கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: இந்துக்கலைக்களஞ்சியம் 6

Page 1
gigi gLDLI Gurg
gin]] ଗ୍ର
 

ர அலுவல்கள் திணைக்களம் காரஅலுவல்கள் அமைச்சு

Page 2
முக்கிய
2. A-,
பொதுசன Ա5
நீங்கள் எடுத்து வாசிக் அழித்தல் வெட்டுதல் மற்றும் கேட்டுக் கொள்கிறோம். lé iਛ குஇறபாடுகளைக் கண்ட தெரிவிக்கவும் இல்லாவிடில் இ பட்டதென்று அருதப்படுவது னையையும் ஒத் நேரிடும்
 
 
 

அகவும் பகுதி
PT6u) 358 à Lyra ழ்ப்பனேடம்
கும் புத்தகத்தில் கீறுதல், கிறுக்குதல், ஊறுபாடுகளைச் செய்யவேண்டாமென த்தகங்களை எடுக்கும்பொழுது இப்படி -ால் நூலகப் பொறுப்பாளருக்கு இவ்வூறுபாடுகள் தங்களாலேயே ഭu'u1', உன் நூலகத்தில் விதிக்கப்படும் தண்ட

Page 3


Page 4


Page 5
பேராசிரியர் இ
வெ6 இந்து சமய கலாசார அ. இந்து சமய விவகார இல
2O
 
 

ரியீடு லுவல்கள் திணைக்களம் அலுவல்கள் அமைச்சு
ங்கை
O3

Page 6
முதற் பதிப்பு:
வெளியீடு :
பதிப்புரிமை:
அச்சு:
விலை :
───────།────།
டிசம்பர் 2003
இந்து சமய கலாசார அலு
இந்து சமய விவகார அலு 248-1/, காலி வீதி,
கொழும்பு-04. இலங்கை
இந்துசமய கலாசார அலு
யுனி ஆர்ட்ஸ் பிரைவேட் 48B, புளுமெண்டால் வீதி, கொழும்பு-13.
ரூபா =ே

ரவல்கள் திணைக்களம் றுவல்கள் அமைச்சு
வல்கள் திணைக்களம்
லிமிடெட்

Page 7
HINDU ENC
Volun
Pub,
Department of Hindu Rel Ministry of Hind Sri L
2O
 

YCLOPAEDIA
ne - VI
வேனது சன நூலக9
aanbirnir seserttir
\ ୯ cନ୍ତି ଏ. ଷ୍ଟସ ବି\–
لا 8 و 3 في
lisher
ligious and Cultural Affairs
u Religious Affairs
anka
O3

Page 8
FIRST EDITION:
PUBLISHED BY:
COPYRIGHT:
PRINTED BY:
PRICE:
December 2003
Department of Hind Ministry of Hindu 248 1/1, Galle Road,
Colombo-04 Sri Lanka.
Department of Hind
Unie Arts (Pvt.) Ltd. 48B, Bloemendhal Road Colombo -13.
Rs. A W

Ll Religious and Cultural Affairs. Religious Affairs.
u Religious and Cultural Affairs.

Page 9
சுருக்கித் தரப்பட்டுள்
(சி.ப), (வி.சி),
 

ந்துக்கலைக்களஞ்சியம்
தொகுதி - ஆறு
எழுத்தாளர் குழு
பேராசிரியர் சி. பத்மநாதன்
பேராசிரியர் வி. சிவசாமி
பேராசிரியர் வே. சேதுராமன்
பேராசிரியர் கு. வேலுசாமி
பேராசிரியர் சோ. கிருஷ்ணராஜா
கலாநிதி மா. வேதநாதன்
கலாபூஷணம் வசந்தா வைத்தியநாதன்
திரு. கே. கே. சோமசுந்தரம்
கலாநிதி இராமசேஷன் இரா கிருஷ்ணன்
திரு. க. சிவாநந்தமூர்த்தி
திருமதி கல்யாணி நடராஜா
திரு. க. இரகுபரன்
༽ ༤༣ ༤༽ ༽ 8 ༤།> དེ་ N།-
திரு. பூரீபத்சர்மா
திரு. வ. சிவராஜசிங்கம்
செல்வி கே. உமாசந்திரா
திருமதி தேவகுமாரி ஹரன்
திருமதி நித்தியவதி நித்தியானந்தன்
ட்டுரைகளின் இறுதியில் அவ்வக் கட்டுரைகளின் ஆசிரியர் பெயர்
ளது. மேற்படி கட்டுரையாளர்களின் பெயர்ச் சுருக்கங்கள் முறையே வருமாறு அமையும்.
(வேசே), (குவே), (சோ.கி), (மா. வே), (வவை), (கே.கே. எஸ்.), (இரா.கி), (க.சி)
(க.ந.) (க.இர), (பூரீபதி), (வி. சி), (உமா), (தே.ஹ), (நி.நி).

Page 10
இந்துக்கலைக்களஞ்சிய
தொகுதி - ஆறு
ஆலோசனைக் குழு
மாண்புமிகு தியாகராசா மகேஸ்வரன் இந்து சமய விவகார அலுவல்கள் அமைச்சர்
திரு. க. பரமேஸ்வரன் செயலாளர், இந்து சமய விவகார அலுவல்கள் அமைச்சு
திரு. க. பரமலிங்கம் மேலதிக செயலாளர், இந்து சமய விவகார அலுவல்கள் அமைச்சு
திருமதி சாந்தி நாவுக்கரசன் பணிப்பாளர், இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம். பேராசிரியர் சி. பத்மநாதன் வரலாற்றுத்துறை, பேராதனைப் பல்கலைக்கழகம்.
பேராசிரியர் ப.கோபாலகிருஷ்ண ஐயர் கலைப்பீடாதிபதி, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்,
பேராசிரியர் சோ. கிருஷ்ணராஜா தலைவர், மெய்யியற்றுறை, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்.
பேராசிரியர் வி. சிவசாமி வருகைப் பேராசிரியர், சமஸ்கிருதத்துறை, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்.
கலாநிதி ப. புஸ்பரட்ணம் வரலாற்றுத்துறை, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்.
கலாபூஷணம் வசந்தா வைத்தியநாதன்
திரு. கே. கே. சோமசுந்தரம் திரு. க. இரகுபரன் விரிவுரையாளர், தென்கிழக்குப் பல்கலைக்கழகம்,
திரு. வீ. விக்கிரமராஜா உதவிப் பணிப்பாளர் (நிர்வாகம்), இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களம்.
திரு. வீ. குமார்வடிவேல் உதவிப் பணிப்பாளர் (இந்து சமய அலுவல்கள்), இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம்.
திரு. எஸ். தெய்வநாயகம் உதவிப் பணிப்பாளர் (ஆராய்ச்சி), இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களம்.
திருமதி தேவகுமாரி ஹரன் - ஆராய்ச்சி அலுவலர், இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களம்,
திருமதி நித்தியவதி நித்தியானந்தன் ஆராய்ச்சி அலுவலர், இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களt
திரு. ம. சண்முகநாதன் தகவல் உத்தியோகத்தர், இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்க


Page 11
ÉeFTLD
ஏலவார்குழல் இறைவி பாலனாகிய குமரவேல்
 

விக்கும் எம்பிரான் தனக்கும்
நடுவுறுஉம் பான்மை

Page 12
நடராசர் பொற்சன
 
 

கோபுரமும் சிவகங்கைக் குளமும்

Page 13


Page 14
ஆயிரங்கால் மண்ட
 

தேவகோட்ட சிற்பம்
பம் படிச்சுவர் சிற்பங்கள்

Page 15
செல்
சூரியன் கோ
 
 

யில் - கோனாரக்

Page 16


Page 17

墨
缀

Page 18
ÅlauËLLITS 5,5
 


Page 19
1ெனது அமைச்சின்கீழ் இயங்கும் இந் தனது அதி உன்னத பணியாக இந்துக் க இத்தகைய ஒரு உலகளாவிய சமய ஆய்வி நாட்டின் இந்து மக்களுக்குப் பெருமை அ
முன்னாள் இந்து சமய விவகார அமை, இப்பணி ஆரம்பிக்கப்பட்ட பொழுதிலும், பி மாண்புமிகு பி. பி. தேவராஜ் அவர்களது காலி முதற்றொகுதி வெளியிடப்பட்டது. அதன் இதுவரை வெளியாகியுள்ளன.
இக் கலைக்களஞ்சியத்தின் முதலாம் அவர்கள். அதன் பின்னர் பேராசிரியர் சி. பத் தொகுதிகளும் வெளிக் கொணரப்பட்ட6 உழைப்பினால் நடைபெற்று வருகின்றது.
இத் தொகுதிகளில் இடம்பெறும் ஆ கட்டடக்கலை, ஒவியம், சிற்பம், சான்றே உள்ளடக்கியிருப்பதால் குறிப்பாக இந்து இந்துக்கள் அனைவருக்கும் அளப்பரிய ப தமது பூரண ஒத்துழைப்பையும், ஆலோச6 பல்கலைக்கழக வரலாற்றுத்துறை மூத்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கின்றே ஆறாவது தொகுதியும் செயலுருப் பெற்று
மேலும் இப்பணிக்கு உதவிய அை கலாசார அலுவல்கள் திணைக்களப் பணி பணிப்பாளர் திரு. எஸ். தெய்வநாயகம் மற் எனது பாராட்டுக்கள்.
கலைக்களஞ்சியத்தின் ஏனைய தொகு
நிறைவுபெற அனைவரது ஒத்துழைப்பும் 6
t
S\ ○ R <سہ ܔ g-لـ ""( ༡༦༽
مجمی۔ الأحي
 

வாழததுரை தியாகராசா மகேஸ்வரன் பாஉ
மாண்புமிகு அமைச்சர், இந்துசமய விவகார அலுவல்கள்.
து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஆய்வுப்பிரிவு லைக்களஞ்சியத்தினைத் தொகுத்து வெளியிட்டு வருகின்றது. |ப்பணி எமது நாட்டில் மட்டுமே நடைபெறுவது, இலங்கை |ளிக்குமொரு விடயமாகும்.
ச்சராகவிருந்த மாண்புமிகு செ.இராஜதுரை அவர்கள் காலத்தில் ன்னர் இந்து சமய கலாசார இராஜாங்க அமைச்சராக விளங்கிய த்திலேயே, (1990 ஆம் ஆண்டு) இந்துக் கலைக்களஞ்சியத்தின் தொடர்ச்சியாக ஐந்து இந்துக் கலைக்களஞ்சியத் தொகுதிகள்
தொகுதியின் பதிப்பாசிரியர் பேராசிரியர் பொ. பூலோகசிங்கம் த்மநாதன் அவர்கள் பதிப்பாசிரியராக அமர்ந்த ஏனைய நான்கு ன. இக் கலைக்களஞ்சியப்பணி பல அறிஞர்களுடைய
ய்வுக் கட்டுரைகள் இந்து சமய வரலாறு, தத்துவம், பண்பாடு, ார், சமய நூல்கள் போன்ற பலதரப்பட்ட விடயங்களையும் சமய ஆய்வாளர்களுக்கும், பொதுவாக மாணவர்கள் உட்பட பன்தருவனவாகும். அவ்வகையில் இத் தொகுதிகள் வெளிவர னைகளையும் நல்கிய பிரதம பதிப்பாசிரியராகிய பேராதனைப் பேராசிரியர் சி. பத்மநாதன் அவர்களுக்கு எனது மனமார்ந்த ன். அவரது அளப்பரிய சேவையினாலேயே இப்பொழுது எாளத.
னத்து அறிஞர்கள், கட்டுரையாளர்கள் மற்றும் இந்து சமய
ரிப்பாளர் திருமதி சாந்தி நாவுக்கரசன், ஆய்வுப்பிரிவு உதவிப் றும் திணைக்களத்தின் ஆராய்ச்சி அலுவர்கள் அனைவருக்கும்
திகளும் வெகுவிரைவில் வெளிவந்து இப்பணி பூரணமாக தொடர்ந்தும் கிடைக்கும் என்பது எனது நம்பிக்கை.
vii

Page 20
அணிந்துரை
க. பரமேஸ்வரன் செயலாளர், இந்து சமய விவகார அலுவல்கள் அமைச்சு
இந்து சமயத்தின் தொன்மையையும் அதன் வரலாறு இந்துவினதும் தலையாய கடமையாகும். வாழ்க்கையைச் இத்தகைய வரலாற்றுப் பின்னணிகள் மிகவும் பயன்பாடு மி சிறப்புக்கு மெருகூட்டி நிற்கின்றன.
இந்த வரலாற்றுத் தொன்மைகளை அறிந்து கொள்வ உறுதுணையாக அமைவுபெறுகின்றது எனலாம். உலகில் இ கலைக்களஞ்சியம் வெளியிடப்பட்டது என்பதை அறிந்து மி
இந்து சமயம் தொடர்பான நாடு, தலம், பெரியோர், நூ விடயங்களை உள்ளடக்கிய கட்டுரைகள் இந்துக் கலைக்கள தொகுதி உயிரெழுத்தில் 'அ' தொடங்கி 'உ' வரை அமைவி அவர்களை ஆசிரியராகக் கொண்டு 1990 இல் வெளிவந்தத வரை இரண்டாவது தொகுதியும், மெய்யெழுத்தில் "க" மூன்றா வரை நான்காவது தொகுதியாகவும் இடம்பெற்றுள்ளன. உள்ளடக்கியுள்ளது. தற்போது வெளிவரும் ஆறாம் தொ சொற்றொகுதிகளைக் கொண்டது. இத் தொகுதிக6ை வேலைப்பளுவை அறியும்போதும் இவற்றைத் தொகுத் புலனாகின்றது.
இதுவரை வெளிவந்த ஐந்து தொகுதிகளும் ஏற கொண்டுள்ளன. ஆறாம் தொகுதியில் 136 கட்டுரைக ஆய்வாளர்களாலும் பேராசிரியர்களாலும் இக் கட்டுரைகள் 6 சேவையும் இந்துக் கலைக்களஞ்சியம் ஆறாம் தொகுதியும் உதவியுள்ளன.
இரண்டாம் தொகுதியிலிருந்து ஆறாம் தொகுதிவரை ஐ பிரதம பதிப்பாசிரியராகப் பேராசிரியர் சி. பத்மநாதன் அவர்க மிக்க மகிழ்ச்சியடைகின்றேன். பேராதனைப் பல்கலைக்கழ இவரின் சேவை ஐந்து தொகுதிகளுக்கும் கிடைத்து இத் ெ வழிகோலிற்று என்றால் மிகையாகாது. 2ஆம் உலக இந்த உழைப்பு மிகவும் உறுதுணையாக அமைந்ததை நாம் அறிே
இன்றைய அரசின் இந்து சமய விவகார அலுவல்கள் அ தாண்டியுள்ள இக் காலப்பகுதியில் இந்துக் கலைக்களஞ்சியத் சிறப்புக்குரிய அம்சமாகும். இந்துக் கலைக்களஞ்சிய தொகு செயற்பட்டு வரும் இந்து சமய கலாசார அலுவல்கள் திணைச் ஆளணிப் பற்றாக்குறை நிலவிய போதிலும், திணைக்களத்தின் பணிகளை நிறைவேற்றி வருவது பாராட்டுக்குரியது.
Vii

களையும், அறிந்து கொள்வது ஒவ்வொரு சரியான பாதையில் இட்டுச் செல்வதற்கு க்கவையாக உள்ளன. இந்து சமுதாயத்தின்
தற்கு இந்துக் கலைக்களஞ்சியம் மிகவும் லங்கையிலேயே முதன் முதலாக இந்துக் கவும் மகிழ்ச்சியடைகின்றேன்.
ல்கள், சஞ்சிகைகள் போன்ற பலதரப்பட்ட த்சியத்தில் இடம் பெற்றுள்ளன. முதலாவது பு பெற்று பேராசிரியர் பொ. பூலோகசிங்கம் 1. அதனைத் தொடர்ந்து 'உ' தொடங்கி 'ஒள' ாவது தொகுதியாகவும், 'கா' தொடங்கி கெள' ஐந்தாம் தொகுதி 'ச', 'சா எழுத்துக்களை ாகுதி 'சி முதல் செள ஈறாக அமைந்த ாப் பார்வையிட்டபோதும் அதற்கான து வெளியிடுவதில் உள்ள சிரமம் நன்கு
க்குறைய 1630 கட்டுரைகளைத் தம்முட் ள் இடம் பெற்றுள்ளன. பலதரப்பட்ட ாழுதப்பட்டுள்ளன. இவர்களது உழைப்பும்
காத்திரமான தொகுதியாக வெளிவருவதற்கு
ந்து தொகுதிகளையும் மேற்பார்வை செய்து கள் பணியாற்றியுள்ளார் என்பதை அறிந்து கத்தில் வரலாற்றுத்துறைப் பேராசிரியரான தாகுதிகள் யாவும் சிறப்பாக அமைவு பெற மகாநாட்டின் வெற்றிக்கும் இவரது கடும் வாம்.
புமைச்சு ஆரம்பிக்கப்பட்டு ஒரு வருடத்தைத் ந்தின் ஆறாம் தொகுதி வெளிவருவது மிகவும் திகளை வெளிக் கொணர்வதில் ஆர்வமுடன் க்களத்தின் பணி மிகவும் போற்றுதற்குரியது. ன் ஆய்வுப் பிரிவு உரிய வேளையில் தனது

Page 21
இந்துக் கலைக்களஞ்சியம் ஆறாம் தெ பதிப்பாசிரியராகக் கடமை புரிந்த பேர பாராட்டுகின்றேன். இனிவரும் இந்து பங்களிப்பை வழங்கி மிகுதியான தொகுதிக
கேட்டுக் கொள்கின்றேன்.
இந்து சமய கலாசார அலுவல்கள் தொகுதிகளையும் வெளிக்கொணர்வதற்கே மாணவர்கள், ஆய்வு செய்ய விரும்புவோ
அமைவு பெறுதல் அவசியம்.
தமிழ்நாட்டிற் கூட இந்துக் கலைக் கலைக்களஞ்சியம் ஆறு தொகுதிகள் வெளி விவகார அலுவல்கள் அமைச்சு இதன் முச் வெளிவருவதற்கு தன்னாலான முழு ஒத் விதத்தில் திணைக்களமும் திட்டமிட்டபடி ஆவன செய்ய வேண்டும். அப்போதுதா
தாற்பரியங்களை அனைவரும் உணர்ந்து
'எம் க
 

ாகுதிக்கு கட்டுரைகளை வழங்கிய ஆய்வாளர்களையும் பிரதம ாசிரியர் சி. பத்மநாதன் அவர்களையும் நான் மனதாரப் கலைக்களஞ்சியத் தொகுதிகளிலும் இவர்கள் தங்களது ளையும் பூர்த்தி செய்திட அயராது உழைத்திட வேண்டும் எனக்
திணைக்களம் இந்துக் கலைக்களஞ்சியத்தின் மற்றைய ற்ற வகையில் தமது செயற்பாடுகளை விஸ்தரிக்க வேண்டும்.
ர் அனைவருக்கும் பயன்படும் களஞ்சியமாக இத்தொகுதிகள்
களஞ்சியம் உருவாகாத நிலையில், இலங்கையில் இந்துக் வந்துள்ளமை மிகவும் மனநிறைவைத் தருகின்றது. இந்து சமய கியத்துவத்தை உணர்ந்துள்ளது. அமைச்சு மிகுதித் தொகுதிகள் துழைப்பையும் திணைக்களத்திற்கு வழங்கும். அதற்கேற்ற மற்றைய தொகுதிகளையும் கூடிய விரைவில் வெளிக்கொணர ன் முழுமையான தொகுதிகள் வெளிவந்து இந்து சமயத்தின்
கொள்ளக்கூடிய வாய்ப்பு ஏற்படும்.
டன் பணி செய்து கிடப்பதே'

Page 22
LIIIITTI'(S60D
க. பரமலிங்கம் மேலதிக செயலாளர், இந்து சமய விவகார அலுவல்கள் அமைச்சு,
இந்து சமயத்துடன் தொடர்புடைய அனைத்து விட கலைக்களஞ்சியத் தொகுதிகள் அமைந்துள்ளன. இதுவ திணைக்களத்தின்மூலம் ஐந்து தொகுதிகள் வெளியிடப்பட்டுள்
கலைக்களஞ்சியமொன்றில் இடம்பெறும் கட்டுரைகள், கு தகவல்களைக் கொண்டிருக்க வேண்டும். அந்த வகையில் இ மிகவும் பொறுப்புடன் முழுமையான கட்டுரைகளை வழங்குவி
என்பதை அறிந்து கொள்ளமுடிகின்றது.
தற்போது வெளியிடப்படும் இந்த ஆறாவது தொகுதி எழுத்துக்களை முதன்மையாகக் கொண்ட இந்து சமயத்துடன் ெ இவை இந்துசமய வரலாறு, பண்பாடு, கலை, இலக்கியம், பெரி
உள்ளடக்குகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
இத்தகைய நூலைத் தொகுத்து வெளியிடுவது என்பது மிக சி. பத்மநாதன் அவர்கள் மனமுவந்து ஏற்று, சிறப்பாக நிறைவேற் தொகுதிகளுக்கு அவர் அளித்துள்ள பங்களிப்பு மகத்தானதும் முடியாததுமாகும்.
அவ்வாறே இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களத் மேற்பார்வையில் இப்பணி தொடர்வது பாராட்டிற்குரியத உதவிப்பணிப்பாளர் திரு. எஸ். தெய்வநாயகம் இந்துக் கை வெளிக்கொணர்விற்குப் பெரும் பங்காற்றியுள்ளார்.
இவர்களினதும் கட்டுரையாளர்கள், ஆராய்ச்சி அலுவல்க காரணமாகவே இத் தொகுதிகள் கிரமமாக வெளியிடப்படுகின் பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன். கூடிய வெளிக்கொணர்வதற்காக அனைவரும் தங்கள், அர்ப்பணிப்புக் விவகார அமைச்சு என்றும் பூரண ஒத்துழைப்புக்களை வழங் பங்களிப்புக்கள் முழுமையாக இந்துக் கலைக்களஞ்சியத் அதன்மூலம் இந்துக்கலைக்களஞ்சியம் காத்திரமான தொகுதிக பயன்பாடுகளை இதன்மூலம் பெற்றுக்கொள்ள வாய்ப்புண்டா
உள்ளபோதே பயன்படுத்திக் கொள்வதற்கு அனைவரும் பாடு

யங்களையும் உள்ளடக்கியதாக இந்து
ரை இந்துசமய கலாசார அலுவல்கள்
560.
றித்த விடயத்தைப் பற்றிய முழுமையான க் கட்டுரைகளை எழுதும் ஆய்வறிஞர்கள் பதற்கு பெருமுயற்சி மேற்கொண்டுள்ளனர்
முதல் செள வரையான தமிழ் தாடர்புடைய விடயங்கள் அடங்கியுள்ளன.
யோர், தலங்கள் எனப் பல துறைகளையும்
வும் சிரமமான பணி. இதனை, பேராசிரியர்
]றியுள்ளார். முதற்றொகுதி தவிர்ந்த ஏனைய ம் வரவேற்கத்தக்கதும். காலத்தால் மறக்க
தின் பணிப்பாளர் திருமதி சாந்திநாவுக்கரசன் ாகும். ஆய்வுப்பிரிவிற்குப் பொறுப்பான லக்களஞ்சியம் ஆறு தொகுதிகளினதும்
ள் ஆகியோரினதும் ஒருமித்த உழைப்புக் ாறன. இவர்கள் அனைவருக்கும் எனது விரைவில் மற்றைய தொகுதிகளையும் ளை நல்க வேண்டும். இதற்கு இந்துசமய கும். ஆய்வுத்திறன் மிக்க அறிஞர்களின் தொகுதிகளுக்குக் கிடைக்க வேண்டும். ாாக வெளிவருவதுடன் இந்துக்கள் கூடிய கும். அந்த வாய்ப்பினை எமது அமைச்சு
ட வேண்டும்.

Page 23
வெளியீட்டுரை
சாந்திநாவுக்கரசன் Zമ%ffബ് இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம்
இந்து சமய கலாசார அலுவல்கள் திை
மேம்பாடு, இந்து சமய ஆராய்ச்சி, இ செயற்றிட்டங்களின்கீழ் அலுவல்கள் திட்ட
இவற்றில் இந்து சமய ஆராய்ச்சி எனு வகிக்கின்றது. ஆராய்ச்சிப் பகுதியின் வேலை பதிப்பித்தலும், கிடைத்தற்கு அரிய நூல்க6ை நூல்களை வெளியிடல் என்பனவும் முக்கிய
ஆய்வுப் பிரிவின் பணிகளுள் இந் பிரதானமானதாகும். இதுவரை ஐந்து தொகு ஆய்வு முயற்சியாக பேராசிரியர் பொ. பூலோ இரண்டாம் தொகுதிமுதல் ஆறாம் தொகுதி சி. பத்மநாதன் அவர்கள் பதிப்பாசிரியராகக் ஆய்வாளர்கள், கட்டுரைகளை எழுதியுள்ள
ஆறாம் தொகுதியான இந்நூலில் சி சொற்களுக்கான கட்டுரைகள் இடம்பெற் தத்துவங்கள், வரலாறு, பண்பாடு, பெரியே விடயங்கள் அடங்கியுள்ளன.
குறித்த நான்கு தொகுதிகள், மற்றும், ! கட்டுரைகளை ஆய்வாளர்களிடமிருந்து பதிப்பிற்குரிய ஆலோசனைகளை வழங்குத என இக்கலைக்களஞ்சியத் தொகுதிகளின் 6 ஒத்துழைப்பு போற்றுதற்குரியதாகும். அவ நூலுருப்பெற்றன. திணைக்களத்தின் ஆய் தெய்வநாயகம் அவர்கள், கலைக்களஞ்சிய பங்கேற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதா தொடர்பு கொள்ளல், கட்டுரைகளைத் தெ ஒருங்கிணைத்தல் போன்ற பணிகளை அ நன்றியினைத் தெரிவித்துக் கொள்கின்றேன்
அவ்வாறே அச்சிடப்பட்ட கட்டுரைக6ை கொள்ளல், நூலை வடிவமைத்தல் ஆகிய பல்கலைக்கழக விரிவுரையாளர் திரு. க. இ தேவகுமாரி ஹரன், திருமதி நித்தியவதி நித்தி
இந் நூலை சிறப்பாக அச்சிட்டு உ நன்றியினைத் தெரிவித்துக் கொள்கின்றேன்
அறிஞர்களும், ஆர்வலர்களும் முத தொகுதியையும் ஏற்றுப் போற்றுவார்கள் எ
 
 

ணக்களத்தில் அறநெறிப் பாடசாலை அபிவிருத்தி, இந்து சமய இந்து சமய கலை கலாசாரம், என நான்கு பிரதான மிடப்பட்டு செயற்படுத்தப்பட்டு வருகின்றன.
றும் செயற்பாடானது ஆய்வுப்பணியில் பிரதான பங்கினை த்திட்டங்களில் இந்துக் கலைக்களஞ்சியத்தைத் தொகுத்தலும் ாத் தெரிவுசெய்து பதிப்பித்தல், பஞ்சாங்கம், பண்பாடு போன்ற மான திட்டங்களாகும்.
துக் கலைக்களஞ்சியத்தைத் தொகுத்து வெளியிடுதல் திகள் வெளியிடப்பட்டுள்ளன. முதற்றொகுதி தனியொருவரின் கசிங்கம் அவர்களின் உழைப்பின் பயனாக வெளியிடப்பட்டது. வரை ஐந்து நூல்களுக்கும் வரலாற்றுத்துறைப் பேராசிரியர் கடமை புரிந்துள்ளார். அவரது தலைமைத்துவத்தின்கீழ் பல
冠TT。
முதல், செள வரையான எழுத்துக்களிலே தொடங்கும் றுள்ளன. இவற்றுள், இந்து சமயத்துடன் தொடர்புடைய பார், தலங்கள், நரல்கள் போன்ற பல் துறைகளைச் சார்ந்த
ஆறாவது தொகுதியான இந்நூல் என்பவற்றுக்கான ஆய்வுக் எழுதிப் பெறல், பின்னர் அவற்றைச் செம்மைப்படுத்தல், ல், நூல் முழுமைபெறும்வரை தொடர்ந்து மேற்பார்வையிடல் வெளியீட்டிற்கு பேராசிரியர் அவர்கள் அளித்துள்ள பரிபூரண ரது விசாலித்த அறிவின் மூலம் பட்டை தீட்டப்பட்டே இவை வுப் பிரிவு உதவிப்பணிப்பாளராகக் கடமைபுரியும் திரு. எஸ். த் தொகுதிகள் அனைத்தின் வெளியீடுகளிலும் முழுமையாகப் கும். பேராசிரியர் அவர்களுடன் இணைந்து ஆய்வாளர்களுடன் ாகுத்தல் அச்சகத்தாருடன் பதிப்புத் தொடர்பான பணிகளை வர் நிறைவாக ஆற்றியுள்ளார். அவருக்கு என் மனமார்ந்த
ா ஒப்பு நோக்கல், உரிய படங்களைத் தெரிவு செய்து சேர்த்துக் விடயங்களை சிறப்பாக நிறைவேற்றியுள்ள தென்கிழக்குப் ரகுபரன், திணைக்கள ஆராய்ச்சி உத்தியோகத்தர்கள் திருமதி யானந்தன் ஆகியோருக்கும் எனது நன்றிகள் உரித்தாகுக.
தவிய யூனி ஆர்ட்ஸ் அச்சக நிறுவனத்தாருக்கும் எனது
ல் ஐந்து தொகுதிகளையும் வரவேற்றமை போலவே இத்
ன்பது எனது திடமான நம்பிக்கையாகும்.
Χ1

Page 24
முன்னேற்றப் பாதையில் இந்து
இந்துக் கலைக்களஞ்சியம் தொடர்பான வேலைத்திட்ட அமைச்சராக இருந்த காலத்தில் ஆரம்பமாகியது. ஆர உருவாக்கப்பட்டது. பதிப்பாசிரியர், பதிப்பாசிரியர் குழு தகவல்களைச் சேகரிப்பவர்கள் முதலானோர்களின் இடப்பட்டிருந்தன. அக்காலத்தில் அமைச்சர் அவர்கள் கொண்டிருந்த போதிலும், அமைச்சிடம் போதிய வசதிகள் செல்ல முடியவில்லை. நெடுங்காலமாக தொகுதியை வெளி உள்ள இந்து சமுதாயத்தின் பலவீனங்களுக்கு அது ஒரு
ஒரு கலைக்களஞ்சியத்தைப் பல தொகுதிகளாக வெளி முதற்கண் வித்துவப்புலமை வாய்ந்தவர்களால் எழுதப்படும் கட்டுரைகள் ஆதாரபூர்வமானவையாக அமைதல் வேண்டும் முறையில் எழுதப்படுதல் வேண்டும். வித்தியாபீடங்களில் உ படித்து இலகுவில் அவற்றைப் புரிந்து, கூடிய அளவு பய இந்த இலக்குகளை அடைவதற்கு ஆளணி தேவை. திட் அனுபவம் இன்றியமையாத தேவையாகும்.
கலைக்களஞ்சியம் தொடர்பான வேலைகளில் முன்ே அமைச்சர் அவர்கள் எமது நண்பரான பேராசிரியர் பொ. பொறுப்புக்களை ஒப்படைத்தார். வித்துவப்புலமை மிக் கருத்துமாகக் கவனிப்பவருமாகிய அன்னார் அதிக சிர தொடர்பான பணிகளைச் செய்து முடித்தார். பெரியார்கள், தல பல விடயங்களைத் தெரிவு செய்து கட்டுரைகளை மு அத்தொகுதியைப் பொறுத்தவரையில் பதிப்பாசிரியர், கட்டு பதிப்பாசிரியரின் பெயரில் எல்லாக் கட்டுரைகளும் வெளிவந் அது எங்களுடைய வித்துவ சமூகம் பற்றியது. அதை பல்துறை சார்ந்த பெரும் தொகுதி ஒன்றில், வெவ்வேறு துை கட்டுரைகள் இடம்பெற வேண்டிய ஒரு தொகுதியில் ஒருவ வெளியிட வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. அத்தகைய சூ கலாநிதி பொ. பூலோகசிங்கம் தனது பணியை அதிக சிரமா நாம் எல்லோரும் ஒத்துக்கொள்ள வேண்டும். அவரைப் ப
ஒப்படைக்கப்படும் முன்பே நடைபெற்ற தேர்தலில் அரசாங்க

பதிப்புரை
சி. பத்மநாதன் சிரேஷ்ட பேராசிரியர்,
வரலாற்றுத்துறை, !
பேராதனைப் பல்கலைக்கழகம்.
க் கலைக்களஞ்சியம்
டம் பூரீமான் செல்லையா இராசதுரை அவர்கள்
ம்பத்தில் தனியொரு பாரிய திட்டமாக அது கட்டுரையாசிரியர்கள், கட்டுரைகளுக்குத் பெயர்களும் குறிப்பிட்டு பட்டியல்கள் அதன் முன்னேற்றம் குறித்துப் பேரபிமானம் இருந்த போதிலும் அதனை முன்னெடுத்துச் யிட முடியாத நிலையிருந்தது. இலங்கையில் உதாரணமாக அமைந்துவிட்டது.
ரியிடுவது சுலபமான காரியமன்று. அதற்கு கட்டுரைகள் சேர்க்கப்படுதல் வேண்டும். அந்தக்
அவை செம்மையான நடையில் கவர்ச்சியான ள்ளவர்களும் வித்துவப் புலமையற்றவர்களும் னைப் பெறக்கூடியதாக அமைதல் வேண்டும்.
ட்டத்தை நிர்வகிப்பதற்கு தகைசான்ற நிர்வாக
னற்றம் ஏற்படாமை கண்டு விரக்தி அடைந்த பூலோகசிங்கத்தை வரவழைத்து அவரிடம் கவரும் தாம் எடுத்த கருமத்தைக் கண்ணும் மங்களுக்கு மத்தியில் முதலாவது தொகுதி ங்கள், நரல்கள், ஊர்கள் என்னும் பகுதிகளாகப்
முதலாம் தொகுதியாக உருவாக்கினார்கள். ரைகளின் ஆசிரியர் என்னும் வேறுபாடில்லை. தன. இதனால் ஒரு உண்மை புலப்படுகின்றது. எண்ணிப்பார்ப்பது வேதனைக்குரியது. ஒரு ஒறகளிற் பாண்டித்தியம் பெற்றவர்கள் எழுதும் ார் எழுதிய கட்டுரைகளை மட்டுமே தொகுத்து ழ்நிலையிற் பதிப்பாசிரியராகக் கடமையாற்றிய ங்களின் மத்தியில் நிறைவேற்றினார் என்பதை
ாராட்ட வேண்டும். அத்தொகுதி அச்சகத்திற்கு ம் மாறிவிட்டது. அமைச்சரும் பதவியிழந்தார்.
xii

Page 25
தனது முயற்சிகள் வீணாகி விடுமே என்ற அதன்பின் திரு. பி. பி. தேவராஜ் அவர்கள் பொறுப்பேற்றதும் இந்துக்கலைக்களஞ்சி திரு. தேவராஜ் அவர்கள் அமைச்சராக இ பணிப்பாளராக இருந்தவர் திரு. க. சண்மு ஆயத்தங்களை அவர் மேற்கொண்டார். சில கட்டுரைகளை எழுதுவித்தார். அதற்குமே6 ஏற்பட்டது. அச் சமயத்தில் எம்மை அன பொறுப்பை ஏற்றுக்கொள்ள முடியுமா 6 இணங்கினோம். பின்பு கட்டுரைகளை எவ்வ தொடர்பாக சுற்று நிருபம் ஒன்றை வ6 அனுப்பினோம். அந்நாட்களில் திருமதி வ8 பண்டிதர் கா. செ. நடராசனும் மிகப்பெரு வட்டத்தில் பேராசிரியர் சோ. கிருஷ்ணராஜ கட்டுரைகளை எழுதினார். பேராதனைப் ப வ. மகேஸ்வரன் ஒரு சமயத்தில் ஒத்துழைப் இந்து சமுதாயம், இந்து கலாசாரம் போன்ற அதற்குரிய தொகுதிகளைத் தயாரிப்பது ஒரு
ஒரு தரமான தொகுதியை வெளியிட வே அதில் இடம்பெற வேண்டும். அத்து சித்திரங்களையும் வரைபடங்களையும் நிழற் ܓ
༡ (ཀྱི་རེད།༽ வேண்டும். இந்து சமய கலாசார அலுவல் 等、 பற்றிய பல நூல்கள் வெளியிடப்பட்ட போ, கலாசார சின்னங்களைப் பற்றிய படங்கள் பிரபலமான இந்துசமய நிறுவனங்கள் இருச் வெளியீட்டாளர்களிடத்தில் இவ்விதமான
தியாகசீலமும், சமய அபிமானமும் அவர்க கலாசாரம் பட்டப்படிப்பிற்கு ஒரு பாடம சாதனங்களும் இல்லை. இவ்வாறான ஒரு
உருவாக்கி அதன் தொகுதிகளை வெ6 வித்தவப் புலமைக்கேற்ப நெறிப்படுத்தி
காலதாமதமாகியே பலன்களைத் தருகின்றன பெற்றுத் தொகுதிகளை வழிப்படுத்தலாம் என முடியவில்லை.
இத்தகைய குறைபாடுகளின் மத்திய வெளிவந்தன. பணிப்பாளராக ஒருவர்பின் ஏற்றுக் கலைக்களஞ்சியக் கட்டுரைகளைத் நியமித்தார்கள். குறிப்பாக திரு. க. இரகுபர திருமதி சாந்தி மகாசேனன் அனைவருமே கு பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றவர்கள். விவரங்களைத் திரட்டி விரிவான, சிறப்பான குறிப்பிட்ட மூத்த தலைமுறையினரின் கட்
 
 
 
 
 
 

எண்ணத்தில் பதிப்பாசிரியர் நோய்வாய்ப்பட்டுத் துன்புற்றார். இந்து சமய விவகாரங்களின் இராஜாங்க அமைச்சராகப் யத் தொகுதியை வெளியிடுவதற்கு வசதிகள் கிடைத்தன. இருந்த காலத்தில் இந்துசமய கலாசார திணைக்களத்தின் கலிங்கம். இரண்டாம் தொகுதியை வெளியிடுவதற்கான கூட்டங்களைக் கூட்டினார். கட்டுரையாளர்களைச் சேர்த்துக் b பணிகளை முன்னெடுத்துச் செல்ல முடியாத தேக்க நிலை ழைத்து கலைக்களஞ்சியத் தொகுதிகளைப் பதிப்பிக்கும் ான்று வினாவினார். அதற்கு எதுவித தயக்கமும் இன்றி ாறு அமைக்க வேண்டும், எழுத வேண்டும், என்னும் விடயம் ரைந்து பணிப்பாளர் மூலம் கட்டுரை ஆசிரியர்களுக்கு ந்தா வைத்தியநாதன் அம்மையாரும் வித்துவான் வேலனும் ம்பாலான கட்டுரைகளை எழுதினார்கள். பல்கலைக்கழக ா ஒருவர் மட்டுமே ஆரம்பத்திலிருந்து ஒத்துழைப்பு நல்கிக் ல்கலைக்கழகத்தைச் சேர்ந்த இளம் விரிவுரையாளரான திரு. பு நல்கினார். இந்துக் கலைக்களஞ்சியமானது இந்து சமயம், வைகளைப் பற்றி அமைய வேண்டியது அவசியம் என்பதால்
ரு பாரிய பொறுப்பாகும்.
ாண்டுமானால் குறைந்தது இருபது அறிஞர்களின் கட்டுரைகள் டன் விவரிக்கப்படுகின்ற விடயங்களை விளக்குவதற்குச் ற்படங்களையும் தேவைக்கேற்ப செம்மையாகப் பயன்படுத்த ஸ்கள் திணைக்களத்தினால் இலங்கையிலுள்ள கோயில்கள் தும் நூலிலே விளக்குவதற்கும் வெளியிடுவதற்கும் ஏதுவான எதுவுமில்லை. இலங்கையிலே, குறிப்பாக கொழும்பிலே கின்ற போதிலும் அவற்றிடம் அவை சொத்தாக இல்லை. சில படங்கள் உண்டு. ஆனால் அவற்றை வழங்கி உதவி புரியும் ளிடத்தும் இல்லை. பல்கலைக்கழகங்கள் மூன்றிலே இந்து ாகப் போதிக்கப்படுகின்ற போதிலும் அவற்றிடம் எதுவித சூழ்நிலையிலேதான் நாங்கள் இந்துக் கலைக்களஞ்சியத்தை ரியிடும் நிலையில் உள்ளோம். கலைக்களஞ்சியத்தை
விரிவுபடுத்துவதற்கு நாம் மேற்கொண்ட முயற்சிகள் 1. ஒரு காலகட்டத்தில் இந்திய அறிஞர்களுடைய உதவியைப் ாக் கருதினோம். அதற்கான ஏற்பாடுகளையும் எவராலும் செய்ய
பிலேதான் இரண்டாம், மூன்றாம், நான்காம் தொகுதிகள் ஒருவராகக் கடமை புரிந்தவர்கள் எமது ஆலோசனைகளை தயாரிப்பதற்கு விசேடமான புலமை பெற்றுள்ள பட்டதாரிகளை ன், செல்வி யசோதா பத்மநாதன், திருமதி கல்யாணி நாகராஜா, நறிப்பிடத்தக்கவர்கள். அவர்கள் அனைவருமே யாழ்ப்பாணப் எமது அறிவுரைகளுக்கு அமையத் தமது சொந்த முயற்சியால் கட்டுரைகளை எழுதியுள்ளார்கள். அத்துடன், நாம் முன்பு டுரைகளும் அத் தொகுதிகளில் இடம்பெற்றிருந்தன.
xiii

Page 26
அன்று வெளிவந்த ஐந்து தொகுதிகளின் பிரதிகளு காலக்கிரமத்திற் கல்லூரி மாணவர்களும் சமய அபிமானிக அறிந்து அவற்றைப் பெற்றுக்கொள்வதிலும் படிப்பதிலும் அவற்றை மீண்டும் பதிப்பிக்க வேண்டும் என்ற குரல் இை
ஆறாவது தொகுதி பல வழிகளில் முன்னேற்றமான ஒ புலமை கொண்ட பலரின் கட்டுரைகள் இடம்பெறுகின்றமை வாய்ந்த இந்திய அறிஞர்களின் கட்டுரைகளும் இதில் அ கட்டுரைகளிற் பெரும்பாலானவை மிக விரிவானவை. இய உள்ளடக்கியவை. தமிழ் நெடுங்கணக்கிலே 'ச 'கர வசையி இடம்பெறுவதால் இத்தொகுதியில் அடங்கிய கட்டுை தொடர்பானவையாகும். சைவ சமய வரலாறு, சைவ சி சிற்பவடிவங்கள் முதலிய விடயங்கள் பற்றிய கட்டுரைகள்
ஆராய்ச்சி பூர்வமானவை.
ஆறு தொகுதிகளை வெளியிடுவதென்பது ஒரு இலகு முன்னேற்றமான முறையில் பல சிறப்புக்கள் பொரு இதனையிட்டு இந்து சமய அலுவல்கள் திணைக்களமும், ! பாராட்டிற்குரியவை. இப்பணியை மேலும் முன்னேற்ற அவர்களின் தலையாய கடமையாகும். இந்து சமய ச வெளிக்கொணரப்படும் இந்து கலைக்களஞ்சியம் தெ பொறுப்பாகவிருந்து செவ்வனே தொகுதிகள் வெளிவர தமத பணிப்பாளர் திருமதி சாந்தி நாவுக்கரசன், ஆராய்ச்சிப் பிரிவின் ஏனைய உத்தியோகஸ்த்தர்கள் ஆகியோர் முழுமையாக ஈடுபடவேண்டும். இதற்கு மாண்புமிகு அமைச்சர் தியாகராச க. பரமேஸ்வரன், மேலதிக செயலாளர் திரு. க. பரமலிங்
கிடைக்குமென எதிர்பார்க்கின்றேன்.
பல்கலைக்கழக மட்டத்திலிருந்து திரு. க.இரகுபரன் இந்த உரிய உதவிகளைச் செய்து வருவது வரவேற்கத்தக்கதாகு நிறைவேற்றுமிடத்து பலரும் போற்றுவார்கள். இ தொகுதிகளையிட்டு இங்கு வரும்போதும் இந்தியாவிற் பொத இவை தொடர்பான பணிகளுக்கு உற்சாகமும் ஊக்கமும் அ
இலங்கையில் உள்ள வித்துவான்களும் தமிழகத்து அறி
வேண்டும் என்பது எமது ஆவலாகும்.

ம் இப்போது கிடைத்தற்கரிதாகி விட்டன. ளும் ஆசிரியர்களும் அவற்றின் பெறுமதியை மிகுந்த ஆர்வம் கொண்டுள்ளனர். ஆகவே டயிடையே திணைக்களத்தில் ஒலிக்கின்றது.
ன்றாக வெளிவருகின்றது. அதிலே வித்துவப் அத்தொகுதியின் சிறப்பம்சமாகும். தகைமை டங்கியுள்ளமை மற்றொரு சிறப்பம்சமாகும். பலுமான வரையில் எல்லா அம்சங்களையும் லே 'சி'கரம் முதலாகவுள்ள சொற்கள் அதில் ரகளிற் பெரும்பாலானவை சைவ சமயம் த்தாந்தம், சைவக்கோயில்கள், கிரியைநெறி,
ா விரிவானவை; வித்துவப்புலமை மிக்கவை;
குவான காரியமன்று. ஆறாம் தொகுதி மிக ந்திய வண்ணம் வெளியிடப்படுகின்றது. இந்து சமய விவகார அலுவல்கள்அமைச்சும் மான வகையில் முன்னெடுத்துச் செல்வது கலாசார அலுவல்கள் திணைக்களத்தினால் நாகுதிகளுக்கு ஆரம்பகாலம் தொடக்கம் கடமைகளைச் செய்து வரும் திணைக்களப் ா உதவிப்பணிப்பாளர் திரு. சீ. தெய்வநாயகம்,
இப்பணிகளில் இனிவரும் காலங்களிலும் ா மகேஸ்வரன் அவர்களதும், செயலாளர் திரு.
ாகம் ஆகியோரது ஒத்துழைப்பும் நிச்சயம்
ரக் கலைக்களஞ்சியத் தொகுதி வெளியீடுகளில் ம். சிறப்பான சாதனைகளைச் செம்மையாக ந்திய அறிஞர்களும் கலைக்களஞ்சியத் து அரங்குகளிலும் கூறிவரும் பாராட்டுக்களும் அளிப்பனவாகும்.
ஞர்களும் இப்பணியிலே இணைந்து கொள்ள

Page 27
சிக்கல்
நிகப்பட்டினத்திற்கு மேற்கே மூன்றுகல் தொலைவில் அமைந்துள்ள தலம் சிக்கல். அது காவிரித் தென்கரைத் தலங்களுள் 83ஆவது தலமாக விளங்குகிறது.
வசிட்டர், காமதேனுவின் வெண்ணெயினால் சிவலிங்கத் திருமேனியை எழுந்தருளிவித்துப் பூசை செய்து வந்தார். பூசையின் முடிவில் சிவலிங்கத் திருமேனியை எடுத்து வசர்ஜனம் செய்ய முற்பட்ட பொழுது எடுக்கக் கூடாமற் சிக்கிய காரணத்தினால் சிக்கல்' எனப் பெயர் அமைந்தது.
இறைவனின் திருநாமம் நவநீதேஸ்வரர் - வெண்ணெய்ப் பிரான்; இறைவியின் திருநாமம். வேல் நெடுங் கண்ணி இத்தலப் பதிகத்துள் திருஞானசம்பந்தப் பிள்ளையார், இறைவன், இறைவியரின் திருநாமங்களை இரண்டாம் திருமுறையில் மூன்றாவது பாடலில் மேல்வருமாறு கூறுவர்.
நிலநெய்தனிலவிம்மல ருஞ்சுனை நீடிய சேலுமாலுங் கழனிவ் வளமல்கிய சிக்கலுள் வேலொன் கன்னிபி 5077னளபெ7ர் பாகன்வெனன்
ணெய்ப்பிரான் பாலவண்ணன் கழலேத்தநம் பாவம் பறையுமே
இங்குள்ள தீர்த்தம் கூrரபுஷ்கரணி, தலவிருட்சம் மல்லிகை. திருக்கோயில் மலையின் மேல் அமைந்துள்ளது. பலவண்ணச் சலவைக் கற்கள் பதித்த அழகிய திருக்கோயிலில் வேலவர் வள்ளி, தெய்வயானை சமேதராக, வேலைக் கரத்தில் தாங்கி நின்ற திருக்கோலத்தில் அருங்காட்சி நல்குகின்றார். அழகும், இளமையும், கலைத் தன்மையும், கருணையும், வேலவர் வடிவத்திற்
பொலிந்து காணப்படுகின்றன.
சிக்கலிற் சூரசம்ஹாரத் திருவிழா மிகச்சிறப்பாக நடைபெறும் ஐப்பசி மாதம் சிங்கார வேலவனுக்குப் பத்துநாட்கள் திருவிழா நடைபெறும். வேலவன் தங்க வாகனங்களில் எழுந்தருளிக் காட்சி வழங்குவார். ஐந்தாம் திருநாள் தேர்த்திருவிழா நடைபெறும். விழா முடிந்து வேலவர் அம்மையிடமிருந்து சக்தி வேலைப் பெற்று மலைக்குச் செல்லுவார். ஏராளமாக அன்பர்கள் கூட்டம் நெருங்கி வழியும். அப்பொழுது முருகப் பெருமானின் திருமேனி மீது வியர்வை அரும்பும். இது ஒர் அற்புதமான காட்சி. வேறெங்கும் காணற்கரிய காட்சி. “சிக்கலிலே வேல்வாங்கி, செந்தூரிலே சம்ஹாரம்” என்பதற்கேற்ப சிக்கலிலும், செந்தூரிலும், சூரசம்ஹாரத் திருவிழா சிறப்பாக நடைபெறும். சம்ஹாரம் முடிந்து, வள்ளி, தெய்வானை திருமணங்கள் நடைபெறும்.

வாழ்ப்பாணம்
கந்தசஷ்டியைத் தவிரக் கார்த்திகை விழாவிற்கும் பக்தர்கள் ஏராளமாக வருவார்கள். நாள் தோறும் இவ்வாலயத்தில் ஆறுகாலப் பூசைகள் நடைபெறுகின்றன.
அருள்மிகு நவநீதப் பெருமானுக்கும், பிறமூர்த்திகளுக்கும் திங்கள் தோறும் மாத சங்கிராந்தியன்று விசேஷ பூசைகளும் விழாக்களும் நடைபெறும். சிவராத்திரி முதலிய நாட்களிலும் பிற விசேஷ காலங்களிலும் மகாபிஷேகம் நடைபெறும். மாதக் கார்த்திகை நாட்களில் சிங்கார வேலருக்கு சிறப்பு அபிஷேகம் உண்டு. வேலவர் உட்பிராகாரம் வலம் வருவார்.
வேல்நெடுங் கண்ணி என்ற பெயர் பெற்ற அம்பிகையின் கண்கள் மிக்க அழகும் அருளும் வாய்ந்தவை.
சிக்கல் தலத்திலே தேரடியில் இரத்தின விநாயகர் கோயில் உள்ளது. தென்மேற்கு மூலையில் ஐயனார் ஆலயமும் உண்டு. அவருக்கு ஆபத்துக்காத்த ஐயனார் என்று பெயர். மேற்கு வீதி வடகோடியில் செல்லமுத்து மாரியம்மன் கோயிலும், பெரிய கோயில் சந்நிதியில் பிடாரியம்மன் கோயிலும் உள்ளன. பொதுவாக கிராம தேவதைகளுக்குரிய ஆலயங்கள் ஊருக்கு வெளியே தான் அமையும். ஆனால் சிக்கலில் வீதியிலேயே அமைந்திருப்பது இத்தலத்திற்குத் தனிச்சிறப்பு திருமாலுக்கு ஒரு தனிக்கோயில் உண்டு.
கடல்நாகைக் காரோணத்தின் பஞ்சக்குலேசத் தலங்களுள் ஒன்றாகச் சிக்கல் விளங்குகின்றது. இங்கு இறைவன் மூர்த்தியாகவும், தலமாகவும், தீர்த்தமாகவும் விளங்குகின்றான்.
இவ்வாலயத்தில் மொத்தம் எட்டுக் கல்வெட்டுக்கள் காணப்படுகின்றன. கோயில் அஸ்திவாரத்திற் சிக்கல் மகாத்மியத்தைப் பற்றியும் இக்கோயிலில் வழிபட்ட முனிவர்கள், திருக்குளம், தல மரம் பற்றியும் விவரித்தும், உருவங்கள் வரைந்தும் காட்டப் பெற்றுள்ளது. சதாசிவராயன் காலத்துக் (சகம் 1482) கல்வெட்டில் ராமராசையர் மகன் கிருஷ்ண மகராசையன் திருவாரூர் ஞானப்பிரகாசப் பண்டாரத்தைக் கோயில் மேற்பார்வைக்கு நியமித்ததும் அச்சுத தேவராயன் காலத்துக் கல்வெட்டில் குமாரசாமியின் உற்சவங்களுக்கு நிலதானம் செய்யப்பட்டதும் மற்றொன்றில் அரங்கப்பதாசன் கந்தசாமிப் பேட்டையைக் கோயிலிற்குக் கொடுத்ததும் வரையப்பட்டுள்ளது.
இத்திருக்கோயிலில் ஜடாவர்மன், திரிபுவனச் சக்கரவர்த்தி வீரபாண்டியன் காலத்திற் செதுக்கப் பெற்ற கல்வெட்டு ஒன்றும், விஜயநகர பரம்பரையைச் சேர்ந்த மகாமண்டலேசுவரர் சதாசிவமகாராயர் காலத்திற் பொறிக்கப் பெற்றது ஒன்றும், கிரந்தத்தில் உள்ள கல்வெட்டு ஒன்றும், வீரபூபதி அச்சுததேவ
இந்துக் க்களஞ்சியம்

Page 28
மகாராயர் காலத்துக் கல்வெட்டு ஒன்றும், விஜய வருஷத்தில் ஏற்பட்ட கல்வெட்டு ஒன்றும் ஆக ஏழு கல்வெட்டுக்கள் உள்ளன. இவைகளுள் வீரபாண்டியரின் கல்வெட்டு, பால்வெண்ணெய் நாயனாருக்கு வழிபாட்டிற்குப் பணம் கொடுத்ததையும், சதாசிவ மகாராயர் கல்வெட்டு (சகம் 1432 ரெளத்திரி ஆண்டில் ஏற்பட்டது) திருவாரூர் ஞானப்பிரகாச பண்டாரம் கிருஷ்ண மகராசையன் கட்டளைப்படி சிக்கல் வடக்குடி வேடச்சேரி முதலியவைகளுக்கு மேற்பார்வையாளராக நியமிக்கப்பட்டிருந்ததையும், அச்சுதமகா தேவராயர் கல்வெட்டு, பால்வெண்ணெய் நாதர் கோயிலில் உள்ள குமாரசாமிக்கு விளக்குகளுக்கும், விழாக்களுக்கும் நில நிவந்தம் செய்து கொடுத்ததையும், விஜய வருஷக் கல்வெட்டு கந்தசாமிப் பேட்டை என்ற ஊரை அரங்கப்பராசர் கொடுத்ததையும் கிரந்தத்திலுள்ள கல்வெட்டு ஸ்கந்த புராணத்தில் குறிப்பிடப் பெற்றுள்ள சிக்கல் மகாத்மியத்தைப் பற்றியும், தமிழிலும் கிரந்தத்திலுமுள்ள கல்வெட்டு இத்தலத்தின் திருக்குளம், தலமரம், வழிபட்ட ரிஷிகள் இவர்களைப் பற்றியும் குறிப்பிடுகின்றன.
(வ.வை)
சிகண்டி
சத்தியவதியும் சந்தனுவும் பெற்ற மக்கள், சித்திராங்கதனும், விசித்திர வீரியனுமாவர். இதில் சித்திராங்கதன் ஒரு கந்தர்வனோடு சண்டையிட்டு கந்தர்வனாற் கொல்லப்பட்டான். அவனுக்குக் குமாரர்கள் இல்லாததால் விசித்திர வீரியனுக்குப் பட்டாபிஷேகம் செய்தனர். விசித்திர வீரியனுக்குத் தக்க வயது வரும்வரையில் பீஷ்மரே அரச பொறுப்பை ஏற்றார்.
ஆண்டுகள் சில செல்ல, விசித்திர வீரியன் வளர்ந்து இளைஞனானான். காசிராசாவின் பெண்களுக்கு சுயம்வரம் என்று கேள்விப்பட்ட பீஷ்மர் தேர் ஏறி சுயம்வர மண்டபத்தை அடைந்தார். பலதேசத்து அரசர்களும் அங்கு கூடியிருந்தனர். பீஷ்மருடைய புகழ் கூடித்திரிய குலத்தில் நிகரற்று விளங்கியது. வந்திருந்த மன்னர்களும் சுயம்வரத்தைக் காண்பதற்கே பீஷ்மர் வந்திருப்பதாக எண்ணினர். ஆனால் மன்னர்களின் பெயர் வரிசையில் பீஷ்மருடைய பெயரும் இடம் பெற்றிருப்பதைக் கண்ட அரசர்கள் எல்லோரும் வியப்படைந்தனர். பீஷ்மர் தனது தம்பி விசித்திர வீரியனுக்காக வந்திருப்பது யாருக்கும் தெரியாது. "கங்கையின் மைந்தராகிய காங்கேயர் கல்வியில் மூத்தது போலவே வயதிலும் மூத்தவர். வயோதிபரான இவருக்கு சுயம்வர மண்டபத்தில் என்ன வேலை? ஆயுள் முழுதும் பிரம்மசாரியாகவே இருப்பேன் என்று பயங்கர சபதம் செய்து பெற்ற பெயராகிய பீஷ்மர் என்பதற்கு களங்கமாக இருக்கிறதே என்று தமக்குள் எள்ளிநகையாடி ஏளனமாகப் பேசிக் கொண்டனர். அச்சமயத்தில் மனமாலையுடன் வந்த காசி ராசாவின் குமாரிகள் மூவரும்
கிழவீரரைப் பார்த்து விட்டு நிற்காமற் சென்றனர்.
· ඕfද්‍රිෂ් អ្eឆ្នា

பீஷ்மர் ஊழித் தீயெனக் கோபங்கொண்டார். சுயம்வரத்திற்கு வந்திருந்த மன்னர்களை புத்தத்திற்கு அறைகூவியழைத்தார். தனியொருவராகவே அனைத்து மன்னர்களுடனும் போரிட்டு வென்று, கன்னியர்கள் மூவரையும் தனது தேரில் ஏற்றிக் கொண்டு அத்தினாபுரம் நோக்கி விரைந்தார். செளபல தேசத்தரசன் சால்வன் ஒட்டும் விடாமல் போர் செய்தவாறு பீஷ்மரைத் தொடர்ந்தான். காசிராசனின் மூத்த புதல்வியாகிய அம்பை தன்மனத்திலே சால்வனைக் கணவனாக வரித்திருந்தாள். இதனை அறியாத பீஷ்மர் அவளையும் சேர்த்தே தனது தேரிற் கொண்டு சென்றார். சால்வனுக்கும், பீஷ்மருக்கும் கடும்போர் நிகழ்ந்தது. தனுர் வேதத்தில் கரைகண்ட பீஷ்மர் சால்வனைத் தோற்கடித்தார். ஆனால் காசிநாதனின் புதல்விகளின் வேண்டுகோளுக்கு இணங்கி அவனை உயிருடன் போகவிட்டார்.
பீஷ்மர் இராஜகுமாரிகளுடன் அத்தினாபுரம் சென்று விசித்திர வீரியனுக்கு மூன்று பெண்களையும் திருமணம் செய்விக்க ஏற்பாடுகள் செய்தார். திருமணப் பந்தலில் அம்பை பீஷ்மரை நோக்கி நகைத்து, "கங்கையின் மைந்தரே! தர்மம் அறிந்தவர் தாங்கள். நான் செளபல தேசத்து மன்னனான சால்வனையே எனக்குரிய மணாளனாகக் கொண்டு விட்டேன். நீர் என்னைப் பலாத்காரமாக அழைத்துவந்து உமது தம்பிக்குத் திருமணம் செய்விக்க முயல்கின்றீர். இது அறமா? எனது உள்ளக்கிடக்கையைக் கூறிவிட்டேன். இனி உமது பொறுப்பு' என்று கூறினாள்.
திருமண மண்டபத்தில் மன்னர் பல்லாயிரவர் வீற்றிருக்க அம்பை இவ்வாறு கூறியதும் பீஷ்மர் தனது தவறை உணர்ந்து, தக்க பாதுகாப்புடன் அம்பையைச் சால்வ மன்னனிடம் அனுப்பி வைத்துவிட்டு அம்மையின் இளைய சகோதரிகளான, அம்பிகை, அம்பாலிகை இருவரையும் விசித்திர வீரியனுக்கு விவாகம் செய்வித்தார்.
சால்வனிடம் சென்ற அம்பை தன்னிலைமையைக் கூறித் தன்னை விவாகம் செய்து கொள்ளுமாறு கூற, சால்வன் மறுத்து, “மன்னர்கள் மத்தியில் என்னை வென்று உன்னை வசப்படுத்திச் சென்ற பீஷ்மரிடமே திரும்பிச் செல். அவரது ஆணையின்படி நட" என்று அம்பையைத் திருப்பி அனுப்பி விட்டான்.
அத்தினாபுரம் திரும்பிய அம்பை நடந்ததை பீஷ்மருக்குச் சொல்ல, அவர் விசித்திர வீரியனிடம் அம்பையைத் திருமணம் செய்து கொள்ளுமாறு கூற, அவனோ, "வேறு ஒரு ஆணிடம் மனத்தைச் செலுத்தியவளை மனப்பது கூடித்திரியப் பண்பாட்டிற்கு மாறானதாகும்" என்று மறுத்து விட்டான்.
இந்நிலையில், துணையற்ற அம்பை பீஷ்மரே தன்னை விவாகம் செய்து கொள்ள வேண்டும் என்று வற்புறுத்தினாள். ஆனால் அவர் அதற்கு இசையவில்லை. சால்வனிடமே திரும்பிப் போகுமாறு கூறினார். ஆனால் மீண்டும் சால்வனிடம் செல்ல வெட்கிய அம்பை தன்னை மணக்குமாறு பீஷ்மரையே பலமுறையும் வற்புறுத்தினாள். உம்மை விட்டுச் செல்லமாட்டேன் என்று பல

Page 29
ஆண்டுகள் அவரது மனையிலேயே காத்திருந்தாள். பீஷ்மர் சிறிதும் அவள் கருத்துக்கு இணங்கவில்லை. இதனால் கோபங் கொண்ட அம்பை, மீண்டும் சால்வ மன்னனிடம் சென்று தனது நிலையைக் கூறி வருந்தினாள். ஆனால் அம்மன்னனோ, "வேறொருவர் ஜெயித்த கன்னிகையை நான் மணக்க மாட்டேன்” என்று உறுதியாகக் கூறிவிட்டான்.
தாமரை மலரையொத்த அழகே வடிவான அம்பை அத்தினாபுரத்திற்கும், செளபல தேசத்திற்கும் ஆறுஆண்டுகளாக அலைந்து கண்ணிர் சொரிந்தாள் - இதயம் துடித்து வாடினாள். வழிகாணாது அல்லலுற்ற அம்பை பீஷ்மர்மீது கடுங்கோபங் கொண்டாள்.
பலதேசத்து அரசர்களிடமும் சென்று தனது பரிதாபநிலையைக் கூறி, இதற்குக் காரணமான பீஷ்மரைக் கொல்லுமாறு வேண்டினாள். பீஷ்மருடைய பராக்கிரமத்தை அறிந்த வேந்தர்கள் அவருடன் போரிட மறுத்தார்கள். இறுதியில் அம்பை ஆறுமுகப் பெருமானைக் குறித்துக் கடுந்தவம் மேற்கொண்டாள். சண்முகப் பெருமானும் அம்பையின் முன்தோன்றி வாடாத ஒர் தாமரை மாலையைக் கொடுத்து "எவன் இந்த மாலையைச் சூடிக் கொள்கிறானோ அவன் பீஷ்மருக்குப் பகைவன் ஆவான்' என்று வரமருளி மறைந்தார்.
அம்பை அந்த மாலையை எடுத்துக் கொண்டு ஒவ்வொரு அரசரிடமும் சென்று "இது ஆறுமுகப் பெருமான் அருளிய தெய்வ மாலை. இதனை அணிந்து கொண்டு பீஷ்மரை எதிர்த்துக் கொல்லுங்கள்’ என்று வேண்டினாள். ஆனால் அவளது வேண்டுகோளை ஏற்க யாரும் முன்வரவில்லை. இறுதியாக துருபத மன்னனிடம் சென்று வேண்டினாள். அவனும் மறுக்க அவனது அரண்மனை வாயிலிலேயே அம்மாலையைத் தொங்கவிட்டு வனம் சென்றாள்.
வனத்திலே முனிபுங்கவர்களிடத்தில் தனக்கு நேர்ந்த அவமானத்தை உரைத்தாள். அவர்கள் பரசுராமரிடம் செல்லுமாறு அவளுக்கு ஆலோசனை கூறினார்கள். அம்பையும் பரசுராமரை அடைந்து தனக்கு நேர்ந்ததைக் கூற “குழந்தாய்! சால்வ மன்னனிடம் கூறி உன்னை விவாகம் செய்து கொள்ளச் சொல்லுகிறேன். அவன் அதற்கு இணங்குவான்’ என்றார்.
ஆனால் அம்பையோ “எனக்கு விவாகம் வேண்டாம். பீஷ்மருடன் போரிட்டு அவரைக் கொல்ல வேண்டும். பீஷ்மரின் மரணமே நான் வேண்டும் வரம்’ என்று பணிந்தாள். கூடித்திரியர்களின் பகைவரான பரசுராமரும் பீஷ்மருடன் போருக்குச் சென்றார். இருவருமே சமமான பலசாலிகள். சமமான ஜிதேந்திரியர்கள்; வெற்றி தோல்வியை நிர்ணயிக்க முடியாமல் போர் நடந்தது. இறுதியில் பீஷ்மர் வென்றார். பரசுராமர் தோற்றார். அவர் தனது தோல்வியை ஒத்துக் கொண்டு “பீஷ்மரைச் சரணடைய வேண்டியதே நீ செய்யத்தக்கது” என்று அம்பையிடம் கூறினார்.

கோபமும், துயரமும் கொண்ட காசிராஜகுமாரி இமய மலைக்குச் சென்று சிவபெருமானைக் குறித்துக் கடுந்தவம் மேற்கொண்டாள். சிவபெருமான் அவளுக்குமுன் தோன்றி, “மற்றுமொரு பிறப்பை நீ அடைவாய். உன்னால் பீஷ்மர் மரணமடைவார்’ என்று வரமருளினார்.
காலதாமதமின்றி உடனே மறுபிறப்பை அடைந்து தனது எண்ணத்தை நிறைவேற்றிக் கொள்ள விரும்பிய அம்பை சிதையை அடுக்கி, அதில் தீயை மூட்டி அக்கினியுடன் சங்கமமானாள்.
சிவபெருமான் அருளிய வரத்தின்வண்ணம், பாஞ்சாலதேசத்து அரசனான துருபதனுக்கு மகளாய்த் தோன்றினாள். வளர்ந்து சில ஆண்டுகளுக்குப் பின்பு, அரண்மனை வாயிலில் தொங்கிக் கொண்டு இருக்கும் வாடாத தாமரை மலர் மாலையைத் தான் அணிந்து கொண்டாள். இதனைக் கண்ணுற்ற துருபதன் பீஷ்மருடைய விரோதம் தனக்கு வந்து விடுமோ என்று அஞ்சி, தன்னைக் காப்பாற்றிக் கொள்ள, தனது மகளை வனத்திற்கு அனுப்பி விட்டான்.
அம்பை வனம் சென்று, தனக்கு ஆண்தன்மையைத் தருமாறு வேண்டித் தவம் செய்து அவ்வாறே பெற்றாள். அம்பை சிகண்டியாக மாறினாள்.
பத்தாம் நாள் பாரதப் போர். சிகண்டியை முன்னால் வைத்துக் கொண்டு அர்ச்சுனன் பிதாமகர் பீஷ்மரைத் தாக்கினான். கொழுந்து விட்டு எரியும் நெருப்பாக பீஷ்மர் ஜொலித்தார்.
சிகண்டியின் அம்புகள் பீஷ்மருடைய மார்பைப் பிளந்தன. பிதாமகரின் கண்களிலிருந்து தீப்பொறிகள் பறந்தன. அவரது பார்வையே சிகண்டியை எரித்து விடும் போல இருந்தது. அடுத்த கணமே அவரது சினம் ஆறி, தனது இறுதிக் காலம் சமீபித்து விட்டதை உணர்ந்தார். பெண்ணாக இருந்து ஆணாக மாறியவன் சிகண்டி என்பது அவருக்குத் தெரியும். பெண்ணின் மேல் பாணம் எய்வது யுத்த தர்மத்திற்கு முரணானது. ஆகையால் சிகண்டி அம்புகளை மழையாகப் பொழிந்தும் அவர் அவனை எதிர்க்கவில்லை. பார்த்தவர் அனைவரும் வியப்புமீதுாரப் பெற்றனர்.
சிகண்டி அம்புகளைத் தொடுக்கும் பொழுது வாளாவிருந்த பிதாமகர் மீது அர்ச்சுனன் தனது மனத்தைக் கல்லாக்கிக் கொண்டு அவரது மர்மஸ்தானங்களைக் குறிவைத்து அம்பு எய்தான்.
உடல் முழுவதும் அம்புகள் கோத்து முள்ளம் பன்றிபோல் தோன்றிய பீஷ்மர், துச்சாதனனை நோக்கி “துச்சாதனா இதோ இந்த அம்புகள் பார்த்தனுடையவை. சிகண்டியின் அம்புகள் அல்ல. தாய் நண்டின் உடலை அதன் குஞ்சுகளே அழிப்பது போல, அர்ச்சுனனின் அம்புகள் எனது உயிரை வருத்துகின்றன” என்று காண்டீபனின் வீரத்தைப் புகழ்ந்தார்.
இந்துக் séfari

Page 30
இப்படிச் சொல்லியதும் ஒரு சக்தியாயுதத்தை எடுத்துப் பார்த்தனின் மீது வீசினார். அதனை அவன் மூன்று பாணங்களால் வெட்டினான். இதுவே கடைசிப் போர் என்று கர்ஜித்த வண்ணம் கத்தியும் கேடயமுமாக தேரினின்று பிதாமகர் இறங்குமுன் அர்ச்சுனன் அவரது கத்தியையும் கேடயத்தையும் துணித்தான். உடலிலே இரண்டு விரற்கிடை இடம்கூட இல்லாமல் அம்புகள் பாய்ந்தன. இரதத்தினின்று பீஷ்மர் தலைகீழாகத் தரையில் வீழ்ந்தார். கங்கைக்கும் சந்தனு மன்னனுக்கும் தோன்றிய அச்சத்தியவிரதரை வானும் மண்ணும் வணங்கிப் போற்றின. மஹாபாரதத்தில் இவ்வாறாக பிதாமகர் பீஷ்மரின் அழிவுக்குக் காரணமாய் சிகண்டி என்னும் பாத்திரம் விளங்குகின்றது. (GDI. 6ØD 6).J.)
சிங்கமுகன்
காசிய முனிவரின் புதல்வர்கள் அறுபத்தாறு கோடி அசுரர்கள். அவர்களுக்கு அரசனாய் அமைந்தவன் அசுரேந்திரன். அவன் மங்கலகேசி என்னும் அரக்கியை மணந்து சுரசை என்னும் பெண்மகவைப் பெற, அம்மகள் தூயவளாக வளர்ந்து வந்தாள். அரசகுல குருவாகிய சுக்கிராச்சாரியார் சுரசைக்குக் கொடிய மாயாவித்தைகள் அனைத்தையும் கற்பித்தார். அவற்றில் அவள் அடைந்த திறமையைக் கண்டு பூரித்து அவளுக்கு மாயை' என்று பெயரிட்டார். அம்மாயையால் எதிர் காலத்தில் அசுரர்கள் பெற இருக்கும் பெருமையை எல்லாம் எண்ணி உளம் மகிழ்ந்தார். மாயையும், திலோத்தமை, ரதி, மோகினி யாவரும் ஒருருக் கொண்டாற்போல் வடிவங் கொண்டு தவமுனிவராம் காசிபரை நாடிச்சென்றனள்.
மாயை, காசிபரின் தவச்சாலைக்கு அருகே நறுமணங் கமழும் அழகிய பொய்கையும், சோலையும், மாணிக்க மலையும், மஞ்சமும், மண்டபமும் விரைவில் அமைத்தாள். ஐம்பொறிகளையும் அடக்கி, இறைவனின் தியானத்தே திளைத்திருந்த காசிபர் இதனைக் கண்டார்; அதிசய முற்றார். தறிகெட்டு ஓடும் மனத்தைத் தடுத்து நிறுத்தித் தவத்திலே செலுத்தினார்.
அப்பொழுது மாயை விண்ணிலிருந்து இழிந்து வரும் கற்பகக் கொடியாக மாணிக்க மலையின் மீது தோன்றினாள். தனியாக நின்ற அப்பொற் கொடியைக் கண்டு “மாதே! உனக்கு என்ன வேண்டுமென்றாலும் நான் தருவேன். மைந்தரை வேண்டிலும் மகிழ்ந்து அளிப்பேன். அவர்களை மிக உயர்ந்தவர்களாக ஆக்குவேன். என்னை மணந்துகொள்” என்று கூற, மாயை மறுத்து "இது தவமுடையோர் செயலோ! முனிவருக்கு இது பொருந்துமோ” என்று பலவாறாகக் கூறி அருவமாக மறைந்தாள்.
மாயை மறையவும், மறைவல்லோன் மன்மதக் கணையால் மயக்கமுற்று, சித்தம் பேதலித்து, நிலை கலங்கித் தடுமாற்றமுற மாயை மீண்டும் காசியர் முன் காட்சியளித்தாள்.

வான்மழைக்காக ஏங்கும் பயிர்போல வாடிய காசிபர் மாயையைக் கண்டதும் சொல்லொனா மகிழ்ச்சி கொண்டு அவளை மருவ, மாயையிடம் மிகுந்த பலசாலியான சூரபத்மன் தோன்றினான். அவனுக்குப் பின் மாயை சிங்கவுருக் கொண்டு இரவின் இரண்டாம் யாமத்தில் முனிவரைக் கூட ஆயிரம் தலையுடைய சிங்கமுகன் தோன்றினான். பின்பு யானை முகமுடைய தாரகனும், ஆட்டுத் தலையுடைய அசமுகி என்ற பெண்ணும் பிறந்தனர்.
காசிபர் தம்மக்களாகிய சூரன் முதலியோருக்கு அறத்தின் அழிவற்ற தன்மையினையும், சைவசித்தாந்த முப்பொருள்களின் விளக்கத்தையும் உபதேசிக்க, மாயை நகைத்து, “வீட்டின்பத்தை நல்கும் உமது உபதேசம் முனிவர்களுக்கே பொருந்தும். எம் மக்களுக்கு அது பொருந்தாது. செல்வமே உலகிலே சிறந்தது. அதற்கு இணையானது மூவுலகத்திலும் இல்லை. உயர் பதவியைப் பெற ஈசனைக் குறித்து வேள்வி செய்யுங்கள்’ என்றாள்.
தாயின் கூற்றைச் சிரமேற்கொண்ட சூரன் தம்பியரோடும் வடதிசை போந்து, அசுர குலத்திற்கு ஆக்கம் தரும் வேள்வியினைச் செய்ய முற்பட்டான். பதினாயிரம் யோசனை அளவு கொண்ட நிலத்தை உயர்ந்த மதிலால் வளைத்தான். மூவகைப்பட்ட ஒமகுண்டங்களும் அமைக்கப்பட்ட பின்பு, வேள்வி இயற்றுதற்கு வேண்டும் பொருட்களையெல்லாம் தந்து உதவுமாறு தாயாகிய மாயையை மனதில் நினைக்க, அவளும் உடனே தோன்றி அப்பொருட்களைப் புதல்வனிடம் சேர்ப்பித்தாள்.
சூரனும் வானவர் அச்சம் கொள்ள விண்ணிலே எழுந்து தனது உடலிலுள்ள தசைகளையெல்லாம் வாளால் அறுத்து வேள்வித் தீயிலே அவிர்பாகமாகச் சொரிந்தான். குருதியை நெய்யாகச் சொரிந்தான். இவ்வண்ணம் ஆயிரம் ஆண்டுகள் ஆகாயத்தில் நின்று ஆகுதி செய்தும் தேவதேவனாகிய சிவபெருமான் தோன்றி வரம் அருளவில்லை. அதுகண்டு சூரன் மனம் வருந்தி இனி மாள்வதே தக்கது என்று துணிந்து, அக்கினி சூழ்ந்த ஆகுதிகுண்டத்தில் மாயையின் தவ வலிமையால் எரியாது நின்ற கூரிய நுனியுடைய வச்சித் தம்பத்திற் பாய்ந்தான்.
சூரனது முடிவுகண்டு, தம்பிகளான சிங்கமுகனும், தாரகனும், அசுரர் கூட்டம் முழுதும் பொங்கும் கடல் போல் பொருமியழுதனர். சிங்கமுகனோ துயரத்தின் விளிம்பிற்கே சென்று "அந்தோ! எனது உயிரின் உயிராகிய தமையன் மாண்டுவிட்ட பிறகு நான் உயிர்வாழ்தல் தருமமும் அல்ல. தகவும் அல்ல” என்று எண்ணி அதே குண்டத்திற் பாய்வதற்கு எழுந்தான்.
அதுகண்ட சிவபெருமான், திருமால் முதலிய தேவர்கள் வியப்புறுமாறு, கிழ வேதியர் வடிவம் தாங்கி, சிங்கமுகனின் முன்பாக வந்து, அவனை நோக்கி "இங்கு எல்லோரும் வருந்தும்படியாக என்ன நிகழ்ந்தது” என்று வினவ, சிங்கமுகன்

Page 31
நிகழ்ந்ததனைத்தையும் கூறினான். அதுகேட்ட முதியவர் "நீங்கள் இறந்து போக வேண்டாம். இறந்த சூரனை எழுப்பித் தருவோம், துயர் ஒழிக’ என்று கூறி கங்கையை மனத்திலே நினைக்க, பாகீரதியாகிய கங்கை புறப்பட்டு விண்ணுலகையெல்லாம் விரைவிற் கடந்து, மண்ணுலகை அடைந்து மகாதேவனின் மலரடி வணங்கி, அவர் பணித்தவாறே ஒமகுண்டத்திற் பாய்ந்தாள். பாற் கடலினின்று பற்றி எரியும் ஆலகாலம் தோன்றியதைப் போன்று விண்ணும் மண்ணும் நடுங்க சூரன் தோன்றினான். சிங்கனும், தாரகனும் பெருமகிழ்வுற்றனர். அளவிறந்த வரங்களைச் சிவபெருமான் சூரனுக்கு நல்கினார்.
தேவரும் மூவரும் வந்தடி வணங்கும் வாழ்வு பெற்ற சூரபன்மன், தனது குலகுருவாகிய சுக்கிராச்சாரியார் அடிதாழ்ந்து அவரது சொற்படி திக் விஜயம் செய்து, இந்திரன், திருமால், நான்முகன் முதலியோரை வென்று, தேவதச்சனாகிய விசுவகர்மாவைக் கொண்டு மாமேரு மலைபோன்ற மாளிகையையும், வீரமகேந்திரபுரம் என்னும் நகரத்தையும் நிர்மாணிக்கச் செய்து தனது தேவியாகிய பதுமகோமளையுடன் ஆட்சிப் பொறுப்பை ஏற்றான்.
தனது இளவலாகிய சிங்கமுகனுக்கு வடகடலின் நடுவே ஆசுநம் என்னும் நகர் அமைத்து எமதர்மனின் மகளாகிய 'விழதையை மணம் செய்வித்தான்.
தாரகனுக்குக் கொடிய மேருமலையின் தென்பால் அமைந்த நாவலந் தீவில் உள்ள ஏமசுடடமலைக்கு அருகே மாயாபுரம் என்னும் நகரைப் படைக்கச் செய்து நிருதியின் மகளாகிய சவுரி என்னும் நங்கையை மணம் செய்வித்தான்.
பானுகோபன், அரங்கிசிமுகன், இரணியன், வச்சிரவாகு என்னும் மைந்தர்களைச் சூரன் பெற்றான். சிங்கமுகனுக்கு அதிசூரனும், நூறுமைந்தர்களும் தோன்றினர். தாரகன் முன்னர் செய்த தவத்தின் பயனாய் பாலசூரியனைப் போன்று அசுரேந்திரன் என்ற மகனைப் பெற்றான். அசமுகி முறையற்ற வாழ்க்கையில் ஈடுபட்டு வலிதிலே துர்வாச மாமுனியைக் கூடி வில்லவன், வாதாவி என்ற இரண்டு கொடிய மைந்தர்களைப் பெற்றாள்.
அமரர் இடர் களைவதற்காகவும் சூரனாதியர்களை அழிக்கவும் கந்தப் பெருமானின் அவதாரம் நிகழ்ந்தது. தாய் தந்தையாகிய பார்வதி, பரமேஸ்வரனின் பூரண ஆசியைப் பெற்றுக் கொண்டு சக்தி வேல் பெற்று, வீரவாகு தேவருடனும் இலக்கத்து ஒன்பான் வீரர்களுடனும் தேவப்படைகளுடனும் புறப்பட்டுத் தாரகனுடைய மாயாபுரியையும், கிரெளஞ்ச மலையையும் தாரகனையும் அழித்து பலபதிகளையும் கடந்து, கருணை வெள்ளமெனத் திருச்செந்தூருக்கு எழுந்தருளி, வாக்கில் வல்லவனாகிய வியாழபகவான் கூற சூரபன்மனின் வரலாற்றையும் அவன் தேவர்களுக்கு இழைக்கும் கொடுமைகளையும் திருச்செவியேற்று, வீரபாகு தேவரைத்

தூதுவிடுத்து அது பயன் தராமையால் சூரனுடன் கடும் போரைத்தொடங்கினார் சிவகுமாரன்.
சூரனின் படைகள் அழிந்தன. சூரனுடைய மைந்தன் வச்சிரவாகுவும் எண்ணிறந்த வீரர்களும் களம் பட்டனர். சூரன் தனது மந்திராலோசனைச் சபையைக் கூட்டினான். சூரனுடைய செயலைப் புகழ்ந்தே அமைச்சர்களும், வீரர்களும் பேசினார்கள். ஆனால் ஆயிரம் தலைபடைத்த சிங்கமுகன் மட்டும், மற்றையவர்களிலிருந்து வேறுபட்டு, சூரன் செய்து வரும் செயல்கள் அறமற்றவை என்றும், தேவர்களைச் சிறையிலிருந்து விடுவிக்குமாறும், சிவனின் வேறல்லாத முருகப் பெருமானின் திருவடிகளைப் பணிந்து வாழ்வதே தக்கதாகும் என்றும் அறவுரைகள் புகன்றான்.
குரவரை சிறுபாலரை மாதரைக் குறைதீர் விரத நற்றொழில் பூண்டுளோர் தம்மை மேலவரை அருமறைத் தொழிலாளரை ஒறுத்தனர் அன்றோ நிரயமுற்றவும் சென்றுசென் றலமரும் நெறியோர்
மேலும் முருகப் பெருமானின் பெருமையைக் கூறுமிடத்து, “வரமளித்த தானே வந்தழிப்பது தகாதென்று தமது திருவுருவமாகிய தனது திருக் குமாரரைக் கொண்டு உன்னை அழிக்கக் கருதினார் போலும். அக்குமாரன் எப்படிப்பட்டவன் தெரியுமா?
வேதக் காட்சிக்கும் உபநிடதத் துச்சியில் விரிந்த போதக் காட்சிக்கும் காணலன் புதியரில் புதியன் மூதக்கார்க்கு மூதக்கவன் முடிவிற்கு முடிவாய் ஆதிக் காதியாய் உயிர்க்குயிராய் நின்ற அமலன்' என்று பலவாறாகக் கூறியும் சூரன் உளம் கொளாமல் செய்த போரில் பல அசுரர்கள், தானைத் தலைவர்கள், சூரபன்மனின் ஒப்பற்ற புதல்வனாகிய பானுகோபன் முதலியவர் மடிந்தனர். இறுதியில் சிங்கமுகாசுரன் போர்க் கவசமணிந்து போருக்குப் புறப்படுகையில், சூரனை நோக்கி,
மூலமும் முடிவுமில்லாத மூர்த்தியைப் பாலனென் றெண்ணின்ை படுவ தோர்ந்திலை ஆலமதானதே ஜய என்மொழி வேலையின் விதியையார் வெல்லுநீரினார் என்று கூறினான்.
வானவராலும் ஊழ்வினையை வெல்லமுடியாது என்று அறிந்த அறிஞன் சிங்கமுகன், தமையனுக்குமுன் தான் உயிர்விடுதலே அறம் என்று கருதி, தமையனை வணங்கி விடை கொண்டு பெருஞ் சேனையோடு பொங்கி எழுந்தான். தன்னுடைய மைந்தர்கள் நூற்றுவரும் வீரவாகுவினால் மடிந்ததைக் கண்டு எரியெனச் சீறி அமரர் படையைக் கலக்கினான். அனைவரையும் அழிப்பேன் என்று வஞ்சினம் கூறி தாயாகிய மாயை தந்த கொடும் பாசத்தை எடுத்தான். அதனை நோக்கி "மற்றார் அனைவரையும் ஒருங்கே கட்டி உதய கிரியில் உய்த்து அவர்களை விட்டுப் பிரியாமல் அங்கேயே காத்துக் கொண்டு இரு” என்று சொல்லி வீசினான்.

Page 32
பல்லாயிர பூதகணமும், வில்வீரர்களும், வீரவாகுவும் அப்பட்சத்தில் அகப்பட்டு, அறிவிழந்த நிலையில் வான்வழியே அவர்களைத் தூக்கிக் கொண்டு பலகடல்களையும் கடந்து உதயகிரியை அடைந்தது பாசப்படை
வீரவாகு முதலிய வீரர்களுக்கு நிகழ்ந்தவற்றை அறிந்த முருகப் பெருமான் தானே படைக்குத் தலைமை ஏற்றுப் போர்க்களம் வந்தார். தீயுமிழ் கண்களோடு நின்ற சிங்கமுகன் முருகனை இன்றே கொன்று சீற்றம் தீர்வேன் என்று அண்டமும், அகில திக்கும் தானேயாக மாயவடிவம் கொண்டான். ஆறு முகப்பெருமான் குறுநகையுடன் ஒரு அம்பை வில்லிற் பூட்டி விடுத்தார். அது சிங்கமுகன் மார்பிற் பட்டு ஊடுருவிச் சென்றது.
அந்நிலையில் உதயகிரியிலே பாசப்படையாற் கட்டுண்டு கிடக்கும் வீரவாகு முதலிய வீரர்களை விடுவிக்கத் திருவுள்ளம் கொண்டு ஒரு அம்பை ஏவினார். அது உதயகிரியைச் சென்றடைந்து வீரர்களைப் பிணித்திருந்த மாயாபாசத்தைத் துணித்தது. கந்தன் திருவருளால் மயக்கம் தெளிந்து எழுந்த வீரர்களைப் புஷ்பக விமானம் போன்று தாங்கியவாறு கந்தனின் திருவடியில் வீரரை விடுத்து அம்புறாத் தூணியிற் சென்று புகுந்தது.
மயக்கம் தெளிந்து எழுந்த சிங்கமுகன் தனது படைகள் அனைத்தையும் முருகப் பெருமான் அழித்து விட்டதை உணர்ந்து கொண்டான். அதுமட்டுமல்லாமல் பாசப் படையால் பிணித்த வீரர்கள் விடுபட்டுத் தம்முன் நிற்பதையும் கண்டான். உள்ளம் கொதித்தான். ஆயிரம் வில்லெடுத்துப் போர் புரிய முனைய, முருகன் ஈராயிரம் அம்புகளால் அவனது கரங்களையும் சிரசுகளையும் அறுத்துத் தள்ளினார். ஆயினும் அவை விழுவதற்கு முன்பாக முளைத்து எழுந்தன. சிங்கமுகனின் சாற்றரிய தவவலிமையைக் கண்டு, நான்முகனும் இந்திரனும் திருமாலும் அஞ்சினார்கள். முருகன் சற்றே ஹூங்காரம் செய்ய தலைகளும், தோள்களும் ஒளிந்தன. தலையும், கையும் முன்போல முளைக்காததைக் கண்ட சிங்கமுகன் 'பாலகனே! வேல் எறியவும், வில் வளைக்கவும் மட்டும் தான் பயின்றாயோ' என்று எள்ளி நகையாடி ஒரு தண்டாயுதத்தை வீசினான்.
சிறிதுநேரம் வாளா இருந்த சிவபாலன் தனது வச்சிரப் படையை இழுத்தார். வச்சிரப்படை தண்டப்படையை ஒடித்துப் பொடித்து மலைமேற்பாயும் இடிபோல சிங்கமுகனின் மார்பைத் தாக்கியது. மார்பு பிளந்தது. உயிர் பறந்து அவ்வச்சிரப்படை கங்கையாற்றிலே சென்று கறைபோகப் படிந்து நீராடி குமாரவேலனின் திருக்கரத்தில் வந்து அமர்ந்தது.
சிங்கமுகனின் இழப்பைத் தாங்க முடியாத சூரபன்மன் கதறிக் கண்ணிர் வடித்தான். மண்ணிலே வீழ்ந்து புரண்டான். துயரக் கடலில் மூழ்கிய அவுணர்கோன் 'ஜயகோ போர் மூண்டதென்றால் உள்ளம் களிப்பாயே! உன்னுயிரையும் கொண்டானோ அக் கூற்றுவன். நீ இறந்தாய் என்று அறிந்தால் மாயவனும் பிரமனும்
இந்துக்கலைக்களஞ்சியம்

இந்திரனும் முன்னைப் பெருமையை அடைந்து விடுவார்களே? அந்தோ? உலகில் பொன்னைப் பெறலாம். பூமியைப் பெறலாம். மாதர்களைப் பெறலாம். புதல்வர்களைப் பெறலாம். ஆனால் இப்பிறப்பில் உன்னைப் பெற முடியுமா! என் உயிர் நீயே! உணர்ச்சியும் நீயே தவமும் நீயே! என நினைத்திருந்தேனே என்னைத் தனித்து விட்டுவிட்டு நீ சென்று விட்டாயே’ என்று அரற்றிய பேரோசை அண்டத்தை அதிரச் செய்தது.
உடன்பிறப்பின் உயர்வை சூரபன்மன் கூறும்பகுதி நெஞ்சத்தை நெகிழ்விப்பது,
பொன்னை நிலந்தன்னைப் புதல்வர்களை
மங்கையரைப் பின்னையுள பொருளை யெல்லாம் பெறலாகும் என்னை யுடைய இளங்கோவே இப்பிறப்பில் உன்னை இனிப் பெறுவதுண்டோ உரையாயே!
சிங்க முகன் அறத்தாறு உணர்ந்த அறிஞன். பாசமுள்ள உடன்பிறப்பு.
சிங்கமுகனைப் பற்றிய மற்றுமொரு புராதனக் குறிப்பு: முன்னொரு கற்பத்தில் பிரபாகரன் என்னும் மன்னனுக்கும் சுகுமாரி என்னும் அவனது மனைவிக்கும் சூரன் - பதுமன் என்ற இரட்டைப் பிள்ளைகளும், சிங்கன், தாரகன் என்னும் பிள்ளைகளும் தோன்றினர். இந்நால் வரும் அரசுபுரியும் பொழுது அகத்திய முனிவரிடம் கந்தப் பெருமானது பெருமைகளைக் கேட்டபொழுது சூரன் கந்தவேளுக்கு மயில்வாகனமாக விரும்பினான் - பதுமன் சேவற் கொடியாக விரும்பினான். திரணபிந்து முனிவரிடம் துர்க்கையின் பெருமையைக் கேட்ட சிங்க முகன் தேவிக்கு சிங்கவாகனமாக விரும்பினான். இடப யோகியாரிடம் சாத்தனாருடைய பெருமையைக் கேட்ட தாரகன் அவருக்கு யானைவாகனமாக விரும்பினான்.
இத்தகைய நோக்கங்கள் நிறைவேறுவதற்கு நால்வரும் தவம் செய்தனர். இந்நிகழ்ச்சியைக் கருடனால் அறிந்த மயில் முதலான ஊர்திகள் தங்கள் பதத்தை இவர்கள் நாடுகின்றார்களே எனச் சினந்து, அவர்களிடம் சென்று, “நீங்கள் நினைத்த வண்ணம் அம்முகமுடைய பூதர்களாகக் கடவீர்கள்’ எனச் சபித்தனர். பின்பு அவர்களின் வேண்டுகோளுக்கு இரங்கி உங்கள் கருத்து இறைவனருளினால் கைகூடும் என வரம் தந்து சென்றன.
இந்நான்கு பூதர்களும் மயில் முதலிய ஊர்திகளை வதைத்தனர். இதனை அறிந்த முருகப்பெருமான் அவர்களை அசுரர்களாக ஆகுமாறு சாபம் கொடுத்துப் பின்னர், "எம்மால் வதைக்கப்பட்டபின் பழைய நிலையை அடைவீர்கள்” என வரமருளினார். அப்பொழுது சூரனும், பதுமனும் அண்ணலை வணங்கி “நாங்கள் இருவரும் சேவலும் மயிலுமாகி தங்களுக்குப் பணிபுரிய அருளவேண்டும்” என்று விண்ணப்பிக்க, பெருமானும்

Page 33
“நீங்கள் இருவரும் ஒருவராகி சூரபத்மன் என்ற பெயர்கொண்டு எம்முடன் போர்புரிந்து பின்னர் சேவலும், மயிலுமாக விளங்குங்கள்” என்று அருள்புரிந்தார்.
நான்கு பூதர்களும் இறைவனிட்ட சாபத்தினால் காசிபருக்கு மைந்தர்களாகி செவ்வேட் பரமனுடன் போர்புரிந்து தாங்கள் நினைத்த பதவியை அடைந்தனர். கருடன் முதலியவர்களுக்குத் தீங்கிழைத்த மயிலும், சேவலும் காஞ்சித் தலத்திற்குச் சென்று தவம் செய்து வீடு பெற்றன. (62.60) 621)
சித்தர்கள்
ஆகமாகிய இந்த மனித உடம்பிலே தெய்வபக்தி கொண்டு இதனுள் அருட்சக்தியை வளர்த்து, ஆன்ம பரிமாணத்தில் மக்களிடையே வானவர்களாகவும் மனித தெய்வங்களாகவும் உலவி, அருள் வாழ்வு வாழ்ந்து அருளை வழங்கி வருகிற பெரியவர்களே, மகான்களே, சித்தர்கள்.
பாரத நாட்டில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக வனங்களிலே தவம்செய்து, ஆன்ம நேயம் கூடி அரிய சமாதி நிலையில் இருந்து, எல்லையற்ற பரம்பொருளின் பேரின்ப அமுதை உண்டு அமரர்களாக வெளிவந்து, மக்களையெல்லாம் தெய்வநெறியில் வழிப்படுத்தி ஆண்டு அருளியிருக்கிறார்கள் அத்தகையவர்கள். இமய மலையிலும், பொதிகை மலையிலும், இன்றைக்கும் அந்த மரபு ஒளிவீசிக் கொண்டிருக்கிறது.
அஃது அணையாத தீபம், நந்தா விளக்கு. புயலும், மழையும், வெயிலும், பனியும் அந்த ஒளியைத் தொடுவதில்லை. அது காலனைக் காலால் உதைத்து கடவுட்டன்மையோடு நிலையாக ஒளி வீசி, நமது சமுதாயத்தைப் பாதுகாத்து வருகிறது. அந்த ஒளி விளக்கே சித்தர்களின் வாழ்வியற் பண்பாகும். சித்தர்கள் என்ற சொல்லுக்குச் சித்தி கைகூடியவர்கள் என்று பொருள். இந்தச் சித்தி அவர்களுக்கு எப்படி கிட்டியது? யோக சமாதியின் உள்ளே அகலிடம் யோக சமாதியின் உள்ளே உளஒளி யோக சமாதியின் உள்ளே உளசக்தி யோக சமாதி உகந்தவர் சித்தரே
“யோக சமாதியை உகந்தவர் யாரோ அவரே சித்தர்” என்று வரையறை செய்கின்றார் திருமூலர். இதுவே, அகத்திலே தெய்வபக்தி கொண்டார் என்ற பாடலின் பொருளாகும்.
இந்த உடம்பிலே தெய்வசக்தியைக் கலந்து காட்டுகிற தவயோகமே சித்தர்களின் தவநெறியாகும்,
மனித உடம்பு நிலையற்றது, மனிதவாழ்வு பயனற்றது என்றெல்லாம் கூறுகின்ற வெறுப்புநிலை ஒரு புறமிருக்க மனிதப்பிறவியும் வேண்டுவதே இந்த மானிலத்தே என்கிற நிலை.

இந்த மனித உடம்பும், இந்த மனித வாழ்வுமே தெய்வத்தைக் காணுவதற்குரிய ஒப்பற்ற சாதனங்கள் என்று தெளிகின்ற நிலையே சித்திகளுக்கெல்லாம் அடிப்படையான சித்தி. உடம்பினை முன்னம் இழுக்கென்று இருந்தேன் உடம்பினுக்குள்ளே உறுபொருள் கண்டேன் உடம்புளே உத்தமன் கோயில் கொண்டான் என்று உடம்பினை யானிருந்து ஒம்புகின்றேனே.
இந்த உடம்பு மிகப்பெரிய சாதனம். இதனுள் புருடோத்தமனான பரமாத்மா-இறைவன், கோயில் கொண்டிருக்கின்றான் என்று கண்ணாரக் கண்டு இந்த உடற்கோயிலைப் பக்குவமாகப் பாதுகாத்து இறைவனுக்குரிய இடமாகப் பரிசுத்த நிலையிற் பேணி, யோக சமாதி உகந்தவர் யாரோ, அவரே மெய்யான சித்தர்கள். அவர்கள் பெற்ற தெய்வ ஆற்றல்கள் வெறும் செப்பிடு வித்தைகள் அல்ல. அந்த தெய்வ ஆற்றல்கள் உலகையே உய்விக்கின்ற பேரின்ப ஆற்றல்களாகும்.
உடம்பின் நுட்பங்களையும் இயல்புகளையும் மனத்தின் தன்மைகளையும் ஆதாரங்களையும் ஆராய்கின்ற காய சித்தி உபாயங்களும், வைத்திய முறைகளும், மனத்தத்துவ இயலாகிய பெரிய விஞ்ஞான அறிவும் அவர்களின் வாழ்வியல் தத்துவங்களாக இருக்கின்றன. உடலின் தத்துவத்தோடு இணைந்து, மனத்தத்துவமும் விஞ்ஞானத் தத்துவமும், மெய்ஞ்ஞான தத்துவமும் பாதுகாக்கப்பட்டன. எல்லாவற்றுக்கும் ஆதாரமாக இருப்பது சரீர யோக சித்திதான்.
இந்த உடம்பினுள்ளே தெய்வதரிசனம் பெற்று, இறை ஆற்றலை இந்த உடம்பினுள்ளே வளர்த்து, உலகிற்கு தங்கள் யோக சாதனையினால் ஒளியூட்டி, மனித சமுதாயத்தைப் பாதுகாப்பதே சித்தர்களின் குறிக்கோள்.
“யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்” இதுவே சித்தர்களின் வாழ்வின் ஆதார சுருதி.
உடம்பின்மூலம் இறைவனை வழிபடுகிற ஞான நெறிக்கு நம்மை அழைத்துச் செல்வதற்கு ஆரம்பப் பயிற்சியாகவே நம்முடைய முன்னோர்கள் நம்நாட்டு ஞானிகள் நாடெங்கும் கோயில்கள் நிறுவி அவரவர் பக்குவத்திற்கு ஏற்பத் தெய்வத்தை வழிபடும் முறைகளையும் வகுத்துத் தந்தார்கள்.
வெளிச் சடங்குகளையும், வெளிச் செயல்களையும் உதறிப் பேசுகிற போக்கானது சித்தனது ஆன்ம பக்குவத்திலிருந்து தெறித்து வருகிற ஞானப் பொறியாகும்.
சித்தர்கள் எல்லோரும் ஆழ்ந்த தெய்வபக்தி நிரம்பியவர்கள். தெய்வநெறி நிரம்பிய அவர்கள் பொது மக்களுக்காகத் தெய்வ சான்னித்தியத்தைப் புற வடிவிலே காட்டி இயங்கச் செய்த புற அமைப்புக்களே நம் நாட்டுக் கோயில்கள். அவை அனைத்தும் சீராக ஓங்கித் தவறாது வளர்ந்தால்தான் சமுதாயத்தின் ஆன்மா
இந்துக் - iaaari

Page 34
செம்மைப்படும் என்ற இரகசியத்தை உணர்ந்த சித்தர்கள் இந்தக் கோயில்களில் தங்கள் சித்திகளையும் காப்பாக அமைத்து, இவற்றின் நெறிமுறைகளையும் அருவத்திலே நின்று கண்காணித்து வருகிறார்கள். இவை தவறக் கூடாது என்பதற்காகப் பலமான எச்சரிக்கைகளையும் பாடல்களிலே
தெரிவித்து இருக்கிறார்கள்.
கோயில்களிற் பூஜை முறைகள் தவறாமல் நடத்தப்பட வேண்டும் என்பதிலே சித்தர்களுக்கு அளவில்லாத கவலையும், ஆர்வமும் இருந்து வந்துள்ளன. ஆம்; நம் உடம்பிலே ஆன்மலிங்கம் இருக்கிறது என்றால் மகாலிங்கம் கோயிலில் இருக்கிறது.
வயதில் முதுமை; பாங்கில் இளமை; பாடல்களிலே கற்றவரையும், கல்லாதவர்களையும் கிறங்க வைக்கும் செம்மைத்திறன் பாராட்டுக்குரியது.
கையில் முடவனும் கண்ணில் குருடனும் மெய்யில் உறைந்திடும் மெய்யினைக் கண்டில் கையில் இரு கண்னும் கண்ணில் இருகையும் பொய்யிலா உண்மை புலப்படல் மெய்யே.
இந்தப் பாடலில் ஒரு புதுமை இருக்கிறது. கண்ணிலே கைமுளைப்பதும் கையிலே கண் தோன்றுவதும் ஆகிய ஏதோ ஒர் ஆழ்ந்த கருத்து நம்மை மலைக்கச் செய்கிறதல்லவா?.
யோகப் பயிற்சியும் ஆன்மீக அனுபவமும் வாய்ந்த மாபெரும் சித்தர்கள் கை என்றும் கண் என்றும் குறிப்பிடுவன இந்த உடம்பிலேயுள்ள பேரறிவு, நுண்ணுணர்வு ஆகிய மையங்கள் தான்.
இந்த மையங்கள் மனித உடம்பின் ஒவ்வோர் இடங்களில் ஞானப்பயிற்சிக்கு உரிய நரம்பு நிலைகளும், இந்திரியச் சுரப்பிகளும் ஆன்மீகப் பயிற்சியினால் இயங்கும்போது பேரானந்த அனுபவங்கள் ஏற்படுகின்றன என்பது சித்தர் வாக்கு, கையில் கண்தோன்றுவதும் கண்ணில் கைமுளைப்பதும் இந்த ஆன்ம மையங்களில் ஏற்படுகின்ற புதிய ஆற்றல்களைக் குறிப்பிடுகின்ற சித்தர்களின் யோக சித்திதான். யோக சமாதியின் உள்ளே அகலிடம் என்று பாடுகிறது திருமந்திரம்.
இன்றைய அறிவியற் சோதனைகளிலே வெளிநாடுகளில் நடைபெற்று வருகின்ற பெரிய ஆய்வு, மூளையின் அதிர்வு நிலைகளைப் பற்றியது. அவர்கள் என்ன கண்டு பிடித்திருக்கிறார்கள் என்றால் மூளையானது அதனுடைய அல்பா'அதிர்வு நிலையிலே வியக்கத்தக்க பல பண்புகளைக் கொள்கிறது என்பதாகும். இந்த அதிர்வு நிலையிலே அதற்கு ஒபரேடிவ் றெஸ்ற் (Operative rest) என்ற ஓர் அறிதுயில் வசமாகிறது. மூளையின் அல்பா ரிதம் (Alpha Rhythm) என்பதையும் ஒபரேடிவ் றெஸ்ட் (Operative rest) என்பதையும் விஞ்ஞானக் கருவிகளைக் கொண்டு ஆராய்ந்து பல தத்துவப்
- க்களஞ்சியம்

பேருண்மைகளை அவர்கள் கூறியுள்ளார்கள். இவையனைத்தும் சித்தர் நூல்களிற் காணப்படுகின்ற சுழுத்தி, துரியம் ஆகிய மன உலகங்களை அப்படியே படம் பிடித்துக் காட்டுவனவாக அமைந்துள்ளன.
உருவமற்ற அருவமாகிய பரம்பொருள், மனித உடம்புக்குள்ளே அகலிடத்தை தனது கருவறையாகக் கொண்டு, இந்த உடம்பையும் அதனுள் ஐந்து பருப்பொருள்களையும் ஐம்புலன்களையும் தொண்ணுாற்றாறு தத்துவங்களையும் தனி உயிரையும் இயக்குவதோடு, உள் இயக்கத்தைப் புற உலகோடு இணைத்து இயக்குகிறது. எனவே உடம்புக்கு உள்ளே இருக்கின்ற அகலிடமானது வெளியில் உள்ள அகலிடத்தோடு இரண்டறக் கலந்து இயங்குகிறது.
அகக்கண்ணே துணையாக ஒளியையும் ஒலியையும் பார்க்கும் போது அகலிடமானது உள்ளும் புறமுமாக விரிகிறது. ஐந்து பூத தத்துவங்களாக இருப்பவை வெளியே இருப்பவையோடு புணர்கின்றன. அந் நிலையிலே சீவாத்மா பரமாத்ம சுகத்தைத் துய்க்கிறது. இந்த அகலிட இணைப்பே மேலான தியானம் என்கிறார்கள் சித்தர்கள்.
உடலைக் கொண்டு வெறும் புறப்பயிற்சிகள் எத்தனை செய்தாலும், எத்தனை ஆண்டுகள் செய்தாலும் இறையின்பம் கிட்டுவதில்லை.
ஆழ்ந்து சிந்தித்தோமானால் ஐம்புலன்களின் நுகர்ச்சிகளையுமே நுகர்வது சித்தமேதான். வெளியில் உள்ள ஒரு பொருளைக் காண்பதும் வெளியில் உள்ள ஓர் ஒலியைக் கேட்பதும் எல்லாமே சித்தத்தின் செயல் தானே!
பார்ப்பான் அகத்திலே பாற்பசு ஐந்துண்டு மேய்ப்பாரும் இன்றி வெறித்துத் திரிவன மேய்ப்பாரும் உண்டாய் வெறியும் அடங்கினால் பார்ப்பான் பசு ஐந்தும் பாலாய்ச் சொரியுமே,
ஐம்புலன்கள், ஐந்து பசுக்களாக, அவை உலவும் இடமாக உடலையும் பார்ப்பவன், இந்த உடலில் இருக்கும் உயிர், சிற்றின்பம் தருகின்ற ஐந்துபுலன்களும் பேரின்பம் தரும் உயர் பசுக்களாகி விட்டால் ஞானப் பாலை சொரிய ஆரம்பித்து விடும் என்கிறார் திருமூலர்,
மந்திரங்கள், தந்திரங்கள், யந்திரங்களைக் கண்டு பிடித்து சித்தர்கள் நம் உடலில் ஆறு ஆதாரங்களின் மையங்களில் எவ்வாறு சக்தியூட்டுவது, மனிதன் மனதால் எப்படி உயர்கிறான் என்பதை விளக்கி, மனிதனுக்கும் விலங்குகளுக்கும் உள்ள அடிப்படையான வேறுபாடு, இம் மனத்தின் ஆற்றலைப் பெருக்கிக் கொள்வதன் மூலமே செயல்படுகின்றது என்பதை இயம்பி, உள்ளத்துக்குள்ளே நாம் நிகழ்த்த வேண்டிய தவ ஒழுக்கங்களைப் பற்பல யோகமுறைகளைச் சொல்லி விளக்குவார்கள். ஒழுக்கத்திற்கும் சீலத்திற்கும் தவவாழ்க்கைக்கும் மனத்தைக் கொண்டு பயிற்சி செய்ய வேண்டும். அகத்துவ

Page 35
ஒழுக்கங்களையெல்லாம் உத்திமுறையிலே சித்தர்கள் விளக்குவார்கள்.
இறைவனை எப்படி வழிபடவேண்டும். சரியை தொண்டு நெறி, கிரியை மகன் தந்தையை வழிபடுகின்ற முறை; யோகம் என்பது இறைவனை தனது தோழனாகக் கருதி தோழமை யோகத்திலே ஈடுபடுகின்ற முறை. ஞானம் என்பது இந்த மூன்று முறைகளையும் கடந்த பேரின்பச் செல்வழியாகும்.
சித்தர்கள் ஒரு பெரிய இரகசியத்தை மக்களுக்கு எடுத்துச் சொல்கிறார்கள். ஆன்மாக்களுடைய பரிபக்குவ நிலைக்கு ஏற்ப இறைவனே குருவாகத் தோன்றி, அவர்களுக்கு தக்க வகையிலே அருள் செய்வதை மிக அழகாக எடுத்துரைக்கிறார்கள்.
மனத்திற்குள்ளே உள்ளதாகிய அறிவு எனும் வாளாயுதத்தை உருவி எடுத்து, இனமாகிய முப்பத்தாறு தத்துவங்களையும் விட்டொழித்து, ஆணவம், கன்மம் ஆகிய இரண்டையும் அறவே களைந்து, நினைத்த இடமாகிய தியான நிலையிலே இறையுணர்வு நிலை பெற்றுவிட்டால் உயிர்கள் அனைத்திற்கும் அதிபதியாகிய இறைவனுடைய தன்மை எய்திவிடும் என்பதை,
மனத்தில் இருந்த மதிவாள் உருவி இனத்தினை நீக்கி இரண்டற வீசி நினைத்த இடத்தே நிலை பெறுமாகில் அனைத்துயிர்க் கெல்லாம் அதிபதி யாமே
என்று மிக கடுமையாகக் கூறுகிறது திருமந்திரம், இன்னொரு பாடல், பேரறிவுநிலை நமக்கு வெவ்வேறு பேரின்பம் தருகிறது என்பதை விளக்குகிறது.
ஆமா மறிந்தேன் அகத்தின் அரும்பொருள் போமாறறிந்தேன் புகுமாறும் ஈதென்றே ஏமாப்பதில்லை இனியோர் இடரில்லை நாமா முதல்வனும் நாமெனலாமே.
“இந்தக் காயத்துள்ளே பரம்பொருள் கலந்திருக்கிறது. ஞான குருவின் அருளினாலே இந்த அகப்பொருளை உணர்ந்துகொண்டேன். பாசமெல்லாம் எனைவிட்டு நீங்கக் கண்டேன். இனி ஆசையினால் வரும் துன்பங்கள் எனக்கில்லை நானே இறைவனாகிவிட்டேன்’ என ஆர்ப்பரிக்கும் ஆனந்த நிலை சித்தர்களின் பாடல்களிற் குதூகலிக்கக் காண்கிறோம்.
எந்தத் துறையிலும் தாங்கள் சளைத்தவர்கள் அல்லர் என வாழ்ந்து காட்டியவர்கள் சித்தர்கள். உடலைப்பற்றிய ஆராய்ச்சியில் உலகையே வென்றார்கள்.
உதாரணமாக மேல்நாட்டு வைத்தியத்தைக் கற்ற நிபுணர்கள் நாடி பார்க்கின்ற பழக்கத்தைக் கையாண்டாலும் அவர்கள் துடிப்பின் எண்ணிக்கையைக் கணக்கிடவே நாடியைப் பார்க்கிறார்கள். துடிப்பின் எண்ணிக்கை, அதன் வேகம், அதன் படபடப்பு அல்லது நலிவு ஆகியவற்றை ஆராய்கிறார்கள். ஆனால் சித்தர்கள் இந்த உடம்பை இயக்குகின்ற அடிப்படையான நாடிகள்

மூன்று என்றும் அந்த மூன்றில் ஒன்று மிகும் போதும், குறையும் போதும் நோய் நொடிகள் வருகின்றன என்றும் கண்டார்கள். வாதம் கூடினால் உடலில் ஏற்படுகின்ற நோய் என்ன, பித்தம் கூடினால் வருகின்ற நோய் எது, சிலேப்பினம் பேசும் போது உடலின் நிலை என்ன என்பதைக் கண்டறிந்தார்கள். அது மட்டுமல்ல தொண்ணுாற்றாறு வேதியல் வினைகள் இவ்வுடலில் இடம்பெறுவதை அறியத்தருகிறார்கள்.
ஆகவே உடம்பு என்ற இந்தத் தூலப் பொருளை அறியும் பொழுது ஊனக் கண்களோடு பார்த்துச் சொல்லப்பட்ட தொண்ணுற்றாறு தத்துவங்கள் தவிர ஞானக் கண்ணோடு பார்த்துச் சொல்லப்பட்டுள்ள ஆறு ஆதாரங்களும் முக்கியம் பெறுகின்றன.
இந்த ஆறு இடங்களும் இன்றைய ஆன்ம விஞ்ஞான மொழியிலே சொல்வதாக இருந்தால் ஆறு physio psychic centres' ஆறு ஆதாரங்களைப் பற்றிய பேருண்மைகள் சித்தர்களின் பாடல்களிலே அற்புதமாக வெளிப்படுகின்றன. பருப்பொருளிலிருந்து சூக்குமப் பொருளுக்குச் செல்வதற்கு, சூக்குமப் பொருளைக் கொண்டு பருப்பொருள் ஆவதற்கும், பருப்பொருளே சூக்குமம் ஆவதற்கும் உள்ள நுட்பமான வழிகளையெல்லாம் சித்தர்களின் வாழ்வியற் பண்பு நமக்கு நுட்பமாக உபதேசிக்கிறது.
இந்தப் பேருண்மைகளைத் தவிர மனம் என்ற தத்துவத்திற்கு ஐந்துவிதமான நிலைகளைக் கண்டு சொல்லியிருக்கிறார்கள் ஜாக்கிரதம் (விழிப்பு) சொப்பனம் (கனவு) சுஷப்தி (கழுத்தி) துரியம் (வேகம்) துரியாதீதம் (அதிவேகம்) என்ற ஐந்து நிலைகள் உள்ளுலகில் இருக்கின்றன என்பதைச் சித்தர்கள் வாழ்ந்தே காட்டுகிறார்கள். உடம்பு எனும் பருப்பொருளையும் உள்ளம் என்னும் நுண் பொருளையும் உயிர் எனும் அதி நுண்பொருளையும், மூன்றையும் அறிவியலோடு சேர்ந்து ஆன்மீகக் கண்கொண்டு நோக்கி, எல்லா நாட்டுக்கும் எல்லா விஞ்ஞானிகளுக்கும் பொருந்துகின்ற முறையிலே ஆராய்ந்து, தெளிவோடு மாபெரும் உண்மைகளை உணர்த்துகின்றனர்.
சித்தர்களது விஞ்ஞான அறிவும் மெய்ஞ்ஞான அறிவும் எத்தகைய அறிவியல் நுட்பமானது என்பதற்கு ரஷியநாட்டில் நடைபெற்று வருகின்ற அறிவியல் ஆராய்ச்சிகளுக்கு, வருங்காலத்திற் கூட மேலும் பயன்படுகின்ற பல கருத்துக்களை அவர்கள் முன்கூட்டி உணர்த்தியிருக்கிறார்கள் என்பதும் தெளிவாக அவர்களது பாடல்களிற் பிரதிபலிக்கின்றன.
உள்ளத்தின் ஆற்றலைக் கொண்டு, இந்த உடம்பை, நிலத்திலிருந்து ஒரு முழம், அல்லது இரண்டு அதற்கு மேலும்கூட எழுப்புகின்ற ஒரு சாதனை சித்தர்களின் பண்பு. இந்த அகஆற்றலை இன்னும் விரிவுபடுத்தி உடம்போடு வான வெளியிலே உலவுகின்ற ஆற்றலும், அதற்குரிய பயிற்சி முறைபற்றியும் சித்தர்கள் கூறியிருக்கிறார்கள்.
இந்துக் க்களஞ்சியம்

Page 36
கண் பார்வையின் மூலமாகவே ஒருவரை மயக்க நிலையில் ஆழ்த்தி விடுகின்ற ஹிப்நாடிச நிலை என்னும் ஆற்றலை நாம் கண்கூடாகப் பார்த்து விடுகிறோம். சித்தர்கள் கமன நாடிமூலமாக இந்த உடம்பைக் காற்றிலே பறந்து செல்லக்கூடிய வல்லமை படைத்ததாகச் செய்துவிடமுடியும் என்று நிரூபித்திருக்கிறார்கள். இறந்த ஒர் உடலுக்குட் சித்தர்கள் தங்கள் உயிரைச் செலுத்தி அந்தப் புதிய உடம்பில் உலவி வருவதும் தங்கள் உடம்பை ஒரு நொடியில் காற்றணுக்களாக மாற்றி, விண்வெளியில் கலந்து பின்னர் குறிப்பிட்ட இடத்தில் மீண்டும் அந்த அணுக்களை உடம்பின் பரு அணுக்களாக ஒன்று கூட்டிக் கண்முன் முன்போலத் தோன்றுகின்ற மாபெரும் சித்தியாகிய வல்லமையானது இப்போது நாம் முழுதும் அறிந்து கொள்ளமுடியாமல், அதிசயத்தோடு வியக்கக்கூடிய ஓர் அற்புதமாகவே இருக்கிறது.
ஊழி முடிவை, உடம்பின் முடிவை, ஐந்து பூதங்களின் செயலைக் கொண்டு அரிய முறையில் இந்தப் பாடல் விளக்குகின்றது.
ஒத்துநின்ற ஒங்காரம் மண்ணை யுண்ணும் உருவியந்த மண்சென்று சலத்தை உண்னும் பத்திநின்ற சலமதுதான் தீயை யுன்னும் பாங்கான திசென்று காலை யுன்னும் வெத்திநின்ற கால் சென்று விண்ணை யுன்னும் விழுந்தப்பால் சடமென்னும் வேதாந்தப் பேச்சு முத்தி கண்டு கூடுவது மெந்தக் காலம்? மூடரே மதுவையுண்டு மேல் பாரீரே.
பாடலில் வருகின்ற ஓங்காரம் உடம்பின் உச்சியிலுள்ள ஞான நிலையின் இயக்க நிலை. கால் என்பது காற்று. மது என்பது ஆறு ஞான ஆதார நிலைகளை இயக்க ஊறும் அமுதம், அதனை உண்ண, உண்ண உயிராற்றல் பெருகும். இதுவே சித்தர்களின் யோக ரகசிய வாழ்வியற் பண்பாகும். (2 to/7.)
சித்தன்னவாசல்
இந்திய ஓவியக்கலை வரலாற்றில் - குறிப்பாக தமிழக ஒவியக் கலை வரலாற்றில் - கணிப்பிடத்தக்க சிறப்பும் தொன்மையும் வாய்ந்த ஒவியங்களைக் கொண்ட ஒரு இடமாக விளங்குவது சித்தன்னவாசல். குகைக் கோயிலாக விளங்கும் சித்தன்னவாசல் சமனசார்புடையதாகவே கருதப்படுகிறது. இடபத்தைச் சின்னமாகக் கொண்ட இடL தீர்த்தங்கரர் என்னும் ஆதிநாதருக்குரிய கோயிலாக இதனை ஆய்வாளர்கள் கொள்கிறார்கள். கருவறையின் உள்ளே அமர்ந்த கோலத்தில் விளங்கும் மூவருள் நடுவிலுள்ளவர் இடபதிர்த்தங்கரராகலாம் என்பது அவர்கள் கருத்து.
சித்தன்னவாசல் ஒவியங்களுள் கலாவிமர்சகர்களின் கருத்தை மிகவும் கவர்வன மண்டபத் தூண்களிற் காணப்பெறும் ஆடல் மகளிர் இருவரின் வண்ண ஒவியங்களாம். அம்மகளிரின்
இந்துக்கலைக்களஞ்சியம்

ஆடற்கோலம் பரதமுனிவரின் நாட்டிய சாஸ்திரம் கூறும் நாட்டியக் கரணங்களைப் பிரதிபலிக்கின்றன. அவற்றுள் ஒன்று நடராஜ வடிவத்திலுள்ள ஆடற்கரணத்தை ஒத்ததாகும். பெண் வெறுப்பினையும், 3566)6) மறுப்பினையும் தங்கள் கோட்பாடுகளாகக் கொண்ட சமணர்தம் கோயிலில் இத்தகைய கவர்ச்சிமிகு மகளிரின் ஓவியக்கோலம் விளங்குவது குறித்து அறிஞர்கள் தங்கள் வியப்பினைத் தெரிவித்துள்ளனர். பெண்களின் அழகிலும் கலையின் கவர்ச்சியிலும் தடுமாற்றமுறாத தம் மனப்பக்குவத்தினை உணர்த்துதற்காக இவை வரையப்பட்டனவோ என்று அவர்கள் அமைதிகான முயல்வர்.
சித்தன்னவாசல் ஒவியங்களுள் அடுத்துக் குறிப்பிடத்தக்கது மூன்று மனித உருவங்களைக் கொண்ட மற்றோர் ஓவியமாகும். இது சித்தன்னவாசல் தென்புறத் தூணின் அருகே மண்டபத்தினுள் நுழையுமிடத்திற் காணப்பெறுகிறது. அம்மூன்று மனித உருவங்களுள் ஒன்று எழிலார்ந்த முடிபுனைந்து பெருமிதம் பொலிந்த வதனத்துடன் விளங்கும் அரசனுடையது. அவன்பின்னே கவின்மிகு தலையலங்காரத்துடனும் நளினத்துடனும் விளங்கும் எழிலுரு அவ்வரசனது தேவிக்குரியது. இந்த இருவருக்கும் எதிரில் காவியுடுத்த துறவுக்கோலத்தில் மூன்றாவது உருவம் விளங்குகிறது. இவ்வோவியம் மிகவும் உருக்குலைந்த நிலையிலேயே காணப்படுகிறது. இவ்வோவியத்தில் விளங்கும் மூன்று உருவங்களுள் முன்னைய இரண்டையும் அர்த்தநாரி என்பர் சிலர். மகேந்திர வர்மனும் தேவியும் என்பர் சிலர். இன்னுஞ்சிலர் அக்காலத்தில் ஆட்சிபுரிந்த பாண்டிய அரசன் பூீமாற பூரீவல்லபனும் அவன் தேவியும் என்பர். அவர்கள் அவ்வோவியத்தில் விளங்கும் துறவுக்கோல உருவை சமணத்துறவியான மதுரை ஆசிரியர் இளங்கெளதமருடையது என்பர்.
சித்தன்ன வாசலில் விளங்கும் தாமரைப் பொய்கை ஒவியம் தனித்துவமானதாகக் கருதப்படுகிறது. நீர் நிரம்பிய பெரிய தடாகம் ஒன்று; அதில் ஏராளமான தாமரை மலர்கள்; பல்வேறு வகையான மீன்கள் துள்ளிக் குதிக்கின்றன; அங்குமிங்குமாக அன்னங்களும் வாத்துக்களும் உலவுகின்றன. யானைகள், எருமைகள், மனிதர்கள் என்று நீர் விருப்புடைய உயிர்கள் பலவும் அத்தடாகத்திற் காணப்படுகின்றன. யானைகள் ஆணும் பெண்ணுமாக தாமரை மலர்களை துதிக்கையாற் பறித்து நிற்கின்றன. துதிக்கையால் நீரை அடித்து விளையாடுகின்றன. இந்த ஆரவாரத்தில் பறவைகள் பறக்கின்றன. எருமைகள் எந்தச் சலனமுமின்றி நீருட் கிடக்கின்றன. தடாகத்தின் ஒரு புறத்தே இடைவரை ஆடை அணிந்த இரு மனித உருவங்கள் நீருள் இறங்குகின்றன. முன் செல்பவர் இடக்கரத்தில் குடலையைத் தாங்கியபடி வலக்கரத்தால் மலர் பறிக்கிறார். பின்னாக வருபவர் கையில் தாமரை மலரைத் தாங்கி நிற்கிறார். தடாகத்தின் மற்றோர் புறத்தில் ஒருகையில் அல்லியும் மறுகையில் தாமரையுமாக ஒருவர் நிற்கிறார். இவ்வாறாக அத்தடாகம் விளங்குகின்றது.

Page 37
“மகாவீரரை அவர்தாய் கருத்தரித்தபோது பதினான்கு நன்நிமித்தங்களைக் கண்டார்; அவற்றுள் ஒன்று தாமரை பொய்கை. மானசரஸ் என்ற பெயர் பெற்ற அப்பொய்கையில் பறவைகளும் மிருகங்களும் விளையாடித் திரிந்தன அப்பொய்கையாக இப்பொய்கை இருக்கக்கூடும்” என்பர் சிலர் அவர்களே மகாவீரர் நல்லறம் போதித்த கதையுடன் தொடர்புடைய வேறு ஒரு பொய்கையாகவும் இது இருத்தல் கூடும் என்பர்.
அக்கதை வருமாறு: ஒரு தாமரைப் பொய்கையில் மலர்களும் பறவைகளும் மிகுதியாக இருந்தன. அதன் நடுவே அழகுமிக்க பெரிய வெள்ளைத் தாமரையொன்று மலர்ந்திருந்தது. அப்பொய்கைக் கரைக்கு வந்த ஒருவர் தம்மை எல்லா ஆற்றலும் வாய்ந்தவராகக் கருதிக்கொண்டு அவ்வெண்தாமரையைப் பறிப்பதற்காகப் பொய்கையுள் இறங்கிச் சென்றார். சென்றவர் சேற்றுள் அழுந்தி இறந்தார். இவ்வாறே வேறும் மூவர் முயன்று சேற்றுள் அழுந்தி இறந்தனர். சிலகாலம் கழித்து ஐந்தாமவராக ஒரு முனிவர் வந்தார். அவர் பொய்கைக் கரையிலிருந்தபடியே "அழகிய தாமரையே வா’ என அழைக்கவே அத்தாமரையும் வந்து அவர் கையிற் சேர்ந்தது. இக்கதையில் பொய்கையானது உலகத்தையும், சேறானது போகங்களையும், சேற்றில் அழுந்திய நால்வரும் பொய்ச்சமயவாதிகளையும் குறிப்பதாகக் கொள்வர். கரையில் நின்ற முனிவர் அறத்தையும், வெண்தாமரை சமணர்தம் குறிக்கோளான பரிநிர்வாணத்தையும் குறித்து நிற்பதாகக் கொள்வர். ஆனால் சித்தன்னவாசல் ஒவியத்தில் வெள்ளைத் தாமரையோ, மலர்பறிக்க வந்த நால்வரோ, கரையில் தவமுனிவரோ இல்லையாதலால் இப்பொய்கை குறித்து நிற்பது அக்கதையை அல்ல என்றும், மகாவீரரின் வரலாற்றில் வரும் சமவசரணம்' என்னும் பொய்கையே அவ்வோவியத்திற் சித்திரிக்கப்பட்டிருப்பது என்றும் வேறு சிலர் கொள்வர். மகாவீரரின் நல்லுரைகேட்கும் பேறுபெற்ற நல்லோர்கள் (பவ்யர்) கடந்து செல்லும் பூமிகளுள் இரண்டாவதான காடிகாபூமி யில் விளங்கும் சமவசரணம் எனும் அப்பொய்கை பறவைகளும் விலங்குகளும் நிறைந்து விளங்குவது. அப்பொய்கையே இது என்றும் இப்பொய்கையானது திருப்பருத்திக்குன்றம், திருமலை ஆகிய புகழ்பெற்ற சமணக்கோயில்களிலுள்ள ஒவியங்களிலும் சித்திரிக்கப் பெற்றுள்ளது என்றும் அவர்கள் கூறுவர்.
சித்தன்ன வாசல் ஒவியங்கள் அஜந்தா ஒவியங்களைப் போலவே சுதைபூசி சுவர்களில் வண்ணக் கலவைகளால் வரையப்பட்டவையாகும். இவ்வோவியங்களை வரைதற்கு அநுசரணை புரிந்தவனாக பல்லவ மன்னனும் கலாவிநோதனுமாக விளங்கிய மஹேந்திரவர்மன் கருதப்படுகிறான். அவன் சித்திரகாரப் புலி’ என்ற சிறப்புப் பட்டம் கொண்டிருந்தமை கருதத்தக்கது. ஆனால் இப்பணிக்கு அநுசரணை செய்தவன் மஹேந்திர பல்லவனல்ல, பாண்டிய மன்னனே என்ற கருத்தும் ஆய்வுலகில் உள்ளமை குறிப்பிடத்தக்கது. எவ்வாறாயினும் இவ்வோவியங்கள் ஏழாம் நூற்றாண்டை ஒட்டிய காலப்பகுதிக்கு உரியனவாக - அஜந்தா ஒவியங்களின் சமகாலத்தனவாகக் கொள்ளப்படுகின்றமை கருதத்தக்கது. (க, இர)

11
சித்தாந்த சாத்திரங்கள்
செவசித்தாந்தம் கூறும் முப்பொருள் உண்மைகளையும், கோட்பாடுகளையும் முறைப்படுத்தி உணர்த்தும் பதினான்கு செந்தமிழ் நூல்கள் சித்தாந்த சாத்திரங்கள் எனப்படும். இவையே தமிழ்ச் சைவசித்தாந்த சாத்திரம் என அழைக்கப்படுவன. சாசனஞ் செய்வது சாத்திரம் ஆகும். சாசனம் என்னும் சொல்லுக்கு ஒழுங்கு ஆணை எனப் பிற பெயர்களும் உள்ளன. இவ்வகையில் சைவசித்தாந்தம் கூறும் முப்பொருளுண்மைகளை ஒழுங்குபடக் கூறுதல் பற்றியும், சற்குரு வடிவில் தோன்றி இறைவன் தன் ஆணையை இந்நூல்கள் வடிவில் உணர்த்தல் பற்றியும் இவை சாத்திரம் எனக் கூறப்படும்.
சித்தாந்த சாத்திரங்கள் பதினான்கையும் முதன் முதலில் மதுரை நாயகம்பிள்ளை என்பவர் 1886 ஆம் ஆண்டில் அச்சிட்டுதவினார். இவர் தமது சிவஞான போத மூலப் பதிப்பின் முகவுரையில் நூல் வரலாறு, நூற்சிறப்பு, நூற்கருத்து, நூற்பாடற்றொகை, சூரணித்தொகை என்பவற்றைக் கூறி, அதன் பின்னர் சித்தாந்த சாத்திரங்கள் பதினான்கையும் உணர்த்தும் பின்வரும் வெண்பாவைத் தருகின்றார்.
உந்திகளிறு உயர்போதம் சித்தியார் பிந்திருபா உண்மை பிரகாசம் - வந்த அருட் பண்புவினா போற்றிக்கொடி பாசமிலா நெஞ்சுவிடு உண்மை நெறி சங்கற்ப முற்று இவ் வெண்பாமூலம் அறிய வரும் பதினான்கு சித்தாந்த
சாத்திரங்கள் மேல்வருவனவாகும் திருவுந்தியார், திருக்களிற்றுப்
படியார், சிவஞானபோதம், சிவஞான சித்தியார், இருபா இருபஃது, உண்மை விளக்கம், சிவப்பிரகாசம், திருவருட்பயன், போற்றிப் பஃறொடை, கொடிக்கவி, நெஞ்சுவிடுதூது, உண்மை நெறி விளக்கம், சங்கற்ப நிராகரணம்.
இதன்படி சித்தாந்த சாத்திரங்கள் பதினான்கு என வழங்கும், வழக்கம் மதுரை நாயகம் பிள்ளை என்பவர் காலத்தில்தான் ஏற்பட்டிருக்க வேண்டுமென்று கருத இடமுண்டு.
காஞ்சி நாகலிங்கமுனிவர் என்பவர் பதினான்கு சித்தாந்த சாத்திரங்கள் முழுவதையும் உரையுடன் ஒரே தொகுதியாக 1897ஆம் ஆண்டிற் பதிப்பித்தார். இவரே முதன் முதல் சித்தாந்த சாத்திரங்கள் பதினான்கிற்கும் சித்தாந்த சாத்திரங்கள் என்று பெயர் கொடுத்தவர் ஆவர். மதுரை நாயகம் பிள்ளை சித்தாந்த சாத்திரங்கள் என்று மட்டுமே குறிப்பிடுகின்றார்.
சித்தாந்த சாத்திரங்கள் “மெய்கண்ட சாத்திரங்கள்’ என்று அழைக்கப்படக் காரணம் பெரும்பான்மையான சாத்திர நூல்கள் மெய்கண்ட தேவர் வழிவந்த சந்தான ஆசிரியர்களால் (ஞானபரம்பரையினர்) இயற்றப்பட்டவை என்பதனாலாகும்.
இந்துக்

Page 38
மனித வாழ்வியலின் உண்மைகளை உள்ளவாறு கண்டுணர்ந்து வகுத்து விளக்குகின்ற நூல்களாதலால் இவற்றிற்கு மெய்கண்ட நூல்கள் எனும் பெயர் பொருந்துவ தாயிற்று என்றும் அறிஞர் கூறுவர்.
பதினான்கு தமிழ்ச் சித்தாந்த சாத்திரங்களில் இடம்பெறும் சைவசித்தாந்தப் பொருள் நிலை தனித்தனி நோக்கத்தன.
திருவுந்தியார்
திருவியலூர் உய்யவந்ததேவநாயனார் அருளிய திருவுந்தியார், சித்தாந்த சாத்திரங்கள் பதினான்கினுள்ளும் முதலாவதாக வைத்து எண்ணப்படும் சிறப்பினை உடையது. திருவுந்தியாரும், அதனை அடியொற்றி எழுந்த திருக் களிற்றுப்பாடியாரும் மெய்கண்டதேவரின் சிவஞான போதத்திற்குக் காலத்தால் முற்பட்டவை. எனவே அவை இரண்டையும் முதலிற் கூறி, அதன் பின்னரே சித்தாந்த முதல் நூலாகிய சிவஞான போதத்தைக் கூறுவது என்ற மரபு காணப்படுகின்றது.
திருவுந்தியார், நாற்பத்தைந்து கலித்தாழிசைகளைக் கொண்டு விளங்குகின்றது. ஒவ்வொரு தாழிசையிலும் இரண்டாவது, மூன்றாவது அடிகள் “உந்தீபற” என்று முடிவுறுகின்றன.
திருவாசகத்திலும் இருபது தாழிசைகளைக் கொண்ட திருவுந்தியார் என்னும் பகுதி இருப்பது குறிப்பிடத்தக்கது.
உந்தி பறத்தல் என்பது, விளையாடும் பெண்டிர் இருகைகளையும் இரு மருங்கும் நேராக நீட்டிக் கால் விரல்களின் மேல் பாடிச் சுழன்று மகளிர் ஆடும் ஒர் ஆட்ட வகையாகும். இது பல்வரிக் கூத்துக்களில் ஒன்று என்றும் தெரிய வருகின்றது. இந்நூலில் உள்ள பாட்டு வரிகளுள் முதல் இரண்டினை ஒரு பெண் கூற, கருத்து வகையில் அவற்றைத் தொடர்ந்து முற்றுவிப்பதாய் மூன்றாம் அடியை மற்றொருத்தி கூறுவதாகக் கூறும்படி தொடர்கள் அமைந்துள்ளன.
திருவுந்தியாரில் உள்ள, உந்தீபற என்பது விளையாட்டுப் பாடலுக்குரிய மகுடமாக அமைந்துள்ளது. ஏனைய பாடற் பகுதிகளே பொருளுணர்த்துவனவாயுள்ளன. இவ்வாறன்றி, “உம்முடைய தீமைகள் பறந்து போகுமாறு நிற்பீர்” எனவும் உந்தீபற என்பதற்குப் பொருள் கூறுவதுண்டு.
இந்நூல் பிற சித்தாந்த சாத்திர நூல்கள் போல முப்பொருள் இயல்புகளை அளவை முறையில் கூறாது உபதேச முறையில் தமக்கு ஏற்பட்ட உணர்வின் அனுபவங்களை வெளியிடும் பாடல்களையுடையது.
இந்நூல் கூறும் பொருள் நிலையைச் சாதனமும் பயனும், ஆதார நிராதர யோகங்கள், இன்புறு நிலை, பெறுதற்கரிய
இந்துக்கலைக்களஞ்சியம்

தத்துவ உணர்வு, வாசியோகம், பாசவீடு, சிவப்பேறு, அணைந்தோர் தன்மை, பரமுக்தியின் இயல்பு, உய்யும் நெறி, குருவாழ்த்து, நூற்பயன் எனப் பகுத்து நோக்கலாம். திருவுந்தியார் யோக நெறியையும், ஞான நெறியையும் விளக்குகின்ற நூலாக அமைந்துள்ளது. சைவ சித்தாந்தச் செந்நெறியில் நின்று ஆசிரியர் எய்திய பேரின்ப அனுபவத்தை இந்நூல் இயம்புகின்றது. சொல்லுக்கு அடங்காத இன்பத்தைச் சொல்ல வருகின்ற ஆசிரியர், தமது பாடல்கள் பலவற்றிலும், குறியீட்டுச் சொற்களாலேயே உணர்த்துகிறார். இதன் விளைவாகப் பல பாடல்கள் பிசிச் செய்யுள்களைப் போலவே அமைந்துள்ளன.
கிடந்த கிழவியைக் கிள்ளி எழுப்பி உடந்தையுடனே நின்று உந்தீபற உன்னையே கண்டது என்று உந்தீபற
பொற்கொழுக் கொண்டு வரகுக்கு உழுவது என அக்கொழு நீ அறிந்து உந்தீபற அறிந்து அறியா வண்ணம் உந்தீபற
முத்தி முதலுக்கே மோகக் கொடி படர்ந்து அத்தி பழுத்தது என்று உந்தீபற அப்பழம் உண்ணாதே உந்தீபற என்பன போன்ற பல பாடல்கள் இதற்கு எடுத்துக் காட்டாக அமைகின்றன. திருவுந்தியாரின் முதற்பாடல்,
அகளமாய் யாரும் அறிவு அரிது, அப்பொருள் சகளமாய் வந்தது என்று உந்தீபற தானாகத் தந்தது என்று உந்தீபற என வருகின்றது. உயிர் பதிப்பொருளில் இருந்து வேறுபட்டது. எனவே, பரம்பொருளை அப்பொருள் என்று சுட்டுச் சொல்லால் ஆசிரியரும் குறித்தார். பரம்பொருள் அங்கிங் கெனாதபடி எங்கும் நிறைந்திருப்பதே ஆயினும், கட்டுண்ட நிலையில் உள்ள உயிர்களுக்கு அது எட்டாப் பொருளாகவே உள்ளது. இதனையே ஆசிரியர்'அப்பொருள்' என்ற சேய்மைச் சுட்டினாற் பெறவைத்தார்.
சைவ சித்தாந்தம் மிகத் தெளிவாக இறைவன் உருவம் உடையவனல்லன். அருவுருவம் உடையவனல்லன். அருவமான வனுமல்லன் என்று மூன்றையும் கூறி “நிறுத்துவன் நினைத்தமேனி நின்மலன் அருளினாலே’ (சிவஞான சித்தியார் 65) என்று வரையறை செய்கின்றது. அதாவது இறைவன் தன்னியல்பிலே உருவம் கடந்தவன். அவன் உயிர்கள்மீது கொண்ட பெருங் கருணையினால் அருவுருவத் திருமேனியும், உருவத் திருமேனியும் தரித்துக்கொண்டு உயிர்களின் கருமேனியைக் கழிப்பதற்காகக் காட்சி தருகின்றான். இக்கருத்துக்கள் சிவஞானபோதம், சிவஞான சித்தியார் போன்ற சாத்திர நூல்களில் மிக விரிவாக விளக்கப்பட்டுள்ளன. இவற்றையே "அகளமாய் நின்றது” என்ற சொற்களாலும், “சகளமாய்த் தந்தது” என்ற சொற்களாலும் உய்யவந்த தேவநாயனார் இத்தாழிசையில் மிகச் சுருக்கமாக

Page 39
எடுத்துரைத்துள்ளார். சிவபெருமானின் திருமேனி அவனது கருணையே வடிவானது என்பது சைவ சித்தாந்தத்தில் ஏற்றுக் கொள்ளப்படுகின்ற கொள்கையாகும். இக்கருத்தே, "தானாகத் தந்தது” என்ற சொற்களால் இங்கு உணர்த்தப்பட்டுள்ளது.
திருவருளை ஆன்மா பற்றும் முறைமையை,
பற்றை அறுப்பது ஒர் பற்றினைப் பற்றில்அப் பற்றை அறுப்பர் என்று உந்தீபற பாவிக்க வாரார் என்று உந்தீபற என்னும் பாடல் விளக்குகின்றது.
உலகப் பற்றினை விடுவதே சிவத்தைப் பற்றுவதற்கு வழியாகும். ஆன்மா உலகியலில் ஆட்பட்டுப் பழகிவந்த பழக்கத்திலிருந்து எளிதில் விடுபடுவதில்லை. உலகப் பற்றை விடுவதற்குப் பழகிய பழக்கத்திலிருந்து விடுபட வேண்டும். மனத்தைப் பழகிய வழியில் செல்லவிடாமல் மன மாற்றம் செய்ய வேண்டும். இது திருவுந்தியாரில்,
பழக்கம் தவிரப் பழகுவது அன்றி உழப்புவது என் பெனே உந்தீபற ஒரு பொருளாலே என்று உந்தீபற என வருகின்றது.
சிவானுபவத்தில் அழுந்தி நிற்பவர்கள் அதனைக் கைவிட்டு விடாமல் அதில் உறுதியுடன் நிற்பவர்கள் என்பதை,
வித்தினைத் தேடி முளையைக் கைவிட்டவர் பித்து ஏறினார்கள் என்று உந்தீபற பெறுவது அங்கு என்பெனே உந்தீபற. என்னும் பாடல் விளக்குகின்றது.
சிவன் குரு வடிவில் வந்து அருள் செய்யும் பான்மையும், ஆன்மா சிவமாம் தன்மையைப் பெற்றுச் சிவானந்தத்தை அனுபவிக்கும் திறனும் திருவுந்தியாரில் நன்கு விளக்கப்பட்டுள்ளன. இவ்வாறு ஆன்மீக வளர்ச்சிக்குரிய அரிய சைவ சித்தாந்தக் கருத்துக்கள் இந்நூலில் இடம் பெற்றுள்ளன.
திருக்களிற்றுப் படியார் சைவ சித்தாந்த சாத்திர நூல்களின் வரிசையில் இரண்டாவது நிற்பது திருக்களிற்றுப் படியார் ஆகும்.
முன்னே தோன்றிய திருவுந்தியார் முதல் நூலாய் அமைய, அதன் வழித் தோன்றிய திருக்களிற்றுப்படியார் வழிநூலாயிற்று. இவ்விரண்டும் மூலமும் உரையும் போல் விளங்குவன, பொருள் வகையால் ஒன்றே என்னும்படி நெருங்கிய தொடர்புடையன.
திருக்களிற்றுப்படியாரின் ஆசிரியர் திருக்கடவூர் உய்யவந்ததேவர் ஆவர். அவர் இந்நூலை நூறு வெண் பாக்களில் அருளிச் செய்துள்ளார். அவர் திருவுந்தியாரின் ஆசிரியராகிய திருவியலூர் உய்யவந்ததேவரின் மாணவராகிய திருவியலூர் ஆளுடைய தேவநாயனாரின் மாணவர் ஆவர்.
1994.80

திருக்களிற்றுப் படியாரில் உள்ள இரண்டு செய்யுட்கள் இதன் ஆசிரியருக்குக் குரு பரம்பரையில் ஞானநூற்பொருள் கிடைத்த வரலாற்றைக் குறிப்பனவாய் அமைந்துள்ளன.
“தன் முனைப்புடன் கூடிய அறிவு கெட்டுத் திருவருளில்
நிலைத்து நின்று யான் அறிந்த உண்மைகளை ஞானத்தில் வேட்கையுடையார் கேட்டுணர்க என்று கூறி, ஒருவர் எனக்கு உபதேசம் செய்தார். உய்ய வந்த தேவராகிய அக்குருநாதர் சொல்லியவாறே யான் உனக்குச் சொல்லுகிறேன். என்னை ஆட்கொண்ட குருவாகிய ஆளுடைய தேவர் எனக்கு உணர்த்திய அப்பொருளை, மாணவனாகிய உனக்கு யான் இப்பொழுது உணர்த்தலுற்றேன்” என்று திருக்கடவூர் உய்யவந்த தேவர் நூலின் தொடக்கத்தில் முன் ஆசிரியர்களாகிய இருவரையும் குறிப்பிட்டுள்ளார். இது திருக்களிற்றுப்படியாரில்,
என்னறிவு சென்றளவில் யான்நின்று அறிந்தபடி
என்னறிவிலார் அறிக என்றொருவன் - சொன்னபடி
சொல்லிக்கேள் என்று ஒருவன் சொன்னான் எனக்கு
அதனைச்
சொல்லிக் கேள் யான் உனக்கு அச் சொல் (செய், 3) எனவரும். இங்கு, என் அறிவு சென்ற அளவில் யான் நின்று அறிந்தபடி சொன்ன ஒருவன், ஆளுடைய தேவர் ஆவர். யான் உனக்கு அச்சொல் சொல்லக் கேள் என்று அருளியவர் இந்நூல் ஆசிரியர் ஆவர்.
நூலின் இறுதியில் தமது ஞானாசிரியராகிய ஆளுடைய தேவரின் பெருமையையும், அவர் தம்மை ஆட்கொண்ட திறத்தையும், எடுத்துரைத்துப் போற்றியுள்ளார். அச்செய்யுள் திருக்களிற்றுப்படியாரில்,
ஆளுடையான் எந்தரமும் ஆளுடையானே அறியும் தாளுடையான் தொண்டர் தலைக்காவல் - நாளும் திருவியலூர் ஆளும் சிவயோகி இன்று என் வருவிசையை மாற்றினான் வந்து (செப்.96) எனவரும் இச் செய்யுளில் தம்மை ஆட்கொண்டருளிய குருநாதரின் பெயர் 'ஆளுடைய தேவர் என்பதையும், அவர் திருவியலூரில் வாழ்ந்தவர் என்பதையும், தகுதி சிறிதும் இல்லாத தன்னையும் ஆட்கொண்டு யான் எனது என்று முனைந்து செயற்படும் வேகத்தை மாற்றினார் என்பதையும் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளமை காணலாம்.
சிதம்பரத்தில் நடராஜர் ஆனந்தக் கூத்து ஆடுகின்ற அரங்கினை ஏறிச்சென்று அடைவதற்கு ஐந்து படிகள் உள்ளன. அவை பஞ்சாக்கரப்படிகள் எனப்படும். அப்படிகளின் இருபக்கங்களிலும் பக்கத்திற்கு ஒன்றாகக் கல்லால் அமைக்கப்பட்ட இரு களிறுகள் துதிக்கையை நீட்டி இருப்பது போல் அமைக்கப்பட்டுள்ளன. அதனால் அப்படிகளைத் திருக்களிற்றுப்படி என்று வழங்குதல் மரபு. சுந்தரமூர்த்தி நாயனார் சிதம்பர நடராசரை வழிபடச் சென்று நின்ற நிகழ்ச்சியைச் சேக்கிழார் பெரியபுராணத்தில், “செய்தவப் பெரியோன் சென்று தாழ்ந்து எழுந்தான் திருக்களிற்றுப்படி
இந்துக்கலைக்களஞ்சியம்

Page 40
மருங்கு” (தடுத்தாட் கொண்ட புராணம், 106) எனக் குறிப்பிடுவது நோக்குதற்குரியதாகும். இத்தகைய சிறப்பு மிக்க சிதம்பர நடராசனின் சந்நிதியில் உள்ள திருக்களிற்றுப்படியில் இந்நூலை வைக்க அதனைக் கல்லால் இயன்ற யானை, தன் துதிக்கையால் எடுத்து நடராஜப் பெருமானின் திருவடியில் வைத்ததெனவும், அதில் இருந்து இந்நூல் திருக்களிற்றுப் படியார் என்னும் பெயரினைப் பெற்றது எனவும் கூறுவர்.
ஞானசிரியரின் உபதேசமே சாத்திரப் பொருள்களைத்
தெளிவுபடுத்தவல்லது என்ற கருத்து திருக்களிற்றுப்படியாரில்,
சாத்திரத்தை ஒதினார்க்குச் சற்குருவின் தன் வசன
மாத்திரத்தே வாய்க்கும் நலம் வந்துதுமோ-ஆர்த்த கடல்
தண்ணிர் குடித்தவர்க்குத் தாகம் தனிந்திடுமோ
தெண்ணிர்மை யாய் , இதனைச் செப்பு எனவரும். அருளாசிரியர் இன்றித் தாமே நூல்களை ஒதி உணர்ந்து கொள்ளமுடியும் என்று எண்ணிக் கற்க முயல்வது, கடல் நீரை நேரே பருகித் தாகத்தைத் தணித்துக் கொள்ள முயல்வது போன்றது என்று இச்செய்யுள் கூறுகிறது. குருமொழி வழியில் அறிவுபெறுதலன்றிச் சாத்திரம் பயன் தராது என்பது இதன் நுண்பொருள் ஆகும்.
உயிருக்குயிராய் உள்ள இறைவனே பக்குவம் வந்தபொழுது ஞானகுருவாய், வெளிப்படுவான் என்பதும், பக்குவம் இல்லாத பொழுது அவன் வெளிப்படான் என்பதும் சைவசித்தாந்தத்தின் அடிப்படைக் கோட்பாடாகும். தாயன்பே, பாலும் கண்ணிருமாய் வெளிப்படுதல் போல, உயிருக்குப் பக்குவம் வராத பொழுது நுண்ணியனாய் மறைந்து நின்ற இறைவனே பக்குவம் வந்த பொழுது குருவடிவாய் வெளிப்பட்டுத் தோன்றுவான் என்பது திருக்களிற்றுப் படியாரில்,
சுரந்த திருமுலைக்கே துய்ய சிவஞானம் சுந்துண்டார் பிள்ளையெனச் சொல்லச் சொல்லச்-சுரந்த தனமுடையார் தென்பாண்டி மாதேவி தாழ்ந்த மனமுடையார் அன்பிருந்தவாறு (செப்.54) என வருகின்றது. பாலும், கண்ணிரும் அன்பின் வடிவம் என்பது இச் செய்யுளில் நுட்பமாக உணர்த்தப்பட்டுள்ளது. மற்றும் மங்கையற்கரசியின் அன்பின் திறத்தையும் இச்செய்யுள் சுட்டி நிற்கின்றது. இந்நூலில் சீவன் முத்தர் இயல்பு விரிவாகக் கூறப்பட்டுள்ளது. சீவன் முத்தர்கள் தமது உணர்வை உலகப் பொருள்களின் புறத்தே செலுத்தாமல் அகத்தே சிவத்தோடு பொருத்தி நின்று பேரின்பத்தைத் துய்த்த வண்ணமிருப்பர் (69). இவர்கள் சிவமாம் தன்மை பெற்று விளங்குவதால் சிவத்தின் ஆணையில் சீவன் முத்தர்களது செயல்கள் யாவும் சிவன் செயலாகவே நிகழ்த்தப்படும்.(69) என்று இந்நூல் குறிப்பிடுகின்றது. சீவன் முத்தர்கள், அத்தகைய வல்லமை வாய்க்கப் பெற்றவர்கள் என்பதைச் சுட்டவே திருஞானசம்பந்தர் (70), திருநாவுக்கரசர்(71), சுந்தரமூர்த்தி நாயனார்(72), மாணிக்கவாசகர் (73) ஆகிய நால்வர் செய்த செயற்கரிய அற்புதச் செயல்கள் பலவற்றை இந்நூல் குறிப்பிடுகின்றது.
இந்துக்கலைக்களஞ்சியம்

சைவத்தில் வன்பக்தி என்ற புதிருக்கு விடை கூறுவதாக அமைந்து விளங்குவது இந்நூலாகும். சீவன் முத்தர்களின் பத்திச் செயற்பாடுகளை, இந்நூலாசிரியர், மெல்வினை வல்வினை எனக் கூறுபடுத்தி வல்வினைகளும் நல்வினைகளாய் முத்திப்பேறு நல்கும் நுட்பத்தைப் புலப்படுத்துகின்றார்.
சரியை, கிரியை சார்பானவை மெல்வினை என்றும், சிறுத்தொண்டர் செயல் போல்வன வல்வினை என்றும் இந்நூல் குறிப்பிடுகின்றது. இவ்வகையிற் சண்டீசர் தாதையைத் தாளற வீசியதும், அரிவாட்டாய நாயனார் தம் கைவாளால் தம் மிடறரிந்ததும் வல்வினையின்பாற் படுதலை இந்நூல் குறிப்பிடுகின்றது.
இத்தகைய சைவசித்தாந்த நுட்பங்கள் பலவற்றைக் கூறும் இந்நூல், அம்மையப்பராக விளங்கும் சிவனை வாழ்த்தும் முறைமையுடன் (100) நிறைவு பெறுகின்றது.
சிறப்பு நூலாகிய திருக்களிற்றுப் படியாரைச் சாத்திர உரையாசிரியர் பலரும் குறிப்பிட்டுள்ளனர் என்பது ஒன்றே இந்நூலின் பெருமைக்குப் போதிய சான்றாகும். சிவஞான முனிவர் தமது மாபாடியத்தில் ஏழு இடங்களில் இதன் செய்யுள்களை எடுத்தாண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
சிவஞான போதம்
சிவஞானபோதம், சித்தாந்த சாத்திரங்கள் பதினான்கினுள் மணிமுடியாய் விளங்கும் சிறப்பிற்குரிய நூலாகும். இந்நூலை அருளிச் செய்த மெய்கண்டதேவர் கி.பி. பதின்மூன்றாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். மெய்கண்டதேவர் என்பது அவருக்கு வழங்கிய சிறப்புப் பெயராகும். பொய்யைப் பொய் என்று கண்டு நீக்கி மெய்யைக் கண்ட காரணத்தால் அச்சிறப்புப் பெயரைப் பெற்றார். அவரது இயற்பெயர் சுவேதவனப்பெருமாள் என்பதாகும்.
அவர் அருளிய சிவஞானபோதம் சொற் செட்டும், பொருட் செறிவும், திட்பமும், நுட்பமும் உடைய ஒரு தலையாய சைவ சித்தாந்த முதல் நூலாக விளங்குகின்றது.
இந்நூல் பன்னிரண்டு சூத்திரங்களால் ஆனது. சூத்திரங்கள் ஒவ்வொன்றும் மூன்றடிகள் அல்லது நான்கடிகள்
9–50)L–U J6ÜT.
சூத்திரத்தின் பொருள் ஐயம், திரிபுகளுக்கு இடமின்றி விளங்குதற் பொருட்டு ஒவ்வொரு சூத்திரத்திற்கும் கருத்துரையும், சுருக்கமான பொழிப்புரையும் மெய்கண்டதேவர் செய்துள்ளார். அப்பொழிப்புரை வார்த்திகம்' எனப்படும். அவ்வார்த்திகப் பொழிப்புரை பின்வருமாறு அமைந்துள்ளது.
ஒவ்வொரு சூத்திரத்தையும் அதன் பொருள் நிலையை வைத்துப் பல கூறுகளாக ஆசிரியர் வகுத்துள்ளார்.

Page 41
ஒவ்வொரு சூத்திரமும் பொருட் பிரிவு செய்யப் பெற்று, ஒவ்வோர் கூறாக (அதிகரணமாக) வகுக்கப்பட்டிருக்கின்றது. அவ்வாறு வகுத்துக் கொள்ளும் கூறு அல்லது பகுதியே அதிகரணம் எனப்படும்.
ஒவ்வொரு கூறிலும் (அதிகரணத்திலும்) மேற்கோள், ஏது, எடுத்துக்காட்டு என்னும் மூன்று உறுப்புகள் இடம் பெறும். மேற்கொள் என்பது சூத்திரத்திலிருந்து பெறப்படும் கருத்தமைவு ஆகும். எது என்பது அம்மேற்கோளை நிறுவுவதற்கு ஆசிரியர் உரைப்பதாகும். எடுத்துக்காட்டு என்பது அந்த ஏதுவை வலியுறுத்துவதற்கு வருவதாகும். இம்மூன்றினுள் மேற்கோளும், ஏதுவும் உரைநடையாய் அமைந்தவை. எடுத்துக் காட்டு செய்யுளாய் அமைந்தது. இவ்வாறு ஒவ்வோர் அதிகரணமும் பொருள், ஐயப்பாடு, பிறர்பக்கம், சித்தாந்தத் துணிபு, இயைபு என்ற ஐந்திற்கும் நிலைக்களமாக விளங்குகின்றதெனலாம்.
சிவஞானபோதம் பிரமசூத்திர அமைப்பில் பிரமாண இயல், இலக்கண இயல், சாதன இயல், பயன் இயல் எனும் நால்வகை அமைப்பில் அமைக்கப்பட்டுள்ளது.
சிவஞானபோதத்தின் முதல் ஆறு சூத்திரங்கள் பொது அதிகாரம் எனவும் , பின் ஆறு சூத்திரங்கள் உண்மை அதிகாரம் எனவும் அமைக்கப்பட்டுள்ளன. பொது அதிகாரம் பிரமான இயல், இலக்கண இயல் எனும் இரு பகுதிகளை உடையது. பிரமாணம் பொருள்கள் இருக்கின்றன என்பதைத் தெரிவிப்பது. இலக்கணம் என்பது அவ்வாறு இருக்கும் பொருள்களின் தன்மையைத் தெரிவிப்பது உண்மை அதிகாரம் சாதன இயல், பயன் இயல் எனும் இருபகுதிகளையுடையது.
சிவஞான போதம் திருமுறைகளில் இடம்பெறும் சாத்திரக்
கருத்துக்களை முறைப்படுத்தித் தருக்க இயல் முறையில் முப்பத்தொன்பது அதிகாரங்களாக விளக்குகின்றது .
சிவஞான போத நூலின் தொடக்கத்தில் ஆசிரியர் செய்த பாயிரம் உள்ளது. அதில் கடவுள் வாழ்த்துச் செய்யுள் ஒன்றும், அவையடக்கச் செய்யுள் ஒன்றுமாக இரண்டு செய்யுள்கள் உள்ளன.
கடவுள் வாழ்த்து: பல நூல்களையும் கற்பதலால் வரும் குழப்ப உணர்வு நீங்கித் தெளிவுணர்வு பெறுவதற்குக் கல்லால் நிழலில் யோக வடிவம் கொண்டு எழுந்தருளியிருந்து அருள் புரியும் சிவபெருமான் திருவருள் வேண்டும். பொல்லாப் பிள்ளையாராகிய விநாயகப் பெருமானை வழிபடுகின்றவர்க்கு அத்திருவருள் எளிதிற் கைகூடும். இது சிவஞானபோதக் கடவுள்வாழ்த்தில்,
கல்லால் நிழல்மலை
வில்லார் அருளிய
பொல்லார் இணைமலர்
நல்லார் புனைவரே.
என வரும்.

15
அவையடக்கம் முதற் பொருளைத் தலைப்பட்டு உணரும் உணர்வே மெய்யுணர்வு எனப்படும். அவ்வுணர்வு உயிரின் இயல்பை முதற்கண் தெளிய உணர்ந்தார்க்கே வரக் கூடியது. முதலில் தமது உயிரின் இயல்பினை உணர்ந்து, பின் தம்மை உடையவனாகிய தலைவனது - இறைவனது இயல்பைத் தெளிய உணர்ந்தோர், சிவத்துவம் விளங்கப் பெற்றுச் சிவனை ஒப்பர். அத்தகைய உண்மை அனுபவம் பெற்றவர் எம்மாற் செய்யப்படும் இச் சிவஞானபோத நூலை இகழாது நல்லதெனக் கண்டு ஏற்றுக் கொள்வர். இனி, தம் இயல்பையே உணரமாட்டாதவர் தலைவனையும் உணரமாட்டாதவரே ஆவர். அன்னோர் தம்முள் ஒன்றுபடுதலின்றி ஒருவரோடொருவர் முரண்பட்டுப் பலவற்றைக் கூறுவர். அத்தகையோர் எம்மையும் எமது நூலையும் இகழ்ந்து கூறுதல் இயல்பாகும். ஆதலால் அவர்கள் கூறும் இகழ்ச்சி உரையை யாம் பொருட்படுத்தோம். இதுவே அவையடக்கத்தில்,
தம்மை உணர்ந்து தமை உடைய தன் உணர்வார் எம்மை உடைமை எமை இகழார் - தம்மை உனரார் உடங்கு இயைந்து தம்மிற் புனராமை கேளாம் புறன். எனக் கூறப்பட்டுள்ளது.
சிவஞானபோதத்தின் பொருள் நிலை பின்வருமாறு அமைந்துள்ளது:
முதற் சூத்திரம் முதலாம் சூத்திரம் மூன்று கூறுகளையுடையது. உலகம் அவன் அவள் அது எனச் சுட்டி அறியப்படுவது. அதனால் அது தோன்றி நின்று மறைந்து மீளத் தோன்றுவதாய் உள்ளது என்பது விளங்கும். இங்ங்னம் மாற்றமடையும் இவ்வுலகை நியமித்து ஒழுங்குபட நடத்திவரும் முதல்வன் ஒருவன் இருத்தல் வேண்டும். அவன் சுட்டி அறியப்படாதவனாய், எவ்வகையான மாறுதலும் இல்லாத செம்பொருளாய், எல்லாவுலகையும் ஒருங்கே ஒடுக்கி ஒருங்கே தோற்றவல்லவனாய் இருத்தல் வேண்டும். உயிர்கள் அறியாமையாகிய தம்மியற்கைக் குற்றம் நீங்கி அறிவு வளர்ச்சி பெற்று மேம்படுதற் பொருட்டே உலகப் படைப்பை முதல்வன் மேற்கொள்கின்றான். இக்காரணங்களால் முதல்வனை உலகின் பரம ஆதார நிமித்த காரணன் என்று உணர்தல் வேண்டும். முற்றழிப்பைச் செய்யும் கடவுளே முதல்வன் ஆவான். சங்கார காரணனாய் உள்ள முதலையே முதலாக உடையது இவ்வுலகம் என்பது இச்சூத்திரக் கருத்துரையாகும்.
இரண்டாம் சூத்திரம் இரண்டாம் சூத்திரம் நான்கு பகுதிகளையுடையது. முதற் சூத்திரத்தில் சொல்லப்பட்ட முழுமுதற் கடவுள் இவ்வுலகைப் படைக்கும் போது உயிரோடும் உலகத்தோடும் கலந்து ஒன்றாய், பொருட்டன்மையால் வேறாய், உயிர்க்குயிராகும் தன்மையால் உடனாய் நின்று படைப்பான். உயிர்கள் செய்த நல்வினை தீவினைகளைப் பொறுத்து அவற்றின் பயனை இறைவனே அவற்றிற்கு ஊட்டுகிறான். உயிர்கள் இறத்தல் பிறத்தல் மூலமாகவே இறைவன்
இந்துக்

Page 42
ஆணையினால் தம் வினைகளை நுகர்ந்து கழிக்க வேண்டும். இவ்வாறு உயிருக்கு உதவும் ஆணையாகிய தன் சக்தியோடு இறைவன் பிரியாது நீக்கமின்றி என்றும் நிறைந்து நிற்பான்.
மூன்றாம் சூத்திரம்: இச் சூத்திரம், உயிர் உண்மையை ஏழு காரணங்களால் உணர்த்துகின்றது. 1. உடல், பொறிகள், நுண்ணுடல் என்பவற்றை ஒவ்வொன்றாகக் கழித்து “இது ஆன்மா ( உயிர்) அல்ல” என்று கூறுவதால் ஆன்மா உளது. 2. உடலின் வேறாக “( எனது உடல்) இது என்னுடைய உடல் என்று” சொல்லும் நான் என்ற பொருளே ஆன்மா 3. ஐம்பொறிகள் ஒன்று அறிந்ததை மற்றொன்று அறியாது. எனவே ஐம்பொறிகள் அறிவதை இணைத்தும், அவற்றைத் தனித்தனி அறிவதும் ஆகிய ஆன்மா வேறு உண்டு. 4. கனவில் அறிவதை நனவில் மாறி அறிவதால் ஒடுக்கமாகிய கனவு நிலையில் இயங்கும் சூக்கும உடலுக்கு வேறாக ஆன்மா உண்டு. 5. உறக்கத்தில் பிராணவாயு உண்டு. ஆனால் உடலுக்கு நுகர்ச்சியும் செயலும் இல்லை. எனவே பிராண வாயு ஆன்மா அன்று. 6. ஆன்மா உணர்த்த உணர்கிறது என்னும் அனுபவ அறிவால் தானே அறியும் கடவுளுக்கு வேறாக ஆன்மா உண்டு. 7. தூல சூக்கும உடல்களுக்கு உடல் என்ற பெயர் மட்டுமே விளங்குவதால் அவ்வுடலுக்கு வேறாக (மாயா இயந்திர தநுவுள்) ஆன்மா உள்ளது.
இச் சூத்திரத்தில், சைவசித்தாந்தம் கூறும் ஆன்மக் கோட்பாட்டிற்கு மாறுபட்ட சூனியமே ஆன்மா, பருவுடம்பே ஆன்மா, இந்திரியங்களே ஆன்மா, சூக்கும தேகமே ஆன்மா, பிராணவாயுவே ஆன்மா, பிரமமே ஆன்மா, அனைத்தும் கூடிய தொகுதியே ஆன்மா என்னும் ஏழுவகையான மாறுபட்ட கருத்துக்கள் மறுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நான்காம் சூத்திரம் அந்தக் கரணங்களாகிய மனம், புத்தி, அகங்காரம், சித்தம் என்பன ஆன்மா அல்ல. அவற்றின் துணை கொண்டு- (அரசன் அமைச்சர்களோடு செயல்படுதல் போல) ஆன்மா அறிகின்றது. ஆனால், உயிரானது ஆதியிலிருந்தே ஆணவ மலத்தோடு கூடியிருப்பதால் அறிவதில்லை. இவ்வறியாமை நீங்க உயிர் உடலிலுள்ள கருவிகளோடு கூடியும் பிரிந்தும் நனவு, கனவு , உறக்கம், பேருறக்கம், உயிர்ப்படங்கல் என்னும் ஐந்து உணர்வு நிலைகளில் (அவத்தைகள்) இறங்கியும் ஏறியும் வரும். ஆன்மாவிற்கு உளதாகும் அறியாமை ஆணவச் சார்பால் வந்த செயற்கை என்பது இதன் முக்கியக் கருத்தாகும்.
ஐந்தாம் சூத்திரம். இது இறைவனின் திரோதான (மறைப்பு) சக்தியை விளக்குகின்றது. மெய், வாய், கண், மூக்கு, செவி என்னும் ஐம்பொறிகளும் தத்தமக்குரிய ஊறு, சுவை, ஒளி, நாற்றம், ஒசை ஏற்பவற்றை அறியும்போது உயிரால் செலுத்தப்பட்டே அறியும். ஆயினும், அவை தம்மை நோக்கியும் அறிவதில்லை. தம்மைச் செலுத்தும் உயிரையும் அறிவதில்லை. அதுபோல உயிர் பொருளை அறியும் போதும், ஒரு செயலைச்
இந்துக்கலைக்களஞ்சியம்

செய்யும் போதும் முதல்வன் அருளால் அறிவிக்கப் பெற்றும் செலுத்தப் பெற்றும்தான் அறிகிறது; செய்கிறது. ஆயினும் அது பொருள் நோக்கு (objective consciousness) உடையதாகவே இருத்தலின்தன்னை நோக்கியும் அறிவதில்லை. தன்னுணர்வின் முதலாகிய திருவருளையும் அறிவதில்லை. முதல்வன் எல்லா ஆன்மாக்களையும் அறிவித்தும் தொழிற்படுத்தியும் வருவது, காந்தம் தான் அசைவின்றி இருந்து இரும்புத் துண்டுகளைத் தன் ஆற்றலில் அடங்கக் கொண்டு இயங்குதல் போலும் ஆகும். அச் செயல்களால் அவன் சிறிதும் மாற்றம் அடைவதில்லை. மாயையின் சார்பால் ஏகதேச அறிவு விளங்கப் பெறும் உயிர்க்கு முதல்வனது உபகாரம் பற்றி உணர்த்துகிறது இச் சூத்திரம்.
ஆறாம் சூத்திரம்: கடவுள் எவ்வாறு அறியப்படுகிறார் என்பதை இச் சூத்திரம் விளக்குகின்றது. 'கடவுள் நம் அறிவால் அறியப் படுபவனா, அல்லனா? என்பது வினா. அறியப்படுபவன் என்றால் அறியப்படும் பொருளெல்லாம் சடமாயும் அழி பொருளாயும் இருத்தல் நியதியாதலால், இறைவனும் அழிபொருள் என்பதாய் முடியும். இனி, அவன் எவ்வாற்றானும் அறியப்படாதவனே எனின், நம் உணர்வில் தட்டாத பொருளால் நமக்கு எந்தப் பயனும் உண்டாகாது. ஆதலால் அவனை இல்பொருள் எனக் கொண்டதாகவே முடியும். ஆதலால் முதல்வனை நம் சுட்டறிவுக்கு அப்பாற்பட்டவன் எனவும், பாசங்களின் நீங்கி சுட்டுதலின்றி ஒன்றித்து நின்று உணரும் மெய்யுணர்வுக்கு விளங்குபவன் எனவும் மெய்யுணர்ந்தோர் கொள்வர். அவர் சுட்டறிவுக்கு அப்பாற்படுதலின் சித்துப் பொருள் எனவும், மெய்யுணர்வுக்கு விளங்குதலின், உள் பொருள் எனவும் துணிந்து, அவனைச் சிவசத்து என மெய்யுணர்ந்தோர் கூறுகின்றனர். இறைவன் தானே அறிவால் அறிகின்ற தன்மையால் சிவசத்தாக (அறிவு வடிவாக) அறியப்படுகிறார்.
ஏழாஞ் சூத்திரம் இச் சூத்திரம் யாருக்குச் சாதனம் தேவை என்பதை உணர்த்துகின்றது. சத்தாகிய சிவத்தின் முன் அசத்தாகிய உலகம் முனைந்து நிற்கமாட்டாமையால் சிவம் உலகத்தை நுகராது; உலகம் அறிவிலது ஆதலால், சிவத்தை அறியாது. இரண்டையும் அறிந்து அழுந்துவது இரண்டும் அல்லாத சதசத்து எனப்படும் ஆன்மாவே ஆகும். அவற்றை அறிந்து அழுந்தும் போது, ஆன்மா அசத்தாகிய குணவடிவில் உள்ள பொருள்களை அசத்தாகிய தனு, கரணம் என்பவற்றால் அறிந்து அசத்தாகிய குணமயமாய் நின்று தன்வேதனைப்படும். இது பிறப்பு நிலை. இங்ங்னமே, வீட்டு நிலையில் அது அசத்தாகிய சிவத்தைச் சத்தாகிய அதன் திருவருளைச் சார்பாகக் கொண்டு உணர்ந்து, சத்தாகிய சிவத்தின்கண் உள்ள தூய எண் குணங்களும் தன்பால் மேம்பட்டு நிற்கச் சிவமாய் நிற்கும்.
எட்டாம் சூத்திரம்: இச் சூத்திரம் ஆன்மா உய்தி பெற எது சாதனம் என்பதை விளக்குகின்றது. ஆன்மாவானது முற்பிறவிகளில் பயன் கருதாது செய்து வந்த சரியை, கிரியை,

Page 43
யோகம் ஆகிய தவ முயற்சியினால், உயிர்க்குயிராய் மறைந்து நின்று உணர்த்தி வரும் முதல்வன் அருளாசிரியனாய்த் தோன்றி நின்று மெய்யுணர்வை விளக்கியருளுவன். மன்னவன்மகன், அறியாமை காரணமாக வேடரிடத்தே தங்கி விதிவிலக்கு அறியாது தன் உரிமையை மறந்து வாழ்ந்து வருதல் போல, சிவத்தைச் சார்ந்து சிவானந்தப் பெருஞ் செல்வத்தைப் பெற்று நிலையாக வாழ்வதற்கு உரிய சிவகுமாரன் ஆகிய உயிர், ஐம்பொறிகள் முதலிய தத்துவக் கூட்டத்தைச் சார்ந்து, தன் இயல்பையும், தனக்கும் முதல்வனுக்கும் உள்ள சம்பந்தத்தையும் அறிந்து கொள்ளாமல், பிறந்திறந்து உழன்று துன்புறும். இதனை ஆசிரியன் உணர்த்த தவமுயற்சியுள்ள உயிர் உணரும். உணர்ந்தவுடன் தத்துவக் கூட்டங்களின் நீங்கி முதல்வன் திருவடியில் பிரிப்பின்றி ஒன்றி, (ஆன்மா) இன்புறும். பக்குவம் வரும்போது இறைவன் குருவடிவில் வந்து ஆட்கொள்வான். எனவே குருவருளே ஆன்மாவுக்குச் சாதனமாகும் என்பது இச்சூத்திரப் பொருளாகும்.
ஒன்பதாம் சூத்திரம் : இச் சூத்திரம் சைவசித்தாந்த நெறியில் நிற்போர் ஞானத்தை அடையும் (சாதிக்கும்) முறையினைக் குறிப்பிடுகின்றது. பாசஞானத்தாலும் பசுஞானத்தாலும் அறிய முடியாத பேரின்ப முதல்வனைத் திருவருள் ஞானமாகிய பதிஞானம் எனப்படும் சிவஞானத்தால் ஒருவன் தன் அறிவின் கண் நாடுதல் வேண்டும். அப்போது பாசம் விடுபட, இறைவன் தண்ணிய நிழல்போலத் தோன்றுவான். அவ்வாறு தோன்றும் இறையுணர்வு தொடர்ந்து நீங்காதிருக்க இறைவனின் திருவைந்தெழுத்தை முறையாக எண்ண வேண்டும் என்பது இச்சூத்திரக் கருத்தாகும்.
அசத்தாகிய தத்துவங்களோடு கூடுவதால் ஆன்மாவுக்கு உண்டாகும் சுட்டுணர்வு பாசஞானம் எனப்படும். மூன்றாம் சூத்திரத்திற் கூறப்பட்டவாறு, உயிர், “நான் யார்”எனத் தன் உண்மையை நோக்கி ஆராய்ந்து உணரின் அது மாயாகாரியமாகிய தத்துவக் கூட்டங்களின் நீங்கித் தன் இயற்கையாகிய வியாபக உணர்வு நிலையைப் பெறும். அந்நிலையில் தத்துவங்களாகிய பாசம் நீங்கினும் முன்னைய பயிற்சி காரணமாக அவ்வுயிர் தன்னை “நானே பரம்பொருள்” என உணரும். இவ்வுணர்வு பசு ஞானம் எனப்படும். திருவருளைச் சார்ந்து அருளே கண்ணாகக் காணும் காட்சியே மாசறு காட்சி அல்லது ‘மெய்யுணர்வு அல்லது சிவஞானம் எனப்படும்.
பத்தாம் சூத்திரம் : இச் சூத்திரம் மல நீக்கத்தை (பாச நீக்கம்) உணர்த்துகின்றது. இறைவன் ஆன்மாவுக்கு உதவும் உண்மையை அறிந்தபோது ஆன்மாவானது இறைவனுடைய நோக்கத்தை முன்னே வைத்து அதற்கேற்பச் செயற்பட வேண்டும். இதுவே “ஏகனாதல்’ ஆகும். இவற்றுடன் இறைவனால் பணிக்கப்பட்ட இறை பணியையும் கடைப்பிடிக்க வேண்டும். ஏகனாதலால் ஆணவமலமும், இறைபணி நிற்றலால் மாயை, கன்மம் ஆகிய மலங்களும் நீங்குகின்றன. இச் சூத்திரத்தால்

17
குறிக்கப்படும் உணர்வு நிலை இராப்பகலற்ற நிலை எனவும், அருள் நிலை எனவும், துரிய நிலை எனவும் நூல்களாற் குறிக்கப்படுகின்றது.
பதினொன்றாம் சூத்திரம் இச் சூத்திரம் சிவப் பேற்றினை விளக்குகின்றது. ஆன்மாவின் அறிவு விளக்கத்திற்கு இறைவன் செய்யும் உதவி காட்டும் உபகாரம் எனப்படும். உயிர் பொருளை அறிந்து அதில் அழுந்தி நிற்பதற்கு இறைவன் உடனின்று பொருள்களைத் தானும் கண்டு வருதல் காணும் உபகாரம், சிவஞானம் பெற்றவன் இவ்வுபகாரத்தைத் தனது தெளிந்த அறிவில் மறவாது கடைப்பிடித்து நிற்றலால், இறைவனிடத்துப் பேரன்பு கொண்டவனாகின்றான். அவ்வன்பைத் தன் வடிவமாகக் கொண்டு பரமுத்தி நிலையில் தான் வேறு, இறைவன் வேறு என்று இல்லாது ஒன்று பட்டு இன்புறுகின்றது ஆன்மா. இதுவே மெய்யுணர்வின் முடிந்த ULUGOTIT(5th.
பன்னிரண்டாம் சூத்திரம் இச்சூத்திரம் அணைந்தோர் எனப்படும் சீவன் முத்தர் இயல்பினை விளக்குகின்றது. சீவன் முத்தி நிலையைத் தலைப்பட்ட முத்தான்மாக்கள் பிரார்த்தவினை காரணமாகச் சில சமயங்களில் நிட்டை நிலையினின்றும் நீங்கி மீண்டும் உலகியலுக்குள் வரலாம். இதனால் மலங்களில் எதுவும் தமை ஒரு காலத்தும் தாக்காதவாறு அதற்குரிய உபாயத்தைச் சீவன் முத்தர் தேடிக்கொள்ள வேண்டும். சீவன்முத்தன் மும்மலங்களையும் களைவன் என்னும் கருத்தையே செம்மலர் நோன்றாள் சேரலொட்டா அம்மலங்கழி இ என்று இச் சூத்திரம் உணர்த்துகின்றது. சீவன் முத்தன் தன்னை மலங்கள் தாக்காதபடி இருக்கும் பொருட்டுச் சிவபக்தர்களோடு எப்பொழுதும் இணங்கி அவர்களிடத்தில் அன்புடையவராக ஒழுகுவர் என்பதை இச் சூத்திரம் அன்பரொடு மரீஇ என்றுணர்த்துகின்றது. சீவன் முத்தன், எவரிடத்தேனும் திருநீறு, உருத்திராட்சம் முதலிய சிவ சின்னங்களோடு கூடிய சிவவேடத்தினைக் கண்டவிடத்து அவரைச் சிவமெனவே வழிபடுவன் என்பதை, “மாலறநேயம் மலிந்தவர்வேடம் அரனெனத் தொழுமே” என இச் சூத்திரம் உணர்த்தும். சீவன் முத்தன் சிவலிங்கத்தையும் சிவனென வழிபடுவன் என்பதை இச் சூத்திரம், “ஆலயம் தானும் அரனெனத் தொழுமே” என்றுணர்த்தும்.
இவ்வியல்புகளை திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் முதலிய பெருமக்கள் வாழ்க்கை வரலாறுகளில் காணலாம் என்பர் சித்தாந்தக் கலைச் செல்வர் திரு. க.வச்சிரவேல் முதலியார்.
இவ்வாறு 39 தெரிவுகளில் சைவசித்தாந்த கோட்பாடுகளை அமைத்துக் காட்டுகிறார் மெய்கண்டதேவர். சிவஞானபோதம் போற்றுவதற்குரிய தலைசிறந்த சித்தாந்த நூலாதனின் “மெய்கண்டான் நூல் சென்னியிற் கொண்டு சைவத் திறத்தினைத் தெரிக்கலுற்றாம்” என்றருளினார் அருணந்தி சிவாச்சாரியார்.
இந்துக்கலைக்களஞ்சியம்

Page 44
சிவஞானபோதம் வேதம், ஆகமம், தேவாரம், திருவாசகம் என்பவற்றின் சாரமாக விளங்கும் தன்மையதென்பதைப் புலப்படுத்துவது,
வேதம் பசு அதன் பால் மெய்யாகமம் நால்வர் ஒதும் தமிழ் அதனின் உள்ளுறு நெய் - போதம் மிகு நெய்யின் உறுசுவையாம்நீள்வெண்ணைமெய்கண்டான் செய்த தமிழ் நூலின் திறம் எனவரும் பாடலாகும்.
சிவஞான சித்தியார்
சித்தாந்த சாத்திரங்கள் பதினான்கினுள் மிகப்பெரிய நூலாக விளங்குவது, மெய்கண்ட தேவரின் மாணாக்கர் பல்லோருள்ளும் சிறந்தவரான அருள்நந்தி தேவநாயனார் அருளிச் செய்த சிவஞான சித்தியாராகும். இது சிவஞானபோதத்தின் வழி நூல் ஆகும். வரலாற்றுண்மைப்படியும், இந்நூற் சுபபக்கப் பாயிரச் செய்யுள் ஒன்றில், “மெய்கண்டான் நூல் சென்னியிற் கொண்டு சைவத் திறனைத் தெரிக்கலுற்றாம்” என்று வருவதன்படியும் இந்நூல் சிவஞானபோதத்திற்கு வழிநூலாதல் பெறப்படும். அதற்கேற்ப மெய்கண்டார் கைக்கொண்ட நூலமைப்பு முறை, பொருளொழுங்கு முறைகள் அப்படியே இதிற் பின்பற்றப்படுகின்றன. மெய்கண்டார் நூலிற் பிரயோகிக்கப்பட்ட அளவைகளே இங்கும் பிரயோகம் பெற்றுள்ளன. அவர் சுருக்கிச் செறியவுரைத்த கருத்துக்கள் இங்கு விளக்கப் பெற்றுள்ளன. அதற்கேற்றபடி யாப்பும் விருத்தப்பாவாக மாற்றம் பெற்றுள்ளது.
சிவஞான சித்தியார் என்னும் பெருநூல் பரபக்கம், சுபக்கம் என்னும் இரண்டு பெரும் பிரிவுகளை உடையது. அருணந்திசிவாச்சாரியார் தமது சிவஞான சித்தியாரின் முற்பகுதியாகப் பரபக்கத்தையும், பிற்பகுதியாகச் சுபக்கத்தையும் படைத்தருளியுள்ளார். எனினும் இரு பகுதிகளின் தொடக்கத்தில் பாயிரம் வாழ்த்துப்பாடல்கள் என்பவற்றைத் தனியே
இயற்றியுள்ளார்.
பரபக்கம்: சிவஞான சித்தியாரின் பரபக்கம், பாயிரப் பகுதியில் பதினொரு விருத்தங்களும், நூற்பகுதியில் இருநூற்றித் தொண்ணுறு விருத்தங்களுமாக முந்நூற்றொரு (301) விருத்தச் செய்யுட்களைக் கொண்டு விளங்குகின்றது. இப்பரபக்கப் பகுதியில் உலகாயதன் முதல் பாஞ்சராத்திரி ஈறாகவுள்ள பதினான்கு சமயவாதிகளின் சமயக் கோட்பாடுகளை விளக்கி , ஒவ்வொன்றின் கீழ் அவர்கள் கோட்பாட்டின் குறைபாடுகள் சுட்டி
மறுக்கப்பட்டுள்ளன.
பரபக்கம் பிற சமயங்களை மதமும் மறுதலையுமாக வைத்து மறுக்கின்றது. மதம் என்னும் பகுதியுள், அந்தச் சமயத்தின் கொள்கைகள் அதிற் சொல்லப்படும் முறையிலே சொல்லப்படுகின்றன. பிற மதக் கோட்பாடுகளைக் கூறுங்கால்
அச்சமயவாதியாகவே நின்று அருணந்தி சிவாச்சாரியார்
இந்துக்கலைக்

கோட்பாடுகளை விளக்கியுள்ளமை நயக்கத்தக்கதாகும். மறுதலை’ என்னும் பகுதியுள் அக்கொள்கைகள் தருக்க முறையில் தக்கவாற்றான் மறுக்கப்படுகின்றன. இப்பரபக்கப் பகுதி மறுப்பு நூலாய் அமைதலின், இதன்கண், நகைச்சுவை முதலிய இலக்கியச் சுவைகளோடு கூடிய பலவகைச் சந்தங்களால் அமைந்த பாடல்களைக் காணலாம்.
எடுத்துக் காட்டாக உலகாயத மதங்கூறுமிடத்து, உலகாயதன் வருகையை, மகளிர் இன்பமே வீட்டின்பம் எனக் கொண்ட அவனது கொள்கைக்கு ஏற்ப, “சந்தணை புயத்து மணமாலைகள் தயங்க உந்தி உலகத்து உலகாயதன் உரைப்பான்” என ஆசிரியர் வருணிக்கிறார். இங்கு மணமாலைகள் என்பது 'வாசனை பொருந்திய மாலைகள் எனப் பொருள் தரினும், பலமகளிர் சூட்டிய பல மணமாலைகள் என்னும் நயத்தையும் தருகின்றது. மேலும், 'உந்தி’ என்பது, உரைப்பான்' என்பதனோடு இயைந்து முற்பட்டு வந்து கூறுவானாயினன் எனப் பொருள் தரினும், 'உந்தியுலகத்தில் உலகாயதன் என்று இயைந்து, மகளிரது 'உந்தியுலகத்தில் மூழ்கிக் கிடக்கும் உலகாயதன் என்னும் நயத்தையும் தந்து நகை விளைத்தலைக் காணலாம். இந்நூற்கண் இவ்வாறமைந்துள்ள பாடல்கள் பலவாகும்.
மாயாவதி மத மறுதலைக்கண் “நானே பிரம்மம்' என்னும் மறுப்புக்குத் தோற்றுவாய் செய்து கொள்ளுமிடத்து, “உயிரே கடவுள் எனின், பாசபந்தமும், அதனின்றும் விடுதலையடையச் செய்தற்குரிய சாதனங்களும் அச் சாதனங்களாற் பெறும் பயனும் அவ்வுயிர்க்கு வேண்டாவாய் முடியுமாதலின், அங்ங்னம் கூறுதல் பொருந்தாது” என்னுங் கருத்தினையுடைய,
ஏகம் நானென இயம்பி இப்படி
அறிந்து முத்தியடை மின்னெனும் மோகமான உரை சோகம் இன்பொடு
முடிந்திடாது மலமாடாகிய காக மானது சுருங்க லின்தசை
பறித்தமுங்கரிய குஞ்சுதன் தாக மார்பசி தணிக்க வாயிடை
கொடுத்த தென்றுரைசெய்தன்மையே என்னும் செய்யுள் எள்ளல் பற்றித் தோன்றும் நகைச் சுவையினை நன்கு விளக்குகின்றது. அஹம் பிரஹ்மாஸ்மி என்னும் மகாவாக்கியத்திற்கு ஒரு ஞானாசிரியன், உயிரே கடவுள்' என விளக்கங்கூறி உபதேசித்துத் தன் மாணாக்கர்களை ஈடேற்ற நினைப்பின், அதனால் உபதேசம் செய்பவனும், அதனைப் பெற்றவனும் வேறு வேறு இலையாகப் பயனும் இலையாய் முடியும். முடிவே, வறியான் ஒருவன் முயன்று பொருள் தேடிச் செல்வனாகமாட்டாது.நானே செல்வமுடையேன், செல்வமுடையார் என்னின் வேறில்லை என்று எண்ணி வறுமைத் துன்பத்தையே செல்வத்தாற் பெறும் இன்பமாக நுகரும் முறைமை போலப் பந்தத்தையே வீடாகப் பற்றிக் கிடக்கும் நிலையே உண்டாகும் என்பது இச்செய்யுளின் பொருளாகும். இவ்வாறு பரபக்கத்துட் காணப்படும் நுண்பொருட்கள் பற்பலவாகும்.

Page 45
சுபக்கம்: சுபக்கம் முந்நூற்றிருபத்தெட்டுச் செய்யுட்களை உடையது. சுபக்கம் தன் கொள்கையை விளக்குவதாகலின், அதன் கண் ஆழ்ந்தும் அகன்றும் உள்ள பொருள்கள் மல்கிக் கிடக்கின்றன. செய்யுட்களும் ஆற்றொழுக்குப் போலத் தொடர்ந்து ஒரே வகையான சந்தத்தில் அமைதியாகச் செல்கின்றன. மங்கல வாழ்த்தைத் தவிர்த்து, அடுத்த செய்யுள்முதல் இருநூற்றைம்பத்தொரு செய்யுட்கள் ஒரே வகையான அறுசீர் விருத்தங்களாய் உள்ளன. அளவையியலுள் ஒரு சில செய்யுட்களும், இடையில் ஒரு செய்யுளும் இசை சிறிது வேறுபட்ட அறுசீர் விருத்தங்களாகும். இருநூற்றைம்பத்திரண்டு செய்யுட்களுக்குப் பின்னுள்ளன யாவும் எண்சீர் விருத்தங்களே. இங்ங்ணம் இறுதிப் பகுதியை எண்சீர் விருத்தங்களாகக் கொண்டு இயற்றியது அப்பகுதியிற் கூறப்படும் பொருள்கள் முன்னே கூறி வந்த பொருளினும் சிறப்புடையனவாதல் பற்றியேயாம். இந்நூற் சிறப்பினை “ஓர் விருத்தப்பாதிபோதும்” எனச் சிவபோகசாரத்துட் கூறப்பட்டதால் அறிய முடிகின்றது.
சுபக்கத்தின் தொடக்கத்தில், “அளவையியல்” என்னும் ஒரு பகுதியை ஆசிரியர் அமைத்துள்ளார். அது சைவசித்தாந்தத்தின் அளவை முறையை நன்குணரப் பெரிதும் பயன்படுவதாகும். வைசேடிகம், நையாயிகம் என்னும் வடமொழி இருவகைத் தருக்க நூல்களைப் பல்லாண்டு வருந்திக் கற்றுணர வேண்டுவனவற்றை இப்பகுதியால் மிக எளிதில் உணரலாகும். அன்றியும் தருக்க நூலின் சில பொருந்தாக் கொள்கைகளைப் பொருந்துவனவாகக் கொள்ளும் மயக்க வுணர்வும் இதனால் நீங்குவதாகும். இப்பகுதி, சிவஞான போதத்தின் முதல் இயலாகிய பிரமான இயலின் பொருளை நன்குணர்தற்குக் கருவியாகச் செய்யப்பட்டது.
இதற்குப் பின்னர், முதல்நூலின் பொருளை முறையாக விளக்கத் தொடங்கி, அந்நூலின் ஒவ்வொரு சூத்திரப்பொருளை ஒவ்வோர் அத்தியாயமாகக் கொண்டு அவ்வத்தியாயங்கட்கு, முதற் சூத்திரம், இரண்டாம் சூத்திரம்' என்ற வகையில் பெயரிட்டுப் பன்னிரண்டு அத்தியாயங்களால் அதனை ஆசிரியர் முடிக்கின்றார். சூத்திரம் என்பது இதன்கண் இருமடியாகு பெயராய், முதற்கண் சூத்திரப் பொருளையும் பின்னர் அதனை விளக்கும் அத்தியாயத்தினையும் குறிக்கும்.
திராவிட மாபாடிய கருத்தராகிய மாதவச் சிவஞான சுவாமிகள் 'சிவஞான சித்தி சிவாகமாந்தங்களுக்கு எல்லாம் உரையாணி எனச் செய்யப்பட்டு நிலவுவது” எனக் கூறியுள்ளமை சிவஞான சித்தியாரின் சிறப்பை உணர்த்தி நிற்கின்றது.
இருபா இருபஃது அருணந்திசிவாச்சாரியார் இயற்றியுள்ள மற்றொரு நூல் இருபா இருபஃது ஆகும். வெண்பா, அகவற்பா என்ற இருவகைப் பாக்களும் ஒன்று விட்டொன்றாக வரும் இருபது
19

பாக்களில் அந்தாதித் தொடையில் அமைந்த நூல் இதுவாகும். அருணந்திசிவாச்சாரியர் தம் குருவாகிய மெய்கண்ட தேவரிடம் ஐயம் தெளிதற்காகச் சில வினாக்களை வினாவுவதும், அவற்றிற்கு மெய்கண்டதேவர் விடையளிப்பதுமான வினாவிடைப் பாணியில் அமைந்தது இந்நூலாகும். சிவஞானசித்தியாரிற் சொல்லியடங்காத சைவசித்தாந்த நுண்பொருளை வெளிப்படுத்துவதற்கு அருணந்திசிவாசாரியார் மேற்கொண்ட ஒர் உபாயமே இந்நூலின் தோற்றம் எனலாம். சைவசித்தாந்த அடிப்படைகள் பற்றிய எல்லா வினாக்களுக்கும் தருக்கரீதியாகவும், பகுத்தறிவுக்கு ஏற்ற முறையிலும் விடை அளித்திருப்பதுதான் இந்நூலின் தனிச் சிறப்பாகும்.
சைவசித்தாந்தத்தில் குருவுக்கு முதன்மை கொடுக்கப்பட்டுள்ளது. அந்த மரபில் தமது குருநாதராகிய மெய்கண்டதேவரைச் சிவமாகப் போற்றிக் குருவணக்கம் செய்கின்றார். சிவனே மானுடச் சட்டை தாங்கி மெய்கண்ட தேவனாகத் தோன்றித் தமக்கு அருள்பாலித்ததாக இருபா இருபஃது மூலம் ஆசிரியர் நமக்கு உணர்த்துகின்றார்.
இந்நூலில் சைவசித்தாந்தம் கூறும் பதி, பசு, பாசம் என்பவற்றின் இயல்புகளும், பாசநீக்கம், சிவப்பேறு என்பனவும் தெளிவாக்கப்பட்டுள்ளன.
இறைவன் உயிர்களோடு ஒன்றாய் வேறாய் உடனாய் இருந்து உயிர்களை உய்விக்கின்றான் என்பது சைவசித்தாந்தக் கோட்பாடாகும். அதனால் ஏற்படும் ஐயங்களும் விடைகளும் இந்நூலில் இடம் பெற்றுள்ளன.
இந்நூலில் இடம்பெறும் சைவசித்தாந்தம் பற்றிய முக்கியமான வினாக்களை இங்கு நோக்குதல் தகும்.
"தொடக்கமில் காலந்தொட்டு என்னை விட்டு நீ என்றுமே நீங்கி நின்றது இல்லையென்றால் அறியாமை, எனக்கு எப்படி ஏற்பட்டது, நான் மலமறைப்பிற்கு உட்பட்டபோது எனக்கு வேறாய் நின்று அறிவிப்பாயா?”, “ஆணவ மல நீக்கமே பக்குவம் என்று கூறுவாயெனின் அம்மலம் என்னை விட்டுத் தானே நீங்குகிறதா அல்லது நானே அதனை விட்டு நீங்குகின்றேனா?,”, “அறிவு, அறியாமை என்ற இரண்டும் என்னிடம் கலந்து நிற்பதைக் காண்கிறேன். நான் அறிவை உடையவனா? அல்லது அறியாமை உடையவனா?”, “எனக்குள்ள இயல்பான குணம் யாது?" “எட்டுக் குணங்களை உடைய ஆணவ மலம், ஏழு குணங்களையுடைய மாயாமலம், ஆறு குணங்களை உடைய கன்மம் ஆகியன என்னைவிட்டு நீங்காமல் தம் வழியில் என்னை இழுத்துச் சென்று, தம் வயமாக்கி அடிமைப்படுத்தித் துன்புறுத்துகின்றன. அவை சடப்பொருள் - அவை தாமே வந்து என்னைச் சேரமாட்டா. எனக்குத் துன்பத்தைக் கொடுக்கும் அவற்றை விரும்பி நானும் சேரமாட்டேன். நீயோ மலங்களுக்கு அப்பாற்பட்டவன். நீயும் அவற்றை என்னோடு சேர்க்கமாட்டாய். அப்படியானால் இந்தப் பாசங்கள் எனக்கு எப்படி ஏற்பட்டன?”
இந்துக் &6rថ្ងៃ៩វិច្ឆ័យថៃ

Page 46
"ஆணவமலத்தை உயிர் காண்பது எவ்வாறு? எப்படி அறிய முடிந்தது? உயிரின் உண்மை இயல்பு யாது? என்னைவிட்டு இறைவனே! நீ நீங்காது இருக்கிறாய் என்று கொள்வதா" அடியேனிடத்து நீ நிற்க வில்லை என்று கொள்வதா? ஆணவி மலம் முத்தியில் கெட்டது என்று கொள்வதா? அல்லது கெடவில்லை என்று கொள்வதா? முற்பிறவியில் நான் செய்த வினைப்பயன் தானே வந்து என்னைக் கூடுமா? அல்லது வினைப்பயனை நான் சென்று கூடுவேனா? அல்லது எனக்கு வினைப்பயனை யார் ஊட்டுகின்றார்கள்? என்னிடத்து இருவினை ஒப்பு நிகழ்ந்தபோது எஞ்சிய பலனை யாருக்கு ஊட்டுவாய்? எல்லா ஆன்மாக்களும் உனக்கு அடிமையே அப்படியிருக்க உன்னை நினைந்திருப்பவர்களுக்கு அருள்கிறாய் உன்னை நினையாதவர்க்கு நீ அவர்களோடு உடனாய் இருந்து மறைந்து நிற்கிறாய். ஏன் இந்த வேறுபாடு?” ஆகிய முக்கிய வினாக்கள் மட்டுமன்றி அவற்றிற்கான விடைகளும் நுட்பமாக இந்நூலில் இடம் பெற்றிருப்பது குறிப்பிடப்படத்தக்கது.
சிவஞான சித்தியாரைக் கற்றவர்களுடைய அறிவை அளக்கும் சோதனை வினாத்தாள் என இந்நூலைக் கூறலாம் என்பர் சித்தாந்த கலைச் செல்வர் திரு.க.வச்சிரவேல் முதலியார்
உண்மை விளக்கம்
உண்மை விளக்கம் எனும் நூல் சித்தாந்த சாத்திரம் என்னும் நூற்றொகுப்பில் ஆறாவது நூலாக வைத் தெண்ணப்படும் அரிய சிறிய சித்தாந்த சாத்திர நூலாகும் . இந்நூல் மெய்கண்ட தேவரின் ១៩ ការប្រចាំ ஒருவராகிய திருவதிகை மனவாசகங்கடந்த தேவநாயனார் என்பவரால் அருளிச் செய்ய பெற்றது.
காப்புச் செய்யுள் ஒன்றுடன் ஐம்பத்திநான்கு வெண்பாக்களால் அமைந்த இந்நூல், 'பொய்காட்டி. எனத் தொடங்குகிறது. ‘வாழ்ந்தேன். எனத் தொடங்கும் பாட குறிப்போடு முடிகிறது. இதனால் சைவசித்தாந்தப் பயில்வோரைப் பொய்யான வாழ்விலிருந்து விலக்கி உண்மையான வாழ்வைத் தலைப்படுமாறு செய்தலை நோக்கமாக உடையது இந்நூல் என்பது விளங்கும் சைவசித்தாந்தச் செந்நெறியினர் உணரவேண்டிய உண்மைகள் பலவற்றையும் சுருக்கமாக விளக்கிக் கூறுதலின் இந்நூல் உண்மை விளக்கம் எனப் பெயர் பெற்றதெனலாம். இந்நூலிற்கு “மெய்கண்ட சந்தான அனுபவத்திரட்டு” என்னும் பெயர் அறிஞ சிலராற் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்நூல் இடையூறின்றி இனிது முடிதற் பொருட்டு முதலில் விநாயகப் பெருமானை வணங்கி ஆசிரியர் நூலைத் தொடங்குகின்றார்.
இந்நூற்கண் அமைந்த முதற்செய்யுள் தம் குருமூர்த்தியாகிய மெய்கண்ட தேவரிடத்து மாணவன் சில வினாக்களை
வினாவுவதற்குரிய பிண்ணப்பத்தைக் கூறுவதாகும்
இந்துக்கலைக்களஞ்சியம்

இவ்வினாக்கள் உண்மைப் பொருளை அறிய வினாவுவதால் l, அவற்றைச் “சுத்தவினா” என்று ஆசிரியர் அருளுகின்றார். நன்மாணாக்கர் ஒருவர் சைவசித்தாந்தப் பொருள் பற்றி அறியாதும், ஐயுற்றும் வினாவும் வினாக்களாகவும், அவற்றிற்கு jl மெய்கண்ட தேவராகிய குருமுதல்வர் அம்மாணாக்கரது உள்ளம் தெளிவு பெறும் வகையில் கூறும் விடைகளாகவும் ill இந்நூலினை ஆசிரியர் அமைத்துக் கொள்கின்றார். இவ்வாறு சீடர் ஆசிரியரிடையே நிகழும் உரையாடல் முறையில் வைத்து ј எல்லோரும் விளங்கிக் கொள்ளும் படியாகச் சைவ சித்தாந்த 5 உண்மைகள் இந்நூலில் உணர்த்தப்பட்டுள்ளது.
. இந்நூல் பாடல் தொகையால் சிறிதாக இருப்பினும், h மாணாக்கர் கேட்பதாக அமைந்த ஏழுவினாக்களும், அவற்றின் இயைபாகக் கேட்கப்படும் இருவினாக்களும் விடையிறுப்பதாக 菇 உள்ளது. அவ்வினாக்கள் அமைந்திருக்கும் முறையும் அதற்கு ஆசிரியர் விடை கூறும் முறையும் எளிமையும் சுவையும் தருவனவாகும். இறுதியாகத் திருவைந்தெழுத்தின் பெருமையைக் கூறும் ஆசிரியர், அதனாற் பெறும் முத்திப் h பேற்றின் விளைவையும் தருவதோடு அதற்கு காரணமாய குருலிங்க சங்கம வழிபாட்டினையும் கூறி நூலை நிறைவு செய்துள்ளார். இவ்வரிய பொருள்களும் 'நாதன் நடம் எனக் கூறப்பெறும் கூத்தப் பெருமானின் ஆடல்தகைமையும் அதன் பயனும் இடம் பெற்றிருப்பது இந்நூலுக்கு அமைந்த தனிச் சிறப்பாகும்.
சைவசித்தாந்த ஆன்மீகக் கல்விக் கோட்பாடுகள் எவ்வாறு போதிக்கப்பட்டன என்பதற்கு உண்மை விளக்கம் ஓர் உரைகல்லாக விளங்குகின்றது. சைவசித்தாந்த அடிப்படைகளை அறியப்புகும் தொடக்க நிலையினர் முதன் முதலாகப் பயிலுதற்குரிய அடிப்படைச் சாத்திரநூலென்ற சிறப்பிற்குரியது உண்மை விளக்கம் ஆகும்.
5
இந்த நூலில் வரும் வினாக்கள் எட்டு ஆகும். இவ்வெட்டு வினாக்களும் யாவை என்பதும், அவற்றிற்குரிய விடைகள் அமைந்துள்ள செய்யுட்கள் எவையென்பதும் மேலே
தரப்பட்டுள்ளன. .
வினாக்கள் விடைகள் முதல்வினா 4 முதல் 21 வரை முடிய 5 முப்பத்தாறு தத்துவங்கள் உள்ள செய்யுள்கள்.
பற்றியவை.
இரண்டாம் , மூன்றாம் வினா 22 ஆம் செய்யுள்.
ஆணவம், கன்மம் பற்றியவை. (ஒரு செய்யுள்)
நான்காம் வினா 24 முதல் 26 வரை முடிய உயிர் பற்றியது. உள்ளவை. (3 செய்யுட்கள்)
T ஐந்தாம் வினா 27 முதல் 29 வரை முடிய . இறைவன் பற்றியது. உள்ளவை. (3 செய்யுட்கள்)
ള്ള 20

Page 47
ஆறாம் வினா: 31 முதல் 38 வரை
நாதன்நடம் பற்றியது. உள்ளவை. (8 செய்யுட்கள்)
ஏழாம் வினா 40 முதல் 45 வரை முடிய அஞ்செழுத்து பற்றியது. உள்ளவை. (5 செய்யுட்கள்)
எட்டாம் வினா: 45 முதல் 48 வரை உள்ள முத்தி நிலை பற்றியது. வையும் 50 முதல் 52 வரை
உள்ளவையும் (7 செய்யுட்கள்)
சைவ சித்தாந்த அடிப்படைகள் பற்றித் தான் கேட்ட வினாக்களுக்கெல்லாம் ஆசிரியர் சரியான விடை அருளியதைக் கேட்ட மாணவன், தன் ஆசிரியராகிய மெய்கண்ட தேவருக்கு நன்றி தெரிவிக்கும் செய்யுளாக வருவது,
வாழ்ந்தேன் அருட்கடலே வற்றாய் பவக்கடலில் வீழ்ந்தே அலையாமல் மேதினியில் - சூழ்ந்துவிடா வெண்ணெச் சுவேதன மெய்கண்ட நாதனே உண்மைத் தவப்பயனே உற்று. என்ற 53வது உண்மை விளக்கப்பாடலாகும். “மெய்கண்ட தேவரே நீர் அருளிய மெய்ப் பொருளைக் கேட்டமையால் பிறவிக் கடலில் அழுந்தாது வீடுபேறு அடையும் வாழ்வைப் பெற்றேன்” என்பது இப்பாடலின் நுண் பொருளாகும்.
உண்மை விளக்கம் சொற் சுருக்கமும், பொருட் பெருக்கமும் உடைய நூலாக இருத்தலின் உரையின் துணையில்லாமல் மாணவர்கள் இந்நூற்பொருளை விளங்கிக் கொள்ளுதல் அரிதாகும். இதன் காரணமாக இந்நூலுக்குப் பல உரைகள் எழுந்துள்ளன.
சைவ சித்தாந்த சமாஜமும், சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகமும் வெளியிட்டுள்ள சித்தாந்த சாத்திரப் பதிப்புகளில் உண்மை விளக்கம் பழைய உரையோடு இடம் பெற்றுள்ளது. அவ்வுரை சுருங்கிய பதவுரையாக உள்ளது.
திரு.க.வச்சிரவேல் முதலியார் இந்நூலுக்குத் தெளிவான விரிவுரை வரைந்துள்ளார். அவ்வுரையை முதலில் தருமையாதீனம் 1958 ஆம் ஆண்டில் வெளியிட்டது. பின்பு அவர் அவ்வுரையில் சிற்சில மாற்றங்களைச் செய்து 1972 ஆம் ஆண்டில் திருவாவடுதுறை ஆதீனம் வழியாக வெளிவரும்படி செய்தார்.
திரு. ஆ. ஈசுரமூர்த்திப்பிள்ளை இந்நூலுக்குப் புத்துரை கண்டுள்ளார். அது பதவுரையாக இருப்பினும் பலநுண் பொருள்களை அதிற் கண்டு மகிழலாம். இவ்வுரை 1960 இல் Gភាofយffយ៉ាញ៉ញ.
குறிப்பிடத்தக்க மற்றொரு உரை தொண்டை மண்டல ஆதீன குருமகாசந்நிதானம் பூநீலழறி ஞானப்பிரகாச தேசிக பரமாசாரிய சுவாமிகள் (முன்பு முத்து. சு. மாணிக்கவாச முதலியார்) எழுதி உதவிய உரையாகும். முறையான சாத்திரப்
2

பயிற்சி உடையவர்களே இவ்வுரையை முழுமையாக உணர்ந்து கொள்ள இயலும். இவ்வுரையை முதலில் மாணிக்கம் பதிப்பகத்தார் 1967 இல் வெளியிட்டனர். அண்மையில் திருமதி சுவர்ணா சோமசுந்தரம் அவர்களின் முயற்சியால் இது மறுபதிப்புக் கண்டுள்ளது. பேராசிரியர் கு. சுந்தரமூர்த்தி எழுதிய உரையைக் காசிமடம் 1979 இல் வெளியிட்டது. ந. ரா. ஆடலரசு உண்மை விளக்கத்தை மூலமும் விளக்கக் கட்டுரையுமாக அமைத்துத்தர, சென்னை தெய்வீக சித்தாந்த இலக்கிய மன்றம் அதனை 1987 இல் வெளியிட்டது.
திரு. சி.சு. மணி என்பவர் உண்மை விளக்கத்திற்கு எழுதிய தெளிவுரையை அருள் நந்தி சிவம் அருட்பணி மன்றம் 1992 இல் வெளியிட்டது.
முனைவர் ஆ.ஆனந்தராசன் என்பவர் எழுதிய
தெளிவுரையை அருள்நந்தி சிவம் அருட்பணி மன்றம் 1996 இல் வெளியிட்டது. எளிய உரைக்கு எடுத்துக்காட்டாக இது இலங்குகின்றது.
உண்மை விளக்கத்தை ஆங்கிலத்தில் தரும் முயற்சியும் மேற்கொள்ளப்பட்டது. ஜே. எம். நல்லசாமிப் பிள்ளை இதனை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துள்ளார். கொ.நீ சிங்காரவேலு அவர்கள் இந்நூலுக்கு ஆங்கிலத்தில் விளக்கம் எழுதியுள்ளார். அவ்விளக்க நூல் சைவசித்தாந்தப் பெருமன்றம் வாயிலாக வெளிவந்துள்ளது.
சிவப்பிரகாசம் சிவப்பிரகாசம், உமாபதிசிவாச்சாரியார் அருளிச்செய்த சித்தாந்த சாத்திர நூல்களுள் தலைசிறந்தது. இது பதினான்கு சித்தாந்த சாத்திரங்களுள் ஏழாவதாக வைத்து எண்ணப்படும். இந்நூல் சிவஞானபோதத்தின் சார்பு நூல் அல்லது புடைநூல் என்று வழங்கப்பெறும்.
சிவப்பிரகாசம் புடைநூல் என்று வழங்கப்படுவதற்கேற்பச் சிவஞானபோதம், சிவஞான சித்தியார் ஆகிய நூல்களை அடியொற்றி, இறைவன் திருவருளால் உமாபதி சிவாச்சாரியாருக்கு உணர்த்தப்பட்ட செய்திகளும், ஆகம நூல்களிற் காணப்படுகின்ற கருத்துக்களும் கலந்து எழுதப்பட்ட நூலாக இந்நூல் விளங்குகின்றது. இதனை 'விளம்பிய நூல் அவை இரண்டும் விரும்பி நோக்கிக் கருத்தில் உறை திருவருளும் இறைவன் நூலும் கலந்து” என்று இந்நூலின் பதினொராவது செய்யுளில் உமாபதிசிவாசாரியார் எடுத்துரைப்பதாலறியப்படும்.
சிவப்பிரகாசம், காப்புச் செய்யுள் தவிர மொத்தம் நூறு விருத்தப் பாக்களால் ஆனது. இது பொது அதிகாரம், உண்மை
அதிகாரம் என்று இரண்டு பகுதிகளைக் கொண்டது. பொது
அதிகாரத்தில் ஐம்பது பாடல்களும் உண்மை அதிகாரத்தில் ஐம்பது பாடல்களும் உள்ளன.
இந்துக் க்களஞ்சியம்

Page 48
சிவப்பிரகாசம் என்ற பெயரை இந்நூலுக்கு உமாபதிசிவாசாரியாரே சூட்டினார் என்பது இந்நூலில் "ஆசில் சிவப்பிரகாசம் ஆகும் அன்றே” (செய்யுள்,1) என்று கூறுவதனாலும், நூலின் இறுதியில் இச்சிவப்பிரகாச நன்னூல் (செய்யுள். 100) என்று அவரே குறிப்பிட்டதிலிருந்தும் தெரிய வருகிறது.
சிவப்பிரகாசம் பெரும்பாலும் மெய்கண்டதேவரின் சிவஞான போதத்தை அடியொற்றி அமைந்துள்ளது என்பது முதல் நூற்பா தொடங்கி பன்னிரண்டாம் நூற்பா வரை காணப்படும் செய்திகள் நிரல்பட அமைந்துள்ளமையிலிருந்து புலனாகிறது. ஆயினும் ஆங்கே மூல நூலிலிருந்து அமைப்பு முறையும், செய்திகளும் சற்றே விரித்தும் சுருக்கியும் முறை மாற்றியும் தரப்பட்டுள்ளமையை உணரலாம். சான்றாகச் சிவஞானபோதத்தின் முதல் நூற்பா, சிவப்பிரகாசத்தில் பதின்மூன்றாவது பாடலில் தொடங்குகின்றது. அதற்கு முந்திய பாடல்கள் அவையடக்கமாக அமைகின்றன. ஆனால் எட்டாம் பாடல் தொடங்கிப் பத்தாம் பாடல் வரையும் தீக்கை முறையை ஆசிரியர் விளக்குகிறார். வைப்பு முறையில் உள்ள மாற்றத்திற்கு இது ஒர் எடுத்துக் காட்டாகும். முதல், வழி நூல்களுக்கு முரணாகாமலும் அதே நேரம் சிறு சிறு மாறுபாடுகளோடும் சிவப்பிரகாசம் விளங்குகிறது. இந்நூல் புடைநூலுக்கு விதிக்கப்பட்ட இலக்கணத்தோடு பொருந்துவதை "இருவர் நூற்கும் ஒரு சிறை தொடங்கித் திரிபுவேறுடையது புடைநூலாகும்” என்ற நன்னூல் நூற்பாவாலறியப்படும். இதில் இருவர்நூல் எனப்பட்டது முதல் நூலையும், வழிநூலையும் குறித்து நிற்கின்றது.
திருக்கயிலாய பரம்பரையில் வழிவழி வந்த சந்தான குரவர்கள் இன்னார் இன்னார் என்பது இதன் பாயிரத்தாற் பெறப்படுகின்றது. கிரியை என்பன எல்லாம் ஞானம் கிடைத்தற்கு நிமித்தம்' என்பதும், சிவஞானம் எனப்படுவது, பரஞானம், அபரஞானம் என இருவகைப்படும் என்பதும், பரஞானமாவது உயிர்தோறும் அறிவுக்கறிவாய்க் கலந்து நின்று பாசப்பற்றறுத்துப் பாரிக்கும் திருவருளே என்பதும், அபரஞானம் என்பது அதன் தடத்தவடிவாய் அதனை விளக்கும் சிவாகமம் அல்லது திருமுறைகள் என்பதும், சிவஞானபோதம் அபர ஞானமாகிய சிவமார்த்தங்களின் முடிந்த முடியாகும் என்பதும் இதன் பாயிரத்திற் பெறப்படும் அரிய உண்மைகளாகும். இந்நூலில் இடம் பெறும் “புறச்சமயத்தவர்க்கு இருளாய் அகச் சமயத்து ஒளியாய்'எனத் தொடங்கும் திருவிருத்தம் குறிப்பிடத்தக்கது. இது சமயங்களைப் புறச்சமயம் என்றும் அகச் சமயம் என்றும் பாகுபடுத்திக் கூறும் முன்னை வழக்கத்தைச் சுட்டிச் சித்தாந்த சைவத்தின் தனிச்சிறப்பை இனிது எடுத்துக் காட்டுகின்றது. 'தொன்மையவாம் எனும் எவையும் நன்றாக, இன்று தோன்றிய நூல் எவையும் தீதாகா என வரும் பாயிரப் பாடற் பகுதியும் ஊன்றி எண்ணுதற்குரியது. இக்கருத்து, காலம்தோறும் சைவசித்தாந்த சிந்தனைகளை வளர்த் தெடுப்பதற்கு ஒர் அரிய ஆதாரமாகும்.

22
திருவருட்பயன் திருவருட்பயன், சைவசித்தாந்தக் கோட்பாடுகளை நூறு குறட் பாக்களில் தெள்ளத் தெளிய இனிது விளக்கும் பதினான்கு சித்தாந்த சாத்திரங்களுள் ஒன்றாக விளங்கு கின்றது. இந்நூலும் உமாபதி சிவாச்சாரியாரால் அருளப்பட்டதாகும்.
இந்நூல் திருவருளைப் பற்றியும், அதனது பயனைப் பற்றியும் விளக்கிக் கூறுதலின் திருவருட்பயன் எனப் பெயர் பெற்றது. இந்நூல் பத்து அதிகாரங்களாக வகுக்கப்பட்டுள்ளது. அவை பதிமுதுநிலை, உயிரவைநிலை, இருள்மலநிலை, அணைந்தோர் தன்மை என்பன ஆகும். ஒவ்வொரு அதிகாரமும் பத்துக் குறட்பாக்களை உடையது. கடவுள் வாழ்த்துடன் 101 குறட்பாக்கள் இந்நூலில் அமைந்துள்ளன. இந்நூலின் முதல் ஐந்து அதிகாரங்களையும் பொது எனவும், பின்னைய ஐந்து அதிகாரங்களையும் சிறப்பு எனவும் வழங்குவர்.
நுவலும் பொருள்: இந்நூலில் உள்ள முதல் மூன்று அதிகாரங்களும் முறையே இறை, உயிர், தளை ஆகிய முப்பொருள்களின் இலக்கணங்களைக் கூறுவனவாகும். நான்காம் அதிகாரம் இறைவனின் திருவருளே உலகிற் சிறந்ததும் உயர்ந்ததும் ஆகும் எனக் கூறுகின்றது. ஐந்தாவது அதிகாரம் அவ்வருளே உயிர்கள் மாட்டு வைத்த கருணையால் குருவாக எழுந்தருளி வந்து உயிருக்கு உறுதியைத் தரும் எனக் கூறுகின்றது. ஆறாவது அதிகாரம் அவ்வாறு அறிவிக்க அறியும் உயிர் அறியும் நிலையை விளக்குகின்றது. ஏழாவது அதிகாரம் அதனால் உயிர் பெறும் விளக்கத்தைக் கூறுகின்றது. எட்டாம் அதிகாரம் அவ்விளக்கம் பெற்ற உயிர், இன்புறுமாற்றை விரித்துரைக் கின்றது. ஒன்பதாம் அதிகாரம் பெற்ற இன்பத்தை நெகிழவிடாது தொடர்ந்து நின்று பயன் பெறுதற்குத் திருவைந்தெழுத்தை ஒத வேண்டும் எனக் கூறுகின்றது. இவ்வாறு திருவருளால் படிப் படியாக உயர்ந்த உயிர், இறைவன் திருவடிக்கண் அணுகியபின் எவ்வாறு இருக்கும் என்பதைப் பத்தாம் அதிகாரமாகிய அணைந்தோர் தன்மை விளக்குகின்றது. இனி இந்நூலில் அமைந்துள்ள சைவசித்தாந்தக் கோட்பாடுகளைத் தனித்தனியே காண்போம்.
பதிமுதுநிலை பதிமுதுநிலை என்பது பதியினது முதுமையான நிலை என விரியும். அஃதாவது, இறைவன் உயிர்களோடு அநாதியாகவே அத்துவிதமாக நிற்கும் நிலையினை இவ்வதிகாரம் விளக்குதலின் இது பதிமுதுநிலை எனப்பட்டது. அகரம் தனித்தும் இயங்கவல்லது; ஏனைய எழுத்துக்களோடு இயைந்தும் இயங்க வல்லது. ஏனைய எழுத்துக்களுக்கெல்லாம் முதற்கண் நிற்பது. அதுபோன்றே இறைவனும் தனித்தும் இயங்கவல்லன். உயிர்களோடு இயைந்தும் இயங்க வல்லன். அவனே உயிர்களுக்கு முதன்மையும் தலைமையும் கொண்டு நிற்பவன். அறிவானவன், எங்கும் நீக்கமற நிறைந்து நிற்பவன், தன்னொப்பார்

Page 49
இல்லாதவன், அவன் உண்மை, அறிவு, இன்பம், ஆகியவற்றின் வடிவானவன். அந்நிலையை நிலைபெற்ற உயிர்கள் யாவும் பெறுதற்குத் துணையாய தன் அருளாற்றலோடு (சத்தியோடு) இயைந்து நிற்பவன். பெரியதிற் பெரியவனாயும் சிறியதிற் சிறியவனாயும் உயிர்கட்குப் பேரருள் வழங்குபவனாயும் அளவிடுவதற்கு அரியனாயும் விளங்குவதில் அவனுக்கு உவமை அவனேயாவன். இவ்வுலகைப் படைத்தும் காத்தும் உயிர்கட்குப் புகலிடமாவன், ஞானியர்க்கு அறிவு வடிவாய் விளங்கும் அவன், மற்றைய உயிரினங்களுக்கு அருவமும் உருவமும் கொண்டு அருள் வழங்கி வருபவனாவன். உணர்த்த உணரும் சிறுமையுடைய உயிர்போலன்றி, எவற்றையும் யாண்டும் முற்றுணர வல்லவனாவன். ஆதலின், அவன், அன்பு மீதூர்ந்த அடியவரிடத்து அகலாது அறிவு வடிவாய் இருப்பன். எரியால் வெப்பமுற்ற நீரில் அதன் வெம்மையைப் பிரிக்க இயலாதவாறு போல எல்லாவிடத்தும் எல்லாப் பொருள்களிலும் இடையீடின்றி நிற்பவன். நண்ணினர்க்கு நல்லனாயும் நண்ணாதார்க்கு நலமிலனாயும் விளங்கினும் அவன், ஒருபால் கோடுதலிலன். அவன் பெயர்க்கேற்ப எவ்வுயிர்க்கும் இன்பந் தந்து நிற்பவனாதலால் 'சங்கரன்' எனப் பெயர்பெறுவன். பிறவிப் பிணிக்கு மருந்தாகும் அவன், உயிர்களிடத்துப் பிரிவின்றி இயைந்து நிற்பவனாவன். ஆதலின் அவனை, ஐயமின்றி உள்பொருளாகத் தெளிந்து நினைந்து மகிழுங்கள்.
உயிரவை நிலை: உயிரவை நிலை என்பது, உயிர்அவை-நிலை என விரியும். அஃதாவது உயிர்களாகிய அவற்றின் நிலையை இவ்வதிகாரத்தில் விரித்துக் கூறுதலின் இது உயிரவை நிலை எனப் பெயர் பெற்றது. இதுவரை துறந்தோரையும் இனித்துறக்க இருப்போரையும் எண்னலுறின் உயிர்கள் இதுவரை பிறந்த நாட்களையும் இனிப்பிறக்க இருக்கின்ற நாட்களையும் கணக்கிட முற்பட்டது போலாகும். இதனால் உயிர்கள் எண்ணில என்பது அறியப்படும். இத்தகைய உயிர்கள் மூவகையாய் பிரித்து உணரப்படும். அவர் மும்மலமுடையார், இருமலமுடையார், ஒருமலமுடையார் எனப்படுவர். இம்மூவரும் ஆணவமாகிய மூலமலத்தை உடையவர். அவர்களுள் மாயை வழிப்பட்ட மும்மலமுடையார் தமக்கு மலப்பிணிப்பு உடைமையை அறியார். நனவில் காணும் பொருள்களைக்கூடக் கனவில் மயங்கிக் காணும் இயல்புடைய உயிர்க்குத் தன்வயம் என்பது ஏது? இந் நிலையில் அதனை ஆற்றலுடையது எனக் கருதுவது எங்ங்னம்? ஐம்பொறிகளின் துணையின்றி எதனையும் அறிய இயலாத உயிர்க்கு அறிவு என்னும் பெயர் வைத்தது பொருந்தாது. கானும் தன்மையற்ற கண்ணுக்கு உலகு, ஒளி, இருள் ஆகிய இவை இருந்தும் என்ன? இல்லாதிருந்தும் என்ன? அது போல, உயிர்களிடத்து உணர்வில்லையாயின், சிவம், மலம், மாயை ஆகிய மூன்றும் இருப்பினும் என்ன? இல்லாதிருப்பினும் என்ன? உயிர்க்குளதாய உணர்வினாலேயே இவற்றை அறியவும் தெளியவும் இயலும், நிலையுடைய பொருளாகிய இறை நிலையில் பொருள்களைச் சாராது. நிலையில் பொருள்களும் அறிவற்றன. ஆதலின், நிலையுடைய பொருளைச்சாரா. இவ்விரண்டும் அல்லாத உயிரே,

23
அவையிரண்டையும் அறிந்தும் தெளிந்தும் பயன் கொள்ளவல்லதாம். இருளில் இருளாகியும், ஒளியில் ஒளியாகியும் நிற்கும் பொருள்கள் பல உள. அவை கண்ணாடி, பளிங்கு முதலியனவாம். இவை போன்றே உயிரும் சார்ந்ததன் வண்ணமாய் நிற்கும் இயல்பினதாம். ஒளியில் இருந்தும் கூகைக்குக் கண் தெரிவதில்லை. அது போன்றே, மலப் பிணிப்புடைய உயிர்கட்கு இறைவன் உயிர்க்குயிராய் இருந்தும் அவன் நிலை தெரிவதில்லை. காலப் பழமைக்கு எட்டாத காலத்திருந்தே மலப் பிணிப்புற்றுக் கிடக்கும் உயிர்கள் அதனின்றும் நீங்கி என்று அருள் பெறுமோ? அந்தோ! இது வருந்தத்தக்கது.
இருள்மல நிலை: இருள் மல நிலை என்பது ஆணவமலத்தினது நிலையாம். பத்தாவது குறளில் மாயை, கன்மம் ஆகிய மலங்கள் குறிக்கப்பெறினும் சிறப்புப் பற்றி இருள்மலநிலை எனக் குறிக்கப் பெற்றது. பிறவித் துன்பமும், அதற்குக் காரணமாய் மலங்களும், வீட்டின்பமும் அதற்குக் காரணமாய் இறைவனும் இல்லையென்பது எங்ங்ணம்? உலகிலுள்ள பொருள்களை மறைத்து நிற்பது இருள். அதுபோலவே, பிறப்பு இறப்பின் துன்பத்தையும் வீட்டின்பத்தையும் மறைக்கவல்லது ஆணவமாகும். உலகிற் காணும் புறவிருளோ பிற பொருள்களைக் காட்டாதேனும், தன்னையேனும் காட்டி நிற்கும். இவ்வாணவமாகிய அகவிருளோ பிறவற்றையும் காட்டாததாகி, தன்னையும் காட்டாதாகும். உயிரொடு இயைந்து நிற்கும் ஆணவம் அவ்வுயிரை மறைத்து நிற்குமேயன்றி உயிர்க்குயிராய இறைவனை மறைப்பதில்லை. பல்லுயிர்களையும் ஆணவம் புணர்ந்து இருந்தும் அவ்வுயிர்த்தலைவர் எவருக்கும் தன்னைக் காட்டாது. இத்தகைய கற்புநிலை அதற்கேயுண்டு. பல சொல்லக் காமுறுவானேன். உயிர்க்குற்ற அறியாமை அவ்விருளார் தந்ததேயாம். அறியாமையின்றேல் துன்பமில்லை. ஆனால், உயிர்க்கு என்றும் அறியாமை இருந்து வருகிறது. ஆதலால், அதற்குக் காரணமாய் ஆணவமும் இருந்து வருவதேயாம். அவ்வாணவத்தைப் போக்கும் பொருள் உண்டெனில், அவ்வாணவத்தோடு இயைந்திருக்கும் உயிரும் போய்விடும். ஆனால் உயிர் என்றும் நிலைத்து நிற்கும். ஆதலின்
ஆணவமும் என்றும் நிலைத்து நிற்பதாம். இவ்வாணவம்
இடைக்காலத்தே உயிர்க்கு வந்திருப்பின், அது வீடுபேறடைந்த காலத்தும் வரக்கூடுவதேயாகும். ஆதலின் அது இடையில் வந்ததன்று. ஒளிகொண்டு இருளை விலக்கலாம். அதுபோல, உடல்கொண்டிருக்கும் பொழுதே அவ்வாணவத்தை நீக்க முற்பட வேண்டும். பொழுது விடியுமளவும் விளக்குத் துணையாதல் போல, ஆணவம் நீங்கும் அளவும் உயிர்க்கு இவ்வுடல் துணையாகும்.
அருளது நிலை: அருளது நிலை என்பது திருவருளின் தன்மையாம். பொருளைக் காட்டிலும் இவ்வுலகில் இன்றியமையாதது ஒரு பொருளில்லை. அதுபோல, திருவருளைக் காட்டிலும் இன்றியமையாததொரு பொருளில்லை. உலக இயக்கத்திற்குக் கதிரவன் துணையாதல்போல உயிர்களின்
இந்துக் តំឲGrញ៉ាទាំu៦

Page 50
வினையீட்டத்திற்கும், நுகர்ச்சிக்கும் திருவருள் துணையாகும். உடம்பு அறிவற்றது. உயிரும் அதனுள் கூடியல்லது அறிய வல்லதன்று. இவ்விரண்டையும் இயைத்து இயக்குவது திருவருளாகும். பாற்கடலில் உள்ள மீன் அப்பாலை அருந்தாது எதிரே காணப்படும் இழிவுணவை நாடுவது போலத் திருவருட் கடலிற் கூடியிருக்கும் உயிர்களும் அத்திருவருளைச் சார்ந்து இன்புறாது உலகியற்பொருள்களில் வேட்கையுற்றுத்திரிதரும். ஐம்பொறிகளும் தாம் உணர்தற்குக் காரணமாய உயிர் உண்டு என்பதை உணர்வதில்லை. அதுபோன்றே உயிர்களும் திருவருள் உண்மையை அறிவதில்லை. தாம் நடந்து செல்வதற்குத் துணையாக இருப்பது தரை என அறியாது, நடந்து சென்று கொண்டிருப்பவர்களைப் போல உயிரும் தனக்கு அடித்தளமாய திருவருளை உணர்வதில்லை. அந்நிலை மலையிலிருந்தோர் மலையைத் தேடுவது போலவும், மண்ணிலிருந்தோர் மண்ணைத் தேடுவது போலவும் விண்ணிலிருந்தோர் விண்ணைத்தேடுவது போலவுமாம். திருவருள் விளக்கத்திலிருந்தும் உயிர் அதனை விடுத்து உலகியற் பொருள்களை நாடுவது வெள்ளத்திருந்தும் நாவறட்சிக்காக வேறு நீர் தேடுவது போலாம். பாற்பானையின் மீதிருக்கும் பூனை அதில் உள்ள பாலை அருந்தாது எதிரிலிருக்கும் கரப்பினை, அருந்த நினைப்பது போலவாம். காலப்பழமைக்கு எட்டாத காலத்து இருந்தே உயிர் திருவருளோடு இயைந்திருந்தும் அதனுடன் பழக்கம் கொள்ளாத உயிர்க்கு வீடு பேறு என்பது மிகையேயாம்.
அருளுரு நிலை: அருளுருநிலை என்பது, அருளே உருவாய குருவினது தன்மையாம் உயிர் பக்குவம் பெறாக்காலத்து உள் நின்றுணர்த்திய பரம் பொருளே பக்குவமுற்ற காலத்துக் காணும் பொருளாக (குருவாக) முன்னின்று உணர்த்தவரும். வீட்டிலுள்ள ஒருவர்க்கு நோய் ஏற்படின் அவ்வீட்டிலுள்ளார் உணர்வரேயன்றிப் பிறர் உணரார். அதுபோல உயிர்க்குற்ற மலநோயை உயிர்க்குயிராக விளங்கும் இறைவன் அறிவதன்றிப் பிறர் அறியார். உயிர்க்கு அருளவல்ல இறைவன் குருவடிவில் மறைந்து நின்றே அருளுவான். அதை இவ்வுலகு அறிவதில்லை. இதனை உலகியல் இன்பத்தில் உழல்பவரும், ஆணவமான படல மறைப்பு உடையவரும் ஞான ஒளியைப் பெறாதோரும் அறியார். காட்டிலுள்ள விலங்குகளை, வீட்டில் வளர்க்கப்பட்ட விலங்குகளைக் கொண்டு பிடிப்பது போல, இறைவனும் வினைவயப்பட்ட மனித இனத்தை மனித இனம் கொண்ட குருவடிவில் வந்தருளுவான். யார் எச்செயலை ஆற்ற இயலுமோ அவர்களிடத்து அச்செயலைச் செய்து முடிக்கவேண்டுவதே அறிவுடைமை ஆதலின் வினை நீக்கத்திற்கு இறைவன் ஒருவனே துணை செய்யவல்லன். ஆதலின் அவனையே வேண்டி நிற்றல் வேண்டும். பாம்பு கடித்தவனிடத்து உளதாகும் நஞ்சு, கீரிப்பிள்ளையால் நீங்குவதில்லை. உரிய மந்திர வாதியினாலே அதனை நீக்கவியலும். அதுபோல, குருவருளே வினை நீக்கவல்லதாம். ஒரு மலமுடையார்க்கு உள் நின்றும், இருமலமுடையோர்க்கு முன்னின்றும், மும்மலமுடையார்க்குக் குருவாக எழுந்தருளி வந்தும் இறைவன் அருளுவான். அவனன்றி

24
அதற்கு உறுதுணையாவார் யார்? கதிரவனன்றிச் சூரிய காந்தக்கல்லில் நெருப்புத் தோன்றாதவாறு போல குருவருளால் அன்றி உயிர்க்கு ஞானம் பெறுதல் இல்லை.
அறியும் நெறி அறியும் நெறி என்பது, உண்மைப்பொருளை அறியும் நெறியாம். ஒன்றையொன்று ஒவ்வாது வளர்ந்து வரும் நல்வினை. தீவினை ஆகிய இரண்டின் கண்ணும் ஒத்த உவர்ப்பும் அவற்றாணாய பயனைத் துய்க்குமிடத்து அதனை ஒப்பக்காணும் உணர்வும் ஏற்படுங்கால் இறைவனின் அருட்சத்திப் பதிவு நிகழும். இறைவன், உயிர்கள்,ஆணவம், வினை, தூயதும் தூயதல்லாததும் ஆகிய மாயை ஆகிய இவை என்றும் உள்ளனவாம். வினை செய்வோன் அவனாற் செய்யப்படும் இருவினை, அவற்றின் பயனாய இன்பதுன்பங்கள், அவற்றை ஊட்டுவிக்கும் இறைவன் ஆகிய இந்நான்கையும் நீ உய்தற்கென உணர்வாயாக. உயிர் திருவருளோடு கூடி ஒன்றுபட்டு நிற்கும் முறைமை போல்வதாம். பளிங்கு தன் நிறத்தையும் தன்னைச் சார்ந்த பொருள்களின் நிறங்களையும் காட்டுவதற்குக் கதிரவன் காரணமாவதுபோல, உயிர் தனக்கு இயல்பாகிய வீடுபேற்றை அடைதற்கும், தான் சேர்ந்த பொருள்களின் வழி அழுந்தி நிற்பதற்கும் இறையருள் காரணமாகின்றது. கண் ஒரு பொருளைக் காணவேண்டின் அதற்கும் அப்பொருளுக்கும் இடையே ஒளி ஒன்று தேவையாகின்றது. அதேபோன்றே உயிரும் எதனை உணரினும் அதற்கு ஏதுவாக இறையருள் வேண்டும். பொறிவழிச் செல்லும் புன்மைக்கு உயிரியக்கம் காரணமாவது போல, நெறிவழிச் செல்வதற்கும் இறையருளே காரணமாகும். இவ்வாறு திருவருளை உணருங்கால் அது எவ்வாறு இருக்குமென்றோ அது தன்னின் வேறாக இருப்பதென்றோ என்று ஆராய வேண்டாம். உன்னை உருவாக்கும் அத்திருவருளை எண்ணியும் போற்றியும் வருவாயாக. ஞானத்தாற் பெறும் இன்பமே இன்பம். அத்தகைய ஞானத்தைக் காணவும், அதன் கண் அடங்கவும் முயலுக. திருவருள் நினக்குக் கிட்டியவாறு உணர்க. உயர்க.
உயிர் விளக்கம் : உயிர்விளக்கம் என்பது, உயிர் ஆணவமலம் நீங்கப் பெற்றுத் தன் செயலின்றித் திருவருள் வயப்பட்டு விளக்கமுற்று விளங்கும் நிலையாகும். வெப்பத்தால் வெதும்பியவனுக்குத் தூய நிழலைச் சேர்க என்று யாரும் சொல்ல வேண்டியதில்லை. அவன் தானே சேர்வன். அதுபோல உலகியல் துன்பங்களில் வருந்தும் ஒருவனுக்கும் திருவருள் நிழல் கண்டதும் அவனுக்கு யாரும் விரைந்து அதனைப்பற்றுக என்று சொல்ல வேண்டுவதில்லை. தானே அதனில் அழுந்தி இன்புற விரைந்து செல்வன். பித்த மிகுதி உடையார்க்குத் தித்திக்கும் பால்தானும் கசக்கும். அப்பித்தம் நீங்கியவழி இனிக்கும். அதுபோல ஆணவமலத்தில் உயிர் அழுந்தி நிற்குங்காறும் மறைப்பாற்றல் இனிக்காது. மலப்பிணிப்பு நீங்கிய வழி இனிக்கும்.
திருவருள் தன்னைக் காட்டக் காணும் உயிர், தான் கண்டதாகக் கருதுதல் பெரும் பாவமாகும். குருடர்க்கு ஒளியும்

Page 51
இருளும் ஒன்றே. அதுபோல இறையருள் வயப்படாதார்க்கு இறையும் தளையும் ஒன்றேயாம். அருளாகிய நட்பைப் பெற்றார்க்கல்லது தமது பாரத்தைச் சுமக்கும் இறைவனைக் கிட்டுதல் அரிது. ஒருவனிடத்துள்ள பொருளைக்கவர அவன் தூங்க வேண்டும்; அல்லது அவன் அங்கில்லாதிருத்தல் வேண்டும். இந்நிலையின்றேல் அவன் பொருளைக் கவர இயலாது. அது உலகியல் நிலை. இதுபோன்றே அருளியல் நிலையிலும் உயிர்கள் பெறத்தக்க அந்தமில் இன்பத்து அழிவில் இன்பமாம் வீடுபேறும் இறைவனை இன்றிப் பெறுதற்கில்லையாம். நண்பகற் பொழுதில் தன் நிழல் கதிரவன் ஒளியால் படிகத் தூணின் நிழல் கவரப்பட்டு நிற்கும். அதுபோல உயிர் திருவருளால் கவரப்பட்ட பொழுது மலப்பிணிப்பினின்றும் நீங்கி நிற்கும்.
தழற்கொள்ளியைக் கையில் முன்னோக்கிப்பிடித்துச் செல்லுங்கால் இருள் நீங்கி இன்பம் பயக்கும். அக்கொள்ளியைப் பின் வைத்துத் தாம்முன் செல்லின் இருளால் இடர்ப்பட்டு விழும். அதுபோல, திருவருளை உயிர்முன் வைத்து எதனையும் செய்யின் இன்பம் இடையறாது ஈண்டும். அதனைப் பிற்படுத்தித் தான் முன் செல்லின் துன்பம் இடையறாது ஈண்டும். ஐம்பொறிகளின்றி உயிரும் உயிரின்றி ஐம்பொறிகளும் செயற்படுவதில்லை. அங்ங்னமாகத் திருவருளை உயிரோ ஐம்பொறிகளோ அறியும் என்றால் எங்ங்ணம்? இறைவன் தானே தன்னை உயிர்களுக்கு வழங்கியருளும் கருணையாளன். அங்ங்னமாக அவனை உயிர்கள் தம்வலியால் அடையமுடியும் என்றால் எங்ங்ணம்?
இயலாது என்பதாம்.
இன்புறு நிலை: இன்புறுநிலை என்பது, உயிர்கள் பேரின்பத்தைப் பெற்று இன்புறும் நிலையாம். இருள் நீங்கி இன்பம் பயக்க எழும் திருவருளின் பின் செல்வார் இன்பமடைவர். அதனைப் பின்னாக்கித் தாம் முன் செல்வார் துன்பமடைவர். ஒருவன் மற்றொருவனுடன் கூடின் அல்லது இருமடந்தையர் தம்முள் கூடின் இன்பம் வாய்ப்பதில்லை. அதுபோல உயிர் திருவருளைச் சார்ந்த நிலையில் இன்பம் அடைவதில்லை. அதன்வழி சிவத்தைச் சார்ந்த பின்பே இன்பமடையும். உயிர்கட்குவேண்டும் இன்பத்தை வழங்கியருளும் இறைவன் இன்ப வடிவினன் ஆவன். அவன் வடிவே இன்ப வடிவாய் இருத்தலின் தான் ஒரு இன்பத்தைத் தனியாக நுகரான். தாள் தலை என்ற சொற்கள் தம்முள் இயைந்து தாடலையாகும். அதுபோன்றே உயிரும் இறையும் இயைந்து இரண்டல்லாத நிலைபெறும். வீடுபேற்று நிலையில் உயிரும் இறையும் ஒன்றென்றும் இரண்டென்றும் கருத இயலாதவாறு இருமையில் ஒருமை பெற்று விளங்கும். மெய்ப்பொருளை அடைந்தவர்களும் அதில் உண்மையைத் தெளிந்தவர்களும் உரை இறந்து (மெளனமாய்) நிற்பவர்களும், பிறவியற்றவராவர். பேய்பிடித்தவன் தன் செயலின்றி அனைத்தும் பேயின் செயல்களையே செய்து நிற்பான். அதுபோலத் திருவருள் வயப்பட்டவர் தன் செயலன்றித்

25
திருவருள் வயத்ததாம் செயலையே செய்வர். நிட்டையால் இறைவனைக் கூடியவர்கள் பேரின்பத்தைப் பெற்று நிற்பர். அவர்தம் சமய ஒழுக்கங்களெல்லாம் தூங்குவார் தம்கைப் பொருள்போலத் தாமே விட்டகலும். உயிரும் சிவமும் பிரிவின்றி இயைந்து நிற்பக் காண்பவன், காட்சி, காட்சிப் பொருள் என்ற மூவகை நிலையும் தோன்றுவதில்லை. அப்பொழுது தோன்றும் பேரின்பம் அறிவில் அறியத்தக்கதன்று. இத்தகைய பேரின்பத்தை அன்புண்டேல் உடனே பெற்றிடலாம்.
ஐந்தெழுத்தருள் நிலை ஐந்தெழுத்தருள் நிலை என்பது திருவைந்தெழுத்தை ஒதி அத்திருவருளிலேயே அழுந்தி நிற்கும் நிலையாம். ஆகமம், மறை மற்றுமுள்ள ஞான நூல்கள் ஆகிய அனைத்தும் ஐந்தெழுத்தின் உண்மையைச் சாற்றுவனவாம். ஓங்காரமாகிய பிரணவத்துள் சிவம், சக்தி, மலம், அழகுமிக்க மறைப்பாற்றல், உயிர் ஆகிய இவ்வைந்தும் அடங்கி நிற்கும். திருவைந் தெழுத்தினுள் வகரமாகிய உயிர் ஒருகால் மலத்தொடும் பிறிதொருகால் சிவத்தொடும் இயைந்து நிற்கும். இதனை முறையே, ஊன நடனம்,ஞான நடனம் என அழைப்பர். மலங்கள் உயிரைப் பொருந்தி அவ்வுயிரைத் தம்மிடத் தினின்றும் நீங்கவிடா. திருவருள்வழி உயிர் சிவத்தை அடையின் மலக்கட்டற்று விளங்கும்.
நகரத்தை முன்னாக வைத்துத் திருவைந்தெழுத்தை ஒதின் உயிர்மலநீக்கம் பெறாது. சிகரமுதலாக (சிவாய நம) வைத்து ஒதின், மலம் நீங்கும். இத்திருவைந்தெழுத்தையே பற்றுக் கோடாகக் கொண்டு ஒதுக! உயர்க! இவ்வாறு ஒதுதல் பிறவிப் பிணி நீங்கவும், வீடுபேறு வாய்க்கவும் இடனாகும். வகரமாகிய திருவருள், சிகரமாகிய சிவத்தை அடைவிக்கும். இத்திருவருளே இறைவனின் திருமேனியாகும். உயிர் நகர மகரங்களின் இடை நில்லாது சிகரவகரங்களின் இடை நிற்றல் தக்கது. உயிர் திருவருள் வழிநின்று சிவத்தை அடைய வேண்டும் என்பதே அனைத்து நூல்களின் உட்கிடக்கையாகும்.
அணைந்தோர் தன்மை: அணைந்தோர் தன்மை என்பது இறைவனது திருவருளில் அழுந்தி நிற்போரது தன்மையாகும். திருவருள் வழி தம் அறிவு இச்சை செயல்கள் செயற்பட நிட்டையில் அழுந்தி நிற்பார்க்கு என்ன குறையுள்ளது? என்ன குறையும் இலையாம். இறைவனால் செய்யப்படும் படைப்பு முதலிய ஐந்தொழில்களையோ அன்றி அவன் அதிட்டித்து நின்று செய்யும் தொழில்களையோ உலகியல் வயப்பட்டார் செய்யும் கொடுந் தொழில்களையோ அணைந்தார் செய்யார். எல்லாவற்றையும் அறியும் அறிவு இவர்க்கு இருப்பினும், இறையின்பத்தில் அழுந்தி நிற்பதன்றி வேறு எதனையுஞ் செய்யார். இடர் வராது காக்க ஆமை தன் ஐந்துறுப்புகளையும் அடக்கியிருப்பது போல, இவரும் உரனென்னும் தோட்டியால் ஒரைந்தும் காத்து (புலனடக்கம் செய்து) நிற்பர்.
இந்துக் க்களஞ்சியம்

Page 52
இறைவனையன்றி இவ்வுலகு இல்லையாதல் போல அவ்விறைவனாம் தன்மையடைந்த இவரையன்றியும் உலகில்லை. உள்ளும் புறமும் ஒரு தன்மைத்தாகக் காண இயலும் இவர்க்கு எதனையும் யாரையும் இகழ்தல் தோன்றாது. பயன்கருதியும் பற்றுச் செய்தும் வாழ்தல் இவரிடத்து இல்லையாதலின் இவர் பெறும் இன்பம் பேரின்பமேயாய் அமையும். அணைந்தோர்க்கு என்றவினை உடலூழாய்க் கழியும், ஏறும் வினை ஒருகால் தோன்றினும் திருவருள் அதனைச் சுட்டொழிக்கும்; மனம் மொழி, மெய்களால் இவர்கள் செய்யும் எவ்வினைகளும் பிறப்பிற்கு ஏதுவாகா. வீட்டின் பதத்தையும் இப்பிறவியிலேயே துய்த்து நிற்பர். உயிர்கள் அனைத்தும் பொறிவழிப்பட்டு நில்லாது. இறைவன் நெறி வழிப்பட்டு நிற்க வேண்டுவதே இவர்கள் கருத்தாகும். இவ்வாறன்றி உயிர்கள் அலமருகின்றன என்பதே இவர்கள் வருத்தமாகும்.
வினா வெண்பா வினாவெண்பா என்ற சாத்திர நூலும் உமாபதி சிவாச்சாரியாராற் அருளப்பட்டதேயாம். சித்தாந்த சாத்திரங்களுள் இந்நூல் ஒன்பதாவது வரிசையில் வைத்து எண்ணப்படுகின்றது.
இந்நூல் மொத்தம் பதின்மூன்று வெண்பாக்களால் அமைந்துள்ளது. அவை வினாக்களாக உள்ளன. உமாபதி சிவாச்சாரியார் தமக்குத்தாமே தமது குருவாகிய மறைஞான சம்பந்தரிடம் வினாவை எழுப்பி, அதன்மூலம் விளக்கம் பெறுவதாக இந்நூல் அமைந்துள்ளது. இவ்வகையில் இந்நூலின் முதற் பன்னிரெண்டு வெண்பாக்களும் உமாபதிசிவாச்சாரியார் தமது குருவாகிய மறைஞானசம்பந்தரிடம் கேட்கும் வினாக்களாக உள்ளன. பதின்மூன்றாவது வெண்பா நூற்பயனைக் கூறுவதாகவுள்ளது.
சைவசித்தாந்த தத்துவத்திற் காணப்படும் சில சிக்கல்கள், முரண்பாடுகள் போல்வன வினாவடிவில் இந்நூலில் அமைந்துள்ளமை நயக்கத்தக்கதாகும். சைவசித்தாந்தம் அச்சிக்கல்களை எவ்வாறு விடுவிக்கின்றது என்பதையும் புலப்படுத்துவதே இந்த நூலின் நோக்கமாகும்.
இந்நூலிற் கேட்கப்படும் வினாக்கள் யாவும் சைவசித்தாந்த மெய்பொருளியலில் எழுகின்ற நுட்பமான ஐயங்களைத் தெரிவிப்பதாக உள்ளன. எழுப்பப்பட்ட வினாக்களுக்கு விடைகள் தரப்படவில்லை.சைவசித்தாந்த சாத்திரப் பயிற்சி உடையோர் இவ்வினாக்களுக்குரிய விடைகளை நுணுகி ஆராய்ந்து கொள்ள இயலும், அவ்வாறு அறிவார்க்குச் சித்தாந்த சாத்திரங்களில் தெளிவு உண்டாகும் எனக் கருதி, ஆசிரியர் வினாக்களின் தொகுதியாக நூலை அமைத்துள்ளார் எனக் கொள்ளலாம்.
இந்நூல் நீ என்று தொடங்கி, நீ என்ற எழுத்திலே முடியும் சிறப்பினை உடையது. இருளும் ஒளியும் ஒன்றுக்கொன்று

முரணானவை. அவை இரண்டும் ஒரிடத்தில் இருக்க இயலாது. அவ்வாறாயின் உயிரில் இருளும் இறைவனும் சேர்ந்திருப்பது எங்ங்ணம் ? என்பதே முதல் வினாவாகும்.
கனவைக் கனவென்று கனவிலே காண முடியாது. நனவாயின் அதனைத் தொடரமுடியாது. இறைவனருள் அவத்தைக்குட்படாதெனின் நான் அவத்தைப்படுவதேன்? என்பது இந்நூலின் நான்காம் வினாவாகும்.
சிற்றறிவு சிவனருளைச் சேர்வதெவ்வாறு என்பது ஆறாம் வினாவாகும். இந்நூலில் வரும்,
காண்பானும் காட்டுவதும் காண்பதுவும் நீத்துண்மை காண்பார்கள் நன்முத்தி கானார்கள் - காண்பானும் காட்டுவதும் காண்பதுவும் தண்டந்தைச் சம்பந்தன் வாட்டுநெறி வாராதவர் எனும் செய்யுள் சைவசித்தாந்த முத்தியின் இயல்பை இனிதெடுத்துரைக்கின்றது. 'காண்பானும், காட்டுவானும், காணப்படும் பொருளுமென்கின்ற மூன்றின் வேற்றுமையுணர்வு நீங்கி மெய்ப்பொருளை ஒன்றியவுணர்வோடு காண்போரே நல்முத்தி காண்பர். மறைஞான சம்பந்த மாமுனியே பாசத்தை மெலிவிக்கும் நன்னெறியில் வராதோர் இம்மூன்று பொருள்களின் இயல்புகளைக் காணாதோர் ஆவார் என்பது இச்செய்யுளின் கருத்தாகும். -
வினாவெண்பாவின் பொருளை உணர்ந்தவரே சித்தாந்த ஞானத்தைத் தெளிந்தவரும், தெரிவிக்க வல்லவரும் ஆவார் என ஆசிரியர் இறுதியில் கூறியருளுகின்றார்.
வினா வெண்பா என்னும் நூலைச் சிவப்பிரகாசம், திருவருட்பயன் எனும் இரு நூல்களையும் கற்றாரைச் சோதிக்கும் சோதனைத்தாள் எனக் கூறல் தகும் என்பர் சித்தாந்தக் கலைச்செல்வர் திரு.க.வச்சிரவேல் முதலியார்.
சித்தாந்த சாத்திரங்கள் பதினான்கினுள் வினா வெண்பா, இருபா இருபஃது, உண்மை விளக்கம் ஆகிய மூன்று நூல்களே வினாவிடை மூலம் சைவசித்தாந்தக் கோட்பாடுகளைப் புலப்படுத்துகின்ற சிறப்புக்குரியவையாக விளங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.
போற்றிப் பஃறொடை போற்றிப் பஃறொடை என்பது சித்தாந்த சாத்திரங்கள் பதினான்கினுள் தனிச் சிறப்புடையது. இந்நூலும் உமாபதி சிவாச்சாரியாரால் அருளிச் செய்யப்பட்டது. பஃறொடை வெண்பாவால் அமைந்து விளங்குகின்றது.
இறைவனின் திருவருள் முதற்கண் உயிர்களை அநாதி கேவலத்திலிருந்து எடுத்துச் சகலநிலைக்கு ஆளாக்கி, பிறப்பிறப்புக்குட்பட்டுச் சுழல வைக்கின்றது. பின்னர் பக்குவ முதிர்ச்சியெய்திய உயிர்களை ஞான தீக்கை செய்து, சுத்தநிலை

Page 53
எனப்படும் பரமுத்தி நிலையை அடையத் துணைபுரிகின்றது. இவ்வாறு உயிர்களுக்குத் திருவருள், தொன்றுதொட்டுச் செய்து வரும் உபகாரங்களை நினைந்து போற்றுவதாக இந்நூல் ஆக்கப்பட்டுள்ளது.
சித்தாந்த சாத்திரங்கள் பதினான்கினுள், உயிர்கள் முதன் முதலாக எவ்வாறெல்லாம் தோற்றம் பெற்றன என்ற செய்தியானது இந்த நூலில் சிறப்பாக இடம் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கதாகும். இந்நூல் தோத்திர வடிவில் அமைந்த ஒரு சித்தாந்த சாத்திரமாகும்.
கொடிக்கவி
கொடிக்கவி எனும் சித்தாந்த நூலும் உமாபதி சிவாச்சாரியார் அருளிய நூல்களுள் ஒன்றாக விளங்குகின்றது. உமாபதி சிவாச்சாரியார் அருளிய நூல்களுள் அளவில் மிகச் சிறியதாய், பெரியதோர் தெய்வாதிசயப் பின்னணியோடும் தோன்றிய நூல் இதுவாகும். இந்நூல், ஒரு கட்டளைக் கலித்துறையும் மூன்று வெண்பாக்களும் ஆக நான்கு பாக்களால் ஆனது. இந்த நூலின் சில பதிப்புகளில் துகளறுபோதத்தின் இறுதிச் செய்யுளான “அந்த மலமறுத்திங் கான்மாவைக் காட்டிய” எனத் தொடங்கும் செய்யுள் ஐந்தாவது பாடலாகச் சேர்க்கப் பெற்றுள்ளது. இச் செய்யுளை இயற்றியவர் சிற்றம்பலநாடிகளாவர்.
கொடிக்கவி எனும் நூல் தில்லையில் கொடியேற்றும் பொருட்டுப் பாடப்பட்டது. தில்லைவாழ் அந்தணர்கள் சிதம்பரம் டராசரின் திருக்கோயிற் திருவிழாவில் உமாபதி சிவாச்சாரியாரை ஒதுக்கிவிட்டு வேறொரு சிவாச்சாரியாரைக் கொண்டு கொடியேற்ற முற்பட்டபோது அங்கு கொடியேறாது தடைப்பட்டதாகவும், பின்னர் உமாபதிசிவாச்சாரியாரை அழைத்து வந்து கொடிக்கவிபாடியபோதே கொடியேற்றம் நிகழ்ந்ததாகவும் கூறப்படுகின்றது.
இந்நூலின் முதற் செய்யுள் உயிரோடு இணைந்திருக்கின்ற ஆணவ இருளாகிய அறியாமையைக் குறிப்பிடுகின்றது. ஒளியும், இருளும் ஒருசேர நில்லா. இருள் ஒளியை விழுங்க முடியாது. ஒளி இருளைக் குவித்து விடும். ஒளி, இருள் என்ற இரண்டில் ஒன்று மேம்படுங்கால் பிறிதொன்று மறையும். அதாவது திருவருள் மிக ஆணவம் குறையும், ஆணவம் மிகத் திருவருள் குறையும். எனினும் ஆணவ மலம் சிவஞானத்தைக் கட்டுப்படுத்தாது. மும்மலங்களாற் கட்டுண்டு கிடக்கும் உயிர்களுக்கு திருவருள் பொருந்துமாறு நான் இக்கொடியைக் கட்டுகின்றேன் என முதற் செய்யுள் குறிப்பிடுகின்றது.
இரண்டாம் செய்யுள் சிவம், சக்தி, உயிர் என்பன பற்றியும் கேவல, சகல அவத்தைகள் பற்றியும் கூறுகின்றது. கோபுர வாசலில் கொடியேறும் பாங்கினை இச் செய்யுள், “கட்டினேன் கோபுரவாசற் கொடி’ எனக் கூறுகின்றது.

27
மூன்றாம் செய்யுள் இறைவனும், உயிரும் பிரியாதிருக்கும் சைவசித்தாந்த அத்வைத நிலையினை விளக்குகின்றது. மனத்திற்கும், வாக்கிற்கும் எட்டாத இறைவன் உயிர்களோடு உயிருக்குயிராய் விளங்கி நிற்கின்றான். இவ்வுண்மையை உயிர்கள் உணர இறைவன் திருவருள் சுரக்குமாறு வேண்டி இக் கொடியைக் கட்டினேன் என மூன்றாம் செய்யுள் இயம்புகின்றது.
நான்காம் செய்யுளில் திருவைந்தெழுத்தின் பல்வேறு வடிவங்கள் எடுத்துக் காட்டப்படுகின்றன. ஒவ்வொருவரும் தாம்தாம் விரும்பும் பயனுக்கு ஏற்ற வகையில் திருவைந் தெழுத்தினைச் செபித்து வருகின்றனர். “சிவாயநம என்பது திருவைந்தெழுத்தாகும். “ஓம் ஹும் ஓம் சிவாய நம” என்பது எட்டெழுத்தாகும். “ஓம் நமசிவாய'என்பது நான்கெழுத்தாகும். இவைகளை முறையாக எண்ணி அதன் பயனாகப் பஞ்செழுத் தாகிய வகாரமாகிய திருவருட் சக்தியையும்,மேலான பெருவெழுத்தாம் சிகரமாகிய சிவத்தையும் மனத்தகத்து வைப்பின், அதன் விளைவாகப் பேசும் எழுத்தாகிய (பிஞ்செழுத்து) வகரமாம் அருட் சத்தி, தன்னுடன் பேசா எழுத்தாகிய (பெருவெழுத்து) சிகரமாம் சிவத்தையும் மிகவும் எளிதாக உயிரின்கண் பதிவிக்கும். அவ்வாறு பதிவிப்பதற்காக இக்கொடியைக் கட்டுகின்றேன் என இச் செய்யுள் அமைந்துள்ளது. திருவைந்தெழுத்தை இடைவிடாது எண்ணுதலின் பயன் உயிர் திருவருளைப் பெற்றுச் சிவத்தை அடைவதாகும். இப் பேற்றினைப் பெறவே கொடி கட்டுவதாக ஆசிரியர் அருளுகின்றார்.
சிவத்தை உணர்வதற்கு திருவருள் தேவை. அதன் குறியீடு “வ” எனும் பிஞ்செழுத்தாகும். சிவப்பரம் பொருளைக் குறிக்கும் குறியீடு 'சி' எனும் மேலைப் பெருவெழுத்தாகும். இவற்றை நுட்பமாகப் புலப்படுத்தும் நூலாகக் “கொடிக்கவி’ விளங்குகின்றது.
இந்நூலுக்கு பழைய உரை ஒன்றுண்டு. நூலாசிரியர் பெயர் தெரியவில்லை. கா.சுப்பிரமணிய பிள்ளை இந்நூலினை உரைநடையில் தந்திருக்கின்றார். ஜே.எம். நல்லசாமிப்பிள்ளை இந் நூலினை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருக்கின்றார்.
நெஞ்சுவிடுதூது
நெஞ்சுவிடு தூது என்பது தூது’ என்னும் இலக்கிய வகையைச் சேர்ந்த சித்தாந்த சாத்திர நூலாகும். சித்தாந்த சாத்திரங்கள் பதினான்கினுள் தூது’ எனும் இலக்கிய வகை மூலம் சித்தாந்தக் கோட்பாடுகளைப் புலப்படுத்தும் நூல் இது ஒன்றே ஆகும். உமாபதிசிவாச்சாரியாரால் அருளப்பட்ட இந்நூல், 129 கண்ணிகளை உடையது. கலிவெண்பாவால் அமைந்து விளங்குகின்றது.
உமாபதிசிவாச்சாரியர் தம்மைத் தலைவியாகவும், தம் குருமூர்த்தியான மறைஞான சம்பந்தரைத் தலைவராகவும், அவர் திருவுலாப் போவது கண்டு தாம் அவரிடத்து ஈடுபட்டதாகவும்,
இந்துக்கலைக்களஞ்சியம்

Page 54
தாம் ஈடுபடுவதற்குக் காரணமாய் அத்தலைவரது மாலையை வாங்கி வரத் தம் நெஞ்சைத் தேர்ந்தெடுத்த திறம் மகிழத்தக்கதாகும். சித்தாந்த நோக்கும் உடையதாகும். தலைவனது பெருமையையே பெரிதும் கூறி, அத்தலைவனிடத்து அணுகுங்கால் ஆங்குள்ள நெறியில் நிற்பாரிடத்துச் சாராது செல்ல வேண்டுமென்று நெஞ்சுக்குக் கூறியிருப்பது சித்தாந்த சாத்திரங்களுள் ஒரு புது வரவாகும்.
இறைவனே, மறைஞானசம்பந்தராய்த் தம்மை ஆட்கொண்டார் என்பது ஆசிரியரின் திருவுளமாதலின், இறைவனுக்குள்ள பெருமைகள் யாவும் தம் குருமூர்த்தியாகிய மறைஞான சம்பந்தரிடம் இருப்பதாகக் கண்டு, பெண்மை நிலையில் நின்று பாடும் ஆசிரியர், தம் தலைவனின் பெருமையைப் பலபடச் சிறப்பித்துச் சைவசித்தாந்தக் கருத்துக்களை வெளிப்படுத்திக் கூறும் திறம் நயக்கத்தக்கதாக வுள்ளது.
இந்நூலில் தலைவனது பெருமை கூறுதல், தமது சிறுமை உரைத்தல், திருவுலாப் போதல், தாம் பெற்ற பேறும் அணுகுநெறியும், போற்றலும், புகலிலும் என்ற ஆறு வகையான வழியிற் சைவசித்தாந்தக் கருத்துக்கள் புலப்படுத்தப்பட்டுள்ளன எனலாம்.
உலகாயதம், பெளத்தம், சமணம், வேதாந்தம் என்பவற்றின் அடிப்படையான பொருள் நிலைகள் இது என்பதை எடுத்துக் காட்டி, அத்தகைய சமயிகளிடத்தும், சிவ பெருமானையும், சிவவேடங்களையும் இழித்தும், பழித்தும் பேசுவாரிடத்தும் செல்ல வேண்டாமென்றும் கூறிச் சைவசித்தாந்தத்தின் சிறப்பை இந்நூல் தெளிவாக உணர்த்தி நிற்கின்றது. இந்நூலையும் தோத்திர வடிவில் அமைந்த ஒரு சாத்திர நூலாகக் கொள்வர்.
உண்மை நெறி விளக்கம்
சைவசித்தாந்த சாத்திரங்கள் பதினான்கினுள் தனிச் சிறப்புடைய சாத்திர நூலாக உண்மை நெறி விளக்கம் விளங்குகின்றது. சைவசித்தாந்த சாத்திர நூல்களின் வரிசையில் பதின்மூன்றாவது நூலாகக் கொள்ளப்படுவது. இந்த ஞான நூலினையும், உமாபதி சிவாசாரியார் அருளிய சித்தாந்த அட்டகம்' என்னும் பெயரில் வழங்கும் எட்டுச் சாத்திர நூல்களுள் ஒன்றாகக் கொள்வது சித்தாந்த சைவ மரபாகும். உண்மை நெறி விளக்கம் என்ற இந்நூலினைச் சீர்காழிச் சிற்றம்பலநாடிகளின் மாணவராகிய சீகாழித் தத்துவநாதர் என்பவர் அருளினார் எனவும் அறிஞர் குறிப்பிடுவர். ஆனால் இந்நூலினைச் சீகாழித் தத்துவநாதர் இயற்றவில்லை என்பதையும், உமாபதிசிவாசாரியரே இயற்றினார் எனவும் அறிஞர் எடுத்துக் காட்டுவர்.
ஆன்மா ஞான சாதனையில் முன்னேறும்போது ஆன்ம அறிவில் நிகழும் செயற்பாடுகளை பத்துவகை ஞானப் படிகளாக வகுத்து தச காரியம் என்று கூறுவது சைவசித்தாந்தத்தின்

28
அடிப்படையான கோட்பாடாகும். தச காரியம் பற்றிய சைவசித்தாந்த ஞானச் செய்தியினையே உண்மைநெறி விளக்கம் சிறப்பாகப் புலப்படுத்துகின்றது.
ஆறு செய்யுட்களைக் கொண்ட உண்மை நெறி விளக்கத்தின் முதற் செய்யுள் தத்துவரூபம், தத்துவதரிசனம், தத்துவசக்தி ஆகியவற்றையும் இரண்டாம் செய்யுள் ஆன்மரூபம், ஆன்மதரிசனம், ஆன்மசக்தி என்பவற்றையும், மூன்று, நான்கு, ஐந்து, ஆறு ஆகிய செய்யுட்கள் முறையே சிவரூபம் சிவதரிசனம், சிவயோகம், சிவபோகம் ஆகியவற்றையும் எடுத்துரைக்கின்றன.
சகள நிலையில் உள்ள உயிர் சுத்த நிலையை எய்தி, இறைவன் திருவடியைத் தலைக்கூடும் நெறியே ஞான நெறி அல்லது உண்மை நெறி ஆகும். இந் நெறிக்கண் மேற்கொள்ளப்படும் ஞானச் செய்திகளை மேலே கூறப்பட்ட தசகாரியங்களாக வைத்து விளக்கும் தனிச் சிறப்பு உண்மை
நெறி விளக்கத்திற்குரியது.
சங்கற்பநிராகரணம்
சித்தாந்த சாத்திரங்கள் பதினான்கில் ஈற்றில் அமைந்தது சங்கற்பநிராகரணம் ஆகும். இந்நூலும் உமாபதிசிவாசாரியாரால் அருளப்பட்ட சித்தாந்த அட்டகங்களுள் ஒன்றாகும். சங்கற்பம் என்பது கொள்கை' எனப் பொருள்படும். நிராகரணம் என்பதற்கு மறுத்தல்' என்பது கருத்தாகும். இவ்வகையில் பிறசமயக் கொள்கைகளை மறுத்தெழுந்த நூலாகச் சங்கற்ப நிராகரணம் எனும் நூல் விளங்குகின்றது.
பரமுத்தி நிலையைத் தலைப்படும் உயிர் மேற்கொண்டு செல்லும் மெய்யுணர்வு நிலையில் ஐயமும் மருட்கையும் விளைவிப்பனவாகச் சில சமயங்களின் முடிவுகள் உள்ளன. அச் சமயங்களை மாயாவாதம், ஐக்கியவாதம், பாடானவாதம், பேதவாதம், சிவசமவாதம், சங்கராந்தவாதம், ஈசுவர அவிகாரவாதம், நிமித்த காரண பரிணாமவாதம், சைவவாதம் என ஒன்பது வகையாக வகைப்படுத்தி அவற்றின் துணிபுகளை சங்கற்பங்கள் (கொள்கைகள்) என வைத்துக்கூறி, அவற்றை இந்நூல் நிராகரிக்கின்றது. இவ்வொன்பது சமய சங்கற்பங்கள் நிராகரிக்கப்படுவதன் காரணமாகவே இந்நூல் இப்பெயர் பெற்றது.
இருபது ஆசிரியப் பாக்களால் இயன்ற இந்நூலின் முதலாவதாகிய காப்புப் பாடல் மூத்தபிள்ளையாரின் திருமேனி நலத்தைப் புனைந்து பாடி நினைந்து வணங்குவதாக அமைந்துள்ளது.
அடுத்துவரும் பாயிரப் பாடலில் நூல் தோன்றிய காலமும் களமும் காரணமும் காட்டப் பெறுகின்றன. சாலிவாகன ஆண்டு 1235 (கி.பி 1313) இல் திருத்தில்லையில் ஆனிப் பெருவிழாவில்

Page 55
ஆறாம் நாளன்று சிவாகம வழியொழுகும் எண்மரும், மாயாவாதி ஒருவனும் தேர்மண்டபத்தின் ஒருபுறம் இருந்தனர். மெய்கண்ட தேவரின் அருள் பெற்ற அடியவராகிய சைவ சித்தாந்தி ஒருவர் மற்றொரு பக்கம் இருந்தார். உண்மை விழைவோன் ஒருவன் அங்கு வந்து மாயாவாதியை நோக்கி “தம்பிரானார் திருவருள் நிலை எத்தகையது?”என வினாவினான். அம்மாயாவாதி தான்
அப்பேச்சிற் குறுக்கிட்டு ஒருவரை ஒருவர் மறுத்துத் தத்தம் கருத்துக்களைக் கூறினர். அக்கூற்றுக்களைக் கேட்டிருந்த மெய்கண்ட தேவர் அருள் பெற்ற அடியவர் அவற்றைச் சங்கற்பங்களாக வைத்து உரைத்து நிராகரித்தார். நிராகரித்து உண்மை விழைவோனைச் “சிவப்பிரகாசச் செழுந்தமிழ் நூலை திருவருள் சார்பாக நின்று சிந்தித்து உணர்ந்தால் மெய்யுணர்வு நிலையைத் தலைப்படுதல் கூடும்” என அறிவுறுத்துகின்றார். இவ்வாறு இந்நூலின் பொருள்நிலை அமைந்துள்ளது. இந்நூலினைச் சிவப்பிரகாசத்தின் பரபக்கம் எனவும் சிவஞானசித்திப் பரபக்கத்தின் ஒழிபு எனவும் கொள்ளுதல் தகும் என அறிஞர் குறிப்பிடுகின்றனர்.
இதன் கண் நிமித்தகாரண பரிணாம வாதம் என்றது சிவாத்துவித சைவம் எனவும், சைவவாதம் என்றது சுத்த சைவம்
சைவசித்தாந்தத்தோடு பெரிதும் ஒத்து, சில குறியீட்டு வாய்பாடுகளாலும், முத்தி நிலைபற்றிய அதிநுட்பக் கருத்துக்களாலும் வேறுபட்டுத் தோற்றுவன ஆகும்.
சைவசித்தாந்த நூல்களிற் காலவரையறையறிவிக்குங் குறிகளில்லை என்ற பொதுக் குறைபாட்டிற்கு உட்படாத தன்மை சங்கற்ப நிராகரணத்தின் தனிச் சிறப்பாகும். (ZDIT. Gau)
சித்தாந்தம்
Siddha (நிறைவு செய், முடிவடையச் செய், சித்தியடை) என்ற வடமொழி வினையின் இறந்தகாலப் பெயரெச்சமாகிய Siddha உடன் anta (இறுதி) என்ற விகுதியும் இணைந்து Siddhanta என வரும். முடிந்த முடிபு என்பது இதன் பொருள்.
சித்தாந்தம் என்ற பதம் ஆதியில் இந்து சமயத்தின் ஆறு தத்துவசாஸ்திரங்களில் ஒன்றாகிய நியாய தர்சனத்தில் முடிந்த முடிபு என்ற பொருளில் வருகிறது. நியாயதர்சனத்தின் தர்க்கவித்தைப் பிரிவுகள் பதினாறில் இது ஆறாவது ஆகும்.
குறிப்பிட்ட ஒரு மதத்தின் கோட்பாடுகளின் அடிப் படையில், அவை சுட்டி நிற்கும் அர்த்தப்பாங்கு மூலமாகவோ அன்றி அநுமான ரீதியாகவோ நிச்சயிக்கப்படுகின்ற மறுக்கப்பட முடியாத முடிவே அம் மதத்தின் சித்தாந்தம் என்க.

குறிப்பிட்ட ஒரு விடயத்தினைத் தெளிவுபடுத்துமுகமாக ஐந்து கூறுகள் கொண்ட அதிகரணமாக (adhikarana) விரிவு செய்தல் இந்து சமய நூலோர் மரபாகும். அதிகரணத்தின் ஐந்தாவது பிரிவு சித்தாந்தம் எனக் குறிக்கப்படுகிறது.
சித்தாந்தம் என்பதற்கு முடிந்த முடிபு என்பது பொருளாயினும், இந்தப் பெயரைச் சமணசமயத்தினரும் சைவரும், முறையே சமண சித்தாந்தம், சைவசித்தாந்தம் எனத் தத்தம் சாத்திரங்களுக்குப் பெயராக நெடுங்காலமாக வழங்கிவந்திருக்கின்றனர்.
கழுகுமலைக் கல்வெட்டுச் சாசனம் சமணருடைய சாத்திரம் சித்தாந்தம் என்று பேசப்பட்டு வந்தமைக்குச் சான்று பகர்கிறது. பண்டைக் காலத்தில் (சமணசித்தாந்தம்) சித்தாந்தம் நாடோறும் நெச்சுர நாட்டுத் திருநேச்சரம் என்ற ஊரில் (இப்போது இது கழுகுமலை என வழங்குகிறது) உபதேசிக்கப்பட்டு வந்ததையும் சித்தாந்தம் உரைக்கும் படாரர் உள்ளிட்ட பதின்மா வயிராக்கியர்க்கு ஆஹார தானமாகச் சில நிலங்களைத் தானம் செய்ததையும் கூறுகிறது கழுகுமலைச் சாசனம். இச்சாசனம் பூரீமாறன் சடையன் என்ற சிற்றரசனின் ஆட்சியாண்டு மூன்றிலே பொறிக்கப்பட்டது.
முப்பொருள் பற்றிப் பேசும் சைவ சித்தாந்தத்தைக் குறிக்கும்
காலத்திலேயே நன்கு வலுப்பெற்ற வழக்கினைப் பெற்றிருக்கிறது.
சுப்பிரபேதாகமத்தின் சாரம் எனக் கூறப்படும் எட்டாம் தந்திரத்தில் ஆறந்தம் என்ற 15ஆவது பிரிவிலே திருமூலர் பின்வருமாறு குறிப்பிடுவார்.
சித்தாந்தத்தே சீவன் முத்திசித்தித்தலாற் சித்தாந்தத்தே நிற்போர் முத்தி சித்தித்தவர் இதற்குப்பின்னர் 13 ஆம் நூற்றாண்டளவில் சைவசித்தாந்தத்தின் முதனூல் எனக் கருதப்படும் மெய்கண்டார் எழுதிய சிவஞானபோத காலந் தொடக்கம் சித்தாந்தம் சைவ சித்தாந்தத்தையே பிரத்தியேகமாகக் குறித்து நிற்கத் தொடங்கியதெனலாம்.
எனினும் கடந்த அரை நூற்றாண்டு காலமாக, இப் பதத்தின் உபயோக வழக்கில் சிறிது மாற்றம் ஏற்பட்டு வருகின்றது. இப்போதெல்லாம் அரசியல் துறையில் மார்க்ஸின் சித்தாந்தம், விஞ்ஞானத்துறையில் 'ஐன்ஸ்டீன் சித்தாந்தம் எனப் பேசப்படுகின்றது. ஒவ்வொரு துறையிலும் அதன் முக்கிய கருது கோளைச் சுட்டிநிற்கக் கூடியதாக சித்தாந்தம் என்ற பதத்தின் பொருள் விரிவடைந்திருக்கிறது. (கே.கே.எஸ்)
இந்துக்கலைக்களஞ்சியம்

Page 56
சித்தாந்த ஸாராவளி
சித்தாந்த ஸாராவளி என்ற நூல் சைவ ஆகமங்களிற் கூறப்பட்ட சித்தாந்த சாரத்தை வரிசைக்கிரமமாகக் கூறுகின்றது. இவ்வரிசைக் கிரமத்தின்படி அது ஞானபாதம், கிரியாபாதம், யோக பாதம், சரியா பாதம் என்ற முறைப்படி இயற்றப்பட்டது. இந்நூல் திரிலோசன சிவாசாரியார் என்பவரால் ஆக்கப்பட்டது. இதற்கு ஆனந்த சிவாசாரியாரின் வியாக்கியானமும் உண்டு. சித்தாந்த ஸாராவளி என்ற இந்நூலும், அதன் வியாக்கியானமும் தமிழில் மொழி பெயர்க்கப்பட்டு மயிலை அழகப்ப முதலியாராற் சென்னை சிவஞான போத அச்சகத்திற் பதிப்பித்து வெளியிடப்பட்டது.
நூலின் இறுதியிற் சித்தாந்த ஸாராவளி பற்றி மேல்வரும் பொருளுடைய சுலோகம் காணப்படுகின்றது. “சைவ சாத்திரத்தில் நல்ல ஞானமுள்ள திரிலோசன சிவர் என்ற சைவாசாரியாலே செய்யப்பட்டதாயும், சகல மங்களத்தைச் செய்வதாயும், சிறந்த சைவ மதத்திலுள்ள சிரேட்ட பதார்த்தங்கள் நிறைந்த தாயுமிருக்கின்ற சித்தாந்த ஸாராவளி என்னும் கிரந்தமானது சிறந்த சைவ மதத்தை அனுசரித்த பண்டிதற்குச் சந்தோசத்தைக் கொடுப்பதாயும், பராசக்தியோடு கூடியிருக்கின்ற பரமசிவனுக்குப் பிரீதியைக் கொடுப்பதாயும், எப்பொழுதும் எங்கும் ஜயம் பெற வேண்டியது.”
சைவ சித்தாந்தக் கருத்துக்களைத் தெரிவிப்பதுடன் நில்லாது சைவம் தொடர்பான சில வரலாற்றுக் குறிப்புக்களைத் தெரிவிப்பதுவும் இந்நூலிற் காணப்படுகின்ற சிறப்பம்சமாகும். குறிப்பாகச் சைவ சம்பிரதாயத்தைப் பேணிவந்த சைவமடங்கள் பற்றிய தகவல்கள் குறிப்பிடத்தக்கவை. துர்வாசமுனிவரால் முதன் முதலில் ஸ்தாபிக்கப்பட்டது ஆமார்த்தக மடம். இம்மடத்திலிருந்து எனபத்ரம், கோளகி, புஷ்பகிரி என்ற மூன்று மடங்களும் பிரிந்தவையாகும். இதன்படி ஆமார்த்தகமடத்துடன் சேர்த்து
அதிபதி சனத்குமாரர். புஷ்பகிரி மடத்திற்கு அதிபதி சனகர். கோளகி மடத்திற்கு அதிபர் சநாதனர். ரனபத்திர மடத்திற்கு அதிபதி சனந்தர். கோதாவரி நதி தீரத்தில் மந்திரகாளி என்ற பட்டணமுண்டு. அங்குள்ள மந்திர காளீஸ்வரரைச் சுற்றியே இந்த நான்கு மடங்களும் ஆரம்பத்தில் இருந்தன. ராஜேந்திர சோழன் கங்காஸ்நானத்திற்குப் போன பொழுது மந்திரகாளி பட்டணத்தில் உள்ள சைவாசாரியார்களை அழைத்துக் கொண்டு வந்து சோழமண்டலத்திலும், காஞ்சி மண்டலத்திலும் அவர்களைக் குடியேற்றினான் என்ற சித்தாந்த ஸாராவளி தரும் தகவல் இங்கு குறிப்பிடத்தக்கது.
சித்தாந்த ஸாராவளியின் ஞானபாதத்தில் சீலைக்கு நெய்பவன் நிமித்த காரணனாயிருத்தல் போல பிரபஞ்சம் அனைத்தும் இவனாற் சிருட்டிக்கப்பட்டது என்றும், சகலர், பிரளயாகலர், விஞ்ஞானகலர் என்ற மூன்றுவிதமான ஆன்மாக்களும் பரம சிவனுடைய அனுக்கிரகத்தால் மலம்,
இந்துக்கலைக்களஞ்சியம்

மாயை, கன்மம், விந்து, திரோதனா சக்தி என்னும் ஐந்துவித பாசக்கூட்டங்களிலிருந்தும் நீங்குகின்றன என்றும் குறிப்பிடப்படுகின்றது. பரமசிவம், பராசக்தி என்ற இரண்டும் சமவாய சம்பந்தம் உள்ளவை. சதாசிவம், பரமசிவம் என்னும் இரண்டும் தர்மாதர்மி ஸ்வரூபமாக இருக்கின்றன. சிவம் தத்துவமென்றும், சதாசிவம் மூர்த்தி என்றும் அழைக்கப்படும். தியானம், பூசை என்பனவற்றின் நிமித்தம் சகல நிஷ்கள ரூபமான சிவலிங்கம் உளதென ஆகமங்களிற் சொல்லப்பட்டிருப்பதாக ஞானபாதம் குறிப்பிடுகிறது.
பரமசிவனுக்கு சிருஷ்டி காரியத்தில் உதவியிருப்பது சக்தி. அச்சக்தியும் ஞான சக்தி, கிரியா சக்தி என்று பேதப்படும். செயற்பாடுகள் அனைத்தையும் தன்னுள்ளடக்கியிருக்கும் நிலையில் சிவன் நிஷ்களரென்று அழைக்கப்படுவார். செயற்படும் காலை சிவதத்துவம் எனப்படும். ஆன்மாவிலே சிவதத்துவம் பிரகாசித்துக் கொண்டிருந்தாலும் அது மலமறைப்பாற் கட்டுண்ட நிலையில் இருக்கிறது. எஜமான் பசுக்களைக் கயிற்றினாற் கட்டுவது போல சிவன் ஆன்மாக்களை மலமாகிய பாசங்களாற் கட்டுகின்றமையால் ஆன்மா பசு எனப்படுகின்றது.
மும்மலங்களாலும் பீடிக்கப்பட்ட ஆன்மா சகலர் என்றும், கன்மம், ஆணவம் இரண்டும் கொண்டவர்கள் பிரளயாகலர் என்றும், ஆணவமலம் மட்டும் உள்ளவர்கள் விஞ்ஞானகலர் என்றும் அழைக்கப்படுவர். ஆணவம் அனாதியானதுடன் அது ஒன்றாகவும், ஆன்மாக்களின் சுபாவசித்தமான மலமாயிருப்பதாற் செம்பிற்களிம்பு போலவும் இருக்கிறது. மாயையிற் பரிபாகத்தை அடையுங் கன்மமலமானது ஆன்மாக்களுக்குச் சுகம், துக்கம் ஆகிய போகங்களைக் கொடுக்கும். மாயை என்னும் பாசமானது அதிவல்லமை உடையதாயும் சூக்கும ரூபமுடையதாகவும், நித்தியமாகவும், தனது காரியங்களுக்குத் தானே ஆதாரமாகவும், வியாபாகமுடையதாயும் இருக்கும்.
விந்து என்னும் இத்தத்துவத்திலிருந்து சக்திதத்துவம் உண்டாகின்றது. அதிலிருந்து சதாசிவதத்துவமும்,அதிலிருந்து ஈஸ்வரதத்துவமும் உருவாகின்றன. இதிலிருந்து சுத்தவித்தை என்னும் தத்துவம் உருவாகிறது. அசுத்ததத்துவமான மாயையிலிருந்து, காலதத்துவம், நியதிதத்துவம் என்பன உண்டாகின்றன. பின்னர் கலாதத்துவத்திலிருந்து வித்யா தத்துவமும், ராகதத்துவமும் உண்டாகின்றன. மாயையிலிருந்தே புருஷ தத்துவமும் உருவாகின்றது. கலாதத்துவத்திலிருந்து பிரகிருதி தத்துவமும், அதிலிருந்து சத்துவம் , ரஜஸ், தமஸ் என்னும் குணங்களும், குணதத்துவத்திலிருந்து புத்திதத்துவமும் உண்டாகின்றன. புத்திதத்துவத்திலிருந்து அகங்காரம் உண்டாகிறது. சாத்துவித அகங்காரத்திலிருந்து ஞானேந்திரியங் களுடன் கூடிய மன தத்துவம் உண்டாகிறது. ராஜஸ அகங்காரத்திலிருந்து கன்மேந்திரியங்களும், தாமஸ் அகங்காரத்திலிருந்து தன்மாத்திரைகளும் உண்டாகின்றன.

Page 57
இரண்டாவதான கிரியாபாதத்திலே தீட்சையின் இயல்பு விவரிக்கப்படுகிறது. ஆணவமலம் பரிபக்குவமாகும் பொழுது திரோதான சக்தி புருஷனிடத்திற் பதிகிறது. இதன் மூலம் ஸம்சாரத்தில் வெறுப்பும், மோட்சத்தில் விருப்பும் ஏற்படுகின்றன. தீட்சையினாற் புருஷன் பரிசுத்தனாக்கப்படுகிறான். தீட்சை செய்து கொண்டவர்கள் நிஷ்களப் பிரசாத மந்திர ஜபம் செய்தல் வேண்டும். நமசிவாய' என்ற இம்மந்திரமானது சுத்தி, பூதகத்தி, ஆகியவற்றைச் செய்ததன் பின்னர் சொல்லப்படல் வேண்டும். தொடர்ந்து பூசை முறைகள் பற்றியும், பல்வேறு தேவைகள் கருதிய ஹோமம் பற்றியும் குறிப்பிடப்படுகின்றன. இத்தகைய பூசைமுறைகள் புருஷனின் போகத்தின் பொருட்டுச் செய்யப்படுவனவாகும். இவற்றைவிடச் சமய தீட்சை, விசேட தீட்சை, நிர்வாண தீட்சை என்பன செய்யும் முறைகளும் விவரிக்கப்படுகின்றன.
முறை விவரிக்கப்படுகிறது.யோகத்திற் சிவனுக்கும் ஆன்மாவிற்கும் முதன்முதலாக ஒருமை சம்பந்தமான தொடர்பு ஏற்படுகின்றது. சரியா பாதத்திற் சிவஞானமானது அவபோதருபம், சப்தரூபம் என இருவகைப்படும் என்றும், இதில் அவபோதருபமான சிவஞானம் அனாதியானது என்றும் சாஸ்திரங்கள் சப்தரூபமானவை எனவும் குறிப்பிடப்படுகின்றது. அவபோத ஞானமே சப்தரூபமாக வெளிப்படுகிறது. இது முதலில் ஆகமங்களாகச் சிவனால் வெளிப்படுத்தப்பட்டுப் பின்னர் குருபரம்பரை வழியாக யோக்கியர்களான புருஷர்களுக்குப் போதிக்கப்படுகிறது. அப்பாற் பூசை முறைகள் பற்றியும், தவறுகளுக்கான பிராயச்சித்தம் என்பனவும், அதற்குரிய வழிமுறைகளும் விபரிக்கப்படுகிறது. இறுதியாக வாஸ்து சாத்திர சம்பந்தமான விடயங்கள் கூறப்படுகின்றன.
(சோ.கி.)
சித்தார்
சித்தார் என்னும் இசைக்கருவி வட இந்தியாவில் உருவாகிய கம்பி வாத்தியமாகும். இக்கருவியை இசையரங்குகளிலே தனியாகவும் கூட்டு வாத்தியமாகவும் பயன்படுத்துவர் இது தமிழகத்து வீணையைப் போன்று மீட்டி வாசிக்கப்படும் கருவியாகும். இவ்வாத்தியம் அன்னியர்களாற் கொண்டு வரப்பட்டதே ஆகும்.
தம்புராவே பிற்காலத்தில் தோன்றிய சிதார் போன்ற கருவிகளுக்கு முதல் வடிவமாகும். இதன் வடிவமைப்பு தமிழகத்திற் பயன்படுத்தப்படும் தம்புராவைப் போன்று காணப்படும். சித்தாரை திபுத்த தம்புரா என அழைப்பது குறிப்பிடத்தக்கது. திருதந்திரி என்ற புராதன வாத்தியத்திலிருந்து சித்தார் தோன்றியது என்பது மற்றுமொரு கருத்து. இது பெயர்களின் ஒற்றுமையை அடிப்படையாகக் கொண்டது. பாரசீக மொழியில் ஸேஹ் என்றால் மூன்று தார் என்றால் தந்தி என்று பொருள். ஸேஹ்தார் என்பதே சித்தார் என் மருவிற்று என்பர்

சத்தார், சப்தகார், சுந்தரர் என்ற பெயர்களாலும் இக்கருவி அழைக்கப்படும். இக் கருவியை அமிர் குசுரு என்பவரே வடிவமைத்தார். 18 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலேயே சித்தார் வாத்தியத்திற்கும், அதை வாசிக்கும் பாணிக்கும் பெருமை கிடைத்தது. மூன்றடி நீளம் கொண்டதாக அமையும் இவ்வாத்தியத்தின் அமைப்பு கோளவடிவமான ஒரு சுரைக்காய் கீழ்ப்பகுதியில் பொருத்தப்பட்டிருக்கும். இக்காய் தட்டையாக இருந்தால் கருவி கச்சுவா அல்லது ஆமை வடிவமான ஸித்தார் என அழைக்கப்படும். தும்பா என அழைக்கப்படும் இதன் கூடு ஒரு நுனியில் கழுத்துடன் பசை வைத்து ஒட்டப்பட்டு இருக்கும். இக்கூட்டின் மேல்பாகம் தட்டையாகவோ அல்லது சிறிது புடைத்ததாகவோ உள்ள மரப்பலகையினால் மூடப்பட்டிருக்கும். இதன் கழுத்துடன் தண்டி எனப்படும் நீண்டஸ்வரப் பலகை இணைக்கப்பட்டு அதன் மீது வெளிப்புறம் வளைந்த பித்தளை மொட்டுக்கள் கட்டப்பட்டிருக்கும். இவை மூன்று அங்குல இடைவெளியில் அமைந்திருக்கும். இதன் வாத்திய மெட்டுக்கள் வீணையில் அமைந்திருப்பது போல மெழுகில் பதிக்கப்பட்டிராது. இதன் கண் பதினெட்டு- இருபத்தி நான்கு மெட்டுக்கள் அமைந்திருக்கும். இராகத்திற்கும், சுருதிக்கும் ஏற்றாற் போல மெட்டுக்களை நகர்த்திக் கொள்ளலாம். இத்தகைய நகர்த்தக் கூடிய மெட்டுக்களைக் கொண்ட சிதார்களின் ஸ்வரப் பலகையின் மறுநுனியில் மற்றுமொரு சுரைக்காய் பொருத்தப்பட்டிருக்கும். ராகங்களை வாசிப்பதற்கு வேண்டிய ஐந்து உலோகக் கம்பிகள் பிரதான குதிரையின் மீது கட்டப்பட்டிருக்கும். இவற்றைத் தவிர சிகிரி எனப்படும் இரு சுருதித் தந்திகளும் உள்ளன. அதிகப்படியான எதிரொலிக்காக தரப் எனப்படும் பதினொன்று பதினேழு வரையினதான தந்திகள் அடியில் கட்டப்பட்டிருக்கும். பிரதான தந்திகளும் சிகரித்தந்திகளும் அகன்ற குதிரையின் மீது கட்டப்பட்டிருக்கும். தரப் தந்திகள் இதன் கீழுள்ள ஒரு சிறிய தட்டையான குதிரையின் மேல்கட்டப்பட்டிருக்கும். ஆள்காட்டி விரலில் கம்பிநெளியை மாட்டிக் கொண்டு தந்திகளை முன்னும் பின்னுமாக மீட்டி வாசிப்பார்கள். வலது கைவிரலால் மீட்டி இடது கைவிரலால் சுரத்தானங்களை அழுத்தி மீட்பர். இதிலிருந்து எழும் ஒலி அழுத்தமானதாகவும் தொடர்ச்சியாகவும் எழும். இதன் ஒவ்வொரு மெட்டுக்களிலிருந்தும் ஆறுவிதமான சுரங்களை எழுப்ப முடியும் என்பது இக்கருவியின் சிறப்பாகும். இக்கருவியை தம்புராவை மீட்டுவது போன்று நிற்க வைத்து மீட்டி வாசிப்பர். திரைப்படப்பாடல்களுக்கு இக்கருவி பெரிதும் பயன்படுத்தப் படுகின்றது. இக்காரணத்தினால் இந்தியாவில் இக்கருவி செல்வாக்குப் பெற்று வருகின்றது. இக்கருவிக்கு துணையாக தபேலா என்னும் தோற்கருவியை பயன்படுத்தல் மரபாகும். ஸிதார் வித்துவான்களுள் மஸித்கான், குலாம் ரஸா ஆகியோர்கள் குறிப்பிடத்தக்கவர்கள். இவர்கள் படைத்த பாணிகளே இன்னும் போற்றப்படுகின்றன. (தே. ஹ.)
இந்துக்கலைக்களஞ்சியம்

Page 58
சித்திர சூத்திரம்
வ்ெவாறு பரதரின் நாட்டிய சாஸ்திரம் நடனக்கலையின் நியமங்களை வரையறை செய்து கூறும் நூலாக விளங்குகிறதோ அவ்வாறே விஷ்ணு தர்மோத்திரத்தின் ஒரு பகுதியான சித்திர சூத்திரம் இந்துக் கலைமரபினது அங்கமான ஒவியத்தின் நியமங்களை வரையறை செய்யும் மிக முக்கியமானதொரு நூலாக விளங்குகிறது. ஸ்ரெலா கிரம்றிச் (Stella Kramrish) என்னும் அறிஞரால் ஏறக்குறைய 65 (1937) வருடங்களிற்கு முன்பாக சித்திரசூத்திரம் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டது. பிரபல்யமான இந்துக்கலை வரலாற்றா சிரியரான சிவராமமூர்த்தி சித்திரசூத்திர சுலோகங்களைப் பிந்திக் கிடைத்த பிரதிகளையும் ஆதாரமாகக் கொண்டு திருந்திய வடிவத்தில் மீண்டும் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து 1978 இல் வெளியிட்டுள்ளார்.
கி.பி. எட்டாம் நூற்றாண்டு காலத்திற்குரியதாகக் கருதப்படும் தாமோதர குப்தரால் காமக்கிழத்திகள் மீது இயற்றப்பட்ட வசைப்பாடலான குட்டணிமதம், பிரம சூத்திரத்திற்கான சங்கரரது உரையான பாடியம் ஆகிய நூல்களிலும், 13ஆம் நூற்றாண்டுக்குரிய சதுர்வாக்கசிந்தாமணி என்ற நூலிலும் சித்திர குத்திரம் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன. வரலாற்றாசிரியரான அல்பெரூனியின் குறிப்புகளிலும் விஷ்ணு தர்மோத்திரம் பற்றிக் குறிப் பிடப்பட்டுள்ளது. பெளத்த சித்திரங்கள் பற்றி விவரிக்கும் சித்திரலக்ஷணம் என்ற நூல் சித்திரசூத்திரத்தை அடியொற்றியே இயற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இவ்வாறு வைதீக மரபிலும் அவைதீகமரபிலும் புகழ்பெற்ற சித்திரசூத்திரத்தின் காலம் தொடர்பாக அபிப்பிராயபேதங்கள் உண்டு. ஆர். ஜி. பண்டக்கார் இந்நூல் மூன்றாம் நூற்றாண்டினதென்றும், சிவராமமூர்த்தி நான்காம் நூற்றாண்டிற்குரியதென்றும் ஸ்ரெலா கிரம்றிச் கி.பி.எட்டாம் நூற்றாண்டு காலத்ததென்றும் கருதுகின்றனர்.
ஒவியத்தின் குணாதிசயங்கள் - தோஷங்கள், சிறப்புகளும் - குறைபாடுகளும், இரசனை, மனவெழுச்சி, தொனிப்பொருள், ஓவியவெளிப்பாட்டுப் பாணிகள் என்பன பற்றிக் கூறும் ஒவியக் கொள்கைக்கான தராதர நூலாகச் சித்திரகுத்திரம் விளங்குகிறதென்பது இந்தியக் கலை வல்லுநர்களின் அபிப்பிராயமாகும். மார்க்கண்டேய முனிவருக்கும் வஜ்ர என்ற அரசிளங்குமரனுக்குமிடையில் நடைபெற்ற உரையாடலின்போது மார்க்கண்டேயராற் கூறப்பட்டதாகவே சித்திரசூத்திரப் பகுதிகள் விஷ்ணு தர்மோத்திரத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளன. இதன்படி தன்னையணுகிய தேவமங்கையரின் எண்ணத்தைத்
திசைதிருப்பும் வகையில் நாராயண முனிவர் தன்தொடையில்
த்துக்கலைக்கவிஜஞ்சிuri

பிரதிமையுருவிற்குரிய அனைத்து வரைவிலக்கணங்களையும், தத்துவங்களையும் பிரதிபலிக்கும் முறையில் ஊர்வசியை வரைந்து உருவாக்கியதன் மூலம் சித்திரக்கலையின் தோற்றத்திற்குக் காரணமாகினாரென்றும், நாராயணமுனிவர் இதனை விஸ்வகர்மாவிற்குப் போதித்தாரெனவும், விஸ்வகர்மா அனைத்துக் கருப்பொருளையும் கலையினூடாக வெற்றிகரமாக வெளிப்படுத்தினாரெனவும் சித்திரசூத்திரத்தின் தொடக்கச் சூத்திரங்கள் குறிப்பிடுகின்றன. 35ஆம் அதிகாரத்திலிருந்து 43ஆம் அதிகாரம் வரையிலான 9 அதிகாரங்களில் ஏறக்குறைய 287 சுலோகங்களைக் கொண்டதாகக் காணப்படும் சித்திர சூத்திரத்தில் 35ஆம் அத்தியாயத்திலிருந்து 38ஆம் அத்தியாயம் வரையிலான பகுதிகளில் சாமுத்திரிகாலட்ஷணம் கூறும் உடல்வாகு அமைப்பிற்கேற்ப ஹம்சம், பத்மம், மாளவ்யம், ரூசகம், சாசகம் என்னும் பிரிவுகளைக் கொண்ட ஆண்கள், அவர்களையொத்த ஐவகைப் பெண்கள் மற்றும் தேவர்கள் ஆகியோருக்குரிய ஒவிய அளவீடுகள் (பிரமாணம்), உரோமவகைகள், கண்களின் வடிவம் என்பன பற்றிய குறிப்புகள்
தரப்பட்டுள்ளன.
12 அங்குலம் ஒரு தாலம் என்ற அளவீட்டின்படி ஹம்சம் 108 அங்குல உயரமுடையதாகவும், பத்மம் 106 அங்குல உயரமுடையதாகவும், மாளவ்யம் 106 அங்குல உயரமுடையதாகவும், ரூசகம் 100 அங்குல உயரமுடையதாகவும், சாசகம் 90 அங்குல உயரமுடையதாகவும், அவரவர் கையின் அங்குல அளவின்படி வரையப்படுதல் வேண்டும். நீண்டு மென்மையாயிருக்கும் குண்டலம், வலப்புறம் சுருளும் தஷிணாவர்த்தம், அலைபோன்று வளையும் 'தரங்கம், நேராக நீண்டு தொங்கும் வரிதாரம், சுருண்டு செழிக்கும் ஜூடதசரம்' என உரோம வகைகள் கணக்கிடப்பட்டுள்ளன. இதேபோல வில்போன்ற சபாகிருதி, நீலோத்பலம் போன்ற உத்பலபத்ரபா, மீன் போன்ற மத்ச்யோதரம், தாமரை இதழ் போன்ற பத்மபத்ரநிபா, உருண்டையான வடிவமுள்ள சனாகிருதி எனக் கண்களின் வடிவங்கள் விபரிக்கப்பட்டுள்ளன. தேவர்களின் பிரதிமைகளை ஹம்சத்திற்குரிய அளவீட்டின் படியாகவும், 16 வயதுடைத் தோற்றமுடையதாகவும், புன்சிரிப்புத் தவழும் முகபாவனையுடன் பல்வகை ஆபரணங்களை அணிந்ததாகவும் சித்திரிக்க வேண்டுமென குறிப்பிடப் படுவதுடன், அளவுப் பிரமாணத்தை மீறிய வகையில் வரையப்படுவன தீமைபயக்குமெனவும்
எச்சரிக்கப்படுகிறது.
சித்திரசூத்திரத்தின் 39ஆவது அத்தியாயம் பிரதிமையின் தோற்றஅமைவு பற்றிக் குறிப்பிடுகிறது. ரிஜ்வகத, அன்ரிஜு, சசிகிருத, அர்த்தவிலோசன, பார்ஸ்வகத, பரிவிருத்த, பிருஷ்டகத, பிரிவிருத்த, சமனத என ஒன்பது வகையான நிலைகள் விவரிக்கப்பட்டுள்ளன. பார்வையாளனை நோக்கிய முறையில்
முற்பக்கப் பார்வையாக நேராக நிற்கும் நிலை ரிஜ்வகத என்ற

Page 59
சரீரத்தோற்றமாகும். முகம் பூரணமாகத் தெரிவதாகவும், மார்பு வயிறு, இடை, தோள், தொடை என்பன சிறிது புலனாகாத முறையிலும் அமையும் நேராக நிற்காதநிலை அன்ரிஜு எனப்படும். உடலின் நான்கில் மூன்று பகுதியே புலப்படு வதாயிருக்கும் அன்ரிஜூ பல்வகைத்தான கரணவடிவங்களிற்கும் பின்னணியாக இருப்பதற்கு மிவும் பொருத்தமானது. பக்கப் பார்வையோ அல்லது முற்பக்கப்பார்வையாகவோ இல்லாது உடலின் பாதி புலனாகுவதாயும், மறுபாதி புலனாகா வகையிலும், ஏறக்குறைய பக்கவாட்டுக் காட்சிபோலிருப்பது சசிகிருத தோற்ற அமைவாகும். பக்கப்பார்வை அர்த்தவிலோசன எனப்படும். புருவம், மூக்கு, நெற்றி என்பன சிறுகீற்றுப்போலத் தென்படுவதாயும் காது, கண் என்பனவற்றில் ஒவ்வொன்று புலனாகும் வகையில் அமைக்கப்படும் பக்கப்பாட்டுக் காட்சி பார்ஸ்வகத சரீர அமைப்பாகும். பின்புறக் காட்சி பிருஷ்டகத எனப்படும். தலைப்பாகத்தின் மேற்பகுதி மூக்கு, சொண்டு, நாடியென சில உறுப்புகள் புலனாகா வகையிலும், மேற்பாதி உடலின் பின்புறமும் கீழ்பாதி உடலின் முன்புறத் தோற்றமும் கொண்ட பின்புறத் தோற்றம் பரிவிருத்த எனப்படும். பிட்டம் முழுவதும் தெரிவதாகவும், உள்ளங்கால், தலை என்பன பாதியும், இடைமுழுமையாகத் தெரியும் விதத்தில் இருப்பதாயும் பாதங்கள் புலனாகாதும் இருக்கும் நேர்முன்புறக்காட்சி சமனத எனப்படும். இவ்வாறு பல்வேறு தோற்ற அமைவுகள் பற்றிய விளக்கத்தைத் தொடர்ந்து தொலைக்காட்சியினாற் பிரதிமைகள் குறுக்கப்பட்டது போலத் தோன்றுவதற்குரிய விதிமுறைகள் எடுத்துக் கூறப்படுகின்றன.
அத்தியாயம் 40இல் ஒவியத்திற்கான ஊடகத்தைத் தயாரிப்பது, வர்ணங்களின் இயல்பு, வர்ணக்கலப்பு, பூச்சுமுறை என்பன தொடர்பான விளக்கங்கள் தரப்படுகின்றன. செங்கற்தூள் கழிமண்ணுடன் கலக்கப்பட்டு, பசை, தேன்மெழுகு, தேன், கருப்பஞ்சாறு, குசும்பச் செடியிலிருந்து எடுக்கப்படும் சிவப்புச் சாயம் என்பனவற்றுடன் சுண்ணப் பொடி கலக்கப்பட்ட கலவையால் ஓவியம் வரைவதற்கான மேற்தளம் தயாரிக்கப்படல் வேண்டும். இவ்வாறு தயாரிக்கப்பட்ட தளமானது நூற்றாண்டு களிற்கு மேலாக பழுதுறாதிருக்குமெனக் குறிப்பிடப்படுகிறது. வெண்மை, மஞ்சள், சிவப்பு, கறுப்பு, நீலம் என அடிப்படை வர்ணங்கள் ஐந்தாகுமெனக் குறிப்பிடுகிற சித்திர குத்திரம் இவற்றின் விகிதாசாரக்கலப்பு வேறுபாட்டால் எண்ணிறந்த வர்ணங்களைப் பெறமுடியுமெனக் கூறுகிறது. தங்கம், வெள்ளி, செம்பு, மைக்கா, கந்தகக்கன்மகி, சிவப்பு:ஈயம், சுண்ணாம்பு,
சாயவேர் என்பனவற்றிலிருந்து வர்ணங்கள் தயாரிக்கப்படலாம்.
சத்யம் வைணிகம் நாகரம் மிஸ்ரம் என்ற நால்வகை ஓவிய வகையீடுகள் பற்றி 41ஆம் அத்தியாயத்தில் ஆராயப் படுகிறது. பொருத்தமான பின்னணியில் செம்மையானதும், இயற்கையான துமான முறையில் அதேவேளை அங்கங்கள் நெடிதுயர்ந்த

தோற்றத்தினையுடையதாய் வரையப்படும் பிரதிமைகள் சத்திய வகையாகும். சீரமைவுடைய வடிவத்தையும், எத்தகைய அங்க மிகைப்படுத்தலுமில்லாத முறையில் உண்மையான அளவீட்டடிப்படையில் வரையப்படுவதும், ੭ 60 நிறைந்ததுமான ஒவியவகை வைணிகம் எனப்படும். அதிக மிகைப்படுத்தலுடன், அங்கங்கள் திரட்சியான முறையில் அமையத்தக்கதாகவும், இயல்பெளிமை இல்லாமுறையில் வரையப்படும் பிரதிமைகள் நாகரவகையாகும். அத்துடன் இவ்வத்தியாயத்தில் ஒவிய வரைவிற் பயன்படும் ஒளி-நிழல் வேறுபாடுகாட்டுதற்குரிய வர்த்தனை முறைகளான பத்ரஜம், ரைகீகம், பிந்துஜம் என்பன பற்றியும், படிப்படியாக நிறத்தை மாற்றுவது தொடர்பான உத்திமுறைகள் தொடர்பாகவும் குறிப்பிடப்படுகிறது. வர்த்தனையென்பது மேடுபள்ளங்களையும், திட்பத்தையும் ஒவியத்தில் தோற்றுவிப்பதற்காகப் படிப்படியாக நிறத்தை மாற்றும் உத்திமுறையாகும். இவ்வாறு ஒவியத்தில் வர்ணப்பயன்பாடு பற்றிக் குறிப்பிடும் இவ்வத்தியாயத்தின் நோக்கம் ஒவியனானவன் தன் வர்ணப்பயன்பாட்டால் இரசனை வேறுபாடுடைய அனைவரதும் நெஞ்சங்களைத் தன் ஒவியத்தின்பால் ஈர்க்க வேண்டுமென்பதாகும். மேற்கூறிய மூன்று வகையும் கலப்புற்ற முறையில் வரையப்படுவது மிஸ்ர வகையாகும். அரசர், முனிவர், தேவர், காந்தர்வர், தைத்தியர், தானவர், மந்திரி அரசகுரு, வித்தியாதரர் முதலானவர்களையும் மிருகங்களையும், சந்தை, போர்க்களம் மற்றும் பருவகால வேறுபாடுகளையும் ஒவியத்தில் உணர்த்தும் வகை பற்றி 42ஆம் அத்தியாயம் குறிப்பிடுகிறது. அங்க வேறுபாடுகள், ஆடைஅணியும் முறை, அணிகலங்கள், மனிதரின் விசேட குணாதிசயங்கள், காலதேச வர்த்தமான வேறுபாடுகள் என்பனவற்றைப் பற்றிய அறிவுடையவனாக ஒவியனிருத்தல் வேண்டும். ஆறுகளும், நீர்வீழ்ச்சிகளும் பெண்களின் வடிவத்தில் உருவகிக்கப்படுவதுடன் அவர்களின் கைகளிலிருந்து நீர்வழிந்தோடுவதாகவும், அவர்களது முழங்கால்கள் சிறிது முன்வளைவுள்ளதாகவும் வரையப்படுதல் வேண்டும். மிருகங்கள் அவற்றிற்கேயுரிய இயற்கைச் சூழலில், இயல்பான தோற்றத்துடன் வரையப்படல் வேண்டும். செல்வத்தின் குறியீடாக கைகளிற் பானையை ஏந்தியவாறு உள்ள பெண்ணுருவம் ஒவியத்தில் வரையப் படுகிறது.
இயற்கையையும் அதற்குரிய சூழலையும், காலநிலை வேறுபாடுகளையும் ஒவியன் உணர்ந்தவனாக இருக்கும்பொழுது, அவனது படைப்பு அனைவர்க்கும் அழகியல் அனுபவத்தைத் தருவதாக இருக்கும். சித்திரசூத்திரத்தின் இறுதிப் பகுதியான 43ஆம் அத்தியாயத்தில் ஒவியரசனை பற்றிக் குறிப்பிடுகிறது. சிருங்காரம், ஹாஸ்யம், கருணை, வீரம், ரெளத்திரம், பயம், அருவருப்பு, அற்புதம், சாந்தம் என ஒவியரசனை ஒன்பது வகைப்படும். வசிப்பிடங்களில் சிருங்காரம், ஹாஸ்யம், சாந்தம் ஆகிய ரசனைகளைத் தரும் ஒவியங்களே வரையப்படல்
இந்துக் க்களஞ்சியம்

Page 60
வேண்டும். ஆலயங்களிலும், வசிப்பிடமல்லாத அரண்மனைப் பகுதிகளிலும் அனைத்துவகை ஓவியங்களும் வரையப்படலாம். திரவியம் நிறைந்த பானையைத் தனது கொம்புகளில் ஏந்தியபடி நிற்கும் காளைமாடு, யானை என்பனவும், பெண்ணாக உருவகப்படுத்தப்பட்ட அருநிதியங்களும், வித்தியாதரர், முனிவர், கருடன், ஹனுமான் மற்றும் புனிதமானதாகக் கருதப்படுபவை அனைத்தும் மனித வசிப்பிடங்களில் வரையப்படலாம். நற்சிந்தனையும், நல்லறிவுமுடைய ஒவியனால் வரையப்படும் சித்திரங்கள் துன்பத்தை நீக்கி, அனைத்துப் பேறுகளையும், அதிஷ்டத்தையும் தரவல்லவையென குறிப்பிடப்படுகிறது.
இவ்வாறு எட்டு அத்தியாயங்களில் ஒவியத்தை வரைதற்குரிய இலட்சணங்களையும் விதிமுறைகளையும் விரிவாக எடுத்துக் கூறும் சித்திர சூத்திரம், நடனத்தில் குறிப்பிடப்படும் தகவல்களை ஒவியத்திற்கான மேலதிக கருத்துக்களாக ஏற்றுக் கொள்ளுதல் வேண்டுமென்ற குறிப்புடன் முடிவடைகிறது. (சே7 கி)
சித்பவானந்தர்
சென்ற நூற்றாண்டிலே தமிழகம் தந்த ஆன்மிகளுானிகளுள், குறிப்பிடத்தக்க துறவுச் சிறப்பும் மக்கள் நலச் சேவையிற் பெருவேட்கையும் வாய்ந்தவராய்த் திகழ்ந்தவர் சுவாமி சித்பவானந்தர் அவர்கள்.
இந்து சமயத்தின் சர்வசமய சமரசநோக்கினைப் பேணும் வேதாந்த நெறியினைத் தென்னகத்தில் வளர்க்க அரும்பாடுபட்ட
மகான் ஆவர்.
இவரது பிறப்பிடம் கோவை மாவட்டம் பொள்ளாச்சி நகர்க்கணித்தாய செங்கோட்டைப் பாளையம் ஆகும். அவ்வூரில் பாரம்பரியமாக வாழ்ந்து வந்த பெருநிலக்கிழார்கள் மரபில் தோன்றிய பெரியண்ணன் கவுண்டர் அவரது தந்தையார் ஆவர். நஞ்சம்மையார் என்ற மங்கைநல்லாள் அவரது தாய்.
தமது முன்னோரைப் போன்று வைத்தியம் சோதிடம் ஆகிய துறைகளிற் பாண்டித்தியம் வாய்ந்த பெரியண்ணன் கவுண்டர் பெருந்தனவந்தராகவும் விளங்கினார். சித்பவானந்தர் பெற்றோரின் ஏழாவது குழந்தை, தமது கனிட்டபுத்திரனுக்குத் தாய் தந்தையர் இட்ட பெயர் சின்னு. சின்னுவுக்கு மூத்த சகோதரர்கள் மூவர். மூத்த சகோதரிகள் மூவர்.
இளமையிலேயே சின்னுவுக்கு வியக்கத்தக்க விவேகமும் கல்விகற்கும் ஆற்றலும் அமைந்திருந்தன. நாடகங்கள்
எழுதுவதிலும் நடிப்பதிலும் அவருக்குத் திறமை கைகூடியிருந்தது. இத்தகைய பண்புகளை அவதானித்த
இந்துக் ਵਰੀ

34
தந்தையார், அக்காலத்தில் மிக்க கெளரவமாகக் கருதப்பட்ட ஐ.சி.எஸ். துரைத்தன உத்தியோகத்தராக சின்னுவை ஆக்கும் நோக்கோடு,சென்னை பிரசிடென்சிக் கல்லூரிக்கு மேற் படிப்புக்காக அனுப்பி வைத்தார்.
இந்தக் கால கட்டத்திலே தான் சின்னுவின் வாழ்வில் ஒரு திருப்பம் ஏற்பட்டது. பூரீமத் விவேகானந்தரின் நூலொன்றைப் படிக்க நேரிட்டதன் விளைவாக, சின்னுவின் மனம் துறவினையும் மக்கள் நலத்தொண்டு பற்றியும் நாடத் தொடங்கியது. மேற்படிப்பைத் துறக்கத் தீர்மானித்தார்.
பூரீ இராம கிருஷ்ணரின் சீடர்களான பிரமானந்தர், சிவானந்தர் என்ற இரண்டு இராமகிருஷ்ண மடத்துத் துறவியர்களைக் கண்டு தமது வேணவாவைத் தெரிவித்தார். சின்னு, அவர்களது ஆசியைப் பெற்று, கல்கத்தா பேலூர் மடத்திற் சேர்ந்து, 1923 ஆம் ஆண்டில் அங்கு பிரமச்சரிய தீட்சைபெற்று
பூரீ திரியம்பக சைதன்யர் என்ற நாமம் பூண்டார்.
பேலூர் மடத்தில் தொண்டராகப் பணியாற்றிய காலத்தில் பூரண துறவுக்காகத் தம்மைத் தயார்படுத்திக் கொண்டார். பின்னர், உதக மண்டலத்தில் இராமகிருஷ்ண மடலாயம் ஒன்று உருவாவதற்கு முன்னின்று உழைத்த அவர், தமது தந்தையார் பெரியண்ணன் கவுண்டரிடமிருந்து அதற்காய பெருமளவு பொருட்கொடையையும் பெற்றுதவினார்.
தமது ஆன்மிக குருவெனத் தம் சிந்தனையிற் கொண்ட மேற்குறிப்பிட்ட சுவாமி சிவானந்தரிடம் சந்நியாச தீட்சை பெற்றுச் சுவாமி சித்பவானந்தர் ஆனார்.
இந்தவேளையில் இயற்கை எய்திய தமது தந்தையாருக்கு ஈமக்கடன் ஆற்ற வேண்டியதாயிற்று.
சித்பவானந்தர் 1926 முதல் 1940 வரையிலான காலப்பகுதியில் உதகமண்டல மடத்தில் தங்கி அநேக உறுதியான பணிகளை மேற்கொண்டார். 1940ஆம் ஆண்டளவில் திருப்பராய்த்துறையில் தங்கியிருந்த போது, அவ்விடத்தில் காணப்பட்ட காவிரியாற்றின் சூழலும் அமைதியும் அவருடைய மனதைப் பெரிதும் கவர்ந்தன. மேலும் தாருகவனம் எனப் புராணங்கள் மூலம், திருப்பராய்த்துறை பிரசித்தி பெற்றமையையும், அங்கு சுயம்பு மூர்த்தியாக எழுந்தருளி யிருக்கும் இறைவனைத் தேவாரம் திருப்பராய்த்துறை மேவிய செல்வரே எனப் போற்றியமையையும் சிந்தையிற் கொண்டு, இத்தகைய புனிதஸ்தலத்தில் தமது ஆன்மிகப் பணிகள் மேலும் அநுகூலமடையும் என்பதை உற்றுணர்ந்து அங்கோர்
ஆச்சிரமத்தை 1942இல் அமைத்துக் கொண்டார். ஆச்சிரம

Page 61
அங்குரார்ப்பண விழாவில் சுவாமி விபுலானந்த அடிகளாரும் கலந்து கொண்டு ஆசியுரை வழங்கியமை குறிப்பிடத்தக்கது.
மானிடத்தின் மேம்பாட்டினை அளிக்கும் கல்வி (Man - making Education) என்ற பூரீமத் விவேகானந்தரின் கோட்பாட்டிற்கமைய கல்விப்பணியில் ஈடுபட்ட சித்பவானந்தர் திருப்பராய்த் துறையில் பூரீ விவேகானந்த வித்யாவனப் பள்ளி எனும் கல்வி நிலையத்தை முதற்கண் நிறுவினார். மேலும் குருகுல முறையில் இயங்கும் உயர்நிலைக் கழகமும் கல்லூரியும் திருவேடகம் என்னும் இடத்தில் அமைத்து நடத்தியமை போல மகளிர்க்கென இத்தகைய சாரதா சமிதி' என்ற நிறுவனமொன்றை அமைத்தார். தவிர, சாரதா சமிதியின் கிளைகள் மதுரை, திருநெல்வேலி, மன்னார்குடி போன்ற இடங்களிலும் அமைவதற்கு வழிவகுத்தார்.
பழைய காலத்தில் பாரதத்தில் நிலவியிருந்த குருகுலக் கல்வி முறைமையையும் நவீன காலத்துக் கல்விக் கோட்பாடு களையும் இணைத்துச் சித்பவானந்தர் நடைமுறைப்படுத்திய கல்வியானது வாழ்க்கைக்குரிய பயிற்சியினை மாணவர்களுக்கு நல்கியது மட்டுமன்றி ஒழுக்கம், தூய்மை, எளிமையான வாழ்வு சேவைமனப்பான்மை முதலிய நற்பண்புகளையும் இயல்பாகவே மாணவர்கள் மேற்கொள்ள இடம் அளித்தது.
இவர், சிறுவர்களை மனிதராக்கும் கல்வித்திட்ட நடைமுறைப்படுத்தலோடு மட்டும் நின்று விடவில்லை. பெரியவர்களும் ஆன்ம ஈடேற்றம் பெறுவதற்குரிய வழிவகைகளையும் அமைத்துக் கொடுத்தார். உலகவிடயங் களினின்றும் மனதைத் திருப்பி இறைவனிடத்துப் படியச் செய்யுமுகமாக ஆங்காங்கு அந்தர்யோகப் பயிற்சி வகுப்புகளை நடத்திவந்தார். (கே.கே.எஸ்)
சிதம்பரம்
தமிழ்நாட்டில் தென்னார்க்காடு மாவட்டத்தில் உள்ள நகரம்; சென்னையிலிருந்து தஞ்சாவூருக்குச் செல்லும் வழியில் கடலூரிலிருந்து 50 கிலோ மீற்றர் தொலைவிலும், சீர்காழியிலிருந்து 18 கிலோ மீற்றர் தொலைவிலும் இந் நகரம் அமைந்துள்ளது. தமிழ் நாட்டின் பெரிய ஏரியான வீராணம் ஏரி இங்குள்ளது. வளமான மண்ணினைக் கொண்ட இவ்விடம் உணவு உற்பத்திமையமாகவுள்ளது. கைத்தறி நெசவுத் தொழிலும் சிறப்புற்றுள்ளது. இந்தியாவின் முக்கிய கல்வி மையங்களுள் ஒன்றாகத் திகழும் சிதம்பரத்தில் அண்ணாமலைப் பல்கலைக்கழகமும் பல கல்லூரிகளும் உள்ளன.
இந்நகரில் சைவர்களின் புண்ணிய தலங்களுள் ஒன்றான கோயில் என அழைக்கப்படும் தலமுள்ளது. வைணவர்கட்கு கோயில் என்றால் திருவரங்கம் போல் சைவர்கட்கு கோயில்

35
சிதம்பரமாகும். அடைமொழி எதுவுமின்றி கோயில் என அழைக்கப்படும் இத்தலம் சிவதலங்களுள் சிறந்ததாகக் கருதப்படுகின்றது. இத்தலம் வடக்கே வெள்ளாறு நதிக்கும், கிழக்கே வங்காள விரிகுடாவிற்கும், தெற்கே கொள்ளிடம் நதிக்கும், மேற்கே வீராணம் ஏரிக்கும் நடுவில் அமைந்துள்ளது. தென்னிந்தியாவிலுள்ள சிறப்புடைய சிவதலங்களுள் முதன்மையானதாகக் கருதப்படும் சிதம்பரத்திற்கு இந்தியாவின் அனைத்துப் பாகங்களிலிருந்தும், வெளிநாடுகளிலிருந்தும் இந்துக்கள் வருடம் முழுவதிலும் வருகின்றனர். மாணிக்கவாசகர் திருவாசகத்தில் அனைத்துலகுந் தொழுந்தில்லை அம்பலம் என இத்தலத்தினைச் சிறப்பித்துப் பாடியுள்ளார். தரிசிக்க முக்தி கிடைக்கும் தலம் என்ற பெருமை இதற்குண்டு.
புருஷ வடிவிலுள்ள ஆறாதாரங்களுள் சிதம்பரம் இருதய தானமாகக் கொள்ளப்படுகின்றது. பஞ்சபூதத் தலங்களுள் இத்தலம் ஆகாய தலமாகும். தமிழ் நாட்டிலுள்ள நடராஜருக்குரிய ஐந்து சபைகளுள் சிதம்பரம் கனகசபையாகும் (பொன்னம்பலம்). இங்கு சிவனின் ஆனந்தத் திருநடனம் நடைபெறுகின்றது. பொதுவாக சிவன் கோயில்களில் சிவலிங்கம் உள்ள சந்நிதி முக்கியம் பெற்றிருக்க இங்கு நடராஜரின் சந்நிதியே முதன்மை பெற்றுள்ளது. இதனால்தான் இத்தலம் சிதம்பரம் நடராஜர் கோயில் என அழைக்கப்படுகின்றது. தேவாரச் சுவடிகள் கண்டெடுக்கப்பட்ட தலம் என்ற பெருமை இதற்குண்டு. இங்கு பேணப்பட்ட தேவாரச் சுவடிகளைச் சோழ மன்னன் இராஜராஜன் நம்பியாண்டார் நம்பியின் துணையுடன் வெளிக்கொணர்ந்து திருமுறைகளாகத் தொகுத்து அவற்றினைக் கோயில்களில் ஒதுவதற்கும் ஏற்பாடு செய்தான். சிதம்பரத்திற்கும் திருமுறைகட்கும் உள்ள தொடர்பின் காரணத்தினாலேயே தேவாரங்களைத் தொடங்கும்போதும் முடிக்கும்போதும் திருச்சிற்றம்பலம் என்று கூறும் வழக்கம் ஏற்பட்டது. சேரமான் பெருமாள் பொன் வண்ணத்து அந்தாதி பாடியது, மாணிக்கவாசகர் திருச்சிற்றம்பலக் கோவை பாடியது, திருக்கடவூர் உய்யவந்த தேவர் பாடிய திருக்களிற்றுப்படி எனும் நூலை இறைவன் ஏற்றுக் கொண்டது எனும் பெருமைகளும் இத்தலத்திற்குண்டு. அறுபத்து மூன்று நாயன்மார்களுள் திருநீலகண்ட நாயனார், திருநாளைப் போவார் நாயனார், கூடற்றுவ நாயனார், கோட்செங்கட்சோழ நாயனார், கணம்புல்ல
இந்துக்கலைக்களஞ்சியம்

Page 62
நாயனார் என்போரும் சந்தான குரவர்களில் மறைஞான சம்பந்த சிவாச்சாரியார், உமாபதி சிவச்சாரியார் என்போரும் வீடுபேறு பெற்ற தலமும் சிதம்பரமாகும். மாணிக்கவாசகர் இலங்கையைச் சேர்ந்த புத்தகர்களை வாதில் வென்றதும் ஊமைப் பெண்னைப் பேச வைத்ததும் முத்தியடைந்ததும் இங்குதான்.
சிற்றம்பலம் என்பது இத்தலத்தின் பழைய பெயரென்றும் இது வடமொழியில் சிதம்பரம் எனத் திரிந்தது எனவும் கூறப்படுகின்றது. சித் என்றால் ஞானம், அறிவு. அம்பரம் என்றால் அளக்க முடியாத வெட்டவெளி அதாவது ஆகாயம் என்றும் பொருள் கண்டு, சிதம்பரம் என்றால் எல்லையற்ற அறிவு, அதாவது ஞானாகாசம்’ எனப் பொருள் கொள்ளப்படுகின்றது. இலக்கியங்களிலும் கல்வெட்டுக்களிலும் இத்தலம் பல்வேறு பெயர்களால் அழைக்கப்படுகின்றது. இவ்விடத்தில் தில்லை மரங்கள் அடர்ந்திருந்ததால் தில்லை, திருத்தில்லை, தில்லைவனம், தில்லையம்பதி, தில்லையூர், தில்லை அம்பலம், தில்லைச் சிற்றம்பலம் எனும் பெயர்களை இத்தலம் பெற்றிருந்தது. தில்லை என்பதனை ஊரின் பெயராகக் கொண்டு தில்லை நகர்த் திருச்சிற்றம்பலம், தில்லை தன்னுள் திகழ்கின்ற சிற்றம்பலம், தில்லையுள் சிற்றம்பலம் எனக் குறிப்பிடப்படுவதனையும் காணலாம். கோயில், மன்று, அம்பலம், பொது, மேரு தட்சிணமேரு. புண்டரிகடரம், வியாக்கிரபுரம், புலியூர், புலியூர்ச் சிற்றம்பலம், பெரும்பற்றப்புலியூர், பொன்னம்பலம், சிதாகாச சேஷத்திரம், மகா சிவலோகம், பூலோக கைலாசம் போன்ற பெயர்களும் இத்தலத்திற்குண்டு. வைணவ நூல்களில் திருச்சித்திர கூடம் என வழங்கப்படுகின்றது.
உமாபதி சிவாச்சாரியரினால் பாடப் பெற்ற கோயிற் புராணத்தில் இத்தலம் தொடர்பான புராணக் கதை கூறப்பட்டுள்ளது. சிவனை வழிபடுவதற்குச் சிறந்த தலம் தில்லை என மத்யந்த முனிவர் தனது மகனான வியாக்கிரபாதருக்குக் கூற அதன்படி அவர் தில்லைக்கு வந்து இங்கிருந்த சிவகங்கைக் குளத்தில் நீராடி அதன் தென் கரையிலிருந்த ஆலமரத்தின் நிழலிற் காணப்பட்ட சிவலிங்கத்தினைக் கண்டு வணங்கி வந்தார். இதற்கு மேற்கே சிவலிங்கம் ஒன்றினை ஸ்தாபித்து அதனைப் பூஜித்து வந்தார். சிவனை வண்டு மொய்க்காத மலர்களைக் கொண்டு பூஜிக்க விரும்பிய வியாக்கிரதபாதர் அதிகாலையில் வண்டு மொய்க்காத மலர்களைப் பறிப்பதற்குப் பிரகாசமான கண்கள் வேண்டியும் மரத்தினில் ஏறி மலர்களைப் பறிப்பதற்குப் புலியினைப் போன்ற வலிமையான நகங்களை வேண்டியும் சிவனை நோக்கிக் கடும் தவமிருந்து அவ் வரத்தினைப் பெற்றார். சிவனை மலர்கள் கொண்டு பூஜித்து வந்தார். இவர் வஷிட்டரின் தங்கையை மணம் செய்து அவர்கட்கு உபமன்யு என்னும் புத்திரன் அவதரித்தார். வஷிட்டரின் மனைவி அருந்ததி உபமன்யுவிற்கு காமதேனுவின் பால் கொடுத்து வளர்த்து வந்தார். அவரை வியாக்கிரபாதரின் ஆச்சிரமத்தில் தில்லையில் கொண்டு வந்து விட்டுச் செல்ல உபமன்யு காமதேனுவின் பாலை நினைத்து அழுதார். இவரைச் சமாதானம் செய்ய முடியாத வியாக்கிரபாதர் தான் வணங்கும் இறைவன் சந்நிதிக்குக் கொண்டு வந்து அவரே கதி என வணங்கி நின்றார். உடன் இறைவன் பாற்கடலைக்
இந்துக் க்களஞ்சியம்
36

கொடுத்து அருள் செய்தார். இவ்வாறு வியாக்கிரகபாதரால் வனங்கப்பட்ட சுயம்பு லிங்கமே இன்றுள்ள மூலட்டானேசுவரராவர்.
உமன்யுவிற்கு இறைவன் பாற்கடல் கொடுத்ததனை பாலுக்குப் பாலகன் வேண்டி அழுதிட பாற்கடல் ஈந்தபிரான் எனத் திருப்பல்லாண்டில் சேந்தனார் குறித்துப் பாடியுள்ளார். திருப்பாற்கடல் என்னும் பெயருடைய தீர்த்தம் சிதம்பரம் கோயிலுக்கு வடக்கேயுள்ளது. புலிக்கால்களையுடைய வியாக்கிரபாதர் வழிபட்டமையினாலேதான் இத்தலம் புலியூர் எனப் பெயர் பெற்றது. இத்தலம் ஆதிசேடனாலும் வழிபடப்பட்டதாகும். சிவனின் திருநடனத்தைக் காண விரும்பிய ஆதிசேடன் விஷ்ணுவிடம் ஆசி பெற்று பதஞ்சலி என்னும் பெயர் கொண்டு தவமிருந்து தில்லையை அடைந்து வியாக்கிரபாத முனிவருடன் மூலட்டானேசுவரரை வணங்கி லிங்கம் ஒன்றினை ஸ்தாபித்து ஆத்மார்த்த பூஜையில் ஈடுபட்டிருந்தார். பதஞ்சலி முனிவரின் தவத்தின் பயனாகத் தை மாதம் பூச நட்சத்திரமும் வியாழக்கிழமையும் கூடிய சித்தயோக தினத்தில் மூவாயிரம் முனிவர்கட்கும் பதஞ்சலி, வியாக்கிரபாத முனிவர்கட்கும் சிவகாமியம்மையும் கண்டு களிக்க சிவன் ஆனந்தத் திரு நடனத்தினைக் காட்டியருளினார். தாம் கண்ட ஆனந்த நடனத்தினை உலகிலுள்ள அனைவரும் எப்பொழுதும் காண வேண்டும் என்று பதஞ்சலி வேண்டிக் கொண்டமைக்கிணங்கி சிவன் தில்லையில் அன்று முதல் ஆனந்த நடனத்தினைத் தொடர்ச்சியாக நடத்திக் கொண்டிருக்கின்றார். சிதம்பரம் தொடர்பான இந்த ஐதீகக் கதை கோயிற் புராணத்தில் வியாக்கிரபாத சருக்கம், பதஞ்சலி சருக்கம், நடராஜர் சருக்கம் என்பவற்றிற் கூறப்பட்டுள்ளது. இது பதஞ்சலிக்கு அருளிய பரம நாடகம் எனத் திருவாசகத்திலும், நாகம் தொழ எழில் அம்பலம் நண்ணிநடம் நவில்வோன்' எனத் திருக்கோவையாரிலும் குறிப்பிடப்பட்டுள்ளது. வியாக்கிரபாதர், பதஞ்சலி என்போரது சிலைகள் சிற்சபையிலுள்ளன. வியாக்கிரபாதர் லிங்கம் அமைத்து வழிபட்ட தலம் இளமையாக்கினார் கோயில் என்ற பெயரிலும் பதஞ்சலி லிங்கம் அமைத்து வழிபட்ட தலம் அனந்தீசுவரர் கோயில் என்ற பெயரிலும் சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு அண்மையிலுள்ளன. சிவகங்கைக் கரையில் வியாக்கிர பாதருக்குக் காட்சி கொடுத்த சுயம்பு லிங்கத்தினைக் கொண்ட திருமூலட்டானம், பதஞ்சலி முனிவருக்காகச் சிவன் திருநடனத்தினை நிகழ்த்திய சிற்றம்பலம் எனும் இரு சந்நிதிகள் சிதம்பரம் தலத்திலுள்ளன. இவற்றுள் சிற்றம்பலம் சந்நிதியே இத்தலத்தில் சிறப்புப் பெற்றுள்ளது.
மூலட்டானத்திலுள்ள இறைவன் திருமூலநாதர், மூலட்டானேசுவரர் என்றும் தேவி உமையம்மை என்றும் அழைக்கப்படுகின்றனர். திருவீழிமிழலைத் திருத்தாண்டகத்தில் பெரும் பற்றப் புலியூர் மூலட்டானத்தார் எனத் திருநாவுக்கரசர் குறித்துப் பாடியுள்ளார். சிற்றம்பலத்திலுள்ள நடனமிடும் இறைவன் சபாநாயகர் என்றும் தேவி சிவகாமியம்மை, சிவகாமசுந்தரி என்றும் அழைக்கப்படுவர். பொன்னம்பலக்

Page 63
கூத்தன், பொன்னம்பல நாதன், ஆனந்தத் தாண்டவப் பெருமாள் நாயனார், அம்பலக் கூத்தன், கூத்தப் பெருமான், அழகிய சிற்றம்பலமுடையார், ஆளுடைய நாயனார், சிதம்பரேசுவர், தில்லைக் கூத்தன், தில்லை நாயகத் தம்பிரான், நடராஜர், மேருவிடங்கர், தட்சிண மேரு விடங்கர், கனகசபாபதி போன்ற பல பெயர்களாலும் அழைக்கப்படுகின்றார்.
இத்தலத்திற்குரிய தீர்த்தம் கோயிலினுள் உள்ள சிவகங்கையாகும். தலவிருட்சம் தில்லை, ஆல் என்பனவாகும்.
திருப்பதிகங்கள் சிதம்பரத்தின் மகிமையினையும் நடராஜரின் சிறப்பினையும் பல தமிழ், சமஸ்கிருத நூல்கள் எடுத்தியம்புகின்றன. இத்தலத்தின் மீது திருஞானசம்பந்தர் இரு பதிகங்களும், திருநாவுக்கரசர் எட்டுப் பதிகங்களும், சுத்ரமூர்த்தி நாயனார் ஒரு பதிகமுமாக மொத்தம் பதினொரு பதிகங்கள் பாடப்பெற்றுள்ளன. இப்பதிகங்களில் தில்லையின் சிறப்பும் நடராஜரின் பெருமையும் கூறப்பட்டுள்ளது. அந்தணர்கள் வாழும் சிறப்புடைய தில்லையைப் பாடும் ஞானசம்பந்தர் இதன் செல்வ வளத்தினை மேல்வரும் பாடலில் குறித்துப் பாடியுள்ளமையைக் காணலாம் :
செல்வ நெடுமாடஞ் சென்று சேனோங்கிச் செல்வ மதிதோயச் செல்வம் உயர்கின்ற செல்வர் வாழ்தில்லைச் சிற்றம் பலமேய செல்வன் கழலேத்துஞ் செல்வம் செல்வமே,
சிற்றம்பலத்துள் நடனமாடும் இறைவனைத் திருநாவுக்கரசர் தனது பதிகங்களில் சிறப்பித்துப் பாடியுள்ளார். பத்தனாய்ப் பாடமாட்டேன். எனத் தொடங்கும் பதிகத்தில் சிற்றம்பலத்துள் நிகழும் திருநடத்தினைக் குறித்துப் பாடியுள்ள பாடல் மேல்வருமாறு:
பூத்தன் பொற்சடை பொன்போல் மிளிரப் புரிகனங்கள் ஆர்த்தன கொட்டி யரித்தன
பல்குறட் பூதகனந் தேத்தென என்றிசை வண்டுகள்
கூத்தனின் கூத்துவல் லாருள ரோவென்றன் கோல்வளைக்கே
பெரிய திருத்தாண்டத்தில் 'பெரும்பற்றப் புலியூரானைப் பேசாத நாளெல்லாம் பிறவா நாளே என ஒவ்வொரு பாடலிலும் குறிப்பிடுகின்றார். சிதம்பரத்தினைப் பற்றி திருச்சாய்க்காடு, திருக்கோலக்கா, திருக்கோடிக்கா, புள்ளிருக்கு வேளூர், வாள்கொளிபுத்தூர், திருவீழிமிழலை, செங்காட்டங்குடி, நாகைக் காரோணம், திருவாரூர், திருப்புத்தூர், திருவதிகை, திருநாவலூர், இடையாறு, திருவாலங்காடு, போன்ற தலங்களின் தேவாரப் பாடல்களிலும் வைப்புத்தலமாகப் பாடப்பெற்றுள்ளது.
திருவாசகம் திருக்கோவை திருவிசைப்பா, திருப்பல்லாண்டு திருமந்திரம் போன்றவற்றிலே தில்லையின் சிறப்பும் அங்குள்ள

இறைவனின் திருநடனத்தின் சிறப்பும் கூறப்பட்டுள்ளமையைக் காணலாம். திருவாசகத்திலுள்ள 51 பதிகங்களில் 25 பதிகங்கள் சிதம்பரத்தினைப் பற்றியனவாகவுள்ளன. திருக்கோவையிலுள்ள 400 கட்டளைக் கலித்துறைகளும் தில்லை இறைவனின் கருணையைப் பேசுவனவாகவுள்ளன. திருவிசைப்பாவில் தில்லையின் சிறப்பு, அந்தணர் சிறப்பு மற்றும் வரலாற்றுச் செய்திகள் உள்ளன. முதலாம் பராந்தகன் தில்லைக்கு பொன் வேய்ந்த செய்தியை கண்டராதித்தரின் மேல்வரும் திருவிசைப்பாப் பாடல் கூறுகின்றது.
வெங்கோல் வேந்தன் தென்னாடும் ஈழமுங் கொண்டதிறன் செங்கோற்சோழன் கோழிவேந்தன்
செம்பியன் பொன்னணிந்த அங்கோல்வளையார் பாடியாடு
மணிதில்லை யம்பலத்துள் எங்கோனீச னெம்மிறையை
யென்றுகொ லேத்துவதே.
சிதம்பரத்தில் தேர்த் திருவிழா நாளில் அசையாது நின்ற தேரை அசைய வைக்கச் சேந்தனார் பாடியதாகக் கூறப்படும் திருப்பல்லாண்டில் சிதம்பரத்தின் சிறப்பும் இறைவனின் கருணையும் கூறப்பட்டுள்ளது. மேல்வரும் பாடல் உபமன்யுவிற்குப் பாற்கடல் அளித்தமையினையும் அந்தணர் வாழும் சிற்றம்பலத்தில் நடனமிடும் இறைவனையும் குறித்துப் பாடப்பெற்றுள்ளது.
பாலுக்குப் பாலகன் வேண்டி யழுதிடப்
பாற்கடல் ஈந்தபிரான் மாலுக்குச் சக்கரம் அன்றருள் செய்தவன்
மன்னிய தில்லைதன்னுள் ஆலிக்கும் அந்தணர் வாழ்கின்ற சிற்றம்
பலமே யிடமாகப் பாலித்து நட்டம் பயிலவல் லானுக்கே
பல்லாண்டு கூறுதுமே.
திருமூலர் இயற்றிய திருமந்திரம் என்னும் நூலிலே தில்லைத் திருநடனம் பற்றியும், திருவம்பலச் சக்கரம் பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளது. திருமந்திரத்தில் திருக்கூத்துத் தரிசனம் என்ற பகுதியில் தில்லையில் நடனமிடும் இறைவனின் நடனத்தினைச் சிறப்பித்துப் பாடியுள்ளமையைக் காணலாம். பொன்னம்பலத்தில் நடனமிடும் இறைவனைத் திருமூலர் ,
உம்பரிற் கூத்தனை உத்தமக் கூத்தனைச் செம்பொன் திருமன்றுள் சேவகக் கூத்தனைச் சம்பந்தக் கூத்தனைத் தற்பரக் கூத்தனை இன்புற நாடிஎன் அன்பில் வைத்தேனே, என்றும்,
மாணிக்கக் கூத்தனை வண்தில்லைக் கூத்தனைப் பூனுற்ற மன்றுள் புரிசடைக் கூத்தனைச் சேணுற்ற சோதிச் சிவானந்தக் கூத்தனை ஆணிப்பொற் கூத்தனை யாருரைப் பாரே. என்றும் பாடியுள்ளார்.
இந்துக் க்களஞ்சியம்

Page 64
கி.பி.13 ஆம் நூற்றாண்டில் சிதம்பரம் தலத்திலுள்ள ஆயிரம் கால் மண்டபத்திலிருந்து சேக்கிழாரினாற் பாடப்பெற்று அரங்கேற்றப்பட்ட பெரிய புராணத்தில் தில்லையைப் பற்றி அநேக குறிப்புக்கள் இடம் பெற்றுள்ளன. இந்நூலைத் தொடங்குவதற்கு இறைவன் 'உலகெலாம் என அடியெடுத்துக் கொடுத்தார் என்ற பெருமை இந்நூலுக்குண்டு. திருத்தொண்டர் வரலாற்றினைக் கூறும் இந்நூலில் குறிப்பாக அப்பர், சுந்தரர், சம்பந்தர், திருநாளைப் போவார் நாயனார், தில்லைவாழ் அந்தணர் புராணங்களிலும் மற்றும் இளையான் குடிமாற நாயனார், கோச்செங்கட் சோழ நாயனார், ஏயர்கோன் கலிக்காம நாயனார், கழறிற்றிவார் நாயனார், கணம்புல்ல நாயனார், திருநீலகண்ட நாயனார், மெய்ப்பொருள் நாயனார் புராணங்களிலும் தில்லையைப் பற்றிய செய்திகள் உள்ளன. திருத்தில்லை, ஆனாத சீர்த்தில்லை, தேனடைந்த மலர்ப்பொழில் தில்லை சீர்வளரும் திருத்தில்லை பெருந்திருத்தில்லை, நீடும் திருத்தில்லை, பூங்கிடங்கு சூழ்ந்த புலியூர், பெருந்திருமாலயன் போற்றும் பெரும்பற்றப்புலியூர், பொற்பதியாம் பெரும்பற்றப்புலியூர், திருவிற் பொலியும் திருப்புலியூர், பொற்புலியூர் போன்ற பல்வேறு அடை மொழிகளினால் பெரியபுராணத்தில் இத்தலம் அழைக்கப் படுகின்றது.
சிதம்பரம் நகரின் வளமும், செழிப்பும், அழகும் பெரியபுராணத்திற் சிறப்புற கூறப்பட்டுளளது. வாவிசூழ் தில்லை மூதூர் எனத் திருஞானசம்பந்தர் புராணத்திலும் தேனாரும் மலர்ச்சோலைத் திருப்புலியூர் எனத் திருநாவுக்கரசர் புராணத்திலும் இதன் இயற்கை எழிலைக் குறிப்பிடும் சேக்கிழார், திரை செய் நெடுங்கடலுடுத்த திருத்தில்லை என இவ்விடம் கடற்கரையில் இருந்தது எனக் கூறுகின்றார். இந்நகரிற்கு நான்கு வாயில்கள், பல வீதிகள், மணிமாடங்கள் காணப்பட்டன என நகரின் அமைப்பு கூறப்படுள்ளது. சிதம்பரத்திலுள்ள பொன்னம்பலம் அப்பொன்நீடிய அம்பலம், பொன்னின் அம்பலம், அடிபொன் நீடும் அம்பலம், திருவார்ந்த செம்பொன்னின் அம்பலம், பைம்பொன் அம்பலம் போன்ற பெயர்களிலும் இறைவன் அம்பலவர், அம்பலத்தாடுவான், அம்பலத்து நிருத்தனார், மன்றுளார், நடம் புரிவார், ஆனந்தக் கூத்தர், திருத்தில்லை வேந்தர், தில்லை மன்றுள் ஆடிய பெருமான் போன்ற பல்வேறு பெயர்களினாலும் பெரியபுராணத்தில் அழைக்கப்பட்டுள்ளது. சிதம்பரத்தில் பூஜை செய்யும் உரிமை பெற்ற தில்லைவாழ் அந்தணர்களைப் பற்றி தில்லைவாழ் அந்தணர் புராணத்தில் சேக்கிழார் கூறியுள்ளார்.
திருக்கடவூர் உய்யவந்த தேவநாயனாரினால் பாடப்பெற்ற திருக்களிற்றுப்படியார்என்னும் நூலில் நடராஜரைப்பற்றிப்புகழ்ந்து பாடப்பெற்றுள்ளது. சிற்றம்பலத்திலுள்ள பஞ்சாட்சரப் படியினில் வைக்கப்பட்ட இந்நூலைப் படியின் இரு கரைகளிலும் காணப்படும் கல்லினாலான யானை தன் துதிக்கையினாலெடுத்து நடராஜரின் பாதத்தில் வைத்தது. இதனால் திருக்களிற்றுப்படியார் என்னும் பெயர் பெற்றது என்னும் பெருமை இந்நூலுக்குண்டு. தில்லைவாழ் அந்தணர்களில் ஒருவரான உமாபதி சிவாச்சாரியரினாற் பாடப்பெற்ற கோயில் புராணம் என்னும் நூலில் இத்தலம் தொடர்பான புராணக் கதைகளும் திருவிழாக்கள் பற்றியும் தகவல்கள் உள்ளன. இந்நூலில் வியாக்கிரபாத சருக்கம் என்னும்
இந்துக் க்களஞ்சியம்

38
பகுதியில் வியாக்கிரபாதர் தில்லைக்கு வந்தது, இறைவனை வேண்டி புலிக்கால்களையும் கண்களையும் பெற்றது உபமன்யுவிற்கு இறைவன் பாற்கடல் அளித்தது போன்ற செய்திகளும், பதஞ்சலி சருக்கத்தில் ஆதிசேடனாகிய பதஞ்சலி வியாக்கிரபாதருடன் சேர்ந்து சிவலிங்கத்தினை வழிபட்டு சிவனின் திரு நடத்தினைக் காண வேண்டிய வரலாறும், நடராஜர் சருக்கத்தில் தைப்பூச வியாழக்கிழமை சித்தயோக தினத்தில் சிவன் பலரும் காண ஆனந்தத் திருநடனம் நிகழ்த்தியது பற்றியும் கூறப்பட்டுள்ளது.
இரண்யவர்மன் சருக்கம் என்னும் பகுதி கெளடவ நாட்டினைச் சேர்ந்த சிங்கவர்மன் என்னும் மன்னன் தென்னிந்தியாவிலுள்ள தில்லைக்கு வந்து காடாக இருந்த இவ்விடத்திலுள்ள தீர்த்தத்தில் குளித்து தன் உடலிலுள்ள நோய் நீங்கப்பெற்று பொன் நிறமான உடலினை பெற்று, இரணியவர்மன் என்னும் பெயரினையும் பெற்று இத்தலத்திற்கு திருப்பணிகள் செய்தான் என்னும் தகவல்கள் கூறப்பட்டுள்ளன. இத்தலத்தின் விழாக்கள் பற்றி திருவிழாச் சருக்கம் என்னும் பகுதியிற் காணமுடிகின்றது. வசந்த உற்சவம், திருவாதிரை உற்சவம், பூசோற்சவம், ஆனி உற்சவம் என்னும் உற்சவங்களைப் போன்ற விழாக்களை இரணியவர்மன் ஆகம முறைப்படி நிகழ்த்தியதாகக் கோயில்புராணம் கூறுகின்றது. உமாபதி சிவாச்சாரியாரின், கொடிக்கவிஎன்னும் நூல் தில்லைத் திருவிழா கொடியேற்றத்தின் போது கொடி ஏறாதிருக்க அதனை ஏற்றுவதற்காக இவரால் பாடப்பெற்ற நூலாகும்.
தில்லைபற்றிய நூல்கள்
சேரமான் பெருமாள் பாடிய பொன்வன்னத்து அந்தாதி பட்டினத்தார் பாடிய கோயில் நான் மணிமாலை, நம்பியாண்டார் நம்பி பாடிய கோயிற்றிருப் பண்ணியர் திருவிருத்தம் புராணத் திருமலைநாதர் என்பவராற் பாடப்பெற்ற சிதம்பர புராணம், குமரகுருபர சுவாமிகள் இயற்றிய சிதம்பர மும்மணிக் கோவை, சிதம்பர செய்யுட் கோவை பூநீலழநீ சிவஞான தேசிக சம்பந்தராற் பாடப்பெற்ற சிதம்பரநாதர் பதிகம் (சிதம்பர நடராஜர் திருவருட்பா),திருவண்ணாமலை குகை நமச்சிவாயார் பாடிய சிதம்பர வெண்பா, திருசிரபுரம் மீனாட்சி சுந்தரம் பிள்ளை LTigu தில்லையமக அந்தாதி, ஆத்மநாத தேசிகர் இயற்றிய சோழமண்டல சதகம் மற்றும் தில்லைக் கலம்பகம், தில்லையுலா, நடராஜர் சதகம், மாரிமுத்துப் புலவர் பாடிய புலியூர் வெண்பா போன்ற நூல்கள் சிதம்பரத்தின் சிறப்பினையும் அங்கு சிவனின் ஆனந்தத் தாண்டவத்தினையும் பற்றிக் கூறுகின்றன.
சிதம்பர புராணம் பாயிரத்துடன் மான்மியச் சருக்கம், துன்மதச் சருக்கம், நியமச்சருக்கம், சோமநாதச் சருக்கம், தீர்த்தச் சருக்கம், திருச்சிற்றம்பலச் சருக்கம், சமாதிச் சருக்கம், துற்றெரிசனச் சருக்கம் என்னும் சருக்கங்களைக் கொண்டுள்ளது. தில்லையுலாவில் நடராஜர் உலா போகும் போது அவருடன் கூடப் போகும் தெய்வங்களைப் பற்றிக் கூறுகின்றது. இந் நூலில் சிற்சபைக்குப் பொன் வேய்ந்த செய்தி குறிப்பிடப்பட்டுள்ளது. தேவர்கள் பொன் வேய்ந்தார்கள் என்றும்

Page 65
பொன் ஒடுகள் ஒவ்வொன்றிலும் சிவாயநம என்னும் பஞ்சாட்சரம் எழுதப்பட்டிருக்கின்றது என்றும் திருவெழுத்தால் சேணோடு பொன் வேய்ந்த சிற்றம்பலம் என்னும் பகுதியில் கூறப்பட்டுள்ளதனைக் காணலாம். நடராஜரைப் பற்றிப் புகழ்ந்துரைக்கும் நூலான நடராஜர் சதகத்தில் தில்லை மூவாயிரவரர் ஆகம விதிப்படி இங்கு பூஜை செய்கின்றனர் எனப் புகழ்ந்து கூறுவதோடு சைவ சமயத்துடன் தொடர்பான பல விடயங்களைச் சிவனின் மூர்த்தங்கள், பூஜைகள், அபிடேகங்கள், வழிபாட்டு முறைகள், பூஜை உபகரணங்கள், அபிடேகத் திரவியங்கள் போன்ற பல விடயங்களையும் எடுத்துரைக்கின்றது. சோழ மண்டல சதகத்தின் மூன்றாம், இரண்டாம், தொண்ணுாற்றொன்பதாம் செய்யுள்களில் தில்லையைப் பற்றியும், தில்லைவாழ் அந்தணர், இங்கு நடைபெறும் நிகழ்ச்சிகள் பற்றியுந்
தகவல்கள் உள்ளன.
நாலாயிரத்திவ்ய பிரபந்தத்தில் 7 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த திருமங்கை யாழ்வாரும் 8 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த குலசேகராழ்வாரும் தில்லைப் பதியிலிருந்த கோவிந்த ராஜரைக் குறித்துப் பாடியுள்ளனர். இத்தலம் அவர்களது பாசுரங்களில் தில்லைச் சித்திரகூடம் எனக் குறிப்பிடப்படுகின்றது. பல்லவ மன்னர்கள் கோவிந்தராஜரை வழிபட்ட செய்தியும், கோவிந்தராஜருக்குத் தில்லைவாழ் அந்தணர்களாகிய மூவாயிரவர் பூஜை செய்த செய்தியும் இப்பாசுரங்களிற் காணப்படுகின்றன. திருமங்கையாழ்வார் பெரிய திருமொழியில் செம்பொன்மணிமாடங்கள் சூழ்ந்த தில்லைத் திருச்சித்திர கூடம், சேமங்கொள் பைம்பூம் பொழில் சூழ்ந்த தில்லைத் திருச்சித்திரகூடம், தெய்வப் புனல் சூழ்ந்த அழகாய தில்லைச் திருச்சித்திரப் பூம்பொழில் தில்லைச் சித்திர கூடம் என தில்லையைக் குறிப்பிடுகின்றார்.
விக்கிரம சோழன் இரண்டாம் குலோத்துங்க சோழன் இரண்டாம் ராஜராஜன் என்போரது அவைப் புலவரான ஒட்டக்கூத்தர் குலோத்துங்க சோழன் மீது பாடிய குலோத்துங்க சோழனுலா, இரண்டாம் குலோத்துங்கனின் மகன் இரண்டாம் ராஜராஜன் மீது பாடிய ராஜராஜ சோழனுலா மற்றும் இவ்வாசிரியரின் தக்கயாகப்பரணி என்னும் நூல்களிலே இக் கோயிலின் கட்டிடத் திருப்பணிகள் பற்றிப் பயனுள்ள குறிப்புக்கள் உள்ளன. இரண்டாம் குலோத்துங்கன் சிதம்பரம் தலத்திற்குச் செய்த திருப்பணிகள் விவரமாகக் குலோத்துங்க சோழனுலாவிற் கூறப்பட்டுள்ளன. தில்லைத் திரு மன்ற முன்றில் சிறு தெய்வத்தொல்லைக் குறும்பு தொலைத்து எடுத்து என இங்கிருந்த கோவிந்தராஜர் சிலை குலோத்துங்கனால் அகற்றப்பட்ட செய்தியும், பேரம்பலம், கோபுர மாடம் பரந்து ஓங்கும் மாளிகை மற்றும் திருக்காமக் கோட்டம் அமைத்த செய்தியையும் 38 முதல் 58 ஆம் பாடல் வரை கூறப்பட்டுள்ளது.
தில்லைவன மான்மியம் புலியூர் மான்மியம், வியாக்ரபுரி மான்மியம் புண்டரிகடரமான்மியம் ஹேம சபாநாயக மான்மியம் சிதம்பர மான்மியம், சிதம்பர பிரதிஷ்ட மான்மியம், சிதம்பர

39
ரகசியம், சிதம்பர ரகசிய மந்ர உபாசன கல்பம், சம்மேளன பிரஸ்தரம் ரகசிய பிரணவபிரகார லக்ஷணம் மகாரகசிய ஸ்தான லக்ஷணம் ஆகாச பரிவார கல்பம், சிதம்பர பஞ்சாக்ஷர கல்பம் சிதம்பரகல்பம் சிந்தாமணிமந்திரம் சிற்சபா கைங்கர்யஸ்வதந்திர சக்தி சிதம்பர சம்ரோக்ஷன கல்பம், சிற்சபா சம்ரோகூன குத்திரம் சிற்சபா சம்ரோக்ஷண கவிதை, சிற்சபா சம்ரோக்ஷன பாஷ்யம், நடராஜ ஸ்கஸ்ரநாம ஸ்தோத்ரம், சிதம்பர கவசம், சிதம்பர தீகூகித ஸ்தோத்ரம் நடேசாஷ்டகம், சிதம்பராக்ஷடகம், நடேச ஸ்தோத்திரம் நடேச சிந்தாமணி நடராஜ திக்பந்தனம், சிதானந்தகூடிடக ஸ்தோத்திரம், சிதம்பரேஸ்வர அஷ்டகம், சிதம்பரேஸ்வர புஜங்காஷ்டகம் சிதானந்த சாரம் நடேச விஜயம் பதஞ்சலி சரித்திரம் சபாபதிவிலாசநாடகம் என்னும் சமஸ்கிருத நூல்களும் சிதம்பரம் கோயில் பற்றியும் இங்குள்ள இறைவன் பற்றியும் கூறுகின்றன.
கட்டடங்களும் திருப்பணிகளும்
தமிழ் நாட்டிலே பல்லவர் ஆட்சி நிலவிய காலத்திலே சிதம்பரம் சிறப்புடன் விளங்கியிருந்திருக்கின்றது. இக் காலத்தினைச் சேர்ந்த தேவாரம், திவ்ய பிரபந்தத்தில் நடராஜர், மூலட்டானத்தார், கோவிந்தராஜர் பற்றிக் குறிப்பிடப் படுகின்றமையால் அக்காலத்தில் நடராஜரின் சிற்றம்பலம், வியாக்கிரபாதர் வணங்கிய சிவலிங்க சந்நிதி, கோவிந்தராஜர் சந்நிதி என்பன காணப்பட்டமை தெரிகின்றது. ஆனாலும் சோழர் காலத்திற்கு முற்பட்ட சாசனங்கள் எவையும் இத்தலத்தில் காணப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. சிற்றம்பலத்தினைச் சுற்றியுள்ள பல சந்நிதிகள், மண்டபங்கள், மாடவீதிகள், திருச்சுற்று மாளிகைகள், கோபுரங்கள் என்பன பிற்காலச் சோழர், விஜயநகர, நாயக்கர் காலங்களில் அமைக்கப்பட்டவையாகும். இங்குள்ள பல கட்டடங்கள் சோழர் காலத்தினைச் சேர்ந்தவையாகும். அக்காலத்திற் சிதம்பரம் 14 சிற்றுார்களைத் தன்னகத்தே கொண்ட பேரூராகத் திகழ்ந்தது என்பது சாசனங்களின் வாயிலாகத் தெரிகின்றது. பண்ணங்குடிச்சேரி என்னும் பரகேசரி நல்லூர், இளநாங்கூர், காரிகுடி, மணலூர், கோயில் பூண்டி, சிவபுரி, கோலம், அக்கன் பள்ளிப்பட்டி என்னும் விக்கிரமசோழ நல்லூர் திருவேட்களம், கடுவாய்ச்சேரி, சண்டேச நல்லூர், கொற்றவன் குடி, மிதிணிக்குடி, எருக்காட்டுப்படுகை என்னும் எருக்காட்டுச் சேரி என்பன சிதம்பரத்தில் இருந்த சிற்றுரர்களாகும்.
இத்தலம் 40 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. வடக்கு தெற்காக நீண்ட நான்கு மாடவீதிகளையும் பல சந்நிதிகளையும்
கொண்டு காணப்படுகின்றது. முதலாம், இரண்டாம், மூன்றாம்,
நான்காம் பிரகார மதில்கள் முறையே குலோத்துங்கச் சோழன் திருமாளிகை, விக்கிரம சோழன் திருமாளிகை, ராஜாக்கள் தம்பிரான் திருமாளிகை, வீரப்ப நாயக்கர் திருமாளிகை என்று அழைக்கப்படுகின்றன. முதலாம், இரண்டாம் பிரகார மதில்கள் முதலாம் குலோத்துங்கன், விக்கிரம சோழன் காலத்திலும் மூன்றாவது பிரகார மதில் இரண்டாம் குலோத்துங்கன் மூன்றாம் குலோத்துங்கன் காலத்திலும் நான்காவது பிரகார மதில் 17 ஆம்
இந்துக் க்களஞ்சியூம்

Page 66
நூற்றாண்டில் நாயக்க மன்னரினாலும் கட்டப்பட்டது. நான்கு புறமும் உயர்ந்த கோபுரங்கள் உள்ளன. ஒவ்வொரு கோபுரமும் ஏறக்குறைய 135 அடி உயரமானவை யாகவுள்ளன. இவை ஒவ்வொன்றிலும் 13 கலசங்கள் உள்ளன. இவற்றின் அடித்தளம் 90 அடி நீளமும் 60 அடி அகலமும் உடையவை. கோபுர வாயில்கள் 40 அடி உயரமுடையனவாகவுள்ளன. இவற்றிலே காணப்படும் நிலைத் தூண்கள் 3 அடி சதுரமும் 36 அடி உயரமுடைய கல்லினாலானவை. வடக்குக் கோபுரம் விஜயநகரப் பேரரசன் கிருஷ்ணதேவராயரினால் 16 ஆம் நூற்ாண்டில் அவனது ஒறிஸா வெற்றியின் நினைவாகக் கட்டப்பட்டது. இதனைக் குறிக்கும் சாசனம் இக்கோபுர வாயிலுக்கு வலது பக்கத்திலுள்ளது. கோபுர வாயிலில் உள்ள மாடக்குழி ஒன்றில் கிருஷ்ணதேவராயரின் உருவச்சிலை காணப்படுகின்றது.
தெற்குக் கோபுரம் பல்லவ மன்னன் கோப்பெருஞ் சிங்கனினால் 13 ஆம் நூற்றாண்டிற் கட்டப்பட்டது. செங்கல்பட்டு மாவட்டம் ஆற்றுார் என்ற இடத்திலுள்ள சாசனம் இக்கோபுரத்தினைக் கட்டுவதற்காக அவன் வழங்கிய தானத்தினைக் குறிப்பிடுகின்றது. இக்கோபுரம் சொக்கசீயன் கோபுரம் எனச் சாசனங்களிற் குறிப்பிடப்படுகின்றது. கிழக்கு, மேற்குக் கோபுரங்கள் சோழர், பாண்டியர் காலத்தினைச் சேர்ந்தவை. நான்கு கோபுர வாயில்களிலும் சுவருடன் ஒட்டிக் காணப்படும் தூண்களிற் பரத நாட்டிய சாஸ்திரத்திலுள்ள 108 கரணங்களையும் சித்திரிக்கும் சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. கிழக்கு, மேற்கு கோபுர வாயில்களிலுள்ள கரண சிற்பங்கள் அவற்றின் பெயர்களுடன் காணப்படுவது சிறப்பம்சமாகும். கோபுரங்களில் அகஸ்தியர், நாரதர், அக்கினி தேவர், சூரியன் திருமூலர், சந்திரசேகரர், கல்யாணசுந்தரர், பாசுபதர், அர்த்தநாரீசுவரர், திரிபுராந்தகர், கஜசம்காரர், இடபாரூடர், பிக்ஷாடனர், சாதசிவன் போன்றோர்களது பல சிற்பங்கள் உள்ளன.
மூன்றாவது பிரகாரத்தின் தென்மேற்கு மூலையில் முக்குறுணி விநாயகர் சந்நிதி கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. வேறு எங்கும் காணமுடியாத அளவிற் பெரிய 8 அடி உயரமான விநாயகர் சிலை இங்குள்ளது. இவர் குலோத்துங்க சோழ விநாயகப் பிள்ளையார், முகக் கட்டணத்து விநாயகர் என சாசனங்களிற் குறிப்பிடப்படுகின்றார். மேற்குக் கோபுரத்தின் வெளிப்புறத்தில் இத்தல விநாயகரான கற்பக விநாயகர் சந்நிதி மேற்கு நோக்கியுள்ளது. இங்கு விநாயகர் நடனமிடும் கோலத்திற் காணப்படுகின்றார். இவர் க்ஷேத்திரபால விநாயகர் என்றும் அழைக்கப்படுவார். மேற்குக் கோபுரத்தின் உட்புறமாக வடக்குப் பக்கத்திற்கப்பிரமணியர் சந்நிதி கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. இதே பிரகாரத்தில் மதுரை மீனாட்சி சோமசுந்தரர் சந்நிதி, இதற்கருகில் நூற்றுக்கால் மண்டபம், திருமூல விநாயகர் சந்நிதி, இதற்கு எதிரில் இத்தலத்தின் தீர்த்தமான சிவகங்கை குளம் என்பனவுள்ளன. சிவகங்கைக் குளம் ஏறக்குறைய 175 அடி நீளமும் 100 அடி அகலமும் உடையதாக சுற்றிவர திருச்சுற்று மாளிகையினையும் நாற்புறமும் செம்மையான படிக்கட்டுகளையும் கிழக்கு மேற்கு வடக்குப் பக்கங்களில் இறங்குதுறை மண்டபங்களையும் கொண்டு காணப்படுகின்றது. ஏனைய
இந்துக்கலைக்களஞ்சியம்
 

கோயில்களுடன் ஒப்பிடும் போது இக்குளம் அளவிற் பெரியதாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது. இதற்குரிய படிக்கட்டுக்களை சோழத் தளபதியான நரலோகவீரன் அமைத்ததாக இவனது சாசனத்திற் கூறப்பட்டுள்ளது.
மூன்றாம் பிரகாரத்திற் சிவகங்கை குளத்திற்குப் பக்கத்தில் இத்தலத்திற்குரிய அம்பாளான சிவகாமசுந்தரியின் சந்நிதி கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. இங்கு கோயில் கொண்டுள்ள தேவி சிவகாமக் கோட்டமுடைய பெரிய நாச்சியார் எனச் சாசனங்களிற் குறிப்பிடப்படுகிறார். இச்சந்நிதி இரு பிரகாரங்களைக் கொண்டுள்ளது. திருச்சுற்றில் இரண்ட டுக்குள்ள அறைகளைக் கொண்ட மாளிகையுள்ளது. இதன் கீழ்த்தளத்தில் பரத நாட்டிய சிற்பங்களும் உள்ளன. கருவறையின் முன் மண்டபத்திலுள்ள தூண் ஒன்றில் தொங்கியவாறு செதுக்கப்பட்டுள்ள சங்கிலி கலை வல்லுனர்களாற் பாராட்டப் பெற்றது. சோழர் காலக் கட்டிட சிற்பக்கலைக்கு எடுத்துக் காட்டாகத் திகழும் இச்சந்நிதிக்கான கட்டுமானப் பணிகள் விக்கிரம சோழர், இரண்டாம் குலோத்துங்கன் காலங்களில் மேற்கொள்ளப்பட்டவை எனச் சாசன, இலக்கியச் சான்றுகள் தெரிவிக்கின்றன. சிவகாமசுந்தரி சந்நிதிக்கு அருகில் துர்க்கை அம்மன் சந்நிதியும் வடமேற்குப் பக்கத்திற் பாண்டிய நாயகர் என அழைக்கப்படும் முருகன் சந்நிதியும் உள்ளன. பாண்டிய நாயகர் கோயில் தேர் போன்ற அமைப்பினைக் கொண்டு தேரினை யானைகள் இழுப்பது போல் அமைக்கப்பட்டுள்ளது. இங்குள்ள தூண்கள் சிற்ப வேலைப்பாடுகளைக் கொண்டுள்ளன. கருவறையில் ஆறுமுகன் வள்ளி தெய்வானையுடன் மயில் மீது உட்கார்ந்திருக்கும் சிற்பம் உள்ளது. முருகன் சந்நிதி முன் மண்டபத்தின் அடித்தளத்திற் பூதகணங்கள், மத்தளம், உடுக்கை, புல்லாங்குழல் போன்ற இசைக் கருவிகளை ஏந்திய நடன மாதர்கள் உருவங்களும், பூ அலங்காரமும் புடைப்புச் சிற்பங்களாகக் காணப்படுகின்றது.
சிவகங்கை குளத்திற்கு அருகில் நவலிங்க கோயில் உள்ளது. இங்கு நடுவில் பதினாறு பட்டைகளைக் கொண்ட லிங்கமும் அதனைச் சுற்றி எட்டு லிங்கங்களுமாக ஒன்பது லிங்கங்கள் உள்ளன.
மூன்றாம் பிரகாரத்தின் கிழக்குப் பக்கத்தில் ராஜசபை எனப்படும் ஆயிரம்கால் மண்டபம் அமைந்துள்ளது. இது ஏறக்குறைய 350 அடி நீளமும் 260 அடி அகலமும் கொண்டது. ஒரு வரிசையில் 24 தூண்கள் வீதம் 41 வரிசைகளாகத் தூண்கள் அமைக்கப்பட்டுள்ளன. மண்டபத்தின் நடுவில் வெளவால் நெற்றி மண்டபம் அமைந்துள்ளது. தூண்களிற் சிற்பங்கள் காணப்படுகின்றன. மண்டபத்தின் அடித்தளத்திலே பூதகணங்களினதும் யானைகளினதும் சிற்பங்கள் உள்ளன. இம் மண்டபத் திருப்பணிகள் பிற்பட்ட சோழ மன்னர் காலத்தில் மேற்கொள்ளப்பட்டன. உமாபதி சிவாச்சாரியார் இந்த மண்டபத்தினை ஐயிரு நூறு கால் மணிமண்டபம் எனக் குறிப்பிடுகின்றார். இம் மண்டபத்திலிருந்தே சேக்கிழார் பெரிய

Page 67
புராணத்தினை இயற்றினார். ஆனி மார்கழி மாதங்களில் இடம் பெறும் மகோற்சவத்தின் பத்தாம் நாளில் நடராஜருக்கு இங்கு திருமஞ்சனம் இடம்பெறுவது சிறப்பானது.
இரண்டாம் பிரகாரத்திற்குச் செல்வதற்கு கிழக்கு மேற்கு பக்கங்களில் வாயில்கள் உள்ளன. கிழக்கு வாயிலில் மனித முகமும் மிருக உடலும் கொண்ட புருஷமிருக உருவங்கள் உள்ளன. இப்பிரகாரத்தின் தெற்குப் பக்கத்தில் ஊர்த்துவ தாண்டவ மூர்த்தியின் சந்நிதியான நிருத்தசபை அமைந்துள்ளது. சிறந்த சிற்பக் கட்டிடக்கலை வேலைப்பாடுகட்கு எடுத்துக்காட்டாகத் திகழும் இச்சபை கலை வல்லுனர்களாற் பாராட்டப் பெற்றதொன்று. குதிரைகள் பூட்டிய சக்கரங்களுடன் தேர் போன்ற அமைப்பினை இது கொண்டுள்ளது. 8 அடி உயரமான 56 தூண்கள் நுண்மையான செதுக்கு வேலைப்பாடுகளுடன் காணப்படுகின்றன. இம்மண்டபத்தின் அடித்தளத்தில் அஞ்சலி நிலையில் ரிஷிகள் ; பல்வேறு நாட்டிய கோலத்தில் மங்கையர், வாள், கேடயம் தாங்கிய போர் வீரர்கள், மனித முகம், மிருக உடலுடனான உருவங்கள் போன்ற புடைப்புச் சிற்பங்கள் காணப்படுகின்றன. நடன மாதர்களிற் சிலர் இசைக்கருவியினை ஏந்தியவாறு காட்டப்பட்டுள்ளனர். நிருத்த மண்டபத்தின் பிரகாரத்திலே சரபமூர்த்தியின் சந்நிதி உள்ளது.
இரண்டாம் பிரகாரத்தில் இத்தலத்தின் மூலட்டானேசுவரர் சந்நிதி கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. வியாக்கிரபாதர் வணங்கிய சுயம்புலிங்கம் இங்குள்ளது. திருமூலட்டானத்தினைச் சுற்றி இரு தூண்வரிசைகளைக் கொண்ட பிரகாரம் காணப்படுகின்றது. இச்சந்நிதியில் உமாபார்வதி, வியாக்கிரபாதர், பதஞ்சலி என்போராது உருவங்கள் உள்ளன. கருவறையின் தெற்குப் பக்க கோஷ்டத்தில் தட்சணாமூர்த்தியின் சிற்பம் உள்ளது. இத்தலத்தின் தல விருட்சமான தில்லைமரம் கல்லில் செதுக்கப்பட்டுள்ளமையினை இரண்டாம் பிரகாரத்திற் காணலாம். உற்சவ மூர்த்திகள் காணப்படும் பேரம்பலம் எனப்படும் தேவசபையும் இப் பிரகாரத்திலுள்ளது. பேரம்பலத்திற்குப்பிற்கால சோழமன்னர்கள் காலத்திற் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன. என்பதனை இலக்கிய, சாசனச் சான்றுகள் தெரிவிக்கின்றன. சிதம்பரத்தின் நிர்வாகத்திற்குப் பொறுப்பான பொது தீட்சிதர்கள் இச் சபையிலேயே கூடுவர். தேவசபைக்கு மேற்கே சட்டநாதர், சனீஸ்வரன், நவக்கிரக சந்நிதிகள் உள்ளன.
இத்தலத்தின் சிறப்பான மூர்த்தியாகிய நடராஜரின் சிற்சபை, கனகசபை என்பன முதலாம் பிரகாரத்தில் உள்ளன. அவ்விரு சபைகளும் ஒருங்கு சேர்ந்தவாறு அமைந்துள்ளன. சிற்றம்பலம் பொன்னம்பலம் என்னும் பெயர்களாலும் அவை அழைக்கப்படும் சிற்றம்பலமாகிய சிற்சபையின் கூரை 21,600 தங்க ஒடுகளால் வேயப்பட்டுள்ளது. ஒடுகள் 72,000 ஆணிகளினால் அறையப்பட்டுள்ளன. இதில் 64 கைமரங்கள் காணப்படுகின்றன. மனிதன் ஒரு நாளில் 21,600 தடவை விடும் மூச்சினையும் மனித உடலிலுள்ள 72,000 நரம்புகளையுமே பொன் ஒடுகளும்

41
ஆணிகளும் குறிக்கின்றன என்றும் 64 கைமரங்களும் 64 கலைகளைக் குறிக்கின்றன என்றும் கூறப்படுகின்றது. இதன் மேலுள்ள 9 கலசங்கள் 9 சக்திகளை குறிக்கின்றன. ஒவ்வொரு பொன் ஒட்டிலும் 'சிவாயநம என்னும் பஞ்சாட்சரம் எழுதப்பட்டிருப்பதாகத் தில்லையுலா என்ற நூலிற் கூறப்பட்டுள்ளது. சிற்சபையில் நடராஜரும் அவரது இடது பக்கத்தில் சிவகாமசுந்தரியும் உள்ளனர். நடராஜர் தெற்கு நோக்கிக் காணப்படுகின்றார். சிற்சபையில் ஐந்துபடிக் கட்டுக்கள் வெள்ளித் தகட்டினால் போர்த்தப்பட்டுள்ளன. படிகளின் இரு கரையிலும் யானை உருவங்கள் காணப்படுகின்றன. இப்படி பஞ்சாட்சர படி எனவும் திருக்களிற்றுப்படி எனவும் அழைக்கப்படும். நடராஜருக்கு வலது பக்கத்தில் சிதம்பர இரகசியம் அதாவது ஆகாய லிங்கம் உள்ளது. அதற்கு வருடம் ஒருமுறை புனுகுச்சட்டம் சார்த்தப்படும் தங்க வில்வ மாலைகள் இங்கு தொங்கவிடப்பட்டுள்ளன. நடராஜருக்கு எதிரே கனகசபையில் இரத்தின சபாபதியும், ஸ்படிகலிங்கமும் இடது பக்கத்திலே சுவர்ணகால பைரவரும் நித்திய உற்சவரும் உள்ளனர். கனகசபையிலே தினமும் ஆறுகால பூஜையும் அபிடேகமும் இடம்பெறும்.
உற்சவங்கள்
வருடத்தில் நான்கு தடவை நடராஜருக்கும் சிவகாமி அம்மைக்கும் சித்திரை, ஆவணி, புரட்டாதி, மாசி என்னும் மாதங்களில் திருமஞ்சனம் இங்கு இடம்பெறும். இங்குள்ள ஸ்படிகலிங்கம்தான் சிற்றம்பலமுடையார் எனக் கூறப்படுகின்றது. இங்கு அருவமாக சிதம்பர இரகசியமும், உருவமாக நடராஜரும், அருவுருவாகச் ஸ்படிகலிங்கமும் காணப்படுவது சிறப்பம்சம். நடராஜர் சந்நிதியின் உட்பிரகார அடித்தளத்தில் பல்வேறு நிலைகளில் நடனமாதரின் புடைப்புச் சிற்பம் காணப்படுகின்றது.
முதற் பிரகாரத்தின் தென்மேற்குப் பக்கத்திலே
கோவிந்தராஜர் சந்நிதி கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. நீண்ட கர்ப்பக்கிருகத்தினையும் முன்மண்டபத்தினையும் சுற்றுப் பிரகாரத்தினையும் இது கொண்டுள்ளது. கர்ப்பக்கிருகத்தில் சயன நிலையிலான விஷ்ணுவின் உருவம் உள்ளது. சுற்றுப் பிரகாரத்தில் நரசிம்மர், வேணுகோபாலர், பதஞ்சலி, கருடன், கஜேந்திரவரதர், ஹனுமார், விஸ்வக்கேசனர் சந்நிதிகள் காணப்படுகின்றன. தில்லைக்கோவிந்தராஜரைத் திருமங்கை யாழ்வாரும், குலசேகராழ்வாரும் மங்களாசனம் செய்துள்ளனர். பல்லவ மன்னர் காலத்திலேயே இச் சந்நிதி காணப்பட்ட தென்பதனைத் திருமங்கை யாழ்வாரின் பெரிய திருமொழியில் வரும்,
.பைம் பொன்னும் முத்தும் மணியும் கொணர்ந்து
படை மன்னன் பல்லவர்கோன் பணிந்த
தில்லைத் திருச்சித்திரகூடம் என்ற பாடல் வரிகள் மூலம் அறிய முடிகின்றது. ஆரம்ப காலத்திலே தில்லைவாழ் அந்தணர்கள் கோவிந்தராஜருக்குப் பூஜைகளைச் செய்து வந்தனர்.
இந்துக்கலைக்களஞ்சியம்

Page 68
இதனை
. மூவாயிரம் நான்மறையாளர் நாளும் முறையால் வனங்க அனங்காய சோதி தேவாதி தேவன் திகழ்கின்றதில்லைத் திருச்சித்திர கூடம் சென்று சேர்மின்களே
என திருமங்கையாழ்வாரும்
தில்லை நகர்த் திருச்சித்திர கூடந்தன்னுள் அந்தணர்க ளொரு மூவாயிரவரேத்த.
என குலசேகராழ்வாரும் குறித்துப் பாடியுள்ளனர். ஆரம்பத்திற் காணப்பட்ட கோவிந்தராயர் சிலை இரண்டாம் குலோத்துங்க சோழன் காலத்தில் இத்தலத்திலிருந்து அகற்றப்பட்டது. இதனை குலோத்துங்க சோழனுலாவில் தில்லைத் திருமன்றின் முன்னில் சிறு தெய்வத் தொல்லைக் குறும்பு தொலைத்து எடுத்து என ஒட்டக்கூத்தர் குறிப்பிட்டுள்ளனர். இன்றுள்ள கோவிந்தராயர் சிலையும்,கோயிலும் விஜயநகர மன்னன் அச்சுத தேவராயனால் அமைக்கப்பட்டனவாகும். முதலாம் பிரகாரத்தின் தென்புறச் சுவரிலுள்ள அச்சுதராயரின் கி.பி.1539 இல் பொறிக்கப்பட்ட சாசனம் தில்லை கோவிந்தராஜப் பெருமானின் சிலையை வைணவ கிரியைகளுக்கு ஏற்ப பிரதிஷ்டை செய்தமை பற்றியும் அதற்கு வேண்டிய நித்திய பூஜைக்கு 500 பொன் வருமானமுள்ள நான்கு கிராமங்களை வழங்கியமை பற்றியும் குறிப்பிடுகின்றது. கி.பி.1539 ஆண்டு முதல் இன்று வரை கோவிந்தராஜருக்குரிய பூஜைகள் வைணவ ஆச்சாரியார்களால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இன்றுள்ள கோவிந்தராஜர் சந்நிதியில் விஜயநகரப் பாணிக்குரிய அம்சங்களைக் காண முடிகின்றது.
பல்வேறு சந்நிதிகள், விமானங்கள், பிரகாரங்கள், மண்டபங்கள், கோபுரங்கள் என்பனவற்றினைக் கொண்டு பரந்த நிலப்பரப்பில் விஸ்தீரணமான ஒரு நகர் போன்று காணப்படும் இத்தலம் சிதம்பர முழம் என்னும் அளவுகோலின் அளவினைக் கொண்டு கட்டப்பட்டது. சிதம்பர முழம் என்பது 25 விரல் நீளமுடைய பிரஜாபத்ய முழமாகும். இது 34, 3/8 அங்குலத்திற்கு சமமானதாகும். சிதம்பரத்தினைச் சுற்றியுள்ள ஊர்களிலும் இதே அளவு கோலிற்கு ஏற்பவே கோயில்கள் இன்று வரை கட்டப்படுகின்றன.
கோயிற் சாசனங்கள்
இக்கோயிலில் ஏறக்குறைய 300 சாசனங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. இவை சோழர், பல்லவ மன்னன் கோப்பெருஞ்சிங்கன், பாண்டியர், விஜயநகர அரசர் காலத்திற்குரியவை. இங்குள்ள சாசனங்களுள் ஏறக்குறைய 75 சாசனங்கள் சோழர் காலத்தினைச் சேர்ந்தவை. சிவபக்தர்களான சோழ வம்சத்தினைச் சேர்ந்த மன்னர்களும், அரச குடும்பத்தினரும், அதிகாரிகளும் இத்தலத்திற்கு பெரும்பணி யாற்றியுள்ளனர். இவர்களால் மேற்கொள்ளப்பட்ட கட்டுமானப் பணிகளையும் கோயிலுக்கு வழங்கப்பட்ட தானங்களையும் சாசனங்கள் குறிப்பிடுகின்றன. முற்காலச் சோழ மன்னர்களுள் முதலாம் பராந்தகன் (கி.பி. 907 - 951) சிதம்பரம் தலத்திற்குப் பொன் வேய்ந்தான். இதனை லெய்டன், திருவாலங்காடு

செப்பேடுகளும், அவனது மகன் (கண்டராதித்தர்) பாடிய திருவிசைப்பாவும் ஒட்டக் கூத்தர் பாடிய விக்கிரம சோழனுலாவும் குறிப்பிடுகின்றன. முதலாம்ராஜராஜன் சிதம்பரத்திற் பேணப்பட்டு வந்த தேவாரச் சுவடிகளை நம்பியாண்டார் நம்பியின் துணையுடன் வெளிக்கொணர்ந்து அவற்றினைக் கோயில்களில் ஒதுவதற்கான ஏற்பாடுகளையும் செய்தான். இத்தலத்திலுள்ள காலத்தால் முந்திய சாசனம் முதலாம் ராஜேந்திர சோழன் காலத்திற்குரியது. முதற் பிரகாரத்தின் வெளிப்புறத்தில் வடக்குப் பக்கத்திலுள்ள அவனது 24 ஆம் ஆட்சியாண்டிற்குரிய (கி.பி.1036) அச்சாசனம் நிலதானத்தினைக் குறிப்பிடுகின்றது.
முதலாம் குலோத்துங்கன் (கி.பி. 1070-1118) முதல் பிற்கால சோழ மன்னர்களால் சிதம்பரத்திற்குக் குறிப்பிடத்தக்க திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அவர்களது குல தெய்வமாகக் கருதப்பட்ட சிதம்பரம் நடராஜரின் கோயில் அக்காலத்தில் விரிவுபடுத்தப்பட்டது. முதலாம் குலோத்துங்கன், விக்கிரமசோழன் (கி.பி 1118 - 1135), அவர்களது படைத் தளபதியான நரலோகவீரன் என்போரது திருப்பணிகளினால் இத்தலம் ஆறு மடங்கு பெரிதாக்கப்பட்டது. இன்றுள்ள கோயிலின் அமைப்பு இக்காலத்தில் வடிவம் பெற்றதாகும். முதலாம் குலோத்துங்கன் காலத்திலே பேரம்பலம் திருத்திய மைக்கப்பட்டது. குலோத்துங்க சோழனின் காலத்திலே திருமாளிகை என அழைக்கப்படும் முதலாம் பிரகார மதிலுக்கான கட்டுமானப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டு அவனது மகனான விக்கிரமசோழன் காலத்தில் நிறைவடைந்தன.
முதலாம் குலோத்துங்கன், விக்கிரம சோழன் காலத்தில் சோழப் படைத் தளபதியாக இருந்த நரலோகவீரன் சிதம்பரத்திற்கு குறிப்பிடத்தக்க பணிகளை யாற்றியுள்ளான். 31 சமஸ்கிருதப் பாக்களையும் 36 தமிழ் பாக்களையும் கொண்ட அவனது நீண்ட சாசனம் அவனது பணிகளை விரிவாகக் குறிப்பிடுகின்றது. பொன்னம்பலம், போம்பலம் என்பன வற்றினைச் செம்பினால் வேய்ந்தமை, விதித் தீபம் அமைத்தமை, திருவிழா நாட்களில் நகரத்து நீருக்கான ஏற்பாடு செய்தமை, நந்தவனங்கள் அமைத்தமை, பாக்கு மரங்களை நாட்டியமை, இறைவனை நீராடு துறைக்கு ஊர்வலமாக எடுத்துச் செல்வதற்குக் (தீர்த்த யாத்திரை) கடற்கரையில் இறைவனை வைக்க மண்டபம் அமைத்தமை. நரலோகவீரன் திருமாளிகை என்னும் சுற்றுமதிலை இரு கோபுரங்களுடன் அமைத்தமை, நூற்றுக்கால் மண்டபம் அமைத்தமை, சிவகாமசுந்தரி சந்நிதி கோபுரம் சுற்று மதிலுடன் அமைத்தமை, சிவகங்கை குளத்திற்குப் படிக்கட்டுக்கள் அமைத்தமை, சம்பந்தர் சிலையைச் சந்நிதியொன்றில் நிறுவித் தேவாரம் ஒதுவதற்கான மண்டபம் அமைத்தமை, பூஜை, வழிபாட்டிற்கு வேண்டிய பல்வேறு தானங்களைச் செய்தமை என அவனது திருப்பணிகள் வரிசைப்படுத்திக் கூறப்பட்டுள்ளன. அவற்றுட் குலோத்துங்கன், விக்கிரம சோழன் காலத்தில் அவர்களுடன் சேர்ந்து நரலோகவீரன் செய்த பணிகளும் கூறப்பட்டுள்ளன. முதற் பிரகாரம் வடக்குச் சுவரிலுள்ள முதலாம் குலோத்துங்கனின் 47ஆம் (கி.பி 17) ஆட்சியாண்டிற்குரிய சாசனம் கோயிலுக்கு செந்தாமரை மலர் மாலைகட்காக

Page 69
வழங்கப்பட்ட நிலத்தானத் தினைக் குறிப்பிடுகின்றது. அவனது சகோதரிகளான குந்தவை, மதுராந்தகி என்போர் இத்தலத்திற்கு வழங்கிய தானங்களை முதற் பிரகாரத்தின் வெளிப்புறத்தில் வடக்கு பக்கத்திலுள்ள சாசனங்கள் தெரிவிக்கின்றன.
முதலாம் குலோத்துங்கனின் மகனான விக்கிரம சோழன் தந்தையின் ஆட்சிக் காலத்தில் அவனுடன் சேர்ந்து ஈடுபட்ட சிதம்பரம் கோயில் திருப்பணிகளை தனது ஆட்சிக் காலத்திலுந் தொடர்ந்தான். அவனது 10ஆவது ஆட்சியாண்டில் அவனது பிறந்தநாளில் இடம்பெற்ற பெருவிழாவிற் கலந்து கொண்ட சிற்றரசர்களினால் வழங்கப்பட்ட பொற்குவியல்களை தன் குல நாயகன் ஆகிய சிதம்பர நடராஜரின் கோயிற் கட்டத் திருப்பணிக்குப் பயன்படுத்தினான் எனச் சாசன சான்றின் மூலம் அறிய முடிகின்றது. பொன்னம்பலத்தினைச் சுற்றியுள்ள திருமாளிகை, கோபுர வாசல், கூட சாலைகள் (மண்டபங்கள்) தங்கத்தினால் மூடப்பட்ட பலிபீடம் எனும் திருப்பணிகளை அவன் செய்து முடித்ததாகச் சாசனத்திற் குறிப்பிடப்படுகின்றது. ஏற்கனவே குலோத்துங்கனாலும் நரலோகவீரனாலும் ஆரம்பித்து வைக்கப்பட்ட கட்டுமானப் பணிகளை அவன் தொடர்ந்து மேற்கொண்டு பூரணப்படுத்தியவை இவை எனலாம். முதலாம் பிரகாரமதில், விக்கிர சோழன் திருமாளிகை என்றழைக்கப்படும் இரண்டாம் பிரகார மதில், மேற்குக் கோபுரம், நூற்றுக்கால் மண்டபம், இரண்டாம் பிரகார மதிலிலுள்ள அகளங்கன் திருவாயில் என்ற மேற்கு வாயில், அம்மன் சந்நிதி போன்ற கட்டுமானப் பணிகள் அவன் காலத்தில் பூரணமாயின. கிழக்கு, வடக்குக் கோபுரங்கட்கான அடித்தளமும் அவனது காலத்தில் இடப்பட்டது. நூற்றுக்கால் மண்டபத்திலுள்ள 12 தூண்களில் விக்கிரம சோழன் திருமண்டபம்’ எனும் பெயர் காணப்படுகின்றது. நடராஜரை தீர்த்தத்திற்காகக் கடற்கரைக்கு ஊர்வலமாக எடுத்துச் செல்லும் வீதியில் பலநிலை மணிமாளிகைகளையும் அமைத்தான். அவனது 10 ஆவது ஆட்சியாண்டில் பெரும் பெயர் விழா என்ற விழாவின் போது நடராஜரை ஊர்வலமாக எடுத்துச் செல்லத் தேர், மற்றும் முத்துமாலை, தங்கத்தினாலான பாத்திரம் என்பனவற்றினை வழங்கினான். இத்தலத்திலுள்ள அவனது சாசனங்கள் நந்தவனம் அமைக்கக் கொடுத்த நிலத் தானங்களை குறிப்பிடுகின்றன. திருவெண்காடு என்னுமிடத்திலுள்ள அவனது 4 ஆம் ஆட்சியாண்டிற்குரிய கல்வெட்டு நந்தவனத்திற்காக நாங்கூர் காட்டிலுள்ள இருக்கையூர் சபையினர் நிலம் வழங்கியதனைத் தெரிவிக்கின்றது. சிதம்பரத்திலுள்ள ஒரு வீதி விக்கிரமசோழன் தெற்குத் திருவீதி எனப் பெயர் பெற்றிருந்ததும் குறிப்பிடத்தக்கது.
அனபாய சோழன் என்றழைக்கப்படும் இரண்டாம் குலோத்துங்கனின் காலத்திற் சிதம்பரம் சிறப்புப் பெற்றிருந்தது. அவன் தில்லையில் முடிசூட்டு விழாவினை நடாத்தினான். தில்லைநகர் சிறப்புடையதாகத் திருமுடிசூடிய பூரீ குலோத்துங்க சோழ தேவர் எனத் திருமாணிக்குழியிலுள்ள கல்வெட்டு ஒன்றில் குறிப்பிடப்படுகின்றான். திருவாரூர் தியாகராஜசுவாமி கோயிலிலுள்ள சமஸ்கிருத சாசனத்தில் இவன் தன்னை வியாக்கிரகத்திலுள்ள (சிதம்பரம்) கனகசபையிலுள்ள நடேசரின்

43
பாத கமலங்களில் ஒரு தேனியாக கூறுகின்றான். இவனது அவைப் புலவரான ஒட்டக் கூத்தராற் பாடப் பெற்ற குலோத்துங்க சோழனுலா எனும் நூல் சிதம்பரத்தில் இவன் மேற்கொண்ட பணிகளை விரிவாகக் கூறுகின்றது. பேரம்பலத் தினைப் பொன் வேய்ந்தமை, ஏழு நிலை கோபுரம், திருச்சுற்று மண்டபம் திருக்காமக் கோட்டமுடைய பெரிய நாச்சியார் சந்நிதி, நான்கு வீதி என்பவற்றினை அமைத்தமை எனும் பணிகள் இவனால் மேற்கொள்ளப்பட்டவை என இந்நூல் குறிப்பிடுகின்றது. சிதம்பரத்திலிருந்த கோவிந்தராஜர் சிலையை இத்தலத்திலிருந்து இவன் அகற்றினான். இதே புலவரினாற் பாடப்பெற்ற ராஜராஜசோழனுலா, தக்கயாக்கப்பரணி என்பன வற்றிலும் இவனது பணிகள் சுருக்கமாகக் கூறப்பட்டுள்ளன. ராஜாக்கள் தம்பிரான் திருமாளிகை என அழைக்கப்படும் மூன்றாம் பிரகார மதிலுக்கான கட்டுமான வேலைகள் இவன் காலத்தில் ஆரம்பிக்கப்பட்டு மூன்றாம் குலோத்துங்கன் காலத்தில் பூர்த்தியாகியது. வடக்கு, கிழக்குக் கோபுரங்களின் கல்லினாலான வாயிற் பகுதி, சிவகாமியம்மன் சந்நிதி மண்டபம் என்பனவும் இவன் காலத்திற் கட்டி முடிக்கப்பட்டன. ஆயிரம்கால் மண்டபம் சோழருக்கு பிற்பட்ட காலத்திற்கு குறிப்பாக விஜயநகர அரசர் காலத்திற்குரியதாகக் கூறப்படுகின்ற போதிலும் இரண்டாம் குலோத்துங்கனின் காலத்தில் இம்மண்டபம் கட்டி முடிக்கப் பட்டிருந்தது. அவனது வேண்டுகோளுக்கிணங்க அம் மண்டபத்தில் வைத்து பெரிய புராணம் சேக்கிழாரினால் இயற்றப்பட்டுச் சிதம்பரத்திலே அரங்கேற்றப் பட்டது. இரண்டாம் குலோத்துங்கனுக்குரிய சாசனங்கள் எவையும் இத்தலத்தில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சிதம்பரம் நடராஜரின் 'ஏகபக்தனான மூன்றாம் குலோத்துங்கன் (கி.பி 1178 - 1218) சபாபதியின் முன் மண்டபம், சிவகாமியம்மன் கோயில், கோபுரம் என்பனவற்றினைக் கட்டி சிதம்பரத்திற்கு பொன் வேய்ந்தான். மூன்றாம் பிரகார மதில் இவனால் கட்டி முடிக்கப்பட்டு ராஜாக்கள் தம்பிரானார் திருமாளிகை’ என இவனது பெயரினால் அழைக்கப்பட்டது. அவனுக்குரிய பல சாசனங்கள் இத்தலத்திலுள்ளன. நந்தவனம், LOL Lñ என்பனவற்றிற்கும் மற்றும் தேவைகட்குமாக வழங்கப்பட்ட தானங்களை அவை தெரிவிக்கின்றன. விளக்கு, விளக்கு நிலை என்பனவற்றினைப் பராமரிக்க 1100 காசின் வட்டி வழங்கப்பட்டமை பற்றி 17 ஆம் ஆட்சியாண்டுக்குரிய சாசனம் குறிப்பிடுகின்றது. இத்தானம் ஒவ்வொரு 5 வருடத்தின் இறுதியிலும் புதுப்பிக்கப்பட வேண்டுமெனவும், ஸ்தானத்தாரின் சபையின் முன் ஒவ்வொரு கால கட்ட முடிவிலும் இது காண்பிக்கப்பட வேண்டுமெனவும் அச்சாசனத்திற் கூறப்பட்டுள்ளது. இரண்டாம் பிரகாரம் வடக்குச் சுவரிலுள்ள இவனது 34 ஆம் ஆட்சியாண்டுச் சாசனம் நந்தவனத்திற்கு நிலதானம் செய்தமை பற்றியும், நந்தவனத்தின் நான்கு வேலையாட்கள் இருவாட்சி, மல்லிகை, நந்தியாவட்டை மலர்களைக் கோயிலுக்கு ஒழுங்காக வழங்க வேண்டும், அவை கிடைக்காத போது வேறு மலர்கள் வழங்கப்பட வேண்டும் என்ற உத்தரவினையும் தெரிவிக்கின்றது.
இந்துக் க்களஞ்சியம்

Page 70
மூன்றாம் இராஜராஜன் காலத்தில் அரசியல் நெருக்கடிகள் காணப்பட்டாலும் அவன் தானங்களை வழங்கி இத்தலத்தினை ஆதரித்து வந்தான். அவனது பல சாசனங்கள் இங்குள்ளன. அவற்றுள் பெரும் பாலானவை நந்தவனத்திற்காக வழங்கப்பட்ட தானங்களைக் குறிப்பிடுகின்றன. இரண்டாம் பிரகாரத்தின் வடக்குப் பக்கத்திலுள்ள 3 ஆம் ஆட்சியாண்டுச் சாசனம் செந்தாமரை வளர்ப்பதற்கும் அவற்றினை வளர்க்கும் வேலையாட்களுக்கு வேண்டிய உணவு, உடை என்பவற்றிற் குமாக நிலதானம் செய்தமையைக் குறிப்பிடுகின்றது. முதற் பிரகாரத்திலுள்ள 4 ஆம் ஆட்சியாண்டிற்குரிய சாசனம் ஆளுடையார் இறைவனுக்கு தை மாதத்துப் பூச நாளில் திருப்பாவாடைக்காக வழங்கப்பட்ட நில தானத்தினைக் கூறுகின்றது. இதே பிரகாரம் கிழக்கு சுவரிலுள்ள 10 ஆம் ஆண்டுச் சாசனம் மாதுளம்பழம் மற்றும் நைவேத்தியம் வழங்குவதற்காகக் கொடுக்கப்பட்ட நிலதானத் தினையும், வடக்கு சுவரிலுள்ள 14 ஆம் ஆண்டுச் சாசனம் காலிங்கராயன் என்ற அரசன் ஆளுடைய நாயனார் கோயிலுக்கு 5000 பலாப்பழம், 5,000 மாம்பழம், 5,000 வாழைப்பழம் வழங்குவதற்காகக் கொடுத்த நிலதானத்தினையும், கிழக்குச் சுவரில் வாயிலுக்கு வலது பக்கத்திலுள்ள 17 ஆம் ஆட்சி யாண்டுக்குரிய சாசனம் பெரும் பற்றப் புலியூர், முடித்தலை கொண்ட பெருமான் திருவீதியிலுள்ள அறச்சாலையின் பராமரிப்பிற்காக வழங்கப்பட்ட நில தானத்தினையும் குறிப்பிடுகின்றது.
3 ஆம்ராஜராஜனின் காலத்திற் சோழப்பிரதேசத்தின் பெரும் பகுதியின் ஆட்சியாளனாகத் தன்னைப் பிரகடனப்படுத்தி கி.பி 1243 -1280 வரை விழுப்புரம் பகுதியை ஆட்சி செய்த பல்லவ மன்னன் கோப்பெருஞ்சிங்கன் தில்லை நடராஜரின் பெரும் பக்தனாகத் திகழ்ந்தான். அவனது பல சாசனங்கள் இங்குள்ளன. சாசனங்களில் அவனியாளப்பிறந்தான் சகலபுவனச் சக்கரவர்த்தி கோப்பெருஞ்சிங்கதேவன் எனக் குறிப்பிடப் பட்டுள்ளது. இவன் சிதம்பரத்தின் தெற்குக் கோபுரத்தினைக் கட்டினான். செங்கல்பட்டு மாவட்டம் ஆற்றுாரிலுள்ள அவனது சாசனம் பெரும்பற்றப்புலியூர் திருச்சிற்றம் பலமுடையார் கோயில் 'சொக்கச்சியன் திருநிலை' என்ற தெற்கு வாயில் ஏழு நிலை கோபுரம் கட்டுவதற்கு ஆற்றுார் கிராமத்தினைத் தானமாகக் கொடுத்தது பற்றிக் குறிப்பிடு கின்றது. அவனது சாசனங்கள் வழிபாடு, நந்தவனம் அமைத்தல் அதன் பராமரிப்பு போன்றவற்றிற்கு வழங்கப்பட்ட நிலதானங்களையே தெரிவிக்கின்றன. அவனது 8 ஆம் ஆட்சியாண்டுச் சாசனம் திருக்காமக் கோட்டமுடைய பெரிய நாச்சியாருக்கும், இறைவனுக்கும் பரிச்சட்டத்திற்குப் புடவை வழங்க வேண்டும் என்ற நிபந்தனையின் பேரிலே சாலிய நகரத்தார் தமது வீடுகளை அமைக்கத் திருவம்பலப் பெருமாள்புரம் என்னும் பெயரால் கடவாச்சேரியான தில்லைநாயக நல்லூரில் நிலம் வழங்கியமை பற்றிக் கூறுகின்றது. 10ஆம், 11ஆம் ஆட்சியாண்டுக்குரிய சாசனங்கள் திருநந்தவனத் திற்கும், திருத்தாமம் பறித்து மாலை தொடுப்போருக்கும் வழங்கப்பட்ட நிலதானத்தினைக் கூறுகின்றன.7ஆம் ஆட்சியாண்டுச் சாசனம் தட்சணாமூர்த்தி சந்நிதியிற் சக்தி பூஜைக்காக நிலம்
இந்துக் க்களஞ்சியம்
44

வழங்கியமையினைக் கூறுகின்றது. அவனது சாசனங்களுட் பெரும்பாலானவை நந்தவனத்திற்காக வழங்கப்பட்ட தானங்களை குறிப்பிடுவனவாகவுள்ளன. தில்லை நடராஜர்க் கோயிலுக்கு வடக்கேயுள்ள தில்லையம்மன் (தில்லைக் காளி) கோயிலுக்கு அவன் செய்த திருப்பணிகளைச் சாசனங்கள் தெரிவிக்கின்றன. பிடாரி சிற்றம்பல மாகாளி, தில்லை வனமுடைய பரமேசுவரி என தில்லைக்காளி இச் சாசனங்களில் குறிப்பிடப்படுகின்றார். நடராஜர் கோயிலிலுள்ள பைரவர் சந்நிதியின் வடக்கு சுவரிலுள்ள அவனது 8 ஆம் ஆட்சி யாண்டுக்குரிய சாசனம் பிடாரியார் கோயிற் கட்டிட திருப் பணிக்கென நிலம் விற்றுக் கொடுத்தமையைக் குறிப்பிடுகின்றது. இவன் தனது 14 ஆம் ஆட்சியாண்டிலே தில்லைவனமுடைய பரமேசுவரிக்குச் சாத்துவதற்கு மஞ்சள் காப்பு, நெல்லி காப்பு அமுது செய்தருளும் அடைக்காயமுது பாக்கு, வெற்றிலை என்பனவற்றிற்கு ஏற்பாடு செய்தான். அவனது ஆட்சியின் 3 ஆம் ஆண்டில் இக்கோயிலுக்குப் பெண்களும் தானமளித்துள்ள மையை அறிய முடிகின்றது.
பிற்காலப் பாண்டிய வம்சத்தினைச் சேர்ந்த மன்னர்களும் சிதம்பரம் தலத்தினை ஆதரித்து வந்தனர். பாண்டிய நாயகம் கோயில் என அழைக்கப்படும் முருகன் சந்நிதியின் கட்டப் பணிகள் பாண்டியர் காலத்தில் மேற்கொள்ளப்பட்டனவாக இருக்க வேண்டும். இத்தலத்திலுள்ள பல சாசனங்கள் பாண்டிய மன்னர்கள் பூஜை, விழா, வழிபாடு மற்றும் தேவைகட்காக வழங்கிய தானங்களைக் குறிப்பிடுகின்றன. அவற்றுள் சடாவர்மன் முதலாம் சுந்தரபாண்டியனால் (கி.பி 1251- 1264) மேற்கொள்ளப்பட்ட துலாபார தானம் குறிப்பிடத்தக்கது. தனது எடைக்குச் சமமான அப் பொன்னைக் கொண்டே கோயிலைப் பொன் வேய்ந்தான். அவனது துலாபாரதானம் கிழக்கு, மேற்குக் கோபுர வாயில்களிலுள்ள இரு சாசனங்களிற் குறிப்பிடப் பட்டுள்ளது. இரண்டாம் பிரகாரம், வடக்குச் சுவரிலுள்ள 8 ஆம் ஆட்சியாண்டிற்குரிய (கி.பி1259) சாசனம் திருச்சிற்றம்பல மாகாளி கோயிலில் விழா, பூஜை நடத்துவதற்காக நிலங்கள் வழங்கப்பட்டமை பற்றிக் கூறுகின்றது. முதற் பிரகாரம் தெற்குச் சுவரிலுள்ள 13ஆம் ஆண்டுச் சாசனம் விக்கிரம பாண்டிய சதுர்வேதிமங்கலம் என்ற அக்கிரகாரத்தினை பெரும்பற்றப் புலியூரின் மேற்குப் பக்கத்தில் அமைத்து அதனை 108 பிராமணர்கட்கு வழங்கியமை பற்றியும் 14ஆம் ஆண்டுச் சாசனம் இறைவனுக்கும் அம்பாளுக்கும் மலர்மாலை வழங்குவதற்காகக் கொடுக்கப்பட்ட நிலதானத்தினையும் கடலாட்டு விழாவிற்குப் பெருமான் எழுந்தருளும் விழாவிற்காக வழங்கப்பட்ட நிலதானத்தினையும் குறிப்பிடுகின்றது. நந்தவனங்கட்காக வழங்கப்பட்ட தானங்களை பல சாசனங்கள் கூறுகின்றன. இத்தலத்தில் ஏறக்குறைய அவனது 30 சாசனங்கள் உள்ளன. மாறவர்மன் வீரபாண்டியனின் (கி.பி 1253 - 1281) 8 ஆம் ஆட்சியாண்டில் நெசவாளர் ஒவ்வொரு வருடமும் சிவகாமசுந்தரிக்கு திருப்பதியிடு விழாவிற்கு 4 புடவைகளும், திருஞானசம்பந்தர் சந்நிதிக்கு 5 சிறிய புடவைகளும் வழங்க வேண்டும் என்ற நிபந்தனையின் பேரில் நெசவாளர் குடியிருப்பு

Page 71
அமைப்பதற்கு நிலம் ஒதுக்கப்பட்டது. அவனது 9 ஆம் ஆட்சியாண்டிலே சிற்றம்பல முடையாருக்கு செந்தாமரைப் பூ சாத்துவதற்கு ஒடை ஒன்றும், நந்தவனமும், தண்ணிர்ப் பந்தலும் அமைத்து அதில் வேலை பார்ப்பதற்கு 18 பேரை நியமித்து, அவர்கட்கு உணவிற்காகவும் தர்ம பாதுகாப்பிற்காகவும் நிலம் வழங்கப்பட்டது. இத்தலத்தில் மாறவர்மன் விக்கிரம பாண்டியனின் பல சாசனங்களும் உள்ளன. அவனது 5 ஆம் ஆட்சியாண்டில் ராஜாக்கள் நாயகன் சந்தி’ என்ற பூஜைக்கு மலர்மாலை வழங்குவதற்கு நில தானம் செய்யப்பட்டது. மாறவர்மன் குலசேகர பாண்டியனின் (கி.பி.1268-1305) ஆட்சியிற் பெரும்பற்றப் புலியூரில், ஒரு வீதியிலுள்ள கடவுளுக்குப் பூஜை நைவேத்தியத்திற்காக நிலதானம் செய்யப்பட்டது. அவனது 29 ஆம் ஆட்சியாண்டில் ராஜாக்கள் தம்பிரான் திருமாளிகையின் ஏழு நிலை கோபுரத்துத் தென் புறத்திலுள்ள குலோத்துங்க சோழ விநாயகப் பிள்ளையாருக்கு எல்லாந்தலையான பெருமான் சந்நிதி என்ற பூஜை காலமுறை ஏற்படுத்தியது பற்றி மேற்குக் கோபுர வாயிலிலுள்ள அவனது சாசனம் கூறுகின்றது.
விஜயநகரப் பேரரசர்கள் சிதம்பரத்திற்குக் கட்டடத் திருப்பணிகளை மேற்கொண்டதுடன் தாராளமாகத் தானங் களையும் வழங்கி ஆதரித்தனர். சாளுவ திம்மராயர், கிருஷ்ண தேவராயர். அச்சுதராயர் 2ஆம்பூரீரங்கராயர், 1ஆம் வேங்கடராயர், 6ஆம் பூரீரங்கராயர் என்போராற் பொறிக்கப் பட்டுள்ள சாசனங்களின் மூலம் அறிய முடிகிறது. சாளுவ திம்மராயர் சக வருடம் 1425 இல் (கி.பி. 1503) இரட்டை மாலைக்கும், நித்திய பூஜைக்கும் பெரும் பற்றப்புலியூரிற்கு மேற்கேயுள்ள காரிக்குடி என்ற கிராமத்தினை வழங்கினார். சிதம்பரத்தின் வடக்குக் கோபுரம் கிருஷ்ணதேவராயரினால் அமைக்கப்பட்டது. இக் கோபுரத்தின் வலது இடது பக்கங்களிலுள்ள இவனது சாசனங்கள் சிம்மாத்திரி பொட்னூர் என்னுமிடத்தில் வெற்றித் தூண் நாட்டித் திரும்பிய பின் பொன்னம்பலவாணர் கோயிலுக்கு வந்து கடவுளை வணங்கி வடக்கு கோபுரத்தினைக் கட்டியதாகக் குறிப்பிடுகின்றன. முதற் பிரகாரத்திற்கான தெற்கு வாயிலின் இடது பக்கத்திலுள்ள கிருஷ்ண தேவராயரின் சக வருடம் 1432 (கி.பி 1521) சாசனம் அழகிய சிற்றம்பலமுடைய தம்பிரான் கோயில் மகாபூஜைக்காகவும், அன்னசாலை நடத்துவற்காகச் சீர்மை அப்பாப்பிள்ளை என்பவன் 3 கிராமங்களை வருமானத்துடன் கொடுத்தமையைக் கூறுகின்றது. அவனது ஆட்சியாண்டின் சகவருடம் 1443 (கி.பி 1521) என்ற செய்தியும் அறியப்படுகின்றது. மங்கராசன் என்பவன் சிதம்பரநாதபுரம் என்ற கிராமத்தினைக் கோயிலுக்கு வழங்கினான்.
இங்குள்ள கோவிந்தராயர் சந்நிதியிலுள்ள கோவிந்தராயரின் சிலை அச்சுத மகாராயர் என்ற விஜய நகர மன்னனால் தாபிக்கப்பட்டது. அதனை முதற் பிரகாரம் தெற்குச் சுவரிலும், கோவிந்தராயர் கர்ப்பக்கிருகத்தின் தளத்திலுமுள்ள சாசனங்கள் எடுத்துக் கூறுகின்றன. 2 ஆம் பூரீ ரங்கராயரின் காலத்தில் (சக வருடம் 1503 - கி.பி 1581 இல்) வையப்ப

கிருஷ்ணப்ப கொண்டமாநாயக்க என்பவன் அபிஷேக ஆராதனை விழாச் செலவுகட்காக 7 கிராமங்களையும் மிளகு தரகு என்ற மிளகு வர்த்தகத்தின் வருமானத்தினையும் வழங்கினான்.
முதலாம் வெங்கடதேவ மகாராயர் காலத்தில் (கி.பி 1586 - 1614) பூஜை நைவேத்தியத்திற்காகவும் தர்ம செயல்கட்காகவும் தானங்கள் செய்யப்பட்டன. அவனது பல சாசனங்கள் இங்குள்ளன. கிழக்குக் கோபுர வாயிலுள்ள சக வருடம் 1500 க்குரிய இவனது சாசனம் சிதம்பரேசுவரருக்கும் சிவகாமசுந்தரி
அம்மைக்கும் அதிகாலை அபிஷேகத்திற்கும், நைவேத்தியயம்
வழங்குவதற்குமாக 4 கிராமங்கள் கோயிலுக்கு கொடுக்கப் பட்டதனைக் கூறுகின்றது. சக வருடம் 1510இல் சிதம் பரேசுவரருக்கு நைவேத்தியத்திற்கும் பக்தர்கட்கு வழங்கு வதற்குமாக 20 தளிகை சோறுக்கு 300 பொன் வழங்கப்பட்டது. இதே வருடத்திற்குரிய இன்னோர் சாசனம் திருத்துணை யனார்க்கு (சைவ ஆண்டிகள்) 30தளிகை வழங்கிய ஏற்பாட்டினைக் கூறுகின்றது. சக வருடம் 1510 இல் வெளி யிடப்பட்ட இவனது ஒர் சாசனம் பரதேசிகட்கு உணவு வழங்குவதற்கான ஏற்பாட்டினையும் அதனை நமசிவாய உடையாரின் மேற்பார்வையில் விட்டது பற்றியும் குறிப்பிடு கின்றது. சகவருடம் 1515 இல் வெளியிடப்பட்ட சாசனம் கோயிலுக்குரிய நிலங்கள் வரியிலியாக்கப்பட்டது பற்றியும் தினமும் 750 தளிகை சோற்றிற்காக தானம் வழங்கியது பற்றியும் குறிப்பிடுகின்றது. 6 ஆம் பூரீரங்கராயரின் காலத்தில் பல புனருத்தாரண வேலைகள் மேற்கொள்ளப்பட்டன. தில்லைச் சித்திர கூடம் கோவிந்தராயர் சந்நிதியின் முன்னுள்ள பெரிய மண்டபம், இச் சந்நிதியின் கோபுரம், தாயார் புண்டரிகவல்லி நாச்சியார், சூடிக்கொடுத்த நாச்சியார் விமானங்கள், திருவாழியாழ்வான் முன் மண்டபம் என்பனவற்றினை மன்னன் புனருத்தாரணம் செய்ததுடன் பூரீ வைணவர்கள் நிரந்தரமாக வசிக்கும் ஆரூர், கருங்குழி, சூரியமங்கலம், மருதாந்த நல்லூர், உடையூர் என்னும் கிராமங்களையும் வரியிலியாக்கினான். இச் செயல்களைக் குறிக்கும் சாசனம் சகவருடம் 1565 இல் வெளியிடப்பட்டது. இது முதலாம் பிரகாரத்தின் கிழக்கு சுவரிலுள்ளது. விஜய நகர மன்னர்கள் வைணவர்களாக இருந்தாலும் சிதம்பரத்தலத்தினை ஆதரித்து வந்தமையை மேற்குறிப்பிட்ட சாசனச் சான்றுகள் தெளிவுற எடுத்துக்
காட்டுகின்றன.
நாயக்க மன்னர்கள் மேற்கொண்ட பணிகளைச் சில சாசனங்கள் குறிப்பிடுகின்றன. தெற்குக் கோபுரத்திற்கு அருகிலுள்ள கற்பலகையிலுள்ள சக வருடம் 1520க்குரிய சாசனம் முத்து கிருஷ்ணப்ப நாயக்கர் கோயிலில் மேற்கொண்ட திருத்த வேலைகளையும் ஆடிபதினெட்டாம் பெருக்கில் தில்லைக் கூத்தப் பெருமான் எழுந்தருளியிருக்கக் கொள்ளிட ஆற்றின் கரையில் மண்டபம் அமைத்தமை பற்றியும் குறிப்பிடுகின்றது. கொச்சி அரசன் ராவர்ம மகாராஜா என்பவனால் ஆனந்த தாண்டவப் பெருமான் நாயனாருக்கு நைவேத்தியத்திற் காகவும், பிராமணர்,
இந்துக் க்களஞ்சியம்

Page 72
மகேசுவரர், கோயிலிற் சமையல் வேலை செய்வோருக்கு வழங்குவதற்காகவும் 33 தளிகை சோற்றுக்கு செய்த ஏற்பாட்டினை இம் மன்னனால் சக வருடம் 1498 இல்
வெளியிடப்பட்ட சாசனம் தெரிவிக்கின்றது.
புனருத்தாரணப் பணிகள்
காஞ்சிபுரத்தினைச் சேர்ந்த பச்சையப்ப முதலியார் (கி.பி 1754 - 1794) குடும்பத்தினர் சிதம்பரத்துடன் நெருங்கிய தொடர்புகளைக் கொண்டிருந்தனர். தனது செல்வத்தினைக் கல்வி, சமய அறக்கட்டளைகட்கு செலவிட்ட பச்சையப்ப முதலியாரினால் சிதம்பர தலத்திற் பல பணிகள் மேற் கொள்ளப்பட்டன. 1791-92 ஆம் ஆண்டில் ஆனித் திருமஞ்சனம் என்ற இரண்டாவது மகோற்சவ விழாவினை ஆருத்திரா தரிசன விழா போன்று பெரியளவில் நடாத்துவதற்கான ஏற்பாடுகளைச் செய்தார். இத்தலத்துத் தேர்களைப் பழுது பார்த்து தேர் மண்டபம் அமைத்ததுடன் தேர்த்திருவிழா ஒழுங்காக நடத்துவதற்கான ஏற்பாட்டினையும் செய்தார். இவராற் சமஸ்கிருத பாடசாலை சிதம்பரத்தில் அமைக்கப்பட்டது. 18ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இவரது சகோதரி, இவரது மனைவியின் தாயார் சுப்பம்மாள் என்போர் கிழக்குக் கோபுரத்திலுள்ள ஒரு சாசனம் இக் கோபுரத்தினைச் சுப்பம்மாள் புனருத்தாரணம் செய்ததனையும் அக்கிரகாரம் (பிராமணர் குடியிருப்பு) அமைத்ததையும் குறிப்பிடுகின்றது. இக் கோபுரத்தின் தெற்குப் பக்கக் கோட்டங்களிற் பச்சையப்ப முதலியார், அவர் சகோதரி,
சுப்பம்மாள் என்போரது உருவங்கள் காணப்படுகின்றன.
செல்வ வளம் படைத்த நாட்டுக்கோட்டை நகரத்தார் சிதம்பரத்தலத்திற்குப் பெரும் தொண்டாற்றியுள்ளனர். ராஜாசாகிப் குடும்பத்தினரால் 19ஆம் நூற்றாண்டின் எழுபதுகளில் இத்தலத்திற் பெரிய அளவிலே புனருத்தாரண வேலைகள் மேற்கொள்ளப்பட்டன. கோபுரங்கள் சந்நிதிகள் புனருத்தாரணம் செய்யப்பட்டு அழகுபடுத்தப்பட்டன. கனகசபை பொன் வேயப்பட்டது. சுற்றுமதில் புனருத்தாரணம் செய்யப்பட்டது, சிவகங்கைக் குளத்தின் படிக்கட்டுக்கள் அகலமாக்கப்பட்டன. இவை தவிரத் தேர்களைத் திருத்தியமைக்கவும் விளக்குகள், பாத்திரங்கள் வாகனங்கள் போன்ற தேவைகட்காகவும் இக் குடும்பத்தினரால் உபயங்களும் கட்டளைகளும் வழங்கப்பட்டன. 1891 இல் மகாகும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. ராஜாசாகிப் குடும்பத்தின் மூன்று பரம்பரையினர் இக்கோயிற் திருப்பணிக்கு தம்மை அர்ப்பணித்தனர். ராஜாசாகிப் செட்டியாரின் பெற்றோரது வெண்கல உருவங்கள் கரங்களில் விளக்குகளுடன் கனகசபையில் உள்ளது. நகரத்தார் சிதம்பரத்தில் கல்விக் கூடங்களை அமைத்ததுடன், பல கட்டிடங்களையும் சிதம்பரத்திற் கட்டியுள்ளனர். சிதம்பரம் அண்ணாமலை நகரிலுள்ள அண்ணாமலைப் பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரிகள்
நகரத்தாரால் அமைக்கப்பட்டவையாகும்.
இந்துக் zászfaUri

சிதம்பரம் கோயில் கோட்டை போன்ற அமைப்பினைக் கொண்டிருந்தமையால் அந்நியர்களினால் இக்கோயில் அரணாகப் பயன்படுத்தப்பட்டிருந்தது. பிரான்சியர் கி.பி 1753 முதல் 1760 வரையான காலப்பகுதியிற் பல தடவைகள் இக்கோயிலை அரணாகப் பயன்படுத்தியிருந்தனர். இவர்களால் மேற்குக் கோபுர வாயில் பலப்படுத்தப்பட்டிருந்தது. அன்னியரான முஸ்லிம்களினாலும் இக்கோயில் அரணாகப் பயன்படுத்தப் பட்டது. அன்னியரினால் ஏற்பட்ட குழப்பமான சூழ்நிலையில் இங்கிருந்த நடராஜர் சிலை திருவாரூருக்குப் பாதுகாப்பிற்காக
எடுத்துச் செல்லப்பட்டுப் பின்னர் இங்கு கொண்டு வரப்பட்டது.
ஆயிரம் கால் மண்டபத்திலுள்ள சுலோகம் போன்ற கிரந்த சாசனத்தின் மூலம் சகவருடம் 1665, கலி 4874, மாசி மாதம், கிருஷ்ணபசஷம் மூல நட்சத்திரம், திரியோதசி திதியில் நடராஜர் திருவாரூரிலிருந்த சிற்சபைக்கு வந்தார் என அறிய முடிகின்றது.
பூசைகளும் உற்சவங்களும்
சிதம்பரம் கோயிலிலே தினமும் ஆறு கால பூஜை நடைபெறுகின்றது. காலசந்தி (முதற்காலம்) இரண்டாம் காலம், உச்சிக்காலம், சாயரட்சை, இரண்டாம் காலம், அர்த்தயாமம் என்னும் ஆறு காலத்திலும் ஸ்படிக லிங்கத்திற்கு அபிஷேகம் நடைபெறும். நடராஜருக்கும் சிவகாமிக்கும் தீபாராதனை காட்டப்படும். இவை தவிர தினமும் காலையில் பள்ளியறையில் பால், பொரி, பழம் முதலிய நைவேத்தியம் வைத்து இறைவனின் பாதுகை, வெள்ளி, தங்கம் என்பனவற்றினை பல்லக்கில் வைத்து நடராஜர் சந்நிதிக்குக் கொண்டு வந்து நடராஜர் சிவகாமி முன் வைத்து தீபாராதனை காட்டப்படும். இவ் வழக்கம் திருவனந்தல், பால் நைவேத்தியம் எனப்படும்.
வருடத்தில் ஆறு தடவை நடராஜர் அபிஷேகம் இடம்பெறும். மேல்வரும் பாடல் ஆறு அபிஷேகங்களையும் கூறுகின்றது.
சித்திரையில் ஒனமுதல் சீரானி உத்திரமாம் சத்ததனு ஆதிரையும் சார்வாகும் - பக்தி மாசியரி கன்னி கருவுசதுர்த் தசிமன்னும் ஈசர் அபிடேகதினமாம். சித்திரை - திருவோண நட்சத்திரம், ஆணி- உத்திர நட்சத்திரம், ஆவணி- சுக்கிலபட்ச சதுர்த்தசி புரட்டாசிசுக்கிலபட்ச சதுர்த்தசி, மார்கழி - திருவாதிரை, மாசி - சுக்கிலபட்ச சதுர்த்தசி என்னும் தினங்களில் நடராஜர் அபிஷேகம் இடம்பெறும். ஆனியிலும் மார்கழியிலும் ஆயிரம்கால் மண்டபத்திலும், சித்திரை, ஆவணி புரட்டாசி, மாசி மாதங்களில் நடராஜர் சந்நிதியின் பக்கத்திலுள்ள மண்டபத்திலும் அபிஷேகம் நடைபெறும்.
இத்தலத்தில் இரு மகோற்சவங்கள் நடைபெறுகின்றன. ஆனிமாதம் உத்திர நட்சத்திரத்திற்கு 10 நாட்கள் முன் கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் திருவிழா நடைபெறும். இரண்டாவது மகோற்சவம் மார்கழி மாதம் திருவாதிரை நட்சத்திரத்திற்கு 10 நாட்கள் முன் கொடி யேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் நடைபெறும். மார்கழி

Page 73
விழாவில் மாணிக்கவாசகரை நடராஜர் சந்நிதிக்கு எழுந்தருளச் செய்து பூஜை, தீபாராதனைகளுடன் திருவெம்பாவை பாடுவது குறிப்பிடத்தக்கது.
இத்தலத்திலுள்ள சாசனங்களில் சில விழாக்கள் குறிப்பிடப்பட்டுள்ளது. மாசி மாதத்தில் மக நட்சத்திரத்திற் கடலாட்டு விழா என்ற ஒரு விழா நடந்திருக்கின்றது. இன்றும் இத்தினத்தில் இறைவனைப் புனித நீராட்டுதலுக்காக கின்னைக்கு எடுத்துச் செல்லப்படுகின்றது. பொதுவாக அம்மனுக்கு ஆடிப்பூர விழா நடத்துவது வழக்கம். ஆனால் இங்கு 'ஐப்பசி பூரம் என்ற விழா நடந்திருக்கின்றது. இன்றும் இவ்விழா 10 நாட்கள் நடைபெறுகின்றது. சிவகாமியம்மைக்கு நடாத்தப்பட்ட திருப்புதியது விழா பற்றி பாண்டியர் சாசனம் குறிப்பிடுகின்றது. திருப்பாலி வனத் திருநாள், எதிரிலி சோழன் சிவபாதசேகரன் சித்தத்துணைப் பெருவிழா, தை மாதத்து பூச நட்சத்திரத்தில் திருப்பாவாடை விழா போன்ற விழாக்கள் சாசனங்களிற் குறிப்பிடப்பட்டுள்ளன.
தில்லை மூவாயிரவர் என்னும் அந்தணர்களினால் இங்கு பூஜைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இவ் அந்தணர்கள் தான் இத்தலத்தின் நிர்வாகத்தினையும் கவனித்து வருகின்றனர். இவர்களைத் தீகூழிதர்கள் எனவும் அழைப்பர். இங்கு பூஜை செய்யும் உரிமையும் கோயில் உரிமையும் இவர்களுக்குரியதாகும். சிதம்பர நகரில் இவர்களுக்கெனத் தனியான சம்பிரதாயங்களும் மரபுகளும் உண்டு. முட்டாத முச்சந்தி மூவாயிரவர்' என சுந்தரராலும் செல்வமூவாயிரம் செழுஞ்சோதியந்தணர்','தெய்வ வாய்மொழியர்', 'வேதவென்றி மாறாத மூவாயிரவர், ஒவா முத்தீயஞ்சு வேள்வியாறங்க நான்மறையோர்' என 9 ஆம் திருமுறையிலும் மும்னை ஆயிரவர், 'மூவாயிரவர் தில்லைவாழ் அந்தணர் என சேக்கிழாரினாலும் அழைக்கப்படும் இவர்கள் சுந்தரமூர்த்தி நாயனார் திருத்தொண்டர் தொகை பாடுவதற்கு தில்லை வாழந்தணர் தம் அடியார்க்கும் அடியேன்” என இறைவனால் எடுத்துக் கொடுக்கப் பெற்ற அடியில் இடம்பெற்ற பெருமை பெற்றவர்கள். பெரிய புராணத்திலே தில்லைவாழந்தணர் புராணம் இவர்களின் சிறப்பினை மேன்மைப்படுத்திக் கூறுகின்றது.
சிதம்பரத்திலே வேடன் பிள்ளையார் கோயில் , செங்கழுநீர்ப் பிள்ளையார் கோயில், சேக்கிழார் கோயில், கமலீசுவரன் கோயில், தேரடிப் பிள்ளையார் கோயில், மாரியம்மன் கோயில் (இது கீழ்த்தெரு மாரியம்மன் கோயில் எனவும் அழைக்கப்படும்) காளியம்மன் கோயில், வீரபத்திர சுவாமி கோயில், செல்லியம்மன் கோயில், நந்தனார் கோயில், கூத்தாடும் பிள்ளையார் கோயில், இளமையாக்கினார் கோயில் (இது வியாக்கிரபாதர் வழிபட்ட கோயில், திருநீலகண்டர் இளமை பெற்ற தலம்) அனந்தேசுவரர் கோயில் (பதஞ்சலி வழிபட்டதலம்), தில்லைக்காளி கோயில் (தில்லையம்மன் கோயில்) நடமுகப் பிள்ளையார் கோயில், மத்தந்தனேசுவரர் கோயில் போன்ற வேறு கோயில்களும்
உள்ளன.

47
சிதம்பரம் நடராஜர் கோயிலினுள் உள்ள சிவகங்கை குளம் தவிர சமுத்திரம், புலிமடு, வியாக்கிரபாத தீர்த்தம், அனந்ததீர்த்தம், நாகசேரி, பிரம்மதீர்த்தம், சிவப்பிரியை, திருபாற்கடல், பரமானந்த கூபம் என்னும் தீர்த்தங்களும் சிதம்பரத்திலுள்ளன. தை மாதத்து அமாவாசை தினத்தில் சிவகங்கை உட்பட மேற்கூறப்பட்ட தீர்த்தங்களிற் சிவன் தீர்த்தமாடுவது வழக்கமாகவுள்ளது.
சிதம்பரம் வட்டத்தில் திருவேட்களம், நெல்வாயில் (சிவபுரம்), கடலையாற்றுார், நாரையூர், ஓமாம் புலியூர், கானாட்டுமுள்ளூர், கடம்பூர் (மேல் கடம்பூர்) என்னும் பாடல் பெற்ற தலங்களும் உள்ளன. (க.ந.)
சிதம்பர மும்மணிக் கோவை
குமரகுருபரசுவாமிகளின் அற்புதமான படைப்புகளுள் ஒன்று சிதம்பர மும்மணிக் கோவை மும்மணிக் கோவை தொண்ணுாற்றாறு வகைப் பிரபந்தங்களுள் ஒன்று. மூன்று வகையான மணிகளால் இயன்ற மாலை போல மூவகைப் பாடலால் அந்தாதித் தொடையாக அமைவது மும்மணிக் கோவையாகும். அரும்பொருள் வைப்பாகக் கவிநலத்தேன் பிழியும் கற்பனை மலர் பல பொருந்திய கவிதைப் பூம்பொழிலாக விளங்குவது இக்கோவை. இந்நூலிற் சிதம்பரத் தல மகிமை, நடராஜப் பெருமானின் அற்புதக் கூத்தின் சிறப்பு, அடியார் பெருமை ஆகியவை சுவை படப் பேசப்படுவதோடு சைவத்தின் கருவூலமாகத் திகழும் சித்தாந்தப் பொருளும் இடையிடையே விளக்கப்படுகின்றது. காப்பினை அடுத்து வரும் முதற்செய்யுள் 83 அடிகள் கொண்ட நேரிசையாசிரியப்பாவாக அமைந்துள்ளது. இதன் முதற்பகுதியில், நடராச மூர்த்தியின் ஐந்தொழில் இயல்பு பேசப்படுகின்றது. உயிர்களை உய்வித்தற்குப் பஞ்சகிருத்திய நடனம் இயற்றி நிற்கும் கூத்தப்பிரானின் அமுதவாக்கிற் பிறந்த அருள் நூல்களில், ஈடேற்றம் பெறுவதற்கு இயன்றனவாகக் கூறப்படும் அறங்களுள் இல்லறமும், துறவறமும் ஆகிய இரண்டும் முதன்மையானவையெனச் சிறப்பித்துப் பேசப்படுவதைத் தெரிந்து கொண்ட நிலையில் இல்லறம் பேணுவதும், துறவறம் பூண்டு ஒழுகுவதும் தமக்கு ஏற்புடையதன்று ஆதலின் ஈடேற்றம் பெற வேறு வழியுண்டோ என வினாவினாக்கு ஆருர் காசி அணிதில்லை எனும் முத்தலங்களுள் தரிசிக்க முத்திதருவது சிதம்பரம் எனச் சிரேஷ்ட அறிவினர் கூறியதையடுத்துப் பரகதி பெறக்கருதிச் சிதம்பரம் சேர்ந்ததாகவும், உண்மைப் பக்தியில்லாதவன் ஆயினும் தம்மை ஏற்றருள வேண்டும் என்ற ஆசிரியரின் விண்ணப்பத்தைக் கொண்டு திகழ்வது முதற்பாடல். மனப்பக்குவமோ பக்தியோ இல்லாத தனக்கும் தரிசித்த மாத்திரத்தே கதியளிப்பது கடனாகும் என்பதற்கு ஆசிரியர் காட்டும் நியாயத்தில் மிளிரும் சமத்காரம் கூத்தப் பிரானைக் குழையவைக்கும் இயல்பினது. நோயுற்ற ஒருவனுக்கு
ந்துக்கலைக்களஞ்சியம்

Page 74
வழங்கப்படும் மருந்தை அவன் விரும்பியுண்டாலும் விரும்பாது அருவருத்து உண்டாலும் அது நோயைக் குணப்படுத்தவே செய்யும். அது போலச் சிறியேன் பக்தியின்மை ஆகிய குறையுடையேன். ஆயினும் நினது திருக்கூத்தை ஒரு முறை கும்பிட்ட அளவிலேயே முத்திபெறும் உரிமை பெற்றேன். அதுமட்டுமன்றி மன்றுடையவனாகி நீ ஒரு பாற்கோடாது அருள வேண்டுவது கடனாகும், எனத் தமக்குப் பரகதிப் பேற்றுடைமைக்கு நியாயம் காட்டுகின்றார் கவிஞர் பிரான். கூத்தப் பெருமானை மன்றுடையோன் என விளித்த குறிப்பால் அறங்கூறும் நீதிமன்றம் உடையாரெனவும் நடனசபையை உடையவர் எனவும் இரு பொருள் பெறவைத்த சாதுரியம் எண்ணி இன்புறற்பாலது.
இது போன்று இன்னும் சில விண்ணப்பங்களை இறைவனிடம் குமரகுருபர சுவாமிகள் வேண்டிநிற்கின்றார். இந்நூலின் பிறிதொரு கவியில் நடனக்கோலம் கண்ட தமக்குச் சிவசாதாக்கியம் அருள வேண்டியதற்கு வேறும் ஒரு காரணம் கற்பிக்கின்றார்.
கூற்றம் உதைத்த குரைகழற்கால் கும்பிட்ட பின்னரும் தோற்றம் துடைக்கப் பெறாது பிறவியைப் பொருந்துவேனாயின் அதற்காக அஞ்சமாட்டேன். ஆனால் கனகசபையில் நடனங்கண்டார்க்குப் பரகதி கிட்டும் என்ற கூற்று இவன் அளவிற் பொய்யாகிவிட்டதே எனத் தேவர் சந்தேகங் கொண்டு அஞ்சநேரும் அல்லவா? அது கருதியேனும் எனக்கு மோட்ச மளிக்க வேண்டும் எனத் தம் உரிமைக் கோரிக்கையினை மேலும் வலியுறுத்திக் கேட்கிறார்.
ஆசிரியரது பிறிதொரு விண்ணப்பம் அறிவுச் செல்வம் அளித்தருள வேண்டுவது; இந்த விண்ணப்பத்தை விடுப்பதற்கு முன்னுரையாகச் செல்வம் என்பது யாது? செல்வம் இன்மையாகிய வறுமையின் தன்மை எத்தகையது? என்பவற்றை விளக்குகின்றார். ஆசையே வறுமையாகும். ஆசையற்று இருத்தலாகிய வேண்டாமையே விழுமிய செல்வம் ஆகும். "அவா என்ப எல்லா உயிர்க்கும் எஞ்ஞான்றும் தவாப் பிறப்பினும் வித்து' என வள்ளுவர் கூறியவாறு ஆசையே பிறவிக்குக் காரணமாகும். ஆசை மோகத்தை விளைவிப்பது. மோகம் மயக்கமாகும். அறிவு இன்மையே, மயக்கத்திற்குக் காரணமாகின்றது. மயக்கத்தையகற்றவல்ல அறிவே சிறந்த செல்வமாகும். ஆகவே பிறவிக்குக் காரணமாகிய ஆசைக்கு இடமாய் விளங்கும் மோகத்தை நீக்கவல்ல அறிவாகிய உண்மைச் செல்வத்தை அளித்தருள வேண்டும் என விண்ணப் பிக்கின்றார் ஒரு பாடலில்.
அறிவு என்பது பல நூல்களைக் கற்பதாலும் பிறர் வாயிலாகக் கேட்பதாலும் பெறப்படும் தகவல் திரட்டு அன்று. மெய்யுணர்வுக்கு வழிகாட்டவல்ல நெறியே உண்மை அறிவாகும். மெய்யறிவே
ஞானம் எனவும் பெறும். தமக்கு ஞானமருளுமாறு நடராசப்
ந்துக்கலைக்களஞ்சியம்

பெருமானை வேண்டும் ஒரு செய்யுளில் ஞானத்தினை ஒரு பெண்ணாக உருவகித்து அஞ்ஞானப் பெண்ணைத் தனக்கு நன்மணம் புணர்த்தி வைக்குமாறு வேண்டுகிறார். இப்பாடலில் ஆணவத்தைச் சேரிப்பரத்தையாக உருவகித்து, அதற்கேற்ப அவ்வுருவத்தைச் சைவசித்தாந்தக் கருத்துக்களுக்கு அமைய விரித்துச் சென்றுள்ளமையும் நயந்தருவது. பலரைப் புணரும் இருட்பாவை என ஆணவத்தை உமாபதி சிவாச்சாரியார் உருவகித்ததும் இங்கு நினைவு கூரத்தக்கது. ஆணவமாகிய பொதுமகளின் இரு தங்கையருள் ஒருத்தி குடிலை எனவும் இவளின் பிள்ளைகள் சிவதத்துவமாகிய சுத்தவித்தை, ஈசுவரன், சதாக்கியம், சக்தி, சிவம் எனும் ஐவர் எனவும், மோகினி எனப்படும் அசுத்தமாயையின் புதல்வியர் காலம், நியதி, கலை என்ற மூவர் எனவும், கலை என்பாளின் புதல்வியர் வித்தை, அராகம், மூலப்பிரகிருதி என்ற மூவர் எனவும், ஞானேந்திரியம் ஐந்து, கன்மேந்திரியம் ஐந்து, தன்மாத்திரை ஐந்து, அந்தக்கரணம் நான்கு என்றின்ன கருத்து மணிகள் ஒளிர
நிற்பது இப்பாடல் .
பிறிதொரு பாடலில் முத்திச் செல்வம் உடையோரை குறையாச் செல்வர் எனக் குறிப்பிடுகிறார். முத்திச் செல்வத்தைப் பெறச் சிதம்பரதரிசனம் செய்வாய் என ஆசிரியரை நெறிப்படுத்திய அடியார்களாகிய அருளாளர்களும் குறையாச் செல்வர்களே. இத்தகைய குறையாச் செல்வர்களது குணவிசேடத்தால் தாம் பக்குவம் அடைந்த சிறப்பை விளக்குகின்றார். மேலும் ஒரு பாடலில் தாம் புறத்தே தொண்டர் வேடம் பூண்டு அகத்தே தீய ஒழுக்கமுடையவனாக இருந்த இடத்தும் இறைவனது தொண்டர்களோடு பழகிய சேர்க்கையால் அவர்கள் தம் புறத்தோற்றத்தையே மெய்த்தோற்றமாக நம்பினர் எனவும், அதனாலே தம்மைத் தக்க அடியவனாகக் கருதித் தம்பால் இறைவன் எழுந்தருளி இருப்பதாகக் கொண்டு, பாவித்த பாவனை தம்மை உண்மையிலேயே சான்றோனாக மாற்றி உய்யும் நெறிக்கு உய்த்து விட்டது எனவுங் குறிப்பிட்டு அடியார் பெருமையையும் அவர்களது பெருங்குணச்சிறப்பால் தாம் ஈடேற்றம் பெற்ற சிறப்பையும் எடுத்துரைக்கின்றார். பாச ஞானம், பக ஞானம் ஆகிய புல்லறிவினைப் போக்கி தொண்டர் கூட்டம் சேரப் பெற்றவர்க்கு எல்லா நலனும் பொருந்தும் என்பது அடிகளின் கருத்தாகும்.
இறுதியாக தில்லைக் கூத்தை ஒருமுறை கும்பிட்டாலே போதும் என்ற கருத்தமைந்த பாடலுடன் நூலை முடிக்கின்றார்.
கூடுங் கதியொரு காற் கும்பிட்டாற் போதுமென நாடு மவிநயத்தை நண்ணிற்றால் - ஒடியகட் காதனார் காணவொரு கால் காட்டிக் கையமைத்து நாதனார செய்யும் நடனம்
இப்பாடலில் ஒரு கால் என்பது ‘குஞ்சிதபாதம்”, “ஒருமுறை” என்ற இரு பொருளுடையது. ஒருகாலை ஒரு முறை கும்பிட்டால் போதும் சகல நலனும் அமையும் என்பது பொருள். (வ. சிவ)

Page 75
  

Page 76
இதன் பஞ்சமத்தையும் தைவதத்தையும் முறையே ஷட்ஷமாக வைத்துக் கொண்டால் மாயமாளவ கெளளை, ரஸிகப்பிரியா இராகங்கள் பேசும். இது முற்பகலில் பாடக் கூடிய ராகம். செம்பழுப்பு நிறமுடைய ராகம். இந்த ராகத்தின் சுவை வீரியமாகும். இது ஒரு புருஷராகம்.
ஐரோப்பாவில் ஹங்கேரி நாட்டின் சங்கீதத்திலும், ஜிப்ஸி சாதியாரின் வாத்யப்ருந்த சங்கீதத்திலும் இந்த ராகம் ஒலிப்பதைக் காணலாம்.
இந்த ராக உருப்படிகள் சில.
க்ருதி - நீதுகரணமுவே - சாபு - சீனிவாசயங்கார் க்ருதி - நிதஜன பரிபால - ரூபகம் - சீனிவாசயங்கார் க்ருதி - மம்முப்ரோசு - ஆதி - வீணைகுப்பய்யர் க்ருதி - இகபரம் - ஆதி - பாபநாசம்சிவன் க்ருதி - உண்மையல்லால் - ஆதி - கோடீஸ்வரஐயர்
(தேஹ.)
சிமிருதிகள் (ஸ்மிருதிகள்)
ைெதிெக இந்து சமய மரபிலே சுருதிகள், சிமிருதிகள் எனும் இருவகையான மிக முக்கியமான நூல்கள் உள்ளன. சுருதிகள் வேதங்களையும், சிமிருதிகள் தர்மசாஸ்திரங்களையும் குறிப்பன. சுருதிகள் இறைவனால் அருளிச் செய்யப்பட்டவை அல்லது இறையருள் பெற்ற ஞானிகளால் அருளிச் செய்யப்பட்டவை எனக் கொள்ளப்படும். சிமிருதிகள் வைதிக மரபையொட்டிய சமூக, சமய பழக்க வழக்கங்களையும் பிறவற்றையும் எடுத்துரைப்பன. இவற்றுள்ளே இக்கட்டுரையில் சிமிருதி பற்றிச் சுருக்கமாகக் கூறப்படும். ஸ்மிருதி எனும் பதம் நினைவிலிருத்தல் எனும் பொருள்படும் வடமொழி வினையடியான "ஸ்மிரு” விலிருந்து தோன்றியதாகும். வேதங்கள் போலவே அவற்றின் சார்பான மரபுகளைப் பிரதிபலிக்கும் ஸ்மிருதிகளும் நினைவாற்றல் மூலம் பேணப்பட்டு வந்தன. வேதகால முடிவில் இவற்றைத் தொகுத்துப் பேண வேண்டிய தேவையேற்பட்டது. இவற்றை எளிதிலே நினைவிலிருத்தும் வகையில் இவை சொற்சுருக்கம், பொருட் செறிவுள்ள சூத்திரநடையில் எழுதப்பட்டன. இவ்வாறு எழுதப்பட்ட நூல்கள் சூத்திரங்கள் என அழைக்கப்பட்டன. இவற்றுள் ஒருவகை நூல்கள் தர்ம சூத்திரங்களாகும். 'தர்மம் எனும் பதம் தாங்குதல்' எனும் பொருள்படும் "த்ரு” எனும் வடமொழி வினையடிலிருந்து வந்ததாகும். இருக்குவேத காலம் தொட்டு இப்பதம் இந்தியமரபிலே பல்வேறு கருத்துக்களிலே கடமை, நியதி, கட்டுப்பாடு அனைத்தையும் தாங்கி நிற்பது. சமயம், பழக்கவழக்கங்கள், நடைமுறைகள் முதலியனவற்றையும் குறிக்கும் வகையில் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. எனினும் அடிப்படையிலே உலகனைத்தையும் தாங்கி வழிநடத்தும் சக்தியைக் குறித்து வந்துள்ளது. எவ்வாறாயினும் மேற்குறிப்பிட்ட தர்மசூத்திரங்களில் அப்பதம் குறிப்பாகக் கடமை, பழக்க வழக்கங்கள் முதலியனவற்றின் பொருளில்தான் வந்துள்ளது. அதாவது வைதிக இந்து சமய சமூக ரீதியிலான நான்கு
இந்துக்கலைக்களஞ்சியம்

வர்ணங்களினதும், நான்கு ஆச்சிரமங்களினதும் கடமைகளையே இவை விபரிக்கின்றன.
காலப் போக்கிலே இத்தர்ம சூத்திரங்களின் அடிப்படையிலேதான் விரிவான தர்ம சாஸ்திர நூல்கள் எழுதப்பட்டன. “விதிமுறைகளைக் கூறி எது காப்பாற்றுகிறதோ அதுவே சாஸ்திரமாகும்.” இவ்வகை நூல்கள் கூறும் விடயங்களை நன்கு ஒழுங்குபடுத்தி ஒரு குறிப்பிட்ட வரையறையிலே கூறுவன இத்தர்மசாஸ்திர நூல்கள். சிமிருதிகள் என அழைக்கப்படுதல் பற்றி ஏற்கனவே கூறப்பட்டுள்ளது.
ஏற்கனவே குறிப்பிட்டவாறு இவ்வகை நூல்கள் குறிப்பாக இந்து சமூகத்தின் பிரதான அமிசமாகிய வர்ணாஸ்ரம தர்மம் பற்றியே விரிவாக எடுத்துக் கூறுகின்றன. தர்மசாஸ்திர நூல்கள் பல இருப்பினும் அவற்றுள் முக்கியமானதாக விளங்கும் மனுஸ்மிருதி அல்லது மாணவ தர்மசாஸ்திரம் பற்றிச் சற்று விரிவாகக் குறிப்பிட்டு இவ்வகை நூல்களின் தன்மை, முக்கியத்துவம் முதலியனவற்றை விளக்கலாம்.
வைதிகசமய மரபிலே மனு மிக முக்கியமானவர்களில் ஒருவர். மாணவ என்பது மனுவுக்குரிய அல்லது மனுவழி வந்த எனப் பொருள்படும். இந்து மரபில் இவர் மனிதர்களின் மூதாதையாகவும், பெரிய முனிவராகவும், சட்டத்தினை வகுத்துக் கூறியவராகவும், அறிஞராகவும் கூறப்பட்டுள்ளார்.
இந்நூல் மனு என்பவராலே எழுதப்பட்டதென ஒருசாரார் கூறுவர். வேறுசிலர் இஃது ஒரு தொகுப்பு நூலாக இருக்கலாம் என்பர். மனு எனும் பதம் ஒரு குறிப்பிட்ட அறிஞர் வட்டத்தினைக் குறிக்கலாம் எனவும், அவர்களின் கருத்துக்களே இதிற் கூறப்பட்டுள்ளன எனவும் கருதப்படுகின்றது. எவ்வாறாகினும் வைதிக இந்து மரபிலே மனுவின் முக்கியத்துவம் குறிப்பிடற்பாலது.
இந்நூலை ஆராய்ந்து இதன் காலத்தை வரையறை செய்ய முயன்ற மேனாட்டறிஞர்களிலொரு சாரார் இது ஒரு தொகுப்பு நூல் எனவும், இது கி. மு. 2ஆம் நூற்றாண்டு தொடக்கம் கி.பி.2ஆம் நூற்றாண்டு வரையுள்ள காலப்பகுதியிலே தோன்றியிருக்கலாம் எனவும் கூறியுள்ளனர். ஆனால் இதன் பழமையான முக்கியமான பகுதிகள் கிறிஸ்து ஆண்டிற்கு முற்பட்டவை எனப் பொதுவாகக் கொள்ளலாம்.
இந்நூல் 12 அத்தியாயங்களும் 2684 செய்யுட்களும் கொண்டதாகும். முதலாவது அத்தியாயத்திலே உலகத் தோற்றம், பஞ்சபூதங்களின் தோற்றம், மகத் தத்துவம் நால்வகை வருணத் தோற்றம், கடமைகள், யுக தர்மங்கள் முதலியன எடுத்துரைக்கப்படுகின்றன. இரண்டாவது அத்தியாயத்திலே தருமத்தின் மூலங்கள் இந்து சட்ட மூலங்கள், பிரமச்சரிய ஆச்சிரமத்திற்குரிய நெறிகள் குறிப்பாகக் கல்வி முறைகளும்,

Page 77
மூன்றாவது அத்தியாயத்திலே கிருஹஸ்தாச்சிரமம் - இல்வாழ்க்கை பற்றியும், நாலாவதிலே பிராமணர் முதலியோருக்கான ஜீவன் கிருத்தியங்களும், ஐந்தாவதிலே உணவு, தீட்டு (ஆசௌசம்) முதலியன பற்றியும் கூறப்பட்டுள்ளது. ஆறாவது அத்தியாயத்திலே வானப்பிரஸ்தம், சந்நியாசமாகிய ஆச்சிரமங்கள் பற்றியும், ஏழாவதிலே ராஜதர்மம் (அரசர் கடமைகள்) பற்றியும், எட்டாவதிலே பலதிறப்பட்ட விவகாரங்கள் பற்றியும், ஒன்பதாவதிலே மாதர், ஆடவர்க்கான தர்மம் பற்றியும், பத்தாவதிலே கலப்பு வருணங்கள், அவர்களின் தொழில்கள், நெருக்கடி காலத்திற்கான தொழில்கள் முதலியனவும், பதினொன்றாவதிலே பிராயச்சித்தங்கள் பற்றியும், பன்னிரண்டாவதிலே சத்துவ, ரஜஸ், தமஸ் எனும் முக்குணங்கள், ஆன்ம விடுதலைக்கான உபாயம் முதலியன பற்றியும் விவரிக்கப்படுகின்றது. இவ்வாறு உலகத்தோற்றம் தொடக்கம் வாழ்வுக்கான பல்வேறு நெறிமுறை வரை இதிலே கூறப்பட்டுள்ளன. இந்நூலைப் பொதுவாக நோக்கும்போது பிராமணர்களை மேம்படுத்திக் கூறும் நூல்போலத் தென்படும். இது கூறும் சமூக அமைப்பில் சூத்திரன் நிலை மிகக் குறைவானதாகக் காணப்படும். இந்நூலை இஃது எழுந்த காலச் சூழ்நிலையிலே வைத்துத்தான் மதிப்பிட வேண்டும். இந்நூல் எழுதப்பட்ட அல்லது தொகுக்கப்பட்ட காலத்திலே வைதிக இந்து சமூகக் கட்டுக்கோப்பு நிலையாகப் பாதுகாப்பதற்குக் - குறிப்பாக
வேற்று நாட்டவர்கள் முதலியோரின் தாக்குதல்களிலிருந்து இதனைப் பாதுகாப்பதற்காக இதிலுள்ள கருத்துக்கள் இடம் பெற்றிருக்கலாம். இது எக்காலத்திற்கும் பொதுவான நூலன்று. ஆனால் இது கூறும் சில கருத்துக்கள் இக்காலத்திற்கும் பொருத்தமானவையே. மேலும், பலதிறப்பட்ட கருத்துக்களின் தொகுப்பாகவும் இந்நூல் அமைந்திருப்பதால் சில இடங்களில் முரண்பட்ட கருத்துக்களும் தென்படலாம்.
இந்துக்களின் வாழ்க்கைநெறி பற்றிக் கூறும் இந்நூல் இந்து சட்ட நூல்களிலும் முதன்மைபெற்றிருந்தது. அக்கால கட்டத்திலே மக்கள் ஒவ்வொருவரும் தத்தம் கடமைகளைச் செவ்வனே செய்வதன் மூலம், சமூகத்திலே பிரச்சினைகள் தோன்றா, நாடு முன்னேறும் எனக் கருதப்பட்டது எனலாம். தொழில்கள் பெரும்பாலும் பாரம்பரியமாகவே நடைபெற்றன. சமூக அசைவாக்கம் இக்கால நோக்கிலே பார்க்கும் போது நன்கு உத்வேகமுள்ளதாகத் தொடர்ந்திருக்கும் எனக் கூறமுடியாது. விதிகள் கடுமையாக இருந்தாலும், நெகிழ்ச்சியும் காணப்பட்டது.
இந்நூல் சென்ற நூற்றாண்டிலே ஒரு சாராரின் பலத்த கண்டனத்திற்குட்பட்டது. எனினும் அதிலுள்ள சில கருத்துக்கள் இன்றும் குறிப்பிடத்தக்கவையே. இந்நூலில் ஒழுக்கமே மிக மேலான இடத்தைப் பெற்றுள்ளது. (ஆசாரஹ பரமோ தர்மஹ}. இஃது எக்காலத்திற்கும் பொருத்தமானதே. வர்ண பேதங்களைக் குறிப்பிட்டுப் பிராமணர்களை முதலாவது நிலையிலே கூறியபோதும் அவர்கள் ஒழுக்கங்கெட்டால், தம் நிலையிலிருந்து பிறழ்ந்து மிகக் கீழான நிலையை அடைவர் என வன்மையாகக் கண்டிக்க நூலாசிரியர் தயங்கிலர் திருவள்ளுவர் ஒழுக்கம்
ஒன நூல*5

விழுப்பம் தரலான் ஒழுக்கம் உயிரினும் ஒம்பப்படும் எனவும், மறப்பினும் ஒத்துக் கொளலாகும், பார்ப்பான் பிறப்பொழுக்கம் குன்றக் கெடும் எனவும் கூறியிருப்பன ஒப்பிடற்பாலன.
எல்லாவற்றிற்கும் மேலானதாகவும், அரசனையும் கட்டுப்படுத்துவதாகவும் தர்மத்தினை ஆசிரியர் அழுத்திக் கூறியதன்மூலம் சட்டமுதன்மை (Rule of Law) போன்ற கருத்தினையும் நன்கு கவனித்துள்ளார் எனலாம். எந்தக் கொடுங்கோலனையும் தருமம் தண்டிக்கும் என்பது குறிப்பிடற்பாலதே. இக்கருத்துக் காலம் தோறும் நிலவி வந்துள்ளது.
ஒருவன் கல்வி, தவம், நல்லொழுக்கம் முதலியனமூலம் மேனிலை அடையலாம் என்பதை மனு சுட்டிக்காட்டியுள்ளார். வேதத்திலும் ஸ்மிருதியிலும் கூறப்பட்டுள்ள ஆசாரமே எல்லோருக்கும் முக்கியமான தர்மமாகச் சொல்லப்பட்டிருக்கிறது (1-108) எனவும், கல்வியினையும் நல்லது எதனையும் எவரிடமிருந்தும் கற்றுக் கொள்ளலாம் (2.258.259) எனவும் அவர் கூறியிருப்பவற்றைக் குறிப்பிடலாம். “ஒருவன் எவ்வகையினும் மற்றைய மனிதனுக்கு வாக்கினாலும், மனத்தினாலுங் கூடத் துன்பம் செய்யக் கூடாது (2161)" என அவர் கூறியுள்ளார்.
சூத்திரர் பற்றியும், பெண்கள் பற்றியும் இவர் கூறியுள்ள சில கருத்துக்கள் குறிப்பிடற்பாலன வைதிக சமூக, சமய மரபிலே திருமணம் ஒரு முக்கியமான சம்ஸ்காரம் (செம்மைப்படுத்தும் - கணவனையும் மனைவியையும் செம்மைப்படுத்தும்; ஒரு புனித செயலாம். இந்நூலிலே ஸ்திரீதனம், சதீ (உடன் கட்டடை ஏறும் வழக்கம்), விவாகரத்து முதலியன பற்றிய குறிப்புகளில்லை. இது கூறும் எண்வகைத் திருமணங்களில் இவை பற்றி எதுவும் கூறப்பட்டில. வேறு நிபந்தனைகளின்றி விரும்பிய பெண் ஒருவரை அவள் விரும்பும் ஆடவன் திருமணம் புரியும் முறையாகிய காந்தர்வ விவாகமும் இவற்றுள் ஒன்றாகும். சுருக்கமாகக்கூறின் காதல் விவாகத்தை மனு அங்கீகரித்துள்ளார். மேலும் பருவமடைந்த பெண்ணுக்குத் திருமணம் செய்து வைக்காத தந்தையும், மனைவியைக் கவனிக்காத கணவனும், தந்தை இறந்தபின் தாயைக் கவனிக்காத தனயனும் பழிக்குரியர் (9,4) என அவர் கூறியுள்ளார். திருமணங்கள் தெய்வத்தால் நிச்சயிக்கப் படுகின்றது. ஒருவன் சொந்த விருப்பத்தினாலன்றி இறைவனால் வழங்கப்பட்ட மனைவியைப் பெறுகிறான். எனவே அவன் அந்த நல்லவளுடன் அன்புடன் பழகி எப்போதும் அவளை ஆதரிக்க வேண்டும் (9.93} என மனு உபதேசிக்கிறார். மேலும் பருவமடைந்த பெண் மூன்று ஆண்டுகள் வரை தனக்குரிய கணவன் பெற்றோரால் நிச்சயிக்கப்படாவிடின் தான் விரும்பியவாறு திருமணம் செய்யலாம் (9.90-91) எனப் பெண்ணுக்கு இத்தகைய சுதந்திரத்தை நூலாசிரியர் வழங்கியுள்ளார். மேலும் 'கணவனும் மனைவியும் இறுதிக் காலம்வரை ஒருவருக்கொருவர் உண்மையுள்ளவர்களாகக்
இந்துக்கஐைக்களஞ்சியம்

Page 78
கற்புள்ளவராக வாழுதலே பெண் (மனைவி) ஆண் (கணவன்) ஆகிய இருபாலாரும் பின்பற்ற வேண்டிய தர்மத்தின் மேலான சாரம்” என அவர் கூறியுள்ளமை குறிப்பிடற்பாலது. கற்பினை இருசாராருக்கும் அவர் வலியுறுத்தியுள்ளமை ஈண்டு குறிப்பிடத்தக்கது. இக் கருத்தினையொட்டியே மகாகவி பாரதியாரும் “கற்பு நிலையென்று சொல்ல வந்தால். இரு கட்சிக்கும் அதனைப் பொதுவில் வைப்போம்” என்று கூறியுள்ளமை கவனித்தற்பாலது. மேலும் பெண்கள் போற்றப்படத்தக்கவர்கள் எனவும், “அவர்கள் வீட்டின் விளக்குகள்: மகாலசுஷ்மிகளாக விளங்குகின்றார்கள். அவர்களுக்கும் மகாலக்ஷமிக்கும் வேறுபாடில்லை” (9.26-27) எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இவற்றினைவிட ஒரு பெண்ணிற்குரிய பாதுகாப்பினை அவளே கவனிக்க வேண்டும். வேறு ஆடவர்களோ காவலாளிகளோ அப்பாதுகாப்பினை அவளுக்கு வழங்க முடியாது" (912) என அவர் கூறியிருப்பது,
“சிறை காக்கும் காப்புஎவன் செய்யும் மகளிர் நிறைகாக்கும் காப்பே தலை’ எனத் திருவள்ளுவர் கூறியிருப்பதுடன் ஒப்பிடற்பாலது; இந்நூல் எழுந்த காலத்திற்கு முன்பே வேதகாலத்தில் பெண்கள் நன்னிலையிருந்தனர். அவர்களிற் சிலர் ரிஷிகளாகவும், புலவர்களாகவும், பிரமஞானிகளாகவும் விளங்கினர். அவர்கள் பூனூல் தரித்தனர் என்பது அதர்வ வேதத்தினாற் புலப்படும். மனைவியின்றி வைதிக சமயக்கிரியைகளை ஒருவர் செய்ய முடியாது. இத்தகைய பின்னணியிலேதான் மனு கூறியுள்ள கருத்துக்கள் வந்திருக்கலாம்.
தாய், தந்தை, குரு ஆகியோருக்கு அவர் முக்கியத்துவம் அளித்துள்ளார். 'விருப்பின்றிப் பிரம்மஞானத்தை அறிந்த ஞானியே யாவரிலும் உயர்ந்தவன்” என அவர் கூறியுள்ளமையை நோக்கும்போது உலகியல் நோக்கில் ஏற்றத் தாழ்வுகளிருந்தாலும், ஆத்மீக நிலையில் யாவரும் சமன் என்பது தெளிவாகின்றது.
உலக நலனைக் கருத்திற்கொண்டு தண்டத்தினையும் அவர் வலியுறுத்தியுள்ளார். (7.22) மேலும் "ஒருவன் மற்றவர்களிலே தங்கியிருப்பது துன்பம். தன் வசமாகக் சுதந்திரமாக இருப்பதே இன்பம்” என அவர் கூறியுள்ளமையும் நன்கு கவனித்தற்பாலதே. இன்றைய காலத்திலே வலியுறுத்தப்படும் பொருளாதாரத் தன்னிறைவு, சுதந்திரம் பற்றிய கருத்துக்கள் இவற்றிலே தென்படுகின்றன.
மனுஸ்மிருதி இயற்றப்பட்டபின் தொடர்ந்து பல நூற்றாண்டுகளாக இந்தியாவில் மட்டுமன்றி கடல் கடந்து இலங்கை, தென்கிழக்காசிய நாடுகளிலும் போற்றப்பட்டு வந்துள்ளது. இந்தோனேசியாவிலுள்ள பாலித் தீவில் வாழும் இந்துக்கள் இன்றும் இதனைப் பின்பற்றுகின்றனர். ஐரோப்பிய அறிஞர்களில் சிலரை இந்நூல் கவர்ந்துள்ளது. தற்கால ஜேர்மனியத் தத்துவஞானிகளிலொருவரான நீற்சே (Nietzche) கிறிஸ்தவ சமயத்திலும் பார்க்க இதுவே தம்மை நன்கு
இந்துக்கலைக் is falsi

52
கவர்ந்துள்ளதெனக் குறிப்பிட்டுள்ளார். இந்தியாவில் இது நன்கு போற்றப்பட்டமைக்குச் சான்றுகளாக மேதாதி (கி. பி. 9ம் நூ.) கோவிந்தராசா (கி.பி. 12ம் நூ) கொல்லுகபட்ட (கி. பி. 13ம் நூ.) முதலிய பலர் இதற்கு எழுதியுள்ள உரைகளைக் குறிப்பிடலாம்.
காலம் செல்ல மேலும் சில சிமிருதிகள் தோன்றின. அவற்றுள் ஒன்றான யக்ஞவல்கிய சிமிருதி 3 அத்தியாயங்களும் 1009 செய்யுட்களும் கொண்டுள்ளது. இது சுமார் கி. பி. 400 அளவில் எழுதப்பட்டதாகும். பிறிதொரு ஸ்மிருதியான நாரத சிமிருதி கி. பி. 500 அளவிலே எழுதப்பட்டது. இதிலே 1200 செய்யுட்கள் உள்ளன. இவ்வாறு பிற்காலத்திலும் தொடர்ந்து சில சிமிருதிகள் எழுதப்பட்டுள்ளன.
சிமிருதிகள் இந்து சமய, சமூக நூல்களாக விளங்குகின்றன. இந்து சட்ட நூல்களாகவும் தேவைக்குத் தக்கவாறு பயன்படுத்தப் பட்டுள்ளன. இந்தியாவில் ஆங்கிலேயர் ஆட்சி ஏற்பட்டபின் ஆங்கிலத்திலே முதலிலே மொழி பெயர்க்கப்பட்ட நூல்களிலே மனுஸ்மிருதி குறிப்பிடற்பாலது. (வி சி)
சியாமளா தண்டகம்
சீமஸ்கிருதத்திலுள்ள பெருந்தொகையான ஸ்தோத்திரங் களில் சி(ஸ்)யாமளா தண்டகமும் ஒன்றாகும். இந்திய சமய, இலக்கிய மரபுக் கதையின்படி தலைசிறந்த புலவர் பெருமக்களில் ஒருவரான காளிதாசரே அதனைக் காளிதேவியின் கோவிலுக்குச் சென்று வணங்கியபோது அம்பாளின் திவ்விய தரிசனத்தைக் கண்ணாரக் கண்டு வியந்து பாடியதாகக் கூறப்படுகின்றது. இவர் தமது மனைவியின் வேண்டுகோளிற்கேற்பவே கோவிலுக்குச் சென்றதாகச் சொல்லப்படுகிறது. காளிபக்தர் ஆனபடியாற்றான் இவருக்குக் காளிதாசர் எனப்பெயர் ஏற்பட்டதென்பர். இவ்வம்பாளின் கருணைக் கடாக்ஷத்தினாலேதான் இவருக்கு அபாரமான கவிதாசக்தி ஏற்பட்டதெனப்படுகிறது. எவ்வாறாயினும் இத்தோத்திரம் குறிப்பிடற்பாலது.
இத்தோத்திரம் முதலிலே உபஜாமி யாப்பிலமைந்த இரு செய்யுட்களிலே தொடங்கி மேலும் இரு செய்யுட்களை அனுஷ்டுப் யாப்பிலே கொண்டுள்ளது. இவற்றின் பின்னரே தண்டக யாப்பிலமைந்துள்ள ஏழு செய்யுட்களைக் கொண்டிலங்குகிறது. தண்டக யாப்பு ஒவ்வொரு அடியிலும் குறைந்தது 27 சொல்லசைகளைக் கொண்டது. இத்தோத்திரம் பிரதானமாக இவ் யாப்பினால் அமைந்துள்ளது. சியாமளா வடிவினளாகிய காளிதேவி பற்றியே இது சிறப்பிக்கின்றது. சியாமளாதேவி பல்வேறு சிறப்புடையள். உலகமாதாவாகவும், சிறந்த இசைப்பிரியளாக இசைமீட்டிக் கொண்டிருப்பவளாகவும் விளங்குகிறாள். எனவே சியாமளாதேவி பற்றித் தண்டக யாப்பிலே கூறுவதால் இது "ஸ்யாமளா தண்டகம்" எனப் பெயர் பெறலாயிற்று. தண்டக யாப்புத் தமிழில் உள்ள தாண்டக யாப்புடன் ஒப்பிடற்பாலது.

Page 79
ஸ்யாம எனும் வடமொழிச் சொல் கறுப்புநிறம், கருநீலம், முகில், குயில், உப்பு, அழகு முதலிய பல பொருட்படும். இதிலிருந்து வந்த 'ஸ்யாமளா எனும் பதம் அடைமொழியாகக் கறுப்பு, கருநீலம், வண்டு, அத்திமரம், அழகு முதலிய பொருட்படும். இப்பதத்திலிருந்து கருநீலமுடைய அம்பாளைக் குறிக்கும் சொல்லாக இது மாறிற்று எனலாம். கறுப்பு, கருநீலத்தைக் குறித்த சொல், அந்நிறத்திலுள்ள அழகிய பொருட்களைக் குறிக்கும் சொல்லாயிற்று. எனவே ஸ்யாமளா எனும் சொல் அழகு எனும் கருத்துப் பெற்றது. தமிழிலும் கருமைநிறக் கண்ணனின் பேரழகு ஆழ்வார்களின் திருப்பாசுரங்களிலும், கம்பராமாயணத்திலே இராமனைக் குறிக்கும் சில பாடல்களிலும் வருவது கண்கூடு. ஆகவே சியாமளாதேவி பேரழகியாகவே இங்கு சிறப்பித்துக் கூறப்படுகிறாள்.
உலகனைத்தும் ஈன்ற அன்னையாகிய பராசக்தியின் வடிவமே சியாமளா, இத்தோத்திர ஆசிரியர் இவ் அம்பாளை முழுமுதற் கடவுளாகவும் மும்மூர்த்திகளுக்கும் மேலானவளாகவும், ஜகத் ஏகமாதாவாகவும் வருணித்துள்ளமை கவனித்தற்பாலது, அம்பாள் முன்னொருகாலத்தே தவத்தில் சிறந்து விளங்கிய அன்பராகிய மாதங்க முனிவரின் திருமகளாகவும் விளங்கியவள். எனவே அம்பாளை மாதங்கி, மாதங்ககன்யா எனப் புலவர் அழைக்கிறார்.
கடவுளை ஆணாகவோ பெண்ணாகவோ, இரண்டும் கலந்த வடிவமாகவோ வருணிக்கும் போது அருட்செல்வர்கள் அப்பரம்பொருளை அழகின் திருவுருவாகவும், கலைகளின் பெரு வடிவமாகவும் வருணிக்கும் வழக்கம் உண்டு. எனவே இத்தோத்திர ஆசிரியரும் சியாமளாதேவியினை கோமளாங்கி (மிக மென்மையான அழகிய வடிவினள்) எனவும், செளந்தர்ய ரத்னாகரே (பேரழகுக் கடலாய் விளங்குபவளே), லாவண்ய நிஸ்யந்த (அழகினைச் சொரிந்து கொண்டிருப்பவள்) எனப் பலவாறு அம்பாளின் பேரழகுக் கோலத்தினைச் சொல்லினாலே உருவகித்து வருணிக்க முயற்சிக்கிறார்.
அம்பாள் நாதவடிவினள், இசைப்பிரியள், வாய்ப்பாட்டினை இசைப்பது மட்டுமன்றி அழகிய வீணையினை என்றும் மிக இனிய நாத இசையேற்பட மீட்டுக் கொண்டிருப்பவள். சியாமளாதேவியின் வடிவமே இசைமயமானது. எனவே ஆசிரியர் இவ் அம்சத்தினை அடிக்கடி நினைவூட்டுகின்றார். அன்னை இனிய வார்த்தைகளையே பேசுபவள் (மஞ்ஜுலவாக் விலாஸா), அவள் சங்கீத ரஸிகை, எனவே அவளுக்கு என்றும் வெற்றி (ஜெய சங்கீத ரஸிகே). அவளின் வீணையைத் தாங்கி மீட்கும் திருக்கரம் குறிப்பிடப்படுகிறது. சாருவீணாதரே (அழகிய வீணையினை மீட்பவள்), ’மாணிக்ய வீணாமுபலாலயந்ம்' (மாணிக்கக்கல் பதித்த வீணையினை மீட்பவள்), வல்லகீபூதகரே (வீணை மீட்கும் திருக்கரத்தவளே) என ஆசிரியர் அம்பாளை வருணித்திருப்பது குறிப்பிடற்பாலது.

இப்பெயர்ப்பட்ட அம்பாளை இசை மூலமும் தேவர்கள் நன்கு வழிபடுகின்றனர். வித்யாதரப் பெண்கள் அவளை யாருடைய மனத்தையும் கவரும் வாத்திய இசையால் பாடுகின்றனர். கின்னரர் வீணைtட்டு அவளை வழிபடு கின்றனர். சங்கீதப் பிரியனான கிருஷ்ணனும் தேவியைப் பூசிக்கிறான்.
அம்பாள் நாதவடிவினள். எனவே சர்வ நாதா தமிகே, சர்வ மந்திராதமிகே காளிகே! (எல்லா மந்திரங்களின் வடிவினளே! காளியே!) என ஆசிரியர் பாடுகின்றார். அம்பாள் வித்தைகளின் வடிவினள் (சர்வ கலாமந்திரே), அவள் கலைச்செல்வி, அவளின் திருக்கரமொன்றிலே அறிவனைத்தினதும் சாரமாகிய புத்தகம் உள்ளது. (ஜ்ஞானசாராத்மிக புஸ்தககர), பிறிதொரு திருக்கரத்திலே பளிங்கினாலான அக்ஷமாலை இலங்குகிறது. இதன் மூலம் உயிர்கள் உய்தற்கான ஞானமுத்திரையினை அம்பாள் காட்டுகிறாள் (ஜ்ஞான முத்ராகரே), இன்னொரு திருக்கரத்திலே கோடரியும் மற்றதிலே பாசமும் உள்ளன. இவை இவளை வழிபடுவோருக்கு ஏற்படும் இன்னல்களையும், இடையூறுகளையும் நீக்குவன, இவளை வழிபடுவோருக்குச் செய்யுள் வடிவிலும், வசன வடிவிலுமான வாக்குத்திறன், கவிதா சக்தி ஆகியன தாமாகவே உண்டாகும்.
சியாமளாதேவியை ஆசிரியர் முதலிலே தியானம் செய்து, பிரார்த்தித்து வழிபடுகிறார். இவ்வருணனை கேசாதிபாதமாகவே அமைந்துள்ளது. அம்பாளின் திருமுகச் சிறப்பு முதலிலே மிக நேர்த்தியாக வருணிக்கப்படுகிறது. தூய தெய்வமாகையால் பிள்ளைகளாகிய உயிர்கள் முதலில் அவளின் திருமுகத்தையே நோக்குவன. தொடர்ந்து திருவுருவச் சிறப்பும், திருப்பாதச் சிறப்பும் வெகு அழகாக வருணிக்கப்படுகின்றன. அன்பர்களைக் காப்பதும், அவர்களுக்கு அருள்புரிவதும் இத்திருப்பாதங்களே. தொடர்ந்து அம்பாளின் கொலுவீற்றிருத்தலும், வேண்டியோர் வேண்டுவதை அவள் வாரி வழங்குவதும் அவளே எல்லாமாக எங்கும் நிறைந்திருப்பதும் வருணிக்கப்படுகின்றன. இவ்வருணனைகள் அனைத்திலும் தேவி பற்றிய மேலான சமய தத்துவக் கருத்துக்கள் பொதிந்துள்ளன.
இத்தோத்திரத்திலுள்ள இலக்கியச் சிறப்பு, குறிப்பாக சொல்லினிமையும் கம்பீரமான நடையும் மிகு கவர்ச்சிகரமானவை. எடுத்துக் காட்டாக 'ஸர்வம்பக்தகரே, பத்மபாஸ்வதகரே, பூரீதரே, சாருவீணாதரே, பக்வபிம்பாதரே, சித்பிரபா மண்டலே புறோல்லஸக் குண்டலே’ போன்ற சொற்றொடர்களைக் குறிப்பிடலாம். இத்தகைய இனிய சந்தங்கள் ஏறக்குறைய ஒவ்வொரு அடியிலும் நன்கு மிளிர்கின்றன. இத்தோத்திரத்திலுள்ள பெரும் சிறப்பு இச் சந்தங்களிலேதான் தங்கியுள்ளதெனவும் கூறப்படுகின்றது.
இத்தோத்திரத்தின் இசைநலமும் மிகவும் சிறப்புடையது. கர்நாடக இசைக்கான பல்வேறு இராகங்களிலே இது நன்கு பாடத்தக்கது. வைணிக வித்வான் ஏ. சுந்தரமய்யர் சுவரங்களுடன் பதிப்பித்துள்ள ஸ்தோத்ர ரத்னாபகரத்ரயம் எனும் நூலில் இதன்
இந்துக் š68ћшні

Page 80
பல்வேறு பகுதிகளும் இருபத்தெட்டுச் சிறப்பான இராகங்களிலே பாடக்கூடியதாக அமைக்கப்பட்டுள்ளன.
அம்பாளின் திருக்கரத்திலுள்ள கிளி ஆசிரியர் கவனத்தை ஈர்த்துள்ளது. இக்கிளியுடன் அம்பாள் விளையாடிக் கொண்டிருக்கிறாள் (லீலாசுகப்பிரியே). இறைவியின் நன்மைபுரியும் கடைக்கண்பார்வை என்றும் கிட்டவேண்டும். எனவே அவர் அவளை என்றும் நன்மை செய்பவள் (கல்யாணி) என்கிறார். தோத்திரத்தின் இறுதிப் பகுதியிலே இறைவியின் பாதுகாப்பினை வேண்டி நிற்கிறார். உலகியல் துன்பங்களிலிருந்து உயிர்களை மீட்பவள் அன்னையாகிய பராசக்தியே. எனவே அவர் அவளுக்குப் பலமுறை வணக்கம் செலுத்துகிறார். பிறைசூடி விளங்கும் பேரழகியாகிய பெருமாட்டியை வணங்குவோருக்கு என்னதான் கிடையாது? எனப் பிரமாதமாக ஆசிரியர் கேட்கிறார் (கிம் நசிதயேத் வயுஹ9 சியாமளம் கோமளம் சந்திரசூடாத்சிதம் தாவகம் த்யாயதஹ) இவ்வாற பலதிறப்பட்ட சிறப்புக்கள் பொருந்தியதாக இத்தோத்திர நூல் இலங்குகின்றது. (வி சி)
ខាំយmon effeលgទ្ធិវិeចាំ
கர்நாடக சங்கீத மும்மூர்த்திகளுள் ஒருவராகிய சியாமா சாஸ்திரிகள் கி.பி. 1782 ஆம் ஆண்டு தஞ்சாவூர் ஜில்லாவில் திருவாரூரில் பிறந்தார். இவரது இயற்பெயர் 'வெங்கட சுப்பிரமணிய சர்ம ஆகும். ஆயினும் சியாம கிருஷ்ண என்ற செல்லப் பெயருடன் அழைக்கப்பட்டார்.
 

54
சியாமா சாஸ்திரிகள் முதன்முதலில் சங்கீதம் பயின்றது தனது மாமாவிடமாகும். பின் சங்கீத சுவாமிகளிடமும் பச்சிமீரியம் ஆதியப்பரிடமும் நிஜ சங்கீதத்தின் தத்துவங்களையும்
தாளசாஸ்திரங்களின் மர்மங்களையும் அறிந்து கொண்டார்.
சமஸ்கிருதத்திலும் தெலுங்கிலும், தமிழிலும் கிருதிகளை இயற்றினார். சியாமகிருஷ்ண’ என்னும் முத்திரையுடன் விளங்கும் இவரது கிருதிகள் கதலி ரவித்திற்கு ஒப்பானவை. இவரால் தோடி, யது குலகாம்போதி, பைரவி ஆகிய இராகங்களில் இயற்றப்பட்ட ஸ்வரஜதிகள் கச்சேரிகளில் பாடத் தகுதி வாய்ந்தவை. மதுரை மீனாட்சி அம்மன் பேரில் நவரத்ன மாலிகை என்னும் பிரசித்தி பெற்ற ஒன்பது கிருதிகளைப் பாடினார்.
சியாமா சாஸ்திரிகள் சுமார் முன்னூறு கிருதிகளை இயற்றி இருக்கிறார். மாஞ்சி, கலகடா, கர்னாடக காபி, சிந்தாமணி போன்ற அபூர்வ இராகங்களில் கிருதிகளை இயற்றி அவ் இராகங்களைப் பிரபல்யப்படுத்தினார். ஆனந்தபைரவி இராகத்தை கையாளுவதில் இவருக்கு நிகர் வேறொரு வருமில்லை. பெரியோர்கள் ஆனந்தபைரவி இராகம் இவரது சொத்து என்று கூறுகின்றனர். தாளபிரஸ்தாரங்களை பற்றி விரிவாக இவர் எழுதியுள்ள கைப்பிரதிகள் இப்பொழுதும் இவர் சந்ததியினரிடம் காணப்படுகின்றன.
இராக முத்திரைகள் இவர் உருப்படிகளில் அழகாக வருவதைக் காணலாம்.
ஸ்வரஸாஹித்யம் என்னும் ព្រូថាgយទf * LLIFILOFT சாஸ்திரிகளால் பிரபல்யம் ஆனது எனக் கூறினால் மிகையாகாது. ஸ்வர ஸாஹித்தியத்துடன் காணப்படும் இவரது கிருதிகள் பின்வருமாறு. . ܡ
நின்னே நம்மினானு - தோடி
i.
2. ஒஜகதம்பா - ஆனந்தபைரவி 3. துரஸ்க க்ருப ஜூசி — ខ្យល់ថាពិ 4. பாஹி பூரீகிரிராஜஸபதே - ஆனந்தபைரவி 5. மரிவேஹேகதி - ஆனந்தபைரவி
8. பாலிஞ்சு காமாகூதி - மத்யமாவதி
பொப்பில கேசவையா என்னும் சங்கீத வித்துவானுடன் தஞ்சை சமஸ்தானத்தில் இசைப் போட்டி ஏற்பட்ட காலத்தில் சாஸ்திரிகளின் தாளஞானமே இவருக்கு வெற்றியைக் கொடுத்தது. போட்டியில் கேசவையா அவர்கள் ஸிம்ஹந்தன தாளத்தில் ஒரு பல்லவியைப் பாடினார். சியாமாசாஸ்திரிகள் உடனே அப்பல்லவியைத் திருப்பிப் பாடி பின்னர் சரபந்தன தாளத்தில் ஒரு பல்லவியைப் பாடினார். இத்தாளம் ஒரு புதிய தாளமாகும். சாஸ்திரிகள் மூலமாகத்தான் இத்தாளம் அறிமுகப் படுத்தப்பட்டது. 79 அட்சரங்களை இத்தாளம் கொண்டது.

Page 81
விலோமசாபு தாளத்தையும் இவரே பிரபல்யப்படுத்தினார். இவரது கிருதிகளில் 5 எழுத்துக்களை உடைய பல சொற்கள் இயல்பாக வருகின்றன. (அனுதினமு, கதியனுசு, கமலபவ, கமலமுகி, கமலயுகி போன்றன) இரண்டு தாளங்களில் பொருத்தமாகப் பாடக்கூடிய கிருதிகளையும் இவர் இயற்றியுள்ளார். உ+ம் சங்கரி சங்குரு என்ற ஸாவேரி இராகத்தில் அமைந்த கிருதியை ரூபகதாளத்திலும், திஸ்ரகதி ஆதிதாளத்திலும் பாடலாம். சொற்சுவை, பொருட்சுவை, இசைச்சுவை, பாவபுஷ்டி, அர்த்த புஷ்டிகளுடன் கூடிய கிருதிகளை இயற்றிய சியாமா சாஸ்திரிகள் கி.பி. 1827 ஆம் ஆண்டு இவ்வுலகை நீத்தார். (தே. ஹ.)
சிரஞ்சீவி
சிரஞ்சீவி என்பதற்கு மரணமில்லாமல் என்றும் வாழ்பவர்கள் என்பது பொருள். சிரஞ்சீவியர் என்று எழுவரைக்
குறிப்பிடுவார்கள்.
1. அசுவத்தாமன் 2. LD5TU65 3. வியாசன் 4. அனுமான் 5. விபீஷணன் 6. கிருபாசாரியன்
7. பரசுராமன்
கிருபரை விடுத்து மார்க்கண்டேயரை சிரஞ்சீவிகளில் ஒருவராக இணைத்துக் கொள்வதுமுண்டு.
1. அசுவத்தாமன்
பாரவத்வாஜர் என்ற அந்தணனின் குமாரன். துரோணர் - கிருபருடைய சகோதரியாகிய கிருபியை மணந்து அசுவத்தாமனைப் பெற்றெடுத்தார். கிருஷ்ணர் பாண்டவர் களுக்காகத் தூது சென்ற போது துர்யோதனன் மனதில் அசுவத்தாமனைப் பற்றித் தவறான எண்ண விதைகளைத் தூவினான் . குருஷேத்திரப் போரின் முடிவில் கெளரவர்கள் தோற்றனர்- பாண்டவர்கள் வெற்றி பெற்றனர். ஆனால் பாண்டவர்கள் பெற்ற வெற்றி அதர்மமானது, நீதிமுறையானதன்று. என்று வெகுண்டான் அசுவத்தாமன், தனது தந்தையான துரோணரைக் கொல்லப் பாண்டவர்கள் கையாண்டமுறை அசுவத்தாமனைச் சினத்தின் உச்சியில் தள்ளியது. அதனால் அறமுறைக்குப் புறம்பாக பாசறையில் உறங்கிக் கொண்டிருந்த பாண்டவர்களின் மைந்தர்களாகிய உபபாண்டவர்களையும், திருஷ்டத்யும்னனையும் பாஞ்சாலர் களையும் வெட்டிக் கொன்றான்.
இதனை அறிந்த பாண்டவர்கள் அசுவத்தாமனைத் தேடி கங்கைக் கரையில் வியாசருக்குப் பக்கத்தில் மறைவாக இருந்த அசுவத்தாமனைக் கண்டனர். அசுவத்தாமன் பாண்டவர்களையும் பரந்தாமனையும் கண்டு மெதுவாகக் கீழிறங்கி வந்து ஒரு துரும்பை எடுத்து “இது பாண்டவ வம்சம்தை முற்றிலும்

55
அழிப்பதாக” என்று மந்திரம் கூறி அஸ்திரத்தை விட்டான். அது உத்தகையின் கருப்பத்திலிருந்த பிண்டத்தை தாக்கச் சென்றது. ஆனால் கண்ணபரமாத்மாவின் அருளால் கரு காக்கப்பட்டது. பரீகூழித்துப் பிறந்தான்- பாண்டவ வம்சம் தழைத்தது.
அசுவத்தாமன் தான் தோற்றதற்கு அடையாளமாக தனது தலையிலிருந்த ஜோதி மணியைப் பீமனிடம் தந்து விட்டு தவம் புரிய வனம் சென்றான்.
2. மகாபலி
விதோசனன் என்னும் அசுரனுக்குத் தேவி என்பவளிடம் பிறந்தவன். பிரகலாதனின் பேரன். இவன் சிறந்த வீரன். இவன் ஒரு யாகம் செய்ய அதிலிருந்து குதிரை, தேர், சிம்மத்துவசம், தனுசு, இரண்டு அம்பறாத் துணி, ஒரு கவசம் முதலியன உண்டாயின. இவனுக்கு பிரகலாதன் கவசம் அளித்தான். சுக்கிரன் சங்கம் கொடுத்தான். அவைகளைக் கொண்டு விண்ணுலகத்தையும் வென்று தன்னடிக் கீழ்ப்படுத்தினான்.
ஒருமுறை இவன் மிகப்பெரிய அஸ்வமேதயாகம் செய்து வேண்டுபவர்களுக்கு இல்லையென்னாது தானாதிகளை வழங்கினான். தனக்கு நிகர் யாருமில்லையெனத் தருக்குக் கொண்டான். மகாவிஷ்ணு காசியப்பருக்கும், அதிதிக்கும் வாமனராய் அவதரித்தார். குள்ள உருவம் கொண்ட வாமன அந்தணர் பிருகு வரிஷ கூேடித்திரத்திற்குச் சென்று மகாபலியிடம் மூன்றடி மண் யாசித்தார். இது திருமாலின் மாயை யென்றுணர்ந்த அசுரப் புரோகிதனாகிய சுக்கிராச்சாரியார் மாபலியைத் தடுத்தார். அதையும் மீறி தான் சொன்ன வண்ணம் வாமனருக்கு மூன்றடி மண்ணை நீர்வார்த்துத் தத்தம் செய்யும் பொழுது, சுக்கிரன் வண்டுருவாக கெண்டியின் துவாரத்தை நீர்விழாது அடைத்தான். சுக்கிரன் செயலை உணர்ந்த வாமனன் அங்கிருந்த துரும்பு ஒன்றால் கெண்டியின் துவாரத்தைக் குத்த வண்டுருவான சுக்கிரனின் கண் குருடாயிற்று.
பலியின் நிலதானத்தை ஏற்க வாமனர் திரிவிக்ரம மூர்த்தியாக விஸ்வரூபம் கொண்டு ஒரடியால் நிலத்தையும், மற்றைய அடியால் விண்ணுலகத்தையும் அளந்து, மூன்றாவது அடிக்கு எது இடம் என்று வினவ மகாபலி தனது சிரசைக் காட்டினான். வாமனனும் தனது திருவடியை பலியின் சிரசில்
வைத்து அழுத்தப் பாதாள உலகம் சென்றான் மகாபலி.
திருமால் மகாபலியின் செயலை மெச்சி, சாவர்ணிமன் வந்தரத்தில் இந்திரனாக வரந்தந்து, இந்திரனாகும் வரையில் பாதாளவுலகத்தில் சகல இன்பங்களையும் அனுபவிக்கச் செய்தார். பாட்டனாகிய பிரகலாதனுடன் இருக்கும் மகாபலி விந்தியா வலி என்னும் தேவியுடன் நூறு குமாரர்களைப் பெற்று சிறப்பாக இருக்கும் பெருமை பெற்றான். அவர்களுள் வானாசுரன் மூத்தவன். மகாபலி எலியாயிருந்து அணைய

Page 82
இருந்த சிவாலயத்து விளக்கைத் தூண்டியதால் சிவனருள் பெற்று மூவுலகிற்கும் சக்கிரவர்த்தியாயினான் என்றுங் கூறுவர்.
3. வியாசர்
பராசரருக்கு சத்தியவதியிடம் பிறந்தவர். வேதத்தை நான்காக வகுத்ததனால் வியாசன் என்று பெயர் பெற்றார்
சந்தனுவின் மகன் விசித்திரவீரியன் மரணமடைய, சந்ததிக்காகத் தாயாகிய சத்தியவதியியன் ஆணையின் வண்ணம், காசிராசன் பெண்களாகிய அம்பிகை, அம்பாலிகை, அவர்களது பணிப்பெண்ணையும் கூடி திருதராட்டினன், பாண்டு, விதுரன் ஆகியவர்களைப் பெற்றார். பாண்டவர்கள் வனவாசம் செய்யும் பொழுதெல்லாம் தோன்றி அவர்களுக்கு அறம் உரைத்தவர். -
வியாசர் விஷ்ணுவின் மறு வடிவம். இதனை விஷ்ணு சஹஸ்ரநாமம். “வ்யாஸாய விஷ்ணு ரூபாய - வ்யாஸரூபாய விஷ்ணவே என்று போற்றுகின்றது.
வசிஷ்டருடைய கொள்ளுப் பேரரும், சக்தியின் பேரரும் பராசரருடைய புத்திரரும், சுகருடைய தந்தையுமாகிய தபோதனர் ៣uល.
கிருதாசி என்ற அப்சரகன்னிகையை கிளிவடிவத்தில் கூட சுகர் பிறந்தார். பராசரர் 12 ஆண்டுகள் தாயின் கர்ப்பத்தில் தங்கி மாயை நீங்கியவர்.
நைமிசாரண்ய முனிவர்களிடம் கேசவனே பரம் என்று கூற, இதனை காசித் தலத்திற்குச் சென்று கூறும் என்று முனிவர்கள் கூற, அவ்வாறே காசியையடைந்து கூற, கையும் நாவும் வலுவிழந்தன. விஷ்ணு பகவான் தோன்றி, சிவபெருமானே பரம் என்று உணர்த்த, சிவனைத் துதி செய்து வலுவிழந்த கையையும், நாவையும் மீளப் பெற்றவர்.
மகாபாரத இதிகாசத்தை உலகத்திற்குத் தந்தவர் வியாசர். பாரதத்தைத் தனது மனதில் யாத்தபின், எவ்வாறு உலகிற்குத் தருவது என்று சிந்திக்கும் பொழுது பிரமதேவன் தோன்றி விநாயகரைப் பிரார்த்தனை செய்யுமாறு கூறி மறைந்தார். வியாசரும் விநாயகரைத் தியானிக்க விநாயகர் தோன்றினார். கணநாதரே! பாரதத்தை நான் சொல்லச் சொல்ல நீர் எழுத வேண்டும் என்று வேண்டினார். விநாயகரும் அதற்கு இசைந்து, "வியாசரே! எழுதும் பொழுது எனது எழுது கோல் நிற்காது . அதற்கேற்ப வேகமாகச் சொல்லிக் கொண்டு செல்ல வேண்டும்” என்றார்.
இந்தக் கடுமையான நிபந்தனையை ஏற்றுக் கொண்ட வியாசரும் "பெருமானே! நீர் பாடலின் பொருளை அறிந்து
எழுத வேண்டும்” என்று எதிர் நிபந்தனையிட்டார். கணபதியும்

56
இசைந்தார். பாரதம் ஆரம்பமாகியது. ஆங்காங்கு பொருள் விளங்காத முடிச்சுக்களை வியாசர் அமைக்க, விநாயகர் யோசிக்க, அந்தக் காலத்தைப் பயன்படுத்திக் கொண்டு நூறு, நூறு பாடல்களை மனத்தில் கவனம் செய்தார். மேருவையே ஏடாக்கி , தனது கோட்டையே எழுத்தானியாக்கி விநாயகர் பாரதத்தை எழுதினார் என்று கூறுவர்.
அக்காலத்தில் அச்சுமுறை கிடையாது. ஞாபக சக்தியே நூல்கள் பரவ ஆதாரமாக இருந்தது. வியாசர் தமது பாரதத்தை முதன் முதலாக சுகருக்குக் கூறினார். பின்பு தன் சீடர்கள் பலருக்கும் கூறிவைத்தார்.
தேவர்களுக்குப் பாரதம் சொன்னவர் நாரதர். கந்தர்வர்களுக்கும், இராக்ஷசர்களுக்கும், யக்ஷர்களுக்கும் கூறியவர் சுகர். மனிதர்களுக்குச் சொன்னவர் வியாசருடைய தலைமைச் சீடரும், தரும சீலரும், அறிஞருமான வைசம்பாயனர். பரீட்கூழித்து மன்னன் மகன் ஜனமேஜனன் நடத்திய யாகத்தில் மன்னனது வேண்டுகோளுக்கு இணங்க வைசம்பாயனர் பாரதத்தைக் கூறினார். வைசம்பாயனர் கூறிய பாரதத்தை
சூதமுனிவர் நைமிசாரண்ய முனிவர்களுக்குக் கூறினார்.
இந்த வியாசர் வைவஸ்வத மன்வந்தரத்தில் இருபத் தெட்டாவது துவாபரயுகத்தில் இருந்தவர். இவ்வகையாக அந்தந்த மன்வந்திரங்களில் 28 வியாசர்கள் இருந்தனர். முதல் துவாபர யுகத்தில் சுவாயம்புமனு வியாசர். 2ஆவதில் மாசாமதி 3 இல் வசன் 4 இல் அந்தணன். 5 இல் சூரியன் 6இல் வசிட்டன், 7இல் இந்திரன், 8 இல் வசிட்டன், 9இல் அச்சுதன், 10 இல் திரிதாமன், 1இல் இடபன், 12இல் சுததேசன், 13இல் தருமன், 14இல் தரக்கு, 15இல் திரியாருணி, 16இல் தனஞ்சயன், 7இல் கேமகன், 18இல் ருதுஞ்சயன் 19இல் பரத்துவாசன், 20இல் கெளதமன், 21இல் விவச்சுவான், 22இல் குகூrமாயணன், 23இல் திரணவிந்து 24இல் வான்மீகி, 25இல் சத்தி, 26இல் பராசரன், 27ஆவதில் சாதுக்கன்னன் 28ஆவது துவாபரயுகத்தில் வியாதர் வியாசராகவும் விளங்கினர்.
இதோபோல 28 கலியுகங்களிலும் வியாசகர்கள் வருமாறு: முதல் கலியுகத்தில் சுரதன், 2இல் தமனன், 3இல் சுகோத்திரன், 4இல் கங்கணன், 5இல் உலோகாகி, 6இல் யோகி,7இல் இந்திரன், 8இல் வசகிடவ்யன், 9இல் திதிவாகன், 10இல் விடபன், 1இல் பிருகு, 12இல் உக்கிரபதன், 13இல் அத்திரி, 14இல் வாலி, 15இல் கோதமன், 16இல் கிரீடன், 17இல் கோகன்னன், 18இல் காவாசரன், 19இல் சிசுண்டி, 20இல் சடாமலியன், 21இல் அட்டகாசன், 22இல் தாருகன் 23இல் இலாங்கலி , 24இல் சுவேதன், 25இல் சூலி, 26இல் திண்டாமுண்டி,27இல் சயிட்டுணு, 28ஆவது கலியுகத்தில் சோமதன்மன் வியாசர். இவர்கள் வியாசகர்களாய் இருந்து வேதம் முதலியவைகளை மாணவர்களுக்கு உபதேசிப்பர். ஒவ்வொருவருக்கும் நால்வர் மாணாக்கர். இவர்கள் சிரஞ்சீவிகள்.

Page 83
பராசரமுனிவருடைய புதல்வராகிய வேத வியாசர் வேதங்கள் நான்கையும் சுமந்துவிற்கும், ஜைமினிக்கும், பைலருக்கும், சுகருக்கும், வைசம்பாயனருக்கும் உபதேசித்தார்.
பராசரமுனிவர் ஒருசமயம் யமுனை ஆற்றைக் கடக்கச் செல்கையில் செம்படவப் பெண்ணான மச்சகந்தியைக் கண்டு அவள் மீது வீசும் புலால் மணத்தைப் போக்கி ஒரு யோசனை தூரம் மணம் வீசும் பரிமளகந்தியாக்கி, ஒரு தீவில் அவளைக் கூடி , வியாசரைப் பெற்றார். அதனால் வியாசருக்குக் கிருஷ்ண வையம்பாயனர் என்ற பெயர் ஏற்பட்டது.
4. அனுமான்
திரேதாயுகத்தில் வாழ்ந்த சிவபக்தன் ஒருவன் நீண்டநாள் மகப்பேறு இல்லாமையால் சிவனைக் குறித்துக் கடுந்தவம் இயற்றினான். அதன் பேறாக புஞ்சிதங்தலை என்னும் அப்சரஸ் ஒரு பெண் மகவாகப் பிறந்தாள். அவளுக்கு அஞ்சனையென்று பெயரிட்டு வளர்த்து வந்தான். அவள் பருவ வயதுற்றதும், கேசரி என்ற வாணர வீரன் ஒருவனைக் காதலித்து மணந்தாள். நீண்டநாட்கள் அவர்களுக்கும் மகப்பேறில்லை. அதனால் குறத்தியிடம் குறி கேட்டாள். தருமதேவதையே குறத்தியாக வந்து திருவேங்கட மலைக்குச் சென்று தவம் செய்தால் குலம் விளங்கக் குமரன் பிறப்பான் என்று குறி கூறினாள்.
அவ்வண்ணமே அஞ்சனாதேவி திருவேங்கட மலைக்குச் சென்று ஆகாய கங்கையில் நீராடிக் கடுந்தவம் இருந்தாள். உண்ணாமல் உறங்காமல் தேவி நோற்கும் கடுந்தவத்தைக் கண்டு வாயுதேவன் மனம் இரங்கி ஒவ்வொருநாளும் கனி ஒன்றை அவள் கரத்தில் விழச் செய்தான். அதனை பகவத் பிரசாதமாகக் கருதி அஞ்சனை உண்டு வந்தாள்.
ஒருநாள் சிவபெருமானும், பார்வதியும் மந்திகளாக உருமாறி மலர்களையும், கணிகளையும் பறித்து விளையாடினர். அப்பொழுது ஈசனின் அழகு ஒர் கனியாக வெளிப்பட்டது. அக்கனியை வாயுதேவன் அஞ்சனாதேவியிடம் சேர்ப்பிக்க அவள் அதனை உண்டதால்- ருத்த அம்சமாகவும் வாயு பகவான் அம்சமாகவும் அவதரித்தவனே அஞ்சனையின் மைந்தனான ஆஞ்சனேயன் ஆஞ்சனேயன் பிறந்து வளர்கையில் சிவந்த கனியென்று சூரியனைப் பறிக்க சூரியமண்டலத்திற்குத் தாவினான். அப்பொழுது இந்திரன் தனது வச்சிராயுதத்தால் அடிக்கத் தாடை முறிந்தது. ஹனு என்றால் தாடை தடை சிதைவுற்றதால் ஹனுமான் என்ற பெயர் வழங்கலாயிற்று.
சூரியனின் இல்லத்திற்கு முன்னே சென்று நவ வியாகரணங்களையும் கற்றவர். அனுமன் வாயுவின் அம்சமான பீமனின் சகோதரர்.
குருக்ஷேத்திரப் போரில் அர்ச்சுனனின் இரதத்தில் கொடியாக இருந்தவர்.

சிறு குழந்தையாக இருந்த பொழுது குறும்புகள் செய்து வனத்தில் இருந்த முனிவர்களுக்குத் துன்பம் தந்ததால், இராமனைச் சந்திக்குமளவும் 'உன்பலம் உனக்குத் தெரியாதிருப்பதாக என்ற சாபம் பெற்றவன்.
சுக்கிரீவனுக்கு நண்பனாகவும் , அமைச்சனாகவும் இருந்து வனவாச காலத்தில் இராம இலக்குவனைச் சந்தித்து அவர்களுக்கு அடிமையானவர்.
ஜானகியைத் தேடச் சென்ற காலத்து பாலைநிலத்தின்
வழியாகச் செல்ல அந்த வெம்மைக்கு ஆற்றாது சாம்பனுடன் ஒரு பாலத்தில் புகுந்து வழிதெரியாமல் திகைக்கையில் மற்றை வானர வீரர்களைத் தனது வாலைப் பிடித்துக் கொள்ளுமாறு கூறி, சுயம் பிரபையைக் கண்டு அவளது சாபத்தைப் போக்கி, சுவர்க்கத்தில் செலுத்திவிட்டு, சம்பாதியால் வழிமறித்து மகேந்திர மலையேறி கடல் தாவி வழிமறித்த மைந்நாகமலையை வெற்றி கொண்டு, அங்காரதாரை, சாயாக் கிரகி என்ற அரக்கியர்களைக் கொன்று, இலங்கையிலுள்ள பவளமலையில் குதித்து இலங்கனியை அடைந்து அவளால் உளவறிந்து, சீதையைத் தேடுகையில் கும்பகர்ணன் மாளிகையை அடைந்து அவன் உறங்குகையில் வெளிப்படும் சுவாசக் காற்றினால் அலைப்புண்டு, அசோகவனத்தில் சீதாதேவியைக் கண்டு பணிந்து இராமபிரானின் கணையாழியைத் தந்து தன் குறுகிய உருவத்தை விடுத்து விஸ்வரூபம் காட்டி அன்னையைத் தேற்றினான். ஜானகி தேவியும் அநுமனை
பாழிய பனைத் தோள் வீர துணிவிலேன் பரிவு தீர்த்த
வாழிய வள்ளலே யான் மறுவிலா மனத்தேன் எள்ளில்
ஊழியோர் பகலா ஒதும் ஆண்டெலாம் உலகம் ஏழும்
ஏழும் வீவுற்ற ஞான்றும் இன்றென இருத்தி என்று வாழ்த்தியதால் சிரஞ்சீவித் தன்மையைப் பெற்று, அன்னையிடம் சூடாமணியைப் பெற்றுக் கொண்டு அசோக வனத்தை அழித்து சம்புமாலி, பஞ்சசேநாபதிகள், அசஷகுமாரன். இவர்களைக் கொன்று இந்திரசித்தனின் பிரம்மாஸ்திரத்தில் கட்டுண்டு இராவணன் அவையில் தனது வாலையே சிம்மாசனமாக்கி அவனைவிட உயர் இடத்தில் இருந்து கொண்டு இராவணனிடம் பேச, தசமுகன் கோபித்து அனுமன் வாலுக்குத் தீயிடுவிக்க என அந்தத் தீயையே கொண்டு இலங்கையை எரியூட்டி மீண்டு, இராமரை வணங்கி நிகழ்ந்ததைச் சொன்னான்.
சேதுபந்தனம் செய்து இலங்கைக்கு இராமருடன் யுத்தத்தில்
சென்று அரும்பெரும் செயல்களைச் செய்தவர் அனுமன்.
ប្រថ្វាស័ក្ត រ៉ែ (UTិ ព្រោយបង់ ស្វ៊ីតាលី ឆ្នាំ மூர்ச்சையடைந்த இளைய பெருமானை தாய்க்குரங்கு குட்டியைத் தூக்கிச் செல்வது போல் சென்று காத்தவர் அனுமான். இராமருக்கு வாகனமாகவும் விளக்கியவர். சஞ்சீவிமலையைக் கொண்டுவந்து இலக்குவனை இறப்பிலிருந்து காத்தவர். மாயா சீதையைக் கண்டு புலம்பிய இராமருக்கு உண்மையைப்
இந்துக் issa Faċċesaffariji

Page 84
புலப்படுத்தியவர். விபீஷணனுடன் சென்று சீதாபிராட்டியை இராமனிடம் சேர்த்தவர். பரதனுக்கு றுநீ இராகவனின் வரலாறு அறிவித்து தீயில் புகாவண்ணம் செய்து இராமனால் சிரஞ்சீவி என வாழ்த்தப் பெற்றவர். பஞ்சபூதங்களால் அழியாதவர். பெண் இன்பம் இல்லாத நைஷ்டிகப் பிரம்மச்சாரி. இராவணனைக் கொன்ற பிரம்மஹத்தி தோஷம் தீர இராமேஸ்வரத்தில் பூஜை செய்வதற்காக காசியிலிருந்து இலிங்கத்தைக் கொணர்ந்து இராமருக்கு அளித்தவர். கால நேமியை வதைத்தவர். மயில்ராவணனைக் கொன்றவர். சதகண்டன் உதிரத்திற் பிறந்த சதகண்டர்களை வதைக்க குரங்கு, நரசிம்மம், கருடன், வராகம், குதிரை ஆகியவற்றின் உருவைத் தாங்கி பஞ்சமுக ஆஞ்சநேயராக உருக்கொண்டவர். இராமரது பணி முடித்து கதலி வனத்தில் தவம் புரிந்தவர். உருக்குமணியைச் சீதையாகவும், கண்ணபிரானை இராமனாகவும் கண்டு சத்யபாமையின் கர்வத்தை அடக்கியவர். பாரிஜாத மலரிற்காக குபேரனது வனத்திற்கு பீமன் சென்ற பொழுது தனது வாலைத் தூக்குமாறு கூற இயலாமையினால் பீமன் வேதனையுறத் தான் பீமனது தமையன் மாருதி எனக் கூறி பீமனை மகிழ்வித்தவர்.
மாருதி, அஞ்சனை புதல்வன், வாயு புத்திரன், வாணர வீரன், ஆஞ்சநேயன், கேசரி புத்திரன் - எனப் பல திருநாமங்களைத் தாங்கிய பெருவீரன்.
5. விபீஷணன்
விச்ரவசுவிற்கு கேசசியிடம் பிறந்தவன். இராவணனுக்கும் கும்பகர்ணனிற்கும் இளையோன். பிரமனை நோக்கித் தவம் புரிந்து தரும சிந்தை நீங்காதிருக்க வரம் பெற்றவன். புலத்திய மரபினன்.
சீதையைக் கவர்ந்தது தவறு என்று இராவணனுக்குப் பலமுறை கூறியும், தூது வந்த அனுமனைக் கொல்லல் அறமற்ற செயல் என்றும் தசமுகனுக்கு இடித்துக் கூவும் அறவழி நின்றவன். இராம, இராவண யுத்தத்தில் அறம் துறந்த தமையனிடமிருந்து விலகி இராமபிரானைச் சரணாகதி அடைந்த தூயவன். பிரம்மாஸ்திரத்தில் மூர்ச்சையடைந்த இராம, இலக்குவணனின் நிலைகண்டு துயருற்று சாம்புவந்தனிடம் சென்று யோசித்து மருந்து மலையை அனுமனைக் கொண்டு வரச்செய்தவன். மாயா சீதையைக் கண்டு துயருற்ற இராகவனுக்கு இராவணனின் மாயச் செய்கை இதுவென்று கூறியவன். இந்திரசித்தனின் தேரினைக் கதையால் அடித்து நொருக்கியவர். இராவணனுக்கு நீர்க்கடன் செய்து இலக்குமணரால் இலங்காதிபதியாகப் பட்டம் சூட்டப் பெற்றவன். சீதைபிராட்டியை அலங்கரிப்பித்து புஷ்பக விமானத்தில் ஏற்றி இராகவனிடம் சேர்ப்பித்தவர். இராமபிரானுடன் அயோத்தி சென்று மீளுகையில் விஷ்ணு மூர்த்தியின் விக்கிரகத்தையும், விமானத்தையும் பெற்று இலங்கை மீளும் பொழுது, பூஜைகாலமாகியதால் திருவரங்கத்தில் வைத்து பூஜை செய்துவிட்டு எடுக்க வராததால் மனம் தளர்ந்து பெருமான் கட்டளைப்படி ஆண்டிற்கொருமுறை
இந்துக் B6F5flagså

திருவரங்கம் சென்று திரிசனம் புரிந்து வருகிறார். இவருடைய மகளே அசோகவனத்தில் சீதாதேவிக்கு உற்ற தோழியாக விளங்கிய திரிசடை
6. கிருபாசாரியன்
இவர் கெளதமரின் வம்சத்தில் ஏகாதச ருத்ரர் அம்சத்தில் பிறந்தவர். சதாநந்தருக்கும், அரம்பைக்கும் பிறந்தவர் என்றும், சாத்து வந்த மகரிஷியின் புதல்வன் என்றும், சிரத்துவானின் புத்திரனென்றும் கூறுவர். தாய் சத்யத்திருதி என்பர். இவரையும் இவரது தங்கை கிருபியையும் சந்தனு மன்னன் வளர்த்து வந்தான்.
கெளரவர்களுக்கும் பாண்டவர்களுக்கும் ஆசான். குருஷேத்திர யுத்த முடிவில் எவ்வளவு எடுத்துக் கூறியும் கேளாத அசுவத்தாமனுக்குத் துணையாகச் சென்று பாஞ்சாலர்களையும், உபபாண்டவர்களையும் வெட்டிக் கொன்றவர்.
7. பரசுராமர்
பிருகு வம்சத்தில் பிறந்த ஜமதக்னி முனிவருக்கு இரேணுகையிடம் பிறந்தவர். விஷ்ணுவின் அம்சம். கூடித்திரியர்களின் அழிவு வேண்டி சிவபெருமானை நோக்கித் தவமிருக்கப் புலையர் உருவில் சிவபெருமான் வர அவருடன் பரசுராமர் மோத, புலையர் அவரை வருத்தினார். வருந்திய ஜமதக்னி புதல்வனுக்குத் தன் உண்மை உருவைக் காட்டி பரசு ஒன்றையும் வழங்கி பரசுராமராக விளங்க சிவன் அருள் புரிந்தார்.
மிதிலையில் சீதையை மணம் முடித்து அயோத்தி மீளும் இராமபிரானைத் தடுத்து நிறுத்தி, “ஜனகனிடம் இருந்தது ஒடிந்த வில் - இதோ என்னிடம் இருப்பது விஷ்ணு தனுசு. இதனை முறித்து விட்டுச் செல் ” என்று ஆணவமிகுதியால் கூற இராமபிரானும் வில்லுக்கு இலக்கு எது? என்று கேட்கத் தனது தவத்தையே இலக்காக்கி இழந்தவர்.
கர்ணனுக்கு அரிய பல வில் வித்தைகளைக் கற்பித்து. அவன் அந்தணனில்லை, கூடித்திரியன் என்று அறிந்து கோபம் கொண்டு, தக்க சமயத்தில் வில்வித்தை பயன்படாதொழியட்டும் என்று கர்ணனுக்குச் சாபம் கொடுத்தவர்.
காசிராஜனின் பெண் அம்பையின் பொருட்டு பீஷ்மரிடம் போரிட்டுத் தோற்றவர்.
தந்தையின் சொற்படி தாயாகிய இரேணுகையைக் கொன்று, தந்தையை வணங்க, ஜமதக்னி முனிவரும் “மைந்தனே! வேண்டும் வரத்தைக் கேள்’ என்று கூற, சகோதரர்கள் தபோதனர்களாகவும், தாய் கற்புக் கெடாது உயிர்பெறவும் வரம் வேண்டிப் பெற்றார்.
கார்த்த வீரியனின் புதல்வர்கள் ஜமதக்னி முனிவரைக் கொன்று, எதிர்த்த இரேணுகையையும் 21 முறை அடிக்க, தன் புதல்வனான பரசுராமன் வரும் வரையில் உயிர்தாங்கி 21முறை

Page 85
தனது மார்பில் அறைந்து கொண்டு, உயிர் நீத்தார். அதனால் 21
கூடித்திரியத் தலைமுறையை அழித்து சமந்த பஞ்சகம்'என்ற ஐந்து இரத்த மடுக்களை உண்டாக்கினார்.
பரசுராமர் கூடித்திரியர்களை வென்று பெற்ற பூமியை காசிபருக்குத் தானம் செய்தார். தானம் செய்த பூமியில் பரசுராமர் இருக்கக் கூடாதென்று காசியர் கூற தென்கரை நோக்கிச் சென்று சமுத்திரத்தில் தனது பரசு என்னும் ஆயுதத்தை எறிய அங்கு ஒரு பூமி உண்டாயிற்று. அந்த இடத்திற்கு பரசுராம பூமி என்று பெயரிடப்பட்டது. தற்காலத்தில் கேரளநாடு என்ற பெயருடன் விளங்குகின்றது.
கார்த்த வீரியனைக் கொன்றதால் தந்தை சொற்படி ஒரு ஆண்டு தீர்த்த யாத்திரை சென்றவர். கோபம் மிக்கவர். இனிவரப் போகும் மன்வந்தரத்தில் சப்தரிஷிகளில் ஒருவராகப் போகிறவர்.
(6). 6061.
சிரார்த்தம்
ஒருவன் இறந்தால் அவனுடைய புத்திரன் தந்தை பட்ட கடன்களைத் தீர்த்து, அவனுடைய பூர்த்தியாகாத ஆசைகளைப் பூர்த்தி செய்து, தன்னுடைய நன்றியை வெளிப்படுத்த வேண்டும். தர்ம சாஸ்த்திரங்களில் விதித்துள்ளபடி அந்திமக் கிரியை களையும் பின் தொடர்ந்து பித்ரு பூஜைகயையும், சிரார்த்தம், தர்ப்பணம் முதலிய முறைகளில் தவறாமல் செய்து வர வேண்டும். சிரத்தையுடன் செய்வதுதான் சிரார்த்தம்.
அச்ரத்யா ஹரதம் தத்தம் தபஸ்தப்தம் க்ருதஞ்சயத் அஸ்தித்யுச்யதே பார்த்த நசதத் ப்ரேத்ய நோ இஹ
சிரத்தையில்லாமல் செய்யப்பட்ட தவமும் அனுஷ்டிக்கப் பட்ட கருமமும் எதுவோ அது அஸத் என்று கூறப்படுகின்றது. அது வேறெங்கு சென்றும் பயன்படாது. இவ்வுலகிலும் பயன்படாது (கீதை 17-28).
நலம் செய்யும் சிரார்த்தம், தர்ப்பணம் முதலிய பித்ருகாரியங்கள் எவரை உத்தேசித்துச் செய்கிறோமோ அவர் பிதிர் உலகத்தில் இருக்கலாம். அல்லது தேவ உலகத்தில் இருக்கலாம். ஏன் மனித உலகில் நமது வீட்டிலேயே கூட மீண்டும் பிறந்திருக்கலாம். அல்லது வேறு எந்தத் தாழ்ந்த நிலையிலும் இருக்கலாம். அது நமக்குத் தெரியாது. ஆனால் உயர்ந்த நிலையில் இருந்தால் நம்மைக் காத்து ஆசி வழங்குவார். தாழ்ந்த நிலையில் இருந்தால் நம்முடைய பூஜைகளும், பிரார்த்தனைகளும் அவர் கடைத்தேற உதவி புரியும் என்பது சாத்திரங்களின் துணிபு. இல்லறத்தோனின் ஐந்து கடமைகளுள் தென் புலத்தாராகிய பிதிரர்களுக்குரிய காரியங்களைச் செய்வதும் ஒன்று.
தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்கு ஜம்புலத்தா றோம்பல் தலை, (குறள் 43)
5

பரஉலகம், பித்ருஉலகம் என்பவற்றில் பிதிர்கள் வசிக்கின்றனர். அவர்கள் வஸாருத்திரர், ஆதித்யர் என்ற பிரிவில் அடங்குவர். உடல் அழிந்தாலும், பிரேத நிலையில் சில காலம் இருந்து, சந்ததிகள் செய்யும் நற்கருமங்களின் பயனாகப் பிரேத நிலை நீங்கியவராய் பிதிர் உலகத்தில் பிதிரர்கள், வஸாருத்திரர், ஆதித்யர் என்ற மூன்று பிரிவுகளில் இடம் பெறுவர். முறைப்படி நாம் செய்யும் கர்மாக்களினால் எளிதில் மகிழ்ந்து நமக்கு அணுக்கிரகம் செய்வார்கள்.
நேரிடைச் சந்ததியினரான பிள்ளை, பேரன், சகோதரன் முதலானோரும், அதே கோத்திரத்தில் பிறந்து ஏழு தலை முறைக்குட் பட்ட ஞாதிகளும், கோத்திரம் மாறிய பெண் மூலமான சந்ததியினரும் சிரார்த்தம் செய்யலாம்.
சிரார்த்தத்தை மூன்றாகப் பிரிக்கலாம். அவை நித்தியம், நைமித்திகம், காமியம் எனப்படும்.
நித்தியம்:- அமாவாசையில் செய்கின்ற தர்ச சிரார்த்தம், மஹாளய பசுஷத்தில் செய்கின்ற சிரார்த்தம், ஆப்திக, பிரத்யாப்திக சிரார்த்தம், தினமும் செய்கின்ற பிரம்மயக்ஞ தேவர்ஷி பித்ருதர்ப்பன அங்கமான பித்ருயக்ஞம் முதலியன.
நைமித்திகம்- மாதப்பிறப்பு. கிரஹணம் முதலிய புண்ணிய காலங்களிலே செய்கின்ற தர்ப்பணம், விவாகம் முதலிய சுப காரியங்கள் நிகழும் பொழுது செய்கின்ற நாந்தீமுக பித்ரு சிரார்த்தம் இறந்த 11 நாட்களுக்குள் செய்கின்ற நக்ன-நவரகோத்தர விருத்தி - ரகோத்திஷ்ட சிரார்த்தங்கள், ஸ்பிண் டீகரணத்தன்று செய்கின்ற ரகோத்தரம்-பார்வன சிரார்த்தம், ஊனமாசி கானு மாசிகங்கள்-ஸோத கும்பம் முதலியன.
காமிகம்:- மன்வாதி-யுகாதி, கங்கை, யமுனை போன்ற புண்ணிய தீர்த்தக் கரையில் செய்யப்படுகின்ற சிரார்த்தங்கள்.
சிரார்த்தங்களைச் செய்வதால் ஏற்படும் நலன்கள் பலவுண்டு. எப்பொழுதும் நம்மை வாழ்த்துகின்ற பிதிர்களுடன் அவர்களுக்குத் துணை வருகின்ற விச்வே தேவர்கள் என்ற தேவப் பிரிவினர் கர்மாக்களைக் காப்பாற்றி பலன் தரும் மஹாவிஷ்ணு, ஹோமம் முதலியவற்றில் பாகம் பெறுகின்ற அக்கினி முதலிய தேவர்கள், பிராம்மண போஜனம் எங்கு நடந்தாலும் திருப்தி அடைகின்ற சுவர்க்கவாசிகளான தேவர்கள், பிண்டதானத்திலும், விகிரானத்தாலும் வேறு வழியில் திருப்தியைப் பெற வாய்ப்பில்லாத நரகவாசிகளும், பிதிர் உலகம் அடைய இயலாத நிலையில் உள்ளவரும், அன்னதானத்தால் நம் உற்றார் உறவினர், காக்கைக்குப் பிண்டம் அளிப்பதால் நாம் அறிந்திராத பித்ருக்கள் திருப்தி அடைகின்றனர்.
சிரார்த்தம் செய்யாமல் விட்டவர்கள் நன்றி மறந்தவர்கள். பிதிர் சாபத்தினால் செல்வத்தையும், சிறப்புக்களையும்
இந்துக் ចំ២៤៥ថ្ងៃច័យ

Page 86
இழப்பதுடன் அவர்களது சந்ததியினரும் பாதிப்புக்கு உள்ளாகின்றனர்.
ஆப்திக-பிரத்யாப்திக சிரார்த்தங்கள்:- ஒருவர் இறந்த முதல் ஆண்டின் இறுதியில் அவர் இறந்த மாதம், திதி, பகூrம் கூடிய தினத்தில் செய்வது ஆப்திக சிரார்த்தம். இரண்டாவது ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டிலும் நிகழ்த்தப் படுவது பிரத்யாப்திக சிரார்த்தம் ஆகும்.
சிரார்த்த தேவதைகள்:- அஷ்ட வசுக்கள், ஏகாதச உருத்திரர், துவாதச ஆதித்யர், இவர்களது வடிவில் பிதாவின் சிரார்த்தமானால் பிதா, பிதாமஹர், பிரபிதாமஹர் என்ற மூன்று பூர்வ புருஷர்கள் பங்கு பெறுகின்றனர். மாதாவின் சிரார்த்தமானால் மாதா, பிதாமஹ9, பிதுர் பிரபிதாமஹறி இம்மூவர் வரிக்கப் பெறுகின்றனர்.
விச்வேதேவர் என்பது தேவர் கூட்டம். இவர்கள் பன்னிருவர். இவர்கள் ஆப்திக, பிரத்யாப்திக சிரார்த்தங்களில் புரூரவர், ஆர்த்ரவர் என்ற இருவர் பிதுர்க்களுக்குத் துணை வருகின்றனர். நாந்திமுத சிரார்த்தத்தில் ஸத்யர், வஸ9 என்ற இருவரும், மஹாளய சிரார்த்தத்தில் காலர், காமர் (காமுகர்) என்ற இருவரும் ஸன்யாஸாங்க சிரார்த்தத்தில் ஸாது, குரு என்ற இருவரும் யாகத்தில் க்ரது, தக்ஷர் இருவரும் விச்வேதேவர்கள்.
சிரார்த்தத்தை பூர்ணபலன் தரவல்லதாகச் செய்பவரும், சிரார்த்தத்திற்கு இடையூறு வராமற் செய்பவரும் சிரார்த்த இரக்ஷகரான மஹாவிஷ்ணு.
பித்ருக்கள் விச்வேதேவர், மஹாவிஷ்ணு என்ற மூவரின் ஸ்தானத்தில் மூன்று பிராம்மணர்களை முன்னதாகவே வரித்து அவர்களை நியமத்துடன் இருக்கச் செய்வது முக்கியமானது. சிலரது குலாசாரத்தின்படி விஷ்ணுவின் இடத்தில் சாளக்ராமச் சிலை வைத்து விஷ்ணுவாக ஆவாகனம் செய்து இலைபோட்டுப் பரிமாறி தத்தம் செய்து விடுவர்.
சிரார்த்த நேரம்:- பகலை 5 பாகமாகவும், ஒரு பாகத்திற்கு 6 நாழிகை (2 மணி 24 நிமிஷம்) முதற்பகுதி பிராதக் காலம் (6 மணி 8-24வரை) (சூரியோதயம் 6 மணி என்கிற கணக்கில் உதயநேரம் மாறுவதற்கேற்ப நேரம் வேறுபடும்) இரண்டாம் பகுதி ஸங்கவ காலம் (முற்பகல் 8.25 முதல் 10.48 வரை). மூன்றாம் பகுதி மத்யாந்நிஹ காலம் (நடுப்பகல் 10.49 முதல் 112 வரை). நான்காம் பகுதி அபராவர்ண காலம் (பிற்பகல் 113 முதல் 338 வரை). ஐந்தாம் aTTT MmmmmmTTTTT TY mmmm SSmm TmT 0S00 TmTT 0S0000 mOmYSS நடுப்பகல் முதல் 2 நாழிகை (10.49 முதல் 136 வரை). கந்தர்வ காலம் இரண்டாவது 2 நாழிகை (1137 முதல் 12.24 வரை). குரப காலம் இக்காலமே சிரார்த்தம், தர்ப்பணம் முதலியவற்றிற்கு
哥蚤
リー
இந்துக்கலைக்களஞ்சி:ம்

சிரார்த்த திதி:- சிரார்த்தம் யாரைக் குறித்துச் செய்யப்படுகின்றதோ அவர் இறந்த மாதம்-பகூடிம்-திதியில் சிரார்த்தம் வரும். திதி இரு நாட்கள் இருந்தால் பிற்பகலில் திதி அதிக நேரம் உள்ளதே ஏற்றது. இருதினங்களிலும் சமமாக இருந்தால் முதல் நாளே ஏற்றது. ஒரு மாதத்தில் இரு திதிகள் வந்தால் பிந்திய திதியே உகந்தது. அதில் மாதப்பிறப்பு கலந்தால் முந்திய திதியே ஏற்றது. இரு திதிகளிலும் ஸங்கிரமண தோஷம் இருந்தால் பிந்திய திதியில் செய்ய வேண்டும். ஒரே திதியாக இருந்தால் ஸங்கிரமன தோஷம் இருந்தாலும் செய்யலாம். ஒரு மாதத்தில் திதியே இல்லையானால் முன் மாதத்தின் திதியில் செய்ய வேண்டும்.
திதி மறந்து விட்டால் கிருஷ்ண பகூடித்து அஷ்டமி, ஏகாதசி, அமாவாசை இவற்றுள் ஒன்றில் செய்யலாம். உரிய திதியில் செய்யமுடியாமல் தடையேற்பட்டால் அன்று உபவாசமிருந்து மறுநாள் செய்யலாம். தீட்டு இருந்தால் தீட்டுப் போகும் நாளிற்
செய்யலாம்.
சிரார்த்தத்தில் வரிக்கப்படுபவர்- இருவரையோ, மூவரையோ குலவழக்கப்படி வரிக்கலாம். வயதில் மூத்தவரை விச்வே தேவராகவும், இளையவரை பிதிர் ஸ்தானத்திலும் வைக்க வேண்டும். இருவரும் சகோதரராகவோ, தந்தையும் மகனுமாகவோ இருக்கக் கூடாது. வேதமறியாதவர், நோயாளி, மாதவிலக்கான பெண்ணின் கணவன், மனைவி, புத்திரன் இல்லாதவர். (மனைவி இல்லாவிட்டாலும் புத்திரன் இருந்தால் வரிக்கலாம்) முன் மூன்று நாட்களுக்குள் சிரார்த்தத்தில் பங்கேற்றவர்கள், மூன்று மாதத்திற்கு மேற்பட்ட கர்ப்பிணியின் கணவர், தன் பெற்றோர் இறந்து ஒரு ஆண்டு முடியாதவர்கள், மறுநாள் சிரார்த்தம் செய்ய இருப்பவர் அன்று காலை வபனம் செய்து கொண்டவர், குஷ்டம், சொத்தை நகம், சொத்தைப்பல் உள்ளவர்கள், ஒரே கோத்திரத்தைச் சேர்ந்தவர்கள் வரிக்கக் கூடாதவர்கள். நல்ல வேதவித்து, யோகி, ஞானி, ஸாமவேதி, தெளவதித்திரன் இவர்கள் வரிக்கச் சிறந்தவர்கள். ஒரு கிருஹஸ்தர் மட்டும் கிடைத்தால் ஒரு பிரம்மசாரியை வரித்து விஸ்வே தேவராகவும், கிருஹஸ்தரை பிதிர் ஸ்தானத்திலும் அமர்த்தலாம். தகுந்தவர் கிடைக்காவிடில் மாதாமஹர், மாதுலர், மருமான், மாமனாரி, குரு, மாப்பிள்ளை, கோத்திரமில்லாத உறவினர் இவர்களை வரிக்கலாம்.
கர்த்தாவின் நியமம்:- கர்த்தா சிரார்த்த மாதம் முழுவதும் நியமமாக இருக்க வேண்டும். அல்லது சிரார்த்த பகூடித்திலாவது அதுவும் இயலாவிடில் 5 நாட்கள் அல்லது குறைந்தது 3 நாட்களாவது நியமத்துடன் இருத்தல் மிக அவசியம். பிறர் வீட்டில் உணவு கொள்ளக் கூடாது. (குரு-மாமன்-மாமனார்சகோதரர் வீட்டில் உண்ணலாம்.) வபனம், எண்ணெய் தேய்த்துக் குளித்தல், மனைவியுடன் உறவு கூடாது. சிலர் தூய்மை பெறுவதற்காக கூஷ்மாண்ட ஹோமம் செய்வர். இதில் தூய்மையை நிலைநிறுத்தும் மந்திரங்கள் உண்டு. ஒளபாசனம் தடைபட்டிருந்தால் சிரார்த்தத்திற்கு மூன்று நாட்களுக்கு முன்

Page 87
தொடங்கி காலை, மாலை செய்ய வேண்டும். ஒளபாசனாக் கினியிலே தான் சிரார்த்த ஹோமம் நடக்கின்றது.
பிரம்மசாரி கர்த்தாவாக இருந்தால் ஸ்மிதாதானம் செய்யலாம். மூன்று நாட்களிலும் அந்த அக்கினி அணையாத படி பாதுகாக்க வேண்டும். இயலாதவர்கள் முதல் நாளும் தொடங்கலாம்.
சிரார்த்தத்திற்கு வரிக்கப்பட்டவர்களை தெய்வமாகக் கருத வேண்டும். அவமதிக்கவோ, ஏளனம் செய்யவோ, கோபிக்கவோ, உத்தரவிடவோ கூடாது. அவசரம் கூடாது. அன்று காலையில் நனைத்து உலர்த்திய ஆடைகளை அணிய வேண்டும். அன்று தானம் வாங்குவதோ தானம் செய்வதோ கூடாது. வேத அத்யயனம், அத்யாபனம் இரண்டுமே செய்யக் கூடாது.
ܢܠ
வரிக்கப் பெற்றவர்களுக்கும் கர்த்தாவிற்குரிய நியமங்கள்
உண்டு.
சிரார்த்தத்திற்கு ஏற்ற பொருட்கள்:- தோல் நீக்கப் பெற்ற உளுந்து, கோதுமை, எள், நெய், பசும்பால், தயிர், மோக கங்கா ஜலம், தேன், வெள்ளிப் பாத்திரம் மிகவும் ஏற்றவை. சொந்த வீட்டிலோ, அல்லது வாடகை வீட்டிலோ செய்யலாம். பிறர் இடத்தில் செய்யக் கூடாது. பயறு, பாகற்காய், பலாக்காய், மாங்காய், பழுப்புச் சர்க்கரை, வெல்லம், உப்பு, கருணைக் கிழங்கு, சேப்பங்கிழங்கு, இஞ்சி, சீரகம், அவரைக் காய், ஏலக்காய், பிரண்டை, தூதுவளை, சர்க்கரை வள்ளிக் கிழங்கு, விளாம்பழம், மின்னக்கீரை, திப்பிலி, சுக்கு, பச்சைக் கற்பூரம், குங்குமப்பூ, வெள்ளரி - இவை சிறப்பானவை. தேங்காய், கடுகு, காயம், Lਲੰ6 மிளகாய்,எலுமிச்சம்பழம், நல்லெண்ணெய், தேங்காயெண்ணெய், எருமைத் தயிர், எருமைப்பால் இவற்றைச் சிலர் சேர்த்துக் கொள்வது உண்டு.
காதராமணி, கொள்ளு, முருங்கை, கத்தரி, சுரைக்காய், துவரம் பருப்பு-நியமமுள்ளவர் உண்ணத் தகாதவைவிலக்கப்பட்டவை.
பாகமுறை:- நீராடி, ஈரவஸ்திரத்துடன், கச்சமனிந்து சமைக்க வேண்டும். ஆசாரமில்லாதவர்கள் சமைக்கக் கூடாது. மாதவிலக்கை எதிர்பார்க்கிறவரும், மாத விலக்காகிக் குளித்த அன்றும், கர்ப்பிணியும், நோயுற்றவரும் சமைக்கக் கூடாது. ஆகாரம் உண்டவர்களும் சமைக்கக் கூடாது. சமைக்கும் பொழுது வீண்வார்த்தை பேசிக்கொண்டோ, அல்லது வேறு பணியில் மனத்தைச் செலுத்திக் கொண்டோ, கோபத்துடனோ, அழுதவாறோ, தலையை விரித்துக் கொண்டோ சமைக்கக் கூடாது. சமையல் செய்யும் பொழுது மலம், சலம் கழிக்க நேர்ந்தால் மீண்டும் ஸ்நானம் செய்தே சமையலைத் தொடர வேண்டும்.

புதுப் பாத்திரம் அல்லது நன்கு தூய்மை செய்யப்பட்ட பாத்திரத்தில் சமைக்க வேண்டும். இரும்பு பிதிர்களை விரட்டி விடும். வெள்ளி பிதிர்க்களை மகிழ்விக்கும். பித்தளை, வெண் கலப்பாத்திரங்களையும் கொள்ளலாம்.
பசுஞ்சாணியால் வீட்டை நன்கு மெழுக வேண்டும். கோலம் போடக் கூடாது. மணியடிக்கக் கூடாது.
சிரார்த்த முறை:- தகுந்தவர்களை முன்னரே வரித்து தூய்மையான இடத்தில் மனைவி முதலியவர்களின் உதவியுடன் முழுமையான ஈடுபாடுடன் அவசரமின்றிச் செய்ய வேண்டும்.
உணவு தயாரிக்க இயலாத நிலை, வெளிநாடுகளில் தங்கியிருத்தல், மனைவி முதலியவர் உதவ இயலாத நிலை, தீர்த்த யாத்திரை, சந்திர, சூரிய கிரஹணம் இவைகளில் ஆம சிரார்த்தமாகச் செய்யலாம். சங்கற்பம் செய்து உணவிற்குத் தேவையானதைவிட 4 மடங்கு அரிசி, பருப்பு, காய்கறி தக்ஷணையுைடன் வழங்க வேண்டும். இதுவே ஆம சிரார்த்தமாகும்.
ஆம சிரார்த்தமும் செய்ய முடியாத பொழுது ஹிரண்ய சிரார்த்தமாகச் செய்யலாம். பூரணமான தக்ஷணையை வழங்கு வதன் மூலம் இதனை நிறைவேற்றலாம்.
அதற்கும் சக்தியில்லாதவர்கள் பிண்டதானம் மட்டும் செய்யலாம். பசுவிற்குப் புல் கொடுக்கலாம். ஸ்நானம் செய்து முறைப்படி தர்ப்பணம் செய்யலாம். மனதிற்குள் சிரார்த்த மந்திரங்களை ஜபிக்கலாம். ஆனால் அன்று முழுவதும் உபவாசமாக இருக்க வேண்டும். செய்யக்கூடிய வாய்ப்பிருந்தும் செய்யாமல் இருந்தால் பாவம் நேரும்.
கர்த்தா பிராமணரை வரித்து அவருக்கு அன்னமிடுவதால் மந்திரத்தால் பலம் பெற்ற அந்த அன்னம் பிதிர்க்கள் எந்த நிலையில் இருந்தாலும் அவர்களுக்கேற்ற உணவாகச் சென்றடையும். ஆப்திகம், பிவத்யாப்திகம் இவற்றில் அளிக்கும் உணவு அவர்களுக்கு ஒராண்டிற்கு நிறைவைத் தரும். தேவ நிலை பெற்றிருந்தால் அவ்வுணவு அமுதமாக மாறும். பசுவாயிருந்தால் புல்லாகவும், மனிதனாக இருந்தால் அன்னமும், பானமுமாகும். அந்தந்த ஜீவன் எதனால் திருப்தி அடையுமோ அதுவாக மாறும்.
நண்பகலில் மாத்யான்னி வரம் ஆனபின்பு ஸங்கல்ப்பம் செய்து முதல் விச்வே தேவதையையும், பின்னர் பிதிர்க்களையும் வரித்து, ஆசனம், பாத்யம், அர்க்யம் அளித்து, என்ஞம், வெல்லமும் கலந்து தந்து (கிருஸரம்) தாம்பூலம் அளித்து அப்பங்க ஸ்நானம் (எண்ணெய் தேய்த்துக் குளித்தல்) செய்து வரச் சொல்ல வேண்டும். கர்த்தாவும் ஸ்நானம் செய்து நனைத்து உலர்த்திய ஆடை அணிந்து காலலம்பி, சம்பிரதாயப்படி விபூதி, சந்தனம் அணிந்தோ, அணியாமலோ ஆசமனம் செய்து தீர்த்த
இந்துக்கலைக்களஞ்சியம்

Page 88
பாத்திரத்துடன் சிரார்த்தம் நடக்கின்ற இடத்திற்கு வரவேண்டும். வரிக்கப் பெற்ற அந்தணர்களை மூன்று முறை வலம் வந்து பூர்வ புருஷர்களின் பெயரைக் கோத்திரத்துடன் கூற வேண்டும்.
விச்வே தேவர்களுக்கும், விஷ்ணுவிற்கும் செய்யும் உபசாரம் அக்ஷதையால் உபவிதியாக நேராக விரல்களின் நுனியால் செய்ய வேண்டும். பிதிர்க்களுக்கு பிராசீன வீதி (பூனூலை மாற்றி) கையை மறித்து கட்டை விரல் இடையே நீர் வெளியாகும் படி எள்ளுடன் அளிக்க வேண்டும்.
ஆசனமளித்த பின் பாத்தியமளித்து பசுஞ்சாணியால் மெழுகிய இடத்தில் விச்வே தேவருக்கு சதுரமாகவும், விஷ்ணுவிற்கு சதுரமாகவும், பிதிர்களுக்கு வட்டமாகவும் மெழுகி, பிறகு பாத்யம் செய்யும் இடத்தில் தர்ப்பம், சந்தனம், அக்ஷதை. எள் முதலியவற்றாற் பூஜை செய்து முதலில் விச்வே தேவரின் கால்களையும், பின் பிதிர்க்களின் பாதத்தையும் அலம்ப வேண்டும். பிதிர்களுக்கு தெற்கில் இடமளிக்க வேண்டும். பாதம் அலம்பும் பொழுது பசுவின் நெய்யை கால்களின் அடியிலும் மேலும் தடவி கணுக்கால் வரை அலம்ப வேண்டும். மனைவியோ சகோதரரோ ஜலம்விட வேண்டும். பாதங்களை அலம்பிய நீரை புனிதமானதாகக் கருதி தலையில் தெளித்துக் கொள்ள வேண்டும்.
பின்பு வடகிழக்கில் கர்த்தாவும், கிழக்கே விச்வே தேவரும் விஷ்ணுவும், வடக்கே பித்ரு வரணம் பெற்றவரும் ஆசமனம் செய்து வந்து அமர்ந்த பின் அர்க்கியம் அளித்து வஸ்திரம் அளிக்க வேண்டும். வஸ்திரங்களை (வேஷ்டி, அங்க வஸ்திரம், திருதிய வஸ்திரம்) காலையில் நனைத்து உலர்த்தி சுத்தமாக அளிக்க வேண்டும். இயலாதவர்கள் பூணுலாவது அளிக்க வேண்டும்.
அக்கிணிக்கு உபசாரம் செய்து பாகமான அன்னத்தை நெய்யிட்டு முறைப்படி பித்ரு பிதாமஹர் பிரபிதா மஹர்களுக்கு ஹோமம் செய்து அக்கினியை வணங்க வேண்டும். இனி அன்ன மிடுகையில் எள்ளும் நீரும் தெளித்து இடத்தைத் தூய்மை செய்து சதுர மண்டலமிட்டு விச்வே தேவருக்கும், தெற்கே வட்டமாகப் பிதிர்க்களுக்கும், கிழக்கே சதுரமாக விஷ்ணுவிற்கும் போஜன ஸ்நானம் அளித்து அதில் இரண்டு நுனி வாழை இலைகளை ஒன்றின் மீது ஒன்றாக இட வேண்டும். வாழை இலை கிழிந் திருக்கக் கூடாது. முதுகு நரம்பை கிழித்தெடுக்கக் கூடாது. உண்பவரின் இடது கைப்புறம் நுனி இருக்குமாறு அமைத்து முதல் இலையில் பாயசம், நெய், பழம், இனிப்பு பண்டங்களையும், மற்றைய இலையில் உப்பிட்ட கறி, கூட்டு முதலியவைகளையும் பரிமாற வேண்டும். இலைக்குக் கீழ் பாத்திராஸனமிட்டு ஜலம் தெளித்துத் துடைத்து நெய் விட்டு ஹோமம் செய்த அன்னத்தின் மிகுதியை பித்ரு இலையில் வைத்து உபவிதியாக ரசேஷாக்ன எடுக்தம் ஜபித்து அன்னம் தவிர மற்றவற்றைப் பரிமாறிப் பின்பு விச்வே தேவருக்கு எதிரில் அமர்ந்து அன்னம் வைக்கச் செய்து நெய் அபிகாரம் செய்து மந்திர பூர்வமாக பரிஷேசனமும், தத்தமும் செய்து புக்த தகூதினை தந்து, இதேபோல் பிதிர் இலையிலும்
វិចិg

செய்து, விஷ்ணு இலையிலும் அன்னம் வைத்து தத்தம் செய்த பின் எள், அக்ஷதை, துளசியுடன் விச்வே தேவர் பிதிர்கள், விஷ்ணு வடிவில் உள்ள ஜனார்த்தனன் திருப்தி அடையட்டும் என்று கூறி தர்ப்பத்தில் விட்டு கயாசிரார்த்தம் அகூடியவடம் தரணமளித்து பிராணாஹாதி முடிந்ததும் ஹஸ்தோதகம் அளித்து அவர்களைச் சாப்பிடச் சொல்ல வேண்டும்.
அவசரமின்றி, இரவிலும் பசிக்காதபடி குறிப்பறிந்து உணவளிக்க வேண்டும்.
அவர்கள் உணவு கொள்ளும் பொழுது இராக்ஷஸ பீடையைத் தவிர்க்க இரக்ஷோக்ன ஸ9க்தம், புருஷ ஸ9க்தம், அபிசிரவண ஸ9க்தர்களைச் சொல்லிக் கொண்டிருக்கலாம்.
சிரார்த்தப் பிராமணர் ஒருவரையொருவர் தொடக் கூடாது. நெய், பாயசம் இவற்றை எறியக் கூடாது. மற்றெல்லா வற்றிலும் மீதி வைக்க வேண்டும். ஒருவரது எச்சில் மற்றவரில் கலந்து விட்டால், இலையை அகற்றி, தூய்மை செய்து புதிதாக இலைபோட்டுப் பரிமாற வேண்டும்.
போஜனம் முடிந்ததும் திருப்தி கேட்டு பின் விச்வே தேவரின் இலையின் முன்பாக அமர்ந்து கொண்டு அன்னத்தில் உதிரியாக இருகையளவும் விளாம்பழ அளவு ஒரு பிண்டமும் மனைவி கொண்டு வந்து வைக்க, இலையின் முன்பாக தெற்கிலிருந்து வடக்காக கோடிட்டு அன்னத்தை உதிரியாகத் தூவி அதன் மேல் நீர் விட்டு 'அமுதம் பருகும் வாய்ப்பில்லாத வரும் யாகங்களில் பங்கு இல்லாத தேவர்களும் இதனால் திருப்தி பெறட்டும்” என்று கூறி, பிறகு பித்ரு இலைமுன் அமர்ந்து பூனூலை இடமாற்றி கிழக்கிலிருந்து மேற்காக அன்னத்தைத் தூவி "முறையான உத்தர கிரியை பெறாத குலப் பெண்கள் இதனால் திருப்தியுறட்டும்.” என்று கூறி நீர்விட்டு பூனூலை இடம்மாற்றி விச்வே தேவர், பித்ரு இவர்களுக்கிடையே தெற்கு நுனியாக தர்ப்பம் பரப்பி இடது காலை முட்டியிட்டு பிண்டத்தை வைத்து, "என் குலத்திற் பிறந்து அக்னி இடப்பட்டோ, இடப்படாமலோ இறந்த பித்ருக்கள் இதனைப் பெற்று மகிழ்வடையட்டும் என்று கூறி எள்ளும், சலமும் விட்டு போஜனம் செய்தவர்களுக்கு உத்ர போசனமளிக்க வேண்டும். பிண்டத்தைக் காக்கைக்கு வைக்க வேண்டும். பின் பித்ருக்களை எழுப்பிப் பின் விச்வே தேவர்களை எழுப்பி அவர்களின் கை, கால்களை அலம்பி ஆசமனம் செய்து வந்ததும், தாம்பூலம், தகூதினை அளித்து மும்முறை குடும்பத்துடன் அவர்களை வலம் வந்து ஆசி பெற வேண்டும். சந்தனம், புஷ்பம் அளித்து அவர்களை மகிழ்விக்க வேண்டும். மேல் வஸ்திரத்தை கிழக்கு அல்லது வடக்கு நுனியாக பூமியில் போட்டு அவர்களை அதன் மேல் நடக்கச் செய்து அவர்கள் எல்லை வரை கொண்டு விட்டு விட்டு வரவேண்டும்.
ஹோம அக்கினியை போஜனம் முடிந்து காக்கைக்குப் பிண்டம் வைக்கும் வரை அணையாமற் பாதுகாக்க வேண்டும். அனைந்தால் அன்று உபவாசமிருந்து மறுநாள் சிரார்த்தம் செய்ய வேண்டும்.

Page 89
காகம் பிண்டத்தை கிழக்கே எடுத்தால் செல்வம் பெருகும்; தெற்கே எடுத்தால் நோய்; மேற்கே எடுத்தால் வெளியூர்ப்பயணம்; வடக்கே எடுத்தால் ஆயுள் குறையும். காகத்திற்கு வைத்ததைக் குரங்கோ, நாயோ எடுத்தால் சிரார்த்தம் நஷ்டம், மறுபடி செய்ய வேண்டும். பிண்டப்பிரதானம் ஆனபின் இடத்தை சுத்தி செய்ய வேண்டும். எச்சில் இலைகளைப் பூமியில் குழிவெட்டிப் புதைக்க வேண்டும். சிலர் குளத்திலோ, பாழுங் கிணற்றிலோ எறிவார்கள்.
பிராமணர்கள் சென்றதும் தெற்கு நுனியாகத் தர்ப்பங்களை வைத்து இரு கூறாகப் பரப்பி மாத்ருவர்க்கத்திற்கும், பித்ரு வர்க்கத்திற்கும் இடம் போட்டு எள்ளும், தண்ணிரும் விட்டு போஞனம் செய்து மீதமான அன்னத்திலிருந்து 6 பிண்டங்கள் செய்து அதனை, மாதா, பிதாவிற்கும் அவர்களைச் சார்ந்தவர்களுக்கும் அளித்து கையை மறித்து எள்ளும், நீரும் விட்டு முன் வைத்திருந்த இரு அர்க்கிய பாத்திரங்களையும் சேர்த்து உள்ளங் கையால் மூடி, இரு வர்க்க பிண்டங்களையும் அப்பிரதசுஷிணமாக பரிசேஷணம் செய்து தன்குலம் வளரப் பிரார்த்திக்க வேண்டும். பிண்டத்திலுள்ள பித்ருதேவதைகளையும் வழியனுப்பி பிண்டபாத்திரத்தில் உள்ள உதிரி அன்னத்தைக் கர்த்தா முகர்ந்து பூனூலை வலமாக்கி ஆசமனம் செய்வர். பிண்டங்களை நீர் நிலையில் விடுவர்.
பிண்டத்தை முறைப்படி அகற்றிவிட்டு பிண்டத்தின் கீழ் பரப்பியிருந்த தர்ப்பத்தைச் சேர்த்து எள்ளும், தண்ணிரும் விட்டு தாய், தந்தை, உறவினர், சகோதரர் இல்லாத முன்னோர்கள் இதனால் திருப்தி அடைய மட்டும் என்று வேண்டி, பூனூலை வலமாக்கி கையலம்பி, ஆசமனம் செய்து ஹோம பஸ்மத்தை ரகூழியாக நெற்றியில் இட்டுக் கொண்டு அனைத்தையும் பிரம் மார்ப்பணம் என்று கருத்திற் கொள்ள வேண்டும்.
ஆசார்ய தகூழினை தந்து பூனூலை மாலையாக்கி, ஸ்நானம் செய்த பொழுது தரித்த வஸ்திரத்தைப் பிழிந்து, எங்கள் குலத்திற் பிறந்து சந்ததி இல்லாதிருந்த முன்னோர்களுக்கு இந்த ஜலம் திருப்தி தரட்டும் என்று கோர வேண்டும். பின் பரேஹனி தர்ப்பணமும் பிரும்ம யக்ஞமும் செய்ய வேண்டும்.
பிதிர்சேஷம்:- கர்த்தா சகோதரர்கள், சகோதரி, பெண், புத்திர பெளடத்திரர்கள், தெளஹறித்திரர்கள், ஸயிண்ட ஞாதிகள் இவர்கள் பிதிர் சேஷம் சாப்பிடலாம். திருமணமான பெண் தன் தாய், தந்தை, சகோதரன் இவர்களின் சிரார்த்த சேஷம் தோஷமில்லை, 3 நாள் தீட்டுள்ள ஞாதிக்கு சேஷ தோஷம் உண்டு. இவர்களும் ஞாதிகள் அல்லாத வரும், ஆபிரியரும், அபிச்ரவணம் சொன்னவரும், தனியாகச் சமைத்த உணவை ஏற்கலாம்.
நிறைவுரை:- பங்கு பிரிக்கப்பட்டிருந்தால் சகோதரர்கள் தனித்தனியே சிரார்த்தம் @gu வேண்டும். பிரிக்கப்படாமலிருந்தாலும் தனித்துக் குடும்பம் நடத்திக் கொண்டிருந்தால் தனியாகச் செய்யலாம். ஒரே குடும்பமாக

63
ஒன்றாக இருந்தாலும், பங்கிடச் சொத்து இல்லையென்றாலும் தனிச்சிரார்த்தம் வேண்டாம். தனித் தனியே வாழ்ந்து கொண்டு சிரார்த்தத்திற்கு மட்டும் ஒன்று சேர்வது என்பது நல்லதல்ல. தாயார் உயிருடனிருந்தால் அவள் இருக்குமிடத்தில் பிதிர் சிரார்த்தம் செய்வது தவறாகாது. மனைவி தனது கணவரின் சிரார்த்தத்தின் போது பிள்ளையுடனிருப்பது அவசியமானது.
மூத்தவர் இருந்தால் அவரருகில் இருந்தால் போது மென்பது எப்போதும் சேர்ந்திருப்பவர்க்கு மட்டுமே. பிரிந்திருந்தால் தனித்தனியே சிரார்த்தம் செய்வது உத்தம மானது. பிதிர்களும் மகிழ்ந்து நமக்கு ஆசி கூறுவார்கள்.
விண்ணவதி சிரார்த்தங்கள்:- 1. தர்ச சிரார்த்தங்கள் - 12 2. மாத ஸங்கிரமண சிரார்த்தங்கள் - 12 3. அஷ்ட்கா சிரார்த்தங்கள் - 12 4. வைத்ருதி சிரார்த்தங்கள் - 13 5. வியதீபாத சிரார்த்தங்கள் 13 6. மன்வாதி சிரார்த்தங்கள் - 14 7. யுகாதி சிரார்த்தங்கள் - 4 8. மஹாளய சிரார்த்தங்கள் - 16 ஆக சிரார்த்தங்கள் 96 ஆகக் கணக்கிடப்படும். 1. தர்ச சிரார்த்தம்- ஒவ்வொரு அமாவாசை தினத்திலும் செய்யப்படுவது.
2. மாத ஸங்கிரமண சிரார்த்தம்:- ஒவ்வொரு தமிழ் மாதப் பிறப்பிலும் செய்யப்படுவது.
3. அஷ்டகா சிரார்த்தம்:- மார்கழி, தை, மாசி, பங்குனி மாதத்துக்குக் கிருஷ்ண பக்ஷஸப்தமி, அஷ்டமி, நவமி திதிகளில் முறையே திஸ்ரோஷ்டகா, அஷ்டகா, அன்வஷ்டகா என்ற பெயரில் செய்யப்படுவது.
4-5. வைத்ருதி-வியதீபாத சிரார்த்தம்- திதி, வாரம், நக்ஷத்திகம் போல் விஷ்கம்பம் முதலிய 27 யோகங்கள் உள்ளன. அவற்றில் 17வது யோகம் வியதீபாதம். 27வது யோகம் வைத்ருதி-விஷ்கம்பம் முதலிய யோகங்கள் ஒரு சுற்று வர 27 நாட்களாகும். வருஷத்தில் 13 தடவை வருகின்றன. இந்த 13
வைத்ருதி-13 வியதீபாத நாட்களில் செய்யப்படுபவை வைத்ருதி
வியதீபாத சிரார்த்தங்கள்.
6. மன்வாதி சிரார்த்தம்:- பிரம்மாவின் ஆயுளில் ஒவ்வொரு பகலிலும் 14 மன்வந்தரங்கள் உண்டு, ஸ்வாயம்பு மனு முதலாக ஸ்வாரோசிஷர், உத்தமர், தாமஸர், ரைவதர், சாக்ஷலிஷர் என்று 6 மனுக்களின் வாழ் நாள் (மன்வந்தரம்) முடிந்து ஏழாவது மனு வைவஸ்தரின் ஆட்சி நடைபெறுகிறது. இவர்களின் ஆட்சி தொடங்கிய நாள் சாந்திர மானப்படி குறிப்பிட்ட மாத, பகூடி, திதிகளில் வரும். (பஞ்சாங்கத்தில் காண்க)
இந்துக் க்களஞ்சியர்

Page 90
ஆச்வின சுக்ல நவமி - ஸ்வாயம்புவ மன்வாதி கார்த்திக சுக்ல துவாதசி - ஸ்வாரோசிஷ மன்வாதி சைத்ர சுக்ல திருதியா - உத்தம மன்வாதி பாத்ரபத சுக்ல திருதீயா - தாமஸ் மன்வாதி புஷ்ய சுக்ல ஏகாதசி - ரைவத மன்வாதி ஆஷாட சுக்ல தசமி - சாக்ஷ9ஷ மன்வாதி மாக சுக்ல ஸப்தமி - வைவஸ்வத மன்வாதி ச்ராவண கிருஷ்ணாஷ்டமி - ஸ9ர்ய ஸாவர்ணி மன்வாதி
0.-
கார்த்திக பெளர்ணமி - தக்ஷ ஸாவர்ணி மன்வாதி பால்குன பெளர்ணமி - ப்ரும்ஹ ஸாவர்ணி மன்வாதி
售
ஆஷாட பெளர்ணமி - அக்னி ஸாவர்ணி மன்வாதி
f
2.
பால்குன அமாவாஸ்யை - ருத்ர ஸாவர்ணி மன்வாதி
3.
ஜ்யேஷ்ட பெளர்ணமி - பெளத்(ஷ்)ய மன்வாதி 14. சைத்ரா பெளர்ணமி - ரெளச்ய மன்வாதி இந்நாட்களில் செய்யப்படுவது மன்வாதி சிரார்த்தங்கள்.
7. யுகாதி சிரார்த்தம்- கிருத திரேதா, துவாபர, கலி என்ற நான்கு யுகங்கள் தொடங்கிய நாளை யுகாதி என்பர். 1. வைசாக சுக்ல திருதீயை - கிருத யுகாதி 2. கார்த்திக சுக்ல நவமி - திரேதா யுகாதி 3. பாத்ரபத கிருஷ்ண திரயோதசி - துவாபரயுகாதி 4. மாக, பால்குன அமாவாஸ்யை - கலி யுகாதி.
8. மஹாளய சிரார்த்தம்: கன்யா இராசியில் சூரியன் நுழையும் பொழுது நடைபெறுகின்ற கிருஷ்ண பக்ஷம் மஹாளய பசுஷம் எனப்படும். இதில் கிருஷ்ண பிரதமை முதல் சுக்ல பிரதமை ஈறாக 16 நாட்கள் மஹாளய சிரார்த்தத்திற்கான நாட்கள் "பிதிர் உலகத்தில் உள்ள பூர்வபுருஷர்கள் யமனின் அனுமதி பெற்று பூமிக்கு வந்து தம் சந்ததியினர் கொடுப்பதை விரும்பி ஏற்பர். ஆஷாடமாதத்து கிருஷ்ன பிரதமை முதல் 5 பக்ஷங்கள் பிதிர் உலகத்தை விட்டு இப்பூமிக்கு வருவதால் அவர்களது அருகாமை எளிதில் கிடைக்கும் வேளையாகக் கொள்வர். இந்த 96 வகை சிரார்த்தங்களில் தர்சம், ஸங்கிரமணம், மஹாளயம் இவை முக்கியமானவை. மஹாளயத்தில் ஒரு நாளாவது பார்வணமாகச் செய்து மற்றைய நாட்களில் ஹிரண்ய சிரார்த்தமும், தர்ப்பணமும்
@gយលr. (627. 626s.
சிருங்காரம்
க்ேகள் உள்ளத்தில் ஒவ்வொருகால் எழும் உளவேறுபாடு பாவம் எனப்படும் பாவங்கள் சில நிலை பெற்றிருக்கும். பல சிறிது நேரத்தில் மறையும். தனக்கு ஒற்றுமையுடையனவும், வேற் mMmmmSmmmS Y0mmm m tmTTm T YTTmTTTmmmT TmT S YtmT TmmMTTT நிற்கும் பாவம் ஸ்தாயி பாவம் எனப்படும் விபாவ, அனுபாவ (காரணம், காரியம்)ங்களால் வெளிப்படுத்தப்படுகின்ற ஸ்தாயி பாவம் ரஸம் எனப்படுகிறது. இது ஒன்பது வகைப்படும். அந்த ஈசங்களில் ஒன்றே சிருங்காரம், அதன் ஸ்தாயி பாவம் ரதி அல்லது ஆண் பெண் சேருதல் ஆகும். அதன் உற்பத்திக்கு
இந்துக்கலைக்களஞ்சியம்
64

நாயகன் - நாயகி காரணமாக இருப்பர். அ வ ர் க ளி ன் இளமை, ரூபம், சரீர அழகு, சீலம் முதலிய கு ன ங் க ஞ ம் , கண்களால் பார்த்தல், சிரித்தல், முதலிய அ வத்  ைத களும் அதன் அடிப்படை
LUT(5b.
பரதர் நாட்டிய
சாஸ்திரம் என்னும்
நூலில் ரசங்களாக
சிருங்காரம், கருணை, வீரம், ரெளத்திரம், ஹாஸ்யம், பயானகம், பீபத்ஸம், அற்புதம் ஆகிய எட்டையுமே குறிப்பிட்டுள்ளார். வடமொழி இலக்கண நூலார் சிருங்காரத்தை விப்ரலம்பம், ஸம்போகம் என இருவகையாகக் கூறுவர். அதில் விப்ரலம்பமாவது நாயகி நாயகர்கள் பிரிந்திருத்தல் எனப்படும். இதைத் தமிழ் நூலார் தணத்தல் என்பர். இவ்விப்ரலம்ப சிருங்கார ரஸம் அயோகம், விரஹம், மானம், பீரவாஸம், சாபம் என ஐந்து வகைப்படும். அயோகம் என்பது அதிக பிரேமையுள்ள நாயகன் நாயகியர் ஒருவர் மேல் ஒருவர் ஆசைப்படுவதைக் குறிப்பிடும். அதனால் உண்டாகும் அவஸ்தைகள் நாயகனைப் பார்த்து வீட்டுக்குள் போதல், வெளியில் வருதல், அடிக்கடி சந்தோஷமாகப் பார்த்தல், தன் ஆசை வெளியிடும்படி சேஷ்டை செய்தல் என்பனவாகும். விரஹம் என்பது அன்பு மிகுந்த நாயக நாயகர்கள் ஏதாவது காரணத்தினாலாவது சேரக்கூடாதிருத்தல். இதனால் உண்டாகும் அவத்தை உற்சாகம், சிந்தை எனக் கூறப்படுகின்றது. மானம் இருவகைப்படும். பிரளயமானம் என்பது நாயகி நாயகர்களுள் ஒருவர் ஆணையை மற்றவர் தப்புவதனால் உண்டாகும். ஈர்ஷியா மானம் என்பது அந்நியப்
பெண் சம்பந்தமான விடயங்கள் தெரிந்ததனால் உண்டாவதாகும்.
நாயகன் தேசாந்திரத்திற்கு போயிருப்பதனால் உண்டாவது ப்ரவாலய விப்ரலம்பம் எனப்படும். சிருங்காரத்தின் இரண்டாவது வகையான சம்போக சிருங்காரம் ஒருவர் மனத்தோடு ஒருவர் கலந்த நாயகி நாயகர் இருவர் கண்குளிரப் பார்த்தல், விபரித்தல், சந்தோஷமாகப் பேசுதல் எனப்படும். ரஸங்கள் தமிழில் மெய்ப்பாடுகள் எனப்படும். இம் மெய்பாடுகள் தொல் காப்பியத்தில் கூறப்படுகின்றன. சிருங்கார ரசம் இந்நூலில் உவகை என கூறப்படுகின்றது. உவகை தோன்றும் நிலைக்களன்களாகச்
செல்வம், புலன், புணர்வு, விளையாட்டு ஆகியன
கூறப்படுகின்றன. தேஹ)

Page 91
சிலப்பதிகாரம்
இம்பெருங் காப்பியம் என்று வழங்கும் நூல்களுள்ளே காலத்தால் முற்பட்டன இரட்டைக் காப்பியம் எனப்படும் சிலப்பதிகாரமும் மணிமேகலையுமாம். வீரயுகத்தை ஒட்டித் தோன்றிய பேரிலக்கியங்களில் இன்று முழுமையாக எஞ்சி நிற்பன இவ்விரண்டுமே. காவிய இலக்கணம் தமிழிலே வந்து புகுமுன்னரே தோன்றிய காரணத்தால் சிலம்பையும் மேகலையையும் காப்பியம் எனக் கொள்ளாது தொடர்நிலைச் செய்யுள் என்பர். ஆயினும் தொடர்நிலை என்னும் வழக்கு முதன் முதலில் தண்டியலங்காரத்திலே தான் காணப்படும். இவ்விரு நூல்களின் ஆசிரியரும் தத்தம் படைப்பைப் பாட்டு என்றே கூறியமைத்தனர். “சிலப்பதிகாரம் என்னும் பெயரால் நாட்டுதும் யாம் ஒர் பாட்டுடைச் செய்யுள்” என்று சிலப்பதிகாரம் கூறும்.
சிலப்பதிகாரம் இளங்கோவடிகளால் இயற்றப்பட்டது. பழைய உரையாசிரியர்களால் எடுத்துக் காட்டப்படும்பிரமான நூல்களுள் ஒன்று. சொற்சுவை, பொருட்சுவைகளில் சிறந்து விளங்குவது எவ்வெப்பொருளைச் சொல்லினும் அவ்வப் பொருளை நேரிற் கண்டாற் போல மனதிற்கு தோற்றும் வண்ணம் நன்கு புலப்படுத்தும் தெள்ளிய நன்னடையையுடையது. இந்நூலின் காலம் கி.பி. இரண்டாம் நூற்றாண்டு என்பது பெரும்பாலோர் கருத்தாகும். வடமொழிப் பரத சாஸ்திரம் பஞ்ச தந்திரம் முதலாய நூல்களுக்குக் காலத்தாற்பிற்பட்டது. சிலப்பதிகாரம் எனக் காட்ட முயல்வர் வையாபுரிப் பிள்ளை அவர்கள். காவிரிப் பூம் பட்டினத்திலிருந்த பெருங்குடி வணிகர் மரபினராகிய கற்பிற் சிறந்த கண்ணகி, அவள் கணவன் கோவலன் என்பவர்களுடைய சரித்திரத்தை விரித்துக் கூறுவது சிலப்பதிகாரம், புகார்க் காண்டம், மதுரைக் காண்டம், வஞ்சிக் காண்டம் என்று மூன்று காண்டங்களையும் முப்பது காதைகளையும் உள்ளடக்கியது. உட்பிரிவுகளிற் சில வரிப் பாடல் எனக் கூறப்படினும் பொதுவாக எல்லாப் பிரிவுகளையும் காதை என்னும் சொல்லாற் குறிப்பது மரபு ஆகும். முப்பது காதைகளும் முறையே.
(1) கோவலன் - கண்ணகி திருமணத்தின் போது மகளிர்
வாழ்த்திய வாழ்த்துப்பாடல்.
(2) பெற்றோர்கள் அவர்களை இல்லறத்தில் ஈடுபடுத்திய காதை,
(3) நடனம் பயின்ற மாதவி மடந்தையின் அரங்கேற்று காதை,
(4) அந்திப் பொழுதான மாலையைச் சிறப்புச் செய்த காதை,
(5) புகார்நகரில் இந்திரனுக்கு விழாச் செய்த காதை,
(6) விழா முடிவில் கடலாடிய காதை,
(7) கடலாடிய கோவலனும் மாதவியும் பூவிதழ் விரிந்த கடற்கரைச்
சோலையிற் பாடிய கானல் வரிப் பாட்டு.
(8) இளவேனில் வர காதலனைப் பிரிந்த மாதவி வருந்திப் பாடிய
காதை,
(9) கனாத் திறம் உரைத்த காதை
(10) நாடுகாண் காதை
(11) காடு காண் காதை

65
(12) வேட்டுவ வரி (13) புறஞ்சேரி இறுத்த காதை (14) ஊர் காண் காதை (15) அடைக்கலக்காதை (16) கொலைக்களக் காதை (17) ஆய்ச்சியர் குரவை (18) துன்பமாலை (19) ஊர்சூழ் வரி (20) வழக்குரை காதை (21) வஞ்சிமாலை (22) அழற்படு காதை (23) கட்டுரைக்காதை (24) குன்றக் குரவை (25) காட்சிக்காதை (26) கால்கோட் காதை (27) நீர்படைக் காதை (28) நடுகற் காதை (29) வாழ்த்துக் காதை (30) வரந்தருங் காதை ஆகியனவாகும்.
சிலப்பதிகாரம் பேரளவு அகவற் பாக்களாலும் சிற்றளவு கலிப்பா, வெண்பா போன்ற ஏனைய இயற்பாக்களாலும் உரைப் பாட்டுகளாலும் உருவானது. தமிழ் நாட்டரசர்கள் மூவருடைய இராசதானிகளாகிய புகார், மதுரை, வஞ்சியென்னும் மூன்றன் பெருமைகளையும் விளக்குவது. பண்டைக்காலத்திலிருந்த பலவகை மாந்தருடைய ஒழுக்கம் முதலியவற்றை இக்காலத்தார் எளிதிற் தெரிந்து கொள்ளுதற்குச் சிறந்த கருவியாகவுள்ளது. அரசர் நீதியிற் சிறிது பிழைப்பினும் அவரை அறக் கடவுள் கூற்றாக நின்று கொல்லுமென்பதும், கற்புடைய மகளிரை மக்களேயன்றித் தேவரும் முனிவரும் துதித்தல் இயல்பென்பதும் இருவினையும் செய்த முறையே செய்தோனை நாடிவந்து தம் பயனை நுகர்விக்குமென்பதுமாகிய இம்மூன்றினையும் முக்கிய பொருளாகக் கொண்டு இளங்கோவடிகளாற் செய்யப்பட்டது. இம்மூன்று உறுதிப் பொருட்களையும் சிலம்பினை மையமாகக் கொண்டு விளக்குவதனால் சிலப்பதிகாரம் எனப் பெயர் பெறலாயிற்று.
கதையமைப்பு
புகார்காண்டம்: புகார்நகரில் மாநாய்கன் LGé守 கண்ணகிக்கும், மசாத்துவன் மகன் கோவலனுக்கும் சிறப்பாகத் திருமணம் நடைபெற்றது. இவ்விருவரும் சில ஆண்டுகள் இல்லற இன்பத்திலே திளைத்தனர். இந்நிலையிற் கோவலன் ஆடல், பாடல் அழகிற் சிறந்த நடனக் கணிகை மாதவியின் மீது மையல் கொண்டு கண்ணகியைப் பிரிந்து மாதவியுடனே வாழத் தலைப்பிட்டான். அதனாற் பெருஞ் செல்வம் அனைத்தையும் தொலைத்தான். இந்நிலையிற் புகாரில் ஆண்டு தோறும் நிகழும் இந்திர விழா வந்தது. அதன் முடிவில் அந்நகரத்தார் தத்தம் பரிவாரங்களுடன் கடலாடுவதற்குச் சென்றார்கள். கடலாடச்
இந்துக்கலைக்களஞ்சியம்

Page 92
சென்ற கோவலன் மாதவியின் யாழை வாங்கிப் பல வகைப்பட்ட வரிப்பாடல்களைப் பாடினான். அப்பாடல்களாற் கோவலன் “பிறமகளிர் பால் விருப்புடையன்’ என்றெண்ணிப் புலம்பி அவன் கையிலுள்ள யாழை வாங்கித் தானும் வேறு குறிப்புடையாள் போலவே அகச் சுவைப் பாடல்களைப் பாடினாள். மாதவி தன்னிலை மயங்கினள் எனத் தவறாகக் கருதிய கோவலன் அவள் மீது வெறுப்புற்றுப் பிரிந்தான். தோழி மூலம் மாதவி அனுப்பிய ஒலையையும் வாங்க மறுத்தான். அதே நேரத்திலே தான் கண்ட தீய கனவினைத் தேவந்தி என்னும் பார்ப்பனத் தோழியிடம் கண்ணகி தெரிவிக்கச் சோம குண்டம், சூரிய குண்டம் என்ற பொய்கைகளில் நீராடி காம கோட்டம் சென்று தொழுதால் இம்மையிலும் மறுமையிலும் காதலனோடு மகிழ்ச்சியாக வாழலாம் என்று தோழி கூற அதைப் “பீடன்று” என்று மறுக்கிறாள் கண்ணகி. இதே நேரத்தில் வீடு திரும்பிய கோவலன் “பொய்யை மெய்யாகக் காட்டும் பரத்தையோடு ஆடி குலத்தார் சேர்த்து வைத்த அரும் பொருள் அனைத்தையும் தொலைத்தேனே' எனத் தன் ஒழுக்கக் குறைவிற்கு நாணினான். கண்ணகி இச்சிலம்பினைக் கொள்ளுங்கள் எனக் கொடுத்தாள். அச்சிலம்பை முதலாகக் கொண்டு இழந்த பொருளை ஈட்டக் கருதிய கோவலன் ஒருவரும் அறியாதபடி கடையாமத்திற் கண்ணகியுடன் மதுரைக்குப் புறப்பட்டான். எதிர்பாராத விதமாகச் சமணத்துறவியாகிய கவுந்தியடிகள் வழித்துணையாக வர அவர்கள் உறையூரை அடைந்தனர்.
மதுரை காண்டம் மூவரும் மதுரையை அடைந்தனர். கவுந்தியடிகள் கோவலன் கண்ணகி ஆகியோரை இடைக்குலப் பெண் மாதரியிடம் அடைக்கலமாகத் தந்தார். சிலம்பு விற்று வருவேன் எனக் கூறிக் கோவலன் பிரிந்தான். பாண்டி மாதேவியின் சிலம்பைத் திருடி, வாய்ப்பினை எதிர் நோக்கியிருந்த அரசப் பொற்கொல்லன் எதிர்ப்பட்டான். அவன் சூழ்ச்சியாற் கள்வனாக்கப்பட்ட கோவலன் பாண்டிய மன்னனின் ஆணையால் கொலை செய்யப்பட்டான். கண்ணகியிருந்த இடைச்சேரியில் தீய உற்பாதங்கள் பல உண்டாயின. செய்தியறிந்து துடித்துப் புலம்பினாள் கண்ணகி. கதிர்ச்செல்வனைக் 'கோவலன் கள்வன் அல்லன்” எனப் பேச வைத்தாள். சிலம்பெறிந்து அரசவையில் மெய்ப்பித்தாள். தவறுணர்ந்த பாண்டியன் உயிர் நீத்தான். பாண்டிமாதேவியும் உடனுயிர் துறந்தாள். சினந்தணியாத கண்ணகி தன் ஆற்றலால் மதுரையை எரித்தாள். மதுராபதி தெய்வம் தோன்றி ஊழ்வினையின் விளைவு என விளக்கி “14 நாட்களின் பின்னர் நீ நின் கணவனைத் தெய்வ உருவிற் காண்பாய்” எனக் கூறிச் சென்றது. வைகைக் கரை வழியே மேற்றிசை நோக்கிச் சென்று மலையேறி வேங்கை மரத்து நிழலினின்று பதினான்காவது தினத்தின் பகல் சென்ற பின்பு அங்கே தெய்வ வடிவத்தோடு வந்த
கோவலனைக் கண்டு தானும் வானவூர்தி ஏறினாள்.
வஞ்சிக்காண்டம் இதைக் கண்ட வேடர்கள் வியப்புற்று மலை வளம் காண மனைவியுடன் வந்திருந்த சேரன் செங்குட்டுவனிடம் தெரிவித்தனர். உடனிருந்த தமிழாசான்
இந்துக் តែទាំយns
66

சாத்தனார் கோவலன், கண்ணகி, பாண்டியன் ஆகியோர் வரலாறுகளை விரித்துக் கூறினார். அது கேட்டு வருந்திய செங்குட்டுவன் தன் மனைவியின் கருத்துப்படி பத்தினித் தெய்வமான கண்ணகிக்குப் படிமம் சமைக்கக் கருதினான். படையுடன் வட நாடு சென்று தமிழரசரை இகழ்ந்த கணக விசயரைச் சிறைபிடித்து, அவர் தலைமீது படிமம் சமைத்தற்குரிய இமயமலைக் கல்லினை ஏற்றிக் கொண்டு வந்தான். விதிப்படி பத்தினிக் கடவுள் படிமம் சமைத்துப் பத்தினிக் கோட்டம் எழுப்பினான். கோவலன் கொலையுண்ட செய்தியை அறிந்த தேவந்தி, செவிலித்தாய், ஆகியோர் மாதரிமகள் ஐயையுடன் சேரநாடடைந்து கண்ணகிக்கும், தங்கட்கும் உள்ள உறவை அழுது ஏங்கிச் செங்குட்டுவனுக்குத் தெரிவித்தனர், கண்ணகி நல்லாள் மின்னற் கொடி போல் தோன்றி செங்குட்டுவனை வாழ்த்தினாள். கற்புடைக் கடவுளை வலம் வந்து வணங்கினான் சேரன், சிறை நீங்கிய கனக விசயரும், குடகக் கொங்கரும் மாளுவ வேந்தரும், இலங்கைக் கயபாகு வேந்தனும் தங்கள் நாட்டிலும் பத்தினித் தெய்வத்தை பரவ விரும்பி வரம் பெற்றனர். பத்தினித் தெய்வம் தேவந்தி மீது ஆவேசித்து இளங்கோவின் இளமைத் துறவைப் பாராட்டியது. தன் துறவு வரலாறு கூறிய பத்தினியின் கற்பு வரலாற்றைத் தாம் கூறும் பேறு பெற்றதாகக் கூறும் இளங்கோ தம் காப்பியத்தைக் கேட்பவர்கள் தெய்வம் தெளிந்து தெளிந்தோர்ப் பேணித் தீதின்றி வாழ வாழ்த்துகின்றார்.
காவியத்தின் சிறப்பு
இக்காவியத்தின் சிறப்பு காவியத்தின் தலைவியாகக் குடும்பத் தலைவி வர்ணிக்கப்படுதல் ஆகும். சிலம்பின் தலையாய குறிக்கோள் பத்தினியைப் பரவுதலாகும். இதற்கேற்ப தொடக்கம் முதல் இறுதிவரை படிப்படியே கதாநாயகி கண்ணகி பெருமைப்படுத்தப் படுகின்றாள். "மாதரார் தொழுதேத்த வயங்கிய பெருங் குணத்துக் காதலாள்"என அறிமுகம் செய்வர் இளங்கோ. புகார்க் காண்டத்தில் “காமவேள் கோட்டம் சென்று தொழலாம் ” என்று கூறும் தேவந்தியிடம் “பீடன்று என்று மறுக்கும் கண்ணகியை காட்சிப்படுத்தியவர், மதுரைக் காண்டத்தில் வேட்டுவ வரியில் தெய்வமுற்ற சாலினியின் மூலம் "இவளோ கொங்கச் செல்வி குடமலையாட்டி, தென்தமிழ்ப்பாவை செய் தவக்கொழுந்து ஒரு மாமணியாய் உலகிற் கோங்கிய திரு மாமணி’ என்று பாராட்டுகிறார். அருகனைத் தவிர பிற கடவுளர் பெயரைக் கூறவும் மாட்டேன் எனக் கூறிய கவுந்தியடிகள் அந்நிலையை மறந்து “கற்புடை கடம் பூண்ட இத்தெய்வமல்லது பொற்புடைத் தெய்வம் யாம் கண்டில மால்' எனப் போற்றி வழிபடுகிறார் “வம்பப் பெருந்தெய்வம்” என்று மதுரை மக்கள் பேசுகிறார்கள். சேரன் செங்குட்டுவனாற் பத்தினிக் கோட்டம் பெறும் கண்ணகியை இலங்கைக் கயபாகு உள்ளிட்ட பிற வேந்தரும் போற்றி வணங்குகிறார்கள். இவ்வாறு கண்ணகி என்னும் பெண்ணின் பெருமையே இந்நூல் முழுவதும் விரிவாகப் பேசப்பட்டுள்ளது.

Page 93
சங்க இலக்கியங்கள் பெரும்பாலும் காதலுக்கும் வீரத்திற்குமே முதன்மை தருவன. அவற்றிலே தனிமனித உணர்ச்சிகள் பொதுமை நிலையிலேயே பாடப்பட்டன. வாழ்க்கையை முழுமையாகப் பார்த்து, உயர்ந்த உண்மைகளைக் காட்டி மனித சமுதாயத்தை வழி நடத்தும் முயற்சியை முதன்முதலிற் சிலப்பதிகாரத்தில் காண முடிவதுடன் அறநெறிக் கருத்துக்களையும் கலைச் செய்திகளையும் கதைப் போக்கில் இரண்டறக் கலந்து சொல்லோவியமாகக் கூறியிருப்பது எக் காவியத்திலும் இல்லாத சிறப்பு ஆகும். இளங்கோவின் தொடர் நிலைச் செய்யுளில் மாதவி, கண்ணகி, தாய், தந்தையர், மன்னன், பொற்கொல்லர், சமணத்துறவி முதலியோர் முக்கியத்துவம் பெற்றுள்ளனர். தனிமனிதனுக்கன்றி தமிழ்ச் சமுதாயத்திற்கே பொதுவான சில பிரச்சினைகள் அலசப்படுகின்றன.
சிலப்பதிகாரத்தை தமிழ்க்கலைக்களஞ்சியம் என்பர். அதன் அரங்ககேற்றுக் காதையும் அதற்கு அடியார்க்கு நல்லார் எழுதியுள்ள உரையும் தமிழிசையின் பல்வேறு சிறப்புகளை அறிய உதவும். இசையாசிரியன் , தண்ணுமையாசிரியன், யாழாசிரியன், குழலாசிரியன், ஆகியோரின் இலக்கணங்கள் அந்நூலிற் கூறப்பட்டுள்ளன. உரையாசிரியர் காலத்திற் பேரி யாழ், மகரயாழ் சகோட யாழ், செங்கோட்டு யாழ் என்பவை வழங்கியுள்ளன. இவை முறையே 21, 19, 14 7 என்னும் அளவில் நரம்புகள் உடையன. குழலைச் செய்யும் முறை பற்றிச் சிலம்பு அரங்கேற்று காதையின் ஆறாம் அடிக்கான உரையிற் காணலாம். அரங்கேற்றுக்காதை ஆய்ச்சியர் குரவை, கானல் வரி முதலிய பகுதிகளிற் காணப்படும் செய்திகள் இசை இலக்கணம் தொடர்பானவை. இசை யாசிரியருக்கு இலக்கணங்களாகப் பின்வரும் செய்திகள் கூறப்படுகின்றன. இசையாசிரியன் என்பவன் சொல்லப் படுகின்ற சொற்கள் இசை பூணும்படியைக் கடைப்பிடித்து இசைவேறுபாடுகளை உடையவனாக இருத்தல் வேண்டும். கானல் வரியிற் கோவலனும் மாதவியும் யாழ் வாசித்துப் பாடு மிடத்து யாழிசைக் கரணம் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றது.
நாடக உறுப்புக்களை உடைத்தாதலின் சிலப்பதிகரம் நாடகக் காப்பியம் என்பது அடியார்க்கு நல்லார் கருத்தாகும். உயிர்த்துடிப்பு நிறைந்த உரையாடல் பொருள் மிகுந்த சொற்கள், பாத்திர வார்ப்பு தொடக்கம், முடிவு செயலொருமை, கால ஒருமை புனைந்துரை அனைத்தாலும் நாடகக் காப்பியம் என்ற பெயருக்குப் பொருத்தமாகின்றது. இக்காப்பியத்திற் சில இசைப்பாடல்கள் ஒருவர் கூற்றாக மட்டும் அமையாமல் பாத்திரங்கள் தமக்குட் பேசுபவனாகவும், அனைவரும் ஒன்று சேர்ந்து பாடுபவனவாகவும் அமைந்து நாடகக் காட்சி போல் அமைதலால் இதற்கு நாடகக் காப்பியம் என்றொரு பெயர் வத்திருத்தல் கூடும், கானல்வரி, வேட்டுவ வரி, ஆய்ச்சியர் குரலை, குன்றக்குரவை வாழ்த்துக் காதை, உரையாடற்திறன் சிறந்த வழக்குரைகாதை ஆகியவை நாடகப் போக்கில் அமைந்துள்ளன.

ஆடற் குறிப்புகளாக பிண்டி, பிணையால், எழிற்கை, தொழிற்கை, கூடை, வாரம் ஆகியவை குறிப்பிடப்பட்டுள்ளன. கூத்துவகைகளாக இருவகைக் கூத்து (வேத்தியல், பொதுவியல்) பதினோராடல், குரவை, வரி, என்பன சொல்லப்பட்டுள்ளன. கூத்திற் பங்கு கொள்ளும் கூத்தியரது அமைதி, ஆடலாசிரியன் அமைதி இசையாசிரியன் அமைதி, கவிஞன் அமைதி, தன்னுமையாசிரியன் அமைதி, குழலோன் அமைதி என்பன விளக்கப்பட்டுள்ளன. சமயத் தொடர்போடு கொடுகொட்டி, பாண்டரங்கம், அல்லியம், மல்லினாடல், துடி , குடை, குடம், படி, மரக்கால், பாவைக்கூத்து, கடையம் ஆகியன கடலாடு காதையிற் காட்டப்பட்டுள்ளன.
காமத் தொடர்புடைய கண்கூடுவரி, காண்வரிக் கோலம், தேர்ச்சி வரி, உள்வரியாடல், பின்புற வரி, கிளர்வரிக் கோலம், காட்சி வரி, எடுத்து கோள் வரி ஆகியன விளக்கப் பட்டுள்ளன. இவற்றோடு அவ்வந் நிலத்திற்கேற்ப ஆடும் ஆடல்களும் சிலப்பதிகாரத்திற் கூறப்பட்டுள்ளன. வேட்டுவராடல், ஆய்ச்சியர் ஆடல், குறவர் ஆடல்கள் விவரிக்கப்படுகின்றன. மகளிர் விளையாட்டுக்களோடு தொடர்புடைய அம்மானை வரி, கந்துகவரி, ஊசல்வரி, வள்ளைப்பாட்டு, துணங்கை குரவை போன்றவையும் விளக்கப்பட்டுள்ளன.
இவ்வாறு எண்ணற்ற இசை, நாட்டியச் செய்திகளை இணைத்து இலக்கியத்தரம் குன்றாமல் விளங்குகிறது சிலப்பதிகாரம் முடிவாகக் கூறுமிடத்துத் தமிழ்க் காப்பிய உலகிற் சிலப்பதிகாரம் தலைமை சான்ற தனிச்சிறப்புடைய காப்பியம் எனலாம். இயல் இசை, நாடகம் என்னும் மூன்றும் மொழிவதால் முத்தமிழ்க் காப்பியம்; காலம், இடம், காட்சிகளை, திறம்பட புனைவதாலும் உரையாடற் பகுதிகளிலே தனித்திறன் காட்டுவதாலும் நாடகக் காப்பியம், முடி மன்னரைத் தவிர்த்து வணிகர் குலத்திலே பிறந்த கண்ணகி, கோவலன் ஆகியோரைக் காப்பிய நாயகர்களாக்கியிருப்பதால் குடிமக்கள் காப்பியம் ஆகும்.
இல்லறத்தோர் துறவறத்தோரைப் போற்றும் நெறிக்கு மாறாகத் துறவி இல்லறத்தோரைப் போற்றித் தொழுவதால் புரட்சிக் காப்பியம் என்னும் தனிச் சிறப்புடையது. தேஹ.)
சிலாதர்
இவர் இளமைப் பருவத்திலே தனது வீட்டிற்கு வந்த அதிதி ஒருவர் உண்ணும் பொழுது விளையாட்டாக அவரது உணவிற் சிறு கல்லொன்றினை எறிந்தார். வந்தவரும் அச்சிறு கல்லை அன்னத்துடன் சேர்த்துப் புசித்து விட்டார்.
கல்லை எறிந்த சிறுவன் வளர்ந்து சகல கலைஞானத்தையும் பெற்று, தவம் செய்து மாதவச் செல்வரானார். ஒருமுறை அவர் அறக்கடவுளின் உலகத்திற்குச் சென்றார். அங்கு ஒரு பெரிய மலையைக் கண்டார். இது எப்படி இங்கு அமைந்துள்ளது என்று அறக்கடவுளை வினவ இது நீர் சிறிய குழந்தையாக இருந்த
ඕjñññā க்களஞ்சியம்

Page 94
பொழுது முனிவர் ஒருவரது உணவில் எறிந்த கல், நாள் தோறும் நீர் வளர வளர அக்கல்லும் வளர்ந்து மலையாகி விட்டது. இதனை நீரே உண்ண வேண்டும். அது தான் தீர்வு என அறக்கடவுள் கூறினார்.
இதனைக் கேட்டு நடுங்கி பூவுலகம் வந்து அக்குன்றுக்குச் சமமான ஒரு குன்றைச் சிறிது சிறிதாக உடைத்துக் கரைத்துக் குடித்தார். குன்றும் கரைந்தது. அவரது தீவினையும் கரைந்தது. சிலையையே (கல்) உணவாகக் கொண்டதனால் அவர் சிலாதனர் என அழைக்கப்பட்டார்.
இச்சிலாத முனிவர் யாக பூமியை உழும்பொழுது கிடைத்தவரே "செபேசர் என்ற நந்தியம் பெருமான். (வவை)
சிவகனம்
சிவகணம் எனில் சைவசமய முழுமுதற் கடவுளாகிய சிவபிரானுடைய கணம் எனப் பொருள்படும். கணம் எனும் பதம் குழு, கூட்டம், தொகுப்பு, பரிவாரங்கள், படை எனப் பொருள்படும். இங்கு சிவபிரானுடைய பரிவாரங்கள் அல்லது அவரைப் பின்பற்றுவோர், அல்லது அவரின் சேவகர்கள் என்னும் கருத்துக்களிலும் இப்பதம் வந்துள்ளது.
கணங்களுக்குத் தலைவர் கணபதி. அவர் சிவபிரான், பார்வதி ஆகியோரின் மூத்த திருக்குமாரனாகவும், கணங்களின் தலைவராகவும் சிறப்பாகப் போற்றப்படுகின்றார்.
சிவபிரானுடைய மிகச் சிறந்த பக்தர்களிலொருவரான நந்திதேவர் அல்லது நந்திகேஸ்வரர் சிவகணங்களில் முதன்மையானவராகவும், சிவகணங்களின் நேரடித்தலை வராகவும், சிவபிரானின் வாகனமாகவும் சிறப்பாகக் கூறப் படுகின்றார்.
புஷ்பதந்தன் என்பவரும் வேறு பலரும் சிவகணங்களாகக் குறிப்பிடப்படுகின்றனர். சிவகணங்கள் சிலரின் தோற்றம், பெயர்களும் குறிப்பிடற்பாலன. எடுத்துக்காட்டுகளாக சங்ககர்ண (சங்குபோன்ற காது உடையவன்), விசாக, சர்வாந்தக (ஒருவகை மேளம்), ஜலாங்க (வலையினால் சிறப்புற்றவன்), கணபுங்கவ, கபாலி ( கபாலத்தை உடையவன்), காக பாத (காகத்தின் கால் போன்ற காலையுடையவன்), விருஷப (எருது வடிவமுடையவன்) போன்றவர்களைக் குறிப்பிடலாம். இக்கணங்களுக்கு மெல்லிய உடம்பும், பருத்தவயிறும், சிங்கம், யானை, பன்றி, ஆடு, குரங்கு, மீன் முதலியனவற்றின் தலைகளும், கைகளில் பல படைக்கலங்களும் இருப்பதாகக் கூறப்படுகின்றது. சில கணங்களுக்கு வாகனங்களும் உள்ளன. இவ்வாறு பல்வேறு வடிவங்களுடன் கணங்களை வருணிப்பதை சமய, தத்துவக் குறியீ எனக் கொள்ளுதல் பொருத்தமானதாகத் தென்படுகின்றது.
இந்துக்கலைக்களஞ்சியம்

ஒருவர் சமூகத்தின் எப்பிரிவிலே பிறந்தாலும் குறிப்பிட்ட புண்ணியச் செயல்களால் கணங்களிலொருவராகலாம் என்பதும் சில கதைகள் மூலம் அறியப்படுகின்றது.
இக்கணங்கள் இறைவனுக்கு - சிவபிரானுக்குச் செய்ய
வேண்டியனவற்றைச் செய்து கொண்டிருப்பர். சிவ சாந்நித்யத்தை என்றும் காணும் நற்பேற்றினைப் பெற்றிருப்பர். (ബി. മീ.)
拿 சிவசமவாதம்
முத்திநிலையில் ஆன்மாவின் நிலை யாதென்பது தொடர்பாக அகப்புறச்சமயங்களான பாசுபதம், மாவிரதம், காபாலிகம் மற்றும் அகச்சமயங்களிற்கு எதிராகத் சைவசித்தாந்திகளினாலே தெரிவிக்கப்படும் குற்றச் சாட்டுக்களில் ஒன்றே சமவாதம் என்ற கருத்தாகும். சிவசமவாதம் அவற்றில் ஒன்றாகும். முத்தியடைந்த ஆன்மாக்கள் பதியாகிய சிவனை யொத்த ஆற்றல்களைக் கொண்டிருக்கு மென சிவசமவாதம் வாதிடுகிறது. பாசுபதர் சங்கிராந்த சமவாதிகளென்றும், மாவிரதர் உற்பத்தி சமவாதிகளென்றும், கபாலிகர் ஆவேச சமவாதிகளென்றும் சிவஞானமுனிவர் சிவஞான பாடியத்தின் அவையடக்கப் பகுதியிற் குறிப்பிடுவது மனங் கொள்ளத்தக்கது.
ஆன்மாக்கள் பலவாய், அனாதியானவையாய் வியாபக இயல்புடையனவாக இருக்கின்றதென ஏற்றுக்கொள்ளும் பாசுபதர் ஆணவமலத்தை ஏற்றுக் கொள்வதில்லை, கன்மம் மாயை ஆகிய இருமலங்களாலுமே இன்பதுன்ப அனுபவங்கள் ஆன்மாக்களிற்கு ஏற்படுகின்றன. நீண்டகாலம் போகங்களில் அழுந்திய ஆன்மாவானது அதில் வெறுப்புற்றிருக்கும் நிலையில், சிவஞானம் அதனைப்பற்றும். இந்நிலையில் ஆன்மாவானது சிவனது குணங்களைப் பெறுவதன் மூலம் சிவனுக்குச் சமனான நிலையை அடையுமென்ற நிலைப்பாட்டைப் பாசுபதம் போதிப்பதனாற் சமவாதம் பேசுகின்றதென்ற குற்றச்சாட்டிற் குரியதெனச் சிவஞானசுவாமிகள் வாதிடுவர்.
தந்திரங்கள் கூறும் விதிமுறைகளின்படி தீட்சை பெற்று, மாவிரதங்களுடைய சங்கற்பத்தின்படி எலும்பு மாலையணிதல் முதலான சரியைவழி தவறாதொழுகுவதன் மூலம் ஆன்மாக்கள் சீவன்முத்தன் நிலையடையும். இவ்வாறு சீவன்முத்த நிலையடைந்த ஆன்மாவிற்குச் சிவனோடு சமனான எல்லாக்குணங்களும் உற்பத்தியாகுமென்பதும் மாவிரதருடைய சமவாதநிலைப்பாடாகும். பசு, பாசம் என்பனவற்றின் இயல்பு தொடர்பாக மாவிரதரின் நிலைப்பாட்டை ஏற்றுக்கொள்ளும் கபாலிகர், சீவன்முத்தனான ஆன்மா சிவ ஆவேசத்தினால் சிவனுக்குரிய அனைத்துக் குணங்களையும் பெற்றுச் சிவனுக்குச் சமமாகுமென்ற கருத்துடையவர்கள்.
எவ்வாறாயினும் சிவசமவாதம் ஒருசமயமெய்யியற் சிந்தனை
யென்ற அடிப்படையில் பாசுபதம், மாவிரதம், காபாலிகம்

Page 95
என்பனவற்றிலிருந்து வேறுபட்டது. சித்தாந்தசைவர் போலவே
பதி, பசு, பாசம் என்ற மூன்றையும் நித்தியப்பொருளாக
ஏற்றுக்கொள்ளும் சிவசமவாதமதத்தின் முக்கிய கருத்துக்கள் மேல்வருவனவாகும்.
சொரூபலட்சணம்
'தி -
நாம ரூபகிரியையில்லாது, நிஷ்களனாய்,நின்மலனாய் சுத்தனாய், பற்றில்லாதவனாய் இருப்பது சிவனின் சொரூப லட்சணம்.
பசு - அனேகனாய், நித்தியரூபமாய், அனாதி மலசம்பந்தராய் மலத்தோடு கூடித் தன்னையும் தலைவனையும் அறியாமலிருப்பது ஆன்மாவின் சொரூப லட்சணம்.
Lਥ- நித்தியமாய், அனாதியாய் வியாபக சக்தியுடைய தாயிருப்பது பாசத்தின் சொரூபலட்சணம்.
தடத்தலட்சணம் :
U5 -
L]Bj; --
UIT Fish
ஆன்மாவின் மலபந்தம் நீங்குதற் பொருட்டு அனேக சக்திகள் மூர்த்தி களாவது பதியின் தடத்தலட்சணம். மலந்தீரும்பொருட்டுச் சிவன் மாயாயுபாயமாக ஆத்மாக்களுக்குத் தனுகரண புவன போகங்களை உருவாக்கிக் கொடுக்க அதிலே திரிவது பசுவின் தடத்தலட்சணம்.
சிவனால் விரிந்து பக்குவப்படுவது மலத்தின் தடத்தலட்சணம்.
பந்தநிலை:
LDTDLuសា (ល கன்மவசத்தனாகிய ஆன்மாவிற்கு அதன் மலம் தீரும்பொருட்டுத் தனுகரணபுவன போகங்களைக் கொடுத்து அவற்றைச் செனனமரணப் படுத்துவதே பந்தநிலையாகும்.
முத்திநிலை:
கன்மசமத்துவத்தால் மும்மலபரிபாகம் உண்டாகிறபொழுது நான்குவித சத்தினிபாத சமயவிசேட தீட்சைபெற்று, விதிமுறைப்படி சிவனைப் பூசித்து அதனாற் பெற்ற தீவிர சக்திணிபாத பக்குவத்தினாலே அத்து வாசுத்தி பண்ணுவதான நிருவான தீட்சை யினால், 36 தத்துவங்களும், பஞ்ச கோசங்களும் நீக்கி, பதியினால் பந்த பாசங்கள் அறிவிக்கப்பட்டு, பாசம் தீர்ந்த பசுவானது ஈஸ்வரனைப்போல எங்கும் பரிபூரணனாய்.சர்வஞானத்துவம், சர்வார்த்த கர்த்தத்துவம் உடையவனாகி, பஞ்ச கிருத்தியம் பண்ணவல்லவனாய்ச், சிவனுடன் கூடிச் சாயுச்சியமாகாமல் வேறாயிருப்பதே
முத்திநிலையாகும்.

மோட்சத்திற் சிவனுக்கு வேறாக சர்வகர்த்துருத்துவமுண்டாய் தேகாந்தத்திலே பஞ்சகிருத்தியம் செய்யுமென்ற சிவசமவாத நிலைப்பாடும், முத்திக்காலத்து ஆன்மாவானது சிவனது உதவியில்லாதே பரதந்திரம் (கட்டு) நீங்கிச் சிவனைப்போலத் தன்வயத்தனாய் நின்று இன்புற்றுவாழும் என்ற சிவசமவாதப் பெறுகையும் சித்தாந்தசைவத்திற்கு உடன்பாடானதல்ல. சிவஞானபாடியத்தின் பொதுவதிகாரத்திற் சிவசமவாதத்திற் கெதிரான விரிவான விமரிசனம் சிவஞானசுவாமிகளாலே தரப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. (சேர கி.)
சிவசின்னங்கள்
சிவத்தைப் பரம்பொருளாகக் கொள்வது சிவநெறி. சைவ சமயத்தினனாகப் பிறந்துவிட்டால் மாத்திரம் ஒருவன் சைவனாகி விடமுடியாது. வாழ்க்கையிற் சைவ ஆசாரங்கள், சைவ ஒழுக்கங்களை மேற்கொள்பவர்களே உண்மைச் சைவர்கள். சிவ நெறி நிற்கும் சைவர்களுக்கு உரிய சிவ சின்னங்கள் விபூதி, உருத்திராக்கம், பஞ்சாட்சரம் லிங்கம், ரிஷபம், திரிசூலம் என்பன.
சிவசின்னங்கள் சிவபெருமானைக் குறித்து நிற்பன. சைவ மக்களால் இவை அணியப் பெற்றும் துதிக்கப் பெற்றும் வருபவை. சிவ சின்னங்களைக் காணும் போது அவற்றைச் சிவமாகக் கருதி வழிபட்டு வருதல் சைவமரபாகிவிட்டது.
விபூதி விபூதி, திருநீறு, இரட்சை, சாரம், பசிதம் என்பன ஒரு பொருட் சொற்கள் . இவற்றின் பொருளமைதி வருமாறு:
விபூதி - அழியாத ஞானத்தையும் செல்வத்தையுங்
கொடுப்பது.
திருநீறு - தீவினை அனைத்தையும் நீறுபடுத்துவது.
இரட்சை - தீமைகளிலிருந்து இரட்சிப்பது.
FT = ஆன்மாக்களின் மல மாசைப் போக்குவது.
பசிதம் - அறியாமையை அகற்றிச் சோதி நல்குவது.
விபூதி எப்பொழுதும் இறைவனின் நினைப்பை உணர்த்துவதால் மனம், வாக்கு, காயம் என்பன தூய்மை பெற்றுவிடுகின்றன. ஆதலாற் சைவ மக்களின் பண்பு வளர்ச்சியிலே திருநீற்றின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கது. இவ்விடத்தில் ஒளவையாரின் “நீறில்லா நெற்றி பாழ்' என்ற கூற்று மனம் கொள்ளத் தக்கது.
வேதங்கள், ஆகமங்கள், புராணங்கள், இதிகாசங்கள், தேவாரத் திருமுறைகள். சிவனடியார் வரலாறுகள் என்பவற்றால் திருநீறு மகிமைப்படுத்தப்பட்டு வந்துள்ளது. கோயிற் கிரியைகள், பூசை வழிபாடுகள், ஏனைய சைவக் கிரியைகள் யாவற்றிலும் திருநீற்றிற்கு முக்கிய இடம் கொடுக்கப்படுகிறது. சிவப் பிரசாதமாக அடியார்களுக்கு வழங்கப்படுகிறது. மந்திரமும்,
இந்துக் க்களஞ்சியம்

Page 96
மருந்துமாக உடல் நோய்களைத் தீர்க்கவும் பிறவிப் பிணியறுக்கவும் சைவ மக்களால் விபூதி பயன்படுத்தப்படுகிறது. சேக்கிழார் பெரியபுராணம், திருத்தொண்டர்களின் வரலாற்றைக் கூறுமிடத்து அவர்கள் திருநீற்றின் மகிமையை விளங்க வைக்கவே பிறந்தவர்களாகக் கூறுகிறது. மெய்ப்பொருள் நாயனார், ஏநாதி நாதநாயனார், சேரமான் பெருமாள் நாயனார் போன்றவர்கள் திருநீற்றைச் சிவமாகப் போற்றி உயர்ந்தவர்கள்.
கொடிய சூலை நோயினால் வருந்திய திருநாவுக்கரசர் தமக்கை திலகவதியாரிடம் திருநீறு பெற்றுத் திருவதிகை வீரட்டானேஸ்வரப் பெருமானின் திருவருட் கடாட்சத்தால் நோய் நீங்கப்பெற்றார்.
வெப்பு நோயினாற் கடுமையாக வருந்திய பாண்டிய மன்னனுக்குத் திருநீறு அணிவித்துத் திருநீற்றுப் பதிகம் பாடித் திருவாலவாய்ப் பெருமானின் திருவருட் துணைபெற்றுத் திருஞானசம்பந்தர் மன்னனின் சுர நோயைத் தீர்த்தார். அம்மன்னனுக்கிருந்த கூனும் நீங்கப் பெற்று உடல் அழகும், பொலிவும் பெற்றது. ஞானசம்பந்தர் தன் திருநீற்றுப் பதிகத்தில் திருநீறு மந்திரமாகவும், அழகைத் தருவதாகவும் தேவர்களால் விரும்பப்படுதாகவும், வேதத்தில் விளம்பப்பட்டுள்ளதாகவும், வெந்துயர் துடைக்கும் ஆற்றலுள்ளதாகவும், மெய்யறிவைத் தரவல்லதாகவும், புன்மையை நீக்கக் கூடியதாகவும் வீடுபேற்றை நல்கக் கூடியதாகவும், முனிவர்களால் விரும்பி அணியப்படு வதாகவும் உள்ளது என்று பாடியுள்ளார்.
இத்தகைய சிறப்புக்கள் பல பொருந்திய விபூதி கற்பம், அநுகற்பம், உபகற்பம், அகற்பம் என நால்வகைப்படும்.
கற்பம் நல்லிலக்கணங்கள் அமைந்த பசுவின் சாணத்தை விதிக்கப்பட்ட நாட்களில் எடுத்துக் குற்றங்களை நீக்கிப்பதருடன் சேர்த்துலர்த்தி அக்கினியாற் சுட்டு வெண்ணிறமானதை எடுத்து புதுப் பாண்டத்தில் வாசனை மலர்களை இட்டுக் கொஞ்சம் கொஞ்சமாக எடுத்தணிவது.
அநுகற்பம்: சித்திரை மாதத்திலே காட்டிலே உலர்ந்து கிடக்கின்ற சாணத்தைக் கொண்டு வந்து இடித்துச் சுட்டு புதுப்பாண்டத்தில் நறுமலர்களோடு சேர்த்து வைத்து எடுத்துத் தரிப்பது.
உபகற்பம்: கோமயம் கிடைக்காதவிடத்து இரு மரங்கள் இணைந்து உரோஞ்சுதலில் அவை எரிந்து தானே உண்டான சாம்பலையாவது செங்கற் சூளையினால் உண்டான சாம்பரையாவது கொண்டு வந்து பஞ்சகவ்வியத்திற் கலந்து நெற்பதருடன் கலந்து எரித்து எடுத்து வைத்துப் பாவிப்பது.
அகற்பம்: யாதாயினும் ஒரு காரணத்தால் மலைகளிலும் நிலங் களிலும் இயற்கையாய் விளைந்த திருநீற்றைச் சுத்தி செய்து

எடுப்பது. கதிர்காமத்தில் இவ்வாறு உண்டு. சமித்துக்களை ஒமாக்கினியிற் சுட்டும் எடுக்கப்படுகிறது.
விபூதியின் பலன்கள் கருநிற விபூதி - வியா தி  ைய உண்டாக்கும். செந்நிற விபூதி - கீர்த்தியைக் கெடுக்கும். புகைநிற விபூதி - ஆயுளைக் குறைக்கும். பொன்னிற விபூதி - செல்வத் தைக் கெடுக்கும். ஆகையால் வெண்ணிற விபூதியையே தரித்தல் வேண்டும். இது போகம், மோட்சம் இரண்டையும் கொடுக்கும்.
விபூதி தரிக்கும் முறையும் காலங்களும்:
வடக்கேயாயினும், கிழக்கேயாயினும் பார்த்து இருந்து கொண்டு அண்ணாந்து வலக்கையின் நடுவிரல் மூன்றினாலும் “சிவசிவா’ என்று சொல்லி நிலத்தில் சிந்தாமல் நெற்றியில் அணிய வேண்டும். சுவாமி, அக்கினி, குரு, சிவனடியார்கள் முன் முகத்தைத் திருப்பி நின்று தரித்தல் வேண்டும். நிலத்திற் சிந்தினால் அதை எடுத்து சுத்தம் செய்ய வேண்டும். உடம்பில் பரவப் பூசுதல் உத்தூளனம் எனப்படும். நீரில் குழைத்து மூன்று குறியாகத் தரித்தல் திரிபுண்டரம் எனப்படும். தீட்சை பெற்றவர் திரி புண்டரமாய் அணிவர்.
விபூதி காலை மாலை முகம் கழுவியவுடனும், ஸ்நானம் செய்தவுடனும், பூசைக்கு முன்பும் ஆலயம் செல்லும் போதும் உண்ணுவதற்கு முன்னும், நித்திரைக்குப் போகும் பொழுதும், நித்திரை விட்டெழுந்தவுடனும், சூரிய உதய, அஸ்தமன நேரமும் அவசியம் தரித்தல் வேண்டும். இதை சுத்தமான மட்பாத்திரம், உலோகப் பாத்திரங்களில் அல்லது பட்டுப்பை, சம்புடம், சிமிழ் என்பவற்றிற் புனிதமாகப் பேணிவைக்க வேண்டும் என சமய நூல்கள் கூறுகிறன.
பசுவின் சாணத்தால் உருவான நீறு நோய்க்கிருமிகளைக் கொல்ல வல்லது என்பது விஞ்ஞானிகளின் கருத்து. இதனை உடம்பில் பரவப் பூசினால் விசப் பூச்சிகள், கிருமிகள், வியாதிகள், நீர்த்தோஷங்களைப் போக்கும். உட்கொண்டாலும் நோய்களைக் கொல்லும். பேய் பிசாசுகளை ஒட்டவும் கண்ணுாறு முதலியவைகளைப் போக்கவும் திருநீற்றை உபயோகிப்பர்.
உருத்திராக்கம் சிவபக்தர்கள் அணிய வேண்டிய சின்னங்களுள் உருத்திராக்கமும் ஒன்நாகும். உருத்திர + அக்கம், உருத்திராக் கமாகியது. இது பற்றிய விளக்கம் புராணங்களிற் கூறுப்படு கிறது.
புராணக் கதை திரிபுரத்து அசுரன் பெருங் கொடுங்கோலனாக இருந்தான். அவன் ஆட்சியில் தேவர்களும் பிரம்மாவும் அல்லலுற்றனர். இதனால் அனைவரும் சிவபெருமானிடத்து முறையிட்டனர். சிவபெருமான் இடையூறுகளை எல்லாம் நொடியில் நீக்கி எல்லாத் துன்பத்தையும் துடைக்கும் அகோரம் என்னும் மகாஸ்திரத்தை ஆயிரம் வருடங்கள் கண்மூடி மனதில்

Page 97
தியானித்துக் கடும் தவம் புரிந்தார். அவர் கண்களைத் திறந்த போது கண்களிலிருந்தும் மூன்று துளி நீர்விழுந்தது. அதுவே உருத்திராக்கமாயிற்று. வலது கண்ணாகிய சூரிய விழியிலிருந்து வந்த நீரிலே பன்னிரண்டு வகையான உருத்திராக்கங்கள் கபில நிறத்தோடு தோன்றின. இடது கண்ணாகிய சந்திர விழியிலிருந்து பதினாறுவகையான உருத்திராக்கங்கள் வெண்மையான நிறத்தில் தோன்றின. மூன்றாவது கண்ணாகிய அக்கினியிலிருந்து கறுப்பு நிறத்திற் பத்து வகையான உருத்திராக்கங்கள் தோன்றின. இதிற் செந்நிறம் கூடித்திரியர் என்றும், வெண்மை நிறம் அந்தணர் என்றும், கருமை நிறம் மற்ற இனத்தவர் என்றும் கூறுவதுண்டு. உருத்திராக்கத்தின் மேற் பாகத்தில் பிரம்மாவும் நடுப்பாகத்தில் உருத்திரனும், கீழ்ப்பாகத்தில் விஷ்ணுவும் என்றவாறு மும்மூர்த்திகளின் ஒருமித்த வடிவமாக இருப்பதாகக் கூறுவர்.
உருத்திராக்க மாலைகள் மாலைகள் ஒரே முகமுடைய சாதிகளால் இருத்தல் வேண்டும். பல முக மணிகள் ஒரே மாலையிற் சேர்த்தல் முறையாகாது. முகத்தோடு முகமாக அமைய இடையில் பொன், வெள்ளி, பவளம், பளிங்கு முதலிய ஏதேனும் இடப்பட்டிருக்க வேண்டும். மாலையில் தொங்கல் இரண்டையும் சேர்த்து முடியுமிடத்தில் அதே முகமுடைய பெரிய மணி ஒன்றை செபமாலையில் இட்டு முடிவது வழக்கம். மார்பில் தரிக்க வேண்டிய மணிகள் பெரிதாய் முப்பத்திரண்டு இருக்க வேண்டும். செபமாலையில் சிறு மணிகளால் நூற்றெட்டு, ஐம்பத்து நான்கு இருபத்தேழு மணிகள் இருக்க வேண்டும் என்று சமய சாஸ்திர நூல்கள் கூறுகின்றன. கோயிலுக்குப் போகும் பொழுதும், விரதம், சிரார்த்தம் அனுட்டான காலங்களிலும், புண்ணிய தலயாத்திரை செய்யும் போதும், தீர்த்தம் ஆடும் பொழுதும் வேறு சுபகாலங்களிலும் தரித்தால் பலன் அதிகம் உண்டாகும் என்பர் உருத்திராக்க மாலையைத் தலையிலே தரித்துக் கொண்டால் கங்கா ஸ்நானம் செய்த பலன் கிட்டும். சிரம், கழுத்து, காது, மார்பு, கைகள் முதலிய அங்கங்களில் உருத்திராக்கம் தரித்துக் கொள்வர். மணிகளில் உயர்ந்த உருத்திராக்கத்தைத் தானம் செய்வது மிகச் சிறந்த தானம்
எனப்படும்.
உருத்திராக்கம் ஆன்மீக வாழ்வுக்கு மட்டுமன்றி லெளகீக வாழ்விற்கும் பயன்படுகிறது. இதில் மின்சார சக்தி இருப்பதைப் பெளதீக சாஸ்திரங்கள் கண்டிருக்கின்றன. அத்துடன் தேகத்திலுள்ள சில நோய்களை நீக்குந்தன்மை இதற்குண்டு. இருதய சம்பந்தமான நோய் உள்ளவர்கள் ஒரு மண்பாத்திரத்திலே சுத்தமான ஜலம் விட்டு அதில் உருத்திராக்க மணியைப் பன்னிரண்டு மணிநேரம் ஊறவைத்து அந்தத் தண்ணிரைப் பருக கண்டிப்பாக குணம் கிட்டும் என்பர் உருத்திராக்கம் பக்தி, ஞானம், மனோசக்தி என ஆத்மபலத்தைக் கொடுப்பதோடு நோயற்ற வாழ்வு, தேகபலம் ஆகியவற்றையும் நல்குகிறது.

பஞ்சாட்சரம்
பஞ்ச - ஐந்து; அட்சரம் - எழுத்துக்கள், ஐந்து எழுத்துக்களால் ஆனது பஞ்சாட்சரம். சிவ சின்னங்களுள் விபூதி, உருத்திராக்கம் என்பன எமது ஊனக் கண்களுக்குப் புலப்படக் கூடியன. ஆனால் பஞ்சாட்சர மந்திரமோ அப்படியல்ல. இதன் உண்மையை ஒதியும், செபம் செய்தும் மனனம் செய்தும்தான் அறியலாம். மந்திரம் என்பது தம்மை உச்சரிப்பவரைக் காப்பது. எல்லாச் சமயத்தினர்க்கும் மந்திரங்கள் உள்ளன. அவற்றை உச்சரித்தே இறைவனை வழிபடுகின்றனர். சைவர்கள் தவறாமல் உச்சரிக்க வேண்டிய மந்திரம் நமசிவாய' என்ற ஐந்தெழுத்தாகும்.
உச்சரிப்பவனை இறைவனுடன் தொடர்பு படுத்தும் சிறப்பான சக்தி மந்திரத்திற்கு உள்ளது. எப்படி உச்சரித்தாலும் இறைவனுடைய திருமந்திரம் நன்மையே செய்கிறது. பக்தி சிரத்தையுடன் செபிக்கும்போது விரைவில் பயன்கிடைக்கிறது. எனவே பஞ்சாட்சர மந்திரம் உள்நின்று உள்ளத்தைத் தூய்மைப்படுத்திப் பக்குவ நிலையை அடையச் செய்யும் சாதனமாகும்.
வேதத்தில் நமசிவாய மந்திரம் நால்வகை வேதங்களில் அதர்வவேதம் ஏனைய மூன்று வேதங்களிலும் அடங்கிவிடுவதால் வேதங்கள் திரயீவித்யா எனப்படுகின்றன. இதில் யசுர்வேதத்தில் உள்ள ஏழு சம்கிதைகளில் நடுவில் உள்ள நான்காம் சம்கிதையில் சிவதராயச் என்று சொல்லப்படும் மந்திரம் உள்ளது. எனவே வடமொழி வேதத்தில் நடுநாயகமாக விளங்குவது திருவைந்தெழுத்து எனலாம்.
பஞ்சாட்சர மந்திரத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்தே நாயன்மார்கள் விசேட பதிகங்கள் பாடி இருக்கின்றனர். திருநாவுக்கரசு நாயனார் நமச்சிவாயப் பதிகத்தில் நற்றுணை யாவது நமச்சிவாயவே, நாவினுக்கருங்கலம் நமச்சிவாயவே, உலகினிற் பயின்ற பாவத்தை நண்ணிநின்று அறுப்பது நமச்சிவாயவே, நடுக்கத்தைக் கெடுப்பது நமச்சிவாயவே, நல்லகவிளக்கது நமச் சிவாயவே, நன்னெறியாவது நமச்சிவாயவே என்றெல்லாம் பாடி,
மாப்பினை தழுவிய மாதோர் பாகத்தன் பூப்பினை திருந்தடிப் பொருந்தக் கைதொழ நாப்பினை தழுவிய நமச்சிவாய பத்து ஏத்தவல்லார் தமக்கிடுக்கன் இல்லையே என இறுதியில் முடித்தருளியுள்ளார்.
திருமூலர் திருமந்திரத்தில் இவ்வைந்தெழுத்தைத் தித்திக்கும் கனி எனப் பாடி உள்ளார்.
ஒன்று கண்டீர் இவ்வுலகுக் கொருகனி நன்று கண்டாப் அது நமச்சிவாயக்கனி மென்று கண்டால் அது மெத்தென்றிருக்கும் தின்று கண்டால் அது தித்திக்கும் தேனே
இந்துக்

Page 98
சைவ சமயத்திற்கு ஒப்பற்ற பெருமை தருவது
இவ்வைந்தெழுத்துமந்திரமேயாகும். இதனை உண்மை விளக்கப்
பாடல் ஒன்று வலியுறுத்தி நிற்கிறது.
அஞ்செழுத்தே ஆகமமும் அண்ணல் அருமறையும் அஞ்செழுத்தே ஆதிபுராணம் அனைத்தும் -
அஞ்செழுத்தே
ஆனந்தத் தாண்டவமும் ஆறாறுக்கப்பாலும் மோனந்த மாமுத்தியும்
இறைவன் அருளிய வேதமும், முதன்மைபெற்ற புராணங்கள் அனைத்தும் இறைவனது ஆனந்த நடனமும் முப்பத்தாறு தத்துவங்களுக்கப்பாற்பட்ட பேரின்ப நிலையாகிய முத்தி நிலையும் ஆகிய அனைத்துமே திருவைந்தெழுத்தே என்று கூறுகிறது அது.
ஒதும் முறை பஞ்சாட்சரம் சிகராதி பஞ்சாட்சரம், நகராதி பஞ்சாட்சரம் என இருவகைப்படும். சிவாயநம என்னும் திருவைந்தெழுத்தே சிகராதி பஞ்சாட்சரமாகும். முத்தியை விரும்புவோர் இதனைச் செபிப்பர். நமசிவாய எனும் திருவைந்தெழுத்தே நகராதி பஞ்சாட்சரமாகும். இவ்வுலக இன்பங்களை நாடுவோர் இதனைச் செபிப்பர். பஞ்சாட்சரத்தை ஒதும் வகையாவது வடக்கு, கிழக்கு முகமாக மான் தோல் அல்லது வெள்ளைத் துணியில் இடது காலின்மேல் வலது காலை வைத்து நிமிர்ந்து உட்கார்ந்து கண்கள் மூக்கு நுனியைப் பொருந்த, மானஸமாக ஒதல் வேண்டும். இவ்வாறு ஒதுவது உத்தம முறையாகும். தன் செவிக்குக் கேட்க ஒதுதல் மத்திமம். பிறர் செவிக்குக் கேட்பின் அதமம்.
உருவேறத் திருவேறும் என்பது ஆப்தமொழி. ஆலய தரிசனம், புண்ணிய தீர்த்த ஸ்நானம், மற்றும் தேவையான புண்ணிய காலங்களில் இதனைச் செபித்தால் எல்லாப் பாவங்களையும் போக்கும்; நன்மைகள் பல பெருகும்.
இலிங்கம்
சிவனைக் குறிக்கும் அடையாளமாக விளங்கும் இலிங்கம் சிவ சின்னங்களில் ஒன்றாகும். “கற்பனைக் கடந்த சோதி கருணையே உருவமாகி அற்புதக் கோல நீடி” என்ற படி ஒன்றிலும் தோய்வின்றி தானே சுயம் பிரகாசமாய் நிற்கும் இறைவன் ஆன்மாக்கள்மேற்கொண்ட பெருங்கருணையினாலே பல படிகள் கீழே இறங்கிவந்து அருவ, அருவுருவ, உருவத் திருமேனிகளைக் கொள்கிறார். இறைவன் கொள்ளும் திருமேனிகளில் அருவுருவத் திருமேனியாகிய சதாசிவமூர்த்தியைக் குறிப்பதே இலிங்கமாகும். அது சிவஞான சக்தியும் கிரியா சக்தியும் சமமாய்ப் பொருந்தி நிற்கும் நிலை.
இலிங்க விளக்கம்:
சி - நாத வடிவமான சிவம். அது இலிங்கத்தின் மேற் பகுதி
தண்டு போல் நீண்டிருப்பது.
வ - விந்து வடிவமான சக்தி. அது கீழ் அமைந்த பீடம் அதை
ஆவுடை என்பர்.
இந்துக் க்களஞ்சியம்
72

லி - ஆவுடையின் மேற்பக்கத்தில் கோமுகைபோல் ஒரு பகுதி
நீண்டிருக்கும். அது லயத்தை ஒடுக்கத்தைக் குறிக்கும். கம் - போதல் தோன்றுதல்.
இலிங்கம் சகல அண்ட சராசரங்களும் தோன்றி நின்று ஒடுங்குவதற்கு நிலைக் களமாய் உள்ளது. எல்லாப் பொருள் களிலும் சிவம், சத்தியாகிய இரண்டும் கலந்திருப்பதை அறிந்து கொள்ளவே இவ்வடிவாக இறைவன் காட்சி தருகிறான்.
இலிங்க வழிபாட்டின் தோற்றம் பற்றிய கருத்துக்கள்: இலிங்க வழிபாட்டின் தோற்றம் பற்றி புராணங்களில் பல கதைகள் கூறப்படுகிறது. ஆய்வுலகிலும் இலிங்க வழிபாட்டின் தோற்றம் பற்றி பல்வேறு கருத்துக்கள் தெரிவிக்கப்படுகிறது. இலிங்க வழிபாடு ஆண் உறுப்பு வழிபாடாக ஆரம்பித்தது என்பர் மேனாட்டார். ஆதிவாசிகளின் வழிபாட்டு முறை என்பர் வேறு சிலர். யூபஸ்தம்ப வழிபாடு தோற்றுவித்தது என்பர் சிலர். இலிங்க புராணம், வாயு புராணம், கூர்ம புராணம் முதலியன குறியீட்டுக் கொள்கையை ஆதரிப்பன.
இவற்றுள் கந்து அழிந்த நிலையில் உண்டானதே கந்தழி வழிபாடு என்றும், இக்கந்தழி சிவலிங்க வடிவம் பெற்றுத் தொடர்ந்து கந்தழியாக விளங்கியது என்றும் கூறப்படும் கருத்தே அதிகம் ஏற்றுக் கொள்ளப்படுகிறது. தெய்வீகம் உடையதாக வழிபடப்பெற்ற மரம் அழியும் போது அதன் அடியைச் சுற்றி பாதுகாப்பிற்காக ஒரு அமைப்பை ஏற்படுத்தி வழிபட்டனர். பின்னர் அடிமரமும் அழிந்தபோது கற்றுரண் அவ்விடத்தில் நடப்பட்டு வழிபடப்பட்டது. அதுவே காலகதியில் இலிங்கமாயிற்று என்ற கருத்தையே பலரும் ஏற்றுக் கொள்கின்றனர்.
இலிங்கம் என்ற பொருள் பண்டைக் காலத்திலேயே காணப்படுகிறது. பெரியனவாகவும். சிறியனவாகவும் அமைந்த இலிங்கங்கள் ஹரப்பா, மொகஞ்சதாரோவில் அறுநூறுக்கு மேலாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளது. சிறிய இலிங்கங்களை அக்கால மக்கள் தாயத்துக்களாக அணிந்திருக்க வேண்டும்
என்று இத்துறை ஆய்வாளர் கருதுவர்.
சிவலிங்க வகைகள்: இலிங்கங்கள் வியக்தாவியக்தலிங்கம், அவ்வியக்த லிங்கம், வியக்த லிங்கம் என மூவகைப்படும். வியக்தாவியக்தலிங்கம் - முகம், தோள் நேத்திரங்களோடு
விளங்குவது. அவ்வியக்தலிங்கம் - லிங்கமும் பீடமுமாயிருப்பது. வியக்தலிங்கம் - எல்லா அங்கங்களும் வெளிப்படத்
தோன்றியுள்ள திருவுருவங்கள்.
பீடமும் லிங்கமுமாய் உள்ள அவ்வியக்தலிங்கங்கள் அவற்றை ஸ்தாபித்து வழிபட்டோரால் பல பெயர்பெற்று இடப்பட்டுள்ளன. சுயம்புலிங்கம் - தானே தோன்றியது தேவிலிங்கம் - அம்பாளினாற் பூஜிக்கப்பட்டது.

Page 99
கானலிங்கம் u விநாயகர் சுப்பிரமணியர் ஆகியோ
ராற் பூஜிக்கப்பட்டது.
தைவிகஸிங்கம் - பிரம்மா, விஷ்ணு, உருத்திரன், இந்திரன் முதலியோராற் பூஜிக்கப் பட்டது.
ஆரிடலிங்கம் - அகத்தியர் முதலிய இருடிகளாற்
பூஜிக்கப்பட்டது.
இராட்சதலிங்கம் - இராட்சதர்களாற் பூஜிக்கப்பட்டது.
அகரலிங்கம் - பாணன் முதலிய அசுரர்களாற்
பூஜிக்கப்பட்டது.
மானுடலிங்கம் - மனிதர்களாற் பூஜிக்கப்பட்டது.
கூடிணிகலிங்கம் - மணல், அரிசி, ஆற்றுமண்,
அன்னம்,கோமயம், வெண்ணெய், உருத்திராக்கம், பஸ்மம், சந்தனம், புஷ்பமாலை, சர்க்கரை ஆகிய வற்றுள் ஒன்றால் அமைத்து வழிபாடு முடிந்ததும் ஆற்றிலோ குளத்திலோ விடுவது. பரார்த்தலிங்கம் - விரும்பிய எல்லாமக்களும் வழிபடும் பொருட்டாகக் கோவில்களில் ஸ்தாபிக்கப் பட்டிருக்கும் சுவாமி. ஆன்மார்த்தலிங்கம்
ஒருவர் விசேட தீட்சைபெற்ற பின் நிலையாகக் குருவினால் எழுந்தருளப் பண்ணிக் கொடுக்கப்படுவது. இது இஷ்ட லிங்கம் எனவும் படும்.
ரிஷபம் சிவ சின்னங்களில் ரிஷபமும் ஒன்றாகக் கருதப்படுகிறது. சிவ வழிபாட்டுடன் ரிஷபம் தொடர்புபட்டதைப் பற்றி வரலாற்று ஆதாரங்களையும், புராணக் கதைகளையும் நாம் அறியக் கூடியதாக உள்ளது.
சிந்துவெளி நாகரிகம் நிலவிய ஹரப்பா மொகஞ்சதாரோ காலத்திற் கண்டெடுக்கப்பட்ட பல சின்னங்களை ஆதாரமாகக் கொண்டு நோக்கும் போது அவற்றை மூன்று பிரிவில் அடக்கக் கூடியதாக உள்ளது. (1) சந்தேகத்துக்குரிய வடிவம் (2) உண்மையான எருதுகள்
(3) பாதி விலங்கும் பாதி மனிதனும் (காமதேனு) போன்றவை.
உண்மையான எருதுகளை திமில் பருத்த எருதுகள், மற்றயவை சிறிய கொம்புள்ள திமிலற்ற எருதுகள் என்று வகைப்படுத்தக் கூடியதாக உள்ளது.
ஹரப்பா மொகஞ்சதாரோவிற் கண்டெடுக்கப்பட்ட சின்னங்கள், முத்திரைகளில் உள்ள எருது அக்கால மக்களால் வழிபடப்பட்டதா என்பது பற்றித் தெளிவாக எதுவும் கூறமுடி யாதுள்ளது. விவசாயச் சமுதாயம் ஒன்றிலே உழவுத் தொழிலுக்கு

73
மிகவும் இன்றியமையாதிருந்த எருதை மக்கள் போற்றியிருக் கலாம் என்று கருத இடமுண்டு. இங்கு பசுமாடு பற்றிய சின்னங்கள் எங்கும் கிடைக்கப் பெறாமை கவனத்திற் கொள்ளத்தக்கது. ரிக் வேதத்தில் எருது பற்றிய செய்திகள் மிக அருகியே காணப்படுகிறது. ரிக் வேத சுலோகங்களை இயற்றிய சிலர் ஆரியருக்கு முற்பட்ட இந்தியர் என்றும் அவர்களே ரிக் வேதத்தில் எருது பற்றிய கருத்துக்களை கூறியுள்ளனர் என்றும் கருதப்படுகிறது.
முன்பு சிவனின் ரூபமாகக் கருதப்பட்ட எருது சிவனுக்கு மானுட வடிவம் கொடுக்கப்பட்டபின் அவரின் வாகனமாகக் கருதப்பட்டது. ஆயினும் சிவன் ரிஷபத்தின் மீது வீற்றிருப்பதாக எங்கும் காட்டப்படவில்லை. ரிஷபத்தின் திமிலிலோ, கொம்பிலோ கைவைத்துக் கொண்டிருக்கும் நிலையிலேயே காட்டப்பட்டுள்ளது.
பஞ்சாப்பிலும், காந்தாரத்திலும், இந்தோ கிரேக்க அரசர்களது நாணயங்களிலும் திமிலுள்ள நந்தியின் உருவமே சிவனைப் பிரதிநிதிப்படுத்தியுள்ளது. இவ்வுருவம் படுத்த நிலையிலோ நின்ற நிலையிலோ காணப்படுகிறது.
கி.மு. முதலாம் நூற்றாண்டு முதல் கி.பி. இரண்டாம் நூற்றாண்டுவரை உஜ்ஜயினியிற் கிடைத்த நாணயங்களில் எருது முன்னங்காலை உயர்த்திக் குதிக்கும் உருவம் பொறிக்கப்பட்டுள்ளது.
காந்தார நாணயங்களில் எருதிலே சாய்ந்தபடி சிவன் காணப்படுகிறார். குஷாண நாணயங்களிலும் சிவனின் உருவம் எருதின் முன் பொறிக்கப்பட்டுள்ளது.
மதுரா சிற்பங்களிலும் நந்தியும், சிவனும் சேர்ந்த வடிவே காணப்படுகிறது.
குப்தர்காலத்துச் சிவன், பார்வதி உருவங்களிலும் எருது பின்புறத்திற் காணப்படுகிறது. கி.பி. முற்பகுதியிலே தான் சிவனின் வாகனத்திற்கு மனித உருவம் கொடுக்கப்பட்டது. குப்தர் காலத்தில் இக் கருத்து வலுப்பெற்றது. குமார சம்பவத்திலே காளிதாசர் சிவனின் ரிஷப வாகனம் பற்றி விவரித்துள்ளார். புராணங்கள் நந்தியின் மூலம் பற்றிப் பல கதைகளைக் கூறுகின்றன.
சிவபுராணம் முப்புரங்களையும் சிவன் எரிப்பதற்கு புறப்பட்ட சமயம் விஷ்ணு ரிஷப வாகனமாக உருக் கொண்டார் என்கிறது.
லிங்க புராணம் சிவன் கண் தெரியாத ஒரு ரிஷிக்கு நந்தியாகப் பிறந்தார் என்றும், தனக்கு ஆயுள் சொற்பம் என்று அறிந்து சிவனை வணங்க, சிவன் தன் கழுத்திலிருந்த மாலையை அணிவித்துக் கணங்களுக்கு தலைவராக்கினார் என்றுங் கூறுகிறது.
இந்துக்

Page 100
திரேதாயுகத்திலே ரிஷியாக இருந்த நந்தியின் தவத்தை ஏற்ற சிவன் பூதகணங்களின் தலைவனாக்கினார் என்ற கருத்தும்
புராணங்களிற் கூறப்படுகிறது.
சிவன் கோவில்களில் கொடிமரத்துக்கு முன்னால் மூலஸ்தானத்தை நோக்கியபடி நந்தி அமைக்கப்பட்டுள்ளது. அது எப்பொழுதும் தன் எஜமானை நோக்கிய வண்ணமே உள்ளது. ஆன்மாவானது தன் தலைவனான பதியை எப்பொழுதும் நோக்கிய வண்ணமாய் இருக்க வேண்டும் என்பதற்காகவே கோவில்களில் இறைவனின் வாகனம் மூலஸ்தானத்தை நோக்கிய வண்ணம் அமைக்கப்பட்டுள்ளது என்று சைவசித்தாந்திகள் கூறுவர். நிநி)
சிவ சூத்திரம்
சூத்திரம் காஷ்மீர தேசத்து சைவநெறியின் முக்கிய சாஸ்திரப் பனுவலாகக் கொள்ளப்படுகிறது. இதனை யாத்தவர் காஷ்மீரசைவத்தின் தந்தையெனப் போற்றப்படும் வசுகுப்தர் ஆவர். இவர் கி.பி. 9ஆம் நூற்றாண்டின் தொடக்க காலத்தில் வாழ்ந்தவர்.
புராதனகாலம் தொட்டே உலகின் ஆன்மீக சுபிட்சத்திற்காக ஆன்மீக ஞானத்தின் உறைவிடமாகிய ரிஷிகள் அண்டத்தின் உள்பொருள் ஒன்றே என்ற ஏகத்துவக் கொள்கையினை தமது ஞானதிருஷ்டியால் உணர்ந்து தாந்திர சாஸ்திர நூல்கள் மூலம் செவ்வனே எடுத்து இயம்பியிருந்தனர்.
எனினும் காலகதியில் குறிப்பாகக் கலியுகப் பிறப்பின் பின்பு இந்த ஆன்மீக அநுபூதிக் காட்சியாகிய ஏகத்துவக் கொள்கை அருகியும் பல்கடவுள் வணக்கமாகத் திரிபு பெற்றும், சாங்கிய தரிசனம் போன்றவற்றின் இருமைத் தத்துவமாக நலிவடையத் தொடங்கியது.
எனவே அண்டத்தின் ஏகத்துவக் கொள்கையினை மீட்டும் நிலை நிறுத்துமுகமாக, இறைவன் சிவ சூத்திரத்தை வக குப்தருக்கு அருளிச் செய்தார் என்றும் வசுகுப்தர் அதனைக்கேட்டு எழுதி வைத்துக் கொண்டார் என்றும் சொல்லப்படுகிறது. ஆதலின் சிவ சூத்திரம் காஷ்மீர சைவத்தின் சுருதி நூலாக அமைகிறது. அதனை ஆகம நூலாகக் கொள்ளும் ஒரு மரபும் உண்டு.
சிவ சூத்திரம் அண்டத்தின் சித்துப் பொருளாகிய மூலவஸ்து ஒன்றே என்றும் அதனை, ஞானிகள் பரமசிவன் (Paramasiva) என அழைப்பர் என்றும் கூறும். இதனை பரசம்வித் (Parasamyid) என்ற பெயராலும் ஞானிகள் அழைப்பதுண்டு. (Vid) வித் என்றால் அறிதல் - உணர்தல் எனப்பொருள்படும். எல்லாவற்றிற்கும் மேலான, சகலத்தையும் உள்ளடக்கிய பேருணர்வான வஸ்து பரசம்வித் என்க.
இந்துக் க்களஞ்சியம்
74

மேலும் பரம சிவத்துக்கு இருவித இருப்பு நிலைகள் உள எனச் சிவ சூத்திரம் தர்க்கரீதியாக இயம்புகிறது. ஒன்று பரமசிவத்தின் பரத்துவ இருப்புநிலை; அதாவது எல்லாவற்றையும் கடந்த பரிசுத்த, எவ்வித மாறுதல்களும் அடையாத அதீதநிலை (Transcendent State).
மற்றது சிருஷ்டி காலத்திற் பேரண்டமாக முகிழ்க்கும் - பரிணமிக்கும் இருப்புநிலையாகும் (Immanent State),
இங்ங்னம் அநாதியான உள்பொருள் ஒன்றின் இருவித இருப்பு நிலைகளின் தன்மை காரணமாக இருமைத் தத்துவம் (Dualism) காஷ்மீரசைவ சாஸ்திரத்தில் தர்க்கரீதியாகத் தவிர்க்கப்படுகிறது.
உள்பொருள் ஒன்றின் இருவித இருப்பு நிலையின் இயல்பினை புலனறிவு மூலமாகவோ தர்க்கசாஸ்திர அறிவுமூலமோ உய்த்துணரமுடியாது. யோக நெறி மூலம் மானிடர்க்குக் கிட்டக்கூடிய மனங்கடந்த ஆன்மீக அநுபூதி தரும் சமாதிநிலை மூலமே ஒருவன் உணரமுடியுமெனச் சிவ சூத்திரம் அறுதியிட்டுக் கூறும்.
அண்டத்தின் அநாதிவஸ்துவான மூலப்பொருள் சலனமடைதல் மூலம் பரிணமிக்கத் தொடங்குகிறது. இந்த ஸ்திதியை சிருஷ்டிநிலை (படைத்தல், ஆக்குதல்) அல்லது ஆபாச நிலை (மலர்தல், தோற்றம் பெறுதல், ஒளிருதல்) எனச் சிவ சூத்திரம் சுடறும.
அண்டம் பரிணமிக்கும் காலம் ஒரு சதுர் யுகம் என்றும் அது 4,320,000,000 மானிட வருடங்களைக் கொண்டிருக்கும் என்றும் சொல்லப்படுகிறது. இந்தக் காலப்பகுதியினை ஒரு கல்பகாலம் என்பர். இதன் பின்னர் பிரளயம் ஆரம்பிக்கின்றது. அண்டமனைத்தும் மூலப்பொருளில் சென்று ஒடுங்குகிறது.
இந்நிலை அண்டத்தின் மூலவஸ்துவின் சலனமற்ற இருப்பு நிலையாகும். மீண்டும் , சிருஷ்டிபிரளயம் என்ற சுழற்சி ரீதியில் மூலவஸ்து ஓயாது இயங்கிக் கொண்டிருக்கும்.
அண்டமாக மலர்ந்த இந்த ஜட உலகம் பரம்பொருள் என்ற சைதன்யத்தின் (பேருணன்) ஒரு மாற்று வடிவமேயாகும். சிலந்தி ஒன்று பின்னுகின்ற வலை அச்சிலந்தியின் வேற்றுருவில் வந்த பகுதியேயாகும். சிலந்திக்கும் வலைக்கும் உருவ வேறு பாட்டைத் தவிர வேறெந்த வித்தியாசமும் கிடையாது என்கிறது சிவகுத்திரம். இதன் மூலம் பரம்பொருளுக்கும் அண்டத்திற்கும் இடையில் நிலவும் அபேதமற்ற தன்மை விளக்கப்படுகின்றது.
பரம்பொருளாகிய மூலவஸ்து அண்டமாகப் பரிணமிக்கும் போது இயற்கையின் 36 தத்துவங்களும் தோற்றம் பெறுகின்றன. இயற்கையின் தன்மையை சிவகுத்திரம் வகுத்துப் பகுத்துக் கூறியது போல் உலகில் எந்த நூலும் எடுத்துரைத்ததில்லை என அறிஞர்கள் கருதுகின்றனர்.

Page 101
சாங்கியம் கூறிய 24 தத்துவங்களோடு மேலும் 12 சிருஷ்டி தத்துவங்களைச் சிவகுத்திரம் கூறும்.
சிவசூத்திரம் அடிப்படையில் யோகம் பற்றிய நூலாயினும், சித் அல்லது பரசம்வித் (முடிவான ஞானம்), படைப்பு, கட்டு (பந்தம்), விடுதலை (முத்தி) என்பனவற்றை யோகத்திற்குரிய அடிப்படைகளாக எடுத்துக்காட்டுகிறது. சாம்பவ உபாயம், சாக்த உபாயம், ஆணவ உபாயம், என்ற மூன்றுபிரிவுகளாக சிவ சூத்திரம் வகுக்கப்பட்டுள்ளது. சாம்பவ உபாயம் இச்சை உபாயம் அல்லது இச்சையோகம் எனவும் அழைக்கப்படும். சாதகன் தன்னை சிவனுடன் முற்றொருமைப்படுத்துவதே சாம்பவ யோகத்தின் பொருளாகும். இந்நிலையில் விகல்ப்ப வேறுபாடுகளில்லாது, அனைத்தும் ஆன்மாவே (நான்) என்ற நல்லறிவு தோன்றுகிறது. இதன்மூலம் மனமும் உடலும் தொடர்புற்றதான பைரவி தத்துவம் என்ற நிலைக்குட் சாதகன் நுழைகிறான். சாதகன் தனது இச்சாசக்தியினாற் சிவனுடன் தன்னை முற்றொருமைப் படுத்துகிறான். ஜீவன் அனுபவ உலகிற் குரியது. விகல்ப ஞானமுடையது. சிவனே மெய்ப்பொருள். ஜீவன் தனது விகல்பஞானத்தை விடுத்து, தன்னுள்ளேயே புலப் படாதிருக்கும் மெய்ப்பொருளான சிவத்துடன் இச்சாசக்தியினால் முற்றொருமை கொள்வதே சாம்பவ உபாயமாகும்.
சாத்த உபாயமானது, ஞான உபாயம் எனவும் அழைக்கப்படும். இங்கு மனத்தினால் தியானம் செய்வது முக்கியமானது. தியானத்திற்கு ஏதுவானது மந்திரம். அதாவது முடிவானமெய்ப் பொருளான சிவத்துடன் தன்னை முற்றொருமையாக்கும் உளத்தின் வழியே மந்திரமாகும். இந்த உபாயத்தினால் சாதகன் இவ்வுலகமனைத்தும் ஆத்மாவே என்ற சிந்தனைகொண்டு நிர்விகல்பமான ஆத்மஞானநிலையை அடைகிறான்.
சிவசூத்திரத்தின் மூன்றாவது பிரிவு ஆணவ உபாயம் பற்றியாராய்கிறது. இதைக் கிரியா உபாயமெனவும் அழைப்பர். பிராணாயாமம், குண்டலினி யோகம் என்பனவற்றால் மனதை நிலைப்படுத்தி சிவானுபவத்தைப் பெறமுயலுவதே ஆணவ 9) LLUITLULOFT(e5th.
ஆணவயோகம் சாக்த யோகத்திற்கும், சாக்தயோகம் சாம்பவயோகத்திற்கும் இட்டுச்செல்லுவதன் மூலம் இறுதியாக சாதகன் சிவத்துடன் முற்றொருமை கொள்வதே அத்வைத நிலையாகுமெனச் சிவகுத்திரம் கூறுகிறது.
வசுகுப்தரின் வாழ்க்கை பற்றி அதிகம் தகவல்கள் கிடைத்தில. கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்திற் காஷ்மீரின் தலைநகராகிய பூரீ நகருக்கண்மையில் உள்ள மகாதேவ என்ற குன்றினடியில் ஆச்சிரமம் அமைத்து வாழ்ந்த மகாஞானி என்பதும் அவருக்கு அநேக சிஷ்யர்கள் இருந்தனர் என்பதும் கர்ணபரம் பரையாக வரும் செய்திகளாகும்.

வசுகுப்தருடைய புகழ்வாய்ந்த சிஷ்யர்கள் இருவர்; ஒருவர் கல்லடப்பட்டர். அவர் சிவசூத்திரத்தை நன்கு விளக்கம் செய்வதற்காக 'ஸ் பந்த காரிகை என்ற நூலை யாத்தார். மற்றவர் சோமாநந்தர். சிவகுத்திரங்களின் தத்துவ அடிப்படையில் 'சிவதிருஷ்டி என்ற சிறந்ததொரு நூலைச் செய்தார். இந் நூல் இப்போது கிடைத்திலது.
சிவகுத்திரத்திற்கு விருத்தி உரை, பாஸ்கரரின் வார்த்திகை உரை, ஷேமராஜரின் விமர்ஷினி உரை, வரதராஜரின் சிவகுத்திர வார்த்திக உரை என நான்கு உரைகள் கிடைக்கப் பெற்றுள்ளன. விருத்தி உரைகாரர் யாரென்பது அறியப் படவில்லை.
சிவகுத்திரம் எடுத்துக் கூறிய தத்துவங்களின் தாக்கம் தென்னகம் வரைக்கும் பரவியிருந்தது. கி. பி. 13 ஆம் நூற்றாண்டில், அதாவது வசுகுப்தருக்கு ஏறக்குறைய 400 ஆண்டுகளுக்குப்பின் எழுந்த சைவ மெய்கண்டசாஸ்திரங்களில் சிவசூத்திர தத்துவங்களின் தாக்கத்தை ஒருவர் நிறையக் காண முடியும் என்பது ஆய்வறிஞர்களின் திடமான துணிவாகும்.
36 சிருஷ்டிதத்துவங்கள், சிவனின் சொரூபநிலை, தடத்தநிலை மற்றும் வேறுசில அம்சங்கள் எல்லாம் சிவ சூத்திரத்தின் அடிப்படையிலேயே மெய்கண்ட சாத்திரங்கள் கூறிப்
போந்தன என்பது மிகையான கூற்றன்று.
(கே. கே.எஸ்) & (சோ. கி.)
சிவஞான முனிவர்
சிவஞான முனிவர் தென்பாண்டி நாட்டில் திருநெல்வேலி மாவட்டம் பாபநாசத்திற்கு அருகில், தாமிரவருணி ஆற்றின் கரையில் அமைந்துள்ள விக்கிரம சிங்கபுரம் என்னும் ஊரில் தோன்றினார். இவரின் தாயின் பெயர் மயிலம்மை; தந்தையின் பெயர் ஆனந்தக்கூத்தர்; இவரது பிள்ளைத் திருநாமம் முக்களாலிங்கர் ஆகும். இவர் சைவ வேளாள குலத்தில்
&
কুঞ্জ
 ேத ர ன் றி ய வ ர் . ་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་། அகத்தியர் அருளால்
6J Աք தலைமுறை
ஏழாம் தலைமுறையில்
தோன்றியவர் என்பர்.
சி வ ஞ | ன முனிவரின் தந்தையும், தாயாரும் விருந்தினரை உபசரிப்பதில் சிறந்து
இந்துக்கலைக்களஞ்சியம்

Page 102
விளங்கினர். இவரின் பள்ளிப் பருவத்தில் நிகழ்ந்த நிகழ்ச்சி ஒன்று இவர்களுடைய விருந்தோம்பும் பண்பை நன்கு புலப்படுத்துகின்றது. சிவஞானமுனிவர் பள்ளி சென்று திரும்பும்போது திருவாவடுதுறை ஆதீன முனிவர்கள் சிலரைக் கண்டார். அவர்களைத் தமது வீட்டிற்கு அழைத்து வந்து விருந்து கொடுத்து உபசரித்தார். அப்பொழுது அவரின் தந்தையாகிய ஆனந்தக் கூத்தர் வெளியூர் சென்றிருந்ததனால் அவருடைய தாயாரே விருந்தினரை நன்கு உபசரித்தார். இதனைப் புலப்படுத்துவது,
அருந்ததியென் அம்மை அடியவர்கட் கென்றும் திருந்த அமுதளிக்கும் செல்வி - பொருந்தவே ஆனந்தக் கூத்தர் அகமகிழத் தொண்டு செய்யும் மானந்தவாத மயில், எனவரும் சிவஞான முனிவரது பாடலாகும். இப்பாடலைச் சிவஞானமுனிவர் இயற்றவில்லை என்றும் சிலர் கருதுகின்றனர்.
நமசிவாய மூர்த்தியால் தோற்றுவிக்கப் பெற்ற திருவாவடுதுறை ஆதீனத்தில் பத்தாம் பட்டத்தில் அமர்ந்திருந்த வேலப்பத் தேசிகர் காலத்தில் சின்னப்பட்டத்தில் இருந்த பேரூர் வேலப்பதேசிகர் என்பவரிடம் ஞான உபதேசம் பெற்றார். சிவஞானத் தம்பிரான் என்ற தீக்கைப் பெயர் சூட்டப் பெற்றார். இவரின் வரலாற்றுடன் தொடர்புடைய திருவாவடுதுறை ஆதீன முனிவர்களுள் பத்தாம் பட்டத்தில் முன்வேலப்பதேசிகர், பதினொன்றாம் பட்டத்துப் பின் வேலப்பதேசிகர், பன்னிரண்டாம் பட்டத்துத் திருச்சிற்றம்பலம்தேசிகர் នា ឆ្នាំ (LT குறிப்பிடத்தக்கவர்களாவர். காஞ்சிப் புராணத்தில் கடவுள் வாழ்த்துப் பகுதியில் உள்ள பின்வேலப்ப தேசிகர் துதியில் அவரிடம் தாம் பெற்ற உபதேசச் சிறப்பையும் சமய நூற் கல்வியையும் உணர்த்தியிருத்தல் காணலாம். ២ចាបf வடமொழியிலும் தென்மொழியிலும் பெரும் புலமை பெற்றிருந்தார்.
சிவஞான முனிவரின் காலம்
சிவஞான முனிவர் பிறந்த காலம் பற்றிய குறிப்புக் கிடைக்கவில்லை. அவர் செங்கழுநீர் விநாயகர் பிள்ளைத் தமிழ் இயற்றிய காலக் குறிப்பினை அந்நூலின் சிறப்புப் பாயிரத்தால் அறியலாம். அந்நூலை வீரப்பன் மகன் கேசவன் என்பவரின் வேண்டுகோளை ஏற்று முனிவர் பாடியதாகப் பாயிரம் கூறுகின்றது. சகம், 1694 ஆம் ஆண்டு மாசித் திங்கள் இருபத்தேழாம் நாள், செய்து முடிக்கப் பெற்றதாகவும் அப்பாயிரம் கூறுகின்றது. இச்சக ஆண்டிற்கு ஒத்த ஆண்டு கி. பி. 1772 ஆகும். இவ்வகையில் சிவஞான முனிவரின் காலத்தைப் பதினெட்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியாகக் கருத முடிகின்றது.
சிவஞான முனிவர் சுசீந்திரம், திருவாவடுதுறை, காஞ்சிபுரம் ஆகிய இடங்களில் வாழ்ந்துள்ளார். இவர் காஞ்சியில் உள்ள திருவாவடுதுறைக் கிளை மடத்தில் நெடுங்காலம் தங்கியிருந்தார் என அறிஞர் கூறுவர். இவர் முப்பத்திரண்டு ஆண்டுகள் வாழ்ந்தவரென அறிஞர் குறிப்பிடுவர். இதனை மறுப்பவரும்
இந்துக் க்களஞ்சியம்

உளர். சிவஞான முனிவர் உரையாசிரியராகவும், நூலாசிரியராகவும், மொழி பெயர்ப்பாசிரியராகவும், திறனாய்வாளராகவும் விளங்கிய சிறப்பிற்குரியவர்.
உரை நூல்கள்
இவர் சித்தாந்த நூல்களுக்கும், இலக்கண நூல்களுக்கும் உரை வகுத்துள்ளார். சித்தாந்த நூல்களுள் இவர் சிவஞான போதத்திற்குச் சிற்றுரை, பேருரை என்று இரண்டு உரைநூல்களை இயற்றியுள்ளார். திருமுறைகளையும், ஏனைய நூல்களையும் துருவி ஆராய்ந்து தம் வாழ்க்கையின் பயனாக இவர் இயற்றிய பேருரையே சிவஞானமாபாடியம் எனப்படும். சிவஞானமாபாடியம் வடமொழிப்பிரம சூத்திரத்திற்கு நீலகண்டர், சங்கரர், இராமானுஜர், மத்துவர் ஆகியோர் இயற்றியுள்ள பாடியங்கள் எல்லாவற்றினும் மிகச் சிறந்ததென்பது அறிஞர் துணிபு. இது பற்றியே அவர் மாபாடியக்காரர் என அழைக்கப்படுவாராயினார். சிவஞான போதத்தின் பேருரையை இவரே முதன் முதல் செய்தார் என்பதால் இவர் திராவிட மாபாடிய கர்த்தர் எனவும் பாராட்டப்பெற்ற சிறப்புக்குரிய வராகின்றார். இவர் சிவஞானபோதத்திற்குச் செய்த சிற்றுரையின் அமைப்பு சுருங்கியது. பேருரையின் அமைப்போ விரிவானது. சிற்றுரையில் சுருக்கமாகக் குறித்த சைவ சித்தாந்தக் கருத்துக்களைப் பேருரையில் விரித்து விளக்குகின்றார். சிற்றுரையில் கூறிய விளக்கம் பேருரையில் சில இடங்களில் வேறுவகையாக உரைக்கப்பட்டதும் உண்டு. சிற்றுரை ஏறத்தாழக் காண்டிகை உரையாகத் தோன்றுகின்றது. பேருரை அகல உரை அல்லது விருத்தியுரையாக விளங்குகின்றது. இதனால் சிற்றுரையைச் "சிவஞானபோதம் - காண்டிகையுரை என்றும், பேருரையைச் 'சிவஞான போதம் - விருத்தியுரை” என்றும் அறிஞர் குறிப்பிடுகின்றனர்.
இவர் சிவஞான சித்தியார் என்னும் நூலுக்குப் பொழிப்புரையும் செய்துள்ளார். அருணந்தி சிவாசாரியார் இயற்றிய சிவஞானசித்தியாரின் நுட்பங்களைத் தெளிவுறுத்தும் வகையில் இப்பொழிப்புரை அமைந்துள்ளது.
முனிவர் தொல்காப்பியப்பாயிரம் முதற்சூத்திரத்திற்கு விருத்தியுரையும் எழுதியுள்ளார். நன்னூல் விருத்தியுரை முழுவதும் சிவஞான முனிவர் செய்யாவிட்டாலும், இவர் செய்த அரிய திருத்தங்கள் காரணமாகச் "சிவஞான முனிவர் விருத்தி என்றே அந்நூலுக்குப் பெயர் வழங்குவது குறிப்பிடத்தக்கது.
இலக்கிய நூல்கள்
சிவஞான முனிவர் பல சிற்றிலக்கிய நூல்களை இயற்றியுள்ளார். செப்பறை அகிலாண்டேசுவரி பதிகம் என்பது இவர் பாடிய முதல்நூல் என அறிஞர் கருதுகின்றனர். இந்நூலில் சைவ சித்தாந்தக் கருத்துக்கள் நுட்பமாக விளக்கப்பட்டுள்ளன. மேலும் இளங்காடு இளைசைப் பதிற்றுப் பத்தந்தாதி கலைசைச் செங்கழுநீர் விநாயகர் பிள்ளைத் தமிழ் கலைசைப் பதிற்றுப் பத்தந்தாதி குளத்தூர்.அமுதாம்பிகை பிள்ளைத் தமிழ், குளத்தூர்

Page 103
பதிற்றுப் பத்தந்தாதி, குளத்தூர் - சோமேசர் முதுமொழி வெண்பா, திருவேகம்பர் அந்தாதி, திருவேகம்பர் ஆனந்தக்களிப்பு, கச்சி ஆனந்தருத்திரேசர் பதிகம், வடதிருமுல்லை வாயிலந்தாதி, பஞ்சாக்கர தேசிகர்மாலை, திருத்தொண்டர் திருநாமக்கோவை ஆகிய நூல்களையும் இவர் இயற்றியுள்ளார்.
மொழி பெயர்ப்பு நூல்
சிவஞான முனிவர் மொழிபெயர்ப்பதில் திறமை வாய்ந்தவர். இவரின் மொழி பெயர்ப்பு நூல்களுள் காஞ்சிப் புராணம் குறிப்பிடத்தக்கது. இந்நூல் மொழி பெயர்ப்பு என்று கூறப்பெறினும் முற்றிலும் மொழிபெயர்ப்பு அன்று என்பது ஆய்வாளர் கருத்தாகும். மற்றும் அரதத்த சிவாசாரியார் செய்த சுலோக பஞ்சகம் அப்பைய தீட்சிதர் செய்த சிவதத்துவ விவேகம், சர்வான்ம சம்பு சிவாசாரியார் செய்த சித்தாந்தப் பிரகாசிகை, அன்னம்பட்டர் எழுதிய தருக்க சங்கிரகம் என்பன சிவஞான முனிவர் வடமொழியினின்றும் தமிழில் மொழி பெயர்த்துள்ள நூல்களாகும். இம்மொழிபெயர்ப்பு நூல்கள் சிவஞான முனிவரின் வடமொழிப் புலமையினையும் அவருக்குச் சைவசித்தாந்தத்தில் இருந்த ஈடுபாட்டினையும் எடுத்துக் காட்டுவனவாக விளங்குகின்றன.
கண்டன நூல்கள்
இலக்கண விளக்கம் என்னும் நூலுக்கு எழுதப் பெற்ற இலக்கண விளக்கச் சூறாவளி, "எடுத்து” என்று, சிவஞான சித்தியாரில் ஆளப்பெற்ற சொல்லுக்குப் பொருள் எழுதிய முறை பற்றி எழுந்த கருத்துக்கு மறுப்பாக எழுதப் பெற்ற, எடுத்து என்னும் சொல்லுக்கிட்ட வைரக்குப்பாயம் ஞானப் பிரகாச முனிவர் எழுதிய உரைக்கு மறுப்பாக எழுதப்பெற்ற “என்னையிப்பவத்தில்’ என்னும் சிவசமவாத உரைமறுப்பு கம்பராமாயண முதற் செய்யுள் சங்கோத்திர விருத்தி சித்தாந்த மரபு கண்டனகண்டனம், என்பவை சிவஞான முனிவரின் மதிநுட்பத்தைப் புலப்படுத்தி நிற்கும் கண்டன நூல்களாகக் கொள்ளத்தக்கவை.
முனிவரின் மாணவர்கள்
சிவஞான முனிவருக்கு ஒரு மாணவர் பரம்பரை இருந்து வருகின்றது. அவரிடம் பலர் பாடங்கற்றுள்ளனர். கச்சியப்ப முனிவர், தொட்டிக்கலைச் சுப்பிரமணிய முனிவர், இலக்கணம் சிதம்பர நாதமுனிவர், காஞ்சிபுரம் சரவணபத்தர், இராமநாதபுரம் சோமசுந்தரம்பிள்ளை, காஞ்சி சிதம்பர முனிவர், காஞ்சி முத்துக்குமார தேசிகர், திருமுக்கூடல் சந்திரசேகர முதலியார், கரவாந்தண்டல் அடைக்கலங்காத்த முதலியார், கடம்பர் கோயில் கல்யாண சுந்தர உபாத்தியாயர் ஆகிய பன்னிருவர் சிவஞான முனிவரின் மாணவர்களுள் குறிப்பிடத்தக்கவர்களாவர். திருவாவடுதுறை ஆதீனத்தில் பன்னிரண்டாம் பட்டத்தில் அமர்ந்திருந்த திருச்சிற்றம்பல தேசிகரும் இவரின் மாணவர் என அறிஞர் குறிப்பிடுகின்றனர்.

முனிவரின் சமாதி
சிவஞான முனிவர் பரிபூரணமுற்றபின் அவரைத் திருவாவடுதுறையிலுள்ள மறைஞானத்தோப்பு என்னும் இடத்தில் அடக்கம் செய்துள்ளனர். இவ்விடம் திருவாவடுதுறை ஆதீன முதல்வர்களை அடக்கம் செய்யும் இடமாகும். இவ்விடத்தில் ஆதீன முதல்வர்கள் பலரின் சமாதிகள் அமைந்துள்ளன. ஆதீன முதல்வர்களின் வரிசையில் வைத்து எண்ண முடியாதவராக முனிவர் இருந்தும், அவருடைய சைவசித்தாந்தப் புலமையில் மதிப்பு வைத்து அவருக்கு ஒரு சமாதியை அங்கு எழுப்பியுள்ளமை அவரின் தனித்துவத்தைச் சுட்டி நிற்கின்றது. (LD/I. Gol)
சிவஞானபோதம் (வடமொழி)
இருபத்தெட்டு சிவாகமங்களில் ஒன்றான ரௌரவத்தின் 73 ஆவது படலமான பாவவிமோசனப் படலத்தின் 13ஆம் அத்தியாயமான துவாதச குத்திரமே சிவஞானபோதமெனப் பெயர்பெற்றது. அதனை சர்வ ஆகமசாரமெனவும் அழைப்பர். ஆதியில் குரு என்பவருக்கு உபதேசிக்கப்பட்டதால் ரெளரவம் என்ற பெயரைப் பெற்றதாக வடநுாற் சிவஞானபோத உரையிற் குறிப்பிடப் பட்டுள்ளது. இவ்வடமொழிச் சிவஞானபோதம் நந்திகேஸ்வரரால் சனற்குமாரருக்கும், சனற்குமாரராற் சத்தியஞான தரிசனருக்கும் (சத்தியஜோதி), சத்தியஞான தரிசனராற் பரஞ்சோதி முனிவர்க்கும், பரஞ்சோதி முனிவரால் மெய்கண்டருக்கும் உபதேசிக்கப்பட்டதென்பதும், மெய்கண்டார் அதனைத் தமிழில்12 சூத்திரங்களாகப் பாடினாரென்பதும் ஐதீகம்.
வடமொழிச் சிவஞானபோதம் விஸ்வேஸ்வர சாஸ்திரி களால் மொழிபெயர்க்கப்பட்டு சண்முகசுந்தர முதலியாரால் பதிப்பிக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. வடமொழிச் சிவஞான போதத்திற்கு சிவஞானபோதவிருத்தி என்ற ஞானப்பிரகாச முனிவர் உரையும், சிவாக்கிரக யோகிகளின் சிவஞானபோத சங்கிரக வியாக்கியானம் (சிற்றுரை), சிவாக்கிரக பாடியம் (பேருரை) என இரு உரைகளும் அம்மொழியிலேயே எழுதப் பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. சிவஞானபோத முதலாம் சூத்திரத்திற்கான சிவாக்கிரகபாடிய உரை நீர்வேலி சங்கர பண்டிதரின் மகனான சிவப்பிரகாசபண்டிதரால் தமிழில் மொழி பெயர்க்கப்பட்டு, கந்தர்மடம் சுவாமிநாத பண்டிதரால் 1916இற் பதிப்பிக்கப்பட்டுள்ளது. இங்கு தரப்படும் வடமொழிச் சிவஞான போத மொழிபெயர்ப்பு விஸ்வேஸ்வர சாஸ்திரிகளால் மொழி பெயர்க்கப்பட்டதும், பேராசிரியர் கைலாசநாதக் குருக்களாற் சரிபார்க்கப்பட்டதுமாகும்.
முதலாம் சூத்திரம் : பிரபஞ்சத்திற்குக் கர்த்தாவானவர் உண்டு. காரியரூபமாய்க் காணுதலினால், அவனவனதுவெறும் (தநுகரனாதிகளாய் வருகையால்) அந்த கர்த்தா இந்த பிரபஞ்சத்தைச் சங்கரித்து சிருஷ்டிக்கிறார். இந்தக் காரணத்தாற் சங்காரகர்த்தா எஜமான் (ஈஸ்வரன்).
இந்துச் க்களஞ்சியம்

Page 104
இரண்டாம் சூத்திரம் : சாஷாத்கார ரூப ஞானத்தால் வேறில்லாதவரான கர்த்தாவானவர் (அவளவனதுவென்பதற்கு) வேறாயிருந்து கொண்டு பிரிவில்லாமலிருக்கிற ஆணையினால் (ஆஞ்ஞா சக்தியினாலே) அவரவர் செய்த வினைக்கீடாக ஆன்மாக்களுக்கு சுகதுக்காதி வியாபாரத்தைச் செய்யாநிற்கிறார்.
மூன்றாம் சூத்திரம் இல்லையெ ன் கையினாலும் மமதையினுடைய தோற்றத்தாலும் இந்திரியங்களும் அவைகளின் ஒடுக்கமும் அறிதலினாலும் சுஷுப்திக் காலத்தில் அனுபவமில் லாமையாலும் அறிவிக்க அறியாத்தன்மையினாலும் சரீரத்தில் ஆன்மா உண்டு.
நான்காம் சூத்திரம் : அந்தக் கரணத்தினின்றும் வேறா யிருந்த போதிலும் மந்திரியும் ராஜாவும் போலக் கூடினவனாயும் (சாக்கிர முதலிய) பஞ்சாவஸ்தைகளிருக்கிறவனாயும் மலங்களினாலே மூடப்பட்ட ஆன்ம ஞானத்தையுடையவனாயும் ஆன்மாவானவன் இருப்பான்.
ஐந்தாம் சூத்திரம்: இந்திரியமானது ஆன்மாவின் பிரேரணையினாலே (விஷயங்களை) அறிகிறது. (அன்றி) தானே (அறிகிற) தில்லை. அந்த ஆன்மாவும் பரம சிவத்தினால் அறிகிறது.
ஆறாம் சூத்திரம் : பரமசிவமானது அறியப்படும் பொருள், அறியப்படாப்பொருள் இரண்டும் அல்லாதது. காணக் கூடாததனால் (சச விஷாணம் போல) பொய்ப்பொருளாம். காணக்கூடுமென்றால் ஜடபதார்த்தமாக ஆகும். இரண்டு வகைக்கும் வேறாக ஞான ரூபம் (என்று) (சிவ) ஞானிகள் பரமசிவத்தை அறிகிறார்கள்.
ஏழாம் சூத்திரம் அசித்தாகிய பிரபஞ்சமானது சித்தாகிய (ஞான சொரூபமாகிய) (சிவ) சந்நிதானத்தில் (பிரகா சிக்கிற) தில்லை. (பின்) யாதெனில் அந்த இரண்டும் (பிரபஞ்ச - சிவம் இரண்டும்) ஒன்று மற்றொன்றை அறிகிறதில்லை. பிரபஞ்ச சிவங்களை அறிகிறவன் எவனோ அவன் அந்தப் பிரபஞ்ச சிவங்களிற்கு வேறான ஆன்மாவென்று சொல்லத் தக்கவன்.
எட்டாம் சூத்திரம் : முமூஷ"வானவன் இந்திரியங்களாகிற வேடர்களோடு கூட இருந்து ஆசாரியரூபமான (சிவத்தாலே) உன்னுடைய சொரூபத்தை அறிகிலை என்று போதிக்கப் பட்டவனாய், இந்த இந்திரியங்களாகிற (வேடர்களை) விட்டு சிவத்தினின்றும் வேறின்றி அந்த (சிவ) சொரூபத்தை அடைகிறான்.
ஒன்பதாம் சூத்திரம் : (சிவ ஞானமுள்ளவன் கானலுக் கொப்பாகிய (பஞ்சேந்திரிய) வியாபாரத்தை விட்டு, ஞான திருஷ்டியினாலே தன்னிடத்தில் பரமசிவத்தைப் பார்த்து பரமசிவத்தின் பாத நிழலை அடைந்து பஞ்சாட்சரத்தைத் தியானிக்க வேண்டியது.
இந்துக்கலைக்களஞ்சியம்
78

பத்தாம் சூத்திரம் (அந்தக் கரணத்தை)வஜிகரித்தவன். வசப்படுத்தினவன் பரமசிவத்தோடு ஐக்கியத்தை அடைந்த வனாயும், ஆணவ மலத்தாலும், மாயையினாலும், கர்மத்தாலும் தொடப்படாதவனாகவும் பரமசிவனிடத்திலேயே ஸ்வாதீனமான தன்னுடைய வியாபாரத்தையுடையவனாய் (சிவ ஸ்வரூபமான) தன்னுடைய அனுபவத்தை யுடைத்தானவனாய் ஆகிறான்.
11ஆம் சூத்திரம் ஆன்மாவானவன் கண்களை (ஞாபகஞ் செய்கிறவன்) அறிவிக்கிறவன் அந்த ஆன்மா வையும் பரமசிவமானவர் அறிவிக்கிறார். ஆகையால் ஆன்மா (தனக்குப் போகமோட்சங்களை) உபகாரஞ் செய்கிற அந்தப் பரமசிவனிடத்திலே திடமான அன்பைச் செய்ய வேண்டியது.
12ஆம் சூத்திரம்: முத்தியின் பொருட்டு (ஞானசிவா) சாரியரை அடைந்து, (அந்த) சைவர்களுடைய பஸ்ம ருத்திராட்ஷாதி அடையாளங்களையும், சிவாலயத்தையும் தொழவேண்டியது. இதன் பிரகாரம் சிவ ஞானபோத மென்கிற(சாஸ்திரத்தில்) சைவ சித்தாந்தத்தின் முடிவை அறியவேண்டியது. (சோ. கி.)
சிவதருமோத்தரம் (தமிழ்)
செவசமய சைவசித்தாந்த மரபிலே பல நூல்களை இயற்றியவர்களின் வரிசையிலே மறைஞான சம்பந்தருக்கும் ஒரு குறிப்பிடத்தக்க இடமுண்டு. இவர் கி. பி. பதினாறாம் நூற்றாண்டிலே வாழ்ந்தவர். இவர் பெருந்தொகையான நூல்களை இயற்றினாலும் அவற்றுட் பல இன்று கிடைத்தில. கிடைத்தவற்றுள், சிவதருமோத்தரம், சைவசமயநெறி, முத்திநிலை, உருத்திராக்க வசிட்டம், பரமோபதேசம், பதி பசு பாசப் பனுவல், வருத்தமற உய்யும் வழி முதலியனவற்றைக் குறிப்பிடலாம். இவற்றுள்ளே சிவதருமோத்தரம் பற்றிச் சுருக்கமாகக் குறிப்பிடலாம்.
வடமொழியிலே 28 மூலாகமங்களும், அவற்றுடன் தொடர்புள்ள உபாகமங்களும் உள்ளன. இம்மூலாகமங்களில் ஒன்றான சர்வோக்தம் சிவபிரானுடைய ஈசானமுகத்தியிலிருந்து தோன்றியதாகக் கூறப்படும். இதனுடைய உபாகமங்களிலொன்று சிவதருமோத்தரம். இதனையே மறைஞானசம்பந்தர் தமிழிலே மொழி பெயர்த்துள்ளார். அகத்தியர் சிவபெருமானைக் குறித்து முருகப்பெருமானை வினாவ அவர் கூறிய உத்தரங்களை (பதில்களை) இவ் ஆகமம் கூறுவதால் இப்பெயர் பெற்றது. சிவதருமங்கள் பலவற்றை எடுத்துக் கூறுவதோடு அவற்றால் விளையும் சிவபுண்ணியங்களையும் இது குறிப்பிடுகின்றது. அதேவேளையில் பாவங்கள் பற்றியும் அவற்றிற்கான தண்டனைகள் பற்றியும் இந்நூல் குறிப்பிடுகின்றது. சிவபரத்துவமும் சிவவழிபாட்டினால் பாவங்கள் நீக்கப்பட்டு ஏற்படும் முத்தியின்பமும் இந்நூலில் நன்கு எடுத்துக் கூறப்படுகின்றன. சைவசமயம் கூறும் பதி, பசு, பாசம் எனும் மும்மலங்கள், சரியை, கிரியை, யோகம், ஞானம் என்னும் நான்கு மார்க்கங்கள் சாலோக, சாரூப, சாமீப சாயுச்சியம் எனும் நால்வகை முத்தி நிலைகள் ஆகியன இந்நூலிலே தெளிவாகக் கூறப்படுகின்றன.

Page 105
1867ஆம் ஆண்டு திருநெல்வேலி சாலி வாடிகர ஒதுவா மூர்த்தியினால் பரிசோதித்து முத்தமிழாகர அச்சுக் கூடத்திலே பதிப்பிக்கப்பட்ட நூலின்படி இந்நூலின் சிறப்புப் பாயிரத்திலே 16 செய்யுட்களும் தொடர்ந்து 12 இயல்களிலும் 1208 செய்யுட்களும் உள்ளன. கணபதி வணக்கத்துடன் முதலாவது செய்யுள் தொடங்குகின்றது. இதிலே சிவபெருமான், சக்தி, முருகன், அகத்தியர் பற்றிய குறிப்புகள் வருகின்றன. சிவபிரானை “உலப்பில் கருணைக்கடல்” எனக் குறிப்பிட்டு, கலியுகத்தின் வலி கெடவே இந்நூல் இயற்றப்பட்டதாக நூலாசிரியர் கூறுகின்றார். தொடர்ந்து இரு செய்யுட்களும் சிவபிரானுக்குரிய துதியாகவும் அடுத்த நாலாவது செய்யுள் சக்தி வணக்கமாகவும் அமைந்துள்ளன. தொடர்ந்து காரைக்காலம்மையார், திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரமூர்த்தி நாயனார், மாணிக்கவாசகர் ஆகியோருக்கான வணக்கம் வருகின்றது. சைவ சமய நாயன்மார்களிலே காலத்தால் முந்தியவர்களின் ஐவருக்கான வணக்கமுறை இப்பொழுது அருகிவிட்டாலும் அது பழைய மரபையொட்டியதே. இதன் பின் தேவர்கள், அந்தணர், பசுக்கள், மன்னர் முதலியோருக்கான வாழ்த்தும், மாதம் மும்மாரி பொழிய வேண்டுமென்ற வாழ்த்தும் ஒரு செய்யுளிலே கூறப்பட்டுள்ளன. இதைத் தொடர்ந்து வரும் செய்யுள் அவையடக்கமாக உள்ளது.
அடுத்துவரும் ஒன்பது செய்யுட்களிலே முதலிலே நூலின் சிறப்பும் பின்னர் அகத்தியரின் வேண்டுகோளிற்கேற்ப முருகப் பெருமான் சிவதருமோத்தரத்தைக் கூறிய வரலாறும் கூறப்பட்டுள்ளன. ஆன்மாக்களின் ஈடேற்றமே நூலின் நோக்கமாகக் கூறப்படுகின்றது. இதைத் தொடர்ந்து 12 இயல்களிலே சிவதருமோத்தரம் எடுத்துரைக்கப்படுகின்றது.
முதலாவதான பர தருமாதியியலிலே 52செய்யுட்கள் உள்ளன.
சிரத்தையோடு செய்வதுதான் அறம். அன்பு இல்லாது செய்யும் ஈகை அறமாகாது என்ற கருத்து "ஆதரவே பரமானஹமதாகும். ஆதரவற்றவரீகையறமேயாகாது” என முதலாவது செய்யுளிலே வருவது குறிப்பிடற்பாலது. இங்கு ஆதரவு, சிரத்தை என்பன பக்தியைக் குறிப்பன. தொடர்ந்து பஞ்சாக்ஷரம், பிரணவத்தின் பெருமை, ஆசிரியர் சிறப்பு, பஞ்சகவ்வியம், சிவபூசைச்சிறப்பு முதலியன் கூறப்படுகின்றன. மேலும் தமக்கு ஒருவர் எண்ணிறந்த துன்பஞ் செய்தாலும் அவருக்கு மிகச் சிறிய துன்பமேனும் செய்யாது நன்மை செய்தலேமேலான அறமென வேதாகம நூல்கள் கூறும் எனவும், நன்மை செய்தலே மேலான அறமெனத் தக்கார் அறியவேண்டும் எனவும் 45வது செய்யுள் பின்வருமாறு கூறுகின்றது.
தமக்கபராதபேதஞ்சதமுறச் சாதித்தார்க்கு
யமைத்து நூலிதமிதென்றேயறைந்திடுமதனையாதி
சமைப்பதே தலைமையான தருமமென்றறிக தக்கார்
என்பதாகும்.

79
தீமை செய்தோருக்கும் நன்மையே செய்யும் போக்குப் போற்றத்தக்கதே.
இரண்டாவதான சிவஞானதானவியல் 33 செய்யுட்களைக் கொண்டதாகும். சிவஞானத்தைத் தாய்மொழியில் அல்லது வடமொழியில் அவரவர் மொழித்தேர்ச்சிக்கேற்றவாறு எழுதலாம். ஞான நூலைப் பக்குவமுள்ள எவருக்கும் உபதேசிக்கலாம். பக்குவமற்ற எவருக்கும் உபதேசிக்கக்கூடாது. சிவஞான சாத்திரம் எழுத வெற்றேடு கொடுத்தல், எழுதுகோல் வழங்குதல் முதலியனவும் பெரும் புண்ணியமாகும். மேலும் பழுதடைந்த ஏட்டைப் புதுப்பித்து வைத்தல் புண்ணியமாகும். பழைய நூலைச் சிவபிரானுக்குப் பசு நெய்யிலே தோய்த்துச் சிவாக்கினியில் ஒமம் செய்யவேண்டுமெனக் கூறப்பட்டுள்ளது. புத்தக தானம், ஏடுதானம், எழுத்தாணி தானம் முதலியன பெரும் புண்ணியமாகச் சொல்லப்பட்டிருப்பதை நோக்கும்போது, அக்காலத்திலே பாடசாலைகளிலே படிக்கும் பிள்ளைகளுக்குப் புத்தகம் அளித்து உதவி செய்யும் கொடையை மக்கள் எவ்வளவு சிறப்பாகப் போற்றினர் என்பது தெளிவாகிறது.
மூன்றாவதான ஐவகை யாகவியல் 34 செய்யுட்களைக் கொண்டதாகும். இங்கு கன்மயாகம், தபோயாகம், செபயாகம், தியான யாகம், ஞானயாகம் எனும் ஐவகை யாகங்களை ஆசிரியர் விளக்கியுள்ளார்.
நான்காவதான பல விசிட்ட காரணவியலில் 61 செய்யுட்கள் உள்ளன. முந்திய இயலிலே கூறப்பட்ட கன்மயாகப் பலன்கள் அதிகமாவதற்குக் காரணமாக தேசம் காலம் முதலியவற்றை இது உணர்த்துகின்றது. சிவஞானியைப் போற்றுதலின் சிறப்பும் அவர்களைக் குறைகூறுவதாலேற்படும் தீயவிளைவுகளும் குறிப்பிடப்பட்டுள்ளன. 46 - 52 வரையுள்ள ஏழுபாடல்களிலே ஐம்பது திருத் தலங்களின் பெயர்கள் உள்ளன. அவற்றுள்ளே சிவகாசி, வெற்றியூர், வேலூர், பிரயாகம், அருணாசலம், குருக்ஷேத்திரம் முதலியவற்றைக் குறிப்பிடலாம். இவற்றுட் சில வட நாட்டிலுள்ளவை.
ஐந்தாவதான சிவதருமவியல் 35 செய்யுட்கள் கொண்டதாகும். இவ் இயலிலே சிவபூசையின் சிறப்புப் பரவலாகக் கூறப்படுகின்றது. பிற்பகுதியிலே சிவபூசை செய்வோர் அடையும் சிவலோகம் பற்றியும், சிவபூசை என்றும் பலனளிக்கும் என்பதும் எடுத்துரைக்கப்படுகின்றன. ஆறாவதான பாவவியலில் 107 செய்யுட்கள் உள்ளன. யார் யார் பாவஞ் செய்கிறார்கள், பாவங்களின் விதங்கள் முதலியனவும், ஒருவர் பின்பற்ற வேண்டிய நற்செயல்கள், ஆசாரங்கள் முதலியனவும் இதிலே விவரிக்கப்படுள்ளன. இதிலுள்ள உலக நீதிகள் சிவதருமத்தின் பாற்பட்டவை. மரங்களை வெட்டுதல், திருக்கோயிலில் நிற்கும் மரக் கொப்புகளைக் கோபித்து வெட்டுதல், கோவில் நந்தவனத்திலுள்ள பூக்களை ஒருவர் தனக்காகப்பறித்தல், கோயிற்பொருட்களைத் திருடுதல் முதலிய பல பாவச் செயல்கள் குறிப்பிடப்படுகின்றன. மரந்தறித்தல் பாவச் செயல் என்பது குறிப்பிடத்தக்கது. ஒருவர் அந்தரங்கமாகச் சேமித்து வைத்த
e -

Page 106
பொருளை அரசனுக்குக் காட்டித் தரக்கூடாது எனவும் கூறப்படுகின்றது. இந்த இயலில் இன்றும் பின்பற்றக் கூடிய நீதிகளும் ஆசாரங்களும் உள்ளன.
ஏழாவதான சுவர்க்க நரகவியலிலே 224 செய்யுட்கள். இந்நூலிலுள்ள மிக நீண்ட இயல்களில் இதுவும் ஒன்று. புண்ணியம் செய்வோர் பெறும் சுவர்க்கப் பலனும், பாவம் செய்வோர் பெறும் நரகப் பலனும் இதிலே விவரிக்கப்பட்டுள்ளன. யமதூதர் செய்யும் நரக தண்டங்கள் மிகப் பயங்கரமானவை. நரகங்களின் அமைப்பு இந்து சமயத்திலே கூறப்படும் அண்டகோசங்கள் அமைப்பை ஒட்டி வருணிக்கப்பட்டுள்ளன.
எட்டாவது இயலான செனன மரணவியலில் 101 செய்யுட்கள் உள்ளன. பிறவியின் தோற்றமும், வகைகளுமிதிலே கூறப்படு கின்றன. உடலின் நிலைமை அதுபடும் துன்பங்கள், ஞானிகள் உடலைப் பற்றி இருக்கும் நிலைமை முதலியன இதிலே விளக்கப்படுகின்றன.
ஒன்பதாவது சுவர்க்க நரகசேடவியல் 49 செய்யுட்கள் கொண்டதாகும். இதில் ஒருவர் தாம் செய்யும் நல்வினை, தீவினை ஆகிய இரண்டிற்கும் ஏற்பப் பெறும் புண்ணிய பாவங்கள் விவரிக்கப்படுகின்றன.
பத்தாவது இயலான சிவஞான யோகவியல் 128 செய்யுட்கள் கொண்டுள்ளது. ஒருவன் ஞானாசிரியனை அடைந்து சிவஞானம் பெற்றுச் சிவயோகம் அடைவதைக் கூறுகின்றது. ஆன்மாக்களைப் பீடித்திருக்கும் மலங்களை நீக்கும் சிவபிரான் மருத்துவன் என அழைக்கப்படுகிறார் (28). சிவனும் சக்தியும் ஆன்மாக்களுக்குப் பிதாவும் மாதாவுமாவர் என்பது (98) உணரப்படுகிறது. இறைவனும் ஆன்மாவும் ஒன்றல்ல, இரண்டுமல்ல என்பதை "ஏகமன்றிறை வனாவியிரண்டுமென்ற பேதமன்றே" (108) என வருவதால் அறியலாம். சைவசித்தாந்தம் இறைவன் - ஆன்மா ஐக்கியம் மரமும் நிழலும் போன்றதாகும் என்பதை அடுத்த செய்யுளில் (10) ஆசிரியர் விளக்குகிறார். அதாவது “தருநிழலன்றோவன்றே தனித்திருபொருளோவன்றே பரமனுமுயிருமிந்தப் படியெனவ பேதம் பாரார் ஒருபுடை ஏகதே சாமனவுபமானமோரார் அரிவை சொல்லதிமிர்தமென்றானா வினாலறிவதோ சொல்” என்பதாகும். இவ்வாறு ஆன்மாவும் சிவனும் இருக்கிற ஐக்கியத்தையறியாமல் மாயாவாதிகள் இவ்விரண்டும் ஒன்று என்று கூறுவதை அடுத்த (110) செய்யுளிலே நிராகரித்துள்ளார்.
பதினொராவது இயல் 106 செய்யுட்களுள்ள பரிகாரவியலாகும். ஆன்மாக்கள் இருவினைப் பலன்களை அனுபவிக்கும்போது, பாவங்களைப் போக்குதற்கான பரிகாரங்கள் இதிலே கூறப்பட்டுள்ளன. ஆகமங்கள் கூறும்
பிராயச்சித்த விதிப்படலக் கருத்துகள் இதில் உள்ளன.
இந்துக் க்களஞ்சியம்
80

பன்னிரண்டாவது இயலாகவுள்ள கோபுரவியலே இந்நூலில் இதுவே மிகக் கூடுதலான செய்யுட்கள் கொண்டுள்ளது. உலக அமைப்பு அங்குள்ள உயிர்கள் ஆகியன பற்றி இவ்வியல் கூறுகின்றது. எடுத்துக் காட்டாகச் சிவலோகத்தின் தன்மை 18 செய்யுட்களிலே (92 - 109) கூறப்படுகின்றது. நூலின் இறுதியிலே நூற்பயன் எடுத்துரைக்கப் படுகின்றது. இந்நூலைப் படிக்கு முன் பூசித்து அருச்சனை செய்ய வேண்டுமென்பது ஆசிரியர் கருத்தாகும்.
இந்நூலாசிரியர் ஒவ்வோரியலிலும் பாடல்களைத் துதியாக அமைத்துள்ளார். முதல் இரண்டும் சிவபிரானுக்குரிய துதியாகும். ஆனால் கடைசி இயலிலே நான்கு துதிகள் சிவபிரானுக் குரியனவாக உள்ளன. மூன்றாவது, சிவதருமோத்தரம் உபதேசித்த முருகன் துதி, நாலாவது கடைசிப் பாடல் உபதேசங்கேட்ட அகத்தியன் துதி.
முருகனைப் பற்றிய துதியெதுவும் தொடக்கத்திலுள்ள கடவுள் வாழ்த்துக்களில் இடம் பெறவில்லை. ஆனால் ஒவ்வொரு இயல் முடிவிலும் கடைசிச் செய்யுளுக்கு முன்னுள்ளது முருகப் பெருமானைப் பற்றிய துதியாகும்.
இந்நூல் சிவபுண்ணியங்கள் பற்றிப் பொதுவாகக் கூறியுள்ளது. மக்கள் அனைவரும் வாழ்க்கையிலே கடைப்பிடித்து ஒழுக வேண்டிய பொதுநெறிகளையும் நீதிகளையும் நன்கு பாகுபடுத்திக் கூறுகின்றது எனினும், இது கூறியுள்ள சில கருத்துக்கள் இக்காலத்திற்கு உகந்தன அல்ல. இந்நூலை 19ஆம் நூற்றாண்டிலே சோழ நாட்டிலே மக்கள் அனைவரும் விரும்பிப் படித்தனர் எனக் கூறப்படுகின்றது.
இந்நூல் சிறந்த தமிழ் நடையில் எழுதப்பட்டுள்ளது. சில செய்யுட்களின் கருத்து உரையின்றி விளங்காவிடினும், பொதுவாக இது தெளிவான தமிழ் நடையில் உள்ளது. சைவசமயம், சமூகம், தத்துவம் பற்றி அறிதற்கு இந்நூலும் நன்கு உதவுகின்றது.
(வி சி)
魯 ● சிவப்பிரகாச சுவாமிகள்,
துறைமங்கலம்
சிவப்பிரகாசர் என்னும் பெயரில் புலவர் பலர் இருந்துள்ளனர். அவர்களுள் துறைமங்கலம் என்னும் ஊரிற் சில காலம் வாழ்ந்தமையால் இப்புலவர் துறைமங்கலம் சிவப்பிரகாச சுவாமிகள் என அழைக்கப்பெற்றார். இத்துறை மங்கலம் பெரும் புலியூர்த்தாலுகாவிலுள்ள வேதாரூர். இவர் சிவப்பிரகாசர் என்றும் நல்லூர்ச் சிவப்பிரகாசையர் என்றும் கூறப்படுவார். இவர் 17ஆம் நூற்றாண்டின் இடைப்பகுதியில் வாழ்ந்தவர். காஞ்சிபுரத்தில் வாழ்ந்த குமாரசுவாமி பண்டாரம் என்பவரின் புதல்வர். வீர சைவ மரபினர். குமாரசாமிப் பண்டாரத்திற்குச் சிவப்பிரகாசர், கருணைப்பிரகாசர், வேலைய தேசிகர் என மூன்று புதல்வர்கள் இருந்தனர். அவர்களுட் சிவப்பிரகாசர் மூத்தவர். 1652 வரையில் துறை மங்கலத்தில் வாழ்ந்தார்.

Page 107
தருமபுர ஆதீனத்திலிருந்த வெள்ளியம்பலத் தம்பிரானிடம் இலக்கணம் கற்றவர். விரும்பிய வண்ணம் கவிபாட வல்லவர். தம் ஆசிரியராகிய வெள்ளியம்பலத் தம்பிரானுடன் தஷிண யாத்திரை செய்த காலத்தில் திருச் செந்தூரில் அவரைக் குதர்க்க வாதம் செய்து ஒரு புலவர் நிந்தித்தார். ஆசிரியர் செய்த சபதப்படியே அவருக்காக இவர் திருச்செந்தூர் நிரோட்டகயமக அந்தாதி என்னும் 30 பாடல்கள் பாடி அப்புலவரை வென்றார். இவருக்கு விரைவிற் பாடும் திறமையுண்டு. உதடுகள் சேராமற் சொல்லும் மொழிகளை அமைத்துப் பாடுவது இச் சிறு பிரபந்தமாகும்.
எல்லையற்ற சிவபக்தி உடைய இவர் துறவி. அடியவர் பால் மிக்க அன்பு பூண்டவர். வேதாந்த உணர்ச்சியும் ஆகம உணர்ச்சியும் மிகவுடையவர். அலங்கார சாஸ்திரத்தில் மிக்க பரிச்சயம் உள்ளவர். இலக்கண விஷயங்களைத் தாம் இயற்றும் நூல்களில் ஆங்காங்கு புலப்படுத்துவார். இவை இவர் பாடிய சோணசைல மாலையினால் நன்கு விளங்குகின்றன. இவரைப் பற்றி வியந்து கருணைப் பிரகாசர் முதலியோர் பாடியிருக்கின்றனர். இவர் தருக்க நூலிலும் பரிச்சயம் உள்ளவர். இவர் திருக்குறளின் கருத்தைத் தம் பாடல்களில் நிரம்ப உபயோகித்திருக்கின்றார். இவர் செய்த நூல்களுட் சிவப்பிரகாச விகாசமும் ஒன்றென்று அடியில் உள்ள செய்யுள் தெரிவிக்கின்றது.
பொன் புரை கடுக்கை வேணிப் புகன்றவா கமக்
குளத்தைத் தன் பெயர் விகாச நாமச் சருக்கரை யாச் சமைத்தான் குன்றவிற் குழகன் வாழும் கூவநற் சரிநற் தன்னைத் தென்றமிழ்க் கவிபுனைந்த சிவப்பிரகாசன் தானே
கற்பனைக்களஞ்சியம் என்று அறிஞர்களாற் பாராட்டப்படும் இவர் திருவெங்கை என மருவி வழங்கும் வெங்கனூர் என்னும் தல விஷயமாக மந்திரக் கோவையென்று புலவர்களாற் சிறப்பித்துப் புகழப்படும் திருவெங்கைக்கோவையும், திருவெங்கையுலாவும், திருவெங்கை கலம்பகமும் திருவெங்கையலங்காரமுமாக நான்கு பிரபந்தங்கள் பாடியுள்ளார். திருவெங்கைக் கோயிலைக் கட்டிய அண்ணாமலைச் செட்டியார் இவரிடத்தில் அளவற்ற பக்தி பூண்டு இவரை ஆதரித்தவர். மனிதர்களைப் பாடாத வீறு கொண்ட இப்புலவர்பெருமான் தம்முடைய அருமைத்திருவாக்கினால் உள்ளங் குளிர்ந்து அண்ணாமலைச் செட்டியாருடைய புகழைத் திருவெங்கையுலாவிற் பலபடப் பாடியுள்ளார். இவர் தாம் துறவியாக இருந்தாலும் “எம் குடி தாங்கி” என்று அண்ணாமலைச் செட்டியாரை நாவாரக்கூறி வாழ்த்தியுள்ளார். (திருவெங்கையுலா-கண்ணி46)
இவர் பிடாரியென்னும் தெய்வத்திற்குச் சீட்டுக்கவி எழுதி விடுத்தார். சிதம்பரம் சென்று நடராசப் பெருமானை வழிபட்டு வரும் நாளில் பல நூல்களை இயற்றினார். இவர் சிவஞானபாலைய சுவாமிகளைக் கண்டு வணங்கி அவர் மீது
ாைழ்ப்பாணம்

தாலாட்டுத் தூது, திருப்பள்ளியெழுச்சி பிள்ளைத் தமிழ் ஆகிய பிரபந்தங்களை இயற்றினார். விருத்தாசலத்திலே தங்கியிருந்த பொழுது கிறிஸ்தவ பாதிரியார் ஒருவருடன் வாதிட்டு ஏசு மத நிராகரணம் என்னும் நூலினை இயற்றினார். அபிடேக மாலை, கைத்தல மாலை முதலிய வீரசைவ சமய நுட்பங் கூறும் துதி நூல்களை இயற்றினார். இவர் நல்லாற்றுாரில் வாழ்ந்த போது 32ஆம் வயதிற் காலமானார்.
தமிழ் இலக்கியம், இலக்கணம், சமயம், தர்க்கம் ஆகிய துறைகளிற் புலமை பெற்று விளங்கிய சிவப்பிரகாசர் வடமொழியிலும் புலமை மிகுந்து விளங்கினார். இவர் இயற்றிய நூல்கள் திருக்கூவபுராணம் (தொண்டை நாட்டு இறைவன் மீது பாடப்பட்டது. 703 விருத்தப்பா) சீகாளத்தி புராணம் இதில் கண்ணப்ப சருக்கமும் நக்கீரச் சருக்கமும் இவர் பாடியவை. பிரபுலிங்கலீலை (அல்லம தேவரின் வரலாறு கூறும் நூல் 157 விருத்தங்கள்), இவை புராணங்களாகும். இவராற் சிற்றி லக்கியங்களும் இயற்றப்பட்டன. அவை செங்கோவை (425 கலித்துறை), திருச்செந்தில் நிரோட்டக யமக அந்தாதி (30) பழமலை யந்தாதி (100 செய்யுள்) சோணசைலமாலை (100 விருத்தம்), சத மணி மாலை, (சைவ சித்தாந்தங்களை 100 செய்யுளில் கூறும் நூல்) பிச்சாடன நவமணி மாலை (9 செய்யுள், விருத்தகிரி பெருமான் மீது பாடப்பட்டது.) இட்ட லிங்க அபிடேக மாலை, நிரஞ்சன மாலை, கைத்தல மாலை, வெங்கை கலம்பகம், சிவஞான பாலையம் (93 பாடல்களை கொண்டது) திருவெங்கையுலா, சிவஞான பாலையர் நெஞ்சுவிடு தூது, சிவ பாலையர் தாலாட்டு, சிவஞான பாலையர் திருப்பள்ளியழுச்சி செங்கை அலங்காரம் ஆகியன. சிவப்பிரகாச விகாசம் வேதாந்த பரிபாடை ஆகியன இவரின் சமய சாத்திர நூல்கள். நன்னெறி கொச்சகக்கலிப்பாவை நெடுங்கழி நெடில், குறுங்கழி நெடில், ஏசு மத நிராகரணம் ஆகியவை இவரின் ஏனைய நூல்களாகும். தேஹ.)
சிவபாதசுந்தரனார்,சைவப்பெரியார்
Iழ்ப்பாணத்து வடமராட்சிப் பகுதியில் கல்வி, அறிவுகளிற் சிறந்து விளங்கிய குடும்பம் ஒன்றில் 1878 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 17 ஆம் திகதி ஞானபானுவாய் சிவபாத சுந்தரனார் உதித்தனர். அவரின் தந்தையார் சுப்பிரமணியபிள்ளை.
சுப்பிரமணிய பிள்ளையவர்கள் துறை போகக்கற்ற தமிழறிஞர், ஆசிரியர் பிள்ளை அவர்களுடன் பிறந்தார் மூவர். இருவர் சகோதரர், ஒருவர் சகோதரி. மூத்த சகோதரர் கணபதிப்பிள்ளை. திருவனந்தபுரம் மகாராஜாக் கல்லூரியிற் சமஸ்கிருத ஆசிரியராகத் திகழ்ந்தவர். இரகுவம்சம் , பில்கணியம் ஆகிய நூல்களை மணிப்பிரவாள நடையில் பெயர்த்தெழுதியவர். மற்றைய சகோதரர் இலக்கணம் குமாரசுவாமிப்புலவர் (சுன்னாகத்தில் விளங்கியவர் இலக்கியம் குமாரசுவாமிப்புலவர்) அவர்களின்

Page 108
சகோதரியான பார்ப்பதி அம்மையார் தென் தமிழிலும் வடமொழியிலும் பாண்டித்தியம் படைத்தவர்.
சிவபாதசுந்தரனார் பிள்ளை அவர்களின் கனிட்ட புத்திரர். அவருக்கு மூத்த சகோதரிகள் இருவர். ஒருவர் மகேசுவரி அம்மையார். திருவாதவூரடிகள் புராண உரையாசிரியர் மக.வேற்பிள்ளை அவர்களின் துணைவியார். இவ்வாறு சைவமும் தமிழும் பாரம்பரியச் சொத்தாக விளங்கிய குடும்பத்தில் உதித்த சிவபாத சுந்தரம் மிக இளம்வயதிலேயே கந்தபுராணம் முதலான சைவநுாற் கருத்துக்களை செவிவழியே தேடிக்கொள்ளும் வாய்ப்பினைப் பெற்றிருந்தார். முக்கியமாக இவரின் தமிழ், சமய அறிவுக்கு வித்திட்டவர் பார்வதி அம்மையாராவார்கள். இவரின் ஆரம்பக்கல்வி இவர்தம் உறவினரான வேலாயுதம் என்பவராலே தாபிக்கப்பெற்ற வேலாயுதம் மகாவித்தியாலயத்தில் அமைந்தது. மேற்படிப்பின் முதற் பரீட்சையில் (First in Arts) சித்தியெய்திய பின்னர் பெரியார் தமது பட்டப்படிப்பினை திருச்சிராப் பள்ளியிலுள்ள தூய வளனார் கல்லூரியிற் கற்றுப்பட்டதாரியாக வெளிவந்தார். பெரியார் அவர்கள் தமது ஆரம்பக்கல்விக்கு நிலைக்களனாக விளங்கிய வேலாயுதம் வித்தியாலயத்தில் சிறிது காலம் ஆசிரியராகப் பணியாற்றிப் பின்னர் தூயவளனார் பாடசாலையில் ஆசிரியராக ஈராண்டுகள் சேவை புரிந்தனர். அக்காலத்துத் தலைசிறந்த கல்விமானாக விளங்கிய செல்லப்பா அவர்கள் தாம் தாபித்த விக்ரோறியாக் கல்லூரியின் தலைமையாசானாகப் பெரியரவர்களை அழைத்து அமர்த்தினார். அதன் மூலம் யாழ்ப்பாணத்திற்கு அன்னார் அளப்பரிய
ஆரம்பகாலத்தில் ஆசிரியர் சிவபாதசுந்தரனாரின் நடையும் உடையும் நோக்கும் மாணவர்களுக்கு விநோதமாகவே பட்டன. அரையில் அணிந்த தூய வெண்ணிற ஆடையின் கீழ்க்கரை கெண்டைக் காலுக்குமேலே உயர்ந்திருக்கும். சட்டைக்குப் பதில் அங்க வஸ்திரமே உடல் மேல்பாகத்தை மறைத்திருக்கும். காலிற் குமிழ் மிதியடி, சிரசில் சிறிய குடுமி, நெற்றியில் விபூதி. இவ்வாறான தோற்றம் மாணவர்களுக்கு விந்தையாக இருந்திருக்கும். ஆனால் அவரது அளக்கலாகா அறிவின் ஆழமும் பொருளை விரித்துரைக்கும் சொல்விற்பனமும், கருகலான கருத்துகளைத் தெளிவுபடுத்தி கேட்போர் மனத்தில் பதிவுறுத்தும் நுட்பமும் மாணவர்களிடத்தே அவர்கட்கு பயம் கலந்த பக்தியையும் மரியாதையையும் படிப்படியாக ஏற்படுத்தலாயின. இவ்வாசிரியர் பெருந்தகையின் சிறப்பினையும்போதிப்புத் திறனையும் ஒழுக்கநெறி புகட்டும் உந்து சக்தியையும் கண்டும் கேட்டுமறிந்த பெற்றோர்பலர் தமது அடங்காத பிள்ளைகளைக் கூட்டிவந்து ஒப்படைத்தனர். அவ்வாறு வந்து சேர்ந்த மாணவர்களின் வேறுபட்ட கிரகிக்கும் ஆற்றல் உளவியல்பு என்பவற்றைத் தம் கூர்த்த மதியாற் கண்டுணர்ந்து தேவைக்கும் உளப்பாங்கிற்கு மேற்பப் போதனை வழங்கி உத்தம
இந்துக் க்களஞ்சியம்

மாணாக்கர் ஆக்குவதில் கைதேர்ந்தவராகி வெற்றியும் கண்டார். 1924 முதல் 1933 இல் இளைப்பாறும் வரை இக்கல்லூரியில் அவர் சேவை செய்தகாலம் ஒரு பொற்காலம். பெரியார்தம் போதனை, கற்பித்தல் என்பவற்றால் மட்டுமன்றி வழி காட்டல், மதியுரை ஆகியவற்றால் உருப்பெற்று ஈடேறிப் பிரபலமுற்ற கல்விமான்கள் அளப்பிலர்.
ஆசிரியர் பணியிலிருந்து இளைப்பாறிய சிவபாதசுந்தரம் பொலிகண்டி கந்தவன நாதர் கோயிற் சூழலில் ஒருசிறு குடிலமைத்து தவ வாழ்வினை மேற்கொண்டனர். ஆசிரியப் பணியிலிருந்து ஒய்வு பெற்றனராயினும், கல்வி, சமய, சமூகப்பணிகளில் தொடர்ந்தும் ஈடுபட்டவண்ணமிருந்தார். காலையிலும் மாலையிலும் கோயில்தரிசனத்திற் கழிந்த நேரம் போக எஞ்சிய நேரமெல்லாம் கோயில் விவகாரங்கள், SFLOL i காரியங்கள், கல்விச்சிந்தனைகள், சித்தாந்த சாத்திரங்கள் என்றின்னவை தொடர்பான ஐயப்பாடுகளை நீக்கிக் கொள்வதற்காக வரும் கல்விமான்கள், சமூக சேவகர்கள், பழைய மாணவர்கள் ஆகியோருடன் உரையாடுவதிலும் வேண்டிய ஆலோசனைகள் வழங்குவதிலும் வெகு பயனுளதாய்க் கழியும்.
பண்டித மதன்மோகன் மாளவியா அவர்கள் நிறுவிய காசி இந்துப் பல்கலைக்கழகத்தின் உப அதிபர் ஓய்வு பெற்றகாலை அப்பதவியை வகிக்க சாலவும் பொருத்தமானவர் பெரியார் அவர்களே என ஒத்து அப்பதவிப் பொறுப்பினை ஏற்றுச் சிறிது காலமேனும் பல்கலைக்கழகத்துக்குத் தொண்டாற்ற வேண்டுமென அப்பல்கலைக்கழக ஆங்கிலப் பேராசிரியராகத் திகழ்ந்த கலாநிதி நாராயண மேனன் அவர்கள் வேண்டுகோள் விடுத்தனர். கந்தவன நாதரின் கழலிணையைப் பிரிய மனம் ஒருப்படாமையாலும் இலங்கையில் ஆற்ற வேண்டிய சமயப்பணிகள் அநேகம் இருந்தபடியாலும் மேனன் அவர்களின் அழைப்பை விநயமாக ஒதுக்கிவிட்டனர்.
சமயத்துறையில் ஆற்றிய சேவையை நோக்கில் நாவலர் பிரானுக்கு அடுத்தபடியில் வைத்து எண்ணத் தகுந்தவர் சைவப் பெரியார் அவர்கள். நாவலர்பிரான் மறைந்த அதே ஆண்டில்தான் பெரியார் அவர்கள் தோன்றினார் என்பது குறிப்பிடற்பாலது. நாவலர் பிரான் சைவநுால்கள் எழுதியும் சமயப் பேருரைகள் ஆற்றியும் சைவப்பாடசாலைகள் நிறுவியும் புறமத பரம்பலைத்தடுத்து நிறுத்தியும் சைவசமய, கல்வி மறுமலர்ச்சிக்குக் காரணராயிருந்தவாறே பெரியார் அவர்களும் சைவசமய நூல்கள் எழுதியும் சைவாசிரியர்க்குத் தலைமை தாங்கியும், சேர். பொன். இராமநாதன் அவர்கள் சைவ வித்தியாவிருத்திச் சங்கம்சார் சு. இராசரத்தினம் அவர்களோடி ணைந்து சைவப்பாடசாலைகள் நிறுவியும் விருத்தி செய்தும் சைவசமய எழுச்சிக்கு ஆதாரசுருதியாகத் திகழ்ந்தார். அவர் முயற்சியின் பயனாகத் தோற்றுவிக்கப்பட்ட பாடசாலைகளுள் ஒன்று மூளாய் சைவப்பிரகாச வித்தியாசாலை,

Page 109
நாவலர் பெருமான் தமது அந்திம காலத்தில் எழுதிய யாழ்ப்பாண சமயநிலை என்ற கட்டுரையில் திருஞான சம்பந்தராலும் சுந்தர மூர்த்தியாலும் பாடப்பெற்ற தலமாகிய திருக்கேதீஸ்வரத்தின் சிதைவுற்ற நிலையினைச் சுட்டிக்காட்டி அதனைப்புனரமைப்புச் செய்யவேண்டிய அவசியத்தையும் சைவநன்மக்கள் அதில் ஈடுபடவேண்டிய இன்றிமையாக் கடப் பாட்டினையும் வலியுறுத்தியிருந்தார். இக்கட்டத்தில் திருக் கேதீஸ்வரத்திருப்பணியின் முக்கியத்துவத்தை உணர்ந்த பெரியார் தமது தள்ளாத வயதினையும் பொருட்படுத்தாது திருக்கேதீஸ்வரம் சென்று சம்பந்தர் மடத்தினை நிறுவியதோடு, நடராசர், சிவகாமி அம்மை திருவுருவங்களைப் புதிதாக வார்ப்பித்துக் கோயிலுக்கு வழங்கினார். மேலும் திருக்கேதீஸ்வர புனருத்தாரண சபையினை பல தொண்டர்களின் உதவியுடன் தாபித்து அச்சபையின் முதல் தலைவராகவும் விளங்கி, திருப்பணிக்கு வேண்டிய நிதியத்தினைத் திரட்டுதற்கான முயற்சியினை மேற்கொண்டார். கொள்கை நெறிவழுவாமையில் உறுதிப்பாடு கொண்ட பெரியார் அவர்கள், சபையின் உறுப்பினர்கள் சிலர் மேற்கொண்ட தீர்மானங்கள், சைவக் கோட்பாடுகளுக்கு முரணாக இருந்தமைகண்டு, தாமே தாபித்ததற்குக் காரணமாகவிருந்த சபையிலிருந்து விலகிக் கொண்டார். கோயிலினுள் நவக்கிரகதேவதைகளை பிரகாரம் அமைப்பதெனச் சபை உறுப்பினர் எடுத்த முடிவுக்கு இசையமறுத்தே விலகினார்.
பெரியார் அவர்கள் ஆசிரிய சேவையிலிருந்து ஒய்வு பெற்றாரெனினும் கல்விச்சேவையிலிருந்து ஒய்வு பெற்றாரல்லர். அவர் இளைப்பாறியிருந்த காலத்தில் இலங்கையில் இலவசக் கல்வியை ஏற்படுத்த எண்ணிய அற்றைநாட் கல்வி அமைச்சர் சிடபிள்யு. கன்னங்கரா அவர்கள் நாட்டின் பல பாகங்களிலிருந்தும் தேர்ந்தெடுத்த கல்வி மான்களைக் கொண்ட ஒருவிசாரணைச் சபையினை அமைத்தார். இச்சபையின் ஒர் உறுப்பினராக விளங்கிய பெரியார் அவர்கள், இலவசக் கல்வித்திட்டத்தின் உன்னத நோக்கத்தினையும் அதனைச் செவ்வனே செயற்படுத்துதற்குச் சகல பாடசாலைகளையும் அரசாங்கம் பொறுப்பேற்று நடத்த வேண்டிய அவசியத்தையும் ஆங்கில போதனைக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்ற கருத்தினையும் எடுத்து விளக்கியாற்றிய பேச்சு அனைவரினதும் வரவேற்பையும் பாராட்டையும் பெற்றது. அக்காலத்துக் கல்விப் பணிப்பாளராக விளங்கிய எச். எஸ். பெரேரா அவர்கள் வரவேற்றதோடு, கல்விசார் பிரச்சினைகள் சம்பந்தமாக அவவப்போது அவர்தம் ஆலோசனைகளையும் பெற்று வந்தார்.
சைவப் பெரியார், கல்வி வளர்ச்சிக்கும் சைவசமய எழுச்சிக்கும் ஆற்றிய பல்வகைப் பணிகளுள் அவ்வத்துறைசார் நூல்கள் பல எழுதியுள்ளமை முக்கியமாகக் குறிப்பிடற்பாலது. கல்வித்துறைசார்பாக அவர் படைத்த நூல்களாவன: (1) படிப்பிக்கும் முறைகளும் விதிகளும், (2) அகநூல் (3) Essentials of Logic. சைவ மாணவர்க்காக எழுதப் பெற்றவை:

(1) சைவபோதம் 1ஆம் புத்தகம் (இது சிறுவர்கள் அறிந்து கொள்ளற் பொருட்டு சின்னச்சின்னக் கதைகள் மூலம் சிவபெருமானின் திருவருள் வடிவங்களை விளக்குவது). மேலும் இறைவனை வழிபடல், தந்தை, தாய், குரு என்போரை வழிபடல் ஆகிய விடயங்களும் கூறப்பட்டுள்ளன. (2) சைவபோதம் 11ஆம் புத்தகம் - இதிலே சைவசமயத்தின் சிறப்பு, சைவசமயப் பிரமான நூல்கள், ஆன்மாவின் இயல்பு, மும்மலங்கள் இறைவனின் பரிபூரணநிலை, அத்துவிதம் என்பன பற்றிய கருத்துக்கள் இலகுமொழியில் விளக்கப்பட்டுள்ளன.
திருவருட்பயன் விளக்கவுரை
உமாபதி சிவாசாரியாரின் சித்தாந்த அட்டகத்துள் ஒன்றான திருவருட்பயனுக்கு நிரம்பவழகிய தேசிகர் ஏலவே எழுதிய உரை உண்டு. சைவசித்தாந்தத்தைப் பயில முனைபவர்க்கு வெகுபயன் அளிப்பது இவ்வுரை.
சைவக் கிரியை விளக்கம்
சிவபெருமான் உயிர்களுக்கு மூவகை உடல்களைக் கொடுத்தருளியமையும் இவற்றை நல்வழிப்படுத்திப் பயன்பெறு முறைமையும் அறிவு, தொழில் இச்சைகளை நன்னெறிப்படுத்தலே சைவக்கிரியைகளின் நோக்கம் என்பதும் இந்நூலில் விளக்கம் பெற்றுள்ளன. இந்நூல் சைவ சமயவியல், கிரியையுறுப்பியல், தீட்சையியல், விவாகவியல், கோயிலியல், அபரக்கிரியையியல் என ஆறு பிரிவுகளையுடையது.
சைவ சமயசாரம்
இச்சிறு நூல் சிவநெறியின் மகத்துவத்தையும், சைவசித்தாந்தக் கோட்பாடுகளையும் சாமானியரும் மாணவரும் விளங்கிக் கொள்ளும் வகையில் இனிய இலகுதமிழ் நடையில் எழுதப் பெற்றுள்ளது. தென்தமிழ்நாட்டு பிச்சாண்டார் கோயில் பெருநிலக்கிழார் இராவ்பகதூர் கோபாலபிள்ளை அவர்களின் வேண்டுகோளின்படி எழுதப்பெற்றது. இவ்வரிய நூல் ஏழு பாடங்கள் கொண்டது. இப்பாடங்கள் முறையே கடவுளின் முதன்மை, ஆன்மாக்களின் இயல்பு, கடவுளை வழிபடும் முறைமை, நல்வினை, தீவினைகளின் இயல்பு, சைவவாழ்க்கை முறை, சைவசமயிகளின் ஒழுகலாறு, சைவத்தின் மகத்துவம் என்பன.
கந்தபுராண விளக்கம்
எத்துணைக் காலம் திருப்பித்திருப்பிப் படிப்பினும் கேட்பினும் எட்டுணையும் தெவிட்டாது தித்தித்தமுதுாறு அதியற்புத அதிமதுரத் திவ்விய வாக்காகிய கந்தபுராணம் பற்றிய தொடர்பு பெரியாரவர்களுக்குக் குடும்பச் சொத்து. அவரது மாமியார் பார்பதிப்பிள்ளை கந்தபுராணக் கதையை அவரின் பிள்ளைப் பராயத்திலேயே புகட்டிவிட்டனர். பெரியார் அவர்களின் வாக்கின்படி, "கந்தபுராணம் பொருளாலும் அகலத்தாலும் தமிழ் நூல்கள் யாவற்றிலும் சிறந்தது. பெருங்காப்பிய இலக்கணங்கள் யாவும் பொருந்தியது. அறம் பொருள் இன்பம் வீடாகிய நான்கையும் விளக்கி அவற்றைப் பெறும் வழியையும்
இந்துக் ឆែ្កវិទ្យា

Page 110
சாதனத்தையும் காட்டுவது. சிவதருமோத்திரங் கூறும் அறங்களை நிலைநிறுத்துவது. பாரதம் முதலியவற்றைப் போலச் சரித்திரங்களையும் கூறுவது. பெரியபுராணத்தை ஒப்பச் சிவபெருமானது திருவருட் சிறப்பையும் அடியாரின் அன்புத் திறத்தையுங் கூறுவது. தோத்திர நூல்களாகிய தேவாரம் திருவாசகங்களைப் போல அரிய அருட்பாக்கள் நிறைந்துள்ளது. திருக்கோவையார் போல பொருளிலக்கணத்துக்கு இலக்கியமாக ஆன்ம ஈடேற்ற முறையை ஒருங்கே கூறுவது. இத்தகு பெருமை வாய்ந்த கந்த புராணத்தில் உள்ள கதைகளில் பாலில் நெய்போலக் கலந்திருக்கும் சித்தாந்த நுண் பொருள்கள் எல்லோர்க்கும் இலகுவில் புலப்படுவதன்று. இவ்வாறான தத்துவப் பொருள் பொதிந்த கதைகள், பாடல்களின் உட்பொருள்களை வெளிக்கொணரும் பாங்கில் கந்தபுராண விளக்கம் அமைந்துள்ளது. உதாரணமாக முத்திப்பேற்றில் மலங்களை வெல்லும் முறை சூரபன்மன் வதையிலும் ஞானத்தை நல்கும் பாங்கு வள்ளியம்மை திருமணத்திலும் காட்டப்பட்டுள்ளதிறனை கந்த புராணவிளக்கம் தெள்ளிதின் விளக்கிநிற்கிறது.
திருப்பெரு வடிவம்
கந்தபுராணம் வடமொழி சிவரகசியத்தின் ஒரு பாகம் என்பது நாவலர் பிரானின் கருத்து. சிவரகசியத்தின் சிரோமணியாகத் திகழும் திருப்பெருவடிவம் கந்தபுராணத்துச் சூரபன்மன் வதைபடலத்தில் அமைந்துள்ளது. போருக்காற்றாத சூரபன்மன் பலவகை மாயவடிவங்களை எடுத்துத் தேவர்களை அச்சுறுத்தினான். முருகவேள் அவன் கொண்ட மாய வடிவங்களை ஒரு ஞானப்படையினால் அழித்துச் சூரனை நோக்கி அழிவில்லாத நம் பெருவடிவங் கொள்வன் நன்று கண்டிடுதி என்று கூறி, உலகம், உயிர்வர்க்கம் அனைத்தும் தன்கைத் தடக்கிய விசுவரூபம் ஒன்றைமேற்கொண்டார். இப்பரமேஸ்வர வடிவக் காட்சி 32பாடல்களில் வருணிக்கப்பட்டுள்ளது.
திருவாசக மணிகள்
திருவாசகமானது சிவஸ்துதியாகவும் சிவஞான நிதியாகவும் இருத்தலாற் பெரியோர் அதனை வேதம் என்று சொல்லுவர். அது எம்முடைய மொழியிலே தோன்றியமையால் வடமொழியிலுள்ள வேதத்தினும் சிறந்ததாயிற்று. சுவையிலும் பொருளிலும் பயனிலும் ஒப்புயர்வற்ற இத்திருவாசகத்தைக் கல்லாத தமிழ்ச் சைவர்கள் மறுமை நலத்தை இழப்பதுமன்றி இம்மையில் அனுபவிக்கத்தக்க இன்பங்களுட் பெரும்பகுதியை அனுபவி யாமலும் அறியாமலும் நிர்ப்பாக்கியராகின்றனர். திருவாசகத்தின் பெருமையை இவ்வாறு குறிப்பிட்டுள்ள சைவப்பெரியார் அவர்கள் தாம் அதில் ஈடுபாடு கொண்டவாறே பிறரும் ஈடுபாடுகொள்ள வேண்டும் என்ற சீரியநோக்கில் சிலபாடல்களைத் தெரிந்தெடுத்து நுண்பொருளும் தத்துவவிளக்கமும் எழுதி வழங்கினார். இவர்தம் கருத்தமைந்த விளக்கத்திற் சிவபெரு மானியல்பு, திருவருளியல்பு, சிவபக்தியை வளர்க்கும் முறைமை, திருவடிப்புகழ்ச்சி முறைமை ஆகிய தலைப்புகளின் கீழ் திருவாசகத்தின் வாக்கியம் இனிது புலப்படுத்தப்பட்டுள்ளது.
இந்துக்கலைக்களஞ்சியக்

Saiva School of Hinduism
பெரியாரவர்கள் ஆங்கிலத்தில் எழுதிய நூல்களுள் இது பாரியது. மேலைநாட்டு வாசகர்களைக் கருத்திற் கொண்டு எழுதப்பெற்று இங்கிலாந்தில் பதிப்பிக்கப்பெற்ற இந்நூல் சைவசித்தாந்த தத்துவத்தை அறிய விழைவார்க்கு உகந்த செவ்விய கைந்நூல் எனலாம். இந்நூலைப் படித்த நியூயோக் நகரைச் சேர்ந்த நியாயவாதியான பேரறிஞர் ஒருவர், சமயதத்துவம்பற்றி அறியவேண்டுமென்ற ஆவலில் தம் கைக் கெட்டிய தத்துவநூல்களைக் கற்றும் திருப்தியுறாத நிலையில் இப்புத்தகம் கிடைக்கப்பெற்று வாசிக்கநேர்ந்த காலை தாம் நாடிய பொருள் இதில் கைகூடப்பெற்று இறும்பூதெய்தியதாக 1935 இல் பெரியார்க்கு எழுதிய கடிதம் ஒன்றில் குறிப்பிட்டுள்ளமை மேலைநாட்டறிஞர்களிடையே இந்நூல் பெற்ற மகோன்னத வரவேற்பிற்குத் தக்க சான்றாகும்.
The Outline of Shivagnanabodam with a Rejoinder of a Christian critic.
கிறித்தவப் பெண்மணி ஒருவர் தமது பட்டத்தின் பொருட்டு சைவசித்தாந்தம் பற்றி ஒரு ஆய்வுக்கட்டுரை எழுதினார். அதில் சிவஞானபோதக் கருத்துகள் தவறாகப் பிரயோகிக்கப்பட்டமை கண்டு அந்நூலுக்கு ஒரு மறுப்புரை எழுதவேண்டுமென தருமபுர ஆதீனமுதல்வர் விடுத்த வேண்டுகோளுக்கிணங்க இந்நூல் எழுதப்பெற்றது. கிறித்தவ ஆய்வாளரின் உரைக்குச் சிவஞான முனிவர் பாணியில் தாக்கரீதியான கண்டனத்தோடிணைந்த சிவஞான போதத்தின் உரை விளக்கமாகத் திகழ்வது இந்நூல். திட்பமும் நுட்பமும் வாய்ந்த கருத்துகள் பொதிந்த இந்நூலின் சிறப்பு நோக்கி அதனைக் காசிப்பல்கலைக்கழகம் சைவசித்தாந்தத்தினை ஒருபாடமாகக் கொள்ளும் முதுமாணிப்படிப்பு மாணவர்களுக்கு ஒரு உசாத்துணை நூலாகச் சிபாரிசு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Arumuka Navalar (gigi(p55IT6)Jauri)
சைவத்தமிழுலகம் நன்கறிந்த நாவலர் பிரானின் வரலாறு அவரின் சைவத்தமிழ் சமூகப் பணிகளின் மகிமை என்பன பற்றி அறியாத ஏனையோரும் அறிந்து கொள்ளற் பொருட்டு பெரியார் அவர்கள் எழுதிய இந்நூல் பல வியத்தகு தகவல்களைக் கொண்டு மிளிர்வது.
The Glories of Shaivaism (6056)|1556ôT LD55516)|Lh)
பெரியாரவர்களின் இறுதிப்படைப்பு இந்நூல். அவரின் ஒன்றுவிட்ட சகோதரர் கலாநிதி சிவப்பிரகாசம் அவர்களது வேண்டுகோளின் வண்ணம் தாம் முதுமைக்கும் தளர்ச்சிக்கும் ஆளாகியிருந்தபோது வெகுசிரமத்தின் மத்தியில் ஒருவாறு எழுதிமுடித்த இந்நூல் சைவசமயம், சைவசமய நூல்கள், திருநீறு, வழிபாடு, வழிபாட்டுக்குகந்த இடங்கள். பஞ்சாட்சரம் சைவவாழ்க்கை நெறி என்பன பற்றிய விளக்கங்களைக்
கொண்டமைந்தது. (தேஹ.)

Page 111
சிவ பிரதிமைகள்
மெய்யியல், விக்கிரகவியல் ஐதீகம் என்பனவற்றினடிப் படையில் நோக்கும் பொழுது சிவவழிபாடு மிகப் புராதனமானதும், பெருமை கொண்டதுமான தெய்வவழிபாடாக விளங்குகிறது. சிவவழிபாட்டிற்குரிய சைவமே இந்து சிற்பக்கலையிலும், கட்டிடக்கலையிலும் முதன்மை பெற்றதொன்றாக இருப்பதை புவனேஷ்வர், கஜுராஹோ, எல்லோரா, ராமேஸ்வரம் முதலான ஸ்தலங்களும், இந்தியாவின் பலபாகங்களிலும் கிடைக்கும் எண்ணற்ற லிங்கங்களும், இலங்கையிலுள்ள சைவவழிபாட்டுத் தலங்களும் எடுத்துக் காட்டுகின்றன. சிவன் தொடர்பான வரலாறு சமய அடிப்படையிலும், விக்கிரகவியலடிப்படையிலுமாக இருதிசைகளில் முனைப்புப் பெற்று விளங்குகிறது. சிவவழி பாடான சைவத்தின் வரலாறு இருபிரதான செல்திசைகளைக் கொண்டு விளங்குகிறது. ஒன்று வேதமரபை ஏற்றுக்கொண்டும், இரண்டாவது வேதமரபிற்குப் புறம்பாகவோ அல்லது மாறாகவோ வளர்ச்சி பெற்றதாகவும் காணப்படுகின்றது. புராணங்கள் குறிப்பாக வராகபுராணம், இவ்விரு செல்நெறிகளையும் ஐதீகங்களினடிப்படையில் இணைத்துச் செல்வதையும் அவதானிக்கமுடிகிறது. நான்கு பிரதான சைவநெறிமுறைகளில் ஒன்றான பாசுபதத்தின் தோற்றம் பற்றிய செய்திகள் இப்புராணத்திலே தரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. பாசுபதகிரியை என்பதினூடாக அதர்வசிரசு உபநிடதத்திற் காணப்படும் செய்திகள் குறிப்பிடத்தக்கது.
மெய்யியலடிப்படையிலும், கிரியை யடிப்படையிலும் ஆகமங்களை ஆதாரமாகக் கொண்ட சைவசிந்தனாகூடம் ஆகமாந்தம் அல்லது சுத்தசைவம் என அழைக்கப்பட்டது. இது குறிப்பாக தென்னிந்தியாவிற் செல்வாக்குப் பெற்ற தொன்றாகவிருந்தது. இதேவேளை வடஇந்தியாவில் வேதாந்தத்தின் ஒருமைவாதச் சிந்தனையை அடிப்படையாகக் கொண்ட வேதாந்த சைவம் வேதஉபநிடதத் தத்துவங்களை அடிப்படையாகக் கொண்டு விருத்தி பெற்றது. ஆகமாந்த சைவத்தின்படி வேதம் பொது, ஆகமம் சிறப்பு. எனவே ஆகமப் போதனைகளிற்கேற்பவே வேதங்களிற்குப் பொருள் கொள்ளவேண்டும் (சிவஞான பாடியத்தில் சிவஞானசுவாமிகள் இக்கருத்தைத் தெரிவித்திருப்பது இவ்விடத்திற் குறிப்பிடத் தக்கது.) தீட்சை முறைமையிலும் இவ்வேறுபாடு காணப்படுவது குறிப்பிடத்தக்கது.
சிவவழிபாட்டில் மிகவும் புராதனமானதும், பாசுபதவழிபாட்டிற் குரியதுமான சிந்துவெளி நாகரீக காலத்துப் பசுபதி-சிவன் பிரதிமைகள், மற்றும் கபாலிகம், காளாமுகம் சார்ந்த வழிபாடுகள் ருத்திரசிவனின் உக்கிரமூர்த்தி வழிபாடாகக் காணப்பட்ட பொழுதும், சிவவிக்கிரகவியலின் வளர்ச்சி படிப்படியாக அகோர சௌமிய வடிவங்களுக்கு முதன்மையளிக்கலாயிற்று. ஆகமாந்த சைவம் அல்லது சுத்தசைவத்திலும் சௌமியமூர்த்தி வடிவங்கள் பற்றிய குறிப்புகளை அவதானிக்கமுடிகிறது.

ஆகமங்கள் சரியை, கிரியை, யோகம், ஞானம் முதலான நால்வகைப் போதனைகளினூடாக யோகதட்சிணாமூர்த்தி, ஞானதட்சிணாமூர்த்தி பற்றிய விக்கிரகவியல் விவரங்களைத் தருகிறது. காஷ்மீரசைவம் ஒருமைவாதச் சிந்தனையாக இருப்பதால் விக்கிரக வழிபாட்டு முறையில் அதிக ஆர்வமில்லா திருப்பது குறிப்பிடத்தக்கது. வீரசைவர் பிரதிமைவழிபாட்டைவிட, இஷ்டலிங்க வழிபாட்டிலேயே ஆர்வமுடையவர்கள்.
சிவபிரதிமை லட்ஷணத்தில் லிங்கம், ரூபம் என்ற இருவகைப் பிரதிமை வடிவங்கள் உளவெனினும், பரமசிவன், சதாசிவன், மகேஸ்வரன் என்ற சிவரூப வேறுபாடுகளிற்கிணங்கச் சிவ பிரதிமைகளை மூன்று வகையான ரூபங்களில் வகைப்படுத்தலாம். இதன்படி லிங்கம் உருவமில்லாப் பிரதிகளையும் பரமசிவத்தையும் லிங்கமூர்த்தி, இலிங்கோற்பவமூர்த்தி, முகலிங்க மூர்த்தியென மூன்று வகையாக முகலிங்கம் சதாசிவரூபத்தையும், மகேஸ்வரரூபம் முதலான சிவபிரதிமைகளையும் உள்ளடக்கும். எவ்வாறாயினும் லிங்கமூர்த்திகளை வகைப்படுத்தலாம். மயமதம், ஈசானகுருதேவ பத்ததி என்பன லிங்கத்தை நிஷ்களம், சகளம், மிஸ்ரம் என மூன்றுபெரும் பிரிவில் உள்ளடக்குகின்றன. நிஷ்களவிங்கம் சலம், அசலம் என இருவகைப்படும். சுப்பிரபேதஆகமம் லிங்கங்களை சுவயம்பு, பூரணம், தைவீகம், காணபத்ய, ஆசுரம், அர்ஷம், ரர்க்சஷம், மானுஷம், பாணம் என 10 வகையாகவும் காமிக ஆகமம் சுவயம்பு, தைவீகம், அர்ஷகம், காணாபத்யம், மானுஷம், பாணம் என7 வகையாகவும், மகுடாகமம் தைவீக, அர்ஷகம், காணபம், மானுஷ என 4 வகையாகவும் பிரிக்கின்றன.
சுவயம்புலிங்கங்களைப் பொறுத்தவரை அவற்றிற்கு விக்கிரவியல் நியமங்களென எத்தகைய வரைவிலக்கணங்களும் சிற்பநூல்களில் கொடுக்கப்படவில்லை. சுயமாகவே உருவானவை. கரடுமுரடான வெளித்தோற்றத்தைக் கொண்டிருக்கும் தெய்வீக லிங்கங்கள். நெருப்பின் சுவாலை வடிவமாகவோ, இருகைகளையும் கூப்பியவாறுள்ள அஞ்சலி வடிவமாகவோ இருக்குமென மகுடாகமம் குறிப்பிடுகிறது. கணங்களால் உருவாக்கப் பட்டவையென நம்பப்படும் கணபஸிங்கங்கள் வெள்ளரிக்காய், விளாங்காய், நாரத்தங்காய் ஆகியவற்றின் வடிவத்தை ஒத்தவாறு இருக்கும். அர்ஷச லிங்கங்கள் ரிஷிகளால் தமது வழிபாட்டுத் தேவைகருதி உருவாக்கப்பட்டவையாகும். இவை உரிக்கப்படாத தேங்காயின் வடிவத்தை ஒத்ததாயிருக்கும். மேலேகுறிக்கப்பட்ட நால்வகை லிங்கங்களிற்கும் குறிப்பிட்ட வடிவம் எதுவுமில்லையென கிராணஆகமம் தெரிவிக்கிறது.
மானசாரம் என்ற சிற்பநூல் லிங்கங்களை1 சைவம், பாசுபதம், காளாமுகம், மாவிரதம், வாமம், வைரவம் என்ற சைவப் பிரிவுகளின் அடிப்படையிலும், 2. சமகர்ன, வர்த்தமான, ஸ்வாஸ்திக என உருவ அடிப்படையிலும் 3 ஜாதி, சண்ட, விகல்ப, ஆபாச என உயரத்தினடிப்படையிலும் 4. நாகரம், திராவிடம், வேசரம் என கலைப்பாணியினடிப்படையிலும் 5. சுவாயம்பு,
இந்துக்கலைக்களஞ்சியம்

Page 112
தெய்வீக, மானுஷ, காணப, ஆர்ஷ என லிங்கங்களின் தோற்றத்தினடிப்படையிலும் 6. ஆத்மார்த்த, பரார்த்த என நோக்கத்தினடிப்படையிலும் 7 ஏகலிங்கம், பாகுலிங்கம் என ஸ்தாபன அடிப்படையிலும் 8. வச்சிரம், சுவர்ணம் என எப்பொருளால் ஆக்கப்பட்டதென்ற அடிப்படையிலும் 9. கூடிணிக, ஸ்திரம் என கால அடிப்படையிலும் லிங்கங்களை வகைப் படுத்துகிறது. சமரங்கன சூத்திராதாரத்திலே தரப்படும் லிங்கங்கள் பற்றிய வகையீடு குறிப்பிடத்தக்கது. லோகபால லிங்கங்களான அக்னேய, அந்திரேய முதலான வகையீடுகள் வேறுநூல்கள் எவற்றிலும் காணப்படாதது.
மானுஷ (மனிதரால் உருவாக்கப்பட்ட) லிங்கங்கள் பற்றி கலாநிதி பனர்ஜி தனது விக்கிர வியல் பற்றிய ஆய்விலேதரும் குறிப்புகளும் முக்கியமானவை. சிவலிங்கங்களில் பெரும் தொகையானவை மானுஷ லிங்கங்கள் என்ற வகையீட்டில் உள்ளடங்குகின்றன. இவை பிரமபாகம், விஷ்ணுபாகம், ருத்திரபாகம் என 3 பாகங்களைக் கொண்டது. ருத்திரபாகம் பூஜாபாகம் எனவும் அழைக்கப்படும் மேற்பாகமாகும். விஷ்ணுபாகம் (நடுப்பாகம்), பிரமபாகம் (கீழ்ப்பாகம்) என அழைக்கப்படுபவை பீடத்திலும், நிலத்திலும் உள்ளடக்கப் பட்டிருக்கும். எல்லா மானுஷ லிங்கங்களினதும் பூஜாபாகத்திற் பிரமசூத்திரமென அழைக்கப்படும் சிலவரைபுகள் காணப்படு துண்டு. சிரோவர்த்தன என அழைக்கப்படும் லிங்கத்தின் மேற்பாகம் குடைபோன்ற வடிவம், கெக்கரிக்காய் வடிவம், முட்டை வடிவம், அர்த்தசந்திர வடிவம், குமிழி வடிவம் என்ற வடிவங்களில் யாதேனுமொன்றாய் இருக்கும். லக்ஷனோத்தரணம், மணிரேகை, பார்ஸ்வசூத்திரம் எனவும் பிரமசூத்திரம் எனவும் அழைக்கப்படும்.
பூஜாபாகத்தில் 108 லிங்கங்களின் சிற்றுருவங்கள் கொண்டது ஸரேட்ய லிங்கங்களாகும். 1001 லிங்கங்களின் சிற்றுரு வரைபுகள் கொண்டது ஆட்யலிங்கங்களாகும். அவை முகங் களிற்கு உரியனவல்ல. முகம் செதுக்கப்பட்ட லிங்கம் முகலிங்கம் என அழைக்கப்படும். அவை முறையே ஐந்து (ஈசானம்), நான்கு (தற்புரூடம்), மூன்று (வாமம்), இரண்டு (அகோரம்), ஒன்று (ஸத்யோசாதம்) என ஐந்துவிதமாகும். இவைதவிர பாண லிங்கங்கள் என அழைக்கப்படும் லிங்க வகைகளும் உண்டு. அவை சிவன் திரிபுரமெரித்த ஐதீகத்துடன் தொடர்புடையவை.
லிங்கபீடங்களும் பலவகை வடிவங்களைக் கொண்டவை. சதுரம், நீள்வட்டம், வட்டம் 16 பக்கங்களைக் கொண்டது, முக்கோண வடிவிலானது, என பீடங்களின் வடிவம் பற்றி மானசாரம் குறிப் பிடுகிறது.
9 (655. Logofig (gTroph (Anthropomorphic forms) வடிவில் இருக்கும் சிவப்பிரதிமைகள் பற்றிப் பார்க்கலாம். ஆகமங்கள், தந்திரங்கள், புராணங்கள் என்பனவற்றில் இது தொடர்பான விவரங்கள் தரப்பட்டுள்ளன. பல்வகைத்தான
இந்துக் க்களஞ்சியம்

சிவபிரதிமைகளைத் தொகுத்து மூன்று பெரும் பிரிவுகளில்
உள்ளடக்கலாம்.
1 சாந்தமூர்த்தம் சாதாரண அசாதாரணமூர்த்தம்
செளமிய, சாந்தமூர்த்தம் நிருத்தமூர்த்தம் தட்சிணாமூர்த்தம்
2. உக்கிரமூர்த்தங்கள் சம்ஹாரமூர்த்தம்
வைரவமூர்த்தம் கங்காளமூர்த்தம் அகோரமூர்த்தம் ருத்திரமூர்த்தம்
3. பிறமூர்த்தங்கள் வித்தியேஸ்வரர்
ஈசானபஞ்சமூர்த்தி மகாதேவர் சிவகணங்களும், சிவபக்தர்களும்
எவ்வாறாயினும், சிவபிரதிமைகளில் லிங்கமே முதன்மையானது. சில்பரத்தினத்தின்படி 18 வகையான லிங்கோற்பவ மூர்த்திகள் முக்கியமானவை. அவற்றினடிப் படையிலேயே மேற்குறித்த வகையீடு உள்ளடக்கப்படுகிறது. சுகாசனமூர்த்தி, சோமாஸ்கந்தமூர்த்தி, சந்திரசேகரமூர்த்தி, ரிஷபவாகனமூர்த்தி, நிருத்தமூர்த்தி, கங்காதரமூர்த்தி, திரிபுராந்தக மூர்த்தி, கல்யாணசுந்தரேச மூர்த்தி, அர்த்தநாரீஸ்வர மூர்த்தி, கஜசங்காரமூர்த்தி, பாசுபதமூர்த்தி, கங்காளமூர்த்தி, பிச்சாடனமூர்த்தி, சண்டேசாநுக்கிரமூர்த்தி, தட்சிணாமூர்த்தி முதலானவை லிங்கோற்பவ மூர்த்திகளில் முக்கியமானவை.
சாதாரணமூர்த்தியென்பது பிரபல்யமான சிவப்பிர திமைகளைச் சுட்டும். மானசாரம், விஷ்னுதர்மோத்தரம் முதலானநுால்களில் சாதாரணமூர்த்தி பற்றிய விவரங்கள் தரப்பட்டுள்ளன. அசாதாரணமூர்த்திகளிற் சதாசிவமூர்த்தி, மகாசதாசிவமூர்த்தி, ரெளத்திர பாசுபதமூர்த்தி என்பன குறிப்பிடத்தக்கவை. காமிக ஆகமம் (உத்தரபாகத்தில்) சதாசிவமூர்த்தி பற்றி வெள்ளை நிறமானவராயும், பத்மாசனத்தில் நிற்பவராயும், ஐந்து முகங்களையுடையவராயும், ஜடா மகுடமுடையவராகவும் விவரிக்கிறது. மகாசதாசிவன் 25 முகங்களும், 75 கண்களும் ஜடாமகுடமும், சர்வ அலங்காரமும் உடையவராக மானசாரம் கூறுகிறது. தஞ்சாவூர் வைத்தீஸ்வரன் கோயிலில் மகாசதாசிவ மூர்த்தியின் பிரதிமையொன்று உளது. பாசுபதமூர்த்தி, ரெளத்திர பாசுபதமூர்த்தி என்பன அவற்றின் அசாதாரண தோற்றத்தினால், பிரதிமையாக்கம் செய்வது தடைசெய்யப்பட்டுள்ளதாக அம்சுமான் ஆகமம் தெரிவிக்கிறது.
செளமிய சாந்த மூர்த்திகளில் அர்த்தநாரீஸ்வரர் பிரபல்யமானது. சிவமகாபுராணத்தில் அர்த்தநாரீஸ்வரர் பற்றி மேல்வரும் குறிப்புக் காணப்படுகிறது. பிரமா பெண்களைப் படைக்காது பிரஜாபதிகளான ஆண்களை மட்டுமே

Page 113
படைத்துவந்ததால் படைப்பைத் தொடரமுடியாத நிலையில் மகேஸ்வரனைத் தியானிக்க, மகேஸ்வரன் அர்த்தநாரீஸ்வரர் வடிவத்தில் அவர்முன் தோன்றவும், தவறையுணர்ந்த பிரமா பெண்ணைப் படைத்ததிலிருந்து படைப்பு தொடரப்படலாயிற்று. வலப்பாகம் சிவனும், இடப்பாகம் பார்வதியும் இணைந்த தோற்றத்தைக் கொண்டதே அர்த்தநாரீஸ்வர மூர்த்தியாகும். பாதாமி, கும்பகோணம், மகாபலிபுரம், தாராசுரம், காஞ்சிபுரம் ஆகிய இடங்களிற் சிறப்பான அர்த்தநாரீஸ்வரர் சிற்பங்கள் உள்ளன.
பிரபலமான பிறிதொரு சிவமூர்த்தி கங்காதர மூர்த்தியாகும். வலதுகால் நேராக நிலத்தில் ஊன்றியபடியும், இடதுகால் சிறிது வளைந்ததாகவும் இருப்பதுடன், முன்வலது கை உமையின் நாடியை அண்டியும், முன் இடதுகை உமையைத் தழுவியநிலையிலும், ஜடாமுடியிற் கங்காதேவியும், கங்கையைப் பூமிக்குக் கொண்டுவந்த பகீரதன் ரிஷிகள் புடைசூழ நிற்பதாக இருப்பதே கங்காதரமூர்த்தியாகும். கங்கை கொண்ட சோழபுரத்திற் காணப்படும் கங்காதரமூர்த்தி சிற்பம் பிரபல்யமானது.
கல்யாணசுந்தரேஸ்வரர் பிறிதொரு சிவமூர்த்தமாகும். சிவபார்வதி திருமணக்காட்சியே இதன் கருப்பொருள். பிரமா, விஷ்ணு, யக்கர்கள், காந்தர்வர்கள், அட்டதிக்குப்பாலர்கள், மாதுருக்கள், வித்தியேஸ்வரர்கள் முதலானோரும் இடம் பெற்றிருப்பது விசேட அம்சமாகும். -
சிவமூர்த்தங்களில் மிகவும் புனிதமானதாகக் கருதப்படுவது இடபவாகன மூர்த்தியாகும். வேதாரணியம், தாராமங்கலம், மகாபலிபுரம் ஆகிய இடங்களில் இம் மூர்த்தத்தின் சிறப்பான வகை மாதிரிகள் காணப்படுகின்றன, சிவனது அணுக்கிரக மூர்த்திகளில் விஷபாகன மூர்த்தியும் ஒன்றாகும். தேவர்களும் தானவர்களும் அமிர்தத்தைப் பெறுவதற்காகப் பாற்கடலைக் கடையும் பொழுது தோன்றிய விஷத்தை தானெடுத்து அருந்தி நீலகண்டராகிய சிவமூர்த்தமே விஷபாகன மூர்த்தியாகும்.
தென்னிந்திய சிற்பங்களில் பிரபல்யமான சந்திரசேகர மூர்த்தி,கேவலமூர்த்தி, உமாசகிதமூர்த்தி, ஆலிங்கனமூர்த்தி என்ற மூன்று வடிவங்கள் குறிப்பிடத்தக்கவை. இவையனைத் தினதும் ஜடாமகுடத்திற் பிறைச்சந்திரன் காணப்படுவதுடன் சிவன் ஆனந்தநிலையிலிருப்பதாகக் கற்பிக்கப்படும். இவைதவிர, சுகாசனமூர்த்தி, உமாம கேஸ்வரமூர்த்தி, சோமாஸ்கந்தமூர்த்தி என்பனவும் குறிப்பிடத்தக்கவை.
சிவனின் செளமிய-சாந்த அம்சங்களில் அனுக்கிரக மூர்த்திகள் முக்கிய இடத்தை பெறுகின்றன. விஷ்ணுவிற்குச் சக்கரத்தை அனுக்கிரகித்த சம்பவத்தையடியாகக் கொண்டது விஷ்ணு அனுக்கிரகமூர்த்தியாகும் (காஞ்சிபுரம்). சிவபுராணம், மகாபாரதம் என்பவற்றில் இது தொடர்பான ஐதீகம்

காணப்படுகிறது. நந்தியனுக்கிரகம், விக்னேஸ்வர அனுக்கிரகம், அருச்சுன அனுக்கிரகம் (பூரீசைலம்), சண்டேஸ்வரர் அனுக்கிரகம் (கங்கைகொண்ட சோழபுரம்), இராவண அனுக்கிரகம் (எல்லோரா) என்பன சிவனது பிற அணுக்கிரக வடிவங்களாகும்.
சிவனுக்கு ஆடல்வல்லான் என்றதொரு பெயருண்டு. நிருத்தசாஸ்திரமும் அவராலே அருளப்பட்டதாகக் கூறப்படுகிறது. பரதருடைய நாட்டியசாஸ்திரம் 108 நடனப்பாங்குள் பற்றிக் குறிப்பிடுகிறது. சிவனுடைய 101 நடனமூர்த்தங்கள் பற்றி சிவாகமங்களும் குறிப்பிடுகின்றன. பரதர் குறிப்பிடும் 108 பாங்குகளும் சிதம்பரம் கோபுரத்திற் செதுக்கப்பட்டுள்ளன. அவற்றிற்குரிய சுலோகங்களும் கீழே தரப்பட்டுள்ளன. சிற்பம் ஒவியம் என்பன தொடர்பான அறிவு மட்டுமல்ல, நடனம் , இசை என்பன சார்ந்த புலமையும் நிருத்த மூர்த்திகளின் விக்கிரவியலிற்கு இன்றியமையாதது. பிரபஞ்ச இயக்கத்தைக் குறியீடாக உணர்த்தும் சிவநடனம் பற்றிச் சித்தாந்த சாத்திரங்களில் ஒன்றான உண்மைவிளக்கத்தில் விரிவாக விளக்கப்பட்டுள்ளது.
தட்சிணாமூர்த்தியும் நடராஜ மூர்த்தம் போன்ற முக்கியத்துவம் பெறும் சிவமூர்த்தங்களில் ஒன்றாகும். யோகத்தையும், ஞானத்தையும் ரிஷிகளிற்குப் போதிக்குமுகமாக சிவன் தெற்குநோக்கி ஆசனத்தில் அமர்ந்திருப்பதாக இம்மூர்த்தம் காணப்படுகிறது. யோகம், ஞானம், இசை, சாஸ்த்திரங்கள் ஆகிய நான்கையும் போதிக்கும் ஆசானாகத் தட்சணாமூர்த்தி கருதப்படுகிறார். ஆலமரத்தடியிற் புலித்தோல் அல்லது வெண்டாமரை இருக்கையில் அமர்ந்தபடி முன்வலதுகை ஞானமுத்திரையையும், முன்இடதுகை வரதமுத்திரையையும், ஏனைய கைகளில் அக்னி, அக்ஷமாலை என்பனவற்றை ஏந்தியவராயும், பாம்பு, கபாலம், பிறைச்சந்திரன் போன்ற அலங்காரங்களை உடையவராயும் ஜடாபாரத்தில் கங்கையை அணிந்தவராயும் வீற்றிருக்க, குண்டலம், ருத்திராட்சமாலை ஆகிய அலங்காரங்களைக் கொண்டவர்களும், சாஸ்திர அறிவைப் பெறும் வேட்கை கொண்டவர்களுமான ரிஷிகள் சூழ அமர்ந்திருப்பவர் வியாக்யான தட்சணாமூர்த்தி. குதசம்ஹிதை, தட்சிணாமூர்த்தி உபநிடதம் என்பனவற்றில் இம்மூர்த்தம் தொடர்பான விளக்கங்களைக் கண்டுகொள்ளலாம். ஞான தட்சிணாமூர்த்தி வடிவம் வியாக்யான தட்சணாமூர்த்தி வடிவத்திலிருந்து அதிகம் வேறுபடாதபொழுதும், பின் வலது, இடது கைகளில் முறையே அக்ஷமாலையையும், உத்பலமலரையும் ஏந்தியவாறும், முன் வலதுகை ஞானமுத்திரையும், முன் இடதுகை அபயமுத்திரையும் கொண்டவாறுமிருக்கும். திருவொற்றியூர், சுசீந்திரம், காவேரிப்பாக்கம் ஆகிய தலங்களில் ஞானதட்சிணா மூர்த்தி பிரதிமைகள் உண்டு.
யோகதட்சிணாமூர்த்தி பிரதிமைகள் மூன்று வெவ்வேறு வடிவங்களிற் செதுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்துக்கலைக்களஞ்சியம்

Page 114
பிரதிமையின் இருகால்களும் சுவஸ்திகா ஆசனத்திலுள்ளது போலவும், முன் வலதுகை மார்பிற்கு அணித்தாக யோக முத்திரையைக் காண்பிப்பதாயும், முன்இடதுகை முன்தொடையில் பதிந்தபடியும் காணப்படுவது முதலாவது வகை. இரண்டாவது வகையில் வலதுகால் உடலைச் சுற்றியபடியும், இடதுகால் யோகபாதத்திலுள்ளபடியும் காணப்படும். கால்கள் ஒன்றை யொன்று குறுக்காக ஏறக்குறைய குத்துவெட்டுக்கோட்டு வழியும், கால்களின் நிலையை உறுதிப்படுத்தும் விதத்தில் உடல் யோகபாதநிலையிலும், முன்னிருகைகளும் மடித்தபடியே முழங்காலிற் பதிந்தபடியும் இருப்பது மூன்றாவது வகையாகும். திருவொற்றியூர், காஞ்சிபுரம் கைலாசநாதர்கோயில் ஆகிய இடங்களில் இத்தகைய பிரதிமைகளைத் தரிசிக்கலாம். வீணையைக் கைகளிலேந்தியபடியிருக்கும் வீணாதரதட்சிணா மூர்த்தியின் முன்னிரு கைகளும் வீணையை ஏந்தியபடி காணப்படும்.
உக்கிரக சம்ஹார மூர்த்தங்களில் காமதகனமூர்த்தி, கஜமுகாசுரமூர்த்தி, திரிபுராந்தகமூர்த்தி என்பன பிரபல்ய மானவை. சிவனால் மன்மதன் எரியூட்டப்பட்டமையைக் காமதகனமூர்த்தி குறியீடாகக் கொண்டது. காமிக ஆகமம், காரணாகமம் என்பன இம்மூர்த்திபேதம் பற்றிக் குறிப்பிடுகின்றன. கங்கைகொண்டசோழபுர ஆலயத்தில் இது மிகச் சிறப்பாகச் செதுக்கப்பட்டுள்ளது. இடது புறத்தில் அச்சம் கொண்ட ரதிக்குக் காமதேவன் ஆறுதல் சொல்வதையும், சிவனை நோக்கிப் பார்வதியும் தோழியரும் அஞ்சலி செலுத்துவதையும், சிவன் தன் பார்வையாலே மன்மதனை எரிக்கத் தயாரான நிலையிலிருப் பதையும் சிறப்பான முறையில் இச்சிற்பம் வெளிப்படுத்துகிறது. கஜமுகாசுரசம்ஹகாரமூர்த்தி தொடர்பான செய்தி யசுர்வேதத்தின் சதருத்ர சம்ஹிதையில் குறிப்பிடப்பட்டுள்ளது. கூர்மபுராணம், வராகபுராணம், சுப்பிரபேத ஆகமம் ஆகியவற்றிலும் இது தொடர்பான குறிப்புகள் காணப்படுகின்றன. கஜமுகாசுரனைக் கொன்று அவன் தோலை தன் மேலாடையாக அணிந்த ஐதீகமே கஜமுகாசுர சம்ஹகாரமூர்த்தி பேதமாகும். இம்மூர்த்திபேதத்தின் விக்கிரவியலடிப்படைகள் அம்சுமான் ஆகமத்திலும், சில்பரத்தினத்திலும் தரப்பட்டுள்ளன. மைசூரிலுள்ள அமிர்தேஷ்வரர் ஆலயத்தில் இச்சிற்பம் வழக்கத்திற்குமாறாக 16 கைகளுடன் சித்தரிக்கப்பட்டுள்ளது. தாராசுரம் ஆலயத்திலும் கஜமுகாசுர சம்ஹகார மூர்த்தி சிற்பம் உளது. மிருகண்டு முனிவரின் மகனான மார்கண்டேயரின் உயிரைப் பறிக்கவந்த காலனின் உயிரைக் கவர்ந்த சிவமூர்த்திபேதம் காலாந்தகமூர்த்தி எனப்படும். எல்லோராவிலுள்ள தசாவதார குகைக்கோயில், கைலாசநாதர் கோயில், தஞ்சாவூர் பட்டீஸ்வரம் என்பனவற்றில் இம்மூர்த்தி பேதத்திற் குரிய சிற்பங்கள் உள்ளன. சிவன் தனது வலது காலை யமன் மீது ஊன்றியபடியும், வலது இடது காலால் அவனது மார்பை உதைத்தபடியும் கையிற் சூலத்தை ஏந்தியபடியும் மார்கண்டேயர் சிவனது வலப்பக்கமாக அஞ்சலி செய்யும்
வகையிலும் இப்பிரதிமை அமைகிறது.
இந்துக் g ஐஞ்சியம்

38
திரிபுரமெரித்த சிவபேதம் திரிபுராந்தக மூர்த்தி எனப்படும். மகாபாரதத்தில் இச்சம்பவம் தொடர்பான ஐதீகம் விரிவாகக் கூறப்பட்டுள்ளது. தாரகாசுரன் மக்களாகிய வித்துன்மாலி, தாரகாசன், கமலாக்சன் ஆகியோரை வதம்செய்த சிவமூர்த்தம் இதுவாகும். இவ்வசுரர்கள் பற்றி மகாபாரதத்தில் விரிவான குறிப்புகள் உள. அம்சுமான் ஆகமத்தில் திரிபுராந்தக மூர்த்தி பற்றிய விக்கிரவியல் விவரங்கள் தரப்பட்டுள்ளன. எல்லோராவில் துர்வாசர் குகையில் 10 கைகளுடன் கூடியவராய், தேரில் நின்றவண்ணம் காணப்படும் திரிபுராந்தகமூர்த்தியைக் காணக்கூடியதாயுளது. இங்குள்ள கைலாசர் கோயிலில் இரு கைகளுடன் கூடிய சிவனும், தேர்ச்சாரதியாயிருக்கும் பிரமாவும் சிற்பமாக வடிக்கப்பட்டுள்ளனர். இவைதவிர காஞ்சிபுரம் கைலாசநாதர் ஆலயத்திலும் திரிபுராந்தகமூர்த்தியின் சிற்பம் காணப்படுகிறது. தஞ்சாவூரிலுள்ள பிரகதீஸ்வரர் ஆலயத்திற் செப்புப்படிமமொன்றும் உளது.
சிவனது சம்ஹாரமூர்த்திபேதங்களில் சரபமூர்த்தியும் ஒன்று. விஷ்ணு நரசிம்ம அவதாரமெடுத்து ஹிரண்யகசிபு என்ற அரக்கனைக் கொன்று அவனுதிரம் பருகியகாரணத்தால் இரத்தவெறியுற்று உயிர்களை வதைக்கத் தலைப்பட்டபோது, சிவன் இருசிரங்களும், வலிமையான சிறகுகளும், எட்டுக் கால்களும், நீண்டவாலும் கொண்ட சரப உருவேற்று சிம்மத்தின் சிரம், கரம் என்பனவற்றைக் கொய்து, அதன் தோலையுரித்து போர்வையாய்க் கொண்ட ஐதீகத்தை அடிப்படையாகக் கொண்டதே சரபமூர்த்தி பேதமாகும். இதன் விக்கிரவியலடிப் படை காமிகாகமத்திலே தரப்பட்டுள்ளது. பூரீ தத்துவநிதி என்ற சிற்பநூலில் சிறிது மாறுபட்ட விளக்கம் தரப்பட்டுள்ளது. இதில் சரபேஸ்வரர் 32 கைகளையுடையவராகக் குறிப்பிடப்படுகிறார். தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள திரிபுவனம் சிவன்கோயிலிற் செம்பினாலாய சரபமூர்த்தி பிரதிமை காணப்படுகிறது. தாராசுரம் ஆலயத்தில் இதன் சிற்பம் காணப்படுகிறது.
சம்ஹாரமூர்த்தி பேதங்களில் பிரமசிரச்சேத மூர்த்தி பேதமும் குறிப்பிடத்தக்கது. வராக, கூர்ம புராணங்களில் இவ்வைதீகம் சிற்சில வேறுபாடுகளுடன் தரப்பட்டுள்ளது. வராகபுராணத்தின் படி பிரமா ருத்திரனைப் படைத்துக் கபாலி என்ற பெயரைக் கொடுத்தார். ஒரு சந்தர்ப்பத்தில் பிரமாவினாலேயே அவமானப் படுத்தப்பட்டதால், பிரமாவின் ஐந்தாவது தலை ருத்திரனால் கொய்யப்பட பிரமஹத்திதோஷம் பிடித்துக் கொண்டது. அதனால் ருத்திரனும் 12 ஆண்டுகள் கபாலிக வாழ்க்கை முறையை மேற்கொள்ளவேண்டியதாயிற்று. இறுதியாக வாரணாசியிலுள்ள கபாலமோஷ்ண தீர்த்தத்தில் மூழ்க பிரமஹத்திதோஷமும் நீங்கிற்று. பூரீ தத்துவநிதியில் பிரமசிரச்சேத மூர்த்தியின் பிரதிமாலட்சணம் தரப்பட்டுள்ளது. வெள்ளை நிறமுடையவராய், முக்கண்ணராய், நான்கு கைகளுடன் கூடியவராய், ஜடாமகுடமுடையவராய், காதில் குண்டலங்கள் அணிந்தவராய் கைகளில், பிரமாவின் மண்டையோட்டை ஏந்தியவராய் இம்மூர்த்தம் அந்நூலில் விபரிக்கப்படுகிறது.

Page 115
ஏனைய பிற சிவமூர்த்தங்களில் 64 வகை வைரவமூர்த்தங்கள் குறிப்பிடத்தக்கவை. இவை உன்மத்தவகை, ரூருவகை, சண்டவகை, குரோத வகை, அசித்தாங்கவகை, கபாலவகை, பிசானவகை, சம்ஹாரவகை என எட்டுப் பெரும் பிரிவில் உள்ளடக்கப்படும். இரு கைகள் முதல் பல கைகள் கொண்ட வராக வைரவமூர்த்தம் கற்பிக்கப்படுகிறது. இம்மூர்த்தத்திற்குரிய வாகனம் ஞமலி (நாய்). சிவனது பூரணரூபமே வயிரவரெனச் சிவபுராணம் குறிப்பிடும். பருத்த வயிறும், வட்டமான மஞ்சள் நிறக் கண்களும், மண்டையோடு, பாம்பு முதலிய அலங்காரங்களுடன் சூலாயுதத்தைக் கொண்டவராகவும் வருணிக்கப்படுகிறார். க்ஷேத்திரபாலக மூர்த்தி, ஸ்வச்சந்த மூர்த்தி என்பன வைரவமூர்த்தங்களிற் பிரபல்யமானவை.
சிவனது சம்ஹாரமூர்த்தங்களில் வீரபத்திர மூர்த்தம், ஜலந்திரவத மூர்த்தம் என்பன குறிப்பிடத்தக்கவை. தக்கன் யாகத்தை அழித்து வதம் செய்த சிவமூர்த்தமே வீரபத்திரமூர்த்தமாகும். சிவமகாபுராணம், கூர்மபுராணம், வராகபுராணம், பாகவதபுராணம் என்பனவற்றிற் சிறிது மாறுபட்ட வகையில் தக்கனது யாகம் அழிக்கப்பட்டமை பற்றிய ஐதீகம் தரப்பட்டுள்ளது. பூரீ தத்துவநிதியில் தரப்பட்டுள்ள விக்கிரவியல் வர்ணணைப்படி வீரபத்திரர் கால்களில் செருப்பணிந்தவராக, அருகில் பத்திரகாளியும், வலது புறத்தில் ஆட்டுத்தலையுடன் கூடிய தக்கனும் நிற்பதாக வர்ணிக்கப்பட்டுள்ளார். சென்னை அரும்பொருட்காட்சியகம், தென்காசி ஆகிய இடங்களில் வீரபத்திரர் பிரதிமைகள் உள. ஜலந்திரவதமூர்த்தம் பற்றிய ஐதீகம் சிவபுராணத்திற் காணப்படுகிறது. இந்திரன் யாரென அறியாது வச்சிராயுதத்தாற் சிவனைத் தாக்க, கோபங்கொண்ட சிவன் ருத்திரவடிவம் கொள்ள, இந்திரன் அடிபணிந்தான். சிவனது ருத்திரகோபம் கடலில் விடப்பட்டு சலந்திரன் வடிவம் பெற்றது. சலந்திரன் இந்திரன் முதலானதேவர்களைப் பலவாறு வருத்தினான். தேவர்கள் சிவனிடம் முறையிட, சிவன் அமரர் காரணமாக சலந்திரனை வதம் செய்தார். இதேபோலச் சிவனது அந்தகாசுரவத மூர்த்தமும் குறிப்பிடத்தக்கது. அதன் பிரதிமை எல்லோராவிலுண்டு.
இறுதியாகத் தாந்திரிக உபாசனையில் முக்கியம் பெறும் அகோரசிவமூர்த்தங்கள் பற்றியும் குறிப்பிடுதல் வேண்டும். இம் மூர்த்தம் கைகளில் ஆயுதங்கள் தரித்தவராயும், கறுப்பு நிறமுடையவராயும், நிர்வாண நிலையிற் கபாலம், பாம்பு அணிந்தவராயும், பேய்கள் கபாலிகள் புடைசூழக் காணப்படும். பட்டீஸ்வரம், திருக்கழுக்குன்றம் ஆகிய இடங்களில் இத்தகைய பிரதிமைகள் காணப்படுகின்றன. மகாகாளியுடன் கூடிய மகாகாளர் மூர்த்தமும் சம்ஹாரமூர்த்தங்களில் ஒன்றாகும். இம்மூர்த்தம் உஜ்ஜையினி பற்றிய ஐதீகத்துடன் தொடர்புடையது. துஷண என்ற அரக்கனைக் கொன்ற பின் சிவன் மகாகாளர் என்ற
பெயருடன் யோதிலிங்கமாகத் தோன்றிய மூர்த்தம் இதுவாகும்.

89
தென்னிந்தியாவிற் காணப்படும் பெரும்பாலான கோயில்களிற் காணப்படுவதும், ஆகமங்கள் பலவற்றிலும் விக்கிரவியல் விவரங்களைக் கொண்டதுமான சிவமூர்த்திபேதம் கங்காள மூர்த்தி, பிச்ஷாடனமூர்த்தி என்ற இரண்டுமாகும். அம்சுகான், உத்தரகாமிகம், காரணாகமம் என்பனவற்றிலும், சில்பரத் தினத்திலும் கங்காளமூர்த்தி, பிச்சாடனமூர்த்தி பற்றிய விவரங்கள் உள்ளன. விஷ்ணுவின் வாயிற் காவலராகிய விஷ்வ சேனனது மண்டையோடு, பின் இடதுகையில் ஏந்திய கங்காள தண்டம், வலது மார்பில் சார்ந்தபடியிருக்க, ஆடுவோரும் பாடுவோருமாகிய கபாலிகப் பெண்கள் புடைசூழ, பூதங்களி லொன்று தலையில் உணவேந்தியபடி நிற்க கங்காளமூர்த்தி பேதம் சிற்பமாக்கப்பட்டுள்ளது. தாராசுரம், தென்காசி செப்புத் திருமேனிகள், சுசீந்திரம், கும்பகோணம் கற்சிற்பங்கள் குறிப்பிடத்தக்கவை.
பிச்சாடனமூர்த்தி நிர்வாணமாய் இடதுகையில் கபாலம் ஏந்தியபடி காட்சியளிக்கும். சுப்பிரபேத ஆகமத்தின்படி கங்காள மூர்த்தி, பிச்சாடனமூர்த்தி ஆகிய மூத்தங்களிற் சிவனது கைகளிற் காணப்படும் கபாலம் விஷ்ணுவினுடைய தாகும். பிச்சாடனமூர்த்தி சிற்பங்கள் கோணம், திருவெண்காடு (செப்புத்திருமேனி) ஆகிய இடங்களிற் காணப்படுகிறது.
ருத்திரேஸ்வரர்கள், வித்தியேஸ்வரர்கள், அஷ்ட மூர்த்திகள், மகாதேவர் எனப் பலவாறான சிவமூர்த்தி பேதங்களும் உள. இவற்றில் காவேரிப்பாக்கத்தை அண்டிய மேலைச்சேரி, எலிபெண்டா குகைக்கோயில் என்பனவற்றில் மகாதேவ மூர்த்தத்திற்குரிய சிற்பங்கள் காணப்படுகின்றன. (சோ. கி.)
சிவபோகசாரம்
சிவபோகசாரம் எனும் சைவ சித்தாந்த நூல் கமலை பூநீலழரீ ஞானப்பிரகாசரிடம் உபதேசம் பெற்ற, தருமை ஆதீனத்தை நிறுவிய, தருமை ஆதீனத்தின் முதலாவது குருவாக விளங்கிய பூரீலழரீ குருஞானசம்பந்த தேசிகபரமாசாரிய சுவாமிகள் என்பவரால் அருளப்பட்டதாகும். இவர் அருளிய சிவபோகசாரம் சொக்கநாதவெண்பா, சொக்கநாதக் கலித்துறை, ஞானப்பிரகாசமாலை, திரிபதார்த்தரூபாதி தசகாரிய அகவல், சோடசகலாப் பிரசாத சட்கம் முத்தி நிச்சயம் நவரத்தின மாலை என்ற எட்டு சித்தாந்த அருள் நூல்களும் பூரீகுருஞானசம்பந்தர் அட்டகம் என வழங்கப்படும் சிறப்புக்குரியவையாக விளங்குகின்றன. இந் நூல்கள் பண்டார சாத்திரம் எனவும் கூறப்படும்.
பூரீலழரீ குருஞானசம்பந்த தேசிக பரமாசாரிய சுவாமிகள் அருளிய நூல்களுள் தனிச் சிறப்புடன் விளங்குவது, சிவபோகசாரம் ஆகும். இந் நூல் நூற்றிமுப்பத்தொன்பது வெண்பாக்களால் ஆயது. இந்நூலில் சைவசித்தாந்த அடிப்படைகள் மிகத் தெளிவாக உரைக்கப்பட்டுள்ளன.
இந்துக் க்களஞ்சியம்

Page 116
இந்நூலில் உள்ள வெண்பாக்கள் - அடிகள் வணக்கம், பெறுதற்கருமை, அறியும் பகுதி, உபதேச விளக்கம், அநுபூதிநிலை, உபாயநிலை, பணியறுத்தல், துறவின்பகுதி, அறிவோர் புகழ்ச்சி, மடவோர் பழிப்பு, பொதுநிலை ஆகிய பதினொரு தலைப்புக்களில் பகுக்கப்பட்டுள்ளன.
பதி, பசு, பாசம் என்ற அனாதி வஸ்துக்கள் மூன்றனுள், பாசம் பற்றி நிகழும் ஞானம் பாசஞானம் என்றும் பசுவாகிய தன்ஞானம், பசுஞானம் என்றும், பதிக்குள்ள இயல்பான ஞானம் பதிஞானம் என்றும் அழைக்கப்படும். பதியும், பசுவும் ஞானமுடையன. இவையிரண்டும் தனித்தனி இச்சாசக்தி, கிரியாசக்தி, ஞானசக்தி என்பனவற்றை உடையன. இவற்றில் பதிபற்றிய ஞானசக்தி சிவசிற்சக்தியெனவும், பசுவிற்குரிய ஞானசக்தி ஆன்ம சிற்சக்தியெனவும் வழங்கப்படும். இவ்வான்மசக்தி மூன்றும் பாசசம்பந்தத்தால் தொழிற்படவே ஆன்மாவிற்கு இன்ப-துன்ப அனுபவங்கள் ஏற்படுகின்றன. இவை நிலையற்றவை. பதி சம்பந்தத்தால் ஆன்மாவின் பசுத்துவம் அகன்று, முடிவிலாப் பேரின்பம் கிடைக்கிறது. இது நிலையானது. சிவபோகசாரத்தின் போதனைப் பொருள் இம்முடிவிலாப் பேரின்பம் பற்றியதேயாகும்.
துன்பத்தினின்றும் நீங்கி இன்பத்தைப் பெறவிரும்பிய உயிருக்குத் தடையாயிருப்பன அதன் உடம்பொடுகூடிய தொடர்பு, பொறிகளோடு கூடிய தொடர்பு உள்ளத்தோடு இயைந்த தொடர்பு, உயிராகிய தன்னை விடாமை என நான்காகும். சரியையில் பயில்வார்க்கு உடற்பற்று ஒழியும் உடல் தன்வயமுறும். கிரியையில் ஈடுபடுவார்க்கு பொறி புலன் அடங்கிக் கட்டுப்படும். யோகம் புரிவார்க்கு உள்ளம் ஒருமைப்படும். இம்மூன்றும் வாய்த்தார்க்கே ஞானம் கிடைக்கும். ஞானம் பெற்றாரே பேரின்பம் எய்துவர். துன்பநீக்கம், பாசரூபம் முதலிய ஆறாகவும், இன்புறுநிலை, சிவரூபம் முதலிய நான்காகவும் வகைப்படுத்தப்படும். இப்பத்தும் தசகாரியங்கள் எனப்படும். இவற்றுள் பத்தாவதாகவிருப்பது சிவபோகம். இதனைச் சுத்தாத்துவித சித்தாந்த முத்தியின்பம் என அழைப்பர். சிவபோகசாரமானது பெத்தநிலை, பிறப்பொழிக்கும் வழி, துன்புறுதற் காரணம், இன்புறுதலும் - துன்புறுதலும், முத்தரும்-பெத்தரும், அட்டமாசித்திகள் தரும் சித்தசலனம், நிலையானதும்-நிலையற்றதுமான பொருளுணர்ச்சி, மெய்த் துறவு, அதர்மத்திற்கு வருந்துதல், கன்மபலம், செருக்கறுக்கும் வழி, முத்திவரும் வழி, தன்னையுணர்தல், திருவருளின் துணை, குரூபதேசம், ஐயமகற்றல், மெய்யுணர்வு, சிவப்பேறு, முத்திநிலையும் அதன் இயல்பும், ஞானவீரம், பரிபூரணானந்த தரிசனம், சிவானுபூதி, சிவபோகம் ஆகிய விடயங்களைப் பற்றி விரிவாக சைவசித்தாந்த நிலைப்பாட்டில் ஆராயும் நூலாகும்.
குருவின் பெருமை
சைவசித்தாந்தம் குருவுக்கு முதன்மை கொடுக்கும் தத்துவ ஞானமாகும். இவ்வகையில் இந் நூலாசிரியரும் இந்நூலில் முதற்கண் தனது குருநாதராகிய கமலை ஞானப்பிரகாசர் மேல் வணக்கச் செய்யுள் பாடித் துதித்துள்ளார். சித்தி, பத்தி, முத்தி, உண்மை என்ற நான்கையும் தரும் நாதன் தம் குருநாதனே என்று தனது குருநாதனைப் பின்வருமாறு பாடித் துதிக்கின்றார்.
இந்துக் ព្រឹទ្ធិយា

90
சித்தி தருநாதன் தென்கமலை வாழ்நாதன் பத்தி தருநாதன் பரநாதன் - முத்திப் பெருநாதன் ஞானப் பிரகாசன் உண்மை தருநாதன் நம்குருநாதன் (சிவபோக.1)
மேலும் அருவம், உருவம், அருவுருவம் என்ற மூன்றும் இல்லாத சிவனே உயிருக்குயிராகி என்னை ஆட்கொள்வதற்காக ஆரூரில்வாழ் ஞானப் பிரகாசனாகி என் சிரத்தின் மீது தன் ஞானத் திருவடிகளைச் சூட்டி என்னை ஆட்கொண்டான்
என்றும், அக் குருநாதன் என்பால் வந்திருக்காவிட்டால் நீதிவழி,
சித்தி, முத்தி, நற்றவங்கள், முத்தி பெறுவதற்கான பத்தி நெறிகள் ஆகியவற்றை ஆரறிவார் என்றும், திருமாலும், பிரமனும் தாம் தாமே தனிமுதல் என வாது செய்தபோது, அவர்கள் தேடி அறியாத வகையில் பேருருப் பிழம்பாய் நின்ற அத் தனிமுதலே திருவாரூரில் ஞானப் பிரகாசனாக இருக்கின்றான் என்றும், அப் பெருமானைக் கண்டு பாசம் கழித்து, அமுதத்தை உண்டு சுகானந்தத்துள்ளிருந்தேன் என்றும், உள்ளும் புறம்புமென ஒன்றாய் நின்றும் வேறாய் நின்றும் உடனாய் நின்றும் என மூவகை நிலையில் நின்று மானிடச் சட்டை தாங்கி வந்து நம்மை ஆண்டருள் புரிந்தான் என்றும், சூரியன் உதித்ததும் இருள் மறைவது போல சிவசூரியன் அகத்துள் தோன்றியதும், மருள் நீங்குவது போல ஞானப்பிரகாசன் தோன்றி மருள் நீங்கி வேதங்களையும், ஆகமங்களையும் அருளினான் என்றும், அழியாத புராணன் என்றும், ஆரணன் என்றும், நாம் வாழும் உலகும், ஈட்டும் பொருளும், அவற்றின் மீது வைக்கும் பற்றும், அப்பற்றுக்குக் காரணமான சிற்றறிவும், உடம்பும் அழியும் பொருட்களே என உணர்த்தி என்னை அருளிற் கூட்டினான் என்றும், காண்பவை, கேட்பவை, காரியங்களாய் வருபவை போகமாகத் தோன்றுவன எல்லாம் பொய் என்றும், இன்ப வெள்ளமாகப் பொருந்தி தன்னுள் என்றும் நீங்காது குருநாதன் வீற்றிருப்பதொன்றுமே மெய் என்றும் கூறுகின்ற சிவபோகசார வணக்கம் பகுதிப் பாடல்களை நோக்கும்போது, இவர் தம் குருவிடம் கொண்டிருந்த பக்தியின் நெருக்கம் புலப்படுவதுடன், சைவசித்தாந்த தத்துவத்தில் குரு பெறும் தனித்துவத்தையும் அறிய முடிகின்றது.
இவ்வகையில், “குருவே சிவம் - சிவமே குரு” என்ற சைவசித்தாந்த இறைக் கோட்பாட்டின் அடிப்படைகளைச் சிவபோகசாரக் குரு வணக்கத்திலுள்ள பத்துப் பாடல்களும் (சிவபோக. 1-10) மிகவும் தெளிவாகப் புலப்படுத்துகின்றன எனலாம்.
சிவம் எது என்பது
'சிவம் எது என்பது சிவபோகசாரத்தின் அறியும் பகுதியில் நுட்பமாக,
உருவை அருவை ஒளியை வெளியை இருளைச் சிவமென்றிராதே - மருளைப் பிறிந்ததறிவிற் கண்டதனைப் பின்னமற எங்கும் செறிந்த பொருள் தானே சிவம் (சிவபோ.17)

Page 117
என விளக்கப்பட்டுள்ளது. “பரு உருவமாயும், நுண்ணுருவமாயும், காணமுடியாத அருவாயும், பேரொளியாயும், பரவெளியாயும், உயிரின் (அறிவைத் தடைப்படுத்தும்) இருளாயும் சிவம் அது அதுவாய் நிற்கும் (அஃதாவது இடையீடின்றி எல்லாவற்றுள்ளும் அவற்றின் உயிர்ப்பாற்றலாய் நிற்கும்.) இவ்வாறு பிரித்துத் தன்னின் வேறாய்ச் சிவத்தைக் காணும், மருளினின்று பிரிந்து அறிவினால் தன்னுள் கண்டு,தன்னுள் நின்ற சிவனை இடையீடின்றி அனைத்திலும் உள்ளும் புறமும் பரந்து செறிந்த பொருளாய்க் காண்பாயாக’ என்பது இச் செய்யுளின் கருத்தாகும்.
முப்பொருள் இயல்பு
சைவசித்தாந்தம் முப்பொருள் உண்மையை நிலை நிறுத்தும்
தத்துவ ஞானமாகும். சைவசித்தாந்தத்தில் நிலை நிறுத்தும் பதி,
பசு, பாசம் என்ற முப்பொருட்களின் இயல்பு சிவபோகசாரத்தில்,
எங்கும் இருக்கும் அறிவுநீ, ஏகமாய் அங்கங்கு உணர்ந்தும் அறிவுநாம் - மொங்கு மல மறைத்தல் மாயை மயக்கல் விகாரப் பலமனைத்தும் கன்மமலம் பார் (சிவபோக.27)
என வருகின்றது.
முப்பொருள் ஆய்வே முத்திக்கு ஏது என்பது
சைவ சித்தாந்தத்தில் அறிவாராய்ச்சிக்குத் தனிச் சிறப்புண்டு. பதி, பசு, பாசம் என்ற முப் பொருட்களும் ஆராய்ந்து நிலை நிறுத்தத்தக்கவை என்பது சைவசித்தாந்தத்தின் அடிப்படைக் கருத்தாகும். "முப்பொருள் ஆய்வு முத்திக்கு ஏது" என்ற சைவ சித்தாந்த அறிவாராய்ச்சிக் கோட்பாடும், முப்பொருள் பற்றிய விளக்கமும் சிவபோகசாரத்தில் நுட்பமாக,
என்னை அறிவென்றான் என் அறிவில் ஆனந்தம் தன்னைச் சிவமென்றான் சந்ததமும் - என்னை உன்னிப் பாரா மறைத்ததுவே பாசமென்றான் இம்மூன்றும் ஆராய்ந்தவர்முத்த ராம் (சிவபோக, 26) என வருவதாலறியப்படும்.
வினைக் கோட்பாடு
இறைவனே வினைப் பயனை உயிருக்குச் சேர்ப்பிக்கின்றார் என்ற சைவசித்தாந்த வினைக் கோட்பாடு சிவபோக சாரத்தில் விளக்கமாக,
பாசம் சடம் உயிரோ தானாகப் பற்றறியாது) ஈசன் இரண்டும் இணைத்தாட்டிப் - பூசல் என்றும் செய்பவனே தானே திரும்பி அருள் செய்யாமல் உய்பவர்கள் உண்டோ உரை எனவருவதாலறியப்படும். செய்வினைப் பயனை ஊட்டு விப்பானின்றி நுகர்தல் இல்லை என்ற சித்தாந்தக் கருத்து இங்கு நுட்பமாகக் கூறப்பட்டுள்ளது.

முக்தியில் இறையும் உயிரும்
முக்தி நிலையில் இறையும் உயிரும் இணைந்து நிற்கும் அத்துவித நிலையானது, விறகில் தீயும், தேனில் சுவையும், மலரில் மணமும், விசும்பிற் காற்றும், கண்ணில் ஒளியும் நிற்றல் போல் விளங்குமென்பது சிவபோக சாரத்தால் அறியப்படுகின்றது.
சித்தாந்த வாழ்வியல்
சித்தாந்த சைவ வாழ்வியல் நெறியில் சித்தி பெற விழைவோர் ஆசையற்றுப், பாசம் விட்டுச் சிவபூசை செய்து, திருவைந்தெழுத்தைத் தியானம் புரிந்து, சினம் தவிர்த்து, திருமுறைகள் ஒதும், மனநிலை உடையவராக விளங்குதல் வேண்டுமென்பது சிவபோகசாரத்தில் நுட்பமாக,
ஆசையறாய் பாசம் விடாய் ஆன சிவபூசை பன்னாய் நேசமுடன் ஐந்தெழுத்தை நீ நினையாய் - சிசி சினமே தவிராய் திருமுறைகள் ஒதாய் மனமே உனக் கென்ன வாய் (சிவபோக 138) எனக் கூறப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். சைவசித்தாந்த வாழ்வுக்கு இவை அடிப்படை என்பது தெளிவாகின்றது.
முத்தித் தலங்கள்
சித்தாந்த சைவ மரபில் முத்திக்குரிய தலங்களாகச் சிலவற்றைக் குறிப்பிடுவது மரபாகும். இம் மரபில் சிதம்பரம், காசி, திருவாரூர், மாயூரம், திருமுல்லைவாயில், மதுரை முதுகுன்றம், விருத்தாசலம், நெல்வேலி, களம், காஞ்சிபுரம், கழுக்குன்றம், வேதாரணியம், அண்ணாமலை, காளத்தி, வாஞ்சியம் ஆகிய சிவத் தலங்களை வழிபடுவதனாலோ, நினைப்பதனாலோ முத்திப் பேறு கிடைக்குமென்பது சிவபோகசாரத்தில்,
தில்லை வனங் காசி திருவாரூர் மாயூரம் முல்லைவனம் கூடல் முதுகுன்றம் - நெல்லைகரை காஞ்சிகழுக் குன்றமறைக் காடருணை காளத்தி வாஞ்சிய மெனமுத்தி வரும் - (சிவபோக. 139)
சித்தியாரைப் பெருமைப்படுத்தல்
சைவசித்தாந்தத்தின் வழிநூலாகிய சிவஞான சித்தியாரின் பெருமையைப் புலப்படுத்துவது,
பார்விரித்த நூலெல்லாம் பார்த்தறியின் சித்தியிலே ஒர் விருத்தப்பாதி போதும் (சிவபோக 23) என வரும் சிவபோகசாரப் பகுதியாகும்.
இவ்வாறாகச் சிவபோகசாரம், சைவசித்தாந்தத்தின் அடிப்படைக் கோட்பாடுகள் பலவற்றை எளிமையாகப் புலப்படுத்துவதுடன், சைவசித்தாந்த சாத்திர மரபையும் சிறப்பிக்கின்ற பண்டாரசாத்திர நூல்களுள் ஒன்றாகத் தனிச் சிறப்புடன் விளங்குகின்றதெனலாம். (மா. வே.) & (வ, வை)

Page 118
இந்துக்கலைக்களஞ்சியம்
சிவமகாபுராணம்
Iகாபுராணங்கள், உப புராணங்கள் எனப் புராணங்களை இரு பிரிவாகப் பிரிப்பர். ஒவ்வொரு பிரிவும் 16 புராணங்களைக் கொண்டிருப்பதால் மொத்தமாக 32 புராணங்கள் உளதெனக் கூறப்படுகின்றது. பிரம்மா, விஷ்ணு, சிவன் முதலான கடவுளர்களில் எவரை முதன்மைப்படுத்துவதாக ஒரு புராணம் அமைகிறதோ அதனடிப்படையில் வைஷ்ணவ புராணங்கள், ! சைவபுராணங்கள் என மகாபுராணங்களை வகைப்படுத்துவர். சிவபுராணம் அதன் பெயருக்கேற்ப ஒரு சைவ புராணமாகும். சிவனது ஐதீகங்கள், கிரியைகள் அனைத்துமடங்கிய புனிதநூலாகச் சிவபுராணம் விளங்குகிறது. சிவபுராணம் மகாபுராணமா அல்லவா என்பது விவாதத்திற்குரியதாயினும், சைவசமயம் பற்றியும், சைவசம்பிரதாயங்கள் பற்றியும் பல செய்திகள் அதிற் காணப்படுகின்றன. சிவபுராணம் பற்றி வரலாற்றறிஞரான அல்பெரூனி தனது நூலிற் குறிப்பிட்டுள்ளதால் இந்நூலின் காலம் எவ்வாறாயினும் கி.பி 10 ஆம் நூற்றாண்டிற்கு முற்பட்டதாயிருக்க வேண்டுமென்பதில் எதுவித ஐயமுமில்லை.
சிவபுராணம் ஒருமகாபுராணம் என்றவகையிற் பிரபஞ்சத்தின் தோற்றம், படைப்பு, மனுவந்தரங்கள், புகழ்பெற்ற அரசர்களான மனு - சத்தியவரதன், இக்ஷவாகு ஆகியவர்களது பரம்பரை, அவர்கள் காலத்துச் சம்பவங்கள், சிவதத்துவமும் சிவவழிபாடும், அதன் சிறப்பு என்பன பற்றிய விவரமான குறிப்புகளை உள்ளடக்கியது.
இந்நூல் வித்தியேஸ்வரம், ருத்திரம், சதருத்திரம், கோடிருத்திரம், உமா, கைலாசம், வாயவ்வியம் என ஏழு சம்ஹிதைகளை உள்ளடக்கியது. இரண்டாவதான ருத்திர சம்ஹிதை 5 உபபிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. வாயவ்விய சம்ஹிதை பூர்வபாகம் உத்தரபாகம் என இருபிரிவுகளைக் கொண்டது.
வித்தியேஸ்வர சம்ஹிதையிற் சிவனது மகிமை, சிவவழிபாட்டிற்குரிய கிரியைகள், மெய்யியலடிப்படைகள், அவதாரங்கள், சிவலிங்கத்தின் தோற்றம், அதன் முக்கியத்துவம்,
அதனை ஸ்தாபிக்கும்முறை, அதற்குரிய விதிமுறைகள்,
சிவலிங்கவழிபாடு, அதன் முக்கியத்துவம், அதற்குரிய வழிபாட்டுமுறை, அதனை வழிபடுவோருக்குக் கிடைக்கும் பலாபலன்கள் என்பனவற்றுடன், ஓங்காரமந்திரம், வில்வம், ருத்திராட்சம், விபூதி என்பனவற்றின் முக்கியத்துவமும் பயன்பாடும் பற்றிய விவரிப்புகள் உள. ருத்திரசம்ஹிதையின் முதலாம் இரண்டாம் பகுதிகளிற் சிவனை வழிபடும் முறைகள் (அத்தியாயம் 11,13) பற்றிய விளக்கமும், (23ம் அத்தியாயம்) பக்திக்கும் ஞானத்திற்கும் வேறுபாடு இல்லையெனக்கூறிப் பக்திபற்றிய ஒன்பதுவகையான விளக்கமும் தரப்படுகின்றது. உலக இன்பங்களையும் மோட்சத்தையும் தரவல்லது பக்தியே

என்றும், கலியுகத்தில் ஞானத்திலும் வைராக்கியத்திலும் பார்க்க
பக்தியே கூடிய பயனுடையதென்றும், அதனால் உடனடியான பலா பலன்கள் கிட்டுகிறதென்றும் கூறப்பட்டுள்ளது.
மூன்றாவதான பார்வதி காண்டத்திற் பார்வதியின் பிறப்பு, சிவ- பார்வதி திருமணம், தாரகன் தவம், சிவனால் மன்மதன்
எரியுண்டமை ஆகியன பற்றிய ஐதீகங்கள் இடம்பெற்றுள்ளன.
நான்காவது பகுதி குமாரகாண்டமாகும். இப்பகுதியில் ஸ்கந்தனின்/ கார்த்திகேயனின் பிறப்பு, ஸ்கந்தன் - தாரகன் யுத்தம், கணேஷரின் (கணபதி) பிறப்பு, சிவகணங்களுடனான யுத்தம், சிவனாலே தலை கொய்யப்படுதலும் யானைத் தலையைப் பெறுதலும், கணங்களின் தலைவனாகுதலும் கணபதியின் திருமணமுமென சிவ-பார்வதி மைந்தர்களின் வரலாறு பேசப்படுகின்றது. ஸ்கந்தன் தந்தைவழி உரிமை கொண்டவராயும், கணபதி தாய்வழி உரிமை கொண்டவராயும் காணப்படுவது இவ்விருவரதும் வரலாற்றிற் குறிப்பிடத்தக்க அம்சம். ருத்திரசம்ஹிதையின் இறுதிப்பகுதியிலே திரிபுரமெரித்தல், இரணியன் அந்தகன் ஆகியோர் சிவனாற் சம்ஹாரம் செய்யப்படுதல் பற்றிய செய்திகள் கூறப்படுகின்றன.
சதருத்திரசம்ஹிதையில் அர்த்தநாரீஸ்வரர், வைரவர் மற்றும் சிவனது பிற அவதாரங்கள் பற்றிய ஐதீகங்கள் விவரிக்கப்படுகின்றன. பாதி ஆணும் , மறுபாதி பெண்ணுமான சிவனது அர்த்தநாரீஸ்வர அவதாரம் ஒரு புறம் படைப்பின் குறியீட்டு வெளிப்பாடாகவும் , மறுபுறம் பிரபஞ்சத்தின் பல்வகைப் பரிணாமம், புருஷன் (பிரபஞ்ச ஆன்மா) பிரகிருதி (பிரபஞ்ச இயற்கை) என்பனவற்றின் இணைவின் மூலமாகப் பெறப்படுகின்ற சாங்கியக் கோட்பாட்டுடன் ஒப்பிடக் கூடியதாக இருப்பதையும் அவதானிக்க முடிகின்றது.
சிவபுராணத்தின் ஐந்தாவது காண்டமான கோடிருத்திரசம்ஹிதையின் போதனைப் பொருள் - குறிப்பாக முத்திமார்க்கம் பற்றிய செய்திகள், அத்வைதச் சிந்தனையுடன் ஒன்றியதாகக் காணப்படுகின்றன. சாலோகம், சாமீபம், சாரூபம், சாயுச்சியம் என நால்வகை முத்திமார்க்கம் பற்றியும், அவற்றைக் கொடுப்பவன் சிவனே என்றும் குறிப்பிடுவதுடன், கைவல்யம் என்ற ஐந்தாவதுவகை முத்திபற்றிய குறிப்பும் இங்கு காணப்படுகின்றது. சச்சிதானந்த சொரூபனான சிவனுடைய தன்மையை அறிவதாலும், அவனிடம் பக்தி செலுத்துவதாலும் கைவல்யம் கிட்டுகிறது. பக்தியும் ஞானமும் வெவ்வேறானவை அல்ல என்றும், சிவனிடம் பக்திசெலுத்துபவர்களிற்கு ஞானம் உடனே கிடைக்கிறதென்றும் எடுத்துக்காட்டப்படுகின்றது.
சிவன் தன் இச்சை மாத்திரத்தால் உலகைப் படைத்துள்ளானெனினும், உலகிலிருந்து ஒட்டாமல் விளங்குகிறான். மண்ணும் பொன்னும் பலவகைளுபங்களைப் பெறினும் அவை அடிப்படையில் மண்ணும் பொன்னுமாக இருப்பதுபோல, சிவன் ஒருவனேயாயினும் அவன் பிரமையினாற்

Page 119
பல வடிவமுள்ளவனாகத் தோன்றுகின்றான். காரியத்திற்கும் காரணத்திற்குமிடையில் அடிப்படையில் வேற்றுமை கிடையாது. பிரமையினாலேயே வேற்றுமையிருப்பதாகத் தென்படுகின்றது. பிரமை நீங்க வேற்றுமை அழிகிறது. மனிதனும் சிவனும் ஒருவரேயெனினும் மனிதன் அகங்காரத்துடன் கூடியவன். அகங்காரத்திலிருந்து விடுபட்டவன் சிவன். பொன்னிலிருந்து களிம்பு நீங்குவதுபோல ஜீவனும் ஸம்ஸ்காரம் பெறுவதன் மூலம் சிவனாகிறான். இதற்கு முதலில் அவன் சற்குருவையடைந்து அவரைச் சிவசொரூபமாக எண்ணிவழிபடல் வேண்டும். இதனால் அவன் மல நீக்கம் பெற்று, அகங்காரத்திலிருந்து விடுபடுவதுடன், சிவனது அருளினாற் சிவத்தன்மையைப் பெறுகிறான்.
சீவன்முத்தனாகி உடல் நீங்குங்காலை சிவனுடன் அத்துவிதமாகிறானெனக் கோடிருத்திரசம் ஹிதை குறிப்பிடுகிறது.
ஊமா சம்ஹிதையில் நரகம் பற்றிய விவரிப்புகள், நரகத்திலிருந்து மீளல், நோன்பின் பெருமை, ஜம்புதீபம் மற்றும் புவியியல் வருணனைகள், சரீரத்தின் தோற்றமும் வளர்ச்சியும், பெண்ணின் இயல்பு படைப்பு பற்றிய வர்ணனை, மன்வந்தரங்கள், சூரியகுல அரசர்கள், பிதிர்களின் சக்தி, மகா லட்சுமி, சரஸ்வதி, உமாதேவி ஆகியோர்களின் அவதாரங்கள் முதலான விடயங்கள் விவரிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக ஆண்களிற்கு முதன்மை ஸ்தானத்தைக் கொடுக்கும் சிவபுராணம், பெண்களின் மனம் மென்மையானதென்றும் அதுவே Tឆ្នាំ៦៣៦ តាចាe! Tr பிரச்சினைகளிற்கும் காலாயிருக்கின்றதென்றும் குறிப்பிடு கின்றது.
சிவபுராணத்தில் ஆறாவதான கைலாச சம்ஹிதையிலே சிவதத்துவமும், சிவாத்வைத ஞானமும் விவரிக்கப்பட்டுள்ளது. சிவதத்துவம் பற்றிய சொல்லாடலிற் காஷ்மீரசைவத்தின் செல்வாக்கு இருப்பதை அவதானிக்கமுடிகின்றது. வசுகுப்தரின் சிவகுத்திரம் பற்றிய குறிப்புகளும் காணப்படுகின்றன. அதேவேளை சிவாத்வித ஞானம் பற்றிய குறிப்புகளைப் பொறுத்தவரையில் பூரீ கண்டரின் செல்வாக்கிருப்பதையும் அவதானிக்கமுடிகிறது.
உயிர்களிடையே ஆண்-பெண் வேறுபாடு காணப்படுவதால் மூலகாரணமான படைப்பிலும் அந்தவேற்றுமை இருந்தாக வேண்டும். பரப்பிரமம் சச்சிதானந்த சொரூபமாக நபும்ஸக லிங்கத்தில் இருப்பினும் அதிலுள்ள ஸத் - சிவன் (புருஷ), சித் - சக்தி (பெண்) என்ற இரண்டிலுமிருந்தே உலகம் தோன்றுகிறது. சிவனும் சக்தியும் எப்பொழுதும் கூடியுள்ளனர். சிவசக்திகளின் சேர்க்கையால் ஆனந்தம் உதிக்கிறது. சக்தியிலிருந்து சித்சக்தி-> ஆனந்தசக்தி-> இச்சாசக்தி ->ஞானசக்தி- கிரியா சக்தி என ஐந்து சக்திகள் விளைகின்றன. ஞானம், செயல், இச்சை ஆகிய மூன்றும் சிவனது கண்களாகும்.

சிவபுராணத்தின் இறுதிக் காண்டம் வாயவ்விய சம்ஹிதையாகும். இது வாயுபுராணத்திலிருந்து வேறுபட்டது. வாயவ்விய சம்ஹிதையிற் பாசுபத தரிசனம் பற்றியும் , பாசுபதயோகம் பற்றியும் விரிவான குறிப்புகள் தரப்பட்டுள்ளன. இது லகுலீச பாசுபத தரிசனத்திலிருந்து வேறுபட்டது. லகுலீசபாசுபதம் வேதங்களை ஆதாரமாகக் கொண்டது. ஆனாற் சிவபுராணத்தில் விவரிக்கப்படும் பாசுபத தரிசனம் ஆகமங்களை அடிப்படையாகக் கொண்டது. அதுபோல இங்கு குறிப்பிடப்படும் பாசுபதயோகமும் பதஞ்சலி யோகத்திலிருந்து வேறுபட்ட தென்பதை கவனத்திற் கொள்ளுதல் வேண்டும்.
வாயவ்வியசம்ஹிதையின் முதல் ஐந்து அத்தியாயங்களிலும் சிவதத்துவஞானம் பற்றிப் பேசப்படுகிறது. பசுபதிபாசம் பற்றிய ஞானத்தைப் பெற்று அதில் ஈடுபாடு கொள்ளும் பொழுது அஞ்ஞானத்தால் விளையும் துன்பம் நீங்குகின்றது. பசு, பதி, பாசம் ஆகிய முப்பொருள்களும் கூடிரம் (அழிவுள்ளது), அக்ஷரம் (அழிவற்றது) என்பனவற்றிற்கு அப்பாற்பட்டது. பிரகிருதி என்பது மாயை. அது புருஷனைச் சூழ்ந்துள்ளது. அதாவது புருஷன் மலத்தினாற் சூழப்பெற்றிருக்கிறான்.
இம்மலம் அனாதியானது. முத்திக்காலத்தில் நீங்குகிறது. ஆறாவது அத்தியாயத்திற் சிவனும் பிரமமும் ஒன்றேயென்ற கருத்துக் காணப்படுகிறது. சிவம் பிரமத்தைப் போலவே ஒப்பற்ற ஒன்று. மாயை சிவனது சக்தி, அச்சக்தியினாலேயே உலகம் தோன்றுகின்றதென்ற குறிப்பு காணப்படுகின்றது. உலகை இயக்கும் காலம் சிவனது சக்தியாகும். சிவனோ காலத்தைக் கடந்தவன். பசுக்கள் மீது அருள்புரிவது இறைவனது இயல்பாகும். பசு மலத்தோடு கூடியதாயினும் சிவன் அவற்றிடம் வியாபித்திருக்கிறானென்பதால் மலம் நீங்கப் பசுக்களிடம் சிவத்தன்மை வளருகிறது.
ஞானம் பரோக்ஷம் (மறைமுகமானது), அபரோக்ஷம் (நேர்முகமானது ) என இரண்டு வகையானது. பரோக்ஷஞானம் தருக்கத்தை அடிப்படையாகக் கொண்டது. அபரோக்ஷ ஞானம் நடைமுறை அனுட்டானத்தினால் கிடைக்கின்றது. அபரோக்ஷ ஞானமில்லாது முத்தியில்லை. பசுபதி விரதத்தை எவ்வாறு மேற்கொள்ளவேண்டுமென 33ஆம் அத்தியாயம் விவரிக் கின்றது.
வாயவ்விய சம்ஹிதையின் பிற்பகுதியிற் பேசப்படும் சைவமெய்யியல் அதன் முற்பகுதியிலிருந்து சிறிது வேறுபட்டதாகக் காணப்படுகின்றது. சிவன் தானே பசுக்களை மலம், மாயை முதலிய பாசங்களாற் கட்டுகிறான். அவனை வழிபுடுவதால் இவை நீங்குகின்றன. இவ்வுலகம் சிவனது சக்தியிலிருந்தே தோன்றியுள்ளது. சிவன் இல்லாது சக்தியும், சக்தியில்லாது சிவனும் இருக்க முடியாது. பிரகிருதியிலுள்ள முக்குணங்களின் சமத்துவம் மாறுகிறபொழுது நாதம் பிறக்கிறது:
இந்துக் 6.

Page 120
நாதத்திலிருந்து பிந்து தோன்றுகிறது. பிந்துவிலிருந்து சதாசிவன் தோன்றுகிறான். சதாசிவனிலிருந்து மகேஸ்வரனும், மகேஸ்வரனிலிருந்து சுத்தவித்தையும் விளைகின்றன. சக்தியுடன் சிவன் கூடுவதால் அவன் சக்திமான் ஆகிறான். சக்தியிலிருந்தும் சக்திமானிலிருந்தும் தோன்றிய இவ்வுலகம் சாக்தமும் சைவமுமானது. தாய்தந்தையின்றி மகப்பேறு இல்லாததுபோலச் சிவனும் சக்தியுமில்லாது உலகு உருவாகமுடியாது. ஆண்- பெண் வாயிலாக உண்டான உலகம் ஆண்- பெண் நிறைந்ததாகவே இருக்கும். (சோ.கி.)
சிவமூர்த்தங்கள்
சிவபெருமான் உயிர்களை உய்வித்தற்பொருட்டு ஏற்கும் வடிவங்கள் மூவகைப்படும். உயிர்களின் இம்மை வாழ்விற்கு உலகியல் இன்பங்களை நுகர்விப்பதற்கு அவர் போக மூர்த்தங்களளாகத் திகழ்கிறார். உயிர்களின் மறுமை வாழ்விற்குரிய ஞான நன்னெறிகளில் நலம் பெறச் செய்யும் யோக மூர்த்தங்களாக விளங்குபவரும் அவரே. உயிர்களின் குற்றங்களைக் கடிந்து வினைமாற்றி மறக்கருணையால் தண்டித்து ஆட்கொள்ள அவர் அருள் சுரக்கும் வேக மூர்த்தங்களாகவும் வெளிப்படுகின்றார்.
தனது பூரணத் தன்மையில் சிவபெருமான் எல்லையற்ற வராகவும், சுதந்திரராகவும், அனைத்து வரையறைகளையும் கடந்தவராகவும் திகழ்கிறார். உரு, பால், ២៣៣ ஆகிய அனைத்தையும் கடந்த, பகுக்க முடியாத ஒரு முழுமையாக அவர் விளங்குகிறார். தன் அடியார்களுக்குத் தன்னை வெளிப்படுத்திக் கொண்டு ஆட்கொண்டருள அவர் திருவுள்ளம் பற்றும்போது, தனது நிரந்தரமான வடிவற்ற நிலையினின்றும், இடைப்பட்ட ஒரு நிலைக்கு அவர் இறங்கி வருகிறார். அந்த இடைநிலையிலிருந்து இறங்கி, இறுதியாகக் காணத்தக்க, எண்ணற்ற முரண்பாடான வடிவங்களில் - பருப்பொருளுடைய காலமும் இடமும் செயலும் கொண்ட உலகில் வாழும் அடியார்களுக்கு அவர் காட்சி தந்தருளுகின்றார். இம்மூன்று நிலைகளையும் முறையே பரசிவம், சச்சிதானந்தம், மகேச்வரம் என்றழைப்பார்.
சிவபெருமானுக்குத்தான் எத்தனை பெயர்கள். “ஒருநாமம் ஒருருவம் ஒன்றுமில்லார்க்கு ஆயிரம் திருநாமம் பாடித் தெள்ளேணம் கொட்டாமோ” என்று திருவாசகத்தில் போற்றுவார் மாணிக்க வாசகர். வேதங்களில் உருத்திரன், பசுபதி, உக்கிரன், அசனி, பவன், மஹாதேவன், ஈசானன் என்ற பெயர்களில்
அழைக்கப்பெறுகிறார்.
சிவபெருமானை யாரே முழுமையாக அறியமுடியும் அவர் உமையம்மையின் கணவராக, கணபதி, முருகனின் தந்தையாகத்
திகழ்கிறார்; அந்நிலையில் அவர் சிறந்த காதலராக, கணவனாகத்
இந்துக் នៃចrញ៉ាខាំយកដៃ
94

தந்தையாக விளங்குகிறார்; ஆடல் வல்லானாக விளங்கும் போது சிறந்த கூத்தனாகிறார். சனகாதி முனிவர்களுக்குச் சொல்லாமற் சொன்ன தட்சிணாமூர்த்தியும் அவரே. ஆசிரியர்களுக்கெல்லாம் பேராசிரியர் அவர். யோகம், ஞானம், வித்தை, கலை முதலிய எல்லாம் அவரிடத்திலிருந்தே இப்பிரபஞ்சம் பெற்றுக் கொள்கிறது. அவர் மயானத்தையும் விடுவதில்லை. குருதிவெறிகொண்ட குறட் பூதங்களோடு, அவற்றின் இசைக்கேற்ப நள்ளிருளில் நடனமாடி மகிழ்கின்றார். காளியுடன் அவர் ஆடும் கூத்துக்கு விலங்குகள் பக்கவாத்யங்கள்.
பரமசிவமாக விளங்கும் அவர் சொரூப சிவநிலையில் நம்மனம், வாக்குக் காயங்களுக்கு அப்பாற்பட்ட வராகத் திகழ்கிறார். தடத்த சிவம் என்ற நிலையில் உயிர்கள்பாற் கருணை கொண்டு அவர் இறங்கி வருகிறார். அப்போது உருவத் திருமேனியோடு - சகளமாக வருகிறார். இந்நிலையில் அறுபத்தி நான்கு மூர்த்தங்களை நம் முன்னோர்கள் காட்டு கின்றனர்.
சிவபெருமான் மூன்று நிலைகளில் விளங்குகிறார். அரூபம்அருவம்; ரூபாரூபம் - அருவுருவம்; ரூபம் - உருவம். அரூப நிலையில் சிவம், சக்தி, நாதம், விந்து என அவர் திகழ்கிறார்; ரூபாரூபநிலையில் அவர் சதாசிவமாகக் காட்சி தருகிறார். ரூபநிலையில் மகேசுரன், உருத்திரன், மால், அயன் முதலிய வடிவேற்கிறார். சைவ சித்தாந்தத்தில் சிவம், சதாசிவம், மகேசுரன் என்னும் மூன்று தத்துவங்கள் சிறப்புடையன. அவை முறையே அவரது நிஷ்களம் (அரூபம்), சகல நிஷ்களம், (அருவுருவம்), சகளம் ( உருவம்) என்னும் சிறப்பியல்களைக் காட்டி நிற்கின்றன. அவயங்கள் ஏதுமில்லா லிங்கமே நிஷ்களத் திருமேனியாகும். அவயவங்களுடன் அமையப் பெற்ற முகலிங்கமே சகள நிஷ்களத் திருமேனி என்று சொல்லப்படும். களம் என்ற வடமொழிச் சொல் பெரும்பாலும் வடிவம் என்னும் கருத்தைக் குறிக்கவே பயன்படுத்தப்படுகின்றது. ஆகவே நிஷ்களம் என்ற நிலையில் வடிவமில்லாத் தன்மை உள்ளது. இந்நிலையில் பரம்பொருளுக்குத் தொடக்கமில்லை, வரம்பில்லை, எல்லையில்லை, அது எங்கணும் நீக்கமற நிறைந்ததாய், அழிவற்றதாய், ஒப்பில்லாததாய், மிக நுண்ணியதாய், மேலானதாய், எவ்வித நிரூபணத்தாலும் அறிய இயலாததாயுள்ளது.
ஊழிக்கால முடிவில் சுத்த தத்துவங்கள், சுத்த புவனங்களைப் படைக்கும் நோக்கத்திற்காகவும், யோகியரின் மல நீக்கத்திற்காகவும் , சிவபரம்பொருளின் ஐந்து சக்திகள் உருப்பெறுகின்றன. தனது அளவற்ற கருணையோடு சிவபெருமான் எண்ணும்போது அவரது தன்மையில் ஆயிரத்தில் ஒரு பகுதி அவரிடமிருந்து பராசக்தியாக வெளிப்படுகின்றது. இப்பராசக்தியின் ஆயிரத்தில் ஒரு பகுயிலிருந்து ஆதி சக்தி வெளிப்படுகின்றது. ஆதி சக்தியின் ஆயிரத்தின் ஒரு பகுதியே இச்சாசக்தி. இதே முறையில் இச்சாசக்தியினின்று ஞானசக்தியும், அதனின்றும் கிரியாசக்தியும் வெளிப்படுகின்றன. இவ்வைந்து சக்திகளிலிருந்து ஐந்து சதாசிவ தத்துவங்கள் கீழ்க்கண்டவாறு தோன்றுகின்றன.

Page 121
இச்சாசக்திகளின் பத்தின் ஒருபாகத்திலிருந்து
1. UJITFég, - சாந்தியாதீதசக்தி - 2.ஆதிசக்தி சாந்தி சக்தி 3.இச்சாசக்தி -- வித்தியாசக்தி
4.ஞானசக்தி - பிரதிஷ்டாசக்தி -
5.கிரியாசக்தி - நிவிர்த்தி சக்தி ബ
பெயர் முகம் திசை வண்ணம் FFF5 வாமதேவம் வடக்கு சிவப்பு ஈசானன் தத்புருஷன் கிழக்கு குங்குமப்பூ jhLDT சத்யோஜாதம் மேற்கு வெண்மை Fឆ្នាំ៦៣jចំ அகோரம் தெற்கு கருப்பு சதாசிவம் FFFTTF உச்சி(நடு) படிகம்
இத்தத்துவங்கள் ஒவ்வொன்றும் அதன் முன் தத்துவத்தைச் சார்ந்துள்ளன. அமூர்த்த சதாக்கியம் சிவ சாதாக்கியத்தையும், மூர்த்தசாதாக்கியம் அமூர்த்த சாதாக்கியத்தையும், என்றிவ்வாறு ஒன்றையொன்று சார்ந்துள்ளன. ஆகவே கர்ம சாதாக்கியம் தன்னுள்ளே ஏனைய நான்கு சாதாக்கியங்களையும் கொண்டுள்ளது. கர்ம சாதாக்கியத்தை விளக்கி நிற்கும் மூர்த்தி படிகத்திருமேனியை உடையவர். அவர் ஐந்து தலைகள் பத்து திருக்கரங்களுடன் பத்மாசனத்தில் நிற்கிறார். கைகளில் ஆயுதம் ஏந்தி அணிகலன் பூண்டு, உயர்ந்த ஆடைகளை அணிந்து புன்முறுவலுடன் அழகாகக் காட்சியளிக்கிறார்.
கூடிய பாதம் இரண்டும் பழமிசை பாடிய கை இரண் டெட்டும் பரந்ததெழுந் தேடு முகம் ஐந்து செங்கனின் மூவைந்து நாடும் சதாசிவ நல்லொளி முத்தே
ஐந்து முகம் உள ஜம்மூன்று கண்ணுள ஐந்தினே#டைந்து கரதளம் தானுள ஐந்துடன் ஐந்தாயுதமுள நம்பி என் நெஞ்சு புகுந்து நிறைந்து நின்றானோ
-திருமந்திரம்இவரது ஐந்து முகங்களுள், கிழக்கு நோக்கிய முகம் - ஈஸ்வரனுடையது - தத்புருஷம் தெற்கு நோக்கிய முகம் - ருத்ரனுடையது - அகோரம் மேற்கு நோக்கிய முகம் -பிரம்மாவினுடையது - சத்யோஜாதம் வடக்கு நோக்கிய முகம் -விஷ்ணுவினுடையது - வாமதேவம் உச்சியில் விளங்கும் முகம் - சதாசிவனுடையது - ஈசானம்
இவ்வைந்து முகங்களிலிருந்தே ஆகமங்கள் தோற்றுவிக்கப் பெற்று உலகிற்கு வழங்கப்பட்டன என்பர். ஐந்து முகங்களின் தத்துவங்கள் வருமாறு:
ஈசானம் பிரபஞ்சம் அனைத்திற்கும் மேலாக அமைந்த பண்புடனே உலகங்களுக்கெல்லாம் ஈசனாக இருப்பதாலும்,

தோற்றம் வடிவத்தின் பெயர்
சிவசாதாக்கியம் — ஈசன்
அமூர்த்தசாதாக்கியம் - ஈசானன்
மூர்த்த சாதாக்கியம் - பிரம்மா கர்த்ரு சாதாக்கியம் FFលែតាចាំ கர்மசாதாக்கியம் = சதாசிவம்
95
உயிர்களுக்குத் தற்பரத்தை அருளுவதாலும் ஈசான மூர்த்தி என இயம்புவர்.
தத்புருடம் ஆன்மாக்களிடத்திலே இறைவன் அந்தர்யாமியாய் இருந்து அறிவை விளக்கி அருள்வதையே தற்புருடர் என்பர்.
அகோரம்: ஞானவடிவாகவுள்ள இறைவன் அஞ்ஞானத்தைப் போக்கி மேலான சிவஞானத்தை அளிப்பதால் அகோரர் என அழைக்கப்படுகிறார்.
வாமதேவம்: அழகின் உறைவமாக இருப்பதாலும், அறம் பொருள் இன்பம் என்னும் மூன்று புருடார்த்தங்களை ஆன்மாக்களின் பொருட்டு அருள்வதாலும் வாமதேவர் என ១៩៦៩.
சத்யோஜாதகம் விஞ்ஞானகலர், பிரளயாகலர், சகலர் என்னும் மூவித ஆன்மாக்களுக்கும் காரணதேகம், புரியட்டதேகம் என்னும் சூட்சும துல தேகமாகிய உடல்களைத் தம் இச்சாமாத்திரத்தில் படைப்பதால் சத்யோஜாதகர் என உரைப்பர்.
மகேச மூர்த்தி:
கர்ம சாதாக்கியத்தின் (சதாசிவத்தின்) ஆயிரத்திலொரு கூறிலிருந்து மகேசமூர்த்தி தோன்றுகிறார். அவரே படைத்தல் (சிருஷ்டி); காத்தல்(ஸ்திதி); ஒடுக்கல்(லயம்) ஆகியவற்றை நேரடியாக இயற்றுகிறார். அவர் சகளத் திருமேனியுடையவர். இம்மகேச மூர்த்தியே அடியவர்களைக் காக்கவும், அரக்கர்களைத் தண்டிக்கவும், பல வடிவங்களில் வெளிப்பட்டு, பல அருளாடல்கள் mTTTTTmmmS mTmmmmS STmmmTS TS TTY S a Ymm mTTTmmm ஏறிவருதல், உக்ரமாயிருத்தல், சாந்தமாயிருத்தல் என்றிவ்வாறு இவர்தம் தோற்றம் பலவாறாக அமைகின்றன. இம்கேசரது வடிவம் ஒருமுகமும் முக்கண்களும், ஜடாமகுடமும், நாற்கரங்களும் கொண்டு பத்மாசனத்தின் மீது நிற்கும் கோலமாகும். இவரது பின் இருகரங்கள் மானும்மழுவும் கொண்டும் முன் இருகரங்கள் அபயவரதமாகவும் உள்ளன.
மகேச மூர்த்தியின் அருளாடல்கள் இருபத்தைந்து தோற்றங்களில் திகழ்கின்றன. அவற்றை மகேஸ்வர வடிவங்கள் என்பர். சதாசிவ மூர்த்தியின் ஐந்து முகங்களும் இயைய இம்மூர்த்தங்களைக் கீழ்வருமாறு கூறுதல் மரபு.
இந்துக்கலைக்களஞ்சியம்

Page 122
சதாசிவ
ஈசான மூர்த்தி 1. சோமாஸ்கந்தர்
நடராஜர் ரிஷபாரூடர் கல்யாணசுந்தரர் சந்திரசேகரர்
தத்புருஷ மூர்த்தி
6. பிச்சாடனர்
7. காமதகனர் C 8. காலசம்ஹாரர் அ கார
e 11. கஜ சம்ஹி 9. ஜலந்தரவதர் 12 வீரபத்ர 10. திரிபுராந்தகர்
திரிபுராந்த 13. தட்சிண 14. கிராதமூ 15. நீலகண்
இவ்விருபத்தைந்து வடிவங்களையும் காணும்போது சிவபெருமானின் அனுக்ரஹ, ஞான வடிவங்களையும், சிவ விஷ்ணு இணைந்த, மற்றும் சிவசக்தி இணைந்த வடிவங்கள் இவற்றுள் இடம் பெற்றிருப்பதையும் நன்கு உணரலாம்.
அடியார்கள் அவரவர் மனப் பக்குவத்திற்கேற்பவும், விழையும் பலன்களுக்கேற்பவும் இம் மூர்த்தங்களில் ஏதாவதொன்றைப் போற்றி வழிபடுவதைக் காண்கிறோம். சிவனது பராக்ரமத்தை இம்மூர்த்தங்கள் இனிது எடுத்துக் காட்டுகின்றன. மகேஸ்வர வடிவங்கள் இருபத்தைந்தும் நம் சைவத் திருமுறைகளிலும் தோத்திரங்களிலும் சாத்திரங்களிலும் பலவாறு போற்றப் படுகின்றன. இவையனைத்தையும் ஆலயங்களில் ஒருசேரக் காண இயலாவிடினும் ஒரு சில வடிவங்கள் தனிச்சிறப்புடைய
தலங்களில் உள்ளன.
1. சோமாஸ்கந்தர்
சிவாலயங்களில் ஐந்து எழுந்தருளித் திருவுருவங்கள் இன்றியமையாதன. விநாயகர், முருகன், சோமாஸ்கந்தர், அம்பிகை, சண்டேசர் என்பன அவை. இவற்றுள் தத்துவச் சிறப்புமிக்க தனித்தன்மை வாய்ந்த வடிவம் சோமாஸ்கந்தர் ஆகும். ஸஹ-உமா-ஸ்கந்தர் என்ற வடமொழிச் சொல்லுக்கு உமையுடன் கந்தனுடனும் விளங்குபவர் என்று பொருள். அதாவது சிவபெருமான் தேவியுடனும் கந்தனுடனும் காட்சிதரும் அருட்கோலம்; இறைவனை இல்லறத்தானாக- இனிய கணவனாக - பாசம் மிக்க தந்தையாகத் தனயனுடன் காட்டும் இவ்வடிவம் கண்டு மகிழ வேண்டிய கவின் மிகு கருணை உருவம்
母色"。
இந்துக்கலைக்களஞ்சியம்

சத்யோஜாத மூர்த்தி 2. លិផ្សំ(២Täuល 22 5886UT
23. உமா மகேஸ்வரர் 24. சங்கர நாராயணர் 25. அர்த்த நாரீச்வரர்
17. சக்ரதானர் மூர்த்தி 18. கஜமுக அனுக்ரஹர் ஹாரா 19. சண்டேச அனுக்ரஹர் T 20. ஏகபாதர் ாமூர்த்தி முர்த்தி
LT
வாமதேவ மூர்த்தி
16. கங்காளர்
சச்சிதானந்தம் (சத் சித் ஆனந்தம்) சோமாஸ்கந்த மூர்த்தியின் தத்துவமாகும்.
சதது சித்து ஆனந்தம் உண்மை அறிவு இன்பம் சிவன் 9-60LD ஸ்கந்தன் அருமை எளிமை அழகு
சத்தாகிய சிவத்துக்கும் சித்தாகிய அம்மைக்கும் நடுவே ஆனந்தமே வடிவான கந்தனொடு விளக்கியமைத்த சோமாஸ்கந்தர் ஈசானத்திலே தோன்றியவர் ஆவர். அவரே சிவாலயத்தில் ஆட்சி செலுத்தும் பிரதான மூர்த்தியாவார். இவ்வடிவின் உட்கருத்துக்கள் பல. "அருமையில் எளிய அழகே போற்றி” என்ற திருவாசக வரியின் உட்பொருள் இவ்வடிவமே என்பர் ஆன்றோர். உண்மையும் அறிவாகிய நன்மையும் சேர்ந்தால் கிடைப்பது இன்பம் என்பதை இக்கோலம் எடுத்துக்காட்டுகின்றது. இம் மூர்த்தத்தில் சிவபெருமான் - கடந்த நிலையையும், இறைவி - கலந்த நிலையையும், கந்தன் - கவர்ந்த நிலையையும் காட்டுகின்றனர். கணவன் - மனைவி - குழந்தை என்னும் இல்லறத்தின் முப்பொருள் தன்மையை முழுமையாக்குவது இவ்வடிவம் என்பாரும் உளர். குழந்தையைப் பெற்றோர் நடுவில்
வைத்துக் கொண்டாடும் கோலாகல வடிவம் இது.
அனைத்துச் சிவாலயங்களிலும் சோமாஸ்கந்தருக்குச் சிறப்பிடம் தரப்பட்டிருப்பினும் திருவாரூர் இப்பெருமானுக்குரிய சிறப்புத் தலமாகும். கமலைத் தியாகேசர், ஆழித்தேர் வித்தகர் என்றெல்லாம் இத்தலத்தில் இவர் போற்றப் பெறுகிறார். திருவாரூர் இருந்தாடும் அழகராம் சோமாஸ்கந்தரைப் பார்க்கும் போது

Page 123
குமரகுருபரசுவாமிகளுக்குத் திரிவேணி சங்கமம் நினைவுக்கு வருகிறது. சிவபெருமான் வெண்ணிறனிந்து சயனித்திருத் தலால் வெண்மை நிறமுடைய கங்கையைப் போலவும், உமா தேவி தன் நீலநிறத்தால் யமுனையைப் போலவும், சிவந்த நிறமுடைய கந்தன் சரசுவதியைப் போலவும் காட்சியளிப்பதாகத் திருவாரூர் நான்மணிமாலையிற் குறிப்பிடுகிறார்.
காஞ்சிபுரத்தில் ஏகாம்பரேசர் கோயிலும், குமரக்கோட்டமும், காமாட்சியம்மன் கோயிலும் அமைந்துள்ள பாங்கு சோமாஸ்கந்த வடிவையே காட்டுகின்றது. கந்தபுராணம் பாடிய கச்சியப்பர் இக்காட்சியை அற்புதமான உவமையாகக் காட்டுகிறார். பகலுக்கும் இரவுக்கும் நடுவே மாலைக்கால இயல்பினை இது காட்டுகின்றதென்கிறார்.
ஏவலார் குழல் இறைவிக்கும் எம்பிரான் தனக்கும் பாலன் ஆகிய குமரவேள் நடுவுறும் பான்மை ஞால மேலுறும் இரவொடு பகலுக்கும் நடுவே மாலை யானதொன்று அழிவின்றி வைகுமாற தொக்கும் (கந்தபுராணம்)
பல்லவர் காலந்தொட்டு திருக்கோயில்களில் சோமாஸ்கந்த வடிவங்கள் சிறப்புற்றன. குடவரைக் கோயில்களிலும், கற்றளிகளிலும் பின்சுவரில் புடைப்புச் சிற்பமாகச் சோமாஸ்கந்தர் திருவுரு அமைக்கப்பெற்றன. திருக்கழுக்குன்றம், திருமறைக்காடு, திருப்புள்ளிருக்கும் வேளூர், திருப்புறம்பியம் கோயில்களிலே கருவறைப் பின்சுவரில் இத்திருவுரு உள்ளது. சிற்பநூல்களிற் சிவபிரான் அமர்ந்த கோலத்தில் இடக்காலை மடித்து வைத்து, வலக்காலைத் தொங்க அமைத்தும், வலக்கரங்களில் ஒன்று அபய முத்திரையும் மற்றொன்றில் பரசு(மழு) ஏந்தியும் இடதுகரம் ஒன்று வரதமாக அல்லது சீம்மஹர்ண முத்திரையிலும் மற்றொன்றில் மானும் ஏற்றியுள்ளார். வலது காதில் மகர குண்டலம், இடது காதில் பத்ர குண்டலமும் கொண்டு ஜடாமகுடம் சர்ப்ப கங்கணம், பல அணிகலன்கள் பூண்டிருப்பார். அவருக்கு இடதுபுறம் தேவி இடதுகால் தொங்க, வலது கால் மடித்து, வலது கரத்தில் தாமரை ஏந்தியிருப்பார். சிவனுக்கும் உமைக்கும் நடுவே கந்தன் சிறு குழந்தையாக நிற்கிறான். உமையின் மடியில் அமர்ந்தோ அல்லது நடனமாடிய நிலையிலும் இருத்தல் கூடும். அவனது இருகரங்களில் தாமரை மலர் வைத்திருக்கலாம். உலகிலேயே மிகப்பெரிய சோமாஸ்கந்தர் வடிவம் இலங்கை திருக்கேதீச்சரத்தில் உள்ளது.
சிவத்தலங்கள் சிலவற்றிலே சிவபிரான், அம்பிகை, முருகன் ஆகியோர் சன்னதிகள் சோமாஸ்கந்த வடிவத்தில் அமைந்துள்ளன. திருக்கருகாவூர் (தஞ்சை மாவட்டம்) திருக்கள்ளில் (திருவள்ளூர் மாவட்டம்) ஆகியவைகளைக் குறிப்பிடலாம். சோமாஸ்கந்த வடிவத்தைத் தொழுவார் இல்லறத்தில் நன்மக்களோடு நலம் பல துய்த்து மகிழ்வர் என்று கந்தபுராணம் பேசுகிறது.

97
2. நடராஜர் (ஆடல் வல்லான்)
மண்ணில் நவரத்ன மணிகள் ஒளி வீசுகின்றன; நீரில் அலை மோதுகின்றது; நெருப்புதனது சுவாலையாம் நாக்கை நீட்டி ஆடுகிறது; காற்று தென்றலாகவோ, புயலாகவோ வீசுகிறது; வானில் மின்னல் துள்ளி ஒளிர்கிறது. இவ்வாறு ஐம்பூதங்களிலும் ஒருவகை நடனம் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. ஐம்பூத நடனமே இறைவன் ஆடு நடனம் என்பார் திருமூலர். உலக இயக்கங்களில் உயிர்கள் பிறப்பதும், இறப்பதும், வாழ்வதும், மறப்பதும், இறப்பதும், பேரின்ப அசைவினாலேயே நிகழ்கின்றன. நுண்ணிய அணுகூட அசைவற்றிருப்பதில்லை. இயக்கம் என்பது உலகின் மாபெரும் அறிவியல் தத்துவம். இதனைக் காட்டும் இணையற்ற இறைவடிவம் இன்ப நடராச வடிவமாகும். இறைவன் தன் அடியார்களைப் பாதுகாத்து - அரக்கர் முதலிய எதிர்ப்பாற்றல்களை வென்று- வெற்றிக்களிப்பால் ஆடிய ஆடல்களே தாண்டவங்களாகும்.
சங்க இலக்கியங்களில் இறைவனது பாண்டரங்கம், கொடுகொட்டி, கபாலம் என்னும் ஆடல்கள் குறிக்கப் பெறுகின்றன. உமை ஒருபாலாக, இறைவன் ஒரு பாலாக நின்று அச்சம், வியப்பு, விருப்பு, அழகு முதலியன பொருந்த, அவுணர்கள் இறந்த போர்க்களத்தில் ஆடியது கொடுகொட்டி இது காத்தற் பொருளைக் கொண்டது. இறைவன் திரிபுரம் எரித்தகாலத்தில் ஊழிக்காலக் காற்றைப்போற் சுழன்று ஆடிய கூத்து பாண்டரங்கம் ஆகும். பிரம கபாலத்தை ஏந்தி இறைவன் ஆடியது காபாலமாகும். திருமூலர் இறைவனது கூத்தினைச் சிவானந்தக் கூத்து, சுந்தரக்கூத்து, பொற்பதிக்கூத்து, பொற்றில்லைக் கூத்து,
அற்புதக் கூத்து என்று ஐவகையாகக் காட்டுகிறார்.
வடமொழியில் பரத சூடாமணி என்னும் நூலில் ஐந்தொழில் தாண்டவங்களாக அகோர தாண்டவம், ஊர்த்துவ தாண்டவம், ஆச்சர்ய தாண்டவம், ஆனந்த தாண்டவம், செளந்தரிய தாண்டவம் என்பன குறிப்பிடப்பெறுகின்றன. பரத சார சங்கிரகம் என்னும் நூலில் அற்புதத் தாண்டவம், அநவரத தாண்டவம், ஆனந்த தாண்டவம், பிரளய தாண்டவம், சம்ஹார தாண்டவம் என்று ஐவகைத் தாண்டவங்கள் காட்டப்படுகின்றன. சிவபெருமானது ஏழுவகைத் தாண்டவங்கள் ஆகமங்களில் முக்கியமாகப் பேசப்படுகின்றன. அவை,
1. ஆனந்த தாண்டவம் 2. சந்தியாதாண்டவம் 3. உமா தாண்டவம் 4.கெளரி தாண்டவம் 5. காளிகா தாண்டவம், 6. திரிபுர தாண்டவம்,
7. சம்ஹார தாண்டவம் என்பனவாகும்.
சிவபெருமானுடைய தாண்டவங்கள் அனைத்துள்ளும் முதன்மையாகத் திகழ்வது நடராஜர் அமைப்பாகும். இவ்வடிவம் தில்லைச்சிற்றம்பலத்தில் சிறப்பாகவும் ஏனைய தலங்களிற் பொதுவாகவும் அமைந்துள்ளது. மதுரை, கீழ்வேளூர் ஆகிய
©វិg லக்களஞ்சியம்

Page 124
தலங்களிற் கால் மாறியாடிய கோலம் அற்புதமானது. சிதம்பரம் திருக்கோயிலுள்ள இரத்தின சபாபதி என்னும் மாணிக்க நடராஜர் மூர்த்தியும், திரு உத்திர கோசமங்கைக் கோயிலிலுள்ள மரகத நடராஜர் மூர்த்தியும் தனிச்சிறப்புடையனவன்றோ!
நடராஜர் தத்துவம் திருமுகம் எல்லையற்ற அழகும் இனிய தண்ணளித் திறனும் கொண்டு தலைமைப்பாட்டினைக் குறிக்கும். பனித்தசடை சிவ நெறிக்குரிய தவ ஒழுக்கச் சிறப்பைக் காட்டுகின்றது. கங்கை இறைவன் பேராற்றலையும் வேகங்கெடுத் தாளும் வித்தகத்தையும் விளக்குவது பிறைசூடுதல் சரண் என அடைந்தவரைத் தாங்கித் தாழ்வு நீக்கிப் பாதுகாக்கும் வள்ளல் தன்மை. ܡ குனித்தபுருவம் தன்பாற் போந்து குறையிரந்து முறையிடும் அடியார்களின் விண்ணப்பங்களைக் கூர்ந்து நோக்கி ஊன்றிக் கேட்டருளும் கருணைத் திறத்தினைக் காட்டுவது. குமிண் சிரிப்பு அடைக்கலம் புகுந்தோரை “என்று வந்தாய்' என்று அருளோடு வரவேற்று பிழைபொறுத்து வாழ்வளித்து மகிழ்விக்கும் மாட்சி. பவள மேனி இறைவன் தீ வண்ணத்தான். அடியார்களின் மாசுகளை நீக்கி மலநீக்கி மாண்புறச் செய்யும் அருள்திறம். பால்வெண்ணிறு தூய இயல்பினையும் அழியாத் தன்மையும் குறிப்பது. - நெற்றிக்கண் தனிப்பெரும் முதன்மையை உணர்த்துவது. “கண்ணுதலான்.” நீலகண்டம் ஒருவரும் உண்ணாத நஞ்சு உண்டும் இருந்தருள் @ចេះរៀបចំ பெருங்கருணைத் திறம். உடுக்கை: இறைவன் உலகப் பொருள்களைப் படைக்கும் சிருஷ்டியைக் குறிப்பது.
நருப்பு உயிர்களின் பிறவித்தளைகளின் இளைப் பினை
ଜୋ
நீக்கும் பொருட்டுச் செய்யும் சம்ஹாரத் தொழிலைக் காட்டுவது. அபயகரம் அடியார்களுக்கு ஆறுதல் கூறித்தேற்றும் நிலை. வீசிய கரம் இடக்கையின் விரல்,துரக்கிய திருவடியைக் காட்டுகின்றது. 'திருவடியை நம்பித் தொழுக. இது உம்மை ஈடேற்றும் என்பது குறிப்பு எடுத்த திருவடி துன்பக் கடலிடைத் தோணித் தொழில் பூண்டு தொண்டர் தம்மை இன்பக்கரை முகந்து ஏற்றும் திறம். ஊன்றிய திருவடி மலத்தை முழுதாக அழித்து விடாமலும், மலத்தால் உயிர்கள் பெரிதும் வருந்தாமலும், வினைப்பயன்களை உயிர்கள் நுகர இறைவன் இயற்றும் மறைத்தல் தொழிலைக் குறிப்பது. முயலகன் ஆணவ மலத்தைக் குறிப்பது. ஆணவம் என்றும் அழிவதில்லை. முத்தி நிலையில் உயிர்கள் மட்டு ஆணவ பலம் அடங்கிக் கிடப்பதைப் போன்றது. ܓ ܐ தெற்கு நோக்குதல் பமபயத்தை நீக்கி அருளி நம்மை
உய்விப்பதற்காக,
蚤 ឆ្នា

குனித்த புருவமும் கொவ்வைச் செவ்வயிற் குமின் சிரிப்பும் பனித்த சடையும் பவளம் போல் மேகளிரிற் பால் வெண்ணிறும் இனித்தமுடைய எடுத்த பொற்பாதமும் கானப் பெற்றால் மனித்தப் பிறவியும் வேண்டுவதே இந்த சரித்தே.
- திருநாவுக்கரசர்ஆடல் வல்லான் திருவுருவம் ஐந்தொழில் விளக்கமாக அமைந்துள்ளதாக திருவதிகை மனவாசகம் கடந்தார் காட்டுகின்றார்.அணுக்களின் அசைவும், உயிர்களின் இயக்கமும், மல நீக்கமும், ஐந்தொழில் விளக்கமும், கலையமைப்பும் தன்னுட் கொண்ட ஆடல் வல்லான் வடிவம் அறிவியல், வேதாந்தம், சமயம், கலை, ஆகிய பல துறையினால் போற்றும் வகையில்
சிறப்பாக அமைந்து விளங்குகின்றது.
3. f6): UTe5LŤ சிவபெருமானுக்கு இடபக் கொடியும், இடபவாகனமும் உரியன. சிவபெருமானுடைய திருக்கோலங்களுள் அருளுதற்கு அமைந்த கோலமாக ரிஷபாரூடமூர்த்தி திகழ்கிறார். தனது அடியார்களுக்கு இடப வாகனராகவே சிவபெருமான் திருக்கோலங்காட்டி ஆட்கொண்டருளியதை திருத்தொண்டர் புராணத்தில் பல இடங்களிற் காணமுடிகிறது.
திருக்கோயில் திருவிழாக்களில் பெருமானுடைய இடபவாகனக் காட்சி காண எண்ணற்ற அடியார்கள் காத்து நிற்பதைக் காணலாம். இறைவன் இறைவியோடு இடபவாகனத்தில் ஏறி வருவதில் ஒப்பற்ற ஒரு தத்துவம் பொதிந்துள்ளது. கருணையே திருமேனியாகக் கொண்ட இறைவியோடு, ஆருயிர்களை ஆட்கொள்ளும் இயல்பினனான சிவபெருமான் அறத்தின் வடிவாகிய இடபத்தின் மீது எழுந்தருளி உயிர்களை நோக்கி வரும் எளிவந்த வான்கருணையை இக்கோலம் நன்கு காட்டுகின்றது. அறத்தை நிலை நிறுத்த வரும் போது, அறத்தின் வடிவாகிய இடபத்தின் மேல் ஆருயிர்களைப் பேணும் அருட் சக்தியாகிய அன்னையோடு அவர் அமர்ந்து வருவது பொருத்தமன்றோ! திருமாலாகிய இடபத்தை வாகனமாகக் கொண்டு சிவபெருமான் உமையோடு ஆரோகணித்ததால் அவருக்கு இடபாரூடமூர்த்தி என்று பெயர் எனச் சிவபராக்ரமம் என்ற நூல் கூறுகின்றது.
கடகரியும் பரிமாவும் தேரும் உகந்து ஏறாதே இடபம் உகந்து ஏறியவாறு எனக் கறிய இயம்பேடி தடமதில்கள் அவை மூன்றும் தழல் எரித்த அந்நாளில் இடபமதாய்த் தாக்கினான் திருமால் காண் சாழலோ,
(திருவாசகம்)
4. கல்யாண சுந்தரர் அன்பு என்னும் பிணைப்பிலேதான் உலகமே உருண்டு கொண்டு வருகின்றது. அன்பே சிவம் என்பார் திருமூலர். சில காலமே வாழும் நாம் ஒருவருக்கொருவர் அன்புடன் இணைந்து
வாழ்ந்தால் உலகமே இன்ப மயமாகிவிடும் அன்றோ! உலகம்
를

Page 125
இன்புற்றிருக்க இறைவன் எடுத்த கோலமே கல்யாண சுந்தரர் திருக்கோலமாகும். சிவபெருமானை மணக்கோல நாதராகப்
பார்ப்பதிலேதான் நம் மக்களுக்கு எவ்வளவு களிப்பு
சிவபெருமான் கயிலையில் கல்லால மரத்தின் கீழ் யோகியாக அமர்ந்து அறம் உரைத்திருந்தார். உயிர்கள் போக நுகர்ச்சியின்றி வறிதே செயலற்றுக் கிடந்தன. நான்முகன், திருமால் உள்ளிட்ட விண்னோர் அனைவரும் பிரமணிடம் விண்ணப்பித்து உலக உயிர்கள் போக நுகர்ச்சியால் தள்ளப்பட்டு இன்புறுமாறு செய்தருளல் வேண்டும் என இறைஞ்சினர். உயிர்கள் அனைத்தும் இன்புறுதற் பொருட்டும், உலகில் இல்லறமாகிய நல்லறவாழ்வு நடைபெறுதற் பொருட்டும் சிவபெருமான் மலைமகளைத் திருமணம் கொண்டருளினார். அமர காதலரான சிவசக்திப் பேரன்பினை உலக உயிர்கள் பெற்று மகிழ்ந்து ஞானமே வடிவாக விளங்கும் இறைவியும் சக்தியமே வடிவான இறைவனும் கூடுவதையே - சக்தியஞான இணைப்பையே இறைவன் திருமணம் என்று கூறுகின்றோம். சத்தியமும் ஞானமும் இணையும் போதுதான் ஆனந்தம் கிட்டுகிறது.
கயிலையிற் பெருமானுடைய திருமணங்கானப் பெருங்கூட்டம் , வடக்கே தாழ்ந்து, தெற்கே உயர்ந்து விடவும், புவியினைச் சமநிலைக்குக் கொணரக் குறுமுனியைத் தென்பால் செல்லுமாறு பணித்தார் பரமன், மணக்காட்சி காணும் நற்பேறு தமக்குக் கிட்டவில்லையே எனக் கவன்ற குறுமுனிக்குத்
திருக்குற்றாலத்தில் அக்காட்சியைக் காட்டினான் பரமன்.
ஒவ்வொரு தலத்திலும் நடைபெறும் திருக்கல்யாணப் பெருவிழா ஒன்றையொன்று விஞ்சுவதாக அடியார்கள் கண்டு வழிபட்டு இன்புற அமைந்துள்ளது. மதுரையில் மீனாட்சி திருக்கல்யாணம் மாண்புமிக்கது.
கல்யாணசுந்தரர் கோலம் எவ்வாறு அமைந்திருத்தல் வேண்டும் என்பதை பல வகைச் சிற்ப நூல்கள் காட்டுகின்றன. பதினாறு வயதுடைய, செம்மேனியுடைய மனமகனான சிவபெருமான் தனது வலக்கரத்தை நீட்டி உமையம்மையின் திருக்கரம் பற்றி நிற்பார். அவரது இடக்கரம் வரத ஹஸ்தமாயிருக்கும். அவரது பின் இருகரங்களில் மழுவும் மானும் விளங்கும். அன்னை தன் வலக்கரத்தை நீட்டிப் பெருமானுடைய கரம் பற்றிக் காட்சியளிப்பார். இடது கரம் நீலோத்பல மலரை ஏந்தியிருக்கும்.
சிவபெருமானின் கலியான சுந்தரக் கோலத்தை திருமணஞ்சேரி, திருவேள்விகுடி, திருவெண்காடு, திருவான்மியூர் ஆகிய தலங்களிற் காணலாம். வடக்காலத்துர் செப்புத்திருமேனி உலகப் பிரசித்திப் பெற்றதாகும். இந்த வடிவத்தை சில நிமிடங்கள் பார்த்துக் கொண்டிருந்தாலே அதிலிருந்து தோன்றும்
தெய்வீக சக்தியை வார்த்தைகளால் விவரிக்க இயலாது.

5. சந்திரசேகரர் தன்னடைந்தார்க்கு இன்பங்கள் தருவானை' என்று திருஞானசம்பந்தர் சிவபெருமானைப் போற்றுவார். விரும்பித் தொழும் அடியார் விழிநீர் மல்கி, கசிந்து, நெக்குருகி, குழைந்து, தம் பிழை பொறுத்து ஆட்கொண்டருளுமாறு வேண்டிப் பணிந்தாற் சிவபெருமான் எங்ங்னம் காத்தருளுவார் என்பதற்கு எடுத்துக்காட்டாகத் திகழ்வது பெருமான் முடியில் தவழும் பிறை தக்கன் மக்களை மணந்த சந்திரன், ரோகிணி என்பாளிடமே தனியன்பு காட்டி ஏனைய இருபத்தாறு மனைவியரையும் வெறுத்தொதுக்குகிறான். தக்கன் சாபம் காரணமாக சந்திரன் நோயுற்றுத் தன் கலைகள் குன்றி மெலிந்தான். கழுவாய் தேடிச் சிவபிரானிடம் அடைக்கலம் புகுந்து போற்றித் துதித்தான். மூன்றாம் பிறையளவாகத் தேய்ந்திருந்த சந்திரன், தன் காலில் விழுந்தது கண்ட பரமன் கருணை பொங்க அவனைத் தலையிலே சூடிக் காத்தார். காலில் விழுவோரைத் தலையில் தாங்கும் தண்ணளியைச் சிவபிரானையன்றி வேறு யாரிடம் காண முடியும். பிறையை ஏற்றுத் தன் தலையில் ஆடிய அக்கணமே தக்கன் சாபம் பொய்த்தது:
திருந்தவானவர்க்கு அரியவன் செஞ்சடைமுடிமேல்
இருந்த வானவன் பெருமை யார் கொலாம் இசைப்பார்
பெரியோரைத் தஞ்சம் அடைந்தால் பெருமையே கிட்டும். 'சேரிடம்
அறிந்துசேர் என்பது மூதுரையன்றோ!
பிறைசூடிய பெருமான் கோலமே சந்திரசேகரர் என்று போற்றப்படும். சிவாலயங்களில் மாதப் பிறப்பு, பிரதோஷம், அமாவாசை, பெளர்ணமி முதலிய விசேஷ நாட்களிற் சந்திரசேகர மூர்த்தியே எழுந்தருளி வலம் வருவார். தியாகராஜர் திருக்கோலம் பொலியும் தலங்களில் எல்லா வாகனங்களிலும் சந்திரசேகரரே எழுந்தருளி வரும் வருவார். மிகச் சிறிய வடிவில் சந்திரசேகரர் அமைக்கப்பெற்று, நாடோறும் காலை, மாலை இருவேளைகளிலும் பூரீபலி சாதிக்க எழுந்தருளிவித்தல் சில கோயில்களில் மரபாக இருக்கும். இவரே பிரதோஷ நாயகர் என்று எல்லாக் கோயில்களிலும் இடம் பெற்றிருப்பார்.
சந்திரசேகரர் வடிவம் மூன்று வகைப்படும் கேவல மூர்த்தி, உமாசகிதமூர்த்தி, ஆலிங்கன மூர்த்தி. சிவபெருமான் மட்டுமே பிறைசூடி விளங்கும் நிலை கேவலமூர்த்தியாகும். ஒரே பீடத்தில் அல்லது பக்கத்தில் நின்ற கோலத்தில் விளங்கும் சந்திரசேகரர், தேவியைக் கொண்டிருப்பின் இவ்வடிவம் உமா சகித சந்திரசேகரர் என அழைக்கப்படும். ஆலிங்கன சந்திரசேகர மூர்த்தி தனது ஓர் இடக்கரத்தினால் தேவியை ஆலிங்கனம் செய்து கொண்டு விளங்கும். அல்லது அவளது வலக்கரம் சிவபெருமானைத் தழுவிக் கொண்டிருக்கும். அவளது இடக்கரம் நீலோற்பல மலரை ஏந்தியிருக்கும். சிவபெருமானும் உமா தேவியும் எல்லா நிலையிலும் இறைவன் பிறைசூடியிருப்பார்.
இந்துக்கலைக்களஞ்சியம்
19948)

Page 126
திருவாவடுதுறைக் கோயிலிலுள்ள அனைத்தெழுந்த நாயகர், சென்னை அருகில் மண்ணிவாக்கம் மிருத்யஞ்சேசுவரர் கோயில் ஆலிங்கனமூர்த்தி ஆகிய வடிவங்கள் அற்புதமானவை.
6. பிச்சாடனர்
சிவபெருமானுக்குத் தியாகராஜன் என்றொரு பெயர். அவர் கொண்ட கோலங்களும், இயற்றிய அருளாடல்களும் அவரது மாண்பினை - உயிர்கள் மாட்டு அவர் கொண்ட அளவற்ற கருணையைப் புலப்படுத்துகின்றன. அவர் பிச்சை ஏற்பவராக - பிக்ஷாடன மூர்த்தியாக வடிவேற்றார். இரவலன் போல் நடித்து அவ்வழியாகவேனும் நம்மையெல்லாம் உய்விக்க - ஆட்கொள்ள விழைந்து எளிவந்து எழுந்தருளிய கோலம் அது. அன்பைப் பிச்சை ஏற்கிறார் இறைவன். உயிர்களாகிய நம் உள்ளக்கதவுகள் திறக்காதா என்று ஏக்கமுற்று நிற்கிறார். நம் இதயக்குகையைத் தூய்மை செய்து, தன் அருளொளியைப் பரப்பி நலம் புரியத் துடிக்கிறார். நமது துன்பப் பொதிகளையும் வினைச் சுமைகளையும் தான் ஏற்று தன்னருளைச் சொரிய நம்பால் வருகிறார்.
தத்துவ விளக்கமான பிச்சாடனர் வடிவத்திற்குப் புராணச் சான்றும் ஒன்று இருக்கத்தானே வேண்டும் தாருகா வனத்திலே முனிவர்கள் தம் குடும்பத்தோடு கடுந்தவம் புரிகின்றனர். சிவபெருமானது கருணையை மறந்து, பக்தியின்றி, உலகியல் வாழ்வையும் மறந்து, கருமமே பயன் தரும், கடவுள் எதற்கு? என்ற மனப்பான்மையோடு தவமியற்றுகின்றனர். பிரவிர்த்தி மார்க்கத்தை மறந்த அவர்களுக்கு கருணை புரிய வேண்டிச் சிவபெருமான் பிச்சைத் தேவராக வடிவேற்கிறார். முனிவர் இல்லங்களில் பிச்சை ஏற்க, இறைவன் ஆடையுமற்ற ஆண்டியாக - அழகனாகச் செல்கிறார். பிச்சாடனரது அழகிலே மனதைத் பறி கொடுத்த முனிபத்தினிகள் தமது இல்லங்களையும் மறந்து, ஆடைகள் நெகிழ அவர் பின்னே செல்கின்றனர். மோகினி வடிவில் திருமால் முனிவர்களிடையே தோன்றுகிறார். அம்மோகினியின் அழகிலே காமப்பார்வையிலே மோகங் கொண்டவர்களாய் முனிவர்கள் தமது தவச்சாலைகள் பின் செல்வதையும் தாம் மோகினி பின் செல்வதையும் உணரத் தலைப்பட்டவுடன், தம்பிழைக்கு வருந்தி, பிச்சாடனரை முதற்கண் தண்டிக்க விரைகின்றனர். தவவலிமை என்னும் செருக்கு அவர்களிடம் முனைப்பாக முன்நிற்கிறது. பிச்சாடனரை அழிக்க ஆபிசார வேள்வியைச் செய்கின்றனர். அதனின்றும் எழுந்த சிங்கம், புலி, யானை, பாம்பு, முயலகன் முதலானவற்றை பிச்சாடனர் மீது ஏவுகின்றனர். பெருமான் புன்னகை புரிந்து, அருளாடல் புரிகின்றார். பாம்புகள் அணிகலன்களாகின்றன. பரமனுக்கு, விலங்குகளின் தோல்கள் ஆடையாகின்றன விமலனுக்கு; முயலகனோ அவர் திருவடியின் கீழ் அடிப்படுத்தப்பட்டு ஆணவம் அழிந்ததன்மையைக் காட்டி நிற்கிறான்.
பிச்சாடன மூர்த்தி நம்மிடம் என்ன கேட்பார்; நம்முடைய
அன்பையும் நன்றியுணர்வையுமே பெற விழைகின்றார்.
இந்துக்கலைக்களஞ்சியம்
100

நம் குற்றங் குறைகளை எல்லாம் தாம் ஏற்றுக் கொண்டு தமது குணங்களையெல்லாம் நமக்கு அருள் செய்யும் பரமனின் தியாகம் எத்தகையது. குறைமதியைச் சூடி நம் குறைமதியை உயர்மதியாக்கும் அவரது சந்திரசேகர வடிவம் போன்று நம் பாதக மலங்களைத் தன் பாத கமலங்களில் உயிர்கள் பிச்சையாக இட வேண்டிய அவரே உயிர்களை நாடிவரும் உத்தமக் கருணையின் சத்திய வடிவமல்லவா பிச்சாடனமூர்த்தி தான் இரவலனாகி நம்மைப் புரவலராக்குகின்ற அவரது வெற்றியை என்னென்பது.
பிச்சாடன வடிவம் தென்னாட்டிற்கே உரிய சிறப்பான வடிவமாகும். பொதுவாக அனைத்துச் சிவாலயங்களிலும் இம்மூர்த்தி விளங்குவார். அம்சுமபேதாகமம், காமிகாகமம், காரணாகமம், சில்பரத்தினம் ஆகிய நூல்கள் இவ்வடிவ அமைப்பினை விளக்குகின்றன.
பிச்சைப் பெருமான் தன் இடக்காலை ஊன்றி, வலக்காலை வளைத்து, நடந்து செல்லும் குறிப்புணர்த்தும் வடிவம் இது. அவர் நான்கு கரங்கள் உடையவர்; முன் வலக்கரத்திலுள்ள அறுகம்புல்லால் மானை ஈர்த்தும், பின் வலக்கரத்தில் உடுக்கை ஏந்தியும், பின் இடக்கரத்திற் பாம்புடன் திரிசூலம் ஏந்தியும், முன் இடக்கரத்தில் கபாலங் கொண்டும் அவர் திகழ்கிறார். ஆடையேதுமின்றி, பாம்பையே அரையில் அணிந்து விளங்குகிறார். பாம்பணிகளைப் பூண்டு, நெற்றியில் திரிபுண்டரத்துடன் விளங்கும் அவரது சூலத்தை மயிலின்தோகை அணி செய்யும்.
காஞ்சிபுரம், திருச்செங்காட்டங்குடி, திருவெண்காடு, கும்பகோணம், வழுவூர், பந்தநல்லூர் முதலிய தலங்களிலுள்ள பிச்சாடன மூர்த்தங்கள் கண்டின்புறத்தக்கன. திருவெண் காட்டுக்குத் தெற்கே (6 கி.மீ) மேலப் பெரும்பள்ளம் எனப்படும் திருவலம்புறத்தில் பிச்சாடனர் வீணை ஏந்திய செப்புத் திருமேனி அற்புதமானது. வழுவூர், திருநின்றவூர் மோகினி செப்புத் திருமேனியும், சென்னை சொன்னமல்லீசுவரர் கோயில் பிச்சாடனர், மோகினி செப்புத் திருமேனிகளும் குறிப்பிடத் தக்கவை, தஞ்சைக் கலைக்கூடத்திலும், நெல்லை மாவட்டம் பிரமதேசம் கோயிலிலும் அமைந்த பிச்சைப் பெருமான் வடிவங்களும் காணற்குரியன.
7. காமதகனர் உலகில் வரும் கேடுகளை ஊன்றிக் கவனித்தால் அவற்றிற்கு அடிப்படைக் காரணம் காமமே என்பது புலப்படும்.
காமம் இல்லை எனிற் கடுங்கேடு எனும் நாமம் இல்லை நரகமும் இல்லையே என்பார் கவிச்சக்கரவர்த்தி கம்பர்.
காமனை வெல்லுவதென்பது எளிதான காரியமல்லவே. சிவபெருமானுக்குரிய தனிச்சிறப்புகள் அவர் காமனை எரித்ததும் காலனை உதைத்ததும் தானே! மனிதன் வெல்ல விரும்பும் காமமும் காலமும் மனிதனையே வென்றுவிடுகின்றன.

Page 127
காமத்தையும் காலத்தையும் வெல்லும் ஆற்றல் நாம் பெற வேண்டுமாயின் அவற்றை வென்ற சிவபெருமானுடைய பெருங்கருணைக்கு ஆளாக வேண்டும்.
ஐந்தொழில் இயற்றும் இறைவன் காமனை ஏன் எரிக்க வேண்டும்? கண்ணுதற் கடவுள் காலனைக் காய்ந்தார் என்றால் காரணம் இருக்கத்தான் வேண்டும்.
சூரபன்மாதியரின் கொடுமையால் தீமையின் வலிமை மிகுந்து உலகம் அல்லலுற்றது. அவுணர்களை அழிக்க இறைவனைப் பணிந்து பரவினர் நல்லோர். கயிலையில் மோன மூர்த்தியாக, யோகியாக - தட்சிணாமூர்த்தியாக அமர்ந்து நால்வர்க்கு அறம்பொருள் இன்பம் வீடு பற்றிச் சொல்லாமற் சொல்லும் குருமூர்த்தியாக-எழுந்தருளியிருந்தார் சிவபெருமான். இமவான் மகளாக அவதரித்த உமையம்மையார் பெருமானைத் திருமணம் புரிந்து கொள்ளக் கடுந்தவம் இயற்றி வந்தாள். அவர்கள் திருமணம் நிகழ்ந்து ஒரு குமாரன் தோன்றி அசுரர்களை அழித்தாக வேண்டும். யோகியாய் விளங்கும் இறைவன் போகியாக மாறவேண்டும். அவருக்கு உமையம்மைபால் மனம் செல்ல வேண்டும். ஆம் அவருக்கு காமம் வரவேண்டும் என்ன செய்வது. விண்ணோர் கூடினர். இந்திரன் காமனை அழைத்துச் சிவபெருமான் மீது மலரம்பு தொடுக்கப் பணித்தனன். மன்மதன் அஞ்சினான். இந்திரனால் அழிவதைவிடச் சிவபெருமானால் உய்வடைவது உயர்வுதரும் எனத்துணிந்தான். சிவபெருமான் மீது மலர்க்கணைகளைத் தொடுத்தான். சிவபெருமான் மோனங்கலைந்து கண் திறந்தார். நெற்றிக்கண் விழித்தது. மன்மதன் சாம்பரானான். காமன் மலர்களைத் தானே சிவன் மீது செலுத்தினான் கல்லெறிந்த சாக்கியருக்குக் கதியளித்த கண்ணுதற்கடவுள் மலர் எறிந்த போதிலும் அவன் உள்ளம் பக்தியால் அதனைச் செய்யவில்லை. சாக்கியர் கல்லெறிந்த போதிலும் அவர் உள்ளம் சிவபெருமான் மீது கனிந்த பக்தி மிகுந்திருந்து. அவர் எறிந்த கல் கண்டு அதனைக் கற்கண்டாக ஏற்றான் பரமன்! செயலைவிட நோக்கம் தானே முக்கியம். ஆதலநல்தான் மன்மதன் கதி அவ்வாறாயிற்று. மன்மதன் பாணம் மாதவனை மயக்கிவிடவில்லை என்பதும் ஈண்டு கருதத்தக்கது. தனது அமரகாதலனான மன்மதன் மாய்ந்தது கண்டு இரதிதேவி புலம்பினாள். இறைவனைப் பலவாறு துதித்துப் பரவினாள். தனக்கு மாங்கல்ய பிச்சை அருள வேண்டினாள். இறைவனும் அவள் நிலைக்கு இரங்கி, அருவமாய் தன் தொழில் செய்யுமாறு மன்மதனைப் பணித்து உயிரளித்து அருள்புரிந்தான்.
காமனை எரித்த இறைவனைக் காமதகனமூர்த்தி என்று போற்றுகிறோம். நம் காமங்கள் மாற்ற அப்பெருமானை வழிபடுகின்றோம். இதில் சில தத்துவங்கள் பொதிந்துள்ளன. இறைவனும் இறைவியும் பிரிந்திருந்த நிலையில் உலகுயிர்கள் செயலிழந்து கிடந்தன என்னும் போது அவனன்றி ஒர் அணுவும் அசையாது என்ற உண்மை புலப்படும். இறைவி மலைமகளாய்

Ol
அவதரித்துத் தவம் இயற்றினாள் இறைவனை மணக்க. இறைவனோ தட்சணாமூர்த்தியாக யோக நிலையில் இருந்தார். ஒரு சிறந்த கணவனை அடையப் பெண்ணும், ஒரு சிறந்த மனைவியைப் பெற ஆணும் அருந்தவம் இயற்ற வேண்டும். தவத்தினாலேயே கணவனுக்குத் தகுந்த மனைவியும் மனைவிக்குத் தகுந்த கணவனும் வாய்க்கும் என்ற தத்துவமும் இதில் வெளிப்படுகின்றது. காமதகனம் நடைபெற்ற பிறகே குமாரசம்பவம் ஏற்பட்டது என்பது காமம் நீங்கித் தவயோகத்தால் பிள்ளை பெறுவதே சிறப்புடையது என்பதைப் புலப்படுத்தும். மனிதன் தன் உயிராற்றலை உயர்ந்த குறிக்கோள்களுக்கு மேலான நிலையில் பயன்படுத்த வேண்டுமென்பதைச் சிவபெருமானது ஆற்றல் நெற்றிக்கண் வழியே (ஊர்த்துவரேதசு) தவக்கனலாக - முருகனாகத் தோன்றி உலகைக்காத்தருளியது. உள்ளதன் தன்மையாம் சக்தியும் நல்லதன் தன்மையாம் சிவமும் தவத்தால் இணையும் போது தனிப்பெரும் அழகாம் முருகு தோன்றித் தீமைகளை அழித்து உலகை இன்புறச் செய்கின்றன என்ற மாபெரும் தத்துவத்தை இம்மூர்த்தி விளக்கியருளு கின்றார். இவரை வழிபட்டால் நம் காமங்கள் நீங்கி, கண்ணுதற் கடவுளின் கருணையினால் கதிகிட்டும்.
காமனை எரித்ததால் சிவபெருமானுக்குக் காமாரி என்ற பெயரும் உண்டு. அவர் காமனை எரித்த திருத்தலம் தஞ்சை மாவட்டத்தில் மயிலாடுதுறைக்கு அண்மையிலுள்ள திருக்குறுக்கை என்று அத் தலமான்மியம் பேசுகின்றது. இறைவனது எட்டு வீரச் செயல்களைக் குறிக்கும் அட்ட வீரட்டத் தலங்களுள் திருக்குறுக்கையும் ஒன்று. காமனை எரித்து இறைவன் நடமாடிய சபை அத்தலத்தில் காமாங்கநாசினி சபை' என அழைக்கப்படுகின்றது.
8. காலாந்தகர் இறப்பைப் பற்றிய எண்ணமே மனிதனைத் தத்துவ நெறிக்கு இட்டுச் செல்கின்றது. “நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும், பெருமை உடைத்து இவ்வுலகு” என்பார் திருவள்ளுவர். “இன்னாது அம்ம இவ்வுலகம்” என்று கூறும் புறநானூறு. ஞானியரும் இறப்பைக் கண்டு அஞ்சுவர். இறப்பே இவ்வுலகைத் துயர் இலங்கச் செய்கிறது. ஆனால் இது இயற்கையின் விதி.
வஞ்சநமன் வாதனைக்கும் வன்பிறவி வேதனைக்கும்
அஞ்சிஉனை அடைந்தேன் ஐயா! பராபரமே!
என்று அடிபற்றுவார் தாயுமான அடிகள். பிறந்தவர் இறத்தலும் இறந்தவர் பிறத்தலும் புதிய செய்தி அன்று. தோற்றம் உண்டேல் மரணம் உண்டு. இறப்புத் துன்பக் கொடுமையைத் தனது ஒவ்வொரு பாட்டிலும் எடுத்தியம்பி இறைவனைப் பணியுமாறு நம்மை ஆற்றுப்படுத்தும் ஐயடிகள் காடவர்கோன் நாயனார் இயற்றிய சிவத்தலத் திருவெண்பா, பதினொன்றாம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது. மரணவாயிலில்
இந்துக்

Page 128
இறைவனைத் தொழுவது என்ன இயலக்கூடியதா என்ற அச்சமே ஞானியரைக்கூட "அப்போதைக்கு இப்போதே சொல்லி
வைத்தேன்” எனவும் பாடச் செய்தது.
உயிர்களுக்கெல்லாம் அந்தகனாம் யமனுக்கும் ஒரு அந்தகனாகத் திகழ்கிறார் சிவபெருமான். அவர் காலாந்தகர், காலாரி, காலசம்ஹாரமூர்த்தி என்றெல்லாம் போற்றப்பெறுகிறார். இக்கோலம் அடியவர்களுக்காக எதையும் செய்யவல்ல சிவபெருமானது பராக்கிரமத்தை விளக்கிக் காட்டுகின்றது. காலனிடமிருந்து நம்மைக் காப்பவராகக் காலசம்காரமூர்த்தி திகழ்கிறார். உலகில் தீயசக்திகளையும் அசுரர்களையும் அழித்துக் காக்கும் பெருமான், அடியவர் ஒருவருக்காக - அதுவும் ஒரு சிறுவனுக்காகக் காலனையே உதைத்தார் எனில் அவரது அளவற்ற கருணையை என்னென்பது ஆம். மார்க்கண்டேயர் வரலாறு மனித குலத்துக்கே மாண்பைத் தருவது; மன்னா உலகில் மன்னுதல் குறித்து மனிதன் என்ன செய்ய வேண்டுமென்பதை முறைப்படி எடுத்து இயம்புவது அல்லவா!
தஞ்சை மாவட்டம் - மயிலாடுதுறை வட்டத்தில் திருக்கடவூர் என்ற தொன்மையான தலம் உள்ளது. ஊழிக்காலத்தையும் கடந்து விளங்கும் தலமாதலின் அது கடவூர். ஆம் யமLயத்தையும் கடக்க உதவும் தலமாதலின் அப்பெயர் பொருத்தமானதுதானே! அட்டவீரட்டத்தலங்களில் ஒன்றான அங்கே, காலசம்ஹார மூர்த்தியின் அற்புதத் திருவுருவம் நமக்கு மரணத்திலிருந்து காப்பளிக்கின்றது. குங்குலியக்கலயநாயனார் வாழ்வைக் குபேர வளமாக்கிய பதியும் அதுதானே. ஆதனால் தான் அறுபது ஆண்டு நிரம்பியவர்கள் தமது ஆயுள் நலம் வேண்டி இன்றும் திருக்கடவூர் பெருமானிடம் சென்று வழிபட்டு இன்புறுகின்றார்கள். கங்கை கொண்ட சோழபுரத்தில்
காலகாலமூர்த்தி திருவடிவம் அற்புதமாக உள்ளது.
9. ஜலந்தரவதர் தேவர்களாயினும் அகந்தை மேலிடும் போது அல்லலுக்கு ஆளாகி, உழன்றுப் பின் இறைவனருளால் இடர் நீங்கப் பெறுவர் என்பதற்கு நமது புராணங்களில் பல வரலாறுகள் உண்டு. இறைவன் அருளில்லையேல் யாராயிருந்தாலும் இன்பமுடன் 6ւյTլք இயலாது.
ஒருநாள் தேவேந்திரன் கயிலைக்குச் சென்றான். அவனுக்கு அறிவுபுகட்டச் சிவபெருமான் வடிவு மாறி எதிரே நின்றார். அவரை நோக்கி, நீ யார்? என இந்திரன் வினவினான். அவர் பதிலேதும் கூறவில்லை. வெகுண்டான் இந்திரன், தன் வச்சிராயுதத்தால் அவரைத்தாக்கினான். அது பொடியாக உதிர்ந்தது. உடனே சிவபெருமான் உருத்திரர் வடிவாக நின்றார். இந்திரன் வணங்கித்தன் பிழை பொறுத்தருள வேண்டினான். ஆனால் உருத்திரன் வடிவில் ஏற்பட்ட வியர்வையிலிருந்து ஒருவன்
இந்துக்கலைக்களஞ்சியம்
iO2

தோன்றினான்; கடலரசன் அவனை வளர்த்தான். அவனுக்கு ஜலந்தரன் என்று பெயர். அவன் அசுரர்களோடு சேர்ந்து ஆற்றல் மிகுந்து விளங்கினான். காலநேமி என்பவனுடைய மகளான பிருந்தையை மணந்து தருக்குமிக்குச் செருக்கோடு வாழ்ந்தான். மேருமலையிலிருந்த தேவர்களோடு போரிட முனைந்த ஜலந்தரனோடு திருமால் இருபதினாயிரம் ஆண்டுகள் எதிர்த்துப் போரிட்டும் அவனை வெல்ல முடியவில்லை, ஜலந்தரன் அடுத்துக் கயிலை சென்றான். இந்திரன் அங்கே ஒளிந்திருந்தான். கயிலைக்குப் போரிடச் செல்ல வேண்டாம் எனப் பிருந்தை தடுத்தாள், ஜலந்தரன் அவள் சொற்குச் செவி சாய்க்கவில்லை. இந்திரன் தன்னைக் காத்தருளுமாறு கயிலை மாதவனைத் துதிக்க, அவரும் அவனுக்கு அபயம் அளித்தருளினார். கயிலையை அடைந்த ஜலந்தரன் முன்னால் வயது முதிர்ந்த முனிவர் ஒருவர் தென்பட்டார். அவர் ஜலந்தானை நோக்கி, நீ யார்? எனவினவ, அவனும் "நான் ஜலந்தரன், சமுத்திரராஜன் மகன். சிவபெருமானுடன் போரிட வந்தேன்’ என்று இறுமாப்புடன் பதிலளித்தான். முனிவர் நகைத்து, ' கண்ணுதற் கடவுளோடு போரிடக் கருதினால் கணத்தில் உயிர் இழப்பாய்; உயிர் பிழைக்க வேண்டில் உடனே திரும்பி ஓடி விடு” என்றார். ஜலந்தரன் “என் ஆற்றலை விரைவில் நீர் காண்பீர்” என முனிவரும் தன் பாதத்தால் தரையில் ஒரு சக்கரம் போல் கீறி, "இவ்வலையத்தைச் சிரமேல் ஏற்றுத்தாங்குவாயோ?” என்றார். உடனே ஜலந்தரன் 'இது ஒரு பெரிய செயலோ’ என நகைத்து அதனைத் தன் இரு கைகளாலும் எடுத்து மார்பிலும் புயத்திலும் தாங்கிச் சிரத்தின் மேல் வைத்துக் கொள்ள அச்சக்கரம் அவனை இருபிளவாகப் பிளந்து விட்டு, மீண்டும் முனிவர் வடிவிலிருந்த சிவபெருமான் கரத்தினை அடைந்தது. சிவபெருமான் விழித் தீயினால் அவனது சேனையும் சாம்பராயிற்று. இந்திரனும் தேவர்களும் சிவபெருமானைத் துதித்துப் போற்றினர்.
ஜலந்தானை அழித்த வடிவமே ஜலந்தரவதமூர்த்தி , சலந்தராளி, ஜலந்தர ஹர மூர்த்தி என்றெல்லாம் போற்றப் பெறுகிறார். ஜலந்தரனைச் சிவபெருமான் வதைத்த திருத்தலமாக விற்குடி வீரட்டம் விளங்குகிறது. திருவாரூர் மாவட்டத்தில் இத்தலம் அமைந்துள்ளது. இத்தலம் பிருந்தை மயானம் எனவும் அழைக்கப்படும். சலந்தரனைக் கொன்ற கதரிசனமே சிவபெருமானால் திருமாலுக்கு அளிக்கப் பெற்றது. இதன் வரலாற்று விரிவைச் சக்கரதான மூர்த்தி என்னும் தலைப்பிற்
காண்க.
10. திரியுராந்தகர் சிவபெருமானுடைய எட்டு வீரட்ட மூர்த்தங்களில் ஒன்றான திரிபுரதகன மூர்த்தி என்பது தொன்மையான சிறப்புடையது. சங்கநூல்களான புறநானூறு, கலித்தொகை, மற்றும் சிலப்பதிகாரத்திலும் திருபுரதகனம் பேசப்படுகின்றது. இவற்றிற்கு அடிப்படையாக தேவதம்ஹிதைகள் பிராமணங்களில்

Page 129
ஒரு வரலாறு காணப்படுகின்றது. மஹாபாரதம் கர்ணபர்வத்தில் திரிபுராதியர் வரலாறு விரிவாகப் பேசப்படுகின்றது. தாரகாசுரனுடைய மைந்தர் மூவர் வித்தியுமன்மாலி, தாரகாட்சன், கமலாட்சன், என்னும் அம்மூவரும் முறையே தங்கம், வெள்ளி, இரும்பினால் ஆன கோட்டைகளை அமைத்துக் கொண்டு உலகிற்குப் பெருந்தொல்லை கொடுத்தனர். விண்ணோர் கூடி முயன்றும் இம்மூவரையும் அழிக்க முடியவில்லை. இறுதியில் அவர்கள் சிவபெருமானிடம் சரண் புகுந்தனர். ஒவ்வொரு கடவுளும் தேவரும் தம் ஆற்றலில் பாதியைச் சிவபெருமானுக்கு அளிக்க முன் வந்தனர். அவர்களது எண்ணம் எப்படியாவது மூன்று அசுரர்களையும் அவர்தம் கோட்டையோடு அழிக்க வேண்டும் என்பதுதான். அனைவரும் சேர்ந்து ஒரு தேரை உருவாக்கினர். திருமால் அம்பு ஆனார்; அக்னியே அதன் முனை, இயமன் அதன் இறகு; வேதங்களே வில்லாயிற்று, சாவித்திரி வில்லின் நாண் ஆனாள்; பிரம்மா தேரோட்டியாய் அமர்ந்தார். சோமன், அக்கினி, விஷ்ணு ஆகியோரைக் கொண்ட மூன்று
அம்புகளாலே முப்புரங்களையும் எரித்துவிட்டார் மகாதேவர்.
தமிழ் நாட்டு இலக்கியங்களில் முப்புரம் எரித்த வரலாறு சிறிது வேறு விதமாகக் கூறப்படுவதைக் காணலாம். குறிப்பாகத் திருமுறைகளும், சமய இலக்கியங்களும் இந்நிகழ்ச்சியைச் சற்று விரிவாகவே நயம்படப் பேசுகின்றன. சிவபெருமான் முப்புரத்தை அழிக்கத் தம் ஆற்றலன்றோ உதவியாக அமைகிறது என விண்ணோர் நினைத்தனர். பெருமான் தேரில் ஏறினார், தேர் முறிந்தது; நகைத்தார், புரமெரிந்தது. சிரித்தார்; எரித்தார் முப்புரத்தை என்று மிகச் சுவைபடப் பேசும் இலக்கியங்களும் தமிழில் உள்ளன.
மேருமலையே வில்; வாசுகியே நாண், பாணமோ மண்தின்ற வாசுதேவனான திருமால், புரம் எரித்ததோ சிரிப்பால் என்ற செய்திகளைத் தில்லைக் கலம்பகப் பாடல் இனிமையாகக் காட்டுகின்றது. இனி, திரிபுரம் எரித்த வரலாற்றின் தத்துவம் யாது, இவ்வினாவிற்கு விடை தருகிறார் திருமூலர்:
அப்பு:அணி செஞ்சடை ஆதிபுராதனன் முப்புரம் செற்றனன் என்பார்கள் மூடர்கள் முப்புரமாவது மும்மலகாரியம் அப்புரம் எய்தமை யார் அறிவாரே, (திருமந்திரம்)
நமது தூலம் , சூக்குமம், காரணம் என்னும் மூவகை உடல்களையும் அவற்றிற்குக் காரணமாய் அமைந்த ஆணவம் கன்மம் மாயை என்னும் மும்மலங்களையும் அழித்தொழித்து இறைவன் நமக்கு அருள் செய்யும் திறத்தினை இவ்வரலாறு அறிவுறுத்துகின்றது. வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம் என்பது பழமொழி. ஆனால் பெருமான் புன்முறுவலாலேயே புரம் எரித்தார் என்பது அவரது பேராற்றலைக் காட்டுகின்றது. முப்புரம் எரித்த முக்கண்ணப்பர் நம் மும்மலங்களையும் எரிக்க வேண்டி அவரை
வழிபடுதல் வேண்டும் என்பது ஒரு குறிப்பு.

103
திரிபுரம் எரித்த வீரட்டத்தலம் திருவதிகையாகும். கடலூர் மாவட்டத்தில் பண்ருட்டிக்கு அருகே உள்ளது திருவதிகை. திருநாவுக்கரசரைச் சைவத்திற்கு மீண்டும் ஏற்ற, தமக்கை திலவதியார் திருத்தொண்டு புரிந்த தலமும் இதுவே. இத்தலத்தில் இடப்பால் தேவியுடன் திரிபுராந்தக மூர்த்தி சிறப்பாக விளங்குகின்றார். திருவிற்கோலம், திருஅச்சிறுபாக்கம் என்ற தலங்களும் திரிபுரம் எரித்த வரலாற்றுத் தொடர்புடையனவாகச் சிறப்பிக்கப்படுகின்றன. அச்சிறுபாக்கம் - அச்சு+ இறு+பாக்கம்: இங்குதான் சிவபிரான் ஏறிச் சென்ற மேர் அச்சு இற்றது. ஏன்? கணபதியை மதியாமற் போயினமையால். இதனை அருணகிரியார் 'முப்புர மெரிசெய்த அச்சிவனுறை ரதம் அச்சது பொடி செய்த அதிதீரா” எனப்பாராட்டுகின்றார். சென்னையிலிருந்து மேற்கே 60 கி.மீ. தொலைவில் உள்ள திருவிற்கோலத்தில் இறைவன் பெயர் திரிபுராந்தகர். திரிபுரம் எரிப்பதற்காகப் பெருமான் வில் எந்திய கோலம் இங்கே சிறப்பாகக் காணப்படுகின்றது.
11. கஜசம்ஹாரர்
சிவபெருமானுடைய எட்டு பராக்கிரமச் செயல்களுள் ஒன்றாக அவர் யானை உரித்த வரலாறு பேசப்படுகின்றது. சிவபெருமானை எதிர்த்த யானையை அவர் கொன்று அதன் தோலைத் தன் மேனி ஆடையாக அணிந்த செயல் கேட்கும் போதே நம்மைச் சிலிர்க்கச் செய்கின்றது. தஞ்சை மாவட்டத்தில் மயிலாடுதுறைக்குத் தெற்கே சில கல் தொலைவிலுள்ள வழுவூர் இப்பராக்கிரமத்தைப் பாரறியச் செய்யும் தலமாகத் திகழ்கின்றது. இங்கே அற்புதமாக அமைந்த கஜசம்ஹாரமூர்த்தி, வீரமும் வியப்பும் கலந்த உணர்வில் நம்மைத் திகைக்கச் செய்து விடுகிறார். இம்மூர்த்தியின் அருகே உமையம்மை, தனது கரங்களில் கந்தனை வைத்துக் கொண்டு தனது நாதனின் உக்கிரத்தைக் கண்டு அச்சத்துடன் நடுங்குபவள் போன்று நிற்கின்றாள்.
கஜசம்ஹார தத்துவம் யாது? ஐம்புலன்களென்னும் ஐந்து கரமுடையவராக நாம் யானையைப் போன்று செருக்கித் தருக்கி நிற்கிறோம். இறைவனையே எதிர்க்கிறோம். இறைவன் ஜம்புலச் சேட்டையை அடக்கி, ஆன்மாவைத் தூய்மையாக்கி ஏற்றுக் கொள்கிறான். ஆணவக்களிறாக இல்லாமல் ஞானச் செல்வனாகக் கந்தனைப் போன்று அருட்சக்தியின் கரங்களில்
நாம் தவழ்தலையே விழையவேண்டும். இதுவே இவ்வடிவம்
கூறும் படிப்பினை எனலாம்.
சில்பரத்தினம் எனும் நூலில் கஜசம்ஹார மூர்த்தியின் அமைப்புக் கீழ்க்கண்டவாறு காணப்படுகின்றது; இவர் எட்டுக்கரங்களை உடையவர். வலக்கரங்கள் மூன்றில் முறையே திரிசூலம், வாள், யானைக் கொம்பு காணப்படும். நான்காவது கரம் யானைத் தோலைப் பற்றியிருக்கிறது. மூன்று இடக்கரங்களில் முறையே கபாலம், கேடகம், கண்டம், ஆகியவை விளங்க, நான்காவது கரம் யானையின் தோலைப் பற்றியிருக்கும். இவரது இடக்கால் யானைத் தலைமீது உறுதியாகப் பதிந்திருக்க, வலக்கால் உத்குடிகாஸன அமைப்புடையதாயிருக்கும்.
இந்துக் ஞ்சியம்

Page 130
12. வீரபத்திரர்
மனிதன் எவ்வளவுதான் வரம்பிலாற்றல் பெற்றிருந்தாலும் அகந்தை என்பது இருத்தல் கூடாது. ஆணவமே மனிதனை அழிக்கும். வேறு புறப்பகை தேவையில்லை. சான்றோர் ஒழுகலாற்று வரம்பினை எக்காலத்திலும் நாம் மீறலாகாது. மரபுகளைப் பேணிக்காத்தல் வேண்டும். இறைவன் அறக் கருணையாலும் மறக் கருணையாலும் மன்னுயிரைக்காத்து உய்வடையச் செய்கிறான். இறைவன் அருளைப் பெற விழையவேண்டுமேயன்றி, எதிர்த்து அழியவேண்டாம் எனப் பல தத்துவங்களை உலகுக்குப் புகட்ட எழுந்த கோலமே வீரபத்திர வடிவம் ஆகும்.
தக்கன் (தட்சப் பிரஜாபதி) தன் மகளான தாட்சாயணியைச் சிவபெருமானுக்குத் திருமணம் செய்து கொடுத்து மகிழ்ந்திருந்தான். ஆனால் தன் அகந்தையால் சிவபெருமானைப் பகைத்துக் கொண்டான்; அவரை நிந்தித்தான். சிவபெருமானை அவமதிக்க வேண்டி, அவரை அழைக்காமலேயே மாபெரும் வேள்வி ஒன்றைச் செய்தான்; அனைத்துத் தேவர்களையும் அழைத்தான், உபசரித்தான். ஆனால் தன் மகளுக்கோ மருமகனுக்கோ அழைப்பு அனுப்பவில்லை. தந்தை செய்யும் வேள்வியைக் காணவும், தந்தையைத் திருத்தவும் நினைத்த தாட்சாயணி, சிவபெருமான் அனுமதி பெற்றுத் தந்தை வீட்டிற்கு வருகிறாள். தந்தையின் வெறுப்புணர்ச்சி அவளைத் திடுக்கிடச் செய்கின்றது. வேள்விக் குண்டத்திலே பாய்ந்து அவள் மறைந்து விடுகிறாள். தன்னை அவமதித்ததையும், தனது தேவியின் மறைவையும் கேட்டு, தக்கன் மீது சினங்கொண்டு சிவபெருமான் தனது நெற்றிக் கண்ணைத் திறக்கிறார். அதிலிருந்து தோன்றுகிறார் வீரபத்திரர் வீரபத்திரரின் கண்களில் வீசும் பொறி
ஊழிவெங்கனலையே எழுப்பியது.
தக்கனையும், யாகத்தையும் அழித்து, வந்திருந்த வானவர்களுக்கும் பாடம் புகட்டுகிறார் வீரபத்திரர் வீரபத்திரரால் தண்டிக்கப்பட்டவர் யார் யார் என்று திருநாவுக்கரசரும், மாணிக்கவாசகரும் பட்டியலிட்டுக் காட்டுகின்றனர். திருநாவுக்கரசர் தேவாரக் குறிப்பின்படி, "எச்சன், பகன் , இரவி, மெச்சன், நாமன், சந்திரனை, அக்கினி, இந்திரன், திருமால், பிரம்மன்” ஆகியோர் சிவபெருமானை மதிக்காத யாகத்திற்கு வந்த காரணத்தாலே தண்டனை பெற்றனர். தீயாரோடு இணங்குதலும் தீமைதானே தரும். தக்கன் தன் தலையை இழந்தான் அவனுக்கு ஆட்டுத்தலை பொருத்தப்பட்டது.
வீரபத்திரரைச் சிவனார் மகனெனக் கூறுவதும் உண்டு. சிவபெருமானுக்கு நான்கு குமாரர்கள்: கணேசர், பைரவர், வீரபத்திரர், வேலர் என்பர். சிவபெருமானுடைய அட்ட வீரட்ட மூர்த்தங்களில் ஒன்றாக வீரபத்திரர் கருதப்படுகிறார். தக்கனைத் தண்டித்த பராக்கிரமம் நிகழ்ந்த தலமாகத் திருப்பறியலூர்
இந்துக்கலைக் ЂdRашчі
104

வீரட்டத்தலம் போற்றப்படுகின்றது. தஞ்சை மாவட்டத்தில் மயிலாடுதுறைக்கு அருகிலுள்ள திருப்பறியலூர் விளங்கும் வீரபத்திரர் திருவுருவம் காணவேண்டிய தொன்றாகும். இங்கே வீரபத்திரர் எட்டுக்கரங்கொண்டு திகழ்கிறார். 5 (5B T_5 மாநிலத்தில் வீரபத்திரர் கைகளில் வீணை விளங்கக் காண்கிறோம். -
தத்தம் செயல்களில் வீரமும் வெற்றியும் வேண்டுவோர் வீரபத்திரரை வழிபடல் வேண்டும். வீரசைவர்களான இலிங்காயதர்கள் வீரபத்திரரைச் சிறப்பாக வழிபடுகின்றனர்.
13. தட்சிணாமூர்த்தி
சிவபெருமான், கற்பிக்கும் திருக்கோலத்தில் ஞானாசிரியனாக - தட்சிணாமூர்த்தி என வழிபடப் பெறுகிறார். தட்சிணம் என்ற சொல் தெற்கு, ஞானம், சாமர்த்தியம் முதலிய பொருள்களைத் தருவது. தட்சிணாமூர்த்தி தெற்கு நோக்கி அமர்ந்திருக்கிறார். தெற்கு அழிவைக் குறிப்பது; வடக்கு அழியாத அமுத வாழ்வைக் குறிப்பது அமுத வாழ்வு வேண்டி வடக்கு நோக்கி ஆன்மா வழிபட ஏதுவாக, இறைவன் தெற்கு நோக்கி அமர்ந்து அமரத்தன்மையை அருளுகின்றார். ஆனந்த வடிவான ஆடல்வல்லானும் சாந்த வடிவான தட்சிணாமூர்த்தியும் தெற்கு நோக்கியே விளங்குகின்றனர். ஞானமே வடிவமாக விளங்குவது சிவம். அவரை ஞானத்தாலேயே தொழவேண்டும். ஆலமர் செல்வனாக அருந்தவர் நால்வருக்கும் மெளனமாயிருந்து- சொல்லாமற் சொல்லி - உபதேசிக்கும் ஞானமூர்த்தியே தட்சிணாமூர்த்தி, அவர் ஆசாரியார்களுக் கெல்லாம் பரமாசாரியர் கற்பிக்க வேண்டிய பொருளுக்கேற்பப் போதனா முறை அமையும். மனதுக்கும், வாக்குக்கும் எட்டாத பரம்பொருளாக மனதிற்குக் கட்டுப்பட்ட வாக்கால் எங்ங்ணம் காட்ட இயலும் அனுபூதி வடிவில் உள்ளதற்குச் சொல்லால் விளக்கம் தர இயலாது. ஆகவே எவ்வித செயலுமற்ற மெளனத்தைக் கடைப்பிடித்து, ஆனந்தத்தை அனுபூதியாகத் தம் உணர்வினால் வெளிப்படுத்திச் சலனமற்றுத் தம்மிடம் கலந்துள்ள சீடர்களின் உள்ளத்தில் அவ்வானந்தம் முழுவதும் பரவச் செய்து பேரின்ப நிலையை உணர்த்தும் பரம்பொருளின் வடிவமே தட்சிணாமூர்த்தி. அறியச் சக்தி பெற்றவர் மட்டுமே அறியுமாறு போதித்த உருவம் அது. சிவத்தினிடம் சக்தி அடங்கிய வடிவம் தட்சிணாமூர்த்தி. வெளித்தோற்றத்தில் சலனமற்ற சிவவடிவமாயினும் உள்ள சக்தி அங்கு நிரம்பியிருக்கிறது. ஞானமேவடிவான அருட்சக்தி நிறைந்து விளங்கும் சச்சிதானந்த வடிவமே தட்சிணாமூர்த்தி. பேரானந்தத்தை வெளிப்படுத்தாமல் உள்ளடக்கிக்கொள்ளத் திறமை மிகவும் தேவை. அந்தத் திறமை - சாமர்த்தியம் மிக்க மூர்த்தியாகத் திகழ்பவர் தட்சிணாமூர்த்தி. இவ்வடிவைக் குருவின் வடிவில்தான் உள் அடங்கிச் சிவனாகத் தேவி தோன்றுகிறாள் என்பர் சாக்தர்.
தட்சிணாமூர்த்தி வடிவைச் சிவாலயங்கள் அனைத்திலும் காணலாம். கருவறையின் தென் சுவரில் வெளிப்புறம் தெற்கு நோக்கி இவர் எழுந்தருளி நம்மை எல்லாம் தன் மோனத்தால்

Page 131
அழைத்து சிவ ஞானத்தைத் திருநோக்காலே தந்தருளுகின்றார். ஆராய்ச்சியைவிட அனுபூதியே சிறந்தது அல்லவா! அருளால் நோக்குக. அது அறிவால் பார்ப்பதை விட உயர்ந்தது அன்றோ! மோனம் என்பது ஞானவரம்பு, சொல்லாமற் சொல்லும் இப்பரமாசாரியர் இவ்வுலகின் ஞானாசிரியர், நல்லாசிரியராக என்றும் திகழ்கிறார். அவரது வடிவமே தத்துவ விளக்கமாக அமைந்துள்ளது.
தட்சிணாமூர்த்தி பலவாறு அழைக்கப்படுகிறார். தட்சிணாமூர்த்தி, யோக தட்சிணாமூர்த்தி, வீணாதர தட்சிணாமூர்த்தி, வீரதட்சிணாமூர்த்தி, லட்சுமி தட்சிணாமூர்த்தி, இராஜ தட்சிணாமூர்த்தி, கீர்த்தி தட்சிணாமூர்த்தி, சக்தி தட்சிணாமூர்த்தி, பிரம்ம தட்சிணாமூர்த்தி, சுத்த தட்சிணா மூர்த்தி, திவ்விய தட்சிணாமூர்த்தி எனப் பல வடிவங்களிற் போற்றுகிறோம். ஞான தட்சிணாமூர்த்தி, யோக தட்சிணாமூர்த்தி, வீணாதர தட்சிணாமூர்த்தி என்னும் வடிவங்களே ஆகமங்களிற் சிறப்பாக விவரிக்கப்படுகின்றன.
யோக தட்சிணாமூர்த்தி வடிவங்களைக் காஞ்சிபுரம் கயிலாசநாதர் கோயில், திருவொற்றியூர், இலம்பையங்கோட்டூர் ஆநசன் கூடு, முதலிய தலங்களிற் காணலாம். மேலப் பெரும்பள்ளம் (திருவலம்புரம்), திருமறைக்காடு, நாகலாபுரம், ஒரத்த நாடு, காஞ்சி கயிலாசநாதர் கோயில், திருப்பாற்றுறை ஆகிய தலங்களில் வீணாதர தட்சிணாமூர்த்தி வடிவங்கள் குறிப்பிடத்தக்கவை. நெல்லை மாவட்டம் கழுகுமலை வெட்டுவான் தட்சிணாமூர்த்தி தன் இருகைகளிலும் வீணைக்குப் பதிலாக
மிருதங்கம் வைத்துள்ளார்.
14. கிராதமூர்த்தி
காண்டீபம் என்ற அதிசய வில்லை அக்னியிடமிருந்து பெற்ற அருச்சுனன் பாரதப்போரில் எதிரிகளின் ஆற்றலை முறியடித்தவன். பார்த்தனுக்குப் பத்துப் பெயர்கள் உண்டு. அருச்சுனன், பற்குணன், கிரீடி தனஞ்ஜெயன், சுவேத வாகனன், விபற்சு, விஜயன், கிருஷ்ணன், சவ்வியசராசி, பார்த்தன் ஆகிய பத்துப் பெயர்களில் சவ்வியசராசி' என்றால் இடது - வலது என்னும் இரண்டு கைகளாலும் அம்பு தொடுப்பவன் என்று பொருள். அத்தகைய சிறந்த வில்லாளியான விஜயன் கெளரவர்களை வெற்றி கொள்ளச் சிவபெருமானிடமிருந்து “பாசுபதம்’ என்னும் வலிமை வாய்ந்த அஸ்திரத்தைப் பெறுகிறான்.
பாசுபதம் பெறவேண்டித் தவமிருந்த பார்த்தனுக்குப் பரமன் வேடரூபத்தில் காட்சி அளிக்கிறார். காட்டுப்பன்றி ஒன்றினை வேட்டையாட இருவரும் அம்பு எய்கிறார்கள். இருவரது அம்பும் ஒரே சமயத்தில் வேறு வேறு திசையிலிருந்து பன்றியைத் தாக்குகின்றன. இருவரும் உரிமை கொண்டாடும் நிலையில் போர் மூள, இறுதியில் பார்த்தனுடைய திறமைக்குப் பரிசாக

05
பாசுபதத்தை அளிக்கிறான் பரமன். இவ்வாறு மகாபாரதம் வனபர்வதத்தில் விவரிக்கப்படுகின்றது.
பண்டு பெரும் போர்க்கோலப் பார்த்தனுக்காகக் கொண்டு நடந்த வேடர் கோலத்தைக் கிராத மூர்த்தி என்றும் பாசுபதமூர்த்தி எனவும் கிராதார்ஜுன மூர்த்தி என்றும் அழைப்பார். இவ்வடிவில் சிவபெருமான் மூன்று கண்களும் நான்கு திருக்கரங்களும், ஜடாமகுடமும் கொண்டிருப்பார். அவரது திருக்கரங்களில் வில் (தனுசு), அம்பு (பாணம்), கோடரி (பரசு), மான் என்னும் நான்கும் திகழ்கின்றன. சமபங்கநிலையில் அவர் நேராக நிற்கிறார். சிறந்த ஆடைகளையும் அனைத்து வித அணிகலன்களையும் அவர் அணிந்திருப்பார். அவருக்கு வலப்பக்கம் அருச்சுனனும், இடப்பக்கம் கெளரியும் நிற்கின்றனர். அருச்சுனன் கூப்பிய கரத்தினனாய் நிற்கின்றான்.
தில்லைச் சிற்றம்பலத்தின் கிழக்கே தற்போது அண்ணாமலைப் பல்கலைக்கழகம் அமைந்துள்ள பகுதியே திருவேட்களம் என்னும் தொன்மையான சிவத்தலமாகும். இங்கேதான் சிவபெருமான் பார்த்தனுக்குப் பாசுபதம் அளித்தருளினார் என்று இத்தல மான்மியம் குறிப்பிடுகின்றது. "வேடனார் உறை வேட்களம்” என்று பாடுவார் அப்பர் பெருமான். இத்தலத்தில் உள்ள பாசுபத மூர்த்தி மிகவும் அற்புதமானது.
15. நீலகண்டர்
சாவா மூவா நிலைபெற அமுதம் உண்ணவேண்டி, தேவர்களும் தானவர்களும் பாற்கடலைக் கடையத் துணிந்து, மேருமலையை மத்தாகவும், வாசுகியை நாணாகவும், திருமாலாம் கூர்மத்தை (ஆமையை) அச்சாகவும் அமைத்துக் கடைந்தனர். அப்போது ஆலகால விஷம் அக்கடலினின்று எழுந்தது. அனைவரும் அஞ்சியோடினர். அவ்விடத்தின் புகைப்பட்டுத் திருமால் கருமாலானார். ஆனால் சிவபெருமான், தன் நிழலான ஆலாலசுந்தரனை அழைத்து, அவ்விடத்தைக் கொணரச் செய்து உண்டார். அவ்விடம் அவரது கழுத்தில் (கண்டத்தில்) சென்று தங்கியதால் அவர் கழுத்து நீல நிறமாயிற்று. அவரும் நீலகண்டர் எனப் போற்றப் பெறலானார். வடமொழியில் வாமன புராணம், பிரம்மாண்ட புராணம், பாகவதம் ஆகியவற்றிலே சிவபெருமான் ஆலகாலவிடமுண்ட வரலாறு பேசப்படுகின்றது.
தமிழ்நாட்டில் சங்க காலந்தொட்டே நீலகண்ட மூர்த்தியின் மாண்பு மக்களிடம் மிகுந்த செல்வாக்குப் பெற்றிருந்ததைச் சங்க இலக்கியங்களிற் காண்கிறோம். அதிசயமான நெல்லிக்கனியை ஒளவையாரிடம் கொடுத்தபோது அவர் அதியனைப் பாராட்டிப் பாடும் பாடலில்,
பால்புரை பிறைநுதற் பொலிந்த சென்னி நீலமணி மிடற்று ஒருவன் போல மன்னுக பெரும நீயே என்று வாழ்த்துவதைப் புறநானூறு காட்டுகிறது.
காளமேகப் புலவர் தனக்கேயுரித்தான சிலேடைப் பொருளில்
இறைவன் ஆலகாலவிடம் உண்டதைக் காட்டும் அருமையான
இந்துக் க்களஞ்சி

Page 132
பாடல் இதோ:
ஈலங்குடியானை ஆலாலம் உண்டானை ஆலங்குடியான் என்று ஆர் சொன்னார்- ஆலம் குடியானேல் வானும் குவலயமும் எல்லாம்
மடியாவோ முற்றொருங்கு மாய்ந்து
ஆலங்குடி இறைவனை ஆலங்குடியான் என்று சொல்கிறோம். அவன் ஆலம்குடியான் எனக் கூறல் பொருந்தாது. அவன்தானே ஆலம் குடித்தான்! அப்படி அவன் ஆலம் குடியாதிருப்பனேல் வானும் குவலயமெல்லாம் அழிந்திருக்கும் அல்லவா?
திருமுறைகளில் நீலகண்டப் பெருமானது பெருமை பலவாறு போற்றப்படுகின்றது. திருஞானசம்பந்தர் நீலகண்டப் பதிகம் என ஒரு பதிகமே பாடியருளினார். ஆகமங்களில் திருநீலகண்ட மூர்த்தம் விஷாபஹரண மூர்த்தி என்று குறிக்கப்பெறுகிறது. அதாவது விடம் உண்ட பெருமான் என்பது அதன் பொருள். காரணாகமத்தில் இம்மூர்த்தியின் வடிவம் காட்டப்பெறுகிறது.
மதுரைக் கோயிலில் நீலகண்டமூர்த்தியின் வடிவத்தைக் காண்கிறோம். சுருட்டப்பள்ளியில் நஞ்சுண்ட ஈசர் பள்ளிகொண்ட ஈசராகச் சயனக் கோலத்தில் காட்சி தருகிறார். சுதையிலான இம்மூர்த்தி, பதினான்கு அடிநீளமுடையவர். இவரது தலைமாட்டில் சர்வமங்களாம்பிகை அமர்ந்திருக்கிறாள். உலகத்தை உய்வித்த நிலையில் அவளது முகம் பெருமிதத்துடன் புனிதப் பூரிப்பில் திகழ்கிறது. சுற்றிலும் நான்முகன், திருமால், இந்திரன், பிருகு, மார்க்கண்டேயர், நாரதர், சூரியன், சந்திரன், அகஸ்தியர், கெளதமர், புலஸ்தியர்,தும்புரு, வசிட்டர், விசுவாமித்திரர், வால்மீகி ஆகியோர் விளங்குகின்றனர்.
16. கங்காளர்
திருமால் வாமனவடிவமேற்று, மாவலிபால் சென்று மூவடி மண் கேட்டுப் பெற்று, ஈரடியால் மூவுலகும் அளந்து, மூன்றாவது அடியால் மாவலியைக் கீழுலகிற்கு அனுப்பிய திரிவிக்கிரம வடிவங் கொண்டார். அதன்பின் அவர் உலகையும் அழிக்கத் தொடங்கினார். வாமனனது உக்கிரத்தைத் தணிக்க வேண்டி வஜ்ஜிராயுதங் கொண்டு வாமனன் மார்பில் அடிக்க, வாமனன் இறந்து வீழ்ந்தார். வாமனனது கங்காளத்தை (முதுகெலும்பை) எடுத்துத் தனது தண்டாகச் சிவபெருமான் வைத்துக் கொண்ட வடிவமே கங்காளமூர்த்தி என அழைக்கப்படுகிறது.
பொதுவாகக் கங்காளமூர்த்திக்கும் பிட்சாடனமூர்த்திக்கும் வேறுபாடு தெரியாது சிலர் தடுமாறுவதுண்டு. ஏனெனில் இரண்டுமே ஏறத்தாழ ஒரே மாதிரியாகத் தோன்றும். ஆனால் உற்று நோக்கின் வேறுபாடுகளை நன்கு உணர்ந்து கொள்ள
முடியும்.
இந்துக்கலைக்களஞ்சியம்
O

இனி, பிரம்மகபாலத்தையும், விஷ்வக்ஸேனரது கங்காளத்தையும் ஏந்திப் பிச்சை ஏற்கும் சிவபெருமானுடைய பைரவக் கோலம் பற்றிக் கூர்மபுரணாம் பேசுகின்றது. ஆனால் கங்காளமூர்த்தி வேறு, பைரவமூர்த்தி வேறு என்பது தெளிவு. வடமொழி இலிங்கபுராணம், ஸ்காந்தம், ஆதித்திய புராணங் களிலும் கங்காளமூர்த்தி விவரிக்கப்பட்டுள்ளது. கங்காளவடிவம்
தென்னகத்துக்கே உரிய சிறப்பான வடிவம் என்பது அறிஞர் முடிபு.
அச்சுமத் பேதாகமம், காமிகாகமம், காரணாகமம், சில்பரத்தினம் போன்ற நூல்களிற் கங்காள மூர்த்தி திருவுருவம் காட்டப்படுகின்றது. கும்பகோணம் நாகேசுவரசுவாமி கோயில் என்னும் குடந்தைக் கீழ்க்கோட்டத்தில் கங்காள மூர்த்தி திருவுருவம் மேற்குறித்த அமைப்பில் சிறப்பாகத் தனிச் சந்நிதியில் அமைந்துள்ளது. சுசீந்திரம், தென்காசி, திருச்செங்காட்டங்குடி, தாராசுரம் கோயில்களில் விளங்கும் கங்காளமூர்த்தி வடிவங்கள் சிறப்புடையன.
17. சக்கரதானர்
சிவபெருமான் ஜலந்தராசுரனைச் சக்கராயுதத்தால் கொன்ற வரலாற்றை முன்னர் குறிப்பிட்டோம். அந்தச் சக்கராயுதமே சுதர்சனம் என அழைக்கப்படும். அதனைத் தந்தருள வேண்டுமென்று திருமால் சிவபெருமானைப் பூசித்து வந்தார். தினமும் ஆயிரம் தாமரை மலர்களால் திருமால் பூசித்தார். ஒருநாள் ஒரு பூக்குறைய தமது கண்ணையே பறித்து மலராகச் சாத்தினார். அவரது பூசைக்கு உகந்த சிவபெருமான் அவருக்குச் சக்கரப்படையை வழங்கியதோடு கமலக்கண்ணன் என்ற திருப்பெயரையும் கொடுத்தருளினார் எனப் புராணங்கள் கூறுகின்றன. சிவபெருமான் சக்கரதான மூர்த்தியானார்; திருமால் சக்கரபாணி ஆனார்.
அதர்வண வேதத்திற் காணப்பெறும் சரபோபநிடதத்தில் ”எவருடைய இடது பாதத்தில் விஷ்ணு தமது கண்மலரை அர்ச்சித்துச் சுதரிசனமென்னும் சக்கரம் பெற்றுக் கொண்டாரோ அந்த உருத்திர மூர்த்திக்கு வணக்கம்” என வருகிறது. திருமால் சிவபெருமானைப் பூசித்துச் சக்கரம் பெற்ற வரலாறு மகாபாரதத்திலும் குறிப்பிடப்படுகின்றது. கூர்ம புராணத்தில் மாயோன் நேமி பெற்ற அத்தியாயம் என்று ஒரு அத்தியாயமே உள்ளது. அதில் திருமால் சக்கரம் பெற்ற வரலாறு விரிவாகப் பேசப்படுகிறது:
காஞ்சிபுராணச் செய்தியின்படி, திருமால் சக்கரம் பெற்ற திருத்தலம் “திருமாற்பேறு” என்பது ஆகும். இது தொண்டை நாட்டில் திருமால்பூர் எனவும் அரிச்சந்திரபுரம் எனவும் தற்போது அழைக்கப்படும். இத்தலத்தில் இறைவனுக்கு முன்னே நந்திதேவருக்குப் பதிலாகத் திருமால் கூப்பிய கரத்தோடு நின்று கொண்டிருக்கிறார்.

Page 133
தஞ்சை மாவட்டத்தில் திருவீழிமிழலை என்னும் தலமும் சக்கரதானமூர்த்தி வரலாற்றைத் தன் தலமான்மியமாகக் கொண்டுள்ளது. திருமால் விண்ணுலகினின்றும் கொணர்ந்த விமானத்தின் கீழ்ச் சிவபெருமானை வழிபட்டுச் சுதர்சனம் பெற்ற வரலாறு அத்தலபுராணத்தில் விரிவாகப் பேசப்படுகின்றது.
நீற்றினை நிறையப்பூசி நித்தல் ஆயிரம் பூக்கொண்டு ஏற்றுழரியொருநாளொன்று குறையக் கண்ணிறைய விட்ட ஆற்றலுக்காழிநல்கி அவன் கொணர்ந்திழிச்சுங்கோயில்
வீற்றிருந்தளிப்பர் விழிமிழலையுன் விகிர்தனாரே,
- திருநாவுக்கரசர்
18. கஜமுக அனுக்ரஹர்
விநாயகருக்குக் கஜானன், கஜவதனன் யானைமுகன், ஐந்து கரன் என்றெல்லாம் பெயர்களுண்டு. வடமொழி சிவபுராணம் - ருத்திர சம்ஹிதையில் விநாயகருக்கு யானை முகம் எவ்வாறு வந்தது என்பது குறித்து ஒரு செய்தி காணப்படுகிறது. யானைமுகம் பிரணவத்தைக் குறிப்பது. பிரணவ வடிவனே விநாயகன் என்பது தத்துவ விளக்கமாகும். விநாயகருக்குச் சிவபெருமான் அணுக்கிரஹம் செய்த கோலமே விக்கினப் பிரசாதமூர்த்தி என வழங்கப்படும். உமாதேவியார் அருகிருக்கச் சிவபெருமான் தனது தொடையின் மீது விநாயகரை அமர்த்திக் கொண்டிருக்கும் வடிவமே விக்கினப்பிரசாத மூர்த்தியாகும்
என்பர்.
சோமாஸ்கந்த மூர்த்தத்தில் இறைவனும் இறைவியும் ஸ்கந்தனுடன் அமைந்திருப்பது மிகவும் பிரபலமாக அமைந்துள்ளது. ஆனால் கஜமுகானுக்கிரஹ மூர்த்தி அவ்வாறு புகழ்பெறவில்லை.
கணபதியை உமாசுதன் என்பர். சிவசுதனான முருகனுக்கு அம்பிகை தனது சக்தி ஆயுதத்தைக் கொடுத்து சூரசம்ஹாரம் செய்யப்பரிபூரண அனுக்கிரகம் செய்தது போன்று, உமாசுதனான விநாயகருக்குச் சிவபெருமான் பூரண அனுக்கிரகம் செய்து அவரைக் கணங்களுக்குப் பதியாக்கி மஹா கணபதியாகிய நிலையை கஜமுகானுக்கிரஹமூர்த்தி வடிவம் காட்டுகின்றது என்று கூறினும் பொருந்தும்.
மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் உள்ள நந்தி
மண்டபத்தில் கஜமுக அனுக்கிரஹமூர்த்தி வடிவம் அற்புதமாக உள்ளது.
விநாயகர் கஜமுகாசுரனுடன் போரிட்டு அவனை வென்றார் என்ற வரலாறு உள்ளது. அவ்வசுரனுடன் போர்புரியச் செல்லுமுன் தன் பெற்றோர்களின் ஆசிபெற வணங்கிய நிலையாகக் கஜமுக அனுக்ரஹமூர்த்தி அமைந்திருக்கலாம் என்று கருத இடமுண்டு.
1C

19. சண்டேச அனுக்ரஹர்
சிவபெருமான், தன்னைப் புகலென அடைந்த மெய்யடியார்தம் சித்தமெல்லாம் சிவமாக்கி அவர் செய்தனவே தவமாக்கும் அத்தன் அல்லவா! உலகில் புண்ணியம் செய்வோரும் உண்டு, பாவம் செய்வோரும் உண்டு. புண்ணியச் செயல்களுக்கு நன்மையான பயன்கிட்டும் பாவம் புரிந்தால் தீமை விளையும். இது பொதுவான உண்மை. ஆனால் இதற்கு விதிவிலக்கான இரு செய்திகளைக் கேள்விப்படுகிறோம். தட்சப்பிரஜாபதி பெரிய வேள்வி செய்தார். அது மிகவும் புண்ணியம் தரத்தக்க செயல். ஆனால் அந்த வேள்வியில் அவர் தனது தலையை இழந்தார். வேள்வி நாசப்படுத்தப்பட்டு, வந்திருந்த தேவர்களும் கடவுளரும் அவமானம் உற்றனர். புண்ணியச் செயல் அங்கு பாதகமாகி விட்டது. காரணம் தக்கன் சிவபெருமானை இகழ்ந்து அவமதித்துச் செருக்கடைந்திருந்தான். நோக்கம் தவறாக இருந்ததால் செயலும் பொய்த்துவிடும் என்பது இதன் தத்துவம். இது போலவே நோக்கம் உயர்ந்ததாக இருந்த செயல் தவறாகும் போது அச்செயல் தண்டிக்கப்படுவதில்லை என்பதைக் காட்டுவது
சண்டேசர் வரலாறு.
தஞ்சை மாவட்டம், கும்பகோணம் வட்டம் திருப்பனந்தாளுக்கு அண்மையில் விளங்கும் சிற்றுார் சேய்ஞலூர். இது கந்தவேள் சிவபெருமானை வழிபட்ட தலமாதலின் அப்பெயர் பெற்றது. சேய்ஞலூரில் வாழ்ந்த எச்சதத்தன் என்னும் அந்தணருக்கு மகனாக வந்தவர் விசாரசன்மன். விசாரசன்மன், ஆநிரைகளைத் தாமே மேய்க்கும் பொறுப்பேற்று செய்துவரும் நாளில், மணலால் இலிங்கம் அமைத்து, மாடுகள் சொரிந்த பாலைக் கொண்டு அவ்விலிங்கத் துக்குத் திருமஞ்சனமாட்டி வழிபட்டுவரும் வழக்கம் இருந்தது. இதனால் வீடுகளில் அம்மாடுகள் கொடுக்கும் பாலின் அளவும் குறைந்துவிடவில்லை. மாடுகளை மேய்க்கும் இடத்தில் தன் மகன் பாலைக் கறந்து பாழாக்குகிறான் என மறைந்திருந்து கண்ட எச்சதத்தன், தன் மைந்தனின் சிவபூசைத் திறத்தினை உணராது பூசனைக் கிடையூறாகக் கால் உதைத்துச் சிதைக்க, சிவாபராதம் பொறுக்காத விசாரசன்மன், மாடுமேய்க்கும் கோலால் எச்சதத்தனின் காலில் அடிக்க, அது வாளாக மாறி அவன் காலைத் துணித்தது. விசாரசன்மனின் பக்தித்திறங்கண்டு பரமன் பெரிதும் உவந்து, அவரைத் தன் மகனாக ஏற்றுச் சண்டேசப்பதமும் தந்தருளினார். இதனால் பெருமானது அருளுந்திறம் இனிது புலப்படும்.
சண்டேச நாயனாருக்குச் சிவபெருமான் அருள்புரிந்த கோலமே சண்டேச அனுக்கிரகமூர்த்தி என்று போற்றப்படுகிறது. அம்சுமபேதாகமத்தில் இக்கோலம் விவரிக்கப்படுகிறது. இவ்வடிவில், சிவபெருமான் பார்வதி தேவியுடன், உமாசகித மூர்த்தியைப் போல் அமர்ந்திருப்பார். அவரது முகம் சற்றே இடப்பால் திரும்பியிருக்கும். அவரது வலக்கரம் வரதமாகவும், இடக்கரம் சண்டேசர் தலைமீது வைத்தும் காணப்படும்.
இந்துக்கலைக்களஞ்சியம்

Page 134
சண்டேசர் பணிவுடன் தன்னிரு கரங்களையும் குவித்து வணங்கியவராய் சிவபெருமான் முன்பு பத்மாசனத்தின் மீது நிற்பார்.
கங்கைகொண்ட சோழபுரத்தில் சண்டேச அணுக்கிரக மூர்த்தியின் சிற்பம் மிகச் சிறப்பாக அமைந்துள்ளது. சுசீந்திரத்திலும் மதுரையிலும் இம்மூர்த்தியின் வடிவங்கள் உள்ளன. திருமுறைகளில் சண்டேசருக்குச் சிவபெருமான் அருளியதிறம் பெரிதும் விதந்தோதப்படுகிறது. சண்டேசர் ஒவ்வொரு கோயிலிலும் ஒவ்வொரு @_fiសិ அழைக்கப்பெறுகிறார். சூரியன் - தேஜ சண்டர், விநாயகர் - கும்பச்சண்டர், சுப்ரமண்யர் - சுமித்ரசண்டர்; சிவன் - த்வனி சண்டர். சக்திகோயிலில் சண்டேஸ்வரி என்று அழைக்கப் படுகிறார்.
20. ஏகபாதமூர்த்தி
சர்வசம்ஹாரம் நிகழும் மகாபிரளய காலத்தில் அனைத்து உயிர்களும் தன்னிடம் சரணடைந்து, தன் திருவடியில் இலயம் பெற வேண்டி, ஒற்றைக்கால் உடையவராகத் திருவுளம் கொண்டு சிவபெருமான் விளங்கும் கோலமே ஏகபாத மூர்த்தியாகும். இவர் ஒருமுகமும் நான்கு கரங்களும் கொண்டு விளங்குவார். இவரது பின் வலக்கரம் சூலத்தையும் பின் இடக்கரம் மழுவையும் ஏந்தியுள்ளன. இவரது முன் வலக்கரம் அபயகரமாகவும் முன் இடக்கரம் வரதமாகவும் அமைந்திருக்கும். மணிகளாலான மாலையை அணிந்து, புலித்தோல் உடுத்து, கங்கையும் பிறையும் விளங்கும் ஜடாமகுடமும் திகழ இவர் விளங்குவார்.
விசுவகர்ம சிற்பசாஸ்திரத்தில் ஏகபாதமூர்த்தி பதினாறுகரங்களுடையவராகக் காட்டப்படுகிறார். ஏகபாத மூர்த்தியை ஏகாதசருத்திரருள் ஒருவராகக் கூறுவாரும் உளர். மதுரையில் இம்மூர்த்தி தூண் சிற்பமாக உள்ளது. திருவொற்றியூரிலும், திருவானைக்காவில் அகிலாண்டேஸ்வரி சன்னதியில் தூணிலும் ஏகபாத திருமூர்த்தி வடிவம் உள்ளது. பிரம்மாவும் விஷ்ணுவும் இருபுறம் விளங்க நடுவில் சிவபிரான் விளங்கும் ஏகபாத திரிமூர்த்திக்கோலம் அருமையாக உள்ளது.
ஏகபாத மூர்த்தியை வழிபடுவோர் அனைத்துப் பேறுகளும் எய்தி இன்புறுவர்.
21 இலிங்கோத்பவர் முன்னொரு காலத்தில் நான்முகனுக்கும் திருமாலுக்கும் தம்முள் யார் பெரியவர் என்ற வினா எழுந்தது. நான்முகன், “நானே படைக்கிறேன்; ஆகவே நான்தான் பெரியவன்’ என்றார். திருமால் “நான் காக்கிறேன்; ஆகவே நானே பெரியவன்’ என்றார். இவர்களிடையே வாதம் வலுத்தது. அப்போது அங்கே
இந்துக் க்களஞ்சியம்

O8
பேரொளிப்பிழம்பாகிய ஜோதித்தம்பம் ஒன்று எழுந்தது. அத்தம்பத்தின் அடிமுடி அறிந்தவரே பெரியவர் என்று அசரீரியாக வானொலியும் கேட்டது. நான்முகனாரும் திருமாலும் அத் தம்பத்தைக் கண்டு வியப்புற்றனர். தமக்குள் ஒரு உடன்பாட்டுக்கு வந்தனர். நான்முகன் அத்தம்பத்தின் முடியைக் கண்டறிவ தெனவும், திருமால் அதன் அடியைக் கண்டறிவதெனவும் ஒத்துக்கொண்டனர். தம்பத்தின் முடியைக் காண அன்னமாகி நான்முகன் மேலே பறந்து செல்லலானார். திருமாலும் வராக (பன்றி) வடிவேற்றுப் பூமிக்குளே சென்று அடி தேடலானார். பலகாலம் இருவரது முயற்சியும் தொடர்ந்து நடந்தது. பறந்து சென்ற அன்னமாகிய நான்முகன் தனது வான வழியில் ஒரு தாழம்பூ மேலிருந்து விழுவதைக் கண்டு அது எங்கிருந்து வருகிறது என வினவ, அத்தாழம்பூ தான் ஜோதித்தம்பத்தின் உச்சியிலிருந்து புறப்பட்டுப் பலகாலமாகக் கீழ் நோக்கி வந்து கொண்டிருப்பதாகக் கூறியது. நான்முகன் தாழம்பூவைத் தன் பால் சேர்த்துக் கொண்டு, தம்பத்தின் உச்சியைத்தான் கண்டுவிட்டதாகவும் அதற்குத் தாழம்பூவே சாட்சி எனவும் கூறினார். திருமால் பலகாலும் முயன்றும் தாம் அத்தம்பத்தின் அடியைக் கண்டறிய முடியவில்லை என ஒப்புக்கொண்டார். இருவரும் சோதித்தம்பமாக விளங்குபவர் சிவபெருமானே என அறிந்து, தம் பேதைமையொழிந்து பணிந்தனர். அவ்விருவர் அகந்தையையும் போக்கிச் சிவபெருமான் உலகிற்குத் தன் பேரொளி வடிவத்தைக் காட்டிய கோலமே இலிங்கோற்பவ மூர்த்தியாகும்.
நான்முகன் அறிவு வடிவானவர்; திருமால் செல்வத்தின் நாயகர், அறிவும் செல்வமும் இறுமாப்பைத் தரவல்லன. அகந்தை மிகச் செய்வன. ஆனால் அறிவினாலும் செல்வத்தாலும் இறைவனைக் காணமுடியாது. அறிவின் வளமுடையவர்கள் பொய் சொல்லவும் அஞ்சமாட்டார்கள் என்பதற்கு நான்முகன் செயல் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு ஆகும். வெறும் செல்வம் மட்டும் உடையவனைக் காட்டிலும் அறிவுள்ளவனே துணிந்து பொய் சொல்லமுடியும் போலும் பணமுடையவனை விட அறிவுடையவனே அதிகம் பிழை செய்யவல்லவனும் கூட! இவையனைத்தும் மேற் சொன்ன வரலாறு உணர்த்தும் தத்துவம் அல்லவா!
திருமுறைகளில் இலிங்கோற்பமூர்த்தி LI6)6) IT gf போற்றப்படுகிறார். திருஞான சம்பந்தர் தனது பதிகம் ஒவ்வொன்றிலும் ஒன்பதாவது பாடலில் அரி அயன் தேட நின்ற பெருமானைப் போற்றுகின்றார். திருநாவுக்கரசர் தேவாரப்பாக்களில் 125 இடங்களில் ஆரழலாய் அயனுக்கும் அரிக்கும் அறிய ஒண்ணாதவன் மாண்பு போற்றப்படுகின்றது. சுந்தரர் 35 இடங்களில் பண்டுஅயன்மால் பறந்தும் இடந்தும் அயர்ந்தும் கண்டிலராம் அவர்கள் கழல் காண்பரிதாய பிரானைப் போற்றிப் பரவுகின்றனர். "நீண்டமாலும் அயனும் வெருவ நீண்ட
நெருப்பு” எனப்போற்றுவார் மணிவாசகர்.

Page 135
அரியும் அயனும் தேட நின்ற பெருமான் என்றதும் நம் மனக்கண்முன் நிற்பது திருவண்ணாமலை என்னும் திருத்தலமாகும். மாலும் அயனும் அண்ணாத - எட்ட முடியாத சோதிப்பிழம்பாய்ப் பெருமான் நின்ற தலமே திருஅண்ணாமலை. அருணைக் கலம்பகத்தில் இத்தல மான்மியமாய் இவ்வரலாறு இனிது காட்டப்படுகிறது.
இலிங்கோற்ப மூர்த்தி வடிவம் குறித்து அம்சுமத் பேதாகமம், காரணாகமம், காமிகாகமம், பூரீதத்வநிதி ஆகியவை விவரிக்கின்றன. சிவன் கோயில் கருவறையின் மேற்குச்சுவர் நடுமாடத்தில் இலிங்கோற்பவமூர்த்தி இடம்பெறுகிறார். முதலாம் ஆதித்திய சோழர் காலம் வரையில் கருவறையின் பின் சுவர்களில் அர்த்த நாரீசர் கோலமே இடம் பெற்று வந்தது. முதற்பராந்தக சோழர் காலம் முதல் கருவறையின் பின் சுவரில் இலிங்கோற்பவ மூர்த்தி இடம் பெறலாயிற்று.
22. சுகாஸ்னர்
திருக்கயிலையில் உமாதேவியார் சிவாகமங்களினது தத்துவங்களைத் தமக்குப் போதிக்க வேண்டிப் பிரார்த்திக்கச் சிவபெருமான் சுகாசனத்தில் அமர்ந்து உபதேசித்த திருக்கோலமே சுகாசன மூர்த்தியாகும். சுவத்திகம், கோமுகம், பதுமம், வீரம், கேசரி, பத்திரம், முக்தம், மயூரம், சுகம் என ஒன்பது வகை ஆசனங்களை ஆகமங்கள் குறிப்பிடுகின்றன. ஒரு காலை இருக்கையில் மடித்தமைத்து மற்றொரு காலைத் தொங்கவிட்டு அமர்ந்திருப்பதே சுகாசனம் ஆகும். -
சில்பரத்தினம், பூரீ தத்துவநிதி ஆகியவற்றில் சுகாசன மூர்த்தி திருவுருவம் விவரிக்கப்பட்டுள்ளது. சில்பரத்தினத்தின்படி, இம்மூர்த்தி, ஒரு முகமும் மூன்று கண்களும், நான்கு கரங்களும் கொண்டு பவளச் சிவப்பு நிறமுடையவராக - அழகு மிக்கவராக பத்ர பீடத்தின் மீது நிமிர்ந்து அமர்ந்திருப்பார். சில நூல்களில் ஒரு முகமும் ஆறுகரங்களும் கொண்டு வலத்திருக்கை ஒன்று சின் முத்திரை காட்ட வேத சிவாகமப் பொருளை அம்பிகைக்கு உபதேசிக்கும் கோலமாக இவ்வடிவம் காட்டப்படுகிறது. சிவபராக்கிரமம் என்ற நூலில் சிவபெருமானும் அம்பிகையும் சேர்ந்து சோமாஸ்கந்த வடிவம் கந்தனின்றி அமைந்ததுபோல் காட்டப்படுகிறது. சுகாசனமூர்த்தியை வழிபடுவோர் வாழ்வில் சகலசுகங்களையும் அடைந்து இன்புறுவர் என்று ஆகமங்கள் கூறும்.
23. உமா மகேஸ்வரர் மண்ணில் நல்லவண்ணம் வாழலாம் வைகலும் எண்ணில் நல்ல கதிக்கு யாதுமோர் குறைவிலை கண்ணின் நல்லஃதுறும் கழுமல வளநகர்ப் பெண்ணின் நல்லாளொடும் பெருந்தகை இருந்ததே
- திருஞானசம்பந்தர்சிவபெருமானது அருட்சக்தியே உமை என அழைக்கப் படுகிறது. சக்தி தன் வடிவினில் தடையிலா ஞானமாகும் என்பர்

O9
ஆன்றோர். ஞானமே உமை வடிவாகத் திகழ்கிறது. சிவபெருமானின் கருணையே அம்பிகை என்பது இதனாற் புலப்படும். உமை என்பது சிவபெருமானது கருணையே என்று காட்ட அமைந்த திருக்கோலமே உமாசகிதமூர்த்தி ஆகும்.
சுகாசனமூர்த்தி அருகே, தேவி அவரைப் பார்த்துக்கொண்டு அமர்ந்திருந்தால் இக்கோலம் உமாசகிதமூர்த்தி என அழைக்கப்படும். இறைவனின் இடப்பக்கம் இறைவி அமர்ந்திருப்பாள். இவர் ஒரு முகமும் முக்கண்ணும் நாற் கரங்களும் கொண்டிருப்பார்.
இம்மூர்த்தி அமைப்பில் இறைவனும் இறைவியும் ஒரே இருக்கையிலோ, தனித்தனியாக வெவ்வேறு இருக்கைகளிலோ இருக்கலாம். காஞ்சியிலும் மதுரையிலும் இத்திருக்கோலத்தைக் காணலாம்.
24. சங்கர நாராயணர் அரன் நாரணன் நாமம் ஆன்விடை புள் ஊர்தி உரை நூல் மறை உறையும் கோயில் - வரை நீர் கருமம் அழிப்பு அளிப்பு கையது வேல் நேமி உருவம் எரிகார் மேனி ஒன்று - பொய்கையாழ்வார்
தாழ்சடையும் நீள்முடியும் ஒண்மழுவும் சக்கரமும் குழ் அரவும் பொன்நானும் தோன்றுமால் - குழும் திரண்டருவி பாயும் திருமலைமேல் எந்தைக்கு இரண்டுருவும் ஒன்றாய் இசைந்து -பேயாழ்வார்
மாலுமோர்பாகம் உடையார் என்று திருஞானசம்பந்தர் போற்றும் சிவபெருமான் திருவடிவம் இடப்பாகம் திருமாலாகவும் வலப்பக்கம் அரனாகவும் ஒரேவடிவில் காட்சிதரும் ஹரிஹரன் வடிவமாகும். இது ஒரு பெரிய தத்துவ விளக்கமாக அமைந்துள்ளது.
சங்கரநாராயணர் வடிவம் பற்றிய வரலாறு வாமனபுராணத்திற் பேசப்படுகிறது. ஒரு முனிவரிடம், திருமால் தானும் சிவபெருமானும் ஒருவரே எனவும் தன்னிடத்திலேயே சிவபெருமான் விளங்குகிறார் எனவும் கூறி ஹரிஹரனாக ஒருருவில் அம்முனிவருக்குக் காட்சி தந்தருளினார்.
தமிழ்நாட்டில் திருநெல்வேலி மாவட்டத்தில் சங்கரன்கோயில் 6T60T அழைக்கப்படும் சங்கரநாராயணர் கோயில் தனிச்சிறப்புடையதாகும். கோயிலின் பெயரால் இவ்வூர் விளங்குகிறது. இத்தல வரலாறு மிகவும் சுவையானது. முன்பு ஒரு காலத்தில் சங்கன், பதுமன் என்னும் இரு நாகர்கள்
இருந்தனர். சங்கன் சிறந்த சிவபக்தன், பதுமன் சிறந்த விஷ்ணு
இந்துக்கலைக்களஞ்சியம்

Page 136
பக்தன். ஒருநாள் இவர்களிடையே பெரிய விவாதம் எழுந்தது; யார் பெரியவர்: சிவனா? திருமாலா? இதே ஐயம் பார்வதி தேவிக்கும் வந்து விட்டது. அவள், "இருவரும் ஒருவரா அல்லது வேறுவேறு நபர்களா?” என்று இறைவனிடமே கேட்டுவிட்டாள். இறைவனும் அம்பிகையைப் பார்த்து , “நீ புன்னைவனத்தில் தவமியற்றி இவ்வுண்மையை அறிந்துகொள்” எனப் பணித்து விட்டார். அன்னையும் அரன் ஆணைப்படி இப்புன்னைவனத் திற்கு வந்து அருந்தவம் இயற்றலானாள். அங்கே ஆடிமாதம் பெளர்ணமியன்று அம்மைக்கும் சங்கனுக்கும் பதுமனுக்கும் இறைவன் காட்சி தந்தருளினார், சங்கரநாராயணர் கோலத்தில்; அவரது இவ்வடிவம் கண்டு மூவரும் தெளிவடைகின்றனர். அக்கோலத்தை இன்றும் நாம் இத்தலத்தில் கண்டு மகிழ்கிறோம். அரியும் அரனும் இணைந்த இவ்வழகிய கோலத்தைக் காணும் எவரும், தொடக்கத்தில் தரப்பட்டுள்ள பொய்கையாழ்வார்,
பேயாழ்வார் பாசுரங்களை எண்ணி வியக்காமலிருக்க முடியாது.
ஆகமங்களிற் கேசவார்த்த மூர்த்தி, ஹரிஹரமூர்த்தி, அரியர்த்தமூர்த்தி, என்றெல்லாம் சங்கர நாராயணர் குறிக்கப்பெறுகிறார். இவ்வடிவில் வலப்பக்கம் சிவபெருமானும் இடப்பக்கம் திருமாலும் விளங்குகிறார்கள். ஒருமுகமும் இருகரங்களும் கொண்ட இவ்வடிவில் முகத்தின் வலப்பக்கம் சிவனாகவும் இடப்பக்கம் திருமாலாகவும் அமைந்துள்ளன.
சைவமும் வைணவமும் சமரசப் போக்கிலே தழைக்க எழுந்த தனிச்சிறப்புடைய இத்திருக்கோலத்தைச் சைவத் திரு முறைகளும் திவ்யப்பிரபந்தமும் பலவாறு போற்றுகின்றன. இருபெருந்தெய்வமும் இணைந்த கோலம்பற்றிய குறிப்பு அகநானூற்றுப் பாடலிலே காணப்படுகிறது;
கர்நாடக மாநிலத்தில் ஹோஸ்பெட் அருகே "ஹரிஹர்” என்ற சிற்றுாரில் பூரீ ஹரிஹர சுவாமி கோயில் உள்ளது. மூலவர் சங்கரநாராயணராகக் காட்சி தருகின்றார். இருபுறமும் சிறிய அளவில் பார்வதியும் இலட்சுமியும் காட்சி தருகிறார்கள். கர்நாடக மாநிலத்தில் ஷிமோகாவிலிருந்து 3 கல் தொலைவில் கூடலி என்று ஒரு சிற்றுார் உள்ளது. இங்கே துங்கா நதியும் பத்திரா நதியும் சங்கமமாகின்றன. அவ்விடத்தில் துங்கா நதி திருமால் அம்சமாகவும் பத்திராநதி சிவபெருமான் அம்சமாகவும் கருதப்படுகின்றன என்பது இங்கு நினைவு கூரத்தக்கது.
25. அர்த்தநாரீஸ்வரர் ஆண்- பெண், ஒளி- இருள், தோற்றம் - அழிவு, என்பனவாகிய படைப்பின் மொத்த வடிவமாகவே சிவபெருமான் திகழ்கிறார். அவர் உலகுய்யக் கொண்டருளிய திருக் கோலங்களுள் மாதொரு பாகன் என்று போற்றப் பெறும் - ஒருபாதி ஆணும் ஒரு பாதி பெண்ணுமாக அமைந்த அர்த்தநாரீசுவரக் கோலமும் ஒன்றாகும். சிருட்டித் தொழிலைத்
இந்துக்கலைக்களஞ்சியம்
11

தொடங்கத் தனக்கு ஒரு பெண் வேண்டுமென்று பிரமன் வேண்ட, சிவபெருமான் தானே மாதொரு பாகனாகக் காட்சி தந்தருளினார் எனப் புராணங்கள் பேசும். அர்த்தநாரீசுவரக் கோலம் ஆணும் பெண்ணும் சேர்ந்திணைந்த உலக வளர்ச்சியை விளக்கும் தத்துவமாகும். சிவசக்தி எங்கும் எப்போதும் எதிலும் இணைந்தே இயங்குவன.
அர்த்தநாரீசுவரக் கோலம் எழுந்தது ஏன் என்பதற்கு ஒரு புராண வரலாறும் உண்டு. பிருங்கி என்ற முனிவர் சிவபெருமானை மட்டுமே வணங்கும் விரதம் பூண்டிருந்தார். இம்முனிவர் தன்னை வணங்கவில்லையே என்று பார்வதி தேவியாருக்குச் சினம் வந்தது; பிருங்கியின் ஆற்றலைக் குன்றச் செய்து விட்டார். பிருங்கி வலுவிழந்து, நேராக நிற்க முடியாதவராக - எலும்புக் கூடாகி விட்டார். உடனே சிவபெருமான் பிருங்கிக்கு ஒருகால் அளித்து அவரை நிற்குமாறு செய்து விட்டார். பிருங்கியை ஒடுக்க பார்வதி அம்மை மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியுற்றதையடுத்து, வேதனையுற்றுச் சிவபெருமானைக் குறித்துத் தவமியற்றினார். தேவியின் தவத்திற்கு இரங்கிய சிவபெருமான் அம்மையின் வேண்டுகோளை ஏற்றுத் தம் உடலிற்
பாதியை அளித்து மங்கை பங்கனானார்.
அம்சுமத் பேதாகமம், காமிகாகமம், சுப்பிரபேதாகமம், சில்பரத்தினம், காரணாகமம் ஆகியவற்றில் அர்த்தநாரீசுவரக் கோலம் விவரிக்கப்பட்டுள்ளது. இவ்வடிவில், வலப்பாகம் சிவனும் இடப்பாகம் உமையுமாக விளங்கக் காண்கிறோம். ஆண்பாதியில் தலையில் ஜடாமகுடமும் பிறையும் விளங்கும்; காதில் மகர குண்டலம், சர்ப்பகுண்டலம் அல்லது சாதாரண குண்டலம் விளங்கும். நெற்றியில் மூன்றாவது கண் பாதி இருக்கும். இடப்பாகத்துத் தலையில் கரண்ட மகுடம் அல்லது தலைமயிரை வாரி அழகாக முடித்து அமைந்திருக்கும். நெற்றியில் அரைப்பொட்டு வைத்திருக்கும். அது வலப்பக்கம் சிவனது மூன்றாவது நெற்றிக்கண்ணுக்கு இணையாக அமைந்திருக்கும். இடது கண்ணில் மையிட்டிருக்க வேண்டும். இடது காதில் வாலிகா என்றழைக்கப்படும் தோடு அணிந்து காணப்படும்.
திருச்செங்கோடு மலைமீது தொன்மையான அர்த்தநாரீசுவர வடிவம் விளங்குகின்றது. இவ்வடிவைத்தான், "கங்கை முடிக்கணிந்த கண்ணுதலோன் பாகத்து மங்கை உருவாய் மறை ஏத்த நிற்கும்” என்று சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகள் போற்றுவார். திருவாசகத்தில் ஒரு அருமையான வருணனையாக மாதொரு பாகர் காட்டப்படுகிறார்: தொன்மைக் கோலம் இக்கோலமே என்பார் மணிவாசகர்:
தோலும் துகிலும் குழையும் சுருள்தோடும் பால்வெள்ளைநிறும் பசுஞ்சாந்தும் பைங்கிளியும் குலமும் தொக்கவளையும் உடைத்தொன்மைக் கோலமே நோக்கிக் குளிர்ந்துதாய்க் கோத்தும்பீ

Page 137
சிவபெருமான் உயிர்கள் மாட்டுக் கொண்ட பெருங்கருணையினால் திருக்கோலங் காட்டியருளிய அருமையான இருபத்தைந்து மகேசவடிவங்களை இதுகாறும் கண்டோம். இவ்வடிவங்கள் சிவபெருமானுடைய எல்லையற்ற கருணையினால் விளைந்த எண்ணற்ற அருளாடல்களில் ((b சிலவே என்பது தெளிவு. இத்திருக்கோலங்களில் ஏதேனும் ஒன்றைப் பற்றியாவது தியானித்து, அதன் மூலம் அகளனாகிய - நின்மலனாகிய - விமலனாகிய - வேத நுண் பொருளாகியசிவபரம் பொருளின் திருவருளுக்கு இலக்காகி இருமை இன்பங்களையும் எய்தி நாம் உய்வடையலாம். திருக்கோயில்களில் இம்மூர்த்தங்கள் கல்லிலும் செம்பிலும் சுதையிலும் காட்டப்பட்டுள்ளமை போன்றே சிவஞானிகளின் கவிதையிலும் காட்டப்பட்டிருப்பதையும் நாம் கண்டு நம் முன்னோர்கள் சொற்கோயிலையும் கற்கோயிலையும் அமைத்த கவினுறு கலையறிவை எண்ணி வியப்படைகிறோம். இரா.கி.)
சிவயோக சுவாமிகள்
இலங்கையின் வடபகுதியாகிய யாழ்ப்பாணத்தில் வரலாற்றுப் புகழ்மிக்க மாவிட்டபுரமே, சுவாமிகள் அவதரித்த ஊராகும். தந்தையார் அம்பலவாணர், தாயார் சின்னாச்சி அம்மை. பெற்றோர் சூட்டிய இயற் பெயர் சதாசிவம். சதாசிவம், கொழும்புத்துறையில் வசித்து வந்த தாய்மாம்னோடு தங்கியிருந்து, யாழ் சம்பத்திரியாசிரியர் கல்லூரியில் கல்விகற்று வந்தார். இப்போதுதான் யோன் எனக்கத்தோலிக்கப் பெயர் சூட்டப்பட்டார். இந்தப் பெயர் மாற்றம்; சிறுவன் சதாசிவம், கத்தோலிக்கக் கல்விச் சூழலில் மதம்மாற்றப்பட்டாரா? என்பன போன்ற விவரங்கள் நன்கு புலனாகவில்லை. சிறு வயதிலிருந்தே, இரைதேடவில்லையன்றி, இறை தேடலில் நாட்டமுடைய சதாசிவன், கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள இரணைமடு நீர்ப்பாசனத்திட்டத்தின், களஞ்சியப் பொறுப்பாளராகச் சிலகாலம் உத்தியோகம் பார்த்தார். அச்சமயம் அங்கு பொறியியலாளராக இருந்த ஆங்கிலேயர் , சதாசிவனின் தெய்வப் பசியைப் புரிந்து கொண்டார். சதாசிவம் அங்கு பணியாற்றும் போது கால் நடையாகவே நல்லூருக்கு வந்து செல்லப்பா என்னும் ஞான குருவைத் தரிசித்துச் செல்வது வழக்கம்.
நாளடைவில் சதாசிவன், வேலையை உதறிவிட்டு, செல்லப்பா சுவாமிகளைச் சுற்றத் தொடங்கி விட்டான். செல்லப்பா சுவாமிகளின் தரிசனம் பற்றிய அனுபவங்களை, சுவாமிகள், நற்சிந்தனையில் பல இடங்களிற் கூறியுள்ளார். செல்லப்பா சுவாமிகளின் மறைவின் பின் சுவாமிகள், கொழும்புத்துறையில் கொட்டில் ஒன்று அமைத்து வாழ்ந்து வந்தார். இந்தக் காலத்தில் சுவாமி விவேகானந்தரின் யாழ்ப்பாண வருகை, சுவாமிகளிடம் பெருந்தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அன்பர்களின் அழைப்பினை ஏற்று கொழும்புக்கும் மலை நாட்டுக்கும் சுவாமிகள்
11

அடிக்கடி சென்று வந்துள்ளார். இந்தியாவில் சிதம்பரம், காசிவரை தலயாத்திரை செய்துள்ளார்.
தூய துறவறமும் சித்துக்கள் புரியும் வல்லமையும் பெற்றிருந்த போதும் சித்துக்கள் புரியும் செப்படிவித்தையைத் தம் குருநாதர் போலப் புறக்கணித்தே வந்தார். இருந்தபோதும் தெய்வ சங்கற்பமாக நடந்த அற்புதங்களை பல அன்பர்கள் கூறியுள்ளார்கள். வேதாந்த சித்தாந்த சமரச நன்னிலை பெற்ற வித்தகச் சித்தரான சுவாமிகள், பெளத்தம், கிறிஸ்துவம், இஸ்லாம் முதலிய மதங்களோடும் சமரச நன்னிலை பெற்றிருந்தார். மதங்கடந்த நிலையில் சீவன்முத்தராக வாழ்ந்த சுவாமிகள், மக்கள் தொண்டை மகேசன் தொண்டாகக் கொண்டு வாழ்ந்து வந்தார்.
சுவாமிகளின் மறைவின் பின் அவர் பொன்னுடலைச் சமாதி வைக்கப் பல அன்பர்கள் விரும்பிய போதும், அவர் திருவுளப்படி அவ்வுடல் எரியூட்டப்பட்டது. அதற்கான காரணம், சமாதிகள், கோவில்களாக, சமயநிறுவனங்களாக முளைத்துச் சமுதாயத்தில் குழப்பங்கள் தோன்றாதிருப்பதற்காகும் எனச் சுவாமிகளின் நெருங்கி அடியார் ஒருவர் கூறினார்.
சுவாமிகளின் ஞானவரலாறும் அக்கால இலங்கையும்
ஞானிகளுக்கு ஞானவரலாறு (Hagiography) உண்டேதவிர ஊன வரலாறு (Biography) இல்லை. இதனை அவர் வெளியிட்ட, அவரைப்பற்றி வெளியிடப்பட்டுள்ள நூல்களில் கண்டு உணரலாம். ஆன்மீகம், அரசியல் போல ஆர்ப்பாட்டம் செய்வதில்லை. ஞானியர் தாம் கண்ட ஞானக் காட்சிகளைத் தம் சீடர் மூலம் ‘யாம் பெற்ற இன்பம் பெறுக இவ் வையகம்” என உலக நன்மை கருதிப் பரப்பச் செய்தனர்.
வேதகால ரிசிகள் தொடங்கி இன்று வரை வாழ்ந்த இந்து சமய ஞானிகள், தம் கருத்துக்களைச் சீடர்களுக்குச் சொல்லியும் எழுதியும் வைத்துப் போயினர். இந்த ஞான பாம்பரையில் முகிழ்த்த சிவயோக சுவாமியும் தம் முன்னோர் வழியையே பின்பற்றினார்.
சுவாமிகளின் உயர்வைப் படம் பிடித்துக் காட்டுவது போல
அமைந்துள்ளது பின்வரும் பட்டினத்தார் பாடல். இல்லறத்தானை விடக் கோடிமடங்கு பெரியவன், துறவி. அவனை விட சதகோடி பெரியோன் உள்ளத்துறவுடையோன். ஆனால் இவர்கள் அனைவரையும் விட,
மறந்தான் அறக்கற்று அறிகேடு
இருந்து இருவாதனை அற்று
இறந்தான் மிகமிகப் பெரியோன். எனவே அவன் பெருமையை என் சொல்லுவேன் கச்சி ஏகம்பனே எனக் கற்றுப் பாடுகிறார் பட்டினத்தார். இந்த நிலையில் வாழ்ந்தவர் நம் யோக சுவாமிகள்.
இந்துக் க்களஞ்சியம்

Page 138
இலங்கையில் இன்றுள்ள சமயங்களில் இந்து சமயம் தவிர ஏனைய சமயங்களெல்லாம் வந்தேறிய சமயங்களே. இந்து சமயம் ஒருவரால் தோற்றுவிக்கப்பட்ட சமயமல்ல. இந்த நாட்டின் இயற்கைக்கு ஏற்பத் தானாக முகிழ்த்த சிந்தனையுடைய சமயம், ஆதலால் இலங்கையின் இந்து சமயத்துக்கு நீண்டகால வரலாறும் அதுவளர்ந்தெடுத்த தத்துவ, சமய, கலை, கலாசார பாரம்பரியமுமுண்டு.
இந்தப் பின்னணியில் வந்துதித்தவரே யோக சுவாமிகள். எனவே அவர் தோன்றுவதற்கு முன்பே இந்து சமயம் முழு வளர்ச்சி பெற்றிருந்தது. ஆனால் அடுத்தடுத்து வந்த அந்நிய ஆதிக்கங்களினால், தத்துவம் தவிர்ந்த சமய கலை கலாசாரங்களில் பலபிறழ்வுகள் ஏற்பட்டிருந்தன.
பெளத்தம், இஸ்லாம், கிறிஸ்துவம் முதலிய சமயங்களின் வருகைகளினால் பல பிறழ்வுகள் ஏற்பட்ட போதிலும் பெளத்தம், இந்து சமயத்திலிருந்து தோன்றிய காரணத்தாலும் போதி மாதவனை இந்துக்களின் காத்தற் கடவுளாகிய விஷ்ணுவின் அவதாரமெனக் கருதியதினாலும் இந்து மதம் பெளத்ததை இலகுவாகச் சீரணித்துக் கொண்டது. பெளத்த தத்துவம் இந்து தத்துவத்திலிருந்து வேறாக இருந்த போதும் பற்றற்ற துறவறத்தை அது வற்புறுத்தியபோதும், பெளத்தம், இந்துக் களிடையே செத்துக் கொண்டிருந்த சீவகாருண்யத்தைப் போற்றியமையால் அது இலங்கையிலும் பரவியது.
பெளத்தத்திற்குப் பின்னர் வந்த இஸ்லாம், கிறிஸ்துவம் ஆகிய மதங்களை தாய் - பிள்ளை உறவு கொண்ட சைவத்தாலும் பெளத்தத்தாலும் எளிதில் சீரணித்துக் கொள்ள முடியவில்லை.
வணிக நோக்கோடு வந்த இஸ்லாமும் வணிகத்தோடு வந்து ஆட்சியைப் பிடித்துக் கொண்ட கிறிஸ்துவமும் ஏறக்குறைய 1300 ஆண்டுகளாக இந்நாட்டிற் பரப்பப்பட்டபோதும் மிகச் சிறந்த தத்துவ சமய கலை கலாசார தளத்தையுடைய இந்து பெளத்த
மக்களை அசைக்க முடியவில்லை.
ஆரம்பத்தில் எதிர்த்து வெல்ல நினைத்தவர்கள், வெல்ல முடியா நிலையில் அனைத்துச் சிறுகச் சிறுக ஆக்கிரமித்து வருகின்றனர். இந்தக் காலகட்டம் நாவலரும் அநகாரிக தம்மபாலாவும் தோன்றிலரேல். என வரலாற்றாசிரியர்களைச் சிந்திக்க வைத்துள்ளது.
நாவலருக்கு பின் சைவமும் தமிழும் விறுவிறுப்பான வளர் நிலையைப் பெற்றன. பல்லாயிரம் ஆண்டுகளாகப் பேணப்பட்ட சைவத் தமிழ் ஆளுமையின் மொத்த வடிவமாக நாவலர் விளங்கினார். இந்த ஆளுமை அவரிடம் உள்ளொன்று புறமொன்றாக இருக்கவில்லை. உள்ளும் புறமும் அத்துவத மாகவே யிருந்தது.
இந்துக்கலைக்களஞ்சியம்

இந்த ஆளுமை நாவலரை அதிகாரத்தோடு பரப்பப்பட்ட கிறிஸ்துவத்தோடு கூட்டொருவரும் வேண்டாக் கொற்றவனாக சமர்க்களத்தில் தனித்து நின்று போரிட வைத்தது. இதனால் இலங்கை இந்துக்கள் மாத்திரமல்ல தென்னகத்தாரும் தலை நிமிர்ந்து நின்றனர். ஆனால் போர்க்களத்தில் காலம் காலமாகப் போற்றப்பட்ட விழுமியங்கள் சில புறக்கணிக்கப்பட்டு வெறும் வெற்றியே நோக்கமாகக் கொள்வது போலச் சைவத்தின் விழுமியங்கள் சிலவும் கைவிடப்பட்டன.
சைவத்தின் சமரசம் மறக்கப்பட்டு விட்டது. சைவம் என்பது திருநீறு, உருத்திராக்கத்தோடு கூடிய வெறும் வெளி வேஷமாகவும் சைவச் சாப்பாடாகவும் மாறிவிட்டது.
இறைவன் ஒன்றாய், உடனாய், வேறாய் இருக்கிறான் எனச் சைவ தத்துவம் கூறிய போதும் முப்பொருளே தத்துவம் என்பது வற்புறுத்தப்பட்டது.
சைவம் ஒழுக்கத்துக்கும் அறத்துக்கும் முதன்மை கொடுத்த போதும் சாபக்கேடான சாதிக்கு வழிவகுத்த வருணாச்சிரம தர்மத்துக்கு முதன்மை கொடுக்கப்பட்டது.
இங்ங்ணம் இருந்த யாழ்ப்பாணச் சமயநிலையில் சைவசமயக் குடும்பத்திலேயே பிறந்து சிறிது காலம் கிறிஸ்துவக் கல்லூரியிலே கல்வி கற்ற யோகநாதன், சுவாமி விவேகானந் தரைத் தரிசிக்கும் பேறு பெற்றான்.
விவேகானந்தரின் வீரத் தோற்றமும் யாழ் இந்துக் கல்லூரியில் அவர் ஆற்றிய சொற்பொழிவும் மூளாத்தீப்போல் உள்ளே கனன்று ஆன்ம ஒளியைச் சுடர்விட்டெரியச் செய்தன.
அந்நியத்தை எதிர்த்துச் சைவத்தை நிலைநாட்ட நாவலர் இறுக்கி முறுக்கேற்றிய சைவத்தின் வளர்ச்சிக்கு ஒரு மென்மை, வளைந்து கொடுக்கும் தன்மை (Flexibility) தேவைப்பட்டது. அதனைத்தந்தவரே யோக சுவாமிகள், அதுவே அவர் ஏற்படுத்திய தாக்கம். இந்தப் பின்னணியில் வைத்தே சுவாமிகள் தத்துவத்தில், சமயத்தில், வாழ்வியலில் ஏற்படுத்திய தாக்கங்கள் எவை, எவை, என சிந்திக்க வேண்டும்.
தத்துவத்தில் ஏற்படுத்திய தாக்கம்
இந்து சமயத்தில் தத்துவத்தைக் கூறும் ஆதி நூலாகிய உபநிடத்தில் வரும் அத்துவிதம் என்னும் தொடருக்கு அத்துவைதம், துவைதம், விசிஷ்டாத்துவைதம் என மூவிதமாகப் பொருள் கொள்ளப்பட்டுத் தத்துவ உலகம் தடுமாறிய வேளையில், “பொய்கண்டார்காணாப் புனிதமெனும் அத்துவித மெய்கண்ட நாதன்” எனப் போற்றப்பட்ட மெய் கண்டார் தாமருளிய சிவஞான
போதத்தின் இரண்டாம் நூற்பாவில் அத்துவிதப் பொருளைத்

Page 139
தெளிவுபடுத்தினார். ஆனாலும் சைவசித்தாந்திகள் உட்படப் பலர் தெளிவு பெறவில்லை. மெய்கண்டார் கண்ட விளக்கத்தின் மூலம் அத்துவைதம், துவைதம், விசிஷ்டாத்துவைதம் ஆகிய எல்லாவற்றையும் சைவசித்தாந்தம் ஏற்றுக் கொள்கின்றது.
இம்மூவகையினையும் ஒருமைக் கொள்கை பன்மைக் கொள்கை என்ற இரண்டினுள் அடக்கிவிடலாம். சைவசித்தாந்தம் இவ்விரு நிலையினையும் ஏற்றுக்கொள்கிறது.
சைவத்தின் மூலவராகிய திருமூலர் அருளிய திருமந்திரமும் “பதி பசு பாசம் எனப் பகர் மூன்று” எனப் பன்மையை ஏற்றுக் கொண்டும் 'சீவன் எனச் சிவன் என வேறில்லை' என ஒருமையையும் வற்புறுத்துகின்றது.
இக்கூற்று முன்னதை மறுக்கும் கூற்றோ எனின் அன்று;
பின்னர் தம் கூற்றுக்கு ஆதாரம் காட்டும் ஆசிரியர் 'சீவனார் சிவனை அறுகிலர்’ அதனால் பன்மை தெரிகிறது.
சீவனார் சிவனை அறிந்த பின்
சிவனார் சிவனாயிட்டிருப்பரே என அறிந்த பின் ஒருமை உணரப்படும் என்கிறார். எனவே ஒருமை, பன்மை ஆகிய இரு நிலைகள் ஆன்ம பக்குவ வேறுபாடன்றி வேறல்ல என்பது பொருளாகிறது.
இந்திய தத்துவ உலகில் பிரச்சினையாகித் தத்துவ மதவாதிகளால் விவாதப் பொருளாகி மக்களுள் பகை வளர்த்த இந்த அறியாமையை மெய்கண்டார் நீக்கிச் சைவசித்தாந்தத்தின் உயர்வை விளக்கியுள்ளார். இதனை உணர்ந்த தாயுமானவர் சைவம், மதங்களின் இராசாங்கத்து அமர்ந்துள்ளது எனப் போற்றுகின்றார்.
சைவ சித்தாந்தம் முப்பொருளையே பேசுகின்றது. எனப் பள்ளிச் சிறுவர்களுக்கும் புகட்டப்படுகின்றது. இது உண்மை. ஆனால் சைவசித்தாந்தம் ஒருமைக் கொள்கையும் சொல்கிறது என்னும் உண்மை மறைக்கப்பட்டு வருகின்றது.
இதற்குக் காரணம் வேதாந்த சித்தாந்தக் காழ்ப்பை வளர்த்துப் பிழைப்பை நடத்தும் மதவெறியாகும். அநுபூதி இன்றி மதநூல்களைப் படித்தவர்களே இந்த நிலைக்குத்தள்ளப் பட்டுள்ளனர். அநுபூதி மான்கள் வாசித்துக் காணொணாது பூசித்துப் பேணொணாதது என்று கூறிவிட்டனர். படித்த மதவாதிகள் பன்மை உணர்விலிருந்து விடுபடாதவர்கள்; விடுபடமுடியாதவர்கள். இவர்களுக்குப் பாசம் தெரியாது; பதார்த்தங்களே தெரியும்.
பார் முதற் பூதங்கள் பாசத்தை மறைத்திருப்பதனால் பரம்புலனாகவில்லை உலகவர்க்குச் சைவசித்தாந்தம் கூறும் முப்பொருளே உண்மை ஞானிகளுக்குப் பதியே உண்மை இந்த ஞான ஒருமைக் காட்சி எளிதில் வாய்க்கப்
பெறுவதில்லை.

இந்த உண்மையைத் தாயுமானவர் என்னும் ஞானசிகரம் மிக அருமையாகவிளக்கியுள்ளார். சந்ததமும் எனது செயல் என்று தொடங்கும் அருமைப்பாடலில் பதி பசு பாசம் என்னும் பன்மை நிலையில் உழன்ற தரம் மிகமேலான பதி என்னும், ஒருமை நிலையுணர்ந்த அனுபவத்தைக் கூறும்போது,
இந்த நிலை தெளிய நான் நெக்குருகி வாடிய
இயற்கை திருவுளம் அறியுமே இந்நிலையிலே அற்று இருக்க என்றால் மடமை இத சத்துரு வாக வந்து சிந்தை குடிகொள்ளுதே மலமாயை கர்மம்
திரும்புமோ தொடு வழக்காய் ஜென்மம் வருமோ எனவும் யோசிக்குதே மனது சிரத்தை எனும் வாளும் உதவி பந்தமற மெய்ஞ்ஞானதீரமும் தந்து எனைப்
பாதுகாத்து அருள் செய்குவாய் பார்க்குமிட மெங்குமொரு நீக்க மற நிறைகின்ற பரிபூரணானந்தமே. என்று பாடுகிறார்.
திருமூலர் சொன்ன உண்மைப் பொருளை உணராத காரணத்தால் சைவசித்தாந்தம் கூறும் முப்பொருள் உண்மையே சைவசித்தாந்தத்தின் முடிபென்று எம் நாட்டில் வாழும் சில சைவர்கள், சைவ சித்தாந்திகள் நம்பிக்கை கொண்டுள்ளனர்.
மெய்ஞ்ஞான அனுபூதியற்றவர்களும் சைவசித்தாந்த சாத்திர தோத்திர நூல்களின் உண்மைப் பொருளைக் கற்றும் தெரியாதவர்களும் செல்வாக்கோடு வாழ்ந்த ஒருசூழ் நிலையிலேயே யோக சுவாமிகளின் வருகை நிகழ்ந்தது.
சுவாமிகள் சமய சாத்திரங்களைச் சைவசித்தாந்தம் உட்பட
எதையும் எழுத்தெண்ணிக் கற்றவரல்ல. அத்தகையதொரு தேவை அவருக்கிருக்கவுமில்லை. ஆனால்
கல்லாது யாவுங் கற்றேனே
காயத்தையு என்றன் கைக்குள் வைத்தேனே
அண்ட சராசர மெல்லாம் - சிவசிவ
அகத்திலே கண்டு தரிசித்துக் கொண்டேன். எனப் பக்குவதிலிருந்து அவரது மெய்ஞ்ஞானம் எத்தகையது எப்படி வாய்த்தது என்பது புலனாகிறது. முன்னைத் தவத்தால் சுவாமிவிவேகானந்தரைத் தரிசிக்கும் பேறு வாய்த்தது போலவே நல்லூர் முருகனின் அவதாரமெனச் சுவாமிகளால் வணங்கப்பட்ட செல்லப்பா சுவாமிகளின் சீடனாகும் பேறும் வாய்த்தது. இத்தகைய பெரும்பேறும் அதற்குரிய தகுதியும் சுவாமிகளுக்கு இருந்ததினால்,
இந்த நிலை தெளிய நான் நெக்குருகி வாடிய
இயற்கை திருவுளமறியுமே. எனத் தாயுமானவர் போல் வருந்தும் நிலையன்றிச் சமயாதீதப் பெரும் பொருளை வேதாந்தமும் சைவசித்தாந்தமும் கூறும் உண்மைப் பொருளை, வேதாந்தசித்தாந்த சமரச ஞானத்தை குருநாதர் செல்லப்பன் உணர்த்த உணர்ந்து கொண்டார்.
இந்துக் க்களஞ்சியம்

Page 140
மாயை வசப்பட்டுப் பன்மை உணர்வோடிருந்த தம்மை ஒன்று இரண்டு என்ற பேதத்தினைப் போக்கியது ஒரு சொல் என்பதனை ஒரு சொல்லால் உளம் தூய்மை ஆச்சே - சிவசிவ ஒன்று இரண்டு என்றிடும் பேதமும் போச்சே என்று பாடுவார்.வேதாந்த சித்தாந்தம் வேறாகக் கானோம் எனப் பாடிய அவர்,
யார் என்ன சொன்னாலும் வாது ஆணவத்தை மிகுவிக்கும் திது என்று கூறியுள்ளார்.
சுவாமிகள் கண்ட இந்த உண்மையைத் தாம் அருளிய சிந்தனைப் பாடல் முழுவதும் உணர்த்தியிருக்கின்றார்.
ஒருமுறை கொழும்புத்துறையிலுள்ள ஆசிரமக் கொட்டிலில் தங்கியிருந்தபோது, அவர் முன்னிலையில் சில அன்பர்கள் குழுமியிருந்தனர். அங்குள்ளவர்களைப் பார்த்து இங்கு எத்தனைபேர் உள்ளோம் என்று வினவினார். எல்லோரும் எண்ணத் தொடங்கிவிட்டார்கள். முடிவில் எண்ணிக்கையைச் சொன்னார்கள். இறுதியாகச் சுவாமிகள் , இங்கு ஒருவர்தான் உள்ளார் என்று கூறினார்.
எனவே எது உண்மை? பன்மையுணர்வினை யுடையவர்களுக்குப் பலர் இருப்பது உண்மை. ஒருமையுணர் வுடைய சுவாமிகளுக்கு ஒருவர் இருப்பது உண்மை, சமயப் பிரசாரத்தையோ,சமய விவாதத்தையோ விரும்பாத சுவாமிகளிடம் யாழ். நகரமண்டபத்தில் சிலநாட்களுக்கு முன் நடைபெற்ற ஒரு சமய விவாதத்தைச் சில அன்பர்கள் கூறினார்கள். அந்த விவாதம் வேதாந்தச் சார்பான ஒரு துறவிக்கும் சைவசித்தாந்தச் சாமியான மற்றொரு துறவிக்கும் இடையில் நடைபெற்றது.
தென்னிந்தியாவிலிருந்து வந்து மோதிக் கொண்ட அந்தப் பிரபலமான துறவிகளின் மோதலைப்பார்க்கப் பெருங் கூட்டங் கூடியது. இந்த நிகழ்ச்சியையே சில அன்பர்கள் சுவாமிகளிடம் கூறினார். அதனைக் கேட்ட சுவாமிகள் கூறிய பதில் மிகமிகச் சுருக்கமானது. ஆனால் சிந்தித்து உணரப்பட வேண்டியது அது இதுதான் அவர்களுக்குக்காணும் ரிசிபத்தினிகள்
இருக்கின்றார்கள்
இதன் பொருள் என்ன? அவர்கள் காமத்திலிருந்து விடுபடாத துறவிகள். அவர்கள் காமகோடிகளல்ல. காமம் என்னும் மூல உணர்விலிருந்தே குரோதம், லோபம், மோகம், மதம், மாற்சரியம் முதலிய குணங்கள் தோன்றுகின்றன. இந்த வேதாந்த சித்தாந்த விவாதத்தைத் தூண்டிவிட்டவை அவர்களிடமிருந்த குரோத, மோக, மத, மாற்சரிய உணர்வுகள். இவற்றின் அடிப்படை காமம். இந்தக் காமத்தையே ரிசிபத்தினிகள் எனச் சுவாமிகள் குறிப்பிட்டார். அவர்களுக்குரிசிபத்தினிகள் இருக்கின்றார்கள். அவர்களுக்குக் காமம் இருக்கின்றது. அதுவே அவர்களை விவாதிக்கச் செய்கிறது.
இந்துக் க்களஞ்சியம்

114
இந்தப் பதிவிலுள்ள பொருளாழமும் நகைச்சுவையும் அதனை அவர் வெளியிட்ட யாழ்ப்பாணத் தமிழ் நடையும் எண்ண, எண்ண வியப்பை ஊட்டுகின்றன. சுவாமிகள் சைவசித்தாந்த தத்துவ சிந்தனையில் ஏற்படுத்திய - தாக்கத்தை மாற்றத்தை உணர்ந்து கொள்ளாதவர்கள் சில சைவசித்தாந்திகள் மாத்திரமல்ல; மதமான பேய் பிடித்த வேதாந்திகளும் தான். திருமூலர் போன்றவர்களால் உணர்த்தப்பட்டு மெய்கண்டார் போன்ற சந்தான குரவர்களால் விளக்கப்பட்டு தாயுமானவரால் தெளிவுபடுத்தப்பட்ட வேதாந்த சித்தாந்த சமரசத்தை ஈழத்தில் நிலைநாட்டியவர், வேதாந்த சித்தாந்த சமரச நன்னிலை பெற்ற வித்தகச் சித்தராகிய யோக சுவாமிகளேயாவர்.
சமயத்தில் ஏற்படுத்திய தாக்கம்
சமயம் என்பது தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டுள்ளது. அந்தத் தத்துவத்தை அடைய மக்களை இட்டுச் செல்வதே சமயமாகும்.
தத்துவத்தை இலகுவில் எல்லோரும் புரிந்து கொள்ள முடியாது. வேதத்தின் ஞான காண்டம் தத்துவத்தைப் பற்றிப் பேசுகின்றது. அதனையடையும் சமயக்கிரியைகளை விளக்கு கின்றது கர்மகாண்டம்.
இரண்டாகிய வேதத்தை விளக்கவே தனித்தனி ஆகமங்கள் தோன்றின. இதனையே 'ஆகமமாகி நின்று அண்ணிப்பான் தாள் வாழ்க’ என மணிவாசகர் பாடினார். இந்த ஆகமங்களை மேலும் தெளிவுபடுத்தவே இதிகாசங்களும் புராணங்களும் ஏற்பட்டன. அவற்றை மக்கள் மயப்படுத்தவே கலைகள் பலவிதமாகத் தோன்றின. இவை எல்லாவற்றின் மையமும் இறைவனே.
இந்தக் கலைகளே கலாசாரத்தின் ஊற்றுக்கள். கலாசாரத்தால் வளர்க்கப்படுவதே ஒழுக்கமாகும். தத்துவம் தவிர்ந்த அதனடிப்படையாகக் கொண்டெழுந்த எல்லாமே சமயம் என்ற சொல்லால் குறிக்கப்படுகின்றது. உலகிலுள்ள எல்லாச் சமயங்களின் தத்துவமும் ஏறக்குறைய ஒன்றே. உண்மை,
உணர்ந்தவர்களுக்கு ஒன்றுதான்.
உண்மை ஒன்றாயிருக்கும் போது அதனை அடிப்படையாகக் கொண்ட சமயமும் ஒன்றாயிருந்தாலென்ன? இதனையே மதவாதிகள் மக்களை மதமாற்றம் செய்வதின் மூலம் சாதிக்க முயல்கின்றார்கள். ஆனால் இது இயற்கைக்குப் பொருத்தமற்றது.
தாயுமானவர் சமய கோடிகள் என்றார். உலகில் உள்ள சமயங்கள் எத்தனை என்னும் வினாவுக்குத் தாயுமானவர், கோடிக் கணக்கான சமயங்கள் என்கிறார். சென்ற நூற்றாண்டில் வாழ்ந்த இராமகிருட்டினர் எத்தனை சமயங்கள் உள்ளன என்னும் வினாவுக்கு, உலகில் எத்தனை மக்கள் இருக்கின்றார்களோ, அத்தனை சமயங்கள் இருக்கின்றன என்றார்.

Page 141
இந்த உண்மைக்கு எந்தச் சமயமும் விதி விலக்கல்ல. இந்து சமயத்தில் எத்தனை பிரிவுகள் தோன்றி விட்டன. ஏனெனில் சமயங்கள் மக்களுக்கு வழிகாட்டும் போது அந்தச் சமய நதி தான் பாய்ந்து செல்லும் மக்களின் வரலாற்றுப்பின்னணி, புவியியல், மன இயல் முதலிய பாரம்பரியங்களுக்கு ஏற்பத் தன்னை மாற்றியே பாய்ந்து பயன் விளைத்துச் செல்லும்.
ஜீவகாருண்யத்தை எல்லா மதங்களும் ஏற்றுக் கொண்டாலும் சமணம், பெளத்தம், இந்து சமயம் போன்று ஏனைய சமயங்கள் கடும் போக்கைக் கடைப்பிடிப்பதில்லை.
பலதார மணத்தை இந்திய மதங்களைப் போன்று ஏனைய மதங்கள் கண்டிக்கவில்லை.
விக்கிரக வழிபாட்டைச் சில போற்ற, சில தூற்றுகின்றன. அதிகம் போவானேன்? யாழ்ப்பாணத்தில் இந்துக் கோவில்களில் ஆண்கள் மேலாடையுடன் போவது தடுக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்து, கனடா போன்ற குளிர்ப்பிரதேசங்களில் உள்ள இந்துக் கோவில்களில் இதனைச் செயற்படுத்த முடியுமா?
எனவே வேதத்தின் ஞான காண்டத்தைத் தத்துவத்தின் அடித்தளமாகவும், கர்மகாண்டத்தையும் ஆகமங்களையும் சமயத்தின் சமயக் கிரியைகளின் அடித்தளமாகவும் கொண்டுள்ள நமது சமயம், தான் பின்பற்றும் நெறிகளிலே கால தேசமாற்றங்களுக்கு ஏற்ப வேறுபட்டிருப்பது தவிர்க்க முடியாததாகும்.
“கிரியைகளெல்லாம் ஞானம் கிளர்த்தற்கு வழி” என்று
சிவப்பிரகாசம் கூறும் ஆன்மபக்குவ உயர்நிலையடைந்த உயிர்கள்
சிடட,
செம்மலர் நோன்றாள் சோ லொட்டா
அம்மலங்கழிஇ அன்பரோடு மரீஇ இருக்க வேண்டும் என்றும் 'ஆலயம் தானும் அரன் எனத் தொழுமே” என்றும் சிவஞானபோதம் கூறுவதையும் நினைவிற் கொள்ள வேண்டும்
இந்தப் பேருண்மைகளையெல்லாம் உணர்ந்த சுவாமிகள் இன்றைய காலத்து ஈழநாட்டுச் சமுதாயத்துக்குப் பொருத்தமான செயற்படுத்தக்கூடிய, செயற்படுத்த வேண்டிய அறநெறிகளையும் சமயக்கிரியைகளையும் நற்சிந்தனையிற் கூறியுள்ளார்.
ஏத்துக பொன்னடி எனத் தலைப்பிட்டு,
எழுக புலருமுன் ஏத்துக பொன்னழ தொழுது வணங்குக தூநீறணிக பழுதில் ஐந்தெழுத்தும் பன்னுக பன்முறை எனக் கூறியுள்ளார்.
இந்துசமய தத்துவ நூல்கள் உறுதியான தத்துவத் தளத்தை அமைத்துக் கொடுக்க, அறநூல்கள் மன மாசுகளை நீக்கிப் பண்படுத்தத் தோத்திர நூல்கள் பண்பட்ட வயலில் பக்திப் பயிரை

வளர்ந்தோங்கச் செய்ய திருமந்திரம் போன்ற யோகநூல்கள்
ஆன்ம இறைக் கூட்டமாகிய யோகத்தைக் கூட்டுவிக்கின்றன. இந்நிலை எய்தத் தமிழ் மக்கள் தினமும் ஓதவேண்டிய நூல்கள் மூன்று. திருக்குறள் மனமாசு போக்கிப் பண்படுத்தும்; திருவாசகம் பக்திப் பயிரை வளர்த்தெடுக்கும்; திருமந்திரம் யோகம் கைவரச் செய்யும்; யோகசுவாமிகள் தத்துவத்தளத்திலே
ஏற்படுத்திய தாக்கத்தைப் போன்று சமய தளத்திலும் பெரிய
தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளார். அவர் அருளிய நற்சிந்தனைப் பாடல்கள், தத்துவ தளத்தை அமைத்துக் கொடுத்துள்ளதோடு, பல அறங்களையும் கூறும் அற நூலாகவும் பக்திதரும் தோத்திர நூலாகவும் யோகம் கூடுவதற்குரிய யோக நூலாகவும் அமைந்துள்ளது.
சுவாமிகள் நிறுவிய சிவ தொண்டன் நிலையங்களில் சைவசமய முறைப்படி இக்காலத்துக்குப் பொருந்திய வழிபாட்டுமுறைகள் பேணப்பட்டு வருகின்றன.
அவர் எழுத்துக்களிலும் சிவதொண்டன் இதழிலும் இக்கோட்பாடு வலியுறுத்தப்பட்டு வந்துள்ளது. ஆண்டுதோறும் நடத்திய பாத யாத்திரை அவர் செய்த காலத்துக்கேற்ற மாற்றங்களுள் ஒன்றாகும்.
கூட்டுப் பிரார்த்தனை, கூட்டுவழிபாடு, பாதயாத்திரை முதலியன பேணப்பட்டன.
மாறா இயல்புடையது சமயதத்துவம்; கால இடங்களுக்கேற்ப மாறும் இயல்புடையன சமய நெறிகள்; மாறி வளர்ந்து வரும் சமுதாயத்துக்கு ஏற்பவே சமய நெறிகளில் சிற்சில மாற்றங்களைச் சுவாமிகள் அமைத்துள்ளார்.
வாழ்வியலில் (இல்லறத்தில், துறவறத்தில் ) ஏற்படுத்திய தாக்கம்
யோக சுவாமிகள் துறவறத்துக்கு ஒர் இலக்கணமாய் தூய துறவறத்துக்கு ஒர் எல்லையாய் மிளிர்ந்தவர். அவர் தோற்றத்தைப்பார்த்து அவர் ஒரு சாமியார், ஒரு துறவி என்று கணிக்கமுடியாது. ஈழத்து வடபகுதியில் வாழும் சாதாரண ஒரு மனிதனைப் போலவே காட்சி அளிப்பார்.
துறவிகள் இப்படித்தான் இருப்பார்கள் என்று உணர்வு குடிகொண்டுள்ள மக்கள் மத்தியில் மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம் பழித்த தொழித்து விடின் என்னும் வள்ளுவத்துக்கு இலக்கணமாய் வாழ்ந்தவர். இந்தத் தூய துறவின் ஊற்றாக விளங்கியவர் சுவாமிகளின் குருநாதனாகிய செல்லப்பா சுவாமிகளாவார். சுவாமிகளின் அகம்புறமாகிய ஞானத் தோற்றத்தை வழங்கியவரும் அவரே. இதன் மூலம் இந்து சமயத் துறவறத்திலே ஒரு மாபெரும் புரட்சியே நடைபெற்று விட்டது. இன்று சில துறவிகளால் பரிகாசத்துக்கு இடமாகிவிட்ட துறவறத்துக்குச் சுவாமிகள் காட்டிய வழியே மாற்று மருந்தாகும்.
இந்துக்கலைக்களஞ்சியம்

Page 142
நீத்தார் பெருமையைத் தெய்வத்தோடு ஒப்பவைத்துப் பாயிரத்தில் பாராட்டிய வள்ளுவர், அவர் இயல்பினைத் துறவறத்தில் விளக்கியுள்ளார். அந்த விளக்கத்துக்குச் செயல்வடிவம் கொடுத்து பெருந்தாக்கத்தினைச் சுவாமிகள் ஏற்படுத்தியுள்ளார்.
இன்று துறவிகள், சமயவாதிகள், தம்புறத்தோற்றத்தால் தம் தூய துறவையல்ல, தம் சமயத்தைப் பறைசாற்றுகின்றனர். இதுவே பலரது கூடா ஒழுக்கத்துக்கு நல்லபோர்வையுமாகின்றது.
சுவாமிகளின் மரபு; சித்தர்மரபு, “கூடும் அன்பினில் கும்பிடலேயன்றி வீடும் வேண்டாவிறலின் விளக்கியவர்கள்.”
“கந்தைமிகையாம்' என்னும் கருத்துடையவர்கள் செல்லப்பா சுவாமிகளைப் பற்றிக் கூறும் சுவாமிகள்,
"வேடம் விரும்பிலர்' "கறுத்த மேனியர் கந்தைத் துணியினர்' 'கோலமொன்றும் விரும்பிலர்' "ஆரகத்திலும் சென்றவர் உண்கிலர்’ “விற்றூண் அறியாதான்” "ஒருசோறும் ஒரு கறியும் ஆக்கியுண்ணுமாசான்' 'நீறணியான் காவியுடையணியான்” என்றிங்ங்ணம் கூறுவார்.
தமது குருநாதனைப் போலவே சுவாமிகளும் எளிமையாக வாழ்ந்துவந்தார். பக்தர்கள், அடியார்கள் என்று வருபவர் எல்லோரையும் அவர்தரும் காணிக்கைகளையும் தம் குரு நாதரைப் போலவே ஏற்க மறுத்து ஏசித் துரத்திய சந்தர்ப்பங்கள்
ԼlճU.
உலகியல் போலத் துறவியலில் இணங்கி, அனுசரித்துப் போகும் போக்குக்கு இடமேது? அங்ங்ணம் இணங்கிப் போயிருந்தால் போலிகளின் உறவும் அதனால் பெரும் பொருளும் குவிந்திருக்கும். சித்துக்கள் செய்யவல்ல தெய்வீக ஆற்றலிருந்த போதும் குருவும் சீடனும் அதை ஒரு வழியாகப் பயன்படுத்தவில்லை.
“இட்டசித்திகள் எய்தவும் விட்டிலன்”; சித்துக்கள்
செய்துமக்களை மயக்கக் கூடாது என்பதே குருவின்
கட்டளையாகும். செல்லப்பா சுவாமிகள்,
வருவார் போவாரை ஆசான் - வாயால் வையாமல் வைதுவிடக் கூசான்
கும்பிடச் சால அன்புடன் தான்வரும் பக்தரைக் கால னென்னக் கறுத்துடன் சிறுவன்
வீதியிற் செலும் வீணர்கள் தங்களைப்
போதிக்கும்படி வேண்டியே பேசுவார் குருவைப் போலவே சீடனும் வெறும் வீணர்கள் நெருங்குவதை அனுமதிக்கவில்லை. ೯೧ಕ್ಕವಾಗಿಸು
இந்துக்கலைக்களஞ்சியம்

வெறும் வீனன் எத்தனை வித்தைகள் கற்றாலும் தறுகுறும்பானவை தான்திரானே என்று அவரே பாடியுள்ளார்.
நல்லூர் வீதியில் சமையல் நடந்து கொண்டிருக்கிறது. சீடர் கூட்டம் வாயூறிக்காத்து நிற்கிறது. திடீரென வந்த செல்லப்பா சுவாமிகள், ஒரு தடியால் சமையல் பானைகளை அடித்து நொருக்குகின்றார். வெந்ததும் வேகாததுமான உணவுகள் சிதறுகின்றன. "அவா என்பது தவாப் பிறப்பினும் வித்து'ஆரார் இயற்கை அவர்” இந்த உண்மைகளையே சுவாமிகள் அன்று உணர்த்தினார்கள்.
“சிவதொண்டன் நிலையத்துக்குள் காவியுடுத்துக் கொண்டு கந்த சாமியார் (நல்லூர்க் கந்தன்) வந்தாலும் உள்ளேவிடாதே" என்று உத்தரவு போட்டுவிட்டவர், யோக சுவாமிகள். இங்ங்ணம் தூய துறவொழுக்கத்தால் இந்த நூற்றாண்டின் துறவொழுக்கத்துக்குத் தாம் வரம்பாகிய காட்சியர். சுவாமிகளைச் சூழ வந்தவர்கள் ஆசாபாசங்களில் உழலும் இல்லறத்தவரே. "செய்த வினை இருக்கத் தெய்வத்தை நோபவர்கள்”, “அறும் பாவமென்று அன்று இடாதவர்கள்” இன்று வெறும்பானை
பொங்கவேண்டுமென்னும் மாயாஜாலதை எதிர்பார்ப்பவர்கள்.
“ஒருவன் பற்றை முற்றாகத் துறந்து ஒருபக்கத்தே ஒதுக்கியிருந்தாலும் இந்த உலகம் விடாது. எதுவுமற்ற அவனிடம் உலகம் எதை எதிர்பார்க்கிறது? உலகப் பொருள்களை. சுவாமி ஏதாவது சொல்லுங்கோ, சொல்லுங்கோ என்று அவன் வாயைக்கிளறும். அவனும் ஏமாந்து ஏதும் சொல்லத் தொடங்கிவிட்டால்; கொழுவிக் கொள்ளும்” இது சுவாமிகள் சொன்ன ஒரு செய்தி. சூழவந்த இல்லறத்தார், தமது பிரச்சனைகளுக்குத் தீர்வு காணவே வந்தனர்.
அவர்களுக்குச் சுவாமிகள் வழங்கிய பிரசாதம், வள்ளுவர், ஒளவை போன்றவர்கள் கூறிய இல்லற நெறிகளைப் பின்பற்றுமாறும் விதிப்பயனை மகிழ்வோடு ஏற்றுக் கொள்ள வேண்டுமென்பதுமாகும். இல்லறம் என்னும் தலைப்பிட்டுப் பாடிய பத்துக் குறட்பாக்களில் சுருக்கமாக ஆனால் ஆழமாக அருளுரை வழங்கியுள்ளார்.
நல்லாறு இல்லறமேயென்றும், எல்லா அறங்களிலும் மேலானது இதுவே என்றும், தானம், தவம் இரண்டும் ஆற்றவல்லதாயிருப்பதால் இதுவே ஞான அறமென்றும், அரனும் உமையும் நின்ற நெறி இல்லறமே என்றும், சனகன் போன்ற இராச யோகியர் கடைப்பிடித்த நெறி இதுவே என்றும், இல்லறத்தில் நின்ற ஏந்திழையாள், சூரியனே உதிக்காதே, நில் என்றதும். அது நின்றதென்றும், இல்லறத்தின் பெருமைகளை எடுத்தியம்பியுள்ளார் சுவாமிகள். விதைத்த ஞானவிதை

Page 143
இனித்தான் முளைத்துப் பயிராகி விளைவு தரும். அதற்கேற்ற காலம் கனிந்து கொண்டிருக்கிறது. அவர் மதப்பிரசாரமோ, பிரசங்கமோ செய்யவில்லை. அவர் வாழ்ந்து காட்டினார். அவ்வப்போது சற்பாத்திரத்தில் போட்டு வைத்தார்; நற்சிந்தனையாக எழுதி வைத்தார்.
அவர் அருளிய நற்சிந்தனைகள், அறம் பொருள், இன்பம், வீடு ஆகிய நாற்பொருளும் தரவல்லன. அவர் சிந்தனைகள், சாத்திரம், தோத்திரம், சமயம், அறம், யோகம், முதலியன பற்றி இக்காலத்துக்கு ஏற்ற விளக்கங்கள் கொண்டிருக்கின்றன.
இந்து சமயத்தில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்த வேண்டுமென்னும் நோக்கம் சுவாமிகளுக்கு இல்லை. ஆனால் அவர் சிந்தனைகளும் வாழ்வும் அமைதியான மாபெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றன.
அவரது குருநாதர் அருளிய மகாவாக்கியங்கள் நான்கிற்கும் நற்சிந்தனையும் சுவாமிகளின் வாழ்க்கையும் விளக்கமாக அமைந்துள்ளன.
இராமகிருஷ்ண குருவின் அனுபூதியைச் சீடராகிய சுவாமி விவேகானந்தர் விளக்கியது போல, அது அக்கால இந்தியாவின் தேவையாயிருந்ததுபோலச் செல்லப்பா சுவாமிகளின் அனுபூதிச் செல்வத்தை அவரது சீடராகிய யோக சுவாமிகள் விளக்கியுள்ளார். அது இக்கால இலங்கையின் தேவை. இலங்கையின் இந்து சமயத்தின் , சைவத்தின், தேவை. சைவம் பிறமதக் காழ்ப்பற்ற தன்மையைப் போற்றிவந்துள்ளது. மதமாற்றத்தை விரும்பாதது; பிற மதங்களையும் அனுசரித்துப் போகும் தன்மை உடையது.
நடைபெற்ற சில மதப்போராட்டங்களெல்லாம் பிறமதத்தினர் ஊடுருவல் செய்து இந்து சமயத்தினரை மாற்ற முயன்றபோது ஏற்பட்ட தற்காப்புப் போராட்டங்களேயாகும்.
பிறமதங்கள் இந்து தேசத்தில் புகுந்து அழிவுகள் செய்த போது, இந்துமதம் அந்நிய தேசங்களில் எவ்வித தீங்கும் செய்ததில்லை. சமண, பெளத்த மதங்கள் தமிழ் நாட்டில் புகுந்து அரசர்களுடைய செல்வாக்கால் மதமாற்றம் செய்த போது சைவம் அதனைப் பக்தி நெறியால் புறங்கண்டது. சைவ சித்தாந்தம், தத்துவ விளக்கத்தில் கடவுளை ஏற்காத உலகாயதயர்களைக் கூட அவர்களும் ஒரு நிலையில் நிற்கிறார்கள் என ஏற்றுக் கொண்டுள்ளது. தாயுமானவர் சைவ சமரசத்தின் கொடுமுடியைக் - காட்டியவர். தாயுமானவரிடம் மிகுந்த ஈடுபாடு கொண்ட யோக சுவாமிகள், அவர்கருத்தைப் பல இடங்களிற் போற்றியுள்ளார்.
இவற்றால் யாழ்ப்பாணத்தில் வாழ்ந்த பல முஸ்லிம் அன்பர்கள், அவருடைய அடியாராக வாழ்ந்துள்ளனர். யாழ்ப்பாணத்தில் பணிபுரிந்த புகழ்வாய்ந்த நீதிபதி அக்பர் மிக்கபக்தியுடைய ஒரு பக்தராவார். தென்னிலங்கையிலிருந்து பல சிங்கள பெளத்த அன்பர்கள் அவரைத் தரிசிக்க வருவதுண்டு.

அவரோடு தமக்கேற்பட்ட ஆன்மீக அனுபவங்களை ஆங்கிலத்தில் நூல்களாக எழுதி வெளியிட்டுள்ளனர். இலங்கையின் தேசாதிபதியாகவிருந்த சோல்பரியின் புதல்வரான ஆங்கிலேயர், சுப்பிரமணிய சுவாமியென அழைக்கப்படும் ஹவாயைச் சேர்ந்த அமெரிக்கத் துறவி முதலியோர் சுவாமிகளின் சீடராயினர்.
அவதாரம் 29.5.1872 திங்கட்கிழமை காலை3.30மணி நட்சத்திரம் அவிட்டம் சுவாதி 23.41964 திங்கட்கிழமை காலை 3.30 மணி நட்சத்திரம் ஆயிலியம்
பிள்ளைத் திருநாமம். சதாசிவன் கத்தோலிக்க பெயர்: யோன் கொழும்புதுறைமணியகாரன் சூட்டியது:யோகநாதன் சுவாமிகள் நற்சிந்தனையில் தம்மைக்குறிக்கும் பெயர்கள்: யோகநாதன், சிவயோகன்,யோகன்,
செல்லப்பன் மாணாக்கன்,யோக சுவாமி. சுவாமிகள் திருவாய் மலர்ந்தருளியவை: 1) நற்சிந்தனைப் பாடல்கள் (தொகை 1330) 2) அவ்வப்போது திருவாய்மலர்ந்தருளிய அருளுரைகள்
(அன்பர்கள் தொகுத்தவை) சுவாமிகள் அருளானையால் அன்பர்கள் எழுதியவை: 1) ShurTGOT assrooth - GLorriguujifil (In the Hours Meditation) 2) விவேகானந்த சுவாமிகள் சொற் பொழிவின் சாரம் 3) அத்வைத வேதாந்தம்- கலைப்புலவர் நவரத்தினம் 4) (3600TL656 of 555 Glorry Guuit Li (Serpent Power By Sir John
wood Safe) 5) சங்கராச்சாரியாரின் விவேக சூடாமணி சுவாமிகள் ஆற்றிய பணிகள்: 1) சிவதொண்டன் நிலையம்-யாழ்ப்பாணம் 2) சிவதொண்டன் நிலையம்-மட்டக்களப்பு 3) மதுவிலக்குப்பணிகள் 4) விவசாய வளர்ச்சிப் பணிகள் 5) பாதயாத்திரை 6) சமய விழாக்கள் 7) சைவ சித்தாந்த, வேதாந்த, புராணதிருமுறை வகுப்புக்கள் 8) சிவதொண்டன் -இதழ் வெளியீடு. சிவயோகசுவாமிகளைப்பற்றிஇதுவரைவெளிவந்தநூல்கள் : 1) ஈழத்துச் சித்தர்கள்-நா.முத்தையா 2) முப்பெருஞ்சித்தர்கள்-நா.முத்தையா 3) யோக சுவாமிகள் - ச. அம்பிகை பாகன் 4) என் நெஞ்சில் இடம் கொண்டபெரியார்-மு. வைரமுத்து 5) எமதுகுருநாதர் சிவயோகசுவாமிகள்-சுதுமலைசரவணமுத்துகந்தையா 6) இன்பம் (மகாவாக்கிய விளக்கம் - சமயில் வாகனம் 7) நற்சிந்தனைப் பாடல் விளக்கம்- மு.அருணாசலம் 8) யோக சுவாமிகள் திருச் சரித்திரம் - க.கி.நடராசா 9) சிவயோக சுவாமிகள் புகழ்பாமாலை - க.கி.நடராசா 10) சுவாமிபிள்ளைத் தமிழ்-க.கி.நடராசா 11) Saint Jogeswary and the Testament Truth. 12) யோகசுவாமிகள் வாழ்க்கையும் வழிகாட்டலும்-சிவதொண்டர். 13) சிவயோக சுவாமிகள் - அன்பர்கள் அனுபவம்-பதிப்பாசிரியர்
-கலாநிதி விமலா கிருஷ்ணபிள்ளை. 14) சிவயோகசுவாமிகள் ஏற்றியஞான விளக்கு-வித்துவான்கநவேலன்
117
இந்துக்கலைக்களஞ்சியம்

Page 144
சுவாமிகளின் ஞான பரம்பரை
குரு செல்லப்பா சுவாமிகள்,
அவரின் குரு: கடையிற்சுவாமிகள்
சமகாலத்தவர்: 1) செல்லாச்சி அம்மையார்
2) கதிரவேல்
3) கொழும்புத்துறை விதானையார்
திருஞான சம்பந்தர் (கிருகஸ்த சீடர்)
சுவாமிகளின் சீடர்:
மார்க்கண்டு சுவாமிகள் கந்தசாமி (இலங்கை தேசாதிபதி சோல்பரிப்பிரபுவின் மகன்,
விராம் போதம்) கெளரிபாலா - யேர்மன் சுவாமி, பரிநளிக் குட்டி-அவுஸ்திரேலியா,
சுப்பிரமணிய சுவாமி- ஹவாய். (கந.வே.)
சிவராத்திரி
இது சிவபரம் பொருளைக் குறித்து நோற்கப்படும் விரதங்களுட் தலையாயதாகக் கருதப்படுகின்றது.
மாசி மாதம் கிருஷ்ண பட்சம் சதுர்த்தசி திதியில் - அமாவாசைக்கு முதல் நாள் இவ்விரத தினமாகும்.
சிவராத்திரி என்ற தொடர், சிவனுடைய ராத்திரி, சிவனை வணங்கும் ராத்திரி, சிவமான ராத்திரி எனப் பல பொருள் தருவதாகும். ஆயினும் சிவமான ராத்திரி எனப் பொருள் கொள்வதே சிறந்ததாகும்.
சிவராத்திரி விரதத்தின் தோற்றம் குறித்துப் பல்வேறு புராணக் கதைகள் காணப்படுகின்றன.
உமாதேவி ஒருநாள் விளையாட்டாகச் சிவனது கண்ணைத் தன் கரங்களால் பொத்த உலகெல்லாம் இருள் சூழ்ந்ததென்றும் அத்தினமே சிவராத்திரியாகக் கொள்ளப்படுகின்றது என்றும் ஒரு கதை உண்டு. அந்த இரவில் ஒளிவேண்டித் தவித்த தேவர்களுக்காக சிவன் தன் நெற்றிக் கண்ணைத் திறக்கவே உமை அஞ்சி நடுங்கியவளாய் தன் கைகளை எடுத்தாள் என்றும் உமையின் அச்சத்தைப் போக்குவதற்காகச் சிவன் குளிர்ந்தான் என்றும் அக்கதை கூறுகிறது.
பாற்கடலில் விளைந்த நஞ்சினை சிவன் அருந்திய வேளை சிவனுக்கு ஏதும் கேடு நேருமோ என அஞ்சிய தேவர்கள் இரவு முழுவதும் விழித்திருந்த நாளே சிவராத்திரி என்று பிறிதோர் கதை கூறுகிறது.
திருமாலும் பிரமனும் தங்களுக்குள் யார் பெரியவர் எனத் தருக்கி நின்ற வேளை உலகைச் சூழ்ந்து கவ்விய ஆணவ இருள் அகலும்படியாக சிவபரம் பொருள் சூழப் பெரும் பிழம்பாகத் தோன்றி திருமாலும் பிரமனும் அடிமுடி காணாவகை நின்று அவர்கள் உண்மையை உணர்ந்த நிலையிற் குளிர்ந்து இலிங்க
இந்துக்கலைக்களஞ்சியம்

வடிவிற் காட்சி கொடுத்த நாளே சிவராத்திரியாக
அனுஷ்டிக்கப்படுகிறது. இக்கதையே சிவராத்திரி குறித்து நிலவும் கதைகளுள் பிரதானமானது.
இக்கதையின் உள்ளார்ந்த தத்துவம் மிகவும் உயர்வானது. ஆணவ மயக்கத்தோடு கூடிய நிலையிலோ கல்வியாலோ செல்வத்தாலோ இறைவனைக் காணமுடியாது; வணங்கிய உள்ளமே உண்மையை உணரவல்லது என்ற பேருண்மையே இக்கதையால் உணரப்படவேண்டியது.
நாள்முழுவதும் உபவாசம் இருந்து இரவு நித்திரையையும் தவிர்த்து மனம், மொழி, மெய்களால் சிவனை வழிபடுதல் சிவராத்திரி விரதத்தின் முக்கிய அம்சமாகும். சிவராத்திரியன்று இரவின் நான்கு சாமங்களிலும் சிவன்கோவில்களில் விசேட அபிஷேக ஆராதனைகள் இடம்பெறும்.
சிவராத்திரியில் இலிங்கோற்ப காலம் பிரதானமானதாகும். இலிங்கோற்பவ காலம் என்பது அயன்மால் அறியாதபடி அனற்பிழம்பாய் எழுந்த பரம்பொருள் குளிர்ந்து இலிங்க வடிவிற் காட்சிதந்த காலத்தைக் குறிப்பது. இக்கதையோடு தொடர்புபட்ட சிவமூர்த்தமே இலிங்கோற்பவ மூர்த்தம் எனப்படுவது.
காலையில் நீராடி பகல்முழுவதும் உபவாசம் இருந்து சிவாலயத்தில் நெய்விளக்கேற்றி நான்கு சாமத்திலும் ஐந்தெழுத்து மந்திரத்தை உச்சரித்தோ அன்றேல் திருத் தோத்திரங்களைப் பாடியோ சிவசிந்தனையோடு இருத்தல் வேண்டும். அடுத்தநாள் அதிகாலை பாரணம் செய்தல் வேண்டும். சிவராத்திரியில் ஒரு தடவை பஞ்சாட்சரம் செபித்தால் ஏனைய நாட்களில் நூறு தடவை செபித்தற்குச் சமன் என்று கூறப்படுகிறது.
சிவராத்திரி விரதத்தை அனுட்டிப்பதன் சிறப்பை விளக்குவதாக ஒரு கதை நிலவுகிறது.
ஒரு முறை காட்டிற்கு வேட்டையாடச் சென்ற வேடன் இருட்டிவிட்ட காரணத்தால் இரவுப் பொழுதை பாதுகாப்பாகக் கழிப்பதற்காக ஒரு மரத்தின் மீது ஏறி இருந்து தான் தூங்கி விடாது இருப்பதற்காக அம்மரத்தின் இலைகளை ஒவ்வொன்றாகப் பறித்துக் கீழே போட்டான். அன்றைய தினம் சிவராத்திரி தினம் என்பதும், அவன் இருந்த மரம் வில்வ மரம் என்பதும், அவன் பறித்துப் போட்ட வில்வ இலைகள் கீழே இருந்த சிவலிங்கத்தின் மீது விழுந்தன என்பதும் அப் பாமரனுக்குத் தெரியாது. வேட்டை தேடியலைந்ததில் பகல் முழுதும் உணவின்றியிருந்ததும், இரவில் தூக்கமின்றி விழித்திருந்ததும், சிவலிங்கத்திற்கு வில்வம் இலையால் அர்ச்சித்ததும் அவனுக்கு முத்தியின்பத்தைக் கிட்டும்படியாகச் செய்தன. விரதம் மேற்கொள்ள வேண்டும் என்ற எண்ணமின்றியே பசியிருக்கவும் விழித்திருக்கவும் வில்வம் போடவும் நேர்ந்த போது இத்

Page 145
தினத்தின் மகிமையால் வேடனுக்கு நற்கதி கிட்டியதெனின் முறையாக அனுட்டிப்பவருக்கு எத்தகைய உயர்பேறும் வந்தெய்தும் என்பது இக்கதை மூலம் சிந்திக்கற் பாலது.
சிவராத்திரி ஐவகைப்படும். அவை, நித்திய சிவராத்திரி, பகூடி சிவராத்திரி, மாச சிவராத்திரி, யோக சிவராத்திரி, மகா சிவராத்திரி என்பனவாம். இவற்றுள் மகா சிவராத்திரியே இங்கு குறிப்பிடப்பட்டது. (கஇர )
சிவலிங்கம்
மூர்த்தி பேதங்கள் அறுபத்து நான்கினுள் முதலிற் கூறப்படுவது இலிங்கம். அறுபத்து நான்கு மூர்த்தி பேதங்களில் இலிங்கம், இலிங்கோற்பவர் சந்திரசேகரர், சோமாஸ்கந்தர், பைரவர், வீரபத்திரர், நிருத்தமூர்த்தி, தகூதிணாமூர்த்தி, பிச்சாடனமூர்த்தி ஆகிய ஒன்பது மூர்த்திகள் இலங்கையிலும், இந்தியாவிலும் உள்ள பெரும்பாலான கோவில்களில் வழிபாட்டிற்காக நிறுவப்பட்டிருப்பதைக் காண்கின்றோம். சிவ வழிபாட்டில் இலிங்க்மே முக்கிய இடம் பெறுகிறது. சிவனுக்குக் கோயில் அமைந்துள்ள இடங்களிலெல்லாம் கருவறையில் நிறுவப்படுவது இலிங்கமே.
அருவத்திருமேனி சிவலிங்கம்
சிவ வடிவங்களுள் வெகு பழமை வாய்ந்தது சிவலிங்கம்.
ஊர் பேர் குணங்குறியற்ற பரம் பொருளாகிய இறைவனை ஒரு
குறியில் வைத்து வழிபடுமாறு விளங்குவது சிவலிங்கமாகும்.
கண்ணுக்குப் புலப்படாத அருவத்திருமேனிக்கும், கண்ணுக்குப் புலனாகும் உருவத் திருமேனிக்கும் மூலமான இருப்பிடமாகிய சிவனை அறிந்து வழிபடுதற்கியன்ற சின்னமாகத் திகழ்வது சிவலிங்கம். எதுவுமே புலப்படாத அருவிரிந்து புலப்படும் அண்ட (முட்டை) வடிவமான பிழம்புரு விளங்கல் பற்றி உருவமும், கைகால் முதலிய அங்கலட்சணங்கள் எவையும் தோன்றாமை பற்றி அருவமும் ஒருங்கே காணப்படுவதால் சிவலிங்கம் அருவுருவத் திருமேனி என அழைக்கப்படுகிறது.
ஆரம்ப காலத்தில் உருவவழிபாடு இடம் பெற்று இருக்கவில்லை. மரத்தையோ கல்லையோ நட்டு வழிபட்டனர். இலிங்கவழிபாடு அத்தகைய வகையைச் சேர்ந்தது என ந. சி. கந்தையாப்பிள்ளை எழுதிய சிவம் என்ற நூலில் குறிப்பிட்டு உள்ளார். உலகெங்கும் சிவம் பரவி இருந்த செய்தியை மேல்நாட்டுப் புதைபொருள் ஆராய்ச்சியாளரின் மேற்கோள் களுடன் நிறுவுவது நோக்கற்பாலது. உலகின் மிகப்பழைய நாகரீகங்களில் ஒன்றான மொகஞ்சதாரோ ஹரப்பா அகழ்வாராய்வுகளில் பல சிவலிங்கங்கள் அகழ்ந்தெடுக்கட் பட்டுள்ளன.

119
சிவனின் வீரச் செயல்கள் பற்றிக் கூறும் புராணங்களில் இலிங்கத் தோற்றம் பற்றிப் பல கதைகள் கூறப்படுகிறது. பிரம்மனும், திருமாலும் அடிமுடி தேடும் வண்ணம் இறைவன் தீப்பிழம்பாய்த் தோன்றிய நிலையினை நினைவூட்டுவது இலிங்கம். தேவர் வேண்டத் தீப்பிழம்பு வடிவம் நீங்கி இலிங்க வடிவமாயினன் எனப் புராணங்கள் செப்புகின்றன. இலிங்கத்தின் குவிந்த தோற்றம் இவ்வுண்மையைத் தெளிய வைக்கிறது. சிவபெருமான் இலிங்கத்திலே தோற்றம் பெறும் காட்சியே இலிங்கோற்பவராகும். இது பஞ்ச பூத தலங்களில் ஒன்றான திருவண்ணாமலையில் மாசி மாத கிருஷ்ண சதுர்த்தசியில் நள்ளிரவில் நிகழ்ந்ததாகக் கூறப்படுகிறது.
இலிங்க வகைகள்
சிவலிங்கம் பரார்த்தலிங்கம் அல்ல தாவரஸிங்கம் எனவும், ஆன்மார்த்த லிங்கம் அல்லது இட்டலிங்கம் எனவும் இரு வகைப்படும். யாவரும் வழிபடுவதற்காகத் திருக் கோயில்களில் நிலையாகத் தாபிக்கப்படுவது பரார்த்தலிங்கம் அல்லது தாவர லிங்கம் எனப்படும். தானே தோன்றியதாயின் அது சுயம்புலிங்கம் எனவும்படும். தாபிக்கப்பட்டதாயின் தாபித்தோருக்கேற்ப பெயர் பெறும். விநாயகர் முதலிய கணங்களால் தாபிக்கப்பட்டது காணலிங்கம். தேவர்களால் தாபிக்கப்பட்டது, தைவிகவிங்கம். இருடிகளால் தாபிக்கப்பட்டது ஆரிடலிங்கம், மானிடரால் தாபிக்கப்பட்டது மானுடலிங்கம். பரார்த்தலிங்கத்திற் சிவபெருமான் சங்கார காலம் வரை சாந்நித்தியராயிருந்து ஆன்மாக்களுக்கு அனுக்கிரகம் செய்வார். ஆதி சைவ மரபில் உதித்து, மூவகைத் தீட்சையும் ஆசாரிய அபிடேகமும் பெற்று வேதாகமங்கற்று வல்ல ஆசாரியர்களே பரார்த்தலிங்கத்திற்கு பூஜை, திருவிழா முதலியன செய்வதற்குரியோர் ஆவர். இனி விசேட தீட்சை பெற்றவர்கள் தாமே சிவலிங்கத்திருமேனியைத் தீண்டி வழிபட்டு இன்புற வேண்டும் என்ற விருப்பத்தால், தமது விசேட தீட்சா குருவிடமிருந்து பெற்று, அவரது உபதேசப்படி பூசிக்கும் சிவலிங்கம் ஆன்மார்த்த லிங்கம் அல்லது இட்டலிங்கம் எனப்படும். அது சுவர்ணலிங்கம், படிகலிங்கம், இரத்தினலிங்கம், சைவலிங்கம் எனப் பல வகைப்படும். ஆன்மார்த்த பூசை ஆயுட்காலம் முழுவதும் செய்தற்குரியது. அங்கவீனம், பிணி முதலிய இல்லாதவர் களாகவும், சிவபூசா விதிகளையறிந்து அனுட்டிக்க வல்லவர் களாகவும் உள்ளவர்களே முற்கூறிய இலிங்கங்களைப் பிரதிட்டை செய்து வழிபடுதற்குரியவர்களாவர். ஏனையோர் பூசித்தவுடன் ஆற்றிலேனும், குளத்திலேனும் விடப்படும் கூடிணிகலிங்க பூசையைச் செய்தற்குரியவர்.
வேறெரு வகையாக நோக்கின் இலிங்கங்கள் சலம், அசலம், சலாசலம் என்று மூன்று வகைப்படும். அசலம் அசையாதது. கருவறையில் உள்ளது. அது ஸ்தாவரவிங்கமாகும். வீடுகளில் வைத்துப் பூஜிக்கப்படுவது சலலிங்கங்களாகும். உரிய இடத்தில் உறுதியாக இருப்பது போலக் காணப்படினும் பீடத்தில் வைக்கவும் தனித்து எடுக்கவும் கூடியவை சலாசலலிங்கங்களாகும். காசியப சிற்பநூல் சிவலிங்கங்களை நாகரம், வேசரம், திராவிடம் என்று
ឆែទាញស្អី,

Page 146
மூவகைப்படுத்துகிறது. இலிங்கம் சிற்ப அமைப்பிலே தாராலிங்கம், சகஸ்ர லிங்கம், முக லிங்கம் என வகைப்படுத்தப்படுகிறது. தாராலிங்கம் அடி முதல் நுனி வரைக்கும் பட்டைகள் உடையதாய் இருக்கும். இராச சிம்மனாற் (கி.பி 666-705) கட்டப்பட்ட காஞ்சி கைலாசநாதர் கோயிலில் உள்ள எட்டு அடி உயரமுடைய இலிங்கம் பதினாறு பட்டைகளை உடையது. ஒரே இலிங்கத்தில் இருபத்தைந்து பட்டைகளைத் தீட்டி ஒவ்வொரு பட்டையிலும் நாற்பது சிறு லிங்கங்களை அமைக்க ஆயிரம் இலிங்கங்களாகின்றன. இவை சகஸ்ரலிங்கம் எனப்படும். இவ்விலிங்கத்தின் சிற்பம் திரு வொற்றியூரிற் காணப்படுகிறது. சிவபெருமானின் முகம் தோன்ற அமைக்கப்படுவன முகலிங்கங்களாகும். இவ்விலிங்கத்தில் ஒரே முகம் முதல் ஜம்முகங்கள் வரை அமைக்கலாம். ஜம்முகங்களைப் பொறுத்தவரை நான்கு பக்கங்களில் நான்கு முகங்களும் உச்சியில் ஒரு முகத்தையும் கொண்ட இலிங்கங்கள் பஞ்ச முகலிங்கம் என்று பெயர் பெறும். ஐதரபாத் மாநிலத்தின் பழைய சிவன் கோயிலிலுள்ள வாயிலிற் பஞ்சமுக லிங்கம் காணப் படுகிறது. திருவானைக்காவில் நான்கு புறமும் நான்கு முகம் கொண்ட இலிங்கமும் தேவாரப் பாடல் பெற்ற திருவக்கரையில் மூன்று முக இலிங்கமும் காணப்படுகின்றன.
பூஜித்த பின் விடப்படுவது சணலிங்கம். அரிசி, மண், ஆற்று மணல், அன்னம், பசுச்சாணம், வெண்ணெய், உருத்திராக்கம், தருப்பை, சந்தனம், மலர்மாலை, சர்க்கரை, மா ஆகிய பன்னிரண்டு பொருட்களில் ஏதாவது ஒன்றினாற் சணலிங்கம் செய்யப்படும். ஆற்று நீரோட்டத்தில் உருண்டை வடிவம் பெற்று நன்கு மெருகேற்றப்பட்டவை பாண லிங்கங்களாகும். அவை நர்மதை ஆற்றின் அடித்தளத்தில் எடுக்கப்படுகின்றன. சிற்பியினால் உருவாக்கப்படாது தானே தோன்றிய இலிங்கங்கள் சுயம்புலிங்கங்கள் எனப்படும். இது பற்றி ஆகமங்களும், புராணங்களும் பலவாகப் பேசுகின்றன. நடராஜப் பெருமான் தனது சடையை விரித்து ஆடியபோது அச்சடையில் தங்கி இருந்த கங்கையின் நீர்த் துளிகள் இவ்வுலகிற் சிதறி விழுந்தன. இவ்வாறு விழுந்த நீர்த்துளிகளே சுயம்புலிங்கங்கள் என்று பரமேசுவர ஆகமம் கூறுகிறது. மற்றும் காரண, வாதுள, சுப்பிரபேத, ஆகமங்களும் சுயம்பு இலிங்கம் பற்றிக் கூறுகின்றன. அவற்றை விட மண்ணிலிருந்து புற்றாக வளர்ந்துள்ளவையும் சுயம்புலிங்கங்களாகும். அப் புற்று இலிங்கங்கள் தமிழ் நாட்டில் திருவொற்றியூர், திருவாரூர், திருவையாறு முதலான பல சிவ தலங்களிற் காணப்படுகின்றன. இவற்றிற்கு திருமுழுக்கு தண்ணீரால் ஆட்டப்படுவதில்லை. மாறாக புனித நாட்களில் சாம்பிராணித் தைலம், புனுகுச் சட்டம் முதலிய நெய்ப்பசை உடைய பொருட்களை மேற் பூச்சிடுவது இன்றும் நடைபெற்று வருகிறது. சுயம்புலிங்கத் தலங்கள் அறுபத்தெட்டாகக் கூறப்படுகிறது. இவை உருத்திராவதாரத் தலங்கள் எனப் பெயர்பெறும்.
சிவபெருமானுக்குரிய நிலைகள் அருவம், உருவம், அருவுருவமாகும். அருவ நிலையிலே சிவம், சக்தி, நாதம்,
©រក្តមំ க்களஞ்சியம்

விந்துவாகவும், உருவ நிலையிலே மகேஸ்வரன், உருத்திரன்,
மால், அயனாகவும் அருவுருவத் திருமேனியில் சதா சிவமாகவும்
காட்சி தருகிறார். இதனை சேக்கிழார்
காணாத அருவினுக்கும் உருவினுக்கும் காரணமாய் நீணாகம் அணிந்தார்க்கு நிகழ் குறியாம் சிவலிங்கம்
என்கிறார்.
இறைவனின் சதாசிவமூர்த்தமே சிவலிங்க வடிவமாகும். அதாவது நாம ரூபங்கள் இல்லாத சுத்த சிவம் நாமம், ரூபம் உடையவராய் அன்பர்களாற் புகழப்படுவர்.
சிவலிங்கங்கள் மூன்று கூறுகளை உடையது. அடிப்பாகம் நாற்கோண வடிவமாய் காத்தல் தலைவனான திருமாலின் பாகத்தை உணர்த்தும். மேலுள்ள பாகம் அழித்தல், மறைத்தல், அருளல் ஆகிய முத்தொழிலுக்கும் தலைவனைக் குறிக்கும் சிவபாகமாகும். பீடத்திலிருந்து தொடங்கி வெளியே தீர்த்தம் செல்வதற்கு வழியாக அமைந்துள்ள பகுதி கோமுகி எனப்படும். குவிந்த நீண்டிருக்கும் பகுதி சிவத்தையும், பீடம் சக்தியையும் குறித்து, இலிங்க யோனி வழிபாட்டின் அடையாளமாக இதை கருதுபவரும் உளர். தாந்திரீக வழிபாட்டின் செல்வாக்கின் பின்பே இக் கருத்து வளர்ச்சியடைந்துள்ளது.
ஆரம்பகால இலிங்கங்களை நோக்கும் போது அவை மிகப் பிரமாண்டமான அளவில் உருவாக்கப்பட்டுள்ளன. குப்த மன்னர்களின் காலத்தின் (6- 8ஆம் நூற்) பின்பே அவை அளவிற் சிறியனவாக உருவாக்கப்பட்டன. மேலும் ஆரம்பகால இலிங்கங்கள் நிலத்திலிருந்து எழுவது போன்ற அமைப்புடையன வாய்ப் பீடங்கள் இன்றி காணப்பட்டன. முதலாம் நூற்றாண்டின் பின் சதுரவடிவமான பீடமும் 7ஆம் 8ஆம் நூற்றாண்டின் பின் நாம் தற்போது காணும் வட்ட வடிவமான பீடமும் அமைக்கப்பட்டது. இந்த அமைப்பு பெண்ணின் யோனியாகவும், மேல் நோக்கி நீண்டிருக்கும் பகுதி இலிங்கமாகவும் கருதப்பட்டு உலகின் சிருஷ்டியைக் காட்டி நிற்தாகக் கொள்ளப்படுகிறது.
கி.பி. ஐந்தாம் நூற்றாண்டில் வாழ்ந்த திருமூலர் சிவலிங்கம் செய்யும் பல பொருட்கள் பற்றிக் குறிப்பிடுகிறார்.
முத்துடன் மாணிக்கம் மொய்த்த பவளமும் கொத்துமக் கொம்பு சிலைநிறு கோமளம் அத்தன்றன் னாகமம் அன்னம் அரிசியாம் உய்த்ததின் சாதனம் பூமன லிங்கமே.
முத்து, மாணிக்கம், பவளம், மரம், பளிங்கு முதலிய கற்கள் திருவெண்ணிறு, திருவமுது, அரிசி, இறுகிய தயிர், தூய நெய், பால், பசுச் சாணம், துரிசகன்ற செம்பு, அழல், பாதரசம், புனலில் உண்டாகும் சங்கினம், சுட்டசெங்கல், அழகிய வில்வம், பொன், ஆகிய பொருட்களாற் சிவலிங்கம் அமைத்து வழிபடலாம் என்று திருமூலர் கூறுவார். ஒவ்வொரு வகைப் பொருட்களால் அமைந்த இலிங்கத்தினை பூசிப்பவருக்கு ஒவ்வொரு வகைப் பலன்கிடைக்குமென ஆகமங்கள் கூறுகின்றன.

Page 147
மேலே கூறப்பட்ட விடயங்களைத் தொகுத்து நோக்குமிடத்துச் சிவலிங்கவழிபாடு மிகத் தென்மையானது என்பதும், சொரூப நிலை நிற்கும் இறைவன் ஆன்மாக்கள் மீது கொண்ட பெரும் கருணையினாலே தன் நிலையினின்றும் பல படிகள் கீழே இறங்கி வந்து தடத்த நிலை கொண்ட திருமேனிகளில் அருவுருவத் திருமேனியாகிய லிங்க வடிவமெடுத்து உலகின் தோற்ற ஒடுக்கத்திற்கு நிலைக்களனாக விளங்குகிறான் என்பதும் புலனாகின்றன. (நிநி)
சிவன், பாபநாசம்
Iபநாசம் சிவன் தஞ்சை மாவட்டம் போலம் ஊரில் 1890ஆம் ஆண்டு பிறந்தார். இவருக்கு இராமையா என்பது பிள்ளைத்திருநாமம், இராமசாமி சிவன் என்ற பெயராலும், பிற்காலத்தில் இவர் வாழ்ந்த ஊரின் பெயரோடு பாபநாசம் சிவன் எனவும் புகழ் பெற்றார். இவர் இளமைக்கல்வியை (1897-1907) மஹாராஜா சமஸ்கிருத கலாசாலையிற் கற்றார். 1907ஆம் ஆண்டில் உபாத்யாய, வையாகரணி என்ற பட்டங்களைப் பெற்றார்.
நீலகண்டன் என்னும் இசைக் கலைஞரிடம் இசையை முறையாகக் கற்றார். பின்னர் இராமநாதபுரம் வைத்திய நாதரிடம் இசையைக் கற்றுத் தெளிந்தார். அத்துடன் இசைப் பாடல்களைப் புனைவதின் நுணுக்கங்களையும் கற்றார். எட்டயபுரம் மஹாராஜா இவரைத் தினமும் அழைத்து இவரின் பாடல்களைக் கேட்டு மகிழ்ந்தார். இவரால் முதன் முதல் தியாகராசப் பெருமானை
 

121
நினைந்து பாடல் பாடப்பெற்றது. இராமாயணத்தை இராக மாலிகைகளாக பாடியதுடன் பல இசைப்பாடல்களை பொருட்சுவை, சொற்சுவை நிரம்பப் பாடியுள்ளார். (உ+ம் நான் ஒரு விளையாட்டு பொம்மையா?, கற்பகமே கண் பாராய்) இளமையிலேயே இறையுணர்வும் இசையறிவும், தமிழ்ப்புலமையும் மிக்கவராதலால் ராகங்களில் சில சுரமனமந்த சாகித்தியங்களை இயற்றுவதில் வல்லவராக மதிக்கப் பெற்றார். தாம் இயற்றிய இசைப் பாடல்களில் இராமதாசன் என்னும் முத்திரையைப் பதித்துள்ளார். மயிலைக் கபாலீச்சுவரரைத் தினமும் தனது இசைப்பாடல்களாற் பாடுவர். திருமதி ருக்மணி அருண்டேல் இவரது பாட்டில் இதயத்தைப் பறி கொடுத்தவராய் அவரை அணுகித் தங்கள் தியாசபிக்கல் சொஸைட்டி பிரம்ம ஞான சபாப் பள்ளியில் இசை கற்பிக்க வருமாறு அழைத்தனர். பிரம்மஞான &UT, கலாஷேத்ரா ஆகியவற்றில் இவர் இசைப் பிரிவின் தலைவராகப் பணியாற்றினார். பாபநாசம் சிவன் பாட ருக்மணி அருண்டேல் நடனம் ஆடியுள்ளார் எனக் கூறப்படுகிறது. ஆண்டாள், கிருஷ்ணமாரிக் குறவஞ்சி கண்ணப்பர் குறவஞ்சி முதலாகத் தமிழிலும் கித கோவிந்தம், சாகுந்தலம், சுடர்மாவதாரம், தசாவதாரம் முதலிய சமஸ்கிருதத்திலும் அமைக்கப்பட்ட நாடகங்களுக்கு இசையமைத்தார். இவர் தன்னுடைய காலப்பகுதியிலே திரைப்படங்களுக்கு இசையமைத்ததுடன் திரைப்படங்களில் நடித்தும் உள்ளார். (குசேலா, தியாக பூமி, குபேர குசேலா, பக்த சேதா) மெலிந்த உடலும் உச்சிக்குடுமியும் கொண்டவராய்த் தோற்றமளித்தார். இவரின் தமிழிசைப் பாடல்களுட் சிலவற்றைத் தொகுத்து அண்ணாமலைப் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. சென்னைத் தமிழிசைச் சங்கத்தின் 1965ஆம் ஆண்டு பண்ணாராய்ச்சிக் கருத்தரங்கிலே தலைமையேற்றார். இவர் இசைப் பேரறிஞர் எனப்பட்டம் வழங்கி கெளரவிக்கப்பட்டார்.கலாநிதிப்பட்டமும் வழங்கி கெளரவிக்கப்பட்டார். 1973ஆம் ஆண்டு தன்னுடைய 83 வயதில் காலமானார். தேஹ)
சிவாக்கிரகயோகி
சீமஸ்கிருத தமிழ் மொழிகள் மூலமான சைவசித்தாந்த மரபில் மிகுந்த புலமையுள்ளவரான சிவாக்கிரகயோகி உரைநூல்களாகவும், மூலநூல்களாகவும் சைவசித்தாந்தம் தொடர்பான பல நூல்களை எழுதியுள்ளார். இவர் தமிழ் நாட்டிலுள்ள சூரியனார் கோயில் ஆதீனத்தின் புகழ்பெற்ற முன்னோருமாவார். வாமதேவமுனிவரால் ஸ்தாபிக்கப்பட்ட இவ்வாதீனம், கந்தபரம்பரை என்றும் நந்திபரம்பரை என்றும் அழைக்கப்படும். சிவாக்கிரகயோகிகளின் காலம் பற்றிய திட்டவட்டமான குறிப்புகள் எதுவுமில்லையாயினும், வைஷ்ணவரான மணவாளமுனிவருடனான வாதத்தில் இவர் வெற்றி பெற்றாரென்ற குறிப்பொன்றுள்ளது. மணவாள முனிவரின் காலம் 1370 -1443 என்பதால் சிவாக்கிரக
இந்துக் Ğafa Txi

Page 148
யோகிகளும் ஏறக்குறைய இவர்காலத்தவராகவே இருத்தல் வேண்டுமென்ற முடிபிற்கு வரலாம். தன்னுடைய குருவான சிவக்கொழுந்து தேசிகரிடமிருந்து தீட்சையும், சைவ சன்னியாசமும் பெற்ற சிவாக்கிரகயோகிகள், தனது குருவைத் தொடர்ந்து சூரியனார் கோயில் ஆதீனத்தின் ஆன்மீகத் தலைமையை ஏற்று அதனைத் திறம்பட வழிநடத்திவந்தார். சித்தாந்த மெய்யியலிலும் சைவநடைமுறையிலும் தலைசிறந்த ஆசானாக ஏற்றுக் கொள்ளப்பட்ட இவர், சைவசித்தாந்த சிந்தனா கூடத்தில் மிகமுக்கிய இடத்தைப் பெறுகிறார்.
அருள்நந்திசிவாசாரியாரின் சிவஞானசித்தியாருக்கு மணிப்பிரவாள நடையில் இவரெழுதிய உரை மிகவும் பிரபல்யமானது. வடமொழி நூல்களான சர்வஞானோத்திரம், தேவிகாலோத்திரம் ஆகிய உபஅயூகமங்களிற்கும், ஹரதத்தரின் சுருதிசூக்திமாலைக்கும் தமிழுரைகளையும், 6@5F6】 சித்தாந்தத்தின் அடிப்படைக் கருத்துக்களை விளக்கும் வகையில் சிவநெறிப்பிரகாசம் என்ற தமிழ்நூலும் எழுதியுள்ளார். ரெளரவ ஆகமத்தின் பாவ விமோசனப் படலத்தில் உளதாகக் கருதப்படும் சிவஞானபோதத்திற்கு வடமொழியில் சிற்றுரை, பேருரை என இரு உரைகள் சிவாக்கிரகயோகிகளால் எழுதப்பட்டுள்ளன. சிற்றுரை சிவஞானபோத சங்கிரக வியாக்கியானம் என்றும், பேருரை சிவாக்கிரக பாடியம் எனவும் அழைக்கப்படும். சிவஞான போதத்திற்கு சைவப்பொருளின் உண்மையே விடயமெனவும், அதனை அறியும் அவாவுடையவன் அதிகாரியென்றும், அதனைத் துணிந்து கோடலே இடையீடின்றிப் பெறும் உறுதியான பயன் என்றும் முதற் சூத்திரத்தின் முன்னுரையில் சிவாக்கிரகயோகி குறிப்பிடுவது அவதானிக்கத் தக்கது. சிவஞானபோதத்தின் பன்னிரு சூத்திரங்களும் பாண்டிச்சேரி பிரெஞ்சு நிறுவனத்தாரால் வெளியிடப்பட்டதும், என். ஆர். பாட் என்பாரால் 1985இல் பதிப்பிக்கப்பட்டதுமான ரெளரவ ஆகமத்தின் முதலாம் பாகத்தில் இடம்பெறவில்லையெனினும், வடமொழிச் சிவஞான போதத்திற்கு ஞானப்பிரகாச முனிவர் விருத்தியுரை செய்திருப்பதும், சிவஞான முனிவரின் சிவஞானபோத சிற்றுரையில் (முத்தையாப்பிள்ளையின் பதிப்பில்) அது காணப்படுவதும் குறிப்பிடத்தக்கது. சிவஞானபோத முதலாம் சூத்திரத்திற்கான சிவாக்கிரகபாடிய உரை நீர்வேலி சங்கரபண்டிதரின் மகனான சிவப்பிரகாச பண்டிதரால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு, கந்தர்மடம் சுவாமிநாத பண்டிதரால் 1916இல் பதிக்கப்பட்டுள்ளது. மேற்குறிக்கப்பட்ட நூல்களிற்கு மேலதிக சைவசன்னியாச பத்ததி, கிரியாதீபிகை, சைவபரிபாசை ஆகிய நூல்களும் இவரால் வடமொழியிற் செய்யப்பட்டுள்ளன.
சர்வஞானோத்திர ஆகமத்தின் ஞானபாதத்திற்கு சிவசமவாத உரையொன்றுள்ளது. இவ்வுரை தவறானதென சிவாக்கிரக யோகிகள் தனது மாபாடியத்தில் மறுத்துரைத்தமை குறிப்பிடத்தக்கது. சிவாக்கிரக பாடியத்தைக் கற்பதற்கு ஏதுவாக,
இந்துக்கலைக்களஞ்சியம்
12

சித்தாந்தப்பொருளைச் சுருக்கி விளக்கும் வகையில் எழுதப்பட்ட நூலே சைவபரிபாஷையாகும். பேராசிரியர் சூரியநாராயண சாஸ்திரிகளால் சைவபரிபாஷை ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டு, சென்னைப் பல்கலைக்கழகத்து மெய்யியற்றுறை யினரால் 1982இல் வெளியிடப்பட்டது. சைவ சன்னியாசபத்ததி 1932இல் தருமபுர ஆதீன வெளியீடாக வெளிவந்தது. இந்நூலில் நான்காம் வருணத்தவர்க்கும் சந்நியாசம் உண்டென்பது சிவாக்கிரகயோகிகளினால் நிறுவப்பட்டுள்ளது மட்டுமல்லாது, இவர்கள் அனுட்டிக்க வேண்டிய ஸ்நானம், சந்தி, பூசை, தீட்சை, சந்நியாசம் என்பன பற்றிய விரிவான விளக்கங்களும்
அந்நூலில் தரப்பட்டுள்ளன. (சேர, தி)
சிவாசாரியர்கள்
சிவாகமங்கள் திருக்கோயில் பற்றியும், திருக்கோயிலில் நிகழும் கிரியைகள் பற்றியும் சிறப்பாக விரிவுபடக்கூறும் பரந்த மரபினைத் தன்னகத்தே கொண்ட புனித நூல்களாகும். திருக்கோயிலில் நிகழும் கிரியைகளையும் திருக்கோயில் அமைவுகளையும் பொருள்படவும், தத்துவார்த்தமாகவும் சைவசமயத்தார்க்கு விளக்கியுரைக்கத்தக்க தகுதியுடையோர் ஆச்சார்யார்கள். இவர்கள் சிவசம்பந்தமுடையோராகையால் சிவாச்சார்யார்கள் எனச் சிறப்புப் பெற்றவர்களாகின்றனர்.
சிவாகமங்களுள் மூலசிவாகமங்கள் காமிகம், யோகஜம், சிந்தியம், காரணம், அஜிதம், தீப்தம், சூக்ஷமம், சஹ்ஸ்ரம், அம்சுமான், சுப்ரபேதம், விஜயம், நிஸ்வாசம், ஸ்வாயம்புவம், ஆக்னேயம், வீரம், ரெளரவம், மகுடம், மலம், சந்திரஞானம், முகபிம்பம், ப்ரோத்கீதம், லலிதம், சித்தம், சந்தானம், சர்வோக்தம், பாரமேஸ்வரம், கிரணம், வாதுளம் எனும் இருபத்தெட்டாகும். ஒவ்வொரு மூலசிவாகமங்களுக்கும் உபாகமங்களும் உண்டு. சிவாகமங்கள் சதாசிவனது ஈசானம், தற்புருஷம், அகோரம், வாமதேவம், சத்யோஜாதம் எனும் முகங்களிலிருந்து சிவகணங்களுக்கும், ருத்ரகணங்களுக்கும் உபதேசிக்கப்பட்ட சிறப்பினால் சிவபேதம், ருத்ரபேதம் என வகைப்படுகின்றன. விதி நூல்களாகிய சிவாகமங்கள் என்றும் வழுவாத தீட்சை மரபினையும், குலபாரம்பரியத்தினையும் பேணி வருவதோடு கிரியைகள் திருக்கோயில் அமைப்புக்கள் ஆலய அமைப்பின் தத்துவார்த்தங்கள் என்பனவற்றையும் கூறி நிற்கின்றன. கிரியைகளை நிகழ்த்தவும் சிவாகமங்களைக் கற்று வழிப்படுத்தவும் தகுதி வாய்ந்தவர்களே ஆச்சார்யர்கள் ஆவர். இவர்களைப் பற்றியும் இவர்களுக்கு இருக்க வேண்டிய தகுதிப்பாட்டினையும் கூறும் பகுதியே ஆச்சார்ய லக்ஷண விதி எனும் படலமாகும்.
சிவாகமங்கள் சைவோற்பத்தி பற்றிப் பேசுகின்றன. அவை சைவம், பாசுபதம், சோமம், லாங்குலம் எனும் நான்கு பிரிவுகள். அவற்றுள் சைவ சித்தாந்தம் ஸ்வதந்திரம் என்றெல்லாம் பேசப்படும் சிறப்புக்களுடையது. சிவாகமங்கள் சார்ந்த மரபுகள்

Page 149
எவ்வாறு தோற்றம் பெற்றன என காமிகாகமம் விளக்குகையில் சிவனிடமிருந்து சைவம் உண்டானது. சைவத்திலிருந்து சதாசிவன் உண்டானார். சிவனாலும் சைவத்தாலும் சுத்தாத்மாவாக உள்ளவர்கள் சிவப்பிராமணர்கள். இவர்கள் தேசிகர், சுத்தசைவர், குருக்கள், தேவகர்மர், ஆச்சார்யர், போதகர், சர்வசாதகர், மூர்த்திபர், சாந்திபர் ஆதிசைவர்,சிவத்விஜர் எனப் பிறப்பினாலும் தீக்ஷயினாலும் சிறப்புப் பொருந்தியவர்களாகி உலகத்தின் நன்மைக்காகவும் எவ்வுயிர்க்கும் முக்திக்கும் சிவனருளுக்கும் காரணமாக இருப்பவர்கள். 6@凸开剑 சித்தாந்தத்தை அறிந்தவர்களாவும் விளங்கும் இவர்களே லோககுரு எனவும் போற்றுதற்குரியவர்கள் என விளக்குகின்றது. இத்தன்மையை அஜிதாகமம் விளக்குகையில், ஆச்சார்யாரே சிவன், சிவனே ஆச்சார்யர், இருவருக்குமிடையே பேதமில்லை. எனினும் ஸ்தாவரம், ஜங்கமம் என இருவகைப்படுவர். சிவம் ஸ்தாவரம், ஆச்சார்யார் ஜங்கமம் என ஆச்சார்யரின் சிறப்பினை எடுத்துரைக்கின்றது.சைவர்களை சிவவாழ்விற்கு வழிகாட்டியாக விருந்து சிவன் பால் வழிப்படுத்துபவரே சிவாச்சார்யார் ஆவர். எவர் சிவனது மரபைப் பின்பற்றுவதோடு மற்றையோரையும் சிவன்பால் வழிப்படுத்துகின்றாரோ அவரே சிவாச்சார்யார் எனும் பெயரை பொருள் பொதியத் தாங்கி நிற்கின்றார்.
இந்து சமயமரபிலும், சைவ மரபிலும் ஆச்சார்யார், குரு என பெரியவர், மரியாதைக்குரியவர் என்ற பொருள் விளக்கத்துடனும் அறியாமை இருளை நீக்கி அருளொளியை வழங்குபவர் எனும் சிறப்புப் பொருளுடனும் சுட்டப்படுகின்றார். குருவின் சிறப்பினை சாஸ்திரங்களும், குருகீதையும் மிக விரிவாக எடுத்துக் கூறுகின்றன.
லக்ஷண விதிகளைக் கூறும் சிவாகமங்கள் சரியா, க்ரியா, யோக, ஞான, வித்யா பாதங்களுள் கிரியா பாதத்துள் கர்ஷணம். பிரதிஷ்டை, உற்சவம், பிராயச்சித்தம் எனும் கிரியைகளையும் நித்தியம் நைமித்தியம் காம்யம் எனும் வகைகளையும் செய்யத்தக்க ஒருவர் எவரோ அவரே ஆச்சார்யார் என்று கூறும். அவர் எத்தகைய இலட்சணங்களோடும் தோற்றப் பொலிவோடும், ஆசாரங்களோடும் விளங்க வேண்டும் என்பதனை அசிந்த்ய விஸ்வசாதாக்கியம் (23), உத்தரகாமிகம் (24), பூர்வகாரணம் (26) சிந்தியம் கை (27) மகுடம் (12), யோகஜம் கை (2), வீரம் கை (7), சந்தான சம்ஹிதை கை (57), சுப்ரபேதம் (க்ரி, 21), சூக்ஷமம், ஸ்வயம்வம், அஜிதம் (84), குமாரதந்திரம் (50) ஆகிய சிவாகமங்கள் ஆச்சார்ய லக்ஷணவிதி படலம் எனும் அத்தியாயத்தின் மூலம் எடுத்துரைப்பதோடு ஏனைய விடங்களிலும் ஆச்சார்யாரின் தன்மைகளை எடுத்துரைக் கின்றன.
ஆச்சார்யார்களில் சிவனின் ஈசானம், தற்புருஷம் அகோரம், வாமதேவம், சத்யோஜாதம் எனும் ஐந்து முகங்களிலிருந்து உண்டானவர்களாக அகஸ்தியர் கெளதமர், பரத்வாஜர், காசியபர்,

கெளசிகர் எனும் ஐவர் சுட்டப்படுகின்றனர். இவர்களுக்குச் சிவனின் அர்ச்சனையின் பொருட்டு சிவனே தீகூைடி அளித்தார். இந்த ரிஷிகளின் வம்சங்களினூடாக ஒருபரம்பரையும் பாரம்பரியமும் உண்டானது. இந்த ரிஷி பரம்பரையில் உண்டானவர்களே சிவத்விஜர்கள் எனும் ஆதிசைவர்கள். இவர்களூடாக ஒரு சந்தானம் ஏற்பட்டது. இச்சந்தானத்திற்காக மேருமலையின் அருகில் ஐந்து மடங்கள் உண்டாயின. அவற்றுள் நடுவேயுள்ள மடம் மருந்தகாளிசமடம், அதிபதி துர்வாஸர், கிழக்கே ஆமர்த்தகிமடம், அதிபதி குரு, தெற்கே புஸ்பகிரிமடம், அதிபதி ததீசி; வடக்கே கோளகாமடம், அதிபதி சுதேவர்; மேற்கே ரணபத்திரமடம், அதிபதி உபமன்யூ என்று ஆதிசைவ சந்தான மரபின் விரிவுகளைச் சிவாகமங்கள் விரிவுபடுத்துகின்றன.
இந்து சமய மரபில் அறிவு என்பது வித்தை எனப்படுகின்றது. பரவித்தை முக்தியை விரும்புபவர்களுக்குரியது என்று சிவாகமங்களுள் பேசப்படுகின்றது.
சிவனது ஐந்து முகங்களிலிருந்து தோற்றம் பெற்ற ரிஷிகளான காசியபர், ஊர்த்தவமுகத்தால் சிவகோசரர் கெளசிகர் தற்புருஷ முகத்தால் சிவகோசரர் பாரத்வாஜர், அகரோமுகத்தால் ஜோதிகோசரர் கெளதமர், வாமதேவமுகத்தால் சாவித்ரி கோசரர், அகஸ்தியர், சத்தேயாஜாதமுகத்தால் வியோமகோசரர் என தீகூைடியின் சிறப்பால் உண்டாயினர். இவ்வைந்து கோத்திரங்களினின்று உண்டானவர்களே ஆதி சைவர்கள் எனும் சிவத்விஜர்கள் ஆவர். இவர்கள் உபநயனத்தால் வேதங்களையும், அவற்றுள் சிறப்பாக யஜுர்வேதத்தையும், தீகூைடியால் சிவாகமங்களையும் கற்பதோடு போதாயன சூத்திரத்தையே பின்பற்றுபவர்களாக வேண்டிய சிறப்பினையும் காமிகம், காரணம்,
சுப்ரபேதம் ஆகிய ஆகமங்கள் வலியுறுத்திக் கூறுகின்றன.
ஆத்மார்த்தம், பரார்த்தம் எனும் இரண்டு பூசைகளையும் செய்யத்தக்க ஆச்சார்யார் எத்தகைய லக்ஷணங்களோடு விளங்க வேண்டும் என்பதனைப் பூர்வகாரணாகமம் விளக்குகையில், ஆதிசைவ மரபில் தோன்றிய மேலானவரான ஆச்சார்யார் அத்யயனம், அத்யாபனம், யஜனம், யாஜனம், ஈதல், ஏற்றல் எனும் ஷட்கர்மாக்களைச் செய்பவர்களாகவும், ஆதிசைவ மரபில் தோன்றியவரிடம் சரியை முதலானவைகளை வரன்முறையாகப் பெற்றவராகவும் 6莓于岔上 சித்தாந்த தத்துவத்தை அறிந்தவர்களாகவும் தேவன் அக்னி, குரு ஆகியோரிடத்தில் பக்தியுடையவராகவும் எல்லா ஆசாரத்துடனும் கூடியவராகவும் தபஸ்விகளிடத்தில் இரக்கமுடையவராகவும், சகிப்புத்தன்மை யுடைவராகவும், இந்திரியங்களை வென்றவராகவும் வெற்றி தோல்வியைச் சமமாக மதிப்பவராகவும், வேதாந்தத் தத்துவங்களை அறிந்தவராகவும், தத்துவார்த்தங்களை விளக்கவல்லவராகவும் தர்மம் கிரியை இவைகளில் நிபுணத்துவமடைந்தவராகவும், விருப்பு வெறுப்புக்கள் பாராதவராகவும் மேலான சிவதத்துவத்தையே எவ்வேளையிலும்
இந்துக்கலைக்களஞ்சியம்

Page 150
சிந்தித்துக் கொண்டிருப்பவராகவும், சிவனது கட்டனைக்குக் கீழ்ப்படிபவராகவும், கிருஹஸ்தராகவும், வாக்கு வல்லமை பொருந்தியவராகவும், நல்லொழுக்கம், பார்ப்பதற்கு அழகு இவைகளுடன் கூடியவராகவும், சிகையோடோ கட்டப்பட்ட கேசத்துடனோ விளங்குபவராகவும், தாடி மீசை இவைகளற்றவராகவும், நோயற்றவராகவும், தீகூைடி பெற்றவராகவும் மந்திரம், முத்திரை, கிரியை இவைகளை நன்கு அறிந்தவராகவும், பதவாக்கிய பிரமாணங்களை அறிந்தவராகவும், பசுசாஸ்த்திரத்தில் பாராமுகமாக இருப்பவராகவும், சிவதந்திரத்தில் மாத்திரமே மனதைச் செலுத்திய ஆத்மாவையுடையவராகவும், 6T6) Gort உயிர்களிடத்தும் நன்மை செய்வதில் விருப்பமுடையவராகவும், வாஸ்துவித்தையில் அப்பியாசம் உடையவராகவும், சல்யோத்தாரம் பற்றி நன்கு அறிந்தவராகவும், எல்லா அங்கங்களும் நிறைவு பெற்றவராகவும், எல்லா லசஷ்ணங்களோடும் கூடியவராகவும் விளங்க வேண்டும் எனக் கூறுகின்றது. இதே கருத்துடைய தன்மைகள் சுப்ரபேதம், காமிகம் குமாரதந்திரம் முதலான ஆகமங்களிலும் பேசப்படுகின்றன. கும்பரபேதாகமம் மாத்திரம் வயதெல்லையைப் பற்றிக் கூறுமிடத்து பதினாறு வயதிற்கு மேற்பட்டவராகவும் எழுபது வயதிற்குட்பட்டவராகவும் இருத்தல் வேண்டும் எனக் கூறுகின்றது. இவற்றைவிட ஸன்யாஸிகள் தவிர்ந்ததாக பெளதிக பிரம்மசாரிகளும் ஆசாரிகளும் ஆச்சார்யாராக விளங்கலாம் என வலியுறுத்துகின்றது.
ஆச்சார்யார்கள் ஐந்து வகைப்படுவர். சதாசிவனது உடலிலிருந்து தோற்றம் பெற்றவனான ஆச்சார்யாருள்ளும் முகத்திலிருந்து அர்ச்சகரும் இருதயத்திலிருந்து ஸ்தானிகரும்: குஹயதிலிருந்து பாசகரும் பாதத்திலிருந்து பரிசாரகரும் உண்டாயினர் எனக் காமிகாகமம் கூறுகின்றது. இவர்களுள் ஆச்சார்யார் சமயம், விசேஷம், நிர்வாணம், அஸ்திராபிஷேகம், ஆச்சார்யாபிஷேகம், சிகாசேதனம், விஸ்வங்களின் சேதனம் எனும் ஏழுவகைத் தீகூைடிகளைப் பெற்று மஹாகாரண பஞ்சாக்ஷரமந்திர உபதேசம் பெற்றவராவார். இவர் நித்திய நைமித்திய காமிய கிரியைகள் செய்வதற்குத் தகுதி வாய்ந்தவர். அர்ச்சகர் சமயம், விசேஷம், நிர்வாணம், அஸ்திராபிஷேகம் ஆச்சார்யாபிஷேகம், சிவசேதனம் எனும் ஆறு தீகூைடிகளைப் பெற்றவராவார். இவர் காரணபஞ்சாகூடிர மந்திர உபதேசம் பெற்றவராவார். இவர் நித்யபூஜாமாத்தரம் செய்வதற்குத் தகுதியுடையவர். இவர் ஒருபோதும் நைமித்திகம் செய்யக் கூடாது. ஸ்தானிகர் சமயம் விசேஷம், நிர்வாணம், அஸ்திராபிஷேகம் எனும் நான்கு தீகூைடிகளைப் பெற்றவராவார். இவர் சூக்ஷம பஞ்சாக்ஷர மந்திர உபதேசம் பெற்றவராவார். இவர் சிவாக்னியில் நைவேத்தியங்களைச் செய்யத்தக்கவராவார். பரிசாரகர்கள் சமயம், விசேஷம், நிர்வாணம் எனும் மூன்று தீகூைடிகள்
பெற்றவராவார். இவர் ஸ்தூல பஞ்சாக்ஷர மாந்திர உபதேசம்
இந்துக்கலைக்களஞ்சியம்

பெற்றவராவார். இவர் அபிஷேகத் தீர்த்தம் பூஜோபகரணங்களைச் சேகரித்தல் முதலானவைகளைச் செபிக்கத்தக்கவராவர் என மேலும் விரிவுபடுத்திக் கூறுகின்றது.
ஆச்சாரியார்களின் வேறுவிதமான பிறப்புக்களால் உண்டான தன்மை, இவர்கள் விவாஹம் செய்யத்தக்கவர்கள் யாவர் போன்ற பல விடயங்களை ஆகமங்கள் விளக்கி நிற்கின்றன.
திருக்கோயிற் கிரியைகளில் ஆச்சார்யார்கள், போதகர், சர்வசாதகர் எனும் மூன்று தன்மைகளை ஆகமங்கள் வகைப்படுத்துகின்றன. ஆச்சார்யார் என்பவர் எல்லாக் கர்மாக்களையும் செய்யத்தக்கவர். இவர் ஆத்மார்த்த, பரார்த்தக் கிரியைகளைச் செய்ய வேண்டும். ஆச்சர்யாருக்கு மேலானவரே போதகர். இவர் மந்திரம், கிரியை, பாவனை முதலியவைகளை போதகம் செய்பவராவார். போதகர்களுக்கு மேலானவர் சர்வசாதகர்; இவர் எல்லாத் தத்துவார்த்தங்களிலும் பாண்டித்தியமுள்ளவர் எனவும் மந்திரம், கிரியை, பாவனை என்பனவற்றையும், எல்லாக் கர்மாக்களையும் நன்கறிந்தவர் எனவும் காமிகாகமம் கூறுகின்றது.
ஆச்சார்யார்கள் எத்தகைய லக்ஷணங்களோடு விளங்கி னாலும் அவர்களை ஆச்சார்யார்களாகக் கொள்ளவேண்டும் என விளக்கும் அதேவேளை, அந்த இலட்சணங்கள் இல்லாதவிடத்து அவர்களை விலக்க வேண்டும் என்பதனையும் சிவாகமங்கள் கூறாதுவிடவில்லை என்பது இங்கு மனம் கொள்ளத்தக்கது.
ஆச்சாரியார்கள் உபவிதம், ருத்ரக்ஷம், உத்தரீயம், விபூதி, ஆதிசைவ மரபு என்னும் பஞ்சமூர்த்தங்களைத் தன்னகத்தே கொண்டவர்களென குமாரதந்திரம் கூறுகின்றது.
ஆச்சார்யார்கள் செய்யும் ஸ்தாபனம் முதலான கிரியைகளின்போது இவர்களோடு இணைந்து அஷ்டமூர்த்தி வடிவமான இறைவனது வடிவத்துள் ஒன்றினைப் பெற்று அக்னியில் பாதுகாத்து மீண்டும் ஆச்சார்யரிடத்தே ஒப்படைப்பிப்பவர் மூர்த்திபர் எனப்படுவர். இவர்கள் எத்தகைய லக்ஷணத்தோடு விளங்க வேண்டும் என்பதனை பூர்வகாரணாகமம் விளக்குகையில் ஸ்தாபகர்களுக்கு அனுகூலமாக இருப்பவராகவும் நல்லபிப்பிராயமுடையவராகவும்: மூர்த்தியை அறிந்தவராகவும் மூர்த்தியைப் பாதுகாப்பவருமாக எல்லா மூர்த்திகளுக்கும் எல்லாக் கர்மாக்களிலும் நல்ல விருப்பமுடையவர்களாகவும் விளங்க வேண்டும் என விளக்குகின்றது.
இத்தகைய லக்ஷணங்களையுடைய ஆச்சார்யார்கள் தந்திர சங்கரி தோஷம் ஏற்படாதவாறு கிரியைகளை எவ்வாகமத்தில் கூறப்பட்டுள்ளதோ அவ்வாகமத்திற் கண்டவாறே மேற்கொள்ள
வேண்டும் என்பதும் நன்கு வலியுறுத்தப்படுகின்றது.

Page 151
சிவாத்வைதம்
சிவனுக்கும் ஆத்மாவிற்குமிடையில் பேதமில்லை யென்ற கருத்துடன் வழிபடுவதே உபாசகனுக்கு முத்தியைக் கொடுக்கும். உலகபந்தத்திலிருந்து விடுபட இதைத்தவிர வேறுவழியேயில்லை என்பதே சிவாத்வைதமாகும். சிவ- அபேதபாவனையால் சிவத்துவம் கிடைக்கின்றது. வழிபடுபவன் வேறு சிவன் வேறு என எண்ணினால் முத்தி கிடைக்காதென்பதும் சிவாத்வைதத்தின் நிலைப்பாடாகும். இதனை சைவவிசிஷ்டாத்வைதம் எனவும் அழைப்பர். பிரமசூத்திரத்திற்கு சைவ ஆகமங்களை அடிப்படையாகக் கொண்டு சிறிகண்டர் இயற்றிய பாடியமே சிவாத்வைதத்தின் ஆதாரநூலாகும். இது சிறீகண்டபாடியம் என அழைக்கப்படும். சிறீகண்டபாடியத்திற்கு நிஜகுண சிவயோகி, ஹரதத்த சிவாசாரியார், பிரஹ்ம வித்யாதரீந்தரர், அப்பைய தீட்சிதர் ஆகியோர் உரையெழுதியிருந்தபொழுதும், இன்று அப்பைய தீட்சிதரின் உரையான சிவார்க்கமணி தீபிகை மட்டுமே கிடைக்கக்கூடியதாயிருக்கிறது. இவைதவிர சிவாத்வைத நிர்ணயம் என்ற அப்பைய தீட்சிதரின் பிறிதொரு நூலும் குறிப்பிடத்தக்கது. சிவாத்வைதம் வேதங்களையும் சைவ ஆகமங்களையும் சுருதியாக ஏற்றுக்கொள்கின்றது. சிறீ கண்டரின் அபிப்பிராயப்படி வேதங்கள் மட்டுமல்ல, உபநிடதங்கள் கூட சைவாகமங்களின் இறையியற் கருத்துக்களுடன்
உடன்படுவனவாகும்.
சிறீகண்டபாடியமே காசிவாசி செந்திநாதையரால் தமிழில் நீலகண்டபாடியமென மொழிபெயர்க்கப்பட்டது. இவ்விடத்து ஒரு சுவையான செய்தியுண்டு. அதாவது சிறீகண்டரின் ஆசிரியராக விருந்த சுவேதாசாரியரே சைவசித்தாந்தத்தின் முதனூலான சிவஞானபோதத்தின் ஆசிரியரான மெய்கண்டாரென்பதே அச்செய்தியாகும். உண்மை எவ்வாறாயினும், சைவ சித்தாந்தத்திற்கும் சிவாத்வைதத்திற்குமிடையிலான கருத் தொற்றுமையே மேற்படி செய்திக்குக் காரணமாக இருந்திருக்கலா மென நாம் ஊகிக்கலாம். ஆன்மஈடேற்றத்திற்கு ஏதுவாக சம்சாரபந்தம் சிவசித்தத்தினால் ஏற்படுத்தப்பட்டுள்ள தென்பதும் இருசாராரும் ஏற்றுக்கொள்ளும் முடிவாகும். சைவசித்தாந்திகள் போலவே சிவாத்வைதிகளும் பதி, பசு, பாசம் என்ற முப்பொருள் உண்மையையே ஏற்றுக்கொண்டவர்களாவர். செம்பிற் களிம்பு போல ஆன்மாக்கள் அனாதியே பாசத்தாற் பீடிக்கப்பட்ட வையாயிருக்கின்றன. ஆன்மாக்களின் பாசநீக்கத்திற்காகவே உலகம் படைக்கப்பட்டதென்பது இருசாராருக்கும் ஒப்பமுடிந்த முடிபாகும்.
எவ்வாறாயினும் சைவசித்தாந்தத்திற்கும், சிவாத் வைத்திற்குமிடையில் குறிப்பிடத்தக்க வேறுபாடு உளதென்பதை மறுக்கமுடியாது, புறப்புறச்சமயம், புறச்சமயம், அகப்புறச்சமயம்,
ஆலு சன ஆக்"

முத்திநிலையில் ஆணவமலம் அற்றுப் போகுமென்ற நிலைப்பாடுடைய ஐக்கியவாத சைவத்துடன் சிவாத்வைதம் சில விடயங்களில் கருத்தொற்றுமை கொண்டிருப்பது, சைவசித்தாந்தத்திற்கும் சிவாத்வைதத்திற்குமிடையிலான குறிப்பிடத்தக்க வேறுபாடுகளில் ஒன்றாகும். சிவாத்வைதத்தின் படி உலகம் சித்தும் அசித்துமாகும். அது சிவனிலிருந்து வேறுபடாதிருக்கும் சிவசக்தியின் பரிணாமமாகுமென்பது அவர்களது நிலைப்பாடாகும். சிவாத்துவைதத்தின் மேற்படி நிலைப்பாடு சைவசித்தாந்தத்திற்கு ஏற்புடையதல்ல. சிவாத்வைத நிலைப்பாடு நிமித்தகாரண பரிணாமவாதமென உமாபதி சிவாச்சாரியரால் சங்கற்பநிராகரணத்தில் விமர்சிக்கப் படுவது குறிப்பிடத்தக்கது.
சைவசித்தாந்திகளும் சிவாத்வைதிகளும் தாதான்மியம் என்ற கருத்துத் தொடர்பாகவும் மாறுபட்ட நிலைப்பாடுடைய வர்களாயிருக்கின்றனர். தாதான்மியம் இருவகைப்பட்டதென சிவஞானமுனிவர் குறிப்பிடுவார். முதலாவதுவகை ஒரு பொருள் இரண்டாகத் தோன்றுவது. அதாவது திரவியத்திற்கும் அதன் பண்பிற்கும் இடையிலான (குனி-குண வேறுபாடு) தாதான்மியத் தொடர்பு இரண்டாவது வகை இருபொருளை ஒன்றெனக் கொள்ளும் (அத்வைதமான தொடர்பு) தாதான்மியத் தொடர்பாகும். இதில் சிவாத்வைதம் முதலாவது வகையான தாதான்மியத் தொடர்பையும் சைவசித்தாந்தம் இரண்டாவது
வகையான தாதான்மியத் தொடர்பையும் ஏற்றுக்கொள்கின்றன.
'சீவன்முத்தி' என்ற கருத்துத்தொடர்பாகவும் சைவ சித்தாந்தத்திற்கும் சிவாத்வைதத்திற்குமிடையில் வேறுபட்ட நிலைப்பாடுண்டு. இவ்வுலகவாழ்க்கையிலேயே ஒரு ஆன்மா சீவன்முத்தனாதல் கூடுமென்பது சைவசித்தாந்திகளிற்கு ஏற்புடையதொரு கருத்தாகும். பக்குவப்பட்ட ( முதிர்ச்சியுடைய) ஞானத்தால் இவ்வுலகிலேயே சீவன்முத்தனாதல் சித்திக்குமென திருவருட்பயன் குறிப்பிடுவது மனங்கொள்ளத்தக்கது. ஆனால் சிவாத்வைதிகளின் அபிப்பிராயப்படி கடந்தகால கர்மவினை யினால் பிறப்பெடுத்த ஒரு ஆன்மா எவ்வளவுதான் பக்குவ ஞானத்தைப் பெற்றிருந்தாலும், தன்வாழ்க்கைக் காலமுடிவுவரை
தனது பண்டைய கர்மவினையை அனுபவித்தே யாதல் வேண்டும்.
சிவாத்வைதவாதிகள் ஆன்மா அணுவியல்பினதென்ற அபிப்பிராயமுடையவர்களாயிருக்க, சைவசித்தாந்திகளோ ஆன்மா விபு (ஊடுபரவும்) இயல்பினதென்ற கருத்துடையவர் களாயிருக்கின்றனர்.
இவை தவிர, நியாயித்தல் முறையிலும் இவ்விரு சித்தாந்தி களும் வேறுபட்டிருப்பதை அவதானிக்க முடிகின்றது. குறிப்பாக, சிவஞானபோதத்தில் மெய்கண்டார் சைவசித்தாந்த
e - க்களஞ்சியம்

Page 152
உண்மைகளை அனுமானவடிவத்தில் (ஏது, திருட்டாந்தங்களால்) நிறுவும் உத்தியைக் கையாண்டிருப்பதையும், அதேவேளை சிறிகண்டர் நியாயத்திற்கு முதன்மை கொடுக்காது, முற்றுமுழுதாக சுருதியைப் பிரமாணமாக ஏற்றுக்கொண்ட முறையிலேயே தனது உரையைச் செய்திருப்பதுவும் இங்கு குறிப்பிடத்தக்கன.
சிவாத்வைதத்தின்படி உலகின் ஆதிகாரணமும் நிமித்தகாரணமும் இறைவனாகும். பிரமமே உலகாகப் பரிணமிக்கிறது. இங்கு சிவனையே பிரமமாக சிறீகண்டர் காண்கிறார். சித்தும் அசித்துமான உலகின் ஆதிகாரணமாக விளங்குவது சிற்சக்தியாகும். பிரமம் நிமித்தகாரணமாகும். அதாவது சிவனாகிய பிரமமும் சிற்சக்தியும் பிரித்தறியக்கூடிய கூறுகளாயினும் (குணியும் - குணமும் போல) அவையிரண்டும் ஒன்றேயாமென்பது சிவாத்வைதத்தின் நிலைப்பாடாகும். இறைவன் தனது சிற்சக்தியினூடாக உலகத்தின் இருப்பில் பங்குகொள்கின்றான். தனியனின் இருப்பென்பது பிரம இருப்பின் ஒரு பகுதியேயல்லாது வேறல்ல. அதுபோலவே ஆன்ம அறிவென்பதுவும் சிவஞானத்தின் பகுதியேயாம். இவ்வாறு சிவாத்வைத போதனைகள் ஒருவகையில் வேதாந்தத்தோடு ஒத்திருப்பதை அவதானிக்க முடிகின்றது.
அசையா நம்பிக்கை, பற்றற்றநிலை என்பவற்றுடன் கூடிய இறை தியானத்தினால் ஆன்மாக்களுக்கு விடுதலை கிட்டுகிறது. மேலும் அத்தியானமும் உபநிடதங்களிற் சுட்டப்பட்ட ஞானிகள் காட்டிய வழியிலமைந்திருத்தல் வேண்டும். இறைவனை மனதால் ஆகாசரூபமாகவோ அல்லது உலகனைத்திலிருந்தும் உருமலர்ச்சியுற்றதொன்றாகவோ தியானித்தல் வேண்டும். அதுவும் பேரின்பப் பொருளாக, நீலகண்டனாக, பார்வதி சமேதனாய், அனைத்து மேன்மைகளினதும் இருப்பிடமாய்க் கற்பித்தல் வேண்டும். பசுத்துவத்தை நீக்கி, சிவத்துவத்தை வேண்டும் வகையில் தியானம் அமைதல் வேண்டும். ஆன்மாக்களின் பசுத்துவம் நீங்காதவரை அவற்றிற்கு சிவத்துவம் கிட்டாதென்பது சிவாத்வைதத்தின் நிலைப்பாடாகும்.
சரியான வழிமுறையில் தியானத்தை மேற்கொள்ளும் ஆன்மாவானது இறப்பின்பின் பிரமத்தையடைகிறதென்பது சிவாத்வைதத்தின் நிலைப்பாடாகும். அது நீ ஆகிறாய் என்ற மகாவாக்கியத்தின் பொருளும் அதுவேயாகும். சிறீகண்டரின் சிவாத்வைதம் தொடர்பான விமரிசனங்கள் சிவானந்தலகரி, சிவார்க்கமணிதீபிகை, சிவாத்வைத நிர்ணயம் ஆகிய நூல்களில் அப்பையதிட்சிதரால் விரிவான ஆய்விற்குட்படுத்தப்பட்டு அதன் தருக்கரீதியான ஏற்புடைமை நிறுவப்பட்டமையும் இங்கு குறிப்பிடத்தக்கது. (வ, வை.)
©រក្តមំ க்களஞ்சியம்
126

சிவானந்தர்
அ ண்  ைம க் காலத்திலே வாழ்ந்த தலைசிறந்த இந்து சமய ஞானிகளிலே சுவாமி சி வ T ன ந் த ரு ம் குறிப்பிடற்பாலர். இவர் தமிழ் நாட்டிலே சில நூற்றாண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த பிரபல வடமொழிப் புலவரும்
SFLOLj ஞானியுமாகிய அப்பய்ய தீகூழிதரின் வழித்தோன்றலாகிய வெங்குவையருக்கும், பார்வதி அம்பாளுக்கும் மகனாகப் பத்தமடையெனும் ஊரிலே 08.09.1897 இலே பிறந்தார். பெற்றோர் இவருக்கு இட்ட பெயர் குப்புசாமி. அவர்கள் சிறந்த சிவபக்தர்கள். ஐந்து வயதுவரை குப்புசாமி பெற்றோருடன் அங்கு வாழ்ந்தார்.
இவரின் தந்தையார் தாசில்தார் பதவி பெற்று எட்டையபுரத்திற்குக் குடும்பத்துடன் சென்று வாழ்ந்தார். எட்டையபுரம் கல்வி, கலைகளுக்குப் பேர்போன ஒர் ஊர். இங்கு பாட்டும், இசையும் நன்கு விளங்கும். வெங்குவையர் சிறந்த சிவபக்தராக சிவோஹம்', 'சிவோஹம் எனப்பன்முறைகூறி ஆனந்தக் கண்ணிர் வடிப்பார். அனைத்தையும் சிவமாகப் பாவனை செய்து வந்தார். சிவனைப் பற்றிய தோத்திரங்களைப் பக்தியுடன் பாராயணம் செய்தார். இத்தகைய சூழ்நிலையிலே பிறந்து வளர்ந்த குப்புசாமியிடமும் இத்தகைய ஆன்மீகப் போக்கு இளம் பிராயத்திலேயே காணப்பட்டது. குப்புசாமி ஐந்து வயதிலேயே பள்ளிக் கூடத்திற்குச் சென்று ஆரம்பக் கல்வியைக் கற்று வந்தார். பின்னர் எட்டையபுரம் வர அங்குள்ள அரசினர் உயர்நிலைப் பள்ளியிலே சேர்ந்து படித்து 1908ஆம் ஆண்டு மற்றிக்குலேசன்' பரீட்சையிலே சித்தியடைந்தார். சமகாலத்திலே வாழ்ந்த மகாகவி சுப்பிரமணிய பாரதியாரும் இவரும் நெருங்கிய நண்பர்கள். பிற்காலத்திலே, பாரதியார் தலைசிறந்த தமிழ்க் கவிமணியாக விளங்கினார். குப்புசாமி ஆங்கிலத்திலே கவிஞராகவும், பேருரையாளராகவும், எழுத்தாளராகவும் விளங்கினார். பாடசாலையிலே கற்கும் போதே, சிறந்த ஆளுமையுள்ள மாணவனாக விளங்கிய இவர், நற் செயல்களிலேயே ஈடுபட்டார். புராணம், கேட்பதிலும், பஜனை மடங்களிலே பாடுவதிலும் இவருக்கு மிகுந்த விருப்பம் இருந்தது. தகப்பனாரைப் போலவே சிவநாம ஜபத்தில் இவரின் உள்ளம் பதிந்து விட்டது. படிப்பிலும், விளையாட்டிலும் இவர் சிறந்து விளங்கினார்.
மற்றிக் குலேசன் பரீட்சையிலே தேறியபின் திருச்சிராப்பள்ளியிலுள்ள எஸ். பி. ஜி. கல்லூரியிலே சேர்ந்து கல்வி பயின்றார். அங்கு இவரின் அறிவும், விளையாட்டுத் திறன்,

Page 153
நாடகத்திறன், பேச்சுத் திறன் முதலியனவும் நன்கு வெளிப்பட்டன. இவர் ஷேக்ஸ்பியரின் முதுவேனிற்கனவு எனும் நாடகத்திலே கதாநாயகனாக நடித்துப் பாராட்டுக்களைப் பெற்றார். பள்ளிக்கூட மாணவனாக இருக்கும்போதே பல வெளிநாட்டுப் பத்திரிகைகள், நூல்கள் ஆகியவற்றை விலைக்கு வாங்கிப் படித்தார். சில நாட்களில் தியானத்திலே தொடர்ந்து இருப்பார். மேலும் ஒய்வு நாட்களிலே ஊருக்கு வந்து தமிழ் நூல்களைப் படித்து மதுரைத் தமிழ்ச் சங்கம் கல்லூரி மாணவர்களுக்கு நடத்தி வந்த பரீட்சையிலும் முதலாகத் தேறினார். ஆனால் தொடர்ந்து அங்கே படிக்க முடியவில்லை. இவர் விஞ்ஞானத்திலும் திறமைசாலி. வைத்தியராகச் சேவை செய்ய விரும்பினார். எனவே தஞ்சாவூரிலுள்ள மருத்துவக் கல்லூரியிலே சேர்ந்து மூன்றாண்டுகள் கற்றார். அங்கே உடன் கற்ற மாணவர்களும் இவரின் குணாதிசயங்களைப் போற்றினர். இவரின் தரும சிந்தனையும், தெய்வ பக்தியும் குறிப்பிடற்பாலன. வைத்தியப் பட்டத்திற்கான பரீட்சையிலும் முதல் தரமாகவே தேறினார்.
சிலகாலம் அங்குமிங்கும் தொழில் செய்து 1913இலே மலேசியா சென்றார். அங்கே முதலிலே நெகிரி செம்பிளானிலும், |ী6 60Tা ஜோகூரிலும், சிங்கப்பூரிலும் அரசினர் வைத்தியசாலைகளிலே கடமையாற்றினார். இவர் வைத்தியத் தொழிலை ஒர் அர்ப்பணமாகவே செய்து வந்தார்; மருத்துவசாலை ஊழியர்களின் நன்மதிப்பையும் பெற்றார்; எல்லோரிடமும் அன்பாக நடந்து வந்தார்; அனைவருக்கும் சமமான சேவை செய்தார்.
இவர் இசைப் பிரியர் ஒரு வித்துவானிடம் ஹார்மோனியம் வாசிக்கக் கற்றுக் கொண்டார். விரைவிலே பாடவும் வாத்தியம் வாசிக்கவும் திறன் பெற்றார். நண்பர்கள், பிரமுகர்கள் விருந்துகளுக்கு அழைத்தாலும் ஹார்மோனியம், தபேலாக்களுடன் சென்று பஜனை நடத்தி அனைவரும் திவ்விய நாம மகிமையை உணரர் செய்வார்.
அக்காலத்தில் இவர் சிறந்த எழுத்தாளரானார். சில ஆங்கிலப் பத்திரிகைகளுக்கு விஷயதானம் செய்தார். மலாய் ரிப்யூனில், கிரிக்கெற் ஆட்டங்கள் பற்றி விமர்சனம் செய்தார். வைத்தியப் பத்திரிகைகளில் அரிய கட்டுரைகள் எழுதினார். அரசாங்கம் இவரின் திறமையை வியந்து பட்டமளித்தது. பத்திரிகைகள், புத்தகங்கள் பலவற்றை விலைக்கு வாங்கிப் படித்து வந்தார். கூடுதலாக வேதாந்த நூல்களில் அவரின் நாட்டம் சென்றது. கடப்பைச் சச்சிதானந்த யோகியார் எழுதிய ஜீவப்ரம்மைக்கிய வேதாந்த ரகசியம் எனும் நூல் முதலில் இவரை நன்கு கவர்ந்தது. பின்னர் விவேகானந்தர், ராமதீர்த்தர், சங்கராச்சாரியர், பி. ஆர். ராஜமையர் முதலியோரின் வாக்குகள் இவரை நன்கு கவர்ந்தன. ஞான நூல்களைக் கற்றுச் சிந்தித்ததன் விளைவாக உலக வாழ்வின் உண்மையான இயல்பினை உணர்ந்தார். “உடல் அநித்தியம். அது வீழுமுன்

பிரம்மஞானம் பெறவேண்டும்” என்ற வேணவா அவருக்கு ஏற்பட்டது. 'ஓம் நமசிவாய' என்ற சிவ மந்திரத்தைக் கொண்டு பரம்பொருளைத் தேடத் தொடங்கினார். எனவே தாம் இதுவரை அநுபவித்து வந்த சுகபோகங்களைத் துறந்தார். சிவோஹம், சிவோஹம் என உள்ளத்திலே ஆழ்ந்து தியானித்தார்.
சிங்கப்பூரிலே நண்பர்களின் அபிலாசைகளையும் செவி மடுக்காது இவர் தாய் நாட்டிற்குத் திரும்பினார். கப்பல் மூலம் சென்னையிலே வந்து இறங்கியபின் தன்னுடன் கொண்டு வந்த பொருட்களை ஒரு நண்பரின் வீட்டிலே வைத்துவிட்டுக் காசிக்குப் புறப்பட்டார். காசியை அடைந்ததும் கங்கையிலே நீராடி காசிவிசுவநாதரை (சிவனை)த் தரிசித்தார். கையில் எஞ்சியிருந்த பணம் எல்லாம் சிவார்ப்பணமாயின. அங்கே சுதந்திரமாகப் பரம்பொருளைப் பற்றிச் சிந்தித்துக் கொண்டு திரிந்தார். பின்னர் அயலிலுள்ள புண்ணிய தலங்களைத் தரிசித்தார். ஒருநாள் சந்திரபாகா ஆற்றங்கரையிலுள்ள பாறையிலமர்ந்திருக்கும்போது, வயது சென்ற தபால் தலைவரைச் சந்தித்து அவருடன் நட்புறவு கொண்டாடினார். அவருடன் சில மாதங்கள் தங்கியபின் ஒரு நான் இவர் ஏகாந்தமாகத் தவம் புரியத்தக்க ஓரிடம் பற்றி முதியவரிடம் கூறியபோது அவர், "ரிசிகேசமே அதற்கேற்ற இடம் - புறப்படும்” எனக் கூறி வழிச்செலவுக்காக 25 ரூபாவும் வழங்கினார். டாக்டர் குப்புசாமியும் நேராக 08:05 1924இலே ரிஷிகேசம் வந்து சேர்ந்தார். இயற்கையழகும் அமைதியும் உள்ள இடமான ரிசிகேசத்தில் எங்கு திரும்பினாலும் சாதுக்களின் கூட்டத்தைக் காணலாம். இத்தகைய சூழ்நிலை குப்புசாமிக்கு அமைதியளித்தது. சிவநாமஜபம், பஜனை, சிவத்தியானம், சாது சங்கமம் ஆகியனவற்றிலேயே இவர் காலம் கழித்தார். இவரைப் பல சாதுக்கள் கவனித்தனர். இவருக்கும் சந்நியாசம் பெற விருப்பமிருந்தது.
ஒருநாள் இவர் கங்கையில் இறங்கி நீராடச் சென்றபோது மகாதேஜஸ்வியான ஒரு சந்நியாசி வந்தார். அவர் கர்நாடக மாநிலத்திலுள்ள சிருங்கேரி சங்கர மடத்தைச் சேர்ந்தவர்; பரமஹம்ஸத்துறவி. இவரின் பெயர் சுவாமி விவேகானந்த சரஸ்வதி, காசியில் வசித்தவர். அதுபவவேதாந்தி. இவரைக் கண்டதும் “ஓம் நடி சிவாய" எனக் குப்புசாமி சாஸ்டாங்கமாக விழுந்து வணங்கினார். அவர் இவருடைய ஆன்மீக பக்குவ நிலையை உணர்ந்து இவருக்கு முறைப்படி பரமஹம்ஸ் ரீதியில் சந்நியாசமும், காஷாயமும் அளித்து சிவானந்த சரஸ்வதி எனத் தீக்ஷா நாமமும் அருளினார்; இவருக்கு உபதேசம் செய்து அத்துவைத ஞானத்தை உலகிலே பரப்பி ஞானசேவை செய்யுமாறு கூறிவிட்டுச் சென்றார். இப்பொழுது பரமஹம்ச சிவானந்த சரஸ்வதிகள் அந்த ஞான சேவைக்கே தம்மைத் தயார் செய்து அர்ப்பணித்துக் கொண்டார்.
ரிஷிகேசத்திற்கு மூன்றுமைல் தூரத்திலே லக்ஷமன ஜூலா எனும் அழகிய நிம்மதியான புனித இடமுள்ளது. இயற்கை அழகும், சாது சங்கமும் அந்த இடத்தைச் சுவர்க்கமாக்கின. அங்கே சிவானந்தர் முதலில் லக்ஷ்மண ஜூலா கிராமத்திலே
இந்துக்கலைக்களஞ்சியக்

Page 154
சிவநாம சங்கீர்த்தனம் செய்வதும் பிகூைடியெடுத்துண்பதும், கிடைத்த இடத்தில் தியானிப்பதும், சயனிப்பதுமானார். பிறகு ஒரு தனிமையான இடிந்த குடிலைக் கண்டார். அந்த இடிந்த குடிலில் சிவானந்தர் தவம் செய்தார். அப்போது அவரை எவருக்கும் தெரியாது. ஆனால் தவத்தில் மட்டும் அவர் மூழ்கிலர். அவர் சிறந்த கர்மயோகி; சேவையிலே மிக்க விருப்பமுள்ளவர். அங்குள்ள துறவிகள் அடிக்கடி நோயினால் பாதிக்கப்படுவதைக் கண்டு மனம் கலங்கினார். மருத்துவசேவை செய்யவிரும்பினார். ஆனால் பணம் தேவைப்பட்டது. இதனை எவரும் வழங்கும் வாய்ப்பும் இல்லை. எனவே முன்னர் சேமிப்பு வங்கியிலும், இன்சூரன்சிலும் போட்ட பணம் நினைவிற்கு வந்தது. உடனே நண்பருக்கு எழுதி அந்தத் தொகையினை(4000 ரூபா)ப் பெற்றார்.
இந்தத் தொகையைக் கொண்டு மருந்துகள் வாங்கி நோயுற்ற சாதுக்களுக்கும், யாத்திரீகர்களுக்கும் சிகிச்சை யளித்தார். இதனாற் பலர் நன்மையடைந்தனர். அவர்களின் அன்பினைப் பெற்றார். நாளடைவில் அங்கே ஒரு சத்திய சேவாச்சிரமம் ஏற்பட்டது. ஆஜானுபாகுவான சிவானந்தர் எவரைக் கண்டாலும் “ஓம் நம: சிவாய' என வணங்குவார். கருணைக்கும் பணிவுக்கும் இவர் பேர் போனவர்.
இவர் தாமே குரு என்ற செருக்கு அற்றவர். பிரமத்தை அறிந்தவனே உயர்ந்தவன்; பிரமம் சத்தியம்; ஞானம்; ஆனந்தம். அது இதயக்குகையில் உள்ளது என்ற தைத்திரிய உபநிஷதத்திற் கேற்பச் சிவானந்தரும் பரம்பொருளை உணர்ந்தவராக விளங்கினார். இவர் கூடுதலாக ஆங்கிலத்திலேதான் சிறந்த தேர்ச்சி பெற்றிருந்தார். எனவே இவரின் நூல்கள் எளிமையான ஆங்கிலத்திலே உலகிற்கு அளிக்கப்பட்டுள்ளன. இவருடைய வேதாந்த யோக நூல்கள் படிப்புத் திறமையாலன்றி உள்ளுணர்வால் எழுந்தவை எனக் கூறப்படும்.
இவரின் அருமையை உணர்ந்த ஒரு பெரியவர், அங்குள்ள சுவர்காச்சிரம அதிகாரிகளுடன் கலந்து பேசி இவருக்கு அங்கே ஒரு செளகரியமான இடத்தை வகுத்துக் கொடுத்தார். அது கங்கைக் கரையில் அழகான இடத்தில் அமைந்திருந்தது. அங்கே சுவாமிகள் மக்கள் சேவை செய்தார். அங்குவரும் யாத்திரீகர்கள், துறவிகளுக்கு இலவச மருத்துவ சேவை செய்து வந்தார். தமக்கு நல்ல தின்பண்டங்கள் கிடைத்தாலும் அவற்றைத் துறவிகளுக்குக் கொடுத்துவிட்டு எளிமையான உணவினைத் தாம் உண்பார். சுவர்க்காச்சிரமத்திலே அதிகாலை தொடக்கம் முன்னிரவு வரை சிவானந்தர் நாம சங்கீர்த்தனம், தியானம், வைத்திய சேவை, பொது நல சேவை முதலியனவற்றிலேயே ஈடுபட்டு வந்தார்.
இவரின் புகழ் நாளுக்கு நாள் அதிகரித்தது. இவரைத் தரிசித்துப் பலன் பெறப் பெருந்தொகையான மக்கள் வரத் தொடங்கினர். இதனால் சிலவேளைகளில் லக்ஷமண ஜூலாவிலுள்ள மிடுக்கான பாறைப் பொந்துகளில் புகுந்து தியானத்தில் ஈடுபடுவார். ஆனால் தியானம் செய்யாத
இந்துக் ឆែកឆ្មោះត្រៃ

28
நேரங்களிலே மக்களைக் கண்டு, இனிமையாகப் பேசி அவரவர் பக்குவமறிந்து உபதேசிப்பார். அவர் புலனடக்கமுள்ள பிரமச்சாரியராகவே விளங்கினார். அவர் தன்னுடைய சேவைகளைச் சுவர்க்கா சிரமத்திலிருந்து நன்கு செய்ய முடியாதென உணர்ந்தார். எனவே, அங்கிருந்து புறப்பட்டுத் துறவியாக இந்தியா அடங்கலும் சுற்றினார். 1930 இலே காலால் நடந்தே கைலாச யாத்திரை சென்றார். அங்குள்ள மானசரோவர் ஏரியிலே தீர்த்தமாடினார். இராமேஸ்வரம் வரையுள்ள பல புனித இடங்களுக்கும், பிறவற்றிற்கும் சென்றார். சென்ற ஊர்களிலே பிரசங்கம் செய்தார்; யோகாசனப் பயிற்சியளித்தார். பஜனைகள் நடத்தினார். உபநிஷதங்கள் கூறும் உண்மைகளையே தாம் பின்பற்றிக் காட்டினார். இவ்வாறு நான்கு ஆண்டுகள் இந்தியா எங்கும் ஞானபோதனைகள் செய்து ரிஷிகேசத்திற்குத் திரும்பிக் கங்கைக் கரையில் ஒர் அமைதியான இடத்தில் சிறு குடில் கட்டி வசித்தார். அதுவே, ஆனந்தக் குடிலானது. ஆயிரக்கணக்கான அன்பர்கள் சிவானந்தரை நாடி வந்தனர். இவரின் இருக்கை சிவானந்த ஆச்சிரமமாக, சிவநகராக வளர்ச்சியடைந்தது.
இவருடன் வாழ்ந்த துறவிகள் குருவைப்போலவே சிறந்து விளங்கினர். எப்போதும் சுறுசுறுப்பாகக் குருவின் மனமறிந்து நடப்பார்கள். ஆச்சிரமத்திலுள்ளவர்கள் பின்பற்ற வேண்டிய அன்றாட ஒழுங்கு முறைகளும், சமயாசாரங்களும் சுவாமிகளால் நன்கு வகுக்கப்பட்டுப்பின்பற்றப்பட்டன. காலை நான்கு மணிக்கே அவர் 'ஓம் நம சிவாய' என்ற மந்திர முழக்கத்துடன் தியான சுலோகம் பாடி எழுந்திருப்பார். உடனே ஆச்சிரமம் முழுவதும் அவரைத் தொடரும்.
காலைக் கடன்களைத் தொடர்ந்து கங்கா ஸ்நானம், பஜனை, புண்ணிய நூல்களின் (உபநிஷதங்கள், கீதை போன்றவை) பாராயணம், தியானம், யோகாசனம், பிராணாயாமம், தெய்வ ஆராதனை வேதாகம முறைப்படி நடைபெறும். இதன் பின்னரே காலை உணவு உண்டபின் நாள் வேலை தொடங்கும். மாலையிலும் சமயாசாரங்கள் நடைபெறும். சிவானந்த ஆச்சிரமம் ஒரு சிறு குடிலில் தொடங்கி இன்று பல கிளைகளுடன் பரந்து விளங்குகின்றது. உலகெங்கும் அதன் கிளைகள் உள்ளன. ஆனந்தக் குடிலைச் சுற்றி சாதகர்களுக்கு யோகசாதகக் குடில்கள் உள்ளன. வானப் பிரஸ்தர்களுக்குத் தனித் தனியே குடில்கள் அமைந்துள்ளன. கைலாசக் குடில் ஒன்றுண்டு. சிவானந்தர் பதிப்பதிகம், திவ்விய ஜீவனக் காரியாலயம், சிவானந்த நூல்நிலையம், சிவானந்தர் பள்ளிக்கூடம், கைவல்யகுகை, சிவாலயம், பஜனைக் கூடம் முதலியன சிவக்கிராமத்தை அணி செய்கின்றன. சிவானந்தர் ஒர் எளிமையான குடிலில் வசித்துவந்தார். அக்குடில் எப்பொழுதும் திறந்திருக்கும். காலையில் சிவானந்தர் திவ்விய ஜீவனக் காரியாலயத்திற்கு வந்து தபால்களைக் கவனிப்பார். பதிலெழுத வேண்டியவற்றிற்குப் பதில் எழுதுவார். அவ்வாறே அச்சிட வேண்டிய நூல்களையும், கட்டுரைகளையும் தொண்டர்களுக்குத் தருவார். தெய்வீக ஜீவன் பிரசுரத்திற்கான தாள்களைக்

Page 155
கவனிப்பார். அதற்குக் கட்டுரை எழுதுவார். இவ்வாறு பிரசுர வேலைகளையும் கவனிப்பார்; இடையிடையே பாடல்களைப் பாடுவார். மேலும் 12 மணிக்குக் குடிலுக்குச் சென்று எளிய உணவு உண்பார். பின்னர் சிறிது ஒய்வு எடுத்துக் கொண்டு பிற அலுவல்களைக் கவனிப்பார். தமது மனதிலே தோன்றும் கருத்துக்களை உடனடியாகவே எழுதி விடுவார். இவரின் நூற்பெருக்கத்திற்கு இஃது ஒரு முக்கிய காரணமாகும். சாதுக்களின் நலனை ஏற்றவாறு இவர் கவனிப்பார். குறிப்பிட்ட நேரத்தில் எவரும் இவருடன் பேசலாம். இரவு பத்துமணிவரை பல்வேறு சமய செயற்பாடுகள், சமூக செயற்பாடுகளில் அவர் ஈடுபடுவார்.
இவர் சிறந்த பேச்சாளர் மட்டுமன்றி எழுத்தாளருமாவர்; பலவகையான உபதேசங்கள் செய்து வந்தார். இவற்றைத் திவ்விய ஜீவனயோகம் எனலாம். இந்தியாவெங்கும் சுற்றிச் சன்மார்க்கப் பிரசங்கங்கள் செய்து வரும்போது பஞ்சாப் மாகாணத்திலிருந்து இரு அன்பர்கள் இவரையணுகி அத்யாத்மகலையை வையகமெங்கும் பரப்புவதற்கும், சர்வசமய ஒற்றுமை, சகல மக்களிடையில் ஒற்றுமை ஆகியவற்றை வளர்த்து அனைவரும் இறைவனின் பிள்ளைகள் என்ற கருத்தினை நிலைநாட்டுதற்கும் ஒரு கழகம் அவசியம் என இவரிடம் வேண்டுகோள் விடுத்தனர். இதற்கேற்ப 1936இலே ரிஷிகேசத்திற்கு அப்பால் ஒருமைல் தூரத்திலே இமயமலைச் சாரலிலே கங்கைக் கரையோரத்திலே தலைமைக் கழகம் நிறுவப்பட்டது. இதுவே தெய்வநெறிக்கழகம் அல்லது திவ்விய ஜீவன சங்கமாகும். (Divine Life Society) 'தன்னலமற்ற பணியாற்று (Serve), பரஸ்பரம் அன்புடன் மக்களை நேசி (Love), ஆத்ம சித்தனை செய் அல்லது தியானம் செய் (Meditate), தன்னை யறிந்தின்புறு (Realise) என்ற இந்நான்குமே இக்கழகத்தின் தலையாய நோக்கங்களாகும். இவை இக்கழகத்தின் இலச்சினையிலும் காணப்படும். 'உங்கள் யாவருக்கும் பணியாற்றவே யானுளன். உங்களது வாழ்நாளை இனிதாக்கி, இன்புற வாழச் செய்யவே யானுளேன். அறியாமையை அகற்றிப் பிறவிப் பயனை அடைவதற்கேற்ற பாதையில் துணைபுரியவே யானுளேன். ஆத்மவேட்கை மிக்குள்ள அன்பர்களுக்கு அரும்பணியாற்றுதலொழித்து வேறொரு அரிய கடவுளும், புனித பூசையும் எனக்கில்லை. அவர்களுக்கும் துணையாக இருந்து உதவி புரிதலே எனது மேலான யோகம் - யானடைந்த அருளொளி” எனக் கூறியுள்ள இவரின் அருள் வாக்கிலே “யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்” எனும் திருமூலரின் கருத்தும் காணப்படுகின்றது. ஆன்ம ஈடேற்றத்திற்கு வழிகாட்டுதலே அவரின் தன்னலமற்ற நோக்கமென்பது இங்கு தெளிவாகின்றது.
இவர் சிறப்பாகக் கூறிய ஆனந்தமார்க்கம் இருபது பகுதிகளைக் கொண்டிலங்குகின்றது. இவையனைத்தும் மக்களின் உலக வாழ்வினை மட்டுமன்றி ஆத்மீக வாழ்வினையும் மேம்படுத்துவன. எடுத்துக் காட்டாக:

* பூீபகவான் அறியாமையையும், துக்கத்தையும் பயத்தையும் நீக்குபவர். நித்தியானந்தத்தினை அளிப்பவர். அவரை அறிந்துகொள். எப்பொழுதும் அவர் உன்னிடத்தில் இருக்கிறார். (01)
* அவரிடம் திட நம்பிக்கை கொள். நம்பிக்கைதான் தெய்வத்
திருவாயில், நம்பிக்கை அற்புதங்களைச் செய்யும். (02)
* எந்தச் சிறிய காரியத்தைச் செய்தாலும் சரி, உனது உள்ளம், மனம், பக்தி, ஆத்மா, அனைத்தையும் அதில் ஒருமைப்படுத்து. இதுதான் வெற்றிதரும் இரகசியம். (03)
* வாழ்க்கையிலே சரியான கொள்கைகளைப் பின்பற்று. ஆரோக்கியம், பலம், வெற்றி ஆகியனவற்றை எய்தவும், பகவத்சாந்நித்தியம் பெறவும் முயற்சி செய். (05)
* போனதெல்லாம் போகட்டும். உனது பலவீனமான பழங்காலத்தைக் குழியை வெட்டிப் புதை. உனது எதிர்காலம் ஒளிமயமாய் விளங்குகின்றது. முயற்சி செய். உழைத்து முயற்சி செய். (08)
* விருப்பு, வெறுப்பை விட்டுவிடு. மனதைச் சாந்தப்படுத்து. எப்பொழுதும் ஒருமுகப் படுத்தப்பட்ட சமசித்தம் கொள்வாயாக. (18)
இவருடைய சமய, ஆத்மீக சிந்தனைகள் சிறந்த பேச்சுகள், குறிப்பாகப் பெருந்தொகையான நூல்கள், கட்டுரைகள் மூலம் பரவியுள்ளன. இவருடைய நூல்களும் துண்டுப்பிரசுரங்களும் பல மொழிகளில் உலாவுகின்றன. இவர் ஐம்பதிற்கும் மேற்பட்ட நூல்கள் எழுதியுள்ளார். இவரின் குரலையும் இசைத்தட்டுகளிலே கேட்கலாம். இவருடைய நூல்களிலே,
(1) Practice of Yoga (GuJIT3, Uusibé (p60p) (2) Vedanta in Daily Life (அன்றாட வாழ்வில் வேதாந்தம்)
(3) கர்மயோகம் (4) பக்தி யோகம் (8) ஞான யோகம் (6) ராஜ யோகம் (7) சமாதி யோகம் (8) ஹடயோகம் (9) கீதை விரிவுரை (10) உபநிஷத் விரிவுரை
(11) திவ்விய ஜீவனம் (12) Light, Power and Wisdom (696ff), F55, 65T60Tib) முதலியனவற்றைக் குறிப்பிடலாம்.
இவருடைய கருத்துக்கள் எளிமையாகக் கூறப்பட்டுள்ளன. இவை பெருமளவு அனுபவவாயிலானவை. முற்காலத்திலே சங்கராச்சாரியர் சம்ஸ்கிருத மொழி மூலம் அத்துவைத சிந்தனைகளை மெருகு ஊட்டிப் பரப்பினார். இவர் இதே நோக்கத்திற்குச் சமமான நோக்கிலே பெருமளவு ஆங்கிலத்தைப் பயன்படுத்தியுள்ளார்.
இவருடைய கருத்துக்களை இவர் உருவாக்கிய நிறுவனங்களும், சிஷ்ய பரம்பரையினரும் உலகளாவிய ரீதியிலே முன்னெடுத்து வருகின்றனர். (வி சி)
129
இந்துக் ääsariääausi

Page 156
சிவானந்தலஹரீ
இது சிவபிரானைப் பரம்பொருளாகக் கொண்டு அவரைத் துதிக்கும் தலைசிறந்த, பக்திரசம் மிளிரும் ஸ்தோத்திர நூலாகும். அத்துடன் மிக்க இலக்கிய நயமும் வாய்ந்தது.
காப்புச் சுலோகம் உட்பட 100 வடமொழி சுலோகங்களைக் கொண்ட இந்த ஸ்தோத்திர நூலை யாத்தவர் கி. பி. 8ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஆதி சங்கரர் ஆவர்.
சிவானந்தலஹரி என்பது சிவன்மீது ஏற்பட்ட ஆராதபக்திப் பெருக்கினாற் பெறப்படும் சிவானுபவப் போரானந்த வெள்ளப் பேரலை எனப் பொருள்படும். நூலின் இரண்டாவது சுலோகத்திலேயே இதன் பெயரைக் குறிப்பிட அழகிய முற்றுருவக அணியினைச் சங்கரர் உபயோகிக்கிறார்.
"சிவானந்த வெள்ளமானது, நினது சரிதமாகிய நதியிலிருந்து பெருகி, எனது பாவமாகிய புழுதியைக் கழுவி நீக்கி, புத்தி எனும் வாய்க்கால் வழிபாய்ந்து, பிறவித் துன்பத்தைப்போக்கி, என்னுடைய சித்தமாகிய மடுப்பிரதேசத்திலே தேங்கி நிற்பதாக சிவானந்தலஹரி என்ற இந்நூல் சிறப்புற அமைவதாக"
ஆதி சங்கரர் ஞானமார்க்கத்தை விதந்துரைக்கும் அத்வைத நெறியினை உலகிற்கு முதன் முதலிற் போதித்து நிலைநாட்டிய நிர்குணப்பிரம்ம உபாசகர் ஆவர். எனவே நாமரூப குணங்களோடு கூடிய சகுணப் பிரம்மத்தினைத் துதிக்கும் பக்தி நூலினை இயற்றியிருப்பாரா என்று சிலர் ஐயுறுவர்.
பக்தி நெறிக்கு ஒரு மெய்யியல் அடிப்படையைத் தந்துதவிய நாரத பக்தி சூத்திரம் சகுணப்பிரம்ம வழிபாட்டிற்குரிய, இறைவனின் குனங்களைப் போற்றுதல், ரூபத்தைத் தியானித்தல், பூசை செய்தல், இடைவிடாது நினைத்தல், சேவை செய்தல், நட்புக் கொள்ளல், காதலால் கசிந்துருகல், குழந்தையாக இறைவனை நேசித்தல், தன்னையே அர்ப்பணம் செய்தல், தன்மயமாகிவிடுதல், பிரிவாற்றாமை போன்ற பக்தி நெறியின் பதினொரு பரிணாமப்
படிநிலைகளை விளக்குகின்றது.
சிவானந்தலஹரீயும் இத்தகைய பக்திப் படி நிலைகளை வர்ணிப்பதால், சங்கரர் இதனை இயற்றியிருக்க மாட்டார் எனச் சிலர் எண்ணுவது நியாயமே.
நிர்க்குணப் பிரம்மத்தை வெவ்வேறு நாம் ரூபங்களோடு கூடிய சகுணப்பிரம்ம நிலையினில் வைத்து வழிபடும் முறையினை, அத்வைத வேதாந்திகள் புறந்தள்ளுவதில்லை.
இறைவனை அடைவதற்கு சகுணப் பிரம்ம வழிபாடு உறுதியான மார்க்கம் என்பதை அவர்கள் ஏற்றுக் கொள்வர்.
វិញ្ច្រា
--
3{

ஆதிசங்கரர் சிவன், அம்பிகை, கEபதி, ஸ்கந்தன், விஷ்ணு, சூரியன் போன்ற வெவ்வேறு தெய்வங்களின் வடிவில் இறைவழிபாட்டை ஊக்குவிக்கு முகமாக ஷண்மதங்களை பாரத நாட்டில் ஸ்தாபிதம் செய்தவர். :ேஐம் பக்தி நெறியை வளர்ப்பதற்காக நூற்றுக்கு மேற்பட்ட தோத்திர நூல்களை உலகிற்கு அளித்தவர்.
எனவே சங்கரரே சிவானந்தலஹரீயினைப் பாடியருளினார்
என்பதில் எவ்வித சந்தேகமும் இருக்க வேண்டியதில்லை.
அத்வைத வேதாந்தத்தை நிலைநாட்டியவர் எனினும் சங்கரர் மேலான பக்தி அனுபவத்தைப் பெற்றவர் என்பது அவரது தோத்திர நூல்களிலிருந்தே புலனாகின்றது. சிவானந்த லஹரீயின் 50 வது சுலோகம் பூரீ கிரியிலுள்ள மல்லிகார்ஜுன மகாலிங்கத்தை வழிபட்டு அருள் பெற்றார் சங்கரர், என்பதைக் குறிப்பிடுகிறது.
சாதனா மார்க்கமாக பக்தி மார்க்கத்தையும் நிலை நிறுத்த விரும்பியே சங்கரர் இதனை எழுதினார் என்பது தெளிவு.
பக்தி மூலம் ஒருவன் முக்தியினைப் பெற்று உய்தி கூடலாம் என்று கூறாமல், பக்தியே முக்தி என்று இந்தத் தோத்திரப் பனுவல் அழுத்திக் கூறும், சுலோகம் 33 பின்வருமாறு மொழியும்:
“தேவ தேவரே, உம்முடைய சேவையோ, வணங்குதலோ, ஸ்தோத்திரமோ, பூஜையோ, தியானமோ, சரிதையைக் கேட்பதோ, உம்மைத் தரிசிப்பதோ, என் போன்றவர்கள் ஈடேறுவதற்கு இவை போதாவா? இவையன்றி முக்தி என்பதுதான் என்ன?”
பக்தி ஒரு சாதனம் மட்டுமன்று. அதுவே, அதனால் அடையப்பட வேண்டிய இலக்காகிய முக்தியுமாம் என்று சிவானந்தலஹரி அறிவுறுத்துகிறது.
காப்புச் செய்யுளிலேயே சங்கரர் பிரம்மத்தை மானிடர் இலகுவில் பக்தி செய்வதற்குரிய சகுணப்பிரம்ம நிலையில் வைத்தே போற்றுகிறார். சக்தியோடு கூடிய சிவனை அர்த்தநாரீஸ்வர வடிவத்திலேயே தரிசித்து அவர்கள் இருவருமே ஒன்றாக மூவுலகுக்கும் அருள்பாலிப்பவர்கள், ஆனந்த மயமானவர்கள், நினைக்குந்தோறும் மனதில் புதிது புதிதாகத் தோன்றும் வடிவினர்கள் எனத் துதிக்கிறார்.
"(கஞ்சித் காலம்) சிறு பொழுது அர்ச்சித்தல், சிறுபொழுது வணங்குதல், சிறுபொழுது தியானம் செய்தல், சிறுபொழுது சிவகதை கேட்டல், சிறுபொழுது தரிசனம், சிறு பொழுது துதித்தல் - இந்த விதமாகச் சிவனிடம் (ஆத்ம நிவேதனம்) தன் உள்ளத்தை அர்ப்பணம் செய்து எவன் இன்புறுகிறானோ, அவனே இங்கு உடல் வாழும் போதே முக்தி எய்தியவன் (ஜீவன் முக்தன்) ஆகிறான்.” என்பது சுலோகம் 81 இன் சாரமாகும்.

Page 157
இறைபக்திக்கு மிகவும் யதார்த்தபூர்வமான வரைவிலக் கணத்தைச் சுலோகம் அழகிய உவமைகள் மூலம் தருகிறது.
"பக்தி என்பது எது? மரத்தை ஒரு கொடியும், கடலை ஒரு நதியும், பிரிய நாயகனை ஒரு பத்தினிப் பெண்ணும், காந்தத்தை ஊசியும் எவ்வாறு நாடுகின்றனவோ அவ்வாறு உள்ளத்தின் நாட்டம் இயற்கையாகவே இறைவனிடம் ஒருவனுக்கு இருப்பின் அதுவே பக்தி எனப்படும்.”
'இறைவன் எம்மிடமிருந்து உளங்கனிந்த உண்மை அன்பையே அன்றி எந்தவிதமான காணிக்கையையும் எதிர்பார்ப்பதில்லை. எதை அர்ப்பணம் செய்கிறான் என்பது கடவுளுக்கு முக்கியமன்று. எந்த நோக்கம், பாவனையுடன் செய்கிறான் என்பதையே இறைவன் கவனிக்கிறான்” என்பது சுலோகம் 27 இன் பொழிப்பாகும்.
சுலோகம் 66, "அகில உலகமுமே இறைவனுடைய திருவிளையாடற்களமாகிறது. மக்கள் இறைவனின் விளையாட்டுப் Tទf56. அவனுடைய இஷ்டப்படியே நாம் ஆட்டுவிக்கப்படுகிறோம்” என்று கூறும்.
சுலோகம் 55இல் இறைவனைத் தாண்டவ மூர்த்தியாகவும் 56இல் ஆனந்தத் தாண்டவம் ஆடுகிறவராகவும், சுலோகம் 54இல் சந்தியா கால நடனம் ஆடுகின்றவராகவும் சமய தத்துவ ரீதியில் கற்பிதம் செய்து களிப்புறுகிறார் சங்கரர். -
இது தவிர, இலக்கிய இரசிகர்களுக்கு உவகையூட்டும் உவமை, உருவகம் போன்ற பொருள் அணிகளும், சிலேடை போன்ற சொல்லணிகளும், புராண இதிகாச சூசனக் குறிப்புகளும் விரவப் பெறுவதால் சிறந்த இலக்கிய - கவிதை நூலாகவும் சிவானந்தலஹரி விளங்குகின்றது.
பொருள் அணிகளிற் சில :
இறையருளை வெள்ளமென உருவகித்து, பக்தன்
இருதயத்தில் தேங்கி நிற்கும் எனல் (சு:2).
பக்தனின் மனம் இறைவனும் இறைவியும் தங்குவதற்குரிய கூடாரம் (க21).
பக்தனுடைய சித்தத்தைப் பதிவிரதையாக உருவகித்தல் (சு/7).
பக்தனுடைய உள்ளத்தையும் இருதயத்தையும் பூந்தோட்டமென உருவகித்தல் (க. 47).
கவிதையைக் கன்னியாக உருவகித்தல் (சு 98).
அடியவன் ஒருவனின் புத்தியை புதிதாக விவாகமான பெண்ணாக உருவகித்தல் (சு. 78).

உவமை அணிகளிற் சில :
புலன் இன்பப் பற்றினாற் கெட்டுப் போன மனதிற்குப் பின்வரும் உவமைகள் கூறப்படுகின்றன.
கொடிய விலங்குகள் வாழும் காடு (5.42) துர்வாசம் நிறைந்த பெட்டி (gi. 74) மதம் பிடித்த யானை (5.97)
சிலேடை உவமை அணிகளிற் சில :
வண்டுக்கும் சிவனுக்கும் சிலேடை (சு. 51) மல்லிகைக்கும் சிவனுக்கும் சிலேடை (சு. 50) மேகத்திற்கும் சிவனுக்கும் சிலேடை (சு.52)
இதிகாச புராணங்கள் பற்றிய குறிப்புகள் : சாக்கிய நாயனார்; அர்ச்சுனன் ஆகியோரைப் பற்றிக்கூறி நிந்தாஸ்துதி செய்தல். (5.83) அடிமுடி தேடுதல் (சு 23)
லக்ஷமீ கணவனாகிய நாராயணனும் சரஸ்வதியின் நாயகனாகிய பிரம்மாவும் சிவபிரானின் அடிமுடியைத் தேடி அலைந்தும் காணாதவர்களாயினர். இது செல்வச் செருக்குக்கும் கல்விச் செருக்குக்கும் எட்டாதது பரம்பொருள் என்பதை விளக்கும்.
இங்ங்னம் இறைவனை சகுண பிரம்ம நிலையில் வைத்து ஒருவர் விரும்பிய நாமரூபங்களில் உபாசித்து, வாழும் போதே ஜீவன் முக்தனாகலாம், என்பதை அறிவுறுத்தும் சாஸ்திரப் பனுவலாகவும், மேலான பக்தியுணர்வினைத் தந்து உள்ளத்தினை உருக்கும் பக்தி நூலாகவும் சிறந்த கவிதாசுரங்கமாகவும் சிவானந்தலஹரீ விளங்குகிறது. (கே.கே. எஸ்.)
சிவாஜி
இந்திய நாட்டின் இடைக்கால வரலாற்றில் விசய நகரப் பேரரசர்கள் டெல்லி அல்தானியரின் ஆதிக்கத்தை எதிர்த்துநின்று, இந்து மதத்தையும், இந்து தர்மத்தையும் காத்து நின்றனர். அதேபோல் மராட்டியர்கள் பதினேழு, பதினெட்டாம் நூற்றாண்டுகளில் முகலாயப் பேரரசர்களுக்கு எதிராக முனைந்து நின்று இந்துப்பேரரசு ஒன்றை அமைத்திடும் அரும்பணியில் ஈடுபட்டு நின்றனர். மராட்டியர்களை ஒருங்கிணைத்து, ஒரு பெரும் நாட்டவர்களாக ஆக்கியவர் சிவாஜி என்னும் மாமன்னர். இந்து சமயமும் இஸ்லாமும் ஒன்றை ஒன்று எதிர்த்து நின்ற நிலையிலே தோன்றிய சக்தியே சிவாஜி, மராட்டியர்களின் எழுச்சிக்குச் சிவாஜியின் தனிப்பட்ட ஆற்றலும் வீரச் செயல்களும் அடிப்படையாக விளங்கின என்றபோதிலும் சிவாஜியைத் தவிர்த்தும் மராட்டியரின் எழுச்சிக்குப் பல்வேறு அடிப்படைகள் இருந்தன.
இந்துக் க்களஞ்சியம்

Page 158
மராட்டியர்கள் உழவுத் தொழிலில் ஈடுபட்டு வறுமையில் வாடி பிறருடைய கொடுமைகளுக்கு ஆளாகியிருந்தனர். மாராட்டியர்களிற் சிலர் தக்கான பாமினி அரசில் படைத் தலைவர்களாவும், ஜமீன்தார்களாகவும் பணியாற்றினர். ஆனால் இவர்கள் சமுதாயத்தில் அரிதாகவே இருந்தனர். மராட்டிய மொழி அவர்களுடைய பொது மொழியாகவும் இந்து சமயம் பொதுச் சமயமாகவும் விளங்கின. எளிமையும், உரமும், தீரமும், மனஉறுதியும், பெருமிதமும் கொண்ட இம் மக்கள் தமக்கென ஒரு அரசினை அமைத்திடும் எண்ணம் இல்லாமல் தக்காணத்தில் சிதறிக் கிடந்தனர். பதினேழாம் நூற்றாண்டில் இவர்களிடையே ஒரு எழுச்சி ஏற்பட்டது. இவ்வெழுச்சிக்கு பல்வேறு கூறுகள் துணை புரிந்தன. அவற்றை நோக்குவோம்.
இயற்கை சூழல்
விந்திய, சாத்பூரா மலைத் தொகுதிகள் அடங்கிய பகுதியே மராட்டியர்களின் நாடு. மலைப் பகுதியாக விளங்கியதால் இயற்கை அரணாக விளங்கியது. இங்கு விளைபொருள்கள் குறைவு. எனவே, மக்கள் கிடைத்ததைக் கொண்டு வாழும் வாழ்க்கைக்கு இயற்கையே பயிற்சியளித்திருந்தது. வாழ்க்கை வாழ்வதில் ஏற்பட்ட சிரமம் தன்னம்பிக்கையையும், கடுமையான உழைப்பையும் அவர்களிடத்து ஏற்படுத்தியது. இத் திறமை இல்லை எனில் பட்டினியைக் கண்டு பயந்து மடிந்திருப்பார்கள். மலைப் பகுதியில் வாழ்ந்தமையால் நன்கு உரமேறி ஊக்கம் மிக்கவர்களாய் வாழ்ந்தனர். தொடர்ச்சியான மலைகளும் அடர்ந்த காடுகளும் கெரில்லாப்போர் செய்வதற்கு வசதி யளித்தது. காடு சூழ்ந்த குன்றுகள் இயற்கைக் கோட்டைகளாக விளங்கின. ஆகவே இயற்கையும் மராட்டியர்களை உருவாக்க உதவியது. சார் ஜாதுநாதசர்கார், “இயற்கை அவர்களுக்குத் தன்னம்பிக்கை. வீரம், பொறுத்திடும் இயல்பு, எளிமை, சமுதாய சமத்துவ உணர்வு, மனிதன் மனிதனாக வாழ்வதில் பெருமை ஆகியவற்றை அளித்தது, மராட்டியப் பெண்டிரும் ஆடவரின் தியாக வாழ்விற்கு பெரும் உதவி அளித்தனர்” என்கிறார். எனவே ஆடம்பரத்திலும் சுகபோகங்களிலும் சொக்கித் திளைத்திருந்த முகலாயரை வெற்றி கொள்வது இவர்களுக்கு எளிதாக இருந்தது.
சமய சீர்திருத்தம்
மராட்டிய இளைஞர்களை எதிர்கால அரசு ஒன்றினை அமைத்திடும் பணியிற் பயிற்சி அளித்தசமய சீர்திருத்த வாதிகளான துக்காராம், ஏக்நாத், இராம்தாஸ், வாமன் பண்டிட் முதலானவர்கள் குறிப்பிடத்தக்கவர்கள். சிவாஜி தோன்றுவதற்கு முன்பே அத்தகைய அரும்பணி ஆற்றியிருக்கிறார்கள் அவர்கள். மராட்டிய சமய சீர்திருத்தவாதிகளில் குறிப்பிடத்தக்கவர் சுவாமி இராமதாஸ்; மாராட்டியத்தின் பல பகுதிகளிலும் மடங்களை நிறுவி இளைஞர்களின் மனவலிமைக்கும், உடல் வலிமைக்கும் பயிற்சி அளித்தார். புராண, இதிகாச பாத்திரங்களான அனுமான், இராமன், அர்ஜனன் முதலியோரின் வீரச் செயல்களைக் கூறி அவற்றினூடாக வீரம் என்னும் பயிரை வளர்த்தார். இராம்தாஸ் தான் எழுதிய 'தாஸ் போத' என்ற நூலிலே செயலின் தத்துவம்
இந்துக் க்களஞ்சியம்
132

என்பதை விளக்கினார். இவர் மேற்கொண்ட செயல்கள் எதிர்காலத்தில் சிவாஜியின் ஆக்கப் பணிகளை எளிதாக்கின. மராட்டிய சமய அறிஞர்கள் மராட்டியர் அனைவரும் ஒன்றே என்ற உணர்வினை ஊட்டினர். கடவுளை நம்புவோர் அனைவரும் கடவுள்முன் சமம் என்ற கருத்தை நம்பச் செய்தமை மராட்டியரிடையே ஒற்றுமையை வலுப்படுத்தியது. “சமஸ்கிருதம் தேவபாஷை என்றால், தாய் மொழி திருடர்களுடைய பாஷையா?” என்று கேட்டார் ஏக்நாத். சர்தேசாய், “இராமதாஸ் இன்றிச் சிவாஜியின் பணி இயலக் கூடியதாக இராது” என்று குறிப்பிட்டார்.
மொழி இலக்கியம் உருவாக்கிய ஒற்றுமை
மொழி உருவாக்கிய ஒற்றுமையைக் குறிப்பிட்டே ஆக வேண்டும். துக்காராம், ஏக்நாத் முதலியவர்கள் சாதி முறையையும், அவற்றின் தீமையையும் கண்டித்ததோடு மக்களுக்கு மாராட்டிய மொழியைக் கற்பித்தனர். அரசியல் ஒற்றுமையை சிவாஜி ஏற்படுத்துவதற்கு முன்னர் மொழி ஒற்றுமை என்ற அடித்தளம் அமைக்கப்பட்டது. சமுதாயத்தின் பல்வேறு வகுப்பினரும் சமயத்துறை அறிஞர்களின் பாடல்களைப் பாடி மகிழ்ந்தனர். மராட்டிய மொழியிலான பாடல்கள், மராட்டிய மொழி முதலியன மக்களின் உணர்ச்சி நரம்புகளில் ஊட்டிய தாய் மொழிப் பற்று தாய் நாட்டுப் பற்றாக உருவானது. இப்படி உருவாகி இருந்த மக்களுக்கு அரசியல் ஒற்றுமை மட்டுமே இல்லாத நிலை இருந்தது. அதனைச் சிவாஜி அளித்தார். பதினாறாம் நூற்றாண்டில் தக்காணத்தில் ஏற்பட்ட சமய, சமூக, இலக்கிய மறுமலர்ச்சி வைதீகப் பிராமணர்களால் உருவானது அன்று. இது சாமானிய மக்களால் உருவானது. சமுதாயத்தின் அடித்தளப் பிரிவில் இருந்த தையற் கலைஞர்கள், தச்சர்கள், குயவர்கள், தோட்டக்காரார்கள் முதலியவர்களிடமிருந்து பக்தி இயக்க கர்த்தாக்கள் தோன்றினர். இதனால் சமய சீர்திருத்தக் கருத்துக்கள் பக்தி மார்க்கம் என்பன பொதுமக்கள் இயக்கமாக மாறுவது இலகுவாக இருந்தது. சர்தேசாய் “இரண்டு சக்திகளே மராட்டிய நாட்டை உருவாக்கியவை. ஒன்று உடல்வலிமைச் சக்தி - இதனை உருவாக்கியவர் சிவாஜி, மற்றொன்று மனவலிமைச் சக்தி - இதனை உருவாக்கியவர் இராம்தாஸ்” என்கிறார்.
மராட்டியர்கள் பெற்ற பயிற்சி
தக்கணத்திலிருந்த முஸ்லீம் அரசுகளில் மராட்டியர் பணிபுரிந்தனர். சிவாஜிக்கு முன்னரே மராட்டியர்கள் பலர் பாமினி, ஷியா அரசுகளில் தளபதிகளாகவும், ஆட்சியாளர்களாவும் பயிற்சி பெற்றனர். இதனால் முஸ்லீம் அரசர்களின் அரசியல் இராணுவ தந்திரங்களையும் ரகசியங்களையும் அறிந்து வைத்திருந்தனர். முன்னூறு ஆண்டுகளாக முஸ்லிம் ஆட்சியாளர்களின் தொடர்பால் இவர்கள் பெற்ற அரசியல் அனுபவத்தை அவ் இஸ்லாமியர் ஆட்சிக்கு எதிராகவே பயன்படுத்தினர். இஃது ஷாஜி பான்ஸ்லே என்பவர் வாயிலாக தோன்றிற்று.

Page 159
மராட்டியர் புத்துயிர் பெற்று ஒர் அரசியல் சக்தியாக உருவாவதற்கு ஷாஜி பான்சுலே என்பவரே காரணம். அவர் பான்ஸ்லே என்ற குடும்பத்தை சேர்ந்தவர். மராட்டியரிடையே நான்காம் வருணத்தவர். தேவகிரியாதவ குலத்தைச் சேர்ந்த ஜதங்ராவின் மகள் ஜிஜாபாய் என்பவரை மணந்தார். கி. பி. 1620இல் இருந்து தொடர்ந்து பல போர்களில் ஈடுபட்ட ஷாஜிக்கு பீஜட்பூர் அடில்ஷா மகாராஜர் என்ற பட்டத்தை வழங்கினார். பின்னர் அடில்ஷாவிடமிருந்து பிரிந்து அகமது நகரில் ஆண்டு வந்த நிஜாம் ஷாசிகளிடம் இராணுவ அதிகாரியாக இருந்தார். அக்கால அரசியல்நிலை பெரும் குழப்பமாக இருந்ததால் அவரது வாழ்க்கையும் அவ்வாறே அமைந்து இருந்தது. அவர் ஒரு சமயம் முகலாயரோடும் மற்றோர்சாமயம் பீஜபுரிகள் சார்பிலும் சேர்ந்து கொண்டு செயற்பட்டார். 1633இல் ஷாஜஹான் அகமது நகரைக் கைப்பற்றி நிஷாம் ஷாஹிகளை வெற்றி கண்டபோது தோற்ற மன்னர் குலத்தைக் காப்பாற்றும் பொருட்டு ஜன்னாரில் ஒரு பொம்மை அரசை ஷாஜி ஏற்படுத்தினார். அகமது நகருக்குச் சொந்தமான பல கோட்டைகளைக் கைப்பற்றி முகலாயப் பேரரசுக்குப் பெரும் இடையூறாக இருந்தார். இது கண்டு சினம் கொண்ட ஷாஜகான் அவர் மீது கடும் நடவடிக்கைகள் எடுத்து அவரை பேரரசின் ஆட்சிக்கு உட்படுத்தினார். இவ்வாறு அடக்கப்பட்ட ஷாஜி பீஜாபுரி மன்னர் அவையில் அலுவலராக இருந்தார். பீஜாபுரி அரசில் இணைந்திருந்தபோது அம் மன்னருக்காக கர்நாடகத்தின் மீது வெற்றி காண்பதில் அவர் முனைந்தார். இத் திறமையைப் பாராட்டிய பீஜபுரி மன்னன் பெங்களூர் மாநிலம் உட்பட பல இடங்களைத் தானமாக வழங்கினார். இவ்வாறு முகலாயருக்கு கேடு விளைவிக்க முடியாத காலங்களில் தம் நிலப்பரப்பை வளர்த்து வந்த ஷாஜி பிற்காலத்தில் தோன்றப் போகும் மராட்டியரின் அரசியல் தத்துவத்தை விதைத்ததோடு ராணுவப் பெருமைக்கும் புகழுக்கும் முன்னோடியாக இருந்தார்.
சிவாஜியின் இளமைக் காலம்
சிவாஜி ஷாஜி பான்சுலேயின் முதல் மனைவி நீஜாபாயின் மகன் ஆவார். பூனா நகருக்கு வடக்கே ஜின்னார் நகருக்கருகில் அமைந்த ஷிவ்னர் மலைக் கோட்டையில் கி.பி.1627 ஆம் ஆண்டு ஏப்பிரல் மாதம் 20 ஆம் நாள் பிறந்தார். ஏறக்குறைய பத்துவயது நிரம்பியபோது பூனாவிற்கு அழைத்துச் செல்லப்பட்டார். ஷாஜி, துக்காபாய் மெனஹட் என்ற பெண்ணை இரண்டாவது மனைவியாக மணந்து நீஜபாயைப் புறக்கணித்தார். ஷாஜியின் புறக்கணிப்பால் சிவாஜி தாயின் அரவணைப்பில் மட்டும் வளர்ந்தார். சிவாஜியின் வாழ்க்கையின் உயர்வுக்கு அவர்தம் அன்னையே காரணமாவார். ஒவ்வொரு பெரிய மனிதருக்குப் பின்னும் ஒரு பெண்மணி உண்டு என்பர். சிவாஜிக்கு அவர் அன்னையின் ஆற்றலே பின் நின்றது. சிவாஜி அன்னையிடம் செலுத்திய அன்பு ஆண்டவனிடம் செலுத்திய பக்திக்குச் சமமானது என்று கூறப்படுகிறது. இளமையில் தந்தையின் புறக்கணிப்புக்கு ஆளான அவருக்கு இறையறிவை ஊட்ட முடிந்த அன்னையால் கல்வி அறிவை ஊட்ட இயலவில்லை. கல்வி அறிவைப் பெற முடியாவிடினும் கேள்வி அறிவினால் இராமாயணம், மகாபாரதம் ஆகியவற்றில் தேர்ச்சி பெற்றார். இவரது காப்பாளராக இருந்த தாதாஜி கொண்டதேவிடம் இந்து

133
சமயத்தையும் சாஸ்திரங்களையும் கற்றறிந்தார். படைப்பயிற்சியும், குதிரையேற்றமும் நன்கு அறிந்து கொண்டார். அச்சம் என்றால் இன்னது என்று அறியாத வீரச் சிறுவனாக அவர் வளர்ந்தார். தாதாஜின் அறிவுரையும் வழிகாட்டலும் சிவாஜியின் ஆரம்பகால ஆட்சிமுறை சார்ந்த பயிற்சிக்கு அடிப்படையாக அமைந்தன. கி. பி. 1647 ஆம் ஆண்டுவரை சிவாஜி தாதாஜியின் கட்டுப்பாட்டின் கீழ் செயற்பட்டார். அவர் மறைந்த பின்னர் இருபதாவது வயதில் தாமாகவே சுயமாகச் செயற்பட்டார்.
தாதாஜியின் உறவு மட்டுமன்றி குரு இராம்தாஸின் நல்லொழுக்கமும் அறிவும் சிவாஜிக்கு உதவின. இராம்தாஸ் எப்போதும் அவரிடம் மராத்தியர்களை ஒன்றுபடுத்துமாறு அறிவுரை கூறினார். பார்ப்பனர்களையும், பசுக்களையும் காப்பதற்கே ஆண்டவன் உன்னை அனுப்பினார் என்பாராம் அவர். ஆகவே சூழ்நிலைகளோடு அன்னை, ஆசிரியர்கள், அறிஞர்கள், சாதுக்கள் ஆகியோர் அவரது உள்ளத்தில் புத்தொளி ஊட்டி
சுதந்திர மாராட்டியப் பேரரசை உருவாக்கத் தூண்டினார்கள்.
அரசியல் வாழ்க்கை
சிவாஜி பூனாவிற்கு அருகிலுள்ள கோட்டைகளை இளம் வயதிலேயே பிடிக்க முற்பட்டார். ஆனால் தாதாஜி சிவாஜியின் இந்தத் துணிகர வீர வாழ்க்கையைக் கண்டு துயருற்றார். முதல் தரமான உயர் குடியினரின் மகனான சிவாஜி மரபு வழியே வந்த செல்வந்தருக்குரிய மென்மையான, எளிதான வாழ்க்கையை மேற்கொள்ளாமல் இத்தகைய செயல்களில் ஈடுபடுவது அவர் தகுதிக்கு குறைவு என்று கருதினார். ஆயினும் துணிகரச் செயல்கள் செய்வதில் ஆர்வம் கொண்டிருந்த சிவாஜி அவரது அறிவுரைகளைச் செவிமடுக்கவில்லை. முதலில் தோர்ணாக் கோட்டையை பீஜப்பூர் முஸ்லிம் தளபதியிடம் இருந்து கைப்பற்றினார். அக் கோட்டையில் இரண்டு லட்சம் ஹீன்கள் கிடைத்தன. அதைக் கொண்டு படை ஒன்றிணை உருவாக்கி அக்கோட்டைக்கு ஐந்து மைல் கிழக்கே ராஜ்கார் என்னும் கோட்டையைக் கட்டினார். பீஜப்பூர் அரசு இரண்டு ஆண்டுகள் சிவாஜி மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருந்தது. இச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி சக்கான், கொண்டா ஆகிய கோட்டைகளையும் சிவாஜி கைப்பற்றி மராட்டியத்தைப் பிணைக்கக் கூடிய கோட்டைச் சங்கிலி ஒன்றை ஆக்கினார். இதனால் ஆத்திரமுற்ற பீஜபுரி மன்னன் தன்னிடம் பணிபுரிந்த சிவாஜியின் தந்தையைச் சிறையிட்டார். தந்தையின் சிறை மீட்புக்காக ஷாஜகானின் உதவியை நாடி நின்றார். மகனுடைய நன்னடத்தை ஒப்புதலின் பேரில் தந்தை சிறை நீக்கப் பெற்றார். சிவாஜியும் சிலகாலம் அமைதி காத்தார்.
1656இற்குப் பிறகு சிவாஜி தம் உண்மையான அரசியல் வாழ்க்கையைத் தொடங்கினார். அப்போது முகலாயரின் அரசப் பிரதிநிதியாக தக்காணத்தில் அவுரங்கசீப் இருந்தார். சிவாஜி ஜாவலி என்னும் கோட்டையை அதைக் காத்து நின்ற சிற்றரசனைக் கொன்று கைப்பற்றினார். இதனால் ஓரளவு
இந்துக் க்களஞ்சியம்

Page 160
பலமுற்ற மராட்டியர் தம் கைவரிசையை பிற பல இடங்களிலும் காட்டத் தொடங்கினர். இதனால் ஆத்திரமுற்ற அவுரங்கசீப் ஒரு முகாலயப் படையை அனுப்பி சிவாஜியைத் தோற்கடித்தார். ஆயினும் அவரங்க சீப்பினால் சிவாஜியை முற்றாக அடக்க முடியவில்லை. மகன் ஷாஜஹான் நோய்வாய்ப்பட்டிருந்தமையும், பட்டப் போட்டிகளால் ஏற்பட்ட போர்களும் காரணமாக சிவாஜி தன் விருப்பப்படி பீஜப்புரியிலும், மகாராட்டிரத்திலும் செயற்படத் தடையில்லாமல் போயிற்று. ஜவாலி வெற்றி சிவாஜியின் வாழ்க்கையில் திருப்பு முனையாக அமைந்தது. படைக்கான சிறந்த ஆள்திரட்டும் நிலமாகத் திகழ்ந்த மாலிப் பகுதி அவர் கைக்கு வந்தது.
அவுரங்கசீப் வாரிசுரிமைப் போராட்டத்துக்கென வட இந்தியாவிற்குச் சென்ற பின்னர் தம் பகுதிகளை விரிவு செய்வதற்கான வாய்ப்பு ஒன்று சிவாஜிக்குக் கிட்டியது. கி. பி. 1657இன் முடிவில் வட கொங்கணத்தில் தமது ஆதிக்கத்தை நிலை நாட்டினார். கல்யாண், பிவந்தி ஆகியவற்றைக் கைப்பற்றி அவற்றினை கடற்படைத் தளங்களாக அமைத்தார்.
பீஜப்பூரின் பெரும்பகுதியையும் பல கோட்டைகளையும் சிவாஜி கைப்பற்றி இருந்ததால் சிவாஜியை அடக்குவதற்கு பீஜப்பூர் அரசு அப்சல்கான் என்பவரை நியமித்தது. அவரும் குதிரைமீது இருந்து ஒரு முறை கூடக் கீழே இறங்காது சிவாஜியைச் சங்கிலியால் பிணைத்துக் கைதியாக தாம் கொண்டு வரப் போவதாக வீரம் பேசினார். ஆயினும் சிவாஜியின் வலிமையை உணர்த்த அப்சல்கான் நேரடியாகத் தாக்கும் கொள்கையைக் கைவிட்டு தந்திரமாகத் தம் வலையிற் சிக்க வைக்க முயன்றார். பிரதாப்களில் தமது பாசறையை அமைத்துக் கொண்டு, தம்மை வந்து காணுமாறு கிருஷ்ணாஜி பாஸ்கரை அனுப்பி வைத்தார். சிவாஜி கிருஷ்ணாஜி மூலம் அப்சல்கான் சூழ்ச்சியை அறிந்து கொண்டு தமக்குப் பாதுகாப்பு வழங்குவதாக மனப்பூர்வமாக வாக்குறுதி அளிப்பதாயின் அப்சல்கானைச் சந்திப்பதாகச் சொல்லி அனுப்பினார். அதற்கு அப்சல்கானும் உடன்பட்டார். சிவாஜி, அப்சல்கானைச் சந்திக்கும் இடத்தைச் சுற்றி தமது படைவீரரை இருக்கச் செய்து இரும்புக் கவசம், இரும்புத் தொப்பி, இரும்பு நகங்கள் முதலிய தற்காப்புக் கவசங்களுடன் சென்றார். சிவாஜியைக் கண்ட அப்சல்கான் கட்டித் தழுவுவது போல் குரல் வளையை நெரித்துக் கத்தியாற் குத்திக்கொல்ல முயன்றார். ஆயினும் நிலைமையைச் சமாளித்த சிவாஜி இரும்பு நகங்களால் அப்சல்கானின் வயிற்றைக் கிழித்துக் கொன்றார். காட்டில் மறைந்திருந்த மராட்டிப் படைகள் பீஜப்பூர் படையைச் சிதறடித்து, நகைகனையும், நாணயங்களையும் பத்து லட்சம் கொள்ளைப் பொருட்களையும் கொண்டு சென்றன.
வட இந்தியாவில் நடைபெற்ற வாரிசுரிமைப் போரில் வாகைசூடி மீண்ட அவுரங்கசீப், வடக்கிலிருந்து தமது கவனத்தை தெற்கு நோக்கித் திருப்பினார். தமது தாய்மாமனான
இந்துக் க்களஞ்சியம்
34

ஷெயிஸ்டகானை மராட்டியர்களை அடக்க அனுப்பி வைத்தார். கி. பி. 1666இல் அகமது நகரில் இருந்து புறப்பட்ட அவர் பூனாவிற்கும், அகமது நகருக்கும் இடைப்பட்ட கோட்டைகளைக் கைப்பற்றினார். பூனாவைக் கைப்பற்றுவதிலும் சிரமம் ஏதும் இருக்கவில்லை. இதற்குள் மழைக் காலம் தொடங்கி விடவே பூனாவில் தங்கிவிட முடிவு செய்தார். பூனாவில் தங்கி இருந்த ஷெயிஸ்டகானை இரவில் தாக்கத் திட்டமிட்டார் சிவாஜி. நானூறு படை வீரர்களுடன் பூனாக் கோட்டையை நோக்கி 1663 ஏப்பிரல் பதினைந்தில் புறப்பட்டார். பூனாக் கோட்டை சிவாஜிக்கு நன்கு அறிமுகமான ஒன்று. கோட்டையுட் புகுந்த சிவாஜியை முகலாயர்கள் தடுத்து நிறுத்தினர். சிவாஜி முகலாயப் படையிலுள்ள மராட்டியர் எனத் தன்னையும் தன்னைச் சார்ந்தவர்களையும் அறிமுகப்படுத்திக் கொண்டு உட்புகுந்தார். எங்கும் இருள் ஷெயிஸ்டகானின் அறையை சிவாஜி முதலில் அடைந்தார். மற்றவர்கள் அவரைப் பின் தொடர்ந்தனர். அப்போது பணியாள் ஒருவன் விழித்துக் கொள்ள ஷெயிஸ்டகான் தப்பினார். இருளில் மராட்டியர்களுக்கும் முகலாயர் களுக்குமிடையே நடைபெற்ற சண்டையில் முகலாய ஆளுநர் தன் விரல்களை இழந்தார். மராட்டியர்களின் இவ் இரவுத் தாக்குதலில் ஷெயிஸ்டகான் தன் மகனையும், மனைவியரையும், நாற்பது பணியாட்களையும் இழந்தார். இந் நிகழ்ச்சியால் ஆத்திரமுற்ற அவுரங்கசீப் ஷெயிஸ்டகானை வங்காளத்துக்கு ஆளுநராக மாற்றினார். இது ஷெயிஸ்டகானுக்கும் வழங்கப்பட்ட தண்டனை எனப்படும்.
இரவுத் தாக்குதல் நடத்தியதால் மராட்டியர்கள் தெம்பு பெற்றனர். சிவாஜி மற்றொரு வீரச் செயலை மேற்கொள்ளத் திட்டம் தீட்டினார். அது இந்தியாவிலேயே செல்வச் செழிப்பு வாய்ந்த துறைமுகமான சூரத்தை தாக்குவதாகும். எதிரிகளை ஏமாற்றுவதில் வல்லவரான சிவாஜி தெற்கு நோக்கிச் செல்வதாக போக்குக் காட்டிவிட்டு வடக்கு நோக்கிச் சென்று வேகத் தாக்குதல் ஒன்று நடாத்தி நகரை சூறையாடினார். இத் தாக்குதலால் ஒரு கோடி ரூபாவுக்கு அதிகமான செல்வம் சிவாஜியின் கைகளில் குவிந்தது. சூரத் தாக்குதலால் சிவாஜின் இரண்டு நோக்கங்கள் நிறைவேறி. ஒன்று மராத்திய நாட்டின் மீது படையெடுத்த முகாலயரைப் பழி வாங்குவது. மற்றையது படைப் பெருக்கிற்கும் ஆட்சிச் சீர்திருத்தத்திற்கும் தேவையான பொருளைப் பெறுவது.
ஷெயிஸ்டகான் அடைந்த தோல்வியும், சூரத் தாக்குதலும் முகலாயரின் பெருமைக்குச் சிறுமை சேர்த்தன. இதனால் அவுரங்கசீப் ஆத்திரமுற்றார். மராட்டிய தலைவனை தம் முன் மண்டியிடுவதற்காக இராஜா ஜெயசிங்கை அனுப்பி வைத்தார். களம் பல கண்ட இராஜா ஜெயசிங் இராசதந்திரமும், போர் ஆற்றலும்மிக்கவர். இதுவரை நடைபெற்ற படையெடுப்பு முயற்சிகளில் மாறுபட்ட முயற்சி இது. இந்து ஒருவர் முகலாயருக்காக மற்றொரு இந்துவை எதிர்த்து நிற்கின்ற துன்பியல் நிகழ்வாக இந்துக்கள் கருதினர். இராஜா ஜெயசிங்

Page 161
இத்தாக்குதலில் தென்னகச் சக்திகளை சிவாஜிக்கு எதிராகத் திரட்ட முற்பட்டார். பீஜப்பூத் சுல்தான், போத்துக்கீசர், ஜான்சிரா சித்திகள் முதலியோர் அணுகப்பட்டனர். அத்துடன் மராட்டிய உயர் குடியினரையும் தம்பால் இழுக்க முற்பட்டார். யனார், யார் சிவாஜியின் கைகளிற் சிக்கி அவதியுற்றார்களோ அவர்களை யெல்லாம் இணைக்க முயற்சி செய்து பெரு வெற்றியும் கண்டார் என்றே கூற வேண்டும்.
சிவாஜியின் காப்பில் இருந்த புரந்தர்கோட்டை முற்றுகையிடப்பட்டது. இம் முற்றுகை பல மாதங்களாகத் தொடர்ந்து நடைபெற்றது. முகலாயர்களின் கடும் தாக்குதலால் நிலைகுலைந்தது மராட்டியப் படை கண்ணி வெடிகள் வைத்துக் கோட்டையைத் தாக்கவும் பீரங்கி கொண்டு பிளக்கவும் முற்பட்டார் ஜெய்சிங், மராட்டியர்கள் இனித் தப்பிப் பிழைக்க முடியாது என்ற நிலை ஏற்பட்டது. சமாதானத்தை நாடினார் சிவாஜி, நேரில் வந்து சரண்புக வேண்டுமென்று ஆணையிட்டார் ஜெய்சிங், சிவாஜி ஜெய்சிங்கைச் சென்று கண்டார். சிவாஜிக்கு ஜெய்சிங் சரியாசனம் தந்து சிறப்பித்தார். போரை நிறுத்தும்படி சிவாஜி கேட்டுக் கொள்ள உடன்படிக்கை ஒன்று கையெழுத்திடப்பட்டது. அதுவே புரந்தர் உடன்படிக்கையாகும்.
கி. பி. 1665 ஆம் ஆண்டு சிவாஜியும், ஜெய்சிங்கும் ஓர் உடன்படிக்கைக்கு வந்தனர். அதன்படி ஆண்டுதோறும் நான்கு லட்சம் ஹின் வருவாய் வரக்கூடிய இருபத்து மூன்று கோட்டைகளையும் அவற்றைச் சார்ந்த பகுதிகளையும் சிவாஜி அளித்தார். அவை முகாலயப் பேரரசுடன் இணைக்கப்பட்டது. ராஜ்கார் உட்பட சிவாஜியின் பன்னிரு கோட்டைகளும் ஒரு லட்சம் ஹின் வருவாய் வரக்கூடிய கோட்டைகள் சார்ந்த நிலப்பகுதிகள் சிவாஜியிடம் விடப்பட்டது. அத்துடன் சிவாஜி பேரரசுக்கு பற்றுறுதியுடன் பணிபுரிய வேண்டும் என்றும் கூறப்பட்டது. சிவாஜி தக்கணத்தில் பேரரசுக்காகப் போரிடுவதற்கும் உடன்பட்டார்.
சிறிது காலத்தின் பின்னர் கொங்கணத் தாழ்நிலங்களில் நான்கு லட்சம் ஹின் வருவாய் அளிக்கக்கூடிய பகுதியும், மேட்டு நிலத்தில் ஆண்டொன்றிற்கு ஐந்து லட்சம் ஹீன் வருவாய் உள்ள நிலங்களையும் தமக்கே அளிக்க வேண்டும் என்றும், எதிர்பார்க்கப்படும் பீஜப்பூர் வெற்றியின் பின் அன் நிலப்பகுதிகளை பேரரசர் ஆணையின்படி தமக்கே அளிக்க வேண்டும் என்றும், அவ்வாறாயின் பதின்மூன்று ஆண்டுத் தவணைகளில் நாற்பது லட்சம் ஹீன்களை பேரரசருக்கு அளிக்க ஒப்புக் கொள்வேன் என்றும் அமைந்த சிவாஜியின் மற்றார் விதிமுறையும் புரந்தர் உடன்படிக்கையில் சேர்க்கப்பட்டது. இவ்வுடன்படிக்கை முகலாயருக்குச் சாதகமாக அமைந்தது. பணமாக இரண்டு கோடிக்கு மேல் கிடைத்தது. பீஜப்பூரும் மராட்டிய அரசும் பகை அரசுகளாக மாறும். அத்துடன் தக்காணத்தில் முகலாயருக்கு எதிராக போர் தொடுத்திட சிவாஜிக்குப் போதிய அளவு அவகாசமும் இருக்காது. அவுரங்க சீப் இந்த உடன்படிக்கையை ஏற்றுக் கொண்டார்.

3
5
புரந்தர் உடன்படிக்கை மேற்கொள்ளப்பட்ட பின்னர் இராஜா ஜெய்சிங் தம் கவனத்தை பீஜப்பூரை நோக்கித் திருப்பினார். தக்கணத்தில் பீஜப்பூருக்கு எதிரான இப்போரில் சிவாஜி பெரும் பங்கு வகித்தார். இப்போரில் சிவாஜியின் செயல் திறனைப் பாராட்டிய பேரரசர் கற்கள் பதித்த வாளையும் சிறப்பு விருதையும் அனுப்பி வைத்தார். இருப்பினும் பீஜப்பூர் முற்றுகை பெரு வெற்றி அளித்தது என்று கூறமுடியாது. இதற்கு மாராட்டிய வீரன் சிவாஜியின் திட்டங்கள் நன்கு முற்றுப் பெறவில்லை என்பதே காரணமாகும் என்று கூறப்படுகிறது.
ஜெய்சிங், பீஜப்பூர் தோல்வியைச் சமாளிக்கவும் தெற்கில் சிவாஜி இருந்தால் பீஜப்பூருடன் இணைந்து கொள்ளக் கூடும் என்பதாலும், சிவாஜியை தானே முகலாய மன்னர் முன் கொண்டு வந்து நிறுத்திய பெருமையை பெற வேண்டுமென்பதாலும் சிவாஜியை அவுரங்கசீப்பின் அரசவைக்கு அனுப்பத் திட்டமிட்டார். ஜெய்சிங், சிவாஜியிடம் முகலாயப் பேரரசரிடம் இருந்து பல சிறப்புக்களும் சலுகைகளும் பெற்றுத் தருவதாக வாக்களித்து அனுப்பி வைத்தார். சிவாஜியும் தன் மகன் சாம்பாஜி, ஐந்து அதிகாரிகள், முன்னூற்று ஐம்பது படை வீரர்களுடனும் ஆக்ராவை நோக்கி புறப்பட்டுச் சென்றார்.
ஆக்ராவை அடைந்த சிவாஜிக்கு அதிர்ச்சியே காத்திருந்தது. சிவாஜி தன் அன்பளிப்புகளை வழங்கி நின்றபோது மன்னன் ஏறிட்டு நோக்கினாரே தவிர வார்த்தை ஒன்றும் பேசவில்லை. அரசபையில் உரிய ஆசனமோ உயர் குடியினர், இளவரசர்கள் அணியும் அங்கிகளோ வழங்கப்படாமல் அவமதிக்கப்பட்டார். இதனால் கோபாவேசம் கொண்ட சிவாஜி மன்னரைப் பழித்துப் பேசிவிட்டார். அத்துடன் மறுநாள் அரசபைக்கு தான் செல்லாது மகன் சாம்பாஜியை அனுப்பி விட்டார். இவரது இச் செயல்களால் ஆத்திரமுற்ற மன்னன் அவுரங்கசீப் சிவாஜியைக் கைது செய்து சிறையிலிட்டார்.
சிவாஜி தன் அறிவின் துணை கொண்டு ஆக்ராவில் இருந்து வெளியேற திட்டமொன்றை வகுத்தார். தனக்கு உடல்நிலை சரியில்லை என நடித்து மக்களுக்கும், பிராமணர்களுக்கும் கூடை கூடையாகப் பழங்களையும் இனிப்புப் பண்டங்களையும் அனுப்பி வைத்து அதில் இரண்டு கூடைகளில் சிவாஜியும் மகனும் ஒளிந்து வெளியேறிச் சென்றனர். உருவத்தில் சிவாஜியை ஒத்திருந்த அவரது ஒன்றுவிட்ட சகோதரரான ஹிரோஜிபர்ஸாந் என்பவர் சிவாஜியின் தங்கக் காப்பை அணிந்து சிவாஜியின் படுக்கையில் படுத்திருந்தார். சிவாஜி வெளியேறிய பன்னிரண்டு மணிகள் கழித்து சந்தடியின்றி ஹிரோஜி வெளிவந்தார். துறவி வேடம் பூண்டிருந்த சிவாஜியும், மகனும் காடு, மேடு குறுக்கு வழிகளில் எல்லாம் புகுந்து 1666இல் மகாராஸ்டிரத்தை வந்தடைந்தனர்.
சிறையில் வாடியதாலும் கடுமையான பயணத்தினாலும் சிவாஜியின் உடல்நலம் குன்றியது. சிவாஜிக்கு நீண்டகால ஓய்வு தேவைப்பட்டது. ஏறக்குறைய மூன்று ஆண்டுகள் சிவாஜி அமைதியாக இருந்தார். உள்நாட்டுச் சீர்திருத்தங்கள் செய்வதன்
இந்துக் ša Grāfai

Page 162
மூலமாகத் தமது அரசினை உறுதியாக்குவதற்கு சிவாஜி இவ்வாண்டுகளைப் பயன்படுத்தினார். அவுரங்கசீப்பும் இத்துணை ஆற்றலும், துணிச்சலும் மிக்க வீரரோடு தொடர்ந்தும் பகைமை பாராட்ட விரும்பாமல் தனது மகன் முவாசம் சிபாரிசு செய்த சமாதானத்தை ஏற்று ராஜா என்ற பட்டப்பெயரை சிவாஜி தரித்துக் கொள்ள சம்மதம் தெரிவித்தார்.
முகலாயருக்கு அடங்கி வாழ்வதை விரும்பாத சிவாஜி 1670 ஆம் ஆண்டு மீண்டும் போர் தொடங்கினார். புரந்தர் உடன்படிக்கை மூலம் தாம் இழந்த பல கோட்டைகளை மீட்டார். புரந்தர், கல்யாண், பீவந்தி, மஹிலி முதலானவை வீழ்ந்தன. பல ஊர்களைக் கொள்ளையடித்தார். அறுப்பத்தாறு லட்சம் ரூபா மதிப்புள்ள கொள்ளைப் பொருட்களுடன் சிவாஜி ஊர் திரும்பிய வழியில் சூரத்தை இரண்டாம் முறையாக சூறையாடி அழிக்க முற்பட்டார். சிவாஜியை இடைமறிக்க முயன்ற தாவூத்கான் குரேஷி இறுதியில் தோல்வியே கண்டார். இவ் வெற்றியைத் தொடர்ந்து தாம் சென்ற வழியில் இருந்த முகலாயப் பகுதிகளிலிருந்து சௌத் என்னும் வரியைச் சிவாஜி கொள்ளத் தொடங்கினார். இச் செயல்களால் ஆத்திரமுற்ற அவுரங்கசீப் மகபத்கானையும், பகதூர்கானையும் அனுப்பினார். ஆயினும் சிவாஜியே வெற்றியைத் தழுவிக் கொண்டார். 1670 - 1674 வரை அவர் தக்கானத்தில் நிகழ்த்திய போர்கள் அனைத்துமே அவருக்கு வெற்றி அளித்தது.
சிவாஜியின் முடிசூட்டு விழா.
இந்துக்கள் சிவாஜியைத் தங்கள் தலைவர் என்று கருதினர். இந்து சுயராஜ்யத்தை விரும்பிய மராத்திய அறிஞர்கள் அக்கனவு சிவாஜியின் வழியே நிறைவேற வேண்டுமென்று விருப்பம் கொண்டனர். சிவாஜியின் முடிசூட்டு விழாவை ஆடம்பரமாகக் கொண்டாட முடிவு செய்தனர். சிவாஜி சத்திரியரல்லர் என்றும் பண்டைக்கால இந்து வழக்கப்படி அவர் முடிசூடிக் கொள்ளத் தகுதியற்றவர் என்றும் பார்ப்பனர் ஏற்க மறுத்தனர். பிரம்மதேவர், வியாசர் எனப் புகழப்பட்ட காகபட்டர் சிவாஜிக்கு முடிசூட்டி வைக்க இசைந்தார். இந்தியாவின் பல பகுதிகளில் இருந்தும் பதினோராயிரம் பார்ப்பனர் மனைவி மக்களோடு வந்தனர். சிவாஜி கி.பி.1647இல் புகழ்படைத்த மராட்டிய நாட்டு ஆலயங்களுக்குச் சென்று வந்ததோடு முடிசூட்டு விழாச் சடங்குகள் தொடங்கின. 1674 ஆம் ஆண்டு ஜூன் மாதம் ஏழாம் நாளன்று அவர் தவமிருந்தார். அதன் பின்னர் காகபட்டரால் சிவாஜிக்கு பூனூல் அணிவிக்கப்பட்டது. முன்னரே மணம் செய்திருந்த தம் இரு மனைவியரையும் சத்திரிய முறைப்படி மீண்டும் மணந்து கொண்டார். சிவாஜி'துவிஜர் எனப்படும் இரு பிறப்பாளரானார். அப்போ காகபட்டரும் மற்றப் புரோகிதரும் மந்திரங்களை ஒதினர். பின்னர் சிவாஜி தம் வாழ்நாளில் செய்த பாவங்களுக்கு பரிகாரமாகத் தைலமுழுக்காடினார். அவர்களுக்கு தங்கம், வெள்ளி, செம்பு, துத்தநாகம், தகரம், ஈயம், இரும்பு ஆகிய ஏழு உலோகங்களையும், சிறந்த ஆடைகள் முதலிய பல பொருள்களையும் தராசில் நிறுத்தி துலாதானம் செய்தார். ஒரு லட்சம் ஹீன்களையும் அளித்தார்.
இந்துக் க்களஞ்சியம்
3

முடிசூட்டு விழாவன்று அரசர் அதிகாலையில் எழுந்து குலதெய்வத்தை வணங்கிய பின்னர் தம் குல குருவான பாலம்பட்டா, காகபட்டர் முதலானவர்களை வணங்கித் தொழுது, அவர்களுக்கு ஆடையும் அணிகலன்களும் வழங்கினார். தூய வெண்ணிற ஆடை அணிந்து பட்டத்து அரசி பக்கமிருக்கப் பொன்தகடு வேய்ந்த இருக்கையில் அமர்ந்தார். அரசியின் ஆடையின் நுனியும் அரசரின் ஆடையின் நுனியும் முடியப்பட்டிருந்தன. இளவரசர்கள் அவர்களுக்கு பின்னர் இருக்க, அமைச்சர்கள் எண்மரும் புண்ணிய ஆறுகளில் இருந்து கொண்டுவந்த நீரை அரசர், அரசியர், பட்டத்து இளவரசர் ஆகியோரது தலைகளில் தெளித்தனர். பின்னர் வேத மந்திரங்கள் முழங்க ஆரத்தி எடுக்கப்பட்டது. ஆரத்தி எடுக்கப்பட்ட பின்னர் அரசர் தன் உடையை மாற்றித் தம்மை நன்கு அலங்கரித்துக் கொண்டு மூத்தோரையும், பிராமணர்களையும் வணங்கி அலங்கரிக்கப்பட்ட அரியணையிருந்த மண்டபத்தினுள் நுழைந்து இசைக் கருவிகள் முழங்க அரியணை அமர்ந்தார். இந்துக்களுக்கென தனியான அரசு ஒன்றை உருவாக்கவேண்டு மென்ற சிவாஜியின் கனவு நிறைவேற்றப்பட்டது. அவரால் நிறுவப்பட்ட புதிய அரசிற்கு சுயராஜ்ஜியம் என்று பெயரிடப்பட்டது. தக்கணத்தில் சிதறிக் கிடந்த மராட்டியர்களை ஒன்று திரட்டி அவர்கள் தேசிய இனமாக மாறுவதற்குரிய அரசியல் அதிகாரமும், உரிமையும் வழங்கியவர் சிவாஜியே. சிவாஜி மக்களிடம் மறைந்து கிடந்த சக்தியை வெளிப்படுத்தி புது வாழ்வும் புதுத் தெம்பும் அளித்தார். தனது மக்கள் மத சுதந்திரம் பெற வேண்டுமானால் அவர்கள் முதலில் அரசியல் அதிகாரமுடையவர்களாக மாற வேண்டும் என்ற எண்ணமே சிவாஜியின் செயல்கள் அனைத்துக்கும் அடித்தளமாக இருந்தது. இதற்காகவே சிவாஜி முறையான முடிசூட்டு விழாவினை நடத்தி அரசர் என்ற பட்டத்தையும் பெற வேண்டிய அவசியம் இருந்தது.
அரசர் என்ற பட்டம் இருந்தாலேதான் அக்காலத்திலிருந்த அரசுகளோடு சமநிலையில் தொடர்பு கொள்ளும் உரிமை சிவாஜிக்கு வரும். அத்துடன் அவரால் வெளியிடப்படும் ஆனைகட்கும், பிற அரசுகளோடு மேற்கொள்ளும் உடன்படிக்கைகளுக்கும் சட்டவலு இருக்கும் என்ற காரணமும் சிவாஜிதன் முடிசூட்டு விழாவை முறைப்படி நடத்துவதற்கு முக்கிய காரணமாக இருந்தது. சிவாஜியின் முடிசூட்டு விழா கருவூலத்தையே காலியாக்கியது என்று கூறப்படுகிறது. சிவாஜி கி. பி. 1580 ஆம் ஆண்டு சித்திரை மாதம் பதின்மூன்றாம் திகதி நோய்வாய்ப்பட்டு இறந்தார்.
குணநலம்
பெற்றோரை வணங்கிடும் பிள்ளையாக, பிள்ளைகள் மீது பாசம் கொண்ட தந்தையாக, பெரியவரைப் போற்றும் குணசீலனாக, குடிமக்கள் நலம்பேணும் மன்னனாகத் திகழ்ந்தார். எதிரியின் பாசறைக்குள் புகுந்து எதிரியை வீழ்த்தித் திரும்பும் ஆற்றல் கொண்டவீரர் அவர். இவருக்குக் கல்வி அறிவு இருக்கவில்லையாயினும் பாரசீக மொழிக்குப் பதிலாக மராட்டிய மொழியை அரச மொழியாகச் செய்தார். வீர

Page 163
சிவாஜியைத் தன் தொண்டனாகவும் சீடனாகவும் ஏற்ற இராம்தாஸ் அவரின் சிந்தனைகளுக்கும் செயற்பாடுகளுக்கும் மேலும் உரமூட்டினார். ஆன்மீக அறிவுரைகளோடு, அரசியல் அறிவுரைகளும் வழங்கி மராட்டிய சமுதாயத்திற்காக அவர் ஆற்ற வேண்டிய பெரும் பணியை வலியுறுத்தி நின்றார். சந்தேசாய், “இராம்தாசுக்கும் சிவாஜிக்குமிடையே தொடர்பு மனப்பூர்வமாக இருந்தது. இராம்தாஸ் இன்றி சிவாஜியின் பணி இயலக்கூடியதாக இராது” என்று குறிப்பிட்டுள்ளார். சிவாஜி இந்து மதத்தில் தீவிர பற்றுக் கொண்டிருந்தபோதும் அவுரங்கசீப்பைப் போல் மதவாதியாக இருக்கவில்லை. ஒரு நாட்டை ஆளும் மன்னன் எப்படி வாழ வேண்டும் என்பதற்கு சிவாஜி ஒர் எடுத்துக் காட்டாகத் திகழ்ந்தார். தம்மைப் போல் தம் படைவீரரும் ஒழுக்கமாக வாழ வேண்டும் என்று விரும்பினார். படை முகாமிற்கு பாவையரை அழைத்து வரக்கூடாது என்று கண்டிப்பாகத் தடை விதித்திருந்தார். பெண்மையைப் போற்றும் பெரும் சீலராகத் திகழ்ந்தார். சிவாஜி தம் சந்ததியினருக்கு மராட்டியர்களின் புது வாழ்வு என்னும் அத்தியாயத்தைத் தொடங்கிவிட்டுச் சென்றார்.
ஆட்சி முறை
குடிமக்களின் நலன் கருதி ஆட்சி நடத்திய சிவாஜியின் அரசவையில் எட்டுப்பேர் அமைச்சர்களாக இருந்தனர். இது அஷ்டப்பிரதான என அழைக்கப்பட்டது. இவர்களை எவ்வித காரணமுமின்றி நீக்கவும், பதவியிலிருத்தவும் அரசருக்கு அதிகாரம் இருந்தது. ஆயினும் அரசர் அவர்கள்பால் மிகுந்த நம்பிக்கை கொண்டு அவர்களுக்குப் பொறுப்பான பணிகளை அளித்தார். அஷ்டப் பிரதான என்னும் மந்திரி சபை முறை சிவாஜியால் உருவாக்கப்பட்டது என்று கூற முடியாது. முகமதியர்களின் காலத்திலும் இப்பதவிகள் இருந்தன என்று கருதப்படுகிறது. சிவாஜி பெரும்பாலும் அமைச்சர்களின் பணிகளில் குறுக்கிடுவதில்லை. ஆயினும் கொள்கை வகுக்கும் விடையத்தில் அரசர் தலையிடுவதுண்டு. அமைச்சர்களின் முக்கிய பணி அரசருக்கு ஆலோசனை கூறுவதாகவே இருந்தது. அமைச்சர்களின் முதன்மையான இடத்தை வகித்தவர் பேஷ்வா என்று அழைக்கப்பட்டார். ஆனால் இவர் மற்ற அமைச்சர்கள் மீது மேலாண்மை கொண்டவர் அல்லர். நாட்டில் மொத்தம் பதினெட்டுத் துறைகள் அமைச்சர்களின் பொறுப்பிலும் மேற்பார்வையிலும் இருந்தன.
சேனாதிபதிகள் அறுவர் சிவாஜியின் காலத்தில் நியமிக்கப்பட்டனர். படையினைத் திரட்டி அதனை முறையாக அமைத்துக் கட்டுப்பாட்டினுள் வைத்திருக்கும் பொறுப்பினை, சேனாதிபதியே மேற்கொண்டார். அத்துடன் போர்க் காலங்களில் படைகளின் நிலையை ஒழுங்குபடுத்தினார்.
நாட்டின் உயர் நீதிபதி நியாயாதீசர் என அழைக்கப்பட்டார்.
பொது ஆட்சித்துறை, படைத்துறை ஆகியவற்றைச் சார்ந்த

நீதிக்கு இவர் பொறுப்பாவர். நிலங்கள் பற்றிய உரிமைகள், ஊர்த் தலைவர் பதவி முதலானவற்றில் சட்ட முறையான தீர்ப்புகளுக்கு இவர் பொறுப்பாக இருந்தார். சிவாஜியின் காலத்தில் நீதித்துறை அமைப்பு மிகவும் பழைமையானதொன்றாக இருந்தது. நீதி மன்றங்கள் எதுவும் முறையாக ஏற்படுத்தப்பட்டு இருக்கவில்லை. கிராமங்களில் ஏற்பட்ட வழக்குகளை பஞ்சாயத்துக்களே தீர்த்து வைத்தன. குற்றவாளியை அறிந்து கொள்ள சோதனை முறை இருந்தது. குற்றவியல் வழக்குகளை பட்டேல்கள் விசாரித்தனர்.
சிவாஜியின் இராணுவ அமைப்பு நன்கு அமைந்திருந்தது. அவர் நிலையான ஒரு படையை நிறுவினார். படைஞர்களைத் தாமே நேரிற் பார்த்துத் தேர்ந்தெடுத்தார். குறைந்த சுமையோடு ஒரு வீரனை மட்டும் சுமந்து சென்ற குதிரைப்படைப்பிரிவு இவரால் அமைக்கப்பட்டு இருந்தது. குதிரைப்படையில் அரசால் நிறுவப்பட்டுப் பராமரிக்கப்பட்ட ஒரு பிரிவும், அரசின் செலவில் தாங்களே குதிரைகளை வைத்துக் கொண்டு வந்த ஒரு பிரிவுமாக இரண்டு பிரிவுகள் இருந்தன.
படைத்துறையில் அடுத்த முக்கிய பிரிவு காலாட்படையாகும். இது ஒன்பது படைவீரர்கள் அடங்கிய சிறு படைப் பிரிவுகளைக் கொண்டிருந்தது. ஒவ்வொரு பிரிவுக்கும் ஒவ்வொரு தலைவர் (நாயக்) பொறுப்பாக விளங்கினார். இருபதாயிரம் (20,000) மாராட்டியப் படைவீரர்களைக் கொண்ட சிவாஜியின் காலாற்படைப் பிரிவு பெரும் பொருட்செலவில் மிகச் சிறந்த முறையில் அமைக்கப்பட்டிருந்தது. படைவீரர்களுக் கென்று செலவழித்திடப் போதிய அளவு செல்வம் நாட்டில் இருக்கவில்லை. எனவே, அன்னியருக்குச் சொந்தமான பகுதிகளைத் தாக்கியே தம் படைகளுக்கு வேண்டிய பொருள்களைக் கொண்டு வருவது என்னும் பழக்கத்தினைச் சிவாஜி வைத்திருந்தார். மழை காலங்களில் படை வீரர்களுக்கு ஒய்வு கிட்டியது. தசராவிற்குப் பின்னர் மன்னர் தேர்ந்தெடுத்த பகுதியின்மீது படை கொண்டு சென்றனர். படைவீரர்கள் போருக்குச் செல்லுமுன் அவர்களிடம் இருந்த பொருட்களைப் பற்றிய பட்டியல் தயாரிக்கப்பட்டது. அதுபோலவே அவர்கள் திரும்பி வந்த போதும் இருந்த பொருள்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டு இரண்டும் ஒப்பிடப்பட்டன. அப்படி ஒப்பிட்டபோது மேலதிகமாக இருந்த பொருட்களை அரசு எடுத்துக் கொண்டது.
கெரில்லாப் போர் முறையைப் பெரிதும் பின்பற்றிய சிவாஜியின் படை எளிதில் இடம்விட்டு இடம் பெயரக் கூடியதாக இருந்தது. குறைந்த அளவு படைத்தளவாடங்களையே கொண்டு சென்றது. சிவாஜியின் படை பதினேழாம் நூற்றாண்டில் பிறரால் எதிர்த்து நிற்க முடியாத படையாகத் திகழ்ந்தது என்றால் அதற்கு காரணம் ஒழுங்கான அமைப்பும் தீவிர கட்டுப்பாடும் ஆகும். படைவீரர்களுக்கு மட்டும் இந்தக் கட்டுப்பாடு இருக்கவில்லை. அரசருக்கும் இருந்தது. அரசர், அலுவலர்களின்
இந்துக் க்களஞ்சியம்

Page 164
நடவடிக்கைகளை இரகசியப் படையினரைக் கொண்டு கண்காணித்தார். போரில் திறமையோடு பணியாற்றியவர்கள்
மராட்டிய ஆட்சிக் காலத்தில் கெளரவிக்கப்பட்டனர்.
செளத், சர்தேஷ்முகி ஆகிய வரிகள் மூலம் அரசுக்கு வருவாய் கிட்டியது. சிவாஜி தனக்கு வேண்டிய நிதிக்கு ஊரியல் துறையை விட இராணுவத்துறையையே அதிகம் நம்பி இருந்தார். சௌத் என்னும் வரி மக்களுக்கு ஏற்படும் அபாயங்களில் இருந்து அவர்களைக் காத்திட அரசு விதித்த வரியாகும். படையெடுத்துச் சென்று வெற்றி பெற்ற நாடுகளில் இருந்தும், மற்றப் படையெடுப்புகளிலிருந்தும் தனது நாட்டைக் காத்திட சிவாஜி இவ்வரியை வசூலித்தார் என்று கருதப்படுகிறது. செளத் என்னும் வரியே சிவாஜியின் முக்கிய வருவாய்ப் பிரிவாக இருந்தது. சிவாஜி தாக்கிய அண்டை நாடுகளுக்குச் சொந்தமான பகுதிகளில் நிலையான வருவாயில் நான்கில் ஒரு பங்கினைக் கொள்வது வழக்கமாகும். ஆண்டுக்கு ஒரு தரம் செளத் வரி அறவிடப்பட்டது.
சிவாஜி தனது ஆட்சியில் மற்றொரு வரியினையும் அமுற்படுத்தி இருந்தார். அது சந்தேஷ்முகி என அழைக்கப்பட்டது. இவை இரண்டும் சட்டத்திற்கும் நீதிக்கும் புறம்பானவை என்றே கருதப்பட்டன. இவ்வரி வசூல்கள் ஒழுங்கற்றவை என்பதை யாவரும் ஒப்புக் கொள்கின்றனர். ஆயினும் சிவாஜி செய்தது எதுவேயாயினும் அதை நேர்மையானது என்று கூற வேண்டும் என்னும் கருத்துடைய சில வரலாற்றாசிரியர்கள் அவருக்கு நிதிப் பற்றாக்குறை ஏற்பட்டதாலும் ஆட்சிக்குப் பணம் தேவைப்பட்டதாலும் இவ்வாறு செய்ய நேர்ந்தது என்று கூறுவர்.
இவ் வரிகளை விட நிலங்களைப் பிரித்து அதன் தரத்திற்கேற்ப வரி வசூலிக்கப்பட்டது. குடியானவனின் மொத்த நில வரும்படியில் ஐந்தில் இரண்டு பங்கு அரசைச் சார்ந்ததாக இருந்தது. குடிமக்களிடம் இருந்து நிலவரி அரசின் அதிகாரிகளால் நேரடியாகப் பெறப்பட்டது. வரியை காசாகவோ, பொருளாகவோ கொடுத்தார்கள். பஞ்ச காலத்தில் குடியானவர்கட்கு நிதி தந்து உதவப்பட்டது.
சிவாஜியின் ஆட்சி சிறிது காலமே நடைபெற்றபடியால் சமூக, பொருளாதாரச் செயற்பாடுகளில் பாரிய பங்களிப்பை அவரால் வழங்க முடியவில்லை. அத்துடன் சிவாஜி எப்போதும் போரில் ஈடுபட்டு இருந்தபடியால் ஆட்சித்துறைச் சீர்திருத்தத்திலோ சமூக, பொருளாதார முன்னேற்றங்களிலோ அதிக அளவில் ஈடுபட முடியவில்லை. சிவாஜியின் முழு நோக்கமும் மராட்டியத்தில் வாழ்கின்ற இந்துக்களை விடுதலை செய்வது, ஆங்காங்கே சிதறிக் கிடந்த இந்துக்களை ஒன்றுபடுத்துவது. அந்த ஒரு நோக்கத்திற்காக அவர் ஓர் அரசை மட்டுமல்ல ஒரு நாட்டையே உருவாக்கினார். நிநி)
க்களஞ்சியம்
13

சிற்பக்கலை வரலாற்றில் சிவ வடிவங்கள் (பல்லவர், முற்காலப் பாண்டியர் காலம்)
பல்லவர், முற்காலப் பாண்டியர் காலம் தமிழகத்தின் சமய மறுமலர்ச்சிக் காலமாகும். வடஇந்தியாவில் ஏற்பட்ட வைதிக சமய மறுமலர்ச்சியின் செல்வாக்கு இக்காலத்தில் தமிழகத்திலும் பரவத் தொடங்கியது. ஏழாம் நூற்றாண்டிற்குச் சற்று முன்பாக பக்திஇயக்கம் தமிழகத்தில் எழுந்தது. இதன் விளைவாக சமயம் சார்ந்த கோயிற்கலைகளும் வளர்ச்சியடையலாயின. வைதிக சமயத்தினர் சமண, பெளத்தர்களின் செல்வாக்கைக் குறைக்க முனைந்தனர். பின்னர் அவர்கள் தங்களுக்குள்ளேயே முரண்பட்டு, போட்டியிட்டு தத்தம் சமயத்தினை வளர்த்தனர்.
பல்லவமன்னன் முதலாம் மகேந்திரவர்மன் (கி.பி. 590-630), சமண சமயத்திலிருந்து சைவ சமய குரவர் அப்பரால் சைவ சமயத்திற்கு மாற்றப்பட்டான். இதன் விளைவாக முதன் முறையாக அம்மன்னன் மண்டகப்பட்டில் சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகிய மும்மூர்த்திகளுக்கும் குடைவரைக்கோயில் ஒன்றை எடுப்பித்தான். இது தொடக்கத்தில் வைதீக சமயத்தவரிடையே நிலவிய ஒற்றுமையைக் காட்டுகிறது.
இம்மன்னனின் திருச்சிக் குடைவரை கோயிலில் தமிழ் நாட்டில் முதன்முதலாகச் சிவபெருமானின் கங்காதரர் சிற்பம் வடிக்கப்பட்டது. இக்கங்காதரர் சிற்பத்தில் சிவனுக்கு அருகில் பார்வதியின் உருவம் இல்லை. ஆனால் இதனைத் தொடர்ந்து வந்த காஞ்சிக்கைலாசநாதர் கோயிலிலும், முக்தேசுவரர் கோயிலிலும் கங்காதரருக்கு அருகில் பார்வதி நின்றிருப்பதைக் காணமுடிகிறது. திருச்சியிலுள்ள கங்காதரர் சிற்பம் முருகியல் நோக்கிற் சிறந்த படைப்பு எனலாம். இங்கு கங்கையைத் தனது சடையில் தாங்கும் சிவபெருமான் தனது வலக்கரத்தில் சீறும் பாம்பொன்றினைப் பிடித்துள்ளார். எனவே இங்கு அவர் கங்காதரராகவும், விஷபாகரனராயும் இருப்பதைக் காணலாம். இருகதைகளை ஒரு சிற்பத் தொகுதியில் மறைபொருளாகச் சிற்பி உணர்த்தியிருக்கிறான். இங்கு சிவபெருமான் இரண்டு திரவங்களைத் தாங்கியிருக்கின்றார். இரண்டுமே தம்மை நாடி வந்தவர்களைக் காத்தற் பொருட்டேயாகும். ஒன்றில் மண்ணுலகிற்கு வாழ்வுதர வேண்டி கங்கையைத் தாங்கினார். மற்றொன்றில் விண்ணுலகத் தேவர்களைக் காக்கும் பொருட்டு ஆலகால விசத்தைத் தானே பெற்று அருந்தினார். இச்சிற்பத்தொகுதியில் மற்றுமோர் சிறப்பும் உள்ளது. விண்ணுலகின் புனித ஆறான கங்கையினைத் தலையில் தாங்கி, மண்ணுலகை உய்விக்க வந்த சிவன் போல் பல்லவ மன்னன் மண்ணுலகின் புனித ஆறான காவிரிவரை வெற்றி கொண்டு தம் நாட்டைச் செழிப்படையச் செய்தான் என்பதை நினைவூட்டும் முறையில் இச்சிற்பத் தொகுதியை அமைத்திருக்கின்றான்.

Page 165
இதனை மகேந்திரனின் திருச்சிக் குடைவரையிலுள்ள கல்வெட்டும் உணர்த்துகிறது.
மாமல்லபுரத்துச் சிற்பங்களில் குறிப்பிடத்தக்க ஒன்று திறந்தவெளிப் பாறையில் அமைக்கப்பட்டுள்ள அர்ச்சுனன் தபசு என்னும் கிராதார்ச்சுனியம் அல்லது பகீரதன் தபசு என்னும் மிகப் பெரிய சிற்பத் தொகுதியாகும். இது இரு பெரும் கற்பாறைகளில் செதுக்கப்பட்டுள்ளது. இவ்விரு பாறைகளையும் இணைக்கின்ற இயற்கையான பிளவுதான் இச்சிற்பத் தொகுதிக்கு இருபொருள் தருவதாக உள்ளது. இதில் இறங்கிவரும் நாக கன்னியர் உருவங்கள் இப்பள்ளத்தில் கங்கை இறங்கி வருவதற்கான குறியீடுகள் என்று சொல்லலாம். எனவேதான் இவ் வமைப்பினைப் பகீரதன்தபசு என்கின்றனர். இப்பிளவின் வலது பக்கத்தில் ஒருவர் ஒருகாலில் நின்றுகொண்டு, மற்றொரு காலை மடக்கி, இருகைகளை உயர்த்தித் தவமிருக்கின்றார். அவருக்கு வலதுபக்கம் சிவபெருமான் திரிசூலம் தாங்கி நிற்கின்றார். அவர் கையிலிருக்கும் ஆயுதம் பாசுபதாஸ்திரம் எனில் தவம் செய்பவர் அர்ச்சுனனாகலாம். இடதுபக்கம் கங்கையிருப்பதாகக் கொண்டு தவமிருப்பவர் பகீரதர் எனலாம். இருபுராணக் கதைகளும் இங்கு இணைத்துக் காட்டப்பட்டுள்ளன. இச்சிற்பத் தொகுதி முழுவதும் மூவுலகையும் உணர்த்துவதாக அமைக்கப்பட்டிருப்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. சிவபெருமானும், தேவர்களும், சூரியனும், சந்திரனும் இடம் பெற்றுள்ள மேல்பகுதியினை விண்ணுல கென்றும், நடுவில் திராவிட விமானக் கோயிலுடன் உலகவாழ்வைக் காட்டும் பகுதியை மண்ணுலகென்றும், கீழே பள்ளமாக விடப்பட்டுள்ள பகுதியை பாதாள உலகமென்றும் கொள்ளலாம். சிவபெருமானின் வலதுபுறச் சடைக்கு மாறாக இடப்புறச் சடையின் மீது இறங்கிவரும் கங்கையைக் கொண்டிருக்கும் கங்காதரரின் நெடிய தோற்றம் திருகோகர்ணம் குடைவரைக் கோயிலிற் காணப்படுகிறது. இச்சிற்பம் கி. பி. 7-8 ஆம் நூற்றாண்டைச் சார்ந்தது.
மாமல்லபுரத்திலுள்ள தர்மராசரதம் முதலாம் நரசிம்மவர்மனின் (கி.பி. 630-668) காலத்திலே தொடங்கப்பட்டு, முதலாம் பரமேசுவரன் காலத்தில் விரிவுபடுத்தப்பட்டது என்ற போதிலும் அது முற்றுப்பெறவில்லை. சைவ இறையுருவங்களைக் கொண்ட அருங்காட்சியகம் என்று தருமராசரதத்தினைக் கருதலாம். கீழ்த்தளச் சுவர்களில் சிவபெருமானின் மூன்று சிற்பங்களோடு அரிகரர், அர்த்தநாரீசுவரர் உருவங்களும் உள்ளன. நடுத்தளத்தில் கங்காதரர், நடேசர், ரிஷபவாகனர், வீணாதரதட்சிணாமூர்த்தி ஆகியோர் வடிக்கப்பட்டுள்ளனர். மேல்தளத்தில் சோமாஸ்கந்தர் சிற்பத் தொகுதி உள்ளது. இச்சிற்பவமைதி தமிழகத்தில் முதலாம் பரமேசுவரவர்மனின் மகன் இராசசிம்மன் காலத்திற் பிரபலமடைந்தது."
சோமாஸ்கந்தர் வடிவம் பற்றி இக்காலத்தமிழ்ப் பக்தி இலக்கியங்களில் ஒரு தோவாரப் பாடல் தவிர (6498) வேறு எதிலும் குறிப்பிடப்படவில்லை. எனினும் இவ்வடிவம் பற்றி காளிதாசர் (கி.பி. 5ஆம் நூற்றாண்டு) தமது ரகுவம்சத்தில் சிவனும், உமையும், கந்தனும் இணைந்துள்ள ஒரு தோற்றம்

9
என்று குறிப்பிட்டுள்ளார்." வட இந்தியாவில் எங்குமே இவ்வுருவம் வடிக்கப்படவில்லை. தென்னகத்தில் பல்லவர்க்கு முந்திய சிற்பம் கடப்பா மாவட்டத்தில் பெத்தமுடியம் என்ற இடத்தில் கிடைத்துள்ளது. தமிழகத்தில் பல்லவர்க்கே உரித்தான இச்சிற்பத் தொகுதி சில குடைவரைகளிலும் மற்றும் அனைத்துக் கட்டிடக் கோயில்களிலும் இடம்பெற்றது. பல்லவர்தம் சமகாலப் பாண்டியரது திருப்பரங்குன்றம் (கி.பி. 773) குடைவரைக் கோயிலில் மட்டுமே இது இடம் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கதாகும். மாமல்லபுரத்தில் மகிசமர்த்தினி மண்டபத்திலும், கடற்கரைக் கோயிலிலும் சோமாஸ்கந்தர் சிற்பம் உள்ளது. இச்சிற்பத் தொகுதி ஒரு நல்ல குடும்பத்தின் இயல்பினைக் காட்டும் ஒரு முக்கியமான குறியீடு எனக் கருதலாம். இது தந்தை, அன்னை, தனயன் என்ற மூவரும் சேர்ந்த ஒரு குடும்பத்தைக் காட்டுகிறது. மேலும் அவர்களது பின்புறம் விஷ்ணு, பிரம்மா போன்றவர்கள் நின்றிருப்பது குடும்பத்தில் தொடர்புடைய (உறவினர்) மற்றவர்களையும் சேர்த்துப் படம் எடுத்திருப்பது போன்ற காட்சியினை விளக்குவதாயுள்ளது. இத்தகைய கருத்தினைப் பல்லவர்கள் விரும்பியும், போற்றியும் வந்துள்ளனர் எனலாம். மாமல்லபுரத்தில் உள்ள அரச அரசியரின் புடைப்புச் சிற்பங்களில் தந்தையும் அவரது அரசியரும் அமர்ந்திருக்கும்போது தனயனும் அவனது அரசியும் நின்றிருக்கக் காணலாம். பிற்காலத்தைச் சேர்ந்த கந்தபுராணத்தில் பகல் போன்ற நிறமுடைய சிவபெருமானுக்கும் இரவு போன்று கருமை நிறமுடைய உமையவளுக்கும் இடையே இளஞாயிறு போன்று ஒளிவீசும் கந்தன் அமர்ந்திருக்கின்றான் என்று கூறப்பட்டிருப்பது இங்கு நினைவு கூரத்தக்கதாகும்.
குப்தர் காலத்திலிருந்தே சைவ, வைணவ ஒருமைப் பாட்டைக் குறிக்கும் அரிகரர் சிற்பம் முன்னுரிமை பெற்றிருந்தது. அதனைப் பற்றி பின்வந்த முதலாழ்வார்களும் நாயன்மார்களும் பாடினர். இரண்டாம் நந்திவர்மனின் (கி.பி.731-796) காசக்குடி பட்டயத்திலும் அரிகரர் குறிப்பிடப்படுகிறார்." வேற்றுமதங்களெனக் கருதப்பட்ட சமண, பெளத்தர்களைத் தடுப்பதற்குச் சைவ, வைணவர்களிடையே இந்த இணைப்பு தேவைப்பட்டதெனக் கொள்ளலாம். தமிழகத்திற் கிடைத்திருக்கின்ற தொன்மையான அரிகரர் சிற்பம் பாண்டிய நாட்டில் பிள்ளையார்பட்டி குடைவரையில் (கி. பி. ஆறாம் நூற்றாண்டு) உள்ளது. இதன் காலத்தினை இங்குள்ள கல்வெட்டு எழுத்தமைதியைக் கொண்டு நிர்ணயித்துள்ளனர். இவ்வூருக்குச் சற்று அருகிலுள்ள குன்னக்குடியிலும் அரிகரர் உருவம் (எட்டாம் நூற்றாண்டு) உள்ளது. பல்லவர்களது அரிகரர் சிற்பங்களில் முதன்மையானது மாமல்லபுரத்து ஆதிவராகர் குடைவரையில் உள்ளதாகும். நான்கு கரங்களையுடைய இச்சிற்பத்தின் கீழ்ப்பகுதியில் இருவர் வணங்கிய நிலையில் உள்ளனர். இங்குள்ள அரிகரரின் ஆடையின் ஒரு பக்கம் தொடைவரையிலும், மறுபக்கம் பாதம் வரையிலும் நீண்டுள்ளது. ஆனால் தர்மராச ரதத்தில் உள்ள அரிகரரின் ஆடை இருகால் பக்கங்களிலும் பாதம் வரை நீண்டுள்ளது. அதியமான்களாற் குடைந்தமைக்கப்பட்ட
இந்துக் க்களஞ்சியம்

Page 166
நாமக்கல் இரங்கநாதர் குகைக்கோயிலில் எட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த அரிகரர், சடைமசூடமும் கிரீட மகுடமும் ஒன்றோடொன்று இணைந்து காணும் நிலையிற் காணப்படுகின்றார். இவை எல்லாம் சைவ, வைணவ ஒற்றுமையை உணர்த்துவதற்காகத் தமிழகத்தின் குடை வரைகளில் அமைக்கப்பட்டன என்று கருதலாம்.
இதேபோன்று சைவ, சாக்த சமயப் பிரிவினரை இணைக்கும் வகையில் அர்த்தநாரீசுவரர் படிமம் பல்லவர் காலத்தில் தர்மராசரதத்தில் வடிக்கப்பட்டது. இவ்வுருவம் பல இந்துக் கோட்பாடுகளிற் சொல்லப்பட்டுள்ள இரு உற்பத்திக் காரணிகளான புருஷ மற்றும் பிரகிருதியின் இணைந்த கோட்பாடேயாகும். ஆண்பகுதியான புருஷம் இங்கு இயக்கமற்றுள்ளது. ஆனால் பிரகிருதி அதனை இயங்கத் தூண்டும் காரணியாகின்றது. எனவே இவ்விரண்டும் பிரிக்க முடியாதபடி ஒன்றாக இணைந்துள்ளன." இவ்விரு சமயப் பிரிவினரிடையே ஒரு பகுதியினர் சிவனே அனைத்துமானவர் என்று கருதுபவர்கள். மற்றொரு பிரிவினரோ இப்பிரபஞ்சமும் அனைத்துக் கடவுளரும் சக்தியிலிருந்து தோன்றியவர்கள் என்ற கருத்தைக் கொண்டவர்கள். இவ்வேற்றுமைக்கு முற்றுப்புள்ளி வைக்கவே அர்த்தநாரி உருவம் வடிக்கப்பட்டது." இந்தியாவின் தொன்மையான அர்த்தநாரி சிற்பம் குசானர்களால் (கி.பி. முதலாம் நூற்றாண்டு முதல் மூன்றாம் நூற்றாண்டு வரை) மதுராவில் உருவாக்கப்பட்டது. பின்னாளில் முற்காலச்சோழர் கோயில்களில் தேவகோட்டங்களில் இது இடம் பெறலாயிற்று.
தமிழகத்தில் முதன்முதலில் கருவறையின் அல்லது விமானத்தின் தெற்குப் பக்கத்தில் தட்சிணாமூர்த்தி உருவத்தினை வைக்கும் மரபு தர்மராசர் ரதத்தில்தான் காணமுடிகிறது. இவர் வட இந்தியாவில் பெரிதும் போற்றப்பட்ட ஞானகுருவான லகுலீசருக்குப்பதிலாகத் தெற்கில் சைவர்களால் உருவாக்கப்பட்ட வடிவமாவார். ஆலமரத்திற்கு அடியில் நான்கு சீடர்களுடன் விலங்குகள் சூழவும் அமர்ந்து அறத்தைப் போதிக்கும் ஆசிரியராய் விளங்கும் இவரது உருவமைதி, சாரநாத்தில் மான் பூங்காவில் போதி மரத்தடியில் புத்தர் தனது முதற் போதனையைத் தொடங்கியதாக வடிக்கப்பட்ட சிற்ப
* இவ்வடிவமானது
அமைதியினைப் பின்பற்றிய ஒன்றாகும். தொடர்ந்து சோழர் காலத்து விமானங்களில் தெற்குத் தேவகோட்டங்கள் மற்றும் கிரீவ கோட்டங்களிலும் பாண்டியர்தம் கோயில்களிலே தெற்கு கிரீவ கோட்டங்களிலும் இடம் பெறலாயிற்று. பல்லவர் கோயில்களிற் காஞ்சிபுரத்திலும் திருக்கழுக்குன்றத்திலும், அவர்களது சமகாலப் பாண்டியர் கோயிலான கழுகுமலை (வெட்டுவான் கோயில்) ஒற்றைக்கல் கோயிலும், சேரநாட்டில் திருநந்திக்கரை மற்றும் இருநிலங்கோடு குடைவரைகளிலும் தட்சிணா மூர்த்தி காணப்படுகிறார். தர்மராசர் ரதத்தில் வீணாதர தட்சிணாமூர்த்தியாகவும், கழுகுமலையில் மிருதங்க தட்சிணாமூர்த்தியாகவும் வடிக்கப்பட்டிருப்பதால் இவர் பிரபஞ்சத்தின் குரு மட்டுமல்ல இசைக்கும் சிவனே இறைவன் என்பதை நிலைநாட்ட உருவான
இந்துக்கலைக்களஞ்சியம்

முயற்சி என்றே கூறலாம். தேவாரப் பாடல்களில் தட்சிணாமூர்த்தியின் சிறப்பு விவரிக்கப்பட்டுள்ளது." இதே காலத்தில், பாசுபதப்பிரிவினைச் சேர்ந்தவரும், வடக்கே தட்சிணாமூர்த்திக்கு இணையான குருவாகக் கருதப்பட்டவருமான லகுலீசரின் சிற்பங்கள் தர்மராசர் ரதத்திலும், தேவர் மலையிலும், அரிட்டாபட்டி குகையிலும் வடிக்கப்பட்டன. இதற்குச் சற்றுப் பிந்திய (கி. பி. 9-10 ஆம் நூற்றாண்டு) லகுலீசர் சிற்பம் திருவொற்றியூரிலே காணப்படுகிறது.
சிவபெருமானது நடனம் பற்றித் தேவாரப் பாடல்களில் விளக்கமாக விவரிக்கப்பட்டுள்ளன." இவ்வடிவம் இந்தியா முழுமைக்கும் பொதுவான இறைவனது ஐந்து செயல்களைக் குறிக்கும் பஞ்சக்கிருத்தியம் எனப்படும் ஆக்கல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் எனும் கோட்பாட்டை வலியுறுத்துவதாகும்.
ஒருவர் மற்றொருவருக்கு எவ்வகையிலும் குறைந்த வரல்லர் என்பதைக் காட்டச் சைவர், வைணவர், சாக்தர் ஆகியோர் போட்டி போட்டுக் கொண்டு உருவாக்கிய புராணக் கதைகள் மற்றும் கலை வடிவங்களில் இதுவும் ஒருவகை எனக் கருதலாம். பல்லவர் காலத்துத் தொன்மையான நடராசர் சிற்பம் முதலாம் மகேந்திரவர்மனின் (கி.பி.630) சீயமங்கலம் குடைவரையின் முகப்புத் தூணில் உள்ளது. தருமராசர் ரதத்தில் நடுத்தளத்தில் வடக்குச்சுவரிலும், காஞ்சி கைலாசநாதர் கோயிலிலும், மாதங்கேசுவரர் கோயிலிலும், பல்லவர்களுக்குச் சமகாலப் பாண்டியர் தம் சேவல்பட்டி, திருமலாபுரம் மற்றும் குன்னக்குடி குடைவரைகளிலும் சிவனது BL6UTਲੰ சிற்பங்கள் காணப்படுகின்றன. இவற்றில் குன்னக்குடியிலுள்ள நடேசருக்கு எண் கரங்கள் உள்ளன. பல்லவர் சிற்பங்கள் உட்பட ஏனைய அனைத்திலும் நாற்கரங்களே நடேசருக்குக் காணப்படுகின்றன.
சைவ வைணவ ஒருமைப்பாட்டைக் குறிக்கும் அரிகரர் சிற்பம் தோன்றிய அதேகாலத்தில் வேற்றுமைக் கருத்துக்களும் பெருகின. அக்காலத்தில் வைதிகப் பிரிவுகளில் சைவமே உயர்ந்ததெனக் காட்ட நாயன்மார்கள் முனைந்தனர். விஷ்ணுவானவர் சிவனை வணங்கினார் என்னும் கருத்தும் பரவலாக்கப்பட்டது." திருஞானசம்பந்தர் தமது ஒவ்வொரு பதிகத்திலும் ஒன்பதாவது பாட்டிலே திருமாலும், பிரம்மனும் சிவனது அடியையும் முடியையும் தேடிக்காண இயலாமற் போயினர் என்று குறிப்பிடுகின்றார்." இக்கருத்தை வலியுறுத்தும் வகையில் இலிங்கோத்பவர் சிற்பவடிவம் தமிழகத்தில் இடம் பெறலாயிற்று. இதன் தொடக்கத்தைப் பிள்ளையார்பட்டியிலும், குன்னக் குடியிலும் திருமையத்திலும் காணலாம். மாமல்லபுரத்துக் கடற்கரை கோயிலிலும், காஞ்சி கைலாசநாதர் கோயிலிலும் நன்கு வளர்ச்சியுற்ற இலிங்கோத்பவர் சிற்பங்கள் உள்ளன. இவ்விறை உருவினைக் கருவறையின் மேற்குச் சுவரில் உள்ள

Page 167
தேவகோட்டத்தில் வைக்க வேண்டும் என்ற முறைமை சோழர் காலத்திலேதான் ஏற்படுத்தப்பட்டது. இப்படிமம் வைணவர்களின் கிருஷ்ணரது விசுவரூப அமைப்பிற்கு இணையாக உருவாக்கப் பட்டதெனக் கருதலாம். கி.பி. ஐந்தாம் நூற்றாண்டிலே தியோகரிலும், ஆறாம் நூற்றாண்டிலே குசராத்தில் சாமலாசிலும்" அமைக்கப்பட்ட விசுவரூப சிற்பங்களிலும், ஆந்திராவில் மோகல்ராசபுரத்தில்" உள்ள குடைவரைத் தூணில் உள்ள விசுவரூபச் சிற்பத்திலும் சிவனும், பிரம்மனும் விஷ்ணுவிலிருந்து உதித்தவர்களாகக் காட்டப்பட்டிருப்பது இங்கு நினைவுகூரத் தக்கதாகும்.
விஷ்ணு ஆயிரத்து எட்டு மலர்களால் சிவபெருமானைத் துதித்தவர் என்னும் கருத்தினை வெளிப்படுத்தும் சிற்பங்கள் கி.பி.எட்டாம் நூற்றாண்டில் வடிக்கப்பட்டன. இதனைப் பாண்டியரின் குன்னக்குடி குடைவரையிலும் பல்லவரது காஞ்சி கைலாசநாதர் கோயிலிலும் காணமுடிகிறது. கைலாசநாதர் கோயிலில் மட்டும் சிவபெருமானின் மேன்மையைக் காட்ட இச்சிற்பம் மூன்று இடங்களில் வடிக்கப்பட்டுள்ளது. இவ்வடிவம் பெருவழக்கிற்கு வந்தபின்பு இதுபற்றி மாணிக்கவாசகர் சிறப்பித்துப் பாடியிருக்கக்கூடும்.
ஏகபாதமூர்த்தி அல்லது ஏகபாததிரிமூர்த்தி என்பது நடுவில் சிவபெருமானையும், அவரது இடுப்பிலிருந்து இருபக்கங்களில் (திருவொற்றியூர்) அல்லது அவரது கால்மூட்டிலிருந்து இருபக்கங்களில் (திருவானைக்கா) விஷ்ணுவும், பிரம்மாவும் தோன்றுவது போல் அமைக்கப்படும் படிமம் ஆகும். இந்தியக் கலைஞர்கள் சமய ஒருமைப்பாட்டுக்காகவோ அல்லது சிவபெருமானின் மேன்மையைக் காட்டுவதற்காகவோ உருவாக்கிய ஒரு சிற்பம் இதுவாகும். இது வட இந்தியாவில் குப்தர்களுக்கும் பிந்திய காலத்திற் பிரபலமடைந்திருந்தது." பல்லவரது மாமல்லபுரத்துக் கடற்கரைக் கோயிலில் வெளிப்பிரகாரவாயிலில் மேலே ஏகபாதமூர்த்தியின் புடைப்புச் சிற்பம் காணப்படுகிறது. தேவாரப் பாடல்களிலும் இவ்வுருவம் பற்றிக் குறிப்பிடப்பட்டிருக்கிறது."
சிவபெருமானின் இராவண அனுக்கிரகம் பற்றிய குறிப்பு திருஞானசம்பந்தரது பதிகங்கள் ஒவ்வொன்றிலும் எட்டாவது பாட்டில் வருகிறது. பலம் வாய்ந்த இராவணன் தனது பலகரங்களாலும் சக்தியை ஒன்று திரட்டிக் கைலாய மலையையே பெயர்த்தெடுக்க முயன்ற முயற்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க சிவபெருமான் தனது காற் பெருவிரல் ஒன்றை மட்டும் அழுத்தி அவனைப் பணிய வைத்தார். இக்கதை சிவபெருமானின் மேன்மையைக் காட்ட எழுந்தது. இதை உணர்த்தும் இராவண அனுக்கிரகமூர்த்தி சிற்பங்கள் முதன்முதலில் தமிழகத்தில் காஞ்சிபுரத்தில் பல்லவர்களால் கி.பி.730க்குப்பின்னர் கட்டப்பட்ட முத்தேசுவரர், மாதங்கேசுவரர், பிறவாதானேசுவரர் கோயில்களிலும், திருப்பரங்குன்றம் பாண்டியர் (கி. பி. 773) குடைவரையின் மேற்கு முகப்பிலும் காணப்படுகின்றன. இது
14

போன்றே எல்லோராவிலும் (பி. பி. 750) இப்படிமம் சிறப்புப் பெற்றதாயுள்ளது.
சிவபெருமானது படிமங்களில் இலிங்காதரர் என்பதும் குறிப்பிடத்தக்க ஒன்றாகும். இது தமிழகத்திற் பாசுபதபிரிவினர் வாழ்ந்த இடங்களிலெல்லாம் பிரபலமாயிருந்தது." பல்லவர்களது காஞ்சிக் கோயில்களில் ஒன்றான தர்ம மகாதேவேசுவரர் எனப்படும் முத்தேசுவரர் கோயிலில் மகாமண்டபத்து இடது சுவரில் இலிங்காதரர் சிற்பம் உள்ளது. இதில் சிவபெருமான் கைலாயத்தில் தமது பரிவாரங்களுடன் அமர்ந்துள்ளார். அவரது இடது மேல் கையில் ஒரு சிவலிங்கத்தினைப் பிடித்துள்ளார். இது முற்காலச் சோழர் கோயில்கள் சிலவற்றிலும் பின்னாளில் (கீழையூர், கொடும்பாளூர்) இடம்பெற்றது.
ஜூரகரேசுவரர் என்னும் சிவபெருமானின் தொன்மக்கதை பசுமாசூரனை வதம் செய்தமை தொடர்பாக உருவானதாகும். ஆகமங்களில் இவ்விறையுருவம் மூன்று தலைகள், மூன்று கால்கள், ஒன்பது கண்கள், ஆறுகைகளைக் கொண்டதென விளக்கப்படுகிறது". பல்லவர் கோயில்களில் ஒன்றான காஞ்சி ஜூரகரேசுவரர் (10ஆம் நூற்றாண்டு) கோயிலில் இச்சிற்பம் காணப்படுகிறது. கோயம்புத்தூர் மாவட்டம் பவானியிலும், தாரமங்கலத்திலும், பாண்டிய நாட்டில் உக்கிரங்கோட்டையிலும் (கி.பி.9ம் நூற்றாண்டு) ஜூரகரேசுவரர் சிற்பங்கள்
வடிக்கப்பட்டுள்ளன.
பிச்சாடனர் சிற்பம் சிவபெருமான் பிச்சைபுகும் பெருமானாக உருவம் எடுத்த காட்சியை விளக்குவதாகும். கோபத்தால் பிரம்மனின் தலை ஒன்றைக் கொய்த பாவத்தினைப் போக்கவே அவர் இவ்வுரு எடுத்ததாகக் கூறுவர். தாருகாவனத்து ரிஷிகளின் ஆணவத்தை அடக்கச் சிவபெருமான் இவ்வுருவத்தை எடுத்தார் என்றும் கூறுவர். இது ஆணவம் நிறைந்த மனித மனத்திற்கும் கடுமையான தவத்திற்கும் மேலான இறைவனின் உயர்வுத் தன்மையை விளக்கும் ஒரு குறியீடென்று தெரிகிறது.* தேவாரத்திலும் பிச்சாடனர் பற்றிய குறிப்பு வருகிறது." இவ்வுருவ அமைதியின் தொன்மையான சிற்பம் சாளுக்கிய மன்னன் விக்ரமாதித்தன் (கி.பி. 681-96) காலத்தில் வாதாபிக்கு அருகில் ஆலம்பூரில் கட்டப்பட்ட சுவர்க்க பிரம்மா கோயிற் சுவரிற் காணப்படுகிறது." பல்லவர் கோயில்களிற் காஞ்சியில் கைலாசநாதர் கோயிலிலும், கோனேரிக் குப்பத்தில் உள்ள இரவசுதான ஈசுவரத்திலும் பிச்சாடனர் படிமம் காணப்படுகிறது. கஜசம்ஹாரமூர்த்தி, ஊர்த்துவதாண்டவர், கங்காதரர், திரிபுராந்தகர் சிற்பங்களும் கைலாசநாதர் கோவிலில் வடிக்கப்பட்டுள்ளன. இக்கோயிலில் ஏகாதசருத்ரர்களது உருவம், அதாவது பதினொரு முகங்கள் அல்லது பதினொரு உருவங்கள் கொண்ட சிவன் சிற்பம் காணப்படுகிறது. இது பெளத்த
இந்துக் க்களஞ்சியம்

Page 168
சமயத்தில் உள்ள பதினொரு முகங்கொண்ட ஏகாதசமுக அவலோகதீசுவரர் உருவத்தினோடு ஒப்புநோக்கத்தக்கதாகும். பதினொரு தலைகளையுடைய கி. பி. 5-6ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த, அவலோகதீசுவரர் சிற்பம் ஒன்று மகாராட்டிரத்திலே காவேரி குகை 41 இல் காணப்படுகிறது. *
இவை தவிர காஞ்சி கைலாசநாதர் கோயிலின் உட்பிரகாரத்தில் அமைந்துள்ள ஐம்பத்தியெட்டுச் சிறுகோயில் அமைப்புகளில் பெரும்பான்மையானவற்றில் சிவமூர்த்தங்களே உள்ளன. அவற்றில் குறிப்பிடத்தக்கவை சிவபெருமான் நந்தியின் மீது வீராசனத்தில் அமர்ந்திருப்பதும், அவர் ஊர்த்துவக என்னும் மத்தளம் வாசிப்பதும், அம்பு போன்ற இசைக்கருவி ஒன்றை மீட்டுவதும், யாழ் வாசிப்பதும் போன்ற சிற்பங்களாகும்.
சிவமூர்த்தங்களில் மிகவும் குறிப்பிடத்தக்கது இலிங்க வடிவமாகும். இது உற்பத்தியின் ஆதியாகும். இதன் மூன்று பகுதிகள் மும்மூர்த்திகளையும் இணைக்கும் அமைப்பாகும். அடிப்பாகம் பிரம்ம பாகமெனவும், நடுப்பாகம் விஷ்ணுபாக மென்றும், மேல்பாகம் ருத்ரபாகமெனவும் கூறப்படுகிறது. தொடக்ககாலப் பல்லவர் குடைவரைகளில் கல்லாலான சிவலிங்கம் வைக்கப்படவில்லை. இராசசிம்மன் காலத்திலிருந்து கருவறையில் சிவலிங்கம் வைக்கும் மரபு கடைப்பிடிக்கப்பட்டது. ஆனால் பல்லவரின் சமகாலத்துப் பாண்டியர் குடைவரைகள் அனைத்திலும் சிவலிங்கங்கள் பாறைகளிலேயே சிற்பமாகச் செதுக்கப்பட்டதோடு சில கோயில்களில் நந்தியின் உருவமும் வெட்டப்பட்டிருப்பதைக் காணமுடிகிறது.
பல்லவர் காலத்திற் சைவம் மேலோங்கிய நிலையிலிருந்தது என்பதை இக்காலத்தில் வடிக்கப்பட்ட சிவபெருமானது வெவ்வேறு சிற்ப வடிவங்களும் மேற்கண்ட விளக்கங்களும் காட்டுகின்றன. மேலும் சிவபெருமானின் சாந்தம், கருணை மற்றும் கோபம் ஆகிய இயல்புகளைச் சித்தரிக்கும் வடிவங்களோடு மற்றக் கடவுளைவிட அவர் உயர்ந்தவர் என்ற கருத்தை உணர்த்தும் சிற்பங்களும் உருவாக்கப்பட்டன என்பதைப் பல்லவர் - பாண்டியர் காலச் சிவவடிவங்களின் சிற்ப
ஆய்வு காட்டுகிறது.
குறிப்புகள்
1. SusanL. Huntington, The Art of Ancient India, Weather
Hill, New York, 1993, P294. மேலது. ப. 310. 3. Basil Gray,ed. The Arts of India, Phaidon, Oxford,
1981, pp.65-66. 4. Kalidasa, Raghuvamsa, III, 23 (quoted from C. Sivaramamurti, Geographical and Chronological factors in India "Iconography', in Ancient India, No.6, 1952, P58. 5. மேலது. ப. 46.
கந்தபுராணம்.
இந்துக்கலைக்களஞ்சியம்

42
திருவந்தாதி, 5, 98, தேவாரம், 4804.
8. S. I. I. Vol. II, 73, V. 4.
9. C. Sivaramamurti, Kalugu malai and Early pandyan Rock - cut Shrines N. M.Tripathi Pvt.Ltd., Bombay 1961, P. 38.
10. Susan L. Huntington, (p56F601 gil, U.279
11. G. Sethuraman, "Religious Harmony as reflected in Indian Sculptures, UNITE Dec. 1995, (Vol.4) p. 51.
12. C. Silvaramamurti, (epsiiT6OTgi, 1952 LI.. 58.
13. தேவாரம்,7894
14. தேவாரம் 124, 576, 2881, 4428, 4528, 4941.
15. ஆ. வேலுப்பிள்ளை, தமிழ் இலக்கியத்தில் காலமும், கருத்தும், பாரி புத்தகப்பண்ணை, சென்னை, மூன்றாம் பதிப்பு, 1985, ப. 140.
16. தேவாரம், 138, 6175,6984 மற்றும் சம்பந்தர் பாடல்கள்.
17. Susan L. Huntington, GLDGugil, L. 232.
18. மேலது. ப. 454.
19. S. D. Kulkarni, ed., Bhismas Study of Indian History and Culture, Vol. V, Pt. I, History of Tamilakam, Bombay 1995, P141.
20. J. C. Harle, Tie Ari and Architecture of the Indian Subcontinent, Pelican Books, London, 1990, PP.161-162.
21. தேவாரம், 234, 1382.
22. K. V. Soundararajan, The Art of South India-Tamilnadu and Kerala, Sundeep Prakasan, Delhi, 1978, P39.
23. H. Krishna Sastri, South Indian Images of Gods and Goddesses, Asian Educational Service, New Delhi, 1995, P 165.
24. கு. சேதுராமன், இராமேசுவரம், கோயில், ஜே. ஜே. பப்ளிகேசன்ஸ்,
மதுரை, 2002, ப. 144.
25 தேவாரம், 12.
26 , C, Harle, முன்னது, பக்.186-187
27. Susan L. Huntington, üp6öTGÜTğil, J. 264, LİLih 12.27
(கு. சே) & (வெ. வே.)
சிற்பக்கலை வரலாற்றில் சிவ வடிவங்கள் (சோழர் காலம்)
(33Iழர்கலை, பல்லவரின் தொடர்ச்சியாய்த் தமக்கே உரிய சில கூறுகளைக் கொண்டு விளங்குவது. சோழரின் கலைப் பெருமையினை அறிந்த முருகியலார் அவர்களின் கலைப் பொக்கிசங்களை உலகின் பல அருங்காட்சியகங்களிலும், தனியார் மாளிகைகளிலும் பாதுகாத்து வைத்துள்ளனர். சோழர்காலச் சிவவடிவங்கள் தொடர்பான சிற்பங்களைச் சோழர் கோயில்களிற் (கி.பி.850-1270) கருவறைகளிலும், அர்த்த மண்டபத் தேவகோட்டங்களிலும் பரிவார ஆலயங்களிலும் காணலாம். இடைக்காலச் சோழப் பேரரசர்கள் காலத்தில் (கி.பி. 985-1070) பேரரசுக் கொள்கையை வெளிப்படுத்தும் வகையில் சிற்பங்கள் வடிக்கப்பட்டன. பிற்காலச்சோழர் காலத்தில் (கி.பி. 1070-1210)

Page 169
திருச்சுற்று மாளிகைகள், உயர்ந்த கோபுரங்கள் ஆகியவற்றில் அவற்றின் பெயரினைத் தெரிவிக்கும் கல்வெட்டுக்களுடன் கூடிய இறையுருவங்கள் அமைக்கப்பட்டன. சோழர்கள் காலத்திலே தான் தென்னகத்திலேயே முருகியலிலும், தொழில்நுட்பத்திலும், சிறந்த செப்புத்திருமேனிகளும் வார்க்கப்பட்டன.
முற்காலச் சோழர் காலம்
நார்த்தாமலை விசயாலய சோழீச்சுவரத்தில், விசயாலய சோழன் காலத்தில், செய்விக்கப்பெற்ற பல சிற்பங்கள் இன்று புதுக்கோட்டை அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளன. இவற்றில் குறிப்பிடத்தக்கது வீணையை மார்போடு சேர்த்து வைத்திருக்கும் வீணாதர தட்சிணாமூர்த்தியின் உருவமாகும். இது பல்லவர் - சோழர் ஆகியோரிடையே ஏற்பட்ட கலைமரபுப் பெயர்ச்சியின் அடையாளமாக அமைந்துள்ளது. காஞ்சி கைலாசநாதர் கோயிலிற் சிவபெருமான் மார்போடு அணைத்து யாழ் அல்லது வீணையை வைத்திருக்கும் சிற்பம் காணப்படுகிறது. சோழர்காலத்துக் கோயில்களில் தெற்குத் தேவகோட்டங்களிலும், கிரீவகோட்டங்களிலும், கொடும்பாளூர், கீழையூர், பழுவூர், லால்குடி, துடையூர், மேல்பாடி போன்ற இடங்களில் வீணாதர தட்சிணாமூர்த்தியின் சிற்பங்கள் உள்ளன. சோழர் கோயில்கள் பலவற்றில் வீணாதரர் அமைந்திருப்பது அம்மன்னர்கள் இசைக்கலையில் கொண்டிருந்த அதிக ஈடுபாட்டைக் காட்டுகிறது. பழுவூர் தட்சிணாமூர்த்தியின் உதடுகள் பாடுவதுபோல்
அமைக்கப்பட்டிருக்கும் பான்மை காணத்தக்க ஒன்றாகும்.
முதலாம் பராந்தக சோழன் காலத்தில்தான் எந்தெந்தத் திக்குகளில் எந்தெந்த இறையுருவங்களை வைப்பது என்பது நிர்ணயிக்கப்பட்டு அம்முறை தொடர்ந்து கடைப்பிடிக்கப்பட்டது. அவ்வகையில் சோழர்களது கோயில்கள் அனைத்திலுமே தெற்குத் தேவகோட்டங்களில் தட்சிணாமூர்த்தி இடம் பெறலானார். பல்லவரின் தர்மராசர்ரதத்திலுள்ள தட்சிணா மூர்த்திக்கும் சோழரது தட்சிணாமூர்த்திக்கும் உள்ள வேறுபாடு யாதெனில் சோழரது தட்சிணாமூர்த்திக்கு அருகில் முதிய சீடர்கள் அமர்ந்திருப்பர். அவரது காலடியில் முயலகன் இருப்பான். பல்லவர் காலத்தினைப் போன்று காலடியில் நாகமும் மானும் இடம் பெறவில்லை. தஞ்சை மாவட்டம் பாவநாசம் வட்டத்தில் உள்ள சில கோயில்களில் தட்சிணாமூர்த்தி அமர்ந்திருக்கும் இடத்தில் உள்ள மரத்தின் கிளையில் பொக்கணம் எனப்படும் அவரது
விபூதிப்பையும் வைக்கப்பட்டிருப்பதைக் காணலாம்.
முதலாம் ஆதித்தன் காலத்துச் சிற்பங்களின் படைப்பு நயத்தினைக் கும்பகோணம் நாகேசுவரசுவாமி கோயிலிலும், லால்குடி, சீனிவாசநல்லூர், திருவல்லம், செந்தலை, கண்டியூர், தக்கோலம் போன்ற இடங்களிலுள்ள கோயில்களிலும் காணலாம்.
கும்பகோணத்தில் தட்சிணாமூர்த்தி, ரிஷபவாகன அர்த்தநாரி,
14

பிச்சாடனர் ஆகியோரின் சிற்பங்கள் சிறந்த கலை நயத்துடன் வடிக்கப்பட்டுள்ளன. இங்கு அர்த்தநாரிசுவரரும், பிச்சாடனரும் கருவறை மற்றும் அர்த்தமண்டப தேவகோட்டங்களில் முதன் முறையாக இடம் பெற்றுள்ளனர். இப்பிச்சாடனர் உருவம் ஆடை ஏதுமின்றி ஆபரணங்களே ஆடையாக, நாகமே இடுப்புக்கச்சையாக மிக நேர்த்தியாக வடிக்கப்பட்டுள்ளது. கலைவரலாற்றாய்வாளர் பெரிதும் வியக்கும் வண்ணம் இது காட்சியளிக்கிறது. முற்காலச் சோழர்காலத்தில் கோனேரிராஜபுரம் உமாமகேசுவரர் கோயிலிலும், அல்லூர் பசுபதிசுவரர் கோயிலிலும், இடைக்காலச் சோழர் காலத்தைச் சேர்ந்த தஞ்சைப் பெரிய கோயிலிலும், இராமேசுவரம் கந்தமாதன ஈசுவரர் (கோயில் 1) கோயிலிலும் தாராசுரம் பிற்காலச் சோழர் கோயிலிலும், பிச்சாடனர் சிற்பங்கள் காணப்படுகின்றன. தாராசுரத்தில் உள்ள பிச்சாடனர் உருவம் ரிஷிபத்தினிகள், குள்ளச்சிறுபூதங்களின் உருவங்களோடு பல்வகை மெய்ப்பாடுகளுடன் நாடகக் காட்சி ஒன்றைக் காணும் பாங்கில் உருவாக்கப்பட்டுள்ளது. இச்சிற்பத் தொகுதி தற்போது தஞ்சை -9|[Te#i அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது. சோழர்காலத்தில் பிச்சாடனர் செப்புத் திருமேனிகளும் வார்க்கப்பட்டன. இதில் குறிப்பிடத்தக்க முருகியல் திறனுடையது திருவெண்காடு (11 ஆம் நூற்றாண்டு) பிச்சாடனர் உருவமாகும். இதுவும் தற்போது தஞ்சை அருங்காட்சியகத்தில் உள்ளது.
பல்லவர் காலத்தில் பிரபலமாயிருந்த சோமாஸ்கந்தர் படிமம் சோழர் காலத்துக் கோயில்களில் இடம் பெறவில்லை. ஆனால் செப்புத் திருமேனிகள் வார்க்கப்பட்டன. இதற்கு எடுத்துக் காட்டாகத் தஞ்சைக் கலைக்கூடத்தில் வைக்கப்பட்டுள்ள தஞ்சை மாவட்டம் பட்டீசுரம் (கி. பி. 975) மற்றும் சென்னை அருங்காட்சியகத்தில் உள்ள நீடூர் (கி. பி. 1000) சோமாஸ்கந்தர் செப்புத் திருமேனிகளைச் சொல்லலாம். கும்பகோணம் நாகேசுவரசுவாமி கோயிலில் அதிட்டானக் கண்டத்தில் உள்ள சிற்றுருச் சிற்பங்களில் சோமாஸ்கந்தரின் உருவம் பொறித்திருப்பதைக் காணமுடிகிறது.
கி. பி. 9-10 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கொடும்பாளூர் மூவர் கோயிலின் தளங்களிலும் கிரீவகோட்டங்களிலும் உமாமகேசுவரர், கங்காதரர், அந்தகாசுரர், காலசம்காரர், அரிகரர், வீணாதார தட்சிணாமூர்த்தி ஆகியோரின் சிற்பங்கள் உள்ளன. இக்கோயிலின் அழிவில் கிடைத்த சிற்பங்களில் சில தற்போது புதுக்கோட்டையிலும் சென்னையிலுமுள்ள அரசு அருங்காட்சியகங்களில் உள்ளன. இவற்றில் திரிபுரசுந்தரி, திரிபுராந்தகர் சிற்பங்கள் ஒப்பற்றவையாகும். பழுவூரில் உள்ள சந்திரசேகரர், கங்காதரர், கஜசம்காரமூர்த்தி, நடராசர், ஊர்த்துவதாண்டவச் சிற்பங்கள், சோழர்காலத்தில் அவர்தம் சிற்றரசர்களான பழுவேட்டரையரின் கலைத்திறனைப் புலப்படுத்துகின்றன.
இந்துக் க்களஞ்சியம்

Page 170
முதற்பராந்தகன் (கி. பி. 907-951) காலத்துச் சிற்பங்களில் சிறந்தவற்றை புள்ளமங்கை பிரம்மபுரீசுவரர் கோயிலிலும் எறும்பூர் கடம்பவனேசுவரர் கோயிலும் காணலாம். புள்ளமங்கை கோயில் விமானத்தின் கண்டப்படை சிற்றுருவச் சிற்பங்களில் சதுரதாண்டவரும் கஜசம்காரமூர்த்தியும் நேர்த்தியாய் வடிக்கப்பட்டுள்ளனர். மிகச்சிறிய கஜசம்கார சிற்பத் தொகுதியில் சிவபெருமான் பத்துக்கரங்களுடன் கோபாவேசமாக யானை அரக்கனை வதைத்து அரக்கனின்தோலினைப் பிரபாமண்டலம் போன்று போர்த்தியுள்ளார். இச்சிறுசிற்பத் தொகுதியில் பயம் பற்றிக் கொள்ள ஒரு பூதகணம் அஞ்சி ஒடுகிறது. பார்வதி நடுங்கித் தன் இடையில் வைத்துள்ள குழந்தையை நடுக்கத்துடன் நழுவ விடுகின்றாள். குழந்தையான கந்தன் பயத்தால் தாதியிடம் தாவுகிறான். சிறுகல்லிலே வடிக்கப்பட்டுள்ள இந்த நாடகக் காட்சி, சோழர் காலக் கலைத்திறனுக்குச் சிறந்த
எடுத்துக்காட்டாகும்."
எறும்பூரில் உள்ள யோகேசுவரர், தாமரை மலரின் மீது அமர்ந்துள்ளார். சிவபெருமானை யோகமூர்த்தியாகக் காட்டும் சிற்பங்கள் அருகிய அளவிலேயே உள்ளன. பாண்டியரது கழுகுமலை ஒற்றைக்கல் கோயிலில் வடக்குச் சுவரில் யோகேசுவரர் உள்ளார். புஞ்சை நல்துணையீசுவரர் கோயில் கண்டச் சிற்பங்களில் ஒன்றில் சிவபெருமான் யோக தட்சிணாமூர்த்தியாகக் காட்சியளிக்கின்றார். அங்கு மேற்குச் சுவரில் சிவனிடமிருந்து தோன்றிய வீரபத்திரன் தக்கனோடு மோதுவதும், தக்கனது தலையைக்கொய்து கையிலேந்துவதும், தக்கனது யாகத்தில் அவனது காலை வீரபத்திரன் பிளப்பதும், இதைக் கண்டு நடுங்கும் பார்வதியை ஒருவர் தேற்றுவதும் தனித்தனி சிற்பங்களாகக் காட்டப்பட்டுள்ளன. சிவன் வரிக்கூத்தாடுவதும், மும்மூர்த்திகளும் கைகோர்த்து நடனமாடுவதும் சிறிய அளவில் பெரிய விசயத்தைச் சொல்லுவது
போல் காட்டப்பட்டிருக்கிறது."
பராந்தகன் காலத்திற் கோயில் விமானத்திலுள்ள தேவகோட்டங்கள் மூன்று முதல் ஐந்துவரை அமைக்கப்படும் முறைமை உள்ளது. கி. பி. பத்தாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் செம்பியன்மாதேவி காலத்தில் இவற்றின் எண்ணிக்கை ஒன்பதாக உயர்ந்தது. இதனை ஆடுதுறை, திருக்கோடிக்காவல், குத்தாலம், கோனேரிராசபுரம், திருநாரையூர், செம்பியன்மாதேவி, திருவேள்விக்குடி, திருமணஞ்சேரி ஆகிய ஊர்களிற் காணலாம். இதனாற் சிவபெருமானின் பல்வேறு உருவமைதிகள் தேவகோட்டங்களில் இடம்பெறலாயின. பிச்சாடனர், அர்த்த நாரி, கங்காதரர் ஆகியோரின் உருவங்கள் வடபுறத் தேவ கோட்டங்களிலும், நடராசர், தட்சிணாமூர்த்தி, விநாயகர், அகத்தியர் ஆகியோரின் உருவங்கள் தென்புற தேவ
இந்துக் க்களஞ்சியம்
14

கோட்டங்களிலும் வைக்கப்பட்டன. முதன்முதலில் அகத்தியர் புஞ்சைக் கோயிலிலும் விநாயகர் புள்ளமங்கைக் கோயிலிலும் வைக்கப்பட்டனர். பின்னர் இவ்வழக்கம் தொடர்ந்தது. தேவகோட்டங்களில் நடராசர் சிற்பம் முதன்முதலில் இடம் பெறுவது செம்பியன்மாதேவி கோயில்களில்தான் என்பது
குறிப்பிடத்தக்கது. இம்மரபு இடைக்கால, பிற்காலச் சோழர்
காலத்திலும் தொடர்ந்தது.
முற்காலச் சோழர் காலத்தில் தேவகோட்டங்களின் மேலுள்ள அலங்காரத் தோரணங்களின் நடுவிலும், ஏராளமான சைவசமயச் சிற்பங்கள் வடிக்கப்பட்டன. இதற்கு எடுத்துக் காட்டாகப் புஞ்சையில் மேற்கு தேவகோட்டத்தின் மேலுள்ள தோரணத்தின் நடுவில் வடிக்கப்பட்டுள்ள ரிஷபவாகன அர்த்தநாரியையும், கோவிந்தபுத்தூரில் வடக்கு அர்த்தமண்டபத் தேவகோட்டத்தின் மீதுள்ள தோரணத்தில் செதுக்கப்பட்டிருக்கும் உமாமகேசுவரரையும் குறிப்பிடலாம். மேலும் திருவேள்விக்குடி தோரணத்தில் விஷ்ணு, இலக்குமி ஆகியோருடன் உள்ள கல்யாணசுந்தரரையும், திருமியாச்சூரில் ஒரே தோரணத்தில் மேற்பகுதியிலும், கீழ்ப்பகுதியிலும் உள்ள சதுரதாண்டவர் மற்றும் உமையுடன் கூடிய நடராசரையும், திருவாவடுதுறை கருவறை தெற்குத் தேவகோட்டத்துக்கு மேலே தோரணத்திலுள்ள பெரிய நடராசரையும் குறிப்பிடலாம்.
இவை தவிர பல முற்காலச்சோழர் சிற்பங்கள் அருங்காட்சியகங்களிலும் உள்ளன. அவற்றிலே குறிப்பிடத் தக்கது. முன்பு பிரம்மன் என்று அடையாளங்காட்டப்பட்ட சிவனது சதாசிவத் திருவுருவம் ஆகும். சதாசிவத் தத்துவத்தின் அடிப்படையில்தான் தஞ்சைப் பெரியகோயில் கருவறை அமைந்துள்ளது என்று கருதுவர். தேவாரப் பாடல்களில் சதாசிவத் திருவுருவம் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது." எலிபெந்தாவிலுள்ள (கி.பி. ஆறாம் நூற்றாண்டு) மகேசுவரரையும் ஐந்து முகங்களுடன் கூடிய லிங்கமான சதாசிவர் (மூன்று முகங்களே வெளியே தெரிகின்றன) என்று ஸ்டெல்லா கிரம்ரிஸ்ச் கூறுகிறார். அவ்வகையில் இச்சிற்பம் தஞ்சை அருங்காட்சியகச் சிற்பத்திற்கு முன்னோடி எனலாம். தஞ்சைக் கோயில் கருவறையைச் சுற்றிச் சதாசிவ சிற்பத் தத்துவத்திற்குள் அடங்கும் அகோரம் (தென்புறம்), சத்தியோஜாதம், (மேல்புறம்) வாமதேவம் (வடக்குப்புறம்) சிற்பங்கள் உள்ளன. இவற்றோடு சிவலிங்கத்தினைத் தத்புருசமாகக் கருதுவர். சோழர் காலத்துச் சிற்பக்கலையும் கட்டடக்கலையும் சைவத் தத்துவங்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்டன என்பதற்கு இது ஒரு சிறந்த சான்றாகும்." மதுரை திருமலைநாயக்கர் அரண்மனைத் தொல்லியல்துறை அருங்காட்சியகத்தில் முற்காலச் சோழர் காலத்துக் கெளரிபிரசாதமூர்த்தி (திருவிடைமருதூர்), கங்காளமூர்த்தி (திருவீராமீசுவரம்) சிற்பங்கள் உள்ளன.

Page 171
அப்பருடைய தேவாரத்தில் அட்டவீரட்டானம் பற்றிக் குறிப்பிடப்பட்டிருக்கிறது." மாணிக்கவாசகரும் இது பற்றிப் பாடியுள்ளார்." திருபுராந்தகர், தக்கசாரி, காமந்தகர், கஜாந்தகர், சலந்தராரி, காலசம்காரர், அந்தகாரி, பிரம்மசிரச்சேதனர் என்று எட்டுக்கோலங்களில், சிவபெருமான் எட்டு வீரச்செயல்களைத் தமிழ்நாட்டில் திருவதிகை, திருப்பறியலூர், திருக்குறுங்கை, திருவழுவூர், திருவிற்குடி, திருக்கடவூர், திருக்கோவலூர், கண்டியூர் ஆகிய இடங்களிற் செய்தார் என்பர்." இக்கோயில்கள் அனைத்தும் தஞ்சை மாவட்டம் பாபநாசம் வட்டத்தில் உள்ளன. இவற்றிற் சில பல்லவர்காலத்திலும், மற்றவை முற்காலச் சோழர் காலத்திலும் கட்டப்பட்டுப் பின்னால் விரிவுபடுத்தப்பட்டுள்ளன. இங்கு இந்தியாவின் தொன்மக்கதை நிகழ்ச்சிகளில் குறிப்பிடத்தக்க சில தமிழகத்தில், அதுவும், தஞ்சை மாவட்டத்தில்தான் நடந்தனவெனக் கருதுவது சைவ சமயத்தின் மீதுள்ள பற்றுதலினாலும், தம்மூர் சிவன் கோயில்களின் மகத்துவத்தின் மீது கொண்ட நம்பிக்கையி னாலுமே எனலாம். இக்கோயில்களில் அந்தந்தப் புராணக்கதைக் கேற்ப சிற்பங்களும் அமைக்கப்பட்டு அவற்றிற்குச் சிறப்பு வழிபாடும் இன்றளவும் நடத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கதாகும். இது போன்றே திருமணஞ்சேரி திருவேள்விக்குடி ஆகிய முற்காலச்சோழர் கோயில்களில் உள்ள கல்யாணசுந்தரருக்கும், தினந்தோறும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றுவருகின்றன.
கற்சிற்பங்களைப் போன்றே முற்காலச் சோழர்களது செப்புத் திருமேனிகளும் உலகப்புகழ் பெற்றவையாகும். அவைகளில் குறிப்பிடத்தக்க சைவப் படிவங்கள் கல்யாணசுந்தரர், சுகாசனமூர்த்தி, நடராசர், திரிபுராந்தகர், ரிஷபாந்திகர் போன்றவையாகும். இக்காலத் திருமேனிகளிற் சிறப்பானது தஞ்சை மாவட்டம் வடக்காலத்தூரில் கிடைத்துள்ள அற்புதமான பேரழகு படைத்த கல்யாணசுந்தரர் திருமேனியாகும்." இதனைப் பல்லவர் காலத்ததென சி. சிவராமமூர்த்தியும், இரா. நாகசாமியும் கருதுகின்றனர்." இளைஞராகக் காட்டப்பட்டுள்ள சிவபெருமானிடம் ஒரு மணமகனின் மிடுக்கும் பெருமிதமும் தென்படுகிறது. நாணமிக்க பார்வதியின் இளவதனத்தில் இறைவனை மணமகனாகப் பெற்ற மகிழ்ச்சியின் குறுநகை தவழ்கிறது. ஆனந்தத்தாண்டவ நடராசர் திருமேனி முதன்முதலில் முதலாம் பராந்தகனின் காலத்தில்தான் உருவானது. கி.பி. 917ஐச் சேர்ந்த நடராசர் திருமேனி கரைவீரம் என்ற இடத்திற் கண்டுபிடிக்கப்பட்டது. பல்லவனீச்சுரத்தில் அழகுக் கோலமிக்க கி. பி. 10ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சோமாஸ்கந்தர் திருமேனியோடு இளமைநலம் வாய்ந்த குகாம்பிகையின் உருவமும் உள்ளது. கோனேரிராசபுரம் உமாமகேசுவரர் கோயிலில் உள்ள செம்பியன் மாதேவி காலத்து ரிஷபாந்திகமூர்த்தி, திரிபுராந்தகர், பார்வதி, கல்யாணசுந்தரர் ஆகிய திருமேனிகள் காண்போரை ஈர்க்கும் கவின் படைத்தவை.
14

இவை பற்றி அக்கோயில் கல்வெட்டுகளிலும் குறிப்பிடப் பட்டுள்ளன. இக்காலத்தினைச் சேர்ந்த திருவரங்குளம் நடராசர் சதுரதாண்டவத்தில் காண்போரை வியப்பில் ஆழ்த்துகிறார். திருவேள்விக்குடி கல்யாணசுந்தரரும் பார்வதியும் அதிக ஆபரணப் புனைவுகளுடன் காட்சியளிக்கின்றனர்.
பத்தாம் நூற்றாண்டைச் சேர்ந்த" பாண்டியரது நடராசர் திருமேனியொன்று மதுரை மாவட்டம் பொருப்பு மேட்டுப் பட்டியில் கிடைத்துள்ளது. தற்போது அத்திருமேனி சென்னை அரசு அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது. பாண்டிய மன்னனொருவனது வேண்டுகோளுக்கிணங்க சிவபெருமான் கால்மாறி ஆடினார் என்று ஒரு கதை பாண்டியநாட்டில் வழங்கி வருகின்றது. இக்கதைக்கு உயிரூட்டும் வகையில் அமைந்ததே இத்திருமேனியாகும்.
இடைக்காலச் சோழர்காலம்
சோழ மன்னர்கள் மிக உயர்ந்த நிலையைப் பெற்றதும், பரந்த பேரரசை உருவாக்கியதும் இவ்விடைக்காலத்தில் (கி. பி. 985 - 1070) தான். சோழர்கள் தங்களது பேரரசுத்தன்மையை நிலைநாட்ட வானளாவிய விமானக் கோயில்களை எழுப்பினர். தஞ்சையில் பேரரசன் இராசராசன் பிரகதீசுவரர் எனும் இராசராசேசுவர ஆலயத்தை எடுத்தான் அவன் மகன் முதலாம் இராசேந்திரன் கங்கைகொண்ட சோழபுரக் கோயிலைக் கட்டினான். இராசராசன் தன்னைச் சிவபாதசேகரன்' என்று அழைத்துக் கொண்டான். அவனது கோயில் தட்சிணமேரு'எனக் கருதப்பட்டது. இவ்விருவரும் தங்கள் கோயில்களில் செய்வித்த சிற்பங்கள் பேரரசின் எழுச்சியையும், வலிமையையும், பெருமையையும் செழிப்பையும் காட்டுவனவாகவே அமைந்தன. இவ்விருகோயில்களிலும், கருவறையில் உள்ள சிவலிங்கங்கள் தென்னிந்தியாவிலேயே பெரியவையாகும். திரிபுராந்தகரின் சிற்பங்கள் முற்காலச் சோழர் கோயில்கள் பலவற்றில் வடிக்கப்பட்டிருந்தபோதும் தஞ்சைக் கோயிலில்தான் அச்சிற்பம் அமைக்கப்பட்டதன் சிறப்பான நோக்கம் வெளிப்படுகிறது. தங்கம், வெள்ளி, இரும்பாலான மூன்றுமாய நகரங்களை அழிக்கும் கோபத்தின் இயல்பினைக் (ரெளத்ரம்) கொண்டதே இவ்வுருவம். புராணக் கதைகளின்படி இந்நகரங்கள் தாரகாசூரன் என்னும் அசுரனின் பிள்ளைகளான தாரகாச்சன், கமலாச்சன், விந்துமாலி ஆகியோரால் அமைக்கப்பட்டனவாகும். இது பிரபஞ்சத்தின் அழிவுக்குக் காரணமாக அமையும் என்று கருதப்பட்டது." எனவே அந்த அரக்கர்களையும் அவர்தம் நகரங்களையும் சிவபெருமானே அழித்தார் என்பது புராணமரபு. முதலாம் இராசராசன் தன்னை முப்புரம் எரித்த சிவபெருமானுக்கு ஒப்பாகக் கருதியிருக்க வேண்டும். இந்திய மன்னர்கள் இவ்வாறு தங்களுக்கு விருப்பமான, இஷ்ட தெய்வத்திற்கு இணையாகத் தங்களை ஒப்புமைப்படுத்திக் கொண்டு நினைப்பது பொதுவான வழக்கமாக
இருந்தது. குப்தர்களும் சாளுக்கியர்களும் பூவராகமூர்த்தியைக்
இந்துக் க்களஞ்சியம்

Page 172
கொண்டாடினர். தங்களது அரசுச் சின்னங்களிலும் அவ்வுருவைப் பொறித்தனர். அதுபோன்றே தஞ்சைப் பெரிய கோயிலில் முப்பது இடங்களில் திரிபுராந்தகரின் திருவுருவங்கள் காணப்படுகின்றன. இதுவே முதலாம் இராசராசனின் படை வலிமையினையும் பேரரசுத் தன்மையையும் விளக்கும் குறியீடாக அமைந்தது." இம்மன்னன் காலத்தில் கட்டப்பட்ட இராமேசுவரம் கோயில் வளாகத்திற்குள் உள்ள பழமையான மூன்று சிவாலயங்களிலும் தேவ கோட்டங்களில் திரிபுராந்தகர் சிற்பங்கள்
வடிக்கப்பட்டுள்ளதைக் காணலாம்."
இதேபோன்று கங்கைகொண்ட சோழபுரத்திலுள்ள சண்டேசுவர அனுக்கிரகமூர்த்தி சிற்பத்தின் பாங்கும் முதலாம் இராசேந்திரன் கங்கை, கடாரம் வரை சென்று கண்ட வெற்றியை இறைவனே போற்றி அவனுக்கு மலர்முடிசூட்டிப் பெருமைப் படுத்தியதாகக் கருத இடந்தருகிறது." இச்சிற்பம் பெரியபுராண சண்டீசர் கதைக்கு வழிகாட்டியாக அமைந்தது என்பர். இவை தவிரச் சிவபெருமானது காத்தல், அருளல், அழித்தல் தொழில்கள் பற்றி விளக்கும் விஷ்ணு அனுக்கிரகமூர்த்தி, பிச்சாடனர், வீரபத்திரர், பைரவர், நடேசர் போன்ற சிற்பங்கள் தஞ்சைக் கோயிலிற் காணப்படுகின்றன. ஆனால் இவற்றின் கலைச்சிறப்புக்கள் பெருங்கட்டிடக் கலையின் மாட்சியில் மூழ்கிப் போய்விட்டன." இவற்றின் சிறப்பை அருகிற் சென்று எளிதிற் காண இயலவில்லை. இக்குறையைக் கங்கை கொண்ட சோழபுரத்தில் காணமுடியவில்லை. கங்கைகொண்ட சோழபுரத்து விமான தேவகோட்டச் சிற்பங்களில் குறிப்பிடத்தக்கவை எட்டு உருத்திரர்கள், காமதகனமூர்த்தி, விஷ்ணு அனுக்கிரக மூர்த்தி, இராவண அனுக்கிரகமூர்த்தி, தேவியனுக்கிரகமூர்த்தி, கங்காதரர், காலசம்காரமூர்த்தி, நடராசர், சண்டேசானுக்கிரகமூர்த்தி போன்றவையாகும். இங்குள்ள நடேசர், செப்புத் திருமேனி களிலுள்ளது போலக் குமிழ்ச் சிரிப்புடன் விளங்குகிறார்.
பாண்டிய நாட்டில் கி. பி. 10ஆம் நூற்றாண்டின் இறுதியிற் கட்டப்பட்ட திருவாலீசுவரம் சிவன்கோயிலிற் சோழரின் மரபுப்படி சிற்பங்கள் அமைக்கப்பட்டுள்ளதைக் காணலாம். இராசேந்தின் காலத்திற்கு முன்பாக உள்ள சண்டேசுவர அனுக்கிரகமூர்த்தியின் சிற்பத்தை இங்கு காணலாம். இலகுலீசர் மரபைச் சேர்ந்த சைவத்துறவியர் வழிபட்ட இலகுலீசர் என்றழைக்கப்படும் சிவபெருமானின் தனித்தன்மை வாய்ந்த ஒரு சிற்பம் திருவொற்றியூரில் உள்ளது. கி.பி.11ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இவ்வுருவம் பத்மாசனத்தில் அமர்ந்தநிலையில் வியாக்கியான முத்திரை காட்டிக் கபாலம் ஏந்திக் காட்சியளிக்கிறது. கெளவீசர் என்ற தனிச் சன்னதியில் இவ்வுருவம் வைத்து வழிபடப்படுகிறது? இதே காலத்தைச் சேர்ந்த, செப்புத் திருமேனி போன்று உருவாக்கப்பட்டுள்ள, பைரவர் சிற்பம் ஒன்று மதுரை திருமலை நாயக்கர் அரண்மனைத் தொல்லியல் அருங்
காட்சியகத்தில் உள்ளது.
இந்துக்கலைக்களஞ்சியம்

In 146
முதலாம் இராசராசன் காலத்துச் செப்புத் திருமேனிகள் பற்றிய செய்திகள் தஞ்சைப் பெரியகோயில் கல்வெட்டுகளில் குறிப்பிடப்பட்டுள்ளன. திருமேனியின் உயரம், அகலம், எடை போன்ற அளவுகளும் தரப்பட்டிருக்கின்றன. இம்மன்னனது காலத்தில் நடராசர் திருமேனிகள் ஏராளமாக வார்க்கப்பட்டுள்ளன. அவனது கோயிலில் இறைவன் ஆடும் கரணச் சிற்பங்கள் வடிக்கப்பட்டுள்ளன. இராசராசன் நாட்டியத்திலும் இசையிலும் கொண்டிருந்த ஆர்வத்தினை இவை காட்டுகின்றன எனக் கருதலாம். இக்கால (11ஆம் நூற்றாண்டு) நடராசர் படிமங்களில் சிறந்ததெனக் கருதப்படுவது சென்னை அருங்காட்சியகத்தில் உள்ள திருவாலங்காட்டு நடராசர் உருவமாகும். நடராசர் தனது வலது காலை முயலகன் மீது அழுத்தி இடது காலை நளினமாகத் தூக்கி ஆடும் இக்காட்சியைக் கண்டு வியந்து கலையின் இயற்கையான இயக்கத்திற்கு இதுவொரு தரமான எடுத்துக் காட்டு எனப்பிரஞ்சு நாட்டு சிற்பிரோடின் கூறியுள்ளார். நடராசரின் தலையில் கங்கையிருப்பது போல் காட்டப்பட்ட பழமையான செப்புத் திருமேனி விருத்தாசலத்தில் உள்ளதுதான் என டக்ளஸ் பாரட் கருதுகிறார்.
பிற்காலச் சோழர்காலம்
பிற்காலச் சோழர் காலத்தில் கட்டப்பட்ட கீழைக்கடம்பூர் கோயிலில் தேவகோட்ட இறையுருவங்களின் அடியில் அவற்றின் பெயர்கள் கல்வெட்டுகளில் பொறிக்கப்பட்டுள்ளன. அவற்றில் குறிப்பிடத்தக்கவை இலிங்கபுராண தேவர் (லிங்கோத்பவர்) சந்திரசேகரதேவர், காலகாலதேவர் (காலசம்காரர்) அர்த்த நாரீசதேவர். ஆனை உரித்ததேவர் (கஜசம்காரர்) போன்ற வையாகும். இரண்டாம் இராசராசனின் தாராசுரம் ஐராவதேசுவரர் கோயில் ஒரு சிற்பக்கலைக் கூடமாகும். இங்கிருந்து எடுத்து தற்போது தஞ்சைக் கலைக்கூடத்தில் வைக்கப்பட்டுள்ள பிச்சாடனர், ரிஷிபத்தினிகள், குள்ளச்சிறுபூதங்கள் ஆகியன இக்காலக் கலைச்சிறப்பின் சிகரங்களாகும். இவை வளவளப்பாக மெருகூட்டப்பட்டவையாகக் காட்சியளிக்கின்றன. இக்கோயில் தேவகோட்டங்களில் அர்த்தநாரி, பைரவர், நாகராசர்,
அகோரவீரபத்திரர், மகேசமூர்த்தி ஆகியோரது சிற்பங்கள் உள்ளன.
நரிசிம்மரை வதம் செய்த சரபமூர்த்தி சிற்பம் முதன்முதலில் தாராசுரத்தில்தான் வடிக்கப்பட்டது. இக்காலத்தைச் சேர்ந்த துக்காச்சி விக்கிரம சோழிச்சுவரர் கோயிலிலும்", திரிபுவனம் கம்பகரேசுவரர் கோயிலிலும் இச்சிற்பம் இடம் பெற்றுள்ளது. திரிபுவனம் சிவன்கோயிலில் பெரிய சரபமூர்த்தியின் உருவத்தை வார்த்து அவருக்குத் தனிச்சன்னதியும் கட்டியிருப்பதால் மூன்றாம் குலோத்துங்கன் யாராலும் வெல்லற்கரிய வேந்தனாக 'திரிபுவனவீரதேவன்' என்று தன்னை மறைமுகமாக
எண்ணுவதற்கு இடந்தந்தான் என்று தோன்றுகிறது. *

Page 173
தமிழகத்தில் மட்டுமே காணப்படும் இவ்வுருவம், சைவவைணவ சமயத்தவரிடையே நிலவிய காழ்ப்புணர்ச்சியின் வெளிப்பாடு எனலாம். சரபமூர்த்தியின் உருவம், சிம்மமுகத்தோடு எட்டும் அதற்கும் மேற்பட்டதுமான கரங்களைக் கொண்டதாகும். நாயக்கர்காலத்துத் திருச்சுற்று மண்டபங்களின் தூண்களில் இச்சிற்பத்தினைக் காணலாம். தாராசுரம் கோயிலில் நாயன்மார்கள் மற்றும் சிவாச்சாரியார்களின் உருவங்கள் அமைத்து அவர்களின் பெயர்களும் பொறிக்கப்பட்டிருப்பது சிற்பக்கலை வளர்ச்சியின் உச்சக் கட்டத்தினைக் காட்டுகிறது. இரண்டாம் இராசராசனின் பழையாறை சோமநாதர் கோயிலில் கலைச்சிறப்பு வாய்ந்த இராவண அனுக்கிரகமூர்த்தியைக் காணலாம். இங்கு இராவணனின் செயல்கண்டு அஞ்சிய தேவி இறைவனை அணைத்துக் கொண்டிருக்கும் காட்சி உணர்ச்சிக் காவியமாக வடிக்கப்பட்டுள்ளது. தில்லை நடராசர் கோயில் கோபுரங்களில் சைவ சமயச்சிற்பங்கள் காணப்படுகின்றன. இவற்றில் சதுர தாண்டவர், ஊர்த்துவதாண்டவர், சோமாஸ்கந்தர், பைரவர், கஜசம்காரர் போன்ற சிற்பங்கள் குறிப்பிடத்தக்கவையாகும். இங்கும் சிவபெருமானின் நூற்றெட்டுக் கரணச் சிற்பங்கள் வடிக்கப்பட்டுள்ளன. முதலாம் குலோத்துங்கன் காலத்தைச் சேர்ந்த திரிபுராந்தகரின் செப்புத் திருமேனி ஒன்று கிடைத்துள்ளது. அதனடியில் பொறிக்கப்பட்ட கல்வெட்டில் அம்மன்னன் அத்தெய்வத்திற்குக் கொடுத்த நிலம் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது. கி. பி. 12ஆம் நூற்றாண்டினைச் சேர்ந்த வீணாதர தட்சிணாமூர்த்தியின் செப்புப் படிமம் ஒன்று மேலப்
பெரும்பள்ளம் என்ற ஊரில் கிடைத்துள்ளது.
பிற்காலச் சோழர் காலத்தில் சிவன் கோயில்களில் திருக்காமகோட்டமுடைய நாச்சியார் கோயில் என்ற பெயரில் அம்மனுக்குத் தனிக்கோயில் எடுப்பிக்கும் வழக்கம் பெருகியது. இக்கோயில்களின் கருவறை அம்மன் உருவங்களுக்குத் தேவாரமூவர் தங்கள் பதிகங்களில் உமையைக் குறிக்க வழங்கிய பல்வேறு பெயர்கள் இடப்பட்டன. கி. பி. 12ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த, கலைப்பொலிவுடைய அம்மன் சிற்பம் ஒன்று அச்சிறுப்பாக்கத்திலிருந்து எடுத்துவரப்பட்டு மதுரை திருமலைநாயக்கர் அரண்மனை அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது. கருவறையிலுள்ள இலிங்கத்தினைக் கட்டிப்பிடித்துக் கொண்டிருக்கும் பார்வதியின் சிற்பம் திருச்சத்திமுற்றம் சக்திவனேசுவரர் கோயிலில் உள்ளது. இதன் பின்புறம் மலைமகள் இறைவனை அடைய ஒற்றைக்காலில் (பஞ்சாக்னி தபசு) நின்று தவம் செய்யும் திருக்கோலம் காட்சியளிக்கிறது." -
சோழப் பேரரசர்கள் சுமார் ஐந்து நூற்றாண்டுகாலம் ஆட்சி செய்து தங்களது அரசியல் மேன்மையை உலகறியச் செய்ததோடு
மட்டுமன்றி கலையார்வத்தையும் பேரரசுத் தன்மையையும்
14

சிற்பங்களின் வாயிலாகவும் புலப்படுத்தினர். சைவ சமயத்தைப் பின்பற்றிய இம்மன்னர்கள் காவிரியின் இரு மருங்கிலும், பிற இடங்களிலும் எண்ணற்ற கோயில்களை எழுப்பியதோடு, அவற்றில் அழகுமிக்க சிற்பங்களையும் வடித்து வைத்தனர். எந்தெந்த சிற்பங்கள் எந்தெந்த இடங்களில் வைக்கப்பெற வேண்டுமென்பதை நெறிப்படுத்தினர். தங்களது மேலாண்மையையும், இசை, மற்றும் நாட்டியத்தில் கொண்டிருந்த ஆர்வத்தையும், சைவப் பற்றினையும் உணர்த்தும் சிற்பங்களைச் செய்வித்தனர். கற்சிற்பங்களையும், செப்புத் திருமேனிகளையும் ஒன்றை ஒன்று விஞ்சிடும் அளவிற்குத் கலைத்திறனோடு போற்றும் வகையில் வடிவமைத்தனர்.
குறிப்புகள்
1. S. R. Balasubramanian, Early Chola Art, Vol. 1, Asia
Publishing House, Bombay, 1966, P52. 2. வெ. வேதாசலம், “சோழர்காலச் சிற்பக்கலை”, தமிழ்நாட்டு வரலாறு, சோழப் பெருவேந்தர்காலம் (இரண்டாம் பகுதி 900 - 1300) தமிழ் வளர்ச்சி இயக்கம், சென்னை, ப. 590, 3. மேலது. ப. 580, 4. G. Sethuraman, FaceÉs of Indian Art and Culture,
J. J. Publications, Madurai, 1995, PP 17-18. 5. கு. சேதுராமன், “புஞ்சை நல்துணையீசுவரர் - கோயில் - கண்டச்சிற்பங்கள்' வரலாற்றுக் கலம்பகம், மனோபதிப்பகம்,
தஞ்சாவூர், 1998, ப. 200. 6. வெ. வேதாசலம், முன்னது, ப. 583 7 சொ. சாந்தலிங்கம், “சதாசிவத்திருவுரு-ஒருபார்வை' வரலாற்றில் புதுவெள்ளம், தொல்பொருள் தொழில் நுட்பப் பணியாளர் பண்பாட்டுக் கழகம், மதுரை, 1991, பக். 68-89 8. தேவாரம், 3545.
Stella Kramrisch, The Presence of Siva, Princeton University
Press, 1981, PP 443-468. 10. வெ. வேதாசலம், முன்னது. ப. 585. 11. அப்பர் தேவாரம், 67.2“காவிரியின் கரைக்கண்டி வீரட்டானம்
. நமன்தமரும் சிவன்தமர் என்று அகல்வார்நன்கே" 12. திருவாசகம், 12.4. "அயனை அணங்கனை. கானேடி" 13. ஆ. வேலுப்பிள்ளை, தமிழ் இலக்கியத்தில் காலமும் கருத்தும், பாரதி புத்தகப் பண்ணை, சென்னை - 1985 (3வது பதிப்பு) பக்.13
.if#4محیے
14. J. C. Harie, Art and Architecture of Indian Subcontinent,
Pelican Books, 1990, PP304-305. 15. Splendours of Tamil Nadu, MARG, P89 and R. Nagasamy, Master Pieces of Early South Indian Bronzes, National
Museum, New Delhi, 1983, P47.
16. C. Silvaramamurti, Natarajain Art, Thought and Literature,
National Museum, New Delhi, 1974 P213.
இந்துக்கலைக்களஞ்சியம்

Page 174
17. O. Flaherty, Hindu Myths, Penguin Books, 1975, P 125. 18. Gray J. Schwindler in his Paper "Speculations on the Theme of Siva as Tripurantaka as it appears During the Reign of Rajaraja I in the Tanjore Area, "Ca A. S. 1000, at the annual meeting of the Association for Asian studies, March 1981 (quoted from Susan L. Huntington, Art of ancient India 1993, PP. 528 and 654. 19. மேலும் விவரங்களுக்குப் பார்க்க, கு. சேதுராமன், இராமேசுவரம்
கோயில், ஜெ. ஜெ. பப்ளிகேசன்ஸ், மதுரை2000 பக்.125 - 129. 20. C. Sivaramamurti, The Chola Temples, Archaeological
Survey of India, New Delhi, 1960, P25. 21. Lost. இராசமாணிக்கனார், பெரிய புராண ஆராய்ச்சி,
பாரிநிலையம், சென்னை, 1978 (3ஆம் பதிப்பு) பக். 205-206 22. வெ. வேதாசலம், முன்னது. ப. 586. 23. S. R. Balasubramaniyam, Middle Chola Temples, Thompson Press Ltd., Faridabad, 1975, PP, 178 - 187. 24. இரா. கலைக்கோவன், சுவடழிந்த கோயில்கள், கழக வெளியீடு,
சென்னை, 1987 ப. 120.
வெ. வேதாசலம், முன்னது. ப. 592.
இரா. கலைக்கோவன், கலைவளர்த்த திருக்கோயில்கள், கழக வெளியீடு சென்னை, 1984 ப. 30.
(வெ. வே.) & கு. சே)
சிற்பக்கலை வரலாற்றில் சிவ வடிவங்கள் (விசயநகர நாயக்கர் காலம்)
இந்துக்கலை, கோயில், பண்பாடு ஆகியவற்றைக் காப்பதற்காகத் தோன்றிய பேரரசு விசயநகரப் பேரரசாகும். தென்னிந்தியக் கலைக்கு அவர்கள் ஆற்றிய பணி அளவிடற் கரியது. விசயநகர வேந்தர்களின் மாநில ஆளுநர்களாக இருந்து பின்னாளில் சுதந்திர அரசர்களான மதுரை, தஞ்சை, செஞ்சி, வேலூர் நாயக்கர்களும் தங்களது பேரரசர்கள் தொடக்கி வைத்த கலைப்பணியைத் தத்தம் பகுதிகளில் விரிவாகச் செய்தனர். தமிழகத்தை ஆண்ட விசயநகர - நாயக்க மன்னர்கள் தமிழகத்தின் மூலை முடுக்குகளிலெல்லாம் பல்லவ, பாண்டிய, சோழ மன்னர்கள் கட்டிய கோயில்களை விரிவாக்கினர். புதிய கோயில்களையும் உருவாக்கினர்.
விசயநகரப் பேரரசர்கள் தென்னிந்தியா முழுவதையும் ஆண்டதால் அவர்தம் கலைப்பாணி பல்கலைக் கூறுகளையும் உள்ளடக்கிய கூட்டுக்கலையாக இருந்தது. இவர்கள் பாண்டியரைப் போலவே கோட்டச் சிற்பங்களைத் தவிர்த்தனர். விமானத்தின் மேல் தளங்களிலும், கோபுரத்தளங்களிலும்
இந்துக்கலைக்களஞ்சியம்

ஏராளமான சிற்பங்களை அமைத்தனர். அவற்றின் அமைப்பு, ஆடை அணிகலன்கள், அன்றைய சமுதாயப் பழக்க வழக்கங்களையும் பண்பாட்டையும் வெளிப்படுத்தியது. வைணவராயிருந்த போதும், விசயநகர வேந்தர் சைவ சமயத்தையும் ஆதரித்து அச்சமயக் கோயில்களையும் விரிவுபடுத்தினர்.
விசயநகர - நாயக்க மன்னர்களது சிற்பங்கள் பல்லவர், சோழர், முற்காலப் பாண்டியர் சிற்பங்கள் போன்று நெடிய மெல்லிய தோற்றத்துடன் ஆபரணங்கள் குறைந்த அளவில் உடலிலேயே நளினங்களைக் காட்டுகின்ற சிற்பங்களாக இல்லை. அவற்றின் அளவுகள் சாத்திரங்களிற் சொல்லப்பட்டிருப்பது போன்று இல்லை எனவும், அவை சிற்பமரபின் தேய்வினைக் காட்டுவனவாக உள்ளன என்றும் கருதுகின்றனர்." கருங்கல்லைப் பயன்படுத்தி ஆளுயரச் சிற்பங்கள் அமைப்பதில் அக்காலக் கலைஞர்கள் அதிக சிரமப்பட்டிருக்க வேண்டும். எந்த ஒரு கலைப் பொருளையும் அந்தந்தக் காலச் சூழலின் அடிப்படையில் நோக்குவது அவசியமாகும். இவ்வகையில் விசயநகர, நாயக்கர் காலச் சைவசமயச் சிற்பங்கள் புராணக் கதைகளின் அடிப்படையிலும் அக்காலச் சமுதாயச் சூழலின் அடிப்படையிலும் அமைக்கப்பட்டன என்பதில் ஐயமில்லை.
சிவபெருமானின் கல்யாணசுந்தரர் திருக்கோலம் இக்காலத்துச் சிற்பங்களில் குறிப்பிடத்தக்க ஒன்றாகும். இதனை மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் புதுமண்டபத்திற் காணலாம். இவை சோழர் காலத்துக் கல்யாணசுந்தரர் செப்புத் திருமேனிகளைப் போலல்லாது திருவிளையாடற்புராணக் கருத்தை வலியுறுத்தும் சிற்பத் தொகுதியாக உள்ளது. திருவெண் காட்டில் கிடைத்த சோழர் காலத்துச் செப்புத் திருமேனியில் கல்யாணசுந்தரருக்கு அருகே விஷ்ணு நின்றிருக்கிறார் எனினும் அதில் அவர் கன்னிகாதானம் செய்வது போல் காட்டப்படவில்லை. ஆனால் நாயக்கர்களது கல்யாணசுந்தரர் சிற்பங்களில் விஷ்ணு மீனாட்சியை (பார்வதி) சிவபெருமானுக்குக் கன்னிகாதானம் " செய்வது போன்றும் பிரம்மா புரோகிதராயிருந்து திருமணத்தை நடத்துவது போன்றும் காட்டப்பட்டுள்ளனர். மதுரை மீனாட்சியம்மன் கோயில் கம்பத்தடி மண்டபத்தில் உள்ள கி. பி. 18ஆம் நூற்றாண்டு கல்யாணசுந்தரர் இதனைப் பின்பற்றிச் செய்யப்பட்டது. இதன் பின்னால் கற்பக விருட்சம் ஒன்று காட்சியளிக்கிறது. இது மீனாட்சியின் திக்விசயத்தை நினைவூட்டுகிறது. இத்திக்விசயத்தின்போது இந்திரன் மீனாட்சியம்மைக்கு ஒரு கற்பக விருட்சம் பரிசளித்ததாகத் தொன்மக்கதை கூறுகின்றது. இதனையொத்ததும், இதே காலத்தைச் சேர்ந்ததுமான கல்யாணசுந்தரரின் தந்தச்சிற்பம் ஒன்று விக்டோரியா ஆல்பர்ட் அருங்காட்சியத்தில் உள்ளது." இராணிமங்கம்மாள் காலத்தில் திருப்பரங்குன்றத்தில் சுப்பிரமணியர் கோயிலின் நுழைவாயில் மண்டபத்தில் சுப்பிரமணியர் தெய்வானையின் திருமணக்காட்சியும் சிற்பமாக வடிக்கப்பட்டுள்ளது. அதில் இந்திரன் கன்னிகாதானம் செய்வதைக் காணலாம்.

Page 175
மதுரை ஆயிரங்கால் மண்டபத்திலும், கோயம்புத்தூருக்கு அருகேயுள்ள பேரூர்க் கோயிலிலும், தென்காசி காசிவிசுவநாதர் கோயிலிலும் தக்கனை வதம்செய்த கதை சிற்பங்களாக வடிக்கப்பட்டுள்ளன. மதுரையில் ஆயிரங்கால் மண்டபத்திலும், முதலிமண்டபத்திலும், பிச்சாடனர் சிற்பங்கள் உள்ளன. முதலிமண்டபமே சிவபெருமான் பிச்சாடனராக வலம் வரும் தாருகாவனமாகக் கட்புலமாக்கப் (Visualised) பட்டுள்ளதைக் காணலாம். சுந்தரேசுவரர் சன்னிதிக்குப் பின்புறம் இதே காலத்தைச் சேர்ந்த செப்புத்திருமேனி ஒன்றும் வைக்கப்பட்டுள்ளது. இதுபோன்று பிச்சாடனர் சிற்பங்கள் பேரூரிலும் சேலம் மாவட்டம் தாராமங்கலத்திலும் அழகுற அமைக்கப்பட்டுள்ளன. வழுவூரில் எழில்மிக்க பிச்சாடனர் செப்புத் திருமேனியும் அதனோடு தொடர்புடைய அழகான மோகினியின் திருவுருவமும் காணப்படுகின்றன. தென்காசியிற் பிச்சாடனர் திருமேனி மட்டும் உள்ளது. சுசீந்திரத்திற் பிச்சாடனர் செப்புத் திருமேனி ஒன்று உள்ளது. பிச்சாடனர் திருக்கோலத்தின் ஒவியப்பிரதியைச் சிதம்பரம் நடராசர் கோயில் அம்மன் சன்னிதி முன் மண்டப விதானத்திலே காணலாம்.
பல்லவர்களுக்குப்பின் சோமாஸ்கந்தர் உருவமைதிகள் மிகவும் அருகியே உள்ளன. சோழர்காலத்தில் அதிக அளவில் செப்புத் திருமேனிகளே வார்க்கப்பட்டன. சோமாஸ்கந்தர் உருவங்கள் விசயநகர - நாயக்கர் காலத்திலும் தொடர்ந்து செய்விக்கப்பட்டன. ஆனால் இவற்றின் செப்புத் திருமேனிகள் அதிக அளவில் செய்விக்கப்பட்டன. இராமேசுவரம் கோயிலில் சோமாஸ்கந்தர் செப்புத் திருமேனி உள்ளது. இதன் காதணிகளின் அமைப்பைத் தவிர பிற கூறுகள் சோழர் காலத்தையே நினைவூட்டுகின்றன. இதேபோன்று இதே காலத்தைச் சேர்ந்த சான்பிரான்சிஸ்கோ அருங் காட்சிய கத்திலுள்ள சோமாஸ்கந்தர் திருமேனியும் சோழர் கலையையே நினைவுபடுத்துகிறது என்பது இங்கு குறிப்பிடத்தக்கதாகும் " இராமேசுவரத்தில் மூன்றாம் பிரகாரத்தில் உள்ள சோமாஸ்கந்தர் கற்சிற்பத்திற்கு முன்னால் இராம பக்தனான அனுமன் தவமிருப்பதுபோல் காட்டப் பட்டிருக்கின்றார். இது சிற்பக்கலை இலக்கணத்தினைக் காட்டவில்லை எனினும் கலைஞனின் கற்பனைத் திறனைக் காட்டுகிறது எனலாம்.
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் கம்பத்தடி மண்டபத்தில் நாயக்கரின் மரபைப் பின்பற்றிய பதினெட்டாம் நூற்றாண்டு சோமாஸ்கந்தர் கற்சிலை உள்ளது. இதனடியில் சிவபெருமான் நரிகளைப் பரிகளாக்கினார் என்னும் மாணிக்கவாசகர் வரலாற்றுடன் தொடர்புபடுத்தப்படும் திருவிளையாடற்புராணக் கதை சிற்பமாய்க் காட்டப்பட்டுள்ளது. இதற்கு முந்தைய வடிவம் இக்கோயிலின் புதுமண்டபத்தில் உள்ளது. திருவிளையாடற்புராணம் தொடர்பான சிற்பத் தொகுதிகள் மதுரைக்கோயில் மண்டபங்களில் அதிக அளவிற் காணப்படுகின்றன. சிவபெருமான் பிட்டுக்கு மண்சுமந்தது, நாரைக்கு முக்திகொடுத்தது, கரிக்குருவிக்கு உபதேசித்தது,

கல்யானைக்குக் கரும்பு கொடுத்தது, பன்றிக்குட்டிகளுக்குப் பால் கொடுத்தது, புலியை மான்குட்டிகளுக்குப் பால் கொடுக்கச் செய்தது போன்ற திருவிளையாடற் சிற்பங்கள் மதுரைக் கோயிலிலும், புதுமண்டபத்திலும், திருப்பரங்குன்றத்திலும் காணப்படுகின்றன. புதுமண்டபத்தில் தடாதகைப் பிராட்டியோடு (மீனாட்சி) சிவபெருமான் சண்டையிடும் காட்சியும், அதன் மேற்குப் புறத்தில் சிவபுராணக் காட்சிகளும், சிற்பங்களாக வடிக்கப்பட்டுள்ளன.
விசயநகர - நாயக்கர் காலத்தில் கல்லாலான நடராசர் சிற்பங்கள், பல கோயில்களில் இடம்பெறலாயின. செப்புத் திருமேனிகளும் செய்விக்கப்பட்டன. மதுரை மீனாட்சி கோயிலில் வெள்ளியம்பலத்திலும், மண்டபநாயக்க மண்டபத்திலும், ஆயிரங்கால் மண்டபத்திலும், மதுரை நாயக்கர்கால நடராசர் சிற்பங்களைக் காணலாழ். வெள்ளியம்பலத்து நடராசர் சிற்பத்திற்கு முன்னால் வியாக்ரபாதர், பதஞ்சலி ஆகிய முனிவர்கள் நிற்கின்றனர். அவர்கள் மீனாட்சி - சுந்தரேசுவரர்
திருக்கல்யாணம் காண மதுரை வந்தவர்கள் என்றும், நடராசர்
49.
தரிசனம் காணாது உண்ணமாட்டார்கள் என்றும் புராணக்கதைகள் கூறுகின்றன. விசயநகர காலத்தைச் சேர்ந்த நடராசர் படிமம் ஒன்று (கி. பி. 1511) சென்னை அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது. இது பேளூர் (சேலம் மாவட்டம்) கோயிலுக்காக (கருநாடகத்தில் உள்ள பேளூர் அல்ல) செய்விக்கப்பட்டதாகும். இதனையொத்த மற்றொரு செப்புத் திருமேனிரோட்திவிலுள்ள கலை அருங்காட்சியகத்தில் உள்ளது." மதுரையில் ஆயிரங்கால் மண்டபத்தின் மையப்பகுதியில் மிகப்பெரிய நடராசர் செப்புத் திருமேனி வைக்கப்பட்டுள்ளது. அதில் உள்ள ஆடை, ஆபரணங்கள் மற்றும் உடற்கூறுகள் அனைத்தும் விசயநகர நாயக்கர் காலத்தை நினைவூட்டுகின்றன.
சிவபெருமான் வலதுகாலை நெற்றிவரை தூக்கி ஆடும் ஊர்த்துவ தாண்டவம் திருவாலங்காட்டில் காளிதேவியைத் தோற்கடிக்கும் பொருட்டு ஆடியது என்பர். இவ்வடிவ அமைப்பு சோழர் காலத்தில் தோன்றிய போதும் நாயக்கர் மண்டபங்களிற் பரவலாக இடம் பெறலாயிற்று. இதற்கான உதாரணங்களை மதுரை மீனாட்சி கோயில் புதுமண்டபம், தென்காசி விசுவநாதர் கோயில், திருநெல்வேலி குற்றாலம் போன்ற பல இடங்களிற் காணலாம். புதுமண்டபத்து ஊர்த்துவதாண்டவச் சிற்பம் தமிழகத்தில் சிறந்த செப்புத் திருமேனிகளின் அமைப்பினை ஒத்துள்ளதென ஒ. சி. கங்குலி கருதுகிறார்." தென்காசியிலுள்ள ஊர்த்துவதாண்டவருக்கு அருகில் தனது தோல்வியை ஒப்புக் கொண்ட காளிதேவி கைகூப்பியபடி உள்ளார். அதேதுணின் அடிப்பாகத்தில் தூணைத்தாங்குவது போன்று இராவணன் காட்சியளிக்கின்றார்." பேரூர் பட்டிப்பெருமான் கோயிலில் உள்ள ஊர்த்துவதாண்டவர் பதினாறு கரங்களைக் கொண்டவராகக் காட்சியளிக்கின்றார். சேலம் மாவட்டத்தில் உள்ள தாரமங்கலம் கயிலாசநாதர் கோயில் மண்டபத்தூண் ஒன்றிலும் வனப்பு வாய்ந்த ஊர்த்துவ தாண்டவர் சிற்பம் உள்ளது. இக்காலத்தில்
இந்துக்கலைக்களஞ்சியம்

Page 176
இச்சிற்பம் அதிக அளவில் அமைக்கப்பட்டிருப்பது சிவபெருமான் போன்ற ஆண் கடவுளரே. காளி போன்ற பெண் தெய்வங்களைக் காட்டிலும் உயர்ந்தவர் என்பதைக் காட்டுவதாகக் கொள்ளலாம்.
சதாசிவர் அல்லது மகாசதாசிவர் சிற்பங்கள் தமிழகத்தில் அருகிய அளவிலேயே உள்ளன. கி. பி. 15-16 நூற்றாண்டைச் சேர்ந்த கந்தபுராணத்தில் இருபத்தைந்து முகங்களோடு, ஐம்பது கைகளையுடைய, கப்ாலமாலையும் அணிந்துள்ள மகாசதாசிவர் குறிப்பிடப்படுகின்றார்." மதுரை மீனாட்சி சுந்தரரேசுவரர் கோயிலில் சுந்தரேசுவரர் சன்னிதிக்குச் செல்லும் வாயிலின் இடப்புறத்தில், தூண் ஒன்றில் மகாசதாசிவர் சிற்பம் காணப்படுகிறது. முற்கால மேற்குச் சாளுக்கியர் கோயில்களில் கி. பி. ஏழாம் நூற்றாண்டைச் சேர்ந்த சதாசிவர் உருவங்களைக் காணலாம்." இதற்கும் முந்தைய சதாசிவர் அல்லது மகாதேவர் உருவம் (ஆறாம் நூற்றாண்டு) எலிபந்தாவில் உள்ளது.
சோழ மன்னன் இராசராசனைப் பின்பற்றி விசயநகர நாயக்கர் காலத்திலும் பல கோயில்களிலே திரிபுராந்தக மூர்த்தியின் சிற்பங்கள் வடிக்கப்பட்டுள்ளன. அவற்றிலே குறிப்பிடத்தக்கவை மதுரையில் ஆயிரங்கால் மண்டபத்திலும் புது மண்டபத்திலும் உள்ளவையாகும். ஆயிரங்கால் மண்டபத்தில் உள்ள திரிபுராந்தகர் சிற்பம் பொற்கொல்லரின் மிகச் சிறந்த கைவினைப் பொருள் போல் உருவாக்கப்பட்டுள்ளது." இச்சிற்பத்தில் சிவபெருமான் பிடித்துள்ள அம்பில் விஷ்ணுவின் உருவம் நேர்த்தியாகக் காட்டப்பட்டுள்ளது. புதுமண்டபத்திலுள்ள திரிபுராந்தகர் பீடம் ஒன்றின்மீது நின்றுள்ளார். நாயக்கர் காலத்தைச் சார்ந்த இரண்டு திரிபுராந்தகர் செப்புத் திருமேனிகள் இராமேஸ்வரம் கோயிலில் உள்ளன.
சோழ நாட்டில் மாயவரத்திற்கு அருகிலுள்ள திருக் கடவூரிலேதான் சிவபெருமான் காலசம்காரம் செய்து மார்க்கண்டேயனைக் காத்தார் என்பது நம்பிக்கை. இதனடிப்படையில் இக்கோயிலில், விசயநகர ஆட்சிக் காலத்தில், காலசம்காரர் செப்புத் திருமேனி ஒன்று செய்விக்கப்பட்டுள்ளது". மதுரை மீனாட்சி சுந்தரரேசுவர் கோயில் கம்பத்தடி மண்டபத்தில், கி.பி.18ஆம் நூற்றாண்டைச் . சார்ந்த இதனையொத்த காலசம்காரக் கற்சிற்பம் உள்ளது. சிதம்பரத்தில் நடனசபைக்கு முன்புள்ள மண்டபத்தூண் ஒன்றிலும் இதனைக் காணலாம். பட்டீசுவரத்திலும் காலாந்தகர் (காலசம்காரர்) சிற்பம் உள்ளது. சிவபெருமான், இறப்பிற்குக் குறித்த காலக்கெடுவாக இருந்தாலும் யமனை வீழ்த்தி தமது பக்தர்களின் உயிரைக் காக்கும் பெருமைகொண்டவர் என்பதனையே காலசம்கார சிற்பவடிவம் காட்டுகிறது. இப்படிவம் ஏகாதச (பதினொன்று) ருத்ரர்களில் ஒன்றென ரூபமண்டலம் கூறுகிறது."
விசயநகர - நாயக்கர் காலங்களிலேயே சிவபெருமான் தனது மாமனின் யாகத்தோடு அவன் ஆணவத்தையும் அழிக்க அனுப்பிய வீரபத்திரர் சிற்பங்கள் பெருமளவிற்
இத்துக்கலைக்களஞ்சியம்

காணப்படுகின்றன. இவை தெலுங்கு மாவட்டங்களில் (ஆந்திரா) பிரபலமடைந்திருந்தன." ஆளுயர அகோர மற்றும் அக்னி வீரபத்திர சிற்பங்கள் மதுரையில் கம்பத்தடி மண்டபத்திற்கு அருகில் உள்ளன. இச்சிற்பங்களில் கோபத்தின் மெய்ப்பாட்டைக் காணலாம். அக்னி வீரபத்திரர் பத்துக் கரங்களுடன் தலையில் சுவாலையுடன் காட்சியளிக் கின்றார். மதுரைக் கோயில் வளாகத்தில் உள்ள சவனந்தீசுவரர் சன்னதியிலும் வசந்தராயமண்டபத்திலும் கி. பி. 15-16 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த வீரபத்திரர் சிற்பங்கள் உள்ளன. இவற்றில் தக்கனும் அவனது மனைவியும் கைகூப்பிய வண்ணம் காட்டப்பட்டிருக்கின்றனர். ஆயிரங்கால் மண்டபத்தில் படிக்கட்டிற்கு அடுத்துள்ள தூண் ஒன்றிலே தொங்கிக் கொண்டிருக்கும் பெரிய மீசையுடன் கூடிய கோபாவேசத்தைக் காட்டும் வீரபத்திரர் சிற்பம் உள்ளது. வெட்டப்பட்ட மனிதத்தலை (தக்கன்) ஒன்று அவரது இடது பாதத்திற்கருகில் காட்டப் பட்டுள்ளது. இதேபோன்ற வீரபத்திரர் சிற்பங்கள் பேரூரிலும், கிருஷ்ணாபுரத்திலும், திருநெல்வேலி நெல்லையப்பர் கோயிலிலும், பூநீவைகுண்டத்திலும், தென்காசி விசுவநாதர் கோயிலிலும், நாங்குநேரியிலும் காணப்படுகின்றன. விசயநகர நாயக்கர் காலத்து மண்டபங்களிற் காணப்படும் வீரபத்திரர் சிற்பம் சிவனை மதியாதாருக்கு ஏற்படும் கதியை உணர்த்துவதோடு விசயநகர நாயக்க மன்னர்களை மதியாதவர்களுக்கு ஏற்படும் கதியைக் குறிப்பால் உணர்த்துவதாகவுங் கொள்ளலாம்.
இராவண அனுக்கிரகமூர்த்தி சிற்பம் பல்லவர் காலத்திலிருந்தே வடிக்கப்பட்டிருந்தபோதும் விசயநகர - நாயக்கர் ஆட்சிக் காலத்தில் மண்டபங்களிலுள்ள தூண்களில் பெரிய அளவிலும், சிறு சிற்பங்களாகவும் வடிக்கப்பட்டன. மதுரையில் புது மண்டபத்தில் மிகப்பெரிய இராவண அனுக்கிரக மூர்த்தியின் சிற்பம் உள்ளது. இதில் சிவனும் பார்வதியும் கைலாசத்தில் அமர்ந்துள்ளனர். சிவபெருமானின் காற்பெருவிரல் கைலாச மலையை அழுத்துகிறது. முனிவர்களும் தேவர்களும் கூடியிருந்து வாழ்த்துகின்றனர். பத்துத் தலைகளையும் இருபது கரங்களையும் கொண்டு மலையைத் தூக்க முயன்று தோல்வியுற்ற இராவணன் அம்மலைக்கு அடியில் அடங்கிப்போய் சிவனைப்போற்றிப்பாடி வீணை வாசிக்கிறான். இதனையொத்த பதினெட்டாம் நூற்றாண்டு இராவண அனுக்கிரகமூர்த்தி மதுரைக்கோவில் கம்பத்தடி மண்டபத்தில் உள்ளது. திருப்பரங்குன்றம் சுப்பிரமணியர்கோயில் முன்மண்டபத்திலும், இராவண அனுக்கிரக மூர்த்தியின் பெரிய சிற்பத் தொகுதி ஒன்று உள்ளது.
அர்த்தநாரி (உமையொருபாகன்) சிற்பங்களும் இக்காலத்தில் கோயில் தூண்களில் செதுக்கப்பட்டுள்ளன. இதனை மதுரைக் கோயில், திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில், தென்காசி விசுவநாதர் கோயில் போன்ற இடங்களிற் காணலாம். மதுரையில் புதுமண்டபத்தில் உள்ள அர்த்தநாரி நான்கு கரங்களுடனும்,

Page 177
கம்பத்தடி மண்டபத்தில் (பிற்காலம்) மூன்று கரங்களுடனும் வடிக்கப்பட்டுள்ளார். இக்காலத்தில் ஏகபாதமூர்த்தி, தட்சிணாமூர்த்தி, அரிகரர், உமாசகிதர், சுகாசனர், கிராதார்ச்சுனர், கங்காளர், கங்காதரர் ஆகிய உருவங்களும் பெருமளவிலே தூண்களில் சிற்றுருவங்களாக அமைக்கப்பட்டன. இதனை மதுரை, திருநெல்வேலி, திருவானைக்கா, தென்காசி, பேரூர், தாரமங்கலம் போன்ற இடங்களிற் காணலாம். அர்த்தநாரியின் ஆளுயரச் சிற்பம் மதுரையில் புதுமண்டபத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
காளைவாகனரான (ரிஷபாருடர்) சிவனும் பார்வதியும் காளையின் மீது அமர்ந்திருக்கும் சிற்பங்கள் நாயக்கர் கோயில்களில் அதிக அளவில் வடிக்கப்பட்டன. சிவனும் உமையும் ரிசபவாகனத்தில் அமர்ந்து வந்து ஞானசம்பந்தருக்குப் பாலூட்டியதாகச் சைவர்கள் கூறுகின்றனர். மதுரையிலும் பிற இடங்களிலும் இன்றும், ரிஷபாரூடராகச் சிவனும் பார்வதியும், (செப்புத் திருமேனி) ஊர்வலமாகத் தெருக்களில் பவனி வருவதைக் காணலாம். காளையின் மீது சிவனும் பார்வதியும் அமர்ந்திருக்கும் ரிஷபாரூடர் உருவங்கள் நாயக்கர் கால மண்டபத் தூண்களில் பேருருவங்களாகவும், சிற்றுருவங்களாகவும் பல
இடங்களில் வடிக்கப்பட்டுள்ளதைக் காணலாம்.
விசயநகர காலத்து ரிஷபவாகனர் செப்புத்திருமேனி ஒன்று தருமபுரஆதீனத்தில் உள்ளது. விசயநகர - நாயக்கர் ஆட்சிக் காலத்தில் பள்ளியறையில் வைப்பதற்கென பள்ளியறைச் சொக்கர் உருவங்களும், குதிரைமீது அமர்ந்து வீதிஉலா வருவதற்காகக் குதிரைச் சொக்கர் உருவங்களும் பல கோயில்களில் செப்புத் திருமேனிகளாகச் செய்விக்கப்பட்டன. இதனை இராமேசுவரம், மதுரை, திருநெல்வேலி, திருவானைக்கா போன்ற இடங்களிற் காணலாம். மதுரைக் கோயிலுள்ள ஆயிரங்கால் மண்டபத்தின் நுழைவாயிலில் எழில்மிக்க குதிரைச்சொக்கரின் சிற்பம் காணப்படுகிறது. அறுபத்திமூன்று நாயன்மார்களின் உருவங்கள் முழுவதும் ஒரே வரிசையில் கல்லிலும் இக்காலத்தில் வடிக்கப்பட்டன. மதுரை சுந்தரேசுவரர் சன்னதியிலுள்ள நாயன்மார்களின் செப்புத் திருமேனிகள் திருமலை நாயக்கர் காலத்திற் செய்விக்கப்பட்டவை என்று கருதுகின்றனர். இவைதவிர சிவபெருமானின் சந்திரசேகரர் உருவம், சைவ சமய குரவர் நால்வரான அப்பர், சம்பந்தர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகியோரின் தனிச்சிற்பங்களும் அதிக அளவில் நாயக்கர் காலக் கோயில்களில் இடம் பெற்றன.
விசயநகர - நாயக்கர் ஆட்சிக் காலமே தமிழகத்தில் கட்டடக்கலை, சிற்பக்கலை மற்றும் ஒவியக்கலை வளர்ச்சியின் இறுதிக்காலமாகும். இக்காலத்தில் முந்தைய அரச வம்சத்தவர்கள் செய்வித்த அனைத்து வகைச் சிவ
15

உருவங்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டன. வைணவராயிருந்த அவர்களிடம் சமயக் காழ்ப்புணர்ச்சி இருந்திருக்கவில்லை என்பதற்கு அவர்கள் செய்வித்த சைவச் சிற்பங்களே சான்றுபகர்கின்றன. பல்லவர் காலத்தில் சிறப்பாகக் கருதப்பட்ட காலசம்காரர், கங்காதரர், அர்த்தநாரி, கஜசம்காரர், இலிங்கோத்பவர் சிற்பங்களையும் சோழர் காலத்தில் பிரபலமாயிருந்த நடராசர், திரிபுராந்தகர், கல்யாணசுந்தரர் போன்ற உருவங்களையும் அதிக அளவில் கோயில் மண்டபங்களில் இடம்பெறச் செய்தனர். ஆந்திராவில் பிரபலமாயிருந்த அக்னி மற்றும் அகோர வீரபத்திரர் சிற்பங்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்தனர். மொத்தத்தில் இக்காலச் சிற்பங்கள் முந்தைய சிற்பங்களின் புராணக் கதையைக் கொண்டவையாகவிருந்த போதும் அமைப்பில் வேறுபட்டனவாயிருந்தன. அதிக அளவு உடை, ஆபரணப் புனைவுகளோடு மிகச்சிறந்த உடற் கூறுகளைக் காட்டும் வகையில் சமுதாயச் சூழலைப் பிரதிபலிக்கும் முறையில் வடிக்கப்பட்டன. མ་བྱུང་
குறிப்புகள் :-
1. K. V. Raman, "Architecture in the Vijayanagar period,
South Indian Studies, 1990, P664.
2. J. C. Harle, Art and Architecture of the Indian
Subcontinent, Penguin Books, 1990, P337. 3. D. Devakunjari, Madurai Through the Ages, SAHER,
Chennai, 1979, P260. 4. George Michell, Architecture and Art of Southern India, Cambridge University Press, Cambridge, 1995,
Pl. 153.
5. சிவபெருமான் பிச்சாடனர் உருவம் எடுத்து ரிஷிபத்தினிகளின் மனதைக் கெடுத்தபோது மகாவிஷ்ணு மோகினி உருவமெடுத்து ரிஷிகளின் மனதைச் சஞ்சலப்படுத்தினார் என்பர். (H. Krishnasastri, South Indian Images of Gods and Goddesses, Asian Educational Services, New Delhi,
1999, Figures 61-62. George Michell, gypsôTGOTgi, Pl. 112.
கு. சேதுராமன், இராமேசுவரம் கோயில், J. பப்ளிகேசன்ஸ்,
மதுரை, 2000, ப. 147. D. Devakunjari, (Up6öTGÜTğl, 262 9. George Michell, (UpsiT60Tg, P.197 10. மேலது P1144 11. O. C. Gangoli, South Indian Bronzes, (quoted from D.
Devakunjari, op.cit, p.271). 12. Georage Michell, psóTGOTg, pl. 136
இந்துக் க்களஞ்சியம்

Page 178
13. H. Krishnastri, (pairGOrg), p. 77.
14. J. C. Harle, (up6òTGOTgl, p. 139.
15. D. Devakunjari, (UpgöTGöTği, p, 261
16. P. R. Srinivasan, Bronzes of South India, Government
Museum, Madras, 1994, Fig. 305.
17. T. A. Gopinatha Rao, Elements of Hindu Iconography, Motilal Banarsidass, Delhi, 1968, Vol. II, pt II, pp.371
388.
18. D. Devakunjari, (Up6öTGÜTğl, p. 272.
கு. சே) & (வெ. வே.)
சிற்றம்பல நாடிகள்
செவ சித்தாந்தத்தின் பொற்காலம் என கி. பி. 13 முதல் 16ஆம் நூற்றாண்டுவரையான காலத்தைக் குறிப்பிடலாம். இக்கால கட்டத்தில்தான் மெய்கண்டார் அருளிய சிவஞான போதம் முதல் தருமையாதீன குருமுதல்வர் றுநீகுருஞான சம்பந்தர் அருளிய ஞானப் பனுவல்கள் வரை சைவசித்தாந்த வாவியில் மலர்ந்தன. அவற்றுள் ஒன்று துகளறு போதம் என்பதாகும். அதனை அருளியவரே காழி பழுதைகட்டிச் சிற்றம்பல நாடிகள்
ஆவா.
மெய்கண்டாரின் மாணவரான அருள்நந்தி சிவாச் சாரியாரிடம் கடந்தை மறைஞான சம்பந்தர் உபதேசம் பெற்றார். அவரிடம் இரு மாணாக்கர்கள் உபதேசம் பெற்றனர். ஒருவர் உமாபதி சிவாச்சாரியார். மற்றையவர் மச்சுச் செட்டியார் என்பவர். இப்பெரியார் சைவ செட்டியார் மரபில் வந்து உலக நோக்கத்திலிருந்து தனது பாதையைத் திருப்புவதற்காக மச்சு ஒன்று கட்டிக் கொண்டு ஞானோபதேசம் பெற்று வாழ்ந்து வந்ததால் மச்சுச் செட்டியார் என்று அழைக்கப்பட்டார்.
தமது குருவாகிய மறைஞான சம்பந்தர் சமாதியடைந்த காலத்தில் இவர் பக்குவம் முழுமையாகப் பெறாத காரணத்தால் தம்முடன் மாணவராயிருந்து உபதேசம் பெற்ற உமாபதி சிவத்திடமும் மாணவராய் இருந்து உபதேசம் பெற்றார். அவருக்குப் பிறகு அருள் நமச்சிவாயர் என்ற திருநாமத்துடன் ஞானாசிரியர் ஆனார்.
மறைஞான சம்பந்தரிடம் இவர் சீடராக இருந்த பொழுது இவருக்கு தொண்டுகள் செய்து சீடராக இருந்தவர் கங்கை மெய்கண்டார் ஆவர். அருள் நமச்சிவாயர் இவருக்கு உபதேசம் செய்து 'காழிகங்கை மெய்கண்டார் என்ற பெயரிட்டு ஆசாரியர் ஆக்கினர். இவரிடம் உபதேசம் பெற்ற மாணவரே சிற்றம்பல நாடிகள் ஆவர். தில்லை திருச்சிற்றம்பலமுடையார் திருவருளில் தோய்ந்தமையால் “சிற்றம்பல நாடிகள்” என்று பெயர் பெற்றார் என்பது அறிஞர் துணிபு.
இந்துக் តំ១rទ្រីអ៊ុំផ្ទះត្រៃ

சம்பந்த முனிவர், தத்துவப் பிரகாசர், தத்துவநாதர் ஆகியோர் உபதேசம் பெற்றுத் தனித்தனி ஆசிரியர்களாக விளங்கினர். இவர்கள் அல்லாமல் ஞானப் பிரகாசர், கண்ணப்பர், மழபாடிப் பண்டாரம் போன்ற 63 பேர் இவரோடு சேர்ந்து ஒர் அடியார் கூட்டமாக வாழ்ந்து வந்தனர். ஒரு நாள் சமையற்காரர் கவனக்குறைவால் நெய் என நினைத்து வேப்பெண்ணையை உண்கலத்தில் படைக்க சிற்றம்பல நாடிகளும், மற்றையோரும் வேற்றுமை உணர்ச்சி இல்லாமல் உண்ண, கண்ணப்பர் என்பவர் மட்டும் வேப்பெண்ணையின் சுவை தெரிந்து வெறுப்புக் குறி தோற்றினர். "நம் திருக் கூட்டத்தில் பக்குவம் இல்லாதவர் இருப்பது தகுதியோ?” என்று சிற்றம்பல நாடிகள் வினவ கண்ணப்பர் மனம்மிக வருந்தித் திருக்கூட்டத்தினின்றும் தாமே நீங்கிச் சென்று விட்டார்.
தம்முடைய இறுதிக்காலம் நெருங்கி வருவதை உணர்ந்த சிற்றம்பல நாடிகள் ஒரு சித்திரைத் திருவோண நாளில் தாமும் தம் திருக்கூட்டத்தினரும் சமாதியாகத் தனித்தனியே 63 சமாதிகள் அமைத்துத் தருமாறு அரசனுக்குக் கட்டளையிட்டார். எல்லோரும் காண சிற்றம்பல நாடிகள் தம் சீடர்களுடன் சமாதி கூடினார். அந்த இடம் மயிலாடுதுறையை அடுத்துள்ள சித்தர் காடாகும்.
வடக்கே சென்ற கண்ணப்பர் அந்த நேரத்தில் அங்கு வந்து
தமக்கோர் சமாதி அமைக்கப்படாமை கண்டு, சிற்றம்பல
நாடிகளின் சமாதியை வலம் வந்து வணங்கித் தமக்கோர் இடம்
தருமாறு வேண்டிப் பின்வரும் வெண்பாப் பாடலைப் பாடினார்.
ஆண்ட குரு சிற்றம்பலவா! அடியேற்கா மீண்டும் எழுந்தருள வேண்டாவோ! - நீண்டமர் ஆரனனும் காணாத ஆனந்த வாரிதியைப் பூரணமாய் வையாத போது
உடனே சிற்றம்பல நாடிகளின் சமாதி திறந்தது - சிற்றம்பல நாடிகள் விழித்து நோக்கிக் கண்ணப்பரைத் தழுவித் தம்மடியில் இருத்தித் தம்மோடு இரண்டறக் கலக்கச் செய்தார்.
வெள்ளியம்பலவாணத் தம்பிரான் சுவாமிகள் "ஏக காலத்தில் அறுபத்து மூன்று பேருக்கு சாம்பவ தீக்கையால் சத்தியோ நிர்வான தனம் பண்ணித் தாமும் சிவகதி அடையும் பெருமை உடைய சிற்றம்பல நாடி பண்டாரம்” என்று குறிப்பிடுவது எண்ணத்தக்கது.
முத்தர் அறுபத்து மூவர் பணிந் தேத்தும் சித்தர் வனம் தில்லைச் சிற்றம்பலவா! - பத்தர் பவவிருளை நீக்கியருள் பானுவே துய்ய தவவடிவே! நின்றாள் சரண்
என்ற பழம் பாடலும் இவ்வற்புத நிகழ்ச்சிக்குச் சான்று பகரும்.

Page 179
புலவர் புராணம் பாடிய தண்டபாணி சுவாமிகள் செவி வழியாகத் தாம் கேட்டறிந்த சிற்றம்பல நாடிகளின் வரலாற்றை 28 செய்யுட்களில் யாத்துள்ளார்.
சிற்றம்பல நாடிகள் அருளிய துகளறுபோதம் சித்தாந்த சாத்திர நூல்களுள் மிகச் சிறந்ததாகும். பதினான்கு சாத்திரங்களில் இறுதி சாத்திரங்களை அருளிச் செய்த கொற்றவன்குடி உமாபதி சிவாச்சாரியார் காலத்திற்குப் பின்னர்
தோன்றியது துகளறு போதம்
சிவஞான போதத்திற்குச் சிற்றுரை, பேருரைகளைச் செய்து பாடியம் உடையார் என்னும் சிறப்பினைப் பெற்ற மாதவச் சிவஞான சுவாமிகள் தமது உரையில் இத்துகளறு போதத்தைச் சிறந்த பிரமாண நூலாக ஆங்காங்கு காட்டிச் செல்வதால் இதன்
சிறப்பினை உணரலாம்.
காழி சிற்றம்பல நாடிகளின் துகளறு போதம் முப்பது வகைப்படும் முத்தி நன்னெறியினை உணர்த்திடும் ஞானநூல். சிவஞானபோதம், சிவானந்த போதசாரம், சித்தாந்த சாரம் முதலியவற்றிற்கு ஆதாரமான தலைமை உடையது. சிற்றம்பல நாடிகள் கலித்துறை, சிற்றம்பல நாடிகள் வெண்பா, சிற்றம்பல நாடிகள் தாலாட்டு, சிற்றம்பல நாடிகள் அனுபூதி விளக்கம் வருகாலத்திரங்கல் நிகழ்காலத்திரங்கல், கழி காலத்திரங்கல், திருப் புன்முறுவல் ஆகிய அனைத்தும் திருவாவடுதுறை ஆதீனத்தால் 1952 இலே பதிப்பிக்கப் பெற்றுள்ளன.
துகளறு போதத்திற் காணப்படும் முப்பது அவதாரங்கள் சிந்திக்க இனிக்கும் சித்தாந்த ஒட்பம் உடையவை. முப்பது அவதாரம் என்பது சீவன் முக்த நிலையில் இருந்த ஆன்மா, அந்த நிலையில் இருந்து வழுவிய காலத்து மீண்டும் அந்நிலைக்குச் செல்லத் தலைப்படுங்கால் முப்பது பொருள்களின் உண்மை நிலையை உணர்ந்து மேல்நோக்கிச் செல்லும் நெறியில் அமைந்த வழிமுறைகள் ஆகும். இந்த முப்பது அவதாரமும் கேவலம், சகலம்
என்ற இரண்டையும் நீங்கி சுத்தாவத்தையில் நிகழ்வனவாகும்.
துகளறு போத நூல் காப்பு, பாயிரம், சன்மார்க்கம் என்ற மூன்று பகுதிகளோடு 1. பூதப் பழிப்பு, 2. பொறியற உணர்தல், 3. அந்தக்கரண சுத்தி, 4. கலாதி ஞான நிராகரணம், 5. சுத்த தத்துவ தூடணம், 6. தத்துவாதீதம், 7. சகல தரிசனம், 8. கேவலம், 9. கேவல தரிசனம், 10. கேவலாதீதம், 11. தன்னுண்மை, 12. சைதன்னிய தரிசனம், 13 ஞான தரிசனம், 14. பரை தரிசனம், 15. பரையில் வியாத்தம், 16. பரையில் யோகம், 17. பரையில் போகம், 18. சுத்தபராயோகம், 19 சுத்தபரா போகம் (முத்தி சாக்கிரகம்) 20. சாக்கிராதீதம் (முத்தி சொப்பனம்) 21 பரையில் தீதம் (முத்தி) சுழுத்தி, 22 சுத்தாவத்தை (முத்தி) துரியம், 23. சுகரூபம்,

153
24. சுகாதீதம், 25. சிவப்பேறு, 26. பரமானந்த தரிசனம்,
27. பரமானந்த யோகம், 28. பரமானந்த போகம் 29. பரமானந்த மேலீடு, 30. பரமானந்த அவசம் (முத்தி) துரியாதீதம் என்பனவும் அடங்கும்.
துகளறு போதத்தில் உள்ள அவதாரங்கள், இருபத்தெட்டு, முப்பது என இருவகையான கருத்துக்கள் உள்ளன. துகளறு போதப்பொருள் வைப்பு முறை பற்றிய அகவல்,
திருவருள் விளையும் திறம்பல வெனினும் ஒருவகை இருபத் தெட்டுடன் பிறவும் என்று வகைப்படுத்துகின்றது. இருபத்தெட்டும் ஐந்தவத்தைகளுள் அடங்கும் என்பார்.
சாக்கிரந்தான் ஈராறு சார்சொப்பனம் ஆறு நீக்கும் சுழுத்தியொன்று நேர்துரியம் - நோக்கி ஒருமூன்று அதிதந்தான் ஈராறும் காலேழ் தருமே துகளறு போதம் தசகாரியம் கொள்ளுவதை முப்பதவதாரமாக,
சாக்கிரம் பத்தொன்பது கனவுதான் ஒன்று துரக்குச் சுழி ஒன்று துரியம்எட்டு - நீக்கித் துரியாதீதம் என்று சுத்தாவத்தை முப்பான் சரியித் துகளறுபோதம்
என்றும் கூறுவர்.
துகள் - ஆணவம் - போதம் - ஞானம், ஆணவம் ஒழிந்தால் ஞானம் எனச் சுட்டுவதே "துகளறு போதம்” அடிகளாரின் காலம்
— 1325–50 5_ff. (6) I. 60,62).)
சிறப்புலி நாயனார்
சிறப்புலி என்பது இவரது இயற்பெயர். சோழநாட்டின் திருவாக்கூர் (திரு + ஆக்கூர்) எனும் பதியில் வேதியர் குலத்தில் உதித்து ஆன்ம ஈடேற்றம் பெற்றவர். 83 சைவநாயன்மார்களுள் ஒருவர் ஆவர்.
சுந்தரமூர்த்தி சுவாமிகள் அருளிய திருத்தொண்டத் தொகையில் ஆறாவது பாடலில், சீர் கொண்ட புகழ்வள்ளல் சிறப்புலி’ எனப் போற்றித் துதிக்கப்படுகிறார். எனவே இவர் சுந்தரரின் சமகாலத்தவர், இன்றேல் சுந்தரர் வாழ்ந்த கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டுக்கும், தமிழகத்தில் சைவம் எழுச்சி பெறத் தொடங்கிய கி.பி. ஆறாம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட கால எல்லைக்குள் வாழ்ந்தவர் ஆதல் வேண்டும்.
மேலும் பத்தாம் நூற்றாண்டில் வாழ்ந்த நம்பியாண்டார் நம்பி பாடிய திருத்தொண்டர் திருவந்தாதியிலும் இவர் போற்றப் படுகிறார்.

Page 180
பின்னர் இரண்டாம் குலோத்துங்கனின் ஆட்சிக் காலமாகிய கி.பி 12 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த சேக்கிழார் பாடிய சைவ அடியார்களின் வரலாற்று நூலாகிய பெரிய புராணத்தில் நாற்பத்தோராவது சரிதமாக இவரது வரலாறு உரைக்கப்படுகின்றது.
சேக்கிழார் இவரது வரலாற்றிற்கு ஆறே ஆறு விருத்தப்பாக்களை மாத்திரமே ஒதுக்கியிருக்கிறார். அரிய வரலாற்றுணர்வோடு அடியார்களின் சரிதங்களைப் பதிவு செய்ய முயன்று அதிற் பெரிதும் வெற்றி கண்டவர் சேக்கிழார். தமது முதல் அமைச்சர் பதவி அந்தஸ்தை உபயோகித்து, முயன்று தேடியும் சிறப்புலி நாயனார் பற்றிச் சம்பவ பூர்வமான வரலாற்றுச் செய்திகள் சேக்கிழாருக்குக் கிடத்திலவெனவே யாம் கொள்ள வேண்டியிருக்கிறது.
எனினும் சிறப்புலியின் வாழ்க்கை ஆன்மீகச் சிறப்புடையதாகத் திகழ்ந்திருந்ததென்பதையும், இந்து சமய தத்துவ நெறிகளுக்குரிய ஒழுக்கலாறுகளை உள்ளடக்கியதாக அமைந்திருந்த தென்பதையும் சைவ சித்தாந்தக் கோட்பாட்டு வளர்ச்சியின் வரலாற்றில் அவரது சரிதமும் முக்கிய இடத்தினை வகிக்கின்ற தென்பதையும் சேக்கிழார் ஆறே ஆறு செய்யுள்களில்
இரத்தினச் சுருக்கமாகச் சுட்டிக் காட்டத் தவறவில்லை.
(பெரிய 3659 - 3664)
பெரிய புராண அடியார்கள் அனைவருமே, ஏதோவொரு வகையில் மதவழிபாட்டு நெறி சார்ந்த புரட்சியாளர்கள் ஆவர். இதற்குச் சிறப்புலியும், விதிவிலக்கானவர் அல்லர்.
மரணத்துக்குப்பின் சுவர்க்கத்தில் போக வாழ்வினை எதிர்பார்த்து, வேள்வி, ஹோமம் போன்ற கிரியைகளை மீமாம்ச தரிசனத்தின்வழி நின்று ஆற்றும் வேதியர்கள் வாழ்ந்த பதி திருவாக்கூர்.
மறைபொலிமுழக்கம் ஒங்கும் பூமலிமறுகில் இட்டபுகைஆகிஸ்து/டந்தாழ
ஒமநல்வேள்விச்சாலை ஆகுதித் தூபம் ஒங்கும்
అ= (பெரிய, 3660)
தத்தம் இல்லங்களில் மறைமந்திரங்கள் ஒதி நாடோறும் கிருகயக்ஞம் ஆற்றி இந்திர வருணாதி தேவர்களுக்கு, அக்கினி வளர்த்து ஆகுதி நல்கும் அந்தணர் குலத்தவரானாலும் சிவபக்தராகிய சிறப்புலி, சிவபிரானையே முழுமுதற் கடவுள் எனக் கொண்டு சிவபேற்றையே வேட்பவராய், தமது மூதாதையரின் நெறியினை விடுத்துப் புரட்சி செய்தார்.
யாகம் ஹோமம் போன்ற வைதிக சடங்குகள், கிரியைகளைப் புரிவோர் அவித்தையை உபாசிப்பவர். ஆதலின் அஞ்ஞானமாகிய இருளில் மூழ்குகின்றவர் என்ற இந்துமதப் பேருண்மைகளை ஈசாவாஸ்யம் போன்ற உபநிடதங்கள் பிரஸ்தாபிக்கின்றன.
វិទ្ទេចំងាយ៦៥ ஞ்சியம்
154

andham tanah pravisanti yeavidyan upasate/ (ஈசாவஸ்யம் மந்திரம்-9)
இந்தத் தத்துவக் கருத்தினைச் சிறப்புலியின் இந்தச் செயல் நிரூபணம் செய்கின்றது.
சிறப்புலி தமது கிருகயக்ளுத்தில் இந்திராதி தேவர்களுக்குப்
ப்ரீதி செய்வதற்குப் பதிலாக, பரம்பொருளாகிய சிவபிரானுக்கே அன்பு மேலிட்டினால் ஆகுதியினை அர்ப்பணம் செய்து, தொழுது சிவனார் தாளினை அடையும் பேற்றினை எய்தினார்.
அஞ்செழுத்து ஒதி அங்கி வேட்டுநல் வேள்வி எல்லாம்
நஞ்சனரி கண்டர் பாதம் நன்னடச் செய்து எனக்கூறும் சேக்கிழார், வேதமந்திரங்களுக்குப்பதிலாக, சிறப்புலி சிவபிரானின் மூலமந்திரமாகிய ஐந்தெழுத்தையே ஒதி ஆகுதி கொடுத்தார் என்பதை வலியுறுத்துவார்.
சிறப்புலியின் வரலாறு இன்னொரு ரீதியில் இந்துமத தத்துவத்தின் மற்றொரு பேருண்மைக்கும் திருஷ்டாந்தமாக அமைகின்றது.
பற்றுக்கள் அனைத்திலும் மானிடனைக் கூடுதலாக உட்படுத்தி அவனது ஆன்மீக முன்னேற்றத்தைக் கெடுப்பது அவனது பொருட் பற்றாகும். பொருட்பற்று நீங்கின் ஏனைய பற்றுக்கள் எளிதில் நீங்கிவிட மனிதன் சித்த சமநிலை அடைகிறான்.
இச்சித்த சமநிலைப் படியை, சைவ சித்தாந்தம் இருவினை ஒப்பு என்றும், வேதாந்தம் ஸ்திதபிரக்ஞைநிலை எனவும் பகரும். சித்தசமநிலை அடைந்தவனுக்கு இறையருள் எளிதிற் கை கூடுகின்றது.
இதனை தேவிகாலோத்தர ஆகமம் நித்தனாய் பரமேசன்' எனத் தொடங்கும் செய்யுளின் இறுதி அடியில், “சித்தனாய்ப் பொருட் பற்றுத் தீர்ந்து வீடு அடையுமால்"எனக் கூறும்.
ஈசாவாஸ்ய உபநிடதமும் முதல் மந்திரத்திலேயே இவ்வரிய கருத்தை வலியுறுத்திப் போதரும்.
இன்மையால் இரந்து சென்றார்க்கு இல்லை என்னாது ஈயும் குலத்தின் உதித்தவராதலின், சிறப்புலிதாமும் ஈகைத்திறன் மிக்காராய், தம்மை நண்ணினார்க்கெல்லாம் வரையாது தம் பொருள் ஈந்தார். இதனால் அவர்பால் இருந்த பொருட் பற்றுத்தேய சித்தம் சலனமற்று, சமநிலை எய்த, சிவபிரான் அருள் அவருக்குக் கிட்டிற்று
நிறுவனமயப்படுத்தப்பட்ட பெளத்த, சமண மதங்களைச் சார்ந்த துறவிகளுக்கு அன்னம் அளித்தும் தானம் கொடுத்தும் ஆதரிக்கும் விதிமுறை மரபினை மேற்கொண்டொழுகுவர் அந்தந்த மதம் சார் பொதுமக்கள்.

Page 181
சைவ பக்தி இயக்கத்தினை, கி.பி ஏழாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் முன்னெடுத்துச் சென்ற சம்பந்தப் பெருமானும் நிறுவனமயப்படுத்தப்படாத சைவமதத்தினை உறுதியாக நிலைநிறுத்துவதற்கு, சிவனடியார் வழிபாடு இன்றியமையாதது என்பதை உணர்ந்து சைவ வழிபாட்டு நெறியின் முக்கியதோர் அம்சமாக இதனை வலியுறுத்திப் போந்தார்.
உதாரணமாக, பூம்பாவைக்கு மீட்டுயிர் கொடுத்து அற்புதம் விளைத்த சந்தர்ப்பத்திலும் இதனைக் கட்டுரைத்தார் எனச் சேக்கிழார் குறிப்பிடுகின்றார்.
மண்ணினிற் பிறந்தார் பெறும்பயன் மதிகுடும் அண்ணலார் அடியாதமை அழுது செய்வித்தல்
(பெரிய 2990)
இதற்கமைய, சிறப்புலி நாயனார் சிவதொண்டர்களைப் பேணி ஆதரித்தார் என்பதனைச் சேக்கிழார் அழகுறக் கூறுவார்.
ஆளும் அங்கணருக்கு அன்பர்
அனைந்தபோது அடியில் தாழ்ந்து மூளும் ஆதரவு பொங்க
முன்பு நின்று இனிய கூறி நாளும் நல் அமுது ஊட்டி
நயந்தன எல்லாம் நல்கி நீளும் இன்பத்துள் தங்கி
நிதி மழை மாரி போன்றார் (பெரிய, 3662)
இங்ங்ணம் சம்பந்தரால் பெரிதும் வற்புறுத்தப்பட்டும் சிறப்புலி உட்பட ஏனைய நாயன்மார்களால் அயரா அன்பொடு மேற்கொள்ளப்பட்டும் வந்த சிவனடியார் வழிபாட்டு நெறி காலகதியில் சிவனடியார்களைச் சிவனுடனேயே சமப்படுத்தி கூறும் சமய தத்துவ நெறியாக வளர்ச்சி மாற்றம் பெறுகின்றது.
13ஆம் நூற்றாண்டில் எழுந்த சிவஞானபோதத்தின் இறுதிச் சூத்திரம் இதனை அழுத்திக் கூறும்.
SSSS SLSS SLSS SLSS SLL LSS SLS S SLLLLL LSLLLLL LSL LLLLS LLLS LSL LLL LLL LLLS SLLL LSLS S LSLS SLSLS S S SS LS S அன்பரொடு மரீஇ மாலற நேய மலிந்தவர் வேடமும்
SL LSL LSL LSL LSL LS S S S S LCC LSL S L L L L LS S S S LSS S S LSL L LSL LLLSS SS SS SS SS அரன் எனத் தொழுமே.
சிவப்பேறு எய்திய ஜிவன் முக்தர்கள் கூட ஏனைச் சிவ பக்தர்களோடு நட்புப் பூண்டு ஒழுகல் வேண்டும் என்பதும் சிவனடியார்களின் வேடத்தைச் சிவன் எனவே வழிபடல்
வேண்டும் என்பதும் நியதி எனச் சிவஞானபோதம் கூறும்.
வேத மந்திரங்களை ஒதாது ஐந்தெழுத்தை ஒதி, சிவபிரானுக்கு ஆகுதி அளித்து, சிவ வேள்வி ஆற்றிய சிறப்புலி நாயனாருக்கு சைவ வழிபாட்டு நெறி வரலாற்றில் முக்கியமான இடம் உண்டு. (கே. கே. எஸ்.)

சிறிய திருமடல்
இது தமிழ்நாட்டு வைணவ அடியார்களுள் சிறப்புறப் பேசப் பெறும் பன்னிரு ஆழ்வார்களுள் ஒருவராகிய திருமங்கை யாழ்வாராற் பாடப்பட்ட ஒரு பிரபந்தம், பன்னிரு ஆழ்வார்களது அருளிச் செயல்களின் தொகுப்பாகிய நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தில் இது அடக்கப்பட்டுள்ளது. மடல் என்ற பிரபந்த வடிவில் அமைந்த இதுவும் இத்திருமங்கையாழ்வாராலேயே பாடப்பட்டதான பெரியதிருமடலும் திவ்வியப்பிரபந்தத் தொகுப்பின் இயற்பாப் பிரிவின் இறுதியில் வைக்கப்பட்டுள்ளன. சிறிய திருமடல் முற்காலத்தில் சிறுத்திருமடல் என்றும் வழங்கியமை குறிப்பிடத்தக்கது.
மடல் என்ற பிரபந்தவகை அகத்திணை சார்ந்த ஒன்றாகும். சங்க இலக்கியங்களில் ஒரு ஆண் தன்னால் விரும்பப்படும் பெண், தன்னை விரும்பாதவிடத்து அவளைத் தான் அடைவதற்காகக் கையாண்ட (தன்னைத் தான் வருத்தும்) ஒரு போராட்ட உத்தியாக மடலூர்தல் குறிப்பிடப்பட்டுள்ளது. அன்பினைந்திணையுள் அடங்காது இழிவானதாகக் கொள்ளப்படும் பெருந்திணை சார்ந்த இந்த நடவடிக்கை ஆண்களால் அன்றிப் பெண்களால் மேற்கொள்ளப்படாத ஒன்றாகும். ஆனால் பெண்ணொருத்தியே காமம் மிக்க நிலையில் மடலூர முற்படுவதாக ஆழ்வார் இப்பிரபந்தத்தை அமைத்துள்ளார்.
ஆன்மநாயகனாகிய திருமாலிடம் காதல் கொண்ட நாயகியாகத் தன்னைப் பாவித்து ஆழ்வார் மடற்பிரபந்தங்களைப் பாடியுள்ளார். அவ்வகையில் இம்மடற்பிரபந்தம் பக்தி இலக்கியங்களிற் காணப்படும் நாயகிபாவனைப் பாடல் வகையைச் சார்ந்ததாகும். திருமங்கையாழ்வார் பாடிய திருமடல்களே தமிழில் தோன்றிய மடற்பிரபந்தங்களுக்கெல்லாம் முன்னோடி
சிறிய திருமடலின் உள்ளடக்கம் வருமாறு:
"நிலமகளிடத்து வாழ்கிற மனிதர்களாற் சொல்லப் படுகின்ற உறுதிப்பொருள்கள் மூன்று, என்பது குறிப்பிடத்தக்கது. அவை அறம், பொருள், இன்பம் என்பன. அவற்றுள் தலையாயது இன்பமே. அந்த இன்பம் என்னும் உறுதிப்பொருளைப் பெற்றவர்கட்கு மற்றையிரண்டும் எளிதிற் பெறப்பட்டனவாம். இம்மூன்றும் தவிர வீடு என்றொரு நான்காவது உறுதிப்பொருள் இருப்பதாகச் சிலர் கூறுவது அறிவற்ற கூற்றே ஆகும். மோட்சத்துக்குப் போகிறவர்கள் சூரிய மண்டலத்தைப் பிளந்து கொண்டு அதனூடே செல்வராம். அவ்வழியே சென்றவர்க்கு மீட்சியில்லாத ஒரு வைகுந்த மாநகர் கிடைக்கின்றதாம். அங்கே ஆராவமுதம் அனுபவிக்கப்படுகின்றதாம். இத்தனையும் முழுப் பொய்யுரையேயன்றி இப்படியும் ஒன்று
இந்துக் basardifuri

Page 182
இருக்கக் கூடியதுண்டா? அப்படியொரு வீடு' என்பது இருப்பதாகவே வைத்துக் கொள்வோம். இருட்டறையில் விளக்குப் போலே எல்லாக் குணங்களும் இனிது விளங்கும்படியான அர்ச்சாவதாரத்தை விட்டு உண்டோ இல்லையோ' என்று ஐயத்திற்கு இடமான அவ்வீட்டினைப் பற்றுவதும் அறிவாமோ? முயலைவிட்டுக் காக்கைக்குப் பின் போகும் செயலைப் போன்றதன்றோ அது?
“ஒ மங்கையீர் எனக்கு நேர்ந்ததொரு துன்பத்தைச் சொல்லுகிறேன் கேளுங்கள். நான் என்னை ஒப்பனை செய்துகொண்டு, பந்தாடிக் கொண்டிருந்தபோது, தெருவில் தாமரைக் கண்ணன் என்று பெயர்பெற்றான் ஒருவன் குடக்கூத்தாடி வந்தான். அதைக் காணும் பொருட்டு என்னையழைத்த பெண்டிரோடு சென்று அவன் கூத்தாடியதைக் கண்டு அவனிடத்து மனத்தைப் பறிகொடுத்தேன். மேனி நிறமிழந்து கைவளையல் கழன்றொழியப் பெற்றேன். எனது நிலைகண்ட தாய் தொண்டரடிப் பொடியைக் கொண்டு காப்பிட்டாள். என்குறை தீரவேண்டிக் காத்தா என்னும் தெய்வத்திற்கு ஒர் அஞ்சலியும் செய்தாள். அத்தனை செய்தும் என்னைப்பற்றிய நோய் தீரவில்லை.
"அப்போது பழங்கதையுணர்ந்த பாட்டிமார் சிலர் குறிகேட்குமாறு கூறினர். அவ்வளவிலே கட்டுவிச்சி ஒருத்தி தானாகவே வந்து தோன்றிக் குறிபார்த்து அந்நோய் திருமாலால் விளைந்ததே என்றுணர்ந்து அவன்றன் அருஞ்செயல்கள் பலவற்றையும் அடுக்கிக்கூறி அவனே இவளை நோய் செய்தான் என்று முடித்தாள். அந்நோயும் 'தீராநோய் என்று தெரிவித்தாள் கட்டுவிச்சி கூற்றால், தாய் கவலையொழிந்தாள்.
"ஆனால் அவன் திருமேனியைக் கண்ணாற் கண்டது முதல், நிலை தடுமாறி, வாய் பிதற்றி, மாறுபாடுற்றேன். என் மனத்தையே அவன்பால் தூதாக அனுப்பினேன். அதுவோ திரும்பி வராது அவனிடத்தே தங்கிவிட்டது. என் நெஞ்சே எனக்கு உதவாதபோது இனி எனக்குத் துணையாவார் யாவர்? என்னைப் பற்றிக் கவலை கொள்வார் ஒருவரும்
இலர்.
“இப்படியும் பதறலாமோ? சிறிதே ஆற்றியிருக்க வேண்டாவோ? என்கிறீர்கள். கடல் போலும் காமத்தராயினார் நன்மை, தீமையுணர்ந்து அடங்கியிருப்பார்களோ? வாசவதத்தை என்று புகழ்பெற்ற ஒருத்தி தனது தோழியரையெல்லாம் விட்டொழித்து
புறப்பட்டுப் போனாளே. அவளை இகழ்ந்தார் ஆரேனும் g_6ক্টাt_fা? நானும் அவளைப்போலவே துணிவு
இந்துக்கலைக்களஞ்சியம் 56

கொண்டுள்ளேன். இதனைத் தடுப்பார் எனக்குத் தலைவரல்லர். அவர்கள் சொல்லை நான் பேணமாட்டேன். பின்னே, என் செய்வேன் எனில், அவன் அருள்தரும் அளவும் திருவேங்கடம் முதல் வடமதுரை ஈறாகப் பல
*چrيتم 4 {يم 萱0 „ ) ዓ யாவரும் அறியத் தூற்றி மடலூர்வேன்.
வீடுபேற்றினையே எப்போதும் அவாவிநிற்கும் இயல்பினரான திருமங்கையாழ்வார் இப்பிரபந்தத்தில் வீட்டினைப் பழித்து இன்பத்தைச் சிறப்பித்துப் பேசுவது கண்டு பலரும் வியப்பர். ஆழ்வார் மேற்கொண்ட நாயகிபாவமே அவரை இப்படிப் பேசவைத்தது என்று அதற்குச் சிலர் சமாதானங் கூறுவர். உண்மையில் ஆழ்வார் தம்மானிடப் பிறப்பின் பயனை அனுபவிக்க விரும்புகிறார் என்றே கொள்ளல் வேண்டும். அதாவது இறைவனுடைய திருத்தலந்தோறும் யாத்திரைசெய்து அவன் எழுந்தருளியிருக்கும் திருக்கோலங்களில் ஈடுபடுதல் ஒன்றனையே விரும்பியவராய் கூடும் அன்பினில் கும்பிடலே அன்றி வீடும் வேண்டா விறலினராய் - விளங்கினார் என்றே கொள்ளல் வேண்டும். தொண்டரடிப் பொடியாழ்வார்,
பச்சைமா மலைபோல் மேனி
பவளவாய் கமலச் செங்கண் அச்சுதா அமரர் ஏறே ஆயர்தம்
கொழுந்தே என்னும் இச்சுவை தவிர யான்போய்
இந்திர லோகம் ஆளும் அச்சுவை பெறினும் வேண்டேன்
அரங்கமாநகருளானே என்று திருவரங்கநாதனின் கிடந்த திருக்கோலத்தில் ஈடுபட்டுச் சுவர்க்க இன்பத்தை ஒதுக்கியதிலும்,
குனித்த புருவமும் கொவ்வைச்
செவ்வாயிற் குமிழ்சிரிப்பும் பனித்த சடையும் பவளம்போல்
மேனியிற் பால் வெண்ணறும் இனித்தமுடைய எடுத்த
பொற்பாதமும் காணப் பெற்றால் மனித்தப் பிறவியும் வேண்டுவதே இந்த மானிலத்தே. என்று நாவுக்கரசர் ஆடல்வல்லானின் அழகுக்கோலத்தைக் காணும் அவாவினால், தான் ஒருபோதும் விரும்பாததாகிய 'மனிதப் பிறவியும் வேண்டுவதே என்று கூறியதிலும் திருமங்கையாழ்வார் இச்சிறிய திருமடலிற் கூறியதிலும் உள்ள உள்ளக்கருத்து ஒன்றேயாம்.
திருமங்கையாழ்வார் திருத்தலங்கள் தோறும் சென்று திருமாலின் அர்ச்சைத் திருக்கோலங்களில் ஈடுபடுதலிலே கொண்டிருந்த ஆர்வம், சிறிய திருமடலின் இறுதிப் பகுதியில் நன்கு புலனாகின்றது.

Page 183
SS SSSSSLS S SS SS SSS நான் அவனைக் காரார் திருமேனி காணும் அளவும் போய் சீரார் திரு வேங்கடமே திருக்கோவல் ஊரே, மதிள்கச்சி ஊரகமே, பேரகமே, - பேரா மருதிறுத்தான் வெள்ளறையே, வெஃகாவே பேராலி தண்கால் நறையூர், திருப்புலியூர், ஆராமம் சூழ்ந்த அரங்கம், கனமங்கை காரார் மணிநிறக் கண்ணனூர் விண்ணகரம் சீரார் கணபுரம் சேறை, திருவழுந்தூர், காரர் குடந்தை கடிகை, கடல் மல்லை, ஏரார் பொழில் சூழ் இடவெந்தை நீர்மலை, சீராரும் மாலிருஞ்சோலை, திருமோகூர், பாரோர் புகழும் வதரி வடமதுரை ஊர7ய எல்லாம் ஒழியாமே நான் அவனை ஒரானை கொம்பொசித்து ஒரானை கோள்விடுத்த சீரானை, செங்கண் நெடியானை, தேன்துழாய்த் தாரானை, தாமரைபோற் கண்ணானை, எண்னருஞ்சீர்ப் பேராயிரமும் பிதற்றிப் பெருந்தெருவே ஊரார் இகழிலும் ஊராதொழியேன் நான் வாரார் பூம் பெண்ணை மடல் திருமால் தலங்கள் பலவற்றையும் வரிசைப்படுத்தி அங்கெல்லாம் நான் அவனைக் காரார் திருமேனி காணும் அளவும் மடலூர்வேன் எனக்கூறும் கவியுள்ளம் உணரத்தக்கதே. 'எண்ணருஞ்சீர் பேராயிரமும் பிதற்றி என்பதில் இறைவனின் திருப்புகழைப் பேசுவதில் - நாம சங்கீர்த்தனத்தில் - ஆழ்வாருக்கு இருந்த ஈடுபாடு புலனாவதும் உணரத்தக்கதே. (க.இர,
சிறுத்தொண்ட நாயனார்
事 த் தொண்ட நாயனார் பெரியபுராணம் சிறப்பிக்கும் றுத plத 西 四 色 அடியார்களில் ஒருவர். பரஞ்சோதி என்பதே அவரது இயற்பெயர். அடியாரை வழிபடுங்கால் சிறியராய்ப் பணிந்து இருந்தமையால்
சிறுத் தொண்டர் எனப்பட்டார்.
காவிரித் திருநாட்டுச் செங்காட்டாங் குடியில் காவல் தொழிலில் சிறந்த மாமாத்திரர் குலத்திலே தோன்றியவர் சிறுத் தொண்ட நாயனார். ஆயுள் வேதம், வட நூற் கலைகள், படைக்கலப் பயிற்சி ஆகியவற்றில் சிறந்த பயிற்சி பெற்றவர். யானை ஏற்றம் குதிரையேற்றம் ஆகியவற்றில் வல்ல இவர் கலைகளையும் முறையாகப் பயின்றிருந்தார். சிவனடி போற்றும் செம்மலாகத் திகழ்ந்த அவர் சிவனடியார்களுக்கு எக் காலமும் திருத் தொண்டு செய்பவர்.

15
பல்லவ மன்னருக்கு சேனாதிபதியாக இருந்து மன்னனின் பகையரசர்கள் பலரை வென்று அவர்கள் தேசங்களைக் கைப்பற்றி மன்னனுக்குப் பெரும் புகழும், பொருளும் தேடித் தந்தவர். ஒரு முறை உத்தரதேசத்திலே மன்னவர்க்குத் தண்டு போய் வாதாபித் தென்னகரத்தை துகளாக்கி, பலவகையிரத்தினங்களும், நிதிக்குவைகளும், யானைக் கூட்டங்களும் குதிரைக் கூட்டங் களும் அரசன் முன் கொண்டு வந்தார்.
அவரது இந்த அரிய செயலைக் கண்டு வியந்த மன்னன் சிறுத்தொண்டரைப் புகழ்ந்து பேச அவரை அறிந்த மந்திரிகள் “மகாராஜா இவர் பரமசிவனுக்கு திருத் தொண்டு செய்பவர் ஆகையால் இவருக்கு எதிரானவர் ஒருவருமில்லை” எனக் கூறினர். மன்னன் திடுக்குற்று “இவர் பரம சிவனது திருத் தொண்டர் என்பதை அறியாது போர் முனையில் விட்டிருந்தேன் என் பிழை பொறுக்க வேண்டும்” என இரந்து நின்றார். மேலும் “நீர் உம்முடைய நிலைமையை நான் அறியா வண்ணம் நடத்திக் கொண்டு வந்தீர். இனி என் மனக் கருத்துக் கிசைந்து, எனக்குப் பணிசெய்தலை விடுத்து, நீர் விரும்பியவாறே சிவபெருமானுக்கும் சிவனடியார்களுக்கும் வெளிப்பட்டு திருத்தொண்டு செய்யும்” என்று கூறி விடை கொடுத்தான்.
சிறுத்தொண்டர் பின் தம்முடைய திருப்பதியிற் சென்று கணபதீஸ்வரப் பெருமானுக்கு திருத் தொண்டுகள் குறைவுறாது செய்து வந்தார். அங்கு திருவெண்காட்டு நங்கையுடன் மனையறம் பேணி, நாள் தோறும் சிவனடியார்களுக்குத் திருவமுது செய்வித்துப் பின்பு உண்ணும் வழக்கம் கொண்டவர். இறையருளால் அவருக்கு மகன் பிறக்க சீராளன் எனப் பெயரிட்டு வளர்த்தார். அந்நாளிலே அத்திருப்பதிக்கு எழுந்தருளி வந்த திருஞானசம்பந்தரை எதிர் கொண்டு அழைத்து வரவேற்றார். அவரது உள்ளமும் தொண்டும் உணர்ந்த சம்பந்தர் தாம் பாடிய பதிகத்துள் அவரைச் சிறப்பித்தார்.
அவரது அன்பின் பெருமையை உலகறியச் செய்ய இறைவன் பைரவ கோலத்தில் அடியாராக வந்து, “சிறுத்தொண்டர் மனையில் உள்ளாரோ” என்று வினவினார். தொண்டரைத் தேடி அவர் சென்ற விவரம் அறிந்து “நாம் உத்தரதேசத்திலிருந்து சிறுத் தொண்டரைக் காண வந்தோம். அவர் இல்லாத வேளை நாம் இங்கே இருக்க விரும்பவில்லை. கணபதீச்சரத்தின் உள்ள திருவாத்தி மரத்தின் கீழ் இருக்கின்றோம். அவர் வந்ததும் தெரிவியுங்கள்’ என்று கூறிச் சென்று விட்டார்.
சிறுத் தொண்டர் அடியாரைச் சென்று கண்டு பணிந்து “இன்று அடியேன் மனையில் அமுது செய்தருள வேண்டும்” என்றார். அதற்கு அப்பைரவர் கோலமுடைய பெருமான் 'யான் ஆறு மாதத்துக்கு ஒரு முறையே உண்பது; அதுவும் பசுவே உணவு” என்றார்.
இந்துக்கலைக்களஞ்சியம்

Page 184
சிறுத் தொண்டர் தம்மிடம் மூவகைப் பசுக்கள் இருப்பதாகக் கூற, "நாம் உண்பது நரபசு. ஐந்து வயதிற்குட்பட்டதாக உடம்பில் மறுவற்றதாக இருக்க வேண்டும். அம் மகவையும் தாய் பிடிக்கத் தந்தை அரிந்து தர ஆக்கிய கறியே யாம் விரும்புவது” என்றார்.
பைரவ சன்னியாசியின் வேண்டுகோளுக்கிசைந்த சிறுத்
தொண்டர், தன் மனையாளிடம் இதனைக் கூற, இத்தகைய
சிறுவனைப் பெறுவது எவ்வாறு என்று அவர் வினவினார். அதற்கு “யாம் பெற்ற மைந்தனை அழைப்போம்” என்று கூறிப் பள்ளி சென்று மகனை அழைத்து வந்தார். அம்மையார் மகனை திருமஞ்சனமாட்டி அழகு செய்து நாயகர் கையிற் கொடுத்தார். இருவரும் மகனை அரிந்து சந்தன நங்கை என்ற தாதியிடம் கொடுக்க அவள் அதைப் பக்குவப் படுத்தினாள்.
பைரவரை அழைத்து வந்து பாதம் பணிந்து உணவு படைத்தார். பைரவர் அதைப் பார்த்து ‘நாம் சொல்லியபடியே கொன்ற பசுவின் எல்லா உறுப்புகளையும் பாகம் பண்ணினீரா” என்று வினவ “தலையிறைச்சி திரு அமுதுக்கு ஆகாது” என்று விட்டோம் என்று கூற “அதுவும் நாம் உண்பது” என்றார் பைரவர். தாதி அதையும் முன்பே கறியாக்கியமையால் எடுத்து உதவினள்.
பின் தான் தனியே உண்ணுவதில்லை வேறு அடியாரையும் அழையும் என்றார் பைரவர். சிறுத் தொண்டர் அடியார்களைக் காணாது திகைத்த பொழுது “நீர் என்னோடிருந்து உண்பீர்” என்று கூறியதுடன் “மகனையும் அழையும்” என்றார். “அவன் இப்போது உதவான்’ என்று தொண்டர் கூறப் பைரவர் மீண்டும் வலியுறுத்தச் சிறுத்தொண்டரும் அவரது மனைவியாரும் “மைந்தா சீராளா” என்று அழைத்தனர். பள்ளி சென்று வருவான் போல் ஓடி வந்த மகனை அழைத்துக் கொண்டு விரைந்து மனையுட் சென்று பார்த்த போது பைரவர் மறைந்தார்.
அப்போது வானிடை சிவபெருமான், உமாதேவி யோடும், சுப்பிரமணியரோடும் நின்றார். தொண்டர் வியந்து பணியத் தம்மைப் பிரியாது இருக்கும் பெருநிலையை நல்கினார். சிறுத்தொண்டரது அரிய செயலைப்பட்டினத்து அடிகள் “வாளால்
மகவரிந்து ஊட்ட வல்லோன் அல்லேன்' என்று பாராட்டியுள்ளார்.
பெரிய புராணத்திற் கூறப்பட்டுள்ள சிவனடியார்களை மென் தொண்டர், வன் தொண்டர் என்ற இரு பிரிவினுள் அவர்களது செயற் கருஞ் செயல்களை நோக்கலாம். வாகீசர், முருக நாயனார், காரைக் காலம்மை, திருக்குறிப்புத் தொண்டர் போன்றோர் மென்தொண்டர் என்றும் எறிபத்தர், கண்ணப்பர், சிறுத் தொண்டர்
போன்றோர் வன்தொண்டர் என்றும் அழைக்கப்படுவர்.
இக் கருத்து சேக்கிழாரால் புதிதாகக் கூறப்பட்டதன்று. திருக்களிற்றுப் படியார் என்னும் சைவ சித்தாந்த சாஸ்திர நூல் மெல்வினை, வல்வினை என்று பிரிவினை செய்து பேசுகிறது.
இந்துக்கலைக்களஞ்சியம்
158

மெல்வினையே யென்ன வியனுலகில் ஆற்றிரிய வல்வினையே யென்ன வருமிரண்டும் - சொல்லிய சிவதன்மம் ஆயவற்றில் சென்றதிலே செல்வாய் பவகன்மம் நீங்கும்படி,
இவை இரண்டுமே சிவ தன்மம் ஆதலால் எதில் மனஞ் செல்கிறதோ அதிற் செல்க என்று கூறுகிறது திருக்களிற்றுப்படியார்.
தொண்டு செய்ய வேண்டுமென்றால் வன்முறை தான் வழி என்றோ, மென் முறை தான் உரிய பாதை என்றோ வரையறுக்க முடியாது. தேவைக்கேற்ப அவர்களின் மனம் எதிற் செல்லுகிறதோ அந்த வழியை அவர்கள் கடைப்பிடித்தார்கள். வன்முறையைக் கடைப்பிடித்ததால் அவர்கள் அன்பில்லாத வன்கணர்கள் என்று யாரும் நினைத்துவிடக் கூடாது. அவர்கள் இச்செயலில் ஈடுபடுவதற்கு அன்பு தான் அடிப்படை
தொண்டு என்பதையே குறிக்கோளாகக் கொண்ட அவர்கள் அன்பே வடிவான சிவபெருமானை முழுமையாக ஏற்றுக் கொண்டமையால் அவர்கள் செயல்கள் அனைத்தும் அறச் செயல்கள் என்றே கருதப்பட்டன.
இயற்பகையார், கோட் புலியார், சிறுத்தொண்டர், எறிபத்தர் முதலியோர் செய்த செயல்களைக் கொலை என்று கூறலாமா? தாம் பெற்ற மகனை அரிந்து கறி சமைக்க எந்தத் தாய், தந்தையாலும் முடியுமா? இதை விடப் பாதகச் செயல் வேறொன்று உளதா? என்ற கேள்விகள் இச் சந்தர்ப்பத்தில் எழுவது நியாயம்.
ஒருவன் தன் பொறி புலன்களுக்குட்பட்டு தொழிற்படும் பொழுது அச்செயலுக்கு அவனே காரணமாவான். அவன் செய்யும் செயலுக்கு அவனை அன்றி யாரும் பொறுப்பேற்க மாட்டார்கள். ஒருவன் தன்னை மறந்து தற்போதமில்லாமல் ஒரு செயலைச் செய்ய நேர்ந்தால் அது உள் நின்று துாண்டும் இறையருளாற் செய்யப் பெற்றதாகக் கருதுவார்கள். இந்த வேறுபாட்டை அறிந்து கொண்டால்தான் பல அடியார்களின் செயலுக்கு விளக்கம் கூற முடியும்.
"சித்தம் சிவமாக்கிச் செய்தனவே தவமாக்கும் அத்தன்'
சித்தத்தைச் சிவன் பால் வைத்த இவ்வடியார்கள் செயல்கள் அனைத்தும் தவச் செயல்களாகவே கருத இடம் உண்டு.
மேலும் பரஞ்சோதியார் சேனாதிபதியாக இருந்து தனது அரசரின் பகைவர்கள் பலரைக் கொன்று வெற்றியுடன் வந்தவர். அது அவரது கடமையும் கூட அதே மனிதருக்குத் தாம் மேற் கொண்ட விரதத்தில், கொள்கையில் ஒரு சோதனை வருமானால் இதே கடமை உணர்ச்சி அங்கும் கைகொடுக்கலாமா? என்பதே
இங்கு எழுப்பப்படும் மற்றொரு வினாவாகும்.

Page 185
சோனாதிபதியாக இருந்து தனது கடமையை அனாயாசமாகச் செய்த இவர் - பிறருடைய உயிர்களைக் கடமை என்ற பெயரில் போக்குகிறவர். தம்முடைய உயிரை அல்லது தமக்கு மிக வேண்டியவர்கள் உயிரை அவ்வாறு செய்வாரா? அதற்கு முன் வருவாரா?
நான், எனது என்ற அகங்கார, மமகாரங்களைப் போக்கியவர்கள் தான் அடியார்களாக முடியும், அகங்காரமமகாரம் அற்றவர்கட்கு, நான் என்பது இருந்தால் தான் என் மனைவி என் மக்கள் என்ற உறவுகள் உண்டாகின்றன. இவை போனபின் மனைவி மக்கள் என்ற முறைப் பெயர்கள் அர்த்தமற்றவை. இதனை விளங்கிக் கொண்டால்தான் அடியார்களின் வாழ்க்கை நுட்பத்தை அறிய முடியும். சேக்கிழார் அடியார் வாழ்க்கையின் நுணுக்கத்தை, அடிப்படையை, மனநிலையை, குறிக்கோள்களை மிக நன்றாக அறிந்திருந்ததாலேயே அவருக்கு தொண்டர்சீர் பரவுவார் என்ற பெயர் ஏற்பட்டது.
பலராலும் விமர்சிக்கப்படுகின்ற சிறுத்தொண்ட நாயனார் கதை போன்று கிறிஸ்தவ வேதாகமத்திலும் (பழைய ஏற்பாடு) குர் ஆனிலும் ஒரு கதை இடம் பெற்றிருப்பது நோக்கத்தக்கது.
பழைய ஏற்பாட்டில் ஆபிரகாம் என்பவர் இறைவனால் தெரிந்தெடுக்கப்பட்ட விசுவாசியாக வாழ்ந்தார். அவருக்கு நுாறு வயது. அவரது மனைவி சாராளுக்கு தொண்ணுாறு வயதாகியும் குழந்தைப் பாக்கியம் இருக்கவில்லை. இருந்தும் அவர்கள் இறைவனுக்கு விசுவாசமாக வாழ்ந்து வந்தார்கள்.
இந்நிலையில் இறைவன் இவர்கள் முன் தோன்றி முதிர்ந்த வயதிலும் ஒரு மகனைப் பெற்றெடுப்பீர்கள் என்றும் அம் மகனிலிருந்தே ஆபிரகாம் சந்ததி பல்கிப் பெருகும் என்றும் வாக்களித்திருந்தார். பின் அவரது மனைவி சாராள் ஒரு மகனைப் பெற்றெடுத்தாள். அம் மகவுக்கு ஈசாக் என்ற பெயரிட்டு வளர்த்து வந்தனர்.
குழந்தை சிறுவனாக இருக்கும் போது இறைவன் ஆபிரகாமின் இறை விசுவாசத்தைச் சோதிக்க விரும்பினார். அவரது ஒரே மகனைத் தனக்கு பலியிடுமாறு கேட்டார். தனது ஒரே மகனை இறை ஆணைப்படி பலியிடுவதற்கு ஒப்புக் கொண்ட ஆபிரகாம் மலையுச்சிக்கு அவனை அழைத்துச் சென்று பலிபீடத்தில் வைத்து பலியிட வாளை ஒங்கிய போது இறைவன் ஆபிரகாமை அழைத்து உன் விசுவாசத்தை சோதிப்பதற்காகவே உனது மகனைப் பலியிடும்படி கேட்டேன். உனது மகனைப் பலியிடத் தேவையில்லை என்று கூறிய ஒரு கதை பழைய ஏற்பாட்டில் இருக்கிறது.
அவ்வாறே குர் ஆனிலும் இப்ராகிம் என்பவர் அல்லாவிலே மிகுந்த விசுவாசமாக மெக்காவில் வாழ்ந்து வந்தார். அல்லாஹ் அவரது இறை விசுவாசத்தின் ஆழத்தைச் சோதிப்பதற்காக அவரது மனைவியையும் மகன் இஸ்மாயிலையும் கொடிய

159
பாலைவனத்தில் விட்டு விட்டு வரும்படி கேட்க அதுவே அல்லாஹ்வின் ஆணை என்றால் நான் அப்படியே செய்கிறேன் என்று கூறிய இப்ராகிம் தனது மனைவி, மகனை பாலைவனத்தில் விட்டு விடுகிறார்.
பாலைவனத்திற் கொதிக்கும் வெய்யிலில் அவர்களுக்கு நீரோ, உணவோ இருப்பிடமோ இருக்கவில்லை. மிகவும் துன்பப்பட்ட போதும் இப்ராகிமின் மனைவி அல்லாஹ்விடம் உணவோ, நீரோ கேட்காமல் எம்மை மோட்சத்திற்கு அழைத்துக் கொள்ளும் என்று தான் கேட்டாள். அதன் பிறகு அங்கு ஒரு வற்றாத நீரூற்று (சாம் சாம் - Zamzam) உண்டாயிற்று. அத்துடன் ஈச்சம் பழமரங்களும் இறை அருளால் தோன்றின என்றும் குர் ஆன் கூறுகிறது. அந்த நீரூற்று இன்றும் மெக்காவில் காணப்படுகிறது. அந்த நீரை முஸ்லீம்கள் புனித நீராகக் கருதுகிறார்கள்.
இப்ராகிமின் விசுவாசத்தைச் சோதிப்பதற்காக அவரது ஒரே மகனைத் தனக்கு பலியிடும்படி அல்லாஹ் கேட்டதாகவும் அதற்கிணங்க மகனை மலையுச்சிக்கு அழைத்துச் சென்று பலியிட முற்பட்டபோது இறைவனால் தடுக்கப்பட்டு அதேயிடத்தில் ஆடு ஒன்றைத் தனக்காக பலியிடும் படி அல்லாஹ் கேட்டதாகவும் மற்றொரு சம்பவம் குர்ஆனில் கூறப்படுகிறது.
இக்கதைகளை நோக்கும் போது இந்து மதத்தில் மட்டுமன்றி ஏனைய மதங்களிலும் வன் தொண்டர்கள் இருந்திருக்கிறார்கள் என்பது தெரியவருகிறது.
இவ்வடியார்கள் செய்த செயல்கள் அவர்கள் மன நிலையில் இருந்து காணும் பொழுது சாதாரண செயல்களாகவே கருதப் பெற்றன. நம்முடைய நிலையில் நின்று பார்க்கும் போதுதான் அவை செயற்கருஞ் செயல்களாகக் காட்சியளிக்கின்றன. வன் தொண்டர்கள் தாம்’ என்ற முனைப்பை விடுத்துச் செயற்பட்டமையால் அவர்களை அது பற்றிக் குறை கூறுவது சரியன்று.
இச் சந்தர்ப்பத்தில் நாம் கருத்திற்கொள்ள வேண்டிய விடயம் யாதெனில் இக்கதைகள் உண்மையில் நடந்தனவா? இல்லையா? என்பதல்ல. அவை எமக்கு புலப்படுத்த முற்படும் ஆழ, அகலங்களே. புராணக் கதைகள் அனைத்தும் ஏதோ ஒரு கருத்தை வலியுறுத்தவே - மக்கள் மனதில் ஆழமாக அதனைப் பதிக்கவே எழுந்தவை.
தத்துவக் கருத்துக்களை, கோட்பாடுகளை வெறுமனே கூறி நிற்பதிலும் அதை கதை வடிவிலே அமைத்துக் கூறும் போது வாசிப்பவர் மனதில் ஆழமாகப் பதிந்து விடுகிறது. ஆன்மீகப் படியில் மிகத் தாழ்ந்த நிலையில் நின்றவர்களுக்கு சமயப் பேருண்மைகளை உணர்த்துவதற்கு இக் கதைகள் பெருந்துணை புரிபவை என்பதை நாம் மறுப்பதற்கில்லை. (நி.நி)
இந்துக்கலைக்களஞ்சியம்

Page 186
சின் முத்திரை
இது ஆன்மிகம் தொடர்பான குறி அல்லது அடையாளமாகும். சித் - மேலான அறிவு; முத்திரை - குறி. ஆன்மா அறிந்து உய்ய வேண்டிய ஞானத்தின் எல்லையை உபதேசம் செய்து ஊர்ஜிதப்படுத்து வதற்காக, ஞானாசாரியன் தமது சிஷ்யனுக்கு காட்டி அறிவுறுத்துங் கைவிரல் அடையாளமாக சைவ I சித்தாந்த, வேதாந்த மரபுகளிற் "? 芭 sD کم- با
இச்சின்முத்திரை சிவமூர்த்தங்களிற் காணப்படும் ஒன்றாகும். சதாசிவத்தின் ஐந்து முகங்களுள் தெற்கு நோக்கியிருக்கும் முகத்திற்கு அகோர மூர்த்தம் என்று பெயர். தெற்கை நோக்கிய சந்நிதியுடையவரும் ஆன்மாக்களுக்கு உபதேசிக்கும் நிலையிலுள்ளவருமாகிய தகூதிணாமூர்த்தியின் வலது கையில் இச்சின்முத்திரை பொருந்தியிருக்கும்.
ஆன்மாக்களின் பாவங்களைப் போக்கியருள்வதற்காக
உபதேச நிலையில் தகூதிணாமூர்த்தி எழுந்தருளியிருக்கிறார் என்று சொல்லப்படுகிறது.
இவர் அமர்ந்திருக்கும் நிலை தவயோகநிலை. இவரது வலக்கையில் உள்ள பெரிய விரல் நுனியின் உட்புறத்தில் ஆள்காட்டி விரல் நுனியின் உட்புறம் வளைந்து பொருந்தியிருக்கும். ஏனைய மூன்று விரல்களும் தனியே இயல்பாகவோ அல்லது ஒன்று சேர்ந்தோ நீட்டப்பட்டு இருக்கும். முழங்கை முன்னால் நீட்டப்பட்டு, முன்னால் இருக்கும் ஒருவருக்கு உள்ளங்கை தெரியும் வண்ணம்
இச்சின்முத்திரை அமைந்திருக்கும்.
சைவ சித்தாந்த தத்துவத்தின் முப்பொருள் உண்மையை இது விளக்கி நிற்கும் எனச் சித்தாந்திகள் கொள்வர். நீட்டியிருக்கும் மூன்று விரல்களும் ஆணவம், கன்மம், மாயை என்ற மூன்று மலங்களையும் குறிக்கும். ஆள்காட்டி விரல் ஆன்மாவைக்
குறிக்கும். பெருவிரல் பதியாகிய சிவபிரானைச் சுட்டி நிற்கும்.
கையின் சாதாரண நிலையில் ஆள்காட்டி விரல் பெருவிரலைத் தவிர்த்து ஏனைய மூன்று விரல்களுடன் சேர்ந்தே நிற்கும். இது ஆன்மா, ஆணவம், கன்மம், மாயை என்ற மும்மலங்களுடன் இயற்கையாகவே சேர்ந்திருக்கும் என்பதைச்
சுட்டும். இது ஆன்மாவின் பெத்த (பந்த-கட்டுப்பட்டநிலை) நிலை.
இந்துக்கலைக்களஞ்சியம் 160

ஆள்காட்டி விரல் ஏனைய மூன்று விரல்களினின்றும் விலகி பெருவிரல் நுனியோடு சேர்ந்திருப்பது, ஆன்மா பாசநீக்கம் பெற்று இறைவனோடு ஒன்றி நிற்கும் விடுதலை / முக்தி நிலையினைச் சுட்டிநிற்கும் என்பது சின் முத்திரையின் உள்ளார்ந்த அர்த்தமாகும்.
திருவிளையாடற் புராணத்தில் பரஞ்சோதி முனிவர் சின்முத்திரை பற்றிய இறைவனின் திருவிளையாடல் ஒன்றினைக் குறிப்பிடுகிறார். தென்முகக் கடவுளாகிய தகூதிணாமூர்த்தி சனாகாதி முனிவர்களுக்கு ஏற்பட்ட ஐயங்களைத் தமது திருவாயால் ஒன்றும் கூறாது சின்முத்திரை காட்டி விளக்கினார் என்பதே அது.
தகூதிணாமூர்த்தியாய் நின்று சிவனார் எல்லா ஆன்மாக்களுக்கும் ஞானோபதேசம் செய்து அருள் புரிகின்றார் என்பது சைவசித்தாந்த சாஸ்திரத்தின் துணிபு ஆகும்.
அஷ்டாங்க யோகமார்க்கத்தைப் பின்பற்றுபவர்களுக்கு யோக நுட்பங்களையும் தர்மம், அர்த்தம், காமம், மோகூடிம் ஆகிய நான்கு புருடார்த்தங்களின் உட்கருத்தையும் விளக்கி சித்தவிருத்தியை ஒடுக்குவதற்கு வேண்டிய மெளன உபதேசத்தையும் அருள் செய்வதற்கு இறைவன் தகூதிணாமூர்த்தியாக எழுந்தருளி, சின்முத்திரை காட்டி அமைவர் என்ற சிந்தனை மரபு ஒன்று உண்டு.
சின்முத்திரையின் அர்த்தத்தை வேதாந்தம் சற்று வேறு விதமாக விளக்கும். சிறிய சுட்டு விரல் கண்களுக்குப் புலப்படும் ஸ்தூல சரீரம், மோதிரவிரல் கண்களுக்குப் புலப்படாத சித்தம், மனம், புத்தி, அகங்காரம் என்ற சூக்கும சரீரம், நடுவிரல் பாவம் புண்ணியம் ஆகிய இரண்டின் கூட்டாகிய சஞ்சிதவினை; ஆள்காட்டி, சீவாத்மா சொரூபம், பெருவிரல் பரமாத்மா சொரூபம், என்றவாறு சங்கரர், பிரமதேவரின் குமாரர்கள் நால்வருக்கு
விளக்கினார் என்ற புராணக் கதை ஒன்று உண்டு.
தூல சூக்கும காரண சரீரங்களில் நிலவக் கூடிய பற்றுகளை சீவாத்மா துறந்து, எவ்வித தருக்கமும் செய்யாமல் மோன நிலையில் அமர்ந்து, வெட்ட வெளியாகிய அகண்ட பரமாத்ம சொரூபத்துடன் இணைய வேண்டும் என்பதையே சங்கரர் ஆள்காட்டி விரலைப் பெருவிரல் கோட்டில் சேர்த்துக் காட்டினார் என்பதை பிரமதேவர் உணர்ந்து கொண்டனராம். அவர்களும் அங்ங்ணம் சின்முத்திரை பிடித்து அதனைத் தியானித்து ஈடேறினார்கள் என்றும் சொல்லப்படுகிறது.
இச் சின்முத்திரை, பரத நாட்டிய சாஸ்திரத்தில் உபதேசம் செய்வதற்கும் நிச்சயமான பொருளை அறுதியிட்டுச்

Page 187
சொல்வதற்கும் குறியாக உபயோகப்படுத்தப்படும் என நந்திகேஸ்வரரின் அபிநயதர்ப்பணம் என்ற நாட்டிய நூல் கூறும்.
வெவ்வேறு சந்தர்ப்பங்களிலும் இந்தச் சின் முத்திரைக்குறி பரத நாட்டியத்தில் உபயோகப்படுவதால் அதற்கு 'ஹம்சாஸ்யம் என்ற பெயர் மாற்றம் உண்டு.
நாடி வைத்திய சாஸ்திரத்திலும் சின்முத்திரை, சிகிச்சை அளிப்பதற்காக விதந்து ஒதப்படுகிறது. பெருவிரலையும் ஆள்காட்டி விரலையும் சேர்ப்பதால் சில நோய்கள் தீர்க்கப்படு மெனவும் நம்பப்படுகிறது. (G5. G5. 676).)
சித்திரா பெளர்ணமி
இது இந்துக்கள் அனுட்டிக்கும் விரதங்களுள் ஒன்று. சித்திரைமாதத்தில் சந்திரன் சித்திரை நட்சத்திரத்தோடு கூடியிருக்கும் நாளாகிய பெளர்ணமி தினத்தில் இவ்விரதம் அனுட்டிக்கப்படுகிறது.
பண்டைத் தமிழகத்தில் இத்தினத்தில் இந்திரவிழா கொண்டாடப்பட்டதென்பது சிலப்பதிகாரம் முதலான
நூல்களால் அறியக் கிடக்கிறது.
இந்து வருடத்தின் முதல் மாதத்தில் வருவதும் வசந்தகாலத்தில் வருவதுமான இப் பெளர்ணமி தினம் வேளாண்மையில் ஈடுபட்ட மக்களிடம் ஒய்வோடு இருக்கும் காலத்தில் இயல்பாகவே தோன்றும் குதூகலத்தின் வெளிப்பாடாய்க் கொண்டாட்டத்துக்குரியதாய் அமைதல் இயற்கையே. தேவிபாகவதமும் இத்தினத்தில் இந்திரனுக்கு வழிபாடியற்றுதல் பற்றிக் குறிப்பிடுகிறது. இந்திரவிழாவே பிற்காலத்தில் சித்திரா பெளர்ணமி விரதமாக மாற்றம் பெற்றதாதல் கூடும்.
சித்திர பெளர்ணமி விரதம் பிதுர்கள் குறித்து சித்திரகுப்தனாரை நோக்கி அனுட்டிக்கப்படுவதாகும். சித்திரை மாதம் சித்திரை நட்சத்திரம், சித்திரகுப்தருடைய ஜன்ம நட்சத்திரமாகும். அதனால் இவ்விரதம் சித்திரகுப்த விரதம் என்றும் கூறப்படுவதுண்டு.
சித்திர குப்தனாரைத் தற்காலத்தில் சித்திர புத்திரனார் என்றே அதிகம் வழங்குகிறார்கள். அவர் சித்திரை
நட்சத்திரத்திற் பிறந்ததனாற் போலும் அப்பெயர் ஏற்பட்டது.

மரணத்தின் அதிதேவதையான யமதர்மன், உயிர்கள் செய்யும் பாவ புண்ணியங்களுக்கு ஏற்ப நீதிவழங்குவதற்கு ஏற்ற முறையில் உயிர்களின் பாவ புண்ணியக் கணக்கைப் பரிபாலிக்கும் பணியைச் செவ்வனே மேற்கொள்பவர் சித்திரகுப்தர் என்று இந்துமத புராணங்கள் கூறும்.
குப்தம் என்றால் இரகசியம்; உயிர்கள் செய்யும் பாவபுண்ணியங்களைச் சித்திரம் போல் மனதில் இரகசியமாகப் பேணுபவர் ஆதலால் இவருக்குச் சித்திரகுப்தன் எனப் பெயர் வந்ததாகக் கூறுவர்.
காஞ்சிபுரத்தில் சித்திரகுப்தனுக்கென்று தனி ஆலயம் ஒன்று உண்டு. அங்கு அவர், கையில் ஏடும் எழுத்தானியுமாக சிலாரூபத்திலும் பஞ்சலோகத்திலும் காட்சிதருகிறார். இத்தலத்தில் இந்திரன், சித்திரா பெளர்ணமியன்று வந்து தரிசனம் செய்வதாக ஐதீகம்.
இறந்த தமது தாயை நினைத்து சித்திரா பெளர்ணமியன்று விரதமிருப்பது இந்துக்களின் மரபு கோயில்களில் சித்திரகுப்தன் கதையைப் படிக்கும் வழக்கம் உண்டு. சித்திரைக்கஞ்சி என்ற பெயரில் விசேட கஞ்சியொன்றைத் தயாரித்து கோயில்களில் வருபவர்களுக்கு வழங்கும் வழக்கமும் உண்டு.
சித்திரா பெளர்ணமி, மதுரைத் தலத்திற் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. முன்பொருகாலத்தில் காடாகக் கிடந்ததும் இன்று மதுரை என அழைக்கப்படுவதுமான இடத்தை அடைந்த தேவேந்திரன் அங்கே தன்பாவங்கள் தீர்ந்ததாகப் பெற்ற மன உணர்ச்சியின் நிமித்தம் அதற்குக் காரணமாயமைந்த சிவலிங்கத்துக்குத் தேவதச்சனைக் கொண்டு கோவில் அமைத்து சிவனையும் அம்பாளையும் எழுந்தருளப் பண்ணியதாகவும் பூஜைக்கு வேண்டிய மலர்களைப் பெறுதற்காக பொற்றாமரைக் குளத்தை வரவழைத்ததாகவும் அந்தினமே சித்திராபெளர்ணமி என்றும் கூறப்படுகிறது. சித்திரா பெளர்ணமியன்று மதுரைச் சொக்கநாதர் சந்நிதியிற் சிவபூசை செய்வதற்காக இந்திரன் வருவதாக ஐதீகம் நிலவுகிறது.
திருமாலிருஞ்சோலைக் கள்ளழகராகிய திருமால் தன் சகோதரியாகிய மீனாட்சியின் திருமணம் காணப் புறப்பட்டுவரும் பெருவிழாவும் மதுரையில் இத்தினத்திலேயே கொண்டாடப் படுகிறது.
எட்டுக்குடி முருகன் கோவில், திருப்பெரும்புதூர், திருவல்லிக்கேணி, திருப்புகழுர், சீர்காழி, வேதாரணியம், திருவையாறு முதலான தலங்களில் சித்திராபெளர்ணமி விசேட தினமாகக் கொண்டாடப்படுகிறது. பூரீரங்கத்தில் சித்திரபுத்திரனார் திருக்கல்யாணமும் நடைபெறுகிறது. (க.இர)
4 ఏపీడ ఏకీ4 ఏపీడ
දී ලෝම ශ්‍රේම ජෑම
161 இந்துக்கலைக்களஞ்சியம்

Page 188
சீக்கியம்
சீக்கியம் என்பது சீக்கியர்களின் சமயம் ஆகும். அது இந்து சமயம், இசுலாமிய சமயம் ஆகிய இரண்டு சமய நெறிகளிலும் கூறப்படும் விழுமிய சிந்தனைகளை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டது. சீக்கியமானது குரு நானக் (1469-1539) என்பவரின் மதிநுட்பத்தினால் உருவாக்கப் பெற்று, அவருக்குப் பின்னர் வழிவழி வந்த ஒன்பது குருமார்களின் உபதேச மொழியினாலும் ஞான உரைகளினாலும் முழுமை பெற்ற சமய நெறியாகச் சிறந்து விளங்குகின்றது.
சீக்கியம் அதன் வரலாற்றில் மிகச் சிக்கலான பல கட்டங்களைத் தாண்டி வந்துள்ளது. மத்திய இந்தியாவில் இந்து, முஸ்லிம் என்ற இரு சமயப் பண்பாட்டுப் போக்குகள் சந்தித்துக் கொண்ட காலத்தில் அவற்றிடையே மிக அற்புதமான ஒருமைப்பாட்டை அது உருவாக்கியது. இந்து, முஸ்லிம் என்ற இரு பாரம்பரியம் மிக்க சமயங்களின் சிறந்த கூறுகளும், அடிப்படைக் கோட்பாடுகளும் இணைந்து மிளிரும் சமயமே சீக்கியமாகும்.
இக்கட்டுரையானது சீக்கியத்தின் சிறந்த கருத்துக்களையும் அடிப்படைக் கோட்பாடுகளையும் புலப்படுத்துவதாக அமைகின்றது.
சீக் என்ற சொல்
சீக் என்ற பஞ்சாபியச் சொல்லுக்குச் சீடர் என்பது நேர்ப் பொருளாகும். அதனைக் குறிக்கவே சீக்கிய சமயத்தை மகாகவி பாரதியார் “சீடர் தம் மார்க்கம்” என்று குறிப்பிடுவர். சீடர்' எனப்படுவோர் ஆன்மீக வளர்ச்சியில் உயர்ந்து, போதனை புரியும் குருவாக உயர்வு பெறுகின்ற காரணத்தால் குருமார்களையும் சீக்' என்ற சொல் விரிபொருட்பேறு காரணமாகக் குறிக்கும். சீக்கியர் என்ற சொல்லுக்குச் சீடர்' என்ற பொருள் மட்டுமன்றி மாணவர் பின்பற்றுபவர் என்ற பொருள்களும் உள்ளன.
சீக்கியரின் தாயகம்
இந்தியத் துணைக் கண்டத்தில் வடமேற்கு எல்லைப் பகுதியில் உள்ள ஐந்து நதிகளைக் கொண்ட 'பஞ்சாப் என்ற மாநிலமே சீக்கியர்களின் பூர்வீகத் தாயகமாகும். ஆனால் இன்று சீக்கியர்கள் இந்தியாவின் பல பகுதிகளில் வாழ்ந்து வருவதுடன், இந்தியாவுக்கு வெளியே அமெரிக்க ஐக்கிய நாடுகள், கனடா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளிலும் வாழ்ந்து வருகின்றனர்.
சீக்கிய சமயப் பண்பாட்டுப் பின்புலம்
சீக்கிய சமயம் உருவாக்கம் பெற்ற காலத்தில் இந்தியாவில்
இந்து சமயம், இஸ்லாமிய சமயம் என்பன வழக்கில் இருந்தன.
இதனை மேலும் அழுத்தமாகக் குறிப்பிடுவதாயின், சீக்கிய சமயம்
இந்துக்கலைக்களஞ்சியம் 162

தோன்றிய காலச் சூழலில் வைணவ பக்தி இயக்கம், நாதர் பாரம்பரியம், இஸ்லாம், சூஃபியம், சந்தர் மரபு ஆகிய சமயப் பின்புலம் வட இந்தியாவில் நிலவியது. இச் சமய நெறிகளிடையே கருத்தியல் ஒற்றுமை காணப்படவில்லை. சமூகத்திற் பலவிதமான அடக்கு முறைகள் நிலவின. சமயப் பண்பாட்டு மரபுகள் பழித்துரைக்கப்பட்டன. படை எடுப்புக்கள் நிகழ்ந்தன. சமயச் சண்டைகளினால் பலர் கொல்லப்பட்டனர். பெண்கள் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டனர். வீடுகள், அரண்மனைகள் என்பன தீயிடப்பட்டன. இந்து சமயத் தலைவர்களோ, இஸ்லாமிய சமயக் காஜிகளோ சமய, சமூகக் கொடுமைகளை எதிர்கொள்ள முன் வரவில்லை. கண்மூடி, வாய் பொத்தி மெளனிகளாக வாழ்ந்தனர். இத்தகைய சமய, சமூகப் பண்பாட்டுச் சீர்கேடுகளும், சமய மோதல்களும் நிலவிய காலச் சூழ்நிலையிற்றான் சீக்கியம் தோற்றம் பெறுகின்றது.
சீக்கிய குருமார்கள்
சீக்கியத்தில் பத்துக் குருமார்கள் தனிச் சிறப்புடன் போற்றப்படுகின்றனர். முதலாவது குருவாகிய குரு நானக் தொடக்கம் பத்தாவது குருவாகிய குரு கோவிந்தர் வரையுள்ள பத்துக் குருமார்களே சீக்கிய சமயத் தலைவர்களாவர். இதனால் சீக்கிய சமயத் தலைவர்கள் பதின்மரின் தனித்துவம் பற்றிச் சுருக்கமாகக் குறிப்பிடுவது அவசியமாகின்றது.
குரு நானக் என்பவர் சீக்கியத்தின் முதலாவது குரு ஆவார். இவர் தாம் பெற்ற இறையனுபவத்தின் பயனாகவும், ஞானிகளின் நன்மொழிகளின் விளைவாகவும் சீக்கிய சமயம் எனும் புது நெறியை நிறுவினார்.
அவர் 1469 ஆம் ஆண்டு இலாகர் என்னும் நகருக்குத் தென்மேற்கில் சுமார் நாற்பது மைல் தொலைவிலுள்ளதால்வண்டி’ என்னும் கிராமத்தில் ஷத்திரிய மரபில் தோன்றினார். அவரின் தந்தையாரின் பெயர் மேத்தா கலியன் தாஸ் பேடி ஆகும். குருநானக் தனது பன்னிரண்டாம் வயதில் சுலாக்ஷினி என்னும் பெண்ணைத் திருமணம் செய்து கொண்டார். அவருக்கு பூரீ சந்த், லக்மிதாஸ் என்னும் இரண்டு புதல்வர்கள் பிறந்தனர்.
குரு நானக்கின் உள்ளம் சமய ஞானிகளையும், இசுலாமிய சமய நெறியின் அனுபூதிச் செல்வர்களையும் நாடிச் சென்றது. அவர் உண்மையைத் தேடி நான்கு யாத்திரைகள் மேற்கொண்டார். அவர் மேற்கொண்ட யாத்திரைகளுக்கு உதாசிகள் என்று பெயர். இந்த உதாசி யாத்திரைகள் என்பது ஒரு வகையில் ஒரு துறவி மேற்கொள்ளும் கடினமான வாழ்க்கை போன்றது. உதாசிகள் என்ற யாத்திரைகளை முடித்த குரு நானக் தமது வாழ்வின் பிற்பகுதியில் கர்த்தாரிலுர் எனும் நகரில் ரவி நதிக் கரையிலே தமது வாழ்வின் இறுதிக் காலம் வரை விவசாயத்தில் ஈடுபட்டவராக விளங்கினார். கலப்பை பிடித்து உழுது விவசாயத் தொழில் செய்யும் நிலையிலேயே, குரு நானக்கை இன்றும் சீக்கிய

Page 189
ஒவியர்கள் சித்திரமாக வரைந்து நினைவுகூருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்க அம்சமாகும்.
குரு அங்கதர் இரண்டாவது குரு ஆவார். அவர் குரு நானக்கின் மரபைப் பின்பற்றிப் பஞ்சாப்பில் வழக்கிலிருந்த மொழியின் எழுத்து வடிவத்தைச் சீர்திருத்தி குருமுகி என்ற மொழி வடிவத்தை உருவாக்கினார். அது தொடர்ந்து சீக்கியர்களின் மொழியாக நிலைபெற்றது. சீக்கியர்கள் ஒன்றுசேர்ந்து கலந்து கொள்ளும் 'சங்கத் என்னும் அமைப்பும் குரு அங்கதரின் காலத்திலேயே வலுப்பெற்றது.
மூன்றாவது குருவான குரு அமிர்தாஸ்' என்பவர் அமிர்தசரஸில் பவோலி எனப்படும் ஒரு நீரூற்றை நிறுவினார். சீக்கியர்கள் அமிர்தசரஸில் கூடுவதற்கு இது உதவியது. சீக்கியர்கள் சந்திப்புகளுக்கு ஒரு தளமாகவும் அமிர்தசரஸ் அவரது காலத்தில் உருவெடுத்தது.
நான்காம் குருவான குருராம் தாஸ் அமிர்தசரஸில் ஒரு பெரிய குளத்தை அமைத்தார். தனது நேரடிப் பார்வை யிலிருந்த அமிர்தசரஸ் தவிர பிற முக்கிய நகரங்களிற் சீக்கிய சங்கங்களை
மேற்பார்வை செய்ய மசந்த்' என்ற அமைப்பை நிறுவினார்.
ஐந்தாவது குருவான குரு அர்ஜுன் என்பார், அமிர்தசரஸ் நகரில் ஏற்கனவே அமைக்கப்பட்டிருந்த குளத்தின் நடுவில் 'ஹர்மந்திர் என வழங்கும் குருத்வாராவைக் கட்டி எழுப்பினார். குரு அர்ஜுனர் சீக்கியர்களின் சமயச் சந்திப்புக்களுக்காக வேறு சில சீக்கிய மையங்களையும் உருவாக்கினார். அவரின் காலத்தில் லங்கற் என்ற சீக்கியர்களின் கூட்டு உணவகமும் சீக்கிய சமயத்தின் நிரந்தர அமைப்பாக உருப்பெற்றது. குரு அர்ஜுனரின் காலத்தில் சீக்கியம் ஒரு வெகுஜன சமய இயக்கமாக உருவானது.
அவர் காலத்திற் சீக்கிய சமயத்தாருக்கும் 9 டில்லி ஆட்சியாளர்களுக்கும் இடையே மோதல் உருவானது. இதன் விளைவாக 1606 ஆம் ஆண்டு குரு அர்ஜுனர் கைது செய்யப்பட்டுக் கொலைசெய்யப்பட்டார். சீக்கிய சமய வரலாற்றில்
இச்சம்பவம் ஒரு திருப்புமுனையாக அமைந்தது.
குரு ஹர் கோபிந்த் சீக்கியர்களின் ஆறாவது குரு ஆவார். அவர் சீக்கியர்களின் சுயமரியாதை, பாதுகாப்பு என்பவற்றை வலியுறுத்தினார். அவர் தனது இடுப்பில் இரண்டு உடை வாள்களை அணிந்திருந்தார். ஒன்று, பீரி எனப்படும் ஆன்மீக வெற்றியைக் குறிப்பதென்றும் மற்றதுமீரி எனப்படும் உலகியல் வெற்றியைக் குறிப்பதென்றும் விளக்கம் தரப்பட்டது. அநீதிக்கும் அடக்குமுறைக்கும் எதிராகப் போராடத் தெரிந்திருக்க வேண்டுமெனச் சீக்கியர்களுக்கு இவர் எடுத்துரைத்தார். இவர் சீக்கியர்களுக்குப் போர்ப் பயிற்சியையும் வழங்கினார்.

குரு ஹர்ராய்' என்ற ஏழாவது குருவின் காலம் ஓரளவு அமைதியாகக் கழிந்தது. அவரது காலத்திற் சீக்கியம் பஞ்சாப்பைக் கடந்து இன்னும் பல வட்டாரங்களிலும் பரவியது.
குரு ஹர்ஷன் சீக்கியர்களின் எட்டாவது குரு ஆவார். இவர் காலத்தில் டில்லியை ஆண்ட ஒளரங்கசீப், சீக்கியர்கள் மீது கசப்புணர்வுடன் இருந்தார்.
‘தேக் பகதுார் சீக்கியர்களின் ஒன்பதாவது குரு ஆவார். அவர் இந்துக்களின் சமய உரிமையைக் காப்பாற்றுவதிலே தீவிரமாக இருந்தார். காஷ்மீரத்து இந்துக்கள் தமது சமய அடையாளங்களை அணிந்து கொள்ள உரிமை வேண்டுமென்ற
போராட்டத்தில் ஈடுபட்டு, அதனாற் கொல்லப்பட்டார்.
குரு கோபிநாத் சீக்கியர்களின் பத்தாவது குரு ஆவார். சீக்கிய வரலாற்றில் தனிச் சிறப்பு மிக்க தலைவராக அவர் விளங்கினார். அவரது பாடல்களிலும், கவிதைகளிலும் 'சண்டி’ எனப்படும் காளியின் வீரச் செயல்கள் குறித்த புராணக் கருத்துக்கள் பெருமளவில் உள்வாங்கப்பட்டன. அவரது பாடல்கள் தச கிரந்த' என்ற பெயரில் ஒரு மிகப் பெரிய நுாலாகத் தொகுக்கப்பட்டுள்ளன. இந்நுால் முழுவதையும் அவர் இயற்றவில்லை எனக் கூறுவாரும் உளர். வட்டார குருத்துவாராக்களை நிர்வகிக்க ஏற்படுத்தப் பட்டிருந்த மசந்த் என்ற அமைப்பு, அவர் காலத்திற் புரோகிதர் அமைப்புப் போல உருவெடுத்து விட்டதால் குரு கோபிந்தர் இந்த அமைப்பை நீக்கி விட்டார். அதற்கு மாறாக எல்லாச் சீக்கியர்களும் பங்கேற்கும் கால்சா என்பது குருவை விட உயர்ந்தது எனக் குரு கோபிந்தர் விதித்தார். சீக்கியர்களை அடையாளப்படுத்தும் ஐந்து அடையாளங்களைச் சீக்கியர்களுக்கு இவரே வழங்கினார். குரு கோபிந்தரோடு மனித உருவிலான சீக்கிய குருமார்களின் வரிசை ஒரு முடிவுக்கு வருகின்றது.
இதன் பின்னர் சீக்கியக் குருமார்களின் பாடல்கள் அடங்கப் பெற்றுள்ள குரு கிரந்தமே சீக்கியர்களுக்குக் குருவாக வாழ்ந்து வழிகாட்டுமெனக் குரு கோபிந்தர் அறிவித்தார்.
சீக்கியரின் அடையாளங்கள்
உயர்வு தாழ்வற்ற சமரச சமய சமுதாயத்தை ஏற்படுத்தும் நோக்கிற் சீக்கிய சமயத்தின் பத்தாவது குருவான குரு கோபிந்தர் சீக்கியர் எல்லோருக்கும் சிங்' என்ற பொதுப் பெயரையும், அவர்கள் எல்லோரும் அணிந்து கொள்ள வேண்டிய மேல் வரும்
ஐந்து அடையாளங்களையும் வரையறைப் படுத்தினார்.
(1) கேசம் - (தலைமயிர், மற்றும் உடலிலுள்ள மயிரை
மழிக்காதிருத்தல்)
(2) கங்கா - (தலைமயிருக்குள் ஒரு சிறு சீப்பு வைத்திருத்தல்.)
(3) கச்சை - (அரைக் கச்சை எனும் உள்ளாடை
அணிந்திருத்தல்.)
163
இந்துக்கலைக்களஞ்சியம்

Page 190
(4) கீர்ப்பான்-(இடுப்பில் சிறு கத்தி அணிந்திருத்தல்) (5) கட்கம் -(கையில் ஒர் உலோகக் காப்பு அல்லது வளையம்
தரித்திருத்தல்)
சீக்கியரில் ஆண்கள் தமது பெயருக்குப் பின்னால் சிங் என்றும் பெண்கள் தமது பெயருக்குப் பின்னால் கெளர் என்றும் வைத்து தம்மை அடையாளப்படுத்துகின்றனர். மேலும் தலைப்பாகை அணிந்து கொள்வதும் சீக்கியர்களை அடையாளப்படுத்தும் ஒன்றாக இன்று விளங்குகின்றது.
சீக்கிய சமயநூல்
பூரீ குருகிரந்த சாகிப் என்பது சீக்கிய சமயத்தின் புனித நூலாகும். சீக்கியர்களின் மூல நூலாகிய இதனையே ஆதி கிரந்தம் அல்லது குரு கிரந்தம்'என்ற பெயரிலும் வழங்குவர். குரு கிரந்தம் (ஆதி கிரந்தம்) சீக்கியர்களால் வாழும் குருவாக மதிக்கப்படுகின்றது. இந்நூலைச் சீக்கியர் நாளாந்தம் வழிபடுவர்.
குரு கிரந்தம் எனும் சீக்கியரின் புனித நூலானது சீக்கியர்களின் ஐந்தாவது குருவான குரு அர்ஜுன் காலத்தில், பதினேழாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் தொகுக்கப்பட்டது. பத்தாவது குருவான குரு கோவிந்தர் மறைந்த பின்னர் குரு கிரந்தம்' என்ற மூல நூலே சீக்கியர்களுக்கு குருவாக விளங்குகின்றது. இந்நூலின் முதற் படிவம் அமிர்தசரஸ் பொற்கோவிலின் மத்திய அறையில் வைத்துப் பாதுகாக்கப்பட்டு வருகின்றது.
ஆதி கிரந்தம் எனப்படும் குரு கிரந்தத்தில் நாற்பத்திமூன்று சமயப்பெரியார்களின் பாடல்கள் இடம்பெற்றுள்ளன. இந்நூலில் உள்ள பாடல்கள் ஒரே காலத்தில் இயற்றப்பட்டவை அல்ல. பாடல்களைப் பாடிய ஆசிரியர்களும் ஒரே காலத்தைச் சேர்ந்தவர்கள் அல்ல. இந்நூலில் இடம் பெறும் பாடலாசிரியருள் ஒருவரான ஜெயதேவ் என்ற கவிஞர் பன்னிரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்தவர். இன்னொரு ஆசிரியரான குரு கோவிந்சிங் என்பவர் பதினேழாம், பதினெட்டாம் நூற்றாண்டுகளில் வாழ்ந்தவர். எஞ்சிய பாடலாசிரியர்கள் இவ்விருவருக்கும் இடைப்பட்ட காலத்தில் வாழ்ந்தவர்கள்.
குரு கிரந்தத்தின் ஆசிரியர்கள் ஒரே சமயத்தை சேர்ந்தவர்களும் அல்லர். இந்நூலில் இடம்பெறும் ஜெய்தேவ் என்பவர் கீதா கோவிந்த என்ற வைணவ நூலின் ஆசிரியர் ஆவர். நாமதேவ் என்பவர் ஆரம்பத்தில் வைணவராக இருந்து, பின்னர் நிர்க்குண பிரம்ம இயக்கத்தில் ஒருவரானார். ஷேக்ஃ பரீத் என்பார் இஸ்லாமிய சமயத்தைத் தழுவியவர். ராமானந்தர் என்பவர் விசிஷ்டாத்வைத தத்துவத்தை நிறுவிய பூரீ ராமானுஜர் என்பவரின் சீடராவார். கபீர் என்பவர் கபீர் பந்த்' என்ற புதுநெறி ஒன்றை நிறுவியவர். இவர்களும் இன்னும் பிறருமாக பல சீக்கியக் குருமார்களின் பாடல்கள் குரு கிரந்தத்தில் இடம் பெற்றுள்ளன.
இந்துக்கலைக்களஞ்சியம்
-164

இவ்வாறாகச் சீக்கியக் குருமார்கள், வைணவ பத்தி இயக்கத்தோர், இஸ்லாமியக் கவிஞர்கள், கபீர் பந்த் போன்ற புது நெறியாளர்கள் உட்பட நாற்பத்திமூன்று சமய ஞானிகளின் பாடல்கள் குரு கிரந்தத்தில் இடம் பெற்றுள்ளன.
குரு கிரந்தத்தில் இடம்பெறும் சமயப் பெரியவர்கள் ஒர் இடத்தையோ ஒரே வட்டாரத்தையோ சேர்ந்தவர்களும் அல்லர். ஜெயதேவர் வங்காளத்தைச் சேர்ந்தவர். ஷேக்ஃ பரீத் மேற்குப் பஞ்சாப்பைச் சேர்ந்தவர். நாமதேவர் மராட்டியத்தில் வாழ்ந்தவர். தான்னா என்பவர் ராஜபுதனத்தைச் சேர்ந்தவர்.
குரு கிரந்தத்தின் ஆசிரியர்கள் ஒரே ஜாதியைச் சேர்ந்தவர்களும் அல்லர் குரு நானக் ஷத்திரிய குலத்தைச் சேர்ந்தவர். ஜெயதேவர் பிராமணர் திரிலோச்சன் என்பவர் வைசிய குலத்தைச் சேர்ந்தவர். சாத்னா என்பவர் இறைச்சி வெட்டும் தொழில் புரிந்தவர். செயின் என்பார் முடி திருத்தும் தொழிலாளி ஆவார். கபீர் என்பவர் ஒரு பிராமண விதவைக்குப் பிறந்து தாயாற் புறக்கணிக்கப்பட்டு, முஸ்லீம் நெசவாளி ஒருவரால் வளர்க்கப்பட்டவர். ரவிதாஸ் என்ற இன்னொரு கவிஞர் செருப்புத் தைக்கும் குடும்பத்திலே பிறந்தவர்.
இதே போன்று குரு கிரந்தத்தின் ஆசிரியர்கள் வங்கம், மராட்டி, ராஜஸ்தான், இந்தி, அராபி, பாரசீகம், பஞ்சாபி எனப் பலமொழி பேசியவர்கள்.
குரு கிரந்தப் பாடல்களிற் பல்வேறு இசை மரபுகளும் சங்கமிப்பதைக் காண முடிகிறது.
இவ்வாறு காலம், பிரதேசம், சமயம், சாதி, மொழி, இசை, மரபுகள் இவை அனைத்திலும் பரந்த ஒற்றுமையைக் குறித்து நிற்கும் பாடல்கள் சீக்கிய சமய மூல நூலான குரு கிரந்தத்தில் (ஆதி கிரந்தம்) இடம் பெற்றுள்ளன. சீக்கியசமய மூல நூலில் இவ்வளவு வேறுபட்ட போக்குகள் ஒன்றுபடுத்தப்பட்டிருப்பது இந்நூலுக்குரிய தனித்துவமான பெருஞ் சிறப்பாகும்.
குரு கிரந்தத்தில் இடம் பெற்றுள்ள ராம தேவரின் பாடல்கள் ராமனைப்பாடும். ஜெயதேவரின் பாடல்கள் கிருஷ்ணனைப்பாடும். ஷேக் ஃபரீதின் பாடல்கள் அல்லாஹ்வைப் பாடும். கபீரின் பாடல்கள் ராமனும், ரஹீமும் ஒன்றெனப்பாடும். குரு நானக்கின் பாடல்கள் அல்லாஹ், சிவன், விஷ்ணு எனப் பல்வேறு பெயர்களால் அழைக்கப்படும் ஒரே கடவுளைப் பாடும்.
சீக்கியம் ஒர் ஐக்கிய சமய வழியாகும். கடவுள் ஒருவரே என்ற உண்மையைத் தேடி அடைய விரும்புவோருக்குச் சாதி, சமயம், மொழி, பிரதேசம், காலம் என்பன வெறும் புற அடையாளங்கள் என்பதையே குரு கிரந்தத்தின் அமைப்பு எடுத்துக் காட்டுகின்றது. குரு கிரந்தம் சமய சமரச ஞான நூலாக மிளிர்கிறது.
குரு கிரந்தத்தில் இடம் பெற்றுள்ள கபீரின் பாடல்கள் சாதியமைப்பிற்கு எதிரான உக்கிரமான பாடல் வரிகளைக் கொண்டுள்ளன. பல்வகைப்பட்ட சாதிகளைச் சார்ந்த

Page 191
சமயஞானிகளின் பாடல்கள் இடம்பெற்றுள்ள குரு கிரந்தத்தில், சமயத் தலைவர்களின் போலித்தனம், ஆட்சியாளர்களின் அடக்கு முறை, சாதியமைப்பின் கொடூரங்கள் என்பனவும் தெளிவாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன. “பிணங்கள் குவிந்து கிடக்கும் இடுகாட்டின் நடுவில் இருந்து இறைவா! நான் உன்னை அழைக்கின்றேன்” என்ற குரு நானக்கின் குரு கிரந்தப் பாடல் வரி அக்காலச் சமுதாய நிலையைத் தெளிவாகச் சித்திரிக்கின்றது.
சீக்கிய இறைக் கோட்பாடு
சீக்கியம் ஏக இறைக் கோட்பாட்டினை வற்புறுத்தும் சமயமாகும். இந்து இறை என்றோ, இஸ்லாமிய இறை என்றோ வேறுபட்ட இறைவன் இல்லை என்பது சீக்கியத்தின் அடிப்படையாகும். இதனையே குரு நானக் தெளிவாக, பாதைகள் இரண்டாயினும் இறைவன் ஒன்றென அறி' (குரு கிரந்தம் 1349) என்று குறிப்பிடுவார். ஒரே இறைவனையே, குரு நானக் இந்துப் பெயர்களாலும், இஸ்லாமியப் பெயர்களாலும் சுட்டுவது குறிப்பிடத்தக்கது. கடவுள் என்பவர் கடந்தவரும், உள்ளார்ந் தவரும் ஆவார் என்பது சீக்கிய இறைக் கொள்கையாகும். இறைவன் உண்மைத் தன்மை உடையவர் என்பதும், படைத்தல், காத்தல், அழித்தல் எனும் முத்தொழில் புரிபவர் என்பதும் சீக்கிய சமய இறைக் கொள்கையாகும்.
சீக்கிய மீரிபீரி கோட்பாடு
சீக்கியம் தனது தத்துவ நிலைப்பாட்டை மீரியீரி என்ற ஒரே சொல்லால் விளக்குகிறது. மீரி என்ற பஞ்சாப்பியச் சொல்லுக்கு உலகியல் என்று பொருள். பீரி என்ற சொல்லுக்கு ஆன்மீகம் என்பது கருத்தாகும். இவ்வகையில் உலகியலையும், ஆன்மீகத்தையும் இணைக்கும் சிறப்புக் கொள்கையாகவே சீக்கியத்தில் “மீரியீரிக் கோட்பாடு விளங்குகின்றதெனலாம். உலக வாழ்வினை அங்கீகரித்து அதனோடு இணைந்த நிலையில் அறமும், சத்தியமும் பக்தியும் வளர்க்கப்பட வேண்டும் என்பதே மீரிபீரிக் கோட்பாட்டின் உட்கிடையாகும். உலகியலும் ஆன்மீகமும் இணைந்து செயற்படுவதே சிறந்தது என்ற கருத்தே மீரி - பீரி என்ற கோட்பாடாகச் சீக்கியத்தில் உருப்பெறுகிறது.
சீக்கியச் சமய சிந்தனையின் மையக் கோட்பாடான இந்த மீரிபீரி' எனும் கோட்பாடு சீக்கியக் குருமார்களின் சமூக நோக்கு ஆன்மீகத்துடன் இணைந்துள்ளதென்பதைச் சுட்டி நிற்கின்றது.
சீக்கிய சமயத்தில் சமூக அக்கறை என்பது ஒரு தற்காலிக ஏற்பாடாக அல்லாமல் அதன் நிரந்தர அம்சமாக,அத்தியாவசியக் கூறாக இணைக்கப்படுகிறது. இவ்விணைப்பையே சீக்கியத்தின் மீரி-பீரி கோட்பாடு குறித்து நிற்கின்றது. ஏற்கெனவே பஞ்சாப்பில் வழக்கில் இருந்த சமயங்கள் உலக வாழ்வைப் பற்றி அக்கறையின்றி புலன் கடந்த நிலையின் உண்மையைத் தேடுவனவாக அமைந்திருந்தன. இதனை விமர்சித்தே சீக்கியம் உருவாக்கப் பெற்றது. எனவே, அது உலகியல் அக்கறையைத்
粵 عهده انه ولقدم.
■蕾轟重*

தனது சிந்தனையின் பிரிக்கவொண்ணாத கூறாக மீரி-பீரிக்
கோட்பாட்டின் மூலம் இணைத்துள்ளது எனலாம்.
லங்கர் எனும் அமைப்பு
ஒவ்வொரு சீக்கிய குருத்துவாராவிலும் சாதி, மதம் பாராமல் ஒரே வரிசையில் அனைவரும் அமர்ந்து பகிர்ந்து உண்ணும் சீக்கியப் பண்பாட்டு அமைப்பிற்கு “லங்கர்’ என்று பெயர். சீக்கியப் பண்பாட்டில் “லங்கர்’ என்னும் அமைப்பு முறை இன்றும் காணப்படுகின்றது.
சீக்கிய குருத்துவாராவின் ஒரு பகுதியாக விளங்குகின்ற லங்கர் எனும் அமைப்பு உலகோரின் பசித் துன்பத்தை நீக்கும் நோக்கத்தையும், சாதி அமைப்பை அனைவரும் விலக்குவதையும், அனைவரும் சமம் என்பதைப் புலப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டது.
கால்சா எனும் அமைப்பு
சீக்கிய சமயத்தின் கால்சா எனும் அமைப்பு மக்களை நேர்வழியில் நடத்திச் செல்ல, அறத்தோடு இயங்கும் ஒரு சுய நிர்வாக அமைப்பாகும். சீக்கியத்தின் சிறப்பு நிலையை இந்த அமைப்பு சுட்டி நிற்கின்றது.
சீக்கியக் கோயில்கள்
முதல் சீக்கியக் கோயில் எவ்வாறு கட்டப்பட்டது என்பது குறித்து ஒரு கதை வழங்குகின்றது. ஷேக் சஜ்ஜானி என்ற ஒரு திருடன் குரு நானக் என்பவரது காலத்தில் வாழ்ந்தான். அவன் தனது வீட்டுக்கு அருகில் இந்துக் கோயில் ஒன்றையும், மசூதி ஒன்றையும் கட்டி வைத்திருந்தான். அந்த வழியாக வரும் வணிகர்களையும், யாத்திரிகர்களையும் அக் கோயில்களில் வழிபடச் செய்து அங்கேயே தூங்கச் செய்வான். இரவில் அவர்களது செல்வத்தைக் கொள்ளையடித்து, அவர்களைக் கொன்று அருகில் உள்ள கிணற்றுக்குள் எறிந்து விடுவான். அவனைப் பற்றி அறியாத பல இந்துக்களும், முஸ்லிம்களும் அவனது கொள்ளைக்கும், கொலைக்கும் பலியானார்கள். அதை அறிந்த குரு நானக் அவனுடன் தங்கி அவனை நல்வழிக்குத் திருத்தினார். பின்னர், அவன் கொள்ளையடித்த செல்வத்தைக் கொண்டு ஒரு தருமசாலை கட்டச் செய்து அங்கு பசித்துவரும் ஏழைகளுக்குச் சாதி சமய வேறுபாடு பாராட்டாமல் உணவு வழங்கச் செய்தார். சாதி, சமய வேறுபாடுகளைக் கடந்த இந்தத் தருமசாலையே முதல் சீக்கியக் கோயிலானது. இன்றும் கூடச் சீக்கியக் கோயில்களில் குரு கிரந்தம் பட்டுத் துணியில் வைத்துப் பாதுகாக்கப்பட்டுள்ள மத்திய அறைக்குத் தருமசாலை' என்றே பெயர். இந்துக்களுக்குக் கோயிலும் இசுலாமியர்களுக்கு மசூதியும். அமைத்தல் போல குரு நானக்கைப் பின்பற்றும் சீடர்களாகிய சீக்கியர்கள் வழிபடும் புனிதத் தலத்தை தருமசாலா என்றே வழங்குதல் மரபாகும். சீக்கியத்தின் கோயில் தத்துவம் அறக்கோட்பாட்டின் வெளிப்பாடாகவே உருவாக்கம் பெற்றது.
ஜூஇ இந்துக் க்களஞ்சியம்

Page 192
சீக்கிய சமயத்தினர் தமது வழிபாட்டுத் தலங்களாகிய கோயில்களை இன்று குருத்துவாராக்கள் என்றே அழைப்பர். குரு தங்குமிடம் என்பது இதற்குப் பொருளாகும். குருத்துவாராக்களில் எந்தச் சமயக் கடவுளின் உருவமும் இடம்பெறுவதில்லை. ஓர் அகன்ற அறையின் மையத்தில் குரு கிரந்தம் எனுச் சீக்கியப் புனித நூல் வைக்கப்பட்டிருக்கும். வாழும் குரு எனும் மரியாதை இந்த நூலுக்கு வழங்கப்படும்.
சீக்கியர்களின் தலைமைக் குருத்துவாரா இன்றைய பஞ்சாப் மாநிலத்தில் அமிர்தசரஸ் நகரத்தில் விளங்குகின்றது. அது பொற்கோயில் எனவும் வழங்கப்படுகின்றது. மிகவும் அகன்ற, சதுர வடிவான ஒரு குளத்தின் நடுவில் சீக்கியர்களின் இப் பொற்கோயில் அமையப் பெற்றுள்ளது. இப்பொற்கோயிலின் மைய அறையில் குரு கிரந்தம் என்ற நூலின் முதல் படிவம் வைத்துப் பாதுகாக்கப்பட்டு வருகிறது.
சீக்கியர்களின் வழிபாட்டுத்தலங்களாகிய குருத்துவாராக்கள் இந்தியாவில் டெல்லி, சென்னை, கோவை, இராமேஸ்வரம் ஆகிய இடங்களில் அமைந்து விளங்குகின்றன. சீக்கியர்கள் தமது குருத்துவாராக்களில் 'குரு கிரந்தம்' எனும் அவர்களது புனித நூலில் உள்ள சீக்கியக் குருமார்களின் பாடல்களை இசையோடு மிகவும் உருக்கமாகப் படித்து மகிழ்வர். இதுவே சீக்கியர்களின் வழிபாட்டு முறையாக விளங்குகின்றது.
இந்து சமய வரலாற்றில் சீக்கியம்
இந்து சமய வரலாற்றிற் சீக்கியம் தனியிடம் பெறுகின்றது. இந்து சமயம் எவராலும் தோற்றுவிக்கப்படாதது எனக் கூறுவதே மரபாகும். ஆனால் சீக்கியம் குரு நானக் என்ற ஒருவரால் தோற்றுவிக்கப்பட்டதென்பது தனித்துவமானது. இந்து சமயத் தலைவர்களும், இஸ்லாமிய காஜிக்களும் சமூகக் கொடுமைகளை எதிர்க்காத நிலை கண்டு அவர்களை குரு நானக் விமர்சனம் செய்கின்றார். அந்த விமர்சனத்திலிருந்தே சமூக அக்கறை கொண்ட சமயமாக இந்து சமய வரலாற்றில் சீக்கியம் உருவாக்கம் பெற்றது. இந்து சமய வரலாற்றில் இந்து, இஸ்லாமிய இணைப்பு விளங்குவது சீக்கியத்துக்கேயுரிய தனிச் சிறப்பாகும். (ம.வே.)
சீகாழி
இது தேவாரப் பாடல் பெற்ற சிவத்தலங்களுள் ஒன்று சென்னை - மாயூரம் பாதையில் இத்தலம் அமைந்துள்ளது. சிதம்பரத்தை அடுத்துள்ள தலம் இது.
சைவ சமய குரவருள் முதன்மை வாய்ந்தவராகப் போற்றப்படும் திருஞானசம்பந்தர் அவதரித்து, ஞானப்பால் உண்டு, மூன்றாம் வயதிலேயே தேவாரம் பாடத் தொடங்கித் தனது பதினாறாம் வயதுவரையில் அவைதீக மதங்களை ஒடுக்கி வேதநெறி தழைத்தோங்க மிகுசைவத்துறை விளங்கத் தக்க பல தொண்டுகளைப் புரிந்து வாழ்ந்த தலம் இதுவே.
இந்துக்கலைக்களஞ்சியம்
166

அறுபத்து மூன்று நாயன்மாருள் ஒருவரான கணநாதரும் இத்தலத்தைச் சார்ந்தவரே. அவர் இத்தலத்தில் பயிற்சிக் கல்லூரியமைத்து திருப்பணிகளுக்குரிய தொண்டர்களை உருவாக்கியதாகச் சேக்கிழார் குறிப்பிடுகிறார்.
தேவார முதலிகள் மூவராலும் பாடப்பெற்ற தலம், பூந்துருத்தி காடநம்பி, பட்டினத்தடிகள், நம்பியாண்டார் நம்பி, அருணகிரிநாதர் முதலான அருளாளர்களும் இத்தலத்தின் மேல் அருட்பாடல்களைப் பாடியுள்ளனர்.
சீகாழிப்பதி இன்று பொதுமக்களால் சீர்காழி என்றே வழங்கப்படுகிறது. பண்டு தொட்டு இத்தலத்துக்கு உரியனவாக பன்னிரண்டு (12) பெயர்கள் நிலவுகின்றன. அப்பெயர்களும் பெயர்க் காரணங்களும் வருமாறு.
1. கழுமலம்: உரோமேச முனிவர் சிவவழிபாடு செய்து உயிர்களின் சகசமலமாகிய ஆணவமலத்தை நீக்கக்கூடிய தீக்ஷாசக்தியைப் பெற்ற காரணத்தால் வந்த பெயர் இது. சீர்காழித் தலத்தை இப் பெயரிலே போற்றுவனவாக பத்துத் (10) தேவாரப் பதிகங்கள் உள.
2. காழி : காளிதன் என்ற பெயரினையுடைய ஐந்தலை நாகமும் சிவபிரானுடன் நடனமாடித் தோற்ற காளியும் வழிபாடு செய்து நற்பேறு பெற்றமையால் வந்த பெயர் இது. இப்பெயரிலே பதின்மூன்று (13) தேவாரப் பதிகங்கள் விளங்குகின்றன.
3.கொச்சைவயம்: பராசர முனிவர் ஒரு சமயம் பிறமுனிவர்களை ஏளனம் செய்ததால் அம்முனிவர்களின் சாபத்துக்கு ஆளாகினார். "மச்சகந்தி என்பாளுடன் கூடி மீன் நாற்றம் உடையவனாவாய்” என்ற அச் சாபத்தின்படி மீன்நாற்றமுற்ற பராசரர் இத்தலத்தில் சிவபெருமானை வழிபட்டு மச்சகந்தம் நீங்கியதோடு 'கொச்சைமுனி என்ற பெயரையும் பெற்றார். கொச்சைமுனி வழிபட்டதால் ஏற்பட்ட பெயரே கொச்சைவயம். இப்பெயரில் மூன்று (3) பதிகங்கள் சீகாழி மேற் பாடப்பட்டுள்ளன.
4. சண்பை நகர்: யாதவகுலத்தினர் தங்களுள் சாம்பான் என்ற ஒருவனுக்குக் கர்ப்பிணி வேடம் போட்டு “இவளுக்குப் பிறக்கப்போவது ஆணா பெண்ணா?’ எனத் துர்வாச முனிவரிடம் வினவினர். உண்மையை உணர்ந்தவரான துர்வாசர் கோபமுற்று “உங்களுக்குப்பிறக்கப்போவது ஆணும் அல்ல, பெண்ணும் அல்ல, இரும்பு உலக்கை தான். அந்த உலக்கையே உங்கள் குலத்தை அழிக்கப் போகிறது” எனச் சபித்தார். இதையறிந்த கண்ணன் உலக்கையைத் தூளாக்கி நடுக்கடலில் போடச் செய்தார். கடலிற் போடப்பட்ட உலக்கைத் துகள்கள் சம்பங்கோரைகளாகக் கடற்கரையில் முளைத்தன. பின்னர் ஒரு தடவை யாதவர்களிடையே கலகம் மூண்ட போது அச் சம்பங்

Page 193
கோரைகளைப் பிடுங்கி ஒருவரை ஒருவர் தாக்கி யாதவர் அனைவரும் மடிந்தனர். கடலிற் போடப்பட்ட உலக்கைத் துகளுள் ஒன்றை ஒரு மீன் விழுங்கியிருந்தது. அந்த மீனைப் பிடித்த வேடன் ஒருவன் மீனின் வயிற்றுள் இருந்த இரும்புத் துண்டை தன் அம்பு நுனியிலே பொருத்தி காட்டிலே யோகாசனத்திலேயிருந்த கண்ணனது பாதத்தில் தவறுதலாக எய்தான். அதையே சாட்டாகக் கொண்டு கண்ணனும் தன் அவதாரத்தை முடித்துக் கொண்டான். இவ்வளவும் தன் சாபத்தால் விளைந்தது என உணர்ந்த துர்வாசர் சீகாழிக்கு வந்து சிவபிரானை வழிபட்டுத் தன் பாவம் போக்கிச் சண்பை முனி என்ற புதுப் பெயரையும் பெற்றார். சண்பை முனியை வழிபட்டதால் வந்த பெயரே சண்பை நகர். இப்பெயரில் இரண்டு (2) பதிகங்கள் பாடப்பட்டுள்ளன.
5. சிரபுரம் தேவர்களுக்குத் திருமால் அமிர்தத்தைப் பகிர்ந்து கொடுத்துக் கொண்டிருந்தபோது சிலம்பன் எனும் அசுரனும் தேவவடிவம் தாங்கி தேவர்களின் வரிசையில் நின்றான். இதையறிந்த திருமால் அமிர்தம் பரிமாறும் அகப்பையால் சிலம்பனின் தலையை வெட்டி வீழ்த்தினார். வெட்டுண்ட சிரமானது இராகு வடிவில் சிவபிரானை வழிபட்டுப் பேறு பெற்றதால் சிரபுரம் என்ற பெயரில் சீகாழி மேல் மூன்று (3) பதிகங்கள் உள.
6. தோணிபுரம் ஊழிக்காலத்து இறுதியில் உண்டான பிரளய வெள்ளத்தில் உலகெலாம் அழுந்த, இத்தலமானது பிரணவ வடிவில் தோணியாய் மிதக்க, அதில் சிவபிரான் தேவியோடு கூடி உலகைப் புனருற்பத்தி செய்தமையால் வந்த பெயர் இது.
ஊருறுபதிகள் உலகுடன் பொங்கி ஒலி புனல் கொள உடன் மிகுந்த காருறு செம்மை நன்மையால் மிக்க கழுமலம் எனச் சம்பந்தர் இதனைத் தம் பாடலொன்றிற் குறிப்பார். இப் பெயரில் நான்கு (4) பதிகங்கள் உள.
7. பிரமபுரம் நான்முகனாகிய பிரமன் உயரிய நோக்கங்களுடன் சிவபிரானை வழிபட்டுப் பேறு பெற்றதால் ஏற்பட்ட பெயர் இது.
“ஏடுடைய மலரான் முனைநாட் பணிந்து ஏத்த அருள் செய்த பீடுடைய பிரமாபுரம்” எனச் சம்பந்தர் இதனைக் குறிப்பார். இப்பெயரில் பதினைந்து (15) பதிகங்கள் உள.
8. புகலி: சூரபன்மனிடம் தம் உலகத்தை இழந்த தேவர்கள் தேவலோகத்தை மீளப் பெறும் பொருட்டு சிவபிரானிடம் புகலடைந்த தலமாதலால் இப்பெயர் வந்தது. இப்பெயரில் ஒன்பது (9) பதிகங்கள் காணப்படுகின்றன.
9. புறவம் கெளதம முனிவரின் சாபத்துக் குள்ளாகிப் புறாவடிவம் பெற்ற பிரஜாபதி என்னும் முனிவர் நரமாமிசம் புசித்து வாழ்ந்து வந்த வேளையில் தற்செயலாக அவ்வழியே வந்த சோழ
மன்னனிடம் அவனது தசையை யாசித்து உண்டதால் மன்னன்
l

67
மூர்ச்சை யுற்று வீழ்ந்தான். தனக்காக உடலை ஈந்த மன்னன் நல்லுடல் பெறவும் தன் சாபம் நீங்கவும் வேண்டிப் பிரஜாபதி முனிவர் புறா வடிவிலிருந்து பூசித்ததால் வந்த பெயர் இது. சிபிச்சக்கரவர்த்தியை புறாவடிவிலிருந்து சோதித்த தீக்கடவுள் தான் சோதித்த குற்றம் நீங்கும் பொருட்டுச் சிவபிரானை வழிபட்டதால் வந்த பெயர் என்றும் விளக்கம் கூறப்படுகிறது. இப்பெயரில் தலத்தின் மேல் மூன்று (3) பதிகங்கள்
பாடப்பட்டுள்ளன.
10. பூந்தராய் : சங்கநிதி, பதுமநிதி எனும் இரு நிதிகளதும் அதிதேவதைகள் பூவும் தாருமாக நின்று சிவபிரானை வழிபட்டுப் பேறு பெற்றதால் பூந்தராய் எனப்பட்டது. வேறோர் காரணமும் கூறப்படுகிறது. இரணியாக்கதன் என்ற அசுரனால் கவரப்பட்டு கடலடியில் மறைத்து வைக்கப்பட்ட பூமியை மீட்பதற்காக பன்றி வடிவெடுத்துப் பூமியைத் தாங்கிய திருமால் (பூமியைத் துரித்தவன்) இரணியாக்கதனைக் கொன்ற பாவம் தீரும் பொருட்டுச் சிவபிரானை வழிபட்ட தலமாதலால் பூந்தராய் எனும் பெயர் உண்டாயிற்று. இப் பெயரில் இத்தலத்தின் மேல் நான்கு
(4) பதிகங்கள் உள.
11. வெங்குரு : அகந்தை காரணமாக தேவகுரு என்ற பதவியை இழந்த பிருகஸ்பதி (வியாழன்) தன் தவறுணர்ந்து இத்தலத்திற் சிவபிரானை வழிபட்டு தேவகுரு என்னும் பதவியை மீளப் பெற்றுக் கொண்டான். வெம்மைக் குணம் கொண்ட குருவை வழிபட்டதால் இத்தலம் வெங்குரு ஆயிற்று எனப்படுகிறது. இவ்வாறு வழிபட்டவர் அசுர குருவாகிய சுக்கிராச்சாரியார் என்றுங் கூறப்படுகிறது. ஆனால் சம்பந்தர் வாக்கில் பிரகஸ்பதியே குறிப்பிடப்படுகிறான். இப்பெயரில் இத்தலத்தின் மேல் இரண்டு பதிகங்கள் பாடப்பட்டுள.
12. வேணுபுரம் : கஜமுகாசுரனிடம் தோற்ற இந்திரன் இத்தலத்து இறைவனை வழிபட்டு விநாயகக் கடவுள் மூலம் கஜமுகாசுரனை அழித்து அமராவதியை மீளப் பெற்றான். வேணுவாகிய இந்திரன் வழிபட்டதால் வந்த பெயர் இது. இப் பெயரில் மூன்று பதிகங்கள் உள்ளன.
ஆக எல்லாமாக எழுபத்தொரு (71) பதிகங்கள் சீகாழித் தலத்தின் மேற் பாடப்பட்டுள்ளன. ஆகக்கூடிய பதிகங்களைப் பெற்ற திருத்தலம் இதுவே என்பது குறிப்பிடத்தக்கது. எழுபத்தொரு பதிகங்களுள் அறுபத்தேழு (67) பதிகங்களைச் சம்பந்தர் பாடியுள்ளார். தான் பிறந்து வாழ்ந்து செயலாற்றிய சீகாழித் தலத்து இறைவர் மேல் சம்பந்தருக்கிருந்த ஆராமை இதனாலே தெரிய வருகிறது. அப்பராற் பாடப்பட்டவை மூன்று(3) பதிகங்கள். சுந்தரர் ஒரு (1) பதிகம் பாடியுள்ளார்.
க்களஞ்சி

Page 194
சீகாழித் தலத்தின் மேல் அருணாசலக் கவிராயர் ஒரு தலபுராணம் பாடியுள்ளார். அதிலேயே தலத்துக்குரிய மேற்படி பன்னிரண்டு பெயர்களுக்குமான காரணங்கள் கூறப்பட்டுள்ளன. திருஞான சம்பந்தரது பதிகங்களிலும் ஆங்காங்கே இப்பெயர்க் காரணங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. பல் பெயர்ப் பத்து என்ற பெயரில் வழங்கும் சம்பந்தரின் அறுபத்து மூன்றாம் (63) பதிகத்தில் மேற்படி பெயர்கள் பன்னிரண்டும் சுருக்கமாக அவற்றின் காரணங்களும் கூறப்பட்டுள்ளன. சம்பந்தர் தனது சித்திர கவிகள் சிலவற்றை இப்பன்னிரு பெயர்களையும் அடுக்கிக்கூறுவதன் மூலம் அமைத்துள்ளார். பட்டினத்துப் பிள்ளையார் பாடியதாக பதினோராந் திருமுறையுள் அடங்கும் திருக் கழுமல மும்மணிக்கோவையுள் வசையில் காட்சி எனத் தொடங்கும் செய்யுளுள் இப்பன்னிரு பெயரும் பன்னிரு யுகங்களில் வழங்கப்பட்டனவாகக் கூறப்படுகிறது. சம்பந்தரும் தமது முதலாம் பதிகத்து எட்டாம் பாடலில்,
துயர் இலங்கும் உலகிற் பல ஊழிகள்
தோன்றும் பொழுதெல்லாம் பெயர் இலங்கு பிரமாபுரம் மேவிய பெம்மான் இவனன்றே es (fa) எனக் குறித்தார். இப்பெயர்கள் தவிர சங்கநிதிபுரம் முதலான பதினான்கு பெயர்கள் உள்ளனவாகவும் தலபுராணம் கூறுகிறது. சீகாழித் தலத்தை வருணிக்கும் சம்பந்தர்,
கடல் முயங்கு கழிகுழ் குளிர்
கானலம் பொன்னஞ் சிறகன்னப்
பெடைமுயங்கு பிரமாபுரம் (17)
அந்தண் கடல் குழ்ந்து அழகார் புறவம் (743)
ஒதம் வந்து உலவிமறிதிரைச்சங்கொடுபவளம்முன் உந்தி வேலை வந்து அணையும் சோலைகள் சூழ்ந்த வெங்குரு /7安効
எனப் பெரும்பாலும் கடல் சார்ந்த கழிநிலமாகவே வருணிப்பார். ஆனால் சேக்கிழாரோ வயலும் கமுகஞ் சோலைகளும் சூழ்ந்த மருதநிலமாக வருணிப்பார்.
சீத வள வயற் புகலி' (பெரிய, 1904)
அப்பதிதான் அந்தணர்தம் கிடைகள் அருமறைமுறையே
செப்பும் ஒலி வளர் பூகச் செழும்சோலை புறவம் குழ
ஒல்பில் நகர். (பெரிய, 1906)
அத்தலத்து இயற்கையே வேதநெறி தழைத்தோங்குதற்குரிய இடமென்பதைக் காட்டி நிற்பதாக உணர்த்துவார் சேக்கிழார்.
பரந்த விளைவயல் செய்ய பங்கயமாம் பொங்கெரியில் வரம்பில் வளர் தேமாவின் கனிகிழிந்த மது நறு நெய் நிரந்தரம் நீள் இலைக்கடையால் ஒழுகுதலால் நெடிது அவ்வூர் மரங்களும் ஆகுதிவேட்கும் தகைய.
(பெரிய, 1910)
இந்துக்கலைக்களஞ்சியம்
168

சீகாழித்தலத்துத் திருத்தோணியப்பர் கோயில் மூலஸ்தானம் தனித்துவமான அமைப்புடையதாகும். மூன்று தலங்களுடன் கூடிய அக்கருவறையின் தரைத் தளத்தில் பிரமபுரீஸர் வீற்றிருக்கிறார். அதன் வடபுறத்துள்ள படிகளால் ஏறிச் செல்லவரும் இரண்டாம் தளத்தில் தோணியில் தேவியுடன் வீற்றிருக்கும் தோனியப்பர் சந்நிதியை அடையலாம். அங்கிருந்து மேலும் சில படிகள் ஏறிச் சென்றால் சட்டைநாதர் சந்நிதியை அடையலாம். இவை மூன்றும் முறையே இலிங்க, குரு, சங்கம மூர்த்தங்களாகக் கொள்ளப்படுகின்றன. பிரமபுரீஸ்வரரே தலத்து இறைவர் பெயராகும்; அம்பிகை பெயர் திருநிலை நாயகி, பெரிய நாயகி என்பனவாம்; சுவாமி சந்நிதிக்கும் அம்பாள் சந்நிதிக்கும் இடையே திருஞான சம்பந்த சுவாமிகளின் சந்நிதி உள்ளது. இது சோமாஸ்கந்த வடிவத்தை நினைவூட்டுவதோர் அமைப்பாகும்.
தலவிருட்சமாக பாரிசாதமரம் விளங்குகிறது. சட்டைநாதரைத் தரிசித்துக் கீழிறங்கி வலமாக வரும் போது மூங்கிலும் அதனருகே பாரிசாதமும் நிற்கின்றன. பிரமதீர்த்தம், காளிதீர்த்தம், கழுமலநதி, விநாயகநதி, புறவநதி முதலாக இருபத்திரண்டு தீர்த்தங்கள் இத்தலத்துக் குரியனவாகக் கொள்ளப்படுகின்றன. பிரமதீர்த்தமே முதன்மையானது; அதனருகே சம்பந்தர் ஞானப்பால் அருந்துதல் முதலான காட்சிகள் சுதைச் சிற்பமாக அமைக்கப்பட்டுள்ளன. இத்தலத்து மஹோற்சவம் சித்திரை மாதம் இடம்பெறுகிறது. இரண்டாம் நாள் உற்சவம் திருமுலைப்பால் உற்சவமாகும்; ஏனைய உற்சவங்களும் பெரும்பாலும் திருஞானசம்பந்தர் வரலாற்றோடு தொடர்பு பட்டனவாகவே நிகழ்த்தப்படுகின்றன.
இத்தலத்தில் திருஞானசம்பந்தருக்கு நித்திய வழிபாடும், தை அமாவாசை, வைகாசி மூலம், ஐப்பசிச் சதயம் ஆகிய தினங்களில் விசேட வழிபாடுகளும் நிகழ்த்தப் பெறுகின்றன. சீகாழித்தலத்தில் உள்ள ஒரு இல்லம் திருஞானசம்பந்தர் அவதரித்த இல்லமாக காஞ்சிகாமகோடி பீடத்தாற் பேணப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. சீகாழிக் கோயில் தருமையாதீனத்து நிருவாகத்துள் அடங்குகிறது.
சீகாழித்தலத்தில் நாற்பத்தைந்துக்கும் மேற்பட்ட கல்வெட்டுக்கள் கிடைத்துள்ளன. அவை இரண்டாம் குலோத்துங்கன் முதல் வேங்கட தேவராயர் வரையில் பத்துக்கு மேற்பட்ட அரசர்களால் வெட்டுவிக்கப்பட்டனவாகக் காணப்படுகின்றன. சோழர் கல்வெட்டுக்களில் இத்தலம் 'இராஜராஜ வளநாட்டுத் திருக்கழுமலநாட்டுப் பிரமதேயம் திருக்கழுமலம்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது. பிரமபுரீஸ்வரர் திருக்கழுமலமுடையார், திருக்கழுமலமுடைய நாயனார் என்று இக்கல் வெட்டுக்களிற் சுட்டப்படுகிறார். தோனியப்பர், திருத்தோணிபுரமுடையார் என்றும் அம்பிகை பெரிய நாச்சியார் என்றும் சுட்டப்படுகிறார்கள். ஞானசம்பந்தர், ஆளுடைய
பிள்ளையார் என்று சுட்டப்பட்டுள்ளார்.

Page 195
சீகாழித்தலத்து ஞானசம்பந்தர் கோயிலில் ஆளுடைய பிள்ளையாரின் வடிவத்தை எழுந்தருளச் செய்தவள் மூன்றாங் குலோத்துங்கனுடைய அடுக்களைப் பெண்டுகளிலே மூத்தவளான விச்சாதரி என்று அறியப்படுகிறது. இரண்டாம் இராசராசனின் கல்வெட்டு கங்கைகொண்ட சோழபுரத்தா னொருவன் ஆளுடைய பிள்ளையார் திருக்கோயில் முதற்பிரகாரத்துத் திருமதிலை அமைப்பதற்குப் பொன் கொடுத்தது பற்றிக் கூறுகிறது. இவ்வாறான பல செய்திகள் மேற்படி கல்வெட்டுக்களால் அறியப்படுகின்றன. (க.இர)
சீதை
சீதை இந்து இதிகாசங்களில் ஒன்றான இராமாயணத்தின் தலைமைப் பாத்திரம். இராமாயணத்தில் மிதிலையை ஆண்ட ஜனகன் மகளாக சீதை விளங்குகின்றாள். ஜனகன் வேள்விச் சாலை அமைப்பதற்காகப் பூமியைச் சமப்படுத்துவதற்கு உழும் போது உழுபடைச்சாலினின்றும் தோன்றினவளாதலின் சீதை எனப் பெயர் பெற்றாள். ஜானகி, மைதிலி, வைதேகி முதலிய வேறு பெயர்களும் உண்டு.
கெளசிக முனிவர் தன் வேள்விகாத்த இராம இலக்குமணர்களை அழைத்துச் செல்லும் போது மிதிலை ஜனகன் அரண்மனையின் கன்னிமாடத்தில் நின்ற சீதையைக் கண்ணுற்று, அவள் யாரென அறியாமலே அவளிடம் தன் மனதைப் பறிகொடுத்து விடுகிறான் இராமன். முனிவர் ஜனக மகாராஜனுக்கு அவர்களை அறிமுகப்படுத்துகிறார். ஜனகன் தன் அரண்மனையில் பல காலம் நாண் ஏற்றப்படாமல் கிடந்த சிவதனுசை நாணேற்ற வல்லவனுக்கு தன் மகள் சீதை எனப் பகர, இராமன் அவ்வில்லிலே நாணேற்ற முற்பட்ட போது அவன் ஆற்றலுக்காற்றாது வில் ஒடிந்து விடுகிறது. அது கண்டு வியந்த ஜனகன் அவனுக்குச் சீதையை மணங்கூட்டுவிக்கிறான்.
மணம் முடித்த பின் இராமனோடு அயோத்தி சென்று வாழும் போது மன்னன் தசரதன் இராமனுக்கு பட்டமளிப்பு விழா நடத்த ஏற்பாடு செய்கிறார். ஆனால் இவ்விழா கைகேயினால் தடைப்படுகிறது. இராமன் துறவுக் கோலம் பூண்டு காடேகும் போது சீதை மரவுரி தரித்து உடன் செல்கிறாள். சுமந்திரன் தன் தேரில் ஏற்றி நாட்டின் எல்லையில் விட்டு வரும் போது சீதை தன்அத்தையருக்கு வணக்கம் கூறும்படியும், தான் வளர்த்த கிளியையும், பூஞ்செடியையும் போற்றுமாறும் வேண்டி யனுப்புகிறாள்.
அயோத்தி நகரின் எல்லையிற் சுமந்திரனால் கொண்டு சென்று விடப்பட்ட இராம, இலக்குமணன், சீதை ஆகியோர் பல இயற்கைக் காட்சிகளைக் கண்டு ரசித்த வண்ணம் கங்கைக்
கரையை அடைகின்றனர். அங்கு குகன் என்னும் தேரோட்டி

கங்கையைக் கடக்க உதவுகிறான். அவர்கள் தண்டகவனம் புகுந்த போது விராதன் என்ற அரக்கன் சீதையைப் பற்றிக் கொண்டு செல்ல முயன்ற போது சீதை கலங்கிக் கதறுகிறாள். பின் இராம, இலக்குமணர்கள் வாள் கொண்டு அவனை வெட்டிக் கொன்று சீதையை மீட்கின்றனர். சடாயு என்ற கழுகரசன் வழிகாட்ட பஞ்சவடி என்னும் இடத்தை அடைந்து பர்ணசாலையிலே தங்கி இருக்கின்றனர்.
அங்கு சூர்ப்பனகை என்னும் அரக்கி இராமனைக் கண்டு காமுற்று தன் எண்ணம் நிறைவேறாமற்போக அதற்குக் காரணம் அழகெல்லாம் ஒருங்கே விளங்கப் பெறும் சீதை தான் என எண்ணி அவளை அச்சுறுத்தி நின்ற வேளையில், இலக்குமணன் அவள் உறுப்புக்களைச் சிதைத்து விடுகிறான். அவ்வாறு ஒறுக்கப்பட்ட சூர்ப்பனகை தனது சகோதரனாகிய கரனிடம் சென்று முறைப்பட்டாள். அவனும் இராமனால் அழிக்கப்பட்டது கண்டு இராவணனிடம் சென்று சீதையின் அழகையெல்லாம் வர்ணித்து அவளைக் கவர்ந்து வந்து வாழுமாறு கூறுகிறாள். அதைக் கேட்ட இராவணன் மாரீசனை மாயமானாகச் சீதை முன் தோற்றும் படி கூறி இராம இலக்குமணர்களை அவளிடம் இருந்து பிரித்துப் பின் கவர எண்ணுகிறான்.
மாயமானாக வந்த மாரீசன் இராமபாணம் பட்டு இறக்கும் தறுவாயிற் செய்த சூழ்ச்சியால் இராமனுக்கு இடுக்கண் ஏற்பட்டது என அஞ்சிய சீதை இலக்குமணனைத் துணைக்குப் போகுமாறு கேட்கிறாள். இராமன் இட்ட கட்டளையை நினைந்து இலக்குமணன் சீதையை விட்டகலாது இருக்க அவனைப் பிழைபட உணர்ந்த சீதை கடிந்துரைப்ப, அச்சொல் பொறாது இராமனைத் தேடிச் செல்கிறான் இலக்குமணன். அவ் வேளையிலே துறவி வேடம் பூண்டு வந்த இராவணனை அறியாத சீதை அவனை முறைப்படி உபசரித்து வரவேற்றாள். அவன் பேச்சைக் கேட்ட பின் அவன் துறவி அல்ல ஒரு கபட சன்னியாசி என்றுணர்ந்து அவனுக்கு அறிவுரை கூறுகிறாள். இராவணனோ அவள் அறிவுரைகளைச் சிறிதும் செவிமடுக்காது சீதையை அவள் இருந்த பர்ணசாலையோடு பெயர்த்தெடுத்து புட்பக விமானத்தில் கொண்டு இலங்கை ஏகி அசோகவனத்திற் சிறை வைக்கிறான். அங்கு அரக்கியர் சூழ இருந்த சீதைக்குத் திரிசடை என்பாள் தோழியாய் அமைகிறாள். இராவணன் சீதையிடம் அடிக்கடி சென்று தனக்கு இணங்குமாறு இரந்தும், பணிந்தும், பயமுறுத்தியும் பார்க்கிறான். அவ் வேளைகளில் எல்லாம் இராவணனுக்கு சீதை அறிவுரை பகர்கிறாள்.
வனத்திலே சீதையைக் காணாது துன்புற்று அலைந்து திரிந்த இராம.இலக்குமணருக்கு அனுமன் உற்ற நண்பனாகிறான். அவன் தென் திசைக் கடலைத் தாண்டி இராவணனாற் சிறை வைக்கப்பட்டிருந்த சீதையைக் கண்டு இராமன் துன்புறும் செய்தியைக் கூறி இராமனால் கொடுக்கப்பட்ட கணையாழியைக் காட்டி தான் இராமனின் தூதன் என்பதை நம்ப வைக்கிறான். பின் அனுமன் தன் ஆற்றலைக் கூறிச் சீதை தன் மீது அமர்ந்து
இந்துக்கலைக்களஞ்சியம்

Page 196
கொண்டால் இராமனிடம் கொண்டு சேர்ப்பதாகக் கூறுகிறான். அது கேட்ட சீதை தானே தன் ஆற்றலால் தன்னை மீட்டுக் கொள்ள முடியுமென்றும், அச்செயலானது இராமனுக்கு இழுக்கென்றும், தன்னை மீட்கும் கடப்பாடுடையவன் இராமனே என்றும் கூறியதோடு தான் ஒரு திங்கள் உயிரோடு இருப்பதாகப் பகன்று, மீட்டிலனேல் உயிர்விடப் போவதாகக் கூறிச் சூளாமணியைக் கொடுத்தனுப்புகிறாள்.
இராவணனின் எழில் மிக்க பூங்காவை அழித்த அனுமனை மேகநாதன் பிரமாஸ்திரத்தால் கட்டி இராவணனிடம் இட்டுச் செல்கிறான். அங்கு அனுமன் தான் இராமனின் தூதன் என்றும் சீதையை விடுவிக்குமாறும் கூறுகிறான். சினம் கொண்ட இராவணன் அனுமனின் வாலில் தீப்பந்தம் கட்டி எரியூட்டி விடுகிறான். அவ்வாலைச் சுழற்றியே இலங்காபுரிக்கு தீவைக்கிறான் அனுமன்.
இராவணன் தம்பியாகிய விபீஷணனும், கும்பகர்ணனும் சீதையின் கற்பின் பெருமை கூறி அவளை இராமனிடம் சேர்ப்பதே அறமெனக் கூறிநிற்கின்றனர். தனக்குப்பலவாறு அறிவுரை கூறி நின்ற விபீஷணனை இகழ்ந்து “என் எதிரில் நின்றால் உன் சிரம் கொய்வேன்” எனக் கூறிநிற்க செய்வதறியாத விபீஷணன் இராமனைச் சரண் புகுகின்றான்.
சுக்கிரீவன் துணையோடு கடலிலே அணை அமைத்து இலங்கையை அடைந்த இராமர், இராவணனையும் அவனது படையையும் அழித்து விடுகிறான்.
இதற்கிடையில் மகோதரனை நோக்கிச் சீதையைத் தான் அடையும் வழி கேட்கிறான். மகோதரன் மருதன் என்பவனை ஜனகனாக வடிவெடுக்கச் செய்து மாய முறையில் சீதையைக் கூட்டுவிப்பதாகக் கூறுகிறான். சீதைக்கு மாய ஜனகன் இராவணனாலே தனக்குற்ற கேடுகளைக் கூறி அவள் இராவணனின் விருப்பத்திற்கு இணங்க வேண்டும் எனவும், அவ்வாறு உடன் படாது போனால் அவள் காண அவனை வெட்டி அச்சுறுத்தி இனங்க வைப்பதாகவும் கூறுகிறான்.
அங்ங்னமே மாய ஜனகனை மகோதரன் அழைத்து வருகிறான். அப்பொழுது இராவணன் சீதையிடம் தன் விருப்பத்திற்கு இணங்குமாறு வேண்டுகிறான். அவள் சினந்து மறுக்கும் போது மாய ஜனகன் சீதையிடம் தனக்கு உயிர்ப்பிச்சை தருமாறும், இராவணனுக்கு உடன்பட்டு வாழுமாறும் வேண்டுகிறான். அதுகேட்ட சீதை அவன் பேச்சை ஏற்காததுடன் தன் தந்தை ஜனகன் அவ்வாறு கூறான் என ஐயுற்று, தனது தந்தையே ஆயினும் தன் நிலையினின்றும் சிறிதும் தளரப் போவதில்லை எனக் கூறுகிறாள். அந்த வேளையில் கும்பகர்ணன் போரில் மாண்ட செய்தி கேட்டு இராவணன் புலம்புகிறான். பின் மகோதரனோடு அவ்விடம் விட்டகன்று விடுகிறான். திரிசடை மகோதரன் செய்த மாயத்தைச் சீதைக்கு விளக்கி ஆறுதல் கூறுகிறாள்.
17

கும்பகர்ணன் இறந்த பின் இந்திரஜித் பிரமாஸ்திரம் எய்து இராமர் முதலிய அனைவரையும் உயிர் மயங்கச் செய்கிறான். அப்போது இராவணன் இறந்த அரக்கரைப் போர்க்களத் தினின்றும் அகற்றிச் சீதையைப் புட்பக விமானத்தில் அழைத்து வந்து இராமன் முதலியோர் மயங்கிக் கிடப்பதைக் காட்டித் தன்னை மணக்குமாறு வேண்டுகிறான். சீதை இராமன் முதலியோர் இறந்ததாகக் கருதி அளவில்லாத துன்பமடைகிறாள். திரிசடை அமங்கல மகளிரைப் புட்பகம் சுமக்காது; ஆதலால் இராமர் இறக்கவில்லை எனக் கூறிச் சீதையைத் தேற்றுகிறாள். பின்னர் அனுமன் கொணர்ந்த சஞ்சீவியால் அனைவரும் உயிர் பெறுகின்றனர்.
இறுதியில் இராமனால் இராவணன் கொல்லப் பெற்றதும் சீதை மங்கலக் கோலம் பூண்பித்து அழைத்து வரப்படுகிறாள். இராமன் அவளைக் கண்ணுற்று பலவாறு குறை கூறிச் சினந்து பேசுகிறான். பின்னர் இராமன் இலக்குமணன் வாயிலாக அமைத்த எரிபுகுந்து அவள் கற்பைப்புலப்படுத்தப் பணிக்கிறான். அவளும் எரிபுகுந்து தன் கற்பினை நிரூபிக்கிறாள். கற்பின் திறம் அறிந்த இராமன் அவளை ஏற்கிறான்.
வனவாச காலம் முடிவடைந்தும் இராமர் வராததாற் பரதன் தீக்குளிக்க முற்படுகிறான். பரத்துவாச முனிவர் மூலம் பரதன் நிலை அறிந்து கலங்கிய இராமர் தன் வரவை உணர்த்துமாறு அனுமனை அனுப்புகிறான். பின் அயோத்தி சென்று எரிபுக நின்ற பரதனைக் கண்டு அவன் துயர் போக்குகிறான். அயோத்தியிற் சீதை தன் மாமியாரைக் கண்டு வணங்கி முடிசூடிக் கொண்டு இராமனுக்கு பட்டத்தரசியாக வாழ்ந்தாள்.
உண்மையில் இராமாயணத்திற்கு இரண்டு வகையான கதை முடிவுகளை நாம் ஏற்றுக் கொள்ள முடியும். ஒன்று சீதையை சிறைமீட்டு இராமன் அயோத்திக்குத் திரும்புதல், மற்றது அயோத்திக்கு திரும்பிய பின்னர் சீதையைக் காட்டுக்கு அனுப்புவதும் அங்கு லவகுசர்களின் பிறப்பும், சீதையை நிலம் பிளந்து உள்வாங்கிக் கொண்ட நிகழ்வுகளும் கொண்ட முடிவு. இந்த முடிவைக் கொண்ட உத்தர காண்டத்தை இராமாயண அறிஞர்கள் பலர் ஏற்றுக் கொள்ளத் தயங்குகின்றனர். காரணம் அதில் இராமனுடைய தர்மத்துக்கு ஊறு விளைவிக்கும் சில கருத்துக்கள் அடங்கியுள்ளன எனக் கருதுவதாலேயாகும்.
கம்பனுடைய சீதையும் வால்மீகி வகுத்த சீதையும்
கம்பனுடைய சீதை தொடக்கத்திற் சாதாரண ஒரு பேதைப் பெண்ணாக இருந்து காலப் போக்கில் அனுபவத்தின் வாயிலாக அறிவுந் திறனும் உறுதியும் நிறைந்த பெண்ணரசியாகத் திகழ்கிறாள். இந்த வகையிலே கம்பனுடைய சீதைக்கும் வால்மீகியினுடைய சீதைக்குமிடையே சில வேறுபாடுகள் உண்டு. வால்மீகியின் கதைப் போக்கிலே இராமன் சிவதனுசை ஒடிப்பதற்கு முன்னால் சீதையைப் பார்க்கவில்லை. ஆனால் கம்பனுடைய கதைப் போக்கிலோ மிதிலை நகரத்து வீதிகளின் வழியே

Page 197
விசுவாமித்திரனோடும், இலக்குவனனோடும் நடந்து செல்லும் போது இராமன் கன்னிமாடத்தில் நின்ற சீதையைக் காண்கிறான்.
வால்மீகியின் சீதை பேதைப் பெண்ணாக, எளியவளாகச் சித்திரிக்கப்படவில்லை. இராமன் சீதையிடத்தில் தான் பதினான்காண்டுகள் காட்டுக்குப் போகவிருப்பதையும் பரதன் அரசாளப் போவதையும் சொல்லிவிட்டு, பரதனிடத்தும் ஏனையவர்களிடத்தும் சீதை எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்றும் சொல்கிறான். அவற்றைக் கேட்ட சீதை தான் இராமனோடு காட்டுக்குச் செல்வதில் உள்ள நியாயத்தைக் கூறி நீண்டதொரு பிரசங்கமே செய்து விடுகிறாள். இந்த நீண்ட பேச்சிலே சீதையின் கம்பீரம் தெளிவாகத் தெரிகிறது.
மேலும் வால்மீகியின் சீதை தன் கணவனைப்பற்றி நினைக்கக் கூடாத, சொல்லக் கூடாத ஒரு செய்தியை இராமனிடத்தில் சொல்கிறாள். இராமன் சீதையை விட்டுத் தனியே காடேகிய விடயம் தன் தந்தையாகிய ஜனகனுக்குத் தெரிந்தால் "ஐயோ மோசம் போனேனே, இவன் உண்மையான புருஷன் என எண்ணி என் பெண்ணை இவனுக்கு விவாகம் செய்து கொடுத்து விட்டேனே! இப்பொழுதல்லவா உண்மை வெளியாயிற்று? அவன் பார்வைக்குப் புருஷனே ஒழிய உண்மையாகப் பெண் பிள்ளையே என்று என் தந்தை எண்ணமாட்டாரா? இது தெரிந்திருந்தால் என் தந்தை ஒருக்காலும் என்னை உமக்கு விவாகம் செய்து கொடுத்திருக்கமாட்டாரே” என்று சொல்கிறாள். ஆனால் கம்பனுடைய இராம கதையிலே நாம் காணும் ஒரு தனித் தன்மை சீதையை ஒரு பேதைப் பெண்ணாக ஆரம்பத்தில் காட்டிய கம்பர், இராமனும் சீதையும் ஒருவருக்கொருவர் அதிகம் உரையாடி யதையும் குறிப்பிடவில்லை. அப்படி உரையாடும் கட்டங்கள் மகிழ்ச்சி நிறைந்தனவாக இல்லாதவை வெகு சில கட்டங்களே ஆகும்.
கம்பன் கண்ட சீதை, பேதைப் பெண்ணாக, வீரமடந்தையாக, அறத்தைப் போதிக்கும் அன்னையாக, கற்பின் கனலியாக, பெண்குலத்துக்கே பெருமை சேர்த்த மாதரசியாக விளங்குகிறாள்.
பேதைப் பெண் சீதை
மிதிலை அரண்மனைக் கன்னிமாடத்தில் நின்ற சீதை இராமனைக் கண்டு காதல் கொள்கிறாள். காதல் வயப்பட்டு நின்ற சீதையிடம் நீலமாலை என்னும் தோழி இராமன் சிவதனுசை முறித்த செய்தியைக் கூறுகிறாள். அவள் கூறிய குறிப்பிலிருந்து தான் நேற்றுக் கண்டவன் தான் அவன் எனத் தெளிவடைந்து அவன் இலனேல் இறப்பன் என அகத்திலே உறுதி கொள்கிறாள். இவ் வெண்ணத்திலே அவள் கற்பின் திறன் சுடர் விடத் தொடங்குகிறது. பருவமடைந்த பெண்ணொருத்தி காதல் வயப்பட்டு தன்னைக் கவர்ந்த கள்வனைக் கடிமணம் செய்து
கொள்ளும் சாதாரணப் பெண்ணாகவே சீதை காட்டப்படுகிறாள்.

இராமனுக்கு அரசு இல்லை என்பதையோ அவன் வனத்துக்குப் போகிறான் என்பதையோ நினைத்து சீதை விம்மவில்லை. தன்னை அயோத்தியில் விட்டுச் செல்லும் இராமனின் எண்ணமே துன்புறுத்த "ஈண்டு நின் பிரிவினும் சுடுமோ பெருங்காடு” என்று கேட்கிறாள். சீதையின் தேம்பலைக் கண்டு என்ன செய்வதென்று தெரியாது இராமன் திகைத்து நிற்கச் சீதை உள்ளே சென்று மரவுரி தரித்துக் கணவனருகில் வந்து அவன் கரம் பற்றி இனிச் சிந்திப்பதற்கு ஒன்றுமே இல்லை என்று இராமனிடம் சொல்லாமலே சொல்லி விடுகிறாள். கணவனிடம் பாசம் மிகுந்த, பண்பு மிக்க ஒரு சாதாரணப்
பெண்ணாகவே கம்பனின் சீதை காட்டப்படுகிறாள்.
இராமனுடன் காடேகிய சீதை அயோத்தி கடந்தவுடன் “அரிய வெங் கானம் யாதோ’ என்று கேட்கிறாள். பதினான்காண்டுகள் வனத்திலே வசிக்கப் போகிறாள். அந்த வனத்தின் கொடுமையையும் கடுமையையும் சற்றும் உணராத காரணத்தால் தான் அயோத்தி எல்லையில் தம்மை இறக்கி விட்ட சுமந்திரனிடம் தான் வளர்த்த செடியையும், கிளியையும் போற்றிப் பாதுகாக்கும் படி தங்கையருக்குச் சொல்லி அனுப்புகிறாள்.
அயோத்தியிலும் பின்பு காட்டிலும் இராமனோடு இணை பிரியாது வாழ்ந்த சீதை, தன் நாயகனோடு இருக்கும் போது உலகமறியாதவளாக இருந்து பின் அளவில்லாத துன்பம் அனைத்துக் கொண்டதால் ஏற்பட்ட அனுபவ அறிவு சீதையை வீரப் பெண்ணாக உருவாக்கியது.
வீரப் பெண் சீதை
வனவாசத்திலே இராமனைத் தவிரத் தனக்கு வேறு எதுவும் இல்லை என்ற நிலையிலே சீதை வாழ்கிறாள். இந்த வாழ்க்கையினூடே உடலையும், உயிரையும் பிரிப்பது போலச் சூர்ப்பனகையின் சூழ்ச்சி அமைகிறது. இந்தச் சூழ்ச்சிக்கு முன்னரே பதின்மூன்றாண்டுகளுக்கு மேலான வனவாசம் கழிந்து விட்டது. அதனால் இராமன், சீதை ஆகியோரின் உறவு மேன் மேலும் நெருக்கமடைந்ததோடு சீதையின் அனுபவ அறிவும் அதிகரிக்கிறது. அவற்றின் காரணமாகப் பேதைப் பெண்ணுக்குப் பதிலாக உறுதியும் முயற்சியுமுள்ள வீரப் பெண்ணாகிறாள் சீதை.
இராவணனுக்கு சீதை கூறிய அறிவுரைகள் அவளின் அறிவு முதிர்ச்சியையும், மனோதத்துவத்தையும் நன்றாகத் தெரிந்திருந் தமையையும் உணர்த்தி நிற்கின்றன. முதலில் இராம, இலக்குமணரின் வீரத்தை எடுத்துக் கூறுகிறாள். “கயிலையைப் பேர்த்தேன், திக்விஜயங்களை வென்றேன் என்றெல்லாம் வீரம் பேசுகின்ற நீ, இலக்குமணன் வில்லேந்திக் கொண்டு நிற்கும் போது வருவதற்கு அஞ்சி வஞ்சனையால் அவனைப் போக்கி என்னைக் கவர்ந்து கொண்டு வந்து இன்னமும் பெருமையும், இறுமாப்பும் கொண்டு நிமிர்ந்து நிற்கிறாயே, அதற்கு மேலும் ஒரு பெண்ணின் காலிலும் வீழ்கிறாயே! இராம, இலக்குமணர்
ឱឆ្នា க்களஞ்சியம்

Page 198
கிடக்கட்டும், சடாயுவிடத்திலேயே நீ தோற்றுவிட்டாய். சிவபெருமான் உனக்குத் தந்த வாளாயு தத்தைக் கொண்டு சடாயுவை வெட்டி வீழ்த்தினாயே அன்றி அந்த வாள் இல்லையேல் நீ அப்போதே இறந்திருப்பாய்."என அவனைச் சாடுகிறாள்.
ஒரு பெண்ணை விரும்பும் ஆண்மகன் அவள் முன் காக்க விரும்புபவை தன் ஆண்மையும், வீரமும் தான். அந்தப் பெண்ணின் முன்னாற் பிறர் பழிப்பதையே அவன் விரும்ப மாட்டான். அந்தப் பெண்ணே அவற்றைப் பழிப்பதானால் அதை விடப் பெரிய அவமானம் அவனுக்குண்டாக முடியாது. இந்த மனோதத்துவத்தின் அடிப்படையிலேயே இராம, இலக்குவணரின் வீரத்தையும் இராவணனுடைய சிறுமையையும் எடுத்துக் காட்டுகிறாள் சீதை.
அறம் போதிக்கும் சீதை
இராவணன் சீதையிடம் ஆசையாகப் பேசுகிறான். தன் கற்பிக்கு மாசு கற்பிக்க எண்ணும் இராவணனுக்குக் கருணை காட்டுகிறாள் சீதை. இச்சை மொழி பேசித் தன்னை நோக்கி வரும் இராவணனுக்கு அற நெறியை இடித்துக் காட்டுகிறாள் சீதை. "மூவுலகும் ஏவல் செய்யும் பெரும் பேறு உனக்குண் டென்றால் அது நீ செய்த தவத்தினால், தருமத்தினால் அல்லவா? அத்தகைய தருமம் இப்போது நீ செய்கின்ற பாதகத்தால் அழிந்து விடுவது திண்ணம். இதனைச் சிந்தித்துப் பார் தன்னைக் காக்க நீதியைக் கூறி இராவணனுக்கு நல்லறிவு புகட்ட முற்படுகிறாள் சீதை.
சீதையை இராமனிடம் கொண்டு சேர்க்க எண்ணிய அனுமன் “என் தோள் மீது ஏறிக்கொள்” என்று வேண்டிக் கொள்கிறான். ஆனால் சீதையோ இந்த வேண்டுகோளை மறுத்துரைக்கின்றாள். இந்தக் கட்டத்தில் சீதையைக் கம்பன் அறிவு, அனுபவம், அன்பு, மனிதப் பண்பு, மனோதத்துவ உணர்வு எல்லாம் விளங்கப்பெற்ற உத்தமப் பத்தினிப் பெண்ணாகக் காட்டுகிறார்.
அனுமன் கூறியதைக் கேட்ட சீதை “நீ சொன்னதைச் செய்து முடிக்கும் வல்லமை உடையவன்; ஆயினும் இதனை என் மனம் ஏற்கவில்லை” எனக் கூறி அதற்குரிய நியாயங்களைக் கூறுகிறாள்.
"கடலைக் கடக்கும் போது அரக்கர்கள் உன்னைத் தொடர்ந்து வந்தால் என் பொருட்டு நீ அவர்களுடன் போரிட வேண்டிய நிலையில் நான் தடுமாறிக் கடலில் விழவும் கூடும்.”
"நீ என்னைத் தூக்கிச் சென்று இராமனிடத்துச் சேர்த்து விடுவாயானால் அது இராமனின் வில்லின் ஆற்றலுக்கு மாசு ஏற்படுத்தும். நான் சிறையிலிருந்து மீளுவது மட்டும் முக்கியம் என்றால், என் சொல்லின் ஆற்றலால் உலகங்கள் அனைத்தையும் சுடும் வல்லமை எனக்குண்டு. இருப்பினும் அது தூயவன் வில்லுக்கு இழுக்கு என்பதால் வாளாவிருக்கிறேன்” என்கிறாள்.
172

"அரக்கர்கள் வஞ்சனை செய்தல்லவா என்னை இங்கே சிறையெடுத்து வந்தார்கள். அவர்களோடு போர் செய்து சிறை மீட்பதுதான் முறை. அன்றேல் அவர்களுடைய வஞ்சனையையும் கீழ்மையையும் நாமும் செய்தவர்களாக மாட்டோமா?”
“எல்லாவற்றிற்கும் மேலாக என்னுடைய கணவனான இராமனது மேனியைத் தவிர வேறு எந்த ஆடவனது மேனியையும் தீண்டுதல் தகுமோ? இப்படிக் கூறும் போது அனுமன் மனம் நோகக் கூடாது என்பதற்காக 'பஞ்சேந்திரியங்களையும் அடக்கி இருக்கின்ற உன்னையும் ஆண் என்று தானே உலகம் கூறும்’ என்று பல நியாயங்களை எடுத்துக் கூறும் நிலையில் சீதை அறங்காக்கும் அணங்காகக் காண்பிக்கப்படுகிறாள்.
கற்பின் கனலி சீதை
மகோரதன் என்பவனிடம் இராவணன் சீதையை அடையும் வழி கேட்கிறான். அவனது சூழ்ச்சியின்படி மாய ஜனகன் சீதையின் முன் அழைத்துவரப்படுகிறான். மாய ஜனகன் இராவணனுக்கு உடன்பட்டு வாழுமாறு சீதையைக் கேட்கிறான். வெகுண்டெழுந்த சீதை, “சந்ததியே அழிந்தாலும், வாழ்வு தேய்ந்து மறைந்தாலும், மார்பிலே வேற்படை வந்து தாக்கினாலும் முறை கெட்டு வாழும் அரசரும் உளரோ?” என்று கேட்கிறாள். இவ்வாறு கூறியவள் "நீ என் தந்தை அல்லன், அப்படி என் தந்தையாகவே இருந்தாலும் இராமன் இச் சிறையினின்றும் உன்னை மீட்பனே ஆகில் மீண்டு செல், மீட்சி என்பது இல்லையேல் இறந்து திருதி. அதற்கு மாறாக இயம்பக் கூடாத வார்த்தைகளைக் கூறி விட்டாய். அதனால் என்றும் பெரும் பழி கொண்டாய்” என்று கூறி முடித்து விடுகிறாள். இந்த நிகழ்ச்சியினூடாகச் சீதை கற்பின் கனலியாக, ஒழுக்கத்தின் சிகரமாகக் காட்டப்படுகிறாள்.
அசோக வனத்திலே அனுமன், சீதை என்னும் ஊனுடம்புடைய வளைக் காணவில்லை. அவளது கற்பின் மேம்பாட்டையே உணர்கிறான். அவளுடைய கண்களிலிருந்து வற்றாது வடிகின்ற கண்ணிரைக் கண்ட பின், கணவன் வருகைக்காகக் காத்துத் தவங்கிடக்கும் அவளது ஒழுக்க மேம்பாட்டினை உணர்கிறான். அனுமன் வாலில் அரக்கர்கள் தீமூட்டிய போது அந்நெருப்பு அனுமனைச் சுடாது தன் கற்பின் திறத்தால் காத்தாள். ஆகையால் அனுமன் சீதையின் கற்பை தெய்வக் கற்பாக மதிக்கிறான்.
இலங்கையில் இருந்து மீண்டு இராமனை வந்தடைந்த அனுமன், தென் திசை நோக்கி வீழ்ந்து வணங்கிய பின் கூறிய முதல் வார்த்தை, “கண்டனன் கற்பினுக்கு அணியைக் கண்களால்". சீதையின் மன உறுதியையும், ஒழுக்க மேம்பாட்டையும் கண்ட அனுமன் இலங்கையில் இருந்து மீண்டு இராமனை வந்தடைந்ததும் அவனை வணங்காது சீதை இருக்கும் தென் திசை நோக்கி வணங்கியெழுந்தபின் கூறிய வார்த்தைகள் இவை.
வெறுமனே சீதையைக் கண்டேன் என்று கூறாமல், கற்பினுக்கு அணியைக் கண்டேன் என்று கூறியது, அவள் கற்பின் உறுதிப் பாட்டைத் தெளிவாகப் புலப்படுத்துவதாக உள்ளது.

Page 199
சீதையின் கற்பினால் மண்ணுலக மடந்தையரேயன்றி விண்ணுலக மாதரும் பெருமை பெற்றனர் எனக் கூறுகிறார் கம்பர். இந்த உண்மையை உள்ளத்தில் வாங்கிக் கொண்டதால் தான், வியாக்கியான கர்த்தா பெரிய வாச்சான் பிள்ளை “சிறையிருந்தாள் ஏற்றம் கூறும் நூல் இராமாயணம்” என்றார்.
மாதரசியாகச் சீதை
இராவணனைக் கொன்ற பின் சீதையை அழைத்துவர, அனுமனைச் சீதையிடம் அனுப்பினான் இராமன். அனுமன் சீதையை வணங்கி 'அம்மணி திரிசடை நீங்கலாக உமக்கு ஊறு புரிந்த அரக்கியர் அனைவரையும் என் கூரிய நகங்களாற் பிளந்து அழித்து ஒழிக்க வரம் தருக” என்று கேட்கிறான். இதைக் கேட்டு சீதை 'அன்பினோய்’ என அனுமனை விளித்து, “இவ்வரக்கியர் இராவணனின் ஏவலைச் செய்தனர். அல்லாது வேறு என்ன தீமை செய்தனர். எனவே நீ இவர்களிடம் பகைமை பாராட்டாதே’ என்கிறாள். பெண்குலத்துக்கே பெருமை சேர்த்த இந்த மாதரசி இராமனிலும் சிறந்தவளாகவே இராமாயணத்திற் காட்டப் படுகிறாள். இராமன் தன்னிடம் சரண் புகுந்தவர்களை மட்டுமே காத்தான். ஆனால் தஞ்சம் புகாதவர்க்கும், குற்றம் புரிந்தவர் களுக்குங் கூட சீதை பாதுகாப்பளித்தாள்.
இத்தகைய மேன்மைகள் பல பொருந்தியவளாய் சீதை விளங்கியதால் தான் ஆன்மீகத் தூதுவரான சுவாமி விவேகானந்தர் பிராட்டியை “பெண்டிர் எண்ணங்களின் எல்லையாய், பொறுமை, பிறருக்காகத் துன்பங்களைத் தாங்கிக் கொள்ளும் திறம், உண்மை நெறி ஆகியவற்றின் உருவமாய் விளங்குபவள் சீதை' எனப் போற்றியுள்ளார். (தேஹ.)
சீமந்தம்
சீமந்தம் என்பது இந்துக்களால் ஒரு பெண் திருமணமாகி அவளது முதல் கர்ப்ப காலத்தில் செய்யப்படுகின்ற ஒரு சடங்கு. கர்ப்பமான நான்காம், ஆறாம், எட்டாம் மாதங்களிற் செய்யப்படுவது; சீமந்தத்திற்கு முன் பும்ஸவனம் என்ற சடங்கைச் செய்யவேண்டும். கர்ப்பம் தெரிந்த பின் கரு அசைய ஆரம்பிப்பதற்கு முன் 2 அல்லது 3ஆம் மாதத்திற் பும்ஸவனம் செய்ய வேண்டும். பிறப்பது ஆண்குழந்தையாக இருக்க வேண்டும் என்று கருதியே சடங்குகள் செய்யப்படுகின்றன. தகசாந்தி, காப்பணிதல் நிகழ்ந்த பிறகு நித்யகர்மாவை முடித்துக் கொண்டு, அனுக்ஞை, சங்கல்பம், அக்னிஹோமம், ஜயாதி ஹோமம் செய்ய வேண்டும். ஆலங்கொழுந்து இருகாய்கள் உள்ளதாகவும், புதுவஸ்திரம், அம்மிகுழவி இவைகள் ஸாதனம் செய்த பிறகு, ஜயாதிஹோமங்கள் நிறைவேறி ஒரு கன்னிப்பெண்ணைக் கொண்டு ஆலங்கொழுந்தை அம்மியில் அரைத்து, புது வஸ்திரத்தில் வைத்து க்ருஹப்ரீதி செய்தபின் “புகும்ஸவனமஸி’ என்ற மந்திரத்தைக் கூறிக் கணவன் தனது கட்டை விரலால் மனைவியின் வலது நாசியிற் பிழிய வேண்டும்.

3
மனைவியை மேற்குமுகமாக உட்காரவைத்துக் கணவன் கிழக்கு
முகமாகவிருந்து பிழியவேண்டும்.
பும்ஸவனத்துடன் சீமந்தமும் சேர்த்தே செய்யப்படுகின்றது. கர்ப்பிணியின் தலைமயிரை, பன்றிமுள், தர்ப்பை, பேத்திக் கொத்து ஆகியவைகளால் வகுடாகப் பிரிப்பதால் சீமந் தோன்னயநம் என்று இதற்குப் பெயர் வந்தது. கர்ப்பிணியின் வகிட்டில் மூதேவி விலகி சீதேவி குடிகொள்வதற்காக இது செய்யப்படுகின்றது. பிறகு வீணை வாசித்து அந்த இனிய இசையை கர்ப்பிணிப் பெண்
கேட்கச் செய்ய வேண்டும்.
மேலும் நிலவு வந்தவுடன் முளையுடன் கூடிய நெற்பயிரை வஸ்திரத்தில் கட்டி, அதைக் கருக்கொண்ட பெண்ணின் சிரசில் கட்டி நக்ஷத்திர உதயம் வரை மெளனமாக இருந்து பின் கன்றுக் குட்டியைப் பின் தொடர்ந்து கிழக்காவது, வடக்காவது சென்று மெளனத்தை விடவேண்டும். ஸத்புத்ரன் பிறக்க வேண்டும் என அந்தணர்களுக்கு “பலதானம்” செய்து அக்ஷதை ஆசீர்வாதத் துடன் கர்மாவை நிறைவு செய்ய வேண்டும். பும்ஸவனம், சீமந்தம் இவைகளை புருஷ நட்சத்திரத்தில், - மிருகசீடம், புனர்பூசம், பூசம், மூலம், திருவோணம் - முக்கியமாகப்பூசத்தில் செய்வது வழக்கம். கர்ப்பதானம், சிசு தங்க இருக்கும் கருவளையைத் தூய்மையாக்கி அங்கு தெய்வ அருள் சூழச் செய்து கருவை உருப்பெறச் செய்ய ஏற்றது. பும்ஸவனம் ஆண்குழந்தைகளை வீரியமுடன் பிறக்கச் செய்யும். சீமந்தம் தாயும் கருவும் தூய்மை பெறவும் தெய்வ அருள் சூழ்ந்து நின்று காக்கவும் செய்யப்படுகிறது. (வ, வை.)
சீறியாழ்
拉றியாழ் சங்காலத்திற் பெரு வழக்கிலிருந்த ஒரு பழமையான கருவியாகும். இது பேரியாழுக்கு எதிர்மறையான பொருள் கொண்டது. சீறியாழ் சிலப்பதிகாரம், பெருங்கதை ஆகிய இரண்டு காப்பியங்களிலும் இடம்பெற்றுள்ளது.
சீறியாழ் பத்தல், போர்வை, நரம்பு, கோடு, திவவு ஆகிய உறுப்புக்களைக் கொண்டமைந்ததாகும். கோடு என்னும் உறுப்பு வரி - மரக் கொம்பு எனப் பொருள்படும்.
சிறுபாணாற்றுப் படைக்குறிப்பிலிருந்து இவ்வுறுப்பு கருங்காலியினாற் செய்யப்பட்டு வலிவு மிக்கதாய் பாம்பு படமெடுத்தாற் போன்று தலைதூக்கி நிற்கும் அமைப்பினைக் கொண்டிருந்தது என அறியலாம்.
பத்தல் என்னும் உறுப்பு கலம் எனப்படும். பத்தலை மூடிய உறுப்பு போர்வை என்ற பெயரில் சங்க நூற்களில் இடம் பெற்றுள்ளது. திவவு என்னும் உறுப்பு நரம்புகளை யாழின்
இந்துக் க்களஞ்சியம்

Page 200
கோட்டுறுப்பில் அமைவுறக் கட்டும் வார்க்கட்டுகளாகும். நரம்பு
யாழில் இசையெழுப்பக் கட்டப் பட்டிருக்கும் உறுப்பு ஆகும்.
‘கருங்கோட்டு சீறியாழ்', 'வணர்கோட்டு சீறியாழ்” என்னும் குறிப்புக்கள் இந்த யாழின் கோட்டுறுப்பு வனர் என்னும் வளைவான பகுதியையும் கரிய நிறத்தையும் கொண்டதாக அமைந்தது என்பதை உணர்த்துகின்றன. புறநானூற்றுக் குறிப்பு சீறியாழ் கைவழி என்னும் பெயருடையது என்பதனையும் உணர்த்துகின்றது. பாணர்கள் எங்கு சென்றாலும் கையில் எடுத்துச் செல்வதற்கு வசதியாக இருப்பதால் 'கை வழி என்ற
பெயர் உருவானது.
பழந்தமிழ் நூல்களான புறநானூறு, பொருநராற்றுப்படை, சிறு பாணாற்றுப்படை, அகநானூறு, மதுரைக் காஞ்சி, நற்றிணை, ஐங்குறுநூறு, மலைபடுகடாம் ஆகியவற்றிலே சீறியாழ் பற்றிய பல குறிப்புக்கள் கிடைக்கின்றன. பொருநராற்றுப் படையில்
NYM ఏపీడ N豊/ %*< ޏަ:ށ ބަ;&
சுக்கிரன்
சிக்கிரன் என்பது சூரிய மண்டலத்திற் சுற்றி வரும் கோள்களுள் ஒன்று. ஆங்கிலத்தில் வீனஸ் (Venus) என்று அழைப்பார்கள். வானசாஸ்திர அடிப்படையில் இக்கிரகம் சூரியனிலிருந்து 67 மில்லியன் மைல் தொலைவில் உள்ளது. இது சூரியனை 224 நாட்கள் 17 மணி நேரத்தில் சுற்றி வருகின்றது. சுக்கிரனுக்குத் துணைக் கோள்கள் எதுவுமில்லை. மிகப் பிரகாசமாக வானில் ஒளி வீசும் கிரகம், சூரிய உதயத்திற்கு முன் பிரகாச ஒளியுடன் உதிர்ந்து விழும். அதனை வெள்ளி முளைத்தது என்பர். அதன் விட்டம் 7,526 மைல்களாகும். அது கிட்டத்தட்ட பூமியின் எடையில் 82 பங்கு கொண்டதாகும்.
சுக்கிரன் மெதுவாக இயங்கும் கிரகமாகும். அது தன்னைத் தானே சுற்றி வருவதற்கு 243 நாட்கள் ஆகின்றன. இக் கோளைச் சுற்றி அழுத்தமான வாயு மண்டலம் இருப்பதால் அதனைப் பற்றி ஆராய்ந்து அறிவது மிகக் கடினம் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இவ் வாயு மண்டலத்தில் மிகப் பெரும் பகுதி கரிய அமில வாயுவேயாகும். அதன் மேற்பரப்பின் உஷ்ணம் கிட்டத்தட்ட 600 பாகை. இக் கோளில் உயிர்கள் இல்லை. சுக்கிரன் பூமியிலிருந்து 4,1889,000 கி.மீ. தூரத்தில் உள்ளது. இக் கோள் சூரியனுக்கும் பூமிக்கும் இடையிலே சுற்றி வருகின்றது.
சுக்கிரன் சோதிடவியலின் பிரகாரம் நவக்கிரகங்களில் ஆறாவது இடத்தை வகிப்பவர். கிழக்குத் திசை நோக்கி ஒளி
இந்துக்கலைக்களஞ்சியம் 17.

“பண்ணமை சீறி யாழ்' என்றும், சிறுபாணாற்றுப் படையிலும் நற்றிணையிலும் “இன்குரற் சீறியாழ்” என்றும், புறநானூற்றில் “தே எந்தீந்தொடை சீறியாழ்” என்றும் கூறப்பட்டதிலிருந்து இதன் இனிமை புலப்படுகின்றது. சீறியாழின் கோடு வளைந்திருப்பது பற்றி "வணர் கோட்டு சீறியாழ்' என சிலப்பதிகாரம் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது. சீறியாழிற் செவ்வழிப்பண், விளரிப்பண், நைவளம் முதலிய பண்கள் இசைக்கப் பெற்றுள்ளன. புறநானூற்றுப் பாடல்களில் 15 இடங்களில் இதனைப் பற்றி குறிப்பிடப்படுகின்றது.
சீறியாழும் செங்கோட்டி யாழும் இரு வேறு யாழ்கள் என்று பேராசிரியர் வெள்ளை வாரணனார் இசைத்தமிழ் என்னும் நூலிற் கூறியுள்ளார். அவை இரண்டும் ஒரே வகையான யாழ் என டாக்டர் வரகுண பாண்டியன் பானர் கைவழி என்னும் யாழ் நூலிற் குறிப்பிட்டுள்ளார். (ക്ര. ബ്ര)
※ N寧/
●●● 49 MAN MAN
விடுபவர். சுக்கிரன் வெண்ணிற மேனி உடையவர்; நான்கு கரங்களிற் கமண்டலமும், அட்சரமாலையும் தண்டமும் வரதக் குறிப்பும் தாங்கி இருப்பவர்; கருட வாகனத்தில் எழுந்தருளுபவர்; இவருக்கு முதலையும் வாகனமாக உள்ளது. பஞ்சகோண பீடமுடையவர். மேருவை வலம் வருபவர், சூரியனுக்கு கிழக்கே பஞ்சகோண மண்டலத்தில் அமர்பவர். பத்துக் குதிரை பூட்டிய தேரில் வருபவர். இவ்வாறு நூல்கள் சுக்கிரன் பற்றி வர்ணிக்கின்றன.
சுக்கிரனுக்கு அதி தேவதை இந்திராணி, சுக்கிரனுக்கு உசறன், பார்கவன், அசுரகுரு, சிவன், நற்கோள் என்ற பெயர்களும் உண்டு. கவி, காவீயன், ஹிமாடன், குந்தவணன், சுபீராம்சு, சுக்லாம் பரதரன், சுக்ல பூஷணன், ஸுதி ஆத்மவித், வேதாந்த பாரகன், மஹாமதி, தீதிஞ்ஜன், நீதிக்ருத், நீதி மார்க்ககாமி, கிரகாதிபன், பிரபு, கருணா சித்து, தைத்ய மந்திரி, தைத்ய குரு என்ற பெயர்கள் இருப்பதாக வட மொழி நூல்கள் மூலமாக அறிய முடிகின்றது.
சுக்கிரன் இல்லற சுகம், வீடு, வாகனம், செல்வ வளம், ஆடம்பரம் போன்றவற்றிற்கு அதிபர். வேதங்களில் யசுர் வேதத்திற்கு உரியவர்; ஒற்றைக் கண்ணுடையவர்; சகல கலைக்கும் ஆதிபத்யம் உடையவர். இவர் அழகை ரசிப்பவர். தன தான்யங்களையும் செல்வத்தையும் திரவியங்களையும் கொடுப்பவர். பொன், பொருள் ஆண்டு அனுபவிப்பதால் ஏற்படும் சுகங்களும் சுக்கிரன் அருளாற் கிடைப்பன. ஒரு ஜாதகத்தில்

Page 201
உச்சம், ஆட்சி, நட்பு பெற்றால் ஜாதகர் எல்லாப் போகங்களையும் அனுபவிக்கும் நிலையைப் பெறுவார்.
சுக்கிரன் காதற் கடவுள் என வர்ணிக்கப்படுகின்றார். சுக்கிரன் அக்னி திசைக்கு அதிபதி என்றும், மழைக்கு அதிபதி எனவும் கூறப்படுகின்றார். பஞ்ச பூதங்களில் நீரும் நவரத்தினங்களில் வைரமும் இவருக்கு உகந்ததாகும். ராஜஸ குணம் கொண்டவர். கிரகங்களில் ஆண்-பெண் பிரிவில் இவர் பெண் பிரிவிற்குரியவர். ரிஷபம், துலாம் இராசிகள் இரண்டும் இவருக்குச் சொந்தவீடுகள். மீனம் உச்ச வீடாகவும், நீச வீடாகக் கன்னியும் குறிக்கப் பெறுகின்றன. நட்சத்திரங்களிற் பரணி, பூரம், பூராடம் என்ற மூன்று நட்சத்திரங்களுக்கும் நாயகனாக விளங்குபவர்.
சுக்கிரனுக்குச் சூரியனும், சந்திரனும் சத்துரு கிரகங்களாகும். சனியும், புதனும் நண்பர்கள். குரு, செவ்வாய் சமமானவர்கள். ஏனையோர் பகைவர்கள் ஆவர். சோதிட நூல்கள் சுக்கிரனைக் களத்திர காரன்’ என்று குறிக்கின்றன. சுக்கிர திசையைப் பொதுவாக வாழ்வின் உச்ச திசையாக குறிப்பிடுவது பொது மக்களின் வழக்கமாகும்.
சுக்கிரன், சப்த ரிஷிகளில் ஒருவரான பிருகு முனிவர் அவரின் பத்தினியாகிய கியாதி ஆகிய இருவருக்கும் புதல்வராகத் தோன்றியவர். சுக்கிரன் இளமையிலே கல்வி கற்றுச் சகல சாஸ்திரங்களையும் கற்றுத் தேர்ச்சி பெற்றார். அசுரர்களுக்குக் குருவாக அமர்ந்து அவர்களை வழிநடத்திச் சென்றார். அசுரர்களுக்கு உதவும் பொருட்டு இறந்தவர்கள் உயிர் பெற்று எழும் அமிர்த சஞ்சீவி மந்திரம் கற்க ஈசனை நோக்கிப் பல ஆண்டுகள் தவம் செய்து ஈசனிடமிருந்து இவ்வரத்தைப் பெற்றார்.
சுக்கிரன் தவம் செய்யும் காலத்தில் இந்திரன்மகள் ஜெயந்தி அவருக்குப் பணிவிடை செய்து வந்தாள். அவர் வரம் பெற்ற பின் அவரையே மணந்து தேவயானி, அரசை என்ற பெண் குழந்தைகளையும், இரு ஆண் குழந்தைகளையும் பெற்றுக் கொடுத்து விட்டுத் தேவர் உலகம் சென்றுவிட்டாள். ஒரு சமயம் அந்தகாசுரன் தலைமையில் அசுரர்கள் தேவர்களுடன் போரிட்டனர். போரின்போது மாண்ட அசுரர்கள் எல்லோரையும் பார்கவர் சஞ்சீவி மந்திரத்தால் எழுப்ப, அசுரர்கள் பலம் அதிகரித்தது. போரிட முடியாத தேவர்கள் சிவபெருமானிடம் முறையிட சிவபெருமான் சுக்கிரனை விழுங்கி விட்டார். போர் தொடர்ந்து நடந்ததால் அந்தகாசுரன் இறந்துவிட்டான். சுக்கிரன் இறைவனின் திருவயிற்றிலே பல ஆண்டுகள் அந்த இறைவனையே எண்ணித் தவம் செய்ய, இறைவனும் அருள் கூர்ந்து சுக்கிரனை வெளிவரச் செய்தார். வெளிவந்த சுக்கிரன் வெண்ணிறமாக இருந்ததால் சுக்கிரன் என்று பெயர் பெற்றார். தேவர்கள் குருவான பிரகஸ்பதி தனது மகன் கச்சனை அசுரகுருவான சுக்கிரனிடம் அனுப்பி எப்படியாவது சஞ்சீவி மந்திரத்தைக் கற்றுவர விரும்பினார். கச்சனும் சுக்கிரர் ஆச்சிரமம் சென்று சுக்கிரனுக்கு சீடனாகி அவருக்கு பணிவிடைகள் செய்து

வந்தான். பின்பு அவரது மகன் தேவயானியிடம் அன்பாக நடந்து கொண்டான். ஆனால் அசுரர்கள் கச்சனைக் கொன்று விட்டார்கள். ஆனால் தேவயானி கச்சன் மீது கொண்ட அன்பினால் அழுது தொழ சுக்கிரன் சஞ்சீவி மந்திரத்தால் கச்சனை எழச் செய்தார். அசுரர்கள் மீண்டும் கச்சனைக் கொன்று சாம்பலாக்கி நீரிற் கரைத்து சுக்கிரனை குடிக்கும் படி சூழ்ச்சி செய்து விட்டனர். மீண்டும் தேவயாணி அழுது புலம்ப சஞ்சீவி மந்திரத்தால் கச்சன் உயிர் பெறச் செய்து அவனுக்கு அந்த மந்திரத்தை கற்றுக் கொடுத்து அவனை தம் வயிற்றிலிருந்து வெளிவரச் செய்தார். கச்சன் வெளிவரச் சுக்கிரன் இறந்தார். கச்சன் தாம் கற்ற மந்திரத்தால் தேவ குருவாகிய சுக்கிரனை உயிர் பெறச் செய்து விட்டு தேவலோகம் சென்றான்.
தேவயானி கச்சன் மீது கொண்ட அன்பினால் அவன் பிரிந்தது பொறுக்க மாட்டாது தன்னை மணக்காமல் ஏமாற்றி விட்டான் எனக் கருதி, அவன் கற்ற சஞ்சீவி மந்திரம் பலனற்றுப் போக எனச் சாபமிட்டாள். சுக்கிரனுக்கு ஈசன் விதியை மீறிப் பிறருக்கு உபதேசம் செய்ததால் மந்திரம் பலனின்றிப் போய்விட்டது.
ஒரு சமயம் மகாபலி என்ற அசுர அரசன் வாமனராக திருமாலுக்கு மூன்றடி மண் தானமாகக் கொடுக்க தாரைவார்க்கும் போது, கெண்டியின் வாயினுள்ளே ஒரு வண்டாக உருவெடுத்துப் புகுந்து சுக்கிரன் தடுக்க, வாமனர் தர்ப்பைப் புல் கொண்டு கெண்டியின் வாயைச் சரி செய்ய அது சுக்கிரர் கண்ணைக் குருடாக்கி விட்டது. பின்பு சுக்கிரர் காசிக்குச் சென்று இறைவனை வழிபட்டுத் தவம் செய்து நவகோள்களில் ஒருவராக கிரக பதவியை அடைந்து உயிரினங்களுக்கு அவரவர் விதிப்படியான நன்மைகளைச் செய்து உலகை பரிபாலனம் செய்து வருகிறார். இவ்வாறு சுக்கிராச்சாரியார் புராணம் அவரது அருமை பெருமைகளை விளக்குகின்றது.
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கஞ்சனூர் என்ற திருத்தலம் சுக்கிரனுடைய தலமாகும். இங்கு ஒரு முறை சென்று வந்தால் சுக்கிர தோஷம் நிவர்த்தியாகும். கற்பகாம்பிகை சமேத அக்னீஸ்வரர் திருக்கோயிலில் சுக்ர பகவான் எழுந்தருளியுள்ளார். இக் கோயிலிற் சுக்கிரனுக்கு என்று தனிச் சந்நிதி கிடையாது. மூல மூர்த்தியே சுக்கிரனின் சாந்நித்யம் கொண்ட அதி தேவதா மூர்த்தியாக விளங்குகின்றார். அதனால் அக்னீஸ்வரரைச் சுக்ரபகவானாகக் கொண்டு பக்தர்கள் வழிபட்டு வருகின்றனர்.
சுக்கிர தோஷமும், பரிகாரமும்
சோதிடப்படி ஜாதகத்திற் சுக்கிரன் நீசம் பெற்றால் இல்லற இன்பம் கிடைக்காது. பெண்களால் அவமானம் உண்டாகும். எந்தக் காரியத்திலும் வெற்றி கிடைக்காது. செல்வம் பெருகாது. சுக்கிரன் ஏழாம் இடத்தில் இருந்தால் அதிக காமம் ஏற்படும். எட்டாம் இடத்தில் இருந்தால் பீடை உண்டாகும். சூரியனுடன் கூடினால் கன்னம், வயிறு, கண் என்பவற்றில் நோய் உண்டாகும்.
இந்துக் க்களஞ்சியம்

Page 202
இவ்வாறு சுக்கிரனால் ஏற்படும் சகல தோஷங்களுக்கும் வெள்ளிக்கிழமை நவக்கிரக பீடத்தில் உள்ள சுக்கிர பகவானை ஒன்பது முறை வலம்வர நலமுண்டு. கிரக ஷேத்திரமான பூரீரங்கம் சென்று தெய்வ தரிசனம் செய்து வர கிரக தோஷம் நீங்கும். கிரகபிரீதியாக மொச்சை சுண்டல் செய்து சுக்கிர பகவானுக்கு நைவேத்யம் செய்து ஏழைகளுக்குத் தானம் செய்வது மிகச் சிறந்ததாகும். இதுவல்லாது சுக்கிர பகவானுக்குரிய காயத்ரி மந்திரம், தியானம், அஷ்டோத்திரம் போன்றவற்றைப் பாராயணம் செய்து வழிபட நன்மையுண்டாகும் என்று சோதிட நூல்கள் கூறுகின்றன. தேஹ.)
சுந்தரமூர்த்தி நாயனார்
இவர் சைவ நாயன்மார் அறுபத்து மூவருள் ஒருவர்; இவர் பாடிய 'திருத்தொண்டத் தொகை'யை அடிப்படையாகக் கொண்டே நம்பியாண்டார் நம்பியும் பின் சேக்கிழாரும் சைவநாயன்மார் அறுபத்து மூவர் என்ற வரையறையை ஏற்படுத்துவாராயினர், தேவார முதலிகள் மூவருள் ஒருவராகவும் சைவ சமயகுரவர் நால்வருள் ஒருவராகவும் இவர் போற்றப்படுவர். இவரது வரலாற்றைப் பெரியபுராணம் வருமாறு கூறுகிறது. திருக் கயிலையிற் சிவபெருமானுக்குத் தொண்டு செய்யும் அணுக்கத் தொண்டர் ஆலால சுந்தரர். எம்பெருமானுக்கு மணம் மிகுந்த மலர்களையும், திருநீற்றையும் தாங்கும் பணிபுரிபவர். ஒருநாள் மலர் கொய்துவர திருநந்தவனம் செல்ல, அங்கு உமாதேவியாரின் பணிப் பெண்களாகிய, அநிந்திதை, கமலினி என்ற இருவரையுங் கண்டு மையல் கொண்டார்.
மாதவம் செய்து தென்திசை வாழவும், திருத்தொண்டர் தொகை என்ற பக்திப் பனுவல் உலகினர்க்குக் கிடைப்பதற் காகவும்தான் இறைவன் ஆலால சுந்தரரின் உள்ளத்தை அவ் வழகிகள்பாற் செலுத்தினார் என்பார் சேக்கிழார் பெருமான்.
ஆலாலசுந்தரரின் எண்ணக்கருத்தை அறிந்த கண்ணுதற் பெருமான் 'அம்மாதர்களின்மேல் மனம்வைத்த காரணத்தால் மண்ணுலகிற் பிறந்து அப்பெண்களை மணந்து, காதல் இன்பம் துய்த்து பின்னர் கயிலைக்கு வருக என்று திருவருளாணை பிறப்பித்தார். அதனைக் கேட்டு மனம் கலங்கிய சுந்தரர் "மானிடப் பிறப்பிற் பிறந்து மயங்கும் பொழுது அடியேனைத் தடுத்து ஆட்கொள்ள வேண்டும்” என்று விண்ணப்பிக்கப் பெருமானும் அதற்கு இசைந்தார்.
திருமுனைப்பாடி வளநாட்டிலே திருநாவலூர் என்ற புண்ணியப் பதி. அங்கு மாதொரு பாகனாருக்கு வழிவழியடிமை செய்யும் புண்ணிய சீலர் சடையனார் என்பவர். அவரது
மனையறத்தின் விளக்கு இசைஞானியார். இவர்களின்
இந்துக் க்களஞ்சியம்
17

மனைவிளங்க அவதரித்தார் நம்பியாரூரர். இவர் சிறு வயதிலேயே அந்நாட்டு அரசராகிய நரசிங்க முனையரால் மகன்மை கொள்ளப்பட்டார். அந்தணருக்குரிய ஒழுக்கமும், அரசர்க்குரிய மரபும் பிறழாது ஒழுகினார்.
கலைச்செல்வமும், கல்விச்செல்வமும் பொருட் செல்வமும் ஒருங்கே பெற்ற நம்பியாரூரர் திருமணப் பருவம் அடைந்தார். புத்தூரில் வாழ்ந்து வந்த சைவ அந்தணராகிய சடங்கவி சிவாச்சாரியாரின் மகளைத் திருமணம் பேசி, திருமண நாளும் குறிக்கப் பெற்றது. அழகே உருவு கொண்டு வந்தது போல நம்பியாரூரர் மணமகன் கோலத்தில் உற்றாரும், பெரியோரும் கூடிய சபையில் மணத்தவிசு ஏறினார்.
நம்பியாரூரர் ஆலால சுந்தரராக இருந்த பொழுது வேண்டிக்கொண்டதற்கொப்ப அவரைத் தடுத்தாட்கொள்ளச் சிவபெருமான் கிழ வேதியராக வடிவெடுத்து வந்தார். நெற்றி நிறையத் திருநீறு நெற்றிக் கண்ணை மறைப்பது போல; தலையிலே நிறைமதியை ஒத்த நரைமுடி, காதுகளில் குழை, மார்பிலே கண்டிகையும் முப்புரிநூலும், தோளிலே வெண்ணிற ஆடை, இடையிலே கோவணம்; கையிற் குடை மறு கையில் ஆடையும், தர்ப்பைப் புல்லும் முடிந்த மூங்கில் தண்டு, மூப்பின் முதிர்வால் தள்ளாடிய நடை, கண்டவர் அனைவரும் வியந்தனர்.
முதிய அந்தணர் வேகமாகத் திருமணப் பந்தரை அடைந்து, நம்பியாரூரர் முன் நின்று கொண்டு, அங்கிருந்த பெரியோர்களை நோக்கி, “இந்த நம்பியாரூரன் எனது அடிமை, எனது இந்த வழக்கை முடித்து விட்டுத் திருமணம் செய்யலாம்” என்று கூறச் சபையோர் அனைவரும் வியப்பு மேலோங்க நோக்க, திருநாவலூரரும் 'நன்று, நன்று இவ்வந்தனர் கூறும் வார்த்தை மிக நன்று” என்று இகழ்ச்சியுடன் கூறினார். உடனே முதியவர் ஆரூரர் அருகிற் சென்று "அக்காலத்தில் உனது பாட்டன் எழுதிக் கொடுத்த அடிமை ஒலை என்னிடம் உள்ளது. நீ சிரிப்பது ஏன்? என்று கேட்டார். சிரிப்பதை நிறுத்திய நாவலூர் நம்பிகள், அவரை நோக்கி, "சைவ அந்தணர் மற்றோர் அந்தணருக்கு அடிமையாவது என்பதை இன்று தான் உம்மிடமிருந்து அறிந்தேன். இவ்வாறு பேசும் நீர் பித்தனோ” என்று கேட்டார். "பித்தனும் ஆகுக, பேயனும் ஆகுக. நீ எனக்குப் பணி செய்’ என்றார் முதியவர்.
நம்பியாரூரரின் உள்ளத்தில் முதியவரைக் காணும் இன்பமும், அவர் கூறியதைக் கேட்கும் பொழுது கோபமும் ஒருமித்துத் தோன்றின. பின்பு ஒலையின் உண்மையை அறியும் பொருட்டு "ஐயா! அடிமை ஒலை உள்ளது என்றிரே? அதனைக் காட்டும். உண்மை அறிவேன்’ என்றார்.
அதனைக் கேட்ட முதியவர் “நீ அவ்வோலையைக் காணத் தகுதியுடையவனோ! அவையினரின் முன் காட்டுவேன் அவர்கள் முடிவு கூறியபின் நீ எனக்குப் பணி புரிய வேண்டும்” என்றார்.

Page 203
ஆரூரர் சினத்தின் எல்லைக்கே சென்று, அம் முதியவரிடம் உள்ள ஒலையைப் பறிக்க விரைந்த பொழுது முதியவர் ஒலையைக் கொடுக்காமல் ஓடினார். அவரைத் தொடர்ந்து ஓடினார் நம்பியாரூரர். ஒடி ஒலையைப் பற்றிக் கிழித் தெறிந்தார். உடனே முதியவர் வேடம் தாங்கி வந்த முதல்வன் நம்பிகளின் கரங்களைப் பிடித்துக் கொண்டு “இது முறையோ’ என்று கூச்சலிட்டார்.
கூக்குரலைக் கேட்ட அவையினர் அவ்விருவரையும் விலக்கி விட்டு " உலகில் இதுவரை நடைமுறையில் இல்லாத வழக்கைக் கொண்டு வாதாடும் மறை முனிவரே! நீவிர் எங்கு இருப்பவர்?’ என்று கேட்டார்கள். எல்லாமாய், எங்கும் நிற்கும் முது வேதியர் "நான் இருக்கும் இடம் நெடுந்தூரமன்று. அண்மையில் இருக்கும் திருவெண்ணெய் நல்லூரேயாகும். ஆரூரர் அறமுறை தவறி எனது ஒலையைக் கிழித்து விட்டான். அதன் மூலமாகவே அவன் அடிமை என்பது உறுதியாயிற்று” என்றார்.
அம்மொழி கேட்ட நம்பி இம்முதியவர் வழக்காடுவதில் வல்லவர் போலும் என்று தம்முள் எண்ணியவாறு, "ஐயா! உமது இருப்பிடமாகிய திருவெண்ணெய் நல்லூருக்கே சென்று உமது பிழை பட்ட வழக்கைப் பேசுவோம்” என்றார். வேதியர் முன்செல்ல
காந்தத்தைத் தொடரும் இரும்பு போல் நம்பியாரூரர் பின் சென்றார்.
திருவெண்ணெய் நல்லூரில் அறிஞர்கள், அந்தணர்கள் நிறைந்த சபையிலே வேதியர் நடந்தவற்றைக் கூற, அங்கிருந்தோர், “வேதியருக்கு வேதியர் அடிமையாகும் வழக்கம் இல்லை. இது பொருந்தா வழக்காக இருக்கின்றது. நம்பியாரூரர் உமது அடிமை என்பதை ஆட்சியில், ஆவணத்தில் அல்லது சாட்சியில், நிரூபிக்க வேண்டும்.” என்று கூறினார்கள். முதியவரும் சளைக்காது, “சபையாரே! இந் நம்பியாரூரன் முன்னர் கோபத்திற் கிழித்த ஒலை படி ஒலை, மூல ஓலை இருக்கிறது. படித்துப் பாருங்கள்” என்று சபையோரிடம் கொடுக்க, கருணிகனைக் கொண்டு அந்த ஒலையை வாசிக்கச் சொன்னார்கள். அவ்வாறே கருணிகனும்
மேல்வருமாறு படித்துக் கூறினான்.
“திருநாவலூரில் இருக்கும் ஆதிசைவனாகிய ஆரூரன் என்னும் பெயருடைய நான், திருவெண்ணெய் நல்லூர்ப் பித்தனுக்கு எழுதிக் கொடுத்தது. நானும் என் வழி வரும் மரபினர்களும் வழிவழியாய் அடிமை செய்து வருவோம் என்பதற்கு உள்ளும், புறமும் ஒருமைப்பட்டு எழுதிக் கொடுத்தேன். இதற்கு இஃது என் கையெழுத்து’ இவ்வாறு கருணிகன் வாசித்துக் கொடுத்த ஒலையின் கையெழுத்தோடு நம்பியாரூரரின் பாட்டனார் கையெழுத்து ஒத்திருந்ததைக் கண்ட அவையோர்கள் நம்பிகளை நோக்கி, ‘இனி இம் முதியவரின் வழக்கை மறுப்பதற்குக் காரணம் இல்லை. நீர் தோற்றுவிட்டீர். இவருக்கு அடிமை செய்வதே உமது கடமை” என்று தீர்ப்பு வழங்க
திருநாவலூரரும் அதற்கு இணங்கினார்.

77
அங்குள்ள அந்தணர்கள் “முதியவரே! உமது ஊர் இதுவானால் உமது வீட்டைக் காட்டுவீராக” என்று கூற “என்னை நீவிர் அறியீரானால் என்னுடன் வாருங்கள்” என்று கூறி திருவெண்ணெய் நல்லூர்க் கோயிலான அருட்டுறைக்குட் சென்று மறைந்தார். திருநாவலூரருக்குக் காட்சி தரச் சிவபெருமான் உமாதேவியாருடன் விடையின் மேலே தோன்றி, “நீ முன் கயிலையிற் கேட்டுக் கொண்ட வண்ணம், இவ்வுலகத் துன்பம் உன்னைத் தொடராதிருக்க நாமே தொடர்ந்து வந்தோம். அந்தணர்கள் முன்னிலையில் நாமே தடுத்தாட் கொண்டோம்” என்று திருவாய் மலர்ந்து அருளினார்.
தாய்ப்பசுவின் குரலைக் கேட்ட கன்றுபோல் பதைத்துக் கதறிக் கரங்களைச் சென்னிமிசைக் கூப்பிக் கண்ணிர் அருவி சொரிய "தேவரீர் அடியவனை வலிந்து வந்து ஆட்கொண்டது, அளவற்ற கருணையின் செய்கையே’ என்றார்.
தேவர்கள் பூமாரி பொழிய, மங்கல வாத்தியங்கள் விண்ணினின்று ஆர்க்க, சிவபெருமான் நாவலூரருக்குத் தம்மிடம் வன்மை பேசியதால் வன்தொண்டன்' என்னும் நாமம் சூட்டி, தம்மைத் தமிழில் பாடுமாறு அருளினார்.
மற்றுநீவன்மை பேசி வன்றொண்டன் என்னும் நாமம் பெற்றனை நமக்கும் அன்பிற் பெருகிய சிறப்பின் மிக்க அர்ச்சனை பாட்டே ஆகும் ஆதலால் மண்மேல் நம்மைச் சொற்றமிழ் பாடு கென்றார் தூமறை பாடும் வாயார்
வன்தொண்டர் திகைத்து, “கோதிலா அமுதே குணப் பெருங்குன்றே! உம்மை யாது கூறி எப்படிப் பாடவல்லேன்’ என்று கசிந்து உருகினார். “நம் பெயரைப் பித்தன் என்று கூறியதால் - பித்தன் என்றே பாடுக” என்று அருளாணை தந்தார், மூவுலக முதல்வன்.
நம்பியாரூரரும், பித்தா! பிறைசூடி’ என்றெடுத்துத் தமிழ்மாலை சூட்டினார். வன்தொண்டர் திருவெண்ணெய் நல்லூரை விடுத்துத் திருநாவலூரையடைந்து அங்குள்ள இறைவனைப் போற்றிப் பதிகம் பாடினார். அப்பதிகம் தற்போது கிடைக்கவில்லை. பின்பு திருத்துறையூர் சென்றுமலையா ரருவித் திரள் என்று பாட இறைவன் நம்பி வேண்டியவாறு தவநெறியைத் தந்தருளினார். பின்பு சிதம்பரத்தைக் காண விழைந்து, பெண்ணையாற்றைக் கடந்து திருவதிகையை அடைந்தார். திருவதிகை மருள்நீக்கியார், திருநாவுக்கரசராகி உழவாரத் தொண்டுசெய்த தலம் ஆகையால், அதனை மிதிக்க அஞ்சி சித்தவடமடத்திலே தங்கி, திருவதிகை திரு வீரட்டானேஸ்வரரை நினைந்து உறங்கினார். அப்பொழுது இறைவன் முதிய அந்தண வடிவம் கொண்டு நம்பியின் தலையிலே தமது திருவடி படுமாறு வைத்துத் தாமும் துயில் கொள்வாரைப் போன்று இருந்தார். ஆரூரர் விழித்தெழுந்து பெரியவரை நோக்கி, "ஐயா! உமது அடிகள் என் தலைமேற் படுகிறது” என்றார். அதற்கு அந்த
இந்துக்கலைக்களஞ்சியம்
1 m 6n AZ SR f

Page 204
முதியவர் 'திசையறியா வகை செய்தது எனது மூப்புக் காண்” என்று கூற, நம்பியும் வேறிடத்திற் சென்று படுத்தார். சிறிது நேரத்தில் அம்முதியவரின் திருவடி மீண்டும் தலையிலே பட்டது. நம்பியாரூரர் எழுந்து “பல முறையும் என்னை மிதிக்கும் நீர் யார்?" என்று சினந்து கேட்க ‘என்னை இன்னும் அறியவில்லையோ?” என்று கூறி முதியவர் மறைந்தார்.
வியப்பு மேலிட்ட ஆரூரர், “என் முடியில் மேல் வலிய வந்து திருவடி சூட்டியவர் இறைவர் என்று அறியாது போனேனே’ என்று வருந்தி, “தம்மானை அறியாத சாதியார் உளரே என்று பதிகம் பாடிப் பரவினார். பின்பு திருக் கெடில நதியில் நீராடி வீரட்டானேஸ்வரரைப் பணிந்து, திருமாணிக்குழி, திருத்தினை நகர் வணங்கி, தில்லைப் பதியை நோக்கிப் புறப்பட்டார்.
சிதம்பரம் சென்று திருவணுக்கன் வாயிலை அடைந்து ஆனந்த நடராசப் பெருமானை, ஐந்து பேரறிவும் கண்களே கொள்ள, அளப்பருங் கரணங்கள் நான்கும் சிந்தையே யாக, குனம் ஒரு மூன்றும் திருந்து சாத்துவிகமேயாக கூத்தப் பெருமானின் ஞானானந்தக் கூத்தில் ஒன்றினார்.
நடராஜப் பெருமானின் திவ்யத் திருக்கோலத்தைக் கண்டு நின்ற வன்தொண்டருடைய காதில் விழும்படியாக "ஆரூரில் நம்பால் வருக” என்ற அசரீரி ஒலி வானிற் கேட்டது. அதனைச் செவியுற்ற வன்தொண்டர் பெருமானிடம் விடை பெற்றுக் கொண்டு கொள்ளிட நதியைக் கடந்து சீர்காழியை அடைந்து, அது திருஞான சம்பந்தப் பிள்ளையின் அவதாரத் தலமாதலால் அதனை மிதிப்பதற்கு அஞ்சி, எல்லைப்புறமாக வலம் வந்த பொழுது திருத்தோணிபுரத் தோன்றல் உமாதேவியாருடன் வெள்விடையின் மேல் காட்சி தந்தார். சுந்தரரும் தோணியப்பரைத் திருக்கயிலையில் இருக்கும் கோலத்தில் வணங்கி, சாதலும், பிறத்தலும் தவிர்த்தென்னை' என்று தொடங்கும் பதிகம் பாடித் துதித்து, திருக்கோலக்கா, திருப்புன்கூர், திருமயிலாடுதுறை, திரு அம்பர் மாகாளம், திருப்புகலூர் முதலிய தலங்களை வணங்கிக் கொண்டு திருவாரூர் சென்றடைந்தார்.
திருவாரூர் மக்களின் கனவில் தியாகேசன் தோன்றி “நாம் அழைத்ததால் நம்பியாரூரன் வருகின்றான். அவனைச் சிறப்பாக எதிர்கொண்டழைத்து வருக!” என ஆணையிட, அவ்வாறே திருவாரூர் மக்கள் அனைவரும் திரண்டு சென்று நகரை அலங்கரித்து வரவேற்றனர். நம்பியாரூரரும் பெருமகிழ்ச்சியுடன், “எந்தை இருப்பதும் ஆரூர் அவர் எம்மையும் ஆள்வரோ கேளிர்” என்ற கருத்தமைந்த கரையுங் கடலும் என்ற திருப்பதிகத்தைப் பாடித் தொழுதவாறே திருக்கோயிலை அடைந்து, தேவாசிரிய மண்டபத்தை வணங்கித் துதித்துச் சிரமேற் குவித்த கரங்களோடு ஊனும் உயிரும் உருக வன்மீக நாதனான தியாகநாதப் பெருமானைக் கீழே விழுந்து வணங்கிப் பிறவி பெற்றதன்
பயனைப் பெற்றார்.
இந்துக் க்களஞ்சியம்
17

அப்பொழுது தியாகேசப் பெருமானின் திருவருளால் “நம்மை உனக்குத் தோழனாகத் தந்தனம், நாம் உன்னைத் திரு நாவலூரிலே தடுத்தாட் கொண்ட பொழுது தாங்கியிருந்த மணக் கோலத்துடனேயே எந்நாளும் இனிது வாழ்ந்து வருவாயாக' என்ற அசரீரி வானின் மிசை எழுந்தது.
வாழிய மாமறைப் புற்றிடங் கொள்
மன்னவன் ஆரரு னாலோர் வாக்குத் தோழமையாக உனக்கு நம்மைத்
தந்தனம் நாம் முன்பு தொண்டு கொண்ட வேள்வியில் அன்று நீ கொண்ட கோலம்
என்றும் புனைந்து நின் வேட்கை திர வாழிமன்மேல் விளையாடுவாய் என்று)
ஆரூரர் கேட்க எழுந்த தன்றே அசரீரியைக் கேட்ட தம்பிரான் தோழர், இறைவனின் அளப்பருங் கருணையை நினைந்து கசிந்து பன்முறையும் வணங்கி எழ, மக்கள் எல்லோரும் 'தம்பிரான் தோழர்' என்று விண்ணளாவ அழைத்து மகிழ்ந்தனர். இப்படியே நாள்தோறும் புற்றிடங் கொண்ட பெருமானை வணங்கி வழிபட்டு வந்தார்.
திருக்கயிலாயத்தில் உமாதேவியாரின் சேடிகளுள் ஒருவராகி ஆலால சுந்தரரால் விரும்பப்பட்ட கமலினி, பரவையார் என்னும் பெயரில் கணிகையர் குலத்தில் அவதரித்து கலைகள் அனைத்திலும் தேர்ச்சிபெற்ற பருவமங்கையாகத் திருவாரூரில் வாழ்ந்து வந்தார். வழக்கம் போல் தம் தோழியருடன் பூங்கோயில் எழுந்தருளியுள்ள தியாகேசப் பெருமானை வணங்கச் சென்றார். அப்பொழுது நம்பியாரூரரும் தியாகேசனை வணங்கிக் கொண்டு அடியார்கள் புடைசூழ வரும் பொழுது, பண்டை ஊழ்வினை கடைகூட்டப் பரவையாரைக் கண்டார். பரவையாரும் கண்டார். இருவர் இதயங்களும் ஒன்றின. சிவபெருமான் திருவருளால் இறைவனே திருவாரூர் அடியவர்கள் கனவில் தோன்றி 'பரவையாருக்கும், சுந்தரருக்கும் திருமணத்தைச் செய்து வையுங்கள்” என்று கட்டளையிட அவ்வாறே திருமணம் சிறப்பாக
நிகழ்ந்தது.
ஒருநாள் வழக்கம் போல் கையில் பொற்கோலும், காதுகளில் நவரத்ன குண்டலங்களும், மார்பில் முப்புரி நூலும், நெற்றியில் திருநீறும் , கழுத்தில் இரத்தின ஆபரணங்களுமாக கண்டவர் வியக்கும் சுந்தரக் கோலத்துடன், தியாகேசப் பெருமானின் திருக்கோவிலை அடைந்தார். அப்பொழுது தேவாசிரிய மண்டபத்தில் இருக்கும் அடியவர்களைக் கண்டு வணங்கி இவர்களுக்கெல்லாம் நான் அடியனாகும் நாள் எந்நாளோ என்று எண்ணியவாறு இறைவன் திருமுன் செல்ல, ஆரூரரின் கருத்தை அறிந்த புற்றிடங்கொண்ட பெருமான் அவர் முன் காட்சி கொடுத்து அடியார்களின் பெருமையை ஆரூரருக்குக் கூறுகின்றார்.

Page 205
பெருமையால் தம்மை ஒப்பார்
பேனலால் எம்மைப் பெற்றார் ஒருமையால் உலகை வெல்வார்
ஊனமேல் ஒன்றும் இல்லார் அருமையாம் நிலையில் நின்றார்
அன்பினால் இன்பம் ஆர்வார் இருமையும் கடந்து நின்றார்
இவரை நீ அடைவாய் என்று சிவபெருமான் அருளிச் செய்தார். பின்பு ஆரூரரை நோக்கி, “முறைப்படி இவர்களைப் பணிந்து அவர்களைப் பற்றி பொருள் மிகுந்த பாக்களாற் பாடு” என்று ஆணையிட, "அடியார்களின் பெருமையையும், வரலாற்றையும் அறியாதவனாகிய என்னால் எப்படிப் பாட முடியும்? அதற்குரிய தகுதி என்னிடம் இல்லையே; அவர்களின் புகழைப்பாடும் வல்லமையையும் தேவரீரே தந்தருள வேண்டும்’ என்று வேண்ட, மறை மணக்கும் திருவாயாற் சிவபெருமானே, “தில்லை வாழந்தணர்தம் அடியார்க்கும் அடியேன்” என்று அடி எடுத்துக் கொடுக்கத் திருத்தொண்டத் தொகை பாடித் தேவாசிரிய மண்டபத்துள்ள அனைத்து அடியார்களையும் பணிந்தார்.
திருவாரூர் இறைவன் மீது முறுகிய அன்புகொண்ட சுந்தரர் முப்பொழுதும் அன்போடு வழிபட்டுத் திருவாரூரையே உயிராகக் கொண்டு வாழ்ந்த காலத்தில் குண்டையூர்க் கிழார் என்ற பெரும் வேளாளப் பெருமகனார் சுந்தரமூர்த்தி நாயனாரின் திருவடிகளில் ஆழ்ந்த பேரன்பு கொண்டவர். சுவாமிகளது திருவமுதிற்கான செந்நெலும், பருப்பும் பிறபொருட்களையும் பரவையாரது மாளிகைக்குத் தவறாமல் அனுப்பிவரும் நியம் பூண்டவர்.
இறைவன் சோதனை மழை பொய்த்தது. வயல்கள் வரண்டன. விளைவு இல்லை. சுந்தரருக்கு அனுப்ப நெல் போதவில்லையே என்று மனம் கவன்று உணவு கொள்ளாது இரவு துயின்றார். அப்பொழுது சிவபெருமான் அவரது கனவில் தோன்றி "ஆரூராருக்குப்படி அளப்பதற்கு உனக்கு நெல்லினைத் தந்தோம்.” என்று அருளிச் செய்து குபேரனை ஏவிவிட குண்டையூர் முழுவதும் நெல்மலையால் நிரம்பியது. விழித்தெழுந்த குண்டையூர்க்கிழார் ஆகாயத்தைத் தொடும் நெல் மலைகளைக் கண்டு ஆச்சரியப்பட்டு, இதனை மனிதர்களாற் கொண்டு செல்ல முடியாது. இதனைச் சுந்தரமூர்த்திசுவாமிகளிடமே தெரிவிப்போம் என்று சொல்ல, சுந்தரமூர்த்தி சுவாமிகளின் கனவிலும் குண்டையூர்க்கிழாருக்கு நெல் அருளிய திறத்தைச் சிவபெருமான் அருள, சுந்தரரும் குண்டையூருக்கு விரைந்தார். கிழாரும் சுந்தரரும் இடைவழியிற் சந்தித்தனர்; சுந்தரரின் திருவடி பணிந்து நடந்தவற்றை குண்டையூர்க் கிழார் கூறினார்.
இறைவன் திருவருளை வியந்த வண்ணம் சுந்தரர் குண்டையூர் சென்று பார்க்க அதிசயமுற்றார். இதனைக் கொண்டு செல்ல எவராலும் இயலாது என்று எண்ணி, சிவபெருமானின் திருவடிகளை வணங்கி "பரவையார் வீட்டிற்கு

இந்நெல்மலையை எடுத்துச் செல்ல ஆளினையும் தேவரீர் தந்தாலன்றி வேறு எவ்வகையாலும் இயலாது” என்று வேண்டி, அருகிலுள்ள திருக்கோயிலுக்குச் சென்று அங்கு கோயில் கொண்டிருக்கும் கோளிலிப் பெருமானை வணங்கி,
நீள நினைந்தடியேனுனை நித்தலுங் கைதொழுவேன் வாளன கண்மடவா ளவள் வாடி வருந்தாமே கோளிலி யெம்பெருமான் குண்டையூர்ச் சில நெல்லுப்
பெற்றேன் ஆளிலை யெம்பெருமானவை யட்டித் தரப்பணியே என்று தொடங்கும் திருப்பதிகத்தினைப்பாட சிவபெருமானின் பூதகணங்கள் அந்நெல்மலைகளைப் பரவையாரது மனை மட்டுமல்ல திருவாரூர் முழுதும் நிறைத்தன.
பரவையார் இது கண்டு பெருமகிழ்வு கொண்டு "அவரவர் எல்லைக்குட்பட்ட நெல்லையெல்லாம் அவரவரும் தங்கள்
மனைக்கு எடுத்துச் செல்லலாம்” என்று முரசறைவித்தார்.
இப்படிச் சுந்தரர் புற்றிடங்கொண்ட புனிதரை வழிபட்டு இருக்கும் நாளிலே கோட்புலியார் என்ற அடியவர் சுந்தரரைத் தமது ஊராகிய திருநாட்டியத்தான் குடிக்கு எழுந்தருளுமாறு வேண்டினார். சுந்தரரும் இறைவனது உத்தரவைப் பெற்றுக் கொண்டு திருநாட்டியத்தான் குடிக்கு எழுந்தருளினார். மகிழ்ச்சி மீதுTரப் பெற்ற கோட்புலியார் சுந்தரரைக் கோலாகலமாக வரவேற்றுப் பொற்பலகையின் மீதிருத்தி முறைப்படி பூசனை செய்து தமது திருமகள்களாகிய சிங்கடியார், வனப்பகையாரை நம்பிகளின் திருவடிகளில் வீழ்ந்து வணங்குமாறு செய்து அவர்களை அடிமைகளாகப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று விண்ணப்பிக்க, வன்தொண்டர் அப்பெண்களைத் தம் மடிமீதிருத்தி, உச்சி முகந்து மகள்மை கொண்டார். இதனைத் திருநாட்டியத்தான் குடிப்பதிகத்தில் பூணாணாவதோரரவம் என்றெடுத்து தம்மைச் சிங்கடியாரின் தந்தை என்ற குறிப்புத் தோன்றச் “சிங்கடியப்பன்’ என்று அமைத்துப் பாடியருளினார் பின்பு திருவலிவலம் வணங்கித் திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசரைச் சிறப்பித்து,
நல்லிசை ஞானசம்பந்தனும் நாவினுக்
கரையனும் பாடிய நற்றமிழ்மாலை சொல்லியவே சொல்லி ஏத் துகப்பானை
என்று பாடி மகிழ்ந்தார். மீண்டும் திருவாரூரை அடைந்தார்.
திருவாரூரிலே தியாகேசப் பெருமானின் பங்குனி உத்திரநாள் நெருங்கியது. அவ்விழாவில் அடியவர்களுக் கெல்லாம் வேண்டுவன கொடுப்பதற்கு பரவையாருக்குக் கொடுக்கப்பொன் பெறும் பொருட்டுத் திருப்புகலூருக்குச் சென்று வணங்கி மகிழ்ந்து அன்று இரவு திருப்பணி செய்வதற்காக வைக்கப்பட்டிருந்த செங்கற்களைத் தலைக்கு உயரமாக ஆக்கி, அதன் மீது தமது வெண்பட்டாடையை விரித்து சயனம் கொண்டார்.
இந்து க்களஞ்சியம்

Page 206
பொழுது விடிந்து பார்த்த பொழுது தலைக்கு வைத் செங்கற்கள் பொற்கற்களாக மாறி இருந்தன. அதனைக் கண்டு மிக மகிழ்ந்து இறைவனின் திருவருளைப் போற்றித் தம்மையே புகழ்ந்து என்னும் பதிகம் பாடித் துதித்துத் திருப்பனையூருக்கு செல்ல, ஊரின் எல்லையிலே, திருவருட் கூத்திடும் காட்சியைக் சிவபெருமான் காட்டச் சுந்தரர் நிலமுறப் பணிந்து ஆடுமாறு வல்லார் அவரே அழகியரே என்ற இறுதி முடிபைக் கொண்ட திருப்பதிகம் பாடித், திருவாரூர் மீண்டு, பரவையார் மனையில் இனிதாக இருந்தார்.
திருவாரூரில் இருந்த காலத்தில் அருகிலுள்ள பல ஆலயங்களுக்கும் சென்று வணங்கிப் பின்பு, திருவாரூரினின்று புறப்பட்டுத் திரு நன்னிலத்துப் பெருங்கோயிலை அடைந்து, தண்ணியல் வெம்மையினர் என்று தொடங்கும் பதிகம் பாடி, அங்கிருந்து திருவீழிமிழலை சென்று வீழி கொண்டீர் அடியேற்கும் அருளுதிரே என்ற முடியினை உடைய பாமாலை சூட்டி, திருவாஞ்சியம் சென்று பொருவனார் என்ற திருப்பதிகம் அருளி, திருநறையூர் சித்தீச்சரம் தொழுது, திருப்புத்தூரை வழிபட்டு, அரிசிற்கரைப் புத்தூரினை அடைந்து, புகழ்த்துணை நாயனாருக்குப் படிக்காசு அருளிய செயலைப் பாடி, திரு ஆவடுதுறையடைந்து, மறையவன்' என்றெடுத்து கோச்செங்கட் சோழனைச் சிறப்பித்து, திரு இடை மருதூரை வந்தடைகின்றார்.
மத்தியார்ச்சுனம் என்னும் இடைமருதை வணங்கிக் கழுதை குங்குமம் தான் சுமந்தெய்த்தால் என்னும் பதிகம் பாடிப் புகழ்ந்து, திருநாகேச்சரம் வணங்கி, பிறையணி வாணுதலாள் எனப் பாடி திருச்சிவபுரம் சென்று, திருக்கலையநல்லூரில் குரும்பை முலை என்னும் பாமாலை சூடி, அங்கு நின்று, திருக்குடமூக்கு, திருவலஞ் சுழி வணங்கி மகிழ்ந்து திருநாவுக்கரசருக்குத் திருவடி சூட்டிய திரு நல்லூரைப் பணிந்து, திருச்சோற்றுத் துறை, திருக் கண்டியூர், திருவையாறு, திருப்பூந்துருத்தி முதலான தலங்களுக்குச் சென்று திரு ஆலம் பொழிலை அடைந்து அன்றிரவு அங்கே துயிலும்பொழுது கனவின்கண் சிவபெருமான் எழுந்தருளி, ” மழபாடிக்கு வர மறந்தனையோ” என்று வினவி, இளமை எழில் பொங்கும் கோலத்தைக் காட்டியருள, துயிலுணர்ந்த சுந்தரர் திருமழபாடிக்குச் சென்று ஈசனின் கரையிலாக் கருணையினை நினைந்து உள்ளமுருகிப் பொன்னார் மேனியனே என எடுத்து "அன்னே! உன்னையல்லால் இனி யாரை நினைக்கேனே' என்று துதித்தார். பின்பு திரு ஆனைக்கா பணிந்து திருப்பாச்சிலாச் சிரமம் சென்றடைகின்றார்.
அங்கு இறைவனை இகழ்ந்துரைப்பது போல “இவரலாது இல்லையோ பிரானார்” என்ற மகுடம் அமைத்துப் பாட இறைவன் பொற்குவை அளிக்கின்றார். இகழ்வுரையையும், ஏற்று இறைவன் பொன்னளித்த திறத்தைத் திருநாவலூர்ப் பதிகத்திற் குறிப்பிடுகின்றார்.
இந்துக்கலைக்களஞ்சியம்

30
புன்மைகள் பேசவும் பொன்னைத் தந்தென்னைப்
போகம் புணர்த்தன்மையினார்க்கு இடமாவது நந்திருநாவலுரரே
எல்லாப் பதிகளையும் வணங்கிக் கொண்டு நம்பியாரூரர் திருப்பைஞ்ஞீலி வந்தடைகின்றார். திருக் கோபுரத்தினை வணங்கி வலம் வந்து, இறைவனின் திருவடி தொழுது நிற்க , பெருமான் கங்காள வேடத்துடன் காட்சி கொடுத்தார். வன் தொண்டர் மனம் நெகிழ்ந்து, தாருகாவனத்து முனிவர்களின் மனத்தைக் கவரும் வண்ணம் வந்த பிக்ஷாடனத் திருக் கோலத்தைக் கண்டு மையலினால் வினவும் பாங்காக காருலாவிய' என்றெடுத்து ஆரணிய விடங்கரே என்ற முடிபுடைய திருக் கடைக்காப்புச் சாத்தி வழுத்தினார். பின்னர் திருஈங்கோய்மலை, திருப்பாண்டிக் கொடுமுடி தொழுது திருவைந்தெழுத்தின் மாண்பினை விளக்கும் மற்றுப் பற்றெனக் கின்றி என்றெடுத்து நமச்சிவாயப் பதிகம் பாடினார்.
கொங்குநாடடைந்து மேலைச்சிதம்பரம் என்று போற்றப் பெறும் திருப்பேரூர் அடைந்து, அங்கு சிதம்பரத்தில் நடனமிடும் திருக்கோலத்தைக் காட்டியருளினார். பின்பு மலைகளையும் ஆறுகளையும் கடந்து திருவெஞ்சமர்க்கூடலைத் தொழுது திருக்கற்குடி, திருஆறை மேற்றளி, திரு இன்னம்பர் வணங்கி, “புறம்பயந் தொழப் போதுமே” என்று பாடியவாறு, திரும்புறம் பியத்தைச் சென்றடைந்தார். அங்கிருந்து பலபதிகளைக் கடந்து திருக்கூடலையாற்றுாரினை அணுகினார். ஆனால் அப்பதியினை வணங்காது, திருமுதுகுன்றத்திற்குச் செல்லலானார். அப்பொழுது சிவபெருமான் வேதியர் வடிவங் கொண்டு தோன்ற, அவரிடம் “திருமுதுகுன்றம் செல்லும் வழியாது” என்று நம்பியாரூரர் வினவ அவ்வேதியரோ இவ்வழி திருக்கூடலையாற்றுார் செல்வதாகும் என்று கூறி, சிறிது தூரம் வழித்துணையாக வந்து, நகரண்மையில் திடீரென மறைந்தார். நம்பியாரூரர் இறைவனின் அதிசயத்தைப் போற்றி வடிவுடை மழுவேந்தி’ என எடுத்து "அடிகளில் வழிப்போந்த அதிசயமறியேனே' என்றுகூடலையாற்றுார் சென்று இறைவனைப் பரவி, திருமுது குன்றம் சென்றார்.
திருமுது குன்றத்தில் இறைவனிடம் பொருள் வேண்டப் பெருமானும் பன்னிரண்டாயிரம் பொன்னைக் கொடுத்தார். வன்தொண்டர் மிக மகிழ்ந்து நீலகண்டர் முன்பு சென்று, “தேவரீர் கொடுத்த இப்பொன் முழுவதும் திருவாரூர் மக்கள் வியக்குமாறு அங்கே வரப்பெற வேண்டும்” என்று விண்ணப்பிக்க, திருமுதுகுன்றப் பெருமானும், "இப்பொன்னை யெல்லாம் மணிமுத்தா நதியிலிட்டுத் திருவாரூர்க் கமலாலயத்திற் பெற்றுக் கொள்” என்று திருவாய் மலர்ந்து அருளினார்.
சுந்தரரும் திருமுது குன்றம் வணங்கி, திருத்தில்லை சென்று மடித்தாடும் அடிமைக்கண் அன்றியே என்று பதிகம்

Page 207
பாடித்தில்லைக் கூத்தனைப் பணிந்து சிலநாட்கள் அங்கு மகிழ்ந்து இருந்து, திருக்கருப்பறியலூர், திருப்பழு மண்ணிப் படிக்கரை, திருவாழ் கொளி புத்தூர், திருக்கானாட்டு முள்ளூர், திரு எதிர்கொள்பாடி, திருவேள்விக்குடி, திருத்துருத்தி வணங்கித் திருவாரூர் வந்தடைகிறார். பூங்கோயிற் பெருமானைத் துதித்துத் தொழுது பரவையாருடன் மகிழ்ந்திருத்தார்.
ஒருநாள் பரவையாரிடம் திருமுது குன்றத்தில் நடந்தவைகளைக் கூறி, அவளது தோழிகளுடன் கமலாலயக் குளக்கரைக்கு வருமாறு கூறினார். வன்தொண்டர் புற்றிடங்கொண்டானைப் பணிந்து வலம் வந்து கமலாலயம் வந்தடைந்து குளத்தினுள் மூழ்கிப் பொன்னைத் தேடினார். சுந்தரரின் செந்தமிழ்ப் பாடலின்மேல் உள்ள விருப்பால் பொன்னைத் தோன்றாதவாறு இறைவன் செய்தருளினான். ஆற்றிலிட்டுக் குளத்திலே தேடும் சுந்தரரின் செய்கை குறித்துப் பரவையார் நகைக்க , நம்பியாரூரர் உளம் வருந்தி முதுகுன்றப் பெருமானிடம் 'பொன்செய்த மேனியினீர் என்றெடுத்துப் பொன் தருமாறு வேண்ட எட்டுப்பாடல்கள் பாடியும் கிடைக்காத பொன் ஒன்பதாவது பாடலில் “எத்தா திருத்தறியேன்” என்று பாட சுந்தரரின் கரத்தில் வந்து சேர்ந்தது. தன்னிடம் வெட்டி
வைத்திருந்த மச்சத்தைக் கொண்டு உரைத்துப்பார்க்க அப்பொன்
மாற்றுக் குறைந்த பொன்னாயிருத்தலைக் கண்டு, மாற்றுயர்ந்த பொன்னாகத் தருமாறு மீண்டும்பாடத் தூயபொன் கிடைத்தது. பொற்குவியலைப் பரவையாரிடம் சேர்த்துவிட்டுப் பூங்கோயிற் பெருமானை வணங்கி மகிழ்ந்தார் ஆளுடைய நம்பிகள்.
சிறிது நாட்களுக்குப் பிறகு, மீண்டும் தலங்களைக் தரிசிக்கும் விருப்பால், ஆரூர் இறைவனிடம் விடைகொண்டு, திருக்கடவூர் வீரட்டம், திருமயானம், வலம்புரம் , சாய்க்காடு, வெண்காடு, நனிபள்ளி, செம்பொன் பள்ளி, நன்றியூர் நீரூர், திருப்புன்கூர் ஆகிய தலங்களைத் தரிசித்தவாறு திருக்கோலக்கா வந்தடைகின்றார். அங்கு திருஞான சம்பந்தருக்குப் பொற்றாளம் வழங்கிய சிறப்பை நினைவு கூர்ந்து புற்றில் வாளரவு என்றெடுத்து எட்டாம் பாடலில்,
நாளும் இன்னிசையால் தமிழ் பரப்பும்
ஞான சம்பந்தனுக் குலகவாமுன் தாளம் ஈந்தவன் பாடலுக் கிரங்கும்
தன்மை யாளனை என்ற அகச் சான்றுக் குறிப்புடன் பாமாலை சாத்திப் பணிக்கின்றார்.
பின்பு சீர்காழிப் பதியை மிதிக்க அஞ்சிபுறத்தே வலம் வந்து புகலியர் கோவினை மனத்தால் வணங்கி, திருக்குருகாவூர் செல்லுகின்றார். வேனிற்காலமாதலாற் சுந்தரர் நீர்வேட்கையாலும், பசியாலும் வாடினார். தமது அடியவனின் துன்பத்தைப் பொறாத ஈசன் மறையவர் வடிவிலே தோன்றி, பொதிசோறு அளித்து நிழல் தரும் பந்தரும் அமைத்து உதவினார். இது குருகாவூர் இறைவன் செயலே என்று உணர்ந்த சுந்தரர் இத்தனையாமாற்றை எனத்
1811

தொடங்கி, உணவளித்து உய்வித்த பெருமானைப் போற்றினார். பின்பு திருக்கழிப்பாலை, தில்லை திருத்தினை நகர் வணங்கித் தான் பிறந்த தலமாகிய திரு நாவலூரை யடைந்தார்.
சிறிதுகாலம் அங்கிருந்து விட்டுத் திருக்கழுக்குன்றத்தை வணங்கிக் கொண்டு திருக்கச்சூர் ஆலக்கோயிலை அடைந்தார். வெம்மை மிகுதியாற் பசியால் வாடிய சுந்தரரின் பசியைப் போக்க மறையவர் உருவில் வீடுதோறும் சென்று இரந்து சோறிட்டார், சிவபெருமான். உணவளித்த மறையவர் மறைய, இறைவனின் பெருங்கருணையை வியந்து ஆலக்கோயிற் பெருமானை முதுவாயோரி என்றெடுத்துப் பதிகம் சூட்டினார். கச்சிலிருந்து புறப்பட்டுக் காஞ்சியடைந்து, அங்கிருந்து ஒணகாந்தன் தளிசென்று பொன் பெற்று, திருக்கச்சி அநேகதங்காவதம், பனங்காட்டூர், மாற்பேறு, திருவல்லம் பணிந்து, திருக்காளத்தி சென்று, கண்ணப்பருக்கு அருளிய திறம் நினைந்து பாடி, வடநாட்டிலுள்ள, திருப்பருப்பதம், திருக்கேதாரம் முதலிய தலங்களைத் திருக்காளத்தியிலிருந்தே நினைந்து போற்றி, அங்கிருந்து புறப்பட்டுப் பலதலங்களையும் வணங்கியவாறு திருவொற்றியூரை அடைந்து எழுத்தறியும் பெருமானை வழிபட்டு இனிதுரைத்தார்.
திருவொற்றியூரில் வாழ்ந்த ஞாயிறு கிழாரின் மகளாகத் திருக்கயிலையில் உமாதேவியாருக்குப் பணிபுரிந்த அனிந்திதை சங்கிலியாராகப் பிறந்திருந்தாள். வளர்ந்து பருவம் அடைந்தும், திருமணவாழ்விற்கு இசையாது திருவொற்றியூரிற் கன்னிமாடம் அமைக்கச் செய்து அங்கு தங்கி, ஒற்றியூர் இறைவனுக்கு மலர்மாலைகள் தொடுக்கும் பணியிலே தன்னை ஈடுபடுத்திக் கொண்டு வாழ்ந்து வந்தார்.
இந்நிலையில் திருவொற்றியூருக்கு வந்த சுந்தரர் ஒருநாள் ஒற்றியூர்ப் பெருமானை வணங்கி மீளும் பொழுது, நங்கை சங்கிலியாரைக் கண்டு மையல் கொண்டு, எனது இப்பிறவி இரு மகளிர் காரணமாக ஏற்பட்டது. ஒருத்தி பரவை, மற்றையவள் சங்கிலியார் போலும் என மருண்டார். “சங்கிலியாரைத் தந்து என் துயர் தீரும்” எனத் திருக்கோயிலின் ஒருபக்கம் நம்பியாரூரர் கவலையோடு இருந்தார். இரவு வந்தது. ஒற்றியூர்ப் பெருமான் நம்பியாரூரரை அடைந்து “சங்கிலியை உனக்கு மணம் முடித்துத் தருவோம். கவலையொழிக” என்றருளிச் செய்து சங்கிலியாரின் கனவிலே தோன்றி, சுந்தரரைத் திருமணம் செய்து கொள்ளுமாறு கூற சங்கிலியாரும் இறைவனைப் பணிந்து “பெருமானே! உமது அடியவரை மணப்பதில் எனக்குத் தடையில்லை. ஆனால் அவர் திருவாரூரில் மகிழ்ந்திருப்பவர் என்பதைத் தாங்கள் அறிய வேண்டும்” என்று பணிவுடன் விண்ணப்பித்தார். சங்கிலியாரின் கூற்றைக் கேட்ட இறைவன் “வன்தொண்டன் உன்னைப் பிரியாதவாறு ஒரு சபதம் செய்து தருவான்’ என்று கூறியருளினார். சுந்தரரிடமும் சென்று “ சங்கிலியைப் பிரியேன்
இந்துக்கலைக்களஞ்சியம்

Page 208
என்று சபதம் செய்து கொடு” என்று கூற, சுந்தரர் “பெருமானே! சங்கிலிக்குச் சபதம் செய்து தரும் பொழுது தாங்கள் கருவறையில் இல்லாது மகிழின் கீழ் இருக்க வேண்டும்” என்று கேட்டுக் கொள்ள எழுத்தறியும் பெருமானும் அதற்கு இசைவு தெரிவித்து விட்டுச் சங்கிலியாரிடம் சென்று "சுந்தரர் செய்து கொடுக்கும் சபதத்தை மகிழ மரத்தடியிற் பெற்றுக்கொள்” என்று கூறி மறைந்தார்.
விழித்தெழுந்த சங்கிலியார் இறைவன் தமக்கு அருளியதை நினைவிற் கொண்டு பாங்கியருடன் திருக் கோயிலினுட் சென்று சுந்தரரை எதிர்கொள்ள, சுந்தரர் இறைவன் தனக்கு அருளியதை எடுத்துக் கூறி சபதம் செய்தற் பொருட்டு இறைவன் திருமுன் வருக என்றழைத்தார். அதற்குப் பாங்கியர்கள், “ இறைவன் திருமுன் சபதம் செய்தல் தகாது. இங்குள்ள மகிழ மரத்தடியிற் செய்து தந்தாலே போதும்” என்றனர். மறுத்தால் திருமணம் தடைப்படும் என்று அஞ்சிச் சுந்தரர், சங்கிலியாருடன் மகிழ மரத்தை அடைந்து மும்முறை வலம் வந்து ‘உன்னைப் பிரியேன்” என்று சங்கிலியாருக்குச் சபதம் செய்து கொடுத்தார். ஒற்றியூர் இறைவன் அடியவர்கள் கனவிலே தோன்றி, சுந்தரர் சங்கிலியார் திருமணத்தை மிகச் சிறப்பாக நடத்துமாறு ஆணையிட, அவ்வாறே திருமணம் நடந்தது. மணமக்கள் இருவரும், ஊழியும் ஒருகணமாகத் தோன்ற ஐம்புல இன்பமும் ஆரத்துய்த்துப் பேரின்பக் கடலில் மூழ்கினார்.
நாட்கள் நகர்ந்தன. தென்றல் காற்று மெல்லத் தவழ்ந்தது. திருவாரூர்த் தியாகேசனின் வசந்த விழாவைத் தென்றல் நினைவூட்டியது. தியாகேசனின் திருவோலக் கத்தையும் பரவையார் ஆடிப்பாடி மகிழ்வதையும் காண விரும்பினார் சுந்தரர். புற்றிடங் கொண்டானையும் தமது அடியார் பெருமக்களையும் இத்துணை நாள் மறந்திருந்தேன் என்று வருந்தி பத்திமையும் அடிமையையும் என்றெடுத்து “எத்தனை நாள் பிரிந்திருக்கேன்
என்னாரூர் இறைவனையே’ என்ற குறிப்புடன் திருவொற்றியூர்
நீங்கித் திருவாரூர் செல்ல முற்பட்டார். திருவொற்றியூர் எல்லை கடந்ததும் சங்கிலியாருக்குச் செய்த சபதம் பிழைத்ததாற் சுந்தரரின் கண்ணொளி மறைந்தது. சத்தியம் பிழைத்தமைக்காக வருந்தி, அழுக்கு மெய்கொடு என்ற பதிகம் பாடி ஒற்றியூரனை வணங்கித் திருவாரூர் செல்லும் உறுதியோடு புறப்பட்டார். உடன் வருவோர் வழிகாட்ட வடதிருமுல்லைவாயிலைப் பணிந்து திருவெண்பாக்கத்தினை அடைய, அங்கு இறைவன் ஊன்று கோல் அருளினான். அங்கு நின்றும், பழையனூர், திரு வாலங்காடு, திருஉளறல், வழியாகக் காஞ்சிபுரத்தை அடைந்தார்.
திருக்கச்சிக் கோட்டத்திலுள்ள காமாட்சியன்னையை வணங்கித் தனக்குக் கண்பார்வையைத் தந்தருளுமாறு வேண்ட இடது கண் பார்வை கிடைக்கப் பெற்றது. மிக மகிழ்ந்த சுந்தரர் ஆலந்தான் உகந்து என்றெடுத்துப் போற்றிப் புகழ்ந்து, திரு ஆமாத்தூர், திருநெல்வாயில் அகத்துறை, திருஆவடுதுறை
இந்துக்கலைக்களஞ்சியம்
18

வழிபட்டுத் திருத்துருத்தியை அடைந்தார். அங்கு கோயில் கொண்டருளும் இறைவனிடம், தனது உடல் நோயை நீக்குமாறு வேண்ட, “இவ்வாலயத்திற்கு வடபால் உள்ள குளத்தினில் மூழ்கி நோய் நீங்குவாய்” என்று இறைவன் திருவருள் புரிய, அவ்வாறே மூழ்கி நோய் நீங்கி, ஒளிவீசும் திருமேனியைப் பெற்றார். திருக் கோவிலுட்சென்றுமின்னுமா மேகங்கள் எனப்பாடித் தொழுதார். அங்கிருந்து திருவாரூரை அடைந்தார்.
திருவாரூரை அடைந்த ஆரூரர் பரவையுடன் மண்டளி வணங்கிப் பதிகம் பாடி, “ஆரூர் அழகனைக் காண ஒருகண் போதாதே, மற்றுமொரு கண்ணையும் தந்தருள்வாய்” என்று கதறி மீளா அடிமை என்று பாடி வலது கண்ணும் ஒளிபெற்றது. இரு கண்களின் ஒளியாலும் இறைவனைக் கண்ணாரக் கண்டு வணங்கி, தேவாசிரிய மண்டபம் சார்ந்தார்.
சுந்தரர் சங்கிலியாரை மணந்ததைக் கேள்வியுற்ற பரவையார் சுந்தரர் பால் சினங்கொண்டார். இது அறிந்த சுந்தரர் கற்றறிந்த பலரைப் பரவையார் பால் அனுப்பி சந்து செய்யக் கோரினார். பயனேதும் இல்லை. பரவையாரின் சினம் அதிகமாயிற்றே தவிரக் குறையவில்லை. பரவையாரின் இந்தச் செயலை அறிந்து வருந்திய சுந்தரர் உறங்காது வருந்திச் சிவபெருமானின் திருவடிகளையே சிந்தித்து “என்னை ஆளுடைய பெருமானே! நீரே எழுந்தருளி வந்து பரவையின் பிணக்கைத் தீர்த்தாலன்றி வேறு எனக்கு உய்வில்லை” என்று வேண்ட அடியார் துயரம் பொறுக்கலாற்றாத பெருமான், மாலும், அயனும், மறைகளும் காணாத் திருவடி திருவாரூர் நிலந்தோய நள்ளிரவில் நடந்து பரவையார் மனைக்கு மறையவர் உருவிற் சென்று பரவையாரிடம் “சுந்தரர் இங்கு வரவேண்டும்” என்ற தமது விருப்பத்தைத் தெரிவித்தார். அதற்குப் பரவையார் “திருவொற் றியூரிற் சங்கிலியை மணந்த அவருக்கு இங்கு ஒரு சார்புண்டோ? உமது பெருமைக்கு இத்தூது பொருந்துவதாகாது. நான் இதற்கு இசையேன்” என்று சிவவேதியரிடம் மறுத்தரைத்தார்.
பரவையார்பால் சுந்தரர் கொண்டுள்ள வேட்கையைக்கான வேண்டும் என்று விரும்பிய சிவபெருமான் மீண்டும் சுந்தரரிடம் வந்து பரவையார் இசையாமையைக் கூறினார். இச்சொற்களைக் கேட்ட சுந்தரர் மிகவும் மனம் வருந்தி, "பெருமானே! தேவரீர் திருமொழியை நும் அடியவளான பரவை மறுக்கமாட்டாள். பரவையாரிடம் இன்று என்னைக் கூட்டவில்லையாயின் என்னுயிர் நீங்குவது உறுதி" என்று கூறித் திருவடிகளில் வீழ்ந்து வணங்கினார்.
சுந்தரரின் நிலைமையினை உணர்ந்து “மீண்டும் நாம் தூதுசென்று உனது குறை முடிப்போம்” என்று கூறிப் பரவையார் மாளிகை நோக்கி மீண்டும் சென்றார். இதற்கிடையிற் சுந்தரருக்காகத் தூதுவந்த வேதியர் சிவபெருமானைத் தவிர வேறு யாராகவும் இருக்க முடியாது. அவரிடம் நாம் மறுத்துரைத்து

Page 209
விட்டோமே என்று கவலை கொண்ட பரவையார் தம்பால் மீண்டும் வந்த இறைவன் திருவடிகளில் வீழ்ந்து வணங்கி சுந்தரரை ஏற்றுக் கொள்ள இணங்கினார். இதனைச் சென்று சுந்தரருக்குத் தெரிவித்த வன்மீகநாதப் பெருமான் இருவரையும் இணைத்துவைத்துத் திருவருள் புரிந்தார். இறைணின் எளிய கருணையை வியந்த சுந்தரரும், பரவையாரும் இன்பமார்ந்து இனிது வாழ்ந்தனர்.
திருப் பெருமங்கலத்தில் வாழ்ந்துவந்த வேளாள குலச் செம்மல் ஏயர்கோன் கலிக்காமர், ஏயர்கோன் குடியைச் சிறப்பிக்கப் பிறந்த அருளாளர். திருநாளைப் போவாராம் நந்தனாருக்காக நந்தி விலகிய திருப்புன்கூர்ச் சிவபெருமானிடத்து நீங்காத பேரன்பு பூண்டவர். ஒருசமயம் மழை பொய்த்துப் பெரும் பஞ்சம் ஏற்பட்டது. மழை பெய்விக்குமாறு இறைவனை வேண்டிப் பன்னிரு வேலி நிலத்தைக் கொடுக்க மழை பெய்தது. பெய்த மழை நிற்கவேயில்லை. மீண்டும் பன்னிரு வேலியை ஏயர்கோன் கலிக்காமர் இறைவருக்குக் கொடுக்க மழை நின்றது. இதனை 'அந்தணாளன் உன் அடைக்கலம் புகுத என்ற திருப்புன்கூர் பதிகத்தில்
வையக முற்று மாமழை மறந்து
வயலில் நீரிலை மாநிலந் தருகோம் உய்யக்கொள் மற்றெங்களை யென்ன
ஒளிகொள் வெண்முகில் போய்ப்பரந் தெங்கும் பெய்யு மாமழைப் பெருவெள்ளந் தவிர்த்துப் பெயர்த்தும் பன்னிரு வேலிகொண்டருளும் செய்கை கண்டு.
என்று கலிக்காமரின் செயலைப் போற்றியுள்ளார்.
இத்தகைய சிறந்த சிவனடியார் நம்பியாரூரர், பரவையாருக் காகத் திருவாரூர் இறைவனைத் தூதனுப்பிய செய்தி கேட்டு மிக்க சினம் கொண்டார். சுந்தரமூர்த்தி சுவாமிகள் இதனையறிந்து, தனது பிழையை உணர்ந்து நாள்தோறும் இறைவனிடம் இறைஞ்சி வந்தார். பெருமானும், கலிக்காமரையும், சுந்தரரையும் சேர்த்து வைக்கத் திருவுளங்கொண்டு ஏயர்கோனுக்குச் சூலைநோயைத் தந்து 'உன்னை வருத்தும் இச்சூலை வன்தொண்டன் தீர்க்கில் அன்றித் தீராது. என்று அருளினார் ஏயர்கோனோ சுந்தரர் வந்து இந்நோயைத் தீர்ப்பதைவிடத் தீராமலேயே இருக்கட்டும் என இருந்தார். ஆனால் சிவபெருமானோ, சுந்தரர்பாற் சென்று “நம் ஏவலாலே ஏயர்கோன் உற்ற சூலையை நீ சென்று தீர்ப்பாயாக’ என்று ஆணையிடச் சுந்தரர் விரைந்து திருப்பெருமங்கலம் சென்றார். ஆரூரரின் வரவு கேட்ட கலிக்காமர் “நம்பியாரூரர் வருவதன் முன், தீராச் சூலைநோயுடைய இவ்வயிற்றோடு அதனை அறுத்தெறிவேன்’ என்று உடைவாளால் வயிற்றைக் கிழிக்கச் சூலை நோயோடு உயிரும் நீங்கியது. கலிக்காமரின் தேவியாரும் கணவனோடு சேர்ந்து உயிர்விட முனைய சுந்தரர் வந்துவிட்ட செய்தி அவருக்குக் கிடைத்தது.

ஆரூரர் வருகையைக் கேட்ட மானக்கஞ்சாறரின் மகளாகிய கலிக்காமரின் தேவியார், இறந்த கணவனின் உடலை மறைத்து அவரை எதிர்கொண்டு பூசனைகள் புரிந்தார். ஆவியொன்றிடக் கிடந்த கலிக்காமரைக் கண்டு அளவற்ற துயர் கொண்டு, “நானும் இவருடன் மாளுவேன்” என்று உடைவாளைப் பற்ற, இறைவன் அருளால் உயிர் பெற்றெழுந்த ஏயர்கோன் சுந்தரரின் கரத்திருந்த உடைவாளைப் பிடித்துத் தடுத்து, நண்பராகி நம்பியாரூரரின் குரைகழல் பணிந்தார்.
நட்புப் பூண்ட கலிக்காமரும், சுந்தரரும் திருப்புன்கூர் பணிந்து திருவாரூர் வந்தடைந்தனர். கலிக்காமர் விடைபெற்றுச் செல்லச் சுந்தரர் திருநாகைக்காரோகணத்திற்குச் சென்று , இறைவனை இறைஞ்சி, விலையுயர்ந்த அணிகளும்,பிறவும் வேண்டுமென்ற திருக்குறிப்புடன் ' பத்தூர் புக்கிரந்துண்டு என்று பதிகம் பாட, நாகைப் பெருமான் ஆரூரருக்கு, நவமணிகளும், பொன்னும், பட்டாடைகளும், நறுமணப் பொருட்களும், விரைந்து செல்லும் குதிரையும், பரிசாக அளித்தார். சுந்தரர் நாகையினின்றும் புறப்பட்டுத் திருவாரூரை அடைந்ததார்.
சேரமண்டலத்தை யாண்ட சேரமான் பெருமாளுக்கு நம்பியாரூரது பெருமைகளைத் தில்லைக் கூத்தன் உணர்த்த, திருவாரூர் சென்று நம்பியாரூரரைக் கண்டு திருவடி வீழ்ந்து நட்புரிமை பூண்டார். இருவரும் ஆரூர்த் தியாகேசனை வணங்கி மகிழ்ந்து திருமறைக்காடு, அகத்தியான் பள்ளி, கோடிக் குழகர் முதலிய தலங்களைப் பணிந்து மதுரை மாநகரத்தை அடைந்து ஆலவாயண்ணலைச் சுந்தரர் பதிகம் பாடிப் பரவினார். தமக்கு பாணபத்திரன் பொருட்டாகத் திருமுகம் அனுப்பிய கூடற் பெருமானைச் சேரமான் பெருமாள் வழிபட்டார்.
சேர, சோழ, பாண்டியர்களான மூவேந்தரும் உடனிருக்க அவர்களோடு, திருப்பூவணம், திருவாப்பனூர், திருவேடகம் தரிசித்துத் திருப்பரங்குன்றத்தையடைந்து 'கோத்திட்டையும் கோவலும் என்றெடுத்துப் பாடிப் பரவினார் சுந்தரர்.
சுந்தரரும், சேரமான்பொருளும், சோழனும் திருக்குற்றாலம், திருகல்வேலி, திருஇராமேச்சரம் ஆகிய தலங்களை வழிபட்டார்கள். இராமேஸ்வரத்தில் இருந்தவாறே ஈழநாட்டின் மாதோட்ட நன்னகராகிய திருக்கேதீச்சரத்தை நத்தார் படை ஞானன் என எடுத்துப்பாடிப்புகழ்ந்தார் சுந்தரர் பெருமான். பின்பு அங்கிருந்து புறப்பட்டு இருவரும் திருச்சுழியினைச் சென்றடைந்தார்கள்.
திருச்சுழியலிலே தங்கியிருந்த பொழுது சிவபெருமான் திருக்கரத்தில் பொற்பிரம்பும், திருமுடியிற் சூழியமும் உடையவராய் நம்பியாரூரரின் கனவிலே வந்து தோன்றி ‘யாம் இருப்பது கானப்பேர்’ என்று கூறி மறைந்தார். விழித்தெழுந்த சுந்தரர்
இந்துக் க்களஞ்சியம்

Page 210
சேரமானுக்கும் அறிவித்து இருவரும் கானப்பேர் சென்று 'தொண்டரடித் தொழலும் எனப் பாடிப் பரவிச் சில நாட்கள் அங்கிருந்து திருப்புனவாயிலை வழிபட்டுச் சோழநாடு வந்தடைந்தனர். பாதாணிச்சரம் முதலிய ஆலயங்களை வழிபட்டுத் திருவாரூர் மீண்டனர்.
பல நாட்கள் திருவாரூரில் தங்கி மகிழ்ந்த கழறிற்றறிவார் என்ற சேரர் கோமான், தமது நாட்டிற்குச் சுந்தரரை அழைத்துச் செல்ல வேண்டும் என்று நினைந்து வேண்ட, சுந்தரரும் அதற்கு உடன்பட்டார். திருவாரூரைப் பணிந்து காவிரியின் தென்கரை வழியே திருக்கண்டியூரை அடைந்தனர். காவிரியில் வெள்ளம் சுழியிட்டுக் கரைபுரண் டோடியது. ஆற்றைக் கடந்து திருவையாறு சென்று தொழ நினைத்த தம்பிரான்தோழர் பரவும் பரி சொன்றறியேன்” என எடுத்து ஆராக் காதலால் ஐயாற்றிறைவனைக் கதறியழைக்கக் கன்றின் குரல் கேட்ட தாய்ப்பசுவைப் போலச் சிவபெருமான், “ஒலம்’ என்று உரத்துக் குரல் கொடுக்கக் காவிரி வெள்ளம் இரு புறமும் ஒதுங்கி, நடுவே வழிவிட்டது. பெருமக்கள் இருவரும் ஐயாற்றினைத் தொழுது கொங்கு நாட்டின் வழியாகச் சேரநாடடைந்தனர்.
சேரநாட்டுக் கொடுங்கோளூர் அடைந்த சுந்தரரைச் சேரமான் மிகச் சிறப்பாக வரவேற்றுத் திருவஞ்சைக்களத்துக் கோயிலிற்கு அழைத்துச் செல்ல, இறைவனை வணங்கி, முடிப்பது கங்கை’ என்று பாடித் தமிழ் மாலை சூட்டினார் திருநாவலூரர்.
பட்டத்து யானையின்மேல் நாவலூரரை இருத்தித் தானே கவரி வீசி அழைத்து வந்து, அரியணை மேல் இருத்தி அர்ச்சித்து உபசரித்தார் சேரமான். பல நாட்கள் சேரமான் பெருமான் கோதையாருடன் இருந்து அவரை மகிழ்வித்த சுந்தரருக்குத் திருவாரூர் தியாகேசனை வணங்கும் விருப்பம் மிகுந்தது. சேரமானிடம் தனது விருப்பத்தைத் தெரிவிக்கப் பிரியமன மில்லாமல், தமது திருமாளிகையிலுள்ள பொருட்களை யெல்லாம் சுந்தரருடன் அனுப்பி வைத்தார்.
சுந்தரர் வழிபலவும் கடந்து கொங்கு நாட்டிலுள்ள திருமுருகன் பூண்டி வழியே செல்லுங்கால், சிவபெருமான் தனது பூதகணங்களை வேடுவராக அனுப்பி, சுந்தரரது பொருட்களை வழிப்பறி செய்துகொண்டு வருமாறு பணிக்க அவ்வண்ணமே வேடுவர்கள் அடியார்களை அச்சுறுத்திப் பொருட்களைப் பறித்துக் கொணர்ந்தனர். இதனை அறிந்த சுந்தரர் திருமுருகன் பூண்டியிலுள்ள இறைவரை நோக்கி எற்றுக்கு இங்கிருந்தீர் என்ற மகுடத்தோடு கொடுகுவெஞ்சிலை என்ற பதிகம் பாடி வினவினார். இறைவன் ஆரூரர்க்கு உண்மையை உணர்த்திக் கவர்ந்த பொருட்களை மீள அளித்தார். சுந்தரரும் திருவாரூரை அடைந்து இனிது இருந்தார்.
இந்துக்கலைக்களஞ்சியம்

சில நாட்கள் சென்றபின் சேரமன்னனின் நினைவு மேலிட மகோதை செல்லத் திருவுள்ளம் கொண்டு, சோழநாடு கடந்து கொங்கு நாட்டிலேயுள்ள, தற்பொழுது அவிநாசி என்று அழைக்கப் பெறும் திருப்புக் கொளியூர் சென்று கொண்டிருக்கும் பொழுது ஒரு வீட்டில் மங்கல ஒலியும், எதிர்வீட்டில் அழுகையொலியும் கேட்டது. காரணத்தை வினவினார் சுந்தரர்.
ஒத்த பருவத்தினராய் ஐந்து வயது நிரம்பப் பெற்ற சிறுவர் இருவர் மடுவில் குளித்துக் கொண்டிருக்கும் பொழுது ஒரு சிறுவனை முதலை விழுங்கி விட்டது. மற்றச் சிறுவன் தம்பித்துக் கொண்டான். பிழைத்து வந்த சிறுவனுக்கு உபநயனம் நடக்கின்றது. புதல்வனை இழந்த பெற்றோர்கள் வருந்து கின்றனர் என்று அவ்வூரிலுள்ள வேதியர்கள் நிகழ்ந்ததைக் கூறினார்கள். புதல்வனை இழந்த பெற்றோர்கள் முகமலர்ச்சியோடு சுந்தரரை வரவேற்று வணங்கி மகிழ்ந்தனர். தமது மகனை இழந்த துன்பத்தையும் மறந்து தம்மை வரவேற்ற அப் பெற்றோர்களை நினைந்து இவர்கள் இழந்த குழந்தையை மீட்டபிறகே அவிநாசிப் பெருமானை வணங்க வேண்டும் என்று உறுதி கொண்டு அம்மடு இருக்குமிடம் சென்று, முதலை விழுங்கிய பாலகனை உயிருடன் கரையில் கொண்டு வந்து தரும்படி அருள் செய்க என அவிநாசியப்பரைத் தொழுது ஏற்றான் மறக்கேன்' என்று தொடங்கி, உரைப்பார் உரை என்னும் நான்காம் பாடலைப் பாடும் பொழுது காலன், மடுவிலிருந்த முதலை வயிற்றுக்குட் புகுந்து பாலகனின் உடல் கடந்த கால வளர்ச்சி உடையதாகச் செய்ய உயிருடன் முதலை புதல்வனைக் கரையில் உமிழ்ந்தது. புதல்வனைக் கண்ட தாய் தந்தையர் கொண்ட மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. சுந்தரரின் திருவடி பணிந்து அவிநாசிப் பெருமானை வணங்கிப் போற்றினர். மங்கல வாத்தியங்கள் முழங்க அச்சிறுவனுக்கு உபநயனம் செய்வித்தார் ஆளுடைய நம்பிகள்.
அவிநாசியிலிருந்து தமது தோழரைக்கான மலை நாட்டிற்குச் சென்றார் சுந்தரர். அவரை மகிழ்ச்சியுடன் வரவேற்று உபசரித்துப் பலதலங்களையும் அவருடன் சென்று வழிபட்டார் சேரர் கோமான்.
ஒருநாள் சேரர் பெருமான் திருமஞ்சனமாடிக் கொண்டிருந்த பொழுது சுந்தரர் திருவஞ்சைக்களத்து இறைவனை வழிபடச் சென்றார். திருக்கோயிலினுட் புகுந்த சுந்தரர் நெஞ்சம் நெகிழ்ந்து நிலமிசை வீழ்ந்து அடியேன் இவ்வுலக வாழ்க்கையை வெறுத்தேன். ‘அடியேனை நின்னுடைய திருவடியிற் சேர்த்தல் வேண்டும்” என்ற குறிப்புடன் தலைக்குத் தலைமாலை' என்னும் பதிகம் பாடி விண்ணப்பித்து வேண்டினார். நம்பியாரூரரை மீண்டும் திருக்கயிலைக்கு அழைத்துக் கொள்ளத் திருஉளம் பற்றிய சிவபெருமான் அவரை அழைத்து வரத் தேவர்களுடன் வெள்ளையானையாகிய ஐராவத்தையும் அனுப்பி வைத்தார். இறைவனின் திருவருளை வியந்த வண்ணம் தனது உயிர்த்

Page 211
தோழராகிய சேரமான் பெருமாளை நினைத்த வண்ணம் திருக்கயிலைக்குத் தானெனை முன் பாடத்தான்’ என்று பாடியவாறு புறப்பட்டார் சுந்தரமூர்த்தி சுவாமிகள்.
சுந்தரர் திருக்கயிலைக்குச் செல்வதைத் திருவருளால் உணர்ந்த சேரர் பெருமான் தமது குதிரையின் மீது ஏறி விரைவாகத் திருவஞ்சைக் களத்தை அடைந்தார். வெள்ளையானையின் மீது அமர்ந்து விசும்பின் வழியாகச் செல்லும் சுந்தரர் பெருமானைக் கண்டார். உடனே தமது குதிரையின் செவியிலே திருவைந்தெழுத்தை ஒத, காற்றினும் கடுகிச் சென்ற அக்குதிரை வான்வெளியில் வெள்ளை யானையை வலம் வந்து வணங்கி விரைந்தது.
சுந்தரமூர்த்தி சுவாமிகளுக்கு முன்பாகச் சேரமான் பெருமாள் திருவணுக்கண் திருவாயிலிலே, உள்ளே செல்ல அனுமதியின்றித் தடைப்பட்டு நின்றார். உள்ளே சென்ற சுந்தரர் பெருமான் சிவபெருமானை வணங்கி, சேரரின் வருகையைத் தெரிவிக்கச் சேரமானை உள்ளே அழைக்கத் திருநந்தி தேவருக்குத் இறைவன் ஆணையிட்டான். திருநந்தி தேவரும் சென்று அருளிப்பாட்டைச் சேரருக்கு அறிவிக்க, உள்ளே வந்த சேரர் கோன், சிவ பெருமானின் திருவடி மலர்களை வீழ்ந்து இறைஞ்சினார். பெருமான் சேரர் கோனை நோக்கி “நாம் அழையாமே நீ இங்கு வந்ததேன்” என்று வினவ “ஆரூரர் கழல் போற்றி அவரைச் சேவித்து வந்தேன். அத்திருவருள் வெள்ளம் என்னை ஈர்த்துத் தங்கள் முன்பு நிறுத்தியது” என்று கூறி, அடியேன் பாடிய 'திருவுலாப் புறம் என்ற நூலைச் செவிமடுத் தருள வேண்டும் என்று வேண்டி அங்கேயே அரங்கேற்றினார். சிவபெருமான் சேரரை நோக்கி, “நம்பியாரூரராகிய ஆலால சுந்தரருடன் கூடி நீவிர் இருவீரும் நம் சிவகணத் தலைவராய் நிலை பெற்றிருப்பீராக” என்று திருவருள் பாலித்தார்.
இறைவனது ஆணையின் வண்ணம் நம்பியாரூரர் அணுக்கத் தொண்டு புரியும் ஆலால சுந்தரனாகவும், சேரமான் பெருமாள் சிவகணத் தலைவராகவும் பணிபுரியும் பெரும் பேற்றைப் பெற்றார்கள்.
நம்பியாரூரரை மணந்த பரவையாரும், சங்கிலியாரும் சிவபெருமான் திருவருளால் மீண்டும் கமலினி, அநிந்திதையராகி உமாதேவிக்குத் தாங்கள் செய்து வந்த திருப்பணியைத் தொடர்ந்து மகிழ்ந்தார்கள்.
சுந்தரர் திருக்கயிலைக்கு வரும்பொழுது வெள்ளை யானையின் மீது அமர்ந்து பாடிய 'தானெனை முன் படைத்தான்' என்ற பதிகத்தை வருணனிடம் அளிக்க அவன் அதனைத் திருவஞ்சைக் களத்திற் கொண்டு வந்து சேர்ப்பித்தான்.
சேரமான் பாடிய திருவுலாப் புறம் என்ற திருக்கைலாய ஞான உலாவை உடனிருந்து கேட்ட மாசாத்தனார் அத்தெய்வப் பனுவலை, சோழநாட்டுத் திருப்பிடவூரிலே வெளிப்படுத்தித் தமிழுலகிற்களித்துத் திருவருள் புரிந்தார். (62/.606).)

சுப்பிரமணிய பாரதியார்
இந்தியநாட்டு மஹா கவிகளுள் ஒருவர்; தமிழிலக்கிய உலகில் வள்ளுவர், இளங்கோ, கம்பர் என்னும் உயர் கவிகள் வரிசையில் வைத்து எண்ணப்படுபவர்; தமிழிலக்கியப் போக்கின் நவீனத்துவத்துக்கு வழி சமைத்தவர்; இந்திய சுதந்திரத்துக்காகக் குரல் கொடுத்தும் செயலாற்றியும் நின்ற தீரர்; இந்து சமூகத்திற் காணப்பட்ட மூடப்பழக்கங்களைத் தகர்த்துச் சமூகத்தைச் செப்பனிட முயன்ற சீர்திருத்தவாதி; மெய்ஞ்ஞான நாட்டமும் பக்தியும் மிக்க ஆன்மிகவாதி; சமயங்களுக்கிடையே உள்ள
ஒருமைப்பாட்டை உணர்ந்து கொண்ட சமரசவாதி.
தமிழ்நாட்டிலே திருநெல்வேலி மாவட்டத்தைச் சார்ந்த எட்டயபுரம் சமஸ்தானத்தில் 1882 டிசம்பர் 11 ஆம் திகதி (சித்திரபானு வருடம், கார்த்திகை மாதம், மூலநட்சத்திரம்) பிறந்த இவரது இயற்பெயர் சுப்பிரமணியம் என்பதாகும். இவரது தந்தையாராகிய சின்னச்சாமி ஐயர் தமிழ், ஆங்கிலம், கணிதம், தர்க்கம் ஆகியவற்றிலே புலமையும் மேலைநாட்டுத் தொழில் நுட்பங்களிலே நல்ல பரிச்சயமும் உடையவராய், எட்டயபுரம் சமஸ்த்தானத்திலே உயர்பதவி வகித்தவர். அக்காலத்தில் முன்னோடி முயற்சியாக சொந்தமாகவே ஒரு துணி ஆலையையும் நிறுவினார். சுப்பிரமணியத்தின் தாயார் இலட்சுமி, அவருக்கு ஐந்து வயது நிரம்பு முன்னரே காலமாகிவிட்டார். தாயாரது தந்தையினதும் சிறிய தாயாரதும் அரவணைப்பிலேயே இவர் வளர்ந்தார்.
சுப்பிரமணியம் இளமையிலேயே கவிபாடும் ஆற்றல் வாய்த்தவராய் விளங்கினார். அவரிடத்து இலக்கிய நாட்டம் இருந்த அளவுக்குக் கல்வியில் நாட்டம் இருக்கவில்லை. எனினும் தந்தையின் வற்புறுத்தலின் பேரில், குடும்பத்தையும் ஊரையும் மனவருத்தத்துடன் பிரிந்து, திருநெல்வேலி சென்று, ஆங்கிலக் கல்வி கற்றார். அதை, பாரதி தன் சுயசரிதையிற் பின்வருமாறு குறிப்பிடுவார்.
நெல்லையூர் சென்று அவ் ஊனர் கலைத்திறன் நேருமாறு எனை எந்தை பணித்தனன் புல்லை உண்கென வாளரிச் சேயினைப்
போக்கல் போலவும். அந்நியக்கல்வியில் வெறுப்போடு மூன்றாண்டுகளில் எட்டயபுரம் திரும்பிய பாரதியை, எட்டயபுரம் சமஸ்தானத்தில் வேலைக்கமர்த்தினர். தன் ஆற்றல்களால் எட்டயபுர மன்னரையும் அறிஞர்களையும் கவர்ந்த சுப்பிரமணியம், 'பாரதி என்ற பட்டம் வழங்கிக் கெளரவிக்கப்பட்டார். அப்பெயரே இன்றுவரை அவருடைய இயற்பெயர்போல பிரசித்தமுடன் வழங்குகிறது.
பன்னிரண்டாம் பிராயத்தில், பாரதி எனப் புகழ் பெற்றவர், பதினைந்தாம் பிராயத்தில், திருமணம் செய்து வைக்கப்பட்டார்.
அப்போது அவரது மனைவி செல்லம்மாளுக்கு வயது ஏழு அக்கால
இந்துக் க்களஞ்சியம்

Page 212
வழக்கப்படி பெரியோர்களின் சொற்படி செய்து கொண்ட பாலிய விவாகம் குறித்து பிற்காலத்தில் பாரதி மிகவும் மனம் வருந்தினார். அதற்கு முக்கிய காரணம் தேசத் தொண்டிலும் கவிதையிலும் கொண்டிருந்த ஈடுபாட்டுக்கும் குடும்பக் கடமைக்கு மிடையிலே போராட்டம் நடத்த வேண்டிய நிலைமைக்கு பாரதி ஆளானமையேயாகும்.
மிக இளவயதிலேயே பாரதி குடும்பச்சுமையைத் தாங்க வேண்டிய நிலைக்கு ஆளானார். பாரதியின் தந்தை சின்னச் சாமி ஐயர் துணி ஆலைத் தொழிலிலே பெரு நட்டமடைந்து மிகுந்த மனவருத்தத்துக்கு ஆளாகி மரணமடைந்தார்.
இருபது வயதும் நிரம்பாத நிலைமையில் இத்தகைய நெருக்கடிக்கு ஆளான பாரதி, அக்காலத்தில் காசியில் வாழ்க்கை நடத்தி வந்த தனது அத்தையின் அழைப்பின் பேரில் காசி சென்று, அலகாபாத் பல்கலைக்கழகத்துடன் இணைந்த மத்திய இந்துக் கல்லூரியிற் சேர்ந்து கற்றார். நுழைவுத்தேர்வில் சமஸ்கிருதம், இந்தி ஆகிய புது மொழிகளைக் கற்று, முதற் பிரிவிலே சித்தியடைந்தார். தேர்விற் சித்தியடைந்த பாரதி, சிறிது காலம் காசியில் ஆசிரியத் தொழிலையும் மேற்கொண்டு வந்தார்.
பாரதி, காசியில் இருந்த காலத்திலேயே, தமது குலமான பிராமண குலத்தின் வழக்கத்துக்கு மாறாக, முடிவெட்டிக் கொள்வதும் மீசை வளர்ப்பதும் வடநாட்டு முறையில் பெரிய தலைப்பாகை வைத்துக் கொள்வதுமான பழக்கங்களை ஏற்படுத்திக் கொண்டார்.
இக்கால கட்டத்தில் எட்டயபுர மன்னரின் அழைப்பின் பேரில், மீண்டும் தமிழ்நாடு திரும்பிய பாரதி, எட்டயபுரம் சமஸ்தானத்தில் வேலைக்கமர்ந்தார். எனினும் அவரது சுதந்திரமானதும் நேர்மையானதுமான மனப்பான்மைக்கு அந்த அரண்மனை வாழ்க்கை ஒத்து வராததால், இரண்டாண்டுகளில் எட்டய புரத்தைவிட்டு மதுரை சென்று, அங்கே சேதுபதி உயர்நிலைப் பள்ளியில், தற்காலிகமாக ஆசிரியர் வேலைக்கு அமர்ந்தார். (1904 ஆகஸ்டில்) அதுவும் விரைவில் முடிவுக்கு வந்தது (1904 நவம்பரில்).
அடுத்து, பாரதி சென்னையிலிருந்து வெளிவந்த சுதேச மித்திரன் பத்திரிகையில் துணையாசிரியராகச் சேர்ந்தார். பாரதியிடமிருந்த தமிழ், ஆங்கில மொழியறிவும் எழுத்தாற்றலும் பத்திரிகைத் துறையில் பாரதியை நன்கு பிரகாசிக்கச் செய்தன. அக்காலகட்டத்திலே பாரதி அதிக மொழி பெயர்ப்புக்களையும் கவிதைகளையும் எழுதினார். அரசியலில் அதிகம் ஈடுபாடு காட்டத் தொடங்கினார். பெண்கள் சமத்துவம், சாதியொழிப்பு முதலான சமூக சீர்திருத்த விடயங்களில் ஈடுபடலானார்.
இந்திய தேசத்தில் அக்காலத்திற் கிளர்ந்து பரந்த சுதந்திர உணர்ச்சியில் ஆழ்ந்த பாரதியார், பத்திரிகையாளர் என்ற முறையிலும் தேசபக்தியினாலும் இந்திய தேசிய காங்கிரஸ் மாநாடுகளிற் கலந்து கொண்டார். அத்தகைய மகாநாடு
இந்துச் க்களஞ்சியம்
186

ஒன்றிலேதான், அவர், சுவாமி விவேகானந்தரின் பிரதம சீடர்களுள் ஒருவரும் பிறப்பால் ஆங்கிலேயருமான நிவேதிதா தேவியைச் சந்திக்கும் வாய்ப்பினைப் பெற்றார். நிவேதிதா தேவி, பாரதியை நோக்கிப் பின்வருமாறு கூறினார்.
என் குழந்தாய் உன் மனபேதங்களையெல்லாம் களைந்து விடு சாதி மதம் பிறப்பு ஆகியவை காரணமான அநாகரிக வேற்றுமைகளை மறந்துவிடு உன் இதயத்தில் அன்பு குடிகொள்ளட்டும் வரலாற்றில் நீ ஒரு தெய்வப்பிறவியாக விளங்குவாய்
நிவேதிதா தேவியின் சந்திப்பின்பின், பெண் சுதந்திரம், சாதி சமத்துவம், தேச சுதந்திரம் என்பவற்றில் பாரதி தீவிரவாதியானார். நிவேதிதா தேவியை தனது ஞானகுருமாரில் ஒருவராகவே பாரதி கொண்டார். பிற்காலத்தில், தனது நூல்கள் இரண்டினை நிவேதிதா தேவிக்குச் சமர்ப்பித்தார் பாரதியார்.
நிவேதிதா தேவியைச் சந்தித்துவிட்டுச் சென்னை திரும்பிய பாரதியாரிடம் புதிய செயல்வேகம் தலையெடுத்திருந்தது. தன் எழுத்துக்களில் ஆங்கிலேயராட்சிக் கெதிராக அதிதீவிரம் காட்ட முற்பட்டார்; சுதேசமித்திரன் பத்திரிகை அதற்கு இடம் கொடுக்கவில்லை. அதையடுத்து 1906 இல் வெளிவரத் தொடங்கிய இந்தியா என்ற தமிழ் வார ஏட்டில் இணைந்து தலையங்கங்கள், அரசியற் கட்டுரைகள்; கவிதைகள், விகடத் துணுக்குகள் எனப் பலவாறு எழுதினார்; கருத்தோவியங் களையும் வரையச் செய்து பிரசுரித்தார். அத்துடன் பாலபாரதா
என்ற ஆங்கில வார ஏட்டின் ஆசிரியராகவும் பணியாற்றினார்.
பத்திரிகை மூலம் மாத்திரமன்றி, இயக்க நடவடிக்கைகள் மூலமும் ஆங்கில அரசுக்கெதிராக பாரதி துணிந்து போராடினார். அந்நிய பண்டங்களைத் தீயிலிட்டுக் கொளுத்துதல் முதலான போராட்ட நடவடிக்கைகளுக்குச் சார்பாகக் கூட்டங்களிற் பேசியும் பாடியும் அணி திரட்டினார். இந்திய தேசிய காங்கிரஸின் மிதவாதிகளோடு ஒத்துப் போகாதவராய் பாலகங்காதர திலகர், அரவிந்தர் முதலான தீவிரப் போக்குடையோர் சார்பாகவே பாரதி செயற்பட்டார். மிதவாதிகளை ஏளனம் செய்தார்.
1907ஆம் ஆண்டில், பாரதியாரின் மூன்று தேசபக்திப் பாடல்கள் அடங்கிய நூல் ஒன்று, கிருஷ்ணசுவாமி ஐயர் என்ற தேசபக்தர் ஒருவரின் உதவியால் வெளிவந்தது; பாரதியின் எழுத்துக்கள், நூல் வடிவில் முதன் முதல் வெளிவந்தது அப்பொழுதுதான். 15,000 பிரதிகள் வெளியாயின; பாரதியின் புகழும் தேசிய உணர்ச்சியும் தமிழ்நாடெங்கும் பரவலாயின. அக்கால அரசியற் பொதுக் கூட்டங்கள் பாரதிபாடலோடே தொடங்குவது வழக்கமாயிற்று.
இக்காலகட்டத்தில் ஆங்கிலேய அரசுக்கெதிரான போராட்ட நடவடிக்கைகள் தீவிரமடைந்தன. பாலகங்காதர திலகர் போன்ற தீவிரவாதிகள் மாத்திரமன்றி சுதேசமித்திரன் ஆசிரியராக

Page 213
விளங்கிய ஜி. சுப்பிரமணிய ஐயர் போன்ற மிதவாதிகள்கூடக் கைது செய்து சிறையிலடைக்கப்பட்டார்கள். தீவிரவாதிகளின் முக்கிய பத்திரிகையான இந்தியாவினுடைய ஆசிரியர் என்று தவறாகக் கருதிக் கொண்டு எம். சீனிவாசனையும் அரசு கைது செய்தது. இந்தியா பத்திரிகையின் உண்மையான ஆசிரியரான பாரதியும் விரைவிலே கைது செய்யப்படலாம் என்ற அச்சத்தால் பாரதியை ஆங்கிலேயரின் அதிகாரத்துக்கு உட்படாததும் பிரான்சியரின் ஆளுகைக்குட்பட்டதுமான புதுச்சேரிக்குத் தப்பிச் செல்லுமாறு மிகவும் வற்புறுத்தினர். அவ்வற்புறுத்தலின் பேரில் விருப்பின்றியே புதுச்சேரி சென்று மறைவு வாழ்க்கை வாழலானார் பாரதி. புதுச்சேரியில், தொடக்ககாலத்தில் குப்புசாமி ஐயர் என்பவர் பாரதிக்கு அடைக்கலம் கொடுத்தார். பின் சுந்தரேச ஜயர் என்பர் பலசிரமங்களுக்கு மத்தியிலும் பாரதிக்கு உதவிபுரிந்தார். குவளைக்கண்ணன் (குவளையூர் கிருஷ்ணமாச்சாரியார்) என்ற இளைஞன் புதுவையில் பாரதியை மிக அன்போடு கவனித்துக் கொண்டான். அவனைப் பற்றி பாரதி தன் கவிதைகளிலும் பாடிச் சிறப்பித்துள்ளார்.
பாரதியின் புதுவை வரவையடுத்து இந்தியா பத்திரிகையும் அங்கிருந்தே வெளியிட வேண்டியேற்பட்டது. பாரதியை ஆசிரியராகக் கொண்டு, புதுவையிலிருந்து வெளிவந்த இந்தியா, தமிழ்நாட்டின் மூலைமுடுக்கெல்லாம் தேசபக்தர்களால் விநியோகிக்கப்பட்டது. இந்தியா பத்திரிகையை வெளியிட்டு வந்த மண்டயம் சகோதரர்கள் புதுவையில் விஜயா என்ற நாளிதழையும் ஆரம்பித்தார்கள். அதற்கும் பாரதியே ஆசிரியராக விளங்கினார். புதுச்சேரியிலிருந்த தேசபக்தர்கள் கர்மயோகி என்ற மாத வெளியீட்டைத் துவக்கினார்கள். பாலபாரதா என்ற ஆங்கில வாரப்பத்திரிகையும் புதுவைக்கு மாற்றப்பட்டது. இவற்றையெல்லாம் இந்திய அரசாங்கம் சகித்துக் கொள்ளவில்லை. 1910 மார்ச் 12 இல் இந்தியா பத்திரிகையை நிறுத்தும்படியாயிற்று. தொடர்ந்து ஏனைய பத்திரிகைகளும் அதே கதியை அடைந்தன. பாரதியின் உணர்ச்சிக்கு வடிகாலாயும் ஆற்றலுக்குக் களமாயும் அமைந்த பத்திரிகைகளின் இடைநிறுத்தத்தால் பாரதி மிகுந்த மனச்சோர்வுக்கு ஆளானார்.
அக்காலகட்டத்தில், தீவிர அரசியலில் ஈடுபட்டு சிறைவாசம் அனுபவித்து, விடுதலையாகி, புதுவைக்கு வந்து, தன் அரசியலிடுபாட்டை விடுத்து, ஆன்மிகப் பாதையில், யோகப் பயிற்சியில் ஈடுபட்டுவந்த அரவிந்தரின் தொடர்பு, பாரதியின் ஆன்மிக நாட்டத்தைத் தூண்டுவதாய் அமைந்தது. அவர்களோடு தேசபக்தரும், பிரபல சிறுகதையாசிரியருமான வ. வே. சு. ஐயர், சீனிவாசாச்சாரியார் ஆகியோரும் கூடி ஆன்மிக சம்பந்தமாக விவாதிப்பதில் ஈடுபட்டார்கள்.
தமிழின் ஆரம்ப நாவலாசிரியர்களில் ஒருவரான ராஜமையரின் தொடர்பும் பாரதிக்குப் புதுவையில் ஏற்பட்டது. அங்கே பிரபல எழுத்தாளர் வ. ராமசாமியின் நட்பும், உதவியும்

187
பாரதிக்குக் கிட்டியது. புதுவையில் பாரதியிடம் அன்பு பாராட்டியவர்கள் அநேகர். பாரதி, தாழ்த்தப்பட்டோரிடத்திற் கூட அன்புடனும் சமத்துவத்துடனும் பழகினார். ஆர். கனகலிங்கம் என்ற தாழ்த்தப்பட்ட இளைஞனுக்கு பூனூல் அணிவித்துப் புரட்சி செய்ததும் புதுவையிலேயே. புதுவையில் பல சாதுக்களின் தொடர்பும் பாரதிக்குக் கிட்டியது.
குள்ளச்சாமி, கோவிந்தசாமி, யாழ்ப்பாணத்துச் சாமி, எனப்பட்ட சாதுக்கள் சிலர் தனக்கு ஞான வழிகாட்டியமை பற்றி, பாரதி, தன் சுயசரிதையிலும் வேறு எழுத்துக்களிலும் விபரித்திருக்கிறார்.
இதற்கிடையில், உளவாளிகளின் இடையறாத தொல்லையும் பாரதிக்கு இருக்கவே செய்தது. ஆங்கிலேயருடன் ஏற்பட்ட உடன்படிக்கையொன்றின் பேரில், பிரான்சியராலும் தேச பக்தர்கள், நெருக்கடிக்கு ஆளாயினர். பாரதி பத்திரிகைத் தொழிலில் ஈடுபடமுடியாமற் போனதுடன் வேறு வழிகளில் வந்து கொண்டிருந்த பணவருவாயும் தடைப்படலாயிற்று.
இத்தனை துன்பத்துக்கு மத்தியிலும், பாரதியிடம் குடி கொண்டிருந்த ஆன்ம பலம் ஒன்றே அவரை வாழவைத்தது.
ஜயமுண்டு பயமில்லை மனமே - இந்த ஜன்மத்திலே விடுதலையுண்டு நிலையுண்டு பயனுண்டு பக்தியினாலே - நெஞ்சிற் பதிவுற்ற குலசக்தி சரணுண்டு பகை இல்லை. புயம் உண்டு குன்றத்தைப் போலே - சக்தி பொற்பாதம் உண்டு அதன் மேலே நியமமெல்லாம் சக்தி நினைவன்றிப் பிறிதில்லை; நெறியுண்டு குறியுண்டு குலசக்தி வெறியுண்டு
இக்காலகட்டத்தில் அரவிந்தர், வ.வே.சு. ஐயர் முதலானோரின் தூண்டுதல் காரணமாக, பாரதி, எழுத்துத்துறையில் அதிகமாக ஈடுபடலானார். பாரதி, தமது முக்கியமான நூல்கள் பலவற்றை எழுதியது புதுவை வாசத்தின்போதே.
'பாரதமாதா திருப்பள்ளியெழுச்சி முதலான தேசபக்திப் பாடல்கள், 'பாரதி அறுபத்தாறு, என்பனவும் ‘வேதரிஷிகளின் கவிதை, பதஞ்சலி யோக சூத்திரம், பகவத் கீதை முதலான மொழிபெயர்ப்புக்களும் பாரதியின் முப்பெரும் படைப்புக்கள் எனப் போற்றப் பெறும் 'கண்ணன் பாட்டு, பாஞ்சாலி சபதம், குயிற்பாட்டு என்பனவும் அவற்றுட் குறிப்பிடத்தக்கன.
இவை பாரதியின் கவித்துவத்தை மாத்திரமன்றி அவரது தேசபக்தியையும் அதற்கு மேலாக அவரது ஆன்மிக பக்குவத்தையும் வெளிப்படுத்தி நிற்பன. பாரதியின் பகவத் கீதை மொழிபெயர்ப்பு தமிழிலமைந்த கீதை மொழிபெயர்ப்புக்களில் தலையாயதாகக் கொள்ளத்தக்கது. அந் நூலுக்கு அவர் எழுதிய முன்னுரை, பாரதியின் ஆன்மிகத் தெளிவையும் தமிழ் வசனநடையின் ஆற்றலையும் உணர்த்தி நிற்பது.
இந்துக் ஞ்சியம்

Page 214
பாரதியின் கண்ணன் பாட்டு, ஆழ்வார்களால் அருளப்பட்ட பாசுரங்களின் வரிசையில் வைத்து எண்ணத்தக்கதாய், ஒருவகையில் அவற்றிலும் ஒருபடி முன்னேறிய நிலையில் விளங்குவது. ஆழ்வார்கள் பாவனா மார்க்கத்தில் கண்ணனைத் தங்கள் காதலனாகவும் குழந்தையாகவுமே கொண்டார்கள். பாரதியோ கண்ணனைத் தன் காதலியாக, குருவாக, ஆண்டானாக, அரசனாக, அவற்றுக்கும் அப்பால் தம் சீடனாக, இன்னும் மேலே, சேவகனாகக் கூடக் கண்டு நிற்கும் திறம் வியக்கத்தக்கதாகும்.
பாரதியின் பாஞ்சாலி சபதம்’ எனும் குறுங்காவியம் நாடகப் பாங்கில் அமைந்தது. பழைய மகாபாரதக் கதையைப் புதிய நோக்கிலும் போக்கிலும் குறியீட்டுத்தன்மை யுடையதாய் பாரதி அமைத்துக் கொண்டார்.
"ஆங்கிலக்கவி ஷெல்லியைப் போன்று பாரதி சென்ற காலத்தை நிகழ்காலத்துடன் இனைத்துப் பாடல்களில் இழையோட விட்டிருக்கிறார். இந்திய தேசபக்தர்கள், பாண்டவர்களைப்போல நிதானக் கொள்கையைப் பின்பற்றுகிறார்கள். சில தீவிரவாதிகள், அரசியல் அரங்கத்திலிருந்து அகற்றப்பட்டு சிறையிலோ வெளிநாடுகளிலோ வாடுகிறார்கள் அடிமைத் தளையில் பிணையுண்ட பாரத மாதாவுக்கு வேறு வழிதான் என்ன? கெளரவர்களின் அவையில் நிற்கும் திரெளபதியாக பாரதமாதா ஆகிவிடுகிறாள். திரெளபதியின் தீரச் செயல்போல அறுதியில் பாரதத்தின் ஆற்றலே வெற்றிபெறும் என்று பாரதி நம்புகிறார்.”
ஞானபானு என்ற பத்திரிகையில் ஆறு அத்தியாயங்கள் வரையில் எழுதி, இடையில் விடுபட்ட சின்னச் சங்கரன் கதை வெளிவந்தது. அது பாரதியின் கவிதை நடையிலமைந்த சுயசரிதைக்கு வேறாக வசனநடையிலமைந்த சுயசரிதை என்றே கொள்ளப்படுகிறது. அத்துடன் தமிழின் புனைகதை இலக்கியங்களின் முன்னோடியென்றும் அது கொள்ளப்படும்.
மிகக் குறுகிய காலத்தில் பாரதி ஏராளமாக எழுதினார். அவை பத்திரிகைகளில் வெளிவந்தன. அவற்றுட் சிலவே பாரதி உயிருடனிருந்த காலத்திலேயே நூல்வடிவம் பெற்றன. அதற்கு உறுதுணையாய் அமைந்தவர் பாரதியின் அன்பரான பரலி சு. நெல்லையப்பர் என்பவர். பாரதியின் எழுத்துக்களிற் பெரும்பகுதி பாரதி மறைந்தும் வெகுநாட்கள் வரையிலே கையெழுத்துப் பிரதிகளாகவே கிடந்தமை குறிப்பிடத்தக்கது.
“நமக்குத் தொழில் கவிதை, நாட்டுக்கு உழைத்தல்; இமைப்பொழுதும் சோராதிருத்தல்” என்ற பாரதியின் உரை வெறும் வெற்றுரையல்ல; தமிழிலக்கிய வரலாற்றில் பாரதியைப் போல் பல்வேறு விடயங்கள் சம்பந்தமாக, பெருந்தொகையில் எழுதியவர்கள் வேறு யாரும் இருப்பதாகத் தெரியவில்லை;
இந்துக்கலைக்களஞ்சியம்
188

பத்திரிகைகளில் ஆசிரியத் தலையங்கமாக, மொழி பெயர்ப்புக்களாக, கட்டுரைகளாக, கதைகளாக, கவிதைகளாக அவர் எழுதியவை ஏராளம். தமது எழுத்துக்களை நாற்பது தொகுதிகளாக வெளியிட அவர் ஆர்வம் கொண்டிருந்தார். ஆனால் அதற்கு உதவிசெய்யத்தக்கதாக அன்றைய தமிழுலகு இருக்கவில்லை என்பது மனவருத்தத்துக்குரியது.
தன் குடும்பத்தைக் கொண்டு நடத்தவே முடியாத பொருளாதார நிலையிலிருந்த பாரதி, நூல்களை வெளியிடுவது எவ்வாறு? புதுவை வாழ்வின் இறுதி மூன்று ஆண்டுகளில் பாரதிக்கு ஏற்பட்ட வறுமையும் துன்பமும் சொல்லொணாதவை. பாரதியின் பெண்கள் இருவரில் மூத்த பெண் காசியில் அவரது அத்தை வீட்டில் வளர்ந்தாள். தன் மனைவியையும் இரண்டாவது பெண்ணையும் பராமரிப்பதே பாரதியால் இயலாததாகிவிட்டது. அக்காலகட்டத்தில் புதுச்சேரியில் இருந்து ஆங்கில இந்தியாவுக்கு மீளவிரும்பினார் பாரதி.
ஆங்கில அரசு அவரைக் கைது செய்வதற்குத் தயாராகவே இருந்தது. பாரதி, மாறு வேடங்களிலும் நடமாடவேண்டியேற் பட்டது. பாரதி, மாறு வேடங்களில் நாகபட்டினத்தில் வாழ்ந்த காலத்தில், முதலாம் உலகப்போரும் முடிவுற்றது. அது முடிவுற்றதும் ஏற்படக் கூடிய அதிகரித்த கட்டுப்பாடுகளை அநுமானித்தவராய், பாரதி, உடனடியாக தன் மனைவியின் ஊரான கடயத்துக்கு மனைவியோடும் மைத்துனரோடும் புறப்பட்டார்.
வழியில், கடலூரருகே பாரதி கைதுசெய்யப்பட்டார். நீதிமன்றில் ஆஜராக்கப்பட்டார். எனினும் சுதேச மித்திரன் பத்திரிகையைச்சார்ந்த ரங்கசாமி ஐயரின் உதவியால் விடுதலையானார். பாரதியின் விடுதலைக்கு அன்னிப் பெசன்ட் அம்மையார், டாக்டர் சுப்பிரமணிய ஐயர், சி.பி.ராமசாமி ஐயர் ஆகியோரும் உதவி புரிந்தமை குறிப்பிடத்தக்கது.
விடுதலையான பாரதி, கடயம் சென்று, கவிதை எழுதிக்கொண்டு அமைதியாக வாழ முற்பட்டார். ஆனால் அவரது முற்போக்கான எண்ணங்களும், நடத்தைகளும் கடயத்திலுள்ள பிராமண வகுப்பாருக்கு ஒத்துவராததால் அங்கும் அவரது அமைதி கெட்டது. சாதி, சமய பேதங்கள் பார்க்காதவராய், பெண்களைச் சமத்துவத்துடன் நடத்துபவராய் , அனைத்து விலங்குகளிடமும் அன்பு பாராட்டி அரவணைக்கும் பாரதியின் போக்கால் அவர் பிராமணக் குடியிருப்பை விட்டு ஊருக்கு வெளியே வாழ வேண்டியவரானார்.
அதில் பாரதி நிம்மதியையே கண்டார்; அக்காலத்தில் பாரதி, தமிழ் நாட்டின் பல பாகங்களுக்கும் சொற்பொழிவாற்றச் செல்லும் வழக்கத்தைக் கொண்டிருந்தார். ஆங்கில அரசாங்கத்தின் கெடுபிடிகளுக்கு எதிராக ஒத்துழையாமை இயக்கம் முதலான போராட்ட நடவடிக்கைகளில் இறங்கிய காந்தியடிகள், 1919 மார்ச்சில் சென்னை வந்திருந்த சமயம், பாரதியார், காந்தியடிகள்

Page 215
தங்கியிருந்த இடத்துக்குச் சென்று அவரைச் சந்தித்துப் பேசிய நிகழ்ச்சி, குறிப்பிடத்தக்க ஒரு நிகழ்ச்சியாகும். அந்த ஒரிரு நிமிடச் சந்திப்பிலேயே காந்தியடிகள் பாரதியை விளங்கிக் கொண்டு உயர்ந்த அபிப்பிராயத்துடன் அவரைப் பற்றி ராஜாஜியிடம், “அவரை நன்கு கவனித்துக் கொள்ள வேண்டும். அவரைக் கவனித்துக் கொள்வதற்குத் தமிழ்நாட்டில் யாரும் இல்லையா?” என்று கூறியிருந்தார்.
பாரதி காந்தியடிகளைப்பற்றிப் பல இடத்தும் எழுதியிருக்கிறார். “இந்தியாவின் இரட்சகர் காந்திஜி” என்பதை அக்காலத்துப் பெரியவர்கள் பலருக்கும் முன்பதாக உணர்ந்து கொண்டவர் பாரதியே. காந்தியடிகளின் தென்னாபிரிக்க இயக்கத்துக்குப் பணம் திரட்டிய முதல் இந்தியர் பாரதியே. ஆயினும், காந்திஜி செல்வாக்குடன் விளங்கிய காலத்தில், அவரைச் சந்திப்பதற்கே பல சம்பிரதாயங்களும், கட்டுத் திட்டங்களும் நிலவிய காலத்தில் அவரைச் சந்திக்கும் நிலையிலும், பாரதி காந்தியடிகளுக்கு சமமான நிலையில் நின்றே பேசினார் என்பதும் காந்தியடிகளின் இயக்கத்துக்கு ஆசீர்வாதம் செலுத்தினார் என்பதும் பாரதியின் ஆன்ம பலத்தை உணர்த்துவனவாகும். அதேவேளை, ஆரம்ப காலத்தில் மிகத்தீவிரப் போக்குடன் விளங்கிய பாரதி, பிற்காலத்தில் காந்தியடிகளின் அஹிம்சை நெறிக்கு ஆட்பட்டு விட்டார் என்பதை, மேற்படி சந்திப்புக்குப்பின்னர், பாரதி, காந்தியடிகளைப் புகழ்ந்து பாடிய பாடல் ஒன்று உணர்த்தும்.
பெருங் கொலை வழியாம் போர்வழி இகழ்ந்தாய்
அதனிலும் திறன் பெரிதுடைத்தாம் அருங்கலை வானர் மெய்த் தொண்டர் தங்கள்
அறவழியென்று நீ அறிந்தாய் நெருங்கிய பயன்சேர் ஒத்துழையாமை'
நெறியினால் இந்தியாவிற்கு வருங்கதி கண்டு பகைத் தொழில் மறந்து வையகம் வாழ்க நல்லறத்தே.
1920 நவம்பரில் பாரதி மீண்டும் சுதேசமித்திரனில் உதவியாசிரியராகச் சேர்ந்தார். அரசியலை விட ஆன்மிக விடயங்களிலேயே அதிக அக்கறை காட்டி எழுதலானார். ஒழுங்காகக் கிடைத்த ஒரளவு வருமானத்தில் குடும்பத்தை ஒட்டிவந்தார்.
ஒரு நாள், பாரதி, திருவல்லிக்கேணியில், தான் வசித்து வந்த கோயிலுக்கு அருகாமையிலுள்ள பார்த்தசாரதி கோயிலுக்குச் சென்றார். வழக்கம் போலவே கோயில் யானைக்கு தேங்காய், பழம் கொடுக்க முற்பட்ட வேளை, மதம் பிடித்திருந்த அந்த யானையால், தூக்கியெறியப்பட்டார். தன் உயிரையும் பொருட்படுத்தாத நண்பன், குவளைக் கண்ணனால் யானையிடமிருந்து மீண்ட பாரதி, ஒரளவு உடல்தேறி சிறிதுகாலம் தொழிலிலும்

189
ஈடுபட்டுவந்தார். ஆயினும், மீண்டும் உடல் நிலை மோசமாகி, 1921 செப்டெம்பர் 12ஆம் திகதி காலமானார். அவர் இறந்த பின்பும் அவரது பாடல்கள் இந்திய தேச விடுதலைக்கு உரமூட்டுவனவாய், தேசபத்தர் நெஞ்சங்களிலெல்லாம் கிளர்ச்சியேற்படுத்தியபடி விளங்கின; விளங்குகின்றன.
பாரதியின் வாழ்க்கை, போராட்டமயமாகவே அமைந்திருந்தது. வறுமைக்குள்ளேயே உழன்றார்; ஆயினும் அவர் தனக்காகவோ தன் குடும்பத்துக்காகவோ எதையும் பிரார்த்திக்கவில்லை. தன் தேசத்துக்காக - இன்னும் சொல்வதானால் உலகத்து மானிடர் அனைவருக்குமாக, அதற்கும் மேலாக அனைத்துச் சீவராசிகளுக்குமாகவே அவரது பிரார்த்தனை அமைந்திருந்தது.
பேசாப் பொருளைப் பேச நான் துணிந்தேன் கேட்கா வரத்தைக் கேட்க நான் துணிந்தேன்; மண்மீதுள்ள மக்கள், பறவைகள் விலங்குகள், பூச்சிகள், புல், பூண்டு மரங்கள் யாவும் என் வினையால் இடும்பை தீர்ந்தே இன்பமுற்று அன்புடன் இனங்கி வாழ்ந்திடவே செய்தல் வேண்டும் தேவ தேவா! ஞானாகாசத்து நடுவே நின்று நான் பூ மண்டலத்தில் அன்பும் பொறையும் விளங்குக துன்பமும், மிடிமையும் நோவும் சாவும் நீங்கி சார்ந்த பல் உயிரெலாம் இன்புற்று வாழ்க’ என்பேன், இதனை நீ திருச்செவி கொண்டு திருவுளம் இரங்கி
அங்ங்னே ஆகுக' என்பாய் ஐயனே! இந்நாள் இப்பொழுது எனக்கு இவ்வரத்தினை அருள்வாய் ஆதிமூலமே!அநந்த சக்தி குமாரனே! சந்திரமவுலி! நித்தியப் பொருளே! சரணம் சரணம் சரணம் சரணமிங்குனக்கே.
பாரதி தன் குடும்பத்துக்கு அன்பு ஒன்றைத்தவிர வேறு எதனையும் திருப்திகரமாகச் செய்தாரில்லை. ஆனால் அந்த அன்பைத் தாராளமாக வழங்கினார். தன் சொந்தப் பிள்ளைகளிடத்துக் காட்டிய அன்புக்கு நிகராகவே பிற குழந்தைகளிடத்தும் பிராணிகளிடத்தும் அன்பு செலுத்தினார்.
செய்கதவம் செய்கதவம்! நெஞ்சே! தவம் செய்தால் எய்த விரும்பியதை எய்தலாம் - வையகத்தில் அன்பிற் சிறந்த தவமில்லை அன்புடையார் இன்புற்று வாழ்தல் இயல்பு எனும் அவருடைய வாக்கை நோக்கின், பாரதி வாழ்நாள் முழுவதும் பெருந்தவம் மேற்கொண்டார் என்றும், அதில் மனநிறைவு கண்டார்
என்றும் கொள்ளலாம்.
பாரதி, குழந்தைகளிடத்து அன்பு மாத்திரமன்றி அக்கறையும் காட்டினார். அதன் வெளிப்பாடே பாரதியின் குழந்தைப் பாடல்கள்;
இந்துச் க்களஞ்சியம்

Page 216
எதிர்கால இந்து சமுதாயம் தீரம் மிக்கதாய் அமையவேண்டும் என்பது பாரதியின் பேரவாவாக அமைந்தது.
பாரதி, தன் தேசத்தின் விழுமியங்களில் அதீத பற்றுக்கொண்டவராக விளங்கினார்; அவை தொடர்பாக பெருமித உணர்வு கொண்டு விளங்கினார்.
மன்னும் இமய மலை எங்கள் மலையே
மாநிலம் மீது அது போல் பிறிது இலையே! இன்னறுநீர்க்கங்கை அறு எங்கள் ஆறே இங்கு இதன் மாண்பினுக்கு எதிர் எது வேறே? பன்னரும் உபநிடத நூல் எங்கள் நூலே பார்மிசை ஏது ஒரு நூல் இதுபோலே? பொன் ஒளிர் பாரத நாடு எங்கள் நாடே போற்றுவோம் இஃதை எமக்கு இலை ஈடே!
பாரதி, பாரததேசத்தை, இந்து மதத்தை நேசித்தாராயினும் அவற்றின் மூடவழக்கங்களில் அதீத வெறுப்புக் கொண்டிருந்தார். பெண்களை அடக்குவதையும், மனிதனுக்கு மனிதன் உயர்வு தாழ்வு கற்பிக்கும் சாதிவழக்குகளையும், பிற மூடப்பழக்கங் களையும் கடுமையாக எதிர்த்தார். ஆயினும் சில தீமைகளுக்காக பெரும்பான்மை நன்மைகளை ஒதுக்கித்தள்ள அவர் தயாரானாரில்லை; தீமைகளைக் களைந்து நன்மைகளை வளர்க்கவே முயன்றார். தாம் ஒரு இந்தியர் என்பதிலும் இந்து என்பதிலும் பெருமிதம் கொண்ட பாரதி, சகிப்புத்தன்மையற்ற பிற்போக்காளராய் ஆகிவிடவில்லை. ஆங்கிலேய அரசாங்கத்தை எதிர்த்த அவர், கிறிஸ்தவ மதத்தை ஒரு போதும் எதிர்த் தாரில்லை; மாறாக இயேசுநாதரைப் போற்றித்துதிக்கும் பாடல்களையும் பாடியிருக்கிறார். அதுபோலவே இஸ்லாமியச்
சார்பாய் அல்லாவைப் புகழ்ந்து பாடியுள்ளார்.
ஒரு மதத்தைவிட மற்றயது எந்தவகையிலும் உயர்ந்ததோ, தாழ்ந்ததோ இல்லை என்பதில் தெளிவு கொண்டிருந்தவர் பாரதி. அதனால் அவர் மதமாற்றத்தை முற்றாகவே வெறுத்தார். தமது நெருங்கிய நண்பர் சுரேந்திரநாத் ஆர்யா, கிறிஸ்தவமதத்திற்கு மாறியபோது, அவரிடம் மிக்க வருத்தத்துடன் பாரதி பின்வருமாறு கூறினார்;
இந்துப் பழக்கவழக்கங்கள், மரபுமுறைகள் ஆகியனவற்றில் பல தவறாகப் பயன்படுத்தப் படுகின்றன. அவற்றில் மூடக் கொள்கைகளும் இருக்கின்றன. இவற்றை அகற்றுவதற்கு நாம் முயற்சி செய்ய வேண்டும் மாறாக இந்த மாதிரி விட்டு ஒடிப்போவதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. எல்லா மதங்களிலும் உண்மை நிலவுகிறது.
பாரதி பண்டைய நம்பிக்கைகளில் நல்லவை எவை, தீயவை எவை எனப் பகுத்துணரும் ஆற்றல் பெற்றிருந்தமையால் அவருடைய பக்தியும், சமய நம்பிக்கையும் மூடத்தனமாக அமையவில்லை. சமயம் விதித்த புறக்கட்டுப்பாடுகளை அவர் முற்றாகவே
இந்துக் ទ្រឹត្វទាំងៃ
190

புறக்கணித்தார். சாதிவேற்றுமைகளையும், சடங்காசாரங் களையும் மறுதலித்தார். பூனூல் அணியும் தம் குலமரபுக்கு மாறாக தன் பூணுாலை அறுத்தெறிந்தார். அவருடைய மதநம்பிக்கை ஞானம், பக்தி என்பவற்றின் அடிப்படையிலானதன்றிக் கிரியைகளினடிப் படையிலானதன்று. பிரபஞ்ச ஞானத்திலும் ஆன்ம விசாரத்திலுமே அவரது கருத்து மிகுதியும் சென்றது. எல்லாவற்றுக்கும் மேலாக விளங்கும் சக்தியொன்றை உறுதியாக நம்பினார். அச்சக்தியின் அம்சமாகவே விநாயகர், கண்ணன், முருகன் முதலான அனைத்துத் தெய்வங்களையும் கருதினார். அளவு கடந்த உலகியற்றுன்பத்துக்கு மத்தியிலும் ஆண்டவனிடத்து ஒன்றிவிடும் வல்லமை பாரதியிடம் இருந்தது. அதனாலேயே தேசபக்தி முதலிய உலகியல் விடயங்களிலும் ஆன்மிக சக்தியொன்றை உணர்ந்து கொண்டார். அவரது பக்திப் பாடல்கள் ஞானக் களஞ்சியமாய் விளங்குவன. அவரது ஞானப்பாடல்கள் வேதாந்த தத்துவத்தின் பிழிசாறாய் அமைவன. (க, இர)
சுப்பிரமணியன்
கெளமார வழிபாட்டு மரபில் வழிபடப்படும் தெய்வம். ஸ்கந்தனின் ஒரு வடிவம் சுப்பிரமணியன். நல்ல வேதத்திற்குத் தலைவன், சிறந்த தேவன், ஆனந்தமான பரவஸ்துவிலிருந்து தோன்றி ஒளிர்பவன் எனப் பொருள்படும் குணங்களை யுடையவன். சு-சிறந்த, பிரமணியம்- பிரம்மத்தைச் சார்ந்த, வேதத்தைச் சார்ந்த எனப் பொருள்படும். சிவன் பிராமணர் களுக்கும் தேவர்களுக்கும் முக்கியமான தெய்வம்.ஆதலால் ப்ரஹ்மணியர் எனப்படுகின்றார். பிரம்மத்தை உபாசிப்பவர் களுக்கு சிவனிலும் மேலான தெய்வமாக விளங்குபவர் இவர். இன்பத்தினையே - உலக நன்மையையே சித்தமாகக் கொண்ட சிவப்பரம்பொருளுக்கு வேறின்றி விளங்குபவர். சு- ஆனந்தம். பிரம்மம்- பரிசுத்தமானது, நியம-பிரகாசம், சச்சிதானந்தம் ஆனந்தத்தையே சொரூபமாக உள்ள பரவஸ்துவின் பாலுதித்த ஞானப் பிரகாச வியாபகப்பிரகாச சரியப்பிரகாச அருட்பிரகாச அனாதி நித்திய சிவப்பிரகாசமென்னும் அனுபவ சொரூபமே சுப்பிரம்மண்யர் ஆவர். இன்னொரு வகையில் சு-நலம்இனிமை; பிரமணியம் - பிரம்மஞானத்தில் விருப்பத்தை வளர்ப்பது; ஆகையால் வழிபடுபவர்களை இனிமையான பேரின்பத்தில் திளைக்கச் செய்து அவர்களின் மேலான ஞான
இயல்பினை மேலும் மேலும் வளரச் செய்பவன் சுப்பிரமணியன்.
இவர் குங்கும நிறமும் நிறைமதிபோல முகமும் தாமரை, அபயம், சக்தி, குக்குடம்- அவற்றைத் தாங்கிய நான்கு கைகளும் செஞ்சந்தனப் பூச்சும் செம்பட்டாடையும் கேயூரம் ஆரம் இவற்றை உடையவராகவும் விளங்குகின்ற திரு உருவம் உடையவர். இன்னுமொரு வகையாக ஒரு முகமும் இரு கைகளும் ஒரு கை அவபயமாகவும் ஒரு கையை இடுப்பிலும் வைத்துக் கொண்டு இருப்பவர்; சூரியன் போன்ற ஒளியை உடையவர்; என

Page 217
குமாரதந்திரம் என்னும் ஆகமம் கூறுகின்றது. கெளமாரம் என்பது மோகூடித்தை அளிப்பது எனப் பொருள்படும். இத்தகைய சிறப்புடைய சுப்பிரமணியரது வழிபாட்டு மரபைக் கூறுகின்ற ஆகமம் குமாரதந்திரம் ஆகும். முருக வழிபாட்டின் ஒரு மூர்த்தமாக விளங்குகின்ற சுப்பிரமணியர், சிவப்பரம் பொருளிலிருந்து வேறன்றி இருப்பவர் என்பதனை சுப்பிரமணிய தத்துவம் சிறப்பித்து கூறுகின்றது.
ஒர்முகம், இரண்டு கண், இரண்டு கை, அழகான உருவமாக வலது கையில் தாமரை இடது கை தொங்கும்படியான அமைப்பினை உடையதாய் இருக்கின்ற குழந்தை வடிவான சுப்பிரமண்யரை கிராம வளர்ச்சியின் பொருட்டுப் பிரதிஷ்டை
செய்யவேண்டும்; என உத்தர காமிகத்தில் கூறப்பட்டுள்ளது.
(தேஹ.)
சுமங்கலி பூஜை
கணவனுடன் கூடி, இல்லறத்தை நல்லறமாக்கும் பெண்களே சுமங்கலி எனப்படுவர். பெண்ணிற்குப் பதியுடன் கூடி வாழும் வாழ்க்கையே சிறந்த வாழ்க்கை- ஸ9 வாஸம். தேவி சிவனை விட்டு என்றும் நீங்காதவள் ஆதலால் அவள் ஸ9வாஸினி. ஸ9வாஸினிகள் செய்யும் அர்ச்சனையிலும் மகிழ்பவள்.
“ஸ9வாஸிக்யர்ச்சகப்ரீதா' என்பது லலிதா சஹஸ்ர நாமத்தில் 967ஆவது திருநாமம். ஸ9மங்கலி- மங்கலப் பொருட்கள் இவர்களை அடைந்து அழகைப் பெறுகின்றன. ஸுவாஸினிகளையே தேவியாகக் கருதிச் செய்யும் பூஜைக்கு சுமங்கலி பூஜை' என்று பெயர்.
நவராத்திரியில் வீடுகளில் திருமணத்திற்கு முன்பாக, அல்லது நீண்டகாலம் விவாகமாகாத கன்னிப் பெண்களின் பொருட்டும், ஆலயங்களில் நடைபெறும் லக்ஷமி ஹோம நிறைவிலும் சுமங்கலி பூஜை செய்வது சிறப்பு சுமங்கலி பூஜை செய்வதால் தோஷங்கள் அகன்று சகல நன்மைகளும் உண்டாகும்.
சுமங்கலி பூஜைக்கு இல்லத்தைத் தூய்மை செய்து மாக்கோலமிட்டு, மாவிலை தோரணங்கள் கட்டி அழகுபடுத்த வேண்டும். சுவாமியறையிலும் மாக்கோலமிட்டு மலர்மாலைகள், பட்டுக்கள் படங்களுக்குச் சாற்றி, சாம்பிராணி தூபமிட்டு விளக்கேற்றி தூய்மையைப் பேண வேண்டும்.
அந்தண சுமங்கலிகளை மூன்று, ஐந்து, ஏழு ஒன்பது என்று அவரவர் வசதிக்கேற்ப அழைக்கலாம். அழைக்கப் படுபவர்கள் நல்லொழுக்கமுடையவர்களாக, சிறந்த குடும்பப் பெண்களாக இருப்பது அவசியம். நீராடி, மடிவைத்து உடுத்து ஆசார சீலர்களாக வருதல் வேண்டும்.

1911
வந்த பெண்களை முகமன் கூறி வரவேற்று அவர்களைத் தாம்பாளத்தில் நிற்க வைத்து வீட்டுத் தலைவி அவர்கள் பாதங்களை அலம்ப வேண்டும். குங்குமம், சந்தநம், மலர்கொடுத்து அப்பெண்களை மனையில் (பலகை) கிழக்குமுகமாக அமரச் செய்ய வேண்டும். அனைவரையும் அன்னை பராசக்தியாக நினைக்க வேண்டும். வீட்டுத் தலைவி ஒவ்வொருவருக்கும், சந்தனம், குங்குமம், மலர், மருதாணி இவற்றை அணிவித்து சாம்பிராணி, தூபம் காட்டி, தீபாராதனை செய்து ஒவ்வொருவரையும் தனித்தனியாகப் பஞ்சாங்க நமஸ்காரம் செய்து வழிபட்டு பின்பு ஒரு தட்டில் புடவை, ரவிக்கை, மஞ்சள், கண்ணாடி, குங்குமச்சிமிழ், புஷ்பம், வெற்றிலை பாக்கு, தகூதிணை கொடுத்து உபசரிக்க வேண்டும்.
உபசாரம் முடிந்தவுடன் அவர்களுக்கு அறுசுவை உணவு வழங்க வேண்டும். அவர்கள் உண்டபிறகு கையலம்ப நீர் கொடுத்து, பானம் கொடுக்க வேண்டும். சுமங்கலிகளை வணங்கி, உபசாரம் கூறி வழியனுப்ப வேண்டும், பிறகுதான்
வீட்டுக்காரர்கள் உணவு கொள்ள வேண்டும்.
சுமங்கலி பூஜைக்கு , திங்கள், புதன், வெள்ளி, போன்ற நாட்கள் சிறந்தன; இராகு காலத்தைத் தவிர்த்துக் கொள்ளல் வேண்டும்.
வீட்டிற்கு அழைத்து உணவிட முடியாதவர்கள். சுமங்கலிகளை அழைத்து, புடவை முதலியவைகள் கொடுத்து உபசரித்து காய்கறி, அரிசி, முதலியவைகளைக் கொடுக்கலாம் உணவிடும் முறையே சாலச்சிறந்தது. -
சுமங்கலிகள் மகிழ்ந்தால் அவ்வீட்டில் வறுமைநோய் துன்பம் நீங்கி வளமுடன் அக்குடும்பத்தினர் வாழ்வார்கள். (62/.606).)
சுயம்வரம்
அரசகுமாரி ஒருததி அகில நாட்டு அரசர்கள் கூடியிருக்குஞ் சபையொன்றில் தான் விரும்புங் கணவன் ஒருவனைத் தேர்ந்தெடுத்தல் என்ற பொருளில் சுயம்வரம் என்ற தொடர் வழங்கியுள்ளது. ஸ்வயம் - தானாக, வரம் - தேர்ந்தெடுத்தல். ஸ்வயம் என்ற சொல் சுயம் ஆனது ஒலித்திரிவு சார்பிலான ஒரு மாற்றம். 'உ'வ் ஆதலும் வ'உ' ஆதலும் சம்பிரசாரணம் என்ற ஒரு வகையிலான ஒலி மாற்றம் என்பது சம்ஸ்கிருத பாளி மொழி இலக்கணக் கொள்கை.
பழைய முடிமன்னர் காலத்தில் ஒரு கட்டத்தில் இது அரண்மனை நாகரிகஞ் சார்ந்த ஒரு வழக்கமாயிருந் திருப்பதாகத் தெரிகிறது. பெயர் சமஸ்கிருதத் தொடராகவே இருத்தலாலும் தமிழில் நேரொத்த மாற்றுத் தொடர் இதற்கு இருக்காமையாலும் இவ்வழக்கம் ஆரிய மன்னரிடையே இருந்திருக்கலாம் அல்லது
இந்துக்கலைக்களஞ்சியம்

Page 218
மன்னர்களின் ஆஸ்தானப் புலவர்களின் கற்பனைப் புனைவுகளாக இருக்கலாம் எனப் பொதுவிற் கருதப்படுகிறது.
அறியப்பட்ட இலக்கியங்களுள் நைடதம், மகா பாரதம் என்ற சமஸ்கிருத இலக்கியங்களில் முறையே தமயந்தி சுயம்வரம், திரெளபதி சுயம்வரம் என்பன இடம் பெற்றுள்ளன. இரண்டும் இரண்டுவகை. தமயந்தி சுயம்வரம் அன்னத்தின் தூது வகையிலான காதல் விவகாரத்தை முற் கொண்டது. திரெளபதி சுயம்வரம் முன் நிபந்தனையான வீர சாகசச் செயல் ஒன்றைச்
சாதித்தமையின் சார்பாக ஏற்பட்டது.
இவ்விலக்கியங்கள் தென்னாட்டுப் புலவர்களால் தம் மொழியில் தந்துரைக்கப்பட்ட வாற்றால் நளவெண்பாவும் வில்லி பாரதம் ஆதியனவுஞ் தோன்றியதன் பேரில் தமிழ் இலக்கியங்களும் சுயம்வர நிகழ்வுக் களங்களாயுள்ளன.
இச் சுயம்வரம் மிகப் பிரமாண்டமான ஒரு நிகழ்ச்சியாக இலக்கியங்களில் வர்ணிக்கப் பெற்றுள்ளது.
தேசா தேசங்களிலிருந்து சுயம்வர தினத்திற்குச் சிலநாள் முன்பாகவே அரசர்கள் குறிப்பிட்ட நகருக்கு வந்து சேர்ந்து, அரச விருந்தாளிகளாய் உபசரிக்கப்பட்டுச் சுயம்வர தினத்தை எதிர்பார்த்திருப்பதும் சுயம்வர நிகழ்வில் அரசர் சகலரும் அரசகுமாரியின் வரவை ஆவலாதியாக எதிர்நோக்கியிருப்பதும் தோழி, ஒவ்வொரு அரசனையும் அவன் நாட்டுச் சிறப்பு வீரச் சிறப்புகளைச் சுட்டி அறிமுகப்படுத்துவதும் ஆன நிகழ்ச்சிகள் இலக்கியச் சுவைபட வர்ணிக்கப்பட்டுள்ளன. திரெளபதி சுயம்வரத்துக்கு முன்கூட்டியே வந்து சேர்ந்துவிட்ட மன்னர்கள் தூக்கணாங் குருவிகள் போலத் தூங்கி மஞ்சம் (ஊஞ்சற் கட்டில்) தோறும் தூங்கிக் கிடந்ததென்பதும் தமயந்தி சுயம்வர மண்டபத்திற் புகும் வேளை மண்டபம் மன்னர் விழித்தாமரை பூத்த தடாகமாயிருந்த தென்பதும் போன்ற கற்பனை நயங்கள்
சுயம்வரப் படலங்களுக்கு வாழ்வளிப்பன.
19ஆம் நூற்றாண்டில் யாழ்ப்பாணத்தில் வாழ்ந்த நட்டுவச் சுப்பையனார் என்ற புலவர் இச் சுயம்வர நிகழ்வை அரச அரண்மனையிலிருந்து தாசியொருவர் வீட்டுக்கு மாற்றித் தமக்கு இலகு பிரசவமாகும் நளினச் சுவைக்குப் போக்கு வீடு பண்ணியிருக்கும் நூதனப் பணியும் கனகிபுராணம் என்ற தாசிபுராணத்துச் சுயம்வரப் படலத்திற் காணலாம். இது யாழ்ப்பாணத் தமிழ்ப் புலமைத் தனித்துவ விருத்திகளில் ஒன்றாகக் கருதப்படற் பாலதாகும்.
சுப்பையனாரின் இப்புனைவு, முன்னைய இலக்கியங்களிற் காணும் சுயம்வரங்களும் புலமைக் கற்பனை மாத்திரமாகலாம்
என்ற துணிபுக்கு வழிவிடுவதாகவும் அமையும். (கே.கே.எஸ்)
இந்துக்கலைக்களஞ்சியம்
192

சுருளிமலை
இது ஒரு முருகத் தலம். முருகனது அறுபடை வீடுகளில் ஒன்றாகக் குறிப்பிடப்படும் குன்றுதோறாடல் என்பது ஏனைய படை வீடுகளைப்போல குறித்த ஒரு தலம் அல்ல என்றும் குன்றுதோறும் அமைந்த முருகன் தலங்கள் யாவும் அதனுள் அடங்குகின்றன என்றும் கொள்ளும் மரபின் அடிப்படையில் திருத்தணி, விராலிமலை முதலான மலைமேலமர்ந்த முருகன் கோயில்கள் வரிசையில் இச் சுருளிமலையும் படைவீடுகளுள் ஒன்றாகக் கொள்ளப்படுகின்றது.
இது மதுரையிலிருந்து எழுபது மைல் தூரத்தில் கம்பம் என்ற ஊரருகே அமைந்த இயற்கை வனப்புமிக்க தலமாக விளங்குகின்றது. சுருளிமலையில் அமைந்த கோயில் செயற்கைக் கோயிலாக அல்லாமல் இயற்கையாக அமைந்த குகைக்கோவிலாகவே விளங்குகிறது.
சுருளிமலை ஒன்றன்மேல் ஒன்றாய் அமைந்த இரு குன்றுகளால் ஆனது. கீழ்க்குன்றில் ஒருவர் மட்டும் நுழையத்தக்க சுரங்கப்பாதையொன்று உள்ளது. அது சென்றடையும் விசாலமான இடத்தில், சிவலிங்கம் ஒன்று இருப்பதாகக் கூறப்படுகிறது. அது பிருங்கி முனிவராற் பூசிக்கப்பட்டதென்று ஐதீகம் உண்டு. கைலயங்கிரியில் மோனநிலையில் வீற்றிருந்த சிவபிரானின் தவத்தைக் குலைக்கச் சென்ற மன்மதன், கீழை வாயிலில் காவல் காத்து நின்ற நந்திதேவராலே துரத்தப்பட்டு மேலைவாயிலை அடைந்தான். அங்கு காவலுக்கு நின்ற கணநாதராகிய பிருங்கி, மதுவுண்டு மயங்கிய நிலையிற் கிடக்கவே, அச்சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி, கோயிலினுட் சென்றான். மது அருந்தியதாலும் கடமை தவறியதாலும் சிவபிரானின் கோபத்துக்கு ஆளான பிருங்கி, இத்தலத்தை அடைந்து சாபவிமோசனம் பெற்றதாகவும் இத்தலத்திலே, பிருங்கி, கயிலாயக் காட்சி கண்டதாகவும் அந்த ஐதீகம் கூறுகிறது. குகைக்கோயில் உள்ள இடத்தை 'கயிலாயப் புடவு என்று வழங்குவது குறிப்பிடத்தக்கது.
மேலேயுள்ள குன்றிலே, இரண்டு குகைகள் காணப்படு கின்றன. அவற்றுள் மேலைத்திசையில் உள்ளது, 'விபூதிக்குகை ான வழங்கப்படுகிறது. கீழ்த்திசையில் உள்ள குகையே சுருளிமலை முருகனின் கோயிலாக விளங்குகிறது. இக்குகைக் கோயிலுள் விநாயகர், சிவலிங்கப் பெருமான், சந்தான கிருஷ்ணர், வீரவாகுதேவர் என்போரோடு முருகன் எழுந்தருளியுள்ளார். இம்முருகன் ஆண்டிக் கோலத்தில் வீற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
சுருளிமலைக் கோயிலுக்கு, சனிபகவானோடு தொடர்பு Iட்டதான ஒரு ஐதீகமும் நிலவுகிறது. சனிபார்வையிலிருந்து விடுபடுவதற்காகத் தேவர்கள் யாவரும் இத்தலத்திலே நஞ்சமடைந்ததாகவும் சனிபகவான் முருகபக்தர்களுக்குத் நன்னால் தீங்குண்டாகாதவாறு நடந்து கொள்வதாக முருகனிடம் உறுதி கூறியதாகவும் அந்த ஐதீகம் கூறுகிறது.

Page 219
இத்தலத்தின் தீர்த்தம் சுருளி தீர்த்தமாகும். சுருளி மலையிலிருந்து விழும் நீர்வீழ்ச்சியே இத்தீர்த்தம். பக்தர்கள் நீராடுவதற்கு வசதியாக நீர்த்துறையும் அமைக்கப்பட்டுள்ளது. மூலிகைச் சக்திகொண்ட இந்நீர்வீழ்ச்சி நோய்களைப் போக்கவல்லதாகக் கருதப்படுகிறது.
சுருளிமலையின் அடிவாரத்தே சுருளி நதியின் கரையிலே சிவனுக்கும் வீர நாராயணப் பெருமாளுக்கும் கோயில்கள் அமைந்துள்ளன. ஒரு மரத்தின் அடியில் கன்னிகா பரமேஸ்வரி சந்நிதியும் அமைந்து விளங்குகிறது. (க.இர)
சுவாதித் திருநாள் மகாராஜா
கேரள மாநிலத்தில் இசையில் 9 (5 LOGO மலர்ச்சியையும், கதகளி, மோகினி ஆட்டங்களில் ஒரு புத்துயிர்ப்பையும் அளித்தவர் சுவாதித் திருநாள் மகாராஜா. இந்தியாவை ஆண்ட பல மன்னர்கள் கலைகளைப் போற்றி வந்தனர். இவர்களுள் கேரள மாநிலத்தை ஆண்ட ராஜவம்சத்தில் தோன்றியவர் சுவாதித் திருநாள் மகாராஜா.
திருவாங்கூரை ஆண்ட பூரீ பாலராமவர்மா, பின் சந்ததி இல்லாமலேயே பரலோகமடைய, அவரின் சகோதரியாகிய பூரீ கெளரி லக்ஷ்மிபாய் மகுடம் சூட்டம் பெற்றார். அவருக்கும் நீண்ட காலமாக புத்திரபாக்கியம் இல்லாததனால் பலவிதமான விரதங்கள் அனுஷ்டித்ததோடு பூரீபத்மநாபன் சந்நிதியில் பற்பல தானங்களையும் புரிந்தனர். இவற்றின் பலனாக பூரீ கெளரி லக்ஷமி மகாராணியார் கர்ப்பவதியாகி, கி.பி. 1813 ஆம் ஆண்டு சுவாதி நட்சத்திரத்தில் பிறந்த ராஜகுமாரனுக்குக் கேரள ராஜகுல சம்பிரதாயப்படி சுவாதித் திருநாள் என்ற திருநாமம் இட்டு வழங்கலாயினர். இவர் கர்ப்பத்தில் இருக்கும்போதே இராஜ்யாதிகாரத்திற்கு உரிமை பெற்றமையால் கர்ப்ப பூரீமான்' என்ற சிறப்புப் பெயருடன் வளர்ந்து வந்தார்.
இவர் இளவயதிலேயே இசை, சிற்பம், சித்திரம், மாந்திரிகம் போன்ற கலைகளிலும் சமஸ்கிருதம், மலையாளம், ஆங்கிலம், தெலுங்கு, கர்நாடகம், மராத்தி, ஹிந்துஸ்தானி முதலிய 13 மொழிகளிலும் தேர்ச்சி பெற்றிருந்தார்.
இவரால் இயற்றப்பட்ட உருப்படி வகைகளை பலவாறு பிரிக்கலாம்.
 

1. ஸ்தோத்திரரூபமானவை - பக்தி மஞ்சரி முதலியன
2. காவ்ய ரூபமானவை - ஸ்யானந்தூர வர்ணனை
பிரபந்தம். 3. காலாக்ஷேபம் செய்வதற்கு
உரியவை :- குசேலோ பாக்கியானம், அஜாமிளோபாக்கியானம் முதலியன. 4. சங்கீத கிருதிகள் リー
(i) கீர்த்தனைகள் - பல தெய்வங்களைக் குறித்துப்
பாடப்பட்டவை.
(i) நாட்டிய
இசைக்குரியவை - பதம், வர்ணம், ஜாவளி,
தில்லானா. (i) ஹிந்துஸ்தானி
கிருதிகள் - ஹிந்துஸ்தானி பாஷையில் துரபத், டப்பா, கயால், தும்ரி முதலிய மெட்டுக்களில் ஸ்தோத்திரளூபமாக இசைக்கப் பட்டவை. இவர் தம் கிருதிகளில் தமது பெயரை முத்திரையாகப் பதிக்காமல் தன் குலதெய்வமாகிய பூரீபத்மநாபன் திருநாமத்தையே பல வகையிலும் முத்திரையாக வைத்து தன் பாடல்களை அப்பெருமானுக்கே அர்ப்பணம் செய்தார். இவரது முத்திரைகளாகவன - பத்மநாப, அம்புஜநாப, ஜலஜநாப, ஸரஸிஜநாப, ஸரஸிருஹநாப, கஞ்சநாப, பங்கஜாப, முதலியன.
இவர் இசைக்காற்றிய தொண்டினைவிட மக்களுக்கு ஆற்றிய தொண்டு அளப்பரியது. பொதுநூலகம் , ஆங்கில உயர்நிலைப்பள்ளி, வானிலை ஆராய்ச்சி நிலையம் ஆகியவற்றை ஸ்தாபித்தார்.
இவர் காலத்திலேயே மலையாள இலக்கண அகராதி ஆக்கப்பட்டது. தானே ஒரு சிறந்த இசைக்கலைஞராக இருந்ததோடல்லாது தனது சமஸ்தானத்திலே பல கர்நாடக, ஹிந்துஸ்தானி இசைக்கலைஞர்களையும் நாட்டியத்தில் விற்பனர்களையும் ஆதரித்தார்.
இவர் அபூர்வ இராகங்களாகிய லலிதபஞ்சமம், ஸாரங்க நாடா, கோபிகாவஸந்தம், கன்னட, போன்ற இராகங்களிலும் உருப்படிகளை இயற்றியுள்ளார். நவராத்திரி தினங்களில் பாடுவதற்கு நவராத்திரி கீர்த்தனைகளை இயற்றியுள்ளார். பல இராகமாலிகைகள், வர்ணங்கள், ஜாவளி, தில்லானா, போன்றவற்றையும் இயற்றியுள்ளார்.
முத்தைய்யா பாகவதராலும் செம்மங்குடி பூரீனிவாஸஐயங் காராலும் மகாராஜா அவர்களது பாடல்கள் ஸ்வரதானக் குறிப்புடன் எழுதப்பட்டுப் புத்தக வடிவில் எமக்குக் கிடைத்துள்ளன. இவர் 34 ஆண்டுகளே வாழ்ந்த போதிலும் 500 உருப்படிகள் இயற்றியது மிகப்பெரிய சாதனைாகும். (தேஹ)
இந்துக் ஞ்சியம்

Page 220
சுவாமிமலை
இது முருகக் கடவுளின் தலங்களுட் சிறந்தவையாகக் கருதப்படுவனவும் படைவீடுகள் என்று வழங்கப் படுவனவுமான ஆறு தலங்களுள் ஒன்று படைவீடு என்பது படைதங்கிய இடம் என்று பொருள்படும் என்றும் அவ்வகையில் தேவாசுர யுத்தத்தின் போது தேவசேனாதிபதியான முருகன், தன் படைகளோடு தங்கிய இடங்களே இந்த ஆறு தலங்கள் என்றும் கொள்ளப்படுகிறது. படைவீடு என்பதற்குச் சிலர் தலைநகர் என்று பொருளுரைத்து, முருகனது பெருமைபெற்ற ஆறு நகரங்களே இந்த ஆறுதலங்களும் என்பர். வேறுசிலர் முருகன் வேறு வேறான ஆறு நிலைகளில் எழுந்தருளியுள்ளமையைக் குறிப்பதே படைவீடு என்ற வழக்கு என்பர். அவ்வகையில் முருகன் தந்தைக்குப் பிரணவம் உரைத்துக் குருசுவாமியாக எழுந்தருளிய படைவீடே சுவாமிமலை எனப்படுகிறது. பழந்தமிழ் இலக்கியங்களில் ஏரகம் என்று சுட்டப்பட்ட தலம் இன்று சுவாமிமலை என்று கொள்ளப்படுகிறது. முருகன்மேல் புலவர் நக்கீராற் பாடப்பட்டதான திருமுருகாற்றுப்படையில் திருப்பரங்குன்றம், திருச்சீரலைவாய், திருஆவினன்குடி என்னும் தலங்களையடுத்து நான்காவதாக இத்திருவேரகம் சுட்டப்படுகிறது. நீண்டகாலம் பிரமச்சரிய விரதத்தை அனுட்டித்த தூய அந்தணர்கள் ஆறெழுத்து மந்திரத்தை உச்சரித்து மலர்தூவி புகழ்பாடித் துதிக்க முருகன் திருவேரகத்திலே வீற்றிருப்பதாக நக்கீரர் பாடுகிறார்.
இருமூன்று எய்திய இயல்பினின் வழாஅது இருவர்ச் சுட்டிய பல்வேறு தொல்குடி அறுநான்கிரட்டி இளமை நல்லியாண்டு ஆறினில் கழிப்பிய அறன்நவில் கொள்கை மூன்றுவகை குறித்த முத்திச் செல்வத்து இருபிறப்பாளர் பொழுதரிந்து நுவல ஒன்பது கொண்ட மூன்று புரிநுண்ஞான் புலராக் காழகம் புலர உடீஇ உச்சிக் கூப்பிய கையினர் தற்புகழ்ந்து ஆறெழுத்தடக்கிய அருமறைக் கேள்வி நாஇயல் மருங்கில் நவிலப் பாடி விரையுறுநறுமலர் ஏந்திப் பெரிதுவந்து ஏரகத் துறைதலும் உரியன். இளங்கோவடிகளும் சிலப்பதிகாரத்தில் திருவேரகத்தைக் குறித்துள்ளார்.
சீர்கெழு செந்திலும் செங்கோடும் வெண்குன்றும் ஏரகமும் நீங்கா இறைவன். (சில. குன்ற)
திருமுருகாற்றுப் படைக்கு g) i 60) DJ எழுதிய நச்சினார்க்கினியர், ஏரகம் என்பது "மலைநாட்டகத்தொரு திருப்பதி” என்று எழுதியுள்ளார். அவ்வாறாயின் இன்று சுவாமிமலை என்று வழங்கும் தலம் வேறு, திருவேரகம் வேறு என்றே கொள்ளல் வேண்டும். ஏனெனில் இன்று திருவேரகம்,
இந்துக்கலைக்களஞ்சியம் 194

சுவாமிமலை எனும் பெயர்களாற் சுட்டப்பெறும் தலம் கும்பகோணத்துக்கு மேற்கே நான்கு மைல் தொலைவில் உள்ளது. நச்சினார்க்கினியரோ மலைநாட்டில் (சேரநாட்டில்) உள்ளதென்கின்றார். சிலப்பதிகார அரும்பத உரையாசிரியர்,
சீர்கெழு செந்திலும் செங்கோடும் வெண்குன்றும் ஏரகமும் நீங்கா இறைவன், என்னும் அடிகளிலுள்ள வெண்குன்றத்தையே சுவாமிமலை என்று குறிப்பிடுகிறார். ஆதலாலும் சுவாமிமலை வேறு ஏரகம் வேறு என்றே கொள்ள வேண்டியுள்ளது. ஆனால் பிற்காலத்தே தோன்றிய முருக பக்தரான அருணகிரிநாதர் "ஏரக வெற்பேனும் அற்புதம் மிக்க சுவாமி மலைப்பகுதி” என்று இரண்டையும் ஒன்றாகச் சுட்டுகிறார். அவருடைய கருத்தின்படி இன்று சுவாமிமலையும் ஏரகமும் ஒன்றாகவே கொள்ளப்படுகின்றன.
சுவாமிமலைத் தலவரலாறு:
நாரதமுனிவர் ஒரு தடவை சிவபிரானை முன்னிட்டு வேள்வியொன்றை நிகழ்த்தினார். வேள்வியில் நிகழ்ந்த தவறொன்றின் காரணமாக வேள்வித்தீயினின்றும் கோரவடிவுடன் சிவந்த நிற ஆடு ஒன்று தோன்றியது. அது தேவர் முதல் யாவரையும் அழிக்கத் தலைப்பட்டது. அதற்கு எதிர்நிற்க ஆற்றாதவர்களாய் நாரதரும் தேவர்களுமாய் சிவபிரானிடம் புகலடையச் சென்றனர். சென்ற வழியில் நின்ற முருகனைக் கண்ட அவர்கள் முருகனிடம் முறையிட்டார்கள். முருகனும் அவர்களது முறையீட்டை ஏற்று அந்த ஆட்டை அழிப்பதற்காக வீரவாகு தேவரை அனுப்பினார். அனைத்துலகிலும் ஆட்டுக்கடாவைத் தேடியலைந்த வீரவாகுதேவர், இறுதியில் சத்தியலோகத்திலே ஆட்டைக் கண்டு அதனை அடக்கி இழுத்துவந்து முருகன்முன் நிறுத்தினார். நாரதரும் தேவர்களும் அக்கொடிய ஆடு ஒரு காலத்தும் தலையெடுக்காதபடி அதனை வாகனமாகக் கொள்ள வேண்டுமென வேண்டவே முருகனும் அந்த ஆட்டைத் தம்முடைய வாகனமாக ஆக்கிக் கொண்டார்.
முருகன் அந்த ஆட்டுக்கடா வாகனத்தின் மீதமர்ந்து அண்டங்கள் யாவும் சுற்றிவந்து, இறுதியில் வெள்ளிமலையில் எழுந்தருளியிருந்தார். அக்காலத்தில், சிவபிரானை வழிபட அவ்வழியாற் சென்ற தேவர்கள் யாவரும் முருகனையும் வணங்கிச் சென்றனர். பிரமன் மாத்திரம் முருகனைக் கண்டும் காணாதவனாக “இவன் சிறுவன் தானே” என்று எண்ணி இறுமாப்புடன் சென்றான். அவனுடைய அகந்தையை அடக்க எண்ணிய முருகன், சிவபிரானை வழிபட்டு மீண்டு வந்து கொண்டிருந்த பிரமனை மறித்து, “நீ யார்? உனது தொழில் யாது?’ என வினவினார். அதுகேட்டு அதிர்ந்த பிரமன் “நான் பிரமன், படைப்புத் தொழில் புரிகிறேன்” என்றான். முருகனும் “அங்ங்ணமாயின் உனக்கு வேதம் தெரியுமா?’ என்று வினவினார். அதற்கு 'ஆம்' என்று பதிலளித்த பிரமனிடம் "வேதங்களின் முன்னதாகிய ஒம் என்ற மந்திரத்தின் பொருள் யாது?’ என்று வினவினார்.
பிரமன் பொருள் தெரியாதவனாகத் திகைத்து நின்றான். முருகன், பிரமனது தலையிலே குட்டி, அவனைச்

Page 221
சிறையிலடைத்தார். பின், படைப்புத் தொழிலைத் தானே மேற்கொள்ள எண்ணியவராய்க் கந்தமலைக்குச் சென்று ஒரு திருமுகமும் இருகரங்களில் ஜபமாலையும் கமண்டலமும் மற்றிருகைகளில் அபய வரதமுத்திரையுமாய் நான்கு திருக்கரங்களோடு வீற்றிருந்து படைப்புத் தொழிலை மேற் கொள்ளலானார்.
பிரமன் சிறையிலடைக்கப்பட்டதை அறிந்த இந்திரன் முதலான தேவர்கள் சிவபிரானிடம் முறையிட்டனர். சிவபிரானும் அவர்களது வேண்டுதலுக்கு இரங்கி, பிரமனை விடுவிப்பதற்காக முருகனை நாடிச் சென்று, பிரமனை விடுமாறு பணித்தார். "நாமும் எம் குமரனும் ஒன்றே என உணர்த்தவே இது நிகழ்ந்தது. நீ முன்புபோல் உன் படைப்புத் தொழிலை மேற்கொள்வாயாக’ எனப் பிரமனுக்கு அறிவுறுத்திய சிவபிரான் முருகனிடம், “பிரமனும் அறியாத பிரணவத்தின் பொருளை எனக்கு அறிவிக்க மாட்டாயா?’ என வினவினார். அதற்கு முருகன் “சீடன் என்ற முறைப்படி கேட்டால் உணர்த்துவேன்’ என்றார். அதன்படி மாசி மகத்தன்று சிவபிரான் சீடராகப் பணிந்து, தம் மடி மீது குழந்தை முருகனை அமர்த்தி, சிரம் தாழ்த்தி வாய்பொத்திப் பணிந்து நிற்க, முருகன் பிரணவப் பொருளைத் தன் தந்தைக்கு உபதேசித்தருளினார். முருகன் தந்தைக்குக் குருவாக எழுந்தருளிய மலையாதலின் குருமலை என்றும், அவர்க்குச் சுவாமியாக விளங்கியமையின் சுவாமி மலை என்றும்
இத்தலத்துக்குப் பெயர்கள் அமைந்தன.
பார்வதியின் சாபத்துக்கு ஆளான பூமாதேவி இத்தலத்தில் தவமிருந்து சாபவிமோசனம் பெற்றாள் என்றும், சாபவிமோசனம் பெற்றபின்பும் சுவாமிநாதனைப் பிரிய மனமில்லாதவளாக ஒரு நெல்லிமரமாக இத்தலத்திலேயே நிலைபெற்றாள் என்றும், பூமாதேவி நிலைபெற்றதால் இத்தலம் தாத்ரீ (பூமி) கிரி எனும் பெயரைப் பெற்றதாகவும் புராணம் கூறுகிறது. அந்த நெல்லிமரமே இத்தலத்தின் புனித விருட்சமாகக் கொள்ளப்படுகிறது. இச் சுவாமி மலைக்கு சுந்தராசலம் என்ற பெயர் உள்ளமையும்
குறிப்பிடத்தக்கது.
இத் தலத்தின் தெற்காக காவிரியும் அரிசிலாறும் ஒடுகின்றன. சுவாமிமலைத் திருக்கோவில், நில மட்டத்திலிருந்து சுமார் அறுபது அடி உயரம் உள்ள ஒரு செய்குன்றின்மேல் நிறுவப்பட்டுள்ளது. குன்றின்மீதுள்ள திருக்கோயில் பழைய வேலைப்பாட்டுடனும் பிற கட்டுமானங்கள் புதிய திருப்பணிகளுடனும் விளங்குகின்றன.
இத்திருக்கோயில் மூன்று வாயில்களுடன் விளங்குகின்றது. அவற்றுட் கீழைவாயிலும் மேலைவாயிலும் ஐந்து நிலைகளையுடைய திருக்கோபுரங்களுடன் விளங்குகின்றன. குன்றின் மீது சுவாமிநாதர் கோயிலும் கீழே மீனாட்சிசுந்தரேசர்

195
கோயிலும் விளங்குகின்றன. முன்னதை மேற்கோயிலென்றும் பின்னதைக் கீழ்க்கோயில் என்றும் வழங்குவர். கோயில் இரு தளங்களில் அமைந்துள்ளதால் பிரகாரங்களும் மேலும் கீழுமாக அமைந்துள்ளன. குன்றில் ஏறுவதற்கு அறுபது படிக் கட்டுக்கள் அமைந்துள்ளன. ஒவ்வொரு படியும் வருடம் ஒவ்வொன்றினதும் அதிதேவதைகளாகக் கருதப்படுகின்றன. அறுபது படிகளில் முதல் இருபத்தெட்டுப் படிகளைக் கடந்தால் இரண்டாம் பிரகாரத்தை அடையலாம். இரண்டாம் பிரகாரத்தின் தென்பக்கமாக முப்பத்திரண்டு படிகளை ஏறிச் சென்றால் மேற்றளத்தை (முதலாம் பிரகாரத்தை) அடையலாம்.
மூலஸ்தானத்தில் சுவாமிநாதராகிய முருகப் பெருமான் கம்பீரத்தோற்றத்துடன் வலக்கையில் தண்டுடன் இடக்கையை இடுப்பில் வைத்தபடி ஊர்த்துவ சிகாமுடியுடன் நின்ற திருக்கோலத்தில் விளங்கக் காணலாம். இத் திருக்கோலத்தைத் தலபுராணமாகிய திருவேரகபராணம் வருமாறு போற்றித் துதிக்கிறது.
காந்திமுகமலர் போற்றி கற்பகதரு என அருளும் கருணை போற்றி வாய்ந்த துணைப்பதம் போற்றி வாமகரம்
இடைசெறிந்த மாண்பு போற்றி சேர்ந்த தண்டகரம் போற்றி கோவணம் நீடு எழில் போற்றி சித்தாந்தத்திற் போந்த பொருளு மலைக் குமரநாயகன் திருத்தாள் போற்றி போற்றி!
சுவாமிநாத முருகன் எழுந்தருளியுள்ள பீடம் லிங்கத்தின் பாணவடிவில் விளங்குவது இத்தலத்தின் சிறப்பு. இது, தலபுராணம் கூறுவது போல சிவனும் முருகனும் ஒன்றே என்ற தத்துவத்தை உணர்த்தி நிற்கிறது எனலாம். இதுபோலவே இக்கோயிலில் உள்ள சந்திரசேகர மூர்த்தம், முருகவடிவில் தெய்வயானை அம்மனோடு விளங்குவதையும் கொள்ளல் வேண்டும். இக்கோயிலின் மகாமண்டபத்தில் விளங்கும் சபாநாதவடிவும் இத்தகையதேயாம். இங்கு முருகப்பெருமான் நடராஜரை ஒத்தநிலையில் நான்கு திருக்கரங்களில் இரண்டு நீட்டியபடியும், இரண்டு கீழ்நோக்கி வளைந்தபடியுமாக எழுந்தருளியுள்ளார். அவரைச் சபாபதியென்றே (பாகுலேய சுப்பிரமணியர்) சுட்டுவதும் கருதத்தக்கது.
இங்கு மூலஸ்தானத்துக்கு முன்பாக நந்தியாக மயிலன்றி ஐராவத யானையே அமைந்துள்ளது. அதுபற்றியும் புராண வரலாறு ஒன்று கூறப்படுகிறது. அரிகேசன் என்ற கொடிய அரக்கனால் தன் வலிமையெல்லாம் இழந்த இந்திரன், அசரீரி வாக்கொன்றினைக் கேட்டு சுவாமி மலையை வந்தடைந்து, முருகனை வழிபட்டு, இழந்த வலிமையெல்லாம் மீளப்பெற்றான். காணிக்கையாக, தன் வெள்ளை யானையை விட்டுச் சென்றான்
என்பதே அக்கதை.
இந்துக்கலைக்களஞ்சியம்

Page 222
சுவாமிமலைத் தலத்தின் புனித தீர்த்தங்களாக வச்சிர தீர்த்தம், குமார தாரை தீர்த்தம், சரவண தீர்த்தம், நேத்திர புட்கரணி,பிரமதீர்த்தம் என்ற ஐந்து தீர்த்தங்கள் விளங்குகின்றன. இவற்றுள் வச்சிர தீர்த்தம் ஒரு கிணறாக அமைந்துள்ளது. இதற்கு சேத்திர கூபம், சுவாமி கூபம் என்றும் பெயர்கள் உண்டு.
குமார தாரை தீர்த்தம், கோயிலிலிருந்து சிறு தொலைவில் உள்ள காவிரியோடு கலந்துள்ளதாக ஐதீகம் உள்ளது. கங்காதேவி, மக்கள் தன்னிடம் வந்து கழுவிக் கொள்ளும் பாவங்களைப் போக்குவதற்காக சுவாமிநாதனிடம் வந்தாள் என்றும், வந்தவள் திரும்பிப் போக மனமில்லாதவளாக தாரையாக
காவிரியில் கலந்துறைகிறாள் என்றும் அந்த ஐதீகம் கூறுகிறது.
சரவணதீர்த்தம் என்பது ஒரு குளம். இது கோயிலுக்கு வட கிழக்கே உள்ளது. ஜமதக்கினி முனிவரால், கரடியாக மாறிய தன் தந்தையின் சாபம் நீங்குவதற்காக சரவணன் என்ற சிறுவன் இக்குளத்தை உண்டாக்கினான் என்பது ஐதீகம்.
நேத்திரபுட்கரணியும் கோயிலின் கீழைவீதியில் உள்ள ஒரு குளமே. இது முருகனின் வேற்படையால் உருவாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதற்குச் சுவாமி புட்கரணி என்ற பெயரும் உண்டு. பிரமதீர்த்தம் என்ற குளம் பிரணவப்பொருளை அறியவிரும்பி இத்தலத்துக்கு வந்து வழிபட்ட பிரமனால் உருவாக்கப்பட்டது என்பது ஐதீகம்.
சிவபெருமான் முருகனிடம் உபதேசம் கேட்ட தலமென்ற காரணத்தால் இது உபநயனச்சடங்கு செய்வதற்கு உகந்த தலமாகக் கொள்ளப்படுகிறது. சுவாமிநாதசுவாமி மகப்பேற்றை அருளுபவர் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் பலரும் இத்தலத்தில் திருமணம் செய்வதை விரும்புகிறார்கள். இத்தலத்தில் சித்திரையிலும் கார்த்திகையிலும் நடைபெறும் திருவிழாக்கள் சிறப்பானவை. அருணகிரிநாதர் இத்தலத்து முருகன்மேல் பல திருப்புகழ்ப்பாடல்களைப் பாடியருளியுள்ளார். கச்சியப்பர் முதலான பிற புலவர்களும் இத்தலத்து முருகனைப் பாடியுள்ளனர்.
பூமாது புனர்மாதும் போற்றரிய
மூவிலை வேற் புனிதன் கேட்ப ஒம் ஆதிமந்திரத்தின் உண்மை எலாம்
உணர்ந்தும் உரை உரைத்துக்காட்டி
ஆம் அதி அந்தம் இலாஐந்தொழிலும்
கடவி அப்பால் அறியாநிற்கும் கோமானை ஏரகத்தில் உறை சுவாமி நாயகனைக் குறித்து வாழ்வாம், என்று இத்தலத்துப் புராணம் முருகனைப் போற்றித் துதிக்கிறது. (க.இர)
இந்துக் க்களஞ்சியம்
196

சுவேதாம்பரர்
கி.மு. ஆறாம் நூற்றாண்டிலே (கி.மு. 599-527 வரை) வடஇந்தியாவிலே தோன்றி விளங்கிய ஞானிகளிலே சமணசமய நிறுவியவராகக் கொள்ளப்படும் மகாவீரரும் ஒருவர் ஆவார். இக்காலகட்டத்திலே உபநிஷததத்துவ ஞானிகளில் ஒரு சாரரும், புத்த சமயத்தை நிறுவியவராகிய புத்த பெருமானும், ஆஜீவிக சமயத்தை நிறுவியவராகிய மொக்கலிகோசல என்பவரும் வாழ்ந்தனர். வேதங்கள் கூறும் வேள்விகளை உபநிஷததத்துவ ஞானிகள் வலியுறுத்தாவிடினும் வைதிக மரபை ஏற்றுக் கொண்டனர். ஆனால் மகாவீரர், புத்தர், மொக்கிலிகோசல ஆகியோர் வேள்விகளை முற்றாக நிராகரித்ததோடு வைதிக மரபையும் புறக்கணித்தனர். இவர்கள் கூடுதலாக ஒழுக்க நெறியை வலியுறுத்தினர். மேலும் கர்மக்கோட்பாடு,ஒழுக்கநெறி, அஹிம்சை, வேள்விகளைக் கண்டித்தல் முதலியவற்றில் உபநிஷதஞானிகள், புத்தபிரான், மகாவீரர் ஆகியோருக்கிடையில் பெருமளவு ஒற்றுமை நிலவிற்று. சமணசமய மரபிலே 24 தீர்த்தங்கரர் (ஞானிகள்) கூறப்படுகின்றனர். இவர்களிலே கடைசியாக வாழ்ந்த வர்த்தமகாவீரரும், அவருக்கு 250 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த பார்ஸ்வநாதரும் முக்கியத்துவம் பெறுகின்றனர். குறிப்பாகப் பின்னையவரே கூடுதலான முக்கியத்துவம் பெறுகிறார்.
இவருடைய போதனைகளைப் பின்பற்றியோர் சமணர், ஜைனர், (ஐம்புலன்களையும் அடக்கி வெற்றி கண்ட ஜினரைப் பின்பற்றுவோர்) அமணர், ஆருகதர் என அழைக்கப்பட்டு வந்தனர். இவருடைய போதனைகளின் விளக்கங்கள் குறித்துக் கருத்து வேறுபாடுகள் தோன்றின. இதன் விளைவாகப் பிற்காலத்திலே சமணசமயத்திலே சுவேதாம்பர, திகம்பர என இரு பெரும்பிரிவுகள் தோன்றின.
சுவேதாம்பர சமணத்துறவிகள் வெண்ணிற ஆடை தரித்தனர். சுவேத எனில் வெண்ணிறம் எனவும், அம்பர எனில் ஆடையெனவும் பொருள்படும். திகம்பர சமணத்துறவிகள் ஆடை தரிக்க மாட்டார்கள். திக் எனில் திசை எனவும், அம்பர எனில் ஆடையெனவும் பொருள்படும். எனவே இவர்கள் திசைகளை ஆடையாகத் தரித்தவர்கள் எனக் கருதப்படுவர். அதாவது இவர் ஆடை தரித்திலர். சுவேதாம்பர ஆலயங்களில் உள்ள தீர்த்தங்கரர்களின் திருவுருவங்களுக்கு வெண்ணிற ஆடைதரிக்கப்படும். ஆனால் திகம்பர சமண ஆலயங்களில் உள்ள திருவுருவங்களுக்கு ஆடை தரிக்கப்படுவதில்லை. எனினும் இவ்விரு பிரிவினரும் உருவ வழிபாட்டினர். இவ்விரு பிரிவினரையும்விட ஸ்தானகவாசி என்ற பிறிதொரு சமணப் பிரிவினரும் இருந்தனர். இவர்கள் உருவ வழிபாட்டினை ஏற்றிலர். தமது கோவில்களிலே சமண ஆகம நூல்களை வைத்து அவற்றையே அருகக்கடவுளாகவும், தீர்த்தங்கரராகவும் பாவனை செய்து வழிபடுவர்.

Page 223
திகம்பர, சுவேதாம்பரப்பிரிவினரிடையிலே நிலவிய வேறுசில வேறுபாடுகளையும் குறிப்பிடலாம். திகம்பரரின் கருத்துப்படி பெண்களுக்கு வீடுபேறு கிடையாது. அவர்கள் இறந்த பின் ஆணாகப் பிறந்து தான் வீடுபேறு அடைவர். ஆனால் சுவேதாம்பரர் பெண்களுக்கு வீடுபேறு உண்டு என்பர். சுவேதாம்பரரின் கருத்துப்படி சூத்திரர், இல்வாழ்வர் ஆகியோர் வீடுபேறு பெறலாம். ஆனால் திகம்பரர் இக்கருத்தினை ஏற்றிலர். மேலும் சுவேதாம்பரர் கருத்துப்படி ஒருவன் ஆடைகளை அணிந்தாலும் வீடுபேறு அடைவான். ஆடை அணிகலன்கள் அணிந்துள்ள திருவுருவங்களை வழிபடலாம். ஒரு துறவி சூத்திரனிடமிருந்தும் உணவினைப் பெறலாம். இன்னோரன்ன கருத்துக்களைத் திகம்பரர் ஏற்றிலர்.
எனினும் கொல்லாமை, ஒழுக்க நெறி, பற்றின்மை, ஆருகதர், தீர்த்தங்கர் வழிபாடு போன்றவற்றில் இருசாராருக்கும் பொதுவான ஒற்றுமை காணப்பட்டது. அஹிம்சையை மிக வலியுறுத்தியோரிலே சமணர் நன்கு குறிப்பிடப்புடுவர்.
மகாவீரர் மறைந்து சுமார் ஆயிரத்து ஐந்நூறு ஆண்டுகளின் பின் கி.பி 980 அல்லது 993இலே வளபியிலே நடைபெற்ற சமணசமய மகாநாட்டின் பின்னரே சுவேதாம்பரர் தனிப்பட்ட பிரிவினராக நன்கு செயற்பட்டனர். இம் மகாநாட்டின் பின்னர்
சமணசமயப் புனித நூல்கள் தொகுக்கப்பட்டு, எழுதப்பட்டன.
இவ்வாறு தொகுக்கப்பட்ட முக்கியமான நூல்களிலொன்று பத்ரபாகுவின் கல்பசூத்திரமாகும். சுவேதாம்பரப் பிரிவினரின் முக்கியமான நூல்களில் இதுவுமொன்றாகும். இதனைத் திகம்பரர் ஏற்றிலர். இதனை விட அங்கங்கள், உபாங்கங்கள் என்ற வகையிலான புனித நூல்கள் 45 உள்ளன. இவற்றையும் திகம்பரர் நிராகரித்துள்ளனர். இவற்றைவிடப் பல உரை நூல்களையும் சுவேதாம்பரர் எழுதியுள்ளனர். குப்த பெருமன்னர் காலத்திலே (கி.பி 4ம் - 6ம் நூற்றாண்டு வரை) சமண சமயத்திற்கான விக்கிரகவியலும் தோன்றிற்று. இரு சாராரதும் விக்கிரகவியல் பெருமளவு ஒரே தன்மையதாயினும், திகம்பரர் வணங்கிய விக்கிரகங்களுக்கு ஆடையோ அணிகலனோ இருக்காது.
சமணர்கள் தொடக்கத்திலே பிராகிருத மொழியையும், அவ்வப்பிரதேச மொழியையும் பயன்படுத்தினர். பின்னர் வட மொழியையும் பயன்படுத்தலாயினர். தமிழ், வடமொழி உட்பட இந்திய மொழிகள் பலவற்றிற்கு இவர்கள் கணிசமான பங்களிப்புகள் செய்துள்ளனர். திகம்பர சமணர்களின் செயற்பாடுகள் பொதுவாகத் தமிழ் நாடு, கர்நாடக தேசம், தெலுங்கு தேசம் முதலிய தென்னிந்திய மாநிலங்களிலும் சுவேதாம்பரரின் செயற்பாடுகள் வட இந்தியாவிலே குறிப்பாக குஜராத், மஹாராஷ்டிரம், ராஜஸ்தான், ஒரிசா முதலிய பல மாநிலங்களிலும் நடைபெற்று வந்துள்ளன. (Gof). GFF))

97
சுவேதாஸ்வதரோபநிஷத்
வேதகால சமய, தத்துவ சிந்தனைகளின் மலர்ச்சியினை வேத இலக்கியத்தின் இறுதிப் பகுதியாக, மகுடமாக உள்ள வேதசிரஸ்' என அழைக்கப்படும் உபநிஷதங்களிலே காணலாம். இவ் உபநிஷதங்கள் கூறும் சமய, தத்துவ சிந்தனைகள் பிற்காலத்திய வைதிக சமயங்களுக்கும், தரிசனங்களுக்கும் பொதுவான அடிப்படையாக அமைந்துள்ளன. அவைதிக தரிசனங்களான பெளத்தம், சமணம், ஆஜிவகம் முதலியனவற்றிலும் அவற்றின் தாக்கத்தினை ஒரளவு காணலாம். முக்கியமான உபநிஷதத்துக்களில் ஒன்றான சுவேதாஸ்வதரோப நிஷத் ஏனைய பிரதான உபநிஷத்துக்களினின்றும் காலத்தாற் சற்றுப் பிந்தியதாயினும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.
இதிலே 113 மந்திரங்கள், செய்யுள் வடிவிலே, ஆறு அத்தியாயங்களிலே இடம் பெற்றுள்ளன. சுவேதாஸ்வதர எனும் பெயருள்ள ரிஷி, தம்முடைய மாணவர்களுக்குப் புகட்டிய மிக உயர்ந்த ஞானோபதேசமாக இந்நூல் அமைந்துள்ளது. அவ்வாறுதான் நூல் முடிவிலே கூறப்பட்டுள்ளது (6,21). மேலும் சுவேத எனில் தூய அல்லது 'வெண்மையான' எனவும், அஸ்வ எனில் இந்திரியங்கள் அல்லது குதிரை எனவும் பொருள்படும். எனவே, தனது புலன்களைத் தூய்மைப் படுத்தியவரின் மேலான ஞானவுரை எனவும் இதற்குப் பொருள் கூறலாம்.
இதற்கு முற்பட்ட கால உபநிஷத்துக்கள் பலவற்றிலே, பரம்பொருள் பொதுவாக நிர்க்குணமாகவே கூறப்பட்டுள்ளது. ஆனால், இதிலே பரம்பொருள் நிர்க்குணமாக ஒரு சில இடங்களிலே கூறப்படினும், குறிப்பாகச் சகுணமாகவே குணம், குறி உள்ளதாகவே கூறப்படுகின்றது சிறப்பாக ருத்ர, சிவ, ஈசான, எனப் பலவாறு சகுணமாக அழைக்கப்படுகின்றது. இருக்கு வேதத்தில் சில பாடல்களிலும் பின்னர் அதர்வ வேதத்திலும், குறிப்பாக யஜுர்வேதத்திலேயுள்ள சதருத்திரீயத்திலும் பலவாறு போற்றப்பட்டுவந்த ருத்திர சிவ எனும் தெய்வம் இவ் உபநிஷதத்திலே எல்லாத் தெய்வங்களுக்கும் மேலான முழுமுதற் கடவுளாக, பரப்பிரமமாக, ஆதிமூல புருஷனாக நன்கு எடுத்துக் கூறப்படுகின்றார். இவ்வகையில் இது முக்கியமான சைவ உபநிஷதத் ஆகவும் இலங்குகின்றது : காஷ்மீர சைவம், தென்னாட்டுச் சைவம் முதலிய சைவசமயப் பிரிவுகளுக்கும் ஒரு முன்னோடியாக அடிப்படை நூலாகவும் இது திகழ்கின்றது. குறிப்பாகத் தமிழகத்துச் சைவசித்தாந்தத்திற்கான சில அடிப்படைக் கருத்துக்களையும் இதிற் காணலாம். இதைவிட, சாங்கிய, யோக தர்சனங்கள் பற்றிய கருத்துக்களும் இதிலே காணப்படுகின்றன.
இத் தரிசனங்கள் சைவசித்தாந்தத்துடன் ஒரளவு தொடர்புடையவை. “சம காலத்திலே நிலவிய பல்வேறு சமய, தத்துவங்களுக்கிடையிலே உள்ள வேறுபாடுகளை நீக்கி
இந்துக்கலைக்களஞ்சியம்

Page 224
அவற்றை மீண்டும் ஒன்றுபடுத்தும் முயற்சியினை இந்நூல் குறிக்கின்றது” எனப் பேராசிரியர் ச. இராதாகிருஷ்ணன் இ பற்றிக் குறிப்பிட்டுள்ளார்.
பிரபஞ்சத்தின் மூலதத்துவம் பற்றிய வினாவினைப் பிரம்மவாதிகளாகிய மாணவர் எழுப்புதலுடன் தொடங்கி, இதனை எத்தகைய மாணவருக்கு உபதேசிக்கலாம் என்பதனதும், இறைபக்தி, குருபக்தி என்பவற்றினதும் முக்கியத்துவத்துடன் இந்நூல் முடிவடைகின்றது. ருத்ர (ன்), சிவன்) எனப் பலவாறு போற்றப்படும் ஈஸ்வரனின் தத்துவம் பற்றிய கருத்துக்களே இந்நூலின் பிரதான பங்களிப்பு என, எஸ்.கே.பெல்வல்கர், ஆர்.டி. ரணாதே ஆகிய இரு பிரபல தத்துவஞான அறிஞர்கள் இந்திய தத்துவ ஞான வரலாறு எனும் நூலிலே குறிப்பிட்டுள்ளனர்.
சுவேதாஸ்வதரோபநிஷத் பரம்பொருளைச் சிறப்பாக குறிப்பிடும் ருத்ர எனும் சொல் பலமானவர்; பயங்கரமானவர்; பாவங்களை,துன்பங்களை நீக்குபவர்; பக்தர்களின் பாவங்களையும், துன்பங்களையும் அழித்து, ஞானத்தினையும், பேரின்பத்தினையும் அளிப்பவர்; பெளதிகவியல் ஒழுக்கவியல், ஆன்மீகவியல் விதிகளை மீறியோரைத் தண்டிப்பவர் எனப் பல பொருள்படும். இவ்வுலகங்கள் அனைத்தினையும் தமது ஆற்றல்களினாலே பாதுகாத்து, ஆட்சி புரியும் ஒரேயொரு ஆளுவோனாக ருத்திரனே விளங்குகிறார். அவரைத் தவிர இரண்டாவதாக வேறு எவரும் இவர் (ஏகோருத்ரோ நத்விதீயா 3.2). இது போன்ற செய்யுள்களிலே ஒரோயொரு முழுமுதற் கடவுளாக ருத்திரன்- சிவன் போற்றப்படுகிறார். ஏற்கனவே சாந்தோக்ய உபநிஷதத்திலே பரம்பொருள் ஒன்றே, இரண்டன்று (ஏகமே வாத்விதீயம்-61) எனக் கூறப்பட்டுள்ளமை ஒப்பிடற்பாலது. உபநிஷதகாலப் பின்னணிக் கேற்பப் பரம்பொருள் (இங்கு ருத்ர - சிவ) பற்றிய கருத்துக்கள் குறிப்பாக வேதாந்த முறைப்படியும் கூறப்பட்டுள்ளன.
சைவசித்தாந்தம் சிவபிரானே முழுமுதற் கடவுள் எனக் கூறும். இங்கும் அப்பிரான் ருத்ர, சிவ, ஈசான ஹர (தமிழ்-அரன்), மஹேஸ்வர போன்ற பல பெயர்களால் அழைக்கப்படுகிறார். சைவசித்தாந்தம் கூறும் பதிபசு, பாசம் ஆகிய திரிபதார்த்தங்கள் குறிப்பிடற்பாலன. ஆன்மா (பசு) தன்னைப் பீடித்துள்ள பாசங்களிலிருந்து, திருவருளால் விடுதலை பெற்றுப் பதியின் (இறைவனின்) பாதாரவிந்தத்தினை அடையும். இத்தகைய கருத்துக்களின் மூலங்களை இங்கே காணலாம்.
"அழியக் கூடியதும் (கூரம்), அழிவற்றதும் (அஷரம் ) வெளிப்படுத்தப்பட்டதும் (வ்யக்தம்), வெளிப்படுத்தப்படாததுமான ( அவ்யக்தம்) சேர்க்கையாலுண்டான இப்பிரபஞ்சத்தினை, இறைவன் (ஈச) தாங்கி நிற்கிறான். இறைவனை அறியாமல் ஆத்மா உலக இன்பங்களில் ஈடுபட்டுக் கட்டுப்படுகின்றது. (ஆனால்) இறைவனை (தேவ) அறிந்தவுடன் அனைத்துப்
இந்துக் க்களஞ்சியம்
198

பாசங்களிலிருந்தும் விடுதலையடைகின்றது (18).” என்பது அவற்றுள் ஒன்று, இங்கே, "சர்வ பாசைஹி' எனப் பாசங்கள் பன்மையில் வந்துள்ளன. வடமொழி இலக்கணப்படி இரண்டிற்கு மேற்பட்டவையே பன்மையாகும். எனவே, இங்கு ஆணவம், கன்மம், மாயை ஆகிய மூன்று மலங்களையே - பாசங்களையே குறிக்கின்றது எனலாம். இதற்கு அடுத்த செய்யுள்களிலும் இறைவன், ஆன்மா, சடப்பொருள் ஆகியன அழியாதவை எனும் கருத்து உள்ளது.
பதி பற்றிய கருத்துக்கள் மேலும் ஆறாம் அத்தியாயத்திலே வந்துள்ளன. “எல்லாத் தலைவர்களுக்கும் மேலான பெருந் தலைவனாகவும் (பரமம் மஹேஸ்வரனாம்), தெய்வங்கள் அனைவருக்கும் மேலான பர தெய்வமாகவும், எல்லா ஆட்சியாளருக்கும் மேலான ஆட்சியாளராகவும், பிரபஞ்சத்தின் தலைவராக, அப்பாலுள்ள இறைவனாகவும் (தேவ)” அவர் கூறப்படுகின்றார் (6:7). அடுத்த செய்யுளிலே அவருடைய ஒப்பற்ற தன்மையும், பேராற்றலும் ( பராசக்தி) கூறப்படுகின்றன. இங்கே பராசக்தி, அருளாகிய சக்தியைக் குறிப்பதாகலாம். இதே அத்தியாயத்திலே (6.16) வரும் “பிரதான சேஷத்ரஜ்ஞபதி (இறைவன்), சடப்பொருளினதும் (மாயா) ஆத்மாவினதும் பதியாக யாவற்றையும் கட்டிக் காத்துத் தமக்குள் அடக்குவர்” என வரும் கருத்தும் குறிப்பிடற்பாலன. இங்கு, சம்சாரத்திலிருந்தும், கட்டுக்களிலிருந்தும் அவர் விடுதலையளிப்பார் எனக் கூறப்பட்டுள்ளது.
இறைவன் பாவங்களை நீக்குபவர் (ஹர); நன்மை அல்லது மங்களம் தருபவர் (சிவ); பெரிய ஒளி வடிவினர் (பரம்ஜோதி); எல்லாம் அறிந்தவர் (சர்வலித்); ஸர்வ வல்லமையுடையவர்; எங்கும் நிறைந்தவர்; பெரியவர்; பிறவாதவர் (அஜ); அழியாதவர் (அஷர); மரணமற்றவர் (அமிர்த); என்றுமுள்ளவர் (த்ருவ); பெரியரிஷி (மஹர்ஷி) (கைலாச) மலையிருப்பவர் (கிரிசந்த); யாவற்றையும் படைப்பவர்; காப்பவர்; அழிப்பவர்; மாயையைக் கட்டுப்படுத்துபவர்; அதனாற் பாதிக்கப்படாதவர்; வித்தையையும் அவித்தையையும் கட்டுப்படுத்துபவர்; வெளிப்படாதவர்; வெளிப்படுபவர்; அந்தர்யாமியாக எங்கு முள்ளவர் : மிக நுண்ணியர் பெருவிரல் அளவினையுடையவர். அவருடைய இரக்கமுள்ள அல்லது தகூதிணாமூர்த்தி முகம் பற்றிய குறிப்பும் வருகின்றது. குருமூர்த்தியாகவே அவர் ஆன்மாக்களை ஈடேறச் செய்பவர்.
“பிரகிருதியை மாயை (மாயா) எனவும், பெரிய தலைவனாகிய (மஹேஸ்வரனை) இறைவனை மாயையின் தலைவன் எனவும், அறிவாயாக, இவ்வுலகனைத்தும் அவரின் உறுப்புக்களாகிய , உயிர்களால் நிறைந்துள்ளது' எனவரும் கருத்தும் குறிப்பிடற்பாலது. மேலும், “தேவர்களின் தோற்றத்திற்கும் பாதுகாப்புக்கும் காரணமாயிருப்பவரும், யாவற்றிற்கும் தலைவனும், முன்னர் ஹிரண்ய கர்ப்பத்தினை உண்டாக்கியவரும், ருத்ரன்), சிவன்) ஆக மிளிர் பவருமாகிய அப்பெரிய ரிஷியாகிய

Page 225
( மஹர்ஷி) பெருமான், எங்களுக்கு நல்ல சிந்தனைகளைத் தந்தருளுவாராக” என்பன குறிப்பிடற்பாலன. இறைவனிடம் வேண்டுவது நல்ல சிந்தனைகளே.
ஜீவாத்மா இறைவன் போன்றதன்று. பாசங்களாற் கட்டுப்பட்டு உள்ளது; சிருஷ்டிக்கப்படாதது; அனாதியானது; அழிவில்லாதது; இதுவும் மிக நுண்ணியது; கர்ம பலன்களினாலே பிறவிச் சுழற்சியிலுழல்கின்றது; இறைவனை அறிந்தவுடன் பாசங்களிலிருந்து விடுதலையடைவதை விட வேறு வழியில்லை; பாசங்களாலே கட்டுப்பட்டுள்ள ஆன்மா தூசு படிந்த பிம்பத்திற்கு ஒப்பிடப்பட்டுள்ளது; விடுதலையடையும் போது இறைவனுடன் ஒன்றுபடும்; பிரணவத்தினைத் தியானித்து ஆன்மா பரம்பொருளைக் கண்டு கொள்ளும்.
பாசங்கள் பற்றிய கருத்துக்கள் ஒரு சிலவே வந்துள்ளன, எனினும் பாசம் எனும் பதம் பல அத்தியாயங்களிலே வந்துள்ளது. இதைவிட மாயை (மாயா), கன்மம், சம்சாரம் பற்றிய கருத்துக்களும் இடையிடையே வந்துள்ளன. நாலாவது அத்தியாயம் ஐந்தாவது செய்யுள் குறிப்பிடற்பாலது. பிறவாதது (அஜ - ஆன்மா) பிறவாத (பெண்) பிரதானத்தினை ( சிவப்பு) வெள்ளை, கறுப்பு நிறமுள்ள இயற்கைச் சடப்பொருள் துய்த்துக் கொண்டு (அதன் புயங்களிலே) துயிலுகின்றது. இதிலிருந்து இது போன்ற பல பிள்ளைகள் தோன்றுகின்றன. இதனைத் துய்த்த பின் அது (ஆன்மா) இதனை (பிரகிருதியை) விடுகின்றது. பக்கத்திலே பிறவாத பிறிதொரு (தலைவன்) பற்றின்றி உளன், எனுமிச் செய்யுளிலே பதி, பசு, பாசம் (இங்கு மாயா) ஆகிய முப்பொருள்களும் வந்துள்ளன. இம் மூன்றும் அழிவற்றன. இங்கு
※
(
S
தந்த என்னும் பதம் பொதுப் பொருளிலும், சிறப்புப் பொருளிலும் நிலவிவந்துள்ளது. இப்பதம் செலுத்துபவன், ஊக்குவிப்பவன், குதிரையைத் திறமையாகச் செலுத்துபவன், தேரோட்டி, மரவேலை செய்பவன், பழையகதை சொல்லுபவன், எனப் பல பொருள்படும். ஒரு காலகட்டத்திலே அரச குலத்தைச் சேர்ந்த ஆணுக்கும், பிராமணப் பெண்ணுக்கும் பிறந்து தேரோட்டியாக விளங்கியோரையும் இப்பதம் குறித்தது. தேரோட்டியின் வளர்ப்புப் பிள்ளையான கர்ணனும் 'சூத என அழைக்கப்பட்டான். மன்னர் வீரர் முதலியோரின் கதைகளைட்
பாடிக் கூறியோரையும் இது குறித்தது.

పీడ ఎపీడ N /en.
తి
அன்ய எனும் பதம் பதியினை- இறைவனைக் குறிக்கின்றது. இச் செய்யுள் 5.1 என்ற பகுதியிலும் வந்துள்ளது. மேற் குறிப்பிட்ட செய்யுள் (4.5) சைவசித்தாந்த நோக்கிலே நன்கு கவனித்தற்பாலது முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.
ஏனைய உபநிஷதங்களிற் போன்று இதிலும் சில முக்கியமான கருத்துக்கள் உவமைகள் மூலம் தெளிவாக விளக்கப்படுகின்றன. எடுத்துக்காட்டாக இறைவன் எப்பொருளிலும் நிறைந்திருப்பது எள்ளில் எண்ணெய் போலவும் தயிரில் வெண்ணெய் போலவும், (நிலத்தடியிலுள்ள) நீரூற்றுக்களில் நீர் போலவும் அரணிக்கட்டைகளிலுள்ள நெருப்புப்போலவும் என நான்கு உவமைகள் மூலம் தெளிவுபடுத்தப்படுகின்றது. பரமாத்மாவும், ஜீவாத்மாவும் ஒன்றாயிருந்தாலும் ஜீவாத்மாவே தனது கர்மபலன்களை அநுபவிக்கின்றது: பரமாத்மா பற்றின்றி அதனைப் பார்த்துக் கொண்டிருக்கும். இக்கருத்து அழகாகப் பின்வருமாறு கவிதை ரீதியிலே கூறப்பட்டுள்ளது. "இணைபிரியாத நட்புறவுள்ள அழகிய இரு பறவைகள் ஒரு மரக்கிளையில் உள்ளன. அவற்றுள் ஒன்று மரத்திலுள்ள கனிகளை நன்கு சுவைத்துப் புசித்துக் கொண்டிருக்கின்றது. மற்றது கனிகளை உண்ணாது பார்த்துக் கொண்டிருக்கின்றது.” இங்கு, சமய தத்துவக் கருத்து எளிமையாக விளக்கப்படுகின்றது.
மேலும் இவ் உபநிஷத் எழுதப்பட்டுள்ள மொழிநடையும் எளிமையானது. மிகக் கடினமான சொற்கள் ஒரு சிலவே வந்துள்ளன. குறிப்பிட்டவாறு ஒரு சிஷ்யனுக்குப் போதிக்கும் முறையில் இந்நூல் அமைந்துள்ளது. இவ் வகையில் இவ் உபநிஷத்,
கடோபநிஷத், பகவத்கீதை போன்றவற்றுடனும் ஒப்பிடற்பாலது.
(விசி)
N/ NV/ ※※ /AN MAN
இதிஹாஸங்களிலே மகாபாரதம், TITLO ITIL/6ØØTLó ஆகியனவற்றில் இப்பதம் போர்க்களத்தில் அரசருடைய தேரைச் செலுத்திக் கொண்டிருக்கும் வேளையில் மன்னனதும், அவனுடைய முன்னோரதும் வீரதீரச் செயல்களை அவனுக்கு எடுத்துக் கூறிவந்தோரும் அரசவையிலே மேற்குறிப்பிட்டவற்றைப் பிரகடனம் செய்தோரும் சூதரென அழைக்கப்பட்டனர். எனவே இவர்கள் இதிஹாசப் பாடல்களையும், பழைய கதைகளையும் நன்குகற்று, அவற்றை நன்கு நினைவிலிருத்திய வராகவும் காணப்பட்டனர். வியாசருடைய மாணவராகிய லோமஹர்ஷணர் மிகப்புகழ் பெற்ற சூதராகக் கூறப்படுகின்றார்.
நைமிஷாரண்ய (நைமிஷவன) த்திலே புராணங்களை மற்றைய முனிவர்களுக்கு எடுத்துக் கூறிய துறவி அல்லது முனிவர் சூத என்ற பெயரால் அறியப்படுகின்றார். வியாசருடைய
199
இந்துக் តំឲGräfiយ។

Page 226
மாணவர், வியாசர் புராணங்களை இயற்றிய பின் அவற்றைத் தன்னுடைய மகன் சுக என்பவருக்குக் கற்பித்தார். அதே வேளையில், வியாசருக்கு சூதர் என்ற மாணவரும் இருந்தார் எனக் கூறப்படுகின்றது. தேவீ பாகவதத்திலே (ஸ்கந்த ) சூதர் சுகருடைய சகமாணவர் எனவும், புராணங்களை நேரடியாகவே குருவாகிய வியாசரிடமிருந்து கற்றார் எனவும் , புராணக்கதைகளை மிகத்திறமையாகக் கூறும் திறன் பெற்றிருந்தார் எனவும், லோமஹர்ஷணருடைய மகன் எனவும் கூறப்பட்டுள்ளது.
வியாசரிடமிருந்து புராணங்களை நேரடியாகக் கற்ற சூதர் கலியுகத்திலே முனிவர்களுடைய இருப்பிடமாகிய நைமிஷாரண்யத்திற்குச் சென்றார், பழைய காலத்திலே துவாபரயுகம் முடியும் கால கட்டத்திலே இனிவரப் போகும் தீமைகள் மிகுந்திருக்கும் கலியுகம் குறித்து முனிவர்கள் பெரிதும் கவலைப்பட்டனர். எனவே அவர்கள் கலியுகத்தின் தீமைகளைத் தடுப்பதற்கான வழிவகைகளை அறியும் ஆவலுடன் பிரமாவின் உலகத்திற்குச் சென்றனர். அவர்களுடைய வார்த்தைகளைக் கேட்ட பிரமா ஒரு சக்கரத்தை அவர்கள் முன்னிலையிலே வைத்து அது அசைந்து செல்லுமிடம் எங்கும் அதனைத் தொடருமாறும், 95 எங்குவிழுந்து தூளாகின்றதோ, அந்த இடம் தூய்மையான இடம் என்றும், அங்கு கலியுகம் முடிந்து கிருதயுகம் (மிகச் சிறந்த யுகம்) வரும் வரை அவர்கள் நிம்மதியாக வாழலாம் எனவும் கூறினார். அதைச் செவி மடுத்த முனிவர்கள் அவ்வாறே குறிப்பிட்ட சக்கரத்தைத் தொடர்ந்து அது விழுந்து தூளான இடத்தினை அடைந்தனர். இந்த இடமே புகழ்பெற்ற நைமிஷாரண்யமாகும். அங்கே சூதர் வந்தார்.
முனிவர்கள் சூதரைக் கண்டனர். அங்கிருந்தவர்களில் ஒருவரான செளனகர், சூதரை முறைப்படி வரவேற்று மேல்வருமாறு கூறினார். “வியாசரின் மாணவராகிய சிறந்த முனிவரே! நீங்கள் 18 புராணங்களையும் வியாசரிடமிருந்து முறைப்படி கற்றுள்ளீர்கள். நாங்கள் அவற்றைக் கேட்பதற்கு மிக ஆவலாக உள்ளோம் . எனவே தயை கூர்ந்து கூறுவீர்களாக இவற்றைக் கேட்டுப் பாவங்கள் நீங்கி வீடுபேற்றினைப் பெறுவோமாக” அவர்களுடைய வேண்டுகோளுக்கு இணங்கிய சூத முனிவர் 18 புராணங்களையும் அவர்களுக்குக் கற்பித்தார். (எனவேதான் புராணங்கள் சூதர் செளனருக்குக் கூறும் பாங்கிலே சம்பாஷனை வடிவில் அமைந்துள்ளன). இதன் பின்னர் மக்கள் இவற்றைப் பெற்றனர். இவ்வாறு தேவீபாக வதம் (ஸ்கந்தம் 1) கூறுகின்றது.
மகாபாரதப் போர் குருக்ஷேத்திரத்திலே நடைபெற்றுக் கொண்டிருந்தபோது சூதர் புராணங்களைப் பாடிக் கொண்டி ருக்கும் போது அவரது தலைவெட்டப்பட்டதென்றும், அது மீண்டும் பொருத்தப்பட்டு அவர் உயிர் பெற்றார் எனவும் கூறப்படுகின்றது. மேலும் மேற்குறிப்பிட்ட போர்க்களத்திலே அம்புகள் துளைத்த உடம்புடன் பீஷ்மர் அம்புகளாலான படுக்கையிலே கிடந்த போது
இந்துக்கலைக்களஞ்சியம்
200

சூதரும் அங்கு சென்று அவரைப் பார்த்தார் எனவும் கூறப்படுகின்றது. விஷ்வாமித்திரருடைய பிள்ளைகளாக வேதங்களை நன்கு விளக்கியவர்களில் ஒருவராகவும் சூதர் கூறப்படுகின்றார்.
இவ்வாறு சூத எனும் பதம் செலுத்துதல், தேரோட்டி முதலிய கருத்துக்களிலே வந்திருப்பினும், குறிப்பாக அரசனுடைய தேரோட்டியையும் சபையிலே அவரின் புகழைக் கூறுவோனையும் குறித்தது. சூதர் என்ற பெயரிலே பெரிய புகழ்பெற்ற பெளராணிக அறிஞர் புராணங்களை முனிவர்கள் மத்தியிலும், ஏனையோர் மத்தியிலும் எடுத்துக் கூறி அவற்றைப் பரப்பி வந்துள்ளார். இப் பெயரில் முனிவர் ஒருவர் அல்லது பலர் வாழ்ந்து மேற்குறிப்பிட்ட பணியைச் செய்து வந்தனர் எனலாம். ஒரு வகையில் இவர்கள்
சங்ககாலத் தமிழகப் பாணர்களை ஒத்தவர்கள் எனலாம்.
(தே. ஹ.)
சூரிய சித்தாந்தம்
ஆதி காலம் தொட்டு மனிதன் ஈடுபாடு கொண்டிருந்துவரும் அறிவியல்களில் வானநூலும் ஒன்றாகும். இந்தியாவைப் பொறுத்தமட்டிலே குறிப்பாக, வைதிக சமயக் கிரியைகள் தொடர்பாக வானியல் பற்றிய குறிப்புகள் வேதங்களில் அங்குமிங்கும் காணப்படுகின்றன. எனினும் வேதாங்கங்களில் ஒன்றான ஜோதிஷத்திலே(வானியல் சோதிடம்)தான் முதன்முதலாக வானியல் பற்றிய அறிவியல், ஒழுங்குபடுத்திக் கூறப்பட்டுள்ளது. இன்று கிடைத்துள்ள காலத்தால் முந்திய வேதாங்க ஜோதிஷம் லகத என்பவராலே தொகுக்கப்பட்டது. அதன் மூலப்பிரதி கி.மு.ஆறாம் நூற்றாண்டளவைச் சேர்ந்த தாயினும், இன்று கிடைத்துள்ள பிரதி கிறிஸ்து ஆண்டின் தொடக்க காலத்தைச் சேர்ந்ததெனக் கருதப்படுகின்றது. காலப்போக்கிலே மேலைத்தேயரின் குறிப்பாக கிரேக்க, ரோம வானியலாளரின் கருத்துக்களும் இந்தியாவிலே பரவின. அவற்றிற் சில கருத்துக்கள் தேவைக்கேற்றவாறு இந்திய மரபிற்கேற்ப வானியலில் இடம் பெற்றன.
கி.பி 400ஆம் ஆண்டளவிலே சித்தாந்த என்றழைக்கப்படும் புதியரக வானியல் நூல்கள் எழுந்தன. இப்புதிய நூல்களிலே நக்ஷத்திர முறைக்குப்பதிலாக இராசிமண்டலம் கையாளப்படுதல், நாளின் காலத்தைச் சரியாகக் கணித்தற்கான விதிகள், கிரகங்களின் அசைவுகள் முதலியன பற்றிய கருத்துக்கள் இடம்பெற்றன. வானியல் பற்றிய கணக்குகளில் கணிதவியல் முக்கிய இடம் வகித்தது. இதனால் இவ்விரு அறிவியற் கூறுகளும் அக்கம்பக்கமாக வளர்ச்சியடைந்தன.
'சித்தாந்த' எனில் முடிந்த முடிபு, அல்லது முடிவான தீர்வு எனப் பொருள்படும். வானியல் தொடர்பான பிரச்சனைகளுக்குச் சரியான தீர்வுகள் அல்லது முடிபுகளைக் கூறும் இக்காலத்திலே புதிய நூல்கள் இவ்வாறு சித்தாந்த என அழைக்கப்பட்டன.

Page 227
சுதாகர்துவிவேதி தமது கனக தரங்கிணி எனும் நூலிலே 18 சித்தாந்தங்கள் இருந்தன, என மரபுவழியாகக் கூறப்பட்டுள்ளன எனக் குறிப்பிட்டுள்ளார். இவற்றுள்ளே சூரிய, பைதாமஹ, வியாச வசிஷ்ட, அத்ரி, பராசர, காஸ்யப, நாரத, மநு, லோமச (ரோமஸ), பெளலிச, சியவன, யவன,பிருகு முதலியன அடங்கும் அவற்றுட் பல இன்று கிடைத்தில. அவற்றுள்ளே காலத்தால் முந்தியதாக வரஹாமிஹிரராலே தொகுத்துக் கூறப்பட்டதும், பின்னரும் திருத்திய மைத்துக் கூறப்பட்டுக் கிடைத்துள்ளதுமான குரிய சித்தாந்தம் குறிப்பிடற்பாலது.
தமது காலத்தில் நிலவிய ஐந்து வானியல் நூல்களான பெளலிச, ரோமக, வசிஷ்ட, சூரிய, பைதாமஹ எனும் ஐந்தினதும் அடிப்படையிலேயே வராஹமிஹிரர் தமது பஞ்ச சித்தாந்திகவைத் தொகுத்துள்ளார். அவை பற்றி அவர் “பெளலிச சித்தாந்தம் திருத்தமானது. அவற்றை மேலாக அதற்கு அண்மையில் உள்ளது; சூரிய மிகவும் திருத்தமானது. ஏனைய இரண்டும் உண்மைக்கு வெகு தூரத்திலுள்ளன” எனக் குறிப்பிட்டுள்ளார். சூரிய சித்தாந்தம் செளர்ய சித்தாந்தமெனவும் அழைக்கப்படுகின்றது. வானியல் பற்றிய இந்திய நூல்களில் இஃது ஒரு முக்கியமான இடத்தினை வகிக்கின்றது. இஃது ஒரு தனிப்பட்ட ஆசிரியரின் ஆக்கம் அன்று. பல ஆசிரியர்களால் காலந்தோறும் குறிப்பிட்ட காலத்திற்கேற்றவாறு திருத்தியமைக்கப்பட்டு மிகத்தரமான வானியல் நூலாகப் பல்வேறு காலப்பகுதிகளில் இது பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது.
இந்நூலின் தோற்றம் பற்றி மரபு வழியாக ஒரு கதை கூறப்படுகின்றது. அதாவது கிருதயுக முடிவிலே வேதங்களின் மிக உயர்ந்த இடத்தை வகிப்பதும், விண்ணிலுள்ள நட்சத்திரங்கள், கிரகங்கள் முதலியவற்றின் அசைவுகளை எடுத்துக் கூறுவதும், எளிதிலே புலப்படாததுமான மிகப் புனிதமான வான அறிவியலை அறிய விரும்பி மயன் எனும் அசுரன் சூரியனை நோக்கிக் கடும் தவம் செய்தான். அவனுடைய தவத்தினாலே மிக மகிழ்ச்சியடைந்த சூரியன் தன்னுடைய அமிசங்களிலொருவர் மூலம் வானியல் முழுவதையும் அவனுக்குப் புகட்டினான். சூரியனின் இப்போதனைகளே சூரிய சித்தாந்தம் கூறும் பொருளாகும் எனக் கூறப்படுகின்றது. இந்திய அறிவியல்கள் தெய்வத்தின் மூலம் வெளிப்படுத்தப் பட்டன, என மரபுவழியாகக் கூறும் முறைக்கேற்பவே இவ்வாறு கூறப்படுகின்றது. இந்நூல் கூறும் சில வானியல் பற்றிய தகவலின்படி, இது கி.மு. ஆறாம் நூற்றாண்டளவிலே தோற்றம் பெற்றிருக்கலாம். இதன் மூலப்பிரதி ஏற்கனவே குறிப்பிட்டவாறு திருத்தியமைக்கப்பட்டது. அகச் சான்றுகளின்படி கி.பி. ஐந்தாம் நூற்றாண்டு அல்லது சற்றுப் பிந்திய காலம் வரை இது திருத்தியமைக்கப்பட்டு வந்துள்ளது எனலாம். இந்நூல் சிறப்பாக நட்சத்திரங்கள் முதலியன பற்றிய இந்தியக் கருத்துக்களைக் கூறினும், அலெக்காந்திரியக் (கிரேக்க/ ரோம) வானியல் கருத்துக்கள் சிலவற்றையும் உள்வாங்கி இந்திய மரபிற் கேற்றவாறு கூறுகின்றதென அறிஞர் கருதுகின்றனர்.

201
சமஸ்கிருத மொழியில் இன்று கிடைத்துள்ள சூரிய சித்தாந்தம், 14 அத்தியாயங்களும் 500 செய்யுட்களும் கொண்டுள்ளதாகும். இவற்றிலே முறையே கால அளவுகள், கிரகங்களின் அசைவுகள், நிலைகள், பஞ்சாங்கத்தின் பிரதான கூறுகள், திசைகள், இடம் , காலம், சந்திர, சூரிய கிரகணங்கள் அவை தோன்றும் முறைகள், கிரகங்களின் சேர்க்கைகள், நட்சத்திரங்களும், கிரகங்களும் சேருதல், கிரகங்கள் உதித்தல், மறைதல், சந்திரன், சூரியன் ஆகியோரின் ஒப்பீட்டு ரீதியிலான அசைவுகள், கிரகங்கள், சேர்க்கையால் ஏற்படும் தீமைகள், பிரபஞ்சவியல், வானியல் கருவிகள், காலத்தை அளவிடும் முறைகள் முதலியன எடுத்துக் கூறப்படுகின்றன. இந்நூல் கூறும் பொருளை மிகச் சுருக்கமாகவே கூறுகின்றன. குறியீட்டுப் பதங்களிற் கணிதவாய்ப்பாடுகள் தரப்பட்டுள்ளன. எண்கள் பல சொற்களால் புலப்படுத்தப்படும்; பெரிய தொகையைக் குறிக்கும் எண்களும், சமஸ்கிருத யாப்பு விதிகளுக்கேற்றவாறு நுணுக்கமாகப் புலப்படுத்தப்பட்டுள்ளன. இதன் மொழிநடை மிக எளிதிலே உய்த்துணர முடியாதிருந்தாலும், அதிர்ஷ்டவசமாக இதற்குப் பல உரைகள் இருப்பதால், கூறும் பொருளும், கலைச் சொற்களும் நன்கு அறியக் கூடியனவாக உள்ளன. சுருங்கக் கூறின் குரிய சித்தாந்தம் மாணவருக்குரிய வானியல் பாடநூலாகவன்றி, சிறந்த தேர்ச்சியுள்ளவர்களுக்கான கைந்நூலாக அமைந்துள்ளதெனலாம்.
சூரிய சித்தாந்தத்தின்படி உலகம் உருண்டை வடிவானது. அதன் அச்சானியாக உள்ள மேரு மலையைச் சுற்றி நட்சத்திரங்கள் அசைகின்றன. வட கோளார்த்தத்தை ஆட்சி செய்யும் தேவர்களின் இருப்பிடம் இதுவே. இதற்கு நேரே தெற்கேயுள்ள தென்கோளார்த்தத்திலே தேவர்களின் எதிரிகளாக பிரேதர்கள் வசிக்கின்றனர். பூமி ஒரு வட்டமான கோளமாக 4 கண்டங்களாக வகுக்கப்பட்டுள்ளது. அவற்றின் மையங்களாக நடுக்கோட்டினை அடுத்த நான்கு நகரங்கள் உள்ளன. அவை சம இடைவெளியில் அமைந்துள்ளன. லங்கர் - (இன்றைய இலங்கையன்று) என்பதைத் தலைநகராகக் கொண்ட பாரதவர்ஷம் (இந்தியா) எனும் கண்டமுள்ளது. மேற்கே ரோமகவைத் தலைநகராகக் கொண்டு கேதுமலவர்ஷமும், சித்தபுரத்தைத் தலைநகராகக் கொண்டு குருவர்ஷமும், இறுதியாக யமகோடியைத் தலைநகராகக் கொண்டு பத்ரவர்ஷமும் உள்ளன. சூரியன் லங்காவில் உதயமாகி, சித்தபுரத்தில் அஸ்தமிக்கின்றான். நண்பகல் லங்காவிலும், ரோமத்தில் நள்ளிரவிலும் காணப்படுவான். இக்கண்டங்களின் வடக்காக மேருவின் சிகரம் விளங்குகின்றது. அங்கு சூரியன் அஸ்தமிப்பதில்லை; என்றும் தேவர்கள் மீது பிரகாசித்துக் கொண்டிருப்பான். வசந்தகாலத்திலே சூரியன் பூமியின் நடுக்கோட்டைக் கடந்து வடக்கே செல்லும் போது தேவர்கள் மீது நன்கு பிரகாசிப்பான். குளிர்காலத்தில் நடுக் கோட்டிற்குத் தெற்கே செல்லும் போது பிரேதர் மீது நன்கு பிரகாசிப்பான்.
இந்துக் க்களஞ்சியம்

Page 228
கிரகங்களின் அசைவுகள் பற்றி இந்நூல் கூறுவதும் குறிப்பிடற்பாலது. கிரகங்களின் அசைவுகள் உத்வேகமுள்ள காற்றினால் ஒரே விதமாக உந்தப்படுகின்றன.மேலேயுள்ள கண்ணிற் புலப்படாத தெய்வங்கள் இவர்களை இழுத்தோ தள்ளியோ விடுவதால் அவை மாறுபட்டுக் காணப்படுகின்றன.
இந்திய வானியல் சித்தாந்த நூல்களிலே கிருத, திரேத, துவாபர, கலியுகமெனும் நான்கு யுகங்களைக் கொண்ட மஹாயுகம் பற்றிய கருத்தும் மிக முக்கியமாகும். இவை ஒன்றன் பின் ஒன்றாகச் சுழற்சியாக வரும் .
சூரிய சித்தாந்தம் எப்பொழுது யாரால் எழுதப்பட்ட தென்பது தெளிவில்லை. கி.பி 628இல் எழுதப்பட்ட பிரம ஸ்புடசித்தாந்தம் எனும் நூலின் சாயல் இதில் உண்டு. கி.பி 966 இல் வாழ்ந்த பட்டோத்பல என்பவர் இதற்கு ஒர் உரை எழுதியுள்ளார். எனவே இது கி.பி 628க்கும் கி.பி.966 க்குமிடைப்பட்ட காலத்தில் எழுதப்பட்டதெனலாம்.
குரிய சித்தாந்தம் கி.பி.12ஆம் நூற்றாண்டு தொடக்கம் நன்கு பரவலாகப் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. இக்காலப்பகுதியில் எழுதப்பட்ட உரைகளும் இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் உள்ள நூலகங்களிலே கிடைத்துள்ள பல சுவடிகளுமே இதற்குச் சான்றுகளாகும். ஏற்கனவே குறிப்பிட்ட பட்டோத் பலர் (966) சண்டேஸ்வரர். மல்லிகார்ஜுனர் ( கி.பி. 12ம் நூ) பரமேஸ்வரர் (கி.பி. 1432) விஸ்வநாதர் ( கி.பி. 1628) , தாதாபை (கி.பி. 1719), முதலியோரின் உரைகளைக் குறிப்பிடலாம்.
இதனைப் பின்பற்றிச் சூரியனின் ( கி.பி. 1387 - 1447) கணகனந்த தர்மபத்தினியின் கணித தர்சம், சூர்யசித்தாந்த சங்கிரகம் முதலிய நூல்களைக் குறிப்பிடலாம்.
புராதன, மத்திய கால இந்தியாவில் வானியல், சோதிடம் என்பன நன்கு வளர்ந்து வந்தமைக்குத் தக்க ஒரு சான்றாகவும் இது விளங்குகின்றது. (Gosl. GF)
சூரியன்
நீரியன் ஒருவகை நட்சத்திரம் . சூரியனிலிருந்து பிரிந்து வந்த குழம்புப் பொருட்களே குளிர்ந்து ஏனைய கிரகங்களாக மாறின. அக்கோள்கள் சூரியனின் ஈர்ப்பு விசையால் சூரியனைச் சுற்றி வருகின்றன. சூரியனில் சதா அனுப்பிளவு ஏற்பட்டவண்ணம் உள்ளது. சூரியனின் மேற்பரப்பிற் பிரகாசமான ஒளி மண்டலம் உள்ளது. மற்ற கிரகங்கள் இந்த ஒளியைத்தான் பிரதிபலிக்கின்றன. -
சூரியன் பூமியிலிருந்து 15 கோடி கி. மீற்றர் தூரத்தில் உள்ளது. சூரியன் தன்னைத்தானே சுற்றிக் கொள்ள 25 நாட்கள் 9 மணி 7 நிமிடங்கள் ஆகின்றன. சூரியனின் மேற்பரப்பு உஷ்ண
இந்துக்கலைக்களஞ்சியம்
2O2

நிலை 6000 டிகிரி சென்ரிகிரேட் ஆகும். பூமியின்விட்டம் போல 109 மடங்கு பெரியது(13,91,980கி.மீ) சூரியனிலிருந்து வெப்பத்தையும் ஒளியையும் பெற்றே உலகில் உயிரினங்கள் உற்பத்தியாகின்றன. காற்று வீசுவதற்கும் சூரியனே காரணம்; சூரியனின் ஒளி பூமியை அடைய 8% நிமிடங்கள் ஆகின்றன. சூரியனின் எடை பூமியைப் போல 3,30,000 மடங்கு ஆகும். இவை பூமியைப் பற்றிய விஞ்ஞானிகளின் கருத்து, இந்து சமய ரீதியில், சோதிட ரீதியில் நிலவும் கருத்துக்கள் வருமாறு. பூமியின் கடக ரேகைக்கும், மகர ரேகைக்கும் இடையே சூரியன் வடக்கு நோக்கியும், தெற்கு நோக்கியும் சஞ்சாரம் செய்கிறது. வடக்கு நோக்கிச் செல்லும் போது உத்தராயணம் என்றும் தெற்கு நோக்கிச் செல்லும் போது தட்சிணாயணம் என்றும் கூறுவர். சூரியனுக்கு ஆதித்தன், ஸவிதா, சுகன், பூஷா, மகாதேஜஸ், அருக்கன், ஆதித்தன், ஆதவன், பரிதி, இரவி, மார்த்தாண்டன், உதயன், எல்லை, ஏழ்பரியோன், கதிரவன், தினகரன் கனல்கண்டன், சான்றோன், சித்திரபானு, செங்கதிரோன், ஞாயிறு, தானவன், பகலோன், விருச்சிகன் எனப் பல்வேறு
பெயர்கள் கூறப்படுகின்றன.
சூரியனை உலகம் முழுவதிலுமுள்ள மக்கள் மிகத் தொன்மைக் காலத்திலேயே தெய்வமாகக் கருதி வழிபட்டு வந்துள்ளனர். இந்தியர்கள், எகிப்தியர்கள், சுமேரியர்கள், கிரேக்கர்கள், மாயா இந்தியர்கள், இன்கா இந்தியர்கள் போன்றோர்கள் சூரியனைக் கடவுளாகக் கருதி வழிபட்டனர்.
கிரேக்கர்கள் சூரியனை அப்போலோ எனப்பெயரிட்டு வழிபட்டனர்.
சூரியன் தோன்றுவதை வைத்து மிகப்பழங்கால மக்கள் நேரத்தைக் கணிப்பிட்டனர். தமிழர்கள் வாரத்தின் முதல் நாளை ஞாயிறு என்று குறிப்பிடுகின்றனர். சூரிய வழிபாடு பொதுவாக வேளாண்மைத் தொழில் செய்யும் மக்களிடம் இன்றளவும் உள்ளது. பண்டைய அரசர்கள் தங்களது குலம் சூரியகுலம் என்றும் தாம் சூரியனின் வாரிசுகள் என்றும் கருதினர். ஜப்பானியர்கள் தம் அரசிர்கள் சூரியனின் வழி வந்தவர்கள் எனக் கூறினர்.
இந்து சமயத்தில் அறுவகை வழிபாட்டு முறைகளில் சூரிய வழிபாடும் ஒன்று. இதனைச் செளரம் என்று குறிப்பிடுவர். சூரிய வழிபாட்டு மரபில் சூரியன் பரம் பொருளாக முழுமுதற் பொருளாக வழிபடப் படுகின்றார். சூரியனை முழுமுதற் கடவுளாக வழிபடுவோர் செளரர் எனப்படுவர். ஆனந்தகிரி என்பவர் அறுவகைச் சூரிய வழிபாட்டினைக் குறிப்பிடுகின்றார். உதிக்கும் சூரியனை வழிபடுவோர், நண்பகலிற் சூரியனை வழிபடுவோர், மறையும் சூரியனை வழிபடுவோர், இம்மூன்று நிலையிலும் வழிபடுவோர் உயிருள்ள நிலையில் வழிபடுவோர், சூரியனின் கோளவிட்டத்தைச் சமயசின்னமாக வழிபடுவோர் ஆகியோர்
அறுவகைச் சமய வழிபாட்டினர் எனக் கூறுகின்றார். இச்சூரிய

Page 229
வழிபாட்டு முறைமை கி.பி12ஆம் நூற்றாண்டுடன் மங்கி நவக்கிரக வழிபாட்டில் ஒன்றாக அமைந்துவிட்டது.
அஷ்டதிக்கு பாலகர்களில் சூரியனும் ஒருவன். சூரியன் மும்மூர்த்திகளின் அம்சம் என்கின்றனர். பிருகு முனிவர், வால்மீகி, அகஸ்தியர், வசிட்டர் ஆகியோர் சூரிய தேவனின் அருளிற் பிறந்தவர்கள் என்று இராமாயணம், மகாபாரதம் கூறுகின்றன. வேதத்திற்குச் சூரியனே முதல்வன் என்பர். வேதகாலத்திற் சூரியன் எல்லையற்றதைக் குறிக்கும் ஆதித்தர்களுள் ஒருவராக ஆதித்தியாவின் மக்களுள் ஒருவராக குறிக்கப்பட்டுள்ளார். சூரியன், மித்திரன், ஆரியமான், பகன், வருணன், தக்கன் (அறிவு), கம்சன் (பகுதி) போன்றவர்கள் ஆதித்தர்கள் ஆவர். வேதங்கள் சூரியனைச் சாவித்துரு (அனைத்தையும் தூண்டுபவன்) பூசன் (நலன் பயக்கும் ஆற்றல்) பகனன் (செல்வத்தை அளிப்பவர்), விலகரன் (வேள்விகளை முதலிற் செய்தவன்) மித்திரன், ஆரியமான், விஷ்ணு என்று பல வகைகளிற் குறிப்பிடுகின்றன. இருக்கு வேதம் அழகிய இறகுகளைக் கொண்ட பறவை என்று சூரியனைக் குறிப்பிடுகின்றது. மேலும் கடவுளின் கண் எனவும், அனைத்தையும் பார்ப்பதால் முழு உலகின் ஒற்றர் எனவும் அனைத்து இருப்புக்களையும், மனிதர்களின் நல்வினை, தீவினைகளுக்கு சாட்சியாக விளங்குபவர் எனவும் அவர்களை உறக்கத்திலிருந்து எழுப்பிச் செயலில் ஈடுபடச் செய்பவர் எனவும் இயங்குகின்ற, இயக்கமற்ற அனைத்திற்கும் உயிர் எனவும் சூரியன் வேதங்களில் விபரிக்கப்படுகின்றான்.
திருமுருகாற்றுப்படையில் நக்கீரர் “உலகம் உவப்ப வலனேர்பு திரிதரு, பலர் புகழ் ஞாயிறு கடற்கண்பாங்கு” எனக் கூறுகிறார். “ஞாயிறு போற்றுதும், ஞாயிறு போற்றுதும்” என சிலம்பு சூரியனைப் போற்றுகிறது. மணிமேகலை, புத்தர்பிரானை புத்த ஞாயிறு எனப்புகழ்கிறது. சங்க இலக்கியங்களிற் புலவர்கள் சூரியனைப் பற்றிப் பேசுகின்றனர். மகாபாரதத்திற் குந்தி முன்பு தோன்றிய சூரிய தேவனின் தோற்றத்தை அழகாக வர்ணித்துள்ளனர். சூரிய வழிபாட்டினை பவிஷ்ய புராணம், பிரம்ம புராணம், வராக புராணம், அக்கினி புராணம் போன்றவை குறிப்பிடுகின்றன.
சூரிய தேவனைப் பற்றி புராணங்கள் மேல்வருமாறு கூறுகின்றன. மகாவிஷ்ணு உந்திக் கமலத்திலிருந்து பிரம்மாவைப் படைத்தார். திருமாலின் எண்ணப்படி நான்முகன் அண்டத்தைத் தோற்றுவித்தார். அந்த அண்டம் ஒரே இருட்டாக இருந்தது. அந்த இருளைப் போக்க வெளிச்சம் உண்டாக்க எண்ணினார். ஓம் என்ற ஒளி பிறந்தது. அதிலிருந்து சூரியன் தோன்றினார் என்று ஒரு புராணம் கூறுகிறது. நான்முகன் தன் படைப்புத் தொழிலுக்குத் துணை செய்ய சப்தரிஷிகளை உண்டாக்கினார். அவர்களுள் ஒருவர் மிரிசி என்ற முனிவர். அவர்மகன் காசியபர் என்னும் முனிவர். காசியபரின் மூத்த மனைவி பெயர் அதிதி என்பது. அவ் அதிதியின் மகனே சூரியதேவன். உலகை ரட்சிக்கும் பொருட்டு

நவக்கிரக குழு அமைக்கப்பட்டு சூரியனுக்கு தலைமைப்பதவி கொடுக்கப்பட்டது. ஏழுகுதிரைகள் பூட்டப்பட்ட, ஒரு சக்கரமுள்ள ரதத்திற் சூரியன் மேரு மலையை வலம் வருகிறார். அவரது சாரதி அருணன், சூரியனுக்கு சமுக்ஞை பிரபை, ரைவதஇளவரசி, சாயாதேவி என்ற நான்கு மனைவிகள். வைவஸ்த மனு, யமன், பிரதவன், அசுவினுத்தேவர்கள், ரைவஸ்தன் என்ற மகன்களும், யமுனை என்ற மகளும் சூரியனுக்கு உண்டு. சமுக்ஞை என்ற உஷாதேவி சூரியனின் வெப்பம் தாங்காது தன்நிழலையே ஒரு பெண்ணாகப் படைத்து சாயாதேவி எனப் பெயரிட்டுத் தமக்கு பதிலாக தன் இடத்தில் சூரியனுடன் வாழும்படி பணித்துவிட்டு அவள் வட துருவத்தில் தவம் செய்யச் சென்றுவிட்டாள். சாயாதேவிக்குச் சூரியன் மூலம் சாவர்ணிமனு, சனி, பத்திரை என மூவர் பிறந்தனர். இவர்கள் பிறந்த பிறகு தமது மாற்றாந்தாய் மீது சந்தேகப்பட்டு யமன் சாயாதேவியின் உண்மையை எப்படியோ கண்டுபிடித்துச் சூரியனிடம் கூறினான். சூரியன் உஷாதேவியை கூட்டி வந்து அவளுடன் வாழ்ந்து வந்தான். இப்படி ஒரு புராணம் கூறுகிறது.
சோதிடவியலின் பிரகாரம் சூரியன் சுப கிரகமாகவும் சாத்வீக குணமுடையவராகவும் கூறப்படுகின்றார். ஒருவரது ஜாதகத்திற் சூரியன் அவரது ஆத்மா, தந்தை, தலை, சரீரம், உத்தியோகம், வலதுகண், பித்தம், வைத்தியம், சுரம், யாத்திரை, தைரியம், புகழ், உடல்நலம், ஆட்சித்திறம் ஆகியவைகளுக்குக் காரணமானவர் எனச் சோதிடம் கூறுகின்றது. சூரியன் சிம்மராசிக்கு அதிபதி. சூரிய பகவானுக்கு சந்திரன், செவ்வாய், குரு, நட்புக்கிரகங்கள்; சுக்கிரன், சனி பகைக் கிரகங்கள்; புதன், செவ்வாய் சம கிரகங்கள் ஆகும். மாதம் ஒரு ராசிவிதம் பன்னிரண்டு ராசிகளில் 12 மாதங்கள் சஞ்சாரம் செய்கிறார். ஒவ்வொரு தமிழ் மாத முதல்திகதியும் அடுத்த ராசிக்கு செல்கிறார். இதுவே சூரியனின் கோட்காரம் எனப்படும். சூரியன் ஒவ்வொரு ராசியிலும் இருக்கும்போது பல்வேறு விதமாக அழைக்கப்படுகின்றார்.
மேடம் - அம்சுமான் ரிஷபம் - தாதா. மிதுனம் - சவீதா கடகம் - ஆரியமான் சிம்மம் - விலஸ்வன் கன்னி - பகன் துலாம் - பர்ஜன்ய விருட்சிகம் - துலஸ்பி தனுசு - மிதரம் மகரம் - விஷ்ணு கும்பம் - வருணன் மீனம் 1,63. T
சித்திரை மாதம் மேட ராசியில் இருக்கும் போது மனிதர்களுக்கு சம்பாத்தியம் குறையும் எனவும் ஆடியில் கடகராசியில் சஞ்சரிக்கும் போது சோம்பல், அவிவேகம் ஏற்படும் ஆவணியில் சிம்மராசியில் சஞ்சரிக்கையில் சாமர்த்தியம், நட்பினால் சுகம் முதலான உண்டாகும்; புரட்டாசி கன்னி இராசியில் இருக்கும் போது செல்வம், தெய்வ பக்தி உண்டாகும்; ஐப்பசி துலாராசியில் இருக்கையில் புத்திக்கூர்மை, தெய்வ ஆராய்ச்சியில் ஈடுபாடு, சாதுவாக இருக்கும் சுபாவம் முதலியன
இந்துக் க்களஞ்சியம்

Page 230
உண்டாகும்; கார்த்திகை விருச்சிக ராசியில் இருக்கும் போது வித்தை, அபிவிருத்தி, சாந்தமான சுபாவம், பிறரால் கெளரவிக்கப்படும் தன்மை முதலியன ஏற்படும்; மார்கழி தனுராசியில் இருக்கையில் வியாபாரத்தில் வருமானம் ஏற்படும்; தைமகர ராசியில் இருக்கையில் பொருள் சம்பாதித்தல், சாமர்த்தியம் உண்டாகும்; மாசி கும்பராசியில் இருக்கும் போது புத்திரபாக்கியமின்மை, பெற்றோரிடம் துவேசம், ஆசாரக்குறைவு முதலிய ஏற்படும்; பங்குனி மாதத்தில் மீனராசியில் இருந்தால் புகழ், தன அபிவிருத்தி முதலியன கிட்டும் எனக் கூறப்படுகிறது.
ஒருவரது ஜாதகப்படி சூரியன் இருக்கும் ராசியை வைத்துப் பலன்கள் கூறுகிறார்கள். சூரியன் கோட்சாரத்தில் சுற்றி வரும் போது ராசிக்கு ஏற்ப பலன் நமக்கு நடைபெறும். சூரியன் இருக்கும் ராசியிலிருந்து அவர் பார்வையையும் அவர் பெறும் மற்றக் கிரகங்களின் பார்வையையும் வைத்து நல்ல பலன், தீய பலன் நடக்கும் எனச் சோதிடர் கூறுவர். ஜாதகத்தில் 3,6,10,11 ஆகியவற்றில் அமையப் பெற்றால் நல்ல பலன்கள் நடைபெறும் . நீசம் பெற்று 3,6,8,12 இல் மறைவு பெற்று சூரிய திசை நடந்தால் தீய பலன்கள் உண்டாகும். சூரிய தசை 6 வருடங்கள் நடைபெறலாம். சூரியனுடன் ராகு சேர்ந்து காணப்பட்டால் சாதகர் பட்டப்படிப்பும், சூரியனுக்கு இரண்டாம் வீட்டிற் சந்திரன் அல்லாமல் மற்றக்கிரகங்கள் இருந்தால் வாழ்வில் புகழ், பெருமை, அதிஷ்டம், சாதனை புரியும் திறம் போன்ற ஏற்றமான பலன்களும் உண்டாகும். சூரியனுக்கு முன் வீட்டிலும் பின் வீட்டிலும் சுபர்கள் இருந்தால் நற்பலனும் அபக்கிரகங்கள் இருந்தால் கெடுபலன்களும் ஏற்படும், எனக் கூறப்படுகின்றது.
ஒருவரது ஜாதகத்தில் சூரிய தோஷம் ஏற்பட்டிருந்தால் வாழ்வில் தாழ்வும் துன்பங்களும் நோய்களும் ஏற்படும். அவற்றைப் போக்க சூரியதியானம், சூரியகாயத்ரிமந்திரம், சூரியகவசம், சூரிய அஷ்டோத்திரம் போன்றவை பாராயணம் செய்யலாம். சூரிய விக்கிரகத்திற்கு சிவப்பு ஆடை, சிவப்பு மலர்களால் அலங்கரித்து, கோதுமை, சர்க்கரை கலந்து பொங்கல் செய்து வழிபாடு செய்யலாம். சூரிய தேவனின் அதிதேவதைகளான சிவபெருமான், ருத்ரன், அக்னி ஆகிய தேவதைகளை வழிபடுதலும் நன்று என சோதிடவியல் நூல்கள் சூரிய தோஷத்திற்கு பரிகாரங்களை இயம்புகின்றன.
தமிழகத்தில் தைத்திங்கள் சூரியனின் இருப்பிடம் மாறும் அந்நாளிலே தமிழர்கள் உழவுத் தொழிலுக்கு உதவிபுரிந்தமைக்கு நன்றி கூறும் வகையில் தைப்பொங்கல், மகாசங்கராந்தி என விமரிசையாகக் கொண்டாடுகின்றனர். வேதகாலம் தொட்டு சூரிய வழிபாடு இருந்தபொழுதும் ஆறாம் நூற்றாண்டு முதல் தான் வட இந்தியாவிற் சூரியனுக்கு கோயில்கள் அமைக்கப்பட்டன.
கோனாரக் என்னும் இடத்திற் சூரியனுக்கு ஆலயம் அமைக்கப்பட்டிருந்தது. இன்று இவ்வாலயம் சிதைவடைந்
துள்ளது. இவ்வாலயம் 11ஆம் நூற்றாண்டில் குஜராத்தை ஆண்ட
இந்துக்கலைக்களஞ்சியம்
20.

ஸோலங்கி வம்சத்தினராற் கட்டப்பட்டதாகும். இங்கு சிறந்த சிற்பங்கள் காணப்பட்டன. தமிழ் நாட்டிற் சூரியனுக்குத் தனி ஆலயமாக நிர்மாணிக்கப்பட்டது சூரியனார் கோயில். இவ்வாலயம் கி.பி 1010-120 இடைப்பட்டது. 1ஆம் குலோத்துங்கனாற் கட்டப்பட்டது. முதல் குலோத்துங்க சோழன் கல்வெட்டுக்கள் இரண்டு கோயிலிலே காணப்படுகின்றன. சூரியபகவான் அரசன் பெயராலே அழைக்கப்படுகின்றார்.
பொதுவாக சூரியனின் சிலைகள் தாமரைமலரில் நின்ற நிலையில் வடிவமைக்கப்படும். வட இந்திய சிற்பங்களில் உடல் முழுவதும் உடையணிந்து காணப்படும். தென்னிந்திய சிற்பங்கள் இடுப்பில் மட்டுமே ஆடை காணப்படும். சூரியனின் சிலைக்கு முன்புறம் சிறு பெண்ணின் வடிவமும் பின்புறம் அருணனின் வடிவமும் காணப்படும். அருணன் வடிவம் வலக்கையில் சவுக்குடனும் இடக்கையில் குதிரைக் கடிவாளத்துடனும் காணப்படும். சூரியனின் தேர் ஏழுகுதிரைகள் பூட்டியதாகக் காணப்படும். சூரியனின் வலப்புறம் தாமரை அல்லது சாமரம் ஏந்திய பணிப்பெண்ணும் அதன் வலப்புறத்திற் புடைத்த வயிறு, தாடி, எழுது கோல் , எழுதுமைப்புட்டி கொண்ட வடிவமும் அமைக்கப்பட்டிருக்கும். இடப்புறம் இவ் வடிவம் காணப்படின் ஆணின் வடிவம் தாடியற்றும் வாள் ஏந்தியும் காணப்படும். சில சமயங்களில் எழுது கோலுடன் பிரமனின் வடிவமும் சூரியனுக்கு அருகில் அமைக்கப்படும். சூரியன் பல தலங்களில் இறைவனைப் பூஜித்து அவர் அருள் பெற்றிருக்கின்றான் எனக் கூறப் படுகின்றது. சில தலங்களிலே தன்பெயரால் தீர்த்தம் ஏற்படுத்தி வழிபட்டதாக சொல்லப்படுகிறது. அத்தகைய தலங்கள் திரு நாகேஸ்வரம், பனங்காட்டூர், கடலையாற்றுார், கருப்பரியலூர், ஆடுதுறை, திருக்கலயநல்லூர், பூரீவைகுண்டம் ஆகியன ஆகும். சூரியனுடைய கிரகணங்களுக்கு சில நோய்களை போக்கும் சக்தி இருப்பதாக விஞ்ஞானிகள் ஆராய்ந்துள்ளனர். சூரியனை ஆராதிப்பதால் குஷ்டம் எனப்படும் வியாதியிலிருந்து விடுபடலாம் எனக் கூறப்படுகின்றது. (தேஹ)
சூரியனார் கோயில்
தமிழ் நாட்டில் சூரிய வழிபாடும், சூரியனுக்குரிய கோயிலும் தொன்று தொட்டு இருந்ததை, “ஞாயிறு போற்றுதும், ஞாயிறு போற்றுதும்” என்றும் “உச்சிக்கிழான் கோட்டம்” என்றும்
வருகின்ற சிலப்பதிகாரக் குறிப்புகள் நன்கு உறுதிப்படுத்துன்றன.
தமிழ் நாட்டில் நவக்கிரகங்களுக்கு எனத் தனிக்கோயிலாக விளங்குவது, சூரியனார் கோயில் என்னும் ஊரில் அமைந்துள்ள அருள்மிகு சிவசூரியப்பெருமான் திருக்கோயிலாகும். இக் கோயிலைச் சூரியனார் கோயில் என்றே வழங்குகின்றனர். ஊர்ப்பெயரும், கோயிற்பெயரும் ஒன்றாக இருப்பது தமிழர் பண்பாட்டின் தனிச் சிறப்பாகும்.

Page 231
அமைவிடம்
சூரியனார் கோயில் தஞ்சை மாவட்டத்தில் திருவிடைமருதூர் வட்டத்தில், காவிரியின் வடகரையில் திருமங்கலக்குடிக்கு வடகிழக்கே அரைக் கிலோமீட்டர் தொலைவில், பூரீ சிவாக்கிரகயோகிகளின் ஆதீனத்திற்கு அருகாமையில் அமைந்துள்ளது.
கோயிலின் தொன்மை
சூரியனுக்குரிய இக்கோயிலை முதலாவது குலோத்துங்க சோழமன்னன் (1079-120) கட்டுவித்து, வழிபாட்டிற்கு வேண்டிய நிவந்தங்கள் அளித்ததற்கான சான்றாதாரங்கள் கிடைக்கின்றன. இம்மன்னனே இந்த ஆலயத்தைக் கற்றளியாக மாற்றி அமைத்து, அதற்குக் குலோத்துங்க சோழ மார்த்தாண்டாலயம் என்று பெயர் சூட்டினான் என்று அறிஞர் குறிப்பிடுகின்றனர்.
மூலமூர்த்தியும் கோயில் அமைப்பும்
இவ்வாலய மூலமூர்த்தியான அருள்மிகு சிவசூரியப் பெருமான் மேற்கு நோக்கி, நின்ற திருக்கோலத்தில் காட்சி தருகின்றார். அவருக்கு இடது புறத்தில் உஷாதேவியும், வலது புறத்தில் பிரத்யுஷாதேவி என்னும் சாயாதேவியும் நின்ற கோலத்தில் காட்சி தருகின்றனர். சூரியபகவான் தமது முன் இரு கரங்களிலும் செந்தாமரை மலர்களை ஏந்தியவராகக் காட்சி
தருகின்றார்.
கருவறைக்கு முன்னே அர்த்தமண்டபமும், மகாமண்டபமும் உள்ளன. மகாமண்டபத்திலிருந்து அர்த்தமண்டபத்திற்குள் நுழையும் வாயிலின் தென்புறத்தில் தண்டியும், வடக்குப் புறத்தில் பிங்கலனும் துவாரபாலகர்களாக இருக்கின்றனர். இவர்களுக்கு முன்னே சூரியனை நோக்கியபடி சூரியனின் வாகனமாகிய குதிரை காணப்படுகின்றது. சிவாலங்களில் சிவலிங்கத்திற்கு முன்னே நந்தி இருப்பது போல, இக் கோயிலில் குதிரை இருக்கின்றது.
இக்கோயில் மகாமண்டபத்தில் நின்ற கோலத்தில் சூரியனை நோக்கியபடி கிழக்கு முகமாகக் குருபகவான் (வியாழபகவான்) காட்சி தருகின்றார். இத்தகைய காட்சியை வேறு எங்கும் காணமுடியாது. கருவறைக்கு வெளியே தென்மேற்கில் சனீஸ்வரனும், தெற்கில் புதனும், தென்கிழக்கில் அங்காரகனும், கிழக்கில் சந்திரனும், வடகிழக்கில் கேதுவும், வடக்கில் சுக்கிரனும், வடமேற்கில் ராகுவும் தனித்தனி கோயில்களில் ஒரே வளாகத்தில் எழுந்தருளியுள்ளனர். அதாவது சூரியனைச் சுற்றி எட்டுத் திசைகளிலும் எட்டுக் கிரகநாயகர்கள் எழுந்தருளியிருப்பது தமிழகத்தில் இக்கோயிலில் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.
சூரியபகவான் எழுந்தருளியிருக்கும் ஏகதள விமானத்தின் நான்கு மூலைகளிலும் குதிரையின் சுதைச்சிற்பங்கள் காணப்படுகின்றன. குருபகவான் எழுந்தருளியிருக்கும்

மண்டபத்தின் மேலுள்ள விமானத்தின் நான்கு மூலைகளிலும் மீன்களின் சுதைச்சிற்பங்கள் உள்ளன.
இக்கோயிலின் இராஜகோபுரம், மேற்கு நோக்கி சுமார் ஐம்பது அடி உயரமுடையதாக விளங்குகின்றது. இக்கோபுரம் மூன்று நிலைகளை உடையது. ஐந்து கலசங்களைக் கொண்டுள்ளது.
இக்கோயிலின் தீர்த்தத்தின் பெயர் சூரிய புஷ்கரணி என்பதாகும். தலவிருட்சம் எருக்கஞ்செடியாகும்.
கோயில் வழிபாட்டு முறை
இந்தக் கோயிலை வழிபடும்முறை தனிச் சிறப்புடடையது. இதனால் இது பற்றி இங்கு குறிப்பிடுவது அவசியமாகின்றது.
சூரியனார் கோயிலை வழிபட வருகின்றவர்கள் ஆலயத்தையடைந்தவுடன் இராஜகோபுரத்திற்கு வெளியே வடக்குப் புறத்தில் அமைந்துள்ள சூரிய புஷ்கரணியில் முதலில் நீராடவேண்டும். பின்பு தரிசனம் செய்துவிட்டு, தெற்குப் பிரகாரத்தில், தென்மேற்கு மூலையில் உள்ள கோள்தீர்த்த விநாயகர் சந்நிதியை அடைந்து சங்கல்பம் செய்து தரிசனம் செய்யவேண்டும். பின்பு கோள்தீர்த்த விநாயகர் சந்நிதிக்கு வடகிழக்குத் திசையில் உள்ள நர்த்தன மண்டபத்தின் படிக்கட்டுகளில் ஏறி அம்மண்டபத்தைத் தாண்டிச் சபாநாயகர் மண்டபத்தை அடைந்து அங்கே நவக்கிரக உற்சவ மூர்த்திகளைத் தரிசனம் செய்ய வேண்டும்.
பின்பு அந்த மண்டபத்தைக் கடந்து உள்ளே சென்று ஸ்தாபன மண்டபத்தை அடைந்து பூரீகாசி விசுவநாதரையும், பூரீவிசாலாட்சி அம்மையையும் வழிபட வேண்டும். பின்பு ஸ்தாபன மண்டபத்தைத் தாண்டி மகாமண்டபமான குரு மண்டபத்தை அடைந்து அர்த்த மண்டப நுழைவாயிலுக்கு வெளியே பூரீ சூரிய பகவான் சந்நிதியில் நின்று பூரீ சூரியபகவானைத் தரிசிக்க வேண்டும். பின்பு திரும்பி நின்று குருபகவானை வழிபட வேண்டும். பின்பு தென்புறத்தே உள்ள கர்ண துவார வாயில் வழியாகக் கீழே இறங்கித் தெற்குப் பிரகாரத்தை அடைந்து சூரியபகவானின் கருவறைக்கு அருகில் செல்லும் வழியில் கிழக்கே சென்று சனிபகவானையும், புதனையும், அங்காரகனையும் தரிசித்துக் கொள்ள வேண்டும். பின்பு வடக்கு முகமாகத் திரும்பிச் சென்று சந்திரனையும், கேதுவையும் தரிசிக்க வேண்டும். பின்பு மேற்கு முகமாகத் திரும்பிச் சென்று சுக்கிரனையும், ராகுவையும் தரிசிக்க வேண்டும். இறுதியாகத் தேஜஸ்சண்டேசுரரையும் வழிபட வேண்டும். அதன் பின்னர் தெற்குப் பிரகாரத்தின் ஊடாக மேற்கு நோக்கிச் சென்று கோள் தீர்த்த விநாயகரைத் தரிசிக்க வேண்டும்.
அதன் பிறகு கொடிமரத்தடியை அடைந்து வீழ்ந்து வணங்கிவிட்டு, அங்கிருந்து வடகிழக்குத் தெற்குப் பிரகார வழியாகக் கோயிலை ஒன்பது முறை வலம் வந்துமுடிந்த பின்பு, மீண்டும் கொடிமரத்தடியில் வீழ்ந்து வணங்கிவிட்டு, உட்கார்ந்து
இந்துக் க்களஞ்சியம்

Page 232
சூரியபகவானைத் தியானிக்க வேண்டும். இந்த ஒழுங்கு முறையிலேயே இன்றும் மக்கள் சூரியனார் கோயிலை வழிபட்டு வருகின்றனர்.
இக் கோயிலில் ஞாயிற்றுக்கிழமைகளில் சிறப்பான வழிபாடு நிகழ்த்தப்படுகின்றது. ஏழரை ஆண்டுச் சனி, அட்டமத்துச்சனி, ஜென்மத்துச்சனி என்பவற்றால் தொடரப்பட்டவர்களும், வேறு பிற நவக்கிரக தோஷமுள்ளவர்களும் சூரியனார் கோயிலுக்கு வந்து பன்னிரெண்டு ஞாயிற்றுக்கிழமை காலம் வரை தலவாசம்' செய்து வழிபடுவர். அதாவது குறிப்பிட்ட ஞாயிற்றுக்கிழமை அதிகாலையிலிருந்து தொடர்ந்து பன்னிரெண்டாவது ஞாயிற்றுக்கிழமை முடியும் வரை சுமார் இரண்டரை மாதகாலம் (78 நாட்கள்) இத்தலத்திலேயே தங்கியிருந்து நாடோறும் இங்குள்ள சூரியபகவானையும், மற்றும் நவக்கிரக
နွှဲန္နီ@ ငွှဲ့3
డ ఎశీ4 Na /èYN
කේම 2
செங்கோட்டு யாழ்
கோடு, கோட்டி என்பன கோலின் அடிப்படைப் பொருள். கொம்பு உவமையணியாக அது கோடு. கோட்டு தன்மையை அடக்கி வைத்திருத்தல் பொருட்டு கோட்டி, தன்மையை விரித்தற் பொருட்டு கோட்டியாழ். பண் திறத்தை உள்ளடக்கியதாக செந்திறம். இதனையே சிலப்பதிகாரப் புறஞ்சேரி இறுத்த காதையில் “செந்திறம்புரிந்த செங்கோட்டியாழ்” என்றார். இளங்கோவடிகள்.
செந்திறம் புரிந்த செங்கோட்டியாழில் தந்திரிகரத்தொடு திவவுறுத்தியாஅத்து (106,107) குறிஞ்சி யாழ், முல்லை யாழ், மருதயாழ், பாலை யாழ் என நான்கு வகை யாழிற்கும் நான்கு வகைப் பண்ணிற்கும் உள்ளிட்ட யாழே செங்கோட்டியாழ்.
செங்கோட்டியாழே செவ்விதிற்கிளப்பின் அறுவகையுறுப்பிற்றாகுமென்ப அவைதாம் கோடேதிவவே ஆணிப்பத்தல் தந்திரிகரமே நரம் போடாறே
யாழ்க் கருவியில் மிகவும் வளைவாக செய்யப்பட்டிருந்த கோடு என்னும் உறுப்பானது நிமிர்ந்து நேராக, செம்மையாக விளங்கும்படி அமைக்கப்பட்ட யாழ் கருவி செங்கோட்டி யாழ் என அழைக்கப்பட்டதெனப் பேராசிரியர் வெள்ளை வாரணர் கூறியிருக்கிறார். செங்கோட்டி யாழில் ஏழிசை ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு நரம்பாக ஏழு நரம்புகள் கட்டப்பெற்றிருந்தன.
இந்துக்கலைக்களஞ்சியம்
ெ
206

மூர்த்திகளையும் வழிபட்டுத் தோஷ நிவர்த்தி பெறுகின்றனர். இவ்வாறு கிரகதோஷமுடையவர்கள் வந்து வழிபட்டுப் பயன்பெறுகின்ற திருத்தலமாகச் சூரியனார் கோயில் விளங்குகின்றது.
இக் கோயிலின் ஆடிக் கடைசிச் செவ்வாய், ஆவணி முதல் ஞாயிறு, கார்த்திகை ஞாயிறு, தை மாத அட்டமி, தீர்த்தவாரி, குருப்பெயர்ச்சி தினம், சனிப்பெயர்ச்சி தினம் ஆகியவற்றில், திருவிழாப் போன்று சிறப்பான வழிபாடுகள் நடைபெறுகின்றன.
இக் கோயில் திருவாவடுதுறை ஆதீனத்திற்குச் சொந்தமானதாய், அவ்வாதீனத்தின் பரிபாலனத்தின் கீழ் சிறப்பாக இயங்கி வருகின்றது. (மா. வே.)
ޏަ*& ޏަ;< , ZᎾᏚ ZéN
செங்கோட்டு யாழ் சிலப்பதிகார அரும்பதை உரையாசிரியர் கூற்றுப்படி அம்பனவர்யாழ் என்று கூறப்படும். திருஞானசம்பந்தர் தேவாரத்தில் காணப்படும் ஏழிசை யாழ் என்னும் குறிப்பு நோக்கற்பாலது. இக்குறிப்பு பொதுவாக யாழை உணர்த்தினாலும் குரல், துத்தம், கைக்கிளை, உழை, இளி, விளரி, தாரம் என்ற ஏழிசைகளை எழுப்பும் ஏழு நரம்புகளைக் கொண்ட செங்கோட்டு யாழைக்குறிப்பதாகக் கொள்ளலாம்.
பஞ்ச மரபில் குறிக்கப்பட்டுள்ள நால்வகை யாழுக்குமுரிய
நரம்புகளாக பேரியாழ்21மகரயாழ் 19 சகோடயாழ் 14 செங்கோட்டு
யாழ் 7 எனக் கொள்ளப்பட்டுள்ளன என்று யாழ்மரபின் பின்வரும்
வெண்பாவிலிருந்து தெரியவருகிறது.
ஒன்று மிருபதும் ஒன்பதும் பத்துடனே நின்று பதினான்கும் பின்னேழுங் - குன்றாத நால்வகை யாழிற்கு நன்னரம்பு கொள்முறையே மேல் வகை நூலோதும் விதி
பஞ்ச மரபில் கூறப்பட்டுள்ள செங்கோட்டி யாழ் ஏழு நரம்புகளைக் கொண்டு அமைப்பில் சிறியதாக திகழ்வதால் இது சீறி யாழாக இருக்கலாம் என்பது சிலரது கருத்து = சீறி யாழின் வளைவான கோட்டுறுப்புப் பகுதி நிமிர்ந்து நேராக்கப்பட்ட நிலையில் அமைக்கப்பட்டதே செங்கோட்டியாழ். யாழ் நரம்புகளின் அடிப்படையில் பார்க்கும் பொழுது இரண்டும் ஒரே நிலைப்பாட்டில் அமைவதால் சீறியாழின் திருத்திய வடிவமே செங்கோட்டு யாழ் எனத் துணியலாம்.

Page 233
தஞ்சை டாக்டர் வரகுண பாண்டியன் பாணர் கைவழி என்னும் நூலில் பழங்காலத்தில் தமிழ் மக்களிடையே வழக்கில் இருந்த செங்கோட்டுயாழே தற்காலத்தில் நம் வழக்கில் இருக்கும் வீணையாகும் என விளக்கியுள்ளனர். சங்க இலக்கியங்களில் கூறப்பட்ட யாழின் உறுப்புக்கள் பதினெட்டும் தற்கால வழக்கில் உள்ள வீணையில் உள்ளன என்றும் செங்கோட்டு யாழே தற்காலத்தில் வீணை என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். (தே. ஹ.)
செந்திநாதையர், காசிவாசி
Iழ்ப்பாணத்துக் குப்பிளான் கிராமத்தில் 1848இல் பிறந்த செந்திநாதையர் சிலகாலம் காசியில் வாசம் செய்தமை குறித்து காசிவாசி செந்திநாதையர் எனப்பட்டார். இவர் வேதம், உபநிடதம், இதிகாசம், புராணம், பிரமசூத்திரம் முதலிய அனைத்துத் திரநூல்களும் சிவபரத்துவமே பேசி நிற்பன என்றும் அவற்றின் அடிப்படை சைவ சித்தாந்தமே என்றும் சாஸ்திர பூர்வமாக நிறுவமுயன்றவர் ஆவர்.
செந்திநாதையர் நாற்பத்தைந்துக்கும் மேற்பட்ட வெளியீடுகளை, நூல்கள், கட்டுரைகள், கண்டனங்கள் என்கிற வகைகளில் வெளியிட்டிருந்தாரெனினும், இன்று கிடைக்கப்பெறும் நூல்கள் இருபத்தொன்று மட்டுமேயாகும். நூல்கள், சைவ சித்தாந்தக் கருத்துக்களை வேத உபநிடத பிரம்ம சூத்திர, இதிகாச புராணங்களிலிருந்து ஈர்த்து வெளிப்படுத்துதலையும், சைவசித்தாந்த கருத்தாக்கங்களுக்கு அணி சேர்ப்பதையும் குறியாய்க் கொண்டவை. கட்டுரைகள், கண்டனங்கள், அவர் வாழ்ந்த காலச் சூழலில், சைவ சித்தாந்தக் கருத்தாக்கங் களுக்கும் அனுட்டான முறைமைகளுக்கும் எதிராய்த் தெரிவிக்கப்பட்ட கருத்துக்களைக் கண்டிப்பனவாகவும் அமைந்து காணப்பட்டன. அய்யரவர்களது பணிகள் பங்களிப்புக்கள் காலச் சூழலைக் கருத்திலெடுத்து இடம் பெற்றவை எனலாம்.
செந்திநாதையரின் சித்தாந்த, சமயப் பங்களிப்புக்களை மூவகைப்பட்டனவெனக் கண்டு கொள்ளலாம்.
அ. இந்திய தத்துவத்தின் மூலநூல்களான, வேதம், உபநிடதம், பிரம்ம சூத்திரம், புராணம், இதிகாசம் போன்ற யாவும் வேதத்தின் முடிந்த முடிவான சைவ சித்தாந்த அடிப்படை உண்மைகளைக் கூறி நிற்பவை என எடுத்துக் காட்டியமை.
ஆ. பிரம்ம சூத்திரத்திற்கான முதற்பாடியம் நீலகண்டரினதென்றும், இதனைக் கற்றறிந்த பின்பே, மாற்றங்களையும் இடைச் செருகல்களையும் உட்புகுத்தி மாயாவாதிகளும் பாஞ்சராத்திரர்களும் தத்தம் சமயக் கருத்துக்களுக்கு ஏற்புடையவாறாக திரித்தாக்கிக் கொண்டனர் என்றும் எடுத்துக் காட்டியமை,
2

07
இ. ஈழத்திலும், தமிழ் நாட்டிலும் சித்தாந்த சைவத்திற்கும் அதன் நடைமுறைகளுக்கும் எதிராக கிறிஸ்தவர்கள் மேற்கொண்ட பிரசார நடவடிக்கைகளையும் மதமாற்ற நடவடிக்கைகளையும், சிவ நிந்தனைகளையும் அறிவுசார் வழிகளில் வலுவுடன் எதிர்த்தமை, வலிகுன்றச் செய்தமை. சித்தாந்த சைவத்தின் உண்மைகளைச் சாதித்தமை, ஸ்தாபித்தமை.
மும்மொழிப்புலமையைப் (தமிழ், வடமொழி, ஆங்கிலம்) பெற்றிருந்த செந்தி நாதையர், மூல நூல்களை நேரடியாகவே அணுகும் வாய்ப்பினைப் பெற்றிருந்தார். பகுப்பாய்வு, வரலாற்று நோக்கு முறையியல்களை ஆய்விற் பயன்படுத்திக் கொண்டார். மேலைத்தேய தருக்கத்தில் பாண் டியத்தியம் பெற்றிருந்தமையும் இவரது ஆய்வுகளுக்குக் கூடுதலான அநுகூலமாயமைந்தது. ஒப்பீட்டு முறைகளில் இசைவு கண்டு, நியாய மாலைகளாக ஆதாரங்களைத் தொகுத்து, தமது ஆய்வு முறையைச் செழுமைப்படுத்திக் கொண்டார். தமிழ் இலக்கண நூல் மரபில் நூலாய்வொன்றிற் பயன்படுத்தப்படும் தொகை, வகை, விரி என்கிற முறமைகளைப் பயன்படுத்திக் கொண்டவழி வாய்பான நிறுவல்களைப் பெற்றார். சிறந்த நியாயித்தல் முறமைகளைக் கைக்கொண்டதன் வழியாகப் பெறப்பட்ட நிறுவல்கள், வலிமை யானவையாய் அமைந்தன.
நீலகண்ட பாடிய தமிழ் மொழிபெயர்ப்பு ஐயரவர்களது படைப்புக்கள் அனைத்துக்கும் மகுடம் போன்றது. பாடியத்திற்கு இரண்டு நீண்ட முகவுரைகளை எழுதியிந்தார். முறையே அவை உபநிடத உபக்கிரமணிகை, பிரம்ம சூத்திர உபக்கிர மணிகை என்பனவாம். உபநிடத உபக்கிரமணிகை 372 பிரிவுகளைக் கொண்டது. பிரம்ம சூத்திர உபக்கிரமணிகை 83 பிரிவுகளைக் கொண்டது. நீல கண்டரது பாடியமே காலத்தால் முற்பட்டது என்றும், அதனையே தத்தமக்குச் சாதகமான, மாற்றங்களைச் செய்து, பொருள் கண்டு மாயாவாதிகளும், பாஞ்சராத்திரர்களும் தத்தம் சமயங்களுக்கு இசைவாக்கிக் கொண்டனர் என்றும் இந்நூல் மொழிபெயர்ப்பு, நூல் ஆய்வு என்பன வழியாக எடுத்துக்காட்டினார். சைவ சித்தாந்தக் கருவூலங்களையே உள்ளீடாகக் கொண்டது கந்தபுராணம், என்பதனை கந்தபுரான நவநீதம் என்கிற நூல் வழியாகத் தெளிவுபடுத்துகிறார். ஈழத்துச் சாதாரண சைவர்களுக்கும் புராண படன வழிப் பரிச்சயமான கந்தபுராணத்தின் சாரம்சம் சைவசித்தாந்தமேயென, நியாயித்தல் வழி, அந்நிய மத ஊடுருவல்களால் தடுமாறி நின்ற மக்கள்முன் உரிய நேரத்தில் எடுத்துக் காட்டியமை, ஐயரவர்களின் புலமையை மட்டுமல்ல புத்திக்கூர்மையையும் உணர்த்தும் செயலாய் அமைகிறது. சிவஞான போத வசனாலங்கார தீபத்தில், அதிகாரங்கள் முற்றுப் பெறுகையில் கேள்விபதில் வடிவில் விளக்கம் தருவதும், பரிச்சயமாகப் பிரத்தியட்சப் புலன்வழி எடுத்துக் காட்டுக்களைக் காட்டி நூல் விளக்கம் செய்யும் உத்தியும் பயில்வோருக்கு வசதி செய்கின்றது. தேவாரம் வேதசாரம் என்கின்ற நூல்வழி, வேதம் குறிப்பிட்டதையே, இசையுடனும் பக்திரசத்துடனும், தேவாரங்கள் கூறுகின்றன என எடுத்துக் காட்டி வேதம் வேறு தேவாரம் வேறு என்கிற சர்ச்சைக்கு
இந்துக் க்களஞ்சியம்

Page 234
முடிவுகட்டப்பட்டது. வெளியிடப் பட்ட கண்டன நூல்கள், கண்டனக் கட்டுரைகள், கிறிஸ்த் தவர்களது சிவ நிந்தனைகளுக்குக் கண்டன கண்டனங்களாக அமைந்தன. பத்திரிகை அறிக்கைகள் அக்கலாச் சூழலுக்கு அவசியமா யமைந்தன. இவை மதமாற்றப் போக்குகளுக்கு ஆப்பு வைத்ததுடன், சிவபரத்துவம் பேணுவோர்க்கு மகிழ்வையும் நம்பிக்கையையும் ஊட்டின.
'சைவ வேதாந்த'த்தின் தோற்றுவாய், பிரம்ம சூத்திரத்திற்கான உரை வேறுபாடுகளிலிருந்து கருக்கொள்கிறது. இறையாணையின் பிரகாரம், உத்தரமீமாஞ்சை என்கிற பிரம்மசூத்திரத்தை வியாசர் வகுத்தார் என்பது ஐதீகம். பிரம்ம சூத்திரத்திற்கு உரை (பாடியம்) நீலகண்டர், சங்கரர், இராமானுஜர் போன்றோர் செய்தனர். நீலகண்டர் சிவாத்துவித அடிப்படையிலும், சங்கரர் ஏகான்ம அடிப் படையிலும் இராமனுஜர் பாஞ்சராத்திர அடிப்படை யிலுமாய் உரைகள் செய்தனர். நூல் ஒன்றாயிருக்க, அதற்கான பொருள் காண்டல் மூன்றாய் அமைந்தது.
நிர்குணப்பிரமம், சகுணப்பிரமம் என்கிற இருநிலைகள் பிரமத்திற்கு உண்டு. நிர்குணப் பிரமம் உயர்ந்தது. சகுணப்பிரம்ம நிலையைப் பிரமம் அடைகிறபோது, சிவனாகிறது. இங்கு சிவன் இரண்டாம் பட்சமாகிறது. மேலும் உயிர், உலகு போன்றவை உள்ள பொருள், உண்மைப் பொருள். எனக் கண்டு கொள்வதற்கு அவித்தையே காரணம். அவித்தை நீங்கப் பெறும் போது பிரமம் மட்டுமே உள்ள பொருள் என்கிற உண்மைத்தெளிவு வரும். இவை சங்கர பாடியத்தின் பொருளடக்கும்.
பிரமம் உண்டு, உலகம் உண்டு, உயிர்கள் உண்டு என ஏற்றுக்கொண்டாலும், உலகமும் உயிர்களும் பிரம்மத்திற்கு வேறாக இல்லை என்றும், இவை இரண்டும் பிரம்மத்தின் விசேடணங்கள். பிரமம் மட்டுமே விசேடியம். இவை இராமானுஜ பாடியத்தின் உள்ளீடுகள்.
பிரமம், மாயை, உயிர் என மூன்றும் உள்ள பொருள்கள் தனித்துவ இயல்பின. இவற்றில் எதுவொன்றும், பிறிதொன்றின் அம்சமாகாது, பொய்த்தோற்றமாகாது. மேலும் பிரம்மத்திற்கு நிர்குணப்பிரமம் சகுணப் பிரமம் என்கிற இருநிலைகள் இல்லை. இவை நீலகண்ட பாடியத்தின் பெறுகை.
நூற் பொருள் ஒன்றாயிருக்க, அதன் அர்த்தம் (பொருள்) காண்டல் மூவகையாய் அமையப் பெற்றமை நூலின் பிழையல்ல நூலுக்குப் பொருள் கண்டவர்கள் பிழையென்பதே செந்திநாதையரின் வழக்குரையாகும். இந்த வழக்குரையை வலிமை பொருந்தியதாக்க, சிவாத்துவிதம் சார்பான நீல கண்ரடது உரையே காலத்தால் முந்தியதெனும் கருத்தை முன்வைக்கிறார். நீலகண்டரது பாடி யத்துக்குப் பின் எழுந்தவை
இந்துக்கலைக்களஞ்சியம்
208
(8

தம் தத்துவப் போக்கிற்குச் சார்பாய், திரிபுகளையும், சேர்ப்புக் ளையும் திருத்தங்களையும் மேற்கொண்ட அமைக்கப்பட்டனவே ன்பது செந்திநாதையரது குற்றச்சாட்டு. இந்தக் ற்றப்பத்திரிகைப் பிரகடனத்தை குற்றங்கள் நடந்த இடங்களைச் டிக்காட்டுவதையும் அதன் சரியான மூலங்களை முன்வைத்து லிதான முடிவைப் பெறுவதையுமே சைவ வேதாந்தம் தன் ட்கிடையாய்க் கொண்டுள்ளது.
வேதம் முதலாய், திருமுறைகள், ஈறாக பிரதிபலிக்கும் கடவுள் வனே என்பதை நிறுவுதலை இந்நிறுவல் வழிபடுவோர்க்கு பக்கத்தை அளிக்கும் என்கிற நம்பிக்கையுடனான மகுட ாசகங்களுடன் இந்நூல் உபோற்காதம் (முடிவுரை) அமைகிறது. நினைந்து அதிகாரங்களைக் கொண்ட நூலின் தலதிகாரத்தில் தாண்டவேசுவரச் சிவ பரத்துவம் றுவப்படுகிறது. தொடர்ந்து வரும் அதிகாரங்கள் சிவ ன்னங்கள் குறித்தனவாயும் மந்திர மகிமைகள், வழிபாடுகள் றித்தனவாயும் அமைவுற்று, கற்போர்க்கு ஆன்ம பக்குவத்தினை ண்டாக்குகின்றன. ஆன்மனுக்கு அறிகை ஆர்வம் ஏற்படுத்தப் டுகிறது. அறியத்தலைப்பட்ட வனுக்கே உணரும் நிலை Fருமாதலால், ஆறாம் அத்தியாயம் தொடக்கம் பத்தாம் த்தியாயம் வரையில், பதி, பசு, பாச இருப்புக்கள், அவற்றின் யல்புகள் எடுத்துக் கூறப்படுகின்றன. தன்னையறிந்து ன்னையுணர்ந்து கொண்ட ஆன்ம ஈடேற்றத்திற்காக ழிக்கொள்ள வேண்டியவை குறித்து, படிமுறை ஒழுங்கில் நினோராம் அத்தியாயத்திலிருந்து பதினான்காம் அத்தியாயம் ரையில் எடுத்துக் கூறப்படுகிறது. பதினைந்தாவது த்தியாயத்தில் சைவ சித்தாந்த வேதாந்த சமரசப்பாடு எடுத்துக் "ட்டப்படுகிறது. பதினாறாம் அத்தியாயத்தில் வேதாந்தத் நளிவே சைவ சித்தாந்தம் என்கிற முடிநிலை பெறப்படுகிறது.
இந்நூலில் அமைந்துள்ள பிறிதோர் சிறப்பம்சம் காலத்தை டியே வைதீக, அவைதீக சமயப் பாகுபாடுகள் ரையறுக்கப்படுகிறதென்பதாகும். வைதீக வரிசையில் சைவம், ான்மவாதம், வைஷ்ணவம், மத்துவம் இடம் பெறுகின்றன. வைதீக வரிசையில் பெளத்தம் ஜைனம், கிறிஸ்தவம், முகமதிய யம் இடம் பெறுகின்றன. காலத்தை ஒட்டிச் சமய துவங்களை வகைப்படுத்தியமையோடு, உலகளாவிய ரீதியாக ரித இருப்பியலை முதன்மைப்படுத்தும், தத்துவங்கள் றையியல் போக்குகளுக்கு ஈடு கொடுக்க மாயாவாதம் தாதென்பதை உணர்ந்து இருப்பியலை முதன்மைப்படுத்தும் வ சித்தாந்தம் குறித்த தெளிவைத் தரக்கூடிய மேலும் பல ல்களை செந்திநாதையர் யாத்தமையும் காலத்துக்கேற்ற ரியெனப் பாராட்டலாம்.
சைவ வேதாந்தம் மூலமாக செந்திநாதையர் ாவதிகளுக்கும் பாஞ்சராத்திரருக்கும் எதிராக முன்வைக்கும் றப்பத்திரிகை பின்வரும் அம்சங்களை உள்ளடக்கியது.

Page 235
வியாசர் தொகுத்தளித்த பிரம்ம சூத்திரம் 545 சூத்திரங்களைக் கொண்டது. எனினும் இவ் எண்ணிக்கையுடன் பதினொரு சூத்திரங்களைப் புதிதாக மாயாவாதிகள் இணைத்துக் கொண்டனர். இந்த இணைப்புக்களை ஆதாரமாக்கியே மாயா வாதத்தோடு பிரம சூத்திரத்தை இசைவாக்க முயன்றனர். சிவாத்துவிதம் குறித்துப் பேசும், காலத்தால் முந்திய நீலகண்ட பாடியத்தை பல தடவைகள் கற்று அந்நூற் கருத்துக்கு மாறாக, மாயா வாதத்திற்கு உடன்பாடாக பாடியம் செய்தார் சங்கரர்.
பிரம்ம சூத்திரத்தின் அதிகரணங்கள் சில திரிபுபடுத்தப்பட்டன. முழுமை சிதைக்கப் பட்டன. சில சூத்திர அதிகரணங்கள் ஒன்றில் முன்னைய துடன் அல்லது பின்னையதுடன் இணைத்துப் பொருள் காணப்பட்டன.
சூத்திரத் தொடர்களிடையே பொருந்தாப் புதிய சூத்திரங்களை உட்புகுத்தினர். சில சூத்திரங்களை அழித்தனர்.
நீலகண்டரது உரையினை வழிமொழிந்த சூதசங்கிதை, சிவாக்கிரமணிதீபிகை, ஆனந்தலகரி போன்ற நூல்களில் வேறுபாடுகளை ஏற்படுத்தினர்.
புராணங்களிலிருந்து சில பகுதியை நீக்கியும், புராணச் செய்திகள் சிலதைத் திரிபுபடுத்தியும் கொண்டனர்.
தமக்கென உரிய உபநிடதங்களைக் கடந்து, பிறிதோர் ஏற்பாட்டுக்குரியன எனக்கண்ட உப நிடதங்களைத் தமது கருத்துக்களுக்குச் சார்பாகக் காட்டினர்.
மேற் குறிப்பிட்ட குற்றச்சாட்டுக்களின் மெய்மையை, உபநிடதங்களை வகைப்படுத்துதல், சிவாத்துவித பாடியத்திற்கு உடன்பாடான கருத்தாக்கங்களை வேதம்சார் பல்வேறு நூல் களிலிருந்து பெற்றுக் காட்டல் என்பவற்றோடு பிரம்மசூத்திர அதிகரணத்தில் மேற்கொண்ட திரிபுகளை சைவ வேதாந்தத்தில் எடுத்துக்காட்டி அதன் வழியாக திரிபுகளை நிரூபிப்பதோடு மேலும் மேற்குறித்த நூல்களில் சிவபரத்துவம் குறித்தே கூறப்படுகிறது என எடுத்துக்காட்டல் என்பன மூலம் தன்கருத்தை மீள வலியுறுத்துகின்றார்.
வேதப் பொருளைப்புரிய உதவுவன வேத சிரசாக விளங்கும் உபநிடதங்கள். இவையே வேதாந்தம். வைதீக சமயங்கள் சார்பான இவ் உபநிடதங்கள் வெவ்வேறான வைதீக சமய ஏற்பாடுகளுக்குரியவை எனச் சிறப்பாக வகுக்கப்பட் டுள்ளன. செந்திநாதையர் அவ்வச் சமயங்களுக் குரியவற்றை வகைப்படுத்துவதன் வழியாக, கற்பித உபநிடதங்களைக் கண்டுகொள்கிறார். வேதாந்த சமயத்திற்குரியவையாக சர்வாரம், நிலாம்பரம், தேஜோவிந்து ஆகியவற்றைக் குறிப்பிடுகிறார். நாராயணம், திரிபாத விபூதி, கபாலம் போன்றவை நாரயணியத்திற்குரியவை என்பதோடு அவை மத்துவரது ஏற்பாடுகளுக்கும் பொருந்துபவை என்கிறார். ஈசாவாசியம்,
2

O9
கேனம், கடம், பிரசினம், முண்டகம், மாண்டுக்கியம், தைத்திரீயம், ஐதரேயம், சாந்தோக்கியம், பிரகதாரண்யம், சுவேதாசுவரதம், பிருகஜ்ஜபாலம், சரபம், காலாக்கினிருத்தம், கைவல்யம், நிருசிம்ம மோத்திரதாபி, மைத்திராயணம், கெளவிதவிக் பிராஹ்மனம், அதர்வசிரசு போன்றன சிவனுக்குரியனவென வகையீடு செய்கிறார்.
வகைப்படுத்தியதன் பிரகாரம் இராமோத்தரதாபிநி உபநிடதம் கற்பித உபநிடதம் எனக்காட்டுகிறார். இந்த உபநிடதம் இராமரிடம் வரம் வேண்டிச் சிவன் தவமிருந்தார் என்கிற செய்தியைக் கூறுகிறது. இராமருக்கு மூலகாரணம் நாராயணர். இந்த நாராயணர் உட்பட அனைவரும் சங்கார காலத்தில் ஒழிந்து போனார்கள். எஞ்சி நின்றவர் சிவன். சிவனை நோக்கித் தவம் செய்தே தசரதர் பதினாயிரம் ஆண்டு வாழும் வரத்தைப் பெற்றதுடன், இராமனையும் பெற்றார். இவ்வாறாக புராணங்கள், இதிகாசங்கள், தேவாரங்கள் குறிப்பிட, இரா மோத்திரதாபிநி உபநிடதம் மட்டும் எதிர்மாறான செய்தியைக் கூறுகிறது. ஆக, இந்த உபநிடதம் தம் சார்பாய், கருத்தேற்றம் செய்வதற்காக மாயா வாதிகளால் சிருஷ்டிக்கப் பட்டதொன்று என நிறுவுகிறார் செந்திநாதையர்.
தத்தம் சமய ஏற்பாடுகளுக்கென வகையீடு செய்யப்பட்ட உபநிடதங்களுக்கு முதன்மை கொடுக்காது வேறொர் பிரிவினர்க்கென வகைப் படுத்தப்பட்டவற்றை தம்சார்பான கருத்துக்களைக் கண்டுகொள்வதற்காய் முதன்மைப்படுத்தி அதன் வழிப் பாடியம் செய்தமை அசித்தப்போலி வகை சார்ந்தது, வலிதற்றது என இலகுவாகவே கண்டு கொள்ளலாம்.
பிறிதோர் ஏற்பாட்டிற்குரியனவற்றை தனது ஏற்பாட்டை நிறுவுவதற்காகப் பயன்படுத்தியமை வழியாக, பிறிதொன்றினது கருத்துக் கருவூலங்கள், தனக்கென உரியனவற்றைக் காட்டிலும் மேன்மை யானவை என்கிற கருத்தாக்கம் மறைமுகமாக ஏற்றுக் கொள்ளப்படுகிறது. இவ்வாறாக உப நிடதங்களில் திரிபுகளை, புதிய கற்பித உபநிடத உருவாக்கங் களைச் செய்து மாயாவாதத்திற்கு அணிசேர்க்க முயன்றனர் என்கிற நிலை நிறுவப்படுகிறது.
மாயாவாதிகள் பிரம்மசூத்திரத்தின் முதலாம் அத்தியாயம் முதலாம் பாதம் முதல் பதினோராம் சூத்திரம் வரையிலான சுலோகங்களை ஆதாரமாகக் கொண்டு, பின்வரும் கருத்தாக்கங்களைப் பெற்று, பிரம்மசூத்திரம் கூறும் பொருள் மாயாவாதம் சார்பானதேயெனக் காட்ட முற்பட்டனர்.
உலகின் தோற்றம், நிலைப்பு, அழிவு ஆகியவற்றிற்கும் காரணன் சகலதையும் அறிபவனும், சகல சக்திகளையும் உள்ளீடாக்கிக் கொண்ட வனுமான ஈஸ்வரன் பிரம்ம சூத்திர சுலோகங்கள் அனைத்தும் ஒரு சேதனப் பொருளையே காரணன் என மொழிகின்றன. பதினோராம் சூத்திரத்திற்குப் பின்னாய
இந்துக்கலைக்களஞ்சியம்

Page 236
சூத்திரங்களே பிரம்மத்திற்கு நிர்குண சகுணப் பாகுபாடுகள் உண்டென்கின்றன. வெவ்வேறு வகைப்பட்ட உபாசனைகள் (வழிபாடுகள்) வெவ்வேறான பலத்தினைக் கொடுக்கின்றன. வழிபாடுகளில் சில முத்தியையும் சில கிரம முத்தியையும், வேறு சில வழிபாடுகள் கர்மத்தில் சித்தியையும் தருகின்றன.
மாயாவாதிகள் பிரம்மசூத்திரத்தின் வழியாகப் பெற்றுக் கொண்ட மேற்குறித்த கருத்துக்களை மறுதலிக்க பின்வரும் வாதங்களைச் செந்தி நாதையர் சைவ வேதாந்தத்தில் முன்வைக்கின்றார். வியாசரது சூத்திரங்கள் ஐந்நூற்று நாற்பத்தைந்து. இவ் எண்ணிக்கையை மாயாவாதிகள் ஐந்நூற்று ஐம்பத்தைந்தாகப் பெருக்கிக் கொண்டனர். இந்த முயற்சி பிரம்ம சூத்திரத்தை மாயாவாத சார்புடையதாக்கும் நோக்குடனேயே செய்யப் பட்டது. இவ்வாறாக எண்ணிக்கை அதிகரிக்கப் பட்ட தென்பதை பின்வரும் கருத்தாக்கங்கள் வாயிலாகப் புரியவைக்கின்றார்.
மூல நூற்படியான சூத்திரங்கள்ஐந்நூற்று நாற்பத்தைந்து. இச் சூத்திரங்கள் சகுணப் பிரம் மத்தையே முன்மொழிகின்றன. இச் சுதந்திரக் கருவூலங்களுக்குப் பின்புலமாய் அமைவன ஈசகேநாதி, முக்கியோ உபநிடதங்களாகும். இவை பிரதிபாலிப்பது சகுணப் பிரம்மத்தையாகும். எனவே வியாசர் ஒன்று முதல் பதினொன்று வரையிலான சூத்திரங்களை வரைந்தாராயின் இவை கூறும் பொருளுக்கு முரணானவாறாய் எஞ்சிய ஐந்நூற்று நாற்பத்தைந்து சூத்திரங்களையும் எழுதியிருக்க மாட்டார். நூலின் முன்னே மொழிந்தவற்றைப் பின்னே மறுப்பது நூலுக்கழகல்ல. எனவே பதினொன்று வரையிலானவை இடைச்செருகல் என்பது பொதுப்புத்திக்கும் புலப்படக் கூடிய தொன்றேயாகும். இவை மாயாவாதிகள் தம் நலன் கருதிச் சேர்த்துக் கொண்டவை. எனவே இவை கூறும் கருத்து மூல நூலுக்கு உட்பாடானவையல்ல.
வியாசர் பிரம்மசூத்திரத்தில் 'ஆனந்த மயோப்பஸாத் அதாவது (சிவபெருமான்) ஆனந்த மிகுதியுடையவர் அப்பியாசத்தினால் என எழுதி யிருக்க பிரம்மத்திற்கு ஆனந்தமில்லை என மாயாவாதிகள் திரித்துக் கொண்டனர். ஆனால் தொடந்ததுவரும் சூத்திரங்கள் பல, ஆனந்தமயம் உட்பட்ட பல குணவியல்புகளைப் பிரம்மத்திற்குக் கூறுகின்றன. அத்தகைய சூத்திரங்கள் ម៉ាល மாயாவாதிகளால் நீக்கப்பட்டிருக்கின்றன. எடுத்துக்காட்டாக 'ஆனந்த குணவிசிஷ்ட முடையவராகக் கூறப்படும் அந்த நியாயத்தினால் அவர் பிரமம்” என்கிற சூத்திரம் நீக்கப்பட்டது. பிரம்மசூத்திரத்தில் பல விடயங்களில், திரிவு, சிருஷ்டிப்பு, சிதைப்பு, நீக்கம் இடம்பெற்றமை செந்திநாதையரால் எடுத்துக் காட்டப்பட்டிருந்தும், விரிவஞ்சி, மேற்குறித்தவை மட்டுமே, இங்கு எடுத்துக் காட்டப்பட்டன. இத்தகைய திரிப்புக்களை இனம் காட்டியதுடன் இவற்றுக்கப்பாலும் நீல கண்ட பாடியம் முழுமையையும் தெளிவாகக் கற்று, ஏனைய நூல்களுடன் ஒப்பீடு செய்து பாடியம்
இந்துக்கலைக்களஞ்சியம்
2

10
கூறிநிற்கும் அனைத்துக் கருவூலங்களும் மாயாவாதத்திற்கல்ல, சிவாத்துவித சைவத்திற்கே உரியன என்று சைவ வேதாந்த வழி எடுத்துக்காட்டுகிறார்.
மாயாவாதிகளின் கரங்கள் மூல நூல்களையும் கடந்து, துணைநூல்கள் வரையிலும் நீளத் தவறவில்லை. நீலகண்ட பாடியத்தில் அநியாமாதி கரணத்தில் நிர்குனோ பாசகர்களுக்கு இங்கேதான் முத்தி என நீலகண்டர் எழுதாத வசனத்தை எழுதி வைத்ததோடல்லாமல், சிவாத்துவித, நிர்ண யத்திலும், அதன் ஆசிரியர் மேற்குறித்த கருத்தையே கூறிவைத்தார் எனக் குறிப்பிடவும் தவறவில்லை. அப்பையதிட்சிதர் எழுதிய சிவாத்துவித நிர்ணயத்தில், மிகத் தெளிவாக, நீலகண்டரின் பாடியம், சங்கரரது பாடியத்திலும் சிறந்ததென எழுதியுள்ளார். இவ்வாறிக்க இருவரது நூலையும் கற்று மதிப்பிட்டு, தீர்ப்புச் சொன்ன பின்னால், சிறந்ததாக ஏற்றுக் கொண்ட நூலுக்கு எதிராக - மாறாக அப்பைய தீட்சிதர் கருத்தொன்றினை முன்மொழிவாரா? ஆக மாயாவாதிகள் சிவாத்துவித நிர்ணயத்திலும் மேற்கொண்ட பொருந்தா மாற்றங்கள் தெளி வாகின்றன. நீலகண்ட பாடியத்தில் சக்தியும் சிவனும் சத்சப்த்தத்தின் பிரத்தியமுமாம், என எழுதியிருக்க அதனை சிவாத்துவித நிர்ணத்தில் சக்தியும், சிவனும் துவந்துவமில்லாத பிரகிருதியும், பிரத்தியமுமாம் என மாற்றி எழுதியுள்ளனர். இம். மாற்றத்தின் பேறாக மாயாவாதிகள் சக்தியும் சிவனும் எனப்
பொருள்படும் சத்பத்தை நிர்குணம் எனச் சாதிக்க முயன்றனர்.
மாயாவாதிகள் தசோபநிடதங்களுக்கு செய்த பாடியங்களுக்கு உபபிருங்கணம் தேவைப்பட்டதால் சூதசங்கிதையில் மாற்றங்களைச் செய்து தமக்கு உவப்பாக்கிக் கொண்டனர். சூதசங்கிதையில் பிரம்ம கீதைப் பகுதியில் மாற்றங்களை, திரிபுகளை ஏற்படுத்தினர்.
சிவனது அவிநாபாவ சக்தியாகிய உமா தேவியை சடசக்தி என்றனர். மோகரூபினி என்றனர். அருட்சக்தியான அம்மையாரின் மறு பெயர்களான விஞ்ஞானம், பிரஞ்ஞானம் போன்றவற்றை அந்தக் கரணங்கள் என மாற்றி எழுதினர். அம்மையாரின் மறுபெயர்களான தகராகாய வியோமத்தை அவித்தை அஞ்ஞானம் அவ்வியாகிருத்தம் மாயை ஜடசக்தி என்றனர். சீவான்மா பரமான்மாக்களை உணர்த்தும் சொற்களை ஷேத்திரஞ்ஞன், சத்துவம் என்றனர். சாமியம் என்கிற சொல்லை கடாகாய மகாகாயம் போல்வதோர் ஐக்கியம் என்றனர்." இவ்வாறாக, துணை நூல்களிலும் மாற்றங்களைச் செய்து
மாயாவாதத்திற்கு அணிசேர்க்க முயன்றனர்.
சங்கர திக்விஜயக் கூற்று, பவிஷ்யத்புராணம் போன்ற பல புராண நூல்களில் சிவபெருமானைப் பழித்தும், திருமால் போன்றோரை உயர்த்தியும் கூறப்படுகின்றன. சங்கர திக் விஜயம் என்கிற, நூலில், புனைகதைகள் புனைந்து சங்கரரது மாட்சிமை

Page 237
கூறப்படுவதுடன், நீல கண்டரும் சைவமும் இழித்துப் பேசப்படுகின்றன. மறுபக்கமாக பவிஷ்யத்புராணம், இராமானுஜர் சங்கரரை வாதில் ஜெயித்தார், இராமனுஜரை சரஸ்வதி புகழ்ந்து அவர் இயற்றிய பாடியத்திற்கு பூரீபாஷ்யம் எனப்பெயர் சூட்டினார் என்று கூறுகின்றது. புராணங்கள் கூறுகிற செய்தி களில் முரண்பாடுகள் மலிந்து காணப்படுகின்றன. இவற்றை உறுதியான செய்திகள் என ஏற்க முடியாது என்கிறார் செந்திநாதையர்.
தமிழ்மொழிவழிப் பாசுரங்களும், சாஸ்திரங் களும் வேதாந்தத் தெளிவே சைவ சித்தாந்தம் என்கிற கருத்தாக்கத்தினைப் பிரேரித்து நிற்கின்றன என்பதனை, சைவவேதாந்தத்தின் பதினாறாவது அத்தியாயத்தில் எடுத்துக்காட்டுகிறார். குமர குருபர சுவாமிகளின், சிறந்த எடுத்துக் காட்டுக்களுடனும் ஒப்புமைகளுடனும் அமைந்து காணப்பெற்ற பாட லொன்றைச் சான்றாக்குகிறார்.
குடிலை யென்னுந் தடவய சினாப்ப னருள்வித் திட்டுக் கருனைநீர்ப் பாய்ச்சி வேத மென்னும் பாதபம் வளர்த்தனை பாதய மதனிற் படுபயன் பலவே, அவற்றுள்
இலைகொண் டுவந்தனர் பலரே யிலையொரிஇ தளிர்கொண் டுவந்தனர் பலரே தளிரொரிஇ யரும்பொடு மலர்பிஞ் சருங்கா யென்றிவை விரும்பினர் கொண்டுகொண் டுவந்தனர் பலரே யவ்வாறுறுப்பு மிவ்வாறு பயப்ப யோரும்வே தாந்தமென் றுச்சியிற் பழுத்த வாரா வின்ப வருங்கனி பிழிந்து சாரங்கொண்ட சைவசித் தாந்தத் தேனமு தருந்தினர் சிலரே யானவர் .
வேதத்தை சிவன் உயிரிகளின் சேமம் பொருட்டாய் உபதேசத்தருளிரெனினும், அதன் பயனை மானிடர் தத்தம் அறிவுக்குப் பொருந்தவே பெற்றுய்ந்தனர். பெரியோர் சிலர் மட்டுமே விருட்சத்து உச்சியிற் பழுத்த தெவிட்டாத சுவையுடைய பழத்தைப் புசித்தது போல அறிவின் உச்சமான சிவாத்துவித வேதாந்தத்தைச் சிலரே சுவைத்தனர், நயந்தனர்.
புறச்சமயத் தவர்க்கிருளா யகச்சமயத் தொளியாய் .
என்கிற சிவப்பிரகாச பாடலின் பிரகாரம் வைதீக, அவைதீக சமயத்தவர்களது சமய அளவைகளுக்கும் அதன் வழி அறிவுக்கும் ஏற்றவாறாய், ஆங்காங்கே, அவரவர் அளவைகளுக்கு அளவுக்குட்பட்டு சுகம் கொடுப்பவர் சிவன், சுத்தாத்துவிதத் தெளிவாம், சைவசித்தாந்திகளின், உயிரினோடுணர்வு என்கிற

ஆன்மசிற்சக்தி பிரமாணம் சிவசிற்சக்திப் பிரமாணமாக பரிணாமம் பெறுகையில், அவர்களுக்கு அன்பே சிவமாவார் சிவன். ஆக, வைதீக சமயநெறிகள் அனைத்துக்கும் மகுடமாய், உச்சமாய் அமையும் நெறி சைவசித்தாந்த நெறியாகும். இதுவே முடிந்த முடிவு. உய்விக்கும் மாக்கம் என்றவாறான கருத்தோட்டங்களை தமிழ்வழிச் சமயநூல்களைச் சான்றாக்கிப் பெறுகிறார். சிவாத்துவித சைவநெறியை 'சைவ வேதாந்தம் மூலம் உறுதிப்படுத்துகிறார்.
சிவபரத்துவத்திற்கு மாறாக மாயாவதிகளும் பாஞ்சராத்திரர்களும் மூல நூல்களில், துணை நூல்களில் மேற்கொண்ட மாற்றங்கள், இணைப்புக்கள், நீக்கங்கள், திரிப்புக்கள் பலவாக சைவ வேதாந்தத்தில் எடுத்துக் காட்டப்பட்டிருந்தும் விரிவஞ்சிச் சில மட்டுமே இங்கு எடுத்தாராயப் பட்டுள்ளன. மாற்றங்களுக்கு மேலாகவும், மூல நூல்களிலும், துணை நூல்களிலும் மேலோங்கிக் காணப்படும் கருத்தாக்கங்கள் சிவபரத்துவம் குறித்துக் கூறுவனவே என்கிற நிரூபணத்தைச் சைவ வேதாந்தம் மூலமாக செந்திநாதையர் வெளிக் கொணர்கிறார். தாண்டவேசுர சிவனின் இயல்புக்கும், இருப்புக்கும் சிவபரத்துவத்திற்கும் மாறாக, வேத, உபநிடத, பிரம்ம சூத்திர, புராண, இதிகாசங்களில் திரிக்கப்பட்டவைகள், திரிப்புக்கள் ஆக, இவை வலுவற்றவை எனச் 'சைவவேதாந்தத்தில் தெளிவுபடுத்தியதுடன், மேற்குறிப்பிட்ட நூல்கள், பதி, பசு. பாச இருப்புக்கள், இயல்புகள், சரியை, கிரியை, யோக வழிபாட்டு முறைகள், சலோப சாமீப, சாரூப சாருச்சியமுத்திகள் குறித்தே பிரஸ்தாபிப்பவை என்பதனை மூலநூற் சூத்திரங்களைச் சான்றாக்கி நிறுவினார். தமிழ் மொழி சமயம் சார் நூல்களும், மேற்குறித்த கருத்தாக்கங்களையே வெளிப் படுத்துகின்றன எனவும் எடுத்துக் காட்டினார். வைதீக சமய நெறிகள் அனைத்திலும் மேலான நெறி சைவ சித்தாந்த நெறி என்கிற வழக்குரையும் வேதம் முதல் திருமுறைகள் ஈறாக பிரதிபாலிப்பதும் இந்நெறியே என்கிற வழக்குரையும் 'சைவ வேதாந்தத்தால், அறிவியல் வலுப்பெறுகின்றன. (95.6)
செந்தில் வாழந்தனர்
செந்தில் வாழந்தணர்கள் 'திரிசுதந்திரர்’ எனப் பெயர்பெறுவர்; இவர்கள், கங்கைக் கரையில் தவம் செய்து பூலோகம், சுவர்க்க லோகம், சத்திய லோகம் ஆகிய மூன்று உலகங்களிலும் சென்று வசிக்கும் சுதந்திரத்தைப் பிரமன், திருமால், சிவன் மூவரிடத்தும் வரமாகப் பெற்ற காரணத்தால் 'திரி சுதந்திரர்’ எனப் பெயர் பெற்றனர். திரிசுதந்திரர் 78,000 பேர்கள். இவர்கள் கீழ்க்காணும் தலங்களில் கீழ்க்கண்டவாறு சென்று குடியேறினர்.
இந்துக் க்களஞ்சியம்

Page 238
1. விருத்தாசலத்தில் 1,000 பேர் சிவனை பூசித்திருந்தனர்.
2. திருச்செந்தூரில் 2,000 பேர் முருகனைப் பூசித்திருந்தனர்.
3. சிதம்பரத்தில் 3,000 பேர் நடராசப் பெருமானைப்
பூசித்திருந்தனர்.
4. கமலாசனபுரத்தில் 4,000 பேர் திருமாலைப் பூசித்திருந்தனர்.
5. திருவண்ணாமலையில் 5000 பேர் சிவபிரானைப்பூசித்திருந்தனர்.
6. ஜகந்நாதத்தில் 6,000 பேர் திருமாலைப் பூசித்திருந்தனர்.
7. திருவீழிமிழலையில் 7,000 பேர் சிவபிரானைப் பூசித்திருந்தனர்.
8. மதுரையில் 8,000 பேர் சிவபிரானைப் பூசித்திருந்தனர்.
9. தண்டகவனத்தில் 9,000 பேர் பூரீராமரைப் பூசித்திருந்தனர்.
10.கோகுலத்தில் 10,000 பேர் திருமாலைப் பூசித்திருந்தனர்.
11. பதரிகாச்சிரமத்தில் 11,000 பேர் திருமாலைப் பூசித்திருந்தனர்.
12.சுவாமிமலையில் 12,000 பேர் முருகளைப் பூசித்திருந்தனர்.
78,000
திருச்செந்தூர் அந்தணர்கள் (முக்காணியர்) இரண்டாயிரம் பேர் முருகவேளை பூசித்துச் சிறப்புற்றனர். இவர்களே செந்தில்வாழந்தணர் எனப்படுவோர். இவர்களை அன்புடன் நினைப்பவர்கள் மும்மூர்த்திகளை பூசித்த பேற்றினைப் பெறுவர் என்று திருச்செந்தூர்ப் புராணம் கூறுகின்றது.
திரிசுந்தரர்களுடன் முருகன் அபேதமாக நின்று அருள் பாலிக்கின்றமையால் அவருக்கு திரிசுந்தராபேதமூர்த்தி எனப்பெயர் ஏற்பட்டது. (சுப்பிரமணிய பராக்ரமம் - பக். 318)
(வ. வை.)
செந்துருத்தி
செந்துருத்தி என அழைக்கப்படும் பண் மத்திய மாவதி இராகமாகும். இது இருபத்திரெண்டாவது மேளகர்த்தாவாகிய கரகரப்பிரியாவின் ஜன்யராகமாகும். ஆரோகணம் ஸரிமபநிஸ அவரோகணம்: ஸ்நிபமரிஸ்
இதில் வரும் சுரங்களாவன நிறைதுத்தம் (சதுஸ்ருதி ரிஷபம்), குறைஉழை (சுத்தமத்திமம்), இளி (பஞ்சமம்), குறைதாரம் (கைசிகி நிஷாதம்) ஆகியனவாகும். ஆரோசை, அமரோசையில் கைக்கிளையும் விளரியும் வரா.
மந்தித் தாமவதி என்பது மருவி மத்திய மாவதி என்று ஆகியிருத்தல் வேண்டும் என்பர் சிலர். மந்தி என்றால் முடித்தல்; தாமம் - ஒழுங்கு, வதி - இருத்தல், ஒழுங்குபட ஒரு முடிவு நிலையை அடைதல். பழங்காலம் தொட்டு நிகழ்ச்சியினை முடிக்கும் போது மங்களம் பாடிமுடிப்பதற்கு இந்த இராகத்தை கையாண்டதால் அதனையே இதற்குப் பெயராக்கியுள்ளனர்.
இந்துக்கலைக்களஞ்சியம்
21.

மத்திய மாவதி இராகம் மிகப் பழமையான இராகம். பழந்தமிழ் மக்கள் இந்தப் பண்னை செந்துருத்தி என அழைத்தனர். தேவாரத் திருப் பாடல்கள் பாடப்பட்ட பண்களில் இதுவும் ஒன்று.
செந்துருத்தி என்னும் இப்பண் செந்நிறம் என்றும் அழைக்கப்படுகிறது. இந்தப்பண் சுந்தரமூர்த்திநாயனார் அருளிச் செய்த ஏழாவது திருமுறையில் 95ஆம் பதிகத்தில் அமைந்துள்ளது. இந்த ஒரே ஒரு பதிகத்தில் மட்டும் இப்பண் பயன்பட்டதாக தெரிகிறது. பகல், இரவு ஆகிய எக் காலத்திலும் இப்பண் பாடுவதற்கு உகந்தது.
பஞ்சமரபு என்னும் நூல் இப்பண் மேற்செம்பாலையில் இருந்து பிறந்தது என்றும், இது பண்ணியற்ற வகையைச் சார்ந்தது என்றும் குறிப்பிடுகின்றது. இப்பண் பற்றி யாழ் நூலில் விபுலானந்த அடிகளும் குறிப்பிடுகின்றார் “ செம்பாலையில் பிறப்பதென அடியார்க்கு நல்லார் சிலப்பதிகார
இப்பண்
உரையிலே கூறுகின்றார். நாரத சங்கீத மகரந்தத்திலே கண்ட மதுமாதவி என்னும் சுத்த ஒளடவராகமும் செம்பாலையில் பிறப்பது. 'மது மாதவி” என்னும் பெயரே திரிபுபட்டு மத்தியமாவதி ஆயிற்று என்பர் ஒரு சாரார். மத்திமசுரம் ஆதியாக வருதலின் இது மத்திய மாவதி ஆயிற்று. குறிஞ்சி யாழ் செந்நிறப் பண்ணின் அகநிலையால் பண்வரிசையில் 65 பெற்ற செந்நிறம் என்னும் நிறமே பிற்பட்ட காலத்தில் செந்துருத்தி என அழைக்கப்பட்டது” என குறிப்பிட்டுள்ளார். கர்நாடக இசையில் மத்திய மாவதி என குறிப்பிடப்படும் இவ்விராகம் வர்ஜராகமாகும். காந்தாரம். தைவதம் வர்ஜசுரங்கள். உபாங்க இராகம். ரிஷபம், மத்திமம், நிஷாதம் ஆகியவை இராகச்சாயா ஸ்வரங்கள். ரிஷபம், நிஷாதம் கம்பித ஸ்வரங்களாகும்.
பிமபநீபமf ஸ்நிபா நிஸரிஸ்ரீ, மரிபமநிபஸ்நி ரிஸா, மபநிபநீபம
போன்ற சஞ்சாரங்கள் இராகத்திற்கு ரஞ்சகத்தை ஊட்டுவன.
திரிஸ்தாயி இராகம், பகல் வேளையில் பாடுவதற்கு உகந்தது. பக்தி, கருணை போன்ற உணர்ச்சிகளை ஊட்டவல்லது. சர்வசுரமூர்ச்சனாகாரக இராகம், சங்கீத ரத்னா காரம், சங்கீத மகரந்தம், சங்கீத சமய சாரம் ஆகிய நூல்களில் இந்த இராகம் காணப்படுகின்றது. மத்தியமாவதி இராகத்தின் ரிஷபம், மத்திமம், பஞ்சமம், நிஷாதம் ஆகிய சுரங்களை கிரக பேதம் செய்தால் முறையே ஹிந்தோளம், சுத்தசாவேரி, உதயரவிச் சந்திரிகா, மோகனம் ஆகிய ராகங்கள் தோன்றும். மங்களகரமான இராகம். இராகங்களை அகாலத்தில் பாடும் தோஷம், சாஸ்திர பத்தியின்றும் தவறும் தோஷம் போன்றவை இந்த இராகம் பாடுவதன் மூலம் நிவர்த்தி ஆவதாகக் கருதப்படுகின்றன. எனவே கச்சேரியின் முடிவில் மத்தியமாவதி இராகத்தைப் பாடி முடிக்கும் வழக்கம் இருந்துவருகிறது.

Page 239
இவ்விராகத்தின் போக்கு:
சரிமா. ரீ ரீமபாமா. ரீ.ரீ.மபநீ. பா மபநி. சா. நீ. ப. நீசரி. சா. நிசரிமா. ரீசா சரிமா. ரீ. சரிமபா. மரீ. சா நீ. பா மபா. நீ. பமf. மா. பமரீசா. சரி மாரிசநி 5FT......... ரிசநிபா. மயநீ சநீபா. மயநீசா இந்த இராகத்தில் அமைந்த உருப்படிகள்: வர்ணம் ஸரகு நன்னேன- ஆதி தியாகய்யர், கருதி ராமகதாசுதா - ஆதி தியாகராஜ சுவாமிகள்- தர்ம சம்வர்த்தனி ரூபகம் முத்துசாமி தீட்ஷதர். பாலிஞ்சு, காமாட்சி; ஆதி சியாமா சாஸ்திரிகள் இயற்றியது.
அருணாசலக் கவிராயர் இயற்றியுள்ள “வந்தான் வந்தான் பரதா’ என்னும் இராம நாடகக் கீர்த்தனை, பாபநாசம் சிவன் இயற்றிய “கற்பகமே” என்னும் கீர்த்தனை, ஜெயதேவர் இயற்றிய “ராதாவதன” என்னும் அஷ்டபதி, "கூர்வேல்” என்னும் திருப்புகழ் ஆகியவை இவ் ராகத்தில் உள்ள இசை வடிவங்களாகும். (ஹ. தே)
செந்தார்
இது முருகனின் ஆறுபடைவீடுகளுள் ஒன்று. திருச்சீரலைவாய் என்று வழங்கப்பட்ட இத்தலம் தற்பொழுது திருச்செந்தூர் என்று வழங்கப்படுகின்றது. கடல் அலைகள் மோதும் இடத்தில் முருகப் பெருமான் கோயில் கொண்டிருப்பதால் அலைவாய்' எனப் பெயர்பெற்றது. குமரன் உறையும் சீர் நோக்கிச் சீர் என்ற அடையும், திரு என்று அடையும் சேர்க்கப் பெற்றுத் திருச்சீரலைவாய்' என வழங்கலாயிற்று.
வெண்தலைப் புணரி அலைக்குஞ் செந்தில்
நெடுவேள்நிலைஇய காமர் வியன்துறை (புறம் - 55) என மருதன் இளநாகனார் அலைவாய் என்ற பெயர்க் காரணத்தை விளக்குவார். அலைவாய் என்றபெயர் மட்டுமல்லாது செந்தில் என்றும் இதற்குப் பெயருண்டு. செந்து என்பதற்கு உயிர் என்பது பொருள்; ஆன்மாக்களின் உயிர்நிலையாக செந்திலாண்டவன் உறையும் ஆலயம் செந்தில் எனப் பெயரமைந்தது.
திருமணி விளக்கின் அலைவாய்ச்
செருமிகு சேய் (அகநா-266) எனப் பரணரும் குறிப்பிடுகின்றார்.
உலகம் புகழ்ந்த ஒங்குயர் விழுச்சீர் அலைவாய் எனத் திருமுருகாற்றுப் படையிலும் சீர்கெழு செந்திலும் செங்கோடும் வெண்குன்றும் என்று சிலப்பதிகாரத்திலும் சீரலைவாய் வரு சேயைப் போற்றுவோம் எனக் கந்த புராணத்திலும் இத்தலம் சிறப்பிக்கப்படுகின்றது.
செந்தூர் வேலனின் திருக்கோயில் முதன் முதலில் கடற்கரையோரத்திலுள்ள சிவப்புச் செங்கற் பாறைகளை அத்திவாரமாகக் கொண்டு கல்மலைமேல் 50 அடிகள்

உயரமுடைய ஒரு பகுதியைக் குடைந்து மூலத்தானம் அமைக்கப்பட்டது. பிற்காலத்தில் தான் இரண்டாவது மூன்றாவது திருச் சுற்றுக்கள் அமைக்கப் பெற்றன. இப்பொழுது விளங்கும் இவ்வழகிய பெருங்கோயில் மெளன சுவாமி என்பவரால் புனருத்தாரணம் செய்யப்பட்டது.
நீலத்திரைக் கடல் ஒரத்தில் நித்தம் தவம் செய்வதற்கு வாய்ப்பாயமையும், மிகப்பழமையான வரலாற்றுத் தொடர்புடைய இத் தலம் மன்னார் வளைகுடாக் கடற்கரையில் திகழ்கின்றது. செந்திலம்பதி, அலைவாய், செந்தில், செந்தி, செந்தூர் என்பது இத்தலத்தின் பெயர்களாகும். கலியுகத்தில் கைமேற்பலனளிக்கும் தலம். அலைவாயிலில் கந்தமாதன பர்வதத்தைக் குடைந்து இக்கோயில் கட்டப் பெற்றுள்ளது. கந்தமாதன பர்வதம் நுரைமணல் கல்மலையாகும். இக்கோயில் இப்பொழுது கருங்கற் திருப்பணியாக புதுப்பிக்கப் பெற்றுள்ளது.
ஜெயந்திபுரம், வீரவாகுபட்டினம் என்றெல்லாம் போற்றப்பெறும் இத்திருக் கோயிலின் கடற்கரைப் பாதையில் தூண்டுகை விநாயகர் அருட் காட்சி வழங்குகின்றார். அவரைப் பணிந்து சுமார் மூன்று பர்லாங்கு தூரம் சென்று கோயிலை அடைய வேண்டும். வழிநெடுகிலும் பக்தர்களை, வெயிலும், மழையும் துன்புறுத்தாமல் இருப்பதற்காக கல்மண்டபம் அமைத்திருக்கிறார்கள். கல்மண்டபப் பாதையினூடு சென்றால் தெற்கு நோக்கி நின்று திருவருள் சுரக்கும் செந்திலாதிபனின் சுந்தரக் கோயிலை அடையலாம். புலரிப் பொழுதில் எழும் சங்க நாதத்தின் ஒலி நமது நெஞ்சில் அகங்காரத்தை நீக்கி, பக்தி உணர்வை நிறைக்கும்.
இத்திருக் கோயில் ஒன்பது நிலை கொண்ட இராஜகோபுரத்துடன், மூன்று பிரகாரங்களுடன் காட்சி யளிக்கின்றது. சிற்பங்கள் செறிந்த இந்த இராஜகோபுரம் பற்றி ஒரு செவிவழிச் செய்தி உண்டு. சுமார் முந்நூறு ஆண்டுகளுக்கு முன்னர் திருவாவடுதுறை ஆதீனம் சுவாமிகள் ஒருவர் இந்த இராஜகோபுரத்தைக் கட்ட ஆரம்பித்ததாகவும், அதற்கு செந்திலா ண்டவனே மனித உருவில்வந்து வேலையாட்களுக்கு விபூதிப் பிரசாதத்தைக் கூலியாக அளித்து, அதனைத் தூண்டுகை விநாயகக் கோயிலைக் கடந்துதான் பார்க்க வேண்டும் என்று கூறியதாகவும், வேலையாட்கள் அவ்வாறு பார்த்த பொழுது அவரவர் செய்த வேலைக்கேற்ற கூலிப் பணமாக அது மாறியதாகவும், கூறுப்படுகின்றது.
இவ்வாலய மூன்றாவது திருச்சுற்று கடற்கரை ஓரமாகச் செல்லுகின்றது. சிறிது தொலைவு சென்றவுடன் வடபாகமாக கடற்கரையை ஒட்டியதுபோல் குடைவரைக் கோயில் ஒன்றினைக் காணலாம். இது வள்ளியம்மன் குகை என்று அழைக்கப்படும். கல்லும், மணலும் கலந்த குன்று ஒன்றைக் குடைந்து அமைக்கப்பட்டுள்ள கோயிலில் அது சிறிது தூரம் உட் சென்றால் உட்புறச் சுவரில் அர்த்த சித்திர வடிவில் உள்ள வள்ளியம்மனைக் கண்டு தரிசிக்கலாம். இக்குகையின் முன் பக்கத்தில் பதினாறு கால் மண்டபம் அமைந்து விளங்குகின்றது. குகையின் உட்புறச்
இந்துக் höFuTub

Page 240
சுவரில் செந்திலாண்டவன் சூரனைச் சங்கரிக்கும் திருக்காட்சியும் அர்த்த சித்திர வடிவில் காணப்படுகின்றது. இக்குகைக் கோயில் உள்ள இடத்திற்கு வள்ளி ஒளித்த வளநாடு’ என்ற பெயர் வழங்கப்படுகின்றது.
இக்குகைக் கோயிலின் மேற்குப் பக்கத்தில் அழகிய சோலையும் அதன் நடுவில் காற்று வாரிதி மண்டபமும் அமைந்துள்ளன. மூன்றாம் பிரகாரத்தின் மேற்கு பாகத்தில் வசந்த மண்டபமும், தெற்குப் பக்கத்தில் பிரதான வாயிலையுடைய சிறப்புமிக்க சண்முக விலாச மண்டபம் காட்சி தருகின்றன. இம் மண்டபத்தின் முகப்பில் ஆறுபடை வீடுகளைச் சித்திரிக்கும் அற்புதச் சிற்பங்கள் அணி செய்கின்றன.
சண்முக விலாச மண்டபத்தினின்று படிக்கட்டுக்களின் வழியாக நிலமட்டத்திற்குக் கீழே அமைந்துள்ள சிவிலி மண்டபம் எனப்படுகின்ற இரண்டாவது திருச்சுற்றை அடையலாம். இம்மண்டபத்தில் வரிசையாகக் காணப்படும் தூண்களில் சிற்ப எழில் நிறைந்த பால சுப்பிரமணியன், சண்முகர், நடராஜர், விநாயகர், தட்சிணாமூர்த்தி ஆகியோரைக் கண்டு மகிழலாம். இங்கேயுள்ள நிர்வாக அலுவலகத்தில் பாஞ்சாலங்குறிச்சி வீரபாண்டிய கட்டப்பொம்மன் வழிபட்ட சண்முக விக்ரகம் கண்ணாடிப் பேழையில் காட்சி தருகின்றது. கட்டப்பொம்மன் குடும்பத்தினர் முறுகிய முருக பக்தி கொண்டவர்கள். வீரபாண்டிய கட்டப்பொம்மனின் தந்தை ஜெகவீர கட்டப்பொம்மன் செந்திலாண்டவனின் உச்சிக்கால பூஜை நிறைவேறிய பிறகே உணவு உண்ணும் நியமம் பூண்டவர். இதற்காக பாஞ்சாலங் குறிச்சியிலிருந்து திருச்செந்தூர் வரையிலான ஐம்பது மைல் இடைவெளிகளில் நகர மண்டபங்கள் அமைத்து அவற்றில் முழங்கப்படும் முரசு ஒலியினின்று உச்சிக்கால பூஜை நிறைவேறியதை அறிந்துகொள்வார். அம்மண்டபங்கள் இன்னும் சிதைந்த நிலையிலே காணப்படுகின்றன.
ஒரு சமயம் அரசனும், அவரது மனைவிமார்களும் தங்கள் நகைகளையெல்லாம் செந்திற்பதிபுரக்கும் சிவன் மகனுக்கு காணிக்கையாக அளித்தனர். அரசனது மனைவியருள் ஒருவர் ஒரு அழகிய விலைமதிக்க வொண்ணா இரத்தினப் பதக்கத்தைத் தனக்கென்று வைத்துக் கொண்டார். அன்று இரவே செந்திலாண்டவன் ஜெகவீரனின் கனவில் தோன்றி, தனது தேவியாகிய வள்ளி, அரசனின் மனைவியிடமுள்ள இரத்தினப் பதக்கத்திற்கு ஆசைப்படுவதாகவும், ஆண்டியாகிய தன்னால் அவளது ஆசையை நிறைவேற்ற முடியாமல் இருப்பதாகவும் தெரிவித்தார். உடனே மன்னன் தன்மனைவி ஒளித்துவைத்துள்ள அப்பதக்கத்தை முருகனுக்குக் காணிக்கையாக்கினார். இன்றும் அந்த நகைகள் திருக்கோயிலில் இருக்கின்றன.
இரண்டாம் திருச்சுற்றின் மேற்குப் புறத்தில் சித்திவிநாயகர், சஹஸ்ரலிங்கம், சூரசங்காரர், ஆன்மநாதர், மனோன்மணியம்மை,
இந்துக்கலைக்களஞ்சியம்
21

பானுகேசுவரர், சோமசுந்தரர், மீனாட்சியம்மை, திருமூலநாதர், திருக்காளத்திநாதர், உமா மகேசுவரர், அருணாசலேசுவரர், உண்ணாமுலையம்மை, ஜம்புகேசவரர், வன்மீகநாதர், அருணகிரியார், வல்லபகணபதி ஆகியோரின் சந்நிதிகள் அமைந்துள்ளன.
இவற்றுள் சூரசம்ஹாரச் சிற்பம் ஒரே கல்லில் செதுக்கப்பட்டு அற்புதக் காட்சியை அளிக்கின்றது. தேவசேனாபதியாகிய சண்முகப் பெருமான் மயில்மீது அமர்ந்த கோலத்தில் சூரனுடன் போர்புரிவதாகவும், மார்பில் வேல் பாய்ந்த சூரபன்மன் பருந்து உருவில் எம்பெருமானை எதிர்த்துப் பாய்ந்து வருவதாகவும் செதுக்கப்பட்டுள்ள இச்சிற்ப எழில் காண்போரின் கருத்தை ஈர்க்கும் காந்தசக்தி வாய்ந்தது.
இரண்டாம் திருச்சுற்றின் வடபாகத்தில் வேங்கடமுடை யானுக்கும், சந்தான கிருஷ்ணனுக்கும் சந்நிதிகள் உள்ளன. இவற்றை தரிசித்துத் தென்பகுதியிலிருந்து முதற் சுற்றிற்குச் செல்லும் வாயிலில் வீரகேசரியும், வீரமார்த்தாண்டரும் காவல் புரிகின்றனர். திருச்சுற்றுள் நுழைந்தவுடன் தெற்குப் பக்கம் அமைந்துள்ள கோயில், வள்ளி தெய்வயானையாரோடு காட்சியளிக்கும் ஜெயந்திநாதர் என்று போற்றப்படும் குமாரவிடங்கப் பெருமானுக்குரியது. இத்திருச்சுற்றின் தென் மேற்குப் பகுதியில் வள்ளிநாயகிக்கும், வடமேற்குப் பகுதியில் தெய்வநாயகிக்கும் தனித்தனிக் கோயில்கள் பளிங்குக் கற்களால் அமைக்கப்பட்டுள்ளன.
இத்திருச் சுற்றின் மேற்குப் பகுதியில் சங்கர நாராயணர் காசி விஸ்வநாதர், விசாலாட்சி, வேதபுரீசுவரர், வாதபுரீசுவரர், நாகநாத சோமேசுவரர் ஆகியோருக்கும், வடக்குப் புறத்தில் மணிவாசகர், காரைக்காலம்மையார், சிவகாமியம்பா சமேத நடேசர், சனிசுவரர், பைரவர் ஆகியோர்க்கும் சந்நிதிகள் காணப்படுகின்றன.
இம்மூர்த்தங்களையெல்லாம் தரிசித்துக்கொண்டு மகாமண்டபத்தினுள் நுழைந்தால்,
பச்சைமயில் வாகனமும் பன்னிரண்டு திண்தோளும் அச்ச மகற்றும் அயில்வேலும், கச்சைத் திருவரையும் சீரடியும் செங்கையும் ஈராறு அருள் விழியும் மாமுகங்கள் ஆறும் விரிகிரணம் சிந்தப் புனைந்த திருமுடிகள் ஓராறும் எந்தத் திசையும் எதிர்த்தோன்ற வந்து இடுக்கண் எல்லாம் பொடிப்படுத்தி எவ்வரமும் தந்து புகுந்து
உல்லாசமாக அடியார் உள்ளத்தில் வீற்றிருக்கும் “ஆறுமுக நாயனார்’ என அன்போடு அன்பர் அழைக்கும் சண்முகப் பெருமான் திருக்காட்சி வழங்குகின்றார். தெற்கு நோக்கிய திருக்கோலம்; சண்முக விலாசத்தில் நின்றவாறே பெருமானை ஆனந்தமாகத் தரிசனம் செய்யலாம். சண்முகரைப் பற்றிய ஒர் செய்தி.

Page 241
இப்பெருமானை போர்த்துகீசியர்கள் களவாகத் தங்கள் கப்பலுக்குள் வைத்துத் தங்கள் நாட்டை நோக்கிப் பயணமாகும் பொழுது கடுங்காற்றும், மழையும் ஒருங்கு சேர்ந்து கப்பல் மூழ்கக் கூடிய பேராபத்தான சூழ்நிலை ஏற்பட்டது. இதனைக் கண்டு கவலையுற்ற கப்பல் தலைவன் தாங்கள் கொண்டுவந்த தெய்வ விக்கிரகத்தினாலேதான் இத்தகைய அபாயம் சூழ்ந்திருக்கிறது என்று அஞ்சி அவ்விக்கிரகத்தைக் கடலில் தள்ளிவிட்டான். சிறிது நேரத்தில் புயலும் மழையும் நிற்கவே அவர்கள் சென்றுவிட்டனர். பல ஆண்டுகள் சென்றுவிட்டன. சண்முகனைக் காணாமல் ஆலயத்திலுள்ளோர் கவலை கொண்டனர். ஒருநாள் முக்காணி ஒருவரின் கனவில் தோன்றி தான் கடலினுள் இருப்பதாகவும், அவ்விடத்தை எளிதில் கண்டு பிடிக்க அங்கே ஒர் எலுமிச்சம் பழம் மிதக்கும் என்றும் முருகப் பெருமான் அருளினார். கனவிலே பெருமான் காட்டிய இடக் குறிப்பை அறிந்து ஆலயத்தினர் சண்முகரை மீட்டெடுத்து வந்தனர். இன்றும் சண்முகரின் திருமேனியில் மீன்கள் கொத்திய வடுக்கள் உள்ளன என்பர்.
ஆறுமுகனின் சந்நிதிக்குச் சற்று மேற்கில் அமைந்து விளங்குகின்றது மூலவரின் கர்ப்பக் கிருகம்; இக் கருவறையின் முன் அமைந்துள்ளது அர்த்த மண்டபம். இம்மண்டபத்து வாயிலில் நவவிரர்களில் வீரவாகுதேவரும், வீரமகேந்திரரும் காவல் புரிகின்றனர். அர்த்தமண்டபத்தின் தூணில் ஆதிசங்கரர் காட்சிகொடுக்கின்றார்.
அர்த்த மண்டபத்தையடுத்து கருவறையிலே செந்திலாண்டவர் கிழக்கு நோக்கி நின்று பக்தர்களின் மனத்துயர்களையெல்லாம் மாற்றியருள் புரிகின்றார். இங்கு மூலத் தானத்தின் தனிச்சிறப்பு மூலவரான பாலசுப்பிரமணியர் கையிலே தாமரை மலரை ஏந்திக் கொண்டிருப்பது. இதற்கும் ஒர் காரணம் உண்டு. சூரனை வதைப்பதற்காகச் செந்திற்பதியானாகிய குமரப்பெருமான் வழக்கம் போல சிவபெருமானுக்கு பூஜை செய்து கொண்டிருக்கும் பொழுது நாரத முனிவர் வந்து துதிக்கவும் அர்ச்சனை செய்யும் நிலையிலேயே திரும்பிப் பார்த்தாராம். அந்த அவசரத்திலேயே இன்றும் பக்தர்களுக்கு பூஜை மூர்த்தமாக தரிசனம் தந்து கொண்டிருக்கின்றார். மேலும் செந்திற்பதி இத்துணை சிறப்போடு விளங்குவதற்குக் காரணம் மூலத்தானத்திலுள்ள விளாங்காய் அளவு பரிமாணமுள்ள சுப்பிரமணிய சாளக் கிராமத்தின் அற்புத சக்திதான் என்று கூறுகின்றார்கள். வீரபாகு தேவருக்கு பூஜை முடிந்த பிறகே மூலவருக்கு இங்கு பூஜை நடக்கும்.
சரித்திர வரலாற்றினையொட்டிப் பார்க்கும் பொழுது திருச்செந்தூர் சேரநாட்டைச் சார்ந்தது என்று கூறுவதற்குக் காரணம், சேரமன்னர்களும், பின்பு கேரள அரசர்களுமே நெல்லை மாவட்டத்தை ஆண்டு வந்திருக்கின்றனர். மேலும் திருச்செந்தூரில் கேரள ஆகம ஆசார வழிபாட்டு முறைதான் கைக் கொள்ளப்படுகின்றது. ஆரம்பத்தில் திரிசுதந்திரர்கள்

செய்துவந்த பூஜை முறையைப் போற்றிமார் என்னும் முக்காணியர்களே தற்பொழுது செய்து வருகின்றனர்.
செந்தில் வாழந்தணர்கள் திரிசுதந்திரர்’ எனப்பெயர் பெறுவர். இவர்கள் கங்கைக் கரையில் தவம் செய்து, பூலோக, சுவர்க்க லோகம், சத்திய லோகம் ஆகிய மூன்று உலகங்களிலும் சென்று வசிக்கும் சுதந்திரத்தை, பிரமன், சிவன், திருமால் என்னும் மும்மூர்த்திகளிடமும் வரமாகப் பெற்று மூவுலகிலும் சஞ்சரிக்கும் 'திரிசுதந்திரர்’ என்று பெயர் பெற்றனர். திரிசுதந்திரர் 78,000 பேர்கள். அவர்களுள் திருச்செந்தூர் திரிசுந்திரர்கள் 2,000 பேர்.
திருச்செந்தூரில் திரிசுதந்திரர்களே முருகன் - முருகனே திரிசுதந்திரர்களாகும் என்பர். அதனால் முருகனுக்கு 'திரிசுதந்தராபேத மூர்த்தி' என்ற பெயர் அமைந்தது என சுப்பிரமணிய பராக்கிரமம் கூறும். •
திருச்செந்தூரில் அதிகாலை நான்கு மணிக்கு வதனாரம்பம் என்னும் கடல் தீர்த்தத்தில் நீராடி, பின்பு ஸ்கந்த புஷ்கரணி என்னும் நாழிக்கிணற்றில் நீராடி கிழக்கு வாசல் வழியாக வந்து, சரியாக ஐந்துமணிக்குப் பள்ளியறை திறந்தவுடனே 'விஸ்வரூப தரிசனம் கிடைக்கும். இந்த சிறப்பான தரிசனம் காண ஆயிரக்கணக்கான மக்கள் கூட்டம் நெருக்கியடிக்கும். இதேபோல இரவு அர்த்தசாம தரிசனமும் சிறப்பானது. அபிஷேகங்களுக்குள்ளே தாராபிஷேகம் என்னும் பாலாபிஷேகம் சிறப்பு வாய்ந்தது. சண்முகார்ச்சனையும் சிறப்புப் பொருந்தியது
அதிகாலை விஸ்வரூபதரிசனம் முடிந்து, கொடி மரத்தின் தெற்குப் பக்கத்திற்கு வந்தால் நூற்றுக் கணக்கான அந்தணர்கள் வரிசையாக நின்று கொண்டு 'அம்போதி மத்தியே என்று ஆரம்பிக்கும் குமார உபநிஷத் சுலோகங்களை ஒரே குரலில் ஒரே சுருதியில் கூறி வணங்கும் காட்சி மெய்சிலிர்க்க வைக்கும்.
இத்தலத்தில் பன்னீர் இலைப் பிரசாதம் சிறப்பானது. விஸ்வாமித்ர முனிவர் இத்தலத்திற்கு வந்து முருகனை வழிபட்டு இலை விபூதிப் பிரசாதம் பெற்று குன்ம நோய் நீங்கப் பெற்றதாக புராண வரலாறு கூறுகின்றது. பன்னீர் இலையில் பன்னிரண்டு நரம்புகள் உண்டு. ஆறுமுகன் தனது பன்னிரண்டு கரங்களாலும் வழங்குவதாக ஐதிகம். இந்த இலைவிபூதியின் மகிமையை ஆதிசங்கரர் தனது சுப்பிரமணிய புஜங்கத் தோத்திரத்திற் கூறியுள்ளார். குமார உபநிஷதத்தின் கடைசிப் பாடலும் இதன் பெருமையைக் கூறும்.
வேதங்களே இத்தலத்தில் பன்னீர் மரங்களாக நின்று செந்திலாண்டவனை வணங்குவதாக ஐதீகம்.
அலைவாய் அற்புதங்கள்
செந்தில்மேய செவ்வேளின் திருவருளால் இத்தலத்தில் பல அற்புதங்கள் நிகழ்ந்துள்ளன. அவற்றுள் ஒரு சில:

Page 242
1803இல் திருநெல்வேலியில் கலக்டராக இருந்தவர் லூஷிங்டன் என்ற ஆங்கிலேயன், திருச்செந்தூரிலே அவர்கள் முகாமிட்டிருந்தனர். அப்பொழுது திருவிழாச் சமயம். செந்திலாண்டவனை வசந்தமண்டபத்தில் எழுந்தருளச் செய்து பக்தர்கள் மயில் இறகு விசிறியால் விசிறிக்கொண்டிருந்தனர். இதனைக் கண்ட துரை 'உங்கள் தெய்வத்திற்கு வியர்க்கின்றதோ என்று கேலியாகக் கூற, உடனே பக்தர்கள் பெருமானின் மீதிருந்த மாலைகளைக் கழற்றி விட்டு கோடித்துணியால் பெருமானைப் போர்த்தினர். சிறிது நேரம் கழித்து அத்துணி முழுவதும் நனைந்ததோடு, வியர்வை நிலத்திலும் வழிந்து ஒடியது. இதனைக் கண்ட லூஷிங்டன் துரை அச்சத்தால் நடுக்குற்றார். அக்கணம்முதல் செந்திலாண்டவனின் பக்தராகி, ஏராளமான காணிக்கைப் பொருட்களை எம்பெருமானுக்குச் செலுத்தினார்.
இத்தலத்தில் வாழ்ந்து வந்த தேவதாசி ஒருத்தி முருகப் பெருமானிடம் தீவிர அன்பு பூண்டவள். நாள்தோறும் இரவு நேரத்தில் பாமாலைகளைப் பாடி பரவசமுற்று பள்ளியறைத் தரிசனம் முடிந்த பிறகே வீடு திரும்புவது வழக்கம். ஒருநாள் இரவு, அவள் தரிசனம் முடிந்து இல்லம் திரும்பும் பொழுது அவளது நகைகளை அபகரிப்பதற்காக இரண்டு திருடர்கள் அவளைப் பின் தொடர்ந்தனர். வர இருக்கும் ஆபத்தை அறியாத அந்தப் பெண் கையிலிருந்த வெற்றிலையின் காம்பை முருகா என்று கூறிய வண்ணம் கிள்ளி எறிந்து தாம்பூலத்தை மென்றாள். கிள்ளி எறியப்பட்ட வெற்றிலைக் காம்பே வேலாக மாறி அக்கள்வர்களைக் கொன்று தனது அடியவளைக் காப்பாற்றியது.
திருநெல்வேலியிலிருந்து பதினெட்டுக் கல் தொலைவிலுள்ளது பூரீ கைலாசம் என்ற ஊர். அவ்வூரிலே வாழ்ந்த சண்முக சிகாமணிக்கவிராயருக்கும், சிவகாம சுந்தரி அம்மைக்கும் அழகிய ஆண்மகவு ஒன்று பிறந்தது. பிறந்த குழந்தை ஐந்து வயது வரையில் பேசமுடியாத ஊமையாக இருந்தது. கவலை கொண்ட பெற்றோர் குழந்தையை திருச்செந்தூருக்கு எடுத்துச் சென்று இறைவன் முன்னிலையில் பாடுகிடத்தி, நாள்தோறும் அலைவாய்த் தீர்த்தமாடி இறைவன் சந்நிதியில் கண்ணிர் பெருக்கி நோன்பியற்றினர். ஒருநாள் இரவு செந்திலாண்டவன் குழந்தையின் நாவை அசைத்துப் பேசுமாறு அருள் புரிந்தார். குழந்தையும் குமரனையே குருவாகப் பெற்று குமரகுருபரனாகி, முதல் முதலிலே ‘கந்தர் கலிவெண்பா பாடி பல பக்தி இலக்கியங்களை அருளியது.
சேது மன்னர் ஆட்சிக்கு உட்பட்ட சதுர் வேதி மங்கலமான சன்னாசிக் கிராமத்தில் பிறந்த வைணவ சமயத்தைச் சார்ந்தவர் பகழிக்கூத்தர்.
இவர் தீராத வயிற்று நோயினால் துன்பமுற, செந்திலான்இவரைப் பிள்ளைத் தமிழ் பாடுமாறு பணித்தான். அவ்வண்ணமே பகழிக்கூத்தரும் திருச்செந்தூர்ப் பிள்ளைத் தமிழ்பாட வயிற்று வலி நீங்கியது.
இந்துக்கலைக்களஞ்சியம்
21 (

இவரது பிள்ளைத் தமிழ் சபையில் அரங்கேறியதும், வைணவர் என்ற காரணத்தினால் வேண்டுமென்றே சிலர் மரியாதை செய்யாது புறக்கணித்தனர். அன்றிரவே முருகவேளுக்குச் சாத்தப்பட்டிருந்த இரத்தினப்பதக்கம் காணாமற் போக, ஆலயத்திலுள்ளோர் அனைவரும் தேட அப்பதக்கம் உறங்கிக் கொண்டிருந்த பகழிக் கூத்தர் கழுத்தில் அணிவிக்கப் பட்டிருந்ததைக் கண்டு, தாங்கள் இழைத்த குற்றத்தினைப் பொறுக்குமாறு வேண்டி, பகழிக் கூத்தரைப் பல்லக்கில் ஏற்றி ஊர்வலம் வந்து மரியாதை செய்தனர்.
வென்றிமாலையர் என்பவர் ஒரு அந்தணர், திருச்செந்தூர்க் கோயிலில் மடைப்பள்ளி வேலை செய்து கொண்டிருந்தவர். ஒரு நாள் நைவேத்தியம் சிறிது கால தாமதப்பட கோயில் அதிகாரிகள் இவரைத் தண்டித்தனர். மானமிழந்து வாழ்வதைவிட கடலிலே வீழ்ந்து மடிவதே மேல் என்று துணிந்த பொழுது செந்தில் முருகன் ஒரு அன்பர் போலத் தோன்றி, "அன்பனே! நீ திருச்செந்தூர்த் தலத்தின் மான்மியத்தைத் தமிழிற் பாடுவாயாக. வடமொழி மூலம் செவ்வல் என்னும் ஊரில் கிருஷ்ண சாஸ்திரிகளிடம் இருக்கின்றது. அதை அவர் தமிழில் மொழிபெயர்த்துத் தருவார் - அதனைப் பாடலாகப் பாட உனக்கு வாக்கு நலம் ஏற்படும்” என்று கூறி மறைந்து விட்டார்.
முருகன் திருவருளால் திருச்செந்தூர்ப் புராணத்தைப் பாடி முடித்தார் அவர். அதை அரங்கேற்ற முற்படும் பொழுது திரிசுதந்தரர்களாகிய அந்தணர்கள் இவரை அசட்டை செய்து இகழ்ந்தனர். இதனால் மனம் நொந்த வென்றி மாலைக் கவிராயர் புராண ஏடுகளைக் கடலிலே வீசி எறிந்து விட்டு சிவயோக பரராய்க் கந்தப் பெருமானின் கழலிணையை அடைந்தார்.
கடலிலே வீசப்பட்ட திருச்செந்தூர்ப் புராண ஏடு அலைகளால் ஒதுக்கப்பட்டு ஈழத்தேசத்தில் யாழ்ப்பாணத்துக் கருகே ஒருவரிடம் கிடைத்தது. அப்புராணம் வைத்திருந்தவரின் தெருவில் மட்டும் சக்கர சுவாசம் என்ற விஷக்காற்று வராமல் இருப்பதைக் கண்டு ஊரார் வியந்த பொழுது, முருகவேள் அவர்கள் கனவில் தோன்றி, இன்னாரிடத்தில் எமது புராணம் உள்ளது. அதன் பெருமையால்தான் விஷநோய் அத்தெருவில் பரவவில்லை என்று எடுத்துரைத்தார்.
ஊராரும் அந்நூலைப் பக்தியுடன் பூசித்து அனைவரும் வாசித்துத் திருவருள் பெற்றனர் புராணம் கிடைத்த இடம் பனைமுனை', 'புராமுனை எனத் தெரிகின்றது.
மூர்த்திச் சிறப்பும், தலச்சிறப்பும், தீர்த்தச் சிறப்பும், நன்கு சிறந்து விளங்குவது இரண்டாம் படைவீடாகிய திருச்செந்தூர். இத்திருத்தலத்திற்கு கடலோரமாக 24 தீர்த்தங்கள் இருப்ப தாகவும், அவை காயத்ரி மந்திரத்தின் இருபத்தி நான்கு எழுத்துக்களுக்கு ஒப்பானவை என்றும் புகழப்படுகின்றன.
(வ.வை)

Page 243
செம்பாலை
ற்ற்பெரும் பண்களுள் குறிஞ்சி, மருதம், முல்லை, பாலை யாழ் ஆகியன குறிப்பிடப்பட்டுள்ளன. பாலை யாழினுள்ளே (பண் யாழ் என்றும் குறிப்பிடப்படும்) செம்பாலை முதலாய ஏழு பாலைகள் பிறக்கும், ஏழுவகைப் பாலை பற்றிய குறிப்பு சங்க இலக்கியங்களில் பரிபாடலில் மட்டுமே பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது. “புரி நரம்பின் கொளைப் புகல் பாலை ஏழும்" ஏழு பாலைகளும் வருமாறு:
அரும்பாலை - கைக்கிளை கோடிப்பாலை - உழை மேற் செம்பாலை - விளரி விளரிப்பாலை- இளி செம்பாலை - தாரம் படுமலைப்பாலை - குரல்
செவ்வழிப்பாலை - துத்தம்
ஒரு இராசி வட்டத்தில் (ஏழு சுரங்கள்) பன்னிரு இசைநிலை (12 சுரஸ்தானங்கள்) களை கொண்டு குரல் திரிபு உறழ்தலின் மூலம் ஏழு பாலைகள் பிறக்கின்றன. சிலப்பதி காரத்தில் அரங்கேற்றுக்காதை, வேனிற்காதை, ஆய்ச்சியர் குரவை ஆகிய மூன்று பகுதிகளிலும் இவ்வாறு வலமுறை (வட்டப்பாலையின் பன்னிரண்டாம் இராசியிலிருந்து மீனம், மேடம், இடபம், மிதுனம் என்ற முறையில் சரிகம என்று வலமாக செல்லுதல்) இடமுறை (வட்டப்பாலையில் இடபத்தில் தோன்றிய குரல் இடபம், மேடம், மீனம் . என்று இடமாக செல்லுதல்) ஆகிய இரு முறைகளில் பிறக்கும் ஏழு பாலைகளின் பிறப்பு மிகவும் விளக்கமாகக் கொடுக்கப்பட்டுள்ளது.
குடமுதலிட முறை யாக்குரறுத்தம் கைக்கிளை யுழையிளி விளரிதாரமென விரிதரு பூங்குழல் வேண்டிய யெரே என்னும் ஆய்ச்சியர் குரவைப் பகுதிக்கு கொடுக்கப்பட்டுள்ள அரும்பதவுரை, அடியார்க்கு நல்லார் உரைகளை ஆதாரமாகக் கொண்டு இடமுறையில் உழை குரலாயது செம்பாலை எனவும் வலமுறை குரல் - குரலாயது செம்பாலை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
பஞ்சமரபில் செம்பாலைக்குரிய ஏழிசையின் தான நிலைகளை இராசி வீடுகளில் மற்றொரு விதமாக கொடுக்கப்பட்டுள்ளது.
ஏத்துமிடபமலவனுடன் சியம் கோற்றணுக் கும்பமொடு மீனமிவை- பார்த்துக் குரல் முதற் தாரம் இறுவாய் கிடந்த நிரலேழுஞ் செம்பாலை நேர் இவ் வெண்பாவில் செம்பாலைக்குரிய ஏழிசைகள் குரல் முதல் தாரம் இறுதியான ஏழு இராசிக்கும் பின்வருமாறு நிறுத்தப்படுகின்றன.

217
இடபம் - குரல் - ஸ்ட்ஸம் கர்க்கடகம் - துத்தம் - சதுஸ்ருதி ரிஷபம் சிம்மம் - கைக்கிளை - சாதாரண காந்தாரம் துலாம் - உழை - சுத்தமத்திமம் தனுசு - இளி - பஞ்சமம் கும்பம் - விளரி - சதுஸ்ருதி தைவதம் மீனம் - தாரம் - கைசிகி நிஷாதம்
இவ்வாறு செம்பாலையின் நேர் செம்பாலை என்று உரையாசிரியர் கூறுகின்றார்கள்.
இதில் கூறப்பட்டுள்ளபடி இது தற்போதைய கரகரப்பிரியா ராகத்திற்கு ஒப்பானது (பஞ்சமரபு).
பாலைகள் குறித்த ஆய்வினை மேற்கொண்ட இசை ஆய்வாளர்களிடையே இப்பாலைக்குரிய தற்காலப் பெயர்களில் கருத்து வேற்றுமைகள் நிலவுகின்றன. கருனாமிர்த சாகரம் என்னும் ஆய்வு நூலை எழுதிய தஞ்சை ஆபிரகாம் பண்டிதர் செம்பாலைப் பண் தற்கால சங்கராபரண ராகத்திற்கு ஒப்பானது எனக்குறிப்பிட்டுள்ளார். விபுலானந்த அடிகள், இசைப் பேராசிரியர் சாம்பமூர்த்தி ஆகியோர், செம்பாலை ஹரிகாம் போதிக்கு இணையானது என்கின்றனர். அவ்வாறே எஸ். இராமநாதன் என்பவரும் செம்பாலை காம்போதி என்கிறார். செம்பாலையுட் பிறக்கும் பண்களுள் சீர்கோடிகம், நாகராகம், கெளடி, ஆகிரி, ஆகியன குறிப்பிடப்பட்டுள்ளன. (தேஹ.)
செல்வச்சந்நிதி
இது முருகத்தலங்களுள் ஒன்று. இலங்கையில் யாழ்ப்பாண மாவட்டத்தில் வடமராட்சிப் பிரதேசத்தில் வல்வெட்டித்துறை நகரை அடுத்து அமைந்துள்ள தொண்டைமானாறு என்னுங் கிராமத்தில் இம்முருகன் கோவில் அமைந்து விளங்குகிறது.
தொண்டைமானாறு என்ற பெயர் முதலாம் குலோத்துங்க சோழனின் படைத்தளபதியாகிய கருணாகரத் தொண்டை மானோடு தொடர்புடையதாகக் கருதப்படுகிறது.
"பன்னிரண்டாம் நூற்றாண்டின் முற் பகுதியில், குலோத்துங்கன் சோழ நாட்டிலே தன்னரசை நிலை நிறுத்திய பின், தன் தளகர்த்தனாகிய கருணாகரத் தொண்டைமானுடன்தண்டனுப்பி இலங்கையையும் கலிங்கத்தையும் வெற்றி கொண்டான் என அவன் சாசனங்கள் கூறும் இலங்கைப் போர்கலிங்கப் போருக்கு முந்தியது என கலிங்கத்துப் பரணியால் அறியக்கிடத்தலின் விஜயவாகு இறந்தபின் கிபி 10ஆம் ஆண்டளவில் இலங்கைப் போர் நடந்ததெனத் தீர்மானிக்கலாம். கருனாகரன் இலங்கைக்குப் படையெடுத்து வந்தபொழுது, யாழ்ப்பாணத்தில் கரணவாய், வெள்ளைப் பரவை என்னுமிடங்களில் உப்பு அளவின்றி விளைந்து அழிந்து போவதைக் கண்டு அவ்வுப்பைச்
இந்துக்க க்களஞ்சியம்

Page 244
சோழ தேசத்துக்கு அனுப்புவதற்கு வேண்டிய பிரயத்தனங் களைச் செய்தான். அவனுடைய உப்பேற்றும் மரக்கலங்கள், காற்றின் உக்கிரத்துக்கு இலக்காகாது ஒதுங்கிநிற்கக்கூடிய ஒரு துறையாக தொண்டைமானாற்றை வெட்டு வித்து இப்போது உரும்பிராய்க் குறிச்சியில் இருக்கும் கருணாகரப் பிள்ளையார் கோயிலையும் கட்டுவித்தான்.” (யாழ்ப்பாணச் சரித்திரம்)
இன்று வல்லைவெளி என்று வழங்கும் வெளியூடாக ஓடிய வல்லிநதியின் தொடுவாயை கருணாகரத் தொண்டைமான் வெட்டி ஆழப்படுத்தியதாலேயே தொண்டைமான் ஆறு என்ற பெயருடன் உப்பு நீருடையதாக இன்று விளங்கும் நீர்நிலை உருவானது என்று கூறப்படுகிறது.
ஆறு போன்று நீண்டு கிடக்கும் அந் நீர்நிலையின் அருகே விளங்கும் இக்கிராமமும் தொண்டைமானாறு என்ற பெயரைப் பெற்றது. இக்கிராமத்திலேயே பாரம்பரியச் சிறப்புக்கள் மிக்கதான செல்வச் சந்நிதி ஆலயம் அமைந்துள்ளது. இவ்வாலயத்தின் தலவிருட்சமாக பழமை வாய்ந்த பூவரச மரம் விளங்குகிறது. இவ்வாலயத்துக்கு சின்னக் கதிர்காமம், செல்லக் கதிர்காமம், கல்லோடை என்ற பெயர்களும் உண்டு.
இப்பெயர்களுக்கு விளக்கமளிப்பனவாக செல்வச் சந்நிதி பற்றிய பல கர்ண பரம்பரைக் கதைகளும் வழங்குகின்றன. அக்கதைகளுள் ஒன்று வீரவாகு தேவரை இத்தலத்துடன் தொடர்புறுத்துவதாக அமைந்துள்ளது. தேவாசுர யுத்தம் ஆரம்பமாவதற்கு முன்பாக முருகப் பெருமான் திருச்செந்தூரிலே இருந்து கொண்டு மகேந்திரபுரியில் இருந்த சூரபத்மனிடம் வீரவாகு தேவரைத் தூதாக அனுப்பிய வேளை தன் கடமையை முடித்துத் திரும்பிய வீரவாகு தேவர் வல்லிநதிக்கரையிலுள்ள கல்லோடைப் பகுதியில் கால்பதித்தாரென்றும் அவ்வேளை முருகப்பெருமானுக்குச் செய்யவேண்டிய சந்திப்பூசை பற்றிய எண்ணம் உதிக்க அவ்விடத்திலேயே வேல் ஒன்றைப் பிரதிட்டை செய்து வழிபட்டுச் சென்றதாகவும் கல்லோடையில் அமைந்த அவ்வேலைப் பல முனிவர்களும் யோகிகளும் வழிபட்டு முத்தியடைந்ததாகவும் கல்லோடையில் அமைந்த வேல்முருகன் கல்லோடைக் கந்தன்' என அழைக்கப்படுகிறான் என்றும் அந்த ஐதீகம் கூறுகிறது.
செல்வச் சந்நிதி பற்றி நிலவும் மற்றோர் ஐதீகம் வருமாறு : தன் கட்டளைப்படி ஒழுகத்தவறிய ஐராவசு என்ற கந்தர்வனை வியாழ பகவான் யானையாகப் போகும்படி சபித்தார், யானையாக உருமாறிய ஐராவசு கதிர்காமக் காடுகளில் அட்டகாசம் செய்தபடி அலைந்து திரிந்து ஈற்றில் சிகண்டி முனிவரைத் தாக்க முற்பட்டான். ஞான திருஷ்டியால் அந்த யானையின் வரலாற்றை உணர்ந்து கொண்ட சிகண்டி முனிவர், வெற்றிலை ஒன்றினை வேற்பெருமானாக நினைத்து ஆறெழுத்து மந்திரத்தை உச்சரித்தபடி யானையின் நெற்றியில் அடிக்கவே, அது அலறி வீழ்ந்து மீண்டும் கந்தர்வனாக மாறியது. கந்தர்வன் சிகண்டி
இந்துக்கலைக்களஞ்சியம்
218

முனிவரை வணங்கி தனக்கு முத்திப்பேறு வேண்டி நின்றான். சிகண்டி முனிவர் அவனைச் செல்வச் சந்நிதிக்கு ஆற்றுப்படுத்த அவன் அங்குசென்று கல்லோடைத் தலத்தில் ஒரு பூவரச மரத்தின் கீழ் முருகப் பெருமானைத் தியானித்து முத்தியடைந்தான். அதுவே தலவிருட்சமாக விளங்கும் பூவரசு. சிகண்டி முனிவர் மதயானையை வெற்றிலை நுனியால் அடித்ததை நினைவு படுத்துமுகமாக இன்றும் எழுந்தருளி வேலின் முகப்பில் வெற்றிலை நுனி பதிக்கப்படுகிறது.
செல்வச் சந்நிதி ஆலயம் முற்காலத்தில் மிகப்பெரிதாக விளங்கியதென்றும் போர்த்துக்கேயர், ஒல்லாந்தர் ஆகியோரால் அழிவுக்குள்ளானதென்றும் கூறப்படுகிறது.
ஒல்லாந்தராட்சியின் இறுதியில் அழிவுற்ற கோயில் இருந்த இடத்தில் தொண்டைமானாற்றைச் சார்ந்த செட்டிமார் சிறு கோவிலொன்றை அமைத்து வழிபட்டார். காலகதியில் அவர்களுக்குள் உண்டான முரண்பாடுகளால் பூசைகள் விடுபட்டுக் கோயில் பூட்டிவைக்கப்பட்டது. அந்நிலையில் முருகப் பெருமானே தனது உண்மைப் பக்தரான மருதர் கதிர்காமர் என்பவரிடம் பூசைப் பொறுப்பை ஒப்படைத்தார் என்றவாறாக தற்போதைய செல்வச் சந்நிதி கோவிலின் வரலாறு பேசப்படுகிறது.
கடற்றொழிலாளியான கதிர்காமரைத் தன்னுடைய பூசைப் பொறுப்பை ஏற்கும்படி கூறிய முருகனிடம் கதிர்காமர் "எனக்கு மந்திரங்கள் ஏதும் தெரியாதே, நான் எவ்வாறு பூசை செய்வது?” என்று தயங்கி நிற்கவே முருகன், 'நீ மந்திரம் ஏதும் இன்றி வாய்கட்டிப் பூசை செய்” என்று கூறியதாகவும், அத்தகைய பூசை முறையை உணர்த்துவதற்காக கதிர்காமரை கண்ணிமைப் பொழுதுக்குள் கதிர்காமம் கொண்டு சென்று அங்குள்ள பூசை முறைகளைக் காட்டியதுடன் பிரதிட்டை செய்வதற்காக ஒரு வேலையும் கொடுத்தார் என்றும், அந்த வேலை அவர் செல்வச் சந்நிதியில் பிரதிட்டை பண்ணி வழிபடுவதைச் செட்டிமார் தடுக்கவே கதிர்காமர் அன்னதான மடமொன்றில் வேலை வைத்து வணங்கி வந்தார் என்றும், விரைவில் முருகன் அருளால் செட்டி வம்சம் அழிந்து போகும் நிலை ஏற்பட்டதென்றும், அந்நிலையில் எஞ்சி நின்ற ஒரு செட்டியால் கோயிற் பொறுப்பு முழுவதும் கதிர்காமரிடம் ஒப்படைக்கப்பட்டது என்றும், கதிர்காமர் ஆலயத்தை நன்கு பராமரித்துப் பூசை செய்து வந்தாரென்றும் பூசை முறைமைகள் யாவும் அவ்வப்போது முருகப் பெருமானாலேயே அவருக்கு உணர்த்தப்பட்டது என்றும், அந்த வழிமுறைகளிலேயே செல்வச் சந்நிதி நித்திய வழிபாடுகளும் திருவிழாக்களும் இன்று வரை இடம்பெற்று வருகின்றன என்றும் கூறப்படுகிறது.
செல்வச் சந்நிதி கோயில் அமைதியும் அழகும் சூழ்ந்த இடத்தில் மிக எளிமையானதாக விளங்குகிறது. மிகச் சிறிய தூபியுடனான மூலஸ்தானமும் ஒடு வேய்ந்த மண்டபங்களும் மிக

Page 245
உயர்ந்த ஒரு மணிக் கோபுரமும் உயர்ந்த சுற்று மதில்களைக் கொண்டமையாது எங்கிருந்தும் நோக்கக் கூடிய வகையில் அமைந்துள்ளன. கோயிலின் பின் புறத்தே தொண்டமானாறு நீண்டு பரந்து கிடக்கிறது. கண்ணுக்கெட்டிய தொலைவில் பாக்கு நீரிணைக் கடல் விளங்குகிறது. கோயிலைச் சூழவும் சிறு கேணிகள் சிலவும் நெடிதுயர்ந்து நிழல் விரிந்த மருத மரங்களும் தெய்வீகத் தோற்றத்தைக் கோயிலுக்கு வழங்கி நிற்கின்றன. சந்நிதிக் கோயிலைப் பொறுத்தவரையில் விசேடமாகக் குறிப்பிடப்படவேண்டியது அதன் சுற்றாடலில் அமைந்து விளங்கும் பல்வேறு மடங்களாகும் அவை ஞானியரின் தவச் சாலைகளாயும் திக்கற்றவர்க்குப் புகலிடமாயும் நாளும் அன்னம் பாலித்து நின்று செல்வச் சந்நிதி முருகனுக்கு அன்னதானக் கந்தன்' என்ற சிறப்புப் பெயரைப் பெற்றுக் கொடுத்துள்ளன.
செல்வச் சந்நிதி கோயில் ஆகமமுறைப்படி அமைந்த கோவில் அல்ல. அதன் மூலத்தானத்திற் பிரதிட்டை செய்யப்பட்டிருப்பது முருகனின் திருப்படையான வேலாயுதமே. அவ்வகையில் செல்வச் சந்நிதி கோயில் ஈழத்தின் திருப்படைக் கோயில்களுள் ஒன்றாக விளங்குகின்றது.
சந்நிதி கோயிலில் பூசை வழிபாடுகளை நிகழ்த்துவிக்கும் பூசகர்களும் பிராமணரல்லாதவர்களே. கதிர்காமத்தில் வேடுவ மரபினர் பூசகராய் விளங்குவது போல இங்கு கரையர்குல மரபினர் பூசகராய் விளங்குகின்றனர். கதிர்காமத்திற் போலவே இங்கும் மந்திரம் முதலியனவின்றி வாய்கட்டிய நிலையிலேயே பூசை செய்யப்படுகிறது. இக்கோயிலுக்கென்றே சிறப்பாக அமைந்த பூசை வழிபாட்டு மரபுகளும் திருவிழாக்களும் உண்டு.
ஆவணி மாதத்துப் பூரணைக்கு முந்திய அமாவாசை நீங்கிப் பிரதமை கூடும் வேளையில் கொடியேற்றம் ஆவணிமாதப் பூரணையில் தீர்த்தத் திருவிழாவுடன் சந்நிதி கோயிலின் வருடாந்த மஹோற்சவம் நிறைவு பெறும். இங்கு நிகழும் கொடியேற்றம் ஆகம மரபு சார்ந்த ஏனைய கோயில்களின் கொடியேற்றம் போன்றதல்ல தனித்துவமானது. இங்கு கொடிக்கம்பமும் இல்லை. திருவிழாக் காலங்களில் இக்கோயிலுக் கேயுரிய சிறப்பான அலங்காரங்களோடு சுவாமி வீதிவலம் வருவார். தீர்த்தோற்சவத்துக்கு முதல் நாள் தேர்த்திருவிழா இடம்பெறும். இக்கோயிலுக்காக நிர்மாணிக்கப்பட்ட நெடிதுயர்ந்த புதிய சித்திரத்தேர் 1986இல் படையினரால் எரித்து நாசமாக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
சந்நிதி முருகன் கோவில் கதிர்காமத்தோடு தொடர்புபட்டதென்ற ஐதீகத்தினடிப்படையிலும் சில விழாக்கள் நிகழ்த்தப்படுகின்றன. கதிர்காமத் திருவிழாக்காலத்தில் சந்நிதி முருகனே அங்கு செல்கிறார் என்ற கருத்தில் கதிர்காமக் கொடியேற்றத்துக்கு முதல் நாள் மாலை மங்கும் வேளையில்

219
ஆலயத்துக்கு முன்னேயுள்ள அரசமரம் வரையில் இருபுறமும் திருவிளக்கேற்றி பூரண கும்பங்கள் வைத்து'வேல் அனுப்பும் விழா நடைபெறும் வழக்கம் உண்டு. அந்த வழியனுப்பும் பூசையின் போது முருகனுக்கு உழுத்தம் பிட்டு நிவேதிக்கப்படும். அதைப் பயணப் பிட்டு என்று அழைப்பார்கள்.
செல்வச் சந்நிதியில் முருகனுக்குப் படைக்கப்படும் படையல்கள் சில அத்தலத்துக்கே சிறப்பாக உரியவை. அவ்வகையில் கதிர்காமத் திருவிழா முடிந்து முருகன் செல்வச் சந்நிதிக்குத் திரும்பி வருவதாகக் கருதி நிகழ்த்தப்படும் வழிபாட்டில் பயற்றம் துவையலும் இளநீரும் படைக்கப்படுவதும், கந்த சஷ்டி இறுதி நாளில் பால் ரொட்டி படைக்கப்படுவதும் குறிப்பிடத்தக்கன. அவற்றைவிட முக்கியமாகக் குறிப்பிடப்பட வேண்டியது அங்கு இடம்பெறும் ஆலம் இலைப் படையலாகும். சந்நிதியின் நித்திய பூசை ஒவ்வொன்றின் போதும் அறுபத்தைந்து ஆலம் இலைகளில் பச்சரிசிப் பொங்கலும் பயற்றங்கறியும் படைக்கப்படுவது பிரதான மரபாக விளங்குகிறது. அப்படையற் பிரசாதத்தை பக்தர்கள் 'அமுது என்றும் மருந்து என்றும் போற்றி அருந்தி மனநிறைவடைகிறார்கள். இப்படையல் முறை முருகனாலே அடியாரான கதிர்காமருக்கு உணர்த்தப்பட்டது என்பது ஐதீகம்.
பூத்தொண்டு, விளக்கெடுத்தல் என்னும் இருவகைத் தொண்டுகள் செல்வச் சந்நிதியைப் பொறுத்தவரையில் விசேடமாகக் குறிப்பிடத்தக்கனவாம். மருதர் கதிர்காமரின் பரம்பரையினராய் தொண்டைமானாற் றையும் அதனையொட்டிய கிராமங்களையும் சார்ந்த ஆண்களே செல்வச் சந்நிதியில் பூத்தொண்டு செய்வதற்கு உரித்துடையவர்களாக விளங்கு கிறார்கள். அது போலவே அவ்விடத்துள்ள பருவமடையாத சிறுமியர் விளக்கெடுத்தலுக்கு உரித்துடையவர்களாகத் தெரிவு செய்யப்படுகின்றனர். இந்த இருவகைத் தொண்டு பற்றிய இவ்விதிகள் சந்நிதியின் மஹோற்சவ காலத்துக்கே உரியனவாகும்.
கொடியேற்றத்துக்கு முதல் நாள் இத்தொண்டினைச் செய்ய உரித்துடையவர்கள் நியமிக்கப்படுவர். பூத்தொண்டு செய்பவர்கள் பூ எடுத்து மாலைகட்டி முருகனை அலங்கரிப்பது முதற்கொண்டு கோயிலைச் சுத்திகரித்தல் முதலான பல்வேறு பணிகளையும் செய்வர். பூத்தொண்டு செய்பவர்களின் தலைவர் மணியகாரர் எனக் குறிப்பிடப்படுவார்.
திருவிழாக்காலங்களில் முருகனின் திருவீதியுலா நிறைவுற்றதும் வெண்கலத்தட்டில் நெய்விளக்கேற்றி முருகன் வாசலில் ஆரத்தி எடுப்பது அதற்குத் தெரிவு செய்யப்பட்ட பருவமடையாத சிறுமியரின் கடமை. அத்தொண்டுக்கு ஒரு தடவையில் பன்னிரு சிறுமியரே அனுமதிக்கப்படுவர். பன்னிருவர்க்கு மேற்படின் மணியகாரர் தயாரித்த நேர அட்டவணைப் பிரகாரம் அதற்கான உரிமை வழங்கப்படும்.
இந்துக் க்களஞ்சியம்

Page 246
“முருகன் வாசல் மகா மண்டபத்தில் பன்னிருவரும் வரிசையாக நிற்க ஆலயப் பிரதமகுரு விளக்குத்தட்டங்களையும் நெய்த்திரியையும் கொடுப்பார் எல்லோரும் பூசகரிடமிருந்து அதனை வாங்கி தீபத்தை ஏற்றியதும் மூலஸ்தான திரைச் சீலை சிறிதாகத் திறக்கப்படும். அப்போது எல்லோரும் ஒன்றாகச் சேர்ந்து ஆரத்தி எடுத்துப் பின்னர் வரிசையாகச் சென்று பிள்ளையார் வாசலில் வைத்து வணங்கிவிட்டுத்திரும்பி வருவர். மீண்டும் மண்டப வாசலை அடைந்து பிரதம குருவை வணங்கி விட்டு வள்ளியம்மன் வாயிலை அடையும் அந்தப் பன்னிரு சிறுமிகளின் பக்தியுணர்வு பார்ப்பவர் நெஞ்சங்களையே பரவசமடையச் செய்யும் தத
திருவிழாக்காலங்களில் இத்தொண்டினை மேற் கொள்பவர்கள் அப்பிரதேசத்து மக்களால் மரியாதைக் குரியவர்களாக - மாகேஸ்வரர்களாக - மதிக்கப்படுவர். இவை செல்வச் சந்நிதிக்கேயுரிய தனித்துவமான அம்சங்கள் எனலாம்.
(க.இர)
செவ்வழி
செவ்வழி என்பதற்கு- செம்மையாகிய வழி - இசையின் பெருக்கத்திற்கு செம்மையாகிய வழியை உடைய பண் எனப் பொருள் கொள்வது பொருந்தும். இப்பெயர் கொண்ட பண் சங்கநூல்களில் பரவலாக காணப்படுகின்றது. காடும் காடு சார்ந்த நிலமுமாகிய முல்லை நிலப்பகுதியில் இசைக்கப்படும் முல்லை யாழும், செவ்வழியும் ஒன்றெனக் கருதுவதற்கு திவாகரம், பிங்கலந்தை , சூடாமணி நிகண்டு ஆகிய மூன்று நிகண்டு நூல்களும், யாப்பருங்கல விருத்தி ஒழிபியலுள் காணப்படும் மேற் கோள் ஒன்றும் சான்று பகிர்கின்றன.
சிறி யாழ் செவ்வழிப் பண்ணி வந்ததை என்ற புறநானூற்றுக் குறிப்பிலிருந்தும்
சாய என் கிளவி போல் செவ்வழியாழிசை நிற்ப மாலையும் வந்தன்றினி என்னும் கவிதைத் தொகைக் குறிப்பிலிருந்தும், சீறியாழில் செவ்வழிப் பண் இசைத்ததாக அறிய முடிகின்றது. பழங்காலத்தில் இப் பண் இறைவனை ஏத்திப் பாடுவதற்குப் பயன்பட்டது எனத் தெரிகிறது. செவ்வழிப் பண்ணை யாழில் நன்கு இசைத்து இறைவனைப் போற்றிப் பாடல்களைப் பாடினர். அகநானூற்றுப் பாடல் ஒன்று இதனைக் குறிக்கின்றது.
செவ்வழி நல்யாழிசையினென் பையெனக் கடவுள் வாழ்த்திப் பையுண் மெய்ந்நிறுத்தி (அகநானூறு) செவ்வழிப் பண் மாலை நேரத்தில் இசைப்பதற்கு ஏற்றது. மாலைக்காலம் வந்த பொழுது சீறியாழில் செவ்வழிப் பண் இசைக்கப்பட்டது என புறநானூற்றுப் பாடல் ஒன்றில் கூறப்படுகின்றது.
அருளாயாகவோ கெடிதேயிருள் வரச் சிறியாழ் செவ்வழி பண்ணி யாழநின் காரெதிர் கானம் பாடினேமாக
இந்துக்கலைக்களஞ்சியம்
220

காலையில் மருதப்பண்ணும் மாலையில் செவ்வழிப் பண்ணும் வாசித்தல் வேண்டும் என்பது இசை நூன் மரபு என புறநானூற்றில் 49 வது பாடலில் மிக அழகாக கூறப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. ‘செவ்வழிப் பண்ணிற் சிறை வண்டரற்றும்’ என்னும் சிலப்பதிகாரக் குறிப்பிலும் “சிதர் சிறை வண்டின் செவ்வழி புணர்ந்த ” என்னும் பெருங்கதைக் குறிப்பிலும் இப்பண்ணொலி, வண்டின் ரீங்காரத்துக்கு உவமையாகக் குறிப்பிட்டுள்ளது.
இப் பண் சங்க இலக்கியங்களிலும் காப்பியங்களிலும் பரவலாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. “தீந்தொடை செவ்வழிப் பாலையிசையெழிஇ” என்னும் சிலப்பதிகாரக் குறிப்பில் ஏழு பெரும் பாலைகளுள் ஒன்றாக செவ்வழிப்பாலையை குறிக்கின்றது. இது செவ்வழியினின்றும் வேறுபட்டது. செவ்வழி ஐந்திசைகளைக் கொண்டது என்றும் செவ்வழிப்பாலை ஏழிசைகளைக் கொண்டது
எனவும் இசை ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
செவ்வழிப்பண்ணிலிருந்து நோதிறம், பெயர் திறம், யாமை, முல்லை என்னும் நான்கு திறங்கள் பிறக்கின்றன. சிலப்பதிகாரம் கானல் வரியில் மாதவி செவ்வழிப் பண்ணும் விளரிப்பண்ணும் வாசித்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. இப் பண் மூவர் தேவாரங்களிலும் பயன்படுத்தப்பட்டுள்ளன. பண் செவ்வழி என அழைக்கப்படும் இராகத்தின் தற்போதைய பெயர் யதுகுல காம்போதி இராகமாகும். திருஞான சம்பந்தர் அருளிச் செய்த இரண்டாவது திருமுறையில் 13 ஆவது முதல் - 122 ஆவது வரையான பதிகங்கள் செவ்வழிப்பண்ணில் பாடப் பெற்றன. திருநாவுக்கரசு சுவாமிகள் அருளிச் செய்த திரு முறையிலுள்ள திருக்குறுந் தொகைப் பாடலில்,
பாலை யாமொரு செவ்வழி பண்கொள மாலை வானவர் வந்து வழிபடும்.
என்ற அடிகளில் செவ்வழிப்பண் மாலையில் பாடப்பெற்றது எனக் கூறப்பட்டுள்ளது. ஆனால் இப் பண் பகல், இரவு ஆகிய எக்காலமும் பாடுவதற்கு உரியது என திருவாவடுதுறை ஆதீனத்திலுள்ள ஏட்டுப் பிரதியொன்றில் இருப்பதாகப் பொன்னோதுவார் அவர்கள் குறிப்பிட்டுள்ளார் எனப் பேராசிரியர் வெள்ளை வாரணனார் தாம் இயற்றிய இசைத்தமிழ் நூலில் தெரிவித்திருக்கின்றார்.
தற்போது வழங்கப்படும் யதுகுலகாம்போதி இராகம் 28வது மேளகர்த்தாவாகிய அரிகாம்போதியின் சேய்ராகம் எனக் குறிப்பிடப்படுகின்றது. இது கலட்ஸம், சதுஸ்ருதி ரிஷபம், அந்தர காந்தாரம், சுத்த மத்திமம், பஞ்சமம், சதுஸ்ருதிதைவதம், கைசிகி நிஷாதம் ஆகிய சுரங்களைக் கொண்டு அமைந்துள்ளது. ஒளடவ சம்பூர்ணராகம். சட்ஸம், பஞ்சமம், ஜீவ சுரங்கள் ஆகும். இந்த ராகத்தில் செளக்ககால நடைப் பயன்பாடுகள் அதிகம்
காணப்படுகின்றன. (தேஹ. )

Page 247
செவ்வாய்
Iங்கலத்தையும், வலிமையையும் அளிப்பவனான செவ்வாய், நவக்கிரக மண்டலத்தில் மூன்றாவதாக உள்ளவன். இவனுக்கு அங்காரகன், குஜன், மங்களன், செம்மீன் எனப் பலபெயர்கள் உண்டு. இராசிச் சக்கரத்தில் விருச்சிகத்தையும், மேஷத்தையும் தன் சொந்த ஆட்சி வீடாகக் கொண்டவன். கடகத்தில் நீசன்,
மகரத்தில் உச்சன்.
பொதுவாகத் திருமண காரியங்களில் செவ்வாய் அதிக
சம்பந்தப்படுகிறான். செவ்வாய் தோஷத்தினால் திருமணங்கள் தடைப்படுகின்றன. செவ்வாய் ஒருவரது ஜாதகத்தில் 2,4,7,8, 12ஆம் இடங்களில் இருந்தாற் செவ்வாய் தோஷம் என்று கூறப் படுகின்றது. செவ்வாய் தோஷமுடைய ஜாதகத்திற்கு செவ்வாய் தோஷமுள்ள ஜாதகத்தையே இணைக்க வேண்டும். 7, 8ஆம் இடங்கள் களத்திர ஸ்தானம். அதில் செவ்வாய் இருந்தால் தோஷமதிகம். ஆனால் இந்தத் தோஷத்திற்கும் சில விலக்குகள் கூறப்பட்டிருக்கின்றன.
சதுஷ் ஸப்தமகோ பெளமோ, மேஷகர் காலி நக்ரக//
யதா ராகசள சுப ப்ரோக்த: குஜாத் தோஷ ந வித்யதே// என்று காளிதாசரின் ஜாதக சந்திரிகை கூறுகின்றது. ஆண்பெண் ஜாதகங்களில் கடகம், மேஷம், விருச்சிகம், மகரம் ஆகிய இராசிகள் 4,7,8 ஆம் இடங்களாயினும் செவ்வாய் தோஷம் இல்லை என்று கூறப்படுகின்றது.
மேலும் 12,48,12 ஆகிய இராசிகள் சர இராசிகளாக இருந்து, அந்த இடங்களிற் செவ்வாய் இருந்தாலும், செவ்வாய் தோஷத்திற்குப் பரிகாரம் என்று ஜாதக சந்திரிகை கூறுகின்றது. குரு-புதனுடன் செவ்வாய் சேர்ந்திருந்தாலோ, பார்க்கப்பட்டாலோ செவ்வாய் தோஷ பரிகாரம் உண்டு என்றும் கூறப்படுகின்றது.
சிவபெருமான் உமையைப்பிரிந்து, தனித்து யோகத்தில் இருந்த பொழுது அவரது நெற்றிக்கண்ணிலிருந்து, நீர்த்துளி ஒன்று பூமியில் விழுந்தது. அதிலிருந்து தோன்றியவரே அங்காரகன் எனப்படும் செவ்வாய். பூமியின் மகன் (குஜன்) என்று அழைக்கப்படுகின்றார். பரத்துவாச முனிவரின் மகனாகப் பிறந்து பூமிதேவியால் வளர்க்கப்பட்டவர் என்றும் கூறுவர்.
வீரபத்திரரையும் அங்காரகன் என்று கூறுவர். தக்ஷயாகத்தை அழித்த பிறகு தேவர்களின் வேண்டுதற்கிணங்க கோபந்தணிந்து அங்காரக வடிவைப் பெற்றார் என்று புராணங்கள் கூறும். வீரபத்திரருக்கு செவ்வாய்க்கிழமை உகந்த நாள். செந்நிறமுடையவர் ஆதலின் செவ்வாய் எனப்பெயர் பெற்றார். விண்ணிலே செவ்வொளி வீசுவதால் செம்மீன் என்று அழைத்தனர்.

221
“முந்நீர் நாப்பண் திமில் சுடர் போலச் செம்மீன் இமைக்குமாக விசும்பின்” என்று புறநானூறு பேசும். சிவந்த ஆடை, செவ்வண்ணமலர் மீது விருப்பமுள்ளவன், அபயம், சக்தி ஆயுதம், கதை, சூலம் முதலியவற்றை நான்கு கரங்களில் தாங்குபவர். இவரது வாகனம் ஆடு, எட்டுக் குதிரைகள் பூட்டிய தேரிலே பவனி வருபவர் (அன்னப் பறவை இவனது வாகனம் என்று சோதிட நூல்கள் கூறும்).
முத்துக்களிற் செவ்வொளி வீசும் முத்து மிக அரிதாகக் கடலிற் கிடைக்கும். இதற்கு அங்காரகன் என்று பெயர் என்றும் சிலப்பதிகாரம் கூறும் கூடித்திரிய வகுப்பைச் சேர்ந்த ஆண் கிரகம் செவ்வாய், பவளம் அங்காரனுக்கு உகந்தது.
சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான பூரீமுத்துஸ்வாமி தீகூழிதர் தமது நவக்ரஹ கீர்த்தனையுள் "அங்காரகம் ஆச்சிரயாமி” என்று பாடியுள்ளார். அங்காரகன் செவ்வாய்க் கிழமைக்குத் தலைவன். சகோதர பாவத்திற்குக் காரகன். முருகனின் அம்சம் கொண்டவன். சூரியன், சந்திரன், குரு ஆகியவர்களின் நண்பன்.
ஆறாத இரணங்கள், மூட்டுவலி ஆகியவற்றால் துன்பப் படுபவர்கள் செவ்வாயை ஆராதித்தால் சிறந்த பயன் ஏற்படும். ஜாதகத்தில் செவ்வாய் நல்ல நிலையில் இருந்தால் பூமியையும், செல்வத்தையும், செல்வாக்கையும் அபரிமிதமாக அளிப்பான். கடன் தொல்லையிலிருந்தும் விடுபடச் செய்வான்.
உரோமானியர்கள் போருக்கு உரிய தெய்வமாகச் செவ்வாயைக் கொண்டாடினர். அவனது ஆசியுடன் சென்றாற் போரில் வெற்றி கிடைக்கும் என நம்பினர். அவனுக்குப் பல கோயில்கள் கட்டினர்.
செங்கண்னன் செம்மேனிச் செல்வன்
செம்மாலையினான்
அங்கையில் வேல் குலம் அடற்கதை கொள் -மங்கலத்தான்
மோதுந் தகரேறும் மூர்த்திநிலமகட்கு
காதற் சேய் அங்காரகன்
அங்காரகனுக்கு லோகிதாங்கன், ரக்தாயதேகூடிணன், ரக்தவர்ணன், சக்திதரன், குமாரன், மகாகாயன், மங்கலன், தனப்ரதன், ஹேம குண்டலி, ரோக நாசனன், ரக்த வஸ்த்ரதரன் என்றும் பல பெயர்கள் உண்டு.
நவக்கிரக க்ஷேத்திரத்தில் ஒன்றான பழனி, அங்காரகனுக்கு உரிய கூேடித்திரம். வைத்தீஸ்வரன் கோயிலில் அங்காரகன் பூஜித்துப் பேறு பெற்றதால் இதுவும் அங்காரகத் தலமாகக் கூறப்படுகின்றது. இங்கு கல்லில் மூலஸ்தான மூர்த்தியும், அழகான செப்புத் திருமேனியும் உள்ளது. ஒவ்வொரு செவ்வாய்க்
இந்துக்கலைக்களஞ்சியம்

Page 248
கிழமையும் அங்காரகன் ஆட்டு வாகனத்தில் எழுந்தருளி அருள் பாலிக்கின்றான். திருச் சிறு குடியிலும் அங்காரகனுக்கு ஆலயம் உண்டு.
அங்காரகன் பாரத்வாஜகோத்திரத்தினன். மாலினி, சுசீலினி என இரு மனைவியர் இவருக்குண்டு. இவரது குமாரன் சுரேசன் (சித்தாந்த சேகரம்). முக்குணங்களிலே இராஜத குணம் உடையவர். கண்டிப்பு, பகைவரை எதிர்க்கும் ஆற்றல்,
வைராக்கியம் முதலியவற்றை அருள்பவர். தற்பெருமைமிகுந்தவர்.
சுப்ரமணியரை வழிபடுவதாலும், பவளமாலை, மோதிரம் அணிவதாலும், சிவந்த வண்ண ஆடை அணிவதாலும், சிவந்த நிறக் காளையைத் தானம் செய்வதாலும், துவரைத் தானியத்தைத் தானமாக அளிப்பதாலும், கார்த்திகை விரதம், செவ்வாய்க் கிழமை விரதம் இருப்பதாலும் தோஷம் நீங்கும்.
செவ்வாய்க்கு உரியன:
இராசி - மேஷ, விருச்சிக இராசிகள் திக்கு - தெற்கு
அதிதேவதை - நிலமகள் பிரத்யதி தேவதை - க்ஷேத்திர பாலகர்
தலம் - வைத்தீஸ்வரன் கோயில்
N/ N/ NP/ e Dede G-SKS Oë-e MN 18N /AN
Ge சேக்கிழார்
பெரிய புராணம் என்று அழைக்கப் பெறும் திருத் தொண்டர் புராணத்தைப் பாடிய சேக்கிழார் சென்னையை அடுத்துள்ள குன்றத்தூரிற் சைவ வேளாண்மரபில் பிறந்தவர். இக் குன்றத்தூரிற் சேக்கிழார் கோவில் ஒன்றும் அதன் அருகே பாலறாவாயர் குளமும் இன்றும் காணப்படுகின்றன. அவர் இளமையிலேயே “எப்பொருளும் ஆக்குவான் ஈசனே' என்னும் உணர்வும் அப்பொருளைத் தான் ஆளுடையார் அடியார் என்னும் அறிவும் வாய்க்கப் பெற்றவர்.
அவர் அநபாயன் என்றழைக்கப்பட்ட சோழ மன்னனிடம் தலைமை அமைச்சராக இருந்தார். 'உத்தம சோழப் பல்லவராயன்' என்ற பட்டமும் பெற்று பெருஞ்சிறப்புடன் இருந்தார். கும்ப கோணத்திற்கு அண்மையில் உள்ள திரு நாகேச்சுரத்துப் பெருமான் மீது இவர் அளவிலா அன்பு பூண்டிருந்தார். அதன் காரணமாகக் குன்றத்தூரில் அப்பெருமான் நினைவாக ஒரு
இந்துக்கலைக்களஞ்சியம் 222

நிறம் - சிவப்பு
வாகனம் - ஆட்டுக்கடா.
செவ்வாய்க்குப் பிரீதியானவை:
தானியம் - துவரை
மலர் - சண்பகம், செவ்வலரி
வஸ்த்திரம் - சிவப்பு ஆடை
இரத்தினம் - பவளம்
நிவேதனம் - துவரம் பருப்புப் பொடி விரவிய
அன்னம்
சமித்து - கருங்காலி
உலோகம் - செம்பு.
செவ்வாய்க் கிரகம் தணல் போற் காணப்படும். சூரியனைச் சுற்றிவர 687 நாட்கள் ஆகும்.
செவ்வாயை ஆராதிப்பதற்குச் செவ்வாய்த்துதி, செவ்வாய் காயத்ரீ என்பவைகளை, தொடர்ந்து 48 நாட்கள் பாராயணம் செய்தால் நலம் விளையும். செவ்வாய்க்குரிய 108 அர்ச்சனை நாமாக்களைக் கூறிச் செவ்விய மலரால் அர்ச்சனை செய்யலாம். செவ்வாய்த் தோஷமுள்ள கன்னிப் பெண்கள் செவ்வாயன்று நீராடி, தூய்மையான உடையணிந்து, நெற்றியில் திலகமிட்டு, கூந்தலை முடிந்து செவ்வாய்க்குரிய தோத்திரத்தையும், செளந்தரிய லஹரி பாடலையும் பக்தியுடன் பாராயணம் செய்தால்
பலன் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. (வ, வை.)
ఏపీడ ఏపీడ නූම කේම
திருக்கோயிலைக் கட்டினார். திரு நாகேச்சுரத்து இறைவன் பெயரையே அப்பெருமானுக்கு இட்டு வழங்கி வழிபடுவாராயினார்.
சேக்கிழாருடைய காலம் பற்றி கருத்து வேறுபாடுகள் உள்ளன. எனினும் கி.பி 13-1150 என்ற கால அளவில் ஆட்சி புரிந்த இரண்டாம் குலோத்துங்கன் காலத்தில் வாழ்ந்தனர் என்ற கொள்கையும், கி.பி 1178-1218 கால அளவில் ஆட்சி புரிந்த மூன்றாம் குலோத்துங்கன் காலத்தவர் என்ற கொள்கையும் ஆய்வுலகில் நிலவுகின்றன. இரண்டாம் குலோத்துங்கன் காலம் என்று கூறும் கொள்கையாளர்களே மிகுதி.
மக்கள் உண்மையான சமய வாழ்க்கையில் ஈடுபடாமற் போலியான மேலோட்டமான சமயவாழ்க்கையில் ஈடுபடுகின்றனர் எனச் சேக்கிழார் கருதினார். எல்லையற்ற செல்வம் மக்களை குறிக்கோளற்ற வாழ்க்கை வாழச்செய்து விடும். இந்நிலையைப் போக்க வழிவகை தேடினார். நாயன் மார்களின் வரலாற்றை இன்ப வேட்டையாடும் மக்களை தட்டி எழுப்பி வாழ்க்கையிற் குறிக்கோள் வேண்டும் என்ற எண்ணத்தைத் தூண்டுவதற்கு முடிவு செய்தார். அதன் பயனாக எழுந்ததே திருத் தொண்டர் புராணம்

Page 249
திருத் தொண்டர் புராணம் தில்லையில் ஆயிரங்கால் மண்டபத்தே வீற்றிருக்கும் கூத்தப் பெருமானால் 'உலகெலாம் என்று அடியெடுத்துக் கொடுக்கப்பெற்று அருளப்பெற்றது. உலகெலாம் என்னும் சொல் இறைவனால் அருளப் பெற்ற திருவாக்கு ஆதலால் அதனை இந்நூலில் முதல், நடு, இறுதி ஆகிய மூன்று இடங்களிலும் வைத்துப் போற்றுவராயினர். இச்சொல் பதினான்கு இடங்களில் மட்டுமே பெரிய புராணத்தில் வருகிறது.
“உலகெலாம் உணர்ந்து ஒதுதற்குஅரியவன் நிலவு உலாவிய நீர்மலி வேணியன் அலகு இல் சோதியன் அம்பலத்தாடு வான்’ என்று இறைவன் அருட்புகழை எடுத்துரைத்த சேக்கிழார் பெருமான் “மன்னுக அடியார் அவர் வான் புகழ் நின்றது எங்கும் நிலவி உலகெலாம்” என்று பழுத்த அடியவர்தம் புகழைப் பாடி முடிக்கின்றார். இதிலிருந்து இறைவன் புகழும் அடியார் புகழும் இரண்டறக் கலந்தவை என்பதனைப் புலப்படுத்துகின்றார். இங்ங்ணம் தொண்டர் சீர்பரவிய சிறப்பினால் 'தொண்டர் சீர் பரவுவார் என்னும் சிறப்பும் பெற்றார். பிறப்பாலும் சிறப்பாலும் பெற்ற மூவகைப் பெயர்களை விட இவர் தம் குடிப்பெயராக விளங்கும் சேக்கிழார் என்னும் பெயரே பெரு வழக்குப் பெறும் புண்ணியம் பெற்றது.
தமிழ் நாட்டில் நிலவிய சமய வாழ்வியல் நடைமுறைகளைச் செய்யுள் வடிவிலே நூலாக இயற்ற வேண்டிய தேவை சேக்கிழாருக்கு இருந்தது. சேக்கிழாரின் காலத்தில் வடமொழிக் கதைகளுக்கூடாக பிறசமய வாழ்வியல் நடைமுறைகள் மக்களிடையே பிரபல்யமாக அறிமுகமாகின. எனவே சேக்கிழாரும் தமது புலமையைப் பயன்படுத்திச் சமய இலக்கிய மொன்றை எழுத வேண்டியவரானார். எனவே தமது காலத்து வழிபாட்டு முறைகளில் அடிப்படையாக அமையும் முற்கால நிலைமைகளை எடுத்துகாட்டியுள்ளார். பெரிய புராணத்தில் நாயன்மார்கள் காட்டும் தலஅமைப்பும் வழிபாட்டு நிலையும் சோழர் காலத்து சமய நிலைமையின் பழமையை விளக்குவதையே சேக்கிழார்
தெளிவுறுத்தியுள்ளார்.
சுந்தரமூர்த்தி சுவாமிகளின் திருத்தொண்டத்தொகையையும் நம்பியாண்டார் நம்பிகளின் திருத்தொண்டர்திருவந்தாதியையும் அடிப்படையாகக் கொண்டே சேக்கிழார் தம் புராணத்தை இயற்றியுள்ளார். சேக்கிழார் பெருமான் தாம் கற்ற திருமுறை நூல்களின் ஆதாரங்களைக் கொண்டும் தாமே நாயன்மார்கள் வாழ்ந்த இடங்களைச் சென்று பார்த்த அநுபவத்தைக் கொண்டும் கல்வெட்டுக்கள், செப்பேடுகள் முதலிய ஆதாரங்களைக் கொண்டும் திருத்தொண்டர் புராணமாகிய பெரிய புராணத்தை இயற்றினார். தம் நூலுள் அவர் அடியார்களின் வரலாற்றினைப் பக்திச் சுவை ததும்ப பாடியுள்ளமையால் மீனாட்சி சுந்தரம்

223
பிள்ளையவர்கள் 'பக்திச் சுவை நனி சொட்டச் சொட்டப் பாடிய
கவி வலவ” என்று அவரைச் சிறப்பித்துப் பாடியுள்ளார்.
அவர் இயற்றிய திருத்தொண்டர் புராணம் தோத்திரப் பாடல்களின் இனிமையையும் சாத்திரப் பனுவல்களின் சாரத்தையும் கொண்டு இறைபற்றில் ஈடுபாடு கொண்டு வாழ்ந்து சிறந்த அடியார்கள் வரலாறு கூறும் வரலாற்றுக் காப்பியமாகிறது. மக்களிடையே சமய நம்பிக்கையை எழுப்புதல், சமய உணர்வினை வெளிப்படுத்தக் கையாள வேண்டிய வழிபாட்டு முறைகளை எடுத்துரைத்தல், நெறிமுறைக்கு அடிப்படையான தத்துவங்களைப் பரவலாகச் சுட்டிச் செல்லுதல் என்ற மூன்று பெரும் பண்புகளைக் கொண்டிலங்குவன சமய இலக்கியங்கள். சேக்கிழாரின் இப்புராணமோ முப்பெரும் பண்புகளைக் காட்டுவதுடன் அடியார்கள் அனுபவித்த பாதிப்புக்களையும் எதிர்விளைவு களையும் அவற்றை இறைவன் மீது கொண்ட அன்பு என்ற ஒன்றாலே வென்று நிமிர்ந்து இறையருள் பெற்ற புராதன வரலாற்று நிகழ்வுகளையும் எடுத்துரைக்கும் புராணம் என்னும் பொருள் தரும் பெரியபுராணமாகத் திகழ்கிறது. இப்புராணம் சோழர்காலச் சமூக மரபு நிலைகளைச் சுட்டிக் காட்டி ஏற்றத் தாழ்வைச் சமப்படுத்த வழி சொல்லும் இலக்கியமாக மிளிர்கின்றது.
இக் காப்பியம் சைவ நெறி நின்று இறைத் தொண்டாற்றிய அடியார் கூட்டத்தில் அறுபத்து மூன்று தனியடியார்களுடைய சீர்மைகளையும் பொதுநிலை அமைப்பிற் பரந்துபட்ட பார்வையில் சமயப் பொதுமை காணும் வகையில் அமையும். அத்துடன் ஒன்பது தொகையடியார்களுடைய வரலாறும் பேசப்படுகின்றன. தில்லை வாழ் அந்தணர் தம் புராணம் முதல் இசை ஞானியார் புராணம் ஈறாகப் பேசப்படுகின்றது. சேக்கிழார் இலக்கிய நெறிகளைப் பெரிதும் பின்பற்றிப் பக்திச் சுவை ததும்ப எளிய தமிழ் நடையிற் பாடல்களைப் பாடியுள்ளார்.
இப்புராணம் விரிந்த நூலாகும். இதற்கு முன்னர் எழுந்த திருத்தொண்டர் தொகை, தொகை நூலாகும். இதனைச் திருமலைச் சிறப்பு 37,38,39 ஆம் பாடல்களால் ஆசிரியரே கூறுவது நோக்கற் பாலது. இவற்றுள் தொகையும் விரியும் இறைவன் அடியெடுத்துக் கொடுக்கப் பெற்ற சிறப்புடையன. பெரிய புராணத்தைச் சேக்கிழார் இரண்டு காண்டங்களாகவும் பதின் மூன்று சருக்கங்களாகவும் வகுத்து நாலாயிரத்து இருநூற்றைம்பத்து மூன்று விருத்தச் செய்யுள்களாற் பாடி முடித்து, திருத்தொண்டர் புராணம் என்ற பெயரும் சூட்டியருளினார். திருமலைச் சருக்கம் முதல் திரு நின்ற சருக்கம் வரை முதற் காண்டமாகவும் வம்பறா வரிவண்டுச் சருக்கம் முதல் வெள்ளானைச் சருக்கம் முடியும்வரை இரண்டாம் காண்டமாகவும் இலங்குகின்றது. முதற் காண்டம் 1903 பாடல்களையும், வம்பறா வண்டுச் சருக்கம் 1737 பாடல்களையும் பொய்யடிமையில்லாச் சருக்கம் 116 பாடல்களையும் கறைகண்டம் சருக்கம் 47 பாடல்களையும் கொண்டு விளங்குகின்றன.
இந்துக்கலைக்களஞ்சியம்

Page 250
பன்னிரண்டாம் திருமுறை எனப்போற்றப் பெறும் இப்பெரிய புராணம் உயிர்கள் பெறவேண்டிய பயனை எடுத்து இயம்புவதுடன் இறைவனை வணங்குவதற்குரிய நால்வகை நெறிகளையும் எடுத்து இயம்புகிறது. மனித சமுதாயத்திற்கு வலிமை தருவது ஆன்ம நிறைவு. ஆன்ம நிறைவிற்கான வழிநடைப்பயணமே வாழ்வு. இவ்வாழ்வியல் குறிக்கோளை அன்பர்தம் வாழ்வு வழி மக்களுக்கு எடுத்துரைத்துள்ளார் சேக்கிழார். (தே. ஹ. )
சேதிராயர்
தமிழிலமைந்த சைவத்திருமுறை பன்னிரண்டில் ஒன்பதாம் திருமுறையாகிய திருவிசைப்பாவை அருளிச் செய்த ஆசிரியர்களுட் சேதிராயர் ஒன்பதாமவராகத் திகழ்பவர். சேதியர் என்பவர் குறுநில மன்னர் மரபினர். சேதி நாட்டை ஆண்ட சிற்றரசர் சேதிராயர், சேதியர் ஆண்டதனால் அந்நாடு சேதிநாடு எனப்பெயர் வழங்கப்பெற்றது. அது தென்னார்க்காடு மாவட்டத்தின் வடமேற்கில் உள்ள நடுநாட்டில் ஒருசிறுபகுதி. சோழநாட்டிற்கும், தொண்டை நாட்டிற்கும் நடுவே உள்ளதால் நடுநாடு' என அழைக்கப் பெற்றது. சேதிநாட்டினை மலையமான்நாடு', 'மலாடு என்றும் அழைப்பார்கள். சுந்தரமூர்த்தி சுவாமிகளை மகன்மை கொண்ட நரசிங்க முனையரையர் வழிவந்தவர் சேதிராயர்.
அவர் தமது முன்னோர்களைப் போலவே சிவபக்தியிற் சிறந்துநின்றார். சைவசீலம் நிறையப்பெற்று சிவ தலங்களுக்குச் சென்று வழிபாடியற்றித் தூய்மை நெறி நின்றவர். அவர் கோயில் எனப்படும் தில்லைத் தலத்தைப் பாடிக் கசிந்து நைகின்றார். அத் திருப்பதிகம் தில்லைப் பெருமான் மீது கொண்ட காதலால் மெலிகின்ற பெண்ணொருத்தியின் ஆற்றாமையை அவளது செவிலித்தாய் இறைவன் முன்சென்று விண்ணப்பித்தவாறு அருளிச் செய்யப்பட்டது. அதுவும் அந்தாதி அமைப்புக் கொண்டது. அதன் கண் உள்ள பாடல்கள் இறுதியடி ஒருசீர் குறைந்து வருவது. அவ்வாறு வருதல் இசைப்பாட்டிற்கு இயல்பாகும். இப்பதிகத்தைப் பாடியவர்கள் பெறும் பயனைப் பதிகத்தின் நிறைவுப் பாடலிலே கூறுவார்.
ஏயு மாறெழிற் சேதியர் கோன்தில்லை
நாய னாரை நயந்துரை செய்தன
தூய வாறுரைப் பார்துறக் கத்திடை
ஆயஇன்பம் எய்தியிருப்பாரே.
சேதிராயர் தில்லைத் தலத்திற்குரிய ஒரு பதிகம் மட்டுமே பாடியுள்ளார்.
அவர் முதற் குலோத்துங்கன் காலத்தவராக (கி.பி. 1070 - 1120) அல்லது சற்று பிற்பட்ட காலத்தவராக இருக்கலாம் என்பது ஆய்வாளர்களின் கருத்து. (GDI. 60)6OH.)
இந்துக்கலைக்களஞ்சியம் 224

சேந்தனார்
செவத் திருமுறை பன்னிரண்டில் ஒன்பதாம் திருமுறையுள்
அடங்கும் திருப்பல்லாண்டு என்ற பிரபந்தத்தையும், சில திருவிசைப்பாப் பதிகங்களையும் அருளிச்செய்த சேந்தனார், திருவெண்காட்டிற்கு அருகில் உள்ள திருநாங்கூர் என்ற ஊரில் தோன்றியவர். அவர் காவிரிப்பூம் பட்டினத்தில் திருவெண் காடரின் பண்டாரக் காப்பாளராகப் பணியாற்றி வந்தார். திருவெண்காடர் அனைத்தையும் துறந்து பட்டினத் தடிகளானார். அப்பொழுது அவரது ஆணையின் வண்ணம் கருவூலத்தைத் திறந்து அதில் உள்ள பொருட்களை எல்லோரும் அவரவர் விரும்பிய வண்ணம் அள்ளிக் கொள்ளுமாறு கூறினார். அது பொழுது திருவெண்காடரின் சுற்றத்தவர்கள் சென்று சோழ மன்னனிடம் பண்டாரப் பொருட்களைப் பொதுமக்கள் அள்ளிச் செல்வது குறித்து முறையிட்டனர். அதுகேட்ட சோழ மன்னனும் சேந்தனாரைச் சிறையிலிட ஆணையிட்டான். சேந்தனாருக்காகப் பட்டினத்தார் இறைவனை வணங்கி,
மத்தனை தயிருண்டானும் மலர்மிசை மன்னினானும்
நித்தமும் தேடிக் கானா நிமலனே அமலமூர்த்தி
செய்தளைக் கயல்பாய்நாங்கூர்ச் சேந்தனை வேந்தனிட்ட
கைத்தளை நீக்கி என்முன் காட்டுவெண் காட்டுளானே. என்று விண்ணப்பிக்க சேந்தனார் சிறையினின்றும் விடுதலை பெற்றார். விடுதலை பெற்றவர் மனைவி மக்களுடன் தில்லைத் திருத்தலத்திற்குச் சென்று விறகுவெட்டி விற்று, அப்பொருளிலிருந்து சிவனடியார் ஒருவருக்கு திருஅமுது படைக்கும் பணியை நாள்தோறும் செய்து வந்தார். ஒருநாள் நடுஇரவில் தில்லை நடராசப் பெருமானே சிவனடியாராகச் சேந்தனார் வீட்டிற்கு எழுந்தருளி அவர்கொடுத்த களியாகிய உணவினை ஏற்று, மறுநாள் தனது திருமேனியில் அவ்வுணவினைக் காட்டி சேந்தனாரின் சிவபக்தியை உலகம் உணரும்படி செய்தருளினார். இதனைச் சிவஞான சுவாமிகள், “வரையேற விட்டமுதம் சேந்தனிட உண்டனை' என்று பாராட்டுகின்றார்.
மற்றொரு சமயம் சேந்தனார் சிதம்பரத்தில் இருந்தபொழுது மார்கழி திருவாதிரைத் திருநாள் வந்தது. நடராசர் எழுந்தருளும் திருத்தேர் பல்லாயிரம் மக்கள் கூடியிருந்தும் ஓடாது நின்றது. இது கண்ட சேந்தனார் இறைவன் திருவருளால் திருப்பல்லாண்டு பாட ஓடாது நின்ற தேர் தானே ஒடி வந்தது.
சேந்தனார் திருக்கடலூருக்கு அருகிலுள்ள திருவிடைக்கழி ான்னும் தலத்தையடைந்து, அங்கு திருக்குரா மரத்தினடியில் ாழுந்தருளி அருள்பாலிக்கும் செவ்வேட் பரமனை வழிபட்டவாறு அங்கேயே ஒருதிருமடம் அமைத்து வாழ்ந்து வந்தார். மன்னனும் நிலமளித்து உதவினான். அப்பகுதி இன்னும் “சேந்தமங்கலம்’

Page 251
என்று வழங்கப்படுகிறது. இச்செய்தி திருவிடைக்கழி புராணத்தில் கூறப்பட்டுள்ளது. சேந்தமங்கலத்திலே சேந்தனார் வழிபட்ட கோயில் மறைந்துவிட்டது. ஆனால் அவர் வழிபட்ட சிவலிங்கத்தை அருகிலுள்ள விசலூரில் உள்ள கோயிலில் எழுந்தருளச் செய்துள்ளனர். சேந்தமங்கலம் இன்று இஸ்லாமியர்களின் உறைவிடமாக மாறியுள்ளது.
சேந்தனார் வரலாறு பற்றிய கருத்து வேறுபாடுகளும் உள்ளன. 'செப்புரை என்னும் ஊரைச் சார்ந்தவர், திருவிழிமிழலையைப் பிறப்பிடமாகக் கொண்டவர் என்ற கருத்துக்களும் உள்ளன. திருவிசைப்பாப்பாடிய சேந்தனார் வேறு. திருப்பல்லாண்டு பாடிய சேந்தனார் வேறு என்ற கருத்தும் உண்டு. திருவிசைப்பா பாடிய சேந்தனார் திருவீழிமிழலையைச் சேர்ந்தவர் என்றும், திருப்பல்லாண்டு பாடிய சேந்தனார் நாங்கூரைச் சேர்ந்தவர் என்றும் துடிசைக் கிழார் கூறுவர்.
முதலாம் இராசராசசோழன் (கி.பி. 985-1014) ஆட்சியில் திருவிழிமிழலை ஆலயத்தில் திருநந்தா விளக்கு வைத்த ஜெயந்தன் என்பவரைச் சிவஞானி என்றும், திருமாளிகைத் தேவர் என்றும் கல்வெட்டில் குறிக்கப்பெற்றுள்ளது. ஜெயந்தன் என்ற பெயரே 'சேந்தன்' என மருவிற்று என்றும் சேந்தனாரும், திருமாளிகைத் தேவரும் ஒருவரே என்றும் மு.இராகவ அய்யங்கார் அவர்கள் குறிப்பிடுவார்கள். ஆனால் இக்கருத்து பலராலும் ஏற்றுக் கொள்ளப்படவில்லை.
சேந்தனார் திருவீழிமிழலை, திருவாவடுதுறை, திருவிசைக்கழி ஆகிய மூன்று தலங்களுக்கும் திருவிசைப்பா பாடியுள்ளார். திருவிடைக்கழி திருவிசைப்பா முருகனைப் பற்றியது. இப்பாடல்கள் நற்றாயிரங்கல் எனும் அகத்துறைப் பாடல்கள். திருப்பல்லாண்டு பதின்மூன்று பாடல்களும் தில்லைக் குரியனவாகும்.
கண்டராதித்த சோழமன்னனின் (கி.பி. 947-957) ஆட்சிக் காலத்திலே தோன்றிய கல்வெட்டில் கல்விசயன்', 'தருணேந்து சேகரன்' என்ற தொடர்கள் காணப்படுகின்றன. சேந்தனாரது திருவாவடுதுறைப் பதிகத்து மூன்றாம் பாடலில்,
நினைக்கும் நிரந்தர னேயென்னும்
நிலாக்கோலச் செஞ்சடைக் கங்கைநீர் நனைக்கும் நலங்கிளர் கொன்றை மேல்
நயம்பேசும் நன்னுதல் நங்கைமீர் மனக்கின்ப வெள்ள மலைமகள்
மணவாள நம்பிவண் சாந்தையூர் தனக்கின்பன் ஆவடுதண்டுறைத்
தருணேந்து சேகரன் என்றுமே, என்ற குறிப்பு வருதலால் இவர் கண்டராதித்த சோழனுக்கு முற்பட்டவராதல் வேண்டும். பட்டினத்தடிகளின் பண்டாரக என்பதால் இவரது காலம் ஒன்பதாம் நூற்றாண்டின் இறுதியு பத்தாம் நூற்றாண்டின் தொடக்கமுமாகக் கொள்ளலாம்.
- (வ, வை

225
சேய்ஞலூர்
இத்தலம் கும்பகோணத்திலிருந்து திருப்பனந்தாள் செல்லும் வழியில் 9% மைல் தொலைவிலுள்ளது.
சூரபத்மனை அழிப்பதற்காகத் திருக்கயிலை மலையினின்று புறப்பட்ட கந்தப் பெருமான், முதலில் தன்னை எதிர்த்த கிரெளஞ்ச மலையையும், தாரகனையும் அழித்துவரும் பொழுது பல சிவ பதிகளையும் கண்டு வணங்கி மகிழ்கின்றார். காஞ்சி, திருவண்ணாமலை, திருவெண்ணெய் நல்லூர், தில்லை முதலிய தலங்களைத் தரிசித்தவாறு கன்னலும், செந்நெலும் ஓங்கும் சோழநாட்டின் காவிரி வடகரையில் உள்ள மண்ணி நதியின் மருங்கே அழகெலாம் ஒருசேர அமைந்து விளங்கும் வளம்மிக்க ஓர் தலத்தை யடைந்து இதுவே நாம் இருத்தற்கேற்ற நல்ல இடம் என்று திருவாய் மலர்ந்தருள, அருகிலுள்ள தேவர்கள் மகிழ்ந்து செவ்வேட் பரமன் உகக்கும் அவ்விடத்திற்கு 'சேய்ஞலூர் என்று பெயரிட்டனர். சேய்+நல்லூர்= 'சேய்ஞலூர் என்றாயிற்று. இத்தலம் தற்காலத்தில் சேங்கனூர் என வழங்கி வருகின்றது.
சண்டேஸ்வர நாயனார் திருஅவதாரம் செய்தருளிய தலம். இவ்வரலாற்றுக் குறிப்பினை இவ்வூர்ப் பதிகத்து ஏழாம்பாடலில், பீரடைந்த பாலதாட்டப் பேணாத வன்றாதை வேரடைந்து பாய்ந்ததாளை வேர்த்தடிந்தான்றனக்குத் தாரடைந்த மாலைகுட்டித் தலைமைவகுத்ததென்னே சீரடைந்த கோயின்மல்கு சேய்ஞலூர் மேயவனே என (முதலாந் திருமுறையில்) ஆளுடைய பிள்ளையார் குறிப்பிடுகின்றார். சண்டேசர் அவதரித்த புனிதபதி என்பதாற் சம்பந்தப் பெருமான் தனது சிவிகையினின்றும் இறங்கி நடந்து சென்றதாகச் சேக்கிழார் பெருமான் கூறுகின்றார். ஞானசம்பந்தரும் நாயனார்சடைத் தூநறுந் தொடையன் முன்குட்டும்பிள்ளையார் பான்மையில் வரும்பதி யென்றுநித்தில யானமுன் னிழிந்தெதிரிறைஞ்சி யெய்தினார். இங்கு எழுந்தருளியிருக்கும் இறைவனின் திருநாமம் சத்தகிரீஸ்வரர் - இறைவன் திருநாமம் - சகிதேவியார். தீர்த்தம் - மண்ணியாறு. இத்தலத்தில் ஒரு கல்வெட்டு உள்ளது.
(627. 6061.)
சேய்த்தொண்டர் புராணம்
சிவபெருமானுக்குரிய தொண்டர்களின் சரிதத்தைத் தொகுத்துக் கூறும் திருத்தொண்டர் புராணம் போலவே முருகன் அடியார் வரலாறுகளைத் தொகுத்துக் கூறும் நூல் "சேய்த்தொண்டர் புராணம்’ எனப்படும். இதனை வரகவி தேனூர் சொக்கலிங்கம் பிள்ளை அவர்கள் இயற்றித் தந்துள்ளார். 2,708 பாடல்களைக் கொண்டது. விரிவஞ்சி இந்நூல் அச்சிடப் படமுடியாமல், அதில் இடம்பெறும் அடியவர்களின் வரலாறு,
இந்துக் க்களஞ்சியம்

Page 252
அதற்கு ஆதாரமான பழைய தமிழ் நூற்பாடல்களுடன் உரைநடை உருவில் உள்ளது. பதினோராம் திருமுறையுள் குறிப்பிட்டது போன்று பத்தொன்பதாம் நூற்றாண்டிற்கு முன்பிருந்த 41 அடியவர்களைப் பற்றிய குறிப்பு சேய்த்தொண்டர் புராணத்துள் காணப்படுகின்றது. அவ்வடியார்கள் பின்வருமாறு:
செந்தில் வாழந்தணர்கள் அகத்தியர்
முசுகுந்தர்
JBIT660TTT
நக்கீரர்
நல்லியக் கோடன்
பரிபாடல் ஆசிரியர்கள் (i) கடுவன் இளனயினனார். (i) நல்லந்துவனார் (i) குன்றம் பூதனார் (iv) கேசவனார் (V) நல்லழிசியார் (wi) நப்பண்ணனார் (wi) நல்லந்துவனார் கல்லாட நூலாசிரியர் 9. ஒளவையார்
10. சேந்தனார் 11. கச்சியப்ப சிவாச்சாரியார்
12. கோனேரியப்பர் 13. முருகம்மையார் 14. பொய்யாமொழியார் 15. அருணகிரிநாதர் 16. ஞானவரோதயர் 17. நிரம்ப அழகிய தேசிகர் 18. சேறைக் கவிராசப் பிள்ளை 19. குமரகுருபரர் 20. சிவப்பிரகாச சுவாமிகள் 21. திருஞான சம்பந்த தேசிகர் 22. சம்பந்த சரணாலயர் 23. மார்க்க சகாய தேவர் 24. குணசீலர் 25. அந்தகக்கவி வீரராகவமுதலியார் 26. சிதம்பர சுவாமிகள் 27. சிற்றம்பல நாடிகள் 28. வென்றிமலைக் கவிராயர் 29. பகழிக் கூத்தர் 30. பாலசுப்பிரமணியக் கவிராயர் 31. விசயகிரி சின்னோவையன் 32. வேதாந்த சுப்பிரமணியபிள்ளை 33. மேலகரம் பண்டாரக் கவிராயர்
34. வைத்தியநாத தேசிகர்
இந்துக்கலைக்களஞ்சியம் 226

35. சாமிநாத தேசிகர் 36. சிவஞான தேசிகர் 37. கச்சியப்ப முனிவர் 38. தொட்டிக்கலை சுப்பிரமணிய முனிவர் 39. காஞ்சி - சிதம்பர முனிவர் 40. செங்கோடைக் கவிராஜ பண்டாரத்தையா 41. கந்தப்பதேசிகர்
சேய்த்தொண்டர் புராணத்திற்கு அடிப்படையாக சேய்த்தொண்டர் தொகை ஒன்று இயற்றப்பட்டது. சேய்த்தொண்டத் தொகை திருத்தொண்டர் தொகையைப் போன்றே இசையமைதி நிறைந்தது. தில்லைவாழந்தணர் என்று தொடங்குவது போன்று சேய்த்தொண்டத் தொகை “செந்தில் வாழந்தணர் என்று தொடங்குகிறது. (GDI. 60062/.)
சேரமான் பெருமாள் நாயனார்
இவர் பெரியபுராணம் கூறும் அறுபத்து மூன்று நாயன் மாருள் ஒருவர். சேரமானார் குலத்தவர். சேரமன்னர்கள் வழிவழி செங்கோல் செலுத்தும் சிறந்த நகரம் திருக்கொடுங்கோளூர். அங்குள்ள புகழ்மிக்க சிவாலயம் திருவஞ்சைக்களம். சேரமன்னர்களுக்குக் கோதை என்னும் சிறப்புப் பெயர் உண்டு. கோதையர்கள் அரசாண்டதால் கொடுங் கோளூர் மாக்கோதை
என்னும் பெயர்பெற்று விளங்கியது.
சேரர் குலமும், உலகமும் செய்த பெருந்தவப்பயனால் பெருமாக்கோதையார் என்னும் சேரர்பெருமான் அவதரித்தார். அவர் சிறுவயதிலேயே அரசர்க்குரிய தொழில்களில் ஈடுபடாது சிவமாம் செந்நெறியைப் பற்றி நின்று ஒழுகினார். சிவபெருமான் வீற்றிருந்தருளும் திருவஞ்சைக்கள ஆலயத்தை அடைந்து அதற்கு அருகிலேயே ஒரு மாளிகை அமைத்துக் கொண்டு திருத்தொண்டுகள் புரிந்து வந்தார். இத்திருமாளிகை அமைந்த இடம் தற்பொழுது 'சேரமான்புறம் என அழைக்கப்படுகின்றது. இது ஆலயத்திற்குத் தெற்கே கடற்கரைக்குப் போகும் குலசேகரபுரம் சாலையில் சுமார் % மைல் தொலைவில் உள்ளது. தற்பொழுது இச்சேரமான்பறப்பு கொச்சி அரசாங்கத்தாரால் நினைவுத்தூண் நிறுவி எல்லை அமைத்துப் பாதுகாக்கப் படுகின்றது.
பெருமாக் கோதையாருக்குக் கழறிற்றறிவார்'சேரமான் பெருமாள்' என்னும் பெயர்கள் உண்டு. ஜீவராசிகள் பேசும் மொழியை அறியும் வல்லமை படைத்தவர். “யாவும் யாரும் கழறினவும் அறியும் உணர்வும்” உடைமையால் கழறிற்றறிவார் என்ற பெயர் எற்பட்டது. உலகவாழ்வும், அரச வாழ்வும் நிலையில்லாதன என்பதை உணர்ந்து ஆலயத் தொண்டுகளைச் செய்தும், இறைவன்மீது பாடல்களைப் பாடியும், மலர்த்தொண்டு செய்தும் இறைவனை வழிபட்டு வந்தார்.

Page 253
இவ்வாறு பெருமாக்கோதையார் சிவப்பணிபுரிந்து வரும் நாளிற் சேரன் செங்கோற்பொறையன்' தானாகவே அரசாட்சியை நீத்துத் தவம்புரியக் கானகம் சென்றான். அரசன் கானகம் அடைந்தபின், அறநூலும், அரசநூலும் உணர்ந்த மதிநலம் சான்ற அமைச்சர்கள், தங்களுள் ஆராய்ந்து தெளிந்து முன்னை மரபினாலே சிவத்தொண்டுபுரியும் பெருமாக்கோதையாரே அரசராகும் உரிமையுடையவர் என்று கண்டு திருவஞ்சைக்களம் சென்று பெருமான் கோதையாரிடம் தங்கள் எண்ணத்தை விண்ணப்பித்தனர். அரசியல், திருத்தொண்டு புரிவதற்குத் தடையாகிவிடும் என்று கருதி முதலில் மறுத்தாராயினும், இறைவனது திருவுள்ளக்கிடக்கையை அறிந்து அரசராவதற்கு இசைவு தந்தார்.
அமைச்சர்கள் மங்கல நன்னாளில் விதிமுறைப்படி கழறிற்றறிவாருக்கு இம்மை, மறுமை இரண்டு உலகிற்கும் பொருந்துவதாகிய மணிமுடியைச் சூட்டினார்கள். மணிமுடி தாங்கிய சேரர் பெருமான் திருக்கோயிலினை வலம்வந்து நிலமுற வீழ்ந்து வணங்கித் துதித்து நகர்வலம் செய்ய யானைமீதேறினார். நகர் வலம் வரும்பொழுது உவர்மண்பொதியினைச் சுமந்து கொண்டு வண்ணான் ஒருவன் தம்முன்பு வருதலை மன்னர் கண்டார். மழையினாலே உவர் மண் கரைந்து அவனது உடல் முழுதும் உவர் ஊறி வெளுத்திருந்தது. சேரமான் வண்ணானின் இந்தக் கோலத்தைக் கண்டதும், விபூதி உத்தூளனம் செய்த சிவனடியார் திருவேடமிது என்று கருதி, யானைமீதிருந்து இறங்கி வணங்கினார். சேரமான் தன்னை வணங்குவதைக் கண்டு அவ்வண்ணான் மனங்கலங்கி மன்னரின் திருவடிகளில் வீழ்ந்து வணங்கி ‘தேவரீர், அடியேனை யாதாகக் கருதினிர்? அடியேன் அடி வண்ணான்’ என்று கூற சேரர்பிரானும் அது கேட்டு "அடியேன் அடிச்சேரன். உமது வடிவினால் சிவவேடத்தினை அடியேனுக்கு நினைப்பித்தீர். வருந்தாது செல்க” என்று விடையளித்தார். அமைச்சர்கள் அனைவரும் வேந்தனது திருத்தொண்டின் உறைப்பை எண்ணி வியந்தனர்.
சேரமான் பெருமாள் அகத்தும், புறத்தும் பகை கடிந்து திரு நீற்று ஒளிவிளங்க வேதநெறி ஓங்க மனுநீதிமுறைப்படி ஆட்சி புரிந்து வந்தார்.
ஆட்சிப்பயனும், நிறைதவமும், தேடும்பொருளும் தில்லையம்பலக் கூத்தனின் குஞ்சிதபாதமே என்ற மெய்யுணர்வோடு சிவாகம முறைப்படி நாள்தோறும் வழுவாமல் பூசனை புரிந்து வந்தார். அப்பூசனையை விரும்பி ஏற்றுக் கொண்ட ஆடல் வல்லானும், அப்பூசைமுடிவில் தனது காற்சிலம் பொலியை சேரமான் பெருமாள் கேட்கும் வண்ணம் அருளினார். இவ் வண்ணம் நாடொறும் சிலம்பொலி கேட்டுப் பேரின்பமுற்றார் கழறிற்றறிவார். அடியார் பெருமக்களுக்குச் செம்பொன்னை மழைபோல வாரிவழங்கினார். சிவவேள்விகள் பலவும் செய்து சிவபுண்ணிய சீலராக விளங்கினார்.

227
சேரமான் பெருமாள் இவ்வாறு ஒழுகி வரும் நாளில் மதுரை ஆலவாயின் அவிர்சடைக் கடவுள், இசையினால் தன்னைத் துதிக்கும் பாணபத்திரன் என்ற அடியவருக்காகச் சேரமான் பெருமாளுக்குத் தமது திருக்கரம்பட திருமுகப் பாசுரம் எழுதி பாணபத்திரனிடம் கொடுத்து “இதனை சேரலர் கோவிடம் சேர்ப்பாயாக. சேரன் அளவில்லாத பொன்னையும் பொருளையும் உனக்குக் கொடுப்பான். பெற்று வருவாயாக’ என்று அனுப்பினார். இவ்வற்புதப் பாசுரம் 11ஆம் திருமுறையின் முகப்புப் பாடலாக அமைந்துள்ளது.
மதிமலி புரிசை மாடக்கூடல் பதிமிசை நிலவு பானிற வரிச்சிற(கு) அன்னம் பயில்பொழில் ஆலவாயில் மன்னிய சிவன்யான் மொழிதரு மாற்றம் பருவக் கொண்மூப் படியெனப் பாவலர்க்(கு) உரிமையின் உரிமையின் உதவி ஒளிதிகழ் குருமா மதிபுரை குலவிய குடைக்கிழ்ச் செருமா உகைக்கும் சேரலன் காண்க! பண்பயில் யாழ்பயில் பாணபத்திரன் தன்போல் என்பால் அன்பன் தன்பால் காண்பது கருதிப் போந்தனன் மாண் பொருள் கொடுத்து வரவிடுப்பதுவே
சோமசுந்தரப் பெருமானின் திருவருளாணையின் வண்ணம் கணக்கற்ற செல்வங்களையும், யானை, குதிரை, பசு முதலாக உயிருள்ள பொருள்களையும் கொடுத்து "அடியேனது ஆட்சியையும் ஏற்றுக் கொள்ளுங்கள்’ என்று பணிந்து வேண்டினார் சேரர்பெருமான். பாணபத்திரரோ தமக்குத்
தேவையான பொருள்களையே பெற்றுச் சென்றார்.
இவ்வண்ணம் அறநெறிவழுவா ஆட்சியுடன், சிவபூஜையினையும் மகிழ்ச்சியுடன் ஏற்றுச் செய்யும் காலத்தில் ஒரு நாள் சிலம்பொலி கேட்கவில்லை. மதிமயங்கிய மன்னன் தனது வழிபாட்டிலேதான் பிழையுளது என்று கருதி, இனிஉயிர் வாழ்வது குற்றம் என்று தனது உடைவாளை உருவித்தனது மார்பில் நாட்ட முற்படும் பொழுது கூத்தப் பெருமான் சிலம்பொலியை அதிகமாகவே கேட்குமாறு செய்தார். சேரமானும் உடைவாளைக் கீழே போட்டு நிலமுற வணங்கி, எழுந்து உச்சிமீது கரங்கூப்பி ‘தேவரீர் இன்று திருவருள் செய்யாதொழிந்த காரணம் என்ன? என்று வினவ, “தில்லையம்பலத்துள் நமது கூத்தினை வணங்கி சுந்தரன்பாடிய செந்தமிழில் திளைத்து இருந்ததனால் இங்கு வரத் தாழ்ந்தோம்” என்று அருளி வன்தொண்டருடன் சேரமானை நட்புக் கூடச் செய்தார்.
நம்பியாரூரரைக் காணவேண்டும் என்ற வேட்கையால் தில்லைக்கு எழுந்தருளினார். அங்கு கூத்தப் பெருமானின் திருமுன்பு திருக்களிற்றுப்படிக்குக் கீழே நின்று “பொன்

Page 254
வண்ணத்தந்தாதி” பாடித் துதிக்க, பெருமான் மகிழ்ந்து தனது காற்சிலம்போசையைக் கேட்குமாறு செய்தார். அங்கிருந்து நம்பியாரூரரைக் காணத் திருவாரூரிற்குச் சென்று கண்டு பேரானந்தமுற்று இருவரும் நட்புரிமை பூண்டனர்.
இருவரும் சிவானந்தப் பெருங்கடலிலே திளைத்துவரும் பொழுது சுந்தரர் பெருமான் பாண்டிநாடு சென்று ஆலவாய்ப் பெருமானைத் தரிசிக்க விருப்பமுற்றார். சேரமானும் உடன் செல்ல உறுதிகொண்டார்.
சுந்தரரும், சேரமானும் வருவதை அறிந்த பாண்டிய மன்னன் இருவரையும் சிறப்பாக மன்னருக்குரிய சிறப்போடு வரவேற்றார். தமக்குத் திருமுகப்பாசுரம் கொடுத்தருளிய கருணைக்கடலைச் சேரமான் பெருமாள் வணங்கி மகிழ்ந்தார்.
சுந்தரரும், சேரமான் பெருமாளும் பாண்டிநாட்டுத் தலங்கள் பலவற்றையும் வணங்கி இருவரும் சுழியல் என்னும் தலத்தினை வணங்கி அங்கு தங்கியிருந்த பொழுது சுந்தரருக்குக் கனவின் கண் இறைவன் காளைவடிவத்துடன் திருக்கரத்தில் பொற்செண்டும், திருமுடியில் சுழியமுமாக எங்கும் காணமுடியாத திருவடிவத்துடன் நாம் இருப்பது கானப்பேர் என்று கூறி மறைய ஆளுடை நம்பியும் தமது கனவை, சேரருக்கு உரைத்து இருவருமாகத் திருக்கானப்பேரினை (காளையார் கோவில்) அடைந்து இறைவனை வணங்கினர். பிறகு சோழநாடு சென்று திருவாரூரினை அடைந்தனர். நீண்டநாட் பிரிவிற்குப் பிறகு தியாகேசரை வணங்கி உள்ளம் மகிழ்ந்தனர். பரவையாரின் உபசரிப்பிற் சேரமான் பலநாட்கள் திருவாரூரிலேயே தங்கினார். பின்பு சேர நாட்டிற்கு வருமாறு ஆரூரரைத் தொழுது வேண்டி அவரது இசைவுபெற்று சேரநாட்டிற்கு இருவரும் எழுந்தருளினர்.
வழியிலே திருக்கண்டியூரை வணங்கிக் காவிரியின் வட கரையிலே திருவையாறு தோன்றவும் நீர் பெருகி நிற்கும் காவிரியைத் தாண்ட வகையறியாது தென்கரையில் நின்று "பரவும் பரிசு” என்று தொடங்கி திருப்பாட்டுக்கள் தோறும் ஐயாறுடைய அடிகளோ என்று அமைத்துச் சுந்தரர்பாட, கன்று தடைபட்டு நின்று தாய்ப்பசுவை அழைப்பது போல நம்பியாரூரரின் பாடலைக் கேட்ட சிவபெருமான் சராசரங்கள் எல்லாம் கேட்கும்படி ஒலம் என்று கூறியருள காவிரி நதியும் பிரிந்து வழிகாட்டியது. இருவரும் ஐயாறப்பரை வணங்கிச் சேரநாட்டுக் கொடுங்கோளூரை அடைந்தனர். மக்கள் ஆரவாரமாக வரவேற்பளித்தனர். இருவரும் அஞ்சைக் களத்தப்பரைத் தரிசித்து பேரன்புடன் முடிப்பதுகங்கை’ என்னும் திருப்பதிகம் பாடித் துதித்தார் சுந்தரர் பெருமான்.
சேரமான் தோழராகப் பலநாட்கள் அங்குதங்கி, சேரமானின் சிறந்த உபசரிப்பில் மகிழ்ந்த நம்பியாரூரர் திருவாரூர்ப் பெருமானைக் காணும் வேட்கையினாலே திருவாரூர் சென்றார். பெருநிதிகளை வழங்கிச் சேரமான் விடை தந்தார்.
இந்துக்கலைக்களஞ்சியம்
228

சிலநாட்கள் ஆரூரரை வணங்கிப் பெருமகிழ்ச்சி எய்திய சுந்தரர் சேரமானைக் காணவேண்டும் என்ற காதல் முந்துறச் சேரநாட்டிற்குச் சென்றார். சென்ற சுந்தரரை யானைமீது இருத்தி வஞ்சிநகர்வலம் வந்து, தமது அரண்மனைக்கு அழைத்துச் செல்கின்றார் சேரர்பெருமான். பலநாட்கள் இருவரும் மகிழ்ந்து சேரநாட்டுத் தலங்களை வணங்கிக் களிகொண்டு இருக்கையில் சுந்தரர் இப்பூவுலகிற்குத் தாம் வந்த கால எல்லை முடிவதை அறிந்து திருவஞ்சைக்களம் சென்று மனைவாழ்க்கையின் பந்தத்தை அறுத்திட்டு இறைவன் திருவடியைச் சேரவேண்டும் என்ற குறிப்போடு தலைக்குத்தலைமாலை என்று தொடங்கும் பதிகம்பாட, சிவபெருமான் மகிழ்ந்து தனது ஐராவதமாகிய வெள்ளையானையைத் திருவஞ்சைக் களத்திற்கு அனுப்ப, தேவர்கள் மலர்மழைபொழிய, சுந்தரர் திருக்கயிலாயத்திற்கு வெள்ளையானையின்மீது ஏறி விரைந்தார்.
சுந்தரர் வெள்ளையானையில் திருக்கயிலாயம் செல்வதை அறிந்த சேரலர்கோமான் தமது குதிரையின் செவியில் திருவைந்தெழுத்தை ஒத காற்றினும் கடிது சென்ற அப்பரி சுந்தரரின் வெள்ளையானையை வணங்கி வலம் வந்து அதற்கு
முன்னே பறந்தது.
நம்பியாரூரர் 'தானெனை முன்படைத்தான்’ என்ற திருப்பதிகத்தைப் பாடியவாறு திருமலையின் தென்திசை வாயிலை வந்தணைந்தார். அப்பொழுது அங்குவந்த சேரமான் பெருமாளுடன் இணைந்து பல வாயில்களையும் கடந்து திருஅணுக்கன் வாயிலை அடைய, அங்கு சேரமான் தடைப்பட்டு நிற்க, இறைவன் திருமுன் சென்ற நம்பியாரூரர் சேரமானின் வரவை அறிவிப்ப அவரைக் கொணர்க என்று சிவபெருமான் ஆணைதர நந்தியம்பெருமான் சென்று சேரரை அழைத்துவந்தார். சேரர்பெருமான் சொல்லொணாப் பெருமகிழ்வுடன் ஆளும்நாயகனை வணங்கிய ஆனந்தத்தில் ஞானவுலா என்ற பிரபந்தத்தைப் பெருமான் திருமுன்னர்பாடி வணங்க, சிவபெருமான் மகிழ்ந்து நம்பியாரூரரையும், சேரமான் பெருமாள் நாயனாரையும் தமது கணத் தலைவராக நியமித்துத் திருவருள் புரிந்தார்.
ஆதியுலா என்ற புகழ்பெற்ற திருக்கயிலாய ஞானவுலா பாட்டுடைத் தலைவனாகிய சிவபெருமான் திருமுன்பு அரங்கேறும் பெருமைகொண்டது. சுந்தரர்பாடிய திருக்கயிலாயப் பதிகமாகிய தானெனைமுன் படைத்தான்’ என்ற திருப்பதிகத்தை வருணதேவன் பெற்று, அதனைத் திருவஞ்சைக்களத்திற்குக் கொண்டுவந்து யாவரும் உணரும்படி செய்தான். சேரமானுடைய ஞானவுலாவைக் கேட்ட மாசாத்தனார் தமிழ் நாட்டிலுள்ள திருப்பிடவூருக்குக் கொண்டு வந்து யாவரும் போற்ற அதனை வெளியிட்டருளினார். .

Page 255
சேரமான் பெருமாள் நாயனாரின் வரலாற்றுச் சுருக்கம் இதுவாகும்.
இவ் வரலாற்றிலே சுந்தரர் தில்லைச் சிவனாற் சேரமானுக்கு அறிமுகஞ் செய்து வைக்கப்பட்ட சம்பவம் விசேஷமாகக் கருதத் தகும்.
பந்தநிலை ஆன்மாக்களாகிய நம் போல்வார்க்கு எங்கள் லெளகிகத் தேவைகள் நிறைவேறுவதற்கு உதவும் சாதனங்களை அர்த்த வடிவிலோ, ஆள் வடிவிலோ கூட்டி வைப்பது போலச் சுத்த நிலை ஆன்மாக்களாகிய சீவன் முத்தருக்கும் அவரவர்களின் ஆன்மீக சாதனங்களை அர்த்த வடிவிலோ, ஆள் வடிவிலோ கூட்டி
வைக்கத் தவறுவ தில்லை.
இங்கு சேரமான் சிவயோகி. சிவயோகியாகிய அவரது சிவயோகப் பயிற்சி முதிர்ச்சியின் பொருட்டுப் பழுத்த சிவயோகி
{
※
சைவக் கிரியைகள்
இந்துக்களின் வாழ்விலே இரண்டு விதமான கிரியைகள் இடம்பெறுகின்றன. உலகின் ஆன்மீக ஈடேற்றத்துக்காகச் செய்யப்படும் கிரிய்ைகள் பரார்த்தம் எனப்படும். தமது சுயநன்மையின் பொருட்டுச் செய்யப்படும் கிரியை ஆன்மார்த்த கிரியை எனப்படும். சைவக்கிரியைகள் என்னும் பிரிவில் அடங்கும் ஆன்மார்த்த கிரியைகள் பூர்வகிரியை, அபரகிரியை என இருவகைப்படும். தாயின் கர்ப்பத்தில் இருந்து இவ்வுலக வாழ்வு முடியும் வரை செய்யப்படும் கிரியைகள் பூர்வகிரியைகள்.
திருமணக் கிரியை:
பூர்வகிரியைகளுட் திருமணக் கிரியை முக்கிய இடத்தைப் பெறுகிறது. அது வாழ்வின் முக்கியமான அம்சமாகும். மானிடப்பிறவி எடுத்ததன் முக்கிய நோக்கம் அறத்தின் வழி நின்று பொருளைத் தேடி இன்பத்தை நுகர்ந்து, வீடுபேறு அடைதலே ஆகும். அந்த நற்பயன்களை அடைவதற்கு ஒரு வாழ்க்கைத் துணையைத் தேடி இணைத்துக் கொள்ளும் நன்னாளே திருமணம் ஆகும். அதில் கோயிற் கிரியைகளில் இடம்பெறும் அனுஜ்ஜை, சங்கற்பம், பிள்ளையார் பூசை, புண்ணியகானம், அங்குரார்ப்பணம், இரட்சாபந்தனம், கும்ப பூசை, ஓமம் வளர்த்தல் ஆகியன இடம் பெறும். இவைகளைத் தொடர்ந்து திருமணத்திற்குச் சிறப்பாகவுள்ள பிதிர்தேவர்களது ஆசீர்வாதம் பெறல், மணமகனுக்கு உபசாரம் செய்தல், கன்னிகாதானம், கூறை கொடுத்தல், தாலிகட்டல், அக்கினி பூஜை, பால், பழம் கொடுத்தல்,

யான சுந்தரரின் சேர்க்கை சிவனால் கூட்டி வைக்கப் பட்டிருக்கிறது. சுந்தரரின் சிவயோக நிலை முதிர்வித்தற் பொருட்டே அவரைத் தமக்குத் தோழனாக ஏற்றுத் தம்பிரான் தோழரென அவரைப் பிரகடனப் படுத்தி வைத்த சிவபெருமான் மீளச் சேரனார் சிவயோக முதிர்ச்சி அநுபவத்தின் பொருட்டு அவரைத் தாமாகச் சேரமானுக்கு அறிமுகப்படுத்தியமை சிலம்பொலி கேட்கத் தாமதிக்கப்பட்ட நிகழ்வின் தாற்பரியமாம். சுந்தரர் சேர்க்கையாற் சேரமானின் சிவயோக அநுபவம் நாளுக்கு நாள் முறுக்கேறி வந்தமை இருவரும் ஒருவரையொருவர் பற்றி நிற்கும் அந்தரங்க இயைபுடன் ஒழுகி வந்த நிகழ்வின் தாற் பரியமாம். சிவயோக முதிர்ச்சியிற் சேரமான் சுந்தரர் நிலைக்கு ஈடாகிவிட்டமை இருவரும் ஒன்றாகவே கயிலை அடைந்ததும் கைலாசபதியால் ஒத்த சிவாநுபவநிலையில் வைக்கப்பட்டதுமான நிகழ்வுகளின் தாற்பரியமாம் எனக் கண்டு கொள்ளுதல் கூடும்.
(வ, வை.)
S4 ఏకీ4 N響/ -- e-s-s-s /\ /\ / AN
CD6F
நவக்கிரகதானம், பசுதரிசனம், பாணிக்கிரகணம் (கையைப் பற்றுதல்) அம்மிமிதித்தல், அருந்ததி காட்டல், பிராயச் சித்தம், அக்கினியை வலம் வருதல், பெரியோர் வாழ்த்துதல் ஆகிய கிரியைகள் நடைபெறும். பருவமடைந்த ஆண், பெண் இருவரதும் சாதங்களைச் சோதிடர் மூலம் முறைப்படி பார்த்துப் பொருத்தம் நிச்சயம் பண்ணிய பின் பெண் வீட்டாரும், மாப்பிள்ளை வீட்டாரும் தமக்குள்ளே கலந்து திருமணநாளை நிச்சயம் பண்ணுவர். அத்துடன் தாலிக்குரிய பொன்னை உருக்குவதற்கும் நாள்பார்த்து அன்றைய தினம் பொன்னுருக்கலும், பந்தற்கால் நடுவதும் இடம்பெறும். திருமணநாளன்று சுபநேரத்தில் தோழனுடன் மணப்பந்தலுக்கு வரும் மண மகனுக்கு சிவாச்சாரியார் சில
கிரியைகளை மேற்கொள்வார்.
அனுஜ்ஜை செய்யப் புகும் கிரியையில் உள்ளத்தை உறுதி செய்தல். (மணமகன் திருமணம் செய்வதற்கும் ஆசாரியார் அதை
நடத்திவைப்பதற்கும் உள்ளத்தை நிறுத்துதல்).
விநாயகர் பூஜை: எந்தக்கிரியையும் இனிது நடைபெற விநாயகக் கடவுளது திருவருள் வேண்டப்படும். அதுவே விநாயகர் பூஜையாகும்.
ஆசமனம் மணமகன் மூவகைத் தத்துவங்களையும் நினைத்து நீரை உட்கொள்ளல். இதனால் உள்ளம் தூய்மையாகி ஆன்மா
அருள்வழி நிற்கும்.

Page 256
புண்ணியகானம்: திருமணம் நிகழ இருக்கும் இடத்தையும், பொருளையும் சுத்தி செய்தல். இது பஞ்சகவ்வியம் கொண்டு செய்யப்படும்.
அங்குரார்ப்பணம்: நவதானியங்கள் முளைப்பதற்காக இடுதல். மணமகன் மணமகள் ஆகிய இரு பகுதியிலும் உள்ள ஐந்து அல்லது மூன்று சுமங்கலிப் பெண்கள் தமது கையாற் சட்டியில் நவதானியங்களை இடுதல். இதனைச் செய்வதன் நோக்கம் எல்லா நன்மைகளும், செல்வங்களும் கிடைக்க வேண்டும் என்பதாகும்.
இரட்சாபந்தனம்: இது காப்புக் கட்டல் எனப்படும். மணமகன் மணமகள் இருவருக்கும் தனித் தனியாகக் காப்புக் கட்டப்படும். மணமக்கள் பாவங்களிலிருந்தும் நீங்கி, தொடங்கிய கருமத்தை இடையூறின்றி முடிக்கவும் இடையில் (ஆசௌசம்) குற்றங்கள் முதலியன தீண்டாதிருக்கவும் கையிற் காப்புக் கட்டப்படும்.
கும்பபூஜை மணமகனுக்கு இரட்சாபந்தனமான பின்னர் ஆசாரியார் முறைப்படி சிவனதும், சக்தியினதும் அருளைப் பெறுவதற்காகச் செய்யப்படும் கிரியையே கும்ப பூஜையாகும்.
நவக்கிரக பூஜை வாழ்க்கைக்கும் நவக்கிரகங்களுக்கும் தொடர்புண்டு. எனவே அவற்றால் வரும் குற்றங்களைப் போக்கியருளும்படி செய்யும் பூஜை இதுவாகும். வாழ்க்கையில் அடியெடுத்து வைக்கும் மணமக்களுக்கு நவக்கிரக தோஷங்களின் பலத்தை இப் பூஜை குறைக்கச் செய்யும்.
ஓமம் வளர்த்தல்: கும்பத்திலே பூசித்த சிவன், சக்தி ஆகியோரின் அருளை நிலைபெறச் செய்வதற்காக ஓமக் குண்டத்திலே அக்கினிகாரியம் செய்யப்படும். இங்கு வளர்க்கும் அக்கினி, சிவாக்கினி எனப்படும். சிவாக்கினி வாழ்க்கைக்கு வேண்டிய தூய அருளை நல்கும்.
பிதுர் ஆசீர்வாதம் குடும்ப வாழ்க்கை தொடங்கும் போது அது தவறின்றி நடப்பதற்கு அக் குடும்பத்து முன்னோரது ஆசீர்வாதம் வேண்டும். அதற்காக முன்னோராகிய பிதிரர்களைத் திருமணத்திற்கு அழைத்து அவர்களது ஆசியைப் பெறும் கிரியை. மணமக்கள் இருவரினதும் தந்தையார்களினாற் செய்யப்படும். (மணமக்களின் பேரன், பூட்டன் பெயர்கள் கூறி ஆசி வேண்டப்படும்)
மணமகனுக்கு உபசாரம்: மேற்கூறிய கிரியைகள் முடிவடைந்தபின் மணமகளை வரவழைத்து மணமகனின் வலப்பக்கத்தில் இருத்தி, இரட்சாபந்தனம் செய்தபின்பு அவளுடைய தகப்பனார் கன்னிகாதானம் செய்வதற்காகச் சங்கற்பம் செய்து கொள்வர். பின்பு பட்டு வேட்டி சால்வையுடன்
உபசாரப் பொருட்களை உபகாரமாக மணமகனுக்குக் கொடுப்பர்.
இந்துக்கலைக்களஞ்சியம்
230

கன்னிகாதானம் மணமகளைத் தானமாக வழங்குதல். மணமகளின் தந்தை தனது மகளை தானமாகத் தாரை வார்த்து மணமகனின் கையில் அளிப்பர். தண்ணிரைத் தாரையோடு கொடுப்பதால் இது தாரா தத்தம் அல்லது தாரைவார்த்தல் எனப்படும். கையில் நீர்விடல் ஒரு பொருளை முழுமையாகக் கொடுத்தலுக்கு அறிகுறி.
கூறை கொடுத்தல்; பெண்ணின் திருமணச் சேலை, தாலி, மற்றும் உபசாரப் பொருட்களை வைத்துச் சுத்தி செய்து பூசித்த பின் பெரியோரினால் அவை ஆசீர்வதிக்கப்படும். பின்னர் மணமகன் மணமகளுக்கு உபசாரமாகக் கூறையைக் கொடுப்பான்.
தாலி கட்டல் மணமகளிடம் கொடுத்த கூறையை மாற்றி வந்த பின் மாங்கல்ய பூஜை செய்து, அவையோர் ஆசீர் வதிக்க, கெட்டி மேளம் முழங்க தாலிகட்டல் இடம்பெறும். மங்கல நாண் பூட்டுதல் என்றும் இதைக் கூறுவர். அதன் பின் மணமகள் மணமகனுக்கு இடப்பக்கமாக அமர்ந்து உமா மகேஸ்வரராகப் பாவனை பண்ணிக் கிரியை நடத்தப்படும்.
மாலை மாற்றுதல்: இதிற் பெண்ணின் கழுத்திலிருக்கும் மாலை ஆணுக்கும் ஆணின் கழுத்திலிருக்கும் மாலை பெண்ணுக்குமாக மூன்று முறை கழற்றி மாற்றப்படும். வாழ்க்கையில் உடலால், உள்ளத்தால், செயலால் நாம் இருவரும் ஒருவரே என்ற தத்துவத்தின் அடிப்படையில் இந் நிகழ்வு இடம்பெறும்.
பால் பழம் அருந்துதல்: தயிர், தேன், சர்க்கரை, நெய், பழம் சேர்த்துக் கொள்ளப்பட்ட பதார்த்தத்தை மணப்பெண் முதலில் மணமகனுக்கும் பின்னர் மணமகன் பெண்ணுக்கும் கொடுப்பார்கள். உயர்ந்த பதார்த்தங்களின் சுவை போன்று மணமக்கள் வாழ்வு முழுவதும் நலம் நிலவவேண்டும் என்பதற்காக இது வழங்கப்படுவது.
கோதரிசனம்: பசு, புண்ணியத்தின் வடிவம். அப்புண்ணிய வடிவத்தைப் பார்த்தல் நல்ல சகுனம். வாழ்க்கையில் யாவும் வெற்றி பெறும் என்ற நம்பிக்கை இதனால் ஏற்படும்.
ஏழடி வைத்தல்: மணமகளுடைய கையை மணமகன் பிடித்துக் கொண்டு தோழி, தோழனுடன் அக்கினியை வலம் வருகையில் ஏழடி வந்ததும் அம்மி மிதித்தல் நடைபெறும். மும் முறை இந்நிகழ்ச்சி இடம் பெறும். ஏழடி வைத்தலின் நோக்கம் இல் வாழ்விலே பெறவேண்டிய ஏழு பொருட்களைப் பெறுவதற்கு இருவரும் ஒத்து முயற்சி செய்ய வேண்டும் என்பதாகும். ஏழு பொருட்களாவன: உணவுப்பொருள், உடற்பலம், கடவுள் வழிபாடு, மன அமைதி, அறிவு, காலத்துக்குக் காலம் வரும் பொருள்களும் அவற்றால் வரும் சுகங்களும், யாகத்திற்கு வேண்டிய துணைகள். வலம் வரும் போது சொல்லப்படும் மந்திரத்தினாலும், கிரியையினாலும் மணமகள் மணமகனின் கோத்திரத்தைச் சேர்ந்து ஐக்கியமடைகிறாள் என்று கருதப்படுகிறது.

Page 257
அம்மி மிதித்தல் மணமகளது வலது காலை மணமகன் தூக்கி அம்மிமீது வைப்பார். இதன் கருத்து பெண்ணானவள் அந்தக் கல்லைப் போல தன்னுடைய நிலையில் இருந்து கற்புறுதியுடன் வாழ வேண்டும் என்பதாகும்.
பிராயச் சித்தம் குற்றம் குறைகளைத் தீர்த்தற்காகப் பிராயச் சித்த ஒமமும் கிரியைகளின் நிறைவு குறித்துப் பூரணாகுதியும் நடைபெறும்.
அருந்ததி காட்டல்: இது ஒழுக்கம், அறிவு, பிறரைவிழையாமை, உறுதிப்பாடு, ஆகியவற்றின் உயர்வு குறித்துக் காட்டப்படும். இது பெண்ணுக்கு மாத்திரமன்றி ஆணுக்கும் உரியது. ஆணுக்கு கற்பு நெறியை வலியுறுத்தவே அரசாணி (முள்முருக்கு) வைக்கப்படுகிறது.
ஆசீர் வாதம் இறுதியாக ஆசாரியார் பூரணாகுதி செய்து மணமக்களை ஆசீர்வதிப்பர். அதன் பிற்பாடு நிறைவான பெரியோர் அறுகரிசி போட்டு ஆசீர்வதிப்பர். அறுகெடுத்து வாழ்த்தும் வழக்கம் பண்டைய காலந்தொட்டே வழங்கி வருகிறது. திருமணக் கிரியைகளில் ஆரம்பமுதல் வாழ்த்து நடைபெறும் வரை
மங்கள வாத்தியங்கள் ஒலிக்கப்படும்.
புதுமனை குடிபுகும் கிரியைகள்
புதிதாகக் கட்டப்பட்ட மனையிலே வாழத்தொடங்குமுன் சில கிரியைகள் செய்ய வேண்டுமென சாஸ்திர நூல்கள் கூறுகின்றன. இக் கிரியைகள் பெரும்பாலும் விவாக கிரியைகளை ஒத்திருப்பதால் அவற்றின் விரிவான விளக்கம் இங்கு இடம் பெறவில்லை.
கிரியைகள்: சங்கற்பம், புண்ணியகானம், விக்னேஸ்வர பூஜை வாஸ்து பூஜை (இல்லத்திற்குச் செய்யும் பூஜை), யாகம், நவக்கிரக பூஜை, இலக்குமி பூஜை, வீட்டுப் பிரவேசம், பால் காய்ச்சுதல். பொங்கல் செய்தல் முதலியன.
அபரக் கிரியைகள்
ஒருவர் இறந்தபின் அவரது நன்மை கருதி அவரது பிள்ளைகளாற் செய்யப்படும் கிரியைகள் அபரக் கிரியைகள். அபரம் என்றால் பிந்தியது எனப் பொருள்படும். கிரியைகள் செய்வதனால் இறந்த ஆன்மா பாவங்களினின்றும் நீங்கி, சிவத்துவம் அடையும் என்பது நம்பிக்கை. தாய் தந்தையர்க்குச் செய்ய வேண்டிய கடமைகளை அவர்கள் உயிருடன் இருக்கும் போதும் இல்லாத போதும் பிள்ளைகள் தவறாது செய்தல்
வேண்டும்.
இல்லறத்தார்க்குரிய ஐவகைக் கடமைகளிற் பிதிர்க் கடன் முக்கியமானதாலேயே திருவள்ளுவர் அதனை ‘தென்புலத்தார் என முதலிற் கூறி உள்ளார். பிதிர்க் கடன் செய்தோர்

231
பெரும்பேறுகளும் சித்திகளும் பெறுவர். பிதிர்க் கடன் செய்யாதோர் சமய ஆசாரம் தவறியவராய்ப் பெரும் தீமைக்கு ஆளாக நேரிடும்.
அபரக்கிரியைகளை தகனக்கிரியை, அத்திசஞ்சயனம் அந்தியேட்டி, ஏகோதிட்டம், சபிண்டீகரணம், மாசியம், சிரார்த்தம் எனப்பல பகுதிகளாகப் பிரிக்கலாம். அவை உத்தரக்கிரியை, சிரார்த்தக் கிரியை எனவும் அழைக்கப்படும்.
மரணக் கிரியைகள்
தகனக் கிரியையில் மூன்று பகுதிகளுண்டு. அவையாவன பேரிகையடித்தல், உடற்சுத்தி, ஆன்ம சுத்தி என்பனவாகும்.
பேரிகையடித்தல்: ஆசாரியார் புண்ணியகானம் செய்து அந்த நீரினால் இடத்தையும் பொருட்களையும் சுத்திபண்ணி, மேளத்தில் பிரம்மா, விஷ்ணு, உருத்திரன் ஆகிய மூர்த்திகளைப் பூசித்து மேளமடிப்பர். மேளமடிக்கும் போது சொல்லும் மந்திர வாக்கியத்தின் பொருள் இறந்த ஆன்மா நன்மையடைய வேண்டும் உமாதேவியார் கட்டளைப்படி பேரிகை அடிக்கின்றேன்' என்பதாகும்.
உடற்சுத்தி: சிவாச்சாரியார் பந்தலின் நடுவிற் சிவகும்பமும், உருத்திர கும்பமும் வைத்து அவற்றின் முன் ஒமாக்கினியை வளர்த்துச் சிவனையும், உருத்திரனையும் வழிபடுவர்.
எண்ணெய், பஞ்சகெளவியம், இளநீர், மஞ்சள் நீர், சிவகும்ப நீர் ஆகியவற்றால் இறந்தவர் உடலை நீராட்டிச் சுத்தி செய்து, புத்தாடை புனைந்து நீறுசாத்திப் பூச்சூடித் தர்ப்பையில் வைப்பர்.
சிவாச்சாரியார் பஞ்ச சுத்திகளையும் சகளிகரணத்தையும் செய்து, அக்கினி வளர்த்து, அட்டதிக்குத் தேவர்களையும் சிவனையும் வழிபட்டு, அவர்களின் ஆசீர்வாதத்தைப் பெறுவார். கும்பத்திலிருக்கும் சிவனை உடலின் மீது எழுந்தருளும்படி வேண்டி வழிபாடு செய்வர். இருதயத்தில் ஆசன பூசை செய்து ஆன்மாவை அதில் அமைத்து அதில் மந்திரங்களைப் பதித்து இருதயத்திற் சிவனை ஆவாகனம் செய்து கொள்வார். பின்னர் ஆசாரியார் இறந்தவரின் நித்திய அனுட்டானக் குற்றங்களைத் தீர்க்க ஆகுதி செய்து அவ்வுடலுக்கும் தனக்கும் நாடி சந்தானம் செய்து அழைக்கப்பட்ட ஆன்மாவைத் தன் இருதயத்திற்குக் கொண்டு வந்து உருத்திரனைத் தியானித்து பூரணாகுதியுடன் உருத்திர மூர்த்தியை அடையும் வழியில் விடுவர்.
சுண்ணம் இடித்தலும் பந்தம் ஏற்றுதலும் பாவங்களை நீக்குவதற்காகச் சுண்ணம் இடிக்கப்படுகிறது. பாவங்கள் அகன்றதும் திருவருள் உண்டாவதற்காக இறந்தவர்களின் பேரப்பிள்ளைகளினால் நெய்ப்பந்தம் பிடிக்கப்படும். இவைகளைத் தொடர்ந்து திருமுறைகள் ஒதப்படும்.
இந்துச் க்களஞ்சியம்

Page 258
சுடலை சேர்தல்; உடலைச் சுடலைக்கு எடுத்துச் செல்லும் போது அட்ட திக்குத் தேவர்களின் ஆசியைப் பெறுவதற்கான வழியில் நெற்பொரி தூவப்படும். (சைவாசாரமுள்ள ஒருவரே இதைச் செய்யத் தக்கவர்) ஒமாக்கினியில் இருந்து உருத்திரனை ஆவாகித்த சிவாக்கினியும், கும்பமும் உடன் எடுத்துச் செல்லப்படும். சுடலையில் நாலு முழ நீளமும் இரண்டு முழ அகலமுமான இடத்தில் மஞ்சள், குங்குமம் இட்டு விறகடுக்கப்பட்டிருக்குமிடம் சிதாதானம் (தகனம் செய்யுமிடம்) என்று பெயர் பெறும். இச் சிதையிலே அடுக்கப்பட்ட விறகினைச் சுற்றி வந்து அதன் மீது உடலை வைத்துத் தற்புருட மந்திரம் சொல்லி நீரையும், அரிசியையும் இறந்தவர் வாயில் இடுவர்
(இதனை வாய்க்கரிசி போடுதல் எனக் கூறுவர்)
தீயிடல்: கும்பமுடனும் சிவாக்கினியுடனும் உடலைச் சுற்றி வந்து கும்ப நீரை உடலுக்குத் தெளித்துக் குடத்தை முன்பாக நிலத்திற் போட்டுச் சிவாக்கினியை விறகின் கண் இட்டு எரியச் செய்வர். தீயிடும் பொழுது “அக்கினி தேவனே பரிசுத்தமாயிருக்கின்ற உடலின் மந்திரத்தினாலுண்டான பூரணாகுதியை ஏற்றுக் கொள்ளும்” என நினைந்து கொண்டே தீயிட வேண்டும்.
அத்திசஞ்சயனம் (காடாற்றல்); அத்தி சஞ்சயனம் என்பது எரிக்கப்பட்ட உடம்பிலிருந்து எலும்புகளையும், சாம்பரையும் எடுத்துப் புண்ணிய நீரிற் சேர்த்தலாகும். அத்தி எலும்பு, சஞ்சயனம்-கரைத்தல். இது கால் கொப்பூழ், நெஞ்சு, முகம், தலை ஆகிய இடங்களிலுள்ள எலும்புகளைச் சாம்பலுடன் எடுத்துப் பால் உள்ள பாத்திரத்தில் இட்டுக்கொண்டு புண்ணிய நீரிற் சேர்த்து வழிபாடு செய்தலாம். அத்தியைப் புண்ணிய தீர்த்தத்தில் இடுவதால் ஆன்மா புண்ணிய உலகம் அடையும் என்பது பொருள். சாம்பல் அள்ளுதல் என்று இன்று கூறப்படுவது அதுவேயாகும். முதலைந்து நாட்களிலொன்றிலேனும் ஏழாவது நாளிலேனும் இது செய்யத் தக்கது.
நக்ன தானம்: இது தகனக் கிரியை முடிந்தபின் இறந்தவரின் பசி, தாகம் முதலியவற்றை நீக்கும் பொருட்டு குடும்பத்தாரால் ஆசாரியருக்கு ஆடை, அரிசி முதலியவற்றைத் தானமாகக் கொடுத்தலாகும்.
அந்தியேட்டி ! இது ஆசௌசக் கடைசியிற் செய்யப்படும் யாகம் எனப் பொருள்படும். அந்திய - கடைசிநாள், இட்டி-யாகம் இறந்தவரின் ஆன்ம சித்திக்காக இது நடைபெறுகிறது. இறந்தவரின் சமய அனுட்டானத்திலுள்ள குற்றங்கள் இதனாலே தீரும். புண்ணிய நீர்க் கரையில் நிகழும் கிரியை இதுவாகும். அதனால் இதனை நீர்க்கடன் என்றும் கூறுவர். இது முப்பத்தோராம் நாள் நடப்பது என நடைமுறையில் இருந்து வருகிறது.
இந்துக்கலைக்களஞ்சியம்
232

பாடான பூசை ஒரு கல்லை வைத்து இறந்தவரின் ஆன்மாவை மந்திரத்தால் அதில் வருவித்து அதற்குச் செய்யும் பூசை. அப்பூசையினாலும் அதனோடு கூடிய மற்றக் கிரியையினாலும் ஆன்மாவின் குற்றம் நீக்கப்படும்.
ஏகோதிட்டம் ஆசௌசம் நீங்கிய அடுத்த நாள் இறந்தவருடைய ஆன்ம சுத்திக்காகவும், நற்கதி அடையும் பொருட்டும் செய்யப்படும் கிரியை. அக்கிரியையில் இருக்கும் ஆசாரியாரை இறந்த ஆளாகப் பாவனை செய்து அவருக்கு ஒரு ஆண்டுக்குப் போதுமான அளவு பொருட்களைத் தானமாகக் கொடுத்து ஒருவருடம் முடியும் வரை எதிர்ப்படாமலிருக்கச் செய்தல், தானமாகக் கொடுக்கப்பட வேண்டியபொருட்கள் உடை, உணவுப் பொருட்கள், திருநீற்றுப்பை, செபமாலை, குடை, மிதியடி, பொன் முதலியனவாகும்.
சபிண்டீகரணம். ஏகோதிட்டத்திற்கு அடுத்த நாளிலே பிதிர் தேவர்களோடு இறந்தவரைச் சேர்ப்பதற்கு நடைபெறும் கிரியை. சபிண்டீகரணத்தினால் ஆன்மா சுத்தி பெற்றுச் சிவலோகம் சேரும். இக்கிரியையை பிண்டமிட்டுச் செய்வதனால் இது சபிண்டீகரணம் எனப்படும். அரிசி, எள், உழுந்து, பால், தேன், பழம், சர்க்கரை ஆகியன பிண்டத்திற்குரிய பொருட்களாகும்.
சிரார்த்தம் (திவசம்): சிரத்தையோடு செய்யப்படுவது சிரார்த்தம் எனப்படும். சிரத்தையானது பற்று, அன்பு எனப்பொருள்படும். இறந்தவரின் சந்ததியினராலேதான் இக்கிரியை செய்யப்பட வேண்டும். இறந்தவர் வீடு, திருநந்தவனம், மலை, திருக்கோயில், புண்ணிய தீர்த்தக்கரை, குருவின் மனை போன்றவை சிறப்பான இடங்களாகும். சிரார்த்தக் கிரியைகளில் எள்ளும் தண்ணிரும் இறைத்தல் முக்கிய கருமமாகும். தர்ப்பையைக் குறுக்காகப் பிடித்து அத்தர்ப்பை மூலத்திலிருந்து எள்ளுக் கலந்த நீரைச் சுட்டுவிரல் மூலமாக விழச் செய்வது. இவ்வேளையில் தலைமுறைப் பெயர்கள் சொல்லப்படும். தருப்பண முடிவிலே 'என் குலப் பிதிர்களே பூமியில் விட்டபட்ட இந்த நீரினால் நற்கதியும், திருப்தியும் அடையுங்கள்” என்று சொல்லித் தர்ப்பை எள்ளுடன் தீர்த்தத்திற் போடப்படும். மேலதிக விபரங்களுக்குப் பார்க்க சிரார்த்தம். (நி.நி)
சைவக் கோயிற் கிரியைகள்
செவக் கோயில்களில் நிகழ்த்தப்படும் நித்திய, நைமித்திய, காமிக பூஜைகளை சைவக் கோயிற் கிரியைகள் என்ற அடிப்படையில் நோக்கலாம். ஆன்மீகத் துறையில் இரு நிலைகள் உள்ளன. ஒன்று அறிவு மேம்பட்டவர் நிற்கும் நிலை, மற்றையது ஆன்மீகப் படியின் ஆரம்ப நிலையில் இருக்கும் கிரியா மார்க்கத்தினர். அறிவு மேம்பட்டவர் யோக, ஞான மார்க்கத்தைக் கடைப்பிடிக்க, கிரியை நெறிநிற்போர் சரியை, கிரியை வழி

Page 259
நிற்கின்றனர். சரியைத் தொண்டுகளையும் கிரியை வழிபாட்டு முறைகளையும் நிகழ்த்தி இறைவனை அடைய வழிகாட்டும் இந்த மார்க்கங்களுக்குச் சில சாதனங்கள் அவசியமாகின்றன. எல்லா இடங்களிலும் எல்லாச் செயல்களையும் செய்வது இயலாத காரியம். அவ்வாறு செய்யின் உரியவாறு சித்திகள் கிடைப்பதும் அபூர்வம். விஞ்ஞானப் பரிசோதனைகள் அதற்கென அமைந்த ஆய்வு கூடங்களில் நிகழ்த்தப்படுதல்போல வழிபாடுகள், கிரியைகள் முறைப்படி நிகழ்த்த ஆலயங்கள் அவசியமாகின்றன. உலகெங்கும் வியாபித்திருக்கும் ஆண்டவனை வழிபடவும் உரிய காலங்களில் உரிய முறைப்படி கிரியைகளை நிகழ்த்தி அவனருளை வேண்டி நிற்கவும் ஆலயங்கள் அவசியமாகின்றன.
மக்களிற் பெரும்பாலானோர் ஆன்மீக அறிவுத் துறையின் அடித் தளத்தையும் அணுகாத நிலையில் உள்ளவர்கள். எனவே வழிபடும் முறைகளும் அவர்களுக்கு ஏற்றவாறு எளிதாய் அமைய வேண்டி உள்ளது. அவ்வாறு எளிதாய் அமைய வழி செய்வது விக்கிரக வழிபாடாகும். குணம், குறியற்ற இறைவனை குணங்குறிகளால் வகுக்கும் எல்லைக்குள் அகப்படுத்திப் புறத்தோற்றம் கொடுத்து எமது கட்புலனுக்குள் அடங்கச் செய்யும் முயற்சியின் விளைவே நாம் வழிபட நிறுவும் விக்கிரகம். இறைவன் பேர், ஊர், அற்றவன். குணம், குறியும் உருவமும் அற்றவன். அத்தகையவன் ஆன்மாக்கள் மேற் கொண்ட அன்பினாலே உருவத்திருமேனியைக் கொள்கிறான் என்று செப்புகின்றன சமய நூல்கள். அத்திருவுருவங்கள் இறைவனை நினைவுகூர்ந்து மனதாரக் கிரகிப்பதற்கு துணைநிற்பதோடமையாது அவனது பெருமையையும் எமக்குப் பறைசாற்றி நிற்கின்றன. திருவுருவங்களை அமைத்து கிரியைகளால் நிகழ்த்தும் வழிபாடு வீடுபேற்றை அடைய அவாவுவோர் தொடக்க நிலையில் ஆற்றும் செயல்களாகும்.
கிரியைகளைப் பற்றிக் கூறும் போது அவற்றைப் பற்றிக் கூறிய ஆதி நூல்களாகவும் எமது சைவ சமயத்தின் பிரமான நூல்களாகவும் அமையும் வேதங்கள், ஆகமங்கள் இரண்டையும் பற்றிய சில கருத்துக்களை முதலில் நோக்குவது பொருத்தமானது. வேதங்கள் நான்கு பகுதிகளாக இருக்கு, யசுர், சாமம், அதர்வணம் என்ற பெயர்களால் வகுக்கப்பட்டுள்ளன. இருக்கு வேதமானது பிரார்த்தனைப் பாடல்களாக அமைந்துள்ளது. இந்திரன், அக்கினி, வருணன், ருத்திரன், விஷ்ணு ஆகிய தெய்வங்களுக்கு பால், நெய், தேன் முதலியவற்றைச் சமர்ப்பித்து நோயற்ற வாழ்வு, புத்திரர், செல்வம் முதலியவற்றைத் தரும்படி வேண்டுவதே இருக்கு வேதம் விதிக்கின்ற வழிபாட்டம்சமாகும். அவற்றிலே தெய்வங்கள் எல்லாம் விளித்தழைக்கப் பெறுகின்றன. இவ்வாறு கூவி அழைத்தல் சிறு கிரியையாக அமைந்துவிடுகிறது. கிரியையின் தொடக்க நிலையினையே இவ் விளிக்கும் முறை சுட்டுகிறது. பொருட்களை இவ்வாறு கொடுக்கும் கிரியை நிகழும் வேளை வேட்பவன் மனதில் தோன்றுவது தான் விரும்பும் பொருட்களைப் பெறுவதற்குரிய அவாவே. கிரியைகள் யாவும் பயனை அவாவிச்

23.
2
செய்யப்படும் நிலையினையே இருக்கு வேதத்தில் வரும் இப் பாடல்கள் சுட்டுகின்றன. கிரியைகளைப் பற்றி விளக்கி நிற்கும் ஆகமங்களும் ஏனைய துணைநூல்களும் கிரியைகளால் விளையும் பயனையும் இயம்புகின்றன. இருக்கு வேதக் கோட்பாடு இன்றைய வழிபாட்டில் நிரந்தர இடம் பெற்றதையே இது எடுத்துக் காட்டுகிறது. இருக்கு வேதத்தில் அக்கினிக்குரிய பாடல்கள் பல உள. அக்கினியைப் பலமுறை விளித்து “நாம் அளிக்கும் அவியினை ஏற்று ஏனைய தேவர்களிடம் சேர்ப்பிப்பாய்’ என வேட்பவன் பலவாறு வேண்டுவதை இருக்குவேதப் பாடல்கள் எடுத்தியம்புகின்றன. இது கிரியை வழிபாட்டு நிலையின் அடுத்த நிலை எனலாம். இச் சூழ்நிலைதான் வேட்கும் முறை விரிந்து பரந்து பெருவழிபாட்டு முறையாக உருவாவதற்கு வழிகோலிற்று.
முதன் முதல் எழுந்த வழிபாட்டு நூல் யசுர் வேதம் எனலாம். தேவர்கட்கு யாகங்களில் அவி கொடுத்தல் நிகழ வேண்டிய முறையினை விளக்குவது யசுர் வேதம். வேட்க வேண்டிய முறையினைப் பற்றிய விளக்கங்கள் தரும் நூலானமையால் அது உரை நடையிலேயே காணப்படுகின்றது. யாகக் கிரியைகள் நிகழ்த்தும் முறையினை விரித்தும், வகுத்தும் ஒழுங்குபடுத்தும் இந்நூல் கிரியைகளின் தோற்றம், வளர்ச்சி பற்றிய தகவல் திரட்டுவோர்க்கு முக்கிய சாதனமாகப் பயன்படுகிறது. யாகத்திற்கு இன்றியமையாததான அக்கினியை வளர்ப்பதற்கு வேண்டிய குண்டங்கள், யாகவேதி அமைக்கு முறைகள், வாஜபேயம், ராஜசூயம், செளத்திராமணி, அசுவமேதம் முதலிய யாகங்கள் வேட்கப்படும் முறைகளும் இங்கே முதன் முதலில் விரிவாகக் கூறப்படுகிறது. வழிபாட்டு முறையின் புதியதோர் அம்சத்தை யசுர் வேதத்தில் காணக்கூடியதாக உள்ளது. இவ் வழிபாட்டு முறை பிற்காலத்தில் உயர்ந்த இடத்தை நிரந்தரமாகப் பெற்றுவிட்டது. தெய்வங்களின் திருவருளுக்குத் தாம் பாத்திரமாக வேண்டி தெய்வம் ஒன்றுக்கு பல பெயர்கள் கூறும் புதியதொரு முறையை யசுர் வேதத்திலேயே முதன் முதல் காணக் கூடியதாக இருக்கிறது. இவற்றுள் சில சிறப்புப் பெயர்கள், சில காரணப் பெயர்கள், சில பொதுப் பெயர்கள், சில தெய்வத்தின் பண்புகளைச் சுட்டும் பெயர்கள். இப் பெயர்கள் சதருத்ரியம் என்னும் பகுதியில் இருக்கக் காண்கிறோம். இப்பெயர்கள் இதிகாச புராணங்களில் நூறாகவும், ஆயிரமாகவும் பெருகியுள்ளன. இப் பெயர்களைப் பிரயோகித்து இன்றும் சைவக் கோயில்களில் இறைவனுக்கு அர்ச்சனை நடைபெறுகின்றது. இவை நூற்றெட்டுப் பெயர்களைக் கொள்ளும் பொழுது அஷ்டோத்தர சத நாமார்ச்சனை’ என்றும், முன்னூறு பெயர்களால் நடைபெறும் போது திரிசதிநாமார்ச்சனை என்றும், இன்னும் விரிவாக நிகழும் பொழுது இலக்ஷார்ச்சனை என்றும், இவ்வர்ச்சனை மேலு விரிந்து கோடியர்ச்சனை என்றும், பெயர்களைப் பெறும். ஆகமக்கிரியைகளில் அடிக்கடி கூறப்படும் ஸ்வாஹா முதலிய மந்திரங்களும், ஹரீம் முதலிய பீஜாக்ஷரங்களும், பஞ்சாக்ஷரமந்திரமும் யசுர் வேதத்தின் நன் கொடை. சாமவேதம் கேட்போருள்ளத்தை உருக்கி
:இந்துக்கலைக்களஞ்சியம்

Page 260
அவர்களிடமிருந்து வேண்டும் பொருளைப் பெறத்துணை நிற்பது என விளக்குவர். சாமகானத்தில் சிவனுக்கு விருப்பம் அதிகம் என்பர். எனினும் சிவயாகங்களிலும் ஏனைய நித்திய நைமித்திய வழிபாடுகளிலும் சாமவேதம் குறிப்பிடத் தக்கவாறு தனி இடம் பெறவில்லை.
அதர்வவேதம் கிரியைகள் பற்றிப் பெரிதும் சொல்லி - இருப்பினும் அவை லெளகீக செயற்பாடுகள், வைத்திய, மாந்திரீக விஷயங்கள் முதலியவற்றையே கூறகின்றன. நன்மை, தீமை ஆகிய இரு விளைவுகளை விளைவிக்கும் கிரியைகளை இவ் வேதப்பாடல்கள் எடுத்தியம்புகின்றன. மக்கள் தம் வாழ்வில் நிகழும் இவ்விருவகை நிகழ்சிகளைக் கண்ணுற்ற மனிதன் தான் விரும்பிய வேளைகளில் விரும்பியதை மட்டுமே, அதாவது தான் நன்மை விரும்பிய வேளை நன்மையும் தீமைவிரும்பிய வேளை தீமையும் நிகழச் செய்யும் வழிவகைகளைப் படிப்படியாக அறிவதில் முனைந்தான். அவ்வாறு முனைந்து அவன் வகுத்த வழிகளையே அதர்வ வேதப்பாடல்கள் எமக்குக் காட்டுகின்றன. தனக்கும் தன்னைச் சார்ந்தவர்கட்கும் நன்மை பெருக வேண்டி அவன் நிகழ்த்திய கிரியைகள் பெளஷ்டிகானி எனப்பெயர் பெற்றன. தன் பகைவரை வேருடன் களைய அவன் மேற்கொண்ட கிரியைகள் அபிசாரணி எனப்படும். நோய், பஞ்சம், வறுமை முதலிய தீமை பயப்பனவற்றிலிருந்து காத்துக் கொள்ள பேஷஜாநி எனப்படும் கிரியையை மேற்கொண்டான். அவற்றை எல்லாம் கிரியைகள் என்று சுட்டும் மரபு கிடையாது. இப்பாடல்கள் மந்திரங்கள் எனப் பெயர் பெறுகின்றன. மந்திரங்கள் சக்தி வாய்ந்தவை. பெரும் வல்லமை பொருந்தியவை. இம் மந்திர சக்தியே சாதாரண சூழ்நிலையிலுள்ள பொருள்களை எல்லாம் தம் வல்லமையினால் உயர்நிலைக்கு இட்டுச் செல்கிறது. அதர்வ வேதத்தின் உயிர் நாடி அது தோற்றுவிக்கும் மந்திரசக்தியே. இவ் வேதம் உணர்த்தும் சக்தி இல்லை எனில் கிரியைகள் தமக்குரிய நிலையை இழந்துவிடும். இந்நிலை இன்றைய வழிபாட்டு முறையில் எவ்வாறு அமையும் என்பதைப் பார்க்கும் போது திருக்கோயிலில் உள்ள பொருட்களிற் சில அங்கே நிரந்தர இடம்பெற்ற உபகரணங்களாக விளங்குகின்றன. சில கிரியைகளுக்காக அவ்வப்போது வெளியே இருந்து தருவிக்கப்படுபவை. அவை கோவிலில் உள்ள சூழ்நிலையில் மந்திரங்களால் தூய்மை பெற்றவுடன் உயர் நிலையிலே வைத்து மதிக்கப்படுகின்றன. கோவிலில் உள்ள மண், மரம், தடி, செப்பு, குடம் முதலிய அனைத்துமே மந்திர சக்தி ஊட்டப்பட்டதும் தெய்வீக அந்தஸ்தைப் பெறுகின்றன. எங்கும் நிறைந்து விளங்கும் இறைவன் தெருவிற் காணப்படும் கல்லிலும் உறைகின்றான் எனினும், திருக்கோயிற் கருவறையில் இலிங்க உருவாக அமைக்கப்பட்டு கிரியைகளால் வலிமையூட்டப்பட்ட நிலையில் விசேஷமாகச் சாந்நித்யங் கொண்டெழுந்தருளி இருப்பதே ஆஸ்திகரது அனுபவமாகும். எனவே அதர்வ வேதம் மந்திரங்களின் தொகுப்பாக விளங்கிடினும் இவ்வேதம் உணர்த்தும் சக்தி இல்லை எனிற் கிரியைகள் தமக்குரிய நிலையை இழந்துவிடும்.
இந்துக்கலைக்களஞ்சியம்
234

சைவக் கோயிற் கிரியையிலே பிராமணங்களின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கது. கிரியை முறைகளின் முழு இயல்புகளையும் செவ்வனே விளங்குவதற்குப் பிராமணங்களின் பயிற்சி பெரிதும் வேண்டப்படும். பிராமணங்களிற் கிரியைகள் விரித்துக் கூறப்படுதல் போல் இந்திய இலக்கியப் பரப்பினுள் வேறு எங்கும் காண்பதரிது. இவற்றை நிலைக்களனாகக் கொண்டு விளங்குவதே ஆகமங்கள் கூறும் சிவயாகம், சைவ வழிபாட்டைப் பொறுத்த மட்டிற் பிராமணங்கள் சிவனின் பொருமையைக் கூறி வழிபாட்டின் அமைப்பை அதன் உயரிய நிலையில் நிறுவ முன்வந்துள்ளன.
பிராமணங்கள் கூறும் நிலைக்கும் உபநிடதங்கள் புகட்டும் அறிவுரைக்கும் இடைநிலையை ஆரணியங்கள் சுட்டுகின்றன. ஆரணியங்கள், பிராமணங்கள் கிரியைகளை விரித்துரைப்பது போன்று எதுவும் கூற வில்லை. அவை பெரும்பாலும் மானசீக வழிபாட்டு முறை பற்றியே எடுத்தியம்புகின்றன. சைவ ஆகமங்கள் கூறும் யாகங்களில் மானசீக யாகங்களும் தனி இடம் பெற்றுவிடுகின்றது. சிவயாகம் நிகழ்த்த முன் சிவாச்சாரியார் இந்த நுண்ணிய யாகத்தை நிகழ்த்தும்படி ஆகமங்களால் உணர்த்தப்படுகிறது. இந்த யாகம் அந்தர் யாகம் எனப்படும்.
உபநிடதங்கள் புகட்டும் வழி உயரிய அறிவுவழி. உபநிடதங்களிற் கிரியைகள் புறத்தே ஒதுக்கித் தள்ளப்படுகிறது. ஆயினும் சில பழைய உபநிடதங்களில் யாகம் பற்றிக் கூறுவதனால் பிராமணங்களை நிகர்க்கும் பகுதிகள் காணப்படுகின்றன. இவ்வாறு அங்குமிங்குமாகக் காணப்படும் ஒரு சில இடங்களைத் தவிர ஏனைய பகுதிகளில் வேள்விக்கு அனுகூலமற்ற நிலையே காணப்படுகிறது. பிராமணங்கள் கூறும் வேள்வியின் பயனற்ற விளக்கங்களை எதிர்த்து தத்துவக் கருத்துக்கள் செறிந்த அறிவுப் பெருக்கத்தை நிகழ்த்துவிப்பன உபநிடதங்கள்.
வேதத்தின் அங்கமாக விங்கும் ஆறு வேதாந்தங்களும் கிரியைகளை அடிப்படையாகக் கொண்டு தோன்றியவை. அவற்றின் மூல நூல்கள் சூத்திரங்களால் ஆனவை. வேதங்களில் கிரியை பற்றிய விவரங்கள் சிதறுண்டும் கோவைப்படுத்தாமலும் இருந்ததனால் வேதகாலத்தை அடுத்து வாழ்ந்த மக்கள் அவற்றை எல்லாம் கோவைப்படுத்திச் சீர் பெற அமைக்க விளைந்தனர். அவ்வாறு அமைந்தவையே சூத்திரங்கள். உபநிடதங்களுக்கு அடுத்த இக்காலத்திலே தத்துவ விசாரணை வளர்ச்சியுறத் தொடங்கியதாலும் தர்க்க ரீதியாகவும், புத்திநுட்பமாகவும் விடயங்களை உசாவி அறியும் நிலை ஏற்பட்டதாலும் கருத்துக்களைக் கோவைப்படுத்தி அமைக்கும் நிலை ஏற்பட்டது.
சைவக் கோயிற் கிரியை முறைகளை வகுத்தும், தொகுத்தும், நெறிப்படுத்தியும் நிற்கும் சிவாகமங்கள் இருபத்தெட்டாகும். அவற்றுட் காலத்தால் அழிந்தவை போக, எஞ்சியிருப்பவை மிகச்

Page 261
சிலவே. அவற்றுட் காமிகம், காரணம் ஆகியவையே பெருவழக்கிலுள்ளன. அவையும் மொழியறிந்தார் கூட இலகுவிற் புரிந்து கொள்ளக் கூடியதாக இல்லை. ஆழ்ந்த கருத்துக்களையும் சங்கேத பாஷைகளையும் கொண்டிருப்பதனால் அவற்றை இலகுபடுத்தியும் ஒழுங்குபடுத்தியும் கிரியை பத்ததிகள் எழுந்தன. பத்ததி என்பது வழிகாட்டும் நூல் எனப்படும். பத்ததிகள் பதினெட்டு என அறியப்படுகிறது. பத்ததிகளை ஆதாரமாகக் கொண்டே இன்று நமது சைவாலயங்களில் நடைபெறும் கிரியைகள் அமைகின்றன. ஆலயக் கிரியைகளில் நேரடியாகப் பயன்படுத்தக் கூடிய பத்ததிகளில் ஒவ்வொரு கிரியையும் செய்ய வேண்டிய முறைகள், அவற்றிற்கு வேண்டிய பொருள்கள், அவை நிகழ வேண்டிய மண்டபம், வேதிகை, குண்டம் என்பன பற்றிய விளக்கங்களும் அந்தந்த இடங்களில் பிரார்த்திக்க வேண்டிய சுலோகங்கள், மந்திரங்கள், தியானங்கள் என்பனவும் படிமுறையாக அமைந்திருக்கின்றன. சாதாரண கிரியைகளுக்குரிய மந்திரங்களையும் முறைகளையும் சிவாச்சாரியார்கள் மனனம் செய்திருப்பார்கள். எனவே அவை நிகழும் போது பத்ததி அவசியமில்லை. ஆனால் விசேஷ கிரியைகள் நிகழும் போது ஒருவர் பத்ததியை வைத்து வாசித்துக் கொண்டிருக்க, அதை அனுசரித்து சிவாச்சாரியார் கிரியைகளைச் செய்வார். நடக்க வேண்டிய கிரியைகளை பத்ததி மூலம் உணர்த்தும் அவரை சாதகாசிரியர்' என அழைப்பர். கிரியைகளைத் தமக்காக நடத்துவிப்பவர் யஜமானன் என்றும் சரியான முறையில் நடப்பவற்றை கண்காணித்து வழிப்படுத்துபவர் 'போதகாசிரியர் என்றுங் கூறப்படுவர்.
ஆலயங்களில் நிகழும் பொதுவான கிரியைகள்: சைவக் கோயிற் கிரியை பற்றி நோக்கும் நாம் அங்கு நாள் தோறும் அல்லது அடிக்கடி நடைபெறுகின்ற சில பொதுவான கிரியைகள் உண்டு. அபிஷேகம், அலங்காரம், நைவேத்தியம், தீபாராதனை அர்ச்சனை, வேதபாராயணம், ஆசீர்வாதம் என்பன பொதுவாகக் கோயில்களில் நடைபெறும் கிரியைகளாகும்.
மூர்த்திகளின் திருவுருவங்களை மந்திரநீரால் முழுக்காட்டுதலே அபிஷேகமாகும். புனித நதியிலிருந்தோ ஆற்றிலிருந்தோ நீரைப் பெற்று சகல மரியாதைகளுடனும் ஆலயத்திற்குக் கொண்டு வந்து அபிஷேகத்திற்குப் பயன்படுத்துவதுண்டு. பொதுவாகக் கோயில் மூலஸ்தானத்திற்கு ஈசான திசையில் இருக்கும் தீர்த்தக் கிணற்றிலிருந்து அபிஷேகத்திற்கு நீரைப் பெறுவர். ஏறக்குறைய அரை மணித்தியாலத்திற்கு மேற்பட்ட நேரத்தை அபிஷேகத்துக்கு ஒதுக்குதல் வேண்டுமென ஆகமங்கள் உரைக்கின்றன. அபிஷேக நீரில் பாதிரி, அலரி, தாமரை முதலிய மலர்களை இடுவதன் மூலம் நறுமணமும் குளிர்ச்சியும் ஏற்படுகின்து. நல்லெண்ணெய், அரிசிமா, மஞ்சள்மா, அபிடேகக் கூட்டு, பஞ்சகவ்வியம், பஞ்சாமிர்தம், பால், தயிர், நெய், தேன், கருப்பஞ்சாறு, பழரசம், இளநீர் அன்னம், விபூதி, குங்குமம்,

சந்தனம், கும்பஜலம் என்பன அபிஷேகத்திற்குரிய விசேஷ திரவியங்களாகும். அபிஷேக ஆரம்பத்திலும் - இவை ஒவ்வொன்றாக அபிஷேகம் செய்வதற்கிடையிலும் சுத்த ஜலத்தால் அபிஷேகம் செய்வதுடன் கற்பூர தீபாராதனையும் செய்யப்படுகிறது. அபிஷேகம் நிகழ்ந்து கொண்டிருக்கும்போது வேத மந்திரங்கள் ஒதப்படுகின்றன. வேத கோஷம் நிகழ்த்த வாய்ப்பில்லாத இடங்களில் திருமுறைகளைப் பண்ணுடன் ஒதுவதும் நாதஸ்வரகானம் நிகழ்த்துவதும் நடைபெறுகிறது. அபிஷேகம் ஆரம்பித்து அலங்காரம் முடியும் வரை இடையீடின்றித் தொடர்ந்து நடத்துதல் அவசியமாகிறது. ஒவ்வொரு பொருளால் அபிஷேகம் செய்வதற்கும் ஒவ்வொரு பலனுண்டு என ஆகமங்கள் கூறுகின்றன. அபிஷேகம் நிறைவு பெற்றதும் தோய்த்துலர்ந்த ஆடையினாலே துடைத்து அதன் பின் வாசனைப் பொருட்களால் தூபமிட்டு, ஆடை, ஆபரணங்களாலும் மலர் மாலைகளாலும் சந்தணம், குங்குமம், முதலியவற்றாலும் அலங்காரம் செய்வர். இவ்வளவு காரியங்களையும் தினசரி செய்வது கடினமாகையினால் ருத்திராபிஷேகம் நிகழும் வேளைகளிலாவது கிரமமாகக் கடைப்பிடிப்பது ஆலயங்களில் தெய்வ சாந்நித்தியத்தை வளர்க்க உதவும். இக் கிரியைகளை கோயில்களிற் சிவாச்சாரியார்கள் பொறுமையுடனும் பக்தியுடனும் செய்கின்ற போது தரிசனம் செய்யும் பக்தர்கள் அதிலே ஒன்றிப் போய்க் கண்ணிர் மல்க பார்த்துக் கொண்டிருப்பர்.
இறைவனுக்கு அமுது செய்வதையே நைவேத்தியம் செய்தல் என்கிறோம். நைவேத்தியம் செய்யும் உணவிற்கு நிவேதனம், அன்னம், அமுது, ஹவிசு என்று பல வகைப் பெயர்கள் வழங்குகிறது. நன்கு சமைக்கப்பட்ட அன்னம் தினசரி நைவேத்தியமாக அவசியம் பயன்படுத்தப்படும். பச்சரிசியே நைவேத்தியத்திற்குரியது. பஞ்சஹவிஸ் என்று ஐவகையாகக் கூறப்படும் சுத்தான்னம், பாயசான்னம், எள்ளன்னம், பயற்றன்னம், சர்க்கரையன்னம் என்பனவும் மற்றும் புளிச்சாதம், எலுமிச்சம்பழச்சாதம், தயிர்ச்சாதம் என்னும் பலவகையான அன்னவகைகளும் மோதகம், வடை, முறுக்கு முதலிய சிற்றுண்டி வகைகளையும் நைவேத்தியமாகப் பயன்படுத்துவர். இவற்றைவிட வெற்றிலை, பாக்கு, நன்கு கனிந்த வாழைப்பழங்கள் மாதுளம்பழம், மாம்பழம், பலாப்பழம் முதலிய பழவகைகளும் நிவேதனத்துக்குரியனவாகக் கூறப்படுகின்றது. நைவேத்தியம் தயார் செய்வதற்கு ஆலயத்தின் தென்கிழக்கு மூலையில் மடைப்பள்ளி அமைந்திருக்கும். சிவதீகூைடி பெற்ற பரிசாரகர்கள் அவற்றைத் தயார் செய்வர்.
சைவக் கோயிற் கிரியையின் முக்கிய அம்சம் தீபாராதனை ஆகும். பலவகையான தீபவகைகளை இறைவனுக்குக் காட்டி ஒளியேற்றிப் பக்தர்கள் இறைவன் திருக் கோலத்தைக் கண்டு களிக்க வகை செய்வது தீபாராதனை. தீபங்கள் பலவகை உண்டு. பொதுவாக வழக்கிலுள்ளவை அடுக்குத் தீபம், நட்சத்திரதீபம், நாகதீபம், பஞ்சமுகதீபம், வில்வதீபம், கும்பதீபம்,
235
இந்துக்கலைக்களஞ்சியம்

Page 262
ஈசானபஞ்சதீபங்கள், ஒற்றைத்தீபம், கற்பூரதீபம், பஞ்சாராத்திரிகை என்பன. தீபங்கள் காட்டும் போது வலக்காலிலிருந்து தலைவரை மும்முறை சுற்றி அந்தந்த இடங்களில் நிதானமாக நிறுத்திக் காட்ட வேண்டும் என்றும் முதல் முறை சுற்றிக் காட்டுவது உலகநன்மைக்காகவும், இரண்டாம் முறை காட்டுவது கிராமநன்மைக்காகவும், மூன்றாம் முறை காட்டுவது உயிர்களின் நன்மைக்காகவும் என ஆகமங்கள் கூறுகின்றன. தீபங்களின் பின் கண்ணாடி, குடை, சாமரை, விசிறி, கொடி, ஆலவட்டம் என்ற உபசாரப் பொருட்களை முறைப்படி காட்டி உபசரிப்பர். ஒவ்வொரு தீபத்தையும் உபசாரப் பொருட்களையும் காட்டும்போது அவற்றிற்குரிய வேத மந்திரங்கள் ஒதப்பட வேண்டும் என்றும் மங்கல வாத்தியங்கள் முழங்க வேண்டும் என்றும் ஆகமங்கள் கூறுகின்றன.
அர்ச்சனை என்பது 'ஓம்' என்னும் பிரணவத்தில் ஆரம்பித்து இறைவனுடைய நாமத்தைக் கூறி நம என்ற இறுதிப் பகுதியுடன் முடிவுறும். ஒவ்வொரு நாமத்தையும் கூறியவுடன் ஒவ்வொரு புஷ்பமாக இறைவனுடைய பாதாரவிந்தத்திற் சமர்ப்பிக்கப்படுகிறது. இவ்வர்ச்சனை மந்திரத் தொகை பதினாறு, நூற்றெட்டு, முந்நூறு, ஆயிரம் என்ற வகைகளில் அமையும். அவை முறையே ஷோடசநாமார்ச்சனை, அஷ்டோத்தரசதநாமார்ச்சனை, திரி த தி நா மார் ச் ச  ைன , சஹஸ் ர நா மார் ச் ச  ைன எனவழங்கப்படுகிறது. இவற்றைவிட லக்ஷார்ச்சனை, கோடி அர்ச்சனை என்பனவும் செய்யப்படுகிறது. அர்ச்சனைக்கு மலர்கள் மட்டுமல்லாமல் அகூடிதை, குங்குமம், வில்வம், மாதுளம் முத்து என்பனவும் பயன்படுத்தப்படுகின்றன. ஈசானம், தத்புருஷம், அகோரம், வாமதேவம், சத்தியோ ஜாதம் என்ற இறைவனின் ஐந்து முகங்களைக் குறித்து ஐந்து சிவாச்சாரியார்கள் நின்று அர்ச்சிப்பது பஞ்சமுகார்ச்சனை என்றும் முருகனின் ஆறுமுகங்களுக்கும் ஆறு சிவாச்சாரியார்கள் நின்று அர்ச்சிப்பது ஷண்முகார்ச்சனை என்றும் கூறுப்படுகின்றது.
கோயிற் கிரியை வழிபாட்டு முறையில் இசையோடு கூடிய பாடல்கள் மூலம்.இறைவனைத் துதித்துப் பாடுதல் அடுத்த அம்சமாகும். இறையருள் பெற்ற நாயன்மாராற் செய்யப்பட்ட திருவருட்பாக்களைப் பன்னிரு திருமுறைகளாக வகுத்துள்ளனர் சான்றோர். அவற்றுள் தேவாரம், திருவாசகம், திருவிசைப்பா, திருப்பல்லாண்டு, திருப்புராணம் பஞ்சபுராணம் என்று சிறப்பிப்பர். அவற்றை வரிசை தப்பாமலும் உரிய முறைப்படியும் ஒதுதல் வேண்டும். திருப்புராணம் ஒதுமிடத்து பெரியபுராணம் மட்டுமே ஒதப்பட வேண்டும் என்பது நியதி. இசையுடன் இணைந்த தோத்திரங்களைப் போலவே நாட்டியமும் இறைவழிபாட்டின் ஓர் அம்சமாகத் திகழ்ந்தது. இன்று வழிபாட்டின் ஒர் அம்சமாக இது கருதப்படாவிட்டாலும் கோயிற் கிரியைகளில் நாட்டியம் முக்கிய இடம் பெற்றிருந்தது.
ஆலய பரிபாலகர்கள் திருவிழா முதலியவற்றை நடத்தும் உபயகாரர், கிராமமக்கள் உலகமாந்தர் யாவருக்கும் சகல
இந்துச் க்களஞ்சியம்
236

நன்மைகளும் கிடைக்க வேண்டுமெனவும் ஆலயம் சகல செல்வங்களுடனும் நித்திய, நைமித்திய சிறப்புக்களுடனும் விளங்க வேண்டுமெனவும் சிவாச்சாரியார் பிரார்த்திக்க அங்கு வந்துள்ள ஏனைய பிராமணர்கள் யாவரும் சேர்ந்து "ததாஸ்து (அவ்வாறே ஆகட்டும்) என்று ஆமோதிப்பர். இதுவே ஆசீர்வாதம் எனப்படும்.
நித்திய, நைமித்திய, காமிய கிரியைகள்:
சிவாலயங்களில் நிகழும் கிரியைகள் மூன்று வகையின. இவை நித்திய, நைமித்திய, காமிக கிரியைகள் எனப்பெயர் பெறுவன. தினந்தோறும் செய்யும் கிரியைகள் நித்தியக் கிரியைகள், காரணங் கொண்டு நிகழ்வன நைமித்யகிரியைகள், பெறுபேற்றினை அவாவிச் செய்யும் கிரியைகள் காமிகக் கிரியைகள் எனப்படும். ஆலயங்களில் தினமும் நித்திய பூஜைகள் ஆலயங்களின் வசதிக்கேற்ப ஒரு வேளை முதல் பன்னிரு வேளைகள் வரை நிகழும். வசதிபடைத்த பல கோவில்களில் ஆறுகாலப் பூஜை நடைபெறுகிறது. இவ்வாறு பூஜை நடைபெற இயலாத ஆலயங்களில் காலைச்சந்தி, உச்சிக்காலம், மாலை என மூன்று வேளை அல்லது காலை, மாலை என இரண்டு வேளைகள் பூஜை நடைபெறும் மிகவும் வசதி குறைந்த சிறு ஆலயங்களில் ஒரு வேளைப் பூஜை மட்டும் நடைபெறுவதும் உண்டு.
நித்திய பூஜையில் முதலாவது பூஜை, சூரியன் உதிப்பதற்கு ஒன்றரை மணி நேரத்திற்கு முன் நிகழ வேண்டியது. இது உஷத்காலப் பூஜை எனப்படும். இரண்டாவதாக நிகழ்வது காலைச் சந்திப் பூஜை இது சூரியன் உதித்து மூன்று மணித்தியாலங்களுக்குள் நிகழும். உச்சிக் காலப்பூஜை நடுப்பகலுக்குரியது. சூரியன் மறைவதற்கு ஒன்றரை மணி நேரத்திற்கு முன் நிகழ்வது சாயரட்சைப் பூஜை, இதன் பின் நிகழும் ஐந்தாவது பூஜை இரண்டாங் காலப் பூஜை எனப்படும். சாயங்காலப் பூஜையிலிருந்து ஒன்றரை மணித்தியாலத்தின் பின் நிகழ்வது இது. இரண்டாங்காலப் பூஜை நடந்து ஒன்றரை மணித்தியாலம் வரை அர்த்தயாமப் பூஜைக்குரிய காலமாகும். தொகுத்து நோக்கின் அதிகாலை நாலரைமணி, காலை எட்டு மணி, பகல் பன்னிரண்டுமணி, பிற்பகல் நாலரை மணி, மாலை ஆறுமணி, இரவு ஏழரை மணி ஆகியவை முறையே ஆறுகாலப் பூஜைக்குரிய நேரங்கள் ஆகும். அர்ச்சகர் அதிகாலையில் நீராடி நித்திய கர்மானுஷ்டானங்களை முடித்துத் தூய ஆடையும், விபூதி ருத்திராக்ஷம் தரித்தவராக ஆலயத்தை அடைந்து, திருநந்தி தேவரையும் துவாரபாலகரையும் பிரார்த்தித்து அவர்கள் அனுமதி பெற்று மண்டபத்தை அடைந்து சகளிகரணம், (தனது சரீரத்தை சிவசொரூபமாக்குதல்) பூதகத்தி (இத் தூல தேகத்தை மந்திரம், பாவனை, கிரியைகளால் புதிய தேகம் அமைப்பதாக பாவனை செய்தல்) அந்தர் யாகம் (சிவபூஜை செய்யு முன் மானசீகமாகச் செய்யும் வழிபாடு) இவற்றால் பூஜை செய்வதற்குத் தன்னை தயாராக்கிய பின் வைரவரின் ஆலயம் சென்று வணங்கி
முதனாளிரவு அவரிடம் ஒப்படைத்திருந்த திறப்பினை அங்குச

Page 263
முத்திரையால் (வலக்கையை முஷ்டியாகப் பிடித்து பெருவிரலை விலக்காது நீட்டி அதன் மேல் சுட்டுவிரலை வளைத்துப் பிடித்தல் அங்குச முத்திரையாகும்.) எடுத்து வந்து வாசலில் நின்று திருப்பள்ளி எழுச்சி முதலியன பாடித் துவாரபூஜை நிகழ்த்திச் சிவசக்தி மந்திரத்தை உச்சரித்தபடி கதவைத் திறப்பர். உள்ளே துப்பரவு செய்து (அர்ச்சித்த பூக்கள் பூமாலைகளைக் களைந்து சுத்தப்படுத்துதல்) உஷத்காலப் பூஜையை நிகழ்த்துவர். முதலில் விநாயகர், மூலவர் (மூலஸ்தானத்திலுள்ள பிரதானமூர்த்தி) அதன் பின் சக்தி ஆகியோரின் பூஜைகள், அபிஷேகம் முதல் தோத்திரம் ബഞ] நிகழும். ஏனைய பரிவார தெய்வங்களுக்கு இவ் வேளையில் பூஜை நிகழ்வதில்லை. இவ்வேளையில் நைவேத்தியமாகப் பாலைப் பயன்படுத்துவதே மரபு.
காலைச் சந்திப் பூஜையில் சூரியன் தனிச் சந்நிதானத்தில் இருந்தால் அவருக்கே முதற் பூஜை நிகழும். இதன் பின் விநாயகர், மூலவர், ஏனைய பரிவாரங்கள் யாவருக்கும் விரிவாக அபிஷேகம் முதல் தோத்திரம் வரை பூஜைகள் நடைபெறும். உச்சிக்காலப் பூஜைக்கு முன் அர்ச்சகர் தமது நித்தியகர்மானுஷ்டானங்களை முடித்தபின் விக்னேஸ்வர பூஜை முதல் சிவோகம் பாவனை வரையிலான பூர்வாங்கக் கிரியைகளைச் செய்து முடித்து ஸ்தபனபூஜை செய்து துவாரபாலகர்களை வணங்கி உட்புகுந்து பின் அபிஷேக ஆராதனைகளை முறையாக நிகழ்த்துவர். இது போல ஏனைய மூன்று காலப்பூஜைகளும் நிகழும். இரவு அர்தயாமப் பூஜை நிறைவுற்றதும், ஆலயத்திறவுகோலை வைரவர் சந்நிதியில் வைத்துக் கோவிற் பாதுகாப்பை அவரிடம் ஒப்புவித்தல்
வழக்கம்.
ஸ்நபன மண்டபத்திலே அமைக்கப்பட்டிருக்கும் ஒம குண்டத்திலே தினமும் அக்கினி காரியம் செய்தல் நித்தியாக்கினி காரியம் என்றும், ஆலயவீதிகளில் எட்டுத் திக்குகளிலும் அந்தந்த திக்குப்பாலகர்களான இந்திரன் முதல் ஈசானன் வரையானோர்க்கும் பலிபீடத்தில் (கொடிமரத்துக் கருகிலுள்ளது) உரிய முறைப்படி அவ் அத்தேவர்களுக்கும் சாத உருண்டைகளைப் பலியாக வழங்கி மகிழ்வித்தல் நித்தியபலிதானம் என்றும் சொல்லப்படும். நித்தியோற்சவர் என்று பிரத்தியேகமாக அமைக்கப்பட்டிருக்கும் உற்சவ மூர்த்தியைத் தினமும் ஒரு தரம் பூஜையின் முடிவில் வீதிவலம் வருதலும் நித்தியக் கிரியைகளில் இடம்பெறுகிறது. ஆகம விதிப்படி அமைய வேண்டிய பூஜைக்கிரமம் இவ்வாறிருப்பினும் இடம், பொருள் ஏவல்களுக்கேற்பவும் கால மாறுதல்களை அனுசரித்தும் இன்று இவற்றின் மிகச் சுருங்கிய வடிவத்திலேயே நித்திய பூஜைக் கிரியைகளை நாம் காணக் கூடியதாக உள்ளது. எவ்வாறெனினும் தினமும் ஒருதடவையாவது குறைந்தபட்சம் குளிர்ந்த நன்னீரை மட்டுமாவது தாராளமாகப் பயன்படுத்தி அபிஷேகம் செய்தல் அவசியமாகும். தீபாராதனையிலும் எல்லாவகையான
தீபங்களையும் தினமும் காட்ட முடியாவிடினும் ஒற்றைத்தீபம்,

237
கற்பூரதீபம், பஞ்சாராத்திரிகை ஆகியவற்றை நிதானமாக நிறுத்தி ஒழுங்காகக் காட்டுவதும் தாராளமாகப் பூவினால் அர்ச்சிப்பதும் மிகக் குறைந்த அளவு கிரியையாகும். இவற்றையேனும்
அர்ச்சகர்கள் ஒழுங்காக நிறைவேற்ற முனைய வேண்டும்.
நைமித்தியக் கிரியை எனினும் விசேடக் கிரியை எனினும் ஒன்றே. இவ்வகைக் கிரியைகள் குறிப்பிட்ட விசேஷ தினங்களில் மட்டும் நிகழ்வன. சுக்கிரவாரம் (வெள்ளிக் கிழமை) சோமவாரம் (திங்கட்கிழமை) முதலிய வாரந்தோறும் வருகின்றவையும் மாதப்பிறப்பு கார்த்திகை, சதுர்த்தி, பூரணை முதலிய மாதமொருமுறை வருவனவும் நடேசரபிஷேகம் முதலிய இரு மாதங்களுக்கொருமுறை வருபவையும், கிரகணபூஜை, மகாமகம், கும்பாபிஷேகம் போன்ற பல வருடங்களுக்கொருமுறை வருபவையுமென்று நைமித்தியக்கிரியைகள் பலவகைப்படும். அதிமுக்கிய தத்துவம் பெற்று கோவில்களில் பெரிதும் மேற்கொள்ளப்படுபவை பிரதோஷம், நவராத்திரி, கார்த்திகைத் தீபம், திருவெம்பாவை, ஆருத்திரா உற்சவம், சிவராத்திரி ஆகியன.
தேவர்களும், அசுரர்களும் திருப்பாற்கடலைக் கடைந்த போது உண்டான ஆலகால விஷம், எங்கனும் UD 65 உலகையழியாதிருக்கும் வண்ணம் இறைவன் தன் உள்ளங்கையில் ஏற்று பருகியருளினார். இந் நஞ்சு பருகப்பட்ட வேளை பிரதோஷ வேளையாகும். இறைவன் ஆன்மாக்கள் மேல் கொண்ட பெருங் கருணையினால் நன்றியுணர்ச்சி தோன்ற இறைவனைப் பூஜிக்க வேண்டுமென ஆகமங்கள் கூறுகின்றன. பகற்பொழுதின் இறுதியான பிரதோஷப் பொழுதில் இறைவனுக்கு விசேட அபிடேக அலங்கார ஆராதனைகள் செய்து நிவேதனம் சமர்ப்பித்து வழிபாடு நடைபெறுகின்றது.
ஐப்பசி மாத சுக்கில பகூடித்தில் பிரதமை முதல் வரும் ஒன்பது தினங்கள் நவராத்திரி தினங்களாகும். தேவியின் கையில் காப்புக்கட்டி துர்க்கை, லக்ஷமி, சரஸ்வதி ஆகிய மூவரையும் பூஜித்தல் நவராத்திரிக்கிரியையின் முக்கிய அம்சமாகும். தேவியை இவ் ஒன்பது தினங்களிலும் வெவ்வேறு கோலங்களில் அலங்கரித்து பலவகை நைவேத்தியங்களுடன் தூபதீபம் முதலிய தீபாரதனைகளும், அர்ச்சனைகளும் பகல் இரவு ஆகிய இரு வேளைகளிலும் நடைபெறும். பத்தாம் தினத்தன்று ஆயுத பூஜை நடைபெறும். குதிரை வாகனத்தில் சந்திரசேகர மூர்த்தியை எழுந்தருளச் செய்து தசமி உற்சவத்தை நிகழ்த்தும் முறையை ஆகமங்கள் கூறி உள்ளன. இது மானம்பூ உற்சவம் எனப்படும்.
கார்த்திகை மாதத்தில் நிகழும் உற்வசவம் கார்த்திகைத் தீபம் எனப்படும். இவ்வுற்சவம் சூரியன் மறையும் சாயரட்சையில் நடைபெறும். மிக உயரமாகத் தீபத் தண்டம் அமைத்து அதைச் சுற்றிலும் நூறு, ஐந்நூறு, ஆயிரம் தீபக்கீலங்களமைத்து அதைச் சுற்றிலும் ஒலையினால் வளைத்து வட்ட வடிவமாகக் கட்டுவர். இது சொக்கப்பானை என்னும் பெயரால் மக்களிடையே வழங்கி
இந்துக் க்களஞ்சியம்

Page 264
வருகிறது. ஓம குண்டத்தில் அக்கினியை ஒம்பி முறைப்படி ஹோமம் செய்து தீபப் பாத்திரங்களில் அதனை எடுத்து கார்த்திகை தீபோற்சவத்துக்குரிய மூர்த்தியை அலங்கரித்து திருவுலாக் கொண்டருளச் செய்து மூர்த்தி, தீபதண்டத்தை அண்மித்ததும் தீப பாத்திரத்திலுள்ள அக்கினியை வடக்கு முகமாக ஏற்றி இவ்வுற்சவத்தை நடத்துவர். பொருள் வசதிக்கேற்றவாறு தீபாலங்காரங்களுடன் உற்சவம் சிறப்பாக அமையும்.
தை மாதம் முதல் ஆறுமாதங்கள் தேவர்களுக்குப் பகற்காலம், ஆடி மாதம் முதல் ஆறு மாதங்கள் இரவு தனுராசியில் சூரியன் நிற்கும் வேளை வைகறைப் பொழுதாக தேவர்களுக்கு விளங்குகிறது. அக் காலத்தில் விசேஷ பூஜை நிகழ்த்த வேண்டுவதனைக் காரணாகமம் கூறுகிறது. மார்கழி திருவெம்பாவை என்று கூறப்படும் இப்பூஜைக்கு பயற்றஞ் சாதம், நெய்ச்சாதம், தயிர்ச்சாதம், முதலியன விசேஷ நைவேத்தியப் பொருட்களாகும். ஆயிரம் தினங்கள் தொடர்ந்து நிகழ்த்தும் பூஜைகளின் பலனை மார்கழிமாதம் விடியற்காலையில் ஒரு வேளைப் பொழுதுமட்டும் நிகழ்த்தும் இப்பூஜையினால் அடையலாம் எனக் கூறப்படுகிறது.
மார்கழி மாத திருவாதிரை நாளில் நடைபெறுவது ஆருத்திரா பூஜை முதனாள் மாலை கெளரிபூஜை விரிவாக நடத்தப்படுகிறது. நடராஜ மூர்த்தியை திருவுலாக் கொண்டு செல்லுதலும், திருவூஞ்சல் நிகழ்த்துவதும் ஆருத்திரா பூஜையின் முக்கிய அம்சமாகும். ஆருத்திரா தினத்தன்று அதிவிடியற் காலையில் மகாஸ்நபனமும், விரிவான அபிஷேகமும் நடராஜப் பெருமானுக்கு நிகழ்த்தி விசேட அலங்காரங்களாலும், நைவேத்தியம், தீபாராதனை, அர்ச்சனை, பூஜை முதலியவற்றாலும் உபசாரப் பொருட்களாலும் உபசரித்து தச தரிசனங்களை நிகழ்த்த வேண்டுமென காரணாகமம் எடுததுரைக்கின்றது.
மாசி மாதம் கிருஷ்ணபசுஷ் சதுர்த்தசிநாள் சிவராத்திரி தினமாகும். இத்தினம் உபவாசம் மேற்கொள்ள வேண்டிய நாள். இத்தினத்தில் நித்திரை விழித்தல், மிகவும் அவசியம். முறைப்படி இவ்விரதத்தைக் கடைப்பிடிப்பவர்கட்கு இம்மை, மறுமைப் பேறுகள் கிடைக்குமென்பது ஆகம வாக்கு. சைவக் கோவில்களில் சிவராத்திரி தினத்தன்று நான்கு யாமங்களிலும் பூஜைகள் நடைபெறுகின்றது. ஒவ்வொரு யாமத்திலும் பூஜைகள் ஆலயங்களில் விரிவாக நடைபெறுகின்றது. முதலாம் யாமத்திற்கு வில்வமும், இரண்டாம் யாமத்திற்கு தாமரையும், மூன்றாம் யாமத்திற்கு ஜாதிபுஷ்பமும், நான்காம் யாமத்திற்கு நந்தியாவர்த்த மலரும் அர்ச்சனைக்குரிய பொருட்களாகக் கொள்ளப்படுகிறது. நான்கு யாமங்களுக்கும் நைவேத்தியப் பொருட்களும் தனித் தனியாக வைக்கப்படுகிறது. நான்கு யாமங்களிலும் பஞ்சமுகார்ச்சனை நிகழ்த்தப்படுகிறது. அவ்வாறு செய்ய இயலாத கோயில்களில் லிங்கோற்பவ காலத்தில் பஞ்சமுகார்ச்சனை நிகழ்த்தப்படுகிறது.
இந்துக்கலைக்களஞ்சியம் 238

கொடியேற்றத்தின் பின் நிகழும் பிரமோற்சவம் நைமித்திய உற்சவங்களில் தலை சிறந்தது. நித்திய, நைமித்திய கிரியைகளின் போது ஏற்படும் குற்றம் குறைகளுக்கு பிராயச் சித்தமாக அமைவது இந்த மஹோற்சவமாகும். இறைவனின் பஞ்ச கிருத்தியங்களை கோயில் உற்சவங்கள் எமக்கு உணர்த்து கின்றன. கொடியேற்றத் திருவிழா சிருஷ்டியையும் (படைத்தல்) வாகனோற்சவம் பலிதானம் என்பன காத்தலையும், வேட்டைத் திருவிழா, தேர்த்திருவிழா அழித்தலையும், சூரணோற்சவம், மெளனோற்சவம் என்பன மறைத்தலையும்,தீர்த்தத் திருவிழா அருளலையும் குறிக்கும் என்று கருதப்படுகிறது. சிவனுடைய அட்ட வீரட்டங்களை உணர்த்தும் வரலாறுகளைச் சித்திரிக்கும் முறையில் உற்சவம் நிகழ்த்தும் முறைபற்றி ஆகமங்கள் கூறுகின்றன. திரிபுரதகனம், யமசம்ஹாரம் பிரமசிரச்சேதனம், காமதகனம் முதலிய உற்சவங்களும் சைவக் கோயில்களில் நிகழ்த்துவதற்குரியன. சுப்பிரமணியர் கோயில்களில் சூரசம் ஹாரமும், பிள்ளையார் கோவில் கஜமுக சம்ஹாரமும் நிகழ்த்தப்படுகிறது.
நைமித்தியக் கிரியைகளுள் மஹாகும்பாபிஷேகம் மிக முக்கியமான கிரியையாகக் கொள்ளப்படுகிறது. ஆன்ம விடுதலைக்கு அவசியமான கிரியைகளை நடத்துவதற்குரிய இடமான ஆலயமொன்றிலே திருவுருவத்தை ஸ்தாபித்து அங்கு தெய்வ சாந்நித்தியத்தை ஏற்படுத்துவதே மஹா கும்பாபிஷேகமாகும். பிரபஞ்சமெங்கும் பரந்து விரிந்து நிற்கும் பரம் பொருளைச் சிவாச்சாரியார் மந்திரம், பாவனை, கிரியைகளின் மூலமாக அக்கினியிலும் கும்பத்திலும் ஆவாகனம் செய்து வழிபட்டு அங்கு ஸ்தாபிக்கப்பட்ட திருவுருவத்திலே சேர்த்து ஆன்ம கோடிகளுக்கு அருள்புரியுமாறு செய்தலே மஹாகும்பாபிஷேகத்தின் நோக்கமாகும். நிலம், நீர், தீ, காற்று, ஆகாயம் என்பன பஞ்ச பூதங்கள். பஞ்சபூதங்களின் வடிவாக இருப்பவன் பரம்பொருள். இவ்வைந்தும் தழுவியதாகக் கும்பாபிஷேகக் கிரியைகள் அமைவதைக் காணலாம். யாகசாலையில் ஆகாயவெளியும் காற்றும் உள்ளன. அங்கு அக்கினி வளர்க்கப்படுகிறது. கும்பங்களில் நீர் நிறைக்கப்பெற்று அதிலே இறையருட் சக்தி ஆவாகனமாகிப் பின் மூர்த்தியில் அபிஷேகமாகிறது. கும்பம் உருவாக்கப்பட்ட உலோகம் மண்ணோடு தொடர்புடையது. இறுதியில் அபிஷேகமாகி ஸ்தாபிக்கப்படும் ஸ்தானமும் மண்ணுடன் தொடர்பான கருங்கல் அல்லது உலோக விக்கிரகமாகும். இத்தகைய பிரதிஷ்டா மஹாகும்பாபிஷேகம் அநாவர்த்தனம், ஆவர்த்தனம், புனராவர்த்தனம், அந்தரிதம் என நால்வகைப்படும் என்று சிவாகமங்கள் வகுத்துரைக்கின்றன. ஆலயம் இல்லாத இடத்து புதிதாக ஆலயம் அமைத்து அங்கு மூர்த்தியைப் புதிதாக பிரதிஷ்டை செய்வது அநாவர்த்தனப் பிரதிஷ்டை முன்பிருந்த ஆலயம் முற்றாய் அழிந்துவிட்டால் அவ்விடத்தில் மறுபடி ஒர் ஆலயத்தை அமைத்துக் கும்பாபிஷேகம் செய்தல் ஆவர்த்தனப்

Page 265
பிரதிஷ்டை என்றும் பூஜைவழிபாடு நிகழும் கோயிலில் திருத்த வேலைகளுக்காக பாலஸ்தாபனம் செய்து திருத்த வேலைகள் முடிந்தபின் மறுபடி மூர்த்தியைப் பிரதிஷ்டை செய்வது புனராவர்த்தனப் பிரதிஷ்டை எனவும் கோவிலுக்குள் கள்வர் புகுதல், மரணம் முதலியன ஆசாரக் குறைபாடுகள் ஏற்பட்டால் நிகழும் பிரதிஷ்டை அந்தரிதப் பிரதிஷ்டை எனவும் கூறப்படுகிறது. பன்னிரண்டு வருடங்களுக்கு ஒரு முறையாதல் கும்பாபிஷேகம் நடைபெற வேண்டுமென்பது விதி. தெய்வ சாந்நித்தியத்தை வலுப்படுத்தி அருட்சக்தியை அதிகரிக்கச் செய்ய கும்பாபிஷேகக் கிரியைகளை நடத்துவது அவசியமாகிறது. பல ஆண்டுகளுக் கொருமுறை நிகழும் கும்பாபிஷேகவிழாவை தரிசித்தல் பெரும்பேறாகும்.
வழிபாடுகள் நிஷ்காமிகமாக அமைவதே சிறப்பு பலன் எதனையும் கருதாது கடமையுணர்ச்சியுடன் செய்யப்படும் வழிபாடு நிஷ்காமிக வழிபாடாகும். ஆயினும் பயனை அவாவியே காரியங்களைச் செய்வது மானிட இயல்பாகும். எனவே பலன் கருதி காரியங்களைச் செய்யும் பெரும்பாலோர்க்கு உரியவாறு ஆகமங்கள் கிரியைகளை வகுத்துள்ளன. அபிஷேகம், அலங்காரம், நிவேதனம், தீபாராதனை, உற்சவம் ஆகிய கிரியைகள் அனைத்தும் பலனை அவாவிச் செய்யப்படுகின்ற கிரியைகளாக அமைகின்றன. இவற்றைவிட விசேஷ திருவிழாக்களும் பலனை அவாவிச் செய்யும் கிரியைகளாகின்றன. ஒரு குறிக்கோளை மனதில் கொண்டு அது நிறைவேறும் வரை காத்திருந்து அது நிறைவேறியதும் முன்னரே சங்கற்பித்துக் கொண்டவாறு தாம் கருதிய அபிஷேகம், திருவிழா முதலியவற்றைச் செய்விக்கும் வழக்கம் பெரிதும் நடைமுறையில் உள்ளது. இவை அனைத்தும் பலனை அவாவிச் செய்வதால்
காமிகக் கிரியையின்பாற்படுவன.
கிரியைகள் சம்பிரதாயங்கள் இவற்றில் பல சிறப்பம்சங்கள் உள்ளன. அதனைப் புரிந்து கொள்ள முடியாத காரணத்தால் வெறுத்தொதுக்காது நம்பிக்கையோடு அவற்றை அணுகி எமது அறிவுக் கெட்டியவரை ஆராய்ந்து அவற்றிலுள்ள தத்துவ உட்பொருள்களை விளங்கிக் கொள்வதவசியம். கிரியைகள் சிறப்புறுவதும் பயனளிப்பதும் நான்கு முக்கிய அம்சங்களில் தங்கி இருக்கிறது. சரியான மந்திரங்களைச் சரியான உச்சரிப்புடன் அவற்றிற்கே உரிய ஒலியெழுப்பும் வகையில் பயன்படுத்துவது முதலாவது அம்சம். இரண்டாவது அம்சம் கிரியைகள் செய்பவரும் செய்விப்பவரும் நம்பிக்கையும் பரிபூரணமான இறைபக்தியும் உடையவர்களாகச் சிரத்தையுடனும் லயிப்புடனும் ஈடுபட வேண்டும். இதன் மூலம் பூரண பலனைப் பெறலாம். கிரியைகளின் வெற்றியை நிர்ணயிக்கும் மூன்றாவது அம்சம் தலச்சிறப்பு. கிரியை நிகழும் ஸ்தானம் அதன் சூழல் என்பன கிரியைகள் நிகழ்வதற்குகந்த முறையிலே சாஸ்திர விதிப்படி

239
அமைந்திருப்பது அவசியம். நான்காவது அம்சம் கிரியைகளை நடத்த வேண்டிய சிவாச்சாரியார்கள் எப்படி ஆசார அனுட்டானங்களைக் கடைப்பிடித்து ஒழுக வேண்டுமோ அவ்வாறே அவர்களைக் கொண்டு கிரியைகள் செய்விக்கும் எஜமானர்களும் தத்தமக்குவிதிக்கப்பட்டஆசார ஒழுக்கங்களைக் கடைப்பிடிக்க வேண்டும். மனம், வாக்கு, காயம் என்னும்
மூன்றிலும் இந்தத் தூய்மை பேணப்பட வேண்டும்.
கோவில்களில் நடைபெறும் கிரியைகளும் அவை பற்றிக் கூறும் சமயநூல்களும் சமஸ்கிருதத்தில் காணப்படுகின்றனவே என அங்கலாய்ப்பவர்கள் பலர். அது அந்நியமொழி, புரியாத மொழி, அதனைப் புறந்தள்ளி தமிழிலே பூஜை அர்ச்சனைகளைச் செய்ய வேண்டுமென முழங்குவோர் சிலர். வேதம், வைதீக மதங்கள் யாவற்றுக்குமே பொதுப் பிரமாணமாகவும் மூலவித்தாம் உள்ளது. ஆகமம் சிறப்பு நூலாக சைவசித்தாந்த வழிபாட்டு முறைக்குரிய நூலாக விளங்குகின்ற போதும் அவை அனைத்தும் சமஸ்கிருத மொழியிலேயே காணப்படுகின்றன. ஆங்கிலம் எவ்வாறு உலகப் பொது மொழியாக விளங்கியதோ அவ்வாறே சமஸ்கிருதமும் இருந்தது. அதனால் சமய நூல்கள், கலை இலக்கியங்கள், அறிவியல் நூல்கள் பலவும் சமஸ்கிருதத்திலேயே எழுந்தன. பூரீ சி. சுப்பிர மணிய தேசிகர் தமது சைவக் கிரியைகள் என்னும் நூலிற் கேட்கும் ஒரு கேள்வி இது.
“தமிழ் மக்கள் பண்டைக் காலம் தொடக்கம் சிவநெறியாளரே என்பது ஆராய்ச்சியாளர் கண்ட துணிபாகும். ஆனால் அவர்களது சிவநெறியொழுக்க முறைகளை விரித்துக் கூறும் தமிழ் நூல்களைக் காண்டலரிதாகும். அங்ங்னமாயின் அவைகளை விரித்துக் கூறும் வடமொழி நூல்களையும் வெறுத்துவிடலாமா? வெறுத்துவிடின் நம் தமிழ் மக்களின் சிவநெறியொழுக்கம் சிதை வடையாது எங்ங்ணம் முறைப்படி நிகழ முடியும்” என்று கேட்டுள்ளார்.
சமய அனுட்டானங்கள் யாவும் கிரியைகளோடும், சடங்குகளோடும் தொடர்புபட்டவைகளாகவே அமைகின்றன. சைவ சமயத்தைப் பொறுத்தவரை அதன் கட்டுக் கட்டுக்கோப்பை நிலைப்படுத்தி வைக்கும் சட்ட அமைப்பு போன்றிருப்பவை கிரியைகளே. சிந்தனை அளவில் மட்டும் சமயத்தை நிறுத்தி வைக்காது நாளாந்த வாழ்க்கையுடன் ஒட்டி உறவாடும் நெறி முறையாகவும் உள்ளது. இவற்றின் சிறப்பம்சங்களை புரிந்து கொள்ள முடியாத காரணத்தால் அவற்றை வெறுத்தொதுக்காது நம்பிக்கையோடு அவற்றை அணுகி எமது அறிவுக்கெட்டியவரை ஆராய்ந்து அதன் தத்துவ உட்பொருட்களை விளங்கி அதன் வழி வாழ முற்படல் வேண்டும். நி.நி)
இந்துக்கலைக்களஞ்சியம்

Page 266
சைவ சமயம்
மொஹஞ்சதாரோ ஹரப்பா முத்திரைகள்
வ வணக்கம் வரலாறு கடந்தது. அது எந்தக் காலத்தில் தோன்றியது என்று அறுதியிட்டுக் கூற முடியாது. தொல் பொருளியலாளர் கண்டுபிடித்த சிந்து வெளிநாகரிகத்திலே சிவ வழிபாடும் இடம் பெற்றிருந்ததென ஆராய்ச்சியாளர் பலர் கருதுகின்றனர். இந் நாகரீகம் திராவிடருக்குரியதென்ற கருத்து வலுவடைந்து வருகின்றது. ஸ்டெல்லா க்ராம்ரிஷ் என்ற அம்மையார் தம்முடைய சிவனின் தோற்றம் (The Presence of Siva) என்ற நூலில் சிந்து வெளியிற் கிடைக்கப்பெற்ற யோகியின் வடிவம் சிவனது மூல வடிவம் என்று கூறியுள்ளார். மொஹஞ்சதாரோ, ஹரப்பா ஆகியவற்றில் எடுக்கப்பட்ட முத்திரைகளில் 420 என்ற எண்ணுள்ள முத்திரையில் ஒரு யோகியின் வடிவம் உள்ளது. அவருடைய குறி ஊர்த்துவமுகமாக இருப்பதாலும், அவரைச் சுற்றி பல விலங்குகள் நிற்பதாலும் சுக்கிலத்தைக் கட்டி மோனோக்கிச் செலுத்தும் யோக வழியைப் பின்பற்றியவர்கள் வழிபடும் தெய்வம் அது என்ற முடிவுக்கு வருகின்றனர். பதஞ்சலியின் யோக சூத்திரம் தோன்றுவதற்கு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் ரிக் வேதம் தொகுக்கப்படுவதற்கு ஆயிரம் ஆண்டுகளுக்கும் முன்னுள்ள முத்திரை அது.
ஹரப்பாவில் உள்ள 420 எண்ணுள்ள முத்திரை, சிவனைக் காட்டுவது என்று நிரூபிக்க முடியாவிடினும் அப் பிராந்தியத்திற் பரவியிருந்த யோகிகளினது என்று ஊகிக்கக் கூடியதாக இருக்கின்றது. சிவனை ஊர்த்துவலிங்க வடிவமாக வழிபடுவது பல்லாயிரம் ஆண்டுகளாக இருந்து வருகிறது. சிந்துவெளி நாகரிக மக்கள் விட்டுச் சென்ற சாசனங்கள் அறிஞர்கள் யாவரும் ஏற்கத்தக்க முறையிலே இன்னும் வாசிக்கப்படாமையினால், இக்காலச் சமயநிலை பற்றித் தீர்க்கமாகக் கூற முடியாதுள்ளது. தொல் பொருளியலாளரான சேர் ஜோன் மார்ஷல் சைவ சமயத்தின் ஆரம்பநிலை, சிந்து வெளி நாகரிகத்திலேயே காணப்படுவதாகக் கூறியுள்ளார். பெருந் தொகையான பெண் உருவங்களும் பெரும்பாலும் பெண் உருவிற் காணப்படும் ஆண் உருவங்களும் முறையே தாய்த் தெய்வ வழிபாட்டையும், நக்கன் என்று பிற்காலத்திற் போற்றப்படும் சிவபெருமானுடைய வழிபாட்டையும் குறிப்பனவாக வேண்டும் என்பது சேர் ஜோன் மாஷலின் கருத்தாகும். சிந்து வெளியில் இலிங்கங்களும், யோனிகளும் பெருந்தொகையாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளமை சிவவழிபாடும் அம்மன் வழிபாடும் அக் காலத்தில் நிலவியமைக்குச் சான்று என்பது அவர் கருத்து
வரலாற்றாசிரியர் சிலர் சைவசமயத்தின் தோற்றுவாய் வேதகாலத்துக்கு மட்டுமே போகிறது எனக் கூறுவர். ஆனால்
வேத காலத்துச் சமயமான வைதீகம் வேறு, சைவம் உள்ளிட்ட இந்து மதம் வேறு என மானிட வியற் பேராசிரியர் சுனித்குமார்
இந்துக்கலைக்களஞ்சியம்
240

சட்டர்ஜி தெளிவாக விளக்கியுள்ளார். சிவனையும், உமையையும் வணங்குதல், யோக அனுட்டானம், பக்தி மார்க்கம் என்பன திராவிடர்களிடமிருந்து பெறப்பட்டன என்பது அவரது கருத்து. வழிபாட்டு முறையில் விக்கிரக வணக்கம் சிறப்பிடம் பெற்று நீர், மலர், இலை, பழம், தானியம் முதலியன கடவுளுக்குப் படைக்கப்பட்டும் பூசை முறை முக்கிய அம்சமாக இடம்பெறுகிறது. வழிபடுபவர் மிகவும் ஆழமான உறவு கொள்ளத்தக்க முறையில் விக்கிரகம் அமைகிறது. அத்துடன் பக்தன் தன்னை இழந்துநிற்கும் நிலையினைப் பூசையிற் காணலாம்.
வேத காலச் சமயநோக்கு எளிமையானது. தெய்வலோகத்தின் வெவ்வேறு பகுதிகளிலே முப்பத்து மூன்று தேவர்கள் உள்ளார்கள் என்று கொண்ட அவர்கள் விக்கிரக வணக்கமுடையவர்களல்லர். அக்கினியே அவர்களுடைய தூதுவன். ஆடு, மாடு ஆகியவற்றின் இறைச்சியையும் இரத்தத்தையும் பால், நெய், சோமம் முதலியவற்றுடன் அக்கினி மூலமாகத் தேவருக்கு அனுப்பினர். உணவு, பானம் முதலியவற்றைப் பெற்றுத் திருப்தி கண்ட தேவர் தம்மை வழிபட்டவர்க்கு அவர் விரும்பிய செல்வம், புத்திரப் பேறு, நீண்ட வாழ்வு, சத்துருவெற்றி முதலியவற்றை வழங்கினர். அக்கினி மூலம் வழிபாட்டைப்பெற்றுக் கொண்டு பதிலுபகாரம் செய் என்பது போல் அமைந்துள்ளது.
பிற்கால இந்து சமயத்திலே இவ்விரு வழிபாடுகளும் கலந்து இடம்பெறுகின்றன. வைதீக வழிபாடு நிகமம் என்று பெயர் பெற பெளராணிக ஆகம வழிபாடு நிகமாந்த வித்யா' என்று பெயர் பெறுகின்றது.
ரிக்வேதத்திலும் பிறவேதங்களிலும் காணப்படும் ருத்திரன்
சைவ சமயத்தின் முழு முதற் கடவுளான சிவன் வேதகாலத்திற் சிறப்பான இடத்தைப் பெறவில்லை. அவன் சம்ஹார மூர்த்தியாகவே கருதப்பட்டுத் தாழ்வான ஒரு இடத்தையே பெற்றுள்ளான். ஏ. ஏ. மக்டனால்ட் என்பவர் எழுதிய வேதகால தொன்மக்கதைகள் (Vedic Mythology) என்ற நூலில் ருத்திரன் பற்றிய வேதக் குறிப்புகள் தொகுத்துத் தரப்பட்டுள்ளன. ரிக் வேதத்தில் ருத்திரனின் உடலமைப்புப் பற்றிக் கூறும் போது அவனது கை, முழங்கை அழகிய உதடுகள், சடை முடி, கண்ணைக் கூசவைக்கும் கதிரவன் வடிவம், பொன்னொளிர் வண்ணம் போன்ற அவனது பண்புகள் பலவற்றைக் குறிக்கின்றது. பின்னர் எழுந்த வாஜசநேயஸம்கிதை ருத்திரனின் வேறு பல பண்புகளைக் குறிக்கின்றது. நீலக் கழுத்துடையவன், தோலாடையணிபவன், மலைகளில் வாழ்பவன், என்ற குறிப் புக்களைத் தந்து நிற்கிறது. அம்பிகா என்ற பெயர் வாஜஸ நேயஸம்கிதையில் வந்தாலும் ருத்திரனின் மனைவியைக் குறிக்கவராமல் அவனுடைய சகோதரியையே குறித்து நிற்கிறது. உமா, பார்வதி என்ற சிவனின் மனைவியின் பெயர்கள் முதன் முதலாகத் தைத்ரீய ஆரண்யத்திலும், கேனோபநிடத்திலுமே

Page 267
வருகின்றன. அக்கினியுடன் ருத்திரனைத் தொடர்புபடுத்தி அதர்வ வேதத்திலும், ஸ்தபத பிராமணத்திலும், தைத்திரீய சம்ஹிதையிலும் குறிப்புகள் வருகின்றன. வாஜநேயஸம்கிதையில் அக்னி, பவ என்பவை ஒரே தெய்வத்தின் பல்வேறு வடிவங்கள் எனப் பேசப்படுகின்றது. ஸ்தபதபிராமணத்தில் ஸர்வ, பவ, பசுபதி, ருத்ர, உக்ரஅசனி என்பவை அக்கினியின் ப்ெயர்கள் என்றும் கூறப்படுகின்றது.
ரிக் வேதத்தில் அடிக்கடி கொடுமையே ருத்திரனுக்குக் குணமாகக் கூறப்படுகிறது. மேலும் அவனை வழிபடும் தங்களை, தம்பெற்றோரை, தம் குழந்தைகளை, கால்நடைகளை, குதிரைகளை அவன் சினந்து அழிக்கக் கூடாது என்று வேண்டப்படுகிறது. தெய்வங்களே கூட ருத்திரனின் வில், அம்புகட்கு அஞ்சி நடுங்கியதாக ஸதபத பிராமணம் கூறுகிறது. ரிக் வேதத்தில் ருத்திரன் பற்றிக் கூறப்பட்ட கருத்துக்களைத் தொகுத்து நோக்கும்போது, அவனைப் பயத்தின் அடிப்படையிலேயே மக்கள் வழிபட்டனர் என்பது புலனாகிறது. இதுவரையில் கூறியவற்றிற்கு முரணாக பிற தெய்வங்களின் கோபத்திலிருந்து தம்மைக் காக்க வேண்டும் என்றும், குழப்பத்தைத் தவிர்த்து ஆசி கூற வேண்டும் என்றும், நோய்நீக்கும் மருந்து தர வேண்டும் என்றும், அவனே வைத்தியர்கட்கெல்லாம் மேலான வைத்தியநாதன் என்றும் வர்ணிக்கும் பகுதிகளும் ரிக் வேதத்திற் காணப்படுகின்றன.
யசுர் வேதம் சதருத்ரீயம்
ருத்திரனுடைய கோபத்தையும் நூற்றுக் கணக்கில் அவன் மேற்கொள்ளும் வடிவங்களையும் புகழ்ந்து அவன் தம்மைத் துன்புறுத்தாமற் காக்க வேண்டியும் போற்றியும் பாடல்கள் சதருத்திரீயம் என்ற பெயரில் யசுர்வேதத்தில் இடம்பெறுகின்றன. ருத்திரன் தன் வில்லை மரத்திலே மாட்டித் தொங்கவிட்டுள்ளான். அவன் மனிதர்கட்கு மகிழ்ச்சியையும் இந்த உலகிலே அமைதியையும் தருகிறான் என்று தைத்ரீயஸம்கிதை கூறுகிறது. அவனுடைய அருளால் மகிழ்ச்சியையும், துன்பத்தையும் அவன் தரும் பொழுது சிவன் என்று பெயர் பெறுகிறான். ரிக் வேதத்தில் கொடுமையின் வடிவமாகத் தாழ்ந்த நிலையில் இருந்த ருத்திரன் யசுர் வேத சதருத்ரீயத்திலும், தைத்ரீய ஸம்கிதையிலும் மகிழ்ச்சி, அமைதி, துன்பம் (சம்பு, சங்கர, சிவன்) என்ற பண்புகளைக் கொண்டவனாகக் கற்பிக்கப்பட்டு உயர் நிலையில் வைக்கப்படுகிறான்.
ஸ்வேதாஸ் வதர உபநிடதத்திற் சிவன்
ஸ்வேதாஸ்வதர உபநிடதம் சிவன் எல்லா உயிர்களுக்கும் முழுமுதற் பொருளாய், அவற்றுள் ஒன்றாய், வேறாய், உடனாய் நிற்கின்றான் என்ற தத்துவக் கருத்தை வெளிப்படுத்துகிறது. இவ்வுபநிடதம் ருத்திரனுக்கு ஆயிரம் கண்களும், எண்ணற்ற முகங்களும் உண்டு என்கிறது. ஒவ்வொரு மனிதனும் அவனுள் இருக்கிறான். புலன்களால் அறியப்படும் இந்த உலகில் உள்ள அனைத்துப் பொருள்களிலும் அவனே உறைகிறான் என்கிறது.

41
ஓசை ஒலி எல்லாம் ஆனாய் நீயே’
(நாவுக்கரசர் தேவாரப் பாடல்)
வேறாய் உடன் ஆனான்
(ஞானசம்பந்தர் பாடல்)
ஸ்வேதாஸ்வதர உபநிடதத்திற் சிவனைப் பற்றிக் கூறப்பட்ட கருத்துக்கள் பிற்கால நாயன்மார்களின் பாடல்களுடன் இயைவுற்று நிற்பதை நோக்கக் கூடியதாக உள்ளது. அனைத்தையும் கடந்தவனாய் தோற்றுவித்தல், அழித்தல் என்ற இரண்டையுஞ் செய்பவனாய் அதே வேளை வாழும் உயிர்களின் தலைவனாய் சிவனைக் காட்டிநிற்கிறது ஸ்வேதாஸ்வதர உபநிடதம். இவ்வுபநிடதம் இந்தப் புருடன் என்பவனைத் தான் முழுமுதற் காரணன் என்று கூற வேண்டுமா? என்ற வினாவை எழுப்பிக் கொண்டு எந்த ஒன்று பிரபஞ்சம் முழுவதையும் ஆள்கிறதோ அந்த ஒன்றே மூல புருடன்- சிவன் என்பதை நான் அறிந்துள்ளேன் என்றும் கூறுகிறது. ஆகவே சைவத்திற்கு ஒரு வடிவம் கொடுத்து சிவப்பரத்துவம் பேசும் முதல்நூல் ஸ்வேதாஸ்வதர உபநிடதமாகும். ஈசானன், மகேஸ்வரன், சிவன், ஈஸ்வரன் என்ற பெயர்களைச் சிவனுக்கு முதன் முதலாக வழங்கும் பழமையான இலக்கியம் இதுவேயாகும். பெறும் அறிவு எவ்வளவு நுண்மையானதாக இருப்பினும் இறையருள் இருந்தால் ஒழிய அவனைக் காணவோ அதன் பயனாகத் துயரத்திலிருந்து விடுதலை பெறவோ முடியாது என்ற மாபெரும் தத்துவத்தைக் கூறுகிறது இந்நூல். ஆதிகாலத்தில் சிவ வழிபாட்டுடன் லிங்க வழிபாடு தொடர்புடையதாக இருந்தது. லிங்கம் என்பதன் முதற் பொருள் குறி அல்லது அடையாளம் என்பதாகும். சுவேதஸ்வதர உபநிடதமே லிங்கம் என்ற சொல்லை முதன் முதல் பயன்படுத்துகிறது. சிவத்திற்கு எந்த லிங்கமும் அடையாளம் இல்லை, அவற்றைக் கடந்து நிற்பதே சிவம், என்கிறது அந்த உபநிடதம்.
தாண்டேகரின் ருத்திர சிவன்
வேதத் தெய்வங்களை விரிவாக ஆய்ந்து வேதத் தெய்வக் கதைகளின் போக்கு என்ற நூலை எழுதிய ஆர்.என். தாண்டேகர் என்பார் ருத்திர சிவன் பற்றிக் கூறியுள்ள கருத்துக்களை இச் சந்தர்ப்பத்தில் நோக்குவது பொருத்தமானது. இந்தியாவின் மேற்குப் பகுதிகளில் வேதம் பரவி நின்று செல்வாக்குப் பெற்றதை ஏற்றுக் கொள்ளும் இவர் அப்பகுதியில் வாழ்ந்த அனைவரும் வேதங்களை ஒப்புக் கொண்டு வாழ்ந்தார்கள் என்ற கருத்தை மறுக்கிறார்.
ரிக்வேதப்பாடல் முனிகள் என்ற ஒரு கூட்டத்தார் பற்றிக் கூறுகிறது. நீண்ட சடையுடன் அவர்கள் புதுவகைப் பானத்தை உட்கொண்டு அரிய சில சக்திகளையும், ஆற்றல்களையும் பெற்றிருந்தார்கள் என்றும், ருத்திரனே இக் கூட்டத்தாரின் தலைவன் என்றும் கூறுகிறது. இவ் வேதத்தில் வரும் பிரமச்சாரிய சூக்தம் இக் கூட்டத்தார் கடிய தவம் மேற்கொண்டவர்கள் என்றும், அவர்கள் எங்கு சென்றாலும் கந்தர்வர்கள் பின்தொடர்வர் என்றும்
இந்துக்கலைக்களஞ்சியம்

Page 268
தெரிவிக்கிறது. விராத்தியர்கள் என்பவர்கள் பற்றி வேதத்திலும் பஞ்சவிம்ஸ் பிராமணத்திலும் பேசப்படுகின்றது. இந்த விராத்தியர்கள் தமக்கென தனியான சமயக் கொள்கையும், சமுதாயக் கோட்பாடுகளும் கொண்டிருந்தார்கள் என்பது புலனாகிறது. அவர்கள் முழுமுதற் பொருளை ஏகவிராத்திய என்று பெயரிட்டழைத்தனர். கரிய வயிறும், சிவந்த முதுகும் உடையவன் இவ் ஏகவிராத்தியன். இக் குறிப்பு ருத்திரனையே நினைவுபடுத்துகிறது. இவர்கள் யோகப் பயிற்சி உடையவர்கள் என்றும் துறவு வாழ்க்கையைப் பின்பற்றினர் என்றும் தெரிகிறது. விராத்தியர்களின் தெய்வங்களாக பவ, ஸர்வ, பசுபதி, உக்ர, ருத்ர, மகாதேவ, ஈயான என்ற பெயர்களை அதர்வ வேதம் குறிப்பிடுகிறது. பிராமணங்கள் கட்டளையிடும் பலிகள் பற்றிய கொள்கைகளை இவர்கள் ஏற்றுக் கொள்ளாமல் மறுத்தார்கள் என்று அதர்வவேதப் பகுதிகள் கூறுகின்றன. இவ் வேதத்தின் இரண்டு பாடல்களில் ருத்திரனோடு பாம்புகள் தொடர்பு கொண்டிருப்பதை அறியக் கூடியதாக உள்ளது.
மேலே கூறப்பட்டுள்ள குறிப்புகளிலிருந்து ஒரு விடயத்தை நாம் புரிந்து கொள்ளக் கூடியதாக உள்ளது. முனிகள், பிரமச்சாரிகள், விராத்தியர்கள் ஆகிய மூன்று கூட்டத்தாரும் தமக்கெனத் தனியான சமய மரபுடையவர்கள் என்றும், கடுமையான தவம் மேற்கொள்ளுதல், ருத்திரனை வழிபடுதல் என்பவற்றிற் பெரிதும் ஒற்றுமையுடையவராய் இருந்தனர் என்றும் அறியக் கூடியதாக உள்ளது. விராத்தியர்கள் அக்கினியை முதன்மையாக வைத்துச் செய்யப்படும் வேதக் கிரியைகளை நம்பவில்லை. ஏற்கவும் இல்லை. யோக வழியை மேற்கொண்ட அவர்கள் வியக்கத்தக்க ஆற்றலைப் பெற்றதுடன் சமய உணர்வு முறுகுவதால் ஏற்படும் இன்பத்தையும் பெறலாயினர். சமுதாயக் கூட்டத்திலிருந்து தனித்து வாழ்வதே தங்களுடைய ஆன்மீக வாழ்க்கைக்கு ஏற்றது என்றும் கருதினர். வேதகால வழிபாட்டில் இவர்களது ருத்திரன் இடம்பெற்றான் ஆயினும் இக் கூட்டத்தார் மேற் கொண்ட தவம், துறவு என்பவை அக்கால வழிபாட்டு மரபில் இடம்பெறவில்லை.
அரப்மன் (Arbman) என்ற மேனாட்டு அறிஞர் ருத்திரன் பற்றி ஆய்ந்து மிகப்பழைய காலத்தில் ருத்திரன் மக்களுடைய வழிபாட்டுத் தெய்வமாக இருந்திருக்க வேண்டும் என்கிறார். ருத்திரனின் தோற்றம், பண்பு என்பவை வேத காலத்தவரால் ஏற்க முடியாதனவாக இருந்தன. ஆயினும் இதனுடைய வலுவான செல்வாக்கினால் தாக்கப்பட்ட வேதக் குருமார்கள் இதற்கும் தம்முடைய வேதத்தில் இடம் கொடுக்க வேண்டிய சூழ்நிலையில் இப் பழந் தெய்வத்தின் இயல்புகள் பலவற்றை மூடி மறைத்து வைத்துவிட்டு வேத தெய்வவரிசையில் ஓர் இடத்தைக் கொடுத்தனர். அதுவரை சாவுக்கு ஒரு தெய்வம் வேதத்தில் கொடுக்கப்படாமையினால் ருத்திரனுக்கு இடம் கொடுக்க வேண்டிய சூழ் நிலை ஏற்பட்டவுடன் இறப்புக்குரிய தெய்வமாக ருத்திரனை ஆக்கிவிட்டனர் வேதகுருமார். அச்சத்தை விளைவிப்பவன், சாவுக்குரிய தெய்வம் என்றெல்லாம் ருத்திரனின் பண்புகளை வரையறுத்தனர்.
இந்துக்கலைக்களஞ்சியம்
24

ருத்திரனை ஏற்றுக் கொண்டு அவனுடைய பண்புகளாகக் கொடுமைத் தன்மை,சாவு என்பவற்றை ஏற்றிவிட்ட வேதகாலத்தவர் ருத்திரன் வலுப்பெற்ற நிலை பெற்றவுடன் பழைய ருத்திரன் என்னும் பெயர் அச்சத்தைத் தோற்றுவித்ததால் புதியதோர் பெயரை நாடிநின்றனர். ருத்திரனுக்கு முக்கியமானது சிவப்பு நிறம். எனவே சிவப்பு நிறமுடையவன் என்ற பொருளுடைய திராவிடச் சொல்லை ஏற்றுக் கொண்டு ருத்திரனுக்கு சிவம் என்னும் பெயரை வழங்கினர். முதன் முதல் சிவம் என்னும் சொல்லை பண்பு அடைமொழியாகக் கூறாமல் பெயர்ச் சொல்லாக வழங்கிய நூல் சுவேதாஸ்வதர உபநிடதமாகும்.
இறுதியாக இந்த ஆராய்ச்சிக்கு ஒரு முடிவு தருகிறார் தாண்டேகர். வேதகால ருத்திரன் தொல்பழங்கால இந்தியரின் தெய்வமாகிய சிவனின் பல்வேறு பண்புகளையும் பெற்று விளங்குகிறான். அதாவது தொல் பழங்காலச் சிவனின் ஆரிய மயமாக்கப்பட்ட வடிவே வேதகால ருத்திரன். மிகப் பழங் காலத்தில் இந்தியா முழுவதும் பரவி இருந்த தொல்பழங்குடியினரின் தெய்வம், ஆரியர் வருகையின் பின்பும் தன் செல்வாக்கை இழக்கவில்லை. இந்திய நாட்டின் பல்வேறு பிராந்தியங்களிற் பல்வேறு பெயர்கள் அக் கடவுளுக்கு வழங்கப்பட்டன. கிழக்கில் உள்ளவர்கள் அவனை 'ஸர்வ என்றும் வாஹிகர்கள் அவனை பவ என்றும் ஒரு பகுதியில் பசுநாம்பதி என்றும் மற்றொரு பகுதியில் உள்ளோர் 'ருத்திரன்’ என்றும் கொண்டாடுகிறார்கள் என்று ஸதபதப் பிராமணம் கூறுகிறது. ஆகவே தொன்மையான சிவவழிபாடு எங்கும் தடைப்படாமல் வேதத்திலும் நுழைந்து புராண சிவமாக வரும் வரை சங்கிலித் தொடர் போல் அமைந்து விளங்கியது என்பதே தாண்டேகரின் கருத்து.
வேத காலத்தையடுத்து உபநிடதகாலத்திலே தத்துவக் கருத்துக்கள் வளர்ச்சியடைந்தன. கிரியைகள் வேதவேள்விச் சடங்குகள் என்பவற்றிற்கு முற்றிலும் வேறுபட்டு உண்மைப் பொருள் ஒன்று; அதுவே பிரமம்; ஏனையவை பிரமத்தின் தோற்றமே என்ற கருத்து வலியுறுத்தப்பட்டது. 'தத்துவமஸி’, அகம்பிரமாஸ்மி’ என்பவை உபநிடதக் கோட்பாடுகளின் சாராம்சமாகும். இத்தகையதொரு நிலையிற் சமயம் - சமயக் கருத்துக்கள் மக்களுக்குப் புரியாத புதிராகவே இருந்தது. ஒரு புறம் கணக்கிலடங்காத கிரியைகளும் சடங்குகளும்; மறுபுறம் தத்துவக் கருத்துக்கள் என மக்கள் மனதில் பெரும் குழப்பமும், தடுமாற்றமும் ஏற்பட்டதே தவிரத் தெளிவான விளக்கமோ, செயற்பாடோ இருக்கவில்லை. அத்துடன் சமுதாயத்தில் ஒரு குழுவிடம் மட்டுமே அவை நிலைபெற்றிருந்தன.
இக்காலத்தில் கெளதமயுத்தரின் போதனைகள் வைதீகக் கிரியைகள், சடங்குகளுக்கு மாறாக மக்களைச் சீராகச் சிந்திக்கும்படி தூண்டின. அவர் வகுத்துக் காட்டிய பாதைகள் மக்கள் மனதிற்கு ஏற்புடையனவாக இருந்ததால் அவரின் போதனைகள் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றன. இந்நிலையில் வைதீக சமயம் மாற்றமடைந்தது.

Page 269
உயர்ந்த தத்துவக் கருத்துக்கள் சாதாரண மக்களும் விளங்கக் கூடிய வகையிலே கதைவடிவம் பெற்று எளிமையாக்கப்பட்டது. தெய்வங்களின் அருட் செயல்கள் வீரச் செயல்கள் ஆகியவற்றை இக் கதைகள் கூறின. வேதகாலத் தெய்வங்கள் செல்வாக்கிழக்க சிவன், விஷ்ணு, பிரமன் என மும் மூர்த்திக் கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்டு வைதீக மதம் பெளராணிக மதமாக வளர்ச்சியடைந்தது. வட இந்தியாவிலே குப்தர்காலத்தில் ஏற்பட்ட இந்த மறுமலர்ச்சி தென்னாட்டிற் பல்லவர் காலத்திற் பெருஞ் செல்வாக்கை ஏற்படுத்தி பக்தி இயக்கமாக மலர்ந்தது.
சங்கத் தமிழ் கண்ட சைவம்
சங்க காலத் தமிழகம் சேர, சோழ, பாண்டிய நாடுகளாக விளங்கியது. அகவாழ்க்கையிற் காதலுக்கும் புறத்திலே போருக்கும் முக்கியம் கொடுத்து உலகியல் வாழ்க்கையில் அதீதமாக ஈடுபட்டிருந்த இக் கால மக்களின் வாழ்வியல் பற்றி அறிய எமக்கு ஆதாரமாக இருக்கும் நூல்கள் அகநானூறு, புறநாநூறு முதலிய நூல்களாகும். இந் நூல்களே அக் கால மக்களின் சமய நம்பிக்கைகள், கோட்பாடுகள் என்பவற்றை எமக்கு அறியத்தருகின்றன. சங்ககாலப் பாடல்களை நாம் நோக்கும் போது அங்கு சிவன் என்னும் பெயர் காணப்படவில்லை. சிவனின் பிற பண்புப் பெயர்கள் மட்டுமே குறிப்பிடப்படுகின்றது. மருதன் இளநாகனார் என்பவரால் பாண்டியன் இலவந்திகைப் பள்ளி துஞ்சிய நன் மாறனைப்பற்றிய பாடல் ஒன்றில்,
நன்றாய்ந்த நீணிமிர்சடை முதுமுதல்வன் ஒருமலைப் பெருவிற் பாம்புநான் கொளிஇ ஒரு கனை கொண்டு மூவெயிலுடற்றிப் பெருவிற லமரர்க்கு வெற்றி தந்த கறைமிடற் றண்ணல் காமர் சென்னிப் பிறைநுதல் விளங்கு மொருகன்போல இப்புலவர் பெருமான் சிவபெருமான் திரிபுரம் எரித்த வரலாற்றை விரிவாகக் கூறியதுடன் அவன் கறைமிடற்று அண்ணல் என்றும், பிறை அணிந்தவன் என்றும் கூறுகிறார்.
ஒளவையார் பாடியுள்ள புறநாநூற்றுப் பாடல் ஒன்றிலே,
பால்புரை பிறைநுதல் பொலிந்த சென்னி S S S SSS S SSS S LLLS SL SLSSLS S SLSLS S S S S S S S S S S SS கறை மிடற்றொருவன் போல எனச் சிவபெருமானை வர்ணிக்கிறார்.
ஆலமர் கடவுள் அன்னநின் செல்வம் என்பார் பேரிச் சாத்தனார்.
பணிஇயர் அத்தைநின் குடையே முனிவர் முக்கட் செல்வன் நகர் வலஞ் செயற்கே பாண்டியன் பல்யாக சாலை முதுகுடுமிப் பெருவழுதியை நோக்கி காரிகிழார் பாடிய பாடல் மேற் கண்டது:
நீல நாகம் நல்கிய கலிங்கம் ஆலமர் செல்வற்கு அமர்ந்தனன் கொடுத்த. என்று சிறுபாணாற்றுப் படை பேசுகிறது. பேரிசை நவிர மேஎய் உறையும்
காரி உண்டிக் கடவுளது இயற்கையும்

என்கிறது மலைபடுகடாம். இவற்றின் மூலம் சிவபெருமான் ஓயாமல் வேதத்தை ஒதிக் கொண்டிருப்பன், வடதிசை இமயத்து இருப்பவன்; எருக்கம் பூவை விரும்பி ஏற்பவன்; அவனே ஆதி ஆனவன்; அவன் திரிபுரம் எரித்தவன்; நீண்ட சடையை உடையவன்; தலையில் பிறையைச் சூடியவன்; கறைக்கண்டன்; நெற்றியில் ஒரு கண்ணை உடையவன்; ஆல்அமர் செல்வன், விடத்தை உண்டவன்; என்ற செய்திகளை அறியக் கூடியதாக
உள்ளது.
இங்கு கூறப்பட்ட விவரங்கள் அனைத்தும் சிவபெருமானின் உருவ அமைப்பைக் கூறுவதுடன் அவன் திரிபுரம் எரித்த கதையையும் புலப்படுத்துகின்றன. மதுரைக் காஞ்சி என்ற பெரும் பாடலில் முதன்முதலாக ஒருதத்துவக் கருத்துப் பேசப்படுகிறது.
நீரும் நிலனும் தீயும் வளியும் மகா விசும் பொடைந்துடன் இயற்றிய மழுவாள் நெடியோன் தலைவன் ஆக.
ஐங்குறுநூறு கடவுள் வாழ்த்திலே,
நீலமேனி வாலிழை பாகத்தொருவன் இரு தாள்நிழற்கீழ் மூவகை உலகும் முகிழ்ந்தன முறையே என்று கூறப்படுகிறது. இக் கருத்துக்கள் அவன் மூலப்பரம்பொருள் என்பதையும் முத்தொழில் புரிபவன் என்பதையும் அக் காலத் தமிழர் நன்கறிந்திருந்தனர் என்பதை விளக்குகின்றன,
சங்கத் தமிழர்கள் சிவபெருமானுக்கு இத்தகைய விரிவான வடிவமைப்புக் கூறி உள்ளமையால், அவர்கள் சிவனுக்கு கோவில் அமைத்து அதில் படிமம் நிறுவி வழிபாடியற்றி வந்திருக்கிறார்கள் என்பதை அறியக் கூடியதாக உள்ளது.
புற்றுடைச் சுவர பதவிவர் பொதியில்
கடவுள் போக்கிய கருந்தாட் கந்தத்து'
“மரையேறு சொரிந்த சாத்தாள் கந்தின் அரையிவர் பொதியில் அங்குடிச் சிறுரர்'
“முருங்கை மேய்ந்த பெருங்கை யானை வெளிநோங்கு சிறுபுறமுரிரு வொல்கி இட்டிகை நெடுஞ்சுவர் விட்டம் வீழ்ந்தெள் பின்புறாத் துறந்த மரஞ்சேர்மாடத்து எழுதணிகடவுள் போகலின் புல்லென்று ஒழுகு பலிறந்த மெழுகாப்புற்றினை'
அகநானூற்றில் வரும் இம் மூன்று பாடல்களும் அக்கால மக்கள் கோயில் அமைத்துக் கடவுளை வழிபட்ட முறையை உணர்த்தி நிற்கின்றன. அக் காலத்திற் கோயில் அமைந்த இடம் பொதியில் என்றும் அம்பலம் என்றும் அழைக்கப் பெற்றது. சுட்ட செங்கற்களால் அமைக்கப்பட்ட கோயில்கள் உயரமானதும்,
இந்துக்கலைக்களஞ்சியம்

Page 270
நீளமானதும், அகலமானதுமாக அமைந்திருந்தன என்பதை நெடுஞ்சுவர் என்ற பாடற் குறிப்பு உணர்த்தி நிற்கிறது. நரைக்கண் இட்டிகை என்பதால் வெண்மையான அகன்ற மேடையமைத்து அதன் மீது வழிபடுபொருளை வைத்து வழிபட்டனர் என்பதை ஊகிக்க முடிகிறது. கடவுட் படிமம் கந்து என்ற முறையில் தறியாகவும், அழகிய ஓவியமாகவும் வரையப்பட்டு பிரதிட்டை செய்யப்பட்டிருக்க வேண்டும் என்று கொள்ள இடமுண்டு. நாட்பலி என்றமையால் விடியற் காலை வேளை பூசை நடைபெற்றிருக்க வேண்டும். மேடையைச் சுற்றியுள்ள திண்ணையையும் அன்றாடம் சாணம் இட்டு மெழுகினர் என்றும் கந்து என்று பேசும் போது கருத்தாள்','மாத்தாள் என்று அடை கொடுத்துப் பேசுவதால் அடி பெருத்து நுனி சிறுத்த வடிவமாக (லிங்கவடிவம்) அது அமைக்கப்பட்டிருக்க வேண்டும் என்று உணரக் கூடியதாக உள்ளது. நான்மாடக் கூடலாகிய மதுரையில் சிவபெருமான் ஏழு நாள் அந்தியில் நீராட்டு விழாக் கொண்டான் என்பதால் கோயிலுண்மையும், விழாவுண்மையும் பெறப்படுகிறது. இந்த விழா என்று தொடங்கி என்று முடியும் என்பதை முரசறைந்து நாட்டு மக்களுக்கு தெரியப்படுத்தும் வழக்கம் இருந்ததை மதுரைக் காஞ்சியின் 316-362 ஆம் அடிகள் குறிப்பிடுகின்றன.
சிலப்பதிகார காலச் சிவனும் உமையும்
சங்ககாலத்திற் சிவபெருமான் அறியப்பட்டிருப்பினும் உமைபற்றிய பேச்சுக்கு அதிக இடமில்லை. உமை இறைவனின் ஒருபாகத்துக்குரியவள் என்பதை பாரதம் பாடிய பெருந்தேவனார் தமது கடவுள் வாழ்த்துப் பாடலிலே கூறி உள்ளார். சங்க கால நூற் தொகுதியில் இடம் பெறாத உமையொருபாகன் பற்றிய குறிப்பு இப் புலவர் பாடிய அகநானூறு, புறநானூறு, ஐங்குறுநூறு ஆகியவற்றுக்கான கடவுள் வாழ்த்துப் பாடல்களில் வருகிறது. சிலப்பதிகார ஆசிரியர் வேட்டுவவரியில் உமை பற்றிக் கூறியவற்றை இவ்விடத்தில் நோக்குவது பொருத்தமானது.
கங்கை முடிக்கனிந்த கண்ணுதலோன் பாகத்து மங்கை உருவாய் மறையேத்த வேநிற்பாய் என்று இளங்கோ அடிகளார் சிலப்பதிகாரம் வேட்டுவவரி 9ஆம் பாடலிற் கூறிகிறார். அடுத்து இளங்கோ அடிகள் உமை திருமாலின் தங்கை என்ற ஒரு புதிய கருத்தையும் தந்துள்ளார்.
களப்பிரர் காலத்திற் சைவசமயம்
களப்பிரர் காலம் எனப்பட்ட மூன்று நூற்றாண்டுகளில்
தமிழகத்தில் அதன் தொல் பழஞ்சமயம் வலிகுன்றியிருப்பினும்
அது அழிந்து படவில்லை என்பதை அறிய முடிகிறது.
களப்பிரர் காலத்திற் சைவசமய வரலாற்றுப் போக்கிலே ஒரு தொய்வுநிலை ஏற்பட்டாலும் காரைக்கால் அம்மையார் போன்றோரினால் சைவ சமயத்திற் புதியதோர் வளர்ச்சியைக் காணக்கூடியதாக உள்ளது. காரைக்கால் அம்மையார் பாடிய மூத்த திருப்பதிகம் இரட்டைமணிமாலை, அற்புதத்திருவந்தாதி ஆகியன தமிழக சைவசமய வரலாற்றிலே அம்மையார் கொண்டிருந்த சிறப்பிடத்தைத் தெளிவுபடுத்துகின்றன.
இந்துக்கலைக்களஞ்சியம்
24.

காலனையும் வென்றோம் கடுநரகம் கைகழன்றோம் மேலை இருவினையை வேரறுத்தோம் - கோல அரனார் அவிந்தழிய வெந்தி அம்பு எய்தான் சரணாரவிந்தங்கள் சார்ந்து (அற்புதத் திருவந்தாதி 81)
இறைவனுக்கு அன்பு பூண்டு அவனுக்கு அடியனாக, வாழ முற்பட வேண்டும். இறைவனை ஏத்தினால் பிறவி நீங்கும், இறைவன் நினைப்பவர் நெஞ்சுற்றே உறைகிறான். அவனை அன்பு செய்யத் தொடங்கினால் அவலம் இல்லை. அவனிடம் செலுத்தினால் இருவினை கழலும் அன்பு. இவை போன்ற கருத்துக்கள் சிவவழிபாட்டு வளர்ச்சியின் முன்னேற்றங்களாகும். இறைவனிடம் முழு அன்பு செலுத்துதல், தன்னை முழுவதுமாக அவனிடம் அர்ப்பணித்தல், இருவினையைப் போக்க முயலுதல், பிறப்பை அறுக்க முயலுதல், இறைவன் தன் உள்ளத்திலே உறைவதை உணர்தல் போன்ற கருத்துக்கள் இவர் சைவ உலகிற்குத் தந்த கொடைகளாகும். இவருக்கு முன் இக் கருத்துக்களை இவ்வளவு அழுத்தமாக யாரும் கூறவில்லை. சங்க காலத்திற் காணப்படும் வேள்வி முதலியன அம்மையார் காலத்தில் நின்று நிலைத்துவிட்டன. ஆயினும் வேதத்தையும் சிவபெருமானையும் சேர்த்துப் பேசப்படும் சந்தர்ப்பத்தில் சிவபெருமான் வேதத்தை ஒதிக் கொண்டே இருப்பான் என்றுதான் கூறினார்கள். ஆனால் அம்மையார் வேதப்பொருளாக உள்ளவன் வேதத்திற்கு முற்பட்டவன். மூலமானவன் என்று கூறுவது கி. பி. 5ஆம் நூற்றாண்டிலே சைவத்தில் ஏற்பட்ட வளர்ச்சியைத் தெரிவிக்கின்றது. மூவர் முதலிகள் விருத்தி செய்த பக்திநெறிக்கு மூல காரணர் காரைக்கால் அம்மையார்.
பல்லவர் காலச் சைவம்
சங்க காலத் தமிழர் வாழ்விலே இடம்பெற்ற அதீத காதல், போர் என்பவற்றால் மனம் சலிப்புற்றிருந்த அக் கால மக்களுக்கு சமண, பெளத்த கோட்பாடுகள் ஆரம்பத்தில் ஏற்புடையனவாய் இருந்தது. புதுமை அவர்களைப் பெரிதும் கவர்ந்தது. எனினும் சாதாரண மனிதனுக்கு அதில் பங்கேற்பதற்கு வழியில்லாமல் இருந்தது. துறவு பூணுதலன்றிக் குறிக்கோளை எட்டும் வழி வேறில்லை என்னும் விதி ஏற்புடையதாக இருக்கவில்லை. வழிபாட்டு முறையில் தாராளமான சுதந்திரத்தை அனுபவித்துப் பழகிய மக்களுக்கு இந்தக் கட்டாயமும், திணிப்பும், வெறுப்பை ஊட்டின. இத்தகைய நிலையில் இருந்தோர்க்கு சமய குரவர் காட்டிய அன்பு வழி - பக்தி நெறி இதமாக இருந்தது. துறவு என்பது அன்புக்கு மாறானது அன்று என்பதை எடுத்துக் கூறினர். இறைவன் புகழ்பாடுவதற்கும், பரப்புவதற்கும் அவர்கள் இசையைப் பயன்படுத்தினர். அதன் விளைவாகச் சமயச் சூழலில் ஒரு பெரும் மாறுதல் ஏற்பட்டது. பெருங் கோயில்கள் எழுந்தன. அவை கலைகளின் கருவூலங்களாக அமைந்தன.
கோயில்களும், விக்கிரக வழிபாடும் சைவசமய வளர்ச்சிக்கு பெரும் பங்களிப்பைச் செய்தன. இந்து சமுதாயத்திலே உருவவழிபாடு, ஆலய வழிபாடு என்பன எவ்வாறு தோன்றின என்பதுபற்றித் தெளிவான சிந்தனைகள் காணப்படவில்லை. கர்நாடகம் தமிழகம், கேரளம் ஆகிய இந்திய மானிலங்களில் ஆதி

Page 271
காலத்தில் நிலவிய பெருங்கற் பண்பாட்டிற்குரிய கட்டிடங்கள் கோயில்களுக்கு முன் மாதிரியாக அமைந்தனவென்று அறிஞர் சிலர் கொள்வர். பெருங்கற் காலத்துக் கல்லறைகளை முன் மாதிரியாகக் கொண்டு ஆதியான இந்துக் கோயில்களின் மூலஸ்தானம் உருவாக்கப்பட்டதென்று கருதமுடிகிறது. வரலாற்று ரீதியாக நோக்குமிடத்துக் கிரேக்க நாகரிகச் செல்வாக்கின் பயனாகவே இந்தியத் துணைக் கண்டத்தில் உருவ வழிபாடு பெருவழக்காகியது என்பது தெளிவாகப் புலனாகின்றது. ஆலய வழிபாடு வழமையாகியதும் அவற்றை விளக்கும் ஆகமங்கள் உற்பத்தியாகின. ஆகமங்கள் சரியை, கிரியை, யோகம், ஞானம் என்னும் நான்கு பாதங்களை உடையவை. ஆகமங்களில் பிரதிமாலசுஷ்ணங்களும் கட்டடம், சிற்பம் என்பவற்றை உருவாக்கும் முறைகளும் சொல்லப்படுகின்றன. இந்நூல்கள் ஸ்தபதிகளாலும் ஆலய நிர்மாணகாரர்களாலும் பயிலப்பட்டு, அதன் அடிப்படையில் கோயில்கள் நிர்மாணிக்கப்பட்டன.
இந்து சமய வழிபட்டு முறையிலே சிறப்பிடம் பெற்ற கோயில்கள் பல்லவர் காலத்தில் பெருமளவில் நிர்மாணிக்கப் பட்டமை அக் கால சமய வளர்ச்சியின் ஒரு மைல் கல்லாக அமைகிறது. செங்கல், சுதை, மரம், உலோகமின்றி மும்மூர்த்திகளுக்குக் கோயிலெடுக்கப்பட்ட தகவலைத் தரும் முதலாம் மகேந்திரவர்மரின் மண்டகப்பட்டுக் கல்வெட்டுடன் பல்லவர் கால கட்டடக் கலை வரலாறு தொடங்குகிறது. பல்லவருக்கு முற்பட்ட தமிழகத்திற் கோயில் இருந்தமைக்கான செய்திகள் நூல்களில் கூறப்பட்டிருப்பினும் அவற்றின் எச்சங்கள் - திட்டவட்டமாக வரையறுத்துக் கூறக்கூடிய தொல்பொருள் சான்றுகள் எமக்குக் கிடைக்கவில்லை. பல்லவர் காலத்தில் மகேந்திரவர்மனால் ஆரம்பிக்கப்பட்ட குடை வரைக் கோயில் அமைப்பு பின் பல்லாயிரக் கணக்காகப் பல்கிப் பெருகி பக்தி நெறி வளர்ச்சிக்கு அடிகோலியதுடன் சைவசமயத்தின் சிறப்பினை உலகோர் கண்டும் கேட்டும் அறிந்தும் வியப்படைதற்கு பெரும்பங்காற்றி வருகின்றது.
அன்றிருந்த தமிழகத்தின் நிலையைக் கருத்திற் கொண்டு பார்க்கும் போது சமயக் குரவரின் பிறப்பின் சிறப்பு நன்கு புலப்படும். தமிழகத்தில் வெவ்வேறு சமயங்கள் பரவி ஆட்சி செலுத்திய காலத்தில் சிவ நெறியைக் காப்பாற்றுவதற்கென்று சமய குரவர் தோன்றினார்கள். அவர்களுடைய பாடல்கள் இறைவனைப் போற்றும் வகையில் உள்ளன. அவன் இயல்பு, உயிர்களுக்கு அருளும் பண்பு, உயிர்கள் மேற் கொள்ள வேண்டிய நெறி முதலியவற்றைப்பற்றிப் பேசுகின்றன. சேக்கிழார் திருஞான சம்பந்தரின் வாழ்க்கையைப் பற்றிக் கூறும்போது அவர் வேத நெறி வளரவும் சிவ வழிபாடு மீண்டும் மலரவும் சிவனடியார்களின் மரபு பொலிவுறவும் அவதரித்ததாகக் கூறுகிறார்.
சமயாசாரியார்கள் நால்வரும் நான்குவகை ஆன்மீக நெறிகளைத் தம் வாழ்க்கையின் பின்பற்றினார்கள். அவற்றையே தம் பாடல்களில் எடுத்துரைத்தார்கள். சம்பந்தர் மகன்மை நெறியையும் (சற்புத்திர மார்க்கம்) அப்பர் தொண்டு நெறியையும்
2

245
(தாசமார்க்கம்) சுந்தரர் தோழமை நெறியையும் (சகமார்க்கம்)
மாணிக்கவாசகர் மெய்ந்நெறியையும் (சன்மார்க்கம்) பின்பற்றினார்கள். இந்த நெறிகள் பிற்காலத்தில் எழுந்த சித்தாந்த சாஸ்திர நூல்களில் விரிவாகவும் விளக்கமாகவும் எடுத்துக் கூறப்படுகின்றன. அப்பர் பாடல்களிற் காணப்படும் கருத்துக்களும் அவர் மேற்கொண்ட உழவாரத் திருப்பணியும் சரியை நெறியை விளக்குகின்றன. சம்பந்தர் இறைவன்புகழைப் புறத்தே பாடுவதும் அகத்தே நினைத்தலும் கிரியை நெறியாக அமைந்தன. சுந்தரர் எப்போதும் சிவனோடு கருத்தால் ஒன்றியிருந்தார். இது யோக நெறியாக அமைந்தது. மாணிக்க வாசகர் முறைப்படி தீட்சை பெற்றவர் சாஸ்திரங்களில் குறிப்பிட்டபடியே மனித வடிவில் குருவடிவாக வந்த இறைவனிடம் ஞான தீட்சை பெற்றவர். இது ஞானநெறியாக அமைந்தது.
சமய குரவர் பல்லவர் காலச் சைவசமய வளர்ச்சிக்கு ஆற்றிய பெரும்பணி மக்களிடையே பக்தி நெறியை வளர்த்ததாகும். பெளத்த, சமயர்களின் கடும் விரதம் துறவறம் போன்ற கொள்கைகளை ஏற்க விரும்பாமல், தத்தளித்து நின்ற அக்கால மக்களுக்கு அன்பே சிவம் என்று கூறி அன்பு ஒன்று மட்டும் போதும் இறைவனை வழிபட, உய்வடைய அதுவே அவனுக்குகந்தது என்று ஒர் எளிய பாதையை மக்களுக்கு இந் நாயன்மார்கள் வகுத்துக் காட்டினார்கள். சாதிவேற்றுமை பாராது இறை அடியார்கள் அனைவரையும் தம்மோடு இணைத்து ஊரூராகச் சென்று ஆடியும் பாடியும் சிவனை வழிபட்டு பக்திநெறியை மக்கள் இயக்கமாக மலரச்செய்த பெருமை தேவார முதலிகளையே சாரும். குரல் இனிமையோ இசையறிவோ இல்லாவிடினும் கூட அடியவரின் பக்தியே இறைவனுக்கு மகிழ்ச்சியையளிக்கும். இறைவனை வணங்கும் பொழுது உயிர்கரைகிறது. ஊன் உருகுகிறது. அன்பே அதற்கு அடிப்படை என்று கூறி நின்றார்கள் அவர்கள்.
இவர்களாற் பாடப்பட்ட தேவாரப் பாடல்களால் சைவசமயம் ஒர் ஒழுங்குபடுத்தப்பட்ட நெறியாக பல்லவர் காலத்திலிருந்து வளரத்தொடங்கியது. எல்லாத் தெய்வங்கட்கும் மூலமானவன் சிவபெருமானே என்றும் மந்திரங்களுக்கெல்லாம் மூலமந்திரமாய் அமைந்தது ஐந்தெழுத்து மந்திரமே என்றும் இவர்கள் பாடல்கள் வலியுறுத்தி நிற்கின்றன. திருவைந்தெழுத்தின் பெருமையை உணர்த்தும் வகையில் சுந்தரர் ஒரு பதிகமே பாடி உள்ளார். நான்கு வேதங்களின் பிழிவாக அமைந்தது ஐந்தெழுத்து என்று கூறும் சுந்தரர் நான் மறக்கினும் சொல்லு நா நமச்சிவாயவே என்கிறார். அதே போன்று திருநீறு பூசுவது, உருத்திராக்கம் அணிவது பற்றியும் தேவாரங்கள் கூறுகின்றன. சிவபூசை செய்வது மட்டுமன்றி திருக்கோயிலை அலகிட்டு, அழகு படுத்துவதும் மாலை தொடுத்தல் முதலான பிற தொண்டுகள் செய்வதும் கூட வழிபாடாகும் என்று கூறி சமுதாயத்திலுள்ள அனைவரையும் சமய வழிபாட்டில் ஈடுபடுத்த முயற்சித்த நாயன்மார்கள் அக்காலச் சைவ சமய வளர்ச்சிக்கும், எழுச்சிக்கும் நிலையான அடித்தளம் ஒன்றை இட்டார்கள் என்று
இந்துக் க்களஞ்சியம்

Page 272
கூறுவது பொருத்தமானது. எல்லாவற்றிற்கும் மேலாக சிவனடியார்களைச் சிவபெருமானாகவே கருதி வழிபட வேண்டுமென்ற கொள்கையை வகுத்துக் காட்டிய சுந்தரர் சைவ சமயத்தின் வளர்ச்சிப் போக்கில் புதியதோர் பரிணாமத்தையே ஏற்படுத்தி விட்டார் என்று கூறலாம். அவர் தம்மை அடியார்க்கடியேன் என்று கூறிக் கொள்கிறார். தொண்டர்கள் என்ற புதிய கோட்பாடு சுந்தரருக்கே உரியது. அடியார் திருக்கூட்டத்தைச் சேர்ந்தவர் என்பதைத் தவிர அவருடைய சாதி குலம் எதுவும் கண்ணிற் படாமல் எல்லாக் காலத்துக்கும் பொருந்தக் கூடிய அடியார் குடியரசு ஒன்றைச் சுந்தரர் இதன் மூலம் உருவாக்கித் தந்தார்.
சைவம் இல்லறத்தை நல்லறமாகப் போற்றியமை அதன் வளர்ச்சிக்கு மேலும் துணைபுரிந்தது. அதனைக் கண்ணுற்ற சைவப் பெருமக்கள் இல்லற நெறியைக் காக்க முற்பட்டனர். துறவிகள் மட்டுமன்றி இல்லறத்தாரும் இறைவனிடம் அன்பு கொண்டு உய்யலாம் என்று எங்கும் பறைசாற்றினர். கடவுள் நெறிக்கு இல்லறம் தடையன்று என முழங்கினர். இறைவனையே அம்மையப்பராகக் கண்டனர். சமணர்கள் பெண்களை இழிவு செய்தனர். அவர்களை வீடுபேற்றிற்குத் தகுதியற்றவர் என்றனர். ஆடவரே வீடுபேறடையத் தகுதியானவர் என்றனர். சைவமோ பெண்ணை உயர்வு செய்தது. பெண்கட்கு வீடுபேறுண்டென்றது. இறைவன் அன்பிற்கு ஆண், பெண் வேறுபாடில்லை என்று பறை சாற்றியது.
பல்லவர் காலத்தில் நாயன்மார்கள் சமூகத்திற் சாதியாலும் குலத்தாலும் ஏற்பட்ட தீயவிளைவுகளைக் கண்டு உள்ளம் வருந்தினர். சமயத்தின் பெயராற் சாஸ்திரங்களைப் படைத்து அவற்றின் துணையுடன் குலமும் சாதியும் பேசிக் காலத்தை வீணாக்கியோரைக் கடிந்துரைத்தனர். அப்பர் சுவாமிகள் "ஆவுரித்துத் தின்றுழலும் புலையரேனும் கங்கைவார் சடைக் கரந்தார்க் கன்பராகில் அவர் கண்டீர் நாம் வணங்கும் கடவுளரே என்று கூறிச் சாதியும் குலமுமன்றி இறை அன்பே வேண்டற் பாலது என்று வற்புறுத்தி நின்றனர். நாயன்மார் பலரும் பல சாதிகளைச் சார்ந்தவர்கள். எனினும் அவர்கள் தம்முட் சாதி வேறுபாடு பாராட்டவில்லை. அதனால் நாயன்மார்கள் சைவசமய வளர்ச்சிக்காக மட்டுமன்றி அக்கால சமுதாய மேம்பாட்டிற்காகவும் பல வழிகளிலும் தொண்டு செய்தார்கள் என்று கூறலாம். பல்லவர் காலத்திற் சைவசமயத்திலே பல பிரிவுகள் தோன்றின. பைரவர், காபாலிகர், காளாமுகர், பாசுபதர் என்னும் பிரிவினர் இருந்தனர். பாசுபதர் விந்தையான பழக்கமுடையோராவர். உடல் முழுவதும் நீறு பூசுவர். சிவனே முழுமுதற் கடவுள் என்பர். லிங்கத்தையும், சிவமூர்த்தங்களையும் வணங்குவர். தலை முடியைக் கத்தரித்தலும் மொட்டையடித்தலும் உண்டு. ஆடையின்றியிருப்பர். தவத்திலீடுபடுவர். மக்களைப் பலியிடுவர். காபாலிகர் என்போர்
பைரவரை வணங்குவர். மண்டையோட்டு மாலையை அணிவர்.
ឧិស្ទះខ្នែងទនេ្លអុំទៅឃ្វៀប្រៃរៃ

மயிர்ப்பூனூல் அணிவர். மனிதர் உட்பட எல்லா உயிர்களையும் பலியிடுவர். அவ்விறைச்சியையும், கள்ளையும் உண்பர். பெண்ணை ஆதிசக்தியாக வழிபடுவர். இப்பிரிவில் பெண்பாலாரும் இருந்தனர். இறைவனை மெய்ம்மறந்து ஆடியும் பாடியும் பணிவர். கல்வியறிவிற் சிறப்புற்றிருந்த இவர்கள் சமூகத்தில் பெஞ்செல்வாக்குப் பெற்றிருந்தனர். அத்துடன் சாங்கியம், வைசேடிகம், உலகாயதம் போன்ற தத்துவக் கோட்பாடுகளும் இக் காலத்தில் இடம் பெற்றிருந்தன.
பல்லவர் காலச் சமய நிலையினைத் தொகுத்துக் கூறின் வேதகாலச் சிறப்புத் தெய்வங்கள் வீழ்ச்சியடைந்தமையாலும், மிக உயர்ந்த ஞானவழி போதிக்கும் உபநிடதங்கள் சாதாரண பொதுமக்கள் மனதைக் கவராமையினாலும், மக்கள் இவ் வேத வழக்கிற்கு மாறுபட்டதும் பழையதுமான சமயங்களை மறுபடியும் நாடலாயினர். வேத வழக்கிற்கு தாம் உடன்பட்டவர்களே என்று நாயன்மார்கள் கூறியதால்தான் பல்வேறு சமயக் கோட்பாடுகளையும் ஒருங்கிணைத்து இந்து மதம் என்னும் ஓர் பெருவிருட்சத்தை ஓங்கி வளரக் களம் அமைத்துக் கொடுத்தார்கள் பல்லவர் காலத்துச் சைவ சமயிகள் என்பது பொருத்தமுடைய கூற்று.
சோழர் காலச் சைவம்
கி. பி. 9 ஆம் நூற்றாண்டு முதல் 13 ஆம் நூற்றாண்டு வரை விசயலாய சோழன் வழிவந்த மரபினர் தென்னகத்தை ஆண்டனர். இக் காலத்தைச் சைவத்தின் பொற்காலம் என்றால் அது மிகையாகாது. சோழர்கள் சைவத்தை அரசாங்க சமயமாகவே ஆக்கினர். அவர்கள் காலத்திற் சிறியதும் பெரியதுமாகப் பல கோயில்கள் எழுந்தன. அத்துடன் பாடல் பெற்ற கோயில்கள் பலவற்றைக் கற்றளிகளாக்கினர். மன்னர் மட்டுமன்றி குந்தவை, செம்பியன் மாதேவி போன்ற அரசகுடும்பப் பெண்களும் கோயில் திருப்பணியில் ஈடுபட்டனர். அரச உயரதிகாரிகளும் கோயில்களுக்கு பல கிராமங்களையும், நிலங்களையும் மானியமாக எழுதி வைத்தனர். தேவாரப் பாடல்களையும், திருவாசகத்தையும் கோயில்களிற் பாட நிவந்தமளித்தனர். எண்ணற்ற கல்வெட்டுகள் சிவன் கோயில்களிற் பதியிலார் இருந்து நடனமாடிய செய்தியைக் கூறிநிற்கின்றன. தஞ்சையில் மட்டும் 400 பதியிலார் இருந்ததாகக் கல்வெட்டுக்கள் கூறுகின்றன. சமயம் தொடர்பான நாடகங்கள் கோயில்களில் நடிக்கப்பட்டன. சைவக் கோயில்களில் காணப்படும் உயிரூட்டமுள்ள சிற்பங்கள் தமிழரின் பெருமையை உலகுக்குக் காட்டி நிற்கின்றன. தமிழகச் சிவன் கோயில்கள் வெறும் சமயச் சின்னங்களாக மட்டுமன்றிக் கலைச் சின்னங்களாகவும் நிற்கின்றன. சிவனுடைய பல்வேறு மூர்த்தங்கள் கல்லிலும், செம்பிலும், பஞ்சலோகத்திலும் வடிக்கப்பட்டன. கோபுரங்கள், தூண்கள், சுவர்கள், அனைத்துமே சிற்பக் கூடமாகக் காட்சியளித்தன. வண்ண ஒவியங்களையும் கோயில்களிலே தீட்டினர். சோழர் காலத்திற் சமயமும், கலையும் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்து வளர்ச்சியடைந்தன.

Page 273
சோழர் காலச் சைவசமய வளர்ச்சியிற் குறிப்பிடத்தக்க அம்சம் தோத்திர நூல்கள் தொகுக்கப்பட்டதாகும். பக்தி பனுவல்களைப் பத்தாம் நூற்றாண்டில் வாழ்ந்த நம்பியாண்டார் நம்பி தொகுத்துத் தந்தார். அவற்றின் பொதுப் பெயர் திருமுறை. பன்னிரு திருமுறைகளிலும் முதல் மூன்றும் திருஞான சம்பந்தரின் பாடல்கள் நான்கு, ஐந்து, ஆறாம் திருமுறைகளாக நாவுக்கரசரின் பாடல்கள்; சுந்தரரின் பாடல்கள் ஏழாம் திருமுறையாக வகுக்கப்பட்டது. எட்டாம் திருமுறை மாணிக்கவாசகரின் திருவாசகமும், திருக் கோவையுமாகும். ஒன்பதாம் திருமுறை ஒரு தொகுப்பு நூலாகும். அதில் ஒன்பது சிவனடியார்களின் பாடல்கள் இடம் பெற்றுள்ளன. திருமந்திரம் பத்தாம் திருமுறையாகும். பதினொராம் திருமுறையும் தொகுப்பு நூலாகும். பிற்காலத்தில் சேக்கிழாரின் பெரியபுராணம் பன்னிரெண்டாம் திருமுறை யாக்கப்பட்டது. சேக்கிழார் 12 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் வாழ்ந்தவர். அவர் தன் காலத்துக்கு முன் வாழ்ந்த பல்வேறு சிவனடியார்களின் வாழ்க்கை வரலாற்றை தொகுத்துக் கூறியுள்ளார்.
சைவ சமயத்தைவிளக்கிக் கூறும் வகையில் தமிழ் நாட்டிலே தோன்றிய முதலாவது சைவக் காப்பியம் பெரியபுராணம் ஆகும். சேக்கிழாருக்கு முன்னதாகப் பல்வேறு காலங்களிலும், இடங்களில் வாழ்ந்த 63 நாயன்மார்களின் வாழ்க்கை வரலாறுகளை அந்நூல் கூறுகிறது. அவர்கள் பல்வேறு குலத்தைச் சார்ந்தவர்களாகவும் பல்வேறு விதமான வழிபாட்டு முறைகளைக் கொண்டவர் களாகவும் விளங்குகிறார்கள். இந்நூலுக்கு சுந்தர மூர்த்தி நாயனார் பாடிய திருத் தொண்டர்த் தொகையும், நம்பியாண்டார் நம்பியின் திருத்தொண்டர் திருவந்தாதியும் மூல நூல்களாக அமைந்தன. சேக்கிழர் ஒரு பேரறிஞர். ஆழ்ந்த சமயப்பற்றுள்ளவர். ஆகவே இந்நூலில் இலக்கியச் சுவை, வரலாற்றுணர்வு, சைவசித்தாந்த மெய்யறிவு ஆகியன இணைந்து வருவதைக் காணக் கூடியதாக உள்ளது.
பெளத்த சமயத்து ஜாதகக் கதைகள் சமண சமயத்துச் சீவகசிந்தாமணி ஆகியவற்றிற்கு இணையாக இப்படி ஒரு நூல் சைவர்களுக்குக் கிடைத்தது வரப்பிரசாதமாகும். இந்நூல் பற்றி போப் கருத்து வெளியிடுகையில் பெரிய புராணம் பிறசமயங்கள் பரவுவதை மட்டும் தடுத்து நிறுத்தவில்லை. சைவ சமயம் பரவுவதற்கும் வழியேற்படுத்திக் கொடுத்தது என்கிறார். இந்நூல் சைவ சமயத்துக்கு உறுதியானதொரு அடிப்படையை அமைத்துக் கொடுத்துவிட்டது. பெரிய புராணத்திற் காட்டப்படும் சைவ சமயம் ஒரு வாழ்க்கை நெறியாகவே அமைந்துவிட்டது.
தமிழகத்திற் சைவ பக்தி இலக்கியத்தை அடுத்து வேதாந்தம் என்னும் பெயரில் இந்து சமயம் மீண்டும் தலையெடுத்தது. சங்கரரின் அத்துவைதம், இராமானுஜரின் விசிஷ்டாத்துவைதம், மத்துவருடைய துவைதம் ஆகியவை தமிழ் நாட்டிற் புதியதோர் மரபை ஏற்படுத்தின. ஏறக்குறைய 13ஆம் நூற்றாண்டில் சைவ சமயத்துக்கென சித்தாந்த மரபொன்று மெய்கண்டாராற்

47
தோற்றுவிக்கப்பட்டது. மெய் கண்டாருக்கு முன் வாழ்ந்த அடியார் பாடல்களிற் சைவ சித்தாந்தக் கருத்துக்கள் பல இடம் பெற்றுள்ளன. இவ்வடியார்களின் கருத்துக்களையும் ஏற்றுக் கொண்டு மெய்கண்டார் சைவ சித்தாந்தம் என்னும் புதிய மரபொன்றை வகுத்துக் கொடுத்தார். அதனாலேதான் சைவ சித்தாந்த சாஸ்திர நூல்கள் மெய்கண்ட சாத்திரம் என்று வழங்கப்படுகின்றன. சிவஞான போதம், சிவஞான சித்தியார், திருவுந்தியார், திருக்களிற்றுப்படியார், இருபா இருபஃது, உண்மை விளக்கம், சங்கற்பநிராகரணம் முதலியன பதினான்கு மெய்கண்ட சாஸ்திரங்களாகும். பல்லவர் காலத்திற் கரைபுரண்டோடிய பக்திப் பிரவாகம் சோழர் காலத்தில் அறிவுத் தாகமாக விளங்க அந்தத் தாகத்திற்குத் தண்ணீராக விளங்கியவை சித்தாந்த நூல்கள் எனின் மிகையாகாது.
சைவ சமயத்தின் கோட்பாடுகளைத் தமிழர் சைவசித்தாந்தம் என்கின்றனர். சைவத்தின் சித்தாந்தம் பற்றி இங்கு சுருக்கமாகப் பார்ப்பது பொருத்தமுடையது. உயிர்கள் படைக்கப்படுவனவும் அல்ல. அவை அழிக்கப்படுவனவும் அல்ல. இறைவன் என்று உண்டோ அன்றே உயிர்களும் உண்டாம். இறைவன் ஒருவனே, உயிர்களோ எண்ணிறந்தன, ஆணவமலம் செம்பிற்களிம்பு போல உயிரைச் சூழ்ந்துகிடக்கிறது. மலம் நீங்கிய உயிர் களிம்பு நீங்கிய செம்புபோல் ஞானவொளி வீசும். உயிர்கட்கு மலக்கட்டு ஏற்படுவதற்குக் காரணம் காணவியலாது. அநாதியான ஆன்மாக்கள் பெறும் உடல் வேறுபாட்டிற்கு அவை முற்பிறவியிற் செய்த வினைகளே காரணம் என்பர். ஆன்மா ஒரு போதும் தனித்திருக்காது. எப்போதும் அது சார்ந்ததன் வண்ணமாகவே இருக்கும். ஆன்மாக்கள் ஆணவத்தைச் சாரும் போது அசத்தாகவும் இறைவனைச் சாரும் போது சித்தாகவும் இருக்கின்றன. எனவே ஆன்மாக்களை 'சதசத்து' என்பர். இறையருளைப் பெறுவதற்குச் சரியை, கிரியை, யோகம், ஞானம் என்னும் நான்கு வழிகள் உண்டென்பர். இவ்வழிகளைப் பின்பற்றுவோர் சாலோகம், சாமீபம், சாரூபம், சாயுச்சியம் என்னும் நிலைகளை அடைவர்.
இதுவரையில் நாம் சைவத்தின் தொன்மை, சிறப்பு பல்லவர் காலத்தில் அதன் கொள்கைகள், கோட்பாடுகள் ஒழுங்காக வகுக்கப்பட்டு மக்களின் ஆன்மீக வாழ்க்கைப் போக்கை முறையாக வழிநடத்தக் கூடிய ஒரு சமயமாக வளர்ச்சியடைந்த நிலையும், பின் சோழரின் காலத்தில் அதன் தத்துவக் கருத்துக்கள் தொகுக்கப்பட்டுச் சைவ சமயம் என்னும் பெருவிருட்சம் காலத்தால் அள்ளுண்டு போகாமல் இறுக்கமான தொரு அடித்தளம் இடப்பட்டதையும் கண்டோம்.
விஜய நகர நாயக்கர் காலத்தில் மடாலயங்கள் பெருவளர்ச்சி அடைந்தன. சோழர் காலத்தில் மன்னர்கள் தம் போர்த் திறத்தினாலும் பொருளாதார வளத்தினாலும் பெற்ற செல்வங்களிற் பெரும்பாகத்தைப் பிரமாண்டமான கோயில்களை அமைத்து சமுதாயத்தின் மேம்பாட்டிற்காக கோயில்களின்

Page 274
பணிகளைப் பன்முகப்படுத்தினர். அதனால் சோழர் காலத்தில் மடங்கள், ஆதீனங்கள் என்பன பெருகின. ஒன்பதாம் நூற்றாண்டில் வாழ்ந்த சங்கராச்சாரியார் மடாலயங்களைப் பொறுத்த அளவில் ஒரு சாதனை ஏற்படுத்தினார் என்று கூறலாம். பெளத் சமயத்தவர்களோடு வாதிட்டுப் பல சந்தர்ப்பங்களில் வெற்றியீட்டிய அவர், சமயத்துக்கான நிறுவன அமைப்புகளை உருவாக்குவதற்கு அயராது முயற்சி செய்தார். பரத கண்டத்தின் நான்கு கோணங்களிலும் நான்கு மடங்களை அவர் அமைத்தார். பிரமச்சரிய விரதத்தை மேற்கொண்டு தீட்சை பெற்ற சந்நியாசிகள் அம் மடங்களில் தங்கி இருந்து அத்வைதக் கோட்பாடுகளையும் கருத்துகளையும் போதித்து வந்தனர். அத்துடன் இவை சமயக் கல்வியுடன் ஒழுக்கக் கல்வியும் போதித்து பொதுமக்கள் வாழ்வை நெறிப்படுத்தும் ஓர் அமைப்பாக விளங்கத் தொடங்கின. பல்லவர், சோழர் காலங்களில் அமைக்கப்பட்ட மடாலயங்கள் விஜய நகர காலத்திலே தமது சமயப் பணியைப் பூரணமாக மேற்கொண்டன. திருவாவடுதுறை ஆகிய இடங்களிலுள்ள சைவ மடங்களும் அவற்றின் கிளை மடங்களும் சைவ நூல்களைப் போற்றிப் பாது காத்தன. அம் மடங்களைச் சார்ந்து அமைந்த கல்வி நிலையங்களிற் கல்விகற்றுயர்ந்தோர் எண்ணிலடங்கார். விஜயநகர ஆட்சிக் காலத்திற் சித்தாந்த சைவம் செல்வாக்குப் பெற்றுப்பரவியது. மெய்கண்ட தேவரின் சிவஞான போதம் சைவசித்தாந்தத்தின் விளக்கமாக விளங்கியது. அவருடைய கொள்கைகள் மக்களைக் கவர்ந்தன. அவர் வழியில் தோன்றிய மறைஞானிகள் ஆகமங்களின் துணையுடன் பரம் பொருளுக்கும் ஆன்மாவுக்குமுள்ள தொடர்பை விளக்கிக் காட்டின. பக்தியே சமயச் சடங்குகளிலும் மேலானது என்ற கொள்கையே விஜயநகர காலச் சைவத்தின் போதனையாக இருந்தது. (நிதி)
சைவசித்தாந்த சங்கிரகம்
செவசித்தாந்த சங்கிரகம் என்ற நூல் யாழ்ப்பாணத்து மேலைப்புலோலி வ.கார்த்திகேய பிள்ளையால் இயற்றப்பட்டது. இதன் முதற்பதிப்பு 1903 இலும் திருத்திய இரண்டாம் பதிப்பு 1908இலும் வெளியாயின. முகவுரை, முடிப்புரை உட்பட பதார்த்த நிச்சயம், பதியிலக்கணம், ஆன்ம இலக்கணம், மல இலக்கணம், கன்ம இலக்கணம்மாயை இலக்கணம், அசுத்தமாயா இலக்கணம், சிவஞான சாதன இலக்கணம், முத்தியிலக்கணம் என 11 அத்தியாயங்களை கொண்டதாக இந்நூல் அமைந்துள்ளது. முப்பொருள் உண்மையையும், முத்தி நிலையையும் சத்காரியவாத நிலைப்பாட்டில் தெளிவுபடுத்துவதே இந்நூலின் சிறப்பாகும். முப்பொருள் உண்மையைப் பற்றிப் பேசும் நூல்களில் பொதுவாகவும், சிறப்பாகவும் கூறப்பட்டுள்ள விடயங்களை உணரவேண்டினோர் தத்தம் பக்குவத்திற்கியையவே பொருள் காண்பதால் பல விடயங்களில் தவறாகப் பொருள் கொண்டு மயங்குவர். பொதுநோக்கில் உண்மை புலனாவதில்லை. சிறப்புநோக்கிலேயே உண்மை புலனாகுமென்பதற்கிணங்க, வேதங்கள் பொதுநோக்கில் பல பூர்வபக்க சமயப்
இந்துக்கலைக்களஞ்சியம்
248

பொருளுள்ளதாய்க் கொள்ளப்பட்டாலும், சித்தாந்த சத்காரியப் பொருளொன்றையே சிறப்பிற் தருமென்று வாதிடும் நூலாசிரியர், இக்கருத்தையே சைவசித்தாந்த சங்கிரகத்தின் ஆய்வுப் பொருளாக எடுத்துக் கொள்கிறார்.
பதி, பசு, பாசம் என்ற மூன்றுமே அனாதிநிதித்திய வஸ்துகளென்றும் கன்மம்,மலகன்மங்களோடு கூடிய மாயை, மாமாயை, திரோதாயி, பஞ்சகிருத்தியம், மூவகையான்ம வேறுபாடு என்பனவெல்லாம் முத்திக்காலத்தில் எவ்வாற்றானும் வேண்டப் படாதனவாய் நீங்கும் காரியப்பொருள்களேயென்றும் அவை அனாதியானவையென்பது உபசாரத்தின் பொருட்டாம் என்றும் முதலாமத்தியாயத்தில் பதார்த்தநிச்சயம் செய்யப்படுகின்றது.
இரண்டாம் அத்தியாயமான பதியிலக்கணத்தில் காரியப் பிரபஞ்சத்திற்கு சித்தாக்கிய சிவன் நிமித்தகாரணமேயன்றி, முதற்காரணமென்னும் உபாதான காரணமல்லவென்பது எடுத்துக்காட்டப்படுகிறது. உலகமானது பராபிரகிருதி, பிரகிருதி யென்னும் முதற்காரணங்களினாலே சுத்த, அசுத்தப் பிரபஞ்சமென இருவகைப்படுமென்றும், அவற்றுள் பராபிரகிருதி சுத்தகாரணமும் பிரகிருதி அசுத்தகாரணமுமாகு மென்பதுவும், சுத்த வித்தியாதத்துவம், மகேஸ்வர தத்துவம், சதாசிவதத்துவம், பிந்து -நாத தத்துவம் உட்பட கூறப்பட்ட உருவங்களெல்லாம் சுத்தமாயாகாரியமேயெனவும் எடுத்துக்காட்டப்பட்டுள்ளது.
மூன்றாவது அத்தியாயத்தில் ஆன்ம இலக்கணம் பேசப்படுகிறது. இதில் அனாதிநித்திய வஸ்துக்களான சிவமும் ஆன்மாவும் நித்தவியாபகசித்தாக இருப்பது பொதுப் பண்பாயினும், சிவம் சர்வானுக்கிரகமாகிய முக்குணங்களையும் கொண்டதால் சூக்கும சித்தெனவும், ஆன்மா அந்த சிவத்திற்கு ஆளாகும் திறமுடையதாயும், சதசத்தாகிய சார்போத நிலையுடையதாயும், உணர்த்த உணரும் முக்குணமுடைய தாகலின் தூலசித்தென அழைக்கப்படுமென்பதும் எடுத்துக் காட்டப்படுகின்றது.
நான்காவது அத்தியாயத்தில் மலமானது அனாதிநித்திய வஸ்துக்களில் ஒன்றென்பதுவும், வெப்பம் அக்கினியைத் தன்னுள் அடக்கியிருப்பதுபோல ஆத்மஞானத்தை தன்னுள் அடக்கி தானாக நிற்பதென்றும், அது ஆவாரசக்தி (மறைத்தல்), அதோநியாமிக சக்தி (திறத்தல்) என்ற வேறுபாட்டால் எண்ணிறந்த சக்திகளையுடையது. ஆவாரகம் சொரூபமும், அதோநியாமிகம் தடத்தமுமாகும். ஆத்மஞான வியாபகத்தை அணுப்படச் சுருக்கியதால் ஆணவம் எனும் பெயரைப் பெறுகிறது. ஆணவம் எண்ணிறந்த சக்திகளை யுடையதாலும், அருவாதி உருவங்களின்மையாலும் ஆன்ம ஞானத்தினால் அளந்தறிவதற்கு அரிதாமென்பன இவ் வத்தியாயத்தால் எடுத்துக்காட்டப்பட்டது.
மலத்தைப்பற்றிய குற்றமே கன்மமென, கன்ம இலக்கணம் கூறும் ஐந்தாவது அத்தியாயம் குறிப்பிடுகிறது. இதன்படி மூலகன்மம் பிரபஞ்சத்திற்கெல்லாம் ஒரு L60) L துணைக்காரணமாயினும், ஆன்மாவாகிய ஒருகருத்தனாற்

Page 275
தேடிக்கொள்ளப்பட்ட குற்றமாகிய பொருளாதலாற் காரணமாகாது காரியப் பொருளேயாகும் என்பது இங்கு எடுத்துக் காட்டப் படுகிறது.
ஆறாவது அத்தியாயம் மாமாயை இலக்கணம் கூறுகிறது. மாமாயையாவது, சிவனது பெருங்கருணையால் சிற்சத்தியிற் பிரிந்த சடசக்தியென்றும், சடசக்திகாரியமான பிரபஞ்சமூலம் எனவும் சொல்லப்படும். அது ஒமென்னும் பிரணவமாயும், பஞ்சாக்கரமாயும் பிறவாயும் விளங்கி, குண்டலி அமலை, விந்து, சிவம், சுத்தவித்தை, சுத்தமாயை முதலிய பல உபசார நாமங்களைப் பெறுவதாயினும் சடப் பொருளேயென்பது இவ்வத்தியாயத்தால் நிறுவப்படுகிறது.
அடுத்த அத்தியாயத்தில் அசுத்தமாயா இலக்கணம் கூறப்படுகின்றது. இது மலத்தின் காரிய தடத்த நிலையாகும். சிவனால் பரிகரித்துக் கொள்ளப்படுவதாலும், நித்தியவஸ்துவான மலத்திற் தோன்றியதாலும், சீவரின் சத்துணர்ச்சியான அறிவிற்கு இன்றியமையாததாலும், முத்திபரியந்தம் தனுகரணாதிகளைத் தோற்றுவிக்கும் தகுதி உடையதாலும், நித்தியகாரணவஸ்து என அருள்நந்தி சிவாச்சாரியாரால் கூறப்பட்டாலும், அநாதிகாரண மெனக் கூறல் சத்காரியவிரோதமாகும். சொரூபநிலையில் நித்தியமாயும், தடத்தநிலையில் தோன்றியொடுங்குவனவாகவும் காணப்படு கின்ற சிவம், ஆன்மா, மலம் ஆகிய மூன்றினுள் சிவமல்லாத மற்ற இரண்டும் தடத்தநிலையில் சிவத்தாற் பெறவேண்டு வனவாகுமென்பது அவ்வத்தியாயத்தில் எடுத்துக்காட்டப்பட்டது.
சிவசாதன இலக்கணம் கூறும் எட்டாவது அத்தியாயத்தில் சிவஞானம் சிவசக்தி சொரூபமென்றும், அச்சொரூபநிலை பரஞானமென்றும், அபரஞானம் அனந்தாதி வித்தியேசுரர்க்குச் சமட்டியாயும், அணுசதாசிவர் பதின்மருக்கும், உருத்திரர் பதினெண்மருக்கும் சிவபேத உருத்திரபேதமாக வாக்கு முறையாக உபதேசிக்கப்பட்டதே இருபத்தெட்டு ஆக மங்களாகுமென்றும் எடுத்துக் காட்டப்படுகின்றது. இதுவே அபரஞானமெனக் கூறப்பட்டது. அபரஞான ஆகமசித்தாந்தமே குரும்பரம்பரையில் வந்து உபதேசிக்கப்படுவதாகும்.
ஒன்பதாவது அத்தியாயம் முத்தி இலக்கணம் கூறுகின்றது. அறிவை மறைக்கும் மலமுமாகாது; அதனைத் திறக்கும் சிவமுமாகாது; அவ்விரண்டினையும் பற்றும் இயற்கையால் ஆன்மா இரு திறனறிவுடையதெனக் கூறப்படுகின்றது. சிவவியஞ் சகத்தால் ஆன்மா அறிவு பெறுவதாயினும், தன்னறிவுச் செயல்களாற் பற்றிய மலசம்பந்தத்தால் மலமாய்க் கிடந்து, பின் பிரேரகத்தால் சிவத்தைப் பற்றி சிவமாம்படி மலவிடுதலையிற் சிவத்தோடு அத்துவிதமாய் ஆனந்த அனுபவமடைதலே முத்தியெய்யப்படுமென்பது இங்கு நிறுவப்படுகின்றது.
இவ்வாறு சைவசித்தாந்தப் பொருளை தருக்கரீதியாக சத்காரியவாத நிலைப்பாட்டில் ஆராய்கின்ற இந்நூல், சைவசித்தாந்த ஆய்விற்கு யாழ்ப்பாணத்தவர் ஆற்றிய
பங்களிப்பில் முதன்மைஸ்தானம் பெறுவது குறிப்பிடத்தக்கது.
(G-77.6)

சைவசித்தாந்தத்தில் முப்பொருளுண்மை
இறைவனின் இயல்பு எத்தகையதாயினும் இறைவன் நூல் எனப்படும் வேத சிவாகமங்களினால் அவனை உணரலும் உணர்த்தலும் கைகூடும் என்பதற்கமையவே இங்கு முப்பொருட்களின் தத்துவம் பற்றிச் சுருக்கமாக நோக்கலாம், சித்தாந்தம் கூறும் முப்பொருளுண்மை என்பது பதி, பசு, பாசம் என்ற மூன்று பொருட்களை உள்ளடக்கியது. இந்த உள்பொருட்கள் பற்றிய ஞானத்தை அறிவிப்பதுதான் சைவசித்தாந்த நோக்கம் என்பதனை சித்தாந்த சாத்திரங்கள் தெளிவாக விளக்கியுள்ளன. பல்கலையாகம வேத யாவையினும் கருத்துப் பதி, பசு, பாசம் தெரித்தலாம் எனச் சிவப்பிரகாசமும் பன்மார்க்கப் பொருள் பலவும் கீழாக மேலாம் பதி, பசு, பாசம் தெரிந்து பரசிவனைக் காட்டும். நன்மார்க்க ஞானம் இது என சித்தியாரும் இதனை விளக்கின.
பொதுவாகச் சமயம் உணர்வையும் தத்துவம் அறிவினையும் அடிப்படை அம்சமாகக் கொண்டவை. ஆதலால் உள்பொருள் பற்றிய அறிவு முதல் ஆராய்ச்சியே தத்துவம். ஆழமானது ஆராய்ச்சிக்குட்பட்டது அறிவு. ஆராய்ச்சிக்குட்படாதது நம்பிக்கை. தத்துவம் அறிவைப் பற்றிப் பேசும்; சமயம் நம்பிக்கைபற்றி விளக்கும். உணர்விற்குப் பின்னரும் இருப்பது அறிவு; ஆதலால் சமய நிலையிலே பக்தி வசப்பட்டு உணர்ச்சிக்கு ஆளாவோரைத் தத்துவ ஞானமானது உணர்வுகளை வென்ற நிலைக்கு இட்டுச் சென்று அவர்களது அக அமைதிக்கு வழிகோலுவதாகின்றது. தத்துவ ஞானத்தின் பயன், நோக்கம் நிறைவேறுதற்குரிய செயற்றிட்டத்தை வகுப்பதுதான். அதனால் தத்துவ ஞானம் வெறும் அறிவு நெறியாக மட்டும் நில்லாது வாழ்க்கை நெறியாகவும் உள்ளதனையே சைவசித்தாந்தம் எடுத்துக் காட்டுவதாக வுள்ளது. 'அறிவுக்காக வாழாதே வாழ்வதற்காக அறிந்து கொள் என்கிறது சித்தாந்த ஞானம்.
'சித்தாந்தம் என்ற சொல்லின் பொருள் “முடிந்த முடிவு” எனப்படும். சித்தம் என்றால் துணிபு அந்தம் என்றால் முடிபு என்பது சித்தியார் தரும் விளக்கமாதலால் 'சித்தத்தின் துணியாகிய முடிந்த முடிபு சைவசித்தாந்தம் எனப்பட்டது. பதி என்றால் இறைவன் அல்லது சிவம். பசு என்றால் உயிர்கள் அல்லது ஆன்மாக்கள். பாசம் என்றால் மும்மலங்கள் எனக் கொள்ளப்படும். நால்வேதங்களும் 28 சிவாகமங்களும் சைவசித்தாந்தத்தின் பிரமான நூல்களாகும்.
முப்பொருளின் உண்மைகளையும், இயல்புகளையும் இலக்கணங்களையும் அவற்றின் தத்துவார்த்தங்களையும்
விரிவாகக் கூறுவதால் சிவாகமங்கள் சித்தாந்தம்' எனவும்
இந்துக்கலைக்களஞ்சியம்

Page 276
'வித்தியாபாதம் எனவும் சிறப்பிக்கப்பட்டன. சிவாகமங்களிற் கூறப்பட்ட முடிந்த முடிபு எவை என்பதனையே மெய்கண்ட சாஸ்திரங்கள் இயம்புகின்றன. அவை திருவுந்தியார் முதல் சங்கற்ப நிராகரணமீறாக 14 நூல்களாக அமைந்துள்ளன. சிவாகமங்கள் முப்பொருள் உண்மை பற்றிக் கூறும் முதல் நூல்களாகும். சிவாகமங்களின் முடிவான உட்பொருட்களின் தத்துவம் பற்றி மெய்கண்டதேவரே சிவஞானபோதத்தின் மூலமாகத் தத்துவ முறைப்படுத்தி (Systematization) விளக்கம் செய்தவராகையாற் சிவஞானபோதம் முதல் நூலாகவும் சிவஞானசித்தியார் வழி நூலாகவும், சிவப்பிரகாசம் சார்பு நூலாகவும் கூறப்படும். இவற்றினைவிட சைவர்கள் கற்கவேண்டிய தோத்திர நூல்களான தேவார திருவாசகங்கள் உட்பட்ட பன்னிரு திருமுறைகளும் சைவசித்தாந்த உண்மைகளைத் தம்முட் கொண்டனவாகக் காணப்படுகின்றன. விளையாததோர் பரிசில் வரு பசு பாச வேதனை ஒண் தளையாயின தவிர அவ்வரு தலைவன்' என்ற சம்பந்தர் பாடல் இதற்கோர் நல்ல உதாரணமாகும்.
காட்சி, அனுமானம், ஆப்தவசனம் எனப்படும் மூவகைப் பிரமாணங்கள் வாயிலாக சித்தாந்தம் முப்பொருளுண்மை எனப்படும் பெளதீகவதீதக் கோட்பாடுகளை நிர்ணயம் செய்திருக்கின்றது. மூன்று பொருட்களும் என்றுமுள்ளவை என்பதனை நிறுவுவதற்குக் காட்சி, அனுமானப் பிரமாணங்களைவிட சாஸ்திரப் பிரமாணங்களையே சைவசித்தாந்தம் பெரிதும் ஏற்றுக் கொண்டுள்ளதாதலால் சித்தாந்த முப்பொருளுண்மையினை ஏற்போருக்கு நம்பிக்கை என்ற சாதனம் மிகவும் இன்றியமையாது வேண்டப்படும்.
தத்துவம் என்பதற்கு இந்து தத்துவ மரபிலே தரிசனம் என்ற ஒரு பெயருண்டு. தரிசனம் என்பது திருஸ் என்ற வடமொழிச் சொல்லடியாகப் பிறந்தது. திருஸ்டி என்றால் பார்வை அல்லது காட்சி எனப்படும் (Super - Vision) மேலான உண்மைகள் எனப்படுவனவற்றினைத் தமது ஞானதிருஷ்டி அல்லது ஞானக்காட்சியினாலே கண்டுணர்ந்து உலகத்தோர் உய்யும் வண்ணம் உரைக்கப்பட்ட உண்மைப் பொருள்கள் தரிசனம் அல்லது தத்துவம் என இந்து தத்துவ மரபிலே சிறப்பாக அழைக்கப்பட்டன. அதனால் வைதிக தரிசனங்கள் ஷட் தரிசனங்கள் எனவும் பெயர் பெற்றன. யோகக்காட்சி, அகக்காட்சி, ஞானக் காட்சி என்பனவும் சைவ சித்தாந்தத்திலே பிரத்தியட்சம் என்ற அளவை மூலம் எதிர்மறைப் பொருளிலே அரிய உண்மைகளை விளக்கப் பயன்பட்டது. ஏனைய தத்துவங்களிற் பிரத்தியட்சம் என்ற அளவை பெறும் முக்கியத்துவத்தைவிடச் சித்தாந்தத்திலே காட்சி எனப்படும் இந்த அளவை பெறும் முக்கியத்துவம் தனித்துவமானது எனலாம். புறக்காட்சி, புலக்காட்சி, ஊனக்காட்சி என்பன கானல்நீர், முயற்கொம்பு, ஆகாயத் தாமரை போன்ற இல்பொருளையும் உணர்த்தும். ஆதலாற் புறக்காட்சியைச் சித்தாந்தம் பெரிதுபடுத்துவதில்லை. 'முகத்திற் கண்கொண்டு காண்கின்ற மூடர்கள் அகத்துக்
இந்துக்கலைக்களஞ்சியம்
250

கண்கொண்டு காண்பதே ஆனந்தம்' என்றது திருமந்திரம். அதனை 'ஊனக்கண் பாசம் உணராப்பதியை ஞானக் கண்ணில் சிந்தைநாடி’ எனச் சிவஞானபோதமும் சுட்டியது.
முப்பொருளுண்மையிற் பொருட் தத்துவம்
கி.பி. 13ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்திலே வாழ்ந்த பொய்கண்டகன்ற புனிதர் எனப்பட்ட மெய்கண்டார் என்பார் சித்தாந்தக் கொள்கைகளுக்கு ஒரு புதிய எழுச்சியும், மறுமலர்ச்சியும் அளித்தார். சித்தாந்த சமயம், சித்தாந்த தத்துவம் ஆகியன பற்றிய தெளிவான அமைப்பினை அவரது சிவஞானபோதம் என்ற நூல் நன்கு வெளிப்படுத்துவதாகவுள்ளது. (சமயம் வேறு தத்துவம் வேறு, என்றில்லாமல் இங்கு இரண்டும் அத்வைதம் போல் பிரிவின்றி உள்ளன.) அவற்றிலே என்றுமே நிலையாக உள்ள பொருள்களின் தத்துவத்தை ஆராய்வது மெய்ஞ்ஞானம் எனவும் மாறும் அல்லது பகுதிகளாகப் பிரியும் பொருட்களை அறிவது விஞ்ஞானம் எனவும் கொண்டனர். தற்கால விஞ்ஞானிகள் உலகப் பொருட்களை ஆராய்ந்து அவற்றினை பெளதிகம் (Physics), வேதியல் (Chemistry), தாவரவியல் (Botany) போன்ற பல துறைகளை உண்டாக்கியது போல அக்கால மெய்ஞ்ஞானிகளும் இவ்வுலகப் பொருட்களினுடைய மூலம், அவற்றின் உற்பத்தி, ஒடுக்கம் முதலியவற்றினை வெவ்வேறாக ஆராய்ந்தனர். மேற்குறிப்பிட்டவற்றிலிருந்து கடவுள், உயிர், உலகம் ஆகிய மூன்றும் என்றும் உள்ளவை, நிலையானவை, ஆதியந்தம் அற்றவை, அநாதியானவை என்பதனைத் தமது ஆழ்ந்த ஆராய்ச்சிகளின் பயனாக சித்தாந்தஞானிகள் சிவாகமங்கள், சித்தாந்த சாஸ்திரம் போன்ற நூல்களிலே வெளியிட்டு வைத்தனர். R பதி, பசு, பாசம் எனப் பகர் மூன்றில் பதியினைப் போல் பசு, பாசம், அநாதி எனத் திருமந்திரம் இந்த முப்பொருளுண்மையினை முதலில் எடுத்துக்காட்டியது.
மேலும் விஞ்ஞானமும் பொருட்தத்துவத்தைக் கொண்டுள்ளது. பொருள் மூவகைப்படும். g|ഞഖ அருவப்பொருள், அருவுருவப்பொருள், உருவப்பொருள் என விளக்கப்பட்டுள்ளது. அருவப்பொருள் மெய்ஞ்ஞானத்திலும் அருவுருவப்பொருளும், உருவப்பொருளும் விஞ்ஞானத்திலும் விளக்கப்பட்டுள்ளன. அருவப்பொருளை விளக்க மெய்கண்டார் நூலையும் விஞ்ஞானத்தை அறிய உடல் தத்துவ நூல்களையும் பயன்படுத்தலாம். உலகியல் விளக்கத்திற்கும், உடல் தத்துவ விளக்கத்திற்கும் விஞ்ஞானம் இன்றியமையாததாயிற்று. இதனையொத்தவாறு சங்க நூல்களிலும் பொருள் தத்துவமானது முதல், கரு, உரி என மூவகையாகப் பகுக்கப்பட்டுள்ளது. நிலமும் வளமும் முதல் எனவும், நிலத்திலே தோன்றும் உயிரினங்கள் முதலியன கருப்பொருள் எனவும், உயிரினங்களின் பயன்பாட்டு நுகர்விற்குரிய அகப் புறப்பொருட்கள் உரிப்பொருட்கள் எனவும் பகுத்துக் காட்டப்பட்டுள்ளன. இதனையொத்த வாறு
சைவசித்தாந்தப் பதிக் கொள்கையினை ஆதாரமாகக் கொண்டு

Page 277
மூவகை விளக்கம் அதில் அடங்கியிருப்பதனை திருமந்திரம் மேல் வருமாறு எடுத்துக் காட்டும். உருவும் அருவும் உருவோடருவும் மருவு பரமசிவன் இவ்வாறு கண்ணுக்குப்புலனாவது உருவம் எனவும் கண்ணுக்குப் புலனாகாதது அருவம் எனவும் கண்ணுக்குப் புலனாகியும் வேறுபாடு தோன்றாதது அருவுருவம் எனவும் உலகிலே பொருட்கள் மூவகையாகத் திகழ்வது பதியுண்மைக்கும் பொருத்தமானதாகும். சித்தாந்தமும் மூன்று பொருட்களையும் அதனையுள்ளிட்ட 36 தத்துவங்களையும் தனது பெளதீகவதீதக் கருத்துக்களாக ஏற்றுக் கொண்டது (MetaPhysics). சித்தியாரிலே தத்துவம் எண் மூன்றும் சென்று ஆன்மதத்துவத்தொடுங்கும் - வித்தையில் ஒடுங்கும் ஆறு: சிவத்தினில் ஒடுங்கும் மூன்று நித்ததத்துவம் இம்மூன்றும் என்பர்; இரண்டும் நின்ற சுத்தமாம் சிவத்தொடுங்கும். நித்ததத்துவம் மூன்று; அது பதி, பசு, பாசம் எனப்படும். கடவுள், உயிர், உலகம் என்றும் சொல்லப்பட்டன. அவற்றின் வாயிலாக முப்பொருட்களின் பொருட்தத்துவம் விளக்கப்பட்டது.
சித்தாந்தத்திலே பாசம்
பாசம் என்பது உயிர்களின் பற்றுக்கு இடமாகின்ற உலகப் போகப் பொருட்களைச் சுட்டும். ஆணவம், கன்மம், மாயை என மூவகைப் பாசங்கள் உயிர்கட்கு உண்டு என சித்தாந்தம் கூறும். அவற்றிலே உலகப்பொருட்களின் உற்பத்தி, ஒடுக்கம் பற்றிய கருத்துக்கள் மாயாகாரியங்கள் எனப்படும் அணுத்தத்துவமாக அங்கு விளக்கப்பட்டுள்ளன. அணு என்பது தத்துவ ஞானத்தின் பயனாக முடிவுக்கு முடிவானது எனச் சித்தாந்தம் சிவாகமங்கள் வாயிலாகக் கூறியது. முடிவு எங்குள்ளதோ அங்குதான் தொடக்கமும் உண்டு. எனவே தொடக்கத்தினை அறிய ஒடுக்கத்தினை ஆராய வேண்டியதாயிற்று. பொருட்களின் ஒடுக்கம் அழிவதில்லை. பகுதிகளாகப் பிரிதலாகும். அது அழிக்கமுடியாத நிலைவரை செல்லுமிடத்து 'அணு' என்பதில் முடியும். இவ்வணுக்களே உலகின் உற்பத்தியும் ஒடுக்கமுமாகும். ஆதியில் உலகில் தோன்றிய துகள்களைப் பூதாதிகள் என்றனர். கண்ணுக்குப்புலப்படாத துகள்கள் அவையாகும். அவற்றினைச் சூக்கும தத்துவம் என்கிறது சித்தாந்தம். உருவம், பண்பு, இயல்புகளற்றுக் காணப்பட்டன. இத்துகள்கள் ஆற்றலை மேற்கொண்டதும் தன்மாத்திரைகள் என்னும் துகள்களாக மாறின. தன்மாத்திரைகள் ஒன்றுகூடி ஒரு பரமானுவாகத் திகழ்கின்றன. உலகப் பொருட்கள் யாவும் பரமானுக்களின் துகள்களே. அவற்றினைச் சடப்பொருள் அல்லது உருவப்பொருள் என்றனர். அவ்விதமான பொருள் சூடு, காந்தம், ஒளி, மின்சாரம் முதலிய சக்திகளாக இயங்கவும் கண்டனர்.
உறைந்து கிடந்தால் பணிக்கட்டி, உருகி வழிந்தால் தண்ணீர் என்பது போல, சக்தி உறைந்து கிடப்பது சடம் எனவும், சடம் ஆற்றலாகி வழிவது சக்தி எனவும் சொல்லப்பட்டது. அணுவிஞ்ஞானத்தின் தந்தை எனப்படும் ஐன்ஸ்ரீன் என்பாரும் ஆங்கிலத்திலே Mater-Energy எனப்படும் பொருளும் சக்தியும் ஆகிய இரண்டும் பொருள் சக்தியாகவும் சக்தி பொருளாகவும்
2

LSLSLS
51
மாறக்கூடியன என்ற உண்மையினை வெளிப்படுத்தினார். சித்தாந்தத்திலும் இவ்வுண்மையானது சக்தி எனவும் சிவம் எனவும் வகுக்கப்பட்டு சக்தி சிவமாகவும், சிவம் சக்தியாகவும் ஆற்றலினால் மாற்றமடைகின்றன எனக் கூறப்பட்டது.
மாமலையாகத் தோன்றுவனவெல்லாம் மணல் மணலாகக் கரைகின்றன. மணலிலும் பெருமணல், சிறுமணல், நுண்மணல் எனக் குறைந்துகொண்டே போவதுண்டு. இவ்வாறு ஒவ்வொரு பொருளும் அடிப்படையில் சிறியதாகி சூக்குமமாம் நுண்ணியதாகி அடங்குகின்றது. இதேபோன்று பனிக்கட்டி சூட்டினால் உருகித் தண்ணீராகி, தண்ணீர் சூட்டினால் நீராவியாகி நீரின் அணுத்திரள்கள் வரும் என்பர். அப்போது தண்ணிரின் இயல்பு அங்கிராது. தண்ணீரையும் இருவேறாகப் பிரித்தால் அங்ங்ணம் பிரிபவையே தத்துவங்கள் அல்லது உள்பொருட்கள் எனப் பெயர் பெறுகின்றன. இத்தத்துவங்களை சூக்கும நுண்நிலையிலிருந்து 36 தத்துவங்களின் பரிணாமமாகச் சித்தாந்தம் வகைப்படுத்திற்று.
மாயை என்பது சுத்தமாயை, அசுத்த மாயை, பிரகிருதி மாயை என மூன்று பிரிவாகக் கொள்ளப்படும். இவற்றிலே சுத்தமாயையில் இருந்து சிவதத்துவம் ஐந்தும், அசுத்தமாயையில் இருந்து வித்யாதத்துவம் ஏழும் பிரகிருதி மாயையில் இருந்து ஆன்ம தத்துவங்கள் 242 உம் ஒடுங்குவதாகக் சிவாகமங்களும் சித்தாந்த தந்திரங்களும் விளக்கின.
அவற்றிலே மூன்றாவதாகவுள்ள பிரகிருதி மாயையில் இருந்தே இன்று காணும் உலகமாகிய பிரபஞ்சம் தோற்றப்படுகின்றது. இத்தகைய தூலமாகிய காட்சிக்குரியவாறு பருமனாகத் தோன்றும் உலகம் பிரகிருதிமாயை என்ற மூலப்பொருளில் தன் மாத்திரைகளான சப்தம், பரிசம், ரூபம்,ரசம், கந்தம் என்பவற்றிலே சூக்குமமாக அருவமாக அடங்கியிருப்ப தெனவும் கூறுப்படும். இதனைப் பாரிடை ஐந்தாய்ப் பரந்தாய் போற்றி - நீரிடை நான்காய் நிகழ்ந்தாய், தீயிடை மூன்றாய்த் திகழ்ந்தாய், வளியிடை இரண்டாய் மகிழ்ந்தாய், வெளியிடை ஒன்றாய்த் திகழ்ந்தாய் என திருவாசகமும் எடுத்துக் கூறியது. இப் பஞ்ச பூதங்களின் விரிவானது சிவனின் ஆற்றல் சக்தி என்பதனை நிலைநிறுத்துவதாகவே தமிழ்நாட்டிலே பஞ்சலிங்கங்கள் சிவாலயங்களிற் சிறப்பாக ஸ்தாபிதம் பெற்றன. இவ்வாறு உலக உற்பத்தி பற்றிய கொள்கை சைவசித்தாந்தத்தில் விளக்கப்பட்டுள்ளது.
சித்தாந்தத்திலே பசுவுண்மை
மேற்கூறப்பட்ட உலகப் பொருட்கள் என்னும் பாசத்திற் கட்டப்பட்டிருத்தலால் உயிர்த் தத்துவம் சித்தாந்தத்திலே பசு எனப்பட்டது. அநாதியான அறிவுடைய பொருள் ஆன்மாவாகும். வித்தியா தத்துவத்திலே புருடன்’ எனப் பெயர் பெற்ற இவ்வான்மாக்கள் சடப்பொருட்களின் வசப்பட்டு ஆணவம், கன்மம், மாயை என்னும் மும்மலச் சேர்க்கையினால் பசுக்கள் எனப் பெயர்பெற்றன எனலாம். மலவேறுபாடு காரணமாக
இந்துக்கலைக்களஞ்சியம்

Page 278
விஞ்ஞானகலர், பிரளயாகலர், சகலர் என மூவகை ஆன்மாக்கள் உண்டு. இவ்வாறு மலங்களினால் கட்டப்பட்டிருப்பதனால் ஆன்மாக்கள் இங்கு பசுத்துவமுடையவாகின. 'பசுத்துவம் உடையன ஆகிப் பசுவென நிற்கும் ஆன்மா என இந்நிலை சித்தியாரிற் குறிப்பிடப்பட்டது.
பாசத்திற்கு அறிவில்லாததால் அதனிடத்துண்டான உலகப் பொருட்கள் சடப்பொருள் எனப்பட்டன. பசுக்கள் பலதரப்பட்டன ஆதலால் தம்மைச் சிறைப்படுத்தியுள்ள பாசங்களின் தொழிற்பாட்டிற்கு ஏற்ப அறிவுப் பெருக்கமும், சுருக்கமும், அறியாமையும் உடையனவாகவுள்ளன. இவ்வாறு பாசம் உயிர்களின் அறிவினைத் தடுத்துப் பிணிப்பதாற் பாசம் உயிர்கட்குத் தளை எனவும் மலம், கட்டு, அழுக்கு, அறியாமை, இருள் எனவும் பலவாறு விளக்கப்பட்டது. பெளஷ்கராகம ஆணவலட்சண படலமும் மிருகேந்திரம் பாசலட்சனபடலமும் இதுபற்றி நன்கு விளக்கும். இதனைப்
பாசம் பயிலுயிர்தானே பரமுதல் பாசம் பயிலுயிர்தானே பசு என்ப பாசம் பயிலப் பதிபரமாதலால் பாசம் பயிலப் பதிபகவாகுமே எனத் திருமந்திரம் கூறியது.
ஆன்மா அறிவை இயல்பாக உடையதாக இருப்பினும் பாசத்தினால் அறிவற்றுக் கிடத்தலால் அதே பாசங்களே அதன் அறிவை விளக்கமடையச் செய்யும் கருவிகளையும் ஆன்மாக்களுக்குக் கொடுத்துள்ளன. அவை அறிதற் கருவிகள் எனவும் தொழிற்கருவிகள் எனவும் இருவகைப்படும். மூக்கு, நாக்கு, செவி, கண், மெய் என்பன அறியும் தொழிலில் ஈடுபடுதலால் அவை ஞானேத்திரியம் எனப்பட்டன. இவ்வாறு அறிந்தவற்றைத் தொழிற்படுத்தும் கருவிகளாக கால், கை, வாய், கருவாய், எருவாய் என்னும் ஐந்தும் கன்மேந்திரியங்களாம் இவையிரண்டினோடும் ஒருமைப்பட்டு நின்று இயங்குவதற்கு மனம், புத்தி, சித்தம், அகங்காரம் என்ற அந்தக்கரணங்கள் நான்கும் ஆன்மாவிற்கு அறிவைப் பெறுவதற்குதவும் கருவிகளாகவும் கொடுக்கப்பட்டன. அவற்றின் துணைக் கொண்டல்லாது ஆன்மா தானாக ஒன்றையும் அறியாது என்பதனை பொறியின்றி ஒன்றும் புணராத புந்திக்கு அறிவு என்ற பேர் நன்றற' என்றது திருவருட்பயன். எனவே சித்தாந்தத்திலே அறிவுக்கொள்கை மூவகைகளாகக் காட்டப்பட்டது. அவையாவன:- பசு தன்னை அறிவது பசு ஞானம் எனவும், பசு பாசமாகிய உலகப்பொருட்களை அறிவது பாசஞானம் எனவும் தன்னை ஆளுகின்ற மேலான பொருளை அறிந்து அதனிடத்து ஒன்றும் அறிவு பதி ஞானம் எனவும் பட்டது. பசுஞானமாகிய அறிவினால் உயிர்கள் தன்னிலை உணர ஆரம்பிக்கின்றன. உயிரின் வேறாகக் காட்சியளிக்கும் உடலும் கருவிகளும் நுகர் பொருளாகிய உலகமும் காட்சிப் பொருளாகுமாறு தோன்றுவது படைப்பு. இது விஞ்ஞானமாகிய பாச அணுக்களின் மாயாகாரியத்தினால் ஏனைய பொருட்களும் தோன்றின. தற்கால
இந்துக்கலைக்களஞ்சியம்
252

நவீன விஞ்ஞானக் கருத்துப்படி பிராணவாயு (Oxygen), Éğjög|PJEF6) ITU (Nitrogen), fỆiř5JFTLų (Hydrogen), 55 ff (Carbon) போன்ற பொருட்களின் கூட்டுச் சேர்க்கையே உயிர்களின் தோற்றத்திற்கும் இயக்கத்திற்கும் ஆதாரமாகவுள்ளன. இவையனைத்தும் பேரண்ட வெளியிலே வாயுரூபமாக உலவிக் கொண்டிருப்பனவாம். உதாரணமாக ஒரு தாவரத்தின் உயிர்ச் சேர்க்கைக்கு (Photo Synthesis) கரியமிலவாயுவும் சூரிய ஒளியும் தேவைப்படுகின்றன. அத்தாவரத்தின் வளர்ச்சிக்கு நீத்துரச வாயுவுந் தேவை. இதே போன்றே உயிர்கள் சுவாசிக்கவும் வளரவும் பிராணவாயு இன்றியமையாதது. பிராணவாயுவும் நீர்வாயும் சேர்ந்தே நீர் (HO) உண்டாக முடியும். எனவே உயிர்க்கு ஆதாரமான பொருட்கள் அனைத்தும் அண்டத்திலிருந்து மாறிப் பிண்டமாகப் பரிணமிக்கின்றன. இவ்வாறு அண்டத்திலுள்ள வாயுக்களின் சேர்க்கை மாறுபாடுகளினாலேதான் பிண்டமாகிய உடல் பரிணமித்தது. உதாரணமாக மரணக்கிரியைகளை எடுத்தாலும் தகனக்கிரியை என்பது ஐம்பூதங்களிலிருந்து இதைப் பிண்டமாகிய உடலை மீண்டும் அவ்வப்பூதங்களிற் பாவனையால் ஒடுக்குகின்ற கிரியை முறையின் தத்துவங்களாக அங்கு விளக்கப்பட்டன.
இப்பரிணாம முறையிலான பிறவிகள் நீங்குதற்கு உயிர்கட்குரிய உடம்புடன் கூடி வாழும் உயிர்கள் மலமறைப்பு நீங்கி அறிவு விளக்கம் பெறுவது அவசியமாயிற்று அறிவு விளக்கம் பெறுதற்கு இப்பிரபஞ்சமும் முத்திக்கு வழிசெய்யும் ஒரு சாதனமாகச் (அத்துவா) சித்தாந்தத்திற் கொள்ளப்பட்டது. இத்தகைய உயிர் அறிவு விளக்கம் பெறுதற்கு மாயையாகிய உலகம் கைவிளக்குப் போல அவற்றின் அறிவினை விளக்குதற்கு உதவியதால் 'விடிவாமளவும் விளக்கனைய மாயை' என உமாபதிசிவாச்சாரியார் எடுத்துக் கூறினார். மாயையின் இத்தகைய இயல்புகளை மதங்க பரமேஸ்வர மாயா படலம் நன்கு விளக்கியுள்ளது. இப்படியாக உலக அறிவாற்றல்களை படிப்படியாகப் பெற்றுக் கொண்ட ஆன்மாக்கள் சார்ந்ததன் வண்ணம் ஆகும் தன்மையுடையனவாதலால் எவற்றைச் சாருமோ அதன் இயல்புகளைப் பொருந்தி நிற்கும் எனவும் பட்டது. உலகப் பற்றுக்களைச் சாரும்போது சத்தாகவும் சிவத்தைச் சாரும்போது சிவமாகவும் நிற்றலால் உயிர்கள் சதசத்து எனப்பட்டன. இவ்வாறு ஆன்மாவின் உலகியல் சார்புநிலை பெத்தநிலை (கட்டப்பட்டது) எனவும் சிவத்தைச் சாரும்நிலை முத்திநிலை எனவும் சித்தாந்தம் கூறும். (ஆணவச் சார்பு காரணமாக உயிர்கட்கு உலகப்பற்று இருக்கின்ற மலச்சார்பு நிலையினை மிருகேந்திரம் பாசலட்சண படலமும் 17ஆம் பெளஷ்கரம் ஆணவலட்சணப்படலமும் விளக்கியுள்ளன.
சித்தாந்தத்திலே பதியுண்மை
ஆகமம் என்ற சொல்லில் 'ஆ' என்பது பாசம் எனவும் 'க
என்பது பசு எனவும் 'ம' என்பது பதி எனவும் பொருள்படுதலால்
ஆகமம் என்பது பதி, பசு, பாசலட்சணங்களை உணர்த்தும் நூல்
எனவும் அது மட்டுமன்றி ஆகமம் என்றால் ஆன்மாக்கட்கு

Page 279
மலத்தை நீக்கி சிவஞானத்தை உதிப்பித்து மோட்சத்தைக் கொடுப்பதெனவும் சைவப் பெரியார் அ. சிவபாதசுந்தரனார் குறிப்பிடுவர். சிவம் என்பது தத்துவமுறையிலே பதி எனப்பட்டது. 'ஊனக்கண் பாசமுணராப் பதியை விதிப்படி அஞ்செழுத்தால் உச்சரிக்க என்ற சிவஞானபோதம் (9ஆம் சூத்திரம்) பதி பரமேயதுதான் நிலவும் அருவுருவன்றிக் குணம் குறிகளின்றி நின்மலமாய் ஏகமாய் நித்தமாகி அலகில் உயிர்க்குணர்வாகி ஆனந்த உருவாய் அநாதியாய் நிற்பது என்கிறது சிவப்பிரகாசம், ஒட்டற்று நின்ற உணர்வு பதிமுட்டி தேடற்றிட நின்ற இடம் சிவம் என்ற திருவுந்தியார் செய்யுளிலும் பதியும் சிவமும் ஒன்றென விளக்கப்பட்டது. சிவம் என்னும் நாமம் தனக்கேயுடைய செம்மேனி அம்மான்' என்றார் அப்பர். நின்றமலம் அனாதி நீங்கி நிற்றலின் அறைகுவர் சிவன் என அறிவின் மேலோர்’ என்ற சிவஞானமுனிவர் வாக்கினாலும் சித்தாந்தப் பதிக்கொள்கை சிவப் பேரறிவியலாக வளர்ச்சியடைந்து இருந்தமையினை சிவாகம சித்தாந்த நூல்கள் விளக்கி நிற்கின்றன.
பதி என்றால் காப்பவர், தலைவர், பெரியவர், உயர்ந்தவர் என்ற பொருளிற் பயன்படுத்தப்படுவது. ஆன்மாக்கட்குத் தலைவர் என்ற கருத்திலே பசுபதி எனப்பட்டது. மிகவுயர்ந்த இருப்பிடமாகிய கைலாசத்தில் உறைவதால் கைலாசபதி என்று கூறப்பட்டது. அடுத்து பதிக்கு இரண்டு நிலைகள் சித்தாந்தத்திற் கூறப்படும். என்றுமுள்ள சுதந்திரமாம் இயல்பு நிலை. அது ஸ்வரூபநிலை எனவும், ஆன்மாக்களின் மேல் கருணைகொண்டு உருவத்திருமேனிகளைத் தாங்கிவரும் நிலை தடத்தநிலை எனவும் சித்தாந்தத்திற் கூறப்பட்டது. அறிவுநிலையிலே ஞான வழிபாட்டிற்கு அடித்தளமாகச் சொரூபநிலையும் உருவ வழிபாட்டிற்கு அடித்தளமாகத் தடத்தநிலையும் சித்தாந்தத்திலே கற்பிக்கப்பட்டன. அருவநிலை சிவதத்துவமாதலாற் சக்தியுடன் கலந்து சதாசிவமூர்த்தியாக நிற்றல் அருவுருவநிலை எனப்பட்டது. சிவம் அவதாரம் எடுப்பதில்லை. நினைத்தமாத்திரத்தில் உருவத் திருமேனிகள் தாங்கும் வல்லமையுடையது என்பதனை நாடரிய கருணைத் திருவுருவமாகி நிறுத்திடுவன் நிமலன் நினைத்த உருதானே' எனச் சிவப்பிரகாசம் கூறியது. அருவாய் உருவாய் குருவாய் வரும் சக்தி எனத் திருமந்திரமும், அருவினால் உருவம் தோன்றி அங்காங்கி பாவமாகி உருவினில் உருவமாயே உதித்திடும் உலகமெலாம்' எனச் சித்தியாரும் அருவமும் உருவமுமாகி அனாதியாய்ப் பலவாய் ஒன்றாய்' எனக் கந்தபுராணமும், பதியின் அனாதியான இயல்பினையும் சொரூப, தடத்த நிலைகளையும் ஆங்காங்கு அறிவித்துள்ளன. சுத்ததத்துவத்திலே சிவப்பொருள் சக்தியுடன் கலந்து சடப்பொருட்களைத் தோற்றுவிக்கும் நிலைக்கு ஒத்த ஒரு விஞ்ஞான விளக்கமும் தற்காலம் சில இடங்களிற் காணப்படுகின்றது.
2

6T6Ioš, GITT GÖT (Electorne) LGT AT GJIT 6ör (Protrone) நீயுட்ரோன் (Newtone) என மூன்று துகள்கள் இணைந்த ஒன்று பரமாணு எனப்படும். எலக்ரொனில் ஆண் தன்மையியல்பும், புரொட்ரோனில் பெண்தன்மையியல்பும், நியுட்ரோனில் சடமாகிய அலித்தன்மையியல்பும் அதிகமாகக் காணப்படும் எனவும் அதனால் ஒவ்வொரு அணுவின் நடுவிலும் நியுகிளியஸ் (Newclear) அணுக்கரு ஒன்றும் அதனால் வசீகரிக்கப்பட்டு அதனைச் சுற்றி ஆண்மின்னுரு (Electrone) பெண் மின்னுரு (Protrone) அலியுரு என்ற பலவகைக் கோள்கள் உண்டெனவும் ஜீன்ஸ் ருதர்போர்ட் போன்ற விஞ்ஞானிகள் பலரும் தெரிவித்துள்ளனர்.
சித்தாந்தப் பதிப்பொருளாகிய சிவத்தினில் இந்த இயல்புகள்
பொருந்தியிருப்பதனைத் திருமந்திரமானது
அணுவில் அணுவினை ஆதிப்பிரானை
அணுவில் அணுவினை ஆயிரம் கூறிட்டு -
அணுவில் அணுவை அணுகவல்லார்க்கு
அணுவில் அறுவை அணுகலுமாமே எனக் கூறுவதனாலும் அருமறையன் அசத்தானை - அணுவை யார்க்கும் தெரியாத தத்துவனை எனவும் ஆணாகிப் பெண்ணாகி அலியாய் எனவும் திருவாசகம் கூறுவதனாலும் இவை சிந்தனைக்குரிய கருத்துக்களாகக் காணப்படுகின்றன. அணுக்களின் சலனங்கள் எனவும் அதனையே சிதம்பர வெளியிலே நடராஜ தத்துவமாகவும் சித்தாந்தம் கற்பித்தது. அங்கிருந்து விரிவடையும் ஐம்பூதவிரிவுகள் நடராஜரின் பஞ்சகிருத்தியம் எனப்படும் ஐந்தொழிலாகவும் விபரிக்கப்பட்டது எனலாம்.
எல்லாப் பொருட்களையும் தனக்குள் அடங்கவைத்திருக்கும் பெரும்பொருளாகவும் மிகநுண்ணிய பொருளிலும் தான் அடங்கியிருக்கும் தன்மையுடையது. சித்தாந்தத்திலே 'சிவம் எனப்பட்டது. அந்தச் சக்தி அணுவுக்குள் அணுவாகத் தங்கியிராவிட்டால் எந்தப்பொருளும் நிலைகொள்ளாது என்பதனாற் போலும்- புறத்தேமட்டுமல்ல அகத்தேயும் இருப்பது சிவம் அவற்றிலே கலந்தும் கடந்தும் இருப்பதும் சிவம் எனச்சித்தாந்தம் கொண்டிருக்கவேண்டும். சைவசித்தாந்தத்திலே பதிப்பொருளின் சொரூபநிலையானது தனிச்சிறப்பு வாய்ந்ததொரு சிந்தனையெனலாம். ஏனைய தத்துவங்களில் விமர்சிக்கப் பட்டவாறு சித்தாந்தபதி அருவப்பொருளாகவோ அன்றி நிர்குணமானதாகவோ அல்லது சூன்யமானதாகவோ ஒன்றுமே இல்லாத வெறுமைநிலை என்றோ கூறப்படவில்லை. மாறாக அதன் ஸ்வருபம் எனப்படும் சுயமானநிலை சச்சிதானந்த சிவம் எனப்பெயர்பெற்றுள்ளது. சத் என்பது என்றுமுள்ளது. சித் என்பது அறிவே வடிவமானது - ஆனந்தம் என்பது பேரானந்த மயமானது என்பதாகும். ஆதலாற் சித்தாந்தப் பதிப்பொருளின் சொரூபநிலை என்பது என்றுமே மேலான சச்சிதானந்த நிலையாகச் சிறப்பிக்கப்பட்டுள்ள சிறப்பிலக்கணம்
இந்துக் ង៉, ញេអ៊ែរៃ

Page 280
வாய்ந்த நிலை எனக் கருதுவதே மிகவும் பொருத்தமானதெனலாம்.
சிவப்பொருளும் சக்தியும்
தனிமுதற்பொருளாம் சிவமாம் தன்மையை விட்டு நீங்காத ஆணை எனப்படும் ஆற்றலே சித்தாந்தத்திற் சக்தி எனப்பட்டது. இதனை ஆணையில் நீக்கமின்றி நிற்கும் என சிவஞானபோதம் குறிப்பிடும். சிவப்பொருளின் நெஞ்சமானது அறிவாற்றல் அல்லது ஞானசக்தி எனவும், அதன் அறிவுப்பெரு வெளியாகிய வனப்பாற்றல் பராபரை அல்லது பராசக்தி எனவும், நடப்பாற்றல் - ஆதிசக்தி எனவும், அன்பாற்றல் - இச்சா சக்தி எனவும், தொழிலாற்றல் கிரியாசக்தி எனவும் கூறப்பட்டிருப்பதால் சிவப்பொருளின் அனைத்து அம்சமும் ஆற்றல் மயம்’ எனச் சித்தாந்தம் உருவகித்துக் காட்டியிருக்கின்றது. இதனைக் சக்திதான் நாதமாகி தானாகும் சிவமுமாகி - சக்திதான் ஆதியாகும். சக்தியும் சிவமுமாகும் - சக்திதான் சத்தனுக்குச் சத்தியாகும்’ எனச் சித்தியார் குறிப்பிட்டது. அதனால் உருவத்திருமேனிகளை எடுக்குமிடத்தும் சிவன் சக்தியுடன் சேர்த்து ஐந்தொழில் ஆற்றுவது புலப்படுத்தப்படும்.
அருவமாகிய சிவம் உருவம் கொள்வதற்குச் சக்தியின் ஆற்றலே காரணம் எனச் சித்தாந்தம் கூறும். உதாரணமாகத் தந்தையிடமுள்ள அருவமாகிய கருவினை உருவத்திற்குக் கொண்டு வருவது தாயாகிய சக்தியாகும். அவ்வாறே அருவுருப் பொருளாகிய ஈசனும் ஆற்றலாகிய சக்தியுடன் சேரும்போது உருவத்திருமேனிகளைப் பெறுகின்றான் என்பது பெறப்படும். அதனால் சிவமும் சக்தியும் பிரிப்பின்றி நின்று தொழிற்படும் நிலையினை 'தன்னிலைமை மன்னுயிர்கள் சாரத்தரும் சக்தி பின்னமிலான் எங்கள் பிரான் எனத் திருவருட் பயன் என்ற நூலில் எடுத்துக்காட்டப்படும். ஆதலால் சிவமும் சக்தியும் நெருப்பும் சூடும் போல - சூரியனும் கதிர்களும் போல என்னும் ஒருமைப்பட்டு அத்துவிதமாகி நிற்கும் நிலை சித்தாந்தத்திலே சிறப்பித்துக் கூறுப்பட்டது.
சைவ சித்தாந்தக் கோட்பாடு தொடர்பான விடய அட்டவணை:
இந்துதத்துவம் கூறும் அளவைகளும் சைவசித்தாந்த அளவைக்கோட்பாடும் அளவைகள் (10)
1. பிரத்தியட்சம் - காட்சியளவை 2. அனுமானம் - கருதலளவை 3. ஆப்தம் - 9) 60).jLL6T606) 4. அனுபலப்தி - இன்மையளவை 5. அருத்தாபத்தி - பொருட்பேறளவை 6. உபமானம் - ஒப்பளவை 7 ஐதீகம் - உலகுரையளவை 8. சம்பவம் - உண்மையளவை 9. Lif(&g:LL) - ஒளியளவை
இந்துக்கலைக் ញ៉ាចើយ។
254

10. சுபாவம் - இயல்பளவை
சார்வாகர் - பிரத்தியட்சம் பெளத்தர், வைசேடிகளில் ஒருசாரார்- பிரத்தியட்சம்,
அனுமானம்
சாங்கியர், சைவசித்தாந்திகள் - பிரத்தியட்சம், அனுமானம்
ஆப்தம்.
நையாயிகர் - பிரத்தியட்சம், அனுமானம்,
ஆப்தம், உபமானம்
பிரபாகர் - பிரத்தியட்சம், அனுமானம், ஆப்தம், உபமானம், அருத்தாபத்தி
பட்டர், அத்வைதிகர் - பிரத்தியட்சம், அனுமானம், ஆப்தம், உபமானம், அருத்தாபத்தி, அனுப்பலப்தி
பெளராணிகர் - பிரத்தியட்சம், அனுமானம், ஆப்தம், உபமானம்,
அருத்தாபத்தி, அனுப்பலப்தி, சம்பவம், ஐதீகம்.
வேதவியாசர் - பிரத்தியட்சம், அனுமானம், ஆப் த ம் , உ ப ம | ன ம் , அருத்தாபதி, அனுப்பலப்தி, சம்பவம், ஐதீகம், சுபாவம், பரிசேடம்.
சைவசித்தாந்த அளவை
காட்சியளவை அனுமான அளவை ஆப்த அளவை
(1) வாயிற்காட்சி () தன்பொருட்டனுமானம் (1) மந்திரம் (2) மானதக்காட்சி (2) பிறர்பொருட்டனுமானம் (2) தந்திரம் (3) தன்வேதனைக்காட்சி (3) உபதேசம்
(4) யோகக் காட்சி
பத்து அளவைகள் பற்றி சைவசித்தாந்த சாத்திரங்களில் ஒன்றான சிவஞானசித்தியார் குறிப்பிடும்போது,
அளவை காண்டல் கருதல் உரை அபாவம் பொருள் ஒப்பு ஆறு என்பர் அளவை மேலும் ஒழிபு உண்மை ஐதீகத்தோடு இயல்பு என நான்காம் என்று விளக்குகிறது.
பத்து அளவைகளைச் சித்தாந்தம் குறிப்பிடுகின்றபோதும்
அவை அனைத்தும் காட்சி, அனுமானம், ஆப்தம் ஆகிய மூன்று அளவைகளுள் அடங்கும் என்கின்றனர்.
(1) காட்சியளவையினுள் அனுப்பலத்தியளவையும் (2) அனுமான அளவையினுள் உபமானம், அருத்தாபத்தி,
சம்பவம், சுபாவம், பரிசேடம் ஆகிய அளவைகளும் (3) ஆப்த அளவையினுள் ஐதீக அளவையும் அடங்கும்
என்கின்றனர். காட்சியளவை பற்றியும் அதன் வருகை பற்றியும் சைவசித்தாந்தம் குறிப்பிடும்போது,

Page 281
காண்டல் வாயின் மனத்தனவேதனையோடி யோகக் காட்சியென ஈண்டுநான்காம். (சித்தியார்) என்பதனாற் காட்சி நான்கு வகை என்கிறது.
மேலளவை காட்சியொடு கருதலிவை மூன்றா மிகு காட்சியையமே திரிபு விகற்பத்தோ டேனும் வாயிற்காட்சி மாணதக்காட்சி தன்வே தனைக் காட்சியோடி யோகக் காட்சியென வேழாம்
(தத்துவப் பிரகாசம்)
சைவசித்தாந்தம் சு
AD
சுத்தடிாயை அசு
சொல் வடிவமான பொருள்வடிவமான வித் சுத்தமாயையின் சுத்தமாயையின் (1) : காரியங்கள் காரியங்கள் (2) (3) (4) (1) சூக்குமை 9ബ (5), (2) பஸ்யந்தி (1) சாந்தி அதீதகலை (6) (3) மத்திமை (2) சாந்திகலை (7) | (4) வைகரி (3) வித்தியாகலை (4) பிரதிட்டாகலை (5) நிவர்த்திகலை சூக்கும தூல வைகரி வைகரி தத்துவம் (சிவ தத்துவம் 05)
(1) சிவம் (2) சக்தி (3) நாதம் (4) விந்து (5) சாதாக்கியம்
உசாவிய நூல்கள்:
சிவஞானபோதம், சிவஞான சுவாமிகள் சிற்றுரை,
ஆறுமுகநாவலர் பதிப்பு, சென்னை சர்வதாரி வருடம், சிவஞானசித்தியார் திருவிளங்கம், மு. புத்துரை, கூட்டுறவுத் தமிழ்
நூற்பதிப்புக் கழகம், யாழ்ப்பாணம், 1971 சிவப்பிரகாசம் திருவிளங்கம், மு. புத்துரை, கூட்டுறவுத் தமிழ்
நூற்பதிப்புக் கழகம், யாழ்ப்பாணம், 1974. சித்தாந்தச் செழும்புதையல் கந்தையா, மு. ஈழத்து சித்தாந்த
வித்யாபீடம், யாழ்ப்பாணம். சித்தாந்தத் தெளிவியல் அருணைவடிவேல் முதலியார், எஸ்.இ
தருமபுர ஆதீனம், 1968. திருவருட்பயன் சிவபாதசுந்தரனார் உரை. திருமந்திரம் திருப்பனந்தாள் காசிமட வெளியீடு, றுநீ வைகுண்டம்,1968.

என்பதனால் நான்குவகைக் காட்சியுடன் திரிபுக்காட்சி,
ஐயக்காட்சி, விகற்பக்காட்சி என்பனவும் சேர்ந்து காட்சி ஏழு வகைப்படும் என்று தத்துவப் பிரகாசம் குறிப்பிடுகின்றது.
எனினும் ஐயம், திரிபு, விகற்பம் என்பன காட்சியின் வகைகளாக
நோக்குவதிலும் பார்க்க காட்சியில் எழுகின்ற குற்றமாக
நோக்குவதே பொருத்தமானதாகும்.
றும் 36 தத்துவங்கள்
Τ6δΥ Η
a பிரகிருதிமாயை தியாதத்துவம் (7) ஆன்மதத்துவம் (24) காலம் நியதி அந்தக்கரணம் 565)60 (1) மனம் வித்தை (2) புத்தி அராகம் (3) சித்தம் புருடன் (4) அகங்காரம் பிரகிருதி
g தைசதம வைகாரி பூதாதி ஞானேந்திரியம் ܢܝܢܘܐܘܘܘ நன்மத் (1) மெய் (1) வாக்கு (1) ஓசை - வானம் (2) வாய் (2) கால் (2) ஊறு - காற்று (3) கண் (3) கை (3) ஒளி - தீ (4) மூக்கு (4) குதம் (4) சுவை - நீர் (5) செவி (5) குறி (5) நாற்றம் - மண்
திருவாசகம் அருளம்பலவனார் உரை. சித்தமருத்துவம் டாக்டர். குமாரசாமி முதலியார். உடற்தத்துவம் டாக்டர் நடராஜன். பெளஷ்கராகமம் சண்முகசுந்தர முதலியார் (தமிழில்) சென்னை.
1981.
Matangaparameshwaragama,
Vidyapada,
The Rouravagama,
Edited by N.R. Bhart, French Institute, Indology, Pondicheri, 1961. Edited by: N. R. Bhart, French Institute, Indology, Pondicheri 1961.
(Vidya and Kiriyapada with English note)
Mirugendragama,
Sivagama Siddhantaparipalana Sangam, Devakottai, 1928.
இந்துக் க்களஞ்சியம்
55

Page 282
சைவபேதங்கள்
சீெவ தந்திரநூல்களிற் காணப்படும் போதனைப் பொருள் வேறுபாடு 16 வகையான சைவப்பிரிவுகளைத் தோற்று வித்துள்ளது. குறிப்பாக மோட்சத்தையடைவது தொடர்பான வழிமுறை பற்றிய கருத்துவேறுபாடே சைவ பேதங்களிற்கு ஏதுவாயுள்ளது. சைவபேதங்களும் அவற்றின் போதனைகளும் வருமாறு.
1. ஊறித சைவம்
சிவன் ஒருவனேயென்றும் அவன் தத்துவங்களைக் கடந்தவன் என்றும் ஏற்றுக் கொள்ளும் இச்சைவர்கள் துறவியாகிலும் சம்சாரியாகிலும் சடைவளர்த்து, உருத்திராட்சம் விபூதி, பூனூல் தரித்து, சிவலிங்கத்தைப் பூசைசெய்து பஞ்சாட்சர செபிதனாய் இருப்பவர்கள்.
2. அனாதி சைவம்
பதி, பசு, பாசம் மூன்றும் அனாதியானவை, நித்தியமானவை, வியர்த்தமாய்ப் பிரகாசிக்கும் இயல்புடையவை; சிவனை முக்குணவிகற்பமில்லாது ஏற்றுக் கொண்டு, விபூதி உருத்திராட்ச பஞ்சாட்சரங் கொண்ட குருலிங்க வேடப் பொருளாகக் கொண்டு, சிவபூசைசெய்து பாசங்களை நீங்கிப் பதியுடன் சேர்ந்து ஆத்மாவானவன் சிவனைக் கும்பிட்டிருத்தலே பரமுத்தியைத் தருமெனக் கொள்பவர் அனாதி சைவராவர். இவர்களில் ஒருசாரார் சிவனே அனாதி சைவனென்ற கருத்துடைய வர்களாவர்.
3. ஆதி சைவம்
பசுவின்பொருட்டாக அதன்மேல் அன்புகொண்ட சிவனாகிய பதி பஞ்சகிருத்தியங்களைத் துலக்கி, நிஷ்களத்தோடு சகளமாகவும் இருக்கும். இப்பதியோடு போகங்கூட வேண்டுவோர் மோட்சசாதனங்களிற்கு ஏற்ற வேடமும் நடத்தையும் பூண்டு, எல்லாம் சிவபோகமாய் அனுபவித்து, விபூதி உருத்திராட்ச வேடத்தின்மேல் விருப்புக் கொண்டு, பதியோடு கூடியவனா யிருந்தால் அவன் போகமயத்தனாக இருப்பானென்பது ஆதிசைவர் கொள்கையாகும். கெளசிகாதி ரிஷியேசுவரரே ஆதிசைவரென்று கருதுவோரும் உளர்.
4. மகா சைவம்
சிவனானவன் மூர்த்திகள், அமூர்த்திகள் அனைத்திற்கும் மேலானவனென வேதாகமங்கள் கூறுகின்றன. இத்தகைய சிவனை சன்மார்க்கத்துடனே கூடி சம்சாரம் துறந்து சடைவிபூதி வேடம் தரித்து, நித்தம் சிவ பூசாதந்திரங்களுடனே சிவபூசைசெய்து, சிவனை சகுணரூபமாகத் தியானம் செய்து, சிவனை குருலிங்க வேடப் பொருளாகக் கருதி நடப்பதால் முத்திகிடைக்குமென மகாசைவர் கருதுவர். ரிஷிகள் கோத்திரமாய் தீட்சதருமான சிவாத்துவசைவரே கோசைவரென்று கூறுவாருமுளர்.
இந்துக்கலைக்களஞ்சியம்
56

5. பேத சைவம்
ரூபம், அரூபம், ரூபாரூபமாயிருப்பவன் சிவன். அவனை சன்மார்க்கத்துடனே கூடிய துறவிலாவது, சம்சாரத்திலாவது விபூதி உருத்திராட்சம் பஞ்சாட்சரம் முதலான வேடங்கள் பூண்டு, சிவனடியார்களையும் லிங்கத்தையும், குருவையும் வழிபட்டு சிவனுடைய மூன்று ரூபத்திலும் தியானம் செய்து வணங்குவதே மோட்சமென்பது பேத சைவர்களது நிலைப்பாடாகும்.
6. அபேத சைவம்
பேதமில்லாது அபேதமாயிருக்கும் சிவனை, சைவவழிமுறைக்குரிய வேடம், விபூதி, ருத்திராட்ச, பஞ்சாட்சர குருலிங்க வேடம் எல்லாம் பொருளாய்க் கொண்டு சன்மார்க்கமாகச் சிவனைத் தேடி, அவன் சொரூபமறிவதே முத்தியென்பது அபேதசைவர்களது கருத்தாகும்.
7. அந்தர சைவம்
எல்லாவகையான உயிருக்கும் உள்ளேயிருந்து உணர்த்துவிக்கிற சிவனைத்தேடி அவனுக்குச் சாதனப்பட்டு, சைவவேடங்களெல்லாம் தரித்து, வேடமே பொருளாக அவனிருக்கிற இயல்பை நாடுவதே முத்தியென்பது இவர்களது கொள்கை.
8. குண சைவம்
சிவன் எட்டுக் குணங்களோடு கூடியவனாயிருப்பதால்,
தன்னெட்டுக் குணங்களாலும் சிவனை ஏற்றி வேடங்கள் பூண்டு
அடிமையாகத் திரிவதே முத்தியென்பர் குணசைவர்.
9. நிர்க்குண சைவம்
குணமில்லாதும், உருவமில்லாதும் இருக்கும் நிர்க்குண
சிவனை இரண்டுபேதமுற்று குணமில்லாதே கூடல்
முத்தியென்பது இவர்களின் கொள்கை.
10. அத்துவா சைவம்
நாமகிரியா ரகிதனாய் சுத்தனாய் நிஷ்களனா இருக்கின்ற சிவனை சத்தினிபாதம் வந்த சீஷன் குருவையடைந்து, சைவத்திற்குரிய வேடங்கள் தரித்து, குருலிங்க வேடப் பொருளாய் அத்துவாசோதனை செய்து, அவற்றின் முடிவைத் தியானித்து சமாதி நிட்டை சாதித்து வழிபடுவது மோட்சமாமென்பது அத்துவா சைவர்களது நிலைப்பாடாகும்.
11. யோக சைவம்
நிர்க்குணனாயிருக்கும் சிவனை குருவாலறிந்து, யோகசாதன வேடங்கள் தரித்து, ஏகாந்தத்திலிருந்து யோகசாத்திரப் பயிற்சியின்படி அஷ்டாங்கயோகங்களைச் சாதித்து, அட்டமாசித்திகளைப் பெறுவதே மோட்சமென்பது இவர்களது கொள்கையாம்.
12. ஞான சைவம்
நித்தனாய், நின்மலனாய், நிஷ்களனாய் இருக்கும் பரமசிவனை குருமுகமாய்த் தெளிந்து சைவத்திற்குள்ள

Page 283
வேடமெல்லாம் தரித்து , சீவ பர பேதமறிந்து, ஆத்மபாரத்துடன் கூடிய நிஷ்டை சாதித்து, சுத்தாத்மாவாய் பரத்துடன் கூடுவதே மோட்சமெனக் கூறுவது ஞான சைவம்
13. அணுச் சைவம்
நித்தியமாயிருக்கின்ற சிவனை உள்ளும் புறமுமாய் பஞ்சகிருத்தியம் செய்பவனென அறிந்து திகம்பரவேடம் பூண்டு, சன்மார்க்க லட்சணத்துடனே கூடி குருலிங்க வேடப்பொருளாய், சிவன் செய்யும் தொழில்களை அனுபவத்திலறிந்து, ஆனந்தம் பொங்கியதில் மனோலயமாகிறதே மோட்சமென்பது இவர் கொள்கை.
சுத்தமான சதாசிவமூர்த்தியை அறிந்து, குருவையடைந்து, சமயவிசேட தீட்சையும் பெற்று, ஆசிரியனாலே அத்துவாசோதனை செய்யப்பட்டு, நிர்வானதீட்சையோடு கிரியா தீட்சையும் பெற்று, ஆவாகனாதி பேதமுமறிந்து, பஞ்ச சுத்தியும் செய்து, சைவசாத்திரப்படியே நியமமுடன் நித்தழுத்தி பொருந்த, இதற்கேற்ற கன்மங்களைச் சாதித்து அதிலமைந்து சிவார்ச்சனை செய்து சோடசோபசாரமும் அஷ்டவிதார்ச்சனையும் செய்வது மோட்சமாமென்பது இவர்கள் கொள்கையாம்.
15. நாலு பாதச் சைவம்
சரியையாதி நாற்பாதத்திலும் ஒவ்வொன்றாக நின்று, ஞானபாதத்தையடைந்து, தீவிரதர சத்தினிபாதமுடையனாய், சுத்தவிரதனாய் சமாதிநிஷ்டைபொருந்தி பிரமத்தையடைகிறது மோட்சமென்பது இவர் கொள்கை.
16 சுத்த சைவம் ܡ
பதி, பசு, பாசம் என்ற மூன்றும் நித்தியப் பொருளென அறிந்து, வேதாந்த சித்தாந்த தீர்வாய் பசு பாசம் முதலான பந்தங்களுமிறந்து, நால்வகை முத்தியையும் கடந்து மகாமெளனமே பொருளாக, இலயமாக நிஷ்டை சாதித்து, சிவனோடு ஏகனாவது மோட்சமென்பது இவர் கொள்கை.
(சோ.தி)
சைவம் (வீரசைவம்)
மிகவும் புராதனமான சைவசமயத்திலே காலப் போக்கிற் பல பிரிவுகள் தோன்றின. அவற்றுள் மூன்று பிரிவுகள் பிரதானமானவை. காஷ்மீர சைவம், வீரசைவம், சைவசிந்தாந்தம் ஆகிய மூன்றும் புராதனமான இலக்கிய மூலங்களையும் சமய ஆசாராங்களையும் அடிப்படையாகக் கொண்டவை. விபூதி, உருத்திராக்கம், திரிசூலம் என்னும் சின்னங்கள் இப்பிரிவுகள் எல்லாவற்றுக்கும் பொதுவானவை.
சைவ சமயமானது முன்னொரு காலத்திலே பரத கண்டம் முழுவதும் பரவியிருந்தது. பன்னிரண்டாம் நூற்றாண்டு வரை இந்து சமய நெறிகளுள் அதுவே முதன்மையானதாக விளங்கியது.

257
வட இந்தியாவிலும், மத்திய பாரதத்திலும், தக்ஷிணாபதத்திலும் அதிகாரம் புரிந்த அரசகுலத்தவர் பலர் சைவராக விளங்கினர். அவர்கள் வழங்கிய காசுகளிலும் முத்திரைகளிலும் சிவ சின்னமான காளையின் வடிவம் பொறிக்கப்பட்டது. ஆதியிலே 60) 66 சமயமானது வேதம், ஆகமம் ஆகிய இரண்டையும் அடிப்படையாகக் கொண்டு விருத்தி பெற்று வந்தது. தத்துவங்கள் எல்லாம் உபநிடதச் சிந்தனைகளை மூலமாகக் கொண்டிருந்தன. வழிபாட்டு முறைகள் ஆகமப் பிரகாரமானவை. பொது வழக்கிற் சைவசமயமும் ஆலய வழிபாட்டோடு பெரிதும் தொடர்புகள் கொண்ட நெறியாகும். காலப்போக்கில் சைவர்களும் வர்ணாசிரம தர்மக் கோட்பாடுகளை அனுசரிக்கத் தொடங்கினார்கள். அதனால் சைவசமயம் பலவீனம் அடைந்தது. கர்நாடக தேசத்திற் பெளத்தம் வலிகுன்றியதோடு சமணமும், வைணவமும் எழுச்சி பெற்றன. வீரசைவம் அவற்றிற்குப் போட்டியாக ஒரு சமய, சமுதாய சீர்திருத்த இயக்கமாகத் தோன்றிப் பெருவளர்ச்சியடைந்தது. வீர சைவம் 160 ஆம் ஆண்டளவில் வசவர் என்பவரின் போதனைகளை அடிப்படையாகக் கொண்டு உருவாகியது. வீரசைவர்களின் கோட்பாடுகளிற் சிலவும் நெறி முறைகளும் எல்லாச் சைவருக்கும் பொதுவானவை. ஆயினும், வீரசைவர் தமக்கெனச் சிறப்பான ஆசாரங்களையும் சமயக் கோட்பாடுகளையும் நெறிமுறைகளையும் வகுத்துக் கொண்டனர்.
வீரசைவம் தோன்றுவதற்கு முன் கர்நாடக தேசத்தின் தென் பகுதிகளிலே சோழரின் ஆதிக்கம் ஏற்பட்டிருந்தது. கங்கபாடி, நுளம்பபாடி, என்னும் இராச்சியங்களை முதலாம் ராஜராஜன் (1805-1014) கைப்பற்றி, அவற்றைச் சோழப் பேரரசின் பகுதிகளாக அமைத்துக் கொண்டான். சோழராட்சிக் காலத்திலே தமிழகத்திலிருந்து சைவ சமயச் செல்வாக்கு கர்நாடகத்தில் மிகுந்த அளவில் ஏற்பட்டது. தெற்கிலிருந்து வணிக கணங்கள் பல கர்நாடகம் சென்று அங்கு நிலை கொண்டன. வணிகரும் அரச பிரதானிகளும் புதிதாகச் சைவ ஆலயங்கள் பலவற்றை அமைத்ததோடு புராதனமான கோயில்களிலே திருப்பணி வேலைகளையுந்தான தருமங்களையும் புரிந்தனர். பக்தி மார்க்கம் தொடர்பான மரபும் சிந்தனைகளும் கர்நாடகத்துச் சைவர்களைப் பெரிதும் கவர்ந்தன. பக்தி மார்க்கமானது பொது வழக்கானது. வர்ணாச்சிரம தர்மங்களுக்கு அப்பாற்பட்டது. எனவே கர்நாடகத்திலே தோன்றிய சமய சீர்திருத்தங்களாற் சைவர் பெரிதும் கவரப்பட்டனர். வீரசைவ மரபில் அறுபத்து மூன்று சைவநாயன்மார்களைப் புராதனர் என்று கொள்வர். சமய ஆசாரங்கள், வழிபாடு என்பவற்றைப் பொறுத்தவரையில் அவர்களை உதாரண புருஷர்களாகக் கொண்டனர்.
பன்னிரண்டாம் நூற்றாண்டிலே கொய்சாலரின் இராச்சி:ம் உருவான காலத்தில் வீரசைவம் எழுச்சி பெற்றது. வீரசைவத்தின் மூலகாரணரான பசவர் சிவாநுபூதி மண்டபம் என்ற ஓர் அமைப்பை உருவாக்கினார். வீரசைவரின் சமய வழிபாடுகள், கோட்பாடுகள், சமூகப் பிரச்சனைகள் முதலான விடயங்களைப் பற்றி அந்த மன்றத்திலே ஆராயப்படும். அதிலே மேற்கொள்ளும்
இந்துக் -

Page 284
தீர்மானங்களே வீரசைவர் பின்பற்ற வேண்டிய பிரமாணங்களாகக் கொள்ளப்பட்டன. இது இந்து சமய மரபிலே ஒரு புதுமையாக அமைந்தது. ஆரம்பத்திலே சிவானுபூதி மண்டபம் சமய ஞானத்திலும் ஆகமங்களிலும் மகாபண்டிதராக விளங்கிய அல்லம பிரபுவின் தலைமையிலே கூடியது. அதன் கூட்டங்களிலே சாதி பேதம் கடந்த நிலையில் வீரசைவர் கூடினார்கள். அதிலே ஆண்களும், பெண்களும் சமமான நிலையிலே கலந்து கொண்டனர். அரச குலத்தவரும், வணிகரும், விவசாயிகளும் அதன் நடவடிக்கைகளிற் பங்குகொண்டனர். ஆரம்ப காலத்திலே 300 பேர் இருந்தனர். அவர்களில் 60 பேர் வரையான பெண்கள் இருந்தனர். பெண் துறவிகளிலே அக்கமாதேவி தலைசிறந்து விளங்கினார்.
சிவானுபூதி மண்டபத்தில் இருந்தவர்கள் பலர் இலக்கிய கர்த்தாக்களாக விளங்கினார்கள். தங்கள் புதிய சமய நெறியின் அடிப்படைக் கோட்பாடுகளையும் ஆசாரங்களையும், வழிபாட்டு முறைகளையும் விளக்கும் வண்ணமாக வசன நடையிலே பெருமளவிலான நூல்களை எழுதினார்கள். கன்னட மொழி வரலாற்றில் அவர்களின் இலக்கியங்கள் ஒரு பிரதான அத்தியாயமாக அமைகின்றன. பொருளாழமும், ஆற்றலும் கொண்ட சொல் வளமுள்ள மொழியாகக் கன்னட மொழி வளர்ச்சி
பெற்றது. அதில் வீரசைவர் கொண்டிருந்த பங்கு மிகவும்
முக்கியமான தொன்றாகும். ஷட்தலங்கள் பற்றிய தத்துவமும் பஞ்சாவரம் அஷ்டாவரணம் என்பன பற்றிய சிந்தனைகளும் சமூக சீர்திருத்தங்கள் பற்றிய கருத்துக்களும் இவற்றின் மூலமாகச் சமுதாயத்திலே பரவின.
வீரசைவரின் கோட்பாடுகள்.
பஞ்ச ஆராத்தியர்களினாலே புராதன காலத்தில் வீரசைவம் உருவாக்கப்பட்டது என்று வீரசைவர் கொள்வர். ரேவண, மருள, ஏகோராம, பண்டித, விஸ்வேஸ்வர, என்போரே அந்த ஐவருமாவர். அவர்கள் ஸ்தாவர லிங்கங்களில் இருந்து உற்பவித்தவர்கள் என்பது ஐதீகம். மைசூர் நாட்டு வலேஹல்லி, பெல்லாரி மாவட்டத்தில் உஜ்ஜயணி, கேதாரம், பூரீ சைலம் மல்லிகார்ஜுனம், காசி ஆகியவற்றில் உள்ள இலிங்கங்களிலிருந்து அவர்கள் தோன்றினார்கள் என்பர். ஆயினும் உண்மையில் ஆராத்தியர்கள் பசவர் காலத்திலும் அதற்குப் பின்பும் தோன்றியவர்களாவர்.
(1) குரு, (2) இலிங்கம், (3) சங்கமம், (4) பாதோதம், (5) பிரசாதம், (6) பஷ்மம், (7) ருத்திராக்ஷம், (8) மந்திரம் என்பன அஷ்டாவரணங்களாகும். ஆவரணங்கள் இலிங்காயதருடைய காயத்தையும் மனத்தையும் பரிசுத்தப்படுத்தும் சாதனங்களாகும். மாயையில் இருந்து அவர்களை அவை காப்பாற்றுகின்றன. வீரசைவர்களை இலிங்காயதர் என்றும் சொல்வர். அவர்கள் இலிங்கத்தைக் கழுத்திலே அணிந்து கொள்ளும் வழக்கமுடையவர். இலிங்கம் ஒளிமயமானது என்றும் அக்கினியின் அடையாளம் எனவும் வீரசைவர் கொள்வர். குருவிடமிருந்து தீகூைடி பெறுமிடத்து இலிங்கதாரணம்
இந்துக்கலைக்களஞ்சியம்

செய்யப்படும். வீரசைவர் ஒருவர் சமய குருவிடமிருந்து சமய தீஷை மூலம் சீவன் முத்தராவதற்கு வேண்டிய நெறியினை அறிந்து கொள்வதால் அவர்கள் ஞான தீகூைடி பெறுமிடத்துப் புதிய பிறவியைப் பெறுவதாகக் கொள்ளப்படும். உபநயனச் சடங்கின்பின் அந்தணரை துவிஜர் என்று சொல்வது புராதன வைதீக முறை. இலிங்கதாரணம் சகிதமான வீரசைவரின் ஞான தீகூைடி உபநயனத்தைச் சார்ந்ததாகும். வீரசைவர் மரணமடைகின்ற போது சடலத்தைத் தகனம் செய்வதில்லை. இலிங்கமானது காயத்திலும், மனத்திலுமுள்ள மலங்களை எரிப்பதால், சீவனைப் பரிசுத்தப் படுத்துவதற்கு இறந்தவரின் சடலத்தை எரிக்க வேண்டியதில்லை என்று கருதுவர். அஷ்டாவரணங்கள் மூலமாக ஞானம் பெறுகின்ற ஒருவரைச் சிவயோகி என்றும் சிவசரணர் என்றும் சொல்வர். சிவ சரணர்கள் துறவிகளாகிச் செல்லுமிடங்களிலே வீரசைவ மார்க்கத்தைப் போதிப்பார்கள். அவர்களைச் சீவன்முத்தர் என்றும் கொள்வதுண்டு. வீரசைவர்கள் தினமும் இலிங்க வழிபாடு செய்தல் வேண்டும். அந்த வழிபாடு இஷ்டலிங்க வழிபாடு எனப்படும்.
தத்துவங்கள்:
பதி, பசு என்பவற்றைப் பற்றிய கோட்பாடுகள் வீரசைவ மரபிலே பிரதானமானவை. வீரசைவ நூல்கள் மூன்று வகையான மலங்கள் பற்றியும் பேசுகின்றன. ஆன்மாவினை ஆணவமலம் பற்றி உள்ளதால் உள்பொருள் வேறானது என்ற மாய உணர்வு ஏற்படுகிறது. சேதன உலகமும் காட்சிக்குரிய உலகமும் மாயா மலத்தின் காரணமாகத் தோன்றுகின்றன. கர்ம மலம் என்பது ஆன்மா மீண்டும், மீண்டும் பிறப்பதற்கு ஏதுவாகின்றது. சாதி, ஆயுள், போகம் என்ற வேற்றுமைகளுக்கு அது காரணமாகின்றது. பசுவாகிய ஆன்மா இம் முலங்களினாலே பந்தப்பட்டுள்ளது.
பரம் ஆகிய பதி படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் என்னும் ஐந்தொழில்களையும் பசுவாகிய ஆன்மாவின் பொருட்டு நிகழ்த்துகிறது. வீரசைவராக உள்ள ஒருவர் சீவன் முத்தராவதற்குப் பஞ்சாசாரங்களையும், அஷ்டாவரணங்களையும் துணையாகக் கொள்ளுதல் வேண்டும். இலிங்காசாரம், சதாசாரம், சிவாசாரம், விருத்தியாசாரம், கணாசாரம் என்பன பஞ்சாசாரங்களாகும். பரத்தின் அடையாளமான இலிங்கத்தைத் தினமும் வழிபட்டுத்தியானிப்பது இலிங்காசாரம், இலிங்காயதர்கள் ஏதோ விதமான தொழில் புரிவதோடு தர்மத்தையும் பின்பற்றி ஒழுக்கமான வாழ்க்கை மேற்கொள்ள வேண்டும். அது சதாசாரம் எனப்படும். நேரான வழிகளிலே சம்பாதித்துத் தனது தேவைகளுக்குப்பின் எஞ்சிய சம்பாத்தியத்தை வறியவர்களினதும் தேவையுடையவர்களினதும் நலத்தின் பொருட்டுச் செலவழித்தல் வேண்டும். சங்கமர்களுக்கும், சிவயோகியர் களுக்கும் அன்னதானம், வஸ்திரம் கொடுத்து ஆதரிக்க வேண்டும். இக் கடமைகளும் சதாசாரத்தில் அடங்கும் வீரசைவர்களாயினோரிடையே எதுவித பேதமுமின்றி சமபந்தியாகப் போசனம் செய்வதும், கலியாணம் செய்வதும் சிவாசார நிபந்தனைகளாகும்.

Page 285
சிவனிடத்தும், சிவனடியாரிடத்தும் மிகுந்த பக்தி செலுத்திப் போற்றிப் பணி செய்தல் விருத்தியாசாரமாகும். இது சைவ சித்தாந்தத்திலுள்ள தாசமார்க்கத்தைப் போன்றதாகும்.
ஆண்களோடும், பெண்களோடும், மிருகங்களோடும் கருணையோடு நடந்து கொள்ளுதல் விருத்தியாசாரத்தின் ஒர் அம்சமாகும். சிவநிந்தனை, இலிங்காயதர்களை நிந்தனை செய்தல், விலங்குகளை வதை செய்தல் போன்ற மகா பாதகச் செயல்களைக் கண்டிப்பது கனாசாரமாகும். வீரசைவக் கோட்பாடுகள் அதனைச் சேர்ந்தவர்களின் மத்தியில் ஒற்றுமை உணர்வும் சீர்திருத்தக் கருத்துக்களும் வலுப் பெறுவதற்கு உந்து சக்தியாக ஆரம்ப காலத்தில் விளங்கின.
சக்தி விஷிஷ்ட அத்வைதம்:
வீரசைவத்தில் ஸ்தல என்பது ஒரு தத்துவமாகும். வீரசைவாச்சாரியார்கள் பரமார்த்திகமான கடவுளை ஸ்தல என்று குறிப்பிடுவர். அதிலுள்ள முதலெழுத்தான ஸ்த என்பது உலகின் தோற்றத்திற்கும், நிலைபேற்றிற்கும் ஆதாரமான மூலப் பொருளைக் குறிக்கும். லகரமானது நகர்ந்து செல்லும் இலக்கையும் இறுதியில் அது அடையும் நிலையினையும் குறிக்கும், ஆகவே பரசிவமாகிய பரப்பிரம்மமே ஸ்தல என்பதாகும். அதுவே உலகின் தோற்றத்திற்கும், பரிமாண வளர்ச்சிக்கும் நிலை பேற்றிற்கும் ஆதாரமானது. பரசிவம் தானாக இயங்குவது, அந்தம் அற்றது (முடிவில்லாதது). புதிய பத்தி, சக்தி பரசிவத்தின் இணைபிரியாத அம்சமாகும். பரமசிவத்தினுடைய சுய உணர்வே விமர்ச-சக்தி எனப்படும். அந்த நிலையில் காட்சிக்குரியன வெல்லாம் பரசிவத்துடன் அடங்கி இருக்கும்; தெய்வீகம் ஆனது போன்று விளங்கும். எனவே பரமானது மணி போன்றது. மணிக்கு தனது ஆற்றலை அறியும் உணர்வு இல்லை ஆனால் பரசிவமானது தனது ஆற்றலை முழுமையும் உணர்ந்த நிலையில் உள்ளது. பரசிவத்தின் இந்த நிலையினை, தன்னை உணர்ந்த கோலத்தை விமர்ச என்றும் ஆத்ம விமர்ச என்றும் பரமார்ஷி என்றும் குறிப்பிடுவர். சக்தி, ஞானம், வேகம், உணர்வு ஆகிய யாவும் அதில் அடங்கி உள்ளன. எனவே பரசிவத்தின் விமர்ஷமானது சாமரசமானது. அது நெருப்பிலும், கதிரவனிலும் அமைந்துள்ள ஒளியினையும், வெப்பத்தினையும் போன்றதாகும். ஒரு பொருளுக்கும் அதன் தன்மைக்குமிடையிலே பிரிக்க முடியாத தொடர்பு உண்டு. அதே போல பரசிவமும், சக்தியும் பிரிக்கமுடியாதவை. எனவே தான் சித்தாந்த சிகாமணி என்னும் நூல் பிரம்மநிஷ்டா, சனாதனி எனச் சக்தியைக் குறிப்பிடுகின்றது. இவ்வர்ணனையிலிருந்து சக்தியானது சிவத்தின் அம்சமானது என்பதும் என்றுமே சிவனிலே தங்கியுள்ளது என்பதும் தெளிவாகின்றன. சக்தி விசிஷ்ட அத்வைதம் காஷ்மீரசைவம், வீரசைவம் அகிய இரண்டிற்கும் பொதுவானதாயினும் அதனைப் பற்றி வீரசைவத்தில் வரும் விளக்கம் தெளிவானது. வீரசைவத்தில் விஷிஷ்டத்துவம் என்பது இராமானுஜவேதாந்தத்திலும் சைவ சித்தாந்தத்திலும் உள்ளவாறு பதி, பசு, உலகம் ஆகிய முப்பொருள்களின் இணை

|L சேர்க்கையை குறிப்பிடுவதில்லை. ٹ945ےil
விமர்ஷத்தினுடைய இயல்பினை, அதாவது தானே தன்னை உணரும் தன்மையைக் குறிப்பது. ஆதலினால் அது எதனையும் ஆக்குவதற்கும் அழிப்பதற்கும் மறைப்பதற்கும் ஆற்றல் கொண்டது. அந்த ஆற்றல் அளப்பரியது.
ஷட் ஸ்தலம்:
இலிங்காயதர்கள் பரம்பொருளை ஸ்தலம் என்று குறிப்பிடும் வழக்கமுடையவர்கள். பரசிவமானது அளப்பரியது, அதீதமானது. ஆயினும் அதனை உணர்வதற்கு இலச்சினைகள் வேண்டும். ஆதலினாலே பரசிவம் இலிங்கமாகவும், அங்கமாகவும் பின்னமாகின்றது. பராசக்தியானது சக்தியாகவும்.பக்தியாகவும் பிரதிபலிக்கின்றது. பராபரத்தின் மேல் அன்பும் ஈடுபாடும் கொண்டு வழிபடுதல் பக்தியாகும். அப்பக்தியானது ஒரு உபாசனையாகும். அது தன்னை மறந்து இறைவனிடம் சரணடைந்து தன் நாமம் கெடுதலாகும். இலிங்கம் உபாஸ்யமானது, வழிபடப்படுவது. அங்கமென்பது உபாசகரான வழிபடுவோரைக் குறிக்கும். பக்தி என்பது உபாசனையாகிய வழிபாடாகும். ஷட் ஸ்தலம் என்பது உபாசனை மூலம் படிப்படியாக அங்கம், இலிங்கம் என்னும் இருமை நிலை கடந்து அவற்றின் வேறுபாடுகள் மறைந்து அடையப்படும் சாமரஸ்யமான ஒருமை நிலையாகும். ஸ்தலமானது அங்கம், இலிங்கம் என்று வேறுபட்டதும் அவை ஒவ்வொன்றும் மும் மூன்றாக மாற்றமடைகின்றன. தியாகாங்கம், போகாங்கம், யோகாங்கம் என மூன்று அங்கங்கள் உள்ளன. அவற்றிற்கு இசைவாக இலிங்கம் இஷ்டலிங்கம், புராணலிங்கம், இலிங்கம் என மூன்றாக வேறுபடுகின்றது. ஆன்மாவானது விழிப்பு நிலையில் விஸ்வஜிவ எனப்படும். கனவு நிலையில் தைஜஸ ஜீவ எனப்படும். ஆழ்துயில் கொள்ளும் நிலையில் அது பிரக்ஜாஜீவ எனப்படும். தியாகாங்க என்பது விஸ்வஜிவ நிலையின் வேறுபாடாகும். 9]gil உலகப்பற்றுக்களைத் துறந்தநிலை என்பதால் தியாகாங்க என்று சொல்லப்படும். பற்றுக்களைத் துறப்பதன் மூலம் ஆன்மா தனது சொரூப நிலையை அடைகின்றது. தியாகாங்கி ஆகிய ஒருவருக்கு இஷ்டலிங்கம் வழிபாட்டிற்குரிய பொருளாகிறது.
போகாங்கம் எனப்படுவது தைஜஸ்; ஜீவனுடைய வேறுபாடடைந்த வடிவமாகும். தைஜஸ்ஜிவன் சூக்கும காயத்தின் மூலமாக இன்ப துன்பங்களைப் பஞ்சேத்திரங்கள் வாயிலாக அனுபவிக்கின்றது. பக்தன் ஒருவன் சிற்றின்ப ஆசைகளைத் துறந்து தன்னைத்தானே உணர்ந்து கொள்வதன் மூலம் ஆன்ம ஈடேற்றத்தைநாடி முன்னேற்றமடைவான். அத்தகைய பக்தனை போகாங்கி என்பர். அவனுக்கு பிராணலிங்கம் வழிபாட்டிற்குரிய பொருளாகும். அவனுடைய மனதிலே மனமும் புலன்களும் தங்கள் இயல்பான குணங்களில் இருந்து விடுபட்டதால் அவன் எல்லாம் சிவமயமானது என்பதை உணர்ந்து கொள்வான். அவனுடைய இந்திரியங்கள் வயப்பட்ட பூர்வீக காயமானது அழிந்து விடுகின்றது. அவன் தன்னைத்தானே உணரும் நிலையை அடைகின்றான். அதனால் அங்கமும், இலிங்கமும்
இந்துக் க்களஞ்சியம்

Page 286
ஐக்கியமாகின்றன. யோகாங்கி ஒருவனுக்குப் பாவலிங்கம் வழிபாட்டுப் பொருளாகும். எனவே இஷ்டலிங்கம், பிராணலிங்கம், பாவலிங்கம் ஆகிய மூன்றும் பரசிவத்தின்
அம்சங்களானவை.
முப்பத்தாறு தத்துவங்கள்
வீரசைவத்தில் முப்பத்தாறு தத்துவங்கள் பற்றிய விளக்கம் கருத்து நிலையில் அமைந்ததொன்றாகும். அது பிரபஞ்சத்தில் உள்ள காட்சிப் பொருட்களையன்றி ஒருவர் அவற்றைப் பற்றிக் கொள்ளும் உணர்வுகளை அடிப்படையாகக் கொண்டது. அத் தத்துவங்களை சித், சித்அசித், அசித் என்பர். தூய்மையான மார்க்கத்துக்கு அடிப்படையான மார்க்கங்கள் ஐந்தும் சித் என்னும் வகையில் அடங்கும். மாயை முதல் புருஷன் வரையிலான அடுத்து வரும் ஏழு தத்துவங்களும் சித்ஆசித் என்னும் பிரிவில் அடங்கும். பிரகிருதி முதல் பிருதிவி வரையான ஏனைய 24 தத்துவங்களும் அசித் எனப்படும்.
சிவம், சக்தி, சதாசிவம், ஈஸ்வரன், வித்யா ஆகியன முதல் ஐந்து தத்துவங்களாகும். முதலாவதாகிய சிவ தத்துவம் எல்லாவற்றிற்கும் முந்திய தோற்றம் என்பதால் அது சத் மtaாகி உள்ளது. அது பராசக்தியோடு கூடிய பிராசாதலிங்கமாகும். இரண்டாவது தத்துவமாகிய சக்தி முதலாவது தத்தவத்தோடு தோன்றுவதாயினும் சம்பிரதாய பூர்வமாக அதனை இரண்டாவது என்று சொல்வதுண்டு. பரசிவமும் சக்தியும் சுடரும் கதிரும் போன்றவை. இதுவே சரலிங்கமான ஆதிசக்தியாகும். மூன்றாவது தத்துவம் சதாசிவம். அதில் நிர்ணய சக்தி வியாபகமாய் உள்ளது.
அது இச்சாசக்தி சகிதமான சிவலிங்கமாகும். ஈஸ்வரன் நான்காவதாக உள்ளது. அந்த நிலையில் ஞானம் மேலோங்கி இருக்கும்; அதனால் ஈஸ்வரதத்துவம் எனப்படும். ஞான சக்தியோடு கூடிய குருலிங்கமே ஈஸ்வரதத்துவமாகும். ஐந்தாவது வகையில் உள்ளது கிரியா சக்தியோடு கூடிய ஆசாரலிங்கம் எனப்படுவது.
மாயை, காலம், நியதி, ராகம், வித்யா, கலா, புருஷன் என்பன இரண்டாவது பிரிவிலுள்ள தத்துவங்களாகும். தனது அறிவினைத் தானாகவே மறைத்தல் மாயை ஆகும். பரசிவத்தின் நித்தியத்துவம் காலமாகின்றது; வியாபகத்துவமானது நியதியாகின்றது; பூரணத்துவமாகின்றது; சர்வக்ஞத்துவம் அகத்தவித்தியாவாகத் தோன்றுகின்றது. இறைவனுடைய சர்வ கர்த்திருத்துவம் கலாவாக வியாபிக்கின்றது. பரசிவம் இந்த ஐந்து கஞ்சுகங்கள் மூலம் தனது சுபாவத்தினை மறந்து புருஷனாகத் தோன்றும்.
பிரகிருதி முதல் பூமிவரையான இருபத்து நான்கு தத்துவங்களும் மூன்றாவது பிரிவில் அடங்கும். பிரகிருதிக்கு
மூன்று குணங்கள் உண்டென்று சாங்கியர் கூறுவர். அவை ஒரே
ந்துக்கலைக்களஞ்சியம்
260

சடத்தின் மூன்று வேறு தோற்றங்களாகும். ஆயினும் பிரபஞ்சமானது ஒடுங்கிய நிலையில் பரசிவத்தில் அடங்கி இருக்கும் என்று இலிங்காயதர் கொள்வர். அலைகளும், நுரையும், குமிழிகளும் சமுத்திரமானது அடங்கி இருக்கும் போது மறைந்திருப்பது போல பிரபஞ்சமானது பரசிவத்தில் மறைந்திருக்கும்.
வீரசைவ இலக்கியம்:
கன்னட மொழி, கன்னட இலக்கிபம் ஆகியவற்றின் வளர்ச்சியில் வீரசைவர் கொண்டிருந்த பங்கு முக்கியமானது வீரசைவர் தங்கள் சமய போதனைகளுக்கும் சமய விளக்கங்களுக்கும் தேசவழக்கான கன்னட மொழியினைப் பயன்படுத்தினார்கள். சமயப் பிரசாரத்திற்கு வேண்டிய நூல்களை அவர்கள் வசனநடையில் எழுதியதால் வசனநடையிலான இலக்கியம் கன்னடத்திலே பெருவளர்ச்சி அடைந்தது. வீரசைவம் தெலுங்கு தேசத்திலும் தமிழகத்திலும் ஓரளவிற்கு பரவியதால் தமிழிலுந் தெலுங்கிலும் வீரசைவ நூல்கள் சில எழுந்தன. வீரசைவம் பற்றிய பிரதானமான நூல்கள் கொய்சலர் காலத்திலும் விஜயநகர ராயர்களின் காலத்திலுந் தோன்றியனவாகும்.
கன்னடத்தில் எழுதப்பெற்ற வீரசைவ நூல்கள் மூன்று பிரதான வகைகளைச் சேர்ந்தவை, வசன என்று கன்னடத்திலே சொல்லப்படும் சிறு நூல்கள் ஒரு வகையானவை. சிவனடியார்கள், சமய குரவர்கள் என்போரைப் பற்றிய நூல்கள் இன்னொரு வகையானவை. சமயக் கோட்பாடுகளை விளக்குவதற்கு எழுதப்பட்டவை வேறொரு வகையினவாகும். வீரசைவத்தின் ஸ்தாபகரான வசபரும் அவரது காலத்து ஆச்சாரியர்களும் வசன என்று சொல்லப்படும் நூல்களை எழுதத் தொடங்கினார்கள். கடினமான விஷயங்களைப் பாமரரும் புரிந்து கொள்ளக் கூடிய இலகுவான, எளிமையான நடையில் எழுதினார்கள். உபதேசங்களுக்கும் இலக்கியத்திற்கும் ஒரு விதமான நடையினை அவர்கள் பயன்படுத்தினார்கள். அதனால் அவர்களுடைய சமய போதனைகள் சமுதாயத்தின் பல நிலைகளில் உள்ளவர்களையுங் கவர்ந்தன. உழவர்களிடையிலும் கம்மாளரிடையிலும் வீரசைவம்
வேகமாகப் பரவியது.
இருநூறுக்கும் மேலான ஆசிரியர்கள் வசன நூல்களை எழுதினார்கள். அவர்களிற் பலர் பெண்களாவர்; அக்கமாதேவியார் அவர்களிலே தலைசிறந்தவர். வசனங்கள் சிறிய பந்திகளைக் கொண்டவை. அவை ஒவ்வொன்றும் பிரதேச வழக்கான சிவநாமங்களில் ஒன்றுடன் முடிவடையும். செல்வம் நிலையாமை, வெறும் வித்துவத்தினாலும் கிரியைகளினாலும் மட்டும் சமய ஞானத்தைப் பெற்றுக் கொள்ள முடியாதமை, யாக்கை நிலையாமை, சிவபக்தரின் பெருமை, சிவபெருமானிடத்துச் சரண்ாகுதல் போன்றவற்றை அவை விளக்கும் வண்ணம்
எழுதப்பட்டுள்ளன.

Page 287
காலஞானம் என்னும் பகுதி சில வசனங்களிற் காணப்படும். வீரவசந்தராயன் என்னும் அரசனொருவன் அவதாரமாகிக் கல்யாணி நகரினைப் புனரமைத்து வீரசைவ சமயம் மேலோங்குவதற்கு வழிசெய்வானென்ற கதை காலஞானங்களிற் சொல்லப்படுகின்றது.
வசனங்களில் வசபரும் அவரது மருகரான சென்ன வசபரும் எழுதியவை காலத்தால் முற்பட்டவை. அவர்களுக்கு பின்பு அந்த வகையான இலக்கியம் படைத்தவர்களில் பண்டிதர், ஆச்சாரியர் என்னும் இரு பிரிவினர் வீரசைவரிடையே மிகுந்த பாராட்டையும் மதிப்பையும் பெற்றனர். மஞ்சன்ன என்னும் சிவலெங்கர், பூீபதி பண்டிதர், மல்லிகார்ச்சுன பண்டிதாராத்யர் ஆகிய மூவரும் முதலாவது பிரிவினைச் சேர்ந்தோராவர். கொள்ளிப்பாகத்து ரேவணசித்தர், கொல்லாபுரத்து மருளசித்தர், பண்டிதாராத்யர், ஏகோராமி தந்தே, விஸ்வேஸ்வர ஆச்சாரியர் என்னும் ஐவரும் ஆச்சாரியர்களாவர்.
லிங்காயதர்கள் தலங்களைப் பற்றியும் தனியான குரவரைப் பற்றியும் தொகையடியார்களைப் பற்றியும் பெருமளவிலான நூல்களை எழுதியுள்ளனர். கொய்சல மன்னனான முதலாம் நரசிங்கனின் காலத்தில் (152-73) வாழ்ந்த ஹரீஸ்வரர் சிறந்த கவிஞராக விளங்கினார். அவர் ஹளேவீட்டிலிருந்த கரணிகர் குலமொன்றிலே பிறந்தவர். அவருடைய நூல்களிற் பம்பசதகம் என்பதும் ஒன்றாகும். அது ஹம்பியிலுள்ள விரூபாக்ஷரைப் பற்றிய நூலாகும். அதில் நூறு செய்யுள்கள் அடங்கியுள்ளன. அது ஸ்தல மகாத்மியம் போன்ற நூலாகும்.
கிரிஜா கல்யாணம் என்பது அவர் எழுதிய வேறொரு நூலாகும். அது சிவன், பார்வதி ஆகியோரின் திருக்கல்யாணம் பற்றிய காவியம். அதிலே பத்துக் காண்டங்கள் உள்ளன. சிவகணதரகளேகளு என்பது ஹரீஸ்வரர் எழுதிய மற்றுமொரு நூலாகும். வீரசைவர், புராதனர் என்று பாராட்டும் சைவ நாயன்மார் அறுபத்து மூவரைப் பற்றியும் வசபரைப் பற்றியும் சிவனடியார்களான பிறரைப் பற்றியும் அதில் வர்ணனைகள் உள்ளன.
ஹரீஸ்வரரின் மருகரான ராகவாங்கர் பல பிரதானமான நூல்களின் ஆசிரியராக விளங்கினார். ஹம்பியிற் பிறந்தவரான ராகவாங்கர் ஷட்பதிஎன்னும் செய்யுள் நடையை முதல் முதலாகக் கையாண்டவர். ஹரிஸ்சந்திர காவியம், சோமநாத சரிதம் ஹரிஹரமகத்துவம் விரேஸ்வர சரிதம் சித்தராமபுராணம் சரப சரிதம் என்பன அவரின் நூல்களாகக் கொள்ளப்படுகின்றன. அவையனைத்தும் வீரசைவம் பற்றிய நூல்களாகும். ஹரிஹர மகத்தவம் ஹம்பிலுள்ள சிவஸ்தலம் பற்றிய தோத்திர நூலாகும். புலிகரை என்னுமிடத்தில் வாழ்ந்த சோமநாதர் என்பவரைப் பற்றியது சோமநாத சரிதம் சித்தராம புராணம் சொன்னலிகே சித்தராமர் என்னும் சிவயோகியாரைப் பற்றியது.
م

261
வீரசைவக் கோட்பாடுகளின் விளக்கமாய் அமைந்துள்ள தீஷாபோதி நரசிங்கதேவனின் பிரதானியாக விளங்கிய கெரேய பத்மரசரால் எழுதப்பெற்றது. அதன் பகுதிகள் குருசீட சம்வாதங்கள் போல அமைந்துள்ளன. சிவயோகி என்ற நிலையினை அடைந்த பத்மரசர் லிங்காயதரின் அபிமானத்திற்கு உரியவரானார். எனவே அவரைப் பற்றிப் பத்மராஜபுராணம் என்னும் நூல் பால்குருகி சோமநாதரால் எழுதப்பெற்றது. சோமநாதர் தெலுங்கு தேசத்தவர். கோதவரி மாவட்டத்துப் பால்குருகி என்னும் ஊரிற் பிறந்தவர். அவர் தெலுங்கிலும் கன்னடத்திலும் வீரசைவ நூல்களை எழுதியுள்ளார். வைணவரை வாதில் வென்று வீரசைவத்தின் மகிமையை நிலை நாட்டியர்; திருக்கைலாயத்துக்கு தலயாத்திரை போனவர். விஜயநகர காலத்தவரான தொண்டார்ய என்னுங் கவிஞர் சோமநாதரைப்
பற்றிய புராணமொன்றினைப் படைத்துள்ளார்.
பால்குறிச்சி சோமநாதர், வசபபுராணம் என்றொரு நூலைத் தெலுங்கில் எழுதினார். அது வீரசைவத்தின் முதல்வரான வசபரைப் பற்றியது; அது பின்பு வீமகவி (1369) கன்னடத்தில் எழுதிய வசபபுராணத்திற்கு அது மூலநூலாகியது. சில சம்பாதனே சஹஸ்ர்கனநாம பஞ்சரத்ன என்பன சோமநாதர் எழுதிய கன்னட நூல்களாகும். மேலும், அவர் ரகளே, வசன
என்னும் வகைக்குரிய பல ஆக்கங்களின் ஆசிரியராவார்.
விஜயநகரப் பேரரசர் காலத்தில் (1336 - 1650) அடியார்கள், ஆச்சார்யர்கள் என்போரைப் பற்றிய பல நூல்களும் தத்துவ விளக்கமான நூல்களும் உருவாக்கப்பட்டன. கன்னடக் கவிஞரிலே தலைசிறந்தவரான வீமகவி.1369 ஆம் ஆண்டளவில் வசபபுராணத்தை எழுதிமுடித்தார். அதிலே வீரசைவ மரபில் வசபரைப்பற்றி வழங்கிவந்த செய்திகளும் ஐதீகங்களும் இலக்கிய வடிவம் பெற்றுள்ளன. வசபர் நந்திதேவரின் அவதாரமானவர் என்ற கருத்து வலியுறுத்தப்படுகின்றது. வீரசைவத்தை நிலைநாட்டுவதற்கென்று வசபர் திருவவதாரஞ் செய்தார் என்ற கருத்து வசபபுராணத்தில் அழுத்தம் பெறுகின்றது. மேலும் அவர் புரிந்த 84 அற்புதங்கள் அந்நூலில் விவரமாகச் சொல்லப்படுகின்றன. புராதனர், ஆச்சாரியர் என்போரைப் பற்றி எழுந்த நூல்கள் அதிகமுண்டு. பண்டிதாராத்யர், ரேவனசித்தர் என்போரைப் பற்றிப் பல நூல்கள் எழுதப்பட்டுள்ளன.
தேவராய மகாராசரின் காலத்தில் விஜயநகரத்தில் வீரசைவரின் செல்வாக்கு மிகுந்து காணப்பட்டது. மகாராசரின் அமைச்சர்களில் இருவர் வீரசைவர். அவர்களில் ஒருவரான லக்கண்ணர் சிவதத்துவசிந்தாமணிஎன்னும் நூலை எழுதினார். அது வீரசைவம் பற்றிய பெருங் களஞ்சியமாகும். சமயக் கோட்பாடுகளைப் பற்றியும் சமயாசாரியார்களைப் பற்றியும் அதில் விளக்கப்பட்டுள்ளது. நூற்றொண்டு ஸ்தல என்னும் நூலை ஜக்கனார்ய என்னும் அமைச்சர் எழுதினார். அது 101
is a க்கவிஜஞ்சிஐச்

Page 288
விஷயங்களைப் பற்றி விளக்கும் பெரு நூலாகும். குரு வசபர் சப்த காவியம் என்னும் ஏழு நூல்களையும் அவதூதகிதே என்னும் நூலையும் எழுதியுள்ளார். வீரசைவரின் சமயக் கோட்பாடுகள் சம்வாதங்களின் வடிவத்திலே விளக்கப்படுகின்றன. அவதூதகிதே பற்றற்ற நிலையின் சிறப்புகளைப் போற்றும் நூலாகும். சைவத்துறவிகளின் சாதனைகளைப் பற்றிக் கூறும் பிரெளடராய சரிதம் அத்ருஷ்யரால் 1495 ஆம் ஆண்டளவில் எழுதப்பட்டது. அதன் ஆசிரியரான ஜக்களார்யர் நூலை இரண்டாம் தேவராயர் முன்னிலையிலே வாசிப்பது வழக்கம்
என்பது ஐதீகம்.
வசபரைப் பற்றி எழுதப்பட்ட புராணங்களில் ஒன்று மலவசபராஜ சரித, அதனை எழுதியவர் (கி. பி. 1500) சிங்கிராஜர். ஆசிரியரின் பெயரின் காரணமாக அது சிங்கிராஜ புராணம் என்றுஞ் சொல்லப்படும். வசபர் புரிந்த 88 அற்புதங்கள் பற்றியும் விஜ்ஜலர் அரண்மனையில் அவர் சமயவிரோதிகளை வாதில் வென்றமையும் அதிலே விவரமாகச் சொல்லப்படுகின்றன. இரண்டாம் தேவராய மகாராயரின் அரண்மனையில் (1422-26) ஆஸ்தான கவிஞராக விளங்கிய சாமரஸர் பிரபுலிங்கலீலை என்னும் நூலை இயற்றினார். அது அல்லபிரபு என்னும் பிரபுலிங்கரைப் பற்றியதாகும். அதிலே பிரபுலிங்கர் கணபதியின் அவதாரமாகக் கொள்ளப்படுகின்றார். அந்நூலைப் பெரிதும்
※※※※
சோடச கணபதிகள்
ஆகமங்களில் முப்பத்திரண்டு விநாயகர் திருவுருவங்கள் குறிப்பிடப்படுகின்றன.
அவற்றுள் பதினாறு வகையான திரு உருவங்கள் குறிப்பிடத்தக்கன. இப் பதினாறு வகையான திரு உருவங்கள் பல்வேறு நூல்களின் பிரகாரம் பலவிதமாக கூறப்படுகின்றன. ஒரு நூலின் ஆதாரப்படி வக்ர துண்ட கணபதி, சிந்தாமணி கணபதி, விக்னராஜ கணபதி, பாலச்சந்திர கணபதி, கஜானர், மல்லாலர், மத்தமயூரேசர், கணேசன், கணபதி, மயூரேரர், தூமகேது துண்டிராஜர், மகோற் கட கணபதி, வல்ல கணபதி, சித்திபுத்தி கணபதி ஆகியன கூறப்படுகின்றன.
சோடச கணபதி வடிவங்கள் பிறிதொரு நூலின் ஆதாரப்படி பாலகணபதி, தருண கணபதி, பக்தி கணபதி, வீர கணபதி, சக்தி கணபதி, துவிஜ கணபதி, பிங்கள கணபதி, உச்சிஷ்ட கணபதி,
இந்துக்கலைக்களஞ்சியம் 262

போற்றிய தேவராய மகாராயரின் ஏற்பாடுகளின் பயனாக அது தமிழிலும் தெலுங்கிலும் எழுதப்பட்டது. வீரசைவ ஆச்சாரியார்களைப் பற்றி எழுந்த நூல்களில் மற்றொன்று சென்னகேசவ புராணம் என்பதாகும். சிவபெருமானின் அவதாரமாகச் சென்னகேசவர் கருதப்படுகின்றார். சென்னகேசவர் சொன்னலிகே சித்தாராமருக்கு வீரசைவ
தத்துவங்களை உபதேசஞ் செய்தவர்.
ஷட்ஸ்தல ஞானாமிர்தம் சித்தலிங்க யதி என்பது தொண்டத சித்தேஸ்வரர் எழுதிய நூலாகும். அவருடைய நூலில் 700 வசன என்னும் பகுதிகள் அடங்கியுள்ளன. சித்தலிங்கர் விரூபாக்ஷ மகாராயர் காலத்தில் (1465-85) வாழ்ந்தவர். குனிகல் என்னும் பகுதியிலுள்ள யெதியூரிலே அவரின் பெயரால் வழங்கும் மடமும் கோயிலுமுள்ளன. சித்தலிங்கரின் சீடர்கள் பலர் இவ்வாறான நூல்களை எழுதியுள்ளனர். சித்தேஸ்வர புராணம் என்பதை விரக்த தொண்டார்ய என்பவர் எழுதினார். சிவஜோகபிரதீபிக விவேக சூடாமணி நிஜகுண சிவயோகி என்பவரின் நூலாகும். கிருஷ்ண தேவராயரின் காலத்தில் (1509-29) வாழ்ந்த மல்லனார்ய கன்னடத்திலும் சமஸ்கிருதத்திலும் பல நூல்களை எழுதினார். பாவசிந்தாரத்ன (ம்) அவற்றி லொன்றாகும். அது திருஞானசம்பந்தரின் பதிகங்களை அடிப்படையாகக்
கொண்டதென்பர். (?)
{
※
{
விக்ன கணபதி, கூழிப்பிர கணபதி, ஏரம்ப கணபதி, லட்சுமி கணபதி, மஹா கணபதி, புவனேக கணபதி,நிருத்த கணபதி, ஊர்த்துவ கணபதி ஆகியனவாகும்.
பால கணபதி யானை முகமும் நான்கு திருக்கரங்களும் உடையவராகவும், உதிக்கின்ற செங்கதிர் போன்ற நிறமுடையவராகவும் குழந்தைத் திருமேனி உடையவராகவும் கூறப்படுகின்றார். அத்துடன் வாழை, மா, பலா,விளா, கரும்பு போன்றவற்றைக் கரத்தில் கொண்டவராய், ஒருமுகம் உள்ளவராய், சூரிய பிரகாசமாக பிரகாசிப்பவர், இவர்தம் துதிக்கையில் மோதகம் விளங்கும்.
தருண கணபதி எட்டுத் திருக்கரங்களையும் யானை முகத்தையும் உடையவர். திருக்கரங்களில் பாசம், அங்குசம், அபூபம், விளாம்பழம், நாவற்பழம், ஒடித்த தன் கொம்பு, நெற்கதிர், கரும்பின் துண்டு இவற்றை உடையவர் , சிவந்த திருமேனி உடையவராக விளங்குபவர்.

Page 289
பக்தி கணபதி, தேங்காய், மா, வாழை, சர்க்கரைப் பாயாசம், இவற்றை நான்கு திருக்கரங்களில் ஏந்தி யானை முகம் உடையவராய் விளங்குபவர்.
வேதாளம், வேல், அம்பு, வில், கேடகம், மட்டி, கதை, அங்குசம், நாகம், பாசம், சூலம், குந்தாலி, மழு, கொடி, ஆகிய பதினாறையும் பதினாறு கரங்களில் தாங்கி, சிவந்த திருமேனியையும் சிவந்த முகத்தையும் உடையவர் வீரகணபதி.
சக்தி கணபதி செவ்வந்தி வானம் போன்ற நிறமுடையவராகவும் தொடையின் மேல் தேவியைக் கொண்டவராகவும் அவளைத் தழுவிக் கொண்டு இருப்பவர். பாசம், பூமாலை, இவற்றைத் தாங்கிய திருக்கரத்துடன் அஞ்சேல்
என்ற அபயக்கரம் உடையவர்.
துவிஜகணபதி நான்கு திருக்கரங்களிலும் முறையே புத்தகம், அட்சமாலை, தண்டம், கமண்டலம், இவற்றைத் தரிப்பவர். கோரமுகம் உடையவர், நான்கு முகங்களை உடையவரும் சந்திரன் போன்ற வெண்மை உடையவருமாக குறிப்பிடப்படுகின்றார். பிங்கள கணபதி ஒரு கரத்தில் மாம்பழமும், மற்றொரு கரத்தில் கல்பமஞ்சரியும், பரசு முதலிய ஆயுதங்களையும் கொண்டவராய், வர்ணிக்கப்படுகின்றார்.
உச்சிஷ்ட கணபதி, நீலநிறத் திருமேனியராய் யானை முகத்துடன் தியானிக்கப்படுபவர். நீலோற்பம், மாதுளம்பழம், வீணை, நெற்கதிர், அட்சமாலை, ஆகியவற்றை உடையவர்.
விக்ன கணபதி சங்கு, கரும்பு, வில், மலரம்பு, கோடாரி, பாசம், சக்கரம், கொம்பு மாலை, பூங்கொத்து, பாணம் முதலியவற்றோடு கூடிய திருக்கரங்களை உடையவர், ஆபரணங்கள் நிரம்பத்தரித்தவர். பொன்மேனியராக விளங்குபவர்.
கூழிப்பிர விநாயகர் தந்தம், கற்பகக் கொடி, பாசம், இரத்தின கும்பம், அங்குசம் ஆகியவற்றைத் ஏந்தியவர். செவ்வரத்தம் பூப் போன்ற அழகிய திருமேனியுடையவர்.
ஏரம்ப கணபதி ஐந்து சிரசு உடையவர். ஐந்து சிரசில் ஒன்று சிங்க முகம் மற்றைவை யானைமுகமாக அமைந்து காணப்படும், அபயம், வரதம், பாசம், தந்தம், அட்சமாலை, பரசு ஆகியவற்றை திருக்கரத்தில் தாங்கியவர். பசுமை கலந்த கருமை நிறமுடையவர். சிங்க வாகனம் உடையவராக இவர் வர்ணிக்கப்படுகின்றார்.
எட்டுக் கைகளிலும் கிளி, மாதுளம் பழம், கலசம், அங்குசம், பாசம், கற்பகம் கொடி, கட்கம், வரதம் இவற்றைத் தாங்கியவர் லட்சுமி கணபதி. இவர் வெண்மை நிறத்தோடு நீலத்தாமரை ஏந்திய இரு பெருந் தேவிகளோடு திகழ்பவராகத் கூறப்படுகின்றார்.
மகா கணபதி- இவர் பத்மாசனராய் கதை, தந்தம், பாசம், கும்பம், என்பவற்றுடன், பொன் நிறமாய் யானை முகத்துடன் தியானிக்கப்படுபவர்.

புவனேச கணபதி கரும்பு வில், புஷ்பபாணம், பாசம், அங்குசம் உடையவராய் சகலாபரணம் அணிந்தவராய்த் தியானிக்கப்படுகிறார்.
நிருத்த கணபதி பாசம், அங்குசம், ஒடிந்த தந்தம், கற்ப தருவின் மலர் உடையவராய் நிருத்த பதம் உடையவராய் வணங்கப்படுவர்.
கனுவக்கிரம், மூன்று கண்கள், ஒற்றைக் கொம்பு, பாசம், அங்குசம், ஊர்த்துவ வடிவம், துதிக்கையில் லட்டு உடையவராய் வணங்கப்படுவர் ஊர்த்துவ கணபதியாகும். (தேஹ.)
சோடச சுப்ரமண்ய மூர்த்தங்கள்
சிப்பிரமணியக் கடவுள் அடியார்களின் பக்குவ நிலைக்கு ஏற்ப உருமேனி தாங்கி வந்து அருள் செய்கிறான். நின்ற கோலத்தும், இருந்த கோலத்தும் அருட்காட்சி வழங்குகின்றான். ஒருமுகம், ஆறுமுகம், இரண்டு கரங்கள், நான்கு கரங்கள், ஆறுகரங்கள், எட்டுக் கரங்கள் பன்னிரண்டு கரங்கள் கொண்டு ஒரு சக்தியோடும், இரு சக்தியோடும், பதுமாசனத்திலும், மயிலிலும், யானையிலும், சிங்கத்திலும் எழுந்தருளி திருவருள் பாலிக்கிறான். இரண்டு கரங்களையுடையன சாத்வீக மூர்த்திகள் என்றும் நான்கு கரங்களுடையன இராசத மூர்த்திகள் என்றும், நான்கிற்கு மேற்பட்ட கரங்களுடையன தாமச மூர்த்திகள் என்றும் கூறப்படுகின்றன.
இத்தகைய மூர்த்தி பேதங்கள் அனைத்தையும் காரணாகமமும் காமிகாகமமும் அம்சுமத் பேதாகமமும் யோகபேரம், போகபேரம், தியான பேரம் என மூன்றாகப் பகுக்கின்றன.
முருகனுடைய மூர்த்தி பேதங்கள் பதினாறாக, பூரீதத்வநிதியும், குமாரதந்திரமும் வேறுவேறாகக் கூறுகின்றன. குமாரதந்திரக் கூற்றுப்படி,
1. ஞானசக்திதர மூர்த்தி
ஒருமுகம், இரண்டு திருக்கரம், வலது திருக்கரத்தில், சக்திவேல் - இச்சை, ஞானம், கிரியை எனும் மூன்று இலை கொண்ட வேல், பகைவரை அழிக்கும் இடக்கரம் தொடையில் அமைந்திருக்கும். இதுவே திருத்தணிகை முருகன் மூலவர் திருவுருவம்.
இச்சா ஞான, கிரியை எனும் இவை மூன்றிலையாய் கிளைத்தெழுந்திட்ட அயில் வேல் ஒருகை வைத்தமைத்து நச்சாதவரைத் தெறும் ஒருகை குறங்கில் அமைத்து. ஞான சக்திதரன துருவம்
(தணிகைப் புராணம் - அகத்தி. 64)
இந்துக்கலைக்களஞ்சி:

Page 290
2. ஸ்கந்த மூர்த்தி
ஒருமுகம்; இரண்டு திருக்கரம், மழுப்படை போன்ற கோவணத்தண்டு வலக்கரத்தில் இடுப்பில் இடது கரம் அமைந்திருக்கும்; இது பழனி தண்டாயுதபாணியின் திருக்கோலம் போலும்.
வைவாய்க் கணிச்சிப் படையென்ன வதிவித் திடுங்கோ வனத் தண்டு கைவாய் வலத்தின் அமைந்தருளிக் கடியில் இடக்கை புதித்தருளி. கந்தன் உருவம்
(தணிகைப் புராணம் - அகத்தி. 65)
3. ஆறுமுக தேவசேனாதிபதி
ஆறு திருமுகம்; பன்னிரண்டு திருக்கரங்கள்; ஒருகை வலது தொடையில் - தேவ சேனையைத் தழுவி மார்போடு அணைப்பது போல, ஒரு கை அபயம்; ஏனைய பத்து கரங்களில் கேடயம், வாள்; சூலம் குலிசம், வேல்; வில்; கதை, சேவல், தாமரை அம்பு.
ஒருகை தனது வலக்குறங்கில் அணங்கைத் தழுவி
யுகளமுலை மருவ அபயம் ஒன்றாக வளர் தோல், வாள், குலங்குலிசம் பொருவேல் வாள்வில் கதைபுள் அம்புயம் கோல் பதிதும்
கரம்பத்தின் இருவும் ஆறுமுகத் தேவ சேனா பதிசிர் இழைப்போரும்.
(தணிகைப் புராணம் - அகத்தி 66)
4. சுப்பிரமண்ய மூர்த்தி
ஒரு திருமுகம், இரண்டு திருக்கரங்கள் இடது கரம் இடுப்பில், வலது கரம் அபயம்; இது திருவிடைக்கழிமுருகன் திருவுருவம் போலும்,
இருள்கால் சீக்கும் மணிக்கடக இடக்கை கடியிற் கொள
இருவி வெருள்கால் உளத்தோர்க் கஞ்சலென விரவும்
பயஞ்சாடபயமெனத் தெருள்கால் ஒருகை வலத்தமைத்துத் திகழ்ந்து
பணிவோர்தமக்கெல்லாம் அருள்கால் விழிச் சுப்பிரமணிய அண்ணல் உருவம்
அமைப்போகும். (தணிகைப் புராணம்- அகத்தி. 67)
5.களிற்றுார்திப் பெருமான் ( கஜாரூட மூர்த்தி)
ஒரு திருமுகம்; இரு விழிகள் நான்கு திருக்கரங்கள்இடப்பக்கம் வரதம்; சேவல் ஒரு கரத்தில், வேல் ஒரு திருக்கரத்தில், வாள் ஒரு திருக்கரத்தில்,
ஒற்றை முகமும் இணைவிழியும் மும்மைப் பயனும்
ஒருங்களிக்கும் கொற்ற வரத முன்றலைக் குக்குடம் மோரிரண்டும்
இடங்கதிர்ப்ப மற்றை வலப்பால் மணிவேலும் வாளுங் கதிர்ப்பக்
கரநான்கும் பெற்ற மதவெங் களிற்றூர்திப் பெருமான் உருவம்
சமைப்போம்
(தணிகைப் புராணம்- அகத்தி 68)
இந்துக்கலைக்களஞ்சியம் 264

6. சரவணபவ மூர்த்தி
திருமுகம் ஆறு, திருக்கரங்கள் பன்னிரண்டு; திருக்கரங்களில் விளங்குவன. வேல்; கேடயம், கண்டாமணி, தாமரை, கோழிக்கொடி கதை, உளி, அம்பு வாள், வரதம், அபயம்; வில்,
ஞாங்கர் படைக்கே டகங் கண்டை நளினம் சேவல் கதை இடங்கம் ஒங்கும் பகழிவாள் வரதம்
ஒளிரும் அபயம் சிலையவைதாம் தாங்கும் கரங்கள் ஈராறும்
தயங்கும் வதனம் ஓராறும் ஆங்க விளங்க அருட்சரவ
எணபவன் உருவம் ஆக்குநரும்
(தணிகைப் புராணம் - அகத்தி. 69)
7. கார்த்திகேய மூர்த்தி
திருமுகங்கள் ஆறு, திருக்கரங்கள் ஆறு இடது திருக்கரங்களில்-குலிசம் கேடகம், வரதம், வலது திருக்கரங்களில் - வேல்; வாள்; அபயம். இம்மூர்த்தி பயம், பிறவிப் பிணி இவைகளை நீக்குபவர்.
சீர்த்த குலிசம் கேடகமே செழித்த வரதம் இடப்பாலும் கூர்த்த மணிவேல், வாளபயம் குலாவு வலப்பாலும் கவின ஏர்த்த ஆறு மலர்க்கரமும் இலங்கும் வதனம் ஓராறும் குர்த்த பிணிகள் தபுங்கார்த்திகேயன் உருவம்
தொகுப்போரும் (தணிகைப் புராணம்- அகத்தி. 70)
8. குமாரசுவாமி
ஒரு திருமுகம், நான்கு திருக்கரம், வலது புறத்தில் வேலும் வாளும், இடது புறத்தில் சேவற் கொடியும், கேடயமும், நகைமுக வள்ளி சமேதர்.
வைத்த சுடர்வேல் வாளிரண்டும் வலப்பால் இடப்பால்
வாரணப்புள் பைத்த மணித்தோல் ஒரிரணம் பயில அலர்ந்த நாற்கரமும் முத்த முறுவற் குறமாது விளங்க முன்வந் தடுத்து மலக் கொத்து விளியக் கடைக்கணிக்கும் குமாரன் உருவம்
குயிற்றுநரும் (தணிகைப் புராணம்- அகத்தி,71)
9. ஆறுமுகசுவாமி
ஆறு திருமுகங்கள்; பன்னிரண்டு திருக்கரங்கள், மயில்
வாகனம், தேவசேனை வள்ளி சமேதர்; வலது திருக்கரங்கள் ஆறில்-வேல்; அம்பு, வாள்; திகிரி, பாசம், அபயம்; இடது திருக்கலங்கள் ஆறில் - குலிசம், வில், கேடயம்; சேவல், அங்குசம், வரதம்.
படைவேல் பகழிவாள் திகிரி பாசம் அபயம் வலத்து
- இடத்துச் சுடர்வார்குலிசம் சிலை தோல் புள் தோட்டி வரதம்
இவை பரித்த

Page 291
தடவான் கரமும் முகம் ஆறும் தனிமாமயிலும் இருமாதர் உடனாம் எழிலும் தரும் ஆறுமுகவன் உருவம்
உஞற்றுநரும் (தணிகைப் புராணம்- அகத்தி.72)
10. தாரகாந்த மூர்த்தி
ஆறு திருமுகம்; பன்னிரண்டு திருக்கரங்கள், வரதம்; சேவற்கொடி கேடகம், அங்குசம் : பாசம், குலிசம், அபயம்; வாள்; சூலம் சக்கரம், தண்டம்; வேல்.
வரதம் கொடி கேடகம் தோட்டி வார்ந்த எறுழ்பாசங்குலிசம் பரவும் அபயம், வாள், குலம் பரிதி முசலம் சேவல் முந்நாற் கரமும் விளங்க ஆறுமுகமும் கதிர்ப்ப விழிகள் கருணை
மழை தரவென்றருளும் தாரகாந்தகன்சீர் உருவம் சமைப்போரும்
(தணிகைப் புராணம் - அகத்தி. 73)
11. சேனாபதி மூர்த்தி
ஆறு திருமுகங்கள், பன்னிரு திருக்கரங்கள் அபயம், முசலம், வாள், சூலம், வேல், அங்குசம் - வலது திருக்கரங்களில், வரதம், குலிசம், வில், தாமரை, தண்டம், கதை - இடது திருக்கரங்களில்,
அபயம், முசலம், வாள், குலம் அயில்வேல், தோட்டி வலம்
வரதம்
தபுசீர்குலிசம் சிலை, பதுமம் தண்டம் கதை மற்றிடமாக
உபய ஈராறு கரதலமும் ஒளிர்வித்தாறுமுகந் தோற்றிச் சுயநன் கருளியிடர் துடைக்குஞ் சேனாதிபதிசிர் தொகுப்
போரும்
(தணிகைப் புராணம்- அகத்தி. 74)
12. பிரம சாத்த மூர்த்தி:-
ஒரு திருமுகம், நான்கு திருக்கரங்கள், வரதம், குண்டிகை (கமண்டலம்)- இடது கரங்களில், அபயம், அக்ஷமாலை- வலது திருக்கரங்களில்,
வரத மணிக் குண்டிகை யிரண்டும் வாமத் திருக்கைத்
தலமாக்கிப் புரவு புரியும் அபயமொடு புரைதிர் அக்கவடம் வலப்பால் இரவை யிரிக்கும் வலத்தமைத்திட் டெல்லா உலகும்
இனிதளித்துப் பிரம சாத்தன் எனப் பொலிந்த பெருமான் உருவம் பிறக்கு
நரும் (தணிகைப் புராணம்- அகத்தி.75)
13. வள்ளி கல்யாண மூர்த்தி
ஒரு திருமுகம், நான்கு திருக்கரங்கள், வள்லி வலது பக்கத்தில், வலக்கரங்கள்- அபயம், அக்ஷவடம், இடக் கரங்கள் இரத்னகும்பம் , ஒருகரம் இடுப்பில்; திருமால் நீர்வார்த்துத் தத்தம் செய்வது.
அல்யாப்பவிழ்க்கும் வலக்கரங்கள் அபயம்
அக்கவடந்தாங்க வெல்யாப்புறுத்த மணிக்கடமும் கடியும்
இடக்கைத்தலஞ்சேரக்

சொல்யாழனைய வள்ளி வலந் துன்ன மணிநீர்
அரிவாக்க கல்யாணத்தின் எழில்வாய்ந்த கடவுள் உருவம்
கான்போரும் (தணிகைப் புராணம் - அகத்தி. 76)
14. பால சுப்பிரமணிய மூர்த்தி
ஒரு திருமுகம்; இரு திருக்கரங்கள்; இடது கரம் இடுப்பில் அமைந்திருக்கும்; வலது கரத்தில் தாமரை, திருவடியில் கிண்கிணி, பால உருவம்,
கடியில் இடக்கைத் தலம் இருவிக் கமலம் வலக்கைத் தலம்
ஏந்தி அடியில் மணிக்கின் கிணிக்களவை அமரும் பால
உருத்தோற்றி முடிகள் உரிரு எதிர் வணங்கும் முகுந்தன்முதலோர்க் கருள்
சுரக்கும் படியில் எழிற்சுப் பிரமணிய பகவன் உருவம் பயிற்றுநரும்
(தணிகைப் புராணம் - அகத்தி.77)
15. கிரவுஞ்ச பேத மூர்த்தி
ஆறு திருமுகம்; எட்டுத்திருக்கரங்கள்; வலது நான்கு கரங்களில் வேல், வாள், அம்பு, அபயம். இடது நான்கு திருக்கரங்களில் குலிசம், கேடகம், வரதம், வில்.
அழலும் நெடுவேல் வாள் பகழி அபயம் வல
நாற்கரத்தமைத்துத் தழல் வச் சிரங்கேடகம் வரதம் சாபம்
இடம் நாற்கரத்தாக்கி எழில் மிக்கொழுகு முகம் ஆறும் இலங்கத் தோற்றிக்
கிரவுஞ்சம் புழைபட்டழியப் படை விடுத்த புத்தேள் உருவம்
பொறிப்போரும் (தணிகைப் புராணம்- அகத்தி.78)
16. மயில்வாகன மூர்த்தி
ஒரு திருமுகம்; நான்கு திருக்கரங்கள்; வலது இரண்டு திருக்கரங்கள் வேலும், அபயமும், இடது இரண்டு திருக்கரங்கள் வரதம், குலிசம், மயில் ஊர்தி.
புலிங்கம் கதிப்பத்தித்தும்மும் பொருவேல் அபயம் வலத்திரற் கைத் தலங்கொண்டு இடப்பால் இருகரத்தும் தக்க வரதம்
வச்சிரமும் இலங்க அணிந்து திரைக்கடலும் எழுபல்வரையும்
உலகனைத்தும் குலுங்கக் கடவும் மயிலூர்திக் கோமான் உருவம் இயற்று
நடும் (தணிகைப் புராணம்- அகத்தி.79)
பூரீ தத்வநிதியில் கூறியுள்ளபடி பதினாறு வகை சுப்பிரமணி மூர்த்தங்கள்
இந்துக் க்களஞ்சியம்
6
5

Page 292
1. ஞான சக்தி சுப்பிரமணியர்
ஒரு திருமுகம்; இருகண்கள் ஜடை வெள்ளெருக்கு மாலை;
இரத்தினங்களிழைத்த பொற்கிரீடம், நான்கு திருக்கரங்களில்
முறையே வேல், வஜ்ரம், கோழிக் கொடி, அபயம்; வெண்மை நிறம்,
2. ஸ்கந்த சுப்ரமணியர்
இரு கண்கள், நான்கு திருக்கரங்களில் முறையே கோழிக் கொடி, அபயம், வரதம், வஜ்ரம் வெண்தாமரை, ஆசனத்தில் வீற்றிருத்தல், தலைமயிரைச் சுற்றித் தவழும் பூமாலை, அரையில் மான்தோல், அரைஞாண், இரத்ன ஆபரணம், பிரபைமுழுவதும் சூர்ய ஒளிவட்டம்.
3. தேவசேனாபதி
ஒரு திருமுகம்; இருகண்கள்; நான்கு திருக்கரங்களில் சங்கு, சக்ரம், வரதம், அபயம், ஸர்வாபரண பூஷிதர், மணமுள்ள சந்தனப் பூச்சு, சாம்பல் நிறம். வெண்மையான பூனூல், அழகிய சிரிப்புத் தவழும் முகம்.
4. சரவணபவர்
ஒரு திருமுகம், ஆறு திருக்கரங்களில் முறையே கரும்புவில்; மலர் அம்பு, கத்தி, கேடயம், வஜ்ரம், கோழிக்கொடி, உதய இரவியின் ஒளி, ஸர்வ ஆபரண பூஷிதர், சிங்க வாஹனம், மூன்று கண், விபூதிப் பூச்சு, நாணலில் உதித்தவர், ரத்த வர்ணம்.
5. கார்த்திகேயர்
ஒரு சிரத்தில் வில்வம் தரித்திருப்பது, மூன்று கண்கள், பத்து கரங்களில் முறையே வலது புறத்தில் வேல், சூலம், சக்கரம், அங்குசம், அபயம், இடது புறத்தில் வரதம், தோமரம், பாசம், சங்கு, வஜ்ரம்; மயில் வாகனம், சர்வ ஆபரணங்கள்; உதயஇரவியின் ஒளி- ரக்த வர்ணம்.
6. குமார
ஒரு திருமுகம், அழகிய பூக்கூடைபோன்ற கிரீடம், நான்கு திருக்கரங்களில் இடது புறத்தில் சக்திவேல், அபயம்; வலது கரங்களில் வரதம், வஜ்ரம்; கழுத்தில் தாமரைப்பூமாலை, குழந்தை உருவம்,
7. ஷண்முகர்
ஆறு திருமுகங்கள், பன்னிரு கரங்களில் முறையே வேல், அம்பு, கத்தி, சக்ரம், பாசம், அபயம், சேவல், வில், கேடகம், சங்கு, கலப்பை, வரதம், ஸர்வலக்ஷணராய் வலத்திலும் இடத்திலும் ஜயை, விஜையை என்னும் இரு பத்னிமாருடன் மயில் வாகனத் தமர்ந்து, சர்வ ஆபரண அலங்காரராய் வீற்றிருக்கும் கோலம்.
8. தாரகாரி
ஒரு திருமுகம், மூன்று கண்கள், யானை முதுகில் அமர்ந்திருத்தல்; வலது மூன்று கரங்களில் அபயம், கத்தி, சக்திவேல்; இடது மூன்று கரங்களில் கேடயம், ருத்ராக்ஷமாலை, கோழிக்கொடி
இந்துக்கலைக்களஞ்சியம்
266

9. க்ரெளஞ்ச பேத்தா
நான்கு திருக்கரங்களில் முறையே வரதம், அபயம், மலர்ப்பாணம், கரும்புவில்; மூன்று கண்கள், மயில் வாகனத்தில் சிம்ஹாசனத்தில் வீற்றிருத்தல்; ரகூழித்தலே நோக்கமாகக் கொண்ட திருமுகம், கிரெளஞ்சத்தை பிளந்த இருகரங்கள் . கிரௌஞ்ச பேதி சொரூபம் , ரக்த வர்ணம்.
10. சிகிவாஹனர்
ஒரு திருமுகம், மூன்று கண்கள், நான்கு திருக்கரங்களில் முறையே அபயம், வரதம், பாசம், அங்குசம், ஜ்வலிக்கும் தோகையையுடைய மயில், இந்திர நீல ரதத்தில் வீற்றிருந்து செந்தாமரை ஒளியுடன் பதினான்கு உலகங்களிலும் பவனி,
11. அக்நிஜாத சுப்பிரமண்ய
இருமுகம், எட்டுக் கரங்கள், வலது நான்கு கரங்களில் முறையே ஹோமம் செய்யும் கரண்டி, அகூடிமாலை, கத்தி, ஸ்வஸ்திகம், இடது நான்கு கரங்களில் கோழி, கேடகம், வஜ்ரம் நெய்ப் பாத்ரம்; அக்னியிற் ஜனித்த உரு, அக்நிஹோத்ர விதியின், தேவர்.
12. செளரபேய சுப்ரமணியர்
நான்கு முகம், எட்டு கண்கள், தாமரையில் வீற்றிருத்தல், இடது கால் சற்று வளைவாகவும் வலக்கால் ஊன்றியும், வலது நான்கு கரங்களில் சத்தி, தாமரை, மலர்ப்பாணம், அபயம், இடது நான்கு கரங்களில் வஜ்ரம், கரும்புவில், சூலம், வரதம். பாதிரிப்பூவர்ணம்.
13. காங்கேய சுப்ரமணியர்
ஒருமுகம் , மூன்று கண்கள், மாதுளம்பூ நிகர் ஒளி, அடர்ந்த மகுடம், கோழிக்கொடி, நீலோத்பலம் தரித்தல், வலது இரு கரங்களில் கோடலி, பூர்ண கும்பம், இடது கரங்களில் அரணிக்கட்டை, கோழி, பொன்மய உரு (பாதிரிப்பூவர்ணம்).
14. குஹ சுப்ரமணியர்
இரத்தினக்களிழைத்த பொற்கிரீடம், மூன்று கண்கள், நான்கு திருக்கரங்கள், வலது இருகரங்களில் சூலம், வஜ்ரம், இடது கரங்களில் வரம், அபயம், வெள்ளை வஸ்திரம், அனைத்தையும் ரகூழித்தலையே நோக்காகக் கொண்டுள்ளவர், பத்நி இடப்பக்கத்தில் கல்யாண உற்சவ விக்ரஹர் ச்யாமநிறம்.
15. ப்ரம்மசாரி சுப்பிரமணியர்
உதய இரவியின் ஒளியுள்ள ப்ரபை; இருகண்கள், இருகரங்கள், வலக்கையில் தண்டம், இடதுகையில் வஜ்ரம், வலது பாதம் ஊன்றியும், இடது பாதம் சற்று வளைந்தும் குடுமி, பூனூல், மான்தோல், கோவணம், இடுப்பில் ஒட்டியாணம், சிவந்த தாமரையில் வீற்றிருக்கும் பிரம்மச்சாரி.
16. தேசிக சுப்பிரமணியர்
ஆறு திருக்கரங்களிற்கு திருமுகம், பூக்கூடை கவிழ்த்தது
போன்ற அடர்ந்த கிரீடம், திருக்கரங்களில் சக்தி வேல்,
ருத்ராக்ஷமாலை, வரதம், அபயம். (வ.வை)

Page 293
சோடசோபசாரம்
உபசாரம் என்பது இறைவனது வழிபாட்டில் சிறப்பு மிக்கதோர் அம்சமாகும். இறைவனை அரசனாக நினைந்து நாம் செய்யும் பணிவிடைகள் - இதனை ஐந்து, பத்து, பதினாறு, அறுபத்துநான்கு என விரிக்கலாம்.
இவற்றுள் சோடசோபசாரம் என்னும் பதினாறு வகையான உபசாரம் ஆலய நித்ய, நைமித்திய பூஜையில் இடம் பெறுவது வழக்கம். அவையாவன:
1. ஆவாஹனம்: இறைவனை வரவேற்றல்; வியாபிக்கும் பரமசிவனது பொருவிலுயர் பரிபூரணாநந்தனம் அறிவிலழுந்துதல் ஆவாகனம் ஆகும்.
2. ஆசனம் : இறைவனை சிறந்த ஆசனத்தில் அமர்த்துதல்.
3. பாத்யம் : திருவடிகளை அலம்ப நீர்வார்ப்பது.
4. அர்க்யம் : இறைவனது திருமுடியில் சமர்ப்பிப்பது அல்லது கரங்களை அலம்ப நீர்வார்த்தல்.
5. ஆசம நீயம் வாய் அலம்ப அல்லது (திருமுகத்தில் கொடுக்கப்படுவது) நீர்வார்த்தல்.
6. ஸ்நானம் நீராட்டுதல் (அபிஷேகம்)
7. வஸ்திரதாரணம் : சிறந்த உடைகளை அணிவித்தல்.
8. சந்தன குங்கும தாரணம்: மணம்மிக்க சந்தனம், குங்குமத்தால் அலங்கரித்தல்.
9. அக்ஷத தாரணம்: நுணிமுறியாத முழு அரிசியைச் சமர்ப்பித்தல்.
10. ஆபரண தாரணம்: விலைமிக்க ஆபரணங்களால் அலங்கரித்தல். (பதிலாக உபவித்தாரணமும் செய்யப்படும்)
11. புஷ்பதாரணம் : மணம் மிகுந்த மலர்களால் அமைந்த மாலையால் அழகுபடுத்தல்.
12. தூபம் நறுமணம் மிகுந்த குங்கில்யம், சாம்பிராணி முதலிய பொருட்களிட்ட புகையைக் காட்டல். இவை நானவிளக்கம்.
13. தீபம் : ஒற்றைத்தீபம் காட்டியவுடன் தீபாராதனைகளைத் தொடங்குவது வழக்கம். பெருவழக்கில் உள்ள தீபங்கள், அடுக்குத் தீபம்; நட்சத்திர தீபம், பஞ்சமுக தீபம்; வில்வ தீபம்;
2

நாகதீபம், விருஷப தீபம்; கருதீபம், ஈசானாதி தீபங்கள், கற்பூர தீபம், பஞ்சாராத்திரிக தீபம் என்பன. இத் தீபங்களைக் காட்டும் முறை ஆகமத்தில் கூறப்பட்டுள்ளது.
பரிசாரகர் தரும் தீபத்தை, நிரீக்ஷணம் முதலிய ஸம்ஸ்காரங்களால் தூய்மை செய்து புஷ்பத்தால் அர்ச்சித்து, கையில் வாங்கி, சுவாமிக்கு நேரே உயர்த்தி, முதலில் இடது கண்ணிற்கு நேரிலும் பின்னர் வலது கண், நெற்றி ஆகிய இடங்களிலும் பாதத்திலிருந்து சிரசு வரையும் மூன்று முறை சுற்றிக் காட்ட வேண்டும்.
சிரசு, நெற்றி, கழுத்து, மார்பு, பாதங்களில் தனித்தனி பிரணவாகாரமாகச் சுற்றிக் காட்டும் முறை தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. தீபங்களை மூன்று முறை சுற்றிக் காட்ட வேண்டும் எனக் கூறும் ஆகமம், முதலில் சுற்றிக் காட்டுவது உலக நன்மைக்காகவும், இரண்டாவது முறை கிராமத்தின் நன்மைக்காகவும், மூன்றாவதாகக் காட்டுவது உயிர்களின் நன்மைக்காகவும் எனக் கூறுகின்றது.
தீபாராதனையின் பொழுது அவ்வத்தீபத்திற்குரிய மந்திரங்களை முறைப்படி வேத அத்யயனம் பயின்ற அத்யயன பட்டர் ஒதுவார்.
14. நைவேத்தியம் : நைவேத்தியத்திற்குரிய அன்னம் சமைக்கப்படும் இடம் பாகசாலை எனப்படும். இதற்கு நியமிக்கப்படுவர் பாசகர்கள் எனப்படும் பரிசாரகர்கள் ஆவர். இவர்கள் சிவ தீகூைடி பெற்றவர்களாக இருத்தல் வேண்டும். நாள்தோறும் நீராடித் தோய்த்துலர்ந்த ஆடை தரித்து, நித்தியக் கடன்களை முடித்து தர்ப்பை தரித்தவர்களாக மடைப்பள்ளி புகுந்து நிவேதனங்களை விதிப்படி பக்குவம் செய்ய வேண்டும். அரிசியை பாகம் செய்தல் முதலான முறைகள் காமிகாகமத்தில் விரிவாகக் கூறப் படுகின்றது.
அரிசியின் மட்டத்திற்கு அரைப்பங்கு அதிகமாக பாத்திரத்தில் நீர்விட்டு, சாணியால் மெழுகப் பெற்ற அடித்தளத்தை உடையதும், தர்மம், அதர்மம் எனப்படும் இரு புயங்களை உடையதுமான அடுப்பின் மீது வாமதேவ மந்திரம் கூறி அதனை ஏற்றுதல் வேண்டும். பின்னர் அகோர மந்திரத்தினால் அடுப்பு மூட்டி எறும்பு முதலியவற்றால் தாக்கப் பெறாத விறகை மாட்டி வக்கிர மந்திரத்தினால் எரியச் செய்ய வேண்டும்.
நெல்லில் பலவகைகள் இருப்பதனையும், அதனை உரலில் இட்டு உமி நீக்கித் துப்பரவு செய்தலையும், நெல்லின் அளவினையும் உத்தம, மத்திம, அதமமான நைவேத்திய பிரமாணங்களையும் ஆகமம் கூறுகின்றது. கிரியைகளை ஒட்டியே அவற்றிற்குரிய நைவேத்தியம், நித்திய , நைமித்திக, காமிய நைவேத்தியங்களாக அமையும்.
சுத்தோதனம் என்பது நன்கு சமைக்கப்பட்ட அன்னமாகும். அரிசியைக் காட்டிலும், மூன்று மடங்கு பாலும், பாலில் பாதியளவு
இந்துக் க்களஞ்சியம்

Page 294
நீரும் நீரில் பாதியளவு பயிற்றம் பருப்பும், நெய்யும் கலந்து பக்குவமாகச் சமைத்தால் அது பாயசான்னமாகும். அரிசியில் பாதி பருப்பும், உரிய உப்பும், மிளகுபொடியும், எள்ளுப் பொடியும் கலந்து சமைத்தால் அது எள்ளன்னமாகும். அரிசியில் மூன்றிலொரு பங்கு பருப்பும், முன் கூறிய அளவு பாலும் கலந்து சமைப்பது பயற்றன்னம். பாலில் பாதியளவு வெல்லமும், அதில் பாதியளவு நெய்யும் வாழைப்பழமும் கலந்து சமைப்பது
சர்க்கரையன்னம். இவ்வாறு அன்னங்கள் ஐந்து வகைப்படும்.
நைவேத்தியத்தை மூன்று பங்காக்கி இரண்டு பங்கை நிவேதித்தல் வேண்டும். பாத்திரத்தில் ஒரு பங்கு மிச்சமிருக்க வேண்டும். நிவேதனத்திற்குரிய சிற்றுண்டி வகைகளும் (உபதம்சங்கள்) விரிவாகக் கூறப்பட்டுள்ளன. நிவேதனத்தை எட்டுப் பங்காகப் பிரித்து இரு பங்குகள் சிவனுக்கும், ஒரு பங்கு சக்திக்கும் ஒரு பங்கு கணேசருக்கும், ஒரு பங்கு கந்தனுக்கும் ஒரு பங்கு பலிக்கும் அக்கினி காரியத்திற்கும் ஒரு பங்கு தேசிகனுக்கும், ஒரு பங்கு பாத்திர சேஷமாகவும் (பரிசாரகர்க்கு) இருக்க வேண்டும்.
15. நீராஞ்சனம் இறுதியாக சமர்ப்பிக்கப்படுவது கற்பூர நீராஞ்சன மாகும்.
16. பிரதசுஷின நமஸ்காரம் : குறைகள் நிகழ்ந்திருப் பின் பொறுக்குமாறு வேண்டி தன்னைத்தானே மூன்று முறை சுற்றிக் கொண்டு நமஸ்காரம் செய்வது. (பதிலாக மந்திரபுஸ்பம்
சமர்ப்பிக்கப்படுதலும் உண்டு.) (வ.வை)
சோமநாதம்
இந்து சமயத்தின் தொல் இலக்கியமான இருக்கு வேதத்தின் பத்தாம் மண்டலத்தில் பரிசிஷ்டம்- கிலம் ஆக அமைந்த பின்வரும் பாடலில் சோமநாதப் பெருமானைப் பற்றிக் கூறப்பட்டுள்ளது.
யத்ர கந்கே ச யமுனா யத்ர ப்ராசி சரஸ்வதி/ யத்ர சோமேஸ்வரா தேவ தத்ர மாம் அம்ருதம்//
இப்பாடலிலிருந்து கங்கை யமுனை சரஸ்வதி என்னும் மூன்று
ஆறுகளும் சந்திக்குமிடத்தில் அமைந்துள்ள திருத்தலத்தில் சோமேஸ்வரதேவர் இருப்பது பற்றிக் கூறப்பட்டுள்ளது.
பம்பாயிலுள்ள சத்தியார் தீபக+ற்பத்தின் தென் கரைப்பட்டினத்தில் இருக்கின்ற புகழ்பெற்ற சிவஸ்தலம் சோமநாதர் கோவில். இங்குள்ள இறைவன் சோமநாதர். இத்திருத்தலம் சமயச்சிறப்பு மிக்க பன்னிரண்டு ஜோதிஸ்தலங்களில் முதன்மையானதாகக் கூறப்படுகின்றது. சோமநாத் என இவ்வூர் அழைக்கப்படுகின்றது. செளராஷ்டிர தேச மேற்குப்பாக சமுத்திரக்கரையிலுள்ள இத்தலம் சக்திபீடம்
இந்துக்கலைக்களஞ்சியம்
26

எனவும் அழைக்கப்படும். சோமநாதர் என்பது சோமசந்திரனுடன் தொடர்புடையதாக, சந்திரன் பூஜை செய்த இடம் எனக்கொள்ளப்படுகின்றது. சந்திரன் - உமை அம்சம்; உமைக்கும் சிவனுக்கும் இடையே உள்ள தொடர்பும் புலப்படுத்தப்படுகின்றது. யசுர்வேதம் சதருத்திரியம் எட்டாம் அனுவாகம் “நமஸ்சோமாய ருத்ராயச” எனக் குறிப்பிடுகின்றது. ஜாபால உபநிடதம் “அக்கினி சோமாத்மகம் விஸ்வம் ” என அக்கினி சிவசம்பந்தம், சோம - சக்தி சம்பந்தம் , சோமநாதர் சிவசக்தி அம்சம் எனக் குறிப்பிடப்படுகின்றது. இங்கு ஸரஸ்வதி சமுத்திரம், ஸோமநாதர், ஸோமாதேவி, ஸோமகிருஹம் என்பன “ஸ’ எழுத்தில் இருப்பது விசேட தன்மையாகும். ஸ்கந்தபுராணம், பாரதம் என்னும் இலக்கியங்கள் இத்தலத்தின் பெருமை பற்றிக் கூறுகின்றன. ஸ்கந்த புராணத்தில் பிரபாஸ் காண்டமாகிய ஏழாவது காண்டத்தில் இத்தலத்தின் பெருமை பற்றிக் கூறப்படுகின்றது. சதானந்தர் ஆகிய சிவனே சோமநாதர் என இங்கு கூறப்படுகின்றது.
இந்த ஆலயம் 1025 இல் கஜினி முகமது என்பவராலும், பின் பலமுறையும் அழிவுக்குட்பட்டது. 1951 இல் வைகாசி சுக்ல பஞ்சமித் திதியில் இந்திய ராஷ்டிரபதி இராஜேந்திர பிரசாத் அவர்கள் இவ் ஆலயத்தின் கட்டட வேலைகளை ஆரம்பித்து வைத்தமை குறிப்பிடத்தக்கது.
சோமதிர்த்தம் இதிக்யாதம் சோமநாதஸ்ய சந்திதன! சமுத்ரே பச்சிமே விப்ரா ஸ்நிதம் யோஜனம் ஆயதம்! பிரணம்ய சோமநாதாக்யம் சோமம் சோம விபூஷணம்: சர்வ பாப வினிர் முக்த சங்கரம் யாதி மான ஸ/ பச்சிம சமுத்திரே சோமநாதாக்யம் ஜோதிர்லிங்கம்
அஸ்தி/ தத்ர ஸ்னானம் தர்சன்ம ச சர்வ பாவ நிவாரகம்
அஸ்தி//
எனும் தோத்திரத்தில் ஜோதிர்லிங்கத்தை வழிபடுவதனாலும் சோம தீர்த்தத்தில் ஸ்னானம் செய்வதாலும் இத் திருத்தலத்தைத் தர்சிப்பதனாலும் எல்லா விதமான பாபங்களிலிருந்தும் ஒருவன் விடுதலையடைவான் எனச் சிறப்பித்துக் கூறப்பட்டுள்ளது. ஜோதிலிங்கமானஸ் பூஜாஸ்தோத்திரத்தில் செளராஷ்ட தேசத்திலுள்ள சோமநாதர் பற்றியும் ஏனைய இலிங்கங்கள் பற்றியும் கூறப்பட்டுள்ளது. பன்னிரு ஜோதிர்லிங்கங்களில் இராமேஸ்வரம் ஒன்று மட்டுமே தமிழ் நாட்டிலும் திருப்பருப்பதமாகிய பூரீசைலம் ஆந்திரத்திலும் ஏனைய பத்தும் வடநாட்டிலும் உள்ளன. இராமேஸ்வரத்தில் மட்டுமே ஆகமசிற்ப முறைப்படி பிரம்மபீடம், விஷ்ணு பீடம், சிவபாகம் ஆகிய முறையில் இலிங்கம் அமைந்துள்ளது. ஏனைய பதினொன்றும் பாணம் மட்டுமே சிறியதும் பெரியதுமாக தரை மட்டத்தில் இருக்க சுற்றிலும் மேடை அமைப்பும் இருக்க விளங்குகின்றன. (றுfபதி)

Page 295
சோமநாதர்
இவர் பற்றிய வரலாறு தெளிவாக கிடைக்கப் பெறவில்லை, “இந்திய நாகரிகம்” என்ற நூலை எழுதிய ஆர்னஸ்ட் உட் என்பவர் இவரின் காலம்16ம் நூற்றாண்டாக இருக்கலாம் எனக் குறிப்பிடுகின்றார். சோமநாதரும் தமது நூலாகிய இராகவிபோதத்தின் முடிவுரையில் 1531ஆம் சகம் செளம்ய ஆண்டு புரட்டாதித் திங்கள் அல்ல பகூடி பிரதமை சோமவாரம் ஹஸ்த நன்னாளில் இந்நூல் முடிவுற்றதாக கூறுகின்றார். எனவே இந்நூல் கி.பி.1609 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 18ஆம் திகதி முடிக்கப்பட்டதாக தெரிய வருகிறது. இதிலிருந்து இவர் 1550க்கு பின்னர் பிறந்திருக்கலாம் என அறிகிறோம்.
இவரது காலம் ஷாஜகான் மன்னன் ஆட்சிக்காலமாகும். இவரது பிறப்பிடம் ராஜமகேந்திரம் என்னும் இடத்திற்கு அருகில் உள்ள ஒரு சிற்றுார் ஆகும். தாய் ஜம்பாம்பாள் தந்தை த்கலஸிரி. ஆந்திர நாட்டு அந்தண குலத்தவர். சோம நாதர் எழுதிய இராக விபோதம் என்னும் நூல் பரதரின் நாட்டிய சாஸ்திரம் மதங்கரின் பிருகத்தசிநாரதரின் சங்கீத மகரந்தம் சாரங்க தேவரின் ரத்னா காரம்ஆகிய நூல்களை ஆராய்ந்து எழுதப்பட்டதாகும். ஆசோலர், வேங்கடமகி ஆகியோர் தம்தம் நூல்களில் இராக விபோதத்தையே மேற்கோளாகக் கொள்வதில் இருந்து இதன் பெருமை நன்கு புலப்படும். இவருடைய இந்நூல் ஐந்து அத்தியாயங்களைக் கொண்டது. முதலாம் அத்தியாயம் சுருதிகளையும் ஸ்வரக் கூட்டங்களையும் பற்றியதாகவும், இரண்டாம் அத்தியாயம் வீணைகள் அவற்றின் வகைகள் பற்றியும், மூன்றாம் அத்தியாயம் மேளங்கள் பற்றியும், நான்காவது அத்தியாயம் இராகங்களைப் பற்றியதாகவும், ஐந்தாவது அத்தியாயம் இராகங்களின் அமைப்புக்கள் பற்றியும் விளக்குகின்றன.
இருபத்திரண்டு சுருதிகளின் வழியாக சுரங்களின் அமைப்பு விபரிக்கப்படுகிறது. காந்தார, மத்தி, கிரமமங்கள் புதிய முறையில் விளக்கப்படுகிறது. சுரங்களுடைய நஷ்டம் உத்திஷ்டம், வர்ணம், அலங்காரம் முதலியவைகள் இவரால் விளக்கப் பட்டுள்ளன. இவரது காலத்தில் இருபத்திமூன்று மேளராகங்கள் நடைமுறையில் இருந்தன. இவைகளுக்கு கிரகம், அம்சம், நியாசம் எவை என்று இவர் குறிப்பிடுகிறார். விக்ருதி சுரங்களைக் கொண்டு 90 மேளங்களையும் குறிப்பிடுகின்றார். இவர் ருத்ர வீணை (நான்கே தந்தியுடைய) கண்டு பிடித்தார். இதிலிருந்து அகிலராக வீணை தோன்றி அதிலிருந்து இன்றைய தஞ்சாவூர் வீணை தோன்றியதாக கருதப்படுகின்றது. (தேஹ.)

சோமவார விரதம்
Iமவாரமென்பது திங்கட் கிழமை ; சோமன் - திங்கள் - சந்திரன்; திங்களை முடியிலே தரித்த சிவபெருமானின் விரதங்களுள் சிறப்புப் பொருந்தியது சோமவார விரதம், கார்த்திகைச் சோமவாரம் மிகச் சிறப்புப் பொருந்தியது. சோமவார விரதம், தொடங்குபவர்கள் கார்த்திகை மாத சோமவாரத்திலேயே அனுஷ்டிக்கத் தொடங்கி ஒவ்வொரு திங்கட் கிழமையும் இவ்விரதத்தை மேற்கொள்ள வேண்டும்.
விரதம் என்பது வினைமாசு தீர்ந்து அந்தக் கரணங்கள் தூயவாதற் பொருட்டுக் காக்கப்படுவது வரிப்பதனால் 'விரதம் எனப்படுகின்றது.
உபவாசம் இருப்பது உத்தமம். இயலாதவர்கள் இரவு ஒரு பொழுது போசனம் செய்யலாம். அதுவும் இயலாதவர்கள் காலை 12 மணிக்கு மேல் போசனம் கொள்ளலாம். பகல் முழுவதும் பட்டினியிருந்து மாலை சிவாலய தரிசனம் செய்து வீட்டில் விளக்கேற்றி வணங்கியபின் போசனம் செய்தல் பெரும் பாலும் நடைமுறையாகும்.
சோமவார விரதம் மேற்கொள்பவர் அநேகமாக உபவாசம் இருப்பார்கள். கார்த்திகை மாத சோமவார விரதத்தைக் கைக்கொள்ளலாம். சோமவார விரதத்தைப் பன்னிரண்டு ஆண்டுகளோ, அல்லது மூன்று ஆண்டுகளோ இயலாதவர்கள் ஒரு ஆண்டோ கடைப்பிடித்துப் பின் விரத உத்யாபனம் செய்ய வேண்டும்
திருப்பாற் கடலில் சந்திரன் தோன்றியது கார்த்திகைத் திங்கள் வளர்பிறை அட்டமி திதியுடன் கூடிய ஒரு திங்கட் கிழமையன்றுதான். சிவனை ஆராதித்து சிரசில் இடம் பெற்றதும் கார்த்திகை சோமவார நன்னாளில்தான். கிருதயுகம் ஆரம்பமாகியதும் கார்த்திகை திங்கட் கிழமையன்று தான்.
சோமவாரம் சிவனுக்குரியது. அதனால் சிவாலயங்களில் அபிஷேகம் பூஜை என்பன சிறப்பாக நடைபெறும். தென் இந்தியாவில் அட்டவீரட்டத் தலங்களுள் ஒன்றாகிய திருக்கடவூரில் அமிர்த கடேஸ்வரருக்கு சங்காபிஷேகம் மிக விமரிசையாக நடக்கும்.
இல்லத்திலே-பூஜைசெய்ய விரும்புவோர் ஏகாத சருத்திரர்களை ஆவாகனம் செய்து பூசித்தல் சிறப்பானது. நல்ல குணமும் ஒழுக்கமும் உள்ள வயது முதிர்ந்த தம்பதிகளை பார்வதி பரமேஸ்வரராக நினைத்து தம்பதி பூஜை செய்வதும் சிறப்பானதே.
தம்பதி பூஜையில் தம்பதியரை வீட்டிற்கு வரவழைத்து கால் அலம்பி ஆசனம் அளித்து புது வேட்டி சால்வை புடவை மஞ்சள் - வெற்றிலை பாக்கு - தேங்காய் தக்ஷணை கொடுத்து மலரால்
இந்துக்கலைக்களஞ்சியம்

Page 296
பூஜை செய்து நமஸ்கரித்து அவர்களது ஆசிகளைப் பெற்றுக் கொள்ளுதல் சாலச் சிறந்தது.
ஆர்யாவர்த்த அரசனின் மகள் சீமந்தனி இளவயதிலேயே கணவனை இழந்து விதவையாகி விடுவாள் என்ற சோதிடரின் கூற்றை இவ்விரதத்தைக் கைக்கொண்டு ஒழுகிப் பொய்யாக்கினாள். யாக்ஞவல்லியர் தமது மனைவி மைத்ரேயிக்குக் கூறி அவள் சீமந்தினிக்கு இவ்விரதத்தை உபதேசித்ததாகக் கந்த புராணத்திற் காணப்படுகின்றது.
(வ.வை)
e O O சோமாஸ் கந்தர்
சிவன், உமை, முருகன் ஆகிய மூன்று தெய்வங்களும் தந்தை, தாய், குழந்தை என்று குடும்பமாகத் தோன்றும் தெய்வத் திருவடிவமே இது. சோமாஸ்கந்த என்பது வடமொழிச் சொல் ச+உமா+ஸ்கந்த என்ற மூன்று சொற்களாகப் பிரிக்கப்பட்டு உமையுடனும் கந்தனுடனும் கூடியிருப்பவர் என்னும் பொருளைத் தருகிறது. சிவாலயத் தேர்த்திருவிழாக்களில் சோமாஸ்கந்தர் திருவுருவமே திருவுலாவுக்கு எடுத்துச் செல்லப்படுகிறது. இத் திருவுருவைச் சிவன் கோயில்களிலும், கருவறையின் பிற்பகுதி திருச்சுற்றில் கிழக்கு நோக்கிய மண்டபத்திலும் காணலாம். திருக்கழுக்குன்றம், மாமல்லபுரம், காஞ்சிபுரம் கைலாசநாதர் கோயில், ஏகாம்பரநாதர் கோயில் ஆகிய கோயில்களிற் சிவலிங்கத்திற்கு பின்புறமுள்ள கருவறை உட்சுவரிலேயே இத் திருவுருவம் காணப்படுகின்றது.
இத்திருவுருவிற் சுகாசனமூர்த்தி போன்றே சிவன் அமர்ந்திருப்பர். இடதுபுறத்தில் உமை அமர்ந்திருப்பார். முருகன் நின்றோ அமர்ந்தோ நடனமாடிய நிலையிலோ காணப்படுவார். கந்தன் உமையின் மடி மீது காணப்படுவதுமுண்டு. ஏலவார்குழல் இறைவிக்கும் எம்பிரான் தனக்கும் பாலன் ஆகிய குமரவேள் நடுவுறூஉம்பான்மை என்று கந்தபுராணம் இத்திருக் கோலத்தைச் சொல்கின்றது. சில்பரத்தினம் முதலிய நூல்களும் சோமாஸ்கந்த திருவுருவ அமைப்பைக் கூறுகின்றன. இத்திருக் கோலத்திற் பொதுவாகச் சிவனும் உமையும் முறையே தங்கள் இடது, வலது கால்களை மடித்து, ஒரே, அல்லது தனித்தனி நீண்ட சதுரத் தாமரைப் பலிபீடத்தில் அமர்ந்திருப்பர்.
சிவபெருமான் நான்கு கைகள் உடையவராய், பின்கைகளில் மான், மழு ஆகியவற்றைக் கொண்டும், முன்னிரு கைகளிற் காத்தல், அருளல் அல்லது முத்திரைகளைக் காட்டியும் விளங்குவார். அவரது முடி சடை முடியாக இருக்கும். அவர் இடைக் கச்சை, முப்புரிநூல், வயிற்றுக்கட்டு, ஆகியவற்றை அணிந்திருப்பர். காதுகளிற் சுருள் ஒலை, மகரம் ஆகியவற்றைக் குண்டலங்களாக அணிந்தவராக, நெற்றிக்கண் உடையவராய் இருப்பர். உமை வலக்கரத்தில் மலர் ஏந்தியும், தலையில் கரண்ட
இந்துக்கலைக்களஞ்சியம்
27(

முடி அணிந்தும், அதனைச் சிரச்சக்கரம் அணி செய்யவும் விளங்குவார். கந்தன் ஆடையேதும் இல்லாது கரண்ட முடிசூடிக் கைகளில் மலர் பிடித்தோ, காத்தல், அருளல் முத்திரைகள் காட்டியோ, பழம் ஏந்தியோ விளங்குவான். முருகன் நடுவில் நின்றோ, அமர்ந்தோ, தாய்தந்தையர் மடியில் விளையாடும் குழந்தையாகவோ காணப்படுவான், முருகனுடைய திருவுருவம் தேவியின் கழுத்தளவு இருப்பது உத்தமம் என்றும் அதற்கு குறைந்திருப்பது மத்திமம் என்றும் தேவியின் தன அளவு இருப்பது அதமம் என்றும் சிற்பநூல்கள் கூறுகின்றன.
இத்திருவுருவம் தமிழ் நாட்டில் மட்டுமே அதிகமாகக் காணப்படுகின்றது. சிவவழிபாடு (சிவன்) சக்தி வழிபாடு (உமை) கெளமார வழிபாடு(முருகன்) இம்மூன்றையும் இணைத்து வடிவமைக்கப்பட்டதே சோமாஸ்கந்தர் வடிவம் என்று கூறுகின்றனர். சோமாஸ்கந்தர் உருவம் செப்பு அல்லது பஞ்சலோகத்தினாற் செய்யப்பட்டே பெரும்பாலும் காணப்படினும் கற்சிலைகளும் மரச்சிலைகளும், ஒவியங்களும் தமிழகத்திற் பல இடங்களில் உள்ளன. பாண்டியர் காலத்தில் (கி.பி 600 - 900) கருவறை உட்சுவர்களிற் கொற்றவை, திருமால், முருகன் போன்ற திருவுருவங்களைப் புடைப்புச் சிற்பங்களாகக் காட்டியவர்கள் சிவனைக் கருவறை நடுவில் இலிங்கமாகக் காட்டியதோடு சுவரிலும் சிவன், உமை, முருகனாக (சோமாஸ்கந்தராக) காட்ட முனைந்தனர். இவ்விதம் சுவரிற் காட்டப்பட்ட சோமஸ்கந்த திருவுருவங்களே தமிழ்நாட்டிற் தொன்மையானவை.
இவ்விதம் சுவரிற் காட்டப்பட்ட சோமாஸ்கந்தர் உருவங்களே மாமல்லபுரத்தில் தர்மராசரதம், மகிடாசுரமர்த்தினி குகை, கடற்கரைக் கோயில், சாளுவன் குப்பம் குடவரை ஆகிய இடங்களிலும் காஞ்சிபுரம் கைலாசநாதர் கோயில், ஏகாம்பரநாதர் கோயில், திருக்கழுக்குன்றம், மலைமீதுள்ள கோயில் ஆகிய இடங்களிலுங் காணலாம். இவ்விடங்களிற் சோமாஸ்கந்தருக்குப் பணிவிடை புரிபவர்களாகத் திருமாலும் நான்முகனும் கவரிவீசியும் வெண்குடை பிடித்துங் காட்டப்பட்டுள்ளனர். காஞ்சி கைலாசநாதர் கோயிலின் திருச்சுற்றுச் சுவரை ஒட்டிய சிறு சிறு கோயில்கள் அனைத்திலும் இந்தச் சோமாஸ்கந்தர் திருவுருவம் எழில் வாய்ந்த பல்லவர் ஓவியமாக இன்றும் காணப்படுகின்றது.
பாண்டியர் குடைவரைக் கோயிலான திருப்பரங்குன்றிலே சிவனுக்கான கருவறைச் சுவரில் சோமாஸ்கந்தர் திருவுருவம் லிங்கத்தின் பின்னதாக அமைக்கப்பட்டுள்ளது. பல்லவர் காலத்திற் கருவறையிலே கற்சிலையாய் மிகச் சிறப்பாகக் காணப்பட்ட இவ்வுருவ வழிபாடு சோழர்காலத்தில் வீதி உலா எடுத்துச் செல்லும் செப்புத் திருமேனியாகச் சிறப்புற்றது. இதன் தொடக்கம் பல்லவர் கால இறுதிக்கட்டமாகும் சோமாஸ்கந்தர் மரச்சிற்பங்கள் ஏறக்குறைய 400,500 ஆண்டுகளுக்கு முற்பட்டவையாகும். தேர்களிலும், கோயிற் கதவுகளிலும், வாயில் அலங்காரங்களிலும் சோமாஸ்கந்தர் திருவுருவம் இன்று சிற்பங்களாக காட்சியளிக்கிறது. (தேஹ)

Page 297
சோழர் அரசியல்
மெய்க்கீர்த்திகள்
சோழர் காலத்திய முக்கியமான நிகழ்ச்சிகளை சோழமன்னரின் மெய்க்கீர்த்திகளிலிருந்து அறிந்து கொள்கிறோம். ராஜராஜ சோழன்தான் இம் மெய்க்கீர்த்தி எழுதும் வழக்கத்தைக் கொண்டு வந்தவன். வீர ராஜேந்திரன் காலத்தில் பூரீ விஜயப் பேரரசுக்குச் சோழர் படை ஒன்று சென்றது. இதை அவனுடைய மெய்க்கீர்த்தி அல்லாமல் வேறு எந்தக் குறிப்பிலிருந்தும் அறிவதற்கில்லை. ராஜசேகரன், பரகேசரி என்ற பட்டங்களைச் சோழமன்னர்கள் ஒருவர்பின் ஒருவராகப் புனைந்து கொண்டார்கள். அவர்களின் மெய்க்கீர்த்திகளில் இப்பட்டப்பெயர்கள் வருகின்றது. சோழமன்னர்களின் மெய்க்கீர்த்திகள் துதிப்பாடல்களாக, மன்னர்களின் உலகியல் சாதனைகளைக் கூறுகின்ற புகழுரையாக அமைந்திருப்பினும் அச் செய்திகள் உண்மைத் தன்மையினின்றும் விலகி விடவில்லை. விஜயால சோழனின் ஆட்சிக்காலத்தில் ஏற்பட்ட நிகழ்ச்சிகளுக்கு உரிய திகதி வரையறையைப் பிழையில்லாமல் தெரிந்து கொள்ள இம் மெய்க்கீர்த்திகள் பெரிதும் உதவுகின்றன. இம் மெய்க்கீர்த்திகளில் உண்மைக்குப்புறம்பான முறையிற் செய்திகள் இடம் பெற்றாலும் அவற்றை அகற்றி விட்டு ஆராய்கின்ற போது சோழமன்னரின் ஆட்சிக்காலச் சிறப்பைக் கூறும்
மெய்க்கீர்த்திகளும் உள்ளன.
சோழ அரசனும் இளவரசனும்
சோழர்கள் எப்போ முதலில் ஆட்சியமைத்தார்கள் என்பதைத் திட்டவட்டமாகக் கூற முடியாது. பழந்தமிழ் நூலான தொல்காப்பியத்தில் சேர,சோழ, பாண்டியர் மூவரும் முற் காலத்தில் தமிழகத்தை ஆண்டனர் என்ற செய்தி கூறப் படுகின்றது. 'வண்புகழ் மூவர் தண் பொழில் வரைபு என்னும் இக் கூற்று சோழர்களின் ஆட்சியுரிமை எத்துணை பழமை வாய்ந்தது என்பதைப் புலப்படுத்துகின்றது.
சோழர்களது அரசுரிமை தந்தை மகற்களிக்க வழிவழித் தொடர்ந்து வந்துள்ளது. மக்கட் பேறில்லாமல் இறந்த மன்னரும், அரசாட்சி செய்வதற்குரிய புதல்வர்கள் இல்லாதவர்களும் தமது ஆட்சியுரிமையை உடன் பிறந்தவர்களுக்கு அளித்த செய்தியும் உண்டு. சோழமன்னர்கள் தம் மூத்த புதல்வர்க்கே அரசுரிமை வழங்கியுள்ளனர். தமது ஆட்சிக்காலத்திலேயே அவர்களுக்கு இளவரசுப் பட்டங்கட்டி அரசியல் முறைகளிற் சிறந்த பயிற்சியும் வழங்கினர். இதனை முதற்பராந்தக சோழன்ராஜாதித்தனுக்கும், சுந்தரச் சோழன் - ஆதித்த கரிகாலனுக்கும், முதல் ராஜராஜசோழன்- இராஜேந்திர சோழனுக்கும் இளவரசப்பட்டம் கட்டி அரசியல் நிகழ்ச்சிகளில் அன்னாரை ஈடுபடுத்திப் பல்துறை வல்லுனராக்கிய செய்திகள் மூலம் அறியலாம்.

71.
சோழமன்னர்கள் எக்கருமத்தையுத் ஆற்றும் வல்லமையும் அதிகாரமும் பெற்றிருந்தும் அமைச்சர் முதலானவரோடு எக்கருமத்தையும் ஆராய்ந்தபின்புதான் நிறைவேற்றுவது வழக்கம். அமைச்சர்களைவிட உடன்கூட்டத் ததிகாரிகள் என்ற ஒரு குழுவினரும் அரசாட்சியில் இடம் பெற்றிருந்தனர். அவர்கள் அரசனோடு எவ்விடத்தும் செல்லும் உரிமை பெற்றிருந்ததோடு தகுந்த வேளையில் ஆலோசனைகள் வழங்கி மன்னர் தம் ஆட்சியின் மேன்மைக்கு ஊன்றுகோலாய் இருந்தனர் என்றும் கருத இடமுண்டு. சோழரின் அரசியல் சிறக்க உறுதுணையாக இருந்த மற்றொரு பிரிவினர் அந்தணர்களாவர். அந்தணர்கள் தம் அறவுணர்ச்சிக் கேற்ப தர்ம சாஸ்திரங்களை எடுத்தோதி நீதி நிர்வாகம், பரிபாலனம் ஆகியவற்றை ஏற்றிருந்தார்கள். தர்ம சாஸ்திரங்களைச் சார்ந்து வாழ்ந்த அவ் அறவோர்கள் அவற்றையே சோழ நாட்டின் சட்டம் என எடுத்தோதினார்கள். சோழ மன்னர்கள் பேரரசர்களாக விளங்கியபோதும் அவர்களுக்கு சட்டம் இயற்றும் அதிகாரம் இருக்கவில்லை. மன்னர்கள் எல்லாம் ஏற்கனவே நடைமுறையிற் காலங்காலமாக இருந்து வந்த தர்ம சாஸ்திரங்களை நிறைவேற்றுகின்ற நிர்வாக ஆணைகளை மட்டும் செய்து கொள்ளக் கூடியவர்களாக இருந்தார்கள் என்பதையும் நினைவு கூர்தல் வேண்டும். சோழ மன்னர்கள், சமூக நீதியைக் காவலன் காவான் எனின், ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூல் மறப்பர் என்ற அச்சத்தோடு தங்களுடைய அரசியலை நடத்தினார்கள்.
முடிசூட்டல்
நாட்டை ஆளுகின்ற மன்னனுக்கு கடவுளின் பெயரால்
எல்லாப் பொறுப்புக்களையும் ஏற்றுக் கொள்ள வைக்கின்ற
முறையில்தான் முடிசூட்டு விழா நடைபெற்றது.
சோழ மன்னர்கள் முடிசூடும் போது ராஜசேகர், பரகேசரி சக்கரவர்த்திகள், உடையார், திரிபுவனச் சக்கரவர்த்திகள் , கோனேரின்மை கொண்டான் என்னும் பட்டங்களைப் புனைந்து கொண்டு அரசாண்டனர் என்பது பல கல்வெட்டுக்களால் அறியப் படுகின்றது.
முடிசூட்டும்போது அபிஷேகம் செய்கின்ற முறை பின்பற்றப்பட்டது. மேலும் அந்நிகழ்ச்சியின்போது இயற்பெயருக்குப் பதிலாக விருதுப் பெயராகவும் மன்னர்குல மாண்புப் பெயராகவும் அமைந்த புதிய பெயர்களை மன்னர்கள் வரித்துக் கொண்டார்கள். அங்ங்னமாக அருள் மொழித்தேவன் - முதலாம் ராஜராஜன் என்றும் அவன் மகன் மதுராந்தகன் - ராஜேந்திரன் என்றும்; ராஜேந்திரன்- குலோத்துங்கன் என்றும்; எதிரிலிப்பெருமாள் என்பவன்-இரண்டாம் ராஜாதிராஜன் என்றும்; பெயர் சூடிக் கொண்டார்கள். முடிசூட்டல் மூலமாக பதவிப் பிரமாணம் செய்யப்பட்டதால் சோழமன்னர்கள் தாங்கள் கொண்ட விரதங்களின்படி மக்கள் நலம் பாராட்டுகின்ற அறநோக்கு அரசியலை நடத்தினர்.
இந்துக் க்களஞ்சியூர்

Page 298
யுவராஜனுக்கும் முறைப்படி முடிசூட்டுதல் சோழரின் வழமையாகும். அரசின் இராணுவ வலிமையை நன்கு அறிந்து கொண்டு படைகளை நடத்திப் போர்புரிகின்ற வீரத்தை சாஸ்திரபூர்வமான பயிற்சியின் மூலம் யுவராஜன் பெற்றிருந்தான். அமைச்சர்களோடு அமர்ந்து அவையில் அமைச்சருக்குரிய முறையில் தம்முடைய அரசியல் புலமையை வெளிக்காட்டுகின்ற வாய்ப்பினையும் அந்த யுவராஜன் பெற்றிருந்தான்.
சோழராச்சியமும் அதன் உட்பிரிவுகளும்
தொன்று தொட்டு சோழமன்னர்களின் ஆட்சிக் குரியதால் அவர்களால் ஆளப்பட்டு வந்த தமிழகப்பகுதி சோழமண்டலம் என்று வழங்கப்பட்டது. அது தமிழகத்தின் கிழக்குப் பகுதியாக அமைந்துள்ளதால் குணபுலம் எனவும் கூறப்பட்டது. அது தற்காலத்து தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி, தென்னார்க்காட்டின் சில பகுதிகள், புதுக்கோட்டை நாட்டின் சில பகுதிகள் என்பவற்றைத் தன்னகத்தே கொண்ட ஒரு பெரு நிலப்பரப்பாகும். சோழர்கள் தம் படை வலிமையினாற் பிறநாடுகளை வென்று பேரரசு ஒன்றை நிறுவிய போது அவர்களது ஆளுகையின் கீழ் அமைந்த நாடுகள் அனைத்தும் சோழராச்சியம் என்ற பெயரைப் பெற்றன. அஃது முதலாம் இராஜராஜசோழனின் 17ஆம் ஆட்சியாண்டில் பல மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டன. அவை சோழமண்டலம், ராஜராஜ பாண்டிய மண்டலம், சயங் கொண்ட சோழ மண்டலம், மும்முடிச் சோழ மண்டலம், முடி கொண்ட சோழமண்டலம், நிகரிலிச் சோழ மண்டலம் அதிராஜராஜ சோழ மண்டலம், மலை மண்டலம் வேங்கை மண்டலம் என்பனவாகும்.
ஒவ்வொரு மண்டலமும் பல வளநாடுகளாகப் பிரிக்கப்பட்டது. வளநாடு ஆறுகளுக்கிடையில் அமைந்திருந்த நிலப்பரப்பாகும். எடுத்துக் காட்டாக உய்யக்கொண்டார் வளநாடு அரிசிலாற்றிற்கும் காவிரியாற்றிற்கும் இடைப்பட்ட நிலப்பரப்பாகும். அதை 'அரிசியலுக்கும் காவிரிக்கும் நடுவான உய்யக் கொண்டார் வளநாட்டுத் திரை மூர் நாடப் பள்ளிச் சந்தம் இறக்கின நெற்குப்பை அளந்தபடி நிலம்” என்னும் தஞ்சைக் கோயில் கல்வெட்டு உணர்த்தி நிற்கிறது. ஒவ்வொரு வளநாடும் பல நாடுகளாகக் பிரிக்கப்பட்டிருந்தன. நாடுகளிற் சில கூற்றங்கள் எனவும் வழங்கி வந்தன. அவை தமது நாட்டிலுள்ள பேரூர் ஒன்றைத் தலைநகரமாகக் கொண்டிருந்த காரணத்தால் அப்பேரூர்களின் பெயரையே தம் பெயராகக் கொண்டு நிலவி வந்தன. இவ்வுண்மை நல்லூர் நாடு, திருநறையூர் நாடு, இன்னம்பர் நாடு, அம்பர் நாடு, உறையூர் கூற்றம், தஞ்சாவூர் கூற்றம், திருவாரூர்க் கூற்றம், பட்டினக் கூற்றம், ஆர்க்காட்டுக் கூற்றம் என்ற நாடுகளின் பெயர்களும் கூற்றங்களின் பெயர்களும் நன்குணர்த்துவனவாகும்.
அரச அதிகாரிகளும் கடமைகளும்
அரசியலை நடத்துவதற்கு அதிகாரிகள் பலர் இருந்தனர். அவர்கள் அனைவரும் சோழமன்னர்களால் அறிவு, ஒழுக்கம் , ஆற்றல், குடிப்பிறப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தெரிந்தெடுக்கப்பட்டவர்கள். அரசியல் அதிகாரிகளில்
இந்துக்கலைக்களஞ்சியம்
27.

2
பெருந்தரம், சிறுதரம் என்ற இருவகையினர் இருந்தனர். சில கல்வெட்டுக்களில் அவ்விருவகையினரும் பெருந்தனம், சிறுதனம் என்று கூறப்பட்டுள்ளனர். ஒவ்வொரு பிரிவிலும் பல அதிகாரிகள் கடமையாற்றினர் என்பது கல்வெட்டுக்களாற் புலனாகிறது. தலைநகரில் அரசனோடு இருந்து நாட்டை ஆட்சி புரிவதில் துணை புரிந்தவர்கள் அமைச்சர்களாவர். அவ்வமைச்சர்களிற் தலைவனாயிருந்தவன் முதல் மந்திரி என வழங்கப் பெற்றான். விக்கிரம சோழனுலா, கலிங்கத்துப் பரணி முதலிய நூல்களினால் அமைச்சர் குழுவும் முதல் மந்திரியும் இருந்தமை தெளிவாகத் தெரிகிறது.
மன்னர் அவையில் அமைச்சர் குழுவோடு நான்கு படைத்தளபதிகளும் அமைச்சர்களுக்குத் தலைவர்களாகவுள்ள மாசாமந்தரும் இருந்தனர். இவர்களை விட அரண்மனையில் இருந்த ஏனைய அதிகாரிகள் திருமந்திர ஓலை (அரசனின் உத்தரவுகளை நேரில் கேட்டு ஒலையில் எழுதும் அதிகாரி) திருமந்திர ஓலை நாயகம் ( ஒலையில் எழுதியுள்ள அரசனின் உத்தரவுகளை மேற்பார்த்து கையொப்பமிடும் அதிகாரி. அத்துடன் இன்ன இன்ன காலத்தில் இன்ன இன்ன கருமங்கள் செய்ய வேண்டும் என்ற நிகழ்ச்சி குறிப்பினை நினைவூட்டி நிறைவேற்றுபவனும் அவனே). விடையில் அதிகாரி ( அரசனது திருமடல்களை பணிமக்கள் மூலம் உரியவர்களுக்குச் சேர்ப்பித்து அதற்குரிய பதிலையும் பெற்றுக் கொள்பவன்) கருமம் ஆராயும் அதிகாரி (அரசாங்கத்தில் அமைந்த பல துறைகளிலும் நிகழும் நிகழ்ச்சிகளை அரசனது ஆணைப்படி ஆராயும் அதிகாரி) நாடுகாவல் அதிகாரி (தன் நாட்டிலுள்ள ஊர்களிற் களவு, கலகம் முதலியவை நிகழாமற் காத்து உள்நாட்டில் அமைதி காக்கும் ஒரு தலைவன்) இவ்வதிகாரியின் செயலுக்காகப் பொதுமக்களிட மிருந்து நாடுகாவல் அல்லது பாடிகாவல் என்ற வரி ஒன்று நெல்லாக வாங்கப்பட்டு வந்தது.
புரவரித்திணைக்களம்
சோழ மன்னர்களின் ஆட்சிக்காலத்தில் அரசாங்கத்திற்குக் கிடைத்த வருமானங்களின் பெரும் பகுதி நிலவரியால் வந்தது என்று திட்டவட்டமாகக் கூறலாம். எனவே விளை நிலங்களை அளந்து அவற்றின் தரத்திற்கேற்ப அவற்றி வரிவிதித்து வருடந்தோறும் குடிமக்களிடம் இருந்து வரியை அறவிடுவது அரசாங்கத்தின் தலையாய கடமையாக நிறை வேற்ற அதிகாரிகள் பலரைக் கொண்ட புரவரித் திணைக்களம் (நிலவரிக்கழகம்) அமைக்கப்பட்டிருந்தது. புரவரித்திணைக் களகத்திலிருந்து பல அலுவல்களைப் பார்த்து வந்தோர் புரவரித் திணைக்கள நாயகம் (திணைக்களத் தலைவர்) புரவரித் திணைக்களக் கங்காணி ( ஊர்கள் தோறும் சென்று நிலவரிக் கணக்குகள் ஒழுங்காக எழுதப்பட்டு கிராம சபைகளில் வைக்கப்பட்டுள்ளதா? என மேற்பார்வை செய்யும் அதிகாரி) வரிப் பொத்தகம் (அரசாங்கத்திற்கு ஒவ்வொரு ஊரினின்றும் வருவதற்குரிய காணிக் கடனாகிய அரசிறை எவ்வளவென்று உணர்த்தும் புத்தகம் ஆகும். அத்துடன் ஒவ்வொரு ஊரிலும் சீவிதமாகவும், இறையிலியாகவும் அரசன் நிலங்களை வழங்க

Page 299
நேர்ந்தால் அவற்றைப் பற்றிய விளக்கமும் நிலவுரிமை பற்றி காலந்தோறும் ஏற்படும் மாறுதல்களும் இவ்வரிப் புத்தகத்திலே தவறாமற் குளிக்கப்படும். இவ்வரிப் புத்தகம் வைத்திருப்பவரும் வரிப்புத்தகம் என்றே அழைக்கப்படுவர்) இவர்களுக்குத் தலைவன் வரிப் புத்தக நாயகன் என்று கூறப்பட்டுள்ளான். ஒவ்வொரு ஆண்டிலும் ஒவ்வொரு ஊரிலும் நிலவுரிமையாளர் களாகவுள்ள காணியாளர்களிடம் வாங்க வேண்டிய நிலவரியும் பிறவரியும் இவ்வளவு என்பதும் அவற்றுள் அரசாங்கத்திற்குச் செலுத்துவது போக எஞ்சிய தொகை இவ்வளவு என்றும் எழுதப்பட்டுள்ள புத்தகம் வரிப்பொத்தகக் கணக்கு எனப்படும். வரியிலிடு அதிகாரி (நிலவுரிமை பற்றி அவ்வப்போது ஏற்படும் மாறுதல்களைச் சில தலைவர் முன்னிலையில் குறிப்பவன் ஆவான்) இவர்களை விட கீழ் நிலை உத்தியோகத்தர்களாக முகவெட்டி (ஊர்களின் பெயர்கள் முதலான எல்லாவற்றிற்கும் அட்டவணை தயாரித்து அவற்றை வரிப்புத்தகம் முதலியவற்றில் எளிதில் கண்டு பிடிப்பதற்கு துணைபுரிபவன்) அவனுக்கு உதவியாக இருப்பவன் கீழ் முகவெட்டி, பட்டோலை என்பான் நாள் தோறும் நடப்பவற்றை நிகழ்ச்சிக் குறிப்பில் எழுதி வைப்பவன்.இவர்கள் ஒவ்வொரு மண்டலத்திற்கும் தனித்தனியாக இருந்த புரவளித் திணைக்களம் ஒவ்வொன்றிலும் இருந்தனர். இவர்களைத் தவிர நாடுகளை கூறுபட அளப்பவரும், விளை நிலங்களைத் தரங்கண்டு வரிவிதிக்கும் அதிகாரிகளும் இருந்தனர். இவர்கள் நாடு கூறு செய்வோர், வகை செய்வோர் என அழைக்கப்பட்டனர். புரவரித்திணைக்கள அதிகாரிகளும் மன்னனைப் போல் நாட்டைச் சுற்றிப் பார்த்து மக்களின் குறை நிறைகளைக் கேட்டறிந்து ஆவன செய்தனர்.
அரசன் தன் ஆளுகைக்குட்பட்ட நாட்டைச் சுற்றிப் பார்த்து மக்கள் குறைகேட்டு அவற்றைத் தீர்ப்பதற்காக உடனடி நடவடிக்கை மேற்கொண்டான். அரசனிடம் தம் விண்ணப் பங்களை விண்ணப்பிக்க விரும்பிய குடிமகன் முதலில் அதனை உடன் கூட்டத்ததிகாரிகளில் ஒருவரிடமோ அல்லது வேறு அதிகாரியிடத்தோ தெரிவிக்க வேண்டும். அவ்வதிகாரி அவற்றை அப்படியே மன்னனுக்கு விண்ணப்பிப்பான். அரசன் உடனே அக்குடிமகனை நேரே வரவழைத்துக் குறைபோக்க ஒரு அதிகாரியை நியமிப்பான். சிக்கலான விடயமாக இருந்தால் உடன் கூட்டத்தார், அமைச்சர்கள் ஆகியோருடன் ஆலோதித்தல் அக்கால வேந்தர்கள் கையாண்ட முறையாகும். இதனால் குடிமக்களின் குறைகள் எல்லாம் காலதாமதமின்றியும் பொருட் செலவின்றியும் நிவர்த்திபெற்று வந்தமை. குறிப்பிடத்தக்கது.
சோழ மன்னர்களின் சுற்றுலாக்களினால் அரசாட்சி வலுப் பெற்றது. திருவிழாக்கள் முதலான நாட்கள் ஆண்டு தோறும் வருகின்ற சந்தர்ப்பங்களில் திருவாரூர், சிதம்பரம் , திருவொற்றியூர் போன்ற ஊர்களுக்கு வருகின்ற சோழ மன்னர்களின் வரவை எதிர்பார்த்து அங்கே செய்கின்றபாங்கில் தீவிரமான பொறுப்புணர்ச்சியைக் காட்டினார்கள். அரசனுடைய மேற்பார்வைக்குக் கொண்டுவரப்பட்ட அரசியற் காரியங்கள் அந்த
2

நேரங்களில் உடனுக்குடன் தீர்க்கப்படும் என்ற வழக்காறு ஆட்சியமைப்பின் ஒர் அங்கமாகக் காணப்பட்டது. சோழமன்னர்கள் தங்கள் ஆதிக்கத்திலுள்ள இடங்களையும் நாட்டு மக்களையும் நேரில் தெரிந்து வைத்திருந்தார்கள்.
அரசியல் அதிகாரிகளும் பட்டங்களும்
சோழமன்னர்கள் தம் அரசியல் அதிகாரிகளுக்குப் பல பட்டங்களை வழங்கிக் கெளரவித்துள்ளார்கள் என்பதைக் கல்வெட்டுக்கள் பல உணர்த்தி நிற்கின்றன. மாராயன், பேரரையன், அரையன், மூவேந்த வேளாளன், தொண்டமான், பல்லவராயன், காலிங்கராயன், காடவராயன், கச்சிராயன், சேதிராயன், வாணகோவராயன், மாவலிவானராயன், கேரளராசன், விழுப்பரையன், மழவராயன், நாடாள்வான், பிரமாதிராசன், பிரமமாராயன், சோழர்கோன் முதலியனவாகும். இப்பட்டங்களைப் பெரும்பாலும் தம் இயர்பெயர் அல்லது சிறப்புப் பெயர்களோடு இணைத்தே சோழமன்னர்கள் தம் அரசியல் அதிகாரிகளுக்கு அளித்து வந்தனர். இவ்வுண்மையை ராஜராஜ மாராயன். விக்கிரமசோழமாராயன் ராஜேந்திர சோழமூவேந்த மாராயன், குலோத்துங்க சோழ கேரள ராஜன், ராஜராஜ காடவராயன், வீரராஜேந்திர பிரமாதிராஜன் என்று வழங்கப் பெற்றுள்ள பட்டங்களால் உணர்ந்து கொள்ளக் கூடியதாக உள்ளது. பிரமராயன், பிரமாதிராசன் என்ற பட்டங்கள் பிராமண குல அதிகாரிகளுக்கு மட்டும் கொடுக்கப்பட்டுள்ளன. இப்பட்டங்கள் அனைத்தும் ஒன்றுக் கொன்று உயர்ந்ததாகவோ தாழ்ந்ததாகவோ கருதப்படாமல் சமமாகவே மதிக்கப் பெற்றன.
கிராம ஆட்சி
சோழமன்னர்களின் ஆட்சி சிறப்பாக நடைபெறுவதற்கும் மக்களின் பல நலன்களும் பெற்று அமைதியான வாழ்க்கையை வாழ்ந்ததற்கும் ஊர்கள் தோறும் நிலைபெற்றிருந்த ஊராட்சி மன்றங்களே காரணமாயிருந்தன. இம்மன்றங்கள் பொறுப்புணர்ச்சியுடன் அறநெறி பிறளாமல் நடுநிலை நின்று தமது கடமைகளைச் செவ்வனே நடத்தி வந்ததால் பொதுமக்கள் பெருமதிப்பும், நம்பிக்கையும் வைத்து அவற்றின் முடிவுகளை ஏற்று நடந்து வந்தனர். சோழ மன்னர்களின் கீழ் இருந்த ஊராட்சி மன்றங்களில் நான்கு சபைகள் இருந்தன. அவை, பிராமணர்கள் பிரமதேய உரிமையுடன் வசித்து வந்த சதுர்வேதி மங்கலங்களில் இருந்த சபை திருக்கோயிலுக்குரிய தேவதானங்களில் இருந்த சபை, பிராமணரல்லாத பிற வகுப்பினர் வசித்த ஊர்களில் இருந்த சபை, வணிகர்கள் வசித்த நகரங்களில் இருந்த சபை, ஆகிய நான்குமாகும். இச்சபைகள் தமிழகத்திற் புராதன காலத்திலேயே நிறுவப்பட்டிருந்ததற்கு ஆதாரங்கள் உண்டு. கடைச்சங்கப் பாடல்களில் உறையூரின் கண் சோழர்களின் அறங் கூறவையம் ஒன்று இருந்ததென்பதும் அது அறங்கெடாமல் எல்லோர்க்கும் நீதி வழங்கி வந்த தென்பதையும் அறியக் கூடியதாக உள்ளது. பின்னர் பல்லவ அரசர் காலத்திலும் , சோழ மண்டலத்தில் இச் சபைகள் இருந்துள்ளன என்பதற்குக் கல்வெட்டாதாரங்களும் நூலாதாரங்களும் உண்டு. பல்லவர் காலத்தில் அவை நீதி வழங்குவதோடமையாது ஏரி, குளம், தோட்டம் ஆகியவற்றைப் பாதுகாத்தல், பெருவழி
இந்துக்கலைக்களஞ்சியம்

Page 300
அமைத்தல், அறநிலையங்களை ஏற்று நடத்துதல், அவற்றைக் கண் காணித்தல், அரசிறை வசூலித்தல் ஆகியவற்றையும் தம் கடமைகளாகக் கொண்டிருந்தன. இவ்வாறு ஊராட்சி நடத்தி வந்த கிராம சபைகளும், நகரசபைகளும் சோழமன்னர்களின் ஆட்சிக்காலத்திலே தான் மிகச் சிறந்த நிலையில் அமைந்து செயற்பட்டன என்பது உண்மை, சோழர் ஆட்சி நிலை குலைந்து தமிழகம் அன்னியர் ஆட்சிக்குட்பட்ட வேளையிலும் இவ்வூராட்சி மன்றங்கள் பொதுமக்கள் வாழ்வு நிலை குலையாமல் இருப்பதற்கு அரும்பணியாற்றியதை வரலாற்றாசிரியரின் குறிப்புகள் புலப்படுத்துகின்றன.
ஊரிலுள்ள ஆண்மக்கள் அனைவரும் கிராம சபையின் உறுப்பினராக இருந்தனர். கிராம சபையால் குடவோலை வாயிலாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களைக் கொண்ட கழகங்கள் கிராமியக் காரியங்கள் முழுவதையும் நடத்தி வந்தன. சோழ மன்னர்களின் ஆட்சிக் காலங்களில் நடைபெற்ற கிராமசபைகளைப் பற்றிய செய்திகளைப் பல கல்வெட்டுக்கள் மூலம் அறியக் கூடியதாக உள்ளது. இத்தகைய கல்வெட்டுக்களில் முதற் பராந்தகசோழன் ஆட்சியில் செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள உத்தரமேரூரில் வரையப் பெற்றுள்ள இரு கல்வெட்டுக்கள், கிராமசபையாரால் தேர்ந்தெடுக்கப்பட்ட நிறைவேற்றுக் கழக உறுப்பினரின் தகுதி, அன்னார் தேர்ந்தெடுக்கும் முறை, நிறைவேற்றுக் கழகங்களின் அமைப்புமுறை முதலான பல விளக்கங்களைத் தந்து நிற்கிறது.
உத்தரமேரூரிற் காணப்பட்ட இவ்விரண்டு கல்வெட்டுக்களும் முதலாம் பராந்தகனது 12 ஆம் ஆட்சியாண்டிலும் 14ஆம் ஆட்சியாண்டிலும் வரையப்பெற்றவை. அவற்றுள் முதற் கல்வெட்டு அவ்வூர்ச் சபையார் சம்வத்சரவாரியம், தோட்டவாரியம், ஏரிவாரியம், பஞ்சவாரவாரியம், பொன்வாரியம் ஆகிய நிறைவேற்றுக் கழகங்களை நிறுவுவதற்குரிய விதிகளையும், முறைகளையும் கூறுகின்றது. இஃது பராந்தக சோழனுடைய ஆணைப்படி அக்கூட்டத்திற்கு வந்திருந்த தத்தனூர் மூவேந்த வேளான் என்ற அரசியல் அதிகாரியின் முன்னிலையில் உத்தரமேருச் சதுர்வேதிமங்கலத்துச் சபையார் தாமே அமைத்துக் கொண்ட விதிகளாகும். இரண்டு ஆண்டுகளின் பின் ஏற்பட்ட அனுபவத்தின் விளைவாக இவ்விதிகள் திருத்தியும், விளக்கியும் எழுதப்பட வேண்டிய தாயிற்று. பராந்தகனது 14 ஆம் ஆட்சியாண்டாகிய கி.பி. 921 இல் அவ் வேந்தன் ஆணைப்படி இங்கு வந்திருந்த சோமாசிப் பெருமான் முன்னிலையில் உத்தர மேரூர்ச் சதுர்வேதிமங்கலத்துச் சபையார் நிறைவேற்றுக் கழகங்களாகிய வாரியங்களை அமைத்தற்குரிய விதிகளையும்,
முறைகளையும் விளக்கமாக வரையறை செய்து கொண்டனர்.
கழக உறுப்பினர்க்குரிய தகமைகள்
கழக உறுப்பினர்களாகத் தேர்ந்தெடுக்கப்படுபவர்கள்
சொந்த மனையில் குடியிருப்பவர்களாகவும் காணிக்கடன்
செலுத்துவதற்குரிய கால் வேலி நிலம் உடையவர்களாகவும்
இந்துக்கலைக்களஞ்சியம்
274

இருக்க வேண்டும். சிறந்த அறிவாளியாகவும், அறநெறி பயின்றவராகவும் 35 வயதுக்கும் 70 வயதுக்கும் இடைப் பட்டவராகவும் இருக்க வேண்டும். அத்துடன் மூன்றாண்டுகளுக்குள் எந்த வாரியத்துக்கும் தேர்ந்தெடுக்கப்படாதவர்களாகவும் இருக்க வேண்டும் என்ற நியதி கடைப்பிடிக்கப்பட்டது. பெரும் கல்விமான்கள் அரைக்கால் வேலி நிலம் இருப்பினும் தகுதியுடையவர்களாகக் கருதப்பட்டனர்.
கழக உறுப்பினர்களாக இருந்து உரிய கணக்குக் காட்டத் தவறியவர்கள் ஐம்பெரும் பாதகங்களில் முதல் நான்கையும் செய்தவர்கள். அவர்களுடைய நெருங்கிய உறவினர்கள், பிறர் பொருளைக் கவர்ந்தவர்கள், இலஞ்சம் பெற்றோர், ஊருக்குத் துரோகம் செய்தோர், குற்றம் காரணமாகக் கழுதை மேல் ஏற்றப்பட்டவர்கள். கள்ளக் கையெழுத்திட்டவர்கள் ஆகியோர் கிராமவாரியம் செய்யும் கழக உறுப்பினராகத் தெரிவு செய்யப்படும் உரிமையைத் தம் வாழ் நாள் முழுவதும் இழந்து விடுகிறார்கள்.
உறுப்பினர்களைத் தெரிந்தெடுக்குமுறை
ஒவ்வொரு சதுர்வேதி மங்கலமும், ஊரும், நகரமும் அக்காலத்தில் பல பகுதிகளாகப் பிரிக்கப்பட்டிருந்தன. ஒவ்வொரு குடும்புக்கும் பிரதிநிதியாக ஒவ்வொரு உறுப்பினர் தெரிவு செய்யப்பட்டனர். குடும்புகளின் எண்ணிக்கை அவ்வூர் பெருமை, சிறுமைகளுக்கேற்ப மிகுந்தும் குறைந்தும் காணப்பட்டது. ஊர்மக்கள் தமக்குள்ளே கூட்டம் வைத்து கழகத்தின் உறுப்பினராக பெயர் எழுதி, அவ்வோலைகளை ஒன்று சேர்த்து அவை எக் குடும்பிற்குரியவை என்று பெயர் வரையப் பெற்ற வாயோலை ஒன்றையும் சேர்த்துக் கட்டி அவ்வோலைக் கட்டைகுடத்திலிட்டு ថា6}_f. உறுப்பினர்களாகத் தேர்ந்தெடுக்கக் குறிக்கப்பட்ட நாளிலே ஊர் மக்கள் ஒன்று கூடுவர். அரசரது ஆணைப்படி அங்கு சமூகம் தந்திருக்கும் அதிகாரி முன்னிலையில் குடும்ப ஒலை பொதுமகனால் 5TGë, si: Ui" (B) நிறைவேற்றுக்கழக உறுப்பினர் தேர்ந்தெடுக்கப்படுவர். ஊரிலுள்ள எல்லாக் குடும்புகளுக்குரிய உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் வாரியங்கள் அமைக்கப்படும்.
இவ்வாரியங்கள் சம்வற்சரவாரியம், தோட்டவாரியம், ஏரிவாரியம் பொன்வாரியம், பஞ்சவாரவாரியம், கழனிவாரியம், கணக்கு வாரியம், கலிங்கு வாரியம், குடும்பு வாரியம் என வழங்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு கிராம சபையும் அவ்வூருக்கும் சூழ்நிலைக்கும் இன்றியமையாத வாரியங்களை மட்டும் அமைத்துக் கொண்டனர் ஆயினும் சம்வற்சரவாரியம் மட்டும் எல்லா ஊர்களிலும் நிறுவப்பட்டிருந்தது. இதனை ஆட்டை வாரியம் என்றும் கூறுவர். சம்வத்சர வாரியத்தில் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்படுவோர். முன்பு ஏரி வாரியத்திலும், தோட்ட வாரியத்திலும் உறுப்பினராக இருந்து அனுபவம் பெற்றவர் களாகவும் கல்வியிலும், வயதிலும் முதியவர்களாகவும் இருத்தல் வேண்டும். இவ் உறுப்பினர்கள் அனைவரும் ஏதாவது ஒரு

Page 301
குற்றத்தின் நிமித்தம் இடையில் நிறுத்தப்பட்டால் அன்றி அனைவரும் வருடம் ஒன்றிற்குக் கிராம காரியங்களைச் செய்ய உரிமையுடையவர்களாவர். இதற்காக அவர்களுக்கு ஊதியம் எதுவும் வழங்கப்படவில்லை. கழக உறுப்பினர் அனைவரும் ஆளும் கணத்தார், வாரியப் பெருமக்கள், பெருமக்கள் என அந்நாளிற் பொதுமக்களாற் பெருமையாக அழைக்கப்பட்டனர்.
சபை கூடும் இடமும் காலமும்
இப் பெருமக்கள் கூடிக் காரியங்கள் நடத்துவதற்குப் பல ஊர்களில் மாளிகைகள் தனியாக அமைக்கப்பட்டிருந்தன. இருப்பினும் பெரும்பாலும் அவர்கள் கோயில் மண்டபங்களிலும் ஏனைய மன்றுகளிலும்தான் கூடுவர். தஞ்சாவூர் மாவட்டத்தில் நாலூர்ச்சபையார் முதலாம் ராஜராஜசோழன் காலத்தில் அவ்வூர்க்கோயில் கண்டராதித்தன் மண்டபத்திலும் ராஜராஜ மண்டபத்திலும், வண்ணக்கனார் அம்பலத்திலும் கூட்டம் நடத்தியுள்ளமை அங்கு காணப்படும் கல்வெட்டுக்களால் அறியக் கூடியதாக உள்ளது. திருவிடை மருதூர் நகரசபையாரும். திரைமூர் சபையாரும் திருவிடை மதுதூர் நாடகநபையில் கூட்டம் நடத்திய செய்தி ஒரு கல்வெட்டிற் காணப்படுகின்றது.
காளம் ஊதுவித்தும் முரசடிப்பித்தும் சபை கூடுமிடம் பொதுமக்களுக்குத் தெரியப்படுத்தப்படும். கிராமக் காரியங் களாகச் செய்து வந்த பொதுமக்கள் ஊதியம் எதுவும் இதற்காகப் பெறவில்லை. அவர்கள் வெவ்வேறு தொழில்களில் ஈடுபட்டு வந்தனர். அதனால் அவர்களுக்கு ஒய்வு கிடைக்கும் நேரத்தில் தான் சபை கூடும் வழக்கம் இருந்தது. எனவே பகல், இரவு என்ற வேறுபாடில்லாமல் கூட்டங்கள் நடத்தப்பட்டமைக்கு நாகப்பட்டினம் செம்பியன்மாதேவி என்ற ஊரிற் காணப்படும் கல்வெட்டு ஆதாரமாக உள்ளது.
கழக உறுப்பினர்க்குரிய தகமைகள்
கிராமசபையார் பணித்தவற்றைச் செய்யும் பணிமக்கள் , மத்தியஸ்தன், கரணத்தான், பாடிகாப்பான், தண்டுவான், அடிக்கீழ் நிற்போன் என்போராவர். அவர்கள் அனைவரும் கிராமசபையில் ஊதியம் பெற்றுப் பணிபுரிந்தனர். சபைக்குரிய கணக்கை எழுதிச் சபையோர் விரும்பியபோது அதனைக் காட்ட வேண்டிய கடமை கரணத்தானுக்குண்டு. அவன் சபையோரின் நன்மதிப்பைப் பெறாவிட்டால் அடுத்த ஆண்டு அவனுக்கு அவ்வேலை அளிக்கப்பட மாட்டாது. அதற்கு ஊதியமாக ஒரு நாளைக்கு நானாழி நெல்லும் ஓராண்டிற்கு இரண்டு கழஞ்சுப் பென்னும் கொடுக்கப்பட்டது. கணக்கில் தவறு ஏற்படின் 10 கழஞ்சு பொன் தண்டம் விதிக்கப்படும். ஒவ்வொரு வாரியத்திற்கும் தனித்தனியாகக் கணக்கன் இருந்திருக்கிறான். பாடிக்காப்பான் என்போன் திருட்டு, கலகம் போன்றவை நிகழாமல் ஊரைக் காத்து வருபவன். பாடி காவலருக்கும் இவர்களின் அதிகாரிக்கும் ஊதியம் வழங்குவதற்கு ஆண்டு தோறும் ஒவ்வோர் ஊரிலும் பாடிகாவல் என்ற வரியொன்று வாங்கப்பட்டு வந்தமை அறியக் கூடியதாக உள்ளது. பழைய செப்பேடுகளில் இவ்வரி நாடு காவல் என்ற
م/

}7
பெயருடன் காணப்படுகின்றது. தண்டுவான் என்போன், கிராமத்திலுள்ள மக்கள் அரசாங்கத்திற்கும் ஊர்ச்சபைக்கும் கொடுக்க வேண்டிய வரிகளை வசூலிப்பவன். அடிக்கீழ் நிற்போன் ஊர்ச் சபையோருக்குக் குற்றேவல் புரிபவன். மத்தியஸ்தன் என்போன் ஊர்ச்சபையிலே செய்யப்படும் முடிவுகளை நிகழ்ச்சிக் குறிப்பில் அவர்கள் கூறியபடி எழுதுபவன். கிராம சபைகளில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் எத்தகைய தொடர்புமின்றி வந்தகாரணம் பற்றி அவன் மத்தியஸ்தன் என வழங்கப்பட்டிருக்க வேண்டும்.
கிராமசபைக்குரிய கடமைகளும் வருவாயும்
கிராம காரியங்களைச் செவ்வனே நடத்தி மக்கள் வாழ்வில் அமைதியையும் சுபீட்சத்தையும் ஏற்படுத்துவதே கிராம சபைக்குரிய முக்கிய கடமையாகும். அதை நிறைவேற்ற கிராம சபையாருக்கு உட்கழகங்கள் இருந்தன. அவை வாரியங்கள் என்றழைக்கப்பட்டன. கிராம சபைக்குரிய முக்கிய கடமை நியாய விசாரணை செய்வதாகும். அறங்களை ஏற்று நடத்துவது, அறநிலையங்களைக் கண்காணிப்பது என்ற முக்கிய கடமைகளை சம்வற்சரவாரியம் மேற்கொண்டது. ஏரி, குளம், ஊருணி முதலிய நீர் நிலையங்களைப் பாதுகாத்தலும், விளைவிற்கு வேண்டிய நீரைப் பாய்சுவதும் ஏரி வாரியத்தின் கடமைகளாகும். புன்செய் நிலங்களையும் தோட்டங்களையும் பற்றிய எல்லாவற்றையும் பார்த்துக் கொள்ளுதல் தோட்ட வாரியத்தின் கடமையாகும். ஊரில் வழங்கும் பொன் நாணயங்களை ஆராய்வது பொன் வாரியத்தின் கடமையாகும். அரசனுக்குக் குடிகள் செலுத்த வேண்டிய நிலவரியையும் பிறவரிகளையும் வாங்கி அரசாங்கத்திற்கு ஆண்டுதோறும் அனுப்பும் கடப்பாடுடையவர் பஞ்சவாரியர் ஆவர்.
இவ்வாரியங்களேயன்றி திருப்பாற் கடற்கல்லெட்டிலே கழனிவாரியம், தடிவழி வாரியம், கணக்கு வாரியம், கலிங்குவாரியம், குடும்பு வாரியம் ஆகிய வாரியங்களும் குறிக்கப்பட்டிருக்கின்றன. நீர் நிலையங்கள் போன்றவற்றைக் கவனித்து வேண்டியவற்றைச் செய்தல் களனி வாரியரது கடமை. ஊர்க்கணக்கரும், மத்தியஸ்தரும் எழுதும் கணக்குகளை ஆராய்ந்து உண்மை காண்பது கணக்கு வாரியரது கடமையாகும். தாங்கிகளில் நீரைத் தேக்கி அவரவர்க்கேற்ற முறை நாட்களில் கால்வாய்களிலே தண்ணீரை விடுவது கலிங்குவாரியரது கடமையாகும். அவ்வாண்டில் குடிகள் பயிரிடும் நிலங்களைக் கோல் கொண்டு அளந்து விளை நிலப்பரப்பையும் விளைபொருளையும் கணக்கனைக் கொண்டு கிராமக்கணக்கில் எழுதி வைப்பது தடிவழி வாரியரது கடமையாகும். இவ்வாரியங்கள் எல்லாம் எல்லா ஊர்களிலும் இடம் பெறவில்லை. சில ஊரர்களிற் சம்வத்சரவாரியம் ஒன்றே கிராம காரியங்கள் எல்லாவற்றையுஞ் செய்து வந்ததைக் கல் வெட்டுக்களால் அறியக் கூடியதாக உள்ளது. சில ஊர்களில் விளை நிலங்களில் ஒரு பகுதி
இந்துக்கலைக்களஞ்சியம்

Page 302
திருக்கோயிலுக்குரிய தேவதானமாகவும் மற்றொரு பகுதி பயிரிடும் குடிகளுக்குரிய வெள்ளான் வகையாகவும் இருந்துள்ளன. இத்தகைய இடங்களில் கிராம ஆட்சியை நடத்துவதற்கு இரு வேறு சபைகள் இருந்தன. இவ்வுண்மையை “ஆமூர் கோட்டத்து படுவூர் நாட்டுத் தேவதானம் திருவிடவந்தை சபையோமும் ஊரோமும் கைய்யெழுத்து” எனவும் “விலை ஆவணஞ் செய்து கொடுத்தோம் வானவன் பேரரையனுக்குத் திரு நெய்தானத்து சபையோமும் ஊரோமும்” எனவும் கல்வெட்டுப் பகுதிகளால் நன்குணரலாம். ஒரே கிராமத்தில் இவ்விரு சபைகளும் தனித்தனியே கிராம காரியம் செய்து வந்தன
என்பதற்குக் கல்வெட்டுக்கள் ஆதாரமாக உள்ளன.
கிராமசபையார் தாம் மேற்கொண்ட பணிகளை ஒழுங்காகச் செய்வதற்கு சபாவிநியோகம், ஊரிடு என்ற வரி வாங்கி வந்தனர். வாரியப் பெருமக்கள் மகாசபையாரின் அனுமதி பெறாமல் ஒரு பொருளுக்கு இரண்டாயிரம் காசுகளுக்கு மேல் செலவழித்தல் கூடாது என்ற விதி நடைமுறையில் இருந்தது. சபையார் மக்களின் வரிப்பணத்தை நியாயமாகவும் ஒழுங்காகவும் செலவிடுதலில் பெருங்கவனம் செலுத்தி வந்தனர் என்பதை இஃது உணர்த்தி நிற்கின்றது. இச் சபையார் தம் முன்னோர்கள் பின்பற்றி வந்த பழைய விதிமுறைகளைப் பின்பற்றி தமது கடமைகளைச் செய்துவந்த போதும் சூழ்நிலைகக்கும் அனுபவத்திற்கும் ஏற்ப இன்றியமையாதவை என்று அனுபவத்தால் உணர்ந்து
செய்யப்பட்ட சில மாறுதல்களும் உண்டு.
கிராம சபையைவிட வேறு குழுவினரும் ஊர்களில் இருந்தனர். அவர்கள் மூலபருடையார், சாத்தகணத்தார், காளிகணத்தார். கிருஷ்ணகணத்தார், குமார கணத்தார், மணிக்கிராமத்தார், வளஞ்சியர், சங்கரபாடியர் பான்மா கேச்சுரர் என்போர். கோயிற் காரியங்களை நடத்துவதற்கு தேவதான ஊர்களிலுள்ள சபையார் அமைத்திருந்த உட்கழகத்தினரே இவர்கள். காளிகணத்தார் என்போர் கிராங்களில் உள்ள காளிகோயில் நிர்வாகத்தை நடத்தி வந்த கூட்டத்தினர் கிருஷ்ண கனத்தார் கிருஷ்ணன் கோயிலை நிர்வகித்து வந்தனர் குமார கனத்தார் முருகன் கோயிலை நிர்வகித்து வந்த குழுவினர். இக்கோயில் நிர்வாகக் குழுவினரை கணப் பெருமக்கள் என்று
சிறப்பித்து அந்நாளில் வழங்கியுள்ளனர்.
கிராமங்களுக்கும், நகரங்களுக்கும் இருந்த தனித்தனிச் சபையைப் போல் ஒவ்வொரு நாட்டிற்கும் தனிச் சபை இருந்தது. இவை அந்நாட்டின் பொதுக் காரியங்களைக் கவனித்து நிறைவேற்றும் பொருட்டு அமைக்கப்பட்டிருந்தது என்பது கல்வெட்டு செப்பேட்டு ஆதாரங்களால் உணரக் கூடியதாக உள்ளது. நாட்டிலுள்ள எல்லாக் கிராமசபை, நகரசபை உறுப்பினர்களைக் கொண்டதே இந்த நாட்டுச் சபையாகும்.
மாநாட்டுக் கூட்டம் நடைபெறும்போது ஒவ்வோரூரின்
ឆ្នាដៃនៃ
276

பிரதிநிதியோடும் அவ்வூரின் கணக்கரும் இருத்தல் வேண்டும் என்ற செய்தி அறியக் கூடியதாக உள்ளது. நாட்டுச் சபையார் தாமே அறச் செயல்களைச் செய்ததோடு அறப்புறங்களை ஏற்று நடத்தியும் வந்துள்ளார்கள்.
இறை கடமைகளும் வரிகளும்
சோழமன்னர்கள் தமது ஆட்சியைத் திறம்பட நடத்தவும் நாட்டு மக்களுக்கு பலவகை நன்மை புரிந்து காத்தற் பொருட்டும் குடிமக்களிடம் பலவகை வரிகளை அறவிடுவது இன்றியமையாத தாயிற்று.
சோழர் ஆட்சியில் அரசனது வருவாய்களில் முதன்மை பெற்றது நிலவரியாகும். அதனைக் கடமை எனவும், காணிக்கடன் எனவும் இறை எனவும், கல்வெட்டுக்கள் கூறுகின்றன. இறைவரி தவிர்ந்த ஏனைய வரிகள் குடிமை எனவும் அங்கம் எனவும் அந்நாளில் வழங்கப்பட்டன.
இவ்வரிகளை மன்னர்கள் தம் குடிகளிடம் அறவிட்டு வந்தார்கள் என்பதற்குப் பல கல்வெட்டுக்களும், செப்பேடுகளும் சான்றாக உள்ளன. அவற்றைவிட தம்கீழ் வாழ்ந்து வந்த குறுநில மன்னர்களிடமும் ஆண்டு தோறும் திறைப்பொருள் வாங்கி வந்தனர். அதுவும் பேரரசுக்குரிய வருவாய்களில் ஒன்றாகும்.
நிலவரியாக விளைநிலங்களில் விளைந்த நெல்லின் ஒரு
பகுதியாகவோ,பொன்னும் காசுமாகவோ வாங்கப்பட்டு வந்தது. அந் நாட்களில் நிலங்களில் விளைந்த நெல்லை ஆறு கூறாக்கி அவற்றில் ஐந்து கூறுகளை நிலவுரிமையாளராகவுள்ள குடிகளுக்கு அளித்து விட்டு எஞ்சியுள்ள ஒரு பகுதியை அரசாங்கத்திற்குரிய நிலவரியாக வாங்கிவந்தனர். இது தொன்று தொட்டுத் தமிழ் நாட்டில் வழங்கிவந்த முறையாகும். முதற் பராந்தகனது ஆட்சிக் காலத்தில் செங்கற்பட்டு மாவட்டம் சோழ சிங்கபுரத்தில் எழுதப்பட்ட கல்வெட்டொன்று அரசற்குரிய நிலவரியாக அக்காலத்தில் எவ்வளவு வாங்கப் பெற்று வந்தது. என்பதைப் புலப்படுத்துகின்றது. வெண்பா வடிவில் அமைந்துள்ள அக்கல்வெட்டு,
ஆறுகூறினால் புரவு மாயதியும் பொன்னும்
பெறுமாறு சோழர்கோன். பறிவையர்கோன்
மங்கல வீரசோழன் அத்தி மல்லன்தான் கொடுத்தான்
முங்கில்வர் என்னும் வயல், என்பதாகும். இதனால் அரசனுக்குரிய அரசிறையாகிய நிலவரி ஆறிலொன்று என்பதும் அது புரவு என்று அந்நாளில் வழங்கப் பெற்று வந்தது என்பதும் தெளிவாகிறது. அரசிற்கு மிகப் பெரிய வருமானத்தைத் தேடாத அந்த நிலவரியாகிய புரவுவரியைச் சேகரிப்பதற்காக ஒவ்வொரு மண்டலத்திற்கும் ஒவ்வொரு தனிச் சபை நிறுவப்பட்டிருந்தது. அவை தொண்டை நாட்டுப் புரவளித் திணைக்களம், சோழ நாட்டுப் புரவளித் திணைக்களம் என்ற பெயர்களை உடையனவாய் இருந்தன. நெல்லாக அறவிடப் பட்ட புரவுவரியை குடிகளிடம் வசூலிப்பது கிராம சபைகளின்

Page 303
உட்கழகங்களுள் ஒன்றாகிய பஞ்சவாரியத்தின் கடமை. இவ்வாரியப் பெருமக்கள் விளை நெல்லை ஆறு கூறாக்கி ஒரு கூறை அரசிறையாகப் பெற்றுக் கொண்டனர். இவற்றைச் சேமிப்பதற்காக ஊர் தோறும் ஊர்க்களஞ்சியம் நிறுவப்பட்டது. இவ்வாறு கிடைக்கப் பெற்ற நெல்லை கிராம சபையார் அரசாங்க உத்தரவுப்படி உரிய இடங்களுக்கு அனுப்பி வைத்தனர்.
இவற்றைத் தவிர, செக்கிறை, மறைஇறை, அங்காடிப்பாட்டம், தட்டாரப் பாட்டம், இடைப்பாட்டம், ஈழம்பூட்சி, வண்ணாரப்பாளை, கண்ணாலக்காணம், குசக்காணம், ஒடக்கூலி, நீர்க்கூலி, நாடுகாவல், உலகு, தரகு, மரவிறை, இலைக்கூலம் முதலான வரிகளும் அறவிடப்பட்டதைச் சுந்தரச் சோழனின் அன்பிற் செப்பேடுகளும், முதலாம் ராஜ ராஜசோழனின் ஆனைமங்கலச் செப்பேடுகளும், கங்கை கொண்ட சோழனின் திருவாலங்காட்டுச் செப்பேடுகளும் எமக்கு உணர்த்தி நிற்கின்றன. இறை,கூலி, பாட்டம், பூட்சி என்பவை வரியை உணர்த்தும் மொழிகளாகும். இவை பெரும்பாலும் உழவுத் தொழில் தவிர்ந்த ஏனைய தொழிலாளர்களிடம் பெறப்பட்ட வரிகளாகும். தறியிறை, செக்கிறை தட்டாரப் பாட்டம், வண்ணாரப்பாறை, குசக்காணம், தரகு என்பன அவ்வத் தொழில் புரிந்தோரிடம் அரசாங்கம் வாங்கிவந்த ஒரு வரியாகும். அங்காடிப் பாட்டம் என்பது கடைக்காரர்களிடம் வாங்கப்பட்ட வரியாகும். இடைப்பாட்டம் என்பது ஆடு, மாடுகளை வளர்த்து அவற்றின் மூலம் வருமானம் ஈட்டிய இடைக்குல மக்களிடம் வாங்கப்பட்ட வரியாகும். ஈழம்பூட்சி என்பது பனை, தென்னை முதலியவற்றில் கள் இறக்கும் தொழில் செய்தவர்களிடம் வாங்கப்பட்ட வரியாகும். கண்ணாலம் கணம் என்பது திருமண நாளிற் செலுத்தப்பட்ட வரியாகும். ஒடக்கூலி என்பது ஆறுகளிலும், ஏரிகளிலும் ஒடந்தள்ளுவோரிடம் வாங்கிய வரியாகும். நாடுகாவல் என்பது ஊர்களில் களவு முதலான குற்றங்கள் நிகழாமல் காத்தற் பொருட்டு குடிமக்களிடம் வாங்கி வந்த ஒரு வரியாகும். இவ்வரி சோழர் கல்வெட்டுக்களில் பெரும் பாடி காவல், சிறுபாடிகாவல் என்று குறிக்கப்பட்டிருக்கிறது. மரவிறை என்பது பயன்தரும் மரங்களை அனுபவித்த குடிமகளிடம் வாங்கப்பட்டவரியாகும். சில கல்வெட்டுக்களில் மரமஞ்சாடி என்று குறிக்கப்பட்டதால் காயும், பழமும் தரக்கூடிய மரம் ஒன்றிற்கு ஒரு மஞ்சாடி பொன் வாங்கப் பெற்றிருக்கலாம் என்று கருத இடமுண்டு. இலைக்கூலம் என்பது வெற்றிலை பயிரிடுபவர்களிடம் பெறப்பட்ட வரியாகும். உல்கு என்பது அங்க வரியாகும். அங்கம் என்பது வணிகத்தின் பொருட்டு வெளிநாடுகளிலிருந்து கடல்வழியாக மரக்கலங்களிலும் உள்நாடுகளில் இருந்து பெருவழிமூலம் வண்டிகளிலும் வரும் பண்டங்களுக்கு வாங்கப் பெற்ற, வரியாகும். இவ்வரிகள் எல்லாம் சோழமன்னர்களால் தம் குடிகளிடத்து அறவிடப்பட்டவை என்பதைத் திருவாலங்காட்டுச் செப்பேடுகள் உணர்த்தி நிற்கின்றன. வரிகளின் பெயர்கள் அதிகமாகக் காணப்படுவதால் சோழர்கால மன்னர்கள் மக்களிடம் அதிக வரியை அறவிட்டு வந்தார்கள் என்பது உண்மையல்ல.
ஒவ்வொரு வரியும், அந்தந்தத் தொழில் செய்தவர்களிடம்

77ו
வாங்கப்பட்டதே அன்றி எல்லா மக்களும் எல்லா வரிகளும் செலுத்தவில்லை.
இரவுவரி
வடஆர்க்காட்டில் திருமாற் பேறு சிவாலயத்துக்குரிய புரவரியாக ஆயிரம் கலம் நெல் ஆண்டு தோறும் அளித்துவந்த புதுப்பாக்கத்துச் சபையார் இரவு வரியாக 187 கலம் நெல்லும் இருபத்தாறு கழஞ்சு அரைமஞ்சாடிப் பொன்னும் கொடுத்து வந்தார்கள் என்று உத்தமச் சோழனின் பதினான்காம் ஆண்டுக் கல்வெட்டொன்று கூறுகிறது. இவ்வரியைக் குறிக்கும் கல்வெட்டுக்கள் மிகுதியாகக் கிடைக்காமையால் இதைப்பற்றித் தெளிவாக ஆராய முடியவில்லை.
போர்வரி
சில வேளைகளில் குறிப்பிட்ட சில காரியங்களுக்காகவே சிலவரிகள் ஒதுக்கப்பட்டன. கங்கை கொண்ட சோழனின் புதல்வனாகிய வீரராஜேந்திர சோழன் என்பான் வடக்கேயுள்ள வேங்கை மண்டலத்தின் மீது படையெடுத்துச் செல்ல நேர்ந்த போது அச்செலவை ஈடுசெய்வதற்காக சோழராட்சியத்திலிருந்த விளைநிலங்களுக்கு வேலி ஒன்றிற்கு ஒரு கழஞ்சு பொன் போர் வரியாக தன் நாட்டு மக்களிடம் வாங்கினான் என்று தங்சாவூரி ஆலங்குடியில் உள்ள கல்வெட்டொன்று கூறுகிறது.
காவேரிக் கரை விநியோகவரி
மூன்றாம் குலோத்துங்க சோழனது 31 ஆம் ஆட்சியாண்டுக் கல்வெட்டு தஞ்சாவூர் திரம்பாம்புரத்தில் காவேரி விநியோகம் என்ற வரி மக்களிடம் வாங்கப்பட்டதைத் தெரிவிக்கின்றது. காவேரி ஆறும் அதன் கிளைகளும் பெருகிக் கரைகளை உடைத்து ஊர்களை அழிக்காதவாறு காவேரி ஆற்றின் இரு மருங்கிலும் பலமான கரைகள் அமைக்கும் பொருட்டு அவ்வாற்றங்கரையைச் சார்ந்த மக்களிடம் வாங்கப்பட்ட வரி என்று கருத இடமுண்டு. எனவே இவ்வரி எல்லா ஊர்களிலும் வாங்கப்படவில்லை என்பது தெளிவு. இத்தகைய வரிகள் காலத்தின் தேவையை ஒட்டி ஒரு சில ஆண்டுகளுக்கு மட்டும் அறவிடப்பட்டன.
சபாவிநியோகம்
இது பிராமணர்க்குரிய கிராமங்களாகிய சதுர்வேதி மங்கலங்களிலிருந்த சபையார் சபையின் செலவுக்காக ஆண்டு தோறும் வாங்கிய வரியாகும்.
ஊரிடு வழிபாடு
இது நகரங்களிலும் வெள்ளாண்வகை ஊர்களிலுமிருந்த சபையார் ஆண்டுதோறும் வாங்கிய வரியாகும். இவ்வரித்தொகை அரசாங்கத்திற்கு உரியதன்று பண்டைக்காலத்தில் வழங்கி வந்த முறையைப் பின்பற்றியே ஊர், கிராமம், நகரம் ஆகியவற்றில் வரிகள் வசூலித்தார்கள். திருச்சிராப்பள்ளி மாவட்டம் மேலைப் பழுவூரிலே சுந்தர சோழன் ஆட்சிக்காலத்துக் கல்வெட்டுக்கள் இரண்டு கிடைக்கப் பெற்றுள்ளன. இக்கல்வெட்டு நந்திபுரத்தில்
இந்துக்கலைக்களஞ்சியம்

Page 304
முன்னர் மன்றுபாடும் பிறவரிகளும் வாங்கிய முறையைப் பின்பற்றியே அவ்வூர்ச் சபையாரும் வாங்கிவர வேண்டும் என அந்நாட்டுத் குறுநில மன்னன் பழுவேட்டரையன் கண்டன் மறவன் என்பான் செய்த உத்தரவு காணப்படுகின்றது. நந்திபுரம் என்பது கும்பகோணத்துக்குத் தெற்கே பழையாறை என்ற பெயருடன் நிலவிய பெருநகரமாகும். இது முற்காலத்தில் சோழர்களின் இரண்டாம் தலைநகரமாக இருந்தது. இந் நகரத்திலிருந்த வழக்கத்தைப் பெரிதும் மதித்து இதனைப் பிறநாட்டுக் குறுநில மன்னர்களும் பின்பற்றி வந்தமை குறிப்பிடத்தக்கது.
வரிவசூலிப்பும் ஊர்ச்சபையும்
பொதுமக்கள் செலுத்த வேண்டிய வரிகளைப் பெற்று அரசாங்கத்திற்கு அனுப்பி வந்தவர்கள் அவ்வூரிலிருந்த சபையாரே. பொது மக்களும் தத்தம் வரிகளை ஒழுங்காகச் செலுத்தி வந்ததனால் ஊர்ச்சபையாரும் எதுவித தடங்கலுமின்றித் தமது காரியங்களை மேற்கொண்டு வந்தனர். பொதுமக்களிடம் இருந்து வரிஅறவிடும் பொறுப்பு முழுவதும் ஊர்ச் சபையாருக்கு இருந்ததால் வரி வசூலிப்பது பற்றிய இன்றியமையாத அதிகாரத்தை அரசாங்கம் அளிக்க வேண்டியதாயிற்று என்பது வட ஆர்க்காட்டு மாவட்டம் உக்கலிற் காணப்படும் கல்வெட்டால் அறியக் கூடியதாக உள்ளது. இதிற் பொறிக்கப்பட்டுள்ள செய்தியின்படி சோழ நாடு, சோழநாட்டைச் சார்ந்த புறநாடுகள், தொண்டை நாடு, பாண்டிநாடு ஆகிய நாடுகளிலுள்ள ஊர்களின் காணியாளர்கள் தம் நிலங்களுக்குரிய அரசிறையையும், ஊரிடுவரியையும் இரண்டு ஆண்டுகள் முடிந்து மூன்றாம் ஆண்டும் கொடாமல் இருந்தால் அவர்கள் நிலங்களைப் பறிமுதல் செய்து ஊர் மக்கள் அவற்றை விற்று அவ்வரிகளுக்கு ஈடு செய்ய வேண்டும் என்ற உத்தரவு காணப்படுகின்றது.
இவற்றை விட நிலவரி, முதலியவற்றைச் செலுத்தாமல் ஊரையும் நாட்டையும் விட்டு வேறு நாட்டிற்குப் போய்க் குடி புகுந்தவர்கள் நிலத்தையும் அவ்வாறே ஊர் நிலமாக்கி விற்று வரிப்பணம் செலுத்தப்பட்டமையைக் கல்வெட்டுச் செய்திகள் உறுதிப்படுத்துகின்றன. கி.பி 17 இல் தஞ்சாவூர் மாவட்டம் வானவன் மாதேவி சதுர்வேதிமங்கலத்தில் வாழ்ந்த அந்தணர்கள் சிலர் தமக்குரிய நிலவரியைச் செலுத்தாமல் வேற்றுார் ஒன்றுக்குச் சென்றுவிட கிராமசபையார் நிலங்களைக் கைப்பற்றி அண்டையிலிருந்த திருச்சேறைக் கோயிலுக்கு விற்று அரசிறை செலுத்தினர் என்று கல்வெட்டுச் செய்தி கூறுகின்றது.
சோழர் ஆட்சி உன்னத நிலையில் இருந்தபோது எதுவித முறைக்கேடுகளுமின்றி நடைபெற்று வந்த வரிவசூலிப்பு அவர்களது ஆட்சி ஆட்டம் கண்ட வேளையில் அவர்களின் கீழ் இருந்த சிற்றரசர்களும் அரசியல் தலைவர்களும் தம்மனம் போனவாறு நாட்டு மக்களிடம் வரிவசூலிக்கத் தொடங்கி விட்டனர். அவர்களது அநியாய வரிவசூலிப்பைக் கண்டஞ்சிய நாட்டு மக்கள் இனிப் பயிர்த் தொழில் புரிந்து கொண்டு தங்கள் ஊரிலே குடியிருக்கப் போவதில்லை என்று கிராமசபையாரிடம்
&ិអ្វីក្តភ្នំ க்களஞ்சியம்
278

முறையிட்ட செய்தியும் அதனால் ஐந்து சபையார் ஒன்றாகக் கூட்டம் கூடி ஆண்டு தோறும் கொடுக்க வேண்டிய வரிகள் இவ்வளவு என்று தெளிவாக வரையறுத்து, உறுதிசெய்து, அதற்கு மேலதிகமாகக் கேட்கும் வரி எதையும் செலுத்த வேண்டியதில்லை என்பதைத் தெரிவித்து அவற்றை மீறுபவர்கள் ஊர்க்கேடு, நாட்டுக் கேடு, பொற்கேடு செய்த துரோகிகளாகக் கணிக்கப்பட்டு தண்டம் கட்டக் கடப்பாடுடையவர்கள் என்று தீர்மானம் எடுத்து அவற்றைக் கைலாயமுடையார் கோயிலிலும், வண்துவராபதி மன்னார் கோயிலிலும் வரைந்து வைக்கும் படியும் செய்தனர். சோழர் ஆட்சியில் நிகழ்ந்த வரிக் கொடுமைகள் பற்றி சிற் சில கல்வெட்டுக்களில் செய்தி வருகிறது. மக்கள் வரிப் பழுவைத் தாங்க முடியாமல் எதிர்ப்புத் தெரிவித்தமைக்கான ஆதாரங்களும் உள்ளன. ஆயினும் இவ்வெதிர்ப்புகள் பெரிய அளவில் இடம் பெறவில்லை என்றே தெரிகிறது. பொதுவாக நோக்குமிடத்து பழைய காலம் முதல் வாங்கி வந்த ஒரு நியாயமான முறையைப் பின்பற்றியே அரசிறை வாங்கப்பட்டு வந்தது என்பது குறிப்பிடத் தக்கது.
நில அளவும் உரிமையும்
சோழ அரசின் முக்கிய வருமானமாக நிலவரி இருந்ததால் ஒவ்வொரு நாட்டிலுமுள்ள ஊர்களை முறையாக அளந்து அங்கு விளை நிலங்கள் எவ்வளவு உண்டு, அரசிறை செலுத்தும் கடமையும், உரிமையும் பூண்ட குடிகள் இன்னார் என்பவற்றைத் தெளிவாக உறுதிப்படுத்துவதற்காக சோழராட்சியில் மூன்று முறை நில அளவை நிகழ்ந்துள்ளது. அவற்றுள் முதலில் நிகழ்ந்த நில அளவு முதலாம் ராஜராஜசோழன் காலத்தில் அவனது பதினாறாம் ஆட்சியாண்டில் 1001 இல் நடைபெற்றது. குரவன் உலகளந்தான் ராஜராஜ மாராயன் தலைமையில் தொடங்கப்பட்டு இரண்டு ஆண்டுகளில் நிறைவு பெற்றது. சோழராட்சியும் முழுவதையும் அளந்து கணக்கெடுத்தமை பற்றி இவனுக்கு உலகளந்தான் என்ற பட்டம் அரசனால் அளிக்கப்பட்டது. சோழரின் இராச்சியத்தில் நில அளவு நடைபெற்ற காலத்தில் ஒவ்வொரு மண்டலத்திற்கும் ஒவ்வோர் அதிகாரி தலைமை வகித்து அதனை நடத்தி நிறைவேற்றியிருத்தல் வேண்டும். நிலத்தை அளக்கப் பயன்பட்ட கோல் நிலம் அளந்த கோல், உலகளந்தகோல் என்று வழங்கப்பட்டுள்ளது. இக்கோல் பதினாறு சாண் நீளமுடையதாக இருந்தது. முதற்குலோத்துங்க சோழனது பதினாறாம் ஆட்சியாண்டாகிய 1086இல் சோழ ராச்சியம் முழுவதும் இரண்டாம் முறை அளந்து கணக்கெடுக்கப் பட்டுள்ளது. இந்நில அளவு இரண்டு ஆண்டுகளில் நிறைவேறி அரசிறை விதிக்கப்பெற்றது என்பது உடையார் சுங்கந்த விர்த்தருளின குலோத்துங்க சோழதேவருக்கு 41 ஆவது இறை கட்டின காணிக்கடன் என்னும் திருவிழிமிழலைக் கல்வெட்டால் அறியக் கூடியதாக உள்ளது. இவ்வேந்தன் காலத்தில் நிலம் அளந்த கோல் திருவுலகளந்த பூரீபாதக் கோல்' என்று வழங்கப் பெற்றது. இது முதலாம் குலோத்துங்கனின் பாதத்தை ஒரு அடியாகக் கொண்டு அமைக்கப்பட்ட அளவு கோல், சோழர்
காலத்தில் மூன்றாம் முறையாக 1216 இல் மூன்றாம் குலோத்துங்க

Page 305
சோழன் காலத்தில் நில அளவு இடம் பெற்றது. இச் செய்தி மூன்றாம் ராஜேந்திர சோழன் காலத்துக் கல்வெட்டுக்களிலேதான் காணப்படுகின்றது. இதனைத் தெளிவாக அறியக் கூடிய வேறு ஆதாரங்கள் கிடைக்கவில்லை.
நிலங்களை நீர், நிலம், கொல்லை , நத்தம், காடு என்று
வகுத்துள்ளனர். அவற்றுள் நீர், நிலம், கொல்லை என்பன நன்செய், புன்செய் நிலங்களாகும். நத்தம் என்பது மக்கள் வீடு கட்டக் கூடிய மேட்டு நிலமாகும். நிலங்களெல்லாம் குழி, மா, வேலி என்ற முறையில் நூறு குழி கொண்டது ஒரு மா ஆகவும் இருபது மா கொண்டது ஒரு வேலியாகவும் அளக்கப்பட்டது. நிலங்கள் அளக்கப்பட்டு எல்லைகள் தெளிவாகத் தெரிவதற்காக கற்கள் நடப்பட்டது. அக் கற்கள் புள்ளடிக் கற்கள் எனப்பட்டன. சிவாலயங்களுக்கு விடப்பட்ட நிலங்களுக்குத் திரிசூலம் பொறிக்கப்பட்ட கற்களும், திருமால் கோயிலுக்கு விடப்பட்ட நிலங்களுக்குத் திருவாழி பொறிக்கப்பட்ட கற்களும் சமணக் கோயில்களுக்கு விடப்பட்ட நிலங்களுக்கு முக்குடை பொறிக்கப்பட்ட கற்களும் எல்லைக் கற்களாக நடுவது சோழராட்சியில் நிலவிய பழைய வழக்கமாகும்.
இவ்வாறு அளக்கப்பட்டு எல்லை குறிக்கப்பட்ட காணிகளின் தரத்திற்கேற்ப இறைவரி விதிக்கப்பட்டது. நிலங்களின் வளத்தையும் அதற்குப் பாய்ச்சப்படும் நீர் வளத்தையும் ஆதாரமாகக் கொண்டே தரம் வகுக்கப்பட்டன. தரம் வகுக்கப்படாத நிலங்கள் தரமிலி என்று கல்வெட்டுக்களில் குறிக்கப்பட்டுள்ளது. பல்வேறு தரங்களில் உள்ள நிலங்களில் எவ்வளவு நெல் விளைந்தது என்ற விவரத்தைத் தற்போது தெளிவாக அறிய முடியவில்லையாயினும் நிலங்களின் விளைவின் அளவைக் கொண்டுதான் அவற்றின் தரங் கண்டு அதிகாரிகள் வரி விதித்தனர் என்பது புலனாகிறது.
ராஜராஜ சோழன் ஆணைப்படி நிலங்கள் அளக்கப்பட்டு வரி விதிக்கப்படாத காணிகளும் இருந்தன. என்பதை அறியக் கூடியதாக உள்ளது. அவ்வாறு ஒதுக்கப்பட்டவை ஊர் நத்தம், கம்மாளச் சேரி, வண்ணார் சேரி, ஈழச்சேரி, வெள்ளான் சுடுகாடு, பறைச்சேரி, பறைச் சுடுகாடு, 'ஊர்நிலத்தூடறுத்துப் போன வாய்க்கால், ஐயன் கோயில், பிடாரி கோயில், தேவர் திருமஞ்சனக் குளம், ஊருணி, களனிக் குளம், நந்தவனக் களம், சுடுகாட்டிற்குப் போகும் வழி, ஆறு, பெருவழி, மன்றம், மனை, கனடா, கடைத்தெரு, கிடங்கு, காடு, உவர் நிலம் என்பனவாகும். இவற்றை அடிப்படையாகக் கொண்டு நோக்குமிடத்து விளை நிலங்களுக்கு மட்டும் வரிவிதிக்கப்பட்டதே அன்றி பிற நிலங்களுக்கு வரிவிதிக்கப்படவில்லை என்பது அறியக் கிடக்கிறது. ஒவ்வொரு ஊரும் இவ்வளவு வேலி நிலம் என்று அளந்தறிந்து அதிலிருந்து வரி விதிக்கப்படாத இடங்களின் நிலப்பரப்பைக் கழித்துக் கொண்டு எஞ்சி இருந்த நிலங்களுக்குத் தான் வரிவிதிக்கப்பட்டது என்பது தெளிவாகிறது.

279
நிலவுரிமை
சோழர் ஆட்சியில் நிலங்களை அனுபவித்து வந்தோரின் உரிமையை அடிப்படையாகக் கொண்டு அந் நிலங்கள் மூன்று வகையாகப் பிரிக்கப்பட்டது. அவற்றுள் உழவுத் தொழிலை மேற்கொண்டு நிலங்களை அனுபவித்து வந்த வெள்ளான் குடிமக்களின் நிலங்கள் , அரசிறை செலுத்தப்பட வேண்டும். அவர்கள் இறைகுடிகள் எனப்பட்டனர். அவர்களில் குறைந்த நிலமுடையவர்கள் தாமே உழவுத் தொழிலை மேற்கொண்டு வந்தனர். அதிக நிலமுடையவர்கள் பிறரைக் கொண்டு உழுவித்து வாழ்ந்தனர்.
மற்றொரு வகை நிலங்கள், தானமாகப் பெறப்பட்டவை. அவை தேவதானம், திருவிடையாட்டம், பள்ளிச் சந்தம், மடப்புறம், சாலபோகம், பிரமதேயம் என்று வழங்கப்பட்டுள்ளன. இதில் தேவதானம் என்பது சிவன் கோயில்களுக்களிக்கப்பட்ட நிலம். திருவிடையாட்டம் திருமால் கோயில்களுக்களிக்கப்பட்ட நிலம். பள்ளிச் சந்தம் பெளத்த, ஜைன கோயில்களுக்கு அளிக்கப்பட்ட நிலம், மடப்புறம் என்பது மடங்களுக்கு கொடுக்கப்பட்ட நிலம். சாலாபோகம் என்பது அபூர்விகள், அந்தணர்கள் , சிவயோகிகள் ஆகியோருக்கு உணவு கொடுக்கும் அறச் சாலைகளுக்கு அளிக்கப்பட்ட நிலம். பிரமதேயம் வேதங்களையும், சாஸ்திரங் களையும் நன்கு பயின்று சீலமும் புலமையும் படைத்த பார்ப்பனருக்கு வழங்கப்பட்ட நிலம். இவ்வகை நிலங்கள் பெரும்பாலும் இறையிலி நிலங்களாகவே இருந்தன. இறையிலி நிலங்களைப் பெற்றவர்கள் அரசாங்கத்திற்கும், ஊர்ச் சபைக்கும் எதுவித வரியும் செலுத்தத் தேவையில்லை என்பது கோட்பாடாயினும் அரசாங்கத்திற்கு அவர்கள் சிறுவரியைச் செலுத்தி வந்தனர் என்பதற்குச் சில கல்வெட்டுக்கள் ஆதாரமாக
உள்ளன.
பிறிதொரு வகை சில குறிப்பிட்ட காரியங்களைச் செய்தற் பொருட்டு அவற்றைச் செய்து வருவோருக்குக் கொடுக்கப் பெற்றவையாகும். இவற்றை சீவிதம், போகம், விருத்தி. பற்று, புறம், பட்டி என்று வழங்கினர். சோழர் ஆட்சியில் அரசியல் அதிகாரிகளுக்குத் திங்கள் தோறும் பணம் கொடுப்பதில்லை. அதற்குப் பதிலாக அதிகாரிகளின் தகுதிக் கேற்றவாறு அவர்கள் வாழ்நாள் முழுவதும் அனுபவிக்கக் கூடிய வகையில் சோழமன்னர்காளல் அளிக்கப்பட்ட நிலமே சீவிதம் ஆகும். இவ்வதிகாரிகள் தங்கள் காலத்திற் பெருந் தொண்டுகளை அரசாங்கத்திற்குச் செய்து பேரும், புகழும் எய்துவராயின் அவர்களுடைய காலத்திலேயே அந்நிலங்கள் இறையிலி நிலங்களாக்கப்பட்டு அவர்களும் அவர்கள் வழியினரும் அனுபவித்துக் கொள்ளுமாறு கொடுத்துவிடுவதும் உண்டு. அத்தகைய சிறந்த அதிகாரிகள் இறந்தபின் அந்நிலங்கள் அவர்களது மனைவி, மக்கள், சகோதரருக்கு இறையிலி நிலமாக வழங்கப்பட்டன. திருக்கோயில்களிலும், பேரூர், சிற்றுார்களிலும்,
இந்துக் 56rgត្វទាំងៃ

Page 306
அம்பலங்களிலும் சில குறிப்பிட்ட காரியங்களை நாள்தோறும், திங்கள் தோறும் செய்துவரும் பொருட்டு அரசர்களாலும் அதிகாரிகளாலும் , கிராம சபையாலும் கோயில் அதிகாரிகளாலும், செல்வந்தர்களாலும் கொடுக்கப்பட்ட நிலங்களும் இறையிலி நிலங்களாகும்.
திருக்கோயில்களில் அர்ச்சனை செய்யும் பொருட்டு சிவவேதியர்க்கும் ஆதுலர்சாலைகளிலிருந்து பொது மக்களுக்கு வைத்தியம் செய்யும் பொருட்டு மருத்துவர்கட்கும் விழா நாட்களில்
ஆரியக் கூத்து நடத்தும் பொருட்டு கூத்தச் சாக்கியர்க்கும்.
கொடுக்கப்பட்ட நிலங்கள் முறையே அர்ச்சனா போகம், வைத்திய போகம், நிருத்த போகம் என வழங்கிவந்தன. ஊர்களில் இரவில் அம்பலத்தமர்ந்து பாரதம் படித்து விரிவுரை நிகழ்த்தும் பொருட்டுப் புலவர்க்கும் திருக்கோயிலில் வேதம் ஒதுவதற்கும் புராணங்கள் படிப்பதற்கும் அந்தணர்க்கும் கொடுக்கப்பட்ட நிலங்கள் பாரத விருத்தி, பட்டவிருத்தி எனவும் வழங்கப்பட்டன.
திருக்கோயில்களில் ஆடல் பாடல்களைச் செய்த பதியிலார்க்கும் அவர்களை ஆட்டுவிக்கும் ஆடலாசிரியனாகிய நட்டுவனுக்கும் ஆரிய, தமிழ்க் கூத்தாடுவோருக்கும், வீணை வாசிப்போனுக்கும், மத்தளம் கொட்டுபவனுக்கும், கணக்கெழுதும் கணக்கனுக்கும், திருப்பதிகம் விண்ணப்பம் செய்யும் ஒதுவார்க்கும் கொடுக்கப்பட்ட இறையிலி நிலங்கள் பதியிலர்காணி, நட்டுவக்காணி, வீணைக்காணி, உவச்சன் காணி, திருப்பதிகக் காணி என வழங்கப்பட்டன என்பதைக் கல்வெட்டுக்கள் உறுதி செய்கின்றன. தேவரடியார்க்கும் இசைப்பயிற்சியளித்து வந்த பானருக்கும் கொடுக்கப்பட்ட இறையிலி நிலம் பாணக் காணி எனப்பட்டது. ஊர்களிலுள்ள அம்பலங்களை நாள்தோறும் மெழுகிச் சுத்தம் செய்த பணி மக்களுக்கும் அவ் அம்பலங்களில் குடி தண்ணிரும், அக்கினியும் சேமித்து ஊராருக்கு வேண்டும்போது கொடுத்துதவும் பணிமகனுக்கு அளிக்கப்பட்ட இறையிலி நிலங்கள் மெழுகுப்புறம், அம்பலப் புறம் என்று கல்வெட்டுக்களில் கூறப்பட்டுள்ளது. சில அறங்களைச் செய்தற் பொருட்டு கிராமச் சபையாரிடத்தும் குறிப்பிட்ட சிலரிடமும் கொடுக்கப்பட்ட இறையிலி நிலங்கள் அறப்புறம் என்று வழங்கின. போரில் உயிர்துறந்த வீரனின் மனைவி மக்களுக்குக் கொடுக்கப்பட்ட நிலம் உதிரப்பட்டி எனவும், ஏரிகளை ஆண்டுதோறும் வெட்டியும் கரை கட்டியும் பாதுகாத்தற் பொருட்டுக் கொடுக்கப்பட்ட நிலங்கள் ஏரிப்பட்டி எனவும் வழங்கி
வந்தன.
வெள்ளாண் வகை தவிர, பிறவகை நிலங்களிற் பலவற்றிற்கு அக்காலத்திற் காராண்மை, மீயாட்சி என்ற இரு வேறு உரிமைகள் இருந்தன. காராண்மை என்பது பயிரிடும் குடிகளின் உரிமையாகும். மீயாட்சி என்பது நிலத்தின் சொந்தக்காரரது உரிமையாகும். அரசியல் அதிகாரிகளுக்கு
இந்துக்கலைக்களஞ்சியம்
28

அரசர்களாற் கொடுக்கப்பட்டிருந்த சீவிதங்களிலும் இரு பிரிவுகள் இருந்தன. ஒன்று அரசாங்கத்திற்குரிய நிலவரி முதலான வரிகளை மாத்திரம் அந்நிலங்களை அனுபவித்துக் கொண்டிருக்கும் குடிகளிடத்து ஆண்டு தோறும் வாங்கிக் கொள்வது, மற்றொன்று சீவிதமாகத் தமக்குக் கிடைத்துள்ள நிலங்களை இறையிலியாகத் தாமே நேரில் அனுவித்துக் கொண்டிருப்பதாகும். அரசியல் அதிகாரிகளுக்கும் பிறருக்கும் நிலவரி முதலானவற்றை மட்டும். அனுபவிக்கும் உரிமையைக் கொண்ட நிலங்கள் இறை நீங்கல் எனவும், இறையிலியாகக் கொடுக்கப்பட்ட நிலங்கள் இறை இறங்கல் எனவும் வரிப்புத்தகத்திற் குறிக்கப்பட்டுள்ளதைக் கல்வெட்டுக்கள் மூலம் அறியக் கூடியதாக உள்ளது. சோழ மன்னர்கள் கோயில்களுக்கு தேவதானம் அளிக்கும்போது சில சமயங்களில் அவ்வூரிலுள்ள குடிகளையும் அவர்களுக்குரிய பழைய உரிமையோடு அக்கோயிலுக்குக் கொடுத்து விடுவது வழக்கம் . இது குடி நீங்காத் தேவதானம் வழங்கி வந்தது. தமது நாட்டை விட்டு வேறு நாடுகளுக்குப் போய் நிரந்தரமாகத் தங்கி விட்டவர்களின் நிலம் அரசினால் பறிமுதல் செய்யப்பட்டு அவ்வூரில் வாழ்ந்து கொண்டிருக்கும் குடிமக்களுக்குப் பகிர்ந்தளிக்கப்பட்டுப் பயிர்ச் செய்கை மேற்கொள்ளும்படி செய்து அவர்களிடம் அரசிறை வாங்கப்பட்டது. இதைக் கங்கை கொண்ட சோழமன்னன் உத்தரவு பொறிக்கப்பட்ட தென்னார்க்காடு ஒமப் பேரூர்க் கோயிற் சாசனம் அறியத் தருகிறது.
சோழ மன்னர்கள் தம்வருவாயின் பெரும் பகுதியை நிலவரியாகவே குறிப்பாக வேளாண்மை வரியாகவே பெற்றுக் கொண்டனர் என்பது தெளிவாகிறது. அதனால் சோழமன்னர்கள் தம் ஆட்சிக்குட்பட்ட நாடுகளில் அவற்றின் இயற்கையமைப்பிற்குத் தக்கவாறு பல ஆறுகளையும், ஏரிகளையும் வெட்டி அந் நாடுகளையும் விவசாயத்தையும், வளம் படுத்தியுள்ளனர். இவர்கள் ஆட்சிக்காலக் கல்வெட்டுக்கள் பல இவர்கள் வெட்டிய ஆறுகள் , ஏரிகள் குளங்கள் என்பன பற்றிய தகவல்களைக் கொண்டுள்ளன. பேராறுகளுக்குக் குறுக்கே அணைகளைக் கட்டித் தண்ணீரைத் தேக்கி கிளையாறுகளில் விட்டும், ஏரிகளில் மதகுகள் கட்டி கால்வாய்களின் மூலமாக வேண்டிய அளவு தண்ணீரை விட்டும், ஆறுகளும், ஏரிகளும், கரைகளை இடிக்காதவாறு கருங்கற்களாற் கற்படை அமைத்தும் சோழமன்னர்கள் தம்மாட்சிக்குட்பட்ட நாடுகளிற் புரிந்த அருட் தொண்டுகள் பலவாகும். இச் செய்திகள் அனைத்தும் சோழமன்னர்கட்கு தமது ஆளுகையின் கீழ் இருந்த நாடுகளில் எத்துணை நிலவுரிமை இருந்தது என்பதைத் தெளிவாக்குகின்றன.
நாணயங்களும் அளவைகளும்
சோழமன்னர்கள் காலத்தில் பொன்னாலும், வெள்ளியாலும், செம்பாலும் செய்யப்பட்ட நாணயங்கள் வழங்கி வந்தன என்பதற்கு
கல்வெட்டுக்கள் சிறந்த ஆதாரமாக உள்ளன. அக்காலத்துக்குரிய

Page 307
நாணயங்களில் செப்பு நாணயமே அதிக அளவிற் கிடைக்கப் பெற்றுள்ளது. சோழமன்னர்கள் வெளியிட்ட எல்லா நாணயங்களிலும் அவர்களின் பெயரோ, சிறப்புப் பெயரோ இடம் பெற்று அப்பெயர்களால் நாடு முழுவதும் வழங்கி வந்தன. இப்போது கிடைக்கப்பட்ட சோழ நாணயங்களில் மிகப் பழமையானதாகிய உத்தம சோழன் காலத்து நாணயம் நடுவில் புலியுருவமும் அதன் வலப்பக்கத்தில் மீனுருவமும் பொறிக்கப் பெற்றது. அது வட்டமான வடிவத்தையுடையது. அக்கால நாணயங்கள் மாடை, காசு என்ற பெயரால் அழைக்கப்பட்டன. அவற்றை விட ஈழக்காசு என்ற ஒருவகைப் பொற்காசு சோழர்களின் ஆட்சிக் காலத்தில் வழங்கியுள்ளமை கல்வெட்டுக்களால் அறியக் கூடியதாக உள்ளது. இவற்றை விடக் கச்சாணம், அக்கம், திரமம், மதுராந்தகன் மாடை, கண்ட கோபாலன் மாடை ஆகிய வேறு நாணயங்களின் பெயர்களும்
கல்வெட்டுக்களிற் காணப்படுகின்றன.
சோழ அரசியலும் கோயில்களும்
ஆழ்ந்த சிவப்பற்றுக் கொண்டிருந்த சோழர்கள் சைவ சமயத்தை வளர்ப்பதில் கண்ணும் கருத்துமாய் இருந்தனர். அவர்கள் காலத்தில் மன்னர் முதல் சாதாரண குடிமகன் வரையிலான அனைவரும் சைவசமயத் தொண்டில் திளைத்தனர். இதன் விளைவாக இக்காலத்தில் கோயில்கள் பெருகின. மன்னர்களும் அவர்களின் அரசியாரும் அவர்தம் உறவினர்களும் சிவன் கோயில்களுக்குப் பெருமளவு அறங்களைச் செய்து வழிகாட்டினர். அவர்களை அமைச்சர்களும், குறுநில மன்னர்களும், நிலப்பிரபுக்களும் பின்பற்றினர். வணிகர்களும் செல்வாக்குற்ற பிற குலத்தவர்களும் தாராளமாக அறங்கள் புரிந்தனர். புதிய கோயில்கள் கட்டப்பட்டன. அதே நேரம் பல்லவர் காலப் பாடல் பெற்ற தலங்கள் புதுப்பிக்கப்பட்டன. மேலும் கோயில்கள் கற்றளிகளாக மாற்றப்பட்டது. சோழப் பேரரசின் உருவாக்கம் சைவ சமயத்துடன் இணைந்தே வளர்ந்தது என்று கூறுவதே பொருத்தமானது.
கோயில்களின் வளர்ச்சியினையும் பங்கையும் பற்றி நீலகண்ட சாஸ்திரி தன்னுடைய சோழர்கள் என்ற நூலில் மேற்கண்டவாறு குறிப்பிடுகிறார். “கோயில்கள் நாடெங்கும் பரவிய பிறகு, பத்திமான்கள் தாராளமாக நிலமும், பொன்னும் அவற்றிற்கு வழங்கினார்கள். அந்த நன்கொடைகளால் கோயில்கள் செழித்தன, செல்வத்தில் திளைத்தன. பணம் வீணாக்கப்படாமல் அறக்கட்டளையாக்கப்பட்டு ஒழுங்காகச் செலவிடப்பட்டது. அவற்றின் நிர்வாகம் செம்மையாகவும் மிகுந்த கவனத்துடனும் நடத்தப்பட்டது என்பது எமக்கு வியப்பைத் தரும் செய்திகளாகும். தம் முன்னோர்களின் அறக் கட்டளைகளைச் செயல்படுத்துவதிலும் ஒவ்வொரு தலை முறையினரும் எச்சரிக்கையுடன் நடந்து கொண்டனர். தாங்களும் புதிய அறக்கட்ளைகளை ஏற்படுத்தி பின்வரும் தலமுறையினருக்குக்

281
கூடுதலான அறக்கட்டளைகளை விட்டுச் சென்றனர். கோயில்களில் மிகுதியான சொத்துச் சேர்ந்ததால் அந்தந்த வட்டாரத்துப் பொருளாதார வாழ்வில் அவை முக்கியத்துவம் பெற்றன’
சோழர் கால அரசியல், சமூக பொருளாதார மையமாக விளங்கிய கோயில்களைத் திறம்பட நிருவகிக்க சோழ மன்னர்கள் மிகுந்த முனைப்புக் காட்டினர். சோழ அரசின் முக்கிய அதிகாரிகளில் ஒருவராகக் கோயில் அதிகாரிகள் இருந்தனர். சிறிய கோயில்கள் சிவப்பிராமணர்கள் பொறுப்பில் விடப்பட்டன. பெரிய கோயில்களில் நிருவாகத்திற்கென தனி ஆட்சிக் குழு இருந்தது. கோயிலின் முக்கியமான செய்திகள் மன்னரின் பார்வைக்குக் கொண்டு செல்லப்பட்டன. மன்னர்கள் கோயில்களுக்கு வருகை தந்து அதன் பாரம்பரியத்தைக் கவனித்தனர். கோயில்களின் வரவு செலவுக் கணக்குகள் அரசாங்க அதிகாரிகளினால் ஆண்டுதோறும் மேற்பார்வை செய்யப்பட்டுத் தணிக்கை செய்யப்பட்டது. தஞ்சைப் பெரிய கோயிற் கல்வெட்டொன்று முதலாம் ராஜராஜன் தான் எடுப்பித்த ராஜராஜேஸ்வரத்தில் நியமித்த தளிசேரிப் பெண்டுகளையும் நிவந்த காரர்களை பற்றி குறிப்பிடுகின்றது. அதாவது வெவ்வேறு பணிகளுக்காக நியமிக்கப்பட்ட கோயிற் பணியாளர்கள் பற்றியும் அவற்றின் பங்குகளைப் பற்றியும் அக்கல்வெட்டுக் குறிப்பிடுகின்றது. இப்பணியாளர்களின் நலன்களைப் பாதுகாக்கும் கடமையைச் சோழமன்னர்கள் மேற் கொண்டனர். கோயிலுக்குச் சேர வேண்டிய வருவாயைத் தவறாகப் பயன்படுத்துவோரும், செலுத்துவோரும் சிவத்துரோகிகளாகத் தண்டிக்கப்பட்டனர். தனிநபர்கள் இல்லாமல் பிரமதேய சபைகளும் மேற்கூறிய தவறிழைத்த போது அவற்றையும் அரசு விட்டுவைக்கவில்லை.
சோழர் கல்வெட்டுக்கள் இறைவழிபாட்டிற்காக மன்னர்களும், மற்றவர்களும் நாள்தோறும் செய்த அறங்களைக் குறிப்பிடுகின்றன. அழுது படைப்பதற்காக வழங்கப்பட்ட நிலங்கள் 町町T6Tü厅町爵剑。 சிறப்புப் பூசைகளின் போதும், விழாக்காலங்களிலும் இறைவனுக்கு திருமஞ்சனம் செய்யப் பட்டது. கல்வெட்டுக்கள் மூலமாக சிவன் கோயில்களில் விழாக்கள் சிறப்பாக நடைபெற்றதை அறியக் கூடியதாக உள்ளது. இப்பூசைகளிலும் விழாக்களிலும் சைவத் தொண்டர்களும் பாமர மக்களும் கலந்து கொண்டனர். விழாக்காலங்களில் ஆடல் பாடல்களும் நடைபெற்றன. பெரிய விழாக்களில் வெவ்வேறு கிராமங்களிலிருந்தும், நகரங்களிலிருந்தும் கலந்து கொண்டனர்.
சோழமன்னர்களின் ஆதரவில் கோயில்கள் பெரிய நிறுவனமாக வளர்ந்த போது அவற்றின் தொடர்போடும் அவற்றிற்கு இணையாகவும் சைவ மடங்கள் முழுமையான சமய பண்பாட்டு நிறுவனங்களாக வளர்ச்சியுற்றன. சோழர்காலத்தில்
இந்துக்கலைக்களஞ்சியம்

Page 308
கோயிற் பூசைகளும், விழாக்களும், அதிகரித்த வேளையில் சைவ மடங்களும் எண்ணிக்கையில் அதிகரித்தன. மடாதிபதிகள் சமயத் தலைவர்களாக, பண்பட்ட ஆன்மீக வாதிகளாக இருந்து சமுதாயத்தின் மேன்மக்களையும், பாமரர்களையும், தங்கள் சமயத்தின்பாற் கவர்ந்தனர். தாங்கள் மடாதிபதிகளாக இருந்து மடங்களை நிர்வகித்ததுடன் சமய, தத்துவ அறிவை மக்களிடையே பரப்பினர். கல்வி பொதுமக்களின் நல்வாழ்வு ஆகியவற்றிற்கான பங்களிப்பைச் செய்து சைவ சமயத்துக்கான, சமுதாய அடிப்படையை வேரூன்றச் செய்தனர். முறையான கல்வி மடங்களாகச் செயல்பட்ட சைவ மடங்கள் மரபு வழியான 18 வித்தைகளை உயர்நிலையில் மக்களிடையே போதித்து வந்தன. சமயக் கல்வியுடன் ஒழுக்கத்தையும் போதித்து வந்த இம்மடங்களின் சீடர்கள், துறவிகள், பிராமணர்கள், பக்தர்கள், ஒதுவார்கள் ஆகியவர்களுக்கென சோழமன்னர்களும் சிற்றரசர்களும் அதிகாரிகளும் நிவந்தங்கள் அளித்தது குறிப்பிடத்தக்கதாகும். முதலாம் இருபெரும் சோழமன்னர்கள் மேலைச்சாளுக்கியப் போரில் பெற்ற பெருஞ் செல்வத்தைப் பெரிய கோயிலுக்கும் காங்காபுரியின் சோழீச்சுரத்திற்கும் உரிமை ஆக்கினார்கள். மூன்றாம் குலோத்துங்கன் 1203 அளவில் பாண்டி நாட்டிற்குப் படையெடுத்துச் சென்று அங்கு பொன் வரி வசூலித்துச் சிதம்பரம், பூரீரங்கம், திருவாரூர்க் கோயில்களுக்கு இறையிலி நிலங்களின் வருவாயோடு சேர்த்து அளித்தான். கொங்கு நாட்டை வென்ற ஆதித்த சோழன் தங்கம் கொண்டு வந்து சிதம்பரத்தைப் பொன் வேய்ந்தான். பராந்தகனும், குலோத்துங்கனும் ஏனைய மன்னர்களும் இத்தகைய முறையிற் சிதம்பரத்திற் பொன் வேய்ந்தார்கள். இந்த வகையில் சோழ மன்னர்களைத் தம் பொருளாதாரச் செழிப்பினால் பெற்ற பொருளையும் போர் வெற்றியினால் கவர்ந்து வரப்பட்ட பொருட்களையும் கோயிலுக்கு உரியதாக்கி தங்கள் அரசியல் இயக்கத்தால் கோயில்களை மக்கள் நலச் சாதனங்களாக ஆக்கிக்
கொண்டனர்.
நீதி நிர்வாகம் தழைக்க இக்கோயில்களே பெரிதும் பயன்பட்டன. உலாச் சென்ற மன்னர்கள் இக்கோயில்களிலாவது அல்லது கோயில்களைச் சார்ந்த மடங்களிலாவது தங்கினர். இதனால் மக்களின் குறைகளை மன்னன் நேரடி விசாரணை மூலம் தீர்க்கக் கூடியதாக இருந்தது. நீதி விசாரணை நடத்திய கிராம சபைகள் கோயில்களில் அமர்ந்து தான் செயற்பட்டன. கொலைக்குற்றம் போன்ற குற்றங்கள் சாட்டப்பட்டவர்கள் தங்களுக்குரிய தண்டனையை, கோயில்களை மையமாக வைத்துப் பெற்றார்கள். நந்தா விளக்குகளைக் குற்ற வாளிகளைக் கொண்டு கோயில்களில் எரிக்கச் செய்தார்கள். இவ்வாறு சோழ நாட்டின் நீதி நிர்வாகம் கோயில்களை மையமாகக் கொண்டியங்கியது. இறந்து போன சோழமன்னர்களுக்குச் சமாதிக் கோயிலாகப் பள்ளிப்படைகள் கட்டப்பட்டன. ஆதித்த சோழன் காலமாகிய
போது அவன் மகன் பராந்தகன் ஆதிச்சேச்சுரர் என்ற
இந்துக் តំឲer@fiយថៃ

பள்ளிப்படைக் கோயிலைக் கட்டினான். முதலாம் ராஜேந்திரன் தன் தந்தையின் சிலையை பெரிய கோயிலின் உற்சவ மூர்த்தி வெளிவருவதற்கு முன்பு உலாச் செல்ல ஏற்பாடு செய்தான். ஆகவே அக்காலக் கோயில்கள் எல்லாம் அரசியலுக்குச் சார்பாகவே நின்றதை இஃது விளக்குகிறது. சோழர் காலக் கோயில்கள் அரசியலுக் கிருக்கையாகவும், சாதனங்களாகவும் செயல்பட்டாலும் நாட்டில் அரசியல் இரண்டுபடுகின்றபோது நடுநிலமை வகித்தன என்பதையும் நாம் கருத்திற் கொள்ள வேண்டும்.
சோழர் ஆட்சிக் காலத்தில் கோயில்கள் அனைத்தும் அரசியற் செல்வாக்குடன் விளங்கியதால் அவை நாட்டின் பொருளாதாரத்திற் கணிசமான அளவில் பங்களிப்புச் செய்தன. தஞ்சைப் பெரிய கோயிலுக்கு ஏற்பட்ட நன்கொடைகள், அவை வட்டிக்குக் கொடுக்கப்பட்ட முறை, வெளிநாட்டுப் படையெடுப்பால் அக்கோயிலுக்குரித்தாகிப் போன தங்கம் வெள்ளி ஆகிவற்றின் அளவைப் பொறுத்து நாட்டின் நாணயச் செலவாணியை வரையறை செய்யப்பட்ட விதம் ஆகிய செய்திகள் அக்காலப் பொருளாதாரத்தின் நாடித் துடிப்பைக் கட்டுப்படுத்தும் செயல்திறன் கொண்டவையாக கோயில்கள் விளங்கின
என்பதற்குச் சான்றாக உள்ளன.
அக்காலப் கோயில் ஏராளமானோருக்கு தொழில் வழங்கும் நிறுவனமாகச் செயற்பட்டது. அத்துடன் வட்டி கருதி கடன் கொடுக்கும் வங்கியாகவும் , உடற்பிணி போக்கும் சத்திரங்கள், அன்னதான மடங்கள், யாத்திரீக இல்லங்கள் அனைத்தும் கோயில்களில் ஏற்பட்டு இருந்தன. அத்துடன் ஏராளமான தனியார் அல்லது ஸ்தாபன அறக்கட்டளைகளை நிர்வாகம் செய்யும் மேற்பார்வை இயக்குநராகவும் அவை செயல்பட்டன. இந்து சமய வளர்ச்சிக்குப்பிற்காலத்தில் பெருந்தொண்டாற்றிய மடங்களைக் கல்விச் சாலைகளாகவும் அறக் கோட்டங்களாகவும், நடத்துவதற்கு அம்மடங்களுக்கு அருகில் இருந்த கோயிலகளே காரணமாக இருந்தன. பாட்டும், பரதமும் கோயில்களின் நடனச் சாலையில்தான் நடந்தன. ஒதுவார்கள் பாடகர்கள். தாளவாத்தியக்காரர்கள், ஆகியோர் கோயில்களில் இருந்த தேவாரப் பாடல்களைப் பண்ணோடு படித்து வந்தார்கள். கோவில்களை மையமாகக் கொண்டே சிற்பம், ஒவியம் போன்ற நுண்கலைகளும் வளர்ச்சியடைந்தன. இங்கு இதிகாச புராணங்கள். விளக்கப்பட்டன. நல்லாசிரியர்களால் திண்ணைப் பள்ளிக் கூடங்கள் கோயில்களில் நடத்தப்பட்டன. சரசுவதி பண்டாரம் என்றழைக்கப்பட்ட நூல் நிலையங்கள் கோயில்களில் ஏற்பட்டு இருந்தன. திருமுறை ஏடுகளைப் பாதுகாக்கவும் படியெடுக்கவும் தமிழ் விரகர் என்ற அலுவலர், நியமிக்கப்பட்டிருந்தார் என்பதை இரண்டாம் குலோத்துங்கன் காலத்துக் கல்வெட்டுக் கூறுகிறது. சிதம்பரக் கோயிலிற் காணப்படும் 1251 ஆம் ஆண்டுக்குரிய கல்வெட்டின்படி கோயில்

Page 309
நூலகருக்கு பண்டார உத்தியோகமுடையார் என்ற உத்தியோகப் பெயர் வழங்கியது என்பது தெளிவாகிறது. இலக்கியப் படைப்புகள், கவிதைகள் அனைத்தும் கோயிலிலேயே அரங்கேற்றப்பட்டது. நடனக் கலையில் தேர்ச்சி பெற்ற ஆடவரும், பெண்டிரும் கோயில்களிலேதான் தங்களுடைய கலைத் திறனை உலகறியச் செய்தனர். கோயிலில் அரங்கேறிய பின்புதான் மக்கள் அங்கீகரிக்கக் கூடிய திறனைப் பெற்றவர் என அவர்கள் கருதப்பட்டார்கள்.
மேலும் சோழர் கோயில்களில் நடைபெறும் திருவிழாவைக் காண மக்களும் மன்னரும் அணிதிரண்டு கோயிலுக்கு வருவர். இதனால் சமுதாய ஒற்றுமையுணர்வு வளர்வதற்கும் நாட்டைப்பற்றிய அறிவு வளர்வதற்கும், கடவுளுணர்வும் அரசபற்றும் நிலைப்படுவதற்கும் இத் திருவிழாக்கள் உதவின. சமுதாயத்தில் பஞ்சம் நிலவிய காலத்தில் அக்கோயில்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அடைக்கலம் அளித்தன. மன அமைதியற்ற மக்களுக்கு அடைக்கலம் நல்கும் அன்னையாக விளங்கின. அரசியல், சமூக பொருளாதாரம் சார்ந்த எல்லாப் பிரச்சனைகளின் தீர்வுகளைக் கோயில்களிலே தான் கல்லெழுத்துக்களாகப் பதித்து வந்தனர். அரச ஆணைகள் ஒலைகளில் எழுதப்பட்டாலும் கல் வெட்டுக்களில் அவை செதுக்கப்பட்ட பின்புதான் நிரந்தரமுடைய பத்திரங்கள் என்ற அந்தஸ்தைப் பெற்றன. ஆகவே சோழர்காலக் கோயில்கள் பத்திரங்களைப் பாதுகாக்கும் நிறுவனங்களாகவும் விளங்கின. அதுமட்டுமன்றிச் சோழர் காலத்தைப் பற்றி நமக்கு நிரூபணமான செறிவான செய்திகளைக் கொடுக்கின்ற வரலாற்றுப் பெட்டகங்களாகவும் கோயில்கள் விளங்குகின்றன.
சமூகம்
சோழர் ஆட்சியில் பலவகைப்பட்ட வகுப்பினரும் தத்தம் கடமைகளை ஒழுங்காகச் செய்து கொண்டு வாழ்ந்து வந்தனர் என்பதற்குக் கல்வெட்டாதாரங்கள் சான்றாக உள்ளன. அக்காலத்தில் மேல் வகுப்பார், கீழ்வகுப்பார் என்ற பாகுபாடுகள் நிலைபெற்றிருந்தன. ஆயினும் இப்பாகுபாடுகளாற் சமுதாயத்தில் பூசலோ குழப்பமோ இடம் பெற்றமைக்குச் சான்றுகள் காணப்படவில்லையென்பது குறிப்பிடத்தக்க அம்சமாகும். அக்காலத்தில் ஒவ்வொருவரும் தத் தம் குலத் தொழில்களைச் செய்து கொண்டு நகரங்களிலும், பேரூர்களிலும், சிற்றுார்களிலும் அமைதியாக வாழ்ந்து வந்ததால் ஒருவரைப் பார்த்து மற்றவர் அழுக்காறு கொள்வதற்கான சந்தர்ப்ப சூழ்நிலை இருக்க வில்லை. அரசன் அரசியல் அலுவல்களுக்குத் தக்க ஆற்றலும் , கல்வியறிவும் குடிப்பிறப்பும் உடையவர்களையே தேர்ந்தெடுத்து வந்தமையால் அத்தேர்வுபற்றி மக்களிடையே எந்தக் கருத்து வேறுபாடும் இருக்கவில்லை.
அந்நாளில் பார்ப்பனர்கள் வேதங்களிலும், சாஸ்திரங்களிலும் வல்லுநராக இருந்தமையோடு இரவில் அம்பலங்களிலும் திருக்கோயில் மண்டபங்களிலும் அமர்ந்து வடமொழியிலுள்ள

மாபாரதம், பதினெண் புராணங்கள் முதலியவற்றைப் படித்து பொதுமக்கள் அறியச் செய்தனர். திருக்கோயிலில் உச்சிப் பொழுதில் உணவளிப்பதற்காக, அரசர்களும், அரசியல் தலைவர்களும், பிற செல்வந்தர்களும் நிவந்தங்கள் வழங்கியுள்ளமை கல் வெட்டாதாரங்களால் அறியக் கூடியதாக
உள்ளது.
சோழ மன்னர்கள் தமது அரசியல் நிலை காரணமாக தமது வலிமையை மேலும் வலுப்படுத்துவதற்காக பிற வேந்தர், குறுநில மன்னர் ஆகியோரின் மகளிரை மணந்து கொள்ள வேண்டிய நிலை காணப்பட்டது. ஆயினும் ஒருவனுக்கு ஒருத்தி என்ற கொள்கையே பெரும்பாலும் ஏற்புடையதாக இருந்தது. சோழர் காலத்திற் பெண்கள் கணவருடன் உடன் கட்டை ஏறிய நிகழ்ச்சிகள் இடம் பெற்றுள்ளன. சுந்தர சோழன், கங்கை கொண்ட சோழன் ஆகியோரின் மனைவியர் உடன் கட்டை ஏறிய செய்தி கல்வெட்டாதாரங்களால் அறியக் கூடியதாக உள்ளது. எனினும் கணவனை இழந்த மகளிர் உடன்கட்டை ஏறுவதற்கு பொதுமக்களின் ஆதரவு அந்நாளிற் பெரும்பாலும் இல்லை என்பது தெளிவாகப் புலப்படுகின்றது. மகளிர் சிலரின் g) Gott 60) put 60T விருப்பின் பேரிலும் உளம் உருகிய வேண்டுகோளை மறுக்க முடியாத நிலையிலும்தான் இவ்வருஞ் செயல் நிகழ்ந்துள்ளது என்பது நன்கு அறியப்படுகின்றது.
அக்காலத்திலே கொடிய பஞ்சம் வறுமை என்பவற்றின் நிமித்தம் தம்மையும் தம் குடும்பத்தாரையும் காப்பாற்றிக் கொள்ளும் பொருட்டு தங்களை விற்றுக் கொண்டு அடிமைகளாக வாழ்ந்து வந்தனர் என்பதைச் சில கல்வெட்டுக்கள் குறிப்பிடுகின்றது. அன்றியும் வழிவழியாக அடிமைகளாக வாழ்ந்து வந்த குடும்பத்தினரும் உண்டு என்பது புலப்படு கின்றது. தஞ்சாவூர் மாவட்டத்தில் அட்ட வீரட்டங்களுள் ஒன்றாகிய கொறுக்கையில் இரண்டாம் ராஜாதிராஜ சோழன், மூன்றாம் குலோத்துங்கன், மூன்றாம்ராஜராஜசோழன் ஆட்சிக் காலங்களில் திருக்கோயிலுக்கு விலைக்கு வாங்கப்பட்ட வர்களும், பரிசிலாகக் கிடைத்தவர்களுமாகிய ஆண், பெண் அடிமைகள் நூற்றுக்கு மேற்பட்டவரின் பெயர்கள் எழுதப்பட்டுள்ளது.
சோழர்கால சமுதாயத்தில் வணிகர் பல பெரும் செல்வந்தர்களாய் வாழ்ந்து திருக்கோயில்களின் வழிபாட்டிற்கும் விழாவிற்கும் திருவிளக்கிற்கும் நிவந்தம் வழங்கிய செய்திகளும், ஏரி, குளம் முதலியனவற்றைச் சீர்திருத்திப் பாதுகாப்பதற்கு பொருளும், நிலமும் அளித்த நிகழ்ச்சிகளும் கல்வெட்டுக்களில் ஆங்காங்கு காணப்படுகின்றன. பெரும் செல்வந்தர்களான இவ்வணிக சமூகத்தினர் உள்நாடுகளிலும் வெளிநாடுகளிலும் முறையே வண்டிகளிலும், மரக்கலங்களிலும் பண்டங்களை ஏற்றிச் சென்று வணிகம் நடத்தி உள்ளனர். வணிகக் குழுக்களுக்கு அரசாங்க பாதுகாவல் இருந்து வந்தமை அறியத் தக்கதாகும்.
இந்துக்கலைக்களஞ்சியம்

Page 310
வணிகர்களுட் சிறந்தோருக்குச் சோழமன்னர்கள் எட்டி என்ற பட்டமளித்துப் பாராட்டியுள்ளனர்.
வெளிநாட்டு வாணிபம் காவிரிப்பூம் பட்டினம், நாகபட்டினம், காரைக்கால், மாமல்லபுரம், வீரசோழபட்டினம், (கோவளம்) மைலாப்பூர் ஆகிய பட்டினங்கள் ஊடாகச் சிறப்பாக நடைபெற்றமைக்கு சான்றுகள் உண்டு. அராபியர், பாரசீகர், சீனர் யவனர், பர்மியர் போன்றோருடன் ஏற்றுமதி, இறக்குமதி வியாபாரத்திற் சோழர்கால வணிகர்கள் ஈடுபட்டிருந்தனர். இதனால் பண்டங்கள் பெருகின. சுங்க வரியினால் அரசாங்கத்திற்கு வருவாயும் மிகுந்தது. சோழர்கால வணிகர் குழுவினருள் நானோதேசிகர், மணிக்கிராமத்தார், நகரத்தார், வளஞ்சியர், அஞ்சு வண்ணத்தார் போன்றோர் குறிப்பிடத்தக் கவர்களாவர். இக்குழுவினர் எல்லாம் தனித்தனிக் குழுவினர் என்பதும் அவர்கள் ஒருவருக்கொருவர் முரண்படாமல் தமிழகத்தில் வாணிபம் நடத்திப் பெரும் பொருளிட்டிப் புகழுடன், வாழ்ந்து வந்தனர் என்பதும் ஈண்டு அறியத்தக்கது. ஒவ்வொரு வணிகக் குழுவும் ஒவ்வொரு சிறு காவற் படையினை வைத்திருந்தன. அவர்கள் தாம் வணிகத்தின் பொருட்டு தாம் செல்லும் இடங்களுக்கெல்லாம் அச்சிறு படையோடு செல்வது வழக்கம் என்பதும் சில குறிப்புகளால் அறியக் கிடக்கிறது.
உள்நாட்டில் நடைபெற்ற வணிகத்திற் பெரும்பகுதி பண்ட மாற்று முறையில் நிகழ்ந்தது என்று தெரிகின்றது. இம்முறையில் வணிகம் செய்தோர், தலை நகரிற்கோ, துறைமுகப் பட்டினங்களுக்கோ சென்று வணிகர்களிடம் தம் வணிகத்துக்கு வேண்டிய பண்டங்களை உரிய விலை கொடுத்துப் பெற்று வண்டிகள், பொதிமாடுகள் மூலம் தத்தம் இருப்பிடங்களுக்குக் கொணர்ந்து தொழிலை முட்டின்றி நடத்தி வந்தனர். வணிகத் துறையில் ஈடுபட்டோர் இன்றியமையாத சமயங்களில் செல்வந்தர்களிடம் கடனாகப் பொருள் பெற்றுத் தம் தொழிலை மேற்கொண்டனர். இக்கடனுக்காக அவர்கள் செலுத்திய வட்டி வீதம் பற்றிய விவரம் திட்டவட்டமாக அறிய முடியவில்லை. அமைதியான காலப்பகுதியில் ஒரு தொகையும் போர்ச்சூழலில் உயர்ந்த வட்டி வீதமும் அறவிடப்பட்டுள்ளமைக்கு கல்வெட்டுகள் ஆதாரமாக உள்ளன. திருக்கோயில்களுக்கு அறங்கள் புரிந்தோர் தாம் நிவந்தமாகக் கொடுக்கும் பொருளை அவ்வூரில் உள்ள கிராம சபையாரிடம் கடனாகக் கொடுத்து அதன் வட்டித் தொகையைக் கொண்டு தத்தம் அறங்களை நாள், திங்கள், ஆண்டுதோறும் செய்து வந்தனர். ஊர்ச்சபையாரிடம் நிவந்தமாக வைக்கப்பட்ட பொருளுக்கு நெல்லையே வட்டியாகப் பெற்றனர். இந்நெல்லைக் கொண்டு பண்டமாற்று முறையில் கோயில் வழிபாட்டிற்கு வேண்டிய எல்லாப் பொருள்களையும் வாங்கி வந்தனர் என்று தெரிகிறது.
சுருங்கக் கூறின் சோழர் காலம் தமிழக வரலாற்றில் பொற்காலம் எனக் கூறப்படுவதற்கு அக்கால மன்னர்கள் அரசியல் நிர்வாகத்தைத் திட்டமிட்டு திறம்பட நடத்தியமையே முக்கிய காரணியாக அமைந்தது எனலாம். நிதி)
இந்துக்கலைக்களஞ்சியம்
284

சோழர்காலத்துக் கோயிற் கட்டடக்கலை
$于Iழப் பேரரசர் காலம் தமிழகக் கட்டடக்கலை வரலாற்றில் உன்னத வளர்ச்சிக் காலமாக விளங்குகின்றது. வடமொழியிலும் தமிழே சிறந்தது என்று வழங்கும் வண்ணமாகவும், எத்திசையிலும் தென்திசையே சிறந்தது என்று பாராட்டும் வண்ணமாகவும் தமிழாகரரான திருஞானசம்பந்தர் திருவவதாரம் செய்தார் என்று சேக்கிழார் பெரிய புராணத்திற் பெருமை பேசுவார். சேக்கிழாரின் காலத்திலே கலா தத்துவத்திலும் கலைச் சின்னங்களின் உருவாக்கத்திலும் பரத கண்டம் முழுவதிலும் தமிழகம் சிறந்து விளங்கியது. பல்லவர்கள் அமைத்த அடித்தளத்திலே மகோன்னதமான நுண்கலை மரபொன்றைச் செம்பியன் மரபினோர் கட்டி வளர்த்தனர். தஞ்சை மாநகரிலே அருண்மொழி வர்மன் அமைப்பித்த விமானம் பூதலத்தில் ஈடிணையற்ற அற்புதக் கோலத்துடன் பொலிந்திருப்பதைப் பார்த்த திருத்தக்கதேவர் வியப்பில் மூழ்கினார். தனது உணர்ச்சி பூர்வமான அனுபவத்தை பதிகமாகப் பாடினார். அதன் வரைவிலாத வனப்பைச் சொற்களால்
வர்ணிக்க முடியாமல் தடுமாறினார்.
சோழர் பேரரசர் காலத்து கட்டடசிற்ப, கலை வரலாறு மிகவும் பரந்த ஒன்றாகும். அதன் பிரதான அம்சங்களை மிகவும் சுருக்கமாக சில மிக முக்கியமான உதாரணங்களுடன் மட்டுமே இங்கு விளக்க முடியும். வனப்புமிக்க ஓங்கியெழும் உன்னதமான விமானம், நுண்ணிய வேலைப்பாடு கொண்ட அழகிய தூண்கள், கலை அழகு பொலிந்த படிமங்கள் அமைந்துள்ள தேவகோட்டங்கள், ஒங்கி எழும் எழு நிலைக் கோபுரம் என்பவற்றைக் கொண்ட பேரமைப்பாக நான்கு நூற்றாண்டுக் காலப் பகுதியிலே தமிழகக் கோவிலமைப்பு பரிணாம வளர்ச்சி பெற்றது. இக்காலத்தை மூன்று பிரிவுகளாக வகுத்துக் கொள்ளலாம். அவற்றுள் முதலாம் பிரிபு விஜயாலயன் காலம் முதல் உத்தம சோழனின் ஆட்சி முடியும் வரை, காலப் பகுதியாகும். (850 - 985) அக் காலத்திலே நூற்றுக்கணக்கான கற்றளிகள் அமைக்கப்பட்டன. பாடல் பெற்ற தலங்கள் பலவற்றிலுள்ள கோயில்கள் கற்றளிகளாகப் புனரமைக்கப்பட்டன. அக்காலப் பகுதியில் எழுந்த கோயில்கள் மிதமான அளவுடையவை. அவற்றின் எல்லாப் பிரதானமான பகுதிகளிலும் ஒரு தனித்துவமான கலைப்பாணிக்குரிய முன்னேற்றமான வேலைப்பாடுகள் அமைந்துள்ளன. பெருந்தொகையான சிற்பிகள் கட்டட வேலைகளில் ஈடுபட்டிருந்தனர். புதுமையான சிந்தனைகளினதும் அனுபவங்களினதும் LILI GOTT G5" பாரம்பரியமான மரபுகளில் முன்னேற்றமான மாற்றங்கள் ஏற்பட்டன. அவற்றின் அடிப்படையிலே சிற்ப சாஸ்த்திரங்களிலே புதிய அத்தியாயங்கள் சேர்த்துக் கொள்ளப்பட்டன. கட்டட சிற்பக்
கலைகளின் வளர்ச்சியானது தேக்கமடையாது ஒரு

Page 311
கவர்ச்சிமிக்கதான வளர்ச்சிப் பாதையை நோக்கிச் சென்றது. அதன் பயனாக பாரததேசத்துச் சிற்பக் கலையின் உன்னதமான அத்தியாயம் மலர்ந்தது. அந்தச் சரிதத்தின் சாராம்சங்களை இங்கு சுருக்கமாகவே வர்ணிக்க முடிகின்றது.
முதலாம்ராஜராஜன் காலம் வரையான கோயில்கள், விமானம், அர்த்த மண்டபம், மண்டபம், பரிவாரதேவர் கோயில்கள் என்னும் பகுதிகளைக் கொண்டனவாகும். கருவறை வெளிப்புறத்தே சதுரமாய் இருக்கும். அதன் சுவர்கள் மிகவும் விசாலமானவை. கருவறைக்கு முன்னால் அர்த்த மண்டபம் அமைந்திருக்கும். சில கோவில்களில் அர்த்த மண்டபம், கருவறை ஆகியவற்றிற்கிடையில் அந்தராளம் அமைந்துள்ளது. அர்த்த மண்டபத்துக்கு முன்னால் மகா மண்டபம் இருக்கும். சில இடங்களிலே மண்டபங்கள் இரண்டினையும் இணைக்கும் விதமாக வேறுமொரு அந்தராளம் அமைந்திருக்கும். கீழையூரிலும் திருவையாற்றிலும் கருவறையும் அர்த்த மண்டபமும் இடைவெளியுடன் தனித்திருந்தன. அக்காலத்துக் கோவில்கள் எல்லாம் கோபுரங்கள் அமைந்த மதிலினாற் சூழப்பட்டிருந்தன. பல்லவர் காலத்துக் கோயில்களைப் போல சோழர் காலத்து ஆலயங்கள் அனைத்தும் அதிஷ்டானத்தை அடித்தள உறுப்பாகக் கொண்டிருந்தன. அதிஷ்டானத்தில் உபானம், ஜகதி, எண்பட்டைக் குமுதம், கம்புகளோடு கூடிய காண்டம், பட்டிகை என்னும் அம்சங்களைப் பெற்றிருந்தன. துணைக்கம்பு என்னும் முதன்மை உறுப்புக்களோடு தாமரை வரிகள், கம்புகள் ஆகியவற்றை உரிய இடங்களில் நுழைத்தும் உபானத்தை தாமரையாக வடித்தும் அதிஷ்டானத்திலே சில மாற்றங்கள் ஏற்பட்டிருந்தன. பாதபந்தத் தாங்கு தளத்தோடு உபானம் பெற்றுள்ளதால் ஒதவனேசுவரர், நாகேசுவரர் கோவில்களின் அதிஷ்டானங்கள் பத்ம வகையினவாகக் கொள்ளப்படுகின்றன. இதிகாச புராணக் காட்சிகளைக் கண்ட பாதங்களிலே சிற்றுருவச் சிற்பங்களாக வடிக்கும் முறை இக்கால கட்டத்திலே அறிமுகமாகியது. நாகேசுவரர் கோயில், பிரம்மபுரீஸ்வரர் கோயில், சடையாரி கோயில் முதலியவற்றில்
இவ்வாறான வடிவங்களைக் காணலாம்.
பாதபந்தத் தாங்கு தளத்திற்கு அடுத்தாற்போல் பிரதிபந்த, பத்மபந்த அமைப்புக்கள் காணப்படுகின்றன. அவையிரண்டும் ஜகதி, உருள் குமுதம், பிரதிவரி என்னும் உறுப்புகளைப் பெற்றுள்ளன. அவற்றின் ஜகதி பெருந்தாமரையாக வடிக்கப் பெற்றிருப்பின் அந்தக் கட்டுமானம் பத்ம பந்தம் என்று சொல்லப்படும். திருச்செந்துறைக் கோயில், வாலிகண்டீஸ்வரர் கோயில் ஆகியன அந்த வகைக்குரியனவாகும். பல்லவர் காலத்து மலைத் தளியான தர்மராஜரதத்திற் காணப்படும் கபோத பந்தத் தாங்கு தளம் இக்காலத்துக்குரிய பிரம்மபுரீஸ்வரர் கோயிலில் வனப்புடன் விளங்குகின்றது. பெரும்பாலான விமானங்களின் சுவர்கள் தாங்கு தளத்தின் மேல் அமைந்துள்ள வேதிகைத் தொகுதியுடன் தொடங்குகின்றன. அது பாதங்களோடு கூடிய
2

285
கண்டம், மேற்கம்பு அலபத்மவரி தழுவிய வேதிகை என அமையும். வேதிக் கண்டத்தின் பாதங்களிலும் இதிகாசபுராணக் காட்சிகளைச் சித்திரிக்கும் சிற்றுருவச் சிற்பங்கள் இடம் பெற்றுள்ளன. பிரம்மபுரீஸ்வரர் கோயில் நாகேஸ்வரர் கோயில் ஆகியனவற்றில் இந்த அம்சங்களைக் காணலாம்.
சுவர்களை ஒட்டி அமைந்துள்ள அரைத்தூண்கள் வெவ்வேறு விதமானவை. நான்முகத் தூண்களும் எண்முகத் தூண்களும் வழமையாக அமைந்திருக்கும். சில சமயங்களிலே பன்முகத் தூண்களையும் அமைத்துள்ளனர். உருளைத் தூண்கள் மிக அரிதாகவே காணப்படுகின்றன. அரைத் தூண்கள் சுவர்களில் பத்திப் பிரிப்புகளில் அனைவுத் தூண்களாக அமைந்துள்ளன. சுவர்களிலே பதிக்கப்பட்ட அலங்காரமாகவும் அவை அமைவதுண்டு. சில ஆலயங்களிலே எல்லா அரைத் தூண்களும் நான்முகத் தூண்களாகவே அமைந்திருக்கிறது. நாகேஸ்வரம், கடம்பவனேஸ்வரம், திருத் தொண்டீஸ்வரம் போன்ற கோயில்களிலே இவ்விதமான கட்டுமானத்தைப் பார்க்க முடிகிறது. குரங்கநாதர் கோயில், ஆவுடையார் கோயில் ஆகியவற்றில் நான்முகத் தூண்கள் எண்முகத் தூண்கள் உருளைத் தூண்கள்
என்னும் மூன்று வகையான தூண்களையும் காணமுடிகின்றது.
தேவகோட்டங்களில் அனைவுத் தூண்களைப் பெறுத்தவரை அவை பெரும்பாலும் சட்டத் தலையுடன் கூடிய நான்முகத் தூண்களாகவும், உருளைத் தூண்களாகவும் காணப்படுகின்றன. எண்முகத் தூண்கள் மிக அரிதாகவே அமைந்திருக்கின்றன. இவ்வகையான தூண்கள் உடல், மாலைத் தொங்கல், ஸ்தானம், தாமரைக் கட்டு, கலசம், தாடி, கும்பம், தாமரை (பாலி), பலகை,
வீரகண்டம், போதிகை என்னும் அம்சங்களைப் பெற்றிருக்கும்.
பிரம்மபுரீஸ்வரம், அரங்கநாதர் கோயில் என்பவற்றின் விமானச் சுவர்களின் அரைத்துரண்களிலே ஒமம் என்னும் அடிப்பகுதி அமைக்கப்பட்டுள்ளது. தூண்களில் உள்ள மாலைத் தொங்கல், ஸ்தானம் என்பவற்றில் வனப்புமிக்க சிற்றுருவச் சிற்பங்கள் அக்காலமளவிலே பெருமளவில் அமைக்கப்பட்டன. பல்லவர் காலத்திலே காஞ்சிபுரத்துப் பரமேஸ்வர விண்ணகரத்திலே இவ்விதமான சிற்பங்கள் முதன் முதலாகத் தோன்றின. சோழர் கலைப் பாணியில் அவற்றை அமைத்துக் கொள்வது பொதுவழக்காகியது. பிரம்மபுரீஸ்வரம், பொன் செய் நல்துணையீஸ்வரம், குரங்கநாதர் கோயில்களில் இத்தகைய சிற்பங்கள் இடம் பெற்றுள்ளன.
இக்காலப் பகுதிக்குரிய தளிகளிலே சாலைப் பத்திகளும், கர்ணப் பத்திகளும் பிதுக்கமாகி உள்ளன. இடைப்பட்ட பகுதிகளில் ஒடுக்கங்கள் அமைந்திருக்கின்றன. சாலைப் பத்திகளில் மட்டுமே கோட்டங்கள் காணப்படுகின்றன. சாலைப்
பத்திகளை ஒட்டிய ஒடுக்கங்களில் சிற்றுருவ கோட்டங்கள்
இந்துக் isefuti

Page 312
காணப்படுகின்றன. ஒதவனேஸ்வரம், நாகேஸ்வரம், ஆபத்சகாயேஸ்வரம் ஆகியவற்றில் அமைந்துள்ள ஒடுக்கக் கோட்டங்களிலும் சிற்பங்கள் காணப்படுகின்றன. பிரம்ம புரீஸ்வரம்,வசிஷ்டேஸ்வரம் ஆகியவற்றின் விமானங்களின் ஒடுங்கங்களிலே நிஷ் கிராந்த பஞ்சரம் அமைந்துள்ளது. எறும்பீஸ்வர விமானத்திற் சாலை, கர்ண பத்திகளுக்கிடையே இப்பஞ்சரம் காணப்படுகிறது.
முற்காலச் சோழர் தளிகளில் கர்ணபத்திகளிலே கோட்டங்கள் அமைந்திருக்கவில்லை. திருத்தொண்டீஸ்வரம், திவ்யஞானேஸ்வரம், அகத்தீஸ்வரம் ஆகியவற்றின் விமானங்களிலே சாலைப்பத்திகளில் மட்டுமே கோட்டங்கள் உள்ளன. அவை வேதிக்குக் கீழே தாங்கு தளம் வரை நீண்டுள்ளன. பல்லவர் காலக் கோட்டங்களோடு ஒப்பிடுமிடத்துச் சோழர் காலத்துக் கோட்டங்கள் நன்கு வரையறுக்கப்பட்டு
வனப்புடன் அமைந்திருக்கின்றன.
சட்டத் தலையுடன் கூடிய கோட்ட அணைவுத் தூண்கள் வீர கண்டத்தில் உத்திரம். வாஜனம், தாமரை, வலமி என்னும் உறுப்புக்களைக் கொண்டிருக்கின்றன. அவற்றின் மேலே மகர தோரணம் அமைந்துள்ளது. கோட்டங்களை ஒட்டிய பக்கச் சுவர்களில் கோட்டத்தில் அமைந்துள்ள கடவுட் படிமம் தொடர்பான சிற்பக் காட்சிகள் சில விமானங்களிற் காணப்படுகின்றன. இக் காலத்துத் தளிகளிலே மகர தோரணங்களிற் பூத கணங்களும், சிவபெருமானின் நடனக் கோலங்களும் மகரங்களுக்கிடைப்பட்ட வளைவுகளிலே அமைந்திருக்கின்றன. சிவபெருமானின் ஊர்துவஜானு தாண்டவக் கோலம் தென் வாயில் பூீ வாயிலின் மகர தோரணத்தில் மிகச் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளது. திரு எறும்பியூர், பிரம்மபுரீஸ்வரம் கோயில்களிலும் மகர தோரணங்களிலும் சிவபெருமானின் நடனக் கோலங்கள்
முற்காலச் சோழர் தளிகளில் வாஜனம், வலபி, கபோதம் என்பன் கூரை உறுப்புக்களாக அமைந்துள்ளன. பொதுவாக வலபியிலே பூதவளி காணப்படும். பல்லவர் காலத்தில் கபோதம் தாங்கும் தாங்கு சிற்பங்கள் பலகைகளின் மீது நின்றவாறு அமைந்துள்ள தாவுயாழிகளாகும். இக்காலப் பகுதியில் அவற்றிற்குப்பதிலாக நடனக் கோலத்தில் அமைந்த பெண்களின் உருவங்கள் காணப்படுகின்றன. பிரம்மபுரீஸ்வரம், நாகேஸ்வரம், திருத்தொண்டீஸ்வரம் ஆகியவற்றில் இவ்விதமான சிற்பங்கள் அமைந்திருக்கின்றன. கூரையின் வெளிப்புறத்தில் நீண்டு கீழ் நோக்கி வளைந்திருக்கும் கபோதத்தின் விளிம்பிலே சந்திரமண்டலமும் நடுப்பகுதியில் கொடிக்கருக்குகளும் கொண்டிருக்கும். அதிகமான தளிகளில் கபோதக் கூடுகள் சிம்மத்தலைகளைப் பெற்றுள்ளன. ஆனால் பல்லவர் காலத்
தளிகளில் பெரும்பாலும் கந்தர்வத் தலைகளே காணப்பட்டன.
Čăក្ត និងៀ
2
s

இக்கால கட்டத்துக்குரிய கட்டடக் கலையின் பிரதான அம்சங்களை நார்த்தா மலையில் உள்ள விஜயாலய சோழேஸ்வரர் கோயில், கண்ணனூர் சுப்பிரமணியர் கோயில், திருக்கட்டளை சுந்தரேஸ்வரர் கோயில், சீநிவாச நல்லூர் குரங்கநாதர் கோயில், புள்ளமங்கை பிரம்மபுரீஸ்வரர் கோயில், கோணேரிராசபுரம் முதலியன சிறப்பாகப் பிரதிபலிக்கின்றன.
விஜயாலய சோழீஸ்வரத்திற் கர்ப்பக்கிருகம், அர்த்தமண்டபம் என்பன பிரதான அம்சங்களாக அமைந்துள்ளன. ஓங்கார வடிவமான கருவறை இருபத்தொன்பது அடி சதுரமான அமைப்பாகும். அதன் நான்கு மூலைகளிலும் சுவர்களை ஒட்டித் தூண்கள் அமைந்துள்ளன. அதன் நடுவில் உருண்டை வடிவமான இலிங்கம் பிரதிட்டை செய்யப்பட்டுள்ளது. கர்ப்பக்கிருகத்தின் மேலே முத்தள விமானம் கம்பீரமான கோலத்துடன் காணப்படுகின்றது. இரு தளங்களின் முகப்புக்களில் கூடங்கள், சாலைகள், வனப்பு மிகுந்த சிற்பங்கள் அமைந்த நாசிகைகள் என்பன காணப்படுகின்றன. அவற்றின் மேல் அமைந்த தளம் கருவறையைப் போன்று வட்டமான அமைப்பினைக் கொண்டுள்ளது. அதன் மேற்பாகமான கிரீவத்திலே தேவ கோஷ்டங்களும் விமானத் தேவதைகளும் உள்ளன. அவற்றுள் வீணாதர தட்சிணாமூர்த்தி உமாசகிதர் ஆகியோரின் படிமங்கள் சிதைவுறாத நிலையிற் காணப்படுகின்றன.
இறையகத்தின் வெளிப்புறச் சுவர்களில் தேவ கோஷ்டங்கள் அமைக்கப்படவில்லை. ஆயினும் அச்சுவர்களில் அரைத் தூண்கள் அலங்காரமான கோலத்திலே உருவாக்கப்பட்டுள்ளன. அவற்றின் போதிகைகள் நடுவிலே பட்டையாகவும் இரு புறங்களிலும் சுருண்டு வளைந்தனவாகவும் உள்ளன.
அர்த்த மண்டப வாயிலின் இரு புறங்களிலும் ஐந்து அடி உயரமான துவாரபாலகரின் உருவங்கள் உள்ளன. ஜடாமகுடம் பத்திரகுண்டலம், கடிசூத்திரம், உதரபந்தம், உபவிதம், கைவளையம் ஆகிய ஆபரணங்கள் அவற்றிலே தெரிகின்றன. ஒரு கையிலே கதையும் மற்றக் கையிலே வியப்புக் குறியும் அமைந்துள்ளன.
கோயிலின் உட்பிரகாரத்தில் எட்டுப் பரிவாரதேவர் கோயில்கள் அமைந்திருந்தன.
கண்ணனூர் சுப்பிரமணியர் கோயில்
புதுக்கோட்டை நகரிலிருந்து தென் மேற்கிலே பதினேழு மைல் தூரத்தில் உள்ள கண்ணனூர் என்னுமிடத்தில் அமைந்திருக்கும் இக்கோயில் கருவறை, அர்த்த மண்டபம், மண்டபம் என்னும் பகுதிகளைக் கொண்டுள்ளது. சந்நிதானம் கிழக்கு நோக்கியது. கோயில் பத்தொன்பது அடி நீளம் கொண்டது. அதன் கருவறை 12% அடிச் சதுரமாகும்.

Page 313
இறையகத்தின் வெளிப்புறச் சுவர்களில் அரைத் தூண்கள் அமைந்திருக்கின்றன. அவை திருக்கட்டளை சுந்தரேஸ்வரர் கோயிலில் உள்ளவற்றைப் போன்றவை. அவற்றிலே கால், கலசம், கும்பம், பலகை என்ற உறுப்புகள் அமைந்துள்ளன. கருவறையின் வெளிப் புறத்திலே தேவ கோஷ்டங்கள் காணப்படுகின்றன. கபோதத்தில் பூத கண வரிசையும் அதன் மேல் யாளி வரிசையும் உள்ளன. அதற்கு மேல் உள்ள பிரஸ்தாரத்தில் நான்கு மூலைகளிலும் யானை வடிவங்கள் அமைந்துள்ளன. கிரீபத்தின் நாற்புறங்களிலும் கூடுகளால் அலங்கரிக்கப்பட்ட தேவ கோஷ்டங்கள் உள்ளன. அதன் மேல் வட்டமான சிகரமும் அதன் உச்சியில் உருண்டை வடிவமான ஸ்தூபியும் உள்ளன.
மூலவரின் திருமேனி 3% அடி உயரமும் 1/2 அடிஅகலமும் % அடிகனமும் உடையது. தலையிலே கரண்ட மகுடமும் மார்பிலே சன்னவீரமும் அணிகளாக அமைந்துள்ளன. மேல் இரண்டு கைகளிலும் சக்தியும், அக்ஷமாலையும் உள்ளன. கீழ் வலக்கரம் அபயகரமானது. கீழ் இடக்கரம் துடைமிது வைத்த நிலையில் உள்ளது.
திருக்கட்டளைச் சுந்தரேஸ்வரர் கோயில்
புதுக் கோட்டைக்குக் கிழக்கே நான்கு மைல் தூரத்தில் உள்ள சுந்தரேஸ்வரம் பதினைந்தாம் நூற்றாண்டுக்கு முற்பட்ட காலத்திலே கற்குறிச்சி என்னும் பெயரால் வழங்கியது. அதனைத் திருக்கற்றளி ஈஸ்வரம் என்று சாசனங்கள் குறிப்பிடுகின்றன. இக்கோயிலின் கருவறையும், அர்த மண்டபமும் ஆதித்த சோழன் காலத்துத் திருப்பணிகளாகும். இக் கோயிலின் கருவறை வெளிப்புறத்திலே பன்னிரண்டடிச் சதுரமாகும். உட்புறத்தில் அது ஆறு அடிச் சதுரமாகும். வெளிப்புறச் சுவர்களில் அரைத் தூண்கள் அமைந்துள்ளன. அவற்றின் போதிகை கோண வடிவமானது. கடோதங்களில் மனிதத் தலைகளின் உருவங்கள் அடங்கிய கூடுகள் அமைந்துள்ளன. அவற்றின் மேலே யாளிவரிசை காணப் படுகின்றது. தேவகோஷ்டங்களிலே தெற்கிலே திரிபுராந்தகரும் மேற்கில் இலிங்கோற்பவரும் வடக்கிலே பிரமனும் அமைந்துள்ளனர். கோயிலின் இரண்டாவது தளத்தின் முகப்பிலே சாலை, கூடம் என்ற உறுப்புகள் உள்ளன. அவற்றின் நடுவில் விமான தேவதைகளின் படிமங்கள் உள்ளன. தென்சாலையின் நடுவிலே பிக்ஷாடனரும், மேற்கிலே திருமாலும், வடக்கிலே பிரமனும் உள்ளனர். இரண்டாந் தளச் சுவரின் மேல் மற்றுமொரு கபோதமும் யாளி வரிசையும் உள்ளன. பிரஸ்தாரத்தின் நான்கு புறங்களிலும் நந்தி உருவங்கள் அமைந்துள்ளன. கிரீபம், ஸ்தூபி, சிகரம் ஆகியவை சதுரமானவை. கிரீவத்தின் கோஷ்டங்களிலே தெற்கிலே தக்ஷணாமூர்த்தியும், மேற்கிலே வராக மூர்த்தியும் வடக்கில் பிரமனும், கிழக்கில் இந்திரனும் காணப்படுகின்றனர்.

287
மூலஸ்தானத்தின் சுற்றுப் புறங்களிற் சூரியன், சப்த மாதர், கணபதி, முருகன், சந்திரன், சண்டேஸ்வரர், வைரவர் ஆகியோரின் கோயில்கள் அமைந்துள்ளன.
மூவர் கோயில்
இக்காலத்துக்குரிய பிரதானமான கோயில்களிற் கொடும்பாளூர் மூவர் கோயிலும் ஒன்றாகும். மூன்று விமானங்கள் ஒரே வரிசையில் அமைந்துள்ளமையால் அது மூவர் கோயில் என்னும் பெயரால் வழங்கியது. அவற்றைச் சிற்றரசனாகிய பூதிவிக்கிரமகேசரி தன் பெயராலும் தன் தேவியர் இருவரது பெயர்களாலும் ஒரே வரிசையில் ஒரே மாதிரியாக அமைப்பித்தான். அவை சுந்தரச் சோழனின் காலத்துக் கற்றளிகளாகும். காளாமுகச் சைவர்களின் பெரிய மடாலயம் ஒன்று அதனைச் சேர்ந்திருந்தது. மல்லிகார்ஜுனர் என்பவர் அதன் மடாதிபதியாக விளங்கினார்.
விமானங்கள் ஒவ்வொன்றினதும் அடிப்பாகம் 21 அடிச் சதுரமாகும். அவை மேற்கு நோக்கிய சந்நிதானங்களாக அமைக்கப்பட்டிருந்தன. அவற்றிற்கிடையில் 10 அடி இடைவெளி உள்ளது. ஒவ்வொன்றிற்கும் முன்னால் 18 அடி சதுரமான அர்த மண்டபம் அமைந்திருந்தது. அவற்றிற்கு மேற்கே, 8 அடி தூரத்தில் 91 அடி நீளமும் 41 அடி அகலமும் கொண்ட மகாமண்டபம் இருந்தது. அதற்கு மேற்கில் 2 அடி இடைவெளிக்கு முன்னால் மகாமண்டபத்தின் மத்திய நிலையத்துக்கு எதிராக 11 அடி சதுரமான நந்தி மண்டபம் அமைந்திருந்தது. அதற்கு முன்னால் அமைந்திருந்த கொடிமரம், பலிபீடம் ஆகியவற்றின் அடையாளங்கள் உள்ளன. அதிஷ்டானத்தில் உபபீடம் பத்மம், குமுதம் என்ற படைகளையும், கோடியில் திறந்த வாயை உடைய மகரங்களோடு கூடிய யாழி வரிசையையும் காணலாம்.
பிரதான தளிகளைச் சுற்றி அமைப்பில் அவற்றைப் போன்றனவும், வெவ்வேறு அளவுகளில் அமைக்கப்பட்டனவுமான 15 பரிவாரதேவர் கோட்டங்கள் இருந்தன. அவற்றுள் நான்கு கோட்டங்கள் கோபுர வாசலின் ஒவ்வொரு பக்கத்திலும் இவ்விரண்டு என்ற வண்ணமாய் இருந்தன. தெற்கிலே நான்கு தளிகளும் வடக்கிலே நான்கு தளிகளும் மதிற் சுவரோடு ஒட்டிக் காணப்பட்டன. மூன்று தளிகள் கிழக்கு மதிலைச் சார்ந்து காணப்பட்டன.
மூன்று பிரதான கோயில்களும் பத்ம கோசங்களாய் அமைந்தவை. அதிஷ்டானத்தின் உபபீடம், பத்மம், குமுதம் என்ற படைகளைக் கோடியிலே திறந்த வாயையுடைய மகரங்களோடு கூடிய யாளி வரிசையும் காணலாம்.
மூன்று வெளிச் சுவர்களிலும் தேவ கோஷ்டங்கள் உள்ளன. ஒவ்வொரு தேவ கோஷ்டத்தையும் அரைத் தூண்களும் முழுத் தூண்களும் மேலே மகர தோரணங்களும் அலங்கரிக்கின்றன.
இந்துக் ឆ្នា

Page 314
தூண்களின் முக்கிய பகுதிகளான கால், பத்மம், கலசம், கும்பம், பலகை, போதிகை என்பன சிறப்பாய் அமைந்துள்ளன. கபோதத்தின் அடியிற் பூதவரிசையும் மேலே இரு கோடிகளிலும் மகரங்களோடு கூடிய யாளி வரிசையும் உள்ளன. கொடுங்கையில் இரட்டைக் கோடுகளும் நுனிப் பகுதியில் வட்டங்களும் திகழ்கின்றன.
இவ்விரு தளக் கற்றளியின் இரண்டாவது தளத்திற் சாலைகளையும் கூடங்களையும் காணலாம். சாலையின் நடுவில் நேர்த்தியான சிலைகள் உள்ளன. இரண்டாம் தளத்துச் சுவர் மீது கூடுகளால் அலங்கரிக்கப்பட்ட கொடுங்கையும் அதன்மேல்
Tតាពិចារណ៏នៃសាខា ១_TTT.
கிரீவமும் சிகரமும் சதுர வடிவமானவை. கிரீவத்தின் அடித்தளத்தில் நான்கு (3а тiguilepth ரிஷபங்கள் காணப்படுகின்றன. மத்தியில் விமான தேவதைகளோடு கூடிய கோஷ்டங்கள் உள்ளன. கோஷ்டங்களின் மீது சிங்கத் தலையால் அலங்கரிக்கப்பட்ட கூடுகள் காணப்படுகின்றன. சிகரம் நடுவில் பிதுங்கியும் கீழே உள்ளடங்கியும் உள்ளது. இதன் கோடியில்
கொடிக் கருக்குகள் உள்ளன. பத்ம பட்டியல் மீது சதுரமான
ஸ்தூபி உள்ளது. மூவர் கோயிலின் சிகரம் மாமல்லபுரத்திலுள்ள
துர்க்கை ரதத்தின் சிகரத்தை ஒத்திருக்கின்றது. நடுத்தளி விமானத்திற் கிழக்குப் பக்கத்திலே கருவறை அர்த்த நாரீஸ்வரரும், இரண்டாம் தளத்திற் சிவனும் பார்வதியும், கிரிபத்தில் இந்திரனும் காணப்படுகின்றனர். வடக்குப் புறத்தில் கருவறையில் நின்ற திருக் கோலத்திலுள்ள சிவபெருமானையும் இரண்டாந் தளத்திலும் கிரீவத்திலும் இருந்த திருக் கோலச் சிவபெருமானையும் காணலாம். ܡ
தெற்குப் புறத்திலே இரண்டாம் தளத்திலே தக்ஷிணா மூர்த்தியும், மூன்றாந் தளத்தில் வீணாதா தக்ஷிணாமூர்த்தியும் காட்சியளிக்கின்றனர். கிரிபத்தின் மேற்குப் புறத்திலே சிவனின் ஆலிங்கன வடிவம் உள்ளது.
தென்தளி விமானத்தின் கிழக்குப் புறக் கருவறைச் சுவரில் கங்காதரரும், இரண்டாந் தளத்தில் ஆலாரி ខ្សវិច្ឆ័យ gT_ិយfiចំហ៊ុំព័ទ្ធr. வடக்குப் புறத்தில் நின்ற திருக்கோலத்திலுள்ள சிவபெருமானும் இரண்டாந் தளத்தில் சங்கர நாராயணரும் காணப்படுகின்றனர். கிரீபத்தின் வட புறத்திலும் மேற்குப் புறத்திலும் இப்போது சிலைகள் ឆ្នាខ្មែរ-ម៉ាស៊}},
جامعي
பெருவிமானங்கள்
முதலாம் இராசராசனின் ஆட்சிக் காலம் முதல் 1985 -1918)
அதிராசேந்திரனுடைய காலம் வரையுள்ள காலப் பகுதி சோழர்
கலைப்பாணியின் வளர்ச்சியின் இரண்டாவது காலகட்டமாகக்
tu m m aaS TTmm Y TuSTT TY T TMmM mm K Y m அநேகமான கற்றளிகள் அமைக்கப்பெற்றன. அவை பொதுவாக
இந்துக்கலைக்களஞ்சியக்
물용
 

முற்காலத்துக் கோயில்களிலும் சற்றுப் பெரியனவாக விளங்கின. இக்காலப் பகுதியிற் சோழராதிக்கம் உன்னத நிலையிற் காணப்பட்டது. சோழரின் இராச்சியம் பேரரசாகியது. அயல்
ராச்சியங்களான பாண்டிநாடு, சேர
ឆ្នាយ៉ា, ថាចំ២LIT,
நுளம்பபாடி முதலியவற்றைக் 5கப்பற்றிச் சோழர் அவற்றைத் தங்கள் இராச்சியத்தோடு இனைத்துக் கொண்டதால் அது வலிமைமிக்க பேரரசாக விளங்கியது. தென்னாசியாவின் பிரதான வர்த்தக கையாக விளங்கிய பகுதி முழுவதும் சோழர் வசமாகியது. தென்னிந்தியாவிலுள்ளவர்கள் இராசராசன் காலம் முதலாகச் சோழ மன்னரைச் சக்கரவர்த்தியென்று குறிப்பிடத் தொடங்கினார்கள். கர்நாடகத்திலே சோழ மன்னன் அமைத்த கோயிலைத் தேவாலயச் சக்கரவர்த்தியென்று குறிப்பிட்டார்கள். இக்கால கட்டத்திலே தென்னிந்தியக் கட்டடக்கலை வளர்ச்சியில் ஏற்பட்ட முன்னேற்றம் எத்தகையது என்பதை அந்த வர்ணனை மூலமாகப் புரிந்து கொள்ளலாம்.
இக்காலகட்டத்து வளர்ச்சிகளை விளக்குவதற்குத் திருவாலீஸ்வரம், தஞ்சைப் பெருங்கோயில், கங்கை கொண்ட சோழ - ஈஸ்வரம் ஆகிய மூன்றையுமே இங்கு உதாரணங்களாகக் கொண்டு வர்ணிக்க முடியும்.
இராசராசனது காலத்துக் கோயிலான பிரம்மதேசத்தில் அமைந்துள்ள திருவாலிஸ்வரம் அதிற் காணப்படும் வனப்புமிக்க உன்னதமான சிற்பங்களின் காரணமாக மிகுந்த முக்கியத்துவத்தைப் பெறுகின்றது. அதன் சில பகுதிகள் புதுமையான முறையிலும் மிக நுட்பமாகவும் அமைந்துள்ளன. கர்ப்பக்கிருகம் சதுரமானது. அதிஷ்டானத்திலுள்ள யாளி வரிசையில் யாளியின் உருவங்கள் முழுமையாகவும் கம்பீரமான கோலத்திலும் காணப்படுகின்றன. கொடுங்கையின் கீழமைந்த பூத கண வரிசையும் புதுமையான வகையில் அமைந்துள்ளது. நானாவிதமான நாட்டியக் கோலங்களிலும் வேறு விதமான கோலங்களிலும் மனித உருவங்கள் இங்கு அமைந்துள்ளன. சிலர் சிங்கமுகங்களுடனும் சிலர் குரங்கு முகங்களுடனும் காணப்படுகின்றனர். உருவங்களின் பெரு வயிறும் ஆனந்தக் களிப்பினாலே ஆடிப்பாடி ஆர்ப்பரிக்கும் கோலமும் கவர்ச்சிமிக்கவை. கொடுங்கைகளிலே அழகு வாய்ந்த சிங்கமுகக் கூடுகள் அமைந்துள்ளன. அவற்றிடையே வளைந்த கொடிகளும் அவற்றின் இலைகளும் மிகவுஞ் செம்மையாகச் சித்திரிக்கப்பட்டுள்ளன. விமானத்தின் முதலாவது தளத்திலுள்ள சிற்பங்கள் அவற்றின் பிரதிமாலசுடினங்களின் காரணமாக மிகுந்த முக்கியத்துவம் பெறுகின்றன. தெற்கிலே நடுவில் நடராசரும் இடப்பக்கத்தில் விருஷபாரூடர் கங்காதரர் ஆகியோரும் அமைந்துள்ளனர். மேற்கிலே விஷ்ணு, பிரமன் ஆகியோர் பக்கங்களிலும் நடுவிலே இலிங்கோத்பவரும் காணப்படுகின்றனர். அவர்களின் இடப்புறத்தில் காலாரிமூர்த்தி, கிராதாமூர்த்தி என்போரும் உள்ளனர். வடக்கிலே நடுவில் கஜாரி மூர்ளத்தியும், வலது பக்கத்திற் சண்டேசானுக்கிரக மூர்த்தி, சுகாசன மூர்த்தி ஆகியோரும் இடப்பக்கத்தில் சோமாஸ்கந்தரும்
வேறொருவரும் உள்ளனர்.

Page 315
விமானத்தின் இரண்டாவது தளத்திலுள்ள சிற்ப வேலைப்பாடுகளும் அலங்காரச் சிற்பங்களும் கர்ப்பக்கிருகத்தின் வெளிப்புறத்திலுள்ளவற்றைப் போன்றவை. அதிலே பூதகணவரியும் யாளி வரியும் அமைந்துள்ளமை குறிப்பிடத் தக்கது. அதன் மேற்புறத்து நான்கு மூலைகளிலும் அளவிற் பெரியனவும் கவர்ச்சியான வடிவழகு பொருந்தியனவுமாகிய நான்கு நந்திகள் அமைந்துள்ளன. அதன் தெற்கிலும், மேற்கிலும் வியாக்கியான தஷணாமூர்த்தி, யோகநரசிங்கர் ஆகியோரின் உருவங்கள் உள்ளன. வடக்கிற் பிரமனும் கிழக்கில் இந்திரனும் உள்ளனர். மிகவும் அலங்காரத் தோற்றம் கொண்ட சிகரத்திலே மகாபத்மமும், பட்டிகையும் தூபியும் உள்ளன. அர்த்த மண்டபமும் விமானமும் ஒரே காலத்தவை. மகாமண்டபம் சற்றுக் காலத்தாற் பிற்பட்டது. அது முதலாம் இராசேந்திர சோழனுடைய காலத்துக்குரியதாகலாம். திருவடி உத்தர கைலாசம், திருமழவாடி, வைத்தியநாதர் கோயில், தாராபுரத்து ஈஸ்வரம், விண்ணகரம் ஆகிய இரட்டைத் தளிகள், பொலனறுவையிலுள்ள வானவன் மாதேவீஸ்வரம் ஆகியவை இராசராசனது காலத்துக் கோயில்களிற் குறிப்பிடத்தக்கவை. ஆயினும் அவை சிற்பக் கலையினைப் பொறுத்தவரையிலே திருவாலீஸ்வரத்தின் உன்னத வனப்பினைக் கொண்டிருக்கவில்லை.
தஞ்சைப் பெருவுடையார் கோயில்
தென்னிந்தியக் கோயிலின் உன்னதமான வளர்ச்சிக் கட்டத்தைத் தஞ்சைப் பெருவுடையார் கோயிலிற் காணலாம். இந்தியக் கோயில்களில் மிகப் பெரியதும், மிகவும் உயரமானதும், கலை வனப்பில் நிகரற்றதுமான அரும் பெருங்கோயில் இந்தியக் கட்டடக்கலை வளர்ச்சியின் சிகரமாய் விளங்குகின்றது. ஒன்றன் முன் ஒன்றாக ஒரே நிலையில் அமைந்துள்ள விமானம், அர்த்த மண்டபம், மகாமண்டபம், நந்தி மண்டபம் ஆகியனவும் அவற்றின் விசாலமான வளாகமும் மதில்கள் சூழ்ந்த 500 அடி நீளமும், 250 அடி அகலமும் கொண்ட பிரகாரத்தினுள் அமைந்துள்ளன. பிரகாரச் சுவர்களின் உட்புறத்தே எல்லாப் பக்கங்களிலும் சுற்றாலை ஒன்று அமைந்திருக்கின்றது. அதில் நூற்றுக் கணக்கான தூண்கள் வரிசையாக அமைந்துள்ளன. பரிவாரத் தேவர் கோயில்களை இணைக்கும் பான்மையிற் சுற்றாலை அமைக்கப்பட்டது. ஆலயத்தின் முகப்பிலே இரண்டு கோபுர வாயில்கள் உள்ளன. அவற்றுள் முற்புறமாக உள்ளது இரண்டாம் பிரகாரத்தின் நுழைவாயிலாக அமைந்திருந்தது. ஆனால் அப்பிரகாரத்தின் மதில்கள் இடிந்து அழிந்து விட்டன.
தஞ்சைக் கோயிலின் பிரதான பகுதியாக விளங்குவது வானத்து முகில்கள் தோயும் வண்ணமாக ஓங்கியெழும் அற்புதச் கோலமான விமானமாகும். அது 215 அடி உயரம் கொண்டது பதினான்கு தளங்களைக் கொண்டது. விமானத்தின் பகுதிகளின் மிகவும் பொருத்தமான அளவுப் பிரமாணங்களும் மிகவும் செம்மையான வேலைப்பாடுகளும் அதன் ஈடிணையிலாத
வனப்புக்கு ஏதுவாயுள்ளன. 82 அடி சதுரமான அதன் தளம் 5

289
அடி உயரம் கொண்டது. அதன் சுவர்கள் எதுவிதமான வளைவுமின்றி நேராக நிமிர்ந்த தோற்றங் கொண்டவை. அதற்கு மேல் 13 நாற் சதுரமான தளங்களுடன் உள்நோக்கிய சரிவு கொண்ட விமானம் அமைந்துள்ளது. உச்சித் தளத்தின் நீளம் அடித்தளத்தின் நீளத்தின் மூன்றிலொரு அளவுடையதாகும். நேராக நிமிர்ந்த அடித்தளத்தைக் கபோதம் இரு வேறு பகுதிகளாகப் பிரிக்கின்றது. கபோதத்தின் கீழும் மேலும் அமைந்துள்ள சுவர்களிலே தேவகோஷ்டங்களும், அரைத் தூண்களும், அலங்கார வேலைப்பாடுகளும் மிகுந்த வனப்புடன் அமைந்துள்ளன.
கர்ப்பக்கிருகம் உட்புறத்தில் 45 அடிச் சதுரமாகும். அதனைச் சுற்றி 9 அடி அகலமான திருச்சுற்றாலை உள்ளது. அதன் கவர்களிற் சமகாலத்து ஒவியங்கள் இருந்தன. நாயக்கர் காலத்தில் அவற்றிற்கு மேலே புதிய ஓவியங்களை வரைந்து பழைய ஓவியங்களை மறைத்து விட்டனர். கருவறையின் நடுவிலே இராஜராஜ ஈஸ்வரமுடையார் என்ற பிரமாண்டமான இலிங்கம் இருந்தது. இறையகத்துக்கு முன்னால் அந்தராளம் அமைந்திருக்கின்றது. அதனை அடைவதற்குத் தெற்கிலும், வடக்கிலும் படிக்கட்டுகள் உள்ளன. அந்தராளத்தின் இரு பக்கங்களில் 8 தூண்கள் இரண்டு வரிசைகளில் அமைந்துள்ளன. இறையகத்து வாயிற்புறத்தே அளவிற் பெரியதான துவாரபாலகரின் உருவங்கள் அடங்கிய கோஷ்டங்கள் உள்ளன. இறையகத்தைப் போல அர்த்த மண்டபமும் இரு தள அமைப்பாகும். அந்தராளமும், அர்த்தமண்டபமும் ஒரு பொதுவான அதிஷ்டானத்தில் உள்ளன. அவற்றின் தேவ கோஷ்டங்களும் அரைத் தூண்களும் ஒரே மாதிரியானவை. மகா மண்டபத்தின் நடுவிலே தூண் வரிசைகளும் ஓரங்களிற் சாலைகளும் உள்ளன. மகா மண்டபத்துக்கு முன்னால், சிறிது துரத்தில் நந்தி மண்டபம் உள்ளது. ஆதியான நந்தி பழுதடைந்துவிட்டதால் அதனை நீக்கிவிட்டு நாயக்கர் காலத்திலே மிகவும் வனப்பு மிக்க ஒரு நந்தியின் உருவத்தை அமைத்துள்ளனர்.
கோயில் வளாகத்திலே வேறு மூன்று சந்நிதானங்கள் பிற்காலத்திலே அமைக்கப்பட்டன. வடக்குப் பக்கத்தில் அமைந்திருக்கும் அம்பின் கோயில் பாண்டியர் காலத்துத் திருப்பணியாகும். மேற்கிலுள்ள சுப்பிரமணியர் சுவாமி கோயில் நாயக்கர் காலத்தில் அமைக்கப்பட்டது. பிள்ளையார் கோயில் மாராட்டியர் காலத்துக்குரியது. அவற்றின் வேலைப்பாடுகள் முக்கியத்துவம் வாய்ந்தவை.
இராசராசனின் ஆட்சியின் முடிவிலே அவனாலும், அவனது தேவியராலும் அமைச்சர், சேனாபதியர் முதலானோராலும் பெருமளவிலான தானங்கள் கோவிலுக்கு வழங்கப்பட்டன. நித்திய நைமித்திய கருமங்களுக்கும் ஆலய சேவைகளுக்கும் அறக் கட்டளைகள் ஏற்படுத்தப்பட்டன. தெய்வங்களினதும் நாயன்மார்களினதும் உலோகப் படிமங்கள் அநேகமானவை
இந்துக்கலைக்களஞ்சியம்

Page 316
ஸ்தாபிக்கப்பட்டன. கோயில் வளாகத்திலே காவல் புரிவதற்கும் அணுக்கர், வேளைக்காரர் போன்ற படையினர்
நியமிக்கப்பட்டனர்.
கங்கை கொண்ட சோழபுரம்
முதலாம் இராசராசனின் மகனாகிய மதுராந்தகன் என்னும் இராஜேந்திர சோழனின் அரசியற் கோட்பாடுகளைப் பிரதிபலிக்கும் வண்ணமாகக் கங்கை கொண்ட சோழபுரம் சோழரின் புதியவொரு தலைநகராக அமைக்கப்பட்டது. வட இந்தியா மீது திக்குவிசையஞ் செய்தமையின் விளைவாகக் கங்கை கொண்ட சோழன் என்னும் பெரும் புகழுக்குரிய அலங்கார நாமம் அவனுக்குரியதாகியது. மதுராந்தகனின் இணையில்லாத புகழினைப் பரத கண்டத்தவருக்கு உணர்த்தும் வண்ணமாக அவனால் அமைக்கப்பட்ட நகரம் கங்கை கொண்ட சோழபுரம் என்னும் பெயரைப் பெற்றது. அங்கு அவனால் அமைக்கப்பெற்ற கங்கை கொண்ட சோழேஸ்வரம் அளவிற்
பெரியதாகவும் கலைவனப்பு மிக்கதாகவும் விளங்கியது.
தஞ்சைப் பெருங் கோயிலை மாதிரியாகக் கொண்டு அமைக்கப் பெற்ற கங்கை கொண்ட சோழேஸ்வரம், தமிழகத்துக் கட்டடக் கலையின் மகோன்னத படைப்புகளில் ஒன்றாகும். கோயில் வளாகம் 567 அடி நீளமும் 318 அடி அகலமுங் கொண்ட சுற்றளவினை உடையதாகும். வளாகத்தினுள் ஆலயத்தைச் சுற்றி வட கைலாசம், தென் கைலாசம் சண்டேஸ்வரர் கோயில், மகிஷாசுரமர்த்தனியின் கோட்டம் என்னுங் கோயில்களும், பலிபீடம், நந்திபீடம், அலங்கார மண்டபம் என்பனவும் அமைந்திருந்தன. கோயில் வளாகத்தின் கிழக்குப் பகுதியிற் கோபுர வாசல் அமைந்திருந்தது.
கர்பக்கிருகம், அர்த்த மண்டபம், மகாமண்டபம் ஆகிய பிரதான பகுதிகள் ஒரு பொதுவான பிரமாண்டமான அதிஷ்டானத்தின் மேல் அமைந்துள்ளன. அதன் மகத்தான உபபீடத்தின் அடிப்பகுதி நிலத்தின் கீழ் மறைந்துள்ளது. உபபீடம், அதிஷ்டானம் ஆகியவற்றிற்கிடையில் ஒர் ஒடுக்கமான மேடை காணப்படுகின்றது. பத்மம், குமுதம், வளிமானம் என்னும் வேலைப்பாடுகள் அதிஷ்டானத்தில் உள்ளன. உபபீடமானது 340 அடி நீளமும் 100 அடி அகலமும் கொண்டது. கர்ப்பக்கிருகம், மகாமண்டபம் ஆகியன முறையே 100 அடியும் 145 அடியும் நீளம்
கொண்டவை.
ஓங்கி எழுந்த விமானம் கோயிலின் சிறப்பு மிகுந்த பகுதியாகும். கர்ப்பக்கிருகச் சுவர்கள் 35 அடி உயரமானவை. சுற்றி வரும் உத்திரம் ஒன்றினாற் சுவர்கள் மேல் கீழாக இரு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. அவை ஒவ்வொன்றிலும் அகலப்பாட்டில் ஐந்து பாகங்கள் காணப்படுகின்றன. அவற்றின் நடுவிலுள்ள பாகமே மிகவும் பரந்தது. கரையோரமாக உள்ள
இந்துக்கலைக்களஞ்சியம்
290

இரண்டுஞ் சதுரமானவை. இடையிலுள்ள இரண்டு பாகங்களும் நாற்சதுர வடிவமானவை. சிவாகமங்களிலும், புராணங்களிலும் போற்றப்படும் 50 தெய்வீகக் கோலங்கள் இச் சுவர்களில் மிகச் சிறப்புடன் அமைந்து காணப்டுகின்றன. அவற்றோடு அலங்கார வேலைப்பாடுகளும், கூடு கும்பபஞ்சரம், சிங்கமுகம் முதலான வையுஞ் செம்மையாக உருவாக்கம் பெற்றுள்ளன. கர்ப்பக்கிருகச் சுவர்களில் அமைந்த சிற்பங்களில் நடராஜர், சண்டேசானுக்கிரக மூர்த்தி, சரஸ்வதி ஆகியோரின் படிமங்கள் மிகுந்த வனப்புடையவை.
கர்ப்பக்கிருகச் சுவர்களின் அடித்தளத்தில் வடக்கிலே காலாந்தகர், துர்க்கை, பிரமா, பைரவர், காமாந்தகர் ஆசியோரின் உருவங்களும், மேற்கிலே கங்காதரர், லிங்கோத்பவர், மகாவிஷ்ணு, சுப்பிரமணியர், அனுக்கிரக விஷ்ணு மூர்த்தி ஆகியோரின் உருவங்களும் அமைந்துள்ளன. தெற்கிலே கணபதி, அர்த்தநாரி, தகூதிணாமூர்த்தி, ஹரிஹரர், நடராஜர் ஆகியோரின் படிமங்களும் கர்ப்பகிருகத்து மேற்றளச் சுவர்களின் வடக்கிலே கெளரிபிரசாதர், சோமன், பிரமன், ஈசானர், பூவராகர், சுப்பிரமணியர் முதலியோரின் படிமங்கள் உள்ளன. பிக்ஷாடனர், திரிமூர்த்தி, வருணன், விஷ்ணு, இலிங்கோத்பவர், பிரமன், வாயு முதலியோரின் வடிவங்கள் மேற்கில் உள்ளன. தெற்கிலே காலாந்தகர், யமன், தக்ஷணாமூர்த்தி, நிருத்தி முதலியோரின்
உருவங்கள் உள்ளன.
கங்கை கொண்ட சோழேஸ்வரத்தின் விமானம் ஒன்பது தளங்களால் அமைந்தது. அது 160 அடி உயரங் கொண்டது. மேலுள்ள தளம் ஒவ்வொன்றும் அதன் கீழமைந்ததைக் காட்டிலும் சுற்றளவிற் சிறியது. தஞ்சைப் பெருவுடையார் கோயில் விமானத்திலுள்ள தளங்களின் நாற்பக்கங்களும் நேராக அமைந்திருக்கையில் இங்குள்ள தளங்கள் நான்கு பக்கங்களிலும் வில்வளைவான கோலத்தில் உள்ளன. அதன் காரணமாக விமானம் கல்யாணத் தோற்றத்துடன் காட்சியளிக்கிறது. சதுரவடிவிலும் நாற்சதுர வடிவிலும் அமைந்த மாடங்கள் தளங்களை அலங்கரிக்கின்றன. ஒவ்வொரு பக்கத்திலும், நடுவிலும், அதன் அருகிலும் அமைந்த மாடங்கள், மூலைகளிலுள்ள கூடங்களைக் காட்டிலும் முன்னோக்கி நீண்ட
வண்ணமாயுள்ளன.
கிரீவத்தின் நான்கு பக்கங்களிலுந் தேவ கோஷ்டங்கள் வழமை போல் அமைந்திருக்கின்றன. அதன் கீழமைந்த சதுரமான பீடத்தில் நான்கு நந்திகளின் உருவங்கள் உள்ளன. தேவ கோஷ்டங்களின் மேலே சிங்கமுக வடிவங்கள் தோரணங்களின் சிகரமாய் உள்ளன. அவற்றின் மேலே பதுமபட்டிகை அமைந்துள்ளது. அதன் மேற் பொன் முலாம் பூசிய தூபியின் உச்சி தாமரை மொட்டுப் போலத் தெரிகின்றது. அதிலே உடையார் பாளையத்துப் பாளையக்காரரான
நல்லக்கதோழ உடையாரின் பெயர் எழுதப்பட்டுள்ளது.

Page 317
இறையகம், மகாமண்டபம் ஆகியவற்றின் நடுவில் அர்த்த மண்டபம் அமைந்திருக்கின்றது. படிக்கட்டுகள் மூலமாக அதனை அடையும் வழிகள் வடக்கிலும், தெற்கிலும் உள்ளன. படிக்கட்டுகள் இரு கட்டங்களில் உள்ளன. முதலாவது கட்டத்துப் படிகள் உபபீடத்தின் மேல் மட்டம் வரை அமைக்கப்பட்டுள்ளன. இரண்டாவது கட்டத்துப் படிகள் அதிஷ்டானத்தின் மேல் மட்டம் வரை உயர்ந்துள்ளன. பிரமாண்டமான துவாரபாலகரின் உருவங்கள் வாசலின் இரு மருங்கிலும் காணப்படுகின்றன. மண்டபத் தூண்கள் வேலைப்பாடின்றிச் சதுரமாகவும்
கனதியாகவும் உள்ளன.
புராணக் கதைகளை விளக்கும் சிற்பங்கள் அர்த்த மண்டபத்தின் கிழக்குச் சுவரிலே சித்தரிக்கப் பெற்றுள்ளன. அவற்றுள்ளொன்று மகேஸ்வரன் இராவணனின் கர்வத்தினை அடக்கும் பான்மையைக் காட்சிப்படுத்தும் வகையில் உள்ளது. சிவனை அர்ச்சிப்பதற்கு வேண்டிய 1008 தாமரை மலர்களில் ஒன்று குறைவாக இருப்பதைக் கண்டு திருமால் தனது கண்களில் ஒன்றைப் பறிப்பதையும் அதனைக் கண்ட சிவபெருமான் பெருமாளுக்கு அனுக்கிரகம் பண்ணுவதையும் மற்றொரு சிற்பம் உணர்த்துகிறது. வேறொன்று பார்வதி கல்யாணம் பற்றியதாக அமைந்திருக்கின்றது. சடங்கினை நடத்தும் புரோகிதராகப் பிரமாவும் கன்யாதானஞ் செய்பவராகத் திருமாலுங் காணப்படுகின்றனர். கிராதார்ச்சுனர், மார்க்கண்டேயர், சண்டேஸ்வரர் ஆகியோரின் கதைகளை விளக்கும் சிற்பங்களும்
உள்ளன.
மகா மண்டபமும் அதற்கு முன்பாகவுள்ள மணிமண்டபமும் அவற்றோடு அதிஷ்டானம், இறையகம் ஆகிய அமைப்புகளும் ஒரு பொதுவான பீடத்தில் அமைந்துள்ளன. மகா மண்டபத்தின் மேற்பாகமும், அதன் சுவர்களும் இடிந்து வீழ்ந்துவிட்டன. அது புனரமைக்கப் பெற்ற காலத்தில் அதன் சுவர்கள் குறைந்த உயரத்துடன் அமைக்கப் பெற்றன. அதன் மேற்குப்புறத்தில் மட்டுமே பழைய சுவரின் பகுதிகள் உள்ளன. அதிலுள்ள தூண்களும், பக்கச் சுவர்களும், கூரையும் பிற்காலத்திலே புதிதாக அமைக்கப் பெற்றவை. மகா மண்டபம், மணிமண்டபம் ஆகியவற்றைச் சென்றடைவதற்கான வழி படிக்கட்டுகளினால்
அமைந்துள்ளது.
மகா மண்டபத்தின் வடக்கு மூலையிற் செளரயீடம் அமைந்திருக்கின்றது. அது சதுரமான பீடமொன்றில் அமைந்துள்ள தாமரை மலரின் வடிவமாகும். அமைப்பிலே கட்டடம் இருதள தளி போன்றுள்ளது. மேலுள்ள தளத்தில் எண் திசைகளையும் நோக்கிய கோலத்தில் எட்டுக் கிரகங்களினதும் மூர்த்தங்கள் உள்ளன. அடித்தளம் ஏழு குதிரைகள் பூட்டிய இரதம் போன்று அமைந்துள்ளது. குதிரைகள் ஏழும் வாரம் ஒன்றிலுள்ள ஏழு நாட்களையுங் குறிக்கும். இக்கிரகங்கள் ஒவ்வொன்றிலும்

291
அமைந்த தாமரை இதழ் போன்ற 12 சட்டங்களும் பன்னிரு மாதங்களையும் குறிக்கும். புவனம் சூரிய மண்டலமாய் அமைந்திருப்பதையும் காலச் சக்கரமானது சூரியனை ஆதாரமாகக் கொண்டு நாள், வாரம், மாதம் என்ற வகையில் வரிசைக் கிரமமாகச் சுழன்று செல்வதையும் அற்புதமான வகையிலே செளரயீடத்தில் உருவகப்படுத்தியுள்ளனர்.
கர்ப்பக்கிருகத்தின் இருபக்கங்களிலும் வட கைலாசம், தென் கைலாசம் என்னும் சிவாலயங்கள் அமைந்திருந்தன. முதலாம் இராசராசனதும் இராசேந்திரனதும் காலங்களில் இத்தகைய கோயில்கள் திருவையாற்றிலும் அமைக்கப் பட்டிருந்தன. வட கைலாசத்திற் கற்பக்கிருகம், அர்த்த மண்டபம் என்னும் அமைப்புகள் உள்ளன. துவிதள விமானத்திலே கிரீவம், ரேகா, சிகரம், ஸ்தூபி ஆகிய அம்சங்கள் காணப்படுகின்றன. கர்ப்பக் கிருகத்தின் சுவர்களில் உள்ள தேவகோஷ்டங்களிலே, தெற்கிலும், மேற்கிலும், வடக்கிலும் முறையே தகூதிணாமூர்த்தி, இலிங்கோத்பவர், பிரமன் ஆகியோரின் பிரதிமைகள் உள்ளன.
வடகைலாசத்து அர்த்த மண்டபத்துச் சுவர்களின் கூடுகளில் வடக்கிலே கெளரி பிரசாதர், துர்க்கை, அர்த்தநாரி, வைரவர் ஆகியோரின் வடிவங்களும், தெற்கிலே நடராசர், பிக்ஷாடனர், சுப்பிரமணியர் என்போரின் பிரதிமைகளும் மிகுந்த வனப்புடன் அமைக்கப் பெற்றுள்ளன. காலப் போக்கிலே வட கைலாசத்தைத் திருக்காமக் கோட்டமாக மாற்றி விட்டனர். தென் கைலாசத்து மகாமண்டபம் காலப் போக்கில் இடிந்து வீழ்ந்து விட்டது. தென் கைலாசத்தின் கர்ப்பக்கிருகத்துச் சுவர்களிலும் அர்த்த மண்டபத்திலும் உள்ள சிற்பங்கள் யாவும் வட கைலாசத்திற் போலவே காணப்படும்.
சிங்கக்கேணியின் சமீபத்தில் அமைந்துள்ள மகிஷாசுரமர்த்தனியின் கோயில் பிற்காலத்தில் அமைக்கப்பட்ட வொன்றாகும். அதிலுள்ள மகிஷாசுரமர்த்தினியின் படிமம் சாளுக்கிய கலைப் பாணியில் அமைந்துள்ளது.
கங்கை கொண்ட சோழேஸ்வரத்தில் ஆதியான வெண்கலப் படிமங்களிற் சில இன்னும் உள்ளன. சோமாஸ்கந்தர், கார்த்திகேயர், யோகேஸ்வரி, துர்க்கை, அதிகார நந்தி, ரிஷப வாகனர் என்போரின் படிமங்கள் அவற்றுட் குறிப்பிடத்தக்கவை. சோமாஸ்கந்தர் படிமத்திலுள்ள உமா மகேஸ்வரரின் உருவங்கள் அளவில் மிகப் பெரியவை. சோழர் காலத்து வெண்கலப் படிமங்களுள் அவை மிகப் பெரியவை. பத்மபீடத்தில் அமைந்த கார்த்திகேயரின் வடிவம் 107 சென்றிமீற்றர் உயரங் கொண்டதாகும். இறையகத்தின் அருகிலுள்ள யோகேஸ்வரியின் கோலம் குமுண் சிரிப்புடன் பொலிந்த வனப்புமிகு தோற்றமாகும். சமபங்க நிலையிலுள்ள துர்க்கையின் கரங்கள் நான்கினுள் மேலுள்ளவை சங்கு, சக்கரங்களை ஏந்திய நிலையில் உள்ளன.
கீழ்க்கரங்கள் வாத, கடி அவலம்பித முத்திரைகளில் உள்ளன.
இந்துக்கலைக்களஞ்சியம்

Page 318
கோயில் வளாகத்தினுட் கற்சிற்பங்களும் பல காணப்படுகின்றன. வடக்கு வாசலுக்குச் சமீபமான மேடையொன்றில் இலிங்கோத்பவர், பிக்ஷாடனர், கணபதி, சுப்பிரமணியர், உமாதேவியார், வீரபத்திரர், பிரமன், துர்க்கை, சந்திரசேகரர், ரிஷபபாந்திகர், வீணாதரர் போன்ற மூர்த்தங்களின் சிற்பங்கள் காணப்படுகின்றன. தென் கைலாசத்தின் அருகில் அர்த்த நாரீசுவரர் கஜலக்ஷமி, சூரியன் முதலியோரின் சிற்பங்கள் நிலத்தில் புதைந்து காணப்படுகின்றன. மகாவிஷ்ணு, பூநீ தேவி ஆகியோரின் படிமங்கள் சிங்கக் கேணியின் அருகில் உள்ளன.
பிற்காலச் சோழர் கோயில்கள்
முற்காலச் சோழர்களான முதலாம் ஆதித்தன் பராந்தகசோழன் சுந்தரசோழன் முதலியோரின் காலங்களிலே தென்னகத்திற் பெருந்தொகையான கற்றளிகள் நிர்மாணிக்கப் பட்டன. தமிழகத்திலே முன் எக்காலத்திலும் காணப்படாத அளவிற் பல நூற்றுக்கணக்கான கோயில்கள் உருவாக்கப் பட்டன. கட்டுமானப் பணிகளிலே பல நூற்றுக்கணக்கான ஸ்தபதிகளும் சிற்பக்கலை விற்பன்னர்களும் ஈடுபட்டிருந்தனர். நாயன்மார்களின் பாடல்கள் பெற்ற தலங்களிலுள்ள மண் தளிகள் Lលតាយ៉ា இடிக்கப்பட்டு புதிதாகக் கற்றளிகளாக நிர்மாணிக்கப்பட்டன. அவற்றோடு புதியனவான ஆலயங்கள் பலவும் உருவாக்கப்பட்டன. அதற்குப் பின்பு முதலாம் இராசராசன். முதலாம் இராஜேந்திரன் ஆகியோரின் காலங்களிலும் பல ஈஸ்வரங்களும், விண்ணகரங்களும் உருவாக்கப்பட்டன. முன்னே கண்டவாறு ஈடுமெடுப்புமற்ற வகையில் விமானங்கள் எழுந்தமை அவர்களின் காலத்துக் கட்டடக் கலையின் சிறப்பம்சமாகும்.
முதலாம் குலோத்துங்க சோழன் (1017 -1122) விக்கிரம சோழன் (1013-1032) ஆகியோரின் ஆட்சிக் காலங்களிலும் தென்னிந்திய கட்டடக்கலையானது சில புதிய அம்சங்களோடு
கோயில் வளாகம் விசாலமாக அமைக்கப் பெற்றமை இக்காலத்துக் கட்டிட அமைப்பின் வளர்ச்சியிலுள்ள ஒரு பிரதான அம்சமாகும். சிதம்பரத்தை மையமாகக் கொண்டு புதிய கட்டுமான முறையின் அம்சங்கள் வளர்ச்சி பெற்றன. முதலாம் குலோத்துங்கன் விக்கிரம சோழன் ஆகியோரின் காலத்திற் சிதம்பரம் கோயில் ஆறு மடங்கு பெரிதாக வளர்ச்சி பெற்றது. குலோத்துங்க சோழன் திருமாளிகை, விக்கிரம சோழன் திருமாளிகை என்னும் முதலாம், இரண்டாம் சுற்றுப் பிரகாரங்கள் அமைக்கப் பெற்றன. மூன்றாம் சுற்றுப் பிரகாரங்களின் கட்டுமானப் பணிகள் இரண்டாம் குலோத்துங்க சோழன் காலத்தில் ஆரம்பமாகி மூன்றாம் குலோத்துங்கனுடைய காலத்தில் நிறைவடைந்தன. அந்தப் பிரகாரம் ராஜாக்கள் தம்பிரான் திருமாளிகை என்னும் பெயரால் வழங்கியது.
நான்கு தேரோடும் வீதிகளும் இக்காலமளவிலே
அமைக்கப்பட்டனவாகும்.
©រនៃទ្វធំ ឆែកឆ្មទាំងៃ
292

தில்லையம்பலத்து எழு நிலைக் கோபுரங்களும் பிற்காலச் சோழர்களின் திருப்பணிகளாகும். நூற்றுக்கால் மண்டபம், ஆயிரம் கால் மண்டபம், திருக் காமக் கோட்டம், திருச் சுற்று மாளிகைகள் போன்ற பல அமைப்புக்கள் சிதம்பரத்திலும் வேறு சில தலங்களிலும் அரசர்களாலும் பிரதானிகள் பலராலும் அமைக்கப் பெற்றன. விக்கிரம சோழன் தில்லையிலே திருத் தேர்க் கோயிலைச் செம் பொன் வேய்ந்து, தன் பெயரால் வழங்கும் மாளிகையையும் திருவீதியையும் அமைத்தமை பற்றி அவனுடைய மெய்க் கீர்த்தி மேல் வருமாறு வர்ணிக்கிறது.
தன் குல நாயகன் தாண்டவம் பயிலுஞ் செம்பொன்ன பலம் சூழ் திருமாளிகையும் கோபுர வாசல் கூட சாலைகளும் உலகுவலம் கொண்டொலி விளங்கு நேமிக் குலவரை உதய குன்றமொடு நின்றெனப் பசும் பொன் வேய்ந்த பலிவளர் பீடமும் விசும்பொளிதளைப்ப இமையவர்களிப்பப் பெரிய திருநாள் பெரும் பெயர் விழாவெனும் உயர் பூரட்டாதி உத்திரட்டாதியில் அம்பல நிறைந்த அற்புதக் கூத்தர் இம்பர்வாழ எழுந்தருளுவதற்குத் திருத்தேர்க் கோயில் செம்பொன் வேய்ந்து பருத்திரன் முத்தின் பயில் வடம் பரப்பி நிறைமணி மாளிகை நெடுந்திரு வித் தன் திருவளர் பேராற் செய்து சமைத்தருளி டைம்பொற் குளித்த பரிகல முதலாச் செம்பொற் கற்பகத்தொடு பரிச்சின்னமும் அளவிலாதன வொளிபெறவமைத்துப் பத்தா மாண்டில் சித்திரைத் திங்கள் அத்தம் பெற்ற ஆதிவாரத்துத் திருவளர் மதியின் திரையோதசிப் பக்கத்து இன்ன பலவும் இனிது சமைத்தருளி தனது முன்னோர்களினது குலதெய்வமான நடராஜப் பெருமான் பள்ளி கொண்டருளியுள்ள பேரம்பலத்திலே அமைந்துள்ள கோபுரவாசலும் அதிலுள்ள கூடங்கள், சாலைகள் ஆகியயாவும் கதிரவனின் கிரணங்களினால் ஒளி பெற்று விளங்கும் உதயகிரி போலபிரகாசிக்கும் வண்ணமாக விக்கிரமசோழன் பொன் வேய்ந்தான். அவ்வாறான கோலத்தைப் பலிபீடமும் பெற்றது. திருத்தேர்க் கோயிலையும் அவன் பொன்வேய்ந்தான். தனது திரு நகூடித்திரமான பூரட்டாதி உத்திரட்டாதியிலே தில்லைப் பெருமான் மகிழும் வண்ணமாக தேர்த்திருவிழா நடைபெற ஏற்பாடு செய்தான். அத்தேரினை முத்து வடங்களால் அலங்காரம் செய்தான். தன் பெயரால் வழங்கும் வண்ணமாக அழகிய மண்டபங்களையும், திருவீதிகளையும் அமைப்பித்தான். அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய அளவிலாத அலங்காரச் சிற்பங்களையும் அமைப்பித்து அவனது பத்தாமாண்டிலே,சித்திரைமாதத்து வளர்பிறையின்

Page 319
பதின்மூன்றாம் நாளன்று, அத்த நட்சத்திரம் கூடிய மங்கள ஒரையிலே, இத்திருப்பணிகள் யாவும் நிறைவு பெற்றதன் அடையாளமாகப் பெருவிழா எடுத்தனர்.
தில்லையிலே முன்பு சயதரனின் சேனாதிபதியான நரலோக வீரன் செய்த திருப்பணிகள் சாசனச் செய்யுள்களிற் போற்றப்படுகின்றன. அவன் பொன்னம்பலம், பேரம்பலம் ஆகியவற்றைப் பொன் வேய்ந்தான். கிழக்கிலுள்ள கடலின் தீர்த்தத் துறைக்குப் போகும் வழி அவனால் அமைக்கப்பட்டது. அதன் விழா மண்டபமும் குளமும் அமைக்கப்பட்டன. இரண்டு கோபுரங்களுடன் அமைந்த நரலோக வீரன் திருமாளிகை அவனுடைய திருப்பணி என்று சொல்லப்படுகின்றது. பசுபதியும், தேவியும் வீற்றிருக்கும் நூற்றுக்கால் மண்டபமும் திருக்காமக் கோட்டமும் அதன் கோபுர வாசலும் திருச்சுற்று மாளிகையும் கற்றளிகளாக நரலோக வீரனால் அமைக்கப் பெற்றன.
“கோயில் முன் ஏழ்நிலை கொண்டதோர் கோபுர வாயில் வகுத்த பிரான் என்று இரண்டாம் குலோத்துங்கனை அவைக்களப் புலவராகிய ஒட்டக்கூத்தர் சிறப்பித்துப் பாடுவார். மேலும், அவர் அவனை இராசராசசோழன் உலாவில் மேல்வருமாறு புகழ்ந்து பாடுகிறார்.
சேய பெரிய திருக்குலத்துநாயகன் சிற்றம்பலமும் பல மண்டபமும் சுற்றிய மாளிகையும் பீடிகையும் மாடமும் கோபுரமும் கோயில் திருக்காமக் கோட்டமும் அக்கோயில் வாயில் திருச்சுற்று மாளிகையும் தூயசெம் பொன்னிற் குயிற்றி.
முன்பு அமைக்கப்பெற்ற கட்டடங்கள் பலவற்றைக் குலோத்துங்கன் செம்பொன் வேய்ந்தான் என்ற செய்தி இதனால் உணரப்படுகின்றது. சிதம்பரத்திலுள்ள கீழைக் கோபுரம், வடக்குக் கோபுரம் என்பவற்றின் தலை வாயில்களும், திருக்காமக் கோட்டம் என்ற சிவகாமி அம்மன் கோயிலும் அக்கோயிலின் திருச் சுற்று மாளிகையும் இக் குலோத்துங்கன் காலத்திலேயே கட்டப்பட்டன. இம் மன்னனுடைய அமைச்சராகிய சேக்கிழார் பெருமான் பாடிய திருத் தொண்டர்புராணம் எனப்படும் பெரியபுராணம் தில்லை ஆயிரங்கால் மண்டபத்தில் அரங்கேற்றப்பட்டது. பெரிய புராணம் “ஐயிரு நூறுகால் மணி மண்டபம்’ என்பதில் அரங்கேற்றப்பட்டதென்று 14 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவரான உமாபதி சிவாச்சாரியார் சேக்கிழார் புராணத்திலே குறிப்பிடுகின்றார். பிற்காலச் சோழர் கலைப்பாணியில் திருக்காமக் கோட்டம், நூற்றுக்கால் மண்டபம், ஆயிரங்கால் மண்டபம், திருச்சுற்று மாளிகை , எழுநிலைக்கோபுரம் என்பன பிரதான அம்சங்களாக இடம் பெற்றன. சிதம்பரக் கோயிலை அடிப்படையாகக் கொண்டு இத்தகைய கட்டுமான முறை பெரு வளர்ச்சியடைந்தது. திருவரங்கத்திலும் இவ்வாறான கோயிலமைப்பு விருத்தி பெற்றது.

293
சைவ மரபிலே பேரம்பலமாகிய சிதம்பரம், கோயில் என வழங்கும். அதே போல வைணவ மரபில் கோயில் என்பது சிறப்பாக திருவரங்கத்தைக் குறிக்கும். திருவரங்கமானது பெரிய கோயில் என்றும் போற்றப்படும். மதுரகவியாழ்வார் தவிர்ந்த ஏனைய ஆழ்வார்கள் அதனைப் புகழ்ந்து போற்றிப் பதிகங்கள் பாடி உள்ளனர். சிதம்பரத்தைப் போல திருவரங்கமும் மிகவும் புராதனமானது. குல சேகராழ்வார், திருமங்கையாழ்வார், ஆண்டாள் முதலியோர் பெரும்பாலும் அங்கே வாழ்ந்தனர். தொண்டரடிப் பொடியாழ்வார், திருப்பாணாழ்வார் போன்ற வர்களும் பலகாலம் திருவரங்கத்திலே சென்று தங்கி உள்ளனர். விசிஷ்டாத்வைத வேதாந்தத்தின் போதகரான இராமானுஜர் பூரீ ரங்கத்திலே ஆலய பரிபாலகராகவும் பூரீ வைணவர்களின் குருநாதராகவும் பல்லாண்டுகளாக விளங்கினார். தென்கலை வைணவப் பிரிவின் ஆச்சாரியரான அழகிய மணவாளர் பல வருடங்களாகத் திருவரங்கத்திலே வாழ்ந்தார். தெற்கு உத்திர வீதியில் உள்ள பல்லவராயன் மடத்தில் அவர் வாழ்ந்தார் என்பது ஐதீகம். அங்கு அழகிய மணவாளரின் படிமமொன்று அமைந்திருக்கின்றது. கவிச்சக்கரவர்த்தியான கம்பர் திருவரங்கத்திலே இராமாயணத்தைப் படித்து அரங்கேற்றினார் என்று சொல்வர். திருவரங்கத்தில் முதலாம் பராந்தகன் காலம் முதல் சோழமன்னரின் சாசனங்கள் காணப்படுகின்றன. கோயிலின் கட்டுமானங்கள் விருத்தி பெற்றமையை அவற்றின் மூலமாக அறிந்து கொள்ள முடிகிறது. மூலஸ்தானத்துக் கதவின் மேற்பகுதியிலே முதலாம் பராந்தகன் காலத்துச் சாசனங்கள் காணப்பட்டுள்ளன. அவன் காலம் முதலாகத் திருவரங்கத்து ஆலயம் கற்றளியாக நிர்மாணம் பெற்றுப்படிப்படியாக விஸ்தாரம் பெற்று வளர்ச்சி பெற்று வந்துள்ளது. முதலாம் பராந்தகன் இரண்டாம் இராஜேந்திரன் ஆகியோரின் காலங்களுக்கிடையில் மூலஸ்தானமும் முதல் இரு பிரகாரங்களும் அமைக்கப்பட்டன. மூன்றாம் பிரகாரச் சுவர்களிற் பெரும்தொகையான சாசனங்கள் காணப்படுகின்றன. அவை சோழர், பாண்டியர், கொய்சலர் ஆகியோரின் காலங்களுக்கு உரியவை. அவற்றிலே காலத்தால், முற்பட்ட சாசனம் முதலாம் குலோத்துங்கனின் ஐந்தாம் ஆண்டுக்குரியதாகும். நான்காம் பிரகாரத்து வடக்குச் சுவரிலே குலோத்துங்க சோழனின் பதினோராவது ஆண்டுக்குரிய கல்வெட்டொன்று காணப்படுகிறது. இவற்றின் அடிப்படையிலே திருவரங்கத்திலுள்ள மூன்றாவது பிரகாரம் முதலாம் குலோத்துங்கனின் ஆட்சிக் காலத்தின் முற்பகுதியில் அமைந்திருந்ததென்று கொள்ளமுடிகிறது. அதே போல நான்காம் பிரகாரமும் அக்காலமளவில் உருவாக்கப்பட்டதென்று கருதலாம். ஐந்தாம் பிரகாரமானது விக்கிரமசோழனின் திருப்பணியாகும் என்று கோயில் ஒழுகு குறிப்பிடுகின்றது. உலகளந்த பெருமாளான அகளங்கன் பிரம்மராயனாலே திருவரங்கத்துப் பெரிய திருமாளிகை அமைப்பிக்கப்பட்டதென்று இரண்டாம் குலோத்துங்க சோழனுடைய சாசனம் ஒன்று குறிப்பிடுகின்றது. அந்தப் பிரகாரத்திலுள்ள நான்கு கோபுரங்களும் விக்கிரமசோழன் காலத்தவை என்றும் கருதலாம்.
இந்துக்கலைக்களஞ்சியம்

Page 320
பதின்மூன்றாம் நூற்றாண்டிலே கர்நாடகத்துக் கொய் சலரின் ஆட்சி ஏற்பட்டிருந்தபோது அவர்களின் கலைப்பாணியிற் சில கட்டடங்கள் திருவரங்கத்திலே அமைக்கப்பட்டன. வீர ராமநாததேவனின் காலத்தில் (1255-1295) நான்காம் பிரகாரத்துக் கோபுரத்தில் மேற்குப் பகுதியிலே ஒரு சாலை ஒன்று நிறுவப் பெற்றது. அதிலே எடுத்த கை அழகிய நாயனாரின் படிமமொன்று ஸ்தாபிக்கப்பட்டது. அதற்கு சாலாபோகமாக அரசனின் பிரதானியாகிய சங்கதேவ சிங்கண்ண தொண்ட நாயக்கனால் மானியம் வழங்கப்பட்டது. நான்காம் பிரகாரத்து வடக்குக் கோபுரத்து மேற்குப் புறத்தில் உள்ள திருநடைமாளிகையில் ஆதுலர் சாலை ஒன்று நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப் பட்டன. நான்காம் பிரகாரத்தில் தன்வந்திரி கோயில் ஒன்று அமைக்கப்பட்டிருந்தது. விஜய நகர காலத்தில் ஆரோக்கிய சாலையும் தன் வந்தரீ கோயிலும் புனர்நிர்மாணம் செய்யப்பட்டன. ஐந்தாம் பிரகாரத்திலே கொய்சலர் கலைப்பாணியில் அமைந்த வேணுகோபால கிருஷ்ணரது வனப்பு மிகுந்த ஆலயம் ஒன்று அமைந்திருக்கின்றது. அதன் கட்டுமானங்களையும் சிற்ப வேலைப்பாடுகளையும் நோக்குமிடத்து அவ்வாலயம் கி.பி (12301275) ஆகிய காலத்துக்குரிய தென்று கொள்ளலாம். எனவே திருவரங்கத்திலே பதின் மூன்றாம் நூற்றாண்டின் பிற்பகுதியிலே ஐந்து பிராகாரங்கள் அமைக்கப்பட்டிருந்தன என்பது சாசனக் குறிப்புக்களால் உறுதியாகின்றது.
முதலாம் குலோத்துங்கனின் காலத்தில் பல கோவில்கள் புனர்நிர்மாணம் செய்யப்பட்டன. வேறு சில புதிதாக அமைக்கப்பட்டன. அவற்றிலே தூண்களின் அமைப்பிலும் அதிஷ்டானப் படைகளிலும் சில மாற்றங்கள் ஏற்பட்டிருப்பதையும் அவதானிக்க முடிகிறது.
ஐராவதேஸ்வரம்
இரண்டாம் ராஜராஜன் 1146-1176 ராஜராஜபுரத்தில் அமைப்பித்த ஐராவதேஸ்வரம் என வழங்குவது பிற்காலச் சோழரின் திருப்பணிகளிற் தலைசிறந்து விளங்கும் கற்றளியாகும். அது விமானம், அர்த்த மண்டபம், மகா மண்டபம், ராஜகம்பீரன் திருமண்டபம் என்னும் பகுதிகளைக் கொண்டது. அதிஷ்டானப் படைகளில் சைவ நாயன் மார்களின் கதைகள் சிற்ப வடிவங்களாக வடிவமைக்கப்பட்டுள்ளன. அவற்றின் கீழ் அவர்களின் பெயர்கள் எழுதப்பெற்றுள்ளன. சிற்பங்களிலுள்ள நாயன்மார் பெயர்களின் ஒழுங்கு முறை சுந்தரரின் திருத் தொண்டர் தொகையில் உள்ளவாறு போல அமைந்துள்ளது.
தாராசுரம் கோயிலில் தூண்களின் வடிவமைப்பும் சிற்ப வேலைப்பாடுகளும் பல சிறப்பம்சங்களைப் பெற்றுள்ளன. அதன் விமானத் துணைத்தளத்தின் மீது கபோத தள தாங்கு தளம் ஒன்று அமைந்துள்ளது. அதன் சுவர்கள் ஐந்து பத்திகளாகப் பிரிந்துள்ளன. கர்ணபத்திகளிலும் பத்ரபத்திகளிலும் சிற்பங்கள் பொருந்திய தேவ கோட்டங்கள் அமைந்திருக்கின்றன.
294

ஒடுக்கங்களிற் குடப்பஞ்சரங்கள் காணப்படுகின்றன. தாங்கு தள வேதியின் கண்டப்பகுயில் அழகுமிக்க சிறிய சிற்ப வடிவங்கள் செதுக்கப்பட்டுள்ளன. துணைத் தளத்தின் கண்டப் பகுதியிலும் வனப்பு மிக்க சிற்பங்களைக் காண முடிகின்றது. தாராசுரம் கோயிலைப் போல சோழர் கலைப்பாணியில் அமைந்த வேறு எந்தக் கோயிலிலும் மிகப் பெரும் அளவிலான சிற்பங்களைக் காண முடிவதில்லை. இங்குள்ள சிற்பங்கள் நானாவிதமானவை. மிக நுட்பமான வேலைப்பாடு
பொருந்தியவை. வனப்பில் உன்னதமானவை.
இக் கோயிலின் விமானம் ஐந்து தளங்களை உடையது. மேலே வட்டமான கிரீவமும், சிகரமும் உள்ளன. முதல் இரண்டு தளங்களும் அர்த்த மண்டபமும் முகப்பில் பஞ்சரங்களால் அணி செய்யப்பட்டுள்ளன. அக்கிரமண்டபத்தில் தூண்கள் வீற்றிருக்கும் சிங்கங்களின் தலைமீது அமைந்துள்ளன. அவை அகலமான பலகைகளையும் போதிகைகளையும் கொண்டவை. மூன்று பக்கங்களிலும் தூண்களின் மீது உத்திரங்களும் அவற்றின் மீது கைப்பிடிச் சுவர்களும் சுவர்கள் மீது இடபச் சிலைகளும் காணப்படுகின்றன. அக்ரமண்டபத்தின் வடக்கே உள்ள அம்மன்
கோயில் மூன்றாம் குலோத்துங்கன் காலத்த்து ஆகலாம்.
விமானம் தஞ்சை, கங்கை கொண்ட சோழபுரம் போன்றவற்றிலுள்ள விமானங்களைப் போன்றது. ஆயினும் அவற்றிலும் அளவிற் சிறியது. கோயில் வளாகம் உயர்ந்த மதில்கள் சூழ்ந்த பிராகாரத்தினுள் அமைந்துள்ளது. பிரகாரத்தோடு இணைந்த திருச்சுற்று மாளிகை அமைந்துள்ளது. அதன் சுவர்களில் 108 சிலைகள் செதுக்கப்பட்டுள்ளன. வெளிக் கோபுரம் தனிச் சிறப்புடையது. அதன் தலை வாயிலைச் சுற்றி புறச் சுவர்களில் கோஷ்டங்கள் உள்ளன. இக்கோபுரம் தில்லை மூன்றாம் திருச்சுற்று மாளிகையிலுள்ள மேலைக் கோபுரத்துச் சிலைகளில்
பெயர்கள் பொறிக்கப்பட்டிருக்கும் அம்சத்தில் ஒத்திருக்கிறது.
வடபுறத்தில் ஆதி சண்டேஸ்வரர், கங்காதேவி, தும்புருநாரதர், வைஷ்ாவணன், சந்திரன், மகாசாஸ்தா, நாகராஜா, வாயு என்ற 8 பெயர்களும் மேற்புறத்திலே தேவி ருத்திராணி, வைஷ்ணவி, பிராமி, வருணன், நந்திதேவர், பெரிய தேவர், சாந்தயாதீத சக்தி, சாந்திதேவி, வித்யாசக்தி, பிரதிஷ்டாசக்தி, நிவர்த்தி சக்தி என்ற பன்னிரண்டு பெயர்களும் தென்புறத்தில் தக்ஷ, யமுன்ாதேவி, இரதிகாமதேவன் என்ற பெயர்களும் கீழ் புறத்தில் அக்கினி தேவர், அகத்திய தேவர், பூரீ தேவி, துர்க்கா தேவி, தேவேந்திரன், பத்மநிதி, சூரியதேவர், சுப்பிரமணிய தேவர், க்ஷேத்ரபாலர், சரஸ்வதி, விஸ்வசர்மா, ஈசான தேவர் ஆகிய பன்னிரண்டு பெயர்களுமென 36 பெயர்கள் காணப்படுகின்றன.
திரிபுவனம்
மூன்றாம் குலோத்துங்கன் (1178 -1216) பாண்டியரை வென்று மதுரையில் வீராபிஷேகம் பெற்று, வெற்றிவிழாக்

Page 321
கொண்டாடிய சமயத்திலே திரிபுவனவீரதேவன் என்னும் சிறப்புப் பெயரைப் பெற்றான். பழையாறை, கும்பகோணம் ஆகியவற்றிற்கு இடையில் அவனால் அமைக்கப் பெற்ற பெருங்கோயில் திரிபுவனவீரஈஸ்வரம் என்னும் பெயரைப் பெற்றது. ஆனால் இப்பொழுது அது கம்பகாரேஸ்வரம் என்று சொல்லப்படுகின்றது. அக்கோயில் அமைந்துள்ள ஊர் திரிபுவனம் என்னும் பெயரால் வழங்கிவருகிறது.
அக்கோயில் இரண்டு கோபுரங்களையும் இரண்டு பிரகாரங்களையும் கொண்டுள்ளது. கர்ப்பக்கிருகம், அர்த்தமண்டபம், அந்தராளம், மகாமண்டபம், முகமண்டபம் ஆகியன பிரதான கோயிலின் பகுதிகளாக அமைந்துள்ளன. கர்ப்பக்கிருகம் உள்ளே 3.81 மீற்றர் சதுரமாகும், வெளியே அது 18.29 மீற்றர் நீளமும், அகலமும் கொண்ட சதுரமாகும். கர்ப்பக்கிருகத்தின் சுவர்கள் 35 அடி உயரமானவை. அதன் மேல் அமைந்துள்ள ஆறு தள விமானம் 91 அடி (2770மீற்றர்) உயரம் கொண்டது. நிலமட்டத்திலிருந்து தூபியின் நுணிவரை கோயிலின் உயரம் 126 அடி ஆகும் (38.40 மீற்றர்).
தஞ்சைப் பெருவுடையார் கோயிலைப் போன்று திரிபுவனக் கோயிலும் மிக உயரமான உபபீடத்தில் அமைந்துள்ளது. அதனாற் கட்டடம் மிகுந்த கவர்ச்சியான வடிவத்தையும் அலங்காரத்தோற்றத்தையும் பெற்றுள்ளது. உபானம், பத்மதளம், வியாளமாலம், கண்டம் முதலிய அம்சங்களும் அவற்றின் மேலே கொடுங்கையும் நாட்டியக் கோலமான சிற்பங்களும் அமைக்கப்பட்டுள்ளன. அதிஷ்டானத்தில் மூன்று தள உபானம், பத்மதளம், குமுதம், கண்டம், கபோதம், வியாளமாலம், வேதிகை என்னும் அம்சங்கள் காணப்படுகின்றன. குமுதப்படையிலே தாமரைப்பூவின் இதழ்கள் போன்ற வடிவங்கள் நிமிர்ந்த வடிவிலுங் கவிழ்ந்த கோலத்திலுங் கீழும் மேலுமாக அமைக்கப்பட்டுள்ளன. இராமாயணக் கதையினை விளக்கும் சிறிய சிற்பங்கள்
வரிசையாகத் தளத்தில் அமைக்கப்பட்டுள்ளன.
கர்ப்பக்கிருகத்தின் சுவர்களிலே முன்புறமாக நீட்டி அமைக்கப்பெற்ற கட்டிடத் தொகுதிகளிலே தேவ கோட்டங்கள் உள்ளன. அவற்றிலே தெற்கிலே தகூதிணாமூர்த்தியும், மேற்கில் லிங்கோத்பவரும், வடக்கிற் பிரமனும் அமைந்துள்ளனர். சுவர்ப்பாகம் ஒவ்வொன்றிலும் சதுரமான பீடமும், எண்கோண வடிவமான தண்டும் கண்டம், கும்பம், குமுதம் முதலிய அம்சங்கள் பொருந்திய தூண்களின் அமைப்புகளும் காணப்படும். தேவ கோட்டங்களின் பக்கங்களில் அரைத்தூண்கள் அமைந்துள்ளன. அர்த்த மண்டபத்தின் தெற்குப் பக்கத்திலே கணேசரின் படிமமும், வடக்கு புறத்திலுள்ள தேவ கோட்டத்திலே ஷட்புய துர்க்கையின் உருவமும் உள்ளன.
கர்ப்பக்கிருகம், திருக்காமக் கோட்டம், சண்டேசுவரர் சந்நிதி, சரபமூர்த்தி கோயில் ஆகியவை முதலாம் பிரகாரத்திலுள்ளன. வடக்குப்பக்கத்திற் சிறிய தேவ கோட்டங்கள் உள்ளன. வசந்த
2

மண்டபம், நந்திமண்டபம், பலிபீடம், துவஜஸ்தம்பம் ஆகியன இரண்டாம் பிரகாரத்தில் உள்ளன.
திருக்காமக் கோட்டம் அலங்கார வேலைப்பாடுகள் மிகுந்த பீடமொன்றில் அமைந்திருக்கின்றது. அதன் இறையகம் சதுரவடிவமானது. விமானத்தின் கிரீவமுஞ் சிகரமும் வட்டமானவை. முன்னால் அர்த்த மண்டபம், மகா மண்டபம் என்னும் அமைப்புக்கள் உள்ளன. அவை யாவும் ஒரு பொதுவான அதிஷ்டானத்தில் அமைக்கப் பெற்றுள்ளன. அதில் உபானம், பத்மம், ஜகதி, திரிபட்ட குமுதம் என்னும் படைகள் உள்ளன. இறையகச் சுவர்கள் மூன்றில் இச்சாசக்தி, கிரியாசக்தி, ஞானாசக்தி என்போரின் படிமங்கள் உள்ளன.
சரபமூர்த்திக்குத் தனிக்கோயில் அமைந்துள்ளமை திரிபுவனம் கோயிலின் தனிச் சிறப்பாகும். சரபமூர்த்தியின் வழிபாடு சோழர்காலத்தின் பிற்பகுதியிலே செல்வாக்குப் பெற்றது. அங்குள்ள சரபமூர்த்தியின் வெண்கலப்படிமம் காமிகாகமத்திலே சொல்லப்பட்டவாறு அமைக்கப்படவில்லை. (கி.ப)
சோழர்காலச் சிற்பங்கள்
காலத்தால் அழியாத கற்கோயில்களை எழுப்பி தமிழகக் கலை வரலாற்றில் புதியதோர் தடம் பதித்தவர்கள் பல்லவர்கள். அவர்களுக்குப் பின் ஆட்சிப் பீடம் அமர்ந்த சோழர்கள் தமது நானூறு ஆண்டு கால ஆட்சியில் உலகமே வியந்து போற்றும் எழில் மிகு கலைப்படைப்புகள் பலவற்றைப் படைத்து தமிழக வரலாற்றில் தமக்கென ஒரு தனியான இடத்தைப் பதித்துக் கொண்டனர்.
சோழர்காலச் சிற்பங்களை முதலாம் ராஜராஜனுக்கு முற்பட்டவை, அவருக்குப் பிற்பட்டவை என இரு பெரும் பகுப்புகளிற் காணலாம். பல்லவர்கள் காலத்தளிகளைப் போலவே சோழர் காலத் தளிகளின் கட்டமைப்பின் பல்வேறு இடங்களிலும் சிற்பங்கள் பொலிவுற்றுக் காணப்படுகின்றன. துணைத் தளம், தாங்கு தளம், சுவர் தூண், கூரை உறுப்புகள், ஆர உறுப்புகள், கிரீவச் சுவர் என அத்தனை பகுதிகளிலும் சோழ சிற்பாசிரியர்கள் தங்கள் கைவண்ணத்தைக் காட்டியுள்ளனர். இடத்துக்கேற்ப அவை சில சென்ரி மீற்றர் அளவிலிருந்து நான்கு மீற்றர் அளவு வரையிலான உயரம் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளன.
சோழர் காலச் சிற்பக் கலையைப் பொறுத்த மட்டில் இரண்டு பருவங்களிலுமே பல அற்புதமான படைப்புகளைக் காண முடிகிறதென்றாலும் முதற் பருவத்தின் மகுடங்களான பிரம்மபுரீசுவரர், நாகேசுவரர் தென்வாயில் பூரீ கோயில், கொடும் பாளூர்த் தளிகள் என்பன சோழர்காலச் சிற்பக்கலையின்
மகுடங்களாக விளங்குகின்றன. இக்காலகட்டச் சிற்பங்கள் சிற்ப
இந்துக் iasardifuri

Page 322
சாஸ்திர நூல்களில் குறிப்பிட்டுள்ள தலைக்கோலங்கள், ஆசனங்கள், கையமைதிகள், ஆடை அணிகலன்கள். நிலைகள் என்பவற்றைக் கொண்டு விளங்குகின்றன. பல்லவர் காலத்து நளினம் தொடர்ந்து காணப்பட்டாலும் ஆகம இறுக்கங்கள் சோழர்காலத்தில் மிகைப்படுவதை உணர முடிகிறது. இக்கால கட்ட வாயிற் காவலர்கள், அன்னையர் எழுவர், சேத்திரபாலர், சிற்பங்கள் ஆகியன பேரெழில் வாய்ந்தவை. பல்லவ மரபில் இருந்து மாறுபட்டு நான்கு கைகளுடன் காட்சிதரும் காவலர்களின் கோரப்பற்கள், விதம் விதமான குண்டலங்கள் மணிகள் கோர்த்த சதங்கைகள் வித்தியாசமான ஆடைகள், கூடுதலான அணி கலன்கள் என்பன குறிப்பிடத்தக்க அம்சங்களாக உள்ளன.
கை அமைதிகளும், அபயமும் கத்தரீமுக ஹஸ்தமும், கடகமும் கூடிய வலம் பிதமும் பெரும் பங்கு வகிக்கின்றன. சுகாசனம், யோகாசனம், லலிதாசனம் ஆகிய மூன்றும் பரவலாகக் காணப்படுகின்றன. பல்லவர் காலத்தில் மிக அரிதாகக் காணப்படும் விரிசடை இக்கால நடராஜப் படிமங்கள் பெரும்பாலானவற்றிலே காணப்படுகின்றது.
இரண்டாம் கால கட்டத்தில் திரு வாலீசுவரம் போன்ற மிகச் சில விமானங்கள் தவிர பிறவற்றிற் சிற்பங்கள் நளினக் குறைவாகவே அமைந்துள்ளன. ஆடற் காரணச் சிற்பங்களைத் தொடராக அமைக்கும் முயற்சி இப்பருவத்தில் மலர்ந்தது. தஞ்சாவூர் ராஜராஜீசுவரம், கும்பகோணம் சாரங்கபாணி கரணத் தொடர்கள் ஆகியவை இரண்டாம் சோழர் கலைப் பாணியின் குறிப்பிடத்தக்க அம்சங்களாகும். செம்பியன் மாதேவியாரால் கோட்டச் சிற்பமாக அறிமுகப்படுத்தப்பட்ட நடராஜர் முதலாம் குலோத்துங்கனுக்குப் பிறகு அருகி மறைகிறார். கோட்டச் சிற்பங்களாக அமைந்த காலாரி, பிக்ஷடனர், கங்காளர், கல்யாண சுந்தரேசர் போன்றவை இரண்டாம் பருவத்தில் வழக்கிழப்பதைக் காண முடிகிறது.
கை அமைதிகள், ஆடை அணிகலன்கள், நிலைகள், தலைக் கோலங்கள் ஆகியவற்றில் அதிக மாற்றமில்லை என்றாலும் முதற்பருவ நெகிழ்ச்சியும் நுணுக்கமும் தென்படவில்லை. இக்காலப் பெருஞ் சிற்பங்களுக்கு கங்கை கொண்ட
ទ្រឹមប្រឹងបៃសម្រាប់ சிறிய அளவிலான சிற்பங்களுக்கு
ராஜராஜேஸ்வரமும் சிறந்த எடுத்துக் காட்டாகும். பல்வேறு புராணக் கதைகள். எண்ணற்ற ஆடற் சிற்பங்களென விமானம், மண்டபம் , திருச்சுற்று மாளிகை, கோபுரம் ஆகிய அனைத்திலும் தங்கள் கைவண்ணத்தை சோழர் காலச் சிற்பிகள் காட்டி உள்ளனர். இதில் பிற்காலச் சோழர் சிற்பிகளின் சாதனையான ராஜராஜேசுவரம் தமிழ் நாட்டுச் சிற்பக்கலை வரலாற்றில் ஒரு மைல் கல் எனலாம்.
விநாயகர்
சங்க இலக்கியத்திலோ, சிலப்பதிகாரத்திலோ விநாயகர்
பற்றிய குறிப்பேதுமில்லை. மேலைச் சாளுக்கிய தலை நகரான
க்களஞ்சியம்
296

வாதாபியில் சாளுக்கிய மன்னனான இரண்டாம் புலிக்கேசிக்கும் பல்லவ மன்னனான முதலாம் நரசிம்மவர்மனுக்கும் நிகழ்ந்த பெரும்போரில் காஞ்சிப் பல்லவனுக்கே வெற்றி கிட்டியது. கி.பி 614இல் நடைபெற்ற போருக்கு தலைமை தாங்கியவர் பரஞ்சோதி என்ற சிறுத்தொண்ட நாயனார். அவ்வெற்றிக்கு அறிகுறியாகப் பரஞ்சோதிவிநாயகர் படிமங்களை வாதாபியில் இருந்து கொண்டு வந்து தமிழ் நாட்டில் விநாயகர் வழிபாட்டிற்கு அடிகோலினார் எனப்படுகிறது. திருஞானசம்பந்தரின் தேவாரப் பாடலும் வாதாபியில் இருந்து விநாயகர் தமிழ்நாட்டிற்கு வந்தவர் என்பதை உறுதிப்படுத்துவதாய் அமைகிறது.
பல்லவர்களைத் தொடர்ந்து ஆட்சிப்பீடம் ஏறிய சோழர்கள் காலத்திலும் விநாயகர் வழிபாடு சிறப்புற்றிருந்தது என்பதற்கு அக் காலச் சிற்பங்கள் சான்றாக உள்ளன. புள்ள மங்கை பிரம்மபுரீஸ்வரர் கோயிலில் உள்ள விநாயகர் சிற்பம் வினோதமான அம்சங்களுடன் காணப்படுகிறது. அதன் பீடம் பத்மாசனமாகும். தலையின் மேலே அரைவட்டக் குடையின் கோலம் தெரிகின்றது. உருவத்தின் மேற்பகுதியில் அஞ்சலிக் கோலத்தில் கந்தருவரின் வடிவங்கள் தெரிகின்றன. இரு பக்கங்களிலும் பூதகணங்கள் காணப்படுகின்றன.
இதே கோவிலின் அர்த்த மண்டபத் தென் கோட்டத்தில் விநாயகர் அலங்காரக் குடையின் கீழ் லலிதாசனத்தில் இருக்க, இருபுறச் சுவரிலும் கணங்கள்; சாமரத்துடன் ஒன்று, படையல்களுடன், சிரட்டைக் கின்னரியுடன் ஒன்று, மற்றொன்று பிள்ளையாரின் வாகனத்தைக் கயிறு கட்டி இழுத்து வருகிறது. நல்துணை ஈஸ்வரத்தில் உள்ள விநாயகரும் அழகானவர். இவரது குடைத் தலையின் இருபக்கங்களிலும் போற்றிய நிலையில் கனங்கள் செதுக்கப்பட்டுள்ளன.
முதலாம் இராசேந்திரச் சோழனால் அமைக்கப்பட்ட கங்கை கொண்ட சோழபுரத்தில் ஆடவல்லானின் தாண்டவத்தைக் கண்டு களிப்பதற்கு விநாயகரும் முருகனும் வந்திருக்கும் காட்சி சிற்பவடிவில் அமைந்திருக்கின்றது. அவர்கள் இருவரும் தத்தம் வாகனங்களில் அமர்ந்திருக்கின்றனர், அருகிலே பிருங்கியும், கணங்களும் தாண்டவக் கோலத்தை பார்த்து ரசித்துக் கொண்டு நிற்கும் காட்சி சிற்ப சாஸ்திரங்களில் கூறப்படும் பிரதிமாலசஷனங்களை பிரதிபலிப்பதாக அமைந்துள்ளது.
சிவனின் வடிவங்கள்
சோழர்காலத்தில் செதுக்கப்பட்ட சிற்பங்களில்
வார்க்கப்பட்ட செப்புப் படிமங்களில் அனேகமானவை சிவனது
வடிவங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆரம்பகால சோழர் சிற்பங்களில் பொன் செய் நல்துணை ஈஸ்வரம் கோயில் தாங்கு தளக் கண்ட பாதங்களில் இடம் பெற்றிருக்கும் ម៉ាលិត យិតាញ ម៉ាហ្គឹបតាមទ្រូ តារំា១៩ ஒவ்வொன்றும் அற்புதக் கோலங்களாகும். சண்டேசுவர

Page 323
அனுக்கிரக மூர்த்தி, உமாசகிதர், கஜசம்ஹாரர், காமதகனர், ரிஷபாந்திகர் போன்ற சிவபுராணச் சிற்பங்களும் சிவபெருமானின் ஆடற் கரணச் சிற்பங்களும் இடம்
இக் கோயிலில் இடம்பெற்றுள்ள கஜசம்கார மூர்த்தியின் சிற்பம் சம்ஹாரத்தின் இயல்பு நிலையைக் காட்டுவதாக அமைந்துள்ளது. சிவனை அழிக்க தாருகாவனத்து முனிவர்கள் அபிசார ஹோமம் செய்தனர். அந்த வேள்வித் தீயினின்றும் கொடிய யானையைத் தோற்றுவித்து சிவனை அழிக்க ஏவினர். தன்னைத் தாக்க வந்த யானையை இரண்டு கைகளாலும் கிழித்து அதன் தோலைப் போர்த்தி கோரத் தாண்டவமாடுகிறார். இந்தக் கோலத்தை சிற்பி அழகாகக் கல்லில் வடித்துள்ளார். சம்ஹாரம் நடக்கும் இடத்தில் வேண்டாமென வலக்கையை உயர்த்தி விலகித் திரும்பும் உமையின் வடிவமும், கையிலிருந்து முருகன் தோழியிடம் செல்லத் தாவுவதும், தாவி வரும் குழந்தையை தாங்கிக் கொள்ள தோழி தவிப்பதும் உமையின் அஞ்சிய தோற்றமும் சிவபெருமானின் அதிபங்கக் கோலமும் அற்புதமான படைப்பாகும்.
தக்கன் யாகத்துக்குப் பிறகு சிவபெருமான் ஆலமரத்தடியில் மோன நிலையில் தென்திசை நோக்கி அமர்ந்தார். அப்போது வேதாகமங்கள் முழுவதும் கற்றுத் தேர்ந்த சனகாதி முனிவர்கள் இறைவனைப் பற்றி மனத் தெளிவில்லாமல் சிவன் காலடியில் அமர்ந்து தங்கள் அறிவு மயக்கத்திற்கு உண்மை விளக்கம் வேண்டுகின்றனர். மோன நிலையில் இருந்த சிவபெருமான் தனது வலக்கையை உயர்த்தி அதில் உள்ள ஐந்து விரல்களில் நடுவிரல், மோதிர விரல், சுண்டுவிரல், ஆகியவற்றை நிமிர்த்தியும், ஆட்காட்டிவிரல், கட்டை விரல் ஆகியவற்றை இணைத்தும் சின்முத்திரையைக் காட்டுகிறார். இக்கோலமே தக்ஷனா மூர்த்திக் கோலமாகும்.
வடவாயில் பூரீ கோயிலில் வீராசனத்தில் சிறு கோரப் பற்களுடன் எழிலரசாய் அமர்ந்திருக்கும் தக்ஷனா மூர்த்தியும், எறும்பூர் கடம்பவனேசுவரர் தகூதிணாமூர்த்திப் படிமங்களும் இப் பருவகாலத்துக்குரியவை. விஜயாலய சோழீசுவரத்து விமான வீணாதா தக்ஷணாமூர்த்தியும். தக்கோலத்துத் திருவூறல் மகாதேவர் கோயில் தகூதிணாமூர்த்தி சிற்பங்களும் கலையம்சம் பொருந்தியவையாகும்.
எறும்பூர் கடம்பவனேஸ்வரர் சிற்பங்கள் முதலாம் பராந்தகன் காலத்து சிற்பக் கலைக்கு சிறந்த எடுத்துக் காட்டாக உள்ளன. அங்கு சிவனது உருவம் மகாயோகியின் வடிவில் அமைக்கப்பட்டுள்ளது. மேல் இரண்டு கைகளில் மான், மழுவுடன் கீழிரண்டு கைகளும், யோக முத்திரையில் தொடைமீது அமைந்திருக்கின்றன.
கங்கை கொண்ட சோழீஸ்வரத்தில் அமைந்திருக்கின்ற
சண்டேச அனுக்கிரஹ மூர்த்தியின் சிற்பம் கலாவிமர்சகர்களின்

297
பாராட்டைப் பெற்ற ஒரு வடிவமாகும். சண்டேஸ்வரருக்குப் பூமாலை சூட்டிக் கோயிலின் காவலர் என்ற பட்டத்தை சிவபெருமான் வழங்கும் காட்சி அற்புதக் கோலத்தில் அமைக்கப் பெற்றுள்ளது.
கங்கை கொண்ட சோழபுரத்து அர்த்தமண்டபச் சுவரிலும் சிவனின் பல கோலங்களைச் சித்திரிக்கும் சிற்பங்கள் இடம் பெற்றுள்ளன. அவற்றிலொன்று ஆயிரம் மலர் கொண்டு அர்ச்சித்த மாயவனுக்கு சிவன் அருள் வழங்கியமை பற்றிய கோலமாகும். இராவண அனுக்கிரஹ மூர்த்தியின் கோலமும் அங்கே காணப்படுகின்றது. சிவனுக்கும், உமாதேவியாருக்கும் இடர்புரிந்த இராவணனுக்குத் தண்டனை வழங்கிப் பின் அருள் கொடுத்தமை அதில் உருவகிக்கப்பட்டுள்ளது. அங்கு காணப்படும் வேறொரு சிற்பம் மார்க்கண்டேயருக்கு அனுக்கிரகம் வழங்கியமை பற்றிய காட்சியாகும்.
முதலாம் ராஜராஜன்,ராஜேந்திரன் ஆகியோரின் காலங்களுக்குரிய சிற்பங்களில் அதிக சிறப்புடையவற்றுட் சில திருச் செங்காட்டங்குடி கணபதி ஈஸ்வரர் கோயில் அட்ட மூர்த்தி மண்டபத்திலுள்ளன. அங்கு காணப்படும் பைரவர், பிக்ஷாடனர் கங்காள மூர்த்தி, திரிபுராந்தக மூர்த்தி ஆகியோரின் சிற்பங்கள் மிக அழகு பொருந்திய வடிவில் உருவமைக்கப் பட்டுள்ளன.
இரண்டாம் இராஜராஜனது சிறப்பு வாய்ந்த சிற்பங்களுள் வேறொன்று தஞ்சாவூர் அருங் காட்சியகத்தில் உள்ள கங்காள மூர்த்தியின் படிமமாகும். தோளின் மேலே கங்காளம் அமர்ந்திருக்கின்றது. அருகிலே கணங்கள் வடிவமைக்கப் பட்டிருக்கின்றது. அதே போன்று பெண்ணுருவங்கள் காணப்படுவதும், அதன் விநோதமான அம்சங்களாகும். இதுவரை கங்காள மூர்த்தி வடிவங்களில் இதுவே மிகவும் பெரியது. பலவிதமான இசைக் கருவிகளை ஒலிக்குங் கோலத்தில் கணங்களின் உருவங்கள் அமைந்திருக்கின்றன. அங்குள்ள பெண்களின் உருவங்களும் கலை நயம் பொருந்தியவை. சிவனைப் பார்த்த நிலையில் ஒரு பெண்ணின் ஆடை தளர்கிறது. நானம் ஏற்பட்டதால் அவள் ஒரு கையால் தளரும் ஆடைகளைப் பற்றிக் கொள்கிறாள். மற்றொரு பெண் சிவனைப் பார்த்ததும் அவரின் அழகில் மயங்கிவிடுகிறாள். உள்ளத்து உணர்வுகளை தத்ரூபமாக கல்லில் வடித்துக் காட்டிய சோழர் காலச் சிற்பிகளின் கற்பனைத் திறன், கலைத் திறனைக் கண்டு வியக்காதோர் அரிது.
சிவனது வடிவங்களில் புள்ள மங்கை பிரம்மபுரீஸ்வரர் கோயில் இலிங்கோற்பவர் படிமம் சிறப்பு மிக்கது. மேற்புறத்தில் நான்கு கரங்களுடன் பறந்து செல்லும் பிரம்மாவின் வடிவமும் கீழ்ப் பகுதியிலே வராக மூர்த்தியின் வடிவமும் அமைந்துள்ளன. கங்கை கொண்ட சோழீஸ்வரத்து வடக்குச் சுவரிற் காணப்படும்
இந்துக்கலைக்களஞ்சியம்

Page 324
காமாந்தகர் சிற்பத் தொகுதி சிறப்பம்சம் வாய்ந்ததாகும். இத் தொகுதியில் பார்வதி தவம் செய்வது போலவும். சிவன் யோக நிலையில் அமர்ந்திருப்பதும் இந்திரன் ஏவலின் படி காமனும், ரதியும் யோகத்தினைக் கலைக்கப் பறந்து செல்வது போலவும், செதுக்கப்பட்டுள்ளதைக் காணலாம். இச் சிற்பத் தொகுதி கலை
ரசிகர்களாற் போற்றப்பட்டதொன்றாகும்.
ஆணுக்குப் பெண் சமம் என்பதைக் காட்டவும், சிவம் இன்றேல் சக்தியில்லை. சக்தியின்றேற் சிவனில்லை. இவை இரண்டும் இணைந்த கோலத்திலே தான் உலகம் இயங்குகின்றது என்பதை விளக்குவதே இறைவனின் அர்த்தநாரீஸ்வர வடிவமாகும். கொடும்பாளுரில் கிடைத்துள்ள அர்த்தநாரீஸ்வரர் சிற்பம் தற்போது சிதைந்த நிலையிற் காணப்பட்டாலும் கலைத்திறமையும் ஆண் பாதியினின்றும் பெண் பாதியினை வேறுபடுத்தும் சிறப்பினை உடையதாகவும் காணப்படுகின்றது. பொதுவாக அர்த்தநாரீஸ்வரர் சிற்பங்களிற் ஆண்பகுதி இரு கரங்களுடனும் அவற்றுள் ஒன்று எருதி மீது வைக்கப்பட்டு மற்றொன்று சூலம் அல்லது வேறு படைக்கலங்களைக் கொண்டும் பெண்பாதி ஒரு கரத்தினைப் பெற்றும் விளங்கும். ஆனால் கொடும்பாளூர் சிற்பத்தில் மொத்தம் இரு கரங்களே காணப்படுகின்றன.
தேவர்களுக்கு இடையறாத தொல்லை கொடுத்து வந்த தாரகாட்சன் கமலாட்சன், விதுன்மாலி ஆகியோரைத் தன் புன்சிரிப்பால் எரித்த நிலையே திரிபுராந்தகராகும். தஞ்சை அருங்காட்சியகத்தில் உள்ள திரிபுராந்தகர் சிற்பம் ( எண் 28) கி.பி. 12ஆம் நூற்றாண்டில் செதுக்கப்பட்டுள்ளது. ஒரு கையில் வில்லும் ஒரு கையில் அம்புமாகச் சர்வ அலங்கார மூர்த்தியாகச் சிவன் காட்சி தருகிறார். இச் சிற்பத்தை வலப்புறம் நின்று நோக்கும் போது இகழ்ச்சியுடன் கூடிய கடைவாய்ச் சிரிப்பையும், இடம் நோக்கில், அருள் பாலிக்கும் புன்னகையையும் காணக் கூடியதாக உள்ளது. அசுரர்களைத் தன் புன் சிரிப்பால் சாம்பலாக்கிய அற்புதக் கோலத்தை சோழர் காலச் சிற்பி கல்லில் அழகாக வடித்துள்ளார்.
தஞ்சைக் கலைக் கூடத்தில் வைக்கப்பட்டுள்ள சிலை எண் 770, சிவனது கங்காதர வடிவமாகும். இந்தப் பின்னமுற்றசிலை தஞ்சாவூர் உக்கிர காளியம்மன் கோயிலிலிருந்து கிடைத்தது. தனது மூதாதையரை உய்விக்கும் பொருட்டு பகீரதன் கடும் தவமியற்றி கங்கையை பூமிக்கு கொண்டு வந்தான். ஆயினும் பிரவாகமெடுத்து வரும் கங்கையின் வேகத்தைக் கண்டு அச்சமுற்று சிவபெருமானை வேண்ட அவர் கங்கையை தனது ஜடாமுடியில் தாங்கி அதன் வேகத்தைக் கட்டுப்படுத்தி பின் பூமியில் விட்டார். கங்கை என்னும் பெண்ணைத் தலையில் வைத்துள்ளதால் உமையவளுக்குக் கோபம் வருகிறது. இறைவன் அவளைச் சமாதானப்படுத்துகிறார். உமையவளை இடக்கரத்தால் அணைத்துத் தன் வலக்கரத்தால் பிணங்கி நிற்கும் உமையவளின்
இந்துக்கலைக்களஞ்சியம்
298

தாடையை உயர்த்த முற்படுகிறார். உமையவள் பிணங்குவதால் பெருமானின் கைப்பிடி தளர்கிறது. ஆண், பெண் இருவருக்கும் இடையில் ஏற்படும் ஊடல் காட்சியை சிவபெருமான்பார்வதியூடாக அழகாகக் காட்டி உள்ளார் சோழர்காலச் சிற்பி.
தாருகாவனத்து ரிஷிகளின் செருக்கடக்க இறைவன் ஆண் அழகனாக பிட்சாடன வடிவிலும் விஷ்ணு மோகினி வடிவிலும் சென்று அவர்களின் செருக்கினை அடக்கினார்கள். இரண்டாம் இராஜராஜசோழனால் (கி.பி 1145 - 1165) தாராசுரத்தில் கட்டப்பட்டுள்ள சிற்பக் கருவூலமான ஐராவதேஸ்வரர் கோயிலில் கவனிப்பாரற்றுக் கிடந்த பிட்சாடனரதும் - ரிஷி பத்தினிகளதும் (சிலை எண் 58 -69) சிலைகள் தஞ்சை கலைக் கூடத்திற்கு கொண்டு வரப்பட்டு தகுந்த மேடை கட்டி அழகுற அமைக்கப்பட்டுள்ளது.
ராஜ ராஜசோழன் காலத்தில் செதுக்கப்பட்ட பிட்சாடனர் உருவம் எழில்மிகு தோற்றத்துடன் காட்சி தருகிறது. இதைச் செதுக்கிய சிற்பி அவரை நிர்வாணக் கோலத்தில் வடிக்காமல் தமிழ் மரபுக்கேற்ப வடிவமைத்துள்ளார். தலையில் கிரீடத்துடனும், இடுப்பில் பட்டு, பீதாம்பரத்துடனும், சர்வ ஆபரணங்களுடனும், பூத கணங்களுடனும், கம்பீரமாக வருகிறார். கையில் கபாலம் இல்லை. நான்கு கரங்களில் ஒரு கரத்தில் மயில் தோகை உள்ளது. அற்புதமான பாதுகைகளை அணிந்துள்ளார். ஒரு கையில் உடுக்கையைப் பிடித்து மற்றொரு கையில் சிறு குச்சியினால் ஒலி எழுப்பிக் கொண்டு வருகிறார். பூதகணங்கள் வாத்தியங்களை முழங்கிக் கொண்டு வருகிறார்கள். உடுக்கை ஒலி, வாத்தியங்களின் ஒசை கேட்டதும் முனிவர்களின் ரிஷிபத் திணிகள் தமது இல்லங்களில் இருந்து வந்து பார்க்கிறார்கள். இறைவனின் அழகில் மயங்கிய அப் பெண்கள் ஒவ்வொருவருக்கும் ஏற்படும் உள்ளக் கிளர்ச்சியை, முகபாவத்தை மிக அற்புதமாகச் சிற்பி காட்டியுள்ளார்.
சிவனின் நடன வடிவங்கள்
சிவனது நடன வடிவங்களில் பொன் செய் நல்துணை ஈஸ்வரன் கோயிலின் உள்ள தாங்குதள கண்ட பாத சிற்பங்களில் சில சிவனது ஆடற் கரணச் சிற்பங்களாக உள்ளன. இக் கரணச் சிற்பங்களிற் குறிப்பிடத்தக்கது சிவனின் தண்டல் பக்ஷம். இக் கரணத் தோற்றம் தமிழ் நாட்டில் இரண்டே திருக்கோயில்களில் தான் காணக்கிடைக்கின்றது. வலக்காலை ஊர்த்துவ ஜானுவாக்கி இட முன்கையை வேடிக்கையாய் அதன் மீது படர விட்டு, கைகளில் மழு, முத்தலை ஈட்டி, தீச்சுடர், துடி முதலியன கொண்டு சடை மகுடராய் இறைவன் ஆடும் இந்தக் கரணத்திற்கு சிரட்டைக்கின்னரியுடன் ஒரு கணமும் குட முழவுடன் மற்றொரு கணமும் இசை சேர்க்கின்றன.
திருப்புறம்பியம் சாட்சீசுவரநாதர் கோயில் கண்டபாதத்தில் வலக்காலை உயர்த்தி புஜங்கத்திராசிதம் காட்டும் சிவபெருமானின் அரிய சிற்பம் இடம் பெற்றுள்ளது. திருச்சென்னம் பூண்டியிலும் குறிப்பிடத்தக்க சிவகரணத்

Page 325
தோற்றங்கள் இடம் பெற்றுள்ளன. செம்பியன் மாதேவியாரால் திருப்பணி செய்யப்பட்ட திருமயானம், கோணேரிராஜபுரம் சிவன் கோவில்களிலும் சிவ நடன சிற்பங்கள் இடம் பெற்றுள்ளன.
சோழப்பெரு மன்னன் முதலாம் ராஜராஜன் நாட்டிய சாஸ்திர மரபை ஆதரித்தவன். பரதர் கூறும் 108 கரணங்களையும் (தாண்டவங்களையும்) தான் தலைநகரில் அமைத்த தஞ்சைப் பெருவுடையார் கோயிலிலே சிற்பங்களாகத் தொகுக்கும் முயற்சியில் ஈடுபட்டான். கருவறையில் உள்ள மேல் மாடியிலே இவற்றைத் தொகுப்பதற்கு அரசர் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார். 108 கரணங்களிலே முதலாவதான தல புஸ்பபுடம் தொடக்கம் 81 ஆவது கரணமாகிய அபிதம் வரையுள்ளவை அமைக்கப்பட்டுள்ளன. எஞ்சியவை அமைப்பதற்கான இடம் வகுக்கப்பட்டுள்ளது. ஆனால் ஏதோ ஒரு கரணத்தால் எஞ்சியவை அமைக்கப்பட்டில. ஏற்கனவே புதிய கரணங்கள் ஏற்பட்டு விட்டபடியால் இப்பேரரசன் இவற்றைத் தொகுக்க வேண்டிய தேவையினை உணர்ந்து செயலாற்றி யிருப்பான் என்று கருத இடமுண்டு. மரபு வழி நிலவி வரும் கரணங்களுக்கும் சமகாலத்தனவற்றிற்குமிடையில் தெளிவின்மை யினை நீக்குமுகமாக இவற்றிற்கு சிற்பங்களிலே அழியாத நிலையளிக்க அரசன் தீர்மானித்தான் என கலாநிதி பத்மா கருதுகிறார். இக்கரணங்கள் பரத நாட்டிய சாஸ்திரத்தையும், அபிநவகுப்தர் எழுதியுள்ள அபிநவபாரதீ என்னும் உரையினையும் பின்பற்றி அமைக்கப்பட்டவை. நோக்கம் எதுவாயினும் முயற்சி புதுமையானது. இவனுக்கு முன் சில கரணங்கள் இந்தியாவின் சில இடங்களில் அமைக்கப் பட்டிருந்தாலும் அனைத்தையும் ஒரிடத்தில் அமைக்கும் முயற்சிக்கு இவனே வழிகாட்டினான்.
இவனுக்கு பின் கும்பகோணம் சாரங்கபாணி கோயிலிலே 108 கரணங்களும் சிற்பங்களாலே தொகுக்கப் பட்டன. ஒவ்வொரு கரணத்திற்குக் கீழும் அதன் பெயர் எழுதப்பட்டுள்ளது. எனவே இவற்றை அடையாளம் காண்பது எளிதெனினும் இவற்றிலே கரணங்களின் ஒழுங்கு முறை பின்பற்றப்படவில்லை என்று கூறப்படுகின்றது.
அடுத்து சைவ உலகின் கோயிலாக விளங்கும் சிதம்பரம் கோயிலின் கோபுரங்களில் உள்ள நடனச் சிற்பங்கள் குறிப்பிடத்தக்கவை. நடனக் களஞ்சியமாக விளங்கும் இக் கோயிலின் நான்கு கோபுரங்களிலும் கரணச் சிற்பங்கள் உள்ளன. இவற்றிலே கிழக்கு, மேற்கிலே உள்ளவை குறிப்பிடத்தக்கவை. இக்கரணச் சிற்பங்கள் ஒவ்வொன்றின் கீழும் அவற்றிற்கான நாட்டிய சாஸ்திரச் செய்யுட்கள் சமகாலச் சோழர் கிரந்த லிபியில் எழுதப்பட்டுள்ளது. எனவே இவற்றை அடையாளம் காணுதல் மட்டுமன்றி இவற்றின் நாட்டிய சாஸ்திர மூலத்தையும் எளிதில் அறியலாம்.
உமாதேவியார், துர்க்கை வடிவங்கள்
புள்ளமங்கை பிரம்புரீஸ்வரர் கோயில் அர்த்த மண்டபச் சுவரில் அமைந்திருக்கின்ற துர்க்கையின் வடிவம் கவர்ச்சிமிக்க

299
ஒன்றாகும். எருமையின் தலையில் கால்களை ஊன்றிய கோலத்தில் அம்மனின் வடிவம் எட்டுக்கரங்களுடன் தெரிகின்றது. கையிலே சங்கு, சக்கரம், வில், வாள், கேடயம் என்பன காணப்படுகின்றன. கைகளில் ஒன்று அபய முத்திரையில் அமைந்துள்ளது. மற்றொன்று இடுப்பினைப் பற்றிய கோலத்திற் காணப்படுகின்றது. இரு பக்கங்களிலும் மானும் சிங்கமும் தெரிகின்றன. அருகிலே கழுத்தை அரிந்து காட்டும் வீரர்களின் உருவங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதனை ஒத்த சிற்பங்கள் திருச் செங்காட்டான்குடி கணபதி ஈஸ்வரம் ஆலயத்திலும் மாயாவரத்து புஞ்சை நல்துணை ஈஸ்வரர் ஆலயத்திலும் காணப்படுகின்றன.
முற்காலச் சோழர் சிற்பங்களுள் வீரட்டானேஸ்வரர் கோயிலில் தன்தலையினைப் பலி கொடுக்கும் அடியவரை இடது புறமும், வழிபடும் மற்றொருவரை வலதுபுறமும் கொண்டதாக அமைக்கப்பட்ட எண்கரக் கொற்றவை சிற்பம் குறிப்பிடத்தக்கது.
மேலைக் கடம்பூர் கோயிலில் ஆணவத்தின் வடிவமான மகிஷாசுரனை அழித்த வண்ணமாய் பத்மபீடத்தில் அம்மன் ஸ்தானக நிலையிலே காணப்படுவது சிறப்பு மிக்க காட்சியாகும். மகிஷத்தினுடைய தலை கீழே வெட்டப்பட்ட நிலையில் காணப்படுகிறது.
தஞ்சைக் கலைக்கூடத்தில் வைக்கப்பட்டிருக்கும் சிவன் பார்வதி ஒரே கல்லில் அமைந்த கோலம் (சிலை எண் 31) சோழர் காலச் சிற்பக் கலையின் வளர்ச்சித் தன்மையினை எமக்கு புலப்படுத்துகின்றது. இச் சிலையைச் செதுக்கிய சிற்பி முதலில் சிவனுருவை மட்டும் கல்லில் செதுக்கியிருக்கிறார். கல்லின் ஒரப்பகுதியில் எஞ்சியிருந்த இடத்தில் அழகும், கூச்சமும், நானமும் ஒருங்கே உருவெடுத்தாற் போல் உமையவளின் திருமேனியை இறைவனை ஒட்டி இணைந்த கோலத்தில் செதுக்கியுள்ளார்.
முதலாம் இராஜேந்திர சோழனால் அமைக்கப் பெற்ற கங்கை கொண்ட சோழீஸ்வரக் கருவறைச் சுவரிற் காணப்படும் நடராஜர் வடிவம் தனிப் பண்புகளைக் கொண்டது. ஆடவல்லானின் தாண்டவத்தை உமாதேவியார் காளையின் மீது சாய்ந்த நிலையில் நின்று ரசிக்கிறார். காரைக்கால் அம்மையார் நடனத்திற்கு இசைவாகத் தாளம் கொட்டுகிறார். அருகிலே காளியும் நடனமாடுகிறாள். சோழர்காலச் சிற்பக் கலையின் பெருஞ்சிறப்பிற்கு இது ஒர் சிறந்த எடுத்துக் காட்டாக உள்ளது.
சுப்பிரமணியர்
சிவன், பார்வதி ஆகியோரின் மைந்தனான ஸ்கந்தன், சுப்பிரமணியன் என்றும் அழைக்கப்படுகிறான். இக் கடவுளைக் குறிக்கும் திருவுருவங்கள் திருவிடைக் கழியிலுள்ள முற்காலச் சோழர் பாணியில் அமைந்த படிமும், திருவரங்குளத்திலுள்ள பிற்காலத்தைச் சார்ந்த படிமமும் சிறப்பு மிக்கவையாகும்.

Page 326
திருவிடைக் கழியிலுள்ள படிமம் ஒரு தலையுடனும், நான்கு கைகளுடனும் அவற்றில் உரிய படைக்கலன்களைக் கொண்டு கலைத்திறமை மிக்கதாய் விளங்குகின்றது. திருவரங்குளப் படிமத்தில் முருகன் தன் தேவியருடனும் தலைக்குப் பின்னால் வட்ட வடிவமான பிரபையுடனும் அவரது வாகனமாகிய மயிலுடனும் திகழ்கின்றார்.
மகாவிஷ்ணு
நீல மேனி நெடியோனின் உருவத்தை கல்லில் வடித்து நிறுத்தி உள்ளார்கள் சோழர்காலச் சிற்பிகள். திருக்காறைவாயில் என்ற ஊரில் கிடைக்கப் பெற்று தற்போது தஞ்சை கலைக் கூடத்தில் உள்ள விஷ்ணுவின் படிமம் (சிலை எண். 7) காண்பவர் கண்ணையும் கருத்தையும் ஒருங்கே கவரவல்லது. இந்தப் படிமத்தில் விஷ்ணு தனது வலது கரத்தில் ஏந்தி இருப்பது பிரயோகச் சக்கரம். இடது கையில் சங்கு உள்ளது. நீண்டு நிமிர்ந்த கிரீடம் முடி அற்புதமான பெருமையை வெளியிடுவது போல் விளங்குகின்றது. அவர் அணிந்துள்ள கோல மாமணி ஆரமும், முத்தாரமும் இச் சிலைக்கு மேலும் மெருகூட்டுவதாக
உள்ளன.
புள்ள மங்கை பிரம்மபுரீசுவரர் கோயிலில் உள்ள திரிவிக்கிரமர் சிற்பம் அளப்பரிய எழிலுடையது. இச்சிற்பத்தில் வானுற உயர்ந்த திருமாலின் இடக் காலைத் தாமரையின் மீதமர்ந்த நான்முகன் பிடித்திருப்பது போலக் காட்சிபுனையப்பட்டுள்ளது. அற்புதமான விஸ்மய முத்திரையும், போர்க்களம் புகுவார் போல் வலக்கை வில் பிடிக்க, இடக்கை முதுகின் அம்புக் கூட்டிலிருந்து அம்பெடுக்க இறைவனின் திருக்கோலம் உணர்வுகளின் கலவையாக விளங்குகின்றது. இதே பகுதியில் கருடனை அரவணைத்த விஷ்ணு காட்சி தருகிறார்.
விழுப்புரம் எண்ணாயிரத்தில் அமைந்திருக்கும் அழகிய நரசிம்மப் பெருமாள் கோயில் முற்காலங்களில் ராஜ ராஜ விண்ணகரம் என்ற பெயரால் வழங்கியது. இங்குள்ள வைணவச் சிற்பங்கள் எல்லாம் சோழர்காலத்தில் அமைந்தவை. அங்குள்ள விஷ்ணுவின் வடிவத்திலே இடம் பெறும் சக்கரம் பல்லவர் காலத்துப் பிரயோகச் சக்கரமாக அமையாது உத்தியோகச் சக்கரமாக விளங்குகின்றது.
திருநெல்வேலியிலுள்ள பள்ளி கொண்டார் சந்நிதி அனந்த சயன விஷ்ணு, பூீ தேவி, பூதேவி ஆகியோரின் கற்சிற்பங்கள், திருநெல்வேலி நெல்லையப்பர் சந்நிதியில் இடம்பெறும் அனந்தசயன விஷ்ணுவின் சிற்பம் ஆகியன சோழர்காலத்தில் செதுக்கப்பட்ட படிமங்களுள் குறிப்பிடத் தக்கவை.
மன்னார் கோயிலைச் சார்ந்த கோபால சுவாமி கோயில் ஆதியில் இராஜேந்திரசோழ விண்ணகரம் என்னும் பெயரால் வழங்கியது. அங்கு காணப்படும் மகாவிஷ்ணுவின் வடிவத்திலே மேலிரு கரங்களிலும் சங்கு, சக்கரம் என்பன காணப்படுகின்றன. ஏனைய கரங்களில் ஒன்று அபய முத்திரையில் அமைந்துள்ளது. மற்றைய கை கதையில் அமைந்துள்ளது.
க்களஞ்சியம்

இதிகாச சிற்பங்கள்
இதிகாச புராணச் சிற்றுருவச் சிற்பங்கள் புள்ளமங்கை பிரம்மபுரீஸ்சுவரர், குடந்தை நாகேசுவரர், எறும்பியூர் எறும்பீசுவரர், கண்டியூர் வீரட்டானேசுவரம், திரும்புறம்பியம் சாட்சீசுவரநாதர், பொன் செய்நல் துணை ஈஸ்வரம் முதலிய விமானங்களின் கண்டபாதங்களில் இடம் பெற்றுள்ளன. அவற்றுள் முதன்மையானது புள்ள மங்கை பிரம்மபுரீசுவரர் கோயில் விமான, அர்த்தமண்டப, வேதக் கண்ட பாதங்களிலே இடம் பெற்றுள்ள இராமாயணக் காட்சிகள் தொடர்பான சிற்பங்கள்.
இலட்சுமணா நீ முன்னாற் செல், சீதை உன்னை அடுத்தாற் போல் செல்ல வேண்டியது, நான் உங்கள் இருவருக்கும் பின்னால் வருவேன்' என்று இராமர் பேசுவதாகத் தம்முடைய சக்கரவர்த்தித் திருமகனில் ராஜகோபாலாச்சாரியார் வால்மீகியில் இருந்து மேற்கோள் காட்டிக் குறிப்பிடுவார். அதை அப்படியே பிரதிபலிக்கிறது புள்ளமங்கைச் சிற்பங்கள். இராமர், சீதை, இலட்சுமணன் காட்டப்பட்டுள்ள பயணக்காட்சிகளில் இந்த ஒழுங்கே பின்பற்றப்பட்டுள்ளது. தாடகை வதம், அகலிகை சாபம் நீக்குதல், குகன் ஒடத்தில் கங்கையைக் கடத்தல், காளிந்தி நதியில் தெப்பப் பயணம், தண்டகாரண்யத்தில் விராதன் சந்திப்பு, அவர் கைகளை ஒடித்து இராம இலட்சுமணர் தப்புதல், சூர்ப்பனகை மோகம், மூக்கரிவு, தம்பி கரனிடம் முறையீடு , மாரீச மான், இராவணன் சீதையைத் தேரிலெடுத்தல், சடாயு தாக்கல், செய்தி சொல்லி இறத்தல், கவந்தன் அழிப்பு, வாலி மரணம் என இராமாயணத்தின் எண்ணற்ற காட்சிகள் இருபது சென்ரி மீற்றருக்கு உட்பட்ட அளவுற்ற சின்னஞ்சிறு சதுரங்களில் சிறப்பாகச் செதுக்கப்பட்டுள்ளன.
இராவணன் சீதையைத் தேரில் அழைத்துச் செல்லும் காட்சி அக்காலத் தேர்களின் வடிவமைப்பைக் காட்டுவதோடு அலங்கரிப்பையும் உணர்த்துகின்றது. இதில் இராவணன் தேரோட்ட அவரை நோக்கி அமர விரும்பாதவர் போல சீதை திரும்பி அமர்ந்திருக்கும் நிலையும், வலக்கையை தேர்ச் சட்டத்தின் மீது ஊன்றிக் குனிந்த தலையை இடக்கையால் தாங்கி இருக்கும் அமைப்பும், வெறுப்போடு கூடிய அவர் சோகத்தை நன்கு புலப்படுத்துமாறு அமைந்துள்ளன.
வாலியின் முடிவு ஒப்புயர்வற்ற அவலச் சுவையின் வெளிப்பாடாக உள்ளது. கன்னத்தில் தலையை வைத்துத் தலை குனிந்து அமர்ந்திருக்கும் அங்கதனின் மடியில் அவரது வலக்கையை சாய்வணையாகக் கொண்டு முகத்தைச் சாய்த்தபடி மரணப்படுக்கையில் இருக்கும் வாலி, தனது வலது காலை கால் மாட்டில் சோகமாய் அமர்ந்திருக்கும் தாரையின் மடியில் கிடத்தியுள்ளார். 'போய் விட்டதே எல்லாம் என்பது போல் இரு கைகளையும் அகலவிரித்துப் புலம்பும் தாரையின் தோழி ஒருபுறமும், இரு கைகளையும் தலையில் வைத்தபடி செய்வதறியாது திகைக்கும் மற்றொரு தோழி இடப்புறமும் அவலத்தின் உச்சியிலிருக்க வாலியின் படுக்கைக்குக் கீழே பிறவானரங்கள் சோகமே உருவான நிலையில் சிற்பமாக வடிக்கப்பட்டுள்ளன.

Page 327
புராணச் சிற்பங்கள்
கும்பகோணம் நாகேஸ்வர சுவாமி கோயிலில் கிருஷ்ணர் கோவர்த்தன கிரியைப் பெயர்த்துக் குடையாகப் பிடித்து ஆயர்களையும் ஆநிரைகளையும் காப்பாற்றுங் காட்சி சிற்பமாக வடிக்கப்பட்டுள்ளது. கோவர்த்தன மலையைக் குடையாகப் பிடித்து நிற்கும் வேளையில் பலராமர் தோளிலே கலப்பையைச் சுமந்த கோலத்துடன் அருகிலே காணப்படுகிறார். கிருஷ்ணரின் LLL இரண்டு காளைகளின் வடிவங்களும் அமைக்கப்பட்டுள்ளன. திருவேந்திரத்திலும், தஞ்சைப் பெருங் கோயில் உட்கோபுரத்திலும் கிருஷ்ணன் கோபியர்களுடன் விளையாடுங் காட்சி சிற்பமாக அமைந்திருக்கிறது. கோபியர் இருவர் ஆடைகள் அற்ற கோலத்தில் காணப்படுகின்றனர். அவ்வேளை கிருஷ்ணன் மரத்தின் மேல் அமர்ந்திருக்கிறான். புஞ்செய் நல்துணை ஈஸ்வரம் கோயிலிலும் கும்பகோணம் நாகேஸ்வரர் கோயிலிலும் கிருஷ்ணன் குவலயாபீடம் என்ற கொல்லையானையை அடக்கும் காட்சி சிற்பமாக அமைக்கப்பட்டுள்ளது. வலது கரத்திலே ஏந்தியுள்ள சக்கரத்தினாலே கிருஷ்ணன் யானையைத் தாக்குகின்றான்.
தேவ கோட்டச் சிற்பங்கள்
புதுக் கோட்டையிலுள்ள திருக்கட்டளை கொடும்பாளூர் ஆகிய கோயில்களின் தேவகோட்டங்களில் இடம்பெற்றுள்ள இரு வீணாதரதசஷினா மூர்த்தி சிற்பங்கள் குறிப்பிடத்தக்கவை. இவற்றில் வீணையின் அமைப்பு அவை வைக்கப்பட்டிருக்கும் முறை என்பன குறிப்பிடத்தக்கதாகும்.
திருவாலீஸ்வரம் கோயில் முற்பட்ட சோழர் சிற்பங்களைக் கொண்ட அரிய கலைக் கருவூலமாகும். விமானத்தில் காணப்படும் பஞ்சரதத்திலுள்ள தேவகோட்டங்களிலும் அவற்றிற்கிடைப்பட்ட பகுதிகளிலும் சிவனது பல்வேறு திருவுருவங்கள் அமைக்கப் பட்டுள்ளன. நடராஜர், ரிஷபாரூடர், கங்காதரர், வீரபத்திரரும் தேவியும், பிரமனையும், விஷ்ணுவையும் இரு மருங்கு கொண்ட லிங்கோற்பவர், காலஹாரமூர்த்தி, யோகதசஷிணாமூர்த்தி, சுகாசனமூர்த்தி, சண்டேசானுக்கிரக மூர்த்தி, சோமாஸ்கந்தர், மூன்று கைகளையுடைய அர்த்தநாரீஸ்வரர் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இக் கோயிலின் தனிப்பட்ட தேவ கோட்டம் ஒன்றில் விஷ்ணுவும் அவரது இரு தேவியரும் இடம் பெற்றுள்ளனர்.
திருமீயச்சூர் முயற்சிநாதர் கோயில் விமானத் தேவ கோட்டத்தில் முற்றும் மாறுபட்ட கங்காதரக் கோலம் காணப்படுகிறது. இதில் உமை இடப்புறமாகத் திரும்பியுள்ளார். இறைவனின் வலமுன் கை அவரது முகத்தைத் திருப்ப முனைவது போற் காட்டப்பட்டுள்ளது.
அதிஷ்டானச் சிற்பங்கள்
தாராசுரத்து ராஜராஜ ஈஸ்வரத்தின் கருவறை
அர்த்தமண்டபம் ஆகியவற்றின் அதிஷ்டானப் பகுதியிலே சைவ
நாயன்மார்களின் புராண வரலாறுகளை விளக்குஞ் சிற்பங்கள்

30
செதுக்கப்பட்டுள்ளன. பெரிய புராணத்தின் செல்வாக்கிற்கு இச் சிற்பங்கள் தக்க சான்றாக உள்ளன. தெற்குச் சுவரின் அதிஷ்டானப் பகுதியிலே திருஞானசம்பந்தர் கையிற் கிண்ணம் ஏந்திய கோலத்திலே காணப்படுகிறார். அருகிலே அவரின் தந்தையாரின் உருவம் கையிலே கோல் ஏந்திய வடிவத்திலே அமைந்திருக்கின்றது. அந்தக் காட்சி சம்பந்தப் பெருமான் சீர்காழியிலே ஞானப் பால் உண்ட அற்புதத்தினைக் காட்டி நிற்கின்றது. அவ்வாறே ஏனைய நாயன்மார்களின் வாழ்க்கை நிகழ்ச்சிகளும் அங்கே சிற்பக் கோலத்தில் வடிக்கப்பட்டுள்ளது. மூன்றாம் குலோத்துங்கன் காலத்தில் திரிபுவனவீர ஈஸ்வரத்தில் அமைக்கப்பட்ட அதிஷ்டானச் சிற்பங்களும் குறிப்பிடத் தக்கவை இராமாயணக் காட்சிகள் சிற்பக் கோலத்தில் அமைந்துள்ளன. இராமர், இராவணன், வாலி, சுக்கிரீவன், முதலியோர் புரிந்த போர்களின் காட்சிகள் அங்கு செதுக்கப் பெற்றுள்ளன. இராமரின் கல்யாண வைபவமும் கலைவனப்புடன் காணப்படுகின்றது.
புஞ்செய் நல்துணை ஈஸ்வரர் கோயில் கருவறையின் அதிஷ்டானத்திலே கிருஷ்ண பெருமான் பூதகியை அழிக்கும் காட்சி புடைப்புச் சிற்பமாக அமைக்கப்பட்டுள்ளது. அவளது கைகள் வெட்டி வீசப்பட்ட நிலை தெரிகின்றது.
விமானத் தளச் சிற்பங்கள்
கோட்டச் சிற்பங்கள் பல விமானங்களிற் காணப்பட்டாலும் சுவர்ச் சிற்பங்கள் ராஜாராஜேசுவரம், கங்கை கொண்ட சோழீசுவரம் போன்ற விமானங்களிலேயே இடம் பெற்றுள்ளன. கங்கை கொண்ட சோழீசுவரத்து சரஸ்வதி, சண்டேசுவர அனுக்கிரக மூர்த்தி, காமதகனமூர்த்தி முதலிய சிற்பங்கள் குறிப்பிடத்தக்கவை. இராஜராஜேசுவரத்துச் சிவபுராணச் சிற்பங்கள் வனப்புமிக்கவை. தக்கயாகம், கங்காதரர், கல்யாண சுந்தரேசர், திரிபுராந்தகர் சிற்பங்கள் சிறப்புக்குரியவை.
இக்கால கட்ட விமானங்களில் குறிப்பிடத்தக்க ஆரச்சிற்பம் இடம் பெற்றிருக்கும் கோயில்களாக பிரம்மதேசம், கைலாசநாதர், திருவாலிசுவரர் கோயில்கள் ஆகியவற்றைக் கூறலாம். திருவாலீசுவரத்திலே சில புதுமையான சிற்பங்களைக் காணமுடிகிறது. தக்கனுக்குத் தலை தரும் காட்சி. உமையின் ஒற்றைக் கால்தவம் என்பன அவற்றுட் குறிப்பிடத்தக்கன. திருவெண் காடு சுவேதாரண்யேசுவரர், அமிர்த கடேசுவரர் கோயில் விமானங்களின் ஆடற் சிற்பங்களும், புராணச் சிற்பங்களும் இடம் பெற்றுள்ளன.
இக்கால விமானங்கள் அனைத்திலும் பூதவரி காணப்படுகிறது. இறைவனின் கணங்கள் பல்வேறு செயற்பாடுகளில் இயங்குமாறு அமைக்கப்பட்டுள்ள இவ் விமானத் தொடர் செதுக்கப்பட்ட காலத்து விடி விளக்காய் அமைகிறது. இவற்றுள் வித்தியாசமான சிற்பங்களோடு விளங்குபவை வட வாயில் தென் வாயில் பூரீ கோயில்களின் பூதவரிகளும்
- - ge

Page 328
கழுக்குன்றம் பக்தவத்சலேசுவரர், சந்திர சேகரர் விமானப் பூதவரிகளும் ஆகும். கீழையூர் தென்வாயில் பூரீ கோயிலில் அனுபவித்துப் பாடுவது போல் இரண்டு கனங்கள் காட்டப்பட்டுள்ளன. இவ்வரியிலுள்ள பூதகணங்கள் குட முழவு, ஊது கொம்புகள் , பல்வேறு அளவிலான தாளங்கள், குழல்கள், மத்தளங்கள், வீணைகள், ஒருமுகமுடிவுகள், சிரட்டைக் கின்னரி
என எண்ணற்ற இசைக் கருவிகளைக் கொண்டுள்ளன.
முற்பட்ட கால சோழர் விமானங்கள் சிலவற்றின் கூடுகளில் பல்வேறு வகையான சிற்பங்கள் இடம்பெற்றுள்ளன. திருப்பழனம் ஆபத்சகாயேசுவரர் விமானக் கபோதக் கூடொன்றில் தொடக்ககால புஜங்கத்ராசித சிவகரணக் கோலம் செதுக்கப்பட்டுள்ளது. கீழ்ப்பழுவூர் ஆலந்துறையார் விமானக் கபோதக் கூட்டில் அற்புதமான திரிபுராந்தகர் சிற்பமும் குடக் கூத்தும் இடம் பெற்றுள்ளன. திருவிசலூருக்கருகில் உள்ள கற்கடேசுவரர் கபோதக் கூட்டில் பல கரங்களோடு கூடிய ஊர்த்துவ தாண்டவர் காட்சி தருகிறார். திருமியச்சூர் விமானத் தளத்தில் கண்ணப்பர் வரலாற்றின் முக்கிய நிகழ்ச்சி இடம் பெற்றுள்ளது. இதில் கண்ணப்பர் கண்ணிருக்கும் இடத்தில் கைவைத்து மற்றொரு கையால் கண்ணகழ்வு செய்கிறார். சிவலிங்கத்திலிருந்து வெளிப்படும் கை கண்ணகழும் அவர் கையைத் தடுக்கிறது.
திருமியச்சூர் முயற்சி நாதர் விமானத்தில் கங்காதரர் , கல்யாண சுந்தரேசுவரர், காலாரிமூர்த்தி, மகிடாசுரமர்த்தனி ஆகியோர் கீழ் வளைவுகளில் இடம் பெற மேல் வளைவுகளில் ஆனந்தத் தாண்டவரும் அம்மையப்பரும் காட்டப்பட்டுள்ளனர். கங்காதரர் சிற்பத்தில் சிவனும் உமையும் நடுநாயகமாக அமைய இருபுறத்தும் சாமரப் பெண்கள்; கீழே போற்றுவனவாய் இரு கணங்கள் இடம் பெற்றுள்ளன. இக்கால கங்காதர
தோற்றங்களில் இது சற்று மாறுபட்டதாகும்.
எறும்பீசுவரர் விமானத்தோரணங்களில் சாமரங்களும், குத்துவிளக்குகளும், குடையும் பொருந்த கைகளில் மலரேந்திய லட்சுமியின் அர்த்த பத்மாசனக் கோலம் சிற்பமாக
வடிக்கப்பட்டுள்ளது.
குரங்கநாதர் விமான மகர தோரணத்தில் அற்புதமான பூவராகர் இடம் பெற்றுள்ளார். தமிழ் நாட்டில் காணப்பெறும் சிறிய அளவிலான பூவராக வடிவங்களுள் இதுவே இணையற்ற
கலைப்படைப்பாகும்.
முதலாம் ராஜராஜனின் ராஜராஜேசுவரத்திலும் அதைத் தொடர்ந்து அமைக்கப்பட்ட பெருவிமானங்களிலும் உயரமான துணைத் தளங்கள் கட்டப்பட்டு பல சிற்பங்கள் அமைக்கப்பட்டன.
இவற்றுள் கண்ணப்பர் இறைவனுக்கு உடும்பை படையலளிப்
இந்துக்கலைக்களஞ்சியம்

பதும் அமர்ந்த நிலையில் கண்ணகழ்வதும் லிங்கக் கை தடுப்பதும் அரிய காட்சிகளாகும்.
தூண்களில் அமைந்த சிற்பங்கள்
இக்காலச் சோழர் கோயில் சுவர்த் தூண்களின் மாலைத் தொங்கல், ஸ்தானப் பகுதிகளில் சிற்றுருவச் சிற்பங்களை மிகுதியாகக் காண முடிகிறது. அவற்றுள் குறிப்பிடத்தக்கன நல்துணை ஈஸ்வரம் குரங்கநாதர், பிரம்மபுரீசுவரர் கோவிற் தூண்சிற்பங்களாகும். குரங்கநாதர் மாலைத் தொங்கல் சிற்பங்களில் ஆடற்காட்சிகளும், சீமந்தம் மகப்பேறு தொடர்பான காட்சிகளும் உள்ளன. தமிழ் நாட்டின் வேறெந்தத் திருக்கோயிலிலும் காணமுடியாத சிறப்புடைய சீமந்த, மகப்பேற்றுக் காட்சி குரங்கநாதரின் தனிச் சொத்தாகும்.
இசையாசிரியருடன் கூடிய ஆடல் அணங்குகளின் கரணக் கோலங்களை பிரம்மபுரீசுவரர் தூண் சிற்பங்களில் காணக்கூடியதாக உள்ளது. அர்த்தஸ்வஸ்திகம், வக்வுஸ்வஸ்திகம் முதலிய ஸ்வஸ்திக கரணங்கள் இங்கு பலவாய்ச் செதுக்கப்பட்டுள்ளன. சோழர் காலத்தில் கரணங்கள் பெற்றிருந்த செல்வாக்கை இச்சிற்பங்கள் நிறுவ வல்லன தாளம், உடுக்கை, ஒருமுகமுழவுகள், குழல் முதலியன இசைக் கருவிகளாகக் காட்டப்பட்டுள்ளன. இசைக் கலைஞர்கள் இங்கு பெண்களாகவே உள்ளனர்.
பிரம்மபுரீசுவரர் கோயில் அர்த்த மண்டபத் தூண்களில் மாலாஸ்தானத்தில் ஊர்த்வஜானு, சூசிவித்தா, அர்த்தஸ்வஸ்திகக் கரணங்களில் பெண்களின் சிற்பங்கள் எழில்படச் செதுக்கப்பட்டுள்ளன. இத் தோற்றங்களில் ஒன்று இதே கோயிலின் தாங்கு சிற்பமாகவும் வடிக்கப்பட்டுள்ளது.
நல்துனை ஈஸ்வரத்தின் அர்த்தமண்டப வாயிலருகில் உள்ள அரைத் தூண்களின் மாலைத் தொங்கல் ஸ்தானகப்பகுதிகளில் மூன்று ஆடற்காட்சிகள் அற்புதமாக வடிவமைக்கப்பட்டுள்ளன. ஸ்தானகப் பகுதியில் சுடர் முடிக்காளியின் அர்த்தஸ்வஸ்திகம் முழு ஆடலாக மலர்ந்துள்ளது. கீழே பெண் கலைஞர்கள் குழல் வாசிக்க இரண்டு காரிகைகளின் அர்த்தஸ்வஸ்திகச் சிற்பம் செதுக்கப்பட்டுள்ளது. இதன் அழகை ஆடல் அசைவுகளின் நயத்தை, மெய்ப்பாட்டு அற்புதத்தை விபரிக்க முடியாது.
பஞ்சநதீசுவரர், ராஜராஜேசுவரர் மண்டபத்தூண்களின் மாலைத் தொங்கல் சிற்பங்கள் குறிப்பிடத்தக்கன. ஊர்த்வஜானு, விருச்சிகம், அர்த்தஸ்வஸ்திகம் முதலிய கரணக் கோலங்களும், ஊர்த்துவ ஆனந்தத் தாண்டவ வடிவங்களும் கலை நயத்தோடு சித்திரிக்கப்பட்டுள்ளன.
மூன்றாம் குலோத்துங்கனின் திரிபுவன வீர ஈஸ்வரத்து தூண்களின் வடிவங்கள் குறிப்பிடத்தக்கவை. தூண்களின் அடிப்பாகத்தில் அமர்ந்த நிலையிலும், முன்னங்கால்களை உயர்த்திய நிலையிலும் எழில் மிகு சிங்க உருவங்கள் அமைக்கப்பட்டுள்ளன. நி நி.)

Page 329
செளந்தர்யலஹரீ
இறைவனைப் பற்றிய புகழ்மாலை வடமொழியிலே ஸ்தோத்ரம் (தோத்திரம்) எனப்படும். வட மொழியிலுள்ள பெருந்தொகையான தோத்திரங்களிலே மிகப் பிரசித்தி பெற்ற ஒன்று செளந்தர்யலஹரியாகும் இந்நூலை ஆதிசங்கரர் இயற்றினார் என இந்து சமய மரபிலே கூறப்படுகின்றது. ஆதிசங்கரர் அத்துவைத தத்துவத்தை நிலை நாட்டியது மட்டுமன்றி, ஷண்மதங்களையும் மீண்டும் நிலைநாட்டியவர் ஆவர். அறுவகைச் சமயப் பிரிவுகளுக்குரிய சிவபிரான், சக்தி, பிள்ளையார், முருகன், திருமால், சூரியன் ஆகியோரைப் பற்றிப் பல நேர்த்தியான தோத்திரங்களும் இயற்றியுள்ளார். அவற்றுள்ளே சிவனைப் பற்றிய சிவானந்தலஹரியும், சக்தியைப் பற்றிய செந்தர்யலஹரியும் குறிப்பிடப்பாலன. இரண்டும் நூறு தன் உணர்வுப் பாடல்களைக் (lyrics) கொண்டவை. சில பதிப்புகளிலே நூறுக்கு மேற்பட்ட சில செய்யுட்களும் உள்ளன. நூலாசிரியர் எவராயினும் இந்நூல்கள் பல சிறப்புக்களைக் கொண்டுள்ளன. நூறு செய்யுட்களைக் கொண்ட பிரபந்தவகை சதகம்' என்றழைக்கப்படும். உதாரணமாகப் பத்திருஹரி எழுதியுள்ள நீதிசதகம், சிருங்கார சதகம், வைராக்கிய சதகம் ஆகியவனவற்றையும், மயூரரின் சூரியசதகம் போன்றவற்றையும் குறிப்பிடலாம். தமிழிலும் குமரேச சதகம் தண்டலையார் சதகம், ஈழமண்டல சதகம் முதலிய சதக நூல்கள் உள்ளன. ஆனால் இங்கு குறிப்பிட்ட இரு நூல்களும் லஹரீ' என முடிக்கின்றன. செளந்தர்யலஹரீ எனின் அழகு அலை எனப் பொருள்படும். உலகனைத்திற்கும் அன்னையாக இலங்கும் அம்பாளைப் பேரழகியாக ஆசிரியர் வருணித்துள்ளார். வழக்கமாக இறைவனையும் இறைவியையும் மிகச் சிறந்த, உவமிக்க முடியாத, குண நலன்களும், அழகும், சிறப்பும் வாய்ந்தவராகவும் வருணித்தல் மரபு. இதற்கேற்பவே பேரழகுத் தெய்வங்களாகவும் அவர்கள் வருணிக்கப்படுகின்றனர். எடுத்துக் காட்டுகளாக சுந்தரேஸ்வரர் (அழகிய இறைவன்), முருகன் (அழகன்) அங்கயற்கண்ணி, லலிதா திரிபுரசுந்தரி முதலிய பெயர்களைக் குறிப்பிடலாம். தமிழிலுள்ள அபிராமி அந்தாதியும் அம்பாளின் பேரழைகைக் குறிப்பிடுகின்றது. அபிராமி என்றால் பேரழகி என்று பொருள்படும். அந்நூலிலே நூலாசிரியரான அபிராமிப்பட்டர் தேவியின் எழில் உதயம் பற்றிக் குறிப்பிடுகிறார். செளந்தர்யலஹரியும் தேவியின் அழகு, அலை அலையாக விளங்குவதை - நேர்த்தியாகத் திகழ்வதை எடுத்தியம்புகிறது. அந்நூல் மிகப் பிரபல்யமான நூல்களில் ஒன்றாகுமென்பதை அதற்கு எழுதப்பட்டுள்ள முப்பத்தாறு உரைகளாலும் உணரலாம். அவற்றுள் லக்ஷமீதரருடைய உரை மிகச் சிறந்ததெனக் கருதப்படுகின்றது.
இந்நூல் இரு பகுதிகளைக் கொண்டுள்ளது.1-41 வரையுள்ள செய்யுட்கள் முதற் பகுதியாவன. ஏனையவை (42 - 100) இரண்டாம் பகுதியாவன. முதற் பகுதியினையே சங்கரர்

&F GT
303
இயற்றினார் எனவும் சிலர் கருதுவர். எவ்வாறாயினும் நூலில் இரு பிரிவுகள் இருப்பது தெளிவு. இந்நூல் அம்பாளை முழுமுதற் கடவுளாகக் கூறும். அதாவது தேவி பரத்துவம் கூறும் முதற்பகுதியிலே தேவியே பரம் எனவும், சக்தியின்றி சிவமியங்காது எனவும், சக்தியே மும்மூர்த்திகளிலும் பெரியவர் எனவும் இந்நூல் தொடங்குகின்றது. தொடர்ந்து தேவியின் திருப்பாத தூளியின் சிறப்பும், பூரீ சக்கரத்திலே தேவி வீற்றிருப்பதும், தேவியுபாசனைக்குரிய வழிகளும் அவரின் சிறப்புகளும் எடுத்துரைக்கப்படுகின்றன. இரண்டாவது பகுதியிலே (42 -100) தேவியின் உவமையற்ற பேரழகு கேசாதிபாதமாகப் பக்திச் சுவையும், இலக்கியச் சுவையும் ஒருங்கே நனி சொட்டச் சொட்ட வருணிக்கப்படுகின்றது. வழக்கமாக, இறைவன் அல்லது பெரியோர் பற்றிய வருணனை அவர்களின் பெருஞ்சிறப்பு நோக்கிப் பாதாதிகேசமாகவே அமையும். ஆனால் இங்கு நூலாசிரியர் அம்பாளைக் கிரீடாதிபாதமாக வருணித்துள்ளமை கவனித்தற்பாலது. இறைவி, உலகமாதா ஆகையால் பிள்ளையாகிய ஆன்மாக்களின் நன்மையில் என்றுமீடுபாடுள்ளவள். பிள்ளை எப்பொழுதும் தாயின் முகத்தையே முதலிலே பார்க்கும். எனவே வருணனை தலையிலிருந்து தொடங்குகின்றது. பிள்ளையிடத்து அன்னையின் அன்புபோலத் தேவி ஆன்மாக்களிடத்துக் கொண்டுள்ள அன்பினை ஆசிரியர் ஒரிடத்தில் மிக அழகாகவும் பக்திச் சுவை ததும்பவும் எடுத்துரைக்கிறார். அதாவது “அம்பாள் உலகம் அழியாதிருப்பதற்காகவே இமை மூடாதிருக்கிறாள் (55) என ஆசிரியர் சிறப்பாகக் குறிப்பிடுகிறார். பக்திச் சுவை நூலின் இறுதிப் பகுதியிலே உச்சநிலையடைகிறது.
நூல் முழுவதும் அம்பாளின் பேரழகும், பேரருட் சிறப்பும், பெருங்கருணையும் நன்கு விரவித் திகழ்கின்றன. தேவியின் பேரழகு உவமையற்றது. நான்முகனாற் கூட வருணிக்க முடியாதது. அப் பேரழகி பெருங்கருணை மழையினாற் ஏழையடியார்களை நீராட்டி வாழ வைக்கிறார். தேவியின் திருவுறுப்புக்களின் வருணனைகள் அனைத்தும் சிறப்பு வாய்ந்தவை. அவற்றுள்ளும், திருக்கண்கள், திருவதனம் குறிப்பாகத் திருப்பாதங்கள் பற்றியவை நன்கு குறிப்பிடற்பாலன. அம்பாள் அன்பர்களுக்கு வரங்களை திருப்பாதத்தினாலேயே வழங்குபவள். அர்த்தநாரீஸ்வரராகிய சிவபிரானின் வாமபாகமே அம்பாள். அருள்பாலிக்கும் அவரின் தூக்கிய திருவடி அம்பாளினுடையதே. சிவபிரானின் பெருங் கருணையே தேவி.
மேலும், நூலிலே செளந்தர்யம், லஹரி ஆகிய சொற்கள் பல தடவைகள் வருகின்றன. உவமையற்ற செளந்தர்யம் நான்முகனும் வருணிக்க முடியாத செளந்தர்யம், வதன லஹரி, சிதானந்தலஹரி, பரமாஹ்லாத லஹரீ முதலியன குறிப்பிடற் பாலன.
இந்துக் க்களஞ்சியம்

Page 330
அம்பாள் நவரஸ் வடிவினள்; கலாமயமானவள், மூலாதாரத்திலே அம்பாளும் , சிவனும் லாஸ்ய தாண்டவ நடனம் செய்து கொண்டிருக்கின்றனர். தேவி சங்கீதப்பிரியை, சங்கதி, கமகம், கதி, கீதம் ஆகியவற்றிலே மிகத்திறமை வாய்ந்தவள். அவருடைய திருக்கழுத்திலுள்ள மூன்று ரேகைகளும் சங்கீத ஞானத்தைக் காட்டுவன. அவருடைய இனிய குரல் வீணையின் நாதத்திலும் இனிமையானது.
மேலும், இந்நூலின் 75ஆவது செய்யுளிலே திருஞானசம்பந்தர் தேவியின் திருமுலைப்பால் உண்டு தலை சிறந்த திருவருட் கவிஞராக ,தேவார ஆசிரியராகத் திகழ்ந்தமை பற்றிய குறிப்பு வருகின்றது. திருஞானசம்பந்தர் இங்கு “திராவிட சிசு” (திராவிடக் குழந்தை) என அழைக்கப்படுகின்றார். அம்பாளுடைய திருமுலைப்பாலாகச் சரஸ்வதியே கவிதா சக்தியாகப் பிரவாகித்துள்ளார் எனச் சங்கரர் வியக்கிறார். நூலாசிரியர் சங்கரர் என்றால் என்ன வேறு எவர் என்றால் என்ன, அவர் தமிழ் நாட்டுச் சைவ மரபில் நன்கு தோய்ந்தவர் என்பதும் தெளிவு.
இந்நூலின் இலக்கியச் சிறப்பும் குறிப்பிடற்பாலது. வட மொழியின் சொல்வளம் இதிலே நன்கு காணப்படுகின்றது. சொல்லழகும், பொருளழகும், ஆழமுமுள்ள செய்யுட்களே இதில் உள்ளன. உயர்ந்த சமய, தத்துவக் கருத்துக்கள் கவிதை நயத்துடன் எடுத்துரைக்கப்படுகின்றன. பக்தி அனுபவம் சிறப்பாக நவரஸங்களுடன் புலப்படுகின்றது. உவமை, உருவகம் முதலிய அணிகள் பல காணப்படுகின்றன. பெரும்பாலும் சாதாரண மனித வாழ்விலே காணக்கூடிய - இயற்கையாக உள்ளனவே உவமைகளாக வந்துள்ளன. எடுத்துக் காட்டாக, அம்பாளின் திருநெற்றி பாதிச் சந்திரனுக்கு உவமிக்கப் படுகின்றது. அவரின் நான்கு திருக்கரங்களும் மெல்லிய பூங்கொடிகளுக்கு உவமிக்கப்படுகின்றன. அம்பாளின் திருவருள் நிலவு போன்று காட்டிலும் நாட்டிலும் அதாவது யாவரிடத்தும் சமமாகவே சென்று நன்மையளிக்கிறது. கடைசிச் செய்யுளிலே வரும் உவமைநயம் சமய ரீதியிலும் , தத்துவ ரீதியிலும், கவிதை ரீதியிலும் குறிப்பிடற்பாலது. சூரியனுக்கு அவன் கிரணத்தாலான அக்கினியினாலே கற்பூர தீபாராதனை செய்தல் போலவும், சந்திரனுக்குச் சந்திரகாந்தக் கல்லிலிருந்து கசியும் நீர்த்துளியினால் அர்க்கியம் செய்தாற் போலும், சமுத்திரத்திற்கு அதன் நீர் கொண்டு தர்ப்பணம் செய்தாற் போலுமே அம்பாளுக்கு அவள் அளித்த வாக்குத்திறன் மூலம் இத்துதியினைத் தாம் அவளுக்கு அளித்துள்ளார் என ஆசிரியர் குறிப்பிடுகிறார்; எனவே அவள் அருளாலே அவள் தாள் வணங்கியதாகக் கூறுகிறார். பக்திப் பிரியையும், பக்தியால் அடையப்படுபவளும் (பக்திகம்யா), பக்தியால் வசப்படுபவளும் அம்பிகையே, "பவானித்துவம்” எனத் தொடங்கும் செய்யுளின் முற்பகுதியிலுள்ள சொற்றொடரிலே பவானி என்ற சொல் வேற்றுமைச் சொல்லாகப் பவன் என அழைக்கப்படும். சிவபிரானின் பத்தினியே எனவும் த்வம் நீ எனவும் அதே
இந்துக்கலைக்களஞ்சியம்
3O4.

"பவானி” என்ற பதம் ஏவல் வினைமுற்றுத் தன்மையொருமைப் பதமாக ஆகிறேன் என அன்பன் ஒருவன் அம்பாள் ஆகிறான்' என அத்வைதக் கருத்தும் கொண்டு காணப்படுகிறது.
மேலும் ஓசை நயமும் நன்கு குறிப்பிடற்பாலதே. உதாரணங்களாக "அவித்யானாமந்தஸ் திமிதமிஹித - துவீப நகரீ” (3) கைஸ்ரஸா - ரேபதமே சஹ ரஹஸி பத்யா விரஹஸே (9) போன்றவற்றைக் குறிப்பிடலாம்.
இத்தகைய சிறப்பு வாய்ந்த செளந்தர்ய லஹரீ சங்கரர், சிவனைப் பற்றி எழுதியதாகக் கூறப்படும் கேசாதி பாதாந்த வர்ணனா போன்றவற்றுடனும், காளிதாசர் எழுதியதாகக் கூறப்படும் ஸ்யாமளாதண்டகம் எனும் தோத்திரத்துடனும், தமிழிலுள்ள அபிராமி அந்தாதி போன்ற நூல்களுடனும் ஒப்பிடற்பாலது. சிவகேசாதி பாதாந்த வர்ணனா, ஸ்யாமளாதாண்டகம் போன்று இதிலும் இறைவியின் வருணனை கேசாதிபாதமாக அமைந்துள்ளமை கவனித்தற்பாலது. பரம்பொருள் வெகு தொலைவில் உள்ள பெரும் சக்தியன்று. உயிர்களோடு, உள் நின்று என்றும் தண்ணளிபயக்கும் பெருங்கருணை வடிவம் என்ற கருத்தே அழகிய கவிதை வடிவிலே இப் பெயர்ப்பட்ட தோத்திரங்களிலே எடுத்துரைக்கப் படுகின்றது. (விசி)
செளரம்
சூரியனைப் பரம் பொருளாகும் கொண்டு வழிபடும் சமயமே சௌரமாகும். இது சண்மதங்களுள் ஒன்றாகும்.
சைவம், சாக்தம், வைணவம், கெளமாரம், காணபத்தியம், சௌரம் என்னும் இந்த ஆறு சமயங்களின் ஸ்தாபகராகச் சங்கரர் விளங்குகிறார்.
சங்கரர் இந்தியாவிலே கேரள மாநிலத்திற் காலடி என்ற கிராமத்திலே சிவகுரு, ஆரியாம்பிகை தம்பதியருக்குப்புத்திரராய் தோன்றியவர். முப்பத்திரண்டே ஆண்டுகள் உயிர் வாழ்ந்த சங்கரர் இந்து மதத்திற்கு ஆற்றிய தொண்டுகள் அளப்பரியவை. இமயம் முதல் குமரி வரை இரு முறை பயணம் செய்த சங்கரரின் திருவடிகள் படாத திருத்தலங்கள் இல்லை. அவரால் வெல்லப்படாத மதத்தலைவர்களும் இல்லை. தனி ஒரு ஞானியாக அத்வைத தத்துவத்தைப் பரத கண்டம் முழுவதும் பரப்பிய பெருமை இவரையே சாரும்.
இந்தியா முழுவதும் பல்வேறு சமயக் கோட்பாடுகள் பரவியிருந்தபோதுதிக்கு விஜயம் மேற்கொண்ட சங்கரர் பல சமய வாதிகளைத் தமது வாதத் திறமையினால் வென்று இந்து மதத்திற்கு இறுக்கமான அடித்தளம் ஒன்றை நிறுவினார்.
சங்கரர் இந்தியாவில் பெரிய சிறிய மடங்கள் பலவற்றை நிறுவினார். ஆதிசங்கரர் நிறுவிய பீடங்களுள் காஞ்சி பூரீ காம

Page 331
கோடி பீடம் இந்து மதத் தலைமைப் பீடமாக விளங்குகிறது. அவரால் பூரீ சக்கரப் பிரதிஷ்டை செய்யப்பட்ட கோவில்கள் இன்றும் சக்தி வாய்ந்ததாக விளங்குகின்றன.
காஞ்சியில் வாழ்ந்த போது சங்கரர் அரும் பெரும் செயல் ஒன்றை ஆற்றினார். அக்கினி, குபேரன், பிரம்மன், மன்மதன், யமன், வருணன், வாயு போன்ற தேவர்களை வழிபட்டு வந்த மதங்கள் மொத்தம் எழுபத்திரண்டு இருந்தன. சங்கரர் அவற்றிலிருந்த வேத விரோதமான ஆசாரங்களை நீக்கினார். அத்துடன் சைவம், சாக்தம், வைணவம், கெளமாரம், காணபத்தியம், செளரம் என ஆறு பிரிவுகளை- ஷண்மதங்களை, உருவாக்கி ஏனைய தெய்வங்கள் அனைத்தும் இந்த ஆறு பிரிவினுள் ஏதோ ஒரு பிரிவில் அடங்கிவிடும் என விளக்கினார். சைவம், - சிவனையும், வைணவம் - விஷ்ணுவையும், சாக்தம் - சக்தியையும், காணபத்தியம் - கணபதியையும், கெளமாரம்முருகனையும், செளரம் - சூரியனையும் முழுமுதற் தெய்வமாகக்
jL606
சங்கரர் இந்த மதங்களை உருவாக்கவில்லை. சீர்திருத்தி ஒழுங்குபடுத்தினார். அவற்றை நாடெங்கிலும் பரப்புவதற்குத் தமது சீடர்கள் அறுவரை அனுப்பினார். அதனால் சங்கரர் ஷண் மத ஸ்தாபகர் எனப்படுகிறார். இந்த அரும்பணியை சங்கரர் செய்ததால் இந்து சமயத்தைச் சேர்ந்தோரிடம் ஒருமைப்பாடும் ஒற்றுமையும் ஏற்பட்டன. இந்து மதம் தழைத்து வளர்வதற்கு வழியேற்பட்டது.
சங்கரர் அத்வைத வாதி, அதாவது இருமை நிலையை மறுப்பவர். ஜீவாத்மா வேறு பரமாத்மா வேறு என்பது வெறும் மாயை, பரமாத்மாவின் தோற்றமே சகலதும் என்று வாதிடுபவர். அப்படிப்பட்டவர் பரம்பொருளுக்கு கண், மூக்கு, வாய், கை எல்லாம் வைத்து கதைகள் கூறுகிறாரே? இது எவ்வாறு பொருந்தும்? என்ற வினா எழலாம். இதை அவர் செய்தாரா? அல்லது அவர் பெயரில் வேறு யாராவது செய்தார்களா? என்று எண்ணவும் இடமுண்டு.
சமயம், கலை,கலாசாரம், சாஸ்திரம் போன்ற பெரிய விஷயங்கள் குறித்துக் குழப்பமும் சங்கடங்களும் நிலையற்ற தன்மையும் ஏற்படும் போது, மகான்களும், தீர்க்கதரிசிகளும் தோன்றி மனித இனம் கடைத்தேற வழிவகைகளை வகுத்துக் கொடுக்கிறார்கள்.
நமது வைதீக மதம் மிகமிக வளைந்து கொடுக்கக் கூடியது. எந்தத் திக்கில் யார் இழுத்தாலும் ஈடுகொடுத்துக் கொண்டு இழுத்த வழிக்குச் செல்லக் கூடியது. இதனால் மக்கள் பல தெய்வங்களை வழிபட்டதுடன் மூடக்கொள்கைகள் பலவற்றையும் கைக் கொண்டிருந்தனர். இவற்றிலே அர்த்தமற்ற விடயங்களைக் களைந்து சமய ஒருமைப்பாடு காணவேண்டிய நிலையிலேயே சங்கரர் அறுவகைச் சமயங்களையும் ஸ்தாபித்தார்.

மேலும் இந்த ஆறும் தலைமைக் காரியாலயமாக விளங்க அதன் கிளைகளாகவே மற்றவை திகழ்கின்றன. இந்த ஆறு தெய்வங்களே எல்லாச் சில்லறைத் தெய்வங்கட்கும் ஆதாரமாக உள்ளவை என்பதைத் தெளிவாக விளக்கினார். இந்த ஒப்பற்ற கைங்கரியமானது இந்து சமுதாயத்திற்கு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே பூரீ ஆதி சங்கரரால் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டது. -_
சூரிய வழிபாடு
சூரியன் இன்றேல் உலகில் உயிர் இல்லை. அவனுடைய சத்தியில் தான் பயிர்கள் வளர்கின்றன. ஜீவராசிகள் உயிர்வாழுகின்றன. உலகுக்கு, உயிருக்கு இன்றியமையாத சூரியனை முழுமுதற் கடவுளாக வழிபட்டு வரும் மதத்திற்கு செளரம் என்று பெயர். இவ்வழிபாடு இந்தியாவிற் பெரிதும் பரவியிருந்தது. சூரியனுக்கு ரத்த பலி கொடுத்து வந்தனர் என்று சொல்லப்படுகிறது. ஆதிசங்கரரே அம்மதத்தினரிடையே பரவியிருந்த அவ்வழக்கத்தை நீக்கி ஒழுங்கு செய்தார் எனப்படுகின்றது. ஆறாம் நூற்றாண்டு வரையிலும் பரந்த அளவிற் பரவியிருந்த சூரிய வழிபாடு பின் கால கதியில் தன் செல்வாக்கை இழந்துவிட்டது. ராஜஸ்தான், கூர்ஜரம், காஷ்மீர், வங்கத்திலும் இந்தக் காலத்தில் சூரியனுக்குத் தனிக் கோயில்கள் இருந்தன. இப்போ ஒரு சிலவே நமக்குக் காணக் கிடைக்கின்றன.
உலகத்தின் உயிராக விளங்கும் சூரியனுடைய வழிபாடு தொன்று தொட்டே இருந்து வருகிறது. பரந்த தாயும், சர்வசாட்சியாகவும், அஞ்ஞான இருளைப் போக்குவதாயும் தேசகால வர்த்தமானத்தால் பாதிக்கப்படாததாயும் நிறைந்து நிற்பது சூரியன், பரத்துவத்தை ஒப்பிடவும் சற்றே உணரவும் உதவுவது சூரியன். அதனால் முதல் உபாசனையாக மனித வர்க்கம் சூரிய தேவனையே அன்றும் இன்றும் ஆராதித்து வருகிறது. ரிக் வேதம் சூரியனை மூன்றுவித அக்கினிகளில் ஒருவனாக விபரிக்கிறது. அது உதய ஜோதியை பலவாறு வர்ணிக்கிறது.
யசுர் வேதம் ஜோதியை உண்டாக்குபவன் என்றும், சகல லோகங்களையும் ஒளிபெறச் செய்பவன் என்றும் வர்ணிக்கிறது. அருண கடாகம் என்ற யசுர்வேதப் பகுதி சூரியனைப் பற்றியதே.
சாமவேதம் உலகம் முழுவதும் ஒளிர்பவன் அவன் என்று போற்றுகிறது.
சதபத பிராமணம் சூரியனைச் சோதிப் பிழம்பு என்றும் பொன்னாரங்களாலான வட்டம் என்றும் குறிக்கின்றது.
சூரிய உபாசனையைப் பவிஷ்யபுராணம் பிரம்ம புராணம், வராக புராணம், மத்ஸ்யபுராணம், அக்கினி புராணம், கருட புராணம் 11விஷ்யோத்ர புராணம், காளிகா புராணம் மார்கண்டேய
இந்துக்க க்களஞ்சியம்

Page 332
புராணம் ஆகிய பழம் பெரும் நூல்கள் விதம் விதமாக விபரிக்கின்றன.
பகவத் கீதையிலே பூரீ கிருஷ்ணபகவான் “வேத சாஸ்திரத்திலே நான் ஸாம வேதமாகவும், பிரகாசிக்கும் பொருள்களிற் சூரியனாகவும் உள்ளேன்” என்று கூறுகிறார்.
மந்திரங்களில் தலை சிறந்தது காயத்திரியாகும். இந்த காயத்ரீயும் சூரிய உபாசனையின் சிறப்பையே காட்டுகிறது.
எந்தத் தேவன் உலகின்கண் உள்ள இருட்டை நீக்கி ஒளியைப் பரப்புகிறானோ அவன் நம் புத்தியை பிரகாசிக்கச் செய்யட்டும். என்பதே காயத்திரி மந்திரத்தின் பொதுவான கருத்து. அப்பர் சுவாமிகளும்,
அருக்கன் பாதம் வனங்குவார் அந்தியில் அருக்கன் ஆவான் அரணுரு வல்லானோ இருக்கு நான் மறை ஈசனையே தொழும் கருத்தினை நினையார் கண்மணவரே என்று அருக்கனின் உபாசனைப் பெருமையைப் பாடி உள்ளார்.
வராஹமிஹிரரின் ப்ருஹத்ஸம்ஹிதை பாரதம் கொண்டாடும் ஒரு புராதன நூல். அதில் சூரியனின் தோற்றப் பொலிவு அடுத்துக் கூறப்பட்டுள்ளது.
சூரியனுக்கு அணியும் உடை காலிலிருந்து துடைவரை கவசமும், கரங்களில் தாமரை மலர்களும், தலையில் மகுடமும், காதிற் குழையும், இடுப்புக் கச்சும் முறுவல் பூத்த வாயும், பிரசன்ன முகமும், குருதிச் சிவப்பான வட்டத்துள் நிலை கொண்டதுமாய் அருக்கனின் வடிவை அமைக்க வேண்டும் என்று கூறுகிறது அந் நூல்.
தமிழ் இலக்கியத்திலே பேராழி உலகனைத்தும் அகல இருள் நீங்க, ஏராழிதனை நடத்தும் ஒளிச் சுடர் பரவுதுமே என்றும், ஒரு கால் தேர்ச் செல்வன் என்றும், ஏழு குதிரைகள் பூட்டிய ஒரு சக்கரத்தேரில் சூரியன் பவனி வருவதாகவும் கூறப்படுகிறது.
சிவாகமங்கள் சூரிய மண்டலத்தின் நடுவே ஈசன் உறைகின்றான் என்று கூறுகின்றன. அதனால் அவருக்கு சிவசூரியன் என்ற பெயரும் வழங்கி வருகிறது. சிவனுடைய அஷ்டமூர்த்தங்களிற் சூரியனும் ஒன்று எனவும், சிவனது வலது கண்ணே சூரியனாகத் திகழ்கிறது என்றும் தெரிவிக்கின்றன.
ஆதியிற் சூரிய உபாசனை மந்திரரூபமாகவே இருந்தது. சூரிய பகவானைப் பஞ்சாயதன பூஜை தவிர யந்திரத்தில் அமைத்து வழிபடும் முறையை ஆகம நூல்கள் வலியுறுத்து கின்றன. கங்கை கொண்ட சோழபுரத்துச் சிவாலயத்திலே கல்லில் ஒரு கமல யந்திரம் உள்ளது. சூரியனின் உதயக் கோலம் வெகு
அழகாகக் காட்டப்பட்ட ஒரு யந்திரமாகும்.
இந்துக்கலைக்களஞ்சியம்
306

ஜோதிடத்திற் சூரியன்
சூரியனை ஜோதிட சாஸ்திரம் சிம்ம ராசிக்குரியவனாகவும், கிரகங்களின் நடுநாயகனாக நிற்பவனாகவும் கூறுகிறது. பிதிர்காரகன், ஆயுள் காரகன், ஆரோக்கிய காரகனாகவும், தாம்ரவர்ணமும், சத்வகுணமும் சொந்த மகனான சனிக்கு பகைவனாகவும், கோதுமைத் தானியத்தில் பிரீதியுடைய வனாகவும், கோடையே பருவமாகவும், பித்தத்தை உண்டு பண்ணும் தன்மையுடையவனாகவும் வர்ணிக்கிறது.
ஜோதிட சாஸ்திரம் நவக்கிரகங்களையே ஆதாரமாகக் கொண்டது. முன்பு ஏழு கிரகங்களே இருந்தன. பின் ராகுவும், கேதுவும் சேர்ந்து ஒன்பது கிரகங்களாயின.
சூரியன் மகரராசியிற் பிரவேசிப்பதே பொங்கல் விழாவாகும். தை மாதம் முதலாம் திகதி சூரியன் மகராசியிற் பிரவேசிக்கிறான். அந்தத் தினத்தை சங்கிராந்தி எனக் கொண்டாடுகிறோம்.
ஆண்டு தோறும் ஆடி, தை மாதங்களில் உத்தராயணம், தட்சணாயணம் என்ற இரண்டு புண்ணிய காலங்களை நாம் கொண்டாடுகிறோம். அவை சூரியன் தெற்கிலிருந்து வடக்கேயும், வடக்கிலிருந்து தெற்கேயும் போவதைக் குறிக்கின்றன.
உலகம் போற்றும் பரம்பொருள்
மிக ஆதிகாலத்திலே சூரிய வழிபாடு நமது நாட்டிலும் வெளிநாடுகளிலும் பரவியிருந்தது. சுமார் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்னதாகவே எகிப்திற் சூரிய உபாசனை இருந்து வந்திருக்கிறது. அந்த நாட்டை ஆண்டு வந்த பாரோ எனப்படும் அரசர்கள் தங்களைச் சூரியனின் வம்சத்தில் வந்தவர்களாகக் கொண்டனராம். நமது நாட்டைப் போலவே பயிர்த்தொழில் பெருகிடச் சூரியனைத் தெய்வமாகக் கொண்டாடி யிருக்கிறார்கள்.
பாரசீகர்களின் தர்மகிரந்தமான ஜெந்த் அவெஸ் தானத்திலும் மித்திரனே தெய்வமாகக் கூறப்பட்டுள்ளது. மித்திரன் என்பது சூரியனின் பெயர்களில் ஒன்று.
கிரேக்கர்கள் சூரியனை அபொல்லோ என்ற பெயரில் வழிபடுகின்றனர். ரோமர்கள் தைபீரியஸ் என்ற பெயரில் வழிபட்டனர். வட அமெரிக்காவிலுள்ள மெக்சிக்கோவிலும். சூரிய வழிபாடு இருந்ததாகத் தெரிய வருகிறது. அங்கு சூரிய வழிபாட்டின் பழைய சின்னங்களை இன்றும் காணக்கூடியதாக உள்ளது என்றும், அதேபோல் தென் அமெரிக்காவிலுள்ள இன்காஸ் என்ற இனத்தவரும் சூரிய வழிபாட்டினை மேற்கொண்டிருந்தார்கள் என்றும் அறியக் கூடியதாக உள்ளது.
கிருஷ்ணனின் மகனான சாம்பன் என்பான் தனக்கேற்பட்ட சாப விமோசன்த்திற்காக நாரதர் அறிவுரைப் படி சூரிய வழிபாடாற்றினான். சாம்பன் சூரியனுக்கு ஆலயம் எடுத்த போது அவரை ஆராதிக்கத் தகுந்தவர்கள் பாரத நாட்டில் இல்லாத

Page 333
காரணத்தால் பாரசீக நாட்டைச் சார்ந்த ஐரானியர்களை அழைத்து வந்தான். ஐரானியர்கள் அணிந்து கொள்ளும் புனித இடுப்பு ஆபரணம் சூரியனுக்காக எடுக்கப்பட்ட ஆலயங்களிலும் சூரிய விக்கிரகங்களிலும் காணப்படுகின்றது என சூரிய புராணம் கூறுகிறது.
இந்திய மன்னர்கள் ஆதித்தனை உபாசிப்பதிலும் தம்மைச் சூரிய வம்சம் எனக் கூறிக் கொள்வதிலும், பெருமை கொண்டனர் என்று தெரிகிறது.
தர்மபுத்திரர் சூரியனை உபாசித்தே அக்ஷய பாத்திரம் பெற்றதாகவும், குந்திக்குச் சூரிய உபாசனையாற் கர்ணன் தோன்றியதாகவும் புராணம் கூறுகிறது.
சோழ மன்னனான பராந்தக சோழன் குடந்தை நாகேஸ்வர ஆலயத்துள் உள்ள சூரியனின் தனிக் கோயிலுக்கு மானியம் அளித்த சாசனமும், செம்பைக் கிராமத்திற் சூரியனுக்குக் கோயில் நிறுவிறுநீ கண்டராதித்திய க்ரஹம் என்று பெயரிட்டு இருப்பதும் குலோத்துங்க சோழனின் பக்தியால் விளைந்த சூரிய நாராயணர் கோயிலும் சூரிய ஆராதனை தொன்று தொட்டு நிலவி வந்துள்ளதைக் காட்டுகின்றன.
சூரியகோயில்கள்
வேதகாலம் தொட்டு சூரிய வழிபாடு இருந்து வந்தாலும் ஆறாம் நூற்றாண்டு முதலாகவே வட இந்தியாவிற் சூரியனுக்குத் தனிக் கோவில்கள் அமைப்பது ஆரம்பமாயிற்று என்று ஆய்வாளர் கருதுவர்.
கோனார்க்கிலுள்ள சூரிய ஆலயம் பதின்மூன்றாம் நூற்றாண்டிற் கட்டப்பட்டதாகச் சொல்லப்படுகின்றது. இது கீழைகங்க வம்சத்தைச் சேர்ந்த முதலாம் நரசிம்மனாற் கட்டப்பட்டதாகும்.
ஆலயத்தைச் சுற்றிலும் சூரியனுக்கான சிலைகள் அதிகம் காணப்படுகின்றன. அவற்றில் சூரிய நாராயணரைக் குறிக்கும் சிற்பம் மிகவும் கலையழகுடன் விளங்குகிறது. பத்மத்தின் மீது நின்ற கோலத்திலே சூரியன் காட்சி தருகிறார். தாமரைக்குக் கீழே பக்தர்கள் மண்டியிட்டு வணங்குவது சித்திரிக்கப் பட்டிருக்கிறது.
சூரியனுக்கு இருபுறத்திலும் இரண்டு இரண்டாக நான்கு தேவியர் காணப்படுகின்றனர். அவர்களை த் யெள, பிருத்வீ, உஷை, சந்தியா என்று சொல்வர். சூரியனின் சிற்பத்திற் காணப்படும் நான்கு கைகளிலே மேலே உள்ள இரு கைகளிற் சக்கரமும் , சங்கும் தாங்கப்பட்டுள்ளன. கீழே உள்ள வலது கரம் வரத முத்திரையுடன் காணப்படுகின்றது. இடது கரம் உடைந்து காணப்படுகிறது. ஆயினும் அது அபயஹஸ்தமாக இருக்க வேண்டும் என்று கருதப்படுகிறது.
குஜராத் மாநிலத்தில் பழங்காலத் தலைநகரான பட்டான் எனப்படும் ஊருக்குப் பதினெட்டு மைல் தெற்கே அமைந்திருக்கிறது மொதேரா அங்குள்ள சூரியனுடைய ஆலயம்

மிகவும் சிதைவடைந்த நிலையிலுள்ளது. சூரிய விக்கிரகம் வெகுகாலத்துக்கு முன்பே கோயிலிலிருந்து அகற்றப் பட்டிருக்கிறது. அந்த ஆலயம் பதினாறாம் நூற்றாண்டைச் சேர்ந்த ஸோலங்கி வமிசத்தினராற் கட்டப்பட்டதாகும்.
ஸோலங்கி வமிசத்தார் கோயில்களை நிர்மாணிப்பதிற் சிறந்தவர்கள். கோயிலின் அமைப்பும் அதன் சிற்பங்களும் போற்றத் தகுந்த வகையில் இருக்கும். மொதேரா கோயில் சிதைவடைந்த நிலையிலும் சிற்ப வேலைப்பாடுகள் நிறைந்ததாகக் காணப்படுகின்றது.
ஆலயம் கிழக்கு நோக்கி அமைக்கப்பட்டுள்ளது. சூரியன் உதயமாகும் நேரத்தில் அதன் செந்நிறக் கதிர்கள் ஆலயத்தின் வாயிலை நேரடியாகக் கடந்து கர்ப்பக்கிருகத்திலுள்ள சூரியனின் சிலை மீது விழுமாம்.
ஆலயத்தின் முன்பாக உள்ள தடாகம் அழகுற நிர்மாணிக்கப்பட்டதாகும். அதனைக் குண்டம் என்று சொல்கிறார்கள். அங்குள்ள மண்டபங்கள், சிற்பங்கள் நிறைந்ததாக உள்ளன.
இவை தவிர காஷ்மீரத்தில் மார்த்தாண்ட் என்ற இடத்தில் ஒன்பதாம் நூற்றாண்டிற் சூரியனுக்காக ஒரு கோயில் நிர்மாணிக்கப்பட்டிருந்ததாம். இவற்றைவிட கச் பிரதேசத்திலும் வடகூர்ஜரத்திலும் சூரியனுக்குப் பல ஆலயங்கள் நிர்மாணிக்கப் பட்டிருந்ததாகச் சாசனங்களில் இருந்து தெரிய வருகிறது. இன்னும் ராஜபுதனம், ஜய்பூர் வங்காளத்திலும் சூரியனுக்குக் கோயில்கள் நிர்மாணிக்கப்பட்டிருந்ததாகத் தெரிகிறது.
தமிழ் நாட்டிலே சூரியனுக்குத் தனி ஆலயம் நிர்மாணிக்கப்பட்டிருப்பது சூரியனார் கோயில் என்ற ஒரு தலத்தில் தான். இது தஞ்சை மாவட்டத்திலே திருமங்கலக் குடியில் உள்ளது.
இந்த ஆலயம் முதலாம் குலோத்துங்க சோழனின் நாற்பத்து நான்காம் ஆண்டிலே கட்டப்பட்டதாகத் தெரிகிறது. இம்மன்னனுடைய காலம் கி.பி 1070- 1120 வரை என்பர். முதலாம் குலோத்துங்க சோழன் கல்வெட்டுக்கள் இரண்டு கோயிலிலே காணப்படுகின்றன. அவற்றில் இக்கோயிலிலிருக்கும் சூரிய பகவான் அரசன் பெயராலே குலோத்துங்க சோழ மார்த்தாண்டாலய தேவர் என்று குறிக்கப்பட்டுள்ளார்.
கர்ப்பக்கிருகத்திலிருந்து சூரியன் மேற்கு நோக்கிக் காட்சி தருகிறார். அவருக்கு இரு புறங்களிலும் உஷாதேவியும், பிரத்தியுஷா தேவியும் காணப்படுகின்றனர்.
நவக்கிரகங்களைப் பிரதிஷ்டை செய்வதற்கு ஒரு விதி முறை உண்டு. சூரியன் நடுவே நிற்கச் சந்திரன், குரு புதன், சுக்கிரன்
இந்துக் ចំពោះព្រឹទ្ធិយា

Page 334
நால்வரும் நான்கு நேர் திசைகளிலும் அமைத்து செவ்வாய், சனி, ராகு, கேது நான்கு மூர்த்திகளையும் நான்கு மூலைகளிலும் அமைத்து வழிபடுவது சிவாகம முறையாகும். சூரியனார் கோயிலில் இவ்வாறே நவக்கிரகங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
கோயிலிற் குதிரையே துவஜஸ்தம்பமாக அமைக்கப் பட்டிருக்கிறது. சுவாமிக்குச் சிவசூரிய நாராயணன் என்று பெயர். அவருக்கு அருகே காசி விஸ்வநாதரும் விசாலாகூழியம்மையும் காட்சி தருகின்றனர். இத்தலத்திலே சூரியன் பிரணவஸ்வ ரூபமாகவும் மும்மூர்த்திகளாகவும் விளங்கும் ஈசனை லிங்கமாக ஸ்தாபித்துப் பூஜை செய்து கொண்டிருப்பதாகச் சொல்லப் படுகிறது. நிநி)
செளராஷ்டிரம்
மேளகர்த்தாவாகிய சூரியகாந்தத்தின் சேய்ராகம் செளராஷ்ரம். அதாவது சூரத் என்ற பட்டினத்தின் இராகம் என்பர் ஒரு சிலர். இந்த இராகம் பாடும்போது கம்பித ப்ரத்யாஹத கமகங்களினால் இருந்த இடத்திலேயே கண்டாமணி போல் ஒலிப்பதனால் இப்பெயர் வந்ததெனலாம். மல்லாரு என்ற ஒரு வித இசை முறை இதிலும் கேதாரம், நாட்டை, கம்பீர நாட்டை, ஹம்சத்வனி போன்ற இராகங்களிலும் பாடப் பெற்று வந்தமை தனிச் சிறப்பாகும்.
காலை வேளை ராகமான இது ஒரு புருவு இராகமாகும். இதன் நிறம் செம்மஞ்சள்
சூரியனார் கோவி
30,
 

இதன் ஆரோகணம் : ஸரிகமபதநிஸ அவரோகணம் -ஸநிதாபமகமரீச
இது ஒரு சம்பூர்ண ராகம். பாஷாங்கராகம், இந்தராகம் எடுத்துக் கொள்ளும் சுரங்கள் ஸ்ட்ஸம், சுத்தரிஷபம் அந்தர காந்தாரம், சுத்தமத்திமம், சதுஸ்ருதிதைவதம், காகலி நிஷாதம், கைசிகி நிஷாதம் ஆகியன. அன்னிய சுரமாகிய கைசிகி நிஷாதம் “பதநிதபா” என்னும் பிரயோகத்தில் தோன்றுகிறது. ரிஷபம், காந்தாரம், தைவதம், நிஷாதம் ஆகியன இவ்ராகத்தின் ஜீவ சுரங்கள். ரிஷபம், மத்திமம், நியாச சுரங்கள் இவ் இராகத்தின் தத, ஸா நிஸ்ஸ்தாபம பாமகரீஸ்ரீ என்பது விசேட பிரயோகம், சுபகரமான ராகம். எப்பொழுதும் பாடக் கூடிய இராகம், பழைய இசை நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ள இராகம். பழமையான ராகம், “பண் வியாழக் குறிஞ்சி' என அழைக்கப்பட்டது இந்த இராகமே.
தத ச்ச ரிரி - சநிச்ரீகா - சநிதா த்த்ச்ச்ரீ - சரீக மரீ காரி சா - சநிதா த்தசாசாநிதா தநீ நிதபா மகபதநீ சரி சநிதா தநித பாகமரீகா சநிதா சச ரிரி சா இவ் ராகத்தில் வரும் உருப்படிகள்
க்ருதி பூநீகணபதி -ஆதி - தியாகராஜ சுவாமிகள் க்ருதி அல்ல கல்லோ -&#FFLI - தியாகராஜ சுவாமிகள் க்ருதி சூர்ய மூர்த்தே -துருவம் - முத்துசாமி தீட்ஷதர் க்ருதி சரணம் சரணம் 一于T山 - அருணாசலக்கவிராயர் க்ருதி வேழ முகனே -ஆதி - பெரிய சாமிதூரன் க்ருதி என் செய்வோமென -ஆதி - முத்துசாமிகவிராயர்
தேஹ)
ல் -கோனாரக்

Page 335
சிக்கல்
சிகண்டி
சிங்கமுகன்
சித்தர்கள்
சித்தன்னவாசல் சித்தாந்த சாத்திரங்கள் சித்தாந்தம் சித்தாந்த ஸாராவளி
சித்தார்
சித்திர சூத்திரம் சித்பவானந்தர்
சிதம்பரம் சிதம்பர மும்மணிக் கோவை சிந்தாமணி சிந்தாமணி விநாயகர் சிம்மேந்திர மத்திமம் சிடமிருதிகள் (ஸ்மிருதிகள்) சியாமளா தண்டகம் சியாமா சாஸ்திரிகள்
சிரஞ்சீவி
சிரார்த்தம்
சிருங்காரம்
சிலப்பதிகாரம்
சிலாதர்
சிவகணம்
சிவசமவாதம்
சிவசின்னங்கள்
சிவ சூத்திரம் சிவஞான முனிவர் சிவஞானபோதம் (வடமொழி) சிவதருமோத்தரம் (தமிழ்) சிவப்பிரகாச சுவாமிகள், துறைமங்கலம் சிவபாத சுந்தரனார், சைவப்பெரியார் சிவ பிரதிமைகள் சிவபோகசாரம் சிவமகாபுராணம் சிவமூர்த்தங்கள் சிவயோக சுவாமிகள் சிவராத்திரி
சிவலிங்கம்
சிவன், பாபநாசம் சிவாக்கிரகயோகி சிவாசாரியர்கள்
சிவாத்வைதம்
சிவானந்தர்
சிவானந்தலஹரி
சிவாஜி சிற்பக்கலை வரலாற்றில் சிவ வடிவங்கள் (பல்லவா சிற்பக்கலை வரலாற்றில் சிவ வடிவங்கள் ( சோழர் சிற்பக்கலை வரலாற்றில் சிவ வடிவங்கள் (விசய நக சிற்றம்பல நாடிகள் சிறப்புலி நாயனார் சிறிய திருமடல் சிறுத் தொண்ட நாயனார்

ால்லடைவு
முற்காலப் பாண்டியர் காலம்) காலம்) ர நாயக்கர் காலம்)
10
29
30
31
32
3季
35
47
49
49
季9
50
52
54
55
59
64
65
67
68
68
69
74
75
Zア
73
80
81
85
89
92
94
置重重 118 1 19
121
121 122 125 126 130 131 138 重42 148 152 153 155 157

Page 336
சின்முத்திரை சித்திரா பெளர்ணமி சீக்கியம்
சீகாழி
சீதை
சீமந்தம்
சீறியாழ்
சுக்கிரன் சுந்தரமூர்த்தி நாயனார் சுப்பிரமணிய பாரதியார் சுப்பிரமணியன் சுமங்கலி பூஜை
5ff ULU LD G) I JJ LD
சுருளிமலை சுவாதித் திருநாள்(மகாராஜா) சுவாமிமலை சுவேதாம்பரர் சுவேதாஸ்வதரோபநிஷத் சூதர்
சூரிய சித்தாந்தம்
சூரியன் சூரியனார் கோயில் செங்கோட்டு யாழ் செந்திநாதையர் காசிவாசி செந்தில் வாழந்தணர் செந்துருத்தி
செந்தூர்
செம்பாலை செல்வச்சந்நிதி
செவ்வழி
செவ்வாய்
சேக்கிழார்
சேதிராயர்
சேந்தனார்
சேய்ஞலூர் சேய்த்தொண்டர் புராணம் சேரமான் பெருமாள் நாயனார் சைவக் கிரியைகள் சைவக் கோயிற் கிரியைகள் சைவ சமயம் சைவசித்தாந்த சங்கிரகம் சைவசித்தாந்தத்தில் முப்பொருளுண்மை சைவ பேதங்கள் சைவம் (வீரசைவம்) சோடச கணபதிகள் சோடச சுப்ரமண்ய மூர்த்தங்கள் சோட சோபசாரம் சோமநாதம்
சோமநாதர் சோமவார விரதம் சோமாஸ் கந்தர் சோழர் அரசியல் சோழர் காலத்துக் கோயிற்களும் கட்டடக்கலை சோழர்காலச் சிற்பங்கள் செளந்தர்யலஹரீ
செளரம்
செளராஷ்டிரம்
19948 310

ムー
づノ○
160
161
162
166
169 173
173
174
176
185
190
191
191
192
193
194
196 197
1 99 200
2O2
204
206
2O7
211
212
213
217
21 7
220
* 221
222
224
224
225
225
226 229
232
240
248 249
256
257
262
263 267
268
269
269 270
271
284
295
303 304 308

Page 337


Page 338


Page 339


Page 340
Designed & Printed by
 

e Arts (Pvt) LTdColombo 13, el 23:30495