். வலக்கால் தொங்கவிடப்பட்டிருக்கும். நான்கு கைகளுள் முன் இடக்கை மடக்கப்பட்டிருக்கும் காலின்மேல் நீட்டியபடி வைக்கப்பட்டிருக்கும். மற்றவை முன் வகையைச் சார்ந்திருக்கும். மூன்றாம் யோக தட்சிணாமூர்த்தியின் உருவம் கால் மடக்கி வைத்தவாறு காணப்படும். இரு கால்களும் குத்துக் கால்கள் இட்டிருக்க யோகபட்டம், இக்கால்கள் உடம்பு ஆகியவற்றைச் சுற்றிக் காணப்படும். நான்கு கைகளுள் முன்னிரு கைகள் கால்களின் மேல் வைக்கப்பட்டிருக்கும். பின்னிரு கைகளில் அட்சமாலையும், கமண்டலமும் இருக்கும். சடாமண்டிலமும் அதில் சந்திரன், ஊமத்தம்பூ ஆகியன அமைந்தும் காணப்படும்.
இசைக்கு ஆசானாகிய வீணாதார தட்சிணாமூர்த்தி கான தட்சிணாமூர்த்தி என்றும் சொல்லப்படுவார். இந்த வீணாதர தட்சிணாமூர்த்தி அமர்ந்த நிலையிலும், நின்ற நிலையிலும் காட்டப்படுவார். அமர்ந்த நிலையிலுள்ள தட்சிணாமூர்த்திச் சிற்பங்கள் முற்காலத்தில் அமைக்கப்பட்டவை. இந்தச் சிற்பங்கள் பொதுவாக விமானம், கோபுரம் ஆகியவற்றில் காணப்படும். நின்ற நிலையில் உள்ள வீணாதார தட்சிணாமூர்த்தியே மிகுந்த அளவில் இன்று கிடைக்கின்றன. இவர் சடாமகுடம் அணிந்திருப்பார். நான்கு கைகளுள் முன்னிரு கைகளில் ஒரு கை கீழேயும் மற்றொரு கை மேலேயும் காட்டப்படும். வீணையைப் பிடித்து மீட்டுவது போல இக் கைகள் அமைந்திருக்கும். பின்னிரு கைகளில் மான், மழு ஆகியவற்றை இவர் பெற்றிருப்பார். 'மிக நல்ல வீணை தடவி என்று சம்பந்தர் இவரைச் சுட்டுவார்.
கல்லாலின் புடையமர்ந்து நான்மறை ஆறங்கமுதற்
கற்ற கேள்வி வல்லார்கள் நால்வருக்கும் வாக்கிறந்த பூரணமாய் எல்லாமாய் அல்லதுமாய் இருந்ததனை இருந்தபடி
இருந்துகாட்டிச் சொல்லாமற் சொன்னவரை நினையாமல் நினைத்து
பவத் தொடக்கை வெல்வாம்.
என்னுந் திருவிளையாடற் புராணப்பாடல் (வியாக்கியான) தட்சணாமூர்த்தியின் எழிலையும் சிறப்பையும் நயம்பட எடுத்துரைப்பதாகும். தட்சணாமூர்த்தியினுடைய உபதேசம் பேச்சற்றதாய் மெளன உபதேசமாய் இருப்பினும் அது வாக்கிறந்த பூரணப் பொருளைத் தெளிவுற உணர்த்துவதாய் அமைகின்றது.
இந்துக்கலைக்களஞ்சியம்

Page 93
யோக தட்சணாமூ
இந்துக்கலைக்களஞ்சியம்
 

ர்த்தி வடிவங்கள்
6ր

Page 94
வீணாதர தட்சணா
62
 

மூர்த்தி வடிவங்கள்

Page 95
கல்வியின் சகலதுறைகளிலும் வல்லவர்களான முனிவர்கள் தமது
பெருங்கல்வித் திறத்தாற் பெறமுடியாத அறிவை இம் மெளனோபதேசத்திற் பெற்றுக் கொண்டார்கள்.
தட்சணாமூர்த்தியின் சிறப்பை அதிசயோக்தி தொனிப்பச் சொல்லும் வடமொழி சுலோகமொன்றின் கருத்தும் இங்கு சிந்திக்கத்தக்கதே. ‘வடதிசையிலே ஆலமரத்தின் கீழே ஒரு அதிசயம்! அங்கே ஒரு உபதேசம் இடம்பெறுகிறது; ஆசிரியர் மிகவும் யெளவனமானவர், ஆனால் மாணவர்களோ மிகவும் முதிர்ந்தவர்கள்; உபதேசிக்கும் ஆசிரியர் வாய் திறந்து பேசவில்லை, ஆனால் மாணவர்களுக்கு எல்லாச் சங்தேகங்களும் அகன்றுவிட்டன.” (திசு)
தடத்தைேை
சைவசித்தாந்தத்திலே கூறப்பட்டுள்ள பதிக்கு இயல்புகள் இரண்டு. ஒன்று சொரூப நிலை. மற்றது தடத்தநிலை. பதி புறப்பொருளோடு சம்பந்தப்படாது நிற்கும் நிலை சொரூபநிலை. அதாவது சச்சிதானந்த நிலையாகும். சத் என்பது முக்காலத்தும் ஒரு தன்மையுள்ள உண்மைப் பொருள் என்றும் ஆனந்தம் ஆனந்த உருவான பொருள் என்றும் கருதப்படும். இது இறைவனின் சூக்கும அல்லது சொரூப நிலையாகும். புறப்பொருளோடு சம்பந்தப்பட்டிருக்கும் நிலை தூலநிலை அல்லது தடத்த நிலை எனப்படும். புறப்பொருள் என்பது ஆன்மாக்கள், மாயை என்பனவாம். ஆகமத்திற் கூறப்படும் பொருள் பொதுவியல்பு, சிறப்பியல்பு என இருவகைப்படும். பதிக்குப் பொதுவியல்பு உயிர்களோடு ஒன்றாய், உடனாய், வேறாய் நிற்றலாகும். சிறப்பியல்பு சச்சிதானந்தமாய் நிற்றலாம். பொதுவியல்பு ஆராய்ச்சி அறிவாலும் சிறப்பியல்பு அனுபவ அறிவாலும் அறியப்படும்.
சொரூபநிலையை விளக்க முற்பட்ட உமாபதி சிவாச்சாரியார் பதிபரமே அதுதான்,
'நிலவும் அரு உருவின்றிக் குணம் குறிகளின்றி நின்மலமாய் ஏகமாய் நித்தமாகி அலகிலுயிர்க் குனர்வாகி அசலமாகி அகண்டிதமாய் ஆனந்த உருவாயன்றிச் செலவரிதாய்ச் செல்கதியாச் சிறிதாகிப் பெரிதாய்த் திகழ்வது தற் சிவமென்பர் தெளிந்து ளோரே'
எனச் சுட்டும் பாடல் இவ்வியல்பைத் தெளிவுறக் குறிக்கின்றது. உருவம், அருவம் இல்லாததாய் மலசம்பந்தம் இல்லாததாய் தனிப்பட்ட பொருளாய் சலனமற்றதாய் கண்டிக்கப்படாததாய் ஆனந்த சொரூபமாய் உள்ளதும் மேலும் மயக்கவறிவினாற் சென்றடைய முடியாததும், வழிபடுவோர் சென்றடையத் தக்கதாய் சிறியதிற் சிறியதாகிப் பெரியதிற் பெரியதாகி விளங்கும். அதனை அறிவாற் தெளிந்தோர் சிவம் என்பர். இதுவே இப்பாட்டின் பொருள். எவ்வித கலப்புமின்றித் தானே சுயம்பிரகாசமாக நிற்கும் இந் நிலையில் சுத்தசிவம்,
இந்துக்கலைக்களஞ்சியம்

சொரூப சிவன், பரமசிவன் என்றழைக்கப்படுவதாகச் சைவசித்தாந்திகள் கொள்வர்.
இவ்வாறு ஒன்றிலும் தோய்வின்றித் தானே சுயம் பிரகாசமாக நிற்கும் இறைவன் ஆன்மாக்கள்மீது கொண்ட பெருங்கருணையினால் தன் உயர்ந்த நிலையினின்றும் படிகள் கீழே இறங்கி தடத்தநிலையில் குணவியல்புகளுடன் கூடியவராய் உருவ, அருவ அருவுருவத் திருமேனிகளைத் தாங்கியவராய் உணர்வதற்குரியவராய் வழிபாட்டிற்குரிய தெய்வமாய் விளங்குகின்றார். சொரூபநிலையில் அறிதற்கரியனாய்த் திகழ்ந்தவன் தடத்த நிலையில் மாறுபட்டு அமைவதனை,
"அகளமாய் யாவரும் அறிவரது அப்பொருள் சகளமாய் வந்தது”
எனத் திருவுந்தியார் தெளிவாகக் கூறப்பட்டுள்ளமை நோக்கற்பாலது. சகளம் என்பது உருவத் திருமேனியைக் குறிக்கும். ஆன்மாக்களின் ஈடேற்றத்தின் பொருட்டு இறைவன் கொள்ளுகின்ற அருவம், உருவம், அருவுருவத் திருமேனிகள் ஒன்பது வகையான நாமரூப பேதங்களாக அமைகின்றன.
சிவம், சக்தி, நாதம், விந்து, அருவுருவத் திருமேனிகள், சாதசிவம், அருவுருவத் திருமேனி,மகேஸ்வரன் உருத்திரன், விஷ்ணு, பிரமன் என்னும் நான்கு உருவத் திருமேனிகளையும் தடத்த நிலையில் இறைவன் கொள்கின்றான் என்பது சித்தாந்தப் பொருள். இந்நிலையில் இறைவனுக்கு எட்டுக் குணங்களும், ஐந்தொழிலும் உரித்தாகும். தன்வயத்தனாதல், தூய உடம்பினனாதல், இயற்கை உணர்வினனாதல், முற்றும் உணர்தல், இயல்பாகவே பாசங்களினின்றும் நீங்குதல், பேரருள் உடைமை, முடிவிலாற்றலுடைமை, வரம்பிலின்பமுடைை f), படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் என்பது ஐந்தொழிலாகும். இத் தொழில்களை நடத்த இச்சை, கிரியை, ஞானம் என்னும் மூன்று வகையான சக்திகள் துணை புரிகின்றன. இச் சக்தியிலிருந்து சிவம் பிரிக்க முடியாத நிலையில் கலந்திருக்கின்றது. சிவன் ஞான சக்தியைப் பொருந்திய பொழுது அருவத் திருமேனியை உடையவராவர். சிவன் கிரியை, ஞான சக்தியைச் சமமாகப் பொருந்தும் பொழுது அருவுருவத் திருமேனி உடையவராவர். ஞான சக்தி குறைந்தும் கிரியா சக்தி கூடியிருக்கும் போது உருவத் திருமேனியாகும்.
ஆன்மாக்கள் கன்ம பலனை அனுபவித்தற் பொருட்டு தனு, கரண புவன போகங்களைத் தோற்றுவித்தலே படைப்பாகும். கன்மங்களை ஆன்மாக்கள் அனுபவிக்கும் வரை காத்ததே காத்தலாகும். வினைப்பயன்களை அனுபவித்த ஆன்மாக்களை முதற் காரணத்தில் ஒடுக்குதலே அழித்தலாகும். ஆன்மாக்களைப் போக போக்கியங்களில் அமிழ்த்தலே மறைத்தலாகும். மல பந்தத்தினின்றும் விடுதலை அளித்தலே அருளலாகும். இவ் வகையில் தடத்த நிலையில் சிவன் ஆற்றும் ஐந்தொழிலும் அருட்செயலாகும்.
63

Page 96
இந் நிலையில் இறைவன் நிர்க்குணன் என்றும் (குணங் குறிகளுக்கு அப்பாற்பட்டவன்) சகுணன் என்றும் (குணங்குறிகட்கு உட்பட்டவன்)கூறுவது முரண்படாதோ என்ற கேள்வி எழுவதற்கும் இடமுண்டு. சித்தாந்தம் காட்டும் பரம்பொருள் பரமசிவன் ஒன்றே எனினும் இயல்பு கருதி சொரூபநிலையில் பரமசிவனாகவும், தடத்த நிலையில் குணம், தொழில் கைவரப் பெற்று பஞ்சகிருத்தியங்களும் முத் திருமேனிகளும் ஏற்பவரான நவபேத நாயகராகச் சுட்டப்படுகின்றார். சைசித்தாந்தம் முப்பத்தாறு தத்துவங்களைத் தெளிவு படுத்துகின்றது. இவற்றுள் சிவதத்துவங்களான சிவம், சக்தி, சாதசிவம், ஈஸ்வரம், சுத்தவித்தை ஆகிய ஐந்து தத்துவங்களும் சுத்த மாயையின் பாற்படுவன. இவ்வகையில் சிவன் சுத்தமாயா காரியத்துக்குட்பட்டு தொழிற்படுதலாவது சொரூபநிலை சிவனுக்கு (நிர்குணனுக்கு) வேறுபட்டு அமைவது புலனாகின்றது.
சைவம் சத்காரியவாதம் ஒவ்வொரு காரியத்திற்கும் முதற்காரணம், துணைக்காரணம், நிமித்த காரணம் எனக் காரணங்கள் மூன்றாகும். ஒரு குடத்தை உண்டுபண்ண மண் மிக முக்கியம். அதனைக் குடமாக்க ஒரு தொழிலாளி வேண்டும். அவனுக்கு அதைச் செய்யக் கருவிகளும் வேண்டும். குடத்திற்கு மண் முதற் காரணம், குயவன் நிமித்தகாரணம், தண்டு சக்கரம் துணைக் காரணம். சத்காரியவாதத்திற்கு உள்ளது போகாது, இல்லது வராது என்பது பொருள். கடவுள் உலகங்களைச் சூன்யத்திலிருந்து படைத்தார் என்பது பெளதீக சாஸ்திரத்திற்கும் நம்பிக்கைக்கும் பொருந்தாத ஒன்றாகும். உலகம் எதுவேனும் ஒன்றிலிருந்து உருவாக்கப்பட வேண்டும். உலகம் அழியும்போது அணுவாகி 9H500] பரமானுவாகிப் பின் ஒரு நுண்பொருளாகின்றது. இந் நுண்பொருள் பருப்பொருள் மாய்வதற்கு இடமாக இருப்பதால் 'மாய் என்றும் அதிலிருந்து அனைத்தும் ஆக்கப்படுவதால் 'ஆ' என்றும் ஆகி மாயா என்றாகின்றது. ஆகையால் உண்மைப் பொருளாகிய மாயையை இறைவன் முதற்காரணமாகக் கொண்டு பராசக்தியின் துணையாகிய துணைக் காரியத்தோடு தான் நிமித்த காரணமாய் அனைத்தையும் படைக்கின்றான். சுத்தமாயையே அனைத்துத் தொழிற்பாட்டிற்கும் முதற் காரணமாய் அமைவதால் மாயாவாசனை சிறிதுமற்ற குணங்குறிகளற்ற நிர்குணன் சித்தாந்தம் காட்டும் சொரூப நிலைச் சிவனாயும், ஆன்ம ஈடேற்றத்துக்குரிய சகுணநிலை தடத்த நிலையாகவும் கொள்ளப்படுகின்றது. நி நி)
தடாதகைப் பிராட்டி
சைவசமய முழுமுதற் கடவுளாகிய சிவபெருமானின் திருவருட் சக்தியாகிய பார்வதி, தமிழகத்திலுள்ள பாண்டி நாட்டினை முற்காலத்தில் ஆட்சி புரிந்த புகழ் பெற்ற மன்னனான மலயத்துவச பாண்டியனின் மகளாகத் தோன்றியபோது தடாதகைப் பிராட்டி எனும் திருப்பெயரால் அழைக்கப்பட்டாள். இவ்வரசன் மலயமலை-பொதியமலையைக் கொடியாகக் கொண்டிருந்தபடியால் மலயத்துவச பாண்டியன் எனப் பெயர்
64

பெற்றான். தடாதகையெனில் தடுத்தற்கரிய அடற்கரிய ஆற்றல் வாய்ந்தவள் எனப் பொருள்படும். பிராட்டி எனில் தலைவி, இறைவி, தேவி எனப் பொருள்படும். உலகனைத்தையும் ஈன்ற அம்பாள் அடற்கரிய ஆற்றல்வாய்ந்த தலைவியுமாவள்; அரசியுமாவள்.
சைவசமய மரபிலே பொதுவாகப் பல திருத்தலங்களுக்கும் தனிப்பட்ட வரலாறும் பழைய கதைகளும், ஐதீகங்களும் உள்ளன. இவ்வகையிலே பாண்டி நாட்டின் தலைநகரும், தொன்மையான நகருமாகிய மதுரையிலே கோயில் கொண்டெழுந்தருளியிருக்கும் சிவபிரானுக்கு சோமசுந்தரேசர் எனும் திருநாமமும் அம்பாளுக்கு மீனாகூதி - அங்கயற்கண்ணி எனும் திருநாமமும் உள்ளன. சைவசமயம் போற்றும் முக்கியமான திருத்தலங்களில் ஒன்றாக மிளிரும் மதுரை சிவபிரான் சுந்தரபாண்டியனாகவும், அம்பாள் தடாதகையாகவும் அவர்களின் திருக்குமாரனாகிய முருகன் உக்கிர பாண்டியனாகவும் ஆட்சி செய்த தனிச்சிறப்பு வாய்ந்ததாகும். இவற்றையும் உள்ளடக்கியதாகிய 64 திருவிளையாடல்களை உலகின் நன்மைக்காகச் சிவபிரான் மதுரையிலே செய்தமை பற்றி நம்பி எழுதிய திருவிளையாடற் புராணம், பரஞ்சோதி முனிவர் எழுதிய திருவிளையாடற் புராணம் முதலியன தமிழிலும் ஹாலாஸ்யமாஹாத்மியம் வடமொழியிலும் விரித்துரைப்பன.
மேற்குறிப்பிட்டனவற்றையும் உள்ளடக்கிய மரபு வழியாக நிலவிவரும் கதைகளின்படி, ஏற்கனவே குறிப்பிட்ட மலயத்துவச பாண்டியன் நீண்டகாலமாக மகப்பேறின்மையால் பல விரதங்களை அனுஷ்டித்துத் தானங்கள் வழங்கிப்பின் அஸ்வமேதம் (குதிரை வேள்வி) செய்யத்தொடங்கி 99ஆவதைச் செய்யும்போது தேவலோக அரசனான இந்திரன், இம் மன்னன் 100ஆவது யாகத்தைச் செய்யின் தன்னுடைய நிலைக்கு ஆபத்து வருமெனக்கருதி அவனை அத்துடன் நிறுத்திப் புத்திரப் பேற்றிற்காக புத்திர காமேஷ்டி யாகம் செய்யுமாறு கூறிவிட்டு மறைந்தான்.
பாண்டிய மன்னனும் அவ்வாறே தன்னுடைய மனைவியான காஞ்சனமாலையுடன் அந்த யாகத்தைச் செய்து கொண்டிருக்கையில் உலகமாதாவாகிய உமையம்மை மூன்று முலைகளுடன் கூடிய மூன்று வயதுப் பெண்குழந்தை வடிவிலே யாக குண்டலத்திலிருந்து தோன்றி வந்து காஞ்சனமாலையின் மடியில் இருந்தாள், அவளும் பெருமகிழ்ச்சியடைந்தாள். அரசனும் பெருமகிழ்ச்சியடைந்தானாயினும், இறைவியே குழந்தை வடிவிலே எழுந்தருளியிருப்பதை உணராது, மகப்பேறு வேண்டிப் பெருந்தவம், யாகம் செய்த தனக்குப் பெண்பிள்ளை கிடைத்த ைபற்றியும், அப்பிள்ளை அபூர்வமாக மூன்று முலைகளுடன் எதிரிகள் நகை செய்யும் வகையில் காணப்படுகிறாள் எனவும் மிக மனம் வருந்தினான். அப்போது ஒரு அசரீரி மூலம் அப் பெண்பிள்ளைக்கு ஆண்மகவு போலச் செய்யவேண்டிய சடங்குகளைச் செய்விக்குமாறும், தடாதகையென அவளுக்குப் பெயர் சூட்டுமாறும், கணவனைக் கண்டவுடன் அவளின் மூன்றாவது முலை மறையும் என்றும் கூறிய அசரீரியைக் கேட்டுப் பெரிதும் மகிழ்ச்சியுற்றான்.
இந்துக்கலைக்களஞ்சியம்

Page 97
இதன்பின் சிவபிரானைத் துதித்து யாகத்தை முடித்துவிட்டு அரண்மனைக்குத் திரும்பினான். மகப்பேறு கிடைத்தமை குறித்து அதனை விமரிசையாகக் கொண்டாடினான். காலப் போக்கிலே தடாதகைப் பிராட்டி பல்வேறு கலைகளையும் கற்றாள். அவருக்குச் செய்யவேண்டிய சடங்குகளை அரசன் முறைப்படி அவ்வப்போது செய்வித்தான். பின்னர் அவளைத் தன்னுடைய வாரிசாக வெகுவிமரிசையாக முடிசூட்டுவித்தான். இது நடைபெற்ற சில நாட்களின் பின் அரசன் மண்ணுலக வாழ்வினை விட்டு விண்ணுலகம் சென்றான். அவனுக்குரிய அபரக் கிரியைகளை மகளே விதிப்படி செய்து முடித்தாள்.
சிறப்புமிக்க பெண்ணரசியாகத் தடாதகைப்பிராட்டி அறநெறி வழி செங்கோலோச்சி ஆட்சி புரிந்து வந்தாள். கன்னியாகத் தடாகைப் பிராட்டி பாண்டி நாட்டை ஆட்சி செய்தமையால் அது கன்னி நாடு என அழைக்கப்படலாயிற்று. அங்கு ஆத்மீகமும், உலகியலும் சிறப்படைந்தன. தடாதகைப் பிராட்டி உலகின் பல பகுதிகளையும் வெல்லும் நோக்குடன் திக்கு விஜயத்தை மேற்கொண்டாள். பல இடங்களிலுமுள்ள அரசர்களை வென்று இறுதியில் சிவபிரான் வீற்றிருக்கும் திருக்கயிலாய மலையினை அவளின் படைகள் சூழ்ந்தன. இவர்களை எதிர்த்த பூதகணங்கள் தோல்வியடைய, திருநந்திதேவர் நிலைமையைச் சிவபெருமானுக்கு அறிவிக்க அவரும் போருக்கு ஆயத்தமாகப் போர்க்களம் சென்றார். அங்கு தடாதகையும் சிவபெருமானும் ஒருவரையொருவர் எதிர்நோக்கினர். அப்போது பிராட்டியின் மூன்றாவது தனம் மறைந்தது. அவர் நாணித் தலை குனிந்தார். எனவே அசரீரி வாக்கின்படி சிவபிரானே தடாதகையின் கணவர் என்பது தெளிவாயிற்று.
இதன்பின் சிவபிரான் குறிப்பிட்ட தினத்தன்று மதுரைக்கு வந்து அவரைத் திருமணம் செய்வதாகக் கூறி வழியனுப்பினார். பின்னர் குறிப்பிட்ட நாளன்று சிவபிரானுக்கும் தடாதகைப் பிராட்டிக்கும் முறைப்படி திருமணம் நடைபெற்றது. அரசர்களுக்கு முன் மாதிரியான ஒர் அரசராக அவர் மதுரையிலே சுந்தரபாண்டியனாகச் செங்கோல் செலுத்தினார். அவருக்குத் தடாதகைப் பிராட்டியிடத்து முருகப் பெருமான் உக்கிரவர்மன் அல்லது உக்கிர பாண்டியன் எனும் திருப்பெயருடன் பிறந்து சுந்தர பாண்டியனுக்குப் பின் பாண்டி நாட்டை நன்கு ஆட்சி செய்தார். இவ்வாறு சிவபெருமான், உமாதேவி, முருகன் ஆகியோர் மதுரையாட்சி செய்தமைக்குக் காரணம் தமிழிலே அவர்களுக்கிருந்த பெருவிருப்பெனவும், இத்தகைய தமிழின் பெருஞ் சிறப்பை யார் அறிவார் எனவும் கருத்துப்படக் குமர குருபரர்,
தமர நீர்ப்புவனம் முழுது ஒருங்கு ஈன்றாள்
தடாதகாதேவி என்ற ஒரு பேர் தரிக்க வந்ததுவும் தனி முதல் ஒரு நீ
சவுந்தரமாறன் ஆனதுவும் குமரவேள் வழுதி உக்கிரன் எனப்பேர் கொண்டதும் தண் தமிழ் மதுரம் கூட்டு உண எழுந்த வேட்கையால் எனில் இக்
கொழி தமிழ்ப் பெருமை யார் அறிவார்
(மதுரைக் கலம்பகம் 93)
இந்துக்கலைக்களஞ்சியம்

எனப் பாடியுள்ளமை ஈண்டு குறிப்பிட்டற் பாலது. சிவபிரானுக்குச் சுந்தரபாண்டியன் சவுந்தர (செளந்தர) பாண்டியன் எனும் பெயர்களும் உள.
பாண்டிநாட்டிலே பெண்ணரசி ஒருத்தி முற்காலத்தில் ஆட்சி செய்தமை பற்றி கி.மு. நாலாம் நூற்றாண்டிலே இந்தியாவின் பெரும் பகுதியை ஆட்சி செய்த சந்திரகுப்த மெளரியனின் அரசசபையிலே கிரேக்க அரசனான செலுயூக்கஸ் என்பவனின் பிரதிநிதியாக இருந்த மெகஸ்தனிஸ் தான் எழுதிய இந்திக்கா எனும் நூலிலே குறிப்பிட்டுள்ளார். அதாவது பாண்டி நாட்டை ஹெரக்கில்ஸ் என்பவனின் மகளான பாண்டயா ஆட்சி புரிந்தாள். தெற்கே கடல் வரையுள்ள 315 கிராமங்களை உள்ளடக்கிய நிலப்பரப்பை அவளுக்கு அவன் ஒதுக்கிக் கையளித்தான் என்பதாகும். இதிலுள்ள வரலாற்றுத்தன்மை எவ்வாறாயினும் பாண்டி நாட்டில் பெண்ணொருத்தி ஆட்சி செய்தமை பற்றி வெகுதூரத்திலே வட இந்தியாவிலுள்ள அரசசபையிலிருந்த கிரேக்கப் பிரதிநிதி ஒரளவாவது அறியுமளவுக்கு இச் செய்தி பரவியிருந்தமை குறிப்பிடற்பாலது.
மேற்குறிப்பிடப்பட்டவற்றைத் தொகுத்து நோக்கும்போது பாண்டிநாடு பழையகாலம் தொட்டுத் தமிழ் சைவ சமய மையமாக விளங்கி வந்துள்ளது என்பதும், இறைவனும், இறைவியும் அன்பர்க்கு வேண்டியவற்றை வழங்குவர் என்பதும் பழந்தமிழ் நாட்டின் ஒரு பகுதியிலாவது பெண் ஆளும் உரிமை பெற்றிருந்தாள் என்பதும் பெண் தெய்வ வழிபாடும் பழைமையானதென்பதும் ஒரு கால கட்டத்தில் ஆண்தெய்வ, பெண்தெய்வ வழிபாடுகள் ஒன்றிணைந்து விட்டமையும் புலப்படும்.
மேலும் சுந்தர பாண்டியன் அல்லது செளந்தர பாண்டியன் எனில் அழகிய பாண்டியன் எனப்பொருள் படும். இதுபோலவே தடாதகைப் பிராட்டி என்பதற்கு அழகிய அரசி/தலைவி/இறைவி என்ற பொருளும் கொள்ளலாம். (வி சி)
தண்டம்
தண்டம், தண்டு என்ற சொல்லிற்கு கழி, அல்லது மரத்தண்டு என்பது பொருள். இறைவன் முன்பாக (அட்டாங்க - பஞ்சாங்க) நமஸ்கரித்தலையும் தண்டம் சமர்ப்பித்தல் தண்டனிடல் என்று கூறுவர். ஒரு மரத்துண்டு எப்படி தரையில் பிடிப்பற்று விழுகிறதோ அதேபோல இவ்வுடலை இறைவன் முன் விழச்செய்தல், ஆணவப் பிடிப்பில் செருக்குற்றிருக்கும் மனதை, உடலை ஆணவமற்று இறைவன் முன் வீழ்த்துதலே உண்மையான நமஸ்காரம் - வணக்கம் ஆகும்.
தண்டம் என்ற சொல்லிற்கு பயனற்றது- உபயோகமில்லாதது என்றும் பொருள் உண்டு. தாய் மரத்திலிருந்து பிரிந்து தனியான பாகத்தினால் என்ன பயன்? தாய் மரத்துடன் ஒட்டியிருந்தபொழுது மலர், காய், கனியினால் பலன் தந்தது. அதனின்று நீங்கியவுடன் பலனற்றதைப் போலவே உயிர் இல்லா உடலும் தண்டமே. பயனற்ற இவ்வுடலையும் இறை பணியில்
65

Page 98
ஈடுபடுத்தி பூரணமாகச் செய்து கொள்ள வேண்டும் என்ற குறிப்பும் பெறப்படுகின்றது. நம் மனதைத் தண்டமாக ஆக்காமல் பயனுடையதாக ஆக்கிக் கொள்ள வேண்டும்.
துறவிகளும், அந்தணரும், கூடித்திரியரும், வைசியர்களும் கூட தண்டுகளை வைத்திருப்பர். இந்த தண்டு அவர்களுக்கு இடிதாங்கி, ஏரியல் போலப் பயன்படுகிறது. வேத மந்தி சக்திகளை தண்டு பாதுகாக்கின்றது. ஆத்ம சக்தியை பாதுகாப்பதற்கு தண்டு பயன்படுகின்றது. அப்பொழுதுதான் மந்திரங்கள் மறவாமல் இருக்கும்.
உபநயனத்தின் பொழுது அந்தண பிரமச்சாரிக்கு பலாட தண்டத்தைத் தருவார்கள். தேவர்கள் கூறிய பிகும்மவாதத்தைக் கேட்டு பலாசமரம், ஸ-ஸ்ரவஸ்' என்று இனிமையாக கூறக்கூடிய தன்மையைப் பெற்றது. “ஓ பலாச தண்டமே! உன்னைப் போல் நானும் ஸுஸ்ரவஸ்ஸாக ஆக வேண்டும். நல்ல வேத விஷயங்களைக் கேட்க வேண்டும். நீ எப்படி தேவர்களது நீதியைக் காக்கின்றாயோ, அது போலவே நானும் அந்தணர்களது நீதியான வேதத்தைக் காக்க வேண்டும்” என்று உறுதி எடுத்துக் கொள்வான்.
பிரமச்சாரிகளில் பிராம்மணன் பலாச (பூவரசு) தண்டமும்
கூடித்திரியன் அச்வத்த (அரசு) தண்டமும் , வைசியன் அத்தி தண்டமும் வைத்துக் கொள்ள வேண்டும்.
துறவிகளுக்கும் தண்டம் உண்டு. சிலர் மூன்று தண்டங்களை சேர்த்து வைத்திருப்பர். இவர்களுக்கு த்ரிதண்டி என்பர். மூங்கில் தண்டே துறவிகளுக்குத் தண்டமாகும். (ബി. ഞഖ
தண்டியடிகன் நாயனார்
இவர் பெரிய புராணம் போற்றிச் சிறப்பிக்கும் அறுபத்து மூன்று சைவ நாயன்மார்களுள் ஒருவர். திருவாரூரில் தோன்றிய இச் சிவனடியார் ஒரு பிறவிக் குருடராவார். நமசிவாய என்னு திருவைந்தெழுத்தினை ஒதித் திருவாரூர்ப் பெருமால் திருக்கோயிலையும் அங்குள்ள தேவாசிரிய மண்டபத்தையு வலம் வந்து தொழும் தொண்டினைத் தம் நாட் கடமையாக கொண்டொழுகினார். சிவன் கோவிலின் மேற்குப் பக்கத்தி இருந்த தீர்த்தக் குளக்கரையில் அமணர்கள் பாழிகள் அமைத்து கொண்டமையால் குளப்பரப்பு சுருங்கியதனை அறிந்த தண் அக்குளத்தை ஆழப்படுத்த விரும்பி அம் முயற்சியில் ஈடுபட்டா இவர் குருடராதலின் குழி தோண்டுமிடமும், மண்ணை கொண்டு சென்று கொட்டுமிடமும் அறிவதற்காக இடைே கம்புகளை நட்டு அவற்றைக் கயிற்றால் பிணித்தார். தோண்டி மண்ணைச் சுமந்து கயிற்றின் துணைகொண்டு வழிநடந்து கொண்டு சென்று கொட்டும் பணியைத் தொடர்ந்து செய்து வந்தார். அதனை அறிந்த அமணர் அத் தொண்டினை செய்யவொட்டாது தடுத்தனர். அமணர்களுக்கும் தண்டிக்கு வாக்கு வாதம் முற்றித் தண்டியிடம் உங்கள் தெய்வ அருளால்
66

கண்பார்வை பெற்றால், நாங்கள் இந்த ஊரை விட்டே அகல்கின்றோம் என்று கூறி அவர் அமைத்திருந்த கம்புகளையும் கயிறுகளையும் அகற்றிவிட்டனர். அதனால், வருந்திய தண்டி, திருக்கோயில் முன்பு சென்று அமணர்கள் எமக்கு அவமானஞ் செய்தமையால் நைகின்றேன். அவமனம் தீர்த்தருள வேண்டும் என்று வேண்டினார். இறைவன், உறங்கிய தண்டியின் கனவில் தோன்றி, அன்னே அஞ்சற்க அமணர்கள் கண்விழித்தபோது பார்வை இழந்தவனை உணர்வார்கள். என்று கூறியதோடு, அரசன்கனவிலும் தோன்றி அமணர் தண்டிக்குச் செய்ததனை உரைத்து அவர் தொண்டினை முற்றுவிக்க அறிவித்தார்.
விழித்த அரசன் அடியவரை நாடிவந்து செய்திகளைக் கூறத் தண்டியும் தாம் அமணரோடு நிகழ்த்திய உரையாடலையும் நிகழ்ச்சியையும் கூறினார். அரசன் அமணர்களை அழைத்து வினவ, அவர்களும் தாம் கூறியததனை ஏற்றுக் கொண்டனர். இறையருளினால் தாம் கண் பெறுவதையும், கொடுமை புரிந்த அமணர்கள் பார்வை இழத்தலையும் நினைத்துத் தாண்டி, திருவைந்தெழுத்தோதிக் குளத்தில் முழுகினார். முழுகி எழுந்த தண்டி பார்வை பெற்று மகிழவும் அமணர்கள் பார்வை இழந்து வருந்தவும் கண்ட மன்னன் பழுது செய்த அமண்கெட்டது என்று கூறினான். தாம் ஒட்டிக் கூறியதற்கேற்ப அமணர்கள் திருவாரூரை விட்டுச் சென்றனர். அமணர்கள் அல்லற்பட்டு அகன்றபின், குளஞ் சுருங்க அமைக்கப்பட்டிருந்த பாழிகளையும் பள்ளிகளையும் நீக்கிக் குளத்திற்குக் கரையமைத்து அதனை ஆழப்படுத்தினர். தண்டி அடிகள் திருக்குளர் பணியை நிறைவு செய்து இறைவனைத் திருவைந்தெழுத்தால் நாளும் போற்றும் தொண்டினைத் தொடர்ந்து செய்து இறுதியில் இறைவன் அடியடைந்தார்.
தண்டியடிகள் பிறவிக் குருடராயிருந்தும் திருவருளால் உள்ளொளி மிகப் பெற்று, ஞானக் கண் உடையராய் விளங்கினார் என்னும் கருத்தில் சுந்தரர் இவரைக் குறிப்பிடும்போது, நாட்டம் மிகுதண்டி’ என்று கூறியுள்ளார். (திருத்தொண்டத்- 5). நம்பியாண்டார் நம்பி இவர் சிறப்பினைத் தம் திருத்தொண்டர் திரு அந்தாதியின் கண்ணார் மணி ஒன்றும் இன்றி என்னும் பாடலில் சிறப்பித்துள்ளார் (திருத்தொண்டர் திருவந்தாதி- 87).
(gy, (O/7. LV.)
தண்டியாைங்கரம்
தமிழ் மொழியிலுள்ள தொன்மை வாய்ந்த இலக்கண நூல் தொல்காப்பியமாகும். அது பஞ்சலக்கணமும் கூறுவதாகும். அதன் பின் தமிழில் தண்டியலங்காரம், வீரசோழியம், மாறனலங்காரம் இலக்கண விளக்கம் தொன்னூல் விளக்கம் குவலயானந்தம், சந்திராலேகம், முத்துவீரியம் எனப் பல அணியிலக்கண நூல்கள் காலத்துக்குக் காலம் எழுந்துள்ளன. இவற்றுள் சிறந்து விளங்குவது தண்டியலங்காரமாகும். இந் நூலையடுத்துப் பல பல அணியிலக்கணங்கள் தோன்றினாலும் இதன் சுருக்கம், எளிமை, தெளிவு, இனிமை காரணமாக இதுவே
இந்துக்கலைக்களஞ்சியம்

Page 99
யாவராலும் பாராட்டிப் பயிலப்பட்டு வந்திருக்கிறது. உதாரணமாக இலக்கண விளக்கத்து அணியியலில் தண்டியலங்கார நூற்பாக்கள் அப்படியப்படியே எடுத்தாளப்பட்டுள்ளன. வீரமாமுனிவரின் தொன்னூல் அணியிலக்கணத்துக்கு தண்டியலங்காரத்தையே பின்பற்றியிருக்கிறது. இதன் சுருக்கமாக தண்டியலங்கார சாரம் என்று ஒரு நூலும் பின் இயற்றப்பட்டுள்ளது. இந் நூல் பன்னிரண்டாம் நூற்றாண்டில் இயற்றப்பட்டது.
தண்டியலங்காரம் வடமொழிக் காவியாதர்ஷம் என்ற நூலைத் தழுவித் தமிழில் வழிநூலாகச் செய்யப்பட்டது. இந் நூலின் பண்டைப் பெயர் அணியதிகாரம் என்று இதற்கமைந்த பழைய உரையால் தெரிகிறது. “தமிழிலேயுள்ள ஒரு அலங்கார நூல் இது. இது வடமொழியிலுள்ள காவியாதர்ஷ மென்னும் அலங்கார சாஸ்திரத்தின் மொழிபெயர்ப்பு மொழிபெயர்த்தவர் இன்னாரெனப் புலப்படவில்லை. என மதுரைத் தமிழ்ப் பேரகராதி குறித்து நிற்கின்றது. எனவே வடமொழிக் காவியா தர்ஷத்தை தழுவியே தமிழில் தண்டியலங்காரம் எழுதப்பட்டது என்பதனை ஏற்றுக் கொள்ள வேண்டியுள்ளது. இவ்வாறு எழுதப்பட்ட போதும் இதிகாசக் கதையை அடிப்படையாகக் கொண்டதாக காவியம் அமைய வேண்டுமெனக் குறிப்பிடவில்லை. ஆனால் வாழ்த்து வணக்கம் வருபொருள் எனத் தண்டியலங்காரம் குறிப்பிட்டதை வடமொழிக் காவியாதர்ஷமும் குறிப்பிட்டமைக்கு சான்றுண்டு. மற்றும் கதாநாயகன் பற்றிக் கூறும்போது வடமொழிக் காவியாதர்ஷம் சதுரோத்த நாயகன் என்றும் தண்டியலங்காரம் தன்னிகரில்லாத் தலைவனையுடைத்தாய் என்றும் குறிப்பிடுகின்றன. எனவே தழுவலாக இந் நூல் அமைந்து தமிழ் இலக்கியத்திற்கேற்ப இலக்கணம் வகுக்கும் நூலாகவே காணப்படுகின்றது.
இதன் அமைப்பை நோக்கும்போது இந் நூல் கடவுள் வாழ்த்துடன் தொடங்குகின்றது.
சொல்லின் கிழத்தி மெல்லிய வினையடி சிந்தைவைத் தியம்புவல் செய்யுட் கணியே’
என சரஸ்வதியை வேண்டி ஆசிரியர் நூலையாக்கத் தொடங்குகின்றார். அடுத்து பொதுவியல், பொருளணியியல், சொல்லணியியல் என்ற மூன்று பகுதிகளில் அணியிலக் கணத்தைக் கூறிச்செல்கின்றார்.
இந் நூல் பொதுவியலில் பெருங்காப்பிய சிறுகாப்பிய இலக்கணங்களையும் செய்யுள் நடையையும் பற்றிய பொது இலக்கணங்களைக் கூறுகின்றது. காப்பிய இலக்கணத்தை இந் நூல் கூறியளவிற்கு வேறு எந்தத் தமிழ் நூல்களும் குறிப்பிடவில்லை எனலாம். காப்பியம் பற்றி தண்டி,
'பெருங்காப்பிய நிலை பேசுங்காலை வாழ்த்து வணக்கம் வருபொருள் இவற்றில் ஒன்று ஏற்புடைத்தாகி முன்வரவியன்று
இந்துக்கலைக்களஞ்சியம்
. ܓܒܝ ܦ --

நாற்பொருள் பயக்கு நடைநெறித்தாகித் தன்னிகரில்லாத் தலைவனையுடைத்தாய் மலை கடல் நாடு வளர்நகர் பருவம் இரு சுடர்த் தோற்றம் என்று இணையன புனைந்து நன்மணம் புணர்தல் பொன்முடி கவித்தல் பூம் பொழில் நுகர்தல் புனல் விளையாடல் தேம்பிழி மதுக்களி சிறுவரைப் பெறுதல் புலவியில் புலத்தல் கலவியிற் களித்தலென்று இன்னன புனைந்த நன்னடத்தாகி மந்திரம் தூது செலவிகல் வென்றி சந்தியில் தொடர்ந்து சருக்கம் இலம்பகம் பரிச்சேதம் என்னும் பான்மையின் விளங்கி நெருங்கிய சுவையும் பாவமும் விரும்பச் சான்றோர் புனையும் பெற்றியதென்ப"
எனக் கூறுகிறார். பின் எழுந்த காப்பியங்களில் இவ் விலக்கணங்களைக் காணக்கூடியதாகவுள்ளது. செய்யுள் வகை பற்றிக் கூறுமிடத்து,
"செய்யுளென்பவை தெரிவுற விரிப்பின் முத்தகங் குளகங் தொகை தொடர்நிலையென எத்திறத் தனவு மீரிரண்டாகும்”
செய்யுளென்று கூறப்படுவன முத்தகம், குளகம், தொகைநிலை, தொடர்நிலை என நான்கு வகைப்படும் என்கிறார். இதில் ஆசிரியர் பாவிக்கும் குளகம், முத்தகம் என்னும் சொற்கள் வடமொழிச் சொற்களே. செய்யுள் நெறி பற்றிக் கூறுமிடத்து,
"வைதருப்பம்பே கெளடமென்றாங்கு
எய்திய நெறிதாம் இருவகைப்படுமே” என்கிறார்.
வைதர்ப்ப நெறியானது
“செறிவே தெளிவே சமநிலையின்பம் ஒழுகிசை யுதார முய்த்தலில் பொருண்மை காந்தம் வலியே சமாதி யென்றாங் காய்ந்த வீரைங் குனனுமுயிரா வாய்ந்த வென்ப வைதருப்பம்மே”
பொருள் எளிதில் விளங்குவதாய்ச் சொல்வன்மை இல்லாததாய் விளங்குகின்ற மிடுக்கில்லாத நடையினையுடையது வைதருப்ப நெறி. அதாவது செறிவு, தெளிவு, சமனிலை, இன்பம், ஒழுகிசை, உதாரம், உய்த்தலில் பொருண்மை, காந்தம், வலி, சமாதி என்ற பத்துக் குணங்களையுடையது வைதர்ப்பமாகும். பொருள் எளிதில் விளங்காததாய்ச் சொல்வன்மை மிக்கதாய் விளங்குகின்ற மிடுக்கான நடையினையுடையது கெளட நெறியாகும்.
பொருளணியியல் எனும் அத்தியாயத்தை தொடங்கும்போதும் ஆசிரியர்,
67

Page 100
"என்னையுடையாள் கலைமடந்தை எவ்வுயிர்க்கும் அன்னையுடைய வடித்தளிர்கள் - இன்னளிகுழ் மென்மலர்க்கே கன்று மெனவுரைப்பார் மெய்யிலா வன்மனத்தே தங்குமோ வந்து”
என சரஸ்வதியை நினைத்துக் காப்புப் பாடுகின்றார். அடுத்து பொருளணி பற்றிக் குறிப்பிடும்போது முப்பத்தைந்து வகை அணிகள் பற்றிக் கூறுகின்றார். செய்யுளில் பொருளை உணர்த்தி அச் செய்யுளை அழகு பெறச் செய்வது பொருளணி, இதனை ஆசிரியர்,
தன்மை உவமை உருவகம் தீவகம் பின்வரு நிலையே முன்ன விலக்கே வேற்றுப் பொருள் வைப்பே வேற்றுமை விபாவனை ஒட்டே அதிசயம் தற்குறிப்பேற்றம் ஏது நுட்பம் இலேசம் நிரனிறை ஆர்வ மொழிகனவ தன்மேம்பாட்டுரை பரியாயம்மே சமாய்தம் உதாத்தம் அரிதுனர் அவநுதி சிலேடை விசேடம் ஒப்புமைக் கூட்ட மெய்ப்படு விரோதம் மாறுபடு புகழ்நிலை புகழாப் புகழ்ச்சி நிதரிசனம் புனர்நிலை பரிவருத்தனையே வாழ்த்தொடு சங்கீரனம் பாவிகம் இவை ஏற்ற செய்யுட் கணியே ழைந்தே"
என கூறுகின்றார். முப்பத்தைந்து அணிகள் இங்கு கூறப்பட்டுள்ளன. பொருளணியியலில் உள்ள தீவகம் பின்வரு நிலையணி, நிரனிறை, சிலேடை, விரோதம் ஆகியவை சொல்லணிகள் என்றும் அவை பொருளணிகளுக்கு இடையிடையே வந்துள்ளன என்றும் கூறுவர். தண்டியலங்கார ஆசிரியர் அணியைப் பொருளணி, சொல்லணி என்று இரண்டுவகையாகப் பிரித்தாலும் சொல்லணி என்பது எழுத்தணிகளின் கூட்டத்தால் அதாவது ஒலியால் மடங்கிவரும் என்றே கூறியுள்ளார். சொல்லால் வரும் என அவர் குறிப்பிடவில்லை. உதாரணமாக திவகம் என்பது சொல்லால் பிறப்பினும் பிறவிடங்களில் சென்று பொருள் தருகின்றது என்பது ஆசிரியரின் கருத்தாகும்.
எழுத்துக்களது தொகுதி பிற எழுத்தாலும் சொல்லாலும் இடையிடாதும் இடையிட்டும் நிற்க மீண்டும் வந்து வேறு பொருளைப் பயப்பது சொல்லணியாகும்.
"எழுத்தின் கூட்ட மிடைபிறிதின்றியும் பெயர்த்தும் வேறு பொருடரின் மடக்கெனும் பெயர்த்தே'
என்பது நூற்பா. மடக்கு நான்கடிகள் கொண்ட செய்யுளே. மடக்கும்போது ஒரடிக்கண்ணும், ஈரடிக்கண்ணும், மூன்றடிக்கண்ணும், நான்கடிக்கண்ணும் நிகழும் என்று கூறுவர். மடக்கு ஆதிமடக்கு, இடை மடக்கு, கடை மடக்கு ஆதியோடு இடைமடக்கு ஆதியோடு கடைமடக்கு இடையோடு கடை மடக்கு, முழுது மடக்கு என ஏழு வகைப்படும்.
68

சித்திரக் கவி பற்றிக் கூறும்போது கோமூத்திரி கூட சதுக்கம், மாலைமாற்று, எழுத்து வருத்தனம், நாகபந்தம், வினாவுத்தரம், காதை கரப்பு, கரந்துறைச் செய்யுள், சக்கரம், சுழிகுளம், கருப்பதோபத்திரம், அக்கரச்சதகம் ஆகிய பன்னிரண்டும் அவ்வெழுத்து மடக்கலங்காரத்தின் பாற்பட்டனவாகும் என்கிறார். சித்திரம் என்பது வியப்பு எனப் பொருள்படும். வியப்பு தோன்ற இயற்றப்படுவது சித்திரக் கவி ஆகும்.
இறுதியில் வழுக்களின் 6) I 6Ö) 5G5 6Ö) ULI ஆசிரியர் குறிப்பிட்டுள்ளார். பிரிபொருள் சொற்றொடர், மாறுபடு பொருண்மொழி, நிரனிறைவழு. சொல்வழு, யிதவழு, செய்யுள் வழு, சந்தி வழு என வழுக்கள் ஒன்பது வகைப்படும். வழுக்கள் பற்றிக் கூறிய ஆசிரியர் மலைவு பற்றியும் குறிப்பிடுகின்றார். இட மலைவு, கால மலைவு, கலை மலைவு, உலக மலைவு, நியாய மலைவு, ஆகம மலைவு என மலைவுகள் ஆறுவகைப்படும் எனக் குறிப்பிடுகின்றார். மேற்கூறிய வழு ஒன்பதும் இவ்வகையால் புணர்ப்பின் என்று கூறியமையால் அது போன்று இங்கு சொல்லப்பட்ட அறுவகை மலைவும் நாடக வழக்கில் சொல்லுதற்குரியதாகின்றது.
இவ்வாறு இந்நூலில் கூறப்பட்ட இலக்கணம் அனைத்துக்கும் புறநடையும் ஒன்று உள்ளது என்று கூறி இறுதியில் புறநடையினை ஒரு செய்யுளில் கூறி முடிக்கின்றார். இறுதிச் செய்யுளில் பொருள் பெற விரித்த முத்தகம் குளகம் தொகைநிலை தொடர்நிலையெனக் கூறப்பட்ட செய்யுள் மரபும் கெளடம் வைதர்ப்பம் என்ற செய்யுள் நெறியும் செறிவு முதலிய பத்துவகைக் குணமும் தன்மை முதலிட முப்பத்தைந்து அணியும் மூவகை மடக்கும் கோமூர்த்தி முதலான சித்திரக்கவி பன்னிரண்டும் இவ்வாறு கூறுதல் வலுவென்றும் இவ்வாறு கூறுதல் வழக்கு என்றும் சொல்லப்பட்ட பதினைந்து வேறுபாடுகளும் இவை யாவும் அடங்கிய இலக்கணங்களுக்கு அப்பால் எதுவரினும் அதனைத் தழி இக் கோடல் அறிவுடையோர் கடன் எனக் கூறி முடிக்கின்றார். இந் நூல் நூற்றிருபத்தாறு செய்யுட்களைக்கொண்டது.
இந் நூலின் ஆசிரியரின் வரலாறு தெளிவாகத் தெரியவில்லை. இவர் தண்டி யென்னும் பெயருடையவர் என ஒரு சாராரும் வடதிசையிலிருந்து. தண்டி என்பவனே என்ற சிறப்புப் பாயிரச் செய்யுளின் துணையால் இவர் சோழ நாட்டவர் கம்பர் மகனார் அம்பிகாபதியின் குமாரர் - தண்டி என்னும் பெயரினர் என்று மற்றொரு சாராரும் கூறுவர். தண்டி என்பது இவர் இயற்பெயரோ அல்லது வடநாட்டுத் தண்டியரின் நூலை மொழிபெயர்த்த காரணத்தால் அடைந்த புகழ்ப்பெயரோ எனத் துணிவதற்கில்லை. எவ்வாறாயின் இந் நூல் மிகச் சிறந்த தென்பதையும் இந் நூலாசிரியர் வடமொழி தென் மொழிகளில் மிக்க வல்லுனர் என்பதனையும் இவர் தமிழ்க் கவித் திறனுடையார் என்பதனை மறுப்பவர் எவருமிலர். இந் நூலாசிரியர் தாம் கூறும் இலக்கணத்துக்கு தக்க எடுத்துக் காட்டுக்களை முன்னோர் நூல்களில் இருந்து எடுத்துள்ளார். வடமொழிக் காவியா தர்ஷத்தின் எடுத்துக்காட்டுகளையும் தமிழில் தந்துள்ளார்.
இந்துக்கலைக்களஞ்சியம்

Page 101
தாமாகப் புதியவைகளையும் சேர்த்துள்ளார். கலைமகள் பற்று இவரிடம் நிறைய உண்டு என்பதனை வாழ்த்துப்பாடி நூலை ஆரம்பிப்பதில் இருந்து அறிய முடிகின்றது. பொருள் வேற்றுமைக்கு செல்கதிரையும் செந்தமிழையும் இணைத்துக் காட்டும் ஓங்கலிடை வந்து' என்னும் பாட்டு இவரது தமிழுணர்வை வெளிப்படுத்தி நிற்கின்றது.
இந் நூலுக்கு சுப்பிரமணியதேசிகர் உரை எழுதியுள்ளார். இந் நூலின் பழைய பிரதியில் சுப்பிரமணிய தேசிகராற் செய்யப்பட்ட உரை என்றே குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்வுரை சூத்திரத்தின் பொருளை நன்கு விளக்கி அச் சூத்திரங்களிற் காணப்படும் அணி வேறுபாடுகளின் இலக்கணத்தை எடுத்துக் காட்டி உதாரணச் செய்யுள்களின் பொருளையும் விளக்கிச் சில இடங்களில் மறுப்பும் விளக்கமும் கூறி முதனூலின் கருத்தையும் தழுவிச் செல்வதால் சிப்புடைய உரையாக அமைகின்றது. இங்கு காட்டப்படும் உதாரணங்கள் பெரும்பாலும் முதனூலாகிய வடமொழிக் காவியாதர்ஷத்தில் குறிப்பிட்டவையே. சிலவற்றிற்கு உதாரணங்கள் கொடுக்காவிடினும் அவை எளிதில் விளங்கக் கூடியவையே என உரையாசிரியர்கள் எண்ணியிருக்கலாம் எனக் கருத முடிகின்றது. இவ் உரையுடன் கூடிய நூலை 1857 இல் தில்லையம்பூர் சந்திர சேகர பண்டிதர் பதிப்பித்தார். 1903 இல் சுன்னாகம் குமாரசுவாமிப் புலவர் உரை எழுதி வெளியிட்டார்.
இ. ச)
தண்டின்
"உபமா காளிதாஸஸ்ய மாகே சந்தி தண்டின படலாலித்யம் பாரவே அர்த்தகெளரவம்”
என்பது சமஸ்கிருத மொழி இலக்கிய கர்த்தாக்களைப் பற்றிய ஒரு முதுமொழியாகும். இலக்கிய நயத்தில் வெவ்வேறான நான்கு பண்புகளில் ஒவ்வொன்றை இணையிலாச் சிறப்புடன் தங்கள் நூல்களில் விளக்கும் ஆசிரியர்களை இது அடையாளங் காண்கின்றது. அந்தக் கணிப்பீட்டில் சமஸ்கிருத மொழியிலுள்ள இலக்கியப் பரப்பில் காளிதாஸர், மாகர், தண்டின், பாரவி என்போர் முதன்மையானவர்கள். உவமைகளைக் கையாள்வதில் மகாகவி காளிதாஸர் இணையிலாதவர். சந்திவிதிகளைச் செம்மையாகப் பின்பற்றுவதில் மாகர் வல்லவர். கிராதார் ஜூனியம் என்னும் காவியத்தின் ஆசிரியரான பாரவியின் கவிதைகள் பொருட் டெளிவும் பொருளாழமும் மிக்கவை. தண்டின் எழுதிய நூல்களிற் காணப்படும் சொல்லாட்சியும் அலங்காரமும் பொருள் விளக்கமும் சாலவுஞ் சிறந்தவை.
இலக்கியங்களில் மிகுந்த பாண்டித்தியம் பெற்ற பல்துறை விற்பன்னராக விளங்கியவர் தண்டின். அவர் இலக்கிய வாதிகளில் முதல்வர். காவிய இலக்கணங்களையும் அணி அலங்காரங்களையும் விமர்சனரீதியாக ஆராய்ந்து வகைசெய்யும் நூல்களில் அவர் எழுதிய காவ்யாதர்சம் பிரதானமானதும் முதன்மையானதுமாகும். அது மொழிநடை இலக்கியவளர்ச்சி என்பன பற்றிய அறிவுக் களஞ்சியமாக அமைவதோடு சமஸ்கிருத இலக்கிய வளர்ச்சியில் மிகுந்த செல்வாக்கினைச் செலுத்தியுமுள்ளது.
இந்துக்கலைக்களஞ்சியம்

சமஸ்கிருத இலக்கிய வரலாற்றில் வசனநடை இலக்கியத்திற்கும் சிறப்பிடமுண்டு. அம்மொழியிலே புராதன காலம் முதலாக வசனநடையிற் கதைகள் எழுதப்பட்டுள்ளன. வசனநடை வேதங்களின் சில பகுதிகளிலும் அர்த்தசாஸ்திரம் போன்ற நூல்களில் இடையிடையேயும் காணப்பட்டுள்ளது. காலப்போக்கிலே சிறுகதை, பெருங்கதை என்ற வடிவங்கள் உருப்பெற்றன. வசனநடையில் அமைந்த கதைகளை ஆக்யாயிகா, கதா என்ற இருவகைகளாகப் பாகுபாடு செய்வது வழக்கம். இவற்றுள் முன்னையவை வரலாற்று நிகழ்ச்சிகளை ஆதாரமாகக் கொண்டவை என்றும் கதா என்னும் வகைக்குரியனவற்றை கற்பனைக் கதைகள் என்றும் அமர என்பவர் கருதினார். அவற்றோடு வேறு சில வேறுபாடுகளையும் பாமகர் அடையாளங் கண்டார். ஆயினும் தண்டின் அக் கருத்துக்களை நிராகரிப்பதோடு ஆக்யாயிகா, கதா என்பன ஒரு வகையான இலக்கிய வடிவத்தின் இருவேறான பெயர்களென்றுங் கொள்வர்.
வசனநடை இலக்கிய கர்த்தாக்களில் மிகப் பிரசித்தமானவர்கள் தண்டின், பாணபட்டர் என்போராவார். தசகுமாரசரிதம், ஹர்ஷசரிதம் மூலமாக அவர்களின் புகழ் விசாலமாகியது.
தசகுமாரசரிதம் மூன்று பகுதிகளைக் கொண்டது. முன்னுரையாக அமைந்தது பூர்வபீடிகைப், உத்தரபீடிகை முடிவுரை போல அமைந்துள்ளது. அவையிரண்டும் பிற்காலத்து ஆசிரியர்களால் நூலுடன் இணைக்கப்பட்டவை என்று கருதப்படுகின்றது. ஆயினும் நூலின் பிரதான பகுதியான கதைப்பகுதி தண்டின் என்பவரால் எழுதப்பட்டது என்பது எல்லோராலும் ஒப்புக்கொள்ளப்படுகின்றது.
பத்து இராசகுமாரர்களைப் பற்றிய கதை என்பதால் நூல் தசகுமார சரிதம் என்னும் பெயரைப் பெற்றது. அவர்களில் ராஜவாஹன என்பவனே கதாநாயகன். அவனும் அவனது ஒன்பது நண்பர்களும் விதிவசத்தால் ஒருவரையொருவர் விட்டுப் பிரிந்தனர். தனிமையில் அவர்கள் பலவிதமான இன்ப துன்பங்களை அனுபவித்தனர். மீண்டும் அவர்கள் இணைந்துகொள்ள முடிந்தது. தாம் ஒவ்வொருவரும் கண்ட அனுபவங்களைக் கதையாகவே மற்றவர்களுக்குக் கூறும் பாங்கிலே நூல் உருவாக்கப்பட்டுள்ளது.
ஒரு சமூகவாழ்க்கைச் சித்திரம்போல தசகுமார சரிதம் அமைகின்றது. கதைகள் கற்பனைக் கதைகள், பாத்திரங்களும் கற்பனையாகவே அமைந்தவை. ஆயினும் கதாபாத்திரங்களின் இயல்புகளும் சமூகப் பண்புகளும் இயல்பானவை; யதார்த்த பூர்வமானவை. அதிலே வெவ்வேறு சமூகப் பிரிவுகளைச் சேர்ந்த ஆண்களையும் பெண்களையும் பற்றிய வர்ணனைகள் காணப்படுகின்றன. அவர்கள் குணநலன்களும் நானாவிதமானவை. மனிதரின் இயற்கையான குணாதிசயங்களையும் அவை சுற்றம், சூழல், சந்தர்ப்பம் என்பவற்றின் காரணமாக மாறுபடுவதையும் சித்திரம் போலச் சொற்களால் உருவகப்படுத்துவதில் தண்டின் மிகுந்த வல்லமை கொண்டவர், தசகுமார சரிதத்திலே
69

Page 102
கதாபாத்திரங்கள் உயிரோட்டமானவை; வசனநடை தெளிவானது; சொல்வளம் மிகவுங் கவர்ச்சியானது. அதனால் கற்போரையும் கல்விமான்களையும் இலக்கியவாதிகளையும் மிகவும் கவர்ந்த நூலாக அது நெடுங்காலம் விளங்கியது.
த்விசந்தான - காவியம் என்னும் நூலையும் தண்டின் எழுதினார் என்பது போஜரின் சிருங்காரப் பிரகாசம் என்னும் நூல் மூலம் தெரியவருகின்றது. அது மகாபாரதம், இராமாயணம் என்பவற்றின் கதைகளைச் சிலேடை நயத்துடன் இணைத்துக் கூறுகின்றது. அதனை மாதிரியாகக் கொண்டு பின்பு பல நூல்கள் இயற்றப்பட்டன. அவை விலோம காவியம் என்னும் பொதுப்பெயரால் வழங்கி வந்தன.
தண்டின் காஞ்சிபுரத்திலே பல்லவ அரசனாகிய ராஜசிம்மனின் காலத்தில் வாழ்ந்தவர் என்று சிலர் கொள்வர் அவர் பாணர், சுபந்து ஆகியோருக்கு முற்பட்டவர் போலத் தெரிகின்றது. அவருடைய நூல்களில் வரும் தேசவர்ணனைகள் இராச்சியங்கள் பற்றிய குறிப்புகள் முதலானவை அவரின் கால பூரீ ஹர்ஷருடைய காலத்துக்கு முற்பட்டது என்ற சிந்தனைக்கு ஏதுவாகின்றன. (β' ρη
தண்ணுமை
மிருதங்கம் போன்ற இசைக்கருவி. பழந் தமிழர்களால் தண்ணுமை என்று பெயரிடப்பட்டது. இத் தோற்கருவி இரண்டு தலைகளையும் நீண்ட உடலினையும் உடையது. ஒரு முகத்தை தாழச் செய்து உயர்ந்த மற்றொரு முகத்தின் கண் இரண்டு தடிப்புகளால் ஒலித்தலால் முழங்கும். நுட்பமான லயச் சொ கட்டுகளை அமைத்து வாசித்து, இசைக்குத் துணையா இருந்தமையால் இந்த இசைக் கருவிக்கு அதிக முக்கியத்துவ கொடுக்கப்பட்டது.
தண்ணுமை
குரவை கூத்தில் தண்ணுமை ஒரு பக்க இசைக் கருவியா முழக்கப்பட்டது எனத் தெரிகிறது.
'தன்னுமைப் பாணி தளராது எழுவுக பண்ணமை இன் சீர்க் குரவை タタ
கலித்தொகை (102:34,35)
7ó
 

சிலப்பதிகாரம் அரங்கேற்றுக் காதையில் அடி 45-55 வரையான பகுதிகளில் தண்ணுமையோன் தகமை, அமைதி என்பனவற்றை இளங்கோவடிகள் விவரித்துக் கூறியுள்ளார்.
இடைக் கருவிகள் பன்னிரண்டில் ஒன்றாகவும், புறமுழவுகள் பன்னிரண்டில் ஒன்றாகவும், தண்ணுமை குறிப்பிடப்பட்டுள்ளது.
இது மத்தளத்திற்கு முந்திய கருவி. தண்ணுமையின் வாய் தோலில் முதலில் சிறிது தண்ணிரைத் தடவி, தோலைப் பக்குவப்படுத்தி, ஒலி தாழ்ந்து ஒலிக்குமாறு இதனை இசைத்தனர். இதனை மேல் வருமாறு புறநானூறு கூறுகின்றது.
"ஈழத்தன் முழவின் பாதிததும்ப'புற 264:2)
ஆமந்திரிகை என்று பழங்காலத்தில் கூறப்பட்ட இசைக் கருவிகள் குழுவில் முதலில் தண்ணுமை முழங்கியது எனவும் அதனையொட்டி முழவு முழங்கியது எனவும் கூறப்பட்டுள்ளது.
"குழல் வழிநின்றது யாழே யாழ் வழித் தன்னுமை நின்றது தகவே தன்னுமைப் பின் வழி நின்றது முழவே முழவோடு கூடி நின்றிசைத்தது ஆமந்திரிகை”
(சிலப் - அரங் - 139-142)
தண்ணுமை இனிய தாழ்ந்த ஓசையை உடையது. ஆகவே அது முதலில் முழங்கியது. முழவு சற்றுப் பெரிய ஓசையை உடையது. ஆகவே தண்ணுமையையொட்டி முழவு முழங்கியது. பழந்தமிழர்களால் தாளக் கருவிகளுள் ஒன்றாக தண்ணுமை பயன்படுத்தப்பட்டதை தமிழ் இலக்கியங்கள் வாயிலாக அறிய முடிகின்றது. (தே. ஹ)
தணிகைப் புராணம்
திருத்தணிகை மலையில் கோயில் கொண்டுள்ள முருகக் கடவுளின் திருவருட் செயல்களை விளக்கும் வகையில் எழுந்தது இந்நூல். இது கி. பி. 18ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த கச்சியப்ப முனிவரால் இயற்றப்பட்டது.
இப்புராணம், 3161 செய்யுட்களில் திருநாட்டுப் படலம், திருநகரப் படலம், நிமிசப் படலம், புராண வரலாற்றுப் படலம், விராட்டகாசப் படலம், குமரேசப் படலம், பிரமன் சிருட்டி பெறு படலம், நந்தியுபதேசப் படலம், அகத்தியனருள் பெறுபடலம், நாரணன் அருள்பெறு படலம், இந்திரன் அருள்பெறு படலம், களவுப் படலம், வள்ளி நாயகி திருமணப் படலம், விடையருள் படலம், நாரதன் அருள்பெறு படலம் முதலிய 19 படலங்களைக் கொண்டு இலங்குகின்றது.
புராண மரபிற்கேற்ப நைமிசாரணியத்து இருடிகளைப் பார்த்துச் சூத முனிவர் கூறுவதைப் போன்றே இப்புராணமும் தொடங்குகிறது. ஆயின் முழுமையாகப் புராணக் கருத்துக்களையே கூறாது. மேலும் பல்வேறு வகையான கருத்துக்களைக் கூறுவது இப்புராணத்தின் சிறப்பாகும்.
இந்துக்கலைக்களஞ்சியம்

Page 103
இத் தணிகைப் புராணத்தைக் கா. நமச்சிவாய முதலியார் முதன் முதலாகப் பதிப்பித்தார். பின்னர்ச் சைவசித்தாந்த நூற் பதிப்புக் கழகமும், திருவாவடுதுறை ஆதீனமும் பதிப்பித்தன. இவற்றுள் சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தின் பதிப்பு உரையோடு கூடிய திருந்திய பதிப்பாக வெளிவந்துள்ளது.
மேற்சொன்ன படலங்களைக் கொண்டு அமைக்கப்பெற்ற தணிகைப் புராணத்தின் சில படலங்கள் தனித்தனிக் கருத்துகளை முழுமையாகக் கூறுவனவாக அமைந்துள்ளன. களவுப் படலம் தொல்காப்பிய அகத்திணைக் கூறுகளையும், சீபரிபூரண நாமப் படலம் தொல்காப்பியப் புறத்திணைக் கூறுகளையும், திருத்தணிகை முருகன் நந்திக்கு உபதேசிக்கும் முகமாக அமைகின்ற நந்தி உபதேசப்படலம் மெய்கண்ட சாத்திரங்கள் பதினான்கின் சாறாகி மெய்ப்பொருட் கருத்துகளையும் விளக்குகின்றன. களவுப் படலத்தைக் கோவை இலக்கணமாகிய கட்டளைக் கலித்துறையில் பாடியுள்ள திறம் பாராட்டுதற்குரியது. மேற்சொன்ன படலங்களை நூலிலிருந்து பிரித்து எடுத்து அவற்றைத் தனித்தனி நூல்களாக்கவும் இயலும். இவ்வாறு பல்வேறு நூல்களை இணைத்துப் பொதிந்த தணிகைப் புராணம் என்னும் நூலாக ஆக்கிய திறம் கச்சியப்ப முனிவருக்குரியது.
தணிகைப் புராணத்தின் களவுப் படலமும், வள்ளி நாயகி திருமணப்படலமும், களவு, கற்பு ஆகிய அகப்பொருட் கருத்துக்களைக் கூறுகின்றன. குறிப்பாகக், களவுப்படலம் தொல்காப்பியம் கூறுகின்ற களவு இலக்கணத்தை அடியொற்றியும் பிற்காலத்தே தோன்றிய கோவை அமைப்பைப் பொருந்தியும் அமைந்து காணப்படுகிறது. களவு மணத்தின் சிறப்புக் கருதியே களவுப் படலத்தைத் தாம் அமைந்திருப்பதாகக் கச்சியப்ப முனிவரும் கூறுவர். 643 செய்யுட்களைக் கொண்டுள்ள இப்படலத்துள் வள்ளியின் பிறப்பும், நாரதர் வள்ளியிள் அழகினைக் கூறுவதும், முருகன் வள்ளியினைக் கண்ணு வதற்கான குறிப்பும், முருகன் வள்ளி ஆகியோரின் களவொழுக்கமும், பின்னர் வரைவு வேண்டுதலும் போன்ற களவுக்குரிய நிகழ்ச்சிகள் முறைபடக் கூறப்படுகின்றன. மேலும், புகுமுகம் புரிதல் முதலாகிய களவிற்கே உரிய மெய்ப்பாடுகள் பலவற்றையும் எடுத்தியம்புகின்றது.
மரபுவழி இலக்கணங்களுக்கேற்பத் தம்புராணத்தையும் அமைக்க வேண்டும் என்ற கச்சியப்ப முனிவரின் அவா களவுப் படலத்தின் வழி வெளிப்பட்டது போன்று சிரீபரிபூரண நதமப் படலத்திலும் வெளிப்படுகின்றது. இப்படலம் முருகனுக்கும் சூரனுக்கும் இடையே நிகழ்ந்த போர் நிழ்ச்சிகளை விரித்துரைப்பது. சூரனும் அவன் தம்பி பதுமனும் பல்லூழிக் காலம் முருகனை நோக்கித் தவமிருந்து அவனது ஊர்தியாகவும் கொடியாவும் ஆக நோற்ற நோன்பின் பயன் அப்போரின் முடிவில் கூறப்படுகிறது. அப்போரில் சூரபதுமர்களை அழித்த முருகனின் ஆற்றலும், அவர் தோற்றமைக்கு அருளிய அருள் திறமும், முருகக் கடவுள் எய்திய புகழும் அதன்கண் விளக்கப்படுகின்றன. இத்தகய சிறப்புக்களைக் கூறும் அப்படலத்தைத் தொல்காப்பியப்
இந்துக்கலைக்களஞ்சியம்

புறப்பொருட் கருத்துக்களை அடியொற்றியும் புறப்பொருள் வெண்பாமாலை காட்டும் சில துறைகளை மேற்கொண்டும் கச்சியப்ப முனிவர் அமைத்துள்ளார் என்பது நோக்கத்தக்கது. தாம் சார்ந்த சைவ சமயத்தைப் பரப்பியவர் கச்சியப்ப முனிவர். அகத்தியன் பேரருள் பெறும் படலத்துள் விதிவழிப் பூசனை, சமய ஒழுக்கம், வழிபாட்டு முறை, சரியை, கிரியை, யோகம், ஞானம் எனும் சமய நெறிகள், அடியவர்களைப் போற்றும் பாங்கு முதலியனவும் ஒதல், ஒதுவித்தல் ஆகியவற்றின் திறமும், ஆசிரியர் மாணாக்கரின் இலக்கணமும், மண்டபம் கோயிலெடுத்தல் முதலியவற்றின் சிறப்பும், தானங்கள், வழிபாடாற்றுதல், இறையுருச்சமைத்தல் ஆகியவற்றின் சிறப்புகளும் பேசப்படுகின்றன.
சாத்திர நூல்களுக்குப் பின் கந்தபுராணம், காஞ்சிப் புராணம், தணிகைப் புராணம் முதலியன மெய்ப் பொருட் கருத்துக்களை உலகிற்கு உணர்த்த எழுந்தவை. இவற்றுள்ளும் தணிகைப் புராணம் தனித் தன்மை வாய்ந்தது. ஏனைய இரண்டும் இக் கருத்துக்களைப் புராணத்துள் பரவலாகப் பேசியிருக்க தணிகைப் புராணம் மட்டும் அக் கருத்துகளைப் பரவலாகவும், தனிப்படலத்துள்ளும் நந்திக்கு உபதேசிக்கும் முகமாகவும் விளக்கி நிற்கின்றது. சீபரிபூரண நாமப் படலம் அகச் சமயங்கள், சித்தாந்த சைவம், உள்பொருள்கள், பதி உண்மை, சக்தியின் செயல், மாயை, பசு உண்மை, பாச உண்மை, அவத்தைகள், பாச நீக்கம், தீக்கை வகைகள், சீவன் முக்தர் நிலை முதலியவற்றையெல்லாம் விளக்குகின்றது.
இந்நூல் முழுவதும் உவமை அணியின் செல்வாக்குப் பெற்றுத் திகழ்கிறது. மேலும், தன்மை, சிலேடை உருவகம், உயர்வு நவிற்சி, தற்குறிப்பேற்றம் வேற்றுப்பொருள் வைப்பு, பரிவருத்தனை போன்ற பல அணிகளின் கொள்கலமாகவும் விளங்குகிறது.
கலித்தொகை போன்ற சங்க நூல்களின் செல்வாக்கும் திருக்குறள் போன்ற நீதிநூல்களின் செல்வாக்கும், சிந்தாமணி கம்பராமாயணம் போன்ற காப்பியங்களின் செல்வாக்கும், பெரிய புராணம், கந்த புராணம், திருவிளையாடற் புராணம், காஞ்சிப் புராணம் போன்ற புராண நூல்களின் செல்வாக்கும் மெய்கண்ட சாத்திரங்களின் செல்வாக்கும் இந் நூலுள் மிகுதியும் காணப்படுகின்றன. - (b, 6്കff)
6600/76060/60/7
திருத்தணிகை முருகனைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு பாடப்பட்ட நூல் இவ்வுலாவாகும். இது திருத்தணிகைச் சந்நிதி முறை என்னும் தொகுதி நூல்களுள் எட்டாவதாக விளங்குகிறது. இந்நூலினைப் பாடிய கந்தப்பையர் என்பார் வீர சைவர். சிவஞான முனிவரின் மாணவராய கச்சியப்பரின் மாணவர். பன்னூலாசிரியர்களாக விளங்கிய விசாகப் பெருமாளையர், சரவணப் பெருமாளையர் ஆகியோரின் தந்தை. இவர் காலம் கி. பி. 18ஆம் நூற்றாண்டு.
7f

Page 104
தணிகையுலா 647 கண்ணிகளையுடையது. அதன் இறுதிக் கண்ணியின் இறுதியடி 'உலவாச் சேய் வந்தான் உலா என்பது. முருகனைப் பற்றிய புராண வரலாறு, அவன் உலாச்சிறப்பு, இசைக் கருவிகளின் முழக்கம், உடன்வரும் திருக்கூட்டத்தார், உலாக்கண்ட எழுபருவ மகளிரின் செயல்கள் ஆகிய இவற்றை முறையே கூறுகின்றது. முருகப் பெருமானின் உலா ஆதலால் அருணகிரிநாதர், நக்கீரனார், பொய்யாமொழிப்புலவர் ஆகியோரும் திருவுலாக் கூட்டத்துடன் வருவதாகப் பாடியுள்ளார் இந் நூலாசிரியர். இரா. இ)
தத்துவப் பிரகாசம்
தத்துவப்பிரகாசம் என்னம் நூல் சீகாழித் தத்துவப் பிரகாசரால் இயற்றப் பெற்றது. இந்நூலாசிரியர் சீகாழிச் சிற்றம்பல நாடிகளின் மாணவர்; இவர் காலம் கி.பி. 14ஆம் நூற்றாண்டு; இந்நூலுக்கு இவர் மாணவரே உரை செய்திருக்கிறார். தத்துவம் என்பது தத்துவம் (பாசம்), ஆன்மா, சிவன் என்னும் மூன்று பொருள்களையும் குறிக்கம். ஆகவே, இம்முப்பொருள்களையும் விளக்கவல்லது இந்நூல் என்பது தெளிவாம்; சரியை, கிரிசை, யோகம், ஞானம் பற்றி விளக்கிக் கூறவல்ல சிறந்த நூலாகவும் திகழ்கிறது. இந்நூலில் 338 திருவிருத்தங்கள் உள்ளன. முதல் 304 பாக்கள் எண்சீர்க்கழி நெடிலடி ஆசிரிய விருத்தங்களாகவும் எஞ்சியவை அறுசீர்க்கழி நெடிலடி விருத்தங்களாகவுமுள்ளன. இறுதியாக நூற்சிறப்புப் பாயிரம் என ஒரு செய்யுளை உரையாசிரியர் பாடிச் சேர்த்திருக்கிறார். முதலாவது பாயிரத்தில் கடவுள் வாழ்த்துச் செய்யுள்களும் அவையடக்கமுமாக எட்டுச் செய்யுள்கள் உள்ளன. இரண்டாவது அளவை எனும் பகுதியில் 9 பாடல்களில் 7 அளவைகளைப் பற்றிக் குறிப்பிடுகிறார். பின்னர், பதி இலக்கணம் 19 பாடல்களிலும், பசு இலக்கணம் 5 பாடல்களிலும், பாச இலக்கணம் 16 பாடல்களிலும் கூறப் பெறுகின்றன.
பின் பொதுவிதி என சரியையிற்சரியை, சரியையிற்கிரியை, சரியையில் யோகம், சரியையில் ஞானம், கிரியையில் சரியை, கிரியையில் கிரியை, கிரியையில் யோகம், கிரியையில் ஞானம், யோகத்தில் சரியை, யோகத்தில் கிரியை, யோகத்தில் யோகம், யோகத்தில் ஞானம், ஞானத்தில் சரியை, ஞானத்தில் கிரியை, ஞானத்தில் யோகம், ஞானத்தில் ஞானம் என 16 பிரிவுகளைப் பற்றி 111 பாடல்களில் விளக்கியுள்ளார். அக்கினி காரியம், போசனவிதி, நிவேதன விதி, தீக்கை விதி, ஆசாரியன் இலக்கணம், சீடன் இலக்கணம், பூசை விதிகள், பல்வகைப் பட்ட தீக்கை முறைகள், அபிடேக விதி, அந்தியேட்டி விதிகள் முதலியன வெல்லாம் கிரியைப் பகுதிகளில் மிகவும் சிறப்பாக விளக்கம் பெற்றுள்ளன. அடுத்து ஞானத்தில் ஞானப் பகுதியில் மேலும் 74 பாடல்களில் பல்வேறு வகையான சமயக் கொள்கைகளையும் அவற்றிற்குரிய மறுப்புகளையும் காணலாம். பின்னர் 30 அவதாரம் சொல்லப் பெறுகிறது.அவற்றில் சீவன் முத்தி நிலையில் இருக்கும் ஆன்மா அந்நிலையில் நின்று வழுவிய காலத்து மீண்டும் அந்நிலைக்குச் செல்லத் தலைப்படுங்கால் முப்பொருளின் உண்மை நிலையை உணர்ந்து மேல் நோக்கிச் செல்லும் நெறியில் உள்ள 30 படிமுறைகள் சொல்லப்
72

பெறுகின்றன. இவை சுத்தாவத்தையில் நிகழ்வுறும். பின் நிட்டை வகைகள் கூறப் பெறுகின்றன. ஞானி ஞான நிட்டையிலிருக்கும் நிலையும் கூறப் பெறுகிறது. அவருக்கு வினைப்பயன் ஏறாது. ஆதலின் சிவயோகத்து அழுந்துதலால் பாச நீக்கம் கிட்டும். பாசம் நீங்குவதால் மலம் நீங்கிச் சிவப்பேறு சித்திக்கும். இறுதியாகச் சீவன் முத்தி நிலையும் குருலிங்க சங்க வழிபாடும் கூறுவதுடன் இந்நூல் முடிகின்றது. இந்நூல் நந்தியருள் நூல், சிவஞான போதம், சிவஞான சித்தியார், சிவபிரகாசம், ஆகம நூல்கள் என்பவற்றையே முதனூல்களாகக் கொண்டு அவற்றின் வழி நூலாக விளங்குகின்றது. சந்தான ஆசாரியர்களுக்குப் பின்னர் ஏற்பட்ட சிறந்த சைவ சித்தாந்த சாத்திர நூல்களுள் தலையிடத்தை பெறும் தகுதி வாய்ந்தவற்றுள் இந்நூலும் ஒன்று என்பதுதெளிவு.
தன்னை அறிவிக்கும் தற்போதம் மாற்று விக்கும் அன்ன அருள் ஆனந்தம் ஆற்றுவிக்கும் மன்னிய சீர்த் தத்துவப்ரகாசனியல் சண்பையர் கோன் உரைத்த தத்துவப்ர காச நூல் தான்'
என்னும் நூற் சிறப்புப் பாயிரமே இந்நூலின் பெருமையை நன்கு விளக்கவல்லதாயுளது. இரா.ச)
தத்துவப் பிரகாசர்
இவர் சீர்காழிச் சிற்றம்பல நாடிகளின் மாணவர். தத்துவப் பிரகாசம் என்னும் ஒரு சிறந்த சாத்திர நூல் இயற்றியவர். தத்துவப் பிரகாசர் என்னும் பெயர் வாய்ந்தவர்கள் நால்வர் இருந்தனர் என்றும் அவர்களுள் தத்துவப் பிரகாசம் இயற்றியவரைக் காழித் தத்துவப் பிரகாசர் என்று அழைக்கும் மரபுண்டு என்றும் நூல்கள் வாயிலாய் முடிகின்றது.
தத்துவப் பிரகாசம் என்னும் நூல் சரியை, கிரியை, யோகம், ஞானம் என்னும் நான்கு பாதங்களையும் விளக்கிக் கூறுகிறது. மேலும், சரியையில் சரியை, சரியையில் கிரியை, சரியையில் யோகம், சரியையில் ஞானம் என்றவாறு ஒவ்வொன்றும் நன் நான்கு பாதங்களாகப் பிரிக்கப்பட்டு 16 உட்பாதங்களையுடையதாய் 337 திருவிருத்தங்களைக் கொண்டதாய் விளங்குகிறது. பரசமய உட்சமய பேதங்கள் 48 என்பதனையும் சித்தாந்த பேதம் 8 என்பதின் விளக்கங்களையும் இந்நூலில் காணலாம். சரியை, கிரியை, யோகம் என்னும் பாதங்களை விளக்கிக் கூறும் தமிழ் நூல்களுள் இது சிறந்த இடத்தைப் பெற்றுளது. யோகப் பிரிவில் 108 ஆசனங்கள் பற்றியும் 108 வகை பிராணாயாமங்கள் பற்றியும் விளக்கங்கள் காணப்படுகின்றன. தத்துவங்கட்கும் ஆன்மாவுக்கும் சிவனுக்கும் தத்துவம் என்ற பெயராதலால் நூலின் பெயர் தத்துவப் பிரகாசம் ஆயிற்று என்று இந்நூலின் உரையாசிரியர் குறிப்பிட்டிருப்பது மிகவும் உணரத் தக்கது.
தத்துவப் பிரகாசரின் மாணாக்கரே இந்நூலுக்கு உரை இயற்றியிருக்கிறார் என்று ஆராய்ச்சியாளர் கருதுகின்றனர்.
இந்துக்கலைக்களஞ்சியம்

Page 105
இந்நூலைத் தவிர துகளறு போதக் கட்டளை என்னும் நூலையும் தத்துவப் பிரகாசரே இயற்றினார் என்றும் தெரிகிறது. இவ்வாசிரியர் காலம் கி.பி. 14 ஆம் நூற்றாண்டின் இறுதி என அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர். இரா.ச)
தத்துவம்
இந்து தத்துவம் பற்றியும் இந்து சமயம் பற்றியும் தெளிவற்ற கருத்துகள் சகல மட்டங்களிலும் நிலவுகின்றன. இந்து தரிசனங்களின் ஆய்வு முடிவுகளையும், ஆய்வு முறைகளையும் ஒன்றிலிருந்து ஒன்றை வேறுபடுத்தியறியத் தவறுவதாலேயே தவறான எண்ணங்கள் ஏற்படுகின்றன. இந்திய தத்துவம் என்றும், இந்திய தத்துவ வரலாறு என்றும், இந்து சமய தத்துவம் என்றும் முறையே சர்வபள்ளி ராதாகிருஷ்ணன், சுரேந்திரநாத் தாஸ்குப்தா, ரி. எம். பி. மகாதேவன் ஆகியோரால் எழுதப்பட்ட புலமைத்துவம் நிரம்பிய நூல்கள் மற்றும் இவைபோன்ற இந்திய தத்துவ வரலாற்றைக் கூறுவனவும், அறிமுகத்தைத் தருவனவுமாகிய நூல்களனைத்தும் பல்வேறு இந்திய தரிசனங்களினது சித்தாந்தங்களைத் தொகுத்துத் தருவனமட்டுமல்லாது, அம் முடிவுகள் எவ்வாறு பெறப்பட்டன என்பது பற்றிய தத்துவ ஆராய்ச்சிகளையும் உள்ளடக்கியிருப்பது அவதானிக்கத்தக்கது. மேற்படி நூல்களின் இவ்விரு இலக்குகளை வேறுபடுத்தியறியத் தவறுவதாலும் பல்வேறு தரிசனங்களின் ஆய்வு முடிவுகளே தத்துவமெனக் கருதும் மயக்கநிலை தோன்ற ஏதுவாகிறது. இது தொடர்பான விவாதங்கள் இந்து இந்திய தத்துவ வாதிகளின் அக்கறைக்கு உரியதாயிருப்பதை சமகால வெளியீடுகளில் அவதானிக்க முடிகிறது.
மேலைத்தேய சிந்தனை மரபில் தத்துவமும், சமயமும் மிகத் தெளிவான வரையறை வேறுபாடுகளைக் கொண்டுள்ளன. அச் சிந்தனை மரபில் மிகக் குறைந்தளவு பயிற்சியுடையவர் கூட கிரேக்கத் தத்துவத்தையும், கிரேக்க சமயத்தையும் அல்லது மத்திய கால கிறிஸ்தவ சமயப்போதனைகளையும் அக்காலக் கிறிஸ்தவச் சிந்தனையாளர்களின் தத்துவ ஆய்வுகளையும் ஒன்றாகக் கற்பித்துக் குழம்புவதில்லை. அது போலவே ஒழுக்கப் போதனைகளையும் ஒழுக்க மெய்யியலையும் (moral teaching and moral Philosophy), GFLDLLğ60Dg5ujuh GFLOLLU göğgij6Jğ60gjuqih (Religion and Philosophy of Religion) gait GOGOT Louri (56.560606). பிரபல்யமான மெய்யியலாளரான அன்ரனிபுளு (Antony Flew); தத்துவமானது அடிப்படையில் நியாயத்தினால் கட்டுப் படுத்தப்பட்டதொரு பரிசீலனை முறையாகும். அது அன்றும் இன்றும் எக் காலத்தும் விமர்சன ரீதியான பகுப்பாய்வு முறையாக, நியாயத்தினடியான சொல்லாடல் முறையாக இருந்து வந்ததென வரைவிலக்கணம் தருவார். ஒரு நம்பிக்கையை விமரிசன ரீதியாகப் பகுப்பாய்வு செய்தலென்பது, அதனை ஆதாரப்படுத்துவதாகத் தரப்படும் நியாயங்களின் ஏற்புடைமையைப் பரிசீலனை செய்வதாகும். இதனையே
இந்துக்கலைக்களஞ்சியம்

6ílö56öTGib60JGöT (Wittgenstein) Doing Philosophy 6T6öTgDITi. இப் பரிசீலனைக்கு கருத்து ரீதியானதும், தர்க்க ரீதியானதுமான பகுப்பாய்வுகள் இன்றியமையாதனவாகும். இத்தகைய பகுப்பாய்வை ஒத்த முறைகள் மிகப் புராதன காலத்திலிருந்து இந்து மரபிலும் வளர்த்தெடுக்கப்பட்டு வந்ததை இருக்கு வேத காலத்திலிருந்து சமகாலம் வரையிலான சிந்தனை வரை காணக் கூடியதாயுள்ளது.
உபநிடதகால (பிரஹதாரண்ய உபநிடதம் நான்காம் அத்தியாயம்) அரசனான ஜனகன் ஒரு காலை வேளையில் தன்னைக் காணவந்த ஞாக்ஞவல்கீயரை நோக்கி "மேன்மை தங்கிய முனிவரே கால் நடைகளைத் தானமாகப் பெறுவதற்கோ அல்லது நுண்மையான விடயங்கள் பற்றிய தத்துவ ஆராய்ச்சியை மேற்கொள்ளவோ இன்று என்னை நாடி வந்தீர்கள்” எனக்கேட்ட பொழுது இரண்டையும் விரும்பியே இங்கு வந்தேன் என ஞாக்ஞவல்கீயர் பதிலிறுத்தார். அக் காலத்தவர்கள் தத்துவத்தை சொல்லாடல் முறையாகப் புரிந்து கொண்டார்களென்பது இதனாற் புலனாகிறது.
இச்சொல்லாடல் எத்தகையதாயிருந்ததென்பது பற்றி கிறிஸ்து சகாப்த காலத்திற்குரிய மகாயான மரபைச் சார்ந்த மிலிந்த அரசனின் வினாக்கள் என்ற நூல் விடை தரும்.
மிலிந்த அரசன் நாகசேனரே தத்துவத்தின் சிறப்பியலான
பண்பு யாது?
நாகசேனர் மீண்டும் மீண்டும் பகுப்பாய்வு செய்தலே
இதன் சிறப்பியல்பான பண்பாகும்.
மிலிந்த அரசன் தயவு செய்து விளக்கமாகக் கூறவும்.
நாகசேனர் செப்புப் பாத்திரமொன்றைச் செய்ய வேண்டுமாயின் அதனை மீண்டும் மீண்டும் தட்டுப் பொல்லால் அடித்து அதற்கு உரிய உருவத்தைக் கொடுத்தல் வேண்டும். மீண்டும் மீண்டும் அடிப்பதன் மூலம் எவ்வாறு பாத்திரத்தின் வடிவம் பெறப்படுகின்றதோ அவ்வாறே மீண்டும் மீண்டும் பகுப்பாய்வு செய்வதன் மூலம் உண்மையை அறிய முயலுதலே தத்துவ ஆராய்ச்சியின் அடையாளமாகும்.
மேற்படி நிலைப்பாடு பிராமணங்களிற் கூட தெளிவாக உணர்த்தப்படுவதை அவதானிக்கலாம். விடயம் சார்ந்ததும், விடயி சார்ந்ததுமான சொல்லாடல்களே தத்துவமென ஐதரேய பிராமணத்தின் ஆசிரியரான-தொகுப்பாசிரியரான மகிதாச ஐதரேய கருதினார். சதபதபிராமணத்தில் உத்தாலக ஆருணி நியாயித்தலினடியான சொல்லாடலையே தத்துவமாக ஏற்றுக் கொண்டதுடன், அனுபவத்தினடியான தொகுத்தறி முறையினூடாகவே இயற்கையின் இயல்பு பற்றிய செம்மையான ஆய்வினைச் செய்யலாமென்றும், தொகுத்தறிதலின் அடிப்படை
73

Page 106
நியாயித்தலே என்றும் ஏற்றுக் கொண்டிருந்தார். முதலில் ஐயுறுதலும், பின்னர் அதனடியான நியாயித்தலுமாகவே இந்து மரபில் தத்துவம் புரிந்துகொள்ளப்பட்டது. அதாவது சமயத்தையும், கிரியையையும் மட்டுமல்ல, சமூக ஒழுக்க நியமங்கள் மற்றும் உண்மையறிவென உரிமை கோரப்பட்ட அனைத்தையும் விமரிசனரீதியான அணுகுமுறையில் பகுப்பாய்வு செய்வதாக அக்கால தத்துவவாதிகள் புரிந்து கொண்டனர்.
மிலிந்த அரசனின் வினாக்கள் அவைதீக தரிசன தத்துவ ஆய்வில் எத்தகைய முக்கியத்துவத்தைப் பெறுகிறதோ, அதேயளவு முக்கியத்துவம் வைதீக தத்துவமரபில் நியாய சூத்திரத்திற்கு உண்டு. ஏறக்குறைய மகாயானபெளத்தத்தின் ஸ்தாபகரான நாகார்ச்சுனரின் காலத்தவராகக் (கி. பி 150)கருதப்படும் அக்ஷபாதர் கெளதமர் என்பவரே நியாய சூத்திரத்தின் ஆசிரியராவார். நியாய சூத்திரத்தின் தோற்ற காலத்திலிருந்து 18ஆம் நூற்றாண்டு வரை காலத்திற்குக் காலம் நியாயமுறையியல் வளர்த்தெடுக்கப்பட்டு வந்துள்ளது. 18ஆம் நூற்றாண்டிலே திராவிடமாபாடிய ஆசிரியரான சிவஞான சுவாமிகள் சைவசித்தாந்த ஆராய்ச்சிக்கு உகந்த கருவி நூலாகப் பிற்கால (நவ) நியாயமரபினரால் வளர்த்தெடுக்கப்பட்ட அன்னம்பட்டரின் தருக்கசங்கிரகத்தை மொழி பெயர்த்திருந்த மையினையும் சிவஞான சுவாமிகளிற்கு சற்றுமுற்பட்ட காலத்தவரான துறைமங்கலம் சிவப்பிரகாச முனிவர் பிறிதொரு நவநியாயமரபைச் சார்ந்த நூலான கேசவமிஸ்ரரின் தருக்கபரிபாசையை மொழி பெயர்த்திருந்தமையும், நீர்வேலிச் சங்கரபண்டிதர் சைவசித்தாந்தத்தை தத்துவார்த்த ரீதியாக ஆராய்வதற் கேதுவாக தமது சைவப்பிரகாசனம் என்ற நூலின் முற்பகுதியில் நியாயமுறையியலை இணைத்துக் கொண்டமையும் குறிப்பிடத்தக்கது. இவ்வாறு சைவம் முதல் அனைத்து வைதீக சமயப்பிரிவுகளும் தமது சமய சித்தாந்தங்களை நிறுவுவதற்கு நியாயக் கொள்கையினரால் விருத்தி செய்யப்பட்ட தத்துவ முறையைப் பயன்படுத்தியமை இது எவ்வளவு தூரத்திற்கு ஆற்றல் மிக்க கருவியாகப் பயன்பட்டதென்பதை எடுத்துக் காட்டுகிறது. ஒரு கருதுகோளை நிறுவுவதற்குரிய சான்றுகளைப் பெறுவதற்கும், அதனது நிச்சயத்தன்மையை ஐயத்திற்கப்பாற்பட்ட வகையில் அறிவதற்கும் நியாயமுறையியல் பயன்படுத்தப்பட்டது. ஆரம்பத்தில் நியாயக் கொள்கையினராலேயே நியாயமுறையியல் விருத்தி செய்யப்பட்ட பொழுதும், காலப் போக்கில் அனைத்து இந்துசமய சிந்தனா கூடங்களிற்குமுரிய பொதுவான சொல்லாடல் முறையாக அது ஏற்றுக்கொள்ளப்பட்டது. நியாய முறையியல் சமண-பெளத்த தத்துவ ஆசிரியர்களால் விமர்சனத்திற்கு உள்ளாக்கப்பட்ட பொழுதும், இவ் விமரிசனங்கள் அடிப்படையில் தன்னியைபுபெற்ற முழுமையான தத்துவ ஆராய்ச்சி இந்து மரபில் வளர்ச்சி பெறுவதற்கு உதவியமை குறிப்பிடத்தக்கது.
இந்து மரபில் தத்துவம் சார் சொல்லாடலானது விவாதித்தல் என்ற முறையில் அமைந்திருந்தது. வாதம், பதில்வாதம் என்பன
74

இதன் உள்ளடக்கக் கூறுகளாகவிருந்தன. ஐயம் விவாதத்தின் தொடக்கப் புள்ளியாகவும், நிர்ணயம் விவாதத்தின் முடிவுப் புள்ளியாகவுமிருந்தது. விவாதித்தல் பிரமாணம் அல்லது போதிய சான்றுகளினடிப்படையில் மேற்கொள்ளப்பட்டது. தத்துவ ஆராய்ச்சியும், அதனடியாகப் பெறப்பட்ட முடிவும் ஏற்புடையதேயென தீர்மானிப்பதற்கு உதவியாக வாதி, பிரதிவாதிகளுடன் நடுவராயிருப்போரும் விவாதத்தில் பங்குபெற்றனர். கெளடில்யரும், வாத்சாயனரும் இத்தகைய சொல்லாடலை ஆன்வீகூடிகி எனப் பெயரிட்டழைத்தனர். விமரிசன ரீதியான ஆய்வு அல்லது விசாரணைமுறையென்பதே இதன் தாற்பரியமாகும். வாத்சாயனர் ஆன்வீகூடிகி நியாயவித்தையென விளக்கி, பிரமாணங்களின் அடிப்படையில் விடயங்களை ஆராய்வதே அதுவெனக் கூறுவார். இங்கு பிரமாணமென்பது 'போதிய சான்று என்ற கருத்தைத் தரும். இது காட்சி, அனுமானம், ஆப்தம் என்பனவற்றினூடாகப் பெறப்படும். நியாயித்தல் முறைகளைப் பயன்படுத்துவதாலேயே ஒரு ஆய்வு தத்துவ ஆய்வாகிறது. அவ்வாறில்லாதபொழுது அத்யாத்ம வித்தையான சமயத்திலிருந்து தத்துவத்தை வேறுபடுத்தியறிய முடியாது போய்விடும். நியாய சூத்திரத்திற்கான வாத்சாயனரது உரையில் தத்துவமானது ஐயுறுதலிலிருந்தே ஆரம்பமாகிற தெனவும் அவ்வாறில்லாதபோது அது வெறுமனே ஆன்ம வித்தையாக மட்டுமேயிருக்குமென்றும் குறிப்புண்டு.
பிரதானமாக நான்கு வகையான கல்விமுறை பற்றிப் பண்டைய இந்துக்கள் அக்கறை கொண்டிருந்தனர். அவை முறையே வேதங்கள் பற்றிய அறிவு, விவசாய பொருளாதாரம் பற்றிய அறிவு, தண்ட நீதி பற்றிய அறிவு, ஆன்ம ஈடேற்றம் பற்றிய அறிவு என்பனவாகும். இவை ஒவ்வொன்றும் தனித்தனியே சிறப்பு வகையான அறிவுத்துறைகளென அழைக்கப்படலாமென வாத்சாயனரது உரைக்கான தனது விளக்கத்தில் உத்யோதகரர் குறிப்பிட்டுள்ளார். இதன்படி கிரியைகள்,வேள்விகள் பற்றியும் அவற்றின் முடிவான சுவர்க்கப்பேறு பற்றியதுமான அறிவை வேதக் கல்வி தருகிறது. நிலம், விதை, பசளை என்பன பற்றிய அறிவால் நல்ல அறுவடையும், அதன் பேறாய் செல்வமும் கிடைப்பது பற்றிய கல்வியை விவசாய பொருளாதாரக் கல்வி தருகிறது. அரசாள்வதற்கு தண்டநீதி பற்றிய கல்வி உதவுகிறது. உபநிடதங்களின் போதனைப் பொருளான அத்யாத்ம விசாரணை ஆன்ம ஈடேற்றத்தை இலக்காகக் கொண்டது. ஆக, இவையனைத்தும் ஆன்வீகூடிகியைப் பயன்படுத்துவதன் மூலமாக தத்துவ ஞானமாகின்றன. இங்கு தத்துவ ஞானம் என்னும் பதமானது உண்மையறிவைப் பெறும் வழிமுறை என்ற அர்த்தத்தைத் தரும். நியாயித்தலினூடாகவே நன்மை தீமையைப் பிரித்ததறியவும், விவசாயத்தில் இலாப - நஷ்டம் பற்றிய அறிவைப் பெறவும், அரசியலிற் சரியான தவறான கொள்கைகளை இனங்கண்டு கொள்ளவும், ஆன்ம ஈடேற்றம் பற்றிய விசாரணையை மேற்கொள்ளவும் முடிகிறதென கெளடில்யர் குறிப்பிடுவார்.
இந்துக்கலைக்களஞ்சியம்

Page 107
தத்துவம் தொடர்பான நியாயக் கொள்கையினரின் நிலைப்பாடு 14 வகையீடுகளை அடிப்படையாகக் கொண்டது. இவற்றில் முதல் ஏழும் தத்துவ ஆய்விற்குரிய முன்னேற் பாடுகளாகும். நியாய பூர்வாங்கங்களென அழைக்கப்படுமிவை முறையே ஐயம், விவாதிப்பதன் நோக்கம், நோக்கற் தரவுகள், கோட்பாட்டு அடிப்படை விவாதக் கட்டமைப்பு, ஆதாரப்படுத்தும் நியாயம், முடிவு என்பனவாகும். ஏனைய ஏழும் வாதம், ஜல்பம், விதண்டை என்ற மூவகை விவாதங்கள், போலியான சான்றுகள், இரட்டுறமொழிதல், சொற்புரட்டான மறுப்புரை, பசப்புரை மூலம் எதிராளிய்ைத் தோல்வியடையச் செய்யும் சூழ்நிலையை ஏற்படுத்தல் என்பன தொடர்பானவையாகும்.
நிச்சயமான முடிவை நிர்ணயம் செய்வதை இலக்காகக் கொண்டதே நியாயக் கொள்கையினரின் தத்துவ முயற்சியாகும். அதாவது எவ்வெவ்விடயங்களில் நிச்சயமற்றதும், ஐயத்திற் கிடமளிப்பவையுமான நிலைப்பாடுகள் காணப்படுகின்றனவோ அங்கெல்லாம் நிச்சயமான முடிவைப் பெறுவதற்கு தத்துவ ஆராய்ச்சி தேவைப்படுகிறது. இதன்படி ஐயுறுதலே தத்துவத்தின் முன்நிபந்தனையாகிறது. இருக்குவேத காலத்திலேயே தத்துவரீதியான சொல்லாடல்கள் ஐயத்தினடியாக வளர்த்தெடுக்கப்பட்டிருந்தது. இதற்குரிய வகைமாதிரியைப் பின்வரும் பந்தியிற் கண்டுகொள்ளலாம்.
“இருப்பனவும் இல்லாதனவும் இல்லாத நிலையில் காற்று இருக்கவில்லை. அதற்கப்பால் ஆகாயமும் இருக்கவில்லை. எது இருந்தது? எங்கு இருந்தது? எவர் அதனைப் பார்த்தது? நீர் அங்கு இருந்ததா? இறப்பு இருக்கவில்லை(யெனின்), இரவும் பகலும் பிரிபடவில்லை (யெனின்), சுவாசிக்காததொரு பொருள் இருந்த (தெனின்), இதைத் தவிர வேறு எதுவுமிருக்கவில்லை (யெனின்), இருளேயிருந்த(தெனின்), உருவமற்ற பாழ் இருந்த (தெனின்). மேலேயிருந்ததென்ன?, கீழேயிருந்ததென்ன?, இதனை மெய்யாக அறிபவர் எவர்?, எவரால் எங்கேயிது கூறப்பட்டது? இது (பிரபஞ்சம்) எப்பொழுது தோன்றியது? எப்படித் தோன்றியது? பிரபஞ்சம் படைக்கப்பட்டதன் பின்னரே கடவுளர் உருவாக்கப்பட்டன (ரெனின்), அது எவ்வாறு நடந்ததென யாரறிவார்? அவரே (பிரஜாபதியே) அனைத்தையும் முதன்முதலில் உருவாக்கினாரா? அல்லது வேறு யாதேனுமொன்றால் உருவாக்கப்பட்டதா? எவருடைய கண்கள் இவ்வுலகையும், சுவர்க்கத்தையும் கட்டுப்படுத்துகிறதோ அவரே இவற்றையெல்லாம் அறிந்திருக்கலாம். சிலவேளை அறியாதிருக்கவும் கூடும் (இருக்குவேதம் 10:129)"
எத்தகைய சித்தாந்த முடிவுகளையும் முற்கற்பிதமாக ஏற்றுக்கொள்ளாது நியாயித்தலினடியான முடிவுகளைப் பெற தத்துவ ஆய்வு உதவுகிறது. ஒரு விடயம் பற்றி ஒன்றிற்கு மேற்பட்ட அபிப்பிராயங்கள் காணப்படுகின்றபொழுது, அவற்றில் எது சரியானதென்ற (ஏற்புடையதென்ற) ஆசங்கை தோன்றும். வாதியும், பிரதிவாதியும் நடுநிலையாளரான அறிஞர் முன்னிலையில் ஐயத்தை அகற்றி நிச்சயமான முடிவைப் பெற முயலுகின்றனர். ஒரு விடயம் அல்லது கருத்துரை ஏலவே
இந்துக்கலைக்களஞ்சியம்

நிறுவப்பட்டதாகவோ அல்லது முற்றிலும் அறியப்படாததாகவோ இருப்பின், அது தொடர்பாக தத்துவ ஆராய்ச்சி நிகழ்த்துதலாகாதென வாத்சாயனர் எச்சரிப்பதையும் நாம் கவனத்திற் கொள்ளுதல் வேண்டும்.
ஐயுறுதல் மட்டும் போதியதல்ல. ஆய்வாளனுக்கு ஒரு நோக்கமிருத்தல் வேண்டும். ஐயுறவிற்குள்ளான கருத்துரையை விமரிசனரீதியான பகுப்பாய்விற்கு உட்படுத்துவது பிரயோசனமுடையதென நம்புதல் வேண்டும். அதாவது தத்துவ ஆய்வானது வெறுமனே புலமைத்துவப் பயிற்சியாக மட்டுமல்லாது, பயனுடையதொரு இலக்கையும் கொண்டிருத்தல் வேண்டும். பகுத்தறிவைப் பயன்படுத்துதல் என்ற மனிதரின் பொது விருப்பினடியாக எழுவதே தத்துவமென்கிறார் உத்யோதகர்.
ஒரு கருத்துரை பற்றிய விமரிசனரீதியான பகுப்பாய்விற்கு ஒரு கோட்பாட்டடிப்படையும், தரவுகளும் மேலதிக தேவைகளாகும். நியாய சூத்திரம் இவற்றை முறையே சித்தாந்தம், திட்டாந்தம் என்ற சொற்களால் குறிப்பிடுகிறது. கோட்பாட்டடிப்படை அவதானிக்கப்பட்ட நேர்வாக இல்லாதபொழுதும், வாதி, பிரதிவாதி ஆகிய இரு பகுதியினராலும் ஏற்றுக் கொள்ளப்படல் வேண்டும். அவ்வாறில்லாதுவிடின் சொல்லாடுவதற்கு எத்தகைய அடிப்படையும் இல்லாது போய்விடும். காரணம் காரியத்தின் முன்நிபந்தனையாய் என்றுமிருக்குமென்பது ஒரு கோட்பாட்டடிப்படையாகும். ஆனால் அது சத்காரியவாதமோ அல்லது அசத்காரியவாதமோ என்பது அவரவர் நிலைப்பாட்டைப் பொறுத்து வேறுபடும். காரண அடிப்படையை வாதியோ அன்றி பிரதிவாதியோ நிராகரிப்பாராயின் அனுமானம் ஒரு அறிவின் வாயிலென்ற வகையிலும், ஒரு வாத வடிவமென்ற வகையிலும் சொல்லாடுபவர்களால் பயன்படுத்த முடியாததொன்றாகப் போய்விடும். இவ்விடத்து பிருகதாரண்ய உபநிடதத்தில் கார்க்கி, ஞாக்ஞவல்கீயர் ஆகிய இரு மெய்யியலாளர்களுக்கிடையில் நடந்த உரையாடலொன்றைக் குறிப்பிடுவது மிகவும் பொருத்தமானது.
அனைத்திற்கும் அடிப்படையான வஸ்து யாதென்று அறியவிரும்பிய கார்க்கி, ஞாக்ஞவல்கீயரை நோக்கி நீர் உலகெங்கும் வியாபித்துள்ளது போல, நீரில் வியாபித்துள்ளதெது?"எனக் கேட்டார். அதற்கு காற்று என ஞாக்ஞவல்கீயர் பதிலளித்தார். அப்படியாயின் காற்றில் வியாபித்ததெது? என கார்க்கி மீண்டும் வினாவினார். அதற்கு ஆகாயம் என ஞாக்ஞவல்கீயர் பதிலளித்தார். இப் பதிலால் திருப்தியடையாத கார்க்கி மீண்டும் மீண்டும் தொடர்ச்சியாக வினாக்களைத் தொடுத்தவண்ணமேயிருந்தார். முடிவில்லாது வினாக்களைத் தொடுத்தல், அதாவது A யில் வியாபித்தது B, B யில் வியாபித்தது C, C யில் வியாபித்தது D என்றவாறாக சொல்லாடும் முறை எத்தகைய முடிவிற்கும் இட்டுச்செல்லாத போலி நியாயித்தல் முறையாகுமென்பதை உணர்ந்த ஞாக்ஞவல்கீயர், தொடர்ந்தும் இவ்வாறான வினாக்களைக்
75

Page 108
கேட்பாயாயின் உன் தலை வெடித்து சுக்குநூறாகுமென கார்க்கியை எச்சரித்தார். மேற்படி எச்சரிக்கை ஒருபுறம் ஒரு தடியடி நியாயம் போலத் தென்படினும், மறுபுறம் தத்துவ ஆராய்ச்சியில் ஈடுபடும் வாதியும் பிரதிவாதியும் ஒரு பொதுக் கோட்பாட்டடிப்படையைக் கொண்டிருப்பதன் அவசியத்தை உணர்த்துகிறதெனலாம்.
நியாயித்தலிற்கு ஒரு கோட்பாட்டடிப்படை எந்தளவிற்கு இன்றியமையாததோ, அதேபோல தரவுகளைப் பெறுவதற்கு காட்சியும், உரையளவையும் இன்றியமையாதனவாகும். இதன்மூலமே சொல்லாடுதற்கான எடுகூற்றுக்களைப் பெறுதல் சாத்தியமாகிறது. நியாயித்தற் கட்டமைப்பின் ஒரங்கமான திட்டாந்தத்தில் எடுகூற்றுக்கள் உள்ளடங்குவதாக இந்துமரபு ஏற்றுக்கொள்கிறது. ஆனால் பெளத்த மெய்யியலாளர்களான தின்னாகர், வசுபந்து முதலானோர்களோ நியாயித்தற் கட்டமைப்பில் திட்டாந்தம், உவமானம் ஆற்றுகின்ற பணியையே ஆற்றுவதாலும் உவமானம் பிரமாணங்களில் தனியொரு வகையாக இருப்பதாலும், அது (திட்டாந்தம்) நியாயித்தற் கட்டமைப்பிற்குத் தேவையற்றதொன்றெனக் கூறி, மேற்படி பகுப்பாய்வுத் திட்டத்தைக் கண்டிப்பர். ஆனால் உத்தியோதகரரோ பெளத்தரின் விமர்சனத்தை நிராகரிப்பதுமட்டுமல்ல, நோக்கற் தரவுகளே திட்டாந்தமென வாதிடுகிறார். வாதியினதும் பிரதிவாதியினதும் சொல்லாடலை ஒருமுகப்படுத்தும் ஆற்றல் தவுகளிற்குண்டென்பது மேற்படி உத்தியோதகரின் வாதத் திலிருந்து தெளிவாகிறது.
விமர்சனரீதியான பகுப்பாய்விற்கான நியாயக்கொள் கையினரின் வாதக்கட்டமைப்புமுறை ஐந்து அவயவங்களைக் கொண்டதொரு அனுமான வடிவமாக இருப்பதுடன், அது அவதானத்தினால் பெறப்பட்ட சான்றுகளால் ஆதாரப்படுத்தப் பட்டதுமாகும். இவ்வனுமானம் ஐந்து படிநிலைகளைக் கொண்டது. அவையொவ்வொன்றும் நியாயவாதக் கட்டமைப்பின் வெவ்வேறு பகுதிகளை வெளிப்படுத்தி, முடிவொன்றைப் பெறத்தக்கவகையில் அமைக்கப்பட்டுள்ளன. இதனையே தத்துவ ஆய்விற்குரிய ஏற்புடை வடிவமாக சைவசித்தாந்தம் தொட்டு அனைத்து இந்து மரபும் அங்கீகரித்துள்ளன. ஐந்து அவயவங்களைக் கொண்ட மேற்படி பெறுகை முறையின் வாதவடிவமானது வருமாறு:
வாதிப்போனின் நிலைப்பாட்டை வெளிப்படுத்தும் கூற்று.
சான்றினை எடுத்துக் காட்டல். வாதத்திற்கு அனுசரணையான உதாரணத்துடன் கூடிய பொதுவிதி. 4. விவாதிப்பதற்கு எடுத்துக்கொண்ட கூற்றை பொதுவிதிக்கு
உட்படுத்திப் பார்த்தல். 5. இதனால் முன்மொழியப்பட்ட கருத்து நிறுவப்பட்டதே
யெனக் காட்டும் கூற்று.
நியாயித்தல் முறையில் உள்ளடங்கிய பிறிதொரு கூறு தருக்கித்தல் அல்லது சொல்லாடும் முறை என்பதாகும்.
76

தருக்கித்தல் அனுபவச் சான்றுகளில் நேரடியாகத் தங்கியிருப்பதில்லை. அது முன்மொழியப்பட்ட கருத்துரை யொன்றை ஆதாரப்படுத்தும் வகையில் மேற்கொள்ளப்படும் ஒரு நியாயித்தல் வடிவமாகும். தருக்கித்தலென்பது வாதித்தல்/ நியாயித்தலென்ற அர்த்தத்தைத் தருமாயினும், அதன் இயல்பு யாதென்பது பற்றி இந்திய மெய்யியலாளர்கள் காலம் காலமாக விவாதித்து வந்துள்ளனர். அக்ஷபாதர் முதல் வாசஸ்பதி மிஸ்ரர் வரையிலான நியாயக் கொள்கையினரின் அபிப்பிராயப்படி முன் மொழியப்பட்ட கருத்துரையின் உண்மை பற்றிய ஊகத்தை தர்க்கத்தாற் பெற முடியும். ஒரு அறிகைமுறை என்றவகையில் தர்க்கத்தாற் பெறப்படும் முடிவானது ஐயுறுநிலையை விட மேலானதாயினும், நிச்சயித்தலைவிடக் குறைவானது. அதாவது தர்க்கம் நிச்சயித்தலிற்கு உதவியாயிருப்பினும், அது தன்னளவில் நிச்சயமானதல்ல. ஜெயந்த பட்டர் மிகவும் தெளிவாக இதனை விளக்கியுள்ளார். நிச்சயமான அறிவைத் தரும் பிரமாணத்திற்கும், ஐயத்திற்கும் இடைப்பட்ட அந்தஸ்த்தே தர்க்கத்திற்குண்டெனக் குறிப்பிடும் பட்டர், தர்க்கித்தலாற் பெறப்படுவது நிகழ்தகவான அறிவேயென
வாதிடுகிறார்.
தர்க்கம் அனுபவச் சான்றுகளைப் பயன்படுத்து வதில்லையென்பதால் அதன்மூலம் பெறப்படும் அறிவு நிச்சயத்தன்மை கொண்டதல்லவென்றும், அதனால் தர்க்கத்தை ஒரு பிரமாணமாக ஏற்றுக்கொள்ள முடியாதென்றும் நையாயிகர் வாதிடுவர். இவர்களுடைய அபிப்பிராயப்படி தர்க்கித்தலென்பது அறிவை அடைவதற்குரிய செயற்துணையான ஒரு யுத்திமுறை மட்டுமேயாகும். தருக்கித்தலென்பது அனுபவச் சான்றுகளை ஆதாரமாகக் கொண்டதொரு அனுமானமுறையல்லவென்றும், அது ஒரு வகையான முன்னது 6J gij GJIT GOT (A Priori) கோட்பாடேயெனவும், தருக்கம் தொடர்பான நையாயிகர்களுடைய நிலைப்பாடு இத்தகையதேயெனவும் மதிலால் எடுத்துக் காட்டுவார். இந்து மரபில் தர்க்கித்தலென்பது ஒரு சிறப்பு வகையான முன்னது ஏதுவான கோட்பாடாகப் புரிந்து கொள்ளப் பட்டது. பிரதிவாதியைத் தோற்கடிக்கும் தர்க்கத்தில் இருதலைக்கோள், வியர்த்தம், முரண்நிலை வெளிப்பாடு என்பன தர்க்கவாதிகளால் பயன்படுத்தப்பட்டன. இது தொடர்பான விளக்கங்கள் நியாய சூத்திரத்தில் தரப்பட்டுள்ளன. இதன்படி அறிவு அல்லது உண்மையைப் பெறுவதற்காக தர்க்கித்தல் பயன்படுத்தப்படலாம். ஆனால் தர்க்கித்தலூடாகப் பெறப்படுவன அனைத்தும் உண்மையேயென்ற முடிவிற்கு வருதல் இய்லாது. இது தன்னளவில் எத்தகைய அனுபவ அறிவையும் உள்ளடக்கியதுமல்ல, நிச்சயத் தன்மையை உறுதி செய்யு மொன்றும் அல்ல. அனுபவ அடிப்படையிலான அறிவைப் பெறுவதற்கு முன்னது ஏதுவான நிச்சயத் தன்மை பயன்படவல்லதல்லவென வாத்சாயனரும், உத்தியோதகரரும் விளக்கியுள்ளார்கள்.
தருக்கித்தல் மூலமாக முடிவுகள் பெறப்பட்டாலும், அதனைத் தனியொரு பிரமாணமாக நையாயிகர் ஏற்க மறுத்தமைக்குக் காரணம் அவர்கள் தமது பிரமாணக் கொள்கையை அனுபவ
இந்துக்கலைக்களஞ்சியம்

Page 109
அறிவை அடிப்படையாகக் கொண்டு வரையறுத்துக் கொண்டமையேயாகும். எத்தகையதொரு அனுபவ அறிவும் அனுபவச் சான்றுகளால் ஆதாரப்படுத்தப்படல் வேண்டும். சான்றின் ஏற்புடமை பற்றிய வினாக்கள் எழும்போது, அச் சான்றின் ஏற்புடைமையானது அச்சான்றின் நிச்சயத் தன்மையினால் உறுதிசெய்யப்பட்டுள்ளதென காட்டப்படல் வேண்டும். அனுபவச் சான்று இல்லாதவிடத்து தர்க்கம் அது எவ்வகைப்பட்டதாயினும், பயனற்றதொன்றாய்ப் போய்விடும். இவ்வடிப்படையிலேயே பிரமாணக் கொள்கையினரான இந்து மெய்யியலாளர்கள் தர்க்கவாதிகளான பெளத்தர்களிற்கெதிரான தமது விமர்சனத்தைக் கட்டியமைத்தமை குறிப்பிடத்தக்கது.
அனுபவச் சான்றுகளை அடிப்படையாகக் கொண்ட அனுமானம், தர்க்கித்தல் யுக்தி என்ற இரு கூறுகளும் இணைக்கப்பட்ட முறையிலேயே நியாயக் கொள்கையினரின் தத்துவ ஆய்வு உருவாக்கப்பட்டது. ஐந்து அவயவங்களைக் கொண்ட அனுமான முறையினாற் தரப்படும் (நேர்முறை) நிரூபணம், எடுகூற்றுக்கள் தொடர்பான ஐயத்தினால் வலிதற்றதாகும் நிலை காணப்படுமிடத்து, அதனைத் தர்க்கவாதத்தினால் (நேரல்முறை) ஈடுசெய்ய முடியுமென எதிர்பார்க்கப்பட்டது. ஆக, ஒரு முடிவொன்றின் ஏற்புடைமையை இவ்விரு முறையினாலும் நிர்ணயித்துக் கொள்ளும் வகையில் தத்துவ ஆய்வு முறை உருவாக்கப்பட்டுள்ளது. சுருங்கக்கூறின் நியாயக் கொள்கையினரால் விதந்துரைக்கப்பட்டதும், இந்து மெய்யியலாளர்களால் அங்கீகரிக்கப்பட்டதுமான தத்துவ ஆய்வானது, முரண்படும் ஆதாரங்களினடிப்படையில் ஒரு முடிவு குறித்து எழுகின்ற ஐயத்தைத் தீர்க்கமுயலுவதாக ஆரம்பித்து நோக்கற் தரவுகள், அங்கீகரிக்கப்பட்ட சித்தாந்தங்கள், என்பனவற்றினடிப்படையில் ஐந்து அவயவங்களைக் கொண்ட அனுமான வடிவத்தில் கட்டமைக்கப்பட்டு தேவையேற்படும் சந்தர்ப்பத்தில் தருக்கித்தல் யுக்தியைப் பயன்படுத்தி, ஐயமற்ற முடிவுகளைப் பெறும் முயற்சியாக இருக்கின்றதெனலாம். நியாயக் கொள்கையினரின் இக் காட்டுருவானது பண்டைய இந்திய மரபிற் காணப்பட்ட சொல்லாடல் முறையிலிருந்தே விருத் தியாக்கப்பட்டதென்பதில் எதுவித ஐயமுமில்லை. இச் சொல்லாடலை வாதவியல் எனப்பெயரிட்டு அழைக்கலாம். வாதவியலின் உள்ளடக்கக் கூறுகள் பற்றி மிகச் சுருக்கமாக நியாயகுத்திரம் குறிப்பிடுகிறது.
பண்டைய இந்தியாவில் வழக்கிலிருந்த வாதவியலானது ஒரு வகையில் பண்டைய கிரேக்க மெய்யியலாளர்கள் பயன்படுத்திய சொல்லாடல் முறையை ஒத்தவொன்றாகக் காணப்பட்ட பொழுதும், இவற்றிடையே காணப்படும் தொடர்பு வெறுமனே சாயலொற்றுமை மட்டுமேயாகும். உபநிடத காலத்திற்குப் பிற்பட்டகால மெய்யியலாய்வில் விமர்சனரீதியான அணுகுமுறை மேலோங்கிக் காணப்பட்டது. சஞ்சயரின் ஜயவாதத்தை இங்கு உதாரணமாக எடுத்துக்காட்டலாம். தத்துவ ஆராய்ச்சிக்கு ஜயவாதத்தை அடிப்படையாகக் கொண்ட விமர்சனரீதியான அணுகுமுறையே பயன்படவல்லதென்பது சஞ்சயரின் நிலைப்பாடாகும். வேதகாலச் சமயம், கிரியைகள் பற்றி
இந்துக்கலைக்களஞ்சியம்

மட்டுமல்லாது, சமூக நியமங்கள், ஒழுக்க நியமங்கள், மனிதரின் ஊழ்வினை பற்றிய உண்மையறிவைத் தருவதாகக் கூறப்படும் கூற்றுக்கள் போன்ற அனைத்து விடயங்கள் பற்றியதுமான விவாதங்களை முன்னெடுப்பது அக்கால நியதியாகவிருந்தது. விமர்சனத்திற்கும் அதனடியான நிராகரிப்புக்கும் உள்ளாகாதவை எதுவுமில்லை என்ற அபிப்பிராயம் நிலவியது. பல்வேறு தரிசனக் குழுக்களும் தத்தம் நிலைப்பாட்டிற் கேற்ற வகையில் வாதவியல் தொடர்பான பயிற்சி நூல்களை உருவாக்கியதுடன், பல்வேறு வாதமுறைகள், தந்திர யுக்திகள், தோல்வித்தானத்தை கண்டுபிடிக்கக் கூடிய வழிமுறைகள் ஆகிய வாதவியல் முறைகளை விருத்தியாக்குவதில் தமது கவனத்தைச் செலுத்தியதுடன் விவாதத்திற்கான விதிமுறைகளையும் உருவாக்கின.
இந்துவாதவியலின் முன்னோடியாக சரகசம்ஹிதையின் ஆசிரியரைக் குறிப்பிடலாம். விவாதித்தல் தொடர்பான பயனுள்ள தகவல்களை சரகசம்ஹிதையிலிருந்து பெறக் கூடியதாயிருக்கிறது. குரு- சீடனிற்கிடையிலான அறிவுப் பரிமாற்றம் தொடர்பாக சரகர் இருவகையான முறைகள் பற்றிக் குறிப்பிடுகிறார். அவை முறையே போதித்தலும் கற்றலும் தொடர்பான முறைகள், சகபாடிகளுடன் விவாதிப்பதற்கான முறைகள் என்பனவாகும். அறிவின் வாயில்கள், அனுமானத்தின் கூறுகள், ஏதுப்போலி, வாக்கியதோஷம், தோல்வித்தானங்கள், ஒத்திருத்தல் அல்லது வேறுபட்டிருத்தல் காரணமாக எழக்கூடிய நிராகரிப்பு ஐயத்திற்கிடமளிக்கும் வார்த்தைப் பிரயோகத்தினால் எழக்கூடிய நிராகரிப்பு முதலானவை பற்றிய தகவல்களுடன் கூடவே, வாதிப்பவர்களிடையே பரஸ்பர ஒத்துழைப்புக் காணப்படும் விவாதம் (Sandhaya Sambhasa), பரஸ்பரம் எதிராளியை மடக்குதல் என்ற நிலைப்பாடுடைய விவாதம் (Vigrhya Sambhasa) என இருவகை வாதவியல் பற்றியும் அவர் குறிப்பிடுகிறார். வாதிப்பவர்களிடையே பரஸ்பர ஒத்துழைப்புப் காணப்படும் நட்புணர்வுடன் கூடிய விவாதம் உண்மையைத் தேடுமுகமாக நிகழ்த்தப்படுவதால் தவறுகள், போலிகள், அடையாளம் காணப்படுமிடத்து அவை களையப்பட்டு விவாதம் தொடரப்படும். ஆனால் பரஸ்பரம் எதிராளியை மடக்குதல் என்ற எதிர்ப்புணர்வுகொண்ட விவாதத்திலோ தவறுகள், போலிகள் பிரதிவாதியைத் தோற்கடிப்பதற்கே பயன்படுகின்றன.
பரஸ்பரம் எதிராளியை மடக்குதல் என்ற நிலைப்பாடுடைய விவாதத்தில் ஜல்பம், விதண்டை என மேலும் இரு உப பிரிவுகள் இருப்பதாக ਤ56) எடுத்துக் காட்டப்பட்டது. விவாதத்தின்பொழுது வாதியும், பிரதிவாதியும் தத்தம் நிலைப்பாட்டை நிறுவ எத்தனிப்பதுடன் எதிராளியின் நிலைப்பாட்டைத் தகர்ப்பது ஜல்ப வகையான விவாதத்தின் இலக்காகும். வாதியும் பிரதிவாதியும் தத்தம் கருத்தை நிறுவுதல் என்றில்லாது பரஸ்பரம் ஒருவரையொருவர் தோற்கடிக்க முயலுவது விதண்டையாகும். தத்துவார்த்த வாதவியலானது நட்பார்ந்த சூழலில் உண்மையாதென அறியும் விருப்புடைய இரு மெய்யியலாளர்களிற்கிடையே நிகழ்த்தப்படும் விவாதமாகும். இவ்வாதவியலின் இயல்பு எத்தகையதென்பதற்கு மிலிந்த
77

Page 110
அரசனிற்கும் நாகசேனன் என்பாரிற்குமிடையில் நடைபெற்ற சொல்லாடல் விடை தரும்.
மிலிந்த அரசன் வணக்கத்திற்குரியவரே மீண்டும் என்னுடன் நீர் வாதம்புரிய வருதல் கூடுமோ?
நாகசேனன் மேன்மை தங்கிய அரசனே நீர் ஒரு அறிஞரைப் போல விவாதிக்கத் தயாரா னால் நான் உம்முடன் விவாதிக்க உடன்படுவேன். ஆனால் விவாதத்தின் பொழுது அரசனைப் போல நடக்க முற்படுவீரானால் உம்முடன் வாதம் புரிய என்னால் இயலாது.
மிலிந்த அரசன் அறிஞர்கள் எவ்வாறு வாதம்புரிவார்கள்?
நாகசேனன் அறிஞர் இருவர் வாதிடும்பொழுது, ஒருவர் விடும் தவறை மற்றவர் சுட்டிக் காட்டினால், தன் தவறைச் சுட்டிக் காட்டியதற்காக அவர்மீது கோபம் கொள்ளமாட்டார். மாறாகக் தன் தவறையுணர்ந்து அதனைத் திருத்திக் கொள்வார். அறிஞர்களிற்கிடை யிலான விவாதம் இத்தகையது.
மிலிந்த அரசன் அரசர்கள் எவ்வாறு வாதிடுவார்கள்?
நாகசேனன் அரசர்களுடன் விவாதிக்கும்பொழுது அவர்விடும் தவறை மற்றவர் சுட்டிக் காட்டினால், அல்லது அவர் கருத்திற்கு மாறாக ஒருவர் விவாதித்தால் அவர் களைத் தண்டிக்க அரசன் முயலுவான். இதுவே அரசர்கள் விவாதம் புரியும் முறையாகும்.
நியாய சூத்திரத்தில் கதா என்ற சொல்லால் மெய்யியலடிப்படையான விவாதம் குறிப்பிடப்பட்டுள்ளது. இது கலந்துரையாடல் அல்லது பேசுதல் என்ற அர்த்தத்தைக் கொண்டது. வாதம், ஜல்பம், விதண்டை என மூன்று பிரிவுகளை கதா உள்ளடக்கியது, இவற்றில் சரகர் குறிப்பிடும் நட்பார்ந்த சூழலில் நிகழ்த்தப்படும் விவாதம் கதாவின் முதலாவது வகையாகும். அது பின்வரும் நிபந்தனைகளைக் கொண்டிருக்கும்.
1. கருத்துரையும், எதிர்கருத்துரையும் ஒன்றுடனொன்று முரண்படுவதாக இருத்தல் வேண்டும். ஒன்றுடன் ஒன்று ஒப்பிடமுடியாதவையான பண்புகள் ஒரு விடயத்திற்கு! பொருளிற்கு இருப்பதாகக் கருதும்பொழுதே மேற்படி முரண்பாடு தோன்றும்.
2. சான்றுகளினடிப்படையிலும் (பிரமாணத்தினடிப்படை யிலும்), தர்க்கத்தினடிப்படையிலும் முரண்படும் கருத்து ரைகளில் யாதேனுமொன்றை நிரூபித்தல் அல்லது நிராகரித்தல் வேண்டும்.
78

3. வாதியும் பிரதிவாதியும் தத்தமது வார்த்தை முன்மொழிகையில் அதனை ஐந்து அங்கங்களைக் கொண்ட அனுமானப் பெறுகையாக மொழிதல் வேண்டும்.
4. தர்க்கநியாயம் வாதத்தின் எடுகோள்களுடனோ அல்லது ஏலவே அங்கீகரிக்கப்பட்டுள்ள கொள்கைகளுடனோ அல்லது யாதேனுமொரு முன்னது ஏதுவான கருத்துடனோ அல்லது வெளிப்படை உண்மைகளுடனோ முரண்படுதல் ஆகாது.
இத்தகைய வாதமுறை பெரும்பாலும் உண்மையைக் கண்டறியும் விருப்புடைய இரு தத்துவவாதிகளிடையேயோ அல்லது குருவிற்கும் சீடனுக்குமிடையிலேயோ நடைபெறுவதுண்டு. இங்கு வாதியோ/ பிரதிவாதியோ வெற்றிபெறுதல் அல்லது தோல்வியுறுதல் என்பதற்கிடமில்லை. தவறான கருத்துரைகள் நிராகரிக்கப்பட்டு சரியானதைக் காணும் தேடலே இலக்காகிறது. வலிதற்ற கருத்துரைகளை வலுவான சான்றுகளினடிப்படையிலும், தர்க்க நியாயத்தினடிப்படையிலும் நிராகரிப்பதற்கு முதலிரு நிபந்தனைகளும் உதவி செய்கின்றன. இறுதியிரண்டு நிபந்தனைகளும் வலிதற்ற முடிபுகளைத் தவிர்ப்பதை இலக்காகக் கொண்டன. மூன்றாவது நிபந்தனை மீறப்படும்பொழுது ஏதுப்போலியும், நான்காவது மீறப்படும் பொழுது அபசித்தாந்தம் என்ற போலியும் ஏற்படும்.
இரண்டாவது வகையான ஜல்பவகை விவாதமோ சம ஆற்றலுடைய இருவரிடையே நிகழ்த்தப் பெறுவது. அவர்கள் போட்டியாளர்களாக இருப்பர். வெற்றி பெறுவதே இருவரினதும் இலக்காகவிருக்கும். இதனால் உண்மையை நிறுவமுயலுதல் என்ற அவசியம் வாதிக்கோ அன்றி பிரதிவாதிக்கோ இருப்பதில்லை. எனவே இத்தகைய விவாதத்தில் தான் வெற்றிபெறுவதற்கும், எதிராளியைத் தோல்வியுறச் செய்வதற்குமாக விவாதிப்போர் தந்திர யுக்திகளைப் பயன்படுத்துவர். இவ்வகை வாதத்திலீடுபடுவோர் இரட்டுறமொழிதல், இருபொருள் மயக்கத்தைத் தரும் சொற்களைப் பயன்படுத்தல், போலியான பதில்நியாயம் தருதல் முதலான உத்திகளனைத்தையும் பயன்படுத்தி கருத்துரை யொன்றை நிறுவவோ, நிராகரிக்கவோ முயல்வர். இம் முயற்சியின் பொழுது எதிராளியானவன் தோல்வியுறக்கூடிய சந்தர்ப்பங்களை இலக்காகக் கொண்டு செயற்படுவர். தோல்வியுறக்கூடிய சந்தர்ப்பங்கள் எதிராளிக்கு ஏற்பட்டு விட்டதெனக் காட்டுவதன்மூலம் விவாதம் முற்றுப்பெறுகிறது.
விதண்டையென்பது மூன்றாவது 6) j60) 5LLIT 6ji விவாதமுறையாகும். இங்கு விவாதத்திலிடுபடுபவன் எத்தகைய பதிற்கருத்துரையையும் நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை. அவன் தனக்கென்றதொரு நிலைப்பாடோ அல்லது எதையேனும் நம்பியேயாதல் வேண்டுமென்ற நிலையோ இல்லாதவன். ஜயவாதமே இதற்குக் காரணமாகிறது. மேலைத்தேய மெய்யியல் வரலாற்றில் (கிரேக்க) சோபிஸ்டுகளிலிருந்து டேவிட் கியூம் ஊடாக சமகாலத்தவரான ஸ்ரோசன் வரை ஜயவாதச் சிந்தனை ஒரு நீண்ட வரலாற்றைக் கொண்டதாகக் காணப்படுகிறது.
இந்துக்கலைக்களஞ்சியம்

Page 111
ஜயவாதத்திற்கு இந்திய மெய்யியல் வரலாற்றில் அத்தகையதொரு நீண்டவரலாறு இல்லாதுபோயினும், ஆங்காங்கே ஜயவாதச்சிந்தனையின் செல்வாக்குப் படிந்திருப்பதை அவதானிக்கலாம். விதண்டை இவர்களது தர்க்க முறையாகவிருந்தது. இதனை கெளடதேசத்து நையாயிகர்கள் ஏற்றுக்கொண்டிருந்தனர். இவர்களது அபிப்பிராயப்படி தர்க்கித்தலானது வாதம், வாத விதண்டை, ஜல்பம், ஜல்ப விதண்டை என நான்குவகைப்படும். இவற்றில் முதலிருவகையும் உண்மைக்கான தேடலிற்குரியது. வாதம் அல்லது வாதவிதண்டையானது ஜயவாதிகளின் கைகளில் பயனுடைய கருவியாக விளங்கியது. முன்மொழியப்பட்ட கருத்துரையொன்று ஏற்புடையதல்லவென நிராகரிப்பதற்கு ஜயவாதிகள் இதனைப் பயன்படுத்தினர். உண்மையைத் தேடும் வழியில் தவறுகளைக் களையும் முயற்சியும் வரவேற்கத்தக்கதே. உண்மை வெளிப்படையானதாயோ அல்லது நிறுவ முடியாததாகவோ இருப்பதாக ஏற்றுக்கொள்ளுமொருவர் ஐயவாதியாக இருப்பதைத் தவிர வேறுவழியில்லை. வேத உபநிடதகால ஜயவாதிகள், உபநிடதங்களிற்கு பிற்பட்ட காலத்து ஜயவாதிகள், பெளத்த ஜயவாதிகள் (மாதேமிக்கர்), ஒருமை வாதிகளான ஜயவாதிகள், ஜயவாதிகளான உலோகாயதர் ஆகியோரும் இதற்கு விதிவிலக்கல்ல.
தற்கால மெய்யியலின் தந்தையெனப் போற்றப்படும் விக்கன்ஸ்ரைன், தத்துவவிசாரத்தை ஒரு மொழி விளையாட்டு (Language game) என வர்ணித்தார். மொழியினால் எமது புத்தியிலேற்படும் மயக்கத்திற்கெதிரான போராட்டமே அவ்விளையாட்டாகும். இந்து மெய்யியலாளர்களும் தத்தம் காலத்து சிந்தனையிலேற்படும் மயக்கத்திற்கெதிரான போராட்டத்தை நடத்தினரென்பதையும், அதற்கென பல்வேறு சித்தாந்தங்களை உருவாக்க முயன்றனரென்பதையுமே இந்திய தத்துவத்தின் வரலாற்றிலிருந்து அறியக்கூடியதாயிருக்கிறது. (്6ff.മി)
தத்துவமசி
ச17ந்தோக்கிய உபநிடதத்தில் 'தத்துவமசி என்ற பரதத்துவத்தை விளக்கும் ஒரு மகாவாக்கியம் காணப்படுகிறது. உத்தாலக முனிவர் தம் மகன் சுவேதகேதுவிற்கு இதை உபதேசித்தார். ஆதியில், இரண்டற்ற நிலையில் சத்து என்பதே இருந்தது. நான் பலவாக வேண்டும் என அது எண்ணிற்று. சத்திலிருந்து நெருப்பும், நெருப்பிலிருந்து நீரும், அதிலிருந்து உணவும் தோன்றின. இவை பல்வேறு வகையில் ஒன்று சேர்ந்து நாம, ரூபமான இவ்வுலகைத் தோற்றுவித்தன. மனம், பிராணன், வாக்கு முதல் எல்லாச் சடப்பொருள்களும், உயிர்களும் சத்திலிருந்தே தோன்றின. உறங்கும்போது உயிர்கள் அடங்கிச் சத்திற்கே திரும்புகின்றன. இவ்வாறு ஒன்றான பரம்பொருளே பலவற்றின் அடிப்படையாகவும், மூலமாயும் உள்ளது எனக் கூறிய உத்தாலகர், இறுதியில் சுவேதகேதுவை விளித்து 'ச ஆத்மா தத்துவமசி (நீ அதுவாக இருக்கிறாய்) என்றார்.
இந்துக்கலைக்களஞ்சியம்

தத்துவமசி என்னும் இச்சொல்லை தத், த்வம், அசி என்று பகுத்து, தத் என்னும் பதம் படைத்தவனான மாயையுடன் கூடிய கடவுளைக் குறிப்பதாகவும், ஆதி சங்கரர் விளக்கியுள்ளார். பிரம்மம் சத்தியமானது, உலகம் மாயையானது. சீவன் பிரம்மம் அன்றி வேறல்லன் என்பது சங்கரரின் கூற்று. வியவகார நிலையில் சீவனும் அவனைப் படைத்த கடவுளும் ஒன்றெனக் கருதமுடியாது. சீவன், உபாதிகளை நீக்கினால், தத் அல்லது அந்த என்னும் பதம் மாயையுடன் கூடிய கடவுளின் அடிப்படையான பிரம்மத்தைக் குறிக்கிறது. எவ்வாறு கயிறு பாம்பாகத் தோன்றுகிதோ அவ்வாறு பிரம்மம் சீவனாகத் தோன்றுகிறது. தூரத்திலுள்ளதைக் குறிக்கும் சொல்லான தத் அருகிலுள்ளதைக் குறிக்கும் த்வம் என்ற சொல்லுடன் ஐக்கியப்பட்டு இரண்டற்ற பிரம்மத்தை விளக்குகிறது என்பது சங்கரரின் கூற்று.
இராமானுசரின் விசிட்டாத் துவைதத்தில், தத்' என்பது கடவுளைக் குறிக்கும். "த்வம்' என்பது சத்து(உயிர்கள்), சடம் (பிரகிருதி) ஆகியவற்றை உடலாகக் கொண்ட உயிரான கடவுள். எனப் பொருள்படும். கடவுள் ஒன்றே, அவர் அந்தர்யாமியாக உள்ளேயுமிருக்கிறார், வெளியிலுமிருக்கிறார் என இராமானுசர் தத்தவமசி எனும் மகாவாக்கியத்தின் பொருளை, விளக்குகிறார்.
மத்துவர், 'ச ஆத்மா தத்துவமசி என்பதை ச ஆத்மா அதத்துவமசி எனப்பகுத்து சடவுளும் சீவனும் ஒன்றல்ல, வேறு என்று துவைத வாதத்தை விளக்குகிறார். இ.வி.ச)
தத்துவராயர்
இவர் கி.பி. 15ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் வாழ்ந்து வேதாந்த பரமாகத் தமிழில் பலநூல்களை இயற்றியவர். வைதிக சைவ பிராமண குலத்தினர். சொரூபானந்தர், தத்துவராயர் ஆகிய இருவரும் அம்மான் மருமகன் முறையினர். இருவரும் தக்க குருவை நாடிப் புறப்பட்டனர். பல காலம் முயன்றும் தக்கவர் கிடைக்கவில்லை. ஆதலின், இருவரும் பிரிந்து வெவ்வேறு திசை நோக்கிச் சென்றனர். தென்பால் வந்த சொரூபானந்தருக்குத் திருப்பைஞ்ஞ்லி அருகிலுள்ள கோவர்த்தம் என்னும் ஊரில் சிவப்பிரகாச சுவாமிகள் என்ற சைவ சித்தாந்தி தக்க குருவாகக் கிடைத்தார். அவரிடம் ஞானோபதேசம் பெற்று அங்கேயே நிட்டையிலிருந்தார். வடக்கே பிரிந்து சென்ற தத்துவராயர் திரும்பித் தெற்கே வந்தார்.சொரூபானந்தரைக் கண்டு அவரையே குருவாகக் கொண்டார். தத்துவராயர் பாடுவதில் வல்லவர். ஆதலின், சொரூபானந்தர் தத்துவராயரைக் கொண்டு பல நூல்கள் தமிழுலகுக்குக் கிடைக்க வழி செய்தார். தத்துவராயர் அடங்கன் முறை என்பன 18 நூல்கள் அடங்கியவை. அவை வேதாந்தக் கொள்கையுடையவை. அவையாவன
1. திருத்தாலாட்டு, 2. பிள்ளைத் திருநாமம், 3. வெண்பா, 4. கலித்துறை அந்தாதி, 5. சின்னப் பூ வெண்பா, 6. தசாங்கம், 7. இரட்டை மணிமாலை, 8. மும்மணிக்கோவை, 9. நான்மணி
79

Page 112
மாலை, 10. கலிப்பா, 11. ஞான விநோதன் கலம்பகம், 12. உலா, 13. சிலேடை யுலா, 14. நெஞ்சு விடுதூது, 15. கலிமடல், 16. அஞ்ளுைவதைப் பரணி, 17 மோகவதைப் பரணி, 18 அமிர்த சாரம் என்பனவாம்.
மேலும் சிவப்பிரகாச வெண்பா, தத்துவாமிர்தம் என்னும் இரு நூல்களையும் இயற்றியுள்ளார். தம் குருநாதர் சொரூபானந்தர் மீது 138 தலைப்புகளில் 1140 பாடல்களைக் கொண்ட தத்துவராயர் பாடுதுறை என்னும் நூலையும் பாடியிருக்கிறார். மேலும், ஈசுரகீதை, பிரமகீதை, சசிவன்ன போதம் என்னும் மொழி பெயர்ப்பு நூல்களும் பெருந்திரட்டு, குறுந்திரட்டு என்னும் திரட்டு நூல்களும் தத்தவராயரால் செய்யப்பட்டவை. வேதாந்தக் கொள்கையைப் பரப்ப இவர் நூல்கள் மிகவும் இன்றியமையாதனவாய் இருக்கின்றன. கடைசியாக இவர் சிதம்பரத்திற்கும் விருத்தாசலத்திற்கும் இடையிலுள்ள எறும்பூரில் ஆடி மாதம் சனிக்கிழமை சதய நட்சத்திரத்தில் பிரதமை திதியில் சமாதியானார். இரா.ச)
தந்திரங்களின் வகையீடு
தந்திரம் என்ற சொல்லானது விதிகள், கிரியைகள், இறைவாக்கு, சமயநூல்கள், கட்டப்பட்டது எனப் பல அர்த்தச் செறிவைக் கொண்டது. சமயநூல் என்ற வகையில் தந்திரங்கள் சிவனுக்கும் சக்திக்குமிடையிலான உரையாடல் வடிவத்திற் காணப்படுகின்றன. சில சந்தர்ப்பங்களில் இவை ஐந்தாம் வேதம் எனவும் அழைக்கப்படுவதுண்டு. ஆக்கல், அழித்தல், இறைவன் - இறைவி வழிபாடு, அறுவகை ஆற்றல்களை அடைதல், நால்வகை ஒன்றிப்பு, தெய்வீக தியானம் ஆகிய விடயங்கள் பற்றித் தந்திரங்களிலே பேசப்படுகின்றது. தந்திரங்கள், சமய நடைமுறைகள் பற்றிய நூல்கள் என்ற வகையில் விக்கிரக வணக்கம், யந்திரங்கள், மந்திரங்கள், உபாசனை, தெய்வீக வல்லமைபெறல், உலகியலின்பங்களைப் பெறுவது தொடர்பானவற்றையும் உள்ளடக்கியுள்ளன.
காமிக ஆகமத்தின்படி எல்லாவகையான சாஸ்திரங்களும் சதாசிவனின் ஐந்து முகங்களிற்குரிய கரணேஸ்வரர்களாலும் (பஞ்ச பிரமாக்கள்) வெளிப்படுத்தப்பட்டதால் அவை ஐந்து பிரிவுகளாக வகுக்கப்படும். அவை வருமாறு:
திசை முகம் கரணேஸ்வரர் சாஸ்த்திரம்
ணு வைதீ
FF守T சதா
விவசாயம், நாடகம், மருத்துவம், அரசியல் என்பன உட்பட விஞ்ஞானம், கலைகள் ஆகியன தொடர்பான நூல்கள் லெளகீக சாஸ்த்திரங்கள் எனப்படும். சாங்கியம், யோகம் என்பன தொடர்பான அறிவைப் போதிப்பன ஆத்யாமிகசாஸ்திரங்கள்
80
 

எனப்படும். வேதங்கள் வைதீகங்களாகும். கிரியைகள், மண்டலங்கள், முத்திரைகள் அதிமார்க்கத்தில் அடங்கும்.
மந்திர தந்திர சாஸ்த்திரங்கள் சதாசிவனின் ஈசானமுகத்திலிருந்து தோன்றியவையாயினும், அனைத்து முகங்களிலும் ஈசானம் உள்ளடங்கியிருப்பதாகக் கருதப்படுகிறது. இதனால் மந்திர - தந்திரங்களும் ஐந்து வகையாகப் பிரிக்கப்பட்டுள்ளன. மேல்வருவன அப்பிரிவுகளாகும்.
6õ) Jቻ கம் ங்கள்
மேற்கு சத்தியோஜாதம் பூததந்திரங்கள்
6) IL
மேல் ஈசானம்
ஆகமசைவர்கள் அனைவரும் மேற்படி வகையீட்டை ஏற்றுக் கொண்டுள்ளனரென்று ஜெயரதர் குறிப்பிடுகிறார். மேலும் இவ்வகையீட்டைப் பின்பற்றியே ஏனைய சைவப்பிரிவினரும் தத்தம் வகையீட்டைத் தமது நோக்கத்திற்கேற்ப அமைத்திருப்பது குறிப்பிடத்தக்கது. காஷ்மீர சைவப்பிரிவான திரிக- தந்திரம், அபிநவகுப்தரின் வகையீடு என்பன இதற்கு உதாரணங்களாகும்.
சித்தாந்த சைவ தந்திரங்கள் மேல்நிலைக் குரியனவாகவும், அதனால் உயர் அந்தஸ்தைக் கொண்ட தென்றும் ஏற்றுக் கொள்ளப்படுகிறது. அவற்றில் 10 சிவாகமங்களாகவும், 18 ருத்திர ஆகமங்களாகவும் கருதப் படுகிறது. இவ்விருபத்தெட்டு ஆகமங்களும் ஏனைய சைவப்பிரிவுகளுக்கும் உடன் பாடானதேயாம். சித்தாந்த தந்திரங்களைப் பொறுத்தவரையில் அவற்றின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்படவில்லை, மேலதிக சேர்க்கைகள் உப ஆகமங்களாகவே தொகுக்கப்பட்டன. மூல ஆகமங்கள், உப ஆகமங்கள் பற்றிய விபரம் காசிவாசி செந்திநாதையரின் தத்துவ விளக்கத்தில் மேல்வருமாறு தரப்பட்டுள்ளது.
சித்தாந்த சைவ உப ஆகமங்கள்
ஆகமங்கள்
1. காமிகம் வக்த்ராரம், பைரவோத்தரம், மிருகேந்திரம்.
2. யோகஜம் வினோசிகோத்தரம், தாரம், சந்தம், சந்ததி,
ஆத்மயோகம்.
3. சிந்தியம் சுசிந்தியம், சுபகம், வாமம், பாவநாசம், பரோத்பவம், அம்ருதம்.
4. காரணம் காரணம், பாவநம், தெளர்க்கம், மகேந்திரம்,
பீமம், மாரணம், துவேஷ்டம்.
5. அஜிதம் பிரபூதம், பரோத்பூதம், பார்வதி சம்ஹிதை,
பதுமசம்ஹிதை.
இந்துக்கலைக்களஞ்சியம்

Page 113
10.
11.
13.
14.
15.
16.
17.
18.
19.
தீப்தம்
சூட்சுமம்
சஹசிரம்
அம்சுமான்
சுப்பிரபேதம்
விஜயம்
நிச்சுவாசம்
சுவாயம்புவம்
ஆக்நேயம்
வீரம்
ரெளரவம்
மகுடம்
விமலம்
சந்திரஞானம்
இந்துக்கலைக்களஞ்சியம்
அமேயம், சப்தம், ஆச்சாத்யம், அசங்கியம், அமிதெளஜசம், ஆனந்தம், மாதவோத்பூதம், அத்பூதம், அசஷதம்.
சூட்சுமசங்ஹிதை.
அதீதம், மங்களம், சுத்தம், அப்ரமேயம், ஜாதிபாக், பிரபுத்தம், விபுதம், ஹஸ்தம், அலங்காரம், சுபோதகம்.
வித்யாபுராணதந்திரம், வாசவம், நீலலோகிதம், பிரகாரணம், பூததந்திரம், ஆத்மாலங்காரம், காஸ்யபம், கெளதமம், ஐந்திரம், பிராம்ஹ்யம், வாசிஷ்டம், ஈசானம்.
சுப்பிரபேதம்
விஜயம், உத்பவம், செளம்யம், அகோரம், மிருத்தியுநாசநம், குபேரம், மஹாகோரம்,
விமலம்.
நிச்சுவாசம், நிச்சுவாசமுகோதயம்,
உத்தரநிச்சுவாசம்,
நிச்சுவாசநயனம், நிச்சுவாசகாரிகை, கோரசம்ஞம், யமாக்யம், குஹயம்,
பிரஜாபதிமதம், பத்மம், சுவாயம்புவம்.
அநலம்
பிரஸ்தாரம்,புல்லமல்லம், பிரபோதம், போதம், போதகம், அமோஹம்,
மோஹசமயம், ஹாகடம், சகடாதிகம், ஹலம், விலோகனம், பத்திரம், வீரம்.
ரெளரவம், ரெளரவோத்தரம், மஹாகாளமதம், ஐந்திரம்.
காலாக்நம், கலாகிதம்,
மகுடம், மகுடோத்தரம்.
அனந்தம், போகம், ஆக்ராந்தம், விருஷபிங்கம்,விருஷோதரம், விருஷாத்புதம், சுதந்தம், ரெளத்திரம், பத்திரவிதம்,
அ ரே வ த ம் , அ தி கி ரா ந் த ம் , அட்டஹாசம்,அலங்கிருதம், அர்ச்சிதம்,
தாரணம், தந்திரம்.
ஸ்திரம், ஸ்தாணு, மஹாந்தம், வாருணம், நந்திகேசுவரம், ஏகபாதம், சங்கரம், நீலருத்திரகம், சிவபத்திரம், கற்பபேதம்,

20. முகபிம்பம்
21. புரோற்கீதம்
22. லளிதம்
23. சித்தம்
24. சந்தானம்
25. சர்வோக்தம்
26. பாரமேசுவரம்
27. கிரணம்
28. வாதுளம்
சதாசிவனின்
பூரீமுகம், சிவசாசநம், சிவசேகரம், தேவிமதம்.
சதுர்முகம், மலயம், யோகம், சமஸ்தோபம், பிரதிபிம்பகம், ஆத்துமாலங்காரம், வாயவ்யம், தெளடிகம், துடிநீரகம், கலாத்யயம், துலாயோகம், குட்டிமம், பட்டசேகரம், மஹாவித்தை, மஹாசெளரம்.
கவசம், வராஹம், பிங்களமதம், பாசபந்தம், தண்டதரம், அங்குசம், தனுர்த்தரம், சிவஞானம், விஞ்ஞானம், பூரீகாலஞானம், ஆயுர்வேதம், தனுர்வேதம், சர்ப்பதம்ஷ்ட்ரீவீ போதநம், கீதம், பரதம், ஆதோத்யம். லளிதம், லளிதோத்திரம், செளமாரம்.
சாரோத்தரம், ஒளசநோத்தரம், சாலபேதம், சசிகண்டம்.
இரிங்காத்ங்சஷம், சுராத்யசஷம், சங்கரம், அமலேச்வரம், அசங்கியம், அநிலம், துவந்துவம்.
சிவதர்மோத்தரம், வாயுபுரோக்தம், திவ்யபுரோக்தம், ஈசானம், சர்வோத்கீதம்.
மதங்கம், யசஷணிபத்மம், பாரமேசுவரம், பெளஷ்கரம், சுப்பிரயோகம், ஹம்சம், 5TLOTf5Uih.
காருடம், நைருதம், நீலம், ரூசஷம், பாநுகம், தேநுகம், பிரபுத்தம், புத்தம், காலம்.
வாதுளம், உத்தரவாதுளம், காலஞானம், பிரரோஹிதம், சர்வம், தர்மாத்துமகம், சிரேஷ்டம், நித்தியம், சுத்தம், மஹாநநம், விஸ்வம், விஸ்வாத்மகம்,
ஏனைய நான்கு முகங்களிலிருந்தும்
தோன்றிய தந்திரங்களை பிரதித்த லக்ஷணசாரசமுச்சயம்’ என்ற நூல் மேல்வருமாறு பட்டியலிட்டுக் காட்டுகிறது.
பிரதித்தலகூடிணசார சமுச்சயத்தில் தரப்படும் மேற்படி வகையீடு பல காரணங்களினால் தந்திரங்கள் பற்றிய ஆய்விற்கு முக்கியமானது. முதலாவதாக இந்நூலின் ஆசிரியரான விரோசனர் கி. பி. 794-814 காலப்பகுதியில் வங்காளத்தை அரசுசெய்த தர்மபால என்ற அரசனின் மகன் எனத் தெரியவருகிறது. இரண்டாவதாக தந்திரங்கள் பற்றிய இப்பட்டியலே ஓரளவிற்குச் சரியானதென்ற முடிவிற்கு வரக்கூடியதாயுள்ளது. மூன்றாவதாக முதன்முதலில் ஐவகை
8f

Page 114
பிரிப்பு முறையிலே தகூழின தந்திரங்களைத் தொடர்புபடுத்திக் காட்டியதுடன் எல்லாத் தந்திரங்களையும் தெளிவாக வகைப்படுத்தியுள்ளது. இறுதியாக ஐவகை மார்க்கங்களின் ஆரம்பகால வளர்ச்சி பற்றிய ஆய்விற்கு நம்பிக்கைக்குரிய சான்றாதாரமாக விளங்குகிறது.
சிவாகமங்கள் தொடர்பான பிரதான ஐவகைப் பிரிப்புகள், எண்வகை உபமார்க்கங்கள் என்பன பற்றி மிருகேந்திர ஆகமம் குறிப்பிட்டாலும், அச்செய்தி விவரமான குறிப்பாக இல்லை. அச்செய்தி மேல்வருமாறு உள்ளது.
காமிகத்தைத் தொடக்கமாகக் கொண்டது மேல்நிலை (upper Current) மார்க்கம். தெற்கு முகம் ஆஜிதத்தைத் தொடக்கமாகக் கொண்ட ஆகமங்களிற்கானது. சம்மோகனம் முதலானவை வடக்கு முகத்திற்குரியவை. த்ரோ தளம் முதலானவை மேற்கு முகத்திற்கும், சண்டநாதருடைய சண்டாசித்தாந்தம் முதலானவை கிழக்கு முகத்திற்கும் உரியன.
கம்போடிய கல்வெட்டொன்றில் வினாசிக தந்திரம் பற்றிய குறிப்பொன்றுமுண்டு. இக்கல்வெட்டு கி.பி.1052 காலப் பகுதிக்குரியது. அரசுகட்டிலை இழந்த கம்போடிய அரசனான இரண்டாம் ஜெயவர்மன் மீண்டும் அதனைப் பெறத் தனது குருவான இரணியதாமவின் துணையுடன் வினாசிகதந்திரக் கிரியைகளைச் செய்து தனது ஆட்சியுரிமையைப் (கி. பி. 802இல்) பெற்றான் என்ற குறிப்புக் காணப்படுகிறது. இரணியதாம சிவகைவல்ய என்ற தனது சகபாடிக்கு சிரஸ்சேதம், வினாசிகம், சம்மோகனம், நவோத்தர ஆகிய தந்திரங்களைப் போதித்தமை குறிப்பிடப்பட்டுள்ளது. கம்போடியாவில் ஆகமங்கள் அறிமுகப்படுத்தப்பட்டதையும் இக்கல்வெட்டால் அறியக் கூடியதாயுள்ளது. வினாசிகதந்திரம் இடங்கை மார்க்கத்திற்குரியது.
நேத்திர தந்திரத்தின்படி தும்புரு சிவனின் மூர்த்தங்களில் ஒன்றென்பதுடன், வாம மார்க்கத்திற்குரிய தலைமைக் கடவுளாகவும் குறிப்பிடப்படுகிறார். வாம தந்திரங்கள் பல்வகைச் சித்திகளைப் பெறுவதற்குப் பயன்படுத்தப்படுவனவாகும். இங்கு சித்தியெனப்படுவது மந்திரக் கிரியைகளாற் பலவகை ஆற்றல்களையும் பெறுவது பற்றியதாகும். இங்கு இரு வகையான சடங்குகள் நிகழ்த்தப்படலாம். அவை முறையே ரெளத்ரம் (கொடுரமான), சுசி (தூயகிரியை) எனப்படும். இதில் முதலாவது வகை எதிராளிகளைக் கொல்வது, தீமை விளைவிப்பது, தோல்வியுறச் செய்தல் என்பனவற்றிற்குரியது. இரண்டாவது வகைக் கிரியை சமாதானம், துர்த் தெய்வங்களைச் சாந்திப்படுத்தல் என்பனவற்றுக்குப் பயன்படுத்தப்படுவது. தந்திரங்கள், புலனின்பத்தூண்டல் நடைமுறைகளைட் பயன்படுத்தியபொழுதும், அவை சிவனுடனான ஒன்றிப்டை இலக்காகக் கொண்டவை. வாமமார்க்க மந்திரங்கள் உலகியலான வெற்றிகளையும், விடுதலையையும் தருவன.
முழுமையான தந்திர சுவடிகள் பல நேபாள நாட்டில் கிடைத்துள்ளன. இதிலிருந்து பெறப்படும் தகவல்களின்படி சிரஸ்ஷேத தந்திரம் வைரவ தந்திர பிரிவிற்குரியதாகச்
82

குறிப்பிடப்படுகிறது. இவை தவிர, ஆனந்த தந்திரம் எனக் காஷ்மீரத்தில் அறியப்படுவதும் வாம மார்க்கத்திற்குரியதென்றே குறிப்பிடப்படுகிறது. கம தந்திரம் வாம மார்க்கத்திற்குரிய கிரியைகள் பற்றியதாயினும், இடங்கை மார்க்கத்தின் செல்வாக்கும் இங்கு காணப்படுகிறது.
கருட, பூத தந்திரங்கள் எதுவும் இதுவரை கிடைக்கவில்லையாயினும் பிரதித்தலக்ஷணசார சமுச்சயத்திலே தரப்பட்டுள்ள பட்டியல் சரியானதே என்பதைப் பிற ஆதாரங்களிலிருந்தும் உறுதி செய்யக்கூடியதாய் இருக்கின்றது. காமிகம் பூத தந்திரங்கள் 20 எனக் குறிப்பிடுகிறது. திரோதல தந்திரத்தை முதலாகக் கொண்டதே பூத தந்திரங்களென மிருகேந்திரம் கூறுகிறது. வாம தந்திரங்கள் பலவகை சித்திகளையும் பெறும் மார்க்கத்தைக் கூற, கருட தந்திரங்களோ விஷம், விஷக்கடி, பாம்புக்கடி முதலானவற்றிற்கான மந்திரங்கள் பற்றிக் குறிப்பிடுகின்றன. கருட தந்திரங்கள் எதுவும் இதுவரை கிடைக்காத பொழுதும் பிற சான்றாதாரங்களை அடிப்படையாகக் கொண்டே இதனைப் பற்றி அறியக்கூடியதாயிருக்கிறது. குறிப்பாக கருட புராணத்தில் இது பற்றிய செய்திகள் உண்டு. அக்னி புராணத்தைப் போலவே கருட புராணமும் தந்திரங்களிலிருந்தே பல விடயங்களை உள்வாங்கியிருக்கிறது. இப் புராணத்தின் 19ஆவது அத்தியாயம் கருட மந்திரங்கள் பற்றியது. அது கருடதந்திரங்களிற்குரியதே என ஊகிக்க இடமுண்டு. இப் புராணத்திற் காணப்படும் சில கிரியைகள் வைஷ்ணவத்திற்குரியதாயும், கருடனை விஷ்ணுவின் அம்சமாகவும், ஏனையவை சைவத்திற்குரியதாகவும், கருடனை சிவனின் அம்சமாகவும் எடுத்துக் காட்டுகின்றன. எவ்வாறாயினும் வைஷ்ணவத்திலும் பார்க்க, சைவ கருட மந்திரங்களும், கிரியைகளுமே கருட புராணத்தில் மிகக் கூடிய அளவிற்குக் காணப்படுகிறது. தன்னைக் கருடனாகப் பாவனை செய்யும் மனிதன் எல்லாவகையான நஞ்சுகளின் பாதிப்பிலிருந்தும் விடுதலை பெற்றவனாவானென அபிநவகுப்தர் குறிப்பிடுகிறார்.
சதாசிவனின் தெற்கு (தகூதிண) முகத்திற்குரிய தந்திரங்கள் வலங்கை மார்க்கம் என அழைக்கப்படும். வடக்கு முகம் இடங்கை மார்க்கமாகும். வலங்கை மார்க்கத்திற்குரியவை வைரவ தந்திரங்களாகும்.
ஒன்பதாம் நூற்றாண்டுக்கு முன்பதாகவே ஐவகை மார்க்கத்திலிருந்து, வலங்கை மார்க்கம், இடங்கை மார்க்கம், சித்தாந்த மார்க்கம் என்ற புதிய முப்பிரிவுத் திட்டம் அறிமுகமாயிற்று. நேத்திர தந்திரத்தில் இப்பிரிவுத்திட்டம் காணப்படுகிறது. இதன்படி இடங்கை மார்க்கத்திற்கு தும்புருவும், வலங்கை மார்க்கத்திற்கு வைரவரும், சதாசிவன் சித்தாந்த மார்க்கத்திற்கும் தலைமைக் கடவுளராவர். இதைவிட நாக - நரசிம்ம வழிபாட்டிற்குரிய கீழ்நிலைத் தந்திரங்களும் உண்டு.
தந்திரங்கள் பற்றிய பிறிதொரு வகையீட்டில் 64 வைரவ தந்திரங்கள் பற்றிய குறிப்பு தரப்பட்டுள்ளது. 64 வைரவ தந்திரங்களும் மேல் வருவனவாகும்:
இந்துக்கலைக்களஞ்சியம்

Page 115
கிழக்கு மேற்கு கருட தந்திரங்கள் பூத தந்திரங்கள் ଜୋ (இ
1. ஹறம் காலகாலம் 2. குன்காரம் ஹயகிரீவம் 3. பிந்துசாரம் ஹரகோத்தம் 4. கலாமிருதம் ஹதங்ஹம் 5. தேவராஸம் ஹரோதம்
6. சுத்ராஸம் மண்டமானம் 7. FUDLh ஹன்கோதம் 8. 56,ortg|TULh ஹாத்ஹராவண்யம் 9. பட்சிராஸம் சண்டா சிதாரம் 10. சிகாயோகம் ஹன்ஹாரம் 11. சிகாசாரம் ஹஹகா காரம் 12. சிகாமிர்தம் சிவாரவம்
13. பஞ்சபூதம் ஹோரத ஹசம் 14. விபாகம் உச்சித்தம்
15. சுல்யாபேத ஹர்ஹாரம்
விநிர்நயம் 16. காலகாஸ்தம் துஷ்தரா சகம் 17. காலான்கம் விமலம் 18. காலகூதம் விகத்அம் 19. பதருமம் மஹோத்கடம் 20. காம்போஜம் யமகந்தம் 21. கம்பாலம் 22. கும்குணம் 23. காலகுண்டம் - 24. கதாஹகம் 25. சுவர்ணரேகம் -
26. சுக்ரீவம் -
27. தோதலம் 28. தோதலோத்தரம் - 29. -
30. - -
31. -
32. -
சதாசிவனின் மேற்கு முகத்திலிருந்து வலங்கை
மார்க்கத்திற்குரிய வைரவ தந்திரங்கள் பெறப்பட்டன. இதற்கு வைரவர் முதன்மைக்கடவுளாவர்.
நால்வகைப் பீடங்களின் அடிப்படையிலும் தந்திரங்களை
வகைப்படுத்துவதுண்டு. பீடங்கள் நால்வகைப்படும். அவை முறையே வித்யாபீடம், மந்திரபீடம், முத்ராபீடம், மண்டலபீடம் என அழைக்கப்படும். ஒரு தந்திரத்தின் போதனைப் பொருள் எதுவோ
இந்துக்கலைக்களஞ்சியம்

வடக்கு வாம தந்திரங்கள் டங்கை மார்க்கம்)
தெற்கு தகூவின தந்திரங்கள் (வலங்கை மார்க்கம்)
நயம் ஸ்வசந்தவைரவம் நயோத்தரம் சண்டவைரவம் மூகம் குரோதவைரவம் மோகனம் உன்மத்தவைரவம் மோகனாமிர்தம் அஷ்டாங்க வைரவம் கரபூஜாவிதானம் குருவைரவம் வினாதந்திரம் கபாலீசம் ஜயம் சமுச்சயம் விஜயம் ஹோரம் அஜிதம் ஹோஷணம் அபராஜிதம் ஹோரம் சித்தா நிசாசன்சாரம் நித்தியோதம் ஜெயஸ்தம் துர்முகம் சிந்தாமணி பீமான்கம் மகோதயம் குகஹம் தாமரராதம்
காமதேனுகடம்பகம் பீமம் ஆனந்தம் வேதாலமர்தனம் ருத்ரம் உஸ்ஹமம் பத்ரம் வாமம் கிம்கரம் கபாலம் ஆனந்தவிஜயம் வைரவம் போக்தம் புஷ்பம் தருவாஸம் அத்வயம் பிஜாபேதம் த்ரிரோபைரவம் * - 6jö5UTLh
- சித்தா
யோகேஸ்வரம்
- பஞ்சாமிர்தம் - பிரபஞ்சம்
யோஹினி
ஜாலசம்பரம்
விஸ்வவிகண்டம் ஜன்ஹாரம் திலஹோத்யன
வைரவம்
அதனடிப்படையில் 의 எப்பீடத்திற்குரியதென
தீர்மானிக்கப்படும். ஜெயத்ராதயாமளம் ஆகம சைவத்தை இரு விதத்தில் அணுகுகிறது. முதலாவதாகவே பீடங்களின் அடிப்படையில் தந்திரங்களை வகைப்படுத்துகிறது. இரண்டாவதாக அவை எவ்வாறு ஆசிரியன் - மாணவன் என்ற முறையில் போதிக்கப்பட்டு வந்துள்ளது என்பதை எடுத்துக்காட்டுகிறது. ஐவகை தந்திரப்பிரிவுகள் வலம், இடம், கலப்பென மூன்றாக வகைப்படுத்தப்பட்டபொழுது, நால்வகைப்
83

Page 116
பீடங்களும் அதற்கேற்றவாறு மூன்று பிரிவாக்கப்பட்டது. மந்திரபீடம் ஆண்பால் சொற்களுடன் தொடர்புடையதால் அதனுடன் தொடர்புடைய தந்திரங்களிற் பெரும்பாலும் ஆண் தெய்வங்களே குறிப்பிடப்பட்டுள்ளது. வித்யாபீடம் பெண்பாற் சொற்களுடன் தொடர்புடையதால் இங்கு பெரும்பாலும் பெண் தெய்வங்களே பேசப்படுகின்றன. இவற்றுக்கு முறையே உதாரணமாக ஸ்வசந்த வைரவம், சித்த யோகேஸ்வரி மதம் ஆகிய தந்திரங்களைக் குறிப்பிடலாம். உடல், உளம், வாக்கு என மூன்று வடிவங்களுடன் முத்ராபீடம் தொடர்புடையது. குறியீட்டடிப் படையில் மந்திரபீடம் போக்தா எனவும், வித்யாபீடம் போகம் எனவும் சுட்டப்படும்.
மந்திரபீடம் அடிப்படையில் எட்டு வைரவ தந்திரங்களான ஸ்வசந்தம், உன்மத்தம், அசித்தாங்கம், ருரு, சண்ட, க்ரோதம், ஜகண்டார, கபாலீசம் என்பனவற்றுடன் இரண்டாம் நிலைத்
பிரிவு ஆசிரியர் தந்திரம்
1. வைரவர் துர்வாசர் ஸ்வச்சந்த 2. சனகர் சண்ட
3. விஷ்ணு க்ரோத 4. கபிலர் உன்மத்த 5. காஸ்யபர் அசித 6. குரு (Ub(J5 7. சம்வர்த்தர் ஜங்கர 8. சங்கபாலர் 35LT65 g.
9. LUTLn6IT பிருகு பிரக்ம 10. சேதஸ் ருத்ர 11. நிதிஸ் விஷ்ணு 12. விஸ்வாமித்திரர் ஸ்கந்த 13. கெளதமர் கெளதாமிய 14. காலவர் அதர்வ 15. ஞக்ஞவல்கீயர் வேதால 16. விப்கண்டர் ருரு 17. மாத குர்சாலர் ரக்த 18. கிரந்தனர் பேடிக 19. கன்கர் பாருந்தி 2O. கீகரர் குக 2. கனானர் பிங்கள
22. கேசமி நீலகேசி 23. கேர்தர்ரக்ஷர் go LiñLjIJIT 24, சம்வர்த்தர் உப்குலா 25. மட்கல பிந்து வைரவமங்கல 26. சபிந்து சந்திரகர்ப்ப 27. சாதாதபர் சாந்தி மங்கலா 28. LI JITgFJri சுமங்கலா பிரஹ்மாருத்ரா 29. ஆபஸ்தம்பர் சர்வமங்கலா 30. ஆம்பூகர் விஜயமங்கலா 31. 6yíluJITöFi விஸ்வாம்பா 32. காத்யாயனர் சத்பாவமட்கல
& 4

தந்திரங்களையும் உள்ளடக்கியுள்ளது. வித்யாபீடம், சர்வவிர, சமாயோக, சித்தா யோகீஸ்வரி மதம், பஞ்சாமிர்த, விஸ்வாத்யம், யோகினி ஜாலசம்பரம், வித்யா பேதம், சிஸ்ஷேத, மகாசம்மோகனம், நயோத்தரம், மகா ரெளரம் ஆகிய தந்திரங்களையும் ருத்ரா, பிரஹ்மா, விஷ்ணு, ஸ்கந்த, உமா, ருத்திரபேத, ஹரி, கெளதமி ஆகிய யாமளங்களையும் உள்ளடக்கியது.
முத்ரா பீடம் கிரியாசூத்திரம் எனவும் அழைக்கப்படும். கிரியாசக்தியே மந்திரங்களாகும். ஹிர்த்பேத, மாத்ர்பேத, குப்ஜிகாமதம் ஆகிய மூல தந்திரங்களும் அவற்றின் பேதங்களும் இதிலடங்கும்.
மண்டலபீடம் ஒரேயொரு மூல சூத்திரத்தைக் கொண்டது. அதன் பெயர் எங்கும் தரப்படவில்லை. எனினும் பல கல்பங்களாகப் பிரிக்கப்பட்டதெனவும் தெரிய வருகிறது. (சோ.கி)
பிரிவு ஆசிரியர் தந்திரம்
33. சக்ர உலூகர் shog))
34. ஸ்தூலநாதி តាយា
35. ஹம்ச நாதி
36. ஹம்சராவ குஹ்ய
37. 岳蚤 B5f60
38. மனு சேளர
39. GÌL வாக்நேய 40. அக்சக சோமஜ 4. ਚੰਥ வசிஷ்ட செளக்ரீ 42. தக்கூடிசுக்ர மண்ட
43. 岳堑町ā மகோச்சுஸ்ம
44. கோகில பைரவி
45. சுகர் gLTf
46. ஷஷ்வாஹா பிரபஞ்சகி 47. 85Т60ШL மாத்ரிபேதி 48. ஸ்வேதர் ருத்திரகாளி 49. பகுரூப பிரகஸ்பதி அந்தகி
50. யமோகந்த ரெளபேதா 51. கண்காரர் ਯਲ
52. சுயாம்கர் சூலினி
53. சிகி கர்ணமோதி 54. குர்ன தான்கி
55. யதா ១៦6Tល័យfi 56. அதிஸ மாத்ரோதானி 57. வாஹிச ஹம்ஸா சித்தா
58. (Ġġ ĦfLn சித்ர
59. அனுலோம ஹிர்லேகா 60. ឆ្នាំ(១៦Tណ្ណ Ljតា
6. லோமாஹ 5_16T 62. ஸ்த ஹம்ஸினி 63. ஜத்தா ஹம்ஸமாலா 64. வால்மீக சந்ரகோடி
இந்துக்கலைக்களஞ்சியம்

Page 117
தம்புரா
இது ஒரு தந்தி வாத்தியமாகும். சுருதி வாத்தியங்களுள் தலை சிறந்து விளங்குவது தம்புராவேயாகும். கச்சேரி மேடையில் சுருதி நழுவ விடாமல் பாதுகாவலனாக நின்று கச்சேரியின் சிறப்புக்கு உறுதுணையாக இருப்பது தம்புராவே, தம்புரா என்னும் பெயர் தும்புரு கையாண்ட வாத்தியம் என்ற காரணத்தினால் அவ்வாறு அமைந்திருக்கலாம் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
தும்ப என்றால் சுரைக்காய், சுரைக்காயைக் கொண்டு செய்யப்பட்டதனாலும் தம்புரா என்ற பெயர் வந்திருக்கலாம். தம்புரா வாத்தியத்தின் சிற்பம் தருமயம் கோயிலில் பெருமாளுக்கு மேற்குப் பாகத்தில் உள்ள சப்தரிஷிகள் கூட்டத்தில் காணப் படுகின்றது. எனவே தம்புரா வாத்தியம் தென்னிந்தியாவிலேயே தோன்றியது எனலாம். தம்புரா பலா மரத்தினால் செய்யப்படுகின்றது. சதுரமாகவுள்ள பலா மரத்துண்டை எடுத்து மேல் பாகத்தை செதுக்கி அரைக் கோள வடிவமாக்கி பின் உள் பாகத்தை எடுத்துவிட்டு குடம் என்ற இசையொலி பெருக்கும் பகுதி தயார் செய்யப்படும். இக் குடத்தின் மேற்பலகை சிறிது வளைவாக இருக்கும். பின்பு தண்டி என்னும் நீண்ட பகுதி தயார் செய்யப்பட்டு குடத்துடன் இணைக்கப்படும். தண்டியின் இடது ஒரத்தில் பிரடைகள் நான்கினை இணைப்பதற்கான (பொருத்துவதற்கான) துவாரங்கள் இடப்படும். குடத்தின் மேலுள்ள மெட்டு (Bridge) அகலமாக, செம்மையாக பதியப்படும். குடத்தின் வலது ஒரத்தில் உள்ள தந்தித் தாங்கியில் நான்கு தந்திகள் பிணைக்கப்பட்டு உருண்டை வடிவமுள்ள மணிக் காய்களின் துளை வழியாக மெட்டின் மேல் சென்று பின்னர் மேரு பாகத்திலுள்ள மற்றொரு மேட்டின் நடுப்பகுதியிலுள்ள சில துளைகள் மூலமாகச் சென்று பிரடைகளில் சுற்றப்பட்டிருக்கும். சுருதி செம்மையாக கூட்டப்படுவதற்காக குடத்தின் மேலுள்ள மெட்டுக்கும் தந்தித் தாங்கிக்கும் நடுவில் நான்கு மணிக்காய்கள் உள்ளன. இவற்றைத் தந்தி தாங்கியின் பக்கமாக தள்ளினால் சுருதி அதிகரிக்கும். எதிர்ப்புறம் தள்ளினால் சுருதி குறையும். தம்புராவின் ஒலி கணிர் என கேட்பதற்காக ஜீவாளி என்றழைக்கப்படும் பட்டுநூல் மெட்டுக்கும் தந்திக்கும் இடையில் தக்க இடத்தில் வைக்கப்படும்.
இந்துக்கலைக்களஞ்சியம்
 

தம்புராவில் அலங்கார வேலைப் பாடுகளுக்கான குடத்தின் மேல் நபுக்கள் எனப்படும் கீறல்களை வரைந்து அழகு படுத்துவர். மைசூர் தம்புராக்களில் இந்த நாபுக்கள் காணப்படமாட்டாது. மேலும் தம்புரா வாத்தியத்தை அழகுபடுத்தும் முகமாக தண்டியின் ஓரங்களிலும் குடத்தின் ஓரங்களிலும் மான் கொம்பையோ, தந்தத்தையோ அமைப்பர். மேலும் குடத்தின் மேல் இரு பக்கங்களிலும் பூவேலை செய்த தந்தத்தை பதிப்பர். இவ்வாறு அழகுபடுத்துவதற்கு கமல வேலை என்று பெயர் வடநாட்டுத் தம்புராக்களில் பலா மரக் குடத்திற்குப் பதிலாக சுரைக்காயைப் பயன்படுத்தி அமைப்பர். தண்டி தேக்கு மரத்தினால் அகலமாகச் செய்ய்ப்பட்டிருக்கும்.
தம்புராவில் சுருதியை மீட்டுவதற்கு நான்கு தந்திகள் பயன்படுத்தப்படும். அவை முறையே பஞ்சம தந்தி, சாரணி தந்தி, அனுசாரணி தந்தி, மந்திர தந்தி ஆகியவை. பஞ்சம், சாரணி, அனுசாரணி ஆகிய தந்திகள் எஃகினாலும், மந்திரத் தந்தி வெண்கலத்தினாலும் செய்யப்பட்டிருக்கும். முதல் தந்தியாகிய பஞ்சம தந்தி மந்திரஸ்தாயி பஞ்சமத்திற்கும், சாரணித் தந்தி மத்தியஸ்தாயி ஷட்சத்திற்கும், அனுசாரணித் தந்தி மத்தியஸ்தாயி ஷட்சத்திற்கும் மந்திர தந்தி, மந்திரஸ்தாயி ஷட்சத்திற்கும் சுருதி சேர்க்கப்படுகின்றன. சாரணி, அநுசாரணி, இரண்டும் ஒரே சுருதியில் இருப்பதனால் இவற்றினின்று பரிவு சப்த அசைவுகள் உண்டாகி நாதத்தின் தன்மையைச் சிறப்படையச் செய்கிறது.
தம்புராவை நிறுத்தி வைத்துக் கொண்டும் படுக்க வைத்தும் மீட்பர். தம்புரா தந்திகளை மத்திய பாகத்திலோ அல்லது C நீள ஸ்தானத்திலோ மீட்ட நாதம் செம்மையாக அமையும். வல்து கை ஆள்காட்டி விரல் மற்றும் நடு விரல்களால் தந்திகளை மீட்டி சுருதி ஒலிக்கப்படுகிறது. தம்புரா மீட்டுதலில் ஒரு இலயம் இருத்தல் வேண்டும்.
இந்திய சுருதி வாத்தியங்களுள் தம்புராவிற்கு இணை வேறெதுவுமில்லை. சுருதி சுத்தமாக மீட்டப் பெறும் தம்புராவே கச்சேரிகள் களை கட்டுவதற்கு ஆதாரமாக அமைகின்றது. நாரதரின் கையிருக்கும் தம்புரா இசையில் சுருதியின் முக்கியத்துவத்தை வெளிப்படுத்துவதினை அறியக் கூடியதாக உள்ளது.தம்புராக்களில் தஞ்சாவூர் தம்புராக்களே நாத இனிமைக்கும் தந்த வேலைகளுக்கும் சிறப்புப் பெற்றவை. இந்தியாவில் திருவனந்தபுரம், மைசூர் விஜயநகரம், மிராஜ், ராம்பூர், ரானோ ஆகிய இடங்களில் தம்புராக்கள் செய்யப்படுகின்றன. (தே. ஹ.)
தமயந்தி
புராதன இந்தியாவிலே விதர்ப்ப நாட்டு மன்னனாக விளங்கிய பீமனுடைய மகளே தமயந்தி. அவளுடைய கணவனாகிய நளன் நிடத நாட்டு மன்னன். இருவரும் இலட்சிய மன்னனாகவும், அரசியாகவும் விளங்கினர். அவர்களுடைய
85

Page 118
கதை இந்தியாவிலுள்ள பலமொழிகளிலே மட்டுமன்றி, வேறு
தேசத்து மொழிகள் பலவற்றிலும் வெளிவந்துள்ளது. இந்திய நாகரிகத்திலே தமயந்தி தலைசிறந்த பெண்மணிகளில்
ஒருத்தியாகவும் கற்புக்கரசியாகவும் போற்றப்படுகின்றாள்.
கதைப் பின்னணி
அவர்கள் பற்றிய கதை மஹாபாரதத்திலுள்ள வனபருவம் எனும் பகுதியிலே நளோபாக்யானம் எனும் பெயரிலே முதன்முதலாக வந்துள்ளது. கெளரவர்களோடு சூதாட்டம் ஆடித் தமது இராச்சியத்தை இழந்து பாண்டவர்கள் 12 ஆண்டுகள் வனவாசமும் ஒராண்டு அஞ்ஞாதவாசமும் செய்ய நேரிட்டது. இக் கால கட்டத்தில் அவர்கள் பல இன்னல்களை அனுபவித்தனர். வனவாசத்தின் போது பாண்டவர்களில் மூத்தவராகிய தர்மபுத்திரர் (தருமர்) மிகவும் மனக் கவலையடைந்திருந்தபோது ஒருநாள் அங்கு பிருஹதஸ்வ எனும் சிறந்த முனிவர் வந்தார். தருமரும் மனைவியும் அப்போது அங்கிருந்த சகோதரர்களும் அவரை வணங்கி வரவேற்றனர். பின்னர் தருமர் தன்னைப் போல வேறு எவரும் இத்தகைய துன்பம் அடைந்திலர் எனக் கவலையுடன் கூறினார். அதற்கு முனிவர் தருமரைப் பார்த்து 'உமக்கு மனைவியும், சகோதரர்களும் உள்ளனர். ஆனால் முற்காலத்திலே நளன் எனும் மன்னன் சூதாட்டத்தில் இராச்சியத்தினை இழந்து, அன்பு மனைவியைக் காட்டிலே தனிமையிலே பரிதவிக்க விட்டுச் சென்று தானும் பல துன்பங்களை அடைந்தான் எனக் கூறினார். அதைக் கேட்ட தருமர் அக்கதையைத் தமக்கு கூறியருளுமாறு முனிவரிடம் வேண்ட அவர் இக்கதையை எடுத்துக்கூறி மன்னனைத் தேற்றினார்.
நளன் தமயந்தியின் இளமைக்கால வரலாறு
விதர்ப்ப நாட்டு மன்னனான பீமன் சிறந்த அரசனாக விளங்கினான். ஆனால் நீண்டகாலம் மகப் பேறின்றிப் பெரிதும் கவலையுற்றிருந்தான். அப்போது தமனர் எனும் ரிஷி அங்கே வந்தார். அரசன் அவரை முறைப்படி உபசரித்தார். மன்னனுடைய மனக்கவலை அறிந்த முனிவர் அவனுக்கு மகப்பேறு கிடைக்கும் வண்ணம் ஆசீர்வதித்தார். இதன்பின் பீமனுக்குத் தமயந்தி எனும் பெண்குழந்தையும் தம, தாந்த, தமன எனும் மூன்று ஆண் மகவுகளும் பிறந்தன. அரசனும் மிக மகிழ்ச்சியடைந்தான். பிள்ளைகளும் நாளொரு வண்ணமும் பொழுதொரு மேனியுமாக வளர்ந்தனர். தமயந்தி திருமணப் பருவத்தை அடைந்தாள். இதே காலத்திலே நிடத நாட்டில் ஆட்சி செய்த வீரசேன எனும் அரசனுக்கு மகனாக நளன் பிறந்தான். அவனும் அரசர்க்குரிய பல பயிற்சிகளைப் பெற்றவனாகவும், உண்மை பேசுபவனாகவும் விளங்கி விவாகப் பருவத்தினை எய்தினான்.
அரச நந்தவனத்திற் பல அன்னங்கள் கூட்டமாக வந்திறங்கின. அரசன் ஆவல் மேலிட்டால் அவற்றுள் ஒன்றினைப் பிடித்தான். அப்போது அந்தப் பறவை அரசனிடம் தன்னைக் கொல்ல வேண்டாமென்றும், தமயந்தி எனும் சிறந்த பெண்ணுக்கு அவனை அறிமுகம் செய்து அவளைத் திருமணம்
86
 

செய்யும் வகையில் முயற்சிப்பதாகவும் கூறிற்று. அதைக் கேட்ட அரசன் வியப்புற்றுப் பறவையை விட்டான். பின்னர் அது ஏனைய பறவைகளுடன் விதர்ப்ப நாட்டிற்குச் சென்று தமயந்தியிடம் நளனின் குணாதிசயங்களை எடுத்துக்கூறி அவன் மீது அவளுக்குக் காதலைத் தூண்டிற்று. மீண்டும் நிடத நாட்டிற்கு வந்து அப்பறவையும் ஏனையவும் நடந்தவற்றைக் கூறின. இவ்வாறு ஒருவரையொருவர் காணாமலே நளனுக்கும் தமயந்திக்குமிடையில் காதல் அரும்பிற்று.
ஆண்களிலே சிறந்தவனாக நளனும் பெண்களிலே சிறந்தவளாகத் தமயந்தியும் விளங்கினர். அவ்விருவருடைய நண்பர்கள் ஒருவரின் குணநலனை மற்றவருக்கு எடுத்துக் கூறினர். அதனால் இவர்களுக்கிடையில் ஒருவரையொருவர் காணாமலே காதல் வளர்ந்தது. நளன் தமயந்தியை நினைத்து ஒருநாள் அந்தப்புரத்திலுள்ள சிறு வனத்திலே தனியே இருந்தான். அப்போது தங்கமயமான சிறகுகளையுடைய அன்னப்பறவைக் கூட்டம் அங்கு வந்திறங்கியது. அரசன் ஆவல் மேலீட்டினால் அப்பறவைகளிலொன்றினைப் பிடித்தான். அப்போது அப்பறவை மனித குரலிலே தன்னைக் கொல்ல வேண்டாமென்றும், அவனுக்கு விருப்பான ஒரு செயலைச் செய்வதாகவும் கூறிற்று. அதாவது விதர்ப்ப நாட்டு இளவரசியாக தமயந்தியிடம் அவனைப் பற்றிப் புகழ்ந்து கூறுவதன் மூலம் அவள் அவனையன்றி வேறு எவரையும் விரும்பாள் என அன்னம் கூறிற்று. இதைக்கேட்ட அரசன் வியப்புற்று அன்னத்தை விட்டான். பின்னர் அப்பறவைகள் விதர்ப்ப நாட்டிற்குச் சென்று தமயந்திக்கு அண்மையில் இறங்கின. தமயந்தியும் தோழிகளும் அவற்றைப் பிடிக்க முயன்றனர். தமயந்தி பிடித்த அன்னம் நளனுடைய அழகையும், குணநலன்களையும் அவளுக்கு எடுத்துக்கூறித் தலை சிறந்த இருவர் ஒன்று சேரல் மிக நன்றே எனக் கூறிற்று. பின்னர் தமயந்தி "நீயும் இவ்வாறே நளனிடம் கூறுவாயாக’ எனக் கூறி அதனை விட்டாள். பின்னர் அப்பறவைகள் நடந்தவற்றை நளனிடம் எடுத்துக் கூறின.
தமயந்தி சுயம்வரம்
பருவமடைந்த தனது மகளின் திருமணத்தை நிச்சயிக்குமுகமாக பீமன் மகளுக்குச் சுயம்வரத்தினை ஏற்படுத்துவதற்கான ஒழுங்குகளைச் செய்தான். அவ்வைபவத்திற்குப் பலதேசத்து இளவரசர்களும், ஏனையோரும் வரவழைக்கப்பட்டனர். நளனும் விதர்ப்ப நாட்டுத் தலைநகராகிய குண்டினபுரத்தை நோக்கிப் புறப்பட்டான். இதற்கிடையில் தமயந்தியின் அழகு நற்குணங்கள் முதலியன பற்றியும் சுயம்வரம் பற்றியும் இந்திரன், வருணன், அக்கினி, யமன் முதலிய தேவர்கள் அறிந்து தம்முள் ஒருவரைத் தமயந்தி தெரிவு செய்ய வேண்டுமென விரும்பினர். ஆனால் அவர்கள் நளன் தமயந்திக்கிடையில் ஏற்கனவே ஒருவரையொருவர் காணாமலே முகிழ்ந்து வந்த காதலை அறிந்திருந்தனர். எனவே நளன் சுயம்வரத்திற்குச் செல்லும் வழியில் அவனைச் சந்தித்துத் தமது நோக்கத்தை எடுத்துக் கூறித் தமக்காக நளன் தனது
இந்துக்கலைக்களஞ்சியம்

Page 119
நோக்கத்தைக் கைவிட்டு அதனைத் தமயந்திக்குத் தெரியப்படுத்துமாறு கூறினர். நளன் இதனை விரும்பாவிடினும் தேவர்களின் வற்புறுத்தலால் அதற்கு இணங்கி அவர்களுக்காகத் தமயந்தியிடம் தூது சென்றான். தேவர்களின் பிரயாவத்தினால் தமயந்தி தவிர்ந்த ஏனையோர் கண்ணில் படாமல் நளன் தமயந்தியிடம் அரண்மனைக்குச் சென்று தேவர்களின் நோக்கத்தைத் தெரியப்படுத்தினான். ஆனால் தமயந்தி தேவர்களின் வேண்டுகோளை நிராகரித்து ஏற்கனவே தான் மேற்கொண்ட முடிவிற்கேற்ப நளனையே தெரிவு செய்தாள். பின்னர் நளன் நடந்தவற்றைத் தேவர்களுக்கு எடுத்துக் கூறினான். சுயம்வரத்திற்கு அனைவரும் சென்றனர்.
சுயம்வர மண்டபத்திலே பல மன்னர்கள் மத்தியிலே தன்னுடைய வரனுக்கு மாலை சூட்டுமுகமாகத் தமயந்தி வந்தபோது நளனைப் போன்று ஐவர் (நளனும் நான்கு தேவர்களும்) காணப்பட்டனர். இதனால் தமயந்தி தான் ஏற்கனவே வரித்துக் கொண்ட நளனை அடையாளம் காணமுடியாது மிகவும் மனக்கலக்கமுற்றாள். எனவே தனக்கு உதவி செய்தருளும் வகையில் உண்மையான நளனைக் காட்டுமாறு தேவர்களைப் பிரார்த்தித்தாள். அவர்களும் கருணை கூர்ந்து அவள் விரும்பிய வரனை அறியும் வகையில் தமது சுயவடிவங்களை வெளிப்படுத்தினர். இதனால் தமயந்தி தான் ஏற்கனவே விரும்பிய நளனை அடையாளம் கண்டு அவனுக்கு மாலை சூடித் தனது வரனை அனைவருக்கும் தெரியப்படுத்தினாள். நளன், தமயந்தி ஆகியோரின் நடத்தையையும், ஒழுக்கத்தையும் கண்டு தேவர்கள் அவர்களை ஆசீர்வதித்தனர். பல வரங்களைக் கொடுத்தனர். இதன்பின் தேவர்களும் ஏனையோரும் தத்தம் இடங்களுக்குத் திரும்பினர். மணமக்களும் பின்னர் நிடத நாட்டிற்குச் சென்றனர்.
நளன் இராச்சியத்தை இழந்து மனைவியுடன் துன்புறல்
தமயந்தியின் சுயம்வரம் பற்றிக் கேள்விப்பட்டு குண்டினபுரிக்குச் சென்று கொண்டிருந்த கலி, துவாபரன் ஆகியோர் வழியில் மேற்குறிப்பிட்ட நான்கு தேவர்களைக் கண்டனர். நடந்தவற்றை அறிந்து அவ்விருவரும் மிகவும் கோபமடைந்தனர். கலி ஒரு தருணம் பார்த்துக் கொண்டிருந்தான். 12 ஆண்டுகளின்பின் நளன் ஒருநாள் கால் கழுவாது சந்தியாவந்தனம் செய்தமையைப் பயன்படுத்தி அவனுடம்புக்குள் புகுந்தான். அதனால் அறம், கடமை முதலியன அவனை விட்டகன்றன. தன்னுடைய இளைய சகோதரன் புஷ்கரனோடு சூதாடி இராச்சியத்தை இழந்தான். இவ்வாறு நளன் தோல்வியைத் தழுவியதை அறிந்த தமயந்தி வார்ஸ்ணேய எனும் தேர்ச் சாரதி மூலம் தன்னுடைய மகன் இந்திர சேனனையும், மகள் இந்திரசேனாவையும் குண்டினபுரிக்கு அனுப்பினாள். வார்ஸ்ணேய அவர்களை விதர்ப்ப நாட்டிலேவிட்டு விட்டு பல இடங்களுக்குச் சென்று இறுதியில் அயோத்தியில் ஆட்சிசெய்த ருதுபர்ணன் எனும் மன்னனின் தேர்ச் சாரதியானான்.
இந்துக்கலைக்களஞ்சியம்

புஷ்கரன் நளனுடைய அரசையும் செல்வமனைத்தையும் தனதாக்கிக் கொண்டான். பரிதாபத்திற்குரிய நளன் ஓர் ஆடையுடன் அரச மாளிகையை விட்டு வெளியேறினான். தமயந்தியும் அவனைப் பின் தொடர்ந்து சென்றாள். நளனுக்கு உதவி செய்வோர் எவராயினும் கடுந்தண்டனை - மரண தண்டனை விதிக்கப்படுவர் எனப் புஷ்கரன் அனைவருக்கும் எச்சரிக்கை செய்தான். நளனும் நீர் மட்டும் ஆகாரமாகக் கொண்டு மூன்று நாட்களின் பின் மனைவியுடன் வெளியேறினான். வழியிலே பொன்னிறமான பறவைகளைக் கண்டான். பசியினால் அவற்றைத் தன் ஆடையினால் பிடிக்க முயன்றான். ஆனால் அவை ஆடையுடன் பறந்து விட்டன. கலியின் செல்வாக்கினால் இந் நிகழ்வு ஏற்பட்டது. பரிதாபகரமான நிலையில், பசியுடன் செல்லும்போது வழியில் வழிப்போக்கர் கூட்டத்தினர் வந்தனர். நளன், தமயந்தியை அவர்களுடன் செல்லுமாறு கூற அவள் மறுத்து கணவனுடன் சேர்ந்து இருவரும் ஒரு சத்திரத்திலே துயின்றனர். இருவருக்கும் பெரும் பசியும் இருந்தது. எனினும், இரவிலே நளன் எழுந்து மனைவியின் சேலையின் அரைவாசியை வெட்டி அதனை உடுத்துக் கொண்டு வெளியேறினான்.
தமயந்தி விழித்தெழுந்தபோது நளனைக் காணாது பெரிதும் கலக்கமுற்றாள். அப்போது ஒரு பெரிய பாம்பு அவளை விழுங்க முற்பட்டது. அப்போது ஒரு வேடன் பாம்பினைக் கொன்று அவளைக் காப்பாற்றினான். ஆனால் அவன் தமயந்தியைத் திருமணம் செய்யுமாறு வற்புறுத்தினான். உடனே தமயந்தி சபிக்க அவன் இறந்தான். பின்னர் தமயந்தி அலைந்து திரிந்து ஒரு பாறையில் நளனை நினைத்து அழுது கொண்டிருந்தாள்.
சேதி அரசில் தமயந்தி
அங்கு இருக்கும்போது அவ்வழியால் ஒரு வணிகர் கூட்டத்தினர் வந்தனர். அவள் அவர்களுக்குத் தனது நிலைமை பற்றிக் கூற அவர்கள் அவளைச் சேதி அரசில் விட்டுச் சென்றனர். அவள் அங்குமிங்கும் அலைந்து திரியச் சிறுவர்கள் அவளைப் பைத்தியக்காரி எனக் கூறிச் சூழ்ந்தனர். சேதி அரசி இதனைக் கண்டு கருணை கூர்ந்து அவளைத் தனது தோழி மூலம் அரண்மனைக்கு வரச் செய்தாள். அங்கு தமயந்தி தான் நளனுடைய மனைவி என்பது தவிர்ந்த ஏனைய தனது கதையை அரசிக்குக் கூறினாள். இதைக் கேட்ட அரசி அரண்மனையிலேயே கணவன் வரும்வரை தமயந்தியைத் தங்கியிருக்குமாறு கூறினாள். தமயந்தியும் சில நிபந்தனைகளை விதித்து அவற்றை அரசி ஏற்றபின் அங்கு தங்கியிருக்க உடன்பட்டாள். தமயந்தி அரசியின் மகளான சுனந்தாவின் பணிப் பெண்ணாக நியமிக்கப்பட்டாள்.
நளன் அயோத்தியில்
இரவிலே மனைவியைத் தனியே விட்டுப் புறப்பட்ட நளன்
காட்டில் அலைந்து திரியும்போது காட்டுத் தீயைக் கண்டான். அத்
தீக்குள்ளிருந்து நளனுடைய பெயரைக் குறிப்பிட்டு ஒருவர் உதவி
& 7

Page 120
கோருவதைக் கேட்டு அங்கு சென்றான். கார்க்கோடகன் எனும் நாக அரசன் தீச் சுவாலையிற் சுருண்டு கிடந்தான். நாரதர் இட்ட சாபத்தால் இந்நிலையடைந்த நாக அரசன் நளன் வரும்வரை காத்திருந்தான். நளன் அவனைத் தீயிலிருந்து காப்பாற்றினான். பின்னர் கார்க்கோடகன் நளனின் காலிலே கடிக்க நளன் அவலட்சணமான வடிவம் பெற்றான். தனது நஞ்சு நளனுடைய உடம்பிலுள்ள கலியைப் பாதித்துள்ளதென்றும், குற்றமற்றவனைத் துன்புறுத்திய கலி துன்புறுத்தப்படும் எனவும், நளன் அயோத்தி மன்னன் ருதுபர்ணனிடம் பாஹுக எனும் தேர்ச் சாரதியென அறிமுகம் செய்து அவனுக்கு அஸ்வ (குதிரை) ஹிருதய மந்திரத்தை உபதேசித்து அவனிடமிருந்து அக்ஷ (சூதாட்டம்) ஹிருதய மந்திரத்தைப் பெற்றுக் கொள்ளவேண்டும் எனவும், பின்னர் மனைவி, பிள்ளைகளுடன் நளன் இணைவான் எனவும் பழைய வடிவத்தை மீண்டும் பெறுவான் எனவும் கூறி இரண்டு தெய்வீக ஆடைகளை அவனிடம் கொடுத்துவிட்டுக் கார்க்கோடகன் மறைந்தான்.
அவ்வாறே நளன் அயோத்தி சென்று 10ஆம் நாள் ருதுபர்ணனின் குதிரைகளின் மேற்பார்வையாளனாக பாஹக எனும் பெயரில் 100 பொற்காசு சம்பளத்துடன் நியமனம் பெற்றான். இவனுக்குக் கீழ் வார்ஸ்ணேய, ஜிவல என்போர் பணிபுரிந்தனர். பாஹாக ஒவ்வொரு நாளும் தனது நிலைமை பற்றி ஒரு பாட்டுப் படிப்பதைக் கேட்ட ஜிவலன் அவனிடம் விசாரித்து இவன் (நளன் என்பது தெரியாதாயினும்) அழகிய மனைவியைத் தனியே கைவிட்டு வந்தவன் என்பதை அறிந்து கொண்டான்.
தமயந்தி தந்தையிடம் செல்லுதல்
மகள் தமயந்திக்கும் மருமகன் நளனுக்கும் நடந்தவற்றைக் கேள்விப்பட்டு விதர்ப்ப மன்னனாகிய பீமன் பெரும் கவலையடைந்து அவர்களைத் தேடிப் பல திசைகளிலும் குறிப்பிட்டவர்களை அனுப்பினான். அவ்விருவரையும் கண்டு பிடிப்பவருக்குப் பல வெகுமதிகள் வழங்குவதாகவும் அறிவித்தான். இவ்வாறு சென்றோர்களிலே சுதேவ என்பவன் சேதி நாட்டிற்குச் சென்று அங்கு அவள் இருக்கலாம் என அறிந்து பணிப் பெண்ணாக இருந்த அவளைத் தனியாகச் சந்தித்து அடையாளங் கண்டான். உரத்து அழுதான். இதைக் கண்ட சுனந்தா தாயிடம் நடந்தவற்றைக் கூற அரசியும் வியப்புற்றுத் தான் தமயந்தியின் தாயினுடைய சகோதரியென அறிமுகம் செய்தாள். இதன் பின்னர் தமயந்தி விதர்ப்ப தேசத்திற்குப் பல்லக்கில் அனுப்பப்பட்டாள்.
நளனைத் தேடல்
விதர்ப்பத்திற்குத் திரும்பிய தமயந்தி நளன் இன்றித் தான் வாழமுடியாதெனத் தகப்பனாரிடம் கூறினாள். பல இடங்களுக்கும் அவளைத் தேடிக் குறிப்பிட்டவர்கள் சென்றனர். அயோத்திக்குச் சென்ற ஒரு பிராமணன் ருதுபர்ணனின் சேவையிலிருந்த பாஹா என்பவன் மட்டும் தமயந்தி பற்றி பல விடயங்களை விசாரித்தான். அவன் சிறந்த சூதாட்டக்காரன், சிறந்த சமையற்காரன். தமயந்தி
88

இதைக் கேட்டு தாயிடம் கூறினாள். சுதேவனை அயோத்திக்கு அனுப்பி தமயந்தியின் இரண்டாம் சுயம்வரம் நடைபெறுவதாக அறிவிக்குமாறு கூறப்பட்டது. தமயந்தியின் இரண்டாம் சுயம்வரம் அடுத்தநாள் காலை நடைபெறவிருப்பதாக ருதுபர்ணனுக்கு அவன் அறிவித்தான். ருதுபர்ணனும், தேர்ச்சாரதி பாஹகனும் வேறு சிலரும் விதர்ப்ப நாட்டினை நோக்கிச் சென்றனர். வழியில் இருவரும் அஸ்வஹறிருதய மந்திரம் (ருதுபர்ணன்), அக்ஷஹிருத மந்திரம் (பாஹுச) பரஸ்பரம் கற்றனர். அக்ஷஹிருதயத்தைக் கற்றவுடன் கலியினாலான விஷம் நளனிலிருந்து வெளிவந்தது. அவன் விஷத்தை வாந்தியெடுத்தான். விஷம் வெளிவர நளனிடமிருந்த கலி விலகினான். தன்னை மன்னிக்குமாறு நளனை வேண்டினான். இதைக்கேட்ட நளனுக்குக் கோபம் ஏற்பட்டாலும் அதனை அடக்கிவிட்டான். பின்னர் கலி வன்னிமரத்தை வசிப்பிடமாகக் கொண்டான். இதனால் அது வெறுக்கப்படுகிறது எனக் கருதப்படுகிறது.
நளன் தமயந்தி பிள்ளைகள் ஒன்று கூடல்
ருதுபர்ணன் பாஹூக முதலியோர் குண்டினபுரம்
சென்றனர். அங்கு திருமண ஆயத்தம் ஒன்றுமிருக்கவில்லை. பீமன் ருதுபர்ணனை வரவேற்றான். தமயந்தி கேசினி மூலம் பாஹகவுடன் தொடர்பு கொண்டாள். பாஹமகனே நளன் என்பது புலனாயிற்று. நளனும் தமயந்தியும் ஒருவரையொருவர் அடையாளம் கண்டனர். நளன் தான் செய்த பிழைக்குக் கண்ணிர் விட்டான். நளன் தன்னை விட்டுப் பிரிந்தமை தேவர்கள் முன்னிலையில் செய்த வாக்குறுதியை மீறியதாகும் எனத் தமயந்தி கூறினாள். நளனும் தமயந்தியும் ஒரு தவறும் செய்யவில்லை என வாயு பகவான் கூறினார். இதன்பின் நளன் கார்க்கோடகன் வழங்கிய ஆடையைத் தரித்து முன்னைய வடிவத்தை பெற்றான். தமயந்தியைத் தழுவிக் கதறினான். ருதுபர்ணன் அடுத்த நாள் அயோத்தி திரும்பினான். நளனும் சில நாட்களின் பின் நிடத நாட்டிற்குத் திரும்பிப் புஷ்கரனைச் சூதாட்டத்திற்கு அழைத்தான். அவன் முதலிலே மறுத்துப் பின்னர் சம்மதித்தான். முதலாவது ஆட்டத்திலேயே புஷ்கரன் தோற்று அரசை இழந்தான். நளன் அவனைக் கொல்லாது தழுவினான். நளன் தனது இராச்சியத்தை இவ்வாறு மீட்டுத் தமயந்தியுடனும் பிள்ளைகளுடனும் மிகுந்த மகிழ்ச்சியுடன் அங்கு ஆட்சி புரிந்தான்.
பல இன்னல்கள் ஏற்பட்டபோதும் பொதுவாக மனம் சலியாதும், மற்றவர்களுக்குத் தீமை செய்யாதும் நளன் சிறந்த அரசனாக விளங்கினான். தமயந்தி பல சோதனைகள் மத்தியிலும் நளனிடத்துக் கொண்டிருந்த பற்றினைக் கைவிட்டிலள். அவளுடைய கற்பு அவளைச் சில ஆபத்துக்களிலிருந்து காப்பாற்றியுள்ளது. தான் முதன்முறை விரும்பியவனையே இறுதிவரை நேசித்து அவனுடைய இன்ப துன்பங்களிலே பங்கு பற்றிய தலைசிறந்த இந்தியப் பெண்மணிகளிலொருத்தியாகத் தமயந்தி போற்றப்படுகிறாள். முன் உதாரணமான மாதர் குல திலகமாகவும் விளங்குகிறாள். (வி சி)
இந்துக்கலைக்களஞ்சியம்

Page 121
தயானந்த சரஸ்வதி (7824-7883)
ஆரிய சமாஜத்தின் ஸ்தாபகரான தயானந்தர் மேற்கிந்தியாவிலே கத்தியவார் பகுதியிலுள்ள மோர்வி என்னுங் கிராமத்திலே செல்வமுடை குடும்பமொன்றிலே பிறந்தவர். அவருக்குப் பெற்றோர்கள் மூலசங்கர் என்று பெயரிட்டனர். இளமைக் காலத்தில் அவருக்குத் தேசாபிமானமும் சமயாபிமானமும் மிகுந்தளவில் ஏற்பட்டன. இந்து சமுதாயத்தின் மீது கொண்ட தீவிரப் பற்றின் காரணமாக அவர் தனது வீட்டிலிருந்து வெளியேறி நாட்டின் பல பாகங்களுக்கும் சுற்றுப் பிரயாணங்களை மேற்கொண்டார். காலப் போக்கிலே கண்பார்வை இல்லாதவரான சுவாமி விருசானந்தரிடம் ஞானோபதேசம் பெற்று அவரின் சீடரானார். துறவறம் மேற்கொண்டார்.
தயானந்தர் வைதிக சமயத்திலும் வேதங்களிலும் அளப்பரிய பற்றுக் கொண்டார். இந்திய நாகரிகத்தின் மூலமாகவும் அதன் உன்னதமான அம்சமாகவும் வேதங்களை அவர் கருதினார். வாழ்க்கைப் பிரச்சனைகள் அனைத்துக்கும் வேதங்கள் மூலமே பரிகாரங்களைத் தேடிக் கொள்ளலாம் என்று கருதினார்.
தயானந்தர் பரப்பிய கருத்துக்களின் மூலம் இந்து சமுதாயத்திலே சமய உணர்ச்சியும் தேச பக்தியும் சமஸ்கிருத மொழி மீதான அபிமானமும் மேலோங்கி வந்தன. அவரின் சமய சீர்திருத்தக் கொள்கைகளும் சமுதாய சீர்திருத்தம் பற்றிய சிந்தனைகளும் கற்றோரையும் பாமரரையும் இளைஞரையும் பெருதுங் கவர்ந்தன. தயானந்தர் 1875ஆம் ஆண்டு ஏப்பிரல் மாதம் பத்தாம் நாளில் ஆரிய சமாஜத்தை நிறுவினார். அதன் தலைமைச் செயலகம் பம்பாயில் அமைந்திருந்தது. அவர் 1977 இல் இவ்வியக்கத்தின் இலட்சியங்களை வரையறை செய்தார். அவை பத்துக் கட்டளைகள் என்று சொல்லப்படும். அவை மேல் வருவனவாகும்.
1. கடவுளே ஞானத்தின் மூல காரணர். கடவுளின் பெயராலே
எல்லாவற்றைப் பற்றியும் அறியப்படும்.
2. கடவுளே உண்மைப் பொருள். அது ஞானமயமானது.
அழிவற்றது. எங்கும் நீக்கமற நிறைந்தது.
3. திருமறைகளைக் கற்பது, கேட்பது, போதிப்பது, அவற்றிலடங்கிய கருத்துகளைப் பரப்புவது ஆகியன ஆரியர்களின் கடமையாகும்.
4. உண்மையே பேசவேண்டும், பொய் மொழிகளைத்
தவிர்க்கவேண்டும்.
5. செயல்கள் எல்லாம் தர்மம் சார்ந்தனவாக அமைதல்
வேண்டும்.
6. மனித குலத்தின் வாழ்க்கை மேம்பாட்டிற்கும் ஆன்மிக ஈடேற்றத்துக்கும் வேண்டிய நற்கருமங்களைப் புரிதல்
வேண்டும்.
இந்துக்கலைக்களஞ்சியம்

7. உறவுகளில் அன்பு, நீதி ஆகியவற்றைக் கடைப்பிடிக்க
வேண்டும்.
8. அஞ்ஞானத்தை ஒழிக்க வேண்டும்.
9. வாழ்க்கையிற் சுயநலத்தை முற்றாகத் தவிர்க்க வேண்டும்.
10. சமுதாய நலனின் பொருட்டு வேற்றுமைகளை அகற்ற
வேண்டும்.
சமயநெறி வாழ்வியலோடு ஒத்திசைவானதாக அமையவேண்டும் என்பது தயானந்தரின் அடிப்படைக் கோட்பாடாகும். திருமறைகளான வேதங்கள் பிரதிபலிக்கும் வாழ்க்கை முறையே உன்னதமானது என்றும் அதனை மீண்டும் சமுதாயத்திலே தோற்றுவிக்க வேண்டுமென்றும் தயானந்தர் கருதினார். நவீனகாலத்தில் பெளதீக ஞானத்துக்கு அடிப்படையான கோட்பாடுகள் வேதங்களில் உள்ளன என்பது சுவாமி தயானந்தரின் உறுதியான நம்பிக்கையாகும்.
தயானந்தர் உருவாக்கிய ஆரியசமாஜம் ஒரு சமயசீர்திருத்த இயக்கம் என்ற வகையிலும் சமூக சீர்திருத்த இயக்கம் என்ற வகையிலும் மிகுந்த முக்கியத்துவம் பெறுகின்றது. இந்து சமயத்தைப் பற்றிய தயானந்தரின் நோக்கு வேத சாரத்தை அடிப்படையாகக் கொண்டது. நாமரூப லக்ஷணங்கள் இல்லாத கடவுளைப் பற்றியே வேதங்கள் பேசுகின்றன. இங்கு அங்கு எனாதபடி, எங்கும் நீக்கமற நிறைவான பரம்பொருளை உருவகப்படுத்தி, படிமங்களாக வார்த்து அவற்றுக்கு வழிபாடாற்றுவது வேத வழிபாட்டு முறைக்கு மாறுபட்டதால் அது பொருத்தமற்றது என்பதே தயானந்தரின் கோட்பாடாகும். அந்த வகையில் அவருடைய சிந்தனைகள் ராஜராம் மோகன் ராய் சொன்னவற்றை ஒத்தனவாகும். இருவரும் இஸ்லாமிய சமயத்தின் செல்வாக்கு நெடுங்காலமாகவும் மிகுந்தளவிலும் ஏற்பட்டிருந்த பகுதிகளில் வாழ்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்து சமயத்தின் அடிப்படைக் கோட்பாடுகளில் ஒன்றான
தர்மம் என்பதற்கு சமகாலச் சூழ்நிலைகளுக்கும் தேவைகளுக்கும் ஏற்ப விளக்கம் அளித்தமை தயானந்தரின் சிறப்பான சாதனையாகும். தர்மம் என்பது சமூகநலன்களை அடிப்படையாகக் கொண்டிருத்தல் வேண்டும் என்ற கருத்துக்கு அவர் அழுத்தங் கொடுத்தார். பெற்றோருக்கு ஒப்பான முதியவர்களை அன்புடன் ஆதரித்தல், அவர்களைப் போற்றுதல் என்பவை ஒவ்வொருவரின் கடமையாகும். அது போல குடும்பங்களின் முன்னேற்றம், சமூக மேம்பாடு என்பவற்றைக் குறிக்கோளாகக் கொண்டு சேவைபுரிதல் தர்மமாகும்.
வைதீக மரபிலே கல்யாணம் என்பது ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையிலான பரிசுத்தமான இணைப்பாகும். அந்தச் சேர்க்கை பிரிக்க முடியாதவொன்று. குடும்ப வாழ்க்கையிலும் சமூக வாழ்க்கையிலும் ஆணும் பெண்ணும்
89

Page 122
ஒருவருக்கொருவர் வாழ்க்கைத் துணையாகி விடுகின்றனர். குடும்ப வாழ்க்கைச் சிறப்பின் மூலமாகவே அன்பும் பண்பும் சமூகத்திலே நிலைபெறுகின்றன. ஆகவே சமுதாயம் நிலைபெறுவதற்கும் மேன்மை பெறுவதற்கும் குடும்ப வாழ்க்கை அத்திவாரமாகும். கல்யாணத்தின் மூலம் பெண் கணவனுடைய சகதர்மினியாகி விடுகின்றாள். உடன்கட்டையேறுதல் போன்ற தீய பழக்கங்களையும் பெண்களுக்கெதிராக இழைக்கப்படும் கொடுமைகளையும் ஆரிய சமாஜம் மிக வன்மையாகக் கண்டித்தது.
தீண்டாமை என்பது வேத சாஸ்திரங்களுக்கு விரோதமானது என்ற கருத்தை தயானந்தர் வலியுறுத்தினார். வேதபாராயணமும் யக்ஞோபவிதமும் துவிஜர்களுக்கு மட்டுமே உரியவை என்ற கோட்பாட்டைத் தகர்த்த சிறப்பு சுவாமி தயானந்தருக்கு உரியதாகும். அவர் உருவாக்கிய ஆரிய சமாஜம் லக்ஷக்கணக்கிலே ஹரிசனருக்கு வைபவரீதியாக உபவிதத்தை அணிவித்து இந்து சமுதாய வரலாற்றிலே பெரும் புரட்சியினை ஏற்படுத்தியுள்ளது. அத்துடன் இந்துக்கள் அல்லாதவர்களையும் இந்து சமுதாயத்திலே இணைத்துக் கொள்ளும் மரபும் அதனால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
சமயஞானமும் பெளதீக ஞானமும் அறிவு பூர்வமானவை என்றும், அறிவுக்கு மூலம் கல்வி என்றும் தயானந்தர் கருதினார். எனவே, கல்வி விருத்தி பெறுவதன் மூலம் சமுதாயத்தில் அறிவு பெருகும் என்பதும் அதன் பயனாகச் சமூகம் உயர்ச்சி பெறும் என்பதும் அவரது உறுதியான சிந்தனைகளாகும். கல்வியறிவின் மூலமாகவே இந்துக்கள் தங்கள் புராதனமானதும் மகோன்னதமானதுமான 5FLOL தத்துவங்களையும் கலைஞானத்தையும் அறிந்து கொள்ள முடியும் என்பது அவரது உறுதியான கருத்தாகும். கல்வித் துறையில் ஆரியசமாஜம் ஈட்டிய சாதனைகள் மகத்தானவை. வட இந்தியாவில் ஆண்களுக்கும், பெண்களுக்கும், பாடசாலைகளும், கல்லூரிகளும் நூற்றுக்கணக்கிலே உருவாக்கப்பட்டன. இந்திய வம்சாவழியினர் வாழும் பிரித்தானிய சாம்ராஜ்யத்தின் குடியேற்ற நாடுகள் சிலவற்றிலும் ஆரிய சமாஜம் சில கல்வி நிலையங்களை
உருவாக்கியுள்ளது. இந்திய மொழியொன்றைப் போதனா
மொழியாகக் கொண்ட முதலாவது பல்கலைக்கழகம் ஆரிய சமாஜத்தால் உருவாக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
ஹரிதுவாருக்குச் சமீபமான கங்கரி என்னுமிடத்திலுள்ள குருகுலத்தில் எல்லா நிலைகளிலுமுள்ள பட்டப்படிப்புகள் ஹிந்தி மொழியில் நடைபெறுகின்றன. அதன் கல்வி நிறுவனங்கள் மூலம் வேதக் கல்வி, சமஸ்கிருதக் கல்வி ஆகியவற்றிலே ஆரிய சமாஜம் குறிப்பிடத்தக்களவிலான மறுமலர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது. ஒழுக்கநெறி சார்ந்த கல்விமுறையினை உருவாக்குவதிலும் பிரமச்சரியம் பற்றிய புராதனமான கோட்பாடுகளுக்கமைய இளைஞர்களின் வாழ்க்கையினை அமைத்துக் கொள்வதிலும் அதன் நிறுவனங்கள் கணிசமான பங்கினைக் கொண்டுள்ளன.
9う

ஆரிய சமாஜம் மேற்கொண்டுள்ள சமூக சேவைகளும் மிக முக்கியத்துவம் கொண்டவை. இயற்கை அனர்த்தங்களாற் பாதிக்கப்படுபவர்களுக்கும் ஆதரவற்றவர்களுக்கும் ஆரிய சமாஜம் பல சேவைகளைச் செய்கின்றது. பூகம்பம் புயல், பெருவெள்ளம், என்பவற்றாற் பெருங் கேடுகள் நிகழ்வதுண்டு. அச் சமயங்களிற் சமாஜத்தின் தொண்டர்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கு பல வழிகளிலும் ஆதரவு புரிந்து அவர்களின் புனர்வாழ்வுக்கான சேவைகளை மேற்கொள்வதில் ஈடுபடுகின்றனர். விதவையர் இல்லங்களையும் அனாதை களுக்கான சிறுவர் இல்லங்களையும் சமாஜம் நடத்தி வருகின்றது.
சிந்தனையாளராகவும் சீர்திருத்த வாதியாகவும் விளங்கிய தயானந்தர் தனது கொள்கைகளைப் பரப்புவதற்கும் நடைமுறைப்படுத்துவதற்கும் ஏற்ற நிறுவனமாக ஆரிய சமாஜத்தை உருவாக்கினார். தான் பிரயாணஞ் செய்திருந்த ஒவ்வொரு நகரத்திலும் தயானந்தர் சமாஜம் ஒன்றை உருவாக்கினார். அவை ஒவ்வொன்றும் தனித்தனியாகவும், சுதந்திரமாகவும் இயங்கி வந்தன. அவற்றின் பிரதிநிதிகளைக் கொண்ட மத்திய சபை ஒன்றினை உருவாக்குவதில் அவர் நாட்டங் கொண்டிருந்தார். 1877 ஆம் ஆண்டு ஜூன் 24 ஆம் நாளன்று லாகூரிலே கூடிய மாநாட்டிலே சமாஜத்தின் அமைப்பு விதிகள் வரையறை செய்யப்பட்டன. அவை நியமங்கள் என்று சொல்லப்படும். அவை தயானந்தரால் உருவாக்கப்பட்டவை. g|ഞ ഖ ஆரிய சமாஜத்தின் குறிக்கோள்களையும் சமாஜத்திலுள்ளவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய நெறிகளையும் பற்றியவை. பிராந்திய சபை ஒவ்வொன்றுக்குமுரிய விதிகள் உப நியமங்களாக வரையறை செய்யப்பட்டு வேறொரு பிரகடனமாக வெளியிடப்பட்டன.
சமாஜம் ஒவ்வொன்றிலும் எவருஞ் சேர்ந்து கொள்ளலாம். ஆண்களும் பெண்களும் அதில் அங்கத்தவராக முடியும். பிற சமயத்தவரும் சமாஜத்திலே சேர்ந்து கொள்ளலாம். தயானந்தர் உருவாக்கிய சமாஜங்களின் நிர்வாக சபைகள் பிரதிநிதி சபைகளாக அமைந்தன. அவற்றின் நிர்வாகத்திலே தலையிடுவதை அவர் தவிர்த்துக் கொண்டார். இந்து சமுதாயத்தில் ஜனநாயக மரபு வேரூன்றிக் கொள்வதற்கு அவை ஏதுவாயிருந்தன.
நவீன கால இந்து சமய மறுமலர்ச்சியிலே தயானந்தரின் பங்கு மிகப் பெரியது. அவரின் இளமைக் காலத்திலே இந்து சமயத்திலும் சமுதாயத்திலும் சீர்கேடுகள் மிகுந்து காணப்பட்டன. இந்து சமய போதனைகளுக்கும் சமய சமூக வழமைகளுக்கும் இடையிலான வேறுபாடு மிகப் பெரிதாகிவிட்டது. அறியாமையின் காரணமாகச் சமய ஞானம், பெளதீக ஞானம் பற்றிய விளக்கம் மங்கிவிட்டது. அத்தகைய சூழ்நிலையில் மேலைத்தேய நாகரிகத்தின் செல்வாக்கு மிகுந்து காணப்பட்டது. அதுவே முன்னேற்றமானது என்ற கருத்து கல்லூரிகளிலே கற்பவர்களின் எண்ணங்களாகிவிட்டன. GFLD LLJ Lh பரப்புவதற்கென உருவாக்கப்பட்ட கிறிஸ்தவ திருச்சபைகள் இந்து
இந்துக்கலைக்களஞ்சியம்

Page 123
சமயத்திற்கெதிரான கண்டனச் சமரை ஆரம்பித்தன. அதே சமயத்தில் வேதங்களையும் சமஸ்கிருத இலக்கியங்களையும் ஐரோப்பிய பல்கலைக்கழகங்களிலே ஆராய்ந்த அறிஞர்களின் அபிமான உணர்வுகள் செறிந்த வெளியீடுகள் இந்தியாவிலும் செல்வாக்குப் பெற்றன. சிந்தனைத் தெளிவின்மையும், முரண்பாடுகளும் வேறுபட்ட கொள்கைகளும் நிலவிய ஒரு சகாப்தத்திலே தயானந்தர் தோன்றினார். ஒரு சமய, சமூக சீர்திருத்தவாதி என்னும் முறையில் அவர் ராம் மோகனின் பணிகளை முன்னெடுத்துச் சென்றார். அதற்கும் மேலாக அவற்றை நடைமுறைப்படுத்துவதற்கு இயக்கரீதியாக தயானந்தர் ஆதரவு தேடினார். ஒரு சமய, சமுக, சீர்திருத்த இயக்கம் என்ற வகையிலே ஆரிய சமாஜம் முன்னணி இயக்கமாக வளர்ச்சியுற்றது.
இந்துக்களிடையே நாடளாவிய ரீதியிற் சமய விழிப்புணர்ச்சி ஏற்படுவதற்கு தயானந்தரின் சாதனைகள் ஏதுவாயிருந்தன. அவர்கள் தங்கள் பூர்வீகமான சமயம் மீதும் அதனைச் சார்ந்த கலைகள் மீதும் அபிமான உணர்ச்சி கொண்டனர். ஆரிய சமாஜத்தாற் கவரப்பட்டவர்கள் மத்தியிலே தேசாபிமானம் மேலோங்கியது. (#? Ly.)
தர்க்கநூல் வராைறு (தமிழ்)
தமிழ்நூல் மரபில் முதன்முதலில் தருக்கக் கருத்துக்களை மணிமேகலையிலேயே சந்திக்கிறோம். இந்நூலின் 29ஆம் காதையில் நூலாசிரியர் சாத்தனார் தருக்கம் தொடர்பான விவரமான கருத்துக்களைத் தந்துள்ளார். தலைசிறந்த பெளத்த சிந்தனையாளரான தின்னாகரின் நியாயப் பிரவேசம் என்ற தருக்க நூலை அடியொற்றியே சாத்தனார் தனது தருக்கச் சிந்தனையை எடுத்துக் கூறியுள்ளாரென பரவலான கருத் தொன்று உண்டு. இவ்விடத்து உ. வே. சாமிநாதையரின் மணி மேகலைப் பதிப்பிற் காணப்படும் குறிப்பொன்று நமது கவனத்தை ஈர்ப்பது குறிப்பிடத்தக்கது. மணிமேகலையிற் காணப்படும் கருத்துக்களைக் கூறும் தருக்கநூல்கள் இக்காலத்து வழக்கில் இல்லை என்பதே அக்குறிப்பாகும்.
மணிமேகலையின் காலம் கி. பி. ஆறாம் நூற்றாண் டென்பர். மணிமேகலையிற் காணப்படும் தருக்கம் தொடர்பான விரிவான ஆய்வுகளை நாராயண ஐயங்கார் (செந்தமிழ் தொகுதிகள் 32. 33. 34 மதுரை தமிழ்ச்சங்கம்), அய்யாசாமி சாஸ்திரியார் (The Journal of Oriental Research, Vol. XIII-XVI, Madras, 1987), எஸ். என். கந்தசாமி (பெளத்தம், சென்னைப் பல்கலைக்கழகம் 1977) LosĎgŋJuh (gë, 5LGB)6ODITLLUITéfrfuLJi (Theory of Anumana in Manimekalai, Buddhism in TamilNadu, Institute of Asian Studies 1998) ஆகியோர் செய்துள்ளனர்.
நியாயதரிசனம், பெளத்தம் ஆகிய இரு சிந்தனா கூடங்களின் தருக்கக் கருத்துக்களும் மணிமேகலையிற் தரப்பட்டுள்ளபொழுதும், அடிப்படையில் மணிமேகலை பெளத்த நூலாதலால் நியாயதரிசனத்தின் தருக்கக் கருத்துக்கள்
இந்துக்கலைக்களஞ்சியம்

விமரிசனரீதியில் சாத்தனாரால் அணுகப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. அனுமானம், அனுமானத்தின் இயல்பு, நியாயதரிசனக் கொள்கையினரின் அனுமானக் கொள்கையிற் காணப்படும் தவறுகள், பெளத்த அனுமானக் கொள்கை, வலிதான அனுமானத்தின் குணாதியம், அனுமானப் போலிகளான பக்கப்போலி, ஏதுப்போலி, திட்டாந்தப்போலி என்பன பற்றிய விரிவான விளக்கம் மணிமேகலையிலேயே தரப்பட்டுள்ளது. மணிமேகலையின் தருக்கக் கருத்துக்களை தின்னாகரின் நியாயப் பிரவேசத்துடன் ஆதியோடந்தமாக ஒப்பிட்டு ஆராய்ந்த நாராயண ஐயங்கார் மணிமேகலையின் தருக்கம் நியாயப் பிரவேசத்தின் வழிவந்ததல்ல என்ற முடிவிற்கு வருகிறார். இக்கருத்து ஏற்புடையதாயின், இத் தருக்கம் தமிழ்நூல் மரபிற் குரியதேயென்ற முடிவிற்கு வரவேண்டியேற்படும்.
மணிமேகலையைத் தொடர்ந்து தமிழ்நூல் மரபில் தருக்கம்
தொடர்பான கருத்துக்களை அருள்நந்தி சிவாசாரியாரின் சிவஞான சித்தியாரிற் சந்திக்கிறோம். அருள்நந்தி சிவாச்சாரியாரின் காலம் கி. பி. 13ஆம் நூற்றாண்டாகும். சித்தியாரில் சைவசித்தாந்த நிலைப்பாட்டிலிருந்து தருக்கக் கருத்துக்கள் முன் வைக்கப்படுகின்றன. 14 செய்யுள்கள் அளவைக்கென ஒதுக்கப்பட்டுள்ளது.
"அனுமானம் அவினாபாவம்
பேசுறும் ஏதுக்கொண்டு
மறைபொருள் பெறுவதாகும்’ என அனுமானத்தை வரையறை செய்யும் சித்தியார், அது தன்பொருட்டு, பிறர்பொருட்டு 6T6 OT இரண்டு வகைப்படுமெனவும், பக்கம், நிகர்பக்கம் (சபக்கம்), நிகரில் பக்கம் (விபக்கம்) என்பவற்றை அடிப்படையாகக் கொண்டு துணிபொருளை அனுமனிைப்பது தன்பொருட்டெனவும், தன்னால் அறியப்பட்டதை பிறருக்கு நிறுவுவதற்குப் பயன்படுவது பிறர் பொருட்டனுமான மென்றும் விளக்குகிறது. அனுமானம், ஒரு பிரமாணம் என்ற வகையில் தன்பொருட்டனுமானத்தையும், அனுமானம் ஒரு தருக்கக் கொள்கை என்ற வகையில் பிறர் பொருட்டனு மானத்தையும் சுட்டுமென்பது இதனால் மிகவும் தெளிவாகிறது. அனுமான வகைகள், வலிதான அனுமானத்தின் இயல்பு, பக்கப்போலி, ஏதுப்போலி, உவமைப்போலி (திட்டாந்தப்போலி), தோல்வித்தானம் என்பன பற்றிய குறிப்புகள் இதில் இடம்பெற்றுள்ளன.
ஒரு வகையில் மணிமேகலையிற் காணப்படும் தருக்கக் கருத்துக்களின் தொடர்ச்சியாகவே சித்தியாரின் தருக்கக் கருத்துக்கள் காணப்படுவதை அவதானிக்கலாம். ஆனால் இத் தொடர்ச்சியை சித்தியாரின் பின்னர் வந்த தருக்கம் தொடர்பான சிந்தனையிற் காணமுடியவில்லை. சிவாக்கிரகயோகிகளின் சிவநெறிப் பிரகாசத்தில் 3 செய்யுள்களில் தருக்கம் பற்றிய கருத்துக்கள் காணப்படுகின்றன. இந்நூலின் உரையாசிரியரால் மேற்படி செய்யுள்களுக்கு நியாயதரிசனத்தின் தருக்கத்தை அடிப் படையாகக் கொண்டே விரிவான விளக்கம் தரப்பட்டிருக்கிறது.
நியாயதரிசனத்தின் தருக்கத்தை ஆதாரமாகக் கொண்டு சைவசித்தாந்தத்தின் தருக்கத்தை விளக்கமுயலுவது
91

Page 124
சிவநெறிப்பிரகாச உரையில் மட்டும் காணப்படுவதன்று. சித்தியார் உரையாசிரியர்கள் அனைவரிலுமே இப்பண்பு காணப்படுகிறது. அறுவர் உரைத் தொகுப்பு இதனைத் தெளிவாக உணர்த்தும். சித்தியார் உரையாசிரியர்கள் அனைவரும் 15 ஆம் நூற்றாண்டிற்குப் பிற்பட்டவர்கள். மணிமேகலையிலிருந்து சித்தியார் காலம் வரை வளர்ச்சிபெற்ற தருக்கச் சிந்தனை இவர்கள் காலத்தில் தமிழ்நூல் மரபில் வழக்கற்றுப்போய், நியாயதரிசனத்தின் தருக்கமரபு செல்வாக்குப் பெறுகிறது. உ. வே. சாமிநாதையரின் கூற்று இதனை உறுதி செய்கிறது. இந்திய தருக்கத்தின் வரலாறு என்ற சதீஸ் சந்திர வித்யாபூஷணரின் நூலின்படி 12ஆம் நூற்றாண்டிலிருந்தே சைவத்தில் நியாயதரிசனத்தின் செல்வாக்குக் காணப்படலாயிற்று. ஷட்தரிசன சமுச்சயத்தின் ஆசிரியரான ஹரிஹரசூரி (168), ராஜசேகரசூரி (1348) ஆகிய நியாய தரிசன ஆசிரியர்கள் சைவர்களே. நியாய தரிசனத்தை அனுசரிப்பவர்கள் சைவர்களெனவும், வைசேடிகத்தை அனுசரிப்பவர்கள் பாசுபதர்கள் எனவும் அழைக்கப் பட்டனர். விவேக விலாசத்தின் ஆசிரியரான ஜினதத்த சூரி என்பார் நையாயிகமும் வைசேடிகமும் சைவமரபில் உள்ளடங்குவதாகக் குறிப்பிடுவார். தேவி புராணத்தின்படி நியாயசாஸ்திரம் சிவனாலேயே அருளப்பட்டது. சைவர்கள் சிவனை வழிபடுபவர்களாயினும் அவர்களனைவரும் 60) F6) சித்தாந்திகளல்லர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
எவ்வாறாயினும், நியாயதிரிசனத்தின் தருக்கம் சைவ சித்தாந்த நூற்கல்விக்கு உபகாரமாகுமென சிவஞான சுவாமிகள் சிவஞானபாடியத்தில் குறிப்பிட்டமை அவதானிக்கத்தக்கது. இச் செல்நெறிக்கு விதிவிலக்காக இருப்பது சிவஞான போதத்திற்கான பாண்டிப் பெருமாள் உரை மட்டுமேயாகும். இவ்வுரையை பழைய உரையெனவும் அழைப்பர். மணிமேகலை, சித்தியார் ஆகியவற்றின் தருக்க மரபைப் பாண்டிப் பெருமாள் பின்பற்றியிருப்பது குறிப்பிடத்தக்கது. இத் தொடர்ச்சியை சித்தியார் உரையாசிரியர்களைப் பொறுத்தவரை ஈழத்தவரான திருவிளங்கத்தின் உரையிலேயே மீண்டும் சந்திக்கக் கூடியதாயிருக்கிறது.
நியாய தரிசனத்தின் தருக்கமரபு சைவசித்தாந்த நூற் கல்விக்கு உபகாரமாகுமென்ற நிலைப்பாடு மேலோங்கியதைத் தொடர்ந்து வடமொழித் தருக்கநூல்கள் தமிழில் மொழி பெயர்க்கப்பட்டன. தருக்கபரிபாஷையே முதன்முதலில் வட மொழியிலிருந்து தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட தருக்கநூலாகும். இது கேசவ மிஸ்ரர் என்பாரால் 13ஆம் நூற்றாண்டளவில் இயற்றப்பட்டது. நியாய வைசேடிக மரபில் குறிப்பிடத்தக்க முக்கியத்துவம் பெறும் இந்நூலுக்குப் பல உரைகள் உண்டு. இவற்றிலே கோவர்த்தன மிஸ்ரரின் தர்க்க பாஷைப் பிரகாசிகை, சின்னபட்டரின் தர்க்கபாஷைப் பிரவேசம் என்பன முக்கியமானவை. தர்க்கபாஷை துறைமங்கலம் சிவப்பிரகாச சுவாமிகளால் மொழிபெயர்க்கப்பட்டது. இந்நூல் தர்க்க சூடாமணி, தர்க்க பரிபாஷை எனவும் அழைக்கப்படுமென தமிழ்நூற் பதிப்பாசிரியர் குறிப்பிடுவார். சிவப்பிரகாச சுவாமிகளின் காலம் 17ஆம் நூற்றாண்டாகும். சுவடியாகவிருந்த
92

இந்நூல் ஊர்காவற்துறை குமாரசுவாமி முதலியார் மகனும் நீதிபதியுமாயிருந்த கதிரைவேற்பிள்ளையினால் முதன்முதலில் பதிப்பிக்கப்பட்டது. இரண்டாம் பதிப்பு 1880 இல் வெளிவந்தது. முதற்பதிப்பு வெளிவந்த ஆண்டு தெரியவில்லை. இந்நூலானது இக் கட்டுரையாசிரியரால் 1988இல் மீண்டும் பதிப்பிக்கப்பட்டது.
வடமொழியிலிருந்து தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட இரண்டாவது நூல் தருக்க சங்கிரகமும் அதனுரையாகிய தருக்க சங்கிரக தீபிகையுமாகும். தருக்க சங்கிரகமும் அதன் உரையான தருக்க சங்கிரக தீபிகையும் நவநியாய மரபைச் சார்ந்த தெலுங்கரும், காசியில் வசித்தவருமான அன்னம்பட்டரால் இயற்றப்பட்டது. காஞ்சி பல்லவனான திரிபுவனதிலகம் என்ற பட்டப் பெயரைக் கொண்ட அரசன் பற்றிய குறிப்பு இவரது தீபிகையிற் காணப்படுகிறது. தருக்க சங்கிரகத்துக்குப் பல உரைகள் உண்டு. இந் நூலுக்கு 35 உரைகள் காணப்படுவதாக வித்யாபூஷணர் பட்டியலிட்டுள்ளார். இதனைத் தமிழில் மொழிபெயர்த்தவர் திருவாவடுதுறைச் சிவஞானசுவாமிகள். இவரது காலம் 17ஆம் நூற்றாண்டாகும். இந்நூல் ஆறுமுகநாவலராற் பரிசோதிக்கப்பட்டு பொன்னம்பல பிள்ளையினால் அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டது. சிவஞான சுவாமிகளின் மொழிபெயர்ப்பில் வழுக்கள் உளதாகக் குறிப்பிடும் தெல்லிப்பழை சிவாநந்தையர் தருக்க சங்கிரகத்தை மீண்டும் மொழிபெயர்த்ததுடன் நியாயபோதினி, பதகிருத்தியம், அன்னம்பட்டீயம், நீலகண்டீயம் ஆகிய அதன் உரைகளையும் வடமொழியிலிருந்து பெயர்த்து 1910 ஆம் ஆண்டில் வெளியிட்டார்.
யாழ்ப்பாணத்து நல்லூர் திருஞானசம்பந்தப் பிள்ளையினால் சைவசித்தாந்த நூற்கல்விக்கு உபகாரமாகும் பொருட்டு தர்க்காமிர்தம் என்றதொரு நூலும் வடமொழியிலிருந்து மொழிபெயர்க்கப்பட்டு திருவாவடுதுறை ஆதீனத்தால் (1883) வெளியிடப்பட்டது. வடமொழி தர்க்காமிர்தத்தின் ஆசிரியர் ஜெகதீசர் (1635). அவர் வைசேடிக மெய்யியலாளராயிருந்த பொழுதும், நியாயதரிசன வகையீடும் இணைந்த வகையிலேயே இந்நூலை இயற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
வடமொழியிலிருந்து தமிழுக்கு மொழிபெயர்க்கப்பட்ட பிறிதொரு தர்க்கநூல் தர்க்க கெளமுதியாகும். நூலாசிரியர் பெயர் பாஸ்கரர். அவர் 17ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த நியாய வைசேடிக மெய்யியலாளராவார். விஸ்வேஸ்வரர் ஆலயத்தையும், மணிகர்ணிகை பொய்கை பற்றியும் குறிப்பிடுவதால் அவர் காசியில் வாழ்ந்தவரென அனுமானிக்கலாம். இந்நூலை வெ. குப்புஸ்வாமி ராஜா என்பவர் தமிழில் மொழிபெயர்த்து 1890 இல் வெளியிட்டார். 1990 இல் மீண்டும் அந்நூல் இக் கட்டுரை யாசிரியரால் பதிப்பிக்கப்பட்டு தருக்க கலைச் சொற்களின் அகராதியொன்றின் பின்னிணைப்புடன் வெளியிடப்பட்டது.
தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டாலும் சைவர்களினதும், சைவசித்தாந்திகளினதும் கவனத்தைப் பெறவேண்டியிருந்தும், பெறத்தவறிய நூலாக நியாயப்பிரகாசம் என்ற நூல் காணப்படுகிறது. நூலாசிரியர்
இந்துக்கலைக்களஞ்சியம்

Page 125
பெயர் சித்தநாநந்தகரி. இந்நூலானது பு:நாகரத்தினம் என்பாரால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு 1907 இல் வெளியிடப்பட்டது. தருக்கம் தொடர்பாக இதுவரை வெளிவந்த நூல்களில் நியாயப்பிரகாசம் மிகவும் விரிவானதொன்றாகும்.
“பூரீ குருவையும், வினாயகரையும், பூரீ மஹாதேவரையும், பூரீ விஷ்ணுவையும் நமஸ்கரித்து, கெளதம முனிவரால் அருளிச் செய்யப்பட்ட நியாய சாத்திரத்தின் பிரமாண(ம்) முதலிய 16 பதார்த்தங்களையும் கணாதமுனிவரால் அருளிச் செய்யப்பட்ட வைசேடிக சாத்திரத்தின் திரவிய முதலிய 7 பதார்த்தங்களையும் நன்றாக நிச்சயம் செய்து நியாயப்பிரகாசம் என்ற இந்நூல் இயற்றப்பட்டது.”
என்ற குறிப்புடன் தொடங்கும் இந்நூல் 7 பரிச்சேதங்களைக் (பிரிவுகளைக்) கொண்டது. யாழ்ப்பாணத்து நீர்வேலி சங்கர பண்டிதர் இயற்றிய சைவப்பிரகாசனம் என்பதுவும் தமிழ் தருக்கநூற் கல்விக்கு பயன்பட்ட நூல்களில் முக்கியமானது. இதன் மூன்றாம் பதிப்பு 1925 இல் வெளியிடப்பட்டது. முதற்பதிப்பு 45 ஆண்டுகளுக்கு முன் வந்ததாக மூன்றாம் பதிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சைவ ஞான சாத்திரங்களை அறிதற்கு இன்றியமையாது வேண்டப்படும் தருக்க அறிவையும், அதனை உபயோகிக்கும் முறையையும் நன்கு விளக்குவதாகவும், இந்தியாவிலும் யாழ்ப்பாணத்திலும் பல்லோராலும் தருக்க அறிவு கருதிப் பயிலப்படுவதாகவும் உள்ளதென்ற குறிப்பு பதிப்பாசிரியர்களால் மூன்றாம் பதிப்பிலே தெரிவிக்கப்பட்டுள்ளது. இலக்கணம், பிரமாணம், சுருதி, நிரூபணம், சமயநிரூபணம், சைவச் சுருதி நிரூபணம், சைவசமய நிரூபணம் என 6 அத்தியாயங்களாக எளிய
முறையில் இந்நூல் எழுதப்பட்டிருக்கிறது.
இவற்றைவிட சித்தியார் அளவைப்பாடல்களை ஆதாரமாகக் கொண்டு ரா.முருகவேள் என்பார் சிவஞான சித்தியார் தருக்க இயல் விளக்கம் (1960) என்றதொரு நூலையும், நாராயண ஐயங்கார் அனுமான விளக்கம் என்றதொரு நூலையும் இயற்றி வெளியிட்டுள்ளனர். முருகவேளின் சிவஞான சித்தியார் தருக்க விளக்கம், தருக்க நூற் சிறப்பு, தமிழகத்தில் தருக்கநூல்,தருக்கமும் சைவமும், தருக்கமும் சைவசித்தாந்தமும், சிவஞான சித்தியாரும் அருள்நந்தி சிவமும், அளவைகள், அனுமானக் குற்றங்கள் என்பனவற்றை உள்ளடக்கியது.
நாராயண ஜயங்காரரின் அனுமான விளக்கத்தின் இரண்டாம் பதிப்பு 1935 இல் வெளியாகியது. இந் நூலானது மணிமேகலையின் தருக்கத்தை அடிப்படையாகக் கொண்டது. துணிபொருள், பக்கம், சபக்கம், விபக்கம், அனுமான வடிவம், அனுமானப் போலிகள் என்பனவற்றை உள்ளடக்கியது. 1961 இல் நடேச கவுண்டர் என்பார் நியாயக் களஞ்சியம் என்ற நூலை வெளியிட்டுள்ளார். பலவத் சஹகார நியாயம் முதலாக தருக்கத்தில் பயன்படுத்தப்படும் 282 உவமானங்களை (தருக்க நூலார் இவற்றை நியாயம் என்று அழைப்பர்) இந்நூல் விளக்குகிறது.
இந்துக்கலைக்களஞ்சியம்

சென்ற நூற்றாண்டின் தொடக்கத்தில் அத்வைத வேதாந்த மரபிற்குரிய தருக்க நூல்களும் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. பூணீவிருத்திப் பிரபாகரம் (1901), பூணூரீ விருத்தி ரத்நாவலி (1902) ஆகிய இரு நூல்களும் குப்புஸ்வாமிராஜா என்பவரால் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டன. இவ்விரு நூல்களினதும் ஆசிரியர் சாது பூரீ நிச்சலதாஸர் ஆவர். விருத்திப் பிரபாகரத்தின் சாராம்சமாகவே விருத்தி ரத்நாவலி இயற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது. விருத்திப்பிரபாகம், பிரத்தியட்சப் பிரமாண நிரூபணம், அனுமானப் பிரமாண நிரூபணம், சப்தப் பிரமாண நிரூபணம், உவமானப் பிரமாண நிரூபணம், அர்த்தாபத்திப் பிரமாணம், அனுபலப்திப் பிரமாணம், விருத்திபேதமும் அனிர்வசனியக் கியாதியின் கண்டனமும், கியாதி கண்டனமும் தானே பிரமாணமாந் தன்மைப் பிரமாண நிரூபணமும், ஜிவேசுவரசொரூப விருத்திப் பிரயோஜனத்தோடு கற்பித நிவிர்த்தி சொரூப நிரூபணம் ஆகிய பிரிவுகளை உள்ளடக்கியது.
சென்ற நூற்றாண்டின் முன்னரைப்பகுதியின் பிற்பாதியிலும். பின்னரையின் முற்பாதியிலும் ஐரோப்பிய தருக்க சாத்திர அறிவைத் தமிழிற் தரும் முயற்சிகள் மேற்கொள்ளப் பட்டன. இவற்றில் நல்லூர் சுவாமி ஞானப்பிரகாசரின் முயற்சி முன்னோடியானது. 1933இல் தருக்க சாத்திரச் சுருக்கம் என்றநூலை எழுதி வெளியிட்டார். உய்த்தறி அனுமானம், தொகுத்தறி அனுமானம் என்பவற்றை முறையே காரண அனுமான வகைகள், அதிலேற்படக்கூடிய போலிகள் எனப் பெயரிட்டு அவை பற்றிய அக்காலத்துக்குரிய சிறப்பான விளக்கங்களை இந்நூலிற் கண்டுகொள்ளலாம். 1960 இல் யாழ்ப்பாணம் க. இராமநாதபிள்ளை என்பார் மேலைத்தேய தருக்கத்தை அளவை விளக்கம் என்றபெயரில் இயற்றி வெளியிட்டுள்ளார்.
அரிஸ்ரோட்டலின் தருக்கத்தை திறனாய்ந்து விளக்கும் வகையில் வெல்டனும், மொனகனும் எழுதிய Intermediate Logic என்ற ஆங்கில நூலை பேராதனைப் பல்கலைக்கழகத்து மெய்யியல் விரிவுரையாளராயிருந்த கலாநிதி சா. வே. காசிநாதன் இடைநிலை அளவையியல் என்ற பெயரில் மொழி பெயர்த்தார். இதனை 1967 இல் கல்வித் திணைக்களம் வெளியிட்டது.
இன்றுவரை அரிஸ்ரோட்டலின் தருக்கத்தை தமிழில் கற்க விழைவோருக்கு பயன்படும் மிகச்சிறந்த நூலாக இது உளது.
இவை தவிர குறியீட்டுத் தருக்கம் தொடர்பாக இக் கட்டுரையாசிரியரின் குறியீட்டளவையியல் - ஒரு அறிமுகம் என்ற யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீட வெளியீடான சிந்தனையில் வெளிவந்த கட்டுரையும், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மெய்யியல்துறை விரிவுரையாளரான கந்தசாமி அன்ரன் டயஸ் என்பாரின் பயனிலைத் தருக்கம்(2001) என்ற நூலும், பரியோவான் கல்லூரி ஆசிரியரான யுகபாலசிங்கம் என்பாரின் எடுப்பளவை தொடர்பான குறியீட்டளவையியல் என்ற நூலும் சமகால தருக்க நூற் கல்வியிற் குறிப்பிடத்தக்க முயற்சிகளாகும். (647.42)
93

Page 126
தர்க்கம்
இந்திய இந்து மரபிற்குரிய மெய்யியல் ஆய்வில், வெற்றிபெறுவதை இலக்காகக் கொண்ட சொல்லாடல்களும், கருத்து முரண்பாடுகளும் முக்கிய இடத்தைப் பெற்றுள்ளன. ஒரு மெய்யியற் திட்டத்தை கட்டமைக்க விரும்பும்போதும் அல்லது ஒரு மெய்யியற் கருத்தை ஏற்புடையதென்று முன்மொழியும் போதும் வாதிடுவோர் தமது நிலைப்பாட்டை நியாயப்படுத்துவதுடன் எதிர்க்கருத்துக்களையும், எதிர்க்கருத்துடைய சிந்தனா கூடங்களையும் நிராகரிக்கத்தக்க வகையில் விவாதிக்க வேண்டியவராகிறார்கள். எவ்வாறாயினும் அவரது நிறுவலும், நிராகரிப்பும் அவற்றிற்கேயுரிய விதிகள், நியமங்கள் என்பனவற்றைப் பேணுதல் இன்றியமையாதது.
விவாதிப்போர் தமது கருத்துக்களில் ஆழ்ந்த புலமை உடையவர்களாயிருத்தல் அவசியமானது. சொல்லாடலின்போது வாதி பிரதிவாதி ஆகியவர்களுடன் உண்மையைக் கண்டறிவதில் ஆர்வமுடைய நடுவர்களும் பிரசன்னமாயிருப்பர். புலமையாளரின் இக்கூட்டம் பரிஷத் என அழைக்கப்பட்டது. சொல்லாடலை ஒழுங்குபடுத்துவதும், விவாதம் அதற்கேயுரிய விதிகள், நியமங்கள் என்பனவற்றைப் பேணுகிறதா? உண்மையான முடிவு அடையப் பெறுகிறதா? என்பனவற்றைத் தீர்மானிப்பதும் பரிஷத்தின் பணியாகும். விவாதத்திலீடுபடுவோரும், எதிர்வாதத்தில் ஈடுபடுவோரும் பரஸ்பரம் முன்வைக்கும் வாதங்களில் வாதியினால் முன்மொழியப்படுவது உத்தரபக்கம் அல்லது சித்தாந்தம் எனவும், பிரதிவாதியினால் மொழியப்படுவது பூர்வபக்கமெனவும் அழைக்கப்படும்.
தொடக்கத்தில் இதனை அன்வீகூடிகி என அழைத்தார்கள். மனுசம்ஹிதை, கெளதமரின் தருமசாஸ்திரம், இராமாயணம், மகாபாரதம் ஆகியவற்றிலே தருக்கம் என்ற கருத்தில் இச்சொல் பயன்படுத்தப்பட்டது. அன்வீகூடி கியானது மனிதரின் நியாயித்தலாற்றலை வளர்க்க உதவுவதன் மூலம் அவர்களைச் சிந்தனாரீதியான பலமுடையவர்களாக மாற்றுகிறதென கெளடில்யர் குறிப்பிடுகிறார். பிற்காலத்தில் அன்வீகூடிகியானது ஹேது வித்தையென்றும், தருக்கவித்தையென்றும் அழைக்கப் படலாயிற்று. மனுசம்ஹிதை, மகாபாரதம், ஸ்கந்தபுராணம், கெளதமரின் தர்மசூத்திரம், இராமாயணம், ஞாக்ஞவல்கீய சம்ஹிதை ஆகிய நூல்களிலும் இது தொடர்பான குறிப்புகள் காணப்படுகின்றன. காலப்போக்கில் அன்வீகூடிகியானது நியாய சாஸ்திரம் அதாவது உண்மையை அறியும் நோக்கிலான நியாயித்தல் என்ற கருத்தைப் பெறலாயிற்று.
ஸ்மிருதி (சுருதி), பிரத்தியகூஷிம், ஐதீகம், அனுமானம் ஆகிய விவாதித்தலுடன் தொடர்புடைய கலைச்சொற்கள் பரிசுஷத் கூடங்களில் பாவனையிலிருந்ததை உபநிடதங்களிலிருந்து - குறிப்பாக தைத்திரிய ஆரண்யத்திலிருந்து அறியக்கூடியதாய் இருக்கிறது. ஐதீகம், அனுமானம், சாத்திரம் ஆகியசொற்கள்
94
 

இராமாயணத்திலும் தர்க்கம், வாதம், யுக்தி, ஜல்பம், நிர்ணயம், பிரயேசனம், பிரமாணம், பிரமேயம் முதலான சொற்கள் கடோபநிடதத்திலும் கையாளப்பட்டிருக்கின்றன. ஒரு சொல்லாடலில் எதிராளியைத் தோற்கடிப்பதற்கான தந்திர யுக்திகள் பற்றி அர்த்தசாஸ்திரம், சரக சம்ஹிதை, சுஸ்ருத சம்ஹிதை ஆகிய நூல்கள் குறிப்பிடுகின்றன.
வாத-பிரதிவாதங்களாயமையும் சொல்லாடல்கள் கதா என அழைக்கப்பட்டன. கதா என்னும் பதம் வாக்கிய பிரபந்தம் என வரையறை செய்யப்படும். ஒரு குறிப்பிட்ட விடயம் தொடர்பாக முன்வைக்கப்படும் அனைத்து அம்சங்களையும் தொடர்புபடுத்திய தொரு கட்டமைப்பாக முன்மொழிவது வாக்கிய பிரபந்தமாகும். உண்மையைக் கண்டறியும் நோக்கில் சகபாடியான அறிஞரொருவருடன் அல்லது ஒரு ஆசிரியன் தனது மாணாக் கனுடன் மேற்கொள்வது, எதிர்க்கருத்துடையவர்களால் மேற்கொள்ளப்படுவதென நியாயசூத்திரத்தின் ஆசிரியரான கெளதமரால் (கி. மு. 150) கதா இருவகையாகப் பிரிக்கப்பட்டது. இவ்விருவகை வாதங்களில் எதிர்க்கருத்துடைய இருவரால் மேற்கொள்ளப்படுவது ஜல்பம் விதண்டை என இருவகையாக மேலும் பிரிக்கப்பட்டது. வெற்றிபெறுவதை இலக்காகக் கொண்டு எதிர்க்கருத்துடைய இருவரால் மேற்கொள்ளப்படுவது ஜல்பம் ஆகும். எதிராளிக்கு எத்தகைய சந்தர்ப்பத்தையும் வழங்காது, தனது கருத்தை மட்டும் சரியென நியாயப்படுத்த முயலுதல் விதண்டை ஆகும். இந்து இந்திய மரபில் உண்மையைக் கண்டறியும் நோக்கிலமைந்த முறைகளான வாதம், ஜல்பம் ஆகிய இரண்டுமே தருக்கத்தில் உள்ளடக்கப்பட்டது.
தவறற்ற அறிவைப் பெறும் வாயில்களாக இந்து மரபினரால் ஏற்றுக்கொள்ளப்பட்ட பிரமாணங்களில் பிரத்தியட்சம் (காட்சி), அனுமானம், சுருதி (ஆப்தவாக்கியம்)ஆகிய மூன்றும் மிகவும் முக்கியமானவையாகும். காட்சியினால் பெறப்பட்ட அறிவென்பது அறிவைப் பெற முயலுமொருவனுக்கு (பிரமாதா) நேரடியாகத் தரப்படுவது. அருள்நந்தி சிவாச்சாரியாரின் சிவஞான சித்தியார் பிரத்தியட்சத்தை 7இந்திரியக் காட்சி, மானதக் காட்சி, தன்வேதனைக் காட்சி, யோகக் காட்சி என நான்காக வகைப்படுத்தும். இறைவனால் வெளிப்படுத்தப்பட்டது அங்கீகரிக்கப்பட்ட சான்றோனால் கூறப்பட்டது, சுருதி ஆப்த வாக்கியம் என அழைக்கப்படும். காட்சியினாலோ அன்றி ஆப்தவாக்கியத்தினாலோ நேரடியாகப் பெறமுடியாதவையும், நியாயித்தல் மூலமாகவே மட்டும் பெறப்படக் கூடியவையுமான விடயங்கள் பற்றிய அறிவைப் பெறுவதற்கு இந்திய இந்து சிந்தனையாளர்களாற் பயன்படுத்தப்பட்ட அறிவின் வாயிலே அனுமானமாகும். இவ்வனுமானம் காரியானுமானம் (காரணத் திலிருந்து காரியத்தை அனுமானித்தல்= பூர்வவத்), காரணானுமானம் (காரியத்திலிருந்து காரணத்தை அனுமானித்தல் = சேஷவத்), சாமானியானுமானம் (ஏக காலத்தில் நிகழ்வனவாயிருக்கும் இரு நிகழ்ச்சிகளில் ஒன்றிலிருந்து மற்றையதை அனுமானித்தல் = சாமானிய திருஷ்டம்) என மூன்று வகைப்படும்.
இந்துக்கலைக்களஞ்சியம்

Page 127
அனுமானம்- அது எவ்வகைத்ததாக இருந்த பொழுதும், தன் பொருட்டாக நிகழ்த்தப்படும் பொழுது ஒரு பிரமாணமாகவும், தன்னால் அறியப்பட்டதொரு விடயம் உண்மையேயெனப் பிறருக்கு நிறுவுதற்கான கருவியாகப் பயன்படுத்தப்படும்பொழுது அது ஒரு தருக்கமுறையாகவும் இந்திய / இந்து மெய்யியலாளர்களால் விருத்தி செய்யப்பட்டது. ஈஸ்வர கிருஷ்ணரின் சாங்கிய காரிகைக்கான உரை நூலாக விளங்கும் யுக்திதீபிகையில் தர்க்க முறையாக அனுமானம் பன்படும்பொழுது, அது பிரதிக்ஞை, ஹேது, திட்டாந்தம், உபநயனம், நிகமனம் என ஐந்து அங்கங்களைக் கொண்டதாக இருக்கிறதென குறிப்பிடுகிறது. தமிழ்நூல் மரபிற் சிவஞானசித்தியார் இதனை மிகவும் தெளிவாகத் தன் பொருட்டு அனுமானம் என்றும் பிறர்பொருட்டு அனுமானமென்றும் வகைப்படுத்தியுள்ளது.
இந்திய தருக்கத்தில் அதிலும் குறிப்பாக இந்து மரபில் தர்க்கம் என்ற சொல்லாற் சுட்டப்படுவது பிறர் பொருட்டனுமானமேயாகும். தர்க்கம் ( = பிறர்பொருட்டனுமானம்) ஐந்து படிநிலைகளைக் கொண்டது. அவை முறையே பக்கம், ஹேது, திட்டாந்தம், உபநயம், நிகமனம் ஆகிய ஐந்து அங்கங்களைக் கொண்டது. அவை வருமாறு.
முதலாவது படிநிலை நிறுவப்படவேண்டியது.
(பிரதிக்ஞை பக்கம்) : இம் மலை நெருப்புடையது.
இரண்டாவது படிநிலை நிறுவுவதற்கு ஆதாரமாகத்
தரப்படும் ஆதாரம்.
(ஹேது) புகையுடமையால்,
மூன்றாவது படிநிலை பிரதிக்ஞைக்கும் ஹேதுவுக்கும் இடையே காணப்படும் தொடர்பு தருக்கரீதியானதேயென எடுத்துக் காட்டுவதும் அதற்கான உடன் பாடானதும் எதிர்மறையானதுமான உதாரணம் தருதலும்,
(திட்டாந்தம்) எங்கெங்கு புகையுண்டோ அங்கெலாம் நெருப்புண்டு - அடுக்களை போல. எங்கெங்கு
நெருப்பில்லையோ அங்கெலாம் புகையில்லை மடுப்போல.
நான்காவது படிநிலை: மூன்றாவது படிநிலையிலே முன்மொழியப்பட்ட விதியை முதலாவது படிநிலையில்
நிறுவலுக்காக எடுத்துக்கொண்ட விடயத்துடன் தொடர்புபடுத்திக் காட்டல்.
(9) LI JELL JLb) இம்மலை புகையுடையது.
ஐந்தாவது படிநிலை பிரதிக்ஞை நிறுவப்பட்டதாகக்
காட்டும் முடிவுரை.
(நிகமனம்) ஆகவே இம் மலை நெருப்புடையது.
பக்கம், சாத்தியம், சாதனம் ஹேது என்ற மூன்று பதங்களை ஆதாரமாகக் கொண்டே இந்திய தருக்கத்தின் அனுமானத்தின்
இந்துக்கலைக்களஞ்சியம்

மூலக்கரு கட்டமைக்கப்பட்டுள்ளது. நிறுவப்பட வேண்டிய பொருள் இருக்குமிடம் பக்கம் என அழைக்கப்படும். நிறுவலிற்கு ஏதுவாயிருப்பது சாதனம் அல்லது ஹேது எனப்படும். நிறுவப்பட வேண்டிய பொருள் சாத்தியம் எனப்படும். இம்மூன்று பதங்களிற்கும் இடையிலான தொடர்பை உறுதிசெய்வது வியாப்தி எனப்படும்.
அனுமானமாகிய தருக்கக் கட்டமைப்பின் முதலாவது படிநிலையாகிய பிரதிக்ஞை பக்கத்தையும் சாத்தியத்தையும் உள்ளடக்கியிருக்கும். அனுமானிக்கவேண்டிய பொருளின் நிலையிடம் பக்கம் (இதனைத் தருமி எனவும் அழைப்பர்). அனுமானிக்க வேண்டிய பொருள் சாத்தியம் (இதனைத் தருமம் எனவும் அழைப்பர்). பக்கத்தையும் சாத்தியத்தையும் பிரதிக்ஞையில் இணைக்க முயலுகிற தொடர்பே தருமா- தருமித் தொடர்பெனப்படும். நிறுவப்படவேண்டிய / அனுமானிக்கப்பட வேண்டிய பொருளின் நிலையிடம் பக்கமென்பதை பிரதிக்ஞை முன்மொழிகிறது.
இரண்டாவது படிநிலையாகிய ஹேது அனுமானத்தில் இரு வகையாகச் செயற்படுகிறது. ஒருபுறம் கட்புலனுக்குத் தரப்பட்ட புகையென்னும் தரவிலிருந்து பக்கத்தில் நெருப்பிருப்பதை அனுமானிப்பதற்கு உதவுகிறது. இதனை ஹேதுவின்பக்க தருமம் என அழைப்பர். மறுபுறம் நெருப்பாகிய சாத்தியத்துடன் புகையாகிய சாதனம் கொண்டுள்ள இன்றியமையாத் தொடர்பினால் பக்கத்தில் சாத்தியத்தின் இருப்பை நிறுவுவதற்கு ஹேது உதவுகிறது. சாத்தியத்திற்கும் சாதனத்திற்கு மிடையிலான இன்றியமையாத் தொடர்பு வியாப்தி என அழைக்கப்படும். மலையில் புகை தென்படுவதாலும் (பக்க தருமம்), புகை (சாதனம்) சாத்தியமாகிய நெருப்புடன் கொண்ட வியாப்தித் தொடர்பாலும் மலையில் நெருப்பிருப்பதை நிறுவுவதற்கு ஹேது பயன்படுகிறது.
அனுமானத்தின் மூன்றாவது அங்கமாகிய திட்டாந்தம் உடன்பாட்டு வடிவத்திலும் எதிர்மறை வடிவத்திலும் இரு பொதுமைக் கூற்றுக்களையும் கூடவே அவற்றை உண்மையென ஆதாரப்படுத்தும் இரு உதாரணங்களையும் கொண்டிருக்கும். சாதனத்திற்கும் சாத்தியத்திற்குமிடையில் வியாப்தித் தொடர்பிருப்பதை உடன்பாட்டு வடிவத்தில் அமைந்த பொதுமைக் கூற்று எடுத்துக்காட்ட, அத்தொடர்பு உண்மையானதேயென எதிர்மறை வடிவத்திலமைந்த பொதுமைக் கூற்று உறுதி செய்கிறது. அடுக்களையும், மடுவுமெனத் தரப்பட்ட உதாரணங்கள் அனுமானிக்கப்பட்டது யதார்த்தமான உண்மையே என எடுத்துக் காட்டுகிறது. இங்கு உடன்பாட்டு வடிவத்தில் அமைந்த பொதுமைக் கூற்றுடன் வருகிற உதாரணம் சபக்கம் எனவும், எதிர்மறை வடிவத்திலமைந்த பொதுமைக் கூற்றுடன் வருகிற உதாரணம் விபக்கம் எனவும் அழைக்கப்படும்.
ஒரு விவாதத்தின் பொழுது அல்லது நிறுவலின்போது உபநயம் என்ற அனுமானத்தின் நான்காவது அங்கம்
95

Page 128
திட்டாந்தத்தினால் உறுதிப்படுத்தப்பட்ட ஹேதுவாகிய சான்று நிறுவலிற்கெடுத்துக் கொள்ளப்பட்ட பக்கத்தில் உளதென்பதை உறுதி செய்கிறது. அதாவது திட்டாந்தத்தினால் எடுத்துக் காட்டப்பட்ட பொதுவிதியுடன் இரண்டாவது அங்கமாகிய ஹேது பொருந்தி வருவதை உறுதி செய்கிறது. நிறுவப்படவேண்டிய பக்கத்தில் இருப்பதை திட்டாந்தத்தின் மூலம் உபநயம் உறுதி செய்தமையினால் நிறுவப்படவேண்டிய பிரதிக்ஞை நிறுவப் பட்டதொன்றாக நிகமனத்தில் மீளவும் தரப்படுகிறது.
ஒரு விவாதத்தின்பொழுது தருக்கமுறை உத்தியாக அனுமானம் பயன்படும் வேளைகளிலேயே உபநயமும், நிகமனமும் அனுமானத்தின் இறுதியிரு அங்கங்களாகத் தரப்படுகிற தென்பதை இங்கு நாம் கவனத்திற் கொள்ள வேண்டும். சுருங்கக்கூறின் இந்திய / இந்து தர்க்கம் ஹேதுவை மையப்படுத்தியதொன்றாகும். அது சாதன சாத்திய தொடர்பாகிய வியாப்தித் தொடர்பாலேயே நிறுவலைச் சாத்தியமாக்குகிறது.
தர்க்கக் கொள்கையாக அனுமானத்தைப் பயன் படுத்தும்பொழுது, வலிதான முடிவுகளைப் பெறுவதே அதன் இலக்காகவிருக்கிறது. ஒரு வாதத்தின் பக்கம், சபக்கம், விபக்கம் ஆகிய இடங்களில் ஹேதுவும், சாத்தியமும் எவ்வாறு இடம் பெற்றுள்ளதென்பதை அடிப்படையாகக் கொண்டே ஒரு வாதத்தின் வலிமை நிர்ணயிக்கப்படுகிறது. அனுமானிக்கப்பட வேண்டியதின் நிலையிடமாகிய பக்கத்திலிருந்து ஹேதுவை பெறக்கூடியதாக இருத்தல் வேண்டும். இதனை பக்கசத்துவம் என அழைப்பர். உடன்பாட்டு வடிவிலுள்ள பொதுவிதிக்கான உதாரணத்தின் நிலையிடமாகிய சபக்கத்தில் ஹேதுவும் சாத்தியமும் பெறப்படக் கூடியதாயிருத்தல் வேண்டும். இதனை சபக்கசத்துவம் என அழைப்பர். எதிர்மறை உதாரணத்தின் நிலையிடம் விபக்கம் எனப்படும். இவ்விடத்து ஹேதுவும், சாத்தியமும் இல்லாதிருத்தல் வேண்டும். இவ்வாறு இல்லாதிருத்தலை விபக்க வியாவிருத்தி என அழைப்பர். பக்கசத்துவம், சபக்கசத்துவம், விப்ககவியாவிருத்தி என்ற மூன்றும் ஒரு வலிதான வாதத்திற்குரிய இன்றியமையாப் பண்பென எடுத்துக் காட்டியவர் தென்னிந்தியாவைச் சேர்ந்த தின்னாகர் என்ற பெளத்த சிந்தனையாளராவர். இவரது அபிப்பிராயப்படி ஒரு வலிதான வாதத்தில் ஹேதுவானது, 1. விபக்கத்தில் இல்லாதும் 2. பக்கம்
3. சபக்கம் என்பனவற்றிற் காணப்படுவதாயும் இருக்கவேண்டும். பின்நாளில் மேலும் இரு பண்புகள் ஹேதுவிற்கிருத்தல் வேண்டுமென நியாயதரிசன தர்க்கவாதிகளால் எடுத்துக்காட்டப் பட்டது. அவை முறையே,
4. பக்கத்திற் காணப்படும் ஹேது மறுதலிக்க முடியாததாய்
இருத்தல் வேண்டும்.
5. நிறுவலிற்காகத் தரப்பட்ட சாத்தியத்தை, நிறுவ முயலும் ஹேதுவுக்குப் பதிலாக முரண்படும் பிறிதொரு ஹேதுவினால் நிறுவப்படுவதாய் இருத்தலாகாது.
96

தொகுத்துக்கூறின் இந்திய இந்து மரபில் தருக்கமென்பது அனுமானத்தையே சுட்டுமென்றும், அவ்வனுமானம் ஹேதுவை மையமாகக் கொண்டதென்றும், பக்கம், சபக்கம், விபக்கம் ஆகிய மூவிடங்களிலும் ஹேதுவின் நிலை எவ்வாறிருக்கிறதென்பதை அடிப்படையாகக் கொண்டே ஒரு வாதத்தின் வலிமை தீர்மானிக்கப்படுமென்றும் கூறலாம். வலிதான வாதம் எப்பொழுதும் உண்மையாகவே இருக்குமென்பது இந்திய/இந்து தர்க்கக் கொள்கையின் சிறப்பியல்பாகும். (്ff.കി.)
தர்க்க-வாதப் போலிகள்
தவறான நியாயித்தலை போலி(ஆபாஸம்) என அழைப்பர். அனுமானத்தின் மூன்று அங்கங்களான பக்கம், ஹேது (ஏது), திட்டாந்தம் ஆகியவை அவற்றிற்கேயுரிய விதிமுறைகளின்படி அமையாத பொழுது வாதம் வலிதற்றதாக இருக்கும். இதனையே போலி என அழைப்பர். பக்கப்போலி, ஏதுப்போலி (ஹேதுப்போலி), திட்டாந்தப்போலி என போலிகள் மூவகைப்படும். இவைதவிர எதிர்க்கருத்துடைய இருவர் தத்தம் நிலைப்பாடே உண்மையானதென நிறுவமுயலும் (ஜல்ப வகை) வாதத்தில் ஏற்படக்கூடிய போலிகளான இரட்டுறமொழிதல் (சலம்), ஒப்புமைப்போலி (ஜாதி), தோல்வித்தானம் (நிக்கிரக ஸ்தானம்), பிரசங்க வகைப்போலி, வரைவிலக்கணத் தவறு ஆகியவையும் தர்க்கவாதப் போலிகளாகவே இந்திய மரபில் இனங்காணப் பட்டுள்ளன. தமிழ்நூல் மரபில் மணிமேகலை, சிவஞானபோத பாண்டிப் பெருமாள் விருத்தியுரை, சித்தியார் உரை நூல்கள் ஆகியவற்றில் போலிகள் பற்றிய விளக்கம் காணப்படுகிறது.
ஒரு வலிதான வாதத்தில் பிரதிக்ஞை பக்கம் பின்வரும் பண்புகளைக் கொண்டிருத்தல் வேண்டும்.
1. அனுமானிக்கப்படவேண்டிய பொருளின் நிலையிடமான பக்கமும், பக்கத்தில் அனுமானிக்கப்படவேண்டிய பொருளும் வெளிப்படத் தெரிதல் வேண்டும். அத்துடன் வாதிபிரதிவாதி ஆகிய இருவர்க்கும் ஏற்புடைய தாயிருத்தல் வேண்டும்.
2. அனுமானிக்கப்பட வேண்டிய பொருளும், அனுமா னிக்கப்படவேண்டிய பொருளின் நிலையிடமும் தெளிவாக இருத்தல் வேண்டும்.
மேற்படி பண்புகள் மீறப்படுவதால் ஏற்படும் தறவான நியாயித்தல் பக்கப்போலி என அழைக்கப்படும். பக்கப்போலிகள் ஒன்பது (9) வகை. அவை வருமாறு:
பிரத்தியட்ச விருத்தம் : கட்புலக்காட்சிக்கு முரணான கருத் துரை ஒன்றை பிரதிக்ஞையாக முன்மொழிவது. சப்தம் செவிப் புலனுக்குரியதல்ல என வாதிடுவது தவறான நியாயித்தலாகும். ஏனெனில் சப்தம் செவிப்புலனாகும் தன்மையுடையதால்.
இந்துக்கலைக்களஞ்சியம்

Page 129
அனுமான விருத்தம் பொருந்தா அனுமானம் இப்போலியின் பாற்படும். பானை உடையக்கூடிய தென்பதற்கு எதிர்மாறாக, அது உடையக்கூடியதல்ல என மொழிவது.
சுவாசன விருத்தம் தன்னையே மறுத்துரைக்கும் கருத் துரையொன்றை பிரதிக்ஞையாக மொழிவது. என்தாய் மலடியென்பது இதற்கு உதாரணம்.
உலக விருத்தம் பொதுசன அபிப்பிராயமாக ஏற்றுக் கொள்ளப்பட்டதொன்றிற்கு முரணான கருத்துரையை மொழிவது. உண்மையென ஏற்றுக்கொள்ளப்பட்ட அபிப்பிராயத்திற்கு முரணாக விவாதித்தலாகாது.
ஆகம விருத்தம்: வாதியோ பிரதிவாதியோ தன்னால் ஏற்றுக்கொள்ளப்பட்ட நம்பிக்கைக்கு முரணான கருத்துரை யொன்றை மொழிதலாகாது.
அப்பிரசித்த விஷேடணம்: ஒரு கருத்துரையில் அனுமானிக்கப்பட வேண்டியதாக இருப்பது பிரதி வாதியினால் ஏற்றுக்கொள்ள முடியாத தாயின் இப்போலி நிகழும்.
அப்பிரசித்த விஷேடியம் : அனுமானிக்க வேண்டிய பொருளின் நிலையிடம் பிரதிவாதிக்கு ஏற்புடைய தல்லவெனின் இப்போலி நிகழும்.
அப்பிரசித்த உபயம்! அனுமானப்படவேண்டிய பொருளும், அப்பொருளின் நிலையிடமான தருமியும் பிரதிவாதிக்கு ஏற்புடைய தல்லவெனின் இப்போலி நிகழும்.
பிரசித்தசம்பந்தம் ஏலவே ஏற்றுக்கொண்ட கருத்துரை யொன்றை பிரதிவாதி மீள நிறுவ முயலுதல் இப்போலியின் பாற்படும்.
வலிதானதொரு வாதத்தில் பக்கம், சபக்கம் என்பனவற்றில் ஏது பிரசன்னமாயும், விபக்கத்தில் பிரசன்னமற்றும் இருத்தல் வேண்டும். இவ்விதி மீறப்படுவதால் எழக்கூடிய போலி ஏதுப்போலி எனப்படும். ஏதுப்போலி அசித்தம், அனைகாந்திகம், விருத்தம் என மூன்று பெரும் பிரிவிலடங்கும். இவை ஒவ்வொன்றும் பல உப பிரிவுகளைக் கொண்டன.
1. அசித்தம் (நிறுவப்படாதது) உபாயசித்தம் நிறுவலுக்கு ஆதாரமாகத் தரப்படும் ஏது. வாதி, பிரதிவாதி ஆகிய இருவராலும் ஏற்றுக்கொள்ள முடியாதிருப்பின் அது உபாயசித்தம் எனப்படும்.
அன்யதாசித்தம் வாதி, பிரதிவாதி ஆகிய இருவரில் ஒருவரால் மட்டும் நிறுவலுக்கு ஆதாரமாகத் தரப்படும் ஏது, ஏற்றுக் கொள்ளப்படின் அது இப்போலியின் பாற்படும்.
இந்துக்கலைக்களஞ்சியம்

சித்தாசித்தம் : ஏது ஐயத்திற்கு இடமளிப்பதாயிருப்பின், அத்தகைய ஏதுவை முன்மொழிதலாகாது.
ஆசிரையாசித்தம் : முன்மொழியப்பட்ட பக்கம் பிரதிவாதி யினால் அங்கீகரிக்கப்படாமையினால் இப்போலி எழும்.
2. அனைகாந்திகம் (பலவகை முடிவுகளிற்கு இட்டுச் செல்வது) சாதாரணம் சபக்கத்திலும் விபக்கத்திலும் ஏது பிரசன்னமாயின் நிறுவல் அசாத்தியம். இதனைச் சாதாரண அனைகாந்திகம் என்பர்.
அசாதாரணம் சபக்கத்திற்கும் விபக்கத்திற்கும் ஏது பொருந்தாதிருப்பின் இப்போலி எழும்.
சபக்க ஏக தேசவிருத்தி விபக்க வியாபி நிறுவலுக்காகத் தரப்படும் ஏது சபக்கத்தில் ஏகதேசமாகவும், விபக்கத்தில் வியாபி யாகவும் இருக்கையில் இப்போலி எழும்.
விபக்க ஏக தேசவிருத்தி சபக்க வியாபி நிறுவலுக்காகத் தரப்படும் ஏது விபக்கத்தில் ஏகதேசமாகவும், சபக்கத்தில் வியாபியாகவும் இருக்கையில் இப்போலி எழும்.
உபய ஏக தேசவிருத்தி நிறுவலுக்காகத் தரப்படும் ஏது சபக் கத்திற்கும், விபக்கத்திற்கும் ஏகதேசமாக மட்டுமே பொருந்துவது இப்போலியின் பாற்படும்.
விருத்த வியபிச்சாரி: பிரதிக்ஞையை நிறுவவும், நிராகரிக்கவும் வெவ்வேறு ஏதுக்களால் முடியுமாயின் அது விருத்த வியபிச்சாரியாகும்.
3. விருத்தம் ( பொருத்தமற்றது.) தன்ம ஸ்வரூப விபரீத சாதனம்: நிறுவலுக்காகத் தரப் படுவதுடன் பொருந்திவரா (சாதனம்) ஏது.
தன்ம விஷேச விபரீத சாதனம்: நிறுவலுக்காகத் தரப் படுவதன் உள்ளடக் கத்திற்குப் பொருந்தாத (சாதனம்) ஏது.
தன்மி ஸ்வரூப விபரீத சாதனம் பக்கத்துடன் பொருந்திவரா (சாதனம்) ஏது. தன்மி விஷேச விபரீத சாதனம்: சாமானியம், விஷேசமென இரட்டைப் பொருள் கொள்ளும் பக்கத்தில் ஒன்றை நிராகரிப்பதன் மூலம் மற்றதும் நிராகரிக் கப்படுவதற்கு சாதனமாகும் ஏது.
ஒரு வலிதான வாதத்தில் இடம்பெறும் திட்டாந்தத்தின்
(1) சபக்கத்தில் சாதன தருமம், சாத்திய தருமம் என்பனவற்றிற்கிடையே தவிர்க்கமுடியாத் தொடர்பு இருத்தல் வேண்டும்.
97

Page 130
(2) நிறுவலிற்கெடுத்துக் கொள்ளப்பட்ட சாத்தியத்தின் தருமமும் சாதனதருமமும் விபக்கத்தில் இல்லாதிருத்தல் வேண்டும். இவ்விதிகள் மீறப்படும்பொழுது, 1. சாதன்மியதிட்டாந்தப் போலி 2. வைதன்மிய திட்டாந்தப்போலி என்பன நிகழும். இவை ஒவ்வொன்றும் ஐந்து (5) உபபிரிவுகளைக் கொண்டன.
1. சாதன்மிய திட்டாந்தப்போலி சாதனதரும சித்தம் சபக்கத்தில் ஏதுவாகிய சாதனம் தனது தர்மத்தை இழந்திருப்பதால் இப்போலி ஏற்படுகிறது. சத்தம் நித்தியமானது வடிவமின்மையால் அணுப்போல என்ற உதாரணத்தில் அணுவானது வடிவத்தைக் கொண் டிருப்பதால், அது வாதப் போலிக்கு இடமளிக்கிறது.
சாத்தியதரும சித்தம் உடன்பாட்டு உதாரணத்தில் சாத்தியதருமம் இல்லாதிருத்தல்.
உபயதரும சித்தம் உடன்பாட்டு உதாரணத்தில் சாதனசாத்திய தருமங்கள் இல்லாதிருத்தல்.
அனன்னுவயம்: உடன்பாட்டு உதாரணத்தில் சாதனசாத்திய தருமங்களிடையே இன்றியமையாத் தொடர்பு இருப்பதாக எடுத்துக்காட்ட முடியாதிருப்பது இப்போலியின்பாற்படும்.
விபரீத அன்னுவயம் : சாதன-சாத்திய தருமங்களிடையே மறுதலையான தொடர்பை உடன்பாட்டு உதாரணம் காட்டுமாயின் அது போலியாம்.
2. வைதன்மிய திட்டாந்தப் போலி சாத்தியவியாவிருத்தி: விபக்கத்தில் சாத்தியத்தை உள்ளடக்கி சாதனத்தை விலக்கும் உதாரணம்.
சாதனவியா விருத்தி : விபக்கத்தில் சாதனத்தை உள் ளடக்கி சாத்தியத்தை விலக்கும் உதாரணம்.
உபயவியா விருத்தி: விபக்கத்தில் சாதனத்தையும் சாத்தியத்தையும் விலக்காததால் எழும் போலி.
அவ்வியதிரேகம்: விபக்கத்தில் சாத்தியத்தை உறுதி செய்ய முடியாமைக்குக் காலா யிருக்கும் சாதனம். விபரீதவெதிரேகம்: சாதன-சாத்திய உடனிகழ்வு விபக் கத்தில் இருப்பதைக் காட்டுவதன் மூலம் இப்போலி நிகழ்கிறது.
இதுவரை, அனுமானமாகிய தருக்க வாதக் கட்டமைப்பில் எழக்கூடிய போலிகள் பற்றிக் குறிப்பிட்டோம். சலம், ஜாதி, நிக்கிரக ஸ்தானம் (தோல்வித்தானம்), பிரசங்க வகை, நியாய ஆபாஸம், வரைவிலக்கணத் தவறு ஆகிய போலிகள் ஏலவே குறித்த அனுமானக் கட்டமைப்புப் போலிகளிலிருந்து வேறுபட்டவை.
ஒரு வாதத்தில் எதிராளியைக் குழப்பமடையச் செய்யும் வகையில் வாதித்து, அவரைத் தோல்வியடையச் செய்யும்
98.
 

நோக்கிலான வாதமுறையை இந்திய / இந்து மரபு ஏற்றுக் கொள்வதில்லை. சலம், ஜாதி என்பன இத்தகைய வாதப் போலிகளாகும். வாதிடுபவரொருவர் தான் விடும் தவறுகளால் தோல்வியைத் தழுவுவதைச் சுட்டுவதே நிக்கிகஸ்தானம் எனும் போலியாகும். பிரசங்க வகை, வரைவிலக்கணத் தவறு ஆகியவை மேற்குறித்த பிரிவுகளில் உள்ளடங்காச் சிறப்புவகைப் போலிகளாகும்.
3. இரட்டுறமொழிதல் (சலம்) இது மூன்று வகைப்படும்:
1. வாக்கிலிருந்து எழுதுவது (வாக்சலம்): வாதி "X இடம் நவகம்பளம் உண்டு. (புதிய கம்பளம் என்ற கருத்தில்) கூற பிரதிவாதியோ X இடம் ஒன்பது கம்பளம் உண்டென நீ கூறினாயல்லவா என பொருள் மாற்றி வாதிடுவது.
2. சாமான்யசலம் பொதுவாக எதிர்பார்க்கலாம் என்று
e கூறியதை கட்டாயமாக எதிர்பார்க்கலாம் என மாற்றிப்பொருள் கொள்வது.
3. உபசாரசலம்: "இறுதியாண்டு அழுதது என உபசாரமாக
மாணவர் அழுததைக் கூறியதை ஆண்டழுதது என வலிந்து பொருள் கொள்ளுதல்.
ஒப்புமைப்போலி (ஜாதி):
ஒரு வாதத்தில் ஏற்புடைய ஒப்புமை தரப்படுமிடத்து அதுவோர் பிரமாணமாக ஏற்றுக் கொள்ளப்படுமென்பது வாத்சாயனருடைய நிலைப்பாடாகும். அவ்வாறில்லாத, தவறான ஒப்புமை இப்போலியின் பாற்படும்.
தோல்வித்தானம் (நிக்கிகஸ்தானம்):
வாதத்தில் ஒருவர் தோல்வியடையக்கூடிய சந்தர்ப் பங்கள் பற்றிய குறிப்பு சரக சம்ஹிதையில் காணப் பட்டபொழுதும், நியாய சூத்திரத்திலேயே மிகவும் திட்டவட்டமாக இது எடுத்துக் காட்டப்பட்டுள்ளது. ஒரு வாதத்தில் ஒருவர் எச் சந்தர்ப்பத்தில் தோல்வியடைகிறாரென்பதைத் தீர்மானிக்க நடுவர்கள் பயன்படுத்திய நடைமுறை விதிகளென இவற்றைக் குறிப்பிடலாம். தர்க்கத் தவறு விவாத நடைமுறை, விவாதமரபு என்பனவற்றை அடிப்படையாகக் པའི་ས་ தீர்மானிக்கப்பட்டது. நியாயசூத்திர வாத்சாயனர் உரை, சித்தியார் உரை ஆகியவற்றில் குறிப்பிடப்படும் தோல்வித்தானங்கள் வருமாறு:
பிரதிஞ்ஞாஹானி (கருத்துரையைக் கைவிடல்) வாதி தன்னால் மொழியப்பட்ட பிரதிக்ஞைக்கு கேடு வரும் விதமாய் பிரதிவாதியின் கூற்றை மறுக்க விளையும் சந்தர்ப்பம்.
பிரதிஞ்ஞாந்தரம் (வேறுபட்ட கருத்துரை)
பிரதிவாதியின் நிராகரிப்புக்கு பதிலிறுக்கமுடியாத வாதி
ஏலவே தன்னால் முன்மொழியப்பட்ட பிரதிக்ஞைக்குப் பதிலாக
பிறிதொரு கருத்தை முன்மொழிய முற்படும் சந்தர்ப்பம்.
இந்துக்கலைக்களஞ்சியம்
ܝܓ

Page 131
பிரதிஞ்ஞா விரோதம் (கருத்துரைக்கு
எதிர்மாறு)
வாதியினால் மொழியப்பட்ட ஏது முன்மொழியப்பட்ட
பிரதிக்ஞைக்கு எதிர்மாறாக இருக்கும் சந்தர்ப்பம்,
பிரதிஞ்ஞாசன்னியாசம் (கருத்துரையை மீளப் பெறல்)
வாதியினால் முன்மொழியப்பட்ட கருத்துரை
பிரதிவாதியினால் நிராகரிக்கப்பட்டமையைக் கருத்திற் கொண்டு அதனை மீளப்பெற முயலும் சந்தர்ப்பம்.
ஏதுவந்தரம் (வேறுபட்ட ஏது)
ஒரு கருத்துரையை நிறுவும்நோக்கமாக மொழியப்பட்ட ஏது
கருத்துரையை நிறுவுவதற்கு போதியதல்லவென பிரதிவாதி
எடுத்துக்காட்ட, பிறிதொரு ஏதுவை வாதி தரமுற்படும் சந்தர்ப்பம்.
அர்த்தாந்தரம் (தொடர்பற்ற வாதம்)
தனது தோல்வியை மறைக்கும் பொருட்டு வாதி தொடர்பற்ற விடயங்களை மொழியும் சந்தர்ப்பம்.
நிரர்த்தகம் (கருத்தற்ற வாதம்)
வாதி தனது கருத்துரையை நிறுவும் முயற்சியில் அர்த்தமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துதல்.
அவிஞ்ஞாதார்த்தம்
வாதியினால் மும்முறை மொழியப்படும் அவர் கூறும் வாக்கியத்தை பிரதிவாதியினாலோ அல்லது பரிஷத்தினாலோ புரிந்துகொள்ள முடியாது போயின், வாதி புரிந்துகொள்ள முடியா வாக்கியத்தைக் கூறிய குற்றத்தினால் தோல்வியடைந் தவராகிறார்.
அபார்த்தகம் (நீங்கிய பொருள்)
தன்னளவிற் பொருளுடையதேயாயினும், மொழியப்பட்ட கருத்துரையுடன் தொடர்பற்ற வாக்கியங்களை மொழிதல். அப்பிராத்த காலம்
நியாயதரிசனத்தின்படி ஐந்து அங்கங்களைக் கொண்ட வாத அமைப்பில் பிரதிக்ஞையை, ஏது, திட்டாந்தம், உபநயம், நிகமனம் என்பனவற்றை அவற்றிற்கேயுரிய படிமுறை தவறி மொழிதல்,
நியூனம்
ஐந்து அவயக் கட்டமைப்புள்ள வாதத்தில் யாதேனும் அங்கத்தைக் குறைத்து மொழிதல்.
அதிகம்
ஐந்து அவயவத்திற்கு மேலதிகமாக மொழிவது அதிகம்.
புனருக்தம்
மொழியப்பட்ட வாக்கியத்தை அல்லது கூற்றை ஒத்த, பிறிதொரு வாக்கியத்தை அல்லது கூற்றை மொழிவது.
இந்துக்கலைக்களஞ்சியம்
L S

ஆனனு பாஷ னம்
வாதியினால் மொழியப்பட்ட வாக்கியத்தை நடுவர்களிற் சிலர் புரிந்துகொண்டபொழுதும், பிரதிவாதி புரியாமையினால் தோல்வியடைதல்,
அஞ்ஞானம்
வாதியினால் மொழியப்பட்ட வாக்கியத்தை நடுவர்களால் புரியமுடியாதபொழுது வாதி தோல்வி யடைந்தவனாகிறான்.
அப்பிரதி பை
பிரதிவாதியின் வினாவிற்கு தக்கவிடை தராது வாதி மெளனமாயிருத்தல்.
விக் ஷேபம்
வாதியின் கருத்துரையை புரியமுடியாமலும் பதிலிறுக்க முடியாமலும் வேறு அவசரவேலை இருக்கிறதெனக் கூறி தப்பிக்க முயலுதல்.
மதானுஞ்ஞை
பிரதிவாதியின் மறுப்பிற்கு விடைகூறாது, அவனது நிலைப்பாட்டை வாதி மறுக்க முயலும் சந்தர்ப்பம்.
பரியனுயோச்சியோ பேக்ஷணம்
வாதியின் தோல்வியை எடுத்துக் காட்டக் கூடிய சந்தர்ப்பம் ஏற்பட்டும், அதனைப் பிரதிவாதி எடுத்துக் காட்டத் தவறும் சந்தர்ப்பம்.
நிரனு யோஜனுயோகம்
தோல்வித்தானம் எய்தாத வாதியை, பிரதிவாதி நீ தோல்வி எய்தினாயென வேண்டுமென்றே கூறின் பிரதிவாதி தோல்வி அடைந்தவனாகிறான்.
அப சித்தாந்தம்
விவாதத்தின்பொழுது, வாதி ஏலவே தன்னால் அங்கீகரிக்கப்பட்ட கருத்துரைக்கு எதிராக வாதிடும் சந்தர்ப்பம்.
ஏத்துவா பாசம்
ஏதுப்போலி ஏற்படும் சந்தர்ப்பங்களும் தோல்வித் தானமாகும்.
தர்மகீர்த்தி தனது ‘வாதநியாயம்' என்ற நூலில் நியாயசூத்திரத்தில் கூறப்பட்ட தோல்வித்தானங்களை ஒழுங்குபடுத்தி அவற்றை நான்கு அடிப்படை வகைகளாக எடுத்துக்காட்டினார். அவை வருமாறு: 1. ஒருவன் தன்னுடைய கருத்துரைக்கு இன்றியமையாததும்,
போதியதுமான நியாயத்தைத் தரத் தவறும் சந்தர்ப்பத்தில்
அவன் தோல்வியடைந்தவனாகிறான்.
2. ஒரு வாதத்தின்பொழுது தேவைப்படாத அல்லது தவறான மொழிவு கூற்று வாதம் என்பனவற்றைத் தரும் சந்தர்ப்பம் தோல்வித்தானமாகும்.
99

Page 132
3. வாதி தவறுவிடும் சந்தர்ப்பங்களை பிரதிவாதி சுட்டிக்காட்டத்
தவறும் சந்தர்ப்பம் தோல்வித்தானமாகும்.
4. தவறுவிடப்படாத சந்தர்ப்பங்களில் தவறுவிட்டதாக வாதியோ பிரதிவாதியோ கூறுவதும் தோல்வித் தானமாகும்.
பிரசங்க வகைப் போலி
இந்து மரபில் உதயணர் என்பவரே முதன்முதலாக இவ்வகைப் போலியை தர்க்க முறையில் உள்ளடக்கியவராவர். இது நான்கு வகைப்படும்.
ஆத்மாஸ் ரயம்
ஒரு வகையான கூறியது கூறற் போலியாகும். பின்வரும் வடிவங்களில் அது தோன்றலாம். 1. எல்லோரும் அறிந்ததுபோல X என்பது X இல்
தங்கியுள்ளது என்றோ, 2. X இன் அடித்தளம் X ஆகும் என்றோ,
X இன் விடயம் X ஆகும் என்றோ, X என்பது X இன் உற்பத்தியாகும் என்றோ, வாதிடல்.
2
. இதரித ஸ்ரயம்
பரஸ்பரம் ஒன்றிலொன்று தங்கியிருப்பதாக வாதிடல். பின்வரும் வடிவங்களில் அது தோன்றலாம்.
1. X என்பது Y இல் தங்கியுளதென்றும், Y, X இல்
தங்கியுளதென்றும் வாதிடல்.
2. Xபற்றிய அறிவு Y பற்றிய முன்னறிவிலும், Y பற்றிய அறிவு
X பற்றிய முன்னறிவிலும் தங்கியுளதென வாதிடல்.
3. சக்கரம்
A என்பது B யிலும், B என்பது C யிலும், C என்பது D யிலும், D என்பது A யிலும் தங்கியுள்ளதென வாதிடல். 4. அனவஸ்தம்
இவ்வுலகில் எண்ணிக்கையற்ற பொருட்களுக்கு/ நிகழ்ச்சிகளுக்கு இன்னின்ன பண்புகள் உளதென வாதிடல்.
5. நியாய ஆபாஸம்
சமண தருக்கவாதிகளால் எடுத்துக்காட்டப்பட்ட இப்போலிவகையை விவரிப்பினால் எழும் போலிகள் என விளக்கலாம். மொழியைப் பயன்படுத்துவதிலுள்ள கருத்துக் குழப்பத்தால் எழுவனவாகும். பின்வரும் கூற்றுக்களை மீறும் சந்தர்ப்பங்களில் இப்போலி ஏற்படும்.
1. பொருளும் அதன் பண்பும் பிரிக்க முடியாதவை. 2. காலம் ஒன்றல்ல. கடந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம்
என்பவை தம்மில் வேறுபட்டவை. 3. தனியன்கள் உள. பொருளின் பன்மைத்தன்மை
உண்மையானது. 4. நிறைகள் (பொதுப்பண்புகள், வகுப்புகள்) உண்டு. 5. பொருட்கள் புறத்தே இருப்புடையன.
[06

6. திரவியங்கள் தொடர்ச்சியாக கால ஓட்டத்திற் கூடாகவும்
இருப்புடையனவாகின்றன.
7. மொழி வெறுமனே பொறிமுறையான கருவியல்ல.
8. சொற்களின் அர்த்தம் சொற்பிறப்பினடியாகத் தீர்மானிக்கப்படுவதில்லை. ஒரு சொல்லின் அர்த்தத்தை நிர்ணயிப்பதில் மரபு பெரும் பங்காற்றுகிறது.
வரைவிலக்கணப்போலி
தொகுத்தறி அனுமானத்தினடியாகவே வரைவிலக்கணம் பெறப்படுகிறதென இந்திய மரபு ஏற்றுக்கொண்டுள்ளது. இதனால் தவறான தொகுத்தறிதலினால் எழுவதே வரைவிலக்கணப்போலியாகிறது. உதாரணமாக DX என்பதன் கருத்து X ஆனது D என்னும் பண்பைக் கொண்டதெனின் DX என்பதிலுள்ள X D யைக் கொண்டதென்பதாகும். அதாவது ஒவ்வொரு X உம், X நிலம் ஆயின், X நாற்றமுடையதாகும் என்பதுடன் இதன் மறுதலையும் உண்மையாமென்பது பெறப்படும். நியாய தருக்கவியலாளர்களின் அபிப்பிராயப்படி அவ்வியாப்தி, அதிவியாப்தி, அசம்பவம் (சாத்தியமற்ற வரைவிலக்கணம்) என வரைவில்க்கணப்போலிகள் மூன்று வகைப்படும். (617.45)
தருப்பை
புராணங்களில் துளசி, தருப்பை, வில்வம் முதலிய தாவரங்கள் மிகுந்திருக்கும் இடத்தின் பெருமை சிறப்பாகக் கூறப்பட்டுள்ளது. இதில் திருப்புல் அல்லது 'தூப்புல்” என்று கூறப்படும் தருப்பையைப் பற்றி நோக்குவோம்.
தருப்பை- இது நாணல் இனத்தைச் சார்ந்த ஒரு வகைப் புல்- தூயபுல்- தூப்புல் எனப்படுகிறது. பூரீ இராமர் திருமேனி பட்டதால் இது ஏற்றம் பெற்றது.
நம் முன்னோர்கள் மங்கலம்-அமங்கலம் என இருவகைப்பட்ட வைதீகச் சடங்குகளிலும் தருப்பைப் புல்லைச் சிறப்பாகப் பயன்படுத்துவார்கள். அது மூன்றுவித தோஷங்களைப் போக்க வல்லது. உஷ்ண வீர்யம் உடையது. அதிவேகமானது. நீரை சுத்தப்படுத்தவல்லது. விஷத்தை முறிக்கவல்லது. தேவர்களுக்கும், பிதிரர்களுக்கும் உகந்தது. புண்ணிய பூமியைத் தவிர வேறு எங்கும் அது முளைக்காது. இதனை வடமொழியில் அக்கினி கர்ப்பம் என அழைப்பார்கள். கும்பாபிஷேகங்களில் யாகசாலையிலுள்ள கும்பத்தின் ஆற்றலைப் பிம்பத்தில் சேர்க்கும் நாபீசந்தானம் என்பதில் தங்கக் கம்பி, வெள்ளிக் கம்பி என்பவைகளைப் பயன்படுத்தும் இடத்தில் தருப்பைக் கயிற்றைப் பயன் படுத்துகிறார்கள்.
இது பிரம்மனது நாசியிற் தோன்றிய பரப்பிரம்மத்திடமிருந்து பிறந்தது. "ஓ! தர்ப்பையே சுபத்தைத் தருவாய். எனது எல்லாப் பாவங்களையும் போக்குவாய்” என்று கூறி ஹும்பட் என்கிற மந்திரத்தால் ஒரு முறை பேதித்து மேலெடுக்க வேண்டும். தருப்பையில் மூவகை உண்டு. அவை பெண்தர்ப்பை,
இந்துக்கலைக்களஞ்சியம்

Page 133
ஆண்தர்ப்பை, அலி தர்ப்பை என்பனவாகும். மேலே தடித்து இருப்பது பெண் தர்ப்பை, அடிமுதல் நுனிவரை சமகனம் உடையது ஆண் தர்ப்பை, அடியிலே தடித்துக் காணப்படுவது அலி அல்லது நபும்ஸக தர்ப்பையாம். தர்ப்பையின் அடியில் பிரமனும் நடுவில் திருமாலும், நுனியில் சங்கரனும் ஆகிய திரிமூர்த்திகளும் வசிக்கின்றனர். தர்ப்பை பத்து வகைப்படும். அவையாவன தருப்பை, நாணல், யவைப்புல், அறுகு, நெற்புல், விழல், மற்ற தானியங்களின் புல், மருள் மட்டை, சவட்டைக்கோரை, கோதுமைப்புல் என்பனவாகும். குசம், காசம், தூர்வை, விரீகி, மஞ்சம்புல், விச்வாமித்திரம் இவை சப்த தர்ப்பைகளாகும். இத் தருப்பையினை தேவர்களை நினைத்து நுனியாலும் மனிதர்களை நினைத்து நடுவிலும், பிதிரர்களை நினைத்து தருப்பையினை மடித்து நுனியாலும் தர்ப்பணம் செய்யவேண்டும்.
வைதீகச் சடங்குகள் செய்யும் பொழுது பவித்திரம்' என்ற பெயருடன் மோதிர விரலில் அணிந்து கொள்ள வேண்டும். இவ்விரலில் கபநாடி ஒடுவதால் அதில் அணியும் பொழுது கபசுத்தி ஏற்படுகின்றது. மேலும் இப்புல்லில் காரமும், புளிப்புச்சுவையும் இருப்பதால், செம்பு விக்கிரகங்களை தர்ப்பைச் சாம்பலால் தேய்க்கவேண்டும் என்று சிற்ப சாஸ்திரம் கூறும். இதனால் விக்கிரகங்கள் மந்திர ஆற்றலும் குறையாது நீண்டநாள் பளபளப்புடன் பிரகாசமாய் இலங்கும். ஆற்றுமுள்ளி, கலிங்கம் முதலிய தாவரங்கள் போல் இந்தப்பூண்டு தண்ணீர் இல்லா விட்டாலும் வாடாது. நீரிலேயே இருந்தாலும் அழுகாது. இதனை அமிர்த வீர்யம் என்பர். உலர்ந்தாலும் இதன் ஆற்றல் குன்றாது.
இந்த குசைப்புல் சமசீதோஷ்ணப் பிரதேசங்களில் நன்கு வளரும் தன்மை கொண்டது. சூரிய கிரஹண காலத்தில் இதன் வீர்யம் பன்மடங்கு அதிகமாகும். இப்புல்பட்ட நீரை தொற்றுநோய் உள்ள இடத்தில் தெளித்தால் தொற்று பரவாது. இப்புல்லின் மீது படும் காற்று நமது உடலில் மீது பட்டால் நன்மை விளைவிக்கும். தர்ப்பைப் புல் அடர்ந்துள்ள நீர்நிலைகளில் அதிகாலையில் நீராடுவது உடல்நலத்திற்கு உறுதியைத் தரும். 穹
மருத்துவமனைகள், உடல்நல விடுதிகள் அமைக்கும் இடங்களில் தென்மேற்கில் குளம் அமைத்து அதைச் சுற்றிலும் தர்ப்பையை வளர்க்கவேண்டும் என்பது முன்னோர் கொள்கை. வடகிழக்கிலிருந்து பூமியின் ஆற்றல் தென்கிழக்கு நோக்கிச் செல்வதால் தர்ப்பை அவ்வாற்றலை அதிகரிக்கின்றது.
விஸ்வாமித்ரம் என்ற தருப்பத்தையே பூரீ வைணவர்கள் அதிகம் பயன்படுத்துவார்கள்.
"விரிஞ்சேன ஸ்ஹோத்பன்ன பரமேஷ்டி நிஸர்கஜ நித ஸர்வாணி பாபாநி தர்ப ஸ்வஸ்திகரேபவ”
என்ற மந்திரத்தினை உச்சரித்தவாறு தர்ப்பையைப் பறிப்பது நல்லது. தர்ப்பையை ஆதிவாரமாகிய ஞாயிற்றுக்கிழமையில் எடுத்தால் ஒரு வாரம் வைத்துக் கொள்ளலாம். அமாவாசையிற்
இந்துக்கலைக்களஞ்சியம்

பறித்தால் ஒரு மாதகாலம் வரை உபயோகிக்கலாம். பெளர்ணமியிற் கொய்தால் 69 (5 பகூடி காலம் வைத்துக்கொள்ளலாம். புரட்டாசி மாதத்தில் எடுத்தால் ஆறுமாதம் உபயோகிக்கலாம். ஆவணியில் எடுத்தால் ஒரு ஆண்டு பயன்படுத்தலாம். சிரார்த்த காலத்தில் எடுத்தது அன்றுமட்டும்தான் பயன்படும். ஐம்பது குசைப்புற்களால் செய்யப்படுவது பிரம்ம கூர்ச்சம்.
சிவபெருமானின் நெற்றி நாட்டத்தினின்று புறப்பட்ட ஆறு நெருப்புப் பொறிகளும் தர்ப்பைத் தடாகமாகிய சரவணத்தில் வந்து புகுந்து சரவணபவனாகின்றன. சரம் என்றால் நாணல் என்பது பொருள்.
திருநள்ளாற்றுத் தலத்தின் தல விருகூடிம் தர்ப்பை, அடிமாய்ந்து விடாமல் காலம் காலமாக இன்னும் காட்சி தரும் அத் தருப்பை நினைப்பதற்கும் அதிசயமானது. இத்தலத்திற்கே தர்பாரன்யம் என்பது பெயராகும்.
திருப்புல்லாணி அல்லது தர்ப்பசயனம் என்னும் புண்ணியத்தலம் இராமநாதபுரத்திலிருந்து தெற்கே ஏழுமைல் தொலைவில் கீழ்க்கரை செல்லும் பாதையில் உள்ளது. இலங்கைக்குப் பாலம் அமைக்க வழிவிடுமாறு கடலரசனாகிய வருணனை இராமபிரான் புல்லணைமேற் கிடந்து வேண்டிய தலம். இத் திருப்பதியைத் திருமங்கையாழ்வார் 20 பாசுரங்களால் மங்களாசாசனம் செய்துள்ளார்.
தன்னை நைவிக்கிலேன் வல்வினையேன் தொழுதும் எழு பொன்னை நைவிக்கும் அப்பூஞ் செருந்தி மண நிழல்வாய் என்னை நைவித்து எழில் கொண்டு அகன்ற பெருமான்
இடம் புன்னை முத்தம் பொழில் குழ்ந்து அழகு புல்லானியே என்று தொடங்கி
பொன் அலரும் புன்னை சூழ் புல்லாணி அம்மானை மின் இடையார் வேட்கை நோய் கூர இரந்ததனை கல்நவிலும் திண்தோள் கலியின் ஒலிவல்லார் மன்னவர் ஆய் மண் ஆண்டு வான் நாடும் முற்றுவரே. என்று இருபது பாசுரங்களால் திருப்புல்லாணித் தலத்தை அழகு படுத்தியுள்ளார்.
இங்கு இராமபிரான் தர்ப்பசயனராகக் காட்சி அருளுகின்றார். வருண தேவனுக்கும் இங்கு கோயில் உண்டு.
இராமர் இலங்கையிலிருந்து புஷ்பக விமானத்தில் திரும்பும் பொழுது திருப்புல்லணையில் இறங்கி, தாம் தவம் செய்த இடத்தைச் சீதைக்குக் காட்டினார். இராவணனைக் கொன்ற பாவம் நீங்க இப்புண்ணியப் பதியை அடுத்துள்ள சேதுகரையில் நீராடித் தூய்மை பெற்றார்.
தர்ப்பையை தேவகாரியங்களுக்கு நுனி கிழக்காகவும், பிதிர் காரியங்களுக்கு நுனி தெற்காகவும் பயன்படுத்த வேண்டும்.
Of

Page 134
கிரகண காலங்களிலும், அமாவாசையிலும் தர்ப்பைக்கு வீர்யம்
அதிகம். கிரகண காலங்களில் உணவுப்பண்டங்கள், நுண்ணிய கிருமிகளால் கெடாதிருக்க தூய தர்ப்பையை பரப்ப வேண்டும்.
பிரேத காரியங்களில் ஒரு தர்ப்பபத்திரத்தாலும், சுபகாரியங்களில் இரண்டு தர்ப்பங்களாலும், பித்ரு காரியங்களில் மூன்று தர்ப்பங்களாலும் தேவ காரியங்களில் நான்கு தர்ப்பங்களாலும், யாகங்களில் ஐந்து தர்ப்பங்களாலும் சாந்தி கர்மாக்களில் ஆறு தர்ப்பங்களாலும் பவித்திரம் முடியப்படவேண்டும். பகவதாராதனம், ஜபம், ஹோமம், தானம், பிதிர் தர்ப்பணம் முதலியவைகளில் கையில் பவித்ரம் தரித்துக் கொள்ளாமல் செய்வது பயனைத்தராது.
பவித்திரம் என்பது தர்ப்பையால் மோதிரம்போல் முடிவது. பவித்திரத்தின் வட்டம் இரண்டு அங்குலமும், பிரம்மமுடி ஒரு அங்குலமுமாக அனைத்தும் நான்கு அங்குலம் இருக்க வேண்டும். சுருதி, ஸ்மிருதி சம்பந்தமான காரியங்களைப் பவித்திரமின்றி செய்யக்கூடாது. அப்படிச் செய்யின் செய்யும் காரியங்கள் வீணாகிவிடும். இதனை வலதுகை மோதிரவிரலில் அணிய வேண்டும். மனம், வாக்கு, காயங்களினால் விளைகின்ற பாவத்தை நீக்கி, நரகத்தினின்று மீட்டெடுப்பதால் பவித்திரம் (தூய்மை நிறைந்தது) என்று பெயர் பெறுகின்றது. (வ, வை.)
தர்மசாஸ்திரங்கள்
1. ஸ்மிருதி என்று சொல்லப்படும் தர்மசாஸ்திரங்கள் இந்து சமுதாயத்திலே கடந்த ஈராயிரம் வருடங்களை உள்ளடக்கிய காலப்பகுதியிற் பெருஞ்செல்வாக்கினை ஏற்படுத்தியுள்ளன. தர்ம சூத்திரங்களைப் போலன்றி அவை செய்யுள் நடையில் அமைந்தவை; ஆயினும் பொருள் மரபில் தர்மசூத்திரங்களை ஒத்துள்ளன; பொதுவான விடயங்களைப் பற்றியே அவை விவரிக்கின்றன. தர்மசாஸ்திரங்கள் அளவிலே விரிவானவை. அவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு தர்மசூத்திரத்தை மூலமாகக் கொண்டுள்ளன என்று சில அறிஞர் கருதுவர். ஸ்மிருதிகள் சமகால வழமைகளையும் சிந்தனைகளையும் மேலதிகமாகப் பதிவு செய்கின்றன. அவற்றில் நாகரிக முன்னேற்றங்களுக்கு ஏற்பவும் அறிவியல் வளர்ச்சிகளுக்கு அமையவும் சிந்தனை வளர்ச்சியும் சமுதாய நோக்கில் நெகிழ்ச்சியும் ஏற்பட்டுள்ளன.
தர்மசாஸ்திரங்கள் காலத்தால் தர்மசூத்திரங்களுக்குப் பிற்பட்டவை. கி. மு. 600 - 200 வரையான காலத்துக்குரியவை தர்மசூத்திரங்கள். அதனை அடுத்து வந்த எட்டு நூற்றாண்டுகளில் தர்மசாத்திரங்கள் எழுதப்பட்டன. தர்மசாஸ்திரம் என்னும் வகைக்குரிய நுல்கள் பலவாகும். மனுதர்மசாஸ்திரம் அவற்றுள் மிகவும் பிரசித்தமானது. யாக்ஞவல்க்யூ, நாரதர், பிருகஸ்பதி, காத்யாயனர், விஷ்ணு என்போரின் பெயர்களால் வழங்கும் நூல்கள் உள்ளன. சுக்கிரநீதி என்பதும் இந்த வகையைச் சேர்ந்த நூலாகும்.
f02
 

தர்ம சாஸ்திரங்களின் காலம் பற்றி அறிஞரிடையே கருத்து வேற்றுமை உண்டு. நூலின் காலம் பற்றிய விவரங்கள் அவற்றுள் எதனிலுங் காணப்படவில்லை. அவற்றிலே காணப்படும் விவரங்கள், சிந்தனைகள், மொழிநடை, சொல்வளம் என்பனவற்றின் அடிப்படையில் மட்டுமே காலநிர்ணயஞ் செய்தல் முடியும். அது இலகுவானதன்று, குறிப்பிட்ட ஒரு நூல் இன்ன நூற்றாண்டுக்கு உரியதென்று உறுதியாகக் கூறுவதும் கஷ்டமானது. தர்மசாஸ்திரங்களின் வரலாற்றை விரிவாக ஆராய்ந்தவரான கானே அவற்றின் காலவரையறையை மேல்வருமாறு அமைத்துள்ளார் :
யக்ஞவல்க்ய ஸ்மிருதி - if. S. 100 - 300 நாரத ஸ்மிருதி S. G. 100 - 400 பிருகஸ்பதி ஸ்மிருதி - கி. பி. 300 - 500
காத்யாயன ஸ்மிருதி கி. பி. 400 - 600
ஜொலி முதலான ஐரோப்பிய ஆய்வாளர் இந்நூல்கள் கி. பி. 300 - 700 ஆகிய காலத்துக்குரியன என்று கொள்வர்.
2. தர்ம சாஸ்திரங்களில் மனுஸ்மிருதி காலத்தால் மிக முற்பட்டது; மிகவும் பிரசித்தமானது; தனியான பண்புகளைக் கொண்டது. தர்ம சாஸ்திரம் என்னும் வகைக்குரிய நூல்களின் அம்சங்களை முழுமையாகப் பிரதிபலிக்கும் நூல் என்ற வகையில் அது சிறப்பிடம் பெறுகின்றது. பரதகண்டம் முழுவதிலும் அதனை ஒரு ஆதாரபூர்வமான நூலாகக் கொண்டனர். குருகுலங்களிலும், கல்லூரிகளிலும் ஆச்சிரமங் களிலும் அதனை விரும்பிக் கற்றனர்.
மனுதர்மத்தைக் கடைப்பிடிப்பது இராசதர்மம் என்ற
சிந்தனை அரண்மனை அதிகாரிகளிடையிற் காணப்பட்டது. அதனை நிலை நாட்டுவதற்கே அரசர்கள் முடி சூடினார்கள் என்ற கருத்தும் முன் வைக்கப்பட்டது. சோழ மன்னரின் மெய்க்கீர்த்திகளில் மேல்வரும் தொடர்கள் உள்ளமை கவனித்தற்குரியது;
"வேதநீதியை விளக்கி மீதுயர்
வீரத் தனிக்கொடி தியாகக் கொடியொடும்
ஏற்பவர் வருகென்று நிற்பக் கோத்தொழில்
உரிமையி னெய்தி அரைசு வீற்றிருந்து
மேவரு மனுநெறி விளக்கிய.
உடையார் பூரீ வீர ராசேந்திர தேவர். 99
"மனுவாறு பெருகக் கலியாறு வறப்பச் செங்கோல் திசைதொறுஞ் செல்ல வெண்குடை இருநில வளாக மெங்கனுந் தனாது
திருநிழல் வெண்ணிலா திகழ .
(முதலாம் குலோத்துங்க சோழன்)
2.
7 “மன்னுயிர்க் கெல்லா மின்னுயிர்த் தாய்போல்
தண்ணளி பரப்பித் தனித்தனி பார்த்து மண்முழுதுங் களிப்ப மனுநெறி வளர்த்துத் தன்
இந்துக்கலைக்களஞ்சியம்

Page 135
கோயிற் கொற்ற வாசல் புறத்து மணிநா வொடுங்க முரசுகள் முழங்க விசையமும் புகழும் மேன்மேலோங்க வாழி வாழி இம் மாநிலங் காக்க.”
(விக்கிரம சோழன்)
'மீனமும் சிலையுஞ் சிதைத்து வானுயர் பொன்னெடு மேருவிற் புலிவிற்றிருப்ப உம்பரியானை ஒரெட் டினுக்கும் தம்ப மென்னத் தனித்தனி திசைதொறும் விசையத் தம்ப நிற்பப் பசிப்பகையானது தீங்கு நீங்க மன்னுயிர் தழைப்ப மனுவாறு விளங்க மாதவர் தவமும் மங்கையர் கற்பும் ஆதி அந்தண ராகுதிக் கனலும்
செம்பொன் வீர சிம்மாசனத்துப் புவனமுழுதுடை யாளொடும் வீற்றிருந்தருளிய இராஜகேசரிவன்மரான திரிபுவனச் சக்கரவர்த்திகள் குலோத்துங்க சோழ தேவர்-”
(அனபாய சோழன்)
“இந்திரன் முதற் றிசாபாலர் எண்மருமொரு வடிவாகி வந்தபடி தரநின்று மனுவாணை தனிநடாத்தி”
(இரண்டாம் இராசராசன்)
“சமையமாறுந் தலையெடுப்பத் தருமமு மறையுமோங்கி, அமைவில்லா மனுவொழுக்க மாதியாம் படி
நிலைநிற்க” (இரண்டாம் இராசாதிராசன்)
“சீர்மன்னி இருநான்கு திசைவிளங்கு திருமடந்தையும்
போர்மன்னு சயமடந்தையும் புவிமடந்தையும் மணம்புணர அருமறைகள் நெறிவாழ அருந்தமிழோர் கிளை வாழப் பொருவில்மனு நெறி வாழப் பொன்மகுடம்
கவித்தருளி' (மூன்றாம் இராசராசன்)
சோழ மன்னர்கள் கருத்துநிலையில் மனுதர்மத்தை இராச தர்மமாகப் போற்றினர். பிற்காலச் சோழர்கள் எல்லோரும் மனுதர்மத்தை நடத்துவதற்கு முடிசூடினார்களென்றும் அதனை அறமாகக் கொண்டு ஆட்சி புரிந்தனரென்றும் அவர்களின் மெய்க்கீர்த்திகள் கூறும். அந்த மரபின் காரணமாக மனுவேந்தன் என்பது சோழமன்னனுக்குரிய அடைமொழியாகி விட்டது. அதன் அடிப்படையிலேயே மனுச்சோழனைப் பற்றிய மரபுவழியான கதையைப் புரிந்துகொள்ள வேண்டும்.
பாண்டிய மன்னரிற் சிலரை மனூபமன் (மனுவுக்குச் சமமானவன்) என்று செப்பேடுகள் சில குறிப்படுகின்றன. “மனுதர்சித மார்க்கத்தினாற் குருசரிதங் கொண்டாடி” என்னும் தொடர் அவற்றிலே அரசரைப் பற்றிய வர்ணனையாக
இந்துக்கலைக்களஞ்சியம்

வருகின்றது. இவ்வாறு மனுதர்மசாஸ்திரத்தைப் பாராட்டியமை போன்று வேறெந்த தர்மசாஸ்திர நூலையும் பாராட்டும் மரபில்லை.
ஸ்மிருதிகள் உற்பத்தியிலே தெய்வீகமானவை என்பது ஐதீகம். அதன் காரணமாக அவை ஆதாரபூர்வமானவை என்று கொள்ளப்பட்டன. மானவதர்ம சூத்திரம் என்றவொரு பூர்வீகமான நூலை ஆதாரமாகக் கொண்டு மனுதர்ம சாஸ்திரம் எழுதப்பட்டதென்று சிலர் கருதுவர். அதிலுள்ள செய்யுள்கள் சில வசிஷ்ட தர்மசூத்திரத்தில் மேற்கோள்களாக வருகின்றன. தர்மம் பற்றிய விதிகள் தெய்வீக மானவை என்றும் அவை பிருகு முதலான முனிவர்களுக்கு இறைவனால் உபதேசஞ் செய்யப்பட்டவை என்றும் மனுஸ்மிருதியிலே சொல்லப்படுகின்றது.
மனுஸ்மிருதியின் காலம் பற்றி உறுதியான முடிவெதனையுங் கூறமுடியாது. அது கி.பி.200-கி.மு. 200 ஆகியகாலத்துக்குட்பட்ட தென்று கொள்ளலாம். பல தடவைகளாக அதிலே மாற்றங்கள் ஏற்பட்டிருத்தல் கூடும். மனுவின் நூல் நாரதர், மார்க்கண்டேயர், சுமதி என்போரால் வெவ்வேறு காலப்பகுதிகளிலே சுருக்கப் பெற்றதென்று நாரத ஸ்மிருதி குறிப்பிடுகின்றது.
பிறப்பிலிருந்து மரணபரியந்தமாக ஒருவர் செய்யவேண்டிய கடமைகளும் மனுதர்மசாஸ்திரத்திலே விளக்கப்படுகின்றன. கலியாண முறைகள், இல்லற தர்மங்கள் விளக்கப்படுகின்றன. இராசதர்மம் பற்றிய தனியான விரிவான பகுதி அதிலுண்டு. அரசனும் ஆட்சியலுவலரும் நிறைவேற்ற வேண்டிய பணிகளும் அவர்களுக்கு வேண்டிய தகைமைகளும் அதில் விளக்கப்படுகின்றன. தேச, சமூக வழமைகள், சட்டமுறைகள், நீதிபரிபாலனம் முதலிய யாவும் அதிலே விவரிக்கப்படுகின்றன. வாழ்வியல் தொடர்பான பிரதானமான எல்லா விடயங்களைப் பற்றியும் அதில் விவரங்கள் காணப்படுகின்றன. அதனைப் போன்று வேறெந்த ஸ்மிருதி நூலும் அவற்றைப் பற்றி விரிவாகச் சொல்வதில்லை. அதனாற் பயன்பாடு கருதி மனுநூலையே எல்லோரும் விரும்பிக் கற்றனர்.
மனுஸ்மிருதிக்குப் பலர் விரிவான உரைகளை எழுதியுள்ளனர். காலப்போக்கில் அந்நூல்களும் மூல நூல்களுக்குரிய முக்கியத்துவத்தைப் பெற்றுள்ளன. மனுஸ்மிருதியின் உரைகாரர்களில் ஒருவரான மேதாதிதி ஒன்பதாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். கோவிந்தராஜர் எழுதியவுரை 11 ஆம் நூற்றாண்டிற்குரியது. குல்லூக பட்டர் 13ஆம் நூற்றாண்டில் எழுதிய பாடியமும் மிகப் பிரசித்தமானது.
இராச தர்மம்
இந்துக்களின் அரசியற் சிந்தனையில் அரசியல் முதலான யாவற்றுக்கும் தர்மமே ஆதாரமானது. அரசன் “தர்மத்தின் காவலன்' என்ற கோட்பாடு வேதகாலம் முதலாக வழங்கி வந்த ஒன்றாகும். தர்மத்தை நிலைநாட்டுவது அரசனுடைய கடமையாகும். தர்மத்தோடு கொண்டுள்ள தொடர்பினால் அரசன் சிறப்புகளைப் பெறுகின்றான். குடிகளைக் காப்பாற்றுவது
TO3

Page 136
மகாயாகத்துக்குச் சமமானதென்று ஸ்மிருதி நூல்கள் சொல்லும், அரசன் தனது கடமைகளை நிறைவேற்றுவதனால் இராச்சியத்திலே சுகபோகங்களும் வளமும் உண்டாகின்றன. ஒழுக்கம், கல்வி, நல்லோரிணக்கம், வீரம், சாதுரியம், விழிப்புணர்ச்சி முதலான இயல்புகள் பொருந்தியவனாக மன்னன் இருக்கவேண்டும் என்பதைச் ஸ்மிருதி நூல்கள் வலியுறுத்துகின்றன. மன்னன் தனது தவவலிமையால் அரசபதவியைப் பெறுகிறான் என்பார் நாரதர். ஒருவன் செய்த குற்றத்துக்குக் கார்ஷாபனம் ஒன்று தண்டமாக விதிக்கப்பட்டால் அதே குற்றத்தைப் புரிகின்ற அரசனுக்கு 1,000 கார்ஷாபனம் அபராதமாகும் என்பதே விதி என்பார் மனு.
தர்மசாஸ்திரங்கள் விவரிக்கின்ற அரசியல், முடியாட்சி முறையினை அடிப்படையாகக் கொண்டது. மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம் என்பதே அவற்றின் ஒருமித்த கருத்தாகும். அரசன் இல்லாதவிடத்து அராஜகம் தோன்றும். சமுத்திரத்திலே சிறுமீன்களைப் பெருமீன்கள் விழுங்குவதைப் போலவும் வனத்திலே மிருதுவான மிருகங்களைக் கொடிய விலங்குகள் கொன்று தின்னுவதைப் போலவும் மனிதர்களிடையே வலியார் மெலியாரைத் துன்புறுத்துவர். எனவே அராஜகம் என்பது தவிர்க்கப்பட வேண்டியது. அரசனை அபிஷேகஞ் செய்து அவனுக்குக் கட்டுப்படுவதன் மூலமே அராஜகத்தைத் தவிர்த்துக் கொள்ளலாம் என்பது மனுமுதலியோரின் கருத்தாகும்.
அரசன் இந்திரன், வருணன், அக்கினி, யாமன் முதலிய தேவர்களின் அம்சங்கள் பொருந்தியவனென்று மனு முதலியோர் சொல்வர். அவனுடைய மகிமையினையும் குடிகள் அரசனுக்கு அடங்கியிருக்க வேண்டிய அவசியத்தையும் வலியுறுத்தும் நோக்குடன் அரசனுடைய தெய்வாம்சங்கள் பற்றிய கருத்துக்களைக் குறிப்பிட்டனர்.
தர்மசாஸ்திரங்கள் அரசனுடைய இயல்புகளையும் கடமைகளையும் தேவர்களுக்குரியவற்றோடு ஒப்பிடுகின்றன. ஆயினும் இராசனை ஈஸ்வரனாகக் கொள்ளும் சிந்தனை தர்மசாஸ்திரங்களுக்கு அன்னியமானது. 9!60060 ] உருவகப்படுத்தும் அரசன் தர்மத்தின் காவலன்; தர்மத்தினாற் கட்டுப்பட்டவன். தர்மத்திலிருந்து விலகிச் செல்லுமிடத்து அவன் தண்டனைக்குரியவனாகி விடுகின்றான்; அவனையும் சுற்றத்தவரையும் இராச்சியத்தவரையும் தர்மம் அழித்துவிடும். இந்தக் கருத்தினையே அரைசியல் பிழைத்தோர்க்கு அறங் கூற்றாவதும் என்று இளங்கோ சிலப்பதிகாரத்தில் மிக அழுத்தமாகக் கூறுகின்றார்.
அரசனைப் பற்றி மனு கூறுவன கெளடில்யரின் கருத்துகளை ஒத்தனவாகும். அவன் வேதம், பொருளியல், தத்துவம் ஆகியவற்றைத் துறைபோகக் கற்றிருத்தல் வேண்டும். கற்ற கல்விக்கு தக்க ஒழுக்கமுடையனாக விளங்க வேண்டும். ஐம்புலன்களையும் கட்டுப்படுத்த வல்ல ஒருவனால் மட்டுமே குடிகளின் மீது அதிகாரஞ் செலுத்த முடியும். அவன் தனது
fó4

கடமைகள் தொடர்பாக இரவு பகலாக விழிப்புடனிருந்து கருமங்களைக் கவனித்தல் வேண்டும். இச்சை, பேராசை, கோபம் என்பவற்றால் ஏற்படும் தீய பழக்கங்களை அரசன் தவிர்த்துக்கொள்ள வேண்டும். அவன் வேளாண்மையினை விருத்தி செய்யவேண்டும்; போக்குவரத்துப் பாதைகளை அமைக்க வேண்டும்; காடுகளை அழித்து நாடுகளை உருவாக்க வேண்டும்; சுரங்கங்களை நன்கு பயன் கொள்ளவேண்டும்; குடியில்லா நிலங்களிலே குடியிருப்புகளை ஏற்படுத்த வேண்டும்; கொத்தளங்களையும் பாலங்களையும் அமைத்தல் வேண்டும்; யானைகளைப் பிடித்துப் பழக்குதல் வேண்டும். அரசன் தனது கடமைகளை இடைவிடாது செய்யவேண்டும்.
நாள்தோறும் அரசன் செய்யவேண்டிய கருமங்களைப் பற்றியும் மனு முதலியோர் குறிப்பிடுகின்றனர். அவன் அதிகாலையில் எழுந்து வழிபாடுகளைச் செய்யவேண்டும்; பிராமணரைத் தரிசிக்க வேண்டும். அதன் பின் சபாமண்டபத்திலிருந்து தன்னைப் பார்க்க வருவோரைக் காணவேண்டும். அதன் பின்பு அவன் அமைச்சர்களோடு ஆலோசனை நடத்தவேண்டும். ஏழு அல்லது எட்டு அமைச்சர்களை அரசன் நியமிக்க வேண்டுமென்று மனு சொல்வார். அவர்கள் அரசபதவிகளைப் பெற்றிருந்தவர்களின் பரம்பரையினராதல் வேண்டும்; அவர்கள் வீரவான்களாயும் படைக்கலப் பயிற்சி பெற்றோராயும் இருத்தல் வேண்டும்; அரசனுக்கு விசுவாசமான சான்றோர் குடும்பங்களைச் சேர்ந்தவர்களாய் இருத்தல் வேண்டும். அரசன் அமைச்சர்களில் ஒவ்வொருவரோடும் தனித்தனியாக ஆலோசனை நடத்தவேண்டும். அதன் பின்பு அவர்கள் எல்லோரையும் ஒன்றாகக் கூட்டி ஆலோசனைகளைப் பெற்றுக் கொள்ள வேண்டும். மன்னனொருவனாலே தனியாக அரசாட்சி செய்யமுடியாது என்பதால் அரசன் தனக்கு உதவியாக அமைச்சர்களையும் அதிகாரிகளையும் அலுவலர்களையும் நியமிக்க வேண்டும் என்பது எல்லோரதும் கருத்தாகும். அரசன் அமைச்சர்களை நியமிப்பதோடு மந்திரி பரிஷத் என்னும் அமைச்சரவையினையும் உருவாக்க வேண்டும் என்பார் கெளடில்யர். நிர்வாகம் தொடர்பான நடவடிக்கைகளும் மந்திராலோசனையின் பின் நடைபெறவேண்டும் என்பது அவரின் கோட்பாடாகும்.
அரசன் ஆலோசனை பெறுமிடத்து, அமைச்சர்கள் ஒவ்வொருவரையுந் தனித்தனியாகச் சந்தித்த பின்பே அவர்கள் அனைவரோடும் கூட்டாக ஆலோசிக்க வேண்டும் என்பது அவரின் கருத்தாகும். அமைச்சர்களில் ஒருவரை அரசன் பிரதான அமைச்சராக நியமித்தல் வேண்டும்.
விவசாயம், நெசவுத்தொழில், மேச்சல் நிலங்கள், சுரங்கங்கள், வாணிபம், வரிகள், இராணுவம், வனங்கள், அளவைக் கருவிகள், ஆவணங்கள், பண்டகசாலை, கணக்குப் பரிசோதனை முதலிய துறைகள் ஒவ்வொன்றுக்கும் பொறுப்பாக அதிகாரிகளையும் அத்தியகூஷர்களையும் அரசன்
இந்துக்கலைக்களஞ்சியம்

Page 137
நியமிக்கவேண்டும். பிரதேச அடிப்படையிலும் பல்வேறு மட்டங்களிலுள்ள அலுவலாளரை அரசன் நியமிக்கவேண்டும். கிராமங்கள் ஒவ்வொன்றுக்கும் பொறுப்பாகக் கிராமிக என்னும் பதவியாளரை அரசன் நியமிக்க வேண்டுமென்று மனு கூறுவார்.
புரவலன் என்ற காரணத்தால் அரசன் குடிகளிடமிருந்து இறை கடமைகளைக் கொள்வதற்கு உரிமையுடையவன் என்பதில் கெளடில்யருக்கும் தர்ம சாஸ்திரகாரருக்கும் இடையிற் கருத்தொற்றுமை உண்டு. "நிலம், அதிலுள்ள காடுகளை வெட்டிச் செய்கை பண்ணுபவனுக்கு உரியதாகும் ; வனவிலங்குகள் அவற்றை வேட்டையாடுவோருக்கு உரியனவாகும்” என்பது உடைமை பற்றிய மனுவின் கருத்தாகும். முறை செய்து காப்பாற்றும் மன்னனே குடிகளிடமிருந்து இறைகொள்வதற்கு உரிமையுடையன். காவலனுக்குரிய கடமைகளை அவன் செய்யாதவிடத்து அந்த உரிமையை அரசன் இழந்துவிடுவான்; குடிகளின் பழிகள் யாவும் ஒன்று திரண்டு அவனைச் சூழ்ந்துவிடும். “கன்று, தேன்வண்டு, ஒட்டுண்ணி ஆகியன சிறிதளவாகத் தமக்கு வேண்டிய ஊணை உறிஞ்சிக் கொள்வது போல அரசன் ஆண்டுதோறும் குடிகளிடமிருந்து அளவளவாக வரிகளைப் பெற்றுக்கொள்ளுதல் வேண்டும்” என்று மனுதர்ம சாஸ்திரம் கூறும்.
நிலவரி மொத்த விளைவில் ஆறிலொன்றாகவோ, எட்டிலொன்றாகவோ, நான்கிலொன்றாகவோ சூழ்நிலைக்கேற்ப அமைதல் கூடும். மந்தைகளிலும் தங்கத்திலும் இரண்டு வீதமானவை அரசனுக்குரியவை என்பது மனுவின் கருத்து. மரங்கள், மாமிசம், வெண்ணெய், நெய், தேன், வாசனைப் பொருட்கள், மருந்து மூலிகைகள், பிரப்பம் பொருட்கள், தோல்கள், மட்பாண்டங்கள், உலோகப் பொருட்கள் முதலியவற்றின் பெறுமதியில் ஆறிலொன்றினை அரசன் வரியாகக் கொள்ளலாம்.
வணிகர்மீது விதிக்கப்படும் வரிகளைப் பொறுத்தவரையில் அவற்றின் கொள்விலை, விற்பனவு விலை, போக்குவரத்து வசதிகள், சுங்கத் தீர்வைகள், தொழில் காரணமாக அவர்களுக்கு ஏற்படும் மற்றுஞ் செலவுகள் என்பவற்றைக் கருத்திற் கொண்டே அவற்றை நிர்ணயிக்க வேண்டும் என்பது மனுவின் கோட்பாடாகும். பெறுமதியின் ஐந்து வீதத்தை வரியாகக் கொள்ளலாம் என்று சிலவிடங்களில் அவர் கூறுவார். போக்குவரத்துத் தொடர்பான தொழில்களில் ஈடுபடுவோர் எல்லோரும் ஒரு குறிப்பிட்டளவு வரியினை அது சொற்பமாயினும், அரசனுக்குச் செலுத்தவேண்டும். வரிசெலுத்தாதவர்களின் சொத்துகள் யாவும் பறிமுதலாகும். சுங்கவரித் தலங்களில் ஏமாற்றுவித்தைகளில் யாராவது ஈடுபட்டால் அவர்கள் இறுக்க வேண்டிய தொகையின் எட்டுமடங்கு முதல் அபராதமாகும். கூலிக்கு வேலை செய்வோர் அனைவரும் மாதமொன்றுக்கு ஒருநாள் என்றபடியாக ஒவ்வொரு வருடமும் 12 நாட்களுக்கு அரசனுக்கு ஊழியஞ் செய்தல் வேண்டும்.
இந்துக்கலைக்களஞ்சியம்

காணாமற்போய்விட்ட பெறுமதிமிக்க பொருள்கள் கண்டெடுக்கப்படுமிடத்து அதில் ஆறிலொன்றோ, பத்திலொன்றோ, பன்னிரண்டிலொன்றோ அரசனுக்கு உரியதென்று கொள்ளப்படும். அது தற்காலிகமாக அதிகாரிகளின் பொறுப்பில் வைக்கப்படும். நிலத்திலுள்ள புதையல்களில் அரைப்பங்கு அரசனுக்குரியது. அரசன் பூபதி என்ற காரணத்தால் நிலத்தின் கீழிருந்து பெறப்படும் கனிவளங்களில் அரைவாசியும் அவனது உடைமையாகும். பாதை படவுகளிற் கொண்டு செல்லப்படும் பொருள்கள் மீதும் சொற்பமான வரிகள் கொள்ளப்பட்டன. “பாதை" ஒன்றில் ஏற்றிச் செல்லப்படும் வண்டி ஒன்றுக்கு ஒரு பணமும் ஆட்சுமை ஒன்றினுக்கு அரைப்பணமும் பொதிகளை ஏற்றிச் செல்லும் வண்டிக்கு அவற்றின் பெறுமதிக்கேற்பவும் வரிகொள்ள வேண்டும் என்பது மனுவின் கூற்றாகும்.
பிற்காலத்து நூலான பிருகத் பராசர ஸ்மிருதியிலே பாஷாண்டர்கள், சூதாட்டக்காரர் பரத்தையர் என்போரின் பொருளை அரசன் அபகரித்துக் கொள்ளலாம் என்று சொல்லப்படுகின்றது. ஆனால் இத்தகைய சிந்தனை நடைமுறைச் சாத்தியமற்றது என்பதே வரலாறாகும். பிராமணர்கள் தங்கள் கடமைகளின் மூலமாகப் பல நன்மைகள் செய்வதால் அவர்களுக்கு வரிவிலக்குண்டு என்கின்றது விஷ்ணு ஸ்மிருதி. எனினும் பிரம்மதேயங்கள் மூலம் மன்னர் வரிகளைச் சேர்த்தமை பற்றிப் பல நூற்றுக்கணக்கான ஆவணங்களின் சான்றுண்டு. நிலவரி ஆறிலொன்று என்பதும் வாணிபவரி பத்திலொன்று என்பதும் அந்நூலாசிரியரின் கோட்பாடாகும். அதுவே பொதுவழமையுமாகும். பிறதேசங்களில் வாணிபம் செய்வோர் ஐந்து வீதம் வரியாகக் கொடுக்க வேண்டுமென்று அவர் கொள்வார். இடையர், பொற்கொல்லர், நெசவாளர் என்போர் இரண்டு வீதம் வரி செலுத்தவேண்டும் என்றும் அவர் சொல்வார். மேலும் அவரின் கருத்துப்படி கிழங்குவகைகள், கனி வர்க்கங்கள், திராவகங்கள், மருந்து மூலிகைகள், வாசனைச் சரக்குகள், மரம், தோற்பொருட்கள், மட்பாண்டங்கள் என்பவற்றின் மீது 16 2/3% வரி கொள்ளப்படும். ஊழியச்சேவை மாதமொன்றுக்கு இரு நாட்கள் என்பார் அவர். ஆயினும் ஊழியம் மாதமொன்றுக்கு ஒருநாள் என்பதே பொதுவழமை.
சட்டமும் நீதிபரிபாலனமும்
இந்து சமுதாயத்தின் நீதிமுறையினை விவரமாக விளக்கும் மரபொன்று மனுஸ்மிருதியில் ஆரம்பமாகி அதற்குப் பிந்திய தர்மசாஸ்திரங்களிற் பெரு வளர்ச்சி பெற்றது. யக்ஞயவல்க்ய(ர்), நாரதர்), பிருகஸ்பதி என்போரின் பெயர்களால் வழங்கும் நூல்கள் இந்த வகையில் அதிக சிறப்புடையவை. சட்டம் தொடர்பான அம்சங்களைப் பற்றி அர்த்தசாஸ்திரத்திலும் சில குறிப்புகள்
உள்ளன.
தர்மம் (மறைநூல் வழக்கு), வியவகார(ம்) (ஒப்பந்தம்), சாரித்திரம் (மேலோர் வழக்கு), ராஜசாசனம் (அரசரின் கட்டளைகள்) என்னும் நான்கும் சட்டத்திற்கு மூலமானவை;
f65

Page 138
இவற்றுள் முன்னைய ஒவ்வொன்றும் அதன் பின்னையதைக் காட்டிலும் வலியுடையது என்பது தர்மசாஸ்திரங்களின்
பொதுவான கோட்பாடாகும். வைதீக மரபிலுள்ள இந்தக் கோட்பாடு கெளடில்யரால் மறுக்கப்பட்டது. சட்டத்திற்கு மூலமான நான்கிலும் பின்னைய ஒவ்வொன்றும் அதன் முன்னதைக் காட்டிலும் வலிகொண்டது என்பதே அவரின் உறுதியான கருத்தாகும். அந்த வகையில் ராஜசாசனம் மற்றைய எல்லாவற்றிலும் வலுவானது; அதிகாரபூர்வமானது. கெளடில்யரின் சிந்தனை, மரபுபிறழ்ந்தது; புதுமையானது; எல்லா அதிகாரங்களும் அரசருக்குரியவை என்ற அரசியற் கோட்பாட்டிற்கு இசைவானது. சட்டம் தொடர்பாகச் சாஸ்திரம், தர்மநியாயம் என்பவற்றுக்கிடையில் முரண்பாடு ஏற்படுமிடத்து தர்மநியாயமே ஆதாரபூர்வமானதென்று கொள்ள வேண்டும் என்பார் கெளடில்யர். இது தர்மசாஸ்திர மரபிற்கு ஒவ்வாதவொன்று. வேதசாஸ்திரங்கள் வழியான மரபுகள் அரசனது தீர்மானங்களைக் காட்டிலும் பிரதானமானவை என்பது தர்மசாஸ்திரங்களின் பொதுவான கருத்தாகும்.
வழமையாகிய சட்டங்கள், சாஸ்திரங்களிலும் எழுத்து வடிவம் பெறாத மரபுகளிலும் அடங்கியுள்ளன. அவை தேவர்களின் நியதிகளையும் முன்னோர்களின் அறிவு, அனுபவங்களையும் ஆதாரமாகக் கொண்டவை. சாஸ்திரங்கள் வழியாகவும் மறைநூல்கள் மூலமாகவும் தலைமுறை தலைமுறையாகச் செவிவழியாகச் சமுதாயப் பிரிவுகளினாற் பேணப்பட்டு வந்த மரபுகளும் சட்டத்திற்கு மூலமானவை. அரசனும் அரசின் எல்லாத் துறைகளைச் சேர்ந்தவர்களும் அவற்றை அனுசரிக்க வேண்டும். அவற்றால் அவர்கள் அனைவரும் கட்டுப்படுகின்றனர் என்பது தர்மசாஸ்திரங்கள் எல்லாவற்றுக்கும் பொதுவான சிந்தனையாகும். காலதேச வர்த்தமானங்களுக்கு அமைவாக அவற்றைப் பயன்படுத்துவதற்கும் தெளிவுபடுத்திக் கொள்வதற்கும் தர்மசாஸ்திரங்கள் பலரால் எழுதப்பட்டன. அவற்றுக்கு உரைகளும் விருத்தி உரைகளும் எழுதப்பட்டன. அவை அனைத்தும் காலப்போக்கிலே பலவாகிப் பெருகி தர்மசாஸ்திரம் என்னும் பொதுப் பெயரால் வழங்கிவந்துள்ளன.
நீதிமன்றங்கள்
பத்து அல்லது மூன்று உறுப்பினர்களைக் கொண்ட பரிஷத் என்னும் சபை நீதிபரிபாலனத்துக்குப் பொறுப்பாக அமைதல் வேண்டும் என்பது மனுவின் கருத்தாகும். சபை மூவரைக் கொண்டதாய் இருப்பின் அவர்களில் ஒவ்வொருவரும் இருக்கு, யசுர், சாமம் ஆகிய வேதங்கள் ஒவ்வொன்றிலே பாண்டியத்தியம் பெற்றவர்களாய் இருத்தல் வேண்டும். பத்துப் பேரைக் கொண்ட சபையில் மேலதிகமாக நியாயம், மீமாம்சை, நிருக்தம் என்பவற்றில் ஒவ்வொன்றிலே புலமை பெற்றவர்களையும் தர்மசாஸ்திரங்களைக் கிரமமாக ஒதுவானொருவனையும் முதல் மூன்று வர்ணங்களைச் சேர்ந்த ஒவ்வொருவரையும் உறுப்பினர்களாகக் கொண்டிருத்தல் வேண்டும்.
106
 

வழக்கு வகைகள்
வழக்குகளுக்கு ஏதுவான காரணங்களை முதன்முதலாக மனுவே வகைப்படுத்திக் கூறியுள்ளார். g|ഞ ഖ மேல்வருவனவாகும். (1) கடன் கொடாமை (2) முதலீடு, உத்தரவாதம், (3) உரிமையில்லாதனவற்றை விற்றல் (4) பங்காளிகளின் விவகாரங்கள் (5) நன்கொடைகளை மீளப்பெறுதல் (6) கூலி கொடாமை (7) ஒப்பந்தங்களை நிறைவேற்றாமை (8) கொள்வனவு விற்பனவுகளைத் தடை செய்தல் (9) பண்ணையார் - பணிமக்கள் தகராறுகள், (10) எல்லைத் தகராறுகள் (11) அடித்துத் துன்புறுத்துதல் (12) I DT6ÕTL 5 JGGD (3) களவு (14) கொள்ளை, வன்செயல் (15) கற்பழித்தல், பிறன்மனையாளைக் கெடுத்தல் (16) கணவன் - மனைவி விவகாரங்கள் (17) பாகப்பிரிவினை (18) சூதாட்டம்.
வன்செயல்களும் தண்டனைகளும்
குற்றங்களுக்கு ஏற்றவாறு உறுத்துதல், கண்டனம், அபராதம், உடல் வருத்துதல் என்ற வகையிலே தண்டனைகள் அமையவேண்டும் என்பார் மனு, சில பெருங்குற்றங்களுக்குத் தேசப்பிரஷ்டமும் தண்டனையாகும். “குற்றத்தின் இயல்பு அதற்கான நோக்கம், இடம், காலம் என்பவற்றையும் குற்றவாளி தண்டனையைத் தாங்கிக் கொள்ளும் சக்தியையும் தீர்க்கமாக ஆராய்ந்து அறிந்த பின்பு, குற்றவாளிகளுக்கு வேண்டிய தண்டனையை அரசன் வழங்கவேண்டும்” “நீதியில்லாத தண்டனை வழங்குவதன் மூலம் அரசனுடைய பேரும் புகழும் மக்களிடையே மங்கிவிடும். மறுமையில் வானுலகத்து வாழ்க்கையினையும் இழக்க நேரிடும். ஆதலால் அரசன் கவனமாகத் தண்டனை வழங்க வேண்டும்.”
“குற்றம் புரியாதவர்களைத் தண்டிக்குமிடத்தும் குற்றம் புரிந்தவர்களுக்கு உரிய தண்டனை வழங்காதவிடத்தும் இவ்விதமான கெடுதிகள் ஏற்படும்” என்பது மனுவின் கூற்றாகும். பிராமணர், பெண்கள், பாலகர்கள் ஆகியோரைக் கொலை செய்வோருக்கும் அமைச்சர்களின் விசுவாசத்தைக் கெடுக்கும் முயற்சிகளில் ஈடுபடுவோருக்கும் இராசதுரோகம், பொய்ப்பிரகடனங்கள் ஆகியவற்றைச் செய்வோருக்கும் மரண தண்டனை உரியதாகுமென்று மனுதர்மசாஸ்திரங் கூறுகின்றது. கொள்ளையிடுவோர், காசு பணங்களைப் பறிமுதல் செய்வோர், பொது நலனுக்கு விரோதஞ் செய்வோர், பிராமணர்களுடைய பசுக்களைக் கவர்ந்து செல்வோர் முதலானோருக்கு உடலுறுப்புகளைச் சேதம் செய்யவேண்டும். ஒரு நகரத்தினுடைய சுவர்களை இடித்தல், அதன் அகழிகளைத் தூர்த்தல் போன்ற சமுதாயத்தின் பாதுகாப்பிற்கு விரோதமான செயல்களில்
இந்துக்கலைக்களஞ்சியம்

Page 139
ஈடுபடுவோரை நாடு கடத்தல் வேண்டும். சூதாடுவோர், வேஷதாரிகள், கொடுமை புரிவோர், விலக்கப்பட்ட தொழில்களில் ஈடுபடுவோர், மதுபானங்களை விற்பனை செய்வோர் முதலியோருக்கும் அத்தகைய தண்டனை வழங்க வேண்டுமென்று சொல்லப்படுகின்றது. பாலங்களை உடைத்தல், கோயில், அரண்மனை ஆகியவற்றின் கொடிகளைச் சேதப்படுத்துதல், வழிபாட்டிற்குரிய படிமங்களை உடைத்தல், கிணற்றிலுள்ள கயிறு, நீரேந்து கலம் ஆகியவற்றைக் களவாடல், தண்ணிர்ப் பந்தலைச் சேதப்படுத்துதல் முதலிய குற்றங்களைப் புரிவோருக்கு அபராதம் விதிக்கப்படுவதோடு அவர்களிடமிருந்து நஷ்ட ஈடும் கொள்ளப்பட வேண்டும்.
சில குறிப்பிட்ட கொடுமையான குற்றங்கள் புரிவோருக்கு மரண தண்டனை வழங்கவேண்டுமென்று கெளடில்யரும் கொள்வார். தகராறு காரணமாகப் பிறரைக் கொலை செய்பவரைச் சித்திரவதை செய்து கொல்ல வேண்டும் என்றும் அவர் சொல்வார். பொய் வதந்திகளைப் பரப்புதல், வீடுகளை உடைத்தல், களவு அரண்மனைக்குரிய யானைகள், குதிரைகள், வண்டிகள் ஆகியவற்றைச் சேதப்படுத்துவோருக்கும் மரணதண்டனை உரியதென்று அர்த்த சாஸ்திரம் குறிப்பிடுகின்றது. அரசாங்கத்தைக் கவிழ்ப்பதற்குச் சதிசெய்தல் அரசனுடைய அந்தப்புரத்திலே பலோற்காரமாக நுழைதல், அரசனுக்கெதிராகக் கிளர்ச்சி புரியுமாறு வனவாசிகளைத் தூண்டிவிடுதல், கோட்டைகளிலும் எல்லைப் புறங்களிலும் இராணுவத்திலும் துரோகச் செயல்களைப் புரியுமாறு தூண்டுதல் ஆகியவற்றில் ஈடுபடுவோரைத் தீயிட்டுக் கொல்ல வேண்டும் என்பார் மனு, கணவன், குரு பெற்ற பிள்ளை ஆகியோரைக் கொல்லுமிடத்தும் பிறரது உடைமைகளுக்கு தீவைக்குமிடத்தும் அவற்றில் ஈடுபடுவோரை பெண்களாயினும் சித்திரவதைப்படுத்திக் கொல்லவேண்டும் என்பது கெளடில்யரின் கருத்தாகும்.
குடியியல் வழக்குகள் தொடர்பான சட்டங்கள்
இவ்விடயந் தொடர்பான சட்டங்கள் மனுமுதலியோரின் நூல்களிலே மிக விரிவாக விளக்கப்படுகின்றன. ஆயினும், இங்கு முக்கியமான ஒரு சில அம்சங்களை மட்டுமே குறிப்பிட முடியும். வட்டி வீதம் பற்றிப் பொதுவான விதிகள் சொல்லப்படவில்லை. மாதம் ஒன்றுக்கு 2 முதல் 5 வீதம் வட்டியினைப் பெறலாம் என்று சொல்லப்படுகின்றது. ஆயினும், நடைமுறையில் ஆண்டொன்றுக்கு 12 வீதம் என்பதே வழக்கமாகும் என்பதைப் பிற்கால ஸ்மிருதிகள் மூலம் அறிய முடிகின்றது. சொத்துக்களை ஒருவர் பத்து வருடங்களுக்கு மேலாக ஆண்டனுபவிக்குமிடத்து அவை அவரின் உடைமையாகிவிடும். ஆயினும் பாலர்களின் உடைமைகள், முதலீடுகள், பெண்களின் உடைமைகள், எல்லைப்புறங்கள், அரசனுக்குரிய சொத்துக்கள், வேதம் ஒதுகின்ற பிராமணரின் உடைமைகள் என்பவை இந்த விதிக்குப் புறநடையானவை. மதுபோதையிலுள்ளவர், புத்தி சுவாதீனமற்றவர், பாலர், மிகுந்த வயோதிபர், பிறரிலே தங்கியிருப்பவர் என்போர் செய்யும் ஒப்பந்தங்கள் எல்லாம் செல்லுபடியற்றனவாகும். சட்டத்திற்கு முரணான ஒப்பந்தங்களும் சான்றோர் வழக்கிற்கு ஒவ்வாத
இந்துக்கலைக்களஞ்சியம்

உடன்படிக்கைகளும் செல்லுபடியற்றனவாகவே கொள்ளப்படும். தாயபாகம், பெற்றோர்கள் இறந்த பின்பு நடைபெறவேண்டிய ஒன்றாகும். பாகப்பிரிவினையில் மூத்த மகனுக்கு முன்னுரிமையுண்டு. அத்துடன் விவாகஞ் செய்யாத சகோதரிகளுக்கும் பெற்றோர்களின் உடைமைகளிற் பங்குண்டு. பாகப் பிரிவினை பற்றி தர்மசாஸ்திர நூல்கள் மிகவிரிவாகக் குறிப்பிடுகின்றன. அவற்றுட் காலத்தாற் பிற்பட்டனவும் உரை நூல்களுமே தேசவழமைகளை ஒரளவிற்கு உள்ளவாறு பதிவு செய்கின்றன.
நீதி நிர்வாகம்
மக்களைக் காப்பாற்றுவது அரசாங்கத்தினுடைய பிரதானமான கடமையென்பதுவும் நீதி பரிபாலனம் அதிலே இணைபிரியாத அம்சம் என்பதுவும் இந்துக்களின் மரபு வழியான அரசியற் சிந்தனையாகும். அரசனது தண்டனை வழங்கும் அதிகாரத்தைத் தண்டம் என்று மனு கொள்கின்றார். அதனைக் கருமையான வண்ணமுடையதென்றும் சிவந்த கண்களையுடையதென்றும் பயங்கரமானதென்றும் குற்றம் புரிவோர்க்குத் தண்டனை வழங்குவதென்றும் உருவகிக்கின்றார். பிரமனின் மகிமையின் பிரதிபலனான தண்டமே உண்மையில் ஆட்சி புரிகின்றதென்று அவர் கொள்வார். தண்டனை குற்றத்திற்கேற்ப வழங்கப்படுவது, அது குற்றச் செயல்களைத் தடுக்கும் ஆற்றல் பொருந்தியது என்ற சிந்தனைகள் மனுஸ்மிருதியில் அடங்கியுள்ளன. தண்டனை நீதியானதாக அமைய வேண்டும். அது எல்லோருக்கும் ஒத்த வகையில் வழங்கப்பட வேண்டும். மனு, மேல் வருமாறு சொல்வார். “எங்கு நீதி முறை அநீதியினாற் பாதிக்கப்படுகின்றதோ, எங்கு நீதிபதிகள் நீதி முறைப்படி தண்டனை வழங்காதிருக்கின்றார்களோ அங்கு அவர்கள் அநீதியின் பாணங்களினாலே அழிக்கப்படுகின்றனர்.” நீதி பரிபாலனம் அநீதியினாலும் பொய்யான வாதங்களினாலும் அழிவுறுமிடத்து நீதிபதிகள் பராமுகமாக இருப்பின் அவர்களும் அழிவார்கள். நீதி பரிபாலனம் முறைகேடாகின்றபொழுது அதனால் அது அழியும். நீதி நிலை நிறுத்தப்படுமிடத்து அது எல்லாவற்றையும் நிலை பெறச் செய்யும். "நீதிக்கு விரோதமான செயல்கள் எம்மை அழித்துவிடும் என்பதால் நீதிக்கு மாறானவற்றைத் தவிர்த்துக் கொள்ள வேண்டும்.”
நீதிமன்றிலே அரசன் தலைவனாக இருக்கவேண்டுமென்பது மனுவின் கருத்து. அவன் பிராமணர்களதும் அனுபவமுடைய அத்யக்ஷர்களதும் உதவியோடு நீதி பரிபாலனஞ் செய்ய வேண்டும். அரசனில்லாதவிடத்து பிராமணரொருவரை நீதிமன்றத்தின் தலைவராக அரசன் நியமிக்க வேண்டும். வேதம் வல்ல பிராமணரான அத்யகூஷர் மூவரை துணையாளராக அவன் நியமிக்க வேண்டும். வயல்நிலங்கள், கிராமங்கள் போன்றவற்றின் எல்லைகள் தொடர்பான தகராறுகளில் சமூக, தேச வழமைகளின்படி விசாரணைகளை நடத்தித் தீர்ப்புகள் வழங்கவேண்டும். குளம், கிணறு, நீரூற்று, தேவாலயம் போன்றவற்றைப் பற்றிய பரிசோதனைகள் மூலம் தீர்க்கமான சான்றுகள்
fó7
...' 1994.84.

Page 140
கிடைக்காதவிடத்து சாட்சியங்களை விசாரணை பண்ணித் தீர்ப்பளிக்க வேண்டும். இத்தகைய தகராறுகள் கிராமவாசிகளின்
முன்னிலையிலும் தகராறு கொள்வோரின் முன்னிலையிலும் விசாரிக்கப்பட வேண்டும். ஏகமனதான முடிவின் பிரகாரம் அரசன் எல்லையை வரையறை செய்ய வேண்டும்.
சாட்சி
குற்றவாளி ஒருவன் தன்மீது சுமத்தப்பட்ட குற்றத்தை ஒப்புக் கொள்ளாதவிடத்து வழக்காளி தனது வாதங்களை நிரூபிக்குமுகமாகச் சாட்சியங்களை அழைக்கவேண்டும். அல்லது வேறு சான்றாதாரங்கள் மூலம் அவற்றை நிரூபிக்க வேண்டும். சாதிபேதம் இன்றி எவரையுஞ் சாட்சியாக அழைத்துக் கொள்ளலாம். ஆனால், அத்தகையவர் பேராசையற்றவராகவும் நம்பிக்கையானவராகவும் தனது கடமைகளை நன்கு உணர்ந்தவராகவும் இருத்தல் வேண்டும். வழக்கிலே ஈடுபாடு கொண்டவர்கள், சினேகிதர்கள், சகபாடிகள், பகைவர்கள், பொய், களவு முதலிய குற்றங்களுக்குத் தண்டனை பெற்றவர்கள் போன்றோரைச் சாட்சிகளாக அழைக்கக் கூடாது.
பெண்கள், பிராமணர், ஷத்திரியர், வைசிகர், சூத்திரர், மிலேச்சர் ஆகிய வகுப்புகளைச் சேர்ந்தவர்கள் தத்தம் வகுப்பினரின் சார்பில் சாட்சி வழங்கலாம். ஆயினும், கொலை, வீட்டிலே நடந்த குற்றங்கள், காட்டிலே நடந்த சம்பவங்கள் என்பன தொடர்பான விடயங்களை நேரிற்கண்டு அறிந்தவர்கள் எவரையுஞ் சாட்சியாக அழைக்கலாம். தகைமை சான்ற சாட்சிகளில்லாதவிடத்துப் பாலர், சீடர், உறவினர், அடிமைகள், பணிமக்கள், பெண்கள் ஆகியோரையும் சாட்சிக்கு அழைக்கலாம். வன்செயல், பெண்களைப் பலாத்காரமாகப் புணர்தல், அவமானம், அடித்துத் துன்புறுத்தல் போன்ற பாரிய குற்றங்களைப் பொறுத்தவரையிற் கிடைக்கின்ற சாட்சியங்களைப் பயன்படுத்திக் கொள்ளலாம். சாட்சியங்களைத் தீர விசாரித்த பின்பு முடிவுகளை எடுக்க வேண்டும்.
யக்ஞவல்க்ய ஸ்மிருதி நீதிமன்றங்கள்
சட்டம், நீதிபரிபாலனம் ஆகியவற்றைப் பொறுத்த வரையில் யக்ஞவல்க்யர், பிருஹஸ்பதி, நாரதர் என்போரின் பெயர்களால் வழங்கும் நூல்கள் மனுஸ்மிருதியைக் காட்டிலும் முக்கியமானவை. அந்நூல்களிலே சட்டம், நீதிபரிபாலனம் என்பன பற்றிய விவரங்களே முதன்மை பெறுகின்றன. அவர்களிற் காலத்தால் முற்பட்டவரான நாரதர் மனுஸ்மிருதியிலே காணப்படும் நீதிபற்றிய விடயங்களைச் சுருக்கமாகவும் மிகவும் ஒழுங்குபடுத்தப்பட்ட முறையிலும் விளக்குகின்றார். அரசனது தலைமையில் இயங்கும் நீதிமன்றங்களைப் பற்றி மனுவும் யக்ஞவல்க்யரும் வழங்கும் விவரங்கள் ஒரே விதமானவை. ஆனால், அதற்குக் கீழ்நிலையிலுள்ள நீதிமன்றங்களை ஒரு படி நிலையில் யக்ஞவல்க்யர் வரிசைப்படுத்தும் முறை புதுமையானது. அவர் மேல்வருவன பற்றிச் சொல்வார்.
108
 

1) அரசன் நியமித்த உறுப்பினர்களைக் கொண்ட
தர்மாசனம். 2) நாடு, நகரங்களின் சபையார், மன்றங்கள் (பூக) 3) வணிகர், தொழில் வினைஞர் போன்றோரின் கூட்டுறவு
அமைப்புகள் (ஸ்ரேனி சபைகள்) 4) குடும்பங்கள், குலங்கள் ஆகியவற்றின் சபைகள்.
வழக்கும் விசாரணைகளும்
யக்ஞவல்க்யர் விவகாரத்தின் நான்கு படி நிலைகளைப் பற்றிக் குறிப்பிடுகின்றார். வழக்குத் தாக்கல் செய்யப்படுமிடத்து பிரதிவாதிகளின் முன்னிலையிலே வழக்கு விவரங்கள் பத்திரமாக எழுதப்பட்டு ஒப்படைக்கப்பட வேண்டும். அதிலே ஆண்டு, மாதம், திகதி என்பன குறிப்பிடப்பட வேண்டும். வழக்காளி, பிரதிவாதி ஆகியோரின் பெயர்களும் அவர்களின் சமூகநிலை பற்றிய விவரங்களும் எழுதப்பட வேண்டும். அதனையடுத்து அதற்குரிய உத்தரம் வழக்காளியின் முன்னிலையிலே பத்திரத்தில் எழுதப்படல் வேண்டும். அதனைத் தொடர்ந்து வழக்காளி முன்வைக்கும் சாட்சியங்கள் ஒப்படைக்கப்பட வேண்டும். வழக்குப் பத்திரம் பற்றித் தீர்மானிப்பதற்கு முன்பு அதற்கு எதிரான குற்றச்சாட்டெதுவும் சமர்ப்பிப்பதற்கு இடமளிக்கப்படுவதில்லை. கலகம், வன்செயல் தொடர்பானவை இதற்குப் புறநீங்கலாகும். ஒருவர் மீது வழக்குத்தாக்கல் செய்யப்பட்டிருப்பின் அது தீர்மானிக்கப்படும் வரை அவருக்கெதிராக மேலதிகமாகக் குற்றஞ் சுமத்த இயலாது. வன்செயல், களவு, சரீரத்துன்புறுத்தல், பெண்களை அவமானப்படுத்தல் என்பன தொடர்பான வழக்குப் பத்திரங்களுக்கு உடனடியாகவே உத்தரம் வழங்கல் வேண்டும். வேறு விடயங்களைப் பொறுத்த வரையிலே நீதிமன்றத்தின் எண்ணப்படி கால அவகாசம் வழங்கப்படலாம். வழக்குத் தொடர்பாக வழக்காளி, குற்றவாளி ஆகியோர் தீர்ப்பளிக்கும் வரை பிணைவைத்தல் வேண்டும். வழக்கைப் பொறுத்தவரையில் வழக்குப் பத்திரமும் உத்தரமான பத்திரமும் சமர்ப்பிக்கப்பட்ட பின்பு நீதிமன்றத்திலே ஆதாரங்களை ஒப்படைக்க வேண்டும். ஆவணம், சாட்சி, ஆட்சி என்பனவற்றை ஆதாரங்களாக யக்ஞவல்க்யர் கொள்வார். கடன் சம்பந்தமான விதிகளைப் பற்றிச் சொல்லுமிடத்து ஆவணம், சாட்சி என்பன பற்றிய விவரங்களை அவர் விரிவாக விளக்குகின்றார். இருவர் செய்யும் ஒப்பந்தங்கள் அமைக்கப்பட வேண்டிய விதிகளைப் பற்றிய விவரங்களை அவர் குறிப்பிடுகின்றார்.
அவர் விளக்கும் நீதிமன்றங்களின் செயற்பாடுகள் ஸ்மிருதி நூல்களின் விதிகளை ஆதாரமாகக் கொண்டவை. மேலும் வழமை சமச்சீரான நோக்கு என்பனவும் அவருடைய கருத்தில் இடம் பெறுகின்றன. ஸ்மிருதிகளுக்கும் சமூக வழமைக்குமிடையே முரண்பாடு காணப்படுமிடத்துச் சமூக வழமைகளே ஒப்புக் கொள்ளப்பட வேண்டுமென்கிறார். தர்மசாஸ்திரம், அர்த்தசாஸ்திரம் என்பனவற்றிலுள்ள விதிகளுக்கிடையிலே முரண்பாடு காணப்படுமிடத்து தர்மசாஸ்திரங்களே பின்பற்றப்பட வேண்டியன.
இந்துக்கலைக்களஞ்சியம்

Page 141
குடியியல் சட்டம்
உரிமைகளைப் பொறுத்தவரை உடைமையைக் காட்டிலும் மரபுவழியான உரித்துக்களே மேலானவை என்பது அவரது கருத்தாகும். முன்னோர்கள் வழியாகப் பல தலைமுறையாக உடைமை கொண்டிருந்த பொருட்கள் மீதே ஒருவர் உரிமை கொள்ள முடியுமென்று குறிப்பிடுகின்றார். ஆயினும், சிறிது காலத்திற்கேனும் உடைமை கொண்டிருக்காதவிடத்து மரபு வழியான உரிமை வலுவிழந்துவிடும் என்கிறார். எனவே, ஒருவர் தனது உடைமைகளாகக் கொண்ட பொருட்களையே உரிமைவழிப் பெற்றுக்கொள்ள முடியும். கடனாகப் பெறும் முதல், பொருட்கள் என்பவற்றின் மீது கொள்ளப்படும் வட்டி விவரங்களைத் தெளிவாக அவர் குறிப்பிடுகின்றார். அவருடைய கருத்துக்கள் மனுவின் கருத்துக்களைப் போன்றனவாகும்.
பாகப்பிரிவினை (தாயபாகம்)
பாகப்பிரிவினை தந்தையின் காலத்திலோ அவர் இறந்த பின்போ நடைபெறலாம் என்கிறார். தந்தை தனது சொத்துக்களைத் தனது புதல்வர்களுக்குச் சமபங்குகளாகப் பிரித்துக் கொடுக்கலாம். அவன் விரும்பியவிடத்து மூத்தமகனுக்குக் கூடுதலான பாகத்தைக் கொடுக்கலாம். தந்தை இறந்த பின்பு ஆண்மக்கள் சொத்துகளைப் பிரித்துச் சமபங்குகளில் எடுத்துக்கொள்வர். அவர்களில் ஒருவனுக்கு உரியளவு பங்கு தாய்க்குரியது. பெண்பிள்ளைகள் இருப்பின் அவர்களில் ஒவ்வொருவரும் ஆண்சகோதரன் ஒருவன் பெறும் சொத்தில் 1/4 பங்கினைப் பெற்றுக் கொள்வர். ஆண்பிள்ளைகளில்லாத இடத்து மனைவி, பெண்மக்கள், இருவரதும் பெற்றோர், ஆண்சகோதரர், அவர்களின் புதல்வர்கள், ஆண்வழிச்சந்தான உறவினர் (ஹேத்ரஜன்), இனபந்துக்கள், சீடன், சகமாணாக்கன் என்னும் வரிசையில் உரிமைகள் சென்றடையும்.
பெண்களின் உரிமைகள் தொடர்பாக யக்ஞவல்க்ய ஸ்மிருதியிற் குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்படுகின்றது. கணவன் இறந்த பின் ஆண்பிள்ளைகள் இல்லாதவிடத்து விதவையானவள் சொத்துக்களில் எல்லா உரிமைகளையும் பெறுகின்றாள். இந்தக் கோட்பாட்டைப் பின்வந்த ஆசிரியரும் உரை நூலோரும் ஒப்புக் கொண்டனர்.
பெண்களின் ஆறுவகையான உடைமைகளைப் பற்றி யக்ஞவல்க்யரின் நூல் குறிப்பிடுகின்றது. அவையாவன :
1. அவளுடைய தகப்பன், தாய், கணவன், சகோதரன்
ஆகியோர் வழங்கியவை.
2. கலியானச் சடங்கில் உபகாரமாகவும்
நன்கொடை யாகவும் கிடைத்த பொருள்கள்.
3. கணவன் வேறொரு பெண்ணை விவாகம் செய்தபோது மனைவிக்கு உபகாரமாக வழங்கப்பட்டவை.
4. உறவினர்களாற் பெண்ணொருத்திக்கு
வழங்கப்பட்ட பொருள்கள்.
இந்துக்கலைக்களஞ்சியம்

5. கலியான சமயத்திற் கொள்வனவுப்
பொருளாகப் பெண்ணுக்கு வழங்கப்பட்ட சம்பத்துகள்.
6. கலியாணத்தின் பின் பெண்ணுக்குக்
கொடுக்கப்பட்ட பொருள்கள்.
ஸ்திரீதனமான (சீதனம்) உடைமைகள்மீதான உரிமைகள் பெண்ணுக்குரியவை. பெண்ணொருத்தி பிள்ளையின்றி இறக்க நேர்ந்தால் அவளுடைய சீதனம் கணவனுக்கோ அவளுடைய பெற்றோருக்கோ உரியதாகும்.
வன்செயல் பற்றிய சட்டங்கள்
வன்செயல் குற்றங்கள் பற்றி யக்ஞவல்க்யர் கூறுவன மனுஸ்மிருதியிலுள்ளவற்றை ஒத்தனவாகும். பொது நீதிக்கு எதிரான குற்றங்கள் பலவற்றைப் பற்றிய விவரங்களை அவர் குறிப்பிடுகின்றார். நீதிமன்றங்களுக்கு அப்பால் தமது குற்றச் சாட்டுக்களை நிரூபிக்க முற்படுவோரும், குற்றஞ் சுமத்தப்பட்டவிடத்தும் நீதிமன்றத்திற்குப் போகாதோரும், அம்மன்றத்தினால் அழைக்கப்பட்டவிடத்து அங்கே சமூகமளிக்காதவர்களும் உண்மைக்குப் புறம்பானவற்றில் ஈடுபடுபவர்கள் என்றும் அவர்கள் தண்டிக்கப்பட வேண்டியவர்கள் என்றும் சொல்லப்படுகின்றது. தொடர்ந்து வழக்குகளைத் திரிபுபடுத்துபவர்களும் பொய்ச் சாட்சி சொல்வோரும் சாட்சியாகச் சத்தியப்பிரமாணம் செய்த பின்பும் தெரிந்தவற்றை வெளிப்படுத்தாது மறைப்போரும் அபராதம் செலுத்த வேண்டியவராவர்.
நாரத ஸ்மிருதி
நாரத ஸ்மிருதி, மனுநூலை ஆதாரமாகக் கொண்டு எழுதப்பட்டது. ஆயினும் அதிற் பல புதிய அம்சங்கள் உள்ளன. நீதிமன்றங்களைப் பற்றி அதில் காணப்படும் வர்ணனைகளில் மனு, யக்ஞவல்க்யர் ஆகியோர் சொல்வனவற்றைக் காட்டிலுங் கூடுதலான விவரங்கள் அடங்கியுள்ளன. அடிமட்டத்திலிருந்து மேலாக அமைந்துள்ள நீதிமன்றங்களை அவர் மேல்வருமாறு வரிசைப்படுத்துகிறார். (1) குலங்கள் (குடும்பங்கள்), (2) ஸ்ரேணிகள் (வணிகர் கழகங்கள்), (3) கண (ங்கள்), (4) அதிகாரம் பெற்ற பிரதிநிதிகள், (5) அரசன்.
நீதிபரிபாலனமுறை தர்மம், வியவகாரம், சரித்திரம், ராஜசாசனம் என்னும் நான்கு பாதங்களை உடையது என்பார் நாரதர். அவற்றுட் பின்னைய ஒவ்வொன்றும் அதன் முன்னையதைக் காட்டிலும் வலிவுடையதென்று கெளடில்யரைப் போல நாரதரும் கொள்வார். தர்மசாஸ்திர மரபில் நாரதர், பிருஹஸ்பதி ஆகியோர் நீதிபரிபாலனந் தொடர்பான விடயங்களில் அரசனது கட்டளைகளே எல்லாவற்றிலும் முதன்மையானதென்று கொள்வர்.
குடியியற் சட்டம்
கடன்களைப்பற்றி மனு கூறும் விதிகளை நாரதர்
விரிவுபடுத்திச் சொல்கின்றார்.
109

Page 142
Hmmmmm
காலிக (வெவ்வேறு காலகட்டங்களிலே செலுத்தப்படுவது),
காரித (நிர்மாணிக்கப்பட்டது), காயிக (ஊழியமாகச் செய்து தீர்க்க வேண்டியது), சக்ரவிருத்தி (நிலை பொலியூட்டானது) என்னும் நான்கு வகையான வட்டிகொள்ளும் முறைகளை அவர் வர்ணிக்கின்றார். அவற்றுள் முதலாவது தவிர்ந்த எல்லாம் மனுவினால் ஒப்புக்கொள்ளப்படாதவை. ஒருவர் பட்ட கடன்களை, அவரின் பின்பு அவரது சொத்துகளை முதுசொமாகப் பெறும் ஆண்மக்களும் அவர்கள் வழிச் சந்தான முறையில் வரும் ஆண்களும் உத்தரிக்கும் விதங்கள் பற்றி நாரதர் விளக்குவார். ஒருவரின் ஆண்மக்களும் அவர்களின் ஆண்பிள்ளைகளும் சொத்துகளைத் தாயபாகமாகப் பெறாதவிடத்தும் அவரின் கடன்களைத் தீர்ப்பதற்குப் பொறுப்புடையவர்கள் என்பது நாரதரின் கொள்கை.
தாயபாகம் பற்றிய புதிய அம்சங்கள்
தாயபாகம் பற்றிய விதிகளிலே சில புதிய அம்சங்களை நாரதர் குறிப்பிடுகின்றார். ஒருவன் தனது சொத்துகளைத் தனது மக்களுக்குப் பகுந்து கொடுக்குமிடத்து அவர்கள் ஒவ்வொருவருக்கும் சமமான அளவிலும் தனது விருப்பத்திற்கு ஏற்ப சிலருக்குக் கூட்டிக் குறைத்துக் கொடுக்கலாம் என்கிறார். தகப்பன் தனக்கென்று இரு பங்குகளை வைத்துக் கொள்ளலாம். தகப்பன் இறந்த பின்பு, அவன்பட்ட கடன்களைக் கொடுத்துவிட்டு, சொத்துகளை ஆண்மக்கள் சமபங்குகளிற் பிரித்துக்கொள்ளலாம். ஆண்மக்கள் இல்லாதவிடத்துச் சொத்துகள் பெண்மக்களைச் சேரும். விதவைப் பெண்களுக்குச் சீவாதாரம் பற்றிய உரிமை மட்டுமே கிடைக்கும். ஆண்பிள்ளைகளில் இளைய சகோதரனும் குடும்பப் பொறுப்புகள் தொடர்பான முகாமைத்துவத்தைப் பெற்றுக்கொள்ளலாம் என்ற கருத்து மரபுவழிச் சிந்தனையிற் புதுமையானது.
சாகஸவியல்
வன்செயல் தொடர்பான குற்றங்கள் பற்றிய மரபுவழியான விதிகளை ஒழுங்குபடுத்தி, அவற்றைக் கூடுதலாக விவரிக்கும் நாரதர் சில மாற்றங்களையும் ஏற்படுத்துகின்றார். களவினைச் சாகசவியலிலிருந்து வேறுபடுத்தி, களவாடப்பட்ட பொருளின் பெறுமதிக்கேற்பக் குற்றங்களை மூன்று வகையினவாகப் பாகுபாடு செய்கின்றார். கள்வர்களுக்கு உணவு, புகலிடம் என்பவற்றைக் கொடுப்பவர்களும், கள்வர்களைத் தெரிந்தும் அவர்களை கண்டுபிடிப்பதற்கு உதவி புரியாதவர்களும் கள்வர் பொருட்களை எடுத்துச் செல்லும்போது அவற்றை மீட்பதற்கு உதவி புரியாதவர்களும் குற்றவாளிகளாகவே கொள்ளப்படுகின்றனர். கள்வரின் அடிச்சுவடுகள் காணப்படும் கிராமங்கள், மேய்ச்சல் நிலங்கள், வெளியிடங்கள் என்பவற்றிலே சஞ்சாரஞ் செய்வோர் இழந்த பொருட்களின் பெறுமதியை இறுப்பதற்குப் பொறுப்புடையோராவர். ஒருவர் இழந்த பொருள்களைக் கண்டெடுக்க முடியாதவிடத்து அவற்றின் நட்டத்துக்கு ஈடான பெறுமதியினை உரியவர்களுக்கு வழங்கவேண்டுமென்ற பழைய தர்மசாஸ்திரகாரரின் கருத்தை நாரதர் உறுதிப்படுத்துகின்றார். பொருள்களின் பெறுமதிக்கேற்பக் கள்வர்களுக்கு அங்கவீனம், கொலை, மெய்வருத்துதல் போன்ற
110

தண்டனைகளை வழங்க வேண்டும். களவு ஒரு பாவச்செயல் என்று கருதப்பட்டது. கள்வன் ஒருவன் அரசனிடம் சென்று தனது குற்றத்தை ஒப்புக் கொள்ளுமிடத்து அவன் பாவ விமோசனம் பெறுவான்.
5 பிருஹஸ்பதி ஸ்மிருதி
பிருஹஸ்பதி ஸ்மிருதி மனுஸ்மிருதியோடு அதிக தொடர்புடையது. அது மனுஸ்மிருதியின் வார்த்திகம் போலானது. தர்ம சாஸ்திரங்களில் மனுநூலுக்கே பிருஹஸ்பதி முதலிடம் அளிக்கின்றார். சட்டம் தொடர்பாக மனுநூலிற் காணப்படும் விதிகளை விளக்குவதோடு, சில சமயங்களில் அவற்றைப் பிருஹஸ்பதி மாற்றிவிடுகின்றார். மேலும், அவர் மனுநூலின் கோட்பாடுகளை உறுதிப்படுத்து முகமாகவும் பல புதிய விடயங்களைச் சேர்த்துள்ளார்.
நாரதர் நீதிமன்றம் 8 உறுப்பினர்களைக் கொண்டதாயிருக்கும் என்பார். ஆனால் பிருஹஸ்பதி அதில் 10 உறுப்பினர் அடங்குவர் என்பார். நாரதர் சொல்லும் சத்புருஷரின் இடத்தில் அதிகிருத என்னும் அத்யகூஷிரைக் குறிப்பிடுகின்றார். சபையோர் வழக்கை விசாரிக்க வேண்டும். ஸ்மிருதிகளின் அடிப்படையில் விசாரணைகள் நடைபெற வேண்டும். விசாரணை சம்பந்தமான விடயங்களை லிகிதர் எழுதவேண்டும். அத்யக்ஷர் தீர்ப்பினை வழங்கவேண்டும். வழக்காளி, சாட்சிக்காரர், நீதிமன்ற உறுப்பினர்கள் ஆகியோரைப் பிரசன்னமாக இருக்கச் செய்வது அதிகிருதரின் கடமையாகும். வழக்குத் தீர்ப்பை அமுல்படுத்துவது அரசனின் பொறுப்பாகும். நிலையானவை, இடம்பெயர்ந்து இயங்குபவை, அரசமுத்திரையின் பெயரால் இயங்குபவை, அரசனின் தலைமையில் அமைந்தவை என்ற நான்கு வகையான நீதிமன்றங்களைப் பிருஹஸ்பதி விவரிக்கின்றார்.
சட்டத்தின் மூலங்களில் ராஜசாசனமே முதன்மையானதென்று நாரதரைப் போல பிருஹஸ்பதியும் கொள்வார். ஏனையவற்றைப் பொறுத்தவரையில் சாஸ்திரங்களை மட்டும் மூலமாகக் கொண்டது வியவகாரமென்றும், தேசவழமை, அனுமானம், வணிகரின் அபிப்பிராயம் என்பனவற்றை ஆதாரமாகக் கொண்டதுசாரித்திரம் என்றும், தேசவழக்குகளைப் பொருட்படுத்தாத அரசனின் தீர்ப்பே ராஜாக்ஞா என்றுஞ் சொல்லும் செய்யுளொன்று ஸ்மிருதிசந்திரிகா என்னும் நூலிலிருந்து மேற்கோளாகக் கையாளப்படுகின்றது.
சாட்சி ஆதாரங்கள்
சாட்சியங்களைப் பற்றி பிருஹஸ்பதி கூறுவன நாரத ஸ்மிருதியில் உள்ளவற்றைக் காட்டிலும் விரிவானவை. அவர் 12 வகையான சாட்சியங்கள் பற்றி விளக்குகிறார். அவற்றுள் ஒவ்வொன்றினதும் இயல்புகளை அவரே முதன்முதலாக வர்ணிக்கின்றார். ஒரு வழக்குப் பத்திரத்தில் அடங்கிய விவரங்கள் சாட்சிகள் மூலம் நிரூபிக்கப்படுமிடத்து அந்தச் சாட்சிகள் ஆதாரபூர்வமானவையாகக் கொள்ளப்படும் என்று பிருஹஸ்பதி சொல்வார். சாட்சியங்கள் குறித்த பரிசீலனை, எதிர்ப்பரிசீலனை,
இந்துக்கலைக்களஞ்சியம்

Page 143
மறுபரிசீலனை என்பன பற்றியும் அவரே முதன்முதலாக விவரமாக வர்ணித்துள்ளார். சாட்சிகளும் ஆவணங்களும் வழக்கு விசாரணையின் போதே பரிசீலிக்கப்படல் வேண்டும். வழக்கு விசாரணை முடிந்த பின் அவற்றைப் பற்றி மேற்கொள்ளப்படும் எந்தவிதமான பரிசீலனையும் ஒப்புக்கொள்ளப்படுவதில்லை.
ஆவணங்களைப் பற்றி பிருஹஸ்பதி சொல்வன மிகவும் விவரமானவை. அரசனால் எழுதப்பட்ட பத்திரங்கள், லிகிதர்களால் ஓரிடத்திலிருந்து எழுதப்பட்ட பத்திரங்கள், தனியொருவர் எழுதிய கையெழுத்துப் பிரதி என ஆவணங்கள் மூன்று வகையினவாகக் கொள்ளப்படுகின்றன. அரச பத்திரங்களும் மூன்றுவிதமானவை. அவை பூமிதானம் போன்றன பற்றிய முழுமையான விவரங்கள் அடங்கிய ஆவணங்கள், தனக்கு இசைவானவர்களுக்கு நிலம், பிரதேசங்கள், வருமானங்கள், பதவிகள், அதிகாரங்கள் என்பனவற்றை அதிகாரபூர்வமாக அரசன் வழங்கிய பத்திரங்கள், வழக்கு விசாரணை, தீர்ப்பு என்பனவற்றைப் பற்றிய விவரங்கள் அடங்கிய, அரசமுத்திரையோடு கூடிய ஜயபத்திரம் என்னும் ஆவணங்கள் என்னும் மூன்றுமாம். பாகப்பிரிவினை பற்றிய உறுதிகள், நன்கொடை, கொள்வனவு, ஈடு, உடன்படிக்கை, பிணை, கடன் என்பன பற்றிய ஆவணங்கள் எனத் தனியார் பத்திரங்கள் ஏழு வகைப்படும் என்றும் அவர் கொள்வார். ஆவணங்களைப் பகிரங்கப்படுத்துவதும் குலம், ஸ்ரேனி, கணம் முதலியவற்றைச் சேர்ந்தவர்களின் முன்னிலையில் அவற்றை வாசித்து விளக்குவதும் அவசியமானது. 30 வருடங்களுக்கும் மேலாக வாசிக்கப்படாதும் எவராலும் காணப்படாதுமிருந்த ஆவணங்கள் ஆதரமற்றனவாகிவிடும்.
ஒருவரின் தேட்டமான சொத்துகளைப் பொறுத்தமட்டில் அவற்றின் மீதான உரிமைக்கு ஏதுவான ஆவணங்களை அவர் ஒப்படைக்க வேண்டும். ஆனால் அத்தகைய சொத்துகள் மகன் ஒருவருக்கு உரிமையாகுமிடத்து அந்த மகன் ஆட்சியின் காரணமாக அவற்றின் உடைமை அதிகாரம் பெறலாம்.
வழக்குகள்
வழக்குகளைக் குடியியல் பற்றியவை, சாகசவியல் பற்றியவை என்ற இரு வேறு பிரிவுகளாக பிருஹஸ்பதியே உறுதியாகவும் தெளிவாகவும் முதன்முதலாக வகைப்படுத்தினார். மனு 18 தலைப்புகளிலான வழக்குகளை விவரித்தார். அவற்றுட் 14 குடியியல் பற்றியவை என்றும் 4 சாகசவியல் (சரீரத் துன்பம் விளைத்தல், கொலை) பற்றியவை என்னும் பிருஹஸ்பதி வகைப்படுத்தியுள்ளார்.
வட்டிக்குக் கடன் கொடுக்குமிடத்து உத்தரவாதம் (ஆதி), வைப்புப் பொருள் (பந்த), பிணை, உறுதிப்பத்திரம் என்பவற்றில் ஒன்றைப் பெற்றுக் கொண்ட பின்னரே கொடுக்க வேண்டும் என்பார் பிருஹஸ்பதி. காலிக (ம்), காரிதம் (ம்) , காயிக (ம்), சக்ரவ்ர்த்தி என வட்டிகள் நான்கு வகைப்படும் என்பார் நாரதர் சிகாவிருத்தி (மூலதனம் உள்ள வரை தலைமயிரைப்
இந்துக்கலைக்களஞ்சியம்

போலப் பொலிந்து பெருகும் வட்டி), போகலாபம் (ஒற்றி) என்ற மேலான இருவகைகளைப் பற்றியும் பிருஹஸ்பதி விளக்கியுள்ளார்.
தாயபாகத்தில் ஒருவருடைய தேட்டமான சொத்துகள் அவருடைய மகனுக்கும் மகனுடைய ஆண்மக்களுக்கும் சமபங்குகளில் உரிமையாகும் என்பது பிருஹஸ்பதியின் கருத்து. ஆயினும் ஒருவருடைய சொத்துரிமைகளைப் பொறுத்தவரையில் அவரது உடன்பாடின்றி மக்கள் உரிமை பெறுவதில்லை. இந்தக் கருத்து மிதாகூடிர நூல்வழி மரபினரின் கோட்பாடுகளுக்கு ஆதாரமாகிவிட்டது.
சாகசவியற் குற்றங்களைப் பொறுத்தவரையில் மேல்வரும் சிந்தனைகள் கவனித்தற்குரியவை. ஒருவர் தன்னை அவதூறான வார்த்தைகளால் இம்சைப்படுத்தியவரை அத்தகைய வார்த்தைகளால் நிந்தனை செய்யுமிடத்து அது குற்றமாகக் கொள்ளப்படுவதில்லை. அதேபோல அடிபட்டவிடத்து ஒருவர் தன்னை அடித்தவருக்குத் திருப்பி அடிக்கினும் தன்னைக் கடுமையாகத் தாக்குபவரைக் கொலை செய்யினும் அவர் குற்றவாளி ஆவதில்லை. குற்றங்களுக்கு ஏற்பக் குற்றவாளிகளுக்குத் தண்டனை வழங்க வேண்டும். ஒருவருடைய உடலுறுப்பினைத் தாக்கிக் காயப்படுத்துபவர் காய சிகிச்சைக்கான செலவை உத்தரிக்க வேண்டும். தகராறுற்று ஒருவரின் உடைமைகளைக் கவர்ந்து செல்பவர் அவற்றை உரியவருக்குத் திருப்பிக் கொடுக்க வேண்டும். ஒரு மனிதரைப் பலர் கூடி அடித்துக் கொல்லுமிடத்து மரண அடிக்குப் பொறுப்பானவருக்கு உரிய தண்டனை வழங்கப்பட வேண்டும். கலகத்தை முதன் முதலாகத் தொடக்கியவரும் அவரது கூட்டாளிகள் பிறரும் அரைப்பங்களவான தண்டனையை உத்தரிக்க வேண்டும்.
குப்தர் காலத்து ஸ்மிருதிகளும் நீதிபரிபாலனமும்
இந்துக்களின் சட்டவியல், நீதிபரிபாலனம் ஆகியவற்றின் வரலாற்றிலே கி.பி நான்காம் நூற்றாண்டு முதல் எட்டாம் நூற்றாண்டின் நடுப்பகுதி வரையான காலம் மிக முக்கியமானது. ஸ்மிருதி நூல்களிற் காலத்தாற் பிற்பட்டவை இக்காலத்தில் எழுந்தன. தர்மசாஸ்திரங்களுக்கு விரிவான உரைகளை எழுதும் மரபு இக்காலத்தில் ஆரம்பமாகியது. நாரத ஸ்மிருதிக்கு அஸ்ஹாயர் எழுதிய உரையினை இதற்கு உதாரணமாகக் கொள்ளலாம். தர்ம சாஸ்திரங்களைத் தொகுக்கும் நீண்ட வரலாறுடைய இலக்கிய மரபு நிறைவு பெற்றதோடு குப்தர் காலத்தில் அவற்றைப் பற்றிய விமர்சன இலக்கிய மரபொன்று உதயமாகியது.
நீதிபரிபாலனத் துறையில் பிரதானமான ஆதார நூல்களாகக் கொள்ளப்படும் பிருகஸ்பதி ஸ்மிருதி, நாரத ஸ்மிருதி, காத்யாயன ஸ்மிருதி ஆகிய மூன்றும் இக்காலத்தில் வழங்கிய நூல்களாகும். அவற்றுள் நாரத ஸ்மிருதி மட்டுமே முழுமையாகக் கிடைத்துள்ளது. ஏனையவற்றைப் பொறுத்தவரையில் பிற்காலத்து நூல்களிற் காணப்படும்
fff

Page 144
மேற்கோள்களின் தொகுப்புக்கள் மட்டுமே உள்ளன. பராசர, வியாச என்போரின் பெயர்களால் வழங்கும் ஸ்மிருதிகளும் அவ்வண்ணமானமை, இக்காலத்து நூல்கள் நீதிமன்றங்கள், நீதி விசாரணை, சட்டவியல் என்னும் மூன்று பிரதான விடயங்கள் பற்றிய விவரங்களைக் கொண்டுள்ளன.
நீதிமன்றங்கள்
சமுதாயத்திலே பல்வேறு நிலைகளில் நீதிவிசாரணை நடைபெற்றது. ஊராட்சி மன்றங்களிலும் தனிச்சமுதாயப் பிரிவுகளின் சபைகளிலும், தொழில்சார் சமூகப்பிரிவுகளின் சபைகளிலும் தேச, சமூக வழமைகளுக்கு ஏற்ப நீதிவிசாரணைகள் நடைபெற்றன. குறிப்பிட்ட தலங்களிலமைந்த நீதிமன்றங்கள் வேறொரு வகையானவை. அவை ஆட்சியாளரிடமிருந்து அதிகாரம் பெற்றவை. அரசனின் ஆணைப்படி நீதித்துறை சார்ந்த அதிகாரிகள் குறிப்பிட்ட தலங்களுக்குச் சென்று செயற்படுத்தும் நீதிமன்றங்கள் வேறொரு வகையினவாகும். இராசதானியில் அரசனுடைய தலைமையில் இயங்கும் நீதிமன்றங்கள் இன்னொரு வகையானவை. அரசாங்கத்தின் ஏற்பாட்டில் இயங்கும் நான்கு வகையான நீதிமன்றங்களைப் பற்றிப் பிருகஸ்பதி குறிப்பிடுவார். தலமொன்றில் அமைந்துள்ள நீதிமன்றங்கள், இடம் பெயர்ந்து செயற்படும் நீதிமன்றங்கள், அரசனால் நியமிக்கப்பட்டோரின் தலைமையிலும் அரசமுத்திரையோடும் இயங்கும் நீதிமன்றங்கள், அரசனின் தலைமையிற் கூடும் நீதிமன்றங்கள் என்பவையே அந்நான்கு வகைகளாகும். குலம் (கிராம சபை), சிரேணி, கணம், அரசசபை ஆகியவற்றால் நடத்தப்படும் நீதிவிசாரணை மன்றங்கள் பற்றி நாரதர் குறிப்பிடுகின்றார்.
அரசனது தலைமையில் இயங்கும் நீதிமன்றங்கள் சபா, தர்மஸ்தானம், தர்மாதிகரணம், தர்மாசனம் எனப் பலவாறு வழங்கிவந்தன. நீதிபதிகள் அமைச்சர், வித்தியாவிருத்தரான பிராமணர், புரோகிதர் என்போருடன் கூடி அரசன் தீர்ப்புகளை வழங்கவேண்டுமென்று காத்யாயனர் கூறுவார். நீதிமன்றத்தின் பத்து அங்கங்கள் பற்றி பிருகஸ்பதி குறிப்பிடுகின்றார். அரசன், பிரதம நீதிபதி, அத்யக்ஷர், கணக்கர், அலுவலர் என்போர் அவற்றுள் அடங்குவர். சட்டப்படி நீதிபதிகள் தீர்ப்பினை அறிவிப்பர். அரசன் உரிய தண்டனையை வழங்குவான்; அத்யகூடிகர்கள் வழக்கின் விவரங்களைப் பரிசீலனை செய்வர். வழக்குத் தொடர்பான ஆவணங்கள், பொருட்கள், பணம் முதலியவற்றின் பெறுமதியை நிச்சயிப்பது கணக்கனின் கடமையாகும். வழக்குத் தொடர்பான குற்றச்சாட்டுகள், பிரதிவாதங்கள், சாட்சியங்கள், தீர்ப்புகள் முதலிய எல்லாவற்றையும் லிகிதர் பதிவு செய்வர். நீதிமன்றத்தின் எல்லா உறுப்புக்களையும் வியாசரும் வர்ணிக்கின்றார். அரசன், நீதிபதிகள், அத்யக்ஷர், பிராமணப் பண்டிதர் ஆகியோரே வழக்குகளை விசாரணை பண்ணுவதிலும் தீர்ப்பு வழங்குவதிலும் ஈடுபட்டனர். ஏனையோர் நீதிமன்றத்திற் கடமை புரியும் பணியாளராகவே செயற்பட்டனர். நீதிபதியின் தீர்ப்பை அரசன் ஒப்புக்கொள்ள வேண்டும் என்பது நாரதரின் கருத்து. சபையோர் நீதியான முறையிலே தீர்ப்பினை வழங்கவேண்டும் என்பது காத்யாயனரால்
f2

வலியுறுத்தப்படுகின்றது. காலதேச வர்த்தமானங்களுக் கேற்பச் செயற்பட்ட நீதிபரிபாலனம் தொடர்பான நிறுவனங்களின் பொதுவான அம்சங்களை ஸ்மிருதி நூல்கள் பதிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நீதிமன்றங்களின் செயற்பாட்டு முறைகள்
வழக்குப் பத்திரத்தை ஒப்புக்கொள்ளுதல், வழக்குப் பொருளை நிர்ணயித்தல், வாதப்பிரதி வாதங்களை ஆராய்தல், தீர்ப்பு வழங்குதல் என்னும் நான்கு கட்டங்களைக் கொண்டது நீதிவிசாரணை என்பது நாரதரின் கூற்றாகும். இவ்விடயம் பற்றி பிருகஸ்பதி, வியாசர் ஆகியோர் சற்று வேறு விதமாகச் சொல்வர்.
விசாரணையின் முதற்கட்டமாக, வழக்குத் தொடருபவரை வழக்கின் விவரங்கள் பற்றி நீதிபதி விசாரணை பண்ண வேண்டும் என்பது காத்யாயனரின் கோட்பாடாகும். சொல்லப்படும் விளக்கங்களை அத்யக்ஷர், பிராமணர் என்போர் சகிதமாகக் கேட்ட பின்பு, தனது தீர்ப்பினை நீதிபதி முத்திரையிட்டு வழங்கவேண்டும். வழக்குச் சட்டப்படி விசாரிக்கப்பட வேண்டியதென்று கருதப்படுமிடத்து நீதிமன்ற அலுவலர் மூலமாகக் குற்றஞ் சுமத்தப்பட்டவரை நீதித்தலத்துக்கு அழைக்க வேண்டும். குற்றப்பத்திரம் ஒலையிலோ கடாதாசியிலோ எழுதப்பட வேண்டும். அது தெளிவாகவும் முரண்பாடு இல்லாத விதமாகவும் எழுதப்படல் வேண்டும். சமூகநலன்களுக்கு ஒவ்வாதனவாயும் வழக்குப் பொருள் பற்றித் தெளிவற்றுங் காணப்படும் வழக்குப் பத்திரங்கள் நிராகரிக்கப்படும். குற்றம் சுமத்தப்பட்டவர் நீதிமன்றத்தின் அழைப்பின் பிரகாரம் சமூகமளிக்காதவிடத்து அவருக்குத் தண்டனை வழங்கப்படும். நோயாளிகள், ஆசாரசீலரான மாதர், விதவைகள், இடையர், வேளாண்மை செய்யும் விவசாயிகள், கம்மாளர் முதலியோர் தாம் நீதித்தலத்துக்குப் போகமுடியாதவிடத்து தங்கள் சார்பிலே பிறரை அனுப்பிக்கொள்ள முடியும். ஆயினும், குற்றங்கள் பாரதூரமானவை என்று கொள்ளுமிடத்துக் குற்றவாளி நீதித்தலத்திற்குச் சமூகமளிக்க வேண்டும். வழக்கிலே சம்பந்தமானவர்களிடமிருந்து பிணை இறுக்க வேண்டுமென்பது காத்யாயனரின் கருத்து. தகுந்த ஆதாரங்களின்றி வழக்குத் தொடர்பவர்களும் பிறரின் முகவர்களாக அதிகாரபூர்வமாக நியமனம் பெறாது வழக்குத் தொடர்பவர்களும் தண்டிக்கப்பட வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
குற்றவாளி ஒருவர் தன்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் தொடர்பாக உத்தரங்கொடுக்க வேண்டும். சில சமயங்களில் அது உடனடியாக வழங்கப்பட வேண்டும். வேறு சில சமயங்களில் அவருக்கு அதன் பொருட்டுக் கால அவகாசம் கொடுக்கப்படும். குற்றத்தை ஒப்புக்கொள்ளுதல், அதனை நிராகரித்தல், விசேஷமான காரணங்களின் நிமித்தம் மன்னிப்புக் கோருதல், நீதிமன்றத் தீர்ப்புகளை அனுசரணையாகக் கொண்டு மன்னிப்புக் கோருதல் என உத்தரம் நான்கு வகைப்படும் என்று நாரதர், காத்தியாயனர், பிருகஸ்பதி ஆகியோர் கொள்வர்.
இந்துக்கலைக்களஞ்சியம்

Page 145
ஒருவர் மீது சுமத்தப்படுங் குற்றங்களைத் தகுந்த ஆதாரங்களோடு நிரூபிப்பது வழக்காளியின் கடமையாகும். எதிரியின் வாக்குமூலத்தை நிராகரிக்கும் வண்ணமாக எழுதுகின்ற பத்திரத்தில் அவற்றை நிரூபிக்க வேண்டும். சமுதாய பூர்வமானவை, தெய்வீகமானவை என ஆதாரங்கள் இரு வகைப்படும். ஆட்சி, ஆவணம், அயலார் வழங்கும் சாட்சி என்பவை ஒரு வகையானவை; தெய்வீகமானவை மற்றொரு வகையானவை. காய்ச்சிய இரும்பினைக் கையில் ஏந்துதல், நீரில் அமிழ்த்துதல் போன்றவை தெய்வீகமானவை என்பர். ஒருவர் சுற்றவாளி எனில் அவர் அத்தகைய கொடூரமான பரிசோதனைகளினாற் பாதிக்கப்படுவதில்லை என்பது ஒரு நம்பிக்கை, சமுதாயபூர்வமான ஆதாரங்கள் கிடைக்காதவிடத்து மட்டுமே தெய்வீகமானவற்றைப் பயன்படுத்த வேண்டுமென்று நாரதரும் காத்யாயனருங் கூறுகின்றனர்.
வழக்கு விசாரணை முடிந்த பின்பு வழங்கப்படும் தீர்ப்பு, பத்திரத்தில் எழுதிக் கொடுக்கப்படும். அது ஜயபத்திரம் என்று சொல்லப்படும். வழக்கில் இடம்பெற்ற எல்லா விவரங்களும் நீதிமன்றம் வழங்கும் தீர்ப்பும் அதில் அடங்கியிருக்கும்.
சட்டம்
சட்டம் பற்றிக் குப்தர்காலச் சிந்தனைகள் முற்காலங்களில் உள்ளவற்றைப் போன்றனவாகும். மறைநூல் வழக்கும் சான்றோர் ஒப்புக்கொள்ளும் சமூகவழமைகளும் சட்டத்தின் ஆதாரங்களாகக் கொள்ளப்பட்டன. சுருதி, ஸ்மிருதி என்பவற்றோடு முரண்படாத தேசவழமைகள் எழுதப்பட்டு அவற்றில் இராசமுத்திரை இடப்பட வேண்டுமென்று காத்யாயனர் கூறுவர். முன்பு மனு முதலியோர் வழக்குகளைப் பதினெட்டுப்பிரிவுகளாக வகை செய்தனர். நாரதர் அவற்றை 132 பிரிவுகளாக வகை செய்தார். உடலுக்கும் உள்ளத்துக்கும் துன்பம் உண்டாக்கும் செயல்களும் உரியனவற்றைக் கொடாதமையும் வழக்குகளின் மூலகாரணங்கள் என்று காத்யாயனரும் பிருகஸ்பதியுங் கொள்வர்.
சொத்துரிமைகள், சீதனம், அபவாதம், உடலுக்கு ஊறுசெய்தல், களவு, வன்செயல் ஆகியனவே இக்கால ஸ்மிருதிகளின் கவனத்தைக் கூடுதலாகப் பெற்றுள்ளன. இக்கால நூலாசிரியர்கள் பெண்களின் சொத்துரிமைகளை ஒப்புக்கொண்டுள்ளனர். கணவன் ஒருவன் இறக்குமிடத்து, ஆண்மக்கள் இல்லாதுபோனால், கணவனுடைய சொத்துகள் மனைவியின் உரிமையாகிவிடும் என்று சொல்லப்படுகின்றது. யக்ஞவல்க்ய, விஷ்ணு ஆகியோரின் பெயர்களால் வழங்கும் ஸ்மிருதிகள் இதனை அழுத்தமாகக் கூறுகின்றன. காத்யாயனர், பிருகஸ்பதி ஆகியோரும் அதே கருத்தைக் குறிப்பிடுகின்றனர். தாய்க்குப் பின் சொத்துரிமைகள் பெண்மக்களுக்கு உரித்தானவை. அவர்களில் மணமாகாதவர்கள் முன்னுரிமை பெறுவர். பெண்பிள்ளைகளும் இல்லாதவிடத்து ஒருவனின் சொத்துகள் முறையே அவனது தகப்பன், தாய், ஆண் சகோதரர், அவர்களின் ஆண்மக்கள் ஆகியோருக்கு உரியனவாகும்.
இந்துக்கலைக்களஞ்சியம்

ஸ்திரீதனம் என்பது பெண் ஒருத்திக்கு நன்கொடையாகவோ உபகாரமாகவோ வழங்கப்பட்ட சொத்துக்களைக் குறிக்கும். ஸ்திரீதனம் பற்றிய விவரங்களைக் காத்யாயனர் விரிவாக விளக்குகின்றார். ஸ்த்ரீதனத்தில் அடங்கும் ஆறு வகையான சொத்துக்கள் பற்றிக் குறிப்பிடுகின்றார். அவை (1) கலியாணச் சடங்கின் முன் கொடுக்கப்பட்டவை (அத்யக்னி) (2) கணவனோடு மணப்பெண்ணாக ஊர்வலமாகச் செல்லும்பொழுது கொடுக்கப்பட்டவை (அத்யாவாஹனிக) (3) பாசத்தினால் பிறர் அவளுக்கு வழங்கியவை (ப்ரீதிதத்த) (4) தந்தை, தாய், சகோதரன் ஆகியோர் வழங்கியவை (5) கலியாணத்தின் பொருட்டு உபகாரமாகக் கணவன் வழங்கிய பொருள்கள் (சுல்க) (6) கலியாணத்தின் பின்பு தனதும், கணவனதும் வீடுகளிலிருந்து உபகாரமாகப் பெற்றவை (அன்வாதேய).
கலியாணத்தின் முன்பும், கலியாணச் சடங்கிலும் அதன் பின்பும் பெண்ணுக்கு நன்கொடையாகவும் உபகாரமாகவும் கிடைக்கும் பொருள்கள் யாவும் ஸ்த்ரீதனத்தில் அடங்கும். கணவன், மகன், தகப்பன், தாய் ஆகியோர் பெண்ணொருத்தியின் ஸ்த்ரீதனத்தை எடுத்துக்கொள்வதற்கோ அதைப் பிறருக்குக் கொடுப்பதற்கோ உரிமை பெறுவதில்லை. அதில் அடங்கிய யாவற்றிலும் பெண் எல்லா உரிமைகளையும் கொண்டிருப்பாள். அவர்களில் எவரேனும் ஸ்த்ரீதனத்தில் ஒரு பகுதியை வலோற்காரமாக எடுத்துக்கொண்டால் அதனைத் திருப்பிக் கொடுக்க வேண்டும். அதற்குரிய வட்டியையும் செலுத்த வேண்டும். மேலதிகமாக அபராதம் செலுத்த வேண்டும்.
ஸ்த்ரீதனத்தைப் பொறுத்த வரையில் சொத்துரிமைகள் பெண் வழியானவை. தாய்க்குரிய ஸ்த்ரீதனம் எல்லாம் அவளின் பின்பு பெண்மக்களின் உரிமையாகும். அவளுக்குப் பிள்ளைகள் இல்லாதவிடத்துப் பெற்றோரும் கணவனும் உரிமை பெறுவர். பெண்பிள்ளைகளில் விவாகம் பண்ணாதவர்களே மிகக் கூடிய பங்கினைப் பெறுவர் என்பார் பிருகஸ்பதி. பெண்மக்கள் இல்லாதவிடத்து ஸ்த்ரீதனம் ஆண்மக்களைச் சேரும் என்பது காத்யாயனரின் கருத்தாகும்.
மானபங்கம் (வாக்பாருஷ்ய) நிஷ் டுர(ம்), அஸ்லீல, தீவிர(ம்) என மூவகைப்படும் என்று நாரதரும் காத்யானருங் கொள்வர். ஆயினும், பிருகஸ்பதி குறைவானது, மத்திமமானது, தீவிரமானது என்னும் தரங்களிலான அபவாதங்களைக் குறிப்பிடுகின்றார். அவற்றின் தன்மைக்கும் சம்பந்தப்பட்டவர்களின் சமுதாய நிலைகளுக்கும் ஏற்பத் தண்டனைகள் அமையும். தீவிரமான வார்த்தைகளால் ஒருவரை அபவாதம் செய்பவர் தனது செயலுக்கு ஏதுவான ஆதாரங்களை நிரூபிக்காதவிடத்து தண்டனைக்கு உரியவராவார்.
ஒருவரைத் தாக்கி அவரின் உடலுறுப்புகளைக்
காயப்படுத்துமிடத்து உண்டாகும் சேதத்திற்கு ஏற்றபடியாகத் தண்டனை வழங்குவது நியதி. பொருந்தாக் காலங்களிலும்
13

Page 146
தீனின்றிச் சோர்வடைந்த வேளையிலும் விலங்குகளைப் பாரமிழுத்துச் செல்வதற்குப் பயன்படுத்துவது தண்டனைக்குரிய குற்றமாகும். தேவையின்றிப் பயன்தரு மரங்களையும் வனவிருட்சங்களையும் தறிப்பதும் பெருங்குற்றமாகும்.
களவு தொடர்பான குற்றங்கள் வெளிப்படையானவை. மறைமுகமானவை என இரு வகைப்படும். அளவு குறைந்த தராசுகள், படிகள், நாழிகள் போன்றவற்றைப் பயன்படுத்தும் வியாபாரிகள், சூதாடுவோர், ஏமாற்றுவோர், பொருள்களைக் கலப்படஞ் செய்வோர், பொய்ச்சாத்திரஞ் சொல்லிப் பிழைப்போர் ஆகியோரை வெளிப்படையாகவே களவு செய்வோர் என்னும் வகையினருள் மனு முதலியோர் அடக்குவர். அத்தியயனம் பெறாது யாகஞ் செய்வோர் போதிக்கும் தகைமையில்லாத போலிப்பண்டிதர்கள் என்போரும் அத்தகையோரென்று காத்யாயனர் கொள்வார். சிறைவாசம், அங்கவீனம், உடைமைகளின் அபகரணம், தேசப்பிரஷ்டம், சிரச்சேதம் முதலியன களவு, கொள்ளை ஆகிய பாதகங்களில் ஈடுபடுவோருக்குரிய தண்டனைகளாகக் கொள்ளப்பட்டன.
களவாடப்பட்ட பொருள்களைத் தேடிப்பெற்று, அவற்றை உடையவர்களுக்கு அரசன் வழங்கவேண்டும் என்பது ஸ்மிருதி நூலோரின் ஒருமித்த கருத்தாகும். அந்தக் கடமை அரசாங்க அதிகாரிகளுக்கும் சமுதாயத்திலுள்ள எல்லா வகுப்பினருக்கும் உரியதாகும்.
தண்டனைக்குரியனவும் பாதகமானவையுமாகிய வன்செயல்கள் மூவகைப்படும். விவசாயக் கருவிகளைச் சேதப்படுத்துதல்; கிழங்கு, கனி வர்க்கங்களை உழக்கி அழித்தல் போன்றவை ஒரு வகையானவை. புடவைகள், உணவு வகைகள், பானங்கள், வீட்டுத் தளபாடங்கள் முதலியவற்றை நாசஞ்செய்தல் முன்னையவற்றைக் காட்டிலுங் கடுமையான வன்செயல்களாகும். கொலை வன்முறைகளோடு கூடிய கொள்ளை பிறன் மனையாளைத் தாக்குதல், பெறுமதிமிக்க பொருள்களைக் கெடுத்தல், கோயில்களையும் கடவுட் படிமங்களையுஞ் சேதப்படுத்துதல், நகரத்து எல்லைச் சுவர்களை உடைத்தல், கால்வாய்களில் நீரோட்டத்தைத் தடை செய்தல் ஆகியன மிகவும் தீவிரமான வன்செயல்களாகும். வன்செயல்களை (சாகஸ)ப் பொறுத்தவரையில் வழங்கப்படும் தண்டனை அவற்றின் இயல்பிற்கு ஏற்ப அமைந்திருக்கும்.
நீதிவிசாரணையின்போது கேட்கப்படும் கேள்விகளுக்கு விடையளிக்க மறுக்கும் சாட்சிக்காரர் மீது அபராதம் விதிக்கப்படும். வழக்கு விவரங்களை நேரிலே கண்டறிந்தவர்கள் சாட்சி சொல்ல மறுக்குமிடத்து அவர்கள் குற்றவாளிகளாகக் கொள்ளப்படுவர். பொய்ச்சாட்சி சொல்வோர் மீது கடுந்தண்டனை விதிக்கப்பட வேண்டும். நீதிபதியும் நீதிமன்றத்து அத்யஷர்களும் வழக்காளியுடனோ எதிரியுடனோ தனியாகவும் இரகசியமாகவும் பேசிக்கொள்ளுமிடத்து அவர்களும் தண்டனைக்கு உரியோராகிவிடுகின்றனர்.
fiA

தர்மருத்திரங்கள்
சமஸ்கிருத மொழி வரலாற்றிலே காணப்படுகின்ற இலக்கியங்களிற் சூத்திரங்கள் ஒருவகையானவை. கிருஹ்ய சூத்திரம், ஸ்ரௌத சூத்திரம், தர்ம சூத்திரம் என்பன அவற்றிலே பிரசித்தமானவை; மிகவும் புராதனமானவை. அவற்றின் காலம் கி.மு.800-கி.பி. 300 என்பதாகும். வீடுகளிலே செய்யப்படுகின்ற கிரியைகள், மகா யாகங்கள் முதலியன பற்றிய விவரங்கள் முன் இருவகைகளைச் சேர்ந்த சூத்திரங்களிலே காணப்படுகின்றன. தர்ம சூத்திரங்கள் தர்மம் பற்றியவை, தர்மம் என்பது கடமை, வழமை, நீதி, ஒப்புரவு, சமயநெறி, செய்தற்குரியவை எனப் பலவற்றைக் குறிக்கும்.
புராதன இந்து சமுதாயத்தில் வாழ்க்கை நெறி என்பதனையும் தர்மம் என்று குறித்தார்கள். வாழ்வியல் பற்றிய மிகப் புராதனமான நூல்கள் தர்ம சூத்திரங்கள் ஆகும். அவை சுருக்கமான நடையிலே ஆசிரியர் கொண்டுள்ள பொருளை, எல்லா அம்சங்களையும் தொடர்புபடுத்தி விளக்கும், நூல்களாகும். ஆபஸ்தம்ப, கெளதம, வசிஷ்ட பெளதாயன என்போரின் பெயர்களால் வழங்கும் நான்கு தர்ம சூத்திரங்கள் கிடைத்துள்ளன. பொருள் மரபில் அவற்றிடையே மிகுந்த ஒற்றுமை காணப்படுகின்றது. விவரங்களைப் பொறுத்தவரை சில வேறுபாடுகள் உள்ளன. புருஷார்த்தங்கள் நான்கினையுங் குறிக்கோளாகக் கொண்டு தர்ம சூத்திரங்கள் வாழ்க்கை நெறியினை வகுத்துக் கூறுகின்றன. அவை வைதீகச் சார்புடையவை. வைதீக நெறியிலே ஈடுபாடும், அபிமானமுங் கொண்டவர்களால் எழுதப்பட்டவை. அவை அனைத்திலும் வைதீகமான சிந்தனைகள் இழையோடி வருகின்றன. அவை வரலாற்று நிகழ்ச்சிகளை வர்ணிக்கும் நோக்கத்துடன் எழுதப்படவில்லை; கற்பனையில் எழுந்த விவரங்களையும் அவற்றிலே காணமுடிவதில்லை. சமுதாய நெறிபற்றிய சிந்தனைகளை அவை பிரதிபலிக்கின்றன. அச் சிந்தனைகள் சமகால வழமைகளை ஆதாரமாகக் கொண்டவை. எனவே, சமூக வழமைகளினதும், சிந்தனைகளினதும் கருவூலங்களாக அவை அமைந்து விடுகின்றன.
வர்ணங்கள், ஆசிரமங்கள்
வர்ணங்கள், ஆசிரமங்கள் என்பன பற்றிய கோட்பாடுகள் தர்ம சூத்திரங்களுக்கு அடிப்படையானவை. சமுதாய வேறுபாடுகள் தோன்றி உறுதியாகிவிட்ட ஒருகாலத்திலே தர்ம சூத்திரங்கள் எழுந்தன. வர்ணப்பாகுபாடு தொழில் வேற்றுமை காரணமாக எழுந்த ஒன்றாகும். பிராமணர்கள் வைதீக மரபைச் சார்ந்தவர்கள், வைதீக நெறியின் அனுசரணையாளர்; அதன் காவலர். வேதம் ஓதுதல், ஒதுவித்தல், வேள்வி வேட்டல்வேட்பித்தல் என்பன அவர்களுக்குச் சிறப்பாக உரிய கடமைகளாகும். மிகப் பரந்த அளவிலான வேதவரிசையிலுள்ள இலக்கியம் எழுத்து வடிவம் பெறாது செவிவழியாகப் பேணப்பட்டு வந்தது. வேதம் அறிவுக்களஞ்சியமானது; ஞானமயமானது; இம்மைக்கும், மறுமைக்கும் பற்றுக் கோடான ஞான நெறியையும், தர்மோபதேசங்களையும்
இந்துக்கலைக்களஞ்சியம்

Page 147
உள்ளடக்கியிருப்பதால் வேத விற்பன்னர்களுக்குச் சிறப்பிடம்
வழங்கப்பட்டது. அதனாலேதான்
"அந்தணர் என்போர் அறவோர் மற்றெவ்வுயிர்க்கும் செந்தண்மை பூண்டு ஒழுகலான்”
என்றனர் திருவள்ளுவர். இராச்சியங்கள் உருவாகிய காலத்தில் அவற்றைக் காவல் புரிகின்றவர்கள் ஷத்திரியர் ஆயினர். ஷத்திரியன் ஒருவனே அரசனாக வேண்டும் என்பது புராதன காலக் கோட்பாடு. ஷத்திரியர்கள் படைக்கலம் தாங்குபவர்கள்; படையணிகளிலே சேவகம் புரிவர்கள். பேராற்றல் மிக்கவனே மன்னனாவான். உற்பத்தி, பண்டமாற்று பொருட்பரிவர்த்தனை, வாணிபம் ஆகியவற்றிலே ஈடுபட்டவர்கள் வைசிகர். சூத்திரர் என்னும் வர்ணத்தவர். வர்ணங்கள் நான்கு என்பது ஒரு கோட்பாடு மட்டுமே. உண்மையில் சமுதாயப் பிரிவுகள் மிகப்பலவாகும். பரம்பரை அடிப்படையிலான தொழில் அதற்கான முதற்காரணமாகும். சமூக வேறுபாடுகளுக்கு வேறும் பல காரணங்கள் உண்டு. அவற்றைப் பற்றிய நவீன கால ஆராய்ச்சியாளரின் விளக்கங்களில் இன்னுந் தெளிவும் உறுதிப்பாடும் ஏற்படவில்லை.
இருக்கு வேதத்திலுள்ள புருஷ சூக்தம் நான்கு வருணத்தாரும் ஆதி புருஷனுடைய உடற்கூறுகளிலிருந்து உற்பத்தியானவர்கள் என்று சொல்கின்றது. எனவே, அவை சமுதாயத்தின் அங்கங்களானவை; சமநிலையிலுள்ளவை என்பதையே புருஷ சூக்தம் குறிக்கின்றது என்று கருதலாம். வர்ணங்களுக்கிடையிலான ஏற்றத்தாழ்வுகள் பற்றிய சிந்தனைகள் எல்லாம் பிற்காலத்தே எழுந்தவை. புருஷசூக்த வர்ணனைகளுக்கு உடன்படாதவை. ஆசிரமங்களைத் தமிழ் நூல்கள் நிலை நான்கு என்று கூறும். அந்த நிலைகள் நான்கும் ஒருவரின் வாழ்க்கையிலுள்ள கால பருவங்களாகும். பிரமச்சரியம் என்பது, இளமைக்காலத்து வாழ்க்கை நெறி. அது, கற்கை நெறி முடிவடைந்ததும் முடிவு பெறுகின்றது. கிருகஸ்தம் என்பது ஒருவன் பெண்ணொருத்தியை மணம் முடித்து இல்வாழ்க்கை நடத்தும் நெறியாகும். இல்வாழ்க்கையின் பயன்களை யெல்லாம் அனுபவித்து அதற்குரிய கடன்களை நிறைவேற்றிய பின்பு மறுமைப்பயன் வேண்டி ஆன்மீக ஈடேற்றத்திற்கு ஆயத்தமாகின்ற நிலை, வானப்பிரஸ்தம். அது காமம் நீங்கி இன்ப துன்பங்களைச் சமநிலைப்படுத்தி பற்றினைத் துறத்தற்கான பக்குவத்தைப் பெறுகின்ற நிலை. நான்காவது நிலையாகிய சந்நியாசம் முற்றுந்துறந்த நிலை. மூன்றாம், நான்காம் நிலைகள் இலட்சிய பூர்வமானவை. சமுதாயத்திலுள்ள பெரும்பாலானோர் அவற்றை அடைவதற்கும் பக்குவம் பெறுவதில்லை.
பிறப்பு முதல் இறப்புவரை ஒருவர் செய்யவேண்டிய கடமைகள் ஆசிரம தர்மங்களிலே விவரமாக விளக்கப்படுகின்றன. ஒவ்வொரு நிலைக்கும் ஏற்ப ஆற்றவேண்டிய கடமைகள், கடைப்பிடிக்க வேண்டிய வாழ்க்கை முறைகள், நடையுடை பாவனைகள் முதலியன எல்லாம் தர்ம சூத்திரங்களிலே விளக்கப்படுகின்றன. வர்ணம் ஆசிரமம் என்பனவற்றை விளக்கிய பின்பு வாழ்க்கையின் ஆரம்பத்தில்
இந்துக்கலைக்களஞ்சியம்

இருந்து செய்யப்பட வேண்டிய கடமைகள், கருமங்கள் யாவும் வரிசைக்கிரமமாக இவற்றிலே சொல்லப்படுகின்றன.
தர்ம சூத்திரங்கள் அரசியல், சமூகம், தனி மனித வாழ்க்கை முதலியவற்றையெல்லாம் வாழ்வியலின் பிரதான அம்சங்களாக பரஸ்பர தொடர்புடையனவாகவே கொள்ளுகின்றன. மக்கள் தனியாகவும், கூட்டாகவும் கடைப்பிடிக்கின்ற தர்மம், ஆட்சியின் மாட்சியிலே தங்கியுள்ளது. அரசனே தர்மஸ்யகோபா என்று கொள்வது மரபு. எனவே, இராஜதர்மம் தர்ம சூத்திரங்களிலே ஒரு முக்கிய அம்சமாக வருகின்றது. அரசனுடைய கடமைகள், தகைமைகள், விதிகளாக வகுத்துச் சொல்லப்படுகின்றன. அரசியல் விடயங்கள் பற்றிய விளக்கங்கள் இடம்பெறுகின்றன. நீதிபரிபாலன முறைக்கு அடிப்படையாக அமைந்த வழமைகளும், சிந்தனைகளும் தர்ம சூத்திரங்களிலே முதல் முதலாக விளக்கப்படுகின்றன. சமூக வழமைகளும், பழக்க வழக்கங்களும் அவற்றிலே சொல்லப்படுகின்றன.
அரசனது கடமைகள்
மனித உரிமைகள் பற்றியும் அரசனுடைய உரிமைகள், அதிகாரங்கள் பற்றியும் தர்ம சூத்திரங்கள் பேசுவதில்லை. அரசனதும், குடியானவர்களதும் கடமைகள் பற்றியே அவை கூறுகின்றன. மூன்று வேதங்களைப் பற்றியும் நியாயம், பொருளாதாரம் என்பன பற்றியும் அறிந்திருப்பதோடு படைக்கலப் பயிற்சியில் வல்லவனாகவும் நல்லொழுக்கம், தூய்மை, நாவடக்கம், புலனடக்கம் ஆகிய பண்புகளைக் கொண்டவனாகவும் மன்னன் விளங்க வேண்டும். நான்கு வருணத்தாரையும் நான்கு நிலையிலுள்ளவர்களையும் தர்மத்தின் அடிப்படையில் காப்பாற்றுவது அவனது பிரதானமான கடமையாகும். அவன் பகைவர்களிடமிருந்து நாட்டைக் காப்பாற்ற வேண்டும். எல்லா உயிர்களின் மீதும் அன்புடையவனாய் இருத்தல் வேண்டும். பாண்டித்தியமுடைய பிராமணர்களுக்கு ஆதரவு வழங்க வேண்டும். எல்லா வகுப்புகளையுஞ் சேர்ந்த வறியவர்களையும் பசி, பிணி, கால நிலைகள் ஆகியவற்றாற் பாதிக்கப்பட்டவர்களையும் அரசன் ஆதரிக்க வேண்டும். அவன் பாரபட்சமின்றிக் குடியானவர்கள் எல்லோருக்கும் நன்மை புரிய வேண்டும். ஒரு நாட்டின் கிராமங்களிலும், வனங்களிலும், பாதைகளிலும் கள்வர் பயமின்றி எல்லோரும் நடமாடக் கூடிய வகையிலே காவல் புரிகின்ற மன்னனே மக்களின் பாதுகாவலனாவான். ஒருவருடைய பொருட்களைக் கள்வர்கள் அபகரிக்குமிடத்து அவற்றைக் கண்டுபிடித்து உரியவர்களிடம் வழங்குவது அரசருக்குரிய கடமையாகும். அதைச் செய்ய முடியாதவிடத்து மன்னவன் தன்வசமுள்ள மூலதனத்தில் இருந்து இழந்த பொருளின் பெறுமதியை உடையவனுக்குக் கொடுப்பதற்குக் கடமைப்பட்டுள்ளான். தனக்குக் கிடைக்க வேண்டிய வரிகளுக்கு மேலதிகமாக குடியானவர்களின் உடைமைகளைத் தனது தேவைகளுக்காக அரசன் பயன்படுத்தக் கூடாதென்று பெளதாயண தர்ம சூத்திரம் குறிப்பிடுகின்றது.
தர்ம சூத்திரங்கள் எழுந்த காலத்திலே இராச்சியம் நிறுவன ரீதியாக உருவாகியிருந்தது. மன்னர்கள் தலைமையில் நிருவாக முறையும் வரிமுறையும் ஏற்படுத்தப்பட்டிருந்தன. அரசனுக்குரிய பல வரிகள் பற்றி கெளதம தர்ம சூத்திரத்திலே
ffs

Page 148
கூறப்படுகின்றது. இறைவரி விளைவில் ஆறிலொன்று என்று பெளதாயன தர்ம சூத்திரம், வசிஷ்ட தர்ம சூத்திரம் என்பன கூறும். உற்பத்திக்கேற்ப இறை கடமைகள் வேறுபடும் என்று கெளதம தர்ம சூத்திரத்திலே கூறப்படுகின்றது. மேலும், மந்தைகள், உலோகப்பொருள்கள் என்பவற்றிலே ஐந்தில் ஒரு பாகமும் வர்த்தகப்பொருள்களில் ஐந்து சதவீதமும், கிழங்குவகைகள், கனிவர்க்கங்கள், மலர்கள், மருந்து மூலிகைகள், தேன், மாமிசம், புல், எரிபொருள் ஆகியவற்றில் அறுபதில் ஒரு பாகமும் அரசனுக்குரித்தானவை என்று கெளதம தர்மசூத்திரம் குறிப்பிடுகின்றது. குடியானவர்களிற் சில வகுப்பினர் அரசனுக்குச் சில சமயங்களிலே ஊழியஞ் செய்ய வேண்டும். கம்மாளரும் ஏவல் தொழில் புரிவோரும் மாதமொன்றுக்கு ஒருநாள் ஊழியஞ் செய்தல் வேண்டும். கப்பலோட்டிகள், வண்டிக்காரர் போன்றோரும் இவ்வாறான கடமை செய்தல் வேண்டும்.
வரி விலக்குப் பெற்றவர்களைப் பற்றியும் இந்நூல்களிலே சொல்லப்படுகின்றது. கல்வி, ஞானம் கைவரப்பெற்ற குருமாரும், பெண்களும், பிரம்மச்சாரிகளும், துறவிகளும், பாலர்களும், முதியோரும், அங்கவீனர்களும், சூத்திரர்களும் வரிவிலக்குப் பெறுவதற்கு உரிமையுடையவர்கள் என்று ஆபஸ்தம்ப தர்ம சூத்திரங்கூறும். ஆயினும், பெண்களிற் கன்னிப்பெண்கள், சேவகம் புரிவோரின் மனைவிமார், விதவைகள் என்போருக்கு மட்டுமே வரிவிலக்கு உண்டென்று வசிஷ்டர் கூறுவார். அரசனொருவன் மகாபண்டிதரான பிராமணரைப் புரோகிதராக நியமிக்க வேண்டுமென்பது விதி. வேதம் வல்ல புரோகிதரான அந்தணரும், அரசனும் இணைந்து உலகிலே தர்மத்தை நிலை பெறச் செய்கின்றனர் என்று கெளதமர் கூறுவார். புரோகிதர் அரசனுடைய கடமைகளிலே மிகுந்த ஈடுபாடும் கவனமுங் கொண்டிருக்க வேண்டும். சொப்பனங்கள், காலநிலைகள் முதலியன பற்றி அறிவுரை வழங்குவதும் நல்லாட்சிக்கும் போரிலே வெற்றிக்கும் வேண்டிய ஆசி அறிவுரைகளை வழங்குவதோடு கிரியைகளும் செய்வது அவருடைய கடமையாகும். போர் தொடங்குமிடத்து அரசனது இரதத்தின் மேற்குப் புறமாக நின்று அவனது பாதுகாப்பும், வெற்றியும் உறுதியாகும் பொருட்டு மந்திரங்களை உச்சாடனஞ் செய்தல் வேண்டும் என்பது அஸ்வலாயன கிருஹ்ய சூத்திரத்திலுள்ள குறிப்பாகும். குதிரைகளுக்கும் காவல் மந்திரங்களை உச்சரிப்பதோடு அரசனுக்குக் காவலாகக் காப்புக்கட்ட வேண்டும். அரண்மனையிலே ஆலோசகராகவும் பணித்துறை அதிபராகவும் பிராமணர் பலர் இருந்தனர். ஆயினும், புரோகிதர் என்னும் பதவி ஒருவருக்கு மட்டுமே வழங்கப்பட்டது. “பரிஷத்” என்னுஞ் சபையொன்று பற்றிச் சொல்லப்படுகின்றது. அதிற் பெரும்பாலும் பிராமணரே உறுப்பினராயிருந்தனர். நீதிபரிபாலனம் முதலான பல துறைகள் தொடர்பாக அவர்கள் ஆலோசனை வழங்கினர். அரசனை “பரிஷத் பலன்’ என்று பாணினி வருணிக்கின்றார். நான்கு வேதங்களையும் துறைபோகக் கற்ற பிராமணர் நால்வரும் மூன்று நிலைகளைச் சேர்ந்த மூவரும் மீமாம்ச விற்பன்னர் ஒருவரும் வேதாங்கங்களைத் துறைபோகக் கற்ற ஒருவரும் தர்மசாஸ்திர ஆசிரியர் ஒருவரும் பரிஷத்திலே இடம்பெற்றனர் என்று சொல்லப்படுகின்றது.
fró

சூத்திரங்கள் எழுந்த காலத்தில் அரசபதவி பரம்பரையுரிமையாகிவிட்டதென்று கருதலாம். "இராஜசூயம்” நடைபெற்ற பொழுது வேள்வியை நடத்திய “ஹோத்திரி” எனும் புரோகிதர் அபிஷேகஞ் செய்யப்பட்ட அரசனுக்கு “சுனக்ஷேபன்’ பற்றிய கதையைச் சொன்னார் என அஸ்வலாயன ஸ்ரெளத சூத்திரம் குறிப்பிடுகின்றது. அச்சமயத்திலே அரசனோடு அவனது மகனும், மந்திரிகளும் பொன்மயமான ஆசனத்திலே வீற்றிருந்தனர். அரசன் காவலன் என்ற வகையிற் குடியானவர்கள் எல்லோரின் மீதும் அதிகாரங்கொண்டிருந்தான். காவலன் என்ற வகையிற் கொலை, களவு போன்ற பெருங் குற்றங்களைச் செய்வோரைத் தண்டிப்பது அவனுடைய கடமையாகும். அதற்கென அவனை ஆதாரமாகக் கொண்டு நீதி பரிபாலனஞ் செய்வதற்குப் பல்வேறு தரத்து அதிகாரிகளை அரசன் நியமித்தான். “குடியானவர்களைக் காப்பாற்றுவதற்காக முதல் மூன்று வருணத்தாரிடையே காணப்படும் தூய்மையும், வாய்மையுங் கொண்டவர்களைக் கிராமங்களிலும், நகரங்களிலும் அதிபர்களாக நியமிக்க வேண்டும்” என்பது ஆபஸ்தம்பரின் குறிப்பாகும். ஒரு நாட்டிலுள்ள மிகச் சிறிய நிர்வாகப் பிரிவு கிராமம் ஆகும். அதன் தலைவனை “கிராமணி’ என்று சொல்வது வழக்கம். போர்க்காலங்களிலே அவன் இராணுவ சேவை புரிந்தான். சாதாரணமான காலத்திலே அவன் நிர்வாகப் பணிகளைப் புரிந்தான். நகராதிபர்களுங் கிராமத்தலைவர்களும் அமைதியைப் பேணி வழமைக்கேற்ப நீதி பரிபாலனம் புரிந்து வளிசேர்க்கும் பணியிலும் ஈடுபட்டனர் எனலாம்.
காவலன் என்ற காரணத்தினாற் போர்க்காலங்களிலே அரசன் படைகளுக்குத் தலைமை தாங்கிச் செல்ல வேண்டும். அவன் வீரம் மிக்கவனாகவும் எதுவித பயமுமின்றிச் செயற்படுபவனாகவுங் காணப்பட வேண்டும். போரிலே நஞ்சு கலந்த ஆயுதங்களைப் பயன்படுத்துவது முறைகேடாகும். நிராயுத பாணிகளைக் கொல்வது அதர்மமாகும். அபயம் புகுவோரையும் பணிந்துவிடுவோரையும் சமாதானம் வேண்டுவோரையும் கொல்வது பெரும்பழியென்று கொள்ளப்பட்டது.
நீதிபரிபாலனம்
நீதிபரிபாலன முறையின் வளர்ச்சியின் ஆரம்பப் படி நிலைகளைத் தர்ம சூத்திரங்களிலே காண முடிகின்றது. கொலை, கொள்ளை, களவு முதலான வன்செயல்கள் சமுதாய நலனைப் பெரிதும் பாதிப்பவை என்பது முதன் முதலாகத் தெளிவாக உணரப்பட்டது. அத்துடன் குடியியல் சம்பந்தமான தகராறுகள் வன்முறை தொடர்பான தகராறுகள் என்பவற்றிற்கிடையிலான வேறுபாடுகள் உணரப்பட்டன. அந்த உணர்வின் அடிப்படையிலே குற்றவியல் பற்றிய விதிகளும் வகுக்கப்பட்டன. தர்ம சூத்திரங்கள் பிரதிபலிக்கும் சட்டநெறியில் நவீனகாலக் கோட்பாடுகளைக் கண்டுகொள்ள முடியாது. மனிதாபிமானம், சமஉரிமை, சமநீதி ஒழுங்குபடுத்தப்பட்ட சட்டக்கோவையின் அடிப்படையிலான நீதிபரிபாலனம் என்பன எல்லாம் நவீனகாலத்திற்குரிய அம்சங்களாகும். அரசன் ஆணையே சட்டத்தின் ஆதாரம் என்றுங் கொள்ளப்படவில்லை. வேதம், மரபு, சான்றோர் வழக்கு ஆகிய மூன்றுமே சட்டத்திற்கு ஆதாரமானவையென்று சூத்திர
இந்துக்கலைக்களஞ்சியம்

Page 149
நூல்கள் கூறும். இம்மூன்றினுள் முன்னைய ஒவ்வொன்றும் அதன் பின்வருவதைக்காட்டிலும் வலியுடையது என்று கொண்டனர். ஆயினும், இவற்றிற்கிடையிலே முரண்பாடு காணப்படுமிடத்து விரும்பியவாறு அவற்றில் ஒன்றை ஆதாரமாகக் கொள்ளலாம் என்பார் கெளதமர். நீதி விசாரணை நடத்தி, குற்றத்திற்கு ஏற்ற தண்டனை வழங்குவது அரசனுடைய பொறுப்பாகும். அவன் நீதி பரிபாலனத்துக்குப் பொறுப்பாக அத்யக்ஷர்களை நியமிக்கலாம். அரசன் தர்ம சாஸ்திரம், புராணம் ஆகியவற்றைப் பற்றி அறிந்திருப்பதோடு பிரதேசம், சமூகப்பிரிவுகள், கூட்டமைப்புகள், குலங்கள் ஆகியவற்றின் வழமைகளையும் அவற்றை நன்கு அறிந்து கொண்டவர் களிடமிருந்து கேட்டறிதல் வேண்டும். தீர்ப்பு வழங்கமுடியாத சங்கடமான வழக்குகளை பரிஷத்தினுடைய பரிசீலனைக்கு ஒப்படைக்கலாம். ஒருவரை வன்முறைக்குள்ளாக்கல், களவு, கொலை, கற்பழித்தல் முதலியன பாதகச் செயல்களாகும். கொலையாளி ஒருவனைக் கொலை செய்தல் பழியற்றது என்று வசிஷ்ட தர்ம சூத்திரத்திலே சொல்லப்படுகின்றது. களவு பற்றிய ஆபஸ்தம்ப தர்ம சூத்திரம் மேல் வருமாறு விவரிக்கின்றது;
"வேறொருவரின் பொருள்கள் மீது ஆசைப்பட்டு அவற்றைக் கவர்ந்து கொள்ளுதல் களவாகும்.” இது கெளத்ஸ ஹாரீத, புஷ்கர ஸாதி, கண்வ என்போரின் கருத்து. வார்ஷாயணி சில புறநடைகளைப் பற்றிச் சொல்வார். “எருதுகளுக்கு வைத்த உணவு, கலத்திலிட்ட விதை, தானியங்களின் முளைகள் போன்றவற்றிலே ஒரு சிறிய பகுதியைக் கவர்ந்தால் அது களவென்று கொள்ளப்படுவதில்லை.”
களவு செய்வோருக்குக் கடுமையான தண்டனைகள் விதிக்கப்பட்டுள்ளன. மரண தண்டனை வழங்குவது வழமை. பிராயச்சித்தங்கள் மூலமாக குற்றம் புரிந்தோர் நிவாரணம் பெற்றுக் கொள்ளவும் முடியும். குற்றம் புரிந்தவர்களுக்குத் தண்டனை வழங்காதவிடத்துப் பழி அரசனைச் சூழ்ந்து கொள்ளும். வன்முறை சம்பந்தமான குற்றங்களுக்கு உடல் வருத்துதல், தேசப்பிரஷ்டம், தண்டம் முதலான தண்டனைகள் வழங்கப்பட்டன. கற்பழித்தலில் ஈடுபடுவோருக்குக் கொடுமையான தண்டனைகள் விதிக்கப்பட்டுள்ளன. மனையாளை விட்டுப்பிரிந்து செல்பவனுக்கும் கடுந்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அத்தகைய கணவன் ஒருவன் தலைவிரிகோலமாகவும், கழுதைத் தோலைப் போர்த்த வண்ணமும் ஏழு வீடுகளுக்குச் சென்று, தான் புரிந்த குற்றத்தைச் சொல்லி யாசகம் பண்ண வேண்டும். ஆறு மாதங்களாக அவ்விதமாக வாழ்ந்து அவன் அவமானமடைவான். மதுபானங்களை உண்ணுவோருக்கும் கொடுமையான தண்டனைகள் விதிக்கப்பட்டுள்ளன. கல்வி அறிவுடையோர் குற்றம் புரியுமிடத்து அவர்களுக்கு கூடுதலான தண்டனை வழங்கப்படும்.
தாயபாகம் பற்றியும் தர்ம சூத்திரங்களிலே விவரங்கள் காணப்படுகின்றன. ஆனால் அவை தெளிவற்றும் மாறுபாடாகவுஞ் சொல்லப்படுகின்றன. சொத்துடைமைகளின்
இந்துக்கலைக்களஞ்சியம்

பங்கீடு பற்றிய மிகப் புராதனமான குறிப்புகள் இவற்றிலே காணப்படுகின்றன. ஒருவருக்குச் சொந்தமான நில உடைமைகள் யாவும் சந்தான வழியில் ஆண்களின் உரிமையாகும். கணவன் இறக்குமிடத்து அவற்றிலே விதவையானவள் உரிமை பெறுவதில்லை. ஆயினும், ஆபரணங்களும், உறவினர் வழங்கிய உபகாரங்களும் அவ்ளின் உரிமையாகும் என்று சிலர் சொல்வர். ஆண் மக்கள் இல்லாத இடத்துச் சொத்துக்கள் பெண்களின் உரிமையாகுமென்று ஆபஸ்தம்பர் சொல்வார். உரிமையாளர் இல்லாத பொருட்களெல்லாம் அரசனுக்குரியவை.
மணமுறைகள்
நாமதேயம், அன்னப்பிராசனம், கர்ணவேதனம், உபநயனம் முதலான எல்லாச் சடங்குகள் பற்றியும் தர்ம சூத்திரங்களிலே சொல்லப்படுகின்றது. எண்வகை மண முறைகளைப் பற்றி முதன் முதலாக தர்ம சூத்திரங்களே குறிப்பிடுகின்றன. பிரம்ம, தைவ, ஆர்ஷ, பிரஜாபத்ய, காந்தர்வ, ராக்கூடிச, பைஸாஸ் என்னும் எண்வகை மண முறைகளைப் பற்றிச் சொல்லப்படுகின்றது. காலப்போக்கிலே இவற்றைப் பற்றிப் பேசுவது ஒரு மரபாகிவிட்டது. இவற்றுள் இறுதியான இரண்டும். உண்மையில் மண முறைகளன்று. அவை, சமுதாயத்தினால் ஒப்புக்கொள்ளப்படாதவை. பலாத்காரமாகப் பெண்களை கவர்ந்து செல்வது அவற்றின் அடிப்படை அம்சமாகும். கன்னியொருத்தியின் பெற்றோரும், உறவினரும் துயிலும் பொழுதும் அவர்கள் செய்வதறியாதிருக்கும் பொழுதும் அவளைக் கவர்ந்து செல்வது, பைஸாஸம் எனப்படும். அவளுடைய உறவினரோடு தகராறு புரிந்து கன்னியை அபகரித்துச் செல்வது ராக்கூடிசம் என்று சொல்லப்படும். இவை பழங்குடி மக்களிடையே காணப்பட்ட வழமைகள் போலும், பிரம்ம விவாக முறையே சிறப்பானதென்று கொள்ளப்படும். அது, மணமகன், மணமகள் ஆகிய இருவரதும் பெற்றோர்கள் கூடி, கலந்து, ஒருமித்து ஒப்பேற்றுவது. தாயினது இரத்த உறவினரான ஒருத்தியையும் தனது கோத்திரத்திலுள்ள ஒருத்தியினையும் ஒருவன் மணம் புரிதல் கூடாது என்பது விதி.
கலியாணச் சடங்கினைப் பற்றி விவரமான குறிப்புகள் தர்ம சூத்திரங்களிற் கிடைக்கின்றன. தங்கள் மகனுக்குக் கலியாணஞ் செய்ய விரும்பும் பெற்றோர்கள் கலியாணப் பேச்சினைத் தொடங்கும் வண்ணமாகப் பெண்ணின் வீட்டுக்குப் போவது வழமை. அவளுடைய தகப்பன் சம்மதம் தெரிவித்தபின் கலியாணம் முடிக்கப்போகும் ஆடவன் ஒரு யாகஞ் செய்வான். கலியாண வைப்வம் நடைபெறும் நாளில், அதிகாலையிற் கன்னியைக் குளிப்பாட்டுவர். அதன் பின் பெண்வீட்டாரின் புரோகிதர் யாகாதி கர்மங்களைச் செய்வார். இந்திராணி கர்மம் என்னும் சடங்கின்போது நான்கு அல்லது எட்டுப் பெண்கள் நடனஞ் செய்வர். அதன் பின்பு மணமகன் தனது வீட்டிலிருந்து புறப்பட்டு மணமகளின் வீட்டை அடைவான். வஸ்திரம், வாசனைத் திரவியம், கண்ணாடி ஆகியவற்றை மணமகளுக்கு உபகாரமாக அவன் சார்பிலே வழங்குவர். அதன் பின்பு கன்யாதானம், பாணிக்கிரகணம் முதலிய கருமங்கள் வரிசைக் கிரமமாக நடைபெறும். மணமக்கள் இருவரும் ஒருவர்
17

Page 150
மற்றவருடைய வலக்கரத்தைப் பற்றிக்கொள்ளுதல் பாணிக்கிரகணம் என்று சொல்லப்படும். அம்மி மிதித்த பின்பு யாகாக்கினியை மணமக்கள் வலம்வருவர். அதன் பின் தானியப் பொரிகள் யாகாக்கினியில் இடப்படும். அதனைத் தொடர்ந்து சப்தபதி என்னும் கருமம் நடைபெறும், அது அடையாள பூர்வமானது. மணமக்கள் கூட்டாக ஏழடி முன்னெடுத்து நடப்பர். அது உயிருள்ளவரை இருவரும் இணைந்து வாழ்வதென்ற உறுதிப்பாட்டை வெளிப்படுத்தும் அடையாளமாகும். இவ்வாறான கருமங்கள் எல்லாம் முடிந்த பின்பு மணமகன் மணப் பெண்ணைக் கோலாகலமாகத் தன் வீட்டுக்கு அழைத்துச் செல்வான்.
கலியாணங்களைப் பொறுத்தவரையில் அநுலோமம், பிரதிலோமம் என்னும் கோட்பாடுகள் பின்பற்றப்பட்டன. ஒத்த வர்ணத்தார் (சவர்ண) கலியாணம் முடிப்பதே ஏற்புடையதாகக் கருதப்பட்டது. பிராமணர், ஷத்திரியர், வைசியர், சூத்திரர் என்னும் நான்கு வர்ணத்தாரிலும் வரிசைக் கிரமத்தில் முதன்மை பெறும் வர்ணத்தைச் சேர்ந்த ஆடவன் ஒருவன் அடுத்த வர்ணத்திலுள்ள பெண்களை மணந்து கொள்ளலாம். ஆயினும் கீழ் வர்ணத்தவர்கள் மேல்வர்ணத்துப் பெண்களை விவாகஞ் செய்யலாகாது. ஆண்கள் பல பெண்களை விவாகஞ் செய்து கொள்ளும் முறையும் காணப்பட்டது.
பிரம்ம மணமுறையிற் பெற்றோரும், உறவினரும், வஸ்திரம், ஆபரணம் முதலானவற்றை மணமகளுக்கு நன்கொடையாகக் கொடுப்பது வழமை. அவ்விதமாகக் கிடைக்கும் பொருள்கள் யாவும் அவளுடைய உடைமைகளாகும். தைவ மணமுறையிலும் பெண்ணுக்கு இவ்விதமான உபகாரங்கள் கிடைத்தன. அசுர முறையில் விலையாக (சுல்க), பெற்றோருக்கு பொருள் வழங்கிப் பெண் கொள்வது முறை. அது கூடித்திரியரிடையிற் காணப்பட்ட வழக்கம் என்று சொல்லப்படுகின்றது. மணவினைகளால் ஏற்படும் தொடர்பு பரிசுத்தமானது. அது உடன்படிக்கையாகவோ ஒப்பந்தமாகவோ அமைவதில்லை. சமுதாயத்தில் ஆண்களுக்கே முதலிடம் அளிக்கப்பட்டது. புராதன காலத்துப் பிற பல சமுதாயங்களிற் போல சந்தான முறைகளும், உரிமைகளும் ஆண்வழிப்பட்டவை. பிதிர்கடன்களை ஆண்களே செய்வதால் ஆண்பிள்ளைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. உபநயனம் ஆண்களுக்கு மட்டுமே உரியதாகும். கலியாணம் நீங்கலாகப் பெண்களுக்குச் செய்யப்படும் சடங்குகளில் வேதமந்திரங்கள் ஒதப்படுவதில்லை.
பெண்களின் சிறப்புரிமைகள்
சில சமயங்களிற் பெண்கள் சிறப்புரிமை பெற்றிருந்தமை பற்றிய குறிப்புகளும் தர்ம சூத்திரங்களிற் காணப்படுகின்றன. மனைவியே மனையாள் என்பதாற் காலையிலும் மாலையிலும் வீட்டிலே செய்யப்படும் யாகங்களைப் புருஷனுக்குப் பதிலாக அவளே செய்துகொள்ளலாம் என்று கோபில கிருஹ்யசூத்திரம் கூறும். மனைவியானவள் ஆண்மக்களைப் பெறாதவிடத்தும் சமயச் சடங்குகளை அனுசரியாதவிடத்தும் மட்டுமே வேறொரு பெண்ணை இரண்டாம் மனைவியாகக்
፲፫8‛

கொள்ளலாம் என்பது ஆபஸ்தம்பரின் கருத்தாகும். மனைவியானவள் தகராறு செய்பவளாயினும், வீட்டைவிட்டு வெளியேறினாலும், வன்செயலுக்கு பாத்திரமானவளாகிலும், கள்வராற் கைப்பற்றப்பட்டவளாகிலும் அவளைக் கணவன் கைவிடலாகாது என்பர் வசிஷ்டர். அவள் பிறரைப் புணர்ந்து கொண்டாலும், அவள் பிராயச்சித்தங்கள் மூலமாகத் தூய்மை பெறுவாள் என்றும் அவளைக் கணவன் மீண்டும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் அவர் சொல்வார். தகுந்த காரணமின்றி மனைவியை விட்டு விலகிச் செல்லும் புருஷனுக்குக் கடுமையான தண்டனைகள் விதிக்கப்பட வேண்டும் என்பது ஆபஸ்தம்பரின் கொள்கை. ஆனால் அவ்வாறான பெண்களுக்குப் பிராயச்சித்தம் மட்டுமே விதிக்கப்பட வேண்டும் என்பது சிலரின் கொள்கை. மறைநூல் விதிப்படி விவாகமாகாத கன்னி ஒருத்தியை பலாத்காரமாகப் பிறர் கைப்பற்றியிருப்பினும் அவளைக் கன்னிப் பெண்ணாகவே கருதி, அவளுக்குத் திருமணஞ் செய்தல் வேண்டும் என்பது பெளதாயனரின் கருத்தாகும்.
கல்வி
கல்வி கற்றலைப் பற்றிச் சூத்திரங்களில் விரிவான குறிப்புக்கள் உள்ளன. உபநயனத்துடன் வேதங்களைப் பற்றிய கல்வி ஆரம்பமாகும். உபநயனம் குருவினாலே பிரம்மச்சரியத்தை மேற்கொள்ளும் இளைஞன் ஒருவனுக்குச் செய்யப்படும் சடங்காகும். பிராமணருக்கு எட்டாம் வயதிலும் கூடித்திரியருக்குப் பதினோராம் வயதிலும் வைசியருக்குப் பன்னிரண்டாம் வயதிலும் உபநயனம் செய்யப்படும். பிரம்மச்சாரிகள் ஆசார சீலராகவும், எளிமையாகவும் குருவின் வசிப்பிடத்திலே தங்கியிருக்க வேண்டும். உபநயனம் செய்து கொண்டதும் மிருகங்களின் தோலினாற் செய்யப்பட்ட மேலங்கியும் அதற்கிசைவான வண்ணத்தில் வஸ்திரமும் தரித்தல் வேண்டும். மான், ஆடு, மாடு ஆகியவற்றின் தோல்கள் மேலாடை செய்வதற்குப் பயன்படுத்தப்பட்டன. அவர்கள் முறுக்கப்பட்ட முப்புரிநூலை அணிவதோடு விதிக்கப்பட்ட அளவுடைய தண்டம் ஒன்றையும் வைத்திருக்க வேண்டும். குருவோடு தங்கியிருக்கும் காலத்திற் பிரமச்சாரிகள் யாசகஞ் செய்து உணவினைச் சேகரிக்க வேண்டும். குருவின் வீட்டில் யாகாதி கருமங்களைக் கவனிக்க வேண்டும்; வீட்டு வேலைகளைச் செய்தல் வேண்டும். மாணவர்கள் வேதம் முதலானவற்றைக் குருவிடமிருந்து கற்றனர். முதலாவதாக அவர்கள் வேத மந்திரங்களை மனனஞ் செய்யப் பழகிக் கொண்டனர். போதனை பற்றிய சில விவரங்கள் கிருஷ்ய சூத்திரங்களிற் காணப்படுகின்றன. ரிஷி ஒருவரின் பாடல்களை மனனஞ் செய்து ஒதுவதற்குச் சிலர் பழகிக் கொண்டனர். சில சமயங்களில் ஒவ்வொரு பாடலிலுமுள்ள முதலாவது செய்யுளை மட்டும் மனனம் பண்ணிக்கொள்வர். வேதவிற்பன்னராக வேண்டியவர்கள் வேதவரிசையிலுள்ள பகுதிகளைக் கூடுதலாகக் கற்றனர். கூடித்திரியராயினோர் ராஜதர்மம், படைக்கலப் பயிற்சி போன்ற துறைகளில் அதிக ஈடுபாடு கொண்டனர்.
குருகுலக் கல்வி ஆடி மாதத்துப் பூர்வபக்ஷத்தில், மழை பெய்யத்தொடங்கியதும் புல், பூண்டுகள் முளைத்துப் பசுமை
இந்துக்கலைக்களஞ்சியம்

Page 151
ஏற்படுங்காலத்திலே ஆரம்பமாவது வழமை. உபநயனம் முடிந்ததும் மாணவர் இருபிறப்பாளர் என்னுந் தகைமையினைப் பெறுவர். தண்டப் பிரதானம் என்பது ஒரு கிரியை போல நடைபெறும். தண்டம் பிரம்மச்சாரிகளின் அடையாளமான கோல், உபநயனம் செய்த ஒருவனுக்கு குரு அதனை வழங்குவது தண்டப்பிரதானம் எனப்படும். மாணவர்கள் தினமும் பிராணாயாமம், சந்தியாவந்தனம் ஆகியவற்றில் ஈடுபடுவது வழமை.
தர்ம சூத்திரங்கள் ஸ்மிருதி என்னும் இலக்கிய வகையினைச் சேர்ந்தவை. அவை கருத்திற் கொள்ளவேண்டிய விடயங்களை விவரிக்கின்றன. ஸ்மிருகளின் விதிகள் சுருதிப் பிரமாணமாக அமைவதில்லை. புராதன காலத்து வழமைகளையும் சிந்தனைகளையும் பதிவுசெய்யும் கருவூலங்களாகவே அவற்றைக் கொள்ளலாம். காலப்போக்கில் அவை பிரதிபலிக்கும்
சமூக நிறுவனங்களும், கருத்துக்களும் மாற்றமடைந்துள்ளன.
(#? Ly.)
0ffDബ്രി
ஐம்பத்தொன்பதாவது மேளகர்த்தா இராகம். திசி என்றழைக்கப்படும், 10 ஆவது சக்கரத்தில் ஐந்தாவது மேளம் (திசி - மா) 23ஆவது மேளமாகிய கெளரி மனோஹரியின் நேர்பிரதி மத்தியம மேளம் தர்மவதி இராகம்.
இதன் ஆரோகணம் ஸரிகமபதநிஸ் அவரோகணம்: ஸ்நிதபமகரிஸ்
இவ் இராகம் எடுத்துக் கொள்ளும் சுரங்களாவன ஸட்ஸம், சதுஸ்ருதி ரிஷபம், சாதாரண காந்தாரம், பிரதி மத்தியமம், பஞ்சமம், சதுஸ்ருதி தைவதம், காகலி நிஷாதம் ஆகியன. காந்தாரம், நிஷாதம் ஜீவ சுரங்கள் மத்திமமும் பஞ்சமும் நியாச சுரங்கள். ஸட்ஸம், காந்தாரம், பஞ்சமம் கிரக சுரங்கள்.
அசம்பூர்ண மேளபத்ததியில் இந்த மேளத்துக்கு தாமவதி என்று பெயர். ஸகரிகமப - தபமப தஸ் - தா கரிஸ் - ஸ்தபமபகரிஸா இவை விசேடப் பிரயோகங்கள். எக் காலத்திலும்
பாடத் தகுந்த இராகம்.
சஞ்சாரம் பா , மாகாரீசா - ரீகா - கரிரீசா சநிதா சநிதா - காரீகாகரிரீகரிகம - பா, மபத பமகரிகமபா - பா , சநிநிதபம பாதபர்தா நீசா ச்நிதபதா ச்நிசா நிச்ரீச்ரிகர் - ரீச்நிதபதா - பதநீதநி ச்நிதப பமகரிகம பா
இவ் இராகத்திலமைந்த உருப்படிகள் கிருதி - பரந்தாமவதி - திச்ரஏகம் - முத்துசுவாமி தீட்ஷதர் கிருதி - சுரபாந்நூதே - ஆதி - மைசூர் வெங்கட கிரியப்பா
இந்துக்கலைக்களஞ்சியம்
-

கிருதி - பஜனசேயராதா - ரூபகம் - மைசூர் வாசுதேவாச்சாரியார் கிருதி - சக்ர ராஜ - ரூபகம் - முத்தையா பாகவதர் கிருதி - தாடவு நீவே - ஆதி - திருவொற்றியூர் தியாகய்யர். கிருதி - என்னகாரியத்துக்கு - ஆதி மாரிமுத்துப் பிள்ளை கிருதி - வேலாயுதா - ஆதி - முத்துச்சாமி கவிராயர் (தே. ஹ)
தருமபுர ஆதீனம்
சைவ சித்தாந்தத்தின் பெருமையை பாரெல்லாம் அறியச் செய்தவர்கள் சமயகுரவர்களும், சந்தான குரவர்களுமாவர். சமய குரவர்கள் நால்வரும் தேவார, திருவாசகங்களாகிய திருமுறைத் தோத்திரங்கள் வாயிலாகவும், சந்தான குரவர்கள் ஞான சாத்திரங்கள் மூலமாகவும் செந்நெறி பரப்பி அருளாட்சி செய்தனர்.
சந்தான குரவர்கள் அகச் சந்தான பரம்பரையென்றும், புறச் சந்தான பரம்பரையென்றும் இருநிலைப்படுவார்கள். பூரீகண்ட பரமசிவனிடமிருந்து உபதேசம் பெற்றவர் நந்தியம்பெருமான். அவரிடமிருந்து சனற்குமாரர், அவரிடமிருந்து சத்திய ஞான தரிசினி, அவரிடமிருந்து பரஞ்சோதி முனிவர் முறையாக உபதேசம் பெற்றனர். இந் நால்வரையும் அகச் சந்தானகுரவர் என அழைப்பர். இவர்கள் விண்ணுலகத்தினர். நான்காமவராகிய பரஞ்சோதி முனிவர் வான்வழியாக வந்து திருவண்ணெய் நல்லூரில் சிறுதேரூர்ந்து விளையாடிய இரண்டுவயதுக் குழந்தையாம் சுவேதவனப் பெருமாளுக்கு (மெய்கண்டார்) உபதேசம் செய்தார், மெய் கண்டாரது சீடர் அருணந்தி சிவம். அவரிடம் உபதேசம் பெற்றவர் மறைஞான சம்பந்தர். அவரது மாணவர் உமாபதி சிவம். இந் நால்வரும் மண்ணுலகில் சைவசித்தாந்தச் செந்நெறியை பரப்பியவர்கள். இவர்கள் புறச்சந்தான குரவர் ஆவர்.
உமாபதி சிவத்திற்குப் பின் அவரது உபதேசமொழிகளை ஏற்றருளி அவருக்குச் சீடராகியவர் மச்சுச் செட்டியார் என்னும் அருணமச்சிவாயர். மச்சுச் செட்டியார், சீகாழியில் வேளாண் குலத்திலே தோன்றியவர். இவர் உலகத்தையே பார்க்கக் கூடாதென்று மச்சிலேயே வாழ்ந்தபடியால் அவருக்கு இப்பெயர் வந்தது. இவர் செய்த நூல் ஞானபூசைத் திருவிருத்தம். இவர் நால்வருக்கு உபதேசம் அருளினார். இவரிடம் அருள் பெற்றவர் கங்கை மெய்கண்டார். இவர் சீகாழிச் சிற்றம்பல நாடிகளுக்கு உபதேசம் செய்தார்.
சிற்றம்பல நாடிகள் மயிலாடுதுறைக்கு அண்மையில் உள்ள சித்தர் காட்டில் தத்துவப் பிரகாசர் முதலிய சிவானுபூதியிற் சிறந்த அறுபத்து நான்கு மாணவர்களுக்கு அருள் செய்து மாணவர்களுடன் சமாதியடைந்தார். உடலை அருவருத்துக் காலில் பழுதை கட்டி இருந்ததால் இவர் பழுதை கட்டிச் சிற்றம்பலர் என அழைக்கப்பட்டார். இவர் செய்த நூல் துகளறுபோதம். இவரது சீடர் பழுதை கட்டி ஞானப்பிரகாசர்.
119

Page 152
பழுதைகட்டி ஞானப்பிரகாசர் திருத்துருத்தியில் எழுந்தருளி உபதேசம் செய்தவர். இவரது சீடர் சிவபுரம் தத்துவட் பிரகாசர். இவர் குடமூக்கிற்கு அருகிலுள்ள சிவபுரம் என்ற ஊரிலே பிறந்தவர். இவர் பழுதை கட்டி ஞானப்பிரகாசரிடம் தீகூைடி பெற்று திருவாரூரில் இருந்தவர். விஜய நகரத்தரசனான கிருஷ்ணதேவராயர் காலத்தவர். இவரது சீடர் திருவாரூர் செட்டித்தெரு ஞானப்பிரகாசர். இவர் சிதம்பரநாத கமலை ஞானப்பிரகாசருக்கு சைவசித்தாந்தத் தெளிபொருள்களை உபதேசித்தார்.
கமலை ஞானப்பிரகாசரின் சீடராகிய குருஞான சம்பந்தரே தருமபுர ஆதீனத்தை அமைத்த குருமனியாவார். தண்ணார் தமிழளிக்கும் தண்பாண்டி நாட்டில், சூடிக் கொடுத்த சுடர்க்கொடியாம் ஆண்டாள் நாச்சியார் அவதரித்த பூரீ வில்லிபுத்தூரில் சிவபக்தியில் தலைநின்ற கார்காத்த வேளாளர் குலத்திலே சுப்பிரமணியபிள்ளை, மீனாட்சி அம்மையார் செய்த தவப்பயனால் சோமவார சுபமுகூர்த்த நல்வேளையிலே தோன்றிய சிவஞானக்கன்று குருஞானசம்பந்தர். குரு ஞானசம்பந்தர் ஒரு சமயம் தாய் தந்தையர்களுடன் ஆலவாய் என்றழைக்கப்படும் மதுரை மாநகர்க்குச் சொக்கேசனை வழிபடும் பொருட்டுச் சென்றார். சிலநாட்கள் அங்கேயே தங்கி ஆனந்த தரிசனம் செய்தனர். ஊருக்குத் திரும்பிச் செல்கையில் ஞானசம்பந்தரை அழைக்க, அவர் தாய் தந்தையருடன் செல்லமறுத்து,
ஊன் நிற்கும் தாய் தந்தை உள்ளிருக்க
உடல் தந்த உம்மை உள்ளம் இனித் தொடராது
என்று மறுக்க, தெய்வத்தவக் குறிப்பை உணர்ந்த பெற்றோர் மகனை சொக்கலிங்கப் பெருமானுக்கே அடைக்கலம் தந்து ஊருக்கு ஏகினார்கள்.
ஞானசம்பந்தர், பொற்றாமரைத் தடாகத்தில் நாள்தோறும் நீராடி, சிவனடியார்கள் செய்யும் பூசையைக் கண்டு தானும் அவ்வண்ணம் ஆன்மபூசை செய்யவேண்டும் என்று விரும்பி, பெருமான் திருமுன்பு பணிந்து நின்றார்.
வேண்டுவார் வேண்டுவதை விரும்பியருளும் பரமன் ஞானசம்பந்தர் கனவில் தோன்றி "அன்பனே! கவலற்க. நாம் சிவலிங்க உருவிலே பொற்றாமரைத் தடாகத்தின் ஈசான மூலையிற் கங்கைக்குள்ளிருக்கின்றோம். காலையில் நீருள் மூழ்கி எனையெடுத்து பூசிப்பாயாக’ என்று திருவருட் குறிப்புணர்த்தி மறைந்தார்.
மறுநாள் வைகறை துயிலுணந்த ஞானசம்பந்தர் சொக்கேசனின் அருளாணையின் வண்ணம் தடாகத்துள் மூழ்கி இட்டெடுப்பார் போல் பொற் பெட்டகம் கைவரப் பெற்றார். ஊன் கரைய, உள்ளம் கரைய, உணர்வு கரைய ஆனந்த சாகரத்துட் கரைந்தார். ஆலவாய்ச்சொக்கரை அவர்விழி அன்பு நீர் சொரிய வழுத்தினார்.
"கண்ணுக்கினிய பொருளாகியே என்கருத்தில் வந்தாய் விண்ணும் பரவிடும் அற்புதமே என்ன விஞ்சையிதான் மண்ணும் புகழ்ந்திட என்னையும் பூரண வாரியுள்ளே நண்ணும் படிசெய் மதுரா புரிச் சொக்க நாயகனே'
120
 

என்ற சொக்கநாதக் கலித்துறை பதினொரு பாடல்களாலே துதித்தார். துதித்தது மட்டுமல்லாமல் ஓர் ஞானாசிரியரையும் தந்தருள வேண்டும் எனப் பணிந்தார். அன்றிரவே கடம்பவனத்துறையும் கண்ணுதற் பெருமான் மீண்டும் அவரது கனவிலே தோன்றி அன்பனே! நமது உபதேச பரம்பரையிலே தோன்றி, திருவாரூரின் கண் வாழ்ந்துவரும் ஞானப்பிரகாசரிடம் சென்று ஞானோபதேசம் பெறுவாயாக’ என்று அருளி அதேபோன்று ஆரூர் ஞானப்பிரகாசரிடத்தும் சென்று “ஞானசம்பந்தன் சோமவாரத்தன்று வருவான். அவனுக்கு விசேஷ நிர்வாண தீகூைடிகளைச் செய்து ஞானோபதேசம் செய்து சிவலிங்க பூஜையினையும் எழுந்தருளப் பண்ணி வை” என்று ஆணையிட்டு மறைந்தார்.
மனம்கொள்ளா மகிழ்வோடு கமலை அடைந்த ஞானசம்பந்தர் கமலாலயத் தீர்த்தத்துள் மூழ்கி ஆலயத்தை வழிபட்டு, தென்முகக் கடவுளாம் ஆலமர் செல்வன் அமர்ந்தருள் புரியும் சித்தீச் சரத்தின்கண் கிழக்கு நோக்கி, ஞான ஞாயிறென வீற்றிருக்கும் குருமூர்த்தியாகிய கமலை ஞானப்பிரகாசத்தைக் கண்டு, அடியற்ற மரம் எனத் திருவடிகளில் வீழ்ந்தார். வீழ்ந்த சம்பந்தருக்கு திருவருள் நோக்கத்தால் ஞான தீக்கூைடி செய்து சொக்கலிங்கப் பெருமான் பூசை முறையை உபதேசம் செய்தார். உபதேசம் பெற்ற ஞானசம்பந்தர் தமது குருநாதர் மீது “ஞானப்பிரகாச மாலை” பாடிப் பரவினார். 'சொக்கநாத வெண்பாவை ஆலவாய் அண்ணலுக்குச் சூட்டி மகிழ்ந்தார்.
இவ்வாறு ஆசாரியருக்குப் பணிவிடை புரிந்து வாழும்நாளில் ஒருநாள் குருநாதராகிய கமலை ஞானப்பிரகாசர் திருக்கோயிலுக்குச் சென்று அர்த்தயாம பூசை தரிசனம் செய்து மீளும் பொழுது கைவிளக்குப் பணிவிடை செய்வோன் வாராமற் போகவே ஞானசம்பந்தரே கைவிளக்கை ஏந்திப் பணிவுடன் அப்பணியினை மேற்கொண்டார். ஞானப்பிரகாசர் தமது இல்லத்தினை அடைந்தவர், ஞானசம்பந்தனை நிற்க' எனப் பணித்து உள்ளே சென்றார்.
ஞானசம்பந்தரும் குருநாதன் அருளினைச் சிரமேல் பெற்றுக் கைவிளக்கைப் பிடித்தவாறே சிவஞான உபதேசப் பெருநிலையில் பொழுது விடியுமளவும் நின்றார். இரவு பெருமழை - பெருங்காற்று. ஆனால் அவை இந்த ஞானமலையின் முன் நிற்கலாற்றாது தோற்றன. சம்பந்தர் திருமேனியில் ஒரு சிறு நீர்த்துளி படவில்லை. கைவிளக்கு அணையவில்லை. அவரைச் சுற்றி ஒரு கோலளவு மழைநீர் படரவில்லை.
மறுநாள் வைகறைப் பொழுதில் வாயில் முன்றிலைத் தூய்மைப்படுத்த வந்த ஞானப்பிரகாசரின் மனைவியார் சம்பந்தரின் பெற்றிமை கண்டு உள்ளே ஒடிச்சென்று கணவனாருக்கு அறிவிக்க, ஓடிவந்து உண்மை நிலையை உணர்ந்த கமலை ஞானப்பிரகாசர், சம்பந்தரை இருகரங்களாலும் ஆரத்தழுவி “குழந்தாய்! நீ பரிபக்குவ நிலையை எய்திவிட்டாய். இனி நீ விரும்பிய இடம் சென்று உன்னை நாடி வரும் பக்குவர்களுக்கு சிவஞான உபதேசம் செய்து திருமடம்
இந்துக்கலைக்களஞ்சியம்

Page 153
அமைத்துப் பணிபுரிவாயாக’ என்று ஆணையிட்டருள “தேவரீரின் ஆணையைப் பிரிந்து செல்லும் சுதந்திரம் அடியேனுக்கு உண்டோ” எனும் கருத்தினராய்,
"கணக்கும் பொதிக்கும் எருதுக்கும் தன்னிச்சை
கண்டதுண்டோ எனக்கும் உடற்கும் எனதிச்சையோ இனங்கார் புரத்தைச் சினக்கும் கமலையுள் ஞானப்பிரகாச சிதம்பர இன்று) உனக்கிச்சை பெப்படி அப்படியாக உகைத்தருளே’
என்னும் கட்டளைக் கலித்துறையால் குருநாதரை வணங்கினார். குருநாதரின் ஆணைக்கு அடிபணிவதை யல்லாது தனக்கு வேறு சுதந்திரம் இல்லாமையைத் தெளிவுபடுத்தினார். ஞானதேசிகரும் "திருவாரூருக்கு வடக்கே இரண்டு யோசனை தூரத்தில் மாயூரத்திற்குக் கிழக்கில் ஒரு குரோச தூரத்தில் எமதர்மனால் வழிபடப் பெற்றதும், அகத்தியரால் பரவப் பெற்றதுமான வில்வாரண்யமான தருமபுரத்தையடைந்து ஓடிவரும் காரணர்க்கு உண்மைப் பொருளை உபதேசித்து ஞானபீடாதிபதியாய் சமயபரிபாலனம் செய்து வருவாய். குருவாரந்தோறும் கமலை வந்து எம்மைக் கண்டு செல்லலாம்” என அருணாணை அளித்தருளினார்.
அவ்வண்ணமே ஞானசம்பந்தர் குருவருள் நோக்கம் பெற்று குருஞான சம்பந்தராய் பூரீ வாஞ்சியம் முதலிய தலங்களை வழிபட்டவாறு தருமபுரத்தை அடைந்து பசுவும் புலியும் ஒரு துறையில் நீர் குடிக்கும் பகையற்ற பூமியில் பூரீ தருமபுரீசரையும், அபயாம்பிகையையும் தரிசித்துக் கொண்டு வில்வாரண்யத்தில் ஒர் ஆசிரமம் அமைத்து சொக்கலிங்கம் பெருமானையும் எழுந்தருள்வித்து பூஜை மேற்கொண்டார். தன்னை வந்தடையும் பக்குவிகளுக்கு உபதேசம் செய்தவாறு சிவபோகசாரம், முத்தி நிச்சயம், திரிபதார்த்த ரூபாதிதசகாரிய அகவல், சோடசகலா பிரசாத ஷட்கம், ஞானாவரண விளக்கம், சொக்கநாதக் கலித்துறை, பண்டாரக் கலித்துறை என்னும் நூல்களைச் செய்தருளினார்.
குருஞானசம்பந்தர் ஞானபீட ஆட்சி புரியும் பொழுது அகத்தியருடைய மாணவர்கள் இவருக்கு இரசவாதம் முதலிய வித்தைகளைக் கற்பித்தகன்றனர். குருஞான சம்பந்தர் இவ்வண்ணம் பரிபாலனம் நடத்தி வருங்காலத்து தில்லைக்குச் சென்று ஆடும் அழகனின் தரிசனம் கண்டு பேரானந்தமுற்று ஆயிரங்கால் மண்டபத்திலே நிட்டைகூடி இரவு பகலற்று பேரானந்தத்தில் திளைத்திருந்தார். குழந்தையின் பசியறிந்து தாய் சிவகாமி தனக்கு நிவேதித்த பாயசத்தையம், திருவமுதையும் கங்கை நீரையும் அளித்தருளினாள். இறைவனின் ஆணைப்படி மீண்டும் தருமையை அடைந்து அருட் செங்கோல் ஒச்சி பூரீ தருமபுரீசுவரர் ஆலயத்தின் மேற்கே திருக்கோயில் அமைத்து அதில் சிவலிங்கப் பிரதிஷ்டையையும் செய்து தமது பரிபூரணத்தை உணர்ந்து தமது அடியார்களுள் ஒருவராகிய ஆனந்த பரவசருக்கு ஞானோபதேசம் செய்து சொக்கலிங்க பூஜையையும் கொடுத்து (கி. பி. 1561-1600க்கு இடைப்பட்ட காலம்.) வைகாசிமாதம்
இந்துக்கலைக்களஞ்சியம்

கிருஷ்ணபசுஷ சஷ்டித் திருநாளில் ஜீவசமாதி யெய்தினார். இன்றும் அத்திருநாளில் குருபூசைத் திருவிழா மிக விமரிசையாக தருமையாதீனத்தில் நடைபெறுகின்றது.
குருஞானசம்பந்தரைத் தொடர்ந்து தருமையாதீன கர்த்தர்களாக இருந்தவர்கள்:
2. பூணிலழறீ ஆனந்த பரவச தேசிக சுவாமிகள்:
ஆனந்த பரவசர், ஞானநிலையில் அதி தீவிர பக்குவமுள்ளவர். தமது குருநாதரை நினைவிலே பதித்து, ஆனந்தக் கண்ணிர் சோர தமது குருநாதரின் சமாதிக்கு மேற் பக்கலிற் சென்று தமது குருமூர்த்தியின் திருக்கோயிற் சிகரத்தைத் தரிசித்த வண்ணம் கிழக்கு முகமாயிருந்து முத்தி நிலையை அடைந்தார்.
3. பூணூரீலபூணூரீ சச்சிதானந்த தேசிக சுவாமிகள் (கி. பி 1600
1640).
ஆனந்த பரவசர் தனக்குப் பிறகு ஞானபீடத்தைத் தொடர வகை செய்யாது சமாதி கூட, அடியவர்கள் ஆதி குருமூர்த்தியாகிய குருஞான சம்பந்தர் சிவசமாதி முன்னின்று குறையிரப்ப குருநாதரும் சமாதியினின்று எழுந்தருளி தம்மடியார்களுள் ஒருவராகிய சச்சிதானந்தருக்கு திருவடிசூட்டி ஞானதீக்கை செய்து மீண்டும் சமாதி கூடினார்கள்.
ஆனால் சச்சிதானந்தருக்கு நிஷ்டானுபூதி நிலை கைவரப்பெறவில்லை. அவர் குருஞான சம்பந்தர் குருமூர்த்தத்தின் முன்னின்று தன்னிலை குறித்து முறையிட குருநாதர் சச்சிதானந்தர்பால் இரக்கம் கொண்டு, 'ஆனந்த பரவசரது அதிபக்குவ நிலையைக் கண்டும் உன்னை நீ உணரவில்லை. அதற்குக் காரணம் உன்னைப் பற்றியிருக்கும். மல, மாயா கன்மங்களே' என அறிவுறுத்தும் வண்ணம்
தானந்த மாதிநடு வில்லா தோங்கும்
சச்சிதா னந்தமயந் தானே ஆனந்த பரவசனைக் கண்டுங் கண்டு
மந்தந்தோ பரகதியை யறிந்திரில்லை மானந்தான் வடிவாகி நிற்றலாலோ
மலமாயை கன்மமிவை மடியாதாலோ ஞானந்தானுமதுளத்திலுகியாதாலோ
நாமறியோ முமதுமயல் நவிற்று வீரே”
என கல்லும் கனிந்துருக உபதேசம் செய்து, சச்சிதானந்தருக்கு ஞானபட்டாபிஷேகம் நிகழ்வித்து, வைகாசித் திங்கள் அபரபக்க சப்தமி நன்னாளிலே மீண்டும் சமாதி நிலையெய்தினார்.
சச்சிதானந்தரும் குருநாதன் பணித்த வண்ணம் பக்குவிகளுக்கு உபதேசம் செய்து நாற்பது ஆண்டுகள் சமயச் செங்கோலோச்சி மாசிலாமணி தேசிகருக்கு ஞானபட்டத்தைச் சூட்டி ஆனி மாதம் வளர்பிறை சப்தமி நந்நாளில் இறைபதம் எய்தினார்கள்.
2f

Page 154
4. பூணிலழறீ மாசிலாமணி தேசிக சுவாமிகள்
(கி. பி.1640- 1660)
மாசிலாமணி தேசிகர், இறைவன் மானிடச் சட்டை போர்த்தி வருகின்றான் என்பதனைத் தம் அடியவர்களுக்குப் பலமுறையும் மெய்ப்பித்துக் காட்டினார். ஒரு சமயம் அடியவர்கள் தமக்குச் செய்த பாத பூசை மலர்கள் திருமுறை ஏடுகளின் மீது இருக்கக் காட்டினார். தமது தவவலிமையினால் தன்னை ஈன்ற தாய்க்கு அத்வா சோதித்து முக்திப்பேறு அருளினார். அரவந்தீண்டி இறந்தவனை உயிர்ப்பித்தார். இவரது காலத்தில் குமரகுருபரர் தருமை வந்து மாசிலாமணி தேசிகரைத் தமது ஞான குருவாகவும் தருமபுரத்தை ஞானபீடமாகவும் ஏற்றுப் போற்றினார். தம்மை ஆண்டு ஞானோபதேசம் செய்தருள வேண்டும் என்ற வேண்டுகோளை பண்டார மும்மணிக் கோவை என்ற நூல் மூலம் தெளிவு படுத்தினார். இந்நூல் சைவசித்தாந்தத்தின் தெளிபொருளாக விளங்குகின்றது. பன்மொழி வல்லுநரும் முக்தி நிச்சயப் பேருரை, ஞானாவரணவிளக்கப் பேருரை முதலியவைகளைச் செய்த தண்தமிழ் முனிவருமான வெள்ளியம்பலவாணத் தம்பிரானுக்கு சமய, விசேட தீட்சைகளை அருளி வடநாட்டில் குமர குருபரிடம் சென்று மேலும் வித்தையால் தேர்ச்சி பெறுவதற்காக அனுப்பி வைத்தார். தமக்குப் பிறகு ஞானசம்பந்தருக்கு ஞானபீடாதி பத்தியத்தை அளித்து புரட்டாசி சுக்லபக்ஷம் ஏகாதசியன்று பரிபூரணம் எய்தினார்.
5. பூணுலபூஞரீ ஞானசம்பந்த தேசிக சுவாமிகள்
(கி. பி.1660-1665)
ஞானசம்பந்த தேசிகர் திருக்கூட்டத்து அடியார்கள் புடைசூழ சொக்கலிங்கப் பெருமான் பூஜையையும் எழுந்தருளப் பண்ணிக்கொண்டு திருவையாறு திருவானைக்கா, திருச்சிராப்பள்ளி, மதுரை, திருநெல்வேலி முதலிய தலங்களையும் தரிசித்துக் கொண்டு திருக்குற்றாலத்தில் எழுந்தருளியிருக்கும் காலத்தில் பெருமழையும் பெருவெள்ளமும் ஏற்பட்டு மக்கள் துன்பமுற்றனர். அவர்கள் ஞானசம்பந்த தேசிக சுவாமிகளிடம் வந்து தங்கள் குறைகளைக் கூறி அத்துன்பத்தைத் தீர்க்குமாறு வேண்டினர். ஞானதேசிகரும் திருவருளை வேண்டி வெள்ளத் துன்பத்தினின்று மக்களைக் காத்தருளினார். இவ்வாறு திருவருட் பெற்றியைப் பல்லாற்றானும் விளக்கி, தமக்குப் பிறகு திருஞான சம்பந்தருக்குப் பட்டம் சூட்டி ஆவணி சுக்லபக்ஷம் துவிதியையன்று முக்திநிலை எய்தினார்கள்.
3. பூனிலழறீ திருஞானசம்பந்த தேசிக சுவாமிகள்
(G. L. 1665-1670)
இக் குருமூர்த்திகளின் காலத்தில் "பதினாறொடுக்கம்’ மிகச் சிறப்பாக விளங்கியது. இந்த இடம் சொக்கலிங்கப் பெருமான் திருத்தளியின் வடக்குத் திருச்சுற்றில் அமைந்துள்ளது. இவ்விடத்தில் ஆதீன அடியார்கள் பலரும் இரவு பகலாக நிஷ்டை கூடி இருப்பார்கள். பதினாறு கலைகளையும் ஒடுக்கித் தவம் புரியும் இடம் இது. அடியார்களுக்கு வேண்டிய பூஜை சாமான்களும், உணவும் அதற்கென ஏற்பட்ட சிறு வாயில் வழியே அளிக்கப்பட்டன. இன்றும் அந்த இடம் இருக்கின்றது.
22

சம்பந்த சரணாலயர் ஞானதேசிகர்பால் உபதேசம் பெற்று உயர்ந்தவர். ஞானதேசிகர் அடியார்களுடன் யாத்திரை செய்து திருநெல்வேலி சென்று சிந்துபூந்துறை மடத்தில் எழுந்தருளியிருந்தார்கள். அவ்வூரில் அறச்சாலை மடம் ஒன்று இருந்தது. அதற்குத் தலைவராக ஒரு தமிழ்ப்புலவர் இருந்தார். அவர் கற்றுத் துறை போகியவர். தில்லைகுகை மடத்தைச் சார்ந்தவர். குகை மடத்தின் தலைவர் ஞானப்பிரகாசர். ஆன்மானந்தவாதி. இவரிடம் புலவர் உபதேசம் பெற்றும் உள்ளம் அடங்கவில்லை. முக்தி நிச்சய நூலுக்கு மறுப்புரை எழுதினார். என்ன செய்தும் அமைதி காண முடியவில்லை. அல்லல் மிகுந்தது. சிந்து பூந்துறைக்கு எழுந்தருளிய தருமை ஞானதபோதனரிடம் வந்தார். குருமூர்த்திகளின் திருவுருவம் அமைதியைத் தந்தது. நல்லுபதேசங்கள் ஞான வழியைக் காட்டின. குருநாதரை வீழ்ந்து வணங்கினார் புலவர். தேசிகர் அவருக்கு சிவஞான உபதேசத்தைச் செய்து “தமிழாகரர்” என்னும் தீட்சாநாமமும் அருளினார்கள்.
சில நாட்களுக்குப் பிறகு திருக்குற்றாலம் செல்லும் வழியில் நாகர் கோவிலுக்கு 4 கல் தொலைவில் உள்ள வேள்விமலை குமர கோவிலிற்குச் சென்று முருகனை வழிபட்டுருகி நின்றார்கள். வள்ளியம்மையின் திருவுரு குகைக் கோயிலாதலால் கண்ணில் படவில்லை. ஆதலால் வள்ளித்தாய், ஈங்கு இல்லையோ எனக்கேட்க வள்ளித்தாய் “இதோ இருக்கிறேன்” என்று திருமேனி வளைந்து காட்சி அளித்தார். இந்நிகழ்ச்சி,
"எழில் வேள்வி மலையிலோ ரம்பை யெங்கே யென்றியம்பிய திருமுனிக்கும், சம்பந்தனுக்கருள் செய் என்று வள்ளிக் கருள்செய் சைவநாயகன்'
என்று க்ஷேத்திரக் கோவைப் பிள்ளைத் தமிழில் கூறப்பட்டுள்ளது. மேலும்,
"வள்ளியம்மை இல்லையோ வென்ன வவள் சிரத்தை
நீட்டி வையம் அறிந்திட விருக்கிறேன் என்ற மொழி கேட்டு மகிழ்ந்து நின்ற துய்யவனாந்தருமைவரு திருஞான சம்பந்தன்”
என்ற தனிப்பாடற் பகுதியும் நிகழ்ச்சிக்கு சான்று பகர்கின்றன.
பின்னர் திருவம்பல தேசிகரிடத்தில் தமது ஞான இருக்கையை ஒப்புவித்து சித்திரை கிருஷ்ண பகஷ பிரதமை நாளில் இறையடி நீழல் சேர்ந்தார்.
7. பூணூரீலபூg திருவம்பல தேசிக சுவாமிகள் (கி. பி. 1670-1680)
சுவாமிகளுடைய காலத்தில் மூவலூர் சுப்பராய செட்டியார் என்பவர் காலஞ்சென்ற தனது தாயாருக்கு ஆற்றவேண்டிய நீத்தார் கடன்களை முடித்து தருமை குருமூர்த்திகள்பால்
இந்துக்கலைக்களஞ்சியம்

Page 155
வந்தணைந்து வணங்கி “தாயினைத் துறக்கம் புகுவித்தல் மக்களின் கடமை. அதற்கு சுவாமிகள் அருள்புரிய வேண்டும்” என விண்ணப்பித்தார் குருமூர்த்திகளும் ஞானநோக்கால் அவ்வான்மா செட்டியாருடைய மனைவியின் கருவிலிருப்பதை அறிந்து உமக்கு மகவு வேண்டுமா? தாய் வீடுபெற வேண்டுமா? என்று வினவ தாய் வீடுபெறுதலே தேவை எனச் செட்டியார் கூற சொக்கலிங்கப் பெருமானை வேண்டி அவ்வான்மாவைக் கொணர்ந்து தீகூைடி அருளி வீடுபேறடைவித்தார்.
மற்றுமொரு சமயம் தஞ்சை மன்னன் கடல்நீராட விரும்பி தமது தானை சூழ காவிரிப்பூம்பட்டினம் செல்கின்ற வழியில் தருமையை அண்மிக்கும் பொழுது அர்த்தயாம பூசையின் மணியொலி கேட்டு சிவிகையினின்று இறங்கி வணங்கினான். அருகிலிருந்தவர் 'அரசன் வணங்கியது சூத்திர சமாதியை. இது அபசாரம். இதற்குத் தக்க கழுவாய் செய்யவேண்டும்” என்று கூற, மதிநலம் இழந்த மன்னன், மற்றவர்களும் இத்தவறினைச் செய்யாமல் இருக்க ஆலயத்தை இடித்துவிடுமாறு பணித்து அகன்றான். ஏவலர்களும் ஆலயத்தை இடிக்க முனைந்தனர். அதுகண்ட அடியவர்கள் ஒடிச் சென்று திருவம்பல தேசிகர் முன்னால் நிகழ்ந்ததை விண்ணப்பிக்க, குருநாதரும்,
"ஈசன் பலகீன னென்றக்கா லாலயத்தின் மோசம் வந்ததென்று மொழியலாம் -ஈசனே ஆக்குவதும் ஆக்கி அழிப்பதுவும் தானானால் நோக்குவதென் யாம்பிறரை நொந்து”
என்று ஆதிகுருமூர்த்திகளாகிய குருஞான சம்பந்தர் அருளிய சிவ போக சாரப் பாடல்மூலம் அடியவர்களுக்கு ஆறுதல் கூறியதும் எம்பெருமானின் கூத்தொலி கேட்டது. அவ்வொலியினைக் கேட்ட குருநாதர் பெருமானின் திருவருளை வியந்து,
“தேசம் சிவாலயங்கள் சேர அலையவொரு மோசம் வந்ததையோ முதல்வனே - தேசத்து மன்னை வெறுப்பேனோ? வருவினையை யூட்டுவிக்கும் உன்னை வெறுப்பேனோ வுரை”
என அடியவர்கட்கு ஆறுதல்கூறி, பஞ்சாக்கரத்தைச் செபிக்க திருக்கோயிலில் இருப்புக்கோல் படுமிடந்தொறும் இரத்தம் பெருகியது. ஏவலாளர்கள் மூர்ச்சையுற்று வீழ்ந்தனர். நகர எல்லையைக் கடந்து சென்ற மன்னனின் கண்ணொளி மழுங்கிற்று. ஆலயத்தை இடிக்குமாறு கூறியவர்கள் ஊமையராய் நின்றனர். தவறை உணர்ந்த மன்னன் தருமபுரத்தை அடைந்து திருவம்பல தேசிகரின் திருவடிகளில் வீழ்ந்து பிழை பொறுக்கப் பணிந்தான்.
குரு மூர்த்திகளும் மன்னவனின் பிழையைப் பொறுத்து ஆலயத்திற்கு அழைத்துச் செல்ல, இறைவனின் திருவுருவத்தைத் தரிசிக்க கண் இல்லையே என அரசன் கவல, குருஞான சம்பந்தரின் அருளால் ஒரு கண், ஒளி பெற்றது. குரு
இந்துக்கலைக்களஞ்சியம்

மூர்த்திகள் திருநீற்றினைத் தூவ உதிரம் பெருகுவது நின்றது. மூர்ச்சையுற்றவர்கள் எழுந்தனர். மன்னர் மீண்டும் குரு மூர்த்தியைப் பணிந்து காவிரிப்பூம்பட்டினம் சென்று கடலாடி, தன் பரிவாரங்களுடன் தருமபுரம் மீண்டு தென்கீழ்த் திசையில் குடிலமைத்துக் கொண்டு அங்கு சில நாட்கள் தங்கி வழிபாடு செய்து வரும்பொழுது ஒரு நாள் குருநாதரிடம் சென்று, சூத்திரர்களுக்கு சந்நியாசம் பெற அதிகாரமில்லை என்று கூறியதால் அடியேனும் தவறிழைத்து விட்டேன். அதன் உண்மைப்பொருளை உரைத்தருள வேண்டும் என விண்ணப்பித்தான். சுவாமிகளும் பல சான்றுகளாலும், அவனது ஐயத்தைப் பல பிரமாணங்களாலும், நீக்கி, வருணாச்சிரம சந்திரிகை என்று வடமொழி நூல் ஒன்றை அருளினார்கள்.
மன்னன் மிக்க மகிழ்ச்சியுடன் ஒரு மண்டலம் அங்கு தங்கி மற்றொரு கண்ணின் ஒளியையும் பெற்றான். ஆலயத்தின் அர்த்தயாம பூசைக்கு நிலங்களை அளித்தான். மன்னவனின் மதி அமைச்சர் கோவிந்ததீகூழிதர் தருமைக்கு வந்து குரு மூர்த்திகளைக் கண்டு வணங்கி பல திருப்பணிகள் செய்துதவினார்.
சிவஞானபானுவாய் விளங்கிய குருமூர்த்திகள் அழகிய திருச்சிற்றம்பல தேசிகருக்கு ஞானாபிஷேகம் செய்வித்து ஐப்பசி பெளர்ணமி நாளில் முத்திப் பேறடைந்தார்.
8. பூனிலழனி அழகிய திருச்சிற்றம்பல தேசிக சுவாமிகள்
(G. L.5 1680 - 1700)
இவர்கள் தென்னாட்டுத் தல யாத்திரை செய்து வரும்பொழுது கற்குளமாநகருக்கு எழுந்தருளினார். அத்தலத்திலுள்ள சிவசிதம்பரம்பிள்ளை என்பார் தேசிகரைத் தரிசித்து குருபூஜை, பட்டணப் பிரவேசம் முதலியன மிகச் சிறப்பாக நடத்தி வைத்தார். இதனைக் கண்டு பொறாமை கொண்ட சிலர் மலடியான பேரிளம் பெண் ஒருத்தியை சுவாமிகளிடம் அனுப்பித் தனக்கு மகப்பேறு உண்டாக அருள் செய்ய வேண்டுமென விண்ணப்பிக்கச் செய்தனர். குருநாதரும் அதற்குத் திருச் செவி சாய்த்து, அப் பெண்ணின் தன்மையினை ஞானத்தாலுணர்ந்து, “நீ விரும்பியவாறே ஆகுக" என அருளி பரிகல சேடத்தை அளித்தார்கள். அதனையேற்று உண்டு சில நாட்களில் ஒரு ஆண் மகவை ஈன்றார். அக் குழந்தைக்கு "அழகிய சிற்றம்பலப் பரிகலம்’ என்றே பெயர் சூட்டி மகிழ்ந்து, மகனுடன் கணவனையும் அழைத்துக்கொண்டு தருமபுரம் வந்து தேசிகரைப் பணிந்து பரவினாள்.
மீண்டும் தல யாத்திரையை மேற்கொண்ட குருமணியவர்கள் கோட்டூர் என்னும் தலத்திற்கு வரும்பொழுது தமக்குப் பரிபூரணம் நெருங்கிவிட்டதை உணர்ந்து ஞானபீட மரபை திருநாவுக்கரசு தேசிகருக்கு அளித்து அத்தலத்திலேயே கார்த்திகை சுக்லபக்ஷ ஏகாதசி நாளில் முக்தி நிலை எய்தினார்கள்.
123

Page 156
9. பூணிலழறி திருநாவுக்கரசு தேசிக சுவாமிகள் (கி. பி.
1700-1715)
இவர்கள் ஒருநாள் புள்ளிருக்கு வேளூரில் பூரீ செல்வமுத்துக் குமார சுவாமியை வழிபட்டுக் கொண்டிருக்கும்பொழுது பெருமான் திருமுன்னர் தொங்கவிடப்பட்டிருந்த திரை, திருவருளால் சுருண்டது. முத்துக் குமரனின் தரிசனம் கிட்டியது. எதிர்பாராமல் நிகழ்ந்த இச்செயலை, திருவருளின் விளக்கமாக எண்ணி மகிழ்ந்தார்கள்.
வைணவன் ஒருவன் குருமூர்த்திகளின் முன்னின்று, "திருமாலே பரம்பொருள்” என்று தருக்கி உரையாட சுவாமிகளின் திருக்கண் பார்வை பட ஊமையாயினான். உடன் அவ் வைணவன் தவறிற்கு வருந்தி மன்னிப்பு வேண்ட சுவாமிகளும் திருநீறளித்து ஊமைத் தன்மையை நீக்கினார்.
ஒரு சமயம் பூனைகள் கிளிகளுடனும், குயில்கள் செம்போத்துக்களுடனும், பாம்புகள் எலிகளுடனும் பகைகொண்டு துன்புறுத்துவதைக் கண்டு அவைகளின் அறியாமை அகலத் திருக்கண் நோக்கம் செலுத்தினார். உடனே அவைகள் பகைமை நீங்கி திருவடியில் அடைக்கலம் அடைந்தன. அவைகளுக்கு தீக்கை புரிந்து சிவப்பேறு அடைவித்தார். இக் குரு மூர்த்தியின் வணக்கச் செய்யுளில் இந் நிகழ்வு குறிப்பிடப்படுகின்றது.
"கானமரும் கிள்ளையொடு குயில் செம்போத்துக்
காட்டரவம் பூனை எலி கதியிற் சேர ஞானவருட் பார்வைபுரிநாதா போதா நாடறியேற்
குணதருளை நயப்ப தென்னாள் வானமரும் கடம்பவனச் சவுந்தரேசன் மலரடியை
யலரடியால் வணங்கவெண்ணித் தானமரும் பூசைபுரி திருநாவுக் கரச சம்பந்த ஞானகுரு
தருமை வாழ்வே'
தென்களந்தைப் படிக்காசுப் புலவர், சுவாமிகள்பால் சந்நியாசம் ஏற்று பதினாறொடுக்கத் தம்பிரானாக இருந்தார்.
சுவாமிகள் அருளிச் செய்த ஞானப்பனுவல் “சித்தாந்த நிச்சயம்’ சிவஞான தேசிகருக்குப் பட்டம் சூட்டி ஐப்பசி பூரணையில் முக்தியடைந்தார்.
10.பூணீலழறி சிவஞான தேசிக சுவாமிகள் (கி. பி. 1715-1770) இவர் இளமையிலேயே துறவுபூண்டு காசிக்குச் சென்று வடமொழி, தமிழ்மொழி இலக்கண இலக்கியங்கள், சாத்திரங்களில் தேர்ச்சி பெற்றுத் தருமையை வந்தடைந்திருந்த காலத்தில் குருபீடம் ஏற்றார்கள். இவர் நீண்டகாலம் ஞானச் செங்கோல் செலுத்தியவர். இவர் நிகழ்த்திய அற்புதங்கள் பலப்பல.
நிலாக்காலம் ஒன்றில் வான்வழியே சென்று கொண்டிருந்த சித்தர் ஒருவர் தருமை ஆதீனமீதாகப் பறக்கும்பொழுது அவரது செலவு தடைப்பட்டது. இவ்விடத்தில்
124

ஏதோ சிறப்பு இருக்க வேண்டுமென நினைத்து கீழே இறங்கிவர, அது சமயம் அங்கு நின்றிருந்த சிவஞான சுவாமிகள் ஏதோ நிழல் படர்வதை உணர்ந்து விரலால் சுட்டி வருகவென அழைத்தார்கள். குரு தரிசனம் பெற்றவுடன் வித்தையால் வந்த செருக்கு அகன்ற சித்தருக்கு அவர் வேண்டிய வண்ணம் திருவருள் நோக்கமும் ஞான தீகூைடியும் அளித்து மடாலயத்திலேயே தங்கச் செய்தார். சில நாட்கள் அகன்றதன்பின் காயகற்பங்களையுண்டு பழகிய சித்தருக்கு திருமடத்திலிடும் உணவு ஒத்துவரவில்லை. உடல்நலம் குன்றியது. இதனை உணர்ந்த குருமூர்த்திகள் திருநீறு அளிக்க நலம் வாய்க்கப் பெற்றார். அதன் பேறாகத் திருமடத்திலேயே குருவிற்குப் பணிவிடைசெய்து சிவத்துடன் கலந்தார். தருமை மடாலயத்தில் சித்தர் வந்திறங்கிய சித்தர்கட்டு இன்றும் இருக்கின்றது.
சேதி மாநகரத்து வேளாளர் ஒருவர் மாமியார் மருமகள் இருவரையும் அழைத்துக்கொண்டு குருநாதர் தரிசனத்திற்காகத் தருமை வந்தார். தமது இளவயதுடைய மருமகளுக்கு சிவதீக்கை செய்ய சுவாமிகளை வேண்ட சுவாமிகளும் அவ்வாறே சொக்கநாதப் பெருமான் திருமுன்பு தீகூைடி அருள அப்பெண் ஞானத்தில் மட்டுமல்ல, ஆண்டிலும் முதுமை பெற்றாள். பெருமானின் திருவடி வீழ்ந்து,
'மதுரா புரிச்சொக்க ஞானப்பிர
காசன் மடாலயத்தில் சதுரான காரியம் செய்ததென்
னேஇந்தத் தாரணியில் முதிரா இளம்பிஞ்சை நற்கனி
யாக்கும் முறைமையென்ன எதிரா மலமறுத் தென்னையும்
ஆட்கொண்டிருந்தனனே 99
என்ற பாடலில் திருவருளைப் பரவி நீண்டகாலம் சொக்கேசன் திருப்பணியில் தலைநின்று சிவபதம் பெற்றாள்.
பாசம் மிக்க மைந்தன் ஒருவன் தனது மனைவியுடன் தனது தந்தை இறந்த பிறகு சிவஞான தேசிகரிடம் வந்து தமது தந்தையை வீட்டுலகம் அடையச் செய்ய வழியாது என்று வினவ, “நாளும் ஞானபுரீஸ்வரரை வழிபட்டு வாருங்கள்” என்று அன்பு ஆணையிட்டார். அவ்வாறே அவர்கள் வணங்கிவர, திருவருள் உணர்வால் வந்தவரது தந்தை வீட்டுலகம் எய்தியதைத் தெரிவிக்க எல்லையில்லா மகிழ்ச்சியை அடைந்தனர்.
சிவஞான தேசிகர் திருத்தல யாத்திரை செய்யத் திருவுள்ளம் கொண்டு மெய்யடியார்கள் புடைசூழ பூஜைப் பெட்டகத்தை எழுந்தருளப் பண்ணிக்கொண்டு புள்ளிருக்கு வேளூரை அடைந்து வள்ளி மணவாளனின் கொள்ளை அழகில் ஈடுபட்டு முத்துக்குமார சுவாமி திருவருட்பா பாடி, அங்கிருந்து, தில்லை, ஆரூர், முதலிய தலங்களில் தல வழிபாடு செய்து
இந்துக்கலைக்களஞ்சியம்

Page 157
கொண்டு திருவருட் பாடலால் தொழுது வரும் பொழுது ஆலவாய் என்னும் மதுரைப் பதிக்கு வருகின்றார்.
அங்கு சொக்கேசப் பெருமான் வழிபாடு முடிந்து திருமடத்திற்கு எழுந்தருளியிருக்கும் பொழுது தொழுநோயாளன் ஒருவன் வந்து சுவாமிகளின் திருவடி மலர்களை வணங்கி நின்றான். அவன்மீது திருக்கடைக்கண் நோக்கம் செலுத்தி, அவனை காளையர் தீர்த்தத்தில் முழுகி வரச் சொன்னார். அப்படி நீரில் மூழ்கி எழுந்ததும் நோய் அவனை விட்டு நீங்கியது. குரு நாதரின் திருவடி மலர்களைத் தொழுது போற்றினான்.
திருச்செந்தில் மேய சேவகனைத் தரிசிக்கச் சென்ற பொழுது சிவிகை, தீவர்த்தி, குடை, ஆலவட்டம் முதலிய மரியாதைகளோடு மக்கள் சுவாமிகளை வரவேற்று அழைத்துச் சென்றனர். அப்படி சிவிகையூர்ந்து சென்ற சுவாமிகளை ஆலய போற்றிமார்கள் தடுத்து சிவிகையிலே தீவர்த்திகள் சகிதம் செல்வது கூடாது என்று கூறினார்கள். அந்த நேரம் செந்திலாண்டவன் போற்றியாக உருமாறி, ஞானாசாரியரது பெருமைகளையும், அவர்கள் எங்கும் விருதுகளோடு செல்லலாம் என்பதனையும் அளவை பிரமாணங்களுடன் விளக்கினார். ஆனாலும் வந்த போற்றிமார்கள் வீண் வம்பிழைக்க அர்ச்சகராக வந்த செந்திற் பெருமான் சினக்கவே அனைவரும் ஊமையர்களாகினர். தங்களது தவறிற்கு போற்றிமார்கள் வருந்தி மன்னிப்பு வேண்ட ஞானதபோதனரும் திருநீறளித்து பேசும் திறனை அளித்தார்கள்.
மலை நாட்டில் வாழ்ந்தவன் துங்கன் என்னும் அரசன். அவனது அருமை மகளை பிரமராக்கதம் பற்றி வருத்தியது. மணி மந்திர ஒளஷதங்களாலும் அது தீரவில்லை. தல யாத்திரை செய்து கொண்டிருந்த குருமணியின் பெருமையை மன்னன் கேள்வியுற்று தனது மகளை அழைத்துக்கொண்டு வந்து தேசிகரின் திருவடிகளில் வீழ்ந்தான். விபரத்தைக் கேட்டறிந்த குருநாதர் மந்திரமும், மருந்துமாகிய திருநீற்றை அளித்தருள பிரமராக்கதம் அப்பெண்ணை விட்டு நீங்கியது. அரசனது மகிழ்ச்சிக்கு அளவில்லை. ஆனந்தத்தின் எல்லைக்கே சென்று விட்டான். பற்பல நிலங்களையும் தந்து கட்டளைகளையும் அமைத்தான்.
தலயாத்திரை முடிந்து வந்த சிவஞான தேசிகர் மடாலயத்தில் இருந்த சமயம் துங்கன் மகளைப் பற்றியிருந்த பிரம்மராக்கதம் தேசிகரின் திருவடிகளில் வீழ்ந்து “நல்லோர்களை நலிவிக்கும் இவ்வுரு நீங்கி, நற்கதியடைய தேவரீர் திருவருள் புரிய வேண்டும்” என்று பணிந்து வேண்ட அதற்கிணங்கிய குருநாதர் ஒரு கால அநுட்டானத்தைத் தத்தம் செய்ய பிரம்மராக்கதம் தேவவுருப் பெற்று விண்ணடைந்தது. அதுமுதல் இன்று வரை வரும் குருமகா சந்நிதானங்கள் அனைவரும் ஒருகால அநுட்டானத்தை அதிகமாகச் செய்து வருகின்றனர்.
சிவஞான தேசிகரிடம் அருள் உபதேசம் பெற்ற அடியார்கள், சச்சிதானந்த தேசிகர், தமிழாகர முனிவர், புன்கூர்ச்
இந்துக்கலைக்களஞ்சியம்

சிவப்பிரகாச முனிவர், சங்கர குமார முனிவர், சிவானந்த முனிவர், முத்துக் குமாரத் தம்பிரான், காவை அம்பலவாண முனிவர், சைவ எல்லப்ப நாவலர் முதலியோர்.
இவ்வடியார்களுள் தில்லைநாயகத் தம்பிரான் சுவாமிகள், குருமூர்த்திகள் பணித்த வண்ணம் திருப்பனந்தாள் காசிமடத்தை கி. பி. 1720இல் தோற்றுவித்தார்கள்.
சிவஞான தேசிக சுவாமிகள் பூரீகாசி துண்டி ராஜ கணபதி திருவருட்பா, பூரீ காசி விசுவநாதர் திருவருட்பா, றுநீ கேதார நாதர் திருவருட்பா, பூரீ காசி விருத்த காளேச்சுவரர் திருவருட்பா, பூரீ காசி கால வைரவர் திருவருட்பா, பூநீகாசி தாரகப் பத்து, பூரீ காசி அன்ன பூரணியம்மை திருவருட்பா, பூரீ காசி கேதார கெளரியம்மை திருவருட்பா, பூரீ காசி பாகீரதியம்மை திருவருட்பா, பூீ காசி கதிர்காம வேலவர் திருவருட்பா, பூரீ சிதம்பர நடேசர் திருவருட்பா, பூீ அசபா நடனப் பதிகம், பூரீ தகூதிணா மூர்த்தி திருவருட்பா, பூீ ஆபதுத்தாரணர் மாலை, பூரீ செல்வ முத்துக்குமார சுவாமி திருவருட்பா, பூரீ சொக்கநாத சுவாமி திருவருட்பா என பதினாறு நூல்களை அற்புதமாக ஆற்றொழுக்காகச் செய்திருக்கின்றார்.
தருமையாதீன குருமணி 25ஆவது குருமகாசந்நிதானம் அவர்கள் காசிக்கு எழுந்தருளிய காலத்தில் பூரீ சிவஞான தேசிக சுவாமிகளின் காசித் தாரகப் பத்தை செவிமடுத்தவாறே 10-11-1971இல் பரிபூரணம் எய்தினார்கள்.
பூரீ சிவஞான தேசிக சுவாமிகள் 1740ஆம் ஆண்டு அடியார்கள் புடைசூழ காசி யாத்திரை மேற்கொண்டார்கள். அங்கு கோயில்கொண்ட துண்டிராஜ கணபதி, விசுவநாதர், அன்னபூரணி, கேதாரநாதர், கால வைரவர் முதலிய கடவுளர்கள் மேல் திருவருட் பாமாலை சார்த்திப் போற்றி வணங்கி தருமை மீண்டார்கள்.
இறுதியாக சச்சிதானந்த தேசிகருக்கு பட்டம் சூட்டி ஐப்பசித் திங்கள் கிருஷ்ண பகூடி தசமித் திருநாளில் சிவத்துடன் இரண்டறக் கலந்தார்.
11. பூனிலழறீ சச்சிதானந்த தேசிக சுவாமிகள் (கி. பி 1771
1782)
சுவாமிகள் அருளாட்சி புரிந்து வரும் காலத்தில் ஒருநாள் ஒருவன் நள்ளிரவில் குழிந்தகண்ணும், கந்தல் உடையுமாக, இரக்கம்கொள்ளும் உருவத்தில் மடாலய வாயிலின்கண் வந்து நின்று, பசி மேலிட "அந்தோ! பசி பசி. சோறு வேண்டும், சோறு வேண்டும்” என ஒலமிட்டான். அறிதுயிலில் ஆட்பட்டிருந்த குருநாதர் திருச்செவியில் தீனக்குரல் கேட்கவே அருள் ஊற்றுப் பொங்க விரைந்து சென்று பார்த்தபொழுது வந்திருப்பவன் அரசனே யென்றும், மாறுவேடம் புனைந்திருக்கிறான் என்பத னையும் ஞானத்தாலுணர்ந்து மடைப்பள்ளியுள் புகுந்து
125

Page 158
வெண்கலப் பாத்திரத்தில் சோறு, குழம்பு என்பன பெய்து வந்தவனிடம் கொடுத்து உண்ணுமாறு கூறினார். வந்தவன், பாத்திரத்தை யாரிடம் ஒப்படைப்பது என்று கேட்க, அரண்மனையில் சேர்க்கலாமே என்றார் சுவாமிகள், மறுநாள் அரசர் தனது நாளோலக்கத்தில் அவையினருக்கு நிகழ்ந்தவைகளைக் கூறி சுவாமிகளது மதி நுட்பத்தையும், கருணையையும் வியந்து பாராட்டினான்.
குருநாதர் குழகர் கோடியில் நீராட விரும்பிச் சென்றார்கள். திருமறைக் காட்டில் சுவாமிகளின் வருகையையறிந்த யாழ்ப்பாணம் கந்தப்பச் செட்டியார் வரவேற்பு வைபவத்தைச் சிறப்பாகச் செய்தார். காட்சியளவை ஒன்றையே மெய்யென நம்பி கடவுள் இல்லையென வாதிடும் நாத்திகருக்கு அவர்கள் சென்ற வழியே சென்று கடவுள் உண்மையை விளக்கியருளினார். அழுக்காறு கரந்த நெஞ்சு கொண்ட அப்புலவர்கள் சுவாமிகளை மகேசுவர பூசைக்கென அழைத்து நஞ்சு கலந்த பாலைக் கொடுக்கவும், சுவாமிகள் அப்பாலில் திருநீறிட்டுப் பருகினார். விடியற்காலை வந்த வஞ்சகர்கள் குருநாதர் திருமேனி நலத்துடன் இருப்பதை அறிந்து பதை பதைத்து தங்கள் செயலுக்கு நாதன் திருவடி பணிந்து பிழைபொறுக்க வேண்டினர். குருமணியும் அவர்களை மன்னித்து சிவதீகூைடியினால் தூய்மையாக்கினார்.
பின்பு தருமபுரம் அடைந்து ஞான அரசு நடத்தி, அடியவர் கூட்டத்துள் ஒருவராகிய முத்துக்குமார சுவாமிகளுக்கு தவ அரசை அளித்து மார்கழி சுக்லபக்ஷம் தசமியில் சிவயோகம் தலைப்பட்டார்கள்.
12. பூணூரீல பூணூரீ முத்துக்குமார தேசிக சுவாமிகள் (கி.
լ հ 1782 - 1827)
சுவாமிகளது அருளாட்சிக் காலத்தில் திருநெல்வேலி மேடைத்தளவாய் முதலியார் அவர்களும், சைவ நல்லன்பர்களும் திருநெல்வேலிக்கு சுவாமிகள் எழுந்தருள வேண்டும் என்று விண்ணப்பிக்க அவ்வாறே செல்லும் பொழுது காளையார் கோயிலில் தங்கினார்கள். அப்பொழுது அங்கு வசித்து வந்த அருணகிரிநாத முதலியார் என்பவரும், அவரது துணைவியார் சிவகாமியம்மையாரும் குருநாதரின் திருவடி மலர்களில் வீழ்ந்து மகவின்றி வருந்தும் தமக்கு பரிகலச் சேடம் அளித்தருள வேண்டும் என்று விண்ணப்பித்தனர். (8ஆவது குருமகா சந்நிதானம் அழகிய திருச்சிற்றம்பல சுவாமிகள், மலடியான வயது முதிர்ந்த பெண்ணிற்குப் பரிகலச் சேடம் அளித்தருள அப் பெண் ஒர் ஆண் மகவை ஈன்று அக்குழந்தைக்கு அழகிய சிற்றம்பலப் பரிகலம் என்ற பெயரிட்ட வரலாறு முன்னர் குறிப்பிடப்பட்டுள்ளது.) மாலைக் காலமாதலால் பரிகலம் முடிவடைந்துவிட்ட காரணத்தினால் மடைப்பள்ளியிற் சிந்திக் கிடந்த சோற்றுப் பருக்கைகளை, பொறுக்கிவரப் பணித்து அருளுள்ளத்துடன் முதலியாரிடம் கொடுக்க, அவர்கள் அதனை அன்பு மீதுரப்பெற்று மனைவியிடம் கொடுக்க அதனை உண்ட சிவகாமியம்மையார் கருவுற்று உரிய காலத்தில் ஆண்மகவை ஈன்றார். குழந்தைக்குக் கொண்டு வந்து குருநாதர் முன்பு கிடத்தி "முத்துக் குமார பரிகலம்” என்று பெயரிட்டு மகிழ்ந்தனர்.
726

மகவு கிடைத்த மகிழ்ச்சியில் சுவாமிகளின் அனுமதி பெற்று மகேசுவர பூஜையும், செந்தமிழ்ச் சொக்கனுக்கு மகாபிஷேகமும் நடத்தி உவகை கூர்ந்தனர். ஞானசம்பந்த தேசிகருக்கு ஞானபீடம் அளித்து சித்திரை கிருஷ்ணபசுஷ அஷ்டமி நாளில் முக்தியெய்தினார்கள். சுவாமிகள் நிகழ்த்திய அற்புதத்தைக் குறித்த பாடல்:
இருக்கு புகழ் திருக்கானப் பேரூர் தன்னில்
இனிமையுறும் அருணகிரி யென்னும் சீடன் பெருக்கமுறு சந்தான விருப்பங் கொண்டு
பீடுபெறு மனைவியொடும் வந்து வேண்டத் திருக்குலவு மடைப்பள்ளியிற் சிதைந்து வீழ்ந்த
செம்மையுறு மன்னமொன்றை அளித்துக் காப்ப உருக்கிளரச் செய்த முத்துக் குமரன் செம்பொன் உபய திருவடிக் கமலம் உச்சி வைப்பாம்
13. பூனிலழறீ ஞானசம்பந்த தேசிக சுவாமிகள் (கி. பி.
1827-1840)
குருமூர்த்திகள் அருளாட்சி நடத்தி வரும் காலத்தில் சீர்காழிப் புராணம், இராமநாடகம் முதலிய அருமையான செந்தமிழ் நூல் இயற்றுவதில் வல்ல அருணாசலக் கவிராயர், சிதம்பர நாதத் தம்பிரான் முதலிய அடியார்கள் சுவாமிகளிடம் வந்து உபதேசம் பெற்றனர். இவரது காலத்திலே தான் ஆங்கிலேயக் கிழக்கிந்தியக் கம்பெனியார் தமிழக அறநிலையப் பாதுகாப்புக்களைக் கண்காணிக்கத் தலைப்பட்டனர்.
குருமூர்த்திகள் கந்தப்ப தேசிகருக்கு ஞானாபிஷேகம் செய்து ஆவணி கிருஷ்ணபசுஷ ஏகாதசியில் இறையருளில் கலந்தார்.
14. பூணூரீல பூணூரீ கந்தப்ப தேசிக சுவாமிகள் (கி. பி. 1840
1842)
ஞானச் செங்கோல் புரந்த கந்தப்ப தேசிகர் திருநெல்வே
நகரத்திற்கு எழுந்தருளியிருந்த காலத்தில் வானம் பொய்த்து மக்கள் உணவின்றி வருந்தினர். விளைச்சல் இல்லை. வருமானமும் இல்லை. ஆனால் அரசியல் அலுவலாளர்கள் வரி வேண்டித் துன்புறுத்தினார்கள். அனைவரும் கூடி மாவட்டத் தண்டல் நாயகத்திடம் முறையிட்டனர். துரையோ “என்னிடம் சொல்லி என்ன பயன். திருநெல்வேலிக்கு வந்திருக்கின்ற உங்கள் பாதிரியாரிடம் கூறினால் மழை பெய்யச் செய்வாரே' என்று கேலியாகப் பேசினார். துன்பத்தின் கொடிய பிடியிலிருந்த மக்கள் கந்தப்ப தேசிக சுவாமிகளைக் கண்டு நிகழ்ந்தவற்றைக் கூறி குறைதீர்க்க வேண்டினார்கள். சுவாமிகள் தியான சமாதி கலைந்து எழுந்து,
"சைவ சமயம் சமயமெனில் அச்சமயத்
தெய்வம் பிறைகுடும் தெய்வமெனில் - ஐவரை வென்று
ஆனந்த வெள்ளத் தழுந்துவதே முத்தியெனில்
为岁 வானங்கTள் பெய்க Lബു
இத் தெய்வத் தமிழை ஒலித்தவுடன் வானத்தில் மேகங்கள் இருண்டன. கருக்கொண்ட மேகம் கனமழை பொழிந்தது. ஏரி,
இந்துக்கலைக்களஞ்சியம்

Page 159
குளமெல்லாம் நிரம்பின. ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. மக்கள் மனமெல்லாம் ஆனந்தத்திற் பொங்கி வழிந்தது. சுவாமிகளை எள்ளி நகையாடிய துரைமகன் மன்னிப்புக் கோரினார். அத்துடன் நில்லாது சொக்கநாதப் பெருமானுக்கு சிறப்பான அபிடேக ஆராதனைகள் நடத்தும்படி நூறுவராகன் பொன்னைக் காணிக்கையாக வழங்கினார்.
பின்னர் ஒரு சமயம் ஞானகுருநாதர் காசிக்குச் சென்று கங்கையில் நீராடி வருவதற்கு இயலாதிருப்பதைக் குறித்து வருந்தினார்கள். இதனை அறிந்த திருக்கூட்டத்து அடியவர்களுள் ஒருவராகிய விருத்தாசலத் தம்பிரான் தமது ஆச்சாரியரின் விருப்பத்தை நிறைவேற்ற தருமை யினின்றும் புறப்பட்டு திருவனந்தபுரம் ஆலயத்தினுட் சென்று இறைவன் சந்நிதானத்தில் சாரங்கியென்னும் இசைக்கருவியினால் இறைவனது புகழைப் பாடிப் பரவினார். இறைவனுக்கு வழியடிமை பூண்ட அரசனது புகழும் பாடல்களில் தெளிவாகியது. அடியவரின் பாடலுக்கு மகிழ்ந்த அம்பிகை அவரது தோளின் மீது நின்று பாடலுக்கேற்ப ஆடிக் கொண்டிருந்தாள்.
வழிபட வந்த மன்னன் அடியவரின் தோள்மீது அன்னை பராசக்தி கூத்தாடுவதைக் கண்டான். ஒடிச்சென்று அம்மையின் திருவடிகளைப் பற்ற வேண்டும் என்று விரும்பினான். விரும்பியவன் கட்டித் தழுவியது தம்பிரான் சுவாமிகளை. திடுக்கிட்ட சுவாமிகள் காரணத்தைக் கேட்டறிந்தார். அரசனுக்குக் காட்சியளித்த அம்பிகை தனக்கு அருளவில்லையே என்று கவன்றார். சுவாமிகள் தன்னைப் புகழ்ந்து பாடிய காரணத்தை அரசன் கேட்கத் தமது ஞான தேசிகராகிய கந்தப்ப தேசிகர் கங்கை நீராட விரும்புவதைத் தெரிவித்தார். அரசனும் காசிக் கங்கை நீரை யானை முதலியவற்றிலே ஏற்றிக் கொண்டு தருமபுரம் திரும்பிய மன்னன் திருமடத்தில் பெரிய தொட்டி ஒன்றை அமைத்து கங்கை நீரை நிரப்பி குருநாதரை திருமஞ்சனம் கொள்ளச் செய்தான்.
தமக்குப் பிறகு விருத்தாசலத் தம்பிரானுக்கு ஞானாபிஷேகம் செய்வித்து மாசிலாமணி தேசிகர் எனத் தீட்சா நாமம் சூட்டி ஆவணி கிருஷ்ணபசஷ நவமிநாளில் சிவசமாதி கூடினார்கள்.
கிழக்கிந்தியக் கம்பெனியாரிடமிருந்த தேவஸ்தானங்கள் இவர்கள் காலத்தில் மீண்டும் ஆதீனத்திடமே ஒப்படைக்கப்பட்டன. இவரது பெருமையைக் குறிக்கும் பாடல்:
கதியினை அளிக்கும் காசியின் மேவும்
கங்கையின் மூழ்கிடக் கருதி துதிபுகழ் மாசிலாமணி மூர்த்தி
துண்டியங் கேகிட விடுத்து துதியிடைத் தருப்பை யுருவினை யங்க
நூன்முறை யாட்டிடச் செய்து பதியினின் மேவும் கந்தப்ப மூர்த்தி
பதமலர் அனுதினம் பணிவாம்.
இந்துக்கலைக்களஞ்சியம்

15. பூனிலழறீ மாசிலாமணி தேசிக சுவாமிகள் (கி. பி 1842
1858)
இவர்களது காலத்தில் வானம் பொய்த்து கடும் பஞ்சம் ஏற்பட்டது. ஆறு குளங்களில் நீரின்றி பயிர்கள் வாட்டமுற்றன. மக்கள் துன்பமடைந்தார்கள்.
சுவாமிகள் மக்களின் அவலத்தைத் துடைப்பதற்காக சொக்கநாதப் பெருமானுக்கு அபிஷேக ஆராதனைகள் செய்து மனமுருகி கண்ணிர் சோர மேகராகக் குறிஞ்சிப் பண்ணில் அமைந்த “புலனைந்தும் பொறிகலங்கி” என்ற திருநெறிய தெய்வத் தமிழ்ப் பாடலைச் சாரங்கி எனும் இசைக்கருவியில் அமைத்துப்பாட பெருமழை பெய்தது. வறண்ட நிலமாக விளங்கிய மக்கள் மனம் மகிழ்ச்சியால் நிறைந்தது.
இவ்வாறு பல நன்மைகளைச் செய்து, அருளாட்சி புரிந்து தருமபுரத்திற்கு அணித்தாகவுள்ள மணக்குடி ஆலயத்தையும் தருமபுரீஸ்வரர் ஆலயத்தையும் திருப்பணி செய்வித்து மகா கும்பாபிஷேகம் நடத்தினார்கள். திருமடத்தில் பல திருப்பணிகள் நடந்தேறின.
இவரது காலத்தில் சுசீந்திர மடத்தில் கட்டளைத் தம்பிரானாக இருந்தவர் இலக்கணத் தம்பிரான் என்று சிறப்புப் பெற்ற முத்தையா தம்பிரான் அவர்கள். திருவாங்கூர் மன்னன் விரும்பிக் கேட்டதற்கிணங்க சிவமகா புராணமான பெரிய புராணத்தை சிறந்த முறையில் ஆராய்ச்சி ரீதியாக விரிவுரை செய்தார்கள். தம்பிரான் சுவாமிகளுக்கிருந்த ஆழ்ந்த புலமையைக் கண்ட மன்னன் அவரிடம் திருமுறைகள், மெய்கண்ட சாத்திரங்கள், பூஜாவிதிமுறை, மச்ச புராணம் இவற்றைப் பாடங் கேட்டுத் தெளிந்தான். இத்தகைய ஒரு முனிபுங்கவரைச் சீடராகப் பெற்றிருக்கும் ஆதீன முதல்வரது சிறப்பியல்புகளைக் கேட்டுத் தெளிந்து சிவமாம் செம்பொருளே குருமூர்த்தியாக எழுந்தருளி வழிகாட்டுகிறது என மகிழ்ந்தான்.
தம் ஆசிரியப் பெருந்தகை தம்பிரான் சுவாமிகளுக்குப் பெருஞ் சிறப்புக்கள் பல செய்தான். சுவாமிகள் அனைத்தும் தமது குருநாதருக்கே உரியன என்று ஏற்றார்கள். தந்தத்தில் பல்லக்கு ஒன்றையும் மன்னவன் அளித்தான். அதனை அப்பொழுது சிந்து பூந்துறையில் எழுந்தருளியிருந்த மகாசந்நிதானம் அவர்கள் திருமுன் சமர்ப்பித்தார். இன்றும் இப் பல்லக்கு தருமைத் திருமடத்தில் உள்ளது.
இந்த குருமூர்த்தியின் ஆட்சிக் காலத்தில் திருவாங்கூர் மன்னன் இறந்தான். அதற்கு ஆதீன வழக்கப்படி தம்பிரான் சுவாமிகள் அரண்மனைக்கு அருட்பிரசாதம் வழங்கி ஆறுதல் கூறினார்கள். புதிய மகாராஜா பட்டமேற்றதும் துலாபாரம் இட்டான். அதில் ஒரு பகுதியை ஆதீனத்திற்கு மாகேஸ்வர பூஜை காணிக்கையாக வழங்கினான். இக் குருமூர்த்திகளின் காலத்தில் சிதம்பரம் ஆலய கும்பாபிஷேகம் நடைபெற்றது. பூரீரங்கம் ரங்கநாதருக்குத் தங்கக் கவசம் செய்து சார்த்த ஆதீனம்
f27

Page 160
பெருமளவு பொருளுதவி செய்தது. வேளூர், சீர்காழி திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன. குத்தாலம் பூரீ உக்தவேதீஸ்வரர், ஆச்சாள்புரம் திருக்குறுக்கை மகா கும்பாபிஷேகங்கள் சிறப்பாக 21-11-1853இல் நடத்தப்பட்டன. ஒருமுறை சுவாமிகள் தென்பாண்டி நாட்டுத் தலங்களைத் தரிசிப்பதற்காக திருவையாறு சென்று சிலநாட்கள் தங்கினார்கள். அப்பொழுது அறம் வளர்த்த நாயகியையும், ஐயாற்றப்பரையும் தரிசிக்க குடை, கொடி, கைவிளக்கு, தீவட்டி சகிதம் ஒதுவா மூர்த்திகள் திருமுறைகளைப் பண்முறை பிறழாமல் முழங்கி வர அன்பர்கள் புடைசூழ எழுந்தருளினார்கள். இச் சிறப்புக்களோடு ஒரு சைவமடாதிபதி செல்லுதல் தகாதென அந்தணர்கள் தடுத்தார்கள். அவர்களுக்குக் குருநாதர் பல சான்றா தாரங்களோடு 10ஆவது குருமகா சந்நிதானம் சிவஞான தேசிகரைத் தடுத்த திருச்செந்தூர் போற்றிமார்களது செயலையும் சொல்லி அமைதிப்படுத்த அந்தணர்களும் தம் தவறுணர்ந்து வருந்தி ஞான தேசிகருடன் உடன் வந்து ஆலய தரிசனம் செய்தார்கள்.
சுவாமிகளின் யாத்திரைக் காலத்தில் திருச்சியில் இந்து முஸ்லிம் கலவரம் ஏற்பட்டது. அடிதடி, கலகங்கள் நிகழ்ந்தன. இந்நிலையில் குருநாதர் திருச்சிக்கு வந்தால் அவரது திருமேனிக்கும் பூஜைக்கும் தீங்கு நேர்ந்து விடுமோ என்று அஞ்சி, திருஎறும்பியூரில் இருந்தே மாற்று வழியாக மதுரை செல்ல ஆலோசனை கூறினர். ஆனால் சுவாமிகள் தாயுமானவரை தரிசிக்காமல் செல்ல மாட்டேன் என்று உறுதியாக திருச்சிராப்பள்ளி வந்தடைந்தார்கள். அவர்கள் திருவடி தோய்ந்த நாள் முதலாக கலகம் ஒய்ந்து அமைதி உண்டாகியது.
திருச்சி மெளனமடத்தில் குருமூர்த்திகள் தங்கியிருந்த பொழுது கனவில் அடியவர் உருவில் பழனியாண்டவனே காட்சி தந்து "காவடியுடன் வந்து எம்மைக் காண்பாயாக’ என்று கூறி மறைந்தான். அன்றிலிருந்து பங்குனி உத்தரத் திருநாளில் திருச்சி மெளன மடத்திலிருந்து காவடி எடுத்துச் செல்வது வழக்கமாக உள்ளது.
சுவாமிகள் மதுரைக்கு எழுந்தருளி பூரீமீனாகூழி சுந்தரேஸ்வரரைத் தரிசனம் செய்து வழிபட்டார்கள். மதுரை திருஞான சம்பந்தர் ஆதீன குருமகா சந்நிதானம் அவர்களுடன் இணைந்து மக்களுக்கு அருட்காட்சி வழங்கியமை சிறப்புமிக்கது. திருநெல்வேலியில் தவராஜருக்கு மக்கள் பட்டணப் பிரவேசம் நிகழ்த்தி மகிழ்ந்தார்கள். மேலும் பாபநாசம், அம்பா சமுத்திரம், திருக்குற்றாலம், சிவசைலம், திருப்புடை மருதூர், கன்னியா குமரி, சுசீந்திரம் முதலிய தலங்களுக்குச் சென்று விட்டு திருச்செந்தூர் அடைந்தார்.
போற்றிமார்களும், அன்பர்களும் முறையாக வரவேற் றார்கள். அங்கு கடலாடியும் நாழிக் கிணற்றில் நீராடியும்
செந்திலாண்டவனை வணங்கி ஆனந்தமுற்றார்கள். இச்
72g

சமயத்தில் அன்பர் ஒருவர் வதனாரம்பத் தீர்த்தத்தில் நீராடுகையில் பெரிய மீனொன்று அவரைக் கடித்து இழுத்துச் சென்றது. இதனைக் கண்ட ஆதீன அடியவர் ஒருவர் அவரை மீனின் வாயிலிருந்து மீட்டு வந்தார். குற்றுயிரும் குலை உயிருமாக இருந்தவனைப் பிழைப்பிக்க வேண்டும் என்று அனைவரும் குருநாதனைப் பணிய சொக்கலிங்கப் பெருமான் திருவருளை நினைந்து மீன்கடித்த இடத்தில் திருநீற்றினை இட்டு உயிர் பிழைக்கச் செய்தார்.
இவர்களது ஆட்சிக்காலத்தில் தாது வருடத்தில் சுசீந்திரத்தில் பெரும் பஞ்சம் வந்தது. மழையில்லை - விளைவு இல்லை - மக்கள் பசியினால் வருந்தினார்கள். ஆதீன மடத்திலிருந்து கஞ்சி வார்த்தும் பிற வகைகளிலும் உதவிகள் வழங்கப்பட்டன. வருண ஜபமும், திருமுறையில் மழைப் பதிகங்கள் பாராயணமும் செய்யப்பட்டதன் விளைவாக பெருமழை பெய்தது.
இவர்களது ஆட்சிக் காலத்திலேதான் திருவையாற்றில் கர்நாடக சங்கீத சாகித்திய கர்த்தாவான தியாகராஜ சுவாமிகள் வாழ்ந்து பூரீ இராமபிரான் அருளினாலே பல கீர்த்தனைகளை இயற்றி மறைந்தார்கள்.
இத்தகைய பல்வேறு அற்புதங்களை நிகழ்த்தி, ஆலயத்திருப்பணிகள் செய்து ஞானஅரசு நடத்திய குருநாதர் சச்சிதானந்த தேசிகருக்கு பீடாதிபத்தியத்தை அளித்து தை கிருஷ்ணபசுஷ் சஷ்டியில் சிவ சாயுச்சியம் அடைந்தார்கள்.
16.பூணிலழறீ சச்சிதானந்த தேசிக சுவாமிகள் (கி. பி 1858-1873)
இவர்களது ஆட்சிக் காலத்திலே அருளுபதேசம் கேட்டுத் தெளிந்தவர் ஆறுமுகத் தம்பிரான் என்பவர். இவர் மாயூரம் துலாக் கட்டத்தில் வெள்ளப் பள்ளம் சாஸ்திரிகள் என்னும் ஸ்மார்த்தப் பிராமணர் பிரம்ம சூத்திரத்திற்கு விஷ்ணு பரமாக உரை கூறுவதைக் கேட்டார்கள். சாஸ்திரிகளுடைய வினை பக்குவமாகுங் காலம் அண்மியதால் ஆறுமுகத் தம்பிரான் தமது ஞானாசிரியரின் ஆணை பெற்றுச் சென்று சாஸ்திரிகளை வாதுக்கு அழைத்தார்கள். சாஸ்திரிகள் “நடுவராக இருந்து வழக்குத் துணியும் ஒருவரை வைத்துத் தொடங்குவோம்” என்றுகூற “நீரே நடுநிலையாளரைக் கூறும்” எனத் தம்பிரான் கூற “உங்கள் குருமகாசந்நிதானம் அநுபூதிமானாக இருப்பதனால் அவரே நடுநிலை வகிக்கத் தக்கவர்” என்று கூற குருமணி முன்பாக வாது தொடங்கியது. தம்பிரான் சுவாமிகள் பற்பலப் பிரமாணங்களுடன் பிரம்ம சூத்திரம் சிவ பரத்துவத்தையே கூறுகின்றது என மெய்ப்பிக்க சாஸ்திரிகள் தம்பிரானை வணங்க “இங்கே எல்லா வணக்கமும் எங்கள் குருநாதருக்கே உரியது” என தம்பிரான் சுவாமிகள் கூற ஞாகதேசிகரை வணங்கிப் பிழை பொறுக்குமாறு சாஸ்திரிகள் வேண்டினார். அவரை மகா சைவராக்கி, சைவ சந்நியாசமும் அளித்தார் தருமைக் குருமணி. குரு காணிக்கையாக தமது ஊரான வெள்ளப்பள்ளம் கிராமத்தை வழங்கி மகிழ்ந்தார் சாஸ்திரிகள்.
இந்துக்கலைக்களஞ்சியம்

Page 161
மகாவித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை ஞானதேசிகளின்
அருட்திறத்தில் அகம் குழைந்து "சச்சிதானந்த தேசிகர் மாலை” பாடி பல கொடைச் சிறப்புக்கள் பெற்றார்.
7.11.1873 இல் மாணிக்கவாசக தேசிகருக்கு இளவரசுப் பட்டம் கட்டி வைத்தார்கள். பின்னர் கார்த்திகை சுக்லபக்ஷ துவாதசி கூடிய 30.11.1873இல் சிவசமாதி கூடினார்.
17. பூணூரீலபூணூரீ மாணிக்க வாசக தேசிக சுவாமிகள்
(கி. பி. 1873-1889)
சுவாமிகள் தலயாத்திரை செய்வதில் இன்பங் கண்டார். இவரது காலத்தில் திருக்கடவூர், புள்ளிருக்கு வேளூர் திருப்பணிகள் தொடங்கப் பெற்றன. திருப்பணி நடைபெற்றுக் கொண்டிருந்த திருபுவனம் தேவஸ்தானத்திற்கு குருநாதர் எழுந்தருளியிருந்த பொழுது சிவஞான தேசிகருக்கு ஞான அரசளித்து மாசி கிருஷ்ணபசுஷ சதுர்த்தி நாளில் சிவசமாதி கூடினார்கள்.
18. பூணூரீலபூணூரீ சிவஞான தேசிக சுவாமிகள்
(S. l. 1889-1906)
இவர்களது ஆட்சிக் காலத்தில் திருநின்றியூர் பூரீ இலக்குமி புரீஸ்வரர் ஆலயமும், சீர்காழி பூரீ பிரமபுரீஸ்வரர் ஆலயமும் திருப்பணிகள் செய்விக்கப்பெற்று மகா கும்பாபிஷேகங்களும் நடந்தேறின.
இவர்கள் 22.4.1900இல் மாணிக்கவாசகருக்கு இளவரசுப் பட்டம் கட்டினார்கள். கார்த்திகைப் பெளர்ணமி நாளில் 01.12.1906 திருப்பனந்தாளில் பரிபூரணம் அடைந்தார்.
19.பூணிலழனி மாணிக்கவாசக தேசிக சுவாமிகள்
(6). էն 1906-1914)
1914இல் சிவஞான தேசிகருக்கு ஞானச் செங்கோலை அளித்து ஆனி சுக்லபக்ஷ சதுர்த்தி நாளில் முக்தி நிலை அடைந்தார்கள்.
20.பூணீலழறீ சிவஞான தேசிக சுவாமிகள்
(G. L. 1914-1918)
இவர்களது அருளாட்சியில் திருவையாறு பூரீ பஞ்ச நதீஸ்வர சுவாமி ஆலயத் திருப்பணி தொடங்க தேவகோட்டை நகரத்தார் திருமிகு உ. இராம, மெ. சுப. சேவு சேவகஞ் செட்டியார், சுவாமிகளிடம் ஒரு ஒப்பந்த விண்ணப்பமளித்து திருப்பணி செய்யத் தொடங்கினார்கள்.
பின்னர் சச்சிதானந்த தேசிகருக்கு ஞான இருக்கையை அளித்து ஆடி கிருஷ்ணபசுஷி சப்தமி நாளில் பேரின்பநிலை எய்தினார்கள்.
21. பூனிலழனி சச்சிதானந்த தேசிக சுவாமிகள்
(G.ü,1918一1919)
குருநாதர் ஆலயப் பணிகளையும் நித்திய நைமித்திக பூசைகளையும் மிகச் சிறப்பாக நடத்தி வந்தார்கள்.
இந்துக்கலைக்களஞ்சியம்

ஆட்சியேற்று மிகக் குறுகிய காலத்திற்குள்ளாகவே மாணிக்கவாசக தேசிகரை ஞான பீடத்தில் அமர்த்தி பங்குனி கிருஷ்ணபசுஷ் பஞ்சமியில் சிவநிலை அடைந்தார்கள்.
22. பூணில பூணூரீ மாணிக்க வாசக தேசிக சுவாமிகள்
(6), լն): 1919-1923)
சுவாமிகள் காலத்தில் திருபுவனம் பூரீ கம்பகாரேஸ்வர சுவாமி, திருப்பனந்தாள் பூரீ அருண நடேஸ்வர சுவாமி, தருமபும் பூரீ தர்மபுரீஸ்வரர், பூரீ ஞான புரீஸ்வரர் ஆலய திருப்பணிகள் நடைபெற்றன. திருக்கடவூர் பூரீ அமிர்தகடேஸ்வர சுவாமி ஆலய திருப்பணிகள் நிறைவேறி கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது.
திருப்பனந்தாள் காசிமடம் பூரீலழரீ காசிவாசி சுவாமி நாதத் தம்பிரான் சுவாமிகள் தருமை குரு மூர்த்திகளிடம் அருளுபதேசம் பெற்றவர்களாவார்.
இவர்கள் ஆட்சித்திறன் பெரிதும் உடையவர்கள். மாயூரம் நகராண்மைக் கழக உயர்பள்ளி மாணவர்கள் விடுதிக்கு பத்தாயிரம் ரூபாய் அளித்தது சிறந்த எடுத்துக் காட்டாகும்.
இவரது காலத்தில் ஆதீன வித்துவான் சுவாமிநாத பண்டிதர் அவர்களைக் கொண்டு மாயூரத்தில் சைவ சித்தாந்த மகாநாடொன்று நடத்தப்பட்டது. இந்து சமய அறநிலைய மசோகா திருத்திய சட்டம் வகுக்கப்பட்டது.
இவர்கள் சுப்பிரமணிய தேசிக சுவாமிகளை
பட்டத்திலிருத்தி ஐப்பசி கிருஷ்ணபசுஷ் சதுர்த்தியன்று 29.10.1923இல் பரிபூரண நிலையை எய்தினார்கள்.
23. பூணுரீல பூணூரீ சுப்பிரமணிய தேசிக சுவாமிகள்
(6). լն).1923-1933)
பூநீலழரீ மாணிக்க வாசக தேசிகர் 29.10.23 இரவு திடீரென்று பரிபூரணம் அடையவே அருகிலிருந்த இரத்தின சபாபதித் தம்பிரான் என்பவர் தாமே பட்டத்திற்குரியவர் என்று கூறிக்கொண்டு பரிபூரணமானவர்களுக்குரிய கிரியைகளை அவசரம் அவசரமாகச் செய்ய முற்பட்டார். இதனால் ஐயம் கொண்டு விசாரணை நடத்தி இரத்தின சபாபதித் தம்பிரானைக் கைது செய்தனர்.
மறுநாள் ஆதீனத் திருக்கூட்ட அடியவர்கள் ஒன்று கூடி ஆதீன முறைமைக்கேற்ப சுப்பிரமண்ய தேசிகராகிய இக்குருமூர்த்தியைத் தேர்ந்தெடுத்து பூரீ ஞானபுரீஸ்வர சுவாமி ஆலய கோமுகையின் கீழ் இருத்தி ஆதி குருமூர்த்திகளே அபிஷேகம் செய்யும் பாவனையில் அபிஷேகம் நடத்தி பட்டம் தரிக்கச் செய்தனர். பட்டம் தரித்த மறுநாளே போலீசாரால் பூட்டப்பட்டிருந்த பூஜை மடத்தின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்து பார்க்கையில் சுவாமிகளுக்கு அதிசயம் ஏற்பட்டது. பட்டம் ஏற்க 48 மணி நேரத் தாமதம் ஏற்பட்டும் சொக்கநாதன் பூஜை அறையில் விளக்குகள் சுடர்விட்டுப் பிரகாசிக்க, மலர்கள் வாடாமல் மணம் வீச, சார்த்தியிருந்த சந்தனமும் ஈரத்தோடு
129

Page 162
இருந்தது. சொக்கநாதனின் திருவருளும், குருநாதரின் குருவருளும் வழிகாட்டுவதைக் கண்டு மனம் நெகிழ்ந்தார்கள்.
பதினாறாவது குருமணியவர்களுக்குப் பிறகு அவருக்குட் பின்வந்த குருமூர்த்திகள் யாரும் தகூழின யாத்திரை மேற்கொள்ளவில்லை. அக் குறையை சுவாமிகள் தீர்த்து யாத்திரைகள் மேற்கொண்டார்கள். சைவப் பெரியார்களான திருவாளர்கள் T. M நாராயணசாமிப் பிள்ளை, திருவரங்கம் சிங்கம் அய்யங்கார், இராவ் பகதூர் TV கிருஷ்ணசாமி அய்யர் P T இராசன் முதலிய அன்பர்கள் சுவாமிகளுக்கு மாபெரும் வரவேற்பு அளித்தார்கள்.
கும்பகோணம் மகாமக காலத்தில் ஆதீன வித்வத் சிகாமணி சுவாமிநாத பண்டிதர் அவர்களைக் கொண்டு சைவசித்தாந்த மகாநாடு நடத்தி சைவப்பயிர் தழைக்கச் செய்தார்கள். சம்பிரதாய நூல்களையும் சைவசித்தாந்த நூல்களையும் அச்சிட்டு இலவசமாக வழங்கினார்கள்.
ஆதீன வித்துவான்களாக சீகாழி வித்வத் சிரோமணி ப. அ. முத்துத் தாண்டவராயப்பிள்ளை அவர்களையும், அவர்கள் குமாரர் ப. மு. சோமசுந்தரம் பிள்ளை அவர்களையும் காழி சிவகண்ணுசாமிப்பிள்ளை அவர்களையும் ஏற்று சைவமும் தமிழும் விளங்க ஆவன செய்தார்கள். பண்டார மும்மணிக் கோவை போன்ற சாத்திர நூல்கட்கு சட்டைநாதத் தம்பிரான் சிறப்பான குறிப்புரை எழுதி உதவினார்கள்.
ஒவ்வொரு தேவஸ்தானத்திற்கும் சென்று அங்கு தங்கி கோவில் கணக்குகள் ஒழுங்காக வரவும், பணிகள் செவ்வனே நடைபெறவும் திட்டங்கள் வகுத்தார்கள். சென்னை இந்து மதமான்யச் சட்டம் நடைமுறைக்கு வந்ததும், ஆதீன மடத்திற்கும், தேவஸ்தானங்களுக்கும் அதன் விதிகளிலிருந்து விலக்குப் பெற்றார்கள்.
இப்படிப் பலவகையாலும் தமிழிற்கும் சைவத்திற்கும் நற்பணிகள் பல புரிந்து தமக்குப் பிறகு சண்முக தேசிகரை மட்டத்தில் இருத்தி, ஆணி, சுக்லபக்ஷ சதுர்த்தியில் 1933ஆம் ஆண்டு ஜூன் திங்கள் 26ஆம் நாள் பரிபூரணத்துவம் எய்தினார்கள்.
24.பூணூரிலழனி சண்முக தேசிக சுவாமிகள் (கி. பி. 1933-1945)
சுவாமிகள் காலத்தில் பல அறிவுப் பணிகள் நடைபெற்றன. சித்தாந்த சைவ நூல்களை அச்சிட்டு வழங்கினார்கள். ஆதீன மடாலய முகப்பில் சிறந்த நூல் நிலையம் ஒன்றினை அமைத்தார்கள். திரு மடத்தின் பல பகுதிகளையும் புதுக்கி, தருமபுரத்தை ஒரு முன்மாதிரிச் சிற்றுாராக மாற்றியமைத்தார்கள். நல்லறிஞர்களின் உரையால் நாடு நலம் பெற “ஞானசம்பந்தம்” என்ற மாத இதழை வெளியிட்டார்கள். ஞானசம்பந்தம் அச்சுக் கூடத்தை அமைத்தார்கள்.
130
 

தெய்வத் தமிழ் சிறக்கவும், ஆகம முறை பெருகவும் தேவார, ஆகமப் பாடசாலைகளை நிறுவி, உணவு, உடை, உறைவிடம் இலவசமாக மாணவர்களுக்கு வழங்கப்பட்டது. இளம் சிறார்களுக்கு ஆரம்பப் பாடசாலை ஆரம்பிக்கப்பட்டது.
இவர்களது அருளாட்சியில் ஆதீனக் கோயில்கள் செம்மை நெறியில் தலை நின்றன. சிவஞானபோத மாநாடு போன்ற சைவ நெறி மாநாடுகள் நடத்தப் பெற்றன. மடாலய முகப்பு ஆதீன உட்கட்டுக்கள் திருத்தி அமைக்கப்பட்டன. சாந்த நிலையம், மெய் கண்டார் நிலையம் ஆகியவை புதிதாகக் கட்டப் பெற்றன. நான்கு வீதிகளிலும் வீடுகள் கட்டப்பெற்று மின் இணைப்புக்கள் வழங்கப்பட்டன.
இவர்களது ஆட்சிக் காலத்தில் மடாலயங்களைக் கடுமையாகப் பாதிக்கக் கூடிய மசோதா ஒன்று சென்னை அரசில் நிறைவேற இருந்தது. அச்சட்டம் நிறைவேறியிருந்தால் அது ஏற்படுத்தும் தடைகள் சமய உலகைப் பெருமளவு பாதித்திருக்கும். அச்சட்டம் தள்ளுபடியாவதற்கு முன்னின்று செயலாற்றிய பெருமை இக் குரு மூர்த்திகளையே சாரும்.
தமது குருநாதர் மீது கொண்ட பேரன்பின் அடையாளமாக “சுப்பிரமணியம் வளைவு" அமைத்தார்கள். இந்திய அரசினர் நிகழ்த்திய போர் முயற்சிக்கு உதவி புரிந்தார்கள். கீழைக் கோபுரம் திருப்பணியும், திருக்கடவூர் ஆலய கும்பாபிஷேகமும் செய்தருளினார்கள். இப்படிப் பல துறைகளிலும் சிறப்பான பணிகள் செய்து தனக்கு அடுத்த பட்டமாக சுப்பிரமணிய தேசிகருக்கு ஞான அரசளித்து முக்திநிலை அடைந்தார்.
25.ழறீலழறீ கயிலை சுப்பிரமணிய தேசிக ஞானசம்பந்த
பரமாச்சாரிய சுவாமிகள் (கி. பி. 1945-1971)
திருக்கயிலாய பரம்பரை தருமையாதீனத்தின் 25ஆவது குருமணியாக அருட் செங்கோல் செலுத்திய இவர்களது காலம் ஆதீன வரலாற்றின் பொற்காலம்.
சிதம்பரத்தில் சுப்பிரமணியப்பிள்ளை, கணபதி ஆச்சி ஆகியோர்க்கு அரும்பெரும் புதல்வனாகத் தோன்றி, சிதம்பரம் ஆறுமுகநாவலர் பள்ளியில் தமிழ்க் கல்வியும், செட்டியார் தேவாரப் பாடசாலையில் திருமுறைக் கல்வியும், யாழ்ப்பாணம் சுவாமிநாத பண்டிதரிடம் சித்தாந்த சாத்திரக் கல்வியும் பெற்று இளமையிலேயே ஆதீனத்தில் துறவேற்று 24ஆவது குருமணியவர்களிடம் அருளுபதேசம் பெற்று ஒடுக்கத்துத் தம்பிரானாகவும், ஞானசம்பந்தம்’ இதழாசிரியராகவும் திகழ்ந்தவர்கள். 2. 5. 1945இல் தருமையாதீன 25ஆவது பட்டத்தை ஏற்றார்கள்.
இவர்கள் காலத்தில் ஆதீன தேவஸ்தானங்கள் இருபத்தேழும் இருபத்தேழு நட்சத்திரங்களாகச் சுடர் விட்டன. வேளூர், சீர்காழி, திருவையாறு, திருக்கடவூர் ஆலயங்களில் மகா கும்பாபிஷேகங்களை நிகழ்த்தினார்கள்.
இந்துக்கலைக்களஞ்சியம்

Page 163
அஷ்டாதசபுஜ மகாலசுஷ்மி துர்க்கையைப் பிரதிஷ்டை செய்து நவராத்திரி நாட்களில் சதசண்டி யாகங்களைச் செய்தார்கள். பூரீ சண்முக விலாசம் விருந்தினர் மாளிகை கட்டப்பட்டது. சொக்கநாதர் பூஜை மடம் சலவைக்கல் திருப்பணி செய்விக்கப்பெற்று நிலைவாயிற் கதவுகளுக்கு வெள்ளித் தகடுகள் வேயப் பெற்றன. தமிழ்க் கல்லூரி தோற்றுவிக்கப் பெற்றது.
தேவாரப் பாடல் பெற்ற தலங்களைத் தரிசிப்பதில் பெருவிருப்பு உடையவர். வடநாட்டிலுள்ள பூரீகாசி, பத்ரிநாத், திருக்கேதாரம், அமரநாதம், பன்னிரு ஜோதிர்லிங்கத் தலங்கள் எல்லாவற்றிற்கும் மேலாகக் கயிலை மலைக்குச் சென்று அப்பர் பெருமான் ஐயாற்றில் ஆடி அமாவாசையன்று தரிசித்த கயிலைக் காட்சியை நேரே தரிசனம் செய்து, திருக்கயிலாய பரம்பரை என்ற தொடரை மெய்யாக்கியவர். அன்று முதல் அன்பர்களால் கயிலைக் குருமணி’ என்றழைக்கும் சிறப்புப் பொருந்தியவர். இவரது சமய, சமூக, தமிழ்ப் பணிகளைப் பாராட்டியும், திருக்கயிலை யாத்திரை சென்று வந்த சிறப்புக் குறித்தும் 1961இல் பொது மக்களால் கனகாபிஷேகம் செய்விக்கப் பெற்ற சீர்மை பொருந்தியவர்.
சைவ சமய வளர்ச்சிக்காக சென்னையில் சமயப் பிரசார நிலையம் ஒன்றை நிறுவி அரிய பணிகள் பலவற்றிற்கு வித்திட்டவர். ஆதீனத் திருமடங்களை ஒன்றிணைத்து தெய்வீகப் பேரவை கண்டவர். திருக்குறள் உரைவளம், பன்னிரு திருமுறைகளுக்கு உரை விளக்கம், நூற்றுக்கும் மேற்பட்ட சைவ சமய நூல்கள் வெளியிட்டு மகிழ்ந்தவர்.
பல்துறை அறிஞர்களுக்கு பட்டம் அளித்துப் போற்றினார்கள். மாயூரத்தில் ஞானாம்பிகை அரசினர் மகளிர் கல்லூரி தோன்றப் பெரும் பொருள் அளித்தார்கள். பூரீ சண்முக தேசிகர் மகப்பேறு மருத்துவ மனையை நிறுவி அதனை மயிலாடுதுறை நகராட்சிக்கு வழங்கினார்கள். திங்கள் தோறும் தம் ஜன்ம நட்சத்திரத்தில் திருக்கோயில் வழிபாடு நிகழ்த்தி அவ்வத்தலப் பதிகங்களை அச்சிட்டு இலவசமாக வழங்கினார்கள். ஆதீனத் திருக்கூட்டத்து அடியவர்களை தமிழ்க் கல்லூரியில் பயிலச்செய்து வித்துவான்’ பட்டப் படிப்பில் தேர்ச்சியளித்து சமயத் தொண்டிலும் தமிழ்த் தொண்டிலும் ஈடுபடுத்தினார்கள். குன்றக்குடி அடிகளாரும் திருப்பனந்தாள் ஆதீன கர்த்தா பூரீமத் முத்துக்குமார சுவாமிகளும் தமிழ்க் கல்லூரியில் பயின்றவர்கள். ஆதீனத் திருக்கோயில்களில் உள்ள மூர்த்திகளுக்குத் தங்கத் திருவாபரணங்கள் செய்தும் ஆதீனக் கோயில்களுக்குத் தேர் வாகனங்கள் செய்வித்தும் யானைகள் வாங்கியும் அருட்பணி புரிந்தார்கள். வேளூர் செல்வமுத்துக் குமரனுக்கு நவரத்தின அங்கியும், வள்ளிக்கு மரகத அங்கியும், தெய்வ குஞ்சரிக்கு இரத்தின அங்கியும் செய்து மகிழ்ந்தார்கள்.
தேவார இசையில் பெரிதும் நாட்டமுடைய இவர்கள் தக்கவர்களைக் கொண்டு பாடஞ் செய்து இசைத் தட்டுகளாக்கினார். ஆதீன குருமகா சந்நிதானங்களின் குருமூர்த்தங்கள் திருப்பணி செய்யப் பெற்றன.
இந்துக்கலைக்களஞ்சியம்

கந்தசஷ்டித் திருநாட்களில் மெளன உபவாசமேற்று திருச்செந்தூருக்கு எழுந்தருளி செந்திலாண்டவணை காலை மாலை வேளைகளில் தரிசனம் செய்து சஷ்டியன்று சூரசம்ஹார தரிசனம் செய்து மறுநாள் விரதம் முடித்தே பாரணை செய்வார்கள். அன்று அன்னம் பாலிப்பு திருநெல்வேலியிலும், தருமையிலும் நடைபெறும். வாரநாட்களில் குருவாரத்தன்று மெளன உபவாசம் காப்பார்கள். செவ்வாயன்றும், கார்த்திகையன்றும் வேளூர் பூரீ வைத்தியநாதர் ஆலயத்திற்கும், சுக்கிர வாரத்தன்று திருக்கடவூர் பூரீ அபிராமி சமேத அமிர்தகடேஸ்வரர் ஆலயத்திற்கும் எழுந்தருளி வழிபடுவார்கள். ஆண்டிற்கு ஒருமுறையேனும் திருக்கோயிலில் பூரீ தியாகராஜருக்கு முசுகுந்த சஹஸ்ரநாமார்ச்சனை செய்து மகிழ்வார்கள். தலவழிபாடு செய்வதில் பெருவிருப்பு
உடையவர்கள்.
சாத்திர, தோத்திர நுட்பங்களை உலகியலோடு ஒட்டிக் கேட்டார்ப் பிணிக்கும் வண்ணம் உபதேசிக்கும் நாநலமும் கண்டோரைப் பிணிக்கும் வசீகரத் தோற்றமும் உடையவர். இவர்களின் அருள் பழுத்த ஞானத் திருமொழிகள் செந்தமிழ்ப் பூம்பொழில் என்ற தலைப்புடன் நான்கு தொகுதிகளாக வெளி வந்துள்ளன. இருபத்தாறரை ஆண்டுகள் சிறந்த முறையில் அருளாட்சி நடத்திய இவர்கள் திருவருள் அழைப்பால் பூரீ காசி சென்று பூரீ விசுவநாதன் விசாலாட்சியை தரிசனம் செய்தபின்பு காசி மடத்தில் ஒதுவா மூர்த்திகளைக் கொண்டு 10ஆவது குருமகா சந்நிதானம் அவர்கள் இயற்றிய காசித் தாரகப் பத்துப் பாடலை பாடுமாறு கூறி அதனை செவிமடுத்தவாறே 10.11.1971இல் சிதாகாசப் பெருவெளியில் கலந்தார்கள்.
தருமையாதீனத்தைப் பலவகையாலும் குன்றிலிட்ட விளக்கென உயர்த்திய பெருமை 25ஆம் குருமகாசந்நிதானம் அவர்களையே சாரும். அப்பரின் முக்தி நாளான சித்திரைச் சதயத்தில் பட்டமேற்று அப்பர் கயிலைக் காட்சி கண்ட ஆடி அமாவாசையில் கயிலை தரிசனம் கண்டு பூரீ காசியில் பரிபூரணம் எய்தியது அற்புதமே.
26.பூணூரிலழறீ சண்முக தேசிக ஞானசம்பந்தப் பரமாச்சாரிய
சுவாமிகள் -
பூரீமத் சோமசுந்தரத் தம்பிரான் சுவாமிகள் சண்முக தேசிக சுவாமிகள் என்ற அபிஷேகத் திருநாமத்துடன் ஞானபீடம் ஏறியருளினார்கள். 12.10.71இல் தருமையாதீனம் ஞானபுரீஸ்வர சுவாமி ஆலய கோமுகையின்கீழ் ஆதி குருமூர்த்திகள் அபிஷேகம் செய்யும் பாவனையில் ஞானாபிஷேகம் செய்விக்கப் பெற்றது.
சுவாமிகள் இளமையில் விருத்தாசலம் சுந்தரர் தேவாரப் பாடசாலையில் ஐந்தாண்டுகள் முறையாகத் தேவாரம் பயின்று இளமையிலேயே 25ஆவது குருமணியவர்களால் துறவு நிலையில் பயிற்றப்பட்டார். ஆதீனப் பல்கலைக்கல்லூரியில் தமிழ் பயின்று 'வித்துவான் பட்டம் பெற்றார்கள். இசைவளமும்,சொல்லாற்றலும் மிக்க இவர்கள் தாம் பயின்ற தமிழ்க் கல்லூரியில் ஒரு ஆண்டு கெளரவப் பேராசிரியராகத் தமிழ்ப்பணி புரிந்தார்கள். சென்னை
13t

Page 164
சமயப் பிரசார நிலையத்திற்கு 20 ஆண்டுகள் பொறுப்பேற்று பணிபுரிந்தார்கள்.
திருவாமூரில் அப்பருக்கு ஆலயம் அமைத்து திரும் பெண்ணாகடத்தில் மெய்கண்டார் ஆலயத்தைப் புதுக்கி குடமுழுக்குச் செய்வித்தார்கள். தருமையாதீனத்தின் பன்முக பணிகள் சிறக்க இவரே காரண கர்த்தா. சென்னை சமயப்பிரசா நிலையத்தின் சிறப்பிற்கு இவர்களே மூலவேர். தமிழ் அறிஞர்களை ஆதீனத்தோடு இணைத்தார். மதவழிபாடுகளும் தேவாரப் பாடசாலையும், மாலைநேரத் தமிழ்க் கல்லூரியும் சாத்திரத் தோத்திரத் தொடர் வகுப்புக்களும் வெற்றிகரமாக நடைபெற காரண கர்த்தா சுவாமிகளே.
ஆதீனக் கோயில்களில் அன்பர்களின் உதவியோடு அறச் கட்டளைகள் நிறுவி திருக்கோயில்களை நிலையான பராமரிப்ட செய்தார்கள். சென்னையில் சச்சிதானந்தம் பிள்ளை சதாபிஷேச நினைவு நிதி அறக்கட்டளை மூலம் அப்பர் குருகுலம் நிறுவி 1 ஏழை மாணவர்களுக்கு இலவச உணவு வழங்க விடுதி அமைத்தார்கள். ஞான நூல்களை அச்சிட்டு வழங்கினார்கள் ஞானசம்பந்தம் பதிப்பகம்’ என நூல் வெளியிடும் தனி அமைப்பினை உருவாக்கினார்கள். இவர்கள் ஆற்றிய ஆசியுரைகள் திருவருட் செய்தி' என்ற பெயரில் இரண்டு பகுதிகள் வெளியிடப் பெற்றுள்ளது.
கல்வி, அறிவு, ஒழுக்கங்களால் சுடச் சுடரும் பொன்னாக ஒளிவிடும் இவர்கள் தவவாழ்வு ஒப்பரியது. இவர்களது பெருமுயற்சியால் 'சைவ சித்தாந்த மேனிலை ஆய்வு மையம் ஒன்று 20இலட்ச ரூபாய் மூலதனத்துடன் சிறப்பாக இயங்கி வருகின்றது. 1984 ஆம் ஆண்டில் திருச்சிராப்பள்ளி பாரதிதாசன் பல்கலைக்கழகத்துடன் இணைந்து தருமையில் அனைத்துலக சைவசித்தாந்தக் கருத்தரங்கு மாநாடு ஒன்றும் 1986 இல் நவம்பர் மாதம், மலேசியா, கோலாலம்பூரில் இரண்டாம் மாநாடும் 1988 டிசம்பரில் பூரீ காசியில் மூன்றாம் மாநாடும் செம்மையுற நடந்தேறின.
தாம் பயின்ற கல்லூரியில் முதுகலை வகுப்புத் தொடங்க நிலை நிதி வழங்கியுள்ளார்கள். ஆதீனப் பணிகள் இடையறவு படாது சீராக இயங்க தக்க வழிமுறைகளைச் சிறப்பாகச் செய்து வருகின்றார்கள். தருமையில் துர்க்கா தேவிக்கு ஐந்து லட்சரூபாய் செலவில் புதிய மகா மண்டபம் அமைத்துள்ளார்கள். ஆதீனட் புலவர்களாக ஐவரை ஏற்றுப் பட்டமளித்து பாராட்டியுள்ளார்கள்.
சிதம்பரம் பூரீ சபாநாயகர் ஆலயத்தில் சமயாசாரியார் சந்தனாசாரியார், வேத சிவாகம, திருமுறைப் பெட்டகக் கோயில் அமைத்து 22.08.86இல் மிகச் சிறப்பாகக் கும்பாபிஷேகப் செய்தார்கள். தமது ஜன்ம நட்சத்திரமாகிய ஆயில்ய நாளில் திங்கள் தோறும் பாடல் பெற்ற தலப் பதிகங்களை உரைச் குறிப்புடன் வெளியிடச் செய்கின்றார்கள். மதமாற்ற முயற்சிகளைத் தடுக்க அழுத்தமாக வேலியிடுகின்றார். (வவை
f32
 

தரும பூதஞானம்
பண்பு அடைமொழியான அறிவு விசிட்டாத்துவைத அறிவாராய்ச்சியியலில் ஒர் அடிப்படையான உண்மையாகும். அது இயற் பொருளின் தன்மையை விளக்கும். அது மூன்று மேலான உணர்வுகளைத் தரவல்லது. ஒன்று அண்டத்துக்குரிய உணர்வு. மற்றொன்று ஆன்மீக உணர்வு, மூன்றாவது பிரம்மனைப் பற்றிய உணர்வு உணர்வானது எப்பொழுதும் அதன் அடிப்படையாக ஓர் ஆன்மாவை உணர்த்தும். ஞானமானது இயற்பொருளோடும் ஒன்றாது; ஆன்மாவோடும் ஒன்றாது. இயற்பொருளும் ஆன்மாவும் வேறாக இருந்தாலும், பிரிக்க முடியாதவை. இருத்தலும் அறிதலும் ஒன்றாயின், அறிவாராய்ச்சி என்பது இருத்தலோடு ஒன்றியிருக்கும். அறிதல் என்பது இருத்தலோடு தொடர்பில்லையானால் ஒத்துக் கொள்ள முடியாது. ஏனென்றால் அது ஐயக் கொள்கைக்கு வழிவகுக்கும். எண்ணம் எப்பொழுதும் இயற்பொருளை அறியமுடியாது. இல்லை என்னும் கொள்கை (Net; method) göITLLU 9 L6OOTf60061 (Pureconsciousness) 956ôT தன்மையிலிருந்து பிரித்து விடுகிறது. இல்லை என்ற கொள்கையானது அறிவை மறுப்பதிலோ இல்லை என்று கொள்வதிலோ அடங்கியிருப்பதில்லை. ஒருமைக் கொள்கை, தத்துவத்தில் ஐயுறுவதில் தொடங்கி மறுப்பதில் முடிகிறது. ஒருமைக் கொள்கையானது உள்ளே இருக்கிற உணர்வு பூர்வமான ஆன்மா, வெளியே இருக்கின்றவற்றை உணர்ந்து அவை உண்மையல்லவென்று கூறி, மனமும் பொய் என்று கூறுகின்றது. இது தான் ஜயக்கொள்கை எனப்படும். மறுத்தல் செய்வதும் ஒரு விதத்தில் ஒரு செயலாகும். அது ஒருவிதமான தோற்றம் என்று கருதினாலும், உண்மை நிகழ்ச்சியாகும். ஒருமைக் கொள்கையினருக்குத் தோற்றம் (Ilusion) எவ்வாறு ஏற்படுகிறது என்று கூற இயலவில்லை. அவித்தை அதன் காரணம் என்று கூறினால், அவித்தை எவ்வாறு தோன்றியது என்ற வினா எழும். ஒரு குணம் அந்தக் குணம் ஏற்படக் காரணமாயிருந்த பொருளை உணர்த்தும். ஒருமைக் கொள்கையானது பொருளை மட்டும் குறிப்பிட்டு, அதன் தன்மையை மறுத்தால், புத்தகக் கொள்கை போல அறிவின் அடிப்படை, நிகழ்ச்சியுணர்வுகள் மட்டுமே என்ற கோட்பாடு (Phenomenalism) அதனை மறுக்கும்.
தருமம் அல்லது குணம், தருமி அல்லது குணம் படைத்தவரைக் குறிக்கும். இவற்றில் ஒன்றை மறுத்தால், மற்றொன்றையும் மறுக்க நேரிடும். இத்தகைய மறுப்பானது, அறிவு பெறுதற்குரிய சாதனங்களை மறுக்கிறது. பொருளானது தானே விளங்கும் இயல்பினதாயின், அதனை அசடம் (Ajada) என்றும் அது சடத்திலிருந்து வேறுபட்டிருப்பதாகவும் கூறலாம். அது ஆகாயத்தைப் போலும், காலத்தைப் போலும் அமையும். அசடம் என்பது (Ajada) உணர்வாகும்.அது உணர்கிற ஆன்மா என்றும், அதன் அறிவு தர்மபூத ஞானமென்றும் சொல்லப்படும். அசடம் (Ajada) என்பது உணர்வுள்ள ஆன்மா. அது எல்லையுள்ளதும் எல்லையில்லாததுமாகும். அது அனுபவத்தில் உணரப்படும் பொருளாகும். அதன் குணம், அறிவு, உணர்வு. அது அடக்கமானது. புத்தியுடையது. இயல்பான அறிவும்
இந்துக்கலைக்களஞ்சியம்

Page 165
(Substribute Intelligence) (5600TLDITGOT 956th, (Attributive Intelligence) பிரிக்க முடியாதவை. தரும பூதஞானம் (Dharmabhuta Jnana) göITGGOT 66TTë5G5p6ODLULg5 TG56|uh (Svayam Prakasa) பொருள்களை விளக்கும் தன்மையுடையதாகவும் (Artha Prakasaka) அமைந்திருக்கிறது. அது மதி (Mati), பிரக்ஞை (Prajana), Gler(upé) (Semushi), Glh6ýslógi (Samvit) 6T60 6)Jún சொல்லப்படும். அது ஆன்மாவைப்போல் தன்னை உணரும் தன்மையதன்று. சேதனத்திற்கும் (Cetana) சடத்திற்கும் (ada) இடைநிலையில் அமைந்துள்ளது. அது விளக்குப் போல் பொருள்களைக் காட்டும். ஆனால், அதற்குத் தெரியாது. அது ஆன்மாவில் அமர்ந்திருக்கிறது. ஆன்மாவிற்கும் ஞானத்திற்குமுள்ள தொடர்பு விளக்கிற்கும், அதன் ஒளிக்கும் உள்ள தொடர்பு போல் அமைந்திருக்கிறது. ஆன்மா அறிகின்ற தன்மையது. அது வெறும் புத்திமட்டுமன்று. ஞானம் என்பது தானே தோன்றியது. பகுத்தறிவு (Reason), புலக்காட்சி, உணர்வு முதலியன எல்லாம் ஞானத்தினால் விளக்கம் பெறுகின்றன. ஆனால், ஞானம் தானே விளக்கம் அளிப்பது. ஞானம் மனத்தின் மூலமாகச் செயற்படும். இயல்புணர்ச்சிகளிலிருந்து பக்தி, விவேகம் முதலியவை ஈறாக எல்லா உணர்வுகளும் - புலக்காட்சி, அனுமானம், சப்தம் முதலியவைகளெல்லாம் ஞானத்தால் நிலைகளில் ஏற்படும் மாற்றங்களாகும். புறஉலகில் காணப்படும் பொருள்களை ஞானத்தினால் அறியலாம். உலகக் கண்ணோட்டத்தில் ஞானம், புலன்கள் மூலமாகப் பொருள்களை அறியச் செய்கிறது.
ஆன்மா சித்து ரூபமானது (Cid-Rupam), ஆன்மா அணு. ஆனால் அதன் உணர்வு பரந்து காணப்படுகிறது. ஞானமானது தெரிந்துகொள்ளக் கூடிய நிலையில் கர்மத்தினால் கட்டுண்ட நிலையில் காணப்படுகிறது. தூங்கும் பொழுது ஞானத்தின் தன்மை, தமோகுணத்தால் (Tamas) ஆளப்படுகிறது. அது முன்பு விளக்கிற்கு உவமையாகக் கூறப்பட்டது. ஞானம் ஆன்மாவின் உள்ளுறைத் தன்மையாகவும், நிலையான தன்மையாகவும் அமைகிறது. தருமபூதமான ஞானம் கர்மத்தின் தொடர்பால் பொருளைப் போல் சுருங்குவதும் விரிவதுமாகச் செயற்படுகிறது. நிலையான உணர்வு கர்மத்தினால் மாறுகிறது. பழையபடி முக்தி நிலையடையும் பொழுது புலன்களின் பிடியிலிருந்து விடுதலை பெறுகிறது.
ஞானமானது இவ்வாறு மாறுவதும், மாறாமலிருப்பதும், பொருளாக அமைவதும், அதன் குணங்களாக அமைவதுமாக இருக்கிறது. இரா. கோ)
தருமம்
தென்னாசிய மரபின் பல்வேறு கூறுகளிலும் - அரசியல் சமயம், சமூகம், பொருளாதாரம், கலைகள் முதலியனவற்றிலே தருமம் (தர்மம்) முக்கியமான இடத்தினை வகித்துவந்துள்ளது. வடமொழியிலே தர்மம் எனும் பதம் 'த்ரு எனும் வினையடியிலிருந்து தோன்றியதாகும். இவ்வினையடி வைத்திருத்தல், போஷித்தல், காப்பாற்றுதல், தாங்கிக்
இந்துக்கலைக்களஞ்சியம்

கொண்டிருத்தல் (தரதி இதி தர்மம்) முதலிய பொருள்படும். தர்மம் எனும்சொல் கட்டளை, வாழ்க்கைநெறி, விதி, கடமை, ஆணை, கோட்பாடு, சட்டம், வழக்காறு, சமயம், ஒழுங்கு, ஒழுக்கம், சரியானவழி, நீதி, கிரியை, நூல், நேர்மை, குறிப்பிட்ட நூல், குறிப்பிட்ட நடத்தை எனப் பல பொருள்படும். எனினும் இப்பதத்தின் முழுமையானதை யன்றிக் குறிப்பிட்டவற்றையே இவை கருதுவன. மேற்குறிப்பிட்டவாறு மனித செயற்பாடுகள் முதலியனவற்றை மட்டுமன்றி இவற்றிற்கு அப்பாலும் உலகனைத்தையும் பிரபஞ்சமனைத்தையும் தாங்கி இயக்கிவரும் முழுமுதற் காரணியாகவும் தருமம் கருதப்பட்டு வந்துள்ளது. இதையொட்டித் தருமம் தெய்வம் என்ற கருத்திலே அதாவது மனிதருடைய செயற்பாடுகளை அறிந்துள்ள தெய்வமாக மகாபாரதத்திலே காணப்படுகின்றது. மநுஸ்மிருதியும் தர்மத்தைத் தெய்வமெனக் கூறுகின்றது. வேதங்களிலே குறிப்பாக இருக்குவேதத்திலே பிரபஞ்ச ஒழுங்கு, சமூக ஒழுங்கு முதலியனவற்றை ரிதம் எனும் பதம் குறித்தது. இக் கருத்தும் பின்னர் தருமம் என்ற பதத்திலே வந்துள்ளது. தென்னாசியாவிலே தோன்றிய இந்து சமயம் மட்டுமன்றிப் பெளத்த, சமண சமயங்களுக்கும் பொதுவான பதமாக இது நிலவி வந்துள்ளது. இது பிராகிருத மொழிகளிலே தம்ம’ எனவரும்.
தமிழிலுள்ள அறம் எனும் பதம் ஒழுக்கம், புண்ணியம், சமயம், ஞானம், நூல், நோன்பு, தெய்வம் (தருமதேவதை), சபித்தல், இறுத்தல், இல்லாமற் செய்தல், நீக்குதல், வருத்துதல் முதலிய பல பொருள்படும். அறுதல் அறுத்தல் எனும் வினையடியாக இது உருவாகியிருக்கலாம். நன்மையில்லாதவற்றை நீக்குதல் அல்லது இல்லாமற் செய்தல், தாங்கிக் கொண்டிருத்தல், தெய்வம், சமயம், நூல் போன்ற கருத்துக்கள், நற்செயல், ஒழுக்கம் போன்ற கருத்துக்கள் தருமத்திற்கும்,அறத்திற்கும் பொதுவானவை. தர்மம் எனும் வடமொழிப் பதமும், அறமெனும் தமிழ்ப்பதமும் பெருமளவு ஒரே கருத்துக்களைக் கொண்டவையாயினும் தருமம் மேலும் விரிவான கருத்துக்களைப் புலப்படுத்தும்.
தர்ம தர்மன் எனும் பதம் இருக்குவேதத்திலே கணிசமான தடவைகள் வந்துள்ளது. எனினும் அதன் சரியான கருத்து தெளிவில்லை எனக் கூறப்படுகிறது. ஏற்கனவே குறிப்பிட்ட வினையடி வழியாகவே இஃது உருவாக்கப்பட்டதெனலாம். பிரபஞ்சத்தினைத் தாங்கிக் கொண்டிருக்கும் ஒழுங்கும் ஒரு பொருள் அது இருக்கவேண்டியவாறு அமைந்திருப்பதற்கான மூலமும் அதுவேயாம். நல்லொழுக்கமுள்ளவர்களுக்கு நன்மை செய்வதும், அவர்களைத் தாங்கி நிற்பதும் தருமமே. உலகங்கள் அனைத்திலும் வாழ்க்கையை நெறிப்படுத்துவதும் அதுவே என மகாபாரதம் கூறியுள்ளமை கவனித்தற்பாலது. வேதங்களில் இச் சொல் சமயச்சடங்குகளையும், கிரியைகளையும் குறிப்பிடுதற்கும் பயன்படுத்தப்பட்டுள்ளது. முதலாவது ஆணைகள் (ப்ரதமாதர்ம) எனும் பொருளில் இது இருக்கு வேதத்திலே (3.171; 10.56.3) வந்துள்ளது. இது போலவே பழைய ஆணைகள் (சனதா தர்மாணி) எனும் பொருள்படவும் இருக்கு வேதத்தில் (3.31) இது வந்துள்ளது. வேதங்கள் கூறியுள்ளவாறும், பெரிய ஞானிகள் விதித்தவாறும் சில சமயக் கடமைகளையும், கிரியைகளையும்
133

Page 166
செய்யும் ஒருவருக்குக் கிடைக்கக்கூடிய புண்ணியத்தை குறிக்கும் வகையில் இச்சொல் அதர்வ வேதத்திலே (9.9.17 வந்துள்ளது. சமயக் கடமைகள் அனைத்தையும் குறிக்கு வகையில் ஐதரேய பிராமணத்திலே இப்பதம் வந்துள்ளது பிருஹதாரண்யக உபநிஷத் (1.14.14)தர்மம், சத்யம் ஆகிய பதங்களையும் ஒரே கருத்திலே கூறியுள்ளது. சாந்தோக்ய உபநிஷத் (2.23) இல்வாழ்வான், வானப் பிரஸ்தன், பிரமச்சா ஆகியோருக்குரிய கடமைகளை தர்மத்தின் மூன்று பிரிவுகளாக குறிப்பிடுகின்றது. இங்கு தர்ம எனும் பதம் பிரமச்சரியம் கிருஹஸ்தம், வானப் பிரஸ்தம் எனும் மூன்று ஆச்சிரமங்களையு குறிக்கின்றது.
இவ்வாறு தர்ம எனும் பதம் பலகாலமாகப் பல்வேறு கருத்துக்களில் வந்துள்ளமை புலனாகும். இறுதியாக மிக முக்கியமாக வைதீக சமூகத்தின் ஓர் உறுப்பினனாக மனிதனின் ஒழுக்கத்தரம், நான்கு வர்ணங்களின் ஒர் உறுப்பினராகவும் நான்கு ஆச்சிரமங்களிற் குறிப்பிட்ட வாழ்க்கை நிலையிலும் மனிதனுக்குரிய சிறப்புரிமைகள், கடமைகள், கடப்பாடுகள் ஆகியனவற்றை உள்ளடக்கியதாகவும் இப்பதம் வந்துள்ளது இத்தகைய கருத்திலேதான் தைத்தீரிய உபநிஷத்தி6ே வைதீகக்கல்வி கற்று முடித்த மாணவனுக்குக் குரு செய்யு உபதேசத்திலே “உண்மை பேசு (சத்யம் வத)” தர்மம் செய (தர்மம்சா), எனவரும் பகுதியில் இப்பதம் காணப்படுகின்றது இதே கருத்திலே பகவத்கீதையிலும் (3.35, 2.31) “ஸ்தர்மலே நிதனம் சிரேயஹ” அதாவது “தனக்கு விதிக்கப்பட்ட கடமையை செய்யும்போது இறத்தலே நன்று” என வந்துள்ளது மனுஸ்மிருதியிலும் தர்ம எனும் பதம் வர்ணங்களின் கடமையெனும் கருத்திலேதான் வந்துள்ளது. இதேபோல வர்ணங்கள், ஆச்சிரமங்களின் கடமைகளைத் தர்ம’ எனும் பதட தர்ம சூத்திரங்களிலும் குறித்துள்ளது. தர்ம சூத்திரங்கள், தர் சாஸ்திரங்கள் எனும் இலக்கிய வகைகளிலும் இவ்வாறுதான் மேற்குறிப்பிட்டவாறு இப்பதம் பயன்படுத்தப்பட்டுள்ளமை உற்று நோக்கற்பாலது. மானவதர்ம சாஸ்திரத்திற்கு உரையெ ழுதியவர்களுள் ஒருவரான மேதாதிதி, ஐந்துவகையான தர்மங்கள் பற்றிக் குறிப்பிடுகிறார். அவையாவன, வர்ணதர்மம், ஆச்சிரட தர்மம், வர்ணாஸ்ரம தர்மம், நைமித்திய தர்மம் (பிராயச் சித்தட போன்றவை) குண தர்ம முடிசூடிய மன்னனின் கடமை) என்பன யஜ்ஞவல்கிய ஸ்மிருதிக்கு விஜ்ஞானேஸ்வரர் எழுதிய மிதாகூ எனும் உரையிலே மேற்குறிப்பிட்ட ஐந்துடன் ஆறாவதாக மக்கள் அனவருக்கும் (சண்டாளர் உட்பட) பொதுவான சாதாரண தர்ம சேர்க்கப்பட்டுள்ளது. சாதாரண தர்மத்திற்கு எடுத்துக்காட்டாக அஹிம்சையைக் குறிப்பிடலாம். இதற்கு ஆதாரமாக எந்த உயிருக்கும் தீங்கு செய்யக்கூடாது (ந ஹிம்ஸ்யா ஸர்வாபூதானி) என வேதத்திலிருந்து மேற்கோள் கூறப்பட்டுள்ளது.
தர்மம் எனும் பதத்தின் உண்மையான கருத்தினை நன்கு புரிந்துகொள்ளும் வகையிலே மேலும் சில வை விலக்கணங்களைக் குறிப்பிடலாம். ஜைமினியின் பூர்வமீமாம் சூத்திரத்திலே (1.1.2) வேதங்களிலே விதிக்கப்பட்டுள்ள கடமைகளைத் தர்மம் குறிக்கும். வேதங்கள் போற்றி விதித்துள்ள
134

h
சமய, ஒழுக்கக் கடமைகளைச் செய்தலே தர்மமாகும். இதனாலேயே இறுதியிலே வாழ்க்கையிலே சமாதானமும், மகிழ்ச்சியும் உண்டாகும். வைசேஷிக சூத்திரத்தின்படி வாழ்க்கையிலே மகிழ்ச்சியும், அருட்பேறும் கிடைத்தற்கு வழிகாட்டுவது தர்மமே. வாழ்க்கையிலே மனிதனுக்குக் கிடைக்கக்கூடிய நற்பேறுகளை அடையாளம் காட்டும் வகையில் ஒருபக்க வரை விலக்கணங்களும் சில நூல்களில் உள்ளன. ஆசாரமே மேலான தர்மம் என மநுஸ்மிருதி (1.108) கூறும். அஹிம்சையே மேலான தர்மமென மஹாபாரதத்திலுள்ள அநுசாசன பர்வப் பகுதியிலே கூறப்பட்டுள்ளது.
மேற்குறிப்பிட்ட வரையறைகளின் அடிப்படையிலே நோக்கும்போது தர்மம் என்பது பரந்த கருத்தில் நான்கு வர்ணத்தைச் சேர்ந்த மக்கள் (பிராமணர், சத்திரியர், வைஷ்யர், சூத்திரர்) நான்கு ஆச்சிரமங்கள் (பிரமச்சரியம், கிருஹஸ்தம், வானப்பிரஸ்தம், சந்நியாசம்) நான்கு புருஷார்த்தங்கள் (அறம், பொருள், இன்பம்,வீடு) தொடர்பாகப் பின்பற்ற வேண்டிய கடமைகள் அனைத்தையும் குறிப்பதாக உள்ளது. ஆன்மீக ரீதியில் முழுமையும் இன்பமும் அடையும் வகையில் மனித வர்க்கத்தினருக்கு பயிற்சி அளிப்பதுமட்டுமன்றி உலகியல் வாழ்வில் அவர்கள் ஒழுக்கம் பொருளியல், அறிவியல் ரீதியில் குறிப்பிடத்தக்க நல்ல நிலையையடைவதற்கு வழிகாட்டலும் தர்மத்தின் மேலான நோக்கமாகும். பரம்பொருள் உறைந்திருக்கும் மனிதனின் மானிடப்பண்பை உணர்த்துவதும் தர்மத்தின் அடிப்படைக் கோட்பாடாகும். இதனை “ஒவ்வோர் உயிரிலும் பரம்பொருள் இலங்குகின்றார் எனும் ஞானமே என்றுமுள்ள தர்மத்தின் அடிப்படைக் கோட்பாடாகும்’ என மஹாபாரதம் கூறுகின்றது.
இறைவன் ஒவ்வொருவரின் இதயத்திலும் இருக்கின்றமையால் ஒருவன் தனக்கு மற்றவன் எதைச் செய்யக்கூடாதென்பதை விரும்புகின்றானோ, அவ்வாறே தானும் மற்றவர்களுடன் நடந்துகொள்ள வேண்டும். இதனை மஹாபாரதம் சாந்திபர்வன்(262.9) "ஜாஜலியே! எவன் ஒருவன் எப்பொழுதும் மற்றவர்களின் நண்பனாக, மற்றவர்களுடைய நன்மையிலேயே மனம், வாக்கு, காயம் ஆகியவற்றால் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறானோ அவனே தர்மத்தின் உண்மையான கருத்தினை அறிந்தவனாகிறான் என விரிவாகக் கூறுகின்றது.
இராமாயணத்திலே தர்மம் நன்கு மதிக்கப்படுகின்றது. இந்நூலின் பிரதான பாத்திரமான இராமன் பரம்பொருளின் அவதாரமாக முனிவராலும் ஞானிகளாலும் கெளரவிக்கப்பட்டவன். தர்மத்தின் பாதுகாவலனாக விளங்கியவன். பல்வேறு சூழ்நிலைகளில் ஆண்கள், பெண்களின் கடமைகளைக் கதாபாத்திரங்கள் மூலம் ராமாயணம் விளக்குகின்றது.
புராணங்கள் கூறும் ஒழுக்கவியலிலும் தர்மமே அடிப்படையாகும். தனிமனிதன், சமூகம், பரந்த உலகம் ஆகியவற்றின் நன்மைக்கும், முன்னேற்றத்திற்குமானவற்றை இஃது உள்ளடக்கியுள்ளது. இதிலே நற்குணங்கள் வாய்ந்து விளங்குவதும், அவரவர் தத்தம் கடமைகளைச் செவ்வனே
இந்துக்கலைக்களஞ்சியம்

Page 167
செய்வதும் உள்ளடங்கும். புராணங்களிலே சாதாரணதர்மம், விசேசதர்மம் என இருவகைத் தர்மங்கள் உள்ளன. விசேச தர்மம் ஸ்வதர்மம் (அவரவர்க்குரிய தர்மம்) எனவும் அழைக்கப்படும். ஒருவனின் வாழ்க்கை முன்னேற்றத்திற்கும் நன்மைக்குமான மற்றவனுடைய வாழ்க்கைக்கும் உதவவேண்டும். தனிப்பட்டவரின் மகிழ்ச்சி யதார்த்தமாகவும், தொடர்ந்தும் நிலவவேண்டுமாயின் அவரைச் சூழ்ந்திருப்பவர்களின் வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கவேண்டும். தனிமனிதன் சமூகத்தில் ஒர் உறுப்பினனாக இருப்பதால் அவன் தனக்கும், சூழ உள்ளவர்களுக்குமாக உழைக்க வேண்டியுள்ளான்.
மனித சமூகத்தினதும், பரந்த கருத்திலே உலகனைத்தினும் பாதுகாப்புக்கும், முன்னேற்றத்திற்கும் தர்மமே உறுதுணையாக உள்ளது. இந்து மரபிலே வலியுறுத்தப்படும் வாழ்க்கை இலட்சியங்கள் புருஷார்த்தங்களான தர்மம் (அறம்), அர்த்தம் (செல்வம்), காமம் (இன்பம்), மோஷம் (வீடு)ஆகியனவற்றுள் தர்மமே பிரதானமானதாகவும் முதனிலைப் படுத்தப்பட்டு அடிப்படையாகவும் கூறப்படுகின்றது. அறத்தின்வழி நின்று செல்வத்தைப் பெற்று உலகியல் இன்பத்தைத் துய்த்து முடிவிலே வீடுபேறு அடைதலே வாழ்க்கையின் இலட்சியமாகும்.
தர்மமே ஒருவனுக்கு மரணத்தின் பின்னரும் தொடர்ந்து வரும் மிகநெருங்கிய நண்பன். முழுமையும் பேரின்பமு மளிக்கவல்ல நிரந்தரமான மூலமாகும் என பிரம, கருட புராணங்கள் கூறும்.
யாவர்க்கும் எக் காலத்திற்கும் பொருத்தமானதாகவும், நிரந்தரமானதாகவுமுள்ள ஒழுக்க விதிகளை வலியுறுத்தலே சாதாரண தர்மத்தின் மிக முக்கியமான அம்சமாகும். சில புராணங்களில் இவை இன்றியமையாத விதிகளாகக் கூறப்படுகின்றன. இவை பலவாக இருப்பனவாதலால் ஒரு சிலவற்றைக் குறிப்பிடலாம். எடுத்துக் காட்டுகளாக அஹிம்சை, (உயிர்களுக்குத் தீங்கு செய்யாமை), கூடிமா (பொறுத்தல்), இந்திரியநிக்கிரஹ (புலனடக்கம்), தயா (இரக்கம்), தானம் (கொடை), செளச (தூய்மை), சத்யம் (உண்மை), தபஸ் (தவம்), ஞானம் (அறிவு) முதலியனபற்றி, பத்ம, அக்கினி, கூர்ம, கருட புராணங்கள் எடுத்துக்கூறுகின்றன. பூரீமத் பாகவதம் ஏழாவது பகுதியில் முப்பது ஒழுக்கவிதிகள் பற்றியும் மநுஸ்மிருதி பத்து விதிகள் பற்றியும் கூறியுள்ளன. பத்ம புராணம் அஹிம்சையே மிக மேலான தர்மம் எனக்கூறும். ஏனையோருக்குத் தீங்கு செய்வதை விலக்கியிருத்தலின் விளைவான கூடிமா, தயா, செள சம், சத்யம் என்பன அஹிம்சையை அடிப்படையாகக் கொண்டவை. உலகிலுள்ள உயிரினங்கள் மேலான, கீழான உயிரினங்கள் அனைத்தும் ஒன்றோடொன்று நெருங்கிய தொடர்புள்ளவை. இந்த அடிப்படைக்கருத்திலேதான் அஹிம்சை உள்ளது. தர்மத்தின் பிறிதோர் அம்சம் சத்தியமாகும். ஹரிச்சந்திரன் (அரிச்சந்திரன்), ருக்மாங்கதன் போன்றோரின் கதைகளிலே உண்மையின் சிறப்பு எடுத்துக் காட்டப்பட்டுள்ளது. சத்தியமே மிக உயர்ந்த தர்மம், உலகம் அனைத்தும் இதனை அடிப்படையாகக் கொண்டுள்ளதென பிரமபுராணம் கூறும். இதுபோலவே செளசம் (தூய்மை), தானம் போன்றவையும்
இந்துக்கலைக்களஞ்சியம்
 

குறிப்பிடற்பாலன. தர்மத்தின் மிக முக்கியமான அம்சங்கள் இவையே. மனிதகுலம் முழுவதினதும் நன்மைக்காக ஒவ்வொருவரும் இதனைக் கடைப்பிடிக்க வேண்டும் எனக் கூறப்படுகின்றது.
தருமத்திலே வாழ்க்கை முழுமையாகவே நோக்கப் படுகின்றது. நற்குணம், நல்லொழுக்கம், சரியான செயற்பாடு, இயற்கையின் நியதி, என்றும் நிலவும் உண்மை, பழக்க வழக்கங்கள், மரபுகளின் தொகுப்பு, நல்வழி என்றுமுள்ள மாறாத ஒழுங்கு, சட்டம், குறிப்பிட்டனவற்றின் வேறுபாடுகள் எனப்பல அடங்குவன. தற்காலத்திலே அரசுகளிலே வலியுறுத்தப்படும் சட்டமுதன்மையினைத் (Rule of Law) தருமத்துடன் சிலர் ஒப்பிடுவர். ஆனால் தருமம் இதற்கும் மேலான பரந்த கருத்துடையதாகும்.
இந்து சமய மரபிலே காலச்சுழற்சி, கிருத, திரேத, துவாபர, கலி என நான்கு யுகங்களாக வகுத்துக்கூறப்பட்டுள்ளது. இதன்படி கிருதயுகத்திலே தருமம் முழுமையாக நான்கு பாதங்களுடன் நிலவிற்று. இது மிகச் சிறந்த பொற்காலமாகும். எல்லோரும் எல்லாம் பெற்றுக் குறைவின்றி நிறைவாக இன்பமாக வாழ்ந்தனர். ஆனால் அடுத்து வந்துள்ள மூன்று யுகங்களிலும் ஒவ்வொரு பாதம் குறைந்தது. எனவே நன்மை குன்றி தீமை படிப்படியாக அதிகரித்தது. இதன்படி தற்போது நிலவுகின்ற நாலாவது யுகமான கலியுகத்திலே தருமத்திற்கு ஒரு பாதமே உள்ளது. எனவே தீமை மிக அதிகரித்தும், நன்மை மிகக் குறைந்தும் நிலவுவதாகக் கூறப்படுகின்றது.
இந்து சமயத்திலே தருமத்தை எருதாக உருவகித்துக் கூறப்படும் மரபு நிலவுகின்றது. சைவ சமய முழுமுதற் கடவுளாகிய சிவபிரானின் வாகனமாகத் தரும தேவதையாகிய நந்தி - எருது விளங்குகின்றார்.
தர்மம் சட்டம் என்ற கருத்திலேயும் வருகின்றது. மனுஸ்மிருதியின்படி தருமத்தின் மூலங்களாகச் சுருதி (வேதம்), ஸ்மிருதி (தர்ம சாஸ்திரம்), இவற்றை நன்கு அறிந்தவர்களுடைய ஆசாரங்கள், (ஒருவரின்) மனச்சாட்சி என்பன கூறப்பட்டுள்ளன.
பொதுவாகத் தொகுத்து நோக்கும்போது இந்துக்களின் வாழ்வின் எல்லா நிலைகளிலும், அம்சங்களிலும் தர்மம் தலையாய இடத்தினை வகித்து வந்துள்ளது. தருமம் மேற்குறிப்பிட்ட கருத்துக்களிலே பெருமளவு தமிழிலும் வந்துள்ளது. ஏற்கனவே குறிப்பிட்டவாறு தர்மம் எனும் சொல் கருதும் பலவற்றைத் தமிழிலுள்ள அறம் எனும் பதம் புலப்படுத்துகின்றது. எனவே இது பற்றியும் சிறிது குறிப்பிடலாம். காலத்தால் முந்திய தமிழ் நூல்களான சங்க நூல்களிலே "அறம் துஞ்சும் செங்கோல்'(புறம் 2) "அறம்புரி செங்கோல் மன்னனின்'(ஐ.நா. 190), "அறனொடு புரிந்த திறநெறி செங்கோல்” (ப. பா.230), "அரசியல் பிழையாது அறநெறி காட்டி” என அரசியலில் அறத்தின் முக்கியத்துவம் வலியுறுத்தப்படுகின்றது. மக்களுக்கு இன்றியமையாத மூன்று இலட்சியங்களான அறம், பொருள்,
f35

Page 168
இன்பம் ஆகியவற்றுள் முதலாவதாகிய அறம் ஏனைய இரண்டிற்கும் மேலான முதனிலையில் இருப்பதுபோல சோழமன்னன் ஏனைய சேர பாண்டிய வேந்தருக்கும்
மேலானவனாக விளங்குவதைப் புறநானூறு (31) “சிறப்புடைமரபிற் பொருளும் இன்பமும் அறத்து வழிப்படுஉம் தோற்றம்போல” எனக்குறிப்பிடுகின்றது. திருக்குறள் நாலாவது அதிகாரம் அறன் வலியுறுத்தல் பற்றியதாகும். இதிலே வந்துள்ள கருத்துக்கள் ஏற்கனவே வடமொழி நூல்களிற் குறிப்பிடப்பட்டவற்றைப் பெருமளவு ஒத்துள்ளன. சிறப்பும், செல்வமும் தரும் அறத்தினைவிட வேறொன்றும் உயிர்க்கு நன்மை பயக்காது என்ற கருத்துப்பட
சிறப்பு ஈனும் செல்வமும் ஈனும் அறத்தினூஉங்கு ஆக்கம் எவனோ உயிர்க்கு'
என இவ் அதிகாரத்தின் முதலாவது செய்யுள் உள்ளது. அறம் எனில் பொறாமை, பிறர்பொருள் மீது ஆசை, கோபம், கடும்சொல் பேசுதல் ஆகிய நான்கும் தவிர்த்து வாழ்வதாகும் என ஐந்தாவது செய்யுள் கூறும். அறத்தால் வருவதே உண்மையான இன்பம் என இதிலுள்ள எட்டாவது செய்யுளும், ஒருவன் வாழ்விலே செய்ய வேண்டியது அறமே (நற்செயல்கள்). தவிர்க்க வேண்டியவை தீய செயல்கள் எனப் பத்தாவது செய்யுளும் கூறுவன. இங்கு அறம் கூடுதலாக நற்செயல் எனும் கருத்திலே தான் வந்துள்ளது.
சிலப்பதிகாரத்திலே பல இடங்களிலே அறம் வலியுறுத்தப் படுகின்றது. சிலப்பதிகார நோக்கங்களிலொன்று "அரசியல் பிழைத்தார்க்கும் அறம் கூற்றாவதை” நன்கு எடுத்துக் கூறுவதாகும். இங்கு இது பரந்த கருத்தில் வந்துள்ளது. பிற்காலத் தமிழ் நூல்களிலே தொடர்ந்து அறம் வலியுறுத்தப்படுகின்றது.
ஏற்கனவே குறிப்பிட்டவாறு பெளத்தம், சமணம் ஆகிய சமயங்களிலும் தர்மம் நன்கு வலியுறுத்தப்படுகின்றது. எனவே தென்னாசிய மரபிலே தர்மம் சிறப்பாக நன்கு வலியுறுத்தப் பட்டுள்ளமை கவனித்தற்பாலது. எனினும் இது பற்றிய விளக்கங்களிலே வேறுபாடுகளும் உள்ளன. (வி சி)
தருமன்
தருமன் எனும் பதம் நீதிக்கும் தருமத்திற்குமான கடவுளைக் குறிக்கும். இவரை அறக்கடவுள் எனத் தமிழிலே கூறலாம். இந்து மரபில் இப்பதம் யமனை- யமதர்மராஜனைக் குறிக்கும். ஏனெனில் மரணத்தின் பின் அவரே அனைத்து உயிர்களின் புண்ணியங்களையும், பாவங்களையும் சீர்தூக்கி, நடுவுநிலையில் நின்று அவைகளின் அடுத்த கதியினைத் தீர்மானிப்பவராவர். மேலும் இப்பதம் புத்தபெருமானையும், சமண சமயக் கடவுளையும் குறிக்கும். ஏனெனில் இவர்கள் தருமத்தை- அறத்தினை எடுத்துக் கூறியவர்கள். திருக்குறளுக்கு உரையெழுதியவர்களில் தருமர் என்பவரும் ஒருவராவர். ஆனால் மகாபாரதத்திலே வரும்
136
 

பிரதான கதாபாத்திரங்களில் ஒருவரையே (பஞ்ச பாண்டவர்களிலே மூத்தவன் இப்பதம் சிறப்பாக)க், குறிக்கும். இவர் தருமபுத்திரர் எனவும் அழைக்கப்படுவர்.
சந்திர குலத்தைச் சேர்ந்த சந்தனுவின் மரபிலே தோன்றிய மன்னர்களிலே திருதராஷ்டிரனும், பாண்டுவும் சகோதரர்கள்: திருதராஷ்டிரன் காந்தார மன்னனின் மகள் காந்தாரியைத் திருமணம் செய்து துரியோதனன் முதலிய 100 ஆண்பிள்ளைகளையும் ஒரு பெண் மகவையும் பெற்றான். யாதவ அரசனான கரனின் மகளான பிரீதா அவனுடைய இனத்தவனான குந்திபோஜனாலே ஸ்வீகாரம் செய்யப்பட்டு வளர்க்கப்பட்டமையால் குந்தி என அழைக்கப்பட்டாள். பாண்டு இவளையும், மத்ர நாட்டு இளவரசியான மாத்ரியையும் திருமணம் செய்தான். யமன், வாயு, இந்திரன் ஆகிய தெய்வங்களின் அருளினாலே குந்திக்கு முறையே தருமன், பீமன், அர்ஜுனன் ஆகிய பிள்ளைகளும், அஸ்வின் தெய்வங்களின் அருளினாலே மாத்ரிக்கு நகுலன்,சகாதேவன் ஆகிய பிள்ளைகளும் பிறந்தனர். இவர்கள் ஐவரும் பாண்டுவின் ஐந்து புத்திரர்களாகப் பஞ்சபாண்டவர் என அழைக்கப்பட்டனர். இவர்களைப் பற்றியும், இவர்களின் பெரிய தந்தையாராகிய திருதராஷ்டிரனின் பிள்ளைகளைப்பற்றியும் இவர்களுக்கிடையே பின்னர் நடைபெற்ற பெரிய போரைப் பற்றியுமே மகாபாரதம் சிறப்பாக எடுத்துக் கூறுகின்றது.
பாண்டவர்களிலே மூத்தவரான தருமர் தருமத்தின் வடிவமாக தருமத்தை நடைமுறையிலே வாழ்ந்து காண்டியவர். பெயருக்கேற்றவாறு வாழ்ந்தவர். இவர் யமன் அல்லது அறக்கடவுள் தருமதேவதையின் மகனாகத் தரும புத்திரர் என அழைக்கப்பட்டார். வடமொழியிலே வியாசர் இயற்றிய மகாபாரதத்தில் இவர் யுதிஷ்டிர (போரில் உறுதியானவன்) என அழைக்கப்படுகிறார். இவர் பிறந்தபோது இந்தக் குழந்தை மிகவும் தருமத்தின் வழி நிற்பான்; துணிகரம் வாய்ந்து விளங்குவான், தருமத்தின் (அறத்தின்) வழி நிற்பவர்களிலே தலைசிறந்தவனாகத் திகழ்வான். இவன் யுதிஷ்டிரன் என அழைக்கப்படுவான்’ எனத் தெய்வீக அசரீரி கூறியதாகவும், ஆகவே அவ்வாறு அழைக்கப்பட்டான் எனவும் மகாபாரதம் கூறும்.
ஐந்துவயதில் இவரும் தம்பியரும் தாயும் வசந்த காலத்தைக் கழிப்பதற்கு சதசிருங்க எனும் காட்டிற்குச் சென்றனர். காட்டிலே வாழ்ந்த முனிவர்கள் இவர்களுக்கு உதவி செய்தனர். சில சமயச் சடங்குகளைச் செய்தனர். வாசுதேவனுடைய புரோஹிதரான காஸ்யபர் தருமருக்கு உபநயனம் செய்தார். ராஜரிஷியான சுகர் இவருக்கு ஈட்டிப் போர் பயிற்சி அளித்தார். இக் கால கட்டத்திலே பாண்டு இறக்க அவனுடைய இரண்டாவது மனைவியான மாத்ரி கணவனுடன் உடன்கட்டை ஏறினாள். மேலும் தான் உடன்கட்டை ஏறுமுன் தருமரை நோக்கி 'மகனே!உன்னுடைய சகோதரர்களுக்கு நீயே தந்தையாக இருக்கிறாய்” என மாத்ரி கூறினாள்.
இந்துக்கலைக்களஞ்சியம்

Page 169
பாண்டு, மாத்ரி ஆகியோரின் மரணத்தின் பின் முனிவர்கள் பாண்டவர்களுக்கு ஆறுதல் கூறி அவர்களின் பெரிய தந்தையார், திருதராஷ்டிரன், பாட்டனாராகிய பீஷ்மர் முதலியோர் தங்கியிருந்த தலைநகரான ஹஸ்தினாபுரத்திற்கு அவர்களை அழைத்துச் சென்றனர். அவர்களை பீஷ்மரிடம் ஒப்படைத்தனர். நடந்தவற்றை அவருக்கு எடுத்துக் கூறினர். அங்கே இளம்பிள்ளைகளான துரியோதனனும் சகோதரர்களும் யுதிஷ்டிரனும் சகோதரர்களும் தங்கிப் பல வித்தைகளைக் கற்றனர். அவர்களுக்கிடையிலே கடும் போட்டி- குறிப்பாகத் துரியோதனனுக்கும் பீமனுக்குமிடையிலே - நிலவிற்று. இரு சாராரும் புகழ் பெற்ற துரோணாச்சாரியாரிடம் போர்ப் பயிற்சி பெற்றனர். தருமர் தேர்ப்படைப் போரிலே பெரிய தேர்ச்சி பெற்றார். குருதகூழிணையாகப் பாஞ்சால நாட்டரசனான துருபதனனை உயிரோடு பிடித்து வருமாறு துரோணர் கூறினார். ஆனால் தமயனை அவ்வாறு செய்யவிடாது தானே அதனை நிறைவேற்றுவதாக அர்ஜுனன் கூறிப் பின்னர் அதனைச் செய்து முடித்தான்.
தருமபுத்திரர் படைக்கலப் பயிற்சியினை நன்கு பெற்றபின், திருதராஷ்டிரன் அவரை முடிக்குரிய இளவரசனாக முடி சூட்டினான். நற்குணம், தார்மீக சிந்தனை, நிருவாகத்திறன் முதலியனவற்றினால் தருமர் தந்தையையும் விஞ்சி விட்டார். குடிகள் இவரை மிகவும் விரும்பினர். இதை உற்று நோக்கிய துரியோதனன் அவர் மீது மிகவும் பொறாமை கொண்டான். அவரையும் சகோதரர்களையும் அழிக்க விரும்பினான். எனவே, தந்தையுடைய அனுமதியுடன் வாரணாவத எனுமிடத்தில் ஒர் அரக்கு மாளிகையை அமைப்பித்து அவர்களை அங்கு வசிக்குமாறு கூறினான். துரியோதனனின் இச் செயலைக் குடிகள் அனைவரும் விரும்பிலர். அவனை ஏசினர். எனினும் பாண்டவர்கள் அங்கு செல்ல குடிகள்,அந்தணர் ஆகிய பலர் அங்கு சென்றனர். அரக்கு மாளிகைக்கு ஒரு நாள் தீ வைத்து அவர்களைக் கொல்வதற்குத் துரியோதனன் திட்டமிட்டிருந்தான். பாண்டவர்களும் அதை முன்கூட்டியே அறிந்து ஒரு சுரங்கப்பாதை மூலம், அரக்கு மாளிகைக்குத் தீ வைக்கப்பட்ட நாளன்று தப்பிச் சென்றனர். அரக்கு மாளிகையில் பாண்டவர் இறந்துவிட்டனர் என்ற செய்தி பரவினாலும் அவர்கள் தப்பிவிட்டதாக விதுரர் கூறினார். தப்பிச் சென்ற பாண்டவர்கள் காடுகள் ஊடாக கங்கைக் கரையை அடைந்தனர். அங்கே தருமர், பீமன் இடும்பியைத் திருமணம் செய்ய அனுமதி வழங்கினார்.
பின்னர் நடைபெற்ற திரெளபதியின் சுயம்வரத்திலே பங்குபற்றிய பாண்டவர்கள் அவளைத் திருமணம் செய்தனர். தொடர்ந்து தமது இராச்சியத்திற்குத் திரும்பினர். அங்கே அரைவாசி இராச்சியத்திற்கு அரசனாக தருமர் முடிசூடினார். கந்தவபிரஸ்த எனுமிடத்திலிருந்து அவர் ஆட்சி புரியத் தொடங்கினார். நாரத முனிவருடைய ஆலோசனைப்படி பாண்டவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வோராண்டு திரெளபதியுடன் வாழ்ந்தனர். மயாசுரன் இந்திரபிரஸ்த எனுமிடத்திலே ஓர் அழகிய அரச மாளிகையை அமைத்துத் தருமரிடம் வழங்கினான்.
இந்துக்கலைக்களஞ்சியம் ཁག་ཏུ་

தருமர் தனது ஆதிக்கத்தைப் புலப்படுத்த ராஜசூயயாகம் செய்யவிரும்பினார். அதற்கு முன் இடம்பெற வேண்டிய திக்கு விஜயத்தினை வடக்கேயுள்ள அரசுகளுக்கு எதிராக மேற்கொள்ளுமாறு அர்ஜுனனையும், தெற்கேயுள்ளவர்களுக்கு எதிராக ஏனைய சகோதரர்களையும் பணித்தார். இந் நடவடிக்கையை வெற்றிகரமாக முடித்துத் தனது மேலாதிக்கத்தை ஏற்படுத்தியபின் ராஜசூயத்தைப் பிரமாதமாகச் செய்தார்.
இதைப் பொறுக்கமுடியாத பொறாமை கொண்ட துரியோதனன் ஒரு சதி முயற்சியில் ஈடுபட்டான். ஹஸ்தினாபுரத்திற்கு வருமாறு விதுரன் மூலம் பாண்டவர்களுக்கு அறிவித்தான். அவர்கள் அங்கு வந்தபின் சகுனியுடன் தர்மபுத்திரர் சூதாட்டத்தில் ஈடுபடச் செய்தான். இச் சூதாட்டத்தில் தர்மபுத்திரன் அனைத்தையும் இழந்தார். திருதராஷ்டிரன் இழந்தவற்றை மீண்டும் தருமருக்கு வழங்கினான். ஆனால் மீண்டும் நடைபெற்ற சூதாட்டத்தில் அனைத்தையும் இரண்டாம் தடவையாக இழந்து பாண்டவர்கள் 12 ஆண்டுகள் வனவாசமும் ஓர் ஆண்டு அஞ்ஞாதவாசமும் செய்யவேண்டியவர்களாயினர். இதற்கேற்ப அவர்கள் திரெளபதியுடன் காட்டிற்கு சென்றனர். அங்கு சூரியதேவன் ஓர் அக்ஷயபாத்திரத்தை அவர்களுக்கு வழங்கினான்.
காட்டிலே தருமர் மிகவும் கவலையுடன் இருந்தபோது பிருஹதஸ்வ எனும் முனிவர் அங்கு வந்தார். தருமர் தம்முடைய நிலைமை குறித்து மிகவும் மனவேதனையுடன் இருப்பதைக் கண்டு அவரைத்தேற்றும் முகமாக நளன் தமயந்தி கதையினை எடுத்துக் கூறினார். லோமர்ஷி தருமருக்கு மெய்ஞ்ஞானம் பற்றி உபதேசித்தார். இதன்பின்னர் சகோதரர்களும், மனைவியும் வடக்கேயுள்ள கந்தமாதனம், பத்ரிகாச்சிரமம், துவைதவனம், காம்யகம் முதலிய இடங்களுக்குச் சென்றனர். கடைசியாகக் குறிப்பிட்ட இடத்திலே பூரீ கிருஷ்ணபகவான் அவர்களைத் தரிசித்தார். பாண்டவர்களின் வனவாசம் எப்படி இருக்கின்றதென்பதை அறியுமுகமாகக் கபட நோக்குடன் துரியோதனன் பரிவாரத்துடன் அவ்விடத்தை நோக்கி வந்தான். வரும் வழியில் அவனையும், உடன் வந்தவர்களையும் சித்திரசேனன் எனும் கந்தருவன் கட்டினான். பின்னர் தருமரின் ஆணைப்படி அர்ஜுனன் அவர்களை விடுவித்தான். பின்னர் தருமர் துர்வாச முனிவரை வரவேற்று உபசரித்தார்; ஆசீர்வாதம் பெற்றார்.
தருமர் மேலும் சில கஷ்டங்களை அனுபவித்து மனவேதனையடைந்திருந்தபோது மார்க்கண்டேய முனிவர் அவரைத் தேற்றுவதற்கு ராமருடைய கதையை எடுத்துக் கூறினார். இதன்பின்னர் தருமர் வேள்வி செய்ய முற்பட்டபோது மான் வடிவில் வந்த தரும தேவதை சமித்துக்களைக் கொம்புகளினால் எடுத்துக்கொண்டு வெகுதூரம் சென்றுவிட்டது. அதைத் தொடர்ந்து சென்ற நகுலன் தாக மேலீட்டினால் ஒரு குளத்தின் நீரை ஓர் அசரீரியின் எச்சரிக்கையையும் மீறிக் குடித்து இறந்தான். இவ்வாறே தருமர் தவிர்ந்த ஏனைய பாண்டவர்கள் நீரைக் குடித்து இறந்தனர்.
137

Page 170
கடைசியாகத் தருமர் அங்கு சென்று பார்த்தபோது சகோதரர்களனைவரும் இறந்துகிடப்பதைக் கண்டு மிகவும் கவலைப்பட்டார். அப்போது அந்த அசரீரி நடந்தவற்றைக்கூறித் தனது வினாக்களுக்குத் தக்கவிடையளித்தால் நன்மைகிட்டும் எனக்கூறிற்று. அந்த அசரீரியின் வினாக்களுக்குத் தக்கபதிலளித்தார். அசரீரி மிகவும் மகிழ்ந்து தருமர் கேட்டவாறு அவர்களின் சகோதரர்களை மீண்டும் உயிர்பெறச் செய்தது. அத்துடன் அவர்களை ஆசிர்வதித்தது. தருமதேவதையே அவரைப் பரீட்சிக்கும் முகமாக இவ்வாறு செய்தார். தங்களுடைய வனவாசக்காலம் முடிவடையப் பாண்டவர்கள் ஓராண்டினை அஞ்ஞாதவாசமாக விராடனுடைய இராச்சியத்திலே கழித்தனர். இதன்பின்னர் ஏற்கனவே செய்து கொண்ட நிபந்தனைப்படி தமக்குரிய அரைவாசி இராச்சியத்தினைத் திரும்பவும் கையளிக்குமாறு துரியோதனனுக்கு அறிவித்தனர். பாண்டவர்கள் எவ்வளவோ பல வழிகளைக் கையாண்டபோதிலும் துரியோதனன் அவ்வேண்டுகோளை நிராகரித்தான். ஒரு சிறிய இடம்கூடக் கொடுப்பதற்கு மறுத்தான். இதனால் பாண்டவர்களுக்கும் பெரிய தகப்பனின் பிள்ளைகளாகிய துரியோதனன் முதலிய கெளரவர்களுக்குமிடையில் போர் ஏற்படல் தவிர்க்க முடியாததாயிற்று.
இரு சாராரும் பெரும் போருக்கு ஆயத்தம் செய்தனர். பாண்டவர்களின் பெருமரியாதைக்குரிய பாட்டனார் பீஷ்மர், குருவாகிய துரோணாச்சாரியார் முதலியோர் கெளரவர் பக்கம் நின்றனர். எனினும் பூரீ கிருஷ்ண பகவான் பாண்டவர் பக்கம் நின்றார். போருக்கு முன் தருமர் மேற்குறிப்பிட்ட பெரியோர்களை வணங்கிய பின்னரே போரிலீடுபடத் தொடங்கினார். போர் மிகவும் உக்கிரமாகப் பதினெட்டு நாட்கள் நடைபெற்றது. இப்போரிலே பெருந்தொகையான வீரர்கள் இருபக்கங்களிலும் இறந்தனர். பல பெரியோர்களும் துரியோதனன் முதலியோரும் மாண்டனர். பாண்டவர்கள், கெளரவர்கள் மத்தியிலே சில வேளைகளிலே யுத்ததர்மத்தை மீறியும் போர் நடைபெற்றது.
இப்பெரிய பாரதப்போர் முடிவிலே பாண்டவர்கள் வெற்றிவாகை சூடினர். அநியாயமாகப் பறிக்கப்பட்ட தம்முடைய இராச்சியத்தினைப் பெற்றனர். தொடர்ந்து தருமர் சகோதரர்களின் உதவியுடன் பல அரசுகளை வென்று குதிரை வேள்வி செய்வித்தார். பலருக்கும் பல தானங்களை வழங்கினார். தருமத்தின் வழிநின்று சகோதரர்களுடன் இராச்சியத்தை நன்கு பரிபாலித்துக் குடிகளின் நன்மதிப்பைப் பெற்றார். அர்ஜுனனுக்கு பூரீ கிருஷ்ணனின் சகோதரியாகிய சுபத்திராவிடத்துப் பிறந்த அபிமன்யுவின் மகனும், இளவலுமாகிய பரீகூதித் தவிர்ந்த (பாண்டவர்களின்) ஏனைய வாரிசுகள் போரிலே மாண்டுவிட்டபடியால், தருமர் அவனைத் தம்முடைய வாரிசாக முடிசூடுவித்து அவனுக்கு உதவியாகக் கிருபாச்சாரியாரை நியமித்தார். இதன்பின் சகோதரர்கள் மனைவி ஆகியோருடன் காட்டுக்குச் சென்று வாழ்ந்து விண்ணுலகை அடைந்தார்.
தருமர் தமது பெயருக்கேற்ப தருமத்தினை நன்கு பின்பற்றி முன்மாதிரியாக மிளிர்ந்தவர். மிகப்பெரிய இன்னல்கள்
፲38

ஏற்பட்டபோதும் தருமத்தைக் கைவிட்டிலர். தனக்கு மிகுந்த கொடுமைகளைச் செய்த துரியோதனன் முதலியோரிடத்தும் பல வேளைகளிலே பண்பும், பரிவும் காட்டியவர். சகோதரர்களிடத்தும், மனைவியிடத்தும் மிகுந்த பற்றுள்ளவர். தேவலோகம் செல்லும் போது தனக்கு வழிகாட்டிவந்த நாயைக்கூட தம்முடன் கூட்டிச் சென்றவர். அதேவேளையிலே இவரும் ஒரு சிறந்த போர்வீரர். ஏற்கனவே குறிப்பிட்டவாறு யுதிஷ்டிர எனும் இவரின் பெயரே இதற்குச் சான்றாகும். வீரத்துடன் அன்பும், பண்பும், சாந்தமும் நிறைந்த பெருமன்னராகவே அவர் விளங்கினார். (வி சி)
தருமி
இவர் ஆதிசைவ மரபில் வந்த சிவமுனி என்பாரின் மகனாவார். இவர் நீதி, நேர்மை, வாய்மை, தூய்மை, நல்லொழுக்கம், சிவபக்தி மிக்கவர். திருவாலவாய் என்னும் மதுரையில் கோயில் கொண்டெழுந்தருளியுள்ள சொக்கலிங்கப் பெருமானை நாடோறும் பூசிக்கும் கடப்பாடுடையவர். இவர் மகனுண்டாக வேண்டித் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்னும் விருப்பத்தால் இறைவனை (சோமசுந்தரக் கடவுளை) வேண்டி நின்றார்.
அப்போது மதுரையை ஆண்ட வங்கிய சூடாமணி பாண்டியர், தம் மனையாளோடு நந்தவனத்தில் அமர்ந்திருக்குங்கால், நல்ல மனமொன்று வீச, அது தம் பாண்டிமாதேவியின் கூந்தலினின்றும் வந்ததறிந்து, இம் மணமானது இவளது கூந்தலுக்கு இயற்கையோ? அன்றிச் செயற்கையோ? என்று ஐயுற்றுத் தன் ஐயம் தெளியப் பாடவல்ல புலவருக்குப் பொன்னாயிரம் கொடுப்பேனென்று சொல்லிப் பொற்கிழியினைச் சங்க மண்டபத்தில் தொங்கவிட்டிருந்தான். வழுதியின் ஐயம் தீர்க்கும் பாடல் பாடவல்ல புலவரிலாமையால் அக்கிழி அறுப்பாரின்றி அப்படியே இருந்தது.
சொக்கலிங்கப் பெருமான், தருமியிடம், 'கொங்குதேர் வாழ்க்கை எனத் தொடங்கும் பாடலைக் கொடுத்து, இதை, நீ பாண்டியனிடம் தந்து, பொற்கிழி பெறுக’ என அனுப்பினார். அப்பாடலுக்குப் பாண்டியன் இசைய, நக்கீரர் மறுத்தார். உடன் சோமசுந்தரக் கடவுள் பாட்டியற் புலவனாகி வந்து, சங்க மண்டபம் புகுந்து, கீரனுடன் வாதிட்டார். இறைவி என்று உலகம் ஏத்தும் ஞானப் பூங்கோதையின் கூந்தலுக்கும் செயற்கை மணமே என்று தருக்குடன் கூறியதால், கீரனை மடுவில் விட்டார். பின்னர் தருமி பொற்கிழி பெற்றார். இவ்வாறு திருவிளையாடற் புராணம்
கூறும.
பாண்டி நாட்டில் பஞ்சம் ஏற்பட்டது. அதனால் துன்பம் அடைந்த தருமி, ஆலவாயண்ணலையடைந்து அண்ணலே இனியும் இவ்வூரிலேயே இருப்பின் இறந்து படுவேன். அதனால் வேற்றுார் சென்று, இது செழுமையடைந்த பின்னர் வருகின்றேன். அதுவரை உன்னை எப்படிப் பிரிந்திருப்பேன்’ எனத் தொழுது அழுதான். அப்போது, இறைவன், 'அன்பனே!
இந்துக்கலைக்களஞ்சியம்

Page 171
அழாதே. வழுதி பொன்னாயிரம் கொண்ட கிழியினைச் சங்க மண்டபத்தில் தூக்கினான். இப் பாவினைக் கொடுத்து அதனைப் பெறுதி என்று, 'கொங்குதேர் வாழ்க்கை எனத் தொடங்கும் குற்றமற்ற செய்யுளைத் தந்தார். தருமி சங்கப் புலவர்களிடம் கொடுக்க, நக்கீரன் குற்றம் கூறவே இன்றவன் நற்பாட்டுப் புலவனாய்ச் சங்க மேறி, வாதிட்டு, நக்கீரனுக்குக் குட்ட நோய் வரச் சாபமிட்டுத் தருமிக்குப் பொற்கிழியினை வழங்கினார்- இது சீகாளத்திப் புராணம்.
தபுைராணங்கள்
புராணம் என்ற சொல்லுக்கு பழமை என்பது பொருள் பழமை, பழைய கதை, பழைய வரலாறு எனப் பலவாறு பொருள் கொள்ளலாம். புரா + நவம் எனப் பிரித்துப் பழமையும், புதுமையும் கொண்டது புராணம் என்று கூறுவாரும் உளர். தமிழ் மொழியிலுள்ள சிறந்த இலக்கியவகைகளில் ஒன்றாகக் கருதப்படும் புராணங்கள் சமஸ்கிருத மொழி. அதன் இலக்கிய மரபு என்பவற்றின் செல்வாக்கைப் பெரிதும் கொண்டுள்ளது.
பாரதீய இதிகாசத்திற் புராணம் வேதங்களைப் போன்று தொன்மை வாய்ந்தது. அது ஐந்தாவது வேதம் எனப்படுகின்றது. பதினான்கு கலைகளில் புராணங்களுக்குத் தனி முக்கிய இடம் கொடுக்கப்பட்டுள்ளது. புராணங்களில் பெளராணிகர் தம் கற்பனைத் திறத்தால் கருத்துக்களைச் சுதந்திரமாக விளக்கும்போது அவற்றின் புகழ் அதிகமாகின்றன. குப்தப் பேரரசு நிலை பெற்ற காலத்தில் கி. பி. 5 ஆம் நூற்றாண்டளவில் தான் புராணங்கள் ஒரு முழுமையான வளர்ச்சியைப் பெற்றன. அக் காலத்தில் சைவம், வைணவம் ஆகிய சமயங்கள் தமக்கெதிராகப் பிரசாரம் செய்து கிளர்ந்தெழுந்த அவைதீக சமயங்களுக்கெதிராகத் தீவிரமாகப் போராட வேண்டிய நிலையிலும், சமயக் கருத்துக்களை பாமர மக்களும் விளங்கிக் கொள்ளும் வகையில் இலகுபடுத்த வேண்டிய ஒரு சூழ்நிலையிலும் புராணங்கள் முழு வளர்ச்சியடைந்ததுடன் வைதீக மதங்களின் மேம்பாட்டிற்கு பெரும் பங்களிப்பைச் செய்தன என்பதும் நினைவிற் கொள்ளத்தக்கது. கடவுட் கோட்பாடும் அதை ஒட்டி எழுந்த பக்தி நெறியும், வழிபாட்டு முறைகளும், புராணக் கதைகளும், தத்துவங்களும் அவற்றிலே தொகுத்துக் கூறப்பட்டுள்ளன.
இவற்றைவிட சரித்திரம் பூகோளம், சங்கீதம், சோதிடம், வைத்தியம், விஞ்ஞானம், மொழிகள், சாகித்தியம், காவிய நாடக அமைப்பு, ஆலய அமைப்பு, கற்புக்கரசிகள் தருமம், காயத்திரியின் மகிமை, மரணம், அண்டம், நமது உடலில் உள்ள எலும்புகள் எத்தனை, நரம்புகள் எத்தனை, காயகல்பம், சமூகத்தில் நடக்க வேண்டிய முறை, குளம் வெட்டுதல், திருடர்களைத் தண்டிப்பது முதலிய எண்ணிறந்த விடயங்கள் அமைந்த பொக்கிஷம் புராணம். எந்த வகையிலாவது மனிதர்களை மனிதர்களாக்கி அடிக்கடி பிறவாமல் துன்பங்களை அனுபவிக்காமல் இறையருளைப் பெறச் செய்வதே புராணங்களின் நோக்கம்.
இந்துக்கலைக்களஞ்சியம்

மிகப் பழைய புராணங்களை மகா புராணங்கள் என்பர். அவை பதினெட்டு, பிரமபுராணம், பாத்மம், வைணவம், சைவம், பாகவதம், பவிஷ்யம், நாரதீயம், மார்க்கண்டேயம், ஆக்கினேயம், பிரமவைவர்த்தம், இலிங்கம், வராகம், வாமனம், கூர்மம், மத்ஸ்யம், காருடம், ஸ்காந்தம், பிரமாண்டம், உப புராணங்கள் பதினெட்டு உள்ளது. இதில் சைவ புராணங்கள் பத்து, வைணவ புராணம் நான்கு பிரம புராணம் இரண்டு, அக்னி புராணம் ஒன்று, சாத்வீக புராணங்கள் ஆறு, இராசத புராணங்கள் ஆறு, தாமச புராணங்கள் ஆறு. உப புராணங்களால் 1500 சிவத் தலங்களையும், 500 விஷ்ணு தலங்களையும் அறியலாம்.
சமஸ்கிருத இலக்கிய மரபின் செல்வாக்கினாலேயே தமிழ் இலக்கியத்தில் புராண இலக்கியம் தோற்றம் பெற்றாலும் தமிழ்ப் புராணங்கள் மகா புராணங்களைப் பின்பற்றியதாக அமையவில்லை. அவை பெருமளவு காவியங்களுக்குரிய பண்புகளையே கொண்டுள்ளன. இப்பொழுது கிடைக்கும் தமிழ் மொழிப் புராணங்கள் அனைத்தும் பதினொராம் நூற்றாண்டுக்குப் பிற்பட்டவை. ஒருவகைப் புராணங்கள் சான்றோர்களின் வரலாற்றை எடுத்துக் கூறுவன. சேக்கிழார் இயற்றிய திருத்தொண்டர் புராணம், திருவாதவூரடிகள் புராணம், முருகதாச சுவாமிகள் இயற்றிய புலவர் புராணம், உமறுப்புலவர் இயற்றிய சீறாப்புரணம் முதலியவை அத்தகையன. கடவுளின் சிறப்பினை எத்தலத்துடனும் சேர்த்துக் கூறாமல் அவரின் செயலை மட்டும் கூறும் புராணங்கள். கந்தபுராணம், கூர்ம புராணம்,சிவமகா புராணம், விநாயக புராணம், விஷ்ணு புராணம். இவை இரண்டாம் வகையைச் சார்ந்தவை. சமஸ்கிருத மொழிப் புராணங்களின் தழுவல் நூல்கள் என்றும் இவற்றைக் கூறலாம். கடவுளின் சிறப்பினை ஒரு தலத்துடன் சேர்த்து அத் தலத்தின் பெருமையினையும் அத் தல இறைவனின் பெருமையினையும் கூறுவது மூன்றாவது வகையாகும். திருவிளையாடற் புராணம், காஞ்சிப் புராணம், திருக்குற்றாலத் தல புராணம் முதலியவை இப் பிரிவில் அடங்கும். இத்தகையனவே தலபுராணங்களாகும். ஆலய வழிபாட்டை ஆதாரமாகக் கொண்டே ஆழ்வார்களும், நாயன்மார்களும் பக்திப் பாடல்களை இயற்றினர்.
தலச்சிறப்பிற்கு அடிப்படையாக விளங்குவது கோயில். பல்லவர் காலத்தில் ஆரம்பிக்கப்பட்ட கருங்கற்கோயில் அமைப்பானது சோழர் காலத்திற் பெரியதோர் அமைப்பாக மாறியது. சமய வாழ்க்கையிலும் சமுதாய அமைப்பிலும் மரபு வழிக் கலாசாரத்தை வளர்ப்பதிலும் கல்வி வளர்ச்சியிலும் பெரும் பங்காற்றின. கால கதியிற் கோயில்கள் புதிய கல் மண்டபங்கள், சுற்றுப் பிரகார வீதிகள் எனப் புதிய பல இணைப்புகள் ஏற்பட்டு ஒரு பிரமாண்டமான அமைப்பாக வளர்ந்ததுடன் வியாபார நிலையங்களும் வாணிபமும் பெருவளர்ச்சியடைந்தது. திருவொற்றியூர், திருவிடை மருதூர், திருவண்ணாமலை, திருவரங்கம் முதலான மாநகரங்கள் கோயில்களை ஆதாரமாகக் கொண்டு வளர்ச்சி பெற்றவையே.
அரசர்களும், பிரமதேயங்களும் கோயில் வளர்ச்சியில் பெரும் பங்காற்றினர். காஞ்சிபுரம், திருவொற்றியூர், திருவாரூர் போன்ற
139

Page 172
தலங்களிலே சங்கரவர்த்திகள் வீராபிஷேகம், விஜயாபிஷேகம் போன்ற சடங்குகளைப் புரிந்தனர். பொதுக் கூட்டங்கள் நடைபெறுவது வழக்கமாயிற்று. மேலும் மன்னராலும் பிறராலும் கோயில்களுக்குப் பல மானியங்கள் வழங்கப்பட்டமை கோயில்களின் வளர்ச்சியை மேன்நிலைப்படுத்தின. நில மானியங்களையும் மக்களது சேவைகளையும் ஆதாரமாகக் கொண்டே ஆலய கருமங்கள் நடைபெற்றன. மக்கள் பெருமளவு கூடுகின்ற களமாக கோயில்கள் திகழ்ந்தமையால் நூல் அரங்கேற்றம், சமயவாதங்கள், பிரசாரங்கள் என்பன கோயில்களில் நடைபெற்று ஆன்மீகச் சிந்தனைகள் பலவிடங்களுக்கும் பரவின.
மேலும் துருக்கியர் வருகையினால் வட இந்தியாவில் பல கோயில்கள் இடித்து நாசமாக்கப்பட்டன. சூறையாடப்பட்டன. இதனால் காஷ்மீரம், கூர்ஜரம் போன்ற இடங்களிலிருந்து பாண்டித்தியம் பெற்ற பிராமணர்களும், சமயக் கணக்கர்களும் தங்களது ஏட்டுச் சுவடிகளோடு தென்னாட்டுத் தலங்களுக்குச் சென்றனர். இதனாலேதான் விஜயநகர காலத்தில் பல தலபுராணங்கள் தோன்றின.
குலோத்துங்கன் காலத்தில் கமலாலய பட்டர் என்பவரால் கன்னி வள புராணம் பாடப்பட்டது. இதற்காக அவர் இறையிலி நிலங்களைப் பரிசாகப் பெற்றார். இதனைத் தென் ஆர்காடு மாவட்டத்தைச் சேர்ந்த கடலூர் சாசனம் உறுதி செய்கிறது. தமிழில் எழுந்த மிகப்பழைய தல புராணம் இதுவாகும்.
விஜயநகர காலத்தில் தென்நாட்டிலுள்ள மடங்களைச் சார்ந்தவர்கள் புராணங்களை இயற்றுவித்தனர். தருமபுர மடத்தைத் தாபித்த குருஞான சம்பந்தருடைய ஆசிரியரான கமலை ஞானப் பிரகாசர் திருமழபாடிப் புராணம் பாடினார். இவருடைய மாணவர் திருவொற்றியூர் ஞானப்பிரகாசர் திருவொற்றியூர்ப் புராணம் பாடினார். இவ்வாறு தல புராணங்கள் வளர ஆரம்பித்தன.
பதினெண் புராணங்களின் ஒர் அங்கமாக மட்டுமே இருந்து வந்த தலமகிமைச் செய்திகள் பிற்காலத்தில் தமிழிலக்கிய உலகில் காப்பிய இலக்கண அமைதியைப் பெற்றுத் தமக்கெனத் தல புராணங்கள் என்ற பெயரில் முழுமையான இலக்கிய நூலுக்குரிய இடத்தைப் பெற்றன.
பெரும்பாலும் சிவ தலங்களுக்குரிய தலபுராணங்கள் பதினெண் புராணங்களில் உள்ள அந்தந்த சிவ தலங்களுக்குரிய சிறப்போடு தேவாரத்தில் உள்ள தலச்சிறப்பு, மூர்த்திச் சிறப்பு, தீர்த்த மகிமை ஆகிய மூன்றும் ஒரு சேரப்பெற்று பதினெண் புராணங்களின் அங்கமாக மட்டுமிராமல் தனி இலக்கியமாக வளர்ந்தன. தமிழில் தல புராணங்கள் பாடும் புலவர்களின் கற்பனை வளமும் இதில் இணைந்து கொண்டதால் சுவைமிகு நூல்களாக அவை வளரலாயின. இவை மக்களுக்கு தம் ஊரைப்பற்றிய வரலாறுகளையும் பெருமைகளையும் பண்டைய நிலை, இன்றைய அமைப்பு முதலியவற்றையும் தெரிவித்துத்
146

தளரா நம்பிக்கையை வளர்த்து வருகின்றன. மனித வளர்ச்சிக்கு உறுதுணையாக விளங்கும் கடவுள் நம்பிக்கையை ஊட்டுவனவாய் இடரினும் தளரினும் இறைவன் துணை நிற்பான் என்ற உணர்வை ஊட்டுவனவாய் உள்ளன. பெருங் காப்பிய இலக்கணங்கள் பொருந்தியுள்ள தலபுராணங்களில் நாட்டு வருணனை, நகர வருணனை, மலை வருணனை, புராண வரலாறு, தலத்தைப் பற்றிய வரலாறுகள், மூர்த்தி, தீர்த்த வரலாறுகள் அடியவர்கள் அடைந்த பேறுகள் முதலியன கூறப்பட்டிருக்கும். பல நூல்களைக் கற்று அறிய வேண்டிய விடயங்களை ஒரே நூலில் நாம் பெறக் கூடிய அரிய பொக்கிஷமாய் உள்ளவை தலபுராணங்கள்.
பல குறுநில மன்னர்களும் பெரு நிலக்கிழார்களும் பெருஞ் செல்வர்களும் தங்கள் செல்வம், செல்வாக்கு என்பவற்றைக் கொண்டு புலவர்களின் மூலம் பல தலபுராணங்களை உருவாக்கி மக்களிடையே நல்லொழுக்கத்தைப் பேணி சமுதாய நலனைப் பேணி வந்தனர் என்பதற்கு இக்கால நூல்கள் சான்றாக உள்ளன.
தல புராணங்கள் இடைக்காலத்தில் பலவாகப் பெருகுவதற்கு வித்திட்டவர்கள் ஞானசம்பந்தரும் திருநாவுக்கரசரும் ஆவார்கள். மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய இம் மூன்றும் தல புராணங்களுக்கு முக்கியம்.
ஞான சம்பந்தர் தேவாரத்தில் தீர்த்த மகிமைக்கு "வேயனதோ ளுமைபங்கன் வெண்காட்டு முக்குள நீர் தோய்வினையாரவர் தம்மைத் தோயாவாத் தீவினையே’
என்னும் இப்பாடல் எடுத்துக் காட்டாக உள்ளது.
'நிலையும் பெருமையும் நிதியும் சால அழகுடைத்தாய் அலையும் பெருவெள்ளத் தன்று மிதந்த இத் தோணிபுரம்"
திருநாவுக்கரசரது இப் பாடல் தலச் சிறப்பினைப் போற்றும் பாடலாக உள்ளது.
'பிறப்பு மூப்புப் பெரும் பசி வான்பிணி
இறப்பு நீங்கியிங் கின்பம் வந் தெய்திடும்
சிறப்பர் சேறையுட் செந் நெறி யான்கழல்
மறப்பதின்றி மனத்தினுள் வைக்கவே” என்ற திருநாவுக்கரசரது பாடல் மூர்த்தியின் மகிமையை எடுத்துக் காட்டுகிறது.
தல புராணங்களின் வளர்ச்சியை நோக்குவோமாயின் 10 ஆம் நூற்றாண்டில் சாந்தி புராணமும் 12 ஆம் நூற்றாண்டில் கன்னிவனப் புராணமும் தோன்றின.
13 ஆம் நூற்றாண்டில் பெரும்பற்றப் புலியூர் நம்பி இயற்றிய திருவாலவுடையார் திருவிளையாடற் புராணம் தோன்றியது.
இந்துக்கலைக்களஞ்சியம்

Page 173
14 ஆம் நூற்றாண்டில் உமாபதி சிவாச்சாரியார் கோயிற் புராணம் இயற்றினார்.
15-16 ஆம் நூற்றாண்டுகளில் வடமொழிப் புராணங்கள் பல தமிழில் மொழிபெயர்க்கப்பட்டன. அதி வீரராம பாண்டியர் கூர்ம புராணம், இலிங்க புராணம், கந்த புராணத்தின் ஒரு பகுதியான காசிக் காண்டம் முதலியவற்றை இயற்றினார்.
வரதுங்கராம பாண்டியன் பிரமோத்திர காண்டத்தை வடமொழியில் இருந்து தமிழில் மொழிபெயர்த்தார். வடமலையப்பர் என்பவர் மச்ச புராணத்தை மொழி பெயர்த்துள்ளார். மறைஞான சம்பந்தர் கமலாலய புராணம்,அருணகிரி புராணம் யாத்துள்ளார். கமலை ஞான்பிரகாசர் தந்தி வனப் புராணம் என்னும் நூலை
இயற்றினார்.
வேதாரணிய புராணம், கும்பகோணப் புராணம் ஆகிய இரண்டையும் அகோர முனிவர் என்பவர் இயற்றினார்.
17 ஆம் நூற்றாண்டில் சைவ எல்லப்ப நாவலர் திருவெண் காட்டுப் புராணம், திருசெங்கோட்டுப் புராணம், தீர்த்தகிரிப் புராணம், செவ்வந்திப் புராணம் முதலியவற்றை இயற்றினார். தருமபுர மடத்தைச் சார்ந்த சம்பந்த சரணாலய சுவாமிகள் என்பவர் கந்தபுராணச் சுருக்கத்தினை இயற்றினார்.
திருக்கூவப் புராணம் சிவப்பிரகாச சுவாமிகளால் இயற்றப்பட்டது. திருக்கழுக்குன்றப் புராணம் என்ற நூலை அந்தகக் கவி வீராகவ முதலியார் இயற்றினார். 17 ஆம் நூற்றாண்டில் தோன்றிய தலபுராணங்களில் பரஞ்சோதி முனிவரின் திருவிளையாடற் புராணமும் ஒன்று. இவர் திருமலை நாயக்கர் காலத்தில் இருந்தவர் என்று தெரிகிறது.
18 ஆம் நூற்றாண்டில் திருக்குற்றாலத் தலபுராணம் தோன்றியது. இதன் ஆசிரியர் மேலகரம் திரிகூட ராசப்பக் கவிராயர். சிவஞான முனிவர் காஞ்சிப்புராணத்தின் முற்பகுதியை இயற்றினார். சிதம்பரநாத முனிவர் என்பார் திருப்பாதிரிப் புலியூர்ப் புராணம் என்ற நூலை இயற்றினார். கச்சியப்ப முனிவர் விநாயக புராணம், காஞ்சிப் புராணத்தின் பிற்பகுதி, திருவானைக்காப் புராணம், பேரூர்ப் புராணம், பூவாளூர்ப் புராணம், தணிகைப் புராணம் முதலியவற்றைப் பாடினார்.
19 ஆம் நூற்றாண்டிலே புராண கர்த்தாவாக விளங்கியவர் திரிசிரபுரம் மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம்பிள்ளை. அவர் பாடிய புராணங்கள் பல. அவை அம்பர் புராணம், உறையூர்ப் புராணம், கும்பகோணப் புராணம், திருக்குறுக்கைப் புராணம், கோயிலூர்ப் புராணம், தனியூர்ப் புராணம், திருத்துருத்திப் புராணம், திருநாகைக் காரோணப் புராணம், திருப்பெருந்துறைப் புராணம், திருமயிலைப் புராணம், திருவரன் குளத்தல புராணம், திருவாளொளி புற்றுார்ப் புராணம், பட்டீசுவரப் புராணம், மண்ணிப் படிக் கரைப் புராணம் முதலியன.
இந்துக்கலைக்களஞ்சியம்

சைவம், வைணவம், சமணம், இஸ்லாம் ஆகிய நான்கு சமயத்தவர்களும் புராணங்களை இயற்றினர். அவற்றுள் சைவ புராணங்களே அதிகம். கும்பகோணம், மாயூரம், நாகபட்டினம், திருப்பெருந்துறை, மதுரை போன்ற ஊர்களுக்கு இரண்டு மூன்று புராணங்கள் உள்ளன. நிநி)
தைைச்சங்காரு
(திருத்தைைச்சங்க நாண்மதியம்)
திருத்தலைச்சங்க நாண்மதியம் என்ற இத்தலம் தற்போது தலைச்சங்காடு என்றழைக்கப்படுகிறது. மயிலாடுதுறையிலிருந்து ஆக்கூர் சென்று அங்கிருந்து சீர்காழி செல்லும் பாதையில் இரண்டு கிலோ மீற்றர் தொலைவில் உள்ளது. சீர்காழி, மயிலாடுதுறை, பூம்புகார் போன்ற இடங்களிலிருந்து பேரூந்து மூலம் இத்தலத்தைச் சென்றடையலாம்.
இத் தலத்து மூலவரான நாண்மதிய பெருமாள் நின்ற கோலத்தில் கிழக்கு முகம் நோக்கிச் சேவை செய்கின்றார். இவருக்கு வெண் சுடர்ப் பெருமாள் என்ற பெயர் உண்டு. இவர் தேவர் பிருந்தங்கர், நித்ய சூரியன், சந்திரன் போன்றோருக்கு பிரதியட்சமானவர். தாயார் தலைச்சங்க நாச்சியார் ஆவார். உற்சவ மூர்த்தியை வியோம ஜோதிப்பிரான் என்று அழைக்கின்றனர். உற்சவ தாயார் செங்கமல வல்லித் தாயார் என்று அழைக்கப்படுகின்றார். திருமங்கையாழ்வார் இத் தலத்தை இரண்டு பாசுரங்களால் மங்களாசாசனம் செய்துள்ளார்.
பூம்புகாரில் இருந்து கொண்டு வரப்பட்ட தலைசிறந்த சங்
குகள் இத் தலத்தில் விற்பனை செய்யப்பட்டதால் தலைச்சங்கம் என்பதும் புரச மரக் காடுகள் நிறைந்து இருந்தமையால் காடும் ஆக இரு பெயர்களும் ஒன்று சேர்ந்து தலைச்சங்காடு என்று வழங்கப்படுகிறது. சங்கின் ஒலியுடன் தொடர்புடைய சந்திரன், வான் உலக தேவர்கள், நித்ய சூரிகள் போன்றோர் சூழ்ந்து நிற்க தினமும் வளர்ந்து தேயும் தன்மையாக சந்திரனைச் சூடிய பெருமானாக இத் தலத்தில் காட்சி அளிக்கிறார். பெருமாள் சாய்ந்து கொள்ள விலை மதிப்பிடமுடியாத சங்கு ஒன்று விளங்குவதும், பேரெழில் வாய்ந்த ஆண்டாள் உருவமும் இத்தலத்துச் சிறப்புகள் ஆகும்.
கோயில் மிகவும் சிறியது. தாயாருக்குத் தனியாக சந்நிதி இல்லை. சந்திரனைச் சூடி சந்திரனது சாபத்தைத் தீர்த்தமையால் சந்திர சாபஹரர் என்ற பெயர் உண்டானது. பலமுறை பற்பல சாபங்களைப் பெற்ற சந்திரன் இத் தலத்தில் பெருமானை. நோக்கித் தவம் புரிந்து பெருமாள் தரிசனம் பெற்றதோடு சாபவிமோசனமும் பெற்றான். இருள் உள்ள காலத்தில் உலகிற்கு ஒளி வழங்கிடும் சந்திரனுக்கு இத் தலத்துப் பெருமாள் திருவருள் செய்ததை விளக்கும் இத் தலம் திருத்தலைச் சங்காடு ஆகும்.
இக் கோயிலின் புஷ்கரணி சந்திரபுஷ்கரணி, விமானம் சந்திர விமானமாகும். (தே.ஹ.)
fAf

Page 174
தவம்
தென்னாசிய சமய மரபிலே தவம் முக்கியமான ஓரிடத்தை வகிக்கின்றது. தபஸ் எனும் வடமொழிச்சொல் தவம் எனத் தமிழிலே வழங்கப்படுகின்றது. இது சமய நோன்பு, சூடு வெப்பம், சமயரீதியில் உடம்பினை ஒறுத்தல், தியானம், நியமம், புண்ணியம், நற்செயல், நெருப்பு, துறவு, ஒர் ஒழுக்க விழுமியம், மனம், வாக்கு, காயம் ஆகியனவற்றை நன்கு கட்டுப்படுத்தி இறைவனிலே லயித்து நின்று திருவருள் பெறுதல், ஓர் குறிப்பிட்ட சமூகத்தினரின் சிறப்புக் கடமையைப் புரிதல், ஏழுலகங்களில் ஒன்று, ஒளி, புலனடக்கம் என பல பொருள்படும்.
தவம், தவம் செய்வோர் பற்றி வேத காலந் தொட்டுப் பல நூல்களிலே கூறப்படுகின்றது. தவம் எனும்போது பலவகை இன்பங்களை விலக்கி, உடல் ரீதியிலான துன்பங்களையும் பொருட்படுத்தாது, குறித்த குறிக்கோளை எட்டும்வரை செயற்படுதல் இடம்பெறுவதை அவதானிக்கலாம். தேவர்கள், அசுரர்கள், மனிதர்கள் இறைவனை நோக்கி வியக்கத்தக்க கடுந்தவம் செய்து தாம் விரும்பியவற்றைப் பெற்றனர் என்பது இதிகாசங்கள், புராணங்கள், பிற்பட்டகால வேறு நூல்கள் முதலியன மூலம் அறியப்படுகின்றது.
இருக்கு வேதத்திலே தவம் செய்கின்ற முனிவர்கள் பற்றிய குறிப்புகள் வருகின்றன. இவர்கள் தேவர்கள்- குறிப்பாக இந்திரன் முதலியோரின் நண்பர்களாகக் கூறப்பட்டுள்ளனர். ஆச்சிரம தர்மம் உருவாகிய பின் தவம் குறிப்பாக வானப்பிரஸ்தன், சந்நியாசிக்குரிய தர்மமாகவும் கூறப்படுகின்றது. ஆனால் தொடக்கத்திலே பிரமச்சரியம், கிருஹஸ்தம், வானப்பிரஸ்தம் எனும் மூன்று ஆச்சிரமங்களே நிலவின. பின்னரே நாலாவது ஆச்சிரமமான சந்நியாசம் சேர்க்கப்பட்டது. சாந்தோக்ய உபநிஷத் (223,1) கூறும் மூன்று வகையான தர்மங்களிலே தபஸ் (தவம்) வானப்பிரஸ்தருக்கு உரியதாகக் கூறப்பட்டுள்ளமை நன்கு கவனித்தற்பாலது. அதர்வ வேதம், தைத்திரிய பிராமணம் முதலிய நூல்களிலே தபஸ் வெப்பம் எனும் கருத்திலும் வந்துள்ளது. காலத்தால் முந்திய இருக்கு வேதத்திலுள்ள சிருஷ்டி பற்றிய பாடல் ஒன்றிலே (10.129) உலகனைத்தும் நீர் நிறைந்து இருள் மயமாக விளங்கியபோது, பரம்பொருள் வெப்பம் அல்லது தவத்தின் மூலம் எழுந்து உலக சிருஷ்டிக்கான சூழ்நிலையை உருவாக்கினார் எனக் கூறப்படுகிறது. பிரபல்யமான நிகழ்வுகள், அரும்பெரும் சாதனைகள் முதலியவற்றிற்குத் தவம் அடிப்படையாக அமைந்துள்ளமை பற்றிப் பின்னரும் கூறப்படும்.
தர்ம சூத்திரங்களிலே ஒருவர் செய்த பாவங்களின் விளைவுகளை நீக்குவதற்காக தவம் செய்ய வேண்டும் எனக் கூறப்படுகின்றது. இவ்வாறு ஒருவரை உள்ளும் புறமும் தூய்மை செய்யும் சாதனமாகத் தவம் விளங்குகின்றது. இப்பதம் நியமம், கட்டுப்பாடு - புலனடக்கம், மிகக் கடுமையான நோன்புகளைக் கடைப்பிடித்தல் முதலிய கருத்துக்களிலும் வந்துள்ளது.
f42

வேதங்களிலும் இதிஹாஸங்கள், Lj T60Tតំថាចាំ போன்றவற்றிலும் தவத்திற் சிறந்த பெரியோர், ஞானிகள் முதலியோர் தவத்தின் மூலம் ஆற்றியுள்ள அருஞ்செயல்கள் பற்றிய குறிப்புகள் உள்ளன. அகத்தியர் பற்றிய குறிப்பிட்ட விவரங்கள் மேற்குறிப்பிட்ட நூல்களில் வந்துள்ளன. அவர் மிகப் பெரிய ஒரு துறவியாயினும், இல் வாழ்க்கையில் ஈடுபட்டவர். அவருடைய மனைவி லோபாமுத்திரா. இல்வாழ்க்கை அவருடைய தவத்திற்கு இடையூறாக இருக்கவில்லை. தன் தவ வலிமையாலே வானளாவ வளர்ந்திருந்த விந்திய மலையை அடக்கினார். இல் வலன், வாதபியை அழித்தார். ஏழுகடல் நீரையும் உள்ளங்கையில் அடக்கக் கூடிய நீராக்கிக் குடித்து, கடலிலே அசுரர்களாலே மறைத்து வைக்கப்பட்டிருந்த வேதங்களை மீட்டார் என அவரின் மிகப் பெரும் சாதனைகள் கூறப்பட்டுள்ளன.
இவருடைய இச் சாதனைகள் குறியீடுகளாக வேறு கருத்துக்களைப் புலப்படுத்துவதாக வரலாற்றாசிரியர்கள் கொண்டாலும், தவத்தின் வியக்கத்தக்க சாதனைக்கு இவை எடுத்துக்காட்டுகளே. தவத்தின் சிறப்பினாலேயே இராவணன் பத்மாசுரன் முதலிய அசுரர்கள் பெரிய ஆதிக்கத்தைப் பெற்றனர். - பின்னர் அதனை நன்கு பயன்படுத்தாமையால் அழிவுற்றனர். மகாபாரத கதாபாத்திரங்களில் ஒருவரான அர்ஜுனன் தவத்தினால்- மிக உக்கிரமான தவத்தினால்சிவபிரானிடமிருந்து பாசுபதாஸ்திரத்தைப் பெற்றான். மேலும் குறிப்பாக சூரனும் அவனுடைய சகோதரர்களுமாகிய தாரகன், சிங்கமுகன் முதலியோர் மிகப் பெரிய தவஞ் செய்தே 1008 அண்டங்களையும் 108 யுகங்கள் ஆளும் பேறு பெற்றனர். அவர்கள் வேள்விகளுடன் தவமும் செய்தனர். இதனால் அசுரர்கள் போர் செய்தபோது அவர்களின் தலைகள் அல்லது உறுப்புகள் துண்டிக்கப்பட்ட போதும் அவை மீண்டும் மீண்டும் வளரத் தொடங்கின. இது பற்றிக் கந்தபுராண ஆசிரியரான கச்சியப்பர் தவத்தின் பெருமையை எடுத்துக் கூறமுடியாதென வியந்து குறிப்பிட்டுள்ளார். சூரன் முதலியோர் தம்முடைய தாயாரான மாயையின் சொற்படியே வேள்வி, தவம் இயற்றி உலக ஆதிக்கம், இன்பங்களை நாடி அவற்றைப் பெற்றுப் பின்னர் அழிவுற்றனர். ஆனால் அவர்களின் தந்தையாகிய காஸ்யப முனிவர் அவர்கள் தவம் செய்து ஆன்ம ஈடேற்றம் அடையுமாறு ஆலோசனை கூறினார். ஆனால் அவர்கள் தாயின் சொல்வழி நின்று செயற்பட்டனர். எனினும் காஸ்யப முனிவர் மூலமாகக் கச்சியப்பர் தவத்தின் மிக மேலான சிறப்பினை,
தவந்தனின் மிக்க தொன்றில்லை தாவில் சீர்த்
தவந்தனை நேர்வது தானுமில்லையாற்
தவந்தனின் அரிய தொன்றில்லைச் சாற்றிடிற்
தவந்தனக் கொப்பது தவமதாகுமே”
என எடுத்துக் கூறியுள்ளமை உற்றுநோக்கற்பாலது. தவத்திற்குத் தவமே சமனாகும். பிறிதொன்றில்லை.
ஏற்கனவே குறிப்பிட்டவாறு மிகப் பெரிய சாதனைகள், நிகழ்வுகள் தவத்தின் பலனாக ஏற்பட்டுள்ளன. சூரன் முதலிய
இந்துக்கலைக்களஞ்சியம்

Page 175
அசுரர்களாலே துன்புறுத்தப்பட்ட தேவர்களின் துயரங்களைக் களையுமுகமாக முருகப்பெருமானைத் தோற்றுவிக்குமுன் சிவபிரானும், சக்தியாகிய உமையும் கடுந்தவம் புரிந்தனர் எனக் கந்தபுராணம், காளிதாசரின் குமாரசம்பவம் முதலிய நூல்கள் எடுத்துக் கூறுவன. தவம் ஒருவரைத் தூய்மைப் படுத்துவதுடன் வலுவையும் அளிக்கும்.
திருவள்ளுவர் திருக்குறளிலே தவம் பற்றி ஒர் அதிகாரத்திலே கூறியுள்ளார். இவ் அதிகாரத்தினை புலான் மறுத்தல், கூடாவொழுக்கம் பற்றிய அதிகாரங்களுக்கிடையில் அவர் அமைத்துள்ளமையும் குறிப்பிடற்பாலது. ஒருவர் தனக்கு ஏற்படும் துன்பத்தைப் பொறுத்துக் கொள்ளுதலும் மற்றைய உயிர்களுக்குத் துன்பம் செய்யாமையுமே தவம் என்ற கருத்துப்புட, முதலாவது செய்யுளிலே,
"உற்ற நோய் நோன்றல் உயிர்க்கு உறுகண் செய்யாமை அற்றே தவத்திற்கு உரு”
என அவர் கூறியுள்ளார். தொடர்ந்து அடுத்த செய்யுளிலே தவத்தினைக் கடைப்பிடிப்போரையன்றி ஏனையோர் இதனைச் செய்ய முடியாதெனவும், மூன்றாம் செய்யுளிலே துறவிகளுக்கு உணவு, உடை கொடுத்துப் பேண வேண்டும் என்பதற்காகத்தான் ஏனையோர் தவத்தை மேற்கொள்ளவில்லைப் போலும் எனவும் குறிப்பிடுகிறார். இதன்படி தவம் துறவியர்க்கு மட்டும் உரிய தெனக் கொள்ளப்படுகிறது. நாலாவது செய்யுளில் ஆசிரியர் துன்பம் செய்தாரைப் பொறுக்கும் சிறப்பும், அன்பு செய்வோரைப் போற்றும் தன்மையும் தவத்தினாலே கிட்டும் என கூறப்படுகிறது. ஒருவர் எண்ணியதை எண்ணியவாறு அடைவதால் தவம் யாவராலும் மேற்கொள்ளப்படும் என ஐந்தாம் செய்யுள் கூறும். தவம் செய்வோரைத் தம் கடமை செய்வோர் எனவும், ஏனையோர் ஆசை வயப்பட்டு வீணான செயற்பாடுகளில் ஈடுபடுகிறார்கள் எனவும் ஆறாவது செய்யுள் கூறும். இந்த இரண்டு (5,6) செய்யுட்களிலும் தவத்தின் தனிச் சிறப்பு மிகச் சுருக்கமாகக் கூறப்படுகிறது. தீயிலே வைத்து உருக்கத் தங்கத்தின் தரம், தூய்மை ஆகியன அதிகரிப்பதுபோல, வருத்தம் அதிகரிக்கத் தவம் வலுப்படும் என ஏழாவது செய்யுள் குறிப்பிடுகின்றது. தன் உயிர், தன்னலம் எனும் சுய உணர்வு அற்று, தன்னுயிரைப் பிறர்க்குதவி வாழும் தியாக சிந்தனையுள்ள பெரியாரை எல்லா உயிர் வர்க்கமும் போற்றும் என எட்டாம் செய்யுள் கூறுகின்றது.
தவ உணர்வு மேலோங்கப் பெற்ற தன்மையுடைய ஆன்மீக வீரனை யமன் கூட ஒன்றும் செய்யமுடியாது. தன்னுயிரே பிறர்க்கென வாழ்கையில், தன்னுயிர் கொண்டு செல்லும் கூற்றுவனைப் பற்றி அவர் பொருட்படுத்த மாட்டார். எனவே எமனையும் அவர் வெல்லலாம் என ஒன்பதாவது செய்யுள் கூறும். கடைசியிலே உலகிலே வறியவர்கள் மிக அதிகமாக இருப்பதற்குத் தவ உணர்வு உடையோர் சிலராகவும், இல்லாதவர் பலராகவுமிருப்பது தான் காரணம் என ஆசிரியர் கூறுகிறார். இங்கு தவம் நல்வினை புண்ணியம் எனும் கருத்திலும்
இந்துக்கலைக்களஞ்சியம்

வந்துள்ளது. தொகுத்து நோக்கும்போது தவம் பற்றித் திருவள்ளுவர் கூறியுள்ளவை வடமொழி நூல்களிலே இது பற்றிக் கூறியுள்ளனவற்றைப் பெருமளவு ஒத்துக் காணப்படுகின்றது. மேலும் திருவள்ளுவர் கருத்துப்படி தானம், தவம், நன்கு நடைபெறுவதற்கு மழை மிக அவசியமாகும்.
இவ்வாறு தவம் பல்வேறுபட்ட கருத்துக்களிலே வந்துள்ளது. அதன் ஆற்றல் மிக மேலான்தாகும். அது துறவிகள் மட்டுமன்றி ஏனையோரும் பின் பற்றிப் பயனடையக் கூடிய மாபெரும் சக்தியாகும். சென்ற நூற்றாண்டின் முற்பகுதியிலே தன்னுடைய சக்தியாக்ரஹம் (உண்மையினைப் பின்பற்றல்) நோன்பு முதலியனவற்றால் அண்ணல் காந்தியடிகள் இந்திய சுதந்திரப் போராட்டத்தை வழிநடத்தி, இந்தியா அமைதி முறையில் பிரித்தானியர் ஆட்சியிலிருந்து விடுபட்டுச் சுதந்திரம் அடைய வழிவகுத்தார் என்பதும் நன்கு குறிப்பிடற்பாலது. மேலும் காஞ்சிப் பெரியவர் சந்திரசேகர சரஸ்வதி சுவாமிகள், யாழ்ப்பாணத்து யோகர் சுவாமிகள் போன்றவர்களும் தலைசிறந்த தவ முனிவர்களே. இத்தகையோர் இன்றும் வாழுகின்றனர்.
இந்துசமய மரபில் மட்டுமன்றிப் பெளத்த, சமண, ஆஜீவிக முதலிய ஏனைய இந்திய சமய மரபுகளிலும் தவம் சிறப்பான ஓரிடத்தை வகிக்கின்றது. பெளத்த சமய நிறுவுநரான புத்தபிரான் பல காலத் தவத்தின் பின் அரசமரத்தின் கீழே அமர்ந்து தியானம் செய்து ஞானம் பெற்றார். அவரைப் போலவே சமண சமய நிறுவுநரான வர்த்தமான மஹாவீரரும், ஆஜிவிக சமய நிறுவுநரான மொக்கலி கோசலர் என்பவரும் தவம் செய்து ஞானம் பெற்றனர். மற்றும் கிறிஸ்தவம், இஸ்லாம் ஆகிய சமயங்களிலும் தவம் சிறப்பாகக் குறிப்பிடப்படுகின்றது.(வி சி)
தன்யாசி
இவ் இராகம் எட்டாவது மேள கர்த்தாவாகிய தோடியின் ஜன்ய ராகம். இதன் ஆரோகணம் ஸகமபநிஸ அவரோகணம் ஸ்நிதபமகரிஸ் -
இது ஒரு ஒளடவ சம்பூர்ண இராகம். உபாங்க இராகமாகும். இவ் இராகம் எடுத்துக் கொள்ளும் சுரங்களாவன ஸட்ஸம், சுத்தரிஷபம், சாதாரண காந்தாரம், சுத்த மத்தியமம், சுத்த தைவதம், கைசிகிநிஷாதம் ஆகிய சுரங்கள் ஆகும். ஆரோகணத்தில் ரிஷபமும், தைவமும் வர்ஜமாகும். காந்தாரமும் நிஷாதமும் இவ் ராகத்தின் ஜீவ சுரங்கள். இச் சுரங்கள் தீர்க்கமாகவும் கம்பிதமாகவும் தோன்றும். பஞ்சமம் நியாசசுரம். ஸட்ஸம், காந்தாரம், மத்திமம், பஞ்சமம், நிஷாதம் கிரக சுரங்கள். இது ஒரு மூர்ச்சனாகாரக இராகம். இதன் நிஷாத மூர்ச்சனையே சாலகபைரவி. இது காலையில் பாட வேண்டிய இராகம். பக்திச்சுவை நிரம்பியுள்ள இராகம். மங்களங்கள் பாடுவதற்கும், வர்ணனைகளுக்கும் ஏற்ற இராகம். நிஸ்ப நிமப என்பது ஓர் அழகு சுரஅமைப்பு. பநீஸ்தாப' என்பது சிறப்பான சுரக் கோவையாகும்.
fA3

Page 176
சஞ்சாரம் நிஸகாமபா - கமபநீஸ்ா - பநீஸ்தாபாபநிஸரிஸ் நிஸ்ா பநிஸ்ம்க்ரிஸ்ா - ஸ்நிதப காமபநிஸ்ா - தாபா - ஸ்தாபா - காம பநிநிதபா - மகரிசா - ஸநிதபநிநிஸா
இந்த இராகத்திலமைந்த உருப்படிகள் தானவர்ணம் - நெனருங்சி - அடதாளம் - வீணைகுப்பய்யர்
பதவர்ணம் - ஏமகுவபோதிஞ் - ஆதிதாளம் - மைசூர்
சதாசிவராயர். கிருதி - சங்கீத ஞானமு - ஆதி - தியாகராசர் கிருதி - சியாமஸந்தராங்க - ரூபகம் - தியாகராசர் கிருதி - நீ சித்தமு - சாபு - தியாகராசர் கிருதி - மீனலோசன - சாபு - சியாமாசாஸ்திரி கிருதி - காணாமல் வீணிலே - சாபு - முத்துதாண்டவர் கிருதி - சூடாமணிகண்ட - சாபு - அருணாசலக் கவிராயர் கிருதி - பிறவாத முத்தி - ஆதி - கோபாலகிருஷ்ணய்யர்.
(தே. ஹ.)
தன்வந்திரி
ஆதிதன்வந்திரி இந்துப் பண்பாட்டின் ஒரு பகுதியான மருத்துவத்தின் வரலாற்றுடன் தொடர்புடையதாய் இருக்கும் தன்வந்திரியின் பெயர் ஆயுர்வேத விஞ்ஞானத்துடன் இணைத்துப் பேசப்படுகிறது. அஸ்வின்கள், காசிராஜனான திவோதாஸ் ஆகிய பெயர்கள்
வேதத்தில் குறிப்பிடப்பட்டாலும், தன்வந்திரி என்ற பெயர் அங்கு இடம்பெறவில்லை. காசிராஜனும், சுஸ்ருதரின் ஆசானுமாகிய
f.A4
 

தன்வந்திரியின் பெயர் பற்றிய குறிப்புகள் பிற்கால மருத்துவ நூல்களிற் காணப்படுவதுமட்டுமல்ல, மருத்துவ விஞ்ஞானத்திற்குரிய தெய்வமாகவும் அப்பெயர் போற்றப்படுகிறது. புராணங்கள், ஹரிவம்ஸம் மற்றும் மருத்துவ நூல்களிற் - காணப்படும் குறிப்புகளின்படி வெவ்வேறு காலப்பகுதியைச் சேர்ந்த மூன்று தன்வந்திரிகளை இனங்காணக்கூடியதாயிருக்கிறது.
1. பிரஹ்ம வைவர்த்தத்தின்படி பாஸ்கரரின் (சூரியனின்) 16 மாணவர்களில் ஒருவரும், அவரிடம் ஆயுர்வேதத்தைப் பயின்றவருமான தன்வந்திரி.
2. திவோதாஸ் என்ற காசி அரசனான தன்வந்திரி.
3. சாம்ராஜ்யபதியான விக்கிரமாதித்தனின் அரசவையில் வீற்றிருந்த நவநாயகர்களில் ஒருவரான தன்வந்திரி. தன்வந்திரி நிகண்டு எனப்பெரிய பிரபல்யமான மருத்துவ நூலின் ஆசிரியர் இவரேயென்பது சிலர் கருத்து.பண்டையகால இந்தியாவிலும், மத்தியகால இந்தியாவிலும் தன்வந்திரி என்றபெயர் ஆயுர்வேதபுலமை, மற்றும் சத்திரசிகிச்சை, குறிப்பாக கண், காது, மூக்கு, தொண்டை வைத்தியத்தில் நிபுணத்துவம் என்பனவற்றுடன் தொடர்பு கொண்டதாகப் போற்றப்பட்டது. அதாவது ஆயுர்வேதத்தின் முன்னோடியாக மட்டுமல்லாது, இந்துப் பண்பாட்டின் மருத்துவ மரபு, மற்றும் பாரம்பரியத்துடன் தொடர்பு கொண்டதாகவும் இப்பெயர் உளது.
ஆயுர்வேத சம்ஹிதைகள், புராணங்கள் ஆகியவற்றில் ஆதிதன்வந்திரி, காசிராஜனான தன்வந்திரி, சத்திர சிகிச்சை செய்பவர்களான தன்வந்திரிகள் பற்றிய தகவல்கள் கிடைக்கின்றன. தேவர்களும், அசுரர்களும் பாற்கடலைக் கடைந்தபொழுது தன்வந்திரி பகவன் அமிர்தத்தை ஒரு கலசத்தில் ஏந்தியபடி தோன்றினாரெனவும் இவர் விஷ்ணுவினது 12ஆவது அவதாரமென்றும் வைஷ்ணவ மரபிற்குரிய ஐதீகமொன்றுண்டு. இவ்வமிர்தத்தை அருந்துபவர்கள் இறக்கும் தறுவாயிலிருப்பினும் நித்தியவாழ்வு பெறுவார்கள். பாகவத புராணத்தின்படி தன்வந்திரி பகவனே ஆயுர்வேதத்தை உலகிற்களித்தவராவார்.
பிரஹ்ம வைவர்த்த புராணத்திலே பிரபஞ்சத்தின் கர்த்தாவானவர் நான்கு வேதங்களிலிருந்தும் ஆயுர்வேதத்தை வேறுபடுத்தியதுடன், அதனைச் சூரியனுக்குப் போதித்தாரெனவும், சூரியன் தனது 16 மாணவர்களுக்கு அதனைப் போதித்தாரெனவும் அவர்கள் ஒவ்வொருவரும் தத்தமது பங்களிப்பாக ஆயுர்வேதம் தொடர்பான நூல்களை இயற்றினரென்றும் அவர்களில் தன்வந்திரி மிகவும் பிரபல்யமானவரென்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்துக்கலைக்களஞ்சியம்

Page 177
ஹரிவம்ச புராணத்தின்படி, பரத்வாச முனிவர் தன்வந்திரிக்கு ஆயுர்வேதத்தைப் போதித்தார். தன்வந்திரி ஆயுர்வேத சிகிச்சையின் சிறப்பியல்பான தன்மை காரணமாக அதனை எட்டு அங்கங்களாக வகையீடு செய்தார். அவை
மேல்வருவனவாகும்.
1. காயசிகிச்சை 2. பாலசிகிச்சை
3. கிரஹசிகிச்சை 4. சாலாக்ய தந்திரம் 5. சல்லிய தந்திரம் 6. விஷ தந்திரம்
7. இரசாயண தந்திரம் 8. வஜிகரண தந்திரம்
இவற்றை அஷ்டாங்க ஆயுர்வேதம் என அழைப்பர்.
மேற்படி வகையீட்டினடிப்படையில் மருத்துவம் பற்றிய அறிவை தன்வந்திரி மாணவர்க்குப் போதித்தார். சிகிச்சாதத்துவ விஞ்ஞானம், சிகிச்சை தரிசனம் ஆகியவற்றை யாத்தவர் திவோதாஸ் தன்வந்திரி என்றும், சிகிச்சாகெளமுதி எனும் நூலை இயற்றியவர் காசிராஜனென்றும் பிரஹ்ம வைவர்த்த புராணம் குறிப்பிடுகிறது. இவ்விருபெயர்களும் ஒருவரையே குறிப்பிடுவன என்று ஏலவே கூறியுள்ளோம். எவ்வாறாயினும் மேற்படி நூல்கள் இன்றுவரை பெயரளவிலேயே அறியப் பட்டிருக்கின்றன. ஆயுர்வேதம் பற்றிப் பொதுவாகவும், குறிப்பாக சல்லிய - சாலாக்ய தந்திரம் பற்றிக் குறிப்பதாகவும் இன்றுவரை கிடைக்கக் கூடியதாயிருக்கும் நூல்களில் காசிராஜ திவோதாஸ தன்வந்திரியின் கருத்துக்களை எடுத்துக் கூறும் முதல்நூல் காசிராஜனின் முதல் மாணாக்கனாகிய சுஸ்ருதரின் சுஸ்ருத சம்ஹிதையாகும். இதனை சுஸ்ருத சம்ஹிதையின் ஆரம்ப சுலோகங்கள் உறுதி செய்யும். அக்னிவேஸ் சம்ஹிதை, அஷ்டாங்க ஹிருதயம் போன்றவற்றிலும் தன்வந்திரியின் கருத்துக்கள் அடங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்திய மரபில் கிறிஸ்துவிற்கு முற்பட்ட சகாப்தங்களில் மருத்துவம், சத்திர சிகிச்சை என்பன உட்பட்ட உயிரியல் விஞ்ஞானம் அல்லது ஆயுர்வேத விஞ்ஞானம் குறிப்பிடத்தக்க வளர்ச்சியைப் பெற்றிருந்தது. உயிர் வாழ்க்கையின் பல்வேறு அம்சங்களை குறிப்பாக தாவரங்கள், மிருகங்கள் மனிதன் என்பன பற்றிய ஆய்வாக இது வளர்த்தெடுக்கப்பட்டது. உயிர் வாழக்கை பற்றிய அறிவே ஆயுர்வேதம். அதன் உதவியினால் மனிதன் நீடிய உயிர் வாழ்க்கையைப் பெறலாமென்பது திவோதாஸ் தன்வந்திரி பகவனின் கூற்றாகும்.
தன்வந்திரியினால் வளர்த்தெடுக்கப்பட்ட ஆயுர்வேத மருத்துவ விஞ்ஞானம் நன்கு விருத்தியாக்கப்பட்ட முறையியலொன்றையும் உள்ளடக்கியிருப்பது குறிப்பிடத்தக்கது. இம்முறையியலில் நோக்கல் (பிரத்தியட்சம்), உய்த்தறிதல் - தொகுத்தறிதல் (அனுமானம்), ஒப்பிட்டு நியாயித்தல் (உவமானம்), ஆப்தனின் உபதேசம் ஆகிய பிரமாணங்கள் உள்ளடங்குகின்றன. தவறற்ற அறிவைப் பெறுதற்குரிய வாயில்களென்பதே பிரமான
இந்துக்கலைக்களஞ்சியம்

மென்பதன் தாற்பரியமாகும். காரணகாரியத் தேட்டம் முதலான பகுப்பாய்வு முறைகளால் பெளதீகம், உயிரியல், இரசாயனம் முதலாம் துறைகள் பற்றிய விசேட அறிவும், உடலியல், உடற்கூற்றியல், நோயியல், மருந்தியல், நோய்நிர்ணயவியல் முதலான பிரயோக அறிவும் பெறப்பட்டது. காலப்போக்கில் கோட்பாடும் - நடைமுறையுமாக இவ்வணுகுமுறை ஒன்றுடனொன்று தொடர்புடைய இரு வைத்திய முறைகள் ஆயுர்வேதத்தில் உருவாக வழியமைந்தது. அவை முறையே,
1. உடற்பலத்தைப் பாதுகாத்தல், மேம்படுத்தல், மற்றும்
நோய்த்தடுப்பு என்பனவற்றிற்குரிய மருத்துவம், 2. நோய் நிவாரணி மருத்துவம் என்பனவாகும்.
தன்வந்திரி, பரத்துவாச முனிவர் ஆகியோர் நோய் நிவாரணி மருத்துவத்தை ஏலவே குறிப்பிட்டபடி சல்லிய தந்திரம், சாலாக்கிய தந்திரம், காய சிகிச்சை பூதவித்யா, ரசாயன தந்திரம், வஜிகரண தந்திரம் முதலான எட்டு சிறப்புவகை மருத்துவ முறைகளாக வகுத்து விருத்தி செய்தனர். காயசிகிச்சை என்ற பொது வைத்தியமுறை மற்றும் அதனோடு தொடர்புடைய பூததந்திரம், ரசாயண தந்திரம், வஜிகரண தந்திரம் என்பனவற்றிலிருந்து சல்லிய தந்திரம் (சத்திர சிகிச்சை) சாலாக்கிய தந்திரம் ஆகியவற்றை வேறுபடுத்தி, அவற்றை சிறப்புவகை வைத்திய முறைகளாக விருத்தி செய்தவர் தன்வந்திரியாவார். அத்துடன் சத்திர சிகிச்சை என்ற சிறப்பான வைத்தியமுறையை ஸ்தாபித்துப் போதனை செய்து வந்தார். காலப்போக்கில் சத்திரசிகிச்சை வைத்தியர்கள் அனைவருமே தன்வந்திரி மருத்துவ சிந்தனா கூடத்தினரென அழைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இதனைப் போலவே பகவான் புனர்வசு ஐதரேயரைத் தலைவராகக் கொண்ட பிறிதொரு ஆயுர்வேத மருத்துவ முறையொன்றும் ஸ்தாபிக்கப்பட்டது. இதனை ஐதரேய ஆயுர்வேத மருத்துவ சிந்தனாகூடமெனப் பொதுவாக அழைப்பர்.
காசிராஜதிவோதாஸ் தன்வந்திரி, புனர்வசு ஐதரேய பகவான் ஆகிய இருவரும் கிறிஸ்து சகாப்தத்திற்கு முற்பட்ட காலப் பகுதியைச் சேர்ந்தவர்களென்பது பொதுவான அபிப்பிராயம். கி. மு. 3000 ஆண்டளவில் வாழ்ந்தவர்களென்ற கருத்துமுண்டு. ஆயுர்வேதம் எட்டு சிறப்புத் துறைகளாக தன்வந்திரியினால் பிரிக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்திய மருத்துவத்தில் விரைவான வளர்ச்சி ஏற்படலாயிற்று. இதனால் ஆயுர்வேத வைத்தியர்களின் நிபுணத்துவம் அஷ்டாங்க ஆயுர்வேதப் பிரிவுகளில் யாதேனுமொன்றில் சிறப்புத் தேர்ச்சி பெறுவதைச் சார்ந்திருந்தது. இதனை காசிராஜ திவோதாஸ் தன்வந்திரிக்கும் சுஸ்ருதர் முதலான அவரது மாணவர்களிற்கு மிடையிலான உரையாடலிலிருந்து அனுமானிக்கக் கூடியதாயுள்ளது. ஆயுர் வேதத்தைக் கற்பதற்காக தன்வந்திரியை அணுகிய சுஸ்ருதர் முதலாயினோர் அஷ்டாங்க ஆயுர்வேதத்தில் எதனைக் கற்க
145

Page 178
அவர்கள் ஆர்வமாயுள்ளனரென்பதை அறிய விரும்பியபோது
'சத்திர சிகிச்சை வைத்தியத்தைச் (சல்லிய தந்திரம், கற்பதற்காகவே நாமனைவரும் ஏகமனதாக இங்கு வந்துள்ளோம். எனவே அதனைக் கருத்திற்கொண்டு எமக்குப் போதனை செய்தல் வேண்டுமெனத் தெரிவித்தனர். இதற்குப் பதிலளித்த தன்வந்திரி சல்லிய தந்திரமே ஆயுர்வேதத்தின் அனைத்துப் பிரிவுகளிலும் மிகவும் பழைமையானது என்று கூறியதுடன், அவையனைத்திற்கும் மிக முக்கியமானதெனவும் தெரிவித்தனர்.
அக்னிவேஸ் சம்ஹிதையிற் காணப்படும் குறிப்புகளின் படி பொது மருத்துவர்களும், வைத்திய நிபுணர்களும் ஒரு நோயாளிக்கு சத்திர சிகிச்சை தேவைப்படுமெனக் கருதும் பட்சத்தில் அவர்களைச் சல்லிய தந்திரத்திற் தேர்ச்சி பெற்ற வைத்திய நிபுணர்களிடம் அனுப்பிவைத்தனர். அக்னிவேஸ் சம்ஹிதை ஆயுர்தேவ வைத்தியத்திற்குரிய கலைக்களஞ்சியமாகப் போற்றப்படுவது மட்டுமல்ல, காய
சிகிச்சைக்குரிய அதிகார பூர்வமான நூலாகவும் பயன்படுகிறது.
1. காசிராஜ திவோதாஸ் தன்வந்திரி புனர்வசு ஐதரேய பகவானுடைய சமகாலத்தவராக மட்டுமல்லாது சத்திரசிகிச்சை தொடர்பாக அவரால் அங்கீகரிக்கப்பட்ட ஒருவராகவும் திகழ்ந்தாரெனவும், 2. சத்திரசிகிச்சை செய்யும் வைத்தியமுறை இக் காலத்திலிருந்தே நன்கு ஸ்தாபிக்கப்பட்ட தொன்றாக விளங்கியதென்றும், 3. வாய், தொண்டை, மூக்கு, காது, கண் என்பன தொடர்பான சத்திரசிகிச்சை நிபுணர்கள், காயடித்தல், காரத்திரிட் பிரயோகம் என்பனவற்றில் வல்லுநர்கள் ஆகியோரும் இவ்வைத்தியப் பிரிவில் உள்ளடக்கப்பட்டிருந்தமையும், 4. தற்காலத்தைப் போலவே சத்திரசிகிச்சைக்கான மருத்துவச் கல்வியைப் பூர்த்தி செய்தவர்கள் குறிப்பிட்ட காலத்திற்கு தமது ஆசிரியரின் மேற்பார்வையில் உள்ளகப் பயிற்சியை முடித்துக் கொள்வது அவசியமானதென்றும் அக்னிவேஸ சம்ஹிதையிலிருந்து தெரிய வருகிறது.
இதுபோலவே மகப்பேறு சத்திரசிகிச்சை முறையும் மிகச் சிறப்பாக வளர்ச்சி பெற்றிருந்தது. அக்னிவேஸ் சம்ஹிதையிற் காணப்படும் குறிப்புகளால் இதனை மட்டுமன்றி, 1. அசாதாரணக் கருப்பம் காணப்படும் சந்தர்ப்பங்களிலும் தாயின் உயிருக்கு ஆபத்தேற்படும் சந்தர்ப்பங்களிலும் கருச்சிதைவு வைத்தியம் செய்தல், 2. அபூரணமான கருவளர்ச்சி ஏற்படும் சந்தர்ப்பங்களில்
குணப்படுத்தல், - 3. உரிய காலத்தில் பிரசவமாகாது காலம் தாழ்த்தும் சந்தர்ப்பங்களில் பிரசவத்தை உடனடியாக நிகழ்த்தும் வைத்தியமுறை,
f46
 

4. கர்ப்பத்தில் குழந்தையின் நிலையிடம் சரியானபடி
அமையாதவிடத்து அதனைச் சரிப்படுத்தும் வைத்தியம், 5. நஞ்சுக்கொடி தானாக வெளியேறாதவிடத்து அதனை
வெளியேற்றுதல், - 6. கருப்பத்தில் குழந்தை இறந்தவிடத்து அதனை
வெளியேற்றும் வைத்தியம், ஆகிய வைத்திய முறைகளும் அக்காலத்தில் வழக்கத்திலிருந்தமையை அறியக்கூடிய தாயிருக்கிறது. மனிதக் கருவின் உருவாக்கம், வளர்ச்சி, தொடர்பான தன்வந்திரியின் கருத்துக்கள் அக்னிவேஸ் சம்ஹிதையிலும் அது தொடர்பான விரிவான விளக்கங்கள் சுஸ்ருதரின் சம்ஹிதையிலும் காணப்படுகின்றன.
சத்திர சிகிச்சைக்கு முன்பதாக மேற்கொள்ள வேண்டி யவை, சத்திர சிகிச்சையின் போது மேற்கொள்ள வேண்டியவை, சத்திரசிகிச்சையின் பின்பு மேற்கொள்ளவேண்டியவை என்பன தொடர்பான நடைமுறைகள் பற்றியும் தன்வந்திரி மிக்க அக்கறை கொண்டிருந்தமை தெரிய வருவதுடன், சத்திரசிகிச்சையின் போது பலவகையான கருவிகள் பயன்படுத்தப்பட்டமை ஏற்புவலித் தடுப்பு, காயங்களிற்கான பலவகைக் கட்டுத் துணிகளின் பயன்பாடு, சத்திரசிகிச்சையின் போதும் அதன் பின்னரும் வலி நிவாரணியாக மதுசாரம் கலந்த பானங்களைப் பயன்படுத்தல், எலும்புமுறிவு, மூட்டுவிலகல் மருத்துவம், சிறுநீர்ப் பையில் உருவாகிய கல்லை அகற்றுதல், தோல் ஒட்டுதல் (Skin grafting). மூக்கறை வைத்தியம் என்பனவும் தன்வந்திரியின் மருத்துவத்திலும், மருத்துவ முறையிலும் உள்ளடக்கப் பட்டிருந்தமை தெரிய வருகிறது. இவை தவிர மாலைக்கண் நோய்க்கான மருத்துவத்தில் ஆட்டீரலைப் பயன்படுத்தல் பற்றிய தன்வந்திரியின் குறிப்புகள் உண்டு.
இயற்கை மெய்யியல் தொடர்பாக காசிராஜ தன்வந்திரி சாங்கிய மெய்யியற் கருத்துடையவராக இருந்தபொழுதும், நியாயதரிசனத்தின் தருக்க முறைகளையும், எண்ணக் கருக்களையும் அங்கீகரித்து ஏற்றுக் கொண்டவராகக் காணப்படுகிறார். திரவியம், குணம், கர்மம் (செயல் இயக்கம்), சாமானியம், விசேடம், மற்றும் சமவாயம், பாகம், சாம்யோகம், விபாகம் போன்ற நியாய எண்ணக்கருக்கள் முன்பதாகவே பரத்துவாச முனிவராற் போதிக்கப்பட்டதுடன், நியாயமுறையியல் சார்ந்த நிலைப்பாட்டை புனர்வசு ஐதரேயரும், சாங்கிய மெய்யியல் சார்ந்த நிலைப்பாட்டை காசிராஜ திவோதாஸ் தன்வந்திரியும் கொண்டிருந்தமை பற்றிய தகவல்களை அறியக்
கூடியதாயிருக்கிறது.
காசிராஜதிவோதாஸ் தன்வந்திரியும் அவரது மாணாக்கரும் மருந்துச்சரக்குகளின் உள்ளடக்கக் கூறுகள், அவற்றின் அணுத்திரண்மக் கட்டமைப்பு, பெளதீக- இரசாயணப் பண்புகள்,
உண்ணும் உணவும் குடிக்கும் மருந்துகளும் உடலில் ஏற்படுத்தும்
இந்துக்கலைக்களஞ்சியம்

Page 179
மாற்றங்கள், மற்றும் மருந்துகளின் செயற்பாடுகளை ரசம், குணம், வீரியம், விபாகம், பரபாவம் என்பனவற்றினடியாக விளக்கினர். இவ்விளக்கம் அணுவும், பரமாணுவும் பற்றிய நியாயக் கொள்கையினடியாக உருவாக்கப்பட்டதாகும்.
திரவியம் பற்றிய நியாயக் கொள்கையில் அசைக்க முடியாத நம்பிக்கையுடையவராகிய தன்வந்திரி, மருத்துவ விஞ்ஞானத்தின் அடிப்படையாக திரவியம் விளங்குகின்ற தென்றும், திரவியமும் அதன் பண்பும் பிரிக்க முடியாத சமவாயத் தொடர்பைக் காரணகாரிய அடிப்படையிற் கொண்டிருக்கிற தெனவும் ஏற்றுக்
لیے
ཡབཤདག་ జా
இந்திய மரபிற் பயன்படுத்தப்பட்ட சத்திர சிகிச்சைக் கருவிகள் சில
கொண்டிருந்தார். அதேவேளை மனிதனது உடல், புலன்கள், உளம், ஆன்மா என்பன தொடர்பாக சாங்கிய இயற்கை மெய்யியலின் நிலைப்பாட்டை ஏற்றுக் கொண்டவராகவும், ஆயுர்வேதத்திற்கான அடிப்படையை அது நல்குகிறதென்றும் கருதினார். பிரபஞ்சம் பற்றிய கொள்கை மற்றும் சடம், மனம், புலன்கள் ஆகியவற்றின் பரிணாமம் என்பன தொடர்பான சாங்கியக் கொள்கையை அடியொற்றியே ஆயுர்வேதம் தொடர்பான தனது ஆய்வுகளைத் தன்வந்திரி மேற்கொண்டிருந்தார். ஆதியான்மிகம், ஆதிபெளதீகம், ஆதிதெய்வீகம் என்ற சாங்கியத்தின் மூவகை வகையீட்டினடிப்படையில் மனிதருக்கேற்படும் நோய்களை வகைப்படுத்தினார்.
ஆதியான்மிக வகைக்குரிய நோய்கள் சரீரசம்பந்தமானவை, மனம் சம்பந்தமானவை என இருவகைப்படும். ரஜஸ், தமஸ் ஆகிய குணங்களின் சமநிலை கெடுவதால் ஏற்படும் நோய்கள் மனம் சம்பந்தமானவை. வாதம், பித்தம், கபம் என்பனவற்றின் சமநிலை கெடுவதால் ஏற்படும் நோய்கள் சரீர சம்பந்தமானவை. இவற்றை மேலும் மூன்றுவகையாக வகுக்கலாம். சந்ததிவழியாக வரும் நோய்கள். இதனை ஆதிபல பிரவிருத்தம் என்பர். இது தந்தை வழியாகவோ அல்லது தாய் வழியாகவோ வரும் நோயாகும். இரண்டாவது ஜன்மபல பிரவிருத்தம் எனப்படும். இது தாயின் கருப்பையிலிருந்து பிறப்பின் வழியாக ஏற்படுவது. மூன்றாவது வகை தோஷ பல பிரவிருத்தம் எனப்படும். தவறான
இந்துக்கலைக்களஞ்சியம்
 

உணவுப்பழக்க வழக்கம், நடவடிக்கை என்பனவற்றாலும், நலம்பேணும் நடத்தைகளை தவறாகப் பின்பற்றுவதாலோ அல்லது பின்பற்றாது விடுவதாலோ ஏற்படும் நோய்கள் இப்பிரிவிலடங்கும்.
பெளதீக ரீதியானதும் உயிரியல் ரீதியானதுமான தோற்றப்பாடுகளால் ஏற்படும் சூழல் தாக்கத்தால் ஏற்படும் நோய்கள் ஆதி பெளதீகம் என அழைக்கப்படும். அகத்தும், புறத்தும் ஏற்படும் காயங்கள், கூரிய கருவிகள், மிகை அழுத்தம், விஷஜந்துக்களாலும் காட்டு விலங்குகளாலும் ஏற்படும் காயங்கள் இப்பிரிவிலடங்கும்.
மூன்றாவது வகையான ஆதிதைவீகப் பிரிவில் மூன்று உபபிரிவுகள் உளது. இதில் முதலாவது வகை காலபலபிரவிருத்தம் என அழைக்கப்படும். காலநிலை வேறுபாட்டால் அதாவது வெப்பம், குளிர், ஈரப்பதன், வரட்சி, மழை, காற்று என்பனவற்றால் ஏற்படும் நோய்கள் இப்பிரிவிலடங்கும். தெய்வ பலபிரவிருத்தம் எனப்படுவது இரண்டாவது வகையாகும். மின்னல் அதிகவெப்பம் என்பனவற்றால் உடல் கருகல், பெரும் பரப்பு, தொற்று நோய்கள் இதிலடங்கும். முதுமையினால் ஒருவருக்கு ஏற்படக்கூடிய நோய்கள் சுபாவ பலபிரவிருத்தம் எனப்படும் மூன்றாவது வகையிலடங்கும்.
தோஷ கிரியாகாலம் பற்றிய திவோதாஸ் தன்வந்திரியின் ஆய்வுகளில் சாங்கிய பரிணாமக் கொள்கையின் திடமான செல்வாக்கிருப்பதை அவதானிக்கக் கூடியதாய் இருக்கிறது. கிரியாகாலம் பற்றிய தன்வந்திரியின் போதனையின் முக்கியத்துவம் தற்கால மருத்துவத்திலும், சத்திர சிகிச்சையிலும் உணரப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. நோயின் வரலாறு குறிப்பாக முடக்குவாத நோய்க்குரிய சிகிச்சைக்கு உதவியாயமைவது அவதானிக்கத்தக்கது.
தொகுத்து நோக்கின், தன்வந்திரியினாலும் அவரைப் பின்பற்றியவர்களாலும் ஆயுர்வேதம் தொடர்பாக நிகழ்த்தப்பட்ட கண்டுபிடிப்புகள் அனைத்துமே மருத்துவ விஞ்ஞானத்தின் முன்னோடியான சாதனைகள் என்று கூறலாம். (്ക0.കി.)
தனுசு
மார்கழி மாதம் சூரியன் கடந்து வரும் இராசியை தனுசு எனக் குறிப்பிடுவர். கால புருஷ இராசிகளில் ஒன்பதாவது இராசி. திரிகோண இராசி, குருவின் இராசி என்பதாலும் சிறப்புடைய இராசி. தனுசு என்பதற்கு கார்முகம், வில், சராசரம் என்ற பெயர்களும் உண்டு. தனுசு இராசியிற் இடம்பெறும் நட்சத்திரங்கள் மூலம், பூராடம், உத்தரத்தின் முதல்பாதம் என்பவை ஆகும். பறவையொன்றை அம்பால் வீழ்த்த வேடன் ஒருவன் குறிவைப்பது போல் இந்த விண்மீன் கூட்டம் காட்சியளித்ததால் முன்னோர் தனுசு (வில்) என்று பெயரிட்டனர். வேடனோ விலங்கின் உடலும் மனிதத் தலையும் உடையவன். அடுத்த இராசியாகிய மகரத்தில் திருவோணம் என்ற நட்சத்திரம்
fA7

Page 180
அமையும். அதனைச் சிறவோணம் என்றும் குறிப்பர். அதன் பொருள் சிறகுடையது என்பதாகும். எனவே வேடன் அம்பெய்யும் கருத்து வலுப்படுகின்றது. தனுசு என்னும் வீட்டில் சந்திரன் நிற்க ஒருவர் பிறந்தால் அவர் தனுசு இராசியில் பிறந்தவர் எனப்படுவார். இலக்கினம் அல்லது பிறந்த நேரம் தனுசில் அமைந்தால் தனுசு இலக்கினம் என்று கூறுவர். தனுசு என்பது வியாழனுக்குரிய வீடு; அதில் அவன் ஆட்சி பெற்றிருப்பதாக நூல்கள் கூறும். தனுசு இலக்கணத்தில் பிறந்தவர்களுக்குச் செவ்வாயும் சூரியனும் நல்ல பலனைத் தரும். தனுசு இலக்கினத்தில் பிறந்தபோது சூரியனும் புதனும் எங்கேனும் கூடி நின்றால் அரச யோகங்களை அடைவதுண்டு என்பது சோதிட நூற் கருத்து.
இவ் இராசியில் யோகக்காரர்கள் சூரியனும் செவ்வாயுமாகும். செவ்வாய் ஐந்துக்கதிபதி சூரியன் ஒன்பதிற்கதிபதி. ஆகவே பஞ்சமாதிபதி, வாக்கியாதிபதி என்ற முறையில் அவை நற் கோளாயின. இத் தனுசு இராசியில் பிறந்தவர்களின் குணநலன்களைப் பற்றி பல்வேறு சோதிட நூல்கள் எடுத்தியம்புகின்றன. அவையாவன உயரமாக, உடல் உறுதியும் வசீகரமுமான தோற்றமுடையவரென்றும் மனிதநேயம் மிக்கவர் என்றும் தனவான், போகவான், மித்திரவான் என்றும் ஏழையின் சிரிப்பிலே இறைவனைக் காண இயலும் என்ற பக்தி உடையவராகவும், எப்பொழுதும் சுதந்திரமாக இருக்கவே விரும்புவர் என்றும் பல அதிஷ்டங்களை, வாய்ப்புக்களை சந்திப்பவர் என்றும் கூறுவதுடன் இவர்கள் இளமைக்காலம் கஷ்டங்கள் நிறைந்ததாகவும் அமையும் எனவும் சோதிட நூல்கள் சில விவரிக்கின்றன. (தே. ஹ.)
656n266D/7
காந்தாரவிஷய என்பது பரதகண்டத்துப் புராதனமான தேசங்களிலொன்று. மகாபாரதம் முதலான இந்திய நூல்களிலும் கிரேக்க நூல்கள் சிலவற்றிலும் அதனைப் பற்றியும் அதன் மன்னர்களைப் பற்றியும் குறிப்புகள் காணப்படுகின்றன. காந்தார விஷயம் இந்திய துணைக்கண்டத்தின் வடமேற்குப் பகுதியில் அமைந்திருந்தது. இந்தியாவில் நுழையும் அந்நியப் படைகள் காந்தார தேசத்தைக் கடந்து செல்ல வேண்டும். அதனால் ஒரு கேந்திர நிலையம் என்ற வகையில் அது அதிக முக்கியத்துவம் பெற்றிருந்தது. தக்ஷசிலா என்பது அதன் தலைநகரம்.
அங்கு அமைந்திருந்த வித்தியாபீடங்கள், கலாக்ஷேத்திரங்கள் என்பவற்றின் காரணமாக தக்ஷசிலா நகரம் உலகப் பிரசித்திபெற்ற நகரங்களில் ஒன்றாக விளங்கியது. இந்தியாவின் வடமேற்குப் பகுதியிலுள்ள பிரதானமான வணிகப் பாதைகள் சந்திக்கும் இடமாகவும் அது விளங்கியது. கி. மு. ஆறாம் நூற்றாண்டிலே ஆட்சிபுரிந்த புக்குசாதி மகாராசன் மகதநாட்டுப் பிம்பிசாரனின் காலத்தவன். அவன் மகதநாட்டு மன்னனுக்குத் தூதுவர்களை அனுப்பினானென்று புராதனமான பெளத்த இலக்கியங்கள் மூலம் அறியமுடிகின்றது.
፲48

மகா அலெக்ஷாந்தர் இந்தியாமீது படையெடுத்துச் சென்ற சமயத்திலே, காந்தாரதேச மன்னன் வழங்கிய ஆதரவு அவனுக்கு மிகவும் சாதகமாயிருந்தது. கிரேக்க மன்னன் பொக்காராவிலே தங்கியிருந்தபொழுது காந்தார நாட்டு இளவரசனாகிய ஆம்பி என்பான் காந்தாரதேசத்தின் மீது படையெடுப்பு நடத்தாதவிடத்து தம்மால் உதவி வழங்க முடியுமென்று அலெகூடிாந்தருக்குச் செய்தி அனுப்பினான். மேலும் உபகாரமாக 65 யானைகள், அளவிற் பெரியனவாகிய பெருந்தொகையான செம்மறி ஆடுகள் 3000 நற்காளைகள் ஆகியவற்றையும் கிரேக்க வேந்தனுக்கு அனுப்பிவைத்தான்.
காந்தார மன்னனின் உதவியோடு கிரேக்க சைனியம் புரூரவன் என்னும் அரசனின் தேசத்தை ஆக்கிரமித்தது. ஜீலம், ராவி என்னும் நதிகளுக்கு இடைப்பட்ட வளமான நிலங்கள் புரூரவனின் ஆள்புலத்தில் அடங்கியவை. இரு அணிகளாகப் பகைவர்களின் படைகள் அவனுடைய நாட்டினுட் புகுந்தன. கடுஞ்சமரின் விளைவாகப் பகைவர் புரூரவனை வெற்றி கொண்டனர். தோல்வியிலும் கூடித்திரியன் ஒருவனுக்குரிய வீர உணர்ச்சியோடு புரூரவன் காணப்பட்டான். அதனாற் கவரப்பட்ட கிரேக்கப் பெருவேந்தன் புரூரவனுக்கு அவனது நாட்டை வழங்கிச் சமாதானஞ் செய்துகொண்டான்.
இந்தியாவிலே தான் பெற்ற வெற்றிகளைக் கொண்டாடும் வண்ணமாகவும் தனது மேலாதிக்கத்தினைப் பிரகடனப்படுத்தும் நோக்குடனும் தக்ஷசிலாவில் அலெக்ஷாந்தர் அரசர் பேரவை ஒன்றினைக் கூட்டினான். சிற்றரசர், பிரதானிகள் என்ற வகைகளைச் சேர்ந்த பலர் தக்ஷசிலாவிற்குச் சென்று கிரேக்க மன்னனுக்கு உபகாரமாகப் பொருள்களை வழங்கியதோடு தமது பணிவான விசுவாசத்தையும் வெளிப்படுத்தினர். மகா அலெக்ஷாந்தர் காலத்திலே ஆதிக்கப்படர்ச்சியின் பிரதான மையமாக அமைந்த தக்ஷசிலா நகரம் அதனையடுத்துள்ள நூற்றாண்டுகளிலே கிரேக்கப் பண்பாட்டு அம்சங்கள் இந்திய கலாசாரத்தோடு சங்கமாகிக் காந்தாரக் கலை என்னும் புதிய மரபொன்று மலர்ச்சி பெறுவதற்கு ஏதுவான களமாகியது.
சந்திரகுப்தன் காலம் முதலாகக் காந்தாரதேசம் மோரியப் பேரரசின் ஓரங்கமாகியது. விந்துசாரன் காலத்தில் தக்ஷசிலாவில் மோரியருக்கு எதிரான கிளர்ச்சி ஏற்பட்டது. அதனால் மோரிய மன்னன் இளவரசனாகிய அசோகனை இராசப்பிரதிநிதியாகத் தக்ஷசிலாவுக்கு அனுப்பினான். அசோகனுடைய ஆட்சிக் காலத்தில் மோரியப் பேரரசிலுள்ள தக்ஷசிலா, உஜ்ஜயினி, தோசலி சுவர்ணகிரி ஆகியவற்றில் அரசப் பிரதிநிதிகள் நியமிக்கப் பட்டிருந்தனர். வடமேற்கு இந்தியாவில் தக்ஷசிலா மோரியரின் பிரதானமான மையமாகவும் நிர்வாக நிலையமாகவும்
அமைந்திருந்தது.
சுங்கரின் ஆட்சிக்காலத்திலே தக்ஷசிலாவில் மகத மன்னர்களுக்கு எதிராக மீண்டும் மீண்டும் கிளர்ச்சிகள் ஏற்பட்டன. அங்கு இந்து கிரேக்கரதும் பின்பு குஷாணரதும் ஆதிக்கம் ஏற்பட்டது.
இந்துக்கலைக்களஞ்சியம்

Page 181
வெஸ்நகரிலுள்ள கழுகுத் தூண் சாசனம் ஒரு வழிபாட்டுச் சின்னமாக ஹெலியோதோர என்ற யவனரால் அமைக்கப்பட்டது. பாகவதனாகிய ஹெலியோதோர தக்ஷசிலா நகரத்தவன். அந்தியால்கித என்ற இந்து கிரேக்க அரசனின் தூதுவன், சுங்க வம்சத்து அரசனாகிய பாகவத்திர காசிபுத்திரனிடத்து அரசதுாதுவனாகச் சென்றவன். தக்ஷசிலாவிலுள்ள அதிகாரமும் செல்வாக்கும் பெற்றிருந்த கிரேக்கரான யவனரிடையே பாகவத சமயம் பரவியிருந்தமைக்கு ஹெலியோதோர பற்றிய சாசனக் குறிப்புச் சான்றாகின்றது.
யவனரின் ஆட்சிக் காலத்திலும் குஷாணரின் காலத்திலும் சமணம், பெளத்தம், சைவம், வைணவம் ஆகியவற்றைச் சார்ந்த சமய நிறுவனங்களும் கலாஷேத்திரங்களும் வித்யாபீடங்களும் பெருவளர்ச்சி அடைந்தன. காந்தாரக் கலையின் உற்பத்தி நிலையமாகவும் பிரதான மையமாகவும் தக்ஷசீலம் விளங்கியது. அக் கலையின் அம்சங்கள் தகூடிசீலத்திலிருந்து வட இந்தியாவிலும் மத்திய ஆசியாவிலும் பரவின. நெடுந்தூரப் பிரயாணங்களை மேற்கொண்டு வியாபாரஞ் செய்த வணிகரும் பெளத்த சங்கத்தாரும் அக்கலையின் அம்சங்கள் சர்வதேசப் பரிமாணம் பெறுவதற்கு ஏதுவாயிருந்தனர். அந்தச் சூழ்நிலை துருக்கியரின் படையெடுப்புகள் நடைபெற்ற காலம் வரை காணப்பெற்றது.
தக்ஷ சீலா அதன் வித்யாபீடங்களின் காரணமாகவே பரதகண்டத்து வரலாற்றிலே மிகுந்த சிறப்பினைப் பெற்றது. வடஇந்தியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் உயர்கல்வி கற்பதற்கு இளைஞர் தக்ஷசிலாவிற்குச் சென்றனர். அங்கு பல வகையான கல்வி நிலையங்கள் அமைந்திருந்தன. மூன்று வேதங்களையும் பதினெட்டுச் சாஸ்திரங்களையும் படிப்பதற்கென்று மாணவர்கள் தக்ஷகீலாவிற்குப் போனார்கள் என்று ஜாதகக் கதைகளிலே சொல்லப்படுகின்றது. மொழி, இலக்கியம், தத்துவம், மருத்துவம், யுத்தசாஸ்திரம், இயற்கை விஞ்ஞானம், ஹஸ்தி சாஸ்திரம், நுண்கலைகள் முதலியன தொடர்பான சாஸ்திர ரீதியான கல்வியினைப் பெற்றுக்கொள்ளும் வசதிகள் அங்கு காணப்பட்டன.
ஐந்நூறு (500) மாணவர்கள் அடங்கிய பாடசாலைகளைப் பற்றி ஜாதகக் கதைகள் குறிப்பிடுகின்றன. பிராமணரும் கூடித்திரியரும் அங்கு சென்று கற்றனர். மிகத் தூரத்திலுள்ள தலங்களிலிருந்து இராசகுமாரர்களும் பிரதானிகளின் புதல்வர்களும் அங்கு செல்வது வழக்கம். ஜாதகக் கதையொன்றிலே காசிராஜனாகிய பிரம தத்தனின் மகனைப் பற்றிய கதையுண்டு. பதினாறு வயதுடைய குமாரனை உயர்கல்வி கற்பதற்கென்று பிரமதத்தன் தக்ஷசிலாவுக்கு அனுப்பிவைத்தான். ஒரு சோடி செருப்புகளையும் ஒலைக்குடை ஒன்றினையும் 1000 கரிசாபணங்களையும் தன் மகனிடங்கொடுத்து அவனை அரசன் அனுப்பி வைத்தான்.
இந்துக்கலைக்களஞ்சியம்
 

தக்ஷ சிலாவுக்குப் போன காசிவாசியான ஜோதிபால என்னும் பிராமணகுலத்து இளைஞனைப் பற்றி ஒரு ஜாதகக்கதை உண்டு. காசிராஜன் தனது பொறுப்பிலே அவனை வில்வித்தையிற் பயிற்சி பெறுவதற்கு அனுப்பி வைத்தான். பயிற்சி முடிந்தபின் ஜோதிபாலவை அவனது ஆசிரியர் வெகுமதியான உபகாரங்களை வழங்கிக் கெளரவித்தார் என்று சொல்லப்படுகின்றது. தனது பதவிச் சின்னங்களான உடைவாள், அம்பு, வில்லு, கவசம், மரகதமணி ஆகியவற்றை அவனிடம் கொடுத்து, தனது பதவியினையும் ஆசிரியர் ஜோதிபாலாவிடம் ஒப்படைத்தார். அவரது பாடசாலையில் 500 மாணவர்கள் பயிற்சி பெற்றனர்.
தக்ஷசிலாவிலிருந்த மருத்துவக் கல்லூரி பரதகண்டம் முழுவதிலுமே மிகப் பிரசித்தமானது. மகதமன்னன் பிம்பிசாரனின் அரண்மனையில் மருத்துவ நிபுணராக விளங்கிய ஜீவகரின் புகழ் நாவலந்தீவு அனைத்திலும் பரவியிருந்தது. ஜீவகர் சீவனோபாயத்திற்காக மருத்துவம் கற்றவர். அவர் இளமைக் காலத்திலே தக்ஷசிலா நகரத்துக்குச் சென்று ஏழு வருடங்களாக மருத்துவக் கலையினை உலகப்பிரசித்தி பெற்றவரான ஒரு ஆசிரியரிடமிருந்து பயின்றவர் என்பது ஐதீகம்.
தக்ஷசீலாவிலே கல்வி பயின்றவர்களிற் சிலர் குருதகூழிணை கொடுத்துக் கல்வி பயின்றனர். பயிற்சியின் முடிவிலே 1000 பொற்காசு வழங்க வேண்டும் என்பது நியதி. காசு கொடுத்துப் படிக்கும் மாணவர்கள் ஆசிரியரின் இல்லங்களிற் சேவை புரிவதில்லை. இராசகுமாரர்களும் செல்வக் குடும்பங்களிற் பிறந்த இளைஞர்களும் காசு கொடுத்துப் படித்தனர். பணவசதியற்றோரும் கல்வி நிலையங்களிலே பயிற்சி பெற முடிந்தது. அவர்கள் முற்கால வழமைப்படி ஆசிரியருக்குச் சேவை புரிவதன் மூலம் கொடுப்பனவுகளை ஈடு செய்தனர்.
கல்லூரிகள் யாவும் தனியார் வசமானவை. சிலவற்றிலே வைதிகப் பிராமணருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது. வேறு சிலவற்றிலே அந்தணர், அரசர், வணிகர் ஆகிய முக்குலத்தவரும் பயிற்சி பெற்றனர். பல நிறுவனங்களில் எல்லோரும் எதுவித வேறுபாடுமின்றி அனுமதி பெற முடிந்தது. மாணவரிற் சிலர் கல்லூரிகளைச் சேர்ந்த விடுதிகளிலே தங்கியிருந்தனர். வேறு சிலர் தங்கள் வசிப்பிடங்களிலிருந்து பாடசாலைக்குச் சென்றனர். காசி இளவரசனாகிய ஜுன்ஹ என்பவன் தக்ஷசீலாவிலுள்ள கல்வி நிலையம் ஒன்றிலே பயிற்சி பெற்ற காலத்தில் ஒரு வீட்டிலே தனிமையில் வாழ்ந்தமை பற்றிய கதை உண்டு. மாணவரிற் சிலர் மனைவி மக்களோடு வாழ்ந்தனர். அத்தகையோரிற் சிலரின் கல்வி முன்னேற்றத்திற்கு மனைவிகள் சில சமயங்களிலே தடையாக இருந்தனர். கணவன் கல்வி நிலையம் செல்வதற்குப் புறப்படும் சமயங்களிலே தனக்குச் சுகவீனம் என்று பாசாங்கு செய்யும் மனைவியொருத்தி பற்றி ஜாதகக் கதைகள் குறிப்பிடுகின்றன. இராசகுமாரர் தக்ஷ சீலாவுக்குப் போகுமிடத்து சில சமயங்களில் அரசப்
f49

Page 182
பிரதானிகளின் குமாரர்களும் அவர்களோடு கூடிச் செல்வர். காசி, ராஜகிருகம் ஆகியவற்றிலிருந்து இராசகுமாரர்கள் சென்றபொழுது வேறு பலரும் அவர்களுக்குத் துணையாகச் சென்றனர். அரசரின் செலவிலே அத்தகையோரும் கல்வி பயின்றனர்.
விடுதிகளில் எல்லா மாணவர்களுக்கும் பொதுவான, எளிமையான உணவே வழங்கப்பட்டது. காலையுண்வாகக் குருவின் வீட்டிலே கஞ்சி வழங்கப்படும். விசேஷமான தினங்களிலும் வைபவங்களிலும் மாணவர்களை விருந்தினராக அழைப்பது சமூக வழமையாகும். அவ்வேளைகளிற் கருப்பஞ்சாறு, பாணி, தயிர், பால் என்பனவற்றோடு கூடிய சுவையுணவு தானமாக வழங்கப்படும்.
மாணவர் விடுதிகள் அமைந்த கல்லுரிகளிற் சேவல்களையும் தித்திரிப் பறவைகளையும் வளர்ப்பது வழக்கம். அதிகாலையிலே சேவல் கூவியதும் மாணவர்கள் படுக்கையை விட்டு எழுந்திட வேண்டும். பயிற்றப்பட்ட தித்திரிப் பறவைகள் வேதமந்திரங்களை உச்சரிப்பதன் மூலம் மாணவர் அவற்றை உச்சரிப்பதற்கு உதவி புரிந்தன.
கல்வித் துறையிற் பரதகண்டத்திலே ஒளிச்சுடராக விளங்கிய தக்ஷசீலா துருக்கியர் படையெடுப்புகளின் விளைவாக அதன் சிறப்புகள் எல்லாவற்றையும் இழந்தது. (#? Ly.)
தகஷினகைாைச மஹாத்மியம்
(வடமொழி)
இலங்கையில் இந்து சமயம் நீண்டகாலமாக நிலவி வந்துள்ளமை பற்றித் தொல்லியற் சின்னங்களும், தீபவம்சம், மகாவம்சம், சூளவம்சம் போன்ற பாளி நூல்களும், கோகில சந்தே சய போன்ற சிங்களத் தூதுப் பிரபந்தங்கள், தகூதிணகைலாச புராணம், கைலாயமாலை, வையாபாடல், யாழ்ப்பாண வைபவமாலை முதலிய தமிழ் நூல்களும், போர்த்துக்கீசர், ஒல்லாந்தர், ஆங்கிலேயர் ஆகியோர் எழுதியுள்ள நூல்கள், ஆவணங்கள் முதலியனவும் குறிப்பிடுகின்றன.
இவற்றைவிடப் பெளராணிக ரீதியிலே இலங்கையின் இந்துசமயத் தலங்கள் பலவற்றின் தொன்மையையும், சிறப்பையும் எடுத்துக்கூறும் தகூவிணகைலாச மஹாத்மியம் எனும் நூல் நன்கு குறிப்பிடற்பாலது. இது வட மொழியிலுள்ள 18 புராணங்களில் ஒன்றான ஸ்கந்த புராணத்திலுள்ளது. சென்ற நூற்றாண்டிலே கிரந்த லிபயில் இதன் மூலத்தையும், தாம் எழுதிய தமிழ் மொழிபெயர்ப்பையும் யாழ்ப்பாணத்திலே வதிரியைச் சேர்ந்த நாகலிங்கம் பண்டிதர் வெளியிட்டுள்ளார்.
தகூழிணகைலாசம் (தென்கைலாசம்) என்பது திருகோண மலையினை - திருக்கோணேஸ்வரத்தினைக் குறிக்கும்.
சிவபிரான் பார்வதி தேவியுடன் வீற்றிருந்து அருள்பாலிக்கும் வட
f50

கைலாசம் இமயமலையில் உள்ளது. இது போலச் சிறப்புள்ள தகூரிணகைலாசமாகிய திருக்கோணேஸ்வரம் இலங்கையின் கிழக்குக் கரையில் உள்ளது. இமயம் தொட்டு இலங்கை வரை பரந்து கிடக்கும் தென்னாசியாவிலே, இந்து சமயப் பரம்பலையும் சிறப்பையும் இது சுட்டுகிறது எனலாம். மாஹாத்மியம் எனும் வடசொல் பெருஞ்சிறப்பு, மகத்துவம், உயர்ந்த நிலை, பெருந்தன்மை, குறிப்பிட்ட தெய்வம், ஞானி அல்லது வேறு பொருளின் சிறப்புக்களைக் கூறும் நூல் எனப் பல பொருள்படும். இவற்றுள்ளே இறுதியாகக் கூறப்பட்டுள்ள பொருளிலேதான் இச்சொல் இங்கு பயன் படுத்தப்பட்டுள்ளது. இச்சொல் தமிழிலே மருவி மான்மியம் எனவும் வரும். இந்நூலிலே தகூதிணகைலாசமாகிய திருக்கோணேஸ்வரச் சிறப்பு மட்டுமன்றி ஈழத்திலுள்ள புராதன திருத்தலங்கள் பலவற்றின் சிறப்புக்கள் பெளராணிக ரீதியிலே எடுத்துக் கூறப்பட்டுள்ளன. திருக்கோணேஸ்வரத்தை மையமாக வைத்தே ஏனைய தலங்கள் பற்றி ஆசிரியர் வருணித்துள்ளார். அதேவேளை திருக்கோணேஸ்வரம் அமைந்துள்ள இலங்கை முழுவதையும் குறிப்பிடும் சொல்லாகவும் இதனை (தக்ஷண கைலாசம்)க் கருதினர் எனவும் கொள்ளலாம். இத்தகைய மாஹாத்மியங்கள் தமிழகத்திலே விஜயநகரப் பேரரசு காலத்திலே (கி.பி. 14-17ஆம் நூற்றாண்டு வரை) தமிழிலும், வடமொழியிலும் எழுதப்பட்டன. எடுத்துக் காட்டுகளாக வடமொழியிலே மதுரையின் சிறப்புக்களைக் கூறும் ஹாலாஸ்ய மஹாத்மியம், சிதம்பரத்தின் சிறப்புக்களைத் தமிழிலே கூறும் சிதம்பர மான்மியம் போன்றவற்றைக் குறிப்பிடலாம்.
இந்நூல் செய்யுள் வடிவில் அமைந்துள்ளது. பூர்வ, உத்தர என இரு காண்டங்களாகவும் (1-11, 12-22), 22 அத்தியாயங்களாகவும் வகுக்கப்பட்டுள்ளது. இதிலுள்ள 1859 செய்யுட்களிலே 1809 செய்யுட்களே கிடைத்துள்ளன. எனினும் இதிலே 27 அத்தியாயங்களும் சுமார் 2500 செய்யுட்களும் இன்று கிடைக்காத மூலப்பிரதியில் இருந்தன எனப் பதிப்பாசிரியர் கூறியுள்ளார். இவர் தமக்குக் கிடைக்கக் கூடிய ஏட்டுப் பிரதிகளை ஒப்பிட்டே நூலினைப் பதிப்பித்துள்ளார். இதிலே புராண வரலாறு தொடக்கம் பொன்னாலயப் பெருமை வருணணை வரை 22 அத்தியாயங்கள் உள்ளன. தலபுராண மரபையொட்டி இந்நூல் எடுத்துக்கொண்ட பொருள் பற்றிக் கூறுகின்றது. இதன்படி நைமிஷாரண்ய வாசிகளாகிய செளனகர் முதலான முனிவர்கள் கோமதி ஆற்றங்கரையிலே பெரிய யாகம் செய்து கொண்டிருந்தபோது அங்கு சூத பெளராணிகர் வந்தார். அவர்கள் அவரை வரவேற்று உபசரித்து அவரிடம் பூர்வ கைலாசம், தோற்றம், வைபவம் முதலியன பற்றிக் கேட்டனர். புராணங்கள் உலக நன்மைக்காகவே அருளிச் செய்யப்பட்டன. அவை பலவாயிருப்பினும் அவைகளின் சாரமுடையதை எடுத்து தகூதிணகைலாச மஹாத்மியம் என்று என்னால் விளக்கப் படுகிறது என்றார்.
இலங்கையினைக் குறிக்கும் பல பதங்களிலே லங்கா, ரத்னதுவிபம், சிங்களம், சிங்களதுவிபம் முதலியவை வடமொழி, பாளி மரபை ஒட்டியவை. இம் மரபையொட்டியே இலங்கையை
இந்துக்கலைக்களஞ்சியம்

Page 183
ஆசிரியர் சிங்களதேசம் எனக் குறிப்பிட்டுள்ளார் எனலாம். இங்குள்ள மக்களைச் சிங்களவர், தமிழர் எனப் பாகுபடுத்திக் கூறிலர். இச்சொற்களே காணப்படவில்லை. எனவே இலங்கையைக் குறிக்கும் சொல் ஆகுபெயராக இங்கு வாழும் மக்களைப் பொதுவாகக் குறிப்பாக இந்துக்களையே குறிக்கின்றது எனலாம். ஏனெனில் பெளத்தம் முதலிய பிற மதங்கள் பற்றிய பெயர் குறிப்புகளில் இல்லை. இலங்கையின் தனிச்சிறப்பு எடுத்துக் கூறப்படுகின்றது. எடுத்துக்காட்டாக முதலாம் அத்தியாயத்திலே 'அங்கம், வங்கம், கலிங்கம் முதலான 56 தேசங்களிலும் இலங்கை மேலானது. இவ் இலங்கை சர்வலோகத்தைப் பார்க்கிலும் பெரிதும் பெருமையுடையது.”
“தேசங்களுள் எல்லாம் உத்தம தேசம் இலங்க்ை என உணர்த்த மகிமை வாய்ந்த தகூதிணகைலாசமானது சிவபிரானது சாந்நியத்திற்குக் காரணமாகும். அதன் பெருமையைக் கூறவல்லார் சிவனேயாகும். ஆதலால் உங்களுக்குத் தகூழிணகைலாச மகிமையைச் சங்கிரகமாகக் கூறுவேன்.” என அவர் கூறுகிறார். தேசாந்தரம் செல்லுவோரும் தீவாந்தரம் செல்லுவோரும் புண்ணியசாலிகளாவர் என அவர் கூறுவதிலிருந்து துணிகரமாகப் பிறநாடுகளுக்குச் செல்லுதல், கடல் கடந்து செல்லுதல், குறிப்பாகத் தீர்த்த யாத்திரை செய்தல் முதலியன மேலான விழுமியங்களாகக் கொள்ளப்படுதலை அவதானிக்கலாம். இலங்கையின் தலச்சிறப்புகளைக் கூறி இவற்றிற்கு நிகராக இந்தியாவிலும் தலங்கள் இல்லை என்று ஆசிரியர் கூறுகிறார். கிரித்திரயமுரைத்த அத்தியாயத்திலே “இலங்கை சர்வதேசங்களிலும் மேலானது இதிலே பல தலங்களும் தீர்த்தங்களும் உள்ளன. இவற்றிற்கு உவமை மூவுலகத்திலும் அறியப்படவில்லை” என அவர் தலபுராண மரபையொட்டிக் குறிப்பிட்டு, ஷேத்திரத்தின் மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகியனவற்றின் சிறப்புக்களைப் பொதுவாகக் கூறியுள்ளார்.
நூலாசிரியர் இந்து சமயத்தினை முழுமையாகவே நோக்கியுள்ளார். சிவபெருமான், சக்தி, முருகன், விஷ்ணு, பைரவர் முதலிய கடவுளர்க்கான திருத்தலங்கள், தீர்த்தங்கள் முதலியனவற்றை விவரித்துள்ளார். அவர் குறிப்பிட்ட இந்து சமயத் தலங்கள் குறிப்பிட்ட பிராந்தியத்திலன்றி இலங்கையின் பல்வேறு பகுதிகளிலும் உள்ளன. நெடுங்காலமாக இந்து சமயம் இலங்கையின் பல இடங்களிலே நிலவிவந்துள்ள வரலாற்றுண்மை இதன் மூலமும் தெளிவாகின்றது. "விநாயகர், கந்தர், முருகர், ஐயனார், இராமர், அனுமான், காளி, சுராரி, துர்க்கை, சிவன், உமை, விஷ்ணு, இலகூடிமி, பிரமா, சரஸ்வதி, பைரவர், வீரபத்திரர் எனும் தேவர்களும் மகிழ்வோடு இத் தேசத்தில் இருக்கிறார்கள், இந்தத் தேசத்திற்கு இணையான தேசம் இல்லை இல்லை' எனக் கூறப்படுகின்றது.
இலங்கையிலுள்ள திருத்தலங்களைச் சிவஷேத்திரங்கள், விஷ்ணு ஷேத்திரங்கள், சுப்பிரமணியர் ஷேத்திரங்கள் எனக்குறிப்பிட்டு, விநாயகர் முதலான கடவுளர்க்குரிய ஆலயங்கள் பல உள்ளன எனவும் நூலாசிரியர் கூறியுள்ளார்.
இந்துக்கலைக்களஞ்சியம்

சிவத்தலங்களிலே தகூழிணகைலாசமாகிய திருக்கோணேஸ்வரம், திருக்கேதீஸ்வரம். முன்னேஸ்வரம் முதலியனவும், முருகத்தலமான கதிர்காமம் போன்றவையும், விஷ்ணு தலங்களான வல்லிபுரம் பொன்னாலை முதலியனவும் குறிப்பிடற்பாலன. இவற்றைவிட அநுராதேசர் (அநுராதபுரம்), வாரிவனநாதர் (சாவகச்சேரி), சுயம்புநாதர் (ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர்), சட்டநாதர் (நல்லூர்), சிவனொளிபாதமலை, நவக்கிரி (புத்தூர்), அஸ்வகிரி (குதிரைமலை) முதலிய கடவுளர் தலங்கள் பற்றித் தனித்தனியாக வருணித்துள்ளார். மேலும் கீரிமலை மாவிட்டபுரம், பளை வயிரவர் ஷேத்திரம் முதலியனவும், வேறு பலவும் கூறப்பட்டுள்ளன. இந்நூலிற் கூறப்பட்டுள்ள சிலவற்றை இன்று அடையாளம் காணுவது மிகக் கஷ்டமாகும். தகூதிண கைலாசம் பற்றிய வருணனையில் இராவணன் பற்றிய மரபுகளும், ஐதீகங்களும் இடம் பெற்றுள்ளன.
தலச் சிறப்புகளுடன் தீர்த்தச் சிறப்புகளும் கூறப்பட்டுள்ளன. பத்துக் கங்கைகளில் ஆறு இலங்கையிலுள்ளன. இவற்றுள் மகாவலிகங்கை முக்கியமானது. சம்புவின் (சிவனின் அநுக்கிரகத்தால்) மகாவலிகங்கை, மாணிக்ககங்கை, காவேரி கங்கை (மல்வத்து ஒயா) ஆகிய நதிகள் மூன்றும் சிவனொளிபாதமலையில் சுபநாளில் சுபலக்கினத்தில் சதா காலமும் பெருகிக் கொண்டிருக்கும் எனக் கூறப்படுகினறது. சிவனொளிபாதமலையில் சிவபிரானின் திருவடிகள் இரண்டும் எப்போதும் இருக்கும். மேலும் திருக்கேதீஸ்வரத்திற்குரிய பாலாவித் தீர்த்தமும், சட்டநாதருக்குரிய யமுனா தீர்த்தமும் குறிப்பிடற்பாலன.
குறிப்பிட்ட சில தலங்கள் பற்றிய தோத்திரங்களும் உள்ளன. எடுத்துக் காட்டுகளாக திருக்கோணேஸ்வரம், திருக்கேதீஸ்வரம், முன்னேஸ்வரம், நல்லூர் சட்டநாததேஸ்வரம் பற்றியனவற்றைக் குறிப்பிடலாம். தமிழிலுள்ள யாழ்ப்பாண வைபமாலை கூறும் நல்லூரிலுள்ள கோயில்களிலே சட்டநாதர் கோவில் மட்டுமே இதில் கூறப்பட்டுள்ளது.
இந்நூல் யாழ்ப்பாணத்திற்கு வெளியேயுள்ள திருக்கோணேஸ்வரத்தை முக்கியமான பொருளாகக் கொண்டு எழுதப்பட்டமையாற் போலும் யாழ்ப்பாணத்திலும் பார்க்க வெளியேயுள்ள முக்கியமான சில திருத்தலங்கள் பற்றி இந்நூல் விரிவாகக் கூறியுள்ளமை குறிப்பிடற்பாலது. நல்லூர்க் கந்தசுவாமி கோயில் போன்ற சில முக்கியமான தலங்களும், தேவிநுவரையிலிருந்த பெரிய விஷ்ணு கோவில் போன்றவையும் இந்நூலில் இடம்பெறவில்லை. எவ்வாறாயினும் இலங்கையிலுள்ள பல புராதன இந்துத் திருத்தலங்கள் பற்றிக் கூறும் ஒரேயொரு நூல் இதுவே என்பது நன்கு குறிப்பிடற்பாலது. கி.பி.15ஆம் நூற்றாண்டிலே சிங்கள மொழியில் எழுதப்பட்டுள்ள நம் பொத்த எனும் சிறுவர்க்கான நூலிலே இலங்கையிலுள்ள பெளத்த தலங்கள் பற்றிய குறிப்புகள் உள்ளன. இலங்கையிலுள்ள பெளத்த தலங்கள் பற்றி நம்பொத்த கூறுவதுபோல இந்நூல் இலங்கையிலுள்ள இந்துத் தலங்கள் பற்றிக் கூறுகின்றது.
f5广

Page 184
தகூதிணகைலாஸ மஹாத்மியம் ஸ்கந்தபுராணத்தின் பகுதியென்பது ஒரு ஐதீகம். ஆனால் அது ஆதார பூர்வமானதன்று. நூலின் பொருள் மரபும் அதற்கு அடிப்படையான சிந்தனைகளும் அது பெளராணிக சிந்தனைகளிலிருந்து விலகியவொன்று என்பதைத் தெளிவாக உணர்த்துகின்றன. அது 18ஆம் நூற்றாண்டில் இலங்கையிலே உருவாக்கப்பட்ட நூலென்று தமிழ், சமஸ்கிருத மொழிவழி இலக்கியங்களிற் புலமையுள்ள வித்துவான்கள் சிலர் கருதுவர். அதில் ஆதாரபூர்வமான குறிப்புகள் கிடைப்பதில்லை; இலங்கையிலுள்ள திருத்தலங்களின் முக்கியத்துவம் பற்றிய ஒரு ஒப்பீட்டு நோக்கிலான நோக்கினை அந்நூல் பிரதிபலிக்கின்றது; என்றவாறான அபிப்பிராயம் அறிஞர் மத்தியில் நிலவுவதும் ஈண்டு கருதத்தக்கது. (627 47)
தகஷினாக்னி
“நிஷேகாதி ச்மசானாந்தம்" - தாயின் வயிற்றில் கருத் தோன்றிய காலத்திலிருந்து, உடல் மயானத்தில் அக்கினிக்கு இரையாகும் வரை அந்தணர்களுக்கு நாற்பது கர்மாக்கள் விதிக்கப்பட்டுள்ளன. நிஷேகம் கர்ப்பாதான மந்திரம் அக்னி சாகூழியாகவே செய்யப்படுகின்றது. உடல் தோன்றி வளர்ந்து மூத்து இறுதியாக அக்னியிலேயே அடங்குகின்றது. பிறப்பி லிருந்து இறப்புவரை அக்னியே இந்துக்களுக்கு உதவுகின்றது.
வேத மதத்திற்கு அக்னியே முக்கியமானது. எந்தக் கடவுளைக் குறித்து யாகம் செய்தாலும் அக்னி மூலமாகவே அந்தந்தக் கடவுளர்க்குரிய அவிர்பாகம் எடுத்துச் செல்லப் படுகின்றது. குமரப் பெருமான் அக்னியிலிருந்தே தோன்றியவன். அம்பிகை விளக்கிலே ஜோதிவடிவமாக விளங்குகின்றாள். திருவண்ணாமலைத் தலம் நெருப்பிற்கு உரியது. இறைவனே அக்னி மலையாகக் காட்சி தருகின்றான். ருத்ரஸ9க்தங்கள் அக்னி சம்பந்தமாகவே காணப்படுகின்றன. திருமாலை அக்னி நாராயணன் என்றே அழைக்கின்றனர்.
ஏறக்குறைய நானூறு வகை யாகங்கள் வேதத்தில் இருப்பதாகக் கூறுகின்றனர். ஒரு குறிப்பிட்ட பயனைக் கருதிச் செய்வது காம்ய கர்மா. உலக நலத்திற்காகவும், ஆன்மத் தூய்மைக்காகவும் செய்தே தீரவேண்டியது நித்யகர்மா. இதற்கு நாள் தோறும் என்பது பொருளல்ல. அழியாத, நலத்தை தரக் கூடியது என்பதே பொருளாகும்.
இப்படி நித்ய கர்மாக்களாகச் செய்ய வேண்டியவை இருபத்தியொரு யாகங்கள். ஏழு பாக யஞ்ஞங்கள் ஏழு ஹவிர்யக் ஞங்கள் ஏழு ஸோம யக்ஞங்கள் என அவை பகுக்கப்பட்டுள்ளன. அஷ்டகை, ஸ்தாலிபாகம், பார்வணம், சிராவணி, ஆக்ர ஹாயணி சைத்ரி, ஆச்வயுஜி என்ற ஏழும் பாக யஜ்ஞங்கள்.
அக்னியாதானம், அக்னிஹோத்ரம், தர்சபூர்ண மாசம், ஆக்ரயம் சாதுர்மாஸ்யம், நிரூடபசுபந்தம், ஸெளத்ராமணி என்ற ஏழுமஹா யஜ்ஞங்கள், அக்னிஷ்டோமம், அத்யக்னிஷ்டோமம்,
f52
 

உக்த்யம் ஷோடசி, வாஜபேயம், அதிராத்ரம், அப்தோர்யாமம் என்னும் ஏழும் ஸோமயஜ்ஞங்கள்.
பஞ்ச மகா யஜ்ஞங்கள் எனப்படும் பிரம்மயக்ஞம் (வேதம் ஒதுவது), தேவயக்ஞம் (பூஜையும் யாகமும்), பிதிர் யக்ஞம் (தர்ப்பணம்), மனுஷயக்ஞம் (விருந்தோம்பல்), பூதயக்ஞம் (ஜீவஜந்துக்களுக்கு உணவளிப்பது) முதலியனவும் யாகங்களே.
திருமணம் அக்னி சாகூழியாக நடத்தப்படுகின்றது. அந்த அக்னியிலேயே ஒளபாஸனாக்னி எடுக்கப்பட்டு அணையாமல் நாளும் அதனை இல்லறத்தவன் பாதுகாக்க வேண்டும். இது அவனுடைய புதல்வனுக்கும் புதல்வனின் புதல்வனுக்கும் முறிவுபடாமல் தலைமுறையாகச் செல்லும்.
இந்த ஒளபாஸன அக்னி இரண்டாகப் பிரிக்கப்பட வேண்டும். அதற்கென்று அக்னி ஆதானம் என்று ஒரு சடங்கு உண்டு. இப்படிப் பிரிந்ததில் ஒன்று க்ருஹ்ய காரியங்களைச் செய்யப் பயன்படும் க்ருஹ்யாக்னியாகின்றது. மற்றையது ச்ரெளத கர்மமாகச் செய்யப்பயன்படும் ச்ரெளதாக்கினியாகின்றது. கிரஹஸ்தன் இந்த இரண்டு அக்னிகளையும் நிரந்தரமாகக் காப்பாற்றி வரவேண்டும்.
க்ருஹ்யாக்னி தான் ஒளபாஸாக்னி. இது ஒரே குணடத்தில் உள்ளபடியால் ஏகாக்னி என்று பெயர் பெறும், ச்ரெளதாக்னி மூன்று அக்னிகளாக மூன்று குண்டங்களில் இருக்கும். அதனால் "த்ரேதாக்னி’ என்றும் அதற்குப் பெயர் உண்டு. அந்தணர்களைக் கூறும் பொழுது முத்தீ ஒம்புபவர் எனக் குறிப்பிடுவார்கள். அம் மூன்று அக்னிகளில் ஒன்று கார்ஹ பத்யம் - அதாவது இல்லத்தின் அதிபதியான இல்லறத்தானுக்கு உரியது. இந்த கார்ஹபத்ய குண்டத்தில்தான் ‘ச்ரெளதாக்னி எப்பொழுதும் அணையாமல் எரிந்து கொண்டிருக்க வேண்டும். இது முழுவட்ட வடிவமாக இருக்கும். இதிலே நேராக ஹோமம் செய்யக் கூடாது. இதில் இருக்கும் அக்னியை அமாவாசை தோறும் செய்யும் பிண்ட பித்ரு கர்மாவிற்காகவும் சில சிறுதெய்வ ஹோமங்களிற்காகவும் இரண்டாவதான ஒரு குண்டத்தில் எடுத்துவைத்துப் பண்ண வேண்டும். இந்த குண்டம் தெற்கே அமைந்திருப்பதால் இந்த அக்னிக்கு தக்ஷணாக்னி’ என்று பெயர். இது அரை வட்ட வடிவமாக அமைந்திருக்கும்.
பொதுவாக மற்ற எல்லாத் தேவைகளுக்கும் செய்கின்ற ஹோமங்களை மூன்றாவதான “ஆஹவனீய’ அக்னியிற் செய்யவேண்டும். இந்த அக்னி கிழக்கே அமைந்திருக்கும். கார்ஹபதிய அக்னியிலிருந்து கிழக்குக் குண்டத்தில் ஆஹவனிய அக்னியை உண்டாக்க வேண்டும். வடஇந்தியர் “ஹவன்” என்று யாகத்தைக் குறிப்பிடுவார்கள். இந்த ஹவனமே ஆஹவனியமாகும். இது சதுர வடிவமாக அமைந்திருக்கும். தேவதைகளை மனங்குளிரச் செய்யும் ஸோமயாகம் முதலிய எல்லாப் பெருவேள்விகளையும் ஆஹவனிய அக்னியை இல்லத்திலிருந்து யாகசாலைக்கு எடுத்துச் சென்று அதில் நிகழ்த்துவார்கள். (62s. 6062/.)
இந்துக்கலைக்களஞ்சியம்

Page 185
öl
தாசமார்க்கம்
மனிதப் பிறவி எடுத்த ஒவ்வொருவரும் முத்தியின்பத்தை வேண்டி நிற்பதை இலக்காகக் கொண்டிருத்தல் வேண்டும் என்ற இந்திய தத்துவங்களின் வலியுறுத்தலுக்கேற்ப சைவசித்தாந்தமும் சிவனடியைச் சேருகின்ற முத்தியின்பத்தையே தமது வாழ்வின் இலட்சியமாகக் கொண்டு விளங்குகின்றது.
முத்தியானது இந்திய தத்துவங்களிடையே வீடுபேறு, விடுதலை, நிர்வாணம், அருகநிலை எனப்பலவாறாகச் சுட்டப்படுகின்றது. இந்த வகையில் பெண்களிடம் பெறும் இன்பமே முத்தியென உலகாயதரும், யாகாதி கருமங்களைச் செய்து ஸ்வர்க்காதிலோக போகங்களை நுகர்தலே முத்தியென மீமாம்சகரும், ஐந்துகந்தம் அறக் கெடுதலே முத்தியென பெளத்தரும், எண்குணமடைதலே முத்தியென ஜைனர்களும், கல்போற் கிடத்தலே முத்தியென வைசேடிகரும், தத்துவங்களைப் பகுத்துணரும் விவேக ஞானத்தை முத்தியென சாங்கியரும், வேதாந்த விசாரத்தினால் தோன்றிய ஞானத்தால் மாயைக்கு வேறாகிய பிரமரூபம் நான் என்றறிதலை முத்தியென அத்வைதிகளும், சிவசாரூப முதலிய பதவிகளை செவ்விதாகப் பெறுதலே முத்தியென சிவசமவாதிகளும், சிவனடியைச் சேருவதே முத்தியென சித்தாந்த சைவரும் விளக்கி நிற்பர். இவ்வாறு முத்தி பற்றிய கருத்துக்கள் பலவிதமாகப் பேசப்பட்டாலும் உயிரானது ஈடிணையற்ற உயர்நிலையாகிய இன்ப நிலையை அடைதலே முத்தியென்கிறது சைவசித்தாந்தம்.
உள்ள மலம் நீக்கி ஒங்கு சிவானந்த வெள்ளந் திளைத்துவாய் மேவுதலே - கள்ளவிழ் பூங் கொத்தார் விரிசடையார் கூறு சிவாகமத்தில் சித்தாந்த முத்தியெனத் தேறு'
எனச் சிவனடியைச் சேர்ந்து சிவனும் ஆன்மாவும் ஒன்றுமன்றி இரண்டுமன்றியுள்ள அத்துவித நிலையைப் பெறுதலே முத்தியென முத்திநிச்சயம் விளக்கி நிற்கச் சமயங்கள் சுட்டுகின்ற இவ்வுயிர் நிலையை அடைவதற்குரிய வழிகளாக சரியை, கிரியை, யோகம். ஞானம் என்ற நால்வகைப் பாதங்கள் சைவசித்தாந்திகளால் விளக்கப்படுகின்றன. இவை முறையே தாசமார்க்கம், சற்புத்திரமார்க்கம், சகமார்க்கம், சன்மார்க்கம் என அழைக்கப்படுகின்றது. இவற்றை கர்மம், பக்தி, யோகம், ஞானம் எனக் கூறுவாருமுளர். இந்நெறிகளில் ஒழுகியோர் முறையே சாலோக, சாமீப, சாரூப, சாயுச்சிய பதவிகளை அடைவதாகச் சைசித்தாந்தம் சுட்டுகின்றது. இவை நான்கு சாதனங்கள் நான்கு மார்க்கங்கள் எனவும் பெயர் பெறுகின்றன. இவற்றைத் திருநெறி சைவத்திறன் எனவும் வழங்குவர். சித்தாந்த சாத்திரங்களில் முடிமணியாகத் திகழும் சிவஞான போதத்தின் வழிநூலான சிவஞானசித்தியாரில் சைவமார்க்கம் என அருணந்தி சிவாச்சாரியார் சுட்டுவதும் இவ்விடத்தில் குறிப்பிடத்தக்கதாகும். இவை நான்கு நன்மார்க்கம் எனவும் பெயர் பெறுகின்றன. இவை இறைவனை அடைவதற்குரிய நேர்வழிகளாகும்.
இந்துக்கலைக்களஞ்சியம்

இவ்வழிகளில் சரியை, கிரியை, யோகம் ஆகிய மூன்றும், ஞானத்துக்கு வழிகாட்டுவனவாய் அமைய ஞான நெறியானது முத்திக்கு வழிகாட்டுவதாகின்றது. இந்நால்வகை மார்க்கங்களும் ஒன்றோடொன்று நெருங்கிய தொடர்புடையன.
விரும்புஞ் சரியை முதல் மெய்ஞ்ஞானம் நான்கும் அரும்பு மலர் காய் கனி போலன்றோ பராபரமே
எனத் தாயுமானவர் நான்கு மார்க்கங்களையும் அரும்பு, மலர், காய், கணிக்கு ஒப்பிட்டுள்ளமை அரும்பின்றி மலரும், மலரின்றிக் காயும், காயின்றிக் கனியும், உருவாக முடியாதது போல் சரியையின்றிக் கிரியையும், கிரியையின்றி யோகமும், யோகமின்றி ஞானமும் செயற்பட முடியாது என்பதைப் புலப்படுத்துகின்றது. சரியை, கிரியை, யோகம் என்ற மூன்று நிலைகளும் வினை முறையின் வளர்ச்சிப்படிகளாக எடுத்தாளப்படுகின்றன.
இங்ங்னம் ஆன்மாக்கள் உயர்நிலையை அடைவதற்குரிய முதற்படி நிலையாக அமைவது சரியை நெறியில் விளங்கும் தாசமார்க்கமாகும். இது ஆன்மாக்களின் விதிமுறைகளுக்கேற்பத் திருக்கோயிலில் அமைந்துள்ள இறைவனது உருவத் திருமேனியை நோக்கிச் செய்யும் வழிபாடாகும். இதனைச் சரியை தேகத்தால் வழிபடல் என்ற சிவதர்மவிசார அடி தெளிவுறுத்துகின்றது. சரியை என்பதைச் சுத்த சைவத்து உயிர் எனச் சுட்டுகின்ற திருமூலர் அடுத்து வரும் பாடலில் அதனைத் தெளிவுறுத்தவும் விழைகின்றார். இறைவனுக்கு அடிமையாதலைத் தாசமார்க்கம் என்கிறார் வள்ளலார். கைத் திருத்தொண்டு செய் கடப்பாடு என இறைவனை உளமார நினைந்து நாவாரப் போற்றுவதுடன் இணைகின்றது. தன்னலத்திற் பாறையாகிவிட்ட மனம் இத் தொண்டினால் கனிவடைவதில் வியப்பேதுமில்லை எனலாம். சரியை மார்க்கத்தில் இறைவனை அணுகும்போது திருக்கோயிலில் ஆற்றப்படுகின்ற சரீரச் செயற்பாடுகள் குறிப்பிடத்தக்க இடத்தை வகிக்கின்றன.
நித்தலு மெம் பிரானுடைய கோயில் புக்கு புலர்வதன் முன் அலகிட்டு மெழுக்குமிட்டு பூமாலை புனைந்தேத்தி புகழ்ந்து பாடி
எளியனல் தீபமிடல் மலர் கொய்தல் அளிதின் மெழுக லதுதுர்த்தல் வாழ்த்தல் பளிமணி பற்றல் பன்மஞ்சன மாதி தளி தொழில் செய்வதும்'
பெரும்புனல் காலை மூழ்கிப் பித்தர்க்குப் பத்தராகி அரும்பொடு மலர்கள் கொண்டாய் கர்வத்தை உள்ளே வைத்து விரும்பு நல் விளக்குத் தூபம் விதியினா லிடுவதும் தாத மார்க்கஞ் சாற்றில் சங்கரன்றன் கோயில் தலம் அலகிட்டு இலகு திருமெழுக்குஞ் சாத்திப் போதுகளுங் கொய்து பூந்தார் மாலை கண்ணி'
153

Page 186
புனிதற்குப் பல சமைத்துப் புகழ்ந்து பாடி திதில் திரு விளக்கிட்டு திருநந்த வனமும் செய்வதும்.
எனப் பலவாறாகச் சரியை செயற்பாடுகள் எடுத்தாளப்படுகின்றன. கோவிலுக்குப் பூக் கொய்தல், தீபமிடல், கோயிலை மெழுகுதல், பூமாலை புனைதல், நந்தவனம் அமைத்தல் போன்ற இத் தொண்டுகளில் உள்ளடங்கும். புறநிலை வழிபாட்டுக்குத் தகுந்த எடுத்துக் காட்டாகச் சரியை நெறி அமைகின்றது. இது தடத்த நிலைச் சிவனின் உருவ வழிபாட்டை ஆதாரமாகக் கொண்டு விளங்குகின்றது. மலங்களை ஒர் கட்டுக்குள் கொண்டு வருவதன் ஆரம்பப் படிநிலையாக உருவ வழிபாடு அமைகின்றது. சரியை நெறியில் அமைகின்ற செயற்பாடுகள் அகநிலைப் பக்குவத்துக்குரிய முன்னோடியாகத் தென்படுகின்றன. உயிர்கள் அனைத்தையும் ஒக்கப் பார்க்கும் அன்பு முழு முதலாகிய சிவனை உளங்கொண்டு செய்யும் தொண்டாக வெளிப்படும்போது சிவபுண்ணியமாகிறது. ஒட்டையும் பொன்னையும் ஒன்றாகவே நோக்கி இறைபணியையே தன் கடனாகக் கொண்டு வாழ்ந்துகாட்டிய திருநாவுக்கரசரின் வாழ்க்கை நெறி,
மத்தமா மலரொடு மதிபொதி சடைமுடி அடிகள் தம்மேல்
சித்தமாம் அடியவர் சிவகதி பெறுவது திண்ணம் அன்றே என்ற திருஞானசம்பந்தரின் பாடலடிகளினூடாக உறுதிப்படுத்தப்படுகின்றது. சிவன் என்னும் நாமம் தனக்கேயுடைய செம்மேனி யெம்மானின் சேவடிக்கு அன்பு பூண்டு அவன் நாமம் பிடித்துத் திரிந்து பன்னாள் அழைத்துப் பரகதியடைந்த நாவுக்கரசரின் திருத்தொண்டு சிவன் கழலடிக்கேயுரியது என்பதை,
நம்மையுடையவர் கழற்கீழ் நயந்த திருத்தொண்டாலே
இம்மையினும் பிழைப்பதென எம்போல்வாருள் தெளியச்
செம்மை புரி திருநாவுக்கரசர் என்ற அப்பூதியடிகள் வாயிலாக சேக்கிழார் வெளிப்படுத்தியுள்ள பாடல்களிலிருந்து அறியக் கிடக்கிறது. நாவுக்கரசர் அன்னை வயிற்றில் மன்னிய நாள் தொட்டு மாதேவன் வார்கழற்கு அலந்து அன்பாய் நயந்து உருகினார் என்பது,
கருவற்ற நாள் முதலாக உன் பாதமே காண்பதற்கு உருகிற் றென்னுள்ளமும் நானுங் கிடந்தலந்தெய்த் தொழிந்தேன்'
எனவும் கருவாய்க் கிடந்துன் கழலே நினையுங் கருத்துடையேன்” எனவும் கருவுற்றிருந்துன் கழலே நினைந்தேன்' எனவும் பாடும் தேவார அடிகளாற் புலப்படுகின்றது. சிவன் தன்னை ஓர் அடியவனாகக் கொண்டு திருவடியில் ஏற்று அருளியதை, ஏற்றாய் அடிக்கே, எனத் தம் முதற் பதிகத்திலே பாடியது இறுதிப் பாசுரத்தில் புண்ணியா உன்னடிக்கே போதுகின்றேன்' எனப் புகலூரிலிருந்து அருளியது வரை அவரது தேவாரம் அனைத்திலும் பிரதிபலிக்கக் காணலாம். - -
154

கோடையில் இளைப்பாறிக் கொள்ளும் வகையெதிர் கிடைத்த குளிர்மரம் போல பிறவிப் பாதையில் துன்ப வெயிலால் துவண்டுலர்ந்து அழுந்துகின்ற உயிருக்கு இறைவன் திருவடி நிழல் தந்து இதம் செய்கின்றான். இறைவனின் திருவடி நிழலே இவ்வுயிர்க்கு முடிவாய் நிலையாய் உரிமையாய் அடைய வேண்டிய பேரின்ப வீடாக விளங்குகின்றது.
நிழலருமை வெயிலிலே நின்றிடின் ஈசன்
கழலருமை வெவ் வினையிற் காண்மின்' என்ற ஒளவையாரின் வாக்கிலமைந்த இரு உண்மைகள் மூலம் ஒருமைப்படுத்திக் காட்டுகின்றார்.
சரியை, கிரியை, யோகம், ஞானம் ஆகிய நான்கு மார்க்கங்களும் உபாயநிலை, உண்மைநிலை என இரு பகுப்புக்கு உட்படும் வகையில் ஒவ்வொரு நெறியும் இவ்விரு பகுப்புக்கு உட்படும்போது செய்யும் தொண்டுகள் சரியையிற் சரியை எனவும் இறைவனின் திருமேனிகளுள் ஒன்றைப் பூசித்தல் சரியையிற் கிரியையாகவும் கடவுளைத் தியானம் செய்தல் சரியையில் யோகம் எனவும் இங்ங்ணம் தியானம் செய்வதால் ஏற்படும் அனுபவ உணர்வு சரியையில் ஞானம் எனவும் எடுத்தாளப்படுகின்றன. சரியை, கிரியை, யோகம், ஞானம் ஆகிய நான்கு மார்க்கங்களிலும் நிற்போர் அடையும் பதவிகளும் அதனால் அடையும் நிலைகளும் வேறுபடுகின்றன. தன்மையில் சரியை வழிபாட்டினர் சாலோகம் என்ற முத்தியையும் கிரியை நெறி நின்றார் சாரூபம் என்ற முத்தியையும் ஞான நெறி நின்றார். சாயுச்சிய முத்தியையும் பெறுவர் என்பது சைவ சித்தாந்திகளின் நம்பிக்கையாகும்.
அகவுணர்வு வெளிப்பாடான முத்தியினை அதன் நனவை கொண்டு பதமுத்தி, பரமுத்தி என இரண்டாகப் பகுப்பர். உளநிலையின் ஞானவுணர்வுக்கு ஏற்பவே இம்முத்திப் பாகுபாடு ஏற்படுகின்றது எனலாம். பரிபூரண மற்ற குறைஞான முத்தியை பதமுத்தி என்றும் பரிபூரண ஞானத்தால் ஏற்படும் ஆனந்தமே பரமுத்தி என்றும் கூறப்படுகின்றது. சரியை, கிரியை, யோகமாகிய மூன்று நிலைகளுக்கூடாகவும் கிடைக்கின்ற சாலோக, சாமீப, சாரூப முத்திகள் பதமுத்திகளாகவும் ஞான மார்க்கத்தாற் கிடைக்கும் முத்தி பரமுத்தியாகவும் எடுத்தாளப்படுகின்றன. பதமுத்திகள் மூன்றும் இறைவனை நெருங்கச் செய்வனவே தவிர பூரணமானவையாக மாட்டா என்பதும் இவ்விடத்தில் சுட்டத்தக்கதாகும்.
எனவே யாவற்றையும் துறந்து உலகத்து அவாக்களைக் களைந்து அனைத்தையும் ஒன்றெனக் கருதும் மலபரிபாக நிலையடைந்து இரு வினையொப்புப் பெற்று சத்தினி பாதமடைந்த நிலையினதாக ஞான நிலை துலங்குகின்றது. இந்நிலையில் அனைத்திலும் இறைவனைக் கண்டு பிறிதொன்றையும் காணாத இறைவனுடன் இரண்டறக் கலக்கும் சாயுச்சிய முத்தி திகழுகின்றது. பிரமஞானமாகிய பேரின்பத்தை தூயவுணர்வினன் ஆதல் மூலமே பெற முடிகின்றது. இந்த இன்ப நிலை துன்பமற்ற பேதங்களற்ற பேரின்பநிலை என்பது சைவசித்தாந்திகளின் நம்பிக்கையாகும். (ந7. ஞா)
இந்துக்கலைக்களஞ்சியம்

Page 187
65/7t-606
இராமகாதையில் வரும் பெண்மாந்தர் பலர். புகழுற்றோர், புகழற்றோர் என இரு நிலைகளில் இப்பெண்மாந்தர் படைக்கப்பட்டுள்ளனர். உந்நத வாழ்வை வாழ்ந்து காட்டுபவர்களாகப் புகழுக்குரிய மாந்தரும், காப்பியத்தை நடத்திச் செல்வதற்குரிய சிறந்த கருவியாகப் புகழற்ற மாந்தரும் அமைந்துள்ளனர். புகழற்றோராகப் படைக்கப்பட்ட பெண்மாந்தரில் ஒருத்தி தான் தாடகை. அழகியாகப் பிறந்து அரக்கியாக்கப்பட்டு, அழிந்துபோன வரலாற்றை உடையவள்.
வரலாறு
இராமாயணப் பால காண்டத்தில் இவள் பற்றிய கதை அமைந்துள்ளது. கருத்த மேனியள், பெருத்த உருவத்தள், நீள் முடியினள், தாழ் சடையினள், எரி கண்ணினள், ஈரமில் நெஞ்சினள், இன்னுயிர் கொன்றுழலும் வாழ்க்கையள் எனத் தாடகையைப் பற்றிக் கம்பர் குறிப்பிடுகிறார். ஆனால் இத்தாடகை பிறக்கும் பொழுது பேரழகுடன் பிறந்தவள். பெருந்தவத்தின் பயனாய்த் தோன்றியவள். மத யானைகள் ஆயிரத்தின் ஆற்றலை ஒருங்கே பெற்றவள். பெருந்தவஞ் செய்த குறுமுனியின் சினத்தால் தன் பேரழகை இழந்து பேயுருக் கொள்கிறாள் தாடகை,
தெளிந்த அறிவுடையவனும், தளர்ச்சியுறாதவனும் வெற்றியாளனுமாகிய சுகேது என்னும் இயக்கன், நான்முகனைப் பன்னெடுங்காலம் வேண்டி தவமேற்கொண்டு அழகிய மங்கையை மகளாகப் பெறுகிறான். இம்மங்கை, குன்றா இளமையும் மயில் போலும் சாயலும், இலக்குமியைப் போன்ற பொற்பும், மிக்க வலிமையும் உடையவளாய்த் திகழ்கிறாள். இயக்கர்கள் தலைவனான சுந்தன் என்பவனை மணந்துகொண்டு மாரீசன், சுவாகு எனும் இரு மக்களைப் பெறுகின்றாள். மாயையிலும், வஞ்சனையிலும், எல்லையில்லாத வலிமையிலும் சிறந்து விளங்கும் இருமக்களைப் பெற்றதனால் களிப்புமிகக் கொண்ட சுந்தன், குறுமுனி அகத்தியரின் உறைவிடத்தை உருக்குலைக்கின்றான். மிக்க தவத்தையுடைய குறுமுனி சினம் மிகத் தழல் எழ விழித்ததால் சுந்தன் நீறாகிறான் (சாம்பலாகிறான்). கணவன் நீறானது கண்ட பொற்றொடி (தாடகை) தன் மைந்தர் இருவரொடும் அகத்தியரை அழிக்க முனைகிறாள். அகத்தியர் சினம்கொண்டு மூவரையும் அரக்கராகும்படி மொழிகிறார் (சபிக்கிறார்). அரக்க வடிவம் பெற்ற மாரீசனும், சுவாகுவும் இராவணனிடம் உறவு கொண்டாடி அவனிடம் அடைக்கலமாகின்றனர். கணவனை இழந்து, மக்களைப் பிரிந்து, அரக்க வடிவமெய்திய தாடகை அழல் எனப் புழுங்கும் நெஞ்சினளாய் வெஞ்சினம் மீதூர உயிர்க்கொலை புரிகிறாள். முடிவில் இராமன் கணையால் உயிர்விடுகிறாள்.
முனிவர்களது யாகத்தைக் குலைத்து வந்த தாடகையை அழிக்க நேரிட்ட போது பெண்ணிடம் போரிடுவதை எண்ணித் தயங்கி நிற்கிறான் இராமன்.
இந்துக்கலைக்களஞ்சியம்

பெண்ணென மனத்திடைப் பெருந்தகை நினைந்தான் எனக் காகுத்தனின் மனநிலையைப் படம்பிடித்துக் காட்டுகிறார் கம்பர். காகுத்தனுக்கு ஏற்பட்ட தயக்கத்தைப் புரிந்துகொண்டு, பல்வேறு நிலைகளில் தாடகையைப் பற்றிக் கருத்துரைத்து இராமனைப் போரிட வைக்கிறார் விசுவாமித்திரர். விசுவாமித்திரரின் அறிவுரையின் விளைவால் அறம் உணர்ந்த இராமன் தாடகையைக் கொல்லுகிறான்.
ஜய னங்கது கேட்டறன் அல்லவும் எய்தி னால்அது செய்கவென்-றேவினால் மெய்ய நின்னுரை வேதமெனக்கொடு செய்கையன் றோவறஞ் செயுமா றென்றான்.
அறனல்லாத செயலைச் செய்யும்படி தாங்கள் ஆணையிட்ட போதிலும் தங்கள் செயலை வேதம் என மதித்து நிறைவேற்றுவதுதான் நான் அறத்தைச் செய்யும் வழி எனக் காகுத்தன் விசுவாமித்திரரிடம் உரைப்பது உணரத்தக்கது.
பெண்ணெனக் கருதிக் காகுத்தன் தயங்கி நிற்பதை அறிந்த விசுவாமித்திரர், தாடகை பெண்ணல்லள் என்பதை நிலைநாட்ட முனைகிறார். முதலில் தாடகையின் தோற்றத்தை எடுத்துரைத்து இவள் பெண்ணல்லள் என்பதை உணர்த்துகிறார். சினத்தால் துடிக்கும் புருவங்களையும், கோரைப் பற்கள் விளங்கும் குகை போன்ற வாயையும் தீப்பொறிபறக்கும் கண்களையும் உடையவள், செம்பட்டை மயிரினள், இரண்டு யானைகளின் துதிக்கையினைப் பின்னி அவற்றை LMIT 60) 60 lLIT 5 அணிந்துகொண்டு, ஏழு உலகங்களிலும் உள்ள உயிர்கள் அஞ்சி நடுங்கும்படி ஆரவாரித்துக் கொண்டுவரும் இயல்பினள், இயமன் போன்ற கொடிய தோற்றமுடையவள்; அளவும், உருவும் அறியமுடியாத பாவங்களெல்லாம் திரண்டு ஒரு பெண் வடிவங்கொண்டு வந்தாற்போல அலையும் தன்மையுடையவள். கடலைப் போன்ற தோற்றமுடையவள்; கங்கணமாகப் பொருந்திய பாம்பையும், சூலப்படையையும் கொண்ட கையையுடையவள் எனத் தாடகையின் தோற்றத்தைக் கூறிக்கொண்டு வந்த விசுவாமித்திரர் இறுதியாக, மைவரை நெருப்பெரிய வந்ததென வந்தாள் என முடிக்கிறார். கரிய மலை ஒன்று எரிந்து கொண்டே நடந்து வந்ததுபோல் வந்தாள் என உரைப்பது தாடகையின் கொடுந்தோற்றத்தைப் புலப்படுத்துகிறது.
இராமனுக்குத் தாடகையின் தோற்றத்தைப் புலப்படுத்திய பின்னர் அவளின் உடல் வலிமையை உணர்த்துகிறார். சிலம்பு, வீரக்கழல், ஆகியவற்றை அணிந்துள்ள பாதத்தைப் பூமியில் பதியும்படி மிதிப்பதனால் ஏற்பட்ட குழிகளில் கடல்நீர் பாய்கிறது; அஞ்சத்தக்க அந்தகனும் (இயமன்) இவளைக் கண்டு அஞ்சிப் பாதாளத்தில் மறைந்து கொள்ளுகிறான்; நிலைபேறுடைய மலைகள் யாவும் இவள் நடந்துவரும் வேகத்தில் இவள் பின்னே தொடர்ந்து வருகின்றன.
சிலம்புகள் சிலம்பிடை செறித்தகழ லோடும் நிலம்புக மிதித்தன னெளித்தகுழி வேலைச் சலம்புக வனற்றறுக னந்தகனு மஞ்சிப் பிலம்புக நிலைக்கிரிகள் பின்றொடர வந்தாள்
T55

Page 188
எனக் காகுத்தனுக்கு உணர்த்துகிறார் விசுவாமித்திரர். தாடகையின் கை, வாய் ஆகியவற்றின் உயர்ச்சி, உறுதி பற்றியும் எடுத்துரைக்கிறார். பூமியைப் பெயர்த்து எடுக்கவும்; கடலை முழுவதும் அள்ளிப்பருகவும்; வானத்தை இடித்துத் தள்ளவும் செய்யும் ஆற்றலையும் உடையவள் தாடகை, இவள் தரும் உதையால் ஆகாயமளாவிய மலைகளும் சிதறிப் பொடிப் பொடியாகின்றன எனக் குறிப்பிட்டுத் தாடகையின் உடல் வலிமையினைப் புலப்படுத்துகிறார்.
மென்மையாக இருக்க வேண்டிய உள்ளம் வன்மையாக மாறியிருப்பதை அடுத்து உணர்த்துகிறார் விசுவாமித்திரர். உயிர்களைக் கொன்று திரியும் தொழிலை வாழ்க்கையாக அமைத்துக் கொள்ளும் அளவிற்குத் தாடகையின் உள்ளம் வன்மையாக மாறிவிட்டது. நாட்டில் உள்ள உயிர்களைக் குலங்களோடு கொன்று திரிகிறாள்; எனவே இவளுடன் போரிடத் தயங்காதே எனச் சான்று காட்டிச் சாற்றுகிறார் விசுவாமித்திரர்.
தாடகையின் தோற்றக் கொடுமையையும் உடல், உள்ளத்தின் வன்மையையும் எடுத்துரைத்து, மென்மையும் பெண்மையுமற்ற இவள் பெண்ணல்லள் எனப் புகன்றும் காகுத்தன் கணை தொடுக்கவில்லை. தாடகை பெண்ணுருக் கொண்டிருந்தாலும் இவளது செயல்கள் இவளைப் பேராண்மை மிக்கவளாகக் காட்டுகின்றன என்பதைப் புரிய வைக்க முனைகிறார் விசுவாமித்திரர் வலிமைமிக்க ஆடவர் அனைவரும் இவள் பெயரைக் கேட்டவுடன் தங்கள் ஆண்மையை இழக்கின்றனர் எனின் இவளது பேராண்மையை என்னென்பது இந்திரன், வானவர், தானவர் முதலிய அனைவரும் இவளிடம் தோற்றோடி விட்டனர் எனத் தாடகையின் ஆண்மையை எடுத்துரைக்கிறார். இவளைக் கொல்வதற்கு ஆண்மக்கள் ஒருவருமில்லை; அதனாலேதான் உன்னை அழைத்து வந்தேன் என்பதையும் குறிப்பால் உணர்த்துகிறார். தறுகண்மையும், உடல் வன்மையும், உள்ள உறுதியுமே ஒருவருக்கு ஆண்மையைத் தரும்; ஆண் வடிவமன்று என்பதைக் காகுத்தனுக்குப் புரிய வைக்கிறார் விசுவாமித்திரர். தாடகை பெண்ணாகப் பிறந்திருந்தாலும், கொடுந்தோற்றத்தையும், வலிமையான உடலையும் வன்மையான உள்ளத்தையும், ஆற்றல் பெற்ற அனைவரையும் அழிக்கும் ஆண்மையும் பெற்று விளங்குகிறாள். பேராண்மை மிக்கவளாக விளங்கும் இவள் நின்னோடு போரிடத் தகுதியானவள்தான்; எனவே இவளைப் பெண்ணென நினைத்துத் தயங்கி நிற்காதே எனச் சான்றுகளைப் பலபட எடுத்துரைத்து இராமனைப் போரிடத் தூண்டுகிறார்.
தாடகையைப் பற்றிப் பல உரைத்தும் இராமன் பெண்ணென நினைத்துத் தயங்கி நிற்கிறான். இதனை உணர்ந்த விசுவாமித்திரர் கூற்றுவனை விடக் கொடியவளாகத் தாடகையைக் காட்டி இராமனைப் போரிடத் தூண்டுகிறார். வரையறுக்கப்பட்ட வாழ்நாள் முழுமையும் கழிந்த பிறகு தான் கூற்றுவன் உயிர்களைக் கவர்வான். கொடுந்தொழிலைச் செய்யும் கூற்றுவனும் அவனுக்குரிய அறநெறியைப் பின்பற்றுகிறான். ஆனால் அறனல்லாதன செய்யும் இத்தாடகையோ உயிர்களின் வாடையை நுகர்ந்ததும் அவற்றைக் கொன்று தின்னும்
156

இயல்பினள். கூற்றுவனின் செயலிலும் ஓர் ஒழுங்குமுறை, அறம் உள்ளது. இவளிடம் அதுகூட இல்லை என்பதை,
சாற்று நாளற்றது எண்ணித் தருமம்பார்த் தேற்றும் விண்ணென்ப தன்றி இவளைப்போல் நாற்றங் கேட்டலுந் தின்ன நயப்பதோர் கூற்றுண்டோ சொலாய் கூற்றுறழ் வேலினாய்
என உணர்த்தியும் இராமன் போரிட இசையவில்லை.
தாடகையுடன் போரிட்டால் அவளைக் கொல்ல நேரிடும்; அதனால் பெண்கொலை புரிந்த பழி தன்னைச் சேரும் என நினைத்துத்தான் இராமன் போரிடாமல் இருக்கிறான் என உணர்ந்த விசுவாமித்திரர் அவ்வெண்ணத்தை மாற்ற முனைகிறார். சூழ்நிலை கருதிப் பெண்கொலை பரிந்தவர்கள் புகழ்ச்சிக்கு உள்ளாகியுள்ளனர் எனச் சான்றுகளைச் சாற்றுகிறார். திருமால், இந்திரன் ஆகியோர் பெண்கொலை புரிந்து புகழடைந்தனர் எனப் புகழ்கிறார்.
காரணங்கள் பல கூறியும் இராமன் போரிடத் தயங்குவது கண்ட விசுவாமித்திரர், இறுதியில் தாம் பாதிக்கப்பட்டதை எடுத்துக் கூறித் தம்மைக் காப்பது அவனது கடமை என உணர்த்துகிறார். இதுவரை பிறர் பாதிக்கப்பட்டதை எடுத்துக் கூறியவர்; இறுதியாகத் தாமே பாதிக்கப்பட்ட நிலையை உணர்த்தி இராமனைப் போரிடத் தூண்டுகிறார். தாமும், தம்மையொத்த முனிவர்களும் தாடகையாலே பட்ட துன்பம் மிகுதியென்றும், தங்களையெல்லாம் கோது என எண்ணி உண்ணாமல் ஒதுக்கினாளேயல்லாமல் உண்ணக் கூடாது என்பதற்காக அல்ல என்பதையும்,
திதென்றுள்ளவை யாவையுஞ் செய்துளமைக் கோதென் றுண்டில எளித்தனையே குறை யாதென் றென்னுவ திக்கொடி யாளையும் மாதென் றெண்ணுவதோ மணிப் பூணினாய்
எனப் புலக்கிறார்.
என்னைக் காப்பது உனக்கு அறமல்லவா? என்பதைக் குறிப்பாக உணர்த்துகிறார். தம்மைக் காப்பதோடு மட்டுமல்லாது உலகத்து உயிர்களையும் காக்கும் கடமை காகுத்தனுக்கு உண்டு என்பதையும் நுட்பமாக உணர்த்துகிறார். ஒலிக்கின்ற வலிய சக்கரத்தால் உலகத்தைக் காத்த இட்சுவாகுமரபில் தோன்றியவன் இராமன்; எனவே உலகத்து உயிர்களைக் காப்பது இராமனின் கடமை; அதுவே அவனது அரச அறம் என்பதைச் சுட்டிக் காட்டுகிறார். பெரியவர்களோடு பகைகொண்டு, இவ்வுலகத்தில் நிலைபெற்ற பல உயிர்களையும் அழித்துத் தான் மட்டும் அழியாது நின்று, அறம் கெடுப்பவளுக்கு ஆண் வடிவமும் வேண்டப்படுவதோ!
கறங்க டற்றிகிரிப்படி காத்தவர் பிறங்க டைப்பெரி போய்பெரி யோரொடும் மறங்கொ டித்தரை மன்னுயிர் மாய்த்துநின் றறங்கெ டுத்தவட் காண்மையும் வேண்டுமோ?
இந்துக்கலைக்களஞ்சியம்

Page 189
எனச் சுட்டியுரைக்கிறார் விசுவாமித்திரர். இங்கு மூன்று அறங்களை உணர்த்தி இராமனைப் போரிடத் தூண்டுகிறார். 1. ஆசிரியனாகிய தன்னைக் காப்பது (மாணவன் என்ற
நிலையில்)
உலகத்து உயிர்களைக் காப்பது (அரசன் என்ற நிலையில்) 3. அறம் கெடுப்பவளை அழிப்பது (அரசன்/வீரன் என்ற
இருநிலைகளில்) ஆகிய நிலைகளில் அறம் உணர்த்தியும் இராமனின் தயக்கம் தளரவில்லை.
தாமும் தம்மையொத்த முனிவர்களும் துன்புறுத்தப்பட்டதை எடுத்துக்காட்டி அறம் அழிக்கப்படும் நிலையை உணர்த்தியும் இராமன் பெண்ணெனக் கருதிப் போரிடத் தயங்குவதைக் கண்ட விசுவாமித்திரர் ஒரு முடிவுக்கு வருகிறார். காரணங்கள் பல காட்டிப் பயனில்லை என்பதை உணர்ந்து, முடிவற்ற அறத்தின் தன்மையை இராமனுக்கு உணர்த்திப் போரை மேற்கொள்ளச் செய்கிறார். எனக்கும், என்னைப் போன்ற முனிவர்களுக்கும் தீங்கிழைத்ததால் இவள்மேல் சினங்கொண்டு இவளைக் கொல்லச் சொல்லவில்லை என்பதை முதலில் தெளிவுபடுத்துகிறார். அதாவது தன்னலம் காரணமாகத் தாடகையைக் கொல்ல நினைக்கவில்லை என்பதை அழுத்திக் கூறுகிறார். நல்லறத்தின் அடிப்படையில், ஆழ்ந்து அறிந்த பின்னரே தாடகை அழிக்கப்பட வேண்டும் என்னும் முடிவுக்கு வந்ததாக விசுவாமித்திரர் குறிப்பிடுகிறார். உலகத்து உயிர்களைக் காப்பதற்காக, அதாவது பொதுநலம் கருதியும் அறம் கருதியும் தாடகை அழிக்கப்படவேண்டும் என்பதை இராமனுக்கு விசுவாமித்திரர் உணர்த்தியதை,
ஈறி னல்லறம் பாத்திசைத் தேனிவட் சிறி நின்றிது செப்புகின் றேனலேன் ஆறிநின்ற தறனன் றரக்கியைக் கோறி யென்றெதிரந்தனன் கூறினான்.
எனக் கம்பர் குறிப்பிடுவது உணரத்தக்கது. முடிவற்ற நல்ல அறத்தை ஆராய்ந்து கூறுகிறேன் என விசுவாமித்திரர் விளம்பிய பின்னரே காகுத்தன் கணை தொடுக்கிறான். அறத்திற்கோர் ஆழிபோன்ற இராமனுக்கு அறத்தின் திறம் உணர்த்தி மறத்தில் ஈடுபட வைக்கிறார் விசுவாமித்திரர். காகுத்தனின் கன்னிப்போர் நிகழ்வதற்கு விசுவாமித்திரர் எடுத்துக் கொண்ட முயற்சிகளையும், உரைத்த செய்திகளையும் நோக்கும்பொழுது இரண்டு உண்மைகளை அறிய முடிகிறது.
1. பெண்ணிடம் போர் நிகழ்த்த இராமன் காட்டும் தயக்கம்
புலனாகிறது.
2. தன்னோடு போரிட வந்தவர் ஆணா, பெண்ணா, நண்பரா, உறவினரா என்றெல்லாம் கருதாமல் அறம் ஒன்றையே (பொதுநலம்) குறிக்கோளாகக் கொண்டு போரிட வேண்டும் என்ற தெளிவை விசுவாமித்திரர் இராமனுக்குப் புலப்படுத்துவது புலனாகிறது.
இந்துக்கலைக்களஞ்சியம்

போரிடத் தயாரான காகுத்தன் மேல் தாடகை தன் முத்தலைச் சூலத்தை முதலில் விட்டெறிகிறாள். தாடகையின் சூலத்தை நொடிப்பொழுதில் துண்டாக்கிய இராமனின் வில்லாற்றலை,
மாலு மக்கனம் வாளியைத் தொட்டதும் கோல விற்கால் குனித்ததும் கண்டிலர் கால னைப்பறித் தக்கடி யாள்விட்ட குல மற்றன துண்டங்கள் கண்டனர். எனப் புனைந்து காட்டுகிறார் கம்பர். காகுத்தன் வில்லின் தண்டினைக் காலால் ஊன்றி வளைத்ததையும், கணையை விடுத்ததையும் ஒருவரும் காணவில்லை; தாடகை விடுத்த சூலாயுதம் முறிந்து விழுந்த துண்டங்களைத்தான் உலகோர் கண்டனர் எனக் கம்பர் குறிப்பிடுகிறார்.
சூலம் துண்டாகி விழுந்த பின்னர்த் தாடகை காகுத்தன் மேல் கல்மாரி பொழிகிறாள். கல்மாரியைத் தன் வில்மாரியால் விலக்கும் காகுத்தன் செயலை,
அல்லின் மாரி யனைய நிறத்தவள் சொல்லும் மாத்திரையின் கடல் தூர்ப்பதோர் கல்லின் மாரியைக் கைவகுத் தாளது வில்லின் மாரியின் வீரன் விலக்கினான் என்று குறிப்பிடுகிறார் கம்பர்.
கல்லாப் புல்லர்க்கு நல்லோர் சொன்ன பொருளெனக் காகுத்தனின் கணை, தாடகையின் மார்பை ஊடுருவிச் செல்கிறது. தாடகை இறக்கிறாள். இராவணனின் வெற்றிக் கொடி அறுந்து வீழ்ந்து, அவனது அழிவை அறிவிப்பதுபோல் தாடகை வீழ்ந்ததை,
பொடியுடைக் கான மெங்குங் குருதிநீர் பொங்க வீழ்ந்த
தடியுடை யெயிற்றுப் பேழ்வாய்த் தாடகை தலைக டோறும்
முடியுடை யரக்கற் கந்நாள் முந்தியுற் பாத மாகப்
படியிடை யற்று வீழ்ந்த வெற்றியம் பதாகை யொத்தாள் எனக் குறிப்பிடுகிறார் கம்பர்.
நான்முகனின் பெருந்தவத்தால் பேரழகோடு பிறந்த தாடகை, உயிர்க்கொலை புரிந்து உழலும் வாழ்க்கை வாழ நேர்ந்ததின் காரணம் சிந்திக்கத்தக்கது. சில இன்றியமையா இழப்புகளைப் பெண்கள் தாங்கிக் கொள்வது அரிது. கற்பு, கணவன், பெற்ற மக்கள் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை இழந்தாலும் உள்ளம் உடைந்து போவர், உயிரையும் விடுவர். இழக்கக் கூடாதவற்றை இழப்பதனால், பெண்மையும், மென்மையும் உடைய மென்மைப் பெண்களும் பல வேளைகளில் வன்மையாக மாறுவர். மென்மையான மனம் மிகுதியான பாதிப்புக்குள்ளாகும்போது வன்மையாக மாறுவது இயற்கை. இழக்கக் கூடாத மூன்றைத் தாடகை இழக்கிறாள். முதலில் கண்ணிறைந்த கணவன். இரண்டாவது தன் பேரழகு வடிவம் (திருமகளுக்கு நிகரான அழகு). மூன்றாவது வலிமைமிக்க தன்னிரு மக்கள். ஒரே நேரத்தில் நிகழ்ந்துவிட்ட மூன்று
157

Page 190
இழப்புக்களையும் தாங்கிக் கொள்ள முடியாமல் தாடகையின் உள்ளம் அழல் எனப் புழுங்குகிறது. இயற்கையாகவே பேராற்றல் (ஆயிரம் மதயானைகளின் ஆற்றல்) பெற்றவள். அரக்க வடிவம் வாய்க்கப் பெற்றதால் அவ்வலிமையும் சேர்ந்து எல்லையில்லாத வலிமையைப் பெறுகிறாள். வரம்பில்லா வலிமையும், வன்னெஞ்சமும் வாழ்வில் வந்து சேர்ந்ததால் உயிர்க்கொலை புரிந்து உழலும் வாழ்வை மேற்கொள்ளுகிறாள். சூழ்நிலையால் இழிநிலைக்கு உள்ளான இம்மாதின் நிலை இரங்கத்தக்கது.
(அ. இ.) தாண்டகம்
தாண்டகம் என்பது செய்யுள் வகையில் ஒன்று. கி. பி. 6ஆம் நூற்றாண்டுக்குப் பின் எழுந்த இலக்கியங்களிலே இச்செய்யுள் வகையைக் காணலாம்.
அறுசீரடி அல்லது எண்சீரடி பயின்ற செய்யுளினால் ஆடவரையோ கடவுளரையோ பாடுவதற்குரியது தாண்டகம் எனும் பிரபந்தம். அறுசீரடியினாலாகிய தாண்டகத்தினைக் குறுந்தாண்டகம் என்றும் எண்சீரடியாலமைந்ததினை, நெடுந்தாண்டகம் என்றும் பன்னிருபாட்டியல் பகருகிறது. பல்காயனார், மாபூதனார், சீத்தலையார் என்போரும் இக் கருத்தினையே ஏற்றுக் கொண்டுள்ளனர். இவ்விருவகை தாண்டகச் செய்யுள்களும் பிற்காலத்துப் பெருகிய அறுசீர்க்கழி நெடிலடி ஆசிரிய விருத்தம் என்பனவற்றிற்கு முன்மாதிரிகள் என மொழியலாம்.
தாண்டகம் பற்றிக் கூறும் இலக்கண நூல் யாப்பருங்கலக் காரிகையாகும். ஒரடியில் நாலெழுத்து முதலாக இருபத்தாறெழுத்து வரையில் அமைந்த செய்யுள் சந்தம் என்றும், ஒரடியில் இருபத்தேழெழுத்து முதலாக மேற்கொண்ட எழுத்துக்களையுடைய செய்யுள் தாண்டகம் என்றும் இந்நூல் கூறி நிற்கின்றது.
இருபத்தேழெழுத்து முதலாக உயர்ந்த எழுத்தடியினவாய் எழுத்தும் குரு லகுவும் ஒத்துவருவன அளவியற்றாண்டகம், எழுத்து ஒவ்வாதும் எழுத்தலகு ஒவ்வாதும் வருவது அளவழித் தாண்டகம் என்பர்.
ஈரிரண் டாதி இருபத்தா றந்தமாச் சாரும் எழுத்தின்கட் சந்தமாம் - சீரொத்த மூவொன்பதாதியா முற்றின தாண்டகமென் றோதினார் தொல்லோர் எடுத்து
சந்தமும் தாண்டகமும் தம்முள் எழுத்திலகு வந்த முறையை வழுவாவேல் - முந்தை அளவியலாம் என்றுரைப்பர் அவ்வாறன் றாகில் அளவழி யாமென்ப ரால்
குரு, லகு ஆவன குற்றெழுத்து ஒற்று அடாது வந்தது. லகு- அது ரகரவடிவாயிற்று. இனிக் குற்றெழுத்து
75g

ஒற்றெழுத்தும் நெட்டெழுத்து ஒற்றெழுத்தும் நெட்டெழுத்து தனித்தும் வந்ததும் குருவாம் அது டகர வடிவிற்று. அடி இறுதிக்கண் வந்த குற்றெழுத்து ஒருகாற் கூறுமாற்றாற் குருவாகவும் இடப்படும். லகுவிற்கு ஓரலகாகவும் குருவிற்கு ஈரலகாகவும் இடினும் இழுக்கா என உரை கூறி நிற்கின்றது யாப்பருங்கலக் காரிகை.
இவ்வாறாக நாற்பத்து மூன்றெழுத்தும் அளவியற் றாண்டகம் நாற்பத்தேழெழுத்தடி அளவியற் தாண்டகம் என்பன தாண்டக வகையிற் கூறப்பட்டுள்ளன.
சந்த அடியும் தாண்டக அடியும் விரவி ஓசை கொண்டு வந்தால் அவை சந்தத் தாண்டகம் என்றும் தாண்டகச் சந்தம் என்றும் வழங்கப்படும்.
சந்தச் சரணமும் தாண்டகத்தின் பாகமும் வந்து மயங்கி வழுவிகந்த - செந்தமிழ்நர் ஈண்டு வடநூற் புலவர் இயற் சந்தத் தாண்டகம் என்றுரைப்ப தாம்.
சந்த அடியும் தாண்டக அடியும் ஒத்துவருவனவற்றையும் சம சந்தத் தாண்டகம் என்பர். சந்தமும் தாண்டகமும் என்ற இவற்றுக்கு எழுத்து எண்ணுகின்றபோது குற்றுகர இகரங்களை எழுத்தாகவே கொண்டு எண்ணுதல் வேண்டும்.
அப்பர் பெருமான் அருளிச் செய்த ஆறாம் திருமுறை முழுவதும் நெடுந்தாண்டகத்தினால் அமைந்தது. இதனையே பெரிய திருத்தாண்டகம் எனச் சேக்கிழார் குறிப்பிடுகின்றார். திருமங்கையாழ்வார் பாடிய இருபது பாடல்களைத் திருக்குறுந்தாண்டகம் என்றும் முப்பது பாடல்களைத் திருநெடுந்தாண்டகம் என்றும் வழங்குவர். பெரும்பாலும் ஈரசைச் சீர்களினால் அமைந்த அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தங்களைத் திருநேரிசை என்று வழங்குதலை நாலாம் திருமுறையிற் காணலாம். அவற்றையே திருக் குறுந்தாண்டகம் என்று வழங்குதல் திருமங்கையாழ்வாரின் பிரபந்தத்திற் காணப்படுகின்றது.
வடமொழியிற் சுட்டப் பெறும் தண்டகமும் பக்தி இலக்கியத்தில் வழங்கும் தாண்டகமும் வேறு வேறு யாப்பு வகைகளைக் குறிப்பன.
தொல்காப்பியர் காலத்தில் தோன்றாத பாவினங்களைத் தொல்காப்பியத்தின் செய்யுளியலுக்கு உரை வகுத்துள்ள பேராசிரியரும் நச்சினார்க்கினியரும் ஏற்றுக் கொள்ளாததுடன் அவற்றைத் தொல்காப்பியர் கூறியுள்ள கொச்சக ஒரு போகு என்ற ஒரு பெரும் பிரிவிற்குள் கொண்டு வந்தனர். வடநூல் வழித் தமிழாசிரியர்கள் தமிழில் புதியனவாய்ப் புனையப் பெற்ற இப் பிற்கால யாப்பிலக்கணங்களைச் சந்தம், தாண்டகம் என்ற பாகுபாட்டில் அடக்கினர். இ. ச)
இந்துக்கலைக்களஞ்சியம்

Page 191
தாண்டவங்கள்
தாண்டவம் என்பது ஒரு வகைக் கூத்து அல்லது நடனத்தைக் குறிக்கும். இப் பதத்திற்குச் சில விளக்கங்கள் கூறப்படுகின்றன. நிலத்தைத் தட்டுதல், அடித்தல் எனும் பொருள் படும் தமிழ் வினையடியான 'தட்' என்பதிலிருந்து இச் சொல் வந்துள்ளது என ஒரு சாரார் கருதுகின்றனர். துள்ளுதல், பாய்தல், ஆடுதல் முதலிய பொருள்படும் தாண்டு எனும் தமிழ் வினையடி வழியாக இது வந்துள்ளது எனப் பொதுவாகக் கொள்ளலாம். மேற்குறிப்பிட்ட கருத்துக்களில் இப்பதம் (தாண்டு) தமிழ் மட்டுமன்றி தெலுங்கு, கன்னடம், மலையாளம் முதலிய இலக்கிய வளமுள்ள திராவிட மொழிகளிலே மட்டுமன்றி, இலக்கிய வளமற்ற சில திராவிட மொழிகளிலும் வருகின்றது. எனவே தாண்டவம் எனும் பதம் திராவிடச் சொல்லாகும். “பூமியைத் தட்டுவதால் ஏற்படும் ஜதியே இதற்குச் சிறந்த அங்கம். ஆதலால் தட்டுதலையுடையது தாண்டவம் ஆயிற்று.” எனவும் கூறப்படுகின்றது. இவ்வாறு தாண்டவம் எனும் பதம் தமிழ் மரபையொட்டியதாகும். அதே வேளையில் 'தட்' எனும் வினையடி அடித்தல், தட்டுதல் முதலிய கருத்துப்படும் என வடமொழியிலும் கூறப்படுகின்றது. தமிழிற் போல வடமொழியிலும் தாண்டவம் நடனம் குறிப்பாகச் சிவபிரானின் திருநடனத்தைக் குறிக்கும் என்பதும் ஈண்டுக் குறிப்பிடற்பாலது. வடமொழி மேற்குறிப்பிட்ட வினையடி பதம் ஆகியனவற்றைத் திராவிட மொழிகளிலிருந்து குறிப்பாகத் தமிழிலிருந்து பெற்றிருக்கலாம். இவ்வாறு பல சொற்கள் வடமொழியிலிருந்து தமிழிற்கும், தமிழிலிருந்து வடமொழிக்கும் வந்துள்ளன என்பதை இவ்விருமொழி வல்லுநர் எடுத்துக் காட்டியுள்ளனர்.
தாண்டவம் பற்றிய மரபு வழியான விளக்கத்தையும் கூறவேண்டியுள்ளது. தண்டு எனும் சிவகணப் (இவர் சிவகணங்களில் முதன்மையானவர்) பெயர் வழியாகவே தாண்டவம் வந்ததெனப் பரதரின் நாட்டிய சாஸ்திரம், நந்திகேஸ்வரரின் அபிநயதர்ப்பணம் முதலிய நூல்கள் கூறுகின்றன. பரதருடைய நாட்டிய சாஸ்திரத்திலுள்ள நாலாவது அத்தியாயத்திலே தண்டு எனும் தன்னுடைய கணத்தின் மூலம் சிவபிரான் பரதமுனிவரின் நாடகக் குழுவினருக்குத் தாம் சந்தியா - அந்தி-வேளையில் ஆடும் ஆட்டங்களைக் கற்பிக்கச் செய்தார் எனவும் இவ்வாறு தண்டு மூலம் கற்பிக்கப்பட்டதால் இக் கூத்திற்குத் தாண்டவம் எனும் பெயர் ஏற்பட்டதெனவும் கூறப்படுகின்றது. 108 கரணங்களையும் விவரிக்கும் மேற்குறிப்பிட்ட நாட்டிய சாஸ்திரத்திலுள்ள நாலாம் அத்தியாயம் தாண்டவலகூடிணம் என்றே அழைக்கப்படுகின்றது. இங்கு கூறப்படும் தண்டு என்பவர் நந்திகேஸ்வரர் திருநந்திதேவர் என்றே பொதுவாகக் கொள்ளப்படுகின்றனர்.
தாண்டவம் எனும் இப்பதம் சில இடங்களில் ஒரு வகைப்பாட்டின் பெயராகவும் வழங்கப்படுகின்றது. ஆடப்பட்ட ஆட்டத்திலிருந்து இதற்குப் பாடப்படும் பாட்டிற்கும் இப்பெயர் ஆகுபெயராக ஏற்பட்டிருக்கலாம் எனக் கொள்ளலாம்.
இந்துக்கலைக்களஞ்சியம்

ஆட்டம் அல்லது நடனம், அதன் இயல்பின் அடிப்படையிலே தாண்டவம், லாஸ்யம் என இருபிரிவாக நாட்டிய சாஸ்திரம் முதலிய நூல்களிலே கூறப்படுகின்றது. அவற்றுள் வலுவான தட்டுக்களாலும் கூடுதலான கால் வீச்சு முதலியனவற்றாலும் உத்வேகமாக (உத்ததம்) இருப்பதும் பொதுவாக ஆண்களால் ஆடப்படுவதுமே தாண்டவமாகும். அழகாகவும் மென்மையாகவும், நளினமாகவும் பொதுவாகப் பெண்கள் ஆடும் ஆட்டம் லாஸ்யமாகும். தாண்டவத்தை முதலிலே தந்தருளியவர் சிவபெருமான், லாஸ்யத்தைத் தந்தவர் பார்வதிதேவி. இவ்வாறு நாட்டிய சாஸ்திரம், அபிநய தர்ப்பணம் முதலிய நூல்கள் கூறுகின்றன. எவ்வாறாயினும் ஆண்கள், பெண்களின் தன்மைகளுக்கேற்றவாறு இவை வகுக்கப் பட்டுள்ளன. எனினும் தாண்டவத்தைப் ஆண்களும் லாஸ்யத்தைப் பெண்களும் ஆடி வந்துள்ளனர் என்பதும் சிற்பங்கள் போன்ற சான்றுகளின் மூலம் அறியப்படுகின்றது. மேலும் தாண்டவத்திலே மென்மையும் லாஸ்யத்திலே உத்வேகமும் ஒரளவு இருப்பதாகவும் நாட்டிய வித்தகர்கள் கூறுவர்.
தாண்டவம் எனும்போது ஒருவருக்குச் சிவபிரானின் ஆனந்த தாண்டவம் வடிவமே பொதுவாக நினைவுக்கு வரும். ஆனால் தாண்டவங்கள் பல உள்ளன என்பது பற்றிய நாட்டிய அறிமுறை நூல்கள், ஆகமங்கள், சிற்ப நூல்கள் முதலியன மூலம் அறியலாம். ஏற்கனவே குறிப்பிட்ட நாட்டிய சாஸ்திரத்திலே (04) சிவபிரான் கற்பித்ததும் அவர் அந்திப் பொழுதிலே (சந்தியா வேளையிலே) ஆடி வருவதுமான தாண்டவம் முதலிலே108 கரணங்கள் மூலம் விளக்கப்படுகின்றது.
கரணம் எனும் பதம் 'கரு' எனும் வடமொழி வினையடி வழியாக வந்ததாகும். இது செய்தல், திறமை ஏற்படுத்தல், ஒன்று செய்ய உதவுதல், ஒழுங்குபடுத்தல், கருவி, அமிசம், உறுப்பு, ஒன்றன் பகுதி எனப் பல பொருட்படும். உறுப்பு அசைவுகளுக்கும் அவை மூலம் செய்யப்படும் செயலுக்கும் இப்பதம் பயன் படுத்தப்படும்.
குட்டிக் கரணம் என மக்கள் இன்றும் அன்றாட வாழ்க்கையில் இதனைப் பயன்படுத்தல் உற்று நோக்கற்பாலது. நடனத்தில் இப் பதம் ஒரு செயலின் ஒருமைப்பாட்டினைக் குறிக்கும். எனவே “கரணம் ஒரு நோக்கத்தினை நிறைவேற்று வதற்கான சாதனம்’ எனக் கலாநிதி பத்மா சுப்பிரமணியம் கூறுகிறார். கரணம் நடனத்தின் ஓர் அலகு ஆகவும் மிளிர்கின்றது. இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட கரணங்களின் கோவை அங்கஹாரங்கள் (உடல் அசைவுகள்) ஆகும் என நாட்டிய சாஸ்திரம் கூறும். "நடனத்திலே கைகளும் (ஹஸ்தங்களும்), கால்களும் (பாதங்களும்) கூட்டாக ஒன்றிணைந்து செயற்படுதலே கரணமாகும்” என நாட்டிய சாஸ்திரம் இதற்கு வரைவிலக்கணம் கூறுகின்றது. மேலும் நாட்டிய சாஸ்திரத்திற்குச் சிறப்பான உரை எழுதிய அபிநவகுப்தர் இங்கு ஹஸ்தமென்பது உடலின் மேற்பகுதி எனவும், பாதம் கீழ்ப்பகுதி எனவும் விளக்கம் தந்துள்ளார்.
f59

Page 192
ஆகவே கரணம் என்பது அங்கம், உபாங்கம், பிரத்யங்கம் (சிறிய பெரிய) ஆகிய உறுப்புகள் அனைத்தும் ஒருங்கிணைந்து செயற்படுதலிலே தங்கியுள்ளது. எனவே கரணமென்பது குறிப்பிட்ட நிலையன்று. அஃது ஒர் அசைவாகும். ஸ்தானம், நிருத்த ஹஸ்தம், சாரி என்பன கரணத்தின் முக்கியமான அம்சங்கள். ஸ்தானம் அதன் நிலையைக் குறிக்கும். நிருத்த ஹஸ்தம் அதன் அழகியல் அம்சங்களைக் காட்டும். சாரிகள் கால்
முழுவதினதும் செயல்களைப் புலப்படுத்தும். இக் கரணங்கள் சமகால அடவுகளை ஒத்த புராதன நடனத்தின் பகுதிகளாகும். அசைகின்றனவும் அசையாதனவுமான முரண்பட்ட கருத்துக்களின் சேர்க்கையினை இங்கு அவதானிக்கலாம். ஸ்தானம் அசைவற்ற நிலையினையும், சாரிகள் அசைவு வடிவங்களையும் குறிப்பன. இதற்கு உள்ளம், உடல் ரீதியிலான பெரிய சமநிலை அவசியமாகும். செயலற்ற நிலையில் செயலாற்றுதல் இந்து சமயத்திற்குப் புதியதன்று. பெளதீகத்திற்கு அப்பாற்பட்டதும், ஆத்மீகத் தன்மை உடையதுமான கருத்துக்களுக்கு உடலசைவு மூலமான வடிவங்கள் காட்டப்படும். ஒரு கரணத்தினைச் செய்து காட்டுவதற்கு அதிக நேரம் தேவையில்லை. ஆகவே குறிப்பிட்ட தொகைக் கரணங்களைக் கொண்டு நிருத்தமாதிருகா, கலாபதம், சங்காதகம், அங்கஹாரம், பிண்டிபந்தம் முதலியனவற்றைச் செய்யலாம் என்பது நாட்டிய சாஸ்திரம் மூலம் அறியப்படும்.
நாட்டியத்திலே பயன்படுத்தப்படும் கரணங்களிலே அழகியற் பெறுமானமும், அவை புலப்படுத்தும் கருத்தும் குறிப்பிடற்பாலன. நாடகங்களிலே கரணங்கள் கருத்தூன்றிப் பயன்படுத்தப்பட்டு வந்தன. கரணங்களின் எண்ணிக்கையையும் அவற்றின் உள ரீதியிலான விழுமியத்தையும் பற்றி நாட்டிய சாஸ்திரத்தைப் பின்பற்றி அதற்குப் பெரிய உரை எழுதியவரான அபிநவகுப்தர் குறிப்பிட்டுள்ளார். நாட்டிய சாஸ்திரத்திலே தல புஷ்ப புடம், வர்த்திதம், வலிதோருகம், அபவித்தம், சமநகம், வீனம், ஸ்வஸ்திகரேசிதம், மண்டலஸ்வஸ்திகம், நிகுட்டகம், அர்த்த நிகுட்டகம், கடிச்சின்னம், அர்த்த ரேசிதம், வசுஷஸ்வஸ்திகம், உந்மத்தகம், ஸ்வஸ்திகம், பிருஷ்டஸ்வஸ்திகம், திக்ஸ்வஸ்திகம், அலாதகம், கடீசமம், ஆகூழிப்தரேசிதம், விகூழிப்தாகூழிப்தகம், அர்த்தஸ்வஸ்திகம், அஞ்சிதம், புஜங்கக்ராஸிதம், ஊர்த்துவஜானு, நிகுஞ்சிதம், மத்தல்லி, அர்த்தமத்தல்லி, ரேசிதநிகுட்டிதம், பாதாபவித்தகம், வலிதம், கூர்ணிதம், லலிதம், தண்டபசுஷம், புஜங்கத்ரஸ்த ரேசிதம், நூபுரம், வைசாக ரேசிதம், பிரமரதம், சதுரம், புஜங்காஞ்சிதகம், தண்டக ரேசிதம், விருச்சிக்குட்டிதம், தடிப் பிராந்தம், லதாவிருச்சிதம், சின்னம், விருச்சிகரேசிதம், விருச்சிகம், ஸ்வயம்ஸிதம், பார்ஷ்வ நிகுட்டகம், லலாடதிலகம், கிராந்தகம், குஞ்சிதம், சக்ர மண்டலம், ரோமமண்டலம், ஆகூழிப்தம், தலவிலஸிதம், அர்க்கலம், விகூழிப்தம், ஆவர்த்தம், டோலாபாதம், விவிர்த்தம், விநிவிர்த்தம், பார்ஷ்வக்ராந்தம், நிஸ்தம்பிதம், வித்யுத்ப்ராந்தம், அதிக்ராந்தம், விவர்த்திதகம், கஜக்ரீடிதம், தலஸம்ஸ்போடிதம், கருடப்லுதகம், கண்டசூசி, பரிவிர்த்தம், பார்ஷ்வஜானு, கிருத்ராவலினதம், சன்னதம், சூசி, அர்த்தசூசி, சூசிவித்தம், அபக்ராந்தம், மயூரலலிதம், சர்ப்பிதம்,
f6り

LSLSLSLS
தண்டபாதம், ஹரிணப்லுதம், பிரேங்கோலிதம், நிதம்பம், ஸ்கலிதம், கரிஹஸ்தகம், பிரஸர்ப்பிதகம், சிம்மவிக்ரீடிதம், உத்ருத்தம், உபசிருதகம், தலஸங்கட்டிதம், ஜணிதம், அவிஹறித்தகம், நிவேசம், ஏலகாக்கிரீடிதம், ஊரூத்விருத்தம், மதஸ்கலிதம், விஷ்ணுக்ராந்தம், ஸம்ப்ராந்தம், விஷ்கம்பம், உத்கட்டிதம், விருஷபக்ரீடிதம், லோலிதம், நாகாபஸர்ப்பிதம், சகடாஸ்யம், கங்காதவரணம் என நூற்றெட்டுத் தாண்டவ பேதங்கள் விவரிக்கப்பட்டுள்ளன.
ஏற்கனவே குறிப்பிட்டவாறு இவை குறிப்பிட்ட கருத்துக்களைப் புலப்படுத்துவன. எடுத்துக்காட்டாக, முதலாவதாகிய தலபுஷ்ப புடம் புஷ்பாஞ்சலிக்குப் பயன்படுத்தப் படும். வர்ஜிதம், அபவித்தம் போன்றவை ரெளத்திர ரசத்தையும், உன்மத்தம் போன்றவை வீரரசத்தினையும் புலப்படுத்துவன. கரணங்கள் மூலம் வியபரிசாரி பாவங்களையும் புலப்படுத்தலாம். எடுத்துக்காட்டாக, விகூழிப்த மூலம் தற்பெருமையையும், மத்தல்லி மூலம் வெறியினையும் சந்நதம் மூலம் புகழ்ந்துரைத்தல் முதலியனவற்றையும் வெளிப்படுத்தலாம். கரணங்களின் உட்கிடக்கையையும் நோக்கத்தையும் உணராதவர்கள் இவற்றை உடற்பயிற்சிக்கான வித்தைகள், அதீத சாஹஸங்கள் எனத் தவறாகப் புரிந்து கொள்ளுகின்றனர். இக் கரணங்களுட் சில யோகாசனப் பயிற்சிகளை நினைவூட்டுவதில் வியப்பில்லை. நாட்டியமும் ஒரு யோகக் கலையெனப் பரதர் ஏற்கனவே கூறியுள்ளார். ஆடலிலே உடலும், உள்ளமும் இறைவனிலே லயித்து விடுகின்றன.
இக் கரணங்கள் இந்தியாவின் பல பகுதிகளிலும் கடல் கடந்து இந்தியப் பண்பாடு பரவிய தென்கிழக்காசிய நாடுகளிலும் நிலவிப் பின்னர் மங்கத் தொடங்கின. சில இடங்களில் இவை மாற்றமடைந்தன. வேறு சில இடங்களிலே வேறு பெயர்களால் அழைக்கப்பட்டன. எனினும் அதிர்ஷ்டவசமாகச் சிற்பங்களிலும், சிறிதளவு ஒவியங்களிலும் இவை நிலைபெற்றுவிட்டன. தமிழ் நாட்டிலுள்ள ஐந்து பிரபல கோவில்களில் இவை சிற்பங்களிலே பெருமளவு நன்கு பேணப்பட்டுள்ளன. இவற்றுள் காலத்தால் முந்தியவை முதலாம் ராஜராஜன் தலைநகரான தஞ்சாவூரில் அமைத்த பிருஹதீஸ்வரர் (தஞ்சைப் பெருவுடையார்) ஆலய ஸ்தூபியின் மேல் தளத்தில் உள்ளன. இங்கு முதலாவது கரணமாகிய தலபுஷ்ப புடம் தொடக்கம் 81 ஆவது கரணமாகிய சுபிதம் வரையுள்ளவை கிடைத்துள்ளன. எஞ்சிய 27 க்குமான இடம் செவ்வனே ஒதுக்கப்பட்டிருப்பினும் g|ഞഖ அமைக்கப்பட்டில. மேற்குறிப்பிட்டவை கி. பி. பதினோராம் நூற்றாண்டின் தொடக்க காலத்தவை.
இதற்குப்பின் தொகுத்தவற்றுள் காலத்தால் முந்தியவை கும்பகோணம் சாரங்கபாணி கோவிலில் உள்ளன. இவை கி. பி. 12ஆம் நூற்றாண்டளவைச் சேர்ந்தவை. இவை வைஷ்ணவக் கோவிலில் இருந்தாலும் அச்சமயச் சார்பானவையல்ல. இங்கு சோமேஸ்வரர் (சிவபிரான்) ஆலயமும், சாரங்கபாணி கோவிலும் முன்னர் ஒன்றாக இருந்தவை. இங்கு 108 கரண சிற்பங்களுடன்
இந்துக்கலைக்களஞ்சியம்

Page 193
குனித்த புருவமும் கொவ்வைச் செ பணித்த சடையும் பவளம்போல் மே இனித்தமுடைய எடுத்த பொற்பாத மனித்தப்பிறவியும் வேண்டுவதே இ
 

வ்வாயிற் குமிண் சிரிப்பும் னியில் பால்வெண்ணிறும் மும் காணப்பெற்றால் இந்த மானிலத்தே.

Page 194
தாண்டவ
இங்கே காணப்படும் படங்கள் வரையப்பட்டவை.
108 கரணபேதங்களை உணர்த்தும் ப சிற்பத்தையும், நாட்டிய சாஸ்திரத்தில் உ கொண்டு எழுதப்பட்டவை. ஆனால் as Esurasilessibás (5th Madras Epigr சுலோகங்களுக்கும், பாடபேதங்களும் உருவங்களின் கீழ் உள்ள சுலோகங்கள்
நன்றி: "ஆ
ஆனந்தத் தாண்டவம்
 

பேதங்கள்
தியான சுலோகங்களைக் கொண்டு
உங்கள் தஞ்சைப் பெருவுடையார் கோயிற் ள்ள மரப்பலகைச் சிற்பங்களையும் துணைக் நாட்டிய சாஸ்திரம் நாலாவது அத்தியாய aphical Report (1914) glau g)_siTGIT
மாற்றங்களும் பலவுள்ளன. វិធា மாறியும் உள்ளன.
டல்வல்லான்’ - திருவாவடுதுறை ஆதீன வெளியீடு
திரிபுரசங்கார தாண்டவம்

Page 195
சதுர தாண்டவம் வேறுவகை)
 

சதுர தாண்டவம் (மற்றொரு வகை
ܔ

Page 196
*
psтпајајbu 8. п.600IL-6ш
சங்கார தானடவம
 
 

சங்கார தாண்டவம் வேறுவகை
(தொடர்ச்சி பக்கம் 162)

Page 197
அவ்வவற்றின் பெயர்களும் கீழே பொறிக்கப்பட்டுக் காணப்படுகின்றன. ஒரு கோவிலிலிருந்து பிறிதொன்றுக்குக் கொண்டுவரப்பட்டமையாற் போலும் கரணங்களின் ஒழுங்குமுறை நன்கு பின்பற்றப்படவில்லை என ஆய்வாளர் கருதுவார்.
காலவரன் முறைப்படி அடுத்ததாகக் குறிப்பிட வேண்டியவை சைவ உலகில் கோவில் எனப் போற்றப்படும் சிதம்பரம் நடராஜர் ஆலயத்தின் நாற்புறமும் உள்ள கோபுரங்களிலே காணப்படுபவையாகும். இவற்றுள் கிழக்கு, மேற்குக் கோபுரங்களிலே உள்ளவை மிக முக்கியமானவை. இங்கு 108 கரண சிற்பங்களையும், அவ்வவற்றின் கீழே அவற்றுக்கான நாட்டிய சாஸ்திரச் செய்யுட்களும் பொறிக்கப்பட்டுள்ளன. எனவே அவற்றை அடையாளம் காணுதல் எளிதாகும். இவற்றின் காலம் கி. பி. 13 ஆம் நூற்றாண்டாகும்.
இவற்றின் பின் விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரன் ஆலயத்திலும், திருவண்ணாமலையிலுள்ள அருணாசலேஸ்வரர் ஆலயத்திலும் உள்ள கோபுரங்களிலே இக் கரண சிற்பங்கள் தொகுக்கப்பட்டுள்ளன.
மேலும், தமிழ் நாட்டிலும், வேறுபல இடங்களிலும் உள்ள கோவில்களிலே சில கரணச்சிற்பங்களும், ஒவியங்களும் இடம்பெற்றுள்ளன. அண்மைக் காலத்திலே சில கலைஞர்கள் கரணங்களிலே குறிப்பிடத்தக்க ஆர்வம் காட்டி வருகின்றனர். பிரபல நடனக் கலைஞர்களான கலாநிதி பத்மா சுப்பிரமணியமும் சுவர்ணமுகியும் இவ்வகையில் நன்கு குறிப்பிடற்பாலர் முன்னையவர் செய்கை முறையுடன் கரணங்கள் பற்றிச் சிறந்த ஆய்வுகள் செய்து வருகின்றனர். பின்னையவர் கரணங்களை மிக லாகவமாகச் செய்து காட்டுவதிலே விற்பன்னர் அண்மைக் காலத்தில் இலங்கையிலே யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்திலும், திருநெல்வேலியிலுள்ள யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாகத்திலுள்ள பூரீ பரமேஸ்வரன் ஆலயத்திலும் 108 கரணங்களும் ஒவியங்களிலே தொகுக்கப்பட்டுள்ளன.
தாண்டவங்களின் தொகை பலவாறு நாட்டிய நூல்கள், ஆகமங்கள், சிற்ப நூல்கள் முதலியனவற்றிலே கூறப்பட்டுள்ளன. ஏற்கனவே குறிப்பிட்டவாறு இவற்றை 108 கரணங்களாக நாட்டியசாஸ்திரமும், அதையொட்டிப் பின்வந்த சில நூல்களும் கூறுவன. எல்லாவற்றிலும் கூத்தம்பிரானே-நடராஜனே முதன்மை இடத்தினை வகிக்கிறார். அவர் ஆடியதாக ஏற்கனவே குறிப்பிட்ட 108 தாண்டவங்கள் உள்ளன. ஆகமங்கள் 64 தாண்டவங்களைக் குறிப்பிடுகின்றன. அவற்றுள் ஏழு மிகப் பிரபல்யமானவை. சிற்ப நூல்களான சிற்பரத்தினமும், காசியப்பசிற்பமும் ஒன்பது தாண்டவங்களின் இல கூடிணங்களைக் கூறுகின்றன. அகத்தியர் பரத சூத்திரத்திலே சிவதாண்டவம் நூற்றெட்டு எனக் கூறியுள்ளனர். இவற்றிலே சிவபிரானுடைய துவாதச தாண்டவம் என்னும் பன்னிரண்டு தாண்டவங்களைச் சாரங்கதேவர் விவரித்துள்ளார். இவ்வாறு
இந்துக்கலைக்களஞ்சியம்

தாண்டவங்கள் தொகை பலவாறு கூறப்படினும் இவற்றுட் பல ஏற்கனவே குறிப்பிட்ட 108 கரணங்களில் ஏதோ வகையில் அடங்குவன. சிலவற்றின் பெயர்கள் மாறியுள்ளன. அதே வேளையிலே தேசீகரணமாக (குறிப்பிட்ட இடங்களுக்குரியன வாகவும்) புதிய கரணங்களாகவும் சில சேர்க்கப்பட்டுள்ளன.
இத் தாண்டவங்களிலே மிகப் பிரபல்யமான எழுவகைத் தாண்டவங்களைச் சைவசமய முழுமுதற் கடவுளாகிய சிவபிரான் ஆன்மாக்களின் ஈடேற்றத்திற்காகச் சிறப்பாகத் தமிழகத்திலுள்ள ஆறு திருத்தலங்களில் ஆடுகிறார் எனச் சைவ மரபிலே கூறப்படுகின்றது. இவற்றுள்ளே காளிகா தாண்டவம் இறைணின் படைத்தல் தொழிலைக் குறிக்கும். இத் தாண்டவம் (தமிழக) திருநெல்வேலியிலுள்ள தாமிர(செப்பு) சபையிலே நடைபெறுகின்றது. இறைவனின் காத்தல், இன்பக் காத்தல், துன்பக் காத்தல் என இருவகைப்படும். இவற்றுள் இன்பக் காத்தலாவது ஆன்மாக்களின் புண்ணியங்களுக்கேற்ப நல்வினைகளுக்கேற்ப இன்பங்களை வழங்கிக் காப்பாற்று வதாகும். துன்பக் காத்தலாவது ஆன்மாக்களின் பாவங்களுக் கேற்ப - தீவினைகளுக்கேற்பத் தண்டித்துக் காப்பாற்றுவதாகும். இன்பக் காத்தலைக் குறிக்கும் சந்தியாதாண்டவம் மதுரையிலுள்ள வெள்ளியம்பலத்திலே (ரஜத - வெள்ளி சபையிலே) நடைபெறுகின்றது. துன்பக் காத்தலைக் குறிக்கும் கெளரீ தாண்டவம் பாண்டி நாட்டிலுள்ள திருப்புத்தூரிலுள்ள சிற்சபையிலே நடைபெறுகின்றது. அழித்தலைக் குறிக்கும் சம்ஹார தாண்டவம் நள்ளிரவிலே சுடலையிலே நடை பெறுகின்றது. மறைத்தலைக் குறிக்கும் திரிபுர தாண்டவம் திருக்குற்றாலத்திலுள்ள சித்திர சபையிலே ஆடப்படுகின்றது. அருளுதலைக் குறிக்கும் ஊர்த்துவ தாண்டவம் திருவாலங்காட்டிலுள்ள இரத்தின சபையிலே நடைபெறுகின்றது. இறைவனின் ஐந்தொழிலையும் ஒருங்கே காட்டும் ஆனந்த தாண்டவம் சைவ உலகின் கோயிலாக விளங்கும் சிதம்பரத்திலுள்ள பொன்னம்பலத்திலே (கனகசபையிலே நடைபெறுகின்றது). இது நாதாந்த நடனம் எனவும், புஜங்க நடனமெனவும் கூறப்படும். இத்திருத்தலத்தின் முக்கியத்துவத்திற்கேற்ப இக் கோயில் ஒரு பெரிய நடனக் களஞ்சியமாகவே விளங்குகின்றது.
சிதம்பரம் எனில் சித் ஆகிய ஆகாசம் எனும் பொருள்படும். இங்குள்ள லிங்கம் ஆகாசலிங்கமாகும். உள்ளமாகிய ஆகாசத்தில் இறைவனின் ஆனந்தக்கூத்து எப்பொழுதும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்ற உட்கருத்து உண்டு. இவ்வாறு ஆன்மாக்களின் ஈடேற்றத்திற்காக இறைவன் சிவபெருமான் தமிழ் நாட்டிலுள்ள ஆறு திருத்தலங்களிலே ஐந்தொழில்களையும் புரிந்து கொண்டிருக்கிறான் எனக் கூறும்போது தாண்ட வடிவங்களுக்கும் தமிழகத்திற்குமிடையிலுள்ள நெருங்கிய தொடர்புகள் வெள்ளிடைமலை, எனவே சிவபிரானின் தாண்டவத் திருவடிவம் தமிழ் நாட்டிலே தோன்றியது என்பதற்கு இஃது ஒரு தக்கசான்று என மயிலைச் சீனி வேங்கடசாமி
கூறியுள்ளார். இவற்றுள்ளே குறிப்பாக ஆனந்த
f6f

Page 198
ՃԳԼյվԼւ6
1. தலபு
ஸ்வஸ்திகரேசிதம்
~
162
 
 
 

鞘 ধ্রু ః 羲
8
இந்துக்கலைக்களஞ்சியம்

Page 199
猴
11. கடிச்சி
ர்த்தநிகுட்டம்
அர்த்த
O
ஸ்திகம்
Geogooooo
13
ចំGoG
17
பிருஸ்டஸ்வஸ்திகம்
16
சியம்
605567(65
d
ந்துக்கை
 
 
 
 
 
 

18. அலாதகம்
f63

Page 200
25. ஊர்த்துவஜாது 26. நி
164
 

:
இந்துக்கலைக்களஞ்சியம்

Page 201
29. ரேசித
GooS
ர்த்தமத்த
அர்த்தம
28
32. சவ
புஜங்கத்
35
ட்சம்
. தண்டப
34
கலைக்களஞ்சியம்
இந்துக்
 
 
 
 

܀
3.
ரஸ்தரேசிதம்
165

Page 202
43. கடிப்பிராந்தம் 44. லதா
f66
 

டகரேசிதம் - 42. விருட்சிகருட்டிதம்
45. ForGOrb
இந்துக்கலைக்களஞ்சியம்

Page 203
52. குஞ்சிதம்
இந்துக்கலைக்களஞ்சியம்
 

வ்யம்ஸிதம்
48.
நதகம
கிராந்
1.
5
உரோமண்டலம்
54
SOTLGOLO
f67

Page 204
168
 

uño
அர்க்கல
57.
uño
60. (LITOOTUIT5
பார்சுவக்ராந்தம்
63
th
நிவிர்த்த
ஞ்சியம்
伽Mö酮
இந்துக்கை

Page 205
65. வித்யு,
uño
64. நிஸ்தம்பித
tb
67. விவர்த்திதக
கருடபலுதகம
7Ο
இந்துக்கலைக்களஞ்சியம்
 
 
 
 
 

72. பரிவிர்த்தம்
f69

Page 206
77ó
79. அபக்ராந்தம்
80. ԼԸ
 

th
- &#F601 601.5
75
65T5b
தராவ
த்தம்
78. சூசீவி
அர்த்தசூ
LLö5LD
81. நிகு
கலைக்களஞ்சியம்
ந்துக்
இ

Page 207
tb
- 5600TLUIT.g5
82
uño
85. நிதம்ப
tb
88. Goffប់យ៉ាg6
கலைக்களஞ்சியம்
இந்துக்
 
 
 
 

பிரேங்கோலிதம்
84
6MOSSLD
கரிஹஸ்
87
3.
雞
tb
ர்ஷிதக
GS
9 O
விக்ரீடிதம்
7
f

Page 208
2 .
92.
உத்ருத்தம்
91
9.
95.
94. ஜநிதம்
98. ஊரூ
97. ஏலகாக்கிரீடித
772
 
 
 
 
 

5606 OIBI6 LLQ-5LD
93
96. நிவேசம்
ஸ்கலிதம்
மதஸ்க
99
இந்துக்கலைக்களஞ்சியம்

Page 209
106. நாகாபஸர்ப்பிதம் 107. Fis L.
இந்துக்கலைக்களஞ்சியம்
 

108. கங்காவதரணம்
f73

Page 210
-
தாண்டவத்திற்கான நடராஜத் திருவுருவம் தமிழ் நாட்டிற்கே தனிச்சிறப்பானது என்பதற்கு அண்மைக் காலத்திலே ஒரு வலுவான சான்று கிடைத்துள்ளது. தமிழ் நாட்டிலுள்ள திருவெண்காட்டிலே கிடைத்துள்ள நடராஜரின் வெண்கலச்சிலையின் கீழ்ப் பீடத்திலுள்ள சாசனம் ஒன்று இக் கருத்திற்கு அனுசரணையாக உள்ளது. இதிலே தேசி அபயநிதியாபரண நாயக (தேசி நடனத்தை ஆடுபவரும்) பாதுகாப்பின் களஞ்சியமாக விளங்குபவருமாகிய தலைவர் (சிவபிரான்) எனப் பொறிக்கப்பட்டுள்ளது. இது பற்றித் தமிழ்நாடு தொல்லியல் துறையின் முன்னாள் இயக்குனர் கலாநிதி இ. நாகசுவாமி விளக்கியுள்ளார். இதிலே குறிப்பிடப்படும் தேசி நடனம் பரதர் கூறும் நாட்டிய சாஸ்திர மரபி லிடம்பெறவில்லை எனச் சான்றுகள் காட்டி விளக்கும்போது, நாட்டிய சாஸ்திரம் கூறும் 108 கரணங்களில் ஆனந்த தாண்டவம் கூறப்படவில்லை என்பதையும் அவர் குறிப்பிட்டுள்ளார். எனவே இது தமிழகத்திற்கே தனிச் சிறப்பானதெனவும் அவர் கருதுகிறார். எனினும் பரதர் கூறும் புஜங்கதிராசிதம், புஜங்கத் ரஸ்தரேசிதம், புஜாங்காஞ்சிதம் முதலிய கரணங்களில் குறிப்பாக முதலாவதிலே தான் ஆனந்த தாண்டவத்திற்கான அமிசங்கள் ஒரளவாவது காணப்படுகின்றன என்பதும் கவனித்தற்பாலது. ஆனந்த தாண்டவம் சைவாகமங்களிலே புஜங்க நடனமெனக் குறிப்பிடப் பட்டிருப்பதாகும் எனப் பேராசிரியர் வே. ராகவன் கூறியுள்ளார்.
சிவபிரானின் திருநடனம் பற்றிச் சிறப்பாகப் பாடியுள்ள சைவநாயன்மார்களிலொருவரான திருநாவுக்கரசர் சாஸ்திரீய நடனக் கலைஞர் தெரிந்திராத நடனத்தைச் சிவபிரான் ஆடிக் கொண்டிருக்கிறார் என்ற கருத்துப்பட “அரங்கிடை நூலறிவாளர் அறியப்படாததோர் கூத்து’ எனச் சிறப்பித்துக் குறிப்பிட்டுள்ளார். எனவே ஆனந்த தாண்டவம் பரதரின் நடனக் கலை மரபிற்குப் புறம்பானதென்பது புலனாகும். அதே வேளையில் இறைவனின் திருநடனம் மனிதர் வகுத்துள்ள விதிகளுக்கு அப்பாற்பட்ட தனிச் சிறப்புடையது என்ற கருத்தும் உள்ளது.
மேற்குறிப்பிட்ட நடராஜர் சிலையின் பீடத்திலுள்ள தேசி எனும் பதம் நன்கு குறிப்பிடற்பாலது. இந் நடனம் தேசி நடன இயல்பினை உடையதென்பதையும் இது சுட்டிக் காட்டுகிறது எனவும் இ. நாகசுவாமி குறிப்பிட்டுள்ளார். மேலும் அவ்வத் தேசங்களுக்குரிய நடனமே தேசி நடனம் என்பது ஏற்கனவே கூறப்பட்டுள்ளது. எனவே ஆனந்த தாண்டவமும், பரத நாட்டியமும் தமிழ்நாட்டிற்கே உரியவை என்பது புலப்படும்.
தமிழிலக்கியத்தைப் பொறுத்தமட்டிலே சிலப்பதிகாரம் மாதவி ஆடியதாகக் கூறும் பன்னிரண்டு ஆடல்களில் கொடுகொட்டியும், பாண்டரங்கமும் சிவபிரான் ஆடியவை கலித்தொகையின் கடவுள் வாழ்த்துப் பாடலில் அதன் ஆசிரியரான நல்லந்துவனார் சிவபெருமானைக் குறிப்பாக நடராஜராக வருணித்து, அவர் ஆடிய கொடுகொட்டி பாண்டரங்கம், காபாலம் ஆகிய நடனங்கள் பற்றியும்
774

குறிப்பிட்டுள்ளார். ஆனால் திருமூலரின் திருமந்திரத்திலே தான் நடராஜத் திருவுருவத்தின் சிறப்புகளும் தத்துவார்த்த விளக்கங்களும் முதன் முதலாக விரிவாக வந்துள்ளன. காரைக்காலம்மையாரின் திருப்பாடல்களிலும் ஆடவல்லான் பற்றிய குறிப்புகள் உள்ளன. இதன் பின் தொடர்ந்து தமிழிலக்கியத்திலே தொடர்ச்சியாகவும் விரிவாகவும் குறிப்புகள் வந்துள்ளன.
சிவ தாண்டவத்தின் சிறப்புகளைப் பிற்காலத்திலே முத்துத் தாண்டவர், கோபால கிருஷ்ண பாரதியார், முத்துஸ்வாமி தீக்ஷதர், பாபநாசம் சிவன் முதலிய பல வாக்கேயகாரர்கள் (இசைப் பாடல்களை இயற்றியவர்கள்) பல இன்னிசைப் பாடல்களிலே நன்கு பாடியுள்ளனர். (வி சி)
தத்தாத்ரேயர்
அத்ரி முனிவர், தமது மனைவி அநசூயையுடன் 'ருஷம் என்னும் குலமலையில் உள்ள அழகிய வனத்தில் தனது பிராணாயாம வன்மையினால் மனத்தை அடக்கி ஒரு பாதத்தில் நின்று காற்றையே உணவாகக் கொண்டு நூறு ஆண்டுகள் தவம் செய்தார்.
அப்படித் தவம் செய்யும் பொழுது “இந்த உலகத்திற்கெல்லாம் யார் தலைவனோ அவனைச் சரணடைகின்றேன். அவன் தனக்கு நிகரான ஒரு குமாரனை எனக்குத் தந்தருள வேண்டும்” என்று நினைத்துத் தவம் புரிந்தார். அவருடைய சிரசிலிருந்து வெளிப்பட்ட ப்ராணாயாம அக்னியால் மூவுலகமும் தகிக்கப்பட்டது. இதனை உணர்ந்த மும்மூர்த்திகளும் மற்ற தேவகணங்களுடன் அத்ரியின் ஆசிரமத்திற்கு வந்தனர். சிவன், பிரம்மா, விஷ்ணு என்ற மும்மூர்த்திகளும் தத்தம் வாகனமாகிய எருது, அன்னம், கருடன் ஆகியவற்றில் ஒருங்கு சேர்ந்துவர, மனத்தில் ஒளி ஏற்பட்டுத் தவநிலையிலிருந்து விழித்து எழுந்து மும்மூர்த்திகளையும் பணிந்து வணங்கி கரங்கூப்பி, மும்மூர்த்திகளின் திவ்ய ஒளி கண்களைக் கூசச் செய்தலால் கண்களையும் மூடிக்கொண்டு கீழ்வருமாறு பிரார்த்தனை செய்தார்.
“ஒவ்வொரு யுகத்திலும் உலகத்தைப் படைத்தல், காத்தல், அழித்தல் என்னும் காரியங்களுக்காகத் தமது மாயா குணத்தை முன்னிட்டு வேறு வேறாகப் பிரிகின்ற பிரம்மா, விஷ்ணு, சிவன் என்னும் மும்மூர்த்திகளான உங்களை நான் வணங்குகின்றேன். இந்த மும்மூர்த்திகளில் எந்த ஒருவரை நான் இங்கு அழைத்தேன்? எந்த ஒருவரை எனது புத்திரனாக அவதாரம் செய்ய வேண்டுமென்று நான் விரும்பினேன்? மனிதர்களின் மனதிற் கெட்டாத தாங்கள் மூவரும்தான் நான் விரும்பியதை அருள வேண்டும் ”
அத்திரி முனிவரின் வார்த்தையைக் கேட்டமும்மூர்த்திகளும் சிரித்துக் கொண்டே அன்பாக அருளினார்கள். 'ஓ! அந்தண குல உத்தமரே! நீர் என்ன நினைத்து ஸங்கல்ப்பம் செய்து கொண்டீரோ அதுவே நடைபெற வேண்டும். ஆகவே எங்கள்
இந்துக்கலைக்களஞ்சியம்

Page 211
மூவரின் அம்சங்களுடன் மூன்று குமாரர்கள் உமக்குப் பிறந்து உம்முடைய புகழை உலகில் பரப்பப் போகின்றார்கள்’ என்று ஏற்றுக் கொண்டு, பிரம்மாவின் அம்சமாகச் சந்திரனும் மகாவிஷ்ணுவின் அம்சமாக துர்வாச முனிவரும் மூன்று குமாரர்களாகப் பிறந்து புகழ் பரப்பினர்.
தத்தாத்ரேய உபநிஷத் அதர்வ வேதத்தைச் சார்ந்தது. மூன்று காண்டங்கள் உள்ளன. தத்த மந்திரங்களை நன்கு விளக்கி, அதன் பயனையும் கூறுகின்றது. தாம் என்பது தத்த மந்திர பீஜம், இதனைத் தாரகமாயும் கூறலாம். இது ஏகாக்ஷர மந்திரம். இது போன்று ஆறு, எட்டு, பன்னிரண்டு, பதினாறு, முப்பத்திரண்டு அக்ஷரங்கள் உள்ள மந்திரம் சுலோக வடிவமாய் உள்ளது.
இம் மூன்று காண்டங்களில், பைசாசம், பிரும்ம ராக்ஷஸம் முதலிய துஷ்ட சக்திகளின் உபாதையைப் போக்கவும், எதிரிகளின் ஏவல் முதலிய உபாதைகளை சீர் செய்யவும், வறுமையைப்போக்கவும், மக்களை வசீகரிக்கவும் மந்திரங்கள் உள்ளன. இம் மந்திரங்களை அறிந்து பெரியோர்களிடமிருந்து உபதேசம் பெற்றே கூறவேண்டும்.
மேலும், பூரீ தத்தாத்ரேய சஹஸ்ர நாமாவளி, பூரீ தத்தாத்ரேயாஷ்டோத்தர சதநாமஸ்தோத்ரம், நாமாவளி, பூரீ தத்தாத்ரேய ஸப்ரபாதம், பூரீ தத்தாத்ரேய ஸ்தோத்திரம், பூரீ தத்தாபராத கூடிமாபந ஸ்தோத்ரம், பூரீ தத்த ப்ரார்த்தநா சதுஷ்கம் முதலியன. பூரீ தத்தாத்ரேயரைப் போற்றி வணங்க சகல நன்மைகளையும் அளிக்கும். (ബ്, ബ)
தாந்திரிகம்
இந்து சமய வரலாற்றில் ஒரு காலகட்டத்தில் தாந்திரிகம் என்று சொல்லப்படும் வழிபாட்டு நெறி உற்பத்தியாகிக் காலப்போக்கில் இந்திய துணைக்கண்டத்திலும், இந்தியப் பண்பாடு செல்வாக்குப் பெற்றிருந்த பிற தேசங்களிலும் பரவியது. தாந்திரிகம் சக்தி வழிபாட்டுடன் தொடர்புடையது. அது தந்திரங்கள் என்று சொல்லப்படும் நூல்களை ஆதாரமாகக் கொண்டது. பெளத்த சமய மரபிலுள்ள தாந்திரயாணம் என்னும் நெறியோடு நெருங்கிய தொடர்புடையது. அவற்றின் தொடர்புகள் பரஸ்பரமானவை. எனவே அவை ஒவ்வொன்றைப் பற்றியும் வித்துவபூர்வமாக விளங்கிக் கொள்வதற்கு இரண்டு நெறிகளுக்கும் உரிய பிரதான அம்சங்களைப் புரிந்து கொள்வது அவசியமாகும். தாந்திரயானமும் தாந்திரிகமும் ஏககாலத்தில் ஏழாம் நூற்றாண்டு முதலாகத் துருக்கியராட்சி ஏற்படும் வரையான காலப்பகுதியிற் சமுதாயத்திலே பெருஞ்செல்வாக்குப் பெற்றிருந்தன. அவற்றிடையே தாந்திரயாணத்தின் உற்பத்தி காலத்தாற் சிறிது முற்பட்டது.
வைதீக நெறியை அடிப்படையாகக் கொண்ட சமயநெறிகள் வித்துவாத மயமாகிப் பொதுமக்களிடையே செல்வாக்கினை இழந்தவொரு காலகட்டத்தில், வடஇந்தியாவிலே தாந்திரிகம் வளர்ச்சி பெற்றது. அதன் செல்வாக்கு சைவம், வைணவம் ஆகியவற்றிற் குறிப்பிடத்தக்க அளவில் ஏற்பட்டது. பண்டிதர், பாமரர் என்ற வேறு பாடின்றியும் மேலோர், கீழோர் என்ற
இந்துக்கலைக்களஞ்சியம்

பேதமின்றியும் எல்லோரும் சாதகர்களாகி ஒப்புக்கொள்ளக் கூடிய சமய நெறியாகத் தாந்திரிகம் விளங்கியது. அது இந்து சமுதாயம் முழுவதிலும் செல்வாக்குப் பெற்றது. பொதுவாகச் சமுதாயம் மரபுவழியான சமயசிந்தனைகளிலும் ஆசாரங்களிலும் நெகிழ்ச்சியினையும் மாற்றுவழிக் கருத்து நிலைகளையும் வரவேற்கும் என்பதற்கு தாந்திரிகத்தின் வளர்ச்சி ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும்.
தந்திரங்கள்
பரஞானத்தை விளக்கும் ஒரு வகையான நூல்களே தந்திரங்கள் என்று தாந்திரிக மரபிலே கொள்ளப்படும். அவை யந்திரம், மந்திரம் என்பவற்றின் மூலமாகப் பரஞானத்தைப் போதிக்கின்றன. இந்திய இலக்கிய மரபிலே சமயநெறி பற்றிய நூல்களைத் தந்திரம் என்று குறிப்பிடும் வழக்கம் கி. பி ஐந்தாம், ஆறாம் நூற்றாண்டுகளிலிருந்தே ஏற்பட்டது. ஏழாம் நூற்றாண்டு முதல் ஒன்பதாம் நூற்றாண்டு வரையுள்ள காலத்துத் தந்திரங்களின் ஏட்டுச் சுவடிகள் நேபாளத்திற் கிடைத்துள்ளன. காம்போஜ தேசத்தில் ஒன்பதாம் நூற்றாண்டிலே தந்திரங்கள் அறிமுகஞ் செய்யப்பட்டன என்பதை அங்குள்ள சாசனக் குறிப்பினால் அறியமுடிகின்றது. பெளத்த சமயத்தைச் சேர்ந்த தந்திரங்கள் சீனாவில் எட்டாம் நூற்றாண்டிலும் திபெத்தில் ஒன்பதாம் நூற்றாண்டிலும் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன.
இந்து சமயத்திற்கு ஆதாரமான நூல்களைக் காலவரிசைக் கிரமமான ஒழுங்கு முறையில் வேதம், ஸ்மிருதி, புராணம், தந்திரம் என நான்கு பிரிவுகளாக வகைப்படுத்துவது வழக்கம். அவற்றுக்கிடையில் குறிப்பிடத்தக்க அளவிலே தொடர்புகள் உண்டென்பது பொதுவாக ஒப்புக்கொள்ளப்பட்டது. புராணங்களுக்கும் தந்திரங்களுக்கும் இடையில் அதிகமான பொதுப்பண்புகள் காணப்படுகின்றன. தந்திரங்களின் பொருள்மரபு புராணங்களை முன்மாதிரியாகக் கொண்டது. புராணங்களின் சில பகுதிகள் தந்திரங்கள் போலவே அமைந்துள்ளன. புராணங்களைப் போலத் தந்திரங்களையும் ஐந்தாம் வேதம் என்று கொள்வர். வேதங்களைப் போலன்றி தந்திரங்களை வர்ண வேறுபாடுகளும் சாதிசமய பேதங்களும் கடந்த நிலையில் எல்லோரும் ஒதலாம். ஆண்களும் பெண்களும் அவற்றைப் படிக்கலாம். தாந்திரிக சமயநெறியில் எதுவித வேறுபாடுமின்றி எல்லோருஞ் சாதகர்களாகலாம். கலியுகத்துச் சமயசாத்திர நூல்கள் எல்லாவற்றிலும் தந்திரங்களே மேலானவையென்று தாந்திரிகர் கொள்வர்.
தந்திரங்களிலே ஞானபாதம், யோகபாதம், கிரியாபாதம், சரியாபாதம் என்னும் நான்கு பகுதிகள் அடங்கும். ஞானபாதம் சமய தத்துவங்களை விளக்குவது. அற்புதமான ஆற்றல்களைப் பெறுவதற்கான தியானம் பற்றியது யோகபாதம். விக்கிரக வழிபாடு, ஆலய நிர்மாணம் என்பன பற்றிய விவரங்கள் கிரியா பாதத்தில் உள்ளன. சரியாபாதத்திலே கிரியாசாரங்கள் விளங்கப்படுகின்றன.
f75

Page 212
தந்திரங்கள் அளவிற் பெரியவை. அவற்றிலே விளக்கப்படும்
விடயங்களும் பல்துறைகளைச் சார்ந்தவை. பிரபஞ்ச உற்பத்தி, அதன் அழிவு, மந்திரங்களின் தொகுப்பு, தேவர் படிமங்களின் தாபனம், புனித தலங்கள் பற்றிய வர்ணனைகள், ஆஸ்ரம தர்மங்கள், அந்தணரை ஆதரித்தல், சீவராசிகளைப் பராமரித்தல், யந்திர நிர்மாணம், பரமார்த்திக சிந்தனைகள், மரஞ்செடிகள் பற்றிய விவரங்கள், விண்மீன்கள் நிலைகொள்ளும் தானங்கள், புராண வரலாறுகள் இரத்தினங்கள், மணிகள் என்பவற்றின் இயல்புகள், விரதங்கள் பற்றிய விவரங்கள், சுகாதாரம், கல்பாந்தரங்களைப் பற்றிய விவரங்கள், ஆண்மை, பெண்மை ஆகியவற்றின இயல்புகள் தானதர்மங்கள், இராசதர்மம், காலதேச தர்மங்கள், வழமைகள், ஆன்மீக ஈடேற்றம் என்பன பற்றித் தந்திரங்கள் விளக்கமான குறிப்புகளைக் கொண்டுள்ளன. அவற்றிலே சமயஞானம் பற்றிய சிந்தனைகளும் உலகியல் பற்றிய விவரங்களும் அடங்கியுள்ளமை குறிப்பிடற்குரியது. -
கடவுட் கோட்பாடும் வழிபாடும்
தந்திரங்களில் மிகவும் பிரசித்தமானது மகா நிர்வாண தந்திரம். தாந்திரிக சமயநெறியின் அடிப்படைக் கோட்பாடுகளையும் ஆசாரங்களையும் அதன் மூலம் தெளிவாக அறிந்துகொள்ளலாம். உபநிடதங்களைப் போல அது பிரம்மத்தைப் பற்றி விரிவாக விளக்குகின்றது. எல்லாவற்றின் உற்பத்திக்கும் தோற்றத்துக்கும் ஏதுவான அனாதியானதும் அழிவற்றதுமாகிய இயக்கத்தைச் சாக்தர்கள் ஆதிசக்தி என்று கொள்வர். தாயின் கருப்பையிலிருந்து உயிர்கள் அனைத்தும் உருப்பெறுவதைப் போல எல்லாவற்றுக்கும் மூலமான ஆதிசக்தியை ஆணாகவன்றிப் பெண்ணாகவே கொள்ளவேண்டும் என்பது சாக்தரிகளின் கோட்பாடு. பிரதிகிருதி, மாயை என்னும் தத்துவபூர்வமான கோட்பாடுகளும் பார்வதி, தர்க்கை, லக்ஷமி, ராதை என்று பெளராணிக் மரபின் வழிப் போற்றப்படுவோரும் உலோகமாதாவாகிய ஆதிசக்தியின் அம்சங்களாகும். பிரமன், சிவன், விஷ்ணு முதலிய தேவர்கள் உலோகமாதாவில் அடங்கியவர்கள், உலோகமாதாவாகிய ஆதிசக்தியிலிருந்து தோன்றியவர்கள் என்பது சாக்த தந்திரங்களின் கோட்பாடாகும். தாந்திரிக சிந்தனையிற் பெண்களில் ஒவ்வொருவரும் பராசக்தியான அன்னையின் அவதார மானவர்கள். எனவே, அவர்கள் மதிப்பிற்கும் போற்றதலுக்கும் உரியவர் களாவர். தாந்திரிக வழிபாட்டில் மந்திரம், பீஜம், யந்திரம், முத்திரை என்பன சிறப்பிடம் பெறும். வழிபாட்டிலே பயன்படுத்தப்படும் தோத்திரங்கள் மந்திரம் எனப்படும். வெவ்வேறு தெய்வங்களுக்கும் சிறப்பாகப் பயன்படுத்தப்படும் மறைஞானத்தின் சாரமான அக்ஷரங்கள் பீஜம் எனப்படும். கடதாசி, மரப்பட்டை, ஒலை, உலோகத்தகடு முதலிய வற்றில் வரையப்படும் படங்கள் யந்திரம் எனப்படும். வழிபாட்டிலே பயன் படுத்தப்படும் அத்தகைய யந்திரங்கள் மறைஞான சாரத்தை விளக்கும் அடையாளங்கள் பொருத்தியவை கைவிரல்களை வெவ்வேறு நிலைகளில் அடையாள பூர்வமாக அமைத்துக் கொள்ளுதல், கைகளை அவ்விதமாக நிலைப்படுத்தல், நியாஸம் செய்தல் என்பன முத்திரை களாகும். உள்ளங்கையினாலும் விரல்நுனிகளினாலும்
f76
 

தெய்வங்களை (படிமங்களை) எடுத்து உடலுறுப்புகளில் வைத்தல் நியாஸம் எனப்படும்.
மந்திரம், பீஜம், யந்திரம், முத்திரை என்பவற்றின் மூலம் ஆன்மீக ஈடேற்றத்தை நாடும் சாதகன் ஒருவன் தனது இஷ்டமான தெய்வத்தை அழைத்து அதனோடு தன்னை இணைத்துக் கொள்வான். சில சமயங்களிலே தேவர்களையும் மனிதர்களையும் வசப்படுத்துவதற்கு அபிசாரங்களாக அவை பயன்படுத்தப்பட்ட பொழுதிலும் சாக்தராகிய சாதகர்களைப் பொறுத்தவரையில் தெய்வத்துடன் ஒன்று கூடி முக்தி நிலை அடைவதற்குரிய சாதனங்களாகவே பெரும்பாலும் அவை பயன் படுத்தப்பட்டன. ஆன்மீக ஈடேற்றத்துக்கான சாதனங்கள் என்ற வகையிலே தந்திரங்களைப் பற்றி முரண்பாடான கருத்துகள் எழுந்தன. ஆன்மீகத்தின் உன்னதமான முதிர்ச்சி நிலையை அடைதற்கு வேண்டிய ஆழமான தத்துவ சிந்தனைகளையும் இறுக்கமான சமயாசாரங்களையும் பரந்தநோக்கினையும் தந்திரங்கள் கொண்டுள்ளன என்று ஒரு சாரார் கொள்வர். வேறு சிலர் புரிந்துகொள்ள முடியாத வீணான வாதங்களும் மர்மமான விவரங்களும் ஒழுக்கநெறிகளுக்கு முரண்பாடான ஆசாரங்களும் அவற்றிலே கலந்துள்ளன என்று கருதுவர்.
தீகூைடியும் குருவும்
தந்திர வாசகங்களின் உண்மையான பொருளைப் புரிந்து கொள்வதற்குக் குருவிடம் சாதகர் ஒருவர் முறைப்படி தீகூைடி பெறவேண்டும். குருவின் வழிகாட்டலின் மூலமே சாதகனொருவன் தந்திரங்களிற் பொதிந்துள்ள சமயஞானத்தை அறிந்துகொள்ளலாம். சாதகர் கையாளும் வழிமுறைகள் இருண்மயமானவை. அபாய கரமானவை. பல சுற்று வளைவுகளைக் கொண்டவை. குருவின் வழி காட்டலின் மூலம் அவற்றைக் கடந்து சென்று ஞான ஒளியைப் பெற்றுக் கொள்ளமுடியும். குருவின் மூலம் அபிஷேகம் பெறும் சாதகர் ஞானதரிசனத்தை நோக்கிய வழியை அடைகின்றார். சித்தத்தை மாசு படுத்தும் தாமஸ் குணத்திலிருந்தும் ராஜஸமான புத்திபூர்வமற்ற செயற்பாடுகளிலிருந்தும் அபிஷேகத்தின் மூலமாக விமோசனம் கிடைக்கின்றது. பாசத்தளைகளை அறுத்து, சாத்துவிகம் மேலோங்கு மிடத்துச் சாதனுக்கு இறைவரோடு ஐக்கியப்படுதலாகிய திவ்வியபாவம் என்னும் அனுபவம் ஏற்படுவதற்கு வழிபிறக்கும்.
பசுமார்க்கம், வீரமார்க்கம், திவ்விய மார்க்கம் என்னும் மூன்று நிலைகளிலுள்ள வழிகளைப் பற்றித் தந்திரங்கள் விளக்குகின்றன. சமுதாயத்தில் மரபுவழியாக நிலவிவரும் ஒழுக்கசீலங்களைக் கடைப் பிடித்தல் பசுமார்க்கம். அது மிருகங்களைப் போல இயல்பான நெறிகளைப் பின்பற்றும் நெறியாகும். வழக்கத்திற்கு மாறான, வழமையாக ஒப்புக்கொள்ளப்பட்ட ஒழுக்கநெறிக்கு விரோதமான ஆசாரங்களைத் துணிகரமாகவும் கட்டுப்பாடுகளுக்கு அமையவும் அநுசரித்தல் வீரமார்க்கம். நன்மை, தீமை, ஏற்புடையது ஒப்புக்கொள்ள முடியாதது என்ற முரண்பாடுகளைக் கடந்த நிலையில் பரத்தோடு ஐக்கியப்படுதல் திவ்விய நிலையாகும்.
இந்துக்கலைக்களஞ்சியம்

Page 213
பிந்திய காலத்துக்குரிய தந்திரங்களில் இம்மூன்று மார்க்கங்களிலும் ஏழு பிரிவுகள் உண்டென்று சொல்லப்படுகின்றது. பசுமார்க்கம் வேதாசாரம், வைஷ்ணவாசாரம், சைவாசாரம், தகூறினாசாரம் என்னும் நான்கு பிரிவுகளை உடையது. வாமாசாரம், சிந்தாந்தாசாரம் என்பன ஐந்தாம், ஆறாம் பிரிவுகள். ஏழாவது கெளலாசாரம், கிரியை வழிபாடு, விஷ்ணு வழிபாடு, சிவ வழிபாடு, தேவியைத் தியானம் செய்தல் என்பன முதல் நான்கு நிலைகளிலும் இடம்பெறும். இந்நான்கிலும் மரபுவழியான ஆசாரங்களும் சடங்குகளும் கிரியைகளும் அனுஷ்டிக்கப்படும். அஹிம்சை, புலால் உண்ணாமை, புலனடக்கம் கட்டுப்பாடான குடும்பவாழ்க்கை, எளிமை, தானம், கிரமமான கடவுள் வழிபாடு ஆகியன மேலான தர்மங்களாகக் கொள்ளப்படும். ஆயினும் நான்காவது நிலையில் இரகசியமான தாந்திரிகக் கிரியைகள் மூலம் அற்புதமான ஆற்றல்களைப் பெறுவதற்கு விரோதமான கட்டுப்பாடுகள் இருப்பதில்லை.
ஐந்தாவது நிலையில் புதுமையான ஆசாரங்களும் உபாயங்களும் கையாளப்படும். அவை தொடர்பான கிரியைகள் இரவிலே இரகசியமாக நடைபெறும். பாலியல் உறவுகள் தொடர்பான வழமையான கட்டுப்பாடுகள் புறக்கணிக்கப்படும். மரபுவழியான சம்பிரதாயங்கள் கைவிடப்படும். உணவு, பானம் பற்றிய வழமையான கட்டுப்பாடுகளும் மீறப்படும். பெண்கள் எல்லோரும் சிவனின் உருவங்களாகவும் கொள்ளப்படுவர். விவாகமான பெண்களை எதுவித தடையுமின்றித் தாந்திரிக கிரியைகளுக்குப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
சிந்தாந்தசாரத்தைப் பின்பற்றும் சாதகர் சமுதாயத்தில் ஒப்புக் கொள்ளப்படாத வழக்கங்களைப் பின்பற்றுவதற்கு எந்த வகையிலும் தயங்குவதில்லை. உணவு, பானம், போகம் என்பனவற்றைப் பொறுத்தவரை தமக்கு வேண்டியவை என்று கருதுவனவற்றை அவர்கள் மன உறுதியோடு செய்துகொள்வர். இவற்றைக் குறித்துப் பொதுசன அபிப்பிராயங்களை அவர்கள் பொருட்படுத்துவதில்லை. பஞ்ச மகரங்களாகிய மது, மச்சம், மாமிசம், முத்திரை, மைதுனம் ஆகியவற்றிலே பொருத்தமான வேளைகளிலும் இடங்களிலும் பகிரங்கமாகவே அவர்கள் ஈடுபடலாம். உள்ளவை அனைத்திலும் காணப்படும் வேற்றுமைகள் மாறுபாடுகள் பற்றிய எண்ணங்களைப் போக்கி கருத்து நிலையில் எல்லாவற்றையும் ஒருநிலைப்படுத்தி அதன் மூலம் ஏகமானதை உணர்ந்து அதனுடன் ஒன்றுபடலாம் என்று கருதப்பட்டது.
மதுவர்க்கங்கள் வெறியூட்டுவதனாலே தகாதவையெனினும் மதுபானத்தின் மூலம் பற்றும், பயமும் அற்றுப்போவதால் மதுபானம் விரும்பத்தக்கது. மாமிச போசனத்தால் உடல் வலிமை பெறும்; மச்ச உணவுகள் பாலியல் உணர்வுகளைப் பலப்படுத்துகின்றன. புணர்ச்சியின் மூலம் மகாசுகம் ஏற்படுகின்றது. ஆதலாற் பஞ்சமகரங்கள் சாதகரின் உடலையும் மனத்தையும் வலுப்படுத்துவதோடு அதன் மூலமாக ஆன்மீக ஈடேற்றத்துக்கு ஏதுவாகின்றன. சாதகனொருவன் தன்
இந்துக்கலைக்களஞ்சியம்

மனையாளைத் தவிர்த்த பெண்களோடு மைதுனத்திற் கூடுவது விலக்கானதென்று பொதுவாகக் கருதப்பட்டது.
நன்மை, தீமை ; சரியானது, பிழையானது ; நீதி, அநீதி என்றபடியான இருமை நிலைப் பேதங்களைச் சிந்தனா பூர்வமாகக் கடந்துவிடும் சாதகனொருவன் கெளலாசார பாவத்தைப் பெறும் தகுதியினை அடைவான். அது பற்று வெறுப்பற்ற திவ்விய நிலை, பேதங் கடந்த நிலை. அந்த நிலை நன்மை- தீமை, இன்பம்- துன்பம், கருணை- கொடுமை என்னும் பேதங்களைக் கடந்த நிலை.
கெளலாசார பாவம் அடைந்த ஒருவருக்குச் சமயபேதங்கள் இல்லை; அவருக்கு எல்லாச் சமயநெறிகளும் ஒப்புக்கொள்ளக் கூடியவை. மனதிலே சக்தியை உபாசிக்கின்ற பொழுதிலும் அவன் புறத்தே சைவரிடையே சைவனாகவும், வைணவரிடையே வைணவனாகவும் பழகிக்கொள்வான். அவன் எல்லாவற்றையும் தன்னிற் காண்பான்; தன்னை எல்லாவற்றிலுங் காண்பான்.
பதினோராம் நூற்றாண்டளவில் எழுதப்பட்ட கெளல ஞான நிர்ணயம் கெளலசாதனையின் உற்பத்தி, அதன் இயல்புகள், குறிக்கோள்கள் என்பன பற்றி விளக்குகின்றது. ஆசாரங்கள் பலவற்றைப் பற்றிய விவரங்கள் அதில் விளக்கப்படுகின்றன. பலவிதமான கெளல சம்பிரதாயங்கள் இருந்தன என்பதையும் அதன் மூலம் அறியமுடிகின்றது. பூர்வ, உத்தர என்ற பிரிவுகளில் அவை அடங்கும். உத்தர கெளலர் தாந்திரிக ஆசாரங்களைச் செயல்முறையிற் பின்பற்றினார்கள். பூர்வ கெளலர் பூரீ சக்கரத்தை ஆதாரமாகக் கொண்டு தியானத்தின் மூலமாகவும் மானசீகமாகவும் யந்திரசாதனைகளில் ஈடுபட்டனர்.
சாதகர்களுக்குத் தீகூைடி வழங்குவோரின் தகைமைகளைப் பற்றித் தந்திரங்களில் விவரமான விதிகள் அமைந்துள்ளன. சைவ சாக்த நெறிகளைச் சேர்ந்த குருமார்கள் எல்லாச் சமயநெறிகளைச் சேர்ந்தோருக்கும் தீகூைடி வழங்கலாம். வைணவம், செளரம், காணபத்யம் ஆகிய நெறிகளைச் சேர்ந்த குருமார் தத்தம் சமயநெறியிலுள்ள வர்களுக்கு மட்டுமே தீகூைடி வழங்கமுடியும். பிராமணர், பிராமணர் அல்லாதோர், பெண்கள் ஆகிய எல்லோரும் தாந்திரிக நெறியிற் புகுவதற்குத் தீகூைடி பெறுவது அவசியமாகும்.
கெளட தேசம், கேரளம், காஷ்மீரம் ஆகியவற்றிலே தக்ஷணாசாரம் சிறப்புடன் விளங்கியதென்று தகூகினாசார - தந்திரராஜ என்னும் நூல் குறிப்பிடுகின்றது. பரதகண்டத்தின் மேற்குப் பகுதிகளைச் சேர்ந்த குருமார் குணநலன்களில் உத்தமமானவர்கள்; தக்கிணத்தவர்கள் மத்திம வர்க்கத்தவர்; கெளடதேசம், காமரூபம் ஆகியவற்றில் உள்ளவர் அவர்களிலும் தரம் குறைந்தவர்கள், கலிங்கதேசத்தவர் எல்லோரிலுங் குறைந்தவர்கள். - இது பிருஹத் கெளதமீய தந்திரம் என்னும் நூலின் மதிப்பீடாகும்.
f77

Page 214
ஒதியான, ஜாலா (ஜாலந்தர) பூர்ணகிரி, மாதங்க (பூரீசைலம்), காமாக்கிய (காமரூபம்) என்னும் ஐந்து பகுதிகளிலும் தாந்திரிகம் சிறப்புடன் விளங்கியதென்று குலாலிகரம்நாய என்னும் நூலிற் கூறப்படுகின்றது. காமாக்கிய, சிரிஹட்ட, பூர்ணகிரி; உட்டியான என்னும் நான்கு தலங்களிலும் அமைந்த தந்திரபீடங்கள் மிகப் பிரதானமானவை என்னும் குறிப்பு சாதனமாலா என்னும் நூலிற் காணப்படுகின்றது.
சக்தி தத்துவத்தைப் பொறுத்தவரையில் சிவாகமங்கள், வைணவ சம்ஹிதைகள், சாக்த தந்திரங்கள் என்பவற்றுக்கிடையில் உடன்பாடு காணப்படும். அனைத்துக்கும் மூலகாரணமாகிய அனாதியான பரம்பொருளை ஆண் என்று கொள்ளுமிடத்து பிரபஞ்சமனைத்தினதும் வியாபகத்துக்கு ஏதுவான ஆற்றலைப் பெண்ணாகிய சக்தியென்றும் உருவகிப்பது பொதுவான மரபாகும். பிரபஞ்சத்தின் வியாபகத்துக்கும் இயற்கைத் தோற்றங்களிலுள்ள வேற்றுமைகளுக்கும் சக்தியே காரணமாகும். ஆண், பெண் சேர்க்கையினால் உலகத்து ஜீவராசிகள் அனைத்தும் தோன்றுவதைப் போல ஆணாகிய பரம் பொருளினதும் பெண்ணாகிய சக்தியினதும் சேர்க்கையால் நானவிதமான அமைப்புகள் அடங்கிய அண்டசராசரம் உருவாகி நிலைபெறுகின்றது.
புலக்காட்சிக்கு அகப்படும் உலகமும் தத்துவதர்சனங்களின் விளக்கமான உலகமும் மெய்யானவை என்பது பொதுவாகச் சாக்தர்களால் ஒப்புக்கொள்ளப்படும். பிரகிருதி மாயை சுயமாக இயங்காதது எனினும் அது நிலையானது. நாதம் ஞானமயமானது என்பது வேதங்களிற் காணப்படும் ஒரு சிந்தனையாகும். நாதம் வாக்மயமானது, அது பிரம்ம சொரூபமானது. நாத விந்து கலாதி நமோ நம என்பார் தாயுமானார். ஆகமங்களும் தந்திரங்களும் நாதம் பரம் பொருளின் அம்சமானது என்பதை விரிவாக விளக்குகின்றன. பீஜமந்திரங்கள் மூலமான இஷ்ட தெய்வங்களைத் தியானிப்பதன் மூலம் அவற்றைத் தரிசனம் பண்ணி அவற்றோடு ஐக்கியப்படலாம் என்பது தாந்திரிகளின் கோட்பாடாகும்.
தந்திரங்களை ஆராய்ந்த மேல்நாட்டு அறிஞரொருவர் அவை குறிக்கும் சமயநெறியினை மேல்வருமாறு வர்ணிக்கின்றார்! "தியானம், வழிபாடு, ஜபம், ஹோமம் ஆகிய நான்கும் யக்ஞத்தின் நான்கு கரங்கள்; மாத்திரிகா கூேடிாடா முதலான நியாஸங்கள் அதன் உடல், இஷ்ட தேவதை மூலம் உணரப்படும் மெய்ஞானம் அதன் ஆத்மா, பக்தி அதன் சிரசு, போற்றிப் பரவுதல் அதன் இருதயம்; சாதனை அதன் கண்கள்; சாதகன் ஒருவன் யக்ஞமானது (வழிபாட்டு நெறி) இவ்வாறான அம்சங்கள் பொருந்திய உடலமைப்புப் போன்றது என்பதை உணர்ந்து கொண்டு யக்ஞத்தின் அம்சங்கள் எல்லாவற்றையும் அனுசரிக்க வேண்டும். அல்லாதவிடத்து உடல் அங்கவீனமாவது போன்று யக்ஞமும் இயல்பற்றதாகிவிடும். யக்ஞத்தின் அம்சங்கள் எல்லாவற்றையும் அனுசரிக்கும் யக்ஞபுருஷனின் முயற்சிகளின் பயனாக அவன் சக்தியுடன் ஐக்கியப்படுவான். அவனுக்குச் சித்தி கிடைக்கின்றது.”
f78

அஞ்ஞான மின்மை (அ மாயா), அகங்காரமின்மை (அனகங்கார), பற்றின்மை (அராகா), தற்புகழின்மை (அமத), மோகமின்மை (அமோக), தற்பெருமையின்மை (அதம்ப), அநிந்தை, நிலைதளராமை (அக்ஷோப), பொறாமையின்மை (அமாத்சர்ய) ஆசையின்மை (அலோப) ஆகிய பத்துக் குணங்களையும் மலர்களாகக் கொண்டு சாதகன் ஒருவன் வழிபாடு செய்யவேண்டும்.
அஹிம்சை, புலனடக்கம், ஒப்புரவு, பிழைகளை மன்னித்தல், ஞானம் ஆகியன அவற்றிலும் மேலான குணநலங்கள் என்பது தந்திரங்களின் முடிபாகும். தந்திரங்கள் மூலமாக மனிதருக்கும் கடவுளுக்கு இடையிலான இடைவெளி சுருங்கியது. அவற்றினாற் சமூகத்திலே பக்திப்பிரவாகம் ஏற்பட்டது. மக்கள் கூட்டுமுயற்சிகளில் ஈடுபட்டனர். தானதருமங்களில் ஈடுபாடு கொண்டனர். பாரததேசம் அனைத்திலும் ஆலயங்களை அமைப்பதில் ஈடுபட்டனர். (சி.ப.)
தாம்ரலிப்தி
தொன்மையான துறைமுகப்பட்டினமாக விளங்கிய நகரம். இந் நகரம் இப்பொழுது வங்காள மாநிலத்தில் மிட்னாப்பூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. தாம்ரலிப்தியின் (Tamralipti) இன்றைய பெயர் தம்லூக்கு (Tamiuk) என்பது ஆகும். தாம்ரலிப்தி பாளிமொழியில் தாமலித்தி (Tamitti) என்றும் கூறப்படும். இந்நகரம் ஊக்ளி ஆற்றின் துணையாறான உரூப நாராயணன் ஆற்றிற்குத் தெற்கில் அமைந்துள்ளது. பண்டைக் காலத்தில் இந் நகரம் முக்கிய துறைமுகப்பட்டினமாக விளங்கியது. இந் நகரத்தைப் பற்றி மகாபாரதம் குறிப்பிடுகிறது. சமண மதச் சான்றுகளில் இந் நகரம் வங்கத்தின் தலைநகராக விளங்கியமை கூறப்பட்டுள்ளது. இலங்கையின் மகாவம்சம் என்னும் பெளத்த நூலில் விசயன் என்னும் மன்னன் இந்நகரிலிருந்தே தனது படைகளுடன் இலங்கைக்குச் சென்று அங்குக் குடியிருப்புகளை நிறுவியதாகக் கூறப்பட்டுள்ளது. அசோகர் தம் சமயப் பரப்பாளர்களை இந் நகரில் இருந்தே போதிமரத்தின் கிளை ஒன்றைக் கொடுத்து இலங்கைக்கு அனுப்பிவைத்தார். பண்டைக் காலத்தில் தென்கிழக்காசிய நாடுகளுக்கு இந்திய வணிகர் இந் நகரிலிருந்தே சென்றனர். தாலமி (Ptolemy) இந் நகரைத் தாமலைட்சு (Tamalites) எனக் குறிப்பிட்டுள்ளார். இரகுவம்சம் என்னும் நூலில் இந் நகரத்தின் அமைவிடம் கூறப்பட்டுள்ளது. அதன்படி இந்நகரம் கபிசா ஆற்றின் கரையில் அமைந்திருந்தது. தண்டின் (Dandin) என்பவர் தம்முடைய தசகுமாரசரிதத்தில் இந்நகரத்தில் பிந்துவாசினி (BinduVasini) என்னும் கோயிலொன்று இருந்ததைக் குறிப்பிட்டுள்ளார். சீனநாட்டுப் பயணிகள் இக் கோயிலைக் காண வந்ததாகவும் அவர் கூறியுள்ளார். சீனப் பயணியான பாகியான் இந் நகருக்கு வருகை புரிந்தார். சம்பாவிற்கு (Champa) 50 யோசனை கிழக்கில் இந் நகரம் அமைந்திருந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார். பாகியான் இத் துறைமுகப் பட்டினத்திலிருந்தே இலங்கைக்குச் சென்றார். இவரை அடுத்து வந்த சீனப்பயணி யுவான்சுவாங்கு இந் நகரின்
இந்துக்கலைக்களஞ்சியம்

Page 215
பரப்பளவைக் கூறியுள்ளார். இந் நகரம் ஏறக்குறைய 400 கி. மீ(250 மைல்) சுற்றளவு உடையது. கடற்கரையின் அருகில் உள்ள இப்பகுதி தாழ் நிலமும் ஈரப்பதமும் கொண்டு விளங்கியது. இந் நகரத்தைக் கடல் வழியும் தரை வழியும் இணைத்தன என்று யுவான்சுவாங்கு தமது குறிப்பில் கூறியுள்ளார். இந் நகரில் பத்துப் பெளத்த மடாலயங்களும் அசோகரின் கற்றுாண் ஒன்றும் இருந்தன எனக் கூறப்படுகிறது.
கடல் வாணிகத்தில் இந் நகரம் (கி. பி. 4ஆம் நூற்றண்டு முதல் 12ஆம் நூற்றாண்டு வரை) தலைசிறந்து விளங்கியமையைக் கதாசரித சாகரம் என்னும் நூல் குறிப்பிடுகிறது. இந் நகரத்திற்கு அயோத்தி நகரிலிருந்து வந்த மூன்று சகோதரர்கள் வாணிகம் செய்து பொருளிட்டியமை குறித்துக் கல்வெட்டொன்று கூறுகிறது. இட்சிங்கு (ltsing) என்னும் சீனப்பயணி இங்கிருந்த ஒரு பெளத்த மடாலயத்தில் தங்கினார். இம் மடாலயம் பாரகா (Baraha) எனக் கூறப்பட்டுள்ளது. யுவான் சுவாங்கும் இங்கிருந்த சில பெளத்த கோயில்களைப் பற்றிக் கூறியுள்ளார்.
தாம்ரலிப்தியிலே கள ஆய்வுகளிற் பல தொன்மையான பொருள்கள் கிடைத்தன. இங்கு 1940 ஆம் ஆண்டு மாதிரிக் குழிகள் தோண்டப்பட்டன. அகழாய்வுகள்1954-55ஆம் ஆண்டுகளில் இங்கு நடத்தப்பட்டன. இவ்வகழாய்வுகளின் மூலம் இந் நகரின் தொன்மை வெளிப்பட்டது. இந் நகரம் புதிய கற்காலத்திலிருந்து இன்றுவரை சிறந்த நகரமாக விளங்கியமை இதன் மூலம் வெளிப்பட்டது. இக் காலங்களுக்கு இடையில் பல இடைவெளிகள் காணப்படுகின்றன. இங்கு கிடைத்த புதிய கற்காலக் கைக்கோடரியுடன் நன்றாகச் சுடப்படாத மட்கலன்கள் கிடைத்தன. இது முதல் பண்பாட்டுக் காலமாகும். இரண்டாம் பண்பாட்டுக் காலம் கி. மு. 300 அல்லது கி. மு. 200இல் தொடங்கப்பட்டது. இக் கால கட்டத்தில் சுங்கர் கலை மரபைச் சார்ந்த சுடுமண் பொம்மை கிடைத்தது. செம்பு நாணயங்களும் பளபளப்பான கறுப்பு மட்பாண்டங்களும் இக் கால மண்படைகளிற் கிடைத்தன. மூன்றாம் பண்பாட்டுக் காலத்தில் இந் நகரம் மிகச் சிறந்த துறைமுகப் பட்டினமாக விளங்கியது. மேற்கு நாடுகளுக்கும் இந் நகரத்திலிருந்து வாணிகம் நடந்தது. இங்குக் கிடைத்த உரோமானிய உரெளலட்டட்டு மட்கலன்கள் இந் நகரம் உரோமாபுரியுடன் வாணிகம் நடத்தியமையை வெளிப்படுத்துகிறது. இவை கி. பி. 1ஆம், 2ஆம் நூற்றாண்டைச் சார்ந்தவை. கட்டடங்களில் சிதைவுகளும் இக்கால மண்படைகளில் வெளிப்பட்டன. நான்காம் பண்பாட்டுக் காலத்தில் அழகான சுடுமண் பொம்மைகள் கிடைத்தன.
இக் காலத்திற்குப் பின் இந் நகரின் வரலாற்றைச் சரியாக அறிய முடியவில்லை. இருப்பினும் பால (Pala) சேன (Sena) மரபினர் காலத்தைச் சார்ந்த சில சிற்பங்கள் இங்கு கிடைத்துள்ளன.அகழாய்வுக் குழிகளில் மேல் மண்படைகளிற் கிடைத்த பொருள்களின் காலம் 18, 19 ஆம் நூற்றாண்டைச் சார்ந்ததாகும்.
இந்துக்கலைக்களஞ்சியம்

இந் நகரம் இப்பொழுது கங்கைச் சமவெளியில் கடற்கரையிலிருந்து 97 கி. மீ. தொலைவில் அமைந்துள்ளது. இவ்வூரில் காளி கோயில் ஒன்று உள்ளது. தம்லூக்கு நகரம் கி. பி. 1864 ஆம் ஆண்டு முதல் நகராண்மையாகச் செயற்பட்டு வருகிறது. இந் நகரின் அருகில் ஒடும் ஆற்றில் படகுப் போக்குவரத்து நடைபெறுகிறது. இந் நகரம் விளைபொருள்கள் விற்கும் சந்தை நகரமாகவும் இரசாயன உற்பத்தி, இயந்திரக் கருவிகள் செய்யும் தொழிற்சாலைகள் கொண்ட தொழில் நகரமாகவும் உள்ளது. இந் நகரத்தின் மக்கள் தொகை 29,367 (1981). (சு இரா)
0/70ിfഖഗ്രമി
இந்த அழகிய ஆறு பொதியமலையிலே தோன்றித் தான்பாயும் நிலங்களையெல்லாம் வளப்படுத்திச் செல்கின்றது. தாமிரச்சத்து (செம்பு) நிறைந்துள்ளதால் தாமிரவருணி என்று பெயர் கொண்டது என்பர். இதற்கு மற்றொரு பெயர் “பொருநை' என்பதாகும். திக்கெல்லாம் புகழும் திருநெல்வேலியிலுள்ள குறுக்குத்துறை சுப்பிரமணியர் திருக்கோயில் இவ்வாற்றின் இடையிலே அமைந்து அழகு செய்கின்றது.
திருநெல்வேலி தலத்துறையும் அன்னை காந்திமதியம்மன் பிள்ளைத் தமிழை இயற்றிய அழகிய சொக்கநாதப் பிள்ளை அவர்கள் நீராடல் பருவத்தில் அமைத்த சிலேடை அலங்காரம் மிகுந்த பொருனை நதியை சிறப்புறுத்தும் பாடல் சுவை மிக்கது.
வான் மருவு மலையமலை நின்றிரு முலைப்பான் மடுத்தலாற்கூடலாளு மன்னங்க வளை வைத்திருத்தலால் அமணரா வருபவர்க் கூறு செயலான் மேன்மருவு நெறியன்ப ராடவே தக்க தவம் விரைவிற் பொருத்தும் வலியான் மிளிர்முத் தலைப்பாணியம்பரஞ் சார்தலால் வியனார் மதிப் பொலிவினாற் தேன்மருவு கட்பூவை யென்யினில் வருத்தலால் திகழ்தோணியூர்தரலினாற் செம்பாக மன்நுசீரம்பதிக மோதலாற் திருஞான சம்பந்தரைப் போன்மருவு கருனைப் புகழ்சிந்து பூந்துறைப் பொருநைநீராடியருளே பூசுரர் வழுத்துமுயர் கீசக வனத் திறைவி பொருநை நீராடியருளே
இப்பாடல் சீர்காழிச் செல்வராம் திருஞான சம்பந்தருக்கும் பொருநை நதிக்கும் உள்ள இயல்புகளை சிலேடையாக உவமிக்கும் அரிய தமிழ்ப் பாடல்.
திருஞானசம்பந்தர் 1. இமயமலையிற் பிறந்த நின்மல சொரூபியான உனது
திருமுலைப்பால் உண்ணலால்,
f79

Page 216
SSSMSSSLLLLLL
பொருநை பொதிகை மலையினின்று முல்லை நிலப்பக்கம் பாய்வதால்
திருஞானசம்பந்தர் மதுரையை ஆளும் பாண்டிய மன்னனாம் நெடுமாறனுடைய சரீரக் கோணலை நிமிர்த்தியதால்
பொருநை கூடுகின்ற இருளையாளும் சந்திரனின் மேனியை ஒத்த (வெள்ளிய) சங்கங்களை வைத்திருத்தலால்
திருஞானசம்பந்தர் சமணர்களுக்கு ஊறு செய்தல்.
பொருநை நிர்வாணமாக நீராடுபவர்களுக்குப் பாவத்தைத் தருதல்
திருஞானசம்பந்தர் தொண்டர் கொண்டாட வேதக் கதவினை (திருமறைக் காட்டில்) அடைப்பித்த சிறப்பால்
பொருநை தன்னில் நீராடும் அன்பர்க்கு தவத்தை அருளும் முறையால்
திருஞானசம்பந்தர் மூன்று கிளைகளையுடைய சூலபாணியாகிய அழகிய பரம்பொருளை அடைதல்
பொருநை
፲8O
முத்துக்களை அலைக்கும் நீர் சமுத்திரத்தை அடைதலால்
திருஞானசம்பந்தர் அறிவு மிகுதல்
பொருநை சான்றோர்கள் மதித்தலால்
திருஞானசம்பந்தர் வண்டுகளையொத்த கண்களையுடைய பூம்பாவையை எலும்பினில் இருந்து உயிர்ப்பித்தலால்
பொருநை மலர், எலும்பு இவைகளை அலைத்துக்கொண்டு வருதலால்
திருஞானசம்பந்தர் சீர்காழிப்பதி பெற்றெடுத்தலால்
பொருநை தோணியூர்ந்து மக்கள் செல்வதால்

திருஞானசம்பந்தர் 9. செவ்விய பக்குவநிலை கொண்ட திருப்பதிகங்களைப்
பாடுதலால்
பொருநை 9. செம்பு உண்டாகும் நீர் அதிகம் உள்ளதால்
திருஞானசம்பந்தரை பொருநை நதி ஒத்திருக்கின்றது. அத் தண்ணிய தமிழ் நீரில் நீராட வருக என்று காந்திமதித் தாயை அழைக்கும் அருள் மிகு பாடல் தாமிரவருணியின் ஏற்றத்தைத் தெரிவிக்கின்றது. (ബ്, ബാബ)
தாமோதுரம்பிள்ளை சி. வை. (7832-1907)
ஈழத்துத் தமிழ் இலக்கிய வரலாறு பூதந்தேவனார் எனும்
சங்கப்புலவரிலிருந்து தொடங்குகிறது என்பர். வரலாற்றாதாரங்களோடு கூடிய ஈழத்து இலக்கிய வரலாறு யாழ்ப்பாண மன்னர்களுடனேயே துலக்கமடையத் தொடங்குகிறது எனலாம். யாழ்ப்பாண மன்னர் காலத்திலிருந்து செழிப்படைந்த ஈழத்து இலக்கிய வரலாறு குறிப்பிடத்தக்க சில துறைகளில் தனித்துவமுடையதாகக் காணப்படுகின்றது. தமிழ்நாட்டிற்கு வழிகாட்டிகளாகவும், முன்னோடிகளாகவும் ஈழத்துத் தமிழறிஞர்கள் பலர் அமைந்தனர்.
議 3- సభ్య
சி. வை. தாமோதரம்பிள்ளை
"தமிழ் இலக்கியவரலாற்றில் 19ஆம் நூற்றாண்டு ஈழத்திற்குரியது” என்பர். இப்பெருமையைப் பெற்றுத் தந்தவர்களுள் ஆறுமுகநாவலரும் சி. வை. தாமோதரம்பிள்ளையும் சிறப்பாகக் குறிப்பிடக்கூடியவர்கள். நாவலரும், சி. வை. தாவும் ஏறத்தாழச் சமகாலத்தவர்களே. நாவலருக்குப் பத்து ஆண்டுகள்
இந்துக்கலைக்களஞ்சியம்

Page 217
பிந்திப் பிறந்தவர் சி. வை. தாமோதரம்பிள்ளை. நாவலர் இறைவனடி சேர்ந்ததின் பின்பும் ஏறத்தாழ இருபத்திரண்டு ஆண்டுகள் இவ்வுலகில் வாழ்ந்தவர். சி. வை. தாவின் சிறப்பான பணிகளிற் பல இவ் இருபத்திரண்டு ஆண்டுகாலப் பகுதியிலேதான் கைகூடியது எனலாம்.
நாவலரும், சி. வை. தாவும், உற்ற நண்பர்களாகவும், ஒருவருக்கொருவர் துணையாகவும் நின்று தமிழ்ப்பணி புரிந்தவர்கள். நாவலரின் பல முயற்சிகளுக்குச் சி. வை. தாவும், சி. வை. தாவின் பல முயற்சிகளுக்கு நாவலரும் பின்னணிக் காரணர்களாக அமைந்தவர்கள் எனலாம். இவர்கள் இருவருக்குமிடையேயிருந்த கேண்மை நிலையை நாவலர் இறந்தபோது சி. வை. தா சொல்லிய செய்யுட்களால் நன்கறியலாம்.
“சி. வை. தாமோதரம்பிள்ளையின் சரித்திரம் தமிழ்ச்சத்திரம்” என்பர் பண்டிதமணி நாவலர் மரபின் பழுத்த பழமாக நம்மிடையே வாழ்ந்த பண்டிதமணியின் கூற்று மிகவும் ஆழ்ந்தகன்றது. தாமோதரம்பிள்ளையின் வரலாற்றை அறிய முற்படுவோர் தமிழ்மொழியின், தமிழிலக்கிய இலக்கணங்களின் வரலாற்றை நிச்சயமாக அறிந்தே தீருவர். தமிழ் இலக்கிய வரலாற்றில் 19ஆம் நூற்றாண்டின் பலமுனைப்பட்ட போக்குகளையும், சி. வை. தாவினூடுகண்டு தெளியலாம்.
தமிழியல் ஆய்வின் பல்வேறு துறைகளிலும் ஈடுபாடு கொண்ட சி. வை. தா அவர்கள் குறிப்பிட்ட சில துறைகளிலே தன் சுவடுகளை மிக ஆழமாகப் பதித்திருக்கிறார். சி. வை. தாவினது பணிகளையும், பண்பினையும் முழுமையாக விளங்கிக் கொள்ள 19ஆம் நூற்றாண்டில் ஈழத்தில், குறிப்பாக யாழ்ப்பாணக் குடாநாட்டில் நிலவிய கல்விப் பாரம்பரியத்தையும் விளங்கிக் கொள்ளல் வேண்டும்.
ஈழத்தில், குறிப்பாக யாழ்ப்பாணக் குடாநாட்டில் நிலவிய கல்விப் பாரம்பரியம் இறுக்கமானதும், ஆரோக்கியமானதும் எனலாம். யாழ்ப்பாணச் சமூகத்தில் நிலவிய சில குறைபாடுகளைத் தவிர்த்து இக் கல்வி அமைப்பினை ஆராயின் மிக உயர்வான கல்விநிலையென்றே கருத வேண்டும். ஐரோப்பியர் வருகையையொட்டி நிறுவன அடிப்படையிலான பாடசாலைகள் நிறுவப்படுவதற்குப் பல காலத்திற்கு முன்பிருந்தே திண்ணைப் பள்ளிக்கூடங்கள் ஈழத்தின் பல பாகங்களிலும் நிலவி வந்துள்ளன. இத் திண்ணைப் பள்ளிமரபில் மாணவர் தனது ஆரம்பக் கல்வியைத் தகப்பனிடமோ, மாமனிடமோ தான் பெறுவர். பின் ஆசிரியரையடைந்து குருசிஷ்யமரபு நெறியில் பாடங்களைப் பயிலுவர். ஆரம்பத்தில் மனனம் செய்வதும், பின் பொருள் விளங்கலும், செய்யுள்யாத்தலும் இம்மரபின் முக்கியமான அம்சமாகும்.
நிறுவன அடிப்படையில் இயங்கிய பாடசாலைகளிலும், உயர் கல்விக்கென உருவாகிய கல்லூரிகளிலும் பாடத்திட்டங்களிலும் வேறுபாடு காணப்பட்டது. பொதுவாக நிறுவன அடிப்படையில்
இந்துக்கலைக்களஞ்சியம்

அமைந்த உயர் கல்லூரிகளில், ஆங்கிலம், கிறிஸ்தவ மதம், ஆங்கில உயர் இலக்கியங்கள், தருக்கம், விஞ்ஞானம் போன்ற பாடங்களோடு தமிழிலக்கிய இலக்கணங்களும் போதிக்கப்பட்டன.
ஐரோப்பியர் வருகையையொட்டி நிறுவன அடிப்படையிலான பாடசாலைகளும், அவற்றோடு தொடர்புடைய பாடப் புத்தகங்களும் (அச்சு, காகித உபயோக) அப்பியாசப் புத்தகங்களுமாய பல்வேறு மாற்றங்களுக்கு மத்தியிலேயும் மிக அண்மைக்காலம் வரை பாரம்பரியக் கல்விமரபும் நின்று நிலைத்தமை கவனிக்கத்தக்கது.
மரபுரீதியான கல்வியை ஆரம்பத்தில் வரன்முறையாகப் பெற்ற பலர் பின்பு நிறுவன ரீதியாக இயங்கிய ஆங்கிலக் கல்விச் சாலைகளிலே கல்வியைப் பெற்றனர். இவ்வாறு "இருமரபுந்துய்ய” கல்வி பெற்ற பலர் அறிஞர்களாகவும், ஆராய்ச்சியாளர்களாகவும், முதன் முயற்சியாளர்களாகவும், முன்னோடிகளாகவும் திகழ்ந்தனர். இந்த இருமரபுந்துய்த்த நெறியே 19ஆம் நூற்றாண்டை ஈழத்திற்குரியது என்ற பெருமைக்குரியதாக்கியது எனலாம். பூநீலறுநீ ஆறுமுகநாவலர், ராவ்பகதூர் சி. வை. தாமோதரம்பிள்ளை போன்ற ஈழத்துத் தமிழறிஞர் பலர் இவ் விருவழிப்பயிற்சியும் பெற்றவர்களே.
சிறுப்பிட்டி குருநாதரவர்களின் புதல்வர் வைரவநாதர். இவர் வட்டுக்கோட்டை செமினறியிலே பயின்று பண்டத்தரிப்பு அமெரிக்க மிஷன் பாடசாலையிற் தலைமையாசிரியராக இருந்தவர். பின்பு வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியில் கணிதப் பேராசிரியராகவும் கடமையாற்றியவர்.
ஏழாலையைச் சேர்ந்த பெருந்தேவியார் உடுவில் மகளிர் கல்லூரியிற் பயின்றவர். வைரவநாதர் பெருந்தேவியார் தம்பதிகளுக்கு 1832 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 12ந் திகதி சிரேஷ்ட புதல்வராகத் தாமோதரம்பிள்ளை பிறந்தார்.
தனது தந்தையாரிடம் வாக்குண்டாம் நன்னெறி, மூதுரை, திவாகரம், உரிச்சொல் நிகண்டு முதலிய நூல்களை ஐயந்திரிபறக் கற்றுணர்ந்தார். பின் சுன்னாகம் முத்துக்குமார கவிராயரிடம் நைடதம், பாரதம், கந்தபுராணம் முதலிய உயரிலக்கியங்களையும் நன்னூல், தொல்காப்பியம் முதலிய உயரிலக்கணங்களையும் கற்றுத் தேர்ந்தார்.
தமிழோடு ஆங்கிலத்தையும் கற்கவிரும்பிய பிள்ளையவர்கள் தெல்லிப்பளையில் உள்ள அமெரிக்க மிஷன் கலாசாலையிலே ஆங்கிலக் கல்வியைப் பெற்றார்கள். ஆங்கிலக் கல்வியில் உயர் புலமை பெறும் நோக்கமாக வட்டுக்கோட்டையிலுள்ள யாழ்ப்பாணச் சர்வசாத்திரக் கலாசாலையென அழைக்கப்பட்ட கலாசாலையிலே 1844 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 12ந் திகதி சேர்ந்து கற்கத் தொடங்கினார். யாழ்ப்பாணத்துக் கல்வி வரலாற்றில் இச் சர்வசாத்திரக் கலாசாலைக்கு அழியாத ஒரு இடம் உண்டு. இக் கலாசாலையிலே கறல் விசுவநாதபிள்ளை,
7&T

Page 218
வித்துவான் கதிரைவேற்பிள்ளை, நெவின்ஸ், சி. டி. மில்ஸ் முதலாய பேரறிஞர்கள் சி. வை. தாமோதரம் பிள்ளைக்கு நல்லாசிரியர்களாக வாய்த்தனர். "தாரமும் குருவும் தலைவிதி” என்பது போலப் பிள்ளையவர்களுக்குத் தந்தையாரைத் தொடர்ந்து தரமான ஆசிரியர்கள் வாய்த்தனர். சி. வை. தா அவர்கள் பிற்காலங்களில் தனது ஆசிரியர்களை மிகவும் நன்றியோடு நினைவுகூர்ந்து வணக்கம் செலுத்தியமை அவரது குரு பக்தியையும், அறிவு முதிர்ச்சியையும் வெளிக்காட்டுவன.
பல்கலைக்கழகத் தரத்தில் விளங்கிய வட்டுக்கோட்டைச் சர்வசாத்திரக் கலாசாலையில் கணிதம், ஆங்கிலம், தமிழ், தத்துவம், வான சாத்திரம் முதலிய பாடங்களிலே விஷேட திறமை பெற்று முதன் மாணவராய் விளங்கினார். தாமோதரம்பிள்ளையிடத்து நிரம்பியிருந்த தமிழறிவைக் கண்டு ஆசிரியர் நெவின்ஸ் அவர்கள், பிள்ளையவர்களைப் பண்டிதன் என அழைப்பது வழக்கமாயிற்றாம். ஆசிரியர்களின் விருப்புக்கும் மதிப்புக்கும் ஆளான பிள்ளையவர்கள் ஏறத்தாழ எட்டு ஆண்டுகள் ஆங்கில உயர் கல்வியில் பயிற்சிபெற்றார்.
1852 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் தனது இருபதாவது வயதிலே போதனா வித்தியாசாலையில் ஆசிரியரானார். இங்கு கற்பித்து வருகின்ற காலத்திலேயே நீதிநெறி விளக்கவுரை சி. வை. தாவால் வெளியிடப்பட்டது. பின்பு தமிழுலகம் வியக்கும் வண்ணம் பதிப்புத் துறையில் ஈடுபடப் போவதற்கான அத்திவாரத்தை இருபது வயதிலேயே போட்டுக் கொண்டார்.
நாவலருக்கு ஆங்கில ஆசிரியராயும், தமிழ்மாணவராயும் இருந்த பார்சிவல் பாதிரியார் யாழ்ப்பாணத்திலிருந்து சென்னை சென்று தினவர்த்தமானி என்கின்ற தமிழ்ப் பத்திரிகையை நடத்திக் கொண்டிருந்தார். தாமோதரம் பிள்ளையின் திறமைகள் பற்றி நன்கறிந்திருந்த பார்சிவல் தாமோதரம்பிள்ளையைச் சென்னைக்கழைத்து தினவர்த்தமானிக்குப் பத்திராசிரியராக நியமித்தார். பத்திராசிரியராக இருக்கும்போதே சென்னை இராசதானிக் கல்லுரியில் தமிழ்ப் பண்டிதராகவும் நியமனம் பெற்றார். இக் காலத்தில் ஒய்வு நேரங்களில், பேர்ணர், சேர் உவால்ரர் எலியெற். வஷ்சிங்டன், மிண்டர் போன்ற ஆங்கிலேயப் பிரபுக்களுக்குத் தமிழ் கற்பித்தும் வந்தார். இக் காலப் பகுதியிலே கற்றோர் மத்தியில் சி. வை. தா. பிரபல்யமடைந்தார்.
1857 ஆம் ஆண்டு சென்னைச் சர்வகலாசாலை ஆரம்பமானது. பத்ராசிரியராயும், தமிழாசிரியராயுமிருந்த சி. வை. தா. அது ஆரம்பமான அதே ஆண்டில் நடத்திய பிரவேசப் பரீட்சையில் திறமான சித்தி பெற்றார். சித்தி பெற்று நான்காவது மாதத்தில் நிகழ்ந்த பீ. ஏ. பரீட்சையிலும் முதற்பிள்ளையாகத் தேறினார். சி. வை. தாவுக்கு வட்டுக்கோட்டைக் கல்லூரியில் ஆசிரியராக இருந்த கறல் விசுவநாதபிள்ளையும் இப் பீ. ஏ. பரீட்சையில் இவருடன் தேறிய இன்னொரு ஈழத்தவராவர். சி. வை. தா. ஈழத்தில் பெற்ற "இருமரபுக்கல்வி சென்னைச் சர்வகலாசாலைப் பட்டப்பரீட்சைக்கு 'அடி உரமாக” அமைந்திருந்தது எனலாம்.
方&2

சி. வை. தா பட்டம் பெற்றதும், அவரது பதவியும் படிப்படியாய் உயரத் தொடங்கியது. பட்டம் பெற்ற பிள்ளையவர்கள் கள்ளிக்கோட்டையிலுள்ள இராசாங்க வித்தியாசாலை உதவியாசிரியராக நியமிக்கப் பெற்றார்கள். அவ்வித்தியாசாலையிற் கடமையாற்றிய ஆறுமாதகாலத்துள் அப் பாடசாலையின் விஷேட அபிவிருத்திகள், சீர்திருத்தங்கள் காரணமாகப் பிள்ளையவர்கள் சென்னை அரசாங்க வரவுசெலவுக் கணக்குச் சாலையிற் கணக்காய்வாளர் பதவியைப் பெற்றார். அப்பதவியிற் காட்டிய கரிசனையாலும், உழைப்பாலும் விசாரணைக்கர்த்தர் ஆயினார். பதவி, பதிப்பு இம் முயற்சிகளினூடும் சி. வை. தா 1871 ஆம் ஆண்டில் பி. எல். பரீட்சையிலும் சித்தியெய்தினார்.
1882 ஆம் ஆண்டில் அரசாங்க உத்தியோகத்தினின்றும் இளைப்பாறிச் சிறிதுகாலத்தின் பின் சென்னை வாழ்க்கையினின்றும் நீங்கிக் கும்பகோணம் (திருக்குடந்தை) சென்று அமைதியான சுதந்திரவாழ்வை நடத்த விரும்பினார்.
கும்பகோணத்தில் அமைதியாக வாழும்போதுதான் புதுக்கோட்டைச் சமஸ்த்தானத்து நீதிபதிகளுள் ஒருவராக நியமிக்கப்பட்டார். 1895 ஆம் ஆண்டு சென்னை அரசாங்கம் ராவ்பகதூர் எனும் கண்ணியப் பட்டம் நல்கிக் கெளரவித்தது.
சென்னை திராவிட கிரந்த பரிபாலன சபை, நியாயபரிபாலனசபை என்பவற்றில் அங்கத்தவராயும், சென்னைச் சர்வகலாசாலைத் தமிழ்ப் பரீட்சகராயும், இருந்து பணிபுரிந்தனர். "தமிழ்ச் சரித்திரத்தில் 19 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதி நாவலர் அவர்கள் சரித்திரம், பிற்பகுதி சி. வை. தாமோதரம்பிள்ளை சரித்திரம்” என்று பண்டிதமணி குறிப்பிடுவர். பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் பல்வேறு வகையிலும் பேரறிஞராகத் திகழ்ந்த சி. வை. தாமோதரம்பிள்ளை இருபதாம் நூற்றாண்டின் விடியலிலே 1901 ஆம் ஆண்டு தைமாதம் முதலாம் திகதி இவ்வுலகவாழ்வை நீத்தார்.
பணிகள்
பதிப்புப் பணி
சி. வை. தாவின் தமிழ்ப்பணிகள் பன்முகப்பட்டவை. அவருடைய பணிகளுள் பதிப்புப் பணியே முதன்மையானதாகக் கருதப்படுகின்றது. பிள்ளையவர்கள் பதிப்பாசிரியராயும், நூலாசிரியராயும், போதனாசிரியராயும், ഉഞ് நடையாசிரியராயும், தமிழ் இலக்கிய வரலாற்று ஆய்வாளராயும், பாடசாலை நிறுவுநனராகவும் பணியாற்றியுள்ளார்கள். பிள்ளையவர்கள் வாழ்ந்த காலத்தில் உண்மையான தமிழ்த் தொண்டாக, அத்தியாவசியமானதாகக் கருதப்பட்டது பதிப்புப் பணியே யெனலாம். ஆறுமுகநாவலர், சி. வை. தாமோதரம்பிள்ளை, உ. வே. சாமிநாதையர் போன்ற தமிழறிஞர்கள் பதிப்புப் பணியில் ஈடுபட்டிராவிடில் இன்றைய தலைமுறை, இணையிலாத் தமிழ்ச் செல்வங்கள் பலவற்றை இழந்திருக்கும். ஆங்கில மோகமும், அதனாலெழுந்த மேலைத்தேய வாழ்க்கை முறைகளும், பழந்தமிழ் நூல்களைப் படிக்கவும் பாதுகாக்கவும்
இந்துக்கலைக்களஞ்சியம்

Page 219
வழிசெய்தில. மிக உயர்ந்த இலக்கிய இலக்கணங்கள் தேடுவாரற்று ஒலைச்சுவடியாகவே உயிரை மாய்த்துக் கொண்டிருந்தன. தீயாலும், நீராலும், க்றையானாலும் சுவடிகள் அழிந்தொழியும் நிலையைக் கண்டு தாமோதரம்பிள்ளை கண்ணிர் வடித்தார். அவர் கண்ணிர் அவர் பதிப்பித்த நூல்களின் பதிப்புரையிலே பேராறாக ஒடுவதைக் காணலாம்.
"மெல்லத் தமிழ் இனிச்சாகும்’ என்ற நிலையே அக்காலத்தில் நிலவியது. சமய, சமூக, பொருளாதாரக் காரணிகள் இந் நிலைக்குப் பக்கபலமாகவே காணப்பட்டன. கோப்பாய் சாதனா பாடசாலை ஆசிரியரான தாமோதரம்பிள்ளை நீதிநெறி விளக்க உரைப் பதிப்போடு பதிப்புத் துறையில் காலடி எடுத்து வைக்கிறார். இவ்வாறு அவர் அன்று வைத்த முதலடியைத் தொடர்ந்து இறக்கும் வரை தனது பாதச் சுவடுகளைப் பதிப்புத் துறையிலே மிக ஆழமாகவே பதித்துச் சென்றுள்ளார்.
“உயர்ந்த நீதிபதி உத்தியோகத்தில் அமர்ந்து பரோபகார முயற்சிகளில் பங்குபற்றிக் குடும்பப் பொறுப்புக்களைச் சுமந்து நோய் வாய்ப்பட்டு, பல கஷ்டங்கள் நேர்ந்தபோதும் பிள்ளை காரியத்திற் கண்ணாகவே இருந்தார்.”
என்று பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளையவர்கள் கூறுவது மிகவும் பொருத்தமானதே.
ஆறுமுகநாவலரின் பதிப்புப் பணிக்குத் தோள்கொடுத்துத் தோன்றும் துணையாக இருந்த சி. வை. தா அவர்கள், நாவலரின் ஆசியோடும், வழிகாட்டலோடும் 1868ஆம் ஆண்டு தொல்காப்பியம் சேனாவரையம் உரைப் பதிப்பினை வெளியிட்டார். இப் பதிப்பின் பரிசோதனை வேலைகளை நாவலரவர்களே செய்துதவினர் என்றும் அறிய முடிகின்றது.
தமிழ்நூற் பதிப்புத் துறையில் ஆறுமுகநாவலருக்குத் தனியானதும், சிறப்பானதுமோர் இடமுண்டு. 'நாவலர் பதிப்புச் சுத்தப் பதிப்பு” என்ற தொடர் நாவலர் பதிப்பாகவே குறுகிச் சுத்தப் பதிப்பைக் குறித்து நின்றதை அறிஞர்கள் அறிவர். ஆனால் பதிப்புத் துறையில் ஈடுபட்ட பிள்ளையவர்கள், பதிப்புத் துறையின் நுட்பங்களை, முறையியலை நன்குணர்ந்து செயற்பட்டமையை அவரது பதிப்புக்கள் நிலை நிறுத்துகின்றன. பிள்ளையவர்களின் பதிப்பு முயற்சியை நூல்கள் வெளிவந்த கால அடைவில் வைத்து நோக்கும் பொழுது அவரின் பதிப்புத் துறை அறிவு வளர்ச்சியை இலகுவிற் கண்டுகொள்ளலாம். பழந்தமிழ் இலக்கிய வெளியீடுகள் பற்றித் திரு வி. க. குறிப்பிடும்போது இவ்வாறு சுட்டிச் செல்லுவர்.
"பழந்தமிழ் இலக்கிய வெளியீட்டுக்குக் கால் கொண்டவர் ஆறுமுக நாவலர். சுவர் எழுப்பியவர் தாமோதரம்பிள்ளை, கூரை வேய்ந்து நிலையம் கோலியவர் உ. வே. சாமிநாதையர்.”
பழந்தமிழிலக்கியப் பதிப்பு முயற்சியில் எஸ். வையாபுரிப்பிள்ளை போன்ற “பதிப்புச் சூறாவளி’கள்
இந்துக்கலைக்களஞ்சியம்

ஈடுபடும்பொழுது, கால்கொண்டவரும், சுவரும் அசையாதிருக்கக் கூரை ஆட்டம் கொடுத்ததை நவீன மூலபாடத் திறனாய்வாளர் அறிவர்.
சி. வை. தாமமோதரம்பிள்ளையின் பதிப்புக்கள் ஆராய்ச்சிக்குட்பட்டவையாய், மிகச் சிறந்த நீண்ட பதிப்புரைகளுடன் வெளிவந்தன. சி. வை. தாவின் பதிப்புரைகளைத் தொகுத்து யாழ்ப்பாணம் கூட்டுறவுத் தமிழ் நூற்பதிப்பு விற்பனைக் கழகம், தாமோதரம் என்ற பெயரில் வெளியிட்டிருக்கின்றது. இப் பதிப்புரைகள் தமிழ் இலக்கிய வரலாறாகவும், பதிப்பு முயற்சிகளின், தாற்பரியத்தைப் புலப்படுத்துவனவாகவும், elp60UTLğ திறனாய்வுப் பொக்கிஷமாகவும் திகழுகின்றன எனலாம். இப் பதிப்புரைகள் கற்றோர் நெஞ்சத்தை நெகிழவைப்பனவாகவும், உழைப்பின் சின்னமாகவும் திகழுகின்றன.
“சி.வை. தாமோதரம்பிள்ளை மூல ஏடுகளில் இருந்த அமைப்பு முறையைத் தேவையான இடங்களில் மாற்றினார். அரிய பெரிய முன்னுரைகளை இயற்றினார். பதிப்பிப்பதில் உள்ள இடர்பாடுகளையும் ஏடுகளின் நிலையையும் விரிவாகக் குறிப்பிட்டார். கலித்தொகை, சூளாமணி, தொல்காப்பியம் ஆகிய நூல்களின் முன்னுரையிற் பல அரிய செய்திகளைக் காணலாம்.” என்று மு. வை. அரவிந்தன் குறிப்பிடுவார்.
சி. வை. தா அவர்களின் தூய்மையான பதிப்புப் பணிக்குக் கிடைத்த வெற்றிகள் மிகப்பல. காழ்ப்புணர்வாலும், கையாலாகாத் தனத்தாலும் பிள்ளையவர்களைத் தூஷித்தவர்களும், கண்டித்தவர்களும் இக் காலப்பகுதியில் வாழ்ந்தனர் என்பதையும் நாம் ஒப்புக்கொள்ளுதல் வேண்டும். பிள்ளையவர்கள் தொல்காப்பியம் சேனாவரையத்தைத் தொடர்ந்து 1881ஆம் ஆண்டு வீரசோழியத்தையும், 1883ஆம் ஆண்டு இறையனார் களவியல் உரையையும், தணிகைப் புராணத்தையும் 1885ஆம் ஆண்டு தொல்காப்பியம் பொருளதிகாரத்தையும், 1887ஆம் ஆண்டு கலித்தொகையையும், 1889ஆம் ஆண்டு இலக்கண விளக்கத்தையும் சூளாமணியையும், 1892ஆம் ஆண்டு தொல்காப்பியம் சொல்லதிகாரம் நச்சினார்க் கினியத்தையும் பதிப்பித்து வெளியிட்டார்கள்.
. உண்மையான அன்போடு உண்மையான தமிழ்த் தொண்டு புரிதலே பிள்ளையவர்களின் வாழ்க்கையின் பெரு நோக்கமாயிருந்தது.
இவ்வகைய்ான உண்மைத் தொண்டு பயனற்றுப் போகுமா? பிள்ளையவர்கள் வெற்றியெய்தியமை தமிழ்நாடு நன்கறிந்ததே. தொல்காப்பியம், கலித்தொகை சூளாமணி யென்பன அவர்கள் தந்த தனிப்பெருஞ் செல்வங்களுட் சிறந்தன. தமிழன்னையின் அருங் கலங்களாகத் திகழும் இந் நூல்கள் உள்ளவரை இவர்கள் புகழும் நின்று நிலவுவதாகும்.”
青83

Page 220
என்று ஆராய்ச்சிப் பேரறிஞரான எஸ். வையாபுரிப்பிள்ளை குறிப்பிடுவர்.
சி. வை. தாவின் பதிப்புக்கள் வெளிவந்த காலத்தில், அவரின் பதிப்புரைகள் மிகவும் முக்கியம் வாய்ந்தவையாகக் கருதப்பட்டன. இருபதாம் நூற்றாண்டின் மாபெரும் தமிழ்க் கவிஞனான பாரதியாரே பிள்ளையவர்களின் பதிப்புரையை நன்கு மதித்துப் பாடியுள்ளார். ஏறத்தாழத் தனது சுயசரிதையையே சின்னச்சங்கரன் கதை என்று புனை கதையாகப் படைத்தவர், அக் கதையில் ஒரிடத்தில் பாத்திர வாயிலாகப் பின்வருமாறு கூறுவர்.
“சென்னப் பட்டணத்தில் சி. வை. தாமோதரன் பிள்ளையென்று ஒரு மகாவித்துவான் இருந்தாரே. கேள்விப்பட்டதுண்டா? அவர் சூளாமணி என்னும் காவியத்தை அச்சிட்டபோது அதற்கெழுதிய முகவுரையை யாரைக் கொண்டேனும் படிக்கச் சொல்லியேனும் கேட்டதுண்டா?”
மகாகவி பாரதியாரே சி. வை. தாமோதரம்பிள்ளையையும், அவரது பதிப்புப் பணியையும் பாராட்டியுள்ளமை ஊன்றிக் கவனிக்கத்தக்கது. தமிழ்நாட்டின் சகல மட்டங்களிலல்லாவிடினும் கற்றோர் மத்தியில் பிள்ளையவர்களுக்குத் தனித்துவமான மதிப்பு இருந்துவந்ததை உய்த்தறிய வேண்டியதில்லை.
பதிப்புப் பணியில் ஈடுபட்ட பிள்ளையவர்கள் பலவிதமான கஷ்டங்களுக்கும் ஆளானார்கள். ஏட்டுப் பிரதிகள் கிடைப்பது கடினமாக இருந்தது. பிரதிகளை வைத்திருந்த சிலரும் மனமுவந்து கொடுக்காதிருந்தனர். அரிதின் முயன்று ஏடுகளைப் பெற்றபோதும் அவற்றைப் பரிசோதிப்பது மிகவும் கடினமாக இருந்தது. ‘எழுதியவன் ஏட்டைக் கெடுத்தான்” என்பதற்கிணங்க ஏடெழுதுவோரின் கட்புலனாலும், கவனக்குறைவாலும், அரைகுறை அறிவாலும், மதக்கொள்கையாலும் பாடபேதங்கள் மலிந்துகிடந்தன. திறமான புலமையும், ஆய்வுநோக்கும், நடுநிலைமையும் இருந்தாலன்றி ஏடுகளைப் பரிசோதிப்பது இயலாத காரியம். திறமான புலமையாளர்களின் உதவியின்றித் தாமே தனித்துநின்று செயற்படவேண்டியதாயிற்று. தமது பதிப்புரைகளிற் பல இடங்களில் இத் துயர நிலையைப் பிள்ளையவர்கள் வாய்விட்டுக் கூறியிருக்கிறார்கள்.
அக்கால நிலையிலே நூல்களைப் பதிப்பிடுதலின் செலவினங்களிலும் பிள்ளையவர்கள் இடருற்றார்கள். சிற் சில பெரியார்கள் இவ் விஷயத்தில் உதவியது உண்மையே யெனினும் பிள்ளையவர்கள் தம் கைப்பொருளையே அதிகம் செலவிட்டுள்ளார்.
"அரசாங்க சேவையிலிருந்து 1882ஆம் ஆண்டிலே ஒய்வுபெற்ற பின்பு தமது ஐம்பத்து மூன்றாவது வயதிலே குடந்தைக்கு வக்கீலாகத் தொழில் புரியச் சென்றமைக்கு பிள்ளையவர்களின் ஊதியத்தின் சேமிப்புப் போதாமையும் ஒரு காரணமாகலாம்.”
184
 

என்று கலாநிதி பொ. பூலோகசிங்கம் குறிப்பிடுவது ஏற்புடையதே. கலாநிதி பொ. பூலோகசிங்கம் அவர்களின் கருத்திற்கு வலுவூட்டுவதாகப் பிள்ளையவர்களின் பின்வரும் கூற்று அமைகின்றது.
"தேடுவாரும் பரிபாலிப்பாருமின்றி ஒன்றொன்றாய் அழிந்து போகும் அருமையான பழைய தமிழ் நூல்களைப் பாதுகாத்தற் பொருட்டு அடியேன் ஏட்டுப் பிரதிகள் தேடிப் பரிசோதித்து அச்சிடுவதிற் புத்தகங்கள் விலைபோகாமல் நேரிடும் நஷ்டம். எவ்வெம் முயற்சிக்குந் துணைக்காரணம் பணம். அதன் குறைவினால் எனது முயற்சி மிகத் தாமதப்பட்டு நடைபெறுகின்றது. லோகோபகாரமாய் யான்கையிட்ட இத் தொழிலைத் தற்காலச் சர்வகலாசோதனைச் சங்கத்தில் எனக்கு வரும் பரீஷா நிவேதனம் ஒன்றைக் கொண்டே நடத்தி வருகின்றேன். அது பிரதிகள் தேடி அப்பப்போ யான் செல்லும் பிரயாணங்களுக்கும் பரிசோதனைச் செலவிற்குமே முன்னோ பின்னோ வென்று கட்டி வருகின்றது.”
இவ்வாறான பணமுடையின் மத்தியிலும் பிள்ளையவர்கள் பதிப்பு முயற்சியிலீடுபட்டமை அவரது உண்மையான தமிழ்ப்பணியே காட்டுகின்றது எனலாம். பல்வேறு வகையான சோதனைகளின் மத்தியிலும் பிள்ளையவர்கள் கருமமே கண்ணாயிருந்தமை பாராட்டத்தக்கதே.
பதிப்புப் பணியிலும், அதனோடொட்டிய மூலபாடத்திறனாய்விலும் (TEXTUAL CRITICISM) பிள்ளையவர்களின் பங்களிப்பை க. கைலாசபதி மிகச் சிறப்பாகச் சுட்டிக்காட்டியுள்ளார்.
"தமிழிலே மூலபாடத் திறனாய்வு தவழும் பருவத்திலிருந்த வேளையிலே தாமோதரம்பிள்ளை அந் நூதனமானதும், துணிச்சலானதுமான முயற்சியை மேற்கொண்டது அவரது ஆராய்வு முதிர்ச்சியையும் ஆய்வறிவுப் போக்கையும் துல்லியமாக்குகிறது.”
இவ்வாறு பதிப்புத் துறையிலிடுபட்டுப் பழந்தமிழ் நூல்களுக்கு அழியா வாழ்வளித்த பிள்ளையவர்கள் நவீன ஆய்வுத் துறைக்கும் வழி காட்டியாக அமைந்தமை அவரின் நுண்மாண் நுழைபுலத்தையே புலப்படுத்துகின்றது.
பிற பணிகள்
சி. வை. தா அவர்கள் பதிப்பாசிரியராக மாத்திரமன்றி நூலாசிரியாரகவும் திகழ்ந்தார். கட்டளைக் கலித்துறை, வசன சூளாமணி (1898) சைவமகத்துவம், ஆறாம், ஏழாம் வாசகம், ஆதியாகம கீர்த்தனை, நட்சத்திரமாலை முதலிய நூல்களைத் தாமே எழுதி வெளியிட்டார். சைவமகத்துவம் நாவலரின் பால பாடத்தை அடியொற்றி எழுதப்பட்டது என்பர். இந் நூல்கள் உரை நடையாலும், செய்யுளாலும் ஆனவை.
இந்துக்கலைக்களஞ்சியம்

Page 221
சி. வை. தாவிடம் செய்யுளியற்றுந் திறன் மிக்கிருந்தது. இவர் பதிப்பித்த நூல்களில் கடவுள் வாழ்த்தாகவும், குருவணக்கமாகவும் பல செய்யுட்களை யாத்திருக்கின்றார். இவரின் அருமை நண்பரும் நரசிங்க வீராசாமி முதலியாருக்கு நல்லறிவுச் சுடர் கொழுத்துவித்தவருமான ஆறுமுகநாவலர் இறந்தபோது பிள்ளையவர்கள் யாத்த கவிதையில் கவித்துவத்தைக் காணலாம்.
நல்லை நகர் ஆறுமுக நாவலர் பிறந்திலரேற் சொல்லுதமி ழெங்கே சுருதியெங்கே- எல்லவரும் ஏத்துபுரா னாகமங்க ளெங்கேப்ர சங்கமெங்கே ஆத்தனறி வெங்கே யறை,
நாவலரின் சமய, சமூக, தமிழ்ப்பணியைப் பிள்ளையவர்கள் சுட்டி இரங்கிப் பாடுகிறார்.
கலித்தொகைப் பதிப்பு முயற்சிகளிற் பிள்ளையவர்கள் ஈடுபட்டிருந்தபொழுது திருவாவடுதுறைச் சற்குருநாத சுவாமிகள் செய்த கைமாறு கருதா உதவியைக் கலித்தொகைப் பதிப்புரையிலே உருக்கமாகக் குறிப்பிட்டுள்ளார். பிள்ளையவர்களின் உள்ளத்தை, நன்றியறிதலைப் பின்வரும் செய்யுள் விளக்கும்.
"விண்ணாடு கைலைவழித் தேசிகர் வெவ்வினைக்கு நெற்றிக் கண்ண7 னசுப்ரமண்யசு வாமிகள் கான்மலரை நண்ணாத் தலையி னசைதிரத் தாங்கநற் கோகழிவாய் மண்ணாய்ப் பிறந்தில னேஜய கோஇந்த வையகத்தே'
"சிரமாலை யாகவுஞ் சின்முடி யாகவுஞ் செய்யகண்ட சரமாலை யாகவும் யானடி பேனினை யேன்றருவாய் பரமார் கயிலைப் பரம்பரைக் கோகழிச் சுப்பிரமண்யா மரமாய்நின் பாத குறடாய் வருதற் கொருவரமே”
எனுஞ் செய்யுள் 'மீனாய்ப்பிறக்கும் விதியுடையேன் ஆகேனோ' என்னும் பக்திப் பாசுரத்தை நினைவூட்டுகின்றது.
சி. வை. தாமோதரம்பிள்ளை சிறந்த இலக்கிய வரலாற்றா சிரியராகவும் திகழ்ந்தார். தமிழ் இலக்கிய வரலாற்று ஆய்வு கூர்மைப்படுத்தப்படாத அக்கால கட்டத்தில் அவர் தனது பதிப்புரைகளிலே காலப் பகுப்பாய்வு செய்ய முற்பட்டார். கலித்தொகைப் பதிப்புரையிலே “இனிக் öT6D நிர்ணயத்தையாவது கொஞ்சமேனும் கவனிக்கிறார்களா?” என்று அக்காலத் தமிழாய்வாளர் மீது குறைபட்டுக் கொள்ளுகின்றார். நிரம்பிய தமிழ்ப்புலமையும், அதற்குச் சமதையான ஆங்கில அறிவும், உலக இலக்கியங்களில் உள்ள பரிச்சயமும் பிள்ளையவர்களின் இலக்கியப்பகுப்பாய்வு முறைக்குப் பேருதவியாக இருந்தன எனலாம். 1881ஆம் ஆண்டு தாம் பதிப்பித்த வீரசோழியப் பதிப்புரையில்
"தமிழ்ப் பாஷையின் கால வருத்தமானம் அபேதகாலம் அட்சர
இந்துக்கலைக்களஞ்சியம்

காலம், இலக்கண காலம், சமுதாய காலம், அநாதார காலம், சமண
... 2 காலம், இதிகாச காலம், ஆதீன காலம் என எண்கூறுபடும்.
என்று தமிழிலக்கிய வரலாற்றைக் காலப் பகுப்பாய்வு செய்கின்றார். தமிழ் இலக்கிய வரலாறு அரசியலடிப்படையிலும் (அல்லது அரசர்களின் அடிப்படையிலும்) சமயஞ் சார்ந்த அடிப்படையிலும், இலக்கியப் பொருள் அடிப்படையிலும் பகுத்து ஆராயப்பட்டுள்ளது. பிள்ளையவர்களின் ஆய்வுமுறை இன்றைய ஆய்வறிவு வளர்ச்சி நிலையில் பொருத்தமாகத் தோன்றாவிடினும் அக்கால கட்டத்தில் புதுமையான முறையாகக் கருதப்பட்டதில் ஆச்சரியமில்லை. தமிழ் இலக்கிய வரலாற்றைச் சமூகவியல் அடிப்படையில் இன்று ஆராய்வு செய்யும் அறிஞர்களுக்கு முன்னோடியாகப் பிள்ளையவர்கள் அமைந்தார்கள் எனலாம். தமிழிலக்கிய சரிதத்தைக் காலமுறைப்படி பாகுபாடு செய்ய முயன்றவர்களுள் சி. வை. தாமோதரம்பிள்ளைக்கு முதலிடம் உண்டு என்று எஸ். வையாபுரிப்பிள்ளை குறிப்பிட்டிருப்பது இவ்விடத்திலே மனங்கொள்ளத்தக்கது.
பத்தொன்பதாம் நூற்றாண்டிலே தமிழாராய்ச்சியில் சிற் சில புதுத்திருப்பங்கள் ஏற்படக் காரணமாயிருந்தவர்களில் ஒருவரும் தலையாய தமிழ்த் தொண்டர்களில் ஒருவரும் ஆய்வறிவாள ருமான தாமோதரம்பிள்ளை தாம் பதிப்பித்த அந்நூலின் (வீரசோழியம்) பதிப்புரையிலே நூலாசிரியர் புத்தமித்திரனாரைப் பற்றிச் சில செய்திகள் கூறுமுகமாகத் தமிழிலக்கிய வரலாற்றைப் பருந்துப் பார்வையாக விவரித்தார்.
"தாமோதரம்பிள்ளையின் காலப்பாகுபாடு இன்று பார்க்கும் போது பலகுறைபாடுடையதாய்த் தோன்றினும் வரலாற்றுணர்வும் காலநிர்ணய அறிவும் அவருக்கிருந்தன என்பதை எவரும் மறுக்கவியலாது. அன்றைய நிலையில் அது ஆராய்ச்சி நெறியின் பாற்பட்டதாகவே இருந்தது. . தனது கல்வியையும், சுயசிந்தனையையும் ஆராய்ச்சியையும் ஆதாரமாகக் கொண்டு மரபுகூறும் செய்திகளையும் மறுத்துரைக்க வேண்டுமிடங்களில் தயங்காது உரைத்தார் தாமோதரம்பிள்ளை. சூளாமணிப் பதிப்புரையில் கூறியுள்ள சில கருத்துக்கள் அவரது சுதந்திரப் போக்கையும் அவசியமேற்படின் மரபையும் நிராகரித்து உண்மையை நாடும் மனோபாவத்தையும் ஐயத்துக்கிடமின்றிக் காட்டுகின்றன’
என்று க. கைலாசபதி கூறுகின்றார்.
தமிழிலக்கிய வரலாற்று ஆய்வாளராகத் திகழும் சி. வை. தா. சிறந்த உரைநடையாசிரியராகவும் காணப்படுகின்றார். 'வன்னநடை வழங்குநடை, வசனநடை எனப் பயிற்றி வைத்த ஆசானை' நண்பனாகவும், வழிகாட்டியாகவும் கொண்ட பிள்ளையவர்கள் சிறந்த உரைநடையாசிரியராகத் திகழ்ந்ததில் வியப்பில்லை. பத்தொன்பதாம் நூற்றாண்டின் ஆரம்பத்திலே தமிழ் வசனநடை தயங்கித் தயங்கித்தான் வெளிவந்து
T&5

Page 222
கொண்டிருந்தது. உணர்ச்சிகளைக் கவிதையிலே கண்டு வந்தவர்களுக்கு உரைநடை உணர்ச்சிகளை வெளிப்படுத்தக்கூடிய சாதனமாகத் தோன்றவில்லை. நாவலர்
பொருளுக்கேற்ற விதத்தில் மொழிநடையைக் கையாண்டார். கற்றோர்க்கு மாத்திரன்றி 'ஒரிரண்டு வருஷத்து நூற்பழக்கமுள்ள வர்களுக்கும் விளங்கக்கூடிய வசனநடையை நாவலர் எழுதினார்.
சி. வை. தாவின் சிறப்பான உரைநடைக்கு அவரெழுதிய பதிப்புரைகளே சான்று. “தமிழ் இலக்கிய வரலாற்றிலே உரைநடை பருவமெய்தியது பத்தொன்பதாம் நூற்றாண்டிலாகும்” என்பர் கைலாசபதி, இப் பருவத்தையறிந்து பயன்படுத்தி வெற்றி கண்டோருள் சி. வ. தாவும் ஒருவர்.
"ஏடு எடுக்கும்போது ஒரஞ் சொரிகிறது. கட்டு அவிழ்க்கும்போது இதழ் முரிகின்றது. ஒற்றை புரட்டும்போது துண்டு, துண்டாய்ப் பறக்கிறது. இனி எழுத்துக்களோவென்றால் வாலுந்தலையுமின்றி நாலுயுறமும் பாணக் கலப்பை மறுத்து மறுத்து உழுது கிடக்கின்றது. எத்தனையோ திவ்வியமதுர கிரந்தங்கள் காலாந்தரத்தில் ஒன்றன்பின் ஒன்றாய் அழிகின்றன. சீமான்களே! இவ்வாறு இறந்தொழியும் நூல்களில் உங்களுக்குச் சற்றாவது கிருபை பிறக்கவில்லையா? ஆச்சரியம் ஆச்சரியம்! அயலான் அழியக் காண்கினும் மனம் தளம்புகிறதே! தமிழ்மாது நும் தாயல்லவா? இவள் அழிய நமக்கென்னவென்று 6) T6TT இருக்கின்றீர்களா? தேசாபிமானம், பாஷாபிமானம், மதாபிமான மென்று இவை இல்லாதார் பெருமையும் பெருமையா? இதனைத் தயைகூர்ந்து சிந்திப்பீர்களாக”
என்று 1887இல் கலித்தொகையின் பதிப்புரையிலே சி. வை. தா. கழிவிரக்கப்பட்டுக் கண்ணிர் வடிக்கிறார். அவரது உள்ளத்து நாதத்தை, ஆத்மாவின் கீதத்தை இவ்வுரை நடைப் பகுதியில் காணலாம். மேற்காட்டிய மேற்கோளில் அவர் தெரிந்தெடுத்து அடுக்கிச் செல்லும் சொற்கள் உணர்வு பூர்வமானவையாக அமைந்துள்ளன.
இவ்வாறு சிறந்த உரைநடையாசிரியராகத் திகழ்ந்த சி. வை. தா. தனது பன்முகப்பட்ட பணிகளுள் பாடசாலை நிறுவுவதையும் நோக்கமாகக் கொண்டிருந்தார். ஈழத்தின் மரபுரீதியிலான கல்வி மரபைக் கட்டிக் காக்கவும், ஐரோப்பியருக்குப் போட்டியாகவும் நாவலர் பாடசாலை நிறுவும் முயற்சியினை மேற்கொண்டார். நாவலரைப் பின்பற்றிய பிள்ளையவர்கள் தனது தாயாரின் கிராமமாகிய ஏழாலையில் சைவப்பிரகாச வித்தியாசாலை எனும் பெயரிற் பாடசாலையொன்று நிறுவினார். அப் பாடசாலைக்குச் சுன்னாகம் அ. குமாரசாமிப் புலவரை உதவியாசிரியராகவும் நியமித்தார். முருகேச பண்டிதர் முதல் வருடமுடிவில் வித்தியாசாலையை விட்டு விலகக் குமாரசாமிப் புலவரே தலைமையாசிரியராக நியமிக்கப்பட்டார். இவருக்கு உதவியாகச் சுந்தரம் பிள்ளையென்பவர் உதவியாசிரியராக நியமிக்கப்பட்டார்.
186
 

சகல பொறுப்புக்களையும் ஏற்றுக் குமாரசாமிப் புலவர்கள் வித்தியாசாலையைத் திறம்பட நடத்தி வந்தார்கள்.
'இன்னறுங் கனிச் சோலைகள் செய்தல்
இனிய நீர்த்தன் சுனைகள் இயற்றல் அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல்
ஆலயம் பதினாயிரம் நாட்டல் பின்னருள்ள தருமங்கள் யாவும்
பெயர் விளங்கி யொளிர நிறுத்தல் அன்ன யாவினும் புண்ணியங் கோடி
ஆங்கோர் ஏழைக் கெழுத்தறிவித்தல் ”
என்று மகாகவி பாரதியார் பாடினார். இப் பாடலின் பண்பினையும், பயனையும் பிள்ளையவர்களிடத்திலே 5T600TលITh. பல்வேறுவகையான பணக்கஷ்டத்திற்கு மத்தியிலும் பிள்ளையவர்கள் வித்தியாசாலையை நிறுவி நடத்தியமை அவரின் 'தொண்டு மனப்பான்மையையே வெளிப்படுத்துகிறது.
ஏழாலை சைவப்பிரகாச வித்தியாசாலையில் ஆண்டுதோறும் மாணவர்கள் பரீட்சிக்கப்பட்டுப் பரீட்சை அறிக்கை சி. வை. தாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அக்காலப் பத்திரிகைகளிலும் இவ்வறிக்கைகள் வெளியாயின. இப் பாடசாலைப் பரீட்சகர்களாக ஆறுமுக நாவலர், கொக்குவில் ச. சபாரத்தின முதலியார், வித்துவசிரோமணி பொன்னம்பலபிள்ளை முதலியோர் பணியாற்றினர்.
ஏழாலை சைவப்பிரகாச வித்தியாசாலைத் தலைமையாசிரியராகக் கடமையாற்றிய சுன்னாகம் அ. குமாரசாமிப் புலவர் ஈழத்து இலக்கிய வரலாற்றின் மைல் கற்களில் ஒருவர். புலவரும், பிள்ளையவர்களும் புலமையாலிணைந்த நண்பினராய் வாழ்ந்தனர். பிள்ளையவர்கள் அவ்வப்போது புலவருக்குக் கடிதங்கள் எழுதியுள்ளார். அக் கடிதங்கள் அவர்கள் இருவருக்குமிருந்த கேண்மையையும், பிள்ளையவர்களின் பெரு மனத்தினையும், தியாகத்தினையும் காட்டுவனவாக அமைந்துள்ளன.
தண்டையார்ப்பேட்டை சென்னப்பட்டினம் சித்திரபானு வூடு சித்திரை மீ"10 உ(1883)
எனது பிரிய சினேகிதராகிய சிரஞ்சீவி பூரீ குமாரசுவாமிப் பிள்ளை அறிய வேண்டியது;
தங்கள் அன்பான கடிதமும், சிவப்பிரகாச பண்டிதர் திருமுகமும் பெற்றுச் சகலமும் அறியலானேன். எனது பாரியாரின் தேக செளக்கியத்தை முன்னிட்டு அந்த மாதம் நெல்லூருக்குப் போக வேண்டியிருத்தலால் மற்ற டிசம்பர் மாதந்தான் யாழ்ப்பாணம் வருவேன்.
இத்துடன் ரூபா அறுபது அனுப்புகிறேன். ஐம்பது தை, மாசி, பங்குனி, சித்திரை, நான்கு மாதங்களுக்கு வித்தியாசாலை
இந்துக்கலைக்களஞ்சியம்

Page 223
நிவேதனமாக எடுத்துக்கொள்ளவும். வைகாசி மாதம் முதல் மாதம், மாதம் ஒரு மாதம் பத்து ரூபாவும், மற்ற மாதம் பதினைந்து ரூபாவாகவும் அனுப்பிக்கொண்டு வருவேன். சென்ற மார்கழி வரையும் தங்களுக்கு வரவேண்டிய தொகையின் விபரங் குறித்து ஒரு கடிதம் அனுப்புக, அப் பணத்தையும் அவ்வப்போது சாவகாசப்படி சேர்ப்பித்து விடுகிறேன்.
இங்ங்ணம், அன்பன், சி. வை. தாமோதரம்பிள்ளை.
இக் கடிதம் குமாரசுவாமிப் புலவர் வரலாறு என்னும் நூலிலே இடம் பெற்றுள்ளது. பிள்ளையவர்களின் நாடி நரம்புகளில் தூயதமிழ்த் தொண்டே புடைத் தோடியது எனில் மிகையாகாது. ஏழாலைச் சைவப்பிரகாச வித்தியாசாலையிற் கற்ற மாணவர்கள் புலர் ஈழத்திலும் தமிழ் நாட்டிலும் பெரும்புகழ் பெற்றிருந்தனர். தாமோதரம்பிள்ளை பதிப்பித்த தொல்காப்பிய உரைப் பதிப்புக்கு உரை விளக்கந் தந்த பிரம்மறுநீ சி. கணேசையர், பிள்ளையவர்களின் வித்தியாசாலையிற் குமாரசாமிப் புலவரிடத்துப் பாடங்கேட்டவரே, தெல்லிப்பளை மகாவித்துவான் சிவானந்தையரும் ஏழாலை வித்தியாசாலை மாணவரே என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் இலக்கிய வரலாற்றில் 19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியைத் தனது சரித்திரமாகக் கொண்ட சி. வை. தாமோதரம்பிள்ளை தனது கைவண்ணத்தைப் பல வழிகளிற் புலப்படுத்தியுள்ளார். பிள்ளையவர்களின் வாழ்க்கை நிகழ்வுகள் பற்றி அறிஞர்களிடையே கருத்து வேறுபாடுகள் நிலவுவதையும் நாம் அறிவோம். எவ்வித கருத்து வேறுபாடு உடையவர்களும் சி. வை. தாவின் சிறப்பான பணிக்கு மாசு கற்பிக்க முடியாது.
“சி. வை. தாமோதரம்பிள்ளையின் தந்தையாரின் ஊர் சிறுப்பிட்டி தாயாரின் ஊர் ஏழாலை, உயர்ந்த உத்தியோகத்தரான தாமோதரம்பிள்ளை இந்த இரு ஊர்களிலும் ஒர் ஊரிலாவது ஒரு சிறு குடிசையாவது அமைத்ததில்லை. ஒரு விரலையாவது ஊன்றுதற்குச் சொந்தமாக ஒரு நிலத்தை அவர் வைத்திருக்கவில்லை. பெருகிய குடும்பத்தவராயிருந்துஞ் சந்ததியாருக்குச் சம்பாதித்து வைக்கவில்லை. சி. வை. தா அவர்களது சரித்திரம் தமிழ்ச் சரித்திரமாகவே முடிந்திருக்கிறது.”
என்பர் பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை.
பிள்ளையவர்கள், தனக்கென்றோ தன் குடும்பத்தினர்க் கென்றோ எதையும் தேடி வைக்காது தூய்மையான, உள்ளார்ந்த தமிழ்த் தொண்டினை மேற்கொண்டமையால் தமிழ் உள்ளவரை அவர் வாழுவார் என்பதிற் சந்தேகமில்லை. (7ஸ். சி)
இந்துக்கலைக்களஞ்சியம்

ժ5/7այմ2/76Օ76/fi
தமிழ்நாட்டில் வழிவழியாகச் சான்றோர் பலர் தோன்றி நாட்டுக்கு நல்வழிகாட்டி வந்திருக்கிறார்கள். அவர்களுக்குள்ளே சமயத்துறையில் மிக்க ஈடுபாடு கொண்டு நல்ல பாடல்கள் பலவற்றை அளித்தவர் தாயுமானவர். முந்நூறு ஆண்டுகளுக்கு முன்னே தமிழ் நாட்டில் விளங்கியவர் அவர், இலக்கிய இலக்கணங்களை எல்லாம் முறைப்படி கற்று, அரசர் அறியும்படியான சிறப்பும் பெற்றவர்; திருச்சிராப்பள்ளியில் ஒர் அரசரின் கீழே அமைச்சராகவும் விளங்கியவர்; அவருக்கு முன்னே விளங்கிய நல்ல சான்றோர்கள் மாணிக்கவாசகர், மூவர், அருணகிரியார் போன்றவர்களின் பாடல்களிலே திளைத்தவர்; அந்தப் பாடல்களை எல்லாம் படித்துப்படித்து அந்தத் தொடர்களை எல்லாம் தம் நூலிலே அப்படி அப்படியே கையாண்டு இருக்கின்றார்; அவர்கள் பெயர்களைக் குறிப்பிட்டும் போற்றி இருக்கின்றார்; இலக்கணம், இலக்கியம்-தமிழ் இலக்கணம், தமிழ் இலக்கியம் மட்டுமல்லாமல், வடமொழி இலக்கணம், வடமொழி இலக்கியம், வடமொழியில் தத்துவ நூல்கள் பலவற்றையும் படித்துத் தேறியவர்; ஆனால், அவருடைய கல்வி, வெறும் உலக வாழ்வின் அளவிலே மட்டும் நின்று விடவில்லை. இந்த உலக வாழ்வின் உச்சியிலே விளங்குகின்ற உண்மை நாட்டம், மெய் உணர்வின் நாட்டம், அவரை ஈர்த்தது. கற்று என்ன பலன் என்று உணர்கின்ற எல்லைக்கு அவர் சென்றுவிட்டார்.
"கற்றும் என் பலன் கற்றிடும் நூல்முறை சொற்ற சொற்கள் சுகாரம்பமோ? நெறி நிற்றல் வேண்டும் நிருவிகற் பச்சுகம் பெற்ற பேர்பெற்ற பேசாப் பெருமையே’ என்று அவருடைய 9, ഖഞ സ, ஆர்வத்தைப் புலப்படுத்தியிருக்கின்றார். நான் பலவற்றைக் கற்றேனே! கற்று என்ன பயன்? இந்தக் கற்றிடுகின்ற நூல்களில் அமைந்திருக்கின்ற சொற்கள் எனக்குச் சுகத்தைத் தருமா? என்று கேட்கின்றார்.
“கற்றிடும் நூன்முறை சொற்ற சொற்கள் சுகாரம்பமோ? சுகத்திற்கு ஒர் ஆரம்பமாகவாவது விளங்குமா? இல்லையேல் நான் கற்ற நெறியிலே நிற்க வேண்டுமே! நின்று நிருவிகற்பச் சுகத்தைப் பெற வேண்டுமே!’ என்றெல்லாம் ஆசைப்படுகின்றார். மூவருடைய தேவாரத்தை அருமையாகப் படித்துப்படித்து நன்றாகத் தம் உள்ளத்தைப் பறிகொடுத்த அந்தப் பெருமான் தம்முடைய தமிழாலே இறைவனைப் பாடவேண்டுமென்று விரும்பிப் பாடுகின்றார். பாடும்பொழுது,
“தேவரெலாம் தொழச்சிவந்த செந்தாள் முக்கன் செங்கரும்பே மொழிக்குமொழி தித்திப்பு ஆக மூவர்சொலும் தமிழ்கேட்கும் திருச்செவிக்கே மூடனேன் புலம்பியசொல் முற்றுமோதான்?” என்று கேட்கின்றார்; 'மொழிக்குமொழி தித்திப்பாகத் திருஞானசம்பந்தரும், திருநாவுக்கரசரும், சுந்தரரும் பாடிய அந்தத்
187

Page 224
தமிழை எல்லாம் கேட்டுக்கேட்டு மகிழ்ந்த உன் திருச்செவிகளுக்குள்ளே, நான் பாடுகின்ற பாடல் ஏற்குமா? என்று இறைவனை வேண்டுகின்றார். இப்படி நூல்களைப் படித்து, அந்தப் பாடல்களில் ஈடுபாடு கொண்டு அந்த நெறியைப் போற்றித் தானும் பாடல் பாடித் தமிழகத்திற்கு உயர்ந்த நூலை அளித்துள்ள அந்தப் பெருமான், தாம் கற்ற அந்த நூல் அறிவைப் பெரிதாக மதிக்கவேயில்லை. உயர்ந்த தத்துவ நூல்களை வடமொழியிலும், தமிழிலும் படித்து இருந்தும்கூட அவர் மனம் அமைதி பெறவில்லை. இந்த நூல்களைப் படித்துப் பெற்ற அறிவினாலே இறைவனை அடைய முடியுமா? மெய்யுணர்வைப் பெற முடியுமா? முடியாதே' என்று ஏக்கம் கொண்டு ஒருவமை அமைத்துப் பாடுகின்றார்.
நூல்ஏணி விண்ஏற நூற்குப் பருத்தி வைப்பார்
போலே கருவிநன்னூல் போதம் பராபரமே” இறைவனே! நான் படித்திருக்கின்ற இந்த நூல் அறிவு இருக்கின்றதே, இதனை வைத்துக்கொண்டு அந்த மெய்யுணர்வு பெற்று, விண்ணேற முடியுமா? இஃது எப்படி இருக்கின்றது என்றால், நூலாலே ஒரு ஏணி அமைக்க விரும்பி, அதற்காக நூலுக்கெல்லாம் பருத்திதேடித், தன் நூலை இழைத்துக்கொண்டே ஒருவன் இருப்பானானால் எப்படியோ, அப்படித்தான் என்னுடைய கல்வி என்கின்றார். இன்னொரு உவமையைச் சொல்லுகின்றார். சிறுபிள்ளைகள் மணற்சோற்றைச் சமைத்து, அதிலே ஒரு மகிழ்ச்சி அடைகின்றார்களே! நானும் சோறு சமைத்தேன் என்று, அதுபோன்ற மகிழ்ச்சிதான் என்னுடைய கலைஞானமார்க்கம் என்கின்றார்.
"சின்னஞ் சிறியார்கள் செய்தமணற் சோற்றை ஒக்கும் மன்னுங் கலைஞான மார்க்கம் பராபரமே”
இப்படிப் படித்துச் சொற்களிலே சொற்களை வைத்துக் கொண்டு விளையாடுகின்ற விளையாட்டிலே வல்லவர்களாக விளங்குகின்ற ஒரறிவு, வாசக ஞானம்' என்று அவர் குறிப்பிடுகின்றார். இதனாலே சுகம் வருமா இறைவனே? என்று முறையிடுகின்றார்.
"வாசக ஞானத்தால் வருமோ சுகம் பாழ்த்த பூசலென்று போமோ புகலாய் பராபரமே”
இந்த வாசக ஞானத்தாலே வேண்டாத பூசல்கள் தான் விளைகின்றன என்று குறிப்பிடுகின்றார். இன்னொரு உவமை, எல்லோரும் சொல்லிவருகின்ற ஒரு வழக்கமான உவமைதான். கிளிப்பிள்ளை கேட்டதே சொல்லும், அது போல்தான் என்னுடைய வாயும்கூடப் படித்ததைச் சொல்லிக் கொண்டு வருகின்றது. பயன்
என்ன?’ என்கின்றார்.
"கேட்டதையே சொல்லும் கிளிபோல நின்னருளில் நாட்டம் இன்றி வாய்பேசல் நன்றோ பராபரமே”
፲88

இன்றியமையாமல் வேண்டத் தக்கதாய் இருப்பது அருளிலே நாட்டம். அந்த அருளை நாடுகின்ற நாட்டமில்லாமல் வெறும் நூல்களைப் படித்துப்படித்துத் திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டு வருவதினாலே பயன் என்ன? என்கின்றார். இந்தக் காலத்து உவமையாக ஒலித்தட்டைச் சொல்லலாம்; சொல்வதையெல்லாம் ஒலியிலே பதிவுசெய்து கொள்ளலாம். ஆனால், அந்த ஒலித்தட்டு அதற்கு மேலே உயரமுடியாது. அந்த அளவிற்குத்தான் இந்த வாசகஞானம், கலைஞான மார்க்கம் என்று அவர் சொல்லுகின்றது. ஆனால், தாயுமானவர் இந்த ஏக்கம் பெற்றவுடனே உயர்ந்துவிட்டார். ஆனந்தக் களிப்பு என்று பாடிய அந்தப் பாட்டிலே சொல்லுகின்றார்.
"அருளால் எவையும் பாரென்றான் அத்தை
அறியாதே சுட்டிஎன் அறிவாலே பார்த்தேன்
இருளான பொருள்கண்ட தல்லால் கண்ட
என்னையும் கண்டிலன் என்னேடி தோழி' என்கின்றார். இறைவனை நாடவேண்டு மென்றால், பாடவேண்டும் என்றால், நாதன், குருநாதன், மெளனகுரு சொல்வதை அறியவேண்டும். ஆனால், அதனை அறியாதே என்னுடைய அறிவாலே பார்த்தேன்; ஒன்றும் விளங்கவில்லை எனக்கு என்கின்றார் இன்னொரு பாட்டிலே. அதனைத் தெளிவாகச் சொல்லுகின்றார். என்னுடைய குரு கூர்த்த அறிவாலே அறிய முடியாது என்று தெரிவித்தார். அதனை நான் உணர்ந்து கொண்டேன்.
"சுடர்த்தல் அறிலாஅறியக் கூடாதெனக் குரவன் சேர்த்தபடி தானே தரித்தேன் பராபரமே”
(பாபரக்கண்ணி-269)
தம்முடைய கல்வியைப் பற்றி அவரே குறிப்பிடுகின்றார். நான் இந்தத் தெளிவு பெறுவதற்கு முன்னமே, வடமொழியிலே வல்லவர்கள் வந்தால், அவர்கள் பேசுவதைக் கேட்டுத் தமிழிலே உள்ள நூல்களில் உள்ள கருத்தை எல்லாம் சொல்லி அவர்களை மடக்கி விடுவேன்; அதுபோலவே, தமிழ் நன்றாகப் படித்தவர்கள் வருவார்களானால், வடமொழியிலே சில வசனங்கள் சொல்லி, அவர்களைத் திகைக்க வைத்து அனுப்பிவிடுவேன்; ஆனால், கடைசியாக இப்போது எண்ணிப்பார்க்கின்றேன்; என்னுடைய இருமொழிப் புலமையும் சேர்ந்து என்ன என்று கேட்டால் அது ஒரு வித்தை
“வெல்லாமல் எவரையும் மருட்டிவிட வகைவந்த வித்தையென்? முத்திதருமோ?’ (சித்தர்கணம்-10)
இந்த வித்தையை வைத்துக்கொண்டே இதுவரையிலே இறுமார்ந்து இருந்தேன். இந்த வித்தை எனக்கு முத்தி தருமோ? என்று இறைவனிடம் கேட்கின்றார். இத்தகைய மனமாறுதல் அவருக்கு ஏற்பட்ட பிறகு இறைவனை வேண்டுகின்றார். 'இப்போது எனக்குத் தகுதி வந்திருக்கின்றது; இறைவனே! என்னை ஆட்கொள், எனக்கு அருள்கொடு' என்று
இந்துக்கலைக்களஞ்சியம்

Page 225
கேட்கின்றார். 'என்ன தகுதி என்று கேட்கின்றாயா? நான் எந்த அறிவை வைத்துக்கொண்டு பெருமைப்பட்டேனோ, அந்த அறிவை எல்லாம் இப்போது உன் திருவடியின் கீழ் வைத்துவிடுகின்றேன்.
"கூர்த்த அறிவு அத்தனையும் கொள்ளைகொடுத்து
ன்னருளைப் பார்த்தவன்நான் என்னை முகம்பாராய் பராபரமே”
(பாபரக்கண்ணி-31)
ஆகவே, முன்போல் நான் இல்லை; இப்போது தகுதி பெற்றிருக்கின்றேன்; எனக்கு, அருள்செய்' என்று வேண்டுகின்றார். இத்தகைய மாறுதல் அவருடைய வாழ்க்கையில் ஏற்பட்ட காரணத்தாலே, அவர் திருச்சியிலே, அந்த அரசாங்கத்தின் கீழ் அமைச்சராய்த் தொடர்ந்து இருக்க முடியாதநிலை ஏற்பட்டுவிட்டது; அவருடைய உள்ளம் வேறு ஒன்றை நாடிவிட்டது; உயர்ந்த ஒன்றை நாடிவிட்டது; மெய்யுணர்வை நாடிவிட்டது. ஆகவே, அவர் அந்தத் தொழிலை விட்டுவிட்டார். அந்த நூலைத் தாயுமானவர் பாடல்’ என்ற ஒரு நூலை, இன்று பார்க்கும்போது, அவருடைய வாழ்க்கையைப் பற்றிய பல குறிப்புகள் நமக்குக் கிடைக்கின்றன; அவர் வளர்ந்த வளர்ச்சியும் நமக்குப் புலனாகின்றது; அவர் உயர்ந்து நின்ற அந்த எல்லையும், ஒரளவு தெளிவாக விளங்குகின்றது; அவருடைய பாடல்களிலே வருகின்ற உருவகங்கள், மிக நீண்ட உருவகங்கள், உவமைகள் தொடர்ச்சியான அடுக்கடுக்கான உவமைகள்-இவற்றையெல்லாம் பார்க்கும்போது, அவருடைய பெரும்புலமை தெளிவாகின்றது. எத்தனையோ பாடல்கள் பாடியிருக்கின்றார்; பழைய யாப்பு வழிப்பட்ட விருத்தங்கள், நீண்ட விருத்தங்கள் பாடியிருக்கின்றார்; ஆனந்தக் களிப்பு, கண்ணிகள் முதலான நாட்டுப்பாடல் முறையிலே பலவற்றை அமைத்திருக்கின்றார். ஆகப் பழம் புலவர்கள் போற்றுகின்ற யாப்பு வழிபட்ட பாடல்களிலும் சிறந்து விளங்கிய பெருமான், மக்கள் பாடுகின்ற நாட்டுப் பாடல் வடிவங்களையும் எடுத்துக் கொண்டு தம்முடைய ஆழ்ந்த, உயர்ந்த கருத்துக்களை எல்லாம் அவற்றில் அமைத்துக் கொடுத்திருக்கின்றார். எத்தனை தொடர்களைப் படிப்பவர் நெஞ்சம், அப்படியே போற்றுகின்றது என்று சொல்ல முடியாது. அவ்வளவு தொடர்கள் உள்ளன அழகான தொடர்கள், ஆழம் உடையதொடர்கள், ஒருமுறை படித்தாலே நெஞ்சிலே பதிந்து விடுகின்ற தொடர்கள், பலப்பல உள்ளன. இறைவனைப் பற்றிப் பாடுகின்ற அந்தப் பாடல்களிலே இத்தகைய தொடர்களை எல்லாம் நாம் படித்துப்படித்துப் போற்ற வேண்டும்.
'பொய்வளரும் நெஞ்சினர்கள் காணாத காட்சியே!”
(சின்மயானந்தருகு -19-4)
இறைவனுக்கு இஃது ஒரு தொடர். இறைவன் யார்? பொய் வளரும் நெஞ்சினர்கள் காணாத இறைவனும், இன்னும்
இறைவன் எப்படிப்பட்டவன்?
இந்துக்கலைக்களஞ்சியம்

"பார்க்குமிட மெங்கும் ஒரு நீக்கமற நிறைகின்ற பரிபூரணானந்தமே! タタ (பரிபூரணானந்தம்-3)
அவருடைய பாடலிலேயிருந்து பல தொடர்கள், பழமொழிகள் போல் இன்று வழங்குகின்றன தமிழரிடையே,
ஆசைக்கோர் அளவில்லை’
(பரிபூரணானந்தம்-10)
அவருடைய தொடர்தான்; ஒரு பாடலின் முதல்தொடர். “கல்லாத பேர்களே நல்லவர்கள் நல்லவர்கள்'
(சித்தர்கணம் -10) இதுவும் தாயுமானவர் நமக்குக் கொடுத்த தொடர்.
"எல்லாம் அறிந்தவரும் ஏதும் அறியாதவரும் இல்லைஎனும் இவ்வுலகம்” (தேஜோமயானந்தம்-9)
அவனன்றி ஓரணுவும் அசையாது”
(எங்கும்நிறைகின்ற பொருள்-1) இவையெல்லாம் தாயுமானவர் கொடுத்த தொடர்கள்.
சிறுசிறு கண்ணிகளிலே மிக உயர்ந்த மெய்யுணர்வை, தத்துவ ஞானத்தை அமைத்துப் பாடியிருக்கின்றார். அந்தப் பாடல்கள் பல இன்று இளமையிலே மனப்பாடம் செய்யத் தவறியவர்களும் கூட, நாற்பத்தைந்து, ஐம்பது வயதுக்குப் பிறகும்கூட, இருமுறை, மூன்றுமுறை படிப்பார்களேயானால், அவர்கள் வாழ்வைவிட்டு அந்தப் பாடல்கள் நீங்கா.
அன்பர்பணி செய்யானை ஆளாக்கி விட்டுவிட்டால் இன்பநிலை தானேவந்து எய்தும் பராபரமே”
(பராபரக்கண்ணி- 155)
அழகான தொடர் ஆழமான கருத்துப் பொதிந்த தொடர் எளிய சொற்களால் அமைந்த பாடல்
"அன்பர்பணி செய்ய எனை ஆளாக்கி விட்டுவிட்டால் இன்பநிலை தானேவந்து எய்தும் பராபரமே”
"சினம்இறக்கக் கற்றாலும் சித்திஎல்லாம் பெற்றாலும் மனம்இறக்கக் கல்லார்க்கு வாயேன் பராபரமே”
(பராபரக்கண்ணி- 169)
"எல்லாரும் இன்புற்று இருக்க நினைப்பதுவே அல்லாமல் வேறுஒன்று அறியேன் பராபரமே”
(பராபரக்கண்ணி-22)
இந்தத் தமிழின் எளிமையை, அதனுடைய எல்லையைக் கண்டவர் போல், அவ்வளவு எளிய சொற்களிலே, ஆழ்ந்த கருத்துக்களை அமைத்து, அழகான பாடல்கள் பாடியிருக்கின்றார். அவருடைய கல்வி அறிவின் பயனாக உயர்ந்த எல்லையைக்
189

Page 226
கண்ட காரணத்தால், அந்தக் கல்வியின் வெறி தணிந்த காரணத்தால், அவருக்கு ஒரு சார்பும் இல்லாமல் நடுநிலையில் நின்று உண்மையை நாடும் நாட்டம் அமைந்துவிட்டது. ஆகவே,
தாம் பிறந்து வளர்ந்த சைவ சமயத்தில் நின்று கொண்டே உலகச் சமயங்களை எல்லாம் பார்த்துப் பிற மதங்களை எல்லாம் ஆராய்ந்து, பிற மதத்தாரின் கொள்கைகளை, போக்குகளையெல்லாம் பொறுமையுடன் உணர்ந்து, எல்லாச் சமயங்களுக்கும் அப்பாற்பட்டவன் இறைவன் என்ற தெளிவைப் பெற முடிந்தது. அவருடைய முதல் பாட்டிலே இதனைத் தெளிவாக்குகின்றார்.
"அங்குஇங்கு எனாதபடி எங்கும் பிரகாசமாய்” நிற்கும் அந்த இறைவன் எப்படிப்பட்டவன் என்றால்
".சமயகோ டிகள்ளலாம் தம்தெய்வம் எம் தெய்வம் என்று எங்கும் தொடர்ந்துஎதிர் வழக்கிடவும் நின்ற எது?”
(பரசிவவணக்கம்-1)
அதுதான் கடவுள். சமயங்கள் எல்லாம் தொடர்ந்து வழக்கிடுகின்றன; இறைவன் எங்கள் தெய்வம்தான் இறைவன் எங்கள் தெய்வம்தான்' என்று வழக்கிட்டுத் தொடர்ந்து எதிர்வழக்கிடுகின்றன. எங்கும் இது நடைபெறுகின்ற காட்சியைப் பார்க்கின்றோம். இப்படி எல்லாச் சமயங்களும் எவனை எங்கள் தெய்வம் என்று சொல்கின்றனவோ, அவன் தான் இறைவன். இவர்கள் வழக்குக்கெல்லாம் அப்பாற்பட்டு இருக்கின்ற அவன்தான் தலைவன். ஆனால், இவர்களுடைய வாதங்கள் எல்லாம் என்ன? என்று கேட்டால், உண்மையாகவே ஆராய்ந்து பார்த்தால், தொலைவிலிருந்து பார்ப்பது இல்லை; புகுந்து பார்த்தால்,
"வேறுபடு சமயமெலாம் புகுந்து பார்க்கின் விளங்குபரம் பொருளே! நின் விளையாட்டு அல்லால் மாறுபடும் கருத்தில்லை முடிவில் மோன வாரிதியில் நதித்திரள்போல் வயங்கிற்று அம்மா”
(கல்லாலின்-25)
என்கின்றார்.
சமயங்களை எல்லாம் வேறுபட்ட சமயங்களை எல்லாம் உள்ளே நுழைந்து ஆராய்ந்து பார்த்தால், இவை எல்லாம் விளையாட்டு' என்ற கருத்துதான் தோன்றுகின்றது தாயுமானவருக்கு. அப்படி வழக்கிடுகின்ற அறிஞர்களைப் பற்றித் தாயுமானவர் ஒருபெரிய பாடல் பாடியிருக்கின்றார்; சமயத் துறையிலே எவ்வளவு பூசல்? எவ்வளவு போராட்டம்? எவ்வளவு வழக்கு? அவர்கள் எப்படிப்பட்டவர்கள்? என்னென்ன செய்கின்றார்கள்? இவற்றையெல்லாம் சுருக்கமாகத் தருகின்றார்; “மாறுபடு தர்க்கம் தொடுக்க அறிவார்; நல்ல தர்க்கம் செய்வார்கள் நீ சொல்லுவது சரியல்ல; அது பொருந்தாது; அது நியாயத்திற்கு ஒத்து வராது என்றெல்லாம் வாதாடுவார்கள்.
79ó
 

"மாறுபடு தர்க்கம் தொடுக்க அறிவார் சாண்
வயிற்றின் பொருட்டதாக
மண்தலமும் விண்தலமும் ஒன்றாகி மனதுழல
மாலாகி நிற்க அறிவார்” (ஆனந்தமானபரம்-3)
இந்தச் சாண்வயிற்றைக் காப்பதற்காக இந்த உலகு, அந்த உலகு, எங்கு எங்கோ மனம் அலையவிட்டு மயங்கி நிற்க முடியும் அவர்களாலே.
“வேறுபடு வேடங்கள் கொள்ள அறிவார்’
அதற்காகவே வேறுவேறு வேடங்கள் எல்லாம் கொள்ள முடியும். அதுமட்டும் அன்று; மந்திரங்கள் யாருக்கும் விளங்காத வகையிலே, மயங்குகின்ற வகையிலே,
S L S L S S S S S S S S S S S S S S LS S S LS S SL L S LS S S S S S LS LLS SLS SLS S S S S S S S S ஒன்றை மெனமெனென்று அகம்வேறதாம்
வித்தை அறிவார்.
மெணமென வென்று ஏதாவது சொல்லிக்கொண்டு அப்படியே மனம்ஒன்று, வாய் ஒன்று; இப்படி உள்ளம் ஒன்று நினைக்க, உதடு ஒன்று சொல்ல, ஏதோ முணுமுணுத்துக் கொண்டிருக்கின்ற அந்த வித்தையும், அவர்களுக்குத் தெரியும். தம்மையும் சேர்த்துக் கொள்கின்றார்.
S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S எமைப்போலவே சந்தைபோல் மெய்ந்நூல் விரிக்க அறிவார்”
நான் எப்படிப் பல நூல்களைப் படித்துச் சந்தை போல எல்லாவற்றையும் மற்றவர்கள் முன்னே விவரித்துச் சொல்கின்றேனோ, அது போலவும் செய்யத் தெரியும் அவர்களுக்கு,
S S S S S S S S S S S S S S S S S S S SS SS SS எமைப்போலவே சந்தைபோல் மெய்ந்நூல் விரிக்க அறிவார்”
இப்படிச் சிலர். இன்னும் சிலர் எப்படி?
"சிறுபுலி போல்சிறி மூச்சைப் பிடித்துவிழி
செக்கச் சிவக்க அறிவார்'
இந்த அடயோகம் போன்றவற்றை எல்லாம் பயின்று, மூச்சைப் பிடித்து, அதிலே ஈடுபட்டு, அவர்கள் தாங்கள் தான் சிறந்த நியதியைக் கண்டவர்கள் போல இருப்பதைப் பார்க்கின்றோம்.
திறம் என்று தத்தம் மதத்தையே தாமதச் செய்கைகொடும் உளறஅறிவார்’
தங்கள் தங்கள் மதக்கொள்கையையே இதுதான் உயர்ந்தது என்று நிரம்பத் திறமாக உளற அறிவார்.
இந்துக்கலைக்களஞ்சியம்

Page 227
"ஆறு சமயங்கள்தொறும் வேறுவேறாகி விளை யாடும் உனை யாவர் அறிவார்?"
அங்கு எல்லாச் சமயங்களிலும் நீதான் இருக்கின்றாய் என்ற அந்த உண்மையைமட்டும் தெரிந்து கொள்ள முடியாதவர்களாய்த் தடுமாறுவார்கள்.
“ஆறு சமயங்கள்தொறும் வேறுவேறாகி விளை யாடும் உனை யாவர்.அறிவார்’
எல்லாவற்றையும் அறிகின்றார்கள்; என்னென்னவோ முயற்சி எல்லாம் செய்கின்றார்கள்; கடைசியிலே அங்கு அங்கு இருப்பதை மட்டும் மறந்து விடுகிறார்கள். இதனைச் சொல்லுகின்ற தாயுமானவர், எவ்வளவு கற்றவர்? அந்தக் கல்வியின் எல்லையைக் கண்டவர்; உயர்ந்த நாட்டம் கொண்டவர்; இப்படிப்பட்ட ஒருவர் கடைசியிலே ஒரு சமரசத் தெளிவு பெற்றுவிட்டார். இந்தச் சமயத் துறையிலிருந்த சான்றோர்களுக்குள்ளே சமரசத்தை வற்புறுத்திய சான்றோர் தாயுமானவர். அந்தப் பொதுமையை மிகுதியாக எடுத்துரைத்தவர் தாயுமானவர். மற்றப் பாடல்களிலே, அவருக்கு முன்னே இருந்த சான்றோர்கள் பாடிய பாடல்களிலே, இலைமறை காய்போல் விளங்குகின்ற இந்த உண்மை, தாயுமானவர் பாடலில்தான் முதன்முதலாகத் தமிழிலே தெளிவாகப் புலப்பட்டது என்று கூறலாம். தாயுமானவர் கண்மூடி நம்புகின்றவர் அல்லர். அது ஒருகாலம். அந்தக் காலத்திலே நான் சொல்லுகிறேன்; ஆகையினால், நம்பு’ என்பார்கள். அவர் சொன்னார்; ஆகையினால், நம்புகிறேன்' என்று பின்பற்றுவார்கள். அந்தக் காலம் மாறிவிட்டது. இப்போதைய காலம், ஆராய்ந்து பார். உண்மை இருந்தால் ஏற்றுக்கொள் என்று சொன்னால்தான் கேட்கும் ஆள்கள் வருவார்கள். உண்மையாகவே இந்த ஒரு புதிய போக்கு அறிவியல் வளர்ச்சியினாலே ஏற்பட்டது என்று சொல்லுகின்றார்கள். ஆனால், எல்லா நாடுகளிலுமே இந்தப் போக்கிலே சில சான்றோர்கள் ஆங்காங்கே இருந்து இருக்கின்றார்கள். மேலை நாட்டிலே சாக்கரடீஸ் என்ற ஞானி இந்தப் போக்கில்தான் உலகத்திற்கு ஒரு புதுவழி காட்ட வேண்டும் என்று விரும்பினார். நம் நாட்டிலே இப்படிப்பட்ட துறையிலே முதன்முதலிலே ஈடுபாடுகொண்டு வழிகாட்டியவர் திருவள்ளுவர் என்று கூறலாம். அவர் நான் சொல்லுகின்றேன்; ஆகையினால், நம்பு’ என்கின்ற அந்தப்போக்கு உடையவர் அல்லர்.
"எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு”
யார் சொன்னாலும், யார் வாயிலாக நீ கேட்டாலும், எந்தப் பொருளையும் ஆராய்ந்துதான் உண்மையைக் கொள்ளவேண்டும் என்ற அந்தக் கருத்தை வலியுறுத்திய சான்றோர் நெறியைத் தாயுமானவர் பாடலிலே காணலாம். ஆயினும், அவருக்குப் பல சமயங்களில், பல சமயநூல்கள் எல்லாவற்றையும் ஆராய்கின்ற வாய்ப்புப் பெற்ற பிறகு, உண்மை உணர்ந்த பிறகு, நம்பிக்கையும்
இந்துக்கலைக்களஞ்சியம்

வந்துவிட்டது. இந்த நம்பிக்கை வேறுவகையானது; கண்மூடி நம்பிக்கை அன்று; தெளிவின் பயனாக ஏற்பட்ட நம்பிக்கை. ஆகவே அவருடைய சமயம் அறிவியல், முறைப்படி அமைந்த ஒரு நெறி என்று கூறலாம்; உலகப் பொதுவான சமயநெறி' என்று 5, sp6UTüh; Scientific Religion, Universal Religion'5T6örg 96öTM) அறிஞர்கள் போற்றுகின்ற அந்தப் போக்கிலே அவர் விளங்கியதைப் பாடல்களால் அறியலாம். இப்படி ஆராய்ச்சியின் எல்லையிலே விளங்கிய அந்த உண்மையைக் கண்ட பிறகு, அவர் உள்ளத்திலே ஒரு பெரிய உறுதி ஏற்பட்டுவிட்டது. சொல்லுகின்றார் தாயுமானவர்,
"ஆனாலும் யான் எனது இங்கு அற்ற எல்லை அது போதும் . 夕外
இதுவா அதுவா? எனக்குக் கிடைக்குமா கிடைக்காதா? நம்புவதா இல்லையா? என்றெல்லாம் ஆராய்ச்சியிலே காலத்தை எல்லாம் கடந்து, கடைசியாக,
'யான்எனது என்னும் செருக்குஅறுப்பான் வானோர்க்கு
உயர்ந்த உலகம் புகும்" என்று திருவள்ளுவர் கூறினாரே, அந்த எல்ல்ை ஒன்று போதும் என்கின்றார்.
'யான்எனது இங்குஅற்ற எல்லை அது போதும் அதுகதிதான் அல்ல என்று போனாலும் . *外
ஒருவேளை அதுகூட உண்மையாக நாம் அடைய வேண்டிய கதியன்று என்று என்னைவிட்டு அது விலகிச் செல்லுமானாலும்கூட,
S S S L S S S L S L S S S S S S S LS LS LS LS LS LS LS S S S S S SSSLSS யான்போவன், அல்லால் மோனப் புண்ணியனே! வேறுமொரு பொருளை நாடேன்’
இனிமேல் நான் அதையும் விட்டுப் போகின்றநிலை வந்தால் விட்டுவிடுவேனே தவிர, இன்னொன்றை நாடுவது என்பது என் வாழ்வில் இல்லை. போதும் நான் இங்குமங்கும் அலைந்து தேடித்தேடி உழன்றது போதும் இனி இதுதான் நான் அடையவேண்டிய கதி, இது இல்லை என்றால், இதற்கு அப்பாலே இல்லை; என்னுடைய முயற்சியும் இல்லை.
'யான்போவன் அல்லால் மோனப்
புண்ணியனே! வேறுமொரு பொருளை நாடேன்’ என்று உறுதிக்கொண்டு அங்கே நின்றுவிட்டார். ஆனால், எப்படி அடைவது? யான்எனது அற்ற எல்லையை எவ்வாறு அடைவது? போராடினார் தாயுமானவர்; அந்தப் போராட்டத்தின் இடையிலே தம் உடம்பின் உள்ளே இருந்துகொண்டு ஏதோ ஒன்று செய்கின்ற அந்தக் குறும்பை உணர்ந்தார். எதுஅது மனம் என்கின்ற ஒன்று? அஃது எப்படி இருந்தது? அதனுடைய தன்மையை எவ்வாறு ஆராய்ந்தார்? ஒரு குரங்காக விளையாடுகின்ற அந்த
19

Page 228
மனத்தைப்பற்றிச் சொல்லுகின்றார். இது சாதாரணக் குரங்கு அன்று பேய்க்குரங்கு, குதிக்கின்ற பேய்க்குரங்காய் இருக்கின்ற ஒன்று, குதிக்கத் தொடங்கிவிட்டால், சொல்லமுடியாது. ஆனால், இந்த மனம் இருக்கின்றதே! அதைவிடப் பொல்லாதது; அந்தக் குரங்கு குதிக்கின்ற குதிப்பைவிட மிகுதியாகக் குதிக்கின்ற ஆற்றல் பெற்றது. அதற்கு ஒரு உவமை தேடினார். அந்தக் குரங்கை ஒரு தேள் கொட்டிவிட்டால், பேய்க்குரங்கைத் தேள் கொட்டிவிட்டால் எவ்வளவு குதிக்கும் அது? அதுவும் சாதாரண தேள் அன்று; கொள்ளித்தேள்!
"கொள்ளித்தேள் கொட்டிக் குதிக்கின்ற பேய்க்
குரங்காய்க் கள்ளமனம் துள்ளுவதுஎன் கண்டாய் பராபரமே”
நம்மிடம் இருக்கின்ற அதனுடைய தன்மையை உணர்ந்தாலே, அது நமக்கு அடங்கிவிடும். அதுதான் சான்றோர் சொன்ன உண்மை. அதை உணர்ந்தார் தாயுமானவர்; உணர்ந்த பிறகு பாடுகின்றார். இந்த உலகத்திலே மதம் பிடித்த யானையை அடக்கிவிடலாம்; கரடி, புலி இவற்றையெல்லாம் கட்டலாம்; சிங்கத்தின் முதுகின்மேல் ஏறிச் சவாரி செய்கின்ற அளவிற்கு அதை அடக்கி ஆளலாம்; கொடிய பாம்புகளையும் பிடித்து ஆட்டலாம்; நீரின் மேலே நடக்கலாம்; நெருப்பின் மேலே இருக்கலாம்; ஆனால், ஒன்று முடியாது; அஃது இவற்றை எல்லாம் செய்யவல்லவர்களாலும் முடியாத ஒன்று.
"சிந்தையை அடக்கியே சும்மா இருக்கின்ற திறம் அரிது . 99
இறைவனைப் பார்த்து வேண்டுகின்றார், ஆண்டவனே! நீ படைத்த உலகத்திலே எத்தனை அருமையான விந்தைகள் எல்லாம் உள்ளன? ஆனால், ஒன்று உன்னாலும் இயலவில்லையோ? எத்தனையோ விந்தையான படைப்புகளை உன் படைப்பிலே காண்கின்றேனே! ஆனால், இதை மட்டும் நீ செய்ய முடியாதா? இந்தப் பெரிய கடலை, மைல் கணக்கிலே பரந்து இருக்கின்ற இந்தக் கடலை ஆலாழி கரையின்றி நிற்கவில்லையோ? இவை எல்லாம் எப்படியோ ஒரு ஈர்ப்புச் சத்தியைக்கொண்டு, ஆங்காங்கே நிற்க வைத்து, இந்த உலகத்தை இயக்குகின்ற நீ எனக்கு உள்ளே இருக்கின்ற ஒரு மனம், குவியும்படியான ஒராற்றலைத் தர முடியாதா?
பாழான என்மனம் குவிய ஒரு தந்திரம்
பண்ணுவது உனக்கு அருமையோ?” என்று இறைவனைக் கேட்கின்றார்; அந்த மனம் ஆடுகின்ற ஆடலை எல்லாம் மற்றொரு பாட்டிலே சொல்லுகின்றார்.
"சொல்லானதில் சற்றும் வாராத பிள்ளையைத்
தொட்டில் வைத்து ஆட்டி ஆட்டித் தொடையினைக் கிள்ளல்போல் சங்கற்பம் ஒன்றில்
தொடுக்கும் தொடுத்து அழிக்கும்”
192
 

பிள்ளையைத் தொட்டிலிலே போட்டுத் தூங்க வைப்பது போலவும் செய்து, அதனுடைய தொடையையும் கிள்ளி அழவைப்பது போலச் சும்மா எங்கேனும் உட்கார்ந்து கொண்டு இருக்கலாம் என்று உட்கார்ந்தால், நம்முடைய மனத்திலே ஒரு எண்ணத்தை உண்டாக்கி, அந்த எண்ணத்திலே நம்மை ஈடுபடச்செய்து, ஒருவிருப்பு வெறுப்பிலே நம்மை அழ வைத்துவிட்டுப் பிறகு நம்மையே கலக்கி, அதனாலே கவலைப்படச் செய்கின்றதே இந்த LOGOTLb!
"பொல்லாத வாதனை எனும் சப்த பூமியிடை
போந்துதலை சுற்றி ஆடும்
புருடனில் அடங்காத பூவை போல் தானே புறம்போந்து சஞ்சரிக்கும்’
கணவனுக்கு அடங்காத ஒருமனைவி இந்தத் தெரு, அந்தத் தெரு, இந்த ஊர் எல்லை, அந்த ஊர் எல்லை, இப்படியெல்லாம் சுற்றித்திரிந்தால் எப்படி இருப்பாளோ அதுபோல் இருக்கின்றதே! என்னைவிட்டு எங்கெங்கோ ஒடி, எங்கெங்கோ அலைகிறதே
என்னுடைய மனம்! இறைவனே! நீ படைத்த பொருள்களுக்குள்ளே கல் வன்மையானது என்று சொல்லுவார்கள்; இரும்பு வன்மையானது என்று
சொல்லுவார்கள். ஆனால், என்னைக் கேட்டால் இந்த என்னுடைய மனம்தான் வன்மையானது.
“கல்லோடு இரும்புக்கும் மிகவன்மை காட்டிடும் காணாது கேட்டஎல்லாம் கண்டதாக் காட்டியே
அணுவாச் சுருக்கிடும்’
என்னென்னவோ செய்யும் பெரிய பொருளை எல்லாம் அணுவாய்ச் சுருக்கிடும்! நான் காணாதவற்றை எல்லாம் கண்டதுபோல் செய்யும் கேளாதவற்றை எல்லாம் கேட்டதுபோல் செய்யும் நான் கேட்டறியாதவற்றை எல்லாம் கண்முன்னே கொண்டு வந்து காட்டிக் கவலைப்பட வைக்கும்.
"கபட நாடக ஜாலமோ?
タタ எல்லாமும் வலது இந்த மனமாயை
இப்படிப்பட்ட மனத்தை ஏழையாம் என்னால் அடக்க வசமோ? என்று இறைவனிடம் வேண்டுகின்றார்; இறைவனிடமே திரும்பத்திரும்ப எடுத்துரைக்கின்றார்; இந்த மனத்தை ஏன்தான் படைத்தாயோ? தெரியவில்லையே! என்று கடைசியாக மனத்தையே கேட்கின்றார். ஏ மனமே!
“வந்தவரவை மறந்து உலகாய் வாழ்ந்து கன்ம பந்தம் உற”
நான் எதற்காக வந்தேன் இந்த உலகத்தில்? அதை மறக்கச் செய்துவிட்டாய்; என்னை இந்த உலகத்திலே வாழ வைக்கின்றாய்; இப்படி கவலையும்பட வைக்கின்றாய்; கட்டுப்படவும் வைக்கின்றாய்; இப்படி எல்லாம் என்னை ஆட்டிப் படைக்கின்றாயே! உனக்கு இதைக் கற்றுக் கொடுத்தவர்கள்
இந்துக்கலைக்களஞ்சியம்

Page 229
யார்? இந்த விந்தையை உனக்குக் கற்றுக்கொடுத்தவர்கள் யார்?'.
இந்தமதி ஏன் உனக்கு? இங்கு என்மதி கேள்.
'உனக்கு ஏன் இந்த அறிவு? இனிமேலாவது என்னுடைய புத்தியைக் கேள். ஒவ்வொரு வழியாக முன்னேறலாம் என்று நான் எண்ணுகிறேன்; உன்னைவிட்டு விட்டால் நான் அன்பு செலுத்த முடியாது இறைவனிடத்திலே; இறைவனிடத்திலே பத்தி செலுத்துவதற்கு உன்னுடைய அருள்வேண்டும்; ஆகவே, என் பேச்சைக் கேள்; என்னுடைய பேச்சைக் கேட்டால் உனக்கும் நன்மை; எனக்கும் நன்மை.
“எனக்கினியார் உன்போலும் இல்லை'
ஆகவே, எனக்கு உறவாக நீ விளங்க வேண்டுமானால் - எனக்கு உதவியாக விளங்க வேண்டுமானால், என் வயப்பட்டு எனக்குத் துணைசெய் என்று வேண்டுகின்றார். இறைவன், உயிர், மாயை இந்தத் துறையில் நடந்து வருகின்ற ஆராய்ச்சி, அளவற்ற ஆராய்ச்சி. ஒவ்வொரு சமயத் துறையிலிருப்பவர்களும் இதுபற்றி ஆராய்ந்து ஆராய்ந்து வழக்காடி வருகின்றார்கள். தங்கள் தங்கள் சமயத் துறையிலே நம்பிக்கை கொண்ட பிறகு, ஒரளவு இந்த ஆராய்ச்சி நின்றுவிட்ட போதிலும்கூட, இது முடிந்தது என்று சொல்லமுடியாது. நம் நாட்டில் மட்டுமல்லாமல், எல்லா நாடுகளிலுமே இப்படிப்பட்ட ஆராய்ச்சி தொடர்ந்து இருந்துகொண்டே வருகிறது. இப்போதைய அறிவியல் துறையிலே வளர்ச்சி ஏற்பட்ட பிறகு, உயிருள்ள பொருள்கள் என்ற பாகுபாடு, சத்து, அசத்து என்ற பாகுபாடு அடிப்படை உடையதா, இல்லையா? என்பதே ஒரு வினாவாகிக் கொண்டு வருகின்றது. அறிவியல் அறிஞர்களுக்குள்ளே ஆத்திகராக உள்ளவர்கள், கடவுள் நம்பிக்கை உடையவர்களும்கூட, இப்படி இரண்டாகப் பாகுபாடு செய்வதிலே கருத்து வேறுபாடு கொண்டு வருகின்றார்கள்.
"MAN THE UNKNOWN" GT6öTD L1555,551(a) Dr. Alexis Carel "Neither the soul nor the body can be investigated separately. The soul is aspected ourselves that is specific as our nature and distinguishes man from all other universe. We are not capable at designing this familiar and profoundly victoriOuS entities.”
"நம்மாலே முடியவில்லை; விளக்க முடியவில்லை; ஆராய்ந்து கூறுவதற்கு வேண்டிய சான்றுகள் போதுமான அளவுக்குக் கிடைக்கவில்லை. நாம் மனம் என்று சொல்லும்போது உள்நோக்கி ஆராய்கின்றோம். பிறகு சத்து அசத்து என்ற சொற்களை ஆராயும்போது உள்நோக்கிக் கூறுகின்றோம். அதனாலே, உடலுக்குள்ளே இருபகுதிபோலத் தோன்றுகின்றன இவைகளெல்லாம்” என்கின்றார்.
"One considers man from inside and the other from outside. There is no reason to give to One, a greater value than to the other.'
இந்துக்கலைக்களஞ்சியம்

என்று இப்படி எல்லாம் அறிவியல் அறிஞர்களுக்குள்ளே ஆசிரியர்களாக விளங்குகின்றவர்களும் கூடத் தடுமாற்றத்துடன் தங்கள் தங்கள் கருத்துக்களை எல்லாம் வெளியிடுகின்றார்கள். தாயுமானவர் இந்த ஒர் ஐயப்பாட்டை இடையிடையே கொஞ்சம் புலப்படுத்துகின்றார். அவருடைய குருவின் அருளினாலே பெற்ற தெளிவு இருந்தும்கூட அவர், சில இடங்களிலே சில தொடர்களை அமைக்கும்போது, அதை மனத்திற்கு அறிவுறுத்தலாக, வேண்டுதலாகக் கூறிய ஒன்றாக எடுத்துக் கொள்ளவேண்டும். மனமே உடலை எடுத்தவர்கள் யாராக இருந்தாலும் உன்னைவிட்டு அவர்கள் உயர்வுபெற முடியாது.
"உறவுடலை எடுத்தவரில் பிரமாதி
யேனும் உனை ஒழிந்து தள்ளற்கு அறவும் அரிது அரிதன்றோ, இகபரமும் உன்னையன்றி ஆவதுண்டோ? வறிதில் உன்னை அசத்து என்னல் வழக்கு அன்று
சத்து எனவும் வாழ்த்துவேன் என் சிறுமைகெடப் பெருமையின் நின் சென்ம
தேயத்தினில் நீ செல்லல் வேண்டும்.”
உன்னை அசத்து என்று சொல்வது பொருந்தாது; உன்னைச் சத்தென வாழ்த்துவேன்; நீ அறிவுடைய ஒன்று என்று வாழ்த்துவேன்; ஆனால், ஒருவேண்டுகோள். நீ எங்கிருந்து வந்தாய்? எல்லாம் முடியாத ஆராய்ச்சி, எங்கிருந்து வந்தாயோ அங்கே திரும்பிப்போய்விடு; என்னை விட்டுவிடு.
“................................................ என் சிறுமைகெடப் பெருமையின் நின்சென்ம தேயத்தினில் நீசெல்லல் வேண்டும்’
'நீ பிறந்த இடத்திற்கே திரும்பிப்போய்விட்டாயானால், சுருக்கமாகச் சொன்னால், நான் இடையிலே சிக்குண்டு இருக்கின்றேனே அந்த மாயை என்னைவிட்டு நீங்கிவிட்டால் நன்றாக இருக்கும்' என்ற ஏக்கத்தைப் புலப்படுத்துகின்றார். ஆனால், அழகான தமிழிலே மனத்திற்கு வேண்டுகோள் விடுக்கின்றார். மனமே! நீ வேண்டிய நாள் என்னோடு பழகிவிட்டாய், பிரிவு என்பது பொல்லாத துயரம் தருகின்ற ஒன்றுதான்; உணர்கின்றேன். உன்னைப் போ’ என்று சொல்லுகின்றேன். ஆனால், அதனுடைய பயனும் எனக்குத் தெரிகின்றது; எனக்கு நன்மையாகலாம்; நீயோ என்னைப் பிரிந்த துன்பத்திலே வருந்துவாய், வாடுவாய்,
“வேண்டியநாள் என்னோடும் பழகியநீ
எனைப்பிரிந்த விசாரத்தாலே
மாண்டு கிடக்கினும் அந்த எல்லையையும் பூரணமாய் வணக்கம் செய்வேன் தர
நீ என்னைப் பிரிந்த துயரத்தாலே எங்காவது சென்று மாண்டுவிட்டால் நான் இங்கிருந்தபடியே அந்தத் திசையை நோக்கி வணங்குவேன்.
193

Page 230
"ஆண்டகுரு மெளனிதன்னால் யான் எனது அற்று அவனருள்நான் ஆவேன்' -
“என்னுடைய குருவின் அருளாலே நான், யான்எனது என்ற அகங்காரம் மமகாரம் இரண்டுமற்று அவன் அருள் வடிவாக விளங்குவேன்.”
LSC LSLL LS LSL L LS S LSL LS L LSL LSL LSL LSL LSL LSL LSL LSL LS LL LSL LSL LSL LS LSS L LSL LS LSLL LSபூவில் காண்தக எண் சித்திமுத்தி எனக்குண்டாம்
உன்னாலென் கவலை தீர்வேன்.”
ஆகையினால், நீபோய்விடு, என்று வேண்டுகின்றார். இப்படிப்பட்ட வேண்டுகோளை விடுத்த அந்தப் பெருமகன், சான்றோர், தாயுமானவர், இறைவனைப் பார்த்துக் கேட்கின்றார். இப்படி ஒரு பொல்லாத மனத்தை எனக்குப் படைத்து, என்னை இப்படியெல்லாம் ஆட்டி வைக்கின்றாயே? நான்தானா உனக்குக் கிடைத்தேன். இந்த மாயையைக் கொண்டு இப்படி ஆட்டுவதற்கு
"வல்லமையே காட்டுகின்ற மாமாயை நானொருவன் இல்லையெனின் எங்கே இருக்கும் பராபரமே”
இப்படிப் படைக்க வேண்டுமா? கடைசியிலே எனக்கு நான் என்கின்ற ஒராணவத்தை வைத்துக்கொண்டு, நான் இங்கே விளையாட வேண்டுமா? அதனாலே என்னுடைய இருவினைகள் யெல்லாம் நான் ஈட்டவேண்டுமா?
"நான்நான் இங்கு எனும்அகந்தை எனக்குரன்
வைத்தாய்? நல்வினை தீ வினை எனவே நடுவே நாட்டி ஊன்ஆரும் உடல்சுமை என்மீது ஏன் வைத்தாய்? உயிர்எனவும் என்னை ஒன்றா உள்ஏன் வைத்தாய்?”
நான் என்கின்ற ஓரகந்தையை எனக்குக் கொடுத்து விட்டு இப்படி என்னை வைக்கவேண்டுமா? அதனாலே, ஒரே ஒரு சுமையாகத் தாங்கிக் கிடந்து உழலுமாறு செய்யவேண்டுமா?
"கூறாய ஐம்பூதச் சுமையைத் தாங்கிக் குனம்இலா மனமெனும் பேய்க்குரங்கின் பின்னே மாறாத கவலையுடன் சுழல என்னை வைத்தனையே பரமே நின் மகிமை நன்றே!” என்று இறைவனிடமே போட்டுவிடுகின்றார். கடைசியாக நீதானே ஆட்டி வைக்கின்றாய், ஏன் இவற்றையெல்லாம் படைத்து என்னை ஆட்டி வைக்க வேண்டும்? நான் நினைக்கின்ற நினைப்பு என்று ஒன்று, இருக்குமானால் அது உண்மையில் உன்னையல்லாமல் இருக்கமுடியாது.
'நினையும் நினைவும் நினையன்றி இல்லை; நினைத்திடுங்கால் வினைஎன்று ஒருமுதல் நின்னை
அல்லாது விளைவதுண்டோ?”
194

நினைப்புக்கே நீ அடிப்படையென்றால் அந்த வினை எப்படி நிகழும் உன்னையல்லாமல்? ஆகவே, எனக்கென்று உன்னையல்லாமல் ஒரு செயல் இல்லையே. நான் எண்ணுகின்ற எண்ணமெல்லாம் உனது என்றால், அதற்குப் பிறகு நான் முன்னே செய்தவினை என்று எப்படியிருக்கமுடியும்? என்று கேட்கின்றார். இவை வினாக்களாக இருப்பினும்கூட இன்றுவரையில் அறிஞர்கள் கேட்கத்தக்க கேள்விகளாகவே இன்னும் இருந்துகொண்டிருக்கின்றன; ஆராய்ச்சியில் விளங்காத புதிர்களாகவே உள்ளன.
"எண்ணமுந்தான் நின்னைவிட இல்லையென்றால்
யான்முனமே பண்ணவினை யேது பகராய் பராபரமே 芳労
"என்னை இன்னதென்று அறியா ஏழைக்கும்
ஆகெடுவேன் முன்னைவினை கூடன் முறையோ பராபரமே”
அப்படியே இருந்தாலும்கூட நான் ஒன்றுமே விளங்காத செய்த பிழைக்கெல்லாம் இப்படி வினை வந்து என்னை வாட்ட வேண்டுமா? என்று கேட்கின்றார்.
"அறியாநான் செய்வினையை ஐயாநி கூட்டும் குறியேது எனக்குளவு கூறாய் பராபரமே”
சரி, ஒருவேளை இவ்வித்து இருந்தாலும் இருக்கட்டும்; இந்த இருவினையை அழிக்கின்ற ஆற்றல் உனக்கு இல்லையோ? நீ அழிக்கக் கூடாதா?’ என்று கேட்கின்றார்.
"என்னைக் கெடுக்க இசைந்த இருவினைநோய் தன்னைக் கெடுக்கத் தகாதோ பராபரமே”
இது கெடுப்பது உனக்கு அருள் அல்லவா? உனக்குப் புண்ணியமாய் இருக்கட்டும் என்றெல்லாம் சொல்லுகின்றார்.
'திண்ணிய வினையைக் கொன்று
சிறியனை உய்யக் கொண்டால்
புண்ணியம் நினைக்கே அன்றோ?
பூரணானந்த வாழ்வே'
என்று இப்படிப் பலவாறு வேண்டி வேண்டிப் பாடுகின்றார். அவருடைய வாழ்விலே தம்முடைய மனநிலையைப்பற்றிக் கூறுகின்ற ஒரு பாட்டிலே ஒவ்வொரு காலம் என் மனம் உயர்ந்ததை எண்ணுகின்றது; ஒவ்வொரு காலம் என் மனநிலை உயர்கின்றது; ஒவ்வொரு காலம் சோர்ந்து போகின்றது; இறைவனே? நீ எனக்கு அருள் தந்து ஒரே நிலையான வாழ்வைக் கொடுக்கக் கூடாதா?’ என்று கேட்கின்றார்.
"என்செயல் இன்றி யாவும் நின் செயலென்று எண்ணுவேன் ஒவ்வொரு காலம்
புன்செயன் மாயை மயக்கின் என் செயலாப்
பொருந்துவேன் அஃதொரு காலம்
இந்துக்கலைக்களஞ்சியம்

Page 231
பின்செயல் யாதும் நினைவின்றிக் கிடப்பேன்
பித்தனேன்; நன்னிலை பெற நின் தன்செயலாக முடித்திடல் வேண்டும்
சச்சிதானந்த சற்குருவே!" என்று வேண்டுகின்றார்.
அந்த நிலையில்தான், அவருக்குத் துறவு ஆசை ஏற்பட்டது. 'யான் எனது' என்று இந்த இரண்டுமற்ற ஒரு நல்ல நிலைபெறவேண்டும் என்ற ஏக்கத்தாலே, தொடங்கிய அவருடைய நல்ல முயற்சி, இறைவனுடைய அருளை நாடி, உழைத்த அந்த உழைப்பு, இந்த ஏக்கத்தைத் தந்தது. 'விடத்தை அமிழ்து ஆக்குகின்ற ஆற்றல்பெற்ற சித்தனே என்னுடைய துன்பமெலாம் தீருவதற்காக நான் இதுவரையிலே பாசக் கடற்குள்ளே இருந்துகொண்டு சுழன்று அலைந்தேனே, அவையெல்லாம் தீரும்படியாக எனக்கோர் ஆசை தோன்றுகிறது. எல்லாவற்றையும் விட்டுவிட்டு.
"ஒதாத ஒருநாளை கையுணவை ஏற்றுண்டால் எனக்கு இங்கு ஒழிந்து விடுவேன்.”
நான் ஊர் தோறும் திரிந்து ஆங்காங்கு அவர்கள் கொடுக்கின்ற பிச்சை உணவை ஏற்று உண்டு இப்படி வாழ்க்கை நடத்தலாமா? அப்படியாவது தீருமா?’ என்று கேட்கின்றார் அமைச்சராக இருந்த ஒரு சான்றோர். துறவாசை கொண்டு, ஊர்ஊராகத் திரிந்து பிச்சை 의_GITT6T) 6)」 ஏற்று இந்தப் பற்றுப்பாசங்களையெல்லாம் ஒழிக்கவேண்டும் என்று விழைந்தார்; அப்போதுதான் பாடுகின்றார்; நிலையாமையைப் பற்றிச் சான்றோர்கள் சொன்ன அதே போக்கிலே கருத்துக்களை அமைத்துக் கொண்டு பாடுகின்றார்.
"தந்தை தாய் மகவு மனை வாழ்க்கை யாக்கை
சகம் அனைத்தும் மெளனியருள் தழைத்த போதே இந்திரசாலங் கனவு கானல் நீராய்
இருந்ததுவே இவ்வியற்கை என்னே என்னே!” என்று அந்தப் பற்றற்ற ஒரு மனநிலையை விரும்பி உயர்ந்த அவருடைய வாழ்விலே, எல்லாம் காணலாய்த் தெரிகின்றது; கனவாய்த் தெரிகின்றது; இந்திரசாலமாய்த் தெரிகின்றது. 'எனக்கெனச் செயல் வேறில்லை; எல்லாம் உன்னுடைய செயல்; என் உடல், பொருள், ஆவியும் நான் தருகின்றேன்; என்னுடைய மனத்தகத்துள் அழுக்கெல்லாம் மாற்றி நீ நினைத்தது எப்படி? அப்படி அருளுதல் வேண்டும்' என்று கேட்கின்றார். ஆனால் இந்தத் துறவற நெறியிலும் கூட அவருக்கு வெறியில்லை. துறவை நாடி அவருடைய மனத்திற்குள்ளே உலகத்தை வெறுக்கின்ற வெறுப்பு எவ்வளவு இருந்த போதிலும்கூட இடையிடையே இந்த உலக வாழ்வால் அல்லவா உண்மையைக் காண முடிந்தது எனக்குக் குருவாக வந்து அருளிட அந்த மெளன நாதனுடைய அருளைப் பெற முடிந்தது. ஆகவே, இந்த உலக வாழ்க்கை பொல்லாதது அன்று; எனக்கு வேண்டியது கிடைத்துவிட்டால் உலக வாழ்க்கையிலேயே நான் இருக்கமாட்டேன்' என்கின்றார்.
இந்துக்கலைக்களஞ்சியம்

"மறமலி உலக வாழ்க்கையே வேண்டும் வந்துநின் அன்பர்தம் பணியாம் அறமது கிடைக்கின்'
இப்படிப்பட்ட ஒரு நெறியிலே நின்று உன்னுடைய அன்பர்களுக்குத் தொண்டு செய்யும்படியான அந்த அறம் கிடைக்குமானால், மறமலி உலக வாழ்க்கையே வேண்டும்; அன்றி, ஆனந்த அற்புத துறவாவது வேண்டும்; நிட்டையினிமித்தம் மெளனியாய் எனக்குத் தூய நல்ல அருள்தரின், மெளனகுருவாக வந்து மீண்டும் அருள் கொடுப்பாயானால், இன்னொரு பிறவியும் பெற்று அந்தப் பிறவியிலும் உன்னுடைய அருளைப் பெறுவதற்காக உடம்பும் எடுக்கலாம்; காத்திருக்கின்றேன். தூய நல்ல அருள்தரின், மெளனியே! எனக்குத் தூய நல்ல அருள்தரின், இன்னும் பிறவியும் வேண்டும். யான் எனது இறக்கப்பெற்றவர் பெற்றிடும் பேறே' என்று வேண்டுகின்றார். அந்த மெளனியாக வந்து அருள்செய்த ஒரு பெருமானை, அவர் நந்தியின் மரபிலே வந்தவர்; திருமூலர் மரபிலே வந்தவர்' என்று எல்லாம் போற்றுகின்றார். அதற்கும் அப்பால் சென்று வடஆல மரத்தின் கீழே விளங்குகின்ற - கல்லால மரத்தின்கீழே அருட்கோலத்துடன் விளங்குகின்ற தட்சிணாமூர்த்தியின் வடிவத்தைப் புகழ்ந்து புகழ்ந்து போற்றுகின்றார். அவர் போற்றி வழிபட்ட அந்த மூர்த்தி
96) JIFT,
"வாரா வரவாய் வடநிழல்கீழ் விற்றிருந்த பூராயம் நம்மைப் புலப்படுத்த வேண்டிஅன்றோ? ஒராயோ நெஞ்சே! உருகாயோ உற்றிருந்து பாராயோ அவ்வுருவைப் பார்க்க நிறைவாய்விடுமே!’
என்று அதிலேயே ஈடுபாடுகொண்டு, அந்த வடிவத்தைப் பார்க்க மாட்டாயா? மனமே! பார்த்துக்கொண்டே இரு; உணர்ந்து கொண்டே இரு உருகிக் கொண்டே இரு உன்னுடைய வாழ்வு நிறைவு பெற்றுவிடும்' என்று சொல்கின்றார்.
"கல்ஆலின் நிழல்தணில் ஒருநால் வாக்கும்
கடவுள்நீ உணர்த்துவதும் கைகாட்டு என்றால்’
எவ்வளவு பெரிய அறிஞர் கடைசியிலே அந்தக் கடவுள் நிலையை, அந்த மெய்யுணர்வைச் சொல்லாலே பெற முடியாது என்கின்றார். அதைத்தான் தட்சிணாமூர்த்தியின் திருக்கோலம் காட்டுகின்றது என்று விளக்குகின்றார்.
"கல்ஆலின் நிழல்தணில் ஒருநால் வர்க்கும் கடவுள் நீ உணர்த்துவதும் கைகாட்டு என்றால் சொலாமலே சொல்லப்படுமோ? சொல்லும் தன்மை’
சொல்லாலேயே விளக்கி விடலாம் என்று இன்று யாரேனும் முயல்வாரானால், அவர் முயற்சி துரும்பைப் பற்றிக் கொண்டு
கடலைக் கடக்கின்ற முயற்சிதான் என்கின்றார்.
"சொல்லாலே சொல்லப்படுமோ? சொல்லும் தன்மை துரும்புபற்றிக் கடல்கடக்கும் துணிபேஅன்றோ?”
195

Page 232
ஆண்டவனிடம் பலவற்றை முறையிட்ட அவர், தம்முடைய
வாழ்க்கையின் தெளிவைப் பல பாடல்களிலே காட்டுகின்றார். இந்த உலகத்தில் நமக்கு எல்லாவற்றையும் உணர்த்துகின்றவன் ஒருவன்; அவனை மறந்து விடுகின்றோம்; அவன் அருளாலே நமக்கு உணர்த்தும் ஆற்றலைக் கொடுத்ததை மறந்துவிடுகின்றோம். ஆனால், உணர்கின்றவற்றிலே மூழ்கி விடுகின்றோம்.
"உணர்த்தும்உனை நாடாது உணர்ந்தவையே நாடி இணைக்குறும் என் ஏழைமைதான் என்னே பராபரமே”
என்கின்றார். இப்படி மெளனகுருவாக வந்து அவருக்கு அருள்செய்த அந்தப் பெருமானின் ஒருசொல்லை நினைத்து நினைத்துக் களிப்பு அடைகின்றார்.
"மந்திர குருவே, யோக தந்திர குருவே மூலன்
மரபில் வரும் மெளனகுருவே" என்று பத்துப் பாடல் தம்முடைய குருநாதரைப்பற்றிப் பாடியிருக்கின்றார்.
தட்சிணாமூர்த்தி வாழ்க வாழ அருளிய நந்தி மரபு
வாழ்க என்னுடைய குருநாதன் மெளனகுரு வாழ்க’ என்று வாழ்த்துகின்றார். தம்முடைய ஆசையை மற்றொரு பாட்டிலே அந்த மெளனநிலையைத் தானும் பெற வேண்டும் என்று ஏங்கிப் பாடுகின்றார்.
'எல்லோரும் காட்டிற்குச் சென்று அங்கே கிடைத்த கனி அல்லது சருகு எதையேனும் உண்டு, பசித்தால் உண்டு, அங்கேயே அமைதியாக கண்மூடிக்கிடக்கின்ற ஆசை எனக்கு இருக்கின்றதே! இறைவனே! நீ அறியாயோ? என்கின்றார்.
"கனியேனும் அரியசெய்ய காயேனும்
உதிர்சருகு கந்த மூலங்களேனும் கனல்வாதை வந்திடும் அள்ளிப் புசித்துநான்
கண்மூடி மெளனியாகித் தனியே இருப்பதற்கு எண்ணினேன்
எண்ணம்இது சாமிநி அறியாததோ?”
என்று அவரிடமே முறையிடுகின்றார். தம்முடைய வேட்கையை, ஆசையை, இவ்வளவு எல்லாம் இறைவனிடத்திலே ஈடுபாடுகொண்டு, தமக்கு அருள்புரிந்த அந்த மெளனகுருவைப் போற்றிய அவர், பூசையைப்பற்றிப் பல கருத்துக்கள் சொல்லுகின்றார். நான் பூசை செய்கின்றேன். ஆனால், நான் எப்படி உன்னை விடுத்து, மலரைப் பறித்து உன்மேல் எறிவேன்? என்று சொல்லாமல் சொல்கின்றார்.
"பண்ணேன் உனக்காகப் பூசை, ஒருவடிவிலே
பாவித்து இறைஞ்ச ஆங்கே
பார்க்கின்ற மலரூடு நீயே இருத்தி அப்
பனிமலர் எடுக்க மனமும்
196
 

நன்னேன், அலாமல்இரு கைதான் குவிக்கனனின்
நானும் என் உளம்நிற்றி நீ நான்கும் பிடும்போது அரைக்கும்பி டாதலால்
நான்பூசை செய்யல் முறையோ?” என்று தாமும், அவர் பெற்ற தத்துவ ஞானத்தையே பூசைக்குப் பயன்படுத்தி ஒரு வழக்காடுபவர் போல் பேசுகின்றார்.
'கடைசியாக நான் செய்கின்ற பூசையிலே எது உண்மையான நைவேத்தியம்? என்றால் என்னுடைய ஆவிஎன்னுடைய உயிர்தான். என்னுடைய அறிவுதான் எனக்குத் தீபம். இதைச் சதா கால பூசையாக ஒப்படைக்கின்றேன்; என்னுடைய குருநாதனாக நீ வந்து எனக்கு அருளிய அருளினாலே, நான் எண்ணுகின்றேன்; கல் ஏன்? மலர் ஏன்? கனிந்த அன்பே பூசை என்ற அந்த நல்லோர்கள் கண்ட உண்மைதான் உண்மை என்று உணர்கின்றேன்; என்னுடைய நெஞ்சம்தான் கோயில் என்று நான் உனக்கு வைக்கின்றேன்; என்னுடைய எண்ணங்களே நறுமணங்களாக ஒப்படைக்கின்றேன்; என்னுடைய அன்பையே மஞ்சள் நீராக, அபிடேக நீராக நான் செலுத்துகின்றேன்; நான் சொல்லுவதெல்லாம் செபம்; நான் சிந்திப்பது எல்லாம் தியானம்; அந்த அளவிற்கு நான் ஒப்படைக்கின்றேன் என் வாழ்வை,
'நெஞ்சகமே கோயில் நினைவே சுகந்தம் அன்பே மஞ்சனநீர் பூசைகொள்ள வாராய் பராபரமே”
"செப்புவதெல் லாஞ்செபம் நான் சிந்திப்பு தெல்லாம்நின் ஒப்புஇல் தியானமென ஒர்ந்தேன் பராபரமே”
திருநாவுக்கரசர், கங்கையில் ஆடினால் என்ன? காவிரியில் நீர் ஆடினால் என்ன? கடல்தோறும் சென்று தீர்த்தங்கள் என்று நீர்ஆடினால் என்ன? எங்கும் ஈசன் என்று உணராதவர்க்குப் பயன்இல்லை' என்கின்றார். அதே கருத்தைத் தான் சொல்லுகின்றார்.
"வடிவெலாம்நின் வடிவுஎன வாழ்த்திடாக் கடியனேனும் உன் காரணம் காண்பனோ?”
‘எல்லாம் உன்னுடைய வடிவம் என்று காண்கின்ற அந்தக் காட்சிதான் உண்மையான காட்சி என்பதை வற்புறுத்துகின்றார்; கண்டவையெல்லாம் மெளன உரு வடிவாகவும் கருதி அஞ்சலி செய்குவாம்' என்கின்றார்; எப்படி வழிபடுவது இறைவனுடைய தட்சிணாமூர்த்திக் கோலத்திலே ஆர்வம் கொண்ட அவர், அந்தக் கோலத்தை உன்னி உன்னிப் பெருங்களிப்புக் கொண்ட அவர், நடவாதபடி ஆடலைப் பார்த்துப் பார்த்து மகிழ்ந்த அவர், மெளன குருவாகத் தம்முடைய குருநாதரைப் பார்த்துப்பார்த்து மகிழ்ந்த அவர் சொல்லுகின்றார், ஆண்டவனே! உன்னிடம் உண்மையான ஒரீடுபாடு கொண்டு நான் பார்க்கின்றேன்; உன்னை எப்படிப் பார்க்கின்றேன்? இந்த உலகமெலாம் நீ என்று பார்க்கின்றேன்; அப்படிப் பார்க்கும்பொழுது இந்தப் பெரிய வடிவத்தை எப்படித்தான் எழுதுவது? எழுதுவதற்கு ஒரு பெரிய மடல்
இந்துக்கலைக்களஞ்சியம்

Page 233
வேண்டுமே! எந்த ஒவியத்தில் இவையெல்லாம் அடக்கி எழுதுவது? என்று பார்க்கின்றேன்; கிடைத்தது எனக்கு ஒர் அருமையான மடல், அதிலே உன்னை எழுதுகின்றேன்’ என்கின்றார்.
“பாராதி விண்ணனைத்தும் நீயா!'
இந்த உலகம் முதற்கொண்டு, அந்த உலகம்வரைக்கும் எல்லாம் நீதான்; எல்லா வடிவத்தையும் நீயாகப் பார்க்கின்றேன்; எப்படி எழுதுகின்றேன்? எங்கே எழுதுகின்றேன்? என்று கேட்கலாம். "சிந்தை பரிய மடலாம்”
விரிந்த பரப்புள்ள என்னுடைய மனம், பெரிய மனம் அதையே பெரிய மடலாக வைத்துக் கொண்டு உன்னை நான் எழுதுகின்றேன்;
“பாராதி விண்ணனைத்தும் நீயாச் சிந்தை பரியமடலா எழுதிப் பார்த்துப் பார்த்து’
நான் கேட்கின்றேன்; (இப்பொழுது தாயுமானவர் காதலி ஆகி விடுகின்றார்; இறைவன் காதலனாக விளங்குகின்றார்; பழைய சங்கஇலக்கியக் காதற்பாட்டுகளின் மரபைத் தாயுமானவர் பாடல்களிலே பார்க்கின்றோம். “இறைவன் பத்தன்” என்ற முறையிலே "காதலன் காதலி’ ஆகப் பார்க்கின்ற காட்சி)
"வாராயோ என்பிரான நாதா என்பேன்;
வளைத்துவளைத்து எனைநீயா வைத்துக்கொண்டு பூராயமா மேல் ஒன்று அறியா வண்ணம்
புண்ணாளர் போல் நெஞ்சம் புலம்பி உள்ளே நீராளமாய் உருகிக் கண்ணிர் சோர
நெட்டுயிர்த்து மெய்ம்மறந்தோர் நிலையாய் நிற்பேன்.”
இப்பொழுது காண்கின்ற தாயுமானவர், பெரிய காதலி
தெய்வக் காதல் கொண்ட ஒருவர்; என்ன ஆகின்றார்?
"காய்இலை புன்சருகு ஆதி அருந்திக் கானம் கடல் மலை எங்கே எனவும் கவலை ஆவேன்.”
'எந்தக் காட்டுக்குப் போனான்; எந்த மலைக்குப் போனான் என்று கவலையாகி விட்டது நாதா
வாயில்கும்பம் போல்கிடந்து புரள்வேன்' வாயில்லாத குடம்போல நிற்கும் நிலையில்லாமல் புரள்கின்றேன்.
"............................τ.τ.τ.τ.τ.τ.τ.τ.τ. வானில் மதி கதிரை முன்னிலையா வைத்து நேரே”
சூரியனைப் பார்க்கின்றேன்; சந்திரனைப் பார்க்கின்றேன்; ஞாயிறே திங்களே! உங்களைப் படைத்தவன் எங்கே
இருக்கிறான்? சொல்லுங்கள்; நான் போய்ப் பார்க்க வேண்டும்.
இந்துக்கலைக்களஞ்சியம்

"நேரேதான் இரவுபகல் கோடா வண்ணம்
யார் உங்களைப் படைத்தவன்?
"அங்கு அவர்பெருமை என்னே என்பேன்; அடிக்கின்ற காற்றேறி யாராலேதான் பேராதே சுழல்கின்றாய் என்பேன்."
மழை பெய்கின்றது; ஏ மழையே! மேகங்களே!
44
L S LCS L L L L L L L S S L S L S S S S S S S L S S S S S S S SSLS LSLS SLLS SSLS S LSLSLSS S LSL LS LSS L L L L L L L L L L L L L L L S S S S SLSLSLS S S S S S SLS SLS S S வந்து பெய்கின்ற முகில்காள் எம்பெருமான் நும்போல் தாராள மாக்கருணை பொழியச் செய்யும் சாதகம் என்னே கருதிச் சாற்றும் என்பேன்; ”
உவகை அடைந்திருக்கின்றார். வானமே! எங்கே தொடங்குகின்றாய்; எங்கே முடிகின்றாய்; ஒன்றுமே தெரியவில்லையே! உன்னைப் படைத்தவன் தன்மையே உனக்கும் வந்துவிட்டதா!
"கருதரிய விண்ணே நீ எங்கும் ஆகிக் கலந்தனையே உன்முடிவின் காட்சி ஆக வருபொருள் எப்படி இருக்கும் சொல்லாய் என்பேன்’
மண்ணைப் பார்க்கின்றார் தாயுமானவர். மண்ணுலகத்தை “மண்ணேஉன் முடிவில்எது வயங்கும்” கடைசியாக உனக்கு எங்கே முடிவு?
". ஆங்கே
துரிய அறிவுடைச் சேடன்’
ஆதிசேடன் என்ற ஒரு பாம்பு உன்னைத் தாங்குகின்றதாமே! ஒருவேளை அந்தப் பாம்பைக் கேட்டால் தெரியுமோ உன்னைப் படைத்தவன் தன்மை? எனக்கேட்கின்றார்.
"..................... ஈற்றின் உண்மை சொல்லானோ சொல் என்பேன்’
“வேதங்கள் இறைவனைப்பற்றி முழக்கம் இடுகின்றன” என்று சொல்கிறார்கள்; அந்த வேத நூலைக் கேட்பேன்.
"..................................... .சுருதியே நீ ஒருவரைப்போல் அனைவருக்கும் உண்மை ஆம் உன் உரைஅன்றோ உன்முடிவை உரை நீ என்பேன்’
'உன்னுடைய முடிவு என்ன என்று சொல்?’ என்று கேட்கிறார்.
கடலைப் பார்க்கின்றார் தாயுமானவர்.
"உரைஇறந்து பெருமைபெற்றுத் திரைக்கை நீட்டி ஒலிக்கின்ற கடலே இவ் உலகம் குழக் கரையும்இன்றி உன்னைவைத்தார் யாரே என்பேன்’
கிளிகள் பறக்கின்றன மாலை நேரத்திலே,
197
ഷൂg ീ ږيgیoغP

Page 234
- 。タタ "கானகத்தின் பைங்கிளிகாள்
வண்டுகள் ஒலிக்கின்றன;
"...καταστατα απαιττα. கமலம் மேவும் வரிசிறை வண்டினங்காள்'
ஆங்காங்கே அன்னங்கள் பறக்கின்றன;
66
S SS SS S S S S S S S S S S S S S S S S S S S LS S LS S LS LS S S S ஒதிமங்காள் தூது மார்க்கம் அன்றோ நீங்கள் இது வரையிலேயும் பெரிய பரிபூரணமாம் பொருளைக் கண்டு பேசியதுண்டோ ஒருகால் பேசும் என்பேன்’
'வழக்கமாகத் தூது போகிறவர்களாய் இருக்கிறீர்கள்! என்னுடைய நாதனிடம் தூது போயிருக்கிறீர்களாம்! ஒரு முறை போய்வந்து சொல்லுங்கள். இப்படியெல்லாம் அவர் காதல் வயப்பட்டுத் தெய்வக் காதல் வயப்பட்டுப் பாடிய அந்தப் பாடலில் ஒன்றைச் சொல்லுகின்றார். இவர் படித்த நூல்களிலே அடிக்கடி வரும் இறைவன், இறைவனிடத்திலே ஆன்மா கலக்கின்ற கலப்பு, அது நீரிலே உப்பு கலப்பது போல, நல்ல தீபத்திலே கர்ப்பூரம் கலப்பது போல; ஏற்றிய கர்ப்பூரம் கரைந்து விடுவதுபோல என்றெல்லாம் சொல்கின்றார்கள்; அதற்காக நான் கொஞ்சம் உப்பை எடுத்துத் தண்ணிரிலே போட்டுப் பார்க்கின்றேன்; கர்ப்பூரத்தைக் கொளுத்திப் பார்க்கின்றேன்; இந்த உவமைகள் வாயிலாவது உண்மை விளங்குமா? என்று பார்க்கின்றேன். ஆனால், எனக்கே என் அறியாமை விளங்குகின்றது. யானை எங்கோ காணாமல் போய்விட்டதென்றால், ஒருவன் குடத்திற்குள்ளே கைவிட்டுத் தேடினானாம் அதுபோலல்லவா இருக்கிறது என் செய்கை?
"ஒருவன் அவன் யானைகெடக் குடத்துள் செங்கை ஒட்டுதல்போல் நான் பேதை உப்போடு அப்பை
மருவவிட்டும் கர்ப்பூரம் அதனில் தீபம்
வயங்கவிட்டும் ஐக்கியம் உன்னி வருந்திநிற்பேன்"
கடைசியாகக் கேட்கின்றார். மாணிக்க வாசகரே! நீர் சொல்லும், திருமூலரே! சொல்லும்; அருணகிரிநாதரே! சொல்லும், இப்படி யெல்லாம் கேட்கின்றார். கடைசியாகக்
காதல்மிகும் அணியிழையார் என வாடுற்றேன்
கருத்தறிந்து புரப்பது உன்மேல் கடன் முக்காலும்
என்றெல்லாம் பாடினார். அவருடைய பாடல்களிலே பைங்கிளிக்கண்ணி என்பது உயர்ந்த ஒன்று. இலக்கிய மரபின்படி அமைந்த அந்தக் காதற் பாடல்களிலே இறைவனுடைய தத்துவத்தை எல்லாம் பாடித் தம்முடைய அன்பின் பெருக்கைப் பாடி மெய்யுணர்வுபற்றிய தெளிவெல்லாம் நல்குகின்றார்.
198
 

“அகம்மேவும் அண்ணலுக்குஎன் அல்லலெல்லாம் சொல்லிச் சுகமான நீ போய்ச் சுகம்கொடுவா பைங் கிளியே'
'உனக்குச் சுகம் என்று பேர் வைத்தார்களே, கிளியே எனக்குச் சுகம் கொண்டு வா; என் அண்ணலை நாடி அவருடைய அருளைப் பெறவிருக்கும் வழி சொல்; அவர் எங்கே இருக்கின்றார் என்று கேட்கிறாயா? அவர் எங்கும் இருக்கிறார். தூது போய் வா' (தம்முடைய பேராசை, இந்த உடலை விட்டு நீங்குவதற்கு முன்னே)
ஆகத்தை நீக்குமுன்னே ஆவித் துணைவரை நான் தாகத்தின் வண்ணம் தழுவுவனோ பைங்கிளியே!”
என்று வேண்டினார்; அவ்வாறே தழுவினார். அவருடைய உடல் தம்முடனயே இருக்கும்போதே, அவ்வுடலை விட்டு அந்த ஆன்மா உயர்ந்து பரந்தது. நெஞ்சத்தை கோயிலாக்கி , நினைவையே சுகந்தமாக்கி, அன்பையே மஞ்சன நீராக்கிச் சதாகாலப் பூசையாகச் செய்த தாயுமான இவருடைய வாழ்வுதர அவர் விரும்பியவாறே முடிந்தது. தமிழ்நாடு கண்ட சான்றோர்களுக்குள்ளே தாயுமானவர் ஒருவர். அவருடைய பாடல்கள் மிக உயர்ந்த பாடல்கள். அங்கு இங்கு எனாதபடி என்று தொடங்குகின்ற அந்தப் பாடல் முதற்கொண்டு ஆனந்தக் களிப்பாகப் பாடுகின்ற 'சங்கர சங்கர சம்போ என்று தெருவிலே பாடிச்செல்கின்ற பண்டாரங்கள் மெட்டிலே பாடுகின்ற பாடல் வரையிலே ஆழ்ந்த பக்தி யுணர்ச்சியையும், தெளிவான ஞான மார்க்கத்தையும் நாம் காணலாம். இத்தகைய சிறந்த ஞானபக்தி நிறைந்த பெருமானுடைய பாடல்கள், தமிழ் மொழிக்கும், தமிழகத்திற்கும் தாயுமானவர் அளித்த செல்வங்களாகும்.
(.627 .0ی)
தரக மந்திரம்
தா ரகம் என்ற சொல்லிற்குத் தாண்டச் செய்தல் என்று பொருளுண்டு. ஒம் என்னும் பிரணவமே தாரக மந்திரமாகும். பிறவிப் பெருங்கடலைக் கடக்கச் செய்வதாற் குடிலை, தாரகமந்திரம் எனப்பட்டது.
பிரணவமானது சிவபெருமானுக்குப் பீடம், ஏனைய தேவர்களுக்குப் பிறப்பிடம். எல்லா எழுத்துக்களுக்கும் வேதங்களுக்கும் ஆதியானது பிரணவமே. காசியம்பதியிலே இறந்தவர்களுக்கு விஸ்வநாதர் வலது செவியிலே தாரக மந்திரத்தை உபதேசிப்பர்.
"ஈசன் மேவரு பீடமாய் ஏனையோர் தோற்றும் வாசமா யெலா எழுத்திற்கு மறைகட்கு முதலாய்க் காசி தன்னிடை முடிபவர்க் கெம்பிரான் கழறும் மாசில் தாரகப் பிரமமாம் அதன்பயன் ஆய்ந்தான் 夕外
வேதங்களை ஒதுவதற்கு முன்னும், பின்னும் கூறுவது பிரணவமேயாகும். அதன் உண்மைப் பொருளை உணராது
இந்துக்கலைக்களஞ்சியம்

Page 235
படைப்புக் கடவுளாகிய பிரமனே மயங்கினான் எனின் சிற்றறிவும், சிறுதொழிலும் படைத்த நம் போன்றோர் அறிவது இயலுமா?
பிரணவப்பொருள் அறியாது, அறிந்தோம் என்று செருக்கிய நான்முகனைக் குட்டிச் சிறையிலிட்டான் குமரவேள். முருகப் பெருமானால் பிரணவ உபதேசம் செய்யப்பட்டவர் மூவர். தேவசிரேஷ்டராகிய சிவபெருமான், முனிசிரேஷ்டராகிய அகத்தியர், நரசிரேஷ்டராகிய அருணகிரிநாதர் அகிய மூவரே உபதேசம் பெற்றவர்களாவர்.
பிரணவ மந்திரமான “ஓம்’ என்பதை ஏகாக்ஷரம், ஜீவ மந்திரம் என்று சிறப்புப் பெயரிட்டு அழைப்பார்கள். இதற்கு அதிதேவதை தன்வந்தரி, அபிமான தேவதை தத்தாத்ரேயர், உபாசனா தேவதை, சுப்பிரமண்யர், அதிஷ்டான தேவதை பரமாத்மா,
பிரணவம் சுத்த ஞானத்தின் வடிவம். அகரம், உகரம், மகரம் மூன்றின் கூட்டே ஓம்’ எனும் நாதம், அகரம்- படைத்தல்; உகரம் - காத்தல்; மகரம் - அழித்தல்.
இராம நாமமும் தாரக மந்திரமே. இம்மகா மந்திரம் இரண்டு அக்ஷரங்களோடு கூடியது. இது இராமாவதாரத்திற்கு முன்னமேயே வேதங்களில் அனாதியாகவே காணப்படுகின்றது. காசியில் இறப்பவர்களின் வலது காதில் விஸ்வநாதர் இத்தாரக மந்திரத்தை உதேசிக்கின்றார். பிறவாத முக்தி தரும் மந்திரம், அதிதேவதைஆஞ்சநேயர், அபிமான தேவதை - இலக்குமணன், உபாசனா தேவதை - ஜானகி, அதிஷ்டான தேவதை - பூரீ இராமர்.
ராம என்னும் இரண்டெழுத்து விஷ்ணுவின் ஆயிரம் நாமத்திற்குச் சமம் ஆகும் என்று பார்வதிக்கு சிவபெருமான் கூறுகின்றார்.
'றுநீராம ராம ராமேதி ரமே ராமே மனோரமே சஹஸ்ரநாம தத்துல்யம் ராமநாம வரானனே' என்று தாரக நாமத்தின் சிறப்புக் கூறப்படுகின்றது.
ராமநாமத்தை மந்திர அக்ஷரங்களாகப் பிரித்தால், ர, அ. ம என்று மூன்று அக்ஷரங்களாகும். ர என்பது அக்னி பீஜம், 'அ' என்பது சூர்ய பீஜம், 'ம' என்பது சந்திர பீஜம், அக்னி பீஜம்பாப தகனம்; சூர்ய பீஜம் - ஞானகரணம்; சந்திர பீஜம் - தாமசமனம்.
அக்னி- ஸத், சூரியன் - சித் சந்திரன் - ஆனந்தம் (வ, வை)
தரகன்
ஆரபன்மன் தம்பியரில் தாரகன் இளையன். மாயமா நகரத்தை ஆண்டு வந்தவன். மாயாமலமே தாரகன், திருமாலிடம் போரிட்டு வென்று அவரது ஆழிப்படையைத் தன் மார்பில் பொன்னாரமாகப் பூண்டவன். இவனது மனைவி கெளரி, மகன் அசுரேந்திரன்.
இந்துக்கலைக்களஞ்சியம்

சூரபன்மனை அழிப்பதற்காக வீரவாகுதேவர் இலக்கத்து ஒன்பான் வீரர்கள் சூழ்ந்து வர, திருக்கயிலையிலிருந்து நிலவுலகத்திற்கு வந்தார். வரும்பொழுது தாரகனது காவல் எல்லையாகிய கிரவுஞ்சம் என்னும் மலை நிமிர்ந்து ஓங்கி நின்றது. யானை முகங்கொண்ட தாரகனின் வரலாற்றை நாரதர் மூலமாக அறிந்த முருகப் பெருமான் வீரவாகு தேவரையும் இலக்கத்து ஒன்பான் வீரர்களையும் தாரகனை வென்று வருமாறு ஆணையிட்டார்.
வீரவாகு தேவரும் குமரப் பெருமான் திருவடி பணிந்து தாரகனின் மாயமா நகரை அடைந்து அதனை வளைத்து அசுரர்களை அழித்தார். நகரத்தை அழித்தார். இதனைக் கேள்வியுற்ற தாரகன் ஊழித் தீ ஒருங்கெழுந்தாற் போல மலைபோன்ற மகுடம் அண்ட கோளத்தை முட்ட அரியாசனத்தி னின்றும் எழுந்தான். தாரகனின் வரவைக் கண்ட வேத பூதப் படைகள் பெரும் ஆரவாரத்துடன் அசுரப்படைகளுடன் மோதின. திருமால் விடுத்த நேமிப் படையை ஆரமாக அணிந்த தாரகன் பூதப்படைகளைக் கொன்று குவித்தான். அவனது ஆற்றலுக்கு முன் நிற்கலாற்றாத படைகள் சிதறி ஓடின. இதனைக்கண்ட வீரவாகு தேவர் வில்லை வளைத்து தாரகனை எதிர்த்தார். தாரகனும் மாயக்கணைகளைத் தொடுக்க வீரவாகு தேவர் ஞானக்கணையினால் அவற்றை விலக்கி உக்கிரமாகப் போர் புரிந்தார். தாரகன் புறங்காட்டி ஓடினான். விடாது அவனைப் பின் தொடர்ந்தார் வீரவாகுதேவர். தாரகன் குருகுபெயர் குன்றமாகிய கிரெளஞ்ச கிரியில் ஒளிந்தான். அவனைப் பின்தொடர்ந்த வீரவாகு தேவரையும், பூதப் படைகளையும் அம் மாயமலை மயக்கித் தன்னுள் அகப்படுத்திக் கொண்டது. இதனை அறிந்த தாரகன் எல்லோரும் ஒழிந்தனர் என்று எண்ணி பெருந்தேரில் அமர்ந்து பொன்மயமான வில்லை வளைத்துப் போர்க்களம் புகுந்தான்.
நாரதர் வாயிலாக நிகழ்ந்ததை அறிந்த கந்தப் பெருமான் நொடிப் பொழுதில் தாரகனை அழித்து கிரவுஞ்சத்தைத் தகர்த்து நம் வீரரை மீட்போம் எனப் போர் முரசறைந்து, தாரகன் முன் நின்றார். முழுமதி போன்ற ஆறு முகங்களும் கருணை பொழியும் பன்னிரு கண்களும் வேலும் வேறுள படைகளும் தாங்கிய பன்னிரு கரங்களும் அணிமணித் தண்டை ஒலிக்கும் திருவடியும் கண்ட தாரகன் செய்த தவத்தைச் சொல்ல முடியுமா?
முழுமதியன்ன ஆறுமுகங்களும் முந்நான்காகும்
விழிகளின் அருளும் வேலும் வேறுள படையின் சீரும்
அழகிய கரம் ஈராறும் அணிமணித் தண்டை ஆர்க்கும்
செழுமலர் அடியும் கண்டான் அவன் தவம் செப்டற் பாற்றோ"
வஞ்சனை மிகுந்த மனத்தினனாகிய தாரகன் ஞானமூர்த்தியாகிய குமரக் கடவுளின் திருவுருவத்தைக் கண்டு அதிசயமுற்று "இப் பாலனே முழுமுதற் கடவுளோ' என்று ஒரு கணம் சிந்தித்தான். பின் அகங்காரம் மேலெழுந்து "திருமாலுக்கும் நான்முகனிற்கும், இந்திரனிற்கும் எனக்கும் போர் நிகழக் காரணமுண்டு. ஆனால் சிவபெருமானுக்கும் எமக்கும் அமர் நிகழக் காரணம் ஏதுமில்லையே. அப்படியிருக்க
199

Page 236
சிவகுமரா! நீ எதற்குப் போர்க்கோலம் பூண்டாய்” என்று கேட்டான்.
அதற்கு ‘வானவரைச் சிறையில் அடைத்து வைத்துள்ள குற்றத்திற்காக நீதியும், தண்டமும் செய்யும் ஈசன் உனது கொடுமையை ஒழிக்கக் கருதி எம்மை அனுப்பினார்’ என்று முருகவேள் மாற்றம் உரைத்தார்.
அம்மொழி கேட்ட தாரகன் சீற்றம் கொண்டு “திருமாலிடம் போர் செய்து, என்மீது விட்ட ஆழிப்படையை யான் கழுத்தில் ஆரமாக அணிந்து வெற்றி கொண்டதை அறியாயோ! என்னை வென்ற தேவர்கள் யாருமில்லை. பச்சிளம் பாலகனே! எம்முடன் போர் செய்து துன்பம் அடையாதே' என்று கூறிய ജൂ, ഞTഖ மொழிகளைக் கேட்ட குமரப் பெருமான் "வஞ்சகனே! மாயையின் இருப்பிடமான இம் மலையையும், உன்னையும் கூரிய வேலாற் கொன்று விரைவில் எம் சேனையை மீட்போம்” என்று கூறி தாரகனுடன் போரிட்டார்.
கந்தப் பெருமானின் பாணங்களால் அடிபட்டு வீழ்ந்த தாரகன் சேனை இழந்து, ஆயுதம் இழந்து மனமிழந்து சிவபெருமான் தந்த பாசுபதாஸ்திரத்தை விடுக்க, குமரப் பெருமான் தந்தையை மனதில் தியானித்து, செங்கரத்தினை நீட்டி தந்தவன் வாங்கிய தன்மைபோல் பெற்றுக் கொண்டார். அளவற்ற மாயா வடிவங்களை எடுத்துத் தாரகன் போர் புரிய அனைத்தையும் கந்தவேள் மாற்றி, தமது திருக்கையில் இருந்த வேலாயுதத்தை நோக்கி, தாரகன் உயிரைக் குடித்து கிரெளஞ்சம் சிறைப்படுத்தியுள்ள வீரர்களை விடுவித்துக் கொள்ளுமாறு பணித்து வேலை விடுத்தார்.
அந்த ஞானவேல் ஊழித் தீயாகக் கனன்று தாரகன் மார்பைப் பிளந்து, கிரெளஞ்ச கிரியை ஊடுருவிச் சிறைப்பட்டிருந்த வீரவாகு முதல் இலக்கத் தொன்பான் வீரரையும் மீட்டு, ஆகாய கங்கையில் நீராடிக் கந்தவேள் கரத்து வந்து அமர்ந்தது.
(62/. 6062/.) தரணிகள்
தாந்திரயாணத்தின் வளர்ச்சிக்கு முன்னோடியாக விளங்கிய தாரணிகள் என்னும் மந்திரபதங்கள் மகாயான சூத்திரங்களின் பகுதிகளாக இணைக்கப்பட்டிருந்தன. லலிதவிஸ்தர சந்தி நிர்மோசன- சூத்திரம் ஆகிய இரண்டாம் நூற்றாண்டுக்குரிய நூல்களிலே தாரணிகள் அமைந்திருக்கவில்லை. நான்காம் நூற்றாண்டிற்குரிய கரண்டவியூகம் என்னும் நூலில் ஆதியான தாரணி இடம் பெற்றுள்ளது. அது போதித்துவரான அவலோகி தேஸ்வரரைப் பற்றிய தோத்திரமாகும். காலத்தால் முற்பட்ட தந்திர நூல்களில் அவலோகிதேஸ்வரர், தாரா ஆகியோரைச் சிறப்பித்துப் போற்றும் துதிப்பாடல்கள் உள்ளன. சுவர்ணபிரபாஷ முதலான பழைய மகாயான சூத்திரங்களின் பகுதியாக அவற்றை எழுது வோரையும் படிப்போரையும் காப்பாற்றுமாறு தேவர்கள், அசுரர்கள் முதலியோரை வேண்டிப் பாடப்பெற்ற தோத்திரங்கள் இணைக்கப் பட்டுள்ளன. சந்தர்மபுண்டரீகம் என்னும் நூலிற் சில தாரணிகள் அடங்கியுள்ளன. அத்தாரணிகள் அவற்றை ஒதுபவர்களைச் சகலவிதமான துன்பங்களிலிருந்தும்
2óう
 

காப்பாற்றவல்லவை என்று கருதினார்கள். காலப்போக்கிலே பெருமளவிலான தாரணிகள் உருவாக் கப்பட்டன. அவற்றை ஒதுவதன் மூலம் நாகர், யக்ஷர், இராக்கதர், முதலியோரின் கெடுதிகளிலிருந்தும் தீய ஆவிகளிலிருந்தும் பாதுகாப்பைப் பெற்றுக்கொள்ள முடியுமென்று கருதப்பட்டது. அரசனுடைய தண்டனையிலிருந்தும் பாம்புகள், கொடிய விலங்குகள், நெருப்பு, கொள்ளை, பழிபாவங்கள், கொடுநோய்கள் முதலியவற்றால் ஏற்படக்கூடிய அபாயங்களிலிருந்தும் மரணபயத்திலிருந்தும் தாரணிகள் காப்பாற்றவல்லன என்று நம்பினார்கள். மேலும் அவற்றின் மூலமாக மரணத்திற் சாந்தியும் அமைதியும் மறுபிறப்பில் நற்பிறவியும் அவற்றோடு போதிசித்தமான நிலையும் கிடைக்குமென்று கருதப்பட்டது.
காலப்போக்கிலே தாரணி மந்திரங்களை மரப்பட்டையில் எழுதித் தாயத்துகளாகப் பயன்படுத்தினார்கள். தாரணிகளை ஒதுவதற்கு முன்பும் பின்பும் புத்தர்களையும் போதிசத்துவர்களையும் தேவர்களையும் கிரியாபூர்வமாக வழிபாடு செய்வது வழக்கம். வழிபாட்டிற்குச் சித்திரங்களையும் படிமங்களையும் பயன்படுத்தினார்கள். அவற்றை உருவாக்கும் விதங்களும் தாரணிகளில் வர்ணிக்கப்பட்டுள்ளன. தாரணிகளை அடிப்படையாகக் கொண்ட வழிபாடுகளை வித்யாதரர் என்னும் பூசகர் நடத்தினார்கள். தாரணிகளையும் அவற்றின் மந்திரங் களையும் ஒதுவது அவர்களின் பிரதான பணியாகும்.
நான்காம் நூற்றாண்டு முதல் எட்டாம் நூற்றாண்டு வரையான காலப்பகுதியிற் பெருமளவிலான தாரணிகள் உருவாக்கப்பெற்றன. தாரணிகள் பலவற்றின் பெருந்தொகையான ஏட்டுச்சுவடிகள் மத்தியாசியாவிலுள்ள துருக்கிஸ்தானத்தின் கிழக்குப் பகுதியைச் சேர்ந்த கில்ஜித் என்னுமிடத்திலே கண்டெடுக்கப்பெற்றன. அவை ஏழாம் நூற்றாண்டுக்குரிய குப்தர் கலைமரபைச் சேர்ந்த வரிவடி வங்களில் எழுதப்பெற்றுள்ளன. அவற்றுட் சில மத்திய ஆசிய மொழிகளில் உள்ளன. மாதந்தோறும் நடைபெற்ற மங்கள நிகழ்ச்சி களிலும் அவலோகிதேஸ்வரரை வழிபடும் சமயங்களிலும் தாரணிகள் பக்திபூர்வமாக ஒதப்பட்டன. தாரணிகள் காலப்போக்கிலே தாந்திர யானத்தின் வளர்ச்சிக்கு ஏதுவாய் அமைந்தன. (d.J.)
65/17/7
பெளத்த சமயத்திலுள்ள தாந்திரயான சம்பிரதாயத்திலே தாரா என்னும் தெய்வத்திற்குச் சிறப்பிடம் உண்டு. தாராவை போதிசத்துவரான அவலோகிதேஸ்வரரின் சக்தியாகக் கொள்வர். காலத்தால் முற்பட்டதாரணிகளில் அவலோகிதேஸ்வரரை மட்டும் பற்றிய தோத்திரங்களான மந்திரபதங்கள் உள்ளன. வைரோசன புத்தரின் பரம அடியார்களில் ஒருவர் அவலோகிதேஸ்வரர். ஆந்திரதேசத்திலே பூரீ தான்யாகடக என்னும் அமராவதிக்கு அண்மையிலுள்ள போதலக என்னும் தானத்தில் அவலோகிதேஸ்வரர் பள்ளி கொண்டுள்ளார் என்று கருதினார்கள். ஆதிபுத்ரான ஆதிநாதரிடமிருந்து அவலோகிதேஸ்வரர் தோன்றினார் என்ற கதை
இந்துக்கலைக்களஞ்சியம்

Page 237
கரண்டவியூகத்தில் உள்ளது. அந்நூலிலே தாராவைப் பற்றிக் குறிப்பில்லை. அத்தகைய அவலோகிதேஸ்வரர் பிரபஞ்ச சிருஷ்டியின் காரணரென்றும் அந்நூல் கூறும். மேலும் உமாமகேஸ்வரர்கள் அவலோகிதேஸ்வரரை வழிபடும் அடியார் என்றும் சொல்லப்படுகின்றது. காலப்போக்கிலே உமாமகேஸ்வரர் பற்றிய தத்துவத்தின் செல்வாக்கு மகாயானத்திலே ஆழமாகப் படிந்துவிட்டது. அதன் பிரதிபலனே தாந்திரயாணம் என்று அறிஞர் சிலர் கொள்வர்.
போதிசத்துவராகிய மஞ்ஜுழநீயினைப் புகழ்ந்து பாடும் நூலாகிய மஞ்ஜ"பூனரீமூலகல்ப என்பதிலே துன்பங்களை அனுபவிப்போர் அவற்றிலிருந்து விமோசனம் பெறுவதற்குத் தாராவை வழிபடவேண்டும் என்று சொல்லப்படுகின்றது. ஆதி புத்தரான வைரோசனரிலிருந்து லோசனா, மாமகி, பாண்டரவாஸினி, சமயதாரா என்னும் பெண் வடிவங்களாகப் புத்தர் பலர் தோன்றின்ார்கள் என்று குஹ்யசமஜா என்னும் தாந்திராயண நூல் கூறும், ப்ரீகுடீ, லோசனா, மாமகி, ஸ்வேதா, பாண்டரவாசினி, சுதாரா என்ற பல்வேறான தாராவின் கோலங்கள் பற்றி மஞ்ஜ"பூனரீமூலகல்ப குறிப்பிடப்படுகின்றது. அவை மகாமுத்திரைகள் , யோகாசாரத்துக்கு அனுகூலமானவை என்று அதிலே சொல்லப்படுகின்றது. வித்யாராக்ஞயாக விளங்கும் தாரா உலகிலுள்ள உயிர்களின் துன்பங்களைப் போக்கும் கருணைக் கடவுளென்றும் அந்நூல் கூறும். மேலும் தாரா கிழக்குத் திசைத் தெய்வமென்றும் அவள் சர்வலோகநிவாசினி என்றும் சொல்லப்படுகின்றது.
தெய்வங்கள் எல்லாவற்றிலும் தாரா மேலானவள் என்ற கோட்பாடு முதன்முதலாக மகாபிரத்யங்கிரா தாரணி என்பதிலே காணப்படுகின்றது. குப்தர் காலத்து வரிவடிவங்களில் எழுதப்பட்ட அந்நூலின் பகுதியொன்றின் ஏட்டுச்சுவடி மத்தியாசியாவிற் கிடைத்துள்ளது. அத்தாரணியை அமோகவஜ்ர என்பவர் (704-774) கீனமொழியில் மொழிபெயர்த்துள்ளார்.
தாராவின் கோலம் அதில் வர்ணிக்கப்பட்டுள்ளது. அவள் வெள்ளை நிறமானவள், குணநலம் நிறைந்தவள்; வச்சிரமாலை அணிந்தவள் கையொன்றிலே வச்சரம் தாங்கியவள்; வைரோசனரின் உருவம் அமைந்த மகுடம் தரித்தவள். எட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த காஷ்மீரத்துக் கவிஞராகிய சர்வக்ஞ மித்திரர் சிரக்தர- ஸ்தோத்ர என்னும் நூலிலே தாராவின் சிறப்புக்களைப் புகழ்ந்து பாடியுள்ளார். பலவீனர்களுக்குப் பலத்தையும், துன்புறுவோருக்கு விமோசனத்தையும் வழங்கும் தாராவை உயிர்கள் அனைத்துக்கும் துன்பங்களைப் போக்கி விமோசனம் அளிக்கவல்ல தெய்வமாக அவர் போற்றுகின்றார்.
ஏழாம் நூற்றாண்டு முதலாகத் தாராவைப் பற்றிய கோட்பாடுகள் மேலும் வளர்ச்சியுற்றன. தாராவைப் பற்றிய தோத்திரங்கள் மிகுதியாக உருவாக்கப்பட்டன. தாராவைப் பிரக்ஞா என்றும் பிரக்ஞாபாரமிதா என்றும் வர்ணித்தனர். தாராவை அவலோகிதேஸ்வரரின் துணைவியாகவும் புத்தர்கள் எல்லோரதும் தாயாகவுங் கொண்டனர். மைத்ரி, கருணா
இந்துக்கலைக்களஞ்சியம்

என்னும் உத்தமோத்தமமான பண்புகளின் வடிவமாக அவளை உருவகப்படுத்தினார்கள்.
தாரா பற்றிய சிந்தனைகள் இந்து சமயத்திலுள்ள சிவ-சக்தி தத்துவத்துக்கு நிகரானவை, அவை பரஸ்பரத் தொடர்புடையவை. பெளத்த சமயத் தாந்திரயான மரபிலுள்ள ஆதிபுத்தரின் நிலை பிரம்மத்திற்கு ஒப்பானது. ஆண், பெண் என்னும் பேதங்களைக் கடந்த நிலையில் பிரபஞ்ச சிருஷ்டிக்குப் பிரம்மம் காரணமாக அமைவதில்லை. எனவே சிவ- சக்தி தத்துவம் பிறந்தது. புருஷனாகிய சிவம் பாசத்திற்கும் சக்தி விமோசனத்துக்கும் ஏதுவாகின்றனர். இது சைவசித்தாந்த மரபிலன்றி தாந்திரிக மார்க்கத்தைச் சார்ந்த கருத்துநிலை என்பது இங்கு கவனத்திற்குரியது. ஆதிபுத்தரின் நிலை பிரம்மத்துக்கு ஒப்பானது. அவலோகிதேஸ்வரர், தாரா என்போரின் நிலை சிவ -சக்திக்கு நிகரானது. புருஷனாகிய சிவன் சம்சாரத்திற்கு ஏதுவாக இருப்பதும் அவலோகிதேஸ்வரர் மைத்திரி, கருணா என்னும் பண்புகளின் வடிவமானவர் ள்ன்பதுமே குறிப்பிடத்தக்க வேறுபாடாகும். தாராவைப் புத்தரின் சக்தியாகக் கொள்ளும் அளவிற்கு தாந்திரயாணத்திற் சிந்தனை மாற்றம் மிகவிரைவில் ஏற்பட்டுவிட்டது. புத்தருக்கும் தாராவிற்கும் இடையிலான உறவ சிவன், பார்வதி என்போருக்கு இடையிலான தொடர்பு போன்றதாகும்.
மஞ்ஜ"பூனரீமூலகல்ப, குஹ்ய சமாஜ என்பன தாந்திரயான மரபிலுள்ள மிகப்பழைய நூல்களாகும்.
பெளத்த சமய மரபில் உருவாகிய பெண் தெய்வங்களில் தாராவிற்கு மிகுந்த முக்கியத்துவம் உண்டு. தாரா வழிபாடு கிழக்கிந்தியாவிற் பிரசித்தமாகியது. அங்கு தாராவின் படிமங்கள் வெவ்வேறு விதமான கோலங்களிலும் பெருமளவிலுங் கிடைத்துள்ளன. தாராவின் அம்சங்கள் தியானி புத்தர்களோடு தொடர்புடையவை. உக்கிர தாரா, கதிரவாணி தாராவின் வடிவங்கள் உருவாகியுள்ளன.
அஷோபய என்னும் புத்தரிலிருந்து உக்கிர தாரா தோன்றியதாக ஐதீகமுண்டு. உக்கிர தாராவை மகாசீன தாரா என்றும் சொல்வர். இந்த வடிவத்திலே தாராவின் கோலம் உக்கிரமானது. உருவம் நான்கு கரங்களை உடையது. அது ஸ்தானகக் கோலத்திலே பிரத்யாலிடமாக, சவத்தை மிதித்த நிலையிலே காணப்படும். வலக்கரங்கள் வாள், கத்தி ஆகியவற்றைப் பிடித்த வண்ணம் அமைந்துள்ளன. இடக்கரங்கள் தாமரை, கபாலம் ஆகியவற்றை ஏந்திய கோலமானவை. சடாமகுடத்தில் அஷோபயரின் சிற்றுருவம் அமைந்திருக்கும்.
சியாம தாரா என்று சொல்லப்படும் காதிராவாணி - தாராவின் படிமங்கள் பெருந்தொகையானவை கிடைத்துள்ளன. அமோகசித்தி என்னும் தியானிபுத்தரிலிருந்து சியாமதாரா தோன்றியதாகக் கொள்வர். படிமங்களை ஆசனக் கோலத்திலும் ஸ்தானக் கோலத்திலும் அமைத்துள்ளனர். உருவம் சாந்தமான தோற்றங் கொண்டிருக்கும், வடிவமைப்பு வனப்புடையதாக
20
ܗ

Page 238
விளங்கும். வலக்கரம் வரதமுத்திரையிலும் இடக்கரம்
தாமரையினை ஏந்திய நிலையிலுங் காணப்படும் உருவத்தின் வலப்புறத்தில் அசோககாந்தா மாரீசீ என்னும் பணிமகளும் இடப்புறத்திலே ஏக ஜடா என்னும் பணிமகளும் காணப்படுகின்றனர்.
சியாம தாராவின் படிமங்கள் சிலவற்றின் பிரபாவலியிற் சில சமயங்களிலே தேவதைகள் எண்மரின் சிற்றுருவங்கள் அமைந்திருக்கும். அவற்றுக்குப் பதிலாக எண்வகையான காட்சிகளைச் சில படிமங்களில் வடிவமைத்துள்ளனர். தாரா மந்திரமான ஓம் தாரே து தாரே ஸ்வாகா என்பதிலுள்ள எட்டு அக்ஷரங்கள் எட்டுத் தேவதைகளின் உருவகமானவை என்றவொரு விளக்கம் உண்டு. ஒரிஸ்ஸா மாநிலத்துக் கட்டக் மாவட்டத்து ரத்நகிரி என்னுமிடத்திற் கிடைத்த தாராவின் படிமத்திலே அஷ்டமகாபயங்களின் உருவகமான அடையாளங்கள் அமைந்துள்ளன. தாரா தனது அடியார்களை அஷ்டமகாபயங்களிலிருந்து காப்பாற்றுவதாக நம்பினார்கள்.
வச்சிர தாரா என்பது தாராவின் மற்றொரு தோற்றமாகும். நான்கு, ஐந்து தியானிபுத்தர்களிலிருந்து தாரா தோன்றியதாகச் சாதனமாலா என்னும் நூல் குறிப்பிடுகின்றது. வச்சிர தாராவின் உருவம் நான்கு முகங்களும் எண்கரங்களும் உடையது. அது இரட்டைத் தாமரைப் பீடத்திலமைந்த வச்சிரபரியங்காசனக் கோலத்தில் விளங்குகின்றது. தாமரைப் பீடம் மண்டலமொன்றில் அமைந்துள்ளது. அதனைச் சுற்றியமைந்துள்ள வட்டத்தில் புஷ்பதாரா, தூபதாரா, தீபதாரா, கந்ததாரா, வச்சிராங்கு, வச்சிரபாசி, வச்சிரஸ்போடி, வச்சிரகண்டா என்னும் பரிவார தேவதைகளின் உருவங்கள் காணப்படுகின்றன. கிரியாபூர்வமான வழிபாட்டில் இடம்பெறும் உபசாரங்களைப் பரிவாரதேவதைகளாக உருவகப்படுத்தி யுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தாரா வழிபாடு பெளத்த மரபிலுள்ள தாந்திரயானத்திலிருந்து இந்து சமயத்திற் பரவியுள்ளது. (afo. Ly.)
தராசுரம்
சோழரின் கலை உள்ளத்திற்கும் இறை உணர்வுக்கும் எடுத்துக்காட்டாக இருக்கும் கோயில்களில் தாராசுரமும் ஒன்று. இது தஞ்சை மாவட்டத்திற் கும்பகோணத்துக்கு அருகே அமைந்துள்ளது.
கும்பகோணத்தின் புறநகர்ப் பகுதியாக மாறிவிட்ட தாராசுரம் தஞ்சைக்குச் செல்லும் பேருந்துச் சாலையில் உள்ளது. தாராசுரம் ஒரு பிரார்த்தனைத் தலமோ நாயன்மார்களால் பாடப்பட்ட தலமோ புராதனத் தலமோ இல்லை. அது நாயன்மார்களின் காலத்தின் பின் ஆட்சிபுரிந்த இரண்டாம் ராஜராஜ சோழன் எடுப்பித்த கலைக்கோயில்,
202
 

புராணக் கதை
துர்வாச முனிவரின் சாபத்தினால் தன் வெள்ளை நிறத்தை இழந்த ஐராவதம் என்ற இந்திரனின் யானை இக் கோயிலில் லிங்க வடிவில் இருக்கும் இறைவனை வணங்கி மீண்டும் வெள்ளை நிறத்தைப் பெற்றதால் இறைவன் ஐராவதேசுவரர் என்று பெயர் பெற்றார் என்று கூறப்படுகின்றது. இந்தப் புராணக் கதைக்கும் கோயில் தோன்றியதற்கும் எந்தவிதத் தொடர்பும் இருப்பதாகத் தெரியவில்லை. கோயிலிற் காணப்படும் கல்வெட்டுக்களிலும் இக் கதை குறிப்பிடப்படவில்லை. வரலாற்றின்படி இக்கோயில் இரண்டாம் ராஜராஜனால் அவனுடைய ஆட்சிக் காலத்தின்போது (கி. பி 1146-173) கட்டப்பட்டது. இம் மன்னன் தாராசுரத்தில் ஒரு சிற்பக் கூடத்தையே கோயிலாக எழுப்பினான் என்று கூறுவதே பொருத்தமானது. முதலாம் ராஜராஜன் தஞ்சையில் எழுப்பிய கோயிலின் மாதிரியில் சற்று சிறிய வடிவில் அவருக்குப் பின்னால் அவருடைய வழித் தோன்றல்கள், கோயில்களைக் கட்டினார்கள். இரண்டாம் இராஜராஜனால் கட்டப்பட்ட இக் கோயில் ராஜராஜேஸ்வரம் எனப் பெயரிடப்பட்டு, ராஜராஜபுரம் என அழைக்கப்பட்டு ராசாபுரம் என்று மருவிப் பின் தாராசுரம் ஆகிவிட்டது.
கோயில் அமைப்பு கிழக்கு நோக்கியிருக்கும் இக்கோயில் 350 அடி நீளமும் 255 அடி அகலமுடைய ஒரு வளாகத்தில் அமைந்துள்ளது. கருவறை, அர்த்த மண்டபம், மகா மண்டபம், ராஜகம்பீரன் திருமண்டபம் ஆகியவை ஒரே தளத்தில் கட்டப்பட்டிருக்கின்றன. கொடிமரம், சிறிய நந்தி மண்டபம் ஆகியவை கோயிலுக்கு வெளியே தரைமட்டத்துக்குக் கீழே இருக்கின்றன.
கருவறை சதுர அமைப்பில் உள்ளது. இதன் உறுதியான சுவர்களின் மீது விமானம் கவினுற எழும்பி உள்ளது. இதன் மேற்பகுதி 83 அடி உயரமுடையது. கருவறை நிர் அந்தார வகையைச் சேர்ந்தது. விமானம் ஐந்து நிலைகளை உடையதாய் வட்டவடிவமான சிகரமும் கொண்டது. கருவறைப் புறச்சுவர்கள் மூன்றில் நாயன்மார்களின் வாழ்க்கையோடு தொடர்புடைய சம்பவங்கள் சில கல்லிற் செதுக்கப்பட்டுள்ளது.
விமானத்தின் துணைப்பீடம் - உபானவரி, கண்டவரி, கபோதவரி ஆகிய மூன்று வரிகளை உடையது. உபானவரி - உபானம், மகாபத்மம், கம்பு ஆகிய சிற்றுறுப்புக்களை உடையது. கண்டவரியில் - பூதகணம், யாளி, காளை, சிம்மம் ஆகிய சிற்பங்கள் பெரிய வடிவில் இடம்பெற்றுள்ளன. கபோதகவரி அழகிய நாட்டியச் சிற்பங்களோடு கூடிய கூடுகளோடும் அதன். மேல் வரி அழகிய யாழி வரியோடும் அமைந்து அதிட்டானத்தின் அழகை மெருகூட்டுகின்றன. துணைப்பீடம் அதிக உயரமாக எழுப்பப்படாமல் சிற்பச் செறிவோடு அளவோடு அமைந்துள்ளது.
விமானத்தின் ஐந்து தளங்களையும் கர்ணக் கூடு, பஞ்சரம், சாலை ஆகிய உறுப்புகள் மாறி மாறி அலங்கரிக்கின்றன. முதலிரு சிகரங்கள் தூங்கானை மாடச் சிகரமாகவும், நான்காவது தளம்
இந்துக்கலைக்களஞ்சியம்

Page 239
திராவிடச் சிகரமாகவும், ஐந்தாவது தளம் வேசர வடிவமுள்ள சிகரமாகவும் அமைந்துள்ளமை பிற்காலச் சோழர் பாணியில் புதிய வடிவங்கள் இடம்பெற்றமையைக் காட்டி நிற்கின்றது.
முன் மண்டபம் ஒரு தேர் போன்று வடிவமைக்கப்பட்டுள்ளது. தேர்ச் சக்கரங்கள், யானைகள், குதிரைகள் இரு பக்கங்களிலும் உள்ளன. மண்டபத் தூண்கள், சுவர்கள், கூரை அனைத்தும் எண்ணற்ற சிற்பங்களுடன் விளங்குகின்றன. தூண்களில் கந்தபுராண நிகழ்ச்சி, தட்சணாமூர்த்தி, கயிலைக் காட்சி, பிரமனும் திருமாலும் அடி முடி தேடும் காட்சி போன்றவை சிற்பங்களாகச் செதுக்கப்பட்டுள்ளன. திருச்சுற்றில் வலமாகச் செல்லும்போது விமானத்துடன் கூடிய இக் கற்றளியைப் பார்த்தால் ஒர் தேரின் அருகில் நிற்பது போன்ற பிரமை ஏற்படுகின்றது. தேர்ச் சக்கரத்தின் ஆரக் கால்களிலும் சிறு சிறு சிற்பங்களைக் காணலாம்.
உட்கோபுரம்
உட்கோபுரம் திருச்சுற்று மதிலோடு ஒட்டி நிற்கின்றது. இது ஐந்து தூபிகளை உடையது. கோபுரத்தின் வெளிப்புறம் நந்தி மண்டபம் பக்கச் சுவரோடு எழுப்பப்பட்டுள்ளது. முன்புறமுள்ள பலிபீடம், துணைபீடம், அதிட்டானம், சுவர், கூரை ஆகிய அங்கங்களோடு முறையே அமைந்துள்ளது. அதிட்டானக் கூரையால் மேல் மட்டத்தில் வட்டமான வேதிகைப் படையின் மீது மகா பத்மமும் அதன் மேல் பலிபீடமும் எழுப்பப்பட்டுள்ளன. பலிபீடத்தை அடைய அமைக்கப்பட்டுள்ள 9 படிகளும் வேலைப்பாடு மிக்க யாளியின் வாயினின்று வெளிப்படும் துதிக்கையைப் பெற்றுத் திகழ்கிறன. இதன் பக்கச் சுவர்கள் கொடிப் பெண்களைக் கொண்ட கோட்டங்களைப் பெற்றுச் சிற்பச் செறிவோடு திகள்கின்றன. பலிபீடத்தின் கீழ்த்திசையில் சோழர்கால நான்கு கால் மண்டபம் கட்டடக் கலையின் அழகைக் காட்டுகின்றது.
கருவறையில், ஐராவதேஸ்வரர்-இராஜ இராஜீஸ்வரமுடையார் பெரிய கரிய இலிங்கத் திருவுருவிலே காட்சி தருகிறார். இது இராஜராஜன் பிரதிஷ்டை செய்து வழிபட்ட லிங்கம். கருவறையைச் சுற்றிலும் இடைவெளி விட்டு சிறு கருங்கற் சுவர் ஒர் அடி உயரத்தில் எழுப்பப் பெற்றுள்ளது. அதன்மீது வரிசையாகக் கல் விளக்குகள் உள்ளன. கருவறை வெளிப்புறச் சுவர்களில் வரிசையாக அகத்தியர், வீரபத்திரர், சரபமூர்த்தி, தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், மகிஷாசுரமர்த்தினி, சண்டீசர் உருவங்களும், இராவணன் கயிலையைத் தாங்கி நிற்கும் காட்சியும் அடிப்பகுதியில் தென்புறம் முதல் வடபுறம் வரை 63 நாயன்மார்களின் சின்னஞ்சிறு உருவங்களும் வடிக்கப் பெற்றுள்ளன. வரலாற்றுச் சிறப்பு மிக்க பல சிற்பங்கள் பாதுகாப்பதற்காக இங்கிருந்து தஞ்சைக்கு எடுத்துச் செல்லப்பட்டன எனக் கூறப்படுகின்றது.
ஐராவதேஸ்வரர் கோயிலுக்கு வடப்பக்கமுள்ள பெரிய நாயகி அம்மன் கோயிலும் தேர் போன்று காட்சியளிக்கின்றது.
இந்துக்கலைக்களஞ்சியம்

கருவறையில் அன்னை நின்ற திருக்கோலத்தில் காட்சி தருகிறார். இங்கும் சிற்பங்களுக்குப் பஞ்சமில்லை. மண்டபத்தின் தென்புறமும், வடபுறமும் உள்ள சுவர்களில் பாம்புகள் ஒன்றோடொன்று பின்னியுள்ளது போன்று பலகணிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதை பாம்புச் சன்னல் என்று கூறுவர். இந்தப் பலகணியை கல்லில் எவ்வாறு செய்தனர் என்று வியக்கத் தோன்றுகின்றது.
இங்குள்ள சிற்பங்களிற் குறிப்பிடத்தக்கவை. ஆண், பெண் பாதியாக உள்ள அர்த்தநாரீஸ்வரர் உருவம்- இதில் மூன்று முகங்கள் உள்ளன. பிரம்மன், விஷ்ணு, ருத்திரன் என்று சிவபெருமானின் விஸ்வரூபம் எனக் கூறுகின்றனர். திருச்சுற்றின் வடக்குப் பகுதியில் ஒரே உடலில் ஒரு யாளியும், யானையும் ஒன்றை ஒன்று கவ்வும் தோற்றத்தில் உருவாக்கப்பட்டிருக்கின்றன. அதே போன்று தென்மேற்கில் கழைக் கூத்தாடும் பெண்களின் வடிவங்களைக் காணலாம். ஒரே உருவத்தில் நான்கு பெண்களின் வடிவங்கள் மிகவும் நேர்த்தியாக இணைந்திருக்கின்றன. அதேபோன்று ஒரு கையில் ஒரு பாத்திரமும் மறுகையில் தாமரையும் ஏந்திப் புன்முறுவலுடன் நிற்கும் அன்னபூரணியின் சிலை எல்லோரையும் ஈர்க்கும் தன்மை வாய்ந்தது. இவளை விஷ்ணு மாயா (வைஷ்ணவி) என்றும் தேவர்களுக்கு அமுதம் அளித்தவள் இவளே என்றும் கூறுகிறார்கள்.
இக்கோயிலில் 6JUT6TLDIT 60T கல்வெட்டுக்கள் காணப்படுகின்றன. அவற்றிலே சோழமன்னர்கள், பாண்டிய அரசர்கள், மற்றும் வேறு பெருங் குடியினர் அளித்த கொடைகள் விவரிக்கப்பட்டிருக்கின்றன. பாண்டியன் மாறவர்மன் திருபுவன சக்கரவர்த்தி வீரபாண்டிய தேவர் குலோத்துங்க சோழவள நாட்டின் திருநாரையூர் பற்று தென் குறுக்கையான ராஜநாராயணபுரம் என்ற கிராமத்தில் 20 வேலி நிலம் கோவிலின் பூசைத் திருப்பணிக்காக அளித்தான் என்று ஒரு கல்வெட்டுக். கூறுகிறது. (ஒருவேலி 6.6 ஏக்கர்)
இந்த ஆணையை மன்னன் எப்போ எங்கிருந்து அறிவித்தான் என்ற விவரமும் அதே கல்வெட்டில் எழுதி இருக்கிறார்கள். கோயிலுக்கு வெளியே முன்புறம் இருக்கும் நந்தியின் சந்நிதியிற் படிகள் காணப்படுகின்றன. இந்தப் படிகளின் ஒரத்தில் உள்ள தடுப்புகளை (இவையும் கல்லால் ஆனவைதான்) தட்டினால் ஒவ்வொரு இடத்திலும் இசையின் வேறு வேறு சுரங்கள் எழும்.
இரண்டாம் இராஜராஜன் தனது முன்னோர்களான இராஜராஜன், இராஜேந்திரன் ஆகியோர் எடுப்பித்த தஞ்சை, கங்கை கொண்ட சோழபுரம் கோயில்களைப் போன்று தாமும் சிவபெருமானுக்கு ஒரு கலைக்கோயில் எடுப்பிக்க விரும்பினான். அவருடைய ஆட்சிக் காலத்தில் போர்கள் எதுவும் நிகழாமல் மக்கள் அமைதியுடனும் செல்வச் செழிப்புடனும் வாழ்ந்தனர். மன்னன் கல்வி கலைகளை வளர்ப்பதில் பேர் ஆர்வம் காட்டினான். கவிச்சக்கரவர்த்தி ஒட்டக் கூத்தரின் சீடராக விளங்கிய இராஜ
203

Page 240
ராஜன் பழையாறையில் எடுப்பித்த இந்தக் கலைக் கோயில் சிதைவடைந்த நிலையிலும் சிற்பக் கலையிலும் பொறியியல் துறையிலும் வல்லவர்களாய் வாழ்ந்து மறைந்துபோன நம் முன்னோரின் பெருமையைப் பறைசாற்றி நிற்கிறது.
ஒட்டக் கூத்தர் தமது தக்கயாகப் பரணியில் இத்தலத்தை,
ஒரு மருங்குடைய மூலநாயகியோ
டொற்றை வெள்ளை விடையூர்த்திமேல்
இரு மருங்கு மறைதொழ வெழுந்தருளி
பிராச ராசபுரி ஈசரே' என்று பாடியுள்ளார்.
தஞ்சாவூரிலும் கங்கை கொண்ட சோழபுரத்திலும் சோழர்களுடைய கோயில் கட்டடப்பணி முழுவடிவம் பெற்று சீருடனும் சிறப்புடனும் விளங்கிய காலத்திற்கும் பிற்காலச் சோழர்களின் பெரிய கோயில் தொகுதிகளுக்கும் இடைப்பட்ட காலத்தில் நிலவிய பாணிக்கு குறிப்பிடத்தக்க எடுத்துக்காட்டாக தாராசுரம் கோயிலைக் கருதலாம்.
நாளும் காலை மாலை இரு வேளைகளிலும் வழிபாடுகள் நடைபெறுகின்றன. (நி நி)
தாணசமுத்திரம்
தாளசமுத்திரம் என்பது தாள வகையைப் பற்றிக் கூறும் ஒரு நூலாகும். பரத சூடாமணி என்னும் அரசன் இந்நூலின் ஆசிரியன் என்பர். இந்நூலின் காலம் அறியப்படவில்லை. எழுபத்தைந்து வெண்பாக்களும் பதினைந்து கலித்துறைப் பாடல்களும் இன்று கிடைக்கின்றன. தஞ்சாவூர் சரஸ்வதி மகால் நூலகத்தினர் 1955 இல் இந்நூலை வெளியிட்டுள்ளனர்.
இந்நூலின் காலம் ஒத்தநூல் முதலான செய்கை, அளவு ஆகிய மூன்றும் கூடித்தாளம் ஆயிற்று என்றும் தாளம் என்பதில் தகர வடிவம் சொக்கனார் என்றும் ளகரம் அங்கயற்கண்ணி என்றும் கூறப்பெறும். காலத்திக் கூறுகளாக கணம், இலவம், காட்டை, நிமிடம், துடி, துரிதம், லகு, குரு, புலுதம், காகபாதம் ஆகிய பத்தும் உரைக்கப்பெறும். பலவகையான தாளங்களை பிறப்பிக்கும் முறையை இந்நூல் விரிவாகக் கூறுகின்றது. காலம், மார்க்கம், கிரியை, அங்கம், கிரகம், சாதி, களை, இலயம், யதி, பிரசுதாரம் ஆகிய தாளத்தின் பத்து வகைப் பண்புகளும் இந்நூலில் சொல்லப்டுகின்றன. பிரசுதானம், நட்டம், மத்திட்டம், சேடை, பிரவேசம், ஆலாபம், நிட்கிராமம் போன்ற வடமொழிச் சொற்கள் இந்நூலில் மிகுந்து காணப்படுகின்றன. (தே. ஹற)
தானம்
இசைப் பாடல்களுக்கும், ஆடலாகிய கூத்தினுக்கும் தாளம்
அடித்தளமாக இருப்பதினால் அதற்கு தாளம் என்னும் பெயர் உண்டாயிற்று. தாளம் கைகளினால் கொட்டப்படுவதனால்
204

அதற்கு பாணி என்றும் கொட்டு என்றும் பெயர்கள் உண்டு. தாளம் என்ற சொல் வழக்கில் வரவே கொட்டு என்னும் சொல்லும் பாணி என்னும் சொல்லும் வழக்கொழிந்தன.
இசையும் கூத்தும் வரம்பு கடந்து செல்லும் ஆறுகள் போன்றவை. தாளம் அதன் கரை போல நின்று அவைகளை ஒரு வரம்புக்குள்ளே கொண்டு வருகிறது. தாளம் ஆட்டத்தையும் இசையையும் அளவுக்கு உட்படுத்துவதுடன் அவை அழகுற விளங்கவும் செய்கிறது. இளங்கோவடிகள் இயற்றிய சிலப்பதிகாரம் அரங்கேற்றுக் காதையில் வரும் அடியார்க்கு நல்லார் உரைப்பகுதியில் தாளம் பற்றி மேல் வருமாறு கூறப்பட்டுள்ளது.
கொட்டும் அசையுந் துக்கும் அளவும் ஒட்டப் புணர்வது பாணியாகும்’
ககரம் கொட்டே எகரம் அசையே உகரம் தாக்கே அளவே ஆய்தம்
கொட்டு, அசை முதலியவற்றின் கால அளவும், அதன் வடிவும் கொடுக்கப்பட்டுள்ளன. இதில் கூறப்பெறும் ககரம் முதலியவை அளவின் குறியீடுகளாகும்.
கொட்டு - a மாத்திரை - வடிவம் க அசை - 1 மாத்திரை வடிவம் எ தாக்கு - 2 மாத்திரை - வடிவம் உ அளவு - 3 மாத்திரை - வடிவம் ஃ
தாளங்கள் தேசீயதாளம், மார்க்கதாளம் என இருவகையாகக் கூறப்பெறுகின்றன. அனுத்திருதம், திருதம், லகு ஆகிய முன்று உறுப்புகளைக் கொண்ட தாளங்கள் தேசிய தாளங்கள் எனக்கூறப்படுகின்றன. தேசிய தாளங்கள் 35 இப்பொழுது வழக்கில் உள்ளன. மார்க்க தாளங்கள் அனுத்திருதம், திருதம், லகு, குரு, புலுதம், காகபாதம் என்னும் ஆறு உறுப்புக்கள் கொண்டவை. மார்க்க தாளங்கள் 108 ஆகும். தேசிய, மார்க்கம் என்னும் இருவகைத் தாளங்களில் தேசிய பெரும்பாலும் இசையிற் பயன்படுகின்றன.
தற்கால இசையில் ஏழு முக்கியமான தாளங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இவற்றைச் சப்ததாளங்கள் என்று சொல்வர். அவையாவன:
G Lu ur அங்கங்கள் ஜாதி
1. துருவதாளம் 1011 சதுஸ்ரஜாதி 2. மட்டியதாளம் 101 சதுஸ்ரஜாதி 3. ரூபகதாளம் O1 சதுஸ்ரஜாதி 4. ஜம்பை தாளம் 100 மிச்ரஜாதி 5. திரிபுடைதாளம் 1OO திச்ரஜாதி 6. அடதாளம் 1100 கண்டஜாதி 7, ஏக தாளம் சதுஸ்ரஜாதி
இந்துக்கலைக்களஞ்சியம்

Page 241
தாளத்தின் அங்கங்களாவன: அனுத்ருதம், திருதம், லகு, குரு, புலுதம், காகபாதம் ,
இவை ஷடாங்கம் என்றும் அழைக்கப்படும். இவ் அங்கங்கள் ஆறினுள் முதல் 3 அங்கங்களுமே சப்த தாளங்களுள்
பயன்படுத்தப்படுகின்றன. அவற்றினுள் லகுவின் ஐந்து ஜாதி பேதங்களினால் 35 தாளங்கள் உருவாகின்றன.
ஐந்து ஜாதி பேதங்களும் முறையே வருமாறு
1. திஸ்ரஜாதி - 3 எண்ணிக்கை 2. சதுஸ்ரஜாதி - 4 எண்ணிக்கை 3. கண்டஜாதி - 5 எண்ணிக்கை 4. மிச்ர ஜாதி - 7 எண்ணிக்கை 5. சங்கீர்ண ஜாதி - 8 எண்ணிக்கை
இவ்வைந்து பேதங்களினாலும் சப்த தாளங்கள் பேதமடைந்து வெவ்வேறு எண்ணிக்கையுடையனவாக மாறி (7X5) 35 தாளங்கள் உண்டாகின்றன. துருதம், அனுத்ருதம் என்பனவற்றிற்கு ஜாதி பேதங்கள் கிடையாது. இம் 35 தாளங்களுள் லகு எந்த ஜாதி அட்சர எண்ணிக்கையை உடையதோ அதே ஜாதியை தாளப் பெயருடன் அழைப்பர். (உ+ம்: திரிபுடை தாளத்தில் வருகின்ற லகுவானது 3 எண்ணிக்கை உடையதாயின் அத்தாளம் திஸ்ரஜாதி திரிபுடைதாளம் எனப்படும்)
இவற்றை சூளாதி தாளங்கள் என்பர். இம் 35 தாளங்களும் 5 கதி பேதங்களினால் 175 தாளங்களாக மாறும் (35x5= 175) அதாவது லகுவின் ஜாதி பேதங்களினால் ஏற்பட்ட சூளாதி தாளங்கள் அவற்றுக்குரிய அட்சரங்கள் ஒவ்வொன்றிலும் தனித்தனியே கதி பேதத்தினைப் பெறுகின்றன. இதனால் அத் தாளங்களுடன் கதியினது பெயரும் சேர்த்து அழைக்கப்படும். உ +ம்: சதுஸ்ர ஜாதி திரிபுடை தாளம் கண்ட கதியில் வரும்போது அதன் எண்ணிக்கையானது அதிகரிக்கின்றது. (8-10 ஆக) இது சதுஸ்ர ஜாதி திரிபுடை தாளம் (கண்ட ஜதி) என அழைக்கப்படும்.
தேசாதி மத்யாதி தாளங்கள்
தேசாதி தாளம் முன்று தட்டுக்களையும் ஒரு வீச்சையும் கொண்டது. இதில் காணும் சிறப்பு என்னவென்றால் வீச்சில் 3/4 இடத்தில் பாடல்கள் ஆரம்பிக்கவேண்டும். இதற்கு எடுத்துக் காட்டு, தியாகராஜசுவாமிகளின் ரகுநாயகாஹம்சத்வனிராக உருப்படியைக் கூறலாம்.
மத்தியாதி தாளமும் 3 தட்டுக்களையும் 1 வீச்சையும் கொண்டது இந்தத் தாளத்தில் 12 இடத்தில் பாடல்கள் ஆரம்பிக்க வேண்டும்.
எடுத்துக்காட்டு - ராக சுதாரச - ஆந்தோளிகா
தேசாதி, மத்யாதி தாளப் பாடல்களைச் சில சமயங்களில் ஆதி தாளத்தில் போடுவதும் உண்டு. இத் தாளங்களை அதிகமாக பயன்படுத்தியவர் தியாகராசரே.
இந்துக்கலைக்களஞ்சியம்

சாபு தாளம்
இதனை சாபு எனவும் சாப்பு எனவும் கூறுவர். அதாவது அட்சர எண்ணிக்கை எண்ணாமலும் அங்கம் காண்பிக்காமலும் வேக காலத்தில் காதை மட்டும் போடப்படும் தாளங்கள் சாப்பு தாளங்கள் எனப்படும். சாபுதாளம் 2 அங்கங்களைக் கொண்டது. இது ஒரு வீச்சும் ஒரு தட்டுமாக இருக்கும். அல்லது 2 தட்டுக்களாக இருக்கலாம். சாபு தாளத்தில் 4 வகைகள் உண்டு.
1 3எண்ணிக்கையுள்ள திஸ்ரசாபு (த+திமி) 2 5 எண்ணிக்கையுள்ள கண்டசாபு (தக+தகிட) 3 7எண்ணிக்கையுள்ள மிச்ரசாபு (தகிட+தகதிமி) 4 9எண்ணிக்கையுள்ள சங்கீர்ணசாபு (தகதிமி+ததிங்கிணதொம்)
சியாமா சாஸ்திரிகள் இத் தாளத்தில் பல இசை உருப்படிகளை இயற்றியுள்ளார். விலோம சாபு தாளத்திலும் உருப்படிகள் இயற்றியுள்ளார் (தகதிமி + தகிட).
தற்பொழுது பெரும்பாலும் ஆதி தாளம், ரூபகதாளம், சாபு தாளம், ஏக தாளம், திச்ரஜாதி ரூபகம் முதலிய தாளங்களே பயன்படுத்தப்படுகின்றன. சில வர்ணங்கள் பாடும்பொழுது மட்டும் கண்ட ஜாதி அடதாளம் பயன்படுத்தப்படுகின்றது.
நூற்றெட்டுத் தாளங்கள்
இத் தாளங்கள் பற்றிய விவரங்கள் பழங்காலத்து நூலாகிய பஞ்ச மரபு, சச்சபுட வெண்பா, தாள சமுத்திரம், தாள தீபிகை போன்றவைகளில் செய்யுள் வடிவில் கொடுக்கப் பட்டுள்ளன. ஒவ்வொரு தாளத்திற்கும் ஒவ்வொரு செய்யுள் உள்ளது. தாளத்தின் அங்கங்கள் மாத்திரைகள் முதலியவை தரப்பட்டுள்ளன. பழந்தமிழ் மக்கள் கையாண்ட தாள வகைள் போல வேறு எந்த நாட்டிலும் கையாளப் பெறவில்லை. எட்டு மாத்திரைகள் கால அளவு கொண்ட சச்சபுடம் தாளத்தை முதல் தாளமாகவும் ஐந்து மாத்திரை கால அளவு கொண்ட பெத்தா பரணம் என்னும் தாளத்தை இறுதியாகவும் கொண்டு இந்தச் செய்யுள்கள் அமைந்துள்ளன. முதற் செய்யுள்:
சச்சபுடமே துனு இரண்டொரு கணை மெச்சிய புலத மெட்டு மாத்திரை’ இறுதிச் செய்யுள்:
"பெத்தாபரணங் கோல்பின் பணிகோல் வைத்தார் அகத்தியர் மாத்திரை யஞ்சே”
தாண்டவத்திற்குரிய தாளங்கள்
தாண்டவத்திற்கு தாளமே முக்கியமானது.
இறைவனுடைய தாண்டவத்திலிருந்து தாளம் பிறந்ததாகப் பரத நூல் கூறுகிறது. சிவனுடைய பதினாறு வகையான தாண்டவங்களுக்கும் தாளங்கள் கூறப்பட்டுள்ளன.
தாள தசப் பிராணங்கள்
தாளத்தின் முக்கிய அம்சங்களாக பத்தினைக் கூறுவர். அவையாவன, காலம், அங்கம், கிரியை, எடுப்பு, ஜாதி, யதி, லயம், களை, மார்க்கம், பிரஸ்தாரம் என்பன.
2ó5

Page 242
காலம்
பழந்தமிழ் மக்கள் தாளத்தின் காலம் அல்லது வேகத்தைக் குறிப்பிட பாணி அல்லது இயக்கு என்று அழைத்தார்கள். தற்போது காலத்தை குறிப்பிடுவதற்கு, முதற்காலம், இண்டாம் காலம், மூன்றாம் காலம், நான்காம் காலம் என அழைக்கிறோம். வட மொழியில் இதனை விளம்ப காலம், மத்திம காலம், துரித காலம், அதிதுரித காலம் என்று குறிப்பிடுகின்றார்கள்.
அங்கம்
தாளத்தின் அட்சர எண்ணிக்கைகளை அங்கங்களின் உதவியினால் அறிய முடியும். இவை திரியங்கம், ஷடாங்கம், சோடாங்கம் எனப்படும். சோடாங்கம் 16 அங்கங்களைக் கொண்டது.
எடுப்பு - ஒரு பாட்டு எந்த இடத்தில் ஆரம்பிக்கின்றதோ அந்த இடத்திற்கு எடுப்பு என்று பெயர்.
சம எடுப்பு - பாட்டும் தாளமும் ஒரே சமயத்தில் ஆரம்பமாகும். அனாகத எடுப்பு - தாளத்திற்குப் பின் பாட்டு ஆரம்பமாகும். அதீத எடுப்பு - தாளத்திற்கு முன் பாட்டு ஆரம்பமாகும்.
ஜாதி - இது ஐந்து வகைப்படும். அவையாவன திஸ்ரம், சதுஸ்ரம், மிஸ்ரம், கண்டம், சங்கீர்ணம் என்பன. (இவற்றின் பேதங்களினால் 35 தாளம் உருவாகும் முறை விளக்கப்பட்டுள்ளது.)
களை - ஒவ்வொரு அட்சர எண்ணிக்கைக்குள்ளும் அடங்கியிருக்கும் உள்ளடக்கமான அட்சர காலம் களை எனப்படும். களையானது ஜாதிக்கு ஏற்றவாறு மாத்திரைகள் உள்ளடக்கியிருக்கும். இது கதி எனப்படும். (175 தாளங்கள் உருவாகும் முறைக்கு கதியே காரணம். கட்டுரையின் முன்பகுதியில் கூறப்பட்டுள்ளது.)
கிரியை - தாளத்தின் அங்கங்களை கைச் செய்கையில் காட்டுவது. இது இரண்டு வகைப்படும். சப்த கிரியை - அனுதிருதம், துருத ஆரம்பத்தட்டு. லகுவின் ஆரம்பத் தட்டு. நிசப்த கிரியை - சப்தமின்றி செய்யப்படுபவை. துருதத்தின் வீச்சு, லகுவின் விரல் எண்ணிக்கை.
லயம் - இசையின் வேகத்தையும் தாளத்தின் வேகத்தையும் குறிப்பது. இது காலப் பிரமாணம் என்றும் கூறப்படும்.
யதி - யதி ஆறுவகைப்படும். சமயதி, விசமயதி, மிருதங்கயதி, வேதமத்திய யதி, கோபுச்சயதி, சுரோதோவகயதி என்பனவாகும். யதிகளின் ஒழுங்கான போக்கு சமயதி எனப்படும். சொற்கள் சமமாக இராமல் தவறியும் எல்லா ஜாதி அமைப்பிலும் கலந்தும் அமைதல் விசமயதி எனப்படும். மிருதங்கத்தின் அமைப்பைப் போன்றது. அதாவது ஆரம்பத்திலும் இறுதியிலும் ஒரே அளவாகவும் நடுப்பாகத்தே பெரிதாகவும் அமைந்த யதிகள் மிருதங்க யதி ஆகும். வேதமத்யயதி உடுக்கின் அமைப்பைப் போன்றது. பசுவின் வாலினைப் போன்று அமைந்த சொற்கட்டு கோபுச்சயதி எனப்படும். ஆரம்பத்தில் சிறிதாயும் பின்னர் சிறிது
206

சிறிதாக விரிவடைந்து செல்லும் யதி சுரோதோவகயதி எனப்படும்.
மார்க்கம் - இசை வடிவங்களில் ஒரு தாள எண்ணிக்கைக்கு இத்தனை சுரங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன.என நோக்குவதே மார்க்கம். இது ஆறு வகைப்படும். 1. தட்சிணா மார்க்கம்
வார்த்திக மார்க்கம்
சித்திர தர மார்க்கம்
சித்திர தம மார்க்கம்
சித்திர மார்க்கம்
அதி சித்திர தம மார்க்கம்
பிரஸ்தாரம் - என்பது விரிவுபடுத்தல் ஒரு தாள அங்கத்தை எத்தனை வகைகளில் நாம் பிரித்துக் காட்ட முடியுமோ அத்தனை வகைகளில் பிரித்துக் காட்டுதல்.
இப்பத்தும் முக்கிய அம்சங்களாக விளங்குவதன் காரணமாக இவை தாள தசப்பிரமாணங்கள் என வழங்கப்படுகின்றன. இசையின் காலப் பிரமாணத்தை நிர்ணயிப்பது தாளமே. ஆகவே தாளமே இசையின் உயிர் என்று கூறலாம். (தே. ஹ.)
தான்தோன்றில்வரர் கோயில்
தான்தோன்றியான சுயம்புலிங்கங்களை உடைய கோயில்களே தான்தோன்றீஸ்வரர் கோயில்களாகும். தான்தோன்றீஸ்வரம் என்னும் பெயரால் விளங்கும் கோயில்கள் பலவற்றை மத்தியகாலத் தமிழகத்துச் சாசனங்கள் மூலமாகவும் அறிய முடிகின்றது. இலங்கையில் வடமாகாணத்தில் மருதடி தான்தோன்றீஸ்வரர், சாவகச்சேரி வாரியவனபதி தான் தோன்றீஸ்வரர், முல்லைத்தீவு ஒட்டிசுட்டான் தான்தோன்றீஸ்வரர், கிழக்கிலங்கையில் மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலயங்கள் குறிப்பிடத்தக்கவை. இவற்றுள் ஒட்டுசுட்டான் தான் தோன்றீஸ்வரரும் கொக்கட்டிச்சோலை தான் தோன்றீஸ்வரர் ஆலயமும் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்தவை.
மட்டக்களப்பில் இருந்து கல்முனை செல்லும் பிரதான வீதியில் இருந்து ஐந்து மைல் தொலைவில் அமைந்துள்ள மண்முனைத்துறையில் அமைந்துள்ள பதியே கொக்கட்டிச் சோலை தான்தோன்றீஸ்வரர் கோயிலாகும். காடும் வயலும் சார்ந்த இயற்கை வனப்புமிகுந்த ஒர் இடத்திலே இக் கோயில் அமைந்துள்ளது.
கோயில் வரலாறு
தல வரலாறு பற்றிய செய்திகள், வரலாற்றம்சங்களோடு புனை கதைகளும் இணைந்து கர்ண பரம்பரைக் கதையாகவே உள்ளன. மகாவம்சக் குறிப்புகளும் இடையிடையே இக்
இந்துக்கலைக்களஞ்சியம்

Page 243
கதைகளோடு சேர்ந்துள்ளன. உலகநாயகி, விமலதருமன், மாகோன், தர்மசிங்கன் ஆகியோரின் செயற்பாடுகளோடு இவை இனங்காணப்படுகின்றன. ஆலய தோற்றம் பற்றி இருவேறு ஐதீகங்கள் தெரிவிக்கப்படுகின்றது.
திருவேட்டைக் காவியம் கோயிலின் தொடக்கத்தினை கொக்கட்டியார் என்பவரோடு தொடர்புபடுத்துகின்றது. பண்டைக் காலத்தில் முத்துலிங்கம், கொக்கட்டியார் என்னும் இரு தபசியார் கதிரை மலையைத் தரிசிக்கச் சென்ற வேளை கொக்கட்டியார் சமாதி அடையவே, அவரைச் சமாதியிலிருத்தி முத்துலிங்கம் கதிரை மலையைத் தரிசிக்கச் சென்றார். அச் சமாதியிலிருந்து சிவலிங்கமொன்று தோன்றி கொக்குநெட்டி மரத்தால் மறைக்கப்பட்டிருந்தது. வேடன் ஒருவன் தேன் பெறும் நோக்கில் மரத்தை வெட்டவே இரத்தம் சிந்தியது. இதனைச் சொப்பனத்திலறிந்த கதிர்காம யாத்திரை சென்ற செட்டியார் கோயிற் திருப்பணிகளைப் பூர்த்தி செய்தார். ஆரம்பத்தில் இங்கு வேடர் பூசையே நிகழ்ந்தது. பெரும்பாலான கிழக்கிலங்கைக் கோயில் பற்றிய ஐதீகங்கள் கதிர்காம யாத்திரீகர்களையும் வேடர்களையும் தொடர்புபடுத்துகின்றன. இது ஒரு மரபு வழிச் சம்பிரதாயமே அன்றி வரலாறு அல்ல. ஆயினும் செட்டியார் கோயிற் திருப்பணி செய்தார் என்ற குறிப்பு, செட்டிப்போடி குடியைச் சார்ந்தவர்கள் கோயிற் பணியில் ஈடுபட்டிருந்தமையைக் குறித்தல் கூடும்.
தான்தோன்றீஸ்வரத்தின் தோற்றம் பற்றிய மற்றொரு ஐதீகம் உலக நாயகிபற்றிய கதையில் அடங்கியுள்ளது. கலிங்க தேசத்து இளவரசியான உலக நாயகி கெளதமபுத்தரின் தசனத்தையும் சிவலிங்கமொன்றையும் தன்னோடு எடுத்துக் கொண்டு தனது சகோதரன் உலகநாதனுடன் இலங்கைக்கு வந்தாள். இலங்கை அரசனான மேகவர்ணனிடம் புத்த சாசனத்தைக் கொடுத்து, தனக்குக் குடிகளில்லாத காட்டுப் பகுதியைத் தரவேண்டும் என்று கேட்டாள். அரசன் மட்டக்களப்பு அதிபதியாகிய குணசிங்கனுக்கு ஒரு திருமுகம் அனுப்ப அவனும் அவளுக்கு மண்முனையை நிவந்தமாகக் கொடுத்து அவள் வாழ்வதற்கென்று மாளிகை ஒன்றும் அமைத்துக் கொடுத்து காடழித்து குடிகளமர்த்திக் கொடுத்தான் என்று கூறப்படுகின்றது.
மேலும் உலகநாயகி தனது சகோதரன் உலகநாதன் மூலமாக 106 குகக் குடும்பங்களையும் 30 சிறைக் குடும்பங்களையும் குடியமர்த்தினாள். அத்துடன் மண்முனையில் சிவலிங்கதாபனம் செய்து ஆலயமொன்றினை அமைத்து வழிபாடு செய்தாள் என்ற செய்தியும் அறியக் கிடக்கின்றது. இக் காலத்தில் திடகன் என்னும் வேடுவர் தலைவன் காடு வெட்டும்போது கொக்குநெட்டி மரத்தையும் வெட்டினான். அப்போ அம் மரத்தினின்று உதிரம் பெருகவே வெட்டுவாயிலே துணியை வைத்து, இரத்தப் பெருக்கைத் தடுத்து, அவ்வற்புதத்தை உலகநாயகியிடம் தெரிவித்தான். உலகநாயகி அங்கு சென்று பார்க்கும்பொழுது சிவலிங்கம் ஒன்று காணப்பட்டதாகவும் அங்கு கோயிலொன்று அமைத்து, அவ்விடத்தை வெளியாக்கிக் குடிகளையும்
இந்துக்கலைக்களஞ்சியம்

அமர்த்தினாள் என்ற செய்தியும் கூறப்படுகின்றது. கோயில் கைங்கரியங்களுக்காகப் பட்டர்கள் மூவரையும், ஆரம் கட்டும் குடிகள் பதின்மரையும் வட தேசத்திலிருந்து குடியேற்றினாள். பூசகர்களாக நியமனம் பெற்ற பட்டர்களின் சொற்படியே ஆரங்க கட்டுவோர் செயலாற்ற வேண்டும் என்றும் கட்டளையிட்டாள். உலகநாயகி குணசிங்கனது சகோதரனான கிரசாசன் என்பவனை மணந்து இரு பிள்ளைகளைப் பெற்றாள். அவர்களின் சந்ததியினரே உலகிப்போடி 6T60T அழைக்கப்படுகின்றனர். மண்முனைப்பற்று என்பது ஒரு தனி நிர்வாகப் பிரிவாக அமைந்தமை பல சான்றுகளால் அறியக் கூடியதாக உள்ளது. அங்கு முக்குவர், வேளாளர், செட்டிகள் ஆகியோர் பல நூற்றாண்டுகளாக வாழ்ந்துள்ளனர். உலகநாயகி பற்றிய ஐதீகம் மண்முனைப் பற்றின் தனித்துவத்தையும் சமூகப் பிரிவுகளின் தோற்றத்தையும் விளக்கும் முகமாக எழுந்ததாகவும் கொள்ள இடமுண்டு. உலகநாயகி பற்றிய ஐதீகத்தில் மேகவண்ணன் (302-332) பற்றிய மகாவம்சக் குறிப்புகளும் சேர்ந்துள்ளன. ஆகவே மேகவண்ணன் காலத்தில் கொக்கட்டிச்சோலையில் சிவன் ஆலயமொன்றமைந்திருத்தல் வேண்டும் எனக் கொள்ள இடமுண்டு. உலகிப்போடி குடியினர் மண்முனைப் பற்றில் அதிகாரம் செலுத்திய காலத்தில் அவர்கள் ஆலயத்திற்குச் சில மானியங்களைக் கொடுத்தும் சேவைகள் புரிந்தும் கோயிலை அபிவிருத்தி செய்திருக்க வேண்டும் என்று கருதுவது பொருத்தமானது.
தான்தோன்றீஸ்வரம் கோயிலுடன் குளக்கோட்ட மன்னனும் தொடர்புபடுத்தப்படுகின்றான்.களு தேவாலயக் கல்வெட்டு, திருக்கோயிற் திருப்படைப் பத்ததி ஆகியவற்றில் கூறப்படும் செய்திகள் குளக்கோட்டனின் கோயிற் திருப்பணிகளைக் கூறுகின்றன. இச் செய்திகள் எந்த அளவிற்கு ஆதார பூர்வமானவை என்பது தெளிவில்லை. ஆயினும் சோழரின் ஆட்சி இலங்கையில் நடைபெற்ற காலத்தில் குளக்கோட்டன் சோழனொருவனாக இருந்திருப்பின் கோயில்களிலே திருப்பணி செய்திருத்தல் கூடும்.
தான்தோன்றீஸ்வரத்தோடு தொடர்புடைய மற்றொரு மன்னன் மாகோன். இவன் கலிங்கதேசத்தைச் சார்ந்தவன். இவனுடைய ஆட்சிக் காலத்தில் மட்டக்களப்பில் வீரசைவர்களான சங்கமரின் செல்வாக்கு அதிகரித்துக் காணப்பட்டது. பழைய சிவாலயமான தான்தோன்றீஸ்வரம் அவர்களின் வசமாக இருந்தது என்றும் அறியக் கூடியதாக உள்ளது. அவனது ஆட்சிக்காலத்தில் சமூக அமைப்பிலும் சமயாசாரங்களிலும் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் ஏற்பட்டன. இம் மன்னனால் வழங்கப்பட்ட சாசனங்களோ, முத்திரைகளோ எவையும் இதுவரை கிடைக்கவில்லை.
கோயில் அமைப்பு தான்தோன்றீஸ்வரர் ஆலயம் காலத்துக்குக் காலம் புனர் நிர்மாணம் பெற்று வந்துள்ளது. இதனால் அதன் பழைய தோற்றம் பற்றி எதுவும் அறிய முடியாதுள்ளது. அத்துடன் இதன்
2ó7

Page 244
கட்டிட அழிபாடுகளோ அதுபற்றிய குறிப்புகளோ கிடைக்கப் பெறவில்லை.
இக்கோயில் 1946ஆம் ஆண்டு புனர் நிர்மாணிக்கப்பட்டபோது கர்ப்பக்கிரகம், அர்த்தமண்டபம், அலங்கார மண்டபங்களைக் கொண்டதாக அமைக்கப்பட்டது. பரிவாரத் தெய்வங்களான பிள்ளையார், முருகன், வள்ளி, தெய்வானை, விஷ்ணு, நாகதம்பிரான், நவக்கிரகங்கள் ஆகியோருக்கு ஆலயங்கள் புதிதாக அமைக்கப்பட்டதோடு கர்ப்பக்கிருகத்தின் மேல் விமானமும் ராஜகோபுரமும், மகா மண்டபம், சபா மண்டபம் ஆகியனவும் நிர்மாணிக்கப்பட்டன. 1946 ஆம் ஆண்டு இக் கோயில் புனர் நிர்மாணம் பெற்றபோதும் அது பழைமை மிக்க கட்டிடமாகவே காட்சியளிக்கின்றது. கட்டிட அமைப்பில் திராவிட பாணியையும் மலையாளக் கலை அம்சங்களையும் பொருந்திய ஒர் அமைப்பாக இது விளங்குகின்றது.
கோயில் நிர்வாகம்
ஆலய நிர்வாகப் பதவிகள் தாய்வழிப் பரம்பரையாகவே நிர்வகிக்கப்பட்டது. தேசத்து வன்னிமையின் தலைமையிலேயே நிர்வாகம் நடத்தப்பட்டது. தான் தோன்றீஸ்வரம் பற்றிய கல்வெட்டுப் பாடல்களிற் கோயிலுடன் தொடர்பு கொண்டிருந்த குகன் இராச வன்னிமை, பூபால கோத்திர வன்னிமை என்னுமிரு வன்னிமை வம்சங்களைச் சேர்ந்தவர்களின் பெயர்கள் காணப்படுகின்றன. காலனித்துவ ஆட்சிக் காலத்தில் வன்னியர்கள் தங்கள் தேச நிர்வாகப்பொறுப்புகளையும் அதிகாரங்களையும் இழந்தபோதும் கோயில்கள் தொடர்பான அவர்களின் மரபுவழி உரிமைகள் பேணப்பட்டது. ஆயினும் பின்னர் பொதுமக்களின் செல்வாக்கு கோயில் நிர்வாகத்தில் அதிகம் ஏற்பட்டு வருகின்றது. ஆலயக் கூட்டங்களுக்கு தேசத்து வன்னிமைகள் தலைமை தாங்குவது வழக்கம்.
மட்டக்களப்பில் உள்ள ஏனைய கோயில்களைப் போலவே தான்தோன்றீஸ்வரர் கோயிற் கருமங்களை நடத்தும் பொறுப்பு வண்ணக்கருக்கு உரியது. வண்ணக்கர் என்னும் சொல் கோயிற் கருமங்களைச் செம்மையாக, ஒழுங்காக நடத்துவோரைக் குறிப்பதாகும். இந்நாட்களில் நிர்வாக சபை என்ற அமைப்பொன்றும் செயற்பட்டு வருகின்றது. திருப்படைப் பத்ததிப் பாடல்களில் ஆலயத்தொழும்புகள் வகுப்பட்ட ஏற்பாடுகள் பற்றிய செய்திகள் காணப்படுகின்றது. கோயிலில் தொண்டுகள் செய்வோர் ஊழியக்காரர் என்று குறிப்பிடப்பட்டனர். வெவ்வேறு குடிகளைச் சார்ந்தவர்கள் வெவ்வேறு ஊழியங்களைச் செய்தார்கள். அதற்கென அவர்கள் நிலங்களைப் பெற்றிருந்தனர்.
பூசைகளும் திருவிழாக்களும் தினமும் மூன்று காலப் பூசை இங்கு இடம்பெறுகின்றது. ஒவ்வொரு மாதமும் வரும் சிறப்பான நாட்களில் விசேட பூஜைகள் இடம் பெறும். தைப்பொங்கல், தைப் பூசம், பங்குனி உத்தரம், வருடப் பிறப்பு, சித்திரை மாதத்து சித்திரை, திருக்கார்த்திகை,
208
 

மார்கழித் திருவாதிரை, சிவராத்திரி, கந்தசஷ்டி, விநாயகர் சஷ்டி ஆகிய தினங்களில் விசேட பூசை ஆராதனைகள் நிகழ்கின்றன.
இக் கோயிலில் நடைபெறும் ஆண்டுத் திருவிழாவை தேரோட்டம் என்பர். தேரோட்டத்திற்கு மறுநாள் சூகர வேட்டையும் குடுக்கை கூறுஞ் சடங்கும் இடம்பெறும். வேட்டைத் திருவிழாவின் பின் தீர்த்தோற்சவம் இடம்பெறும். இங்கு கடலோ, ஆறோ, குளமோ இல்லாதபடியால் தீர்த்தோற்சவம் சிறப்புப் பெறுவதில்லை.
திருவிழாக் கொண்டாட்டங்களில் தேரோட்டமே சிறப்பானது. மிகப்பழமையும் அற்புத வேலைப்பாடுகள் நிரம்பப் பெற்றதுமான இக் கோயில் தேர்களை 4060 இல் மட்டக்களப்புக்கு அதிபனாக விளங்கிய தருமசிங்கன் சோழநாட்டிலிருந்து சிற்பிகளை வரவழைத்துச் செய்வித்தான் என்பது ஐதீகம். அவ்வாறு செய்யப்பட்ட தேர்களில் இரண்டு மட்டுமே தற்போதுள்ளன. ஒன்று சிவன்தேர். மற்றையது பிள்ளையார் தேர். தேரோட்டத்தில் உமாமகேஸ்வரர் கோலத்தில் சிவபெருமான் எழுந்தருளுவார். பிள்ளையாரும் முருகனும் மற்றைய தேரில் எழுந்தருளி வலம் வருவர்.
கொக்கட்டிச் சோலையில் பிராமணர்கள் பூசை செய்வதில்லை. இலிங்கதாரிகளான சங்கமரே பூசை செய்வர். இத் தலத்தில் மட்டுமன்றி மட்டக்களப்பில் உள்ள அனேக சைவக் கோயில்களிற் சங்கமரே (வீர சைவத் தொடர்புடையவர்கள்) பூசை செய்கின்றனர்.
திருப்படைப் பத்ததி
கோணேசர் கோயிலை அடிப்படையாகக் கொண்டு ஒரு இலக்கிய மரபு உருவானது போன்று தான்தோன்றீஸ்வரத்தை ஆதாரமாகக் கொண்டு பல பாடற் தொகுதிகள் உருவாகியுள்ளன. நெடுங்காலமாக ஏட்டுவடிவில் நிலைபெற்று வந்த இப் பாடல்கள் கல்வெட்டு வகையினைச் சார்ந்தவை. குளிக்கல் கல்வெட்டு,பெரிய கல்வெட்டு, பங்கு கூறுங் கல்வெட்டு, ஆசாரிகள் கல்வெட்டு, நாதன் கல்வெட்டு, திருப்படைக் களஞ்சியம் என்பவை அவற்றுட் பிரதானமானவை. இவை மட்டக்களப்பு மான்மியம் என்னும் பெயரால் வெளிவந்த நூலிலே சேர்க்கப்பட்டுள்ளன.
இப் பத்ததியில் ஆதிகாலம் முதல் ஒல்லாந்தரின் ஆட்சிக்காலம் வரை ஏற்பட்ட வளர்ச்சிகள் பற்றிய வரலாறுகளும், ஐதீகங்களும், புனைகதைகளும் கலந்துள்ளன. அரசர், பிரதேசப் பிரதானிகளான வன்னியர், சமுதாயப் பிரிவுகள், சமுதாய வழமைகள், குடிகள் ஆகிய விவரங்கள் தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தையும் அதன் சேவைகளையும் அடிப்படையாகக் கொண்டு இவ் விவரங்கள் விவரிக்கப்பட்டுள்ளன.
தான்தோன்றீஸ்வரம் (ஒட்டுசுட்டான்) ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலயம் முல்லைத்தீவு மாவட்டத்தில் மாங்குளம், முல்லைத்தீவு பிரதான வீதியில்
இந்துக்கலைக்களஞ்சியம்

Page 245
அமைந்துள்ளது. இவ்வாலயம் தோன்றிய காலம் பற்றித் திட்டவட்டமாக அறிவதற்கு அகழ்வுச் சான்றுகளோ, சாசனங்களோ கிடைத்தில. ஆயினும் கர்ணபரம்பரைக் கதைகளையும், வரலாற்றாதாரங்களையும் நோக்கும்போது இலங்கையில் சோழர் ஆட்சிக்காலம் நிலவிய 12ஆம் 13 ஆம் நூற்றாண்டுகளில் தோன்றியிருக்கலாம் எனக் கருத இடமுண்டு.
ஆலயத் தோற்றம் பற்றிய கர்ண பரம்பரைக் கதைகள்
சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன் சித்தர்கள் வன்னிப் பிரதேசத்திற்கு வந்து ஒட்டுசுட்டான் என்னுமிடத்திற் பிரிந்து சென்றார்கள். அவர்களில் ஒருவர் ஒட்டுசுட்டானுக்குத் தென்மேற்கே இரண்டு மைல் தொலைவில் உள்ள வாலெட்டி என்னுமிடத்திலே தியானத்தில் இருந்து சமாதியடைந்தார் என்றும் மற்றையவர் ஒட்டுசுட்டானுக்கு தெற்கே இரண்டு மைல் தொலைவில் உள்ள காதலியார் சம்மாங்குளத்தில் சமாதியடைந்தார் என்றும் மூன்றாவது சித்தர் ஒட்டுசுட்டானிலே ஒரு கொன்றை மரத்தடியில் நிஷ்டையில் இருந்து சமாதியடைந்தார் என்றும் அவர் பூஜித்த சிவலிங்கமும் இவருடனே சமாதியடைந்திருக்க வேண்டும். பிற்காலத்தில் இவ்விடத்தில் சிவலிங்கம் ஒன்று தோன்றியது என்னும் ஐதிகம் நிலவுகின்றது.
யாழ்ப்பாணம் இடைக்காட்டைச் சேர்ந்த வீரபுத்திரர் என்பாரும் அவரது இரண்டு புதல்வர்களும் வன்னிக்குச் சென்று குடியேறினர். அவர்களும் அவரது பரம்பரையினரும் வாழ்ந்த இடம் தற்போதும் ஒட்டுசுட்டானில் இடைக்காடு என அழைக்கப்படுகின்றது. காடுவெட்டிக் குரக்கன் பயிரிட்ட வீரபுத்திரர் குரக்கனை வெட்டி எடுத்தபின் ஒட்டுகளை தீயிட்டு எரித்தார். அவ்வாறு எரித்தபோது ஒரு கொன்றை மரத்தடியில் ஒட்டுக்கள் எரியாது இருப்பதைக் கண்டு அவற்றை அகற்றுவதற்காக மண்வெட்டி கொண்டு வெட்டினார். அப்போ அவ்விடத்தில் இருந்து இரத்தம் கசிந்ததாகவும், இச் செய்தியைக் கேள்வியுற்ற வன்னியன் அவ்விடத்தைப் பார்வையிட்டு கோயிலமைத்து வழிபடுமாறு கூறினான் என்றும் ஆரம்பத்தில் கொன்றலடிப் பிள்ளையார் என்ற பெயரில் வழிபாடுகள் நடைபெற்றுப் பின் சிவலிங்கம் சுயமாகத் தோன்றியதைக் கண்ட மக்கள் அத் தான்தோன்றீஸ்வரருக்கு வேகாவனேஸ்வரர் என்றும் வேகாவனப் பெருமான் என்றும் பெயர்கள் இட்டார்கள் என்றொரு ஐதீகமும் கூறப்படுகின்றது.
பெருமானின் அற்புதச் செயல்கள்
கோயில் திருப்பணிக்காக கொண்டுவரப்பட்ட சீமெந்துப் பீப்பாக்கள் ஒரு அரசமரத்தடியில் இறக்கி வைக்கப்பட்டிருந்தது. அன்றிரவு பெய்த மழையில் அப் பீப்பாக்கள் நனையா வண்ணம் பாதுகாப்பாக நகர்த்தப்பட்டிருந்தது. இச் செயலைச் செய்தவர் யார் எனத் தெரியாது மக்கள் திகைத்து நின்றபோது கோயில் அர்ச்சகர் தான் இரவு கண்ட கனவில் ஈசன் சீமெந்துப் பீப்பாக்களை உருட்டியதால் உடல் முழுவதும் வலிப்பதாகவும்
இந்துக்கலைக்களஞ்சியம்

வெந்நீர் அபிஷேகம் செய்யும்படி கேட்டதாகவும் இறைவனுக்குத் தாம் அவ்வாறே அபிஷேகம் செய்ததாகவும் கூறினார்.
போர்த்துக்கேயரின் ஆட்சி இலங்கையில் நடைபெற்ற போது அவர்களின் அராஜகத்தினால் தப்பிப் பிழைத்த கோயில்கள் மிகச் சிலவே. அவற்றுள் ஒட்டுசுட்டான் கோயிலும் ஒன்றாகும். ஒரு முறை தன் பரிவாரங்களுடன் தான்தோன்றீஸ்வரர் ஆலயம் வந்த போர்த்துக்கேய அதிகாரி ஒருவர் நந்தியம்பெருமான் முன்வைக்கப்பட்டிருந்த அறுகம்புல்லைப் பார்த்து இந்தக் கல்மாடு புல் தின்னுமா என ஏளனமாகக் கேட்டதுடன் இக் கல்மாடு புல்லுத்தின்னாவிட்டால் உங்கள் சமயம் பொய்ச்சமயம் எனக் கூறி கோயிலைத் தரைமட்டமாக்குவதுடன் கிறிஸ்தவ தேவாலயம் ஒன்றையும் கட்டி சகலரையும் அதை வழிபடும்படி செய்வேன் என அகங்காரமாகக் கூறிவிட்டுச் சென்றான். மறுநாட் காலை கோவிலுக்கு அவ் அதிகாரி வந்தபோது கோயிற் பூசகர் அறுகம்புல்லைப் பாலில் நனைத்து நந்தியின் வாயில் வைத்தார். உடனே நந்தி தன் நாக்கை நீட்டி வாய்க்குள் இழுத்துத் தின்றது. பின் எழுந்து நின்று சாணியும் போட்டது. இவ்வற்புதத்தைக் கண்டு மனம் பதைபதைப்புற்ற போர்த்துக்கேய அதிகாரி பூசகரிடம் மன்னிப்புக் கோரியதுடன் கோயில் திருப்பணிக்குப் பெரும் தொகைப் பொன்னும் பொருளும் கொடுத்தான் என்றும் கூறப்படுகின்றது.
ஆலயத் திருப்பணி மேலே கூறியது போன்று இக் கோயில் எக் காலத்தில் கட்டப்பட்டது என்பது திட்டவட்டமாக கூறமுடியாது இருக்கின்றது. ஆயினும் இக் கோயில் இடைக் காலத்துக்குரிய கோயிலாக இருக்க வேண்டும் என்றே அறியக் கிடக்கின்றது. இடைக்காலம் என்பது சோழர் ஆட்சிக் காலமாகும். இவ் வாலயத்தைக் குளக்கோட்டன் கட்டியதாகவும் ஒரு கதையுண்டு. ஒட்டுசுட்டானுக்கு அண்மையில் உள்ள முத்தரையன் கட்டுக் குளத்தையும் குளக்கோட்டன் கட்டியதாகக் கர்ணபரம்பரைக் கதையுண்டு. குளக்கோட்டன் கதையில் இருந்து நாம் அறிந்து கொள்ளக் கூடியது சோழர் காலத்தில் தான்தோன்றீஸ்வரம்
புனருத்தாரணம் செய்யப்பட்டது என்பதாகும்.
கோயிற் திருப்பணி சம்பந்தமாக மற்றொரு கதையும் கூறப்படுகின்றது. போர்த்துக்கேயர் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றிய பின் வன்னி மீதும் தமது ஆணையைச் செலுத்தினர். வன்னியரும் திறை தருவதாக ஒப்புக்கொண்டு ஆண்டுதோறும் யானைகள் அனுப்பும் வழக்கம் இருந்தது. காட்டில் யானை பிடிக்கும் பணிக்கருக்கு குறிப்பிட்ட தினத்திற்குள் யானை பிடித்துத் தரவேண்டும் என வன்னியர் கட்டளையிட்டனர். எங்கு தேடியும் யானைகள் கிடைக்கவில்லை. யானைப் பணிக்கன் தான்தோன்றீஸ்வரரிடம் யானைகள் கிடைக்கும் பட்சத்தில் கோயிலைப் பெருப்பித்துக் கட்டுவதாக நேர்த்திக்கடன் வைத்தான். இறைவன் பணிக்கனின் கனவில் தோன்றிப் பெரிய இத்திமடுவிலுள்ள கிளிமடு என்னுமிடத்தில் பெளர்ணமி தினத்திலே ஏராளமான யானைகளைக் காண்பாய் எனக்
209

Page 246
கூறினார். அதன்படி தேவையான யானைகள் கிடைத்தன. பணிக்கன் கோயிலைப் பெருப்பித்துக் கட்டுவித்தான்.
கோயிற் காணிகள்
ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் கோயிலுக்குச் சொந்தமான காணிகள் ஏராளம் இருந்தது. ஆலயத்துக்கென கரைத்துறைப்பற்று, மேற்பற்றுப் பகுதிகளில் நெல்வயல்களும், தென்னந்தோட்டங்களும் இருக்கின்றன. இவை வன்னி மன்னராலும் பொதுமக்களாலும் ஆலய பரிபாலனத்துக்கென தானமாக வழங்கப்பட்டவையாகும். ஆனால் தற்போது பெரும்பாலான காணிகளைப் பொதுமக்கள் தமது உடமையாக்கியுள்ளனர்.
ஆவுடையார் கவசம்
சுயம்புலிங்கமாகக் காட்சியளிக்கும் மூலஸ்தான மூர்த்திக்கு ஆவுடையார் பகுதி இல்லை. கோயில் தர்மகர்த்தாக்கள் இந்தியச் சிற்பிகளை அழைத்து ஆவுடையார் பகுதியை பொழிவித்து இணைக்க முற்பட்டபோது இறைவன் விருப்பம் மாறாக இருந்தது. தனக்கு ஆவுடையார் தேவையில்லை எனக் கூறிவிட்டார். லிங்கத்தை மூடுவதற்கு ஒரு பொற்கவசம் ஒன்று செய்யப்பட்டது. ஆனால் அதையும் ஈஸ்வரர் ஏற்றுக் கொள்ளவில்லை. அது இப்போ பெட்டியில் வைத்துப் பூட்டப்பட்டு உள்ளது.
பூசையும் திருவிழாவும்
தான்தோன்றீஸ்வரருக்கு மூன்று காலப் பூசையும் விசேட தினங்களில் அபிடேக ஆராதனைகளும் நிகழ்கின்றது. ஆனிமாத அமாவாசையில் கொடியேற்றம் பெளர்ணமியில் தீர்த்த வைபவம். பதின்மூன்றாம் நாள் நடைபெறும் வேட்டைத் திருவிழா அன்று ஐந்நூறுக்கு மேற்பட்டோர் உடம்பெங்கும் கரிபூசி வாகந் தளிர்களால் உடையணிந்து காணப்படுவர். ஒவ்வொருவரும் வாகங்குழை நுனியில் கட்டப்பட்ட தடி ஒன்றையும் வைத்திருப்பர். வேடுவத் தலைவன் சுரக் குடுவையினுள் தேன் வைத்தி ருப்பார். இத் தலைமைப் பதவி பரம்பரை பரம்பரையானது. வேட்டுவத் தலைவனின் ஆணைப்படியே ஏனைய வேடுவர் நடக்க வேண்டும். இறைவன் வேட்டை முடித்து வந்ததும் அம்மனுக்கும், இறைவனுக்கும் வாக்குவாதம் இடம்பெறும். இப் பிணக்கினை கோயில் மணியகாரரே தீர்த்து வைப்பார். இறைவன் ஆலயத்தினுட் சென்றதும் வேடுவர்கள் அனைவரும் விழுந்து வணங்கி கோயிலை வலம் வந்து ஒட்டுசுட்டான் குளத்திற்குச் சென்று தம் வேடுவ உடைகளை நீக்கிப் பின் நீராடுவர். தீராத நோயினால் பீடிக்கப்பட்டோர் தாம் வேட்டைத் திருவிழாவின்போது வேடனாக வருவதாக நேர்த்திக் கடன் வைப்பார்கள். வேடுவராக வருவோர் விரதமிருந்தே இந் நேர்த்திக் கடனைச் செய்வர். பதினைந்தாம் நாள் நடைபெறும் தீர்த்தத் திருவிழாவிலும் யாழ்குடா நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் மக்கள் பங்கு கொள்வர்.
இலக்கியம் தான்தோன்றீஸ்வரர் மீது கொக்குவில் குகதாசர் ச. சபாரத்தின முதலியார் பாடிய ஒட்டுசுட்டான் சிவபெருமான்
20

ஆசிரிய விருத்தமும் ஒர் ஊஞ்சற் பதிகமும் வேட்டைத் திருவிழாவின் போது படிக்கப்படும் வசன கவிதையும் உள. இவ்வூஞ்சற் பதிகத்தைத் தவிர பெயர் தெரியாத வேறொருவர் பாடிய ஊஞ்சற் பதிகத்தின் மூன்று பாடல்களும் கிடைத்துள்ளன. ஊஞ்சற் பதிகத்தின் காப்புச் செய்யுளில் ஒட்டுசுட்டான் தேவர் பதி என அழைக்கப்படுகின்றது.
தான்தோன்றீஸ்வரர் வேட்டைக்குச் சென்று திரும்பியபோது ஊடல் கொண்ட பூலோக நாயகியார் கதவை அடைக்க இருவருக்குமிடையில் நடக்கும் தர்க்கம் போல் அமைந்துள்ள ஒரு வசன கவிதை வேட்டைத் திருவிழாவின்போது படிக்கப்படும். பாடல் அமைந்திருக்கும் விதம் ஈஸ்வரன் நேரடியாகத் தேவிக்குக் கூறுவதுபோல் அமையாது வேறு ஒருவருக்குக் கூறுவது போன்றுள்ளது. அவ்வாறே உமையின் பதிலும் வேறொருவரை நோக்கிக் கூறுவதுபோல் அமைந்துள்ளது. கோயில் மணியகாரரே இருவருக்குமிடையில் உள்ள ஊடலைத் தீர்த்து வைப்பார். அவரே இவ் வசனநடைக் கவிதையையும் படிப்பார். (நிநி)
தானம்
தானம் எனில் கொடை எனப் பொருள்படும். எவ்விதமான பிரதி உபகாரமுமின்றி ஒரு பொருளை ஒருவர் மற்றவருக்கு வழங்குவதே உண்மையான தானமாகும். ஒரு பொருளை ஒருவர் வேறொருவருக்குக் கொடுக்கும்போது, அப்பொருளின் உரிமையை அவர் இழந்து பிறிதொருவருக்கு அவ்வுரிமையை ஏற்படுத்துகிறார். மேலும் குறிப்பிட்ட பொருளை ஏற்றுக் கொள்பவர் அதனை உளரீதியாக அல்லது வாய்மொழியாக அல்லது உடல்ரீதியாக அல்லது எழுத்து ரீதியாக அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட வகையில் அதனை ஏற்றுக் கொள்ளுவார். ஒரு கொடை அல்லது நன்கொடையில் ஆறு அமிசங்கள் கவனித்தற்பாலான, அவையாவன, கொடையாளி, கொடையைப் பெறுநர், சிரத்தை, கொடுக்கப்படும் பொருள், கொடுப்பதற்குப் பொருத்தமான காலம், இடம் என மநுஸ்மிருதி (4.226-227) கூறும். பெண்கள், சூத்திரர் உட்பட மக்கள் எவரும் கொடை வழங்கலாம். பெற்றோர். குரு, நண்பன், நன்கு கற்றவன், கொடையாளி. ஏதோ வகையில் ஏழை, ஆதரவு இல்லாதவன், மேலான சிறப்பு வாய்ந்தவன் ஆகியோருக்குக் கொடை வழங்கினால் நற்பலன் ஏற்படும் எனக் கூறப்பட்டுள்ளது. தர்மசூத்திரங்கள், தர்மசாஸ்திர நூல்கள் சிலவற்றிலே தானத்திற்கு விலக்கப்படவேண்டியவர் யார் யார் என்பது எடுத்துக் கூறப்படுகிறது. ஒருவன் தனக்குத் துன்பம், தொல்லை ஏற்படாத வகையிலும் ஏனையோருக்குத் துன்பம் ஏற்படாத வகையிலும் தனது சொந்த முயற்சியினாலே பெறப்பட்ட பொருள் சிறிதாயினும் பெறுமதியுள்ளதாயினும் அதனை வழங்குதலே பொருத்தமான கொடையென தவலஸ்மிருதி கூறும். சிலவகைத் தானங்கள் மஹாதானங்கள் என அழைக்கப்படும்.
தானங்கள் நித்திய (ஒவ்வொரு நாளும் வழங்கப்படும் உணவு போன்றவை), நைமித்திய (விசேட காலங்களில் வழங்கப்படுபவை), எனகாம்ய (மகப்பேறு, வெற்றி, செல்வச்
இந்துக்கலைக்களஞ்சியம்

Page 247
செழிப்பு, விண்ணுலகம், மனைவி முதலியவற்றைப் பெறுதற்கானவை) என வகுக்கப்பட்டுள்ளன. வழக்கமாக எத்தகையதான தானத்தையும் ஏற்றுக் கொள்ளாதவர் கூட ஒருவன் தன்னுடைய கையினாலேயே விரும்பி அளிக்கும் கொடையை ஏற்க வேண்டும் என மனுஸ்மிருதி, யஜ்ஞவல்க்ய ஸ்மிருதி முதலிய நூல்கள் கூறும். தனக்கு உரிமையில்லாத கொடைகளை ஒருவர் வழங்கக் கூடாது. மேலும் சில பொருட்களைக் கொடையாக வழங்கக் கூடாது. ஏனெனில் அவை கொடைகளாக வழங்கத் தகுதியற்றவை. வசிஷ்ட தர்ம சூத்திரத்தின் படி வெறி தரும் மதுபானம், படைக்கலம், நச்சுப்பொருள் முதலியன கொடையாக வழங்குதற்குத் தடை செய்யப்பட்டுள்ளன. கொடை வழங்குதற்கும் சில பொருத்தமான காலங்கள் கூறப்பட்டுள்ளன. எடுத்துக் காட்டுகளாக கிரஹணங்கள் நிகழும் காலம், மாதமுடிவு முதலியன குறிப்பிடற்பாலன.
பகவத்கீதை மூவகைக் கொடைகள் (17.20-22) பற்றிக் குறிப்பிடுகின்றது. அவையாவன, கொடுத்தல் கடமையெனக் கருதிக் கைம்மாறு கருதாமல் தகுந்த இடத்தையும் காலத்தையும், பாத்திரத்தையும் (தகுதியானவரையும்) நோக்கிச் செய்யப்படும் தானமே சாத்வீகம் எனக் கூறப்படும். கைம்மாறு வேண்டியும், பயனைக் கருதியும், மனத்துன்பத்துடன் வழங்கப்படும் தானம் ராஜஸம் எனப்படும். தகாத இடத்திலே, தகாத காலத்திலே, தகாதவருக்கு வழங்கப்படும் தானம் தாமஸம் என்பர்.
தைத்திரீய உபநிஷத்திலே (1.11) வைதீக குருகுலக் கல்வி முடித்து வெளியேறும் மாணவனுக்குக் குரு கூறும் நல்ல உபதேசங்களிலே தானம் பற்றிய கருத்தும் உள்ளது. “தானம் சிரத்தையோடு கொடுக்க வேண்டும். அசிரத்தையோடு வழங்கக் கூடாது. தானத்தைத் தாராளமாக, பண்புடனும், அச்சத்துடனும், அநுதாபத்துடனும் வழங்க வேண்டும்” எனக் கூறப்பட்டுள்ளது. தானங்கள் பற்றி வேறு உபநிஷதங்களும் குறிப்பிடுகின்றன. ஜானசுருதி குறிப்பிட்ட ஞானத்தைக் கற்பதற்காக றைக்வ என்பவருக்கு ஆயிரம் பசுக்கள், பொன், கோவேறு கழுதைகள் பூட்டிய தேர், தன்னுடைய மகள், சில கிராமங்கள் முதலியவற்றை வழங்கினான் என சாந்தோக்ய உபநிஷதம் (4.2.4-5) கூறுகின்றது.
புராணங்களிலே பலவகையான கொடைகள் பற்றிக் கூறப்படுகின்றன. மத்ஸ்ய புராணத்தின் படி தான்யம், உப்பு, வெல்லம், பொன், எள்ளு, பருத்தி, நெய், சர்க்கரை, விலைமிக்க ரத்தினம், வெள்ளி, ஆகிய பத்துப் பொருட்களைத் தானமாக வழங்கலாம். தர்ம சாஸ்திரங்கள், புராணங்கள் முதலியன யானை, குதிரை, எருமை, முதலிய மிருகங்கள், ஆடை, தோல், குடை, செருப்பு வழங்குதல், வழிப்போக்கருக்கு நீர் வழங்குதல் போன்றவற்றைக் கொடைகளாகக் கூறும். இத்தகைய தானங்களிலே இதிஹாஸங்கள், புராணங்கள் எழுதப்பட்டுள்ள ஏடுகளை வழங்குதல் சிறந்த கொடையாக கருதப்பட்டமைய்ை அக்கினி புராணம் போன்றவற்றால் அறியலாம். பவிஷ்ய புராணத்தின் படி இவ்வாறு குறிப்பிடப்பட்ட நூல்கள் மக்களுடைய பயன்பாட்டிற்காக மடங்களிலே வைக்கப்படும். சிவபெருமான்,
இந்துக்கலைக்களஞ்சியம்

விஷ்ணு, சூரியன் ஆகிய கடவுளர்க்கான கோவில்களிலே மக்கள் வாசிப்பதற்காக நூல்களை ஒழுங்குபடுத்தி வைப்பார்கள். பசுக்கள், நிலம், பொன் ஆகியவற்றைத் தானம் செய்வதால் ஏற்படும் புண்ணியத்தைப் பெறுவர் எனப் பவிஷ்ய புராணம் கூறும்.
கல்வி புகட்டுதல், வித்யா தானம் எனவும், உணவு வழங்குதல் அன்னதானம் எனவும் கன்னியை வரனுக்கு அளித்தல் கன்யா தானம் எனவும் பலவிதமான தானங்கள் கூறப்படுகின்றன. எத்தகைய தானம் வழங்கினாலும் அது ஏற்கனவே குறிப்பிட்டாவாறு, தக்கவாறு தக்காருக்கு வழங்குதலே சிறந்த தானமாகக் கருதப்படும். சிலநூல்களிலே 32 வகையான அறங்கள் (இங்கு கொடைகள்) கூறப்படுகின்றன. இந்த வகையிலே முதலாவதாக உணவு வழங்குதல் - அன்னதானமும், அடுத்த படியாக பசுக்களுக்கு இரை - புல் போன்றவை வழங்குதலும் கூறப்படுகின்றன. இவற்றின் பின்னரே நந்தவனம் அமைத்தல், தரும சாலைகள் அமைத்தல், நீர்நிலைகள், குளங்கள் முதலியன அமைத்தல், தண்ணிர்ப் பந்தல் அமைத்தல் முதலியன இடம் பெற்றுள்ளன.
காஞ்சி புரத்தில் அம்பாள் இந்த தர்மங்களையெல்லாம் நடத்தி உயிர்களுக்கு குறிப்பாக மனிதருக்கு வழிகாட்டுகிறாள். காஞ்சி காமாகூழி அம்பாள் கோவிலில் அன்ன பூரணிக்கு ஒரு சந்நிதி உள்ளது. காமாகூழியே அன்னதானம் மட்டுமன்றி மேற்குறிப்பிட்டவாறு 32 தர்மங்களையும் செய்கிறாள். திருவொற்றியூரில் அம்பாள் தர்ம சம்வர்த்தனியாக அறம் வளர்க்கும் நாயகியாக இலங்குகின்றாள். இங்கு தானம் தர்மம் எனவும் வந்துள்ளது. பொது வழக்கிலும் “தருமம் தாருங்கள்” எனக் கூறுவதுண்டு.
மனுஸ்மிருதியிலே (3.78-80) கிருஹஸ்தாஸ்ரமம் ஏனைய ஆச்சிரமங்களுக்கும் வேறு சில முக்கியமானவற்றிற்கும் உறுதுணையாக இருப்பதால் நன்கு போற்றப்படுகின்றது. கிருஹஸ்தனின் தானம் குறிப்பிடத்தக்கதே.
காலத்தால் முந்திய இந்துசமய முதல் நூலான இருக்குவேதத்திலே சுமார் இருபது தானஸ்துதிப்பாடல்கள் பல்வேறு தானங்களையும் அவற்றை வழங்கும் கொடையாளிகளையும் புகழ்ந்து கூறுகின்றன. (இ. வே, 1.125, 1126, 5.61, 6.47 முதலியன). சுதா பைஜ்ஜவ பல தானங்களை வழங்கினான் எனக் கூறப்படுகின்றது. கொடைகளில் மிக முக்கியமாக பசுக் கொடைகள் கூறப்படுகின்றன. வீடுகள், நிலம், தேர்கள், உணவு முதலியனவும் கொடைகளில் அடங்குவன. வேள்விகளிலும் மற்றும் பல கிரியைகளிலும் தகூழிணையாக வழங்கப்படும் பொருட்கள் பற்றி வேதங்களிலும் பிந்திய காலச் சமய நூல்களிலும் கூறப்படுகின்றன.
தானங்கள் அனைத்திலும் அன்னதானம் மிகச் சிறந்ததாகப் போற்றப்படுகின்றது. இத் தானத்திற்குரிய தனிச்சிறப்பு பிற தானங்களுக்கு இல்லை. இத் தானத்தாலேதான் ஒருவரை
271

Page 248
முற்றாகத் திருப்திப்படுத்த முடியும். பணம், பொன் ஆடை, நிலம், வீடு முதலியவற்றுள் ஒன்றையோ பலவற்றையோ கொடுத்தாலும் ஒருவர் பொதுவாகத் திருப்தியடையமாட்டார். மேலும் அதிகம் வேண்டுமென்றே கூறுவர். ஆனால் வயிராற நன்கு ஒருவர் சாப்பிட்டு விட்டால் “திருப்தியடைகிறேன்” எனக் கூறுவார். ஒருவன் தான் பெற்ற கொடையினாலே பூரணமான திருப்தியடையும்போதுதான் கொடையாளிக்குக் கொடையின் உண்மையான பலன் கிட்டும். உயிருள்ள உடம்பினைப் போஷித்துக் காப்பாற்ற உணவு மிக அவசியமே. இதனால் தான் “உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோர்’ எனப் போற்றப்படுகின்றனர். மக்களின் பசிப்பிணி போக்கும் அக்ஷய பாத்திரம் பற்றி மணிமேகலை சிறப்பித்துக் கூறுகின்றது. ஒருவன் எப்பொழுதும் கொடுக்கிறவனாக இருக்க வேண்டும். கொடையைப் பெறுகிறவனாக இருக்கக் கூடாதெனவும் கூறப்படுகின்றது. தமிழிலே ஈவது அறம்', 'ஈவது விலக்கேல் என்பவற்றுடன் ஏற்பது இகழ்ச்சி எனவும் கூறப்பட்டிருப்பது கவனித்தற்பாலது.
தமிழிலே சிலப்பதிகார முடிவிலே வரும் அறிவுரைகளிலே
தானம் செய்மின் தவம் பல தாங்குமின்’ எனவும் திருமந்திரத்திலே,
"ஆர்க்கும் இடுமின் அவரிவர் என்னன்மின் பார்ந்திருந்துண்மின் பழம் பொருள் போற்றன்மின் வேட்கையுடையீர் விரைந்தொல்லை உண்ணன்மின் காக்கை கரைந்துண்ணும் காலம் அறிமினே'
எனவும் வருவன தானத்தின் சிறப்பையும் அதை எவரும், எவருக்கும், எப்போதும் செய்யலாம் என்பதையும் காட்டுவன.
இவ்வாறு தானத்தின் சிறப்புகள் பற்றி வடமொழியிலும் தமிழிலுமுள்ள நூல்கள் எடுத்துக் கூறுவன. தன்னலமற்ற தானம் செய்து அழியாப் புகழ் பெற்ற சில சான்றோரையும் குறிப்பிடுவது பொருத்தமாகும். சிபி மன்னன், நந்திதேவன், கர்ணன், இயற்பகை நாயனார், இளையான் குடிமாறன் நாயனார், பாரி வள்ளல், தன்னுடைய கண்ணையே தானம் செய்து இக் காலத்தில் கண் தானத்திற்கு முன்னோடியாக விளங்கும் கண்ணப்ப நாயனார், சடையப்ப வள்ளல் முதலிய பலரைக் குறிப்பிடலாம். மேலும் அண்மைக் காலத்திலே வாழ்ந்த தமிழகத்தைச் சேர்ந்த ராஜா சேர், அண்ணாமலைச் செட்டியார், காரைக்குடி அழகப்பாச் செட்டியார், இலங்கையைச் சேர்ந்த சேர் பொன். இராமநாதன் போன்ற வள்ளல்களும் குறிப்பிடற்பாலர். இவர்களுடைய கொடைகள் குறிப்பாக கல்வி அபிவிருத்திக்கு நன்கு உதவியுள்ளன.
சமகாலத்தலே மனித உறுப்புகளைக் குறிப்பாகக் கண்களைத் தானம் செய்தல், இரத்த தானம் முதலியன குறிப்பிடற்பாலன.
தானம் இந்து சமயம், பெளத்தம், சமணம் முதலிய தென்னாசிய சமயங்களில் மட்டுமன்றி கிறிஸ்தவம், இஸ்லாம் சமயங்களிலும் போற்றப்படுகின்றது. எனவே உலக
சமயங்களுக்கும் பொதுவானதாக இது விளங்குகின்றது.
(வி சி)
2f2
 

திக்குUாகைர்கள்
இந்து சமயத்தின் திசைக் கடவுளரே திக்குப் பாலகர் ஆவர். எட்டுத் திசையிலும் எட்டுக் கடவுளர் உள்ளனர் என்று இந்து சமய நூல்கள் கூறுகின்றன. இவர்கள் திசை ஒவ்வொன்றைக் காத்து வருவதால் திக்குப் பாலகர்கள் என்று குறிப்பிடப்படுகின்றனர். கோயிலின் விமானப் பகுதியில் (கருவறையின் மேல் அமைக்கப்படும் பகுதி) திக்குப் பாலகர்களின் உருவம் அமைக்கப்படுகிறது. எட்டுத் திசைகளின் காவலராக இந்திரன், அக்னி, எமன், நிருதி, வருணன், வாயு, குபேரன், ஈசானர் ஆகியோர் விளங்குகின்றனர்.
இந்திரன்
கிழக்குத் திசைக் கடவுள் இந்திரன். இந்திரனைப் பற்றி இருக்கு வேதம், சதபதப் பிராமணம் ஆகியன குறிப்பிடுகின்றன. இந்திரனின் தோற்றம் பற்றிய ஒர் முழுமையான வர்ணனை இருக்கு வேதத்தில் இடம்பெற்றுள்ளது. இந்திரனுக்கு இரண்டு கண்களும், இரண்டு கைகளும், தலையில் மணி மகுடம், காதுகளில் குண்டலங்கள், மாலை, கேயூரம் ஆகியன உடலை அழகு செய்கின்றன. அவன் அமர்ந்த அல்லது நின்ற நிலையில் உள்ளான் என இருக்கு வேதம் வர்ணிக்கிறது. புராணங்கள் பாற்கடலைக் கடைந்தபோது வெளிப்பட்ட ஐராவதம் இந்திரனின் வாகனமாக அமைந்துள்ளது. இந்திரனின் இடது பக்கம் இந்திராணி அமர்ந்திருப்பார். நான்கு கரங்களுடன் காணப்படும்போது முன்னிரு கைகளில் அபயம், வரதம் ஆகிய முத்திரைகள் இருக்கும். பின்னிரு கைகளில் அங்குசம், வச்சிரம் போன்றவை இருக்கும். சில சமயங்களில் அக்கமாலை, கமண்டலம் போன்றவைகளும் சடா மகுடம், முப்புரி நூல் முதலியனவும் காணப்படும் எனக் கூறுகின்றன. அருச்சுனனின் தந்தையாகிய இந்திரன், கெளதமன் என்ற முனிவரின் பத்தினியாகிய அகல்யாவை ஏமாற்றியதால் உடல் முழுவதும் 1000 கண்கள் பெற்றான். சிலப்பதிகாரம், இந்திரனைப் பற்றியும் அவனுக்கு எடுக்கப்படும் இந்திரவிழா பற்றியும் பேசுகின்றது. ஆண்டுதோறும் இந்திரவிழா காவிரிப்பூம்பட்டினத்தில் 25 நாட்கள் நடைபெற்றன. தமிழின் ஐந்திணை மரபில் இந்திரன் மருத நிலக் கடவுளாகக் கொள்ளப்படுகிறான் என்பது குறிப்பிடத்தக்கது.
அக் கினி
வேத காலத்தில் விளங்கிய கடவுளரில் குறிப்பிடத்தக்க ஓர் தெய்வமாக அக்கினி விளங்கினான். இவன் தென் மேற்குக்கு அதிபதி, பூமியில் நெருப்பாகவும், வானில் மின்னலாகவும், சூரியனின் ஒளியாகவும் இருக்கிறான். நெருப்பின் தெய்வமான இவனுக்கு இரண்டு தலைகள், நான்கு கொம்புகள், மூன்று கண்கள், ஏழு கைகள் போன்றவை உள்ளன என்று வேதங்கள் கூறுகின்றன. பிற்காலத்தில் கார்த்திகேயனின் தந்தையாகவும், திக்குபாலகராகவும் மாற்றப்பட்டான். இவரின் மனைவியின் பெயர் சுவாகா. கருமையான நிறம் கொண்ட இவனது தலையில் நெருப்புச்சுவாலையுடன் கூடிய மகுடமும் காணப்படுகிறது. அக்கினியின் வண்டியில் சிவப்பு நிறமான குதிரைகளும், காற்றுச் சக்கரங்களும் உள்ளதாகக் கூறப்படுகிறது. ஆட்டுக்
இந்துக்கலைக்களஞ்சியம்

Page 249
கடாவே இவனது வாகனமாகக் கொள்ளப்படுகிறது. ஆட்டுக் கடாவில் அமர்ந்த வண்ணம் அல்லது கடாவுக்கு முன் நின்ற வண்ணம் இவன் சித்திரிக்கப்படுகின்றான். ஆகமங்கள் அக்கினியின் உருவ அமைதியைப் பின்வருமாறு கூறுகின்றன.
சிவப்பு நிறம், நான்கு கரங்கள், மூன்று கண்கள், தலையில் நெருப்பு, பிரபா மண்டலம் ஆகியன இருக்கும். ஆட்டின் மீது அமர்ந்திருக்கும் இவனது முன்னிருகைகளும் அபய, வரதமாகவும் பின் கைகளில் பாசமும், சக்தியும் காணப்படுவதாகக் கூறுகின்றன.
எ ம ன்
எமனும் வேத காலத்தைச் சார்ந்தவன். தெற்குத் திசையின் தலைவன். விவாசுத்து, சராயூ என்பவர்களுக்கு மகனாகப் பிறந்தவன். இறப்பிற்குக் கடவுளாக இருப்பவன். நான்கு கண்கள் உள்ள இரண்டு நாய்களை இவன் வைத்திருப்பான். பாவம் செய்தவர்களுக்கும், தர்மம் செய்தவர்களுக்கும் அவர்களின் செயல்களின்படி தீர்ப்பு வழங்குகின்ற காரணத்தால் தர்மராசா என்ற பெயரைப் பெற்றுள்ளான். கறுப்பு நிறத்தனாய், நெருப்புப் போன்ற கண்களுடனும், கோரைப் பற்களுடனும் காணப்படுவான். தலையிற் கீர்த்தி மகுடம் காணப்படும். எருமையின் மேல் அமர்ந்திருப்பான். இரண்டு கைகளில் கத்தி, கேடயம் அல்லது பாசம் இருக்கும். எமனுக்கு இரண்டு பக்கங்களிலும் மிருத்தியு சம்மிதா ஆகியோர் இருப்பர், இவருக்கு அருகில் சாமரம் வீசும் பெண்களும் இருப்பர்.
சித்திரகுப்தன் இவனது வாயிற் காவலன், எமனைச் சுற்றிலும் தேவர்கள் அசுரர்கள் காணப்படுவார்கள். இவன் நான்கு கைகளுடன் காணப்பட்டால் அக் கைகளில் கத்தி, கேடயம், திரிசூலம், அட்சமாலை ஆகியவற்றைக் கொண்டிருப்பான்.
நிருதி
தென்மேற்குக் கடவுள் நிருத்யு; இவனைப் பற்றிய குறிப்புகள் வேதத்தில் உள்ளன. இவன் சிம்மவாகனத்தில் அமர்ந்திருப்பவன். விஷ்ணுதர்மோத்திரம் இவனது வாகனம் கழுதை என்று கூறுகிறது. அச்சம் தரும் தோற்றமுள்ள இவனைச் சுற்றி அசுரர்களும் தேவ கன்னியர்களும் இருப்பர். இரண்டு கைகளில் கத்தியும், கேடயமும் வைத்திருப்பான். இவனுக்கு நான்கு அழகான மனைவியர் உண்டு என்று காட்டப்பட்டுள்ளது.
வருணன்
வருணன் மேற்குத் திசைத் தலைவன். மழை, தண்ணீர் ஆகியவற்றின் தலைவன். வேத காலக் கடவுளரில் ஒருவனான வருணன் வெண்மையான நிறம் உடையவனாகவும் மீன் அல்லது முதலையின் மீது நிற்பவனாகவும் கூறப்பட்டுள்ளான். இரண்டு கைகளுடன் காணப்படின் வரத முத்திரையும், பாசமும் இருக்கும். கரங்கள் நான்காக இருப்பின் வரத முத்திரை ஒரு கையிலும் ஏனைய மூன்று கரங்களிலும் பாசம், பாம்பு, கமண்டலம் ஆகியனவும் இருக்கும்.
இந்துக்கலைக்களஞ்சியம்

விஷ்ணு தர்மோத்திரத்தில் ஏழு அன்னப்பறவைகள் பூட்டப்பட்ட தேரில் இவன் அமர்ந்திருப்பான் என்றும், வைடூரியத்தின் நிறமுடைய இவன் வெண்மையான கற்கள் பதித்த ஆபரணங்களை அணிந்துள்ளான் என்றும் கூறப்படுகின்றது. தலையின் மேல் வெண்கொற்றக் குடையும், மீன் கொடியும் இருக்கும். நான்கு கைகளில் பதுமம், பாசம், சங்கு, இரத்த பத்திரா ஆகியன இருக்கும். கங்கையும், ஜமுனையும் அருகில் இருப்பர். என்று இந்நூல் கூறுகிறது.
Gôl (Tu4
வேத காலத்தில் முக்கியமான கடவுளாகக் காட்டப்படவில்லை. இவன் வடமேற்குத் திசையின் அதிபதி. காற்றின் தெய்வமாக இருப்பவன். மகாபாரதத்தில் பீமனின் தந்தையாகக் கூறப்படுகிறான். இவன் கருமையான தோற்றமும், நான்கு கரங்களும் கொண்டவராகக் கற்பிக்கப்படுகிறான். வலக்கையில் கொடி அல்லது அங்குசம், இடக்கையில் தடி வைத்திருப்பான். இரண்டு கைகள் இருப்பின் சக்கரம், கொடி ஆகியன இருக்கும். இடப்பாகத்தில் மனைவி அமர்ந்திருப்பாள் என்று விஷ்ணு தருமோத்திரம் அவனது உருவத்தை வர்ணிக்கிறது.
குபேரன்
வடக்குத்திசைக்கு அதிபதி. குபேரனுக்கு தனதா என்ற பெயரும் உண்டு. வராக புராணத்தில் பிரம்மன் உலகத்தைத் தோற்றுவித்த போது பெரிய சூறாவளிக் காற்று உண்டாகி, சுண்ணாம்புக்கல் தோன்றியது. பின்னர் இக் கற்கள் எல்லாம் ஒன்றாகத் திரண்டு குபேரனாக அதாவது செல்வத்திற்கு அதிபதியாக மாறின என்று கூறுகிறது.
பெளத்த இலக்கியங்களும் செல்வத்தின் தலைவனாகக் குபேரனைக் குறிக்கின்றன. மேலும் இயக்கர்களின் தலைவன் என்றும் ஆரத்தியின் கணவன் என்றும் கூறுகின்றன. தங்கத்தின் நிறத்தை ஒத்த இவன் வெள்ளைத் துணிகளை அணிந்திருப்பான். இரண்டு அல்லது நான்கு கைகள் இருக்கும். இரண்டு கைகள் இருந்தால் வரதமும், அபயமும் காணப்படும். கரங்கள் நான்காக இருந்தால் சக்தியும், கதையும் இரு கரங்களிலும் மற்றைய இரு கரங்கள் தன் மனைவியர் இருவரையும் அணைத்த வண்ணமும் காணப்படும். மீசை, கோரப்பற்களுடனும் காட்டப்பட்டுள்ள இவருக்கு வாகனம் செம்மறி ஆடு. குபேரனின் வாகனம் யானை என்றும் கருத்துத் தெரிவிக்கப்படுகிறது.
নিF gF IT 60া fr
வடகிழக்குக் கடவுள். மகாதேவன் அல்லது சிவனின் மறு உருவமாகக் கருதப்படுகிறான். இவனுக்கு மூன்று கண்களும் புலித்தோல் ஆடையும், தலையில் சடாமகுடமும், மார்பில் முப்புரிநூலும் காணப்படும். தலையில் சந்திரனும் பின்னிரு கைகளில் திரிசூலம் கபாலம் ஆகியனவும் முன்னிரு கைகளில் அபயம், வரதம் ஆகிய முத்திரைகளும் இருக்கும். வீணை வாசிப்பது போன்ற நிலையிலும் காணப்படுவான். வெண்மையான எருதின் மீது அமர்ந்திருப்பான். நிநி)
213

Page 250
தியாகராஜ சுவாமிகள்
நெடுங்கால மரபினையுடைய கர்நாடக இசை வரலாற்றிலே தியாகராஜ சுவாமிகள் மிக முக்கியமான இடத்தினை வகிக்கின்றார். கி. பி. 1750-1850 வரையுள்ள காலம் கர்நாடக இசையின் பொற்காலம் என விதந்து கூறப்படும். இக்காலப் பகுதியிலேதான் கர்நாடக சங்கீதத்தின் மும்மூர்த்திகள் எனப் போற்றப்படும் ஸ்யாமா சாஸ்திரி (1762-1827), தியாகராஜ சுவாமிகள் (1767-1817), முத்துஸ்வாமி தீக்ஷிதர் (1767-1847) ஆகியோரும் கோபால கிருஷ்ண பாரதியார், சின்னையா முதலிய பரதவிற்பன்னராகிய தஞ்சை நால்வரும், சுவாதித் திருநாள் மஹாராஜவும் வேறு சில பிரபல இசைக் கலைஞரும் வாழ்ந்தனர். இவர்களிலே தியாகராஜர் கர்நாடக இசைக்குப் புதிய உத்வேகமும், பரிமாணமும், செழுமையும், ஆக்கபூர்வமான பிற தொண்டுகளும் செய்து கர்நாடக இசை உலகிலும் பொதுவான இசையுலகிலும் தனக்கொரு சிறந்த இடத்தினை ஏற்படுத்தியவர். இவர் ஒரு பெரிய இசை மேதை. லக்ஷண கிரந்தங்களிலே விரவிக் கிடந்த இசை அம்சங்களுக்கு லக்ஷய ரீதியிலே ஒப்பற்ற இசை உருவங்களை (பாடல்களை) உருவாக்கியவர். ஒப்பற்ற வாக்கேயகாரர். வாய்ப்பாட்டுக் கலைஞர். வைணிக வித்துவான். பரதமும் ஓரளவு தெரிந்திருந்தார். இவரின் இசை உருப்படிகளே இவற்றுக்குச் சிறந்த சான்றுகளாம். இவர் ஒர் அருட்கவி.
தமிழகத்திலுள்ள சமய கலாகேந்திரங்களிலொன்றான திருவாரூரில் இவர் பிறந்தார். திருவையாற்றிலே நீண்டகாலம் வாழ்ந்தவர். தெலுங்கினைத் தாய் மொழியாகக் கொண்ட அந்தணர் குடும்பத்தினைச் சேர்ந்தவர்.
தமிழ் நாட்டிலே பிறந்து வளர்ந்து நீண்டகாலம் வாழ்ந்தவராயினும் தமிழில் ஒர் இசைப் பாடலாவது இயற்றிலர். பெரும்பாலான இசைப் பாடல்களைத் தாய் மொழியான தெலுங்கிலும் சிறு தொகையினைச் சமஸ்கிருதத்திலும் இவர் இயற்றியுள்ளார்.
இவர் பிரபல இசைக் குடும்பத்திலே பிறந்தவர். இவரின் தாய் வழிப் பாட்டனார் வீணை காளஹஸ்தி அய்யா ஆவர். இவருடைய தகப்பனாகிய இராமப் பிரமம் இராமயணப் பிரசங்கங்கள் செய்வதில் திறமையுடையவர். தஞ்சாவூரிலே ஆட்சி செய்த துளஜாதி மன்னரிடமிருந்து சில மானியங்கள் பெற்றிருந்தார். இவருடைய தாயாரான சீதாம்மா இவரின் குணாதிசயங்களை உருவாக்குவதில் பெரும்பங்கு ஆற்றினார். தியாகராஜர் “சீதம்மமாயம்ம, பூரீராமுடு மாதண்(ட்)ரி” என்ற வசந்த ராகக் கிருதியிலே பெற்றோரை நினைவு கூருகிறார்.
தந்தையார் இவருக்கு இளம் வயதிலேயே இராம தாரக மந்திரத்தை உபதேசித்தார். தந்தை பகவானுக்கு ஆராதனை செய்யும் வேளைகளிலே மகன் அவருக்கு உதவி செய்து வந்தார். எனவே இளம் பிராயத்திலிருந்தே பெரிய இராம பக்தராக விளங்கி வந்தார். சம காலத்திலே வாழ்ந்த பிரபல இசைக்கலைஞராகிய
214
 

ஸொண்டி வேங்கடரமணய்யாவிடம் குரு குலவாசம் செய்தார். இசையினை நன்கு கற்றார்.
இவர் வடமொழியிலுள்ள வேதங்கள் குறிப்பாக உபநிஷதங்கள், இதிஹாஸங்கள், புராணங்கள் குறிப்பாகப் பாகவதம், இசை, நாட்டிய நூல்கள் முதலியனவற்றை நன்கு கற்றவர். தமிழகத்திலே பிறந்து வளர்ந்து வாழ்ந்தமையாலே சமகாலத் தமிழகப் பண்பாடு - குறிப்பாகச் சமய, இசை மரபுகளை நன்கு அறிந்திருந்தார்.
இவரின் பாடல்களைத் தமிழக இசை மரபுப் பின்னணியிலே தான் நன்கு விளங்கிக் கொள்ளலாம். மேலும் இவர் வடக்கே திருப்பதிக்கு அப்பாலே சென்றிலர். இவருடைய நடமாட்டங்கள் தமிழகத்தின் வடபகுதியிலே தான் இருந்தன.
அக் காலத்திலே இறைவனின் நாமசித்தாந்தக் கோட்பாடு பிரபல்யமாக நிலவிற்று. இவருக்குப் பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே தமிழகத்திலே சைவ நாயன்மார்கள், வைணவ ஆழ்வார்கள் இறை பக்தியை நன்கு அழுத்திப் பாடியுள்ளனர்.
தியாகராஜர் திருவாரூர் தியாகரின் (சிவபிரானின்) திருவருளினால் பிறந்தவர் என்று கூறப்படினும், இவர் தலைசிறந்த இராம பக்தர். அதே வேளையிலே சீதாபிராட்டி, அனுமான் போன்றோர் பற்றியும் சிவபிரான், பார்வதி, விநாயகர், முருகன் முதலியோர் பற்றிய கிருதிகள் இயற்றியுள்ளார். ஆனால் கூடுதலான இசை உருப்படிகள் இவரின் இஷ்ட தெய்வமான இராம பிரானைப் பற்றியவையே.
தியாகராஜ சுவாமிகள் வால்மீகி இராமாயணம், அத்யாத்ம இராமாயணம் முதலிய இராமாயண நூல்கள் கூறும் இராமரின் கதையை நன்கு கற்றவர். இக் கதையடிப்படையில் குறிப்பாகப் பல்வேறு ராக, தாள, அமைப்புகளைக் கொண்ட வெகு நேர்த்தியான இசைப் பாடல்களை இயற்றிச் சமய உலகிலும் இசையுலகிலும் பெரிய சாதனை செய்துள்ளார். இதனால் “இராமயண வாக்கேயகாரர்’ எனவும் இவர் சிறப்பித்துக் கூறப்படுகின்றார். வால்மீகியை ஓரிடத்திலே இவர் கவீன எனக் குறிப்பிட்டுள்ளார். இவர் இசைப் பாடல்களை நன்கு இயற்றியுள்ள “திருவையாற்று இசைக்கவி’ எனச் சிறப்பாகவும் அழைக்கப்படுகிறார். “பலகீர்த்தனைகள் மெட்டு அமைக்கப்பட்ட கவிதை” போன்று காணப்படுகின்றன.
இவர் உஞ்சவிருத்தி மூலம் எளிமையான வாழ்க்கை நடத்தியவர். இறைவனையன்றி மனிதரை எவ்வகையிலும் பாடாத பக்தர். இவருக்குப் பெருந் தொகையான சீடர்கள் (மாணவர்கள்) இருந்தனர். அவருடைய சீடர்களும், சீடர்களின் சீடரும் சிறந்த பாடல்கள் இயற்றினர். திறமையாகப் பாடிப் புகழ் பெற்றனர். சீடர்கள் அவர் பாடல்களைப் பாடும்போது அவற்றை எழுதி வைத்தனர். மாணவர்களின் இசை ஞானத்திற்கேற்றவாறு அவர்களை பிரிவுகளாக்கி இசை கற்பித்தார். அவர் பாடும்போது
இந்துக்கலைக்களஞ்சியம்

Page 251
சீடர்கள் தாமே இசை வாத்தியங்களை வாசித்தனர். அவர் பெரும்பாலும் ஒவ்வொரு நாளும் ஒரிரு பாடல்களையாவது இயற்றுவார். "ரீ ஜானகி மனோஹர” எனத் தொடங்கும் ஈசமனோஹரி ராகக் கிருதியைத் தான் அவர் முதன் முதலிலே சீடர்களுக்கு கற்பிப்பது வழக்கம் எனக் கூறப்படுகிறது.
இவரின் சீடர்களில் தஞ்சாவூர் ராமராவ் வயதில் மூத்தவர். நடைமுறையில் இவருக்கு அந்தரங்கச் செயலாளராகப் பணிபுரிந்தார். குருவின் பிரயாணத்திட்டங்களை வகுத்து அவரோடு செல்வார். இதனால் மற்ற சிஷ்யர்கள் இவரைச் சின்னதியாகராஜர் எனக் குறிப்பிடுவதுண்டு. குருவிடம் ஏதாவது சொல்லவேண்டுமாயின் ஏனையோர் ராமராவ் மூலமே கூறுவர். தியாகராஜரைச் சிஷ்யர்கள் பெயர் கூறாது "அய்யர்வாள்' என்றே அழைப்பர்.
தியாகராஜரின் முப்பது பிரபல சீடர்களில் வாலாஜாப் பேட்டை வெங்கடரமண பாகவதரும், மகன், கிருஷ்ண சுவாமி பாகவதரும் நன்கு குறிப்பிடற்பாலர். சுவாமிகளின் இன்னிசைப் பாடல்களைக் காப்பாற்றி மக்களிடையே பரப்பியதன் மூலம் இவர்கள் கர்நாடக இசைக்குப் பெரும்பணி ஆற்றியுள்ளனர். வெங்கடரமண பாகவதர் சமஸ்கிருதம், தெலுங்கு மொழிகளிலே நல்ல தேர்ச்சியுள்ளவர். குருவின் இசைப்பாடல்களையும், இசை நாடகங்களையும் கவனமாகக் குறிப்பெடுத்து வைத்துள்ளார். வாலாஜாப் பேட்டைத் தொகுப்பின் மூலமே இசை உலகம் தியாகராஜரின் “பிரஹ்லாத பக்தி விஜயம்", "நௌகா சரித்திரம்”, “சீதாராம விஜயம்” ஆகிய மூன்று இசை நாடகங்களை அறிய முடிந்தது. இவற்றுள் முதலிரண்டின் சாஹித்தியம் பிரசுரிக்கப்பட்டுள்ளது. மற்றையதன் சாஹித்தியம் இதுவரை கிடைக்கவில்லை.வெங்கடரமண பாகவதரும் மகனும் தியாகராஜரைப் பற்றி விரிவான வாழ்க்கைக் குறிப்புகளை எழுதிவிட்டுச் சென்றுள்ளனர்.
லாலாஜாப் பேட்டையை விட உமையாள்புரம், தில்லை ஸ்தானம் ஆகியவற்றைச் சேர்ந்த பிரபல சிஷ்யர்களும் இருந்தனர். அவர்களிலே சுந்தர பாகவதர், ராமஐயங்கார் போன்றோரைக் குறிப்பிடலாம்.
தியாகராஜர் வால்மீகியைப் பின்பற்றி இவர் 24,000 இசைப்பாடல்கள் இயற்றினார் எனவும் அவற்றுள் சுமார் 1000 வரையில் கிடைத்துள்ளன எனவும் கூறப்படுகின்றது. ஏற்கனவே குறிப்பிட்டவாறு, இவற்றுட் பெரும்பாலானவை தெலுங்கு மொழியிலும் சிறிய தொகை வடமொழியிலும் உள்ளன. தெலுங்கிலுள்ள பாடல்களிலும் ஆங்காங்கே சமஸ்கிருதச் சொற்களும், சொற்றொடர்களும் காணப்படுகின்றன. சில பாடல்கள்- எடுத்துக் காட்டாக "ஈச பாஹிமாம்” எனத் தொடங்கும் கீர்த்தனையிலே பல்லவி மட்டும் வடமொழியிலும், ஏனைய பகுதிகள் தெலுங்கிலும் உள்ளன. “சிவே பாஹிமாம்” எனத் தொடங்கும் இசைப் பாடலிலே பல்லவி அனுபல்லவி
இந்துக்கலைக்களஞ்சியம்

ஆகியவை வட மொழியிலும், சரணம் தெலுங்கிலும் அமைந்துள்ளன. "ஏலநீதயராது” எனத் தொடங்கும் கீர்த்தனையில் பல்லவி மட்டும் தெலுங்கிலும் அனுபல்லவி, சரணங்கள் வடமொழியிலும் உள்ளன.
இவரின் இசைப்பாடல்கள் கிருதி, கீர்த்தனை எனும் பெயர்களால் அழைக்கப்படுகின்றன. இவற்றைவிட ஏற்கனவே குறிப்பிட்ட மூன்று கேய (இசை) நாடகங்களையும் இவர் இயற்றியுள்ளார். இதனால் இசை நாடக ஆசிரியராகவும் இவர் இலங்குகிறார். கீர்த்தனை, கிருதி எனும் பதங்கள் வேறுபாடின்றிப் பயன்படுத்தப்படினும் இரண்டிற்குமிடையில் வேறுபாடுகள் உண்டு. கிருதிக்கு மிக முழுமையான வடிவம் அளித்த சுவாமிகள் ‘ஸொகஸப்கா மிருதங்க தாளமு எனத் தொடங்கும் பாடலிலே கிருதிக்குப் பின்வருமாறு வடமொழியிலே வரைவிலக்கணம் கூறியுள்ளார். அதாவது, யதிவிச்ரமஸத் பக்திவி, ரதித்ராஷாரஸ, நவரஸயுதகிருதி (எதுகை, விஸ்ரமம் (இடைஒய்வு), உத்தமபக்தி, பதவாக்கியங்கள் முடிவில் விஸ்ராந்தி, திராட்சைப் பழத்தின் சுவை, நவரசங்கள் கூடியதே கிருதி) என்பதாகும். இவ்வரைவிலக்கணத்தை நோக்கும்போது, இசை நயம் மட்டுமன்றி, இலக்கிய நயம், பக்திரசம் முதலியன கூடிய இசைப்பாடலாகவே கிருதி விளங்குகின்றது. கீர்த்தனைக்குரிய பிரதான அம்சங்கள் சிலவும் இதிலே காணப்படுகின்றன. எனவே இரு சொற்களையும் ஒரே கருத்திலே பயன்படுத்தலாம். இவருடைய பாடல்கள் இசைக்களஞ்சியங்களாகவும் ஆத்மஞானக் களஞ்சியங்களாகவும் இலங்குகின்றன. இவருடைய இசைப் பாடல்கள் பல திறப்பட்டவை. திராட்சைக்கனி போன்று முற்றிலும் சுவையானவை. உபநிஷதக்கருத்துக்களை மிகக்கவர்ச்சிகரமான இசை வடிவத்திலே இவர் வெளிப்படுத்தியுள்ளார். கீதம், வாத்தியம், நடனம் மூன்றும் சேர்ந்ததே கங்கீதம் என்ற சாஸ்திர ரீதியான கருத்துக்குச் சுவாமிகள் ஒர் எடுத்துக்காட்டாகவும் இலங்கினார்.
இவருடைய இசை உருப்படிகளிலே தாது, மாது ஆகியவற்றின் எழிலையும், சிறப்புகளையும் காணலாம். இவற்றைச் சலிக்காது பல தடவைகள் தொடர்ந்து கேட்டுக் கொண்டிருக்கலாம். இப் பாடல்கள் பல கன (பாரிய) இராகங்களில் அமைந்துள்ளன.
ராகலக்ஷணங்கள், இசைப் பாடல்கள் இயற்றுதற்கான மார்க்கத்தை இவர் காட்டியுள்ளமையால் மார்க்கதரிசி எனவும் இவர் அழைக்கப்படுகிறார். இசைப் பாடல்களிலும், இசை நாடகங்களிலும் இவர் கிராமிய / நாட்டுப் புற இசையம்சங்களையும் நிலைக்கச் செய்துள்ளார். க்ஷேத்திரக் கிருதிகள், திவ்விய நாமகீர்த்தனைகள், உற்சவ சம்பிரதாயக் கீர்த்தனைகள், பஞ்சரத்தினக் கீர்த்தனைகள் எனப் பலவகையான இசைப் பாடல்களை இவர் இயற்றியுள்ளார். ராகவிஸ்தாரம் செய்வதற்குக் கிருதிகளில் அடுக்கடுக்கான சங்கதிகள் அமைத்த பெருமை இவரைச் சாரும்.
2f5

Page 252
இசைக்குப் பக்தி அவசியம் என்பதை இவர் நன்கு வலியுறுத்தியுள்ளார். சங்கீதஜ்ஞானமு பக்தி விநா சன்மார்க்கமுகலதே மனஸா (சங்கீத ஞானமும் பக்தியுமின்றி உலகில் நல்வழி உளதா மனமே) எனவும் , 'சங்கீத சாஸ்த்ர ஞானமு சாரூப்ய செளக்யதமே மனஸா (மனமே! சங்கீத சாஸ்திர ஞானம் சாரூப்யம் என்ற சுகத்தை அளிக்கவல்லது) எனவும் ஸ்வரராகஸதாரஸ பக்தி ஸ்வர்க்காபவர்க்க முரா (ஸ்வரம், ராகம் ஆகியவற்றின் அமுத ரசத்துடன் கூடிய பக்தியே சுவர்க்கம், மோக்ஷமாகியவற்றைத் தரவல்லது) எனவும் அவர் கூறியுள்ளமை குறிப்பிடற்பாலது. இசையிலே திளைக்கும் இறைவனை சங்கீதலோல', 'கான லோல’ எனக் குறிப்பிட்டுள்ளார். மும்மூர்த்திகளும் ஏனைய தேவர்களும் நாரதர் முதலிய முனிவர்களும் இசையினாலேயே தத்தம் நிலையினை அடைந்துள்ளனர் எனவும் கூறியுள்ளார். நாதோபாசகராகத் தம்முடைய இஷ்ட தெய்வமான இராமனை மட்டுமன்றிச் சிவபிரான் போன்றோரையும் நாத வடிவமாகவே வழிபாடு செய்தவர். இவர் 96 கோடி ராமநாமஜபம் செய்தவர். இது முடிந்தபின் ராமர் ஏதேனும் ஒரு வடிவத்திலே தோன்றித் தரிசனம் அளித்தார் என்பது ஐதீகம். எனினும் இத்தகைய காட்சியினை கன்னு கொண்டினி' எனத் தொடங்கும் கீர்த்தனத்திலும், அலகல்ல' எனத் தொடங்கும் கீர்த்தனையிலும் காணலாம். நாததனுமனிசம் சங்கரம் எனத் தொடங்கும் கீர்த்தனையிலே சிவபிரானை இவர் நாத வடிவமாக வழிபடுகிறார். இவர் ஒரே ராகத்திலே பல பாடல்களை இயற்றினாலும் அவை ஒவ்வொன்றும் தனித்தனியான அழகுடன் மிளிர்வன. தோடி ராகத்தில் மட்டும் இவர் முப்பது பாடல்கள் இயற்றியுள்ளார்.
இவருடைய “ஜகதாநந்தகாரக” எனத் தொடங்கும் கீர்த்தனை இறைவனைப் பற்றிய புகழ்மாலையாக இறைவன் பெயரிலான அஷ்டோத்தர சதநாமாவளி (108) போலக் காணப்படுகிறது. "ராகம் எனும் அமுதத்தைப் பருகி மலர்ச்சியடைவாய்! அது யாகம், தியாகம், யோகம், போகம் தரவல்லது.” “சதாசிவ சொரூபமான நாதம், பிரணவம், ஸ்வரம் ஆகியவற்றை அறிந்தோரே ஜீவன் முக்தர் ஆவர்' எனப் பலவாறு சுவாமிகள் கூறியுள்ளார்.
சாமவேதத்திலிருந்து தோன்றிய அமுதமயமான இசை விற்பனனராக இறைவன் (இங்கு கிருஷ்ணன்) விளங்குகின்றான். ஸ்வரம், லயம், மூர்ச்சனை ஆகியவற்றில் இறைவன் மிளிர்கிறான் (ஸ்வரலயாதி மூர்ச்சனோல் லஸித). சிவபெருமான் பார்வதிக்கு விளக்கிய ஸ்வரார்ணவம் எனும் சிறந்த இசை நூலைத் தாம் கற்றதாகத் தியாகராஜர் கூறுகிறார். “ஸ்வர ராக சுதாரஸ்” என்ற சங்கராபரணம் கிருதி இதைச் சுட்டுகின்றது. தியாகராஜரின் பாடல்கள் மூலம் முதன் முதலாக அறியப்படும் ராகலக்ஷணங்கள் பற்றி அறிய இந்நூலின் எஞ்சிய பகுதிகள் உதவுகின்றன. இதிலே வரும்,
ஆத்மமத்ய கதாஹ பிராணாஹ
பிரான மத்ய கதோ த்வனிஹறி த்வனி மத்ய கதோ நாதஹ
நாத மத்யே சதா சிவஹ!
216
 

(உடம்பின் நடுவில் உயிர் உயிர் நடுவுள் ஒசை. ஒசை நடுவுள் நாதம். நாதத்துள் சதாசிவம்) எனவரும் செய்யுள் குறிப்பிடற்பாலது.
இவருடைய கீர்த்தனைகளிலே வரும் உவமை, உருவகம், அனுப்பிராசம் போன்ற அணிகள் சிலவற்றைக் குறிப்பிடலாம். எடுத்துக்காட்டுகளாகப் பிள்ளையாரைப் பற்றிய கீர்த்தனை ஒன்றில் அவர் "சங்கரனுடைய ஆகமமாகிய பெருங்கடலில் தோன்றிய சந்திரன், (சங்கராகமவாரிநிதிரஜனிகர)” எனவும், இராமனை "நல்லோர் யாவரினதும் இதயமாகிய கடலில் தோன்றிய சந்திரன் (சகல ஸாஜனஹ்ருதய ஜலதிஸோம)” எனவும் அவர் கூறியிருப்பனவற்றில் வரும் உருவகங்கள் குறிப்பிடத்தக்கன. மேலும் “பொது ஹ்ருத் ஸாரஸாப்ஜபால” "திதிதனய திமிரசூர்ய', 'ஸரவைரிநிசயத்மஸ் ஸுர்ய', "கிங்கர ஜனகணதாபத்ரயதமோமித்ர" எனவரும் பகுதிகளிலுள்ள உருவகங்கள் அனுப்பிராசங்கள் குறிப்பிடற்பாலன. அழகிலே இராமன் கோடி மன்மதர்களுக்குச் சமானமானவன் (மன்மதகோடிஸமான), அம்பாள் தாமரை மலரை போன்ற திருக்கண்களையுடையவள் (சரோஜதலநிபாகூழி). இத்தகைய உவமைகள் பல உள்ளன.
தியாகராஜர் திருமணம் செய்து சீதாலக்ஷமி எனும் மகளைப் பெற்றார். அவள் அகிலாண்டபுரம் குப்புஸ்வாமி ஜயா என்பவரைத் திருமணம் செய்து பஞ்சாகேசய்யா எனும் மகனைப் பெற்றாள். பெரிய பாடகராகிய இம்மகள் இளம் வயதிலே இறந்துவிட்டார்.
தியாகராஜருக்கு பிற்சந்ததியினர் தொடர்ந்து இல்லையாயினும் பல இசை வாரிசுகளும், பக்தர்களும் தொடர்ந்து அவரை நினைவு கூருகின்றனர். இவருடைய இசைப்பாடல்கள் என்றும் இவரை நினைவு கூரச் செய்வன. இவருக்கு அழியாநிலை அளித்துள்ளன. இவர் பழைய, ராகங்களுக்குப் புதிய மெருகு ஊட்டியதுடன் புதிய ராகங்களையும் உருவாக்கியுள்ளார்.
சுவாமிகள் புஷ்ய (தை மாத) பஹPள பஞ்சமி தினத்தன்று ராமப் பிரமத்துடன் ஒன்றுபட்டார். கடைசிநாள் காலையிலே பரமாத்முடு, பரிதாபமு எனத் தொடங்கும் பிரபல பாடல்களைப் பாடிப் பின்னர் சிஷ்யர்களும் பிறரும் சமுகமளித்திருக்க சமாதி நிலை அடைந்தார். இவரின் பூதவுடல் காவிரி ஆற்றங்கரையிலுள்ள இவரின் குருவின் சமாதிக்கருகிலே அடக்கம் செய்யப்பட்டது.
சுவாமிகள் சமாதியடைந்த பின் ஒவ்வோராண்டும் உமையாள்புரம் சிஷ்யர்கள் சமாதிக்குச் சென்று உரிய ஆராதனை செய்து வந்தனர். இதற்குப் பின் 1907 ஆம் ஆண்டிலிருந்து சமாதி உற்சவம் புதிய பாணியில் நடைபெற்றது. மேலும் 1923 இலே பெங்களூர் நாகரத்தினம்மாள் தாம் தேடிய பொருள் கொண்டு நேர்த்தியான ஆலயம் ஒன்றினை சமாதிமேல்
இந்துக்கலைக்களஞ்சியம்

Page 253
அமைப்பித்தார். இது பின்னர் மேலும் சீரமைக்கப்பட்டது.1940ஆம் ஆண்டு தொடக்கம் சுவாமிகளின் வருடாந்த இசை ஆராதனையை மகோற்சவ சபை திருவையாற்றிலே மிகச் சிறப்புடன் அவர் சமாதியடைந்த தினத்தையொட்டி நடத்திவருகின்றது. (ബി.മീ.)
திராவிடப் பிரகாசிகை
இப் பெயரில் திராவிடம் என்பது தமிழ்மொழியைச் சுட்டும்; பிரகாசிகை என்பது விளக்கத்தையுடையது எனப் பொருள்படும். ஆகவே, தமிழ்மொழியிலுள்ள இலக்கிய இலக்கணம் முதலிய நூல்கள் பற்றிய செய்திகளைத் தரும் நூல் இது என்பது பெறப்படும். இந் நூலைத் தமிழ் வரலாறு' என்றும் ஆசிரியர் குறிப்பிடுகிறார். 'திராவிடப் பிரகாசிகை என்னும் தன்னை நேர்தரும் தமிழ் வரலாறு சாற்றுவதனால் என்றும், தமிழ் வரலாறு தகைபெற எடுத்தீண்டு அமைவுறக் கூறுதற்கமர் தந்து என்றும் வரும் பாயிரப் பகுதிகள் இதனை விளக்கும். வடமொழியிலும் வல்லவராகிய இவர் அந் நாளைய சூழலுக்கு ஏற்பத் திராவிடப் பிரகாசிகை என்று பெயர் சூட்டினார் போலும்,
இந்நூலை ஆக்கிய ஆசிரியர் இலங்கை யாழ்ப்பாணப் பகுதியிலுள்ள வடகோவையில் தோன்றிய சபாபதி நாவலர் ஆவர். இவர் பிறந்தது கி. பி. 1844; மறைந்தது 1903, இவர் வேளாள மரபினர். நீர்வேலிச் சங்கரபண்டிதரிடம் வடமொழி தென் மொழிகளைக் கற்று நிறைந்த புலமை பெற்றார். இரு மொழிகளிலும் உள்ள இலக்கிய இலக்கணம், தருக்கம், சித்தாந்தம், வேதாந்தம் ஆகியவற்றில் சிறந்த பயிற்சியுடையவராய்த் திகழ்ந்தார். அவையோர் வியக்கப் பேசும் பேச்சாற்றல் உடையவராய் விளங்கினார். இவருடைய வாழ்வில் பெரும் பகுதியும் தமிழ் நாட்டில் கழிந்தது. திருவாவடுதுறை ஆதீனம் சுப்பிரமணிய தேசிக சுவாமிகள் இவருக்கு நாவலர் என்னும் பட்டம் சூட்டிச் சிறப்பித்தார். இவர் செய்யுளிலும் உரை நடையிலும் இயற்றிய தமிழ் நூல்கள் பல. வடமொழியிலிருந்து மொழி பெயர்த்து ஆக்கிய நூல்களும் உள. எல்லாவற்றினும் மேலாக இவர் இயற்றிய திராவிடப் பிரகாசிகையே தமிழறிஞர் சிந்தனையில் முன்னிற்கிறது.
திராவிடப் பிரகாசிகை நூல் ஐந்து இயல்களாகப் பகுக்கப்பட்டுள்ளது. அவையாவன தமிழின் தெய்வப் பழமை மரபியல், இலக்கண மரபியல், இலக்கிய மரபியல், சாத்திர மரபியல், ஒழிபியல். முதல் இயலில் தமிழ் மொழியின் இயல்பு, தமிழின் தெய்வ மாட்சி, தமிழ் என்னும் பெயர் வந்த காரணம், தமிழ் வழங்கு நிலம், செந்தமிழ் நாடு, வடமொழி தென்மொழி ஒற்றுமை வேற்றுமை முதலியன பற்றி விவரித்துள்ளார்.
இலக்கண மரபியலில் அகத்தியம், தொல்காப்பியம் முதலாகச் சிவஞான முனிவரின் பாயிரவிருத்தி ஈறாக வந்துள்ள இலக்கண நூல் வரலாறு தந்துள்ளார். தொல்காப்பியத்தைக் குறித்து அதன் உரையாசிரியர்களின் திறன் குறித்தும் மிகவும் விரிவாக ஆராய்ந்துள்ளார்.
இந்துக்கலைக்களஞ்சியம்

இலக்கிய மரபியலில் திருமுறை இலக்கியம், சங்க இலக்கியம், காவிய இலக்கியம், புராண இலக்கியம், இதிகாச இலக்கியம், பல்வகைப் பிரபந்த இலக்கியம் எனப் பகுத்து ஆராய்ந்துள்ளார். திருக்குறள் விருத்தியுரையும் இப் பகுதியில் தனிப்படக் கூறத்தக்கன. அருட்பிரகாச வள்ளலார் இராமலிங்க சுவாமிகளின் பாடல்களைத் திருவருட்பா அன்று என மறுக்கிறார். இது அந்நாளில் நடந்த அருட்பா -மருட்பா விவர்தத்தின் விளைவைக் காட்டும்.
சாத்திர மரபியலில் அட்டாதச வித்தை, வைதிக சாத்திரம், வேதாந்த சாத்திரம், ஐக்கியவாத சைவ சாத்திரம், சித்தாந்த சாத்திரம் ஆகியவை விளக்கப்பட்டுள்ளன. சரியை, கிரியை, யோகம், ஞானம் என்னும் நாற்பாதத் தெளிவும் தந்துள்ளார். சிவஞானபோதச் செம்பொருளை மிக விரிவாக விளக்கியுள்ளார்.
ஒழிபியலில் கல்விச் சிறப்பு:கற்பிக்கும் நல்லாசிரியர் இயல்பு நன்மாணாக்கர் இயல்பு, கற்கும் முறை, கற்கும் நூல் முறை, கல்வியறிவின் பயன் என்பவை விளக்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு நூலையும் அதன் பொருள்வகை, ஆசிரியர், தோன்றிய நூலின் பொருட் பாகுபாடு, பிற நூல்களோடுள்ள தொடர்பு என்னும் முறையில் ஆராய்ந்து எழுதியுள்ளார். தமிழ்நூல் மேற்கோள்களோடும் பல இடங்களில் வடமொழி நூல்களிலிருந்தும் மேற்கோள் காட்டியும் விளக்கம் தருவது ஆசிரியரின் இருமொழிப் புலமைக்குச் சான்றாகும். இவருடைய உரைநடை இறையனார் களவியல் பொருளுரை தந்த நக்கீரரின் நற்றமிழ் நடையினையும் சிவஞான முனிவரின் பெருமித நடையினையும் ஒத்து இலங்குகிறது. இடையிடையே சிற்சில சொற்களின் பொருளையும் விளக்கிச் செல்வது ஆசிரியரின் தமிழ் நடையைப் புரிந்து கொள்ள உதவுகிறது. பிறர் கருத்துக்களை எடுத்து மறுத்துரைத்துத் தம் கொள்கையை நிலைநாட்டி உரைக்கும் இடங்களும் பல. பிறர் கூற்றை மறுத்துரைக்கும் இடங்களில் சேனாவரையர் செல்லும் நெறியில், மாறுபடும் பழிப்புரையேயன்றி நியாயவுரை ஆகாமை தெற்றென வுணர்க', 'சழக்குரையே யாமன்றி வழக்குரையாகாதென்க', சிறுமகார்க்கும் நகையினை நிறுத்தும் என்க' என்றாற் போன்று கூறிச் செல்கின்றார்.
சென்ற நூற்றாண்டின் இறுதியில் தோன்றிய இந்நூலுள் அதுவரை வெளிவந்த நூல்களை ஆதாரமாகக் கொண்டு இவ் வரலாற்று நூலை ஆசிரியர் படைத்துள்ளார். தமிழ் வரலாற்று நூல்களுள் இது முற்பட வைத்துப் போற்றத்தக்க பெருநூல் ஆகும்.
இந்நூலின் முதற்பதிப்பு ஆசிரியர் வாழ்ந்த காலத்திலேயே கி. பி. 1899 இல் வெளிவந்தது. பின்னர் இதன் இரண்டாம் பதிப்பை நூலாசிரியரின் மருகர் ஆ. சிவகுருநாதபிள்ளை 1927 இல் வெளியிட்டார். இதற்குப் பின் மூன்றாம் பதிப்பை 1960 இல்
277

Page 254
சைவ சித்தாந்த நூற்பதிப்பு கழகத்தார் வெளியிட்டுள்ளனர். இ
பதிப்பில் எளிதில் பொருள் விளங்காத சொற்றொடர்களை பிரித்தும், மேற்கோட்பாக்களைச் சீர்பிரித்து அடிவரையறை தோன்றும் படி அமைத்தும் தந்துள்ளனர். முதற்கண்ணுள்ள பொருளட்டவணை நூற்பொருள்களை எளிதில் கண்டுகொள்ளத் துணை செய்கிறது. (மு. ச.
திரிக சாத்திரம் /திரிகம்
இந்திய துணைக் கண்டத்தில் எழுச்சி பெற்ற வைதிக அவைதிக தரிசனங்களுள் வைதிக தரிசனங்களில் ஒன்றான சைவமானது மிகத் தொன்மை வாய்ந்ததாகவும் குறிப்பிடத்தக்கதொரு நெறியாகவும் பரந்துபட்ட தொன்றாகவும் நிலவி வந்தமையைக் காண்கிறோம். எண்ணுக் கணக்கற்ற சைவப்பிரிவுகள் சைவ சமயத்தில் நிலவி வந்த போதிலும் இன்னும் வட இந்தியாவில் நிலைத்து நிற்கின்ற காஷ்மீர சைவம் குறிப்பாகக் கன்னடத்தில் நிலவுகின்ற வீரசைவம், தமிழகத்திலும் இலங்கையின் குறிப்பிடத்தக்க பாகங்களிலும் விளங்குகின்ற சைவசித்தாந்தம் என்பன சுட்டத்தக்கனவாக அமைகின்றன.
காஷ்மீரத்தில் நிலைத்த காஷ்மீர சைவமதமானது பெரும்பாலும் த்ரிக சாஸ்திரமாகவே அழைக்கப்படுகிறது எனினும் த்ரிக தரிசனமானது நடைமுறையில் காஷ்மீர் சைவத்தின் ஒரு பகுதியே தவிர அதனை முழுமையாகக் கொள்ள முடியாது எனலாம். காஷ்மீரதேசத்தில் வாழ்ந்த அறிஞர் பெருமக்களால் தமது நூல்களின் வாயிலாகப் பரப்பப்பட்ட காரணத்தினால் காஷ்மீர சைவம் என வழங்கப்படுவதாகவும் த்ரிக சாஸ்திரம் என்பதே இத்தத்துவ நெறிக்கு உரித்தான பெய எனவும் விளக்கமளிக்கின்ற பெ. திருஞானசம்பந்தன் அவர்கள் சற்று மாறுபட்ட கருத்தைத் தருவதும் சிந்தனைக்குரிய விடயமாகின்றது. இக்கருத்தின் சாயலிலேயே பிரத்திய பிஞ்ஞா ஹ்ருதயம் என்ற நூலை எழுதிய சேமராஜரும் காஷ்மீரத்தில் நிலவும் த்ரிகம் எனப்படும் காஷ்மீர சைவம் எனக் குறிப்பிட்டிருப்பது அறியக்கிடக்கின்றது.
கைலையங்கிரியில் வீற்றிருக்கும் பூரீகண்ட சிவனின் பணிப்பிற்கமைய திரியம்பகர் என்பார் பரப்பிய அபேதசைவடே த்ரிகம் எனப்படும் அத்வைத சைவமாகும். இத் த்ரிக் சாஸ்திரமானது ஆகம சாஸ்திரம், ஸ்பந்தசாஸ்திரம், பிரத்ய பிஜ்ஞாசாஸ்திரம் 6T 6UT முப்பெரும் பிரிவுகளாக பிரிக்கப்படுகின்றது. ஆகமம் என்ற சொல் வழிவழியாக மரபுபற்றி வந்தவற்றைக் குறித்து நிற்கிறது. ரீகண்ட சிவனிடமிருந்து தோன்றி வழிவழியாக வந்தமையால் ஆகL சாஸ்திரங்கள் என அழைக்கப்படுகின்றன. இச் சாஸ்திரங்களுள் குறிப்பிடத்தக்கவையாக விளங்குகின்ற மாலினி விஜயம் ஸ்வச்சந்தம், விஞ்ஞான பைரவம், உச்சுஸ்ம பைரவம், ஆனந்த பைரவம், பிருகேந்திரம் மதங்கம், நேத்ரம், நைசுவாசம் சுவாயம்புவம், ருத்ரயாமளம் போன்றவற்றுள் பெரும்பாலானவை த்ரிக தரிசனம் தோன்றுவதற்கு முன்பே இருந்ததற்கான குறிப்புகள் காணப்படுகின்றன.
218
 

T
அத்வைத சைவத்திற்குச் சிறந்த பிரமான நூலாகக் கருதப்படும் மாலினி விஜயம் த்வைதக் கருத்துக்களைக் கொண்டிருந்த போதிலும் காலப்போக்கில் அத்வைத முறையிலேயே விளக்கமளிக்கப்பட்டது என்பது ஜகதீச சந்திரசட்டர்ஜி அவர்களின் கருத்தாகும். ஸ்வச்சந்தம், நேத்ரம், விஞ்ஞான பைரவம், மதங்கம் ஆகிய தந்திரங்களுக்கு அத்வைத பரமான உரைகள் எழுதப்படும் வரை அத்வைத பரமான சைவ நூல்களாகவே வழங்கி வந்திருப்பதை ஜகதீச சந்திரசட்டர்ஜி அவர்கள் காஷ்மீரசைவம் பற்றிய தனது நூலிற் குறிப்பிடத் தவறவில்லை. சிவசூத்திரங்கள் இப்பிரிவில் முக்கியமான முதல் நூல்களாக விளங்குகின்றன. சிவனால் அருளப்பட்டமையால் இவை இப்பெயரைப் பெறுகின்றன. அத்வைத பரமாக சிவரஹஸ்யா மக சாஸ்திர சங்கிரகம் எனப் பின்நாளில் அழைக்கப்பட்ட இந்நூலை உலகுக்குப் பரப்புமாறு சிவன் வசுகுப்தரின் கனவில் தோன்றிப் பணித்ததாகக் காணப்படும் செய்திகளின்படி இது காஷ்மீராத்வைத சைவத்திற்கு முதனூலாக வழங்கி வருவதாக சிவசூத்ரவிமர்சினி என்ற நூலில் சேமராஜர் சுட்டிக்காட்டுவது குறிப்பிடத்தக்கதாகும்.
சிவசூத்திரங்கள் விளக்குகின்ற கருத்துக்களை மேலும் தெளிவுறுத்தும் வகையில் ஸ்பந்த சாத்திரங்கள் அமைகின்றன. இவற்றுக்குரிய முதன்மையான நூல்களாக விளங்குகின்ற ஸ்பந்த சூத்திரங்கள் வசுகுப்தரால் எழுதப்பட்டதாகக் கூறுகின்ற சேமராஜரின் கருத்துக்கு மாறாகக் கல்லடரே இதனைச் செய்ததாகக் கருதப்படுவது நோக்குதற்குரியதாகும். கல்லடரால் எழுதப்பட்டதாகக் கருதப்படும் விருத்தியுடன் கூடிய இந்நூல் ஸ்பந்த ஸர்வஸ்வம் என்ற பெயரால் அழைக்கப்படுகின்றது. இவை சிவகுத்திரங்களைப் போன்று தத்துவரீதியில் ஆராயாமல் கொள்கைகளையும் கோட்பாடுகளையும் விளக்கிச் செல்கின்றன. ராமகண்டரால் இயற்றப்பட்ட ஸ்பந்தவிருத்தி, உத்பல வைஷ்ணவரால் இயற்றப்பட்ட பிரதீபிகை, சேமராஜரால் இயற்றப்பட்ட ஸ்பந்த சந்தோசம், ஸ்பந்த நிர்ணயம்போன்றவை ஸ்பந்த காரிகையை ஒட்டி எழுந்தவையாகும்.
த்ரிக சாஸ்திரத்தில் முப்பெரும் பிரிவுகளில் இறுதியாகச் சுட்டப்படும் பிரத்யபிஜ்ஞா சாஸ்திரமே உண்மையில் த்ரிகக் கொள்கைகளை தத்துவரீதியில் விசாரிக்கும் சாஸ்திரமாகும். இது தர்க்க ரீதியில் சுவபக்கம், பரபக்கம் என்ற வகையில் வசுகுப்தரின் மாணவரான சோமானந்தரால் ஆராயப்பட்டுள்ளது. இவ்வகையில் எழுச்சி பெற்ற முதல் நூல் சிவத்ருஷ்டியாகும். இவருடைய மாணவரான உத்பலர் எழுதிய ஈஸ்வர பிரத்திய பிஜ்ஞா சூத்திரங்கள் என்ற நூல் காஷ்மீரத்திற்கப்பாலும் புகழ் பெற்றிருந்த காரணத்தினாற்போலும் மாதவாசாரியார் சர்வதர்சனசங்கிரக என்ற தனது நூலில் த்ரிக சாஸ்திரத்தை பிரத்தியபிஜ்ஞாதர்சனம் என்ற தலைப்பில் விளக்கியுள்ளதைக் காண்கிறோம்.
பிரத்தியபிஜ்ஞை என்பது நினைவு கூர்தல் எனப் பொருள்படுகின்றது. தான் சிவன் என்பதை உணராத சீவன்
இந்துக்கலைக்களஞ்சியம்

Page 255
உடலையும் கரணங்களையும் தானாகக் கருதுகின்றது. இவ்வறியாமையை அதற்குணர்த்தி சீவன் சிவனன்றி வேறல்ல என்ற உண்மையறிவை அது மீண்டும் உணர்ந்து கொள்வதற்குரிய விதிமுறைகளைத் தெளிவுறுத்தும் சாஸ்திரமே பிரத்திய பிஜ்ஞா சாஸ்திரமாகும்.
த்ரிகம் என்பதன் கருத்து ஒன்றில் ஐக்கியப்படும் மூன்று என்பதாகும். த்ரிக சாஸ்திரத்திலுள்ள யோகமானது பல ஐக்கியப்படும் அம்சங்களைக் கொண்டது. இச்சாஸ்திரம் த்ரிகம் என்ற பெயரைப் பெறுவதற்குரிய காரணங்கள் பல என்பது ஆசிரியர்களின் கருத்தாகும். சிவன், சக்தி, நான் அல்லது சிவன், சக்தி, அணு அல்லது பதி, பசு, பாசம் அல்லது பரா, அபரா, பாராபரா என்ற நிலைகள் அல்லது சித்தம், நாமகம், மாலினி என்ற சாத்திரங்கள் ஆகியவற்றைப் பற்றி விளக்குவதாக இது கொள்ளப்படுகின்றது.
த்ரிக சாத்திரத்தில் சிவன் முழுமுதற் பரமபொருளாய் முழுமையான உண்மைப் பொருளாய் அறிவுமயமானவராய் எடுத்தாளப்படும் அதேவேளை சக்தியின் துணையின்றி சிவனில்லை எனும் நிலையை காஷ்மீரவாதிகள் ஆதரிப்பர், பரம சிவனுக்குக் கொடுக்கப்படும் குணவியல்புகள் சங்கரராற் பிரமத்துக்குக் கொடுக்கப்படும் குணவியல்புகளிலிருந்து சற்றே வேறுபட்டதாகும். எனினும் சங்கரர் எடுத்தாளும் நிர்க்குணப் பரம் என்னும் கருத்தையும் திரிகவாதிகள் இராமானுஜரைப் போல ஏற்றுக் கொள்கின்றனர். உயர்வான பரம்பொருளாய் அமைகின்ற பரமசிவன் காஷ்மீர சைவத்தின்படி உயர்நிலை, தடத்தநிலை என்ற இரு தன்மைகள் கொண்ட ஒர் உண்மைப் பொருளாக விளங்குகின்றான். உயர்நிலையானது அனைத்துத் தோற்றத்தின் படைப்புக்கும் அப்பாற்பட்டதாகும். தடத்த நிலையானது படைக்கப்பட்ட பிரபஞ்சப் பொருள்கள் அனைத்திலும் வியாபித்துள்ளது. பிரத்திய பிஜ்ஞாஹ்ருதயத்தின் கடவுள் வாழ்த்திலமைந்த “சிவானந்த கனஸ்வாத்ம பரமார்தாவமானே சதாம் பஞ்சக்ருதிய விதாயினே சிவாயநம” என்ற சேஷமராஜரின் கூற்று சொருபலட்சணம், தடத்தலட்சணம் ஆகிய இரண்டையும் உணர்த்தி நிற்கின்றது. அத்வைதிகள் சொருபலட்சணத்தையே பேருண்மையாகக் கொள்வதும் குறிப்பிடத்தக்கதாகும். சேமராஜர் இவ்விரு நிலைமைகளையும் ஒருமைப்படுத்திக் காண்பதுடன் நமசிவாய என்ற பஞ்சாக்கரத்தையும் சிவனுடைய பஞ்ச கிருத்தியங்களையும் இணைத்துக் கூறியிருப்பது சைவசித்தாந்திகளுடன் ஒப்பிட்டு நோக்கத்தக்கது. ஒடுக்கம் கிளைப்பொழித்தல் மற்றைய தோற்றம் மனபாகம் வரக் காத்தல் போகம் துய்ப்பித்தல் திரோதாயிதம் நிறுத்தலாகும். போற்றவரும் அருள் அருளே என்ற பஞ்ச கிருத்தியத்தைக் குறிப்பது நடராஜப் பெருமானின் ஆனந்த தாண்டவமாகும். அஞ்செழுத்தே ஆனந்தத் தாண்டவமும் என்ற சித்தாந்த சாத்திர அடியும் இவ்விடத்தில் சுட்டத்தக்கதாகும்.
த்ரிக சாத்திரப்படி உலகின் படைப்புக்கு நிமித்த காரணனாகவும் உபாதன காரணனாகவும் சிவன்
இந்துக்கலைக்களஞ்சியம்

எடுத்தாளப்படுகின்றான். சிவன் நிமித்த காரணனாக எடுத்தாளப்படுவது சித்தாந்தம் முதல் வேறு தரிசனங்க்ளுக்கும் ஏற்புடையதே எனினும் உபாதனகாரணனாக விளங்குவது குறிப்பிடத்தக்க வேறுபாட்டைக் காட்டுகின்றது. இவர்கள் உலகை நான்கு அண்டங்களாக எடுத்தாண்டு அந்நான்கு அண்டங்களுக்கும் நான்கு அதிபதிகளையும் சுட்டுவர். இதனாலேயே சுதந்திர பகவானான மகேஸ்வரன் தனக்கியல்பாகவுள்ள சக்தியின் பெருக்கால் பிரபஞ்சத்தை சக்தி, மாயை, பிரகிருதி, பிருதுவி என நான்கு அண்டங்களாக வகுத்து வெளிப்படுத்தினான் என்கிறார் அபிநவகுப்தர்.
உண்மைப் பொருளானது எல்லாப் பொருள்களிலும் அதன் முழுமையைக் கொண்டுள்ளதாக அமைகிறது. இந்த வகையில் பரமசிவன் சத் சித் ஆனந்தமாக விளங்குகின்றான். பிரமம் சங்கரரால் உணர்வு நிலை இணைந்த அம்சமாக கொள்ளப்படுவது போல மாறாத உண்மைப்பொருள் சைதன்யங்களாக விளக்கப்படுகின்றது. சைதன்யம் என்பது தூய உணர்வாகும். அதாவது கட்டுக்கள் எதுவுமற்ற நிலையாகும். உணர்வானது தடத்த நிலையில் தோற்றப்பாட்டுக்குரியதாக அமைகிறது. இத்தன்மை விடயம் விடயி எனும் நிலைக்குரியதாகின்றது. இதனை அகம், புறம் எனவும் கொள்வர். இது தண்ணிருக்கும் குளிர்மைக்குமிடையே உள்ள நெருக்கம் போன்றது.
த்ரிக சாஸ்திரமானது சைவசித்தாந்தம் போல் 36 தத்துவங்களை அடிப்படையாகக் கொண்டு தனது கொள்கைகளை ஆராய்கின்றது. இவற்றுள் பிருதிவி முதல் பிரகிருதி வரையான இருபத்துநான்கு தத்துவங்களும் சாங்கியம் எடுத்தாளும் தத்துவ அமைப்பை ஒத்தனவாகும். ஏனைய பன்னிரண்டு தத்துவங்களும் ஆன்மீக நிலையில் படித்தரங்களாக எடுத்தாளப்படுகின்றன. இங்கு முதற் தத்துவமாக சிவதத்துவம் அமைகின்றது. இது சத் சித் ஆனந்தம் என்னும் பிரபஞ்ச நிலையில் சித்து அம்சமாக அமைகிறது. சக்தி தத்துவமானது பிரபஞ்ச பரிணாமத்துக்குரிய ஒரு அம்சமாக ஆனந்த நிலைக்குரியதாய் அமைகிறது. முதலிரு தத்துவங்களான சிவசக்தி தத்துவங்கள் பிறிதொன்றால் தோற்றப்படாத நிலைக்குரியனவாகும். பிரளய காலத்தில் பிரபஞ்சம் ஒடுக்கத்திற்குட்படும் வேளையிற்கூட இவ்விரு தத்துவங்களும் நிலைத்திருப்பதாகக் கொள்ளப்படுகிறது. பிரபஞ்ச சக்தியாகச் சுட்டப்படும் சக்தி தத்துவம் இச்சா, கிரியா, ஞானா சக்தி என மூவகை அடிப்படை உளவியல் செயற்பாட்டைக் கொண்டமைந்ததாக எடுத்தாளப்படுகின்றது. இவை ஒவ்வொன்றும் ஒன்றையொன்று தர்க்க ரீதியில் தொடர்வதாகச் சுட்டப்படுகின்றது.
மூன்றாவது தத்துவமாக சதாசிவதத்துவம் குறிப்பிடப்படுகின்றது. சதாசிவதத்துவமானது உணர்வின் முதற் பரிணாமநிலையாகப் பிரபஞ்ச இச்சா சக்தியாக எடுத்தாளப்படுகின்றது. பிரபஞ்ச பரிணாமத்தின் நான்காவது
219

Page 256
படிமுறையாக விளங்கும் தத்துவம் ஈஸ்வர தத்துவமாகும். இத்தத்துவத்தின் பிரகாரம் பிரபஞ்ச அறிவின் சக்தியாக அதாவது ஞானசக்தியாக அமைகின்றது. தூய அறிவாக அமைவதற்கு ஈஸ்வர தத்துவம் மூலமாக விளங்குகிறது. இதற்கு அடுத்த நிலையில் சுத்த வித்யா தத்துவம் அமைகிறது. அந்த வித்யா தத்துவத்தில் சக்தியின் செயல் ரூபமான கிரியாசக்தி முதன்மைப்படுத்தப்படுகிறது. பிரபஞ்ச செயலின் விரிவு இத்தத்துவத்திலேயே தொழிற்படுகிறது. இவ்வைந்து தத்துவங்களும் வழிபாட்டு நோக்கத்தைக் கொண்டவையாக அமைகின்றன.
த்ரிக சாத்திரம் சுட்டும் தத்துவ விளக்கத்தில் ஆறாவது பிரிவாக மாயாதத்துவம் அமைகிறது. மாயா மயக்குவித்தல் என்னும் பொருளை உணர்த்துகின்றது. பிரபஞ்ச தோற்ற ஒடுக்கத்திற்குக் காரணமான மாயையானது திரிக தரிசனத்தைப் பொறுத்தவரையில் தனியான உண்மைப் பொருளல்ல. அது செயற்பாடற்றது எனச் சுட்டப்படுகின்றது. மாயையிலிருந்து காலம், நியதி, இராகம், வித்தை, கலை என்னும் வித்தியா தத்துவங்கள் பரிணமிக்கின்றன. இவ் வகையில் பிரபஞ்ச சக்தியானது ஐந்து வடிவங்களில் விரிந்து அமைகின்றது. நித்யம், வியாபகம், பூரணத்துவம், சர்வஞானம், சர்வ வல்லமை ஆகிய ஐந்து பிரபஞ்ச நிலைகளும் மாயையால் கட்டுப்படுத்தப்படுகின்றன. இவ்வகையில் L0IT 60). Ll தத்துவத்திலிருந்து புருஷதத்துவ மீதான தத்துவங்கள் சுத்த, அசுத்த தத்துவங்களாக காஷ்மீர சைவர்களால் எடுத்தாளப்படுகின்றன. சுத்த தத்துவம், சுத்தாசுத்த தத்துவத்தை அடுத்து பிருதிவி முதல் பிரகிருதி ஈறாகவுள்ள அசுத்த தத்துவங்கள் இருபத்துநான்கும் தோன்றுகின்றன. இதே தத்துவ அமைப்பை சைவசித்தாந்தம், வீரசைவம் போன்றவற்றிலும் காணலாம்.
சைதன்ய சொரூபனான பரமேஸ்வரன் தனது சுதந்திரத்தன்மை காரணமாக பேத வியாப்தியை மேற்கொள்ளும் வேளை அவனது சக்திகள் குறுக்கப்பட்டவை போலத் தோன்றுகின்றன. இந்நிலையில் அவன் ஜீவான்மாவாகக் கருதப்படுகின்றான். சக்தி பிரகாசிக்கும் போது சிவனெனவும் சக்தி தரித்திரனாகும் போது சம்சாரி எனவும் சுட்டப்படுகின்றான். எங்கும் வியாபித்திருக்கும் சைதன்யம், ஆணவம், முதலான கோசங்களாற் சூழப்பட்டிருக்கும் போது ஆத்மா எனப்படுகிறது. சீவாத்மாவும் பரமசிவனே என்பது திரிக சித்தாந்தமாகையால் சிவனுடைய தொழில்களான சிருஷ்டி, திதி, சம்ஹாரம் என்பனவற்றுக்கேற்ப சீவநிலை சாக்ரத் (விழிப்பு) நிலை ஸ்வப்னம் (கனவுநிலை), சுஷுப்தி (உறக்க) நிலை ஆகிய மூன்று நிலைகள் குறிப்பிடப்படுகின்றன. விளிப்பு நிலையில் வகைப்பட்ட ஞானம் சீவர்களுக்கு ஏற்படுகின்றது. சுஷப்தி நிலை மகாசூன்ய நிலை எனவும் சுட்டப்படுகின்றது. இந்நிலையில் பரமசிவன் சின்மயமாக விளங்குகின்றார். அபிநவகுப்தரின் கருத்துப்படி பசுவினது பாசங்களின் வாசனை தீரும்போது சுத்த பூர்ணானந்த துரியநிலை ஏற்படுகின்றது. மேற்குறித்த மூன்று நிலைகளிலும்
220
 

ஊடுருவி நிற்கும் இந்நிலையில் பரம்பொருள் ஞானப்பிரகாசானந்த மூர்த்தியாய்த் திகழ்கிறார்.
பொதுவில் இந்திய தத்துவங்கள் அனைத்தும் அவித்தையே பந்தத்துக்குக் காரணமெனச் சுட்டி நிற்கின்றன. இதனையே அஞ்ஞானத்தாலுறுவதே பந்தமென சிவஞான சித்தியார் குறிப்பிடுகின்றது. த்ரிகவாதிகள் இதனை அக்யாதி என விளக்கி நிற்பர். திரிகசாஸ்திரத்தில் அஞ்ஞானமானது பெளருஷ அஞ்ஞானம், பெளத்த அஞ்ஞானம் என இருவகைப்படுகிறது. பெளருஷ அஞ்ஞானமானது சீவன் அல்லது புருஷனுடன் அனாதியே தொடர்புடையதாகும். இதனையே ஆணவமல மென்பர். பெளத்த அஞ்ஞானமென்பது முழுமையான ஞானமின்மை எனப் பொருள் கொள்ளப்படுமே தவிர ஞானமின்மையாகாது என்பதும் இங்கு கருத்திற் கொள்ளப்பட வேண்டிய ஒன்றாகும். கண்டு, கேட்டு, உண்டு, உய்த்து அறிதலே இப்பெளத்த ஞானமாகும். சைவசித்தாதிகள் ஆணவம் அனாதியான தென்பதுடன் முத்தியிலும் அது செயலற்றிருக்குமே தவிர முற்றாக நீங்குவதில்லை என்பதற்கு மாறாக ஆணவம் முத்தி நிலையில் நீங்கிய தொன்றாகுமென்பது த்ரிக வாதிகளின் கருத்தாகும்.
த்ரிகவின்படி மோட்சம் என்பது அறிவின் சுத்திகரிப்பாகும். அதாவது தன்னைத் தான் உணரும் நிலையாகும். இது பராசம்வித் அல்லது உயர்ந்த உணர்வு நிலையாகும். இந்த இறுதியான நிலை வார்த்தைக்கும் எண்ணத்திற்கும் அப்பாற்பட்டதாகும். அனுபவத்தினாலும் யோகத்தினாலும் அறிகின்ற ஒப்புவமை அற்ற உயர்ந்த உள்ளுணர்வான இந்த நிலை அப்பிரகாசநிலை என அழைக்கப்படுகின்றது. சைவசித்தாந்திகள் முத்தியடைவதற்குரிய வழிமுறைகளாக சரியை, கிரியை, யோகம், ஞானம் என்னும் நான்கு மார்க்கங்களை எடுத்தாளுவது போன்று த்ரிகவாதிகளும் ஆணவோபாயம், சாக்தோபாயம், சாம்பவோபாயம், அனுபாயமென்னும் நான்கு உபாயங்களைக் கூறுகின்றனர். இவற்றுள் ஆணவோபாயம் க்ரியோபாயம் எனவும் சுட்டப்படுகின்றது. மந்திரஜபம் பிராணாயாமம் இஷ்டதேவதையின் பூசை முதலியன இங்கு இடம்பெறுகின்றன. பிராணன் அபானன் முதலியவற்றை ஒழுங்குபடுத்தி ரேகசம் பூரகம் கும்பகம் என்ற யோக நிலையில் உள்ள நாடிகளில் அவற்றைச் செலுத்தி, சுழுமுனையில் நிறுத்தும் போது அது முத்திக்கு வழிவகுக்கிறது. அடுத்து அமைகின்ற சாக்தோபாயம் மந்திர சக்தியின் வெளிப்பாட்டைக் குறிக்கின்றது. இது ஞானோபாயம் எனவும் அழைக்கப்படுகின்றது. இந்த யோகநிலையில் மேம்பட்டவர்களுக்கு பேதஞானம் அகலுகின்றது. சாம்பவோபாயம் எனும்போது ஒருவன் இச்சா மாத்திரத்தால் பரம்பொருள் சமாவேசத்தைப் பெறுகின்ற உபாயமாகும். இந்த யோக நெறியில் நிற்கும் சாதகன் பரம்பொருள் தத்துவத்தைப் பற்றிய உண்மையைத் தனது இச்சா சக்தியினால் உணரவல்லவனாகின்றான். குரு முகமாக உண்மையை உணர்ந்த நிலையில் ஈஸ்வரனின் தீவிர சத்திணிபாதம்
இந்துக்கலைக்களஞ்சியம்

Page 257
முத்தியடைவதற்கு ஒரு எளிய உபாயமாகக் கருதப்படுகின்றது. இதில் சீவன் எவ்வித சாதனத்தையும் மேற்கொள்ள வேண்டியதில்லை. எனவே இதை அனுபாயம் என வழங்குவர். இது ஆனந்தோபாயம் எனவும் வழங்கப்படுகிறது.
சத்திணிபாதமென்பது ஈஸ்வரனின் திருவருளெனப் பொருள்படும். திரோதானமாய் நின்று மறைப்பைச் செய்து வந்த சிவசக்தி மலம் பரிபக்குவமற்ற நிலையில் அருட்சக்தியாக மாறி ஆன்மாவிடத்திற் பதிதலே சத்தினிபாதமாகும். இச்சத்தினிபாதம் தீவிரம், மத்யமம், மந்தம் என மூவகைப்படுமென திரிக சாத்திரம் விளக்கி நிற்கிறது. அபிநவகுப்தர் பரமார்த்தசாரத்தில் இது பற்றிக் குறிப்பிடும் போது ஒரு பக்குவ ஆன்மா தனது இறுதிப் பிறப்பில் மரணமடைந்த ஒரு குருவின் வாயிலாக பாரமார்த்த மார்க்கம் பற்றிய விளக்கத்தைப் பெற்றவுடனே சிவனேயாகி விடுகின்றான். அதிதீவிர சத்தினிபாதத்தினாலேயே இது ஏற்படுகிறது. பேரொளியாயிருக்கின்ற அவனே சித்தும் அசித்துமான பிரபஞ்சமாய்த் திகழ்கின்றான் என்பதைக் குரு மூலமாக உணர்ந்தபோது சீவன் முத்தனாகின்றான்.
மும்மலங்களைக் களைந்து பிரகாசவிமர்ச மயமான பரம்பொருள் நானே என்றறிதலே முத்தியாகும். மோட்ச சொரூபத்தை விளக்குகின்ற அபிநவகுப்தர் சீவன் தனது அஞ்ஞானத்தை அகற்றி தனது இயல்பான சொரூபத்தை அறியக்கூடிய அறிவைப் பெற்றவிடத்து மோட்சமேற்படுகிறது என்பர். த்ரிக தரிசனம் சுட்டும் முத்தி நிலையானது நீரும் நீரும் கலப்பதுபோலவும் அல்லது பாலும் பாலும் சேர்ந்தது போலவும் சிவனும் சிவனும் சமநீர்மையை அடைதலாகும். இந்த நிர்வாண நிலையில் சிவன் பாரமேஸ்வர சொரூபாவேசம் பெற்று பரிபூரணத் தன்மையுடையவனாய் சிவசமமாகி விடுகின்றான். த்ரிக சாத்திரமானது காலவெள்ளத்தாற் கரைந்துவிடாது சைவத்துள் ஒளிபெற்று இன்றும் நிலைத்திருப்பதற்கு அதன் தத்துவச் செழுமையும் சமய அடிப்படைகளுமே காரணம் எனின் அது மிகையன்று. ந. குர)
திரிசங்கு
சூரியகுல வேந்தன் திரிசங்கு. பல ஆண்டுகள் பெரும்புகழுடன் மன்னனாகச் செங்கோல் ஒச்சினான். அவனுக்குள் ஒரு ஆசை மெல்ல மெல்ல எழுந்து அவனைப் பேயாய்ப் பிடித்து ஆட்டியது. உடலுடன் சுவர்க்க உலகு செல்ல வேண்டும் என்பதுதான் அது. அவ்வாசையை நிறைவேற்றிக் கொள்ள பிரம்மரிஷி வசிட்டரிடம் சென்றான். வசிட்டர் திரிசங்குவின் குலகுரு. அவரிடம் சென்ற மன்னன் தனது ஆசையைத் தெரிவித்தான். அவனது வேண்டுகோளைச் செவிமடுத்த தவமுனிவர் “மன்னா! உடலுடன் சுவர்க்கம் செல்லுவது இயலாததொன்று; உம்மால் முடியாது; வீணான இந்த ஆசையை விட்டு விடும்” என்று கூறினார்.
திரிசங்குவிற்கு இது பிடிக்க வில்லை. வசிட்டருடைய குமாரர்களிடம் சென்று “உங்களுடைய தந்தை எனது வேண்டு
இந்துக்கலைக்களஞ்சியம்

கோளுக்கு இணங்கவில்லை. முடியாது என்று அவர் செல்லிவிட்ட இந்த யாகத்தை நீங்கள் நடத்தித் தாருங்கள்” என்று வேண்டினார்.
வசிட்டரது குமாரர்களுக்கு சினம் ஓங்கியது “மன்னனே! உமக்கு அறிவு மங்கிவிட்டதா. எங்களது தந்தையும் உமது குலகுருவுமாகிய ஆச்சாரியனின் சொல்லைப் புறக்கணித்து எம்மிடம் வேள்வி செய்யுமாறு கோரி வந்திருக்கின்றீரே திரும்பிப் போய் விடும்” என்று கூறினார்கள். ஆனால் திரிசங்கு அவர்கள் அறிவுரையை ஏற்காமல் மீண்டும் மீண்டும் வற்புறுத்தினான். அவர்கள் இணங்க வில்லை.
கோபங் கொண்ட திரிசங்கு உங்களால் முடியாவிட்டால், வேறு யாரையாவது தேடி என் கருத்தை நிறைவேற்றியே தீருவேன் என்று கூற, வசிட்ட குமாரர்கள் அதனைப் பொறுக்காமல் “குருவை அவமதித்த அரசனே! நீ சண்டாளனாவாய்' என்று சபித்து விட்டுச் சென்றுவிட்டார்கள்.
அன்றிரவு உறங்கச் சென்ற மன்னன் காலையில் உறக்கம் தெளிந்து எழுந்த பொழுது அழகிய உருவமும் ஒளியும் இழந்து அவலட்சண வடிவத்தோடு தோன்றினான். அமைச்சர்களும் ஜனங்களும் அரசனுடைய சாப உருவத்தைப் பார்த்துத் தூர விலகி ஓடினார்கள்; அஞ்சினார்கள்; வெறுத்தார்கள். தனது நிலையைக் கண்டு அவமானமுற்ற மனத்தினனாய் ஊரின் புறத்தே தன்னந் தனியாக ஊண் உறக்கமின்றி அலைந்தான் அரசன் திரிசங்கு.
சண்டாள உருவத்துடன் ஞானரிஷி விசுவாமித்திரரின் ஆசிரமத்திற்கு திரிசங்கு அரசன் சென்றான். அவனைக் கண்டதும் வியப்பு மேலிட்ட முனிவர் உற்ற காரணத்தைக் கேட்டறிந்தார்.
திரிசங்கு நிகழ்ந்ததைக் கூற, அவன்பால் அனுதாபங் கொண்ட தபோதனர் “ இகூடிவாகு குலவேந்தனே! அஞ்சாதே உன்னுடைய சிறப்பான அரச வாழ்க்கையை நான் அறிவேன். நான் உனக்கு அபயம் தருகின்றேன். முனிவர்களை அழைத்து நீ நடத்த விரும்பிய வேள்வியை நான் நடத்தித் தருகின்றேன். குருவின் கோபத்தால் விளைந்த இந்த சாப சண்டாள வடிவத்துடனேயே உன்னைச் சுவர்க்கத்திற்கு அனுப்புவேன். இது உறுதி” என்று வாக்களித்தார்.
தனது வாக்குறுதியை நிறைவேற்ற விரும்பிய கோசிக முனி சீடர்களை நோக்கி “நீங்கள் சென்று வேள்விக்கு எல்லா முனிவர்களையும் நான் அழைத்ததாக அழையுங்கள்” என்று உத்தரவிட்டார்.
விசுவாமித்திரரின் கோபத்திற்கு அஞ்சிய தவசிரேஷ்டர்கள் அவரது அழைப்பை நிராகரிக்க இயலாமல் இசைந்தார்கள். ஆனால் வசிட்டரின் குமாரர்கள் வரமறுத்ததோடு, ஒருவர் எவ்வளவுதான் தவத்திற் சிறந்தவராக இருந்தாலும் க்ஷத்திரியரான அவர் எப்படி வேள்விச் சடங்குகளை
22f
199484

Page 258
நடத்தக்கூடும்? அதிலும் ஒரு சண்டாளனுக்காக எப்படி நடத்தலாம்? என்றுகூறி மறுத்துவிட்டார்கள்.
இதனைக் கேட்ட விசுவாமித்திரர் கடுங்கோபங் கொண்டு நான் செய்யும் காரியத்தில் எவ்விதத் தவறுமில்லை. செருக்கு மிகுந்த இந்த வசிட்ட குமாரர்கள் இறந்து சாம்பலாகட்டும். அவர்கள் ஏழு ஜன்மம் வரையில் நாய்தின்னும் ஜாதியாகக் கடவார்கள் என்று சபித்து விட்டு நிச்சயித்தபடி யாகத்தைச் செய்யத் துவங்கினார்.
கூடியிருந்த பெரியோர்களை நோக்கி, “இந்த திரிசங்கு மகாதர்மவான், சத்தியவான், இக்ஷவாகு குலத்தரசன், இவன் உடலோடு சுவர்க்கத்திற்குச் செல்ல வேண்டும் என்று விரும்புகின்றான். அவனது விருப்பத்தை நிறைவேற்றுவதற்காக இந்த வேள்வியைச் செய்ய நான் நிச்சயித்திருக்கின்றேன். நீங்கள் அனைவரும் கலந்து கொண்டு இக் காரியத்தை நிறைவேற்றித் தர வேண்டும்” என்று கேட்டுக் கொண்டார்.
அவருக்கு அஞ்சிய முனிவர் பெருமக்களும் வேள்வியில் கலந்து கொள்ள விசுவாமித்திரர் கிரமப்படி வேள்வியை நடத்தினார். வேள்வி முடிவில் அமரர்களை ஹவிர் பாகத்தைப் பெற்றுக் கொள்வதற்காக மந்திரம் கூறி அழைத்தார். ஆனால் யாரும் வரவில்லை. வேள்வி வீணாயிற்று. கோசிகனின் கோபத்திற்கு அஞ்சிய முனிவர்கள் மனத்திற்குள் அவரது செயலைப் பரிகசித்தார்கள்.
ராஜரிஷி கடுங்கோபங்கொண்டு தன் கையில் வைத்திருந்த நெய்மிகுந்த ஹோமக் கரண்டியை உயரத் தூக்கி “திரிசங்கு ராஜனே! என் தவத்தின் வலிமையைப் பார்! என் தவமும், முயற்சியும், சக்தி இவ்வளவும் உனக்கும் பயன்படுவதாக உன் சரீரத்துடன் இப்பொழுதே நீ சுவர்க்கம் ஏகுவாய். தேவர்கள் அவியை எடுத்துக் கொள்ளாதது பற்றி எனக்குக் கவலையில்லை. அரசனே! செல் மேலே’ என்றார்.
அப்பொழுது அங்கு ஓர் அற்புதம் நடந்தது. முனிவர்களும் அந்தணோத்தமர்களும் விழி இமைக்காது பார்த்துக் கொண்டிருக்கையில் சண்டாளனான மன்னன் அப்படியே ஆகாயத்தில் கிளம்பினான். விசுவாமித்திரருடைய தவவலிமையைக் கண்டு உலகம் அதிசயித்தது.
திரிசங்கு சுவர்க்கத்தை அடைந்தான். தேவ சபையில் வீற்றிருந்த இந்திரன் சண்டாள வடிவுடன் திரிசங்கு வருதைக் கண்டான். “குருவிடம் சாபம் பெற்ற மூடனே போ” என்று தள்ளி விட்டான். சுவர்க்கத்திலிருந்து திரிசங்கு கதறிக்கொண்டு தலைகீழாக வீழ்ந்தான். கீழே வீழ்ந்து கொண்டு வரும்பொழுது "ஐயோ! என்னைக் காப்பாற்றுவீர்! காப்பாற்றுவீர்!’ எனக் கூக்குரலிட்டான்.
இக்காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்த விசுவாமித்திரமுனிவர் தம் தபோபலத்தைத் தேவர்கள்
222

இகழ்கின்றார்கள் என்று அவேசம் கொண்டு சினத்தின் உச்சியில் நின்று கொண்டு “நில் நில் அப்படியே நில்” என்று கர்ஜித்தார். ஒரு சதுர்முகப் பிரம்மாவைப் போல் ஜொலித்தார். தலைகீழாக விழுந்த திரிசங்கு விசுவாமித்திரர் “நில்” என்று உத்தரவிட்டதும் நடு ஆகாயத்தில் ஒரு நட்சத்திரமாகப் பிரகாசித்துக் கொண்டு அப்படியே நின்றான். அக்கணமே திரிசங்கு நின்ற தென் திசையில் ஒரு புதிய சுவர்க்கத்தையே நிறுவிவிட்டார். புதிய சப்தரிஷிகள் நட்சத்திரமும் பொன்னுலகமும் என சுவர்க்கம் உருவாயிற்று. "இதோ இந்திரனையும் தேவர்களையும் உண்டாக்குவேன்’ என்று முயன்றபொழுது ரிஷிகளும் தேவர்களும் விசுவாமித்திரரிடம் ஓடோடி வந்து அவரிடம் நயமாகப் பேசி கோபத்தை ஆற்றினார்கள். தாங்கள் நிர்ணயித்தபடியே இந்த சுவர்க்கம் இருக்கட்டும் கோபத்தைத் தணித்துக் கொண்டு எங்களுக்கு அருள் செய்ய வேண்டும் என்று வேண்டி நின்றனர். முனிவரும் அமைதியுற்றார்.
ஆனால் அதுவரை விசுவாமித்திரர் செய்த தவம் முழுதும் திரிசங்குவிற்காக வீணாக்கப்பட்டது. தவப்பலன் இழந்து நின்றார் இராஜரிஷி. (ബ്, ബ)
6/forgot
கார்மேகத்தின் இடையே இலங்கும் அவிரொளி போன்று அரக்கர் குலத்தில் தோன்றிய தூயமங்கை திரிசடை. இராவணனது இளவலாகிய அறத்தாறு உணர்ந்த அறிஞன் விபீஷணன், விபீஷணன் என்ற சொல்லுக்கு பயமில்லாதவன் என்பது பொருள். அறம் உணரா அண்ணனுக்கு நேருக்கு நேர் நின்று அஞ்சாது அறம் உரைத்தவன். அறவுரை ஏற்காத தமையனை உதறி நேர்மை வழி நின்று இராகவனுடன் சேர்ந்தவன். பெயருக்கேற்ற செயல்திறம் வாய்ந்தவன். இவ் விபீஷணனின் செல்வமகளே திரிசடை, ஊனைத் தின்று ஊனைப் பெருக்கும் அரக்கர் குலத்திலே புலால் உணவை அறவே ஒழித்த குணக்குன்றாக விளங்கியவள் திரிசடை
தசமுகன் சீதையை வஞ்சனையாற் கவர்ந்து அசோக வனத்தில் சிறைவைத்து அரக்கியரைக் காவல் அமைத்தான். பொல்லா அரக்கியர் நடுவே புயலில் அகப்பட்ட பூளைப் பூவானாள் பொன்மாது. அப்பொழுது உயிர்தளிர்க்கும் மருந்துபோல் சீதைக்கு ஆறுதல் கூறி அமைதிப்படுத்தியவள் திரிசடை. நற்குணங்களெல்லாம் ஒருருவான விபீடணனின் மகளிடம் தலையாய அன்பு பூண்டு உயிர்த் தோழியாகக் கொண்டாள் ஜானகி.
மையல் நோயுற்ற இலங்கை வேந்தன் தனக்குத் தீங்கு செய்து விடுவானோ என்று அஞ்சி நடுக்குற்ற வைதேகிக்கு மலரோனின் சாப வலிமையை எடுத்துரைத்தாள் வீடணன் மகள். முறையாக மணம் புரிந்த மங்கையரையல்லாமல் மற்றையோரைத் தீண்டினால் தசமுகன் தலை வெடிக்கும் என்று அயன் அருளிய சாபத்திறத்தைக் கூறியருளி சாந்தப்படுத்தினாள். அப்பொழுதுதான் தன் மெய் தீண்டாது தானிருந்த நிலத்தை அகழ்ந்து எடுத்துத் தன்னை
இந்துக்கலைக்களஞ்சியம்

Page 259
அசோகவனத்தில் உரைத்த உண்மையை சீதை அறிந்து கொண்டாள். திரிசடையின் கருணையை,
"அன்ன சாபம் உளதென ஆண்மையான் மின்று மெளலியன் மெய்மையன் விபீடணன் கன்னி என்வயின் வைத்த கருணையால் சொன்ன துண்டு துணுக்கம் அகற்றுவாள்' என்று அனுமனிடம் மனந்திறந்து பாராட்டிப் பேசுகின்றாள்.
இரவும் பகலும் காகுத்தனை எண்ணியே கலங்கிய ஜானகி ஒரு நாள் சில மெய்க்குறிகள் தோன்றிய இடத்துத் தோழி திரிசடையை நோக்கி உண்மையை ஆராய்ந்து சொல்வாய் என விநயமாகக் கேட்க அவளும், அன்னையே உன் நாயகன் விரைவில் வருவான். எந்நாளும் துயிலாத நான் நேற்றுச் சற்றுக் கண்ணயர்ந்து இருக்கையில் கனவொன்று கண்டேன். இலங்கை வேந்தன் செவ்வாடை அணிந்து தலையில் எண்ணெய் பூசிப் பேய்த்தேரிலே தென்திசை நோக்கிச் சென்றான். அரக்கர் கூட்டமும் அத் திசை நோக்கிச் சென்றது. அசோகவனம் அழகிழந்து அழிந்தது. இராவணனின் மாளிகை இடிந்து வீழ்ந்தது. பெண் யானைகள் மதம் பொழிந்தன. பேரிகைகள் அடிப்பாரின்றியே இடிபோல் முழங்கின. கருமேகங்கள் வெடிபட அதிர்ந்தன. விண்மீன்கள் உதிர்ந்தன. ஞாயிறு பிளந்து எரிந்தது. கற்பகமாலை புலால் நாற்றம் வீசியது. வாடா விளக்குகள் அவிந்தன. இலங்கை மாநகரமே தீப்பற்றி எரிந்தது. பூரண கும்பங்கள் மதுக்குடம் போல் பொங்கின. வேழங்களின் வலிய கொம்புகள் முறிந்தன. மதியினைப் பீறி மின்னொளி எழுந்தது. மேகங்கள் குருதிமழை பொழிந்தன. அரக்க மகளிரின் மங்கல நாண்கள் அறுந்து வீழ்ந்தன. மயன்மகளாகிய மண்டோதரியின் கூந்தல் அவிழ்ந்து விளக்கழலில் எரிந்து கருகிற்று. புலிக்குழாத்தின் நடுவே வந்த இரண்டு சிங்கங்கள் இலங்கையின் மதகரிகளைச் சூழ்ந்து போர் செய்து கொன்றன. இந்நகரினின்று ஒர் அழகிய மயில் வெளியே சென்றது. ஒளிமிக்க திருமகள் தன் கழுத்தில் மணி விளக்கேந்தி, இலங்கை வேந்தன் மாளிகையினின்றும் புறப்பட்டு என் தந்தையின் மாளிகை புகுந்தாள். அந்நிலையில் நான் விழித்துக் கொண்டேன். நான் கண்ட கனவினால் இலங்கை விரைவில் அழியப் போகின்றது. தாங்கள் சிறைமீள்வீர்கள். எனது தந்தை இலங்கையின் மன்னனாவான் என்று திரிசடை கூற சீதாதேவி துயர் ஒழிந்து மனந்தெளிந்தாள்.
மற்றொரு சமயம், சீதை தன் கருத்திற்கு இணங்காது போகவே அவளைப் பயத்தினால் வெல்லக் கருதி, மாயையால் ஒரு அரக்கனை மிதிலை மன்னன் ஜனகன் போல் உருமாற்றி சீதையின் முன் கொணர்ந்து கொடுமைப்படுத்தினான். தந்தையின் துயர்கண்டு ஜானகி பதறித் துடித்தாள். இரக்கமற்ற இராவணன் சென்ற பிறகு “மருத்தன் என்ற அரக்கனையே தசமுகன் தனது மாயத்தால் ஜனகனைப் போல் ஆக்கினான். உனது தந்தை நலத்துடன் இருப்பார். தீங்கு விளையாது” என்று ஆறுதல் கூறி அகந்தேற்றினாள்.
இந்துக்கலைக்களஞ்சியம்
 

வில்லின் செல்வனாகிய இந்திரசித்தன் பிரம்மாஸ்திரத்தை மாற்றார் போல் ஏவ, அதன் வலிமையால் இலக்குவன் முதலாய எண்ணிறந்த வீரர் மண்மேல் சாய்ந்தனர். இதனைக்கண்ட இராகவனும் மனங்கலங்கி மண்மீது சாய்ந்தான். இதனைப் பெரு வெற்றியாகக் கருதி இராவணனிடம் தெரிவித்து மகிழ்ந்தான். அமர்க்களத்தில் மயங்கிக் கிடக்கும் இராமனைக் கண்டால் சீதை தன் வயமாவாள் என்று கருதிய இலங்கை வேந்தன், அரக்கியரை அழைத்துச் சீதைக்கு அக் காட்சியினைக் காட்டுமாறு பணித்தான். அங்ங்னமே சீதையை ஒரு விமானத்திலேற்றி போர்க்களத்தைக் காண்பித்தார்கள். திரிசடையும் சீதையுடன் விமானத்திற் சென்றாள். மயங்கிக் கிடந்த நாயகனையும், மற்றைய வீரர்களையும் கண்ட தேவி நடுங்கி அழுதாள்.
"மங்கை யழலும் வானாட்டு மயில்கள்
அழுதார் மழவிடையோன் பங்கிலுறையும் குயிலழுதாள்
பதும மலர்மேல் மாதழுதாள் கங்கையழுதாள் நாமடந்தை யழுதாள் கமலத் தடங்கண்ணன் தங்கை யழுதாள் இரங்காத அரக்கி மாரும்
தளர்ந் தழுதார்.”
தனது தலைவன் இராமன் இறந்தபின்பு, உயிர் வாழ இசையாத தேவி ஆவி துறக்கத் துணிந்தாள். அருகே நின்ற திரிசடை பிராட்டியாரைத் தழுவி “அன்னையே இதுவும் அரக்கர் மாயம். மாயமானை விடுத்ததும் மிதிலை மன்னனை வகுத்ததுவும் மாயத்தின் மூலமாக என்பது தாங்கள் அறிந்ததே. மேலும் நான் கண்ட கனவும், தங்களுக்கேற்பட்ட நன்னிமித்தமும் பொய்யாகுமா? தசரத குமாரனது வீரம் எளிதானதா, இராமன் அழிந்தால் இந்த அகிலமும் அழிந்து விடுமே. மலரோன் படை வலிமையால் வீரர்கள் மயங்கினரேயன்றி மாண்டாரல்லர். இம் மயக்கம் தீர்ந்து விரைவில் எழுவார்கள். தாங்கள் மனம் வருந்துவது தகாது” என்று திரிசடை தேறுதல் கூற அன்னையும் மனந்தேறி,
"அன்னை நீ உரைத்த தொன்றும் அழிந்திலது ஆதலானே உன்னையே தெய்வமாகக் கொண்டு இத்தனை காலமும்
உய்ந்தேன் இன்னம் இவ் இரவுமுற்று மிருக்கின்றேன் இறத்தல் என்பால் முன்னமே முடிந்த தன்றே" என்று கூறி மயக்கந் தீர்ந்தாள்.
இலங்கையில் போர் முடிந்து இராவணன் முதலியோர் இறந்து சீதையும் செந்தீயில் மூழ்கி எழுந்து தனது கற்பின் பெருமையை நிலை நிறுத்தி தனது ஆருயிர் நாயகனுடன் அயோத்தி நகரம் செல்ல முனைந்தபொழுது திரிசடையை நோக்கி, அன்னையே! இந் நகரில் இணையற்ற அணங்காக எந்நாளும் இனிது வாழ்க’ என்று நிறைந்த மனதுடன் வாழ்த்தினான்.
வீடணன் மகளாய திரிசடை சீதாதேவியின் உயிரைக் காத்து அன்னையினும் இனியளாய்த் திகழ்ந்து இலங்கை அணங்காக உயர்நிலை பெற்றாள். (627. 60262/.)

Page 260
திரிபிடகம்
இந்து சமயப் புனித நூல்கள் தொகுப்பாக வேதங்கள் என அழைக்கப்படுவது போலப் பெளத்த புனித நூல்கள் தொகுப்பாகத் திரிபிடகம் என அழைக்கப்படும். இது விநயபிடகம், ஸுத்தபிடகம், அபிதம்மபிடகம் எனும் மூன்று பெரும் பிரிவுகள் கொண்டதாகும். இவற்றுள் விநயபிடகம் பெளத்த துறவிகள் அல்லது சங்கத்தாரின் ஒழுக்க விதிகளைக் கூறும். ஸுத்தபிடகம் பெரும்பாலும் புத்தபிரானின் உபதேசங்களையும், அவற்றின் விளக்கங்களையும் கொண்டுள்ளதாகும். மூன்றாவதான அபிதம்ம பிடகம் பெளத் தருமத்தின் நுணுக்கமான பொருட் பாகுபாடுகளை விளக்கும். இங்கு திரி என்பது மூன்று எனப் பொருள் படும். பிடகம் என்பதற்கு கூடை, மரபு எனப் பொருள் கூறப்படுகின்றது. பெளத்ததுறவிகள் அக்காலத்தில் புனித நூல்கள் எழுதப்பட்ட ஏடுகளைக் கூடையிலே கொண்டு சென்றனர். எனவே ஆகு பெயராகக் கூடை அதற்குள் கொண்டு செல்லப்பட்ட புனித நூல்களைக் குறித்தது என ஒரு சார் விளக்கம் கூறப்படுகின்றது. பெரிய குழி அல்லது கிடங்கு தோண்டுவோர் தோண்டும் மண்ணைக் கடகங்களிலே (கூடைகளிலே) நிரையாக நின்று ஒருவர் மற்றொருவருக்கு கொடுக்க அவர் அடுத்த ஆளுக்குக் கொடுக்கத் தொடர்ந்து குறிப்பிட்ட இடத்திற்கு மண் கொண்டு செல்லப்படும். இதுபோலக் குருசிஷ்ய மரபிலே இப்புனித நூல்கள் தொடர்ச்சியாகப் பேணப்பட்டுவந்துள்ளன. எனவே பிடகம் என்பது மரபினை, சம்பிரதாயத்தைக் குறிக்கும் என வி. G|Jöl&G|Bif (V. Trenckner), sÓlsso GL6úlL6su (RlaySDavids) gélu அறிஞர் கருதுவர். இவ்விளக்கமும் இந்திய அறிவியல் மரபிற்குப் பொருத்தமானதே. திரிபிடகம் முதன் முதலில் பாளி மொழியிலேயே எழுதப்பட்டவை. பின்னரே வடமொழியிலும் வேறு மொழிகள் சிலவற்றிலும் எழுதப்பட்டன. புத்தசமயத்தின் பிரதான அம்சங்களான மும்மணிகள் - புத்தபெருமான், தம்ம (தருமம்), சங்கம் ஆகியனவும், புத்தபெருமான் போதித்த நான்கு உயரிய உண்மைகள் - துக்கம், அதற்கான காரணம், அதனை நீக்கும் மார்க்கம் அல்லது வழி, அந்தவழியைப் பின்பற்றுவதற்கான எட்டு ஒழுக்கங்கள் (அட்டசிலம்) அடங்கிய சிறந்த அறநெறி முதலியன சிறப்பாக மேற்குறிப்பிட்ட நூல்களிலே கூறப்பட்டுள்ளன.
புத்த பெருமான் கி.மு. 563 இல் வரை வட இந்தியாவின் வட எல்லையிலும் நேபாளத்தின் தென் எல்லையிலுமுள்ள கபிலவஸ்துவிலே சாக்கிய மன்னர் குலத்திலே பிறந்தவர். அரச போகங்களைத் துறந்து உயிர்களின் நன்மைக்கான புதிய மார்க்கம் ஒன்றினை உருவாக்கியவர். அவர் கங்கையாற்றுப் பிரதேசத்திலே குறிப்பாக மகதம், கோசலம் ஆகிய அரசுகளிலே ஊர் ஊராகச் சென்று தமது சமயக் கருத்துக்களைப் போதித்தவர். அவருடைய சிஷ்யர்கள் பலர் இவ்விடங்களைச் சேர்ந்தவர்கள். ஏறக்குறைய ஐம்பது ஆண்டுகள் சமயப்பிரசாரம் செய்தவர். அவர் உருவாக்கிய பெளத்த சமயம் இன்றைய உலகிலுள்ள பிரதான மதங்களில் ஒன்றாகும்.
224

புத்தபெருமான் பரிநிர்வாணம் அடைந்தபின் அவருடைய போதனைகளைச் சிஷ்யர்களும் அவர்களின் வழிவழிச் சிஷ்யர்களும் பல இடங்களுக்கும் முன்னெடுத்தனர். அவருடைய போதனைகளும் அவரது சிஷ்யர்களின் செயற்பாடுகளும் அவர்களுடன் தொடர்புகொண்டிருந்த அரசர்கள், பிறபிரமுகர்கள், மக்கள் பற்றிய செய்திகளும் பிறவும் எழுதப்படாது செவிவழி மரபிலே பேணப்பட்டு வந்தன. மேலும் இவை குறிப்பாக அசோகப் பெருமன்னர் காலத்திலே (கி. மு. 3ஆம் நூ.) நடைபெற்ற மூன்றாவது பெளத்த மகாநாட்டினைத் தொடர்ந்து தொகுக்கப்பட்டன. இவ்வாறுதான் திரிபிடகம் உருவாகிற்று. இதிலுள்ள காலத்தால் முந்திய பகுதிகள் கி.மு. 5ஆம் நூற்றாண்டின் பிற்பகுதிக்கும் கி. மு. 4ஆம் நூற்றாண்டிற்கும் இடைப்பட்ட காலத்தவை எனலாம். ஏனைய பகுதிகள் சற்றுப் பிற்பட்ட காலத்தவை. இலங்கையிலே பேணப்பட்டு வந்துள்ள பெளத்த மரபின்படி கி. மு. முதலாம் நூற்றாண்டில் இலங்கையில் அநுராதபுரத்தில் இருந்து ஆட்சி புரிந்த வட்டகாமணி என்ற அரசன் காலத்திலேதான் இவை முதன்முதலாக எழுத்துருவம் பெற்றதாக அறியப்படுகின்றது. தொடர்ந்து திரிபிடகம் பற்றிச் சுருக்கமாகக் குறிப்பிடலாம்.
விநய பிடகத்தை நோக்கும் போது இது ஸத்தபிடகத்திற்கு முற்பட்டதென்று கொள்ள முடியாது. பெளத்தர்கள் விநய பிடகமே தலைமை பெற்றதாகக் கொண்டுள்ளனர். இவ் விநயபிடகத்திலே மூன்று வகை நூற்றொகுதிகள் உள்ளன. அவையாவன ஸ"த் தவி பங்கம், கந்தகை, பரிவாரம் அல்லது பரிவார பாடம் என்பனவாகும். இவற்றுள்ளே ஸுத்தவிபங்கத்தில் மகாவி பங்கம், பிக்குணிவி பங்கம் எனும் இரண்டும், கந்தகையில் மகாவக்கம், சுள்ளவக்கம் எனும் இரண்டும் அடங்குவன.
விநயபிடகத்தின் உயிர்நாடியாக பாடிமொக்கம் விளங்குகின்றது. பெளத்த சங்கத்தவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய நியமங்களில் வழுவாதவாறு அவ் வழுக்களை கணக்கிட்டுத் தொகுத்துக் கூறி அவற்றிற்குப் பிராயச்சித்தமும் விதிப்பதாம். இந்நியமங்கள் பெளத்த சங்கத்தின் ஒற்றுமையை ஏற்படுத்துவனவாகும். பாடி மொக்க எனும் சொற்தொடர் பலவாறு விளக்கப்படினும் “நிறைவேற்றுதற்கான உறுதிமொழி” என்பதே சரியான பொருள் எனக் கருதப்படுகின்றது. ஒவ்வொரு பிக்குவும் கூறும் நியமங்களுக்கேற்ப ஒழுகவேண்டுமென அடிக்கடி கூறப்படுகின்றது.
மகாவிபங்கத்தில் எட்டு வகைக்குற்றங்கள் பற்றிய எட்டு அதிகாரங்கள் உள்ளன. பிக்குகளுக்கும் பாடிமொக்கம் இருப்பது போல பிக்குணிகளுக்கும் (பெண் துறவிகளுக்கு) பிக்குணி விபங்கம் உண்டு. இது மிகச் சிறிய நூல்.
கந்தகையெனில் பகுதி எனப் பொருள்படும். பிக்குமாரும், பிக்குணிகளும் நாடோறும் பின்பற்றவேண்டிய ஒழுக்கங்களை எடுத்துக் கூறுவதுடன் சங்கத்தினர் பின்பற்ற வேண்டிய விதிகளையும் இது விளக்குகின்றது. இதிலுள்ள
இந்துக்கலைக்களஞ்சியம்

Page 261
மலையும் கோவிலும் சிவ
 

த் திருக்குளமும்
கங்கைத

Page 262
க் கோபுரம், கட்டை
றகுக
தெ
 
 

க் கோபுரம், பெருமாள்

Page 263
நடுவில் வல்லாளன் கோபுரம் இடது வலதுபுறம் ஆயிர
கிழக்குக் கோபுரத்
 
 

புறம் கம்பத்து இளையனார் சந்நிதி, 'ங்கால் மண்டபம்
தின் ஒரு தோற்றம்

Page 264
திருவண்ணாமலைக்
 

க் கோயிற் சிற்பங்கள்

Page 265


Page 266


Page 267

ghane뚝 gs평0hu中國 활5mu田龍 gdmumaun동범a a道制

Page 268

目目白u園四迴uansgusuns - qmns劑可信99迴4可。圓圈mus可尼因n騙遍白到迴目自可臣因3u田

Page 269
அண்மையில் கட்டிமுடிக்கப்
தென்திசை முதல் வாயி
பெருங்கோபுரமும் அதன் பகுதிகளும்
 
 


Page 270

திருவரங்கத்துச் சிற்பங்கள் இரண்டு

Page 271
(கந்தகையிலுள்ள) மகாவக்கத்திலே பத்துப் பகுதிகள் உள்ளன. இவற்றிலே பெளத்த சங்கத்திலே சேர்தற்குரிய நியமங்கள், உபோசத நியமங்கள், மழைக்கால ஒழுக்கம், துறவிகள் செருப்பு அணியும் முறை, அவர்களுக்கான மருந்து, ஆடை, நீதிபரிபாலன முறைகள் முதலியன வரையறுத்துக் கூறப்பட்டுள்ளன.
சுள்ளவக்கத்தில் முதல் ஒன்பது பகுதிகளில் பிக்குமாருக்கும், பத்தாவது பகுதி பிக்குணிகளுக்குமுரிய சில விஷயங்கள் கூறப்பட்டுள்ளன. பெளத்தசமய வரலாற்றிலே குறிப்பிடத்தக்க முதலாம் இரண்டாம் மகாநாடுகள் பற்றி 11ஆம், 12ஆம் பகுதிகளிலே எடுத்துரைக்கப்படுகின்றது. இவ்விரண்டு பகுதிகளும் பிற்பட்ட காலத்தவை எனப் பொதுவாகக் கருதப்படுகின்றது.
மகாவக்கத்திலே புத்தர் வரலாற்றுடன் தொடர்புள்ள சில கதைகளும் உள்ளன. சுள்ளவக்கத்திலும் சில கதைகள் உள்ளன. விநயபிடகத்தை வேதங்களின் பகுதிகளாக உள்ள பிராமணங்களுடன் ஒப்பிடலாம். இரண்டிலும் விதியும், பொருள் விளக்கமும் அடுத்தடுத்துக் காணப்படுகின்றன. பொருள் விளக்கத்திலேதான் பரிபாஷைத்தன்மையுள்ள இடங்களில் ஆங்காங்கே சிறந்த கதைப்பாடல்களும் இடம் பெற்றுள்ளன.
பெளத்த சங்கம் பற்றிய சிறந்த ஆதாரமாக விநயபிடகம் விளங்குவது போல, பெளத்த தருமம் பற்றிய சிறந்த ஆதார நூலாக ஸ"த்தபிடகம் திகழ்கின்றது. இங்கு ஸத்த (சூத்திரம்) எனும் பதம் உபதேசம் (அறிவுரை) அல்லது பிரசங்கம் எனும் பொருளில் வந்துள்ளது. இவ்வகை நூல்களிலே உரையாடல்களும், கதைகளும் பொன்மொழிகளும், கவிதைகளும் இடம் பெற்றுள்ளன. பெளத்த சமயத்தால் உருவாகிய மிகச்சிறந்த இலக்கியமாகவும் இது கொள்ளத்தக்கது. ஸுத்தபிடகத்திலே தீகநிகாயம், மஜ்ஜிம நிகாயம், சம்யுத்த நிகாயம், குத்தக நிகாயம் என்னும் தொகுப்புகள் உள்ளன. முதல் நான்கு நிகாயங்களிலும் புத்தபெருமானின் உபதேசங்கள் உள்ளன. இந்த உபதேசங்களிலே புத்தரும் சிலசமயங்களில் அவரின் சிஷ்யர்களும் பேசிய சொற்பொழிவுகள் சமய சந்தர்ப்பத்தை விளக்கும் முன்னுரையுடன் காணப்படுகின்றன. இவற்றைவிட உரையாடல்களும் கதைப்பகுதிகளும் இதில் இடம் பெற்றுள்ளன. சிலவிடயங்களில் உரைப்பகுதியின் இடையே காதைகள் அல்லது பாடல்களும் உள்ளன.
தீகநிகாயம் எனில் நீண்ட உபதேசங்களின் தொகுதியெனப் பொருள்படும். இதிலே மிக நிண்ட ஸுத்தங்கள் 34 உள்ளன. ஒவ்வொரு ஸுத்தமும் தர்மத்திற்குரிய ஒன்று அல்லது பல விடங்களை நுணுக்கமாக விளக்குகின்றது. இந்த நிகாயம் சிவக்கந்தவக்கம், மகாவக்கம், பாடிகவக்கம் எனும் மூன்று தனிநூல்களாக வகுக்கப்பட்டுள்ளது. முதலாவது நூல் சீலத்தைக் கூறும். இரண்டாவது அளவிலே மிகப் பெரியது. ஸுத்தங்களிற் பெரும்பாலானவை மகா எனத் தொடங்குகின்றன. மூன்றாவது நூல் பாடிகவக்கம் என அழைக்கப்படும். இது பாடிகஸத்தம் என்பதோடு ஆரம்பிக்கின்றது.
இந்துக்கலைக்களஞ்சியம்

சீலக்கந்தவக்கம் முழுவதும் உரைநடையில் உள்ளது. எனைய இரண்டிலும் சில பகுதிகள் உரைநடையிலும் பலபகுதிகள் உரையும் பாட்டும் கலந்த நடையிலும் அமைந்துள்ளன. பாடல்களிற் கதைப் பகுதியாகச் சிலவும், சிறந்த கருத்துக்கள் உட்கொண்டனவாகச் சிலவும் உள்ளன.
முதலாவது சீலவக்கத்திலுள்ள ஸத்தங்கள் அருகபதவியை அளிக்கும் சீலம், சமாதி, பிரக்ஞை முதலியனவற்றை எடுத்துக் கூறுவன. புத்தரின் நீதிக் கொள்கைகள் பலவும் பிராமணரின் வைதிக சமயங்களிற்கு முரண்பட்டவை. இப்போக்கினை முதலாம் ஸுத்தமான பிரம்மஜால ஸுத்தத்திலே காணலாம்.
தீகநிகாயத்தில் மிகமுக்கியமான ஸுத்தம் மகாபரி நிர்வாண ஸ"த்தமாகும். இதிலே புத்தபெருமானின் வாழ்க்கை வரலாற்றின் இறுதிப் பகுதியும், இறுதிக் காலத்தில் அவர் கூறிய உபதேசங்களும் அவரது மரணமும் விவரிக்கப்பட்டுள்ளன. அவரின் வரலாறுகள் கூறும் மிகப் பழைமையான பகுதி இதுவெனக் கருதப்படுகின்றது. புத்தர் தமது போதனைகளை யாவருக்கும் புகட்டியவர். தாம் இன்றியே சங்கம் செயற்பட வேண்டுமென விரும்பியவர். தமது சிஷ்யர்களில் ஒருவரான ஆனந்தருக்கு “நீ உனக்கு விளக்குப் போன்றவன். நீ உனக்குப் புகலிடம், பெளத்த தர்மத்தை உனது விளக்காகக் கொண்டு அதனை இறுகப்பற்றிக் கொள். அதனையே இறுகப்பற்றி உனது புகலிடமாகக் கொள்” என்று உபதேசித்தார்.
சீலக்கந்தவக்கம் எனும் நூலிலுள்ள பலபகுதிகளும் புத்தரை மனிதராகவே வருணித்துள்ளன. ஆனால் 14ஆவது மகா அபதான ஸ”த்த முதலியவற்றில் அவரின் அற்புதச் செயல்கள், ஆறுவகைப் புத்தர்கள் பற்றிக் கூறப்படுகின்றன. லக்ஷண ஸ"த்தத்திலே 30 மகாபுருஷர்களுக்குரிய 32 லக்ஷணங்களும் விவரிக்கப்படுகின்றன. பெளராணிக வடிவிலமைந்த ஸுத்தங்களும் உள்ளன. எடுத்துக்காட்டாக இந்திரன் முதலிய தெய்வங்கள் புத்தபிரானை வழிபட்டதைக் கூறும் சக்கபண்ஹ ஸ"த்தத்தை (21) க் குறிப்பிடலாம்.
மஜ்ஜிம நிகாயம் அதிக நீண்ட அல்லது அதிக குறுகிய அளவிலன்றி மத்திய தரத்தில் அமைந்த ஸுத்தங்களைக் கொண்டதாகும். இவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு பொருள் பற்றியதாகும். இப் பொருள்களும் பல திறப்பட்டவை. பெளத்த தர்மம், நால்வகை வாய்மைகள், கர்மம், அவாவின் பயனின்மை, ஆத்மா, நிர்வாணம், பலவகைத் தியானம் முதலியன பற்றி இதிலே கூறப்படுகின்றன. இந்த உபதேசங்களுக்கு முன்பும், பின்பும் உள்ள உரையாடல்கள் கதைகள் கவர்ச்சிகரமானவை. நால்வகை வர்ணங்களுக்கிடையில் ஏற்றத் தாழ்வு இல்லை. அவையனைத்தும் தூயவை என்றே புத்தபிரான் கருதினார். முற்கால வாழ்க்கை பற்றிய செய்திகள், வைதிக சமய யாகம், சமகாலப் பிற துறவு நெறிகள் பற்றியும் மஜ்ஜிம நிகாயம் கூறுகின்றது.
225

Page 272
ஸம்யுத்தநிகாயம் மூன்றாவது பெருந்தொகுதியாகும். இதிலே 56 தொகுதி ஸத்தங்கள் உள்ளன. அவற்றுள் தேவதா ஸம்யுத்தம் தெய்வங்கள் கூறியவற்றின் தொகுதி மாரஸம்யுத்தம், பிக்குணி ஸம்யுத்தம், மாதுகாம ஸம்யுத்தம், தம்ம சக்க பவத்தன ஸ"த்தம் முதலியன குறிப்பிடற்பாலன. இந்த நிகாயத்திலே 2889 ஸத்தங்கள்
உள்ளன.
அங்குத்ரநிகாயம் நாலாவது பெரியதொகுதியாகும். எண்வரிசையில் அமைந்த பல உபதேசங்கள் அடங்கிய தொகுதியாக இது உள்ளது. அங்குத்தரம் எனில் ஒர் அங்கம் எனப் பொருள்படும். இதிலே 2308 ஸத்தங்கள் உள்ளன. இந்த ஸுத்தங்கள் 11 பகுதிகள் அல்லது நிபாதங்களாக வகுக்கப்பட்டுள்ளன. முதலாம் நிபாதம் ஒருபொருள் பற்றியும் இரண்டாம் நிபாதம் இருபொருள் பற்றியுமாகத் தொடர்ந்து 11வது நிபாதம் 11 பொருள் பற்றியுமாக அமைந்துள்ளன. முதல் நிபாதத்திலே கணவன் மனைவி உறவுகள் போன்றவை கூறப்படுகின்றன. நிர்வாணத்திற்கான பல தியானங்களும் இதில் இடம் பெற்றுள்ளன. பெண்கள் பற்றிக் கூறும் ஸுத்தங்கள் பல உள்ளன. புத்தபிரானின் அன்புக்குரிய சிஷ்யரான ஆனந்தர் பெண்கள் துறவியாக மாறுவதை ஆதரித்தவர். நான்காவது நிபாதத்திலே தற்காலப் பெண் விடுதலை பேசும் அறிஞர்கள் போலக் கூறியுள்ளார். சில உண்மைகளை விளக்குதற்கான உவமானக் கதைகள் இந்த நிகாயத்தில் உள்ளன.
குத்தகநிகாயம் ஸுத்தபிடகத்தின் ஐந்தாவது நிகாயமாக பெரும்பாலும் கொள்ளப்படுகின்றது. ஓரளவு அபிதம்ப பிடகத்தைச் சார்ந்ததாகவும் கருதப்படுகின்றது. சூத்த நிகாயம் என்பது சிறு கடிகையின் அல்லது துண்டின் திரள் எனப்பொருள்படும். இந்த நிகாயத்தை ஒழிபியல் தொகுதி எனக்கூறலாம். இதிலே பல விதமான சிறு நூல்கள் ஒன்றாக இணைக்கப்பட்டுள்ளன.
குத்தக நிகாயத்திலே குத்தக பாடம், தம்மபதம் உதானம், இதிவுத்தம், ஸ"த்தநிபாதம், விமானவத்து பேதவத்து, தேரகாதை, தேரீகாதை, ஜாதகம் நித்தேசம், படிஸம்பிதாமக்கம், அபதானம் புத்தவம்சம், சர்பாபிடகம் என 15 தொகுதிகள் உள்ளன முதலாவதாக உள்ள குத்தக பாடத்திலே பெளத்த மந்திரங்கள், இச்சமயத்தில் புதியவராகச் சேர்ந்தோர் கேட்குப் சில கேள்விகளுக்கு விடைகள், நீதி உபதேசங்கள் மைத்திரீபாவனை முதலியன கூறப்பட்டுள்ளன.
இந்த நிகாயத்தின் இரண்டாவது தொகுதி தம்மபதம் திருக்குறள், பகவத்கீதை போன்று சிறப்புவாய்ந்தது. தம்மபதம் என்ற தொடரில் பதம் என்பது அடிச்சுவடு, நெறி, சொல், வசனம் செய்யுள் - தொகுப்பு எனப் பலவாறு பொருள் கொள்ளப்படும் தர்ம எனும் வடமொழிப்பதம் தம்ம எனப் பாளி மொழியிலே வரும் எனவே இந்நூலை அறநெறி எனத் தமிழிலே கூறலாம்
226

பெளத்த நூல்கள் அனைத்திலும் மிகப் புகழ்பெற்ற நூல் இதுவே. ஐரோப்பிய மொழிகள், ஆசிய மொழிகள் பலவற்றில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. ஆங்கிலத்தில் மட்டும் பல மொழி பெயர்ப்புகள் உள்ளன.
இதிலுள்ள செய்யுட்களிலே பாதிக்கு மேற்பட்டவை பாளிமொழியிலுள்ள திரிபிடகத்தினைச் சேர்ந்த பிறநூல்கள் பலவற்றிலும் காணப்படுகின்றன. எனவே இந்தத் தொகுப்பிலுள்ள குறிப்பிட்ட செய்யுட்கள் அவை இன்று கிடைத்துள்ள திரிபிடக நூல்களிலிருந்து தொகுக்கப்பட்டன எனலாம். மேலும் ஒரு குறிப்பிட்ட தொகைச் செய்யுட்கள் பொதுவான நீதிக் களஞ்சியத்திலிருந்து பெறப்பட்டிருக்கலாம் எனக் கருதப்படுகின்றது. இது பற்றிப்பின்னரும் குறிப்பிடப்படும். இலங்கையிலுள்ள பெளத்தர்கள் இதனை நன்கு கற்று வருகின்றனர். மனனம் செய்தும் வருகின்றனர். 423 செய்யுட்கள் கொண்டுள்ள இந்நூல் யமகவக்கம் தொடக்கம் பிராமணவக்கம் ஈறாக 26 வக்கங்களாக வகுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு வக்கத்திலும் 10-20 வரையுள்ள செய்யுட்கள் இடம் பெற்றுள்ளன. பெளத்த சமய ஒழுக்கக் கோட்பாடுகளைக் குறிப்பாக உள்ளடக்கிய அறிவுரைகளின் தொகுப்பாகக் இஃது இலங்குகின்றது. இதில் இடம்பெற்றுள்ள கருத்துக்களிலே கணிசமானவை திருக்குறள், பகவத்கீதை, மகாபாரதம், தர்மசாத்திரங்கள், உபநிஷதங்கள் முதலியன கூறும் விடயங்கள் சிலவற்றுடன் நன்கு ஒப்பிடற்பாலன. இவையனைத்தும் ஒரு பொது மூலத்திலிருந்தும் பெறப்பட்டிருக்காலம். சில எடுத்துக்காட்டுகளைக் குறிப்பிடலாம். தம்மபதம் கூறும் நிற்பனவும் திரிவனவுமாகிய எவ்வுயிரையும் துன்புறுத்தாமலும், கொல்லாமலும், கொல்லக் காரணமாக இல்லாமலும் எவன் உள்ளானோ அவனையே நான் பிராமணன் என்று சொல்லுவேன் என்பதைத் திருக்குறள் கூறும், “அந்தணர் என்போர் அறவோர் மற்றெவ்வுயிர்க்கும் செந்தண்மை பூண்டொழுகலான்” என்பதுடன் ஒப்பிடலாம்.
“தேர்ப்பாகன் குதிரைகளை அடக்கிப் பழக்கியிருப்பதுபோல இந்திரியங்களை அடக்கி அகங்காரத்தை அகற்றி, ஆசையாகிய கறைகளில்லாதிருப்பவனைக் கண்டு தேவர்களும், பொறாமைப்படுவார்கள்” எனத் தம்ம பதம் கூறியிருப்பதைக் கடோபநிஷத்திலே (1.33-9) கூறப்பட்டுள்ள தேர் பற்றிய உப தேசவுரையுடன் ஒப்பிடலாம்.
மாதந்தோறும் ஆயிரம் யாகங்களாக நூறு வருடம் யாகம் செய்பவன் தம்மைத்தாமே அடக்கிக் கொண்ட ஒருவரை ஒருகணம் வணங்குதல் அந்த நூறுவருட வேள்வியை விட மேலானது' என தம்மபதம் கூறியிருப்பதைத் திருவள்ளுவர் 'அவிசொரிந்தாயிரம் வேட்டலின் ஒன்றன் உயிர் செகுத்துண்ணாமை நன்று எனக் கூறியிருப்பதுடன் ஒப்பிட்டு நோக்கலாம். "எவ்வளவு உயர்ந்ததாயினும் பிறருடைய கடமைக்காக எவனும் தன் கடமையைக் கைவிடக்கூடாது. தன் கடமையைக் கண்டறிந்த பின்பு அவன் அதையே நன்கு ஆறறிவருவானாக” எனத் தம்மபதம் கூறியிருப்பதைப்
இந்துக்கலைக்களஞ்சியம்

Page 273
பகவத்கீதை, "தொழிலைச் செய்வதற்குத்தான் உனக்கு அதிகாரம் உண்டு. அதன் பலன்களில் என்றுமே உனக்கு அதிகாரமில்லை” எனவும் 'உனக்கு) விதிக்கப்பட்ட தொழிலைச் செய், தொழிலின்மையைக் காட்டிலும் தொழில் சிறந்தன்றோ’ எனவும் கூறியிருப்பதுடன் ஒப்பிடலாம்.
“விழித்தெழுக! கருத்தில்லாமல் இருக்கவேண்டாம். கரும ஒழுக்கத்தைக் கடைப்பிடி தரும வழியில் நடப்பவனுக்கு இகத்திலும் சுகம். பரத்திலும் சுகம்” எனத் தம்மபதம் கூறியிருப்பதைக் கடோபநிஷத் கூறும் எழுந்திரு வழித்தெழுக! வரங்களைப் பெற்றபின் அவற்றை விளங்கிக் கொள்வாயாக' என்பதுடன் ஒப்பிட்டு நோக்கலாம்.
'நன்மக்கள் எதிலும் பற்றுக் கொள்வதில்லை. இன்பங்களை விரும்பி இரைச்சல் போடுவதில்லை, சுகமோ துக்கமோ வந்தால் ஞானிகள் எழுச்சியடைவதுமில்லை, அயர்வு கொள்வதுமில்லை” எனத் தம்ம பதம் கூறியிருப்பதை, "தன்னைவென்று நன்கு அமைதியடைந்தவனாகிச் சீதோஷ்ணங்களிலும், சுகதுக்கங்களிலும், மானாவமானங் களிலும் சமநிலையில் உள்ளவனிடத்தே பரமாத்மா விளங்குகின்றது” எனப் பகவத்கீதை கூறியிருப்பதுடன் ஒப்பிடலாம்.
இவ்வாறு தம்மபதத்திற்கும் வேறு சில தமிழ், சமஸ்கிருத நுல்களுக்குடையில் கருத்தொற்றுமை நிலவுவதை அவதானிக்கலாம்.
தம்மபதம் செய்யுட்களின் தொகுப்பே. இவை ஒவ்வொன்றும் எந்தச் சந்தர்ப்பத்தில் தோன்றின என்பது பற்றி விளக்கி விரிவான உரைநூல் ஒன்று பிற்காலத்திலே எழுதப்பட்டது.
மூன்றாவது உதானம் எனும் கட்டுரைத் தொகுதியாகும். இதில் எட்டு வக்கங்களும், ஒவ்வொரு வக்கத்தியிலும் பத்து ஸுத்தங்களும் உள்ளன. இவை புத்தரது வரலாற்றில் ஒரு நிகழ்ச்சியைக் கூறி அதன் முடிவில் அவர் கூறியதாகவுள்ள சிறு கட்டுரை ஒன்றும் கொண்டுள்ளன. இக்கட்டுரை ஒவ்வொன்றும் புத்தரால் 'உயிர்க்கப்பட்டது எனக் கருதப்படுவதால் இப்பெயர் (உதானம்) ஏற்பட்டது.
நான்காவது இதி உத்தகம்; இவ்வாறு (புத்தர்) கூறினார் எனப் பொருள்படும் இதில் 12 சிறுவசனங்கள் உள்ளன. இதுவும் உரையும் பாட்டுமாக அமைந்துள்ளது. ஏதேனும் ஒர் உபதேசம் அல்லது கொள்கை அரைவாசி உரையாகவும் அரைவாசி பாட்டாகவும் இதில் அமைந்திருக்கும்.
குத்தக நிகாயத்தைச் சேர்ந்த ஐந்தாவது தொகுதி ஸ"த்த நிபாதம். பெளத்தச் செய்யுள் இலக்கியத்தில் மிகப் பழைமையானவை சில இதில் இடம்பெற்றுள்ளன. தம்ம பதத்திற்கு அடுத்தபடியாக இதுவே பெளத்த நூல்களில் அடிக்கடி பயன்படுத்தப்பட்டுள்ளது. இதில் உரகவக்கம் முதலிய ஐந்து
இந்துக்கலைக்களஞ்சியம்

பகுதிகள் உள்ளன. இவற்றில் உரையாடல்களும், கதைச் செய்யுட்களும் உள்ளன.
ஆறாவது, ஏழாவது தொகுதிகளாக உள்ள விமானவத்து, பேதவத்து ஆகியனவற்றிலே கர்மத்தின் விளைவுகள் கூறப்படுகின்றன. தொடர்ந்து வரும் தேரகாதை, தேரீகாதை ஆகியன சுவையுள்ளன. இக்காதைகளிலே மிகச்சிறந்த உணர்ச்சிக் கவிதைகளும் (Lyrics) காணப்படுகின்றன. தவத்தில் முதிர்ந்த பெளத்த ஆண் துறவி, பெண் துறவி முறையே தேரர், தேரீ என அழைக்கப்படுவர். மேற்குறிப்பிட்ட காதைகளில் உள்ள செய்யுட்களை இயற்றிய தேரர், தேfகளின் பெயர்கள் இவற்றிலிடம் பெற்றுள்ளன. தேர காதையில் 107 பெருங்கவிதைகளும், 1279 காதைகளும் தேரீ காதையில் 73 பெருங் கவிதைகளும் 522 காதைகளும் உள்ளன. இயற்கை வருணனைகள் பல இவற்றில் உள்ளன.
குத்த நிகாயத்திலுள்ள பத்தாவது தொகுதி ஜாதகக் கதைகளாகும். ஒருவர் புத்தராவதற்கு முன்பு வாழ்ந்த வாழ்க்கை பற்றிய கதைகளே இத் தொகுப்பிலுள்ளன. போதிசத்துவர், தமது முற்பிறப்புக்களிலே செய்த அரும் செயல்கள் பற்றியே இவை கூறுவன. புத்தர் ஆவதற்கு முந்திய நிலையே போதிசத்துவ நிலையாகும். எனவே ஜாதகங்களை போதிசத்துவர் கதைகள் எனவும் கூறப்படும். ஜாதகங்கள் பெரும்பாலும் பாட்டும் உரையும் கலந்த நடையிலேதான் அமைந்துள்ளன. இப்போது கிடைத்துள்ள ஜாதகத் தொகுப்பிலே 547 கதைகள் உள்ளன. ஆதியில் 500 கதைகளே இருந்தன எனவும் கருதப்படுகின்றது. பழைய கதைகள் பல பெளத்தர்களால் தங்களின் சமயத்திற்கு ஏற்றவாறு திருத்தியமைக்கப்பட்டன என ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.
ஜாதகக் கதைகளின் பொருளடக்கத்தினை நோக்கும்போது விலங்குகள் பற்றிய நீதிக்கதைகளாகச் சில உள்ளன. தெய்வீகம், மாந்திரிகம் முதலியன பற்றிய விலங்குக் கதைகளாக வேறு சில காணப்படும். நகைச்சுவைக்கதைகளாகவும் சில காணப்படும். இவற்றைவிட நவீனகம் போன்ற கதைகள், ஒழுக்கக் கதைகள், மூதுரைகள், பக்திக் கதைகள் முதலியனவும் உள்ளன. இவைகளில் பல பெளத்தம் சார்பற்றவையாயிருந்து பெளத்தமயமாக்கப்பட்டவை எனக் கருதப்படுகின்றன. புகழ்பெற்ற வெஸ்ஸந்தர ஜாதகக் கதை பெரியபுராணம் கூறும் இயற்பகை நாயனாரின் கதையைப் போன்றதாகும். இதுபோலவே சிபியின் கதையும் குறிப்பிடற்பாலது. இவ்வாறு ஜாதகங்கள் பல திறப்பட்டவை.
நித்தேசம் எனில் விளக்கம் எனப்பொருள்படும். ஸுத்திநிபாதத்திலுள்ள பகுதிகளுக்கு விளக்கமாக இது உள்ளது. இது மகாநித்தேசம், சுள்ள நித்தேசம் எனும் இரு பிரிவுகள்  ெக I ன் ட த ரா கு ம் ப டி ஸ் ம் பி த ப ம க் க ம் பொருட்பாகுபாட்டிற்குரிய நெறியைக் குறிக்கும். இதில் மூன்று பெரும்பகுப்புகள் உள்ளன. ஒவ்வொன்றிலும் பெளத்த தர்மத்தைப்
227

Page 274
பற்றிப் பத்து நூல்கள் உள்ளன. குத்தநிகாயத்தைச் சேர்ந்த அவதானம் ஜாதகத்தைப் போல விரிந்த நூலாகும். அவதானம் எனில் வீரச்செயல், புகழ்பெற்ற செயல் எனப்பொருள்படும். பக்தியினாலும், தியாகத்தினாலும் ஏற்பட்ட அருஞ் செயல்களையே இவை குறிக்கின்றன. ஆகவே பெளத்தத்தின் மேலானதுறவிகளுக்குடைய வரலாறு பற்றியவை. இவை முற்றிலும் செய்யுளில் அமைந்துள்ளன. குத்தநிகாயத்தில் அடுத்துவரும் புத்தவம்சம் சிறு நூலாகும். கௌதம புத்தருக்கு முன்பு 12 கற்பங்களிலும் வாழ்ந்த 24 புத்தர்களின் வரலாறுகள் இதில் இடம்பெற்றுள்ளன. குத்த நிகாயத்திலடங்கியுள்ள கடைசி (15வது) நூலாக சரியாபிடகம் அமைந்துள்ளது. இதிலே 35 ஜாதகக் கதைகள் செய்யுள் வடிவில் உள்ளன. ஒவ்வொரு போதிசத்துவரும் இன்ன இன்ன பாரமிதையில் (முழுமையானநிலை) சிறந்து விளங்கினார் எனவரும் வரலாறுகள் இந்நூல் கூறும் பொருளாகும். தானம், சீலம் எனும் இரு பாரமிதைகளைப் பற்றிக் கூறும் இரண்டு நிகாயங்கள் உள்ளன.
திரிபிடகத்தின் மூன்றாவது தொகுப்பான அபிதம்மபிடகம், தம்மஸங்காணி, விபங்கம், தாதுகதா, புக்கலபஞ்ஞத்தி, கதாவத்து, யமகம், பட்டாணபகரணம் அல்லது மகாபகரணம் எனும் ஏழு நிகாயங்களைக் கொண்டுள்ளது. அபிதம்மம் எனும் பதம் (பெளத்த) கொள்கையிலே சிறந்து விளங்கும் நுட்பப் பொருளைக் குறிக்கும். மெய்யியலையோ பெளதீகாதீத இயலையோ குறிக்காது. ஸுத்தபிடகத்திலும் இதிலும் கூறப்படும் பொருள் பெரும்பாலும் ஒன்றேயாயினும், அபிதம்மநூல்களில் சங்கேதங்களின் இலக்கணங்களும் பாகுபாடுகளும் அதிகமாக உள்ளன. இந்த இலக்கணங்கள் சொல்லின் பொருளை வரையறுக்க முயலுகின்றன. ஆனால் ஒரே கருத்துள்ள பல சொற்களை அடுக்குகின்றன. பாகுபாடுகளும் மனநிகழ்ச்சிகளை ஆழ்ந்தறிந்து சொல்வன அல்ல. முதலாவதான தம்மஸம்காணி, மனம் பற்றிய நீதிகளைக் கூறும் பெளத்த கையடக்கமான நூலாகும். இரண்டாவதான நிகாயம் விபங்கம். இதற்குப் பகுப்பு என்று பொருள். இதன் முதற்பகுப்பு முதலாவது நிகாயத்தின் தொடர்ச்சியே. இரண்டாம் பகுப்பு புலனறிவு முதல் புத்தரை அறியும் வரையுள்ள பலவிதமான விஷயங்களை உணர்த்துகிறது. மூன்றாவது பகுப்பு பரஞானத்திற்குத் தடையாயிருப்பனவற்றை விளக்கும். இறுதியான நாலாம் பகுப்பு மக்கள், ஏனைய உயிரினங்கள், அவற்றின் நிலைமைகள் முதலியன பற்றிக் கூறும்.
தாதுகதா மூன்றாவதாக அமைந்துள்ளது. இதிலே மானசிகத் தோற்றத்திற்குரிய பல அடிப்படைப் பொருள்களும் கூறப்படுகின்றன. கேள்வியும் விடையுமாக இஃது அமைந்துள்ளது.
நாலாவது நிகாயம் புக்கலபஞ்ஞத்தி. இதன்பொருள் தனித்தனி மக்களின் வருணனை என்பதாகும். மக்களைக் குணம் பற்றிப் பாகுபாடு செய்வதே இதன் நோக்கமாகும்.
228

அபிதம்மபிடகத்தின் ஐந்தாவது நிகாயம் கதாவத்து. ஏனைய அபிதம்மபிடக நூல்களிலும் பார்க்க பெளத்த சமயவரலாற்றை அறிவதற்கு மிக முக்கியமானதாகக் கூறப்படுகின்றது. இதனைத் திஸ்ஸமொக்கலி புத்தர் மூன்றாவது பெளத்த சங்கத்திலே தொகுத்தார் எனக் கூறப்படுகின்றது. இது பற்றிக் கருத்து வேறுபாடு நிலவுகின்றது. இப்போது கிடைத்துள்ள பிரதியில் கேள்விகளும் விடைகளுமாக அமைந்த 23 பகுப்புக்கள் இந்நூலில் உள்ளன. முற்காலத்திலே நிலவிய பல்வேறு வகையான மித்தியாவாதங்களும் இதில் இடம்பெற்றுள்ளன. அபிதம்மபிடகத்திலே ஆறாவது நிகாயமான யமகத்தில் வரும் ஒவ்வொரு கேள்வியும் விடையும் இரண்டு வகையாகத் தரப்படுகின்றன. அபிதம்மத்தின் முதல் ஐந்து நிகாயங்களிலுள்ள ஐயங்களை நீக்குதற்கு இஃது எழுதப்பட்டதாயினும், எளிதில் இது பொருள் விளங்கத்தக்கதன்று. அபிதம்மபிடகத்திலுள்ள கடைசி நிகாயம் பட்டாணபகரணம் அல்லது மகாபகரணம் ஆகும். இதிலே திகபட்டானம், துகபட்டானம் என இரண்டு பகுதிகள் உள்ளன. இதிலே உடம்பிற்கும், மனத்திற்கும் இருக்கக்கூடிய 24 வகைத் தொடர்புகளைப் பற்றி விரிவான ஆராய்ச்சி செய்யப்படுகின்றது. காரணம்-காரியம், அகம்-புறம், ஆண்டான்-அடிமை அடுத்தடுத்து ஒருசேரவிருப்பது முதலியன இத் தொடர்புகளுக்கு உதாரணங்களாகும். பெளத்தக் கருத்துக்களைப் பொதுப்பட விசாரிப்பவர்களுக்கு திகபட்டாணத்தின் முதற்பகுதி பயனுடைத்தாகும். இதிலேதான் மேற்குறிப்பிட்ட 24 வகைத் தொடர்புளும் முறையாகக் கூறப்பட்டுள்ளன. எனினும் இதுவும் எளிதில் புரிந்து கொள்ளக்கூடியதாக இல்லை.
அபிதம்மபிடகத்தை அனைத்துப் பெளத்தரும் ஏற்றுக் கொண்டிலர். ஹீனயானத்தைச் சார்ந்த செளந்திராந்திக, ஸர்வாஸ்திவாதப் பிரிவினர் இதனைப் பிரமாணமாக ஏற்றிலர். வடமொழியிலுள்ள அபிதம்ம பிடகத்தையே மேற்கொள்வர். ஆனால் இவ்வடமொழி நூல் பாளி மொழியிலுள்ள அபிதம்மபிடகத்திலிருந்து வேறுபட்டுள்ளது. திரிபிடகம் பாளி மொழியைவிட, சமஸ்கிருதம், சிங்களம், சீனமொழி, திபெத்திய மொழி முதலிய ஆசிய மொழிகளிலும் தற்காலத்தில் ஆங்கிலம் முதலிய சில ஐரோப்பிய மொழிகளிலும் முழுமையாகவோ அல்லது பகுதிகளாகவோ வெளிவந்துள்ளது. (ஹரி சி)
திரிபுரம் (முப்புரம்)
திரிபுரம் மயன் எனும் சிற்பியினால் உருவாக்கப்பட்ட மூன்று கற்பனை நகரங்களாகும். புரம் எனில் நகரம் எனும் கருத்துப்படும். பிரமாவின் மகனாகிய மாரீசியின் மகன் காஸ்யபருக்குப் பல மனைவியர் இருந்தனர். இவர்களிலே தேவர்களின் தாயாகிய அதிதி முதலிடமும், அசுரர்களின் தாயாகிய திதி இரண்டாமிடமும் வகித்தனர். இவர்கள் இருவரும் தக்கனின் பிள்ளைகள். திதிவழிவந்த சூரபத்மன், சிம்மவக்திரன் (சிம்மமுகன்), தாரகாசுரன், கோமுகன், ஹிரண்யாக்ஷ, ஹிரண்யகசிபு முதலியோர் தலைமையில் தேவர்களுக்குப் பல தொல்லைகளை ஏற்படுத்தினர். ஆனால் அமிர்தத்தைப் பருகிய தேவர்களுக்குத்
இந்துக்கலைக்களஞ்சியம்

Page 275
தலைவனான இந்திரன் அவர்களை எப்பொழுதும் வெற்றிபெற்றான். சுப்பிரமணியப் பெருமான் தாரகாசுரனைக் கொன்றபின் அசுரர் பலமிழந்தனர். இக்கால கட்டத்தில் தாரகனின் மக்களாகிய கமலாக்ஷன், தாரகாசுஷ, வித்யுன்மாலி ஆகியோர் கடும் தவஞ்செய்து பிரமாவிடம் பலவரங்களைத் தருமாறு வேண்டினர். முதலாவதாகத் தங்களை மூவுலகில் எவரும் கொல்லக்கூடாது எனக்கேட்க பிரமா அதைத் தவிர்த்து வேறு ஏதேனும் கேட்குமாறு கூறினார். அதற்கு நாங்கள் வசிப்பதற்கு மூன்று நகரங்கள் வேண்டும். அவை மூவுலகிலும் தடையின்றிச் செல்ல வேண்டும் எனவும் 1000 ஆண்டுகளுக்கு ஒருமுறை நாங்கள் மூவரும் எமது நகரங்கள் ஒன்றிலே ஒன்று கூடவேண்டும் எனவும், ஒன்றுகூடிய பின் மீண்டும் 1000 ஆண்டுகள் அசைந்து திரிய வேண்டும் எனவும், எங்களுக்கு மரணம் ஏற்படுவதாயின் நாங்கள் மூவரும் ஒன்றாயிருக்கும்போது ஒரே அம்பினால் ஏற்படவேண்டும் எனவும் பரிந்து வேண்டினர். பிரமா அவ்வாறே வரமளித்தார்.
இதன்பின் மூவரும் தம்முடைய சிற்பியாகிய மயனிடம் சென்று பொன், வெள்ளி, இரும்பு ஆகியவற்றை கொண்டு முறையே மூன்று நகரங்களை அமைக்குமாறு கூறினார். அவ்வாறே மயன் சுவர்க்கத்திலமைத்த பொன்னகளில் தாரகாகூடினும், ஆகாயத்திலே அமைத்த வெள்ளி நகரிலே கமலாகூடினும், பூமியிலமைத்த இரும்பு நகரிலே வித்யுன்மாலியும் வசிக்கத் தொடங்கினர். இந் நகரங்கள் விரும்பியவாறு நகரும். இந் நகரங்களைக் கட்டுப்படுத்தும் அதிகாரம் பாணாசுரனிடம் வழங்கப்பட்டது. இவன் ஹிரண்யகசிபு மரபில் வந்த மகாபலியின் மகன்.
திரிபுரம் இருந்தபோதிலும் அசுரர் பலர் இறந்தனர். தாரகாசுரன் மகன் ஹரி பிரமாவை நோக்கித் தவம் செய்தான். அவர் அவன்முன் தோன்றியபோது அசுரர்களின் மரணத்தினைத் தடுப்பதற்கு வழிவகுக்குமாறு கோரினான். பிரமா அதற்கு இணங்கி மயன் மூலம் அதிசயமான வாவியை அமைப்பித்தார். அதனை அமுதத்ததால் நிரப்பினர். இறந்த எந்த அசுரனின் உடலை அதிலே விட்டெடுத்தாலும் அவன் முன்னையிலும் பார்க்க அதிக வலுவுடன் உயிர்பெற்று எழக்கூடிய நிலை ஏற்படும். இவ்வாவி அமிர்த சஞ்ஜிவனி வாவி எனப்பட்டது. எனவே இதன்பின் அசுரர் அழியாமல் தேவர்களுக்குப் பெரும் துன்பம் விளைவித்தனர்.
பாதிப்புற்ற தேவர்கள் பிரமாவிடம் முறையிட்டனர். ஆனால் பலன் இல்லை. பின்னர் அவர்கள் சிவபிரானிடம் சென்று தம்மைக் காக்குமாறு வேண்டினர். அதற்கு அவர் அசுரர்களை மீண்டும் 1000 ஆண்டுகளின் பின் ஒன்று கூடும்போது அவர்களை அழிப்பதாக வாக்குறுதி அளித்தார்.
இதனை நிறைவேற்றுதற்கான ஆயத்தங்களைச் சிவபிரான் செய்யத் தொடங்கினார். முதற்படியாக நாரதரை திரிபுரத்திற்கு அனுப்பினார். நாரதர் தனது அதிசயமான தெய்வீக ஆற்றலால் அசுரப் பெண்களைத் தேவர்களிடம் அதிகப் பற்றுறச் செய்தார்.
இந்துக்கலைக்களஞ்சியம்

சிவபிரான் திரிபுரத்துடன் போர் செய்யும் வாய்ப்பினை நாடி நர்மதையாற்றங்கரையிலே தங்கியிருந்தார். பெரிய ஆயத்தங்களை மேற்கொண்டார். தேவர்களின் அரைவாசி பலத்தினைத் தனதாக்கினர். தேவர்கள் தமது சிற்பியான விஸ்வகர்மா மூலம் சிவனுக்குப் பெரிய தேர் செய்வித்தனர். நர்மதையாற்றங்கரையில் மகேஸ்வர எனுமிடத்திலே 1000 ஆண்டுகள் தங்கிச் சிவபிரான் திரிபுரப் போர் பற்றிச் சிந்தித்தார். மந்தர மலையை வில்லாகவும், வாசுகியை நாணாகவும், விஷ்ணுவை அம்பாகவும் பயன்படுத்தினார். அம்புநுனியில் அக்கினியை அமைத்தார். அம்பின் கீழ்ப்பகுதியில் வாயுவை வைத்தார். நான்கு தேவர்கள் குதிரைகளாக நின்றனர். பூமியே தேராகிற்று. தேவலோகத்திலுள்ள உயிருள்ள உயிரற்ற அனைத்தும் தேரின் பல்வேறு பகுதிகளாயின. சில்லுகளில் அஸ்வினி தேவர்களும், அச்சில் சக்கரபாணியும் நின்றனர். கந்தவர்கள் சில்லுகளின் ஆரங்களாக இருந்தனர். இந்திரன் வில்லிலும், வைஷ்ணவர் அம்பிலும் நின்றனர். யமன் வலது கைப்பகுதியிலும், பயங்கரமான காலன் இடதுகைப்பகுதியிலும் நின்றனர். இவ்வாறு நன்கு படைக்கலங்கள் பொருத்தப்பட்ட தேரிலே சிவபிரான் ஆயிரம் ஆண்டுகள் வீற்றிருந்தார். மூன்று நகரங்களும் வானத்திலே ஒன்று சேர்ந்தபோது அவற்றைத் தனது திரிசூலத்தினாலே உடைத்தார். ஓர் அம்பினை நகரங்களுக்கு எய்தார். தீயசகுனங்கள் திரிபுரத்திலே தோன்றின. நகரிலுள்ளோர் உயிரற்றவர் ஆயினர். முப்புரங்களும் தீயினால் சாம்பலாயின. சிவபெருமான் அம்பை எய்யாமலே தனது புன்முறுவலாலே முப்புரங்களையும் எரித்துச் சாம்பராக்கினார் எனவும் கூறப்படுகின்றது.
பெளராணிக ரீதியிலான இக் கதைக்குச் சைவமரபிலே தத்துவரீதியிலான விளக்கம் அளிக்கப்படுகிறது. ஆன்மாக்களைப் பீடித்திருக்கும் ஆணவம், கன்மம், மாயை எனும் மூன்று மலங்களுமே முப்புரங்கள். சிவபிரானின் திருவருளால் இவை செயலற்றுப் போக ஆன்மாக்கள் விடுதலையடைந்து சிவகதி அடைவன. எனவே திரிபுர தகனம் (முப்புரம் எரித்தல்) மும்மலங்களையும் அழித்தலையே குறியீடாகக் கொண்டுள்ளது. (வி சி)
திரிபுராந்தக மூர்த்தி
சிவபெருமான் எடுத்த பல வடிவங்களுள் திரிபுராந்தக மூர்த்தி வடிவம் குறிப்பிடத்தக்கது.
புராண வரலாறு
முன்னொரு காலத்தில் தாராகாட்சன் என்பவனின் புதல்வராகிய தாரகாட்சன், கமலாட்சன், வித்யுன் மாலி என்னும் அசுரர்கள் மூவரும் பெருந்தவம் புரிந்து, பறந்து திரிந்து உலவும் தன்மையுடைய பொன், வெள்ளி, இரும்பு என்ற உலோகத்தால் அமைந்த மூன்று பெரும் கோட்டைகளைப் பெற்றனர். அவற்றைக் கொண்டு அம்மூவரும் தேவர்களுக்கும் முனிவர்களுக்கும் பெரும் கொடுமைகள் புரிந்து வந்தனர். அவர்களின் செருக்கை அடக்கி, அவர்களை அழிக்கச் சிவபெருமான் திருவுளம் கொண்டு தேவர்கள் எல்லோரும் படைகளாகவும் சூரிய, சந்திரர்கள்
229

Page 276
சக்கரமாகவும் உலகம் தேராகவும் அமைய, அத்தேரின் மீது ஏறித் திரிபுர அசுரர்கள் மீது போர் செய்யப் புறப்பட்டார். அப்போது தேவர்கள் எல்லோரும் இவர் நம்முடைய துணையைக் கொண்டன்றோ போர் புரியச் செல்கின்றனர் என எண்ணிச் செருக்குற்றனர். இதையறிந்த சிவபெருமான் தேவர்களின் அறியாமையை நினைத்து சிறிது புன்முறுவல் தோன்றச் சிரித்தார். அச் சிரிப்பினாலேயே திரிபுரங்களும் அழியச் செய்தருளிய நிலையே திரிபுராந்தக மூர்த்தம் எனப்படும்.
சிவபெருமான் திரிபுரங்களை எரித்தருளிய வீரச் செயல் பற்றிய குறிப்புகள் சங்க இலக்கியங்களில் காணப்படுகின்றன. பரிபாடலில் இறைவன் முப்புரம் எரித்த விரிசடைக் கடவுள் என்றுகூறப்பட்டுள்ளான். புறநானூற்றுப் பாடல் ஒன்று (புறம், 55) திரிபுரம் எரித்தவரும் நஞ்சுண்டவரும் சந்திரனைச் சூடியவரும் ஆகிய சிவபெருமான் எனக் குறிப்பிடுகின்றது. கலித்தொகையிலும் சிலப்பதிகாரத்திலும் திரிபுரமெரித்த வரலாறு உள்ளது. தேவாரத் திருப்பதிகங்களுள் திரிபுரம் எரித்த செயல் விரிவாகக் காணப்படுகின்றது. திரிபுரத்தைப் பற்றியும், திரிபுரமெரித்த காரணம் பற்றியும், வில்லைப் பற்றியும், வில்லின் நாண் பற்றியும், தேரைப் பற்றியும், திரிபுரத்தை அழித்தவரைப் பற்றியும், தேவர்களுக்கும் அடியவர்களுக்கும் அருளியது பற்றியும் தேவாரம் விரிவாக எடுத்துரைக்கிறது.
29ó
 

சிவபெருமானுடைய பல்வேறு வடிவங்களைப் பற்றி கி. பி. 7ஆம் நூற்றாண்டிலிருந்து 9ஆம் நூற்றாண்டு வரை ஆட்சி செய்த பல்லவ, பாண்டிய மன்னர்களின் செப்பேடுகளும், கல்வெட்டுகளும் கூறுகின்றன. மன்னர்களை இறைவனுடன் ஒப்பிட்டுப் பேசுகின்றன. திரிபுராந்தகரின் வடிவம் மன்னர்கள் போரில் வெற்றி பெறுவதற்கும், வெற்றி பெற ஊக்க மளித்ததற்கும் காரணம் ஆக இருந்தது என்பதைக் கல்வெட்டுகளின் வாயிலாக அறியலாம். பல்லவ மன்னனான சிம்மவர்மன் காலத்தைச் சேர்ந்த பள்ளன் கோயிற் செப்பேடு பல்லவ மன்னர்களின் முன்னோனான அசுவத்தாமன் திரிபுரங்களை எரித்த திரிபுராந்தகரின் வடிவமாகக் கருதப்படுகிறான் என்று கூறுகிறது. இராசசிம்மன் தன் விரோதிகளின் நகரைத் திரிபுராந்தகர் எரித்தது போல அழித்துப் பரமேசுவரன் என்ற பட்டம் பெற்றிருந்தான் எனக் கல்வெட்டுக்கள் கூறுகின்றன. பாண்டிய மன்னனான நெடுஞ்சடையனின் சீவரமங்கலச் செப்பேடுகள் இறைவன் பினாகபாணியாக நின்று அசுரர்களை அழித்த வரலாறு கூறுகின்றன. ബ്[] நாராயணனின் தளவாய்புரச் செப்பேடுகள் அவனுடைய தமையன் வரகுணன் பினாக பாணியான இறைவனை எப்பொழுதும் தொழுபவன் என்பதைப் பிள்ளைப்பிறை சடைக்கணிந்த பினாகபாணி எம்பெருமானை உள்ளத்தில் இனிது நிறுவி உலகங் காக்கின்ற நாளில் எனக் குறிப்பிடுகின்றன. பினாகபாணி என்பது வில்லேந்திய திரிபுராந்தகரையே குறிக்கும். சோழ மன்னர்கள் காலத்தில்தான் திரிபுராந்தகரைச் சிற்பங்களிலும், செப்புத் திருமேனிகளாகவும் பெருமளவில் காணலாம். இராசகேசரி சுந்தர சோழன் என்ற இரண்டாம் பராந்தகன் ஆற்றலில் திரிபுரம் எரித்த விரிசடைக் கடவுளான சிவபெருமானுக்குச் சமமானவன், பகை மன்னரின் வலியை அழித்தவன், குடிமக்களைத் தன் நற்குணங்களால் வசீகரித்துக் கொண்டு ஆழிசூழ் உலகை ஆண்டவன் என ஆனைமங்கலச் செப்பேடுகள் கூறுகின்றன.
இந்துக்கலைக்களஞ்சியம்

Page 277
邸
திரிபுராந்தக மூர்த்திதேரின் மீது செல்லும் காட்சி (பிற்காலச் சோழர் சிற்பம்)
சிற்பங்கள்
மாமல்லபுரத்தில் முப்புரம் எரித்த இறைவன் இரண்டு விதமாகக் காட்டப்பட்டுள்ளார். கடற்கரைக் கோயிலின் வடக்குச் சுவரில் முப்புரம் எரிக்கத் தேர்மீது, விற்பிடித்து வீரச்சமர் புரியும் தோற்றமாக அது விளங்குகிறது. மற்றொன்று பலிபீடத்தின் அருகிலுள்ள கொடித்தூண் பகுதியில் ஒரு புறம் உள்ள உருவத்தில் நான்கு திருக்கரங்கள் உள்ளன. கீழ்க்கரம் நீண்ட காம்பையுடைய மழுவை ஏந்தி நிற்க மற்றொரு கரத்தில் ஒரு வில்லைச் சிவன் பிடித்திருக்கிறார். வலக்கரங்களுள் ஒன்று சூலத்தையும் மற்றொன்று அம்பையும் பிடித்துள்ளன. காஞ்சிபுரம் கைலாசநாதர் கோயிலிலே வடக்குச் சுவரில் திரிபுராந்தகரின் சிற்பம் காணப்படுகிறது. சிவபெருமான் தேரில் ஏறிச்செல்வது போன்ற காட்சி சித்திரிக்கப்பட்டுள்ளது. தேரினருகே துர்க்கையும், வலப்புறத்திலே திரிபுர பைரவியும் அமர்ந்த நிலையில் காணப்படுகிறார்கள். பல்லவர் காலச் சிற்பக்
கலைக்கு இவை எடுத்துக் காட்டாகும்.
முற்காலச் சோழர் காலக் கோயில்களில் தேவகோட்டங்களில் திரிபுராந்தகரின் திருவுருவத்தைக்
இந்துக்கலைக்களஞ்சியம்
 
 
 
 
 

காணலாம். இருக்கு வேளிர்களின் தலைநகரான கொடும்பாளூரில் உள்ள கோயிலின் விமானத்தில் சிவபெருமான் முப்புரத்தையும் அழித்தபின்னர் காலை மடித்து வில்லைக் கையிலே ஏந்தி வேகமாகச் சுழன்று ஆடுகின்ற நிலையில் ஒரு சிற்பம் உள்ளது. தஞ்சைப் பெருங்கோயில் கருவறையின் மேல்நிலைகளில் ஏறக்குறயை 30 திரிபுராந்தகர் புராண வரலாற்றினைத் தொடர் சிற்பங்களாகவும் காணலாம். திரிபுர அசுரர்கள் சிவபக்தி உடையவர்கள். தலையில் எப்பொழுதும் சிவலிங்கத்தைச் சுமந்து கொண்டிருப்பவர்கள். தம்மிடம் ஈடுபாடு கொண்டவர்களைச் சிவபெருமான் அழிக்கத் தயங்குவார் எனக் கருதித் திருமால் புத்தர் வடிவம் எடுத்து சைவ நெறியில் இருக்கும் அவர்களை மாற்றுகிறார்.
திரிபுரத்தைத்தான் சிவபெருமான் அழித்தாரே தவிரச் சிவபக்தி கொண்ட அசுரர்களுள் இருவரைத் தம் வாயிற் காவலராகவும், ஒருவனைத் தான் ஆடும் பொழுது குடமுழா என்ற இசைக்கருவி வாசிப்பவனாகவும் கொண்டு அவர்களுக்கு அருள் செய்தார். இதே வரலாற்றைக் கருவறையில் சுற்றியுள்ள திருச்சுற்றில் ஒவியமாகவும் தஞ்சைக் கோயிலிற் காணலாம். தாராசுரம் கோயிலிலும் இதுபோன்ற சிற்பத் தொடர் காணப்படுகிறது. பிற்காலச் சோழர் கலைப் பணிக்கு எடுத்துக் காட்டாகச் சிதம்பரம் கோயிலில் கோபுரங்களில் திரிபுராந்தகர், தேவியுடன் வில்லேந்தி நிற்கும் கோலத்தைக் காணலாம். நாயக்கர் காலத்தில் தூண்களில் திரிபுராந்தகரின் சிற்பத்தை அமைக்கும் வழக்கம் காணலாம்.
செப்புத் திருமேனிகள்
சோழர் காலத்திலேதான் திரிபுராந்தகரின் செப்புத் திருமேனிகள் மிகுந்த அளவில் காணப்படுகின்றன. சோழர் காலக் கல்வெட்டுகளில் இத் திருமேனி திரிபுரவிசயர் 'திரிபுவனசுந்தரர் எனக் குறிக்கப்படுகிறது. திருநல்லம் எனப்பெறும் கோனேரிராசபுரம் கோயிலுக்கு செம்பியன்மாதேவி
23r

Page 278
பல தானங்களை அளித்தாள். அதில் திரிபுராந்தகரையும் தேவியையும் செப்புத் திருமேனியாகச் செய்தளித்து வழிபாட்டிற்காகத் தானமளித்திருக்கிறாள். இன்றும் அத் திருமேனி வழிபாட்டில் உள்ளது. தஞ்சைக் கோயில் கல்வெட்டு தஞ்சை அழகர் என்ற திருமேனி செய்தளிக்கப்பெற்றதாகக் குறிப்பிடுகிறது. இது திரிபுராந்தகர் திருமேனியாக இருக்கலாம் என வரலாற்று அறிஞர்கள் கருதுகின்றனர். தஞ்சை மாவட்டத்தில் முதலாம் குலோத்துங்க சோழனுடைய காலத்துத் திரிபுராந்தகர் திருமேனி ஒன்று காணப்படுகிறது. இத் திருமேனியின் பீடத்தில் இதனுடைய வழிபாட்டிற்காகச் சோழப் பேரரையன் என்பவனால் நிலம் தானம் அளிக்கப்பட்ட செய்தி பொறிக்கப்பட்டுள்ளது. பிற்காலத்தில் இவ்வாறு திரிபுராந்தகர் திருமேனி வடிப்பது குறைந்துவிட்டது. பண்டைய மன்னர்களுடைய வெற்றிக்கு ஊக்கம் கொடுக்கும் வகையில் திருபுராந்தகரின் வரலாறு அமைந்திருந்ததால் கலை மற்றும் வரலாற்றில் திரிபுராந்தக மூர்த்தியின் திருஉருவம் ஒரு சிறப்பிடம் பெற்றுத் திகழ்கிறது எனலாம். (கி நூறf)
திரிவேணி சங்கமம்
உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள அலகாபாத் புகைவண்டி
நியைத்திலிருந்து பேரூந்து மூலம் திரிவேணி சங்கமம் எனும் புனித இடத்தை அடையலாம்.
புதுடில்லி, ஆக்ரா ஆகிய நகரங்களின் வழியாக யமுனை நதி அலகாபாத்தில் பாய்கிறது. அதனைப் போலவே ரிஷிகேஷ், கான்பூர் வழியாக கங்கை நதியும் பாய்கிறது. இந்த கங்கை யமுனை நதிகளுடன் அந்தர்வாஹினியாக சரஸ்வதி நதியும் ஒன்று சேருகின்றது. ஆகவே இந்த இடம் திரிவேணி சங்கமம் என அழைக்கப்படுகின்றது.
கங்கை நதி வெண்மை நிறத்திலும், யமுனை கருமை நிறத்திலும் காணப்படுகின்றது. கங்கை, குதிரையைப் போன்று Lாய்ந்து கொண்டும், யமுனை ஞானியைப் போல் அமைதியாகவும் பாய்கின்றது. இந்நதிகளின் சங்கமத்தில் நீராடினால் சகல பாவங்களும் தொலையும் புண்ணியம் பெருகும்.
கங்கையும், யமுனையும் கலக்குமிடத்தில் ஒன்றுடன் ஒன்று இணைந்து கொள்ள வெண்மை, கருமை நிறந்தான் நமக்கு நன்கு தெரிகிறது. இங்கே பாதுகாப்பு வசதிகள் உண்டு. இறங்கி நீராடலாம். ஆழம் ஐந்தடி வரை உண்டு. திரிவேணி சங்கமத்தைக் கடந்தால் பிரயாகை எனும் புண்ணிய தலம் உள்ளது. இங்குதான் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நிகழும் கும்பமேளா பிரம்மாண்டமான முறையில் நிகழும்.
தம்பதி சமேதராய் காசிப்பயணம் மேற்கொண்டவர்கள் அடுத்த பிறவியிலும் கணவன் - மனைவியாகத் தாங்களே இணைய வேண்டும் என்று “வேணி தான்ம்' எனும் சடங்கைச் செய்வார்கள்.
232

கங்கையும், யமுனையும் இணையும் கரைக்கு அருகில் அக்பர் கட்டிய பெரிய கோட்டை ஒன்று உள்ளது. கோட்டைக்குள் உள்ள சுரங்கத்தில் ஒர் ஆலயம் உள்ளது. அங்கே ஒரு இலிங்கமும், எழுதலை நாகமும் உள்ளன. ஆஞ்சநேயருக்குத் தனியாக ஆலயம் உள்ளது. திரிவேணி சங்கமத்தில் நீர்மட்டம் உயர்ந்தால் ஆஞ்சநேயர் சிலை நீரில் மூழ்கிவிடும். நீர்மட்டம் குறைந்தால் தரிசனம் கிடைக்கும்.
மனகாமேஸ்வரர், சோமநாதர், பிந்து மாதவர் ஆகிய ஆலயங்களும் அலகாபாத்தில் தரிசிக்க வேண்டிய திருக்கோயில்களாகும். (வ, வை)
திரு அகத்தியாச்சிரமம்
சத்தியபுரி என இன்று வழங்கும் திருஅகத்தியாச்சிரமம், நாசிக் நகருக்கு இருபத்து நான்கு மைல் தொலைவில், பஞ்சவடிக்கு அண்மையில் விளங்கும் புண்ணிய தலமாம்.
திரு அகத்தியான்பள்ளி
வேதாரணியத்துக்குத் தெற்கில் ஒரு மைல் தொலைவில் உள்ளது இத்தலம். பார்வதிதேவியாருக்கு இமயமலையில் நடந்த திருமணத்தை அகத்தியர் இத்தலத்திலிருந்து தரிசித்தார். சுவாமி. அகத்தீசுவர், அம்பிகை : பாகம்பிரியாள், பாகம்பிரியாநாயகி, செளந்தரநாயகி. தீர்த்தம் : அக்னி தீர்த்தம் (கோயிலுக்கு எதிரில்). சுவாமி சந்நிதி : கிழக்கு. அம்பாள் சந்நிதி : தெற்கு. தலவிருட்சம் : அகத்தி. பிறசெய்திகள், அகத்தியர் திருவுருவம் கோயிலில் உள்ளது. மிக அழகியது.
இக்கோயிலிலுள்ள ஒரு சிலா சாசனத்திலிருந்து குலசேகர பாண்டியனுக்கு (கி. பி. 1268 - 1308) இருந்த வியாதி வேதாரணியம் கோயிலில் உற்சவம் நடத்தி நீங்கப் பெற்றது
வெளியாகிறது. திருஞானசம்பந்தரால் பாடப்பெற்ற தலம்.
(pl. 662/ 47.)
திரு அச்சிறுபாக்கம்
இச்சரப்பாக்கம் என்று வழங்கும் அச்சிறுபாக்கம் செங்கற்பட்டு மாவட்டத்திலுள்ள திருத்தலம். சென்னைக்குத் தெற்கே ஐம்பத் தொன்பது மைல் தொலைவிலுள்ளது. வண்டியின் அச்சு இற்ற காரணத்தால் வந்த பெயர் என்பர். அச்சு இற்றதற்கு இரு கதைகள் கூறுவர். திரிபுரத்தைத் தகனம் செய்யும் பொருட்டுச் சிவபிரான் தேரில் ஏறிய போது தேவர்கள் விநாயகரை வணங்காததால் அச்சு முறிந்தது என்பது ஒரு கதை. பாண்டியன் கங்கை மணலை வண்டியில் கொண்டு வரும்போது இத் தலத்துக்கு வந்ததும் வண்டி மேற் செல்லாது நிற்க ஊக்கிச் செலுத்த முற்பட்டபோது அச்சு முறிந்தது என்றும் அவன் அசரீரி மூலம் உண்மை அறிந்து ஆலயத் திருப்பணி செய்ததாகவும் கூறுவது மற்றக்கதை
இந்துக்கலைக்களஞ்சியம்

Page 279
கண்ணுவரும் கெளதமரும் இங்கு பூசித்துப் பேறு பெற்றனராம். இங்கெழுந்தருளியுள்ள சிவபிரானுக்குப் பாக்கபுரேசர், அக்ஷேஸ்வரர், ஆட்சிநாதர் என்றும், உமையம்மைக்கு சுந்தர நாயகி, இளங்கிளியம்மை என்றும் பேர். வேத தீர்த்தம் எனும் தீர்த்தத்தையும் கொன்றையாம் தலவிருட்சத்தையும் உடையது.
திருஞானசம்பந்தமூர்த்தி சுவாமிகள் பாடிய திருப்பதிகம் ஒன்றுண்டு (177). வேங்கடாசலம் பிள்ளை என்பவர் பாடிய
அச்சிறுபாக்கம் ஆட்சீஸ்வரர் பதிற்றுப் பத்தந்தாதியுமுண்டு.
(ر. يي 7/7Lم)
திரு அட்டபுயகரம்
செங்கற்பட்டு மாவட்டத்திற் காஞ்சீபுரம் இருப்புப்பாதை
நிலையத்திலிருந்து ஒரு மைல் தொலைவில் அமைந்தது திரு அட்ட புயகரம் (அஷ்டபுஜம்) எனும் வைணவ திவ்வியதலம்.
இங்கு நின்ற திருக்கோலத்தில் எழுந்தருளும் விஷ்ணுவுக்கு ஆதிகேசவப் பெருமாள் என்றும் பெரிய பிராட்டியாருக்கு அலர்மேல் மங்கை என்றும் பேர். எம்பெருமானுக்கு எட்டுத் திருக்கைகளுள. கஜேந்திராழ்வாருக்குப் பிரத்யக்ஷம், கஜேந்திர புஷ்கரிணி. மேற்கே திருமுகமண்டபம்.
பேயாழ்வாரும் (மூன்றாந்திரு.99), திருமங்கையாழ்வாரும் (பெரிய திருமொழி, 28) மங்களாசாசனம் செய்துள்ளனர்.
(pl. 662/ 47.)
6og Svæåvæ7/7uDo60
வட ஆர்க்காடு மாவட்டத்தின் திருவண்ணாமலை தாலுகாவின் பிரதான நகரம் திருவண்ணாமலையாகும். இங்கு கோயில் கொண்ட சிவபிரானுக்கு அண்ணாமலை நாதர், அருணாசலேசுவரர் என்றும் உமையம்மைக்கு உண்ணா முலையம்மை, அபீதகுஜாம்பாள் என்றும் பெயர்கள் வழங்குவன. தலவிநாயகருக்கு பூரீ சம்பந்த விநாயகர், முக்குறுணி விநாயகர் என்ற பெயர்களுண்டு. தலவிருட்சம் மகிழ மரமாகும். கோயிலுக்கு உள்ளும் வெளியிலும் மலைப் பகுதியிலுமாக 360 தீர்த்தங்களுள்ளன. இவற்றிலே சிவகங்கை, பிரமதீர்த்தம், அக்கிணிதீர்த்தம், இந்திர தீர்த்தம் என்பன சிறந்தவை.
திருவண்ணாமலை நினைக்க முத்தி கிடைக்கும் தலமாகப் போற்றப்படுவது. பிரமாவும் விஷ்ணுவும் அகந்தை கொண்டு அடிமுடிதேட அன்னமும் வராகமுமாக மாறித் தேடி அயற்சி அடைந்தாராக, அக்கினி வடிவாய் நின்று அருள் செய்தவர் அண்ணாமலைநாதர். தாருகனை வதஞ் செய்த முருகப் பெருமான் வணங்கிச் சென்ற தலங்களுள் அண்ணா மலையுமொன்று. சூரியன், பிரதத்தராஜன், அஷ்டவசுக்கள், பிரமதேவன், சந்திரன், திருமால், புளகாதிபன் முதலியோர் பூசித்துப் பேறு பெற்ற தலம். இரு வித்தியாதரர் ரிஷிசாபத்தாற் பூனையாகவும் குதிரையாகவும் மாறிய வடிவம் இத்தலத்தை வலம்
இந்துக்கலைக்களஞ்சியம்

வந்தமையின் மாறின. வச்சிராங்கத பாண்டியன் தினமும் வலம் வந்து திருப்பணி பல செய்துள்ளான். அருணகிரிநாதர் கோபுரத்தில் இருந்து இறக்க எண்ணி வீழ்ந்த போது முருகன் தோன்றி அருள் செய்ததலம். குகைநமச்சிவாயர், குரு நமச்சிவாயர் முதலானவர்கள் சித்தி பல செய்த தலம்.
திருவண்ணாமலை திருத்தலத்தின் பெரிய விழா கார்த்திகைத் திருவிழா. சித்திரை மாதத்திற் பிரமோற்சவமும் பங்குனி உத்தரத்தில் திருக்கல்யாணமும் ஆறுநாள் விழாவும் நடைபெறுவன. நவராத்திரி, கந்தசஷ்டி, திருவெம்பாவை, திருவாதிரை முதலியனவும் சிறப்பாகக் கொள்ளப்படுவன.
சம்பந்தப் பெருமான் பாடிய இரு திருப்பதிகங்களும் (1:10, 169) அப்பர் சுவாமிகள் பாடிய மூன்று திருப்பதிகங்களும் (4:63, 54, 5.5) உள்ளன. மணிவாசகர், நக்கீரதேவர், பரணதேவர், கபிலதேவர், பட்டினத்தடிகள் திருவண்ணாமலை பற்றிப் பாடியவை பதினோராந்திருமுறையில் இடம்பெறுவன. அருணகிரிநாதர் திருப்புகழ் பாடியுள்ளார்.
அருணாசல புராணம், அருணகிரிப்புராணம் எனும் புராணங்கள் திருவண்ணாமலையின் மான்மியத்தைப் பாடுகின்றன. அருணாசலபுராணம் இயற்றியவர் எல்லப்ப நயினார் அல்லது சைவ எல்லப்பநாவலர்; அருணகிரிப்புராணம் பாடியவர் சிதம்பரம் கண்கட்டி மறைஞான சம்பந்த தேசிகர். அண்ணாமலையந்தாதி (ஈசானிய தேசிகர் கந்தப்பஞான தேசிகர்), அருணகிரியந்தாதி (குகைநமச்சிவாயர்), திருவருனையந்தாதி (எல்லப்பநயினார்), திருவருணை யமகவந்தாதி (திம்மப்ப அந்தணனார்), அண்ணாமலைச் சதகம் (மாம்பாக்கம் உபாத்தியாயர் திருச்சிற்றம்பல நாவலர்), அருணாசல சதகம் (காஞ்சி கோ. சபாபதி முதலியார்), சோணாசல சதகம் (புராணிகர் சோணாசல முதலியார், அண்ணாமலை வெண்பா (சிதம்பரம் குருநமச்சிவாயர்), திருவண்ணாமலைக் கார்த்திகை தீப வெண்பா (புராணிகர் சோணாசல முதலியார்), திருவருனைத் தனி வெண்பா (குகை நமச்சிவாயர்), திருவருனைக் கலிவெண்பா (புராணிகர் சோணாசல முதலியார்), சோனாசைலமாலை (துறைமங்கலம் சிவப்பிரகாசர்), அருணை வெண்பாமாலை (புரசை இ. சபாபதி முதலியார்), திருவருனைக் கலம்பகம் (சைவ எல்லப்ப நாவலர்), அருணாசல அக்ஷரமாலை (பூரீ ரமண மகரிஷிகள்), அருணாசலேசுவரர் சாரப் பிரபந்தம் (நமசிவாய சுவாமிகள்) முதலிய பல பிரபந்தங்கள் இத்தலத்திற்குண்டு. உண்ணா முலையம்மை பிள்ளைத்தமிழ் (புராணிகர் சோணாசல முதலியார்), உண்ணாமுலையம்மன் சதகம் (வித்துவான் சின்ன கவுண்டர்), உண்ணாமுலையம்மன் பதிகம், உண்ணா முலையம்மன் வருகைப் பதிகம் முதலிய பிரபந்தங்கள் இறைவிக்குள. இவற்றைவிடப் பதிகம், வண்ணம் முதலியன பல அண்ணாமலை நாதரைப் பற்றிய தோத்திரங்களாகும்.)
அண்ணாமலை பஞ்சபூதத் தலங்களுள் தேயுதலமாகக் கொள்ளப்படுவது. விராட்புருடனின் மணிபூரகத்தலம். மலை
233

Page 280
உயரம் கடல் மட்டத்திற்கு 2668 அடி. செந்நிறமுடையது சோணையென்னும் பெயருடையது. தட்டுப் புழுகால் அபிஷேகம் நடைபெறும். சுவாமிக்கும், அம்பிகைக்கும் அஷ்ட பந்தன மருந்து சாத்தப்படாமல் சுவர்ணபந்தனம் செய்யப் பெற்றுள்ளது விசேடம்
அருணகிரிநாதர் வழிபட்ட தலம். அவர் பாடலுக்கு இரங்கி பிரபுடதேவமகாராசனுக்குக் காட்சி கொடுத்தார் முருகன். முருகன் சந்நிதி கீழைக் கோபுர வாயிலுக்கருகில் திருக்குளத்தின் வடபாலுள்ள 16 கால் மண்டபத்தில் ஒருகால் "கம்பத்திளையனார் கோயிலாக உள்ளது. அங்கிருந்து மேற்கே சென்று வல்லாள் கோபு வாயிலுள் நுழையும்போது வடபுறம் இருக்கும் முருகனே அருணகிரியாரை ஆட்கொண்டதாகத் தெரிகிறது.
மாணிக்கவாசகர் திருவெம்பாவை பாடிய தலம். பார்வதி தேவியார் தவம் செய்து இறைவன் இடப்பாகம் பெற்றதலப் என்றும் கூறுவர். மலை எட்டுமைல் சுற்றளவு உள்ளது. அணி அண்ணாமலை (அடியண்ணாமலை) பஞ்சமுக தரிசனப் என்னும் மலையின் 5 சிகரக்காட்சி முதலியன புகழ் பெற்றவை.
கார்த்திகை மஹோற்சவத்தின் பத்தாம் திருநாளன்று அதிகாலையில் பரணி தீபதரிசனம். அண்ணாமலையார் சந்திதிக்கு எதிரில் ஐந்து பெரிய நெய்த்தீபங்கள் ஏற்றி, பஞ்ச பிரம மந்திரத்தோடு பூசை செய்யப்படும். மாலை பஞ்சமூர்த்திகளும் மலையை நோக்கிப் பிராகாரத்தில் நிற்க, ஆறுமணிக்கு ஐந்து பரணி தீபங்களையும் ஒரு பெரிய கொள்கலத்தில் சேர்ப்பர். மலைமீது தீபமும் ஏற்றப்படும். அர்த்தநாரீசுவரர் வெளிவரும்போது சுவாமி கோயிலைத் தாளிட்டு மறுநாட்காலையில்தான் திறப்பார்கள். தைமாதம் திருவூடல் உற்சவம் நடைபெறும்.
மலைமேல் வடக்குத் திக்கில் முலைப்பால் தீர்த்தம். குகை நமச்சிவாயர் மடத்துக்குப் பக்கம் பாததிர்த்தம், துர்க்கையம்மன் கோயில் ஒன்று தனியே இருக்கின்றது. விருபாகூதிகுகை, பவளக் குன்றுக்கு வடக்கே துர்க்கைகோயில் உள்ளது. கட்கதீர்த்தம் துர்க்கை தபசு செய்த இடம். பவளக்குன்று முருகன் தலம். வடவீதியில் ஒரு தலம். தெற்குவீதி திருவூடல்வீதி, தகூதிணாயன உற்சவம் 10 நாள். அதன்முடிவில் திருவூடல் உத்தராயண உற்சவம் 10 நாள். தலவிருட்சம் மகிழ், பாண்டவதீர்த்தம் என்பதொன்று உண்டு. பத்தாம் நாள் கடைசி வேடுபறி. மட்டையடி தீபம் போடுகிறவர் மீனவர்.
அடி அண்ணாமலை, அருணாசலத்தின் வாயு மூலையிலுள்ளது. அணி அண்ணாமலை திருவண்ணா மலையைச் சார்ந்ததொரு தலம்.
அண்ணாமலை : (அருணாசலப் புராணக் குறிப்புக்கள்) இத்தலம் அண்ணவெனவும் வழங்கும். விநாயகர் : யானை திறைகொண்ட விநாயகர்.
234

6ոյLITLց) : அதிருங்கழலார். தேவி : உண்ணாமுலையம்மை.
சுப்பிரமணியர் : கோபுரத்திலும் வடக்கு வீதியிலும் எழுந்தருளியுள்ளார்.
துர்க்கை : அம்பிகையின் ஏவலாற் சென்று மகிடனைச் செற்றனள்.
மலைநான்கு கீழ்த் திசையில் அர்க்கமலையும், தெற்கில் தேவமலையும், மேற்கில் தண்டமலையும், வடக்கில் திரிசூலகிரியும் உள்ளன.
ஆறு : பெண்ணை, சேயாறு, கயிலை, திருநதி, போகலிங்கம், அருணைபுரி,
மலையின் பெயர்: மலை மருந்து மரணபவ மருந்தானமையின்,
அருணகிரி சிவ பூசை காமிகாகமப்படி
தீர்த்தம் : 360.
பிரம விஷ்ணுக்களுடைய பிரார்த்தனையால் மலையின் கீழே ஸ்வாமி சிவலிங்கப் பெருமானாக எழுந்தருளியிருக்கிறார்.
திருநதி வடக்கு ; தீர்த்தச் சருக்கம் 20 சோணைநதி தெற்கு ; தீர்த்தச் சருக்கம் 20 புண்ணிய நதி மேற்கு ; தீர்த்தச் சருக்கம் 21
புண்ணியாற்றுார் : தீர்த்தச் சருக்கம் 21
சேயாறு திருநதிக்கு வடக்கு தீர்த்தச் சருக்கம், 22 முருகக் கடவுளாலழைக்கப் பெற்றது இது.
இத்தலத்தில் ஐந்து முகூர்த்தத்திற்கும் ஐந்து மடங்கள் உண்டு. 1. ஓங்காரத் தேவர் 2. அண்ணா மலைத்தேவர் 3. பசுபதித்தேவர் 4. திருமாளிகைத்தேவர் 5. ருத்திரதேவர்.
அண்ணாமலை நேர்வடக்கே ஆதி அருணாசலம் உண்டு.
உண்ணாமுலை உமையாளொடும் உடனாகிய ஒருவன் பெண்ணாகிய பெருமான்மலை திருமாமணி திகழ மண்ணார்ந்தன அருவித்திரள் மழலைம்முழ வதிரும் அண்ணாமலை தொழுவார்வினை வழுவாவண்ணம் அறுமே
(திருஞா.1ஆம் திரு)
ஒதிமா மலர்கள் தூவி உமையவள் பங்கா மிக்க சோதியே துளங்கும் எண்தோள் சுடர்மழுப் படையி னானே ஆதியே அமரர் கோவே அணியனா மலையு ளானே நீதியால் நின்னை அல்லால் நினையுமா நினைவி லேனே.
(திருநா. 4ஆம் திரு.)
இத்தலத்தைப் பற்றி வேறு தலங்களில் வழங்கும் தேவாரங்கள்:
அண்ணாமலையுறையுமண்ணல் போலும்-சாய்க்காடு, திருநா. அண்ணாவையாறனே யென்றே னானே - ஐயாறு. திருநா. அண்ணாநின்னையல்லாலினியாரை நினைக்கேனே - மழபாடி
சுநதர
இந்துக்கலைக்களஞ்சியம்

Page 281
அண்ணா நின்பொற்பாத மடையப் பெற்றால் - ஆனைக்கா
திருநா. ஊக முகிலுறிஞ்சு சோலை சூழ்ந்தவுயர் பொழிலண்ணா விலுறை கின்றாரும் - இடைமருதூர், திருநா. அண்ணாவு மாரூரு மேயார் போலும் - ஆக்கூர் திருநா. அண்ணாமலை யமர்ந்தாராரூருள்ளார் - விழிமிழலை, திருநா. பெண்ணானென நின்ற பெம்மான் பிறைச்சென்னி யண்ணாமலை நாடனாரூருறையம்மான் - நாகைக்காரோணம்
திருஞா. அண்ணாமலையானை யானைந்தாடு மணியாரூர் வீற்றிருந்த வம்மான்றன்னை - நாகைக்காரோணம் திருநா. அண்ணாவும் கழுக்குன்று மாயமலையவை வாழ்வார் -
பெருவேளுர் - திருநா. அண்ணாமலை யுறையு மண்னல் கண்டாய் - மறைக்காடு.
திருநா. அண்ணாமலை பேனென்றிராரூருளிர் - பரங்குன்றம் சுந்தரர் ஆர்த்தருவி வீழ்சுனைநீரண்ணாமலை - அதிகை திருநா. விடங்களுர்திருவெண்ணியண்ணாமலை -இடையாறு சுந்தரர் ஒற்றியூர் உறையும் அண்ணாமலை அண்ணல் - இலம்பையங்
கோட்டூர், திருஞா. அண்ணா வாலங்காடா - ஆலங்காடு, சுந்தர. அண்ணாமலையான்காண் - காளத்தி. திருநா. அண்ணாமலையீங்கோயுமத்திமுத்தாறு - பொது திருஞா. அண்ணாமலை எம் அண்ணலை - பொது திருநா. அகத்தியான்பள்ளி அண்ணாமலை - பொது, திருநா. காளத்தி கழுக்குன்றங் கண்ணாரண்ா - பொது, திருநா.
(ഉ. മീബ ക്രff)
திரு அண்ணாமைைக் கார்த்திகைத் தீய வெண்பா
வட ஆர்க்காடு மாவட்டத்திலுள்ள முக்கியமான தலம் திருவண்ணாமலை. அது தென்னிந்திய இருப்புப் பாதையில் விழுப்புரம் காட்பாடி கிளையிலுள்ளது.
அருணகிரியின் முடியில் ஒளிரும் கார்த்திகைத் தீபத்தைப் பாடுவது திருவண்ணாமலைக் கார்த்திகைத் தீபவெண்பா, விநாயகர் காப்பு வெண்பாவினையும் வாழி வெண்பாவினையும் ஆதியுமந்தமு மாகவுடைய கார்த்திகைத் தீப வெண்பாவில் இடைநடுவே 100 வெண்பாக்கள் உள்ளன.
திருவண்ணாமலைக் கார்த்திகைத் தீபவெண்பாவின் ஆசிரியர் புராணிகர் சோணாசல முதலியார் (1858 - 1925). அவர் திருவண்ணாமலை தொடர்பாக வேறு பிரபந்தங்களையும் பாடியவர்.
அடியார்களின் பாவமறுக்கும் தீபத்தினை, அன்பர்களுக்கு இன்பம் தரும் தீபத்தினை, பக்தர்களுக்கு அருள்புரியும் தீபத்தினை ஆசிரியர் இலகுவான நடையிலே போற்றிப் புகழ்ந்து பாடியுள்ளார். (67பாழ,)
இந்துக்கலைக்களஞ்சியம்

திரு அத்தியூர்
செங்கற்பட்டு மாவட்டத்திலே காஞ்சிபுரம் இருப்புப்பாதை நிலையத்திற்கு இரு மைல் தொலைவிலுள்ள சின்னக் காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயில் அமைந்த திருவத்தியூர் அல்லது அத்திகிரி என்பது வைணவ திவ்வியதலம். பாசுரங்களிற் பொதுவாகக் கச்சியெனக் குறிக்கப்படுமிடங்களில் அத்தலம் கொள்ளப்படுதல் அதன் முக்கியத்துவத்தினை உணர்த்தும். கோயில், திருமலை, பெருமாள் கோயில் எனும் மூன்று முக்கிய வைணவ தலங்களுட் பெருமாள் கோயில் எனப்படுவது இதுவேயாம்.
ஐராவதம் மலையுருவாகி விஷ்ணுவைத் தாங்கினமையால் அத்தியூர், அத்திகிரி என்ற பெயர்கள் ஏற்பட்டனவாம். அத்திகிரியை உத்தரவேதியாகப் பிரமன் அசுவமேதயாகம் செய்ய, அதில் தோன்றிய புண்ணியகோடி விமானத்தில் விஷ்ணு தோன்றி வரங்கொடுத்ததால் வரதராஜன் எனப்பட்டார்.
இங்கு நின்ற திருக்கோலத்தில் எழுந்தருளும் விஷ்ணுவுக்கு வரதராஜப் பெருமாள், தேப்பெருமாள், தேவராஜன், பேரருளாளன் என்றும் பெரிய பிராட்டியாருக்குப் பெருந்தேவித் தாயார் என்றும் பெயர்.
மேற்கே திருமுகமண்டலம். தீர்த்தம் சேஷ, வராக, பிரம, பத்ம, அக்கினி, குசல தீர்த்தங்கள். வேகவநதி, பிருகு, நாரதர், அநந்தாழ்வான், பிரமா, கஜேந்திரர்கட்குப் பிரத்யக்ஷம்.
பூதத்தாழ்வார், பேயாழ்வார், திருமங்கையாழ்வார் ஆகியோர் மங்களாசாசனம் பெற்றது இத்திவ்விய தலம். (இரண். திருவந். 95, 96; மூன். திருவந் 26; திருக்குறுந்:19, திருநெடுந் 9,15)
அத்திகிரியின் அடிவாரத்திலுள்ள அழகிய சிங்கப் பெருமாளே மங்களாசாசனம் பெற்றவர் என்பர் சிலர். பூரீ வேதாந்த தேசிகர் அத்திகிரி மகாத்மியம் இயற்றியுள்ளார். கொ.
பள்ளி கொண்டான்பிள்ளை அத்திகிரியந்தாதி பாடியுள்ளார்.
பொழ,)
திருஅதிகை (திருவதிகை)
தென் ஆற்காடு மாவட்டத்திலுள்ள பண்ருட்டியிலிருந்து 2 கி.மீ. தொலைவில் உள்ளது. சென்னை, கடலூர், விருத்தாசலம், விழுப்புரம், சிதம்பரம் முதலிய ஊர்களிலிருந்து பண்ருட்டிக்குப் பேருந்து வசதி உள்ளது.
பண்ருட்டி பேருந்து நிலையத்திலிருந்து கடலூர் பாதையிற் சென்றால் திருவதிகையை அடையலாம். கோயில் வரை வாகனங்கள் செல்லும், பண்ருட்டி இருப்புப்பாதை நிலையம்.
அட்ட வீரட்டத் தலங்களுள் ஒன்று. திரிபுரத்தை எரித்த வீரச் செயல் நிகழ்ந்தது. ஞானசம்பந்தருக்கு இறைவன் திருநடனம்
235

Page 282
காட்டிய தலம். அப்பரின் தமக்கையார் திலகவதியார் தங்கியிருந்து திருத்தொண்டு செய்துவந்த தலம். சூலை நோயின் துன்பம் தாளப்பெறாத அப்பர் பெருமான், யாருமறியாமல் பாடலிபுத்திரத்தை (திருப்பாதிரிப்புலியூரை) விட்டு நீங்கி, இங்கு வந்து, தமக்கையாரைக் கண்டு, தொழுது, திருவாளன் திருநீறு தரப் பெருவாழ்வு வந்ததென்று பணிந்து ஏற்று, உருவார அணிந்து, அவர்பின் சென்று, அதிகைப் பிரான் அடிமலர் வீழ்ந்து வணங்கி, "ஆற்றேன் அடியேன்” என்று "கூற்றாயினவாறு” பதிகம் பாடிச் சூலை நீங்கப்பெற்ற அற்புதத்தலம். சுருங்கச் சொல்லின், சைவத்துக்குத் திருத்தொண்டுக்கு உறைப்பான திருநாவுக்கரசரை வழங்கியருளிய பெருமைமிகு தலமிதுவே.
இத்தலத்தை மிதிக்க அஞ்சி சுந்தரர் அருகிலிருந்த சித்தவடமடத்தில் தங்கியதும் - திருவடி தீட்சை பெற்றதும்; பல்லவனான மகேந்திரவர்மனின் மனத்தை மாற்றிச் சமண் பள்ளிகளை இடித்துக் குணபரவீச்சரம் எழுப்பச் செய்ததும்; இத்தலத்தின் பெருமையைப் பறைசாற்றும் நிகழ்ச்சிகளாம்.
சைவ சித்தாந்த சாஸ்திரங்களுள் ஒன்றான 'உண்மை விளக்கம் நூலை அருளிய மனவாசகங்கடந்தாரின் அவதாரத் தலம் இதுவே.
அதிரைய மங்கலம், அதிராஜமங்கலம், அதிராஜ மங்கலியாபுரம் என்னும் பெயர்கள் இத்தலத்திற்குரியனவாகக் கல்வெட்டுக்களிற் காணப்படுகின்றன.
மண விற் கூத்தனான காலிங்கராயன் என்பவன் இக்கோயிலுக்குப் பொன்வேய்ந்து நூற்றுக்கால் மண்டபம், மடைப்பள்ளி, யாகசாலை ஆகியவற்றை அமைத்து, அம்பாள் கோயிலையும் கட்டுவித்தான் என்பது கல்வெட்டுச் செய்தி. தென்கங்கை எனப்படும் கெடிலநதி பக்கத்தில் ஒடுகின்றது.
இறைவன் - வீரட்டேஸ்வரர், வீரட்டநாதர், அதிகைநாதர் இறைவி - திரிபுரசுந்தரி
தலமரம் சரக்கொன்றை
தீர்த்தம் - கெடிலநதி
மூவர் பாடல் பெற்றது.
மிகப் பெரிய கோயில், சுவாமி கர்ப்பக்கிருகம் தேர்போலப் பதுமைகளால் அலங்கரிக்கப்பட்டு, நிழல் பூமியில் சாயாதபடி கட்டப்பட்டுள்ளது. கோயிலுக்கு முன்னால் பதினாறு கால் மண்டபம் உள்ளது. இதைத் திருநீற்று மண்டபம் என்றழைக்கிறார்கள். இம்மண்டபத் தூண்களில் ரிஷபாரூடர், அப்பர், மயில் வாகனன் முதலிய சிற்பங்களும் இக்கோயிலைத் திருப்பணி செய்வித்த செட்டியார் சிற்பங்களும் உள்ளன. கோயிலுக்கு எதிரில் கருங்கல் தூண்கள் மொட்டையாக நின்று கொண்டிருக்கும் நிலையில் திலகவதியார் மடம் காட்சியளிக்கிறது. பதினாறுகால் மண்டபத்தின் பக்கத்தில் அப்பர் சுவாமிமடம் - திருவாவாடுதுறை ஆதீனத்திற்குரியது - உள்ளது.
236

உயர்ந்த ராஜகோபுரம் ஏழு நிலைகளையுடையது. கோபுர வாயிலில் இருபுறங்களிலும் அளவற்ற சிற்பங்கள் உள்ளன. வலப் பக்கத்தில் சற்று உயரத்தில் திரிபுரமெரித்த கோலம் மிக அழகாக வடிக்கப்பட்டுள்ளது. அதன்கீழ் கஜசம்ஹாரகோலம்.
வாயிலின் இருபுறங்களிலும் நடனக்கலைச் சிற்பங்கள் (பரதசாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ள 108 கரணங்களை விளக்கும் சிற்பங்கள்) அளவிறந்துள்ளன. மிதித்தேறும் படியின் இருபுறத்திலும் அழகான நடன மாதரின் உருவங்கள்.
உட்புறத்தில் மற்றொரு பதினாறுகால் மண்டபம் உள்ளது. இம்மண்டபத்தின் இடப்பால் 'சக்கரதீர்த்தம்' எனப்படும் திருக்குளம் உள்ளது. இம்மண்டபத்தில் புகும்போது முதலில் உள்ள இரு தூண்களில் ஒன்றில் சுப்பிரமணியத் தம்பிரான் (அமர்ந்த நிலை) சிற்பமும், இதற்கு நேர் எதிர்த்தூணில் சிவஞானத் தம்பிரான் (நின்று கை கூப்பிய நிலை) சிற்பமும் உள்ளன. சுப்பிரமணியத் தம்பிரான் என்பவர்தான் இக்கோயிலைத் திருத்திச் செப்பம் செய்தவர் என்கின்றனர். இவர் சீடரான சிவஞானத்தம்பிரான்தான் முதன் முதலில் இத்திருக்கோயிலில் அப்பர் பெருமானுக்குப் பத்து நாள்கள் விழா எடுத்துச் சிறப்பாக நடத்தினார் என்பர்.
உட்கோபுரம் ஐந்து நிலைகளையுடையது. கவசமிட்ட கொடிமரம், கொடிமரத்து விநாயகர் தரிசனம், முன்னால் நந்தி. வலப்பால் நூற்றுக்கால் மண்டபம் உள்ளது. இதைத் தேவசபை என்கின்றனர். நடராச அபிஷேகம் இம்மண்டபத்தில் நடைபெறும். உட்கோபுரம் தாண்டினால், உயரமான நந்தி உள்ளது. ஒருபுறம் முருகப் பெருமானும், மறுபுறம் கணபதியும் காட்சியளிக்கின்றனர். வலமாக வரும்போது அப்பர் சந்நிதி (உற்சவ மூர்த்தி) உள்ளது. சேக்கிழார் அறுபத்துமூவர் மூலத் திருமேனிகள் உள்ளன. அடுத்துத் தலமரம் சரக்கொன்றை உள்ளது. பக்கத்தில் திலகவதியார் சந்நிதி, அடுத்து சனீஸ்வரர், முன்னால் பெரிய சிவலிங்கம் ஒன்று வைக்கப்பட்டுள்ளது. அடுத்து அப்பர் சந்நிதி - மூலமூர்த்தம் உள்ளது. அமர்ந்த திருக்கோலம் - சிரித்தமுகம் - தலைமாலை - கையில் உழவாரப் படை தாங்கிய பேரழகு. அம்பாள் சந்நிதி தனிக் கோயிலாகவுள்ளது. முன்மண்டபம், எதிரில் கவசமிட்ட கொடிமரம், பலிபீடம், நந்தி உள்ளன.
பிராகாரத்தில் அடுத்து விநாயகர் சந்நிதியும் பக்கத்தில் பஞ்சமுக சிவலிங்கமும் (பசுபதிநாதர்) உள்ளன. வரிசையாகப் பல சிவலிங்கத் திருமேனிகள் உள்ளன. யாகசாலை, நவக்கிரக சந்நிதிகளையடுத்து, நடராச சபை உள்ளது. பக்க வாயிற்படிகள் வழியே சென்று, முன்மண்டபத்தையடைந்து, துவார பாலகரை வணங்குகிறோம். திரிபுராந்தகர் உற்சவ சந்நிதி தெற்கு நோக்கியுள்ளது. உள் மண்டபத்தை அடைந்ததும் நேரே மூலவர் சந்நிதி. மூலவர் - சிவலிங்கத் திருமேனி, கிழக்கு நோக்கியது. பெரிய திருமேனி - பெரிய ஆவுடையார். சிவலிங்கத் திருமேனி பதினாறு பட்டைகளுடன் கம்பீரமாகக் காட்சியளிக்கின்றது. பின்னால் சுவாமி அம்பாள் உருவங்கள் சோமாஸ்கந்த வடிவில்
இந்துக்கலைக்களஞ்சியம்

Page 283
புடைமுர்த்தமாகச் சுதையில் அமைக்கப்பட்டுள்ளன. - கல்யாண திருக்கோலம், தெவிட்டாத தரிசனம்.
இருபுறமும் உற்சவத் திருமேனிகள் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளன. பிட்சாடனர், சந்திரசேகரர், விநாயகர், பள்ளியறை மூர்த்தி, அஸ்திரதேவர், திலகவதியார், நால்வர், சண்டேசுவரர் முதலிய உற்சவத் திருமேனிகள் தரிசிக்கத்தக்கவை.
சுவாமி கருவறை, பூமியில் நிழல் சாயாதபடி கட்டப்பட்டுள்ள தேர் போன்ற அமைப்பு, (காஞ்சி கயிலாய நாதர் கோயில் அமைப்பை நினைவூட்டுகிறது) கருவறை சுதையாலான பணி. முன்புறம் வளர்த்துக் கற்றளியாகக் கட்டப்பட்டுள்ளது. கருவறையைச் சுற்றிலும் குடவரைச் சிற்பங்கள் - சற்று வளர்த்துச் செய்யப்பட்டுள்ளன. இச்சிற்பங்களுள் தகூதிணா மூர்த்தி, லிங்கோற்பவர், துர்க்கை, சண்டேஸ்வரர், சரபமூர்த்தி, கல்யாணசுந்தரர், ஏகபாதர் முதலியன பேரழகு வாய்ந்தவை.
அதிகை வீரட்டானம் அரிய சிற்பங்களைக் கொண்ட, கலைப் பெட்டகமாகத் திகழ்கின்றது.
அம்பாள் - திரிபுரசுந்தரி சந்நிதி வலப்பால் தனிக்கோயிலாகவுள்ளது. அழகிய திருமேனி - நின்ற திருக்கோலம் - அபயவரதத்துடன் கூடிய நான்கு திருக்கரங்கள் - எதிரில் நந்தியுள்ளது. நிறைவான தரிசனம், வைகாசி விசாகத்தில் பத்து நாள்களுக்குப் பெருவிழாவும், சித்திரைச் சதயத்தில் பத்து நாள்களுக்கு அப்பர் சுவாமித் திருவிழாவும் நடைபெறுகின்றன.
நாடொறும் ஆறுகாலப் பூஜைகள் முறையாக நடக்கின்றன. 1940இல் கும்பாபிஷேகம் நடந்துள்ளது. கோயிலில் திருப்பனந்தாள் பூரீ காசி மடத்தின் கட்டளையாக சிவ சிவ ஒலி மண்டபம் 1962இல் ஏற்படுத்தப்பட்டுத் திருமுறைப் பாராயணப் பணி நடைபெற்று வந்துள்ளது.
இத்தலத்தில் உள்ள பழைய போலீஸ் ஸ்டேஷனைத் தாண்டி, 1 கி. மீ. தொலைவு சென்றால் பூணூரீ சிதம்பரேஸ்வரர் கோயில் உள்ளது. இதுவே சித்த வட மடம் ஆகும். இப்பகுதி புதுப்பேட்டை என்று வழங்குகின்றது. (சித்தவடமடத்தைப் பிற்காலத்தில் சித்தாண்டிமடம் சித்தாந்த மடம் என்றெல்லாம் வழங்கினர். இப்பகுதி இப்போது கோடாலம்பாக்கம் என்றும் அழைக்கப்படுகிறது).
மகேந்திரவர்ம பல்லவன் கட்டிய குணபரவீச்சரம் - "ஆதிமூல குணபரேச்சுரன் கோயில்” என்றழைக்கப்படுகிறது. இது கோயிலுக்குப் பக்கத்தில் மேற்கே பெருந்தெருக் கரையில் உள்ளது. சிறு கட்டிடமாக, இடிந்த நிலையில், உடைந்துபோன படிமங்களுடன் காட்சி தருகின்றது. தற்போதுள்ள கோயில் பிற்காலத்தில் பாண்டியர்களால் எழுப்பப்பட்டது. இக்கோயில் மராட்டிய ஆங்கிலேயர் காலத்தில் போர்க்கோட்டையாகவும் மாறி மாறிப் பயன்படுத்தப்பட்டதாக வரலாற்றில் அறிகிறோம்.
இந்துக்கலைக்களஞ்சியம்

"எண்ணார் எயில்எய்தான் இறைவன் அனல் ஏந்தி மண்ணார் முழவதிர முதிரா மதிகுடிப் பண்ணார் மறைபாடப் பரமன் அதிகையுள் விண்ணோர் பரவ நின்றாடும் வீரட்டானத்தே. ”
(சம்பந்தர்)
"நீதியால் வாழமாட்டேன் நித்தலும் துரயேனல்லலேன் ஒதியும் உணரமாட்டேன் உன்னையுள் வைக்கமாட்டேன் சோதியே சுடரே உன்தன் தூமலர்ப் பாதங்காண்பான் ஆதியே அலந்து போனேன் அதிகை வீரட்டனீரே. ”
(அப்பர்) தம்மானை யறியாத சாதியார் உளரே,
சடைமேற்கொள்பிறையானை விடைமேற்கொள் விகிர்தன் கைம்மானின் உரியானைக்கரி காட்டிலாட லுடையானை விடையானைக் கறைகொண்ட கண்டத் தெம்மான்தன் அடிக்கொண்டு என்முடிமேல் வைத்திடுமென்னும்
ஆசையால் வாழ்கின்ற அறிவிலாநாயேன் எம்மானை எறிகெடில வடவீரட்டானத்து, உறைவானை
இறைபோதும் இகழ்வன் போலியானே.” (சுந்தரர்)
சுந்தரருக்குச் சித்தவடமடத்தில் திருவடி தீகூைடி நடந்தது. திருவதிகை எல்லைக்குள்ளேயே சித்தவடமடம் உள்ளது. கெடில நதியின் தென்கரை ஓரமாக ஒரு ஊற்று இடைவிடாது பெருகிக் கொண்டு பின் ஒரு வாய்க்காலாக ஒடுகிறது. மேற்படி தீர்த்தம் வெயிற் காலத்தில் குளிர்ந்தும், குளிர்காலத்தில் வெப்புற்றும் இருக்கிறது மிகவும் ஆச்சரியகரம். கெடிலத்தின் தெற்கே மூன்று காதம் வரையில் சிவந்த பூமியாகவே இருக்கிறது. திரிபுரம் எரித்தமையால் இப்படியிருக்கிறதென்று நினைக்கிறார்கள். இரண்டு காதவழிக்கப்பால் வேகாக்கொல்லையென்று ஓரிடமுள்ளது. இது மட்டும் வெள்ளை.
பலதலங்களிலுள்ள கல்வெட்டுக்களில் திருவிழாவிற்கு முன் திருவீதி ஆண்டார்கள் திருவதிகைக்கு ஒப்பாக வீதிகளைத் துப்பரவு செய்ய வேண்டுமென்றுள்ளது அப்பர் சுவாமிகளுடைய உழவாரத் தொண்டுக்குச் சான்று பகர்வதாகும். பாண்டிநாட்டுத் தலங்கள் பலவற்றுள் திருக்கொடி ஏற்றத்திற்கு முன்னாள் அப்பர் சுவாமிகள் திருவீதித் திருக்கண் சாத்தும் உற்சவம் நடக்கிறது.
அப்பருக்கு மூல உற்சவ விக்கிரகங்கள் உள்ளன. லிங்கம்
பட்டைகளால் திகழ்கிறது. மூவராலும் பாடப்பெற்ற தலம். அதிகை, அதிகையூர், அதிகைவிரட்டம், வீரட்டம்.
கூற்றாயின வாறு விலக்ககிலீர்
கொடுமைபல செய்தனநானறியேன் ஏற்றாயடிக் கேஇரவும்பகலும்
பிரியாது வணங்குவன் எப்பொழுதும் தோற்றாதென் வயிற்றின் அகம்படியே குடரோடு துடக்கி முடக்கியிட ஆற்றேன்.அடி யேன்அதி கைக்கெடில
வீரட்டா னத்துறை அம்மானே.
திருநா. 4ஆம் திரு.
237

Page 284
குண்டைக் குறட்பூதம் குழும அனலேந்திக் கெண்டைப் பிறழ்தெண்ணfர்க் கெடில வடபக்கம் வண்டு மருள்பாட வளர்பொன் விரிகொன்றை விண்ட தொடையலா னாடும் வீரட் டானத்தே.
திருஞா. 7-ஆம் திரு.
தம்மானை அறியாத சாதியார் உளரே
சடைமேற் கொள்பிறையானை விடைமேற்கொள் விகிாதன் கைம்மாவின் உரியானைக் கரிகாட்டில் ஆடல்
உடையானை விடையானைக் கறைகொண்ட கண்டத் தெம்மான்தன் அடிக்கொண்டு என்முடி மேல் வைத்திடும்
என்னும் ஆசையால் வாழ்கின்ற அறிவிலா நாயேன் எம்மானை எறிகெடில வடவீரட்டானத் துறைவானை
இறைபோதும் இகழ்வன்போல் யானே. (சுந்தர)
இத்தலத்தைப் பற்றி வேறுதலங்களில் வழங்கும் தேவாரங்கள் :
அதிகை மூதூரரசினை ஐயாறமர்ந்தவையனை
பொது திருநா. அறஞ்கு ழதிகை விரட்டத்தரிமானேற்றை யடைந்தேனே,
பொது திருநா.
அண்டர்தொழுமதிகை வீரட்டானம் பொது திருநா. கடவூர் வீரட்டானங்காமருசீரதிகை மேவிய வீரட்டானம்
பொது திருநா.
அதிகை விரட்டான மாட்சி கொண்டார். பொது திருந7
( A. ബ്ര)
திரு அம்பர்ப் பெருந்திருக்கோயின்
பூந்தோட்டம் இரயில்வே நிலையத்திலிருந்து தென்கிழக்கே இரண்டு மைலில் உள்ளது. அம்பர் மாகாளத்துக்குக் கிழக்கே முக்கால் மைலில் உள்ளது.
சோமாசி மாற நாயனார் வழிபட்ட தலம்.
சுவாமி பிரமபுரீசர். அம்பிகை பூங்குழலம்மை.
தீர்த்தம் பிரம தீர்த்தம், விருட்சம் : புன்னை.
திரிசிரபுரம் மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்கள் ஒரு புராணம் இயற்றியுள்ளார். அம்பிகையின் வடமொழிப் பெயர் : சுகந்த குந்தளாம்பிகை. ஒரு பஞ்சகாலத்திற் பொருளில்லாமல் வருத்தமுற்ற நந்தனென்னும் அரசனுக்கு நாள் தோறும் படிக்காசு அருளினமையால் இத்தல விநாயருக்குப் படிக்காசுப் பிள்ளையார் என்னும் திருநாமம் அமைந்தது.
இத்தலத்தில் உள்ள தீர்த்தம் அன்னமாம் பொய்கை, அன்னவடிவங்கொண்ட பிரமதேவர் உண்டாக்கிய தீர்த்தம் இது. சுவாமி எழுந்தருளியிருக்கும் திருக்கோயில் கோச்செங்கட் சோழ நாயனாரால் திருப்பணி செய்யப் பெற்ற பெருமை வாய்ந்தது என்பது இத்தலத்துத் தேவாரங்களால் விளங்கும். இந்தத்தலம் மிகவும் பழைமை வாய்ந்தது; திவாகரத்தில் ஒளவை பாடிய அம்பர்ச் சேந்தன் என்றதிற் கூறப்பட்டதும் “தண்ணிருங் காவிரியே
238

தார்வேந்தன் சோழனே மண்ணாவதுஞ் சோழ மண்டலமே - பெண்ணாவாள் அம்பர்ச் சிலம்பி யரவிந்த மேமலராம் செம்பொற் சிலம்பே சிலம்பு’ என்ற தனிப்பாடலிற் சொல்லப்பட்டதும் இத்தலமேயாகும். மன்மதன் பூசித்த தலம். வடபக்கம் : பாதாளேசுவரர் புன்னாக விருட்சத்தின் கீழ் செங்கட்சோழன் பிரதிஷ்டை புன்னாகவனேசுவரர் மாடக்கோயில், கிழக்கு முகம். அம்மன் தெற்குமுகம். சம்பந்தர் பாடியதலம்.
எரிதர அனல்கையில் ஏந்தி எல்லியில் நரிதிரி கானிடை நட்டம் ஆடுவர் அரிசிலம் பொருபுனல் அம்பர் மாநகர்க் குரிசில்செங் கன்னவன் கோயில் சேர்வரே.
(திருஞா. ம்ே திரு) (2. 662/ 47. )
திரு அரங்கம்
தென்னிந்திய வைணவத் தலங்களிலே மிகவும் புராதனமானது திருவரங்கம். அது ஏறக்குறைய 2000 ஆண்டுகால வரலாறுடையது. சைவர்கள் ஆலயங்களில் உன்னதமானதாகச் சிதம்பரத்தைக் கொள்வர். எனவே, கோயில் என்றால் அது சிறப்பாக அத்தலத்தைக் குறிக்கும். அது போலவே வைணவக் கோயில்களில் திருவரங்கம் முதன்மையானது. முதலாழ்வார்களினாலும் பிந்திய ஆழ்வார்களினாலும் மங்களா சாசனம் பெற்றதலம்; இராமானுஜர் முதலான ஆச்சாரியார்கள் தங்கியிருந்து வரலாறு படைத்த தலம்; தென்னிந்தியக் கோயில்களிலெல்லாம் மிகப் பெரிய அளவிலான கட்டுமானங்களைக் கொண்டுள்ள தலம்; இந்திய துணைக்கண்டம் அனைத்திலும் புண்ணிய கூேடித்திரமாகவும் பாவ விமோசனங்களையும் முத்தியையும் அளிக்கவல்லதாகவும் போற்றப்படுந் தலம் திருவரங்கம். அதனைப் பற்றிய ஐதீகங்கள், புராணக்கதைகள், வரலாறு என்பனவற்றைக் கூறும் சிறப்புடைய நூல்கள் உண்டு. அவற்றிலொன்று சமஸ்கிருத மொழியிலமைந்த பூணூரீரங்க மகாத்மியம் அது பெளராணிக நடையிலமைந்தது. கோயிலொழுகு என்பது ஆலயத்தின் வரலாற்றம்சங்களைப் பதிவுசெய்கின்ற தமிழ் நூல். எல்லாமாக 400 வரையான சாசனங்கள் கோயில் வளாகத்திலுள்ளன. அவற்றிற் சில செப்புப்பட்டயங்கள். ஏனையவை சிலாசாசனங்கள். அவை சோழர்காலம் முதல் நாயக்கரின் ஆட்சி முடியும் வரை அடங்கிய காலப்பகுதியில் எழுதப்பட்டவை.
காவேரி, கொள்ளிடம் ஆகியவற்றினாலே சூழப்பட்ட இடைதுறை நிலப்பகுதியில் அமைந்துள்ள திருவரங்கம் திருச்சியிலிருந்து மூன்று மைல் தூரத்திலே காணப்படுகின்றது. அதன் உற்பத்தி பற்றிய ஐதீகங்கள் பூநீரங்கமகாத்மியத்தில் உள்ளன. தஸாத்யாயீ. சதாத்யாயீ என்னும் பெயரில் அந்நூலின் இருவடிவங்கள் உள்ளன. பத்து அத்தியாயங்களில் அமைந்த நூல் மகாத்மியத்தின் சுருக்கமாகும். நூலின் முழுவடிவம் 100 அத்தியாயங்களைக் கொண்டது. அரங்கநாதர்
இந்துக்கலைக்களஞ்சியம்

Page 285
உருவமமைந்த பூரீ விமானம் பிரமன் செய்த கடுந் தவத்தின் பயனாகக் கடலின்றுந் தோன்றியதென்றும் பிரமதேவனின் கட்டளைப்படி சூரியதேவன் அதற்கு பூசைவழிபாடுகளைச் செய்தானென்றுஞ் சொல்லப்படுகிறது. சூரிய வம்சத்து இக்ஷவாகு மன்னன் அதனைப் பிரம்மலோகத்திலிருந்து அயோத்தி நகருக்கு எடுத்து வந்தான். பின்பு இராமர் பட்டாபிஷேகத்தினைக் காண்பதற்குச் சென்ற விபீஷணனிடம் அதனை இராமர் கொடுத்தார். விபீஷணன் காவிரிக் கரையை அடைந்ததும் அங்கு விமானத்தை வைத்து விட்டு இளைப்பாறினான். தனது பிரயாணத்தைத் தொடர முற்பட்ட பொழுது விமானத்தை அவனால் எடுக்க முடியவில்லை. அது தலத்திலே படிந்துவிட்டது. விபீஷணனின் துயரத்தைக் கண்டு சோழநாட்டு வேந்தனாகிய தர்மவர்மன் அவனுக்கு ஆறுதல் கூறினான். அரங்கநாதர், தான் காவிரிக்கரையிலே பள்ளிகொள்ள வேண்டுமென்றும் விபீஷணன் பொருட்டுத் தென்திசை நோக்கிய வண்ணமாக சயனக் கோலத்தில் இருக்கப் போவதாகவும் அவனிடங் கூறினார். விபீஷணன் அமைதி பெற்று இலங்காபுரி புக்கான். தர்மவர்ம சோழன் தலத்திலே ஆலயமும் பிரகாரங்களும் அமைத்து வழிபாடு நடைபெறுவதற்கு ஏற்பாடு செய்தான்.
விமானம் மண்மாரியினால் மூடப்பெற்று விட்டதென்றும் நெடுங்காலஞ் சென்ற பின்பு கிளிச்சோழன் சொப்பனத்தில் அதனைப்பற்றி அறிந்த பின்பு ஆலயத்தை மூடிய மணற் பிட்டிகளை அகற்றி அதனைப் புனரமைத்தான் என்றும் கோயிலொழுகு செப்புகின்றது. கிள்ளி என்னுஞ் சேழனொருவன் செய்த திருப்பணிகள் பற்றிய நினைவுகள் இக்கதைக்கு ஆதாரமாகலாம். புராதனமான தமிழ் நூல்களிலே திருவரங்கம் பற்றிய குறிப்புகள் உண்டு. அரங்கம் பற்றியும் அங்கு நடைபெற்ற பங்குனி உற்சவம் பற்றியும் அகநானூற்றுப் பாடலொன்று குறிப்பிடுகின்றது. ஆயிரம் பணாமுடிகளைக் கொண்ட ஆதிசேடனின் பாயலிலே, மார்பிலே லக்ஷ்மி தங்கிய கோலத்திலே பள்ளிகொள்ளும் அரங்கநாதரைப்பற்றி இளங்கோ குறிப்பிடுகின்றார். முதலாழ்வார்களான பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார் ஆகியோரின் பாடல்களிலே திருவரங்கம் பற்றிய விவரங்கள் காணப்படுகின்றன.
திருவரங்கம் கோயிலைச் சூழவுள்ள எண்திசைகளிலும் தீர்த்தங்கள் அமைந்திருக்கின்றன என்றும் அங்கு வழிபாடு செய்வதற்கு முன் அடியார்கள் நீராடுவரென்று திருமளிசையாழ்வார் கூறுவார். நம்மாழ்வாரின் காலத்திற் பிரகாரங்கள் பொருந்திய பேரமைப்பாக ஆலயம் விளங்கியது. கோயிலைச் சூழ்ந்த பிரகாசச் சுவர்களை அலங்கரித்த கொடிகளைப் பற்றி அவர் வர்ணிக்கின்றார். குலசேகர ஆழ்வார் நெடுங்காலம் திருவரங்கத்திலே தங்கியிருந்தவர். மூலஸ்தானத்து வாயிற்புறத்துத் திருமணத் தூண் பற்றியும் அரங்கநாதரை மலர்தூவி வழிபடும் அர்ச்சகரைப் பற்றியும் அவர் குறிப்பிடுகின்றார். அரங்கநாதர் கோயிலிற் பூசை செய்யும் மறையவர்களைப் பெரியாழ்வாரும் போற்றுகின்றார். அவரின்
இந்துக்கலைக்களஞ்சியம்

மகளான ஆண்டாள் அரங்கநாதர் மீது தெய்வீகக் காதல் கொண்டவர். இறைவன் மீது அவர் கொண்ட காதல் திருப்பாவையாக மலர்ந்தது. வைணவர் போற்றும் முதன்மை வாய்ந்த தோத்திரங்களிலே அதுவும் அடங்கும். விப்பிரநாராயணரான தொண்டரடிப் பொடியாழ்வார் அரங்கநாதர் கோயிலுக்கு மாலையும் பூவும் தினந்தோறும் கொடுக்கும் வழக்கமுடையவர். 96) (560 LU திருமாலையில் அரங்கநாதரின் சயனக்கோலம் வர்ணிக்கப்படுகின்றது. பெரிய பெருமாளின் அங்கலக்ஷணங்களையெல்லாம் அவர் வர்ணிக்கின்றார். அரங்க நாதர் மீது தொண்டரடிப் பொடியாழ்வார் திருப்பள்ளியெழுச்சி பாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது. "அமலனாதிபிரான்” எனத் தொடங்கும் பாசுரத்திலே திருப்பாண் ஆழ்வார் அரங்கநாதரின் திருப்பாதங்கள், பீதாம்பரம், நாபி, சுவர்ண உதரபந்தம், ஆபரண அலங்காரங்கள் பொருந்திய மார்பு, கழுத்து, பவளவாய், கமலக்கண்கள் ஆகியவற்றை விவரித்துப் போற்றுகின்றார்.
அண்ணன் திருமாளிகை ஒழுகு, உத்தமநம்பி வம்சப் பிரபாவம், குருபரம்பரை முதலிய நூல்களிலும் திருவரங்கம் பற்றிய குறிப்புகள் உண்டு. பத்மபுராணம், மத்ஸ்ய புராணம் என்பவற்றிலும் இத்தலம் தொடர்பான மகாத்மியம் பற்றிக் குறிப்புண்டு என்பர். பிரபன்னாமிருதம் என்னுஞ் சமஸ்கிருத நூலிற் திருவரங்கம் பற்றிய பல குறிப்புகள் வருகின்றன. 15ஆம் நூற்றாண்டில் எழுதப்பெற்ற லசுஷ்மி காவியம் அரங்கநாதருக்கும் உறையூர் வல்லிக்கும் நடைபெற்ற கலியாண வைபவத்தை விவரிக்கின்றது. கோயிலில் நிகழும் ஆதிபிரம்மோற்சவம் பற்றிய மிகவிரிவான வர்ணனை அதிலே காணப்படுகின்றது. திருவரங்கத்திலே துருக்கியரால் ஏற்பட்ட கேடுகளும் விஜநகரப் பிரதானிகள் அங்கு செய்த திருப்பணிகளும் மதுரா விஜயம், சாளுவாப்யுதயம் என்னும் நூல்களிலே விளக்கப்படுகின்றன. புராதன காலச் சோழ மன்னன் ஒருவனாற் தலத்திலே பெருமாள் கோயிலொன்று அமைக்கப்பட்டதென்பதை ஒரு வரலாற்றுச் செய்தியாகக் கொள்ளலாம். திருவரங்கத்திலே காணப்படுகின்ற காலத்தால் முற்பட்ட சாசனங்கள் 10 ஆம் நூற்றாண்டிற்குரியவை. இரண்டாம் இராஜேந்திரனுடைய மகனாகிய இராசமகேந்திரன் (1060 - 1063) இரண்டாம் பிரகாரச் சுவர்களையும் இராசமகேந்திரன் திருவீதி என்னுஞ் திருச் சுற்றினையும் அமைப்பித்தான் என்று சொல்லப்படுகிறது. இக்காலமளவில் முற்கால ஆச்சாரியர்களான நாதமுனிகள், உய்யகொண்டார், மணக்கால் நம்பி, ஆளவந்தார் ஆகியோர் திருவரங்கத்திலே பல பணிகள் புரிந்தனர். அவர்கள் வைணவததைப் பரப்பியதோடு திருவரங்கம் கோயில் நிர்வாகத்தையும் நடத்தி வந்தார்கள். விசிட்டாத்வைத வேதாந்தத்தின் மூலவராகிய இராமானுஜர் திருவாங்கத்தைத் தலைமைத்தனமாகக் கொண்டு நாடளாவிய தமது சமயப்பணிகளைச் செய்தார். கோயில் நிர்வாகத்திலே அவர் சீர்திருத்தங்களை ஏற்படுத்தினார். வைணவ மரபிலே கிருமிகண்டசோழன் என்பவன் துன்புறுத்தியதால் இராமானுஜர் திருவரங்கத்திலிருந்து வெளியேறி ஹொய்சல மன்னரின்
239

Page 286
ஆட்சியிலமைந்த கர்நாடக தேசத்திற்குச் சென்றார் என்று சொல்லப்படுகின்றது. இது முதலாம் குலோத்துங்க சோழனின் காலத்தில் (1070-1122) நடந்ததென்று கொள்ளப்படுகின்றது.
13ஆம் நூற்றாண்டிலே சோழர் ஆதிக்கம் வலிகுன்றிவிட்ட காலத்தில் தமிழ் நாட்டின் வடமேற்குப் பகுதிகளிற் ஹொய்சலரின் ஆதிக்கம் ஏற்பட்டது. திருவரங்கத்திற்கு 5 மைல் தூரத்திலுள்ள கண்ணனூரைக் கர்நாடக இராசாக்கள் தங்கள் இரண்டாம் தலைநகராக அமைத்துக் கொண்டனர். திருவரங்கத்திற் ஹொய்சலர்கள் அதிகாரம் பெற்றனர். அங்கு அவர்களின் சாசனங்கள் பல எழுதப்பட்டுள்ளன. 3 ஆம் 4 ஆம் பிரகாரங்களிலுள்ள பிரதானமான பல கட்டடங்கள், தேவகோட்டங்கள், மண்டபங்கள் ஹொய்சலப் பிரதானிகளால் அமைக்கப்பட்டனவென்று கோயிலொழுகு குறிப்பிடுகின்றது.
ஆயிரங்கால் மண்டபம், பரவாசுதேவர் கோயில், சுதர்சனப் பெருமாள் கோயில், லக்ஷமிநாராயணப் பெருமாள் கோயில், நாச்சியார் கோயில் மண்டபம் ஆகியவை கம்பைய தண்ட நாயக்கன், கரியமாணிக்கதண்ட நாயக்கன் என்போரால் அமைக்கப்பட்டன. அவர்கள் சகோதரர்கள், ஹொய்சலரின் படைத்தலைவர்கள். நான்காம் பிரகாரத்திலுள்ளவற்றில் வனப்பிற் சிறந்ததான வேணுகோபாலர் கோயில் ஹொய்சலரினால் அமைக்கப்பட்டதென்று சிலர் கருதுவர்.
இரண்டு வருட காலமாகக் கலிங்கத்து மூன்றாம் அரங்க வீமனின் படையினரான ஒட்டர்கள் திருவரங்கத்திலே தங்கியிருந்தனர் (1223-1225). அவர்கள் ஆலய விவகாரங்களிலே தலையிட்டதனாற் சீர்கேடுகள் உண்டாகின. அவர்களை முதலாம் மாறவர்மன் சுந்தர பாண்டியன் (1216 - 1238) அங்கிருந்து துரத்தினான். இரண்டாம் பாண்டியப் பேரரசின் ஸ்தாபகனாகிய முதலாம் ஜடாவர்மன் சுந்தரபாண்டியன் பூரீரங்கம் கோயிலுக்குப் பேராதரவு வழங்கினான். கோயில் விமானத்தைப் பொன்வேய்ந்து ஆலயத்திற்கு விலைமதிக்க முடியாத நன்கொடைகளை வழங்கினான். அவன் அங்கு ஹஸ்திதுலாபாரம் செய்தான். அதற்குப் பதினெண்ணாயிரம் பொற்காசுகள் செலவாயினவென்று கோயிலொழுகு குறிப்பிடுகின்றது.
கி.பி 1311 இலும் 1323 இலும் நடைபெற்ற துருக்கியர் படையெடுப்புகளினால் அரங்கநாதர் கோயில் சீரழிந்தது. கோயிலைத் தாக்கிப் பெருமளவு செல்வங்களைத் துருக்கியப் படைகள் கவர்ந்து சென்றன. ஆயினும் துருக்கியப் படைகள் தில்லிக்குத் திரும்பிச் சென்ற பின்பு புதிய உற்சவ மூர்த்திகள் வார்க்கப்பட்டு, வழிபாடுகள் மீண்டும் வழமையாகின. மதுரை சுல்தானியம் உருவாகியிருந்த காலத்திற் பூரீரங்கம் ஒரு கோட்டையாகப் பயன்படுத்தப்பட்டது. கோயிற் கட்டடங்கள் கிலமாகிச் சிதைவுற்றன. பிள்ளை லோகாச்சாரியாரின் தலைமையிற் கோயிற் பரிசனங்கள் அழகிய மணவாளர், பூரீதேவி, பூதேவி ஆகியோரின் உற்சவ மூர்த்திகளையும் சில
240

ஆபரணங்களையும் வழிபாட்டுக்கு வேண்டிய உபகரணங்களையும் எடுத்துக் கொண்டு தப்பிச் சென்றுவிட்டார்கள். புங்கனூரூடாகத் திருப்பதியை அடைந்தனர். அங்கு வெங்கடேசப் பெருமாள் கோயிலில் விக்கிரகங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டன.
விஜயநகர காலத் திருப்பணிகள்
1370 ஆம் ஆண்டிலே மதுரை சுல்தானியம் குமார கம்பணன் தலைமையில் வந்த விஜயநகரப் படையினாற் கைப்பற்றப்பட்டது. மதுரையைக் கைப்பற்றிய பின்பு கம்பணனும் ஏனைய பிரதானிகளும் தென்னாட்டுக் கோயில்களைப் புனராவர்த்தனஞ் செய்வதில் ஈடுபட்டனர். குமார கம்பணன், கோபண, மங்கு, சாளுவகுண்ட ஆகிய விஜயநகரப் பிரதானிகளினாற் திருவரங்கம் புனரமைக்கப்பட்டு அங்கு வழிபாடுகள் மீண்டும் ஆரம்பமாயின. விஜயநகர ராயர்கள், படைத்தலைவர்கள், பிரதானிகள் என்போர் கிராமங்களையும் நந்தவனங்களையும் பெருந்தொகையான பொற்காசுகளையும் தானம் பண்ணினார்கள் என்பதைச் சாசனங்கள் மூலம் அறியமுடிகின்றது. விஜயநகரப் பிரதானிகள் உற்சவங்கள் பலவற்றை நடத்த ஏற்பாடுகள் செய்தார்கள். விருப்பண்திருநாள், மூவதிதிருநாள் என்பன விஜயநகர இளவரசர்களின் பெயரால் இன்றுவரை நடைபெறும் உற்சவங்களாகும். கோயில் விமானம் புதிதாக அமைக்கப்பட்டுப் பொன் மூலாம் பூசப்பெற்றது. கருடாழ்வாரின் புதிய படிமமொன்று தாபனமாகியது. துவஜஸ்தம்பம் 102 பொற்றகடுகளினாற் சுற்றி மூடப்பெற்றது. ஆஞ்ஞனேயர் சந்நிதி, நம்மாழ்வார் கோட்டம் போன்ற பழுதடைந்த கோட்டங்கள் பல திருத்தி அமைக்கப்பட்டன. கோபுரங்களும் கோபுரவாசல்களும் புனரமைக்கப்பட்டன. கி.பி 1490ஆம் ஆண்டளவிலே 292 கிராமங்கள் கோயில் வசமிருந்தன என்பதை உத்தமநம்பி வம்சபிரபாவம் என்னும் நூல் மூலம் அறியமுடிகின்றது. விட்டலநாத சுவாமி கோயில் மதுரகவியாழ்வார் கோயில் போன்ற கோயில்கள் பல புதிதாக உருவாக்கப் பெற்றன. புதிய மண்டபங்கள் பல கட்டப்பட்டன. இராயகோபுரங்கள் என வழங்கும் பிரமாண்டமான கோபுரங்களின் அடித்தளங்கள் உருப்பெற்றன.
விஜயநகர ராயர்களின் ஆட்சியில் அரங்கநாதர் கோயில் விசாலமாகிய பேரமைப்பாகி வளர்ச்சிகண்ட போதும் ஆலயநிர்வாகம் சுதந்திரத்தை இழக்க நேர்ந்தது. ஆலய விவகாரங்களில் விஜயநகரப் பிரதானிகளான துர்காபதிகள் என்னும் தளவாய்களின் தலையீடுகள் அதிகரித்தன. “கோயிலை அரண்மனையிலிருந்து அரசவதிகாரிகள் நிர்வாகம் செய்யுமாப்போன்று கோயிற் கண்காணிகளாகவும் கணக்கராகவும் தங்கள் கையாட்களையே துர்காதிபதிகள் நியமித்தனர்” என்று கோயிலொழுகிற் கூறப்படுகின்றது. இராயர்களின் காலத்தில் உத்தமநம்பிகள் கோயிலின் தர்மகர்த்தாக்களாகப் பணிபுரிந்தனர். பெரியகிருஷ்ணராய உத்தமநம்பி, அவரின் மக்களான பூரீரங்காசார்ய உத்தமநம்பி, சக்கரராயர் ஆகியோரும் அவர்களின் பின் பதவி பெற்றவர்களும்
இந்துக்கலைக்களஞ்சியம்

Page 287
இராயர்களின் விஸ்வாசத்திற்குரியவர்களாவர். கோயிலின் முன்னேற்றம் கருதிப் பல பணிகளை அவர்கள் புரிந்தனர்.
நாயக்கர் காலம்
பதினாறாம் நூற்றாண்டின் நடுப்பகுதியிலே சுதந்திரமாக ஆட்சி புரியத் தலைப்பட்ட மதுரை, தஞ்சாவூர் சமஸ்தானங்களின் நாயக்கர் அரங்கநாதர் கோயில் அலுவல்களில் அதிக ஈடுபாடு கொண்டிருந்தனர். தஞ்சாவூர் அரசரான அச்சுதப்ப நாயக்கர் (1580-1614) 1600 ஆம் ஆண்டளவிலே ஆட்சிப்பொறுப்புகளைக் கைவிட்டு, திருவரங்கத்திலே தங்கியிருந்து காலத்தைப் போக்கியதாக கிறிஸ்தவ பாதிரியார்களின் ஆவணங்கள் குறிப்பிடுகின்றன. நாயக்கர் அங்குள்ள பண்டிதர்களோடு கூடி இருந்தாரென்று சாஹித்ய ரத்நாகர என்னும் நூலிற் சொல்லப்படுகின்றது. கோயில் விமானத்தைப் பொன்வேய்ந்த அச்சுதப்பர் வெளிப்பிரகாரச் சுவர்கள் சிலவற்றையும் சில கோபுரங்களையும் புனரமைத்ததோடு பல புதிய மண்டபங்களையும் நந்தவனங்களையும் அமைத்தார்.
மதுரை நாயக்கர் தலைநகரை 1616 இலே திருச்சிராப்பள்ளிக்கு இடம் மாற்றியதும் பூரீரங்கம் அவரின் நேரடியான கவனத்தைப் பெற்றது. வைணவரான மதுரை நாயக்கர் பூநீரங்கத்து வாதூலதேசிகரைத் தம் குருமாராகக் கொண்டனர். மதுரை நாயக்கரின் திருப்பணிகள், நன்கொடைகள் ஆகியவற்றின் விவரங்கள் அடங்கிய பல சாசனங்கள் திருவரங்கத்தில் உள்ளன. சொக்கநாத நாயக்கர் (1659-1682) அங்கு பல திருவீதிகளையும் அக்கிரகாரங்களையும் அமைத்தார். அவரால் மண்டபங்களும் பிரகாரங்களும் அமைக்கப்பட்டதோடு பழைய கட்டுமானங்களிற் பல புனராக்கம் பெற்றன. கோயிலுக்குத் தேவதான ஊர்களாக 95 கிராமங்கள் வழங்கப்பட்டன.
விஜயரங்க சொக்கநாதர் (1706-1732) பூரீரங்கத்திற்கு வழங்கிய ஆதரவினைப் பொறுத்த வரையில் நாயக்க மன்னரிடையே முதன்மை பெறுகின்றார். அவர் கண்ணாடி அறையினையும் மூன்றாம் பிரகாரத்தில் வேதபாராயண மண்டபத்தையும் கட்டினார். அவரதும் அவரின் குடும்பத்தினரதும், யானைத்தந்தத்தில் உருவாக்கப்பட்ட, ஆளுயரமான சிற்பங்கள் முதலாம் பிரகாரத்து மேலைமண்டபத்தில் வைக்கப்பட்டுள்ளன.
கோயில் நிர்வாகம்
14 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்திலே துருக்கியரின் படையெடுப்புகள் நடைபெறும் வரையான காலப்பகுதியிற் கோயில் நிர்வாகம் சுதந்திரமாக இயங்கியது. அது பூரீ வைஷ்ணவரின் வசமாயிருந்தது. அது ஆழ்வார்கள், ஆச்சாரியார்கள் என்போரின் வழிகாட்டலில் நடைபெற்றது. கோயில் நிர்வாகத்தில் இராமானுஜர் பல சீர்திருத்தங்களை ஏற்படுத்தினார் என்று கருதப்படுகின்றது. திருமங்கையாழ்வர் காலம் முதலாகக் கோவணவர், கொடவர், கொடுளெடுப்பர், வீடுவர், தழையீடுவார் என்னும் ஐந்து வகையினரான பூரீ காரியம் செய்வோர் இருந்தனரென்று கோயில் ஒழுகிற் கூறப்பட்டுள்ளது.
இந்துக்கலைக்களஞ்சியம்

அவற்றைப் பத்துக் கொத்துகளாக இராமானுஜர் மாற்றியமைத்தார். அவை மேல்வருவனவாகும். (1) திருப்பதியார் (2) திருப்பணிசைவார் (3) பாகவத நம்பிகள் (4) உள்ளூரார் (5) விண்ணப்பஞ் செய்வார் (6) திருக்கரகக்கையார் (7) தானத்தார் (8) பட்டாள் கொத்து (9) ஆரியபட்டாள் (10) தசநாமிகள்
ஒவ்வொரு பிரிவினருக்கும் உரிய கடமைகள் இராமானுஜரால் வரையறை செய்யப்பட்டன. அக்கடமைகள் பிரிவுகளின் பெயர்கள் மூலம் விளங்கவில்லை. கோயிற்பணிகள் புரிந்த பிராமணரைக் கோவணவர் என்றனர். பெளராணிகர், திருப்பதியம் ஒதுவார், திருமஞ்சன நீரை அள்ளிவருவோர், அர்ச்சகர், மாலைக்காரர் முதலியோரும் இப்பிரிவுகளில் அடங்குவர் எனக் கொள்ளலாம். அவர்களைத் தவிர ஏகாங்கிகளும் சூத்திரர் அடங்கிய 10 கொத்துகளைச் சேர்ந்தவர்களும் ஆலயத்தொழும்புகளில் ஈடுபட்டனர்.
முதலாம் குலோத்துங்க சோழனது காலத்துச் சாசனமொன்று (1088) பூரீ கார்யம் செய்கிற அதிகாரிகள், அர்ச்சகர் (கன்மிகள்) என்போரைக் குறிப்பிடுகின்றது. பூனி வைஷ்ணவ வாரியம், பூனி பண்டார வாரியம் என்பன பற்றியும் அதில் சொல்லப்படுகின்றது. இரண்டாம் குலோத்துங்க சோழனது (133 - 150) ஏழாம் ஆண்டுக்குரிய சாசனமொன்று கோவனவர் பற்றிக் குறிப்பிடுகின்றது. மாறவர்மன் சுந்தரபாண்டியனின் காலத்துக் கல்வெட்டொன்று (கி.பி. 1225) பத்து கொத்துகள் பற்றிக் குறிப்பிடுவதோடு அவற்றுள் பாகவதநம்பிகள், ஸ்தானத்தார், விண்ணப்பம் செய்வார், ஆரியபட்டாள், பட்டாள்கொத்து என்னும் பெயர்களையும் குறிப்பிடுகின்றது.
கோயிலமைப்பு
ஏழு சுற்றுப் பிரகாரங்களைக் கொண்ட அரங்கநாதர் கோயிலின் விசாலமான வளாகம் ஒரு கோயில் நகரம் போலக் காட்சியளிக்கின்றது. அது சிற்பசாஸ்திர மரபில் உத்தமோத்தம வகைக்குரிய ஆலயமாகக் கொள்ளப்படும். அதன் ஆவரணங்களான பிரகாரங்களின் சுவர்கள் அரண்மதில்களைப் போல மிக உயரமாகவும் உறுதியாகவும் கல்லினால் அமைக்கப்பட்டுள்ளன. அடையவளந்தான் வீதி, சித்திரவீதி, உத்தர வீதி என்னும் மூன்று வெளிப்பிரகாரங்களிலும் மடங்களும் நிரை நிரையாக அமைந்த கடைகளும் வீடுகளும் உள்ளன. அவை அடங்கிய பகுதி நகரப் பகுதியாகும். முதல் நான்கு பிரகாரங்களிலும் கோயிலின் பகுதிகளான கட்டடங்கள் அமைந்துள்ளன.
முதலாவது பிரகாரமான இராசகம்பீரன் திருவீதியில் ஆதியான கோயில் அமைந்துள்ளது. விருத்தாயத சிகரங்கொண்ட வட்டமான கர்ப்பகிருகம், அந்தராளம் அவற்றைச் சுற்றியுள்ள சதுரமானதும் தூண்கள் பொருந்தியதுமான திருவுண்ணாழி எனப்படும் பிரதசுஷிண பாதை, காயத்திரி மண்டபம் என வழங்கும் முகமண்டபம், அழகிய மணவாளன்
241

Page 288
திருமண்டபம் (பெரிய மண்டபம்) என்னும் மகாமண்டபம் , மூலஸ்தானத்தை நோக்கிய கோலமான கருடாழ்வார் சந்நிதி ஆகியவை 150 அடி நீளமும் 50 அடி அகலமும் கொண்ட உயரமான பீடத்தில் அமைந்துள்ளன.
மகாமண்டபத்தை அடைவதற்கான படிக்கட்டுகள் அதன் கிழக்கிலும் மேற்கிலும் உள்ளன. ஒவ்வொன்றிலும் 6 தூண்கள் என்ற படியாக 5 வரிசைகளிலே தூண்கள் அதில் அமைக்கப்பட்டுள்ளன. அவை விஜயநகர கலைப்பாணியில் அமைந்தவை; நான்முகமான கலப்புத்தூண்கள். அவை ஒவ்வொன்றும் மும்மூன்று தூண்கள் இணைந்தாற் போன்ற வடிவமைப்புக் கொண்டவை. அவற்றின் நடுப்பகுதி பன்முகமானது. தூண்களின் மேற்புறத்தில் இரட்டைப் பத்மபந்தமும் போதிகையும் அமைந்திருக்கின்றன. மகாமண்டபத்தின் தென்பக்கத்தில் மூன்று தேவ கோட்டங்கள் அமைந்துள்ளன. அவற்றுள் நடுவிலமைந்துள்ளது கருடாழ்வார் கோட்டம்.
மகாமண்டபத்திலிருந்து வாயிற்கதவின் மூலம் காயத்திரி மண்டபத்தை அடையலாம். கதவின் இரு பக்கங்களிலும் ஜய, விஜய என்போர் வாயிற்காவலராக அமைந்துள்ளனர். காயத்திரி மண்டபத்தில் 4 வரிசைகளில் 24 வட்டத்தூண்கள் காணப்படுகின்றன.
அவற்றின் போதிகைகள் சோழர் கலைப்பாணியில் அமைந்தவை. அத்தூண்கள் காயத்திரி மந்திரத்திலுள்ள 24 அக்ஷரங்களின் அடையாளமானவை என்று கொள்வர். காயத்திரி மண்டபத்தின் மூலமாக அந்தராளத்தை அடைந்ததும் மூலபேரம் என்னும் சயனக்கோலமான அரங்கநாதரின் திருவடிவத்தைத் தரிசிக்கலாம். அங்கு உற்சவமூர்த்திகளான அழகியமணவாளர், பூரீதேவி, பூதேவி ஆகியோரின் படிமங்களும் உள்ளன. திருவுண்ணாழி வடக்கிலும், கிழக்கிலும் மேற்கிலும் திருச்சுற்று மாளிகையின் கோலத்துடன் விளங்குகின்றது. அதன் ஒவ்வொரு பக்கங்களிலும் நன்னாங்கு விஜயநகர காலத் தூண்கள் உள்ளன. திருவுண்ணாழி வழியாகச் செல்லும்போது சுவர்க்கோட்டங்களில் விக்னேஸ்வரர், யோக அநந்தர், யோகநரசிம்மர், துர்க்கை ஆகியோரின் வடிவங்களைக் காணலாம்.
கர்ப்ப கிருகத்தின் வெளிப்புறச் சுவர்களில் சோழர் கலைப்பாணியிலமைந்த அணைவு தூண்கள் உள்ளன. அவை நீள்சதுரமான பீடத்தில் அமைந்த எண்முகத் தூண்கள் அவற்றின் மேற்பாகத்திலே கும்பம், தடி, இதழ், பலகை, போதிகை என்னும் உறுப்புகள் அமைந்துள்ளன. அதிஷ்டானமற்ற விமானம் முழுமையும் செங்கல் சுதை ஆகியவற்றால் அமைக்கப்பட்டுள்ளது. விமான சிகரம் களத்தின் மேல் எழுகின்றது. களம் கபோதந்தின் மேல் அமைந்துள்ளது. அவற்றினிடையே தளம் எதுவுங் காணப்படவில்லை. கபோதத்திலே சிங்கலலாதக் கோலமான மஞ்சடைப்புகள் இரு வரிசைகளில் அமைந்துள்ளன. வட்டமான களத்திலே ஆழ்வார்கள், ஆச்சாரியார்கள் போன்ற திவ்விய
242

சூரிகளினதும் அன்னப்பறவைகளினதும் சித்திரங்கள் வரையப்பட்டுள்ளன. விமானம் உருவத்தில் நீள்வட்டமானது; கிழக்கு மேற்காக நீண்டது. சிகரத்தில் நான்கு கலசங்கள் உள்ளன. அவை வாசுதேவர், சங்கர்ஷணர், பிரத்யும்னர், அநிருத்தர் ஆகிய நான்கு வியூகங்களின் அடையாளமானவை. ஈரடுக்கு இதழ்கள் பொருந்திய பதுமத்திற் கலசம் அமைந்துள்ளது. சிகரத்தின் அடியில், மேற்கிலும் வடக்கிலும் கிழக்கிலும் உச்சியிற் சிங்கலலாத வடிவம் அமைந்த மகரதோரணங்கள் உள்ளன. தோரணக் கூடுகளில் மேற்கில் அச்சுதரின் ஸ்தானகக் கோலமும் வடக்கில் ஆதிசேடனின் பணாமுடிகள் பொருந்திய விஷ்ணுவின் ஸ்தானகக் கோலமும் கிழக்கில் வேணுகோபாலரின் உருவமும் வடிவமைக்கப்பட்டுள்ளன. கிழக்கிலுள்ள தோரணம் விசாலமானது; அரைவட்ட வடிவமானது; 12 அடி சுற்று வட்டமுடையது. அது கீழமைந்த அந்தராளம் முழுவதன் அகலப்பாட்டின் மேற் பரந்துள்ளது. அதிலே ஐந்து நிரைகளிற் கீழிருந்து மேலாக ஹம்சம், பத்மம், வியாளம், கணங்கள், தாமரை மொட்டுகள் என்பவற்றின் வரிமானங்கள் அமைந்துள்ளன. மகரதோரணத்தின் சிகரமாக அளவிற் பெரிதான சிங்கலலாத கூடம் அமைந்துள்ளது. அதனுள்ளே கோட்டமொன்றிலே பீடத்தின் மேலே பரவாசுதேவரின் படிமம் காணப்படுகின்றது. விமானம் முழுவதும் பொற்றகடுகள் வேய்ந்த ஹிரண்யகூடமாகக் காட்சியளிக்கின்றது. அது தோற்றத்திலே பிரணவாகாரமாக விளங்குகின்றது. பிராசாதங்களில் விருத்தாயதமே சாலவும் சிறப்புடையதென்று பரமேஸ்வர சம்ஹிதையிலும் பஞ்சராத்திர ஆகமத்திலுஞ் சொல்லப்படுகின்றது.
முதலாம் பிராகாரம்
குலசேகரன் திருவீதியிலிருந்து நாழிகேரன் திருவாசல் மூலமாக முதலாம் பிராகாரமான இராசமகேந்திரன் பிராகாரத்தை அடையலாம். அதன் கோபுரவாசலின் இரு மருங்கிலுமுள்ள கோட்டங்களில் பத்திரன், சுபத்திரன் என்னும் துவாரபாலகரின் வடிவங்கள் உள்ளன. கோட்டங்களின் உச்சியில் மகரதோரணம் அமைந்திருக்கின்றது. அவற்றின் பக்கங்களில் அமைந்த அணைவு தூண்களிற் கும்பம், தடி, இதழ், பலகை என்னும் அம்சங்கள் உள்ளன. தூண்களின் வெளித்தோற்றமான மூன்று பக்கங்களிலும் சோழர் கலைப்பாணியில் அமைந்த போதிகைகள் காணப்படுகின்றன. மூலஸ்தானப் பக்கமாக, வடக்கு நோக்கிய கோட்டங்களிற் சங்கநிதி, பதுமநிதி என்போரின் படிமங்கள் மேலதிகமாகக் காணப்படுகின்றன. கோபுரம் கூடங்களையும் ஒரு ஆயதாஸ்ர சிகரத்தையும் கொண்டமைந்த இருதளக் கட்டுமானமாகும். நான்கு கலசங்கள் சிகரத்தின் மேலுள்ளன.
தெற்கிலும் மேற்கிலுமுள்ள பிராகாரச் சுவர்களை ஒட்டிய வண்ணமாக மேடைகள் உள்ளன. அவற்றிலே களஞ்சியவறைகளும் உலாப்போகும் வேளைகளிற் திருவுருவங்களின் வடிவங்களைக் காட்சிப்படுத்தும் விசாலமான கண்ணாடிகளும் உள்ளன. மேற்கு, கிழக்குச் சுவர்களின் நீளம் 208 அடி. வடக்கு தெற்குச் சுவர்களின் நீளம் 152 அடி
இந்துக்கலைக்களஞ்சியம்

Page 289
திருநடமாளிகை 20 அடி அகலமானது. மேலைச் சுவரை ஒட்டி நிரையிலமைந்த பண்டகசாலைகளும் சுற்றாலை மண்டபமும் உள்ளன. அம் மண்டபத்திலே விஜயரங்க சொக்கநாதரதும் அவரது குடும்பத்தவரதும் உருவச் சிற்பங்கள் வைக்கப்பட்டுள்ளன. அதில் இரு வரிசைகளில் நாற்பது தூண்கள் அமைந்துள்ளன. உயரமான பீடத்தில் அமைந்துள்ள அத்தூண்கள் சராசரி 20 அடி 11 அங்குலம் உயரமானவை. இதே வகையிலே தெற்குச் சுற்றாலை மண்டபத்திலே தூண்கள் அமைந்துள்ளன. தூண்கள் பன்முகமானவை. போதிகை ஒவ்வொன்றிலும் இரண்டு தளங்கள் உள்ளன. அடித்தளம் வேலைப்பாடுகள் அற்றது; அதற்கு மேலே அமர்ந்த கோலத்திலுள்ள சிங்கத்தின் உருவம் காணப்படுகின்றது. அதன் முன்பாகம் கீழ்த்தளத்திற்கு முன்னால் நீண்டுள்ளது. தெற்கு மண்டபத்து மூலைத்தூண்கள் இரண்டின் அடித்தளத்தில் நாயக்கர் இருவரின் உருவங்கள் செதுக்கப்பட்டுள்ளன.
வடமேற்கு மூலையில், உயரமான பீடமொன்றிலே யாகசாலை உள்ளது. அதன் முன்னாலே தொண்டமான் மண்டபம் உள்ளது. அதில் 24 தூண்கள் நான்கு வரிசைகளில் உள்ளன. அவற்றிலே தென்வரிசையிலுள்ளவை உருளைத் தூண்கள். அவற்றுட் சிலவற்றில் கூடம், சாலை என்னும் அமைப்புகள் மாறி மாறி ஒன்றன் கீழ் இன்னொன்றாகச் செதுக்கப்பட்டுள்ளன. ஏனையவற்றில் நீள்சதுரமான மூன்று பாகங்கள் உள்ளன. நடுப்பாகம் எண்கோணமானது. அவற்றின் மேற்பாகத்தில் கும்பம், தடி, இதழ், பலகை என்னும் உறுப்புகள் உள்ளன. புஷ்பபோதிகை கூர்முனையற்றும் வட்டவடிவமைப்பைப் பெறாத நிலையிலுங் காணப்படுகின்றது.
முதலாம் பிாரகாரத்தின் வட- கிழக்கு மூலைக்குச் சமீபத்தில் சேனை முதலியார் கோயில் என்னும் விஸ்வக்சேனர் சந்நிதானம் உண்டு. அது அளவிற் சிறியது; 32 அடி 8 அங்குல நீளமும் 13 அடி 4 அகலமுங் கொண்டது. அதில் கர்ப்பகிருகம், அந்தராளம், முகமண்டபம், முன்றில் என்னும் பகுதிகள் அமைந்துள்ளன. அதன் அதிஷ்டானத்திலே குமுதம், வியாளமாலம், களம், ஆலிங்கபட்டிகை என்னும் படைகள் உள்ளன. களத்தை அணைவுதூண்கள் சிறு பகுதிகளாகப் பிரிக்கின்றன. கர்ப்ப கிருகத்தின் மூன்று பக்கச் சுவர்கள் ஒவ்வொன்றிலும் நன்னான்கு அணைவு தூண்கள் உள்ளன. அந்தராளத்தின் இரு பக்கச் சுவர்களில் இவ்விரண்டு அணைவு தூண்கள் வைக்கப்பட்டுள்ளன. தூண்கள் சோழர் கலைப்பாணியில் அமைந்தவை.
அர்ச்சுன மண்டபம்
முதலாம் பிராகாரத்தின் கிழக்குப் பகுதியிலும் நிலமட்டத்திலான திரு நடமாளிகை, திருச்சுற்று மாளிகை என்னும் பிரிவுகள் உள்ளன. திருச்சுற்று மாளிகையில் அர்ச்சுன மண்டபம், கிளிமண்டபம் என்னும் இரு மண்டபங்கள் முறையே வடக்கிலும் கிழக்கிலும் உள்ளன. பத்து அடி உயரமான அதன் அதிஷ்டானத்தில் கீழ்வரும் படைகள் உள்ளன.
இந்துக்கலைக்களஞ்சியம்

(1) உபானம் (2) பட்டம் (3) இரண்டாம் பட்டம் (4) அதபத்மம் (5) களம் (6) குமுதம் (7) மூன்றாம் பட்டம் (8) நான்காம் பட்டம் (9) ஊர்த்துவ பத்மம் (10) இரண்டாம் களம் (i) வட்டமான குமுதம் (12) ஐந்தாம் பட்டம் (13) மூன்றாம் களம் (14) மூன்றாங் குமுதம் (15) வியாளமாலம் அமைந்த ஆலிங்கபட்டிகை.
முதலாங் களத்திலே நாட்டியப் பெண்களதும் மேளவாத்திய காரரதும் உருவங்கள் வரிசையாக அமைக்கப்பட்டுள்ளன. இம்மண்டபத்தின் தென்கரையினின்றும் விமானத்திலுள்ள பரவாசுதேவரைத் தரிசனம் பண்ணலாம். இம்மண்டபத்தின் வடக்கு, தெற்குப் பகுதிகளில் இரண்டு அரங்குகள் உள்ளன. அவை ஒவ்வொன்றிலும் நன்னான்கு தூண்கள் அமைந்திருக்கின்றன. வடக்கிலுள்ள அரங்கத்துத் தூண்களிற் கூடம், சாலை ஆகியவற்றின் உருவங்கள் ஒன்றின் மேல் ஒன்றாக மாறிமாறி அமைந்துள்ளன.
மண்டபத்தில் 6 தூண்நிரைகள் உள்ளன. ஒவ்வொன்றிலும் 12 என்றபடியாக எல்லாமாக 72 தூண்கள் காணப்படுகின்றன. கிழக்கிலிருந்து இரண்டாவது வரிசையிலுள்ள தூண்கள் மூன்று நீள்சதுரமான பகுதிகளைக் கொண்டவை. நடுப்பகுதி 16 முகத்தூணாகும். மலர்கள், கொடிகள் ஆகியவற்றின் உருவங்கள் அவற்றில் அமைந்திருக்கின்றன. நடுவிலுள்ள தூண்வரிசைகளில் அவற்றின் போதிகைகள் ஒன்றையொன்று எதிர்நோக்கிய வண்ணமாயுள்ளன. போதிகைகளில் மூன்று தளங்கள் உள்ளன. மேலமைந்த ஒவ்வொன்றும் அதன் கீழுள்ளதைக் காட்டிலும் முன்னோக்கி நீண்டுள்ளது. கீழ்த்தளத்தின் இரு பக்கங்களிலும் இரு வியாள வடிவங்கள் உள்ளன. அதன் மேல் அமைந்துள்ள கல்லில் வியாளங்களோடு அவற்றின் முற்புறத்தில் கணவடிவம் ஒன்றும் மலர்மொட்டுங் காணப்படுகின்றன. மேல்தளத்தில் சுருள்வடிவமும் அணைவு தூண்களின் உருவங்களும் அத்தூண்களுக்கிடையே நாட்டியக் கோலங்களும் இருபக்கங்களிலும் உள்ளன.
அர்ச்சுன மண்டபத்தின் வட - கிழக்கு மூலையில் அமைந்துள்ள கூடம் பீபிநாச்சியார் கோட்டம் என்று சொல்லப்படும். அதன் வடக்குச்சுவரில் அரங்கநாதரின் அடியாராகி வழிபாடு செய்த சுல்தானின் துணைவியாரின் உருவம் சித்திரமாக வரையப்பட்டுள்ளது. அர்ச்சுன மண்டபத்தின் வடமேற்கு மூலையிற் சேரகுலவல்லி நாச்சியாரின் கோட்டம் அமைந்திருக்கின்றது. முதலாம் பிரகாரத்திலுள்ள மற்றொரு மண்டபம் கிளிமண்டபம் என்னும் பெயரால் வழங்குவது. அது அர்ச்சுன மண்டபத்திலும் சிறியது; உயரங் குறைந்தது. அதில் 36 தூண்கள் நான்கு நிரைகளில் அமைக்கப்பட்டுள்ளன. வெளிநிரைகளிலுள்ள தூண்கள் வேலைப்பாடற்ற உருளைத் தூண்களாகும். அவற்றின் போதிகைகள் சோழர் கலைப்பாணியில் அமைந்தவை. நடுநிரைகளின் தூண்களும் உருளைத் தூண்கள். ஆயினும் அவற்றோடு கூடிய ஒட்டுத்தூண்கள் பன்முகமானவை.
கிளிமண்டபத்தின் தென்கிழக்கு மூலையிலுள்ள கிருஷ்ணர் கோயில் கர்ப்பகிருகம், அந்தராளம் என்ற
243

Page 290
அமைப்புகளைக் கொண்டுள்ளது. அதன் வடக்குச் சுவரிலுள்ள் வெற்றுக்கோட்டத்தின் பக்கம் ஒவ்வொன்றிலும் இவ்விரு அணைவு தூண்கள் உள்ளன. மகரதோரணத்தின் உச்சியில் நவநீத - நிருத்த கிருஷ்ணரின் உருவம் காணப்படுகின்றது. சிகரம் எண்முகத் தோற்றங் கொண்டது.
இரண்டாம் பிராகாரம்
இரண்டாம் பிராகாரமான குலசேகரன் பிராகாரத்தை ஆரியபட்டாள் கோபுரவாசல் மூலமாக அடையலாம். அங்கு அணியரங்கம் திருமுற்றம் என்னும் விசாலமான பகுதியுள்ளது. அது சுவர்களினாற் சூழப்பட்டது. கிழக்கிலும் மேற்கிலும் முறையே ஊஞ்சல் மண்டபமும் பவித்திர மண்டபமும் அமைந்துள்ளன. அவற்றுக்கிடையிலே, சற்று வடக்கே கொடிமரமும் பலபீடமும் அமைந்திருக்கின்றன. அவை பொற்றகடுகளினால் மூடப்பெற்றவை.
முற்றத்திலே கிழக்கு மேற்காக நான்கு நிரைகளில் 80 தூண்கள் உள்ளன. அவற்றில் நடுவிலுள்ள இரண்டுக்கும் இடையே முதலாம் பிராகாரத்துக்குப் போகும் வழி அமைந்திருக்கின்றது. இவ்விரண்டு நிரைகளிலுமுள்ள கலப்புத் தூண்கள் ஒவ்வொன்றினதும் கம்பம் பன்முகமானது. அதன் அணைவு தூண்கள் கம்பத்திலும் மெலிந்தவை. அவற்றிலே சுருள்கள் போன்ற வேலைப்பாடுகள் அமைந்துள்ளன. நீள்சதுரமான அடித்தளத்தில் அமைந்துள்ள தூண்கள் 21 அடி 7 அங்குலம் உயரம் கொண்டவை. போதிகையில் மூன்று தளங்கள் அமைந்துள்ளன. ஏனைய நிரைகளிலுள்ள தூண்கள் எல்லாம் பன்முகமானவை. அவற்றின் மேற்பாகத்திற் சிற்பங்களும் போதிகையும் காணப்படும்.
உயரமான தளத்தில் அமைந்திருக்கும் ஊஞ்சல் மண்டபம் 38 அடி நீளமும் அகலமும் கொண்ட வனப்புடைய அமைப்பாகும். அதில் 8 நிரைகளில் 14 அடி 8 அங்குலம் உயரமுடைய 64 தூண்கள் உள்ளன. நடுவில் நான்கு தூண்கள் பொருந்திய உயரமான மேடை உண்டு. மண்டபத்தின் நடுவிலுள்ள தூண்கள் இரண்டு ஊஞ்சலைத் தாங்கி நிற்கின்றன. அத்தூண்களின் அலங்காரக் கோலங்களாக சல - பஞ்சிக உருவங்கள் செதுக்கப்பட்டுள்ளன. நான்கு மூலைகளிலுமுள்ள தூண்கள் ஒவ்வொன்றும் நான்கு சிறிய கம்பங்கள் பொருந்திய கூட்டுத் தூண்களாகும். இங்குள்ள போதிகைகள் பாண்டியர் கலைப்பாணியில் அமைந்தவை. இம்மண்டபத்திற்குப் பக்கத்திலும் ஆரியபட்டாள் திருவாசலுக்குச் சமீபத்திலும் ஆஞ்சநேயரின் படிமம் உண்டு.
பவித்திர மண்டபம் ஊஞ்சல் மண்டபத்தின் எதிர்ப்புறமாகவும் கோபுரவாசலுக்கு மேற்குப் புறமாகவும் அமைந்திருக்கின்றது. அது அளவிற் பெரியது; வனப்புக் குறைந்தது. அது 76 அடி நீளமும் 66 அடி 6 அங்குலம் அகலமுங் கொண்டது. ஆறு நிரைகளில் 13 அடி 6 அங்குலம் உயரம் கொண்ட 60 தூண்கள் பவித்திர மண்டபத்தில் உள்ளன.
244

அவற்றின் போதிகைகள் விஜயநகரக் கலைப்பாணியில் அமைந்தவை. இம்மண்டபத்துக்கு மேற்கே மூன்று சிறிய கோயில்கள் ஒரே வரிசையில் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றுள் ஒன்றிலே ஹயக்கிரீவரின் படிமமும் மற்றொன்றிலே சரஸ்வதியின் திருவுருவமுங் காணப்படுகின்றன. மூன்றாவது படிமமொன்றும் இல்லாத வெற்றுக் கோட்டமாகும்.
இரண்டாம் பிராகாரத்து மேலைவீதியின் அரைப்பகுதியில் உயரமான மேடை அமைந்துள்ளது. அது சுவர்களால் மூடப்பெற்ற பல கூடங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அதன் எஞ்சிய பாகம் ஒடுக்கமானது. அது 177 அடி நீளமும் 15 அடி அகலமும் கொண்ட திருச்சுற்று மாளிகையாக விளங்குகிறது. இரு நிரைகளில் அமைந்த 44 தூண்கள் அதன் கூரையைத் தாங்குகின்றன. நீள்சதுரமான பீடத்தில் அமைந்துள்ள 15அடி 2 அங்குலம் உயரங் கொண்டுள்ள தூண்கள் கூட்டுத் தூண்களாகும். பீடத்திலே சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. கம்பம் பன்முகமானது. அதன் அணைவு தூண் நீள்சதுரமானது; அதிலும் வனப்புடைய சிற்பவடிவங்கள் காணப்படுகின்றன. போதிகைகளின் வடிவமைப்பு பாண்டியர் கலைப்பாணிக்குரியது.
வடக்கு வீதியில் ஒடுக்கமான திருநடமாளிகையும் அதன் தொடர்ச்சியாக 137 அடி நீளமும் 43 அடி அகலமுங் கொண்ட மண்டபமும் உள்ளன. மண்டபத்திலே நான்கு நிரைகளில் 40 தூண்கள் உள்ளன. அதற்கு கிழக்கிலே பெரிய மண்டபம் ஒன்றுண்டு. அங்குள்ள தூண்களில் தசாவதாரச் சிற்பங்களும் கடவுளர் வடிவங்களும் மனிதரதும் விலங்குகளினதும் உருவங்களும் சிற்பக் கோலத்தில் விளங்குகின்றன.
கிழக்கு வீதியில் மடப்பள்ளி, அன்னசத்திரங்கள் போன்ற கட்டடங்கள் உள்ளன. இங்கு காணப்படும் சுற்றாலை மண்டபங்களிற் சோழர் கலைப்பாணியில் அமைந்த தூண்கள் உள்ளன.
மூன்றாம் பிராகாரம்
தெற்குக் கோபுரமான கார்த்திகைக் கோபுரவாசல் வழியாக மூன்றாம் பிராகாரத்தை அடையலாம். கோபுரத்தின் அதிஷ்டானம் உபானம், திரிபட்டம், களம், குமுதம், ஆலிங்கபட்டிகை முதலிய படைகளால் அமைந்தது. (5 TLD வாசலின் இருபக்கங்களிலுமுள்ள கோட்டங்களில் கங்கை, யமுனை ஆகிய தேவதைகளின் படிமங்கள் தாபனமாகியுள்ளன. அணைவு தூண்களில் தடி, இதழ், பலகை என்பனவும் சோழர் கலைப்பாணியில் அமைந்த போதிகையும் உள்ளன. கோபுரத்திலே கபோதத்தின் இரண்டு தளங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றின் ஓரங்களிற் கூடம், சாலை, பஞ்சரம் ஆகிய அலங்கார வேலைப்பாடுகள் உள்ளன. அதில் ஆயதாஸ்ர சிகரமும் நிரையிலமைந்த ஏழு கலசங்களும் காட்சியளிக்கின்றன. முதலாம் தளத்திலே உக்கிர நரசிங்கரின் உருவம் முதன்மைச் சிற்பமாக அமைந்துள்ளது.
இந்துக்கலைக்களஞ்சியம்

Page 291
வடகோபுரமான ஐந்து குழி மூன்று வாசல் கோபுரம் எல்லா அம்சங்களிலும் கார்த்திகைக் கோபுரத்தை போன்றது. அது பிராகாரச் சுவரோடு சேராது தனிக் கட்டுமானமாக அமைந்திருக்கின்றது. அதன் சிகரத்தில் ஐந்து கலசங்கள் உள்ளன. கிழக்குக் கோபுரம் தட்டறைவாசல் என்று சொல்லப்படும்.
தெற்கு வீதியான ஆலிநாடன் திருவீதியில் கொட்டாரம், நம்மாழ்வார் கோயில், கருடமண்டபம், திருக்கச்சிநம்பி சந்நிதி, பூரீபண்டாரம், சூர்யபுஷ்கரணி என்பவை உள்ளன. கொட்டாரம் என்பது நெற்களஞ்சியங்கள் அமைந்த பகுதியாகும். அது ஆலிநாடன் திருவீதியின் தென்மேற்கு மூலையில் உள்ளது. களஞ்சியங்களை மறைக்கும் வண்ணமாக, தெற்கு வடக்காக, மிக நீளமான சுவர் அமைக்கப்பட்டுள்ளது. அதனால் ஒரு ஒடுக்கமான இடைவெளியே நடைபாதையாக உள்ளது. கொட்டாரப் பகுதியிலே, செங்கற் கட்டங்களான எண்கோண வடிவமான புராதனமான நெற்களஞ்சியங்கள் இன்றும் காணப்படுகின்றன. கோபுரவாசலின் எதிரே செங்கமல நாச்சியார் சந்நிதானம் உள்ளது. அதன் ஒருதள விமானத்தில் நாகர சிகரமும் கலசமும் உள்ளன. கோபுரத்திலே இரு தளங்களும் ஆயதாஸ்ர சிகரமும் நிரையிலமைந்த கலசங்களும் உள்ளன.
நம்மாழ்வார் கோயில் 6 அடி உயரமான அதிஷ்டானத்தின் மேலே காணப்படுகின்றது. இங்கு 16அதிஷ்டானப் படைகள் காணப்படுகின்றன. கட்டடத்திலே கர்ப்பகிருகம், அந்தராளம், முகமண்டபம் ஆகிய அம்சங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இறையகத்தின் வெளிப்புறச் சுவர்களில் கோட்டங்களும் அவற்றின் பக்கங்களில் அணைவு தூண்களும் உள்ளன. அந்தராளத்தின் பக்கச் சுவர்களில் இத்தகைய அமைப்புகள் உள்ளன. சந்நிதி வடக்கு நோக்கியது. மூலஸ்தானத்திலே மூலபேரமும் நம்மாழ்வாரின் உற்சவபேரமும் திருமங்கையாழ்வார், மதுரகவி ஆழ்வார் என்போரின் உற்சவ பேரங்களும் வைக்கப்பட்டுள்ளன.
தெற்கிலிருந்து கார்த்திகைக் கோபுரவாசல் வழியாகப் பிராகாரத்தை அடைந்ததும் வடக்கு நோக்கிய கருடாழ்வார் கோயிலின் பின்புறத்தைப் பார்க்கலாம். மகாமண்டபமாகிய கருடமண்டபத்தின் தெற்குப் பகுதியில் இச்சந்நிதி அமைந்துள்ளது. அதில் 15 அதிஷ்டானப் படைகள் உள்ளன. மூலஸ்தானத்திலே கருடாழ்வாரின் பிரமாண்டமான சுதைச் சிற்பம் உள்ளது. அதன் உயரம் 15 அடி. அது 5 அடி உயரமான பீடத்தில் வைக்கப்பட்டுள்ளது. இக்கோயிலுக்கு கிழக்கிலே சூர்யபுஷ்கரணி என்னும் தீர்த்தம் உள்ளது.
கருடமண்டபம் 116 அடி நீளமும் 114 அடி அகலமுங் கொண்ட பேரமைப்பாகும். அதிற் 14 தூண் நிரைகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன. அவற்றுள் ஒவ்வொன்றிலும் 16 தூண்கள் காணப்படுகின்றன. தூண்கள் 20அடி4அங்குலம் உயரமானவை. அவற்றின் வேலைப்பாடுகள் விஜயநகர
இந்துக்கலைக்களஞ்சியம்

கலைப்பாணிக்குரியவை. அவற்றில் இராமாயணச் சிற்பங்களும் வேறு பிரதிமைகளும் வனப்புமிக்க கோலத்திற் செதுக்கப்பட்டுள்ளன.
திருக்கச்சி நம்பிகள் கோயில் கருடமண்டபத்துக்குத் தென்கிழக்கிலே காணப்படுகின்றது. அது திருக்கச்சிநம்பி என்னும் ஆச்சாரியாரின் பெயரால் வழங்கும் கோயிலாகும். அதில் கர்ப்பகிருகம், அந்தராளம், பிரதஷிணபாதை, முகமண்டபம் ஆகியன உள்ளன. நீள்சதுரமான கர்ப்பகிருகத்தின் மூன்று வாயில்களின் முன்னால் படிமங்கள் வைக்கப்பட்டுள்ளன. அவற்றுள் ஒவ்வொன்றையும் மற்றொன்றிலிருந்து மறைக்கும் வண்ணமாகச் சுவர்கள் அமைந்துள்ளன. வடபாகத்தில் லக்ஷமீநாராயணரின் படிமமும் வரதராஜர், அவரது தேவியார் என்போரின் படிமங்களும் உள்ளன. மத்திய பகுதியிலே திருக்கச்சி நம்பியின் கற்சிற்பமும் வெண்கலப்படிமமும் வைக்கப்பட்டுள்ளன. அவற்றோடு நவநீத நிருத்த கிருஷ்ணர், திருக்கருகூர் நம்பி ஆகியோரின் வெண்கலப் படிமங்களும் உள்ளன. தெற்குப் பகுதியில் வரதராஜரதும் தேவிகளதும் படிமங்கள் இவ்விரண்டு வைக்கப்பட்டுள்ளன. முகமண்டபத்திலே 16 தூண்கள் 4 நிரைகளில் அமைந்துள்ளன. அவற்றின் அடிப்பாகமும் மேற்பாகமும் சதுரமானவை; நடுப்பகுதி பதினாறு முகத்தூணாக அமைந்துள்ளது. போதிகைகள் விஜயநகர கலைப்பாணியில் அமைந்தவை.
கிழக்கு வீதியில் பூரீபண்டாரத்துக்கு எதிர்ப்புறமாக மூடப்பெறாத 5 சிறிய மண்டபங்கள் உள்ளன. அவை ஒவ்வொன்றிலும் நன்னான்கு தூண்கள் உள்ளன. மேற்கு வீதியில் முதலாழ்வார் கோயில், தீர்த்தக்கரை வாசுதேவப்பெருமாள் கோயில், தன்வந்திரி கோயில் முதலியன அமைந்துள்ளன. முதலாழ்வார் கோயிலில் மூலவராக விஷ்ணுவின் ஸ்தானகக் கோலம் தாபனமாகியுள்ளது. முதல் மூன்று ஆழ்வார்களின் உற்சவ விக்கிரகங்களும் அங்குள்ளன.
முதலாழ்வார் கோயிலுக்கு வடக்கிலமைந்த தீர்த்தக்கரை வாசுதேவர் கோயில் கிழக்கு நோக்கியது. கர்ப்பகிருகத்திலே மூலவர் ஸ்தானக விஷ்ணு. அதன் முன்னால் அந்தராளம், நான்கு தூண்கள் கொண்ட அர்த்த மண்டபம், மகாமண்டபம் என்னும் கட்டுமானங்கள் உள்ளன. மகாமண்டபத்தில் 8 நிரைகளில் 64 தூண்கள் நிறுத்தப்பட்டுள்ளன. முகமண்டபத்துக்கு அண்மையிலுள்ள இரண்டு நிரைகளிலும் காணப்படும் தூண்கள் உருளைத் தூண்கள்; அவற்றின் போதிகைகள் சோழர் கலைப்பாணிக்கு உரியவை. ஏனைய தூண்களின் அடிப்பாகமும் மேற்பாகமும் சதுரமானவை; நடுப்பகுதி எண்முகமானது. அவற்றின் போதிகைகள் விஜயநகர கலைப்பாணிக்குரியவை. மகாமண்டபத்துக்கு வெளியே அமைந்துள்ள சிறிய மண்டபத்தின் சிதைவுகள் காணப்படுகின்றன. அங்குள்ள தூண்கள் யாழித் தூண்கள். அவற்றின் கம்பம் எண்முகமானது. தூண்களின் மேற்பாகத்திற் கும்பம், தடி, இதழ், பலகை என்பனவும் சோழர் காலத்துப் போதிகைகளும் அமைந்திருக்கின்றன.
245

Page 292
உயரமான பீடமொன்றில் அமைந்திருக்கும் தன்வந்திரி கோயில் கிழக்கு நோக்கியது. அதன் கட்டுமானத்திலே கர்ப்பகிருகம், அந்தராளம், பிரதஷிண பாதை, முகமண்டபம், மகா மண்டபம் என்பவை அடங்கியுள்ளன. கர்ப்பகிருகத்தின் சுவர்களின் வெளிப்புறத்தே கோட்டங்களும் அணைவு தூண்களும் உள்ளன. தூண்களின் வேலைப்பாடு விஜயநகர காலத்திற்குரியது. மகாமண்டபத்திலுள்ள கூட்டுத் தூண்களில் கடவுட் படிமங்கள் மேற்பாகங்களிலே செதுக்கப்பட்டுள்ளன.
சந்திரபுஷ்கரணி என்னும் வட்டமான தீர்த்தக்கேணி இக்கோயிலுக்கு அண்மையில் உள்ளது. அதற்கு மேற்கில் அரசமரமொன்றும் நீளமான சாலையும் உள்ளன. சாலைத்தூண்கள் மிகவும் உயரமான பதினாறு முகத் தூண்களாகும். அவற்றின் போதிகைகள் சோழர்காலத்து வேலைப்பாடுகள் கொண்டவை. கேணியின் சுற்றுச்சுவரிலுள்ள நீள்சதுரமான கற்களிலே சந்தான கோபாலரது உருவங்களும் நாகவடிவங்களும் செதுக்கப்பட்டுள்ளன.
கேணியைச் சுற்றிப் பல சிறிய கோட்டங்கள் அமைந்துள்ளன. வடமேற்கிலே வேதவியாசர், தொண்டரடிப்பொடி ஆழ்வார் ஆகியோரின் படிமங்கள் அமைந்துள்ள கோட்டங்கள் காணப்படுகின்றன. வடகிழக்கிலுள்ள கோட்டமொன்றிலே வராகர், வரதராஜர் ஆகியோரின் படிமங்கள் உள்ளன. கேணியின் கிழக்குப் பக்கத்திலே கோதண்டராமர், பரமபதநாதர் என்போரின் கோயில்கள் உள்ளன. கோதண்டராமர் கோயில் கர்ப்பகிருகம், அந்தராளம், முகமண்டபம் என்னும் பகுதிகளைக் கொண்டுள்ளது. அதிலுள்ள தூண்கள் சோழர் கலைப்பாணியில் அமைந்தவை. கோயில் தெற்கு நோக்கியது. அதற்கு அருகிலும் தெற்கு நோக்கியும் அமைந்துள்ள பரமபாதநாதர் சந்நிதியிலே அநந்தசயனர், பூரீதேவி, பூதேவி, ஆண்டாள் ஆகியோரின் பிரதிமைகள் காணப்படும்.
கிழக்குத் திருவீதியில் கோபுரத்தின் இரு பக்கங்களிலும் 9 நாற்றுாண்டு மண்டபங்கள் உள்ளன. வேதவியாசர் கோயில், கீழைக்கோயில், பட்டாபிராமர் கோயில், பூரீநிவாசப் பெருமாள் கோயில் என்பன ஒரே வரிசையிலுள்ள மேற்கு நோக்கிய சந்நிதானங்களாகும். அவற்றுள் ஒவ்வொன்றிலும் கர்ப்பகிருகம், அந்தராளம், முகமண்டபம் என்னும் பகுதிகள் உள்ளன. முதலிரண்டு கோயில்களுக்கும் பொதுவான மகாமண்டபம் ஒன்றுண்டு. அதில் 4 நிரைகளில் 24 தூண்கள் உள்ளன. தெற்கு வரிசைத் தூண்களின் அடித்தளத்திலே பூதகணங்கள் காணப்படுகின்றன. நடுவிலுள்ள கம்பத்தை ஒட்டிய கோலத்தில் நான்கு பக்கங்களிலும் நான்கு கூட்டுத் தூண்கள் தெரிகின்றன. அவற்றிலே தடி, இதழ், பலகை, போதிகை என்னும் பகுதிகள் விஜயநகர காலத்து வேலைப்பாடுகளுடன் அமைந்துள்ளன. இராமர், சீதை, லக்ஷமணர், பரதன், சத்துருக்கன், கருடாழ்வார் என்போரின் படிமங்களும் தசவதாரச் சிற்பங்களும் கிழக்கிலமைந்துள்ள பட்டாபிராமர் கோயிலிற் காணப்படுகின்றன. இங்குள்ள தெற்குக் கோயில் திருமழிசை ஆழ்வார் கோயிலாகும்.
246

அது சோழர்காலத் திருப்பணி என்பதை மகாமண்டபத்திலுள்ள தூண்களின் வேலைப்பாடுகள் மூலமாக அறியமுடிகின்றது.
நான்காம் பிராகாரம்
அரங்கநாதர் கோயிலின் பிரதான பகுதிகள் எல்லாம் அகளங்கன் திருமதில் என்னும் நான்காம் பிராகாரத்தினுள் அடங்கிவிடுகின்றன. அதன் சுற்றளவு 1235 அடி நீளமும் 849 அடி அகலமுங் கொண்டது. தெற்குவாசற் கோபுரம் அகளங்கன் கோபுரம் என்றும் ரங்கவாசல் கோபுரம் என்றும் சொல்லப்படும். நான்முகன் கோபுரம் என்பது அதன் மற்றொரு பெயர். அதன் அதிஷ்டானம் 12 அடி உயரமானது. அதில் மிகுந்து காணப்படும் சிற்பங்களும் வேலைப்பாடுகளும் அலங்காரக் கோலமானவை. அணைவு தூண்கள் விஜயநகர காலத்து வேலைப்பாடுகளுடன் விளங்குகின்றன.
வடக்குக் கோபுரம் தாயார் சந்நிதிக் கோபுரம். வடக்கிலிருந்து அதன் வாசல் வழியாக தாயார் சந்நிதி என்னும் கோயிலை அடையலாம் என்பதாற் கோபுரம் அவ்வாறு பெயர் கொண்டுள்ளது. அதிலுள்ள புஷ்பபோதிகைகள் விஜயநகர காலத்தவை. கோபுரம் நான்கு தளங்களைக் கொண்டது. ஒவ்வொரு தளத்திலும் கூடம், பஞ்சரம், சாலை என்னும் அமைப்புகள் பொருந்தியுள்ளன.
கிழக்கிலுள்ள அகளங்கன் கோபுரமான வெள்ளைக் கோபுரமே திருவரங்கத்திலுள்ள வனப்புமிக்க மிகப்பெரிய கோபுரமாகும். அதன் அடித்தளம் 92 அடி நீளமும் 80 அடி அகலமுங் கொண்டது. கோபுரவாசல் 12 அடி அகலமும் 25 அடி உயரமுங் கொண்டுள்ளது. கருங்கற்றிருப்பணியான அதிஷ்டானத்தில் உபானம், பட்டம், அதபத்மம், அகன்ற பட்டம், குமுதம், களம், ஊர்த்துவ பத்மம், ஆலிங்கபட்டிகை என்னும் படைகள் அமைந்திருக்கின்றன. கோபுரம் 165 அடி உயரங் கொண்டது; அதில் 9 தளங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தளங்கள் யாவும் செங்கல் வேலைப்பாடாகும். கூடம், சாலை, பஞ்சரம் முதலிய அலங்கார அமைப்புகள் ஒவ்வொரு தளத்தினையும் அணிசெய்கின்றன. தளத்தூண்கள் எல்லாம் விஜயநகர கலைப்பாணியில் அமைந்தவை.
அகளங்கன் பிராகாரத்தில் திருவந்திக்காப்பு மண்டபம், ரங்கவிலாச மண்டபம், நாதமுனிகள் கோயில் முதலிய கட்டடங்கள் உள்ளன. திருவீதியின் நடுவில், நான்முகன் கோபுர வாசலின் முன்னால் நாயக்கர் காலத் திருப்பணியான திருவந்திக்காப்பு மண்டபம் அமைந்துள்ளது. அது 12 அடி நீளமும் அகலமும் கொண்டது. அதற்கு வடக்கிலுள்ள ரங்கவிலாச மண்டபம் மிகப் பெரியது. வடக்கிலே கொடுமரமும் மிகப்பெரிய பலிபீடமும் கல்லினால் அமைக்கப்பட்டுள்ளன. இம்மண்டபம் 118 அடி நீளமும் 75 அடி அகலமுங் கொண்டுள்ளது. அதிலே நான்கு நிரைகளில் 56 தூண்கள் உள்ளன. அவற்றின் வேலைப்பாடுகள் விஜயநகர காலத்தவை. மண்டபத்தின் கபோதத்தின் மேலமைந்த கைபிடிச் சுவரிலே
இந்துக்கலைக்களஞ்சியம்

Page 293
சயனக்கோலமான அரங்கநாதர், அநந்தசயனர், பார்த்தசாரதி, சக்கரத்தாழ்வார் ஆகியோரின் உருவங்கள் சிற்பங்களாக வடிக்கப்பட்டுள்ளன.
ரங்கவிலாச மண்டபத்திற்கு மேற்கிலே நாதமுனிகள் கோயில், ஆண்டாள் கோயில், வேணுகோபாலர் சந்நிதி ஆகியவை வரிசையாக அமைந்துள்ளன. அவை கிழக்கு நோக்கிய சந்நிதிகள், நாதமுனிகள் கோயில் கர்ப்பகிருகம், அந்தராளம், முகமண்டபம் என்னும் பகுதிகளைக் கொண்டுள்ளது. அவற்றின் தூண்கள் சோழர் காலத்தவை. இறையகத்துக் கதவத்தின் மேல் கஜலக்ஷமியின் வடிவம் அமைந்துள்ளது.
மூலஸ்தானத்தில் கோபாலகிருஷ்ணர், பாலகிருஷ்ணர், நாதமுனிகள், ஆளவந்தார், திருவரங்கப்பெருமாள் அரயர் ஆகியோரின் திருவுருவங்களும் காளியகிருஷ்ணர், நாதமுனிகள், ஆண்டாள் ஆகியோரின் உற்சவ விக்கிரகங்களும் வைக்கப்பட்டுள்ளன.
ஆண்டாள் கோயில் இறையகம், அந்தராளம், முகமண்டபம், மகாமண்டபம் என்பன அடங்கிய அமைப்பாகும். இது ஆதியில் இராமர் கோயிலாக அமைந்திருந்தது. இராமர், சீதை, லஷ்மணர் ஆகியோரின் மூலமூர்த்திகளும் உற்சவ மூர்த்திகளும் இங்குள்ளன. ஆண்டாள் உற்சவமூர்த்திக்கு கிரமமாக ஆராதனைகள் நடைபெறுகின்றன. இறையகத்தின் அதிஷ்டானம் பல படைகளால் அமைந்தது. திராவிடமான சிகரம் எண்முகமானது. சோழர் கலைப்பாணியிலும் விஜயநகர கலைப்பாணியிலும் அமைந்த தூண்கள் இக்கோயிலிற் காணப்படுகின்றன.
திருவரங்கத்திலுள்ள கோயில்களில் வனப்பிற் சிறந்ததான வேணுகோபாலர் கோயில் இறையகம், அந்தராளம், பிரதஷிணபாதை, முகமண்டபம், மகாமண்டபம் என்னும் வழமையான பகுதிகளைக் கொண்டுள்ள கட்டுமானமாகும். அதன் மகாமண்டபம் 60 அடி நீளமும் 34 அடி அகலமுங் கொண்டுள்ளது. தூண்கள் 20 அடி உயரம் கொண்டவை. கோயிலின் விமானம் ஏகதளமானது. அதிற் கூடம், பஞ்சரம் சாலை என்னும் அமைப்புகள் பொருந்தியுள்ளன.
வேணுகோபாலர் கோயிலுக்கு வடக்கில் அமிர்தகலச கருடாழ்வார் சந்நிதி இருக்கின்றது. அதன் மூலவராக அமிர்தகலசத்தை ஏந்திய கருடாழ்வாரின் திருவடிவம் காணப்படுகின்றது. தெற்கு வீதியின் மேற்குப் புறத்திலே கிழக்கு நோக்கிய சக்கரத்தாழ்வார் கோயில் அமைந்திருக்கின்றது. அதிற் சுதர்சனப்பெருமாளை மூலவராகக் கொண்ட இறையகம், அந்தராளம், பிரதஷிண பாதை, முகமண்டபம், மகாமண்டபம் என்பன அமைந்துள்ளன. சுதர்சனச் சக்கரத்தின் பின்னால் நரசிங்கப் பெருமாளின் வடிவம் தெரிகின்றது. இங்கு சோழர்காலத் தூண்களும் விஜயநகர காலத் தூண்களும்
உள்ளன.
இந்துக்கலைக்களஞ்சியம்

ரங்கமண்டபத்திற்குக் கிழக்கில் திருப்பாணாழ்வார், விட்டலகிருஷ்ணர், தொண்டரடிப் பொடி ஆழ்வார், கூரத்தாழ்வார் என்போரின் மேற்கு நோக்கிய கோயில்கள் உள்ளன. அகளங்கன் பிராகாரத்துத் தென்கிழக்கு மூலையில் இராமானுஜர், ஆளவந்தார், பார்த்தசாரதி என்போருக்குரிய கோயில்கள் அமைந்துள்ளன. முதலிரு கோயில்களுக்கும் பொதுவானவொரு மகாமண்டபம் நிர்மாணிக்கப் பெற்றுள்ளது. நாச்சியார் கோயில், வேதாந்த தேசிகர் கோயில், கம்பர் மண்டபம், மேட்டழகிய சிங்கர் கோயில் என்பன வடக்கு வீதியிலுள்ள பிரதான கட்டடங்களாகும். கிழக்கு வீதிக் கட்டுமானங்களில் ஆயிரக்கால் மண்டபம், சேஷதிரிராயர் மண்டபம், பிள்ளை உலோகாச்சாரியர் கோயில் என்பவை பிரதானமானவை. ஆயிரங்கால் மண்டபம் 503 அடி நீளமும் 138 அடி அகலமும் கொண்டது. அதில் பல விதமான தூண்கள் காணப்படுகின்றன. அரங்கத் தூண்கள் சோழர்காலத் தூண்கள் போன்றவை. அதன் வடக்கிலுள்ள சேஷகிரிராயர் மண்டபம் 100 அடி நீளமும் 87 அடி அகலமும் கொண்டுள்ளது. வடக்குத் தூண்நிரையிலே பிரமாண்டமான தோற்றங் கொண்ட போர்க் குதிரைகளின் உருவங்கள் ஈடிலாத வனப்புடன் செதுக்கப்பட்டுள்ளன. தூண்கள் 19 அடி உயரமானவை. அவற்றிலே பலவிதமான சிற்பங்கள் அமைந்துள்ளன.
வடகிழக்கிலுள்ள கோதண்டராமர் கோயில் இறையகம், அந்தராளம், பிரதசுஷிண பாதை, முகமண்டபம் என்னும் அமைப்புகளை உடையது. பிரதசுஷிண பாதையிலுள்ள தூண்கள் சோழர் காலத்தவை; முகமண்டபத் தூண்கள் விஜயநகர கலைப்பாணிக்குரியவை. இராமர், சீதை, லக்ஷமணர், ஆஞ்சநேயர் ஆகியோரின் பிரதிமைகள் மூலஸ்தானத்தில் உள்ளன.
ஐந்தாம் பிராகாரம்
ஐந்தாம் பிராகாரத்தின் நான்கு மதில்களின் நடுப்பகுதியிற் கோபுரவாசல்கள் உள்ளன. தெற்குப் கோபுரத்தில் மேல்வரும் படைகள் அமைந்துள்ளன. உபானம், அகல் பட்டம், அதபத்மம், பட்டம், களம், குமுதம், களம், பட்டம், களம் (அணைவு தூண்கள் கொண்டது) ஊர்த்துவபத்மம், ஆலிங்கபட்டிகை. கோபுரவாசலின் இருபக்கங்களிலுள்ள சுவர் ஒவ்வொன்றிலும் ஜவ்வைந்து அணைவு தூண்கள் காணப்படுகின்றன. கோபுரத்திலே செங்கற் கட்டுமானமாகிய நான்கு தளங்கள் உள்ளன. அவற்றிலே கூடம், சாலை, பஞ்சரம் ஆகியவை அலங்காரக் கோலமாக அமைக்கப்பட்டுள்ளன. அவற்றிலே துவாரபாலகர் வடிவங்களும் தேவர் படிமங்களும் அமைந்துள்ளன. ஆயதாஸ்ரமான சிகரத்தில் ஏழு கலசங்கள் நிரையாக உள்ளன.
மேற்குக் கோபுரத்தின் மிகவுயர்ந்த அதிஷ்டானம் கட்டுமானத்திலே தென்கோபுரத்தில் உள்ளதைப் போன்றது. கோபுரவாசலின் தெற்குச் சுவரில் நான்கு அணைவு தூண்கள், பிதுக்கம், மஞ்சஅணைவு, தூண்களின் நடுவிலமைந்த சாலை என்பன காணப்படுகின்றன. வடக்குச் சுவரில் இதே அமைப்புகள் வரிசை மாறி அமைந்துள்ளன. நான்கு கோபுரதளங்களும்
2.47

Page 294
செங்கல்லினால் அமைந்தவை. தளங்களிலே தேவர் படிமங்களும் வேறு உருவங்களும் சுதைச்சிற்பங்களாய் உள்ளன.
வடக்குக் கோபுரத்தின் அதிஷ்டானம் தெற்குக் கோபுரத்தில் உள்ளதைப் போன்றது. கோபுர வாசலின் இரு பக்கங்களிலும் அலங்கார வேலைப்பாடற்ற அணைவு தூண்கள் காணப்படுகின்றன. இக்கோபுரம் மூன்று தளங்களைக் கொண்டது. அவற்றிலே வழமை போலக் கூடம், பஞ்சரம், சாலை என்பன காணப்படுகின்றன. அளவிற் சிறியதான கீழைக் கோபுரத்தில் இரண்டு தளங்கள் மட்டுமே உள்ளன.
உத்தர வீதியின் தென்கிழக்கு மூலையில் முன்பு பல்லவராயன் மடம் என வழங்கிய மணவாள மகாமுனி மடம் உள்ளது. அதில் இறையகம், அந்தராளம், முகமண்டபம் என்னும் பகுதிகள் காணப்படுகின்றன. முகமண்டபத்தில் உருளைத் தூண்களும் நான்முகத் தூண்களும் அமைந்துள்ளன. அவை எல்லாவற்றினதும் போதிகை சோழர் கலைப்பாணியில் அமைந்துள்ளது. மண்டபத்து விதானத்திலுள்ள தோரணங்களில் அஷ்டதிக்கஜங்களின் சுதைச் சிற்பங்கள் அமைந்துள்ளன. மூலஸ்தானத்தில் மணவாள மகாமுனியின் செப்புப்படிமம் தாபனமாகியுள்ளது.
ஆறாம் பிராகாரத்துக் கோபுரங்கள்
கலியுகராமன் திருவீதி என்னும் ஆறாம் பிராகாரத்து தெற்குக் கோபுரத்தின் அதிஷ்டானத்தின் பெரும்பகுதி நிலத்தின் கீழே புதைந்து விட்டது. வழமை போலக் கோபுரவாசலின் இருபக்கச் சுவர்களிலும் அணைவு தூண்கள் உள்ளன. இக்கோபுரத்தில் செங்கல் வேலைப்பாடான மூன்று தளங்களும் ஆயதாஸ்ர சிகரமும் அதன் மேல் 7 கலசங்களும் உள்ளன.
மேலைக் கோபுரமும் செங்கற்களால் அமைந்த மூன்றுதளக் கட்டுமானமாகும். அதன் அதிஷ்டானத்து உபானமும் அதபத்மமும் மண்ணிற் புதைந்துவிட்டன. அகல்பட்டம், திரிபட்டம், களம் பட்டம், களம், ஊர்த்துவ பத்மம், ஆலிங்கபட்டிகை என்னும் படைகள் அதிலே காணப்படுகின்றன. கோபுரவாசலின் இருபக்கச் சுவர்களிலும் சோழர்கலைப் பாணியில் அமைந்த போதிகைகளோடு விளங்கும் அணைவு தூண்கள் உள்ளன. கோபுர தளங்கள் கூடம், பஞ்சரம் , சாலை என்பவற்றால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. அஞ்சலிக்கோலமான கருடாழ்வாரின் படிமங்கள் சிகரத்தின் கீழ் நான்கு பக்கங்களிலுங் காணப்படுகின்றன. வடக்குச் சித்திரைக் கோபுரம் அமைப்பிலும் தோற்றத்திலும் மேலைக் கோபுரம் போன்றதாகும்.
கிழக்குக் கோபுரமான கலியுகராமன் கோபுரம் பல சிறப்புகள் பொருந்தியது. அதன் வேலைப்பாடுகள் ஏனைய சித்திரைக் கோபுரங்களில் உள்ளவற்றிலிருந்தும் விவரங்களில் வேறுபட்டனவாகும். அதன் கட்டுமானத்திலே சில குறைபாடுகள் அமைந்துவிட்டன. அதில் 7 செங்கல் வேலைப்பாடான தளங்கள்
248

உள்ளபோதிலும் கோபுரம் அதன் அதிஷ்டானத்தின் பிரமாண்டமான அளவிற்குப் பொருத்தமான உயரத்துடன் விளங்கவில்லை. தளங்கள் உயரங் குறைந்தவை. அதிலே வேறுபாடான முறையில் அலங்கார வேலைப்பாடுகள் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளன. கோபுரவாசற் கதவின் மேற்சட்டங்களில் லக்ஷ்மி - நாராயணர், விஷ்ணு, தேவியர், அடியார் ஆகியோரின் சிற்பங்கள் அமைந்துள்ளன.
ஏழாம் பிராகாரத்துக் கோபுரங்கள்
ஏழாம் பிராகாரத்துக் கோபுரங்கள் ராயகோபுரங்கள். அவை முற்றுப்பெறாத கட்டுமானங்களாக அண்மைக்காலம் வரை இருந்துள்ளன. தெற்குக் கோபுரம் பிரமாண்டமான அதிஷ்டானத்துடனும் புதுமையான வேலைப்பாடுகளுடனும் விளங்குகின்றது. அது சென்ற நூற்றாண்டின் முடிவிலே கட்டி முடிக்கப் பெற்றது. கிழக்குக் கோபுரத்தின் அதிஷ்டானம் முற்றாக நிலத்திற் புதைந்துவிட்டது. வடக்குக் கோபுரத்தில் மேலதிகமாகத் திருச்சுற்றாலை மண்டபம் அமைந்திருக்கின்றது. அதன் நடுவிலே கோட்டமொன்றில் விஷ்ணுவின் வடிவம் அமைக்கப்பட்டுள்ளது. விஷ்ணுவின் இரு மருங்கிலும் கருடாழ்வாரின் உருவங்கள் வைக்கப்பட்டுள்ளன. மேலைக்கோபுரம் பெருமளவிற் சிதைவுற்ற நிலையிற் காணப்படுகின்றது.
திருப்பணி விவரங்கள்
திருவரங்கத்திலே நடைபெற்ற திருப்பணிகள் பற்றிச் சாசனங்களிலும் கோயில் ஒழுகு முதலான நூல்களிலும் பல குறிப்புகள் உள்ளன. சோழர் காலம் முதலாக நடைபெற்ற திருப்பணி வேலைகளைப் பற்றி ஒருவாறு அவற்றின் மூலம் அறிந்துகொள்ளலாம்.
மகதேசன் திருவீதியான அடையவளந்தான் திருமாளிகை என்னும் பிராகாரத்தின் புனரமைப்புப் பணிகளுக்குக் குலோத்துங்க சோழ வாணகோவரையர் பொறுப்பாக இருந்தான் என்பதை மூன்றாங் குலோத்துங்க சோழதேவரின் (176 - 1216) சாசனமொன்றின் மூலம் அறியமுடிகின்றது. 13ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவரான வடக்குத் திருவீதி பிள்ளை என்பாரின் ஈடு 36,000 என்பதில் அடையவளந்தான் மதில்பற்றிச் சொல்லப்படுகின்றது.
அண்ணப்ப உடையார் 1444 ஆம் ஆண்டிலே அடையவளந்தான் திருவீதியின் மதிலையும் கோபுரவாசலையும் கட்டினார் என்ற குறிப்பு கோயில் ஒழுகிலே காணப்படுகின்றது.
நம்மாழ்வார் கோயில்
நம்மாழ்வார் சந்நிதி திருவரங்கத்தில் இராமானுஜரால் அமைக்கப்பட்டது. அதற்கு முன்பு வருடந்தோறும் அத்தியயன உற்சவ காலத்திலே நம்மாழ்வாரின் படிமம் ஆழ்வார் திருநகரியிலிருந்து எடுத்து வரப்பட்டுத் திருக்குறளப்பன் கோயிலில் வைக்கப்படுவது வழக்கம். கி.பி. 1579 ஆம் ஆண்டுக்
இந்துக்கலைக்களஞ்சியம்

Page 295
கல்வெட்டொன்றிலே ஆதிபிரமோற்சவத்தின் ஒன்பதாம் நாள் பற்றிய குறிப்புண்டு. அன்று திருவுலாக் கோலமாகக் கடவுட் படிமம் நாச்சியார் திருக்குறளப்பன் சந்நிதிகளுக்குக் கொண்டு செல்லப்பட்டது.
கலியுகராமன் கோபுரம்
கலியுகராமன் என்பது 1297 ஆம் ஆண்டிலே அரசபதவி பெற்ற சடாவர்மன் சுந்தரபாண்டியனின் விருதுப்பெயர். இக்கோபுரத்தின் வாயிற்புறச் சட்டங்கள் நான்கில் 13ஆம் நூற்றாண்டுக்குரிய கிரந்த எழுத்துகளிற் கலியுகராமன் என்று எழுதப்பட்டுள்ளது. சாசனத்தின் கீழே கர்நாடகத்துக் ஹோய்சளரின் சின்னமாகிய கண்ட பெருண்ட வடிவம் செதுக்கப்பட்டுள்ளது. கோபுர விதானத்து தூண் சட்டங்கள் இரண்டிலே பாண்டியரின் இலச்சினையாகிய இணைக்கயல்களும் அங்குசமும் பொறிக்கப்பட்டுள்ளன. எனவே ஹோய்சளர், பாண்டியர் ஆகியோரின் ஆதிக்கம் நிலைபெற்ற காலத்திலே கோபுரம் உருவாகியிருந்ததென்றும் பாண்டியர் காலத்தில் மேலும் சில திருப்பணிகள் நிறைவேறிய பின் அது கலியுகராமன் கோபுரம் என்னும் பெயரால் விளங்கியது என்றுங் கொள்ளலாம்.
வெள்ளைக் கோபுரம் - கிழக்கு அகளங்கன் கோபுரம்
புராதன காலக் கோபுரத்தை இடித்துப் புதிய கோபுரத்தைக் கந்தாடை இராமானுஜ ஐயங்கார் 15ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலே கட்டினார். கோபுரப் புனரமைப்பு பற்றிய செய்தி கோயில் ஒழுகிற் காணப்படுகின்றது.
உள்ளிருக்கும் ஆண்டாள் கோயில்
ஆதியில் இராமர் கோயிலாக அமைந்த ஆலயம் 15ஆம் நூற்றாண்டின் முற்பகுதியிற் சக்கராரியர் என்பவராற் புனரமைக்கப்பட்டது. அங்கு சூடிக்கொடுத்த நாச்சியாரான ஆண்டாளின் உற்சவத்திரு மேனி (பேரம்) தாபனம் பண்ணப்பட்டது. இவ்விவரங்கள் கோயில் ஒழுகில் உள்ளன.
வேணு கோபாலர் கோயில்
வேணு கோபாலர் சந்நிதியின் கட்டுமானம் மதுரைநாயக்கர் காலத்திற்கு உரியது. அதன் மகாமண்டபத்திற் சிதைவான சாசனமுண்டு. காஸ்யப்ப கோத்திரத்திற் பிறந்த ஒருவரால் மண்டபம் 1736 இற் கட்டப்பெற்றது என்ற விவரம் அதிற் பதிவாகியுள்ளது.
சக்கரத்தாழ்வார் கோயில்
கோயில் ஒழுகிலுள்ள குறிப்பின்படி ஹோய்சள அரசனான இராமநாதனின் (1263 -95) அமைச்சனாகவிருந்த கம்பய தண்டநாயக்கராற் சக்கரத்தாழ்வார் கோயில் கட்டப்பெற்றது. அக்கோயில் விமானத்தையும் அதன் மண்டபம் கோபுரம் ஆகியனவற்றையும் கி. பி 1400 ஆம் ஆண்டளவில் விருபண்ண உடையார் கட்டிமுடித்தார். கோயிலின் தெற்குச்
இந்துக்கலைக்களஞ்சியம்

சுவரிலுள்ள சாசனமொன்று திரிபுவனச்சக்கரவர்த்தி கோதண்டராமனைக் குறிப்பிடுகின்றது. அது பிற்காலச் சோழருக்கும் பாண்டியருக்கும் உரிய விருதுப் பெயராகும்.
ஆழ்வார் கோயில்கள்
தேவராயர் காலத்தில் (1422 - 46) மதுரையிலே தனவாயாகவிருந்த லக்கண்ண தண்டநாயகர் ஆஞ்சநேயர் கோட்டத்தை அமைத்தார் என்பது கோயில் ஒழுகின் மூலம் அறியப்படும் விவரமாகும். பின்பு கந்தாடையாரின் சீடரான சாத்தாத நரசிங்கதாசன் அங்கே திருப்பாணாழ்வாரின் படிமத்தைத் தாபனம் பண்ணினார். விட்டல நாதர் கோயிலை 15 ஆம் நூற்றாண்டிலே கந்தாடை இராமனுஜ ஐயங்காரின் சீடரான மாதவ ஐயங்கார் புதிதாக அமைத்தார். அது நான்முகன் கோபுரத்துக்கு வடக்கில் அமைந்துள்ளது. அவர் அங்கு விட்டலேஸ்வரர் படிமத்தையும் மதுரகவி ஆழ்வாரின் உருவத்தையும் தாபனஞ் செய்தாரென்று கோயில் ஒழுகுவில் எழுதப்பட்டுள்ளது.
மதுரை நாயக்கரான சின்ன பொம்ம நாயுடு அஷ்டபுஜ கோபால கிருஷ்ணரின் கோயிலை அமைத்து, அதற்கு நன்கொடைகள் வழங்கினாரென்று 1674 இல் எழுதப்பட்ட சாசனமொன்று குறிப்பிடுகின்றது. அக்கோயில் கூரத்தாழ்வார் சந்நிதிக்கும் விட்டலேஸ்வரர் கோயிலுக்கும் இடையில் நிர்மாணிக்கப்பட்டது. தொண்டரடிப் பொடி ஆழ்வாரின் படிமமொன்று பிற்காலத்திலே அங்கு நிறுவப்பட்டுள்ளது. நம்மாழ்வாரதும் வேறு ஆழ்வார்கள் பலரதும் கோட்டங்களை உடையவராகிய இராமானுஜர் அமைத்தாரென்று கோயில் ஒழுகு குறிப்பிடுகின்றது.
நாச்சியார் கோயில்
தாயர் சந்நிதி 12 ஆம், நூற்றாண்டு முதலாக அமைந்திருந்தது என்று கொள்ளலாம். தென்னிந்தியக் கோயில்களிலே திருக்காமக்கோட்டத்தை அமைக்கும் வழக்கம் பிற்காலச் சோழர்களின் காலப்பகுதியிலே தொடங்கிவிட்டது. மூலஸ்தானத்திலுள்ள பூப்பலகையான மாலை கட்டிக்கல் என்பதின் விளிம்பிலே 12 ஆம் நூற்றாண்டுக்குரிய வரிவடிவங்களில் எழுதப்பெற்ற சாசனம் ஒன்றுண்டு. அக்கல் சோழகுலோத்துங்க மூவேந்தவேளாரின் உபயம் என்று எழுப்பப்பட்டுள்ளது. அங்குள்ள வோறொரு கல்லில் அது கட்டி கதிரநாயக்கர் உபயம் என்று எழுதப்பட்டுள்ளது. இச்சாசனம் 15ஆம் நூற்றாண்டுக்குரிய வரிவடிவங்களைக் கொண்டுள்ளது.
நவராத்திரி மண்டபம் என்னும் மகாமண்டபத்திலே 13ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சாசனத்துண்டங்கள் உள்ளன. நாச்சியார் கோயிலின் மண்டபம் ஹோய்சள இராமநாதனின் பிரதானியான கம்பய தண்டநாயக்கனால் அமைக்கப்பட்டதென்று கோயில் ஒழுகு குறிப்பிடுகின்றது. நாச்சியார் கோயிலின் பின்னாலுள்ள நீராழி மண்டபத்தை கி. பி. 1444 இல் அண்ணப்ப உடையார் அமைப்பித்தார் என்றும் அதில் எழுதப்பட்டுள்ளது.
249

Page 296
H
நாயக்கர் காலத்தில் அரங்கநாதர் கோயிலும் அதன் சுற்றுப் பிராகாரங்களும் அவற்றிலுள்ள மண்டபங்களும் முழுமையாகப் புனரமைக்கப்பட்டன என்று கருதலாம்.
நாச்சியார் கோயிலும் வெளிப்பிராகாரங்களிலுள்ள பெரும்பாலான மண்டபங்களும் சொக்கநாத நாயக்கரின் (1659 - 82) சகோதரர்களின் திருப்பணிகள் என்று கோயில் ஒழுகு குறிப்பிடுகின்றது.
தன்வந்திரி கோட்டம்
ஹோய்சள வீரராமநாதனின் பிரதானிகளில் ஒருவனாகிய சிங்கண தண்ட நாயக்கர் தன்வந்திரி ஆலயத்தை அமைப்பித்தான் என்ற விவரம் கி. பி 1257 ஆம் ஆண்டு கல்வெட்டொன்றிலே காணப்படுகின்றது. துருக்கியரின் ஆக்கிரமிப்புகளின் காலத்தில் அது அழிந்துவிட்டது. பின்பு, 1493 ஆம் ஆண்டளவில் லக்ஷமீ காவியத்தின் ஆசிரியரான கருடவாகன பண்டிதர் அதனைப் புனரமைத்தார்.
முதலாம் பிராகாரத்துக் கட்டடங்கள்
இராசமகேந்திரன் திருவீதியான முதலாம் பிராகாரச் சுவர்களும் தூண்களும் கோபுரவாசலும் சோழச்சக்கரவர்த்தியான இராசமகேந்திரனின் (1060 - 63) திருப்பணியானவை என்ற விவரம் கோயில் ஒழுகுவிற் பதிவாகியுள்ளது. சேனை முதலியார் கோயில் முதலாம் சடாவர்மன் சுந்தரபாண்டியனுடைய திருப்பணியாகும். அக்கோயிலின் சிகரமும் கலசமும் அப்பெருவேந்தனாற் பொன்வேயப்பட்டன. பொன் வேய்ந்த பெருமாள் என்பது அவனுக்குரிய சிறப்புப் பெயராகும்.
பெரிய திருமண்டபத்தின் முன்னாலமைந்த நூற்றுக்கால் மண்டபம் திருமலைநாத உத்தமநம்பியின் திருப்பணியாகும். ஜேஷ்டாபிஷேகத்தின் போது அம்மண்டபத்திலே உத்தமநம்பியால் ஆயிரக்கும்பாபிஷேகம் செய்விக்கப்பட்டது. ஒரு பெரும் மண்டபத்தின் பகுதிகளான அர்ச்சுன மண்டபம், கிளிமண்டபம் என்பன மல்லிகார்ஜூன ராயரின் காலத்தில் (1447 - 65) உத்தமநம்பியால் அமைக்கப்பட்டன.
அழகிய மணவாளன் திருமண்டபத்திற் கருடாழ்வாரின் பொற்படிமம் சடாவர்மன் சுந்தரபாண்டியனால் அமைக்கப்பட்டது என்று கோயில் ஒழுகுவிற் சொல்லப்படுகின்றது. அது துருக்கியரின் ஆதிக்கத்திலே கவரப்பட்டதால் 1515 இல் ஒரு செப்புப்படிமத்தை வார்த்து அதனை சக்கராரியர் தாபனம் பண்ணினார். கோபுர வாசலுக்கும் அழகியமணவாளன் திருமண்டபத்துக்கும் இடையிலுள்ள பள்ளம் பாண்டியரால் நிரப்பப் பெற்றது என்பதை கோயில் ஒழுகு மூலம் அறியமுடிகின்றது. நிலத்திலே கற்பாளங்கள் பதிக்கப்பட்டு, மண்டபத்தின் கிழக்கிலும் மேற்கிலும் படிக்கட்டுகள் உருவாக்கப்பட்டன.
அரங்கநாதர் கோயிலின் இறையகமும் அந்தராளமும் பூர்வீகமானவை; அவை ஆழ்வார்களின் காலம் முதலாக
25ó

அமைந்திருந்தவை. காயாத்திரி மண்டபம், அழகிய மணவாளன் திருமண்டபம் என்பன அவற்றுக்குப் பிற்பட்டவை; அவை சோழர், பாண்டியர் காலங்களுக்கு உரியவை காவிரிப் பெருக்கால் மூலஸ்தானத்தில் வெள்ளம் பெருகிவிடுவதால் இறையகம் மண்டபங்கள் ஆகியவற்றை இராசமகேந்திரன் உயரமான தளங்களோடு அமைத்தான் என்று சொல்லப்படுகின்றது. மகா மண்டபமும் திருவுண்ணாழியும் விஜயநகர காலத்தில் மீண்டும் புனரமைக்கப்பட்டுள்ளன போலத் தெரிகின்றது.
முதலாம் சடாவர்மன் சுந்தரபாண்டியன் கருடாழ்வார் சந்நிதானத்தை மகாமண்டபத்தில் அமைத்ததன் விளைவாக மூலஸ்தானத்தை முதலாம் பிராகாரத்திலிருந்து அடியார்களாற் தரிசனம் பண்ண முடியாததாகிவிட்டது. மூலஸ்தானத்தை முதலாவதாகச் சுந்தர பாண்டியனும் அதன் பின்பு இரண்டாம் ஹரிஹர ராயரின் (1707 - 1404) மகனான விருபண்ண உடையாரும் பொன்வேய்ந்தனர்.
மண்டபங்கள் 1. ஆயிரங்கால் மண்டபம்
ஹோய்சள மன்னர் ராமநாதரின் (1263 - 1295) பிரதான அமைச்சராகிய கம்பய தண்டநாயக்கரின் ஏற்பாட்டினால் பெருமாள்தேவன் என்பவர் ஆயிரங்கால் மண்டபத்தை அமைத்தார். கோயில் ஒழுகு, பூஞரீரங்கராஜஸ்தவ என்பவற்றில் இது குறிப்பிடப்படுகின்றது. மேலைமுகப்பிலுள்ள 10 தூண்களில் மண்டலிக மாராஜன் கம்பய தண்டநாயக்கன் என்னும் தொடர் 13 ஆம் நூற்றாண்டுக்குரிய வரிவடிவங்களில் எழுதப்பட்டுள்ளது. அண்ணப்ப செளண்டப்பர், மண்டபத்திலே திருத்த வேலைப்பாடுகளைச் செய்தாரென்று 1396 ஆம் ஆண்டுக் கல்வெட்டொன்றிலே எழுதப்பட்டுள்ளது.
2. சேஷகிரியார் மண்டபம்
இம்மண்டபம் எப்பொழுது அமைக்கப்பட்டது என்பது பற்றி ஆதாரபூர்வமான சான்றுகள் இல்லை தூண்களிற் குதிரைகளின் உருவங்கள் விஜநகர காலத்திலே செதுக்கப்பட்டுள்ளதால் இது விஜயநகரகாலத்தில் அமைக்கப்பட்டதென்று கருதலாம். சேஷகிரி என்பது விஜயநகரப் பிரதானி ஒருவரின் பெயராகலாம். இதனை 16ஆம் நூற்றாண்டுத் திருப்பணியாகக் கொள்ளலாம்.
3. பவித்தர மண்டபம்
குலசேகரன் திருவீதி என்னும் இரண்டாம் பிராகாரத்திலே சேரமானார் குலசேகர ஆழ்வார் ஒரு மண்டபத்தை அமைத்தார் என்று கோயில் ஒழுகு குறிப்பிடுகின்றது. 9ے([gil சேனைவென்றான் திருமண்டபம் என்னும் பெயரால் வழங்கியது. அதனை மூலமாகக் கொண்டே பவித்திர மண்டபம் அமைக்கப்பட்டது. பவித்திர மண்டபத்தைச் சடாவர்மன் சுந்தர பாண்டியன் அமைத்தான் என்று கொள்ளலாம்.
இந்துக்கலைக்களஞ்சியம்

Page 297
4. ஊஞ்சல் மண்டபம்
குலசேகர பெருமாள் என்னும் பட்டங் கொண்டவரான
கந்தாடை இராமனுஜதாஸர் இம்மண்டபத்தை 1489 ஆம்
ஆண்டளவிலே கட்டினார் என்று சொல்லப்படுகின்றது
தொரை மண்டபமும் திருநட மாளிகையும்
இரண்டாம் பிராகாரத்து வடமேற்கு மூலையிலுள்ள திருச்சுற்றாலை மண்டபமும் மேற்கிலும் கிழக்கிலும் அதன் தொடர்ச்சியாக அமைந்துள்ள கட்டுமானங்களும் இராணி மங்கம்மாளின் (1690 - 1706) இராசகுருவான தொரை ரங்காச்சாரியாரின் திருப்பணி என்று கொள்ளப்படும். ஆயினும் அதிலுள்ள தூண் சட்டமொன்றிலே தெலுங்கில் எழுதப்பட்டுள்ள சாசனங்கள் இரண்டின் மூலம் விஜயரங்க சொக்கநாத நாயக்கரின் காலத்திலே (1706 - 1732) கட்டுமானப் பணிகள் நடைபெற்றன என்பதை அறியமுடிகின்றது.
இம்மண்டபத்திற்குத் தெற்கிலுள்ள திருநடமாளிகையும் அந்நாயக்கரின் காலத்துக் கட்டுமானமாகும். பெரிய திருமண்டபத்துக்கு மேற்கிலும் பவித்திர மண்டபம் முதலாகவும் அமைந்துள்ள திருநடமாளிகை விஜயரங்க சொக்கநாதரின் திருப்பணியென்று கோயில் ஒழுகு குறிப்பிடுகின்றது.
திருவந்திக்காப்பு மண்டபம், கம்பர் மண்டபம்
நான்முகன் கோபுரத்துக்கு வடக்கிலுள்ள நான்கு தூண்கள் பொருந்திய திருவந்திக்காப்பு மண்டபம் சொக்கநாத நாயக்கரின் (1659 - 82) ஆதரவுடன் பூரீநிவாஸ தேசிகரால் அமைக்கப்பட்டது. அதன் வடபாலாக அமைந்துள்ள கம்பர் மண்டபமும் அவரது திருப்பணியாகக் கொள்ளத் தக்கது.
(இக்கட்டுரையில் அடங்கிய விவரங்கள் வி. என் ஹரி ராவ் எழுதிய பூரீரங்கம் கோயில் : கட்டுமானங்களும் கலைகளும் (திருப்பதி: 1967) என்னும் நூலிற் பெறப்பட்டவை) (f. L.)
திரு அரங்கக் கம்ைபகம்
வைணவர் கோயில் எனத் தனித்துச் சிறப்பிக்கும் பெருமையுடைய திருவரங்கம், திருச்சிக்கு வடக்கே மூன்று மைல் தொலைவிற் காவேரியின் இரு கிளைகளின் நடுவே அமைந்துள்ளது; விழுப்புரம் விருத்தாசலம் திருச்சிக்கிளை இருப்புப் பாதையில் உள்ளது; ஆழ்வார் மங்களாசாசனம் பெற்ற பூலோக வைகுண்டமிது.
திருவரங்கத்திலே அறிதுயில் கொள்ளும் பூரீ ரங்கநாதனைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டது திருவரங்கக் கலம்பகம். இதனுள், சிறப்புப் பாயிரமாக இரு செய்யுளுள; காப்பாக நான்கு செய்யுளுள; பிற் சேர்க்கையாக ஒரு செய்யுளுண்டு; நூலாக 100 செய்யுளுள; பல திறப்பட்ட பாவாலும் பாவினத்தானும் அம்மானை, இரங்கல், ஊசல், ஊர், களி, காலம், குறம், கைக்கிளை, சம்பிரதம், சித்து, தவம், தழை, நாரை, பாண், புயவகுப்பு, மடக்கு, மதங்கு,
இந்துக்கலைக்களஞ்சியம்

மறம், மேகம், வண்டு முதலிய உறுப்புகள் அமைய அகப் பொருளுக்கு முக்கியத்துவம் கொடுத்துப் பாடப்பட்டுள்ளது.
திருவரங்கக் கலம்பகத்தைப் பாடியவர் அழகிய மணவாள தாசராவர்.
அஷ்டப் பிரபந்தத்துள் இடம் பெறும் நூல்களிலே திருவரங்கக் கலம்பகமும் ஒன்றாகும். அஷ்டப் பிரபந்தத்தை முதன் முதலிலே தொகுத்துப் பதிப்பித்தவர் திரிசிரபுரம் கோவிந்தபிள்ளையாவர். இக்கலம்பகத்திற்கு வைத்த மாநிதி முடும்பை சடகோபராமாநுஜா சாரியர் சிறந்தவுரை வழங்கியுள்ளார். (ിffഗ്ഗം)
திரு அரங்கத்தந்தாதி
திருவரங்கத்திலே அருட்டுயில் கொள்ளும் பூரீ ரங்க நாதனைப் பாடுவது திருவரங்கத் தந்தாதி. இது யமக வந்தாதியாகும்; சொற்பிரிப்புப் பயிற்சிக்கு இந்நூல் சிறந்ததொரு கருவியாகப் போற்றிக் கொள்ளப்படுவதாகும்.
சிறப்புப் பாயிரச் செய்யுள், ஐந்து காப்புச் செய்யுள், பிற்சேர்க்கைப்பாடல் எனும் ஏழு செய்யுள் நீங்கலாக நூறு பாடல்களையுடையது.
இதனைப் பாடியவர் மணவாளதாசர் எனும் வைணவ தாசராவர். இவர் குணவாளராம்பட்டரின் சீடர் என்று கருத இடமுண்டு.
இவ்வந்தாதியிலே அரங்கப் பெருமானின் பெருமைகளும் அடியார்களின் சிறப்பும் அழகுற அமைந்துள்ளன. ஆயினும் தத்துவச் சிறப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கப் பெற்றதால் ஆசிரியரின் தமிழ்ப்புலைமை கண்டு வியக்கும் வகையிலேயே அமைகின்றது.
இதற்குத் திருவல்லிக்கேணி வைத்தமாநிதி முடும்பை சடகோபராமாநுசாசாரியர் சிறந்தவுரை எழுதியுள்ளார்.
இதனைவிட வேங்கடாசலதாசர் பாடிய திருவரங்கப் பதிற்றுப் பத்தந்தாதி, பாலகவி பூணூரீநிவாச ஐயங்கார் பாடிய கோயிலந்தாதி போன்ற அந்தாதிகளும் அரங்கப் பெருமாளுக்குண்டு.
திருவரங்கத்தந்தாதி அஷ்டப் பிரபந்தத்தில் ஒரு நூலாகத் தொகுக்கப்பட்டுள்ளது. ( ിffഗ്ഗം)
திரு அரங்கத்து மாைை
திருவரங்கத்திலே அறிதுயில் கொள்ளும் பூரீரங்கப் பெருமாளைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டது திருவரங்கத்துமாலை. அதனுள் சிறப்புப்பாயிரச் செய்யுளும், காப்புச் செய்யுளும், பிற்சேர்க்கைப் பாடலுமாக மூன்று செய்யுள் நீங்கலாக நூற்றிப் பதினொரு பாடல்கள் உள்ளன.
257
ஆது சன குலக
aardplului Tessardh

Page 298
திருவரங்கத்து மாலையைப் பாடியவர் மங்கை மணவாளதாசர், அழகர் அந்தாதியையும் அவர் பாடியுள்ளார்.
தோத்திர மாலையாக மங்கை மணவாளதாசர் சூட்டியுள்ள திருவரங்கத்து மாலையிலே சாதுரியம் மிக்க பாடல்கள் பல காணப்படுதல் குறிப்பிடத்தக்கது.
இம்மாலை அஷ்டப் பிரபந்தத்தில் ஒன்றாக இடம் பெறுவதாகும். இதற்கு வை. மு. சடகோபராமாநு ஜாசாரியர் சிறந்த உரை வழங்கியுள்ளார். (47பாழ,)
திரு அரங்கப் பதிற்றுப்பத்தந்தாதி
அரங்கத்திலே அருட்டுயில் கொள்ளும் அரங்கனைப்பாடுவது
திருவரங்கப் பதிற்றுப் பத்தந்தாதி. அது பதிற்றுப் பத்தந்தாதியின் இயல்புக்கேற்பப் பலவித யாப்பமைதிகளில் அமைந்தது.
நம்மாழ்வார், இராமாநுசர், ஆசிரியர் வணக்கம் கூறும் மூன்று செய்யுட்களை ஆதியிலும் நூலாசிரியர் விவரம் கூறும் செய்யுளை அந்தத்திலும் உடைய பதிற்றுப் பத்தந்தாதியிலே இடைநடுவே நூறு பாடல்கள் காணப்படுகின்றன.
இதனைப் பாடியவர் வேங்கடாசலதாசர் எனப்படுபவர்.
இப்பதிற்றுப் பத்தந்தாதி சென்னை அரசின் கீழைத்தேயச் சுவடிகளின் 51ஆம் தொடராகத் தி. சந்திரசேகரன் 1956 இல் வெளியிட்ட முதலாம் அந்தாதிக் கொத்து எனும் தொகுப்பில் இடம் பெறுகின்றது.
திருவரங்கத்திற்கு மணவாளதாசர் பாடிய திருவரங்கத் தந்தாதி, பாலகவி பூரீநிவாசஐயங்கார் பாடிய கோயிலந்தாதி போன்ற அந்தாதிகளும் உள்ளன. ) 67LJ/Tيg.(
திரு அரதைப்பெரும்Uாழி
9ரித்துவாரமங்கலம் என்று வழங்கப் பெறும் திருஅரதைப்
பெரும்பாழி, தஞ்சை - நாகூர் இருப்புப் பாதையில் கோயில்
வெண்ணி நிலையத்திலிருந்து நான்குமைல் தொலைவிலுள்ளது.
இறைவன் திருமுன்பு பன்றியாகிய திருமால் பறித்த பள்ளம் இருப்பதால் வந்த பெயர் தலப்பெயர் என்பர் வராகமூர்த்தியின் கொம்பைப் பறித்துச் சிவபிரான் அணிந்து கொண்ட தலமிது.
இத்திருத்தலத்தில் கோயில் கொண்ட சிவபிரானுக்குப் பாதாள வரதர் என்றும் இறைவிக்கு அலங்கார அம்மை என்றும் பேர். தீர்த்தம் பிரம தீர்த்தம், தலவிருட்சம் வன்னி.
இத்திருக் கோயிலுக்கு சம்பந்தர் பாடிய திருப்பதிகம் ஒன்றுண்டு (3.30). (67பாழ,)
252

திருஅரிசிலி
தொண்டை நாட்டுத்தலம். மக்கள் வழக்கில் ஒழிந்தியாப்பட்டு என வழங்கப்படுகிறது. திண்டிவனம், பாண்டிச்சேரி வழியாக கிளியனூர் தைலாபுரம் தாண்டி திருஅரிசிலித் தலத்தை அடையலாம். நல்ல சாலை கோயில் வாயில் வரை பேரூந்து செல்லக்கூடியது. வாமதேவ முனிவரால் வழிபடப்பெற்ற தலம்.
கோயில்
இறைவன் - அரிசிலிநாதர்,அஸ்வத்தேஸ்வரர், அரசலீஸ்வரர். இறைவி - பெரிய நாயகி, அழகிய நாயகி. தலமரம் - அரசு தீர்த்தம் - வாமதேவதீர்த்தம்
சாளுவமன்னனால் கட்டப்பட்டது இக் கோயில். இம் மன்னனும், வாமதேவ முனிவரும் பிரதோஷ காலங்களில் வழிபட்டுப் பேறுபெற்ற தலம். ஆதலால் இத்தலம் பிரதோஷ வழிபாட்டிற்கு பெயர் பெற்ற தலமாகக் கருதப்படுகிறது.
ராஜகோபுரத்தைக் கடந்து உட்சென்றதும் மூலவரை நோக்கியவாறு சூரியன், பைரவர் சந்நிதிகள் உள்ளன.உட்சுற்றில் விநாயகர், ஆறுமுகன் சந்நிதிகள் அழகாக உள்ளன. கோஷ்ட மூர்த்த தட்சிணாமூர்த்தி தனி விமானத்துடன் அழகாக உள்ளார். பிரம்மா, துர்க்கை, வைஷ்ணவி சந்நிதிகளும் உள்ளன. நால்வரைத் தரிசித்து பக்கவாயில் வழியே தலப்பதிகக் கல்வெட்டைக் கண்டு ஒதியவாறு கருவறை நாயகரைத் தரிசிக்கலாம்.
மூலவர் - சிவலிங்கத் திருமேனி - குட்டையானது; ஆவுடையாரும் தாழவுள்ளது; முன் மண்டப வலப்பால் அம்பாள் சந்நிதி நின்ற திருக்கோலம். கருவறை வெளிச்சுவரில் ஜயங்கொண்ட சோழமண்டலத்து கோப்பரகேசரிவர்மன் காலத்திய கல்வெட்டுகள் உள்ளன. வைகாசி விசாகத்தில் பத்து நாட்களுக்குப் பெருவிழா நடைபெறும்.
இத் திருக்கோயிலுள்ள ஐந்து கல்வெட்டுகள் படியெடுக்கப்பட்டுள்ளன. இவற்றுள் விக்கிரம சோழதேவர், குலோத்துங்கசோழதேவர் ஆகிய இருவரும் குறிக்கப் பட்டுள்ளனர். விக்கிரம சோழதேவரின் ஆறாவது ஆட்சிக் காலத்தில் இவ்வூர் ஜயங்கொண்ட சோழ மண்டலத்து ஒய்மானாடான விஜயராஜேந்திர சோழவள நாட்டுப் பெருவேம்பூர் நாட்டுத் தேவதானம் திருவரைசிலி என்றும், பன்னிரண்டாவது ஆட்சியாண்டில் "ஒய் மானாட்டுத் திருவரசிலி’ என்றும் பதினாறாவது ஆட்சியாண்டில் “ஜயங்கொண்ட சோழ மண்டலத்து ஒய்மானாடான விஜயராஜேந்திர சோழவள நாட்டுப் பெருவேம்பூா நாட்டுத் திருவரசிலி” என்றும் குறிக்கப்பட்டுள்ளது.
இந்துக்கலைக்களஞ்சியம்

Page 299
இவ்வூரில் வாழ்ந்த அறச் செல்வி திருமதி ஜெயலட்சுமி அம்மையார் அவர்கள் கட்டிய திருஞான சம்பந்தர் மடம் கோயிலுக்குப் பக்கத்தில் உள்ளது. இவ்வம்மையார் வைத்துள்ள அறக்கட்டளையிலிருந்து வைகாசி விசாகப் பெருவிழா ஏழாம்நாள் உற்சவம் தலமகிமைப்படி அரசமர வாகன உற்சவமாக விசேஷமாகக் கொண்டாடப்படுகிறது. பூரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு பூரீ ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் அவர்களின் பொன்விழாத் திட்டத்தில் நிதியுதவி பெற்றும் அரசின் ஆதரவிலும் திருப்பணிகள் செய்யப்பட்டு 1986இல் கும்பாபிஷேகம் செய்யப்பட்டுள்ளது.
"மிக்க காலனை வீட்டி மெய் கெடக் காமனை விழித்துப் புக்க வூரிடு பிச்சையுண்பது பொன்திகழ் கொன்றை தக்கநூறிதழ் மார்பிற்றவள வெண்ணிறனிந்தாமை அக்கினாரமும் பூண்ட அடிகளுக்கு இடம் அரசிலியே’
என்று சம்பந்தர் இத் தலத்தில் எழுந்தருளியிருக்கும் பெருமானைப் பாடிப் பரவியுள்ளார். (நி நி)
திரு அரிசிற்கரைப்புத்து7ர்
தஞ்சை மாவட்டத்தில் கும்பகோணத்திற்குத் தென்கிழக்கே நாலரைமைல் தொலைவில் அரிசிலாற்றங்கரையிலுள்ளது அழகார் புத்தூர், அழகார் திருப்புத்தூர், திருப்புத்தூர் செருவிலிபுத்தூர் எனும் பெயர்களாலும் இத்தலம் வழங்கப்பட்டுள்ளது.
கோச்செங்கட்சோழன் திருப்பணியான திருக்கோயில்; புகழ்த்துணைநாயனார் பேறு பெற்ற தலம். இங்கு கோயில் கொண்ட சிவபிரானுக்குப் பழங்காசு வைத்த பரமர், சொர்ண புரேசுவரசுவாமி என்றும் இறைவிக்குக்குச் சிவாம்பிகை, அழகாம்பிகை என்றும் பெயர். சொர்ணபுரேசுவரசுவாமி மேற்குப் பார்த்த சந்நிதி.
இத்திருத்தலத்திற்குச் சம்பந்தர் திருப்பதிகம் ஒன்றும், அப்பர் திருப்பதிகம் ஒன்றும், சுந்தரர் திருப்பதிகம் ஒன்றுமாக மூன்று திருப்பதிகமுள (2.63, 5.61, 7.9) (ിffഗ്ഗ.)
திரு அரியமேய விண்ணகரம்
தஞ்சை மாவட்டத்திலே சீகாழி இருப்புப்பாதை நிலையத்திற்கு ஒரு மைல் தொலைவில் அமைந்தது அரிமேய விண்ணகரம் என்னும் திருநாங்கூர் குடமாடுகூத்தன் சந்நிதி; திருநாங்கூர் ராமாநுஜ கூடத்திற்கு அருகிலுள்ளது.
இங்கு வீற்றிருக்கும் திருக்கோலத்தில் அருள்புரியும் விஷ்ணுவுக்குக் குடமாடுகூத்தர் என்றும் பெரிய பிராட்டியாருக்கு அம்ருதகடவல்லி என்றும் பேர்.
கிழக்கே திருமுகமண்டலம், கோடி அம்ருத தீர்த்தங்கள். உதங்கமகரிஷிக்குப் பிரத்யகூஷம்.
திருமங்கையாழ்வார் மங்களாசாசனம் பெற்ற திவ்விய தலமிது (பெரிய திருமொழி 3.10) (பொ.யூ.)
இந்துக்கலைக்களஞ்சியம்
 

திரு அருணைக்கம்ைபகம்
நினைக்க முத்தி கிடைக்கும் தலம் எனச் சைவர் போற்றும் திருவண்ணாமலையில் எழுந்தருளிய சிவபிரானார் அண்ணா மலைநாதர் மீது பாடப்பட்டது திருவருணைக்கலம்பகம்.
விநாயகருக்கும் சமயகுரவர் நால்வருக்கும் தனித்தனியாக இரு செய்யுளிற் காப்புக் கூறி ஆரம்பிக்கப் பெற்ற திருவருணைக் கலம்பகம் முதலுறுப்பாக ஒருபோகும் வெண்பாவும் கலித்துறையும் தொடர்ந்தமையப் பாவாலும் பாவகையாலும் இயன்ற நூறு செய்யுள்களையுடையது. அம்மானை, இடைச்சியார், இரங்கல், ஊசல், களி, காலம், குறம், கொற்றியார், சம்பிரதம், சித்து, சிலேடை, தவம், தழை, தூது, பாண், பிச்சியார், புயவகுப்பு, மடக்கு, மதங்கு, மறம், வலைச்சியார் முதலிய உறுப்புகளை அருணைக் கலம்பகத்திற் காணலாம்.
இக்கலம்பகத்தைப் பாடியவர் இராதா நல்லூர் சைவ எல்லப்பநாவலர் எனும் புலவராவார்.
சைவ வைணவப் போட்டியினையும் பூசலையும் ஞாபகமூட்டும் பாடல்கள் பல இக்கலம்பகத்திலுள்ளன.
மேலைப்புலோலி சதாவதானம் நா. கதிரைவேற்பிள்ளை (1871 - 1907) திருவருணைக் கலம்பகத்திற்கு விருத்தியுரை எழுதத் தொடங்கினார். அவ்வுரையின் முதலாவது சஞ்சிகை 1902 இலே சென்னையிலிருந்து வெளிவந்தது. நகராமலை நா. இராமலிங்கபிள்ளை உரை 1934 இலே வெளிவந்துள்ளது.
(67பாழ,)
திரு அருனைத் தனிவெண்பா
அண்ணாமலையில் அருள்பாலிக்கும் அண்ணாமலைநாதர் மீது குகை நமச்சிவாயதேவர் அவ்வப்போது பாடிய வெண்பாக்கள் திருவருணைத்தனி வெண்பாவாகும். இத்தொகுப்பில் 35 வெண்பாக்கள் உள்ளன.
குகை நமச்சிவாயதேவர் அருணகிரியந்தாதியும் பாடியவராவார். ( 67/714.)
திரு அருணையந்தாதி
திருவண்ணாமலையில் எழுந்தருளியுள்ள அண்ணாமலை நாதரைப்பாட்டுடைத்தலைவராக உடையது திருவருணையந்தாதி.
இதனுள் இரு காப்புச் செய்யுள் நீங்கலாக 100 பாக்களுள.
அதனைப் பாடியவர் சைவ எல்லப்பநாவலர் என்பது மரபு அவர் காலம் பதினெட்டாம் நூற்றாண்டாகலாம். சிலர் இதனைப் பாடியவர் எல்லப்பநயினார் என்பர். அவர் காலம் பதினாறாம் நூற்றாண்டு.
திருவருணையந்தாதியிலே அகப் பொருட்பாக்கள் மிகுதியாகவுள்ளன. திரிபணியமையப் பாடப்பெற்ற திருவருணை
253

Page 300
யந்தாதியிலே ஆசிரியரின் வித்துவத்தருக்கினைக் கண்டு வியக்கலாம்.
திருவண்ணாமலைக்குக் குகைநமச்சிவாயர் பாடிய அருணகிரியந்தாதியும் ஈசானியதேசிகர் கந்தப்பஞானதேசிகர் பாடிய அண்ணாமலையந்தாதியும் திம்மப்ப அந்தணனார் பாடிய திருவருணையமகவந்தாதியு முள்ளன. ( பொ. பூ)
திரு அல்லிக்கேணி
சென்னை எழும்பூர் இருப்புப்பாதை நிலையத்திலிருந்து மூன்றுமைல் தொலைவிலுள்ள திவ்வியதலம். இங்கு நின்ற திருக்கோலத்தில் அருள்புரியும் விஷ்ணுவுக்குப் பார்த்தசாரதி என்றும் பெரிய பிராட்டியாருக்கு வேதவல்லி என்றும் பேர். உருக்மணி பிராட்டியோடும் அநிருத்தன், பிரத்யும்நன், பலராமன், சாத்யகி ஆகிய குடும்பத்தினரோடும் கண்ணனாகத் தொண்டைமான் பிரார்த்தனைக்கு இரங்கித் திருவேங்கட முடையான் சேவை சாதித்த தலம். ஏழுரிஷிகள் தவம் செய்த பிருந்தாரண்ய தலம். வியாசர் பிரதிஷ்டை செய்து ஆத்ரேயர் ஆராதித்த மூர்த்தி எழுந்தருளியதலம்.
கிழக்கே திருமுகமண்டலம்; இந்திர சோம மீன அக்கினி விஷ்ணு தீர்த்தங்கள் சூழ்ந்த கைரவிணி ஸர்ஸ்; தொண்டைமான், சுமதி, அர்ச்சுனனுக்குப் பிரத்தியகூஷம்.
இங்கு பூரீரங்கநாதன், பூரீராமன், வரதராஜன் சந்நிதி
களுமுள.
பேயாழ்வார், திருமழிசையாழ்வார், திருமங்கையாழ்வார் மங்களாசாசனம் பெற்ற திவ்வியதலமிது (மூன்றாந்திரு. 16; நான். திருவந் 35; பெரியதிரு. 23). திருவல்லிக்கேணிக் கலம்பகம், திருவல்லிக்கேணி யமகவந்தாதி முதலிய பிரபந்தங்கள் உள்ளன. ( பொழ,)
മഗ്ര (9ഞ്ഞുങ്ങഖff
கடலலைகள் மோதும் கரையோரத்தில் அமைந்த திருச்சீர் அலைவாய், திருநெல்வேலி மாவட்டத்தில் திருநெல்வேலி நகருக்குக் கிழக்கே 35 மைல் தொலைவிற் காயற்பட்டினத்திற்குத் தெற்கேயுள்ளது.
'திருமணி விளக்கின் அலைவாய்ச் செருமிகு சேஎய்” அகநானூற்றிலே கூறப்படுகிறார் (266). திருமுருகாற்றுப்படை கூறும் ஆற்றுப்படை (ஆறு படை) வீடுகளிற் "சீர் அலைவாய்” ஒன்றாகும் (124-125) புறநானூற்றிலே இத்திருத்தலம் 'செந்தில் என்று அழைக்கப்பட்டுள்ளது (55); சிலப்பதிகாரமும் 'செந்தில் என்றே கூறுகின்றது (குன்றக்குரவை, 8), ஜெயந்தி, ஜெயந்திபுரம், வீரவாகுபட்டணம் என்ற பெயர்களும் இத்திருத்தலத்திற்குள்ளன. சூரனைவென்று முருகப்பெருமான் ஜெயாபிஷேகம் செய்த தலம் என்று புராணம் கூறும்.
254

சூரன்போருக்கு முன் முருகன் இத்தலத்திலே தங்கிக் கொண்டு வீரவாகுதேவரைத் தூது அனுப்பினாராம்.
இக்காலத்தில் திருச்செந்தூர் என்றே இத்தலம் பெரும்பாலும் அழைக்கப்படுகின்றது. முருகன் திருக்கோயிலுக்குச் சந்தன சைலம் என்றும் பெயர்.
கடற்கரைப் பாதையில் தூண்டுகை விநாயகர் கோயில் உண்டு. விநாயகர் கோயில் முதல் முருகன் கோயில் வரை கல்மண்டபம் உண்டு. முருகன் கோயில் மூன்று சுற்றுப் பிரகாரங்களுடன் ஒன்பது நிலைகளோடு கூடிய இராஜ கோபுரத்துடன் திகழ்கின்றது. இத்திருக்கோயிலைச் சுற்றி இருபத்தி நான்கு தீர்த்தங்கள் இருப்பதாக ஐதீகம். அவை காயத்ரீ மந்திரத்தின் இருபத்திநான்கு எழுத்துக்களையும் குறிப்பிடு வதாகக் கருதப்படுகிறது.
மலைச்சுற்று எனப்படும் மூன்றாவது பிராகாரம் கோவிலுக்கு வெளிப்பக்கம் கடற்கரை ஓரமாகச் செல்லுகின்றது. இப்பிராகாரத்தின் வடபாகத்திற்குன்றைக் குடைந்து அமைக்கப்பட்ட வள்ளியம்மன் ஆலயம் உண்டு. வடக்குக் கோபுரத்தையடுத்து வெளிச்சுற்று வட மேற்கு மூலையில் தேர் போலமைந்த முருகன் கோயிலிலே மயில் வாகனத்தில் ஆறுமுகமும் பன்னிரு கையும் கொண்டு இரு மருங்கும் தேவியர் அமைய முருகப் பெருமான் வீற்றிருக்கிறார். சிற்ப வேலைப்பாடு மிக்க தூண்களையுடைய இரண்டாவது பிராகாரத்திற் பல சந்நிதிகளுள்ளன. கர்ப்பக் கிருகத்தைச் சுற்றியுள்ள முதற் பிரகாரத்திலும் பல சந்நிதிகளுண்டு. மூலவர் நின்ற திருக் கோலத்தில் ஒரு முகமும் அபயம், வரதம், பூ, செபமாலை ஏந்திய நான்கு கைகளுடன் கிழக்கு நோக்கிக் காட்சி தருகிறார். உற்சவர் ஆறுமுக நயினார் ஆறு திருமுகமும் பன்னிரு திருக்கரமும் கொண்டு தெற்கு நோக்கி அமர்ந்துள்ளார். மூலவருக்குப் பின்னால் வடமேற்கு மூலையில் பஞ்சலிங்க மூர்த்திகள் எழுந்தருளியுள்ளார்கள். மூலவருக்குத் தீபாராதனை செய்துவிட்டு பஞ்சலிங்க மூர்த்திகளுக்குக் காண்பிக்கும் வழக்கம் இன்றும் உண்டு.
பன்னீரிலை விபூதிப்பிரசாதமும் சந்தனமும் இத்தலத்திலே பிரசித்தமானவை. ஆவணியிலும் மாசியிலும் முருகனுக்குச் சிறப்பான விழாக்கள் நடைபெறும். அவற்றுள் ஏழாந்திருவிழா மிகவும் சிறந்தது. அன்றுதான் ஆறுமுகநயினார் திருவுலாக் கொண்டருளுவார் வைகாசி விசாகத்திலும் ஐப்பசி கந்தசட்டியிலும் நோன்பு இங்கு விசேடமாக அமையும்.
கோயிலுக்குத் தெற்கே கடலோரத்தில் நாழிக்கிணறு எனப்படும் புண்ணிய தீர்த்தத்தில் மூழ்கி ஆதிசங்கரர் நோய் நீங்கி பூரீசுப்பிரமண்ய புஜங்கம் பாடினார் என்பர். குமரகுருபரர்
ஊமைத்தன்மை நீங்கக் கந்தர் கலிவெண்பா பாடிய தலம் இதுவாகும்.
இந்துக்கலைக்களஞ்சியம்

Page 301
இத்தலத்திற்கு ஏராளமான பிரபந்தங்கள் தமிழிலே உள. திருச்செந்தூர் வென்றிமாலைக் கவிராசர் பதினேழாம் நூற்றாண்டில் திருச்செந்தூர்ப் புராணம் பாடியுள்ளார். முகவூர் ரா, அருணாசலக்கவிராயர் அதனைத் தழுவித் திருச்செந்தூர்த் தலபுராண வசனம் எழுதியுள்ளார். திருச்செந்தினி ரோட்டக யமகவந்தாதி (துறைமங்கலம் சிவப்பிரகாசர்), (உடுப்பிட்டி சிவசம்புப்பலவர்), (இராமசாமிசிவன்), திருச்செந்தில் திருக்கத்தாதி (சிவசம்புப் புலவர்), திருச்செந்தில் திரிபந்தாதி (கொட்டாம்பட்டி கருப்பையா பாவலர்), திருச்செந்தில் பதிற்றுப் பத்பத்தந்தாதி (தா. மாணிக்கவாசகம்பிள்ளை), செந்திலந்தாதி (பாளையங் கோட்டை குற்றாலலிங்கம்பிள்ளை), செந்தில் குமரேசர் அந்தாதி (சுப்பிரமணியபிள்ளை), திருச்செந்தூர் பிள்ளைத் தமிழ் (பகழிக் கூத்தர்), திருச்செந்திற் கலம்பகம் (சுவாமி நாத தேசிகர்), திருச்செந்தூர்க் கோவை, திருச்செந்தூர்த் திருப்புகழ் (தண்டபாணி சுவாமிகள்) முதலியன அலைவாய் முருகனைப் போற்றும் சில பிரபந்தங்களாம்.(பொழ,)
திரு அவளிவனல்லூர்
தஞ்சாவூர் - நாகூர் இருப்புப்பாதையில் சாலிய மங்கலம் இருப்பு நிலையத்திலிருந்து வடகிழக்கே ஆறரை மைல் தொலைவில் உள்ள திருத்தலமிது. கோயில் வெண்ணி இருப்புப்பாதை நிலையத்திலிருந்தும் செல்லலாம்.
இங்கு எழுந்தருளிய சிவபிரானுக்குத் தம்பரிசுடையார், சாட்சிநாதர் என்றும் இறைவிக்குச் செளந்தரியவல்லி என்றும் பேர். தீர்த்தம் சந்திரபுட்கரணி, தலவிருட்சம் பாதிரி.
வராகமூர்த்தியும் காசியப்பமுனிவரும் வழிபட்டுப் பேறு பெற்ற தலம். தன்மனைவியை விடுத்து அவள் தங்கையைத் தம் மனைவியென வாதிட்ட கணவனுக்கு, அவன் மனைவியாகிய அவள் தான் சுட்டும் இவள் என்று காட்டியதால், நல்லூர், அவள் இவள் நல்லூர் என்று பெயர் பெற்றதாம். இக்கதை கர்ப்பக்கிருகத்தின் பின் பக்கத்தில் செதுக்கப்பட்டிருக்கின்றது என்பர்.
இத்திருக்கோயிலுக்குச் சம்பந்தர் திருப்பதிகம் ஒன்றும் அப்பர் திருப்பதிகம் ஒன்றுமாக இருபதிகமுள (3.82, 459).( பொ. பூ)
திரு அவிநாசி
அவிநாசி என வழங்கும் திருத்தலம் திருப்புக்கொளியூர் என முன்பு வழங்கியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள இத்
திருத்தலத்தில் எழுந்தருளியுள்ள சிவபிரானுக்கு அவிநாசியப்பர் என்றும் இறைவிக்குக் கருணாம்பிகை என்றும் பேர்.
இத் தலத்திற்குச் சுந்தரர் பாடிய திருப்பதிகம் ஒன்றுண்டு (792). இளையான்கவிராயர் அவிநாசி தலபுராணம் பாடியுள்ளார். கருணாம்பிகை சதகம், கருணாம்பிகை பிள்ளைத் தமிழ்,
இந்துக்கலைக்களஞ்சியம்

அவிநாசியமகவந்தாதி, அவிநாசியுலா முதலிய பிரபந்தங்களும் உள்ளன.
திருப்பூர் இரயில்வே நிலையத்திற்கு வடக்கே எட்டு மைல் தொலைவில் உள்ளது.
சுந்தரர் முதலை வாயினின்றும் பிள்ளையை மீட்டுக் கொடுத்து அருளியதலம். மடுவின் பெயர் தாமரைக்குளம். இதன் கரையில் சுந்தரர் கோயிலில் முதலைவாய்ப்பிள்ளை எழுந்த கற்சித்திரம் உள்ளது. இவ்வரலாறு ஹரதத்தரால் புகழப்பட்டது. சிறுவன் முதலை வாயினுள் புகுந்த ஊர் புக்கொளியூர். அவிநாசி - அழிவு இல்லாதது. சுந்தரர் பாடிய தலம்.
சுவாமி அவிநாசி ஈசுவரர்.
அம்பிகை கருணாம்பிகை
விருட்சம் : பாதிரி. (பொ.பூ)
திரு அழுந்துர்
தஞ்சாவூர் மாவட்டத்தில் மாயூரம் தாலுகாவிலுள்ளது திருவழுத்தூர் எனும் திருத்தலம். அழுந்தூர் என்றும் (அகநா. 246), அழுந்தை என்றும் (அகநா. 196) பண்டைய பாடல்கள் குறிப்பிடுவன. தேரழுந்தூர் என்று தற்போது வழங்கப் படுகின்றது. இதற்கேற்ப ஒரு கதையும் கூறப்படும். அகத்திய முனிவர் கீழே இறைவரைப் பூசித்திருந்ததை அறியாது ஊர்த்துவரதன் எனும் அரசன் வானிலே செலுத்திய தேர் செல்லாது அழுத்தியதால் வந்த பேர் என்பர்.
இது மாயூரம் - கும்பகோணம் இருப்புப் பாதையிலுள்ள தேரழுந்தூர் நிலையத்திற்குத் தெற்கே சிறிது தூரத்திலுள்ளது.
இங்கெழுந்தருளிய சிவபிரானுக்கு வேதபுரீசுவரர் என்றும் இறைவிக்குச் செளந்தரியாம்பிகை என்றும் பேர். தீர்த்தம் வேததீர்த்தம், வேதங்கள், தேவர்கள், திக்குப்பாலகர், முனிவர்கள் பூசித்துப் பேறு பெற்ற தலம். கம்பன்மேடு இவ்வூரிலேயே அமைந்துள்ளது.
இத்தலத்திற்குச் சம்பந்தர் பாடிய திருப்பதிகம் ஒன்றுண்டு (2.20)
சிவாலயத்தில் தனியே இருக்கும் மகா மடேசுவரர் என்ற மூர்த்தி தீர்த்தத்தின் அதிஷ்டான தெய்வமென்று பெரியவர்கள் சொல்லுவார்கள், "அழுந்தை மாமறையோர் வழிபாடு செய் மாமட மன்னினையே’ என்ற தேவாரப்பகுதியால் திருஞான சம்பந்தராற் பாடப்பெற்ற மூர்த்தி இந்த மகாமடேசுவரராகத்தான் இருக்க வேண்டும். இங்கே முற்காலத்தில் வேதகோஷம் நிரம்பியிருந்ததால் வேதபுரி என்ற பெயர் இவ்வூருக்கு அமைந்தது பொருத்தமாகும்.
255

Page 302
கோயிலுக்கு வடபால் பூரீமட தீர்த்தம் என்று ஒரு குள இருக்கிறது. இந்த லிங்கம்தான் ஆதியில் உள்ளதென்று சொல்லுகிறார்கள். கோயிலுக்கு வடபுறம் சிறிது தூரத்தி கடகடம்பைக்குளம் என்கிறார்கள். அதற்கு மேற்பால் ஒ( சிவாலயம் இருந்ததாயும் அதற்குக் கடம்பவனம் என்று பெய என்றும் ஜீரணமாய்ப் போய்விட்டபடியால் அதிலிருந்து கடம்பனேசுவரர் என்னும் லிங்கத்தைக் கோயிலில் கொண்டுவந்து வைத்து விட்டதாகக் கேள்வி என்றும் சொல்லுகிறார்கள் கோயிலிருந்த இடம் இப்பொழுது நன்செய் நிலமாக இருக்கிறது இந்த அடையாளம் ஒன்றும் தெரியவில்லை. -
வேதபுரீசுவரர் கோயில் தெற்குப் பிராகாரத்தில் அம்பிை இன்றி மூன்று லிங்கங்கள் மட்டும் உள்ளன. கடம்பனேசுரா ருத்ரபதீசர், கைலாசநாதர் என்று பெயர்கள் வழங்குகின்றன.
கடம்பனேசுவரர் போல மற்ற இரண்டு லிங்கங்களுக்கு ஆலயமிருந்து ஜீரணமாய் விட்டதென்று தெரிகிறது.
கடகடம்பையில் விசேஷ காலங்களில் வைதீகர்கள் கதம்பவன தீர்த்தமென்று சங்கற்பம் செய்து நீராடுவதாக தெரிகின்றது.
திருவழுந்தூரில் விஷ்ணு திருக்கோயிலுமுண்டு ஆமருவியப்பன் நின்ற திருக்கோலத்திற் செங்கம6 வல்லியுடன் அருள்புரிகிறார். இவ்விஷ்ணு கோயில் திருமங்கையாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்டது (பெரிய திருமொழி, 7, 5, 7.6, 7.7, 7.8, 10.1, 7 திருநெடுந்தாண்டகம் 15, 26; சிறியதிருமடல், 72; பெரிய திருமடல், 123). (67UI.44. ó: 2. 65)/, éT.,
திரு அறையணி கல்லூர்
இவ்வூர் திருக்கோவலூர் இரயில்வே ஸ்டேஷனுக்கு அருகிலுள்ளது. அறகண்ட நல்லூர் என்று வழங்கப்படுகிறது இங்கே சம்பந்த சுவாமிகளுடைய திருப்பாதம் இருக்கிறது இவ்வூரில் ஒரிடத்தில் வெட்டிய காலத்தில் சில உற்ச6 விக்கிரகங்கள் கிடைத்தனவாம். சுவாமி பெயர் : ஒப்பில்லா ஈசுவரர், ஒப்பில்லாத நயினார். அம்பிகை பெயர் : செளந்தரிப கனகாம்பிகை என்று வடமொழியிலும் அழகிய பொன்னம்ை என்று தமிழிலும் வழங்கும். தீர்த்தம் பீமதீர்த்தம்.
இங்கேயுள்ள சாசனத்தில் ஒப்பொருவரும் இலா ஆளுடையார் என்ற பகுதி ஒன்று இருக்கிறது. “பூமாது விளங்க எனத் தொடங்கும் சாசனம் ஒன்றும் வேறுபல சாசனங்களு இருக்கின்றன.
கோயிலுக்குப் பின்னே பெண்ணையாறு ஒடுகிறது. கோயில் குன்றின்மேல் அமைந்துள்ளது. பஞ்சபாண்டவர் படுக்கை என்
ஓரிடம் இருக்கிறது.
256

o
கற்பாறையில் குடையப் பெற்ற குகைக்கோயில் வேறொன்றுள்ளது. மலைமேல் வலம் வரும்போது ஒரிடத்தில் நின்று பார்த்தால் அண்ணாமலை நன்கு தெரியும். சம்பந்தர் இங்கிருந்தே 'உண்ணாமலை உமையாளொடும்” எனத் தொடங்கும் பதிகம் பாடினார்.
மேற்குப் பார்த்த சந்நிதி. சுவரில் விநாயகர் உருவம் இருக்கிறது. அம்பிகைக்கு அரைமுடிசார்த்திப் பார்க்கும் இடம். சம்பந்தர் பாடல்பெற்ற தலம்.
அறையணி நல்லூர் அறையணிநாயகர் நறைகமழ் திருவரு னாயகி யாறணி
பீடினாற்பெரியோர்களும் பேதைமைகெடத்திதிலா வீடினாலுயர்ந்தார்களும் வீடிலாரிள வெண்மதி குடினார்மறை பாடினார் சுடலைநீறணிந்தாரழல் ஆடினார்.அறையணிநல்லூர்,அங்கையால்தொழுவார்களே. திருஞா. 2-ம் திரு. ( உ. வே. சா.)
திருஅன்பின்
திருச்சியிலிருந்து லால்குடி வழியாக அன்பில் 25 கி. மீ. தொலைவில் உள்ளது. இவ்வூருக்கு அருகில் காவிரி, சரசுவதி, பங்குனி என மூன்று ஆறுகளும் ஒன்று சேர்வதால் முக்கூடல் என்ற சிறப்பையும் பெற்றுள்ளது. இவ்வூர் மேல்அன்பில், கீழ் அன்பில் என இரு பகுதிகளாக விளங்குகிறது. சமய இலக்கியங்களில் அன்பிலாந்துறை எனப் புகழ்பெற்ற இவ்வூரில் பாடல்பெற்ற சிவத்தலமும் ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட வைணவ தலமும் உள்ளன.
அருள்மிகு சத்திய வாகீசர் கோயில் அல்லது
அன்பிலாந்துறை
இறைவன் - சத்தியவாகீசர் இறைவி செளந்தர நாயகி தலமரம் - ஆல் தீர்த்தம் - காவிரி, சந்திர தீர்த்தம்
முதல் பராந்தக சோழன் காலத்தைய கோயில்; திருஞானசம்பந்தராற் பாடப் பெற்றது.
"கடியார் மலரும் புனல் தூவி நின்றேத்தும் அடியார் தொழும் அன்பிலாந்துறையே’
எனப் போற்றிப் பரவுகிறார் திருஞானசம்பந்தர். கோயில் மதில்களாற் சூழப்பட்டது. கிழக்குப் பகுதியில் ஐந்து நிலை இராஜகோபுரம் உள்ளது. அடுத்து பரந்த முன் வெளி; இரண்டாவது வாயிலைக் கடந்ததும் இரண்டாம் திருச்சுற்றின் முகப்பு, கொடிமரம், பலிபீடம், நந்தி உள்ளன. திருச்சுற்று
இந்துக்கலைக்களஞ்சியம்

Page 303


Page 304
qi@sossáhlog qif)ri-impson qıfluss@șútnomussuriloj
 
 


Page 305


Page 306
தெற்குக் கோபுரம் - முன்னால் ெ
 
 

தரிவது குலசேகரப் பாண்டியன் சிலை

Page 307
ஆலவாய்க் கோபுரம் ஒன்றின் உச்
 


Page 308
கோபுர
 

ச் சிற்பங்கள்

Page 309


Page 310
ரா மற90 பிர்டிஓவிதி
 
 


Page 311

மண்டபத் தூண்கள்

Page 312


Page 313
தேர்க்காலில் மனுநீதி கண்ட சோழனின் மகன்
 
 

நத பசு
இழ
量
巴 cm 础 历

Page 314


Page 315
முழுவதும் திருமாளிகைப் பக்தி மண்டபங்கள் முற்றுப்பெறாத நிலையில் உள்ளன. ஒரு மண்டபத்தில் கோயில் எழுப்பப்பட்டுள்ளது. கருவறையில் சுவாமி இலிங்கத் திருமேனியில் காட்சி தருகிறார். கருவறையைச் சுற்றியுள்ள உண்ணாழியில் கன்னி மூலையில் செவிசாய்த்த விநாயகர் சந்நிதியுள்ளது. திருஞானசம்பந்தர் கொள்ளிடத்தின் அக்கரையில் நின்று வாகீசப் பெருமானைப் போற்றிப் பாடிய பாடல்களைக் கேட்குமாறு தந்தையார் பணிக்க, பிள்ளையார் ஒருபுறம் செவியைச் சாய்த்து அதை உற்றுக் கேட்பது போல அமர்ந்துள்ளார். திருஞானசம்பந்தரின் திருப்பாடல்களின் வாயிலாக அக்காலத்தில் இவ்வூரில் மறையுணர்ந்த அந்தணர் பலர் வாழ்ந்திருந்தனர் என அறிய முடிகின்றது. சாமவேத கானத்தை விரும்பிக் கேட்பதற்காக பிள்ளையார் இவ்வாறு அமர்ந்துள்ளார் எனவும் கூறுவர். சிவாலயப் பரிவாரக் கடவுளர்கள் (அறுபத்துமூவர் நீங்கலாக) அனைவரும் இடம்பெற்றுள்ளனர். சுவாமி சந்நிதிக்கு இடப்புறம் அம்மன் கோயில்உள்ளது. மண்டபத்தூண்களில் அழகிய பல சிற்பங்கள் காணப்படுகின்றன.
இரு நேர வழிபாடுகள் நடைபெறுகின்றன. இத் தலம் தொடர்பான பதிகங்கள்;
"வானம் சேர் மதி குடிய மைந்தனை நீ நெஞ்சே கெடுவாய் நினைகிற்கிலை ஆனஞ் சாடியை அன்பிலாந்துறைக் கோன் என் செல்வனைக் கூறிடக்கிற்றியே’
(திருநாவுக்கரசர்)
பிறையும் அரவும் உறவைத் (த) முடி மேல் நறை உண்டு எழு வன்னியும் மன்னு சடையார் மறையும் பல வேதியர் ஒத ஒலி சென்று உறையும் புனல் அன்பில் ஆலந்துறையாரே
(திருஞானசம்பந்தர்)
திருமால் கோயில்
நூற்றியெட்டு வைணவத் திருப்பதிகளில் ஒன்றாக திரு அன்பில் தலம் அமைகின்றது. இங்குள்ள மூலவரான வடிவழகிய நம்பி, கிடந்த கோலத்தில் புஜங்க சயனராக கிழக்கு முகம் நோக்கியபடி காட்சி தருகின்றார். வால்மீகி முனிவர், பிரம்மா ஆகியோருக்குப் பிரதியட்சமானவர். தாயார் அழகிய வல்லி நாச்சியார் ஆவார். திருமழிசையாழ்வார் ஒரு பாசுரத்தால் மங்களாசாசனம் செய்துள்ளார். நான்முகன் திருவந்தாதி 36 ஆம் பாடல் ஒன்றில்தான் இத்தலம் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இக் கோயிலில் உள்ள கல்வெட்டுக்கள் பல ஆராய்ச்சிக்குரியவை.
அன்பில் கிராமத்தில் சிறிது காலத்திற்கு முன் சில செப்பேடுகள் எடுக்கப்பட்டன. அவை இரண்டாம் பராந்தக சோழன் என்ற சுந்தரசோழன் காலத்தவை. அன்பிலில் குடியிருந்த அந்தண அதிகாரிக்கு அரசன் கொடுத்த கொடையை அந்தச் செப்பேடுகள் குறிக்கின்றன. அந்த அதிகாரியும் அவன்
இந்துக்கலைக்களஞ்சியம்

முன்னோர்களும் இவ் ஆலயத்துக்கு அளித்த நன்கொடைகளையும் அச் செப்பேடு குறிப்பிடுகின்றது. அந்தச் செப்பேட்டில் உள்ள வடமொழிச் சுலோகத்தின் ஆசிரியனது குருநாதர் பூரீநாதர் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பூரீநாதரே நாதமுனிகள் என்னும் வைணவ முதலாசாரியார் என்கிறார்கள். சிவ விஷ்ணு ஆலயங்களில் உள்ள கல்வெட்டுக்களில் ஆலயங்களுக்கு அளிக்கப்பட்ட நிவந்தங்களைப் பற்றிக் குறப்பிடப்பட்டுள்ளன.
உலகங்கள் அனைத்தையும் படைப்பவர் பிரம்மா ஆவார். வால்மீகிமுனிவர் பாவ விமோசனத்துக்காக மாபெரும் காப்பியமான இராமாயணத்தைப் படைத்தவர். இவர்கள் இரண்டு பேருமே தங்கள் படைப்புக்களை பெருமானின் திருவடிவம் மற்றும் கல்யாண குணங்களை அடிப்படையாகக் கொண்டே படைத்திட்டனர். இவர்கள் இருவருமே அன்பின் பின்னணியில் தான் தத்தம் தொழில்களைச் செவ்வனே செய்தனர். அதன் காரணமாக இத்தலம் அன்பில் என்ற பெயரினைப் பெற்றது என்பர். படைப்பாளர்களாகிய இவ்விருவரின் பார்வைக்கு பெருமானும் தாயாரும் அழகுள்ளவர்களாக - வடிவழகிய நம்பியாகவும் அழகிய வல்லி நாச்சியாராகவும் உருவெடுத்து இத்தலத்தில் சேவை செய்தனர்.
இக்கோயிலின் தீர்த்தம் மண்டூக புஷ்கரணி, கொள்ளிடம் ஆகியவை ஆகும். இக் கோயிலின் விமானம் தாரக விமான அம்சத்துடன் காணப்படுகின்றது. இத் தலம் பற்றி பிள்ளைப் பெருமாள் ஐயங்கார் பாடிய பாடல் மேல் வருமாறு அமைகின்றது.
போற்றி செய் ஒர் குடைக்கீழ் பொன்னாடும் இந்நாடும் நாற்றிசையும் ஆண்டாலும் நன்கில்லை - தோற்றமிலா எந்தையன்பில் ஆதி இணைந்தாமரை அடிக்கே சிந்தை அன்பிலாதார் சிலர்
108 திருப்பதி திருப்புகழில் இத்தலம் பின்வருமாறு கூறப்படுகின்றது.
அந்தணர் சந்தி செய்யும் திருமண்டப முன்றிலும் வண்டு உறையும் சின்னபம்ப அரும்பு கரும்பு குருத்து செருத்து உயிர் பொழிலூடு அம்புலி வந்து தவழ்ந்தென ருவன்சுரி சங்கு தவழ்ந்து உமிழும் தரளம் திகழ் அன்பில் வளம் பதியங்கள் வளர்ந்தருள் பெருமாளே
என இத்தலத்தின் மேன்மையைச் சிறப்பிக்கிறார் குருவை இராமானுதாசர். (தே. ஹ.)
திரு ஆச்சாபுரம்
திரு நல்லூர்ப் பெருமணம் எனும் சம்பந்தர் தேவாரம் பெற்ற திருத்தலம், ஆச்சாபுரம் என்றும் ஆச்சார்யர்கள் புரம் என்றும் இன்று வழங்கப் பெறுகின்றது. பிரமதேவன் அழைத்ததால்
257

Page 316
நல்லூர் ஆகிய தலம், சம்பந்தப் பெருமான் திருமணத்தால் நல்லூர்ப் பெருமணமாயிற்று.
தஞ்சை மாவட்டத்திற் சிதம்பரம் மாயூரம் இருப்புப் பாதையிற் கொள்ளிடம் இருப்புப் பாதை நிலையத்திற்குக் கிழக்கே மூன்று மைல் தொலைவில் உள்ளது திருநல்லூர்ப் பெருமணம்.
இங்கு எழுந்தருளிய சிவபிரானுக்குச் சிவலோகத்தியாகர் என்றும் இறைவிக்குத் திருவெண்ணிற்று உமையம்மை என்றும் பேர். பஞ்சாக்கரத்தீர்த்தம் முதலிய தீர்த்தங்களுண்டு.
சம்பந்தப் பெருமானும் மனைவியாரும் திருநீலநக்கர், முருகர், திருநீலகண்ட யாழ்ப்பாணர், திருமணத்திற்கு வந்தோர் முதலியோரும் நமச்சிவாயப் பதிகத்தை ஒதிக் கொண்டு சோதியிற் கலந்த தலமிது என்பது ஐதீகம்.
இத்தலத்திற்குச் சம்பந்தர் பாடிய திருப்பதிகம் ஒன்றுள்ளது (3.125). கொட்டையூர் சிவக்கொழுந்து தேசிகர் பாடிய ஆச்சாபுரத் தலபுராணம் உண்டு. ) هPLل/T. LJ .ز
திரு ஆதனூர்
என்னை மனங்கவர்ந்த ஈசனை - வானவர்தம்
முன்னவனை மூழிக் களத்து விளக்கினை
அன்னவனை ஆதனூர் ஆண்டளக்கும் ஐயனை
(திருமங்கையாழ்வார்-பெரியதிருமடல் 129-30)
பெருமாள் புஜங்க சயனராகக் காட்சியளிக்கும் தலங்களுள் ஆதனூரும் ஒன்று. இத் திருத்தலம் தஞ்சை மாவட்டம் சுவாமி மலையிலிருந்து மூன்று கி. மீ. தொலைவில் அமைந்துள்ளது. கும்பகோணத்திலிருந்து சுவாமிமலை வழியாக இத் தலத்தைச் சென்றடையலாம். அமைதியான சூழலில் அமைந்துள்ள ஆலயத்தின் முகப்பில் அழகிய சிறு கோபுரம் அணி செய்கிறது. கருவறையில் திருமால் புஜங்கசயனராகப் பள்ளி கொண்டுள்ளார். கிழக்கே திருமுக மண்டலம் கொண்டுள்ள இப்பெருமானின் பாதாரவிந்தங்களில் காமதேனுவும் திருமங்கையாழ்வாரும் உள்ளனர். பெருமானின் திருமுகத்தருகே ஒரு மரக்கால் இடம்பெற்றுள்ளது. கையில் எழுத்தாணியை இப் பெருமான் கொண்டுள்ளார்.
பள்ளிகொண்ட பெருமானின் திருநாமம் ஆண்டளக்கும் ஐயன் என்பதாகும். வேதங்களில் கூறப்படுவது போலவே திருமால் சர்வகாலங்களையும் அளந்தபின் இங்கு சயனித்துள்ளதாக நம்பப்படுகின்றது. கால தத்துவத்தை திருமால் தமது ஆட்சியிலே கொண்டுள்ளதை குறிப்பதற்காகப் பெருமாளுக்கு அருகே மரக்கால் உள்ளதாகக் கூறுகின்றனர். வழிப்பறி செய்து பெற்ற செல்வத்தைக் கொண்டே ஆலி நாடன் என்னும் திருமங்கை மன்னன் திருவரங்கத்தின் மதிலைக் கட்டினான். இறைவனும்,
258

திருப்பணி செய்தே தன் அனைத்துச் செல்வத்தையும் இழந்து விட்டதாக அம்மன்னன் வருத்தமுற்றான். அம்மன்னன் முன்பு தோன்றிய திருமாலும் "எனக்கு தொண்டாற்றியவர்கள் அனைவரும் பொருள் அடைந்தனரேயன்றி எவரும் செல்வத்தை இழந்ததில்லை” எனக் கூறியவராய் ஒரு மரக்காலை திருமங்கை மன்னனிடம் அளித்தாராம். அதில் மண்ணை அளந்தாலும் பொன்னாக மாறியதாம். இதனால் ஆண்டளக்கும் ஐயன் என்ற
பெயர் இறைவனுக்கு ஏற்பட்டதாகவும் ஒரு கருத்து உள்ளது.
சிவபெருமானே மரக்கால் உருவில் திருமாலுக்கருகே இருப்பதாகவும் ஒரு ஐதீகம் இங்கு உண்டு. இப் பகுதியில் கடும் வறட்சி ஏற்பட்டு மக்கள் பசிப்பிணியால் தவித்தபோது சிவபெருமானே மாற்றுருவிலே தோன்றி மக்களுக்கு நெல்லை மரக்காலால் அளந்து வழங்கினாராம்.
இங்குள்ள உற்சவரான ரங்கநாதன் பேரெழில் மிக்கவர். ஆலயத்தில் உட்புறத்தில் ஜியர் சுவாமிகள் திருவுருவங்கள், வண்ண ஒவியங்களாகக் காட்சியளிக்கின்றன. மற்றொரு அற்புத ஒவியம் அமரர்கள் இருமருங்கும் சூழத் தோன்றும் இலட்சுமி நாராயணனின் எழிலுருவத்தைச் சித்திரிக்கின்றது. இரங்கநாயகி எனும் திருநாமத்தை உடைய தாயார் தனிச் சந்நிதியில் அமர்ந்து அருள்புரிகின்றார்.
இத் தலத்திற்கு ஆதனூர் என்னும் பெயர் ஏற்பட்டமைக்கான காரணங்களாகப் பல கூறப்படுகின்றன. நினைத்த வண்ணம் செல்வத்தை வாரிவழங்கும் வல்லமை பெற்றிருந்த காமதேனுவை விதிவசத்தால் ஆணவம் பற்றியது. திருமால் இப்பதியில் காமதேனுவின் செருக்கை அடக்கி நல்லருள் புரிந்தார். இதற்கு ஏற்ப காமதேனுவும், அவளது சகோதரியான நந்தினியும் இக் கோயிலில் சிவரூபங்களாக இடம்பெற்றுள்ளனர். காமதேனுவாகிய பசு இங்கு நாராயணப் பெருமானை வழிபட்டு பேறுபெற்றதால் இவ்வூருக்கு ஆதனூர் என்ற பெயர் ஏற்பட்டதாகும். (ஆ- (பசு) + தன் + ஊர்) இப்பகுதியில் அரசாண்டு வந்த ஆதன் என்னும் குறுநில மன்னன் மகாவிஷ்ணுவின் அருளால் தனது எதிரிகளை முறியடித்தான். அம்மன்னனே நன்றி க்காணிக்கையாக இக் கோயிலை எழுப்பினார். ஆதன் பெயரால் இவ்வூர் ஆதனூர் என்று வழங்கப்பட்டதாக மற்றுமொரு கருத்துமுண்டு. மாயவனான எம் பெருமான் தனது தீட்சண்யமான பார்வையில் இருந்து எந்த ஒரு அணுவின் இயக்கமும் தப்பிவிடாதபடி பார்த்து பதிவேட்டில் பதிந்து கணக்குப் பார்த்து படியளந்திடுவதால் ஆதவனாகிய எம் பெருமான் உறையும் ஊர் ஆதனூர் என்றானது என்றும் கூறுகின்றார்கள்.
ஆதனூர் பற்றிய குறிப்பு பிரமாண்ட புராணம், பிரம்ம நாரதீய புராணம் ஆகியவற்றிற் காணப்படுகின்றது என்பர்.
ஆதியில் பிருகு முனிவர் இங்கு இறைவனை பிரதிஷ்டை செய்து வழிபட்டாராம். பூமாதேவியும் இத் தலத்தில் திருமாலைப்
இந்துக்கலைக்களஞ்சியம்

Page 317
பூசித்து காரியசித்தி பெற்றாள். மூலவர் சந்நிதிக்கு மேலுள்ள விமானம் பிரணவ விமானம் என அழைக்கப்படுகின்றது. பாடலிமரமே இங்கு தல விருட்சமாகவும், சூரிய புஷ்கரணியே இங்கு புண்ணிய தீர்த்தமாகவும் போற்றப்படுகின்றன.
இத்தலத்தில் அக்னிபகவான் சாபவிமோசனம் பெற்றார். இதற்கேற்ப ஐயனின் திருவடிகளுக்கருகே அக்னி பகவானின் உருவம் இடம்பெற்றுள்ளது. அக்னிபகவானுக்கு ஒரு மண்டலம் சகஸ்ரநாம அர்ச்சனை செய்வதால் சகல தோஷங்களும் நீங்கும் என நம்பப்படுகின்றது. ஸ்வாபி, ஸ்வதா என்னும் இரு தலைகளையும் ஏழு நாக்குகளையும் கொண்டு இருகரங்களில் கொடி, சாமரம் ஆகியவற்றை ஏந்தியுள்ளார். மற்ற இரு கரங்கள் அபயஹஸ்த, ஸ்வஸ்திக ஹஸ்த முத்திரைகளைத் தாங்கியுள்ளன. அவருக்கு ஆகவனியம், தட்சிணாக்கினி, கார்ஹபத்யம் ஆகிய மூன்று திருவடிகள் உள்ளன. இவ்வாறு அக்னி பகவான் கோலம் கொண்டுள்ளதால் அனைத்துத் தேவர்களும் இங்கு எழுந்தருளியிருப்பதாக ஐதீகம் உண்டு. திருவரங்கத்திற்கு இணையாக இவ்வாலயமும் உபய காவிரி தீரத்தில் அமைந்துள்ளது. ஆதனூரே ஆதியரங்கம். ஆகையால் ஆண்டளக்கும் ஐயனே மூத்தவராகவும் திருமலை திருவேற்கடவனும், தேரெழுந்தூர் ஆமருவியப்பனும் இவரது இளைய சகோதரர்களாகவும் கருதப்படுகின்றனர். பன்னிரு ஆழ்வார்களுள் திருமங்கையாழ்வார்
மட்டுமே இப் பெருமாளை மங்களாசனம் செய்துள்ளார்.
இத்தலமானது கர்மாவின் பலாபலன்களின் தத்துவத்தை விளக்கிடும் தலமாக விளங்குகின்றது. இத் தலத்தில் குடிகொண்டுள்ள பெருமாளுக்கு படியளக்கும் பரம தயாளன் என்ற சிறப்பு பெயரும் உண்டு. (தே. ஹ.)
திரு ஆப்பனூர்
தற்பொழுது ஆப்புடையார் கோயில் எனப்படும் திரு
ஆப்பனூர், மதுரை மாவட்டத்தில் மதுரை இருப்புப்பாதை நிலையத்திற்கு வடகிழக்கே ஒரு மைல் தொலைவிலுள்ளது.
சோழாந்தகன் எனும் பாண்டியன் பொருட்டுச் சிவபிரான் ஆப்பினிடத்துத் தோன்றியதால் ஆப்பனூர் எனப் பெயர் வந்தது என்டர். இங்கு எழுந்தருளிய சிவபிரானுக்கு ஆப்பனூர்க்காரணர், ஆப்பானூரீசுரர், திருவாப்புடையார் என்றும் இறைவிக்கு அம்பிகையம்மை, குரவங்கமழ் குழலம்மை என்றும் பேர் தீர்த்தம் இடபதிர்த்தம்.
திருஞானசம்பந்தர் பாடிய திருப்பதிகம் ஒன்று (1.88) இத்தலத்திற்குண்டு. பதினேழாம் நூற்றாண்டில் வாழ்ந்த திருப்பூவணம் கந்தசாமிப் புலவர் ஆப்பனூர்ப் புராணம் பாடியுள்ளார். அது செளமிய வருடம் (1909-1910) பதிப்பிக்கப்பட்டது. (67/7. 4)
இந்துக்கலைக்களஞ்சியம்

திருஆப்பாடி
இத்தலம் ஆடுதுறை இரயில்வே நிலையத்திற்கு அருகில் இருக்கிறது. திருப்பனந்தாளுக்குத் தென்மேற்கே ஒரு மைல் தொலைவில் இருக்கிறது. மண்ணியாற்றின் தென்கரை யிலுள்ளது.
சுவாமி : பாலுகந்தீசுவரர், கூrரபுரிநாதர், கூrரபுரீசுவரர். அம்பிகை பெரியநாயகி. தீர்த்தம் : மண்ணியாறு. விருட்சம். ஆத்தி, சண்டேச நாயனார் பூசை செய்து முக்தி பெற்ற தலம்.
இங்கிருந்த இடையன் ஒருவன் பாலைக் கறந்து வீட்டுக்குக் கொண்டுபோகும்போது, வழியில் தினந்தோறும் கால் தடுக்கிப் பால் கவிழ்ந்துகொண்டு வருதலையுணர்ந்து கையிலிருந்த கொடுவாளால் அவ்விடத்திலோச்ச, அங்கிருந்து இரத்தம் வெளிப்படக்கண்டு மனமிரங்கிப் பாலுகந்தநாதரே என்று தொழ, சுவாமி அவனுக்கு அருள் செய்த இடம். திருநாவுக்கரசர் பாடிய தலம்.
லிங்கத்தின் பக்கத்தில் சண்டேசருள்ளார். சுவாமிக்குப் பூசையானவுடன் இவருக்குப்பூசை நடக்கின்றது. வேறிடத்தில் இல்லை. மகாசிவராத்தியில்தான் இவருக்குப் பட்டம்.
கோயில் மிகப் பழையது. சுவாமியின் வடமொழி திருநாமம் கூrரபுரிநாதர், அம்பிகை, பிரகந்நாயகி. ஆத்தி பழைய மரம். பூரீ சண்டிகேசுவரர் மணலில் லிங்கம் அமைத்துப் பூசித்த தலம். ஆத்திமரத்தடியில் ஒரு சிவலிங்கம் சாய்ந்திருக்கிறது. இந்தத் தலத்தில் சண்டிகேசுவரர் இருவருளர். தேரடிப் பிள்ளையார் என்று ஒரு பிள்ளையார் இருக்கிறார். திருத்தேர்விழா நடைபெற்றதாகத் தெரிகிறது. சிவராத்திரி அமாவாசை சண்டிகேசர் முத்தியடைந்த தினம். அன்று பிரமோற்சவ தீர்த்தம். அம்பிகையின் திருவுருவம் மிகச் சிறந்த அமைப்புடையதாக இருக்கிறது. இங்கே கோப்பெருஞ் சிங்கனுடைய சாசனம் ஒன்று இருக்கிறது. இங்கே கந்த சஷ்டியில் காவடி எடுக்கும் வழக்கம் இருக்கிறது. சிவாலயத்திற்கு ஒரு வேலி நிலம் இருக்கிறது.
அர்த்த மண்டபத்துக்கும் மகாமண்டபத்துக்கும் மத்தியில் உள்ள சுவாமிக்குத் தீபாராதனை செய்தவுடன் சண்டேசருக்குத் தீபாராதனை. சண்டீசனார் திருவவதாரம் செய்து உடலுடன் சிவபெருமான் திருவடியில் வீற்றிருந்த தலம்.
பண்பாய்ப் பாடி பாலுகந் தீசர் நண்பாய்ப் பெரிய நாயகி மண்ணி (சிவ)
கடலகம் ஏழி னோடும் புவனமும் கலந்த விண்ணும் உடலகத் துயிரும் பாரும் ஒள்ளழ லாகி நின்று தடமலர்க் கந்த மாலை தண்மதி பகலு மாகி மடலவிழ் கொன்றை குடி மன்னும்ஆப் பாடி யாரே.
(திருநா. 4-ம் திரு.) (g) 6án/. áT.)
259

Page 318
திரு ஆமாத்தூர்
இத்தலம் விழுப்புரம் இரயில்வே நிலையத்திற்கு வடமேற்கில் நான்கு மைல் தொலைவில் உள்ளது. பம்பை என்னும் ஒரு சிற்றாற்றின் வடகரையில் இத்தலம் உள்ளது.
சுவாமி அபிராமேசுவரர்; அழகியநாயனார். அம்பிகை : முத்தாம்பிகை. விருட்சம் : வன்னி தீர்த்தம் : கம்பாநதி, இது சிவ சந்நிதிக்குச் சமீபத்தில் குறுக்கே ஒடுகின்றது. சந்நிதியில் அழகான படித்துறை உண்டு. சத்தியாநிர்த விவேசனி என்று ஒரு திருவட்டப் பாறையிருக்கிறது. இதனிடம் சென்று பிரமாணம் செய்வது அக்கால வழக்கம். காமதேனு பூசித்துக் கொம்பு பெற்ற இடம். இராமர் பூசித்தது. சுவாமி சந்நிதி கிழக்குமுகம். அம்பிகை சந்நிதி மேற்கு முகம். சந்நிதியின் அருகில் கம்பையாற்றின் படித்துறையுள்ளது ; பசுக்களுக்குத் தாயகமான தலம். பிருங்கிமுனிவர் சக்தியின் சாபத்தால் வன்னி மரமாகி, பிறகு அவர் சக்தியைத் துதித்துச் சாபம் நீங்கப் பெற்றார். அம்பிகை கோயிலுக்குப் பெரிய கோபுரம், ஊரின் ஒரு புறத்தில் புலவர் புராணம் பாடிய தண்டபாணி சுவாமிகள் சமாதி இருக்கிறது. தலபுராணம் அச்சிடப் பெற்றுள்ளது.
இரட்டைப் புலவர்கள் திரு ஆமாத்தூர்க் கலம்பகம் பாடி இருக்கின்றார்கள். இத்தலம் இரட்டையர்களுக்கு முன்பு தொல்காப்பியத் தேவரால் பாடப்பெற்றுள்ளது என்பது தமிழ் நாவலர் சரித்திரத்தால் தெரிகின்றது.
இத்தலப் பாசுரங்கள் சிலவற்றில் இறைவன் அழகியரே என்று அழைக்கப்படுவதற்கேற்பக் கல்வெட்டுக்களிலும் அழகிய நாயனார் என்று பெயர் காணப்படுகிறது. வடமொழியில் அபிராமேசுவரர் என்று வழங்கப்படுகிறது.
இத்தலத்தில் தேவாரங்களைப் பண்ணோடு கற்றுச் சந்நிதியில் பாடும் பொருட்டுப் பல குருடர்களுக்கு ஆகாரம் முதலியன அளித்து வரும்படி ஒரு சோழன் ஏற்பாடு செய்திருந்தான் என்னும் செய்தி சிலாசாசனங்களால் அறியப்படுகிறது.
இத்தலத்தைப் பற்றிச் சம்பந்தர் இரண்டு பதிகங்களும் நாவுக்கரசர் இரண்டு பதிகங்களும், சுந்தரர் ஒரு பதிகமும் பாடியுள்ளனர்.
திருவா மாத்தூர் சிவனழ கியநாதர் தரைசே ரிளங்கொடி சாம்பவி பம்பை சிவ.
வண்ணங்கள் தாம்பாடி வந்து நின்று வலிசெய்து
வளைகவர்ந்தார் வகையால் நம்மைக் கண்னம்பால் நின்றொய்து கனலப் பேசிக்
கடியதோர் விடையேறிக் காபாலியார் சுன்னங்கள் தாங்கொண்டு துதையப் பூசித்
தோலுடுத்து நூல்பூண்டு தோன்றத் தோன்ற அண்ணலார் போகின்றார் வந்து காணfர் அழகியரே
ஆமாத்தூர் ஐயனாரே,
திருநா. 6-ம் திரு.
26ó

துன்னம்பெய் கோவனமுந் தோலும் உடைஆடை பின்னம் சடைமேலோர் பிள்ளை மதிகுடி அன்னம்சேர்தண்காணல் ஆமாத்தூர் அம்மான்தன் பொன்னம் கழல்பரவாப் பொக்கமும் பொக்கமே,
திருஞா. 2-ம் திரு.
காண்டனன் காண்டனன் காரிகை யாள்தன் கருத்தனாய் ஆண்டனன் ஆண்டனன் ஆமாத்தூர்எம் அடிகட்காட் பூண்டனன்பூண்டனன் பொய்யன்று சொல்லுவன் கேண்மின்கள் மீண்டனன் மீண்டனன் வேதவித்தல்லாதவர்கட்கே
சுந்தரர். (2 . 6.2/.47.)
திரு ஆமாத்தூர்க் கம்ைபகம்
விழுப்புரத்திற்கு அண்மையில் மூன்று மைல் தொலைவில் வடமேற்கில் உள்ளது திருவாமாத்தூர் என்னும் திருத்தலம்; அது பசுக்கள் பூசித்துப் பரம சிவனைத் தமக்குப் பாதுகாப்பாகக் கொண்ட தலம் என்பர்; அங்கு எழுந்தருளிய சிவபிரானுக்கு அழகிய நாதர் என்றும் அம்மையாருக்கு அழகிய நாயகி என்றும் திருநாமங்கள் அமைந்துள்ளன.
ஆமாத்தூரிற் கோயில் கொண்டருளும் அழகியநாதர் மீது பாடப் பெற்றது திருவாமாத்தூர்க்கலம்பகம். காப்புச் செய்யுளும் 101 பாடலுமாகக் கலம்பகத்தில் 102 செய்யுளுள; பல திறப்பட்ட பாவாலும் பாவினத்தாலும் அகமும் புறமும் பொருந்த அம்மானை, இடைச்சியார், ஊசல், காலம், குறம், கொற்றியார், சம்பிரதம், சித்து, பாண், புயவகுப்பு, மடக்கு, மதங்கியார், மறம், யோகினியார், வலைச்சியார் முதலிய உறுப்புகள் அமையப் பாடப்பட்டுள்ளது.
திருவாமாத்தூர்க் கலம்பகத்தைப் பாடியவர் இரட்டையர் என்பவராவர்; அவர் காலம் பதினான்காம் நூற்றாண்டாகும்.
யாழ்ப்பாணம் சுழிபுரம் சிவப்பிரகாச பண்டிதர் 1883 இலே திருவாமாத்தூர்க் கலம்பகத்தைப் பதிப்பித்தனர்; திருமயிலை சே, வெ. ஜம்புலிங்கம்பிள்ளை 1891 இலே பதிப்பித்தனர். வித்துவான் த.ச. மீனாட்சிசுந்தரம்பிள்ளை பதிப்பித்ததும் துறைசையாதீன வெளியீடுமான இரட்டையர் பிரபந்தங்கள் எனும் பிரசுரத்திலும் (1953) ஆமாத்தூர்க் கலம்பகம் இடம் பெறுகின்றது. (67L/T. Lg.)
திருஆரூர்
சோழநாட்டுத் தென்கரைத் திருத்தலம். இத் தலத்தில் பிறக்க முத்தி’ என்று புகழப்படும் சிறப்பினையுடையது. பஞ்சபூதத்தலங்களில் ஒன்று. பிருதிவித்தலம். இத்தலத்திற்குரிய வேறு பெயர்கள்: ஷேத்ரவரபுரம் அந்தரகேசுரபுரம், ஆடகேசுரபுரம், வன்மீகநாதபுரம், தேவயாகபுரம், தேவாசிரியபுரம், முசுகுந்தபுரம், சமயற்காரபுரம், கலிசெலாநகரம், மூலாதாரபுரம், கமலாலயபுரம் என்பன.
இந்துக்கலைக்களஞ்சியம்

Page 319
திருஆரூர் அனைத்திற்கும் மூலாதாரமாக விளங்குகின்றது. எனவே இது திருமூலட்டானம் என சிறப்பிக்கப்படுகிறது. பூமகள் இங்கு பூஜித்தமையால் பூங்கோயில் எனவும் வழங்குவர். திருநாவுக்கரசர் இத்தலமேகி, கோயிலின் பழமையைக் கண்ணுற்று இத்தலம் தில்லைக் கோயிலுக்கு முன்னர் தோன்றியதா? அன்று பின்னரா? என ஐயப்பட்டு,
'மாடமொரு மாளிகைகள் மல்குதில்லை மணிதிகழ் அம்பலத்தே மன்னிக் கூத்தை ஆடுவான் புகுதற்கு முன்னோ பின்னோ அணி ஆரூர் கோயிலைக் கொண்ட நாளே”
என இறைவனையே வினவினார். திருஞானசம்பந்தர், அப்பர், சுந்தரர் இத் தலத்தை 34 பதிகங்களால் பாடிப் போற்றி மகிழ்ந்தனர். மாணிக்கவாசகரின் திருவாசகத்திலும் சேரமான் பெருமாள்நாயனாரின் மும்மணிக்கோவையிலும், சேக்கிழாரின் பெரிய புராணத்திலும் இத்தலம் சிறப்பிக்கப் பெற்றுள்ளது. மேலும் குமரகுருபரர் போன்ற சான்றோர்கள் இயற்றிய வடமொழி, தமிழ்மொழி நூல்கள் ஏராளமாக இத்தலத்தைப் போற்றி எழுந்துள்ளன. சங்கீத மும்மணிகள் இத்தலத்தில் பிறந்து வளர்ந்து இறைவனையும் இறைவியையும் போற்றிப் பாடிப் பரவச மடைந்துள்ளனர்.
சுந்தரர், நமிநந்தியடிகள், ஏயர்கோன் கலிக்காமர், விறன்மிண்டர், திருநீலகண்ட யாழ்ப்பாணர், கழற்சிங்கர், ஐயடிகள், காடவர்கோன் முதலிய பல நாயன்மார்களின் வாழ்க்கையிலும் இத்தலம் பின்னிப் பிணைந்துள்ளது. சுந்தரரின் திருத்தொண்டத்தொகை மலர்ந்ததும் இத்தலத்தில் தான். அனபாயச் சோழன் காலத்தில் முதல் ஏழு திருமுறைகளுடன் மற்ற திருமுறைகளையும் சேர்த்து முறைப்படுத்தி செப்பேடு செய்து வைத்ததுவும் தியாகேசர் திருமுன்பிலேதான் என்பதும் அறியக் கிடக்கிறது.
திருஆரூர் சப்த விடங்கத் தலங்களுள் முதன்மையாக விளங்குவது. இங்குள்ள சோமாஸ்கந்த மூர்த்தியே நாம் வழிபடும் தியாகராசர். அப்பர் இவரை வீதிவிடங்கன் எனப்போற்றிப் பாடியுள்ளார். இங்குள்ள சோமாஸ்கந்தர் திருமேனி காலத்தால் அனைத்திலும் முற்பட்டது.
திருஆரூர் என்றவுடன் நம் நினைவில் எழுபவை கமலாலயம், மனுநீதி சோழன், ஆழித்தேர் என்பன.
35 LID Glu) T Guo uLu LiD
ஒவ்வொரு கோயிலையும் சார்ந்து ஒரு தெப்பக்குளம் அல்லது திருக்குளம் அமைந்திருக்கும். திருஆரூரைச் சார்ந்தது கமலாலயம். இது கமலாலயம் என்ற பெயரால் ஒர் ஆலயமாகவே சிறப்பிக்கப்படுகிறது. கமலாலயம் தமிழகக் கோயில்களைச் சார்ந்த திருக்குளங்களில் மிகப் பெரியது. கோயில் ஐந்து வேலி,
இந்துக்கலைக்களஞ்சியம்

குளம் ஐந்துவேலி, செங்கழுநீர் ஒடை ஐந்து வேலி என்பது பழமொழி. கமலாலயத்திற் காசியைப் போன்று 64 தீர்த்தக் கூட்டங்கள் உள்ளன. சீரான படிக்கட்டுகள், நீராழி மண்டபங்கள் உள்ளன. நடுவில் தீவு போன்ற அமைப்பில் ஒரு கோயில் உள்ளது. இது நடுவனார் கோயில் என அழைக்கப்படும். உள்ளே நாகநாதரும் யோகாம்பிகையும் எழுந்தருளியுள்ளனர். இக் கோயிலுக்குச் செல்வதற்கு ஒடங்கள் உள்ளன. தெப்பத் திருவிழாவின்போது இக்குளம் மிக அழகாக இருக்கும். செந்தாமரை மலர்கள் நிறைந்திருந்தமையால் கமலாலயம் எனப்பெயர் பெற்றுள்ளது.
ஆழித்தேர்
திருவாரூர்த் தேரழகு திருவிடை மருதூர் வீதியழகு, திருமறைக்காடு விளக்கழகு என்பது பழமொழி. திருஆரூர்த் தேர் மிகப் பழமையானது. கலையழகு மிக்கது. அப்பர், பெருமானால் பாடப் பெற்றது. திருஞானசம்பந்தரும், நாவுக்கரசரும், தியாகேசர் தேர்த்திருவிழாவைத் தாமே முன்னின்று நடத்தினார்கள் என்று அவர்களது வரலாறு கூறும். திருநாவுக்கரசராலே பாடப்பெற்ற ஆழித்தேர் 1926 ஆம் ஆண்டு அழிக்கப்பட்டது. பின் 1930 ஆம் ஆண்டு புதியதேர் உருவாக்கப்பட்டது. பத்து சக்கரங்கள் ஆறு வடங்கள் 300 தொன் எடை கொண்டு 12,000பேரினால் இழுக்கப்பெற்றது. 1945 முதல் 1970 வரை தேரோட்டம் தடைப்பட்டது. இன்று நாம் காணும் தேரை 96 அடிகள் உயரத்துடன் புதிய அச்சுகள் இரும்புச் சக்கரத்துடன் தருக்கி பெல் நிறுவனம் உருவாக்கியது. இங்கு ஆழித் தேர் எண் கோணமாக இல்லாமல் இருபது பட்டைகளாக அலங்கரிக்கப்படுவது ஒரு தனிச் சிறப்பு புராண நிகழ்ச்சிகளைச் சித்தரிக்கும் வண்ணக் சுதை சிற்பங்கள் தேருக்கு மேலும் மெருகூட்டுகிறது. ஆழித் தேரைத் தவிர விநாயகர், சுப்பிரமணியர், சண்டிகேசர், அம்பிகை ஆகியோருக்கும் சிறு தேர்கள் உள்ளன. திருஆரூர் ஆழித்தேர் போன்று வேறு எங்கும் காண முடியாது என்று கூறப்படுகிறது.
புராண வரலாறு
சிலப்பதிகாரத்தில் (மதுரைக் காண்டம் வழக்குரை காதை) கண்ணகியின் கூற்றாக இளங்கோவடிகள் மனுநீதி சோழனைச் சிறப்பித்துள்ளார். கண்ணகி பாண்டியன் அவையில் தான் எங்கிருந்து வந்தவள் என்பதை வருமாறு கூறுகிறாள். ஒரு புறாவிற்காக தன் தசையை அரிந்து கொடுத்த சிபி சக்கரவர்த்தியும், அவர் வழியில் வந்து ஒரு பசுவுக்கு நீதி வழங்கத் தன் மகனைத் தேர்க் காலில் இட்ட மனுநீதிச் சோழனும் ஆட்சி செய்த சோழநாட்டிலிருந்து வந்தேன் எனச் செப்புகிறாள். சேக்கிழார் தமது பெரிய புராணத்தில் திருநகர்ச் சிறப்பில் இம்மாபெரும் மன்னனது வரலாற்றை விரிவாகக் கூறுகிறார்.
செங்கோல் வழுவாது ஆட்சி செய்த மன்னன் மனு, தனது மகன் வீதிவிடங்கனால் கொல்லப்பட்ட பசுக்கன்றின் இழப்பைத் தாங்காது துயருற்ற தாய்ப் பசுவின் அவலநிலை அறிந்து, தானும்
267

Page 320
இப்பசுவின் துயரத்தை அடைவேன் எனக் கூறித் தன் மகனைத் தானே தேரை ஏற்றிக் கொன்றவன். பின் திருஆரூர் இறை கருணையால் பசுக்கன்றும் அரசகுமாரனும் உயிர் பெற்றனர். திருஆரூரில் எழுந்தருளி இருக்கும் வீதிவிடங்கப் பெருமானின் பெருமையை, சேக்கிழார் பெருமான் தமது கடைக்காப்பில் எடுத்தோதி நிறைவு செய்கிறார்.
மனுநீதி சோழனின் தேர், தேர்க் காலடியில் மரித்த அரசகுமாரன், இளங்கன்று அனைத்தும் கற்சிற்பங்களாக கோயிலின் கிழக்கு வளாகத்தில் காட்சிப் பொருட்களாக வைக்கப்பட்டுள்ளன. இவையனைத்தும் பிற்காலச் சோழர் காலத்தில் வடிவமைக்கப்பட்டவை. சுவரில் மனுநீதிசோழன் வரலாறு ஒவியங்களாக வரையப்பட்டுள்ளன.
சுந்தரருக்கும் அவர் மனைவி பரவையாருக்கும் ஏற்பட்டிருந்த ஊடலைத் தீர்க்க, சுந்தரரின் வேண்டுகோளுக்குச் செவிசாய்த்த தியாகராசர் ஒர் இரவில் தமது கோயிலுக்கும் பரவை நாச்சியார் மாளிகைக்கும் தூது நடந்து இருவருக்கும் இடையில் இருந்த ஊடலைத் தீர்த்தார். மேலும் தேவாசிரியன் மண்டபத்தில் வீற்றிருந்த அடியார்களைப் புறக்கணித்துக் கோயிலுக்குள் சென்ற சுந்தரரைத் தடுத்த விறன்மிண்டர் நாயனாருக்கும் சுந்தரருக்குமிடையில் இறைவன் நின்று அவர்கள் இருவரையும் இணைத்து வைத்தார். விறன்மிண்டர் சுந்தரரைத் தடுத்திருக்காவிட்டால் எமக்கு கிடைத்தற்கரிய பெரியபுராணம் கிடைத்திருக்காது. சுந்தரர் அப்போது பாடிய திருத்தொண்டர்த் தொகையை அடிப்படையாகக் கொண்டே சேக்கிழார் பெரியபுராணம் பாடினார். “தில்லைவாழ் அந்தணர்தம் அடியார்க்கும் அடியேன்” எனத் தொடங்கும் திருத்தொண்டர் தொகையில் ஒவ்வொரு அடியாரையும் ஒரு வரியில் குறிப்பிடுகிறார் சுந்தரர். சேக்கிழார் அவ் அடியார்களின் ஊர்களுக்குச் சென்று செய்திகளைச் சேகரித்து அடியார்களின் வரலாற்றைப் பெரிய காவியமாகவே இயற்றினார்.
தியாகேசர் திருக்கோயில்
இறைவன் - திருமூலட்டானேஸ்வரர் (வான்மீகநாதர்,
புற்றிடங் கொண்டார்)
இறைவி - கமலாம்பிகை, அல்லியங்கோதை,
நீலோத்பலாம்பாள்
தலமரம் - பாதிரி
தீர்த்தம் - கமலாலயம், சங்குதீர்த்தம், செங்கழுநீர்
ஒடை.
உற்சவர் - தியாகராசர் (சோமாஸ்கந்தர்)
திரு ஆரூர்க் கோயில் மிகப்பெரியது. நாற்புறமும் உயர்ந்த மதில்களுடனும் கோபுரங்களுடனும் விளங்குகிறது. நான்கு திசைகளிலும் ராஜகோபுரங்கள் உள்ளன. கிழக்கு வாயில் ராஜகோபுரம் ஏனையவற்றிலும் உயரமானது. மேற்கு வாயிற் கோபுரம் எண்ணற்ற சுதைச் சிற்பங்களுடன் விளங்குகிறது. மொத்தம் ஐந்து பிராகாரங்கள்.
262

கிழக்கு வாயில் வழியாக உட்சென்றால் இரு மருங்கிலும் விநாயகர், சுப்பிரமணியரின் சிற்றாலயங்கள் உள்ளன. அடுத்து வீதிவிடங்கப் பிள்ளையார்; இவருக்குப் பின்னால் பிரமநந்தி உள்ளார். மழை வேண்டின் இப் பெருமானுக்கு நீர் கட்டுவதும், பசுக்கள் பால் கறக்க உதைத்தால் அறுகுசாத்தி அதைப் பசுக்களுக்குத் தருதலும் இன்றும் மக்களிடையே உள்ள நம்பிக்கையும் பழக்கமுமாகும். அடுத்து பெரிய பிராகாரத்தில் வலமாக வந்தால் பக்தகாட்சி மண்டபம், (பங்குனி உத்திர விழா முடிந்து நடனக் கோலத்தில் தியாகராசர் எழுந்தருளுமிடம்), ஊஞ்சல் மண்டபம் (சந்திரசேகரரின் ஊஞ்சல் உற்சவம் நடக்குமிடம்) காணலாம். அடுத்து ஆகாச விநாயகர், துலாபார மண்டபம், சரஸ்வதி தீர்த்தம் முதலியவை உள்ளன.
அடுத்துள்ள சித்திரசபா மண்டபம் பெரியது. இதன் பக்கத்தில் கோயில் ஒரமாக இருப்பது புராண மண்டபம். வடமேற்கில் கமலாம்பிகையின் தனிக்கோயில் உள்ளது. நான்கு கரங்களுடன் தவக்கோலத்தில் காட்சி தருகிறார். அன்னையின் ஒருகரம் அபயம் காட்டியும் மற்ற திருக்கரங்கள் உருத்திராக்கமாலை, பாசம் தாமரை ஏந்தியும் காணப்படுகின்றன. இவர் முத்தி யளிக்கும் யோகசக்தி அம்மன். இவருடைய சந்நிதியில் வழிபட்ட பின்னரே மற்ற சந்நிதிகளுக்குச் செல்ல வேண்டும் என்பது மரபு அம்பாள் கோயிலின் மேற்கு மூலையில் அக்ஷரபீடமுள்ளது. இதில் பீடமும் 51 எழுத்துக்கள் எழுதப்பெற்ற திருவாசியுமே உள்ளன. அட்சரபிடத்தின் முன்னின்று அதன் முன் அம்மன் வீற்றிருப்பதாக எண்ணி தியானம் புரியவேண்டும். அடுத்தாற்போல சண்முகர், பாலசுப்பிரமணியர், கலைமகள், மகரிகூழிகள் வழிபட்ட லிங்கங்கள் உள்ளன.
அம்மன் கோயிலுக்கு எதிரில் பார்ப்பதீச்சரம். இங்குள்ள தீர்த்தக்கிணறு முத்திக் கிணறு எனப்படும். இதை மக்கள் உருமாற்றி மூக்குத்திக் கிணறு என்கிறார்கள். இதனை அடுத்துள்ளது ஒட்டுத்தியாகர் கோயில். இவ்விடத்தில் தான் விறன்மிண்டநாயனார் சுந்தரரைக் கோயிலுக்குள் செல்லவிடாது தடுத்தார். அடுத்துள்ள தேவாசிரியம் ஆயிரம்கால் மண்டபம் எனப்படும். தியாகேசர் ஆழித்தேர்விழா முடிந்து இம் மண்டபத்தில்தான் வந்து மகாபிஷேகம் செய்து கொள்வார். ஆயிரங்கால் மண்டபத்திற்கு எதிரில் பல கல் தூண்கள் உள்ளன. இவை விழாக்காலங்களில் பந்தல் கால்களாக விளங்குகின்றன. அடுத்துள்ள தீர்த்தம் சங்கு தீர்த்தம். இதில் இறங்கி கை, கால் சுத்தி செய்துகொண்டு ஆரியன் கோபுரம் வழியாக உட்செல்ல வேண்டும்.
கோபுர வாயிலின் இடப்புறம் விறன்மிண்ட நாயனார் உருவச்சிலை உள்ளது. அவரை வழிபட்டு உள்ளே செல்வது மரபு. எதிரில் கொடிமரம், பலிபீடம், நந்தி, அடுத்து எண்ணெய்க் காப்பு மண்டபம். பங்குனி உத்திர விழா முடிவில் பெருமான் எண்ணெய்க் காப்புக் கொள்ளுமிடம். இது ராஜநாராயண சோழன் கட்டியது. இம் மண்டபத்தின் வலப்பக்கம் விநாயகர். இடப்புறம் துர்க்கை. மேலும் பல சந்நிதிகளும் உண்டு. இங்கு திருச்சுற்றிலுள்ள நாற்சதுரக் கல்லின்மீது நின்று தியாகராசர் கோயில் கோபுரங்கள் அனைத்தையும் கண்டு களிக்கலாம்.
இந்துக்கலைக்களஞ்சியம்

Page 321
அடுத்து திருவாரூர் அறநெறி, ஒரு தனிக் கோயிலாகக் கொடிமரம், பலிபீடம், நந்தி, முன்மண்டபம், அர்த்தமண்டபம், விமானம் என விளங்குகிறது. இறைவன் அசலேஸ்வரர், இறைவி வண்டார் குழலி அம்மை; திரிபங்க நிலையில் அழகாகக் காட்சி தருகிறார். நமிநந்தி அடிகள் விளக்கேற்ற நெய் இல்லாதபோது தண்ணிரையே ஊற்றி விளக்கெரித்த அற்புதம் நிகழ்ந்த தலம். அப்பர் பெருமான் தனியாக ஒரு பதிகம் பாடி உள்ளார். சோழமாதா செம்பியன் மாதேவடிகளின் திருப்பணியைப் பெற்ற திருக்கோயில், இக்கோயிலில் சிவராத்திரி மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. அடுத்து ஆடகேஸ்வரம் ஆனந்தேசம், விஸ்வகர் மேசம், சித்தீச்வரம் எனப் பல கோயில்கள் இத் தலத்தைச் சுற்றி உள்ளன. ஆடகேஸ்வரத்திற்குப் பக்கத்தில் தலமரம் பாதிரி உள்ளது. விஸ்வகர்மேசம் அழகான கற்கோயில்,
கோபுர வாயிலின் உட்புறம் நாட்டிய மண்டபம் உள்ளது. கொடிமரம், பலிபீடமும் உள்ளது. மூலஸ்தானத்திற்குச் செல்லும் வழியில் ஐயங்கலக்காசு விநாயகர் வீற்றிருக்கிறார். கருவறையில் சுவாமி வான்மீக நாதர் நாகாபரணத்துடனும் வெள்ளிக் கவசத்துடனும் காட்சியளிக்கிறார். இவர் சுயம்புருவினர். இவர் அமர்ந்துள்ள இடம் பூங்கோயில் எனவும் வழங்கப்படும். அர்த்த மண்டபத்தில் சோமகுசாம்பிகை என்ற அம்மன் நான்கு யாளிகள் தாங்கும் மேடை மீது அமர்ந்துள்ளார். இதற்குத் தென்புறம் இத் தலத்தின் புகழ்பெற்ற தியாகராசர் சந்நிதி எதிரில் அவரது தோழர் சுந்தரமூர்த்தி சுவாமிகளும் சேரமான் பெருமாள் நாயனாரும் சிலை உருவில் காட்சி தருகின்றனர். முன்புறம் நந்திகேஸ்வரர், தியாகராஜர் இரத்தின சிங்காசனத்தின் முன்னே இரண்டு வாட்படையும் நடுவில் பூச்செண்டும் பொருந்த எழுந்தருளி யுள்ளார். பெருமானுக்குப் பக்கத்தில் அம்மை. இருவருக்குமிடையில் இளமுருகன். அணி மணி கலங்களுடன் விளங்குகின்றனர். சுவாமிக்கு வலப்பக்கத்தில் மரகதலிங்கம் ஒன்று வைக்கப்பட்டுள்ளது. இச் சிவலிங்கத்திற்கு இருவேளையும் அபிஷேக ஆராதனைகள் இடம்பெறுகிறது. அம்மை, தியாகராசர் ஆகியோரின் முகங்களை மட்டும் என்றும் காணலாம். அபிஷேகங்களின் போது திருக்கரங்களில் ஒரு பகுதியைக் காணமுடியும். பங்குனி உத்தரத்தில் வலது பாத தரிசனமும், மார்கழித் திருவாதிரையில் இடது பாதத் தரிசனமும் அருளப் பெறும். ஏனைய அவயவங்களைக் காண்பது கடினம். தியாகராசருக்கு அலங்காரங்கள் மற்றத் திருத்தலங்களில் சோமாஸ்கந்தருக்குச் செய்யப்படுவது போலன்றி வேறுபட்டவை. சந்நிதியில் உள்ள பஞ்சமுக வாத்தியமும், நாதஸ்வரமும் மிக அரிதானவை. இவருக்கே உரித்தானவை. இவர் சந்நிதியில் சாயரட்சை வழிபாடு மிகவும் பிரசித்தமானது. தேவேந்திரன் தியாகேசரை வழிபடும் ஐதீகம் காணப்படுகிறது. இதனால் சிவாச்சாரியார் நீண்ட அங்கி, தலைப்பாகை முதலியன தரித்து தம்மை இந்திரனாகப் பாவித்து தியாகராசருக்கு அபிடேக ஆராதனைகள் புரிவார். இவரை வழிபட்டு திருச்சுற்றில் வலமாகச் சென்றால் முதலில் வாதாபி கணபதியை வழிபடலாம். அடுத்து சிவாலய பரிவார மூர்த்தங்களும் நவக்கிரக மேடையும் உள்ளன. இங்கு சண்டிகேச்வரருக்கு இரு சந்நிதிகள் உள்ளன. ஒன்று எமசண்டேசர் திருஆரூரில் பிறந்தோர்களுக்கு மறுபிறப்பில்லை.
இந்துக்கலைக்களஞ்சியம்

அதனால் சண்டேசர் பதவியை எமனுக்கு அருளினார் என்பது தலபுராணம்.
திருச்சுற்று முடிந்து வெளிவந்து அன்னை அல்லியங் கோதையின் தனிக்கோயிலை அடையலாம். முன்மண்டபம், அந்தராளம், கருவறை, பள்ளியறை எனப்பல பிரிவுகளுடன் விளங்குகிறது. கோயில் கருவறையில் அன்னை வலக்கையில் அல்லிமலரை ஏந்திய வண்ணமாகக் காட்சி தருகிறார். அருகில் அவரது தோழி முருகப் பெருமானைச் சுமந்த வண்ணம் காணப்படுகிறார். இவர் போகசக்தி அம்மன், இல்லற வாழ்வின் சிறப்பை உணர்த்தி நிற்பவர். இவரை வழிபடுவோருக்கு இல்லற வாழ்க்கை இனிது நடைபெறும்.
பரவையுண்மண்டளி என்பது மற்றொரு தலமாகும். இது தேர்நிலைக்கு அருகில் கீழ் வீதியில் உள்ளது. தனிக்கோயில், கிழக்குப் பார்த்த சந்நிதி வருணன் அனுப்பிய கடலை கவறச் செய்த இறைவன் எழுந்தருளியுள்ள இடம். துர்வாச முனிவர் பூசித்தது. இறைவன் துவாஸநாதர். மக்கள் துவாநாயனார் கோயில் என்றழைக்கின்றனர். சுந்தரரால் பாடப்பெற்றது. இதன் பின்புறம் திருநீலகண்டநாயனார் கோயிலும், தெற்குச் சந்நிதியில் பரவை நாச்சியார் கோயிலும் உள்ளன.
திருஆரூர்க் கோயிலில் நாள்தோறும் ஆறுகால வழிபாடுகள் இடம்பெறுகின்றன. அர்த்தயாமத்தில் தியாகராசர் சந்நிதியிலிருந்து பூரீ சொக்கப் பெருமானைப் பல்லக்கில் எழுந்தருளச் செய்து அல்லியங்கோதைக் கோயில் பள்ளியறைக்கு எழுந்தருளச்செய்து பொன்னூசல் நடைபெறும். தியாகராசருக்குப் பங்குனி உத்திரம், மார்கழித் திருவாதிரை மற்றும் விசேஷ நாட்களில் அபிஷேகம் நடைபெறும். ஆண்டு தோறும் மாசி அத்த நட்சத்திரத்தில் கொடியேறி ஆயிலியத்தில் தேரோடி பங்குனி உத்திரத்தில் தீர்த்தம் என 36 நாட்களுக்குப் பெருவிழா நடைபெறும். ஆடிப்பூரத்திருவிழா 10 நாட்கள் கமலாம்பிகை சந்நிதியில் நடைபெறும். நவராத்திரியில் அல்லியங்கோதை கோயிலுக்கு அடுத்துள்ள மண்டபத்தில் கொலுவைத்து பத்து நாட்கள் திருவிழா நடைபெறும். குமரகுருபரர், பட்டினத்தடிகள் போன்றோர் இங்கு நடைபெறும் விழாச் சிறப்பினைப் பாடி உள்ளனர்.
"சாதிபார்கின்னரர்தருமனும் வருணனமேத்து முக்கண் ஆதியாரூர் தொழுது உய்யலாம் மையல் கொண்டு அஞ்சல் நெஞ்சே” என ஞான சம்பந்தரும்
"ஒழௗ வெண்பிறையானும் ஒளித்திகழ் குலத்தினானும் ஆடிளம் பாம் பசைத்தானும் ஆரூர் அமர்ந்த அம்மானே' எனச் அப்பர் சுவாமிகளும்
"மல்லிகைமாட நீடு மருங்கொடு நெருங்கி யெங்கும் அல்லி வண்டியங்கும் ஆரூர் அப்பனே அஞ்சினேனே' என சுந்தரரும் திருவாரூர் பற்றிப் பாடிச் சிறப்பித்துள்ளனர்.
(நி நி)
263

Page 322
திருஆரூர்க் கமாைம்பிகை பிள்ளைத்தமிழ்
திருவாரூர்த் திருதலத்திற் கோயில் கொண்டுள்ள உமாதேவியாரின் திருநாமமே கமலாம்பிகையாகும். கமலாம்பிகை அம்மையாரின் திருக்கோயில் பூங்கோயிலின் தென்மேற்கு மூலையிலேயுள்ளது.
ஆரூர்க் கமலாம்பிகை மீது பாடப் பெற்றது கமலாம்பிகை பிள்ளைத்தமிழ் விநாயகர் வணக்கம் நீங்கலாக காப்பு, செங்கீரை, தால், சப்பாணி, முத்தம், வாரானை, அம்புலி, அம்மானை, நீராடல், பொன்னூசல் எனும் பத்துப் பருவங்களுள. காப்புப்பருவம் நீங்கலாக ஏனைய பருவங்களிலே பருவத்திற்குப் பத்துப் பாடலாக 90 பாடலுள. காப்புப் பருவத்திலே திருமால், சிவன், முருகன், வீரபத்திரர், பிரமன், இந்திரன், திருநந்திதேவர், சத்தமாதர், முப்பத்துமுக்கோடிதேவர் ஒன்பது பாடல்களில் காப்பு வேண்டப்படுகின்றனர்.
நூறு பாடல் கொண்ட இக் கமலாம்பிகை பிள்ளைத்தமிழைப் பாடியவர் அளகை சம்பந்த முனிவராக இருக்கலாம் என்று வித்துவான் ச. தண்டபாணிதேசிகர் தாம் பதிப்பித்த கமலாம்பிகையம்மை பிரபந்தங்கள் (1947) பதிப்பின் முன்னுரையிற் கூறினார். ஆயினும் ச. சோமசுந்தரதேசிகர் தமிழ்ப் புலவர்கள் வரலாறு (பதினேழாம் நூற்றாண்டு) எனும் நூலிலே திருவாரூர் வைத்தியநாத தேசிகர் பாடிய கமலாலய அம்மை பிள்ளைத் தமிழுக்கு எடுத்தாளும் செங்கீரைப் பாடல் தண்டபாணிதேசிகர் குறிப்பிடும் கமலாம்பிகை பிள்ளைத் தமிழிலே இடம் பெறுகின்றது.
திருவாரூர் வைத்தியநாததேசிகர் பதினேழாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர்; திருவாரூர்ப் பன்மணிமாலை முதலியனவும் பாடியவர்;
கமலாம்பிகை பிள்ளைத் தமிழை வித்துவான் ச. தண்டபாணிதேசிகர் 1947 இலே கமலாம்பிகை பிரபந்தங்கள் என்ற தொகுப்பிலே பதிப்பித்துள்ளார்.
இப்பதிப்பிலே கமலாலய அம்மன் பிள்ளைத் தமிழ் என வேறொரு பிள்ளைத் தமிழ்ப் பிரபந்தமும் கமலைப் பராசக்திமாலையும் இடம் பெறுகின்றன. கமலாலய அம்மன் பிள்ளைத்தமிழ் ஆசிரியர் யாரென அறிதற்கரிதாயுள்ளது.
கமலாம்பிகைப் பிள்ளைத் தமிழ்ப் பாடல்கள் மிகுந்த நயமுடையனவாயும் ஒசையும் அழகும் பொருந்தியனவாயும் காணப்படுகின்றன; அம்பிகையருள் பெற்றதாகக் கருதவைக்கும் பாடல்கள் உள்ளன. (47பா. யூ.)
திருஆரூர்க் கோவை
ழுநீ தியாகராசப் பெருமானைப் பாட்டுடைத் தலைவராக வைத்துப் பாடப் பெற்றது திருவாரூர்க்கோவை எனும் ஐந்திணைக் கோவை. விநாயகரையும் முருகனையும் காப்பு
264

வேண்டும் வெண்பாவும், அவையடக்கம் கூறும் இரு கட்டளைக் கலித்துறையும் நீங்கலாகத் திருவாரூர்க் கோவை 514 கட்டளைக் கலித்துறைப் பாக்களையுடையது.
அதனைப் பாடியவர் தாழைநகர் எல்லப்பநயினார் எனும் புலவர். அவர் பதினாறாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர்.
திருவாரூர்த்தலத்தின் செய்திகளும் அகப்பொருள் மரபுகளும் இடம் பெறும் கோவையில் சிவனடியார் நிகழ்ச்சிகளும் சமயக்கருத்துகளும் இதிகாச புராணச் செய்திகளும் தாராளமாக இடம் பெறுகின்றன; எதுகைமோனை நயங்களும் சொல்லணி பொருளணிகளும் மலிந்து காணப்படுவன.
ஆ.மே. சென்னகேசவலுநாயுடுவின் மூலப்பதிப்பிலே 496 செய்யுள் இடம் பெற்றுள்ளன. பின்பு உ.வே. சாமிநாதையர் குறிப்புரையுடன் 1937 இல் வெளியிட்ட பதிப்பிலே 517 பாடல் இடம் பெற்றன. சாமிநாதையரின் இரண்டாம் பதிப்பு சென்னையில் இருந்து விஷ வருடம் சித்திரை மாதம் (1941) வெளிப் போந்தது. ( 6ിffg)
திருஆரூர்/கான்மணிமாைை
திருவாரூரில் வீற்றிருக்கும் சிவபிரான் மீது பாடப் பெற்றது திருவாரூர் நான்மணி மாலை. இந் நான்மணிமாலை விநாயகர் காப்பு வெண்பா நீங்கலாக நாற்பது பாடல்களையுடையது; நேரிசை வெண்பா, கட்டளைக் கலித்துறை, ஆசிரிய விருத்தம், நேரிசை ஆசிரியப்பா எனும் நால்வகையாப்பமைதிகளும் மாறிமாறி அந்தாதித் தொடையில் அமையப் பாடப் பெற்ற பிரபந்தம் திருவாரூர் நான்மணிமாலை.
திருவாரூர் நான்மணிமாலை குமரகுருபரசுவாமிகள் பாடிய பிரபந்தங்களில் ஒன்றாகும். இவர் பதினேழாம் நூற்றாண்டில் வாழ்ந்தவராவர்.
புறப்பொருட் பாடல்கள் அதிகமாகவுள்ள போதும் அகப் பாடல்கள் சில, நான்மணி மாலையிலுள. அணிநலங்கள் மிகுந்து காணப்படும் நான்மணிமாலையிலே சாதுரியம் நிறைந்த பாடல்கள் பலவுள.
திருவாரூர் நான்மணி மாலை குமரகுருபர சுவாமிகள் பிரபந்தத் திரட்டிலே இடம் பெறுவதாகும். இப் பிரபந்தத் திரட்டினை 1889, 1903 ஆம் ஆண்டுகளிற் தில்லை ஈசானியமடம் இராமலிங்கசுவாமிகளும் 1939 இலே உ.வே. சாமிநாதையரும் பதிப்பித்தனர். சாமிநாதையர் பதிப்பின் மறு பிரசுரங்கள் 1947, 1952 ஆம் ஆண்டுகளில் வெளிவந்தன.
திருப்பனந்தாள் பூரீ காசிமடம் 1962 இலே திருவாரூர் நான்மணிமாலையைத் தி. பட்டுச்சாமி ஒதுவாருடைய தெளிவுரையுடன் பதிப்பித்துள்ளது. ( 67//7. As)
இந்துக்கலைக்களஞ்சியம்

Page 323
திருஆரூர்ப்பள்ளு
திருவாரூர்க் கோயிலிற் பாடப் பெற்று வந்தது திருவாரூர்ப் பள்ளு பதினாறாம் நூற்றாண்டில் வாழ்ந்த கமலை ஞானப்பிரகாசசுவாமிகளை அதன் ஆசிரியர் என்று கூறுவர். ஆயினும் இக்கூற்றுச் சித்தாந்தமெனல் சாலாது.
பதினேழாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் எழுந்த முக்கூடற்பள்ளுடன் ஒப்பிடும் போது பள்ளுப்பிரபந்த வளர்ச்சிக் கிரமத்திலே திருவாரூர்ப் பள்ளு பிற்பட்டதாகத் தெரிகின்றது; இந்நிலைக்கு இடைச் செருகல் ஒரு காரணமாகலாம். ஆயினும் இதனுட் காணப்படும் வெண்பா, கலித்துறை, விருத்தம் முதலிய செய்யுள் வகைகள், கதைத் தொடர்புக்குச் சம்மந்தமின்றி அதிகமாக இடம்பெறும் திருவாரூர்ப் பெருமான் புகழ்பாடும் தனிப்பாடல்கள், ஆசிரியரின் புலமைச் சிறப்பை உணர்த்தும் புதிய பள்ளுறுப்புகளும் கவி கூற்றுகளும் இதன் காலத்தைப் பதினாறாம் நூற்றாண்டாகக் கருத இடம் தரவில்லை. பள்ளிற்கே உயர் நாடியான இயற்கைப் பண்பும் எளிமைச் சிறப்பும் ஒதுக்கப்பட்ட பாங்கும் இக்கருத்தை அரண் செய்யும். (பொ. பூ)
திரு ஆரூர்ப்புராணம்
திருவாரூரிற் கோயில் கொண்ட வன்மீகநாதர், கமலாம்பிகை, தியாகேசர் முதலிய முக்கிய மூர்த்திகளைப்பாடுவதே திருவாரூர்ப் புராணம் இதற்குக் கமலாலய புராணம் என்றும் கமலாலயச்
சிறப்பு என்றும் வேறு பெயர்களுண்டு.
ஆரூரின் தெய்வீகத் தன்மையை வெளிப்படுத்த எழுந்ததாயினும் மானிடருக்கு இன்றியமையாத பேறுகளையும் அவற்றை அடையும் வழிகளையும் அறவாழ்க்கை நெறிகளையும் கூறுவது அப்புராணம்.
பூசித்துப் பேறுபெற்றவர்களின் வரலாறுகள், தீர்த்தங்களின் விவரங்கள் முதலியன விரிவாக இடம் பெறுகின்றன. ஒழுகலாறுகள், வைதிக நெறிகள், பூசனை முறைகள், புண்ணியபாவ இயல்புகள், சுவர்க்கநரகவிவரங்கள், சமய வாழ்க்கையின் பண்புகள் முதலியனவற்றிற்கு முக்கியத்துவம் கொடுத்து ஒழுக்கத்தின் சுருக்கமாகவும் ஞான விளக்கமாகவும் அமைகிறது.
பாயிரச் சருக்கம் முதலாக முனிவரெழுவர் முத்தி பெற்ற சருக்கம் வரையிலான 24 சருக்கங்களிலே 1066 செய்யுள்களை உடைய திருவாரூர்ப்புராணம் சங்கத மூலத்தைத் தழுவியதாகும். பெரும்பாலும் ஆசிரிய விருத்தத்தாலான திருவாரூர்ப் புராணத்தில் நான்கடித்தரவுக் கொச்சகக் கலிப்பா ஆதியனவுமுள; ஆசிரிய விருத்தத்தைச் சார்ந்த சந்தப் பாடல்களுமுள
திருவாரூப் புராணத்தைப் பாடியவர் சிதம்பரம் கண்கட்டி மறைஞானசம்பந்தராவர். இவர் பதினாறாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர்; திருவாரூர்ப்புராணம் 1548 இலே இயற்றப்பட்டது.
இந்துக்கலைக்களஞ்சியம்

கமலாலயச் சிறப்பு என்னும் திருவாரூப்புராணம் அடையாறு உ.வே. சாமிநாதையர் நூல் நிலையத்தினரால் 1961 இலே வெளியிடப் பெற்றது.
அளகை சம்பந்த முனிவர் பாடிய திருவாரூர்ப் புராணமுமுண்டு. அதுவும் திருவாரூர்த் திருத்தலத்தைப் போற்றும் தல புராணம் ஆகும். 111 சருக்கங்களில் 2929 விருத்தங்களை உடைய திருவாரூர்ப் புராணம் நாகர காண்டத்தின் மொழிப்பெயர்ப்பு என்பர்.
இதனை வடபாதிமங்கலம் சோமசுந்தரமுதலியார் ஜய வருடம் பங்குனி மாதம் (1895) பதிப்பித்துள்ளார். )67L/T. هيي(
திருஆரூர் மும்மணிக்கோவை
திருவாரூர்த் திருத்தலத்திற் கோயில் கொண்ட சிவபிரானைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டது திருவாரூர் மும்மணிக்கோவை. அகவல், வெண்பா, கட்டளைக் கலித்துறை எனும் மூவகை யாப்பமைதிகளும் தொடர்ந்து மாறிவர அந்தாதித் தொடையில் அமைந்த முப்பது பாடல்களையுடையது திருவாரூர் மும்மணிக் கோவை,
இம் மும்மணிக்கோவை பாடியவர் சேரமான் பெருமாள் நாயனார். கழறிற்றறிவார், பெருமாக்கோதையார், வண்ணானைக் கும்பிட்டார் என்றும் அவர் அழைக்கப்பெறுவர். சுந்தரமூர்த்தி சுவாமிகளின் நண்பரான சேரமான் பெருமாள், அவர் வாழ்ந்த காலமாம் ஏழாம் நூற்றாண்டின் கடைக்கூறும் எட்டாம் நூற்றாண்டின் முற்கூறும் ஆகிய கட்டத்திலே வாழ்ந்தவராவர்.
திருவாரூர் மும்மணிக்கோவைப் பாடல்கள் யாவும் அன்பினைந்திணை மரபுகளுக்கு அமையப் பாடப்பட்டுள்ளன. பண்டைய சான்றோரின் அகப் பொருள் மரபினையும் அம்மரபில் எழுந்த பாடல்களையும் நன்கறிந்தவர் சேரமான் பெருமாள் என்பது பாடல்கள் உணர்த்தும் செய்தியாகும்.
பதினோராம் திருமுறையில் இடம் பெறுவது திருவாரூர் மும்மணிக்கோவை. இத்திருமுறை சுக்கில வருடம் வைகாசி மாதம் (1869) சென்னையில் முதன் முதலாக யாழ்ப்பாணம் பூரீ ஆறுமுகநாவலரால் வர்த்தமான தரங்கிணி சாகை யச்சுக் கூடத்திற் பதிப்பிக்கப்பெற்றது. )7مL/T. هيي(
திரு ஆரூரு7ை
தியாகராசப் பெருமானாம் சிவபிரான் உலாப்போந்ததாக அமைத்துப் பாடப்பட்டது திருவாரூருலா, அதனைப் பாடியவர் அந்தக்கவி வீரராகவ முதலியார் என்பவராவார். அவர் பதினேழாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். அவர் பாடியுள்ள நான்கு உலாப்பிரபந்தங்களில் ஒன்றே திருவாரூருலா, வாதாபி விநாயகரை வணங்கி, மாற்றுரைத்த விநாயகரைத் துதித்து,
265

Page 324
அவையடக்கம் கூறி, 528 கண்ணிகளையுடைய கலிவெண்பாவிலே பூரீ தியாகேசர் உலாவினை வீரராகவ முதலியார் பாடியுள்ளார். உலாவின் அந்தத்தில் இரு வெண்பாக்கள் உள.
தேவார திருவாசகமாம் திருமுறைகள், சைவ சித்தாந்த சாத்திரங்கள் ஆகியனவற்றின் சொல்லும் பொருளும் யாண்டும் கலந்து நிறைந்து நிற்கும் சால்பினையுடையது திருவாரூருலா,
திருவாரூருலாவினை உ.வே. சாமிநாதையர் 1905 ஆம் ஆண்டிலே பதிப்பித்தார்; 1910, 1925 ஆம் ஆண்டுகளில் அது மறுபிரசுரம் கண்டது. ( 671/74.)
திரு ஆலங்காட்டு மூத்த திருப்பதிகம்
வட ஆர்க்காடு மாவட்டத்திலே திருவாலங்காடு இருப்புப் பாதை நிலையத்திற்கு வட கிழக்கில் மூன்று மைல் தொலை விலுள்ளது திருவாலங்காடு எனும் திருத்தலம்.
நடராசப் பெருமானின் இரத்தின சபையாகக் கருதப்படுவதும் காளியை ஊர்த்துவ தாண்டவத்தாலே தோற்கச் செய்ததுமானது இத்தலம்; பதஞ்சலி முனிவர் கார்க் கோடகனாகவும் வியாக்கிர பாத முனிவர் முஞ்சிகேசராகவும் எப்போதும் நடன தரிசனம் செய்யும் தலம்.
இத் திருத்தலத்துறை சிவபிரானுக்குத் தேவார சிங்கப் பெருமான் என்றும் ஊர்த்துவதாண்டவேஸ்வரர் என்றும் இறைவிக்கு வண்டார் குழலி என்றும் திருப்பெயர்கள் உள்ளன.
திருவாலங்காட்டு இறைவன் மீது பாடப்பட்ட திருவாலங்
காட்டு மூத்த திருப்பதிகத்திற் பதினொரு திருப் பாடலுள; பதினோராவது திருப்பாட்டு திருக்கடைக்காப்பு
சைவ நாயன்மார்களில் ஒருவரான காரைக்காலம்மையார் இம்மூத்த திருப்பதிகத்தைப் பாடியவராவார். அவர் ஆறாம் நூற்றாண்டிலே வாழ்ந்தவரென்று கருத இடமுண்டு.
சேக்கிழாரின் பெரியபுராணத்தின் படி அம்மையார் பேய் வடிவு பெற்று அற்புதத்திருவந்தாதியையும் திருவிரட்டை மணிமாலை யையும் பாடித் திருக்கையிலையடைந்து இறைவனிடம் வேண்டும் வரம் பெற்று இறையாணையாலே திருவாலங்காடு அடைந்து பாடிய முதற்றிருப்பதிகம் இதுவாகும். இது தலம் பற்றியதாகும்.
அம்மையார் பாடிய இரண்டாவது மூத்த திருப்பதிகம் நடம் பற்றியதாகும். அதுவும் முன்னையதின் பாடலமைப்பினைக் கொண்டதாகும்.
காரைக்காலம்ைைமயார் பாடிய இரு பதிகங்களும் மூத்த திருப்பதிகம் எனப் பெயர் பெறுவன. பதிகம் என்ற அமைப்பில்
266

வரும் அருட் பாட்டுகளுட் காலத்தால் மூத்தவை இவை என்ற காரணம் பற்றி அப்பெயர் பெற்றன.
இறைவனின் ஊர்த்துவதாண்டவத்தைப் பலவாறு
சித்திரித்துக் காட்டுவதோடு அந்தி நிருத்தத்தையும் அம்மையாரின் பதிகங்கள் குறிப்பிடுவன. ( ിffഗ്ഗ.)
திரு ஆாைங்காகு
சென்னைக்கு மேற்கே 27 மைல் தூரத்திலுள்ள திருவாலங்காடு இரயில்வே ஸ்டேஷனுக்கு வடகிழக்கே 3-மைலில் உள்ளது.
செப்பேடுகளில் கங்கைகொண்ட சோழன் என்ற முதல் இராசேந்திரன், பழையனுராக் கிராமத்தைத் திரு ஆலங்காடுடைய மகாதேவர்க்குத் தானமாகக் கொடுத்த செய்தி விவரிக்கப் பெற்றுள்ளது. தானச் செய்தியை ஊரார் அறியும் பொருட்டு, பிடி சூழ்ந்து படாகை நடப்பித்துப் பிரசுரம் செய்யப்பட்டது. பெண் யானையைக் கிராம எல்லை முழுமையையும் சுற்றிவரச் செய்து ஆங்காங்கு கள்ளியும் சூலக்கல்லும் நாட்டப்பட்டது. இவ்வூரில் தெங்கும் பனையும் ஈழவர் ஏறப்பெறாததாகவும் என்ற குறிப்பினால், அக்காலத்தில் கோயில் மரங்களிலிருந்து கள் இறக்குதல் இல்லை என்று தெரிகிறது.
காளியோடு தாண்டவம் புரிந்த சிவபெருமான், அவள் சமமாக ஆடுவதைக் கண்டு அவளைத் தோற்கடிப்பதற்குக் கருதித் தமது இடது காலைத் தலையளவு உயர்த்தி ஊர்த்துவ தாண்டவம் புரிந்த அருமைத் தலம். ஊர்த்துவ தாண்டவ மூர்த்தி 8 கைகளுடைய கவர்ச்சிமிக்க திருவுருவத்தோடு விளங்குகிறார்.
காரைக்காலம்மையார் தலையாலே நடந்து வந்து “இறைவா! நீ ஆடும்போதுன் அடியின் கீழ் இருக்க” வேண்டிப் பெற்ற வரத்தால், பதஞ்சலி வியாக்கிரபாதர்களோடு அம்மையார் திருவுருவமும் நடராசர் சபையில் இருக்கிறது. அம்மையார் தலையால் நடந்துவந்த இந்தத் தலத்தைத் தம் காலால் மிதிக்க அஞ்சிய சம்பந்தர் ஊருக்கு வெளியே ஒரிடத்தில் தங்கி, அன்று இரவு துயிலும்போது அவர் கனவில் வந்து ஆலங்காட்டப்பன் “நம்மை மறந்தனையோ பாடுதற்கு” என்று நினைவூட்ட அடுத்த நாள் தலத்துக்குள் சென்று இறைவனைப் பதிகம்பாடி வணங்கினர்.
ஆலங்காட்டு நீலி வஞ்சனையால் உயிர்நீத்த வணிகனுக்கு உறுதியளித்த 70 வேளாளர்கள் உயிர்விட்டனர்.
இவ்விரண்டையும் சேர்த்துச் சம்பந்தர் கூறுகிறார்.(1- ஆம் திரு). கூத்தப்பிரான் சபைகள் ஐந்தனுள் இது இரத்னசபை அல்லது மணிமன்று எனப்படும். பழையனூர் ஆலங்காட்டிற்கு % மைல் தொலைவிலுள்ளது. அங்கு, காரைக்காலம்மையார் கோயிலொன்றுண்டு. தேவார முதலிகள் மூவர்கட்கும்
இந்துக்கலைக்களஞ்சியம்

Page 325
அம்மையார் முற்பட்டவராகையால் அவர் திருவாக்கு மூத்ததிருப்பதிகம் எனப்படுகிறது. அற்புதத் திருவந்தாதி யோடு அம்மையார் திருவாக்கு முழுமையும் 11- ஆம் திருமுறை யில் இடம் பெற்றுள்ளது. ஊர்த்துவ தாண்டவ மூர்த்தி திருவீதிக்கு எழுந்தருளிப் பழையனூர்க்குச் சென்று பங்குனி உத்திரத்திலும் மார்கழித் திருவாதிரை அன்றுமாக ஆண்டுக்கிருமுறை முஞ்சிகேச முனிவர், கார்க்கோடக முனிவர் ஆகிய இருவருக்கும் காட்சியளிப்பார்.
இரத்தின் சபை ஊர்த்துவ தாண்டவம் காளியுடன் ஆடியது.
சுவாமி : தேவர்சிங்கப்பெருமாள், அமிர்ததாண்டவேசுவரர்,
முஞ்சிகேசுவரர்.
அம்பிகை வண்டார் குழலி,
தீர்த்தம் : முத்தி தீர்த்தம்.
விருட்சம் : பலா,
கணபதி வல்லபகணபதி பத்துக்கரங்கள் வாய்ந்தது.
பிருங்கி முனிவர் ஆலயம், காளிகோயில் முதலியன தனித்தனியே உள்ளன. ஊருக்குக் கிழக்கே பழையனூர் உள்ளது.
கார்கோடகர், காரைக்காலம்மையார் இவர்களுக்குத் திருத் தாண்டவக்காட்சி அளித்து முத்தி கொடுத்த தலம்.
சபாநாயகர் : ஊர்த்துவ தாண்டவேசுவரர்.
தங்களுடைய வாக்குத் தவறி விட்டதேஎன்று 70 வேளாளர் முத்தியுற்றதலம்.
இங்கு, தெற்கு வீதியில் காரைக்காலம்மையாருக்கு ஒருமடம் உண்டு சுவாமி சந்நிதி மேற்கு நோக்கியது. மூவரும் பாடிய தலம்.
திருவா லங்காடு சேர்வட வாரணியர்
அருளால் வனநாயகி ஞானதீர்த்தம் 9ിഖ്,
வெள்ளநீர்ச் சடையர் போலும் விரும்புவார்க் கெளியர் போலும் உள்ளுளே உருகி நின்றங் குகப்பவர்க் கன்பர் போலும் கள்ளமே வினைக ளெல்லாம் கரிசறுத் திடுவர் போலும் அள்ளலம் பழனை மேய ஆலங்காட் டடிக ளாரே.
திருநா. 4-ம் திரு.
துஞ்ச வருவாரும் தொழுவிப்பாரும் வழுவிப்போய் நெஞ்சம் புகுந்து என்னை நினைவிப்பாரும் முனைநட்பாய் வஞ்சப் படுத்தொருத்தி வானாள்கொள்ளும் வகைகேட்டு) அஞ்சும் பழையனூர் ஆலங்காட்டெம் அடிகளே.
திருஞா.1-ம் திரு.
இந்துக்கலைக்களஞ்சியம்

முத்தா முத்தி தரவல்ல முகிழ்மென் முலையாள் உமைபங்கா சித்தா சித்தித் திறங்காட்டும் சிவனே
தேவர் சிங்கமே பத்தா பத்தர் பலர்போற்றும் பரமா
பழைய லூர்மேய அத்தா ஆலங் காடாஉன் அடியார்க்
கடியேன் ஆவேனே
சுந்தரர். (உ. வே.சா)
திரு ஆவைாய்
பாண்டிய நாட்டின் தலைநகர். தமிழ்ச் சங்கங்கள் திகழ்ந்த தலம். சிவபெருமான் 64 திருவிளையாடல்கள் செய்த தலம். அங்கயற் கண்ணியம்மையார் அவதாரம் செய்து பாண்டியன் திருமகளாக வளர்க்கப் பெற்று, சோமசுந்தரராக வந்த சிவபெருமானைத் திருமணம் செய்து கொண்டு அரசுபுரிந்த பழம்பதி. மும்மையால் உலகாண்ட மூர்த்தி நாயனார், நின்றசீர் நெடுமாறநாயனார், மங்கையர்க்கரசியார், குலச்சிறைநாயனார் முதலியோர் வரலாற்றுத் தொடர்புடைய வளநகர். திருஞான சம்பந்தர் அனல்வாதம், புனல்வாதம் முதலியன செய்து சமணர்களைத் திருத்திச் சைவம் பரப்பிய திருநகர். ஒரு பாண்டியனுக்காகக் காலை மாற்றி ஆடிய கூத்தப்பிரான் கற்சிலையுருவில் வெள்ளியம்பலத்துள் காட்சி அளிக்கிறார். புலவர்கள் “பொன்னுக்கு வெள்ளி கால்மாற்று அதிகம்” என்று தில்லையோடு ஒப்பிட்டு, இக்கால் மாறிய திருவிளையாடலை நயம்பெறக் கூறுவர்.
அங்கயற்கண்ணி அம்மையார் கோயில் வெளிப்பிரகாரத்தில் திருமலை நாயக்க மன்னர் தமது தேவியரோடு சிலையுருவிலுள்ளார். அம்மையின் சந்நிதிக்கெதிரில் பொற்றாமரைத் தீர்த்தம் உள்ளது. இத்திருக்குளத்தின் பெருமை சங்ககாலத் தொடர்புடையது. சங்கப் பலகை மிதந்து தக்க புலவர்களையும் அவர்கள் நூல்களையும் தாங்கி, ஏனையோரையும் அவர் நூல்களையும் கவிழ்த்துவிடும் அற்புதம் சங்ககாலத்தில் இந்தத் திருக்குளத்தில் நிகழ்ந்தது. "நெற்றிக்கண்ணைக் காட்டினும் குற்றம் குற்றமே” என்ற நக்கீரர் தமது பிழையை உணர்ந்து இக்குளத்தில் மூழ்கிக் "கோபப்பிரசாதம்” என்ற நூலை இயற்றியதும் இத்தலமே. இப்பொற்றாமரைத் தீர்த்தத்திலேதான் தருமபுரத் தாபனர் கையில் அவ்வாதீன வழிபடுமூர்த்தி ஆகிய சொக்கலிங்கக் கடவுள் திருவுருவம் திருவருளாற் கிடைத்தது.
குமரகுருபர சுவாமிகள் 'மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ்” பாடி அரங்கேற்றியபோது அம்மை ஓர் இளம்பெண்ணாக வந்து தமது கழுத்திலிருந்து முத்துமாலை ஒன்றைக் கழற்றி அவருக்குப் பரிசாக அளித்ததும் இத்தலத்தில். சில நூற்றாண்டுகட்கு முன்நிகழ்ந்த திருவிளையாடல் சித்திரைப் பெருவிழாவில் மீனாட்சியம்மன் திக்குவிஜயம், திருக்கலியாணம் முதலியனவும்,
267

Page 326
பாண்டியன் ஜ்வதீர்த்தது, ஆவணி மூலத்து விழாவில் பிட்டுக்கு மண் சுமந்தது முதலியனவும், ஏனைய மாதங்களில் வெவ்வேறு திருவிளையாடல்களும் உற்சவங்களாக நடைபெறுகின்றன.
இந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் பாண்டிதுரை தேவர் முதலிய பெரியோர்களால் நான்காவது தமிழ்ச் சங்கம் நிறுவப் பெற்றுத் தமிழ்த் தொண்டாற்றி வருகின்றது. திருக்கோயில் வெளிப் பிராகாரத்தில் சங்கப் புலவர்கள் கற்சிலையுருவில் காட்சியளிக்கின்றனர். சுவாமி சந்நிதிக்கெதிரில் இரு கற்றுரண்களில் துர்க்கையும் வீரபத்திரரும் பெரிய சிலையுருவில் வெண்ணெய் சாற்றப்பெற்று காட்சியளிக்கின்றனர். வாதவூரடிகள் வரலாற்றுத் தொடர்பும் இத்தலத்துக்குண்டு.
வீமநாத பண்டிதர் இயற்றிய கடம்பவனபுராணம் பரஞ்சோதி முனிவர் இயற்றிய திருவிளையாடற்புராணம், பெருபற்றப் புலியூர்நம்பி இயற்றிய திருவாலவாயுடையார் திருவிளையாடற் புராணம், குமரகுருபரர் இயற்றிய மதுரைக்கலம்பகம், மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ் முதலிய நூல்கள் இத்தலத்தைக் குறித்து எழுந்த நூல்கள்.
சுவாமி சொக்கநாதர், சோமசுந்தரர். அம்பிகை மீனாட்சி.
தீர்த்தம் பொற்றாமரை.
விருட்சம் கடம்பமரம்.
ஸ்தல விநாயகர் : சித்திவிநாயகர்.
வழுதி நாட்டிற்றிரு மதுரைசொக் கேசர்வேல் விழிமீனாட்சிவே கவதிபொற் றாமரை. (சிவ)
மங்கையர்க் கரசி வளவர்கோன் பாவை
வரிவளைக் கைம்மட மானி பங்கயச் செல்வி பாண்டிமா தேவி பணிசெய்து நாடொறும் பரவப் பொங்கழ லுருவன் பூதநாயகனால்
வேதமும் பொருள்களும் அருளி அங்கயற் கண்ணி தன்னொடும் அமர்ந்த
ஆலவா யாவதும் இதுவே.
திருஞா. 3-ம் திரு.
ஆலவாய் தத்தனென்னும் பாண்டியன் அரசாளுகையில் சமணரனுப்பிய நாகம் உமிழ்ந்த விடவாற்றின் கொடுமை சிவபெருமானுடைய சடையிலிருந்த சந்திரனிடத்துள்ள அமுதத்துளியால் சமனமுற்று மதுரமாயிற்று. அதனால் இந்நகர்க்கு மதுரையென்பது பெயராயிற்று.
திருவாலவாய், திருநள்ளாறு, திருமுடங்கை, திருநடுவூர் ஆகிய நான்கு மாடங்கள் கூடும் இடமாகிய இத்தலத்துக்கு நான் மாடக் கூடல் என்பது பெயராயிற்று. நான்கு மாடங்களையும் கன்னி, கரியாமல், காளி, ஆலவாய் என்று சொல்லுவதும் உண்டு.
268

மதுராநகரம் கன்னி, கரியமால், காளி, ஆலவாய்த் தருமமூர்த்தி என்பவர்களால் பாதுகாக்கப்படுவது. இத்தலம் சிவபெரு மானுடைய படைவீடும் சத்திபீடமுமாகும்.
விருத்திர ஹத்தியைப் போக்குதற்குத் தேவலோகத்திற் பல விமானங்கள் இந்திரனாற் செய்விக்கப்பெற்றன. இந்திர விமானம் 8 யானை, 64 கணநாதர், 32 சிங்கங்களால் தாங்கப் பெறுவது (திருவிளை. இந்திரன் 83) இந்திர விமானத்திற்குத் தென்பாலுள்ளதாகிய வெள்ளியம்பலத்திற் பதஞ்சலி முனிவருக்காகச் சிவபெருமான் திருநடனம் செய்தருளினர். அது சொக்கத் தாண்டவமென்று பெயர் பெறும். (மதுரையில் திருக்கோயிலுக்குத் தென்பால் வெள்ளியம்பலமென்ற பெயருள்ள ஒரு மண்டபமிருத்தலும், அதில் இக்காலத்துப் பங்குனித் திருவிழா நடைபெறுதலும், வெள்ளியம்பலம் தென்பாலுள்ள தென்றற்கும் பங்குனி உத்தரத்தில் திருமணம் முதலியன நடைபெற்றதற்கும் சான்றாக உள்ளன.) இத்தலத்தில் எழுந்தருளியுள்ள சிவபெருமானுடைய அழகிய வடிவத்தைக் கண்டு இந்திரன் பெயரால் ஐராவதம் தாபித்துப் பூசித்த சிவலிங்கப் பெருமானுடைய திருநாமம். இந்திரேசுவரர் என்பது. ஐராவத தீர்த்தக்கரையில் ஐராவதத்தால் பூசிக்கப் பெற்ற சிவலிங்கப் பெருமான் ஐராவதேசுவரர் ஆவர்.
பழைய கணக்குகள் முதலியவற்றில் பூரீ சோமசுந்தரக் கடவுளுக்கு திருவாலவாய்த் தம்பிரானார் என்ற திருநாமமே வழங்கப் பெற்று வந்ததாம். பூரீ- சோமசுந்தரக் கடவுளின் விருதாவளித்திரு நாமங்களுள் பாண்டிய மண்டலாதீசுவரர் என்பதும் ஒன்று. பூரீ சோமசுந்தரக் கடவுள் பாண்டியராசவாக வீற்றிருந்த பொழுது சுந்தரமாறன் என்று கைச்சாத்திட்டருளினர். சுந்தரமாறர் பதினாறு தெய்வ வருடம் அரசாண்டார்; கிரீடமணிந்து அரச போகத்தை அனுபவித்துக் கொண்டிருந்தது பற்றி சொக்கநாதர், அபிடேகச் சொக்கரென்றும் புழுகுநெய்ச் சொக்கரென்றும் திருநாமம் பெற்றனர். இந்திரனுக்கு முன்னம் ஆடிய ஈசான கோணத்தில் சிவபெருமான் பாண்டியனுக்காக மாறியாடி திருவடியின் மேற்கொடி கட்டினர். அதனால் அதிர வீசியாடுவார், மாறியாடிக் கொடியிட்ட பெருமானென்னும் திருநாமங்கள் அவருக்கு உண்டாயின.
பழியஞ்சிச் சொக்கரென்பது மதுரேசருக்கு ஒரு திருநாமம்; பழியஞ்சிய திருவிளையாடலால் உண்டாகியது இது. பூரீ சோமசுந்தரக் கடவுள் சங்கப் புலவராக எழுந்தருளியிருந்த பொழுது அவருக்கு மதுரைப் பேராலவாயாரென்பதும் இறையனாரென்பதும் திருநாமம்; செந்தமிழாகரன் என்னும் திருநாமமும் உண்டு. ஆலவாயக் கோயிலின் கீழை மதிற்பால் அட்டாலை மண்டபம் தெய்வகம்மியராற் கட்டப் பெற்றது; வில்வீரவடிவங் கொண்டு அதில் எழுந்தருளி யானையை எய்த சிவபெருமானுக்கு அட்டாலைச் சேவகரென்பது திருநாமம். அம்பிகையின் திருநாமங்கள் அங்கயற்கண்ணி, அருட்பெண், தமிழறியும் பேராட்டி, மரகதவல்லி, மாணிக்கவல்லி, தலவிநாயகர் கற்பக விநாயகர் (இவர் கோயில் இப்பொழுது காணப்படிலது), சித்திவிநாயகர்.
இந்துக்கலைக்களஞ்சியம்

Page 327
ஐராவதகணேசர் : ஆனையூருணிக் கரையில் ஐராவதத்தாற் பூசிக்கப் பெற்றவர்.
மதுரையிலுள்ள ஆலயத்தின் திருநாமம் ஆலவாய். பூரீ சோமசுந்தரக் கடவுளுடைய திருக்கோயிலிலுள்ள பெரிய பிராகாரத்தில் வாயுமூலையில் சங்கத்தார் கோயில் உள்ளது. இதில் முருகக் கடவுள், அகத்திய முனிவர், சங்கப் புலவர் நாற்பத்தொன்பதின்மர் ஆகிய இவர்களுடைய திருவுருவங்கள் முதலியன உள்ளன. பொற்றாமரைப் பொய்கையின் வடகரை மண்டபத்துள்ள தூணப் பத்திகளிலும் ஸ்வாமி கோயிலின் வாயு மூலையின் கண் உள்ள ஆலயத்திலும் சங்கத்தார்களுடைய திருவுருவங்கள் அமைக்கப் பெற்றுள்ளன. பொற்றாமரைப் பொய்கையிற் பாண்டியன் படித்துறையிற் கிழக்குத் தூணில், முதலில் இத்தலத்தைக் கண்டு மணலூரிலிருந்த குலசேகர பாண்டியனுக்கு இத்தல விசேடத்தைத் தெரிவித்த வணிகனாகிய தனஞ்சயன் வடிவம் உள்ளது.
பொற்றாமரைப் பொய்கை வடபாலுள்ள பாண்டியன் படித்துறையில் மேல் பாற்றுரணில் குலசேகர பாண்டியன் வடிவம் உள்ளது. குலசேகர பாண்டியனென்பவன் தனஞ்சயன் சொல்லக் கேட்டு இத்தலத்தைக் கண்டு நகராகச் செய்வித்து இதனை ராசதானியாக்கிக் கொண்டவன். திருவாலவாய்த் திருக்கோயிற் கருவூலம் முதலியவற்றில் வைக்கப்பட்டு வழங்கி வருகின்ற முத்திரைகளாவன : 1. இடபமுத்திரை 2 மீனமுத்திரை, 3. இராசகர நாகர் முத்திரை.
காஞ்சனமாலைக் கோயில் எழுகடற்றீர்த்தத்தின் தென்மேற்கிலுள்ள மிகப் பழமையான கோயில்; இதில் ஜலகண்டேசுவரரென்ற சிவலிங்கப் பெருமானும் அவரைத் தரிசித்த வண்ணமாக அமைந்த காஞ்சனமாலையின் வடிவமும் உண்டு.
தீர்த்தங்கள் :
எழு கடல் : ஒரு தீர்த்தம், காஞ்சனமாலைக்காக வருவித்த ஏழு கடல்களும் தன்பால் வந்து அடங்கப் பெற்றமையின் இஃது இப்பெயர் பெற்றது. சிவதீர்த்தமெனவும் வழங்கப் பெறும்.
ஐராவத தீர்த்தம் ஐராவதத்தால் உண்டாக்கப் பெற்றது: யானை யூருணியெனவும் கணபதியேந்தலெனவும் வழங்கும்; மதுரைக்கு மேற்கேயுள்ளது. பொற்றாமரைப் பொய்கை கோயிலுக்குள் இருக்கிறது.
தலவிருட்சம் : கடம்பு.
அகத்தியர் பளிங்குத் துண்டு ஒன்றைக் கலைப்பீடமாக இத்தலத்தில் வைத்தார் என்று திருவையாற்றுப் புராணத்தில் சொல்லப்பட்டிருக்கிறது.
மன்றம் : வெள்ளிமன்று.
மண்டபம் : மண்டபங்கணாயன், அன்னக்குழி மண்டபம், அட்டாலை மண்டபம், வாயில் முத்தளக்குந்திருவாயில். மதுரைக் கோயிலின் வெளிமதில் 'கயாமி மதில்’ என்னும் பெயருடையது. (2. 662/ 47.)
இந்துக்கலைக்களஞ்சியம்

திருஆலி (திருஆலிதிருநகரி)
தஞ்சாவூர் மாவட்டத்திலே சீகாழிக்கு ஆறுமைல் தொலைவில் உள்ளது திருவாலி; அதற்கு இரண்டு மைல் தொலைவில் உள்ளது திருவாலி திருநகரி. திவ்விய தேசக் கணக்கில் ஒன்றாகக் கருதப்படினும் இவை இரு தனியூர்களாம்.
திருமகள் விஷ்ணுவை ஆலிங்கனம் செய்ததால் ஆலி ஆயிற்று. திருவாலியில் நரசிம்மன் சந்நிதியும் திருநகரியில் வயலாலி மணவாளன், திருமங்கையாழ்வார் சந்நிதிகளுமுள்ளன.
திருநகரிக்கு அரைமைல் தொலைவில் வேதராஜபுரத்துக்கு அருகில் ஒரு மைதானத்திற் பங்குனி உத்தரத்தில் மங்கையாழ்வார் திருமாலை வழிபறித்த வேடுபறி உற்சவம் நடைபெறும்.
குலசேகரரும் திருமங்கையாழ்வாரும் மங்களாசாசனம் செய்த திவ்வியதலம் (பெருமாள் திரு. 87; பெரியதிருமொழி, 3.5). (பொ. பூ)
திரு ஆவருதுறை
நாரசிங்கன் பேட்டை இரயில்வே நிலையத்திலிருந்து கிழக்கே 1% மைல் தொலைவில் உள்ளது இத்தலம். திருமூலநாயனார் திருமந்திரம் அருளிய தலம். சம்பந்தர் தமது தந்தையார் வேள்வி செய்யும் பொருட்டு இறைவனைப் பாடி ஆயிரம் பொற்காசு பெற்றுக் கொடுத்ததைத் தேவாரம் கூறுகின்றது.
திருவிசைப்பா பாடிய திருமாளிகைத் தேவர் தொடர்பும் இத்தலத்துக்குண்டு. திருவாவடுதுறை ஆதினத் தலைமைத் திருமடம் இங்குளது.
பசுவடிவுடன் உமாதேவி பூசித்ததால் ஆவடுதுறை. தருமதேவதை பூசித்ததலம்.
தியாகராஜ சந்நிதி இருக்கிறது. ஆயிரம்பொன் சுவர்ணத்தியாகர், முசுகுந்தர் புத்திரர் - புத்திரத் தியாகர்.
கிழக்கே சித்தர்காடு என்ற ஊர் இருக்கிறது. நிருதிமூலை : சாத்தனூர். உற்சவம் கொள்பவர் சோமாஸ்கந்தர். துவஜாரோகணம் செய்பவர் தியாகர் தீர்த்தம் கொடுப்பவர் கனைத்தெழுந்த நாயகர் மூவரும் பாடிய தலம்.
ஆவடுதுறைமாசிலாமணி ஞானத் தியாகர் ஒப்பிலா முலைதிகழ்கோ முத்தி (சிவ)
கங்கை வார்சடை யாய்கண நாதா
கால காலனே காமனுக் கனலே
பொங்கு மாகடல் விடமிடற் றானே
பூத நாதனே புண்ணியா புனிதா
269

Page 328
செங்கண் மால்விடை யாய்தெளி தேனே
தீர்த்த னேதிரு வாவடுதுறையுள் அங்க னான்னை அஞ்சல்என் றருளாய்
ஆர்எ னக்குற வமரர்கள் ஏறே.
சுந்தரர்.
இடரினும் தளரினும் எனதுறுநோய் தொடரினும் உனகழல் தொழுதெழுவேன் கடல்தனில் அமுதொடு கலந்த நஞ்சை மிடறினில் அடக்கிய வேதியனே
இதுவோன்மையாளுமாறிவதொன்றெமக்கில்லையேல் அதுவோவுனதின்னருள் ஆவடுதுறையரனே,
திருஞா. 3-ம் திரு.
மாயிரு ஞாலமெல்லாம் மலரடி வணங்கும் போலும் பாயிருங் கங்கை யாளைப் படர்சடைவைப்பர் போலும் காயிரும் பொழில்கள் குழ்ந்த கழுமல ஊரர்க்கு அம்பொன் ஆயிரம் கொடுப்பர்போலும் ஆவடு துறைய னாரே,
திருநா. 4ம். திரு. திருஞான சம்பந்தமூர்த்தி நாயனார் தம் தந்தையார் செய்த வேள்விக்காக ஆயிரம் பொன் சிவபெருமானிடம் இருந்து இத்தலத்திற் பெற்றனர். அதனால் அங்கே உள்ள தியாகராசமூர்த்திக்குச் சுவர்ணத்தியாகர் என்ற பெயர் வழங்கும்.
ஒருமுறை அம்பிகை சிவாக்ஞையால் இங்கே பசுவடி வத்துடன் வந்து இங்குள்ள தீர்த்தத்தில் நீராடி அப்பசு வடிவம் நீங்கப் பெற்றமையின் இத்தலத்திற்குக் கோமுக்தி, கோகழி என்னும் பெயர்கள் வழங்கும். அம்பிகை தன் சுயரூபம் பெற்ற காலத்து அப்பிராட்டியைச் சிவபெருமான் அணைத்தெழுந்த நாயகர் என்ற திருநாமத்தோடு ஒரு மூர்த்தி எழுந்தருளி யிருக்கிறார். உற்சவத்தில் தீர்த்தம் கொடுக்க எழுந்தருளுபவர் அம்மூர்த்தியே.
இத்தலத்தின் ஆலயத்தில் பல அரசமரங்கள் உள்ளன. அவை படரும் அரசு. மண்டபத்தின் மதிலின் மேலும் படர்ந்திருக்கும் தலவிருட்சம் அந்த அரசே, அதனால் அதற்கு அரசவனம் என்ற காரணப் பெயர் உண்டாயிற்று. சிறந்த சித்தரும் நாயன்மார்களுள் ஒருவருமாகிய திருமூலர் இத்தலத்தில் தவம்புரிந்து திருமந்திரத்தை அருளிச் செய்தனர். ஆலயத்தினுள் அவர் எழுந்தருளியிருக்கும் கோயில் ஒரு குகையைப் போன்ற தோற்றமுடையது.
மடத்தைச் சார்ந்த ஒரிடத்தில் திருமாளிகைத் தேவர் என்னும் சித்தருடைய ஆலயம் உண்டு. போகரின் சிஷ்யரும் திருவிசைப்பா பாடியவரும் ஆகிய அவர் ஒரு சமயம் அக்கோயில் மதில்களின் மேலுள்ள நந்தி உருவங்களையெல்லாம் உயிர் பெறச் செய்து ஒரு பகையரசனோடு போர் புரிய அனுப்பினார் என்பது பழைய வரலாறு, அதுமுதல் இவ்வாலய மதிலின் மேல் நந்திகள் இல்லாமல் போயினவாம்.
27う

இங்கே சுவாமி சந்நிதியிலுள்ள ரிஷபம் மிகப் பெரியது.
'படர்ந்த அரசு வளர்ந்த ரிஷபம்” என்று ஒரு பழமொழி இப்பக்கங்களில் வழங்குகின்றது.
இவ்வாலயத் திருவாவடுதுறை மடத்தின் நிர்வாகத்துக்கு உட்பட்டது. இயல்பாகவே சிறப்புள்ள இவ்வாலயம் ஆதீன
சம்பந்தத்தால் பின்னும் சிறப்புடையதாக விளங்குகிறது.
குருபூசை நடைபெறும் காலத்தில் இவ்வாலயத்திலும் ரதோற்சவம் நடைபெறும். உற்சவம் பத்துநாள் மிகவும் விமரிசையாக நிகழும். ரதசப்தமி அன்று தீர்த்தம். பெரும்பாலும் ரதசப்தமியும் குருபூசையும் ஒன்றையொன்று அடுத்தடுத்தே வரும். சில வருஷங்களில் ஒரே நாளில் இரண்டும் வருவதும் உண்டு. ஒவ்வொரு நாளும் காலையிலும் மாலையிலும் பூரீ கோமுத்தீசர் வீதியில் திருவுலா வருவார். ஆதீனகர்த்தர் பரிவாரங்களுடன் வந்து உற்சவம் ஒழுங்காக நடைபெறும்படி செய்விப்பார். தியாகராச மூர்த்தியின் நடனமும் உண்டு. அதற்குப் பந்தர்காட்சி என்று பெயர். ஆலயத்தில் உற்சவமும் மடத்தில் குருபூசையும் ஒருங்கே நடைபெறுவது ஒரு சிறப்பாகவே இருக்கும்.
தலவிநாயகர்கள் இருவர் :-
1. துணை வந்த விநாயகர்; இவர் அம்பிகை பசுவடிவங்
கொண்டு வந்தபொழுது துணையாக வந்தவர்; 2. அழகிய விநாயகர்; இவர் அகத்திய முனிவருக்குப்
பஞ்சாக்ஷர உபதேசம் செய்தவர்.
சுவாமியின் திருநாமங்கள் :-
பூரீ ஸ்வயம் வியக்தேசுவரர், பிரகாசமணிநாதர், மாசிலாமணியீசர், கோமுத்தீசர் கோகழிநாதர், அணைத்தெழுந்த நாயகர், பூகைலாஸேசுவரர், புத்திரத்தியாகர், போதிவனநாதர், போதியம்பலவாணர், மகாதாண்டவேசுவரர், அர்த்தத்தியாகர், முத்தித்தியாகர், சிவலோகநாயகர் என்பனவும் இவற்றின் வேறு
பரியாய நாமங்களுமாம்.
தேவியாரின் திருநாமங்கள் :-
அதுலகுச நாயகி, ஒப்பிலா முலையம்மை, ஒப்பிலாள்.
தலத்தின் திருநாமங்கள் :-
கோமுக்தி, கோகழி, திருவாவடுதுறை, பூகைலாசம், நந்திநகர், தியாகபுரம், போதிவனம், அரசவனம், மகாதாண்டவபுரம், வேதபுரம், சித்தபுரம், நவகோடிசித்தபுரம், முக்திக்ஷேத்திரம், சிவபுரம் என்பனவும் இவற்றின் பரியாய நாமங்களுமாம்.
தீர்த்தங்கள் மூன்று :-
1 முத்தி தீர்த்தம் அல்லது கோமுக்தி தீர்த்தம், 2. கைவல்ய
தீர்த்தம், 3. பத்மதீர்த்தம் என்பன. இவை முறையே
இந்துக்கலைக்களஞ்சியம்

Page 329
திருக்கோயிலின் எதிரிலும், திருக்காவிரியிலும், பூரீகொங்கணேசுவரர் கோயிலின் பக்கத்திலுமுள்ளன.
விருட்சம் : திருவரசுகள் படர்ந்து விளங்குதலால் இவை
படர்ந்த அரசுகள் என்றும் நிலவரசுகள் என்றும் வழங்கப்படும்.
சபை போதியம்பலம் அல்லது அரசம்பலம். நந்தி தருமநந்திதேவர்.
இத்தலத்தில் சிவபெருமான் நிகழ்த்தியருளிய விசேடங்கள்.
1. லீலார்த்தமாக நேர்ந்த பசுவடிவத்தை உமாதேவியார்க்கு நீக்கி அணைத்தெழுந்து நின்று இத்தலத்தைக் கைலையங் கிரியாகக் காட்டினார்.
2. தமது கட்டளைப்படி தேவர்கள் படர்ந்த அரச விருட்சங்களாகத் தோன்றி விளங்க அவற்றின் நிழலில் எழுந்தருளியிருந்தனர்.
3. மகப்பேறு கருதிவந்த முசுகுந்த சக்கரவர்த்திக்கு இந்தத் தலத்தைத் திருவாரூராகவும் தம்மைத் தியாகேசராகவும் காட்டிப் புத்திரப்பேறும் அளித்தனர்.
4. தம்மைப் போற்றிய தருமதேவதையை இடபவாகனமாகக் கொண்டதன்றிச் சந்நிதியில் அரசவிருட்சத்தின் நிழலில் கோயில் கொண்டிருக்கும்படிக்கும் வரமளித்தனர்,
5. தேவர்களும் முனிவர்களும் செய்த பிரார்த்தனைக்கு இரங்கி
அரச விருட்சத்தின் நிழலில் அமைந்த அம்பலத்தில் மகா தாண்டவம் புரிந்தனர்.
6. திருமூலநாயனாரைத் தடுத்தாட்கொண்டு ஆகமசாரமாகிய திருமந்திரத்தை வெளிப்படுத்தத் திருவருள் புரிந்தனர்.
7. திருஞானசம்பந்தமூர்த்திநாயனாருக்குப் பொற்கிழியளித்தனர்.
8. சில முனிவர்களுக்குச் சிவஞானோபதேசம் செய்தருளினர்.
9. சில அந்தணர்களுக்கு வேதத்தை ஒதியருளினர்.
10. போகர் முதலிய சித்தர்களும் நவகோடி சித்தர்களுக்கும் அவர்கள் விரும்பிய வண்ணம் அட்டமாசித்திகளையும் பிறவற்றையும் அருளினர்.
இத்தலத்தில் கோச்செங்கட்சோழ நாயனார் திருப்பணி செய்து பேறு பெற்றனரென்றும், சித்தர்கள் பலர் எப்பொழுதுமே தங்கியிருக்கின்றார்களென்றும் புராணங்கூறும்.
பூரீ அணைத்தெழுந்தநாயகர் : இவர் உமாதேவியாரை அணைத்தெழுந்த கோலமாக எழுந்தருளியிருப்பவர். உற்சவாந்தத்தில் கோமுக்தி தீர்த்தத்தில் தீர்த்தம் கொடுத்தருள்பவர் இவரே.
இந்துக்கலைக்களஞ்சியம்

பூரீ தியாகராசர் : முசுகுந்தருக்குச் சிவபெருமான் திருவாரூர்த்தியாகராசராகக் காட்சி கொடுத்தது தொடங்கி இவர் சந்நிதி இங்கே உளதாயிற்று; இவர் வீரிசிங்காதனமுடையார். இவருடைய நடனம் சுந்தரநடனம். உற்சவத்தில் திருத்தேர் ஊர்ந்தருள்பவர் இவரே. (pl. 662/ 47.)
திரு ஆவருதுறைக் கோவை
திருவாவடு துறையிலே கோயில் கொண்டுள்ள சிவபிரானாம் மாசிலாமணியீசர் மீது பாடப் பெற்றது திருவாவடுதுறைக் கோவை எனும் ஐந்திணைக் கோவை. இதற்குத் துறைசைக் கோவை என்ற பெயருமுண்டு. இது விநாயகர் வணக்கமாக அமையும் இரு பாடல் நீங்கலாக 457 செய்யுளையுடையது.
இதனைப் பாடியவர் மதுரகவி எனப் போற்றப்பெறும் தொட்டிக்கலை சுப்பிரமணிய முனிவராவர்; அவர் மாதவச் சிவஞானயோகிகளின் (- 1785) மாணவராவார்.
இதனை உ.வே. சாமிநாதையர் சென்னையில் வைஜயந்தி அச்சுக் கூடத்திற் சுபகிருது வருடம் தை மாதம் (1903)
பதிப்பித்தனர்; அது 1926 இலே மறுபிரசுரம் கண்டது.
(67.1/1, 4)
திருஆவினன்குடி
இக்காலத்திற் பெரும் புகழ் பெற்று விளங்கும் பழநி மலையின் அடிவாரத்தில் உள்ள பழைய திருத்தலம் திருவாவினன் குடியாகும். பழநிமலை மதுரை மாவட்டத்திலே திண்டுக்கல்லுக்கு மேற்கே கோயம்புத்தூர் செல்லும் வழியில் 36 மைல் தொலைவிலுள்ளது.
திருவாவினன்குடி திருமுருகாற்றுப்படையில் இடம் பெறும் ஆற்றுப்படை (ஆறுபடை) வீடுகளில் ஒன்றாகும். (175-176). இங்கு முருகப் பெருமான் ஒரு தேவியோடு தங்கியிருப்பது முருகாற்றுப்படை தரும் செய்தியாகும். தெய்வாணையம்மை யாருடன் முருகப்பெருமான் இங்கு எழுந்தருளியுள்ளார். இங்கெழுந்தருளிய முருகப் பெருமானைக் குழந்தை வேலாயுதசாமி என்பர்.
திருவாவினன்குடி முருகனை அருணகிரிநாதர் பாடியுள்ளார்; பழநிமலை தண்டாயுதபாணி, கோயிலின் செல்வாக்குக்கு முன்னே ஆவினன்குடி குழந்தை வேலாயுதசாமி கோயிலின் முக்கியத்துவம் குறைந்து காணப்படுகின்றது. வே. இராமநாதன் செட்டியார் பாடிய ஆவினன்குடி அந்தாதி போன்ற சில பிரபந்தங்கள் இத்தலத்திற்குள.
தொண்டை நாட்டிலும் பாலாற்றுக்கு வடகரையில் திருவாவினன்குடி எனும் சிவத்தலம் ஒன்றுண்டு. அங்கு எழுந்தருளியுள்ள கைலாயநாதர் மீது தொட்டிக்கலை
சுப்பிரமணியமுனிவர் பதிற்றுப்பதந்தாதி பாடியுள்ளார்.
( يلي1/7Lم)
27f

Page 330
திரு ஆவினன்குடிக் கைாையநாதர் பதிற்றுப்பத்தந்தாதி
தொண்டைநாட்டிற் பாலாற்றுக்கு வடகரையிலுள்ள சிவத்தலம் திருவாவினன் குடியாகும். திருவாவினன்குடியில் எழுந்தருளியுள்ள கைலாயநாதர் மீது பாடப் பெற்ற பதிற்றுப் பத்தந்தாதி, திருவாவினன்குடிக் கைலாயநாதர் பதிற்றுப் பத்தந்தாதியாகும்.
இதனை மதுரகவி எனப் போற்றப் பெற்ற தொட்டிக்கலைச் சுப்பிரமணிய முனிவர் பாடி 1789 ஆம் ஆண்டு அரங்கேற்றினார். விநாயகர் வணக்கத்தினையும் பல்வேறு யாப்பமைதிகளிற் பாடப்பெற்ற நூறு பாடல்களையும் உடையது மதுரகவியின் பதிற்றுப் பத்தந்தாதி,
இவ்வந்தாதி சென்னை அரசின் கீழைத்தேயச் சவடிகளின் 51 ஆம் தொடராகத் தி. சந்திரசேகரன் 1956 இலே வெளியிட்ட முதலாம் அந்தாதிக் கொத்துத் தொகுப்பில் இடம் பெறுகின்றது. (பொழ,)
திரு ஆனந்தருத்திரேசம்
செங்கற்பட்டு மாவட்டத்திலே காஞ்சி புரத்தினைச் சார்ந்த
திருத்தலம். நூற்றுப் பதினெட்டு உருத்திரருள் முதல்வராகிய ஆனந்த உருத்திரர் பூசித்த தலம்.
இங்கு எழுந்தருளிய சிவபிரானுக்கு ஆனந்தருத்திரேசர் என்று பெயர்.
கச்சியப்ப முனிவர் கச்சியானந்தருத்திரேசர் மீது வண்டு விடுதூது, பதிற்றுப் பத்தந்தாதி, கழிநெடில் எனும் பிரபந்தங்களைப் பாடியுள்ளார். அவர் ஆசிரியர் சிவஞான
யோகிகள் கச்சியானந்தருத்திரேசர் பதிகம் பாடியிருக்கிறார்.
( 67/7. As)
திரு ஆணைக்கா
இத்தலம் பூரீரங்கம் இரயில்வே நிலையத்திற்குக் கிழக்கில் % மைல் தொலைவில் உள்ளது.
மதகரிவனம், அத்தியாரணியம், தானப் பொருப்பு வனம் உரலடிவனம், மதமாதங்கவனம் என்பன இத்தலத்தின் பெயர்கள்.
பஞ்ச பூதஸ்தலங்களுள் இது அப்புஸ்தலம். காவிரி, கொள்ளிடம் ஆகிய இரண்டு ஆறுகளுக்கும் இடைப்பட்ட மூலஸ்தான மூர்த்தியிருக்கும் இடம் தரைமட்டத்திற்கும் கீழாக இருப்பதால் எப்போதும் தண்ணிர்க் கசிவு இருந்து கொண்டேயிருக்கும். ஆறுகளில் வெள்ளம் வரும்போது ஓயாமல் இறைத்துக் கொண்டே இருந்தாலன்றி ஜம்புகேசுவரரைத் தரிசனம் செய்ய முடியாது. தண்ணிரை அப்புறப்படுத்துவதற்கு இப்பொழுது ஒரு கருவி உள்ளது.
272

இத்தலத்தில் மிகப்பழைய காலத்தில் வெண்நாவல் மரங்கள் நிறைந்த காடு இருந்தது. இக்காட்டில் ஒரு முனிவர் தவம் புரிந்தார். ஒருநாள் அவரெதிரே ஒரு வெண்ணாவற்பழம் விழுந்தது, அதை முனிவர் திருக்கைலாயம் சென்று இறைவனுக்கு நிவேதித்துப் பிரசாதமாக உண்டார். பிரசாதமாகையால் கொட்டையையும் உமிழாமல் உண்டு விட்டார். இறைவன் திருவிளையாடலால் அக்கொட்டை முளைத்து முனிவர் தலைவெடிக்குமாறு மரமாக வளர்ந்தது. முனிவர் விண்ணப்பிக்க இறைவன் கட்டளைப்படி முனிவர் மீண்டும் நாவற்பழம் விழுந்த இடத்திற்கே மரமாக நடந்து வந்து சேர்ந்தார். இறைவன் இம்மரத்தடியில் அவர் பூசையை ஏற்று ஜம்புலிங்கமாக ஆனார். நாவல் மரம் (வெண்ணாவல்) ஸ்தலவிருட்சம் ஆயிற்று.
திருக்கயிலாயத்தில் புஷ்பதந்தன் மால்யவான் என்ற இருகணநாதர் போட்டியிட்டுத் தொண்டாற்றுவதில் பெருமை கொண்டு ஒருவரை ஒருவர் சபித்துக் கொண்டு முறையே யானையும் சிலந்தியும் ஆயினர். இருவரும் முறையிடுவதற்கு இரங்கிய சிவபெருமான் இத்தலத்தில் வழிபட்டு விமோசனம் பெறுமாறு அருளினார். யானையும் சிலந்தியும் ஜம்புலிங்கத்தை வழிபட்டன. யானை பூவும், நீரும் கொண்டு வழிபட்டது. மரத்திலிருந்து சருகுகள் விழாதபடி ஜம்புலிங்கத்திற்குச் சிலந்தி தனது வாய்நூலால் பந்தி அமைத்தது. இப்பந்தர் அநுசிதம் என்று யானை அழித்து வழிபட்டுச் சென்ற பிறகு, சிலந்தி நாடோறும் புதிய பந்தல் அமைத்து வந்தது. பத்தரையழிக்கும் யானையைத் தண்டிக்க எண்ணிய சிலந்தி துதிக்கைக்குள் நுழைந்து மூளையைக் கடித்தது. யானை இறந்தது. உள்ளே புகுந்த சிலந்தியும் இறந்தவுடனே யானையும் சிலந்தியும் முறையே புஷ்பதந்தனும் மாலியவானுமாக ஆயினர். ஜம்புகேசுவரர் அவர் முன் தோன்றிப் புஷ்பதந்தனை மறுபடியும் கணநாதன் ஆகும்படியும், அவன் யானை வடிவு நினைவுக்குறியாக இத்தலம் ஆனைக்கா என்று பெயர் எய்தும்படியும், மாலியவான் சோழ மன்னனாகப் பிறந்து பல தொண்டுகள் புரிந்து பிறகு வீடு எய்தும்படியும் அருள் புரிந்தார். சிலந்தியும் கோச்செங்கண் ணனாகப் பிறந்தது. இம்மன்னன் சிவபெருமானுக்கு 70 மாடக்கோயில்கள் (யானை உள்நுழையாதபடி) சிறிய வாயிலாக வைத்து எடுப்பித்தான். அவ்வாறு எடுப்பித்த கோயில்களுள் இக்கோயிலும் ஒன்று.
உமாதேவியார் பூசித்த தலங்களுள் ஒன்று. நாடோறும் அம்மன் கோயில் அர்ச்சகர் பெண்ணுடையைத் தரித்துக் கொண்டு உச்சிக்கால பூசைவேளையில் சுவாமி கோயிலில் வழிபாடு செய்கிறார். பிரமோற்சவத்திற் பங்குனி மாதம் சித்திரை நட்சத்திரத்தன்று பஞ்சப் பிரகார உற்சவம் மிக விமரிசையாக நடைபெறும். சோமாஸ்கந்தர் அம்மன் வேடமும், அம்மன் சுவாமி வேடமும் பூண்டு ஐந்து வீதிகளிலும் வலம் வருவார்கள். ஆயிரக்கணக்கான மக்கள் தரிசனம் செய்வார்கள். திருநீற்றையே கூலியாகக் கொடுத்து ஒரு பெரியார் கட்டிய திருநீறிட்டான் மதில் இன்றும் உள்ளது. சோழ மன்னன் ஒருவன் காவிரியில் நீராடும்போது கழுத்திலிருந்த பதக்கம் நழுவி
இந்துக்கலைக்களஞ்சியம்

Page 331
வெள்ளத்தோடு போயிற்று. அவனும் சிவார்ப்பணம் என்று போனான். நாடோறும் ஆற்றிலிருந்து வரும் திருமஞ்சனத்தில் அது அகப்பட்டுத் திருமஞ்சனம் செய்யும்போது இறைவன் திருமேனியில் விழுந்தது.
அம்பிகை அகிலாண்டேசுவரி திருவுருவம் அழகும் அருளும் நிரம்பியது. இத்தலத்திற்கு அருமையான புராணத்தைக் கச்சியப்ப முனிவர் இயற்றியுள்ளார். இத்தலத்திற்குக் கமலை ஞானப்பிரகாசர் தந்திவனப்புராணம் என்ற நூலை இயற்றியுள்ளார்.
சுவாமி ஜம்புகேசுவரர், சம்புலிங்கப் பெருமான்.
சம்புநாயகர், அமுதப் பெருமான்.
அம்பிகை அகிலாண்டநாயகி, அகிலாண்டேசுவரி, தீர்த்தம் காவிரி. விருகூடிம் வெண் நாவல்
சுவாமியை அம்பாள் பூசித்ததாக ஐதீகம்.
அம்பிகை தீர்த்தத்தைத் திரட்டிச் சிவலிங்கத் திருவுரு அமைத்த காரணத்தால் சுவாமியின் திருநாமம் செழுநீர்த்திரள் என்றும் கூறப்படும்.
திருவானைக்காவுக்குரிய சப்த ஸ்தானங்கள் :
1. திருவானைக்கா 2. திருச்செந்துறை 3. திருப்பராய்த்துறை 4. திருப்பைஞ்ஞ்லி 5, திருப்பாச்சிலாச்சிரமம் 6. திருவீதிகுடி 7. திருவாலந்துறை.
தலத்தின் வேறுபெயர்கள் :
இத்தலம் திருவானைக்காவல், கஜாரண்யம், ஜம்புகேசுவரம், ஜம்புவீச்சரம், வெண்நாவல்வனம், சம்புவனம், ஞானசேஷத்திரம், ஞானதலம், ஞானபூமி, காவை, தந்திபுகாவாயில், அமுதேசுவரம், தந்திவனம், இபவனம் என்றும் பெயர் பெறும்.
சுவாமி யின் பெயர்கள் :
ஜம்புகேசுவரர், ஜம்புநாதர், சம்புநாயகர், வெண்ணாவலீசர், ஜம்புலிங்கம், அப்புலிங்கம், அமுதலிங்கம், அமுதேசுவரர், பிரமலிங்கம், பிரமீசர், கஜாரண்யநாதர், பச்சாதாபேசுவரர், ஆதிப் பெருஞ் செல்வர், சங்கரேசுவரர், செழுநீர்த்திரள் என்ற பெயர்களும் வழங்கும்.
நவ தீர்த்தங்கள் : 1. பிரம தீர்த்தம் : இது தெற்கில் 4-ஆம் பிராகாரத்திற்
சாலைக்குத் தென்புறம் உள்ளது.
2. இந்திர தீர்த்தம் இது 3-ஆம் பிராகாரத்திலே தென்மேற்கில் காசி விசுவநாதர் சந்நிதிக்குப் பக்கத்தில்
இருக்கிறது.
இந்துக்கலைக்களஞ்சியம்

3. சம்பு தீர்த்தம் இது 3-ஆம் பிராகாரத்திற்குக் கிழக்கிற் பழைய ஜம்புகேசுவரர் கோயிலுக்குப் பக்கத்தில் உள்ளது.
4. இராம தீர்த்தம் இது 5-ஆம் பிராகாரத்திற்கு வெளியே சந்நிதிக்குத் தெற்கில் உள்ள தெப்பக்குளம். இதில் தைமாதப் புணர்வசு நட்சத்திரத்தில் தெப்பத் திருவிழா நடைபெறும்.
5. பூனிமத் தீர்த்தம் இது மூல்லிங்கத்திற்கு அருகில்
சிற்றுாறலாக உள்ளது.
6. அக்கினி தீர்த்தம் : இது 3-ஆம் பிராகாரத்தில் தென்கிழக்கில் வசந்த மண்டபத்திற்குப் பக்கத்தில் உள்ள பெரிய கிணறு.
7. அகத்திய தீர்த்தம் : இது அம்மன் கோயிலில் முதற் பிராகாரத்திற் சந்நிதிக்கு முன்பு பள்ளியறைக்குப் பக்கத்தில் உள்ள சிறிய கேணி
8. சோம தீர்த்தம் : இது றுநீரங்கத்தில் உள்ள சந்திர
புட்கரிணி என்று சொல்லுகிறார்கள்.
9. சூரிய தீர்த்தம் : இது 4-ஆம் பிராகாரத்தின் தென்மேற்கு மூலையில் ஆயிரங்கால் மண்டபத்திற்கு முன் உள்ள தெப்பக் குளம். இதில் ஆடிமாதம் பூரநட்சத் திரத்தன்று தெப்பத்திருவிழா நடைபெறும்.
சுற்றுக் கோயில்கள் :
இராசராசேசுவரர் கோயில், நீலவிண்டீசுவரர் கோயில்,
சங்கரேசுவரர் கோயில், பிடாரி கோயில், வீரபத்திர சுவாமி
கோயில், சுப்பிரமணியசுவாமி கோயில்.
சிற்பங்கள் :
சுவாமி சந்நிதிக்கு முன்பு உள்ள பெரிய துவஜஸ்தம்ப மண்டபம் சிறந்து விளங்குகிறது. நான்கு பெரிய தூண்களை அடிப்படையாகக் கொண்டு ஒவ்வொரு தூணுக்கும் மேல் எட்டுச் சிங்கங்கள் தாங்குவதாகக் காட்டப்பட்டுள்ளது. ஒவ்வொரு தூணிலும் தலவரலாறுகளைத் தெரிவிக்கின்ற சிற்பங்கள் உள்ளன. பக்தர்கள் இம்மண்டபத்தைக் கண்டு மகிழ்வர்.
புராதனத் திருப்பணிகள் :
திருவானைக்காத் திருப்பணி மாலை என்னும் நூலின் மூலமாக இக்கோயிலின் மதில்கள், கோபுரங்கள் மண்டபங்கள் முதலியவைகள் சோழர்களாலும், பாண்டியர்களாலும், நாயக்கமன்னர்களாலும், பக்தர்களாலும் அவ்வப்போது திருப்பணி செய்யப்பட்டவைகளை அறியலாம்.
திருப்பணி மாலையிலுள்ள முற்காலத் திருப்பணிகளைப் பற்றிய விவரம்.
273

Page 332
10.
廿
12.
13.
14.
15.
16.
17.
274
கோச்செங்கட் சோழன் திருச்சாலகக் கெண்டிகை, மண்டபம், கோபுரம், தந்திபுகாவாயில் மாடவீதி, 18 மடம், எண்டிசை இடபக் கொடிகள்.
விஜயபாலன் அகளங்கவளவன் : இரண்டாம் பிராகாரத்தின் மதில், கோபுரம், மண்டபம்.
விக்கிரம சோழன் மூன்றாம் பிராகாரம், மதில், மண்டபம், கோபுரம்.
இராமர் : திருக்குளம், சிவலிங்கம், வசந்த மண்டபம்,
சுந்தரபாண்டியன் நான்காம் பிராகாரத்தின் கோபுரம் முதலியன.
சிவமுனிச் சித்தர் : (முக்கட் செல்வர்) திருநீறிட்டான் மதில், 4 கோபுரங்கள் முதலியன.
பூணூரீ சங்கராச்சாரியார் : பிரசன்ன விநாயகர் பிரதிட்டை, தாடங்கப் பிரதிட்டை குலசேகர பாண்டியன் விண்ணோங்கு மண்டபம்.
மதுரைவரகுண பாண்டியன் விடையாத்தி மண்டபம்.
திருநீற்றுச் சோழன் யாகசாலை, கோடைவிழா மண்டபம்.
அழகனருள் முதலியப்பன் நிலா எறிக்கும் மண்டபம், சிவலிங்கப் பிரதிட்டை, சிகரத்துக்குட்
பொன்முலாம்பூச்சு.
வரிசைப் பெருமாளையன் நீராழி மண்டபம் புஷ்கரிணி, திருமாளிகைப்பத்தி மைய மண்டபம்,
சொக்கப்பய்யன் வீரேச்சுவரத்துக்கு மேற்கே ஓர் மண்டபம்.
சம்புநாத செட்டி : ரோகிணி நட்சத்திரத் தீர்த்தம் நாலுகால் மண்டபம், பூசக் கட்டளை.
சுப்பிரமணிய மகாமுனி செங்கழுநீர் விநாயக திருப்பணி, கோபுரம், சந்நிதிக்கு முன் பிள்ளையார் கோயில்
மாணிக்கவாசகன் : கருங்கற்சிங்காசனம்.
தெய்வராயன் : திருவளர்ச்சோலையில் நந்தவனம் மணி மண்டபம்.

18. ரெங்கஜயதுங்கன் : அம்மன் கோயில் கம்பத்தடியில்
உயர் மண்டபம்.
19. பேரம்பலத்துறைவர் சைவமுனி ஆயிரங்கால்
மண்டபம்.
20. சிவந்திநாதன் : தாழைக்குடி மண்டபம்.
21. மந்திரிப் பெருமாள் : வெங்கக்குடி மண்டபம்.
22. கச்சிசெட்டியப்பநாயக்கர் : காவிரியின் கரையில்
தன்பேரால் பதினாறு கால் மண்டபம் அமைத்தது.
23. கனகய்யன் (மறைவல்லோன்) மேலைத் தெருவில் கைலாய வாகன மண்டபம், இவையன்றி, வாணாதிராயன், நித்தியானந்த நாராயண தீகூழிதன், திருமலைநாயக்கன், சுப்பிரமணியமகாமுனிவன் முதலியவர்கள் காலத்தில் பல திருவாபரணங்கள், வாகனங்கள், கோரதம் முதலிய திருப்பணிகள் செய்யப்பட்டிருப்பதாகத் தெரிகிறது.
வழிபட்டோர் : பிரமன், திருமால், திக்குப்பாலகர், அஷ்டவசுக்கள், சம்புமுனி, அம்பிகை, சிலந்தி, யானை, இராமர், பராசரர், சோழன், கோச்செங்கண்ணான், கெளதமர், குபேரன், அகத்தியர், சூரியன், சந்திரன், இந்திரன், அக்கினி முதலானவர்கள்.
திருஞானசம்பந்தர், நிருநாவுக்கரசர், சுந்தரமூர்த்தி சுவாமிகள், பூரீ ஆதிசங்கராச்சாரியர், அருணகிரிநாதர், கமலை ஞானப் பிரகாசர், காளமேகப் புலவர், மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம்பிள்ளையவர்கள், வித்துவான் தியாகராச செட்டியார்.
தினந்தோறும் காலை, உச்சி, மாலை, இரவு ஆகிய நான்கு காலங்களிலும் அபிடேக ஆராதனைகள் நடைபெறுகின்றன. அர்த்த சாமத்தில் அபிடேகமில்லை.
ஜம்முகப் பிள்ளையார் ஏரம்ப விநாயகர் என்று ஆகமங்கள் கூறும். தந்தைக்குள்ள ஐந்து முகம் இவருக்கும் உண்டு. தெய்வத் திருவுருவங்களின் தலையின் மிகுதி ஞானவிசேடத்தையும், கைகளின் மிகுதி செயல் மிகுதியையும் காட்டும். தந்தையைப் போல் பிள்ளை. -
திருவானைக்காத் திருப்பணி மாலை (கையெழுத்துப் பிரதி எண் 718 அ.)
சோழன் செங்கணான் முதல் மாணிக்கவாசகன் வரை நாற்பத்து மூவர் செய்த திருப்பணியை விளக்கி 56 பாடல்களிற் கூறுவது இந்நூல். ஆசிரியர் பெயர் தெரியவில்லை.
கையெழுத்துப் பிரதி மிகவும் சிதிலமான நிலையில் உள்ளது.
( உ. வே. சா. )
இந்துக்கலைக்களஞ்சியம்

Page 333
திரு ஆணைக்கா அகிாைண்ட/நாயகி பின்னைத்தமிழ்
திருச்சிக்கு வடக்கே இரண்டு மைல் தொலைவிலுள்ள திருத்தலம் திருவானைக்கா. இதற்குத் திருவானைக்காவல், ஜம்புகேஸ்வரம் என்ற பெயர்களுமுண்டு. இங்கு கோயில் கொண்ட சிவபிரானுக்கு நீர்த்திரள்நாதர், ஜம்புகேசுவரர் என்றும் உமையம்மைக்கு அகிலாண்டநாயகி என்றும் பெயர்.
திருவானைக்கா அகிலாண்டநாயகி மீது திரிசிரபுரம் மகாவித்துவான் சி. மீனாட்சிசுந்தரம் பிள்ளை (1815 -1876) பாடிய பிரபந்தமே திருவானைக்கா அகிலாண்ட நாயகி பிள்ளைத்தமிழ்.
இப்பிள்ளைத்தமிழ் நூலுக்குப் புறவுறுப்பாக அமையும் பாயிரத்திலே பன்னிரு துதிப்பாடல்களும் ஒரு அவையடக்கச் செய்யுளும் காணப்படுவன. விநாயகர், பரமசிவன், பராசக்தி, சுப்பிரமணியர், நந்திதேவர், சம்பந்தர், அப்பர், சுந்தரர், மணிவாசகர், தண்டீசர், திருத்தொண்டர்கள் என்போர் பாயிரத்திலே தனித்தனிப் பாடலிலே துதிக்கப்படுகின்றனர்.
காப்புப் பருவம் நீங்கலாகவுள்ள செங்கீரை, தால், சப்பாணி, முத்தம், வாரானை, அம்புலி, அம்மானை, நீராடல், பொன்னூசல் எனும் ஒன்பது பருவங்களிலும் பருவத்திற்குப் பத்துப் பாடல்கள் உள்ளன. காப்புப் பருவத்திலே திருமால், சம்புநாயகர், விநாயகர், முருகன், நான்முகன், இந்திரன், திருமகள், கலைமகள், காளி, சத்தமாதர், முப்பத்துமூவர் ஆகியோர் தனித்தனியாகப் பதினொரு பாடல்களிலே காப்பு வேண்டப்படுகின்றனர்.
இப்பிள்ளைத்தமிழ் பிலவவருடம் பங்குனி மாதம் (1842) முதன் முதலாக அச்சிடப் பெற்றது. உ.வே. சாமிநாதையர் தொகுத்தளித்த திரிசிரபுரம் பூணூரீ மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்கள் பிரபந்தத்திரட்டு எனும் தொகையிலும் (1910, 1926) இடம் பெறுகின்றது. ( ിff. ഗു)
திரு ஆணைக்கா அதிாைண்டநாயகி மாலை
திருவானைக்கா அகிலாண்டநாயகி மீது திரிசிரபுரம் மகாவித்துவான் சி. மீனாட்சிசுந்தரம்பிள்ளை (1815-1876) பாடிய பிரபந்தமே திருவானைக்கா அகிலாண்டநாயகி மாலை.
செல்வவிநாயகர் காப்பினை ஆதியாகவுடைய அகிலாண்டநாயகி மாலையில் நூறு செய்யுள்கள் உள்ளன. இம்மாலையில் இடம்பெறும் பாடல்கள் சிறந்த தோத்திரங்களாக அமைதல் நோக்கத்தக்கது.
இம்மாலையை உ.வே. சாமிநாதையர் தொகுத்தளித்த திரிசிரபுரம் பூரீ மீனாட்சிசுந்தரம்பிள்ளையவர்கள் பிரபந்தத் திரட்டில் (1910, 1926) மீண்டும் பதிப்பித்தனர். அடையாறு உ.வே. சாமிநாதையர் நூல்நிலையத்தினர் 1961 இலே இம்மாலையினைக் குறிப்புரையுடன் பதிப்பித்துள்ளனர். (பிபா, பூ)
இந்துக்கலைக்களஞ்சியம்

திருஆனைக்காவு7ை
சம்புநாதபுரம் இறைவன் மீது பாடப் பெற்றதே திருவா னைக்காவுலா. இதனுள் ஆதியில் விநாயகர் காப்பு வெண்பாவும் அந்தத்தில் அவையடக்க வெண்பாவும் அமைய, இடைநடுவே 461 கண்ணிகள் உள்ளன.
திருவானைக்காவுலாவினைப் பாடியவர் காளமேகப் புலவர். அவர் பதினைந்தாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர்; திருவானைக்கா சம்புகேசுவரர் மீது அந்தாதி, சித்திரமடல் என்பனவும் பாடியவர்.
திருவானைக்காவுலாவிலே ஆணைக்காவின் தலவரலாறுகள் விரிவாக அமைவதோடு பொருளணிகளும் சொல்லணிகளும் மலிந்து காணப்படுகின்றன.
திருவானைக்காவுலாவைப் பூவை கல்யாணசுந்தரமுதலியார் 1890 இலே பதிப்பித்தார்; மு. அருணாசலம் 1940 இலே குறிப்புரையுடன் வழங்கினார். ( 62/s. 4.)
திரு இடவெங்தை
தொண்டை நாட்டில் வண்டலூர் இருப்புப் பாதை நிலையத்திலிருந்து பதினாறு மைல் தொலைவிலுள்ள வைணவ திவ்விய தலம் இடவெந்தை அல்லது வடந்தை. சென்னையிலிருந்து பக்கிங்காம் கால்வாய் வழியாகப் படகிலும் போகலாம்; பார்ப்பான் சாவடிப் படகுத் துறையிலிருந்து பதினைந்து மைல்.
காலவரிசையின் பெண்கள் 360 பேரையும் சேர்த்து ஒருத்தியாக்கி அகிலவல்லி நாச்சியார் எனத் தம் இடப்பக்கத்தில் வைத்திருப்பதால் இத்தலம் இடவெந்தை ஆயிற்று. அப்பெண்களை தினம் ஒருத்தியாகத் திருமணம் செய்து கொண்டதால் மூலவருக்கு நித்ய கல்யாணர் என்று பேர். மூலவர் வராஹஸ்வரூபி. பெரிய பிராட்டியாருக்குக் கோமளவல்லி நாச்சியார் என்று பேர். நித்ய கல்யாணர் நின்ற திருக்கோலமுடையவர். மார்க்கண்டேயருக்குப் பிரத்யக்ஷம், வராக, கல்யாண தீர்த்தங்கள்.
திருமங்கையாழ்வார் மங்களாசாசனம் செய்த திருத்தலமிது. (பெரியதிரு. 184, 27; சிறிய திருமடல் 73; பெரிய திருமடல், 119) (ിff. ഗു.)
திரு இரும்பாவணம்
தஞ்சாவூர் மாவட்டத்திலே உள்ள இடும்பாவனம் இடும்பன் பூசித்துப் பேறு பெற்றதால் வந்த பெயர் என்பர். பாண்டி நிலையத்திலிருந்து தெற்கே நான்கு மைல் சென்றால் வரும் முத்துப்பேட்டை வேதாரணியம் மட்சாலைச் சந்திப்பிலிருந்து மேற்கே கால்மைல் தொலைவிலுள்ளது இடும்பாவனம் எனும் திருத்தலம்.
இடும்பாவனத்திற் கோயில் கொண்ட சிவபிரானுக்குச் சற்குணநாதர் என்றும் உமையம்மைக்கு மங்கல நாயகி என்றும்
275

Page 334
பெயர். இங்குள்ள வெள்ளை விநாயகர் பிரசித்தமானது. மூலத்தானத்தின் பின்புறம் இறைவரது மணவாளக் கோலம் அமைந்துள்ளது. சமூகபுஷ்கரணி என்ற தீர்த்தமுடையது.
இடும்பாவனம் அகத்தியருக்குக் காட்சி கொடுத்த தலம். இத்தலத்திற்குச் சம்பந்தப் பெருமான் திருப்பதிகம் ஒன்றுண்டு (117) பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் (1862-1914) பாடிய
இடும்பாவனபுராணம் ஒன்று அறியப்படுகின்றது.
( ിff, 'g')
திருஇடைக்குழி
மாயூரம் வட்டத்தில் சிதம்பரம் நாக பட்டினம் நெடுஞ் சாலையில், திருக்கடவூர் திருத்தலத்திற்குத் தென்மேற்கே நான்கு மைல் தொலைவிலும் மாயூரம் - தரங்கம்பாடி இருப்புப் பாதையில் தில்லையாடி நிலையத்திற்கு நேர் மேற்கே சுமார் இருமைல் தொலைவிலும் அமைந்தது திருவிடைக்கழி அல்லது மகிழவனம் எனப்படும் திருத்தலம்.
இங்கு மூலத்தானத்திற் சுப்பிரமணியக்கடவுள் எழுந் தருளியுள்ளார். தெய்வானை அம்மனுக்குத் தனி ஆலயம் உண்டு. திருக்காமேசுவரர் எனப் பெயர் பெறும் சிவபிரானும் திருக்காமேசுவரி எனப் பெயர் பெறும் உமாதேவியும் இங்கு
கோயில் கொண்டுள்ளனர்.
தெய்வாணையம்மன் பரங்குன்றம் செல்ல இறைவனிடம் விடைகேட்டதலம் என்றும் கூறுவர்.
சேந்தனார் பாடிய திருவிசைப்பா இத்தலத்திற்குண்டு. அருணகிரிநாதர் திருப்புகழுமுண்டு. அவருடைய வேல் விருத்தம், மயில்விருத்தம் இத்தலத்தினைக் கூறியுள்ளன. திரிசிரபுரம் மகா வித்துவான் சி.மீனாட்சிசுந்தரம் பிள்ளை திருவிடைக்கழி முருகன் பிள்ளைத் தமிழும் திரு விடைக்கழிக் குறவஞ்சியும் பாடியுள்ளார். குரவலிங்கர் திரு இடைக்கழித் தலபுராணம் பாடியுள்ளார். (ിff, 'g')
திரு இடைக்கழி முருகர்
பின்னைத்தமிழ்
சோணாட்டிலே பூம்புகாருக்கு அண்மையிற் காவிரியின் வடகரையில் அமைந்த திருத்தலம் திருவிடைக்கழி. திருவிடைக் கழியில் எழுந்தருளியிருக்கும் முருகப் பெருமான் மீது திரிசிரபுரம் மகாவித்துவான் சி. மீனாட்சிசுந்தரம்பிள்ளை (1815-1876) பாடிய பிரபந்தமே திருவிடைக்கழி முருகர் பிள்ளைத்தமிழ்.
விநாயகர் வணக்கத்தைப் பாயிரமாகவுடைய பிள்ளைத் தமிழிலே காப்புப் பருவம் நீங்கலாகவுள்ள செங்கீரை, தால், சப்பாணி, முத்தம், வாரானை, அம்புலி, சிற்றில், சிறுபறை, சிறுதேர் எனும் ஒன்பது பருவங்களிலும் தனித்தனியே
276
 

பருவத்திற்குப் பத்துப் பாடல்களுள. காப்புப் பருவத்திலே திருமால், பாவநாசப்பெருமான், பராசக்தி, பிள்ளையார், நான்முகன், இந்திரன், திருமகள், நாமகள், துர்க்கை, சப்தமாதர், முப்பத்து முக்கோடிதேவர் தனித்தனியே பதினொருபாக்களிற் காப்பு வேண்டப்படுகின்றனர்.
இப்பிள்ளைத் தமிழ் பூவாளூர் சி. தியகராசச் செட்டியாரால் 1883 இலே பதிப்பிக்கப் பெற்றது. உவே. சாமிநாதையர் தொகுத்த திரிசிரபுரம் பூரீ மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்கள் பிரபந்தத் திரட்டு எனும் தொகையிலும் இடம் பெறுகின்றது. (1910 - 1926). மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம்பிள்ளை பாடிய திருவிடைக் கழிக்குறவஞ்சி மறைந்து விட்டது. (67/7, 14.)
திரு இடைச்சுரம்
தொண்டை நாட்டுத் தலம். மக்கள் வழக்கில் திருவடிசூலம், என்றழைக்கப்படுகின்றது. ஊர்க்கோடியில் கோயில் அமைந்துள்ளது. இயற்கைச் சூழலில் வயல்களை ஒட்டினாற் போல் அமைந்துள்ள இக் கோயில் பழமையானது. அம்பாள் பசு வடிவில் வந்து பால் சொரிந்து வழிபட்ட தலம். கெளதம முனிவரும், சனற்குமாரரும் வழிபட்ட தலம்.
கோயில் இறைவன் - ஞானபுரீஸ்வரர், இடைச்சுரநாதர்
mைவி கோபரத்னாம்பிகை, இமயமடக்கொ
@ 函 19.
கோயில் கருங்கல்லால் அமைக்கப்பட்டுள்ளது. ராஜகோபுரம் இல்லை. கட்டுவதற்கான முயற்சி மேற்கொள்ளப்பட்டு அதற்கான திருப்பணி உண்டியல் கோயிலில் வைக்கப்பட்டுள்ளது. முகப்பு வாயிலுக்கு முன் இடப்புறத்தில் வரசித்தி விநாயகர் சந்நிதி உள்ளது. வலப்பக்கத்தில் தீர்த்தக் குளம் படிகள் செம்மையாக இல்லை.
தெற்கு நோக்கி உள்ள முகப்பு வாயிலைக் கடந்து பிராகாரத்தை வலம்வரும் போது பிரமாண்டேஸ்வரர் சந்நிதியும், பிரமாண்டேஸ்வரி சந்நிதியும் தனித்தனியே உள்ளன.
உள்முகப்பு வாயிலைக் கடந்து மண்டபம் தாண்டி சுற்றி வரும்போது நால்வர் பிரதிஷ்டை உள்ளது. அடுத்து விநாயகர் சந்நிதியும், வள்ளி, தெய்வானை உடன் சுப்பிரமணியர் சந்நிதியும், வைரவர் சந்நிதியும் தரிசிக்கலாம். கொடிமரம் இல்லை. நந்தி, பலிபீடம் மட்டுமே உள்ளன.
கருவறை அகழி அமைப்புடைய அழகான கற்றளி மூலவர் சந்நிதிக்கு இருபுறமும் விநாயகரும், சுப்பிரமணியரும் உள்ளனர். மூலவர் சுயம்பு, மரகதலிங்கம். (பச்சைக்கல்) மூலவருக்குத் தீபாராதனை செய்யும்போது ஒளி பிரகாசமாகத் தெரிகின்றது. அற்புதமான தரிசனம், சதுர ஆவுடையார். கிழக்கு நோக்கிய தரிசனம்
இந்துக்கலைக்களஞ்சியம்

Page 335
அம்பாள் தெற்கு நோக்கிக் காட்சி தருகிறாள். நின்ற திருக்கோலம்.
இத் தலத்தில் சிவராத்திரியும், பிரதோஷ வழிபாடும் சிறப்பாகச் சொல்லப்படுகின்றது. சிவராத்திரி நாளில் நான்கு யாம வழிபாடுகளும் முறையாக நடைபெறுகின்றன. மக்கள் பெருந் திரளாக வந்து தரிசிக்கின்றனர். இங்கு மகோற்சவம் இடம்பெறுவதில்லை.
சுவாமி, அம்பாள் விமானங்கள் பூரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு பூீ ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் அவர்களின் பொன்விழாப் பணிகளுள் சேர்க்கப்பட்டு திருப்பணிகள் செய்யப்பட்டுள்ளன.
"கானமுஞ் சுடலையுங் கற்படு நிலனுங்
காதலர் - திதிலர் கனன் மழுவாளர் வானமு நிலமையுமிருமையு மானார்
வணங்கவு மினங்கவும் வாழ்த்தவும் படுவார் நானமும் புகையொளி விரையொடு கமழ
நளிர் பொழில் இளமஞ்சை மன்னிய பாங்கர் ஏனமும் பிணையலும் எழில் திகழ் சாரல்
இடைச்சுர (ம்) மேவிய இவர் வணமென்னே'
என்று சம்பந்தர் இத்தலத்தில் எழுந்தருளியிருக்கும் சுயம்புலிங்கரின் (மரகதலிங்கர்) அழகினைப் போற்றிப் பாடியுள்ளார். (நி நி)
திருஇடைமருதூர்
இரயில்வே நிலையம் உள்ள தலம். வரகுணபாண்டியன் வரலாற்றுடன் தொடர்புடையது. பட்டினத்தடிகள் வழிபட்டதலம். அவர் அருளிய மும்மணிக்கோவை பெற்றது. இங்குத் தைப் பூசத்தில் நீராடுதல் சிறந்தது. தைப்பூச உற்சவச்சிறப்பானது தேவாரத்தில் சிறப்பிக்கப்பட்டுள்ளது. உருத்திரர், உமை, விநாயகர், முருகன், பிரமன், திருமால் முதலியோர் பூசித்த தலம்.
சுவாமி : மகாலிங்கேசர், அம்பிகை பெருநலமுலைநாயகி, பிருகத்சுந்தரகுசாம்பிகை. தீர்த்தம் : காவிரி,
விருட்சம் : மருதம்.
திருவாசகம் : பாதந்தன்னைக் காட்டிய பரிசும் மாணிக்க வாசகர்க்குத் திருவடி தீகூைடியான இடம். தெற்கு வீதியில் ஒரு கோயிலுண்டு அதற்கு ஆவுடையார் கோயிலென்று பெயர். அதில் மூலஸ்தானம் திருவடிகள் இரண்டு அமைந்த பலிபீடமாக உள்ளது. அம்பிகையின் பெயர் யோகாம்பிகை.
இழுப்புணி வயல்: மாயூரம் போகிற சாலைக்கு வடக்கே யுள்ளது. வரகுண பாண்டியர் வடிவம்- வெளியிலிருந்து மூன்றாவதாகிய பாண்டியன் தோரணத்தில் தென்புறமுள்ளது.
இந்துக்கலைக்களஞ்சியம்

பட்டணத்துப் பிள்ளையார் வடிவமுள்ளது. ஐராவதத் துறை. கலியாண தீர்த்தத்திற்குக் கிழக்கேயுள்ளது.
இத்தலத்திலுள்ள சோமாஸ்கந்தமூர்த்தி (உற்சவமூர்த்தி)க்கு ஏகநாயகர் என்பது திருநாமம். மகாவித்துவான் பூரீ மீனாட்சி சுந்தரம்பிள்ளையவர்கள் இயற்றிய பூரீகாசி ரகசியம் என்னும் நூல் பூரீ மகாலிங்க ஸ்வாமி திருக்கோயிலிலுள்ள நூற்றுக்கால் மண்டபத்தில் அரங்கேற்றப் பெற்றது. மத்தியார்ஜுனம் என்ற பெயருக்கு வெண்மையாகிய இருதயாகாசத்திற்குச் சமமான தென்று தத்தவார்த்தம் கூறுவர். தஞ்சை மகாராஷ்டிர மன்னரது வம்சத்தைச் சேர்ந்த அமரசிம்மரென்பவர் இத்தலத்திலுள்ள பூரீ மகாலிங்க மூர்த்திக்கு வெள்ளிரதமும் மகாரதத்தின் முன்பு கட்டும் நான்கு குதிரை உருவங்களும் செய்வித்தளித்தவர். அந்த வெள்ளி ரதமும் குதிரையுருவங் களும் இப்பொழுது உள்ளன.
இத்தலத்தில் வெளிப்பிராகரம் வலம் வருதலை அசுவமேதப் பிரதகூSணம் என்பர். முறையாகச் சிலகாலம் இப்பிரதக்ஷணம் செய்து கொடிய நோய்கள், பைத்தியம், பேய்க்கோள் முதலிய வற்றிலிருந்து நீங்கினவர்கள் பலர் உண்டு. இத்தகைய நிகழ்ச்சி இன்றும் நடைபெறுகிறது. இத்தலத் திருக்கோயிலிலுள்ள பாண்டியன் தோரணமென்ற வாயிலின் வலப் பக்கத்தே வரகுண பாண்டியருடைய திருவுருவம் அமைக்கப் பெற்றுள்ளது. கோயிலில் கணநாதர் பிம்பம் இருக்கிறது. ஹரதத்த சிவாசாரியார் இத்தலத்திலுள்ள காருண்யாமிர்தமென்னும் தீர்த்தத்திற்குப் படிக்கட்டுக்கள் கட்டுவித்தார். பூரீ கோவிந்த தீகூழிதர் இத்தலத்தில் புஷ்ய மண்டபமும் புஷ்ய மண்டபப் படித்துறையும் கட்டுவித்தவர்.
அருகநாய்ச்சி. ஏகநாயகர் பீடத்திலேயே இருப்பவர். மருத வாணர் பக்கத்துள்ள அம்மை. மருத மரம். இதன்பட்டை கோயிலில் உள்ளது. மேற்படி மரம் கல்வடிவமாக மருதவாணர் கோயிலுக்கு வடக்கில் உள்ளது.
மூர்த்திகள்: கலியாணசுந்தரர், செப்பு அர்த்தநாரீசுவரர் சிலை, ஜ்வரகரேசுவரர் சிலை. சட்டைநாதர் தெற்கு வாயிலில் காவலாக இருந்தவர். இப்போது அம்பிகை கோயிலிலுள்ளார்.
வீரபத்திர் : இவர் வடக்கு வாயில் காவல் ; இவருக்கு இப்போது கோயிலுண்டு. மேற்கு வாயிலில் சிங்காரவேலர்.
கிழக்கு வாயிலில் கணநாதரும் 18 ஆம்படிக் கறுப்பரும் இருந்தனர். உக்கிரம். இவர்களை ஒரு பெரியவர் எடுத்துத் துண்டராயம் பேட்டையில் வாயு மூலையில் வைப்பித்தனர். கணநாதரைக் குருக்களும் கறுப்பண்ணரைப் பூசாரியும் பூசிக்கின்றனர். பின் விநாயகரையும், சுப்பிரமணியரையும் பிரதிஷ்டிப்பித்தார்.
இடை மருது : பிராகாரம் 5. உள்ளிருந்து ஸோம சூத்திரம், அம்பாய, கொடுமுடி, அசுவமேதம், மடவளாகம் வீதி.
277

Page 336
மூர்த்தி கங்கையம்மை- ஸ்வாமி கோமுகியின் கீழண்டை
ஸாம்பதசஷிணாமூர்த்தி : ஸ்வாமியின் மகாமண்டபத்தில் வடபுறமாகத் தெற்கு நோக்கியுள்ளார். கோபுரங்கள் கிழக்கேயிருந்து கீழ்க்கோபுரம், ஏகநாயகர் கோபுரம், பாண்டியன் கோபுரம் மேற்கு 6 கோபுரம். (திருவிளை ) காந்திமதி, வரகுணன் மனைவி. பிம்பம்; ஸோம சூத்திரத்தில் வடபுறம் தெற்கு நோக்கியுள்ளார்.
நகூடித்திர லிங்கம் : 27 வடிவம். யாகசாலையின் வட புறத்துள்ளார்.
சுந்தரேசர் கோயில் கொடுமுடிப் பிராகாரத்தில் வட பாகத்தில் தெற்கு நோக்கியுள்ளது.
சொக்கநாதர் கோயில் : சுவாமி அம்பிகையோடும் உள்ளார். வரகுணனுக்குத் தரிசனம் கொடுத்தவர். கிருஷ்ணன் கோயில் : மகாலிங்கம் கண்ணுவருக்குக் கண்ணன் வடிவாகக் காட்சி கொடுத்தவர். அர்ச்சுன மரம் உண்டு.
நாயடியார் கோயில் சிவசர்மாவுக்கு மகாலிங்கம் வில்வ மரத்தின் கீழே குழந்தையாக வந்த இடம். சிவசர்மா பூசைபண்ணும் குருக்கள். இவர் வீடு ஜயா ஸாமி ஐயர் வீடு. இவர் மனைவி சுசீலை. இவர்களுக்கு மருதவாணர் மூன்று வயதுக் குழந்தையாகத் தோன்றினர். சிவசர்மா தம்பாலுள்ள எல்லாப் பொருளையுங் கொண்டு திருப்பணி செய்து மிக்க வறுமையுற்றார்.
ஆவுடையார் கோயில்: இது தெற்கு வீதியில் வடபுற முள்ளது. லிங்கம். மாணிக்க வாசகர் பிம்பமுண்டு. இதற்குரியவர் ஐந்து கொத்துப் பண்டாரங்கள்.
வீதி நான்கிலும் 17 மடங்கள். கிழக்கு வீதி குற்றாலச் செட்டி
மடம், ஸொர்க்கபுர மடம், தஞ்சாவூர் 64 வேளாஞ் செட்டி மடம்.
தெற்கு வீதியில் சாலியர் மடம், குறைச்செட்டி மடம், அணைக் குடியார் மடம், திருப்பணிமடம், அஞ்சு கொத்து மடம், 5,
தருமபுரமடம், மேற்கு வீதியில் குன்றக்குடி மடம், திருவாவடுதுறை மடம், சூரியனார் கோயில் மடம், வடபாதி மங்கல முதலியார் மடம்.
21. இராமநந்தீசுவரம் சோமாஸ்சுந்தரின் அம்பிகை கையில் விருஷபம் இருக்கிறது.
கொட்டையூர் சிவக்கொழுந்து தேசிகர் இயற்றிய மருதவனப் புராணம் இத்தல சம்பந்தமானது.
தருமபுரம் பதிப்பில் திருவிடைப் பிச்சக் கட்டளை என்ற தலைப்பின் கீழ் உள்ளவை.
விநாயகர் ஆண்டபிள்ளையார்- ஆஞ்ஞாகணபதி. இத்தலத்திற்கு 160 கல்வெட்டுக்கள் உள்ளன. இவற்றில் 33
அச்சாகி உள்ளன.
278

முதல் குலோத்துங்கன் ஆட்சியில் 38- ஆம் ஆண்டில் நிலங்கள் அளந்து வரிக்கூறு செய்யப்பட்டமையை ஒரு கல்வெட்டின் மூலமாக அறியலாம். பரகேசரிவர்மன் 4 ஆம் ஆண்டு விளக்குக்காகக் கொடுக்கப்பட்ட தங்கத்தின் கணக்கு உள்ளது. ஒரு கவ்வெட்டினால் கூத்து விகற்பங்கள் இங்கு நடைபெற்றன என்று தெரிகிறது. உய்யக்கொண்ட வளநாட்டு திரைமூர் நாட்டு இடைமருது. ஆண்டபிள்ளையார் பேட்டைக்குச் (ஆண்டலாம் பேட்டை ) சிவாக்ரபுரம் என்றும் பெயர் (தெற்கு)
மருதவாணன்பேட்டை - மேலை வீதிக்கு மேற்கு. ஏகநாயகன்பேட்டை : ( ஏனாம்பேட்டை ) தெற்கு வீதியில்
இரயில்வேபாதைக்குத் தெற்கு
திருப்பணிப் பேட்டை இழுப்பணிப் பேட்டை திருவிடைமருதூர் கீழண்டை எல்லை.
கைலாயம் பேட்டை- திருவிடைமருதூர் வடக்கு வீதிக்கு வடக்கு துண்டராயன்பேட்டை - தொண்டிராயன்- வடமேற்குக் காவிரி மூலைத்தெரு. இங்கிருந்த தெரு போய்விட்டது.
சுவாமி சோமாஸ் கந்தர், சோதிமய மகாலிங்கம், ஏகநாயகர், அம்பிகை : மூகாம்பிமை, பெருநலமாமுலை, பிருகத்சுந்தர குசாம்பிமை; வாடாமுலை; ஏகநாயகரின் பக்கத்துள்ள தனி அம்பிகை. அன்பிற்பிரியாள் மருதவாணர் பக்கத்துள்ளார். அம்பாயம்மை போகசத்தி மகாலிங்கத்தின் பக்கத்துள்ளவர். கோயில் வேலைக்காரர் : ஆதிசைவர். 6; ஜபக்காரர், 4; ருக் மூவர். ஸாம இருவர். புராணம் வாசிப்போர் ஒருவர். கட்டியம் கூறுவோர் ஒருவர்.
அர்ச்சனை வாசிப்போர் இருவர்; சோதிடம் சொல்வோர் ஒருவர்; தேவாரம் ஒதுவோர் ஒருவர்; பாகவதர் இருவர்; ஸ்தபதிகள் இருவர்; வீரமுஷ்டி ஒருவர், வைராகி, பரிசாரகர் 16 பேர்.
காலம் : (1) உஷக்காலம் (2) காலை சந்தி (3) உச்சி (4) சாயரட்சை (5) 2- ஆம் காலம் (6) அர்த்தசாமம்.
மடங்கள் மேற்கு வீதியில் சடைச்சிமடம், அகோர சிவாசாரியார் மடம், வாணியமடம், வடக்குவீதியில் வண்ணான் மடம், செம்படவன் மடம், கீழை வீதியில் கம்மாளர் மடம்.
சத்திரம் - சந்நிதியின் தென்புறத்தில் பிச்சைக்கட்டளைச் சத்திரம்,
மண்டபம் :- தாசிதையா மண்டபம் இது காருண்யா
மிருதத்திற்கு மேற்புறமுள்ளது. முதல்நாள் திருவிழா.
கம்மாளர் மண்டபம் - யானைகட்டுமிடத்திற்குக் கீழ்புறம். 4-ஆம் நாள் திருவிழா, திருமலைராயன் பட்டினத்தார் மண்டபம்
சந்நிதி வடசிறகில் சதிபதி வீடுகளாய் உள்ளன.
இந்துக்கலைக்களஞ்சியம்

Page 337
கொத்தன் மண்டபம் - சந்நிதியின் வடசிறகு கோடியிலுள்ளது, 2- ஆம் திருநாள்.
வாணிய மண்டபம் : இது மேலை வீதியில் மேல்சிறகில் வடக்குக் கோடி
உடையார்பாளையம் ஜமீன்மண்டபம்:- திருபுவன சாலையின் வடபுறத்துள்ளது. 7- ஆம் திருநாள்.
சிவாஜி மண்டபம் :- இதில் புஷ்ய விடையாற்றி நடைபெறும். இதற்கு அருகில் சிவாஜி ருத்திரன் தோப்பும் நன்செயும் உள்ளன.
பிடாரி - சிங்கனேரிக் குளத்திற்கு வடகரைக் கோயிலிலுள்ளாள். இவள் உலகாட்சி.
பிடாரி 2: ஆடுதுறைக்குப் போகிற சாலையில் கீழ்ப் புறத்திலுள்ளது. தத்தாத்திரேயர் பூசித்த தலம்.
சுவாமி மகாலிங்கர் என வழங்குதகேற்பச் சிவாலய அமைப்பினை ஒட்டித்திருவலஞ்சுழி விநாயகர் சந்நிதியாகவும், சுவாமிமலை சுப்பிரமணியர் சந்நிதியாகவும், திருச்சேய்ஞலூர் சண்டீசர் சந்நிதியாகவும், சூரியனார்கோயில் நவக்கிரகங்கள் சந்நிதி யாகவும், சீகாழி வைரவக்கடவுள் சந்நிதியாகவும், திருவாவடுதுறை நந்திதேவர் சந்நிதியாகவும், திருவாரூர் சோமாஸ்கந்தர் சந்நிதியாகவும், திருவாலங்குடி தகூதிணாமூர்த்தி சந்நிதியாகவும் இவ்வாறு பரிவார சந்நிதிகள் அவ்வத் தனிச்சிறப்புடன் தனித்தலங்களாகவே அவ்வவற்றிற்குரிய இடங்களில் விளங்குதல் இத்தலத்தின் பெருமையை நன்கு விளக்குவதாகும்.
மேலும் தம்மைப் பூசிக்கும் முறையை யாவருக்கும் அறிவுறுத்தற் பொருட்டு இறைவன் தம்மையே தாம் பூசித்த பெருமையும் உடையது இத்தலம். மூவரும் பாடியதலம். ஏகநாயகர் என்பது இத்தலத்து உற்சவ மூர்த்தியின் திருநாமம்.
திருவிடை மருதூர் சிவன்மருதப்பர் பெருநல முலையாள் பெருங்கரு னாநதி சிவ
ஒடேகலன் உண்பதும் ஊரிடு பிச்சை காடேயிட மாவது கல்லால் நிழற்கீழ் வாடா முலைமங் கையும்தா னும்மகிழ்ந் திடாவுறைகின்ற இடைமரு தீதோ, திருஞா.1ஆம் திரு.
காடுடைச் சுடலைநீற்றர் கையில்வெண் டலையர் தையல் பாடுடைப் பூதம் குழப் பரமனார் மருத வைப்பில் தோடுடைக் கைதை யோடு குழ்கிடங் கதைச் சூழ்ந்த ஏடுடைக் கமல வேலி இடைமரு திடங்கொண் டாரே.
திருநா. 4ஆம் திரு. (pl. 662/ 47.)
இந்துக்கலைக்களஞ்சியம்

திரு இடை மருதூர்த்திரியர்ந்தாதி
மாயூரம் கும்பகோணம் இருப்புப் பாதையில் திருவிடை மருதூர் நிலையத்திற்கருகிலுள்ள திருத்தலம் திருவிடை மருதூர். இதற்கு மத்தியார்ச்சுனம் என்ற பெயருமுண்டு. இங்கு எழுந்தருளியிருக்கும் சிவபிரானுக்கு மருதவாணர். மாகலிங்கேசுவரர் என்றும் உமாதேவியாருக்கு நன்முலைநாயகி என்றும் பெயர்.
திருவிடைமருதூர் திருத்தலத்திற் கோயில் கொண்ட இறைவனைத் திரிசிரபுரம் மகாவித்துவான் சி. மீனாட்சி சுந்தரம்பிள்ளை (1815- 1876) பாடிய பிரபந்தமே திருவிடை மருதூர்த் திரிபந்தாதி
ஆண்டவிநாயகர் துதியையும் சுப்பிரமணிய தேசிகர் வணக்கத்தையும் புறவுறுப்பாகக் கொண்ட திரிபந்தாதியிலே 100 செய்யுள்கள் உள்ளன. சொற்பிரிப்புப் பயிற்சிக்கு ஏற்றதாக அமையும் அந்தாதியிலே சிற்சில பாடல்கள் இலகுவாக விருத்தல் குறிப்பிடத்தக்கது.
இவ்வந்தாதி உ.வே. சாமிநாதையர் தொகுத்தளித்த திரிசிரபுரம் பூணூரீமீனாட்சி சுந்தரம்பிள்ளையவர்கள் பிரபந்தத் திரட்டு எனும் தொகையில் இடம் பெறுகின்றது. (1910,1926).
மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம்பிள்ளை திருவிடைமருதூர் உலாவும் திருவிடைமருதூர் மருதவாணர் தோத்திரப் பதிகமும் பாடியுள்ளார். (ിഗ്ര, ഗു.)
திரு இடைமருதூர் மருதவாணர் தோத்திரப் பதிகம்
திருவிடைமருதூர் மருதவாணர் மீது திரிசிரபுரம் மகா வித்துவான் சி. மீனாட்சிசுந்தரம்பிள்ளை (1815-1876) பாடிய தோத்திரப் பதிகமே, திருவிடைமருதூர் மருதவாணர் தோத்திரப் பதிகம். “மருதவாணா அடியேற்கு இரங்காயே’ என்று பாடல் தோறும் முத்திரை வைத்துப் பாடிய பத்துப் பாடல்களை L60LLUgjl.
உ.வே. சுவாமிநாதையர் தொகுத்தளித்த திரிசிரபுரம் பூரீ மீனாட்சி சுந்தரம்பிள்ளையவர்கள் பிரபந்தத்திரட்டு எனும்
தொகையில் (1910, 1926) இப்பதிகம் இடம் பெறுகின்றது.
(பொ. பூ)
திரு இடைமருதூர் மும்மணிக்கோவை
இடைமருதூரிற் கோயில் கொண்ட சிவபிரானுக்கு மருதவாணர், மகாலிங்கேசுவரர் என்றும், இறைவிக்கு நன்முலை நாயகி என்றும் திருப் பெயர்களுண்டு. திருவிடை மருதூர் மும்மணிக்கோவை இத்தலத்துறை இறைவனைப் பாட்டுடைத் தலைவனாகவுடையது.
279

Page 338
திருவிடைமருதூர் மும்மணிக்கோவை ஆசிரியப்பா, வெண்பா, கட்டளைக் கலித்துறை எனும் மூவகை யாப்பமைதி களால் அந்தாதித் தொடை அமைய, முப்பது பாடல்களால் இயன்றது. இம்மும்மணிக்கோவையைப் பாடியவர் பட்டினத் தடிகளாவர். இது, இவர் பாடிய ஏனைய பிரபந்தங்களுடன் பதினோராம் திருமுறையிலே தொகுக்கப்பட்டுள்ளது. பட்டினத்தார் பிரபந்தத்திரட்டில் இடம் பெறுவனவற்றிலே பதினோராம் திருமுறையில் அடங்கிய பட்டினத்தடிகள் பிரபந்தங்கள் நீங்கலாக, ஏனையவை வேறொருவரால் அல்லது இருவராற் பிற்காலத்தில் இயற்றப் பெற்றனவாதல் வேண்டும். மும்மணிக்கோவையாசிரியர் பட்டினத்தடிகள் காலம் தெளிவாகவில்லை. ஆயினும் அவர் மாணிக்கவாசக சுவாமிகளுக்குப் பிற்பட்டவர் என்பது தெளிவு. மாணிக்கவாசக சுவாமிகள் காலம் ஒன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதி என்பது பொருத்தமாகத் தெரிகின்றது.
திருவிடைமருதூர் மும்மணிக்கோவையிற் புறப்பொருளில் அமைந்த பாடல்களே அதிகமாகக் காணப்படுவன, அகப் பொருட் பாடல்கள் குறைவு. புறப்பாடல்கள் தோத்திரமாகவும் உலகினருக்கு அறிவுரை கூறுவனவாகவும் அமைவன.
ஆ. சிங்காரவேலு முதலியார் (1855 - 1931) பட்டினத்தார் பாடலுக்குக் கண்ட விருத்தியுரை குமாரவேலாயுத முதலியாரால் மதராஸ் டைமண்ட் பிரஸில் 1911 இலே பதிப்பிக்கப்பட்டது. இவ்வுரையின் ஐந்தாம் பதிப்பு 1956 இலே வந்தது. (பொ. யூ.)
திரு இடைமருது/7ரு7ை
திருவிடை மருதூர் மருதவாணர் மீது திரிசிரபுரம் மகாவித்துவான் சி. மீனாட்சி சுந்தரம்பிள்ளை (1815-1876) பாடிய பிரபந்தமே திருவிடைமருதூருலா, பிள்ளையவர்கள் பாடிய ஒரேயொரு உலாப்பிரபந்தம் இதுவே என்பது குறிப்பிடத்தக்கது.
ஆண்டபிள்ளையார் துதிவெண்பாவைப் புறவுறுப்பாக உடைய உலாவிலே 721 கண்ணிகள் கலிவெண்பாவில் இடம் பெறுவன.
இவ்வுலா பவ வருடம் வைகாசி மாதம் (1874) பதிப்பிக்கப்பட்டது. உ.வே. சாமிநாதையர் தொகுத்தளித்த திரிசிரபுரம் பூணூரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளை யவர்கள் பிரபந்தத்திரட்டு எனும் தொகையிலும் (1910,1926) இவ்வுலா இடம் பெறுகின்றது. (பொ. பூ)
திரு இடைவாய்
தஞ்சை மாவட்டத்திலே நன்னிலம் தாலுகாவில் அமைந்த சிவத்தலம் திருவிடைவாய் இங்குள்ள திருக்கோயிலில் 1918 ஆம் ஆண்டிலே கல்லெழுத்தில் அமைந்த திருப்பதிகமாகச் சம்பந்தப் பெருமான் பாடிய திருப்பதிகம் காணப்பட்டது. இப்பதிகச் சாசனம்
பன்னிரண்டாம் நூற்றாண்டிற்குரியதென்று ஆய்வாளர் கூறியுள்ளனர்.
25?

திருமுறைகண்ட புராணம் (செய்யுள், 25) சம்பந்தருக்கு 384 திருப்பதிகம் கூறியபோதும் திருவிடைவாய்ப் பதிகம் கிடைப்பதற்கு முன்பு 383 திருப்பதிகங்களே மூன்று திருமுறைகளிலும் இடம் பெற்றிருந்தன. ஆயினும் சம்பந்தர் இடைவாய்க்குத் திருப்பதிகம் பாடிய செய்தியைச் சேக்கிழார் குறிப்பிடவில்லை. (67யா, பூ)
திருஇந்தளூர்
மயிலாடுதுறை நகரின் வடகிழக்கிலுள்ள நகரப் பகுதியில் உள்ள வடக்கு மூலையில் காவிரி ஒடுகிறது. அவ்வாற்றினைக் கடந்தால் இத் தலத்தினைத் தரிசிக்கலாம். அக்காலத்தில் இந்துபரி என வழங்கப்பெற்ற இத்தலம் மக்கள் வழக்கில் இந்தளூர் என அழைக்கப்படுகிறது. திருவரங்கப்பட்டினம், கோவிலடி, திருவரங்கம், குடந்தை, இந்தளூர் ஆகியவை பஞ்சரெங்க கூேடித்திரங்கள். இந்தளூர் திருமங்கையாழ்வாரால்
மங்களாசாசனம் செய்யப்பட்டது.
சந்திரன் இத்தல நாதனை வழிபட்டு தன் சாபத்திலிருந்தும் காச நோயிலிருந்தும் விடுபட்டான். எனவே இங்குள்ள மூலவர் சந்திர பாபவிமோசனப் பெருமாள் என அழைக்கப்படுகிறார். வேதங்களைத் திருடி பின் பாற்கடலில் ஒளிந்து கொண்டிருந்த மதுகைபடர் என்ற அசுரர்களை அழித்து அவர்களிடமிருந்து வேதங்களை மீட்டார். அசுரர்களின் கைகளிலிருந்த அந்த வேதங்கள் துர்நாற்றம் அடைந்திருந்தன. அவற்றைத் தூய்மையுடனும் நறுமணம் வீசவும் அருள் செய்து தேவர்களிடம் ஒப்படைத்தார். ஆகவே இங்குள்ள பெருமாள் (உற்சவர்) பரிமள ரெங்கநாதர் என அழைக்கப்படுகிறார். கங்கை ஒவ்வொரு ஐப்பசித் திங்களிலும் இத்தலத்துக்கு ஏகி காவிரியில் நீராடி பெருமானை வழிபடுவதாக ஐதீகம், இந்தியாவின் வடநாட்டு யாத்ரீகர்கள் பெருமளவில் இங்கு வந்து வழிபடுகின்றனர். திருமணமாகாத ஆண் பெண் இருபாலாரும் பெருமாளுக்கு மாலையணிவித்து வழிபாடுகள் இயற்றிய பின் தங்கள் கழுத்தில் அம் மாலையை அணிந்தால் திருமணம் கைகூடும் என்பது இத் தலத்தின் பெருமைகளில் ஒன்று. சந்தான கிருஷ்ணனை ஆராதித்து அவரைக் கையில் ஏந்தி அசைத்து வழிபடுவோருக்கு மகப்பேறு உண்டாகும் என்ற நம்பிக்கையும் இத்தலம் தொடர்பாக
நிலவுகின்றது.
திருமங்கையாழ்வார் திருவிந்தனார் கோயிலை அடைந்தார். கோயிற் கதவு மூடியிருந்தது. பெருமாள் கதவைத் திறந்து ஆழ்வாரை வரவேற்கவில்லை. உரையாடவும் இல்லை. திருமங்கையாழ்வார் பொறுத்திருந்து பார்த்தார். மனத்துடிப்புடன் பெண்ணாகத் தம்மைப் பாவித்து அத் தன்மையில் பாசுரங்களைப் பாடினார். "எல்லோரும் கண்ணுற்று மகிழவேண்டிய உன் திருமேனியழகை நீயே பார்த்துக் கொண்டிரு” என மனத் தாங்கலுடன் பாடிய 10 பாசுரங்களும் இனிமையானவை.
இந்துக்கலைக்களஞ்சியம்

Page 339
"ஆசை வழுவா தேத்தும் எமக்கிங்கிழுக்காய்த்து
அடியோர்க்குத் தேசமறிய உமக்கேயாளாய்த் திரிகின்றோமுக்கு காசினொளியில் திகழும் வண்ணம் காட்டீ ரெம்பெருமான்
வாசி வல்லி ரிந்தளூரீர் வாழ்ந்தேபோம் நீரே'
(பெரிய திருமொழி 4-94)
மூலவர் - சந்திர சாப விமோசனப் பெருமாள் தாயார் - சந்திர சாப விமோசனவல்லித் தாயார் உற்சவர் - பரிமள ரெங்கநாதர் (சுகந்த வளநாதர்,
அந்நியரங்கன், மருவினியடைந்தான் போன்ற பெயர்களை உடையவர்)
தாயார் - பரிமள ரெங்கநாயகி தீர்த்தம் - இந்துபுட்கரணி, காவிரி விமானம் - வேதா மோத விமானம்
கோயிற் சந்நிதி வீதி சாலையுடன் சேருமிடத்தில் அநுமார் கோயில் உள்ளது. கோயிலுக்கு அடுத்துள்ள மற்றொரு வீதியில் ஆண்டாள் கோயில் உள்ளது. கோயிலின் தென்புறம் தீர்த்தக் குளம் உள்ளது. கோயிலின் இராஜகோபுரம் வண்ணச் சுதைச் சிற்பங்களுடன் விளங்குகிறது. கோயிலில் மூன்று திருச்சுற்றுகள் உள்ளன. பல மண்டபங்கள் உள்ளன. வாயிலைக் கடந்ததும் உள்ள முன் மண்டபத்தில் கொடிமரம், பலிபீடம், சுவாமிக்கு எதிரில் கருடாழ்வார் சந்நிதியுள்ளன. வலப்பக்கம் ஏகாதசி மண்டபம், மண்டபத் தூண்களின் அடிப்பகுதியில் நான்கு புறங்களிலும் அனுமார், கருடாழ்வார், தசாவதார மூர்த்திகள், ஆழ்வார்கள், உருவங்கள் புடைப்புச் சிற்பங்களாக வடிவமைக்கப்பட்டுள்ளன. வெளிச்சுற்றின் தெற்குப் பகுதியில் பூரீராமர் கோயிலும் உட்கோயிலின் முகப்பில் சக்கரத்தாழ்வார் கோயிலும் உள்ளன.
பெருமாள் சந்நிதிக்கு நேர் எதிரில் கொடிமரத்திற்கு முன்புறம் உள்ள தூண்களில் அழகான பல சிற்பங்களைக் காணலாம். அவற்றுள் நடன சரஸ்வதி, கஜலட்சுமி, வைகுந்தநாதன் குறிப்பிடத்தக்கவை. திருச்சுற்றில் சக்கரத்தாழ்வாருக்குப் பின்புறம் யோக நரசிம்மரும், தாயார், ஆண்டாள், ஆழ்வார்கள் சந்நிதிகள், பரமபத வாயில் உள்ளன. கருவறையில் மூலவர் வீரசயனக் கோலத்தில் நான்கு கரங்களுடன் காட்சியளிக்கின்றார். திருமுடிக்கருகில் காவிரியும், திருவடிக்கருகில் கங்கையும், திருமுடிக்கு நேராக சூரியனும் திருவடிகளுக்கு நேராக சந்திரனும் நாபிக் கமலத்தில் பிரம்மாவும் உள்ளனர். திருமுன்பில் உற்சவர் உபயநாச்சியார்களுடன் எழுந்த ருளப் பெற்றுள்ளார். சந்தான கிருஷ்ணன் திருமேனியும் அருகில் உள்ளது.
நாள்தோறும் 8 கால வழிபாடுகள் நடைபெறுகின்றன. ஐப்பசி மாதத்திலும் பங்குனியிலும் பெருவிழா 10 நாட்கள் நடைபெறும். ஐப்பசி மாதத்தில் இத்தலத்தில் விழா கொண்டாடப்படுகிறது. ஒரு சமயம் முடவனாகிய பக்தன் ஒருவன் கடமுழுக்கு ஆடவந்தான். ஆனால் கடமுழுக்கு நாளன்று முழுகாமல் மறுநாள் வந்து முழுக்காடியதால் முடமுழுக்கு என்ற பெயர் உண்டானது. இங்கு நடைபெறும் முடமுழுக்கு விசேடமானது. (தே. ஹ.)
இந்துக்கலைக்களஞ்சியம்

திரு இரத்தினகிரி
இரத்தினகிரி என வழங்கும் திருத்தலம் வாட்போக்கி என்று முன்பு பெயர் பெற்றிருந்தது. திருச்சி மாவட்டத்திற் குளித்தலை இருப்புப்பாதை நிலையத்திலிருந்து ஆறரைமைல் தொலைவில் உள்ளது.
இங்கு எழுந்தருளிய சிவபிரானுக்கு இரத்தினகிரிநாதர், மத்தியானசுந்தரர் என்றும் இறைவிக்குச் சுரும்பார் குழலியம்மை என்றும் பேர். இங்கு உச்சிக்கால வழிபாடு விசேடமானது. இந்திரன் உண்டாக்கிய வேப்ப மரத்தையும், இறைவழிபாடு முடிந்து திரும்புகையில் வயிர வீரப்பெருமாளையும் வணங்குதல் மரபு தீர்த்தம் காவிரி.
அகத்தியர், இந்திரன் பூசித்துப் பேறுபெற்ற தலம். இத்தலத்திற்கு அப்பர் பாடிய திருப்பதிகமொன்றுண்டு (5.86). சேறைக் கவிராச பிள்ளையின் வாட்போக்கிநாதருலாவும் திரிசிரபுரம் சி. மீனாட்சிசுந்தரம்பிள்ளையின் வாட்போக்கிக் கலம்பகமும் இத்தல சம்பந்தமானவை. ( ിff. ഗു.)
திரு இரும்பூனை
நீடாமங்கலம் இரயில்வே நிலையத்திற்கு வடமேற்கே கும்பகோணம் போகும் வழியில் உள்ளது. நான்கு மைல் தொலைவு. இத்தலம் ஆலங்குடியென்றும் வழங்கும். இங்குத் தகூதிணாமூர்த்தி சந்நிதி விசேடம். வியாழக் கிழமைகளில் வழிபாடு செய்தல் சிறப்புடைத்து. குருப் பெயர்ச்சியின் போது மக்கள் திரளாக வந்து வழிபாடு செய்வர். தகூதிணாமூர்த்தியே திருத்தேரில் எழுந்தருளுவார். பிள்ளையார்:- கலங்காமல் காத்த பிள்ளையார் கோபுர வாயிலில் உள்ளார். விஷத்தால் கலங்கிய தேவர்களைக் கலங்காமல் காத்தவர். இவருக்கு அகளங்க விநாயகர் என்ற பெயரும் உண்டு. தகூதிணாமூர்த்தி விஷவேகத்தால் மூர்ச்சித்த தேவர்களுக்கு ஞானோபதேசம் செய்தமையால் இவருக்கு உற்சவாதிகள் நடைபெறுகின்றன.
சுவாமி:- காசி ஆரணியேசுரர், ஆபத்சகாயர்
அம்பிகை- ஏலவார் குழலியம்மை, ஏலாளகாம்பா.
தீர்த்தம் :- அமிர்த புஷ்கரணி தீர்த்தம், கோயிலைச் சுற்றி அகழி போல் உள்ளது. தேவர்கள் செய்த அமிர்தாபிஷேகம் இவ்வாறு ஆயினமையின் இப்பெயர் பெற்றது,
ஏலவார் குழலி:- கைலையங்கிரியில் பந்தாடுகையில் ஏதோ ஒரு குறிப்பால் தன்னை நிற்கச் சொன்னதாக நினைந்து சூரியன் நின்றுவிட்டமையால் உலகியல் தம்பித்தது. அதனாலுண்டான தோஷத்தைப்பரிகரித்தற்குச் சிவர்க்ஞையால் அமிர்த புஷ்கரிணி யின் ஈசானத்தில் குழந்தையாய் அவதரித்து, அங்கு நீராட வந்த
281

Page 340
ஒரு வேதியரால் எடுத்து வளர்க்கப்பட்டுச் சமீபத்திலுள்ள ஓரிடத்தில் தவஞ் செய்து, பரீக்ஷார்த்தமாக வந்த சிவபெருமானோடு வாதாடி அவரைத் திருமணம் செய்துகொண்டார்.
விசுவாமித்திரர் முதலியோர் பூசித்த தலம். இத்தலம் ஆலங்குடி என்று வழங்கப்படுகிறது. ஆலங்குடித் தல புராண வசனம் அச்சிடப்பெற்றுள்ளது. விநாயகர் கலங்காமல் காத்த பிள்ளையார்.
கருதிரும் பூளை காசியா ரணியர் அருளேலக் குழலீசு வரிய முதப் பொய்கை சிவ சீரார் கழலே தொழுவீர் இதுசெப்பீர் வாரார் முலைமங் கையொடும் முடனாகி ஏரார் இரும்பூ ளையிடங் கொண்ட ஈசன் கார7ர் கடல்நஞ் சமுதுண் டகருத்தே
திருஞா. 2-ம் திரு.
இத்தலக் கோயில் முசுகுந்த சக்கரவர்த்தியின் மந்திரியாகிய ஒகுடையான் (அமுதோகன்) என்பவனாற் கட்டப்பட்டது. தமது திரவியங்கொண்டு கட்டவில்லையே என்று சினந்த முசுகுந்தனால் அம்மந்திரி கொல்லப்பட்டு ஸ்வாமியை அடைந்து ஐக்கியமானான். அத்தலை ஸ்வாமியின் கோமுகியின் கீழேயிருக்கிறது. ஊரின் கிழக்கே அவ்விடம் ஒகுடையான் களமென்று இப்போது வழங்கப்பட்டுள்ளது. இத்தலக் கோயில் பெரிய ஆலயமாக இருந்ததென்றும் விரிவான ஸப்தப்பிராகாரம் இருந்தனவென்றும் சொல்வர். ஆலங்குடிக்குத் தெற்கிலும் கிழக்கிலும் பூளைவனத்தாறு என்று நதி ஓடுகிறது. இது கிழக்கே கம்பா நதி என்று சொல்லப்படும். சுந்தரமூர்த்திநாயனார் விக்கிரகம் வடுவமைந்த திருமேனியுள்ளதாக இருக்கிறது. ஸ்வாமியின் திருமுடியில் கபிலைக் கிழங்கு தோண்டிய வேடனால் உண்டாகிய தழும்புண்டு. அம்பிகை இறைவனை விவாகஞ் செய்து கொண்ட இடம் திருமண மங்கலமென்றும் வழங்குகிறது. அங்கே ஒமஞ் செய் பள்ளம், ஒமக்குளமென்றும், அம்பிகை பாவம் நீங்கிய தீர்த்தம் பாப விமோசன தீர்த்தமென்றும் இப்போது வழங்கி வருகின்றன. இத்தலம் காசியாரண்யம் என்று வடமொழியில் வழங்கப் பெறும்.
பழைய கல்வெட்டுக்களில் இரும்பூளை என்ற இத்தலப் பெயர் சொல்லப்பட்டிருக்கிறது. பூளை வனம் என்றும் வழங்கும். தகூதிணாமூர்த்தியின் முக்கிய தலங்கள் 24-இல் ஒன்று. விருட்சம். ஆல். (2 . 62s. 47.)
திரு இரும்பை மாகாணம்
தொண்டை நாட்டுத் தலம். மக்கள் வழக்கில் இரும்பை என்று வழங்குகிறது. திண்டிவனம் - பாண்டிச்சேரி கிளியனூர்
நெடுஞ்சாலையில் இத் திருத்தலம் அமைந்துள்ளது. மாகாளர் வழிபட்ட தலம்.
282
 

கோயில்
இறைவன் - மாகாளேஸ்வரர், மாகாளநாதர் இறைவி - மதுரசுந்தரநாயகி, குயில் மொழியம்மை தலமரம் - புன்னை தீர்த்தம் - மாகாள தீர்த்தம். கோயிலுக்கு அருகில் உள்ளது.
மிகப்பழைய கோயில் சிதைவடைந்துள்ளது. ராஜகோபுரம் இல்லை. முகப்பு வாயில் மட்டுமே உள்ளது. தெற்கு நோக்கிய வாயில், வெளிப்பிராகாரம் விசாலமானது. கோஷ்ட மூர்த்தங்களாக விநாயகர், தட்சணாமூர்த்தி, இலிங்கோற்பவர், துர்க்கை ஆகியோர் உள்ளனர். சண்டேஸ்வர சந்நிதியும் எதிரில் நவக்கிரக சந்நிதியும் உள்ளன.
முகப்பு வாயிலினுள் நுழைந்ததும் நேரே அம்மன் சந்நிதி. இடப்பக்கத்தில் சுவாமி சந்நிதி, சந்நிதியில் நடராஜர், சிவகாமி திருமேனிகள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. பிராகாரத்தில் விநாயகர் சந்நிதியும் மூலவருக்கு நேர் பின்னால் ஆறுமுகர் சந்நிதியும் உள்ளன. மூலவர் சிவலிங்கத் திருமேனி கிழக்கு நோக்கிய சந்நிதி. சிவலிங்கத்தின் மேற்புறம் மூன்று பிளவுகளாக வெடித்துள்ளது. இதில் ஒரு பிளவு வெளியில் விழுந்துவிட்டது. அதனால் அவ்விடம் வழித்தெடுத்தாற்போல் உள்ளது.
இவ்வெடிப்புப் பற்றி செவிவழிக்கதை ஒன்று கூறப்படுகின்றது. குலோத்துங்க சோழன் ஆண்ட காலத்தில் நாட்டில் பஞ்சம் ஏற்பட்டது. மன்னன் பஞ்சத்திற்கான காரணத்தைத் தெரிந்து அறிவிப்பவர்களுக்கு பரிசு உண்டு என அறிவித்தான். அவ்வேளையில் அத்தலத்தில் பழுத்த அரச இலையை உணவாக உண்டு தவஞ் செய்து வந்தார் கடுவெளிச் சித்தர். அவரை அணுகி உண்மை நிலை அறிய விரும்பிய வள்ளி என்னும் தாசி அவர் உணவுக்காக பழுத்த அரசிலையை உண்ணக் கை நீட்டியபோது கையில் உணவை இட்டாள். அதைப் பெற்று உண்டமையால் சித்தர் உணர்வு கைவரப்பெற்று கண் விழித்துப்பார்க்க, அவளும் நாட்டில் பஞ்சம் நீங்கி செழுமை உண்டாக வேண்டும் என அவரிடம் வேண்டி நின்றாள்.
சித்தர் ஆலயத்திற்கு வந்தார். தாசியும் தன் குலத்தொழிலான நடனமாடினாள். அப்போது தாசியின் காற்சிலம்பு அவிழ்ந்து விழ அதைக் கண்ட சித்தர் அக் காற்சிலம்பை அவள் காலில் பூட்டிவிட்டார். மக்கள் இது கண்டு
ஏளனஞ் செய்தனர்.
மன முதிர்ச்சியற்ற மக்களின் ஏளனத்தால் கோபமுற்ற சித்தர்
“வெல்லும் பொழுது விடுவேன் வெகுளியை செல்லும் பொழுது செலுத்துவேன் சிந்தையை அல்லும் பகலும் உன்னையே தொழுவேன்
கல்லும் பிளந்து கழுவெளியாமே”
இந்துக்கலைக்களஞ்சியம்

Page 341
என்று பாட சிவலிங்கம் திருமேனி வெடித்துச் சிதறியது. இதைக் கண்ட மக்கள் பயந்து சித்தர் காலிற் பணிந்து விழுந்தனர். பிழை பொறுக்க வேண்டி நின்றனர். மனமிரங்கிய சித்தர்,
“எட்டும் இரண்டும் அறிந்த எந்தனை எட்டும் இரண்டும் அறிந்த உந்தனை எட்டும் இரண்டும் ஒன்றதாகுமே”
இவ்வாறு பாடியதும் வெடித்துச் சிதறிய மூன்று துண்டுகளில் இரண்டு மட்டும் ஒட்டிக் கொண்டது. ஒன்று மட்டும் வெளியே போய் விழுந்தது. அச்சில்லு விழுந்த இடம் கழுவெளி என்னும் பெயரில் சிறு கிராமமாக உள்ளது.
வேதவித்தாய் வெள்ளைநிறு பூசி வினையாயின கோது வித்தாய் நீறெழக் கொடி மாமதிலாயின ஏதுவித்தாயின தீர்க்குமிடம் இரும்பைதனுள் மாதவத்தோர் மறையோர் தொழ நின்ற மாகாளமே என்று இத்தலத்து இறைவனை சம்பந்தப்பெருமான் போற்றிப் பாடியுள்ளார். (நி நி)
திரு இஞ்ைசி
திருநெல்வேலியைச் சார்ந்த திருக்குற்றாலத்துக்கு வடக்கிலும் தென்காசிக்கு மேற்கிலும் சித்திரா நதிக் கரையில் அமைந்தது திருவிலஞ்சி எனும் திருத்தலம். திருக்குற்றாலத் திற்குரிய பரிவாரத் தலங்களுள் ஒன்றாக விளங்குவது இத்திருத்தலம். மகிழ் (இலஞ்சி) தலவிருட்சம்.
இத்திருக்கோயிலில் இரு பிராகாரங்கள் உள்ளன. சூரியன், தட்சணாமூர்த்தி, வச்சிரதேவர், அறுபத்துமூவர், கன்னிவிநாயகர், வள்ளிதேவசேனா சமேத முருகன், வேணுகோபாலன், காசி விசுவநாதர், விசாலாட்சியம்மை, குற்றாலநாதர், குழல்வாய் மொழியம்மன், அகஸ்தியர், சாஸ்தா, சப்தகன்னியர், ஆறுமுகன், சனீஸ்வரன், சண்டிகேசுரர், பைரவர் ஆகியோர் சந்நிதிகள் முதற் பிராகாரத்தில் உள்ளனர்.
இரண்டாம் பிராகாரத்திற் கர்ப்பக்கிருகம் இரு சந்நிதி களாகச் காட்சி தருகிறது. ஒரு சந்நிதியில் இலஞ்சிப் பெருமான் வள்ளி தேவசேனா சமேதராய்க் காட்சி தருகிறார். மற்றைய சந்நிதியில் இருவாலுகேசர் எனும் சிவபிரான் இருவாலு கேசற்கிணியாளுடன் காட்சி தருகிறார். இருவாலுகேசர் அகத்தியராற் பிரதிட்டை செய்யப் பெற்றவர்.
பிரமன் முதலியோர் பூசித்துப் பேறுபெற்ற தலமிது. அருணகிரிநாதர் இத்தலத்தின் மீது திருப்புகழ் பாடியுள்ளார். திரு இலஞ்சி முருகனுலா (பண்டாரக் கவிராயர்), திரு இலஞ்சி முருகன் பிள்ளைத்தமிழ் (செங்கோட்டை கவிராச பண்டாரத்தையா) எனும் பிரபந்தங்கம் உள்ளன. ( பொ. பூ)
இந்துக்கலைக்களஞ்சியம்

திரு இஞ்ைசி முருகன் உாை
திருநெல்வேலியைச் சார்ந்த திருக்குற்றாலத்திற்கு வடதிசையில் உள்ள திருவிலஞ்சி என்னும் திருத்தலம், தலவிருக்ஷமான இலஞ்சியினால் (மகிழால்) பெயர் பெற்றது.
திருவிலஞ்சியில் வீற்றிருக்கும் முருகப் பெருமானைப் பாடுவது திருவிலஞ்சி முருகனுலா, காப்பு வெண்பா இரண்டினை ஆதியிலும் வாழி வெண்பாவொன்றினை அந்தத்திலுமுடைய உலாவின் இடையே அமைந்த கலிவெண்பாவிலே 460 கண்ணிகள் உள்ளன.
இதனைப் பாடியவர் மேலகரம் பண்டாரக் கவிராயர் என்பவராவார். அவர் திரிகூடராசப்பக்கவிராயரின் புதல்வராவார். திரிகூடராசப்பர் பதினேழாம் நூற்றாண்டின் பிற்கூறிலும் பதினெட்டாம் நூற்றாண்டின் முற்கூறிலும் வாழ்ந்தவர்.
முருகப் பெருமானின் பெருமைகூறி, அவன் திருத்தலமாம் திருவிலஞ்சியின் மான்மியம் கூறி, அத்திருத்தலத்தின் விழாக்காலத்து உலகினருக்கு அருள்பாலிக்கப் பவனி புறப்பட்ட முருகப் பெருமானைக் கண்டு, ஏழு பருவ மகளிரும் மையலால் வாட, உலாப் போந்ததாகத் திருவிலஞ்சி முருகன் உலா அமைகின்றது; திருவிலஞ்சியின் வரலாறும் ஏழுபருவ மகளிரின் செய்திகளும் விரிவாகக் கூறப்பட்டுள்ளன.
இவ்வுலாவினை உ. வே. சாமிநாதையர் 1935 இலே பதிப்பித்தனர்; இரண்டாம் பதிப்பு 1956 இலே வெளிவந்தது.
(67/7, 14.)
திரு இஞ்ைசி முருகன் பிள்ளைத் தமிழ்
திரு இலஞ்சி என்னுந் திருத்தலத்திற் கோயில் கொண்ட முருகப் பெருமானைப் பாடுவது திருவிலஞ்சி முருகன் பிள்ளைத் தமிழ். இப்பிள்ளைத் தமிழிலே புறவுறுப்பாம் காப்பினை அடுத்து இடம்பெறும் பத்துப் பருவங்களாம் காப்பு, செங்கீரை, தால், சப்பாணி, முத்தம், வாரானை, அம்புலி, சிற்றில், சிறுபறை, சிறுதேர் என்பனவற்றிலே தால், வாரானை சிற்றிற் பருவங்களிலே பருவத்திற்குப் 11 பாக்களும் ஏனைய ஏழு பருவங்களிற் பருவத்திற்குப் 10 பாக்களுமாக, காப்பு நீங்கலாக 103 செய்யுள்கள் உள்ளன.
செங்கோட்டை கவிராச பண்டாரத்தையா பாடியது திருவிலஞ்சி முருகன் பிள்ளைத்தமிழ், (ിff. ഗു.)
திரு ஈங்கோய்மலை
இத்தலம் குழித்தலை இரயில்வே நிலையத்திலிருந்து 2 மைல் தொலைவில் உள்ளது. அகத்தியமுனிவர் ஈ உருவம் கொண்டு பூசித்த தலம், காலையில் கடம்பர் கோயிலையும் உச்சிவேளையில் இரத்தினகிரியையும், மாலையில் திருவீங்கோய் மலையையம் கார்த்திகை சோம வாரங்களில் தரிசித்தால் விசேட பலன் கிடைக்கும்.
253

Page 342
“காலைக் கடம்பர், மத்தியானச் சொக்கர், அந்தித் திருவீங்கோய் நாதர்'
சுவாமி மரகதாசலேசுரர்
அம்பிகை மரகதவல்லியம்மை
கோயில் குன்றின் மேல் இருக்கின்றது. 500 படிகள் இருக்கும்
ஈங்கோய், மாகதாசலம், மரகதமலை,மரகதலிங்கம். சுந்தரர்
போன பொழுது சுவாமி புளியில் ஒளிந்திருந்தார். அவன் பொன்
கேட்டதும் சுவாமி புளியங்காயைப் பறித்து வீழ்த்தினர். அது
பொன் ஆயிற்று என்பர். திருஞானசம்பந்தர் பாடிய தலம்.
மருவும் ஈங்கோய் மலைமரக தேசர் மரகத வல்லி மனமகிழ் அமிர்தம் (சிவ) வானத் துயர்தன் மதிதோய் சடைமேல் மத்த மலர்குடித் தேனொத் தனமென் மொழிமான் விழியாள் தேவி பாகமாக் கானத் திரவில் எரிகொண் டாடும் கடவுள் உலகேத்த ஏனத் திரள்வந் திழியுஞ் சாரல் ஈங்கோய் மலையாரே.
திருஞா. 2-ஆம் திரு.
இத்தலத்தைப்பற்றி வேறு தலங்களில் வழங்கும் தேவாரப் பாடல்கள் : இடைமருதோ டீங்கோய் நீங்கா விறையவனைபுள்ளிருக்குவேளுர், திருநா. இடைமருதும் ஈங்கோயு நீங்காதேற்றின் மிசையானை -
ஆனைக்கா திருநா. ஈங்கோய் நீங்காதுறையு மிறைவன்றன்னை- கற்குடி . திருநா. ஏலமண நாறும் ஈங்கோய் நீங்கார்- இடைமருதூர். திருநா இன்னம்பராரிங்கோய் மலையார்-வீழிமிழலை. திருநா. அண்ணாமலை யீங்கோயு மத்திமுத்தாற கலாமுதுகுன்றம்
பொது திருஞா இடைமருதீங்கோய் இராமேச்சுரம் - பொது. திருநா.
(a) . 62s, 47.)
திரு எருக்கத்தம் புலியூர்
நடு நாட்டுத் தலம். சம்பந்தர் பாடல் பெற்ற தலம். ஜயங் கொண்டம் பேரூந்துச் சாலையில் உள்ளது. வியாக்கிரபாதர் (புலிக்கால் முனிவர்) முனிவர் தரிசித்த தலங்களில் இதுவும் ஒன்று. மக்கள் வழக்கில் ராஜேந்திரப் பட்டணம் என்று வழங்குகின்றது. சிறிய ஊர். குளக்கரையில் கோயில் உள்ளது. வெள்ளெருக்கைத் தலமரமாகக் கொண்டுள்ள தலமாதலின் எருக்கத்தம்புலியூர் என்று பெயர் பெற்றது.
உருத்திரசன்மர் என்பார் இத்தலத்து இறைவனை வழிபட்டு ஊமை நீங்கப் பெற்ற சிறப்புடையது. உருத்திர சன்மரின் உருவச்சிலை கோயிலுள் உள்ளது. திருநீலகண்டர் அவதரித்த பெருமையையும் பெற்றது இத்தலம்.
இறைவன் நீலகண்டேஸ்வரர், சுவேதாரக்கவனேஸ்வரர் இறைவி அபீதகுஜநாயகி, நீலமலர்க்கண்ணி தலமரம் - வெள்ளெருக்கு
தீர்த்தம் -
நீலோற்பல தீர்த்தம்
284

மூன்று நிலைகளையுடைய ராஜகோபுரம், வலப்பால் சிறிய விநாயகர் சந்நிதி. கோபுரத்திற்கும் கொடிமரத்திற்கும் இடையில் நந்தி மண்டபம் உள்ளது. வெளிச்சுற்றில் இடப்புறமாக நவக்கிரகமும் நால்வரும் உள்ளனர். திருநீலகண்ட யாழ்ப்பாணருடைய திருவுருவம் மதங்க சூளாமணியாருடன் கூடியுள்ளது. மகாகணபதி, விசுவநாதர், விசாலாட்சி, முருகன், இலக்குமி ஆகியோர் சந்நிதிகள் உள்ளன.
கோஷ்ட மூர்த்தங்களாக விநாயகர், தட்சணாமூர்த்தி, இலிங்கோற்பவர், பிரம்மா, துர்க்கை ஆகியோர் உள்ளனர். தட்சணாமூர்த்திக்கு மேலே சிறிய கோயில் அமைப்பில் சட்டைநாதர் உள்ளார். மேலே செல்ல படிக்கட்டு வசதிகள் உள்ளன. சண்டேசுவரர் சந்நிதியும் உள்ளது. துவாரபாலகர்களை வணங்கி, பின் மூலஸ்தான இறைவனைத் தரிசிக்கலாம். மூலவர் அழகிய திருமேனி, சுவாமிக்கு வலப்பக்கத்தில் அம்பாள் சந்நிதி உள்ளது. நாள்தோறும் நான்கு காலப் பூஜைகள் இடம்பெறுகிறன.
"விண்ணோர் பெருமானே விகிர்தா விடையூர்தி பெண் ஆண் அலியாகும் பித்தா பிறைகுடி எண்ணார் எருக்கத்தம்புலியூர் உறைகின்ற அண்ணாஎன வல்லார்க்கு அடையா வினைதானே'
என்று சம்பந்தர் பெருமான் இத் தலத்தெழுந்தருளியிருக்கும் பெருமானைப் பாடியுள்ளார். (நி நி)
திருஎவ்வுன்
சென்னை - அரக்கோணம் புகைவண்டிப் பாதையில் உள்ள திருவள்ளூரிலிருந்து மூன்று கிலோ மீட்டர் தொலைவில் இத்தலம் உள்ளது.
திருவள்ளூரில் உள்ள பூரீ வீரராகவப் பெருமாள் கோயில் ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப் பெற்றது. திருமழிசையாழ்வார், திருமங்கையாழ்வார், பூரீ வேதாந்த தேசிகர், திவ்வியகவிப் பிள்ளைப் பெருமாள் அய்யங்கார் முதலானோர் இத் தலத்துப் பெருமானைப் பாடிப் பரவியுள்ளனர். மார்க்கண்டேய புராணத்தில் பன்னிரு அத்தியாயங்களில் இத்தல மேன்மை விவரிக்கப் பெற்றுள்ளது. புண்யாவர்த்த கூேடித்திரம் எனச் சிறப்பிக்கப் பெற்றுள்ள இத்தலம் அகோபில மடம் பூரீமத் அழகிய சிங்கர் சுவாமிகளின் ஆளுகைக்குட்பட்டு சீருடனும் புகழுடனும் விளங்குகிறது. தற்காலத்தில் இது பெரும் பிரார்த்தனைத் தலமாகப் பிரசித்தி பெற்றுள்ளது. திருவள்ளூர்த் திருத்தலத்தைப் பற்றிய பல புராண நிகழ்ச்சிகள் கூறப்பட்டுள்ளன.
சாலிஹோத்ரர் என்ற ஒரு முனிவர் தீர்த்த யாத்திரை செய்து வரும்போது வீட்சாரண்யம் பகுதியை அடைந்து குடில் அமைத்து நாளும் “ஹிருத்தாபநாசினி” என்னும் திருக்குளத்தில் அரிசியை மாவாக்கி அதிதிகளுக்கு அமுது படைத்துப் பெருமாளை வழிபட்டு வாழ்ந்திருந்தார். வழக்கம் போல அமுது படைக்க அதிதியை
இந்துக்கலைக்களஞ்சியம்

Page 343
எதிர்பார்த்து அவர் காத்திருக்கும் போது பெருமாள் ஒரு முதியவர் வேடத்தில் அவர் முன் தோன்றி அமுது கேட்க, முனிவர் மிக்க மகிழ்ச்சியுடன் அவருக்கு உணவு படைக்க, அவர் அதை உண்ட பின்னர் மேலும் பசிக்கிறது என்று கூற முனிவர் தமக்காக வைத்திருந்த பங்கை அவருக்களித்தார். முதியவர் உணவுண்ட பிறகு “களைப்பாயிருக்கிறது. படுக்க வேண்டும். அதற்கு எவ்வுள்' என முனிவரை வினவ சாலிஹோத்ரர் தமது குடிலைக் காட்டி இவ்வுள் உமதே நீர்படுத்துக் கொள்ளலாம்' எனக் கூறினார். கிழ அந்தணரும் பெருமகிழ் வெய்தித் தமது திருமுடியைத் தெற்கே வைத்து சாய்ந்தருளி தமது முதிய வேடத்தைக் களைந்து பெருமாளாகக் காட்சியளித்துப் படுக்கத் தொடங்கினார். திருமாலின் சுடர் மேனியைக் கண்ட முனிவர் பெருவியப்பும் பெருமகிழ்ச்சியும் மீதுாரக் கண்களில் நீர் துளிர்க்கத் திருமாலின் கழல்களைப் பணிந்தார். பெருமாள் முனிவரின் முடிமீது தமது வலதுகரத்தை வைத்தருளி இடது கரத்தால் ஞானமுத்திரை காட்டி ஆசி கூறினார். முனிவர் விரும்பியவாறு விஜய சோடி விமானத்துடன் இத்தலம் விளங்கப் பெற்றது. முனிவரிடம் படுக்க எவ்வுள் என்று பரந்தாமன் கேட்டமையால் இத் தலம் திரு எவ்வுள் எனப் பெயர் பெற்றது. பெருமாளும் திரு எவ்வுள் கிடந்தான் என அழைக்கப்படுகிறார்.
திருமகள் தர்மசேன மன்னரின் திருமகளாக அவதரித்து வசுமதி என்ற பெயரில் வளர்ந்து மங்கைப் பருவம் எய்திய போது வீரநாராயணன் என்ற அரசகுமாரன் வடிவில் வந்த பெருமாளைக் காதலித்து மன்னரின் ஒப்புதலால் இருவருக்கும் திருமணம் நிகழ்ந்து பின் இருவரும் வீரராகவப் பெருமாள் கருவறையுட் சென்று மறைந்தனர் என்பது புராண நிகழ்ச்சி. அதன் நினைவாக புரட்டாதி முன்னிட்ட பத்து நாட்கள் திருக்கல்யாண உற்சவம் நடைபெறுகிறது. வசுமதியாக அவதரித்த திருமகள் கனகவல்லித் தாயார் என்ற பெயரில் தனிக்கோயில் கொண்டுள்ளார்.
மது கைபடர்களை வெற்றிகொண்ட வரலாறு, தட்சனைக் கொன்றதால் ஏற்பட்ட ஹத்திதோஷம் நீங்க உருத்ரன் ஹ்ருத்தாப நாசினியில் நீராடிய வரலாறு எனப் பல புராண நிகழ்ச்சிகள் இத் தல மேன்மையை விளக்கி நிற்கின்றன. இத்தலத்திற்கு வருவோர் தீராத பிணிகளிலிருந்து தம்மை விடுவித்துக் கொள்வதற்காக பெருமாளைப் பிரார்த்திக்கின்றனர். ஒவ்வொரு அமாவாசை நாளன்றும் வழிபடுகின்றனர். இங்குள்ள பெருமாள் வைத்திய வீரராகவசுவாமி என்ற சிறப்புப் பெயராலேயே அழைக்கப்படுகின்றார். அமாவாசை நாளன்று பெரும் மக்கள் கூட்டத்தை இத் தலத்திற் காணலாம். இங்குள்ள ஹ்ருத்தாப நாசினி தீர்த்தக் குளத்தில் நீராடி விஜய கோடி விமானத்தையும் வைத்திய வீரராகவ சுவாமியையும் வழிபடத் தீராத பிணிகள் நீங்கி வாழ்க்கையில் இன்பம் கைகூடி வரும் என்பது கண்கூடு.
திருஎவ்வுள் கிடந்த பரமசுவாமியைப் பிள்ளைப் பெருமாள்
அய்யங்கார்.
இந்துக்கலைக்களஞ்சியம்

'நீர்மை கெடவைதாரும் நின்னோடு எதிர்த்தாரும் சீர்மை பெற நின்னடி கிழ்ச் சேர்க்கையினால் வெவ்வுளத்தனேன் செய் மிகையைப் பொறுத்தருளி எவ்வுள் அத்தனே நீ இரங்கு”
(108 திருப்பதி அந்தாதி) எனப் புகழ்கின்றார்.
இத் தலத்தை திருமங்கையாழ்வாரும் அவருக்கு முன்னரே திருமழிசைப்பிரானும் பாடியுள்ளனர். திருமழிசையாழ்வார், திருமால் அர்ச்சாரூபியாக நாகத்தணைமேல்பள்ளிகொண்டிருக்கிற
தலங்களைக் கூறிக் கொண்டே வருகிறார்.
"நாகத்தனைக் குடந்தை வெஃகா திருவெவ்வுள்
நாகத்தனை யரங்கம் பேர் அன்பில்
என்று பெருமாள் காட்சியளிப்பதாகக் கூறுகிறார். திருமங்கையாழ்வார் தமது பத்து பாசுரங்களிலும் பெருமாளின் பத்து அவதாரங்களையும் முறையாய்ப் பாடி, பாடல் தோறும் “எவ்வுள் கிடந்தானே” என்ற ஈற்றடியுடன் நிறைவு செய்கின்றார். திரு எவ்வுள்ளூரின் இயற்கையழகை,
'நீலமார் வண்டுண்டு வாழும் நெய்தலந் தண்கழனி ஏலநாறும் பைம் புறவில் எவ்வுள் கிடந்தானே' எனப் பாடி மகிழ்கின்றார்.
கோயில் மூலவர் வீரராகவப் பெருமாள், வைத்திய வீரராகவ
சுவாமி, திருஎவ்வுள் கிடந்தான். தாயார் கனகவல்லி
விமானம் - விஜயகோடிவிமானம் தீர்த்தம் - ஹ்ருத்தாபநாசினி
கோயில் ஊரின் நடுவில் அமைந்துள்ளது. வானளாவிய இராஜகோபுரத்துடன் விளங்குகின்றது. கோயிலின் வலப்புறம் மிகப் பெரிய தெப்பக்குளம் நீராழி மண்டபத்துடன் காணப்படுகின்றது. கோபுர வாயிலின் வலப்புறம் உற்சவ மண்டபம், இடப்பக்கம் ஆச்சார்யர்களின் சந்நிதி, கொடிமரம், பலிபீடம் என்பன உள்ளன. பெருமாள் சந்நிதிக்கு முன்புறம் கருட மண்டபம் உள்ளது. கருடாழ்வார் கூப்பிய கரங்களுடன் மேற்கு நோக்கி காட்சியளிக்கின்றார். தென்புறம் நுழைவாயில் திருச்சுற்றில் கனகவல்லித் தாயாரின் தனிக் கோயில் உள்ளது. வடபுறம் ஆண்டாள் திருக்கோயில், ஆழ்வார்கள் சந்நிதிகள் உள்ளன. மகாமண்டபத்தைக் கடந்ததும் மூலவரின் கருவறை, பெருமாள் ஆதிசேடப் படுக்கையில் தென்புறம் திருமுடி வைத்து வடபுறம் திருவடிகள் நீட்டி நாபிக் கமலத்தில் உள்ள பிரமனுக்கு இடது கரத்தால் ஞானமுத்திரை காட்டி உபதேசித்தும் வலது திருக்கரத்தை சாலி ஹோத்திர முனிவர் முடிமீது வைத்து ஆசி
285

Page 344
கூறியும் கீழ்த் திசையில் திருமுகம் நோக்கக் காட்சி அளிக்கின்றார். திருமுன்பில் உற்சவர், பூதேவி, பூரீதேவி காட்சி தருகின்றனர்.
பரமனே தனக்கு படுத்துக் கொள்ள இடம் கேட்ட தலம். ஆழ்வார்களாலும் ஆச்சாரியர்களாலும் பாடப்பெற்ற தலம். வடலூர் இராமலிங்க அடிகளார் இத்தலப் பெருமாள் மீது திருப்பஞ்சகம் என ஐந்து பாடல்களைப் பாடியுள்ளார். -
ஐந்து கால வழிபாடுகள் நடைபெறும் தலம். ஆண்டு முழுவதும் திருவிழாக்கள் கொண்டாடப்படும் தலம். சித்திரையில் பெருவிழா, சித்திரை நட்சத்திரத்தில் தீர்த்தவாரி, ஆவணி பவிரோற்சவம், மார்கழி அத்யயனம், போகியில் திருக்கல்யாணம், தைத்திங்கள் பெருவிழா, ஆடிப்பூரம், ஆண்டாள் திருக்கல்யாணம், பங்குனி உத்திரம், தாயார் உற்சவம், ஆனி கருட சேவை, பூரீஜெயந்தி, நவராத்திரி, தேசிகர் உற்சவம் என பல விழாக்கள் சிறப்பாகக் கொண்டாடப்படும். இத் தலம் பல்லவர் காலத்துக் கோயில் ஆகும். பின்வந்த மன்னர்களால் திருப்பணிகள் விரிவு பெற்றது. (தே. ஹ.)
திருக்கச்சி ஏகாம்பூரநாதர்
தொண்டை நாட்டுத் தலம். காஞ்சிபுரம் வரலாற்றுச் சிறப்புக் கொண்டது. கி. மு. 5ஆம் நூற்றாண்டிலேயே காஞ்சி மாநகர் சிறப்பாக இருந்ததென்று சீன யாத்திரிக யுவான் சுவாங்கின் குறிப்பேட்டிலிருந்து அறிய முடிகின்றது. கி.மு 2ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த பதஞ்சலி தமது பாஷ்யத்துள் காஞ்சியின் சிறப்பைக் கூறி உள்ளார். கல்வியில் கரையில்லாத காஞ்சிமாநகர் என்று அப்பர் தேவாரத்தில் குறிப்பிட்டதுபோல இத்தலம் ஆதிமுதல் கல்விக்குப் பெயர் போன தலமாகத் திகழ்ந்தது. புகழ்பெற்ற நாலந்தா பல்கலைக்கழகத்தின் தலைவராக விளங்கிய தர்மபாலரும் பேராசிரியர் தின்னாகரும் பெளத்த சமய தத்துவ நூல்களை எழுதி உதவிய போதி தர்மரும் காஞ்சியைச் சேர்ந்தவர்களே.
திருக்குறளுக்கு உரை எழுதிய பரிமேலழகர், பொய்கையாழ்வார், வேதாந்த தேசிகர், சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான சியாமா சாஸ்திரிகள் முதலியோரும் இத் தலத்தைச் சேர்ந்தவர்களே. தற்போது திருப்பருத்திக்குன்றம் என அழைக்கப்படும் பகுதியே பண்டை நாளில் திகம்பர சமணர்களின் கோட்டையாக விளங்கியது. கி. பி. 14ஆம் நூற்றாண்டில் மல்லிசேனா, வாமனசூரி போன்ற சமணப்பெருமக்கள் காஞ்சியில் அனைவராலும் மதிக்கத்தக்க வராக வாழ்ந்தனர்.
வைணவத்திலும் காஞ்சி அழியாத சிறப்பைப் பெற்றுள்ளது. பொய்கையாழ்வாரும் வேதாந்த தேசிகரும் வாழ்ந்த பதி, பூரீ ராமாநுஜர், திருமழிசையாழ்வார், திருக்கச்சி நம்பிகள் முதலியோரும் இத் தலத்தில் வாழ்ந்து வரதராஜப் பெருமாளுக்குத் தொண்டாற்றிப் பேறு பெற்றவர்கள்.
286

சக்தி பீடங்களிற் சிறந்ததாகிய காமகோடி பீடத் தலம் இதுவே. காமாட்சியம்மனின் ஆலயம் காமகோட்டம் எனப்படும். இறைவனிடம் இருநாழி நெல் பெற்று அம்பிகை முப்பத்திரண்டு அறங்களையும் செய்தருளிய அற்புதத் தலமும் இதுவே. கந்தபுராணம் தோன்றிய பெருமையுடைய தலமும் இதுதான். கந்தபுராணம் அரங்கேற்றம் செய்யப்பட்ட மண்டபம் இன்றும் இத் திருக்கோயிலிற் கச்சியப்பர் பெயரில் நூலகமாகப் பாதுகாக்கப்பட்டு வருகிறது.
இத்தலத்திற்கு பிரளயசித்து, காமபீடம், மும்மூர்த்திவாசம், சிவபுரம், சிண்டுபுரம், தபோமயம், சகலசித்தி, கன்னிகாப்பு, துண்டீரபுரம், சத்தியவிரத ஷேத்திரம், பூலோககயிலாயம், பிரமபுரம் என்பன வேறு பெயர்கள். காஞ்சிபுரம் கோயில்கள் மலிந்த நகரம். எப்போதும் விழாக்கள் மலிந்து விளங்கும் நகரமாதலின் 'விழாவறாக் காஞ்சி என்று புகழப்படும் பெருமை பெற்றது.
பூரீ காஞ்சி காமக்கோடி பீடமும் காஞ்சி மாநகரிலேயே உள்ளது. சைவ ஆதீனங்களில் மிகவும் பழமையான ஆதீனமாகவும் மெய்கண்ட தேவர் சந்தான பீடமாகவும் பெருமையுடன் திகழ்கின்ற தொண்டை மண்டலாதீனம் இத் தலத்திலே தான் உள்ளது.
இத்தகைய அளவற்ற சிறப்புக்களுடைய இத் தலத்தில் கயிலைநாதர் கோயில், வைகுந்தப் பெருமாள் கோயில் போன்ற எண்ணற்ற கோயில்கள் இருப்பினும் பாடல்பெற்ற திருமுறைக் கோயில் என்பவை திருவேகம்பம், திருமேற்றளி, ஒணகாந்தன்தளி, கக்சிநெறிக்காரைக்காடு, அனேகதங்காவதம் என்பனவாகும். மாணிக்கவாசகர் இத் திருக் கோயிலைக் கச்சித் திருவேகம்பன் செம்பொற்கோயில்’ என்று சிறப்பித்துப் பாடியுள்ளார். அருணகிரிநாதர் திருப்புகழும் உள்ளது. பட்டினத்தாரின் திருவேகம்பமுடையார் திருவந்தாதியும், கந்தபுராணமும் இத் தலத்தின் சிறப்பையும் மூர்த்தியின் புகழையும் பலவாறு புகழ்கின்றன. மணிமேகலை, தக்கயாகப்பரணி, மத்தவிலாசப் பிரகசனம், தண்டியலங்காரம் போன்ற நூல்களிலும் பன்னிரு திருமுறைகளில் பலவிடங்களிலும் இத் தலச்சிறப்புப் பேசப்படுகிறது.
புராண வரலாறு
கயிலையில் சிவபெருமானும் உமையம்மையாரும் இனிதாக வீற்றிருந்தபோது உமை விளையாட்டாக இறைவன் திருக்கண்களை மூடினார். உலகின் இயக்கம் நின்றது. இருள் சூழ்ந்தது. தீவினைகள் பெருகின. இந்தச் செய்கையினால் விளைந்த தீவினையைப் போக்க சிவபெருமான் ஆணைக்கேற்ப உமையம்மை காஞ்சிப் பதியை அடைந்து கம்பை நதிக்கரையில் மணலால் சிவலிங்கம் அமைத்து அதனை இடையறாது வழிபட்டு வந்தார். ஒருநாள் சிவபெருமானின் திருவிளையாடலால் கம்பை நதி பெருக்கெடுத்தது. அவ்வேளை தான் வழிபட்ட சிவலிங்கத்திற்கு ஊறு ஏற்படாவண்ணம் அதனை தமது மார்பில்
இந்துக்கலைக்களஞ்சியம்

Page 345
அணைத்துக் காத்தார் தேவி. இதனால் சிவலிங்கத் திருமேனி குழைந்து தேவியாரின் வளைத்தழும்பும், முலைத் தடமும் பெற்று விளங்கியது. அந்தக் காரணம் பற்றியே திருவேகம்பமுடைய சிவபெருமான் தழுவக் குழைந்த நாதர் என்னும் திருப்பெயரை பெற்றார்.
சுந்தரமூர்த்தி சுவாமிகள் சங்கிலியாரிடம் அவரைப் பிரியேன் என வாக்குக் கொடுத்துப் பின் அவ் வாக்கை மீறி திருவொற்றியூரில் இருந்து நீங்கியதும் அவரது கண்கள் பார்வையிழந்தன. அவர் திருவாரூருக்குச் செல்லும் வேளையில் பல தலங்களைத் தரிசித்துக் கொண்டு காஞ்சிப் பதியை அடைந்து ஏகாம்பரநாதர் சந்நிதியில் நின்று தொழுதழுதார்.
“பொங்கிய அன்பொடு பரவிப் போற்றி ஆரூரர்க்கு மங்கை தழுவக் குழைந்தார் மறைந்த இடக்கண் கொடுத்தார்’
எனச் சேக்கிழார் தமது பெரிய புராணத்தில் இறைவன் சுந்தரருக்கு இடக்கண் பார்வை அளித்ததைக் கூறுகிறார்.
G3, Tungi)
இறைவன் - ஏகாம்பரநாதர், திருவேகம்பமுடையார் இறைவி - ஏலவார் குழலி, காமாட்சியம்மன்
தலமரம் - LOT
தீர்த்தம் - சிவகங்கை, கம்பைத் தீர்த்தம்
ஏகாம்பரம் என்னும் வட மொழிச் சொல்லுக்கு ஒற்றை மாமரம் என்பது பொருள். இங்கு ஒற்றை மாமரத்தடியில் எழுந்தருளிய சிவபெருமான் ஏகாம்பரநாதர் என அழைக்கப் படுகிறார். பஞ்சபூதத் தலங்களில் கச்சி ஏகம்பம் பிருதுவித் தலமாகக் கருதப்படுகிறது. இங்குச் சிவலிங்கத் திருமேனி மணலாலானது. இங்கு அம்மையார் ஏலவார் குழலி என்ற பெயரில் எழுந்தருளும் திருமேனியில் காட்சியளிக்கிறார். காஞ்சியிலுள்ள சிவத் தலங்களில் அம்மனுக்குத் தனியாக மூலவர் அமைந்த சந்நதிகள் இல்லை. அனைத்தும் சிவலிங்கத்தில் ஒன்று கலந்ததாக ஐதீகம்.
கோயில் பெரியது. கிழக்கு நோக்கியது. கோயிலைச் சூழ்ந்து அமைந்துள்ள மாட வீதிகளையும் சேர்த்து ஐந்து திருச்சுற்றுகள்; மிக உயரமான மதில்களைக் கொண்ட இக் கோயிலின் ராஜகோபுரம் தென்திசையில் உள்ளது. இக் கோபுரம் 9 நிலைகளைக் கொண்டதாய் 192 அடிகள் உயரமுடையதாய்க் காட்சியளிக்கிறது. இக்கோபுரம் கிருஷ்ண தேவராயரால் கி. பி. 1510ஆம் ஆண்டு நிறுவப் பெற்றது. இது போன்று கிழக்கு, மேற்குத் திசையிலும் அளவிற் சிறிய கோபுரங்களும், உட் கோபுரங்களும் உள்ளன. கோபுர வாயிலைக் கடந்து உள்ளே சென்றதும் இடப்பக்கம் கம்பைத் தீர்த்தக் குளமும், நந்தவனமும் உள்ளன. இதற்கு நேரே தெரிவது ஆயிரங்கால் மண்டபம். இது சற்றுப் பழுதடைந்த நிலையில் உள்ளது. இங்குள்ள கோபுரம்
இந்துக்கலைக்களஞ்சியம்

பல்லவ கோபுரம் எனப்படும். இக் கோபுர வாயிலிலேதான் தல விநாயகரான விகட சக்கர விநாயகர் உள்ளார்.
சலந்திரனை அழிக்கத் திருமால் இறைவனை வேண்டிப் பெற்ற சக்கராயுதத்தை வீரபத்திரர் மீது ஏவியபோது அவர் அணிந்திருந்த வெண்டலை மாலைகளில் ஒரு தலை அதனை விழுங்கிவிட்டது. இதனால் திருமால் பெரிதும் வருந்தினார். இதையறிந்த விசுவசேனர் வீரபத்திரரிடம் சென்று வேண்டி அவர் சொல்லியவாறே பிரபகபாலம் சிரிக்கும் வரை விகடக் கூத்தாடினார். அக் கூத்தைக் கண்டு பிரமகபாலம் சிரிக்க, சக்கரப்படை கீழே விழுந்தது. அப்போது அருகிலிருந்த விநாயகர் அதனை விரைந்து எடுத்துக்கொண்டு மறுமுறையும் விகடக் கூத்தாடும்படி கூற, அவரும் அவ்வாறே ஆடினார். விநாயகரும் மகிழ்ந்து சக்கரப் படையைத் தந்தருளினார். விகடக் கூத்தினை விரும்பிக் கொண்டதால் விகடச் சக்கர விநாயகர் என்ற பெயரைப் பெற்றார்.
கோபுர வாயிலைக் கடந்து வலமாகச் சென்று கோயிலின் கிழக்குப் பகுதியை அடையலாம். மூன்றாம் திருச்சுற்றில் சுவாமி கோயிலைச் சுற்றிலும் திருக்கச்சிமயானம், வாலீசம், ரிஷபேசம், சத்தியநாதேசம் முதலான உட் கோயில்கள் உள்ளன. மூன்றாம் திருச்சுற்றின் வடகீழ்ப் பகுதியில் சிவகங்கைத் தீர்த்தக்குளம் உள்ளது. படிக்கட்டுகள், மண்டபங்கள் அழகுற விளங்குகின்றன. முன் மண்டபத்தில் கல்யாண மண்டபம், கோயில் அலுவலகம், கொடி மரம், பலிபீடம் அனைத்தும் உள்ளன. இங்குள்ள தூண்கள் அனைத்திலும் நிமிர்ந்து நின்று துதிக்கையைக் கால்கள் வரை தொங்கவிட்டுள்ள சிங்கமுகத்தைக் கொண்ட யாளிகளின் உருவச்சிலைகளைக் காணலாம்.
இரண்டாம் திருச்சுற்று நுழைவாயிலில் இரண்டு துவார பாலகர் சிலைகள் உள்ளன. இத் திருச்சுற்று மண்டபத் தூண்கள் எண்ணற்ற சிற்பங்களைக் கொண்டுள்ளன. அங்குள்ள தூண் ஒன்றில் இறைவி இறைவனின் கண்களை மூடி நிற்பது போன்ற சிற்பம், எதிரில் இறைவன் இறைவி திருமணக் கோலச் சிற்பம் உள்ளன. அடுத்து பிரளயாகால சக்தி அம்மன் சந்நிதி உள்ளது. இங்கு பல எழுந்தருளும் திருமேனிகள் உள்ளன. இரண்டாம் திருச்சுற்றின் மேற்குப்புறம் பஞ்சமுக விநாயகர் காட்சி தருகிறார்.
சுவாமி கருவறைக்கு நேர்ப் பின்புறம் தலமரமான மா உள்ளது. இது மாவடி சந்நிதி. இவ்விடத்திலேயே இத் தலத்தின் பிரார்த்தனை வழிபாடுகள் இடம்பெறுகிறது. மாமரத்தைச் சுற்றி வலம் வருவதற்கு மேடை உள்ளது. மாமரத்தின் நான்கு கிளைகளும் நால் வேதங்கள் என்பர். இம் மரம் சுமார் 3500 ஆண்டுகள் வயதுடையது என்பர். இம் மரத்தின் கீழ் கிழக்குப் பகுதியில் ஒரு சிற்றாலயத்தில் சிவபெருமான் தேவியுடன் சின் முத்திரை காட்டிக் காட்சியளிக்கிறார். இது சோமாஸ்கந்தர் வடிவம். கீழ்ப்புறம் பதஞ்சலி, வியாக்கிரபாதர் உள்ளனர். அன்னை காமாட்சி பஞ்சாக்கினியின் மத்தியில் தவக் கோலத்தில் காட்சி
287

Page 346
தருகிறார். அடுத்து ஏலவார் குழலியம்மையின் சந்நிதி. இங்கு உற்சவர் திருமேனி மட்டுமே உள்ளது. நடராசர் சபையில் நடராசர், சிவகாமி, மாணிக்கவாசகர் ஆகியோரின் உருவங்கள் உள்ளன.
உள்வாயிலைக் கடந்து உட்சென்றதும் அர்த்த மண்டபம், கருவறையில் ஏகாம்பரநாதர் இலிங்கத் திருவுருவில் காட்சி தருகிறார். மணலால் உருவாக்கப்பட்ட இலிங்கமாதலால் அபிஷேகம் இல்லை. புனுகுச் சட்டம் மட்டுமே சாத்தப்படுகிறது. கருவறையில் சிவலிங்கத்திற்குப் பின்புறம் சோமாஸ்கந்தர் புடைப்புச் சிற்பம் உள்ளது. மூலவரை வணங்கி முதல் திருச்சுற்றிலே வலமாகச் சென்றால் பல சிவலிங்கங்கள், அறுபத்து மூவர் சந்நிதிகள், ஆறுமுகன் சந்நிதிகள் உள்ளன. கருவறையை ஒட்டிச் சண்டிகேஸ்வரர் கோயில் உள்ளது. இங்குள்ள பெருமாள் சந்நிதியில் சிவாச்சாரியார் பூஜை செய்து துளசித் தீர்த்தமும் வழங்குகிறார்.
கரிகால சோழன் காலம் முதலாகப் பல்லவர், சோழர், பாண்டியர், விஜயநகர வேந்தர், நாயக்கர் எனப்பலரும் திருப்பணிகள் புரிந்த இக் கோயிலில் ஒரு நாள் முழுவதும் வழிபடுவதற்கான எண்ணற்ற சந்நிதிகள் உள்ளன.
இங்கு நாள் தோறும் ஆறுகால வழிபாடுகள். பங்குனி உத்திரப் பெருவிழா 14 நாட்கள் நடைபெறுகிறது. ஆடிப்பூரம், நவராத்திரி, விநாயகர் சதுர்த்தி, கந்தர் சஷ்டி, நடராஜர் அபிஷேகங்கள், வைகுந்த ஏகாதசி, மகாசிவராத்திரி, கார்த்திகை இலட்சத் தீபத் திருவிழா எனப்பல விழாக்கள் சிறப்புடன் கொண்டாடப்படுகிறது.
"சடையானைத் தலை கையேந்திப் பலிதருவார்தம் கடையே போய் மூன்றும் கொண்டான் கலிக்கச்சியுள் புடையே பொன் மலருங் கம்பக் கரையே கம்பம் உடையானை யல்லது உள்காது எனதுள்ளமே”
என திருஞானசம்பந்தரும்
'நல்லானை நல்லான நான் மறையொடு ஆறங்கம் வல்லானை வல்லார்கள் மனத்துறையும் மைந்தனைச் சொல்லானைச் சொல்லார்ந்த பொருளானைத்
துகளேதும் இல்லானை எம்மானை என் மனத்தே வைத்தேனே' என திருநாவுக்கரசரும்
"எள்கல் இன்றி இமையவர் கோனை
ஈசனைவழிபாடுசெய்வாள் போல் உள்ளத் துள்கி உகந்து உமைநங்கை
வழிபடச் சென்று நின்றவா கண்டு வெள்ளங் காட்டி வெருட்டிட வஞ்சி
வெருவி ஒழத் தழுவ வெளிப்பட்ட கள்ளக் கம்பனை எங்கள் பிரானைக்
காணக் கண் அடியேன் பெற்ற வாறே” எனச் சுந்தரமூர்த்தி நாயனாரும் இத்தலத்தில் எழுந்தருளியிருக்கும் பெருமானைப் போற்றிப் பாடியுள்ளனர். (நி நி)
288

திருக்கச்ருர்
தொண்டை நாட்டுத் தலம். தொண்டை நாட்டிலுள்ள தியாகராஜர் சந்நிதிகளுள் ஒன்று. இங்குள்ள தியாகேசர் "அமுதத் தியாகர்” என்னும் பெயருடையவர். அமுதம் திரண்டு வருவதற்காக திருமால் கச்சப வடிவில் (ஆமைவடிவில்) இருந்து இத்தலத்தில் இறைவனை வழிபட்டதாக ஐதீகம். ஆதலின் கச்சபவூர் என்னும் பெயர் நாளடைவில் மக்கள் வழக்கில் கச்சூர் என்றாயிற்று என்பர். இது ஆலக் கோயில் வகையைச் சார்ந்தது.
சுந்தரர் பெருமான் திருக்கழுக்குன்றம் சென்று வழிபட்டு கச்சூர் அடைந்து ஆலக் கோயில் பெருமானை வழிபட்டு மதிற்கரையில் பசியோடு அமர்ந்திருக்க, அந்தணர் வடிவில் வந்த இறைவன், ஊருக்குள் அடியார்கள் வீடு தோறும் சென்று உணவு பெற்று வந்து அவருடைய பசியை மாற்றிய நிகழ்ச்சி நடைபெற்ற பதி. பசி நீங்கப்பெற்ற சுந்தரர் இறையருள் கருணையை வியந்து முத்துவாயோரி என்னும் பதிகம் பாடிப் போற்றினார்,
கோயில் - ஆலக்கோயில்
இறைவன் - விருந்திட்டேஸ்வரர், விருந்திட்ட வரதர் இறைவி - அஞ்சனாகூழியம்மை
தலமரம் ஆல் தீர்த்தம் - கூர்ம (ஆமை) தீர்த்தம்
கச்சூர் கோயில் கிழக்கு நோக்கியுள்ளது. ராஜகோபுரம் இல்லை. முகப்பு வாயில் மட்டுமே உண்டு. கோயிலுக்கு எதிரில் பதினாறு கால் மண்டபம் உள்ளது. இம் மண்டபத்தூண்களில் கூர்மவதாரம், காளிங்கநர்த்தனம், கல்கி அவதாரம், துர்க்கை, ஆதிசேஷன், காளி ஊர்த்துவ தாண்டவம் முதலிய பல சிற்பங்கள் இருப்பதைக் காணலாம். நுழைவாயிலின் வழியாக உட் சென்றதும் கொடிமரம், நந்தி, பலிபீடம் ஆகியவற்றைத் தரிசிக்கலாம்.
தெற்கு வாயில் முன்னால் மண்டபம் உள்ளது. இம் மண்டபத்தூண் ஒன்றில் திருமால் ஆமை வடிவில் வழிபடும் சிற்பம் ஒன்று செதுக்கப்பட்டுள்ளது. இம் மண்டபத்தில் அமுத தியாகேசர் சபை உள்ளது. உட்சென்றால் முன்மண்டபம், அங்கு தெற்கு நோக்கிய அம்பாள் சந்நிதி; அம்பாள் அபய வரத கரத்துடன் நின்ற திருக்கோலத்தில் உள்ளாள். எதிரில் சிம்மம் உள்ளது. இது தனிக் கோயிலாகவுள்ளது. இடப்பக்கம் சுவாமி சந்நிதிக்குச் செல்லும் வழி உள்ளது. வாயிலைக் கடந்து பிராகாரத்தை வலம் வரும்போது சூரியன், விநாயகர், பல சிவலிங்கத் திருமேனிகள், நாகலிங்கங்கள், வள்ளி, தெய்வானை, சுப்பிரமணியர், நடராஜர், நால்வர் ஆகியோரின் சந்நிதிகள் உள்ளன. இக்கோயிலில் சித்திரை மாதத்தில் வரும் விழாக்கள் அனைத்தும் தியாகராஜருக்குத் தான். இத் திருவிழாவில் ஒன்பதாம் நாள் இறைவன் சனகாதி முனிவர்களுக்கு உபதேசம் செய்த ஐதீகம் நடைபெறுகின்றது. சுந்தரர் பாடிய முதுவாயோரி' தலப்பதிகம் கல்லிற் பொறிக்கப்பட்டுள்ளது. இக்கோயிலுக்கு முன்னால் ஆறுமுகம் செட்டியார் மடம் உள்ளது. கோயிலுக்கு வருவோர் இளைப்பாற, உணவருந்த வசதியாகவுள்ளது.
இந்துக்கலைக்களஞ்சியம்

Page 347


Page 348

目ung4ns ns亂遍u田增ngus可自強尼婭觀n昌

Page 349

ஐம9ழeயண நேர்ஐவிஓ

Page 350

நடன மகா மனடபம

Page 351


Page 352

qıfırı-lungsun sūtījoạo sỹ qisms@gigio ipsumqissão

Page 353


Page 354


Page 355
மலையடிவாரத்தில் மருந்தீசர் கோயில் உள்ளது. சுற்று மதிலோடு கூடிய சிறிய கோயில், இயற்கை எழில் நிறைந்த அமைதியான இடம். தெற்கு நோக்கிய வாயில், வாயிலைக் கடந்து உள்ளே சென்றால் சிறிய மண்டபம் காணப்படுகின்றது. இம் மண்டபத் தூண்களில் துவாரபாலகர்கள் உருவம் செதுக்கப்பட்டுள்ளது. இவை தவிர இலிங்கோற்பவர், பட்டினத்தார், வள்ளலார், விநாயகர், தண்டபாணி, அப்பர், சம்பந்தர், சுந்தரர் ஆகியோரின் சிற்பங்களும் இடம்பெற்றுள்ளன. இச் சிற்பங்களிற் குறிப்பிடத்தக்கது இறைவன் சுந்தரரை நோக்கிக் கையில் அமுதத்துடன் காட்சி தரும் ஒரு சிற்பமாகும். உள்பிரகாரத்தில் விநாயகர் கோயில் உள்ளது. சுவாமி சந்நிதி மேற்கு நோக்கியது. முன்னால் பலிபீடம், நந்தி, கொடிமரம் இடம் பெற்றுள்ளது. நவக்கிரக சந்நிதியும் உண்டு.
அம்பாள் சந்நிதி மேற்கு நோக்கியது. நின்ற திருக்கோலத்தில் நான்கு திருக்கரங்களில் இரண்டு அபய, வரதமாக உள்ளன. துவார கணபதி, சுப்பிரமணியரை வணங்கி உட்சென்றால் மூலவர் தரிசனம். உயர்ந்த திருமேனியராய் கம்பீரமாகக் காட்சி தருகிறார். கோஷ்டமூர்த்தங்களாக விநாயகர், தட்சிணாமூர்த்தி, மகாவிஷ்ணு, பிரம்மா ஆகியோரின் மூர்த்தங்கள் இடம் பெற்றுள்ளன. கோஷ்ட பிரம்மாவுக்கு எதிரே சதுர்முக சண்டேஸ்வரர் காட்சி தருகின்றார். இச்சிற்பம் இக்கோயிலுக்குரிய தனிச் சிறப்பாகும்.
மாசி மாதத்தில் இக் கோயிலில் திருவிழா நடைபெறுகின்றது. அதில் ஒன்பதாம் நாள் இறைவன் பிச்சையெடுத்து சுந்தரருக்கு அமுதிட்ட ஐதீகம் நடைபெறுகிறது.
"மேலை விதியே வினையின் பயனே விரவார் புரமூன்றெரி
செய்தாய் காலையெழுந்து தொழுவார்தங்கள் கவலை களைவாய் கறைக்
கண்டா, மாலைமதியே மலைமேல் மருந்தே மறவேன் அடியேன் வயல்
குழ்ந்த ஆலைக்கழனிப் பழனக்கச்சூர் ஆலக் கோயில் அம்மானே’
என்று சுந்தரர் இக்கோயிலில் எழுந்தருளியிருக்கும் பெருமானைப் போற்றிப் பாடியுள்ளார். (நி நி)
திருக்கடல் மல்ைை (மாமல்புைரம்)
"பார் ஆயது உண்டு அமிழ்ந்த பவளத்தூணை
படுகடலில் அமுதத்தை பரி வாய் கீண்ட சீரானை, எம்மானை, தொண்டர் தங்கள்
சிந்தையுள்ளே முளைத்து எழுந்த தீம் கரும்பினை, போர் ஆனைக் கொம்பு ஒசித்த போர் ஏற்றினை,
புனர் மருதம் இற நடந்த பொன் குன்றினை, கார்ஆனை இடர் கடித்த கற்பகத்தை
கண்டது நான் கடல் மல்லை தல சயனத்தே'
(பெரிய திருமொழி 1088 பாசுரம்)
இந்துக்கலைக்களஞ்சியம்

சென்னையிலிருந்து கடற்கரையோரமாகச் செல்லும் பேரூந்துச் சாலையிலிருந்து சுமார் 45 கி. மீ. தொலைவில் உள்ளது மகாபலிபுரம் என்னும் மாமல்லபுரம். இம் மாமல்லபுரம் அக்காலத்தில் துறைமுகமாகவும் விளங்கி வந்தது. கடலோரம் அமைந்திருந்ததால் இயற்கையின் எழிலையும், சிற்ப கலைக் களஞ்சியமாக விளங்கும் பல்லவர் காலத்து குடைவரைகளையும் கற்றளிகளையும் கொண்டு வரலாற்றுச் சிறப்பினையும் ஆழ்வார்களால் மங்களாசாசனம் பெற்ற தலசயன பெருமாள் எழுந்தருளியிருப்பதால் புராண மேன்மையையும் கொண்டு விளங்குகின்றது. பல்லவ அரசர்களான மகேந்திரவர்மன், நரசிம்மவர்மன் ஆகியோரால் உருவாக்கப்பட்ட கலைச் சிற்பங்கள் நிறைந்த குடைவரைக் கோயில்கள் பல இங்கு அமைந்துள்ளன. கடல் மல்லைத் துறைமுகத்தில் வணிகப் பெருமக்கள் பெருமளவு நிதிக் குவியலோடு வந்து பண்டமாற்றுச் செய்த, மணம் கமழ்கின்ற வீதிகளை உடைய திருக்கடல் மல்லை என்னும் இத்தலத்தின் சிறப்பினை திருமங்கையாழ்வார் தனது பாசுரத்தில் இவ்வாறு குறிப்பிடுகின்றார்.
"புலன் கொள்நிதிக் குவையோடுபுழைக்கை மாகளிற்று இனமும் நலம் கொள் நவமணிக் குவையும் சுமந்து எங்கும் நான்று ஒசிந்து கலங்கள் இயங்கும் மல்லை கடல்மல்லைத் தல சயனம் வலங்கொள் மனத்தார் அவரை வலங்கொள் என் மட நெஞ்சே 岁外
(1103) 'கடி கமழும் நெடு மறுகின் கடல் மல்லை 岁岁 (1107)
"செழு நீர் மலர்க்கமலம் திரை உற்று வன் பகட்டால்'(105)
திருக்கடல்மல்லை என வழங்கப்படும் திருத்தலம்பூதத்தாழ்வார் அவதரித்த தலமாகவும் திருமங்கையாழ்வார், பூதத்தாழ்வார் ஆகியோரின் பாசுரங்களைப் பெற்ற தலமாகவும் அமைகிறது.
தல புராணம்
முன்னொரு காலத்தில் புண்டரிகர் என்ற ஒரு முனிவர் திருமால் மீது மட்டற்ற பக்தி கொண்டு தலந்தோறும் வழிபட்டு திருவிடவெந்தை என்னும் தலத்தில் பெருமானை வணங்கித் திரும்பும்போது கோயிற் புட்கரிணியில் ஆயிரம் இதழ்கொண்ட ஓர் அழகான தாமரை மலரைக் கண்டு அது திருப்பாறக லில் பள்ளி கொண்டுள்ள பெருமாளுக்கே உரியது என்றெண்ணி அதைப் பறித்துக் கூடையில் வைத்துக் கொண்டு வங்கக் கடற்கரையோரம் சென்றார்.
திருப்பாற்கடலை அடைவதற்கு வங்கக் கடல் ஒரு தடையாக இருப்பதை எண்ணி, கரையருகில் உட்கார்ந்து கரையின் மருங்கில் ஒரு மணல் அணையைக் கட்டி வங்கக் கடல்
நீரைக் கைகளில் நிரப்பி அவ்வணைக்கு மறுபுறம் இறைக்கத் தொடங்கினார். அவர் மனதில் திருப்பாற்கடலில் துயில்பவனே நிறைந்திருந்தான். கைகளால் கடல் நீரை வற்றச் செய்ய இயலுமா என்பதை அவர் எண்ணவில்லை. அந்த நிலையில் புண்டரீக முனிவருக்கு உதவப் பெருமாள் முதிய அந்தணர் வடிவிலே

Page 356
தோன்றி அவர் முன் நின்று கடல் நீரை இறைக்கத் தானும் உதவி புரிவதாகக் கூறி அதற்குக் கூலியாக அருகில் உள்ள ஊருக்குச் சென்று மதிய உணவு கொண்டுவரக் கூறினார். புண்டரீச முனிவர் உணவுடன் திரும்பியபொழுது அங்கு அணை கட்டியிருந்த இடத்தில் பெருமான் நிலத்தின் மீது படுத்திருந்ததைக் கண்டார். அவர் கூடையில் வைத்திருந்த தாமரை மலர் பெருமானின் திருமேனியை அலங்கரித்திருந்தது புண்டரீக முனிவர் திகைப்பும் மகிழ்ச்சியும் கொண்டு பெருமானின் கருணையை வியந்து போற்றி வணங்கிட் பெருமானை அதே நிலையில் அங்கு எந்நாளும் எழுந்தருளியிருந்து வழிபடுவோர்க்கு அருள்புரிய வேண்டினார்
கோயிலமைப்பு
மூலவர் - பூரீ தலசயனப் பெருமாள் தாயார் - நிலமங்கைத் தாயார்
உற்சவர் - உலகுய்ய நின்றான்
தீர்த்தம் புண்டரீக புட்கரிணி, கருடநிதி
விமானம் அனந்தவிமானம்
இராஜகோபுரத்துடன் எழிலாகக் காட்சி தரும் இத்தலத்திற்கு கிழக்கு நோக்கிய திருவாயில், தீபக்கம்பம், கொடிமரம் ஆகியவை உள்ளன. இடப்பக்கம் அனுமார் சந்நிதி நேர் எதிரில் கோயிலின் முன் மண்டபம், மண்டபத்தின் நடுவில் கீழ்ப்பக்கம் கருடன் சந்நிதி; பெருமாள் கருவறைக்குத் தென்புறம் நிலமங்கைத் தாயாரின் தனிக்கோயில்-அமர்ந்த கோலம், திருமுன்பில் உற்சவ திருமேனியுள்ளது. திருச்சுற்றின் வடப்பக்கம் ஆண்டாள் கோயில் உள்ளது. கோயில் மண்டபத்தின் வடபுறம் லட்சுமி நரசிம்மர் பூதத்தாழ்வார், பூரீராமர், ஆழ்வார்கள், ஆச்சாரியார்கள் சந்நிதிகள் உள்ளன. மகாமண்டபம், அர்த்தமண்டபம் இவற்றை அடுத்து மூலவரின் கருவறை வாயிலில் துவார பாலகர்கள் உள்ளனர். மூலவர் பள்ளி கொண்ட கோலத்தில் வலதுகரத்தை மார்பின் மீது உபதேச முத்திரையாக வைத்து தென்புறப் திருமுடியும் வடபுறம் திருவடியும் துலங்க கிழக்கு நோக்கிய திருமுகம் கொண்டு காட்சியளிக்கின்றார். உற்சவர் கையில் ஒரு தாமரை மலரைக் காணலாம். இந்தத் தலத்தில் மட்டுமே உற்சவ இவ்வாறு காணப்படுகின்றார் எனக் கூறுவர். கலங்கை விளக்கத்திற்கு அடுத்தாக மேற்கு திசையில் உள்ள குடைவரைக் கோயில் ஒன்றில் வராக மூர்த்தியாகக் காட்சி தருகின்றார்.
பல்லவர் காலத்தைய கோயில் பின்வந்த பல மன்னர்களின் நிவந்தங்களைப் பெற்றது. பூதத்தாழ்வார், திருமங்கையாழ்வா தவிர பூரீ மணவாளமுனிகள், பிள்ளைப் பெருமாள் அய்யங்கா ஆகியோரும் இத் தலத்தைப் போற்றிப் பாடியுள்ளார்.
கோயிலில் நாள்தோறும் நான்கு கால பூஜை வழிபாடுகள் நடைபெறுகின்றன. சித்திரையில் பெருவிழா, தாயார், ஆண்டாள் ஆழ்வார்கள் திருவிழாக்களும் நடைபெறுகின்றன.
29ó

கலங்கரை விளக்கத்துக்கு அடுத்துள்ள கோயிலில் வீற்றிருக்கும் ஆதிவராக மூர்த்திக்கும் ஒரு தலவரலாறு கூறப்படுகின்றது. இக் கோயிலின் விமானம் தகணாக் நதி விமானம் ஆகும். புண்டரீக புஷ்கரணி இத்தலத்தின் புஷ்கரணி ஆகும். ஊருக்குள் இருக்கும் கோயிலை மன்னர் பராங்குசர் எழுப்பியதாக வரலாறு கூறுகிறது. (தே. ஹ)
திருக்கடவூர்
சோழநாட்டுத் தலம்; சிவபெருமானின் எட்டு வீரட்டத்தலங்களுள் ஒன்று. திருக்கடவூர் வீரட்டம், கடபுரி, வில்வாரண்யம், பிரமரந்திரத்தலம், பாபவிமோசன புண்ணிய வர்த்தம் என்பன இத்தலத்திற்கு வழங்கப்படும் வேறு பெயர்கள். அகஸ்தியர், புலஸ்தியர், வாசுகி, துர்க்கை வழிபட்ட தலம். பிரம்மனுக்கு உபதேசம் செய்த இடம். குங்கிலியக் கலய நாயனார், காரி நாயனார் ஆகியோர் வாழ்ந்து தொண்டாற்றி முத்தியடைந்த தலம். அபிராமி அந்தாதி பாடப்பட்ட அற்புதப் பதி, யமபயம் போக்க வல்ல பதி, பூமிதேவி அனுக்கிரகம் பெற்ற தலம். உக்கிரசாந்தி, சஷ்டியப்தபூர்த்தி (மணிவிழா), பீமரதசாந்தி (எழுபது வயது நிரம்பியவுடன் செய்வது), சதாபிஷேகம் (எண்பது வயது கடந்ததும் செய்யப்படுவது) ஆயுள்ஹோமம் முதலியன செய்வதற்கு ஏற்ற இடம். இச் சாந்திகளை வேறு தலத்தில் செய்ய நேர்ந்தாலும் இம்மூர்த்தியை நினைத்துத் தான் செய்ய வேண்டும். திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரமூர்த்தி சுவாமிகள் மூவரும் இத்தலமேகி ஆவல் தீருமட்டும் இறைவனைப் போற்றிப் பாடியுள்ளனர்.
புராண வரலாறு
மிருகண்டு முனிவர் புத்திரப் பேறின்றி மனம் வருந்தித் தவமியற்ற, சிவபெருமான் அவர் முன் தோன்றி அறிவும் குணமும் இல்லாத ஆயுள் நிரம்பப் பெற்ற மகன் வேண்டுமா? பதினாறு வயது மட்டும் நிரம்பப் பெற்ற சற்புத்திரன் வேண்டுமா? என வினவியபோது முனிவர் பிந்தியதையே வரமாகப் பெற்றார். மிருகண்டு முனிவரின் மகன் மார்க்கண்டேயர் பல சிவத்தலங்களையும் தரிசித்து இறுதியாக (108 ஆம் தலமாக) திருக்கடவூரை அடைந்து கங்கை நீருடன் பிஞ்சிலப் புஷ்பங்களையும் கொண்டு வந்து அர்ச்சித்ததாக வரலாறு கூறுகிறது. இச்செடி (பிஞ்சிலம்) கோயிலுள் உள்ளது. இதனால் இத் தலத்திற்கு பிஞ்சிலாரண்யம் என்றும் பெயர். தற்போது தலமரம் இதுவே. ஆதியில் தல விருட்சம் வில்வம் என்பர்.
மார்க்கண்டேயருக்குப் பதினாறு வயது நிரம்பியதும் காலன் தன் பாசக் கயிற்றுடன் அவர்முன் நிற்க மார்க்கண்டேயர் அஞ்சித் தான் வழிபட்ட சிவலிங்கத்தையே கட்டி அணைத்துக் கொண்டார். காலன் தன் பாசக் கயிற்றை வீச அது மார்க்கண்டேயர் மீதும் அவர் கட்டியணைத்த சிவலிங்கத்தின் மீதும் விழுந்தது. உடனே சிவலிங்கம் பிளக்க அதனின்றும் கால சங்காரக் கடவுள் தோன்றினார். யமனைத் தன் இடது காலால் உதைத்துத் தள்ளி மார்க்கண்டேயருக்கு சிரஞ்சீவித் தன்மையை அளித்தார்.
இந்துக்கலைக்களஞ்சியம்

Page 357
சிலகாலம் செல்ல இறப்பு இன்றிப் பூமியின் பளு கூடிவரவே பூமிதேவியின் வேண்கோளுக்கிணங்கி எமனை உயிர்ப்பித்து, மீண்டும் அவனது தொழிலைப் புரிய அருள் புரிந்தார். இத் தலத்தில் உள்ள பெருமானை உள்ளன்புடன் வணங்குபவர்களைக் காலன் அணுக மாட்டான் என்ற நம்பிக்கையினால் தான் இங்கு சாந்திகள் செய்யப்படுகின்றன. இவ் வரலாற்றைச் சம்பந்தர், அப்பர், சுந்தரர் ஆகிய மூவரும் தமது பாடல்களிற் குறிப்பிட்டுள்ளனர்.
"கரிதரு காலனைச் சாடினானுங் கடவூர் தன்னுள் விரிதரு தொல்புகழ் வீரட்டானத்து அரண் அல்லனே' எனத் திருஞானசம்பந்தரும்
“அருட்டிய நாவில் வெங்கூற்றம் பதைப்ப உதைத்து அங்ங்னே உருட்டிய சேவடியான் கடவூர் உறை உத்தமனே タタ எனத் திருநாவுக் கரசரும்
"கொன்றாய் காலன் உயிர் கொடுத்தாய்மறையோனுக்கு” எனச் சுந்தரமூர்த்தி சுவாமிகளும் பாடியுள்ளனர்.
தேவர்கள் பாற்கடலைக் கடைந்தெடுத்த அமுதம் நிரம்பிய குடத்தை இத் தலத்தில் வைத்துவிட்டு நீராடச் சென்றனர். பின்னர் மீண்டும் வந்து அக் குடத்தை எடுத்துச் செல்ல முற்பட்டபோது அமுதம் நிரம்பிய குடம் சிவலிங்கமாக மாறிக் காட்சியளித்தது. இதனால், இங்குள்ள இறைவன் அமிர்தகடேஸ்வரர், அமிர்தலிங்கேஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார்.
திருக்கடவூரில் அந்தண மரபில் தோன்றியவர் குங்கிலியக்கலை நாயனார். அவர் நாள்தோறும் இறைவனைக் குங்கிலியத் தூபமிட்டு வழிபட்டு வந்தார். அவருக்கு இறை சோதனையால் வறுமை ஏற்பட்டது. அவரது மனைவியார் மங்களநூல் தாலியைக் கொடுத்து அதை விற்று நெல் கொள்ளுமாறு கூறினார். அதனை விற்பதற்காக அவர் சென்றபோது குங்கிலியப்பொதியைச் சுமந்து வந்த வணிகன் ஒருவன் எதிர்ப்பட, தன்னிடமிருந்த பொற் தாலியைக் கொடுத்து அப்பொதியை ஆலயப் பண்டகசாலையிற் சேர்ப்பித்தார். அங்கேயே கண்ணயர்ந்துவிட்டார். சிவபெருமான் ஆணையால் குபேரன் அளவற்ற செல்வத்தினையும், நெல். அரிசி போன்ற பிறவற்றையும் அவர் இல்லத்திற் சேர்ப்பித்தார். இறைவன் திருவருளை வியந்த நாயனார் தன் வாழ்நாள் முழுவதும் இறைபணி மேற்கொண்டு வந்தார்.
திருக்கடவூர்ப் பெருமான் தமது அடியார்களுக்கு அருள் புரிந்தது போன்று இறைவியும் தமது அடியார் ஒருவருக்கு அருள் புரிந்தார். அபிராமி என்றோர் அந்தணர் இறைவி அபிராமி மேல் பேரன்பு பூண்டவர். இறைவியின் சந்நிதியில் அமர்ந்து நாள்தோறும் அவரைத் தியானிப்பவர். மக்கள் அவரைப்
இந்துக்கலைக்களஞ்சியம்

பித்தனென்று அழைப்பர். தஞ்சையை ஆண்ட மன்னன் ஒருமுறை திருக்கடவூர் கோயிலுக்கு வந்தார். அபிராமிப்பட்டரின் அருகில் சென்று ஐயா இன்று என்ன திதி எனக்கேட்டார். பட்டரின் மனதில் தேவியின் முழு மதி முகமே நிறைந்திருந்தது. இன்று பெளர்ணமி என்றார். மன்னன் பட்டரிடம் இன்று இரவு எனக்கு முழு மதியைக் காட்டாவிடில் உம்மைச் சிரச்சேதம் செய்வேன் என்றார். தன்னிலைக்குத் திரும்பிய பட்டர் தமது தவறை உணர்ந்தார். அன்று மாலை அனைவர் முன்னிலையிலும் விநாயகர் காப்புப் பாடி "உதிக்கின்ற செங்கதிர் உச்சித் திலகம்” எனத் தொடங்கி ஓர் அந்தாதியைப் பாடினார். 78 பாடல்களைப் பாடி முடித்தபோது சூரியன் மறைந்தான். அடுத்த பாட்டான விழிக்கே அருளுண்டு எனப் பாடத் தொடங்கியதும் அன்னை அபிராமி தன் பக்தன் மேல் இரக்கங் கொண்டு தன் காதணியைக் கழற்றி வானத்திலே வீசி எறிந்தார். அது முழு நிலவாகக் காட்சியளித்தது. அமாவாசை அன்று வானத்தில் முழு நிலவைக் கண்ட மன்னன் பட்டரின் பக்திப் பெருக்கை வியந்து தன்னை மன்னிக்கும்படி இறைஞ்சி நின்றார்.
திருக்கடவூர் கோயில்
mைவன் மிர்தகடேஸ்வரர், விராட்டேஸ்வரர்
四 அம்ாத
இறைவி - அபிராமி
தலமரம் - பிஞ்சிலம் (முல்லை)
தீர்த்தம் - அமிர்த தீர்த்தம், சிவகங்கை, காசித்
தீர்த்தம்
கோயில் மிகப் பிரமாண்டமானது. மதில்களால் சூழப்பட்டது. இக்கோயிலின் ராஜகோபுரம் ஏழுநிலைகளுடன் தெற்குப் பார்த்தபடி அமைந்துள்ளது. ராஜ கோபுரத்தில் உள்ள அரிய சிற்பங்களுள் பாற்கடலைக் கடைந்தது, கஜசங்கார மூர்த்தி, சிவபாத விருதயரின் தோளிற் சம்பந்தர், சம்பந்தரின் சிவிகையை அப்பர் சுமப்பது போன்ற சுதை உருவச் சிற்பங்கள் இடம் பெற்றுள்ளன. உட்கோபுரம் ஐந்து நிலைகளையுடையது. கவசமிடப்பட்ட கொடிமரம், பலிபீடம் இதைச்சுற்றி நான்கு சிறிய நந்திகள் உள்ளன. கோபுரவாயிலில் நுழைந்து பிரகாரத்தை வலம் வரும்போது மார்க்கண்டேஸ்வரர், நாக நாதேஸ்வரர், சுப்பிரமணியர், கஜலட்சுமி சந்நிதிகள் உள்ளன. அருகில் மார்க்கண்டேயருக்கு அருள் புரிந்தது, பாற்கடலைக் கடைந்தது போன்ற பல ஒவியங்கள் வண்ணச் சித்திரங்களாக இடம் பெற்றுள்ளன.
அடுத்து பஞ்சலிங்கங்கள், சந்தனாசாரியர்கள், குங்கிலியக் கலய நாயனார், சந்திரபூஷணராஜா, அவர் அமைச்சர், குங்கிலியம் கொண்டு வந்த வணிகர், வீரபத்திரர், சப்தமாதர் சந்நிதிகளும் தலமரமான முல்லையும் உள்ளன. அறுபத்து மூவர் திருமேனிகளும் அடுத்து யமதர்ம ராஜா சந்நிதிகளும் உள்ளன. யமனுடைய சந்நிதி மகா மண்டபத்தில் உள்ள காலசங்காரக் கடவுளுக்கு நேர் எதிரில் உள்ளது.
சந்திர சேகரரைத் தொழுது வாயிலைக் கடந்தால் நேரே மூலவர் தரிசனம்; கருவறையில் மூலவர் அமிர்தகடேஸ்வரர்
29f

Page 358
இலிங்கத் திருவுருவில் வெண்திருநீற்றுப் பட்டையில் சந்தன துலங்க ஆவுடையாரை ஆடைகளும் மலர் மாலைகளு அணிசெய்யப் பரவசமூட்டும் திருமேனியராக எழுந்தருளியுள்ளா மகாமண்டபத்தில் யமனைச் சங்காரம் செய்த மூர்த் பாலாம்பிகையுடன் ஒரு பீடத்தில் எழுந்தருளியுள்ளார். பீடத்தி அடிப்பகுதியில் சங்காரக் கடவுளின் திருவடிகளின் கீழ்ப்புற யமன் வீழ்ந்து கிடப்பதையும் மார்க்கண்டேயர் கூப்பி கரங்களுடன் நிற்பதையும் காணலாம். தீபாராதனை நடைபெறு சமயத்தில் மட்டுமே பீடத்தின் கீழ்க்கொடி திறக்கப்படும்.
பூமி தேவி பிரார்த்திக்க, மகாவிஷ்ணுவும், பிரம்மாவு வேண்ட இறைவன் யமனை எழுப்பித் தந்தருளினனாதலின் அனுக்கிரகம் பெற்று எழும்பப் பெற்ற யமனின் திருவுருவம் இ மூர்த்திக்கு (கால சங்கார மூர்த்தி) நேர் எதிரில் உள்ளதை
காணலாம்.
வெளித்திருச்சுற்றில் அபிராமி அம்மனின் தனிக்கோயி முன் மண்டபம், அர்த்த மண்டபம், சுற்றாலை இவற்றுடன் விளங்குகிறது. அழகான சந்நிதி, கருவறையில் அபிராமி அம்மன் வலது கரத்தில் தாமரை மலரை ஏந்தியும், இடது கீழ்க்கரத்தை தொங்கவிட்டும், வலது கீழ்க்கரத்தை அபயமாகவும், இடப்புற முழுக் கரும்பு தம்மீது சாய்ந்து நிற்கவும் ஆடை அணி மண அலங்காரங்களுடன் ஜடா மகுடம் தாங்கி, மலர் மாலைகள் பாதங்கள் வரை நீண்டு பெரிய புன்னகை ததும்பும் முகத்தினளா விழிகளில் அருள் ததும்பக் காட்சி தருகிறார். இக் கோயிலில் நவக்கிரகங்கள் இல்லை. நாள்தோறும் ஆறுகால வழிபாடுகள் சித்திரையில் பெருவிழா, ஆடிப்பூர நவராத்திரி விழாக்களுட சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. கார்த்திகை சோமவாரங்களில் 1008 சங்கு அபிஷேகங்கள் பூநீலறு தருமையாதீன குருமகா சந்நிதானங்களின் முன்னிலையில் நடைபெறும். இங்கு ஒரே சமயத்தில் பல திருமணங்கள், சஷ்டியப் பூர்த்தி முதலானவை நடைபெறுவதுண்டு.
திருக்கண்டியூர்
தஞ்சை - திருவையாறு பேரூந்துச் சாலையில் உள்ளது தஞ்சையிலிருந்து 9.கி. மீ. தொலைவு திருவையாற்றிலிருந்து கி. மீ. தொலைவு பேரூந்து வசதி உள்ளது. அட்டவீரட்ட தலங்களுள் ஒன்று. பிரமன் சிரத்தை (ஐந்தனுள் ஒன்றை) தட சூலத்தால் கண்டனம் செய்த (கொய்த) காரணத்தால் கண்டனபுரம் - கண்டியூர் எனப் பெயர் பெற்றது. சப்தஸ்தான தலங்களுள் ஒன்றாகும்.
“சாதாதாப முனிவருக்காக இறைவனால் வில்வமரt கயிலையிலிருந்து கொண்டு வரப்பட்டதால் இத்தலத்திற்கு ஆதிவில்வாரண்யம்' என்றும் பெயர். இம்முனிவ பிரதோஷத்தில் காளத்தி சென்று தரிசனம் செய்து வந்தார் ஒருமுறை கண்டியூர் வந்தபோது, காளத்திக்கு, நேரத்தில் செல்6 முடியாமற் போயிற்று. அப்போது இறைவன், அவருக்கு
292

5
காளத்தி தரிசனத்தை இத்தலத்திலேயே காட்டியருளினார் என்பது வரலாறு. பிரமகத்தி தோஷம் நீங்கும் தலமாகவும் சொல்லப்படுகிறது. சூரியன் வழிபட்ட தலம் இது. மாசிமாதம் 13, 14,15 ஆம் நாள்களில் மாலையில் 5.45 மணிமுதல் 6.10 மணிவரை சூரிய ஒளி சுவாமிமீது படுகின்றது. அருணகிரி நாதர் பாடல் பெற்றது.
இறைவன் - பிரமசிரக் கண்டீஸ்வரர், வீரட்டேஸ்வரர்
பிரமநாதர், ஆதிவில்வவனநாதர்.
இறைவி மங்கள நாயகி தலமரம் - வில்வம் தீர்த்தம் - நந்திதீர்த்தம், தக்ஷதீர்த்தம், பிரமதீர்த்தம்,
குடமுருட்டியாறு முதலியன. சம்பந்தர், அப்பர் பாடிய சிறப்புடைய தலம்.
பெரிய ஊர். மேற்கு நோக்கிய கோயில். ராஜகோபுரம் ஐந்து நிலைகளுடன் காட்சி தருகின்றது. கவசமிட்ட கொடிமரம் - நந்தி, பலிபீடங்கள் உள்ளன. கொடிமர விநாயகர் காட்சி தருகின்றார். இடப்பால் தண்டபாணி சந்நிதி தனிக்கோயிலாக மண்டபத்துடன் உள்ளது. இம்மண்டபம் வெளவால் நெத்தி மண்டப அமைப்புடையது. சப்தஸ்தானத் திருவிழாவில் (ஏழுர் திருவிழாவில்) சுவாமி இங்கிருந்து புறப்பட்டுச் செல்லும், சுவாமி இங்கு வந்து இறங்கி, (ஐந்தாவது தலமாக) சற்று இளைப்பாறிச் செல்லும். சிலாத முனிவருக்கு, சாதாதாப முனிவர் தமையனாராதலின், இளைப்பாறிச் செல்லும்போது மூத்தமாமனார் என்ற வகையில் கட்டிச் சோறு கட்டித் தரும் ஐதீகமாக அன்று (தயிர்சாதம், புளியோதரை) - கட்டித் தந்து சுவாமியுடன் அனுப்புவது மரபாக இருந்து வருகின்றது.
அம்பாள் சந்நிதி தெற்கு நோக்கியது. நின்ற திருக்கோலம். அபயவரதத்துடன் கூடிய நான்கு திருக்கரங்கள். பெயருக்கேற்ற மங்களப் பொலிவு, வலப்பால் விநாயகர் உள்வாயில் கடந்ததும் இடப்பால் வள்ளி தெய்வயானையுடன் கூடிய சுப்பிரமணியர் தரிசனம். அடுத்து மகாலட்சுமி சந்நிதி. எதிரில் நடராசசபை உள்ளது. வலமாக வரும்போது விஷ்ணு துர்க்கை சந்நிதி உள்ளது. பைரவரும், பலவகை விநாயகர்களும், (வெவ்வேறு வகை மூர்த்தங்கள்), சூரியனும், அமர்ந்த கோலத்திலுள்ள அர்த்த நாரீஸ்வரரும் அடுத்தடுத்துக் காட்சி தருகின்றனர். சண்டேஸ்வரர் சந்நிதி தனிக் கோயிலாகவுள்ளது. கோஷ்டமூர்த்தங்களாக பிரமன், லிங்கோற்பவர், தகூதிணாமூர்த்தி, பிட்சாடனர் மூர்த்தங்கள் உள்ளன.
உள் வலம் முடித்து, துவார பாலகர்களை வணங்கி உட்சென்றால் இடப்பால் நவக்கிரகங்கள் உள்ளன. துவாரபாலகர்களுக்குப் பக்கத்தில் சாதாதாப முனிவர் உருவம் உள்ளது. சப்தஸ்தானலிங்கங்கள், பஞ்சபூதலிங்கங்கள், சாதாதாபருக்குக் காட்சி தந்த காளாத்தி நாதர் சந்நிதி முதலியவைகள் உள்ளன. நவக்கிரகங்களில் சூரியன் இரு மனைவியருடன் காட்சி தருகின்றார். மூலவர் தரிசனம், மூலவர் சுயம்பு துவாரகணபதியும் சுப்பிரமணியரும் உள்ளனர். மூலவர் பாணம் சற்று உயரமாகவுள்ளது. சுவாமி சந்நிதிக்குப் பக்கத்தில்
இந்துக்கலைக்களஞ்சியம்

Page 359
பிரமன், சரஸ்வதி சிலாரூபம் உள்ளன. பிரமனின் நான்கு முகங்களும் அழகாகவுள்ளன. பூ, ஜபமாலை ஏந்தி, இருகைகளும் பிரார்த்திக்கும் அமைப்பில், அமர்ந்த திருக்கோலத்தில் உள்ள இவ்வுருவம் (பிரமன்) அழகுடையது. பிரமன் சிரம்கொய்த பின், அவன் வேண்டிட ஜம்முகங்களின் அழகினை சதுர் முகங்களில் (நான்கு முகங்களில்) இறைவன் அருளிச் செய்ய, பிரமன் பெற்றுப் பயனடைந்ததாக ஐதீகம்.
பிரமன் சிரம் கொய்வதற்காக இறைவன் மேற்கொண்ட வடுகக் கோலம், சுவாமி சந்நிதிக்கு எதிரில், இடப்பால், பிரமன் சந்நிதிக்குச் செல்லும் வாயிலில் சுவரையொட்டிக் கதவோரமாகச் சிறிய சிலாரூபமாகவுள்ளது. நவக்கிரக சந்நிதியில் தீபமேற்றி வழிபடுவதற்காகத் தீபங்கள் வைக்கும் அமைப்பில் மேடை அமைத்துக் கட்டப்பட்டுள்ளது. நாடொறும் நான்கு காலபூஜைகள் நடைபெறுகின்றன.
சித்திரை மாதத்தில் ஏழுர்த் திருவிழா நடைபெறுகின்றது. வைகாசி விசாகத்தில் பதின்மூன்று நாள்களுக்குப் பெருவிழா நடை பெறுகிறது. கல்வெட்டில், இப்பெருமான் பெயர், திருவீரட்டானத்து மகாதேவர்', 'திருக்கண்டியூர் உடைய மகாதேவர் எனக் குறிக்கப் பெறுகின்றது.
அடியராயினர் சொல்லுமின்னறிகின்றிலேன் அரன் செய்கையைப் படியெலாந் தொழுதேத்து கண்டியூர் வீரட்டத்துறை பான்மையான் முடிவுமாய் முதலாயில் வையமுழுதுமாய் அழகாயதோர் பொடியதார் திருமார்பினிற் புரி நூலும் பூண்டெழு பொற்பதே'
(சம்பந்தர்)
"வானவர் தானவர் வைகன் மலர் கொணர்ந்திட் டிறைஞ்சித் தானவர் மால் பிரமன் அறியாத தகைமையினான் ஆனவனாதி புராணன் அன்றோடி அப்பன்றி யெய்த கானவனைக் கண்டியூர் அண்டவாணர் தொழுகின்றதே"
(அப்பர்) (തൂ.6്ബ്)
திருக்கரம்பனூர்
திருச்சிக்கும் பூரீரங்கத்திற்கும் இடையே திருக்கரம்பன்னூர் என்ற இத்திருத்தலம் உள்ளது.
இத்தலம் பற்றிய தல புராணம் மேல்வருமாறு கூறப்படுகின்றது. ஆதியில் சிவனுக்கும் பிரம்மாவுக்கும் ஐந்து முகங்கள் இருந்தன. தனக்கு இணையாக பிரம்மதேவருக்கும் ஐந்து தலைகள் இருப்பதைக் கண்டு பிரம்மாவின் ஐந்து தலைகளில் ஒரு தலையை கிள்ளி எறிந்தார் சிவபெருமான். கிள்ளப்பட்ட பிரம்மாவின் தலை கபாலமாக பிரம்மஹந்தி தோஷத்தால் சிவனின் கையோடு ஒட்டிக் கொண்டது. ஒட்டிக் கொண்ட கபாலத்தை திருவோடாக ஏந்தி பிச்சை எடுத்து உண்ணும் பிச்சாண்டவராக சிவபெருமான் ஆனார். முடிவில் மகாலட்சுமி சிவனுக்கு பிச்சை இடவும் பிரம்ம ஹத்தி தோஷம்
இந்துக்கலைக்களஞ்சியம்

நீங்கியது என்று தலபுராணம் கூறுகிறது. பரமாத்மா ஜீவாத்மாக்களுக்கு தெளிவான ஞானத்தை உணர்த்திட நடத்திய நாடகமே இத்தல புராணம் என்றும் கூறப்படுகின்றது. ஞானம் என்ற பேரொளியானது அஞ்ஞானமான இருளை அகற்ற வல்லது. ஞானமாகிய இப் பெரிய நெருப்பில் நான், எனது என்ற ஆணவத்தால் உண்டாகும் அகங்காரங்களும் பொறாமை, பேராசை, மோகம், கோபதாபம், அறியாமை ஆகிய அனைத்தும் எரிந்து சாம்பலாகி அழிந்து போகும்.
ஆணவம் கன்மம், மாயை ஆகிய மூன்றினையும் வென்று தெளிந்திட்ட ஞானப்பிழம்புதான் ஆதிசிவம் ஆகும். இந்த ஞானமே வடிவான சிவபெருமானின் மனதில் பிரம்மா மீது பொறாமை உண்டானது. அதன் காரணமாய் தான் ஆணவ அகங்காரங்கள் கோபதாபங்கள் அனைத்தும் சிவனுக்கு உண்டானது.
இந்நிலை ஏற்பட்டதால்தான் ஞானப்பிழம்பாகிய சிவபெருமான் உணர்ச்சிக்கு ஆளாக்கப்பட்டு பிரம்மாவின் தோஷத்துக்கு ஆளாகி, ஒருவன் தான் செய்த பாவத்திற்கான தண்டனையை தானே அனுபவிக்க வேண்டும் என்ற தத்துவத்தின் பிரகாரம் கையில் பொறாமை, அதிருப்தி, பேராசை, அறியாமை ஆகியவற்றிற்கு ஆளானவர்களிடம் தரித்திரமானது சொல்லாமல் கொள்ளாமல் அவருள் குடிகொண்டுவிடும். செல்வத்தை அருளிடும் திருமகளும் அவரிடம் இருந்து நீங்கிவிடுவார். மேலும் பசியும் பிணியும் உண்டாவதோடு கல்வியும் ஞானமும் அவரிடம் இருந்து விலகிவிடும் என்பதனை எடுத்துக்காட்டுவதாக இத்தெய்வீக நாடகத்தை இத்தலத்திலே நிகழ்த்தியுள்ளார்.
சாபத்தின் பயனாக வழிபாட்டுத் தலமே இல்லாத பிரம்ம தேவர் வழிபடப்படும் சந்நிதியை பெற்றது இத்தலத்தில் தான். கதம்ப சேத்திரம் என்ற பெயரும் இத்தலத்திற்கு உண்டு. கதம்ப முனிவருக்கு எம்பெருமான் பூரீ நாராயணர் பிரதியட்சம் ஆன தலமானதாலும் கதம்ப சேத்திரம் என்ற பெயர் உண்டானது என்றும் கூறுகின்றனர். கதம்ப முனிவர் ஆதி மூலமான இறைவனை வேண்டி நீண்டகாலமாய் இத்தலத்தில் கடும்தவம் இருந்தமையால் சிவபெருமானும் திருமாலும் விஸ்வரூப தரிசனமாக கதம்ப முனிவருக்கு சேவை தந்தார்கள் என்றும் கூறப்படுவதால் சமய ஒருமைப்பாட்டை உணர்த்திடும் தலமாக உள்ளது.
கோயிலமைப்பு
நான்கு புறமும் மதில்களுடன் எழில் மிகு தோற்றத்துடன் கோயில் அமைந்துள்ளது. கிழக்கு நோக்கியவாறு இரு பிரகாரங்களுடன் கோயில் விளங்குகிறது. கீழ்புறத்திலுள்ள கோபுரவாயில் வழியாக உட்சென்று துவஜஸ்தம்பத்தை கடந்து மகா மண்டபத்தை அடையலாம். கருடாழ்வாரை தரிசித்தபடி மூலஸ்தானத்தை அடையலாம். மூலவரான புருஷோத்தமன் கிழக்கு நோக்கியவாறு பள்ளி கொண்ட கோலத்தில் காட்சி தருகின்றார். மூலவருக்கு உத்தமர் என்ற பெயரும் வழங்கப்
293

Page 360
படுகின்றது. அருகே ஆண்டாள் சந்நிதியும் உள்ளது. உட்பிரகாரத்தை வலம் வரும் போது மகா மண்டபத்திற்கு தெற்கே சந்நிதியில் பூரண வல்லித் தாயார் காட்சியளிக்கின்றார். சிறிது தொலைவில் தலவிருட்சமாக கதலி மரம் காணப்படுகின்றது.
ஆலயத்தின் மற்றொரு பகுதியில் பிச்சாடனேஸ்வரர் சிவலிங்க வடிவில் அருள்பாலிக்கும் தனிச் சந்நிதியைக் காணலாம். அருகே செளந்தர பார்வதி சந்நிதியும், விநாயகர் சுப்பிரமணியர், நந்திதேவர், நடராஜர், தட்சிணாமூர்த்தி திருவுருவங்களும் காணப்படுகின்றன. ஆழ்வார்கள், கோபாலகிருஷ்ணர், லட்சுமிநாராயணர், இராமர், ஆகியோருக்கு தனிச் சந்நிதிகள் காணப்படுவதுடன் நான்முகனுக்கும் சரஸ்வதிக்கும் தனிச் சந்நிதி அமைந்துள்ளது சிறப்பான அம்சமாகும்.
சமய துவேஷங்களுக்கு இடம் அளிக்காமல் மும்மூர்த்தி களையும் சமமாக பாவித்து வழிபடவேண்டும் என்ற கருத்தினை இக் கோயில் வலியுறுத்துகின்றது. புருஷோத்தமனின் மூலஸ்தானத்தை ஒட்டியே பிச்சாடனர் சந்நிதி தென்புறத்திலும், தசரத லிங்க சந்நிதி வடபுறத்திலும் உள்ளன. இங்கு வழிபடுவோர் மூன்று சந்நிதிகளையும் சேர்த்து வலம் வரவேண்டும் என்பதே நியதி. மூலவர் சந்நிதிக்குமேல் அணி செய்யும் விமானம் உத்தியோக விமானம் எனப்படும்.
ஆலயத்திற்கு கிழக்கிலமைந்துள்ள கதம்ப தீர்த்தமும், தெற்கிலுள்ள ஐயன் வாய்க்காலும் கொள்ளிடநதியும் இத்தலத்திற் குரிய புண்ணிய தீர்த்தங்களாகும். இவற்றிலிருந்து திருமஞ்சனத்திற்கு நீர் கொண்டு வரப்படும். கதம்ப முனிவருக்கு திருமால் காட்சியளித்ததால் திருக்கரம்பனூர் என்றும், ஆதியில் தீப மரங்கள் நிறைந்து விளங்கியதால் தீபவனம் என்ற பெயரும் உண்டு. மும்மூர்த்திகள் ஒன்று சேர்ந்து எழுந்தருளியுள்ளதால் திரிமூர்த்தி ஷேத்திரம் என்ற பெயரும் உண்டாயிற்று, அரனார் பிச்சாடன மூர்த்தியாகக் கோயில் கொண்டதால் பிக்ஷாண்டார் கோயில் என்றும் நான்முகனைத் தனது நாபியில் நிறுத்தியவாறு திருமால் மூல மூர்த்தியாக அருள் பாலிப்பதால் ஆதிமாபுரம் எனவும் பிரம்மபுரம் எனவும் இப்பதியை அழைப்பர்.
இக்கோயிலின் மத்தியிலுள்ள சந்நிதியின் வடக்கு சுவரிலுள்ள கல்வெட்டின் மூலம் (எண் 602) சோழமன்னர் உடையார் ராஜாதி ராஜ தேவர் என்ற ராஜகேசரி வர்மரின் முப்பதாவது ஆட்சியாண்டில் நிலங்கள் கொடையாக அளிக்கப்பட்டமை அறியக்கூடியதாக வுள்ளது. சிவாலயத்தின் தென் சுவரிலுள்ள கல்வெட்டு மூலம் (எண் 103 ஆண்டு 193637) நாயனார் சுந்தர பாண்டியனின் ஆட்சியின் போது சில கோயில்களில் வழிபாடுகளும் விழாக்களும் நடைபெற பூமி தானமாக வழங்கப்பட்டதாக அறியலாம். மாறவர்மன் திரிபுவன சக்கரவர்த்தி குலசேகர தேவனின் பத்தாம் ஆட்சியாண்டில் இதுபற்றிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. சிவாலயத்தின் மேற்புறச்
2.94

சுவரிலுள்ள கல்வெட்டின் மூலம் உத்தமர் பூசைகளுக்காக மலையபுரம் எனப்படும் குண சீலமங்கத்தில் வசிப்பவரால் விற்குடியிலுள்ள பூமியை பூரீரங்கநாதசுவாமி முன்னிலையில் தானம் அளிக்கப்பட்டதாக அறிய முடிகின்றது.
திருமங்கையாழ்வார் மட்டும் இத்தலத்தை மங்களாசாசனம் செய்துள்ளார். திருவரங்கப்பெருமானை வழிபடும் போது திருப் பேர்நகர், திருத்தண்கால், திருக்குறுங்குடி, ஆகிய பகுதிகளில் எழுந்தருளியுள்ள இறைவனுடன் கரம்பனூர் உத்தமனையும் அவரது பாசுரம் குறிப்பிடுகிறது.
"பேரானைக் குறுங்குடியெம் பெருமானைத் திருத்தண்கா லூரானைக் கரம்பனூ ருத்தமனை முத்திலங்கு காரார் திண்கடலேழு மலையேழிவ்வுலகே பூண்டும் ஆதாதென்றிருந்தானைக் கண்டது தென்னரங் கத்தே
(திருமங்கையாழ்வார்)
திருமங்கையாழ்வார் கரம்பனூரில் தங்கியவாறு திருவரங்க ஆலயத்தின் மீது மதில், மண்டபம், ஆகியவற்றை கட்டியதாக ஒரு ஐதிகம் நிலவுகின்றது. ஆனி ஜ்யேஷ்டாபிஷேகம், ஆவணி பவித்ரோற்ஸவம், புரட்டாசி7 நவராத்திரி ஆகிய விழாக்கள் இத் தலத்தில் கொண்டாடப்படும். (தே. ஹ.)
திருக்கள்ளில்
தொண்டை நாட்டுத் தலம். மக்கள் வழக்கில்
திருக்கண்டலம், திருக்கள்ளம் என வழங்கப்படுகிறது. பிருகு முனிவர் வழிபட்ட தலம்.
கோயில் சுவாமி சந்நிதி கிழக்கு நோக்கியது. மூலவர் சிவலிங்கத் திருமேனி, சதுர ஆவுடையார். வெளியில் விநாயகர் கோயிலும், அடுத்து சுப்பிரமணியர் கோயிலும் அதன் பக்கத்தில் அம்பாள் கோயிலும் உள்ளன. சுவாமி விமானம் தூங்கானை மாட அமைப்புடையது.
இறைவன் - சிவானந்தேஸ்வரர்
mைவி னர்கவல்லி
ஆனநத தீர்த்தம் - நந்தித் தீர்த்தம்
பூரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் அவர்களின் பொன்விழாத் திட்டத்தில் இத் திருக்கோயில் திருப்பணிகள் செய்யப்பட்டு 22.1.1999இல் கும்பாபிஷேகம் நடைபெற்றுள்ளது.
முள்ளின்மேல் முதுகூகை முரலுஞ் சோலை வெள்ளின் மேல் விடுகூளைக் கொடி விளைந்த கள்ளின் மேய அண்ணல் கழல்கள் நாளும் உள்ளுமேல் உயர்வெய்தல் ஒரு தலையே” எனச் சம்பந்தர் இத்தலத்து எழுந்தருளியிருக்கும் இறைவனைப் பாடி உள்ளார். (நி நி)
இந்துக்கலைக்களஞ்சியம்

Page 361
திருக்கானத்தி
தொண்டை நாட்டுத் தலம். பஞ்சபூதத் தலங்களுள் இது வாயுத் தலம். தட்சிண கைலாயம் என்னும் சிறப்புடையது. சுவர்ணமுகி என்னும் பொன்முகலி ஆற்றின் அருகில் உள்ளது. இவ்வாறு வடக்கு முகமாய் பாய்ந்து ஒடுவதால் இவ்விடம் மிகச் சிறப்பானதாகக் கருதப்படுகிறது. அன்புக்குச் சான்றான கண்ணப்பர் தொண்டாற்றி முத்தி பெற்ற தலம். அட்டமா சித்திகள் அணைதரு காளாத்தி எனச் சிறப்பிக்கப்படும் தலம். நக்கீரர் கைலைபாதி காளாத்தி பாடிப் பெருமை பெற்ற தலம். முசுகுந்தன், பரத்வாஜ மகரிஷி, சிவகோசரியார் முதலியோர் வழிபட்டுப் பேறு பெற்ற தலம். அருச்சுனன் தன் தீர்த்த யாத்திரையின் போது இங்குவந்து இறைவனை வழிபட்டும் பரத்வாஜ மகரிஷியைக் கண்டும் வணங்கியும் சென்றதாகச் சொல்லப்படுகிறது. சிவஞானத்தை அளிக்க வல்ல காசி, சிதம்பரம், விருத்தாசலம், காளாத்தி என்னும் நான்கினுள் ஒன்றாகக் கருதப்படுகிறது. ஒரு நாளேனும் நியமத்துடன் வசிப்பவர்களுக்கு கலியின் பீடையை மாற்றிப் பிறவித் துயர் நீக்கவல்ல காசி, காளாத்தி என்னும் ஸ்தலங்கள் இரண்டினுள் ஒன்று எனவும் நூல்களிற் பாராட்டப்பட்டது இத்தலம். இத்தல மகிமையும் தீர்த்த விசேடமும் வழிபட்டுப் பேறு பெற்றோருடைய மேம்பாடுகளும் திருக்காளாத்திப் புராண நூலாலும், தேவாரம் முதலிய திருமுறைகளாலும் அறியலாம்.
இத் தலத்திற்குத் தட்சிண கைலாசம் அல்லது தென் கைலாயம், தென்கயிலை, திருக்காளத்தி, பூரீ காளஹஸ்தி, காளாத்தி, சிவாநந்ககிரி, விஞ்ஞான க்ஷேத்திரம், கண்ணப்பபுரம், மும்முடிச் சோழபுரம் போன்ற வேறு பெயர்களும் உண்டு. பூரீகாளம் - அத்தி; சிலந்தி - பாம்பு- யானை ஆகிய மூன்றும் வழிபட்டுப் பேறுபெற்ற தலம். ராகு, கேது ஷேத்திரம் என்றும் அழைக்கப்படுகிறது.
புராண வரலாறு
வேட்டுவத் தலைவன் திண்ணனார். ஒருமுறை வேட்டையாட வந்தபோது மலை மீதிருந்த குடுமித்தேவரைக் கண்டு ஆராக்காதல் கொண்டு தன் குல வழக்கப்படி சிறந்த புலால் உணவு படைத்து, வாயினால் உமிழ்ந்து வந்த பொன்முகலி ஆற்று நீரால் அபிஷேகம் செய்து வழிபாடாற்றினான். நாள்தோறும் இவ்வாறு நடைபெறுவது கண்ட அந்தணர் சிவகோசரியார் மனம் வருந்தி இறைவனிடம் முறையிட கண்ணப்பரின் இறையன்பைச் சிவகோசரியாருக்குப் புலப்படுத்த விழைந்தார் சிவபெருமான். சிவகோசரியார் மறுநாட்காலை இறைவன் ஆணைப்படி மலை உச்சியில் ஓரிடத்தில் மறைந்திருந்து பார்த்து கண்ணப்பரின் ஆழ்ந்த அன்பை, ஈடுபாட்டை அறிந்து கொண்டார்.
திண்ணனார் தம் அன்பின் பெருமையைக் காட்ட அந்த இறைவன் தமது வலக் கண்ணினின்றும் உதிரம் பெருகச் செய்தார். இதைக் கண்டு பதைபதைத்த திண்ணனார் காடெல்லாம் சுற்றிப் பச்சிலை கொணர்ந்தார். அவற்றைப்
இந்துக்கலைக்களஞ்சியம்

பிசைந்து ஐயன் கண்ணில் வைக்கிறார். அது நிற்கவில்லை. ஊனுக்கு ஊன் என்னும் பழமொழி நினைவுக்கு வந்தது. திண்ணனார் அம்பால் தன் வலக்கண்ணை அகழ்ந்தெடுத்து அப்புகிறார். உதிரப் பெருக்கு நின்று விடுகிறது. ஆனந்தக் கூத்தாடுகிறார். திண்ணனார் பின் மறுகண்ணிலும் உதிரம் பாய்ந்தபோது சற்றும் தயங்காமல் எனக்கு இன்னொரு கண்ணுண்டு. அதை அகழ்ந்து அப்பி ஐயன் நோய் தீர்ப்பேன் என்று உறுதிபூண்டு இடது கண்ணையும் அகழ முற்பட்ட வேளையில் இறைவனால் தடுக்கப்பட்டு ஆட்கொள்ளப்பட்டார்.
மலை உச்சியிலிருந்த குடுமித்தேவர் வழிபாடே கண்ணப்பநாயனார் செய்தது என்பதும் மலைமேல் ஏறியே தேவார முதலிகள் மூவரும் வழிபட்டனர் என்பதும் பெரியபுராண த்தால் அறியப்படும். ஆனால் நாம் இப்போது பொன்முகலியாற்றங் கரையில் தரைமட்டத்திலுள்ள கோயிலுக்குள் இருக்கும் மூர்த்தியையே வணங்குகின்றோம். ஆற்றிலிருந்து சில படிகள் ஏறி ஆலயம் செல்வதால் இப்போதுள்ள ஆலயமும் மலை மீதுள்ளதென்பாரும் உளர்.
கோயில் இறைவன் - பூரீ காளஹஸ்தீஸ்வர சுவாமி, காளாத்தி
நாதர், குடுமித்தேவர். இறைவி ஞானப்பிரசுன்னாம்பிகை, ஞானப் பூங்கோதை தலமரம் மகிழம் தீர்த்தம் ஸ்வர்ணமுகி(பொன் முகலியாறு)
சுவர்ணமுகி, பொன்முகலிப் பாலத்தை கடந்து ஊருக்குள் சென்றால் காளி கோயில் கோபுரம் மிக உயர்ந்து கம்பீரமாகக் காட்சி தருகிறது. இக் கோபுரம் கிருஷ்ண தேவராயரால் 1516 இல் கட்டப்பட்டது. இதனைக் கடந்து உள்ளே சென்றால் திருக்காளத்தி கோயிலின் பிரதான வாயிலை அடையலாம். இக் கோயிலின் கோபுரம் பிசவுசாலா கோபுரம் என்றழைக்கப்படுகிறது. இதுவும் ஏனைய கோபுரங்களும் 12 ஆம் நூற்றாண்டில் வீரநரசிம்மயாதவராயராற் கட்டப்பட்டன. கோபுர வாயிலைக் கடந்து உள் நுழைந்ததும் வலப்பக்கத்தில் வள்ளி தெய்வானை உடனாகிய சுப்பிரமணியர் சந்நிதி தனிக் கோயிலாகவுள்ளது. அடுத்து வரும் வடக்குக் கோபுரவாயில் வழியாகத்தான் சுவாமி புறப்பாடு நிகழ்வது வழக்கம். இதற்கு சற்றுமுன் பாதாள விநாயகர் சந்நிதி உள்ளது. பெயருக்கேற்ப விநாயகர் 35 அடி ஆழத்தில் உள்ளார். 20 படிகள் இறங்கிச் சென்று தரிசிக்க வேண்டும். விநாயகர் அமர்ந்துள்ள இடம் பொன் முகலியாற்றின் மட்டத்தில் உள்ளதாகச் சொல்லப்படுகிறது. இங்கு வந்த அகத்தியர் விநாயகரை வழிபடாமல் போகவே பொன்முகலி ஆறு நீரின்றி வற்றியது. அகத்தியர் தன் தவறுணர்ந்து ஆழத்தில் விநாயகரைப் பிரதிஷ்டை செய்து வழிபட்டு அருள் பெற்றார் என்பது தல வரலாற்றுச் செய்தியாகும். எதிரில் சிவராத்திரி மண்டபம் உள்ளது. அடுத்து மூலையில் இரண்டு கால்கள் மட்டும் வெளியே தெரிய சுவரோடு சேர்த்துக் கட்டப்பட்ட சிறிய மண்டபத்தைக் காணலாம். அடுத்து உள்ளிருக்கும் மூலவருக்கு
295

Page 362
நேராகச் சாளரம் அமைத்து அதற்கு வெளியில் பிரதிட்டை செய்யப்பட்டிருக்கும் நந்தியைக் காணலாம்.
இங்குள்ள தரையின் மத்தியில் சதுரமான பகுதியில் மண் நிரப்பப்பட்டுள்ளது. கார்த்திகைத் தீபத்தன்று இங்குதான் சொக்கப்பானை கொழுத்தப்படும். இந்தக் குழியில் பனைமரத்தை நட்டு சுற்றி வர சிறு கொம்புகளை நட்டு அதைச் சுற்றிலும் ஒலைகளைச் சுற்றுவார்கள். இடித்த எள்ளை அகல்விளக்குப் போல் செய்து அதில் எண்ணெய், திரி வைத்து பனை மரத்தின் உச்சியில் வைத்து சொக்கப் பானையைக் கொழுத்துவார்கள். எல்லாம் எரிந்து கல் விளக்கும் எரிந்து போகும். அப்போதே அதை எடுத்து அரைத்து அக் கரியை (ரகூைடியாக) சுவாமிக்கு கறுப்புப் பொட்டாக இடுவார்கள். இது இங்கு விசேஷமானது.
அடுத்துச் சென்றால் வலப்பக்கத்தில் உள்ள கோபுரம் திருமஞ்சனக் கோபுரம் எனப்படும். இக் கோபுரத்திலிருந்து பார்த்தால் நேரே பொன் முகலி ஆறு தெரியும். ஆற்றுக்குச் செல்வதற்கு படிக்கட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. இவ் வழியே தான் திண்ணனார் பொன்முகலி ஆற்றுநீரைக் கொணர்ந்து சுவாமிக்கு அபிஷேகம் செய்தார் என்று சொல்லப்படுகிறது. இப் படிக்கட்டில் இறங்கும்போது முதற் படிக்கட்டின் இடப்பால் தேவகோட்டை மெ. அரு. தா. இராமநாதன் செட்டியாரின் உருவச்சிலை உள்ளது. 1912 ஆம் ஆண்டிலேயே ஒன்பது லட்சம் ரூபா செலவழித்து பெரும் திருப்பணிகள் செய்த புண்ணியவான்
அவா.
இக் கோபுரத்தின் எதிரில் நாற்கால் மண்டபத்தை அடுத்து அஷ்டோத்ரலிங்க சந்நிதி உள்ளது. கோபுரத்தின் பக்கத்தில் பஞ்சசந்தி விநாயகர் சந்நிதி. அடுத்துள்ள மண்டபம் நூறுகால் மண்டபம். 1516 இல் கிருஷ்ண தேவராயராற் கட்டப்பட்டது. எதிரில் உள்ள பதினாறு கால் மண்டபம் அச்சுதராயராற் கட்டப்பட்டதாகும். அவற்றைக் கடந்து சென்றால் ஆலய நுழை வாயில் எதிரில் இரு கொடிமரங்கள். ஒன்று கவசமிடப்பட்டது; மற்றது கல்லால் ஆனது. 60 அடி உயரமுள்ள இது கல்லால் ஆனது. பலிபீடமும் நந்தியும் உள்ளன.
பிரதான கோபுரம் தஷிண கோபுரம் எனப்படும். 11 ஆம் நூற்றாண்டில் குலோத்துங்க சோழனின் ஆட்சியில் அவனுடைய நேரடி மேற் பார்வையில் அதற்கென நியமிக்கப்பட்ட கோயிற் குழுவினரால் கட்டப்பட்டது. தெற்கு நோக்கிய இக் கோபுர வாயிலில் நுழைந்தால் நமக்கு நேரே தரிசனம் கொடுப்பவர் தகூதிணாமூர்த்தி வலம்வரும் தரையில் வட்டமாக குறித்துள்ள இடங்களில் நின்று பார்த்தால் கைலாசமலையும், சுவாமி விமானமும் தெரியும். இங்குள்ள தீர்த்தக் கிணறு சரஸ்வதி தீர்த்தம் எனப்படுகிறது. இயற்கையில் பேசவராத குழந்தைகளுக்கு இத் தீர்த்தத்தைக் கொடுத்தால் நன்கு பேசவரும் என்ற நம்பிக்கை உள்ளது. அடுத்துள்ள உற்சவ அலங்கார மண்டபத்தில் காளாத்தீஸ்வரர், ஞானப்பூங்கோதை, கண்ணப்பர், ஆறுமுகர், வள்ளி, தெய்வயானை, பரத்வாஜ
296

மகரிஷி, பிச்சாடனர், விநாயகர், தொண்டமான் அரசர், சிலந்தி, யானை,பாம்பு முதலிய உற்சவத் திருமேனிகள் உள்ளன.
அடுத்துச் சென்றால் சுந்தர கணபதி, மோகூகணபதி, பாலகணபதி ஆகிய மூவரின் தரிசனம். வலமாக வந்து மூவரைத் தரிசிக்கலாம். உள் நுழையும் போதே கவசமிட்ட கொடிமரமும் முன்னால் பலிபீடமும் உள்ளன. தூண்களில் அழகான சிற்பங்கள் உள்ளன. மூலஸ்தான மூர்த்தி சுயம்பு வடிவினர். தீண்டாத் திருமேனி, சிவலிங்கத் திருமேனி அற்புதமான அமைப்புடையது. ஆவுடையார் பின்னால் கட்டப்பட்டது.
சுவாமி மீது தங்கக் கவசம் சாத்தப்பட்டுள்ளது. கவசத்தைச் சாத்தும் போதும் எடுக்கும் போதும் சுவாமி மீது கரம்படக் கூடாது. இக் கவசத்தில் இருபத்தேழு நட்சத்திரங்களும் பொறிக்கப்பட்டுள்ளது. இக் கவசத்தை எடுத்துப் பார்த்தால் இத் திருமேனியின் அற்புதமான அமைப்பைக் காணலாம்.
சிவலிங்கத் திருமேனி மிக உயரமானது. இதன் அடிப்பாகத்தில் சிலந்தி வடிவமும், நடுவில் யானையின் இரு தந்தங்களும் மேற்புறத்தில் ஐந்து தலை பாம்பு வடிவமும் வலப்பால் கண்ணப்பர் கண் அப்பிய வடுவும் அழகுற அமைந்துள்ளன. சிவலிங்கத்தின் மேற்பகுதி, ஐந்து தலை நாகம் போலவே காட்சி தருகிறது.
மூலவர் சந்நிதிக்கு அருகில் மனோன்மணி அம்மன் திருமேனி உள்ளது. கீழே காளஹஸ்தீஸ்வரன் போக மூர்த்தத் திருமேனி உள்ளது. சுகாசன அமைப்பில் உள்ள இம் மூர்த்தம் மான் மழுவேந்தி அபய, சிம்மகர்ண முத்திரைகளுடன் கூடிய நான்குகரத் திருமேனியாகும். மூலவரின் கதவருகில் உள்ள தீபங்கள் எப்போதும் காற்றில் அசைந்தாடி இது வாயுத்தலம் என்பதைக் காட்டி நிற்கிறது. இச் சந்நிதியில் கண்ணப்பரின் உருவச் சிலையும் உள்ளது.
கண்ணப்பரால் அபிஷேகம் செய்யப்பட்ட மூர்த்தியாகையால் இங்கு திருநீறு தரப்படுவதில்லை. பச்சைக் கற்பூரத்தை பன்னீர்விட்டு அரைத்து தீர்த்தத்தில் கலந்து சங்கு ஒன்றில் வைத்துக்கொண்டு தரிசிப்போருக்கு அத் தீர்த்தத்தையே தருகின்றனர். மூலவருக்கு கங்கை நீரைத் தவிர வேறெதுவும் மேலே படக்கூடாது. ஏனைய அபிஷேகங்கள் அனைத்தும் ஆவுடையாருக்கே நடைபெறுகிறது. சுவாமிக்கு மேலே தாராபாத்திரம் உள்ளது.
கருவறை அகழி அமைப்புடையது. கோஷ்ட மூர்த்திகளாகக் கணபதி, தட்சிணாமூர்த்தி, இலிங்கோற்பவர், பிரம்மா, துர்க்கை ஆகியோர் உள்ளனர். சர்ப்பதோஷம் முதலியன நீங்கும் தலமாதலின் இராகு கால தரிசனம். இராகு கால சாந்திகள் சிறப்பானவை. இங்கு உச்சிக்கால பூஜை முடிந்து கோயிற் கதவுகள் பூட்டப்படும் வழக்கம் இல்லை. கோயில் காலை முதல் இரவு வரை திறந்தே இருக்கும். ஆயினும் இங்கு அர்த்தஜாமப் பூஜை நடைபெறுவதில்லை. இரவு 8 மணிக்கு சாயரட்சைப் பூஜை
இந்துக்கலைக்களஞ்சியம்

Page 363
முடிந்ததும் சுவாமி அம்பாளை அப்படியே கருவறையில் சேர்த்து விடுவார்கள். நாள்தோறும் நான்கு காலப் பூஜைகள் நடைபெறுகிறது. பரத்வாஜ மகரிஷி இங்கு தவம் செய்து பேறு பெற்றதால் அக் கோத்திரத்தைச் சார்ந்தவர்களே இங்கு பூஜை செய்து வருகிறார்கள். இத் தலம் கிரகதோஷ நிவர்த்தித் தலமாதலின் இங்கு நவக்கிரகங்கள் இல்லை. சனி பகவான் மட்டுமே உள்ளார்.
அம்பாள் ஞானப் பூங்கோதையின் சந்நிதி கிழக்கு நோக்கி உள்ளது. நின்றகோலம். திருவடியில் பூரீ ஆதி சங்கரரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட அர்த்த மேரு உள்ளது. அம்பாளின் இடுப்பு ஒட்டியாணத்தில் கேது உள்ளது. சந்நிதிக்கு வெளியில் பிரகாரத்தில் தலைக்கு மேற்புறத்தில் ராசிச்சக்கரம் உள்ளது. அம்பாளுக்கு வெள்ளி தோறும் தங்கப்பாவாடை சாத்தப் படுகிறது. சந்நிதிக்கு நேர் எதிரில் உள்ள மண்டபத்தில் வெள்ளிக்கிழமை தோறும் ஊஞ்சல் உற்சவம் சிறப்பாக நடைபெறுகிறது. அம்பாள் கருவறையை வலம் வரும்போது வட்டமாகத் தரையில் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ள மூலை இடத்தில் மூன்று தலைகள் சேர்ந்திருப்பது போன்ற சிற்பம் செதுக்கப்பட்டுள்ளது. இவ்விடத்தினடியில் சக்திவாய்ந்த யந்திரம் இருப்பதால் இங்கு அமர்ந்து ஜபம் செய்வது மிகவும் விசேஷமானது என்று சொல்லப்படுகிறது.
அம்பாள் கோயிற் கோபுரத்தைத் தாண்டி இடப்பக்கமாகச் சென்றால் கைலயங்கிரி மலைக்குச் செல்லலாம். இது கண்ணப்பர் மலை என்றும் அழைக்கப்படுகிறது. இதில் ஏறிச் செல்ல நல்ல படிகள் உள்ளன. மலை அதிக உயரம் இல்லை. மேலேறிச் சென்றால் சிறிய சிவலிங்கச் சந்நிதியைத் தரிசிக்கலாம். கண்ணப்பர் சந்நிதியும் உள்ளது. வில்லேந்தி நிற்கும் திருக்கோலம் மலைக்கிளுவை மரங்கள் இரண்டு சுவாமிக்கு முன்னால் உள்ளன. இம் மலை பெயருக்கேற்றபடி (கைலாசகிரி) பல கோயில்களையும் தீர்த்தங்களையும் பெற்றுத் திகழ்கிறது.
பொங்கல் விழாவில் ஒரு நாளிலும் பெருவிழாவில் ஒருநாளிலுமாக ஆண்டில் இரு நாள்களில் சுவாமி இம் மலையை வலம் வருகிறார். இவ்வலம் காலை தொடங்கி மறுநாள் முடிவுறும். சுவாமியின் திருக்கல்யாண விழாவின் போது மக்கள் பெருந்திரளாகக் கூடத் தங்கள் திருமணங்களையும் நிறைவேற்றிக் கொள்ளும் வழக்கம் இங்குண்டு. இத் தலத்தில் பிரவேசிப்பது முத்தி எனக் கருதப்படுகிறது.
கோயிலிலிருந்து மலைக்குச் செல்லும் வழிக்கு நேராக உள்ள வீதியில் சென்றால் சற்றுத் தொலைவில் மிக அழகான பஞ்சமுகேஸ்வரர் கோயிலையும், மலைக் கல்லில் அமைக்கப்பட்ட அருமையான புடைச் சிற்பங்களையும் தரிசித்து மகிழலாம்.
"சந்தமா ரகிலொடு சாதி தேக்கம்மரம் உந்துமா முகலியின் கரையினில் உமையொடும்
இந்துக்கலைக்களஞ்சியம்

மந்தமார் பொழில் வளர் மல்குவன்காளாத்தி எந்தையார் இணையடி என்மனத் துள்ளவே" எனச் சம்பந்தரும்
அண்ணாமலையான்காண் அடியார் ஈட்டம் அடியினைகள் தொழுதேத்த அருளுவான் காண் கன்னாரக் காண்பார்க்கோர் காட்சியான் கான் காளாத்தியான் அவன் என் கண்ணுளானே 岁岁
என அப்பர் சுவாமிகளும்
"செண்டாடும் விடையாய் சிவனே என் செழுஞ்சுடரே வண்டாரும் குழலாள் உமைபாக மகிழ்ந்தவனே கண்டார் காதலிக்கும் காணநாதன் எங்காளாத்தியாய் அண்டா உன்னையல்லால் அறிந்தேத்த மாட்டேன்”
எனச் சுந்தரரும்
"அறியாமலேனும் அறிந்தேனும் செய்த செறிகின்ற தீவினைகள் எல்லாம் - நெறிநின்று நன்முகில் சேர் காளாத்திநாதன் அடிபணிந்து பொன்முகலி யாடுதலும் போம்”
என நக்கீரரும் இத் தலப் பெருமையைப் பாடிப் பரவியுள்ளனர்.
(நி நி)
திருக்குடந்தைக் கீழ்க்கோட்டம்
இது சோழநாட்டில் காவிரியின் தென் கரையில் உள்ள ஒரு
சிவத்தலம். திருக்குடமூக்கு என்றும் கும்பகோணம் என்றும் இத்தலம் வழங்கப் பெறும். கும்பகோணத்தின் ஊர் நடுவில் திருக்குடந்தைக் கீழ்க்கோட்டமாகிய சிவன்கோவில் உள்ளது.
இது நாகேசுவர சுவாமி கோவில் என்றும் வழங்கப்படும்.
விசுவகர்மாவால் ஒளியிழக்கப் பெற்ற சூரியன் பூசித்து ஒளி பெற்ற தலம் இது. சித்திரைத் திங்கள் 11, 12, 13 ஆகிய நாள்களில் கதிரவன் ஒளி இங்குள்ள சிவலிங்கத்தின் மீது படுகிறது. இங்குள்ள இறைவன் பெயர் மடந்தை பாகர், மடந்தை
பாகேசுவரர், பாகேசுவரர் என்ற பெயர்களும் உண்டு. இங்குள்ள
இறைவி பெயர் பெரியநாயகி. சூரிய புட்கரணி, சிங்கக் கிணறு
ஆகியவை இங்குள்ள தீர்த்தங்கள்.
இது நாவுக்கரசரால் பாடப்பெற்ற திருத்தலம். ஆறாம்
திருமுறையில் அவர் பாடிய பதிகம் (6:75) இடம்பெற்றுள்ளது. குடந்தைக் கீழ்க்கோட்டித்தெங் கூத்தனாரே என ஒவ்வொரு
பாடலும் முடியும். அவை திருத்தாண்டகப் பாடல்கள் எனப்பெறும்.
சிவபெருமானைக் கூரிலங்கு வேற்குமரன் தாதை என்று ஒரு பாடலில் (7) நாவுக்கரசர் இப் பதிகத்தில் சுட்டியிருப்பது குறிக்கத் தக்கதாகும். அன்றியும் சதுர நடம் ஆட்டுகந்த சைவர் (9) என்று சிவபெருமானை அனாதி சைவர் என்று குறிக்கும் மரபும் இப்பதிகத்தால் அறியப்படுகிறது. (5. (O/7.)
297

Page 364
திருக்குரக்குக்கா
இது தேவாரப் பாடல் பெற்ற சோழ நாட்டுத் தலங்களுள் ஒன்று. தஞ்சை மாவட்டத்தில் இக் காலத்தில் தலை ஞாயிறு என்று வழங்கப்பெறும் திருக்கருப்பறியலூர் என்னும் தலத்திற்கு வடக்கே 1 கி. மீ. தொலைவில் இவ்வூர் உள்ளது. தஞ்சையிலிருந்து பேருந்து வழியாகத் தலை ஞாயிறு சென்று அங்கிருந்து இவ்வூரினை அடையலாம். குரக்குக்கா என்னும் பெயர் குரங்குச் சோலை என்று பொருள்படும். இத்தலம் அனுமார் வழிபட்ட சிறப்புடையது என்றும், அதனால் இது இப்பெயர் பெற்றது என்றும் கூறப்படுகிறது. ஆண்டில் ஒரு குறிப்பிட்ட நாளில் இந்தக் கோயிலில் பூசை முதலியன முடித்துக்கொண்டு, பூசை செய்வோர் வந்துவிடுவர் என்றும், அதன் பின்னர் எங்கிருந்தோ சில குரங்குகள் இங்கு வந்து கருவறை வரையிற் சென்று வழிபடும் பாங்கில் இயங்கிப் பின்னர்ச் செல்லும் என்றும் ஒரு செவிவழிச் செய்தி கேட்கப்படுகிறது.
இங்குள்ள இறைவன் பெயர் குந்தளேசுவரர்; இறைவி பெயர் குந்தள நாயகி என்பனவாகும். திருநாவுக்கரசர் இங்கு வந்து ஒரு பதிகம் பாடி இத்தல இறைவனைப் பரவியுள்ளார். இத் தலத்தினைக் குறிப்பிடும்போது ‘குரக்கினம் குதிகொளும் குரக்குக்கா என்று அப்பர் கூறியுள்ள கூற்று, குரங்குகள் குதித்து மகிழ்ந்தாடும் அத் தலத்தின் இயற்கையைச் சுட்டுவதோடு, குரக்குக்கா என்பதற்கு வழங்கும் செவிவழிச் செய்திக்கு அடிப்படை எனத் தகும் குறிப்பாகவும் விளங்குகிறது. இத் தலத்தினை அடைந்து வழிபடுவோர்க்கு வினைகள், பாபங்கள், அல்லல் போல்வன கெட்டகலும் என்பதனைப் பதிகப் பாடல்தோறும் அப்பரடிகள் குறிப்பிட்டுள்ளார். மரக்கொக்காமென வாய்விட்டலறி நீர் சரக்குக் காவித் திரிந்து அயராது என்னும் பகுதி, உலக வாதனையில் உழன்று திரியும் மக்களினத்தின் அவல நிலையை அழகுறக் காட்டி, அதற்கு மருந்தாவது குரக்குக்கா சென்றடைவதே என்று கூறியிருப்பது சிறப்பாக உள்ளது. (9/, /0/7. L/)
திருக்குரங்கனின் முட்டம்
இது தொண்டை நாட்டுத் தலங்களுள் ஆறாம் சிவத்தலமாகும். இத் தலத்திற்குச் சம்பந்தர் பதிகம் ஒன்று, முதல் திருமுறையில் தக்கராகப் பண்ணில் அமைந்துள்ளது. இவ்வூர் காஞ்சிபுரத்திலிருந்து தெற்கே 9 கி. மீ தொலைவிலிருக்கிறது. இது பாலாற்றின் தென் கரையில் அமைந்தது. இத் தலத்தை வாலி, அணில், காகம் வழிபட்டுப் பேறு பெற்றன. அதனாற்றான் இவ்வூருக்கே குரங்கணில் முட்டம் என்ற பெயர் ஏற்படலாயிற்று. (முட்டம் காக்கை) ஆலய வாயிலில் குரங்கு, அணில், காகத்தின் உருவங்கள் செதுக்கப்பட்டுள்ளன. இறைவன் பெயர் வாலீசுவரர்; இறைவி பெயர் இறையார்வளையம்மை; என்பனவாம்.
'இறையனார் வளையாளை ஒர் பாகத்தடக்கி என்பது சம்பந்தர்
298

திருவாக்கு. இங்குள்ள தீர்த்தமும் வாலி தீர்த்தம்; காக்கை மடு என்று மற்றொரு தீர்த்தமும் உண்டு. கோயில் மிகப்பாழடைந்த நிலையிலிருந்து அண்மையில் பழுதுபார்க்கப்பட்டது. அதன்பின் குடமுழுக்குச் செய்யாமலேயிருந்து பின்னர் அதுவும் நிறைவேறிற்று. பல்லவர் காலத்தைச் சேர்ந்த பழமையான குடை கோயில்,
மாமண்டூர் ஏரி, மாமண்டூர் மலை இக்கோயில் அருகிலேயே உள்ளன. அருகிலுள்ள பெரிய ஊர் தூசி என்பதாகும். இக் கோயிலில் 6 கல்வெட்டுகளுள்ளன. கலியூர்க் கோட்டத்தில் எரிசில் நாட்டில் மூவேந்துார்ப் பற்றில் பல்லவ புரத்திலுள்ள குரங்கணில் முட்டம் என இவ்வூரைக் கல்வெட்டுக் குறிப்பிடுகிறது. சோழர் கல்வெட்டு, விசயநகர்க் கல்வெட்டு, இராட்டிரகூட கன்னரதேவன் கல்வெட்டு உள்ளன. கல்வெட்டுகளில் திருக்குரங்கணில் முட்டமுடைய நாயனார், கொய்யாமலர் சூடுவார், கல்மடை காத்தாள்வார் என்று இறைவன் பெயர்கள் காணப்பெறுகின்றன. இவ்வூருக்குப் பழைய பெயர் பல்லவபுரம் என்பதும் தெரிகிறது. வழிபாட்டுக்காக நிலம் தானமளித்தல், பலநிவந்தங்கள் விடல் முதலிய பல செய்திகள் இக் கல்வெட்டுகளிலிருந்து தெரிகின்றன.
"விழிநீர் மழுவாட் படை யண்ணல் விளங்கும் கழுநீர் குவளைமலர்க்கயல் பாயும் கொழுநீர் வயல் குழ்ந்த குரங்கனில் முட்டம் தொழு நீர்மையர் தீதுறு துன்பமிலரே”
என்பது போன்ற பாடல்கள் பல இத்தலத்தை வழிபடுவதால் ஏற்படும் பயன்பற்றிக் குறிப்பிடுகின்றன. இரா. ச)
திருக் குருகாவூர்
இது சோழ நாட்டிலுள்ள தேவாரப் பாடல்பெற்ற தலங்களுள் ஒன்று. சீர்காழித் தலத்திற்குக் கிழக்கே 6. கி. மீ. தொலைவிலுள்ள இத் தலம் இக் காலத்தில் திருக்கடவூர் என்று வழங்கப்படுகிறது. இத் தலத்திறைவனைத் திருஞான சம்பந்தரும், சுந்தரமூர்த்தி நாயனாரும் பதிகங்கள் பாடிப் பரவியுள்ளனர். இங்கு சுந்தரர் தம் அடியாரோடு வந்தபோது, இறைவன் அவர்களுக்கு உணவளித்தார் என்று கூறுகின்றனர். இத் தலத்திலுள்ள கோயிலின் பெயர் வெள்ளடை என்பதாகும். இறைவன் பெயர் வெள்ளடையீசுவரர், இறைவி பெயர் காவியங் கண்ணம்மை, தீர்த்தம் அளிக்கும் போது பால் நிறமாக மாறுவதாகக் கூறப்படுகிறது. சுந்தரர் தம் தேவாரத்தில் வெள்ளடைக் கோயிலிலுள்ள இறைவனை வெள்ளடை என்றே குறிப்பிட்டுப் போற்றியுள்ளார். பண்ணிடைத் தமிழ் ஒப்பாய், பழத்தினில் சுவை ஒப்பாய், கண்ணிடை மணி ஒப்பாய் என்று குறிப்பிடப்படுபவர் குருகாவூர் வெள்ளடையேயாவார் என்று சுந்தரர் பாடியுள்ளார். (g2/, MOIT. LV.)
இந்துக்கலைக்களஞ்சியம்

Page 365
திருக் குருக்கர்
திருவைகுந்தத்திலிருந்து திருச்செந்தூர் செல்லும் வழியில் சுமார் மூன்று கி. மீ. தொலைவில் உள்ளது இத்தலம். திருமால் தாம் உறைவதற்காக தேர்ந்தெடுத்த இத் தலத்தில் தம்மை வழிபடுமாறு பிரம்ம தேவரிடம் கூறினார். பிரம்மன் தம் குருவாக நின்ற திருமாலை இத்தலத்தில் வழிபட்டதால் இத்தலம் ஒரு காலத்தில் குரு ஊர் என்ற பெயர் பெற்று நாளடைவில் குருகூர் என மருவியது. நம்மாழ்வார் இத்தலத்தில் அவதாரம் செய்த பின்னர் ஆழ்வார் திருநகரி என்ற பெயர் பெற்றது.
நம்மாழ்வார் நவ திருப்பதிகளுள் முதன்மையானது ஆழ்வார் திருநகரி. தென் திருப்பேரை, திருக்கோளூர் ஆகியன தாமிரவருணியின் வடகரையில் அமைந்தவை. திருவைகுந்தம், வரகுணமங்கை, தொலைவிலி மங்கலத்து இரட்டைத் திருப்பதிகள் புளியங்குடி இவ்வைந்தும் தென்கரைத் தலங்கள்.
திருக்கண்ணபுரத்தை திரு அரங்கத்து கீழை வீடு எனக் கூறுவர். அதுபோன்று ஆழ்வார் திருநகரியையும் திருவரங்கத்தின் தென்வீடு எனப் போற்றலாம். இத் தலத்தின் நாயகன் ஆதிநாதர் என்றாலும் அவரைப் போற்றி வந்த நம்மாழ்வாருக்கு இத்தலத்தில் சிறப்பு அதிகம். இந்நகரில் நம்மாழ்வாரின் பூதவுடல் பள்ளிப்படுத்தப்பட்டு ஒரு கோயில் எழுப்பப் பெற்றது.
திருவரங்கம் பூலோக வைகுந்தம்; திருநகரி பரமபதத்தின் எல்லை; நம்மாழ்வாரின் மெய்யான சீடர் மதுரகவியாழ்வர். அவர் தமது குருவான நம்மாழ்வாரை மட்டும் பாடியுள்ளார். அவரது கண்ணி நுண் சிறுதாம்பு எனத் தொடங்கும் பாசுரங்களை நம்மாழ்வாரின் திருவாய் மொழியை இசைப்பதற்கு முன் பாடுதல் மரபு. அவை குரு தோத்திரமாக அமைந்தவை.
'நாவினால் நவின்று இன்பம் எய்தினேன் மேவினேன் அவன் பொன்னடி மெய்மையே தேவு மற்றறியேன் குருகூர் நம்பி பாவின் இன்னிசை பாடித் திரிவனே'
(திவ்விய பிரபந்தம் 938) இது அவர் பாடிய பாசுரங்களில் ஒன்று.
தாமிரபரணியாற்றின் வடகரையில் ஒரு மடத்தில் ஒரு யோகி வாழ்ந்து வந்தார். அவர் மடத்தில் நாய் ஒன்று வளர்ந்து வந்தது. அந்த நாய் நாள்தோறும் ஆற்றின் அக்கரைக்குச் சென்று ஆழ்வார் திருநகரி திருவீதிகளில் எறியப்படும் உணவை உண்டு மீண்டும் யோகியின் ஆச்சிரமத்திற்குத் திரும்பிவரும் வழக்கத்தைக் கொண்டிருந்தது. ஒருநாள் அந்த ஆழ்வார் திருநகரிக்குச் சென்று எச்சில் உணவை உண்டு மீண்ட நாய் ஆற்று வெள்ளத்தில் அகப்பட்டு நீரில் மூழ்கி இறந்தது. அந்த நாய் பேரொளி வடிவம் எய்தி மேலுலகம் சென்றதென திருகுருகூர் மான்மியம் என்னும் நூல் கூறுகின்றது. ஆழ்வார் திருநகர்த் திருத்தலத்தில் ஆதிநாதரை வழிபடுபவர் ஒவ்வொருவரும் விரும்பும் பிறவிப்பயனைப் பெறுவர் என கூறப்படுகின்றது.
இந்துக்கலைக்களஞ்சியம்

திருக்குருகூரில் லிங்க கோயில்கள் ஒன்பது இருந்ததாக கூறுகின்றார்கள். இவை நவலிங்கபுரம் என வழங்கி வந்தன என்பர்.
'இலிங்கத்திட்ட புராணத் திரும்
சமணரும் சாக்கியரும்
வலிந்து வாது செய்வீர்களும்
மற்றும் நும்தெய்வமும்”
என்ற ஆழ்வாரின் பாடல் மூலம் திருகுருகூரிற் சைவர்கள் சமணர்கள், சாக்கியர்கள் வாழ்ந்து வந்தனர் என்பதனை அறியலாம்.
"விளம்பும் ஆறு சமயமும் அவை ஆகியும் மற்றும் தன்பால்
அளந்து காண்டற்கு அரியன்
ஆகிய ஆதிபிரான் தத
என்ற ஆழ்வார் பாசுரத்தின்படி பெருமாளுக்கு இன்றும் ஆதிநாதர் என்றே பெயர் வழங்குகின்றது.
39 Tuឆ្នាំ
அளவிற் பெரிய ஆதிநாதரின் திருக்கோயில் நீண்டுயர்ந்த மதில்களையுடையது. கிழக்கில் இராஜகோபுரம் உள்ளது. கோயிலுக்கு முன் கல்லினால் பந்தல் மண்டபம் ஒன்றுள்ளது. அதை ஒட்டியே பிரதான கோபுர வாயில் உள்ளது. வாயிலில் நான்கு நிலை கொண்ட கோபுரமாக அது அமைகின்றது. மாடவீதிகளில் திருவேங்கடத்தான், அரங்கநாதர், ஆண்டாள், மணவாள மாமுனிகள் ஆகியோர் சந்நிதிகள் இருக்கின்றன. உடையவர் சந்நிதி மேற்கே அமைந்துள்ளது.
மூலவர் - ஆதிநாதர்
தாயார் - ஆதிநாயகி
உற்சவர் பொலிந்து நின்ற பிரான் தலமரம் - உறங்காப்புளி
தீர்த்தம் தாமிரவருணி
விமானம் சோவிந்த விமானம்
சிறப்பு வழிபாடு- பூரீ நம்மாழ்வார்
பிரதான வாயிலைக் கடந்ததும் உள்ளே கற்பந்தல் மண்டபம் இருக்கிறது. அதன் இரு புறங்களிலும் கண்ணாடி மண்டபம், வாகன மண்டபம், வசந்த மண்டபம், நந்தவனம், கோயில் காரியாலயங்கள் ஆகியன அமைந்துள்ளன. வடக்கே வைகுந்த வாயிலும் திருமாமணி மண்டபமும் உள. தென்கிழக்கு மூலையில் கருடாழ்வார் இருக்கின்றார். அவருடைய இருபக்கங்களிலும் யாளி உருவங்கள் காணப்படுகின்றன. இந்தப் பிராகாரத்தைத் தாண்டி உள்ளே சென்றால் ஆழ்வார் பெருமாள் சந்நிதிகளுக்கு செல்ல முடியும். மகா மண்டபம், அர்த்த மண்டபம் இவற்றைத் தாண்டி கர்ப்பகிருகத்தில் ஆதிநாதர் உபய நாச்சியார்களுடன் நின்ற திருக்கோலத்தில் கிழக்கு நோக்கிய வண்ணம் காட்சியளிக்கின்றார். மூலவரும் தேவியரும் சுதையாலான திருஉருவச் சிலைகள், திருமுன்பில் உற்சவர் பொலிந்து நின்ற பிரான் உபய நாச்சியார்களுடன் காட்சி தருகின்றார்.
299

Page 366
பெருமாள் சந்நிதிக்குப் பின்னால் இரண்டு புறங்களிலும் இரண்டு நாச்சியார்களதும் கோயில்கள் தனித்தனியாக இருக்கின்றன. பகல் பத்து இராப்பத்து உற்சவம் நடைபெறும் மண்டபங்களும் மடைப் பள்ளிகளும் அந்தப் பிராகாரத்திலேயே இருக்கின்றன.
வடக்குத் திருச்சுற்றின் கீழ்ப்புறம் ஆதிசேடன் அவதாரமாகக் கருதப்படும் புளியமரம் உள்ளது. உறங்காப்புளி என்பர்; தலமரம் காய்த்தாலும் பழுக்காது. அதனுடைய கிளைகளும் மண்டபக் கூரையின் மீது படர்ந்துள்ளன. படிக்கட்டுகளின் வழியாக மேலேறிச் சென்று பார்க்கலாம். இப் புளிய மரத்தின் அடியிலேயே நம்மாழ்வார் பதினாறு ஆண்டுகள் அமர்ந்து பேசா நோன்பு ஏற்று தவநிலை இருந்தார். அவர் இம் மரத்தினடியிலேயே அமர்ந்து திருவாய்மொழி முதலான பிரபந்தங்களை இயற்றினார். இங்கு நம்மாழ்வார் பூத உடல் பள்ளிபடுத்தப்பட்டு அதன் மேல் சிற்றாலயம் எழுப்பப்பட்டுள்ளது. கோயிலின் முன் பலிபீடம், கொடிமரம் உள்ளன. நம்மாழ்வார் தட்சிணா மூர்த்தி போன்று முத்திரை காட்டி ஞானகுருவாகக் காட்சியளிக்கின்றார். அவரது பீடத்தைச் சுற்றியுள்ள சுவர்களின் மேல் 36 வைணவ திருப்பதிகளின் எம்பிரான்களின் திருஉருவங்களும் கீழ் வரிசையில் ஆழ்வார்களின் திருஉருவங்களும் அவற்றின் கீழே யானையின் உருவங்களும் காணப்படுகின்றன.
இக்கோயிலில் ஆண்டு முழுவதும் பல விழாக்கள் கொண்டாடப்படுகின்றன. சித்திரை உத்திர நட்சத்திரத்தில் தீர்த்த வாரியுடன் முடியும் பெருவிழா, வைகாசியில் நம்மாழ்வார் அவதாரத் திருவிழா, நவதிருப்பதித் திருவிழா, ஆணியில் வசந்தப்பெருவிழா, ஆடியில் தெப்போற்சவம், நவராத்திரி, நம்மாழ்வார் பரிவேட்டை, மார்கழி வைகுந்த ஏகாதசி, அரையர்சேவை, கார்த்திகை தீபம், பங்குனி உத்திர கல்யாணம் என்னும் திருவிழாக்கள் சிறப்பானவை. (്ക്ര. ബ്ര)
திருக்குருகைப் பிரான் பின்னான்
இவர் இராமானுசரின் ஆசாரியாரான பெரிய திருமலை நம்பியின் மகனாகத் தோன்றியவர். பெரிய திருமலை நம்பி தம் குமாரரான பிள்ளானை, அன்புப் புதல்வராக வைத்துக்கொள்ளும்படி இராமானுசரிடம் அளித்தார். அவரும் பிள்ளானிடம் மிக்க அன்பு கொண்டவராய், தமக்கு அவரை ஞான புத்திரராகக் கொண்டு அவரைத் திருவாய்மொழிக்கு ஆறாயிரப்படி வியாக்கியானம் செய்யும்படி நியமித்தார். நம்மாழ்வாருக்கும், தமது ஆசாரியாரான திருக்கோட்டியூர் நம்பிக்கும் திருநாமமான 'திருக்குருகைப் பிரான்’ என்னும் திருநாமத்தை அவருக்கு இட்டு திருக்குருகைப் பிரான் பிள்ளான்' என்று அவரை அழைத்து, அவரருளிய ஆறாயிரப்படி வியாக்கியானத்தையும் அரங்கேற்றி, ஆளவந்தாரின் மூன்றாம் உள்ளக் கிடக்கையை நிறைவேற்றினார் எத்திராசர் ஆகிய இராமானுசர், திருவாய்மொழியைக் காத்த குணவாளர்களில் பிள்ளானே முதலாமவராவார். விட்டுணுபுராணக் கணக்கிலே
300

ஆறாயிரம் கிரந்தங்கள் உள்ளனவாகத் திருவாய்மொழிக்கு இவரருளிய வியாக்கியானம், ஒன்பதினாயிரப்படி தொடக்கமாக முப்பத்தாறாயிரப்படி ஈறாக உள்ள திருவாய்மொழி வியாக்கியானங்களுக்கு வழிகாட்டியாயமைந்துள்ளது.
திருவெள்ளறையில் தோன்றிய 'எங்களாழ்வான்' என்னும் ஆசாரியார், உடையவர் காலத்திற்குப் பின் பிள்ளானையே ஆசாரியராக அடைந்து, திவ்வியப் பிரபந்தங்களுக்குப் பொருள் கேட்டறிந்தார். நாலாயிரத் திவ்வியப் பிரபந்தவியாக்கியானங்களில் பிள்ளானுடைய ஜதிக நிருவாகங்கள் பல இடம்பெறுகின்றன. வார்த்தா மாலை' என்ற கிரந்தத்தில் பிள்ளானின் சொற்கள் கையாளப்பட்டுள்ளன. எடுத்துக்காட்டாகச் சக்கரவர்த்தியைப் பார்க்கச் செல்லும்போது வெறுங்கையோடு செல்லலாகாது என்று ஒர் எலுமிச்சம்பழத்தை எடுத்துச் சென்று கொடுத்து, அவனுடைய வன்மையாலே இராச்சியத்தைப் பரிசாகப் பெறுவது போன்றது துவயம் என்கிற மந்திரத்தை உச்சரித்து எம் பெருமானிடம் மோட்சத்தைப் பெறுவது என்று பிள்ளான் பணிப்பர். (எஸ். கி)
திருக்குருகைப் பெருமாள் கவிராயர்
இத் தமிழ்ப் புலவரின் இயற்பெயர் சடையன் என்பதாகும். காலம் கி. பி. 16 ஆம் நூற்றாண்டாகும். இவர் பிறந்த ஊர் ஆழ்வார் திருநகரி. இவ்வூர் திருக்குருகை என்றும் சொல்லப் பெறும். வேளாள குல வைணவரான இவருக்கும் இவர் தந்தையாருக்கும் பெயரால் ஒற்றுமை காணப்படுகிறது. திருக்குருகையில் உள்ள நம்மாழ்வாரின் ஆத்தானக் கவிஞராதலின் இவருக்கு இப் பெயர் ஏற்பட்டது.
இக் கவிராயர் மாறன் அலங்காரம் என்னும் பெயரால் ஓர் இலக்கண நூல் எழுதியுள்ளார். மாறன் கோவை என்ற ஒரு கோவை நூலையும் ஆக்கினார். அது அகப்பொருள் இலக்கணம் அமைந்த இலக்கியமாகும். இவர் எழுதிய மற்றொரு நூலான திருக்குருகாமான்மியம் தலப்பெருமை கூறுவதாகும். இவர் எழுதிய வேறு நூல்கள், நம் பெருமாள் மும்மணிக்கோவை, மாறன் பாப்பாவினம், மாறன் கிளவி மணிமாலை, மாறனகப் பொருளும் நூற்றெட்டுத் திருப்பதிக் கோவை என்பனவாம்.
நம் மாழ்வாரின் மாற்றுப் பெயரான மாறன்என்ற பெயரில் இயற்றப் பெற்ற அகப்பொருள் நூல், களவு, கற்பு, வரைவு என்னும் முப்பெரும் பகுப்புடையது. அது 106 நூற்பாக்களைக் கொண்டது. திருவரங்கம் முதல் திருமாலின் திருப்பதிகளாக வைத்தெண்ணப்படுவன 108 ஊர்கள். இத் திருப்பதிகள் மீது பாடப் பெற்ற அகப்பொருள் இலக்கியத்தின் ஊடே நம்மாழ்வார் பற்றிய பாடல்களும் இடம் பெற்றுள.மாறன் பாப்பாவினம் என்ற நூலில் மரபிலக்கணச் செய்யுட்களுடன் புதிய செய்யுட்களையும் இயற்றி இணைத்துள்ளார். தொல்காப்பியர் கூறும் பரிபாடல் இலக்கணப்படி இவர் ஐந்து பரிபாடல்கள் இயற்றியுள்ளார். இவரது மாறனலங்காரத்தில் உல்லேகம், சங்ககதி போன்ற சிறப்பு அணிகள் இடம்பெற்றுள. இரத பந்தம் போன்ற சித்திரக் கவிகளுக்கும் இலக்கணம் கூறியுள்ளார். (zി. മിക്ര)
இந்துக்கலைக்களஞ்சியம்

Page 367
திருக்குணங்தை
சீரீவைகுண்டத்திலிருந்து வடகிழக்கில் 11. கி. மீ. தொலைவில் உள்ள வைணவத்தலம் இது. இங்கு எம்பெருமான் மாயக் கூத்தன் என்ற திருநாமத்துடன் குளந்தை வல்லி நாச்சியாரோடு ஆனந்த நிலைய விமானத்தில் நின்ற திருக்கோலத்தில் காட்சி அளிக்கிறான். எம் பெருமானுக்கருகில் கருடனும் உற்சவ மூர்த்தியாக எழுந்தருளியிருக்கிறான். இங்கு பிருகசுபதிக்குக் காட்சி கொடுத்தார். பெரிய ஏரியிருப்பதால் இத் தலத்திற்குப் பெருங்குளம் என்ற பெயருமுண்டு. இத் தலத்து எம்பெருமான் அசுமசாரன் என்ற அசுரனோடு போர் செய்து அவன் மேல் நாட்டியமாடி அவனைக் கொன்றபடியால் எம்பெருமானுக்கு மாயக்கூத்தன்' என்ற திருநாமம் உண்டானதாகப் புராணம் கூறுகிறது. இத் தலத்தை மங்களா சாசனம் செய்தருளிய நம்மாழ்வார் தாமானநிலை தவிர்ந்து பெண்மை நிலையெய்தி, திருக்குளந்தை எம்பெருமான் கண்ணனாயிருந்து அருளிச் செய்த கீதையைப் படிப்பதாலுண்டான மனக் களிப்பு ஒருவன் மனத்தில் இல்லையானால் அவன் மனக் கவலை தீரப் பெற்று உய்ய மாட்டான்' என்று பிள்ளைப் பெருமாளய்யங்கார், இத் தலத்து எம் பெருமானைப் பாடியுள்ளார். (எஸ். கி)
திருக்குறட் குமரேச வெண்பா
திருக்குறளின் கருத்துகளுக்குப் பொருத்தமான சரிதங்களை இராமாயணம், பாரதம் முதலிய இதிகாசங்களிலும், காந்தம், பாகவதம் முதலிய புராணங்களிலும், சிந்தாமணி, சிலப்பதிகாரம் முதலிய காப்பியங்களிலும், பத்துப்பாட்டு, எட்டுத்தொகை முதலிய சங்க நூல்களினும், வேறுபல நூல்களிலும் இருந்து தெரிந்து எடுத்துத் தமது குல தெய்வமாகிய குமரேசனது முன்னிலையில் விண்ணப்பித்து அவற்றிற்கு விடைகூறும் முறைமையில் குறள்களை உதாரணமாக எடுத்துக் காட்டி, இந்நூல் எழுந்துள்ளதாக இதன் ஆசிரியர் கவிராச பண்டிதர் செகவீர பாண்டியனார் விளக்குகிறார். எவ்வகையினாலாவது திருக்குறளின் பயனை எல்லோரும் பெற்று இன்புற வேண்டும் என்பதே என் வேட்கை என அவர் நூலின் நோக்கத்தையும் விளக்கியுள்ளார். அதனாலேயே இவ்வினாவிடை வெண்பா முறை இலக்கியப் படைப்பை இந் நூலாசிரியர் மேற்கொண்டார். கடந்த நூற்றாண்டுகளில் சோமேச வெண்பா, அரங்கேச வெண்பா முதலானவை திருக்குறளைப் பின்னணியாகக் கொண்டு எழுந்தன. அவற்றை முன்னோடிகளாகக் கொண்டுபுதுப்பழமையாய் எழுந்தது திருக்குறட் குமரேச வெண்பா,
நேரிசை வெண்பாவின் முதலிரண்டடிகள் ஒரு கதையைச் சுட்டி வினா ஒன்று எழுப்பப் பின்னிரண்டடிகள் குறட்பாவை விடையாகத் தரும் முறையில் 1330 வெண்பாக்களால் ஆகியது இந் நூல். காப்பு அவையடக்கச் செய்யுள்கள் வேறு இரண்டுண்டு. இவ் வெண்பாக்களுக்கு உரையும் எழுதி 4602 பக்கங்களில் பதினொரு தொகுதிகளாக 1924 முதல் 1938 வரை அச்சியற்றி ஆசிரியர் வெளியிட்டுள்ளார்.
இந்துக்கலைக்களஞ்சியம்

ஆசிரியர் செகவீர பாண்டியனார் திருவள்ளுவர் மீது பற்றுக் கொண்ட சைவப் பெரும்புலவர். சங்க இலக்கியங்கள், சைவ இலக்கியங்கள், புராணங்கள், சிற்றிலக்கியங்கள், காப்பியங்கள் ஆகியவற்றில் பயிற்சி மிக்க புலவரும் ஆவார் இவர் குமரேச வெண்பா முழுவதும் இந் நூல்களிலிருந்து எடுத்த மேற்கோள்கள் மலிந்து கிடக்கின்றன. நூலின் உரையும் எதுகை மோனை விரவிய புலமை நடையால் இயன்றுள்ளது.
குமரேச வெண்பா குறளுக்குத் தரும் விளக்கம் எல்லாம் பரிமேலழகர் உரையைப் பின்பற்றியே அமைந்துள்ளன. நூல் காட்டும் சரிதங்கள், முப்பாற் குறளை வைதிகச் சைவ சமய நூலாகவே கொண்டு காட்டுகின்றன. வரலாற்றுணர்வும் ஆராய்ச்சி நெறியும் சிறிதும் இல்லா நூலாக இது அமைந்துள்ளது. வள்ளுவர் உள்ளம் இந் நூலுக்கு நெடுந் தொலைவில் உள்ளது.
நூலின் போக்கிற்கு ஒர் எடுத்துக் காட்டு:
பூவுலகோடு எங்கும் ஏன் பூண்டது உமைகேள்வன், கோமு கிழ்த்த தன்மை குமரேசா? - மேவும் அகர முதல எழுத்தெல்லாம்
ஆதி பகவன் முதற்றே உலகு (தி மு.)
திருக்குறள்
இந்நூலை அறிமுகம் செய்து விளக்கியும் ஆராய்ந்தும் பலநூறு நூல்களும் கட்டுரைகளும் தமிழில் வெளிவந்துள்ளன. எனினும் இந்நூலில் அமைப்பியலில் - குறிப்பாக பா, அதிகாரம், இயல், பால் அகியவற்றின் வைப்புமுறைகளில் வள்ளுவரின் பங்கு யாது? தொகுப்பாளர், உரைகாரர் ஆகியோரின் பங்குகள் யாவை? என்பன இற்றைவரை முழுநிலையில் ஆராய்ந்து தெரியப் படவில்லை. எனவே இந்நூல் வள்ளுவரது ஆக்கம் என்ற பொதுக்கருத்தின் அடிப்படையிலே இந்நூல் தொடர்பான சிந்தனைகள் இங்கு முன்வைக்கப்படுகின்றன.
உள்ளடக்கமும் அமைப்பும்
ஒரு பண்பட்ட - உயர்ந்த - வாழ்வியைலைக் கட்டியமைத்துக் காட்டும் முயற்சியாகக் குறள் அமைந்துள்ளது. தனிமனித நிலை, குடும்ப நிலை உறவினர் நிலை, சமூக உறுப்பினர்கள் நிலை, நாட்டுக் குடிமக்கள் நிலை ஆகிய தளங்களில் ஒருவர் பேணிக் கொள்ள வேண்டிய பண்புகள்,
ஆற்றவேண்டிய கடமைகள் பெறவேண்டிய அநுபவங்கள் ஆகிய _-—
பல்வேறு கூறுகளையும் ஒருங்குதிரட்டி ஒழுங்கமைத்துள்ளதன் மூலம் ஒரு முழுமையான வாழ்வியலை அது முன்வைத்துள்ளது.
அறம், பொருள், காமம் என முப்பாற் பிரிவுடைய அந்நூலில் முதலாவதான அறத்துப்பாலில் சிறப்பாக தனிமனிதநிலை, குடும்ப உறவினர் நிலை சார்ந்த அடிப்படைப் பண்புகள், கடமைகள் என்பன பேசப்பட்டுள்ளன. இரண்டாவதான பொருட்பாலிலே சமூகப் பொது வாழ்வின் செயன்முறைகள் - குறிப்பாக நாட்டின் அரசியல், நிர்வாகம், பொருளியல்,
3öf

Page 368
குடிமக்கட்பண்பு என்பன முதன்மையிடம் பெறுகின்றன. இறுதி இயலான காமத்துப்பால் குடும்பவாழ்வின் ஒரு கூறாகிய ஆண் - பெண் உறவு நிலை - திருமணத்துக்கு முன்னும் பின்னுமான காதல் நிலை - பற்றிப் பேசுவது.
மேற்குறித்தவை தவிர கடவுள், மழை, ஊழ், கல்வி, மருந்து முதலியன தொடர்பாகவும் குறள் சிந்தனைகளை முன் வைத்துள்ளது.
அடிப்படைகள்
மேற்சுட்டியவாறு குறளில் முன்வைக்கப்பட்டுள்ள அனைத்து சிந்தனைகளுக்கும் அடிப்படைகளாக அமைந்தவை அன்பு, அறம் ஆகிய இரண்டுமாகும். இவற்றின் அடிப்படையிலமைந்த செயல்திறனும் ஒழுக்கநெறிகளுமே குறளிற் பரந்து செறிந்து காணப்படும் விழுமியங்களாகும்.
அன்பு, அறம் என்பவற்றைப் பற்றிய செய்திகளைக் குறட்பரப்பிலே பல இடங்களிற் காண முடியுமாயினும் அவற்றை வலியுறுத்தும் வகையில் தனித்தனி அதிகாரங்களும் உள்ளன என்பது நோக்கத்தக்கது. அன்புடைமை என்ற தலைப்பில் அமைந்த அதிகாரம் அன்பின் பெருமை, இன்றியமையாமை முதலியவற்றைப் பேசுகிறது. அன்பு என்றால் என்ன என்பதற்கு அது நேரடியாக வரைவிலக்கணங்கூறவில்லை; ஆனால் அன்பின் அடிப்படையான உணர்வுநிலையை உணர்த்தியுள்ளது.
அதனை,
அன்பிலார் எல்லாந் தமக்குரியர் அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு.
என்ற குறளில் நோக்கலாம். ஒருவர் தம்மை மற்றவர்களுக்காக பயன்படுத்தும் நோக்கிற்கு அடிப்படையான உணர்வுநிலை அது என்பது இக்குறளிற் புலப்படுத்தப்பட்டுள்ளது. அன்பின் இன்றிய
60) LOLLUT 6ODLO6OLLU,
அன்பின் வழிய துயிர்நிலை யஃதிலார்க் கென்புதோல் போர்த்த உடம்பு
எனக்குறள் சுட்டும். அன்பற்றாரது உடல் வெறும் சடப்பொருளே என்பது இதன் தொனிப்பொருளாகும். இவ்வாறு அன்புடமை அதிகாரத்தில் சுட்டியுணர்த்தப்பட்ட அன்பின் பன்முக விளக்கங்களாகவே இல்வாழ்க்கை, இனியவை கூறல், அருளுடைமை, கொல்லாமை, செங்கோன்மை, கண்ணோட்டம், நட்பு சான்றாண்மை முதலிய பல அதிகாரங்கள் அமைதுள்ளன என்பது நோக்குதற்குரியது. காமத்துப்பால் முழுமையும் அன்புநிலை பேசுவதே.
அறன்வலியுறுத்தல் என்ற அதிகாரத்திலே அறம் என்பதற் கான சுருக்கமான வரைவிலக்கணம் பின்வருமாறு அமைகிறது.
மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறள் ஆகுல நீர பிற
322

மனதில் மாசற்ற-அழுக்கற்ற-நிலை அறம் என இது சுட்டக் காணலாம். இங்கே மாசு என்பது சுயநலம், பொய்ம்மை, என்பவற்றைக் குறித்து நிற்பது தெளிவு. எனவே அறம் என்பது பொதுநலத்தையும் உண்மையையும் சார்ந்த நிலை என்பது உயர்த்துணரப்படும். இந்நிலையே இன்பத்துக்கு ஒரே அடிப்படை என்பதை,
அறத்தான் வருவதே இன்பம் மற்றெல்லாம் புறத்த புகழும் இல.
என்ற குறள் அறிவுறுத்துகிறது. இந்நூலின் ஒரு பகுதி அறத்துப்பால் என வழங்கப்படும்நிலை இதில் அறம் பெற்றுள்ள முக்கியத்துவத்தை உணர்த்துவதாகும். இந்நூல் முழுமைக்குமே 'அறம்' என ஒரு பெயரும் வழக்கில் உள்ளது என அறிஞர் சுட்டுவர்.
இவ்வாறு குறள் முழுவதையும் தாங்கிநிற்கும் அன்பு, அறம் ஆகியவற்றின் ஊற்றுக்கண்கள் எவை என்பது எங்கள் முன் நிற்கும் முக்கிய வினா. குறளுக்கு முற்பட்ட இந்தியச் சிந்தனை வரலாற்றிலே இவற்றின் மூலக்கூறுகளை அவதானிக்க முடியும். குறிப்பாக வேதமரபிலே,
உண்மை பேசுக.
அறத்தைக் கடைப்பிடிக்குக. விருந்தினரைத் தெய்வமாகப் போற்றுக
முதலியனவாக அறச்சிந்தனைகள் முன் வைக்கப்பட்டுள்ளமை முன்னரே நோக்கப்பட்டுள்ளது. தமிழிலே அறம் என்பற்கு ஒரளவு ஒத்த பொருளிலே வடமொழியில் தர்ம’ என்ற சொல் வழங்கி வருகின்றது என்பது இங்கு சுட்டிக்காட்டப்பட வேண்டியதாகிறது.
“தருமத்தை அறத்தினின்று சிறிதே வேறுபடுத்திச் சொல்லலாம். அறத்தில் தருமம் அடங்கும். தருமத்தில் அறம் அடங்காது. அறம் என்ற நீண்ட இரேகையின் தொடக்கப்புள்ளியிலிருக்கும் தருமம்.”
என ஈழத்துத் தமிழ் மூதறிஞர்களுள் ஒருவரான பண்டிதமணி சி.கணபதிப்பிள்ளை அவர்கள் முன் வைத்துள்ள கருத்து இத்தொடர்பில் நம் சிந்தனைக்குரியதாகும். அறத்தைவிட தருமம் பொருட்சுருக்கமுடையது என அவர் கருதுகிறார். இது தனி நிலை ஆய்வுக்குரிய பொருள் ஆகும்.
தர்ம’ என்ற வடமொழிச் சொல்லின் அடிச்சொல்லான த்ரு என்பது தாங்குதல், போஷித்தல், மேல்நிலைப்படுத்தல் ஆகிய பொருண்மைகளை உள்ளடக்கியதாகும். இந்த அடிப்படையில் உருவான தர்ம என்பது நீதி, நேர்மை, உரிமை, கடமை, ஒழுக்கம், வழக்கம், உண்மை, சமயநெறி, கட்டளைச் சட்டம் முதலிய பல பொருண்மைகளிற் பயில்வது. இருக்கு வேதத்திலே பயிலும் தர்மவான்’ என்ற சொல்லுக்கு (9:24). யாஸ்கரின் நிருக்தம்' என்ற சொற்பொருள்விளக்க நூல்
இந்துக்கலைக்களஞ்சியம்

Page 369
தாங்கிநிற்பவன்' எனப்பொருள் தரும் என்பது இத் தொடர்பில் சுட்டத்தக்கது.
வடமொழியில் வேதமரபைச் சார்ந்து எழுந்தனவாகிய தர்மசாத்திரங்கள் தருமத்தை இயமம், நியமம் என இருபெரு நிலைகளாக வகைப்படுத்திக் காட்டுவன.
இயமங்கள் எல்லார்க்கும் பொதுவான உயர்ந்த ஒழுக்கங்கள். அவை அஹிம்சை, சத்தியம், களவொழுக்கம், தூய்மை, புலனடக்கம், தானம், பொறுமை, தயை, சாந்தி என்பன. நியமங்கள் வருணாச்சிரம அடிப்படையில் உள்ளன. இவற்றை வருணாச்சிரமதருமம் என்பர் வருணம் மக்களைத் தொழிற்பாகுபாட்டின்படி பிரிப்பது. ஆச்சிரமம் தனிப்பட்ட மனிதனின் வாழ்க்கை நிலைகளைக் குறிக்கும்.
குறளுக்கு முற்பட்ட சிந்தனைகளிலே சமணம், பெளத்தம் ஆகியன அன்பு, ஒழுக்கம் என்பவை பற்றிச் சிந்தித்தவையாகும். இவை புலப்படுத்தும் அன்பு நிலையானது அஹிம்சை, ஜீவகாருண்யம் என்பனவாகச் சுட்டப்படுவன. வேதவேள் விமரபிலே நிகழ்ந்து வந்த உயிர்ப்பலிகளுக்கு எதிராக ஒலித்த இவர்களின் குரலுக்கு இவ்வாறான அன்புநிலையே முதன்மைக் காரணிகளிலொன்று என்பது நமது கவனத்துக்குரியது. சமணரின் தலையாய அணுகுமுறையாக
அஹிம்சை அமைந்துள்ளது.
“ சமணர் அதைனை அனுட்டிப்பதுபோல் வேறு யாருமே அனுட்டிப்பதில்லை. புத்தர் கூட ஊன் உண்பதை அனுமதித்ததாகக் கூறப்படுகிறது. சமணர் அதனை அறவே நீக்குவர். பிறவுயிருக்குத் தீங்கு செய்யாமை என்னும் விரதத்தைச் சமணர் அனுட்டிகும்போது தம்முயிருக்குத் தீங்கு செய்யும் எல்லைவரை சென்றுவிடுகின்றனர். ”
பெளத்தத்திலே நல்லொழுக்க நெறிகள் சிறப்பாகப் பேசப்பட்டுள்ளன. நற்காட்சி, நல்வாய்மை முதலியனவாக அது சுட்டியுள்ள எண்வகை நெறிகளும் கொலை, களவு, பொய், மது என்பவற்றை அது கடிந்தொதுக்கிய முறைமையும் இதனைத் தெளிவுறுத்துவன. பெளத்த அறநெறித் தொகுப்புகளான திரிபிடகங்களிலே, வாழ்க்கையிற் கடைப்பிடிக்க வேண்டிய நற்பண்புகள் விலக்கவேண்டிய தீயமுனைப்புகள் என்பன விரிவாக எடுத்துக் கூறப்பட்டுள்ளன. மேலே நோக்கப்பட்ட வேதமரபு, சமணம், பெளத்தம் என்பனசார்ந்த அன்பு-அறம் தொடர்பான சிந்தனைகளுக்கும் குறளின் அத்தகு சிந்தனைகளுக்கும் பொதுமைக்கூறுகள் உள. குறிப்பாக குறள் கூறும் இல்வாழ்க்கை, விருந்தோம்பல், வாய்மை முதலியவற்றை வேதமரபினைச் சார்ந்த அத்தகு செய்திகளுடன் தொடர்புபடுத்திப் பொதுமைகளை கண்டறிய முடியும். குறளின் கொல்லாமை, இன்னா செய்யாமை, ஒழுக்கம் சார்ந்த செய்திகள் என்பன சமண பெளத்த சிந்தனைகளுடன் மிகவும் ஒத்தநிலையில் உள்ளன. அவற்றுட் குறிப்பாக புலானுண்ணாமை என்ற அதிகாரம் குறளைச் சமணத்தின்பால்
இந்துக்கலைக்களஞ்சியம்

மிக நெருக்கமாகத் தொடர்புபடுத்தி நிற்பது. (புலாலுண்டலைப் பெளத்தம் கண்டிக் கவில்லை என்பது இங்கு நமது கவனத்துக்குரியது.)
பெளத்தத்தோடு குறளைத் தொடர்புபடுத்திச் சிந்திப்பதற்கு ஆதாரமாக அமையும் முக்கிய நூல் மேற்சுட்டிய திரிபிடங்களில் ஒன்றான சுத்தபிடக (சூத்திரபிடக)த்தின் ஒரு பகுதியான தம்மபதம் (அறநெறி) ஆகும். சுத்தபிடகம் கி.மு.477இல்-புத்தர் பரிநிர்வா ணமடைந்து ஏழு ஆண்டுகளின் பின் -ராஜகிருகம் நகரில் புத்தரின் மாணவ மரபினரால் தொகுக்கப்பட்டது என்பது ஆய்வாளர் தரும் செய்தி.மேற்படி தம்மபதம் நூலில் முன்வைக்கப்பட்ட அறம்சார் சிந்தனைகளும் அவற்றின் அமைப்பு முறையும் குறளின் சிந்தனைகளுடனும் அமைப்புடனும் பொதுமை கொண்டிருப்பதை அறிஞர் பலர் அவதானித்துள்ளனர்.
சிந்தனைப் பொதுமைக்குச் சான்றாக சிலவற்றை இங்கு நோக்கலாம்.
பகைபாவம் அச்சம் பழி என நான்கும் இகவாவாம் இல்லிறப்பான் கண் குறள் 146
பிறன்மனையாளை நோக்குகின்றவனுக்கு பின்வரும் நான்கு தீவினைகள் விளைகின்றன. அவை பாவம் உறங்காமைபழிச்சொல், துன்பம் தம்ம:309
தன்குற்றம் நீக்கிப் பிறர்குற்றம் காண்கிற்பின் என்குற்றம் ஆகும் இறைக்கு. குறள்: 436
முதலில் ஒருவர் தம்மை நல்வழி நிலைநிறுத்திக் கொள்ள
வேண்டும் பிறகுதான் மற்றையவர்க்கு எடுத்துரைக்க
வேண்டும்.இத்தகையவர் பழித்துக் கூறப்படமாட்டார்
தம்ம 158
செய்தக்க அல்ல செயக்கெடும் செய்தக்க செய்யாமையானும் கெடும். குறள்: 446 செய்யத்தக்கதைக் கைவிட்டும் செய்யத்தகாததைச் செய்தும், கட்டுக்கடங்காதுள்ள மதங்கொண்டவர்க்குக் குற்றங்கள் வளர்கின்றன. தம்ம. 292
குறளிலே சில அறக்கருத்துக்கள் உடன்பாட்டானும் எதிர்மறையானும் எடுத்துக் கூறப்படுவதை அவதானிக்கலாம். தனிக்குறளுக்குள் மட்டுமன்றி அதிகாரவைப்பு முறையிலும் இந்த உத்தி அமைந்துள்ளது. தனிக்குறளில் இவ்வுத்திமுறைக்குச் சான்றாக,
ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை இழுக்கத்தின் எய்துவர் எய்தாப் பழி குறள்:137
என்பதைக்காட்டலாம். கல்வி, கல்லாமை, செங்கோன்மை, கொடுங்கோன்மை முதலியன மேற்படி உடன்பாடு எதிர்மறை
303

Page 370
அதிகாரநிலைச்சான்றுகள். இவ்வாறு அடுத்தடுத்து உடன்பாடும் எதிர்மறையுமாக அறக்கருத்துக்களை முன்வைக்கும் முறைமை தம்மபதத்திலும் அமைந்துள்ளமையை பேராசிரியர் டாக்டர். வ.சுப. மாணிக்கம் அவர்கள் அவதானித்து எடுத்துக் காட்டியுள்ளார்.
கால அடிப்படையில் மேற்படி வேதமரபு, சமணம், பெளத்தம் என்பன குறளுக்கு முற்பட்டன என்று தெரிவதால் மேற்படி சிந்தனைகள் குறிளரின் தளங்களான அன்பு, அறம் என்பவற்றுக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பு செய்திருக்க வேண்டும் என ஊகிக்க இடமுண்டாகிறது. சிறப்பாக சமணமும் பெளத்தமும் குறளின் உருவாக்கத்திற்கு அதிகம் பயன்பட்டிருக்க வேண்டும் என ஆய்வாளர் கருதுவர். குறிப்பாக சமணத்தின் தொடர்பு அதிகம் வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலைத்தேயத்தவராக அறிஞர் அல்பர்ட் சுவைட்சர் அவர்கள் Indian Thought and Its Development என்ற நூலிலே (பக். 200-205), ‘சமண சங்கத்தின்பெருமையும் சமணரின் சிறப்புடைக் கொள்கையாகிய தருமமும் குறளில் முறையே நீத்தார் பெருமை, அறன்வலியுறுத்தல் ஆகிய அதிகாரங்களிற் கூறப்பட்டன. என்ற கருத்தை முன்வைத்துள்ளார். இத்தகு சான்றுகளைக் கருத்திற்கொண்டு குறளாசிரியரான வள்ளுவரைச் சமண சமயத்தவராகவே கருதும் நோக்கு ஆய்வுலகில் வலுவடைந்துள்ளது என்பது இத்தொடர்பில் நமது கவனத்துக்குரியது.
ஆயினும் சமணம் உட்பட எந்த சிந்தனையின் பங்கையும் நாம் வள்ளுவரிடத்தில் மிகைப்படுத்திக் காட்டுவது சாத்தி யமில்லை. குறள் எந்தச் சமயதத்துவங்களுக்குள்ளும் வரையறை செய்ய முடியாத உலகளாவிய பொது அறம்' என்பதை அறிஞருலகம் ஒப்புக் கொண்டுள்ளது.
"வள்ளுவர் உலக சமயத்தின் புறத்தோற்றத்தில் தம்மைப் பறிகொடுத்துவிடவில்லை. சமயவாதிகளின் தருக்கம் அவரை மயக்கிவிடவில்லை. வள்ளுவர் சமயங்களை நன்கு கற்றிருக்கிறார். சமய உண்மை வள்ளுவருக்கு விளங்கியிருக்றிது. வள்ளுவருக்கு BFLDLL 3FLD |JöF நெறியையும் கடந்து எவ்வளவோ ஆழமாகச் சென்றுவிட்டார்.”
என டாக்டர் ஆ. வேலுப்பிள்ளை அவர்கள் குறிப்பிட்டுள்ளமை இத்தொடர்பில் நமது கவனத்துக்குரியது.
சமணம், பெளத்தம் ஆகிய சமயதத்துவங்கள் வாழ்க்கையைத் துறவுதளத்தில் நின்று அணுகியவை. உயிர்க் கருணை, சில ஒழுக்கநெறிகள் என்ற அளவில் மட்டுமே அவை அன்பு, அறம் என்பவற்றை முன்வைத்தன. அனால் குறள் கூறும் அன்பு, அறம் என்பவை மேற்படி கூறுகளையும் உள்ளடக்கிய விரிவான பரிமாணம் கொண்டு, காதல், குடும்ப உறவு, சமூக உறவு ஆகிய நிலைகளை நோக்கி விரிந்து செல்வன. காமத்துப்பால் காட்டும் அகநிலை அன்பும் அறத்துப்பாலின்
3ó4
 

இல்லறவியலிற் புலப்படுத்தப்படும் வாழ்க்கைத் துணைநலம், மக்கட் பேறு, விருந்தோம்பல், இனியவைகூறல் முதலிய கூறுகளும் வாழ்க்கையை அதன் இயல்பான தளத்தில் மனநிறைவோடு எதிர்கொள்ளும், உளப்பாங்கை உணர்த்துவன. சமணம், பெளத்தம் என்பவற்றில் இவ்வாறான உளநிலைக்கு மூலம் காண்பது வலிந்து கோடலாக அமையும். வேதமரபிலே வாழ்க்கையை அதன் இயல்பான நிலையில் ஏற்றுக்கொள்ளும் நோக்கு அமைந்துள்ளது. எனினும் அம்மரபின் கிரியைமுறை, பிரம்மம் தொடர்பான சிந்தனைகள் என்பவற்றைக் குறள் சிறப்பித்துப் பேசவில்லை. வேள்வி, பூசனை, என்பன தொடர்பான ஒரிரு குறிப்புகள் மட்டும் (குறள்கள் 18,259) பயின்றுள்ளன. தர்மசாத்திர மரபின் வருண -ஆசிரம சிந்தனைகள் குறளிற் செல்வாக்குச் செலுத்தவில்லை. ஆசிரம தர்மத்திற் சில பெதுமைக் கூறுகளை மட்டுமே குறளின் அறத்துப்பாலில் இல்லறவியலில் அவதானிக்க முடியும். எனவே சமண, பெளத்த சிந்தனைகளிலோ அல்லது வேதமரபிலோ குறளின் அன்பு, அறம் என்பவற்றறுக்கு முழுநிலையில் அடிப்படை காணமுயல்வது சாத்தியமில்லை என்பது தொளிவாகிறது. இத்தொடர்பில்,அறிஞர் அல்பர்ட் சுவைட்சர் அவர்கள் முன்வைத்துள்ள மற்றொரு கருத்தையும் இங்கு கவனத்திற் கொள்வது பொருத்தமாகும். குறள் கூறும் அன்புடைமை, இனியவை கூறல், செய்ந்நன்றியறிதல், நட்பு, முதலிய சிந்தனைகளைச் சமண, பெளத்த, மரபுகளிலோ அன்றேல் வேதமரபிலோ இவ்வளவு தெளிவாகக் காண்பதற்கில்லை எனவும் இவை தமிழ்மக்களிடையே நிலவிவந்த அறக் கருத்துக்களாக இருக்கலாம் எனவும் அவர் கருதியுள்ளார். இவ்வகையிலே தமிழ்மரபில் மேற்படி அன்பு, அறம் என்பவற்றுக்கு மூலம் காண்பதற்குப் போதிய அடிப்படைகள் உள.
குறளின் காமத்துப்பால் புலப்படுத்தி நிற்கும் அகநிலை அன்பானது தமிழ்மரபின் அன்பினைந்திணையின் தேறல் என்பது தெளிவாகத் தெரிவது. குறளுக்கு முற்பட்ட சங்க இலக்கிய மரபிலே பேணப்பட்டு நின்ற மேற்படி ஐந்திணை மரபு குறளிலே பொருட்பொருத்தமுறத் தொகுக்கப்பட்ட நிலை புலனாகிறது. எனவே குறள் கூறும் அன்பின் ஒரு கூறு தமிழ்மரபில் கால்கொண்டுள்ளமை தெளிவு. ஐந்திணை மரபை உள்வாங்கிக் கொண்ட குறள் அம்மரபிலே சமுதாயக்குறைபாடு எனக்கருதும்படி அமைந்திருந்த (மருதத்திணைசார்) பரத்தையொழுக்கத்தை அறிவுபூர்வமாகவே தவிர்த்துள்ளது; காமத்துப்பாலின் எல்லைக்கு வெளியே பொருட்பாலில் அதனை வரைவின் மகளிர் என்ற தலைப்பிலே சுட்டிக் கண்டித்துள்ளது.
பழந்தமிழரின் புறவாழ்விலே பகுத்துண்டு பல்லுயிர்
ஒம்புதல்' என்ற நிலையில் அன்பும்,அறமும் அமைந்திருந்தன. பாதீடு, கொடை ஆகிய பெயர்களில் இப்பண்புகள் சுட்டப்பட்டன.
"கிடைத்த பொருளைப் பங்கிட்டு துய்த்த குலங்கள் ஆதி நாளைய தமிழகத்தில் வாழ்ந்தன என்பதை வெட்சித்திணை இலக்கணத்திலிருந்தும் அந்தத் திணைக்குரிய செய்யுட்களிலிருந்தும் உய்த்துணரலாம். வாளேந்திய போர்புரிந்தோர், உளவு அறிந்து கூறியோர், பறைவைகள்
இந்துக்கலைக்களஞ்சியம்

Page 371
வலம் ஆதலையும் இடம் ஆதலையும் நோக்கி நற்சகுனம் நவின்றோர் ஆகியோருக்குப் பசுக்களைப் பங்கிட்டுக் கொடுப்பதை பாதீடு என்றனர். குலவாழ்வில் பங்கு பெறும் ஏனையோருக்குத் தருவதைக் கொடை என்றனர்.”
நாடிவந்தோரின் பசிப்பிணியைத் தவிர்ப்பதில் முனைப்பாகச் செயற்பட்ட சிறுகுடித்தலைவர்கள் பலர் வாழ்ந்தனர் என்பதை புறநானூறு காட்டுகிறது. இவ்வாறு பசி தீர்ப்பதில் முனைப்பாகச் செய்யபட்ட ஒரு தலைவன் -சிறுகுடிகிழான்பண்ணன் -பசிப்பிணி மருத்துவன்’ என்ற சிறப்புப் பெயரால் சுட்டப்பட்டுள்ளான். பாணர் என்ற இசைமரபினரின் பசியைப் போக்குவதில் மிகுந்த ஈடுபாடுகாட்டிநின்ற ஒரு தலைவன் ஈரந்தூர் கிழான் தோயன் மாறன். இவனைப் பாண்பசிப்பகைஞன் என அன்றைய புலவருலகம் சுட்டியது.
பண்டைத் தமிழகத்தில் நிலவிவந்த அன்பும் அறமும் உயர்பண்ளபார்களான சான்றோர் பலரை அன்று உருவாக்கியிருந்தது. பெறற்கரிய அமிழ்தத்தை ஒத்தவை கிடைக்கப் பெற்றாலும் தாமே தனித்து உண்ணாமல் பிறர்க்குப் பகிர்ந்தளிப்பவர்களாகவும் புகழுக்காக உயிரையும் தரவல்லவர்களாகவும் பழியெனின் உலகுடன் தந்தாலும் கொள்ளாது மறுக்கும் துணிவினராகவும் அவர்கள் திகழ்ந்தனர்.
சமுதாயமும் பண்பாடும் முன்னேற்றம் பெற்ற காலகட்டத்திலே மேற் சுட்டிய மனிதாபிமானம் சார்பண்புகள் மன்னர்களது வள்ளன்மையாகவும் புலவர்கள் மக்கள் நலன்கருதி மன்னர்க்கு இடித்துரைக்கும் செவியறிவுறுஉ என்னும் அணுகுமுறயாகவும் வெளிப்பட்டன. தன்னை நாடிவந்த புலவனின் தேவையை நிறைவுசெய்வதற்கு வாய்ப்பற்ற நிலையில், அப்புலவனுக்கு உதவத்தக்கவகையில் தன் தலையையே வழங்க முன்வந்த குமணன்' பற்றிய செய்தி (புறம்:165) வள்ளன்மையின் எல்லைக் கோட்டைத் தொட்டுக் காட்டுவது.
மன்னர்களுக்கிடையிலும் குறுநிலத் தலைவர்கள் மத்தியிலும் அடிக்கடி நிகழ்ந்துவந்த போர்கள் நாட்டில் பேரழிவுகளை ஏற்படுத்தியதோடு மனிதநேய மனப்பாங்கையும் கேள்விக்கு உரியதாக்கியது. அகவாழ்விலே அன்பினைந்திணையின் தூய்மையைக் குறைக்கத்தக்க செயன்முறைகள் முனைப்புப் பெறலாயின. கைக்கிளை பெருந்திணை என்பனவும் பரத்தையொழுக்கமும் முதன்மைபெறத் தொடங்கின. இவ்வாறான சூழ்நிலையிலே குறள் அன்பையும் அறத்தையும் முன்னிலைப்படுத்திப் புதிய காலச் சூழலுக்கு ஏற்ப அவற்றை அறிமுகம் செய்து, தத்துவ நிலைப்படுத்தி, போதனைகளை வழங்க முற்பட்டமை புலனாகிறது.
அகத்திணை மரபைக் கையாண்ட முறையை மேலே நோக்கினோம். புறமரபிலே பிறர்க்குக் கொடுத்து வாழும் அன்பையும் அறத்தையும் அது போற்றியது. சுயநலத்தையும் சுரண்டலையும் கடிந்தொதுக்கியது.
இந்துக்கலைக்களஞ்சியம்

பழியஞ்சிப் பாத்தூண் உடைத்தாயின் வாழ்க்கை வழியெஞ்சல் எஞ்ஞான்றும் இல், 44
இருந்தோம்பி இல்வாழ்வதொல்லாம் விருந்தோம்பி வேளாண்மை செய்தற் பொருட்டு. 81
பகுத்துண்டு பல்லுயிர் ஒம்புதல் நூலோர் தொகுத்தவற்று ளெல்லாந் தலை, 322
நச்சப் படாதவன் செல்வம் நடுவூருள் நச்சுமரம் பழுத்தற்று 1008
வேலொடு நின்றான் இடுவென்றது போலும் கோலொடு நின்றான் இரவு 552
அல்லற்பட்டாற்றா தழுதகண்ணிரன்றே செல்வத்தைத் தேய்க்கும் படை 555
இவ்வாறாக, தமிழரின் பண்டைய அன்பு, அறம் என்பவற்றுக்குக் காலத்தோடொட்டிய புதுவாழ்வளிக்க முற்பட்ட குறள், தனது காலப்பகுதிக்குக் முன்னரே வடபுல வரவுகளாக அறிமுகமாயிருந்த வேதமரபு, சமணம்,பெளத்தம் முதலிய சிந்தனைகளிலிருந்து தனது நோக்கிற்குப் பொருத்தமானவற்றை உள்வாங்கித் தன்னை வளம்படுத்திக் கொண்டிருக்கும் என்பது உய்த்துணரக் கூடியதேயாம். மேற்குறித்த சிந்தனைகளுடன் குறள் கொண்டிருக்கக்கூடிய பொதுமைநிலையை இந்த அடிப்படையில் புரிந்து கொள்வதே பொருத்தமானதாக அமையும்.
வாழ்வியல்
இல்வாழ்க்கை, துறவு என இரு வாழ்வியல்நிலைகள் குறளிற் பேசப்பட்டுள்ளன. இல்வாழ்க்கையின் முக்கிய கூறுகளாக வாழ்க்கைத்துணை, மக்கட்பேறு என்பன சுட்டப்பட்டுள்ளன. அன்புடைமை இன்சொல், விருந்தோம்பல், செய்ந்நன்றியறிதல், நடுவுநிலை, பிறனில் விழையாமை முதலிய பண்புகளும் உயர் ஒழுக்கநெறிகளும் இல்வாழ்விற்குரிய இன்றியமையாத அடிப்படைகளாகக் குறளில் விரித்துரைக்கப் பட்டுள்ளன. சுருங்கக் கூறுவதானால் ஒருவர் தம்மளவில் உலகியல் அனுபவங்களை நிறைவாகத் துய்ப்பதோடு, தம்மைச் சார்ந்த குடும்பம், சமூகம் என்பவற்றையும் நிறைவுவாழ்வு வாழவைக்கவும் துணைபுரிவதான ஒரு வாழ்க்கை நிலையாக இல்வாழ்க்கை குறளில் விளக்கம் பெறுகிறது. இவ்வாழ்வின் நிறைவு ஆக புகழ் சுட்டப்பட்டுள்ளது. இல்லறவியலின் நிறைவு அதிகாரமாக புகழ் அமைந்துள்ளது.
துறவு என்பது உலகியல் பற்றுக்களிலிருந்து விடுபட்டு, யான் எனது என்னும் செருக்கு அற்று , புலன்களை அடக்கியாளும் ஒரு நிலையாக குறளிற் பேசப்பட்டுள்ளது. அருளுடைமை, நிலையாமை பற்றிய உணர்வு, தவம் கொல்லாமை முதலிய நோன்புகள் துறவுவாழ்வின் முக்கிய
305

Page 372
கூறுகளாகச் சுட்டப்பட்டுள்ளன. மெய்யுணர்வு பெற்று அவாவறுக்கும் நிலையில் துறவுவாழ்வு நிறைவு பெறுகிறது. அறத்துப் பாலிலே துறவறவியலாக அமையும் 13 அதிகாரங்கள் தவிர பாயிரவியலில் அமைந்த நீத்தார் பெருமை’ என்ற அதிகாரமும் துறவு பற்றிப் பேசுவதே. இதில் துறவின் பெருமை பேசப்படுகின்றது. செயற்கரிய செய்யும் வல்லோராகவும், நிறை மொழிமாந்தராகவும், உயிர்கள் மாட்டு செந்தண்மை பூணும் அந்தணராகவும் அத்துறவோர் சுட்டப்ட்டுள்ளனர்.
குறள் கூறும் இல்வாழ்க்கை நிலை, வடமொழியின் தர்மசாஸ்திர மரபின் கிருஹஸ்தம் என்ற நிலையுடன் தொடர்புப் படுத்தி நோக்கத்தக்கது. இல்வாழ்வானுடைய கடமைகள், பொறுப்புகள் என்பவற்றில் இவ்விருநிலைகளிலும் பொது மைகளை நோக்க முடியும். தர்மசாஸ்திரங்கட்கு முன்னோடியான வேத இலக்கியப் பரப்பிலே மனிதனுடைய கடமைகள் ஐந்தாகப் பகுக்கப்பட்டுள்ளன.
"தெய்வம், ஞானிகள், பிதிரர் , உடன்வாழும் ஏனைய மனிதர் ஆகிய நான்கு பகுதியினருக்கு மட்டுமன்றிப் பிராணிகளுக்குத் தன்னால் ஆவன செய்ய ஒவ்வொருவனும் கடமைப்பட் டுள்ளான் என்பது வேதவாக்கு”
என்பர். மேற்படி மரபில் சில வேறுபாடுகளுடன்,
தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்கு ஐம்புலத்தா றோம்பல் தலை (43)
எனக் குறள் சுட்டியுள்ள முறைமை ஒப்பு நோக்கத்தக்க சிறப்புடையது. இக்குறட்பாவுக்கு மேற்படி வேதமரபுச் சிந்தனையுடன் தொடர்புபடுத்தி உரைகாணும் மரபும் உள்ளது; வேறு வகையில் உரைகாணும் மரபுகளும் உள.
குறள் கூறும் துறவுநிலையின் அடிப்படை எது என்பது ஆய்வுக் குரிய ஒன்றாக உள்ளது. பரிமேலழகர் இத் துறவுநிலைலையை இல்வாழ்க்கையை முறையாக நிறைவு செய்தபின் எய்தும் ஒரு நிலையாகக் கருதுகிறார்.
துறவறமானது: மேற்குறித்த இல்லறத்தின் வழுவாது ஒழுகி அறிவுடையோராய்ப் பிறப்பினை அஞ்சிச் வீடுபேற்றின்
பொருட்டுத் துறந்தார்க்கு உரித்தாய அறம்.”
என்பது அவர் கூற்று. குறளுக்குத் தமிழ்மரபு சார்ந்து நின்று உரை கண்ட மதுரை இளங்குமரனார் அவர்கள்,
"துறவோ எனின், இல்லறஞ் சிறந்த நாளில் கணவன், தன் மனைவியொடும் மக்களொடும்
இருந்து செய்யும் பொதுநலச் செய்கை”
எனக்குறித்து, தொல்காப்பியக் கற்பியல் 51 ஆம் நூற்பாவைச் சான்றாகவும் காட்டுகிறார். இந்த உரைகளின்படி துறவு என்பது
306

இல்வாழ்க்கையைத் தொடர்ந்து அமையும் ஒரு வாழ்க்கைப் படிநிலை ஆகிறது. ஆனால் குறளின் அமைப்பிலே இல்லறவியலைத் தொடர்ந்து துறவறவியல் அமைந்துள்ளதான இயல்வைப்புமுறை யைத் தவிர வேறு எவ்வகை அகச்சான்றும் இல்வாழ்வின் தொடர்ச்சியாகத் துறவை உணர்த்துவதாகக் காணப்படவில்லை. அன்றியும் சில குறட்பாக்கள் இருநிலைகளையும் வேறுபட்ட இரு தளத்தனவாகக் காண்பதற்கே வகைசெய்கின்றன.
அறத்தாற்றின் இல்வாழ்க்கை ஆற்றின் புறத்தாற்றிற் போஒய்ப் பெறுவ தெவன். 46
துறந்தார்க்குத் துப்புரவு வேண்டி மறந்தார் கொல் மற்றையவர்கள் தவம் 263
வேண்டின் உண்டாகத் துறக்க துறந்தபின் ஈண்டியற் பால பல 342
தலைப்பட்டார் தீரத் துறந்தார் மயங்கி வலைப்பட்டார் மற்றை யவர் 348
இவற்றிலே, முதற்குறளில் இல்வாழ்க்கை அல்லாத புறவழி எனச் சுட்டப்படுவது துறவு என்பதே பொதுவான கருத்து. 2 ஆம் 4 ஆம் குறட்பாக்களில் மற்றையவர் என அமையும் சுட்டு இல்வாழ்வாரையே குறித்து நிற்பது தெரிகிறது. இம்மூன்று குறட்பாக்களிலும் இல்வாழ்க்கை, துறவு என்பனவற்றுள் ஒன்றைவிட மற்றது சிறந்தது என ஒப்பீட்டு நிலையில் (இருநிலைகளுமே) உயர்த்திப் பேசப்பட்டுள்ளன. இரண்டும் ஒருவரது வாழ்க்கையின் இருவேறு கட்டங்கள் எனக் குறளாசிரியர் கருதியிருப்பின் இத்தகு ஒப்பீட்டுக்கு அவசியமிருந்திருக்காது என்பது கருத்திற் கொள்ளப்பட வேண்டியதாகும். வேண்டினுண்டாக என்ற குறட்பா உலகியல் அனுபவத்துக்குரிய வாய்ப்புக்கள் உள்ள போதே துறவை மேற்கொள்ளுமாறு கூறுகிறது. இது உலகியலை அனுபவித்தபின் துறவு பூணும் நிலையைக் குறிப்பதாகக் கொள்வது எவ்வாறு பொருந்தும் என்ற வினா எழும். இல்வாழ்க்கையை அனுபவித்துக் கொண்டிருப்பவர்கள் வாழ்நாள் முழுவதும் அதிலே தோய்ந்து விடாமல் ஒரு கட்டத்தில்வாய்ப்புக்கள் இருக்கும்போதே- துறந்த விட வேண்டும் என இக்குறட்பா கூறுவதாக மேற்படிவினாவுக்கு விடை கூறி அமைதிகாணவும் இடமுண்டு. ஆயின் மேற்சுட்டிய ஏனைய குறட்பாக்களிலே இவ்வாறான அமைதி காண்பதற்கு வாய்ப்பில்லை.
இவ்வாறு சிந்திக்கும் போது குறள் கூறும் துறவானது இல்வாழ்வின் தொடர்ச்சியாக அல்லாமல், உலகியலிடு பாட்டிலிருந்து தொடக்கமுதலே விலகிநிற்கும் ஒருநிலையாகவே உய்த்துணரப்பட வேண்டியதாகிறது. இத்தகு நிலை சமணம், பெளத்தம் என்பவற்றோடு தொடர்புபடுத்திச் சிந்திக்கப்பட வேண்டியதாகும். கொல்லாமை, இன்னாசெய்யாமை என்பவற்றோடு புலாலுண்ணாமையும் முக்கிய நோன்பாக
இந்துக்கலைக்களஞ்சியம்

Page 373
இத்துறவு கொண்டுள்ளதால் இது சமணரது துறவுநிலை என்று கொள்வதே வலுவுடைய ஊகமாகும். நீத்தார் பெருமை அதிகாரத்திலே சமணசங்கத்தின் பெருமை கூறப்பட்டதென அறிஞர் அல்பர்ட் சுவைட்சர் கூறியுள்ள கருத்தும் (இது மேலே நோக்கப்பட்டது) இந்த ஊகத்துக்கு வலுவூட்டுவதாகவே அமைகிறது. திருவள்ளுவர் தமது சமகாலத்தில் செந்தண்மைபூண்டு அருட்பணி ஆற்றிநின்ற சமணமுனிவர்களின் ஆளுமைகளால் ஈர்க்கப்பட்டு அவர்தம் பெருமைகளை நீத்தார் பெருமையாக எடுத்துரைத்தார் எனவும் அத்தகு ஆளுமைகட்டு அடிப்படையான பண்புகளைத் துறவறவியல் சார்ந்த குறட்பார்க்களில் விரித்துரைத்தார் எனவும் ஊதிக்க இடமுண்டு.
குறள் இல்வாழ்க்கை, துறவு ஆகிய இருநிலைகளையுமே சிறந்ததாகப் பேசுகிறது என்பதை மேலே நோக்கினோம். ஒன்றன் சிறப்பைப் பேசும்பொது அதையே மிக உயர்வானதாகப் சுேவது குறளின் உத்திகளுள் ஒன்றாகும். ஊழ் ஆள்வினை, அருள் பொருள் முதலிய விடயங்களை பற்றிப் பேசும் சந்தர்ப்பங்களிலும் வள்ளுவர் இந்த உத்தியைக் கையாண்டுள்ளார். அதேபோல் இங்கு இல்வாழ்க்கை, துறவு ஆகிய இருநிலைகளையும் இவ்வுத்தி முறையாற் சிறப்பிக்கிறார் என இதற்கு விளக்கம் தரலாம். ஆனால் அதில் முக்கிமானதாகக் கவனத்திற்கொள்ளவேண்டிய வரலாற்று அம்சம் ஒன்றுஉளது. இருநிலைகளையும் மதித்துப் பேற்றும் சமநிலைநோக்கே அந்த அம்சமாகும்.
இவ்வாறான சமநோக்கை முன்னைய மரபுகளிற் காண்பது அரிது. வேதமரபின் தொடர்ச்சியான தர்மசூத்திர தர்மசாத்திர மரபு இல்வாழ்க்கையையும் அதனைத் தொடர்ந்து அமையும் வானப்பிரஸ்த சன்னியாச, நிலைகளையும் பற்றிப் பேசுகிறது. இயல்பாகவே உலகியலிலிருந்து விடுபட முயலும் துறைவை அது சிறப்பித்துப் பேசியமைக்குத் தெளிவான சான்றுகள் கிடைத்தில. சுகர், சங்கரர் ஆகிய சிலரே இல்லறம் புகாமல் துறவு பூண்டனர் என்பது பிற்கால வேதமரபு. இல்லறம்புகாத் துறவை முதன்மைப்படுத்தி நின்ற சமணம், பெளத்தம் என்பன வள்ளுவர் காட்டுவதுபோல அன்புப் பிணைப்புக் கொண்ட ஒரு நிலையாக இல்வாழ்க்கையைத் தரிசித்தவையல்ல. இவை அடிப்படையில் துன்பியல் நோக்கின . எனவே குறள் மேற்படி சிந்தனைப் போக்குகளிலிருந்து குறிப்பிடத்தக்க அளவு வேறுபட்டதாகவும் வளர்ச்சியைப் புலப்படுத்துவதாகவும் திகழ்வது தெளிவு. நாலடியார் முதலிய சமண அறநூல்களை ஒப்பு நோக்கும்போது குறளின் இத்தனித்தன்மை தெளிவாகும். நாலடியார் இல்லறத்தைப் போற்றிய நூலன்று என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
ஒவ்வொருவரும் தத்தம் ஆர்வம், ஆற்றல் என்பவற்றுக்கேற்ப இல்வாழ்க்கை gl0Q ஆகிய இருநிலைகளிலும் ஒன்றைத் தேர்ந்து கொள்ளலாம் எனவும் அவ்வாறு தேர்ந்து கொண்ட நிலைக்குரிய அடிப்படைப் பண்புகளில் தெளிவாகக் காலூன்றி நிற்க வேண்டும் எனவும்
இந்துக்கலைக்களஞ்சியம்

வள்ளுவர் கருதுவதாகத் தெரிகிறது. இது வள்ளுவரது சமநிலை நோக்கை உணர்த்துவது. அவ்வாறு முறைப்படி நின்று ஒழுகுபவர்கள் அவ்வந்நிலைகளில் முழுமை எய்தலாம் என அவர் சுட்டுகிறார்.பின்வரும் குறட்பாக்களில் இவற்றை அவதானிக்கலாம்.
இயல்பினான் இல்வாழ்க்கை வாழ்பவன் என்பான் முயல்வாருள் எல்லாம் தலை 4/ வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படும் 50 தவமும் தவமுடையார்க் காகும் அவமதனை அஃதிலார் மேற்கொள்வது 262 யான் எனதென்னும் செருக்கறுப்பான் வானோர்க்கு உயர்ந்த உலகம் புகும். 346
இவ்வாறாக இல்வாழ்க்கையையும் அதற்குப் புறம்பாக இயல்பாகவே அமையும் துறவையும் அவ்வற்றின் தளத்தில் நின்று மதித்துப் போற்றும் முதன்மையான - காலத்தால் முற்பட்டதுமான - இந்தியச் சிந்தனை என்ற பெருமைக்குத் திருக்குறள் உரிமைபூண்டுள்ளது.
குறள் மேற்படி இருநிலைகளையும் மதித்துப் போற்றினாலும் அதன் அமைப்பில் மிகப்பெரும்பான்மையான பகுதி இல்வாழ்க்கை தொடர்பானதாகவே அமைந்துள்ளது. அறத்துப்பாலில் இல்லறவியல் என்ற தலைப்பிலான 20 அதிகாரங்களும் நேரடியாக இல்வாழ்க்கை பற்றிப் பேசுவன. பொருட்பாலில் அமைந்துள்ள விடயங்கள், பொதுவாக இல்வாழ்க்கையை அடிப்படைக் கூறாகக் கொண்ட சமுதாயத்தின் இயல்பு, சிந்தனை, செயல் என்பன பற்றிப் பேசுவனவாகும். இல்வாழ்க்கையின் செம்பாகமாகிய அகவாழ்வின் சுவையே காமத்துப்பாலின் உள்ளீடாகும். எனவே குறள் துறவை மதித்தாலும் இல்வாழ்க்கையையே முதன்மைப்படுத்தி நோக்கி உருவான சிந்தனை என்பது தெளிவாகிறது.
கடவுளும் ஊழும்
குறட் சிந்தனைகளுள் இந்தியச் சிந்தனை மரபுப் பின்னணியில் அவதானிக்கப்பட வேண்டியவற்றுள் முன்னர் நோக்கப்பட்டவற்றைத் தவிர முக்கியமானவை கடவுள், ஊழ் என்பன தொடர்பான கருத்து நிலைகளாகும். இவை இரண்டும் முறையே குறளின் அறத்துப்பாலின் முதலும் முடிவுமாக அமைந்துள்ளன.
கடவுளைப் பற்றிப் பேசும் முதலாவது அதிகாரம் எந்தத் தனிப்பட்ட சமயக் கடவுளரையும் வெளிப்படையாக இனங் காட்டவில்லை. கடவுளுண்மையை உணர்த்துவதோடு அவரை வழிபடுவதால் எய்தக்கூடிய பயன்களையும் அறியத் தரும் பொதுநிலை அறிமுகமாகவே அவ்வதிகாரம் அமைந்துள்ளது. கடவுளைச் சுட்டுவதற்கு ஆதிபகவன், வாலறிவன், மலர்மிசை ஏகினான், விருப்புவெறுப்பற்றவன், புலன்களைக் கட்டுப் படுத்தியவன், ஒப்பில்லாதவன், அறக்கடல், எண்குணத்தான் ஆகிய பண்புசார் பெயர்களை அது வழங்கியுள்ளது.
3ó7

Page 374
"உலகிற்கு முதல் ஆதிபகவன் என்பது கருத்தாகக் கொள்க. கானப்பட்ட உலகத்தாற் காணப்படாத கடவுட்கு உண்மை கூற வேண்டுதலின்.”
என இதற்குப் பரிமேலழகர் விளக்கம் தருவர். இதன்படி உலகிற்கு முதற்காரணர் - தோற்றுவித்தவர்- கடவுள் என்பது வள்ளுவர் கருத்தாகக் கொள்ளக்கூடியதாக உள்ளது. இவ்வாறன்றி உலகிற்கு முன்மாதிரியான ஒருவர் கடவுள் எனப் பொருள் கொள்ளும் மரபும் உள்ளது. ஆயினும் முதற்றே"என்பதற்கு முன்மாதிரி என்பதைவிட முதற்காரணர் எனக்கொள்வதே பொருத்தம் மிக்கதாகும். பிறிதொரு சந்தர்ப்பத்திலே வள்ளுவர் ‘உலகியற்றியான் (1062) என்ற தொடரைக் கையாண்டுள்ளார். இதன் நேர்ப்பொருள் உலகத்தைப் படைத்தவன் என்பதாகும். இதற்கு, சட்டங்களை இயற்றி நாட்டை ஆள்பவன் எனப் பொருள் கொள்வோரும் உளர். ஆயினும் நேர்ப்பொருளே தெளிவாக உளது.
“உலகியற்றியான் (குறள் 1062) என்னும் தொடர்
இந்த உலகம் கடவுளால் படைக்கப்பட்டது என்னும்
கருத்துடையது என்றும் கொள்ளலாம்.” என டாக்டர் கு. மோகனராசு கூறியுள்ளமை இத்தொடர் பிற் கவனத்திற்கொள்ளத்தக்கது. ‘உலகியற்றியான் யார்? ஆண்டவனா? அரசனா? என்ற தலைப்பில் ஆராய்ந்த கவிஞர் கண்ணதாசன் அவர்கள். உலகைப் படைத்த மூல முதல்வன் என்ற கருத்தே பொருத்தம் என்ற முடிவுக்கு வந்துள்ளமையும் இங்கு சுட்டத்தக்கது.
எனவே கடவுள் உலகிற்கு முதற்காரணர் என்பதே வலுவுடைய கருத்தாகக் கொள்ளத்தக்கது.
கடவுளை வழிபடுவதால் எய்தப்பெறும் பயன்கள் என்ற வகையில் நீண்ட நல்வாழ்வு, துன்பநீக்கம் என்பன சுட்டப்பட்டுள்ளன. துன்பம் என்ற வகையிலே பொதுவான துன்பதுயரங்களும் வினைத்தொடர்பு , பிறவித் தொடர்ச்சி என்பனவும் மேற்படி அதிகாரத்திற் சுட்டப்பட்டுள்ளன. கடவுளை வணங்குபவர் இவற்றைக் கடக்க முடியும் என்பதனை இவ்வதிகாரம் தெளிவுபடுத்தியுள்ளது (குறட்பாக்கள் 4,5,8,10). எனவே உலகத் தோற்றத்துக்கு முதற்காரணனும் உயிர்களின் பிறவி முதலிய துயர்கள் நீங்கத் துணைநிற்பவனுமான ஒருவனையே வள்ளுவர் கடவுள் ஆகக் கருதியுள்ளமை ஊகிக்கக் கூடியதாயுள்ளது. ஊழ் அதிகாரத்திலே வகுத்தான் (377) என அமையும் சுட்டும் இத்தொடர்பிற் கவனத்திற்குரியது. உயிர்களின் அனுபவத்துக்குரியவற்றை வகைப்படுத்தியவன் என்பது இதன் நேர் பொருள் .
'இது வினை கடவுளாற் கூட்டுவிக்கப்படல் என்ற கருத்தைத் தரும்”
என ஆய்வாளர் காமாட்சி சீனிவாசன் கூறுவர். இதன்படி வினைத்தொடர்ச்சிக்கும் கடவுளுக்கும் தொடர்புண்டு என வள்ளுவர் கருதுவது தெரிகிறது. இந்த வகுத்தானைக்
308

கடவுளாகக் கொள்ளாமல் ஆட்சியாளனாகவும், 'ஊழ் என்ற முறைமை யாகவும் வேறுவகையிற் பொருள் கொள்வோரும் உளர். ஆயினும் முதல் அதிகாரத்திலே வினைத்தொடர்பு, பிறவித் தொடர்ச்சி என்பவற்றோடு கடவுள் நெருக்கமாகச் சிந்திக்கப்பட்டுள்ள நிலையில் ஊழ்கூறும் வகுத்தானையும் கடவுளோடு தொடர்புபடுத்தி நோக்குவதே பொருத்தமானதாகும் என்பது எமது கருத்து.
இவ்வாறு வள்ளுவராற் சிந்திக்கப்பட்ட கடவுள் எந்தச் சமயமரபுக்கு உரியவராகக் கொள்ளத்தக்கவர் என்பது எம்முன் நிற்கும் வினாவாகும். குறள் சமயங்கடந்த நிலையினது என்பதை முன்னரே நோக்கியுள்ளோம். குறளில் கடவுளைச் சுட்ட வழங்கப்பட்ட தொடர்களான ஆதிபகவன், மலர்மிசை ஏகினான், பொறிவாயில் ஐந்தவித்தான் முதலியன சமணரின் கடவுளான விருஷபதேவருக்கே சிறப்பாகப் பொருந்துவன எனச் சில அறிஞர்கள் கருதுவர். வேதமரபுக் கடவுளரோடு தொடர்புபடுத்தும் சிந்தனைகளும் உள.
இவ்வாறான சிந்தனைகளின் பொருத்தப்பாட்டைத் தெரிந்து கொள்வதற்கு முதற்கண் குறளுக்கு முற்பட்ட கால இந்தியக் கடவுட் சிந்தனைகளின் அடிப்படைகளை நினைவில் மீட்பது அவசியமாகிறது.
குறளுக்கு முற்பட்ட காலத்தில் கடவுள் தொடர்பாக இருநிலைச் சிந்தனைகள் நிலவிவந்தன என்பதறிவோம். ஒன்று கடவுளை உலக இயக்கத்துக்கான முழுமுதலாகக் காணும் நிலை. உபநிடதங்களிற் சுட்டப்படும் பிரம்மமும், புராண இதிகாசங்களின் சிவன், விஷ்ணு முதலிய கடவுளர் தொடர்பான கற்பனைகளும் இச்சிந்தனையின் வெவ்வேறு நிலை விளக்கங்கள் என்பது தெளிவு. இரண்டாவது நிலை , மனிதராகப் பிறந்த ஒருவர் பொறிபுலன்களை வென்றடக்குவதன் மூலம் வினை நீக்கம் பெற்றுத் தெய்வநிலைக்கு உயர்வதாகும். சமணர் சுட்டும் ஆதிநாதரான விருஷப தேவர் இந்த இரண்டாம் நிலையின் சான்றாகக் கொள்ளப்படுவர். மேற்சுட்டிய முதல்நிலைக்குரிய கடவுளர் உலகத்தைப் படைத்தவர்களாகவும் உயிர்களின் நடத்தைகளைக் கண்காணிப்போராகவும், அவ்வகையில் வினைப்பயன், பிறவித் தொடர்ச்சி என்பவற்றில் ஆதிக்கமுடையவர்களாகவும் கருதப்படுபவர்கள். கீதையில் உள்ள ". என்னைச் சரணடைக, நான் உன்னை எல்லாப் பாவங்களிலிருந்தும் விடுவிப்பேன். வருந்தற்க” (18:66) என்ற கண்ணனின் கூற்று இத்தொடர்பிற் கவனத்திற் கொள்ளத்தக்கது.
சமணரின் விருஷபதேவர் உலகத்தைப் படைத்தவராகக் கருதப்படுபவரல்லர். வினைப்பயன், பிறவித்தொடர்ச்சி என்பவற்றில் கடவுளின் ஆதிக்கம் இருப்பதாக சமணம் கொள்வதில்லை. 'ஊழ்வினை (தானே) உருத்துவந்து ஊட்டும்” என்பதே அவர்களது நிலை. அவ்வாறான் வினைப்பயனிலிருந்து உயிர் தன்னை விடுவித்துக் கொள்வதற்கு ஒரு வழிகாட்டியாக - பொறிபுலன்களை அடக்கிய முதல்வராக-முன்னோடியாக - சமணரின் கடவுள் போற்றப்படுகிறார்.
இந்துக்கலைக்களஞ்சியம்

Page 375
இவ்வாறான அடிப்படைகளைக் கவனத்திற்கொண்டு நாம் மேலே குறளின் கடவுள் பற்றிக் கொண்ட விளக்கத்தின் ஊடாக நோக்கும்போது விருஷபதேவரை அந்நூல் சுட்டியதாகக் கொள்வதற்கு இடமில்லை. உலகின் முதற்காரணராகவோ உயிர்களின் வினைகள், பிறவி என்பவற்றை மாற்றத் துணை நிற்பவராகவோ அவரைக் கொள்வதற்கு இடமில்லை என்பது தெளிவு. முதற்குறளில் இடம்பெறும் முதற்றே என்பதற்கு முதற்காரணர் எனப்பொருள் கொள்ளாது முன்மாதிரி எனப் பொருள் கொள்வோர் விருஷபதேவரை அதிற்பொருத்தி அமைதிகாணலாம். எனினும் வினைத்தொடர்பு, பிறவித்தொடர்ச்சி என்பவற்றுக்கு அவரிடத்து அமைதி காண்பது சாத்தியமா? என்பதே எமது முன்னிற்கும் வினா. அத்தகு முயற்சி வலிந்து கோடலாகவே அமையும்.
மேலே பெயர்ப்பொருத்தம் என்றவகையில் சுட்டப்படும் ஆதிபகவன்', 'மலர்மிசை ஏகினான் முதலிய தொடர்கள் விருஷபதேவருக்கே சிறப்பாகப் பொருந்துவன என்பதும் வலுவான வாதம் அல்ல. மேற்சுட்டிய புராண - இதிகாச மரபுசார்ந்த கடவுளர் பலருக்கும் அவை பொருந்த வல்லன. பொறிவாயில் ஐந்தவித்தான் என்ற தொடர் (குறட்பா.6) தன் புலன்களைக் கட்டுப்படுத்தியவன் என்ற வகையில் விருஷபதேவரைக் குறிக்குமாயினும் பிறரது புலக்கட்டுப்பாட்டுக்குத் துணைநிற்பவன் என்றவகையில் பிறகடவுள் எவரையும் கூடக் குறிக்க வல்லதே என்பதும் சிந்தித்தற்குரியது.
இவ்வாறு நோக்கும்போது குறள் காட்டும் கடவுளைச் சமணசமயத்துடன் தொடர்புபடுத்துவதைவிட புராண- இதிகாச மரபுடன் தொடர்புபடுத்துவதற்கே வாய்ப்பு அதிகம் உள்ளமை புலனாகும். உலகத் தோற்ற முதற்காரணரும் உயிர்களின் துயர்துடைப்பவருமான கடவுளைப் புராண இதிகாச மரபே காட்டி நிற்கிறது. இம்மரபுசார் கடவுளர் பற்றி வள்ளுவர் அறிந்துள்ளார் என்பதற்கு குறளில் பல சான்றுகள் உள. இந்திரன் (25) செய்யாள், செய்யவள், திரு, தாமரையினாள் (84, 167, 179, 519, 617, 990) முகடி (617) , அடியளந்தான், தாமரைக் கண்ணான் (610, 1103), காமன் (1197) ஆகிய பெயர்கள் குறளிற் பயின்றுள்ளன. செய்யாள் முதலியன லஷ்மியையும் அடியளந்தான், தாமரைக்கண்ணான் என்பன விஷ்ணுவையும் குறிப்பன என்பது தெளிவு. முகடி என்பது மூதேவியைச் சுட்டுவது.
இவ்வாறான புராண - இதிகாச மரபுத் தெய்வங்களை வள்ளுவர் அறிந்திருந்தபோதும் அவற்றைத் தம் கடவுட் கோட்பாடுநிலையில் அவர் முதன்மைப்படுத்தவில்லை; சமகால வழக்கிலுள்ள செய்திகள், எடுத்துக்காட்டுக்கள் என்ற அளவிலேயே அவற்றைச் சுட்டிச் செல்கிறார். ஆயினும் அம்மரபுக்குரிய கடவுட் சிந்தனையின் அடிப்படையை உள்வாங்கிக் கொண்டுள்ளார். அவ்வகையிலேயே அவர் உலகப்படைப்புக்கு முதற்காரணரும் உயிர்களின் துயர்துடைப்பவனுமாகிய ஒரு கடவுளைப் பேசுகிறார். அத்தெய்வத்துக்கு அன்று வழக்கிலிருந்த சமயவரம்புகளுக்கு
இந்துக்கலைக்களஞ்சியம்

அமைதிகாண அவர் முற்படவில்லை. பரந்த மானிடம் அனைத்துக்கும் பொதுவான அன்பு, அறம் ஆகியவற்றுக்குத் துணை நிற்கும் ஒரு நம்பிக்கையாக அவர் அதனைத் தரிசித்துள்ளார். கடவுளைக் குறிக்க அவர் வழங்கிய தொடர்களில் அறவாழி அந்தணன்' என்பது இந்நோக்கில் தனிச்சிறப்புடையதாகத் திகழ்வதை அவதானிக்கலாம். அறக்கடலாகவும் அன்புப் பெருக்காகவும் கடவுளைக் காணும் நிலை இது. இத்தொடர்பிலே டாக்டர் கு. மோகனராசு அவர்கள் முன்வைத்துள்ள ஒரு கருத்தை இங்கு சுட்டிக் காட்டுவது பொருந்தும்,
"வள்ளுவர் கடவுள் ஏற்புக் கொள்கையாளரேயாயினும் ஏதேனும் ஒரு சமயத்தைச் சார்ந்து நின்ற குறுகிய மனப்பான்மை உடையவராக இல்லாமல் எல்லாச் சமயங்களிலும் காணும் கடவுள் பற்றிய உண்மைகளைத் தேர்ந்து தெளிந்து, வேறுபட்டும் மாறுபட்டும் நின்ற சமயவாணர்கள் அனைவரும் ஒப்புக்கொள்ளும் ஓர் ஒப்பற்ற - பொதுமையான - புதுமையான - பண்புவடிவமான கடவுளைப் படைக்க முனைந்து அதில் பெருவெற்றியும் பெற்றுள்ளார். ”
எனவே வள்ளுவர் சமயவரம்புகளைக் கடந்த ஓர் ஒப்பற்ற கடவுள் நிலையைச் சிந்தித்துள்ளமை தெளிவாகிறது.
குறளிலே ஊழ் என்ற அதிகாரம் மனிதனுடைய செயலூக்கம், அறிவாற்றல், அனுபவம் என்பவற்றைக் கட்டுப்படுத்தி நிற்பதான - அவனது அறிவுக்கு அப்பாற்பட்ட - ஒரு சக்தியைப் பற்றிப் பேசுகிறது. நல்ல ஊழ் (ஆகூழ், ஆகலூழ்) தீய ஊழ் (போகூழ், இழலும்) என ஊழ் இருவகையாகச் சுட்டப்பட்டுள்ளது. ஒருவரது செயல்திறன் அறிவு என்பன விரிந்து தொழிற்படவும் சுருங்கிப் போகவும் இவையே காரணம் எனப்படுகின்றது. ஊழ் காரணமாகவே சிலர் செல்வமுடையோராகவும் சிலர் கல்வியுடையோராகவும் இருவேறு நிலைகளில் அமைகின்றனர். ஒருவர் எவ்வளவு தான் தேடித் தொகுத்துவைத்தாலும் ஊழால் வகுத்துக் கொடுக்கப்பட்டதைத் தவிர அனுபவிக்க அவருக்கு வாய்ப்பில்லை. அனுபவிக்க வேண்டியவற்றை ஒதுக்கிவிடுவதும் எவருக்கும் சாத்தியமில்லை. நுகர்வதற்கான பொருளற்றோர் ஊழானாகிய துன்பங்களை அனுபவித்துக் கழித்தல் தவிர்க்க முடியாததாகும். ஊழைவிட வலியது இல்லை. அதனை மீற முயல்வோரையும் அது (மீறப்பட முடியாதவகையில்) தானே முன்வந்து கட்டுப்படுத்தும். இவை மேற்படி அதிகாரத்தின் தெளிபொருள்.
மேற்படி அதிகாரத்திலே வள்ளுவர் ஊழ் என்றால் என்ன என்று கூறவில்லை; அதன் இயல்பு, ஆற்றல் என்பவற்றையே சுட்டியுள்ளார். பழைய உரைகாரர்களான பரிமேலழகர், மணக்குடவர், பரிதியார் ஆகியோர் ஊழைப் பழவினைப் பயன்' எனக் கொண்டு விளக்கம் தந்தனர். இது இந்திய சிந்தனை மரபிலே கர்மம், விதி ஆகிய வடசொற்களாற் சுட்டப்படுவது. ஒருவரது பிறப்பு, வாழ்க்கைத்தரம், செயலூக்கம் , இன்பதுன்ப அனுபவங்கள் ஆகிய அனைத்தும் அவரது முற்செயல்களின்
309

Page 376
விளைபொருள்களே என்பது இதன் விளக்கமாகும். இது காரணகாரியத் தொடர்பு அடிப்படையிலானது.
முற்செயல் என்பது (ஒரு பிறப்பிலே) முன் செய்தவற்றைப் பொதுவாகச் சுட்டவல்லது. ஆயினும் ஒருவரது பிறப்பு முதலிய அனைத்து அநுபவநிலைகளுக்குமான காரணத்தை ஒருபிறப்பிலே சுட்டுவது சாத்தியமில்லை என் நிலையில் முற்பிறவி என்ற எண்ணம் உருவாகியது. ஒருவர் த செயல் அனைத்துக்குமான பயனை ஒருபிறப்பில் அனுபவிப்பது சாத்தியமில்லை என்ற கருத்தடிப்படையில் மறுபிறப்பு என்பது சிந்திக்கப்பட்டது. இவ்வாறு பிறப்பும் செயலும் (வினையும் ஒன்றுக்கொன்று காரணமாகி - சங்கிலித் தொடர்போல் அமைவதான விளக்கமே கர்மக்கோட்பாடு, விதி, பழவினை, ஊ என்பவற்றால் உணர்த்தப்படுவதென்பது பொதுவான கருத்து நிலையாகும்.
இக்கருத்துநிலைக்கான மூலக்கூறுகளை வே இலக்கியப்பரப்பில் தெளிவாக அவதானிக்கலாம். உடல் அழிந்: பின்னரும் உயிருக்கு வாழ்வு உளது என்பதும் செயல்களுக்கு ஏற்ப அது விண்ணுலகு அல்லது யமனுலகு அடைகிறது என்பது இருக்குவேதத்தில் சிந்திக்கப்பட்டமை (2 12 7) யு மறுபிறவிபற்றி உபநிடதங்களிற் பேசப்பட்டமையும் அறியத்தக்கன கர்மக்கோட்பாடு வேதமரபுசார் சிந்தனைகளில் மட்டுமன்றி சமணம் பெளத்தம் என்பவற்றிலும் முக்கிய இடத்தை பெற்றுள்ளது. சமண பெளத்த சமயங்களில் கர்மப்பலன் தன்னியக்கமுடையது; தன்னை அனுபவிக்க வேண்டியவனை தானே போய்ச்சேரவல்லது என்பதையும் வேதமரபு சிந்தனைகளில் கர்மப்பலன் கடவுளின் அதிகாரத்துக்குட்பட்டது என்பதையும் மனங்கொள்ள வேண்டும்.
குறள்கூறும் ஊழை, பண்டைய உரையாசிரிய கருத்தோடொட்டி, பழவினைக் கோட்பாட்டோடு தொடர்புபடுத்தி பொருள் கொள்ளும் முறைமையே பொதுவழக்காக உள்ளதெனினும் அதற்கு மாறாக வேறுபொருள் காணு சிந்தனையும் ஆய்வுலகில் தனிக்கவனத்தை பெற்றுவருகின்றது. இவ்வாறான வேற்றுப்பொருள் நாட்டத்தின் அடிப்படை வள்ளுவரின் மேற்படி அதிகாரத்திலே கர்மம், வினை பழவினை, ஊழ்வினை என்னும் சொற்கள் பயிலாமையாகும் பதிலாக இயற்கை, பால் ஆகிய சொற்கள் அதிற்பயின்றுள்ளடை நோக்கப்பட்டுள்ளது. இந்த நோக்கின் அடிப்படையில் முன்வைக்கப்பட்டுள்ள கருத்துக்களுக்குச் சான்றாக இரு ஆய்வாளர்களின் சிந்தனைகளை இங்கு நோக்கலாம்.
“ஊழ் முறைமை; உலகியல் நிகழும் முறைமை, உலகியலின் இயற்கை நிகழ்ச்சி, அதாவது பொருளும் காலமுட செயற்படும் தகுதியும் சுற்றுச் சார்பின் தகுதியும் நட எண்ணத்தின், முயற்சியின், செயலின் தகுதிக்கு ஒத்துவருதலும் ஒவ்வாது வருதலுமாம்.” புலவர் குழந்தையவர்களது கருத்து இது.
3fó

)
"ஊழ் வேறு ஊழ்வினை வேறு ஊழ் என்பது முறைமை மறுபிறப்புக் கொள்கைக்குச் செல்வாக்கு ஏற்பட்ட பின்னர் முற்பிறப்பு வினையின்பயன் இப்பிறப்பில் முதிர்வதை முறைமையின் வெளிப்பாடாகக் கண்டு அதனை ஊழ்வினைப் பயன் என்றனர். பழவினையை ஊழ்வினை என்றாரே யன்றி ஊள் என்றாரில்லை.
. வள்ளுவத்தின் ஊழ், அறிவிற்கு அப்பாற்பட்ட ஒரு கருத்து (Mystic Conception) அதில் இறைமை உண்டென்பது வள்ளுவரின் குறிப்பு. பல இயற்கை நிகழ்ச்சிகளை விஞ்ஞானரீதியாகப் புரிந்து கொள்ளமுடியாத சமுதாயத்தில் தோன்றிய கருத்து இது. . உலகத்தில் அறம் நிலவுகிறது. அதுவே இயற்கை அதுவே ஊழ் அல்லது தெய்வம் ”
என்பது டாக்டர். எஸ். இராமகிருஷ்ணனது கருத்தாகும்.
புலவர் குழந்தை (யும் வேறுசில அறிஞர்களும் கருதிய) உலகியல் முறைமை என்ற எண்ணக் கருவை டாக்டர் எஸ். இராமகிருஷ்ணன் அவர்கள் சமுதாய வரலாற்று நோக்கிலே தெளிவாக வளர்த்தெடுத்துள்ளமை தெரிகிறது. வள்ளுவர் கூறும் ஊழை அவர் அறிவிற்கு அப்பாற்பட்டதும் இறைமையுடையதும் , உலகத்தின் அறம் எனக் கொள்ளத்தக்கதுமான முறைமை எனச் சுட்டியுள்ளமை கவனத்துக்குரிய ஒன்றாகிறது. ஆயினும் அவ்வாறு கொள்ளுதல் குறளை உரியவாறு தெளிந்து கொண்டதாகுமா என்பது எமக்கு எழும் ஐயமாகும். இந்த ஐயத்துக்கான அடிப்படைகளை இங்கு சுருக்கமாக நோக்கலாம்.
இங்கே ஊழ்வேறு, ஊழ்வினை வேறு எனச் சிந்திப்பதற்கான அடிப்படை வினை என்ற இணைப்பு இன்றி ஊழ் தனிநின்ற நிலையாம். சுருக்கமான- செறிவானசொற்களில் அறம் கூறவந்த வள்ளுவர் ஊழ் என்பதே ஊழ்வினையை உணர்த்தும் என்ற கருத்தில் குறள் வெண்பா யாப்பின் தேவைக்கேற்ப வினையைத் தவிர்த்திருக்கலாம். எனக்கருத இடமுண்டு. வள்ளுவருக்கு ஊழ்வினைக் கோட்பாடு தெரிந்திருக்கிறது; அதில் நம்பிக்கையும் இருந்தமைக்குச் சான்றுகள் பல உள. சிலவற்றை இங்கே சுட்டலாம்.
தீயவை செய்தார் கெடுதல் நிழல் தன்னை
வீயா தடியுறைந் தற்று 208 அருள் சேர்ந்த நெஞ்சினார்க்கில்லை இருள் சேர்ந்த
இன்னா உலகம் புகல் 243 பற்றற்ற கண்ணே பிறப்பறுக்கும் மற்று நிலையாமை காணப்படும். 347
இவற்றிலே வினைப்பயன், மறு உலகு, மறுபிறப்பு என்பன பேசப்பட்டுள்ளன.
குறளிலே கடவுள், அறம் என்பன தொடர்பாகத் தனித்தனியே பேசப்பட்டுள்ளன. மேலே நோக்கியவாறு
இந்துக்கலைக்களஞ்சியம்

Page 377
வினைப்பயன் பற்றிய எண்ணங்களும் ஆங்காங்கு வெளிப்படுத்தப்பட்டுள்ளன. இவ்வாறெல்லாம் பேசிய குறள், ஊழ் என்பதால் தனியாக, இறைமையுடன் இணைந்ததான ஒரு உலகம் அறம்' - முறைமை - பற்றிச் சிந்தித்துள்ளது என்று கொள்ள அவசியம் இருப்பதாகத் தெரியவில்லை. இராதாகிருஷ்ணன் அவர்கள் கூறுவது போல வினைப்பயன் கோட்பாட்டுக்குப் புறம்பான ஒரு MyStic Conception ஆக அதனைக் கொள்வதால் குறளுக்குப் புதிய பொருள்வளம் சேர்வதாகவும் தெரியவில்லை.
குறள் கூறும் ஊழ் வினைப்பயன் தொடர்பானதல்ல என்று கொள்ளும் போது அந்த ஊழ் அதிகாரம் மனித செயலூக்கத்தைக் கட்டுப்படுத்தும் ஒரு கருத்து நிலையாகவே எல்லைப்பட்டு அமைந்து விடுகிறது. சமுதாய வளர்ச்சிக்குப் பயன்படத்தக்க உள்ளடக்கத்தைப் பெற அது இடமளிக்காது. மாறாக வினைப் பயன் சார்ந்த சிந்தனை எனக் கொள்ளும்போது, அதிலே, “எதிர்காலத்திலாவது தீவினைகள் தவிர்ப்போம், நல்வினை புரிவோம், நற்பயன் பெறுவோம்’ என எண்ணுவதற்கு இடம் உண்டாகிறது.
இவ்வாறாகச் சிந்திக்கும்போது வள்ளுவர் ஊழ் என்பதால் ஊழ் வினையே சுட்டினார் எனக் கொள்வதே பொருத்தம் என்பது எமது கருத்தாகும்.
ஊழ் அதிகாரத்திலே அதன் வல்லமைபற்றிப் பேசிய வள்ளுவர் வேறு சந்தர்ப்பங்களில், அவ்வல்லமையை மனித முயற்சியால் வெல்ல முடியும் என்ற கருத்தை முன்வைத்துள்ளார். ஆள்வினையுடைமை அதிகாரத்திலே,
ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித் தாழா துருற்று பவர் (620)
என்ற குறட்பா ஊழ் வல்லமைக்கு நேரெதிரான பொருளைத் தந்து நிற்பது வெளிப்படை வெவ்வேறு சந்தர்ப்பங்களில் அமைந்த,
கூற்றம் குதித்தலும் கைகூடும் நோற்றலின் ஆற்றல் தலைப்பட்டவர்க்கு (269)
தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக்
கற்றனைத் தூறும் அறிவு (396)
ஆகிய குறள்கள் தவமுயற்சியால் கூற்றுவனையும் வெல்லலாம் எனவும் கல்வி முயற்சியால் அறிவு பெருகும் எனவும் சுட்டுவதன் மூலம் ஆகூழ், போகூழ் என்பவற்றின் அடிப்படைகளை ஆட்டங்காணச் செய்வன என்பது சிந்திக்கத்தக்கது.
அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியான் கேடும் நினைக்கப்படும் (169)
இந்துக்கலைக்களஞ்சியம்

என்ற குறட்பா நல்லவன் சீரழிவதும் தீயவன் பெருவாழ்வு பெறுவதும் ஆன சமுதாய நிலைமைகளுக்கு வினைப்பயன் கோட்பாட்டில் விடை காண முடியாத வள்ளுவரின் மன ஏக்கத்தை உணர்த்துவது. இதிலே நினைக்கப்படும் என்பதற்குச் சிந்திக்கப்படும் என்பதே நேர்ப்பொருள்.
இதுவரை, மேற்படிநிலைக்குக் காரணம் காணவோ தீர்வு
கூறவோ முடியாத நிலை உளது. இனிமேலாவது இது
சிந்திக்கப்பட வேண்டும். எதிர்காலச்சந்ததி இதனைச்
சிந்தித்துத் தீர்வு காணும். - எனப் பொருள் கொள்வதே இக்குறளுக்குப் பொருந்தும்.
இவற்றையெல்லாம் நோக்கும் போது வள்ளுவர் தாம் கூறிய ஊழ்க்கருத்துடன் தானே முரண்படுகிறார் என்ற எண்ணமே ஏற்படும். இவற்றை முரண்பாடு என்று கூறுவது வள்ளுவருக்கு இழுக்கேற்படுத்தும் எனக் கருதும் அறிஞர்கள் மேற்படி குறட்பாக்கள் அமைந்த சந்தர்ப்ப சூழ்நிலைகளைக் காரணம் காட்டியும், கூறவந்த பொருளை மிகைப்படுத்திப் பேசும் அவரது உத்தியைச் சுட்டியும் அமைதி காண்பர். டாக்டர் எஸ். இராமகிருஷ்ணன் அவர்கள், ஊழ் அதிகாரம் செல்வந்தரையும் ஆள்வினையுடைமை என்ற அதிகாரம் பாட்டாளி மக்களையும் நோக்கி அமைந்தன என நோக்கு நிலைவேறுபாடு காட்டுவதன் மூலம் முரணின்மை சுட்ட முனைகிறார். அறிஞர் சாமி சிதம்பரனார் அவர்கள்,
"வள்ளுவர் ஊழை மறுக்கவில்லை, அதனை எதிர்க்க
。 ラタ வழிகாட்டுகிறார் என்பர்.
இக்கருத்தின் தருக்கரீதியான வளர்ச்சிபோல அமைந்ததான, டாக்டர் இரா வேலு என்ற ஆய்வாளரின் விளக்கத்தை இங்கு சுட்டி காட்டுவது பொருத்தமாக அமையும்.
இந்தியக் கொள்கையான விதிக்கொள்கை சங்க காலச் சமுதாயத்தில் வேரூன்றியிருந்தது. வள்ளுவர் அக்கொள்கையை ஏற்றுக் கொள்கிறார். ஆனால் அதன் விளைவாக மக்கள் உள்ளத்தில் சோம்பல் நிலைகொள்வதை அவர் விரும்பவில்லை. அதனால் ஊழையும் ஆழ்வினையால் வெல்ல முடியும். என்ற நம்பிக்கையையும் (கு.620), முயற்சிக்குத் தக மெய்வருத்தம் கூலிதரும் (கு 619) என்ற குறிக்கோளையும் வலியுறுத்துகிறார்.
ஊழ்க்கொள்கை வள்ளுவரிடம் வன்மைபெறவில்லை. அறத்துப்பாலில் கூறும் கருத்துக்கள் எல்லாம் செயற்பாட்டுக் கொள்கை எனக் கொள்ளல் இயலாது. ஆனால் பொருட்பாலில் விளக்கும் கொள்கைகள் எல்லாம் அரசன் செய்ய வேண்டிய செயல்களை வலியுறுத்துகின்றன. அறத்துப்பால் காலங்கடந்து பயனைக் கொடுப்பது. பொருட்பால் உடனுக்குடன் பயனைத்
தருவது.
வள்ளுவரின் ஊழ்ச்சிந்தனை தொடர்பான ஒரு தெளிவான பார்வையை - மதிப்பீட்டை இந்த ஆய்வாளர் தந்துள்ளார் எனின் மிகையாகாது. நா.சு)
3ff

Page 378
திருக்குறிப்புத் தொண்டாநாயனார்
பெரியபுராணம் சிறப்பிக்கும் அறுபத்து மூன்று நாயன்மார்களுள் ஒருவர். ‘தூய மாதவம் செய்தது என்று பாராட்டப்பெறும் தொண்டை நாட்டினைச் சேர்ந்த காஞ்சிபுரத்தில் இவர் தோன்றினார். ஆடை தூய்மைப்படுத்தும் மரபில் வந்த இவர் சிவபெருமான்மீது அன்பு மிகக் கொண்டவராய், சிவனடியார்களுக்குத் தொண்டு செய்யும் ஒழுக்க நெறி நிற்பாராயினார். சிவனடியார்களின் உளக் குறிப்பினை அறிந்து போற்றும் இயல்பு மிக்கவராக விளங்கியமையால் இவர் திருக்குறிப்புத் தொண்டர் என்னும் சிறப்புப் பெயரால் குறிக்கப் பெற்றார்.
இவர் சிவனடியார் எவராயினும் அவரது ஆடையினைத் தூய்மை செய்து தரும் பணியினைத் தவறாது மேற்கொண்டொழுகினார். அடியார்களின் ஆடையிலுள்ள மாசினை அகற்றும் பணி மேற்கொண்டடிருந்தாராயினும், அதேநேரத்தில் சிவன்பாலும் சிவனடியார் பாலும் கொண்டிருந்த மெய்யன்பினால், தம் ஆன்மாவைப் பற்றியுள்ள மும்மல அழுக்கினையும் அகற்றி வருவாராயினார். இவர் தம் உண்மையன்பினை உலகிற்கறிவிக்க எண்ணிய இறைவன் அழுக்குமிக்க கந்தை அணிந்த ஓர் ஏழை வடிவில் வந்தார்.
திருக்குறிப்புத் தொண்டர் அவரை நெருங்கிச் சென்று அவர் தம் குறிப்புணர்ந்து வணங்கி அவர் அணிந்துள்ள கந்தை ஆடையினைத் தூய்மைப்படுத்துவதற்குத் தந்தருளுமாறு வேண்டினார். இக் கந்தை அழுக்கு மிக்கது; எனினும் அகற்றினால் குளிரால் வருந்த நேரும், இரவு வருமுன் ஆடையைத் துவைத்துக் கொடுப்பதாக இருந்தால் எடுத்துச் செல்லும் என்று அடியவர் கூறினார். அவவாறே அந்தி வருமுன் ஆடையைத் தூய்மை செய்து உலர்த்தித் தருவதாக உறுதி கூறினார் தொண்டர். அடியவர் மேலும் வற்புறுத்தி, இரவுக்கு முன் ஆடையைத் தாராவிடின் என் உடலுக்கு மிக்க துயர் செய்தவராவீர் என்று கூறி ஆடையைக் கொடுத்தார்.
ஆடையைப் பெற்றுச் சென்ற திருக்குறிப்புத் தொண்டர் அதனை வெள்ளாவியில் வைத்துத் துவைக்க முற்பட்டபோது, இறைவன் திருக்குறிப்பினால், இருண்ட மேகம் சூழ்ந்து மழை பெய்யலாயிற்று. மழை இரவு வரை தொடர்ந்து பெய்வதனைக் கண்ட தொண்டர் மனம் மிக நொந்து, 'ஆ கெட்டேன் நான். ஏவலை நிறைவேற்றுவதில் தவறிவிட்டேன்' என்று கூறி மிகவும் வருந்தினார். அடியவர் திருமேனி குளிரால் நடுங்குவதனை எண்ணி மயங்கி விழுந்தார். துவைத்த ஆடையை மனையிற் கொண்டு சென்று உலர்த்த அறியாது போய்விட்டேனே என்று அரற்றி, அடியார்க்குத் துன்பம் செய்துவிட்ட உணர்வினால், மேலும் உயிர் வாழ விரும்பாது, துணிதுவைக்கும் பாறையில் தம் தலையினை மோதி உயிர்விடத் துணிந்து முற்பட்டார். மோதிய தலையினைப் பாறையின் மருங்கே இறைவன் திருக்கரம் தோன்றித் தொண்டரின் தலையினை மோதாமல் தடுத்து நிறுத்தியது. பெய்த மழை நீங்க, அங்கு பூமழை பொழிந்தது.
312

வானத்தில் இடபத்தின் மீது அம்மையோடு இறைவன் தோன்றி 'நம் மண்ணுலகு பிரியாது வைகுவாய்' என்றுரைத்து அருள்புருந்தார்.
இவரைச் சுந்தரமூர்த்தி சுவாமிகள், திருக்குறிப்புத் தொண்டர் தம் அடியார்க்கும் அடியேன் என்று திருத்தொண்டத் தொகையில் பாராட்டியுள்ளார். மழை முகில் வீடாதொழியின் யான் வீவன் என்னா, முண்டம் படர் பாறை முட்டும் எழிலார் திருக்குறிப்புத் தொண்டன்’ என்று நம்பியாண்டார் நம்பி இவரைச் சிறப்பித்துள்ளார். இவர் வரலாறு கூறும் புராணத்தில் சேக்கிழார், தொண்டை நாட்டின் பெருமைகளையும், வளங்களையும் மிகவும் விரிவாகக் காட்டியுள்ளார். (அ. மா. ப)
திருக்குறுக்கை (கொருக்கை)
மக்கள் வழக்கில் கொருக்கை என்று வழங்கும் இத்தலம் மயிலாடுதுறைக்குப் பக்கத்தில் 12 கி. மீ. தொலைவில் உள்ளது. மயிலாடுதுறை - மணல்மேடு பேருந்துச் சாலையில் நீடூர் தாண்டி கொண்டல் பாலந்தாண்டி, கொண்டல், ஊரையடைந்து, 'கொருக்கை என்று வழிகாட்டிப் பலகை (கைகாட்டிமரம்) உள்ள (குறுக்கைச்) சாலையில் இடப்புறமாக 3 கி. மீ. சென்று (குறுகிய பாதை) பாலத்தைக் கடந்து இத்தலத்தை அடையலாம்.
அட்ட வீரட்டத் தலங்களுள் ஒன்று. மன்மதனை எரித்த தலம். 'ஆடல் அநங்கனை அமுது செய்த செங்கணான் இருக்கை ஈது” என்பது திருவிளையாடற் புராணத் தொடர். இத்தலம் திருக்குறுக்கை வீரட்டம் எனப்படும்.
தருமையாதீனத் திருக்கோயில். இங்குள்ள சூல தீர்த்தத்தின் பெருமையறியாது, தீர்க்க பாகு என்னும் முனிவர், கங்கை நீரைப் பெறவேண்டித் தம் கைகளை நீட்டியபோது அக்கைகள் குறுகிவிட்டன. அதுகண்டு தம்பால் பிழை நேர்ந்தது என்றெண்ணித் தலையைப் பாறைமீது மோதமுற்பட, இறைவன் காட்சி தந்து, அவர் உடற்குறையைப் போக்கினார் என்பது தலவரலாற்றுச் செய்தி. குறுங்கை முனிவர் இவர் பெயரால் இத்தலம் அழைக்கப்பட்டு, நாளடைவில் குறுக்கை என்று ஆனதாகச் சொல்லப்படுகிறது.
யோகீசபுரம், காமதகனபுரம், கம்பகரபுரம் என்பன இதன் வேறு பெயர்கள். இலக்குமி, திருமால், பிரமன், முருகன், ரதி ஆகியோர் வழிபட்ட தலம்.
இறைவன் வீரட்டேஸ்வரர்
mைவி ானாம்பிகை
D ஞ தலமரம் கடுக்கா தீர்த்தம் - சூல தீர்த்தம் - கோயிலின் முன்பு
உள்ளது.
அப்பர் பாடல் பெற்றது.
ராஜ கோபுரம் ஐந்து நிலைகளையுடையது. எதிரில் சூல தீர்த்தம் உள்ளது.
இந்துக்கலைக்களஞ்சியம்

Page 379
மேற்கு நோக்கிய சந்நிதி. ராஜகோபுரத்தில் பைரவர், தகூதிணாமூர்த்தி, சதாசிவர் முதலிய பலவகைச் சிற்பங்கள் உள்ளன. இவற்றுள் பன்றி, யானை, நரசிம்மம், மனிதன் ஆகிய நான்கு முகங்களையுடைய ஒரு மூர்த்தியின் உருவம் - சிற்பம் காணத்தக்கது.
வாயிலில் உட்புறமாகத் துவாரகணபதியும் சுப்பிரமணியரும் உள்ளனர். வெளிச்சுற்றில் தோட்டம் மட்டுமே - சந்நிதிகள் ஏதுமில்லை; கொடிமரம் இல்லை. நந்தி, பலிபீடம் மட்டும் உள. வெளவால் நெத்தி மண்டபம். இம் மண்டபத்தில் இடப்பால் அம்பாள் - ஞானாம்பிகை சந்நிதி உள்ளது. தெற்கு நோக்கியது. நின்ற திருக்கோலம். நான்கு திருக்கரங்கள். எதிரில் நந்தி, பலிபீடம் உள்ளன. இருபுறமும் துவாரபாலகியர் உள்ளனர். மண்டபத்தின் ஒரு புறம் பள்ளியறை உள்ளது.
வாயிலைக் கடந்து அடுத்த மண்டபத்தையடைந்தால் இடப்பால் வள்ளி தெய்வயானை சுப்பிரமணியர் தரிசனம். அடுத்து கஜலட்சுமி தரிசனம் பக்கத்தில் தலமூர்த்தியாகிய காம தகன மூர்த்தி சந்நிதி உள்ளது. இடக்காலை மடித்து, வலக்காலைத் தொங்கவிட்டு, வலக்கை அபய முத்திரையுடன், இடக்கையை மடக்கிய கால்மீது வைத்து, அமர்ந்த திருக்கோலத்தில் இம்மூர்த்தி காட்சியளிக்கின்றார். களிற்றுப் படிகள் உள்ளன. சந்நிதியின் உள்ளே பக்கத்தில் உமையும் எதிரில் ரதி, மன்மதன் உற்சவத் திருமேனிகளும் உள. சுவாமிக்குப் பக்கத்தில் சனகாதி முனிவர்களின் திருமேனிகள் உள்ளன. மன்மதன் கையில் கரும்பு வில்லும், ரதியின் கையில் கிளியும் உள்ளன.
காமதகனவிழா மாசிமகத்தன்று இக்கோயிலில் சிறப்பாக நடைபெறுகின்றது. காமனைத் தகனம் செய்த இடம் விபூதிக்குட்டை என்ற பெயரில் 1 கி. மீ. தொலைவில் உள்ளது. இக்குட்டையில் எங்கெடுத்தாலும் மண்ணானது விபூதியாகவே யுள்ளது. உட்பிராகாரத்தில் தலமரம் கடுக்கா உள்ளது. குறுங்கை விநாயகர் - தலவிநாயகர் சந்நிதி உள்ளது. இச்சந்நிதியில் விநாயகர் சதுர ஆவுடையாரில் அமர்ந்த கோலத்தில் உள்ளார். பக்கத்தில் தீர்த்தபாகுமுனிவர் உருவம் உளது. அடுத்து, நின்ற கோலத்தில் 'சோகஹரேஸ்வரர் காட்சி தரும் சந்நிதியுள்ளது. கோஷ்ட மூர்த்தங்களாகத் துர்க்கை, பிரமன் (இம்மூர்த்தத்தின் மேலே ரதி, இறைவனை வேண்டுவதுபோல சுதையாலான சிற்பம் உள்ளது). லிங்கோற்பவர், தட்சணாமூர்த்தி, நர்த்தனவிநாயகர் ஆகிய மூர்த்தங்கள் உள்ளன. சண்டேஸ்வரர் சந்நிதி தனிக் கோயிலாக உள்ளது.
உட்பிராகார வலம் முடித்துப் படிகளேறி, மண்டபத்தை அடையலாம். மண்டபத்தின் வலப்பால் நவக்கிரக சந்நிதி. வாயிலைக் கடந்து உட் சென்றால் இடப்பால் நடராச சபை உள்ளது. எதிரில் வாயில் உள்ளது. இச்சபையில் சிவகாமி, மாணிக்கவாசகர் திருமேனிகள் உள. இச்சபை, சம்பு விநோத சபை, காமனங்க நாசனி சபை' எனப் பெயர் பெறும்.
துவாரபாலகர்களைக் கடந்து உட்சென்றால் நேரே மூலவர் தரிசனம், சுயம்பு மூர்த்தி, சதுர ஆவுடையார் - உயர்ந்த பாணம்,
இந்துக்கலைக்களஞ்சியம்

மன்மதன் எறிந்த பஞ்ச பாணங்களுள் (ஐந்து அம்புகளுள்) ஒன்றான பத்மம் (தாமரை) பதிந்துள்ள அடையாளம் சுவாமி பீடத்தின் முன்புறத்தில் நடுவில் உள்ளது. நிறைவான தரிசனம். நாடொறும் நான்கு கால பூஜைகள் முறையாக நடைபெறுகின்றன. 29.04.1959இல் கும்பாபிஷேகம் நடந்துள்ளது. பெருவிழாக்களும் மாதாந்திர விழாக்களும் முறையாக நடைபெறுகின்றன. மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம்பிள்ளையவர்கள் பாடியுள்ள தலபுராணம் உள்ளது. சோழ, விஜயநகர மன்னர்கள் காலத்திய கல்வெட்டுக்கள் இக்கோயிலில் உள்ளன.
நீற்றினை நிறையப் பூசி நித்தலும் நியமஞ்செய்து ஆற்றுநீர் பூரித்தாட்டும் அந்தன னாரைக் கொல்வான் சாற்றுநாள் அற்றதென்று தருமராசற்காய் வந்த கூற்றினைக் குமைப்பர்கோலும் குறுக்கை வீரட்டனாரே t
நிறைமறைக்காடு தன்னில் நீண்டெரி தீபந்தன்னைக் கறைநிறத் தெலிதன் மூக்குச் சுட்டிடக் கனன்று தூண்ட நிறைகடன் மன்னும் விண்ணும் நீண்டவானுலகு
மெல்லாம் குறைவறக் கொடுப்பர்போலும் குறுக்கை வீரட்டனாரே' (அப்பர்) (தே. ஹ.) திருக்குறுங்குடி
ஆழ்வார்களாற் பாடப்பெற்ற வைணவத் திருப்பதிகள் 108 இல் ஒன்று. இது நாங்குனேரியிலிருந்து தென்மேற்கே 13 கி. மீ. தொலைவில் உள்ளது. குறுகியவனான வாமனன் எழுந்தருளியிருக்கும் இடமாதலால் இத்தலம் குறுங்குடி எனப் பெயர் பெற்றது. திருக்குறுங்குடியில் வைணவ நம்பி குறுங்குடி வல்லித் தாயாருடன் நின்ற திருக்கோலத்தில் விளங்குகிறார். இங்கு பெருமாள் பக்கம் நின்ற சிவனுக்கு வெளிப்பட்டருளினர் என்பது மரபு நின்ற நம்பி, இருந்த நம்பி, கிடந்த நம்பி, மலைமேல் நம்பி, திருப்பாற்கடல் நம்பி, ஆகிய எம் பெருமான்கள் இங்கு விளங்குகின்றனர். ஒரு வைசிக திவாதசியன்று திரு நம்பாடுவான் என்ற பக்தன் இத்தலத்தில் தன் புண்ணியத்தில் ஒரு பாகத்தைத் தன்னை விழுங்க வந்த பிரம அரக்கனுக்குக் கொடுத்துக் காத்தான் என்னும் வராகபுராண வரலாறு, இங்குக் கைசிக ஏகாதசியன்று இரவு நாடகமாக நடிக்கப்படுகிறது. திருமங்கையாழ்வார் பரமபதம் எய்திய தலம் இதுவே என்றும், ஆழ்வார் திருமேனி நீத்தருளிய திருவரசு என்னும் இடம் வயல் வெளியி உள்ளது என்றும் கூறப்படுகிறது.
இத்தலத்து எம்பெருமான், உடையவரிடம் சீடனாயிருந்து மந்திரப் பொருள்களைக் கேட்டமையால் சிரீவைணவ நம்பி’ என்று திருநாமம் பெற்றான். 'திருப்பரிவட்டப் பாறை' என்று பெயர்பெறும் உடையவரது அனுட்டானப் பாறை அமைந்துள்ள இடம் மிகவும் அழகானது. திருமழிசையாள்வார், நம்மாழ்வார், பெரியாழ்வார், திருமங்கையாழ்வார், ஆகிய நால்வரும் இத்
3T3

Page 380
தலத்தைப் பாடிப் பரவியுள்ளனர். வடிவழகிய நம்பியின் திருமேனியழகு நம்மாழ்வாரைக் கொள்ளைகொண்டது. நாயகியின் நிலையை அடைந்த நம்மாழ்வார் தம் தாய் தடுத்தும் எங்ங்னேயோ என்ற பதிகத்தில் நாங்கள் கோலத் திருக்குறுங்கொடி நம்பியை நான் கண்டபின், சங்கினோடும் நேமியோடும் தாமரைக் கண்களோடும் செங்கனிவாய் ஒன்றினோடும் செல்கின்றது. என் நெஞ்சமே என்று அவனிடமே நெஞ்சு ஈடுபட்டதை அருளிச் செய்கிறார். (எஸ். கி)
திருக்கடல்
மதுரை மாநகரில் உள்ள வைணவவத்தலம் திருக்கூடல். இது தென்மதுரை என்று போற்றப்படுகிறது. இங்கு அட்டாங்க விமானத்தில் கூடலழகர் வகுளவல்லி நாச்சியாரோடு வீற்றிருந்த திருக்கோலத்தில் கிழக்கே திருமுக மண்டலத்துடன் காட்சி நல்குகிறார். இங்குச் செளநகர், பிருகு, பெரியாழ்வார் ஆகியோருக்குஇறைவன் காட்சியருளினார். இச் சந்நிதியின் அட்டாங்க விமானம் மிகப் பெரியது. விமானத்தின் மேலடுக்கில் கிடந்த வண்ணமாய் அரங்கநாதனும், அதற்கு மேலடுக்கில் நின்ற வண்ணமாய்ச் சூரிய நாராயணனும் விளங்குகின்றனர். இத் தலத்தைத் திருமங்கையாழ்வார் மங்களாசாசனம் செய்தருளினார். பரிபாடலில் இருந்தையூர் என்று பாடப்பட்டுள்ளது. இத்தலமே என்று சிலர் கூறுவர்.
பெரியாழ்வார் பல்லாண்டு பாடிய தலம் இதுவேயாகும். முன்பொருகால் மதுரையைத் தலைநகராகக் கொண்டு ஆண்டு வந்த வல்லபதேவன்' என்னும் அரசன் பரம்பொருள் யார்? என்று நிருணயம் செய்வதற்காக வித்வான்களைத் திரட்டிச் சபை கூட்டினான். சிரீவில்லிபுத்தூரில் விளங்கி வந்த பெரியாழ்வார் எம்பெருமானின் அருளுடன் இங்கு வந்து எதிரிட்ட வித்துவான்களை வெற்றிகொண்டு திருமாலே பரம்பொருள் என்பதைப் பல வேத வாக்கியங்களைக் கொண்டு நிலை நாட்டினார். அதனால் உகந்த அரசன் பெரியாழ்வாரைத் தன் பட்டத்து யானை மேலேற்றி நகர்வலம் வருகையில், எம்பெருமானும் கருடன் மேல் ஏறிக்கொண்டு அனைவரும் காணும்படியாக ஆகாயத்திலே தோன்றினான். அவனைக் கண்ட ஆழ்வார் எம்பெருமானிடம் உள்ள பொங்கும் பரிவினால் அவனுக்கு என் வருமோ? என்று பயந்து பல்லாண்டு பாடினார். அதுவே நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தில் திருப்பல்லாண்டு என்ற பெயருடன் முதலிடம் வகிக்கிறது. பிள்ளைட் பெருமாளய்யங்கார் இத் தலத்தைப் பாடும்போது புதுவைப் பட்டர் பிரான் கொண்டாடும் கூடலழகா' என்கிறார். (எஸ். கி,
திருக்கடைையாற்றுார்
நடு நாட்டுத் தலம். சுந்தரரால் பாடப் பெற்றது. சேத்தியா தோப்பு கும்பகோணம் பாதையால் சென்று காவாலகுடியை அடைந்து அடுத்துள்ள கூடலையாற்றுாரை அடையலாம் மணிமுத்தாறும், வெள்ளாறும் கூடும் இடத்தில் உள்ள ஊராதலின் கூடலையாற்றுார் என்று பெயர் பெற்றது. வெள்ளப்
314

பெருக்கில் இக் கோயில் அழிய அங்கிருந்த கற்களைக் கொண்டு வந்து இவ்வூரில் கோயிலைக் கட்டி சுவாமி, அம்பாளை எழுந்தருளச் செய்துள்ளனர்.
சுந்தரர் திருமுதுகுன்றம் சென்றபோது இத் தலத்தை வணங்காமல் செல்ல இறைவன் அந்தண வடிவத்தில் வந்து முன் செல்ல சுந்தரர் அவரை திருமுது குன்றத்துக்கு வழி யாதெனக் கேட்கின்றார். கூடலையாற்றிற்கு வழி இதுவெனக் கூறி மறைய திடுக்குற்ற சுந்தரர் இத் தலத்தை அடைந்து வழிபட்டதாக வரலாறு கூறுகின்றது.
கோயில் இறைவன் - நர்த்தன வல்லபேஸ்வரர், நெறிக்காட்டு
நாதர் இறைவி - பராசக்தி, ஞானசக்தி (இரு அம்பாள்
சந்நிதி) தலமரம் - கல்லால மரம் (தற்போது இல்லை) தீர்த்தம் - சங்கமத் தீர்த்தம் (மணிமுத்தாறும்,
வெள்ளாறும் கூடுமிடம்)
பிரமனுக்கு நர்த்தனம் செய்து காட்டியவராதலின் நர்த்தன வல்லபேஸ்வரர் என்று பெயர் பெற்றார்.
மூன்று நிலைகளைக் கொண்ட பழமையான ராஜகோபுரம். கிழக்கு நோக்கிய சந்நிதி. இக் கோயிலின் கொடிமரம், பலிபீடம் இல்லை. நந்திமட்டுமே உள்ளது. அமுதவிநாயகர், விசுவநாதலிங்கம், ஆறுமுகர், ஞானசக்தி அம்பாள் முதலிய சந்நிதிகள் உள்ளன. இந்த அம்பாள் மிகவும் சக்தி வாய்ந்த அம்பாள் என்று போற்றி வழிபடுகின்றனர்.
படிகளேறி மேலே சென்றால் அழகிய மண்டபம் உள்ளது. துவார கணபதியைத் கும்பிட்டு மூல மூர்த்தியைத் தரிசிக்கலாம். மூலவர் விமானம் இரு தள அமைப்புடையது வலப்பக்கத்தில் பராசக்தி அம்மன் சந்நிதி உள்ளது. நின்ற திருக்கோலம். நடராஜ சபையில் சிவகாமி மூர்த்தமும் உள்ளது.
இங்குள்ள உற்சவ மூர்த்தங்களில் குறிப்பிடத்தக்கது சித்திரகுப்த நாயனாரின் உருவமாகும். ஒரு கையில் எழுத்தாணியும் மறு கையில் ஏடும் கொண்டு காட்சி தருவது. இவ்வுருவம் பிற்காலத்தில் பிரார்த்தனைக்காக ஒருவரால் செய்து வைக்கப்பட்டதாகும்.
இங்குள்ள இரு அம்பாள் சந்நிதிகளில் ஞானசக்தி அம்பாள் சந்நிதியில் குங்குமமும், பராசக்தி அம்பாள் சந்நிதியில் திருநீறும் தரப்படுகின்றது. இத் தலத்தில் நவக்கிரக சந்நிதி இல்லை. மூலவருக்கு வலப்பால் உட்பிரகாரத்தில் சனிபகவான் சந்நிதி மட்டுமே உள்ளது. கோட்டமூர்த்தங்களாக தட்சிணா மூர்த்தி, இலிங்கோற்பவர், பிரமன், அஷ்டபுஜ துர்க்கை முதலியவைகள் உள்ளன. சண்டேஸ்வர சந்நிதியும் உள்ளது.
இந்துக்கலைக்களஞ்சியம்

Page 381
நாள்தோறும் மூன்று காலப் பூஜைகள் இடம்பெறுகின்றது. மாசி மாதத்தில் பதின்மூன்று நாட்களுக்குத் திருவிழா இடம்பெறுகிறது.
"வடிவுடை மழுவேந்தி மதகரியுரி போர்த்துப் பொடியணி திருமேனிப் புரிகுழல் உமையோடும் கொடியணி நெடுமாடக் கூடலை யாற்றுாரில் அடிகள் இவ்வழி போந்த அதிசயம் அறியேனே'
சுந்தரரால் பாடப்பட்ட இப் பாடல் இறைவன் கூடலையாற்றுருக்கு வழிகாட்டிய செய்தியைக் குறிக்கின்றது.
(நி.நி)
திருக்கேதீஸ்வரம்
தலச்சிறப்பு
திருக்கேதீஸ்வரம் மன்னார்த் தீவிலிருந்து தெற்கே ஆறரைக் கல் தொலைவில் வடகடல் ஒரமாகடத் தென்பால் திகழ்கிறது. ஆதியில் இப்பகுதி மாதோட்ட நன்னகர், மாந்தை நகர் என வழங்கியது. மாதோட்டம் என்பது ஊரின் பெயர். திருக்கேதீஸ்வரம் என்பது மாதோட்ட ஊரின் கண் விளங்கிய சிவாலயத்தின் பெயர். தற்போது மாதோட்டம் என்ற பெயர் அருகிச் சிவாலயத்தின் பெயராகிய திருக்கேதீஸ்வரம் என்ற திருப்பெயரே பெருவழக்காக வழங்கி வருகிறது.
இத் தலத்துச் சிவலிங்கப் பெருமானை நவக்கிரகங்களில் ஒருவனான கேது என்பவன் பூசித்துப் பேறு பெற்றான். அதனால் இத் திருக்கோயில் திருக்கேதீஸ்வரம் எனப் பெயர் வழங்கியது. இங்கு கேது பகவான் பூசித்த பின்பு அக் கேது நாதனைச் சூரபன்மனின் மனைவியான பதுமகோமளையின் பாட்டனும் விசுவகர்மா என்பவனின் தந்தையுமான மாதுவட்டா என்ற தேவதச்சன் வந்து பூசித்து வழிபட்டான். பின்பு அவன் திருக்கேதீஸ்வரத் திருக்கோயிலைச் சிறப்பு முறைப்படி திருப்பணி புரிந்தான். ஊரையும் நன்முறையில் அமைத்தான். ஊர் மகாதுவட்டாபுரம் எனப் பெயர் பெற்றதென்று வடமொழித் தகூழினகயிலாய மான்மியம் கூறுகிறது. இம் மகாதுவட்டாபுரம் என்ற பெயரே காலப் போக்கில் மாதோட்டம் என்று மருவி வழங்கியது என்பர் சிலர். இம் மாதோட்ட நன்னகர் பெளத்த இலக்கியங்களில் மூன்றாம் நூற்றாண்டிலிருந்து மகாதீர்த்தம் என்ற பெயரைப் பெற்று வருகிறது. மகாதீர்த்தம் - இது மிகப் புனிதமான ஒரு புண்ணியத் தலம் என்பதாகும். தீர்த்தம் - பரிசுத்தம், புனிதமாக்குவது. அதாவது தன்னிடம் வந்து முழுகுவோரின், தரிசிப்போரின் பாவங்களைப் போக்கித் தூய்மை செய்வதாகும். இறைவனுக்குத் தீர்த்தன் என்ற ஒரு திருப்பெயரும் உள்ளது. ஆர்த்த பிறவித்துயர் கெட நாம் ஆர்த்தாடும் தீர்த்தன் என்பது திருவாசகக் கூற்று.
பாலாவித் தீர்த்தத்தின் மகிமை
மாதோட்டத் திருக்கேதீச்சரத்திலே திகழும் புண்ணிய தீர்த்தம் பாலாவித் தீர்த்தமாகும். இதனை, மாதோட்டத்துள்
இந்துக்கலைக்களஞ்சியம்

மன்னு பாலாவியின் கரையில் கேதீச்சரம்' எனச் சம்பந்தர் தேவாரமும் ". மாதோட்ட நன்னகரில். LIT6urI6Shaft கரைமேல் செய்ய சடை முடியான் திருக்கேதீச்சரத்தானே’ எனச்
சுந்தரர் தேவாரமும் கூறுகின்றன.
இப் பாலாவித் தீர்த்தம் சிவ வடிவாகும். இத் தலம் தோன்றிய போதே தோன்றியது. இதனை 'பரம பரன் உருவாய் உற்ற பாலாவி’ என்றும் பலவினைக் குறும்பு போக்கும் பாலாவி என்றும் திருக்கேதீச்சரப் புராணம் புகழ்கிறது.
இப் பாலாவிச் சிவதீர்த்தம், திருக்கேதீஸ்வர ஆலயத்தின் அம்மன் சந்நிதிக்கு நேர் எதிரே தென்பால், சிறிது தூரத்தில் உள்ளது. இது கி. பி. 9 ஆம் நூற்றாண்டின் இடைப்பகுதியான சுந்தரமூர்த்தி சுவாமிகள் காலத்தினும் பெரு நதியாக இருந்து மேலைக் கடலுடன் கலந்து நின்றதாக ஆய்வாளர் கருதுவர். தற்போது பாலாவியானது அணை கட்டித் தேக்கிய நீர்நிலை போற் காணப்படுகிறது. ஒருவர் இப் பாலாவித் தீர்த்தத்தில் நாடோறும் ஸ்நானம் செய்து கேது நாதனைத் தரிசிக்கின் இஷ்ட சித்திகளைப் றுெவர். அவ்வாறு இயலாதவர் விசேட புண்ணிய காலத்திலேனும் வந்து ஸ்நானம் செய்து இறைவனைத் தரிசிக்கின் இஷ்ட காமியங்களைப் பெற்று உய்வர் என்பது திண்ணம். ஒருவர் பிதிர் தினத்திலே இப் பாலாவியில் வந்து நீராடி நியமம் முடித்து தர்ப்பணம் செய்து கேது நாதனைத் தரிசித்து நெய்விளக்கு இட்டு வழிபடின் காசியில் சிவதர்ப்பணம் அல்லது சிவசிரார்த்தம் செய்த பெரும் பயனை அடைவர். தென் புலத்தாரும் மிக மகிழ்ந்து அவர்க்கு ஆசி கூறுவர் என்று தலபுராணம் கூறும்.
மாதோட்டம் - துறைமுகப் பட்டினம்
பண்டைக் காலம் தொட்டே இம் மாதோட்ட நகர் இலங்கை - வடகடல் துறைமுகமாக இருந்து வந்ததாகும். இம் மாதோட்டத் துறைமுகம் போக்குவரத்துத் துறைமுகமாகவும் விளங்கி வந்தது. இத் துறைமுகத்தில் தங்கி நின்ற பெருங் கப்பல்களையும் அங்கு அமைந்து விளங்கிய பல அடுக்கு மாளிகைகளையும், மலர்ச் சோலைகளையும், பழத் தோட்டங்களையும் தம் தேவாரங்களில் சம்பந்தரும், சுந்தரரும் கவின் பெற எடுத்துக் காட்டி உள்ளனர். பாலாவியின் தென் கரையில் களஞ்சியக் கட்டிடங்களும், பாலத்துறையும் அமைந்து விளங்கின. அவ்விடம் இன்றும் வங்காலை (வங்கம் - கப்பல், காலை - தங்கும் நிலையம்) என்ற பெயருடன் நிலவக் காணலாம். இங்கு வாணிபத்தின் பொருட்டுப் பற்பல நாட்டு மக்கள் வந்து கூடி இருப்பர். இதனை வங்கம் மலிகின்ற கடல் மாதோட்ட நன்னகர் எனவும் வையம் மலிகின்ற கடல் மாதோட்ட நன்னகர் எனவும் சுந்தரர் தேவாரத்தால் அறியலாம். இங்கு நடைபெற்ற கடல் வாணிபம் வெகுகாலம் வரை பண்டமாற்றாகவும், பின்பு சிலகாலம் வரையில் பண்டமாற்றும், நாணய மாற்றும் கொண்டதாகவும் இருந்து வந்தனவாம்.
யாழ்ப்பாண வைபமாலை விஜயன் இலங்கைக் கரையைச் சேர்ந்ததும் நெடுங்காலமாகப் பாழடைந்து கிடந்த
375

Page 382
திருக்கேதீச்சர ஆலயத்தைப் புதுப்பித்துக் கட்டினான் என்று எடுத்துரைக்கின்றது. இத் தலத்திலே தேவர்கள் அர்த்தசாமப் பூசை செய்வதாக மரபு உண்டு. புரட்டாதி மாத பூர்வபட்ச சதுர்தசித் திதியே தேவர்கள் அர்த்தசாம பூசை செய்யும் நாளாகக் கூறப்படுகின்றது.
வரலாற்று ஆதாரங்கள்
மன்னார் மாவட்டத்திலுள்ள மாந்தை, அனுராதபுரம் இலங்கைத் தலைநகராக இருந்த காலத்தில் பிரதான துறைமுகமாய் விளங்கிற்று. இதனைச் சிங்களத்தில் மகாதித்த என்றழைப்பர். இலங்கைச் சரித்திரத்தைக் கூறும் மகாவம்சம் என்னும் நூலில் மகாதித்த சரித்திர காலம் தொடங்கிப் பிரசித்தி பெற்ற துறைமுகமாக விளங்கியமை பற்றி பலவிடங்களிற் கூறுகிறது. அந் நகரமிருந்த இடத்தில் இப்பொழுதும் நகரின் சுற்று மதில்களையும் இரட்டை அகழிகளையும் காணக்கூடியதாக உள்ளது.
மாந்தையெனும் நகரமிருந்த இடத்திற் புதைபொருள் ஆராய்ச்சி 1887இல் போக் என்பவராலும் 1925 28 இல் ஏ. எம். கொகாட் என்பவராலும் நடத்தப்பட்டது. கொகாட் என்பவரின் ஆராய்ச்சி முடிவுகள் அவர், சுகவீனங் காரணமாக 1929இல் இளைப்பாற நேர்ந்தபடியால் தக்க முறையில் வெளிவரவில்லை. திருக்கேதீஸ்வரம், மாதோட்டம் அல்லது மாதோட்டை என்ற தலைப்பில் 1887 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 7 ஆம் நாள் திரு W. J. S. போக் என்பவரால் படிக்கப்பெற்ற அறிக்கையில் இருந்து புராதன ஆலயமான திருக்கேதீஸ்வரத்தின் நிலையைப் பற்றி திட்டவட்டமான சில உண்மைகளை நாம் அறிய முடிகிறது.
இப் பழைய நகரில் உடைந்த சில சிற்பங்களின் பகுதிகளையும், ஒடுகளையும், செங்கட்டிகளையும், மட்பாண்டங் களையும் தவிர வேறு எதுவும் நிலத்தின் மேல் இல்லை. பழைய வீதிகளின் அறிகுறிகளும் இரண்டொரு கிணறுகளும், செங்கட்டிடங்கள், கோயில்கள் என்பவற்றின் அத்திவாரங்கள் என்பனவும் காணப்படுகின்றன. குன்று ஒன்றின் மத்தியில் செங்கட்டியால் அமைந்த பழைய அத்திவாரம் ஒன்று இருக்கின்றது. இவ்விடத்திலேயே முக்கிய நகரம் பெரும் பகுதி இருந்திருக்க வேண்டும். பழைய கிணற்றிற்கு அண்மையில் ஆலயத்தின் வாயில் இருந்திருக்கலாம் என்று அவர் கூறினார்.
ஆனால் அந்தக் கூட்டத்திலிருந்த சேர் பொன் இராமநாதன் அவர்கள் குறித்த அறிக்கையின் ஒரு பகுதிக் கருத்தை மறுத்துரைத்து விரிவான விளக்கத்தோடு இந்து சமய அடிப்படையில் அந்த இடத்தின் அமைவைத் தெளிவுபடுத்தினார். மேலும் அவர் பழைய கட்டிடங்கள் இருந்தவிடம் நகருக்குப் புறம்பானது என்றும் எடுத்துக் காட்டினார். அங்கு ஆலயத்தின் ஆட்சிக் குழுவினர் அடியார்கள் வேலையாட்கள் என்பவர்கள் வாழ்ந்தனர். அன்று திருக்கேதீச்சரத்து ஆலயத்தைச் சூழ்ந்து இருந்த அகழியின் அமைவு முக்கியமானதொன்றெனலாம். அங்கே இரண்டு அகழிகள் அமைந்திருந்தன. ஓர் அகழி கடல் நீரையும் மற்றையது நன்னீரையும் உடையனவாய் இருந்தன.
3T6

கோயிற் சொத்துக்களைப் பாதுகாப்பதற்காகவே அகழிகள் அவ்வாறு அமைக்கப்பட்டிருந்தன போலும். பிரதான ஆலயத்தின் பாழடைந்த மூலப்பகுதி 1894 ஆம் ஆண்டு கண்டு பிடிக்கப்பட்டது. அவ்வாறு கண்டு அறிவதற்குக் கோயில் நிலத்தில் அமைந்திருந்த சோழர் காலக் கிணறு ஒன்றும், போர்த்துக்கேயர் காலத்திற்கு முன் வழிபட்ட சிவலிங்கம் ஒன்றும், நந்தி ஒன்றும் கணேசரின் உருவம் ஒன்றும் உதவியாயின.
1950 ஆம் ஆண்டு, நகரின் கிழக்கு வாசலில் இருந்துபோகும் நாற்பதடி அகலமுள்ள ஒரு வீதி கண்டுபிடிக்கப் பட்ட இந்த வீதிக்கு சமாந்தரமாகப் போகும் அகலம் குறைந்த இன்னொரு வீதியும் காணப்பட்டது. இந்த வீதியின் இரு மருங்கிலும் கட்டிடங்களின் அழிவுகள் காணப்படுகின்றன. கிழக்கு வாசலிலிருந்து போகும் வீதி பிற்காலத்தில் கட்டப்பட்ட கோயிலுக்குப் போவதாக காணப்பட்டது. இந்தக் கோயில் எக்காலத்தது என்று இப்போது கூறமுடியாமலிருக்கிறது. நாற்பது வருடங்களுக்கு முன் இந்த இடத்தில், பின்னப்பட்டதும், இலங்கையிலுள்ள சிவலிங்கங்கள் எல்லாவற்றிலும் மிகப் பெரியதுமான சிவலிங்கமொன்று கண்டெடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இப்பொழுது இருக்கும் கோயிலுக்கருகில் காணப்படும் கற்களைப் போன்ற ஒரு தீர்த்தக்கல் இந்த இடத்தில் காணப்படுகிறது. இந்த இடத்தில் இன்னும் ஆராய்ச்சி செய்தால் இக் கட்டடத்தைப் பற்றிய விபரங்களை அறியக் கூடும்.
சுட்ட மண்ணினால் கட்டப்பட்ட ஒரு கிணறு அல்லது கழிவு நீர்க்குழியும், கல்லினால் கட்டப்பட்ட இரு கிணறுகளும் காணப்பட்டுள்ளன. 32 அடி தோண்டப்பெற்ற பின் மூன்றடி விட்டமுள்ள கல்லினால் கட்டப்பட்ட கிணற்றின் நீர்மட்டம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இப்படி தோண்டிக் கொண்டு போகும்பொழுது விசித்திரமான பானை சட்டிகளும், மிருகங்களின் எலும்புக் கூடுகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. உரோமாபுரி, அரேபியா, சீனா முதலிய இடங்களிலிருந்து கொண்டுவரப்பட்ட பலவித பீங்கான்களும் காணப்பட்டுள்ளன. இவற்றுள் சிலவற்றைக் கொண்டு இவற்றின் காலத்தை நிர்ணயிக்க முடியும்.
மாந்தை நகர மதில்களுக்குப் புறத்தே இடுகாடு கண்டுபிடிக்கப்பட்டுத் தோண்டிய பொழுது ஒரு கிடங்கில் ஒரு மனிதனின் முழு எலும்புக் கூடும் அதோடு சம்பந்தப்பட்ட சட்டி பானைகளும் கண்டெடுக்கப்பட்டன. பேராசிரியர் டாக்டர் பி. கே. சண்முகம் இந்த இடத்திற்கு விஜயம் செய்து இந்த எலும்புக் கூட்டை ஆராய்ச்சிக்காக எடுத்துச் சென்றுள்ளார் வேறு இடங்களில் கண்டெடுக்கப்பட்ட தலையோடுகளும் எலுமபுகளும் ஆராய்ச்சிக்கு அனுப்பப்பட்டுள்ளன.
போர்த்துக்கேயரும் திருக்கேதீச்சரமும்
போர்த்துக்கேயர் இலங்கையின் வட காையில் இறங்கியபோது திருக்கேதீச்சரம் இந்துக்களின் முக்கிய வழிபாட்டு ஆலயமாகத் திகழ்ந்தது என்பது திண்ணம். எமேர்சன் நெனந்து (Emmerson Tennent) என்பவர் வெளிப்படையாகக்
இந்துக்கலைக்களஞ்சியம்

Page 383
குறிப்பிடாவிட்டாலும் போர்த்துக்கேயரின் ஆட்சிக் காலத்தில் திருக்கேதீஸ்வரம் சீரும் சிறப்பும் உள்ளதாய்த் திகழ்ந்தது என்பது தெளிவு போர்த்துக்கேயத் தளபதி (Lope de Britto) லொபி டி பிறிற்றோ மாதோட்டத்திற்கு அப்பால் இருந்த அரிப்பு (Arippu) முத்துக் குளிக்கும் கடற்கரைக்கு 1520 இல் வந்தான். அவ்வாண்டே திருக்கேதீச்சரம் கொள்ளையடிக்கப்பட்டு தரைமட்டமாக்கப்பட்டது. ஆலயத்தை இடித்த கற்களை எடுத்துச் சென்று மன்னார் துறைமுகத்தைப் போர்த்துக்கேயர் கட்டினர்.
திருக்கேதீச்சரமும் ஆறுமுகநாவலரும்
19 ஆம் நூற்றாண்டு மத்தியில் ஆறுமுகநாவலர் யாழ்ப்பாணச் சமயநிலை என்ற நூலில் "சைவ சமயிகளே! தேவாரம் பெற்ற சிவ ஸ்தலங்களுள் இரண்டு இவ்விலங்கையில் உள்ளன. அவைகளுள் ஒன்றாகிய திருகோணமலைக்குச் சம்பந்தமூர்த்தி நாயனார் திருப்பதிகமொன்று இருக்கிறது. மற்றொன்றாகிய திருக்கேதீச்சரத்துக்கு திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார் திருப்பதிகமும், சுந்தரமூர்த்தி நாயனார் திருப்பதிகமொன்றும் இருக்கின்றன. இத் திருக்கேதீச்சரம் வட மாகாணத்தின் கண்ணுள்ள மன்னாருக்கு அதி சமீபத்திலிருக்கின்ற மாதோட்டத்திலுள்ளது. இத் திருக் கேதீச்சரம் அழிந்து காடாகக் கிடக்கிறதே! புதிது புதிதாக இவ் இலங்கையில் எத்தனையோ கோயில்கள் கட்டப்படுகின்றனவே. நீங்கள் இந்த மகாஸ்தலத்தைச் சிறிதும் நினையாத தென்னையோ! இவ் விலங்கையிலுள்ள விபூதிதாரிகள் எல்லாரும் சிறிது சிறிது உபகரிக்கினும் எத்துணைப் பெருந் தொகைப் பொருள் சேர்ந்துவிடும். இதை நீங்கள் எல்லோருஞ் சிந்தித்து இத் திருப்பணியை நிறைவேற்றுவீர்களாயின் அருட் கடலாகிய சிவபெருமான் உங்களுக்கு அனுக்கிரகஞ் செய்வார்’ எனக்கூறிச் சைவர்களை இன் நற்பணியை மேற் கொள்ளும்படி ஊக்கப்படுத்தினார்.
திருக்கேதீச்சர நிலம் அரசாங்கச் சொத்தாய் வடமாகாண அதிபதியின் அதிகாரத்திலிருந்தது. நாவலரின் இளமைக் காலத்தில் 'டைக்கும் மத்திய காலத்தில் 'றசலும் மாகாண அதிபதிகளாகவிருந்து நாவலருக்கு உறுதுணை புரிந்தவர்கள். அவர்கள் காலத்தில் திருக்கேதீச்சரம் பற்றிய எண்ணம் கருக் கொண்டிருக்குமாயின் நாவலர் பெருமானே விதிப்படி சிவாலயம் எடுத்துப் பூசைக் கிரமம் பற்றிப் பத்ததியுஞ் செய்து வைத்திருப்பர். றசலைத் தயாநிதி என்கிறார் நாவலர். றசலுக்குப் பின் வந்தவர் துவைனம். திருக்கேதீச்சர நிலத்தை துவைனம் மூலம் பெற நாவலர் விரும்பவில்லை. காரணம் துவைனத்தின் உத்தியோக நடைமுறையில் நாவலருக்கு இருந்த அருவருப்பாக இருக்கலாம். நாவலரின் மறைவுக்குப் பின் பதினான்கு ஆண்டுகள் கழித்து அவருடைய கனவு நனவாகியது. நாவலரின் கனவை நனவாக்க நாட்டுக் கோட்டைச் செட்டிமாரும் பிறரும் முன் வந்தனர். பழைய கோயிலிருந்த இடம் அரசிடமிருந்து விலைக்கு வாங்கப்பட்டது.
விஜய வருஷம் தை மாதம் 1894ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் இருந்து திரு. சி. த. மு. பசுபதிச் செட்டியாரும்
இந்துக்கலைக்களஞ்சியம்

சில மேசன்மாரும் வேறு சில கூலியாட்களும் திருக்கேதீஸ்வரம் சென்று வாஸ்து சாந்தி, கிராம சாந்தி முதலிய கிரியைகளைச் செய்து காடு வெட்டிச் சோதித்த போது கிணறு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டு சேறு அள்ளிய பிறகு நல்ல தீர்த்தமுடையதாய் இருந்தது. இத் திருக்கேதீஸ்வரத்தின் அத்திபார ஸ்தானம் சோதனையால் அகப்பட்டது. சுற்றுப் பிரதிஷ்டாலிங்கமும் ஒன்று அகப்பட்டது. ஆலயம் இருந்த இடம் கண்டுபிடிக்கப்பட்டு அதிலுள்ள மண்மேட்டை எடுத்தபோது இத் தலத்துத் தென் மேல் புறத் திருமதில்கள் காணப்பட்டன. அம் மதில்கள் அப்பொழுதிருந்த மண்மேட்டில் ஏழு முழத்துக்குக் கீழே அதன் கீழ் நிலமட்டத்திலிருந்து பதினைந்து முழ உயரமுடையனவாக தோன்றின. இவை அடியிற் கருங்கல்லாலும் கட்டப்பட்டிருந்தன. அங்கு தற்காலிகமான சிவாலயமும் அம்பாளாலயமும் நிறுவப்பட்டு பூசைகளும் முறையாக நடக்கக்கூடிய ஒழுங்குகள் செய்யப்பட்டன.
பின்பும் ஒருமுறை வேதாகம முறைப்படி கருங்கற் திருப்பணியுடன் சிவாலயம், அம்பாளாலயம் மற்றைப் பரிவார மூர்த்திகளின் ஆலயங்கள் கோபுரங்கள் முதலியன நிறுவப்பட வேண்டுமென்பது சைவ மக்களுடைய உள்ளத்தில் தோன்றியது. அவர்களுள் முதன்மையானவர் புலோலியூர் திரு. சு. சிவபாதசுந்தரனார் ஆவார். அவர் சைவ மக்களைத் தூண்டி இக் கோயிற் திருப்பணியை பூர்த்தியாக்கி அதனைச் சிறப்பாக நடத்த வழிவகுத்தனர். சிறந்த சைவாபிமானியும் அரசியல் ஞானியுமாகிய சட்டத்தரணி திரு சு. சிவசுப்பிரமணியம் அவர்களின் பெருமுயற்சியால் திருக்கேதீஸ்வர புனருத்தாரண சபை நிறுவப்பட்டது. திரு சு. சிவபாத சுந்தரம் மலாயாவில் இருந்த தனது பழைய மாணவர்கள் மூலம் பெரும் தொகை நிதி திரட்டி ஆலயப் புனருத்தாரண வேலைகள் தடையின்றி நடைபெற உதவினார். திருக்கோயிலுக்கு ஈசான திசையில் திருஞான சம்பந்தர் மடாலயத்தை நிறுவுவதற்கு வழிகோலித் தாமே பெருந் தொகை நிதி உதவினார். பெருந்தொகைப் பொருள் செலவு செய்து திருக்கோயிலில் ஒரு நடராசர் விக்கிரகத்தையும் சிவகாமி அம்பாள் விக்கிரகத்தையும் செய்வித்து கோயில் உள்வீதியில் வடபுறத்தில் ஒரு மண்டபம் முறைப்படி பிரதிஷ்டை செய்து நித்திய பூசைகளும் வருடந்தோறும் நடராஜப் பெருமானுக்கு செய்ய வேண்டிய அபிஷேகங்களும் நிகழ ஒழுங்குகள் செய்துள்ளார்.
இன்று இத் திருக்கோயில் இத்துணை தூரம் முன்னேறியிருப்பதற்குக் காரணர் வைத்தியநாதன் அவர்களே. திரு சு. சிவபாதசுந்தரம் காலத்தில் பிரபல ஸ்தபதி செல்லக்கண்ணு அவர்கள், கட்டடக் கலைஞர் நரசிம்மன் ஈசான சிவாச்சாரிடார் முதலியோரின் ஆலோசனையுடன் திருக்கேதீச்சர ஆல' த்துக்கு ஒரு முறையான படம் தயாரித்துக் கொடுத்தார் இப்படததின் படி உட்பிரகாரம், இரண்டாம்வீதி, தேரோடும் வீதி முதலியவற்றை அமைத்து திருக்கேதீஸ்வர ஆலய புனருத்தாரண வேலையை ஆரம்பித்த பெருமை சேர் கந்தையா வைத்தியநாதனையே சாரும்
377

Page 384
வீதிகள் அமைத்ததும் பரிவாரக் கோயில்களை அமைக்கத் தொடங்கினார். 1960 ஆம் ஆண்டில் விநாயகர், வைரவர், சோமாஸ்கந்தர், பஞ்சலிங்கம், மகாலிங்கம், சுப்பிரமணியர், நடராசர் முதலியோருக்குரிய கோயில்களைப் பூர்த்தி செய்து திருவருள் துணைக்கொண்டு கும்பாபிஷேகம் செய்து வைத்தார்கள். இப் பரிவாரக் கோயில்களுள் மகாலிங்கத்துக்கு அமைக்கப்பட்ட மண்டபத்தை விசேடமாகக் குறிப்பிட வேண்டும். இம் மண்டபம் அழகான தூண்களைக் கொண்டது. இங்கு பிரதிஷ்டை செய்யப்பட்ட சிவலிங்கம் மிகவும் பழமையானது. சிறிது சேதம் இருந்தபடியால் புதிதாக அமைக்கப்பட்ட கோயிலுக்குள் பிரதிஷ்டை செய்யவில்லை. இதனையே தமது செலவில் அமைக்கப்பட்ட மண்டபத்தில் எழுந்தருளச் செய்வித்தார்கள். அதனோடு அதற்குச் சகல அடியார்களும் பாலாவியில் இருந்து தீர்த்தக்காவடி எடுத்து வந்து தாமே அபிஷேகம் செய்வதற்கு ஏற்பாடு செய்து வைத்தார்கள். திருக்கேதீச்சரத்திற்கு இது ஒரு சிறப்பான அம்சமாக இருக்கின்றது. இப்படி அபிஷேகம் செய்யும்போது மக்களுக்கு எழும் ஆனந்தம் சொல்லில் அடங்கா, மேலும் தீர்த்தக் காவடியால் கோயில் திருப்பணிக்கும் பணம் சேர்ந்தது.
சேர் கந்தையா வைத்தியநாதன் தினசரி பூசையில் திருமுறைகளுக்கு சிறந்த இடத்தை ஏற்படுத்தியது இன்னுமொரு சிறந்த அம்சமாகும். குன்றக்குடி அடிகளாரின் வேண்டுகோளுக் கிணங்கி வழமையான பூசையோடு தமிழ்மறையோதுதலையும் சேர்க்கத் தீர்மானித்தார். அதை நடைமுறைப்படுத்தினார். இவரது காலத்திலேதான் மாந்தைச் சந்தியில் இருந்து திருக்கேதீச்சரத்திற்கு தார் வீதியும், மின்சார வசதியும், பாலாவிக் கட்டு வேலையும், மணியும், மணிக்கோபுரமும், தபால் நிலையம் முதலியனவும் அமைக்கப்பட்டன.
திருக்கேதீச்சரத்தில் பிராமணப் பிள்ளைகளைப் பயிற்று விப்பதற்கு ஒரு குரு குலத்தை அகில இலங்கை இந்து மா மன்றத்தின் ஆதரவில் நிறுவியது சேர் கந்தையா வைத்தியநாதனின் மற்றுமொரு பணியாகும். பிராமணப் பிள்ளைகளை ஆலயச் சூழலில் பழைய குருகுல முறைப்படி பயிற்றுவிப்பதற்கு அச்சுவேலி குமாரசாமிக் குருக்களதும் கொக்குவில் குமாரசாமிப் புலவரதும் உதவியைப் பெற்றார்கள். தற்போது இக் குருகுலம் திருக்கேதீச்சரத்தில் நடைபெறாது இருப்பது பெருங் குறையாகும்.
மூர்த்தி, தலம், தீர்த்தம் என்ற பழம் பெருமை வாய்ந்த இத்தலம் களம் பல கண்டு சிலகாலம் பொலிவிழந்து, நலிந்து கிடக்கினும் மீண்டும் தழைத்தெழுந்து தன் மாட்சியை பொறித்துக் கொள்ளும் என்பது திண்ணம். (நி நி)
திருக்கொண்டிச்சரம்
சோழ நாட்டில் காவிரியாற்றின் தென்கரையில் உள்ள 127 சைவத்தலங்களுள் ஒன்று. தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த நன்னிலம் வட்டத்தில் உள்ளது இவ்வூர். இது நன்னிலம்
3፲8
 

புகைவண்டி நிலையத்திற்கு மேற்கே 2 கி. மீ. தொலைவில் காவிரியின் கிளையாகிய முடிகொண்டான் ஆற்றின் தென்கரையில் உள்ளது. தேவாரப் பாடல் பெற்ற தலம். வில்வாரணியம் எனவும் இத்தலம் சொல்லப்படுகிறது. சைவசமய குரவர் நால்வருள் ஒருவராகிய திருநாவுக்கரசர் இத் தலத்தில் எழுந்தருளியிருக்கும் பசுபதிநாதரை இரு பதிகங்களிற் போற்றியுள்ளார்.
காமதேனு இறைவனைப் பூசித்து வழிபட்ட தலம் என்ற சிறப்புடையது இவ்வூர். மேலும் பசு வடிவு கொண்டு உமையம்மை இறைவனைத் தேடிவரும்பொழுது கொம்பினால் மண்ணைக் கிளறியமையால் கொம்புபட்டுச் சிவலிங்கத்திலிருந்து குருதி வெளிப்பட்டதாகவும், உடன் தனது பாலை இட்டுக் காயத்தை ஆற்றி இறைவனை வழிபட்டதாகவும் வரலாறு கூறப்படுகிறது. இன்றும் சிவலிங்கத்தின் மேல் வடு காணப்படுகிறது என்பர். இங்குள்ள சிவன் கோயில் சிறிய அமைப்புடன் அழகாக உள்ளது. இதனைச் சுற்றி அகழிபோல ஒரு குளம் உள்ளது. இக் குளம் திருப்பாற்குளம் எனச் சொல்லப்படுகிறது. இக் கோயிலில் உள்ள இறைவன் பெயர் பசுபதிநாதர். இறைவியின் பெயர் சாந்த நாயகி.
விசயநகர வேந்தர் கிருட்டிணதேவராயர் உதயகிரிக் கோட்டையைக் கைப்பற்றி அதன்கண் இருந்த திருமலைராகுத்தராயரைச் சிறை பிடித்த செய்தியைத் தெரிவிக்கும் கல்வெட்டு இக்கோயிலில் உள்ளது.
இத் தலத்தைப் பற்றிய பதிக வரலாறு கிடைக்கப்பெறவில்லை. நீர்வளம் மிக்க வயல்கள், பொழில்கள் ஆகியவற்றைக் கொண்டு விளங்கும் இத் தலத்தின் சிறப்பைத் திருநாவுக்கரசர் குறிப்பிடுகிறார். இன்றும் இவ்வூர் வளம் நிறைந்ததாக விளங்குகிறது. சேணுயர் மாடம் நீடு திருக்கொண்டீச்சரம் என்று இங்குள்ள கோயிற் சிறப்பை நாவரசர் நவில்கின்றார்.
திருக்கொண்டிச்சரத்து இறைவனை நோக்கிப்பாடபெற்ற பாடல்களின் செய்திகள் பிறவியிலிருந்து வீடு பெறவேண்டும் என்பதை வலியுறுத்துகின்றன.
ஐம்பொறிகளின் செயலைப் பொறுக்க முடியவில்லை இவையும் தொண்ணுாற்றாறு தத்துவங்களும் என்னைச் சோர்வடையச் செய்கின்றன. இவ்வுடம்பு நடுக்கடலில் உடைந்துவிடும் மரக்கலம் போன்றது. பெண்டிருடன் வாழும் வாழ்வே மெய்யென்று எண்ணி உன்னை எண்ணாமலும் நண்ணாமலும் இருந்து விட்டேன். உடம்பென்னும் குடிசையிலிருந்து உயிர் பிரியும் பொழுதும் உன்னை அறியாதவனாய் உள்ள நான் திருநின்ற செம்மை நெறியில் செல்லும் வழியறியேன். பாலனாய்க் கழிந்த நாளிலும், மாதர் மேலனாய்க் கழிந்த நாளிலும், மெலிவும் மூப்பும் உற்றுக் கைக்கோல் ஏந்தி மூன்று காலுக்குத் தக்கவனாகிக் கழிந்த நாளிலும் உயிர்த்துணையாகிய உன்னை குறியாகக் கொள்ளுதல் இல்லாமல் கெட்டேன்' என்று நாவரசர் இப்பதியின் இறைவனிடம் கூறுவது நினைத்தற்குரியது. இர கி)
இந்துக்கலைக்களஞ்சியம்

Page 385
திருக்கொன்னம்பூதூர்
தஞ்சை மாவட்டம், கொரடாச்சேரி-குடவாசல் பாதையில் குடவாசலுக்குத் தென்கிழக்கே ஐந்து கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. திருக்களம்பூர் எனச் சொல்லப்பெறும் இத் தலம் வெட்டாற்றங்கரையில் உள்ளது. வில்வவனம் என்ற பெயரும் இதற்குண்டு. அகத்திய காவேரி எனவும் முள்ளியாறு எனவும் வெட்டாறு கூறப்பெறுகிறது. கூவிளம்பூதூர் என்பது கொள்ளம்பூதூர் என்று மருவி வழங்கப் பெறுகிறது என்பர். மதுரையில் அனல், புனல் வாதங்களில் சமணரை வென்று திரும்பிய திருஞானசம்பந்தர் இங்கு வந்தபொழுது ஆறு பெருக்கெடுத்தோடியது. ஆற்றைக் கடத்தற்குரிய பரிசிலைச் செலுத்துவாரில்லை. கரையில் கட்டப்பட்டிருந்த பரிசிலை அவிழ்த்து விட்டு அதில் அடியாருடன் ஏறிக்கொண்டு, 'கொட்டமே கமழும் கொள்ளம் பூதூர்’ என்று தொடங்கிப் பாடல்தோறும், செல்ல உந்துக' என்று குறிப்புடன் சம்பந்தர் பாடினார். பரிசில்கள் தாமே நகர்ந்து ஆற்றின் அக்கரையில் சேர்ந்தன என்பது வரலாறு. பெரியபுராணத்தில் இவ்வரலாற்றைக் காணலாம். ஆண்டுதோறும் ஐப்பசி அமாவாசையில் இவ் வரலாற்றைக் குறிக்கும் விழா நடைபெறுகின்றது. இத் தலம் இவ்வகையில் பாடல் பெற்ற தலமாகத் திகழ்கிறது. இத் தலத்து இறைவன் வில்வவனேசுவரர். இறைவி செளந்தராம்பிகை.
கொள்ளம்பூதூரில் வாசனைப் பொருள்கள் கமழ்கின்றன. தென்னை மரங்கள் சூழ்ந்துள்ளன. குவளை மலர்களும், கொன்றை மலர்களும் நிறைந்துள்ளன, ஒடங்கள் வந்தணைகின்றன, ஆறு வந்தணைகின்றது. குரங்குகள் மிகுதியாக உள்ளன. பருவரால் மீன்கள் உகளுகின்றன. கழனிகள் நிறைந்துள்ளன என்று சம்பந்தர் இவ்வூரின் நிலவளத்தையும் நீர் வளத்தையும் மொழிகின்றார்.
நட்டம் ஆடிய நம்பன், வெண்மை தவள நீறணி தலைவன், நின்ற புன்சடை நிமலன், ஆடல் பேணிய அடிகள், ஏறு தாங்கிய இறைவன், அரக்கனைச் செற்ற ஆதி, இருவர் காண்பரியான், தேரமண் செற்ற செல்வன்' என இறைவனைப் போற்றிப் பரவுகின்றார் சம்பந்தர்.
நாவலமே கோலாகக் கொண்டு பரிசிலைச் செலுத்தி ஆற்றைக் கடந்து கரைசேர்ந்த நிகழ்ச்சி வியத்தற்குரிய ஒன்றாக உள்ளது. சம்பந்தரின் இறையுணர்வின் சிறப்பைக் காட்டுகிறது. தொண்டர் தம் அன்பு, இறைவனின் அருள் ஆகியவை இந்நிகழ்ச்சியால் விளக்க முறுகின்றன. இர கி)
திருக்கோட்டியூர்
இராமநாதபுரம் மாவட்டத்தில் திருப்பத்தூருக்கு அருகில்
திருக் கோட்டியூர் என்ற இத் திருத்தலம் உள்ளது. திருக் கோட்டியூர் 108 வைணவத் திருப்பதிகளுள் ஒன்று. பெரியாழ்வார்
இந்துக்கலைக்களஞ்சியம்

இருபத்தொரு பாசுரங்களாலும் பேயாழ்வார் ஒரு பாசுரத்தாலும் திருமங்கையாழ்வார் பதின் மூன்று பாசுரங்களாலும் திருமழிசை ஆழ்வார் ஒரு பாசுரத்தாலும், பூதத்தாழ்வார் இரு பாசுரங்களாலும் இக்கோயிலில் மங்களாசாசனம் செய்துள்ளனர். இத்தலத்தில் வைணவ ஆச்சார்யர்களான பூரீ செல்வநம்பிகள், பூரீ திருக்கோட்டியூர் நம்பிகள் ஆகியோர் அவதரித்தனர்.
இரணியன் தான் பெற்ற வரங்களினால் உலகோரையும் தேவர்களையும் துன்புறுத்தித் தானே அனைவருக்கும் தலைவன், இறைவன் என அகந்தையுற்றான். தனது மைந்தன் பிரகலாதன் நாராயணனிடம் அளவற்ற பக்தி கொண்டதையறிந்து அவனையும் நாராயணன் எனச் சொல்லக்கூடாது என கட்டளையிட்டது மட்டுமன்றி பலவாறு துன்பங்களையும் இழைத்தான். நாராயணனை நாளும் நிந்தித்தான். நாராயணன், பிரம்மா, சிவன் மும்மூர்த்திகளும் இத்தலத்தில் ஒன்றுகூடி இரணியனை அழிப்பதற்கு வழி தேடினர். நாராயணன் நரசிம்மனாக வடிவெடுத்து இரணியனை அழிப்பதற்கு திருவுளம் கொண்டார். அவனை அழித்தார். மும்மூர்த்திகளும் ஒன்றாக இத்தலத்தில் கூடியதால் கோஷ்டியூர் எனப்பெயர்பெற்றது. பின்னர் கோட்டியூர் என மருவியது என்பர்.
கோயில்
மூலவர் - உரக மெல்லணையான் கூrராப்திநாதன்
தாயார் - திருமாமகள் (நிலமாமகள் குலமாமகள்
எனவும் அழைப்பர்)
உற்சவர் - செளமிய நாராயணர்.
தீர்த்தம் - திருபாற்கடல் தீர்த்தக் குளம்
விமானம் - அஷ்டாங்க விமானம்
கோயில் மிகப் பெரியது. மதில்கள் சூழ்ந்து கிழக்கில் இராஜ கோபுரத்துடன் விளங்குகிறது. கோயிலின் எதிரில் திருபாற்கடல் தீர்த்தக் குளம் நடுவில் ஒரு மண்டபத்துடன் திகழ்கின்றது. கோயிலுக்கு மேற்கிலும் வடக்கிலும் சிவகங்கை ஐயனார் குளங்கள் உள்ளன. வாயிலைக் கடந்ததும் ஏகாதசிக் கூடம். தென்புறம் இராமானூர் சந்நிதி. அடுத்து திருக்கோஷ்டியூர் பெரிய நம்பிகள் சந்நிதி, வடபுறம் மகாமகக்கிணறு என்பன உள்ளன. மண்டபத்தில் தங்கக் கவசமிட்ட கொடிமரம் பலிபீடம் உள்ளன. நேர்மேற்கில் தென்புறமாக சிறிதுதள்ளி சிவபெருமான் சரபேசர் கோயில் உள்ளது. அதன் தென்புறம் கணபதி சந்நிதி, வடபுறம் யோக நரசிம்மர் சந்நிதி மணிமண்டபம், இடப்பக்கம் ஆழ்வார் சந்நிதியும் கிருஷ்ணரின் சந்நிதியும் உள்ளன. கிருஷ்ணன் நடன நிலையில் சத்யபாமா, ருக்மணி உடன் நிற்க காட்சியளிக்கின்றார். அவரது கருவறைக்கு வலப்பக்கம் தாயார் திருமாமகளின் சந்நிதி, இடப்பக்கம் பூரீ ஆண்டாள் சந்நிதி என்பன தனிச்சிறு ஆலயங்களாக உள்ளன. தாயார் சந்நிதியில் இலட்சுமி நரசிம்மரும், ஆண்டாள் சந்நிதியில் பூரீ இராமரும் காட்சி தருகின்றனர்.
இக்கோயிலில் நடன கிருஷ்ணன் சந்நிதியே முதலாவதாகும். அடுத்து படிகளேறி முதல் மாடத்தையடையலாம். இங்கு
979

Page 386
கருவறையில் மூலவனை உரக மெல்லணையாள் ஆதிசேட படுக்கையில் பள்ளி கொண்டுள்ளார். திருவடிப்புறம் பூரீதேவி பூதேவியும் அருகில் மதுகைடபர், தேவேந்திரன், புரூரவ சக்கரவர்த்தி என்போரும் திருமுடிக்கருகில் கதம்பமகரிஷி ஆகியோர் உள்ளனர். சுவரில் புடைப்புச்சிற்பங்களாக பிரம சாவித்திரி, சரஸ்வதி, தேவர், கந்தர்வர் ஆகியோர் உள்ளன திருமுன்பில் உற்சவர் சௌமிய நாராயணன் பூமிதேவி நீளாதேவ உடனிருக்க காட்சி தருகின்றார். இரண்டாவது தளத்திலுள்6 கருவறை இந்திரலோகம் என அழைக்கப்படுகின்றது. உபேந்தி நாராயணன் திருமகள் பூமகள் உடனுறைய நின் திருக்கோலத்தில் காட்சிதருகின்றார். கருவறைச் சுவர் முழுவது தேவலோகக் காட்சிகள் வண்ண ஒவியங்கள் வரையப்பட்டுள்ளன மூன்றாவது மாடத்திலுள்ள மூலவர் பரமபதநாதர் இருதேவியருடன் அமர்ந்த திருக்கோலத்தில் காட்சி தருகின்றார்.
இக்கோயிலின் விமானத்து நிழல் கீழே விழுவது இல்லை மூலையில் இரண்டாக மொத்தம் எட்டு விமானங்கள் இருப்பதினால் அஷ்ட்டாங்க விமானம் என்ற பெயரினைப் பெற்று உள்ளது. இவ்விமானங்களில் எழிலான சிற்பங்கள் காண படுகின்றன. இக்கோயில் பற்றி பெரியாழ்வார் தம்முடைய பாசுரங்களில் மேல்வருமாறு வர்ணிக்கின்றார்.
"வண்ண மாடங்கள் சூழ்திருக்கோட்டியூர் கண்ணன் கேசவன் நம்பி பிறந்தினில் எண்ணெய் சுண்ணம் எதிரெதிர்தூவிடக் கண்ணன் முற்றம் கலந்தளறாயிற்றே
(பாசுரம் 13
"உரகமெல்லாம் அணையாள் கையில் உறை சங்கம் போல் மட அன்னங்கள் நிரை கணம் பரந்து ஏறும் செங் கமல வயல் திருக் கோட்டியூர் நரக நாசனை நாவிற் கொண்டு அழையாத மானிட சாதியர் பருகு நீரும் உடுக்கும் கூறையும் பாவம் செய்தன தாம் கொலோ
(பாசுரம் 36 என இக் கோயிலை மங்களாசனம் செய்கின்றார். இக்கோயிலில் சித்திரைப் பெருவிழா, சித்திரை நட்சத்திரத்தில் தேரோட்டம் பங்குனி உத்திரப் பெருவிழா, மார்கழி வைருந்த ஏகாதசி என்பன சிறப்புடைய திருவிழாக்கள். (தே. ஹ)
திருக்கோட்டியூர் நம்பி
இராமானுசரின் ஆசிரியர் ஐவருள் ஒருவர். ஆளவந்தா சீடர்களுள் தலைமையானவர். இவர் ஆளவந்தார் பிறந்து பதினோராண்டுகள் சென்றபின் கி. பி. 987 இல் திருக்கோட்டியூரில் பிறந்தார். பெரியாழ்வாருக்கு நெருக்கமானவராக விளங்கிய செல்வநம்பியின் மரபிலே வந்தவர். இவரது திருப்பெயர் குருகேசன் (திருக் குருகைப்பிரான் என்பதாகும். மறையவர் குலத்தைச் சார்ந்தவர்.
32ó
 

இவர் இராமானுசருக்குத் திருமந்திரத்தையும் அதன் பொருளையும் அறிவுறுத்தியவர். அதன் பொருட்டு இராமானுசரைப் பதினெட்டு முறை திருக்கோட்டியூருக்கு நடக்கச் செய்தவர். தாம் அறிவுறுத்தும் மந்திரத்தை வேறு எவருக்கும் சொல்லிவிடக்கூடாது என்று உறுதிமொழி பெற்றுப் பின்னரே இராமானுசருக்குத் திருமந்திரப் பொருளைத் தெரிவித்தவர். இராமானுசர் தம் பெருங்கருணையினாலே ஆசிரியரின் ஆணையையும் மீறி, நமக்கு நரகம் வந்தாலும் வரட்டும்; பலர் உய்ய வேண்டும் என்னும் கருத்தோடு கோயிற் கோபுரத்தின் மீது ஏறி நின்று பலர்க்கும் திருமந்திரப் பொருளை வெளியிட்டார். இவர் அதனைக் கண்டு இராமானுசரின் பேரருளை உணர்ந்து வியப்படைந்து அவரை 'எம் பெருமானாரே என்று அழைத்து அனைத்துக்கொண்டார். மேலும் இவரே அவருக்குச் சரம சுலோகத்தின் பொருளையும் சொல்லிவைத்துத் தக்கவர்களுக்குச் சொல்லவும் பணித்தருளினார்.
திருமலையாண்டானை எம்பெருமானாருக்குத் திருவாய் மொழியைக் கற்பிக்கும்படி பணித்தவர் இப் பெருந்தகையே யாவார். சில பாசுரங்களுக்கு இராமானுசர் புதிய விளக்கங்களைத் திருமாலையாண்டானிடம் கற்கும்போது தெரிவித்தார். திருமலையாண்டானுக்கு அவ் விளக்கங்கள் ஆளவந்தாரிடம் கேட்டறியாதனவாக இருந்தன. எம் பெருமானார் தாமே புதிய பொருள்களைக் கற்பித்துச்சொல்கிறார் என்று கருதிய அவர் திருவாய்மொழி சொல்லிக் கொடுப்பதனை நிறுத்தினார். அப்பொழுது, இவர் திருமலையாண்டானுக்கு எம்பெருமானார் பெருமைகளை எடுத்துச் சொல்லி மறுபடியும் பாடம் சொல்வதைத் தொடங்குமாறு செய்தார்.
திருவரங்கத்தில் உள்ளார் எம்பெருமானாருக்கு உணவில் நஞ்சு இட்டமையால் அவர் பட்டினி கிடந்தார். அதனைக் கேள்விப்பட்டுத் திருக்கோட்டியூரிலிருந்து விரைந்து வந்து எம்பெருமானார் சீடர்களுள் கிடாம்பியாச்சானுக்கே அவர் திருமேனியில் பரிவு உள்ளதைக் கண்டறிந்து அவரை அவருக்கு மடைப் பள்ளித் தொண்டு செய்யும்படி பணித்தார்.
இவருக்குத் தெற்காழ்வார் என்னும் மைந்தர் ஒருவரும் தேவகிப்பிராட்டியார் என்னும் மகள் ஒருத்தியும் இருந்தனர். இவ்விருவரும் இராமானுசருக்கு அடியவர்களாக விளங்கினர். திருக்கோட்டியூர் நம்பிகள் நூற்றைந்து ஆண்டுகள் வாழ்ந்தவர் என்பர். தெ. ஞா)
திருக்கோட்ரூர்
தேவாரப் பாடல்பெற்ற தலங்களுள் ஒன்று. தஞ்சாவூர் மாவட்டத்தில் திருத்துறைப் பூண்டிப் புகைவண்டி நிலையத்திலிருந்து வடமேற்கில் 14 1/2 கி. மீ. தொலைவில் உள்ளது. இது காவிரித் தென்கரைத் தலங்களுள் ஒன்று சோழர் காலக் கல்வெட்டுகள் இதனை நென்மலி நாட்டிலுள்ள கோட்டு' என்று குறிப்பிடுகின்றன.
இந்துக்கலைக்களஞ்சியம்

Page 387
இவ்வூரில் இரு கோவில்கள் உள்ளன. மேற்கில் உள்ள கோவில் திருஞான சம்பந்தராற் பாடப்பெற்றது. இங்கு எழுந்தருளியுள்ள இறைவன் பெயர் கொழுந்துநாதர். 'கொழுந்தாண்டார்', 'மூலத்தானவுடையார்', 'கொழுந்தீசுவர சுவாமி’ என்று காலந்தோறும் வேறுபட்ட பெயர்களைக் கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன. இறைவி பெயர் தேன்மொழிப்பாவை, வன்னி தலமரம்.
தேவர்களும் குச்சர முனிவர்களும் இங்குள்ள இறைவனை வழிபட்டுப் பேறு எய்தினர் எனத் தேவாரம் குறிப்பிடுகின்றது. இவ்வூர், மாளிகை கோபுர கூடம், மணி அரண், சாலை, பொன் மண்டபம், மதில், பொழில் முதலியன கொண்டு சிறப்புடன் விளங்கியதாகச் சம்பந்தர் (திருக்கோட்டூர், 7) குறிப்பிடுகின்றார். இங்குள்ள கோவிலில் 23 கல்வெட்டுகள் படியெடுக்கப்பட்டுள்ளன. அவற்றுள் பெரும்பாலான சோழர் காலத்தவை. (மா.இரா.)
திருக்கோடி
பாடல் பெற்ற தேவாரத் தலங்களுள் ஒன்றாகிய இது இக் காலத்தில் குழகர் கோயில் என வழங்கப் பெறுகின்றது. இது தஞ்சாவூர் மாவட்டத்தில் திருமறைக்காட்டிற்குத் தெற்கில் 9 1/2 கி. மீ. தொலைவில் உள்ளது. இவ்வூருக்குத் தெற்கில் 11/2 கி.மீ. இல் கோடிக்கரை என்னும் கடல்துறை இருக்கின்றது.
இவ்வூர் ஒரு சைவத் திருத்தலமாகும். தேவர்கள்உண்டு எஞ்சிய அமுதத்தை வாயு, விண்ணில் எடுத்துச் செல்கையில் சிறிது கீழே விழுந்தது. கீழே விழுந்த அமுதம் இலிங்க உருவாய் அமைந்தது. இதனால் இறைவன் அமிர்தகடேசர் என்று பெயர் பெறுகிறார். இறைவி பெயர் மையார் தடங்கண்ணி இங்குள்ள புனித தீர்த்தம் அமுதவாரி.
சுந்தரர், சேரமான் பெருமாள் நாயனாருடன் வந்து இத்தலத்தை வணங்கினார். கடற்காற்று வீசும் கரையில் இறைவன் தனித்திருப்பதைக் கண்டு சுந்தரர் வருந்திப் பாடிய தேவாரப் பதிகம் உள்ளது. குரவம் பொழில் சூழ்தரு கோடி’ (திருக்கோடிக் குழகர் 6) என்று சுந்தரர் இவ்வூரைக் குறிப்பிடுவார். இங்கு கோயில் கொண்டுள்ள முருகனுக்கு ஒரு திருமுகமும் ஆறு திருக்கரங்களும் இருக்கின்றன. கடற்கரையில் உள்ள சித்தர் ஆசிரமத்தில் மராட்டிய மொழியில் ஒரு கல்வெட்டுள்ளது. (ம, இரா)
திருக்கோவனூர்
நூற்றியெட்டு வைணவ தலங்களுள் இதுவும் ஒன்றாகும். இது நடுநாட்டுக்குரிய வைணவ தலமாகும். விழுப்புரம் காட்பாடி புகைவண்டிமார்க்கத்தில் திருக்கோவிலூர் புகைவண்டிநிலையத்தில் இருந்து சிறிது தொலைவில் இத்தலம் அமைந்துள்ளது. பஞ்ச கிருஷ்ணாரண்ய தலங்களுள் திருக்கோவிலும் ஒன்றாகும். கண்ண பரமாத்மா திவ்ய சாந்நித்யம் செய்து அருளும் தலமாகும். முதன்முதலாக நாலாயிர திவ்ய பிரபந்தம் பாடப் பெற்ற தலமாகும்.
இந்துக்கலைக்களஞ்சியம்

இத் திருவருட் புனிதமிக்க இக் கோவலூர் வைணவ பதிகளுள் முக்கிய பதியாக இருந்ததோடன்றி சிவபெருமானின் அட்டவீரட்டானங்களில் அந்தகாசுரனைச் சங்கரித்த இடமாகவும் விளங்குகின்றது. வீரட்டேசுவரர் திருக்கோயிலும் இத் தலத்தில் அமைந்து விளங்குகின்றது. இக் கோவலூர் பதி இறையருட் புனிதம் பெற்று விளங்குவதோடன்றி வரலாற்று புகழும் பெற்ற பெருமை மிகு பதியாகவும் விளங்குகின்றது. சங்க காலத்தில் மலையமான்நாடு, மலாடு என்று வழங்கப்பட்டது. வள்ளல் பாரியின் மகளிரான அங்கவை, சங்கவையை மணம்புரிந்த தெய்விகன் என்பவன் இருந்து அரசாண்ட இடம் இப்பதி. இவன் வழிதோன்றியவர்களே மெய்ப்பொருள் நாயனார், நரசிங்க முனையர் முதலியோர். தெய்விகன் திருமணத்தை முடிப்பதையே தமது கடமையாக கொண்டவர். பாரியின் நண்பராகிய கபிலர் இவர் திருமணம் முடிந்த பின்னர் இப்பதியில் ஒரு பாறை மீது தீ வளர்த்து அதில் வீழ்ந்து முக்தி எய்தித் தம் ஆருயிர் நண்பர் பாரியிடம் சேர்ந்தார் என்பது வரலாறு. இவ் வரலாற்றினை இப்பதியிலுள்ள கபிலர் கல் என்னும் பாறையில் பொறிக்கப்பட்ட பாடல் விளக்குகின்றது.
இங்குள்ள கோயிலின் மூலவர் திரிவிக்ரமர் நின்ற கோலத்தில், நடந்த கோலத்தில் உலகளந்த கோலத்தில் கிழக்கு நோக்கி சேவை செய்கின்றனர். எம்பெருமானின் வலதுகையில் இருந்திடவேண்டிய சக்கராயுதம் இடதுகையிலும் இடதுகையில் இருக்கவேண்டிய சங்கு வலது கையிலும் இருக்கின்றன. திருமாலின் தசாவதாரங்களுள் வாமன அவதாரமும் ஒன்று. அவ்வாமன அவதாரத்துடன் தொடர்புடையதாக இத்தல மூலவர் அமைகின்றார். மகாபலி என்ற அசுர மன்னனிடம் காசிய முனிவர் - அதிதி தம்பதியின் மகனாகிய வாமனன், மூன்றடி மண் வேண்டும் என யாசித்தார் எனவும், குள்ளனாகிய முனி குமாரனுக்கு மூன்றடிதானே வேண்டும் என்று புன்முறுவலுடன் இப்போதே தந்தேன் எனக்கூறி கமண்டல நீரைத் தாரைவார்க்க முற்பட்டான். அவனுடைய குலகுருவான சுக்கராச்சாரியருக்கு வந்திருக்கும் வாமனன் திருமாலின் மறுதோன்றலே என அறிந்து மகாபலிக்கு உணர்த்த அந்தப் புகழ் பெற்ற கொடையாளி எல்லோரும் வணங்கும் பூரீமத் நாராயணன் தன்னிடம் தானம் வேண்டும் என வந்திருப்பது தனக்கு பெருமையையே சேர்க்கும் எனத் தன்வாக்கு தவறாது குருவின் அறிவுரையை மீறி கமண்டல நீரை வாமனனுக்கு தாரைவார்க்கும் போது சுக்கராச்சாரியார் வண்டு உருவமெடுத்து கமண்டல நீர் விழும் முகத்தின் துளையை அடைத்து நிற்கவும், வாமனன் ஒரு சிறு நாணல் புல்லை எடுத்து துளையினுள் செலுத்தி அது வண்டுருவிலிருந்த குருவின் கண்களைக் குத்தி ஒரு கண் பார்வை பழுதடைந்தது. தாரை வார்த்து முடிந்ததும் வாமனன் விஸ்வரூபம் எடுத்து ஒரு காலடியால் பூமியையும் மற்ற ஒரு அடியால் விண்ணுலகையும் அளந்து மூன்றாவது அடிக்கு இடம் எங்கே? என மகாபலியைக் கேட்க அவன் திருமாலை வணங்கித் தன் தலையைக் காண்பித்தான். திருமால் அவனது சிரத்தின் மேல் தம் காலை அழுத்திப் பாதாள உலகிற்கு அனுப்பினார். பாதாள உலகில் மகாபலி பல்லாண்டுகள் மன்னனாக வாழ்ந்து அவனது ஈகை தன்மையால் திருமாலின் திருவடி புறம்பில் என்றும் இருக்க
321

Page 388
வைகுந்தப் பதவியைப் பெற்றான். இவ்வாறு வாமனன் நெடிதுயர்ந்து திரிவிக்கிரமனாக காட்சியளித்ததைத் தேவர்கள்
கண்டனர்.
அந்தக் காட்சியை மறுமுறை காண்பதற்காக ஆவலுற்று மிருகண்டு முனிவரும் அவரது பத்தினியான மிருதுமதியும் கிருஷ்ணாரண்யத்தில் கடுந்தவம் செய்தனர். அவர்களது தவத்தின் பயனாக திருமால் அவர்களுக்கு வாமனத் தோற்றத்தையும் உலகளந்த திருவிக்கிரமன் தோற்றத்தையும் இத்திருக் கோவிலூரில் காட்டியருளினார். இக்கோயில்
மூலவர் உலகளந்தப் பெருமான், திருவிக்கிரமன்
தாயார் - பூங்கோவல் நாச்சியார்
உற்சவர் - கோவலன், கோபாலன்
தீர்த்தம் - கிருஷ்ணதீர்த்தம், சக்ரதீர்த்தம்,
பெண்ணையாறு
கோயில் கிழக்கு நோக்கிய நிலையில் அமைந்துள்ளது. பதினொரு நிலைகளைக் கொண்ட இராஜகோபுரம் வானளாவி நிற்கின்றது. வடக்கிலே கட்டைக் கோபுரம் ஒன்று அமைந்துள்ளது. இக் கோபுரத்தை பெரியாழ்வார் ஒரே இரவில் கட்டி முடிப்பது என்று சங்கல்பம் செய்துகொண்டாராம். கோபுர வேலை முடிவதற்குள் பொழுது விடிந்துவிட்டதால் கோபுரம் அரைகுறையாக நின்றுவிட்டது என்று கூறுவர். இக் கோபுரம் மாத்திரமின்றி கிழக்கு மேற்கு வாயிலிலும், பரமபத வாயிலிலும் தாயார் சந்நிதி, பலிபீடம் ஆகியவற்றிலும் கோபுரங்கள் உள்ளன. பதினாறு கால் மண்டபம், உறியடி மண்டபம், வசந்த மண்டபம், மகா மண்டபம், பெளர்ணமி மண்டபம், ரெங்கநாத மண்டபம், ஊஞ்சல் மண்டபம், பூங்காவன மண்டபம், உட்கோயில்கள், விமானங்கள் என கோவில் பெரியதாகத் திகழ்கின்றது. பெரிய கோபுரத்தின் அருகில் அனுமார் சந்நிதியுள்ளது. கோயிலின் எதிரில் மிகப்பெரிய கல் தூண்கள் மீது கருடாழ்வார் காட்சி தருகின்றார்.
நுழைவாயிலின் வலதுபுறம் வேணுகோபாலர் சந்நிதியும் இடதுபுறம் குமுதவல்லி நாச்சியார், ஆழ்வார்கள் சந்நிதியும், வலமாக செல்லும்பொழுது தாயாரின் தனிக் கோயிலும் காணப்படுகின்றன. கருவறையில் அன்னை அமர்ந்த கோலத்திற் காட்சி தருகின்றார். வடகீழ்ப்புறம் சக்கரத்தாழ்வார் சந்நிதியும் திருசுற்றில் நந்தவனம் ஆஞ்சநேயர் சந்நிதியும், இராமர் கோவிலும் உள்ளன. வரதராஜப் பெருமாள் கோவில், லோகாசாரியார் சந்நிதி, மணவாளமுனிகள் சந்நிதி, விஷ்ணு, துர்க்கை சந்நிதிகளும் உள்ளன. இக் கோயிலின் முதல் பிரகாரத்தில் நுழைந்தால் இடதுபுறத்தில் துர்க்காதேவி காட்சி தருகின்றாள். இவள் இப்பதியின் காவல் தெய்வம் இவளைத் திருமங்கையாழ்வார் வித்தைமேய கற்புடைய மடக்கன்னி காவல் பூண்ட பூங்கோவலூர் எனப் போற்றுகின்றார். திரு உண்ணாழியில் லட்சுமி நாராயணர், லெட்சுமி நரசிம்மர், பூநீ ஆண்டாள், உடையவர் விஷ்வச்சேனர் சந்நிதிகள் உள்ளன. மூன்று மண்டபங்களையும் கடந்து கருவறையில் மூலவர்
உலகளந்த திரிவிக்ரமன் பெரிய திரு உருவில் காட்சி
322

யளிக்கின்றார். ஒரு காலை மகாபலியின் முடியின் மீதும் மற்றொன்றை விண்ணை அளப்பதுபோன்று உயரத் தூக்கியும் இடக்கையில் சக்கரம் வலக்கையில் சங்கு ஏந்திக் காட்சியளிக்கின்றார். தூக்கிய திருவடியில் பிரமதேவன் கமண்டல நீரைப் பொழிகின்றார். இப் பெருமானின் திருக்கோலத்தைக் கண்டு சேவித்த திருமங்கை மன்னர் “ஒண் மிதியிற் புனலுருவியொரு கால் நிற்க ஒரு காலும் காமரு சிரவுணன் உள்ளத்து' எனப் போற்றிப் பாடுகின்றார்.
இத் தலத்தைப் போற்றி பொய்கையாழ்வார் அருளிச் செய்த பாசுரங்களில் ஒன்று
“அடியும்படி கடப்பத்தோள் திசை செல்ல முடியும் விசும்பளத்த தென்பர் வழயுகிரால் ஈர்ந்தான் இரணியன தாகம் இருஞ் சிறைப்புன் ஊர்ந்தானுலகளந்த ஞான்று” என இத்தலம் பற்றியதாக அமைகின்றது.
இக் கோயிலில் பொய்கையாழ்வார் இரு பாசுரங்களாலும் திருமங்கையாழ்வார் பதினெட்டுப் பாசுரங்களாலும் பூதத்தாழ்வார் ஒரு பாசுரத்தாலும் மங்களாசனம் செய்துள்ளனர். இம் மூன்று ஆழ்வார்களும் திருக்கோவிலூரிலே தான் ஒன்றாகச் சந்தித்தனர். இதே இடத்தில் தான் பரமபதம் அடைந்தனர்.
தீர்த்த யாத்திரை மேற்கொண்ட அர்ச்சுனன் திருக்கோவிலுக்கு வந்து தென்பெண்ணை ஆற்றில் நீராடிவிட்டு திரிவிக்கிரமப் பெருமாளை வழிபட்டதாக வில்லிபாரதத்தின் மூலம் அறிகின்றோம். மலையமான் திருமுடிக்காரி என்ற அரசர் கடையெழு வள்ளல்களில் ஒருவர் அம்மன்னர் ஆண்ட ஊர் திருக்கோவிலூர் ஆகும். அகநானூறு, புறநானூறு, நற்றிணை ஆகிய நூல்களிற் குறிப்பாக அகநானூற்றில் திருக்கோவலூர் மற்றும் பெண்ணையாறு பற்றிய குறிப்புக்கள் காணப்படுகின்றன. (தே. ஹ.)
திருக்கோவனூர் (திருக்கோயிலூர்)
சென்னை, விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை,
திண்டிவனம், சிதம்பரம், விருத்தாசலம், கள்ளக்குறிச்சி முதலிய
ஊர்களிலிருந்து இத்தலத்திற்குப் பேருந்து வசதி உள்ளது.
திருவண்ணாமலையிலிருந்து 35 கி. மீ. தொலைவு. திருவண்ணாமலையிலிருந்து பேருந்தில் சென்றால் தென்பெண்ணையாற்றுப் பாலத்தைக் கடந்து, ஊருட் சென்று, கடலூர்-பண்ருட்டிப் பாதையில் திரும்பிச் சென்றால், கீழையூர்ப் பகுதியில் கோயில் உள்ளது.
வீரட்டேஸ்வரர் கோயில் என்று கேட்க வேண்டும். இவ்வூர், மேலூர், கீழுர் என இருபிரிவானது. கீழுரில் (கீழையூரில்) இக்கோயில் உள்ளது. மேலூரில் வைணவ ஆலயம் உள்ளது. இவ்வூர் மக்கள் வழக்கில், திருக்கோயிலூர் என்று வழங்குகிறது.
அட்டவீரட்டத் தலங்களுள ஒன்று. அந்தகாசூரனை சம்ஹரித்த தலம். இத்தலம் வைணவப் பெருமையும் உடையது
· இந்துக்கலைக்களஞ்சியம்

Page 389
இங்குள்ள திரிவிக்ரமப் பெருமாள் கோயில் பிரசித்தி பெற்றது. பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார், திருமங்கை யாழ்வார் ஆகியோரால் மங்களாசாசனம் செய்யப் பெற்ற திவ்வியதேசம்.
ஒருவர் படுக்கலாம், இருவர் இருக்கலாம், மூவர் நிற்கலாம் என்று சொல்லப்படும் முதலாழ்வார் மூவரின் வரலாற்று நிகழ்ச்சி இடம் பெற்ற தலம் இதுவே.
அறுபத்து மூவருள் ஒருவராகிய மெய்ப்பொருள் நாயனார் ஆண்ட பதி இஃது.
சேதி நன்னாட்டு நீடு திருக்கோவலூரின் மன்னி மாதொருபாகர் அன்பின் வழிவரு மலாடர் கோமான் வேதநன்னெறியின் வாய்மை விளங்கிட மேன்மைபூண்டு காதலால் ஈசர்க்கு அன்பர் கருத்தறிந்து ஏவல் செய்வார்.”
(பெ. புரா.மெய், புரா)
இராசராசசோழன் பிறந்த ஊர். இவருடைய தமக்கை குந்தவை சுவாமிக்கு 'பொன் பூ வழங்கியதோடு சந்நிதியில் திருவிளக்குகள் ஏற்றிட சாவா மூவா பேராடுகள் 300உம், 2000 கழஞ்சு பொன்னும் ஊர்ச்சபையாரிடம் ஒப்படைத்த செய்தியைக் கல்வெட்டால் அறிகிறோம்.
கோயில் தென் பெண்ணையாற்றின் கரையில் உள்ளது.
கபிலர் பாரி மகளிரைத் திருமுடிக்காரிக்குத் திருமணம் செய்வித்து, அதன்பின்பு வடக்கிருந்து உயிர் விட்ட இடம் கோயிலின் பக்கத்தில் ஆற்றின் நடுவில் கபிலர்குகை' என்னும் பெயரில் உள்ளது. இது கோயிலமைப்பில் உள்ளது. உள்ளே சிவலிங்கம் உள்ளது. இவ்விடத்தில் நின்று பார்த்தால் எதிரில் அறையணி நல்லூர் தலம் தெரிகிறது. இத்திருமணத்திற்குப் பந்தல் போட்டஇடம் மணம்பூண்டி’ என்னும் பகுதியாக
வழங்குகின்றது.
இறைவன் - வீரட்டானேஸ்வரர்
இறைவி - சிவானந்த வல்லி, பெரிய நாயகி, பிருகந் நாயகி
தலமரம் வில்வம்
தீர்த்தம் - தென் பெண்ணை (தக்ஷண பிணாகினி)
சம்பந்தர், அப்பர் பாடல் பெற்ற தலம்.
கோயில் மேற்கு நோக்கிய சந்நிதி. விசாலமான வெளியிடம், முன்புறத்தில் பதினாறுகால் மண்டபமொன்று சற்றுப் பழுதடைந்துள்ளது. முன்னால் வலப்பால் அம்பாள் கோயில் உள்ளது. சுவாமி ராஜகோபுரம் மிகவும் பழமையானது - மூன்று நிலைகளையுடையது. உள்நுழைந்ததும் கவசமிட்ட கொடிமரம், முன்னால் நந்தி உள்ளது. வெளிப்பிராகாரத்தில் சந்நிதி ஏதுமில்லை. முகப்பு வாயிலில் மேலே பஞ்சமூர்த்திகள் வைக்கப்பட்டுள்ளன. முன் தூணில் இடப்பால் மெய்ப்பொருள் நாயனார் சிற்பம் உள்ளது. வலப்பால்'பெரியானைக் கணபதியின் சந்நிதி உள்ளது. ஒளவையார் வழிபட்டு, சுந்தரருக்குமுன் கயிலையை அடைந்ததற்குத் துணையான - ஒளவையைத் தூக்கிவிட்ட - கணபதி இவரே என்பர்.
இந்துக்கலைக்களஞ்சியம்

கரிமீதும் பரிமீதும் சுந்தரருஞ் சேரருமே கைலை செல்லத் தரியாது உடன் செல்ல ஒளவையுமே பூசையுரிதரத்தை நோக்கிக் கரவாதுதுதிக்கையால் எடுத்துஅவர்கள் செலுமுன்னும் கைலை விட்ட பெரியானைக் கணபதிதன் கழல்வனங்கி விருப்பமெலாம்
பெற்று வாழ்வாம்.
சோமாஸ்கந்தர் சந்நிதியை அடுத்து மகாவிஷ்ணு தரிசனம். எதிர்த் தூணில் பழனியாண்டவர் உள்ளார். வாயிலின் இடப்பால் வள்ளி தெய்வயானை ஆறுமுகப் பெருமான் மூர்த்தம் உள்ளது. பக்கத்தில் கஜலட்சுமி சந்நிதி, நடராச சபை உள்ளது. மணிவாசகரும் சிவகாமியும் உடனுளர். திருமுறைப் பேழையுள்ளது. கபிலர் உருவச் சிலையுள்ளது.
தலமூர்த்தியாகிய அந்தாகாசூர சம்ஹார மூர்த்தி சந்நிதி விசேஷமானது. பக்கத்தில் நரசிங்க முனையரையர், மெய்ப்பொருள் நாயனார் ஆகியோரின் உற்சவத் திருமேனிகள் உள்ளன.
கோஷ்ட மூர்த்தமாகவுள்ள துர்க்கை மிகவும் விசேஷமாக வுள்ளது. எட்டுக் கரங்களுடன் காட்சியளிக்கின்ற நின்ற திருக்கோலம். இத்தேவியின் விழிகள் மிகவும் அற்புதமாக வடிக்கப்பட்டுள்ளன. இவ்வுருவம் இராசராசன் தாயின் காலத்தியது - மிகவும் பழைமையானது என்பர். கருவறைச் சுவரில் கல்வெட்டுக்கள் நிரம்பவுள. அடுத்து பிரம்மா, தகூதிணாமூர்த்தி முதலிய கோஷ்ட மூர்த்தங்கள் உள்ளன.
வலப்பால் பைரவர், நவக்கிரகம் முதலிய சந்நிதிகள் உள்ளன. வரிசையாக சூரியலிங்கம், ஏகாம்பரேஸ்வரர் முதலாகப் பஞ்சபூதலிங்கங்கள், விசுவநாதர் விசாலாட்சி உருவங்களும், அர்த்தநாரீசுவரர், அகத்தியர், சூரியன், சம்பந்தர் முதலிய உருவங்களும் உள்ளன.
ஜடாமுனி, ஐயனார், வீரபத்திரர், பிராமி, மகேஸ்வரி, வைஷ்ணவி, வாராகி முதலிய உருவங்கள் குடைவரைகளாக அமைக்கப்பட்டுள்ளன. விநாயகர் சந்நிதியைத் தொடர்ந்து அறுபத்துமூவர் மூலத்திருமேனிகள் உள்ளன.
துவாரபாலகரை வணங்கி உட் சென்றால் மூலவர் தரிசனம்சிவலிங்கத் திருமேனி, சுயம்பு பெரிய உருவம். திருப்பணி செய்த காலத்துத் தோண்டிப் பார்க்க, 25 அடிக்கு மேலும் போய்க் கொண்டிருக்க, அப்படியே விட்டுவிட்டுச் சுற்றிலும் ஆவடை யாரைச் சேர்த்து எழுப்பப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. நாகாபரணம் சார்த்தப்பட்டு மூலவர் கம்பீரமாகக் காட்சிதரும் சேவை நம் கண்களை விட்டகலா. அம்பாள் கோயில் தனியே உள்ளது - கோபுரம் உள்ளது. முன்மண்டபத்தில் இருபுறமும் விநாயகரும் சுப்பிரமணியரும் உள்ளனர்.
நேரே அம்பாள் தரிசனம், நின்ற திருக்கோலம். அபய வரதத்துடன் கூடிய நான்கு திருக்கரங்கள். அம்பாளுக்கு வெள்ளிக் கவசமும் தாடங்கமும் அணிவிக்கப்பட்டுச் சேவிப்பது கண்கொள்ளாக் காட்சியாகும். முன்னால் நந்தி, பலிபீடம் உள்ளன.
323

Page 390
மாசிமாதத்தில் பெருவிழா நடைபெறுகிறது. இவ்விழாவில் ஆறாம் நாள் விழாவில் மாலையில் அந்தகாசூரசம்ஹார ஐதீகம் நடைபெறுகின்றது. கார்த்திகை சோமவார சங்காபிஷேகம் விசேஷமானது. சஷ்டியில் லட்சார்ச்சனை நடைபெறுகின்றது. நவராத்திரி, சித்திரையில் வசந்தோற்சவம் முதலியனவும் சிறப்பாக நடைபெறுகின்றன.
நாடொறும் நான்குகால பூஜைகள். 12.07.1954இல் மகாகும்பாபிஷேகம் நடந்துள்ளது.
கோயிலுக்குப் பக்கத்தில் பூரீமத் ஞானியார் சுவாமி மடாலயம் உள்ளது. இதுவே ஆதி மடாலயம் எனப்படுகிறது. முதல் மூன்று சந்நிதானங்கள் இங்குதான் வாழ்ந்து சமாதியடைந்துள்ளனர். நான்காவது சந்நிதானத்திலிருந்துதான் திருப்பாதிரிப்புலியூர் மடாலயம் அமைந்தது என்பர். இச்சமாதிகள் பக்கத்தில் உள்ள நெடுஞ்சாலை ஓரத்தில் உள்ளன.
இவ்வூரின் வடக்கு வீதியில் குகைநமசிவாயர் சமாதி உள்ளது. சுவாமி ஞானானந்தகிரியின் தபோவனம் இத்தலத்தில்தான் உள்ளது. அமைதியான சுகத்திற்கு ஏற்ற இடமாக இத்தபோவனம் திகழ்கிறது. மார்கழித் திருவாதிரையில் இங்கு ஐந்து நாள்களுக்கு ஆராதனை நடைபெறுகிறது. மத்வர்களுக்கு முக்கியமானதான பூரீ ரகோத்தமசுவாமி பிருந்தாவனமும் இத்தலத்தில் (பாலத்தின் அருகில்) உள்ளது. இங்கு மார்கழியில் விசேஷ ஆராதனை நடைபெறுகின்றது. இத்தலத்திற்குப் பக்கத்தில் அறையணி நல்லூர் உள்ளது.
"கரவலாளர் தம்மனைக் கடைகடோறுங் கானிமிர்த் திரவலாழி நெஞ்சமே இனியதெய்த வேண்டில் நீ குரவமேறி வண்டினங் குழலொடுயாழ் செல்கோவலூர் விரவிநாறு கொன்றையான் வீரட்டானஞ் சேர்துமே”
(சம்பந்தர்) வழித்தலைப் படவுமாட்டேன் வைகலுந் தூய்மை செய்து பழித்திலேன் பாசமற்றுப் பரம நான் பரவமாட்டேன் இழித்திலேன் பிறவிதன்னை என்நினைந்திருக்கமாட்டேன் கொழித்து வந்தலைக்கும் தெண்ணீர்க்கோவல்
வீரட்டனரீரே
(அப்பர்) - சொல்வண்ணம் நாவலர் போற்றும் நலம் பெறவே ஒங்குதிருக்
கோவலூர் வீரட்டங் கொள் பரிசே
(அருட்டா) (தே. ஹ.)
திருக்கோவையார்
சைவத் திருமுறைகளிலே எட்டாவதாக விளங்கும் திருவாசகமும், திருக்கோவையாரும் சைவ நாயன்மார்களில் ஒருவராகிய மாணிக்கவாசகரால் இயற்றப்பட்டவை. இவரின் காலம் பற்றிக் கருத்து வேறுபாடு நிலவுகின்றது. ஒரு சாரார் இவர்
ஏனைய சைவநாயன்மாருக்கு முன்னர் வாழ்ந்தவர் எனவும்,
324

மற்றுமொரு சாரார் கி. பி. 9ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் எனவும் கருதுவர். எவ்வாறாயினும் மேற்குறிப்பிட்ட இரு நூலாசிரியர் இவரே என்பதில் ஐயமில்லை.
கோவை தமிழ் இலக்கியத்திலே பிரபந்த வகையைச் சேர்ந்தது. கோவை எனில் வரிசையாகக் கோர்க்கப்பட்ட பகுதிகளையுடையதெனப் பொருள்படும். தமிழிலக்கண நூல்களில் கோவை எனும் சொல்லை அகப் பொருளிலக்கியங்களில் ஒன்றின் பெயராகக் கையாளப்பட்டு உள்ளது. பன்னிரு பாட்டியல் (133) இதற்குரிய இலக்கணத்தை,
"கோவை என்பது கூறுங்காலை மேவிய களவு கற்பெனும் கிளவி ஐந்தினை திரியா அகப்பொருள் தழிஇ முந்திய கலித்துறை நானூறென்ப"
எனக் கூறும். மேலும்
"கள்ளிலும் கற்பினும் கிளவி வகையால் தினைநிலை திரியாச் செம்மைத்தாகி நாட்டிய கலித்துறை நானூறு ரைப்பது கோட்டம் இல்லாக் கோவையாகும்”
'ஜந்தினை தழுவிய அகநிலைக் கோவை தந்த நானூறும் தாம் கலித்துறையே’
எனும் சூத்திரங்களும் இதன் இலக்கணம் பற்றிக் கூறுவன.
இவற்றிற்கேற்ப கோவை 400 செய்யுட்கள் கொண்டதாகும். அகப்பொருள் இலக்கணத்தைத் தழுவி ஐந்திணையில் திரியாததாய்ப் பொருந்திய களவு, கற்புக்குரிய கிளவிகள் கட்டளைக் கலித்துறை நானூறாற் பாடப்படவேண்டும் என்பது தெளிவாகும்.
பழந் தமிழிலக்கிய மரபிலே சிறப்பாக நிலவிவந்த அகம், புறம் என்பனவற்றில் இஃது அகம் சார்ந்ததாகும். சங்க இலக்கியத்திலும், இறையனாரகப்பொருளுரை போன்ற நூல்களிலே காதலன், காதலி நிலைகள் தனித்தனியாக உலகியல் இன்ப நோக்கிலே எடுத்துக் கூறப்படுகின்றன. ஆனால் கோவையில் அந் நிலைகள் ஒன்றிணைக்கப்பட்டுத் தொடர்ச்சியாக கூறப்படும். அவை உலகியல் ரீதியிலமைந்தவை போலக் காணப்படினும், திருக்கோவையாரைப் பொறுத்தமட்டில் ஆன்மீக ரீதியிலும் அமைந்துள்ளன என்பது பின்னர் சுட்டிக்காட்டப்படும்.
அகப்பொருள் திணைகளிலே வருணிக்கப்படும் காதல் நிகழ்ச்சிகளை வரிசையான பல சந்தர்ப்பங்களாக வகுத்து, ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் அதைக் கண்ணுறும் அல்லது அநுபவிக்கும் ஒருவர் தனது எண்ணத்தை ஒரே செய்யுளில் புலப்படுத்துவர். இதற்குக் கிளவி என்று பெயர். இவற்றின்
இந்துக்கலைக்களஞ்சியம்

Page 391
தொகுதியே கோவை எனும் இலக்கிய ஆக்கமாகும். இதில் இடம்பெறும் ஒவ்வொரு சந்தர்ப்பமும் துறை எனப்படும். அகப் பொருளிலக்கியத்தில் இடம் பெறுதற்கேற்ற துறைகள் பற்றித் தொல்காப்பியமும், இறையனாரகப் பொருளுரையும் விரிவாக வகுத்துத் தொகுத்துக் கூறியுள்ளன.
தமிழில் உள்ள காலத்தால் முந்திய கோவைகளிலே திருக்கோவையார் தனிச் சிறப்பு வாய்ந்ததாகும். மணிவாசகர் "அறிவாற் சிவனே’ எனப் போற்றப்படுபவர். செந்தமிழின் சிறப்புக் காரணமாக விளங்குவனவற்றில் ஒன்றான பொருள் (அகப்பொருள்) இலக்கண அமைதி திருக்கோவையாரிலே நன்கு மிளிர்கின்றன. தமிழ்நாட்டுத் தலைவன் தலைவி எனும் இரு பிரிவுகளிலே வைத்து 25 கிளவிக் கொத்துக்களாக வகுத்து 400 துறைகளில் அமைந்த செய்யுட்களில் கதைபோன்று இந்நூல் எடுத்துக் கூறிச் செல்லுகின்றது. இதிலுள்ள இயற்கைப் புணர்ச்சி தொடக்கம் பரத்தையிற் பிரிவு வரையுள்ள 25 கிளவிக் கொத்துக்களிலும் உலகியல் பற்றிய அகத்திணைப் பொருளை ஒருவர் புறப்போக்கிலே பார்த்து மகிழ்ச்சியடையலாம். இவ்வகையில் இதற்கும் ஏனைய பல கோவைகளுக்குமிடையிலே வேறுபாடு அதிகமில்லை. ஆனால் இவ்வளவில் நின்றுவிடாது இதன் உட்கிடையை அறிய முற்படவேண்டும். அதாவது, இதன் உயிர் நாடியாக அமைந்திருக்கும் இறையியல் பற்றிய உயர்ந்த உன்னதமான பொருள்களையும் உணர்ந்து இன்புறுதல் மிகப் பயனுடையதே. சிற்றின்பத்தைத் தருவதாகிய வெறும் உலகியல் காம நூலாக மட்டும் திருக்கோவையாரை நோக்குதல் யதார்த்தமான நோக்கு எனக் கூற முடியாது.
பலதரப்பட்டவர்களும், தத்தம் நோக்கங்களிற்கு ஏற்றவாறு பயன்படுத்தும் வகையில் இந் நூல் வளம் மிக்கு மிளிர்கின்றது. இதனால், இதன் சிறப்பியல்புகளைக் கூறவந்த ஒரு பெரியார்,
"ஆரணங்கானென்பர் அந்தணர் யோகியர் ஆகமத்தின் காரணங் கானென்பர் காமுகர் காம நன்னூல தென்பர் ஏரணங் கானென்பர் எண்னர் எழுத்தென்பர் இன்புலவோர்
சீரணங்காய சிற்றம்பலக் கோவையைச் செப்பிடினே'
எனப் பாராட்டியுள்ளார். அதாவது, அந்தணர்கள் இதை, வேதம் எனவும், யோகியர்கள் ஆகம மூலநூல் எனவும், காமுகர்கள் காம நூலெனவும், தருக்கம் செய்வோர் தருக்க நூலெனவும், புலவர்கள் இலக்கண நூலெனவும் தத்தமக்குரிய நூலென இதனைக் கொள்ளுவர் என்பதாகும். இது வெறும் புகழுரையன்று. உண்மையென்பதை அவ்வத்துறைகளிலே வல்லுநர் நன்கு அறிவர். வேதாகமங்களையும் இலக்கிய இலக்கண, தருக்க நூல்களையும் நன்கு கற்றுத் துறைபோகிய சுவாமிநாததேசிகர் தமது இலக்கணக் கொத்து என்னும் நூலிலே
“பல்காற்பழகினும் தெரியாவுள'வேல் தொல்காப்பியந் திருவள்ளுவர் கோவையார் மூன்றினும் முழங்கும்”
இந்துக்கலைக்களஞ்சியம்

எனக் குறிப்பிட்டுள்ளமை ஈண்டு உற்று நோக்கற்பாலது. அதாவது மற்ற நூல்களிற் பலகாலும் பயின்ற பின்னரும், தெரிந்துகொள்ள முடியாத பொருள்களை ஒருவர் தொல்காப்பியம், திருக்குறள், திருக்கோவையார் ஆகிய மூன்று நூல்களையும் கற்று எளிதிலே அறிந்து கொள்ளலாம் என்பதாகும்.
மேலும் எந்நூலுக்கும் இல்லாத தனிப் பெருஞ் சிறப்பாக இந்நூலுக்குத் திரு எனும் அடைமொழியும், 'ஆர்' எனும் உயர்வு சிறப்பு விகுதியும் கூட்டிப் பெயர் வழங்கப்பெற்று வருகின்றது. இந்நூலின் தனிப் பெருங் சிறப்புக்கான பிறிதொரு காரணமாகச் சைவ மரபு வழியாக நிலவிவரும் கதைகளும் குறிப்பிடற்பாலது. அதாவது, திருவாசகம் போலவே திருக்கோவையாரையும் மணிவாசகப் பெருமான் இயற்றிப்பாடச் சிவபெருமானே மானிட வடிவந்தாங்கி வந்து எழுதினார் என்பதாகும். 'பாவை பாடிய வாயால் கோவை பாடுக” எனச் சிவபிரான் கூறியருளியதற்கேற்ப மணிவாசகர் இதை இயற்றினார் எனவும் அழைக்கப்படும். திருவாசகம் போல இதுவும் சிவபிரானை பற்றியதே. சமய, தத்துவ ரீதியில் மட்டுமன்றி இலக்கிய ரீதியிலும் இது மிகச் சிறந்த ஓர் ஆக்கம் என்பதில் ஐயமில்லை.
இந் நூலின் பிரதான பொருளாக விளங்கும் ஆன்மீக ரீதியிலான - இங்கு சைவசித்தாந்த ரீதியிலான கருத்துப் பற்றி சிறிது குறிப்பிடலாம். தலைவன், தலைவியருக்குரிய அகத்துறைப் பொருளைப் புறத்தே காட்டி, ஆன்மா ஆண்டவனுக்குரிய உயர் துறைப் பொருளை அகத்தே காட்டும் இச் சிறந்த நூலிலே வெளிப்படையாகக் காணப்படும் சிற்றின்பத்தைப் பேரின்பமாகக் கொள்ளுதல் வேண்டும். திருக்கோவையாரின் உள்ளுறை பொருளை எடுத்து விளக்கும் திருச்சிற்றம்பலக் கோவையாருண்மை விளக்கம் எனும் அரிய நூலொன்றைப் பிற்காலத்திய பேரறிஞர் ஒருவர் அருளிச் செய்துள்ளார். அதில் “தத்துவாதீத தற்றரிசன சுத்த சாக்கிரத்தானமே குறிஞ்சி நிலம். போதாதீதத் திருவருட்டெரிசன சுத்த சொப்பனத்தானமே பாலை நிலம், அருளாதிக்கந் தானே யான் சுத்த சுமுத்தித் தானமே முல்லை நிலம். அருளுருவபேத சுத்த துரியத்தானமே மருத நிலம், பரமசிவ வின்பச் சுத்தா தீதமே நெய்தனிலம். இவ்வாறு ஐந்து நிலமும் சுத்தாவத்தைத் தானங்களாகவும், பஞ்சசத்தி அதிட்டானத் தானங்களாகவும், நாயகி பரம்பொருளாகவும், நாயகன் பக்குவான்மாவாகவும் தோழி திருவருளாகவும் தோழன் ஆத்ம போதகமாகவும், செவிலித் தாய் திரோதாயியாகவும், நற்றாய் பரையாகவும் கொள்ளப்படும்.” என இந் நூலாசிரியர் திருக்கோவையாரின் உள்ளுறை பொருளை நன்கு விளங்கிக் கொள்ளும் வகையில் கூறியிருப்பதை நன்கு கூர்ந்து நோக்கின் கருத்திற் கொள்ளுதல் அவசியமாகும்.
மற்ற நூல்களிலே துறைகளனைத்தையும் ஆன்மாவை நாயகியாகவும், இறைவனை நாயகனாகவும் வைத்தே அமைக்கப் பெற்றிருக்கும். ஆனால் இந் நூலிலே நாயகி சிவமெனவும் நாயகன் ஆன்மா எனவும் பாவனை செய்யப்படுகின்றனர். இன்பசுகம் நாயகியும் அதனைப் பெறுவான் நாயகனுமாகிச்
325

Page 392
சுவையும் நாவும் போல அவர்களிருவருமிருத்தலால் பேரின்பப் பொருளாகிய சிவத்தை நாயகி என்றும் அதனை நுகரும் ஆன்மாவை நாயகன் என்று சொல்லுவதே பொருத்த முடையதாகும் எனக் கூறப்படுகின்றது. காசியிலுள்ள இந்துப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் சைவசித்தாந்தப் பேராசிரியரான சிவராமனும் இதையொட்டியே துய்த்தற் பொருளான சிவமே நாயகி எனவும், துய்ப்பவராகிய ஆன்மாவே நாயகன் எனவும் கூறியுள்ளார்.
குமரகுருபரர் திருக்கோவையாரைக் “காமஞ் சான்ற ஞானப்பனுவல்” எனத் தமது சிதம்பரமும்மணிக் கோவையிலே குறிப்பிட்டுள்ளார். மேலும், திருச்சிற்றம்பலக் கோவையாருக்குப் பேராசிரியர் எழுதியுள்ள உரை உள்ளது. அதிலுள்ள உரைப்பாயிரத்தில் அவர்
தில்லை மூதூர்ப் பொதுவினில் தோன்றி எல்லையில் அனந்த நடம் புரிகின்ற பரமகாரணன் திருவருளதனால் திருவாதவூர் மகிழ் செழுமறை முனிவர் ஐம்பொறி கைஇகந்து அறிவாயறியார் செம்புலச் செல்வராயினர் ஆயினர் ஆதலின் அறிவன் நூற்பொருளும் உலகநூல் வழக்கும் என இரு பொருளு நுதலியெடுத்துக் கொண்டனர் ஆங்கள் விரண்டனுள் ஆகம நூல்வழியினுதவியஞான யோக நுண்பொருளை யுணர்த்து தற்கரிது உலகநூல் வழியினுதவிய பொருளெனு மலகில் தீம்பாற் பரவைக் கண்னெம் புலனெனுங் கொள்கலன் முகந்தவகைசிறி துலையா மரபினு ரைக்கற்பாற்று”
எனக் கூறியுள்ளமை உற்று நோக்கற்பாலது. இதன்மூலம், மணிவாசகப் பெருமான் சிவாகம முடிவுகளையும், உலகியல் வழக்குகளையும் பொருள்களாக வைத்தே திருக்கோவையாரை அருளிச் செய்தார் என்பதும், அவ்விருவகைப் பொருள்களுள் ஆகம ஞானயோக நுண்பொருள் உணர்த்துதற்கரியதாகலின் உலகநூல் வழிப்பொருளே அவ்வுரையாசிரியரால் விரித்துரைக்கப் பட்டுள்ளது என்பதும் தெளிவாக அறியப்படுகிறது.
இந் நூலிலுள்ள அதிகாரங்களாகிய கிளவிக் கொத்துகள் இருபத்தைந்தும் பேரின்பப் பொருளில் எவ்வாறு கொள்ளப்படுகின்றன என்பதைச் சற்றுநோக்கலாம். “இயற்கைப் புணர்ச்சி சற்குரு தரிசனமாகக் கொள்ளப்படும். பாங்கற் கூட்டம் ஆன்ம போதமாகவும் இடந்தலைப்பாடு, அன்பாலானந்தம் பெற்றனுபவித்தலாகவும், மதியுடம்படுத்தல் அருள் சிவங்கலந்துயிர் தரிசனம் செய்தலாகவும், இருவருமுள் வழி யவன்வரவுணர்தல் சிவமுயிர் விரவிய அருளே தேறலாகவும், முன்னுறவுணர்தல் சிவமுயிர் கூட அருள் வினாவியதாகவும், குறையுணர்தல் சிவமுயிர் கலத்தருள் பணியாற் காண்டலாகவும்,
326

நாணநாட்டம் அருளுயிர்ப்பக்குவ மறித்து வியந்ததாகவும், நடுங்க நாட்டம் சிவமே கருணையென்ற நோக்கலாகவும், மடற்றிறம் உயிரின்புறவே யருளொடுரைத்தலாகவும், குறைநயப்புக்கூறல் உயிர்ப் பரிவின்புக்கருள் புகன்றிடுதலாகவும், சேட்டை கிடையா இன்பத்தரமை காட்டலாகவும், பகற்குறி இயற்கைபோற் சிவத்தோடாக்கியவருமை கருணை பலவுமெடுத்துக் காட்டியதாகவும், ஒரு வழித்தணத்தல் சிவனது கருணையருடெரி வித்தலாகவும், உடன்போக்கு அருளுயிர்க்கருமையறிவித்தலும், ஆனந்தத் திடையழுந்து வித்தலுமாகவும், வரைவுமுடுக்கம் சிவனது கருணை தெரியவுரைத்தவ்வின்பம் பெறவருள் எடுத்தியம்பியதாகவும், வரை பொருட் பிரிதல் கருணையருள் திரோதைபரையின் புணர்தலாகவும், மணஞ் சிறப்புரைத்தல் உயிர் சிவமணம் பெற்று உண்மையாதலாகவும், ஒதற்பிரிவு பூரண இன்பத்திலும் பாராட்டலாகவும், காதற் பிரிவு இன்பத்திறத்தை எங்கும் காண்டலாகவும், பகை தணிவினைப் பிரிவு இன்பக்கனமன்றி வேறிலையுலகென்றலாகவும், வேந்தற் குற்றுறிப்பிரிவு இன்பாராமை அன்பே யென்றலாகவும், பொருள் வயிற்பிரிவு அறிவு பூரணமாகி இன்பாதலாகவும் கொள்ளுதல் வேண்டும்.” இவை போலவே இந் நூலிலுள்ள நானூறு கிளவிகளையும் பேரின்பப் பொருளிலே கொள்ளுதல் நூலாசிரியரின் கருத்துக்கும் பொருத்தப்பாடுடைத்தே. இயற்கைப் புணர்ச்சியில் காட்சியை அறிவிப்பதாகிய முதலாவது திருப்பாடலுக்குச் சிற்றின்பக் கிளவி “மதிவாணுதல் வளர் வஞ்சியைக் கதிர்வேலவன் கண்ணுற்றது” என்பதாகும். இப் பாடலுக்குப் பேரின்பக் கிளவி “குருவின் திருமேனி காண்டல்” என்று குறிக்கப்படுகின்றது. இதுபோலத் தெய்வத்தை மகிழ்தல் பற்றிய பாடலின் (06) சிற்றின்பக் கிளவி அன்னமென்னடை அரிவையைத் தந்த மன்னிருந் தெய்வத்தை மகிழ்ந்துரைத்த தாகும். இப் பாடலுக்குப் பேரின்பக் கிளவி "தன்தவத்தினை வியந்தது” கண்ணயந்துரைத்தல் பற்றிய பாடலின் (109 சிற்றின்பக் கிளவி “கண்ணினை பிறழ்வன, வண்ணமுரைத்தது”. இதன் பேரின்பக் கிளவி “திரு நோக்கு இன்பச் சேதனம்’ என்றது. இடத்துய்த்து நீங்கல் பற்றிய பாடலின் (163), சிற்றின்பக் கிளவி “மைத்தடங் கண்ணியையுய்த் திடத் தொருபால் நீங்கலுற்றபாங்கி பகர்ந்தது”. இதன் பேரின்பக் கிளவி “சிவத்திற் சேர்த்தருள் சென்று நின்றது” என்பதாகும். இவ்வாறு ஏனைய பாடல்களுக்கும் பேரின்பக் கிளவிகளை திருச்சிற்றம்பலக் கோவையார் உண்மை விளக்கம் எனும் நூலிலே காணலாம். மேலும் இந்நூலிலுள்ள முதலாவது திருப்பாடலின் சிறப்புகளைக் குறிப்பிடலாம்.
இத் திருப்பாடல்
திருவளர்தாமரை சீர்வளர் காவிகளிசர் தில்லைக் குருவளர் பூங்குமுழ் கோங்கு பைங்காந்தள்
கொண்டோங்கு தெய்வ மருவளர் மாலையொர் வல்லியினெ7ல்கி யனநடைவாயந் துருவளர் காமன்றன் வென்றிக் கொடியோன்
றொளிர்கின்றதே" என்பதாகும்.
இந்துக்கலைக்களஞ்சியம்

Page 393
உலகியல் இன்பங்களுள் தலைவனும் தலைவியும் - நாயகனும் நாயகியும் ஒன்றியிருந்து நுகரும் இன்பம் தலை சிறந்ததாகும். அதுபோல இறையியல் இன்பங்களுள் இறைவனும் ஆன்மாவும் ஒன்றியிருந்து நுகரும் இன்பம் உயர்ந்ததாகும். இறைவனது உலகத்திலிருத்தல் (சாலோக) இறைவனுக் கருகிலிருத்தல் (சாமீப) இறைவனது உருவத்தைப் பெற்றிருத்தல் (சாரூப) இறைவனோடு பிரிப்பின்றி ஒன்றியிருத்தல், (சாயுச்சிய) என இறையியல் இன்பங்கள் (வீடுபேறுகள்) நான்கு வகைப்படும். இவற்றுள் இறுதியாகக் கூறப்பட்டதே அத்துவித முத்தி. பரமுத்தி, சாயுச்சியம் என ஞானநூல்களிலே சிறப்பாகக் கூறப்பட்டுள்ளது. இப்பர முத்தியின் இயல்பு திருச்சிற்றம்பலக் கோவையாரிலே வரன்முறையாக உணர்த்தப்படுகின்றது என்பது சைவசித்தாந்த அறிஞர்களின் கருத்தாகும். ஏற்கனவே குறிப்பிட்டவாறு நூலின் முதற் பகுதியாகிய இயற்கைப் புணர்ச்சியின் முதலாவது திருப்பாடலை காட்சி யென்னும் துறையில் உள்ளது. இதனைச் சைவசித்தாந்த நோக்கிலே
'இயற்கைப் புணர்ச்சித் துறையீரொன்பதும் சத்திநிபாதம் ஒத்திடும் காலத் துத்தம சற்குரு தரிசனம் ஆகும்
எனவும்
“குருவின் திருமேனி காண்டல்” எனவும் திருச்சிற்றம்பலக் கோவையார் உண்மை விளக்கம் விளக்குகின்றது. சிவபெருமானே குருவடிவம் தாங்கி வந்து ஆன்மாக்களுக்கு அருள் புரிவார் எனச் சைவ சித்தாந்தம் கூறும். எனவே முதற் காட்சியிலே தலைவனாகிய பக்குவ ஆன்மாவுக்குத் தலைவியாகிய இறைவனே குரு மூர்த்தியாகப் புலப்படுவது சாலவும் பொருத்தமானதே. அதனாலேயே காட்சித் துறை குருவின் திருமேனி காண்டல்' என்று தெளிவாக்கப்படுகின்றது.
இந் நூலிலே வெளிப்படையாக ஐந்திணை அக வொழுக்கமே கூறப்படுகின்றது. அகத்திணை ஒழுக்கங்களில் ஏனையவற்றிற்கு அடிப்படையாக நின்று உதவுவது குறிஞ்சித்திணை ஒழுக்கமே. ஏனையவற்றுக்குரிய ஒழுக்கங்கள் குறிஞ்சித் திணைக்குரிய கூடலுக்குத் துணையாகவே உள்ளன. சிவன் பிரான் கோயில் கொண்டெழுந்தருளியிருக்கும் தலங்களில் மிக முக்கியமானது தில்லைத்திருத்தலமே. இத்திருப்பதியின் சிறப்பு இந்நூலில் பெரும்பாலும் இடம் பெற்றுள்ளது.
இப் பாடலில் குறிப்பிடப்பட்டுள்ள மலர்கள் ஐந்தும் ஐவகை நிலங்களுக்குரியவை. மருதத்தில் தாமரையும், நெய்தலில் நெய்தலும், முல்லையில் குமுழும், பாலையில் கோங்கும் குறிஞ்சியில் காந்தளும் பொதுவாகக் காணப்படுவன. ஐந்திணைகளுக்குமுரிய மலர்களை ஒழுங்கு கூறி நில மயக்கத்தை வெளிப்படுத்திய மணிவாசகர் இறுதியாகக் குறிஞ்சியை வைத்தமை அதன் அடிப்படையை உணர்த்துவதற் கெனலாம். மேலும் "ஈசர் தில்லை” என்ற சொற்றொடரை
இந்துக்கலைக்களஞ்சியர் ബ് -

வைத்து வீடு பேறாகிய பயனையும் ஆசிரியர் சுட்டிக் காட்டத் தவறிலர்.
தன்னுடைய கண்களுக்குத் தென்பட்ட நங்கையைக் கேசாதிபாத முறையில் முகம், கண், மூக்கு, கொங்கை, கை ஆகிய உறுப்புகளின் வழி மலர்கள் என்று கண்ட தலைவன் இறுதியில் அவளது கால்களைப் பார்த்து அவள் அன்ன நடையுடையவள் எனப் பாராட்டிய நயமும் அறிந்து மகிழத்தக்கதே. இங்கு ஐவகை நிலங்களுக்குமுரிய பூக்களாலானவளாகவே தலைவி உருவகப்படுத்திக் கூறப்படுகிறாள். அதாவது அழகு வளரும் தாமரை மலரை முகமாகவும் அழகிய நீலப் பூக்களைக் கண்களாகவும் தில்லையிலுள்ள குமிழ மலரை நாசியாகவும், கோங்கரும்புகளை மார்புகளாகவும் செவ்விக் காந்தள் பூக்களை கைகளாகவும் கொண்டு ஆக்கப்பட்ட உயர்ந்த தெய்வவாசனை மிக்க மாலை ஒரு வல்லிக் கொடிபோல நுடங்கி அன்னத்தின் நடைபோல நடையும் வாய்ந்து விளங்குகிறாள். அது மட்டுமா? காதல் தெய்வமான மன்மதனின் வெற்றிக் கொடி போன்று ஒளிர்கிறாள். இங்கு தலைவியின் தனி அழகுச் சிறப்பு இவ்வாறு புலப்படுத்தப்படுகின்றது. மேலும் தலைவி ஐவகை நிலங்களையும் அவ்வவற்றின் ஒழுக்கங்களையும் புலப்படுத்துகிறாள். தலைவியான இறைவன் எல்லாமாக எல்லா அழகும் ஒருங்கு திரண்ட பேரழகனாகத் திகழ்கிறான். இவ்வாறு இப் பாடலிலே உலகியல் சமய, தத்துவ ரீதியிலான சிறப்புகள் பல தென்படுகின்றன.
திருக்கோவையாரின் சிறப்பினை பிற்பட்ட கால ஒளவையார்
“தேவர் குறளும் திருநான்மறை முடிவும் வேர் தமிழும் முனிமொழியும் - கோவை திருவாசகமும் திருமூலர் சொல்லும் ஒருவாசகமென்றுணர்”
எனக் குறிப்பிட்டுள்ளமையும் கவனித்தற் பாலது. (வி சி)
திருக்கோழியூர்
பாடல் பெற்ற 108 வைணவத் திருப்பதிகளுள் திருவரங்கத்தையடுத்து இரண்டாவதாகத் திகழும் திருத்தலம் திருப்பாணாழ்வார் அவதாரப்பதி, ஊர் - உறந்தை; கோயில்திருக்கோழி, சோழ மன்னன் ஒருவனின் மகப்பேறு இல்லாத குறையைத் தீர்க்க திருவுளங்கொண்ட திருமகள் தாமே அம்மன்னனுக்குப் பெண்குழந்தையாகத் தோன்றினாள். சோழன் அக்குழந்தைக்கு கமலவல்லி என்ற பெயரைச் சூட்டி வளர்த்து வரலானான். குழந்தை மங்கைப் பருவம் எய்தியதும் பூரீ ஆண்டாள் போல திருவாங்கத்தமுதனிடம் காதல் கொண்டு மணந்தால் அவரையே மணப்பேன் எனச் சோழனிடம் கூற அவன் மகிழ்ச்சியுடன் அரங்கனுக்குத் தன் பெண்ணைத் திருமணம் செய்து கொடுத்தான். சீதனமாக உறையூரையும் அவளுக்கே தந்தான் அரங்கனுடைய மாளிகைக்குச் சென்றதும்
3's

Page 394
கமலவல்லி இறைவனுடன் ஒன்று கலந்தார். அப்பெண்ணின் பெயர் கொண்டு விளங்குவதே நாச்சியார் கோயில்.
கோயில் பழமையானது. பல நூற்றாண்டுகளின் தொடர்ச்சியில் திருப்பணிகள் நிறைவேறி விரிவு பெற்று இன்று பலரும் கண்டு மகிழும் பொலிவுடன் திகழ்கிறது.
கோயில்
மூலவர் - அழகிய மணவாளன் தாயார் கமலவல்லி தீர்த்தம் - கல்யாணதீர்த்தம், சூரியபுட்கரணி குட முருட்டியாறு. விமானம் - கல்யாண விமானம்
கோயில் வடக்கு நோக்கியது. இராஜ கோபுர வாயிலை அடுத்து மகாமண்டபம், முகப்பில் அனுமார்; அவருக்கு அப்பால் தாயார் சந்நிதிகள் உள்ளன. இடப்பக்கம் சேனை முதலியார், நம்மாழ்வார், உடையவர், திருப்பாணாழ்வார் சந்நிதிகள் உள்ளன. நம்மாழ்வார் கோயிலில் அழகான ஒவியங்கள் தீட்டப் பெற்றுள்ளன, திருப்பாணாழ்வார் கோயிலை அடுத்து படிக்கட்டுகளுடன் கூடிய தெப்பக்குளம் உள்ளது. அடுத்து நந்தவனம், வசந்த மண்டபம்; திருப்பாணாழ்வார் சந்நிதிக் கெதிரில் பெருமாள் கருவறைக்குச் செல்லும் நுழைவாயில் உள்ளது. வலப்பக்கம் கருடாழ்வார் சந்நிதியுள்ளது. கருவறையில் அழகிய மணவாளன் இரு கரங்களில் சங்கு சக்கரம் ஏந்தியும் வலக்கரத்தால் அபயம் காட்டியும், இடது கரத்தால் கதையைப் பிடித்தும் நின்ற கோலத்திற் சாட்சியளிக்கின்றார்.
ܔ`ܣܛܬܐ
328
 

திருமங்கையாழ்வார் ஒரு பாசுரத்தாலும் குலசேகரத்தாழ்வார் ஒரு பாசுரத்தாலும் மங்களாசாசனம் செய்துள்னர்,
அல்லிமாமலர் மங்கை நாதன்
அரங்கன் மெய்அடியார்தம் எல்லையிலடி மைத்திறத்தினில்
என்று மேவு மனத்தனாம் கொல்லிக் காவலன் கூடல் நாயகன் கோழிக் கோன் குலசேகரன் சொல்லினின் இன்தமிழ் மாலைவல்லவர் தொண்டர் தொண்டர்களாவரே'
(குலசேகரத்தாழ்வார். பிரபந்தம் பாசுரம் 667)
பங்குனி உத்திரத்திற்கு முதல் நாளன்று அரங்கநாதப் பெருமாள் இத்தலத்திற்கு எழுந்தருளி, பங்குனி உத்திரத்தன்று கமலவல்லி நாச்சியாரை மணந்து கொண்டு சேவை தருகின்றார். உறையூரில் கோழி, யானையை வென்ற காரணத்தால் கோழியூர் என்ற பெயர் ஏற்பட்டதாகக் கூறப்படுகின்றது. இத்தலத்தில் மூலவர் மட்டுமே உள்ளார். உற்சவ மூர்த்திகள் இல்லை. திருவரங்கத்து உற்சவரே இங்குள்ள உறையூர் வல்லியின் திருக்கல்யாண வைபவத்தில் அழகிய மணவாளனாக வந்து திருமணம் செய்து கொண்டதால் திருவரங்கத்து உற்சவரே இத்தலத்து உற்சவப் பெருமானாக விளங்கி வருகின்றார்,
எம்பெருமான் கிடந்தும், நின்றும், இருந்தும் சேவை தருவதைப் போல, பெரிய பிராட்டியார் இத்தலத்தில் இருந்தும், கிடந்தும் என்ற இரு சேவைகளையும் ஒரே சேவையாக உறைந்து விளங்கும் சேவையாக தந்து திருவருள் புரிகின்றார். (தே.ஹ.)
இந்துக்கலைக்களஞ்சியம்

Page 395


Page 396
arripiului ***

[噬x鹭 巽*

Page 397


Page 398
Designed printed by unit
 

RTS PAT) LTD COLOMBO 13, TEL: 2330495
its.