கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: இந்துக்கலைக்களஞ்சியம் 8

Page 1
இந்து சமய கலாசார அலுவல்க
 
 

க்களஞ்சியம்
Tட்டு தி-தோ

Page 2
முக்கிய அ
#-&-ୋ},$ଙ୍ଗ୍]]
பொதுசன நூலக
நீங்கள் எடுத்து வாசிக்கும் பு அழித்தல் வெட்ாதல் மற்றும் ஊறு கேட்டுக் கொள்கிறோம். புத்தகங் யான குறைபாடுகளைக் கண்டால் தெரிவிக்கவும். இல்லாவிடில் இவ்வூ பட்டதென்று கருதப்படுவதுடன் னையையும் ஏற்க நேரிடும்.
 

|றிவி_
ம் பகுதி
Està யாழ்ப்பான
|த்தகத்தில் கீறுதல், கிறுக்குதல், பாடுகளைச் செய்யவேண்டாமென களை எடுக்கும்பொழுது இப்படி நூலகப் பொறுப்பாளருக்கு உடன் றுபாடுகள் தங்களாலேயே செய்யப் .و مسمی است நூலகத்தில் விதிக்கப்படும் தண்ட ܢ ܂

Page 3

b, S, O) —

Page 4


Page 5
பிரதம பதி
பேராசிரியர் சி
உதவிப் பதி
திரு. க. ே
நிர்வாக
豫
திரு. எஸ். ெ
இந்து சமய கலாசார அலுவல்க
2O
 

|ňundfirfiuŤ
1. பத்மநாதன்
åog - thuাefinfluff ப்ேபா.
இரகுபரன்
Občfifluuři
தய்வநாயகம் V ༦འི, ༦༽ ༽ ༥ རྨས་རྗེས་རྗེ་ དེ་ ༽།།
1994, 88
ள் தினைக்களம் - இலங்கை
Օ6

Page 6
முதற்பதிப்பு
வெளியீடு
பதிப்புரிமை
அச்சு
ISBN
டிசம்பர், 2006
இந்து சமய, கலாசார அலுவல்கள் தி 248 - 11 காலி வீதி, கொழும்பு - 04, இலங்கை,
இந்து சமய கலாசார அலுவல்கள் தின்
யுனி ஆர்ட்ஸ் (பிரைவேட்) லிமிட்டெட்
48 பீ, புளூமெண்டால் வீதி, கொழும்பு இலங்கை.
ensum. 8 /=
955-9233-11-4

ணைக்களம்
ணைக்களம்
- 13,

Page 7
HINDUENCY
Volume
€ditor is PROF. S. PAT
SUb 6 HK. RAGU
Monogin S. THCVAN
Department of Hindu Religious
90

(CLOPAEDIA
- VIII
n Chief HMANATHAN
ditOr JPFARFAN
O GCitOr NAPAGAM
V ༦༽ ༤༣, W2. ཕར་་་་(3རི་ A།།
and Cultural Affairs-Sri Lanka
O6

Page 8
First Edition
Published By
Copyright
Printed By
Price
ISBN
December, 2006
Department of Hindu Religious a 248 1/1, Galle Road, Colombo- 0 Sri Lanka.
Department of Hindu Religious a
Unie Arts (Pvt) Ltd. 48B, Bloemendhal Road, Colombo Sri Lanka.
RS. O /=
955-9233-11-4

und Cultural Affairs, 4,
nd Cultural Affairs.
13,

Page 9

(தொகுதி - னடு)
எழுத்தாளர் குழு
பேராசிரியர் சி. பத்மநாதன்
பேராசிரியர் வி. சிவசாமி
பேராசிரியர் சோ. கிருஷ்ணராஜா
கலாபூஷணம் வசந்தா வைத்தியநாதன்
பேராசிரியர் தி. ஞானகுமாரன்
கலாநிதி ஏ. என். கிருஷ்ணவேணி
திரு. க. இரகுபரன்
திரு. வேல் சுவாமிநாதன்
திருமதி இந்திராதேவி சதானந்தன்
திருமதி தேவகுமாரி ஹரன்
திருமதி நித்தியவதி நித்தியானந்தன்
செல்வி க. ஹேமலோஜினி -
செல்வி ச நந்தினி
திருமதி சா. விஜயந்தி
\ ༦༽ ༤༽ Wསོརྗེ་ཛa V།།
கட்டுரைகளின் இறுதியில் அவ்வக் கட்டுரைகளின்
ஆசிரியர் பெயர் சுருக்கித் தரப்பட்டுள்ளது. மேற்படி கட்டுரையாளர்களின் பெயர்ச் சுருக்கங்கள் முறையே வருமாறு அமையும். (சி.ப), (வி. சி), (சோ. கி), (வவை), தி. ஞா), (ஏ.என்.கி), (க, இர), வே.சு), (இ. ச), தேஹ), (நிநி), கே. ஹே), சே. ந.) (சா.வி)

Page 10
கட்டுரை ஆசிரியர்கள்
தவத்திரு ஊரன் அடிகள்
திரு. ம. பாலசுப்பிரமணிய முதலியார்
பண்டிதர் இ. வடிவேல்
செல்வி தங்கேஸ்வரி கதிராமன்
முனைவர் வெ. வேதாசலம்
பேராசிரியர் இரா. செல்வகணபதி
முனைவர் உலகநாயகி பழனி
மேற்படி அறிஞர்களின் கட்டுரைகள் இத்தொகுதிக்கென எழுதப்பட்டவை அல்ல. வேறு நூல்களிலிருந்து பெறப்பட்டவை. மேற்படி கட்டுரையாளர்களின் பெயர்ச் சுருக்கங்கள் முறையே வருமாறு அமையும் (ஊரன்), (ம.ப), (இ.வ.), (த.க), (வெ.வே.), இரா.செ.), (உப-)
 


Page 11
இந்து சமய கலாசார அலுவல்கள் இந்துக் கலைக்களஞ்சியம் வெளியிடு வருகின்றன. இந்துக் கலைக் களஞ்சியத் வெளியிடப்பட்டது. அதிலிருந்து இது இந்துக் கலைக் களஞ்சியத்தின் எட்ட தொடக்கம் ‘தோ’ வரையிலான எழுத்து அமைவு பெற்றுள்ளன. இந்து சமய பெருமைகள், தலங்கள், கலாசார சின் சிறப்புற விளக்கப்பட்டுள்ளன.
திணைக்களம் கடந்த பதினெட்டு ( தொகுக்கும் பணியை, வெற்றிகரமாக மே விளங்குகின்றனர். கலைக் களஞ்சிய எழுதுவதற்கான அறிஞர்கள் எம்மிடம் நீண்டகாலம் தொடர்புடைய அ விரிவுரையாளர்கள், எமது திணைக்க தம்மாலான முயற்சிகளை மேற்கொண்டு இதனால் இந்துக் கலைக் களஞ்சியத் சாத்தியமாகின்றது.
இந்துக் கலைக்களஞ்சியம் இர தொகுதிவரையுள்ள ஏழு தொகுதிகளு வருபவர் பேராதனைப் பல்கலைக்கழக ஆவார். அவரது ஆலோசனைகளும் அ மகத்தானவையாகும். பேராசிரியருக்கு எ
எழுத்தாளர் குழுவினரும், கட்டுரை பயனாக இந்த எட்டாம் தொகுதி ெ கடமைப்பட்டுள்ளேன்.
எமது திணைக்களத்தின் பணிக இடையூறுமின்றி நிறைவேற ஆதரவு வி ஜனாதிபதி, சமய விவகாரப் பிரதி அை அமைச்சின் செயலாளர் திரு. பி. ெ கொள்வதில் மகிழ்ச்சியடைகின்றேன்.
இந்துக்கலைக் களஞ்சியம் மு. இத்தொகுதிகளின் வெளியீட்டிற்கு சிறட் பணிப்பாளர் திரு. எஸ். தெய்வநாயக விரிவுரையாளரும், இந்துக் கலைக்க திரு. க. இரகுபரன் ஆகியோருக்கு எனது இத்தொகுதியின் பிரதி ஒப்பீடுகளை சண்முகநாதன், ஆராய்ச்சிப் பிரிவின் அச்சிட்டு உதவிய யூனி ஆர்ட்ஸ் அச்சக இந்து சமயம், இந்துப் பண்பாடு ே ஆர்வலர்களுக்கும் இந்துக் கலைக் பயன்பாடுகளை கொடுக்கும் என்பதில்
vii
 

வெளியீட்டுரை
சாரிந்தி நாவுக்கரசன் L600. LITGITs
இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம்
திணைக்க்ளம் ஆரம்பமான காலம் தொடக்கம், தல் தொடர்பான பணிகள் முன்னெடுக்கப்பட்டு தின் முதலாம் தொகுதி 1990 ஆம் ஆண்டு யூன் மாதம் |வரை ஏழு தொகுதிகள் வெளியிடப்பட்டுள்ளன. ாவது தொகுதி இதுவாகும். இத்தொகுதியில் "தி |க்களில் தொடங்கும் சொற்களுக்குரிய கட்டுரைகள் த்துடன் தொடர்புடைய வரலாறு, பண்பாட்டுப் னங்கள், பெரியார்கள், சஞ்சிகைகள் முதலானவை
வருடங்களுக்கு மேலாக இந்துக் கலைக் களஞ்சியம் ற்கொண்டு வருவதற்குப் பலர் காரண கர்த்தாக்களாக த் தொகுதிகளுக்கான கட்டுரைகளை ஆராய்ந்து குறைவாக உள்ளனர். எனினும் திணைக்களத்துடன் றிஞர்கள், பல்கலைக்கழகப் பேராசிரியர்கள், ள ஆராய்ச்சி உத்தியோகத்தர்கள் முதலானோர் எமக்கு கட்டுரைகளைச் சமர்ப்பித்து வருகின்றனர்.
தொகுதிகளை இடைவெளியின்றி வெளியிடுவது
"ண்டாம் தொகுதியிலிருந்து இந்த எட்டாம் நக்கும் பிரதம பதிப்பாசிரியராகக் கடமையாற்றி தகைசார் ஒய்வுநிலைப் பேராசிரியர் சி. பத்மநாதன் வர் அளித்துவரும் ஊக்கமும் ஒத்தாசையும் மிகவும் ானது மனமார்ந்த நன்றிகள் உரித்தாகுக.
rயாளர்களும் எடுத்துக் கொண்ட முழுமுயற்சியின் வளியிடப்படுகின்றது. அவர்களுக்கு நன்றி கூறக்
ளூக்கு ஊக்கமளித்து, செயற்பாடுகள் எந்தவித பழங்கிவரும் சமய விவகார அமைச்சரான மேதகு மைச்சர் கெளரவ திஸ்ஸ கரலியத்த, சமய விவகார நாடித்துவக்கு ஆகியோருக்கு நன்றியைக் கூறிக்
தற் தொகுதி ஆரம்பமான காலத்திலிருந்து புறப் பணியாற்றிவரும் ஆராய்ச்சிப் பிரிவின் உதவிப் ம், தென்கிழக்குப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறை ளஞ்சிய ஆலோசனைக் குழு உறுப்பினருமாகிய | பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
சரிபார்த்து உதவிய தகவல் உத்தியோகத்தர் திரு. ம. உத்தியோகத்தர்கள், இத்தொகுதியைச் சிறப்புற த்தினர் ஆகியோருக்கும் நன்றி. பான்ற துறைகளில் உயர்கல்வி பெறுவோருக்கும்,
களஞ்சியத் தொகுதிகள் அனைத்தும் நல்ல ஐயமில்லை.

Page 12
பதிப்புரை
சி. பத்மநாதன் தகைசார் ஓய்வுநிலைப் பேராசிரியர்
பேராதனைப் பல்கலைக்கழகம்
இந்துக் கலைக் களஞ்சியத்தின் எட்டாம் கட்டுரைகளிற் பெரும்பாலானவை திருக்கோயில் குரவரின் பாடல் பெற்ற தலங்கள், வைணவ ஆழ்வார் வகைப்படும். அத்தலங்கள் யாவும் மிகவும் புராதன உண்டு. அவை தமிழர் பண்பாட்டின் கருவூலங்கள் கோயில்கள், அவற்றின் வனப்புமிக்க கட்டுமானங் உரியவை. மிக உயரமான விமானங்கள், அழகிய ே மண்டபங்கள், கவர்ச்சியான செதுக்கு வேலைப்பாடு தோற்றங்கொண்ட ஓங்கியெழுந்த கோபுரங்கள், நெடிதுயர்ந்த விசாலமான திருநடமாளிகைகள், அமைப்புகள் அங்குள்ளன. அவற்றின் பிரமாண்டத் வேலைப்பாடுகளும் வினோதமானவை. அதனால் அ அவற்றின் வனப்பினாலே கவரப்பெற்ற அறிஞர்கள் ப6 நூல்களை எழுதியுள்ளனர். அவை எல்லா விவரங் சமயநெறி, வழிபாடு, பிரபஞ்சக் கோட்பாடுகள் விமர்சனங்களாகவும் அமைந்துள்ளன. ஆனந்த குட க்றாம்ரிஷ் எழுதிய இந்துக் கோயில், சிவ தரிசனம் முத கலாதத்துவம் என்பவற்றின் அருமை பெருமைகளை நூல்களாகும். அவர்களின் ஆக்கங்களை முன்னுதா பலர் திருக்கோயில்களின் பல்வேறு அம்சங்களையும் நூல்கள் பலவற்றை வெளியிடுகின்றமை ஒரு தொடர்
தென்னாட்டுத் திருத்தலங்கள், தமிழ் வளர்ச்சியோடும் நெருங்கிய தொடர்புடையவை. உணர்ச்சிபூர்வமான நினைவுகளை ஏற்படுத் நாயன்மார்களினதும் ஆழ்வார்களினதும் பங்கு ஆக்கங்களினாலே தமிழ் இனிமையும் தெளிவும் ெ இலக்கியம் படைத்து தமிழ் மொழிக்குப் புத்துயிரளி
தென்னாட்டு வைணவர்கள் ஆழ்வார் பாசுரங் கொண்டனர். சைவசமய குரவர்களின் பாடல்கள் வேதங்களுக்கு நிகரானவையாகச் சைவர்களாற் போ பாடல்கள்; திருத்தலங்களை அடிப்படையாகக் ெ
வளர்ச்சி பெற்ற சைவ, வைணவ சமயங்கள் திருத்தல
திருக்கோயில்கள் வளர்ச்சி பெற்ற க பந்தமாகிவிட்டன. அவற்றின் சுற்றாடல்களிற் சதுர்ே விருத்திபெற்றன. கல்விக்கூடங்களும் கலாநிலைய காலங்களிலே தேசத்தின் பல்வேறு பகுதிகளிலிரு மகாவிரதிகளும் அங்கு யாத்திரை சென்றனர். அவ
w

தொகுதியான இந்நூலில் அடங்கிய களைப் பற்றியவை. அவை சைவசமய களின் பாடல் பெற்ற தலங்கள் என இரு மானவை. அவற்றுக்குப் பல சிறப்புகள் ள். அவற்றிலே மிகப் பெரிதளவிலான கள் வெவ்வேறு காலப் பகுதிகளுக்கு வலைப்பாடுகள் பொருந்திய பலவகை களைக் கொண்ட சிற்பங்கள், எடுப்பான வரையிலாச் சிறப்புடைய சிற்பங்கள், திருச்சுற்று மாளிகைகள் எனப் பல தோற்றமும் வனப்புமிகுந்த கோலமும் புவை உலகப் பிரசித்தி பெற்றுவிட்டன. லர் அவற்றை ஆராய்ந்து பல சிறப்புமிக்க களையுங் கொண்டிருப்பதோடு இந்து ா, கலாதத்துவம் போன்றன பற்றிய மாரசுவாமியின் சிவ நடனம், ஸ்ரெலா 5லிய நூல்கள் இந்துசமயத் தத்துவங்கள், ா உலகத்தோருக்கு அறிமுகஞ் செய்யும் ரணமாகக் கொண்டு மேனாட்டறிஞர் பற்றி ஆய்வு செய்து, புலமைநிலையில்
ர்கதை.
மொழியோடும் அதன் இலக்கிய அத்தொடர்பு பற்றிய சிந்தனைகள் தக்கூடியவை. தமிழ் வரலாற்றில் த சாலவும் பெரியது. அவர்களின் பற்றது. பொதுவழக்கான சந்தங்களில் த்த சிறப்பு அவர்களுக்குரியதாகும்.
களை வேதங்களுக்கு நிகரானவையாகக்
திருமுறைகளாக வகைசெய்யப்பட்டு ாற்றப்படுகின்றன. இவை யாவும் பக்திப் காண்டு பாடப்பட்டவை. தமிழகத்தில்
ங்களை ஆதாரமாகக் கொண்டவை.
ாலத்தில் அவை சமுதாயத்தோடு வேதிமங்கலங்களும் வணிக நகரங்களும் ங்களும் உருவாக்கப்பட்டன. உற்சவ நந்தும் பக்தர்களும் சமயஞானிகளும் ார்களின் தேவைகளைக் கவனிப்பதற்கு
viii

Page 13
அறச்சாலைகளும் அன்னசத்திரங்களு உலோக வார்ப்புக்கலை வல்லுநர், ப பொற்கொல்லர் முதலிய பல திறத்தோர் நடனம் ஆகிய கலைகள் நெடுங்காலமா குறிப்பிடத்தக்க அம்சமாகும்.
அரசரும் செல்வ வணிகரு வருமானங்களையும் அடிப்படையாகக் கட்டளைகளையும் ஆலய சேவைக6ை அமைக்கப்பட்டிருந்தன. கோயில்க தேவதானமென்று வகை செய்து அவ செய்தனர். அடியார்கள் காணிக்கைய பெருமளவிலே கோயில்களுக்கு வழங்கி மிகக் கூடுதலானவை. விளக்குகளும் நந் பல வகைப்படும். விளக்குகளை எரிப்ட வேண்டிய நெய் தினமும் இடைய செய்யப்பட்டன. பெரும்பாலும் ஆடு, போன்றனவும் தானமாகக் கொடுக்கப் சங்கரபாடியரும் பெருவணிகருக்கு நிகர சாசன வாசகங்களால் அறியலா முட்டுப்படுவதுண்டு. அறக்கட்டளைக் தங்கள் பொறுப்புகளைக் கைவிடுவது தொடர்பாகப் புதிய ஏற்பாடுகளைச் ெ
கோயில்களில் ஆயிரக்கணக் பெரும்பாலும் நன்கொடைகளைப் ப வேறெந்த மொழியில் உள்ளனவற்ை குறிப்பிடற்குரியது. அவை வரலாற்று ஆட்சிமுறை, சமுதாயப் பிரிவுகள், இய பரிவர்த்தனை, வாணிபம், மொழி, இ
தொடர்பு முதலான பல விடயங்களைப்
விஜயநகர நாயக்கர் காலத்துட் தொடர்பானவை. அவற்றைப் பற்றி வெளிவரவில்லை, தமிழிலக்கியப் ப கூடுதலானவை என்பது குறிப்பிடற்கு பலதிறத்தன. அவற்றுள்ளே திருமுறைக - நாயக்கர் காலத்துப் பிரபந்தங்க இவற்றையேனும் படித்து, அவற்றிலுள்ள உயர்கலாபீடங்களிலேனும் வளர்த்து சூழ்நிலையில் திருக்கோயில்களைப் கட்டுரைகளை வெளியிடுவது சாலி நிறுவனங்களும் இந்நிலை பற்றி அக்கறை மிகுந்த முக்கியத்துவம் பெறுகின்ற
ix

ம் உருவாக்கப்பட்டன. கட்டட, சிற்பக் கலைஞர், ட்பாண்ட உற்பத்தியாளர், ஒவியர், நெசவாளர், ஆலயங்களின் சுற்றாடல்களிற் குடிகளாகினர். இசை, க ஆலயங்களின் ஆதரவில் வளர்ச்சி பெற்றமை ஒரு
ம் பிரதானிகளும் வழங்கிய நிலங்களையும் கொண்டு ஆலய சேவைகள் நடைபெற்றன. அறக் ாயும் பரிபாலனஞ் செய்வதற்கு நிர்வாகக் குழுக்கள் ளுக்கு வழங்கப்பட்ட நிலங்களை இறையிலித் ற்றை அரசாங்கத்தின் வரித்திணைக்களத்திற் பதிவு ாக பொன், ஆபரணம், மந்தைகள் முதலியவற்றைப் னார்கள். விளக்கெரிப்பதற்கு வழங்கிய தானங்களே தா விளக்கு, சந்தி விளக்கு, தராநிலை விளக்கு எனப் பதற்கென்று வழங்குமிடத்து, அவற்றை எரிப்பதற்கு றாது கிடைப்பதற்கு வேண்டிய ஏற்பாடுகளும்
மாடு, எருமைகளும் சில சமயங்களிற் காசு, நிலம் பட்டன. மந்தைகளைக் கோனார்கள் மட்டுமன்றிச் ான பேரிளமையாரும் பொறுப்பேற்றனர் என்பதைச் ம். சில சமயங்களிலே திருவிளக்குப் பணி குப் பொறுப்பேற்றவர்கள் ஏதோ காரணங்களினால் உண்டு. அச்சந்தர்ப்பங்களிலே திருவிளக்குப்பணி
சய்தனர்.
கான சாசனங்கள் எழுதப்பட்டுள்ளன. அவை ற்றியவை. தமிழ் மொழியில் அமைந்த சாசனங்கள் றைக் காட்டிலும் மிகக் கூடுதலானவை என்பது று ஆவணங்கள் என்ற சிறப்புடையவை. அரசர், ற்கை வளம், தொழில் முறைகள், உற்பத்தி, பொருட் லக்கியம், சமய சமூக நிறுவனங்கள், பன்னாட்டுத்
பற்றிய அரிய விவரங்கள் இவற்றில் அடங்கியுள்ளன.
பிரபந்தங்களிற் பெரும்பாலானவை கோயில்கள் ய தரமான ஆய்வுகள் இதுவரை போதியளவில் ரப்பில் அக்காலத்து நூல்களே எண்ணிக்கையிற் யது. திருக்கோயில்களைப் பற்றிய மூலாதாரங்கள் ள், ஆழ்வார் பாசுரங்கள், தலபுராணங்கள், விஜயநகர i என்பன தமிழ் மொழி இலக்கியங்களாகும். ா விவரங்களை எழுதக்கூடிய தகைமையைத் தேசத்து துக் கொள்ள முடியவில்லை. அத்தகையவொரு பற்றிய பிரதான விவரங்கள் அடங்கிய விரிவான ாக் காரியம். இலங்கையிலுள்ள இந்து சமய கொள்வதில்லை. சைவசமயத்திலே திருக்கோயில்கள்
போதும், இலங்கை சைவ அறிஞர்களிற் பலர்

Page 14
கோயில்களின் சிறப்புகளை மாணவர்களுக்குப் போ அதனால் இந்து கலாசாரத்தின் மகோன்னத தலைமுறையினர் அறிந்து கொள்ளமுடியாத நிலை கிரியைகள் மட்டுமே சமயநெறி என்ற ஒரு மனோபா கொள்பவர்களும் சமயநெறி போதிப்பதில்லை.
இவ்வாறான சூழ்நிலையில், இந்து ச உணர்வினையும் ஏற்படுத்துவதற்கு இத்தகைய க அளவில் துணை செய்யும் எனலாம். எனினும் நாட்டி இத்தகையதொரு வெளியீட்டுக்கு அமையவேண் மத்தியில், இந்துக்கலைக் களஞ்சியத்தின் தொகுதி பெருமிதங்கொள்ளத்தக்கதொரு விடயமே.
இத்தொகுதி உரிய காலத்தில் வெளிவருவ திணைக்களப் பணிப்பாளர் திருமதி சாந்தி திரு. சீ. தெய்வநாயகம், கட்டுரையாசிரியர்கள், ெ உத்தியோகத்தர்கள், பிரதிகளை ஒப்புநோக்கி உதவி நிறுவனத்தினர் ஆகியோருக்கு எங்கள் பாராட் பயன்படுத்தப்பட்டுள்ள சில வண்ணப் படங்கள் ‘த நூலிலிருந்து பெறப்பட்டவை. அதன் ஆசிரியர் தி நன்றிபாராட்டக் கடமைப்பட்டுள்ளோம். இத்ே பிரதிகளைப் பல முறை படித்துத் திருத்தங்கை நிழற்படங்களையும் தெரிவுசெய்து, நூலை அ திரு. க. இரகுபரனுக்கு எமது பாராட்டுக்கள் உரித்த
 

திப்பதை ஒப்புக் கொள்ள மறுக்கின்றனர். மான அம்சங்களைப் பற்றி இளைய யொன்று இருந்து வந்துள்ளது. கோயிற் வம் உண்டு. இந்துக்கள் சமயகுருமாராகக்
மயம் தொடர்பான அறிவினையும் லைக்களஞ்சிய வெளியீடு கணிசமான ன் சூழ்நிலைக்கும், மக்கள் மனநிலைக்கும், iண்டிய வளங்களின் குறைபாட்டுக்கும் எட்டாவதை எட்டியுள்ளமை ஒரளவில்
தற்கு வேண்டிய ஏற்பாடுகளைச் செய்த நாவுக்கரசன், உதவிப் பணிப்பாளர் தாகுக்கும் பணியிலீடுபட்ட ஆராய்ச்சி ய திரு. ம. சண்முகநாதன், யுனி ஆர்ட்ஸ் டுகள் உரித்தானவை. இத்தொகுதியிற் மிழ் நாட்டுக் கலைக் கோயில்கள்’ என்ற ருெ. தேவமணி ரஃபேல் அவர்களுக்கும் தொகுதியில் அடங்கிய கட்டுரைகளின் ள ஏற்படுத்தியதோடு, அவற்றுக்குரிய புலங்காரக் கோலத்தில் வடிவமைத்த
ᏏᎱᎢ6ᏡᎢ6ᏡᎶᎧ1.

Page 15
O O O
திருக்கச்சிநம்பிகள்
வைணவ ஆச்சாரியார்களில் ஒருவர். தமிழ் நாட்டில் தொண்டைப் பகுதியில் பூவிருந்த வல்லி என்னுமிடத்தில் வாழ்ந்த வணிகரும் திருமால் பக்தருமான வீரராகவர், கமலையாருக்கு நான்காவது புதல்வராக திருக்கச்சி நம்பிகள் தோன்றினார். இவரது பிள்ளைத் திருநாமம் கஜேந்திரதாசர். இவரது தந்தையார் தான் தொண்டு செய்து வந்த பார்க்கவரான திருமிழிசை யாழ்வாரின் அருளால் பிறந்ததால் பார்க்கவப் பிரியார் எனப் பெயரிட்டார். கச்சியில் வாழ்ந்ததால் திருக்கச்சி நம்பி, காஞ்சி முனி, காஞ்சிப் பூரணனார் எனவும் அழைக்கப்பட்டார். ஆளவந்தார் இவருக்கிட்ட பெயர் பேரருளான தாசர் என்பதாகும்.
இவரது தந்தையார் ஒரு நாள் தன் புதல்வர்கள் நால்வரையும் அழைத்து தான் ஈட்டி வைத்துள்ள பொருட்களின் ஒரு பகுதியை எடுத்து அந்நால்வருக்கும் சமமாகப் பகிர்ந்தளித்தார். திருக்கச்சி நம்பி தவிர்ந்த மூவரும் தந்தை கொடுத்த பொருளை மேலும் அதிகரித்தனர். ஆனால் கச்சி நம்பியோ தனது பங்கை திருமால் அடியார்களை ஆராதிப்பதில் செலவிட்டார். பின் ஒரு நாள் தந்தையார் தம் மைந்தர் நால்வரையும் அழைத்து வினவிய பொழுது ஏனைய மூவரும் பொருளைப் பல மடங்காகப் பெருக்கியிருக்க கச்சிநம்பி மட்டும் வைகுந்தப் பெருமானின் அடியாரின் விருந்தமுதுக்குச் செலவிட்டு விட்டதாகக் கூற, சினம் கொண்ட தந்தை வீட்டை விட்டுச் செல்லுமாறு கூறிவிட்டார். அவ்வேளையில் திருக்கச்சிநம்பி தந்தையாரை வணங்கி “எந்தையிர் தாங்கள் சினந்து கூறினீர், ஆயினும் தாங்கள் கூறியன யான் உய்தற்கு உரியனவே” என்று கூறி தாயாரிடம் விடை பெற்றுச் சென்றார்.
திருக்கச்சி நம்பியின் மனம் எப்போதும் அத்திகிரியில் எழுந்தருளியுள்ள பேரருளாளன்பால் செல்வதாயிற்று, அத்திகிரி நாதரின் வேண்டுகோளுக்கிணங்க பெருமானுக்கு திருவால வட்டம் வீசுதல் ஆகிய தொண்டினை மேற்கொண்டு வந்தார். தமது குருவாக ஆளவந்தாரை ஏற்க விரும்பி கச்சி நம்பிகள் அவர் வதியும் திருவரங்கக் கோயில் மடத்தை அடைந்து அவரால் திருவடி தீட்சை அருளப் பெற்று திருமந்திரம், துவயம், சரமசுலோகம் என்பவற்றின் பொருள்களை அறிந்து கொண்டார்.
திருக்கச்சி நம்பிகள் பின் ஆளவந்தாரின் சீடர்களில் தலைமைத் தொண்டரும் சிறந்த அறிவாளியுமான பெரிய நம்பிகளுடன் சென்று தங்கியிந்தார். அவ்வேளையில் பெரிய நம்பி திருவாய் மொழி முதலிய நாலாயிரத்தின் பொருள்களை நன்கு விளங்கும்படி கூறக் கேட்டுப் பல வைணவத் தலங்களைத் தரிசித்து திருக்கச்சியை அடைந்து தம் பணியாகிய திருவால வட்டம் வீசுதலைத் தொடர்ந்தும் செய்து வந்தார்.
இந்துக் கலைக்களஞ்சியம்
தி

விசிஷ்டாத்வைத ஆசிரியரான இராமானுஜர் திருக்கச்சி நம்பிகளின் சீடராக விரும்பினார். நம்பி அதற்கு மறுத்துவிட்டார். இவர் உண்ட கலத்தில் உண்ண இராமானுஜர் ஆசைப்பட்டார். அதை இராமானுஜர் மனைவி நிறைவேறாமல் தடுத்து விட்டார். எனினும் இராமானுஜருக்கு ஏற்பட்ட சில சந்தேகங்களைக் கச்சி நம்பிகள் பேரருளாளனிடம் கேட்டு விடை கூறினார்.
1) பரம்பொருள் நாமே 2) மதம் பேதமே 3) அடைக்கலம் (பிரபக்தி) தான் சிறந்த வழி 4) யாக்கை முடிவில் நம்மை நினைத்தல் வேண்டும் என்பது அன்று 5) யாக்கை முடிவில் வீடு பேறு 6) இராமானுஜர் பெரிய நம்பியைக் குரவராகக் கொள்ளுதல் வேண்டும். இவையே இராமானுஜர் எம்மிடம் அறிய விரும்பியவை என்று கச்சி நம்பியிடம் கூறி அவரது வினாக்களுக்கு விடை பகர்ந்தார் பேரருளாளன்.
திருக்கச்சி நம்பிகளிடம் அளவு கடந்த அன்பு வைத்திருந்த பெருமாள், நம்பி ஊட்டத்தான் திருவமுது பெற்றார். அடர்ந்த இருளின் போது நம்பி தங்கியிருந்த மடம்வரை அவரது பணியாளரைப் போன்று வேடம் புனைந்து தீப்பந்தம் ஏந்தி வந்தார். ஏழரைச் சனியனின் தாக்கத்தை சிறு விளையாடல் நடத்தி சில கணப்பொழுதில் நீக்கியமை போன்ற அற்புதங்களைச் செய்து நம்பியின் அன்புக்குக் கட்டுண்டு நின்றார். காஞ்சிப் பெருமாள் தாம் சிலையாக விளங்கும் அர்ச்சை நிலையைக் கடந்து இவரோடு உரையாடினார் என்று இவரது வரலாறு கூறுகிறது.
அந்திமக் காலத்தில் வீடுபேற்றை விரும்பிய நம்பிக்கு “நீர் விசிறி வீசினீர்; நான் உம்மோடு பேசினேன்; இரண்டிற்கும் சரியாயிற்று. ஒரு பரமபாகவதரின் அன்பினைப் பெற்றாலே உமக்கு வீடுபேறு’ என்று வரதராஜன் கூற, மாறுவேடத்துடன் இவர் திருக்கோட்டியூர் நம்பிகளிடம் மாடு மேய்க்கும் தொண்டு செய்து நம்பயல்’ என்று அவரால் அன்புகூரப் பெற்று வரதனிடம் வீடுபேறு பெற்றார். இவர் பெருமாளைப் பற்றி எட்டு சுலோகங்கள் கொண்ட 'தேவராசாட்டகம்' என்னும் துதி நூலை அருளிச் செய்தார். (நி. நி.)
திருக்கயிலாயம்
உலகின் முகடு எனக் கருதப்படும் திபேத்துப் பீட பூமியில் மேற்குப் பகுதியில் திருக்கயிலாயம் அமைந்துள்ளது. தீபெத்தின் தலைநகரம் 12890 அடி உயரத்திலுள்ள லாஸ்ாவாகும். திருக்கயிலாயம் இலங்கையிலிருந்து கிட்டத்தட்ட 2800 கிலோமீற்றர் தூரத்தில் உள்ளது. கடல் மட்டத்திற்கு மேல் 22028 அடி உயரத்தில் ஒளியுடன் விளங்கும் கொடு முடி இதன் விட்டம் 12 கிலோமிற்றர், சுற்றளவு 36 கிலோமீற்றர். எவரெஸ்ட் மலையின் உயரம் 29410 அடி என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

Page 16
கயிலைவேறு, சிவபெருமான் வேறு அல்ல. கயிலாயமே சிவபெருமானின் உறைவிடம். கயிலையைச் சிவபெருமானின் வடிவமாக பக்தர்கள் கண்டு உணர்ந்து வழி படுகின்றனர். திருக்கயிலாயமலையை வலம் வர 52 சிலோமீற்றர் தூரத்தை நடந்தோ, குதிரையின் மீதோ, யாக் என்னும் மிருகத்தின் மீதிருந்தோ பிரயாணம் செய்யலாம். திருக்கயிலாயத்தை வலம் வர சாதாரணமாக மூன்று நாட்கள் எடுக்கும். எமக்குப் பசு, எருமை எப்படியோ அதேபோன்று யாக் மிருகம் திபெத்தியருக்கு. இதன் வாலிலுள்ள ரோமமே நாம் கோவிலில் சுவாமிக்கு வீசும் சாமரையாகும்.
கயிலைமலை சிவபெருமானாகவும், மானசரோவர் ஏரி சக்தி வடிவமாகவும் வழிபடப்படுகின்றது. இத்தடாகம் கயிலையின் தென்புறத்தில் 32 கிலோமீற்றர் தொலைவில் சுமார் 90 கிலோமீற்றர் சுற்றளவில் பளிங்கு போன்ற நீரைத் தன்னகத்தே கொண்டது. இதன் ஆழம் 260 அடி இருக்குமெனக் கணிக்கப்படுகின்றது. இது கயிலாயத்திலிருந்து வந்து சேரும் புனித நீரை தன்னகத்தே தேக்கி வைத்துள்ளதால் புண்ணிய தீர்த்தமாகக் கருதப்படுகின்றது. மானசரோவரில் ஹோரே என்னும் இடத்திலிருந்தும் இடப்பக்கமாக 8 கிலோமீற்றர் தூரத்தில் கயிலையங்கிரியின் பிம்மம் தடாகத்திற்தெரிகின்றது. இதை கெளரிசங்கராக நினைத்து வழிபடப்படுகின்றது. மானசரோவர் ஆவுடையாராகவும் கயிலையங்கிரி இலிங்கமாகவும் இணைந்து விசுவலிங்கமாகக் காட்சியளிக்கின்றன. இத்தடாகம் 61 சக்தி பிடாங்களில் முதன்மையானதாகக் கருதப்படுகின்றது. தாட்சாயினியின் முன்கரம் விழுந்த இடம் இதுவென்றும், பர்வதமன்னன் சிவனரியின் அருகிலிருந்து நீண்டகாலமாகத் தவம் செய்து பார்வதிதேவியைத் தன் மகளாகப் பெற்றான் என்றும் இங்கு அன்னப்பறவைகள் வசித்தன வென்றும் புராண வரலாறுகள் கூறுகின்றன. இவ் ஏரியின் அருகில் அமைந்துள்ள சூகும்பா என்னும் மடாலயத்திலிருந்து மாயாதேவி தவம் செய்து புத்தர் பிரானை இவ்வுலகுக்கு அளித்தாரென்று தீபெத்திய புராணம் பகர்கின்றது. இத் தடாகத்தை வலம் வர மூன்று நாட்கள் எடுக்கின்றது. இதன் நீரின் மேற்பரப்பு சிலநேரத்தில் பனிக்கட்டியாக உறைந்திருக்கும். நாம் 2000 ஆம் ஆண்டு ஆவணி மாதம் இத்தடாகத்திற்குச் சென்ற போது இத்தடாக நீர் இந்த நிலையில் இருந்தது.
மானசரோவர் தடாகத்தின் தென்பால் இருக்கும் தடாகத்தை இராச்சதஸ்த்தால் என அழைக்கின்றனர். இதன் கரையிலிருந்தே இலங்கை வேந்தன் இராவணன் நீண்ட காலமாகக் கடும் தவம் புரிந்து கயிலை வாசனிடம் அளவற்ற வரங்களையும், வாளையும் பெற்றான் என்று தீபெத்திய புராணம் பகர்கின்றது. மானசரோவர் வாவியின் கரையோரத் திலிருந்து பெறப்படும் பலவர்ணங்களினாலான சொரூபத்தையும் (கற்கள்) புனித நீரையும் யாத்திரியர்கள் தம் ஊர்களுக்கு எடுத்துச் சென்று அங்குள்ளோருக்கு கயிலைப் பிரசாதமாக வழங்குகின்றனர்.

மானசரோவர் வாவியின் வடதிசையில் 32 கீலோமிற்றர் தூரத்தில் பலகோடி சூரிய பிரகாசத்துடன் திருக்கயிலாயம் அருட்காட்சி அளிக்கின்றது. இதன் முதற்தோற்றம் தர்சன் என்று அழைக்கப்படும் இடத்திலிருந்து கிடைக்கும் தென் முகக் காட்சியாகும். இங்கு யாத்திரிகர்கள் தங்குவதற்கு ஏற்ற விடுதிகளும், கடைகளும் உண்டு. யாத்திரிகர்கள் கயிலையங் கிரியை வலம் வருவதற்குத் தென்மேற்கு மூலையில் அமைந்துள்ள தேவர்கள் பள்ளத்தாக்கில் (VALLEY OF GOD) இருந்து ஆரம்பிக்கின்றனர். கிரிவலம் ஆரம்பிக்கும் போது இங்குள்ள பிரார்த்தனைக் கொடிக்கருகில் ஹோமங்கள் செய்து தாம் கொண்டு சென்ற கொடிகளை அங்கு நாட்டிக் கிரிவலம் ஆரம்பிக்கின்றனர். கிரிவலம் செல்லும் பாதையில் பல சிற்றாறுகளையும், நீர்வீழ்ச்சிகளையும், பனிப்பாறைகளையும், வழுக்கல், சறுக்கல்களையும், கரடுமுரடான கற்களையும், பள்ளதாக்குகளையும், பல ஏற்ற இறக்கங்களையும், மலைச் சரிவுகளையும் கடந்து இரத்தத்தை உறையவைக்கும் கடும் குளிர், பனி, மழை, சுவாசிப்பதற்குப் போதிய பிராண வாயு இன்மையால் மூச்சுத்திணறலுடன் தளர்ந்த நடையில் கைத்தடியை ஊன்றிக் கொண்டு கிரிவலம் வரவேண்டியுள்ளது.
கிரிவலம் வரும் போது காணும் அருட்காட்சிகள் பிரயாணத் துன்பங்கனைப் போக்குகின்றன. வடமேற்கு மூலையிலிருந்து பார்க்கும் போது கயிலைவாசன் சிதம்பரத் திலுள்ள பொன்னம்பலத்தின் மேல்விதான அமைப்பில் காட்சி அளிக்கின்றார். அதிகாலை வடதிசையிலுள்ள திரபுக்கிலிருந்து பார்க்கும் போது பொன்னிறமாகக் காட்சியளிக்கின்றார். இதை அப்பர் பெருமானும் கயிலைத் திருத்தாண்டகத்தில் “காவாய் கனகத்திரளே போற்றி கயிலை மலையானே போற்றி போற்றி” எனப் போற்றுகின்றார். திரபுக்கில் இருபதுபேர் அளவில் தங்கக் கூடிய விடுதியுண்டு. இது 19000 அடி உயரத்தில் உள்ளது. வட கிழக்கு மூலையில் இராவணன் கயிலையைத் தூக்க முயன்ற இடமும் அதற்காக அவன் நாட்டிய நெடிய கற்றுாணும் தென்படுகின்றன. அதைத்தாண்டி சிவஸ்தால் என்ற இடத்தையடைந்தால் அங்கு தீபேத்தியரின் பிரார்த்தனைக்கொடி தென்படும். திருக்கயிலாயம் வந்தவர்கள் தம்மிடமுள்ள சகலதையும் துறக்க வேண்டுமென்ற நியதிக்கமைய தம்வசமுள்ள பொருட்களையும், பணத்தையும், தலைமுடியையும், நகத்தையும், இலை போன்ற பிறவற்றையும் சம்பிரதாயமாக் கருதி இங்கு விட்டுச் செல்கின்றனர். அவர்கள் விட்டுச் சென்றவை சிறிய மலைக்குன்றாகத் தென்படுகின்றது. அதனைத் தொடர்ந்து கிழக்குத் திசையில் பார்வதிதேவி நித்தமும் நீராடும் கெளரி குண்டமென்ற தீர்த்தக்குளம் தென்படுகின்றது. இதிலுள்ள நீர் பச்சை நிறமாகத் தெரிகின்றது. மேற்பரப்பிலுள்ள நீர் உறைந்து பனிப்படராகத் தென்படுகின்றது. உலகத்தில் அதி உயரத்தில் இருக்கும் தடாகம் இது எனக் கருதப்படுகின்றது.
அடுத்ததாகத் கிழக்குப் பக்கத்தில் டோல் மாபாஸ் என்ற இடம் 19500 அடி உயரத்தில் அமைந்துள்ளது. இங்கு பகல் ஒரு
இந்துக் கலைக்களஞ்சியம்

Page 17
மணிக்கு மேல் எப்பொழுதும் பனிப்புயல் வீசுகின்றது. குளிர் அளவு சய இருபது டிகிரியாகவுள்ளது. பனிப்பாறைகளின் மேற் பிரயாணம் செய்ய வேண்டியுள்ளது. பிராணவாயு அறுபது வீதம் தொடக்கம் எண்பது விகிதம் வரையுள்ளது. சவாசிப்பது மிகவும் சிரமம். இதனால் சிலர் சுயநினைவு இழந்து மயக்கமடைவதும் உண்டு. இதைத் தவிர்ப்பதற்கு சிலர் பிராண வாயுச் சிலிண்டர்களிலிருந்து பெறப்படும் வாயுவைச் சுவாசித்தும், சிலர் உள்ளியைச் சாப்பிட்டும், சிலர் பச்சைக் கற்பூரத்தை முகர்ந்தும் சுவாச அவதியைக் குறைக்கின்றனர். நடக்க முடியாத நிலை ஏற்பட்டு பனிப்பாறையின் மேல் இருக்கவோ, படுக்கவோ கூடாது. அப்படி இருந்தால் இரத்தம் உறைந்து விபரீத விளைவுகளை உண்டு பண்ணி விடும்.
திருப்பராய்த்துறவி சுவாமி சித்பவானந்தர் தாம் நேரிற் கண்ட கயிலைக்காட்சிகளை இப்படிப் பகர்கின்றார்.
“மனிதனால் கட்டப்பட்ட கோயில் எதுவும் திருக்கயிலாயத்தில் இல்லை. ஆனால் கோயில்களுக்கெல்லாம் மாதிரியாக கயிலாயம் இயற்கையாகவே அமைந்திருக்கிறது. சில பாகங்களில் அது வெறும் சுவராகவும், வேறு சில இடங்களில் சித்திரங்களும், உருவங்களும் அமைக்கப்பெற்றது போன்றும் காணப்படுகின்றது. மூடப்பட்ட வாயில் போன்றவைகளும் ஆங்காங்கு தென்படுகின்றன. பிராகாரத்தின் மீது ஒருபெரியமேடை, அதன் சுவர் ஐந்துநூறு அடி முதல் ஆயிரம் அடிவரையில் ஒரே செங்குத்தாக இருப்பதால் அந்த மேடைக்கு யாரும் போகமுடியாது. அந்த மேடையின் மீது நூற்றுக் கணக்கான சிறுமலைகள். கோபுரங்கள் போன்று அமைந்திருக்கின்றன. அவைகளில் சித்திர வேலைப்பாடு டையவை, சாதாரணமாக இருப்பவை, சதுரமாக இருப்பவை, வட்டமாக இருப்பவை, முட்டைபோன்று இருப்பவை, முக்கோண முடையனவை, தூண் போன்றவை, ஒடுங்கிய நுனியை உடையவை, இன்னும் பல விதமான வடிவங்களை உடையவைகள் பல இருக்கின்றன. அவைகளின் நிறங்களும் பலவகைப்படும். இந்தியாவில் தென்முனையிலிருந்து இமயம் வரையில் எத்தனை விதமான கோபுரங்கள் இருக்கின்றனவோ அத்தனைக்கும் மாதிரிகள் கயிலையில் இருக்கின்றன. இன்னும் புதிதாக ஏதாவது கட்ட வேண்டும்மென்றால் அதற்கும் மாதிரி அங்கே கிடைக்கும். அண்ட நாயகனின் அரண்மனை போன்றது கயிலை. அதற்கு அகழி, பிராகாரம், கோட்டை, கொத்தளம், கோபுரம், கூடம், மாடம், கொலுமண்டபம், அந்தப்புரம் ஆகிய காட்சிகள் அனைத்தும் ஒருங்கே அமைந்திருக்கின்றன.
"தென்புறம் தவிரமற்ற மூன்று பக்கங்களிலும் அணி அணியாக மலைகள் இருக்கின்றன. ஆனால் அவைகள் வெறும் மலைபோன்று தென்படுவதில்லை. விசுவேசுவரன் வீற்றிருக்கும் கொலு மண்டபத்திற்கு அருகில் அவனுடைய கணங்கள், சிப்பந்திகள் முதலானவர்கள் வசிப்பதற்கான குடியிருப்புகளாக அவைகள் விளங்குகின்றன. முக்கியத்துவம் வாய்ந்த
இந்துக் கலைக்களஞ்சியம்

அமைச்சர்கள் முதல் சாதாரண வேலைக்காரர்கள் வரை பல படித்தரங்களில் இருக்கும் இலட்சக்கணக்கான பேர்களுக்கு என்னென்ன விதமான மாளிகைகள் உப்பரிகைகள், சாதரணவீடுகள் தேவையோ அவை அனைத்தும் அங்கு இருக்கின்றன. தேவலோகத்திற் கேற்ற ஓர் ஒப்பற்ற நகரம் போன்று அவைகள் காட்சி கொடுக்கின்றன’
இவ்விதம் சுவாமி சித்பவானந்தர் கூறியது முற்றிலும் உண்மை என்பதை கயிலாயப் பரிக்கிரம சமயத்தில் (கிரிவலம் வருகையில்) உணரலாம்.
"பொடி கொள் உருவர் புலியின் அதளர் புரிநூல் திகழ்மார்பில் கடிகொள் கொன்றை கலந்த நீற்றர் கறைசேர் கண்டத்தர் இடியகுரலால் இரியுமடங்கல் தொடங்கு முனைச்சாரல் கடிய விடைமேல் கொடியொன்றுடையார் கயிலை மலையாரே'
"ஏதமில பூதமொடு கோதை துணை
யாதிமுதல் வேத விகிர்தன் கீதமொடு நீதிபல வோதி மற
வாதுபயி னாதனகர்தான் தாதுபொதி போதுவிட வூதுசிறை
மீதுதுளி கூதல்நலியக் காதன்மிகு சோதிகிளர் மாதுபயில்
கோதுகயி லாயமலையே.” (சம்பந்தர்)
“வேற்றாகி விண்ணாகி நின்றாய் போற்றி
மீளாமே ஆளென்னைக் கொண்டாய் போற்றி ஊற்றாகி உள்ளே ஒளித்தாய் போற்றி ஒவாத சத்தத் தொலியே போற்றி ஆற்றாகி அங்கே அமர்ந்தாய் போற்றி
ஆறங்கம் நால்வேதம் ஆனாய் போற்றி காற்றாகி யெங்கும் கலந்தாய் போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி (அப்பர்)
"தானெனை முன்படைத்தான் அதறிந்துதன் பொன்னடிக்கே நானென பாடலந்தோ நாயினேனைப் பொருட்படுத்து வானெனை வந்தெதிர் கொள்ள மத்தயானை அருள்புரிந்து ஊனுயிர் வேறு செய்தான் நொடித்தான்மலை உத்தமனே'
(சுந்தரர்)
G
உருவுபல கொண்டு உணர்வரிதாய் நிற்கும் ஒருவன் ஒருபால் இருக்கை- மருவினிய பூக்கையிற் கொண்டு எப்பொழுதும் புத்தேளிர் வந்திறைஞ்ச மாக்கயிலை என்னும் மலை’
(நக்கீரர்)
"புமியதனிற் ப்ரவுவான- புகலியில் வித்தகர்போல அமிர்தகவித் தொடையாட - அடிமைதனக் கருள்வாயே சமரி லெதிர்த்தகர்மாள - தனியயில் விட்டெறிவோனே நமசிவயப் பொருளானே - ரசதகிரிப் பெருமாளே."
(திருப்புகழ்)
3

Page 18
6
எண்ணிறைந்த சான்றோர் வணங்கு நொடித்தான் மலையில்
தேன்தோய் அமுதச் செழுஞ்சுவையே - வான்தோய்ந்த இந்திரரும் நாரணரும் எண்ணில் பிரமர்களும்
வந்திறைஞ்சும் வெள்ளி மலையானே - தந்திடுநல் தாய்க்குங் கிடையாத தண்ணருள் கொண்டன்பருளம்
வாய்க்கும் கயிலை மலையானே.” (அருட்பா)
(வே.சு.)
திருக்கரைசையம்பதி
O O O
அகஸ்தியர் ஸ்தாபனம்
திருக்கோணமலை மாவட்டத்திலுள்ள கொட்டியாபுரப் பற்று, மகாவலிகங்கையினால் வளம் பெற்ற பெரிய பிரதேசம். அப்பிரதேசத்தில் சிவாலயங்கள் பலவற்றைக் கொண்ட திருக்கரைசையம்பதி பண்டைக்காலத்தில் தமிழ்க் குறுநில மன்னர்களின் ஆட்சிக்குட்பட்டிருந்தது. திருக்கரைசைப் புராணம் இந்தச் செய்தியைத் தருகின்றது. திருக்கரைசையம்பதியில் திருமங்கையால் அமைக்கப்பட்ட திருமங்கலாய் சிவன்கோவில் போல, அகஸ்திய முனிவரால் சிவலிங்கம் ஸ்தாபிக்கப்பட்ட இடம் அகஸ்தியர் ஸ்தாபனம். அங்கு பிரசித்திபெற்ற சிவன்கோவில் இருந்தமைக்குரிய ஆதாரங்கள் காணப்படுகின்றன. சிவாலயம் இருந்த இடத்தில் லிங்கம், நந்தி, பலிபீடம், சுப்பிரமணியர், அஸ்திரதேவர், கோவில் வாயிற் கற்கள், கோமுகை, அபிஷேக வாசனைத் திரவியங்கள் அரைக்கும் முக்கூட்டுக்கல், வாசல் படிக்கற்கள், தூண்கள் முதலியன இன்றும் இருக்கின்றன. இவற்றை ஒன்று சேர்த்து ஒரு சிறிய கோவில் கட்டிப் பாதுகாத்து வைத்திருக்கின்றார்கள்.
கிளி வெட்டியிலிருந்து பதினொரு கிலோமீற்றர் தூரத்தில் அகஸ்தியர் ஸ்தாபனம் இருக்கின்றது. கிளிவெட்டியிலிருந்து கங்குவேலிக்கூடாக மோட்டாரில் செல்லக்கூடிய பாதை இருக்கின்றது. பாதை நல்லநிலையிலில்லை. மோட்டார் வண்டிச் சொந்தக்காரன் இப்பாதையில் வண்டியைச் செலுத்த விரும்பமாட்டான். மாரிகாலமென்றால் சொல்லவேண்டாம். நடந்து சென்றாலும் வழுக்கிவிழாமலிருக்கமுடியாது. அகஸ்தியர் ஸ்தாபனத்திலிருந்து இரண்டு கிலோமீற்றர் தூரத்தில் மகாவலிகங்கை கரைபுரண்டு ஒடிக்கொண்டிருக்கின்றது. திருக்கரைசையம்பதியிலிருந்த ஆலயங்கள் பண்டைக்காலத்தில் மகாவலிகங்கையின் பெருவெள்ளத்தினால் அழிந்திருக்கலாம் என்று ஊகிக்கத் தோன்றுகின்றது. வெருகலம்பதியிலுள்ள சித்திரவேலாயுத சுவாமி கோவிலைச் சுற்றியோடும் மகாவலியின் கிளையாகிய வெருகல்கங்கை பெருவெள்ளமேற்படும்போது
அகஸ்தியர் திருக்கயிலாயத்திலிருந்து தெற்கே வந்த வரலாறுகள் பல புராணங்களிலே கூறப்பட்டிருக்கின்றன. அகஸ்தியர் ஒருவரா? பலரா? என்ற ஆராய்ச்சி வேறு விஷயம். திருக்கரை சைப்புராணம், திருக்கோணாசல புராணம்
4.

என்பவைகளில் கூறப்படும் அகஸ்தியர் தமிழ் மக்கள் வாழ்ந்ததும், குறுநில மன்னர்களால் ஆளப்பட்டதும், தவம் செய்வதற்குரிய இயற்கை அமைவுகளை யுடையதுமாகிய திருக்கரைசையம்பதிக்கு வந்து லிங்கஸ்தாபனம் செய்து சிவன் கோவிலைக் கட்டியிருக்கின்றார். அந்த ஆலயம் அழிந்து, காடடர்ந்து பெரும் வனமாயிருந்த காலத்தில் கிளிவெட்டிப்பகுதில் வாழ்ந்த சில அன்பர்கள் இந்தக் காட்டுப் பிரதேசத்தில் அழிந்து கிடந்த ஆலயத்தைக் கண்டறிந்தார்கள். காடுதிருத்தி ஆராய்ந்த போது அழிந்த ஆலயத்தின் எஞ்சிய பகுதிகள் கிடைத்தன. அவற்றை ஒழுங்குபடுத்தி ஒரு கொட்டில்கோவில் கட்டி அதில் வைத்து வழிபட்டு வந்தார்கள். அருணாசலம் சுவாமி, பசுபதிச் சுவாமி, செல்லத்துரைச் சுவாமி, பூரீ நாராயணசுவாமிக் குருக்கள் என்பவர்கள் பூசைவழிபாடுசெய்து ஆதரித்துவந்தார்கள். அகஸ்தியர் தவம்செய்த இடமாதலால், பெரும் காடடர்ந்திருந்த போதிலும் இயற்கையாகவே தெய்வ சாந்நித்தியம் நிறைந்த இடமாயிருப்பதை உணரக்கூடியதாயிருக்கின்றது. இதற் கருகிலுள்ள மகாவலிகங்கைக் கரையிலேதான் இருநூற்றைம்பது வருடங்களாக ஆடியமாவாசைத் தீர்த்தோற்சவம் நடைபெற்று வருகின்றது. (இ. வ.)
திருக்கரைசையம்பதி திருமங்கலாய் சிவன்கோவில்
இது மிகப் பழமைவாய்ந்த சிவன்கோவில், கிளி வெட்டியிலிருந்து ஒன்பது கில்லோமீற்றர் தூரத்தில் இருக்கின்றது. திருக்கோணமலை மாவட்டத்தில் கொட்டியாரப் பற்றிலுள்ள சைவக்கிராமம் கிளிவெட்டி, இவ்விடத்திற்குச் செல்வதற்குரிய மார்க்கம் கங்குவேலிச் சிவன்கோவில் வரலாற்றில் கூறப்பட்டிருக்கின்றது. கிளிவெட்டியிருந்து திருமங்கலாய்க்குப்போகும் மார்க்கத்தில் நாலு கில்லோமீற்றர் தூரம் காட்டுப்பாதையினூடாகச் செல்ல வேண்டும். தற்போது இந்த ஆலயம் பெரும்பாலும் அழிந்த நிலையில் இருக்கின்றது. கர்ப்பக்கிருகம் சிதைந்துவிட்டது. அர்த்தமண்டபம் சிதைந்த நிலையில் பாதுகாக்கப்பட்டிருக்கின்றது. மகாமண்டபமும், மற்றும் ஆலயக் கட்டிடங்களும் அத்திவாரமட்டத்தில் சிதைந்து மண்ணில் மறைந்து கிடக்கின்றன. அத்திவாரம் பெரும் கருங்கற்களால் அமைக்கப்பட்டிருக்கின்றது. இவற்றையெல்லாம் பார்க்கும்போது இங்கு ஒரு பெருங்கோவில் இருந்ததற்குரிய அடையாளங்கள் காணப்படுகின்றன. ஆலயங்களுக்குத் தலபுராணம் பாடப் பட்டிருக்குமானால் அந்த ஆலயம் பிரசித்தியும், மகத்துவமும் வாய்ந்ததாக இருக்க வேண்டும். என்ன காரணத்தினால் இவ்வாலயம் அழிந்ததென்பது தெரியவில்லை. ஆனால் ஆலயத்திற்குரிய தலபுராணம் உயிரோடிருக்கின்றது. கொட்டியா புரப்பற்றிலுள்ள பல ஆலயங்களில் திருக்கரைசைப் புராணம் இன்றும் படிக்கப்பட்டு வருகின்றது. திருமங்கலாய் சுவாமி பெயர் கந்தலிங்கேஸ்வரர். திருமங்கலாய் சிவன் கோவிலில் இருந்து சுவாமி எழுந்தருளிச் சென்று மகாவலிகங்கையில் ஆடியமா
இந்துக் கலைக்களஞ்சியம்

Page 19
வாசையன்றும், மகரமாதத்திலும் தீர்த்தமாடுவார். ஆலயம் அழிந்த பின்னர் இந்த வழமையின்படி கங்குவேலிச் சிவனும், தம்பலகாமம் கோணேசரும் மகாவலிகங்கையில் தீர்த்தமாடி வருகின்றனர்.
மூர்த்தி, தலம், தீர்த்தம் மூன்றும் முறையே பொருந்திச் சிறந்து விளங்கியது திருமங்கலாய்ச் சிவன் கோவில். மகாவலிகங்கையின் பெரு வெள்ளப் பெருக்கினால் இந்த ஆலயம் அழிந்திருக்கலாம். ஆலயமழிந்து காடுவளர்ந்து மூடியிருந்த காலத்தில் இங்குள்ள சைவ மக்களின் உதவியோடு பூரீ தியாக ராசாக் குருக்கள் என்பவர் ஆலயத்திலிருந்து லிங்கத்தையும், அம்பாளையும் எடுத்து வந்து வெருகலம்பதியில் ஒரு சிறுகோவில் கட்டி வைத்திருந்தார்கள். அந்தக் கோவிலும் பராமரிப் பிழந்ததினால் இப்போது இந்தத் திருவுருவங்கள் மூதூரிலுள்ள பிள்ளையார் கோவிலில் வைக்கப்பட்டிருக்கின்றன. சுமார் மூன்றடி உரயமான லிங்கமும், அம்பாளும் சிறிது பின்னப்பட்டிருந்த போதிலும் மிக அழகிய திருவுருவங்களாகக் காணப்படுகின்றன. திருமங்கலாய் ஆலயத்திலிருந்த மணியொன்று கங்குவேலிச் சிவன்கோவிலில் இருக்கின்றது.
திருமங்கலாய் சிவன் கோவிலுக்குரிய திருக்கரைசைப் புராணம் இவ்வாலயத்தின் தொன்மையையும் சிறப்பையும் எடுத்துக் கூறுகின்றன. இலங்கையின் கிழக்குப் பிரதேசங்களில் தமிழ் மன்னர்கள் பன்னெடுங் காலத்திற்கு முன்பே ஆண்டுவந்துள்ளார்கள் என்பதை திருக்கரைசைப்புராணம் கூறுகின்றது. இந்திய மன்னர் பரம்பரையைச் சேர்ந்த சிங்கபூதரன் என்பவன் அயோத்தியிலிருந்து இலங்கைக்கு வந்தான். தற்போது இலங்கைத்துறை என்று சொல்லப்படு மிடத்தில் கப்பலில் வந்திறங்கினான். அப்போது இப்பிரதேசத்தை ஆண்டுகொண்டிருந்தவன் எழில்வேந்தன். இவனுடைய மகள் திருமங்கை. திருமங்கையைச் சிங்கபூதரன் திருமணம் செய்து திருக்கரைசையம்பதியில் அரண்மனையமைத்து நாட்டையாண்டு வந்தான். அரண்மனை அமைத்த இடத்திற்கு இரணியன்குன்று என்று பெயர். இப்பெயர் இன்று திரிபுபட்டு இரணியன்கொட்டு என்று வழங்கிவருகின்றது. இந்தச் சிங்கபூதரனும், மனைவி திருமங்கையும் அமைத்த கோவில்தான் திருமங்கலாய் சிவன் கோவில். இப்போது மிகவும்ள பழுதடைந்த நிலையிலிருக்கின்றது. ஆலயச் சிதைவுகளைத் தேடியெடுத்து ஒழுங்குபடுத்திப் பாதுகாத்தவர் திரு. க. செல்லத்துரைச் சுவாமியார். அன்னாருக்கு நாம் கடமைப்பட்டுள்ளோம். (இ. வ.)
திருகோணமலை ருநீ பத்திரகாளி அம்பாள் මෙg,6vuffD
இந்த ஆலயம் திருக்கோணமலைப் பட்டினத்தின் இருதய
ஸ்தானம்போல் அமைந்திருக்கின்றது. திருகோணமலைப் புகையிரத நிலையத்திலிருந்து ஒரு கிலோமீற்றர் தூரத்தில்
இந்துக் கலைக்களஞ்சியம்

பேருந்து நிலைத்திற்குச் சமீபத்தில் டொக்கியாட் வீதிக்கு அருகாமையில் உள்ளது. ஆலயத்திற்கெதிரே பரந்த விளையாட்டு மைதானமும், அதையடுத்து விரிந்து பரந்து கிடக்கும் இந்து சமுத்திரமும் இவ்வாலயத்திற்கு இயற்கையழகை ஊட்டிக்கொண்டிருக்கின்றன.
ஈழநாட்டின் தலைசிறந்த புண்ணிய ஷேத்திரமாகிய பாடல்பெற்ற திருக்கோணேஸ்வரத்தை இவ்வாலயத்தில் நின்றபடியே தரிசிக்கலாம். அம்பாளின் அருட்கடாட்சம் கோணேஸ்வரத்தில் படிய, கோணேஸ்வரப் பெருமானின் கிருபாகடாட்சம் அம்பாளுடைய ஆலயத்தில் நிறைந்து கொண்டிருப்பது போன்ற உணர்வு இவ்வாலயத்தில் நிற்கும்போது ஏற்படுகின்றது. ஆலயத்தின் உள்ளும், புறமும் எப்பொழுதும் புனிதமாகவேயிருக்கும். இது பூரீபத்திரகாளி அம்பாளின் அருட்செயலென்றே கூறலாம். இதனால் இவ்வாலயத்தைச் சிறப்பாகவும், புனிதமாகவும் வைத்திருப்பதில் ஆதீன கர்த்தருக்கும், அடியவர்களுக்கும் அக்கறை இருந்து வருகின்றது.
இவ்வாலயத்தின் வரலாறுகளைத் திட்டவட்டமாக வரையறுத்துக் கூறமுடியவுல்லை. என்றாலும் இவ்வாலயத்தில் கிடைத்துள்ள கல்வெட்டுக்கள், பழைய சாசனங்கள், கர்ண பரம்பரையாக வழங்கிவரும் கதைகள், அக்கதைகளோடு தொடர்புடையதாய் தற்போது ஆலயத்திலிருக்கும் விக்கிரகம், தகளி, வாகனம், மற்றும் பொருட்களாகியவற்றை ஆதாரமாகக் கொண்டு முதலாம் இராஜேந்திர சோழனுடைய காலமாகிய பதினோராம் நூற்றாண்டில் இவ்வாலயம் சிறப்புற்று இருந்திருக்க வேண்டுமென்று சரித்திர பேராசிரியர் செ. குணசிங்கம் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். இதனால் இவ்வாலயம் அதற்கு முற்பட்ட காலத்திலிருந்தே வழிபாட்டுக்குரிய ஸ்தலமாக இருந்துவந்துள்ள தென்பதைத் துணிந்து கூறலாம். தற்போது இவ்வாலயமிருக்கு மிடத்தில், பன்னெடுங்காலத்திற்கு முன்பு நிலத்தை அகழ்ந்போது ஒரு தகளி கிடைத்ததாகவும் அதற்குள்ளே அம்பாளின் திருவுருவம் (தாமிரவிக்கிரகம்) இருந்ததாகவும் கூறுகின்றார்கள். அந்தத் திருவுருவம் இப்போதும் ஆலயத்திலிருக்கின்றது. சில விசேஷ உற்சவங்களுக்கு இந்த அம்பாளை எழுந்தருளச் செய்வார்கள். சிங்கவாகனம் ஒன்றை இந்தியாவிலிருந்து கப்பலில் ஏற்றிக் கொண்டு இந்து சமுத்திரத்தில் அக்கப்பல் சென்று கொண்டிருந்ததாயும், பூரீ பத்திரகாளியம்பாள் ஆலயத்திற்கு நேராக இக்கப்பல் ஓடாமல் நின்றுவிட்டதாகவும் அம்பிகையின் அருளால் கப்பற்தலைவன் கண்ட சொற்பனத் தின்படி அந்தச் சிங்கவாகனத்தை இவ்வாலயத்திற் சேர்ந்த பின்னரே கப்பல் ஒடத் தொடங்கியதென்றும் கர்ணபரம்பரைக் கதையொன்று கூறப்படுகிறது. அந்தச் சிங்கவாகனமும் இவ்வா லயத்திலிருக்கிறது.
சுமார் நானூறு ஆண்டுகளுக்குமுன் நிகழ்ந்ததாகக் கூறப்படும் கர்ணபரம்பரைக் கதையொன்று பூரீ பத்திரகாளி அம்பாளிடத்துப் பயபக்தியை ஸ்திரப்படுத்திக் கொண்டிரு
5

Page 20
கின்றது. பண்டைக்காலத்தில் இவ்வாலயத்திலும், ஆலயச் சூழலிலும் அனாச்சாரமாக நடந்துகொள்வதற்கு மக்கள் பயப்படுவார்களாம். இன்றுமப்படித்தான். ஒருநாள் ஒரு யாவுகப் பெண் தலைவிரிகோலமொடு அம்பாளுடைய சந்நிதானத்திற்கு முன்பாக உதாசீனமாகச் சென்றளாம். அதனால் அப் பெண்ணினுடைய தலை ஒரு பக்கம் திரும்பி விட்டதாம் (கழுத்து வாங்கல்) அம்பாளுக்கு அபசாரம் செய்துவிட்டதாக அப்பெண் சொற்பனங்கண்டு குற்றத்தையுணர்ந்து ஆலயத்திற்கு வந்து தனது தலைமயிரைக் கத்தரித்து நேர்கடனாகக் கொடுத்த பின்புதான் தலையினைச் சரியான நிலைக்குத் திருப்பக் கூடியதாயிருந்ததாம். அந்தப் பெண் தனது தலைமயிரை நேர்கடனாகக் கொடுத்தாளாம். அதனைப் பாதுகாத்து வைத்திருந்து மகிஷாசூர சம்மாரம் நடைபெறும் போது அம்பாளுடைய சடைமுடியோடு சேர்த்துக் கட்டி அலங்கரிக்கும் வழக்கம் இருந்துவந்ததாம். அந்த மயிர்களில் ஒரு பகுதி இன்றும் இருப்பதாகக் கூறுகின்றார்கள்.
முன்னொருகாலத்தில் இவ்வாலயத்திற் பூசை செய்து கொண்டிருந்த குருக்கள் ஒருவர் இரவு பூசையை முடித்துக் கொண்டு திருக்கதவை அடைத்துக்கொண்டு வீட்டுக்குச் சென்று விட்டார். தனது பிள்ளை ஆலயத்தினுள்ளிருந்ததை அவர் காணவில்லை. வீட்டுக்குப்போய்ச் சாப்பாட்டுவேளையில் பிள்ளையைக் காண்ாமல் எங்கும் தேடிவிட்டு ஆலயத்திற்கு வந்து பார்த்தபோது பிள்ளை அங்கிருப்பதைக் கண்டு மனைவியிடம் கூறினாராம். பூசை முடிந்து கதவடைத்தபின் ஆலயத்தைத் திறப்பது சாஸ்திரவிரோதமானது. அதனால் காலையில் பார்க்கலாம் என்று கூற மனைவி ஏற்றுக்கொள்ளாமல் அடம்பிடித்தாளாம். அதனால் குருக்கள் ஆலயத்தைத் திறந்தபோது காவல்தெய்வமாகிய வைரவர் அந்தப்பிள்ளையை இரண்டாகக் கிளித்துப்போடுவதைக் கண்டாராம். அத்தகைய உக்கிரமூர்த்தியாகிய வைரவரை மந்திர, தந்திரக் கிரியைகளால் இடம்பெயர்த்து எங்கேயோ ஒரு மலையிற்கொண்டு போய் ஸ்தாபித்ததாக ஆலயக் குருக்கள் கூறுகின்றார். முன்னொருநாள் இவ்வாலயத்தினுள் சுருண்டு படுத்திருந்த ஒரு சர்ப்பத்தின் மேல் பெரிய பாரமான கிடாரமொன்றை கவலையீனமாகத் தூக்கி வைத்துவிட்டார்களாம். சர்ப்பம் அதனடியில் நசுங்கி இறந்துவிட்டது. அந்தச் சர்ப்பத்தின் சாபத்தால் இவ்வாலயத்தில் பூசைசெய்துவந்த அந்தணர் பரம்பரையில் ஏழு சந்ததிக்குப் பின்பே ஆண்குழந்தை பிறந்ததாம். அதற்கு முன்பெல்லாம் பெண்சந்ததியே தொடர்ந்து பிறந்திருக்கின்றது. இவ்வாலயத் திலிருந்த கட்டுத்தேருக்குப் பதிலாக 1972ஆம் ஆண்டு சித்திரத்தேர் மூன்றும் மஞ்சமும் செய்யப்பட்டு ரதோற்சவத்திற்குப் பயன்பட்டு வருகின்றன. கிழக்கிலங்கையில் முதன் முதலாக உருவாக்கப்பட்ட சித்திரத் தேர் இதுவாகும். 1981ஆம் ஆண்டு இந்தத் தேர்களைப் பாதுகாப்பதற்காக பெரும் பணச் செலவில் தேராலயம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
இவ்வாலயத்திற்கு ராஜகோபுரங்கள் மூன்று அமைப்பதற்கு உள்ளன. கருவறையில் சதுர்ப் புஜங்களையுடைய அம்பாளின்
6

சிலாவிக்கிரகம் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கின்றது. சூலம், டமருகம், கட்கம், கபாலம் தாங்கியதிருக்கரங்களோடு அம்பாள் பத்மாசனத்தில் அமர்ந்திருக்கின்றார். மகாமண்டபத்தில் பூரீ பத்திரகாளியம்பாள், விநாயகர், முருகன் தாளியில் கிடைத்த அம்பாள், ராஜராஜேஸ்வரி, சண்டேஸ்வரி என்னும் தாமிரவிக்கிரகங்களும் அந்த மண்டபத்தில் பிள்ளையாரும், வடக்குப்பக்கம் தண்டாயுத பாணியின் சிலாவிக்கிரகங்களும் வைக்கப்பட்டிருக்கின்றன. பங்குனி உத்தரத்தைத் தீர்த்தோற்சவ தினமாகக்கொண்டு பத்துநாட்கள் மகோற்சவம் நடை பெறுகின்றது. ஒன்பதாம் நாள் ரதோற்சவம் நடைபெற்று வருகின்றது. பங்குனி உத்தரத்தன்று அம்பாள் கோணேசப் பெருமான் எழுந்தருளியிருக்கும் கோணவரையின் அடி வாரத்திலுள்ள கடற்கரையில் அதிகாலையில் தீர்த்தமாடுவார். அன்று மக்கள்வெள்ளம் கடல்வெள்ளத்தை மறைத்து நிற்கும் அற்புதக் காட்சியைக் காணலாம்.
வைகாசிப் பெளர்ணமிக்கு முதல்வரும் திங்கட்கிழமை இவ்வாலயத்தில் பொங்கல் விழா நடைபெற்று வருகின்றது. திருக்கோணமலையில் எழுந்தருளியிருக்கும் பூரீ பத்திரகாளி யம்பாளுக்கும், திருக்கோணமலையிலிருந்தும் பத்தொன்பது கிலோமீற்றர் தூரத்திலுள்ள பாலம்போட்டாறு பத்தினியம் மனுக்கும், ஏழு கிலோமீற்றர் தூரத்திலிருக்கும் சல்லியம்மனுக்கும் ஏதோ ஒருவிதத் தொடர்பு பண்டுதொட்டு இருந்து வருகின்றது.
வைகாசிப் பொங்கல்
வைகாசிப் பூரணை வரும் தினம் எதுவோ அதற்கு முன்னர் வரும் திங்கட்கிழமை பூரீ பத்திரகாளி அம்பாள் கோவிலில் பொங்கலும், இந்தத்தினத்திற்கு முன்னர்வரும் திங்கட்கிழமை பாலம் போட்டாற்றுப் பத்தினியம்மன் கோவிற் பொங்கலும் இந்தத்தினத்தை அடுத்துவரும் வாரத்தில் செவ்வாய்க்கிழமை சல்லியம்மன் கோவில் பொங்கலும் நடைபெற்றுவருகின்றன. இந்த ஒழுங்கு பண்டுதொட்டு நடைமுறையிலிருந்து வருகின்றது. இதனால் வைகாசிமாதம் முழுவதும் திருக் கோணமலையில் சக்திவழிபாடு பக்திவெள்ளத்தில் மூழ்கியிருப் பதைக் காணலாம். பத்திரகாளியம்மன் பொங்கல் ஆலயத்தைச் சுற்றியுள்ள வீதியில் நடைபெறும். பொங்கலுக்குரிய இடம் பிடிப்பதில் மக்கள் ஒருவரை ஒருவர் முந்திக்கொள்வார்கள். அன்றிரவு ஆலயவீதி முழுவதும் யாகசாலைபோல் காட்சியளிக்கும். புகைமண்டலம் இருளை மூடி இருண்டுநிற்கும். அக்கிணிதேவன் வீதியெங்கும் பிரகாசித்துக் கொண்டிருப்பான். மக்கட்கூட்டம் வீதியில் எஞ்சியுள்ள இடங்களை மூடியிருப் பார்கள். அம்பாளின் பொங்கல் மண்டபவாசலில் வெளியில் நடைபெறும். அடியார்களின் பொங்கல் வீதியெங்கும் நடைபெறும். அம்பாளின் பொங்கற் பிரசாதமும், அடியார்களின் பிரசாதமும் தேவிக்குப் படைக்கப்பட்டு பூசைநடைபெற்றுப் பொங்கல் விழா நிறைவேறும். வெண்மணல் பரந்த வீதி காலையில் கரிக்குவியல்களால் மூடுண்டு கிடப்பதைக் காணலாம்.
இந்துக்கலைக்களஞ்சியம்

Page 21
நவராத்திரி
புரட்டாதிமாதப் பிரதமை தொடக்கம் ஒன்பது இரவுகளும் இயந்திரபூசை நடைபெற்று ஒன்பதாவது நாள் நவமியன்று மகிஷாசூர சங்காரம் (சூரன்போர்) நடைபெறும். முதல் மூன்றுநாள் துர்க்கைக்கும், அடுத்த மூன்று நாள் இலட்சுமிக்கும், அடுத்த மூன்று நாள் சரஸ்வதிக்கும் அலங்காரப் பூசைகள் நடைபெற்று திருவீதியுலாவும் நடைபெறும். பத்தாவது நாள் விஜயதசமியன்று கும்பம்சொரிந்து தீர்த்தோற்சவம் நடைபெறும்.
கும்பவிழா
திருக்கோணமலையில் நடைபெறும் கும்பவிழாவைப்போல் இலங்கையில் வேறு எங்காவது நடைபெறுவதாகத் தெரியவில்லை. இவ்விழா இந்த ஆலயத்திற்கு மாத்திரம் உரிய சிறப்பு விழாவல்ல. விஜயதசமியன்று திருக்கோணமலையில் பரவலாகக் கும்பவிழா நடைபெற்று வருகின்றது. எனினும் இவ்விடத்தில் இவ்விழாவைப்பற்றிக் குறிப்பிடுவது சாலவும் பொருத்தமுடையதெனக் கருதுகின்றேன். பிரித்தானியர் இலங்கையைக் கைப்பற்றி ஆட்சிசெலுத்திவரும் காலத்தில் திருக்கோணமலையில் கடற்படைத்தளம் அமைக்கும் வேலையை ஆரம்பித்தார்கள். அத்தளத்தில் வேலை செய்வதற்காக இந்தியாவிலிருந்து சீக்கியமக்களையும், பஞ்சாபியர்களையும் அழைத்துவந்திருந்தார்கள். ஸ்லாமிய மதவழிபாடுடைய பஞ்சாபியர்கள், தமது மத பக்தியினாலும், நம்பிக்கையினாலும் தங்கள் நாட்டில் கடைப்பிடித்துவந்த விழாக்களை இங்கும் ஆரம்பித்தார்கள். "பஞ்சா” எடுத்தல் என்பது அவ்விழா. சந்தனக்கூடுகட்டி (தேர்போல் அலங்கரித்து அமைப்பது). அதில் பஞ்சா என்ற சின்னத்தை வைத்து வீதிதோறும் கொண்டுசென்று பெருவிழாவாகக் கொண்டாடினார்கள். இவ்விழாவுக்குப் பல இடங்களிலுமிருந்து ஸ்லாமியர்கள் வந்து கலந்து கொள்வார்கள். பஞ்சா எனப்படும் விழா திருக்கோணமலையில் பல பள்ளிவாசல் களிலும் நடைபெற்றது. அவ்வவ்விடங்களிலிருந்து அழகாக அலங்கரிக்கப்பட்ட பஞ்சாக்கள் (கரகம்போல் முக்கோணவடிவில் கட்டுவது) குதிரைகள் பூட்டப்பட்ட வண்டிகளில், தற்போது இங்கு கும்பவிழா நடைபெறுவதுபோல வீதிகள் தோறும் கொண்டு செல்லப்படும். விழாமுடிவில் அந்தப் பஞ்சாக்களை வில்வ பத்திரிக் கோணேசர் கோவிலுக்கு அருகிலிருந்த குளத்திலே போடுவார்கள். இதனால் பிற்காலத்தில் அந்தக் குளத்திற்குத் தக்கியாக் குளம் என்று பெயர் வந்ததாம். பஞ்சாபியர் ஒப்பந்தம் முடிந்து தங்கள் நாட்டுக்குச் சென்றபின் இவ்விழா அருகிக்கொண்டே வந்து தொடர்ந்து நடைபெறாமல் மறைந்து விட்டது. இங்குள்ள இஸ்லாமியர்கள் அதனைத் தொடர்ந்து நடத்த விரும்பவில்லைப்போலும். பஞ்சாபியர்களைப்போல் இந்துக்களாகிய சீக்கியர்கள் கும்பவிழாவை நடத்தினார்கள். சீக்கியரால் ஆரம்பிக்கப்பட்ட கும்பவிழா அவர்கள் இந்த நாட்டை விட்டுச் சென்றபின்னரும் இங்குள்ள இந்துக்களால் தொடர்ந்து விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகின்றது. திருக் கோணமலை மாவட்டம் இந்துக்களின் குடியிருப்பாகப் பன்னெடுங்காலமாக இருந்து வருகின்றது. கோணேசப் பெருமானுடைய தெய்வீக அருள் இப்பிரதேசமெங்கணும்
இந்துக் கலைக்களஞ்சியம்

வியாபித்திருந்ததை ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்த ஞானசம்பந்தப் பெருமான் தேவாரத் திருப்பதிகத்தில் பாடியருளினார். “கோயிலும் சுனையும் கடலுடன் சூழ்ந்த கோணமாமலை’ என்பது அவருடைய திருவாக்கு. திருக்கோணமலையில் இந்துக் கோவில்கள் நிறைந்திருந்ததால் சீக்கியர் ஆரம்பித்த கும்பவிழாவை, அவர்கள் இந்த நாட்டைவிட்டுச் சென்ற பின்னரும் இங்குள்ள ஆலயங்கள் தொடர்ந்து நடத்தி வருகின்றன. ஆலயங்களிலிருந்து கும்பங்கள், கரகங்கள் அழகாக அலங்கரிக்கப்பட்டு பக்திபூர்வமாக, அதேவேளையில் போட்டி மனப்பான்மையுடன் வீதிகளில் வலம்வந்துகொண்டிருக்கும். ஒரு ஆலயத்துக்கும்பம் இன்னொரு ஆலயக்கும்பத்தை எதிர்ப்படாமல் (எதிர்ப்பு ஏற்படாமலிருப்பதற்காக) வீதிகளில் வலம்வரும். இந்தக் கும்பம் கரகங்களைத் தாங்கிவருபவர்கள் ராஜமேளம் அடிக்கப்படும் தாளத்திற்கமைய ஆடிக்கொண்டு வருவார்கள். உடுக்கடித்துக் காவியங்கள், காவடிச்சிந்துகள் பாடிக்கொண்டும் வருவார்கள். மங்களமேளங்களும் வாசிப்பதுண்டு. கும்பம், கரகங்களைத் தாங்கி வருவோர் உருவேறி ஆடுவதுமுண்டு. அருள் வாக்குகள் கூறுவதுமுண்டு. விஜயதசமியன்று இரவுபூராவும் இவ்விழா நடைபெறும். கும்பம் கரகங்களைப் பயபக்தியுடன் வரவேற்க மக்கள் தத்தம் வீட்டு வாசல்களில் நிறைகுடம் வைத்துக் காத்துக் கொண்டிருப்பார்கள். ஒவ்வொரு ஆலயத்திலுமிருந்து புறப்படும் கும்பம், கரகங்கள் மற்ற ஆலயங்களுக்குச் சென்று தரிசித்துக் கொண்டு மீண்டும் புறப்பட்ட இடத்தைப் போய்ச் சேர்வதுடன் இவ்விழா நிறைவுபெறும். கும்பம் எனப்படுவது பெரிய செப்புக் குடத்தில் வேப்பம் பத்திரத்தினால் அகலமான அடித்தளம் அமைத்து சுமார் பத்தடி உயரத்திற்கு தேர்போல மலர்களாலும், வர்ணக் காகிதங்களாலும் அலங்கரித்துக் கட்டப்படுவது. கும்பத்தின் அடிப்பாகம் அகன்று மேலே போகப் போக ஒடுங்கியும் செல்லும். கரகம் செப்புக்குடத்தில் அம்பாளின் முகபடாம் வைத்து வேப்பம் பத்திரத்தினால் கட்டப்படுவது எல்லா ஆலயங்களிலுமிருந்து புறப்படும் கும்பம் கரகங்கள் தத்தம் கோஷ்டிகளுடன் பூரீ பத்திரகாளியம்பாள் ஆலயத்திற்கு வந்து தரிசிப்பார்கள் இவைகளைப் பார்ப்பதற்காக இவ்வாலயத்தில் மக்கள் திரளாகக் கூடிநிற்பார்கள். அன்று இவ்வாலயத்தில் “மானம்பு” திருவிழாவும் நடைபெறும், அம்பாள் ஆலயத்திற்கு எதிரேயுள்ள மைதானத்தில் மானம்புத் திருவிழாவுக்காக எழுந்தருளுவார். அவ்விடத்தில் கோணேசர் கோவிலிலிருந்து மாதுமையம்பாளும், சிவன் கோவிலிலிருந்து விசாலாட்சுமி யம்பாளும் வந்து மானம்பு விழா நடத்திச் செல்வர். இதுவும் இந்துக்களுக்கு ஒருவாய்ப்பான சமய நிகழ்ச்சியாக நடைபெற்று வருகின்றது.
இலட்சார்ச்சனை
இவ்வாலயத்தில் கும்பாபிஷேகம் நடைபெற்ற திதிக்கு வருடா வருடம் சங்காபிஷேகம் செய்வார்கள். சங்காபிஷேகத்திற்கு முன்னுள்ள பத்து நாட்களும் இலட்சார்ச்சனை நடைபெற்று மறுநாள் சங்காபிஷேகம் நடைபெறுகின்றது. அம்பிகையின் ஆயிரத்தெட்டு நாமங்களை பீஜமந்திரத்தோடு உச்சரித்து ஐந்து
7

Page 22
சிவாச்சாரியார்கள் ஒரு நாளைக்கு இரண்டு தரம் பத்து நாட்களுக்கு அர்ச்சனை செய்து இலட்சார்ச்சனையை நிறைவு செய்வார்கள்.
கேதாரகெளரி விரதம்
புரட்டாதிமாத விஜயதசமியன்று இவ்விரதம் ஆரம்பிக்கப்பட்டு ஐப்பசிமாத அமாவாசிதிதியில் இவ்விரதம் நிறைவு பெறுகின்றது. இருபத்தொரு நாட்களுக்கு அனுட்டிக்கப்படும் இவ்விரதம் திருக்கோணமலை பூரீ பத்திரகாளியம்பாள் ஆலயத்தில் கடந்த நூற்றி ஐம்பது வருடங்களாகக் கடைப்பிடிக்கப்பட்டுவருகின்றது. இலங்கையின் பல பாகங்களிலுமிருந்து இவ்விரதத்தை அனுட்டிக்க ஆயிரக்கணக்கில் மக்கள் இங்கு வந்து கூடுவார்கள். அம்பிகையின் அற்புதமான அருட் பலத்தால் வருடாவருடம் இவ்விரதத்தை அனுட்டிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டு வருகின்றது. ஆண்கள், பெண்கள், சிறுவர், சிறுமியர் அனைவரும் இவ்விரதத்தை அனுட்டிக்கலாம். ஆதலால் ஒவ்வொரு வருடமும் ஐயாயிரத்திற்கு மதிகமானோர் இவ்வாலயத்தில் வந்திருந்து இவ்விரதத்தை அனுட்டிப்பார்கள். இவ்விரதத்தை அனுட்டிப்பவர்கள் தரிப்பதற்குரிய விரதநூலும், வகைக்கு இருபத்தொன்றாக பழம், பாக்கு, வெற்றிலை, மஞ்சள், பூ பலகாரம் என்பனவும், தேங்காய், விபூதி, குங்குமம் என்பனவும் அடங்கிய பூசைப் பெட்டிகள் அடுக்கி வைக்கப்பட்டு அலங்காரப் பூசை நடைபெறும், பூசை முடிவில் இவ்விரதத்திற்காக முன்னரே பதிவு செய்து கொண்டவர்களை அழைத்துப் பூசை பெட்டிகள் வழங்குவார்கள். தனியாக விரத நூலைமாத்திரம் பெற்று இவ்விரதத்தை அனுட்டிப்பவர்களுமுண்டு. ஆலயத்தில் தங்கியிருந்து விரதமனுட்டிப்பவர்களுக்கு அடுத்தநாள் பாரணைப் பூசையும் செய்து அனுப்புவார்கள்.
6. 3.80 இல் நடைபெற்ற கும்பாபிஷேகத்தின் ஆனி உத்தரத் திருவிழாவும் தொடர்ந்து பத்துத் தினங்களுக்கு நடைபெற்று வருகின்றது. சிவராத்திரியைத் தொடர்ந்து நடைபெறும் கோணேசர் ஊர்வலத்தில் மாதுமையம்பாள் சமேத கோணேசப் பெருமான் பூரீ பத்திர காளியம்பாள் ஆலயத்தில் ஒரு நாள் தங்கியிருப்பார். கோணேசப்பெருமானை இவ்வாலயத்தின் ஆதீனகர்த்தரும் அடியார்களும் சோடசோபசார மங்களச் சின்னங்கள் புடைசூழ மங்களவாத்தியங்களோடு வரவேற்று ஆலயத்திற்கு எழுந்தருளச் செய்து பூசை முதலியன முடித்து மாலையில் மங்களவாத்தியம் முழங்க வீதியுலாவுக்கு அனுப்பி
வைப்பார்கள்.
பண்டைக்காலம் தொடக்கம் இன்றுவரை பூரீபத்திர காளியம்பாளின் திருவருளால் இவ்வாலயத்தில் பல அற்புதங்கள் நடைபெற்று வந்துள்ளன. இவற்றினால் மக்களிடம் பயபக்தி வளர்ந்துகொண்டு வருகின்றது. இதனால் பக்தியோடு வழிபடும் அடியார்கள் அம்பிகையின் கிருபாகடாட்சத்தால் எண்ணியன எண்ணியாங்கெய்தி இன்புற்று வாழ்கின்றார்கள். இவ்வாலயத்தில் குறித்த குறித்த நேரத்தில் பூஜை, திருவிழாக்கள் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்க சிறப்பம்சமாகும். (இ. வ.)
8

திருச்சாய்காடு
சோழநாட்டு வடகரைத் தலம். ஞானசம்பந்தர், அப்பரால் பாடல் பெற்ற தலம். பைங்காய் என்னும் கோரை மிகுந்திருந்த தலம் ஆதலின் சாய்க்காடு என்று பெயர் பெற்றதென்பர். காசிக்குச் சமமாகச் சொல்லப்படும் ஆறு தலங்களில் இதுவும் ஒன்று (ஏனையவை திருவெண்காடு, மயிலாடுதுறை, திருவிடைமருதூர், திருவையாறு, திருவாஞ்சியம்). இயற்பகை நாயனார் இத்தல எல்லைவரை தனது மனைவியை அழைத்து வந்து இறைவனுடன் அனுப்பி வைத்தார் என்பது வரலாறு.
சீர்காழி - பூம்புகார்ச் சாலையில் இத்தலம் உள்ளது. உபமன்யு முனிவர், இந்திரன், ஐராவதம், இயற்பகை நாயனார் ஆகியோர் வழிபட்டதும் பேறு பெற்றதுமான தலம். இறைவன் - சாயாவனேஸ்வரர், இரத்தினச்சாயவனேஸ்வரர். இறைவி - கோஷாம்பாள், குயிலினும் நன்மொழியம்மை. தலவிருட்சம் - பைஞ்சாய். தீர்த்தம் - காவிரி, ஐராவத தீர்த்தம்.
மிகப் பழைமையான இத்தலத்தைப் பற்றிய செய்திகள் அகநானூற்றில் இடம் பெற்றுள்ளன.
"நெடுங்கதிர்க்கழனித்தண் சாய்க்கானம்”
"செந்நெலஞ்செறுவின் அன்னந்துஞ்சும் பூக்கெழு படப்பைச் சாய்க்காட்டன்ன”
என்னும் அகநானூற்றுப் பாடல்கள். இத்தலத்தின் பழமையைப் பறைசாற்றி நிற்கின்றன.
கோயில் முகப்பு வாயிலைக் கடந்ததும் கொடிமரத்து விநாயகர் உள்ளார். ஆயினும் கொடிமரம் இல்லை. மாடக் கோயிலாதலின் நந்தி உயரத்தில் உள்ளார். வெளிப்பிராகாரத்தில் சூரியன், இந்திரன், இயற்பகை நாயனார் துணைவியாருடன் உள்ள சந்நிதிகள் உள்ளன. விநாயகர், சுப்பிரமண்யர், கஜலட்சுமி, உயர்ந்த பீடத்தில் பைரவர், நவக்கிரக சந்நிதி ஆகியன உள்ளன. வலம் முடித்து படிகள் ஏறி மண்டபத்தை அடைந்தால் வலப்பால் பள்ளியறையும் பக்கத்தில் அம்பாள் சந்நிதியும் உள்ளன. இக்கோயில் தனியே வைக்கப்பட்டுள்ள பஞ்சலோகத்தினால் ஆன வில்லேந்திய பஞ்சலோகத்திருமேனி மிகச் சிறப்புடையது. நான்கு கரங்களுடன் வில்லேந்திக் கம்பீரமாக வேலவர் உயர்ந்த மயிலுடன் காணப்படுகின்றார். இவை நெடுங்காலத்திற்கு முன்பு கடலில் கிடைத்ததாகச் சொல்லப்படுகிறது.
சுவாமிசந்நிதி வாயிலின் இருபுறமும் தலப்பதிகக் கல்வெட்டுக்கள் உள்ளன. சந்நிதி வாயிலின் மேற்குப் பக்கத்தில் இயற்பகை நாயனாருக்கு இறைவன் அருள் செய்த காட்சி சித்திரமாகத் தீட்டப்பட்டுள்ளது. கருவறையில் மூலவர் சதுர ஆவுடையாரில் குட்டையான பாணத்துடன் சிவலிங்கத் திருமேனியாக அமர்ந்துள்ளார். மூலவருக்கு வடபகுதியில் நடராஜ சபை உள்ளது. திருப்பனந்தாளில் பூரீ காசி மடத்தின் திருமுறை விண்ணப்பத்திற்கான கட்டளை 1964ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்டிருப்பதாகக் கல்வெட்டு ஒன்று பதியப்பட்டுள்ளது.
இந்துக் கலைக்களஞ்சியம்

Page 23
இந்திரவிழா சித்திரா பெளர்ணமியில் 21 நாட்கள் நடைபெறுகிறது. ஆடி, அமாவாசையில் அன்னமளிப்பு, சித்திரை, வைகாசி மாதங்களில் இயற்பகை நாயனாருக்கு ஐந்து நாள் விழா, அதில் நான்காம் நாளிரவு இறைவன் காட்சி கொடுக்கும் ஐதீகம் முதலிய சிறப்பு விழாக்களும் நடைபெறுகின்றன. தினம் நான்கு வேளைப் பூசை நடைபெறுகின்றது.
"போய்க்காடே மணந்துறைதல் புரிந்தானும் பூம்புகார்ச் சாய்க்காடே பதியாக உடையானும் விடையானும்” எனச் சம்பந்தர் பெருமானும்,
'o 99 "சாடினார் காலன் மாளச் சாய்க்காடு மேவினாரே
என்று அப்பர் பெருமானும் இவ்வூர் இறைவனைப் புகழ்ந்து பாடியுள்ளனர். (நி.நி.)
திருச்சிராப்பள்ளி
தமிழகத்தின் பெரிய நகரங்களில் ஒன்றாக விளங்கும் திருச்சிமா நகரில் நடுநாயகமாக அமைந்து விளங்குவது. சிராமலை அல்லது சிராப்பள்ளிக் குன்று எனப்படும் மலைக் கோட்டையாகும். இங்கே இயற்கையாக அமைந்த அகழிபோல் காவிரியாறு விளங்குகிறது. நெடுந்தூரத்திலிருந்தே வருகை தருபவர்களைக் காணக்கூடிய அரிய மலையாக இத்திருச்சிராப் பள்ளி விளங்குகிறது. இம்மலைக்கு திரிசிராமலை, திரிசிரபுரம், திருசிரகிரி, மூத்தமலை, பிரமகிரி, தட்சிண கைலாயம் என வேறுபல பெயர்களும் உண்டு.
இச்சிராப்பள்ளி மலையின் தோற்றம் பற்றி பல காரணங்கள் கூறுவர். ஆதியிலே “திரிசிரன்’ என்ற அசுரன் அரசாண்டு சிவனை வழிபட்டு வரம் பெற்ற இடம் என்பதால் இப்பெயர் வரப்பெற்றது என்றும், திரி என்றால் மூன்று என்றும் மூன்று சிகரங்களை உடைய மலை என்பதால் “திரிசிரபுரம்” என்றும் கூறுவர். “பள்ளி’ என்றால் இறைவன் உறையும் இடம் எனப் பொருள்படும். எனவே "திருச்சிராப்பள்ளி’ என மருவி நிலைத்ததாகவும் கூறுவர்.
இவ்வாறு பல கதைகள் கூறப்பட்டாலும் புராண வரலாறு ஒன்றும் இதற்கு உண்டு. முன்பொரு சமயம் வாயு தேவனுக்கும் ஆதிசேடனுக்கும் யார் வலிமை மிக்கவர் என்னும் போட்டி ஏற்பட்டது. அவர்கள் இருவரும் தங்கள் வலிமைக்குப் போட்டியாக மேருமலையின் ஆயிரம் சிகரங்களையும் ஆதிசேடன் தனது ஆயிரம் திரு முடிகளால் மூடிக்கொள்ளுதல் வேண்டும் என்றும் தன் வலிமையினால் வாயு ஏதேனும் ஒரு சிகரத்தைப் பெயர்த்து எடுக்க வேண்டும் என்பதும் போட்டி போட்டியில் ஆதிசேடன் தன்னுடைய மணி முடியினால் மேருவை நன்றாக மூடிக்கொள்ள வாயு தன்னுடைய முழுப் பலத்தையும் பயன்படுத்தியும் சிகரத்தைப்
இந்துக் கலைக்களஞ்சியம்

பெயர்க்க முடியாது போனதால் செயலற்று நிற்க உயிர்கள் எல்லாம் உயிர்ப்பின்றித் தவித்தன. ஆதலால் தேவர்கள் ஆதிசேடனிடம் சென்று வேண்டினர். ஆதிசேடன் தனது சிரசைச் சற்றுத் தூக்க அவ்வேளை வாயு மேருவினின்று மூன்று சிகரங்களை எடுத்து வீசினான். அந்த மூன்றில் ஒன்றே மலைக்கோட்டை திருச்சிராப்பள்ளியாகும் என தலபுராணம் கூறுகிறது.
பழங்காலம் தொட்டுப் புகழ்பெற்று விளங்கும் திருச்சிராப் பள்ளியில் நடுநாயகமாக அமைந்து விளங்குவது “சிராமலை” ஆகும். இங்கே காவிரிக்கும் அருகே ஒரு பாறையிலான தாயுமானவர் மலையும், மலை அடிவாரத்தின் தென்புறம் மாணிக்க விநாயகர் திருக்கோயிலும், உச்சியில் உச்சிப் பிள்ளையார் கோயில் என 3 பகுதிகளை உடையது. இம்மலையின் அடிவாரத்தில் விநாயகர் கோயில் ஒன்று உள்ளது. இது மாணிக்க விநாயகர் கோயில் என அழைக்கப்படுகிறது. இவ்வாலயம் உச்சிப் பிள்ளையார் கோயிலுக்கு மலையேறிச் செல்ல இயலாதவர் களுக்காக சில நூற்றாண்டுகளுக்கு முன்னர் எழுப்பப் பெற்றதாகும். இங்கு வீற்றிருக்கும் மாணிக்க விநாயகர் எந்நேரமும் சந்தனக் காப்புடனும் வெள்ளிக் கவசத்துடனும் காட்சி தருகிறார். மாணிக்க விநாகரைத் தொழுது வலம் வந்து படியேறிச் சென்றால் நாம் தாயுமான சுவாமி சந்நிதியை அடையும் முன்னர் பூரீ மெளன சுவாமிகள் கட்டளை மடம் வருகின்றது. அதனைக் கடந்து மேல் ஏறும்போது நூற்றுக்கால் மண்டபத் தையும் அதைத் தொடர்ந்து ஏறிச் சென்றால் மலையின் மத்தியில் தாயுமானவர் திருக்கோயிலையும் அடையலாம்.
தாயுமானசுவாமி கோயில், மலையைக் குடைந்து கற்பாறைகளின் மீது கற்சுவர்களைக் கோட்டை மதில் போன்று எழுப்பி கீழ் மேல் என இரு மாடங்களுடன் கட்டப்பட்ட ஆலயமாகும். உட்புறத்தில் கற்பக்கிரகத்தில் மூலவர் பெரிய பருத்த சிவலிங்கத் திருமேனியுடன் காட்சி தருகிறார்.
அர்த்த மண்டபத்தில் பித்தளைக் கவசமிடப்பட்ட நந்தி பலிபீடம், கொடிமரம் உள்ளன. கீழ் மாடத்தில் வடகிழக்குப் பகுதியில் கருவறை விமானத்தை வெகு அருகில் நின்று வழிபடக் கூடியவகையில் அமைந்துள்ளது. இவ்வாலயத்தின் திருச்சுற்று மண்டபத்தின் நுழைவாயிலில் சுவாமி கருவறையின் பின்புறம் உள்ளது. மேற்குப் புறத்தில் செவ்வந்தி விநாயகர் கிழக்கு நோக்கிக் காட்சி தருகிறார். வடக்குப் புறமாக முத்துக்குமார சுவாமி, நடராஜர் உற்சவத் திருமேனிகள் தெற்கு நோக்கி எழுந்தருளப் பெற்றுள்ளன.
கீழ் மடத்தில் உள்ள அம்மன் கோயிலுக்குச் செல்லும் வழியில் திருமகளின் தனிக் கோயில் உள்ளது. கீழ் மடத்தில் அம்பாள் கருவறையில் மட்டுவார் குழலியம்மன் வீற்றிருக்கிறார். இவர் நான்கு திருக்கரங்களுடன் நின்ற திருக்கோலத்தில் மேற்கு நோக்கிக் காட்சி தருகிறார். இத்திருச் சுற்றிலே சண்டேசுவரர்,

Page 24
பள்ளியறை முதலான பல சந்நிதிகள் உள்ளன. இங்கு நவக்கிரக மேடையில் சூரியன் தம் தேவியருடன் நடுவிலும் அவரை நோக்கிய மற்றக் கிரகங்களும் எழுந்தருளப் பெற்றுள்ளன.
மலைக்கோட்டையின் மேற்கில் சோமரோன தீர்த்தம் என்ற பெயரில் நீராழி மண்டபம், நடுமண்டபம் இவற்றுடன் கூடிய தெப்பக் குளமும் உள்ளன. மலையடிவாரத்தின் தென்புறத்தே குகைக்கோயில் ஒன்று உள்ளது. இது மிகப் பழமையானது. இதன் வடபுறச் சுவரில் தெற்கு நோக்கி கணேசர், சிவபெருமான், அம்பாள், பிரம்மதேவர், சூரியன் முதலான சிற்ப உருவங்கள் செதுக்கப்பட்டுள்ளன. குகையின் மேற்குப் புறத்தில் ஆலயத்தில் சூனியமான கர்ப்பக்கிரகம் ஒன்று உள்ளது. இக்குகைக் கோயில் சிற்பக்கலை மலிந்த இடமாகத் திகழ்கிறது. இங்குள்ள கங்காதரர் சிற்பம் என்பது சிவபெருமானே நேரில் நின்று காட்சி அளிப்பது போல் உள்ளது. மகுடத்தினின்று பிரவகிக்கும் கங்கையைத் தாங்கிய வண்ணம் உள்ளது. இக்காட்சி ஒரு கரத்தில் உருத்திராக்க மாலையும், மற்றொரு கரத்தில் பூனூலும் அணிந்து கொண்டு இரு நாகத்தின் தலையும் இருக்கின்றன. கீழே நான்கு அடியார்கள் துதி செய்த வண்ணம் உள்ளனர். இவ்வாறு பல திறப்பட்ட சிற்பங்களை இங்கு காணலாம்.
இக்கோயிலின் சித்திரங்களும் சிறப்பானவை. இத்தலத்தில் வீற்றிருக்கும் இறைவன் தாயுமான சுவாமிகள் என அழைக்கப்படுவதற்கான காரணம் அழகிய சித்திரமாக எழுதி இருப்பது குறிப்பிடத்தக்கது.
இவ்வாலயம் பற்றிய தலபுராணங்கள் பல உள்ளன. இத்தலத்தில் வீற்றிருக்கும் இறைவனைத் தாயுமான சுவாமிகள், மாத்ருபூதேசுவர் என்று அழைப்பதற்கு காரணமான ஒரு வரலாறு உள்ளது. இறைவனிடம் மட்டற்ற பக்தி கொண்ட இரத்தினவதி என்னும் பெண் கருவுற்று மகப்பேறு அடையும் காலத்தில் காவிரியில் வெள்ளம் ஏற்பட இரத்தினவதியின் தாய் பிரசவம் பார்க்க வரமுடியாத நிலை ஏற்பட்டது. அப்போது இறைவன் அப்பெண்ணின் தாய் போன்று உருமாறி அப்பெண்ணுக்கு சுகப் பிரசவம் அடையச் செய்து மறைந்தார்; பின்னர் இரத்தினவதியின் தாய் அங்கு வந்து சேர்ந்தவுடன் உண்மையை அறிந்த இரத்தினவதி தனக்கு மருத்துவம் பார்த்தது இறைவன் எனத் தெரிந்து அவரது கருணையைப் போற்றி வணங்கினார். இதன் காரணமாக இங்குள்ள இறைவனுக்கு “தாயுமானவர்” என்ற திருப்பெயர் வழங்கப்பட்டு வருகிறது. தாய்க்கு ஒப்பானவராகவும் மேலானவராகவும் விளங்கும் இறைவன் இங்கு வீற்றிருக்கிறார்.
இங்குள்ள இறைவி மட்டுவார் குழலியம்மை சிவபெருமானை வழிபடவும் திருமணம் செய்து கொள்ளவும் விரும்பி இத்தலத்தில் ஒரு தாமரை மலரில் சிறிய பெண் குழந்தை வடிவம் கொண்டு தோன்றி கார்த்தியாயன முனிவரால் வளர்க்கப்பட்டு வந்தார் என்றும், இச்சிறுமியின் கூந்தல்
10

இயல்பாகவே நறுமணம் வீசியதால் மட்டுவார் குழலி என அழைக்கப்பட்டார் எனவும், இவர் உரிய பருவம் அடைந்ததும் சிவகங்கை என்னும் தீர்த்தத்தில் மூழ்கிப் பக்கத்தில் உள்ள சுயம்புவாய்த் தோன்றிய இலிங்கத்தை வழிபட்டுத் தவம் புரிந்து சிவனைத் திருமணம் செய்து கொண்டார் என்றும் தலபுராணம் கூறுகிறது.
இங்குள்ள இறைவன் மேற்கு நோக்கி அமர்ந்து இருப்பதற்கு தலவரலாறு ஒன்று உள்ளது. சாரமா முனிவர் நந்தவனம் அமைத்து செவ்வந்தி மலர்களால் இறைவனை நாளும் அர்ச்சித்து வந்தார் எனவும், ஒரு வணிகன் அவருடைய நந்தவனத்துப் பூக்களைத் திருடி உறையூர் இராணியிடம் விற்று வந்தார் என்றும் அதனை முனிவர் மன்னனிடம் முறையிட அதுவரை கிழக்கு நோக்கி இருந்த இறைவன் திரும்பிக் கண்விழித்தார் என்றும், இதனால் மேற்கில் இருந்த உறையூரிலும் சுற்றுப் புறத்திலும் மண்மாரி பொழிந்தது என்றும் அன்று முதல் சுவாமி மேற்கு நோக்கியே காட்சி தருகிறார் என்பதும் ஐதீகம். சாரமா முனிவர் செவ்வந்திமரத்தினை நாகலோகத்திலிருந்து கொண்டு வந்து சிவனைப் பூசிக்கப் பயன்படுத்தினார் என்பதால் இறைவனுக்கு செவ்வந்தி நாதரெனவும், இந்நகரை செவ்வந்தி நகர் என்றும் அழைக்கும் வழக்கம் உள்ளது.
இவ்வாறு சிறப்புப் பெற்ற இவ்வாலயத்தை ஆதியில் பல்லவ மன்னனான மகேந்திர வர்மன் அமைத்தான் என்கிறது வரலாறு ஆதியிலே சமண முனிவரான “சிரா” என்ற சமணத் தலைவரின் பள்ளியாக விளங்கிய இவ்விடத்தை மகேந்திர வர்மன் என்னும் இப்பல்லவ மன்னன் சமண சமயத்தில் இருந்து சைவ சமயத்துக்கு திருநாவுக்கரசரின் அற்புதங்களில் கவரப்பட்டு அவரின் பக்தியின் தன்மையை உணர்ந்து சைவத்தை தழுவிய போது சமணப் பள்ளியாக விளங்கிய இவ்விடத்தை சைவாலயமாக மாற்றினான் என்றும், சிவன் கோயிலாக எடுப்பித்தான் என்றும் கூறுகிறது வரலாறு. தினம் ஆறுகால பூசை நடைபெறும் இவ்வாலயத்தில் பங்குனிப் பெருவிழா பத்து நாட்களும், சித்திரை பெருவிழா 14 நாட்களும் இடம் பெற்று வருகின்றன. விநாயகர் சதுர்த்தி, கந்தர்சஷ்டி , ஆருத்திரா தரிசனம், நவராத்திரி, சிவராத்திரி போன்ற விரதங்களும், விழாக்களும் சிறப்பாக இடம் பெற்று வருகின்றன.
இங்குள்ள தீர்த்தம் சிவகங்கை, காவிரி, சோமரோகண தீர்த்தம் என அழைக்கப்படுகிறது. இத் தீர்த்தம் சிறப்பு வாய்ந்தது. புரட்டாசிப் பெளர்ணமியில் சிவகங்கை தீர்த்தத்தில் மூழ்கித் தும்பை மலரைச் சூட்டி வணங்குவோர் நல்வாழ்வு பெறுவர் என்பது நம்பிக்கையாகும்.
இவ்வாலயத்தில் பங்குனி மாதத்தில் 23 தொடக்கம் 25 வரையிலான திகதிகளில் இறைவன் மீது மாலைச் சூரியனின்
ஒளிக்கதிர்கள் படும் அற்புதக் காட்சியைக் காணலாம்.
இந்துக் கலைக்களஞ்சியம்

Page 25
அகத்தியர், அனுமன், இந்திரன், அருச்சுனன், இராமர், உமாதேவி, சப்த கன்னியர், சப்தரிஷிகள் சூராவாத்த சோழன், திரிசிரன், பிரம்மன், ஜடாயு, தாயுமானவர், இரத்தினாவதி முதலியோர் இத்தலத்தினைச் பூசித்துப் பேறு பெற்றனர்.
இம்மலையின் உச்சியில் உச்சிப் பிள்ளையார் கோயில் உள்ளது. விபீஷணனிடமிருந்து திருவரங்க நாதனை வாங்கி பூரீரங்கத்தில் வைத்து விட்டு இம்மலையில் விநாயகர் ஏறி உச்சியில் அமர்ந்தார் என்கிறது கர்ணபரம்பரைச் செய்தி ஒன்று. அந்த விநாயகரே இங்குள்ள உச்சிப்பிள்ளையார் ஆவார்.
இத்தலம் தேவாரப் பாடல் பெற்ற தலமாக விளங்குகிறது. திருஞானசம்பந்தர் கூட,
'நன்றுடையானைத் தீயதிலானை நரை வெள்ளே
றொன்றுடையானை யுமையொருபாக முடையான்ைச் சென்றடையாத திருவுடையானைச் சிராப்பள்ளிக் குன்றுடையானைக் கூற என்னுளங் குளிருமே”
எனப் பாடியுள்ளார். திருஞானசம்பந்தர் இவ்வாலயம் பற்றி ஒரு பதிகமே பாடியுள்ளார். இதுமட்டுமன்றி திருநாவுக்கரசர் திருக்குறுந்தொகையில் “தாயுமாயெனக் கேதலை.” என்று ஆரம்பிக்கும் பாடலைப் பாடியுள்ளார். மாணிக்கவாசகப் பெருமான் “சிராப்பள்ளி மேவிய சிவனே போற்றி 'என்கிறார். ஐயடிகள் காடவர்கோன் அடிகளார் “கழிந்தது நென்னற்று கட்டவிட்டு நாறி”. என ஆரம்பித்து “கொண்டு போ என்னா முன் நெஞ்சே சிராமலையான் பாதமே சேர்’ என உருகுகிறார். இத்தலத்தின் தலபுராணத்தை சைவ எல்லப்ப நாவலர் அவர்கள் செவ்வந்திபுராணம் எனப் பாடியுள்ளதும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.
இவ்வாறு மூர்த்தி, தலம், தீர்த்தம் மூன்றிலும் சிறப்புடையது இவ்வாலயம். இவ்வாலயத்தின் லிங்கம் ஆவுடையாரிலும் பெரியது என்பதால் லிங்காதீஸ் தலம் என்றும் அழைக்கப்படுகிறது.
திருச்சி மாநகரில் மலைக் கோட்டையின் நடுவில் அமைந்துள்ள திருச்சிராப்பள்ளி ஆலயம் புராணம், வரலாறு, இலக்கியம் ஆகிய பல்வகையிலும் சிறப்புற்று விளங்குகிறது. இது மட்டுமன்றி தமிழகத்தின் நடுநாயகமாக விளங்கும் முக்கிய நகரங்களின் ஒன்றான திருச்சியில் அமைந்து விளங்குவதும் சிறப்பாகக் குறிப்பிடத்தக்க விடயமாகும். (சா. வி.)
திருச்சிற்றேமம்
சோழ நாட்டுத் தலம். அரிச்சந்திர நதியின் வடபால்
உள்ள தலம். ஊர் அருகில் செண்பக நதி உள்ளது. பிரம்ம ரிஷிச் சித்தர்கள் வழிபட்ட தலம்
இங்கு எழுந்தருளியிருக்கும் இறைவன் பெயர் சுவர்ணஸ் தாபனேஸ்வரர், பொன்வைத்தநாதர், இறைவி அகிலாண்
இந்துக்கலைக்களஞ்சியம்

டேஸ்வரி, தலமரம் அத்தி. தீர்த்தம் சுவர்ண புஷ்கரணி. சம்பந்தப் பெருமானால் பாடப்பெற்ற தலம்.
கோயில் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. அழகிய ராஜ கோபுரமும் உண்டு. முத்தரசபுரத்தை ஆண்டு வந்த மன்னனுக்கு இவ்வழியாக நாள்தோறும் பாற்குடம் செல்வது வழக்கம். சில நாட்களில் குறிப்பிட்ட இடத்தில் பாற்குடம் விழுந்து உடையலாயிற்று. அரசன் அவ்விடத்தை வெட்டிப் பார்க்க சிவலிங்கத் திருமேனி கண்டான். அவ்விடத்தில் கோயில் எழுப்பினான் என்பது வரலாறு. இதற்கு அடையாளமாக சிவலிங்கத்தின் மீது வெட்டுக் காயம் உள்ளது.
தலவரலாறு
இவ்வூரில் வாழ்ந்த சங்கரன் செட்டியார் என்பவர் வியாபார நிமித்தம் வெளியூர் சென்றிருந்தார். அவ்வேளையில் அவரது மனைவி கருவுற்றிருந்தார். சிவப்பற்று மிக்குடைய செட்டியார் மனைவிக்கு இறைவன் நாள்தோறும் பொற் காசு வைத்துவர அவள் அதை விற்று வாழ்வு நடத்தி வந்தாள். பேறு காலம் நெருங்கியவுடன் அம்மாது இறைவனிடம் வேண்ட அகிலாண்டேஸ்வரியே தாயாக வந்து பேறுகாலத்தில் உதவி புரிந்தாள். செட்டியார் ஊர் திரும்பிய போது ஊரவர்கள் அப் பெண்ணைப் பற்றி தவறான கதைகளைக் கூறினர். இதனால் மனமுடைந்த செட்டியார்மனைவி இறைவனிடம் மன்றாடி வேண்ட இறைவன் கோயிற் கதவைத் தானே திறக்கச் செய்தும், அத்திமரத்தை இடம் பெயர்ந்து முன்புறம் வரச் செய்தும், நந்தி தேவரை பலிபீடத்திற்குப் பின் போகச் செய்தும் - பல அற்புதங்களைச் செய்து பெண்ணின் கற்பை ஊரறியச் செய்தார். செட்டிப் பெண்ணுக்கு பொன் நிறுத்துக் கொடுத்த இடம் பொன்னிறை என்னும் பெயரைப் பெற்றது.
இக்கோயிலில் உள்ள தேன்கூடு வியப்பானது. இது பற்றியும் ஒரு செய்தி உள்ளது. நாடொறும் அர்த்த சாமத்தில் வழிபட்டு வந்த பிரமரிஷி ஒரு நாள் காலம் தாழ்த்தி வர ஆலயக் கதவு மூடப்பட்டு விட்டது. அப்போ அவர் தேனி உருக்கொண்டு உள்ளே சென்று பெருமானை வழிபட்டு அங்கேயே வசிக்கத் தொடங்கினர் என்பர்.
இங்கு எழுந்தருளியுள்ள நடராசர் அழகான வடிவம். பிராகாரத்தில் கன்னிவிநாயகர், முருகன், மகாலட்சுமி சந்நிதிகள் உள. பிரமரிஷி, ஐயனார், பைரவர், சனிபகவான், சூரியன், விசுவநாதர் சந்நிதிகளும் உள்ளன. தலப்பதிகம் அம்பாள் சந்நிதி முன்பு பதிக்கப்பட்டடுள்ளது.
வேலவர், சோமாஸ்கந்தர், ஆடிப்பூர அம்மன், பிரதோஷ நாயகர், சந்திரசேகர் மற்றும் தலவரலாற்றுடன் தொடர்புடைய செட்டியார், அவர் மனைவி ஆகியோருடன் சம்பந்தர் முதலியோரின் உற்சவத் திருமேனிகள் உள்ளன.
11

Page 26
'நிறைவெண் திங்கள் வாண் முக மாதர் பாட நீள் சடைக் குறைவெண் திங்கள் சூடியோர் ஆடல் மேய கொள்கையான் சிறைவண்டி யாழ் செய்யும் பொழிற் பழனஞ் சூழ் சிற்றேமத்தான் இறைவன் என்றே உலகெல்லாம் ஏத்த நின்ற பெருமானே’
என்று சம்பந்தர் பெருமான் இத்தலத்து இறைவனைப் போற்றிப் பாடியுள்ளார். (நி.நி.)
திருச்சிவபுரம்
“படரொளி சடையினன் விடையினன் மதிலவை சுடரெரி கொளுவிய சிவனவ னுறைபதி
திடலிடு புனல்வயல் சிவபுர மடையநம்
இடர்கெடு முயர்கதி பெறுவது திடனே"
என திருஞானசம்பந்தர் சிவபுரத்தைப் போற்றிப் பாடுகிறார். சோழநாட்டுத் திருமுறைத் தலங்களில் இதுவும் ஒன்று. கும்பகோணம் திருவாரூர் நெடுஞ்சாலையில் இருந்து உள்ளே 10 கி. மீ. தூரத்தில் இவ்வாலயம் அமைந்துள்ளது. சிவபுரம் “மண் புனலனலொடு மாருதமும். கொண்டு” விளங்குகின்றது எனச் சம்பந்தர் பாடுகிறார். இவ்வாறாக, இயற்கை எழில் சூழ்ந்த நீர்வளம் நிலவளம் நிறைந்த இடத்தில் திருச்சிவபுரம் விளங்குகின்றது. இத்தலம் "குபேரபுரம்”, “பூகயிலாயம்”, “சண்பகாரண்யம்” எனப் பல பெயர்களால் அழைக்கப்படு கின்றது. இன்று இவ்வாலயம் சிவகுருநாதசுவாமிகள் திருக்கோயில் என்றே அழைக்கப்படுகிறது.
பிரமன் இத்தலத்திலே சிவபூசை செய்து உலகங்களைப் படைக்கும் ஆற்றல்களைப் பெற்றான் எனத் தலபுராணம் கூறுகின்றது. திருமால் வெள்ளைப் பன்றி வடிவிலிருந்து இத்தலத்தில் பூசித்தான் என்றும், ஆதிவராகம் பூசித்த தலம் என்றும் தேவாரப் பாடல்கள் மூலம் அறிய முடிகிறது. இவ்வாலயம் அமைந்துள்ள ஊரில் பூமிக்கடியில் ஒரு அடிக்கு ஒரு சிவலிங்கம் இருப்பதாக ஐதீகம். இதனால் திருஞானசம்பந்தர் முதலியோர் இத்தலத்தில் நடக்காமல் அங்கப்பிரதட்சணம் செய்து சுவாமியை தரிசித்துப் பின்னர் ஊர் எல்லைக்கு அப்பால் தள்ளி நின்று பெருமானைப் பாடியதாக ஐதீகம். அவ்வாறு பாடிய இடம் இன்று “சுவாமிகள் துறை” என அழைக்கப்படுகின்றது.
ஆலயத்தின் பழமையான இராஜகோபுரம் ஐந்து நிலைகளுடன் கிழக்கு நோக்கியுள்ளது. உள்கோபுரம் மூன்று நிலைகளுடன் விளங்குகின்றது. கொடிமரம் இன்றி பலிபீடம் மட்டுமே உள்ளது. நேரே மூலவர் சந்நிதி கிழக்கு நோக்கியது. அதற்கு முன்னால் விசாலமான கல் மண்டபம் ஒன்று உள்ளது. உள்கோபுரத்தின் உட்சுவரில் சந்நிதியைப் பார்த்தவாறு சூரிய சந்திர உருவங்கள் உள்ளன. விசாலமான பிரகாரம் உடையது. கோஷ்டமூர்த்தங்களாக நடனவிநாயகர், தட்சிணாமூர்த்தி, இலிங் கோற்பவர், பிரமன், துர்க்கை என்போர் காணப்படுகின்றனர்.
12

வெளிச்சுற்றில் விநாயகர், சுப்பிரமணியர், கஜலட்சுமி சந்நிதிகளும் உள்ளன. முன்மண்டபத்தில் அம்பாள் சந்நிதி தெற்கு நோக்கி நின்ற திருக்கோலத்தில் உள்ளது.
மூலவர் கம்பீரமான பெரிய சிவலிங்கத் திருமேனி. இவர் சிவகுருநாத சுவாமிகள் சிவபுரீஸ்வரர், பிரமபுரீஸ்வரர், சிவபுரநாதர் என்ப் பல பெயர்களால் அழைக்கப்படுகிறார். அம்பாள் ஆர்யாம்பாள், சிங்காரவல்லி, பெரியநாயகி என்றழைக்கப்படுகிறார். இவ்வாலயத் தலமரம் செண்பகமரம், தீர்த்தம் சந்திரதீர்த்தம் என்றழைக்கப்படுகிறது. தீர்த்தக் கிணற்று நீர் மிகவும் சுவையானது. இவ்வாலயத்தை குபேரன், இராவணன், பட்டினத்தார், அருணகிரிநாதர் என்போர் வழிபட்டுள்ளனர். சம்பந்தரும் அப்பரும் தேவாரப் பாடல்களைப் பாடி உள்ளனர். ஆலயத்தை வழிபடுபவர்களின் வினை கெடும், அருள் பெருகும் எனச் சம்பந்தர் கூறுகிறார்.
1.சிவபுரம் என்றிரு பொழுதுமுன் வழிபடுமவர் துயர்
ஒன்றிலர் புகழொடு முடையரில் வுலகே
66
சிவபுரம் நினைபவர் திருமகளொடு நிகழ்வரே”
".சிவபுரநகர் தொழ இலைநவி வினையிரு
மையும் இடர் கெடுமே”
".சிவபுரமடைய நம் இடர் கெடு முயர்கதி பெறுவது திடனே' என்பர்.
நித்திய பூசைகள் ஒழுங்காக நடைபெறுகின்றன. கார்த்திகைச் சோமவாத்தில் சுவாமி புறப்பாடு நிகழ்கின்றது. இங்குள்ள பைரவர் விசேடமானவர். இவருக்கு காலைச்சந்தி, அர்த்தசாமம் ஆகிய காலத்தில் அபிஷேகம் செய்து வடைமாலை சாத்தி, தயிர்சாதமும் கடலை உருண்டையும் நிவேதித்து சிவகுருநாதரை அங்கப்பிரதட்சணம் செய்து வந்தால் வழக்குகளில் வெற்றி, தீராத நோய் தீரும் என்பது இன்றும் வழக்கத்தில் உள்ளது. இயற்கை எழிலுடன் அடியவர்களின் துன்பங்களை நீக்கி, சிவபுரத்திலிருந்து அருள்பாலித்து வருகின்றனர் சிங்காரவல்லி சமேத சிவபுரீஸ்வரர். (க.ஹே)
O O O O
திருச்சுற்றுப்பிராகாரம்
முழுமையான இந்துக் கோவிலமைப்பிலே திருச்சுற்றுப் பிராகாரம் ஒரு குறிப்பிடத்தக்க பகுதியாகும். திருக்கோயிலை மையமாகக் கொண்டு சுற்றியிருக்கின்ற இப்பகுதிகளை ஆகமங்கள் தண்ட அளவுகள் மூலம் வகைப்படுத்தி எடுத்துக் கூறுவன. பிராகார லக்ஷண விதிகள் பற்றி அஜிதம்(38), காமிகாகமம் (171), காரணம் (18), சுப்ரபேதம் (131) ரெளரவம்(41), தீப்தம் (12) அம்சுமத் முதலிய ஆகமங்கள் விபரிக்கின்றன.
இந்துக் கலைக்களஞ்சியம்

Page 27
இந்தத் தண்ட அளவு பற்றி அஜிதாகமப்படி (கிரியாபாதம் 381 -3) பிராஸாதத்தின் விஸ்தாரத்திலிருந்து பெறப்படும் அளவானது தண்டம் என்று கூறப்படும். இந்தத் தண்டம் என்னும் அளவானது மூன்று விதமான அளவுகளில் வேறுபடுகின்றது. உபகரணத் திலிருந்து அளத்தல் உத்தமம் என்றும், கைவரத்திலிருந்து அளத்தல் மத்யமம் என்றும், பாதாந்தத்திலிருந்து அளத்தல் அதமம் என்றும் கூறப்படுகின்றன.
இவ் அளவு மூலம் பெறப்படும் பல திறப்பட்ட அளவை முறைகள் பிராகாரங்களை அமைப்பதற்குப் பயன்படுத்தப்படுகின்றன. இப் பிராகாரங்கள் பற்றிச் சிற்பசாஸ்திர நூல்களில் ஒன்றான மயமதம் (பூர்வம் 33.1) குறிப்பிடுகையில் கோவில் விமானங்களின் பாதுகாப்பிற்காகவும், அழகுக்காகவும், பரிவாரங்களை வைப்பதற்காகவும் அறிஞர்கள் பிராகாரத்தைச் சிறப்பித்துக் கூறியிருக்கிறார்கள் எனக் குறிப்பிடுகின்றது.
கர்ப்பக்கிருகம் (கருவறை மூலஸ்தானம்) பிராகாரங்களால் சூழப்பட்டு விரியும் முறையைக் காரணாகமம் விரிவாகக் கூறியுள்ளது. அந்தர் மண்டபத்தையடுத்து முதற் பிராகாரமும், இரண்டாவதாக அந்தர் துவாரத்தையடுத்து இரண்டாம் பிராகாரமும், மத்யஹாரம் மூன்றாம் பிராகாரமாகவும், மர்யம் நான்காம் பிராகாரமாகவும், மஹா மர்யம் ஐந்தாம் பிராகாரமாகவும் அமையும். இவற்றின் அளவையை மேற்குறிப்பிட்ட ஆகமங்கள், சிற்பநூல் முதலியனவற்றிலே காணலாம். பிராகாரங்களைச் சுற்றிச் சுவர்கள் அமையும். இச்சுவர்கள் பித்தி அல்லது மதில் என அழைக்கப்படும். ஐந்து பிராகாரங்கள் அல்லது மூன்று பிராகாரங்கள் அல்லது ஒரு பிராகாரம் கொண்டதாகக் கோவில் அமையும். ஒவ்வொரு பிராகாரத்திற்கும் கோபுரம் அமைவதே முறை. இவ்வாறு நான்கு திசைகளிலும் கோபுரங்கள் எழும் போது அவற்றின் தொகை அதிகரிக்கும்.
கோவில்களுக்கு அழகைக் கொடுக்கும் பிராகாரங்கள் வளரும் போது கோவிலைச் சுற்றித் திட்டமிட்டமைக்கப்படும் நகரம் ஒன்று பல அழகுகளுடன் உருவாகின்றது. ஆகமங்களும் சிற்பசாஸ்திர நூல்களும் கூறும் இத்திட்டத்தினை அடிப்படையாகக் கொண்டு விரிந்த நகரத்திற்குச் சிறந்த ஒர் எடுத்துக்காட்டாக விளங்குவது பாண்டி நாட்டின் தலைநகராகத் திகழும் மதுரை மாநகரமாகும். இந்நகரம் மீனாகூஜி சுந்தரேசுவரர் ஆலயத்தை மையமாகக் கொண்டு விரிந்து பல பிராகாரங்களைக் கொண்டிலங்குகின்றது. வைஷ்ணவர்களின் பிரதான கோவிலான றுநீரங்கநாதர் ஆலயம் பல பிராகாரங்களையும் கோபுரங்களையும் கொண்டு மிளிர்கின்றது. யாழ்ப்பாணத்திலுள்ள மாவிட்டபுரம் கந்தசுவாமி கோவில் மூன்று பிராகாரங்கள் கொண்டுள்ளது. மரபுவழிச் செய்திகளின்படி பொன்னாலையிலுள்ள பழைய கிருஷ்ணன் ஆலயம் போர்த்துக்கீசரால் அழிக்கப்படுமுன், பூரீரங்கத்திற் போல் பிராகாரங்கள் கொண்டிருந்ததெனக் கூறப்படுகின்றது. ஆனால் பொதுவாக இலங்கையிலே ஒரு
இந்துக் கலைக்களஞ்சியம் —****

பிராகாரமுள்ள ஆலயங்களே பெரும்பாலும் உள்ளன. இராமேசுவரத்தில் உள்ள சிவாலயத்திலே மிகப் பெரிய திருச்சுற்றுகள் மூன்று உள்ளன.
மேற்குறிப்பிட்டவாறு அமையும் பிராகாரங்களிலும், அவற்றைச் சேர்ந்த இடங்களில் அமைய வேண்டியவற்றைக் குறிப்பிடலாம். "அக்கினி திக்கில் பவனாலயம் அமையும்” இரண்டாம் பிராகாரத்தில் வடகிழக்கு மூலையில் கிணறு இடம்பெறும். கிழக்குக்கும் வடகிழக்குக்கும் நடுவில் இருக்க வேண்டியது வாத்தியசாலை. கிழக்குக்கும், தென்கிழக்குக்கும் நடுவில் பொக்கிஷசாலை நிர்மாணித்தல் வேண்டும். தெற்குக்கும் தென்கிழக்குக்குமிடையில் குளிப்பதற்கென அமைக்கப்பட்ட திருக்குளம் இருத்தல் வேண்டும். தென்மேற்குக்கும் மேற்குக்கும் இடையே விளங்குவது தர்ம சிரவண மண்டபம். மேற்குக்கும் வடமேற்குக்கும் நடுவில் ஆயுத மண்டபம் இருக்கும். வடமேற்குக்கும், வடக்குக்கும் நடுவில் பள்ளியறை அமையும். வடக்குக்கும், வடகிழக்குக்கும் இடையில் யாகமண்டபம் இடம் பெறும். கோவிலின் முன்பு நடுவினதாக அமைவது ஆஸ்தான மண்டபம், கோவில் நகரங்கள் இவ்வாறு விரிவடைவதை ஆகமங்களின் அடிப்படையிலே பேராசிரியர் கா. கைலாசநாதக் குருக்கள் எடுத்துக் காட்டியுள்ளார். வெளிப் பிராகாரத்திற்குப் புறத்தே இடம்பெற வேண்டிய சிவாசாரியாரின் வாசஸ்தானம் மேற்கே பரிசாரகரின் வீடு, தெற்குப் பக்கத்தில் வைத்தியருக்குரிய இடம், இதையடுத்துச் சோதிட வல்லுநரின் இருப்பிடம், கிழக்கே வாத்தியம் வாசிப்பவரின் உறைவிடமும் சைவமகாசனங்கள் வசிப்பதற்குச் சிறந்த இருப்பிடமும் இன்னோரன்ன விபரங்கள் பலவும் ஆகமங்களிலே குறிப்பிடப்பட்டுள்ளன.
திருக்கோயிலிலுள்ள பிராகாரத்திலேதான் சுவாமி (தெய்வம்), பக்தர்கள் வீதி வலம் வருவர். வலம் வருவதற்காகவே பிராகாரம் பயன்படுத்தப்படும். இவ்வாறு பக்தர்கள் வலம் வருதல் பிரதசுஷணம் எனப்படும். பிரதசுஷணம் என்றால் “இறைவனின் திருவருளில் வீழ்தல்” எனக் கூறப்படும். பிராகாரங்கள் இவ்வாறு இறைவன் மயமாக மிளிர்கின்றன. கருவறையிலுள்ள இறைவனின் நுண்ணிய திருவருட்கதிர்கள் எட்டுத்திசைகளிலும், மேலும் கீழும் பரவிப் பிராகாரங்களில் எங்கும் நிறைந்து விளங்கும். வெளிப்பிராகாரம், உட்பிராகாரம் ஆகியனவற்றின் வழியே வழிபாடு செய்தல் முறையாகும். உயிர் தன்னுடைய பந்தங்களை (பாசங்களை) ச் சிறிது சிறிதாக விட்டு ஒழிப்பதாகக் கருத்துக்கள் கூறப்படுகின்றன. வழிபடுவோர் கருவறையின் முன் நிற்கும்போது பாசங்கள் நீக்கப்பட்டவராகக் கருதப்படு கின்றார்கள்.
பிராகாரங்கள் பற்றிச் சில உள்ளார்ந்த சமய தத்துவக் கருத்துக்களுங் கூறப்படுகின்றன.
பொதுவாகக் கோயில் கொண்டெழுந்தருளியிருக்கும்
இறைவனைப் பிராகார மதில்கள் மறைத்துக் கொண்டிருக்
-ஆ4இலகல் 13 rrardh
1 9 9488

Page 28
கின்றன. பிரதான வாசல் மூலமே பொதுவாகக் கோயிலுக்குள்ளே சென்று இறைவனை வழிபடமுடிகின்றது. இறைவனை மறைத்துக் கொண்டிருக்கும் பிராகார மதில்கள் மனிதன் தன்னிடத்திலுள்ள ஆன்மாவைத் தான் ஆன்மா என்ற உண்மையை எளிதில் அறிய முடியாத வகையில் அமைந்துள்ள உடம்பை உணர்த்துகின்றன. மதிற் சுவர்கள் இல்லாவிட்டால் இறைவனை எங்கிருந்தும் எப்போதும் பார்த்து வழிபடலாம். உடம்பில்லாவிடில் மனிதன் தான் உடம்பு அல்லன், ஆன்மாதான் எனும் உண்மையை எப்பொழுதும் உள்ளத்திலே கொண்டிருப்பான். பிராகாரத்து மதிற் சுவர்களின் அமைப்பு, மறைப்பு ஆகியன உடம்பின் அமைப்பு மறைப்பு ஆகியனவற்றை உணர்த்துகின்றன.
பிரதான வாயில் என்று கூறப்படும் கிழக்கு வாயில் வழியாகவே இறைவனைக் காண முடிகின்றது. இறைவழிபாட்டின் மூலமே ஆன்மா என்பதை மனிதன் அறிய முடிகின்றது. பிராகாரத்து மதில் சுவர்களின் மறைப்பு இறைவனின் ஐந்தொழில்களில் மறைத்தல் எனும் தொழில் முறையில் உள்ளது.
திருக்கோயில்களில் ஐந்து பிராகாரங்கள் இருப்பின் அவை அன்னமயம், பிராணமயம், மனோமயம், விஞ்ஞான மயம், ஆனந்த மயம் என்னும் ஐந்து விதகோசங்களையும் குறிப்பன. மூன்று பிராகாரங்கள் இருப்பின் அவை ஐந்து கோசங்களினாலான தூலம், சூக்குமம், காரணம் என்னும் மூவகை உடம்புகளைக் குறிப்பன.
கோவில் வழிபாடு செய்வோர் மூன்று முறை, ஐந்து முறை பிராகாரங்களை வலம்வரவேண்டும் என்பது மூவகை உடம்புகளையும், ஐந்து வித கோசங்களையும் கடந்தவனாக இறைவன் இலங்குகின்றான் என்பதைக் கருத்திற் கொள்ளுவதற்காகும்.
இந்த ஐந்து பிராகாரங்களையும் கடந்தால் இறைவனது சாமீப நிலையை அடையலாம் என்ற உண்மையை உணர்தல்
அவசியமாகும்.
திருக்கோயிலில் ஒரேயொரு பிராகாரமிருப்பின் அது பொதுவான உடம்பைக் குறிக்கும்
பிரகாரத்தில் வலம் வரும்போது மூலஸ்தானம் அல்லது கருப்பகிருஹத்தைச் சுற்றி அர்த்த மண்டபம், மகாமண்டபம், அபிடேக மண்டபம், அலங்கார மண்டபம், சபா மண்டபம் முதலியன உள்ளன. மூலஸ்தானம் உடம்பிலுள்ள மூலாதாரத்தைக் குறிக்கும். பிறமண்டபங்கள் ஸ்வாதிஷ்டானம், அநாகதம், விசுத்தி, ஆக்ஞை ஆகியனவற்றைக் குறிக்கும்.
இவ்வாறு பிராகாரங்கள் புலப்படுத்தும் சமய தத்துவக் கருத்துக்கள் உற்று நோக்கற்பாலன. அவை வெறும் கட்டடங்களாக அன்றி மக்களுக்கு மேற்குறிப்பிட்ட
14

கருத்துக்களைப் புலப்படுத்துவன. எனவே பிராகாரங்களை வலம் வரும்போது உலகப் பற்றின்றி இறைவனை அன்புடன் இடையறாது நினைத்துத் துதித்து வழிபடுதல் ஆன்ம விடுதலைக்குச் சாலவும் உகந்ததாகும்.
திருச்செங்கோடு
இத்தலம் சேலம் மாவட்டத்தில் உள்ளது. கோடு என்றால் மலை என்பது பொருள். செங்கோடு - சிவந்த மலை. பெயருக்கேற்பவே இம்மலை செம்மை நிறமுடையது. மலையின் பெயரே ஊரின் பெயராகவும் திகழ்கின்றது. பாடல் பெற்ற கொங்குநாட்டுத் தலங்கள் ஏழினுள் சிறப்பு வாய்ந்தது.
சேலத்திற்குத் தெற்கே 28 கல் தொலைவிலுள்ளது. சேலம்ஈரோடு புகையிரதப் பாதையில் உள்ள சங்கரிதுர்க்கத்திலிருந்து தென்கிழக்கே ஆறுமைல் தொலைவில் உள்ள தலம். ஈரோட்டிலிருந்து பேருந்து மூலமாகவும் செல்லலாம்.
இத்தலத்தினைக் ‘கொடிமாடச் செங்குன்றுார்” என்று பழைய நூல்கள் கூறும். திருஞானசம்பந்தர், “கொடிமாடச் செங்குன்றூர் நின்ற நீருறு செஞ்சடையான்” என்றும், சேக்கிழார் “சேரர் திருநாட்டு ஊர்களின் முன் சிறந்த மூதூர் செங்குன்றுார்” எனவும் இத்தலத்தைக் குறிப்பிடுவார்கள். அறுபான் மும்மை (63) நாயன்மார்களுள் விறன்மிண்ட நாயனார் பிறந்தருளிய தலம். கடல் மட்டத்திலிருந்து 1901 அடிகள் உயரம் உடையது. மலைஉச்சியில் மாதொருபாகனான அர்த்தநாரீஸ்வரர் மூலமூர்த்தியாக விளங்குகின்றார். நல்ல அழகான உயரமான திருமேனி அம்மை அப்பராக ஈருருவும் ஒருருவில் இணைந்தது போலவே திருச்செங்கோட்டுக் குன்றும் இரண்டு சிகரங்களும் பின்னிப் பிணைந்து காட்சி தருகின்றது. கீழிருந்து பார்த்தால் மலையானது படங்கொண்ட நாகத்தினது உருவில் தோன்றுகின்றது. அதனால் இக்குன்றிற்கு சர்ப்ப சைலம், நாககிரி என்ற பெயர்கள் அமைந்தது பொருத்தமே.
இத்தலத்தில் முருகன் சந்நிதி சிறப்பு வாய்ந்தது. அருண கிரி நாதருக்கு இத்தலத்தின் மீது காதலே உண்டு. கந்தர் அலங்காரத்தில் செங்காடைக் குமரன் புகழை பல இடங்களிலும் பாடிப் பரவச முறுகிறார். முருகன் சந்நிதி கிழக்கு நோக்கியது. அர்த்த நாரீஸ்வரர் சந்நிதி மேற்கு நோக்கியது. கோவிற்குள்ளேயே திருமால் ஆதிகேசவப் பெருமாளாக அருள் பாலிக்கின்றார்.
ஞானசம்பந்தர் இத்தலத்திற்கு எழுந்தருளிய பொழுது, சிவனடியார்களை குளிர்சுரம் பீடித்து நலித்தது. அக்கொடிய நோயினின்று அடியார்களைக் காப்பதற்காக உறுதியுடன் இறைவன் மீது ஆணையிட்டுத் “திரு நீலகண்டப் பதிகம் பாடி நலிவினின்றும் காத்தார்.
இந்துக் கலைக்களஞ்சியம்

Page 29
"சீர்கெழு செந்திலும் செங்கோடும் வெண்குன்றும் ஏகமும் நீங்கா இறைவன் கை வேலன்றே" என்று சிலம்பும் திருச்செங்கோட்டை குறிக்கின்றது.
இதன் புராணவரலாற்றைக் குறிப்பிடுகையில் ஒருகாலத்தில் வாயுபகவானிற்கும் ஆதிசேடனுக்கும் பலப்பரீட்சை நடக்கையில் மகாமேருவின் கொடுமுடிகளில் ஒன்றை வாயு தேவன் அடைக்கும் பொழுது ஆதிசேடன் தனது ஆயிரம் முகங்களாலும் அதனை மூடிக்கொள்ள பெருங்காற்றினால் உலகமே அழிந்து விடும் என்று அஞ்சிய அமரர்கள் சற்று விட்டுக் கொடுக்குமாறு ஆதிசேடனை வேண்ட, அவன் முடியாது என்று தலையை அசைக்கையில் அந்த இடைவெளியைப் பயன்படுத்திக் கொண்ட பவனதேவன் மலையை வேகமாகத் தூக்கினான். அதனால் ஆதிசேடன் முடியில் காயம் ஏற்பட்டுக் குருதி சொரிந்தது. இரத்தம் தோய்ந்த நிலையிலேயே சிகரம் கொண்டு வரப்பட்டதால் அதற்குச் செங்குன்று, செங்கோடு என்ற பெயர் ஏற்பட்டது.
காமதேனு என்னும் தேவப்பசு சிவபெருமானிடமிருந்து ஐந்து குன்றுகளைக் கொடையாகப் பெற்றது. அவற்றுள் இந்தச் செங்குன்றும் ஒன்று. குருதி தோய்ந்து சிவந்த மலையாக ஒருபுறமும் காமதேனு கொணர்ந்த மலையாக மறு புறமும் இணைந்து சிவ-சக்தி வடிவமாகக் காணப்படுகின்றது. இதனை ஒட்டியே மலைக்கோயிலில் அர்த்த நாரீஸ்வரர் எழுந்தருளி அருள் பாலிக்கின்றார்.
திருச்செங்கோட்டின் அடிவாரத்தில் கயிலாச நாதரும் பரிமளவல்லியும் தனித்தனிக் கோயில் கொண்டு விளங்கு கிறார்கள். இருவருக்கும் இடையே சோமாஸ்கந்த அமைப்பில் முருகப்பெருமான் தனிச் சந்நிதி கொண்டு அமர்ந்திருக்கின்றார்.
திருச்செங்கோட்டு மலைமேல் ஏறுவதற்கு 1200 படிகள் அமைந்துள்ளன. இளைப்பாறுவதற்கான மண்டபங்கள் உண்டு. மலைமேல் உள்ள தைலி மண்டபத்திற்கு மேற்கே வெண்ணெய் பூசப்பட்டு நந்தி காணப்படுகின்றது. இக்குன்றே சிவலிங்க வடிவில் அமைந்துள்ளது என்று கூறலாம். மலைப்பாதை ஒரத்தில் 60 அடி நீளம் உள்ள ஐந்தலை நாகத்தின் உருவம் செதுக்கப்பட்டுள்ளது. நாக பணத்தின் நடுவில் சிவலிங்கம் காணப்படுகின்றது.
இந்நாகத்தைக் குறித்து ஒரு சுவையான செய்தி: வெளிநாட்டிலிருந்து வந்த புலவன் எல்லோரையும் வாதில் வென்று அனைவர் மனத்திலும் அச்சத்தை விதைத்தான். உள்நாட்டிலிருந்த புலவர் ஒருவருக்கு வாதிட ஆசை. ஆனால் தோற்று விடுவோமோ என்ற பயம். சிறந்த முருகபக்தர். “வெளியிலிருந்து வந்தவனிடம் தோற்றால் அரசன் ஊரை விட்டே விரட்டிவிடுவான் உன்னை எப்படி வழிபடுவேன்’ என்று வருந்தினார்.
இந்துக்கலைக்களஞ்சியம்

மாலை நேரம் வெளியிலிருந்து வந்த புலவன் உல்லாசமாகக் கவி பாடத் தொடங்கினான்.
"சமரமுகத் திருச் செங்கோடு சர்ப்ப சைல மெனின் அமரில் படம் விரித் தாடாத தென்னை."
ஒன்றரை அடிக் கவிதை வந்தது மற்றைய அடி தொண்டையில் சிக்கிக் கொண்டது போல் வெளிவர மறுத்தது. எத்தனையோ முயன்றும் முடியவில்லை மண்டை வெடித்தது.
தன் பக்தனைக் காப்பதற்காக முருகன் மாடு மேய்க்கும் சிறுவனாக வந்து புலவரின் தடைப்பட்ட கவிதையைப் பாடி முற்றுவித்தான்.
"அஃது ஆய்ந்திலையோ
நமரன்குற வள்ளிபங்கன் எழுகரை நாட்டுயர்ந்த
குமரன் முருகன் தன் மயில் வாகனம் கொத்து மென்றே.”
புலவன் அதிர்ச்சியும், ஆச்சரிய முற்று "நீயாரப்பா?” என்று கேட்க சிறுவன் இவ்வூர் அரச சபைப்புலவர் வீட்டு மாடு மேய்ப்பவன் என்றான். இதனைக் கேட்ட புலவர் வாதிட அஞ்சி ஊரைவிட்டே ஓடிவிட்டார்.
திருச்செங்கோட்டு மலைமேல் சுனை ஒன்று உண்டு. அங்குள்ள வேலவனின் கைவேல் கல்லால் ஆனது. இடது கரத்தில் கோழிக் கொடி காணப்படுகின்றது.
கருவறையில் காணப்படும் அர்த்த நாரீஸ்வரரின் திருவடிக் கீழ், நீர் ஊற்று ஊறிவருகின்றது. மகாமண்டபத்தில் உற்சவ அர்த்த நாரீஸ்வரர் திருக்காட்சி வழங்குகின்றார். அழகிய வடிவம். தலையில் சடாமுடியின்றி, கொண்டை அமைந்துள்ளது. இவரது திருவடிக்கீழ் பிருங்கி முனிவர் காணப்படுகின்றார். உற்சவ வேலவர் வள்ளி தெய்வயானை சமேதரராகத் திகழ்வது காண்பதற்கினிய கோலமாகும்.
திருச்செங்கோட்டு முருகமூர்த்தம் பழநித் தலத்தைப் போலவே நவபாஷாணத்தால் ஆகியது. பழநிமூர்த்தம் “கிருஸ்ணம் (கருமை), செங்கோட்டு மூர்த்தம் 'சுவேதம்’ (வெண்மை) மூர்த்தியின் திருவுரு அழகுமிக்கது. (வ. வை.)
Ο
திருச்சேறை
திருமங்கையாழ்வாரால் பாடல் பெற்ற வைணவத் தலம் இதுவாகும். இத்தல இறைவன் ஐந்து தேவியருடன் காட்சியளிக்கின்றார். இத்தலத்தில் காவிரித் தாய்க்குப் பெருமாள் குழந்தையாக அவதரித்தார் என்பது தலபுராணமாகும். முன்னொரு காலத்தில் கங்கை, யமுனை, சரஸ்வதி, காவிரி போன்ற நதி தேவதைகள் தங்களில் சிறப்பு மிக்கவர் எவர் என வாதப் போரிட்டு பிரம்ம தேவனை அணுகி அவரிடம் விடை கேட்க அவர் கங்கையே சிறந்தது எனக் கூறினார்.
15

Page 30
"கங்கையிலும் புனிதமாம் காவிரி” எனத் தம்மைப் புகழ வேண்டும் என்ற எண்ணத்தில் காவிரி செந்தணலில் காலூன்றி திருமாலை நோக்கி தவமியற்றினாளாம். பெருமாள் அவளது தவத்திற்கு இரங்கி மடிமீது குழந்தையாகத் தோன்றினார். கங்கையும் பிறவும் இறைவனின் பாதங்களை மட்டுமே தழுவிச் செல்கின்றன. தாமோ திருமாலையே குழந்தையாக பெற்றோம் என மகிழ்ந்து இறைவனை மடியில் வைத்துத் தாயாகக் கொஞ்சி மகிழ்ந்தாள்.
இத் தலத்தினை வைணவர் “சாரஷேத்திரம்” எனவும் அழைப்பர்.
மூலவர் சாரநாதன் தாயார் - சாரநாயகி விமானம் - சாரவிமானம் தீர்த்தம் சாரபுட்கரணி
இறைவன் இங்கு நின்ற திருக்கோலத்தில் காட்சியளி க்கின்றார். இவ்வாலயத் தீர்த்தமான புட்கரணி சிறப்புமிக்கதாகக் கூறப்படுகின்றது. இது தொடர்பான புராணக் கதையொன்றும் விவரிக்கப்படுகின்றது.
பிரளய காலத்தில் பிரமன் புட்கரணி இருந்த இடத்திலிருந்து மண் எடுத்து குடம் பண்ணினார். அதில் சகல வேத ஆகம, சாத்திர புராணக்கலை ஞானங்களையெல்லாம் பத்திரப்படுத்தி காப்பாற்றினார். வேதங்களின் சாரங்களெல்லாம் காப்பாற்றப்படக் காரணமாக இருந்த இத்தலம் சார ஷேத்திரம் எனப்பெயர் பெற்றது. குடம் செய்ய மண் எடுத்த இடம் சாரபுட்கரணி எனப்பட்டது.
இவ்வாலயம் உயரமான, எழில்மிகு இராஜ கோபுரத்துடன் விளங்குகின்றது. இவ்வாலயத்தில் காவிரித்தாய் திருமால் குழந்தையை தம் இடுப்பில் இருக்கிற வண்ணம் வடிவமைக் கப்பட்ட அழகிய சிற்பம் இங்கு காணப்படுகின்றது. இச் சிற்பத்திற்கருகே பிரமா, விஷ்ணு ஆகியோரின் திருவுருவச் சிற்பங்களும் காணப்படுகின்றன.
இவ்வாலயத்தின் கீழ்க் கரையில் இராஜ கோபுரத்தின் முன் அனுமார் கோயில் உள்ளது. கோயிலினுள்ளே திருமணமண்டமும், அதன் வட பகுதியில் இராஜகோபாலன் சந்நிதியும் உள்ளன. இடப்பக்கம் பூரீ நரசிம்மர், தேசிகர் சந்நிதிகளும், பெருமாள் சந்நிதிக்கு வலப்புறம் தாயார் சந்நிதியும் உள்ளன. மூலவரின் இருபக்கங்களிலும் காவிரித்தாயும் மார்க்கண்டேயரும் காட்சி தருகின்றனர். அருகில் பூரீதேவி, பூதேவி, நீளாதேவி, மகாலட்சுமி, சாரநாயகி ஆகியோர் எழுந்தருளியுள்ளனர். சாரநாதன் திருமார்பிலும் திருமகள் காட்சியளிக்கின்றார். இவ்வாலயத்தின் முன் மண்டபத்தில் விஜயராகவ நாயக்க மன்னரின் சிலையொன்றும் உள்ளது.
16

இத்தலத்தின் மீது திருமங்கையாழ்வார் பத்துப் பாசுரங்கள் பாடியுள்ளார்.
“பண்டேன மாயுலகை பன்றிடந்த பண்பாளா! என்று நின்று
தொண்டானேன் திருவடியே துணையல்லால்
துணையில்லேன் சொல்லுகின்றேன் வண்டேந்தும் மலர்ப்புறவில் வண்சேறை
எம்பெருமான் அடியார் தம்மை கண்டேனுக்கிது காணி ரென் நெஞ்சும்
கண்ணினையும் களிக்குமாறே.” (பெரிய திருமொழி - 7.4.6. பாசுரம் 1583)
திருச்சேறை வாழும் சாரநாதனைப் பாடும் தமிழே இனிக்கும் தன்மையுடையது என்கிறார் பிள்ளைப் பெருமாள் ஐயங்கார். இத்தலத்தைப் பற்றி புராணங்களும் வரலாற்றுச் செய்திகளும் மிக உள்ளன. இத்திருச்சேறையில் சைவத் திருத்தலமும் ஒன்று உள்ளது. இறைவன் செந்நெறியப்பர், சந்நிதியப்பர் என வழங்கப்படுகின்றார். இறைவி ஞான வள்ளியம்மை. தீர்த்தம் மார்க்கண்ட தீர்த்தமாகும். இது தெளமிய முனிவர் வழிபட்டுப் பேறுபெற்ற தலமாகும். இவ்வூர்க் கோயிலில் திரிபுவன சக்கரவர்த்தி குலோத்துங்க சோழத் தேவரின் கல்வெட்டுக்கள் கிடைத்துள்ளன. அவற்றில் இறைவியின் நாமம். திருச் செந்நெறியுடையார் எனக் குறிக்கப்பட்டுள்ளது. இத்தலத்திற்கு ஞானசம்பந்தர் பதிகமொன்றும் அப்பர் பதிகமொன்றும் என இரண்டு பதிகங்கள் உள்ளன. (தே. ஹ.)
O O
திருச்சோபுரம்
நடுநாட்டுத் தலம். திருஞானசம்பந்தரால் பாடல் பெற்ற தலம். மக்கள் வாழ்வில் தியாகவல்லி என்று வழங்குகின்றது. கடலூர் சிதம்பரம் நெடுஞ்சாலையில் அலப்பாக்கம் புகையிரத நிலையத்திற்கு வடகிழக்கே இரண்டு மைல் தொலைவில் உள்ளது. அகத்தியர் பூஜித்த தலம். இங்குள்ள மூர்த்தி அகத்தியரால் பிரதிஷ்டை செய்யப்பட்டதென்பர். திரிபுவனச் சக்கரவர்த்தியின் முதல் மனைவியான தியாகவல்லி அம்மையார் இங்கு திருப்பணி செய்த காரணத்தினால் தியாகவல்லி என்று பெயர் பெற்றதாகவும் சொல்லப்படுகின்றது. சோழபுரம் என்பது மருவியே சோபுரம் ஆயிற்று எனக் கருதப்படுகின்றது.
இத்தலம் மணலால் மூடப்பட்டிருந்து 125 வருடங்களுக்கு முன் இரண்டு தம்பிரான் சுவாமிகளால் கண்டுபிடிக்கப்பட்டு அவர்களால் திருப்பணி செய்யப்பட்டது. இதனால் 'தம்பிரான் கண்ட தலம்’ என்ற பெயரும் உண்டு. கோயிலுக்குச் செல்லும் வழி மணலாக இருப்பதால் இத்தலத்திற்குச் செல்வோர் காலை 10 மணிக்கு முன்பும் மாலை 4 மணிக்குப் பின்னும் செல்வது நல்லது.
இந்துக் கலைக்களஞ்சியம்

Page 31
இறைவன் - மங்களபுரீஸ்வரர், திருச்சோபுரம்நாதர் இறைவி
தியாகவல்லியம்மை, சத்யதாகூறிவேல்
நெடுங் கண்ணி தலமரம் - கொன்றை தீர்த்தம் - கோயிலுக்குள் உள்ள கிணறும் கோயிலு
க்குப் பின்னால் உள்ள குளமும்
கோயிற் கட்டிடம் நன்றாக உள்ளது. மேற்குப் பார்த்த கோயில், கவசமிடப்பட்ட கொடிமரத்தைத் தாண்டிச் சென்றால் முகப்பு வாயில் உள்ளே வலமாக வரும்போது சுப்பிரமணியர், கஜலட்சுமி, வீரட்டேஸ்வரலிங்கம், கண்ணப்பர், திரிபுவனச் சக்கரவர்த்தி, அவர் மனைவி வழிபட்ட இலிங்கங்கள், பைரவர், சூரியன், நவக்கிரகங்கள் முதலிய சந்நிதிகள் உள்ளன. விநாயகர் சந்நிதியும் தொடர்ந்து அறுபத்துமூவர் மூலத் திருவுருவங்களின் சந்நிதியும், சோமஸ்கந்தர் சந்நிதியும் உள்ளன.
மூலவர் அகத்தியர் பிரதிஷ்டை சதுர ஆவுடையார். பாணம் சுற்றளவு சற்றுக் குறைவாக நீட்டு வாக்கில் உள்ளது. மூலவருக்கு இடப்பக்கத்தில் அம்பாள் சந்நிதி. இரு சந்நிதிகளையும் ஒரே இடத்தில் நின்று தரிசிக்கலாம்.
நடராஜ சபை உள்ளது. கோஷ்ட மூர்த்தத்தில் இலிங்கோற் பவருக்கு இருபுறங்களிலும் திருமாலும், பிரமாவும் நின்று தரிசிக்கும் கோலத்தில் உள்ளனர்.
கோயிலின் வெளிச் சுற்றில் கொன்றை மரம் தழைத்து நிற்கின்றது. பிற்காலத்தில் தொண்டை மாநத்தத்தைச் சேர்ந்த மு. துரைசாமி ரெட்டியார் என்பவர் கோயிலில் ஆராதனைக்காக வீடுகளை விட்டு அதன் வருமானத்தில் ஆராதனை நடத்துமாறு உயில் எழுதி அதை 26.8.1912 இல் ஆவணக் காப்பகத்தில் பதிவு செய்த கல்வெட்டு ஒன்று கோயிலில் உள்ளது. மேலும் கல்வெட்டுக்கள் உள்ளன. இங்கே நர்த்தன கணபதி கோயில் இருந்ததாகவும் அதற்குச் சுந்தர பாண்டியன் நிவந்தம் அளித்ததாகவும் தெரியவருகிறது.
"கடலுக்கு மேற்கில் தொண்டை மாநத்தத்திற்கு கிழக்கில் பெண்ணையாற்றுக்குத் தெற்கில் வெள்ளாற்றிற்கு வடக்கில் உள்ள நிலங்கள் இக்கோயிலுக்கு பட்டா நிலங்களாக இருந்தனவென்றும் அவைகளை அரசு எடுத்துக் கொண்டு அதற்குரியதாக ஆண்டு தோறும் கோயிலுக்கு ரூபா 600/- (ஆறுநூறு ரூபாய் மட்டும்) தருவதாகவும் தெரிகிறது’
சோழர் பாண்டியர் கல்வெட்டுகள் இக்கோயிலுக்கு நிலம் விட்ட செய்தியையும் தொண்டைமாநல்லூரைக் கோயிலுக்குத் தானமாக அளித்த செய்திகளையும் தெரிவிக்கின்றன.
பங்குனி உத்திரப் பெருவிழா 10 நாட்கள் நடைபெறுகின்றது. நாள்தோறும் நான்கு காலப் பூஜைகள் நடைபெறுகின்றன.
இந்துக்கலைக்களஞ்சியம்

“வெங்கணானை யிருரிவை போர்த்து விளங்குமொழி
மங்கை பாகன் வைத்துகந்த மாண்பது வென்னை கொலாம் கங்கையொடு திங்கள் சூடிக் கடிகமழும் கொன்றைத் தொங்கலானே தூயநீற்றாய் சோபுர மேயவனே' என்று திருஞானசம்பந்தர் இத்தலத்திறைவனைப் பாடியுள்ளார். (நி. நி.)
திருத்தினைநகர்
நடு நாட்டுத் தலம். சுந்தரராற் பாடப்பட்டது. சிதம்பரத்திற்கு 45 ஆவது கி.மீ. ஆலப்பாக்கம் புதுச்சத்திரம் இவற்றுக்கிடையில் மேட்டுப் பாளையம் என்னும் இடத்தில் அமைந்துள்ளது.
தல வரலாறு:-
பெரியான் என்பவன் தன் நிலத்தை உழுது கொண்டிருக்கும் போது இறைவன் அடியவனாக வந்து உணவு கேட்க, உணவைப் பெற்று வர பெரியான் தன் வீடு சென்று மீண்டும் வந்து பார்த்த போது நிலத்திலே தினை விளைந்திருந்தது. இதனைக் கண்டு பெரியான் திகைக்க அவனுக்குக் காட்சி தந்தான் இறைவன். இவ்வதிசயம் நடைபெற்றமையால் 'தினை நகர் என்ற பெயரேற்பட்டது என்பர்.
இறைவன் - சிவக்கொழுந்தீசர், சிவாங்கரேஸ்வரர்
இறைவி - நீலாயதாகூறி, ஒப்பிலாநாயகி, கருந்தடங்
கண்ணி
தலமரம் - கொன்றை
தீர்த்தம் - ஜாம்பவ தீர்த்தம்.
வீரசேனன் என்னும் மன்னன் இத்தீர்த்தத்தில் மூழ்கி அவன் வெண்குஷ்டம் நீங்கியதால் அவனே இக்கோயிலைக் கட்டினான் எனத் தல வரலாறு கூறுகிறது.
மூன்று நிலைகளை உடைய இராஜகோபுரம் கடந்து உட் சென்றால் பிராகாரத்தில் நால்வர், விநாயகர், சுப்பிரமணியர், வீரசேன மன்னனின் சந்நிதிகளும் தலமரமான கொன்றையும், சூரிய, சந்திரர்களும் உள்ளன.
பிராகார வலம் முடிந்து உட்சென்றால் நடராஜ சபை. இறைவன் மலர்ந்த முகத்துடன் காட்சியளிக்கிறார். நடராஜ மூர்த்தத்தின் கீழே மகாவிஷ்ணுவும், சங்கை ஊதுவது போன்று பிரம்மனின் உருவமும் இன்னும் பஞ்ச முக வாத்தியங்களை இசைப்பது போல சிறிய மூர்த்தங்களும் உள்ளன.
மூலவர் சுயம்புத் திருமேனி, பாணம் சற்றுக் கூர்மையா கவுள்ளது. சதுர ஆவுடையார் இருபுறமும் வழிதெடுத்தாற் போல் உள்ளது. கவசமிடப்பட்ட கொடிமரம், பலிபீடம், நந்தி ஆகியன
உண்டு. மூலவருக்கு வலப்பால் அம்மன் சந்நிதி உள்ளது.
17

Page 32
கோஷ்ட மூர்த்தங்களாக நர்த்தன விநாயகர், தட்சிணா மூர்த்தி, இலிங்கோற்பவர்- பிரம்மா, விஷ்ணு பக்கங்களில் நின்று தரிசிக்கும் அமைப்பில், துர்க்கை ஆகிய மூர்த்தங்கள் உள்ளன. கோயிற் சுவரில் தல புராணச் சிற்பங்கள் இடம்பெற்றுள்ளன. கோயிலுக்கு அருகில் உள்ள மடம் வேதபாராயண சத்திரம். உற்சவ காலத்தில் வேதபாராயணக் கட்டளைக்காக ஏற்படு த்தப்பட்ட சத்திரம் இது. இப்போது வேதபாராயணம் இடம்பெறுவதில்லை.
நாள் தோறும் நான்கு காலப்பூசைகள் இடம் பெறுகிறது. பூரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜதக் குரு பூரீ ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் அவர்களின் பொன்விழாத் திருப்பணித் திட்டத்தின் கீழ் சுவாமி, அம்பாள், விநாயகர், முருகன் ஆகியோரின் விமானங்கள் திருப்பணிகள் செய்யப்பட்டுள்ளன.
"நீறு தாங்கிய திருநுதலானை
நெற்றிக் கண்ணனை நிரைவளை மடந்தை கூறுதாங்கிய கொள்கையினானைக் குற்றமில்லியைக் கற்றையஞ் சடைமேல் ஆறுதாங்கிய அழகனை அமரர்க்கு அரிய சோதியை வரிவரால் உகளும் சேறுதாங்கிய திருத்தினை நகருள் சிவக்கொழுந்தினைச் சென்றடைமனனே’ என்று சுந்தரர் இத்தல இறைவனைப் போற்றிப் பாடியுள்ளார்.
(நி. நி.)
O திருத்துருத்தி
"பொன்னியின் நடுவு தன்னுள் பூம்புனல் பொழிந்து தோன்றும் துன்னிய துருத்தியானை
தொண்டனேன் கண்டவாறே”
என்று அப்பர் போற்றிப்பாடும் திருத்துருத்தி சோழ நாட்டு தென்கரைத் தலமாக விளங்குகின்றது. மயிலாடுதுறை கும்பகோணம் இருப்புப் பாதையில் உள்ளது. ஆற்றிடைக் குறையாகவுள்ள தலத்திற்கு துருத்தி என்று பெயர் வழங்கப்படும். காவிரி நதியின் தென்கரையில் உள்ளது திருத்துருத்தி. ஆற்றிடைக் குறைத் தலமாக விளங்குகின்றது. அதனால் திருத்துருத்தி எனப் பெயர் பெறுகின்றது. இன்று மக்கள் வழக்கில் குத்தாலம் என வழங்கப்படுகிறது. குத்தாலம் என்பது ஒருவகை அத்திமரம். இவ்வாலய தல விருட்சம் உத்தால மரம். இப் பெயர் மருவி குத்தாலம் என அழைக்கப்படுகிறது. உத்தால மரம் உள்ள காரணத்தினால் உத்தாலவனம் எனவும் அழைக்கப்படுகிறது.
தருமபுர ஆதினத்தின் கீழ் மிக நல்ல முறையில் இயங்கும் ஆலயங்களில் திருத்துருத்தியும் ஒன்றாக விளங்குகின்றது. விஜயநகர நாயக்கர் காலக் கல்வெட்டுக்கள் ஆலயத்தில்
18

இருக்கின்றன. அத்துடன் இராஜேந்திரசோழன் கல்வெட்டு ஒன்றும் காணப்படுகின்றது. இவ் ஆலயத்தை உத்தம சோழரது தாயார் செம்பியன் மாதேவியார் கற்றளியாகக் கட்டினார் என்று கல்வெட்டுக்கள் கூறுகின்றன. அப்பர் காலத்தில் இரண்டாற்றின் நடுவில் இருந்து திருத்துருந்தி சுந்தரர் காலத்தில் காவிரிக் கரைக் கோயிலாக விளங்கியது. முதலாம் இராஜரோஜன் காலத்து கல்வெட்டிலும் இவ்வாலயம் காவிரியின் தென்கரையில் இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.
ஊரின் நடுவில் மேற்கு நோக்கிய இராஜ கோபுரத்துடனும் இரண்டு பிராகாரங்களுடனும் பொலிவுடன் காட்சி தருகிறது திருத்துருத்தி. இறைவன் மேற்கு நோக்கியும் இறைவி தனிப் பிராகாரத்தில் தெற்கு நோக்கியும் எழுந்தருளியுள்ளனர். இராஜ கோபுரத்தைத் தாண்டிச் சென்றதும் தல விருட்சமான உத்தால மரம் காட்சியளிக்கின்றது. திருமணத்துக்கு முன் இறைவன் மணவாளக் கோலத்துடன் வந்து அம்பிகைக்கு மரத்தடியிற் காட்சி கொடுத்துப் பாதுகைகள் மறைத்து வைத்த இடம் என அவ்விடத்தைக் கருதி இன்றும் அதற்கு அறிகுறியாக இரண்டு பாதணிகள் இருக்கின்றன. திருமணம் செய்ய வந்த இறைவனுக்குத் துணையாக வந்த விநாயகர் துணைவந்த விநாயகர் என்ற பெயருடன் இங்கு எழுந்தருளியுள்ளார். வெளிப்பிராகாரத்தில் சுந்தரர் சந்நிதியுள்ளது.
இறைவன் திருப்பெயர் உத்திர வேதீஸ்வரர். வேதிக்குடியில் உமையைத் திருமணம் செய்வதற்கு முன் இறைவன் திருத்துருத்தியில் பிரமச்சாரியாக இருந்து வேதம் ஓதி வந்தார். இதனால் ஒத்தீஸ்வரர் எனும் பெயர் வழங்கப்படுகிறது. தம்மை மணந்து நெடுநாள் ஆகி விட்டது எனவே மீண்டும் ஒரு தடவை மணந்து கொள்ள வேண்டும் என அம்பிகை இறைவனிடம் வேண்ட அதற்கு இசைந்த இறைவன் பூவுலகிற் பரதமா முனிவரின் புதல்வியாக வளர்ந்து வந்த அம்பிகையைக் கரம் பற்ற வந்தார். அப்போது அம்பிகை தம் பெற்றோர் மகிழ விதிமுறைப்படி மணந்து கொள்ளுமாறு வேண்டினாள். அதற்கு இசைந்தார் இறைவன். “நாமே விதித்த விதியின் படி நடந்து உம்மை மணங்கொள்வோம்’ என்று அருள் புரிந்தார். இதனால் “சொன்னவாறு அறிவார்’ எனும் பெயர் வந்தது. இறைவி அமிர்தமுகிழாம்பிகை, மிருதுமுகிழாம்பிகை, பரிமளசுகந்த நாயகி, அரும்பன்னவனமுல்லையாள் எனப் பல பெயர் கொண்டு அழைக்கப்படுகின்றாள். தீர்த்தங்களாக காவிரி, சுந்தர தீர்த்தம், என்பனவும் தலமரமாக உத்தால மரமும் விளங்குகின்றன.
கார்த்திகை ஞாயிறு நாட்கள் இத்தலத்தில் விசேடமான நாட்களாகும். நாள் தோறும் காரண, காமிக ஆகமங்களின் முறைப்படி ஐந்து காலப் பூசைகள் சிறப்பாக நடைபெறுகின்றன. கதிரவன் வழிபட்டுத் தவம் செய்த இடம் என்பதால் கதிராமங்கலம் எனவும் அழைக்கப்படுகிறது. இவ்வாலயத்தைச் சூழ பல தீர்த்தங்களும் ஆலயங்களும் உள்ளன. அக்கினி தீர்த்தம், காளி தீர்த்தம், புண்டரீக தீர்த்தம், காம தீர்த்தம், கதிரவ தீர்த்தம், மார்க்கண்டேய தீர்த்தம் முதலிய பல தீர்த்தங்கள் காணப்படுகின்றன. இத் தலத்திற்குப் பக்கத்தில் திருவாவடு
இந்துக் கலைக்களஞ்சியம்

Page 33
துறை, தென்குரங்காடுதுறை, திருக்கோடிகா, சூரியனார் கோயில், கதிராமங்கலம், திருமணஞ்சேரி, திருப்பந்தனை நல்லூர், திருவேள்விக்குடி முதலியன காணப்படுகின்றன.
நால்வரின் பாடல் பெற்ற தலமாக இது விளங்குகின்றது. ஐயடிகள் காடவர்கோனும் இத்தலத்தைப் பாடியுள்ளார். மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்களால் திருத்துருத்திப் புராணம் பாடப்பட்டுள்ளது. சங்கிலியாரை மணந்து, பின் அவளுக்குச் செய்து கொடுத்த சத்தியத்தை மீறி, சுந்தரர் ஒற்றியூரை விட்டு வெளியேறிய போது அவரது உடலில் பிணி உண்டாகி கருநிறமாக மாறியது. சுந்தரர் திருத்திருத்தியை அடைந்து இறைவனைப் பாடிய போது இறைவன் சுந்தரரை ஆலயத்தின் வடகுளத்தீர்த்தத்தில் நீராடும் படி கூறினார். இதில் நீராடி மின்னும் மாமேகங்கள் எனும் பதிகம் பாடி பழைய மேனியைப் பெற்றார். தீண்டும் பொருளை எல்லாம் எரிக்கும் பழியை இத்தலத்தை வணங்கிப் போக்கிக் கொண்டார். அக்கினி பகவான். விக்கிரம சோழனின் மனைவி கோவளையின் குஷ்ட நோய் இத்தலத்திலேயே நீங்கியது. வருணனுக்கு சலோதரம் என்ற வியாதியும் இத்தலத்து இறைவனை வழிபட்டு நீங்கியுள்ளது. இவ்வாறு பிணி போக்கும் தலமாக இது விளங்கியுள்ளது.
இத் தலச்சிறப்பாக உமை வழிபட்டதும் காளி வழிபட்டுப் பேறு பெற்றதும் வருணன் வழிபட்டு சலோதரம் எனும் பிணி நீங்கியதும் கொள்ளப்படுகின்றன. இதைவிட காசிபன், ஆங்கிரசன். கௌதமன், வசிஷ்டர், மார்க்கண்டேயர், புலஸ்தியர், அகத்தியர், ஆகிய சப்தரிஷிகளும் வழிபட்டு இத்தலத்தில் பேறு பெற்றுள்ளனர். இவ்வாறு மூர்த்தி தல, தீர்த்தம் எனும் சிறப்புப் பெற்று விளங்குகின்றது திருத்துருத்தி. இதன் சிறப்பை மாணிக்கவாசகர்,
"திருத்துருத்தி மேயானைத்
தித்திக்கும் சிவபதத்தை
அருத்தியினால் நாயடியேன்
அணிகொள் தில்லை கண்டேன்’ எனவும்,
அப்பர் சுவாமிகள்,
"அள்ளலைக் கடக்க வேண்டில் அரனையே நினைமின் நீர்கள் பொள்ளலிக் காயந் தன்னுள் புண்டரீகத்திருத்த வள்ளலை வானவர்க்கு காண்பரிதாக நின்ற துள்ளலைத் துருத்தியானைத் தொண்டனேன் கண்டவாறே” எனவும் பாடுகின்றார்கள். (க.ஹே.)
திருத்தொண்டர் திருவந்தாதி திருத்தொண்டத் தொகையிற் காணப்படும் திருத்தொண்டர்
தம் வரலாற்றை இந்நூல் கூறுகின்றது திருத்தொண்டத் தொகை இந்நூலுக்கு முதன் நூலாக அமைகின்றது. இந்நூல்
இந்துக் கலைக்களஞ்சியம்

பதினோராம் திருமுறையைச் சேர்ந்தது; கட்டளைக்கலித் துறையாலானது.
நூற்பொருள்- தில்லைவாழ் அந்தணரை வாழ்த்தி இந்நூல் தொடங்குகின்றது. இந்நூலில் தேவாரம்பாடிய மூவரும் தனியடியார்அறுபதின்மரும் ஒன்பது திருக்கூட்டத்தாரும் ஆகிய தொண்டர்களுக்குரிய ஊர், நாடு, மரபு முதலியவைகளும் அவர்கள் மேற்கொண்டருளிய திருத்தொண்டின் நெறியும் அதனால் அவர்கள் பெற்ற பேறும் கூறப்பட்டுள்ளது. திருத்தொண்டத் தொகைத் திருப்பாட்டுக்கள் பதினொன்றிலும் காணப்படும் எழுபத்திருவர் வரலாறுகளையும் பெரும்பாலும் ஒவ்வொரு திருப்பாட்டுக்களால் வகை செய்தருளினர். இப்பாட்டுக்கள் எண்பத்தாறாகக் காணப்படுகின்றன. மெய்யடியார்கள் எழுபத்திருவருக்கும் ஒவ்வொரு திருப்பாட்டால் அமைந்தன போக, பதினான்கு திருப்பாட்டுக்கள் கூடுதலாகக் காணப்படுகின்றன. சுந்தரர் வரலாற்று நிகழ்ச்சிகளைக் குறித்துப் போற்றும் பதினொருபாடல்கள் திருவந்தாதியில் அமைந்துள்ளன. நாவுக்கரசர், ஞானசம்பந்தர், சேரமான் பெருமாள், கோச் செங்கட்சோழர் ஆகியோரின் வரலாறுகள் இவ்விரண்டு பாடல்களிலும் ஏனையோரின் வரலாறுகள் ஒவ்வொரு பாடலிலும் குறித்துப் போற்றப்பட்டுள்ளன. இறுதியில் இத் திருவந்தாதியை ஒதுவதனால் அடையும் பயனும் திருத்தொண்டத் தொகையின் முதற் குறிப்பும் குறிப்பிடப் பட்டுள்ளன.
சிவஞானம்பெற்ற சுந்தரரும் சேரமான் பெருமான் நாயனாரும் மனித உடலோடு தேவர்களாலும் அடையமுடியாத கயிலாயத்திற்குச் சென்று இறைவனைத் தரிசித்தனர். சுந்தரர் வரலாற்று நிகழ்ச்சிகளைக் குறித்துப் போற்றும் பதினொரு பாடல்கள் இந்நூலிற் காணப்படுகின்றன. ஒன்பது திருக்கூட்டத் தாரின் சமய அறிவும் ஞானமும் சிவனடியார் பண்பும் கூறப்பட்டுள்ளது.
நூலின் பயன் இறுதியிற் கூறப்பட்டுள்ளது.
"ஓடிடும் பஞ்சேந்திரியம்
ஒடுக்கி என் ஊழ்வினைகள் வாடிடும் வண்ணம் நின்று எத்தவம்
செய்தனன் வானின் உள்ளோர் சூடிடும் சீர்த்திருப் பாதத்தர்
தொண்டத் தொகையின் உள்ள சேடர்தம் செல்வப் பெரும் புகழ்
அந்தாதி செப்பிடவே'
ஆசிரியர்- இந்நூலாசிரியர் நம்பியாண்டார் நம்பி 11ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவர். சோழ நாட்டிலே தென்னார்க்காடு மாவட்டத்தில், சிதம்பரத்துக்கருகில் உள்ள திருநாரையூரில் ஆதிசைவர் குலத்திற் பிறந்தார். இவர் தந்தை அங்கு கோயில் கொண்ட பொல்லாப் பிள்ளையாரை வழிபடுபவர். ஒரு நாள் பிள்ளையாருக்கு நைவேத்தியம் படைத்தார். தந்தையார் படைக்கும் நைவேத்தியத்தைப் பிள்ளையார் உண்கிறார் என
19

Page 34
நினைத்து படைத்த நம்பியார், பிள்ளையார் அதனை உண்ணாமை கண்டு பெரும் கவலை அடைந்து கல்லுடன் தன் தலையை மோத முற்பட்டார். இதனைக் கண்ட பிள்ளையார் தும்பிக்கையால் படையலை உண்டுவிட்டார். பிள்ளையார் அருள் பெற்ற நம்பியாண்டார் பிள்ளையார் மீது இரட்டை மணிமாலை பாடினார். இவர் தேவாரப் பதிக ஏடுகளை தேடி எடுத்து திருமுறைகளாக வகுத்தார். விநாயகர் திருவிரட்டைமணிமாலை, திருத்தொண்டர் திருவந்தாதி, திருமும்மணிக் கோவை, திருவுலாமாலை, திருக்கலம்பகம் முதலிய பல நூல்களை அருளினார். (இ.ச.)
O
திருத்தொண்டர் புராணம்
ைெசிவத்திருமுறைகள் பன்னிரண்டில் நிறைவாக அமைந்திருப்பது திருத்தொண்டர் புராணம். இதனைத் பெரிய புராணம் என்றும், திருத்தொண்டர் மாக்கதை என்றும் சொல்வர். இதன் ஆசிரியர் சேக்கிழார். சுந்தரமூர்த்தி சுவாமிகள் அருளிய திருத் தொண்டத் தொகையை முதல் நூலாகவும், நம்பியாண்டார் நம்பிகள் அருளிய திருத்தொண்டர் திருவந்தாதியை வழி நூலாகவும் கொண்டு, பெரிய புராணம் ஒரு பெருங்காப்பியமாக அமைக்கப்பட்டுள்ளது. இரண்டு(02) காண்டங்களையும், பதின்மூன்று (13) சருக்கங்களையும், நாலாயிரத்து இருநூற்று எண்பத்தேழு(4287) விருத்தப் பாக்களையும் இந்நூல் கொண்டுள்ளது. அறுபத்துமூன்று(63) தனியடியார் வரலாறுகளும், ஒன்பது (9) தொகையடியார்களது சிறப்புக்களும் இந்நூலுள் விரித்துரைக்கப்படுகிறது. சமய - சமூக - பண்பாட்டு வளர்ச்சியில் இந்நூல் ஆற்றியிருக்கும் பெரும்பங்கு இங்கே விரித்துரைக்கப்படவுள்ளது.
நூலாசிரியா - சேக்கிழார்
பெரிய புராண நூலாசிரியர் சேக்கிழார், தொண்டை நாட்டில் குன்றத்தூரிற் பிறந்தவர். இவர் வேளாளர் குலத்தில் சேக்கிழார் என்ற குடியில் வந்தவர் இயற்பெயர் அருண்மொழித்தேவர் என்பது. இவர் அநபாயன், அபயன், திருநீற்றுச் சோழன் முதலிய பட்டப்பெயர்களை உடைய இரண்டாம் குலோத்துங்க சோழன் அவையில் முதல் அமைச்சராகத் திகழ்ந்தார். சோழன் இவருக்கு உத்தம சோழப்பல்லவன் என்ற பட்டம் அளித்துச் சிறப்பித்தான். அக்காலத்தில் திருத்தக்க தேவர் இயற்றிய சீவக சிந்தாமணி என்ற சமண காவியத்தில் சோழன் பெரிதும் ஈடுபாடு கொண்டிருந்தான். மன்னனைச் சைவ நாட்டம் உடையவனாக மாற்றச் சிவனடியார் வரலாறுகளைச் சேக்கிழார் அவ்வப்போது எடுத்துரைத்து வந்தார். சோழன் அவற்றை விரும்பிக்கேட்டு மகிழ்ந்து சைவ அடியவர்கள் வரலாற்றைத் தொகுத்து ஒரு காப்பியம் இயற்றித் தருமாறு சேக்கிழாரைக் கேட்டுக்
கொண்டான்.
தொண்டர்சீர் பரவுவார்
சேக்கிழார் சோழமன்னனின் வேண்டுகோளை ஏற்றுத் தில்லைக்குச் சென்று நடராசப் பெருமானை வணங்கிநின்றார்.
20

தில்லை அம்பலவன் 'உலகெலாம்’ என்று சேக்கிழாருக்கு அடி எடுத்துக் கொடுத்தான். அதனையே முதலாகக்கொண்டு,
உலகெலாம் உணர்ந்து ஒதற்கு அரியவன் நிலவுலாவிய நீர்மலி வேனியன் அலகில் சோதியன் அம்பலத்து ஆடுவான் மலர் சிலம்படி வாழ்த்தி வணங்குவாம் என்று வாழ்த்தை முதலாக அமைத்துக் கொண்டு திருத்தொண்டர் புராணத்தை இயற்றினார். சோழன் முன்னிலையில் இந்நூல் தில்லையில் அரங்கேற்றம் செய்யப்பட்டது. நிறைவில் சோழன் சேக்கிழாரையும், பெரியபுராணத்தையும் யானை மீது ஏற்றி, தானும் பின் இருந்து கவரி வீசி நான்கு வீதிகளினும் ஊர்வலமாக அழைத்துச் சென்று பெருமை சேர்த்தான். தொண்டர் சீர் பரவுவார் என்ற பட்டத்தையும் அளித்துச் சிறப்பித்தான். சேக்கிழார் தில்லை யிலேயே தவம் இருந்து கூத்தப்பிரான் தாள் மலர்களில் கலந்தார். இவர் காலம் கி. பி. 12 ஆம் நூற்றாண்டு என்பர்.
சேக்கிழார் புராணம்
சேக்கிழார் வரலாற்றையும், பெரியபுராணத் தோற்றத்தையும் விரித்துரைக்கும் செய்யுள் நூல் ஒன்று தமிழில் உள்ளது. இந்நூலுக்குச் சேக்கிழார் புராணம் என்று பெயர். இதனை, திருத்தொண்டர் புராண வரலாறு என்றும் கூறுவர். இதனைத் தில்லை உமாபதி சிவாச்சாரியார் என்பவர் இயற்றியதாகக் கூறுவர். இந்நூலுள் 103 பாடல்கள் இடம் பெற்றுள்ளன. இந்நூலில்,
தில்லைவாழ் அந்தனரே முதலாகச் சீர்படைத்த தொல்லையதாம் திருத்தொண்டத்
தொகையடியார் பதம் போற்றி ஒல்லை அவர் புராணகதை உலகறிய விரித்துரைத்த செல்வமலி குன்றத்தூர்ச் சேக்கிழார் அடிபோற்றி
(சேக்கிழார் புராணம்- பாடல் 7)
தொல்லை - பழமை, ஒல்லை - முன்னர், மலி - நிறைந்த
என்றபாடல் சேக்கிழார் வாழ்த்தாக அமைந்துள்ளது. சேக்கிழார் பெருமையையும், பெரியபுராணச் சிறப்புக்களையும் விரித்து ரைக்கும் சில நூல்கள் பிற்காலத்திலே தோன்றின. அவற்றுட் குறிப்பிடத் தக்க ஒன்று சேக்கிழார் பிள்ளைத் தமிழ் என்பது. இதன் ஆசிரியர் மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம்பிள்ளை. இவர் சேக்கிழாரைப்
பக்திச் சுவை நனி சொட்டச் சொட்ட பாடிய கவி வலவ என்று போற்றிப் புகழ்ந்து விளித்துள்ளார்.
பெரிய புராணம்
தமிழிலே பெருங்காப்பிய இலக்கணம் பெறும் சிறந்த நூல்கள் இல்லை. இருக்கும் ஒன்றிரண்டு நூல்களும்
இந்துக் கலைக்களஞ்சியம்

Page 35
வடமொழிக்காப்பியப் போக்கைக் கருத்திற் கொண்டு இயற்றப்பட்டுள்ளன. என்றாலும், அவை பெறும் காப்பிய இலக்கணங்கள் பலவும் கொண்டதாகப் பெரியபுராணம் இயற்றப் பட்டுள்ளது. பெரிய புராணத்தின் முதல் நூல் சுந்தர மூர்த்தி சுவாமிகளின் திருத்தொண்டத் தொகை என்பது முன்னரும் கூறப்பட்டது. எனவே, சிவனடியார் வரலாறுகளைத் தொகுத்துத் தந்த சுந்தரமூர்த்தி சுவாமிகளையே காப்பியத் தலைவராகச் சேக்கிழார் கொண்டுள்ளார். காப்பியத்தின் முதல், இடை, கடை ஆகிய மூன்றிடத்தும் சுந்தரமூர்த்தி சுவாமிகள் வரலாறுகளை விரித்துரைத்து இடையிடையே அவராற் போற்றி வணங்கப்பட்ட அடியவர்கள் வரலாறுகளையும் விளக்கி வரைந்து மிக நுட்பமாக இப்பெருங்காப்பியத்தைச் சேக்கிழார் படைத்தளித்துள்ளார். காப்பியக் கதையைக் கயிலாயத்திலே தொடங்கி மீண்டும் கயிலாயத்திற் கொண்டுபோய் நிறைவிக்கும் அருமை சேக்கிழாரின் காப்பியப் புனைவிற்குச் சான்று கூறி நிற்கிறது.
காப்பியப் பகுப்பு
பெரியபுராணம் காப்பிய இலக்கணங்களுக்கு ஏற்ப முதற் காண்டம், இரண்டாம் காண்டம் என இரண்டாகப் பகுக்கப்பட்டுள்ளது. பெருங் காப்பியங்களின் உட்பிரிவுகளுக்குப் பல பெயர்கள் வழங்கப்படுகின்றன. சேக்கிழார், சருக்கம் என்ற சொல்லைப் பயன் கொண்டுள்ளார். முதற் காண்டத்தில் ஐந்து(5) சருக்கங்களும், இரண்டாம் காண்டத்தில் எட்டு(8) சருக்கங்களும் இடம் பெற்றுள்ளன. திருத் தொண்டத் தொகையில் இடம் பெற்றுள்ள பதினொரு(11) பாடல்களினதும் தொடக்கமே சருக்கங்களுக்குப் பெயராகச் சூட்டப்பட்டுள்ளன. உதாரணமாகத் திருத்தொண்டத்தொகையின் முதற் பாடல் தில்லைவாழ் அந்தணர்தம் அடியார்க்கும் அடியே என்று தொடங்கியுள்ளதால், அப்பாடலில் இடம் பெற்றுள்ள அடியார் வரலாறுகளை விரித்துரைக்கும் பகுதிக்குத் தில்லைவாழ் அந்தணர் சருக்கம் என்றே ஆசிரியர் பெயர் சூட்டியுள்ளார். முதற் சருக்கமாகக் கயிலாய மலைச் சிறப்புரைக்கும் திருமலைச் சுருக்கத்தையும், இறுதியாகச் சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருக்கயிலாயம் சென்றடைந்த செய்திகளைக் கூறும் வெள்ளானைச் சுருக்கத்தையும் அமைத்துக் கொண்டு, திருத்தொண்டத்தொகைப் பாடல்களை முதன்மையாகக் கொண்ட பதினொரு சருக்கங்களையும் இடையில் வைத்துச் சேக்கிழார்
அற்புதமாகக் காப்பியக் கட்டமைப்பைச் செய்துள்ளார்.
யாப்பமைதி
சேக்கிழாரின் பெரியபுராணம் முழுவதும் அக்காலத்தில் பெருவழக்கில் இருந்த யாப்பு முறைகளையே பின்பற்றி அமைக்கப்பட்டுள்ளது. கீழ் வரும் பட்டியல் கொண்டு பெரிய புராணத்தில் இடம் பெற்றுள்ள பல்வகை யாப்பு வகைகளையும், அந்த அந்த யாப்பில் அமைந்துள்ள பாடல் தொகைகளையும் தெரிந்து கொள்ள முடியும்.
இந்துக் கலைக்களஞ்சியம்

G). GT யாப்பு வகை பாடல்
தொகை
1. அறுசீர்க்கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் 1805 2. எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் 75 3. எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் 28O 4 தரவு கொச்சகக் கலிப்பா 12O7 5. கலி நிலைத்துறை 545 6. கலிவிருத்தம் 368 7 வஞ்சிவிருத்தம் 6
பாடல்கள் மொத்தம் 4286
இதில் பெரிய புராணத்தின் நிறைவில் இணைக்கப்பட்டுள்ள வையம் நீங்குக' என்ற பாடல் சேர்க்கப்படவில்லை. மேற்கண்ட அட்டவணை சமயக் காப்பியம் பாடுவதற்கும், பக்திச் சுவையை நிலைநாட்டுவதற்கும் விருத்தப்பாக்களும், கலிப் பாக்களும் சிறந்த யாப்பு முறைகள் என்பதை அறிவிக்கிறது.
திருமலைச் சருக்கம்
பெரிய புராணத்தின் முதற்பகுதியாகிய திருமலைச் சருக்கம் (1) பாயிரம், (2) திருமலைச் சிறப்பு, (3) திருநாட்டுச் சிறப்பு, (4) திருநகரச் சிறப்பு, (5) திருக் கூட்டச் சிறப்பு, (6) தடுத்தாட் கொண்ட புராணம் என்ற ஆறு உட்பகுதிகளையும், 344 பாடல்களையும் கொண்டு நடையிடுகிறது. காப்புப் பகுதியில் முதல் இரண்டு பாடல்கள் தில்லைக் கூத்தனையும், 'எடுக்கும் மாக்கதை’ என்று தொடங்கும் மூன்றாவது பாடல் விநாயகனையும் வணங்குவதாக அமைந்துள்ளன. காப்புப் பகுதியில் அடியார் திருக் கூட்டம் விளக்கம் பெற ஒரு பாடலும், அவையடக்கப்பகுதியில் ஐந்து பாடல்களும், நூற்பெயர் பெறும் பாடல் ஒன்றும் இடம் பெற்றுள்ளன.
இங்கிதன் நாமம் கூறின்
இவ்வுலகத்து முன்னாள் தங்கிருள் இரண்டில் மாக்கள்
சிந்தையுள் சார்ந்து நின்ற பொங்கிய இருளை ஏனைப்
புறஇருள் போக்குகின்ற செங்கதிரவன் போல்நீக்கும்
திருத்தொண்டர் புராணம் என்பாம்
(பெரியபுராணம் -10) என்னும் பாடல் இந்நூற் பெயரைப் பதிவு செய்கிறது.
பெரியபுராணம் - காப்பு:
காப்புப் பகுதியில் விநாயகர் வாழ்த்தில் 'எடுக்கும் மாக்கதை என்ற ஒரு தொடர் வருகிறது. மா - என்ற ஒரெழுத்து ஒரு மொழிக்குப் பெரிய என்பது பொருள். எனவே, மாக்கதை என்ற தொடருக்குப் பெருங்கதை என்று பொருள் கொண்டிருக்கலாம். முன்னரே தமிழில் பெருங் கதை என்ற ஒரு நூல் இருப்பதால், இதனை வேறுபடுத்தி அறிவதற்கும் பெரிய புராணம் என்று இந்நூலை முன்னோர் அழைத்திருக்கலாம். அவையடக்கத்தில்
21

Page 36
அளவிலாத பெருமையராகிய அளவிலா அடியார் என்ற ஒரு தொடர் வருகிறது. 'பெருமையர் என்ற சொல் பெருமைமிக்கவர், பெரியார் என அழைக்கப்பட்டு, பெருமைமிக்க அடியார் வரலாறு என்ற பொருளில் பெரியபுராணம் என்றும் அழைக்கப் பட்டிருக்கலாம். செயற்கரிய செயல் செய்தவர்களைத் திருவள்ளுவர் பெரியார்' என்கிறார். நாயன்மார் வரலாற்றில் பலரும் செயற்கரிய செயல் செய்தவரே ஆவர். சேக்கிழாரும் பல இடங்களில் அடியார் செயல்களைச் செயற்கரிய செயல் என்று குறிப்பிட்டுள்ளார். அது பற்றியும் பெரிய புராணம் என்ற பெயர் அமைந்திருக்கலாம்.
திருமலைச் சிறப்பு
திருமலைச் சிறப்பில், கயிலாயமலையின் இயற்கை எழிலும், சிவபெருமான் எழுந்தரு எளியிருக்கும் திருவோலக்கமும் சிறப்பிக்கப்பட்டுள்ளன. உபமன்யு முனிவர் சீடர்களுக்குச் சுந்தரர்வரலாறு உரைக்கும் போக்கில் காப்பியமும் இங்கேயே தொடங்கிவிடுகிறது. காப்பியநாயகர் பெருமையை,
தம்பிரானைத் தன் உள்ளம் தழிஇயவன் நம்பியாரூரன் நாம் தொழும் தன்மையன் (29)
என்று உபமன்யு முனிவர் கூற்றாகச் சேக்கிழார் பதிவு செய்கிறார்.
ஒரு காதலால், தென்தமிழ் நாடு அடியவர் பெருமை அறிந்து மகிழும் பேறு பெற்றது என்பதனை,
மாதவம் செய்த தென்திசை வாழ்ந்திடத் தீதிலாத் திருத்தொண்டத் தொகை தரப் போதுவான் அவர்மேல் மனம் போக்கிடக் காதல் மாதரும் காட்சியில் கண்ணினார் (35)
எனச் சேக்கிழார் காப்பிய நுட்பமும், நயமும் தோன்றக் குறித்துக் காட்டுகிறார்.
திருநகரச் சிறப்பு
பெருங்காப்பியங்களில் காப்பியத்தலைவன் பிறந்த நாட்டையும், நகரத்தையும் சிறப்பித்தல் மரபு. சுந்தரமூர்த்தி சுவாமிகள் பிறந்த நாடு திருமுனைப் பாடி நாடு. நகரம் திருநாவலூர். ஆனால் சேக்கிழார் அவற்றையும் புனைந்து பாடாது சோழ நாட்டையும் திருவாரூரையும் புனைந்து போற்றுகிறார். இதற்கான காரணம் தெளிவாகப் புலப்படவில்லை. தம்மை ஆதரித்துப் பெரிய புராணம் பாடச் செய்த சோழர்கள்பாற் கொண்ட நன்றி உணர்ச்சியால் இவ்வாறு பாடியிருக்கலாம். அல்லது, சுந்தரமூர்த்தி சுவாமிகள் வருகையின் நோக்கமாக அமைந்த திருத்தொண்டத் தொகை பிறந்த ஊர் திருவாரூர் என்பதால் அதனையும், சோழ நாட்டையும் சேக்கிழார் பாடியிருக்கலாம். இரண்டாவது காரணமே சேக்கிழாருக்குப் பெருமை சேர்ப்பதாக அமையும். நகரப் பெருமை கூறும் நகரச்சிறப்பு என்ற பகுதியில் மனுநீதிச்சோழன் வரலாற்றைச் சேக்கிழார் விரித்துப்பாடியுள்ளார். இதற்கான உண்மைக் காரணமும் தெரியவில்லை.
22

திருக்கூட்டச் சிறப்பு
முதற் சருக்கத்தில் இடம் பெற்றுள்ள திருக் கூட்டச் சிறப்பில் சைவ அடியார்களின் அளவற்ற பெருமைகள் விரித்துரைக்கப் பட்டுள்ளன. சைவ அடியார்கள் புறத் தூய்மையும், அகத் தூய்மையும் மிக்கவர்கள் என்பதை, பூசு நீறுபோல் உள்ளும் புனிதர்கள்(141) என்றும், அன்னார் இன்ப துன்பங்களில் பாதிப்போ, பொன் பொருள்களில் நாட்டமோ இல்லாதவர்கள் என்பதனை,
கேடும் ஆக்கமும் கெட்ட திருவினார் ஒடும் செம்பொனும் ஒக்கவே நோக்குவார் கூடும் அன்பினில் கும்பிடலே அன்றி வீடும் வேண்டா விறலின் விளங்கினார் (143) என்றும், அடியவர்தம் அக, புறத்தூய்மைகளை,
ஆரம் கண்டிகை ஆடையும் கந்தையே பாரம் ஈசன் பணி அலது ஒன்றிலர் ஈர அன்பினர் யாதுங் குறைவிலர் வீரம் என்னால் விளம்பும் தகையதோ (144)
என்றும் சேக்கிழார் இனங்காட்டிப் பெருமை சேர்க்கிறார்.
ஆக்கம் - செல்வம், ஒக்கவே - ஒன்றாகவே, ஆரம் - கழுத்தில் அணியும்
அணிகலன், பாரம்-சுமை - இங்கே கடமை
தடுத்தாட் கொண்ட புராணம்
முதற் படலத்தின் ஆறாவது பகுதி தடுத்தாட் கொண்ட புராணம். பெரியபுராணத்தின் மிக உன்னதமான பகுதி இது என்று கூறலாம். சுந்தரமூர்த்தி சுவாமிகள் அவதாரம் தொடங்கி, திருத்தொண்டத் தொகை பாடப்படும் வரை இப்பகுதி இருநூற்று மூன்று (203) பாடல்களில் நடையிடுகிறது. பெருங்காப்பியங்களில் இடம் பெறவேண்டிய பல பகுதிகள் இப்புராணப்பகுதியில் அற்புதமாக இடம்பெறச் செய்யப்
இங்கே இடம் பெற்றுள்ளன. சுந்தரமூர்த்தி சுவாமிகளின் அவதாரம், திருவெண்ணெய் நல்லூர் அரசன் நரசிங்கமுனையன் சுந்தரரை அரண்மனையில் அன்பு பாராட்டி வளர்த்தமை, புத்தூர் சடங்கவி சிவாசாரியார் மகளை மணம் பேசியமை, திருமணத்தில் சிவபெருமான் முதிய வேதியராய் எழுந்தருளி ஒலைகாட்டித் திருமணத்தைத் தடுத்துச் சுந்தரரை ஆட்கொண்டமை, திருவெண்ணெய் நல்லூர்ச் சிவாலயமாகிய திருவருட்டுறையில் சிவபெருமான் மறைந்து தம்மைப்பாடுமாறு பணித்தமை, எவ்வாறு பாடுவது என்று சுந்தரர் திகைத்து நின்றபோது பித்தா என்று அடி எடுத்துக் கொடுத்துப்பாடுமாறு செய்தமை என்றெல்லாம் நிகழ்வுகள் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன.
அர்ச்சனை பாட்டேயாகும் ஆதலால் மண்மேல் நம்மைச் சொற்றமிழ் பாடுக என்றார் தூமறை பாடும் வாயார்
என்ற அழகிய, தமிழ் மொழியின் சிறப்புரைக்கும் இறைமை சார்ந்த மொழிகளும் முன்பு எனைப் பித்தன் என்றே
இந்துக்கலைக்களஞ்சியம்

Page 37
மொழிந்தனை ஆதலாலே என்பெயர் "பித்தன்' என்றே
பாடுவாய் என்ற திருவருட் குறிப்பு மொழிகளும் இப்பகுதியில் இடம் பெற்றுள்ளன.
பரவையார் திருமணம்
மேலும் தலயாத்திரை மேற்கொண்ட சுந்தரர் திருத்துறையூரில் தவநெறி அருளப் பெற்றதும், திருவதிகை எல்லைப் பகுதியில் சிவன் திருவடி சூட்டப் பெற்றதும், தில்லைச் சிற்றம்பலவனை வணங்கிப் பேரின்ப வெள்ளத்துள் திளைத்ததும், தோணிபுரத்தில் (சீர்காழி) இறைவன் திருக்காட்சி காட்டக் கண்டு மகிழ்ந்ததும், திருவாரூரில் இறைவன் தம்மைச் சுந்தரருக்குத் தோழமையாகத் தந்ததும், சுந்தரர் 'தம்பிரான் தோழர்' என அழைக்கப் பெற்றதும், இறைவனின் முன்னைய விதிப்பால் திருவாரூரில் உருத்திரகணிகையர் குலத்திற் பிறந்திருந்த பரவையாரைக் கண்டு ஆரூர்ப் பெருமான் அருளின் துணையோடு அவரை மணந்து மகிழ்ந்ததும் இப்பகுதியில் நிரல்பட விரித்துரைக்கப்பட்டுள்ளன. இன்பத்திலே திளைக்கும்போதும், அதிலிருந்து விடுபட்டு நீங்கி நிற்பதும், துன்பத்திலே துவஞம் போதும் அதனால் பாதிப்படையாது நெஞ்சுறுதி கொண்டு நிமிர்வதும் சிலருக்கே வாய்க்கும். பரவையாரோடு இன்பம் துய்த்த காலத்தும் சுந்தரர் அவ்வின்பத்தில் திளையாது யோகநெறி நின்றார் என்ற அரிய குறிப்பு இப்பகுதியில் இடம் பெற்றுள்ளது.
S SS SS SSL S S S S S LS S LS S S S S SS LS LS LS S S S S S LS S LSL S S S S S LSL LSL S S S S S S S S S S S S S S S S S S S பரவை என்னும் மெல்லியல்தன் பொன்னாரும் முலை ஓங்கல் புணர்குவடே சார்வாகப் பன்னாளும் பயில்போக பரம்பரையின் விரும்பினார்
ஓங்கல் - மலை, குவடு - குன்று, யோகம் - நால்வகை இறைநெறிகளில் ஒன்று (32)
திருத்தொண்டத் தொகை
திருவாரூரில் வாழ்ந்துவரும் நாளில் திருக்கோயில் முன்பகுதியில் அமைந்திருந்த தேவாசிரியன் மண்டபத்தில், சிவனடியார் பலர் கூடியிருக்கக் கண்ட சுந்தரர், தாம் அன்னாருக்கு அடிமை பூண வேண்டும் என்று விரும்பினார். திருவாரூர் இறைவன் சிவனடியார்களின் பெருமைகளை அசரீரியாக எடுத்துரைத்தான்.
பெருமையால் தம்மை ஒப்பார்
பேனலால் எம்மைப் பெற்றார் ஒருமையால் உலகை வெல்வார்
ஊனம் மேல் ஒன்றும் இல்லார் அருமையாம் நிலையில் நின்றார்
அன்பினால் இன்பம் ஆர்வார் இருமையும் கலந்து நின்றார்
இவரைநீ அடைவாய் (342)
இந்துக்கலைக்களஞ்சியம்

என்று அடியவர் பெருமையை இறைவன் எடுத்துக் கூறக் கேட்ட சுந்தரர் மகிழ்ந்தார். இறைவன் அடியார் பெருமைகளை விரித்து நீபாடுக என்று ஆணையிட்டு, தில்லை வாழ் அந்தணர் தம் அடியார்க்கும் அடியேன்” என்று அடி எடுத்தும் கொடுத்து அருளினார். சுந்தரர் சிவன் அருட் கட்டளையை ஏற்று பதினொரு (11) பாடல்களால் அடியவர் பெருமை கூறும் - வரலாற்றுச் சிறப்புமிக்க திருத் தொண்டத் தொகை என்ற பதிகத்தைப் பாடி வழங்கினார். அதில் முன் குறித்தவாறு அறுபது (60) தனியடியார்கள் மற்றும் ஒன்பது (9) தொகையடியார்கள் பெயர்கள் இடம்பெற்றிருந்தன. அவ்வடியார் வரலாற்றை இனி நான் விரித்துரைப்பேன் என்று கூறிச் சேக்கிழார் நாயன்மார் வரலாறுகளை இரண்டாவது சருக்கம் முதலாக விரித்துரை செய்துள்ளார்.
பெண் அடியார்கள்
திருத்தொண்டத் தொகையில் ஆண் அடியார்கள் ஐம்பத்தெட்டு (58) பேரும் பெண் அடியார்கள் இருவரும் இடம்பெற்றுள்ளனர். சேக்கிழார் காப்பிய நாயகராகிய சுந்தரர், அவர் தந்தை சடையனார், தாயார் இசைஞானியார் ஆகிய மூவரையும் இணைத்து நாயன்மார் தொகையை அறுபத்து மூன்று (63) ஆக உயர்த்தியுள்ளார். பெண் அடியவர்கள் மூவருள் இசைஞானியார் வரலாறு சுந்தரர் வரலாற்றுடன் இணைந்து வந்துவிடுகிறது. மங்கையர்க்கரசியார் வரலாறு திருஞான சம்பந்தர் வரலாற்றுள் விரித்துரைக்கப்பட்டு விடுகிறது. எனவே, இவ்விருவர் வரலாறுகளும் தனியே மிகச்சுருக்கமாகவே பாடி அமைக்கப்பட்டுள்ளன. காரைக்கால் அம்மையார் வரலாறு ஒன்று மட்டுமே அறுபத்தாறு (66) பாடல்களால் விரித்துரைக்கப் பட்டுள்ளது. திருத்தொண்டர் தொகையில் இடம்பெறாது அடியவர்கள் அருள் வரலாற்றில் இடம்பெற்றுள்ள திலகவதியார், திருவெண் காட்டு நங்கை, கமலவதி முதலாகிய பல பெண்களும் இந்நூலுள் பெரிதும் போற்றப்பட்டுள்ளனர். பெரிய புராணத்துள் இடம் பெற்றுள்ள மதிப்புமிக்க பெண்களைச் சேக்கிழார் அவள், வந்தாள்’ என்ற பெண் பால் மொழிகளை விடுத்து, அவர், வந்தார்’ என்று பலர் பால் விகுதிகளாற் போற்றியிருப்பது குறிப்பிடத் தக்க சிறப்பாகும்.
தொகை அடியார்கள்
இவர், இன்னார் என்று குறிப்பிட்டுச் சொல்ல இயலாது வேறுபலரையும், தம் காலத்துக்கு முன்பும் தம் காலத்தும் பின்பும் வாழ்ந்தவர்களையெல்லாம் போற்றும் நோக்கில் தொகையடியார் வணக்கத்தைச் சுந்தரர் மேற்கொண்டுள்ளார். வரலாற்று எல்லைக்குள் உட்படாதவர்களையும், வரலாற்றுப் பார்வையில் கிட்டாதவர்களையும் சிறப்பிக்கும் சுந்தரரின் இப்பண்பு பெருஞ்சிறப்புக்கு உரியது. நால்வரில் ஒருவராகிய மாணிக்க வாசகர் பெயர் திருத்தொண்டத் தொகையில் இடம்பெறவில்லை. காரணம் அவர் சுந்தரர் காலத்துக்குப் பின் வந்தவராதல் வேண்டும். இவ்வாறான தொகையடியார்களை அறிந்து கொள்வது பயனுடையதாக அமையும்.
23

Page 38
G). GT தொகையடியார் LITLG) 35 gir
1. தில்லைவாழ் அந்தணர் 10 2. பொய்யடிமை இல்லாத புலவர் 3 3. பத்தராய்ப் பணிவார்கள் 8 4. பரமனையே பாடுவார் 2 5. சித்தத்தைச் சிவன்பால் வைத்தார் 1 6. திருவாரூர்ப் பிறந்தார் 2 7. முப்போதும் திருமேனி தீண்டுவார் 3 8. முழுநீறு பூசிய முனிவர் 6 9. அப்பாலும் அடிசார்ந்தார் 2
பாடல்கள் மொத்தம் 37
தனி அடியார்கள்
பெரியபுராணப் பெண் அடியார்கள் மற்றும் தொகை அடியார்கள் அறிமுகத்திற்குப் பின்னர் ஆண் அடியவர்கள் வரலாறுகளைக் காணலாம். இரண்டாவது சருக்கம் தொடங்கி வரும் சுருக்கங்களில் அறுபது (60) ஆண் அடியார்களின் வரலாறுகளும், திருத்தொண்டத்தொகை வரிசையில் விரித்துரைக் கப்பட்டுள்ளன. தமிழ் மொழியில் அமைந்த பிற புராணங்கள் பலவும் வரலாற்று நோக்கில் அமைந்தன அன்று. சேக்கிழார், வரலாற்றுத் தரவுகளை நாடு முழுதும் சென்று நேரில் கண்டு, திரட்டி, முறைப்படுத்திக் கொண்டு, இந்நூலை ஒரு வரலாற்றுப் பெருங்காப்பியமாகவே படைத்துள்ளனர்.
இலக்கியங்கள், கல்வெட்டுக்கள், செப்பேடுகள், செவிவழிச்
1. அதிபத்தர் 22. காரி நாயன 2. அப்பூதியடிகள் 23. காரைக்கா 3. அமர்நீதி நாயனார் 24. குங்கிலிய 4. அரிவாட்டாய நாயனார் 25. குலச்சிறை 5. ஆனாயநாயனார் 26. கூற்றுவ ந 6. இசைஞானியார் 27. கோச்செங் 7. இடங்கழி நாயனார் 28. கோட்புலி 8. இயற்பகை நாயனார் 29. சக்தி நாய 9. இளையான்குடிமாறர் 30. சடையநாய 10. உருத்திர பசுபதியார் 31. சண்டேசுவி 11. எறிபத்த நாயனார் 32. சாக்கிய ந 12. ஏயர் கோன் கலிக்காமர் 33. சிறப்புலி ந 13. ஏனாதி நாத நாயனார் 34. சிறுத்தொ 14. ஐயடிகள் காடவர்கோன் 35. சுந்தரமூர் 15. கண்ணப்ப நாயனார் 36. செருது6ை 16. கணம்புல்ல நாயனார் 37. || ($g:ILDITéf) ! 17. கணநாத நாயனார் 38, g56tioTiguly. 18. கலிக்கம்ப நாயனார் 39. திருக்குறி 19. கலியநாயனார் 40. திருஞான 20. கழற்சிங்க நாயனார் 41. திருநாவுக் 21. கழறிற்றறிவார் 42. திருநாளை
24

செய்திகள் யாவும் அவரால் உற்று நோக்கி அறியப்பட்டுள்ளன. நன்கு அறிந்து தெளிந்த உண்மைகளை மட்டுமே இவர் பதிவு செய்கிறார். கற்பனைப் பதிவுகளில் இவருக்கு நாட்டம் இருந்திருக்கவில்லை. பூகோள அறிவும், காலக்கணக்குகளும், நில இயல்புகளும் இயற்கை அமைப்புக்களும் மிகத் துல்லியமாக இந்நூலுள் பதிவு செய்யப்பட்டுள்ளன. எனவே, பெரிய புராணத்தை ஒரு வரலாற்றுக் காப்பியமாகக் கொள்ள முடிகிறது.
நாயன்மார் குலமரபு :
திருஞானசம்பந்தர் அருள் வரலாறே இந்நூலுள் அதிகப் பாடல்களால் விரித்துரைக்கப்பட்டுள்ளது. மொத்தம் 4287 பாடல்களில் திருஞானசம்பந்தர் புராணம் மட்டும் 1256 பாடல்களால் பாடப்பெற்றுள்ளது. திருநாவுக்கரசர் வரலாறு 429 பாடல்களால் நடையிடுகிறது. ஏனைய வரலாறுகள் கிடைத்தி ருக்கும் செய்திகளின் அளவிற்கு ஏற்ப விரித்தும் - சுருக்கியும் பாடப் பெற்றுள்ளன. நாயன்மார்கள் அக்காலத்தில் நிலவிய பல்வேறு குலங்களையும், சாதிகளையும் சார்ந்தவர்கள். சைவம் என்ற ஒரு பெரிய வட்டத்துள் சாதி வேறுபாடுகள் கருதாது மனித குலத்தை ஒருங்கிணைக்கும் அரிய முயற்சி பெரிய புராணத்துள் மேற்கொள்ளப் பட்டுள்ளது. அடியவர்களுள் வேளாளர் 13, அந்தணர் 12, முடியரசர் 6, மரபு இன்னது என்று தெரியாதவர் 6, குறுநில மன்னர் 5, வணிகர் 5, ஆதிசைவர் 4, இடையர் 2, ஏனைய குலத்தோர் 10. இவர்கள் சோழநாடு, நடுநாடு, தொண்டை நாடு, பாண்டிநாடு, மலைநாடு, கோனாடு, மழநாடு என்ற பலபகுதிகளைச் சேர்ந்தவர்கள் இன்னநாட்டினர் என்ற குறிப்பு ஒன்பது (9) அடியவர் வரலாறுகளில் இல்லை.
TITrif 43. திருநீலகண்ட யாழ்ப்பாணர் ல் அம்மையார் 44. திருநீலகண்டர்
க் கலயர் 45. திருநீலநக்கர்
நாயனார் 46. திருமூல நாயனார் ாயனார் 47. நமிநந்தியடிகள் கட்சோழர் 48. நரசிங்க முனையரையர் நாயனார் 49. நின்றசீர் நெடுமாறர்
TTT 50. நேச நாயனார்
J60TT if 51. | புகழ்ச்சோழ நாயனார் பர நாயனார் 52 புகழ்த்துணை நாயனார் ாயனார் 53. பூசலார் நாயனார் ாயனார் 54. பெருமிழலைக் குறும்பர் ண்ட நாயனார் 55. மங்கையர்கரசியார் த்தி சுவாமிகள் 56. மானக்கஞ்சாற நாயனார் ண நாயனார் 57. முருக நாயனார்
மாறர் 58. முனையடுவார் நாயனார் கள் 59 மூர்க்க நாயனார் ப்புத் தொண்டர் 60. மூர்த்தி நாயனார்
சம்பந்தர் 61. மெய்ப்பொருள் நாயனார் कTका 62. வாயிலார் நாயனார் Tப் போவார் 63. விறன்மிண்ட நாயனார்
இந்துக் கலைக்களஞ்சியம்

Page 39
பெரியபுராண அடியவர்கள் வரலாற்றை விரித்துரைக்கும் வாய்ப்பு இங்கு இல்லை. ஆயினும் அவர்கள் பெயர்கள் இன்னது என்று தெரிந்து கொள்வது நலம் பயக்கும். அகர வரிசையில் அவர்கள் பெயர்கள் மட்டும் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன.
காப்பிய உள்ளிடு - நூல்செய்தோர்
பெரியபுராணத்தில் இடம்பெற்றுள்ள தனி அடியார்களுள் சிலர் சைவசமயத்திற்கு அருந் தொண்டுகள் இயற்றியதோடு, தாமே சைவ சமயம் குறித்துத் தனிப்பாடல்களையும், பதிகங்களையும், சிற்றிலக்கியங்களையும் படைத்தளித்துள்ளனர். கழறிற்றறிவார் என்ற பெயர் கொண்ட சேரமான் பெருமான் நாயனார் 1. திருவாரூர் மும்மணிக் கோவை, 2. பொன்வண்ணத்தந்தாதி, 3. திரு உலாப்புறம் (திருக்கயிலாய ஞான உலா) என்ற நூல்களைப் படைத்தளித்துள்ளார். காரிநாயனார் என்பவரால் 'காரிக்கோவை' என்ற ஒரு நூல் படைத்தளிக்கப்பட்டதாகச் சேக்கிழார் குறித்துள்ளார். அந்நூல் இன்று கிடைக்கவில்லை. காரைக்கால் அம்மையார் 1. இரட்டைமாலை அந்தாதி (திரு இரட்டை மணிமாலை), 2. அற்புதத் திருவந்தாதி, 3. மூத்த திருப்பதிகம் முதலிய சிறு நூல்களை ஆக்கி அளித்துள்ளார். திருஞான சம்பந்தர்/ திருநாவுக்கரசர் ஆகியோர் அருளிய பதிகப் பாமாலைகள் குறித்து முன்னரே விளக்கப்பட்டுள்ளன. திருமூலர் திருமந்திரமாலை ஆக்கி அளித்துள்ளார். தம் காலத்துக்கு முற்பட்ட இந்நூல்கள் யாவற்றையும் நன்கு ஆராய்ந்து அறிந்தே சேக்கிழார் பெரியபுராணம் பாடியுள்ளார் என்பது நன்கு தெளிவாகிறது.
சைவசமய உண்மைகள்
சைவ சமயம் தொடர்பான பல உண்மைகள் குறித்துப் பெரிய புராணம் விரிவான விளக்கங்களைத் தருகிறது. சைவ சமயத்தில் சிவலிங்க வழிபாடு தொன்மையானது. சிவலிங்கத் திருமேனியின் உண்மை குறித்துச் சேக்கிழார் கூறுவதாவது,
காணாத அருவினுக்கும் உருவினுக்கும் காரணமாய் நீள் நாகம் அணிந்தார்க்கு நிகழ் குறியாம் சிவலிங்கம்
(பெரிய - 3648)
சிவலிங்கம் என்பது உருவமும் அன்று; உருவம் அற்றதும் அன்று. அருவமும் உருவமும் கலந்த ஒரு வழிபாட்டுச் சின்னம் என்று சேக்கிழார் விளக்கம் தருகிறார். சைவத்தில் இறைவனை வீழ்ந்து வணங்கும் முறைகள் இரண்டு உண்டு. அவை; 1. பஞ்சாங்க நமஸ்காரம், 2. அட்டாங்க நமஸ்காரம், இதில் பஞ்சாங்க நமஸ்காரம் என்பது, மண்ணுற ஐந்து உறுப்பால் வணங்கி (270) என்றும், அட்டாங்க நமஸ்காரம் என்பது, அங்கம் மாநிலத்து எட்டுற வணங்கி’(2856) என்றும், சேக்கிழாரால் விளக்கப் பட்டுள்ளன. இரண்டு கால், இரண்டு கை, தலை என்பன ஐந்து உறுப்புக்கள். இத்துடன் மார்பு, இரண்டு காதுகள் தோய்வது எட்டு உறுப்புக்கள் வழிபாடு.
இந்துக்கலைக்களஞ்சியம்

சிவபெருமான் - அருள்திறம்
சைவ சமயக் காப்பியம் என்பதற்கு ஏற்பச் சிவபெருமானின் அடையாளங்களையும், அருட் செயல்களையும், வீர நிகழ்வுகளையும் சேக்கிழார் தம்நூலுள் விரிவாகப்பதிவு செய்துள்ளார்.
தன்னையார்க்கும் அறிவரியான்(1) இன்னதன்மையன் என்று அறியாச் சிவன்’(23) அருமறை முறையிட்டு இன்னும் அறிவதற்கு அரியான்’ (192) அடியார் இடுக்கண்தரியாதார்'(3483)
எவ்வுயிர்க்கும்தாயானான்(2385) கருச்சுற்றில் அடையாமல் கைதருவார்(2294) அருவாகிஉருவாகிஅனைத்துமாய்நின்றபிரான்'(4163) தொல்உலகம் முழுவதும் அளித்து அழித்து ஆக்கும் முதல்வர்(3444) தேவரையும் மால் அயன்முதல் திருவின் மிக்கோர் யாவரையும் வேறு அடிமையா உடைய எம்மான்'(183) முன்னாகி எப்பொருட்கும் முதலாகிநின்றான்(142) முந்தை மறை ஆயிரம் மொழிந்த திருவாயான்(179) புண்ணியப் பொருளாய்நின்றான்'(385) என வரும் பெரிய புராணத் தொடர்கள் குறிப்பிடத்தக்க சிறப்புடையன.
இடுக்கண் - துன்பம், கருச்சுற்று-தாய் வயிற்றில் கருவாகியிருத்தல், மால் - திருமால், அயன் - பிரமன்
புராண வரலாற்றுக் காப்பியம்
இந்நூலுள் பல புராண, வரலாற்றுச் செய்திகளை உள்ளவாறு பதிவு செய்துள்ளார். 1 ஆதித்த சோழன் தில்லை அம்பலத்திற்குப் பொன் வேய்ந்தமை, 2. இமயமலையில் சோழன் புலி இலச்சினை பொறித்தமை, 3. ஒரு காலத்தில் பெண்ணை ஆறு துறையூரின் தெற்கில் ஓடியது. 4. காஞ்சிபுரத்தைக் கரிகாற் பெருவளத்தான் புதுக்கியது, 5. அகத்தியர் காளரியை வரவழைத்தது, 6. இலக்குமி திருவாரூரில் வழிபட்டது. 7 உபமன்யு முனிவர் கண்ணனுக்குச் சிவ தீட்சை செய்வித்தது, 8. உமையம்மை காஞ்சி புரத்தில் சிவபூஜை செய்தது, 9. உமையம்மை காஞ்சியில் முப்பத்திரண்டு அறங்களையும் வளர்த்தது, 10. சிவபூஜை செய்து பரசுராமன் பரசு ஆயுதம் பெற்றது - இவ்வாறான செய்திகள் மேலும்பல பெரிய புராணத்துள் இடம்பெற்றுள்ளன.
காப்பிய எழில் - உவமை அழகு
ஒரு பெருங்காப்பியத்திற்கு கற்பனை, வருணனை, உவமை முதலிய அணிகள் மேலும் அழகு சேர்ப்பன. பக்திக் காப்பியம் என்பதால் சேக்கிழார் உவமைகளில் எல்லாம் பக்தி மணம் கமழக் காண்கிறோம். வஞ்சகத்தை உள்ளத்தில் வைத்துக் கொண்டு, பொய் வேடம் தரித்து வந்தவனை,
மைபொதி விளக்கே என்ன மனத்தினுள் கருப்பு வைத்து (473)
என்று உவமித்துக் காட்டுகிறார். சிவனடியார் வீரத்திற்கு முன் நிற்கமாட்டாது புறங்கொடுத்து வஞ்சகப் பகைவன் ஒடுவதை,
25

Page 40
கதிரோன் எழ மழுங்கிக் கால்சாயும் காலை மதிபோல் அழிந்து பொறா மற்றவன் (615)
என உவமித்து மகிழ்கிறார். நல்ல அன்பு நிறைந்த பிள்ளையின் தந்தை குணமற்றவனாக இருப்பதை விளக்கும் இடத்தில் பாம்பு மாணிக்கத்தையும் அளித்து நஞ்சினையும் கக்கும் தன்மைபோல் என்று உவமிக்கிறார். இறைவனைக் கண்டு கண்ணப்பர் விட்டு நீங்காத தன்மையை,
வங்கினைப் பற்றிப் போதா வல்உடும்பு என்ன நீங்கான்
(765)
என உடும்பின் தன்மையோடு ஒப்புமை காட்டுகிறார். இவ்வாறான உலகியல் கலந்த உவமைகள் பல இந்நூலுள் இடம் பெற்றுள்ளன.
கற்பனைப் புனைவு
பெரிய புராணத்தில் அழகிய கற்பனைகளும் நயமுற அமைந்துள்ளன. வேதியர்கள் கொழுந்து விட்டு எரியும் வேள்வித்தீயில், மாவிலைகளைக் கொண்டு, நெய்யை முகந்து வார்த்து வேள்வி வேட்பர். திருஞானசம்பந்தர் அவதரித்த சீர்காழியில் இயற்கையே வேள்வி செய்வதாகச் சேக்கிழார் கற்பனை செய்கிறார். மாமரங்கள் வயல்களின் ஓரங்களில் தழைத்துள்ளன. வயல்கள் எல்லாம் செந்தாமரைப்பூக்கள் மலர்ந்து கிடக்கும் காட்சி, அவற்றை வேள்விக் குண்டங்கள் போல் எண்ணச் செய்கின்றன. மரத்தில் மாங்கனிகள் முதிர்ந்து வெடித்து அவற்றின் கொழுவிய சாறுகள் கீழே வழிகின்றன. அவை மாவிலைகளில் விழ, மாவிலைகளின் நுனிவழியாகக் கனிச்சாறு கீழே தாரை தாரையாக இறங்க இக்காட்சி, அவ்வூர் மரங்கள் எல்லாம் வேள்விசெய்வது போன்ற தோற்றத்தைத் தருகின்றன. மாம்பழச்சாறு கெட்டி பட்டு இளகிய நெய்போலத் தோன்றும் ஒப்புமை நினைவு கூரத்தக்கது.
பரந்த விளை வயல் செய்ய பங்கயமாம்
பொங்கு எரியில் வரம்பில் வளர் தேமாவின் கனிகிழிந்த
மது நறு நெய் நிரந்தரம் நீள் இலைக்கடையில் ஒழுகுதலால்
நெடிது அவ்வூர் மரங்களும் ஆகுதி வேட்கும் தகைய என
மணந்துளதால் (1910) என்பது மேற்குறித்த கற்பனை அமைந்த அழகிய பாடல்.
பெரியபுராணம் - சமூகநோக்கு
எந்த ஒரு காப்பியமும் சமூகப்பயன்பாடு கொண்டதாக அமையவேண்டும். அது தோன்றிய காலத்தில் நிலவியிருந்த சமூக அநீதிகளைக் கண்டித்து எதிர் நீச்சல் அடிக்கும் துணிவு காப்பியப் படைப்பாளிக்கு வேண்டும். அத்தகு காப்பியங்களே சமூகத்தில் நின்று நிலவும். சாதி பேதங்களும், பொருளாதார ஏற்றத் தாழ்வுகளும், ஆண்டான் - அடிமைச் சமூக அமைப்பும் நிலவியிருந்த காலம் சேக்கிழார்காலம். இயன்றவரை சமய மரபுகளுக்கு மாறுபடாமல் சமூகத்தை நெறிப்படுத்த அவர் அரிய முயற்சி மேற் கொண்டிருந்தமையை உணரமுடிகிறது.
26

முடியாட்சிக்காலத்தில் - மன்னனின் நியாயமற்ற அழைப்பை ஏற்க மறுத்து நாமார்க்கும் குடியல்லோம் என்று வீறு கொள்ளும் உரிமை முழக்கம் அங்கே கேட்கிறது. தவறு நிகழுமானால் - அரசனின் பட்டத்து யானையையும் பாகனையும் கொல்ல முடியும் என்பதை எறிபத்தர் வீரத்தில் காண முடிகிறது.
நந்தனார் வரலாறு அக்காலத்தில் ஆதி திராவிடர்கள் சிவாலயங்களுக்குள் சென்று வழிபடத் தடை இருந்தமையை எடுத்துக் காட்டுகிறது. ஆனால், திருஞானசம்பந்தராகிய வேதியர், தம் தேவாரப் பனுவல்களுக்கு இசைகூட்டி யாழ் ஒலி எழுப்ப திருநீலகண்ட யாழ்ப்பாணர் என்ற கீழ்க் குடியில்வந்த அன்பரைத் திருக்கோயிற் கருவறைவரை அழைத்துச் செல்கிறார். திரு நீல நக்கர் தம் இல்லத்தில் வேள்வி மண்டபத்தில் கணவன் மனைவியாகப் பாணர் தம்பதியர் இரவிற் படுத்து உறங்க அனுமதிக்கிறார். வணிகர் மரபில் வந்த சிவநேசர் தம் மகள் பூம்பாவையை வேதியர் குலத்து வந்த திருஞானசம்பந்தருக்கு மணம் முடிக்க விரும்பியிருந்தார் என்று தெரிகிறது. பெண்களுக்கு உரிமை மறுக்கப்பட்டிருந்த காலத்தில் உலகத்தார் பார்வையில் வாழ்வை இழந்தவராகத் தோற்றம் தந்த திலகவதியார் திரு நீறு வழங்கித் தம்பியாரை மதமாற்றம் செய்து சைவத்திற்கு மீட்டுள்ளார். ஒரு மடாதிபதிக்கு உரிய உரிமை ஒரு பெண்ணுக்குச் சேக்கிழாரால் வழங்கப்படுகிறது.
ஆட்சியாளர் திறம்
நாடாளும் மன்னர்கள் நெறி திறம்பாது ஆளவேண்டும் என்பது முதலமைச்சராக இருந்த சேக்கிழார் விருப்பமாக அமைந்திருக்கிறது. மனுநீதிச் சோழன் வரலாறு நாடாள் வோருக்கு மனு நீதியினும் மேம்பட்ட நீதி வழங்கப்படவேண்டும் என்பதை வற்புறுத்துகிறது. பசுவின் கன்று தேர்க்காலில் அடிபட்டு இறந்தமைக்குப் பிராயச் சித்தம் போதும் என்று அமைச்சர்கள் கூறினர். மன்னன் ஒப்பவில்லை. கன்றை இழந்த பசுவின் துயரை, நான் என்மகனை இழந்து நின்று பெறுவதே அரசநிதி என்று மனுச்சோழன் கருதி, மகனைத் தேர்க்காலில் கிடத்தித் தேர் ஊர்ந்து நீதி செய்கிறான்.
அறிவினான் ஆகுவது உண்டோ பிறிதின்நோய் தன்நோய்போல் போற்றாக் கடை
என்ற குறளுக்குப் பெரிய புராணத்தில் ஒரு சான்றாக மனு நீதிச் சோழன் வரலாறு அமைகிறது. தம் பட்டத்துயானை இழைத்த தவறுக்காக அதனைக் கொன்றது போதாது யானைக்கு உரியவனாகிய என்னையும் கொல்லவேண்டும் என்று கூறிய புகழ்ச் சோழன் கற்பார் நெஞ்சில் இடம் பிடிக்கிறான். முடியாட்சிக் காலத்திலேயே இத்தகைய அரசர் வரலாறுகளைச் சேக்கிழாரால் மட்டுமே பாட முடிந்திருக்கிறது.
தொகுப்புரை -
பெரிய புராணம் பன்னிரு திருமுறைகளுள் ஒன்றாக
அமைக்கப்பட்டிருந்த போதும், அது தனித்தன்மை உடையது
என்பது இங்கு எடுத்துக் காட்டப்பட்டது. இறைவனுக்கு
இந்துக் கலைக்களஞ்சியம்

Page 41

தி அாCசிதன்

Page 42
திருச்சிராப்பள்ளி கு
 
 

5Tយពៅ (BDITü6b

Page 43
மலைப்பாறையும் பாறையைக் குடை
 

ந்தமைத்த கோயிலும் சிற்பங்களும்

Page 44

மேஸ்வரம்
Čij5Jō)J

Page 45

ஈங்தோடு
லிங்க வgவில் குன்றும்

Page 46
கோவிலும் குன்றும் கிராம
 


Page 47

குேன்றம்
கோயிலும் குன்றும்
சரவணைப்பொய்கை

Page 48
நாயக்கர் காலச்சுவரோவியம்
 

- மாரிைக்கவாசகர் வரலாறு

Page 49
}
 

திருவாதவூரர் அgயாராக

Page 50

ഗ്രബ്

Page 51

ரிபாதமலை

Page 52
மேலைக்கோபுரம்
 

ഖ//ഗ്ഗ്
விக்கிரமசோழன் கோபுரம்
சுற்று மதிலின் புறத்தோற்றம்

Page 53
ஐயாறப்பர் கோயிலும்
ஒலொகமாதேவிஸ்வரமும்
 
 


Page 54
சுவரோ
 

o
o
வியங்கள்

Page 55
தூங்கானை மாடமாக புற்றி
கோயிற் கல்வுெ
 
 

டங்கொண்டார் விமானம்

Page 56


Page 57
இணையாக இறையருள் பெற்று மனித குலத்திற்குத் தொண்டு செய்யும் மனிதர்களும் போற்றவும் வணங்கவும்பட வேண்டும் என்பதைப் பெரியபுராணம் வற்புறுத்துகிறது. சாதிகளால் பிரிவுண்டு பிளவுபட்டு நின்ற மனித குலத்தை ஒரு சமயத்தை மையப்படுத்தி ஒன்றுபடுத்த இயலும் என்பதைப் 0ெபரிய புராணம் இனம் காட்டுகிறது. முடியாட்சிக்கு எதிரான தனிமனித உரிமைப் போராட்டத்திற்கு இங்கே கால்கோள்விழா நடத்தப்பட்டுள்ளது. இயன்றவரை பெண்மைக்குப் பெருமை சேர்க்கும் உள்ளார்ந்த முயற்சியில் சேக்கிழார் ஈடுபட்டிருப்பது தெரிகிறது. வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்த மனிதர்கள், தெய்வங்களோடு திருக்கோயிலுக்குள் திருவுருவமாக எழுந்தருளிப் பெருமைபெற இயலும் என்பதை இந்நூல் துணிவுடன் பறைசாற்றுகிறது. தமிழர் வாழ்வில் இந்நூல் ஏற்படுத்தியிருக்கும் பெருமிதங்கள் நீள நினைந்து போற்றப்பட வேண்டுவன. (இரா. செ.)
திருதராட்டிரன்
மஹாபாரத பாத்திரங்களுள் ஒன்று. சத்தியவதிக்கும் சந்தனுவிற்கும் இரு ஆண்மக்கள் பிறந்தனர். மூத்தவன் சித்திராங்கதன் கந்தர்வன் ஒருவனால் மரணமடையவே விசித்திர வீரியன் மன்னனாக முடிசூடினான்.
விசித்திர வீரியன் விவாக வயது அடைந்ததும் காசி ராஜனின் கன்னிகைகளுக்கு சுயம்வரம் என்று கேள்விப்பட்டுப் பீஷ்மர் தேர் ஏறி சுயம்வர சபைக்குச் சென்றார். பலநாடு களிலிருந்தும் அரசர்கள் வந்திருந்தனர். போட்டி கடுமையாகவே இருந்தது. பீஷ்மர் சுயம்வரத்திற்கு வந்தது விசித்திர வீரியனுக்காக என்று அறியாத பலர் பீஷ்மரின் பிரமச்சரியத்தை ஏளனமாகப் பேச, கோபங்கொண்ட கங்கையின் மைந்தன் வந்த அரசர்களை யுத்தத்திற்கு அறைகூவி அழைத்து எல்லோரையும் வென்று காசிராஜனின் மூன்று புதல்விகளையும் தனது தேர் மீது ஏற்றிக் கொண்டு அத்தினபுரம் செல்ல முற்பட்டார். செளபல தேசத்தரசன் சாலுவன் மட்டும் விடாமல் துரத்தி வந்து பீஷ்மருடைய போக்கிற்கு தடை ஏற்படுத்தினான். சாலுவன் மீது காதல் கொண்டவள் அம்பை.
சாலுவனுக்கும் பீஷ்மருக்கும் கடும் போர் நிகழ்ந்தது. சாலுவன் தோல்வியடைந்தான். பீஷ்மர் அத்தினாபுரம் சென்று கன்னியர் மூவரையும் விசித்திரவீரியனுக்கு மணம் செய்ய முனைந்த பொழுது தனது மனம் சாலுவன் பால் ஈடுபட்டு விட்டதாக அம்பை கூற, அவளை சாலுவ மன்னனிடம் அனுப்பி விட்டு மற்றைய இருவர்களான அம்பிகை, அம்பாலிகையை விசித்திரவீரியனுக்கு விவாகம் செய்வித்தார்.
சாலுவனிடம் சென்ற அம்பை தன்னை மணக்குமாறு வேண்ட “பீஷ்மர் வசப்படுத்திச் சென்ற உன்னை மணக்க முடியாது. அவரிடமே திரும்பிச் செல்” என்றான்.
இந்துக் கலைக்களஞ்சியம்

அத்தினாபுரம் திரும்பிய அம்பை பீஷ்மரிடம் வந்து நடந்த செய்திகளைத் தெரிவித்து, விசித்திரவீரியனை வேண்ட, “மாற்றான் மேல் மனம் போக்கிய பெண்ணை மணப்பது கூடித்திரிய தர்மமல்ல” என்று மறுத்துவிட்டான். பீஷ்மரை வேண்டினாள். அவர் தனது சபதத்தைக் கூறி மறுத்துவிட்டார்.
இதனால் சினங்கொண்ட அம்பை தனக்கு நேர்ந்த அவமானத்திற்கு கங்கையின் மைந்தனைப் பழிதீர்க்க சிவ பெருமானைக் குறித்து கடும் தவம் இயற்றி சிகண்டி எனும் ஆணாக மாறினாள்.
இந்த இடைக்காலத்தில் அம்பிகை, அம்பாலிகை இருவ ரையும் திருமணம் செய்து கொண்ட விசித்திரவீரியன் அளவு கடந்த போகத்தால் உண்டான இராஜயகூஷமா என்ற கொடிய நோயின் வாய்ப்பட்டு இறந்தான். “புத்திரப் பேறில்லாமல் விசித்திரவீரியன் இறந்ததனால் சந்திர பரம்பரை தொடர வேண்டி, கணவனை இழந்த கைம்பெண், சந்ததி விருத்திக்காக கணவனோடு பிறந்தவனைக் கூடி மகவை பெற்றுக் கொள்ளலாம் என்பது தேவ நீதி. ஆகையால் உனது கொழுந்தியரைக் கூடி, புத்திரப் பேற்றினுக்கு வழி சமைப்பாயாக’ என்று சந்தனுவின் மனைவி கூற அதற்கு பீஷமன் “பெண்ணின்பம் இல்லாது வாழுமாறு விதித்த வசிட்டருடைய சாபம், நான் அவர்களை மணப்பதனால் கெட்டுவிடும். மீண்டும் நான் பூமியில் பிறக்க வேண்டும். எனது தந்தையாகிய சந்தனுவிற்குக் கொடுத்த வாக்குப் பிழையேன்” என்று உறுதியாக மறுத்து விட்டான்.
கங்கையின் மைந்தன் மறுக்கவே பரிமளகந்தியின் மனத்தில் சோகம் கப்பியது. இதனை உணர்ந்த பீஷ்மர் ஒரு யோசனை தெரிவித்தார். அஃதாவது தன் தந்தையைக் கார்த்தவீர்யார்ச் சுனன் என்ற அரசன் கொன்ற பிழைக்காக, கூடித்திரிய குலத்தையே வேரோடு அழிப்பேன் என்று சபதம் பூண்ட பரசுராமரினால் அரச குலம் மங்கி வரவே, அரச மகளிர் முனிவர்களைச் சேர்ந்து புத்திரப் பேறு பெற்று சந்ததி விருத்தி செய்து கொண்டனர். அது போல் இப்பொழுதும் செய்யலாம் என்று தேவவிரதன் கூறவே அன்னையும் அதற்கு உடன் பட்டுக் “காமத்தாலன்றி, குலவிருத்திக்காக முனிவரைக் கூடல் சாத்திர உடன்பாடாகும்” என்று தெரிவித்து மேலும் கூறினாள்.
யமுனைத்துறையிலே நான் மச்சகந்தி என்ற மீனவப் பெண்ணாக இருந்த பொழுது பராசரமுனிவன் என்னை ஏழு யோசனைத்தூரம் மணம் பரப்பும் யோசனகந்தியாக்கி யமுனையின் நீர்த்துறையருகே ஒர் மணற்றிட்டில் என்னைக் கூடி அவனியில் அனல் பிறந்தது என முஞ்சியும், புரிநூலும் இலங்க, பொற்கொழுந்து போன்று வியாசன் தோன்றினான். (கருநிறம்ச கொண்ட திட்டிலே கிருஷ்ணத் வீபத்திலே தோன்றியதால் “கிருஷ்ணத்வைபாயனர்” என்று அழைக்கப்பட்டார்).
முனிமகன் என்னைச் சென்னியால் வணங்கி, நீ என்னை நினைத்தால் நான் உடனே வருவேன் எனக்கூறி என்னையும்
27

Page 58
மீளவும் கன்னியாக்கி மறைந்தான். என் மகனாகிய வியாசனைக் கொண்டு என் கருத்தினை முற்றுவிப்பேன் எனக்கூறி, பராசுரன் மைந்தனை மனத்தினால் நினைக்க மைந்தனும் வந்தான்.
திருவடி வணங்கி மகிழ்ந்த மைந்தனை பரிமளகந்தி பாசமுற நோக்கித் தன்மனக்குறையைப் போக்கவும், குருகுலம் தழைக்கவும் அவரது உதவியை நாடினாள். தாயின் ஆனையைத் தட்டா அத் தலைமகனும் விசித்திரிவீரியனின் மனைவியான அம்பிகையை புல்மணக்கும் மேனியுடனும், தவத்தினால் வற்றிய தேகத்துடனும் சடாமுடியுடனும் அணைக்க அம்பிகை கண்களை மூடிக்கொண்டாள். அதனால் பதினாயிரம் யானை பலத்துடன் விழியில்லாமல் அம்பிகையின் மகன் தோன்றுவான் என்ற குறிப்பை தாயிடம் தெரிவித்தான் வியாசன்.
பிறக்கும் குழந்தை கண்ணில்லாதவன் என்றமையால் வேதனையுற்ற சத்யவதி (யோசனைகந்தி - பரிமளகந்தி) அம்பாலிகைக்கும் ஒரு மகளை அருள வேண்டும் என்று வேண்டினாள். அம்பாலிகையும் வியாசரைக் கண்டு அச்சமுற்று உடல் வெளிறியதால் துணையில்லாது தரணி முழுதாளும் தனித்த மகன் கூடும் பொழுது உடல் வெழுத்துத் தோன்றுவான் என்று அன்னைக்குக் கூறி வனத்திற்குச் சென்று விட்டான் தபோதனன். அம்பிகைக்கும், அம்பாலிகைக்கும் விழிகளற்ற திருதராட்டிரனும், பாண்டுவும் தோன்றினார்கள். குழந்தைகளைக் கண்டு மகிழ்ச்சிக்கு பதில் துன்பம் அடைந்த சந்தனுவின் தேவி மீண்டும் வியாசனை நினைக்க, வியாசன் வர, அம்பிகையிடத்துப் புத்திரப்பேற்றை உண்டாக்குமாறு வேண்டினாள்.
முனிவரும் இசைந்து அம்பிகை மாளிகைக்குச் செல்ல, நாணம் மேலிட்ட அம்பை, தனது பணிப் பெண்ணை அணிகல ன்களால் அழகுப்படுத்தி சயன அறைக்குள் அனுப்பினாள். அப்பணிப்பெண் முனிவனுக்குக் காம இன்பம் முழுவதையும் அளிக்க, இன்பம் துய்த்த புங்கவன், சத்தியவதியிடம் சென்று அம்பிகையின் பணிப்பெண் செய்த பேற்றினாலும், தேவர்களிடம் பெற்ற வரத்தினாலும், தர்மதேவதையே மகனாகப் பிறப்பான். அவன் பெயர் விதுரன் என்று கூறி இனி என்னைப் புத்திர பேறு குறித்து அழைக்காதே’ என்று சொல்லி வனம் ஏகினான்.
பணிப்பெண் பெற்ற விதுரனும், அம்பிகை பெற்ற திருதராட்டிரன், பாண்டு என்ற இருவரும் குருகுலமாகிய மலைமேல் முப்பெருஞ் சிகரங்களாகத் திகழ்ந்தார்கள். பீஷ்மரிடம் கல்வி பயின்றார்கள். படைக்கலப் பயிற்சியில் ஒப்பாகும் மிக்காரும் இல்லாது திகழ்ந்தார்கள்.
நல்ல நாளொன்றில் அம்பிகையின் சேயாகிய திருத ராட்டிரனுக்கு மணிமுடிசூட்டி, அம்பாலிகையின் மைந்தனாகிய பால் நிறங்கொண்ட பாண்டுவை சேனாதிபதி யாக்கி, மதிநலம் வாய்ந்த விதுரனை அமைச்சனாக்கி அரச பொறுப்பை அவர்களிடம் தந்தார் பீஷ்ம பிதாமகர்.
28

பீஷ்மரின் ஆணையைப் பெற்ற தூதுவர்கள் சுபலன் என்ற காந்தார நாட்டரசனை அணுகி திருதராட்டிரனுக்குப் பெண் கேட்க, சுற்றத்தார்கள் அரசன் விழியற்றவன் என்று கூறவும், அருந்ததி அனைய காந்தாரி திருதராட்டிரனை மணக்க இசைந்தாள். அன்று முதல் இறக்கும் வரை கணவன் காணாத உலகத்தை தானும் காணமாட்டேன் என்று தன் கண்களைப் பட்டினாற் கட்டி வாழ்ந்தாள் அக்கற்புக்கரசி. உரோகிணியும், சந்திரனும் போன்று அன்பு கலந்து திருதராட்டிரனும், காந்தாரியும் இணைந்து வாழ்ந்தார்கள்.
பாண்டுவும், சூரனின் மகளும் குந்தி போசனால் வளர்க்கப்பட்டவளுமான பிரதை என்னும் குந்திதேவியையும் மந்திர தேசாதிபதியின் மகளான மாந்திரியையும் மணந்து இன்புற்றான்.
இந்நிலையில் காந்தாரி கருவுற்றதை அறிந்த பாண்டு மன்னன் மகப்பேற்றின் சிறப்பையும், இன்பத்தையும் குந்தியிடம் எடுத்துக் கூறினான். தனக்குக் கிந்தம முனிவரின் சாபம் இருப்பதால் தன்னால் இல்லற இன்பத்தைத் தரமுடியாது. தேவர் அல்லது மறை வேதியர் மூலமாக நீ மகவைத் தரின் யான் நற்கதி பெறுவேன். அதற்கு நீ இசைய வேண்டும் என்று பாண்டு குந்திதேவியிடம் வேண்டிக் கொண்டான். குந்தியும் ஒருவாறு அதற்கு உடன்பட்டு துர்வாசர் தனக்கருளிய மந்திரத்தால் எமதர்மனை நினைக்க, தருமபுத்திரன் தோன்றினார்.
குந்தி மகவு பெற்றாள் என்று அறிந்த காந்தாரி பொறாமை கொண்டு சூல் கொண்டதன் உதரத்தை கல்லால் உட் குழம்புமாறு மோதினாள். காந்தாரியின் கருப்பம் நூறு மகவைக் கொண்டது. அதனால் இரண்டாண்டு கழிந்தும் வெளிப்படவில்லை. இதை அவள் அறியாது குந்திக்கு மகன் பிறந்த செய்தி கேட்டுப் பொறாமையால் வயிற்றை மோதிக் கொண்டாள். குழம்பிய கரு நிலத்தில் வீழ அதனை வியாசபகவான் நூறு தாழிகளில் இட்டு எஞ்சியதை ஒரு தாழியில் இட்டு பெண்ணாகுக என்று கூறினார். அதன்படியே நூறு ஆண்மக்களும் துச்சளை என்னும் பெயர் கொண்ட பெண்ணும் தோன்றினர்.
குந்திக்கு வாயுபகவான் அருளால் பீமனும், இந்திரன் கருணையினால் அர்ச்சுனனும் பிறக்க, மாந்திரிக்கு குந்தி அச்வினி தேவர்களின் மந்திரத்தை உபதேசிக்க நகுல, சகாதேவர் தோன்றினர்.
இந்நிலையில் கிந்தம முனிவரின் சாபத்தைப் புறக்கணித்து பாண்டு மாந்திரியைக் கூட பாண்டு இறந்தான். மாந்திரி உடன்கட்டை ஏறினாள். குந்தியையும் பஞ்சபாண்டவர்களையும் சதசிகுங்க முனிவர் அழைத்துக் கொண்டு அத்தினாபுரம் வந்து திருதராட்டிரனிடம் ஒப்படைத்தார். தம்பி இறந்தமைக்கு வருந்திய திருதராட்டிரன் தன் பாதத்தில் விழுந்து வணங்கிய சிறுவர்களை அன்புடன் தழுவி, தாமரையும், குமுதமும் போலத் தன் புதல்வர்கள் நூற்றுவரோடு பாண்டவர்களையும் அன்புடன் வளர்த்து வந்தான்.
இந்துக் கலைக்களஞ்சியம்

Page 59
திருதராட்டிரன் இயல்பிலேயே நல்லவன். பாண்டவர்களிடம் அன்புமிக்கவன். கருணை உள்ளம் கொண்டவன். நீதி நெறி அறிந்தவன். இருந்தாலும் அதீதமான புத்திரபாசம் அவனை அஞ்ஞானத்திற்குள் ஆழ்த்தி விட்டது. துரியோதனனுடைய செயல்கள் குறிப்பாக வாரணாவத அரக்குமாளிகை, பாண்டவர்களுக்கு உரிய அரசைத் தர மறுத்தமை, சூதுப் போருக்கு அழைத்தது, திரெளபதியின் துகிலுரிந்தது, அஞ்ஞாத வாச காலத்தில் விராட நகருக்குப் படை எடுத்தது, பன்னிரெண்டு ஆண்டு வானவாசம், ஒராண்டு அஞ்சாத வாசம் முடித்து வந்த பாண்டவர்களுக்கு ஊசிமுனை இடமும் கொடேன் என்று ஆணவமாகக் கூறியது, விதுரனை இகழ்ந்துரைத்தது- இவை எல்லாம் தவறு என்று உணர்ந்தாலும் அதனைத் தடுக்கும் வழி திறனற்று பலகீனனாக இருந்ததே திருதராட்டிரனிடம் நாம் காணும் குறைபாடு ஆகும்.
கண்ணன் தூதுப் பகுதியிலே துரியோதனன் சகுனி முதலியவர்களுடன் இணைந்து திருதராட்டிரனும் தனித்து வந் திருக்கும் கண்ணனை அழிப்பதற்குக் கருத்துரை கூறினான். துரியோதனன் வஞ்சனையை உணர்ந்த மாயக் கண்ணனும், வஞ்சகமாக அமைக்கப்பட்ட தவிசில் அமர வைத்து கொல்ல நினைத்த துரியோதனனின் எண்ணம் பாழிபட அடி அதலத்துற, முடி ககனத்துற விஸ்வரூபம் கொண்டான். அச்சமயம் குருடனான திருதராட்டிரனும் கண்கள் பெற்று அம்மாபெரும் வடிவத்தை கண்டான். ஆனந்தம் கொண்டான். பரந்தாமனின் வியன் பெருவடிவத்தைக் கண்ட கண்களால் வேறு எதனையும் பார்க்க விரும்பவில்லையென்று மீண்டும் தனது கண்கள் பார்வையற்றுப் போகும்படி வேண்டினான்.
கெளரவர்களுக்கும், பாண்டவர்களுக்கும் குருஷேத்திரம் என்னும் இடத்தில் யுத்தம் மூண்டது. கெளரவர் படைக்குப் பிதாமகர் பீஷ்மரும், பாண்டவப் படைக்கு துருபதனின் மகன் திருஷ்டத்யும்நனும் சேனாதிபதிளாகப் பட்டாபிஷேகம் செய்யப் பட்டார்கள். ஒவ்வொரு நாளும் இரு தரப்பிலும் ஆயிரக் கணக்கான வீரர்கள் மாண்டார்கள். நான்காம் நாள் யுத்தம், பீமன் மதம் கொண்ட யானையைப் போல் போர்க்களத்தை பாற்கடலைக் கடையும் மந்தரமலையைப் போலக் கடைந்தான்.
அன்று துரியோதனனின் தம்பியர்கள் எண்மரை யமலோகத்திற்கு அனுப்பினான். துரியோதனனுக்கும் பலத்த காயங்களை உண்டாக்கினான். பீமனுக்கு உதவியாக அரக்க மைந்தன் கடோத்கஜனும் சேர்ந்தான். அஸ்தமன காலம் நெருங்கிற்று. இருளில் அரக்கர்களுக்கு பலம் அதிகம் என்பதால் துரோணர் யுத்தத்தை நிறுத்தினார். துரியோதனன் தன் சகோதரர்களில் பலரை இழந்த துக்கத்தால் பீடிக்கப்பட்டுக் கண்ணில் நீர் ததும்பப் பாசறையில் அமர்ந்து ஆழ்ந்த சிந்தனையில் ஆழ்ந்தான்.
போர்க்களத்து நிகழ்ச்சிகளையெல்லாம் தனது ஞான திருஷ்டியால் திருதராட்டிரனுக்கு சஞ்சயன் கூறிக் கொண்டி
இந்துக்கலைக்களஞ்சியம்

ருந்தான். சஞ்சயா என்னைச் சேர்ந்தவர்களே கொல்லப் பட்டார்கள், துன்பப்பட்டார்கள். என்று சொல்லி வருகிறாயே! இது என்னை மிகவும் வருத்துகிறது. எந்த உபாயத்தினால் கெளரவர்கள் வெல்லப்போகின்றார்கள். எனக்கு மிகவும் பயமாக இருக்கின்றது என்றான். விதியே வலிது போலும்,” என்று அரற்றினான்.
அதைக் கேட்ட சஞ்சயன், “அரசே! இந்த அநியாயத்திற்கு மூலகாரணம் நீரே அல்லவா! மனக்கலக்க மடையால் உறுதியான
மனத்துடன் நிகழ்ச்சிகளைக் கேட்க வேண்டும்” என்றார்.
“விதுரனுடைய வாக்கியங்கள் நிச்சயமாகி வருகின்றன’ என்று கூறிய திருதராட்டிரனுடைய மனம் பெருந்துயரில் ஆழ்ந்தது.
யுத்தகளத்தில் அர்ச்சுனனுடைய வெற்றி பற்றி சஞ்சயன் கூறியதைக் கேட்ட திருதராட்டிரன் புலம்பினான். “சூதனே! சமாதானத்தை விரும்பி கண்ணன் அத்தினாபுரம் வந்தபொழுது இது நல்ல வாய்ப்பு. இதனைக் கைவிடாதே, பாண்டவர்களுடன் சமாதானம் செய்துகொள் என்றேன். அவன் கேட்கவில்லை. காலபுருசனால் தூண்டப்பட்டு நாசத்தைத் தேடிக் கொண்டான். பெரியவர்களான, பீஷ்மர், துரோணர், கிருபர், இன்னும் மற்றவர்களும் யுத்தம் வேண்டாம் என்றார்கள். மூர்க்கமான என்மகன் கேட்கவில்லை. யுத்தத்தை வரவழைத்துக்
99 o e கொண்டான்' என்று புலம்பினான்.
இதனைச் செவியுற்ற சஞ்சயன் “ வெள்ளம் போன பின் அணை கட்டுவது போல் இப்பொழுது நீர் புலம்புவதால் ஏது பயன்? சூதாட்டத்திலிருந்து குந்திபுத்திரனை நீர் ஏன் விலக்க வில்லை? அவ்வாறு தடுத்திருந்தால் இந்தத் துக்கம் ஏற்பட்டிருக்காது. யுத்தத்திற்கான பேச்சு நடந்தபொழுதாவது உமது மகனைத் தடுத்திருந்தால் இத்தகைய துன்பம் விளைந்திருக்காது. பிதாவின் கடமையைப் புறக்கணித்துவிட்டீர். உம்முடைய அறிவை விலக்கி வைத்துவிட்டு கர்ணன், சகுனி இவர்களுடைய மூர்க்கத்தனத்தை அனுசரித்தீர். கண்ணனும், யுதிஷ்டிரனும் துரோணரும் இப்பொழுது உம்மை முன்போல் மதிக்கவில்லை. பேராசை கொண்டவர் என்றும் வாயினால் மட்டும் தர்மம் பேசுபவர் என்றும் கண்ணன் உம்மைப் பற்றி அறிந்து கொண்டான். உமது குமாரர்கள் எவ்வளவு முடியுமோ அத்தனை பிரயத்தனங்களும் செய்து போராடுகிறார்கள். ஆனால், அர்ச்சுனனும், கிருஷ்ணனும், பீமனும், சாத்யகியும் நடத்தும் போரில் அவர்களை எதிர்த்து நிற்கும் வல்லமை கெளரவர்களுக்கு இல்லை” என்றான்.
“சஞ்சயா விதியை யாரும் விலக்கமுடியாது. நல்லதாயினும், துக்கமாயினும் நடந்ததை நடந்தவாறு கூறு” என்று துயரத்தில் மூழ்கிக் கொண்டிருந்த திருதராட்டிரன் கூறினான்.
29

Page 60
குருஷேத்திர யுத்தம் முடிவடைந்தது. கெளரவர்கள் முற்றும் அழிந்தார்கள். யுத்தத்தில் எஞ்சியது பாண்டவர்கள் ஐவரும் அசுவத்தாமன், கிருதவர்மன், கிருபர் என எழுவரே. கண்ணற்ற மன்னன் திருதராட்டிரன் குலநாசம் நடைபெற்ற யுத்த களத்திற்குச் சென்று புலம்பினான். திருதராட்டிரனைத் தேற்றிய சஞ்சயன் பிரேத காளியீங்களைச் செல்டிபிாறு கூறினான். அந்நிலையில் வியாசபகவான் அங்கு வந்து மன்னனுக்கு ஆறுதல் கூறி, ”இனி யுதிஷ்டிரனே உன் மகன். அவன் பால் அன்பைச் செலுத்து” என்றார். யுதிஷ்டிரனாகிய தர்மபுத்திரன் வந்தான். திருதராட்டிரனை வணங்கினான். சோகத்தினால் பீடிக்கப்பட்ட அரசன் தருமரைத் தழுவினான். பிறகு பீமனையும் அழைக்க, கண்ணபிரான் முன் யோசனையுடன் இரும்பால் செய்யப்பட்ட பிரதிமை ஒன்றை முன் நிறுத்த திருதராட்டிரன் அந்த பிரதிமையை பீமன் என்று அனைத்தான். அப்படி அணைக்கும் பொழுது தமது மக்களில் பெரும் பான்மையானவரைக் கொன்றது இவன்தானே என்று நினைக்கக் கோபம் மேலிட்டு அணைக்கையில் இரும்புப் பதுமை நொருங்கி சுக்கல் சுக்கலாகியது.
உடனே "ஐயோ என் கோபமே பீமனை அழித்து விட்டதே' என திருதராட்டிரன் கதற, அருகிலிருந்த புருஷோத்தமன் நடந்ததைக் கூறி பீமன் நலமாக இருப்பதைத் தெரிவிக்க அனைவரையும் ஆசீர்வதித்தான்.
பாண்டவர்கள் கெளரவர்களை வென்று அரசை அடைந்தார்கள். பதினைந்து ஆண்டுகாலம் திருதராட்டிரனையும் காந்தாரியையும் தமது கண்களைப் போல் கவனித்து வந்தனர். இருந்தும் புதல்வர்களை இழந்த திருதராட்டிரனால் அமைதியாக இருக்க முடியவில்லை. உபவாசம், விரதம் இருந்து தன்னை வருத்திக் கொண்டான். அப்படியும் அமைதியில்லை. வனத்திலே சென்று தவம் புரிய விரும்பினான்.
தருமன் எத்துணையோ கூறியும் மனங்கொள்ளாமல், காந்தாரியுடன் வனத்திற்குச் செல்ல ஆயத்தமானான். குந்தி தேவியும் அவர்களுடன் இணைந்து கொண்டாள். விழியற்ற மன்னவன் காந்தாரியின் தோளைப் பற்றிக் கொண்டும், காந்தாரி குந்தியைப் பற்றிக் கொண்டும் வனம் சென்று தவம் புரிந்தார்கள். மூன்றாண்டுகள் சென்றன. ஒருநாள் திருதராட்டிரன் நீராடி ஆசிரமத்திற்கு வந்தான். அப்பொழுது காடு தீப்பற்றிக் கொண்டது. சுழற்காற்றினால் வனம் முழுதும் தீப்பரவியது. மான்களும் காட்டுப் பன்றிகளும் கூட்டம் கூட்டமாக ஒடி உயிர் தப்பின. கூட இருந்த சஞ்சயனை அக்கினியிலிருந்து ஒடித் தப்புமாறு கூறிவிட்டு, கண்ணற்ற வயோதிப திருதராட்டிர மன்னனும், இறுதி வரை கணவன் காணாத உலகைத் தானும் காண மாட்டேன் என்று உறுதியுடன் இருந்த கற்புக்கரசி காந்தாரியும், புண்ணியப் புதல்வர்களாம் பாண்டவர்களைப் பெற்ற குந்தி தேவியும் யோகநிலையில் அமர்ந்து நெருப்பிற்கு இரையானார்கள். (வ.வை.)
30

O O திருந்து தேவன் குடி
இத்தலத்தைத் தற்பொழுது "நண்டாங் கோயில்” என்று அழைக்கின்றார்கள். நண்டு இறைவனைப் பூசித்துப் பேறு பெற்ற தலமாதலின் இப்பெயரால் மக்கள் அழைக்கின்றார்கள். (சோழநாட்டு காவிரி வடகரைத் தலங்களில் இது 42 வது தலமாகும்)
திருஇடை மருதூர் புகைவண்டி நிலையத்தினின்று வடமேற்கே 4 1/2 மைல் தொலைவில் இத்தலம் அமைந்துள்ளது. மயிலாடுதுறையிலிருந்தும் கும்கோணத்திலிருந்தும், பேரூந்தில் செல்லலாம். திருந்து தேவன் குடி என்ற பெயருடன் ஊர் தற்பொழுது இல்லை. கோயில் மட்டும் உள்ளது. ஊர் இருந்த இடம் நன்செய்நிலங்களாக உள்ளன. கோயிலைச் சுற்றி மூன்று பக்கங்களிலும் அகழி உள்ளது. இப்பகுதி திருந்து தேவன் குடி என்று கூறப்படுகின்றது. மிகப்பெரிய சிவாலயம். பழுதடைந்த நிலையில் காணப்படுகின்றது. சுவாமி அம்பாள் கருவறைகளும், முன் மண்டபங்களும்மட்டுமே உள்ளன. இறைவனின் திருநாமம் - கற்கடகேஸ்வரர். கற்கடம் என்றால் நண்டு. நண்டு பூசித்துச் சிறப்புற்றதலம், இறைவனுடைய சிரசில் ஒர் துவாரம் உள்ளது. கிழக்கு நோக்கிய ஆலயம் சுற்றிலும் வயல்கள் இயற்கை எழிலை மிகுவிக்கின்றது.
" தேனும் வண்டும் இடைபாடும் தேவன்குடி புவிகள் பொங்க புனல் பாயுந்தே வன்குடி தெண்ணிலா வெண்மதி தீண்டுதே வன்குடி திங்கள்தோ யும்பொழில் தீண்டுதே வன்குடி திரைகள் பொங் கப்புனல் பாயுந்தே வன்குடி திலகாம ரும்பொழில் சூழ்ந்ததே வன்குடி
திருமருவும் பொய்கை சூழ்ந்ததே வன்குடி”
என்றெல்லாம் சொல்லிச் சொல்லி மகிழ்ச்சியில் மூழ்குகின்றாார் சீர்காழிக் குழந்தை. தேனீக்கள் ரீங்காரவாலி நம்செவியையும், சிந்தையையும் நிறைக்கின்றது.
இறைவியின் நாமம் - அருமருந்தம்மை, அபூர்வவிநாயகி, அம்பிகையை வழிபட்டு நோய் நீங்கிய மன்னன் ஒருவன் செய்த பிரதிஷ்டையே அருமருந்தம்சம் ஆகும். பின்னர் பழைய அம்பிகையும் கண்டெடுக்கப்பட்டு அதனையும் பிரதிஷ்டை செய்தார்கள். அதுவே அபூர்வ நாயகி என்ற திருநாமம் கொண்ட திருமேனியாகும். கோயில் பாதுகாப்பில்லாத காரணத்தால் திருமேனிகள் வேறிடத்தில் பாதுதுகாப்புக் கருதி வைக்கப் பட்டிருக்கின்றது. ஒருகால பூசை மட்டுமே நடக்கின்றது. இத்தலத்திற்கு திருஞான சம்பந்தப் பெருமான் அருளிய “மருந்து வேண்டில்” என்ற தொடக்கம் கொண்ட பதிகம் இருக்கின்றது. பண் - கொல்லியில் அமைந்தது. இராகம்- நவரோஸ்
இந்துக் கலைக்களஞ்சியம்

Page 61
திருச்சிற்றம்பலம் "மருந்துவேண் டில் இவை மந்திரங் கள்இவை புரிந்து கேட் கப்படும் புண்ணியங் கள்இவை திருந்துதே வன்குடித் தேவர்தே வெய்திய அருந்தவத் தோர்தொழும் அடிகள்வே டங்களே”
“அடிகள்’ என்ற சொல் சிவபெருமானைக் குறிக்கும்
நிறைவுப்பாடல்”,
“சேடர்தே வன்குடித் தேவர்தே வன்றனை மாடம் ஒங் கும்பொழின் மல்குதண் காழியான் நாடவல் லதமிழ் ஞானசம் பந்தன் பாடல்பத் தும்வல்லார்க் கில்லையாம் பாவமே”
(வ. வை.)
O. O.
திருநல்லூர்ப் புராணம்
தலபுராணங்களுள் ஒன்று; தலபுராணங்கள் அவ்வத் தலங்களின் அருமை பெருமைகளைத் தெய்வீகத்தோடும் சமயக்கொள்கையோடும் இணைத்து சுவைபட உயர்வு நவிற்சியாக புலவர்களால் பாடப்பட்டவைகளாம். இவை தலத்தின் சிறப்பினைக் கூறுவதோடு அதனூடே சமயப்பற்றினை உண்டாக்கி அதன் வாயிலாக அங்கெழுந்தருளியுள்ள மூர்த்திகளின் மகிமையையும் தீர்த்தங்களின் மாண்புகளையும் அறியச் செய்வதோடு அதனால் பெறும் பலனையும் குறித்து நிற்கின்றன.
திருநல்லூர்க்கோயில் திருநல்லூர்ப் புராணத்தில் சிறப்பித்துக் கூறப்படும் ஆலயம் சுந்தரநகரம் எனப்படும் சோழநாட்டின் தலைநகரமான தஞ்சை மாவட்டத்தில் உள்ள கும்பகோணத்திற்கு தென் மேற்கில் காவிரியின் தென்கரையில் மருதவனஞ் சிறந்து விளங்கும் நன்னகரில் உள்ளது. இக்கோயில் திருவாவடுதுறை ஆதீனத்துக்குரியது. பாடல்பெற்ற தலங்களில் இதுவும் ஒன்று. தேவாரமூவர் முதலிகளும் அருணகிரிநாதரும் இதன் சிறப்பினைப் பாடியுள்ளனார். அப்பரடிகள் விரும்பியவாறு இறைவன் தன் திருவடியை அவர் முடிமீது வைத்தருளிய மாட்சிமையுடையது இவ்வூர், “நனைந்தனைய திருவடி என் தலைமேல் வைத்தார் நல்லூராளும் பெருமானார் நல்லவாறே” எனப் பாடுவதில் இருந்து அறிய முடிகின்றது. மாடக் கோயில் அமைப்பை உடையது. அறுபத்துமூன்று நாயன்மார்களில் ஒருவராகிய அமர்நீதிநாயனார் திருத்தொண்டு செய்ததும் இத்தலத்திலேயாகும். -
சிற்பவேலைப்பாடுகள் நிறைந்த இத்திருக்கோயிலில் பெரியதொரு நெற்களஞ்சியமும் சோழர்கள் அமைத்த இரகசியமான ஒரு சுரங்கமும் இருக்கின்றன. இக்கோயில் எதிரே பெரியதாக சுத்தசாகரம் என்னும் பிரம்ம தீர்த்தம் அமைந்துள்ளது. இக்கோயிலில் பழம் பெருமைகளை இருபத்திமூன்று
இந்துக் கலைக்களஞ்சியம்

கல்வெட்டுக்கள் மூலம் அறியலாம். முதலாம் இராசஇராசாக்கள் காலத்தில் நாராயணன் ஏக வீரன் என்பவன் ஒரு மண்டபம் கட்டியுள்ளான் என்றும் இக்கல்வெட்டின் மூலம் அறியமுடிகின்றது. இவ்வூர் பஞ்சவன்மாதேவிச் சதுர்வேதி மங்கலம் என அழைக்கப்பட்டதாகவும் அறியமுடிகின்றது.
திருவாரூரில் சைவாசிரியர் மரபில் தோன்றிய வான்மீகநாத தேசிகரின் முதல் மனைவிக்கு மகனாகப் பிறந்த வைத்தியநாதன் என்பவரே இந்நூலின் ஆசிரியராவர். திருவாரூரின் மற்றொரு பெயராகிய கமலை என்பதனை அடையாக்கி கமலை வைத்தியநாத தேசிகர் என அழைக்கப்பட்டார். இவர் 17ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தார். இளமையில் தாயை இழந்தமையால் தந்தையே இவரை வளர்த்தார். தந்தையின் மாணவரான அகோரமுனிவரிடம் கல்விபயின்று வடமொழி தென்மொழி இரண்டிலும் பாண்டித்தியம் பெற்றவராக விளங்கினார். கவிதை பாடுவதில் திறமையுடையவர். இவர் இடை விடாது பாடஞ் சொல்லுவதால் வாயின் இருதாள்பகுதிகள் வலியெடுக்கும் போது தவிட்டை வறுத்து ஒத்தடம் கொடுக்க சொல்லுவாராம். அப்போதும் தமிழ் நயத்தோடு தன் மனைவியிடம் “தக தக தங்கம் தாளை வலிக்குது தவிடு வறுத்துத்தா” என கவிதை நயத்துடன் கூறுவாராம். இவரது மனைவியின் பெயர் தங்கம்மாள். இருவருக்கும் ஐந்து ஆண்பிள்ளைகள். சதாசிவம், தியாகராஜன், சிதம்பரநாதன், வடுகநாதன், வன்மீகநாதன் என சிவனின் திருப் பெயர்களே புதல்வர்களுக்குச் சூட்டியுள்ளார். இவரது மாணவர்கள் ஒப்பிலாமணிதேசிகர், அரசூர்சொக்கப்ப நாவலர் பழந்தமிழ் இலக்கண மரபுகளும் புராண அமைப்பு முறைகளும் நன்கமைய இப்புராணத்தை இயற்றியுள்ளார். அவரது ஏனைய நூல்கள் (1) இலக்கண விளக்கம் (2) பாசவதைப்பரணி (3) மயிலாசல முருகன் பிள்ளைத்தமிழ் (4) திருவாரூர் பன்மணிமாலை (5) கமலாலய அம்மன் பிள்ளைத்தமிழ் (6) திருவாட்போக்கிப் புராணம் என்பன. சீரிய ஒழுக்கமும் நிறைந்த கல்வியும் ஆழ்ந்த புலமையும் உடையவர் என்பதனை இவர்தம் நூல்கள் சுட்டிநிற்கின்றன.
திருநல்லூர்ப் புராணம் கூறும் பொருள்
இந்நூல் சிவபுராணம் பத்தினுள் பவுடிகம் காருடம் பிரமாண்டம் என்னும் மூன்றிலும் கூறப்படும் சுந்தரநகர மான்மியத்தை மூலமாகக் கொண்டு தமிழ் மொழியில் பாடப்பட்டுள்ளது.
இப்புராணம் பாயிரச் சருக்கம் முதலாக அமர்நீதிச் சருக்கம் ஈறாக இருபத்தேழு சருக்கங்களைக் கொண்டது. ஆயிரத்துப் பதினான்கு பாடல்கள் இதில் அடங்கும்.
(1) பாயிரச் சருக்கம்
இங்கு கடவுள் வாழ்த்து கூறப்படுகின்றது. காப்பு கூறும்
மரபு புராண இலக்கியங்களில் காணப்பட்ட போதும் கடவுள்
வாழ்த்துக் கூறியே இந்நூல் ஆசிரியர் நூலை எழுதுகின்றார்.
31

Page 62
காசி விநாயகர் வணக்கம், சவுந்தரநாயகர், சொக்கநாயகி அம்மை, விநாயகர், முருக,ன் நந்தி, நாயன்மார்கள் அறுபத்துமூவர், சிவனடியார் எல்லோரையும் வாழ்த்துகின்றார். பின் புராண வரலாற்றையும் அதனைச் செய்தற்குரிய காரணத்தையும் குறிப்பிடுகிறார்.
"ஒதுகெனப் பசுந்தமிழால் யானுமவர் பணிமேற் கொண் டுரைக்க லுற்றேன்” என்கிறார்.
(2) நைமிசாரண்யச் சருக்கம்
(நைமிசம் - நேமிசம்பந்தமானது) நேமி சம்பந்தமாக ஏற்பட்டமையில் இத்தலம் நைமிசாரண்யம் எனப்படும். இதில் நூற்றைம்பது பாடல்கள் இடம்பெறுகின்றன. இச்சருக்கத்தில் ஆற்றுச் சிறப்பு, நாடு நகர் சிறப்புக்கள் கூறப்படுகின்றன. பிரம தேவரிடம் தவம் புரிய ஒரு சிறந்த இடம் வேண்டுமென தேவர்கள் வேண்ட, குசைப்புல்லை சக்கரமாக உருட்டி அதுநிற்குமிடமே உங்களுக்குகந்த இடம் என்று கூறி விடுக்க, முனிவர்கள் அதுநிற்கும் இடத்தைத் தவம் புரியுமிடமாகக் கொண்டனர். இங்கு வந்த சூதமுனிகளை தவமேற்கொண்டார் இக்கோயில் புராணத்தைக் கூறும் படி வேண்ட, காவிரி நதியின் சிறப்பினையும் நதிகளின் சிறப்பினையும் சோழநாடு பற்றியும் அங்குவாழ் மக்களின் அறநெறி ஒழுக்கம் பற்றியும் வயல்கள், அங்கு வேலை செய்யும் உழவர்கள், நகர்வன, நீர்த்தடாகங்கள், மாடங்கள், தெருக்கள், எல்லாவறையும் வர்ணித்துச் செல்கிறார். விழாக்களில் வழிபடுவோர், அன்னதானம் செய்வோர், பெறும் பயன்களும் நல்லூரே கைலாயம், தீர்த்தங்கள் யாவும் கங்கை, மணல்கள் சிவலிங்கம் என வர்ணித்துச் செல்லுகிறார்.
(3) கைலாயச் சருக்கம்
இது அறுபது பாடல்களுடையது. கைலாயத்தின் சிறப்பு இங்கே கூறப்பட்டுள்ளது. இது விண்கடலிற் பூத்த தாமரை மலர் போன்றது. எப்பொழுதும் ஒளியுடையதாய் சாரல்களால் சிறப்புடையதாய் தேவர்கள் ஆடிப்பாடிக் களிப்புறும் இடமாய் விளங்குகின்றது என ஆசிரியர் வர்ணிக்கின்றார்.
(4) சுந்தராசலச் சருக்கம்
இது நாற்பது பாடல்களையுடையது. சுந்தராசலம் இப்புவிக்கண் வந்த வரலாறு கூறப்படுகிறது.
(5) பிரமதேவர் அருச்சனை புரிந்தசருக்கம்
நாற்பத்தொரு பாடல்களையுடையது. பிரமன், இறைவனிடம் இறவாத இன்ப அன்பு வேண்டும் என்றும், அருச்சனை புரிவோர் பாவங்களைத் தீர்க்க வேண்டும் என்றும் தான் அமைத்த பிரம்ம தீர்த்தத்தில் நீராடுவோருக்கு இம்மை இன்பமும் மறுமைப் பேறும் நல்க வேண்டும் என்றும் வேண்டியதாகக் கூறப்படுகின்றது.
(6) பிரம்மதீர்த்தச் சருக்கம்
இருபத்தாறு பாடல்களையுடையது. பிரம்ம தீர்த்தத்தின் அமைப்பும் அதனை வழிபடுவோர் எய்தும் பயனும்
32

கூறப்படுகின்றது. இதில் தீர்த்தமாடினால் கிடைக்கும் பலன்கள் கூறப்படுகின்றன. கிருதயுகத்தில் பிரமபுட்கரணி என்றும் திரேதாயுகத்தில் வேதபுட்பரணி என்றும் துவாபரயுகத்தில் புண்ணிய புட்கரணி என்றும் கலியுகத்தில் சத்தசாகரம் எனவும் இத் தீர்த்தம் வழங்கப் பெறும் எனவும் கூறப்பட்டுள்ளது.
(7) பஞ்சாக்கரச் சருக்கம்
இச்சருக்கம் எழுபத்தேழு பாடல்களைக் கொண்டுள்ளது. இறைவன் பஞ்சாக்கர மந்திரம் சத்தகோடி மகா மந்திரங்களிலும் உயர்ந்தது பெரியது என்றும், எண்வகைச் சித்திகளையும் வீடுபேற்றையும் அளிப்பது என்றும், தான் பஞ்சாக்கர ரூபமாகவே விளங்குகின்றான் என்றும், ஆறாதாரத் தத்துவங்கள் இதன் விளக்கமே என்றும், எத்தகைய பாவிகளும் இதனை உணர்ந்து ஒதின் அவர்களை உய்விப்பதென்றும், இதுவே தாரக மந்திரமென்றும், விளக்கி உபதேசம் செய்கின்றமை இங்கு கூறப்படுகின்றது.
(8) அக்கினி தீர்த்தச் சருக்கம்
இது எண்பத்திரண்டு பாடல்களையுடையது. வசு என்னும் அந்தணன் பசுவுக்கு உணவளியாமையால் இருநூறு ஆண்டுகள் இயமனுலகில் வாழ்ந்து பிள்ளையாகப் பிறக்கின்றான். பின் சுந்தகிரியில் அக்கினித் தீர்த்தத்தின் துளி அவன் மேல் பட்டதும் பாவம் நீங்கியது. அவன் சிவராத்திரியில் இத்தலத்தில் வந்து வசிப்போர் யாவருக்கும் எல்லாப் பேறுகளையும் அருள வேண்டும் என இறைவனை வேண்டுவதாக இச்சருக்கம் கூறுகின்றது.
(9) அகத்தியர்க்கு மணவாளக் கோலம் காட்டிய சருக்கம்
இச்சருக்கம் அறுபத்துமூன்று பாடல்களைக் கொண்டது. அகத்தியர் திருநல்லூரில் இறைவனின் மணக்கோலம் கண்ட காட்சி வர்ணிக்கப்படுகின்றது. இக்கோலம் இக்கோயிலில் செதுக்கப்பட்டுள்ளது.
(10) சத்த சாகரம் வரவழைத்த சருக்கம்
இச்சருக்கம் நாற்பத்தைந்து பாடல்களைக் கொண்டது. குந்தி தனது பாவங்களைப் போக்குவதற்காக இக் கோயிலில் மாசிமகா நாளில் இறைவன் அருளால் பிரம தீர்த்தத்தில் ஏழு கடல்களும் கலக்க அதில் நீராடி பாவம் போக்கியமை கூறப்படுகிறது.
(11) சமுத்திரராசன் செப்பேசுரம்பணிந்து மீண்ட சருக்கம்
இருபத்தாறு பாடல்களைக் கொண்டது. கடலரசன் எல்லாத் தலங்களுக்கும் செல்ல விரும்பி இறைவனை வேண்ட நீ இவ்வடிவில் சென்றால் உலகம் தாங்காது ஆதலின் அடக்கத் தோடு நல்லூரை அடைந்து செப்பேசுரத்தைப் பணித்தால் எல்லாத் தலங்களையும் வழிபட்ட பயனை எய்துவாய் என விளம்ப அவ்வாறே செய்தான்.
இந்துக்கலைக்களஞ்சியம்

Page 63
(12) பிரம தேவர் வரம் பெற்ற சருக்கம்
இச்சருக்கம் முப்பத்துமூன்று பாடல்களைக் கொண்டது. பிரமனும் திருமாலும் எதிர்ப்பட்டபோது ஏற்பட்ட வாக்குவாதத்தால் இறைவன் தன் அடிமுடியைக் காணுமாறு பணித்தார். பன்றியாக திருமாலும் அன்னப்பறவையாக பிரமனும் அடிமுடி தேடினார்கள். பிரமன் தான் முடியைக் கண்டதாகப் பொய் கூறினான். அதற்கு தாழம் பூ சாட்சி கூறியது. இதனால் லோகத்தில் பிரமனுக்கு கோயில்கள் இல்லை என்றும் தாழம்பூவை தேவர்கள் சூடா தொழிக எனவும் இறைவன் சாபமிட்டார். பின் சாபநீக்கம் செய்யும்படியும் தான் கட்டிய தீர்த்தத்தில் நீராடுவோர் பாவங்களை தீர்க்கும்படியும் பிரமன் வேண்ட இறைவன் அருளினார்.
(13) ஐராவத சாப விமோசனச் சருக்கம்
இச்சருக்கம் முப்பத்தொன்பது பாடல்களைக் கொண்டுள்ளது. களிப்புடன் இந்திரனை மறந்திருந்த ஐராவத யானையை பூவுலகத்திற்கு போகும்படி இந்திரன் சாபமிட்டான். ஐராவதம் நல்லூர் வந்து ஐந்தெழுத்தோதி நீரும் மலரும் கொண்டு வழிபட்டு பிரமதீர்த்தமாடி தன் சாபத்தைப் போக்கியது.
(14) சுமதி காந்தனையடைந்த சருக்கம்
இது நாற்பது பாடல்களைக் கொண்டது. சர்ப்ப வேந்தன் மகளாகிய சுமதி நல்லூரில் நற்புருஷன் கிடைக்க வேண்டுமென வேண்டி நிற்க அரித்துவசன் என்னும் வேந்தன் அவளைக் கண்டு விரும்பி மணமுடிக்கின்றான். சுமதி இங்கு கன்னி தீர்த்தத்தினை அமைக்கின்றாள். காதல் சுவைமிக்க பாடல்கள் இங்கு
காணப்படுகின்றன.
(15) சங்கு கன்னச் சருக்கம்
இருபத்துமூன்று பாடல்களையுடையது. சங்குகன்னன் என்னும் வேடர் குல வேந்தன் மூன்று மனைவிகள் இருந்தும் மகப்பேற்றின்மையால் வருந்தினான். நாரதர் கூற்றால் பிரமதீர்த்தத்தில் நீராடிப் பசுதானம் செய்து சாபம் நீங்கியவனாக புத்திரப் பேற்றினை அடைந்தான்.
(16) கிராத மோட்ச சருக்கம்
முப்பத்துமூன்று பாடல்களையுடையது. தீவினை செய்தோர் வேடுவராகப் பிறப்பர் எனக் கூறப்படுகின்றது. வாழ்கின்ற வீட்டுக்கு தீயிடுதல் முதலிய முப்பத்தாறு பாவங்களை ஆசிரியர் இங்கு குறிப்பிடுகிறார். அந்தணர்குலத்தில் பாவஞ் செய்தமையால் வேடுவர் குலத்தில் பிறந்த இவன் தீர்த்த யாத்திரை செல்லும் அந்தணர்களோடு களவாக தானும் அந்தணவேடம் தாங்கிச் சென்று தன்னை மறந்து அங்கு மந்திரங்களை ஒதி இறைவன் பக்தனாகிறான். அங்கு இவன் இறந்து சொர்க்கலோகம் செல்கிறான்.
(17) தரும சேனச் சருக்கம்
நாற்பத்தெட்டுப் பாடல்களைக் கொண்டது. தருமசேனர் என்னும் மன்னன் நல்லூரை அடைந்து சூரிய குண்டத்திலும்
இந்துக்கலைக்களஞ்சியம்

வேதபுட்கரணியத்திலும் கன்கிகா தீத்தத்திலும் நீராடி தானங்கள் செய்து பாவம் நீங்கியவனாக புத்திரப் பேற்றினை அடைந்தமை.
(18) தீர்க்க துண்டச் சருக்கம்
இது இருபத்தைந்து பாடல்களைக் கொண்டது. அகத்தியர் பலிக்கொடை செய்து கொண்டிருந்தபோது அந்தப் பலியை ஒரு காகம் எடுத்துச்சென்று தவறுதலாக பிச்சைக்காரன் தட்டில் போட்டுவிட்டது. அவன்அதனால் பசியைத் தீர்த்துக் கொண்டான். அன்னதானம் செய்ததால் அக் காக்கைக்கு தேவலோகத்தில் தலைமைப் பதவி கிடைத்தது. அந்த இடத்தில் ஒரு தீர்த்தம் கட்டப்பட்டுள்ளது.
(19) எக்கிஞ குத்தச் சருக்கம்
யஞ்ஞகுப்தன் என்ற வணிகள் திருவாதிரை அன்று வணிகத்தின் நிமித்தம் நல்லூரில் நின்ற சமயம் அங்கு நடந்த புராணக் கதையினை கேட்டுக்கொண்டு உணவு உண்ணும் போது அவன் உயிர் பிரிந்தது. அதனால் அவருக்கு உருத்திர வடிவம் கிடைத்தது.
(20) கோபிதார்த துவாசகச் சருக்கம்
இதில் இருபத்திரண்டு பாடல்கள் உள்ளன. இங்கு தலங்களின் சிறப்புக் கூறப்படுகின்றது. கோவிதாரத்துவசன் அகத்தியரை உபசரிக்க மறந்துவிட்டான். அகத்தியரின் சாபத்தினால் தொழு நோயால் வருந்தினான். பின் நல்லூர் சென்று சூரிய தீர்த்தத்தில் மூழ்கி சாபம் நீங்கப் பெற்று புத்திரப்பேறும் பெற்றான்.
(21) பிரமதேவர் நாரதருக்குத் தலவிசிட்ட
முரைத்தச் சருக்கம் இச்சருக்கம் இருபது பாடல்களைக் கொண்டது. நாதருக்கு நல்லூரில் லிங்கமூர்த்தியாய் எழுந்தருளியிருக்கும் இறைவன் பெருமையினையும் இரணியனை வெல்ல தான் அங்கு சென்று வழிபட்டமையும் பிரமன் கூறுவதாக அமைகின்றது.
(22) மாயவனருச்சனைச் சருக்கம்
இதில் இருபது பாடல்கள் உண்டு. திருமால் தான் நரசிங்கமாகச் சென்று இரணியனை அழிப்பதற்காக நல்லூரில் ஆயிரம் ஆண்டுகள் பூசித்த ஒரு தீர்த்தம் அமைத்து வழிபட்டமை கூறப்படுகின்றது. இத் தீர்த்தம் சக்கர தீர்த்தம் எனப்படும். இக்கோயிலின் விமானத்தில் இக்கதையை விளக்கும் நரசிங்க வடிவம் காணப்படுகின்றது.
(23) தேவர்கள் அருச்சனைச் சருக்கம்
இதில் பதினொரு பாடல்கள் உள்ளன. தேவர்கள் இறைவனைத் துதிக்கும் பாடல்களே இவை. தேவர்கள் அவுணர்களை வெல்லவும் பிரமதீர்த்தம் அமிழ்த்த தடமென விளங்கவும் வரம் கேட்டுப் பெற்றனர்.
33

Page 64
(24) பிரமதேவர் நாரதர்க்குத் தீர்த்த விசிட்டம்
உரைத்த சருக்கம் இருபத்தெட்டுப் பாடல்களையுடையது. இங்கு பிரமதேவர் நாரதருக்கு நல்லூரில் எட்டுத் திசைகளிலும் உள்ள தீர்த்தங்களின் பெயர்களையும் அதன் சிறப்புக்களையும் கூறுகின்றார்.
(25) கழுகு விமோசனச் சருக்கம்
இச்சருக்கம் பத்துப் பாடல்களைக் கொண்டது. சத்தியவிரதன் என்னும் அந்தணன் தன் தீய பழக்கத்தால் உத்தம வைஷ்ணவன்மேல் புலாலை ஊற்ற அவனது கோபத்தால் கழுகானான். கழுகுருப் பெற்ற இவன் மீன் தின்பதற்காக பிரம தீர்த்தத்தில் பாய்ந்தபடியால் அவ்வுருவம் நீங்கப்பெற்று பொன்னுலகமெய்தினான்.
(26) வீதிவிடங்கச் சருக்கம்
இருபத்தெட்டுப் பாடல்களையுடையது. முசுகுந்தன் என்னும் அரசன் இந்திரனிடம் வீதிவிடங்க மூர்த்தியைப் பெற்றுக் கொண்டு நல்லூரில் தங்கி இருந்தான். பின் இறைவன் வேண்டுகோளின் படி அங்கே அம்மூர்த்தியை பிரதிட்டை செய்தான்.
(27) அமர்நீதிச் சருக்கம்
இறுதிச் சருக்கமாகிய இதில் இருபத்தேழு பாடல்கள் உள்ளன. இப்புராணத்தின் அமைப்பும் சுவையும் பற்றிச் சிறப்பிக்கும் பாடலும் உள்ளது. இதில் பதினெட்டாம் பாடல் தொடங்கி இருபத்தாறாம் பாடல் வரை புராணவரலாறு பற்றியும் நூலாசிரியர் கூறும் வாழ்த்தும் சருக்கமாகக் கூறப்படுகின்றது. இருபத்தேழு பாடல் நூலாசிரியரின் வரலாற்றைக் கூறுகின்றது. அமர் நீதியார் பழையாறை நகரில் வணிகர் குலத்தில் பிறந்தவர். நல்லூரில் மடம் அமைத்து தொண்டு செய்தவர் அவரை இறைவன் ஆட்கொண்ட வரலாறும் இங்கு கூறப்படுகிறது.
சரஸ்வதிமகால் நூல் நிலையத்தில் இருந்த இப் புராணச் சுவடிகளை அச்சிட்டு வெளியிட்டவர் திரு ச. பாலசுந்தரம் அவர்கள். 1979 இல் பதிப்பு வெளியிடப்பட்டது. இந் நூல் 1908 ஆம் ஆண்டில் வெளிவந்ததாகவும் ஒரே ஒரு படி மட்டும் திருவாவடுதுறை ஆதீனத்தின் சரஸ்வதி மகால் நூல் நிலையத்திலிருந்து கிடைத்ததாகவும் தெரிய வருகிறது. அதனை உரைநடைப்படுத்தி பொன். சுப்பிரமணியபிள்ளை அவர்கள் ஒரு நூலை வெளியிட்டுள்ளார். (இ.ச.)
O திருநள்ளாறு
நிள் - ஆறு என்றால் ஆறுகளின் நடுவில் உள்ளது என்பது பொருள். இத் தலத்தின் தெற்கிலும், வடக்கிலும் இரண்டு ஆறுகள் ஒட இடை நடுவே இத்தலம் இருப்பதால் இந்தப் பெயர் வந்தது. சிலர் நளன் + ஆறு நள்ளாறு ஆயின்று
34

என்பர். இப் பெயரே திருமுறைகளிலும் குறிக்கப்படுவதால் கி.பி.7ம் நூற்றாண்டில் இப் பெயர் வழங்கி வருவதை அறியலாம். கல் வெட்டுக்களிலும் இப்பெயரே குறிக்கப்பட்டுள்ளது. பிரம்ம தேவர் பூசித்த தலம் ஆதலால் 'ஆதி புரி எனவும், தருப்பைக் காடாக இருந்தமையால் தர்ப்பாரன்யம்' எனவும், நகவிடங்கராகிய தியாகேசப் பெருமான் எழுந்தருளியிருப்பதால் நக விடங்கபுரம் எனவும், நளமகாராசன் வழிபட்டு கலி நீங்கி மீண்டும் அரசு பெற்றமையால் நளேச்சுரம் எனவும் அழைக்கப் பெறுகின்றது.
தலச்சிறப்பும் புராணவரலாறும்
திருநள்ளாறு என்னும் தலம் சனீஸ்வர வழிபாட்டிற்குரிய முக்கிய தலமாக இன்று விளங்குகின்றது. சூரியபகவானுக்கும் சாயாதேவிக்கும் பிறந்த குழந்தையே சனீஸ்வரன். இவன் கரிய நிறமுடையவன், கரிய ஆடை அணிபவன், குறுகிய உடம்பினன், இவனுக்கு ஒரு கால் சிறியது, மெல்ல ஊன்றி நடப்பான், யமன் அவன் காலைத் தன் தண்டத்தால் அடித்ததால் ஏற்பட்ட ஊனம் என்று கூறுவார்கள். இரு கரம் உடையவன், வலக் கரத்தில் தண்டமும், இடக் கரத்தில் வரதக் குறிப்பும் உடையவன், இவன் வீற்றிருக்கும் பீடம் பத்ம பீடமாகும், காக்கையே வாகனம், மேற்கு நோக்கி வீற்றிருக்கும் இவன் முடிதரித்தவன் என்றும் கருதப்படுகிறான். இவனுக்கு மந்தன், பிணிமுகன், முதுமகன் என வேறு பெயர்களும் உண்டு. இவனுக்கு விருப்பமான மலர் வன்னி மற்றும் கருங்குவளை, கசப்பான சுவை உடையவன். பார்ப்பதற்கு அச்சத்தை விளைவிக்கும் உருவம் இருந்தாலும் இவனை ஆயுட்காரனாகச் சொல்கிறது ஜோதிட நூல்; சனியைப் போல் கெடுப்பாருமில்லை. கொடுப்பாரும் இல்லை என்கிறது பழமொழி.
அட்டமத்துச் சனியாலோ ஏழரை நாட்டுச் சனியாலோ நாம் துன்புற நேர்ந்தால் பரிகாரத் தலமாக விளங்கம் திரு நள்ளாறு அடைந்து நீராடி அன்புடன் மானசிகமாக வணங்கினால் நம் துன்பங்கள் யாவும் விலகும். மேலும் இத்தலத்தைப் பற்றிப் பாடிய திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரமூர்த்தி சுவாமிகள் போன்ற சைவ சமயப் பெரியார்கள் பாடியுள்ள தேவாரப் பாடல்களைப் பாடி வந்தால் நம்மைப் பிடித்துள்ள துன்ப துயரங்கள் அறவே நீங்கும்.
புராணவரலாறு
சிவபெருமானால் படைத்தல் தொழிலின் ரகசியம் கைவரப் பெற்று மனக் குறை நீங்கப் பெற்றுள்ளார் பிரமன். அங்கு சிவபெருமானுக்கும் அம்பிகை மற்றும் 6j60)60TLU பரிவாரங்களுக்கும் சிறந்ததோர் ஆலயம் அமைத்தார். தன் கையில் உள்ள பிரம்ம தண்டத்தால் பிரம்ம தீர்த்தம் என வழங்கும் ஒர் தீர்த்தமும், சரஸ்வதி தேவியால் வாணி தீர்த்தமும், ஒம் என்னும் பிரணவவடிவான ஒரு தடாகமும், அவர் வாகனமான அன்னத்தால் உண்டாக்கப்பட்ட ஹம்ச தீர்த்தமும் உண்டாக்கி
இந்துக்கலைக்களஞ்சியம்

Page 65
அதன் கரையில் ஒர் சிவலிங்கமும் பிரதிஷ்டை செய்தார். இவ்வாறு இவரால் நிர்மாணிக்கப்பட்ட கோயிலில் என்றும் இடையறாது பூஜைகள் நடக்க வேண்டும் என்று எண்ணி இந்திரன் முதலான அஷ்டதிக்குப் பாலகர்களை அழைத்து அவர்கள் தங்கள் தங்கள் திசையில் தீர்த்தமும், சிவலிங்கமும் ஸ்தாபித்து சிவபூசை சிறப்பாக நடைபெற வழிவகுத்தார் என்று கூறப்படுகிறது.
கலிங்க மன்னன், அரசி, அரசகுமாரன் ஆகியோர் பார்க்கவர் என்னும் முனிவரால் சாபம் பெற்று காட்டு யானைகளாக அலைந்து திரிந்த வேளையில், நாரதர் உபதேசப்படி தர்ப்பாரன்யத்தில் (திருநள்ளாறு) உள்ள பிரம்ம தீர்த்தத் திவலை பட்டு விமோசனம் பெற்றனர். அம் மன்னரும் அத் தலத்தில் சில நாட்கள் தங்கி இருந்து இறைவனுக்குப் பணிவிடை செய்து பின் கலிங்க நாடு சென்றார்.
கலியினால் பற்றப்பட்ட நளன் அவனால் பல துன்பங்களை அனுபவித்தார். தன் நண்பனுடன் ஆடிய சூதாட்டத்தில் கலியினால் தோற்கடிக்கப்பட்டான். நாடு, நகரம் இவைகளை இழந்து உறங்குகின்ற மனைவியையும் கானகத்தே காரிருளில் கைவிட்டுச் சென்றான். போகும் வழியில் காட்டுத் தீ பற்றி எரிய அதில் சிக்கித் தவித்த கார்க்கோடன் என்ற பாம்பிற்கு உதவ அப் பாம்பும் அவனை உடன் தீண்டியது. அதனால் கருமை நிறமும், குள்ள உருவமும் ஏற்பட்டது. பின் இழந்த அரசையும் மனைவி பிள்ளைகளையும் மீண்டும் பெற்றும் அரசன் அமைதியுறவில்லை. தீர்த்த யாத்திரை மேற் கொண்டிருந்த மன்னனை பரத்துவாஜமுனிவர் கண்டு மன்னன் மனநிலையை உணர்ந்து, காவிரியின் தென் கரையில் ஒன்றரை காத தூரத்தில் திருநள்ளாறு என்னும் தலம் இருக்கிறது. அங்கு சென்று பிரம்ம தீர்த்தத்தில் நீராடி தர்ப்பாரண்யேசுவரரை வழிபட்டால் உன்னைப் பிடித்த பீடைகள் அகலும் எனக் கூறினார். அவ்வாறே மன்னனும் திருநள்ளாறு அடைந்து பிரம்ம தீர்த்தத்தில் நீராடித் தன் பீடைகள் அனைத்தையும் தொலைத்தான்.
ஒருமுறை பசுவைக் கொன்ற பாவத்தினால் (கோஹத்தி தோஷம்) புலையனாய் அலைந்து திரிந்தான் ஒர் அந்தணன். அப்போது உரோமக முனிவர் இவ்வந்தணனைக் கண்டு சிவபெருமான் எழுந்தருளியிருக்கும் தர்ப்பாரனியத்துக்குச் செல், அங்கு அன்ன தீர்த்தம் என்று ஒர் குளம் இருக்கிறது, அதில் ஒரு துளி நீர் உன்மேற்படின் உன் புலைத் தன்மை நீங்கப் பெற்று மீண்டும் அந்தணனாவாய். பின் விதிப்படி நீராடிதர்ப்பாரண் யேசுரரை வழிபடின் கோஹத்திதோஷம் நீங்கும். அங்கு சனிபகவான் சிவபெருமானின் கருணையைப்பெற்று இருக்கிறான். அச் சனிபகவானைத் தரிசித்தால் உன் பாவங்கள் அனைத்தும் தொலையும் எனக் கூறிய அறிவுரையின்படி அவ்வந்தணனும் திருநள்ளாறு சென்று தன் பாவங்களைத் தொலைத்தான் எனப்படுகிறது.
இந்துக் கலைக்களஞ்சியம்

திருக்கோயில் அமைப்பு
ஊரின் நடுவில் திருக்கோயில் அமைந்திருக்கிறது. திருக்கோயிலைச் சூழவும் ஒரு காலத்தில் அகழிகள் இருந்திருக்க வேண்டும். இன்று அவை தூர்ந்து நிலப்பரப்பாக உள்ளது. அகழியின் உட்பக்கத்தில் நாற்புறமும் உயர்ந்த மதில்கள் உள்ளன. கோயிலின் முற்றவெளி மிகப் பெரியது. முற்ற வெளிக்கு வடப்பக்கத்தில் திருக்கோயில் அலுவலகம் உள்ளது. அதனையடுத்து வாகன மண்டபமும், அதனையடத்து பசு மடமும் உள்ளன. சந்நிதியின் வலக்கைப் பக்கத்தில் இடையனார் கோயில் உள்ளது. இதில் இடையன் கணக்கன் உருவங்கள் உள்ளன. தியாகராசப் பெருமான் இவர்கள் இருவருக்கும் காட்சி கொடுத்ததாக வரலாறு.
முற்றவெளியை அடுத்து அழகான சுதைச் சிற்பங்களோடு கம்பீரமாக எழுந்து நிற்கிறது ஐந்து நிலை ராஜகோபுரம். இதனைக் கடந்து உள்ளே சென்றால் இரண்டாம் பிராகாரம் தொடங்குகிறது. இப்பிராகாரத்தின் தெற்கு, வடக்குப் பகுதிகளில் சிறிய நந்தவனங்கள் உள்ளன. இரண்டாம் பிரகாரத்தின் வடமேற்குப் பகுதியில் கற்பக விநாயகர் உள்ளார்.
இதன் உள்ளே நுழைந்ததும் உட்பிராகாரமாகிய மூன்றாம் பிராகாரத்தை அடையலாம். இங்கு முதலிற் காட்சி தருபவர் தம்பிரான் தோழராகிய சுந்தரமூர்த்தி சுவாமிகள். இவர், எழுந்தருளும் திருமேனியாக நகரவிடங்கப் பெருமானை வணங்கிய வண்ணம் மேற்கு நோக்கிய நிலையில் இருக்கிறார். அடுத்து சமயாசாரியர் நால்வர் திருவுருவங்களும் உள்ளன. அதனை அடுத்து விநாயகர், தர்ப்பாரன்யச் சிவலிங்கம், நந்தி ஆகியவை உள்ளன. அவற்றையடுத்து அறுபத்திமூவர் திருவுருவங்கள், உள்ளன. அறுபத்திமூவருக்கும் கடைசியில் தனித்த சிறிய மண்டபம் ஒன்றில் கலிநீங்கிய நளனும் சிவலிங்கத் திருமேனியும் இருக்கின்றன. நளன் இத் தலத்திற்கு தனிச் சிறப்புடையவன். ஆதலால் அடியார்கள் வரிசையில் இடம் பெற்றான். கோயிலின் கன்னிமூலையில் ஸ்தல விநாயகர் இருக்கிறார். அவருக்கு சொர்ண விநாயகர் என்று பெயர். விநாயகரை அடுத்துச் சோமாஸ்கந்தர் - அம்மை இவர்கள் திருவுருவங்கள் கருங்கல் சிற்பமாக மிக அழகாக அமைந்துள்ளன. சோமஸ்கந்தரின் எதிரில் முனிவரைப் போன்று உருவங்கள் உள்ளன. அவற்றில் ஒன்றின் அரையில் உடைவாள் இருப்பதால் சோழ மன்னரின் உருவமாக இருக்கலாமோ எனக் கருதக் கூடியதாக உள்ளது. சோமஸ்கந்தரை அடுத்துச் சப்தவிடங்க ஸ்தலங்களில் உள்ள விடலிங்கங்கள் இடம்பெற்றுள்ளன. அடுத்து நின்ற திருக்கோலத்தில் திருமால், பைரவர் திருக்கோலங்கள் உள்ளன.
வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் தனி ஆலயமாக திருமாளிகைப் பத்தி மணிமண்டபத்தில் உள்ளது. அங்கு வடமேற்குக் கரையில் திருமகள் சுதை வடிவிலும், சிலை வடிவிலும் காட்சி வழங்குகிறார். அங்கு தியாகராஜப் பெருமான்
35

Page 66
எண்ணெய்க் காப்புக் கொண்டருளும் எண்ணெய்க் காப்பு மண்டபம் இருக்கிறது. இதன் தூண்கள் பல்லவர் காலச் சிற்பத் திறமும் அழகும் செறிந்தவை. இதன் கீழ்க்கோடியில் ஷேத்திர பால பைரவர் ஆலயம் இருக்கிறது. கோயிலில் அர்த்தசாமப் பூசை முடிந்ததும் இவரையும் வழிபட்டு ஆலயப் பாதுகாப்புப் பணியை அவர் கையில் ஒப்புவித்துச் செல்வது வழக்கம்.
திருமாளிகைப் பத்தியின் வடகீழ்க் கோடி ஈசான மூலையில் சபாநாயகராகிய நடராஜப் பெருமான் சிவகாமி அம்மையாரோடு எழுந்தருளி இருக்கிறார். அங்கே உள்ள சூரியனுக்கு பூசை முடித்துக் கொண்டுதான் திருப்பள்ளி எழுச்சி முதலிய நான்கு காலப் பூசை தொடங்குவது வழக்கம். பின் இரண்டாம் கோபுரத்தின் உட்புறத்திலுள்ள சந்நிதியை அடைந்தால் கொடிமரம் காணப்படும். கொடிமரத்தையும் கடந்து தியாகேசப் பெருமான் சந்நிதி மண்டபத்தில் பக்கவாயில் வழியாக நள்ளாறர் திரு அணுக்கன் திருவாயிலை அடைந்தால் அங்கு மகாமண்டபத்தில் நந்தி, பல்லவர் காலச் சிற்பமாக அமைந்து இருக்கிறது.
நந்தியம் பெருமானை வணங்கிக் கொண்டு தெற்குப் பக்க வாயிலின் வழியாக தியாகராஜப் பெருமான் சந்நிதியை அடைய வேண்டும். அச் சந்நிதியில் இத் தலத்திற்குச் சிறப்பான மரகத விடங்கர் பெட்டகத்தில் எழுந்தருளியிருக்கிறார். பச்சை ரத்தினத்திலான சிவலிங்கத் திருமேனி இது. இதற்கு நான்கு காலங்களிலும் அபிஷேகம் நடைபெறும். தியாகராஜப் பெருமானின் மகா மண்டபத்தின் மேல் தளத்தில் புராண வரலாறு
தொடர்பான பல வண்ண ஒவியங்கள் இடம் பெற்றுள்ளன.
கர்ப்பக்கிருகத்தின் வடபக்கச் சுவரில் கருணையே உருவான துர்க்கை, பிட்சாடனர் திருவுருவங்கள் உள்ளன. சுவாமிக்கு வடபகுதியில் சண்டேசுவர் உள்ளார். சண்டேசுவரரை வணங்கி வெளியே வந்தால் சுவாமி சந்நிதிக்கு வலப்பக்கத்தில் சனீஸ்வரபகவான் சிறியமாடத்தில் எழுந்தருளியுள்ளார். அவரது சந்நிதி மிகச்சிறப்பானது, மகிமை வாய்ந்தது . சனீஸ்வர பகவான் இத் தலத்தில் அனுக்கிரக மூர்த்தியாக உள்ளார். இவரை வழிபட்டுக்கொண்டு அம்பிகையின் சந்நிதியை அடைய வேண்டும். அவர் சந்நிதி தெற்குப் பார்த்தது. இதுவே இக் கோயிலை வழிபாடு செய்யும் முறை.
தல விருட்சம்
இத்தலம் ஆதியில் தருப்பைக் காடாக இருந்தமையாலும்
இறைவன் அதனடியில் எழுந்தருளியிருந்தமையாலும் தருப்பையே ஸ்தல விருட்சமாகும்
மண்டபங்கள்
ஏனைய சிவாலயங்களில் உள்ளதுபோல இங்கும் கர்ப்பக் கிருகத்தை ஒட்டி அர்த்த மண்டபம், மகாமண்டபம், அந்தராள
மண்டபங்கள் உள்ளன. தியாகத் தலமாதலின் எண்ணெய்க் காப்பு
36

மண்டபம் ஆஸ்தான மண்டபம் வசந்த மண்டபம், இம் மூன்றும் சிறப்பாக உள்ளன. ஆஸ்தான மண்டபம் இன்று வாகன
மண்டபமாக உள்ளது.
மூர்த்தி (தர்ப்பாரன்யேஸ்வரர்)
இவர் ஆதி மூர்த்தியாயினும் சுயம்பு மூர்த்தியாவார். இவர் சந்நிதி கிழக்கு நோக்கி உள்ளது. அதில் தருப்பை வனத்தில் எழுந்தருளியிருந்தமையால், தருப்பையினால் ஏற்பட்ட வடுக்கள் லிங்கத்தில் காணப்படுகின்றன.
பிராணேஸ்வரி
இவளுக்கு போகமார்ந்த பூண்முலையாள் என்ற பெயரும் உண்டு. இவள் கருணையே வடிவானவள். மதுரையில் சமணர்களால் சைவசமயத்திற்கு ஊறுவந்தபோது 'பூண் முலையாள்” எனத் தொடங்கும் திருப்பதிகம் சைவசமயத்திற்கே உயிர் கொடுத்ததால் இவளுக்கு பிராணேஸ்வரி என்ற பெயரும் உண்டாயிற்று. இவள் தெற்கு நோக்கிய வாறு அருள்பாலிக்கிறாள்.
சனீஸ்வரன்
இத் தலத்திலுள்ள மூர்த்திகளில் பிரபலமானவர் இவர். இவருடைய கோயில் உட்கோபுரத்தின் உட்பகுதியில் உள்ள சிறிய மாடத்தில் உள்ளது. இவர் அபய கரத்துடன் கருணையே வடிவாக ஒரு கரத்தை ஒரு தொடையில் அழுத்தியவாறு நின்ற திருக்கோலத்தில் காட்சியளிக்கிறார். கைகளில் எதுவித படையணிகளும் இன்றிக் கருணா மூர்த்தியாக விளங்குகிறார்.
பைரவர்
இத்தலத்தின் விஷேச மூர்த்திகளில் இவரும் ஒருவர். இவரே
இத்தலத்தின் ஷேத்தரபாலகராக உள்ளார். இவர் இவ்வாலயத்தில்
ஈசான மூலையில் எழுந்தருளியுள்ளார்.
தீர்த்தங்கள்
இத்திருத்தலத்தில் நீராட அனேக தீர்த்தங்கள் உள்ளன. எண்திசைக் காவலர்களும் இத் தலத்தில் தங்கள் பெயரில் சிவலிங்கப் பிரதிஷ்டை செய்து தீர்த்தமும் ஏற்படுத்தியிருக் கிறார்கள் என்பது ஐதீகம். இத் தல தீர்த்தங்களில் பிரம்ம தீர்த்தம், வாணிதீர்த்தம், அன்ன தீர்த்தம், நளதீர்த்தம் என்பவை குறிப்பிடத்தக்கவை. இன்று இத்தலம் திருக்கயிலாய பரம்பரையைச் சார்ந்த தருமபுரம் ஆதீன குரு மகாசந்நிதானத்தின் கீழ் சிறப்புற இயங்கி வருகிறது. (நி.நி.)
O ●
திருநாகேச்சுரம்
சோழநாட்டுத் தென்கரைத் தலம். கும்பகோணத் திலிருந்து காரைக்கால் செல்லும் வழியில் ஒப்பிலியான் கோயிலுக்கு அருகில் உள்ளது திருநாகேச்சுரம். தேவார முதலிகள் மூவரும் பாடியுள்ளனர். சேக்கிழார் திருப்பணி செய்த தலம். அவர் இத் தலப்பெருமான் மீது மிகுந்த அன்பு
இந்துக் கலைக்களஞ்சியம்

Page 67
கொண்டிருந்தார். இதனால் தமது ஊரான குன்றத்தூரில் இப்பெயரில் ஒரு கோயிலைக் கட்டினார். ஆதிசேடன், தட்சன், கார்க்கோடகன், கெளதமர், பராசரர், நளன், நந்தி வழிபட்ட தலம். இராகு பகவான் இத்தல இறைவனை வழிபட்டுத் தம்மை வழிபடுவோருக்கு பல நன்மைகளை அருளுவதற்கு சிவபெருமானிடம் வரங்கள் பெற்று இத்தலத்தில் தமது இரு தேவியருடன் அமர்ந்துள்ளார். நாகேச்சுரம் இராகுத்தலம் என்கின்ற சிறப்பைப் பெறுகிறது. நாகராஜன் ஒரு சிவராத்திரியன்று நான்கு யாமங்களில் முதல் யாமத்தில் குடந்தைக் கீழ்க் கோட்டம், இரண்டாம் யாமத்தில் திருநாகேச்சுரம், மூன்றாம் யாமத்தில் திருநாகைக் காரோணம், நான்காம் யாமத்தில் திருவலஞ்சுழி ஆகிய தலங்களில் வழிபட்டுச் சென்றான். அதன் காரணமாவே இத் தலம் திருநாகேச்சுரம் என வழங்கப்படுகிறது. இராகுதோஷ நிவர்த்திக்காக இத்தலமேகி வழிபடுவோர் பலர்.
கோயில்
இறைவன் - நாகநாதசுவாமி, நாகேச்சுரர் இறைவி - பிறையணிவாள் நுதலம்மை,
குன்றமுலையம்மை (கிரிகுஜாம்பிகை) தலமரம் - செண்பகம் தீர்த்தம் - சூரியபுட்கரணி முதலான பன்னிரு தீர்த்தங்கள்
நாற்புறங்களிலும் மதில்கள் சூழ்ந்து நான்கு வெளி மதிற் கோபுரங்கள், உட்கோபுரங்கள், விமானங்கள் மூன்று திருச்சுற்றுகள் பல மண்டபங்கள் என அளவிற் பெரிதாக அமைந்துள்ளது. பிரதான வாயில் கிழக்குக் கோபுரம் ஐந்து நிலைகளையுடையது. இராஜ கோபுரவாயிலினுள் சென்றதும் நம் முன்னே கணபதியும் நந்தியும் காட்சி தருகின்றனர். இடப்பக்கத்தில் சூரியபுட்கரணியுள்ளது. அருகில் மழுப்பொறுத்த விநாயகர் சந்நிதி உள்ளது. வலப்பக்கம் நூறுகால் மண்டபமும் அதனையடுத்து கிரிகுஜாம்பிகையின் தனிக்கோயிலும் உள்ளன. அந்த உருவத்திற்கு தைத் திங்களில் மட்டும் புனுகுச் சட்டம் சாத்தப்படுகிறது.
பலமண்டபங்களையடுத்து சுவாமியின் கருவறை உள்ளது. இறைவன் நாகநாத சுவாமி இலிங்கத் திருவுருவில் காட்சி தருகிறார். உள் திருச்சுற்றில் அதிகார நந்தி, சேக்கிழார், பாலறாவாயர், அவர்களுடைய தாயார், நால்வர், செண்பக விநாயகர், சந்திரசேகரர், சுப்பிரமணியர், இலக்குமி, பள்ளியறைச் சந்நிதி, அறுபத்துமூவர், நடராஜர் சந்நிதிகளும், கருவறை மாடக் கடவுளர்களும், சந்நிதிகளைக் கொண்டுள்ளனர். வடபுறம் சண்டிகேசுரர் சந்நிதி உள்ளது. சுவாமிக்கு வடபுறம் முருகன் சந்நிதியும் அடுத்து அம்மன் பிறையணி நுதலாள் சந்நிதியும் உள்ளன. சோமாஸ்கந்த வடிவத்தில் இறைவன், முருகன்,
இறைவி சந்நிதிகள் அமைக்கப்பட்டுள்ளன. அலங்கார
இந்துக் கலைக்களஞ்சியம்

மண்டபத்தின் வடகிழக்கில் நவக்கிரக சந்நிதி உள்ளது. இரண்டாம் திருச்சுற்றில் இத் தலத்தின் சிறப்பு வழிபாட்டிற்குரியவரான இராகுபகவான் சந்நிதி உள்ளது. இராகு பகவான் தன் இரு தேவியருடன் வீற்றிருந்த திருக்கோலத்தில் காட்சியளிக்கிறார். இராகு பகவானுக்கு அபிஷேகம் செய்த பால் நீல நிறமாக மாறிவிடுவது அதிசயம். ஒவ்வொரு நாளும் இராகு காலத்தில் சிறப்பு வழிபாடு இடம்பெறுகிறது. அவற்றுள் ஞாயிற்றுக்கிழமை சிறந்தது.
அன்னை கிரிகுஜாம்பிகை சந்நிதி சூரிய புட்கரணிக்கு வடபுறம் தனிக் கோயிலாகத் திகழ்கிறது. மிக்க புகழ்வாய்ந்த சந்நிதி. அலைமகளும், கலைமகளும் அருகில் நிற்க மலைமகளான குன்றமா முலையம்மை அருளே வடிவாகக் காட்சியளிக்கிறார். திருச்சுற்றில் நவசக்தி, ஐயனார் சந்நிதிகள் உள்ளன. இக் கோயில் மண்டபங்களில் பல அழகான சிற்பங்களைக் காணலாம். நூறுகால் மண்டபம் தேர்ச்சக்கரங்கள் பொருத்தப்பட்டு விளங்குகிறது.
கண்டராதித்த சோழன் இக் கோயிலைக் கட்டியதாகச் சொல்லப்படுகிறது. சேக்கிழார் உள் மண்டபத்தையும் அச்சுதப்பநாயக்கரிடம் மந்திரியாக இருந்த கோவிந்த தீகூழிதர் வெளிமண்டபத்தையும் கட்டியதாகக் கூறுவர். கோயிலில் பல கல்வெட்டுகள் உள்ளன. சேக்கிழார் பெருமான் நாகநாத சுவாமியிடம் பேரன்பு பூண்டவர். அவரது திருப்பணிகளையும் பெற்றுள்ளது இத் திருக்கோயில், கார்த்திகையின் பெருவிழா, வைகாசி பூசத்தில் சேக்கிழார் குருபூசை நடைபெறுகிறது.
"பொன்னேர் தரு மேனியனே புரியும் மின்னேர் சடையாய் விரை காவிரியின் நன்னீர் வயல் நாகேச்சர நகரின் மன்னே என வல்வினை மாய்ந்து அறுமே” எனச் சம்பந்தர் பெருமானும்,
"நல்லர் நல்லதோர் நாகங் கொண்டாட்டுவர்
வல்லர் வல்வினை தீர்க்கு மருந்துகள்
பல்லிலோடு கையேந்திப் பலிதிரி
செல்வர் போற்றிரு நாகேச்சரவரே” என அப்பர் பெருமானும்,
"பாலனது ஆருயிர்மேற் பரியாது பகைத் தெழுந்த
காலனை வீடுவித்துக் கருத்தாக்கியது என்னை
கொலாம்
கோல மலர்க் குவளை கழுநீர் வயல்சூழ் கிடங்கில்
சேலொடு வாளைகள் பாய் திருநாகேச்சரத் தானே’
எனச் சுந்தரர் பெருமானும் இத்தலத்து இறைவனைப் போற்றிப் பாடியுள்ளனர். (நி.நி.)
37

Page 68
O திருநாவலூர்
நடு நாட்டுத் தலம். சுந்தரராற் பாடப்பட்ட தலம். பண்ணுருட்டி புகையிரத நிலையத்திலிருந்து பத்து மைல் தொலைவில் உள்ளது. பேருந்தில் செல்பவர்கள் கடலூர் - பண்ணுருட்டி பேருந்தில் 2. கி. மீ. சென்று ஊரையடையலாம். மக்கள் வழக்கில் திருநாமநல்லூர் என்று வழங்குகின்றது.
உமாதேவியார், திருமால், சண்டேஸ்வரர், கருடன் ஆகியோர் பூஜித்த தலம். சுந்தர மூர்த்தி நாயனார் அவதரித்த தலம்.
கோயில் இறைவன் - பக்தஜனேஸ்வரர், திருநாவலேஸ்வரர், இறைவி - மனோன்மணி, சுந்தரநாயகி, சுந்தராம்பிகை. தலமரம் - நாவல்
தீர்த்தம் - கோமுகித் தீர்த்தம்
ராஜகோபுரம் ஐந்து நிலைகளுடன் சிறந்த நிலையில் உள்ளது. (பூரீ காஞ்சி காமகோடி பீடம் ஜகத்குரு பூரீ ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் அவர்களின் பொன்விழாத் திருப்பணி) கோபுரத்தை அடுத்து இடப்பக்கம் சுந்தரர் சந்நிதி உள்ளது. பரவை, சங்கிலியார் சூழ எதிரில் வெள்ளை யானை நிற்க, சுந்தரர் கையில் தாளமேந்திக் காட்சி தருகிறார். எதிரில் கவசமிடப்பட்ட கொடிமரம், பலிபீடம் முதலியன உள்ளன. கொடிமர விநாயகர் சுந்தர விநாயகராகக் காட்சி தருகிறார். நந்தி சற்றுப் பெரியது. அடுத்து வாகன மண்டபம் உள்ளது. வாயிலைக் கடந்து உட் சென்றதும் உற்சவத் திருமேனிகள் பாதுகாக்கப் பட்டுள்ளதைக் காணலாம். சுந்தரர் இருமனைவியருடனும் நடராஜர், சிவகாமி, முருகன்,விநாயகர், வள்ளி, தெய்வயானை முதலிய உற்சவத் திருமேனிகள் உள்ளன. நேரே கருவறை, கிழக்கு நோக்கிய சந்நிதி; சிவலிங்கத்தின் பாணம் சற்று உயரமாக உள்ளது. நடராஜ சபையும் உண்டு. உள் பிராகாரத்தில் நரசிங்க முனையர் பூஜித்த மிகப்பெரிய சிவலிங்கம் உள்ளது.
பிராகாரத்தில் சேக்கிழார், நால்வர், அறுபத்துமூவர், வலம்புரி விநாயகர், சோமாஸ்கந்தர், ஆறுமுகர் முதலியோர் சந்நிதிகளும், தொடர்ந்து யுகலிங்கங்களும் கஜலட்சுமி சந்நிதியும் உள்ளன. கருவறைச் சுவரில் சண்டேஸ்வரர் வரலாறு சிற்ப வடிவிலுள்ளது. பால் கறப்பது, தந்தையார் மரத்தின் மீதேறிப் பார்ப்பது திருமஞ்சனம் செய்வது, தந்தையின் கால்களைத் துண்டிப்பது. இறைவன் கருணை செய்வது போன்றன சிற்பங்களாக வடிக்கப்பட்டுள்ளன. நவக்கிரக சந்நிதியில் சுக்கிரனுக்கு எதிராக அவன் வழிபட்ட சுக்கிரலிங்கம் உள்ளது. நவக்கிரகங்களில் சூரியன் திசைமாறி மூலவரைப் பாத்தவாறு உள்ளார். வெளிப்பிராகாரத்தில் தலமரமான நாவல் இரண்டு உள்ளது. அம்பாள் சந்நிதி கிழக்கு
38

நோக்கியது தனிக் கோயில், அழகான முன் மண்டபம் உள்ளது. அம்பிகை நான்கு திருக்கரங்களுடன் நின்ற திருக்கோலம்.
கோஸ்ட மூர்த்தமான தட்சிணாமூர்த்தி உருவம் - ரிஷபத்தின் முன்னால் நின்று வலக்கையை ரிஷபத்தின் மீது ஊன்றி மறுகையால் சுவடி ஏந்தி நிற்கும் அமைப்பு அற்புத அமைப்பு. ஆலயத்துள் வரதராஜப் பெருமாள் சந்நிதி பூரீதேவி, பூதேவியுடன் காட்சி தரும் கோலத்தில் உள்ளது. உற்சவ மூர்த்தங்களாகப் பெருமாள், இராமர், இலக்குவணன், சீதை முதலிய உருவங்கள்
வைக்கப்பட்டுள்ளன.
கோயிலுக்குப் பக்கத்தில் சுந்தரர் மடாலயம் ஒன்று உள்ளது. சுந்தரர் கையில் செண்டுடன் அழகாகக் காட்சி தருகின்றார். இங்குள்ள உட்கோயில் தொண்டீச்சரம் எனப்படும். இக்கோயில் முதற்பராந்தகனின் மகன் இராசாதிராசனால் கட்டுவிக் கப்பட்டது எனக் கல்வெட்டு கூறுகிறது.
கோவலன் நான்முகன் வானவர் கோனுங்குற் றேவல் செய்ய மேவார் முப்புரம் தீயெழு வித்தவன் ஒரன்பினால் ஏவலனார்வெண்ணெய்நல்லூரில் வைத்தென்னை ஆளுங்கொண்ட நாவலனார்க்கிடம் ஆவது நந்திரு நாவலூரே
எனச் சுந்தரர் பெருமான் இத் தலத்தில் எழுந்தருளியிருக்கும் பெருமானைப் போற்றிப் பாடியுள்ளார். (நி.நி)
திருநாவுக்கரசர்
இவர் சைவ சமயத்தவர், குரவர் எனப் போற்றும் நால்வருள் ஒருவர். தேவார முதலிகள் மூவருள் ஒருவர். பெரியபுராணம் பாடும் நாயன்மார் அறுபத்து மூவருள் ஒருவர். திருவாமூவரில் புகழனார் மாதினியார்க்குப் புதல்வராய் தோன்றியவர் மருள் நீக்கியார். இவரின் மூத்த சகோதரி திலகவதியார்.
திருவாமூரில் புகழனாரும், மாதினியாரும் பெருஞ் செல்வந்தர்களாக வாழ்ந்தார்கள். அவர்களின் மூத்த புதல்வி திலகவதியார். இவரின் பன்னிரண்டாம் அகவையில் கலிப்பகையார் என்பவருக்கு மணம் பேசி முடித்திருந்தனர். அவ்வளவில் புகழனார் நோய்வாய்ப்பட்டு இவ்வுலக வாழ்வை நீத்தார். அவரைத் தொடர்ந்து அவரது மனைவியும் இறக்கவே பிள்ளைகள் இருவரும் தனியே விடப்பட்டனர். இவ்வேளையில் மன்னவர் படைக்குத் தலைமை தாங்கிச் சென்ற கலிப்பகையாரும் போரில் இறந்து விட்டார். இந்நிலையில் தன்னுயிரை விடத் துணிந்த திலகவதியாரைத் தடுத்து மருள்நீக்கியார் “அன்னையும் அத்தனும் அகன்ற பின்னையும் நான் உமை வணங்கப் பெறுதலினால் உயிர்தரித்தேன், என்னை இனித்தனியே விட்டு
ஏகுவீர் எனில் யான் நும் முன்னம் உயிர்நீப்பேன்’ என்று கூறவே,
இந்துக் கலைக்களஞ்சியம்

Page 69
தம்பியார் உளராக வேண்டும் என்ற அன்பினால் தன்னுயிரைத் தாங்கி வாழ்ந்தார் திலகவதியார். திலகவதியாரின் இருத்தல் இல்லாதிருந்தால் திருநாவுக்கரசரின் இருத்தலும் இல்லை என்றே கூற வேண்டும்.
இளம் வயதிலேயே யாக்கை செல்வம் இவற்றின் நிலை யாமையை நன்குணர்ந்த நாவுக்கரசர், நல்லறங்கள் பலவற்றைச் செய்தார். அவர் செய்த சமுதாயத் தொண்டினை வகைப்படுத்தி விரித்துரைக்கிறார் சேக்கிழார். பல வகை அறங்களுக்காக பெருநிதியம் அளித்தார், விருந்தோம்பினார், அறநிலையங்கள் தண்ணீர்ப் பந்தல் ஆகியவைகளை அமைத்துக்கொடுத்தார், சோலைகள் பலவற்றை உண்டாக்கியும் திருக்குளம் வெட்டியும் தொண்டு செய்தார், நாவன்மை வாய்ந்த புலவர்கட்கு பெருநிதி கொடுத்தார். இவ்வாறு நாவுக்கரசர் அறவாழ்க்கையை மேற்கொள்ள, திலகவதியார் திருவாமூரை விடுத்துத் திருவதிகை வீரட்டானம் சேர்ந்து தம் கையினாலேயே திருப்பணிகள் செய்யத் தொடங்கினார். செல்வச் செழிப்பிருப்பினும், பணியாட்கள் பலரின் உழைப்பிருப்பினும் அவைகளின் துணை கொண்டு சிவனுறையும் திருக்கோயில் தொண்டு செய்தல் உண்மைத் திருத்தொண்டாகாது எனக் கருதி தாமே தம் கையினால் திருப்பணி செய்ய வேண்டும் என்று முடிவு செய்தார், திலகவதியார் என்பது குமரகுருபரனின் கூற்று.
இத்தகைய ஒர் சூழ்நிலையில் திருநாவுக்கரசருக்கு ஒருவகை வெறுப்புணர்ச்சி தோன்றியிருத்தல் இயல்பே. தாய், தந்தையரின் இறப்பு, கலிப்பகையாரின் இறப்பு இதனால் திலகவதியார் மேற்கொண்ட தவவாழ்வு ஆகியவை நிலையாமை உணர்வை மேம்படுத்தியிருக்க வேண்டும். மேலும், சமயங்கள் கூறும் வாழ்வியல் விளக்கங்களை அறிய வேண்டும் என்ற அவா சமணர்களின் கொல்லாமைக் கொள்கை என்பன திருநாவுக்கரசரை சமணத்தின்பால் ஈர்த்தன. சைவராகப் பிறந்து வளர்ந்த அப்பர் சமணசமயத்திற் சேர்ந்து பின்பு சைவராக மாறிச் சைவசமய மறுமலர்ச்சியில் முக்கிய பங்கு வகித்துச் சிவலோகம் சேர்ந்தார் எனப் பெரிய புராணம் கூறும். சமணராகப் பிறந்து வளர்ந்த அப்பர் இடையில் சைவ சமயத்தைச் சேர்ந்து சைவ சமய எழுச்சிக்குக் காரணமாக இருந்தார் என்றும், பின்பு சமணத்திற்கு திரும்பினாரெனவும் சமணர் கூறுவர் என்று தென்னிந்தியச் சமணம் என்னும் ஆங்கில நூல் கூறுகின்றது. எனினும் திருநாவுக்கரசர் சைவராகவும், சமணராகவும் இருந்தார் என்பது இருசாராருக்கும் உடன்பாடு.
திருநாவுக்கரசர் சமணராக இருந்தபோது சமண சமய வளர்ச்சிக்கும் பெருந் தொண்டாற்றியதைப் பெரிய புராணமே விதந்து கூறுகின்றது.சமண நூல்கள் பலவற்றையும் கற்றுப் புறச்சமயத்தினர் பலருடன் வாதஞ் செய்து அவர்களைத் தோற்கடித்து அவர்களை சமணத்திற்கு மத மாற்றம் செய்த நாவுக்கரசர் சமணர்களின் பெருமதிப்பைப் பெற்றிருந்தார். அவர் தம் சமண சமய அறிவுத் தேர்ச்சியைக் கண்டு தருமசேனர் என்ற
இந்துக் கலைக்களஞ்சியம்
飞酉 ਰਾ

சிறப்புப் பெயர் அளித்துப் பாராட்டினார்கள். பின்னர் அவர் பெளத்த மதத்தின் ஒரு பிரிவினரான தேரவாத நெறி நின்றோரை வாதில்வென்று சமண சமயத் தலைமைப் பதவியையும் பெற்றுச் சிறந்து விளங்கினார்.
தி ரு வ தி  ைக வீரட்டானத்தில் திருத்தொண்டு புரிந்து வந்த திலகவதியார் இறைவனை நோக்கி "அடியேன்பின் வந்தவனை ஈண்டு வினைப் பரசமயக் குழியினின்றும் எடுத்தாள வேண்டும்” எனப் பலமுறையும் இரந்து நிற்க, வீரட்டானத்து இறைவன் திலகவதியார் கனவில் தோன்றி உன் மனக் கவலை ஒழி; உன் உடன் பிறந்தான் முன்னமே முனியாகி எம்மை அடையத் தவம் முயன்றான்; அன்னவனை இனிச்சூலை மடுத்தாள்வம் எனக் கூறி அவ்வாறே மேற்கொண்டருளினார். சூலை நோயினாற் துன்புற்ற நாவுக்கரசர், சமணர்கள் கைவிட்ட நிலையில் தன் பணியாளன் ஒருவனின் துணையுடன் திருவதிகை வீரட்டானம் வந்தார். அங்கு
தமக்கையிடம் தன் கொடுநோயின் தாக்கம் பற்றிக் கூறி, உய்ந்து கரையேறு நெறி உரைத்தருளும் என வேண்டி நின்றார். திலகவதியார் திருவைந்தெழுத்தை ஒதி திருநீற்றைக் கொடுத்தார். அவ்வளவில் சூலை நோயின் வேகம் சற்றுத் தணிய திருவதிகை வீரட்டானப் பெருமானை நோக்கி "கூற்றாயினவாறு விலக்ககிலீர்” எனத் தொடங்கும் பதிகத்தைப் பாடினார்.
தருமசேனருக்கு வந்த சூலை நோயைச் சமணரால் தீர்க்க முடியாமற் போனதும், சைவரால் தீர்க்க முடிந்ததும் சைவசமய வரலாற்றில் ஒரு திருப்பு முனையாக அமைந்துவிட்டது. சமணமும், தருமசேனர் என்ற பெயரும் அழிய அந்த அழிவிலே சைவமும் திருநாவுக்கரசரும் தோன்றின. அவ்வளவில் வலிமை மிக்க எதிரிகள் நாவுக்கரசரை மிக மோசமாக எதிர்த்தனர். நீற்றறையில் இட்டனர், நஞ்சு கலந்த பாற்சோற்றை உண்ணக் கொடுத்தனர், கொல்யானையை ஏவி விட்டனர், கல்லோடு கட்டி கடலில் போட்டனர், துன்பங்கள் யாவற்றையும் ஏற்றார், சகித்தார், வெற்றியும் கண்டார். தொடர்ந்து வந்த துன்பங்கள் அனைத்தும் அவரது வாழ்வின் வளர்ச்சிப் பகுதிகளாயின.

Page 70
"நாமார்க்குங் குடியல்லோம் நமனை யஞ்சோம் ஏமாப்போம் பிணியறியோம் பணிவோ மல்லோம்”
“அஞ்சுவதுமில்லை, அஞ்ச வருவதுமில்லை” என்ற உறுதிப்பாடு நிறைந்த உள்ளப் பாங்கைப் பெற்றிருந்தார். இந்த மன உறுதியே சைவசமய மறுமலர்ச்சிக்கு அடிகோலியது. அப்பரின் சாத்வீக எதிர்ப்புப் போராட்டம் வெற்றி பெற்றது. பல்லவ மன்னனும் அப்பரின் கொள்கையை ஏற்று சைவனானான். இவரது பாடல்கள் சைவத் திருமுறைகளுள் நான்கு, ஐந்து, ஆறாம் திருமுறைகளாக இடம்பெற்றுள்ளன. இவரால் பாடப்பட்ட திருத்தாண்டகம் நீண்ட அடிகளால் ஆகியது. இப்பகுதி ஏனைய ஆசிரியர்களின் திருமுறைகளில் இல்லை. இது தனிச் சிறப்புடைய திருமுறையாகும்.
அப்பர் பாடிய திருமுறைகளை ஆராயின் அவர் பாடிய தலங்கள் 126. இவை தவிர வைப்புத் தலங்களாக அப்பராற் குறிக்கப்படுபவை 60க்கு மேற்படுகின்றன. அப்பர், சம்பந்தர் காலத்தில் தமிழ்நாட்டில் ஏறக்குறைய 300 சிவன் கோயில்கள் இருந்தன என்று கூற இடமுண்டு.
நாவுக்கரசர் காலத்தில் ஏற்பட்ட சைவ மறுமலர்ச்சியானது பக்தியை அடிப்படையாகக் கொண்டது. பக்தியைப் பொதுமக்கள் இயக்கமாக வளர்த்த பெருமை அப்பர், சம்பந்தர் இருவரையுமே சாரும். தமிழ்நாட்டில் உள்ள தலங்கள் தோறும் யாத்திரை செய்த அப்பர் பெருமான் பக்திச்சுவை நனி சொட்டப் பாடல்கள் பலவற்றைப் பாடினார். அப்பாடல்களில் இறைவனைப் புகழ்ந்தது மட்டுமின்றி மக்கள் உய்யும் நெறிகளையெல்லாம் செந்தமிழில் அழகு பெற விளக்கியுள்ளார்.
அவைதிக சமயங்கள் கற்பித்து நின்ற அதீத கட்டுப்பாடுகளால் சலிப்புற்று நின்ற அக்கால மக்களுக்கு, இறையருளைப் பெறுவதற்கு தொண்டு நெறியை, ஆழ்ந்த அன்பினால் வழிபாடியற்றும் பக்தி மார்க்கத்தைக் கற்பித்து
நின்றவர் நாவுக்கரசர்.
'நிலைபெறுமா றெண்ணுதியேல் நெஞ்சே நீ வா
நித்தலுமெம் பிரானுடைய கோயில் புக்குப் புலர்வதன்முன் அலகிட்டு மெழுக்கு மிட்டுப்
பூமாலைப் புனைந்தேத்திப் புகழ்ந்துபாடித் தலையாரக் கும்பிட்டுக் கூத்து மாடிச்
சங்கரா சயபோற்றி போற்றி என்றும் அலைபுனல் சேர் செஞ்சடையெம் ஆதியென்றும் ஆரூரா என்றென்றே அலறா நில்லே.”
என்ற இப் பாடல் ஆன்மீக நெறியில் மிகத் தாழ்ந்த நிலையில் இருந்த மக்களையும் அரவணைத்து ஒன்று கூட்டி அன்பு நெறிக்கு ஆட்படுத்தும் தன்மையிலேயே அமைந்துள்ளது.
40

வட இந்தியாவில் வீறு கொண்டெழுந்த பெளத்த மதத்தை, வலுவிழக்கச் செய்ய முனைந்த வைதிக சமய ஆர்வலர், இறைவன் பற்றிய கோட்பாடுகள் கொள்கைகளை சாதாரண மக்களும் உணரக் கூடிய அளவில் இலகுபடுத்தினர். இந் நிலையில் பழைய வைதீக மதம் தன் செல்வாக்கை மெல்ல இழக்க பெளராணிக மதம் எழுச்சியுற்றது. அதன் செல்வாக்கு தமிழ் நாட்டில் பல்லவர் காலத்தில் பரந்த அளவில் ஏற்பட்டதை அப்பர், சம்பந்தர் பாடல்கள் தெளிவாக உணர்த்துகின்றன. மார்க்கண்டேயர் பொருட்டு இறைவன் காலனை வீழ்த்தியதும், கண்ணன் தன் கண்ணை அர்ச்சித்து ஆழிப்படை பெற்றதும், அர்ச்சுனன் பொருட்டு இறைவன் வேடுவனாய்ச் சென்றதும், பகீரதன் பொருட்டு கங்கையைச் சடையில் தாங்கியதும். புரம் மூன்றையும் எரித்ததும், அயன் தலை ஐந்தினுள் ஒன்றை அறுத்ததும், தருமிக்குப் பொற்கிழி அளித்ததும், அகத்தியரின் பொருட்டு இறைவன் பொதிய மலைக்கு எழுந்தருளியதும், ஆலின் கீழிருந்து நால்வருக்கு ஆகமப் பொருளை அருளியதும், திருமறைக்காட்டில் விளக்கெரியத் தூண்டிய எலியை மறுபிறப்பில் மன்னனாகப் பிறப்பித்ததும், இராவணனைக் கயிலை மலையின் கீழ்ப்பட அடக்கியதும் பிறவும் நாவுக்கரசரால் குறிப்பிடப் பெற்றுள்ளன.
இவற்றுள் இராவணனை அழித்த செய்தி மட்டும் ஒவ்வொரு பதிகத்தின் இறுதியிலும் திருக்கடைக்காப்பாகக் குறிக்கக் பெற்றுள்ளது. தொடக்கத்தில் எதிர்த்து நின்று, பின்னர் அருட்பேறு கருதி இறைவனுக்கு வணக்கம் செய்து வாழ்வு பெற்ற இராவணனைப் போல், தாம் தொடக்கத்தில் புறச் சமயம் புகுந்து பிணங்கிப் பின்னர் சூலை நோயால் ஆட்கொள்ளப்பட்டமையின் நாவுக்கரசர் இராவணன் வரலாற்றுக் குறிப்பை திருக்கடைக் காப்பாகக் கொண்டு பாடினார் என்று கொள்ளலாம்.
திருநாவுக்கரசு நாயனார் தாசமார்க்கத்தில் நின்றவர். இருப்பினும் நாயகன், நாயகி பாவத்தை மிகச் சிறப்பாகக் கையாண்டுள்ளார். இறைவன் ஆன்மா என்பவற்றுக் கிடையிலான தெய்வீக உறவு, தலைவன் தலைவிக்கிடையிலான உலகியல் உறவாகப் பாவனை செய்யப்படுதலையே நாயகன் நாயகி பாவம் என்ற தொடர் உணர்த்துகிறது. நாவுக்கரசரின் பாடல்கள் இரண்டு வகையின. ஒருவகை உணர்ச்சி வேகத்திலே இறைவனைப் பாடிக்கொண்டு செல்லும் போது தமக்கும் இறைவனுக்குமுள்ள நெருக்கத்தை உணர்த்துவதற்காக இறைவனையும் தம்மையும், காதலன், காதலியாக அமைத்துப் பாடுதல். பின்வரும் பாடல் இத் தன்மையில் அமைந்தது.
"முன்னம் அவனுடைய நாமம் கேட்டாள்
மூர்த்தி அவன் இருக்கும் வண்ணம் கேட்டாள் பின்னை அவனுடைய ஆரூர் கேட்டாள்
பெயர்த்தும் அவனுக்கே பிச்சியானாள் அன்னையையும் அத்தனையும் அன்றே நீத்தாள்
அகன்றாள் அகலிடத்தார் ஆசாரத்தைத் தன்னை மறந்தாள் தன்நாமம் கெட்டாள்
தலைப்பட்டாள் நங்கை, தலைவன் தாளே”
இந்துக் கலைக்களஞ்சியம்

Page 71
மற்றைய வகை சிவபெருமான் பிச்சாடன ரூபத்தோடு பலி பெறச் சென்றபோது அங்கிருந்த ரிஷி பத்தினியருள் ஒருவராகத் தம்மைக் கற்பனை செய்து பாடுவது. இறைவன்மீது தமக்குள்ள அன்பின் வேகத்தைப் புலப்படுத்தவும், சங்ககால அகத்திணை மரபைப் பேணி மக்கள் மனதில் இன்பக் கிளர்வை ஏற்படுத்தும் நோக்கிலும் நாவுக்கரசர் நாயகன்- நாயகி பாவச் செய்யுட்களைப் பாடினார் என்று கூறலாம்.
நாவுக்கரசரின் வாழ்வில் ஏற்பட்ட தொடர் இன்னல்கள் அதனால் ஏற்பட்ட மனவிரக்தி, சமணசமயக் கொள்கைகள்பால் கொண்ட ஈர்ப்பு ஆகியனவற்றின் வெளிப்பாடுகளை இவரது பாடல்களில் பரந்த அளவில் காணக்கூடியதாக உள்ளது. மக்களுக்கு யாக்கை நிலையாமை, இளமை நிலையாமை, செல்வ நிலையாமை முதலிய பல நிலையாமைகளையும் பரக்க எடுத்துக் கூறி அறிவைப் பிரகாசிக்கச் செய்துள்ளார்.
"தந்தை தாயொடு தாரம் எனும் தளைப் பந்தம் ஆங்கு அறுத்துப் பயில்வு எய்திய கொந்தவிழ் பொழில் கொண்டீச்சரவனைப் சிந்தை செய்மின் அவனடி சேரவே ”
என்று பாடி தந்தை, தாய், தாரம் என்னும் நிலையற்ற உலக பந்தங்களில் வைக்கும் பற்றை இறைவன் மீது செலுத்தினால் என்றும் அழியா இறையருளைப் பெறலாம் என்று விளக்குகிறார். சமண சமயத்தை விடுத்து நாவுக்கரசர் சைவராக தம் வாழ்நாளின் இறுதி நாட்களைக் கழித்தாலும் சமணக் கொள்கைகள்பால் கொண்ட பற்றை அவரது பாடல்களில் பல இடங்களில் காணக்கூடியதாக உள்ளது. நாவுக்கரசர் அறக் கருத்துக்களை அதிகம் வலியுறுத்தி நிற்பது சமணர்தம் செல்வாக்கே, அறம் ஒன்றையே உள்ளம் நாட வேண்டும். அறம் கனிந்த நெஞ்சுடையவராலேயே ஆசை, சினம், வெறுப்பு முதலிய தீய பண்புகளில் இருந்து விலகி நிற்க இயலும். தீமையினின்றும் விலகி நிற்றலே அறிவின் பயன் என்பதைக் குறிப்பாக உணர்த்தியுள்ளார்.
"அறத்தையே புரிந்த மனதினால் கர்வச்சொற்றக் குரோதம் நீக்கியுன் திறத்தனாய் ஒழித் தேன் திருவாரூர் அம்மானே’
சாத்திரமும், கோத்திரமும், குலமும் பேசிப் பயனில்லை. சங்கநிதி, பதுமநிதி ஆகிய பெருஞ் செல்வங்களுடன் மண்ணுலகு, விண்ணுலகு இரண்டும் ஆளும் பேறு கிடைத்தாலும் அதை மதிக்க மாட்டோம், அவர்கள் மாதேவர்க்கு அன்பர்கள் இல்லாவிட்டால்,
"அங்கமெலாங் குறைந்தழுகு தொழுநோயராய்
ஆவுரித்துத் தின்றுழலும் புலையரேனும்
கங்கைவார் சடைக்கரந்தார்க் கன்பராகில்
அவர் கண்டீர் நாம் வணங்கும் கடவுளாரே' என்றும்,
இந்துக்கலைக்களஞ்சியம்

'நன்று நோற்கிலென் பட்டினி யாகிலென் குன்றமேறி யிருந்தவம் செய்யிலென் சென்று நீரில் குளித்துத் திரியிலென் என்றும் ஈசனென் பார்க்கன்றி யில்லையே”
என்றும் பாடி, இறைவன் மீது கொள்ளும் ஆழ்ந்த பற்று ஒன்றே நம் விமோசனத்துக்கு வழி, இறை அன்பில்லாது செய்யும் சடங்குகள், சம்பிரதாயங்கள் அனைத்தும் பயனற்றவை என்பதைத் தெளிவாக விளக்கியுள்ளார்.
ஆடலும், பாடலும் தமிழ் மக்கள் வாழ்வோடு மிக நெருக்கமானவை. சமணசமய வளர்ச்சியுள்ளபோது கலைகள் அனைத்தும் ஒதுக்கப்படவேண்டும், அவை இச்சையைத் தூண்டிவிடும் தன்மையுடையவை என்று போதிக்கப்பட்ட வேளையில் இறைவனையே ஆடவல்லானாக, சாமகானப் பிரியனாக எடுத்துக் காட்டி இறைவழிபாட்டிற்கு கூத்தும், பாட்டும் இன்றியமையாதவை என்று பாடி வைத்தார்கள் நாயன்மார்கள். மக்கள் மனதிலே இறை அன்பைப் பெருக்கவும், பக்திமார்க்கத்தை மக்களிடையே பரவலாக்கி சைவசமயத்துக்கு ஒர் புத்துணர்ச்சி கொடுக்கவும் விழைந்த நாவுக்கரசர் ஆடலையும், பாடலையும் இறைவழிபாட்டுடன் இணைத்துப் பாடுகிறார்.
'ஆடிப் பாடி அண்ணாமலை கைதொழ ஒடிப் போம் எம துள்ள வினைகளே”
“சலம் பூவொடு தூபம் மறந்தறியேன் தமிழோடிசை பாடல் மறந்தறியேன்”
என்று ஆடியும், பாடியும் எம் பெருமானைப் போற்றிப் பரவலாம் என்று கூறி, அவைதீக மதங்களின் கடும் போக்கிற்கு மாறான ஒர் இலகு வழியை மக்களுக்கு எடுத்துக் காட்டியுள்ளார்.
நாவுக்கரசரின் காலத்தில் சமணசமயம் அரசியல் செல்வாக்குப் பெற்று ஓங்கி நின்றதுடன் வட மொழியும் அரச ஆதரவைப் பெற்று நின்றது. இந் நிலையில் தமிழின் ஊடாக தமிழின் பெருமை பேசி தம்மையும் தமிழையும் இணைத்துக் காட்டி மக்களைத் தன் வசம் இழுக்க முனைகிறார்கள் அப்பரும், சம்பந்தரும்.
"மூலநோய் தீர்க்கும் முதல்வன் கண்டாய்
முத்தமிழும் நான் மறையும் ஆனான் கண்டாய்”
"வடமொழியும் தென்தமிழும் மறைகள் நான்கும் ஆனவன் காண்”
"ஆரியம் தமிழோடிசையானவன்”
"தமிழோடிசை பாடல் மறந்தறியேன்”
41

Page 72
என்று பாடியதுடன் திருமறைக் காட்டில் வேதங்களால் காப்பிடப்பட்டு பூட்டிய நிலையில் இருந்த கோயிற் கதவைத் திறக்கவும், பூட்டவும் செய்தனர் ஞானசம்பந்தரும், திருநாவுக்கரசர் பெருமானும். இவ் அருங் கைங்கரியத்தை தமிழ்ப் பதிகம் பாடியே செய்தார்கள். ஆகவே தென் தமிழ் வடமொழிக்குச் சற்றும் சளைத்ததல்ல என்பதை நிரூபித்து சமணரை வெற்றியீட்ட முனைந்திருக்கிறார் நாவுக்கரசர் என்பது தெளிவாகிறது.
ஏனைய நாயன்மார்களோடு ஒப்பிட்டுப் பார்க்கும் பொழுது அப்பருடைய வாழ்க்கை பற்றிய நோக்கு பெருமளவில் சமணசமயம் சார்ந்ததாக இருந்தாலும், சைவத்தின் பக்தி நெறியும், தமிழும், பிணையும் அழகு அவரது பாடல்களில் தெரிகிறது. (நி.நி.)
திருநாளைப்போவார்
O O (நந்தனார்)
ைெசிவசமயத்திலே சிறப்பாகப் போற்றப்படும் அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவராக விளங்கும் திருநாளைப் போவார்பற்றி அறிவதற்குச் சுந்தரரின் திருத்தொண்டத் தொகை, நம்பியாண்டார் நம்பி இயற்றிய திருத்தொண்டர் திருவந்தாதி குறிப்பாகப் பெரியபுராணம், முதலியன குறிப்பிடற்பாலன. இவற்றுள் முன்னைய இரண்டிலும் மிக மிகச் சுருக்கமான குறிப்பே இவரைப் பற்றி உள்ளது. பிற்காலத்தில் இவரின் வரலாறு சிறப்பாகக் கோபால கிருஷ்ண பாரதியாரால் விரிவாக எடுத்துரைக்கப்பட்டுள்ளது.
சுந்தரர் இரத்தினச் சுருக்கமாக 'செம்மையே திருநாளைப் போவார்க்கும் அடியேன்” எனத் திருத் தொண்டத் தொகையிலும் பிறிதோரிடத்திலே திருப்புன்கூர்த்திருப்பதிகத்திலே "நற்றமிழ் வல்ல ஞானசம்பந்தன் நாவினுக்கரையன் நாளைப்போவானும்” எனவும் திருநாளைப்போவார் பற்றிக் குறிப்பிட்டுள்ளார். முதலிலே “செம்மை” யெனக் குறிப்பிடுவதிலிருந்து செம்மையான - செம்பொருளான சிவபெருமானிடத்து ஆராத அன்பு கொண்டவராக, அப்பெருமானிடத்து ஓங்கி எழுந்த பற்றுள்ள சித்தமுள்ளவராக, ஒழியாத அன்பு கொண்டவராக இவர் விளங்கினார் என்பது தெளிவாகும். மற்றையதிலே திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசருக்கு அடுத்தபடியாக இவரைச் சுந்தரர் குறிப்பிட்டிருப்பதிலிருந்து இவருடைய சிவபக்தியின் மேன்மை புலப்படும். இறைவன் அடியார்கள் - அன்பர்கள் எக்குலத்தவராயினும் அவர்களுக்கிடையிலே வேறுபாடு இல்லை என்பதைத் தெட்டத்தெளிவாக எடுத்துக் கூறியவர்களில் சுந்தரர் நன்கு குறிப்பிடற்பாலர். அவருடைய திருத் தொண்டத்தொகை இதற்குத் தக்க சான்றாகும். அந்தணர் குலத்தைச் சேர்ந்த சுந்தரர் குறிப்பிட்டுள்ள 63 சிவனடியார்களிடையில் சமூக வேறுபாடு காட்டாது, அவர்கள்
42

எவராயினும் சிவனடியார்கள் என்றவகையில் அவர்கள் அனைவருக்கும் தாம் "அடியேன்” எனக் குறிப்பிட்டிருப்பது அக்காலச் சமூகவியல் நோக்கிலே பார்க்கும் போது புரட்சிகரமான கருத்தேயாகும். இவரைத் தொடர்ந்து பிறிதொரு அந்தணரான நம்பியாண்டார் நம்பி திருத்தொண்டர் திருவந்தாதியிலே ஒரு செய்யுளிலே (20)
'நாவார் புகழ்தில்லையம்பலத்தானருள் பெற்று நாளைப் போவானவனாம் புறத்திருத்தொண்டன்றன்புன்புலை போய் மூவாயிரவர் கைகூப்ப முனியாயவன் பதி தான்
மாவார் பொழிறிகழாதவனூரென்பரிம் மண்டலத்தே'
எனக் கூறியிருப்பதும் நன்கு கவனித்தற்பாலது. சோழப் பெருமன்னரின் அமைச்சரும், வேளாளர் குலத்தவருமாகிய சேக்கிழார், திருத்தொண்டர் புராணத்தில் இவரைப்பற்றி திரு நாளைப் போவார் புராணம் எனும் பகுதியிலே 37 செய்யுட்களிலும், \ பின்னர் 19ஆம் நூற்றாண்டிலே
வாழ்ந்த அந்தணரும், இ  ைச ப் பு ல வ ரு மா கி ய கோபாலகிருஷ்ண பாரதியார் இவரின் வரலாற்றை “ நந்தனார் சரித்திரக் கீர்த்தனை” எனும் பெயரிலே இசை நாடகமாக எழுதியுள்ளார். சமகாலத் தமிழகச் சூழ்நிலையிலே கோபாலகிருஷ்ணபாரதியார் தாழ்ந்த பறையர் குலத்தைச் சேர்ந்த சிவனடியார் பற்றிப் புகழ்ந்து பாடியுள்ளமை மேலும் பு ர ட் சி க ர ம | ன செயற்பாடேயாகும். ஏற்கனவே குறிப்பிட்ட முதலிருவரும் - சுந்தரர் (கி.பி. 9ம் நூ.), நம்பியாண்டார் நம்பி (கி.பி 10 -
11ம் நூ.). சிறிதளவு சுட்டிக் காட்டியதை ஒரளவு விரிவாகச் சேக்கிழாரும் (கி.பி. 12 நூ.) மிகவிரிவாக இசை நயத்துடன் ஜனரஞ்சகமான வகையிலே கோபால கிருஷ்ண பாரதியாரும் பாடியுள்ளனர். மேற்குறிப்பிட்டனவற்றை அடிப்படையாகக் கொண்டு திருநாளைப் போவார் பற்றி அறிய முடிகின்றது.
சேக்கிழார், கோபாலகிருஷ்ண பாரதியார் ஆகியோரின் நூல்களிலே அவரவர் காலங்களிலே செவிவழியாக நிலவிவந்த செய்திகளும், பிறவும், அவர்களின் சொந்தக் கருத்துக்களும் இடம் பெற்றுள்ளன. எனினும் வேறுவிரிவான மூலங்கள்
இந்துக் கலைக்களஞ்சியம்

Page 73
இல்லாமையால் இவற்றின் அடிப்படையிலே இச்சிறுகட்டுரை எழுதப்பட்டுள்ளது. மேற்குறிப்பிட்ட சிவனடியார் நந்தன், நந்தனார், திருநாளைப் போவார் என அழைக்கப்படுகிறார்.
திருநாளைப் போவார் தமிழகத்திலே பக்தி இயக்கம் முகிழ்த்த காலப் பகுதியிலே கி.பி. 5 - 6 நூற்றாண்டளவிலே தான் வாழ்ந்திருப்பார் எனக் கருதப்படுகிறது. ஒரு சாரார் இவர் கி.பி. 680 - 840க்கிடையில் வாழ்ந்தவர் எனக் கருதுவர். தமிழகத்திலுள்ள தஞ்சை மாவட்டம் கொள்ளிடம் ஆற்றுக்கு அருகே மேற்காக நாட்டு ஆதனூர் என்னும் சிற்றுாரிலே பறையர் சமூகத்திலே நந்தனார் பிறந்தார். இவ்வூரின் இயற்கை வளச் சிறப்புப் பற்றிச் சேக்கிழாரும், பாரதியாரும் வருணித்துள்ளனர். இங்குள்ள பண்ணைகளிலே வேலையாட்களாகவும், வேறு தம் குலத் தொழில்கள் செய்பவர்களாகவும் பறையர்கள் இருந்தனர். இவர்கள் தீண்டத்தகாதவர்களாகக் கருதப்பட்டனர். மது அருந்துதல், மீன், மாமிசம் முதலியனவற்றை உண்ணுதல் இவர்களின் வழக்கமாகும். அதே வேளையில் தமது பாரம்பரிய இசை, ஆடல்களில் ஈடுபாடும் இவர்களுக்கு இருந்தது. உயர்சாதியினர் தெய்வமெனக் கருதப்பட்ட சிவன் போன்றோரை வணங்காது கருப்பன், முனியன், மூக்கன், காட்டேறி முதலிய சிறு தெய்வங்களையே இவர்கள் பெருமளவு வணங்கினர். இத்தகைய புலைப்பாடியிலே தான் இவர் பிறந்தவராகையால் தனது குல ஆசாரங்களைத் தொடக்கத்திலே பின்பற்றியவர் பின்னர் அவர் பிறந்த ஊரான ஆதனூரிலும் அயலிலும் உள்ள சிவாலயங்களுக்குச் சென்று வழிபாடு செய்து வந்தார். தனது சமூகத்தவரிலும் பார்க்க வித்தியாசமான சமயப் போக்கு உடையவராக இருந்தார்.
நந்தனார் அவ்வூரிலுள்ள வேதியரிடம் கொத்தடிமைத் தொழில் மேற்கொண்டு நேர்மையாகவும், ஒழுங்காகவும், பணிசெய்து வந்தார். கோயில்களுக்கு சென்று வழிபடும் முறையில் இவர் ஏனைய பறையரிலிருந்து வேறுபட்டார். இதனால் அவர்களின் ஏளனங்களுக்கும், ஏச்சுக்களுக்கும் இலக்காகினார். எனினும் தமக்கென ஒரு சீரிய வழியை வகுத்துச் செயற்படத் துணிந்தார். தாம் செய்யவேண்டிய அன்றாட வேலைகளைச் செய்து முடித்தபின் இறைவனை வழிபட மறந்திலர். கோயில் முரசுகள், யாழ்க்கருவிகள், வீணை முதலியனவற்றுக்கான போர்வைத் தோல், வார், நரம்பு முதலியன வற்றையும், பூசைக்குக் கோரோசனை முதலியனவற்றையும் அளித்து வந்தார். திருக்கோயில்களுக்குள்ளே தீண்டத்தகாதோர் செல்லாது தடுக்கப்பட்டிருந்தபடியால் கோயில் முன் நின்றே இறைவனை வணங்கிப் பக்திப் பேரன்பு மேலீட்டால் ஆடிப்பாடி உருகி இறைவனை வழிபட்டு வந்தார்; தமது சமூகத்தினரையும் தமது வழியைப் பின்பற்றுமாறு புத்திமதி கூறிவந்தார். தன் குலத்தொழிலுக்கேற்றவாறே மேற்குறிப்பிட்ட சிவப்பணிகள் செய்து வந்தார்.
ஆதனூருக்குச் சற்றுத் தொலைவிலிருந்த திருப்புன் கூருக்குச் சென்று அங்கு கோயில் கொண்டெழுந்தருளியி
இந்துக் கலைக்களஞ்சியம்

ருக்கும் சிவலோக நாதனை வழிபட மிகவும் விரும்பினார். இதற்குத் தமது சமூகத்தவரை நோக்கி 'சிவலோகநா தனைக்கண்டு சேவித்திடுவோம் வாரீர்” என அழைத்தார். அவர்களிற் பலர் இவரின் அழைப்பை ஏற்றிலர். எனினும் கோபாலகிருஷ்ண பாரதியாரின் கூற்றுப்படி பதினொரு பேர் இவருடன் சேர்ந்து திருப்புன்கூருக்கு வந்தனர். ஆனால் இவர்கள் வெளியே நின்று உள்ளேயுள்ள மூலவரை வழிபடக் கோயில் வாசலில் உள்ள பெரிய நந்தி தடுத்தது. எனவே இறைவனின் தரிசனம் காணாது பெரிதும் மனம் வருந்திய இவர்,
“வழிமறைத்திருக்குதே மலைபோலே ஒரு மாடுபடுத்திருக்குதே'
என மனம் கசிந்துருகிப்பாடினார். தம்முடைய அன்பரின் உருக்கமான வேண்டுகோளைச் செவிமடுத்த சிவபிரான்
"சற்றே விலகிரும்பிள்ளாய் சந்நிதானம் மறைக்குதாம் நற்றவம் புரியுநம்மிட திருநாளைப்போவார் வந்திருக்கிறார்”
எனக்கூற நந்தியும் சற்று விலகியிருந்தார். தனது வழிபாட்டிற்குத் தடைநீங்கியதைக் கண்ட நந்தனார் மிக மகிழ்ச்சியுற்றார். இலிங்கத்திருவடிவத்திலுள்ள சிவலோகநாதரை முழுமையாகக்கண்டு முழுமனதுடன் வழிபட்டார். மனநிறை வுற்றார். இக்கோயிலின் பின் புறத்திலுள்ள குளம் தூர்ந்து கிடப்பதைக் கண்ட நந்தனார் அதைப் புதுப்பிக்க எண்ணினார். தனியாளாகக் குளத்தை ஆழப்படுத்தத் தொடங்கினார். இதனைக் கண்ணுற்ற சிவபிரான் தன் மகன் விநாயகரை இவருக்குத் துணைபோகச் செய்தார். விநாயகப் பெருமானின் உதவியுடன் குளத்தை ஆழப்படுத்தும் பணி நன்கு முடிவுற்றது. புன்கு எனும் புங்கை மரம் அப்பதியிலே வளர்ந்திருந்தமையால் “திருப்புன்கூர்” என அவ்வூர் அழைக்கப்பட்டது. புங்கைமரம் அத்திருக் கோயிலின் தலவிருட்சம். திருப்புன்கூரிலே சிவலோக நாதனைக் கண்டு தரிசித்த பின் நந்தனார் தம் சிற்றுாருக்குத்திரும்பினார். தாம் பெற்ற இறையநுபவத்தைத் தம்மவர்க்கு எடுத்துக் கூறினார். அவர்கள் அவரைக் கேட்கும் மனநிலையில் இருந்திலர். இதன் பின்னர் நந்தனார் தில்லைக்குச் சென்று நடராஜப் பெருமானைத் தரிசனம் பண்ண விரும்பினார். இப்புனிதத் திருத்தலத்திற்கு மார்கழித் திங்களிலே செல்ல விரும்பினார்."சிதம்பரம் போவேன் நான் - நாளைச்சிதம்பரம் போவேன் நான்’ என ஒவ்வொரு நாளும் கூறிவந்தார் “நாளை” “நாளை” என்று இவ்வாறு பல நாட்கள் கடந்தன. தில்லைப்பிரயாணம் தாமதமாகிவிட்டது. இந்தப்போக்கை எள்ளி நகையாடவே “திருநாளைப்போவார்’ என நந்தனார் அழைக்கப்பட்டார். எனவே, இதற்கு முடிவுகட்டும் முகமாகத் தன்னுடைய ஆண்டையராகிய அந்தணரிடம் சென்று தாம் சிதம்பரம் செல்லுவதற்கு இசைவுதருமாறு வேண்டினார். ஆனால் தமது பண்ணையாளரின் வேண்டுகோளை வேதியர் புரிந்திலர், உயர் சாதியினர் வழிபடும் தில்லைத்தலத்திற்குத் தீண்டப்படாத வேலையாள் போகவிருப்பது குறித்துத் திகைத்தார். எனவே நந்தனார் அவர் சமூகத்தினர் வழிபடும் கருப்பன், முனியன் முதலிய தெய்வங்களையே வழிபடவேண்டுமெனவும்
43

Page 74
உயர்சாதியினரின் தெய்வமான நடராஜப்பெருமானை வழிபடக் கூடாது எனவும் கண்டிப்பாகக் கூறினார். இவ்வாறு செய்யாவிட்டால் நந்தனாரின் வேதனத்தைக் குறைப்பதாகவும் அச்சுறுத்தினார். நந்தனார் இதனால் மிக மனவேதனை யடைந்தார். இவர் ஆண்டையிடம் சென்று தில்லை செல்ல அனுமதி கோரியதும் ஆண்டை அதை மறுத்துத் திருப்பியனுப்பிய செய்தியும் நந்தனாரின் மனப்போக்குப் பற்றியும் அறிந்த சேரி மக்கள் வருத்தமுற்று இவருக்கு ஆலோசனை கூறுமுகமாக ஒரு முதுகிழவனை அனுப்பினர். அக்கிழவனின் அறிவுரையைச் செவிமடுக்காத நந்தனார் சிவனை நினைத்து அவருக்கும் நீர் தெளித்து பஞ்சாக்ஷரத்தை உபதேசித்தார். இதன் பின் கிழவனும் ஆனந்தம் கொண்டு மனம்மாறினார். ஏற்கனவே நந்தனோடு சேர்ந்த பதினொரு பேருடன் கிழவனுமாகப் பன்னிருவர் நந்தன் வழியில் நின்றனர். இதனைக்கண்ணுற்ற புலையர்கள் துயரமடைந்தனர்: நந்தனுக்குப் பைத்தியம் பிடித்துவிட்ட தென்றனர். எனினும் நந்தனார் தனது நோக்கத்தைக் கைவிடாது புலையர்களுக்குச் சிவநாமத்தை உபதேசித்தார். அவர்கள் தாங்கள் நாடோறும் மூன்று தடவை சிவநாமத்தைக் கூறுவதாகவும், மற்றவேளைகளில் பண்ணை வேலைகளைச் செய்வதாகவும் நந்தனாருக்குக் கூறினர். அந்தச் சேரியிலே புலையர்கள் பக்தி செய்ததால் சேரி சிவலோகம் போல விளங்கியது. எனினும் பறையரில் ஒரு சாரார் நந்தனாரின் செயற்பாடுகளை ஆண்டைக்குக் கூறி அவரைத் தண்டிக்குமாறு தூண்டினர். ஆனால் நந்தனாரோ சிதம்பரம் செல்லும் நோக்கத்தைக் கைவிடாது மேலும் உத்வேகத்துடன் இருந்தார். ஆனால் வேதியரோ சிதம்பரம் போக வேண்டாமென்று கண்டிப்பாகக் கூறிவந்தார். ஆனால் நந்தனாரோ,
"பித்தம் தெளிய மருந் தொன்றிருக்குது பேரின்பமன்றுள்ளே”
"சிதம்பரம் போகாமலிருப்பேனோ கெடுப்பேனோ சென்மத்தை வீணாக்கி’
எனச் சிதம்பரதரிசனம் பற்றிய சிந்தனையிலேயே லயித்துக் கொண்டிருந்தார்: அச்சிந்தனையால் ஆனந்தக் கூத்தும் ஆடினார்.
நந்தனார் தனது கொள்கையில் உறுதியாக நின்று மீண்டும் வேதியரைக் கண்டு அவரின் இசைவுபெறத் துணிவுடன் முயற்சித்தார். ஆனால் அவர் முன்னர் போல மறுத்தாராயினும், நந்தனின் பிடிவாதத்தைக் கண்டு, தமது நாற்பது வேலி நிலத்தில் (250 ஏக்கர்) ஒரே நாளில் உழுது நடவுவேலையைச் செய்து முடித்து விளைச்சலைக் கொண்டுவந்து சேர்த்த பின் விரும்பினால் சிதம்பரத்திற்குப் போகலாம் என நிபந்தனை விதித்தார். இந்நிபந்தனையை எப்படி நிறைவேற்றலாம்? நந்தனார் வேதியரை வணங்கிவிட்டு “சோலையிலிருந்து பண்ணுவார் தன்னுடைய சரீரத்தைத் தில்லை வெளியிலே கலந்து கொள்வேனென்று வீர வைராக்கியத்துடனே சேரியில்
44

வராமல் தன்னுடைய துன்பங்களை எல்லாம் அம்பலவாணருக்கே ஒப்புவித்துச் சலுகை கொண்டாடுவார் ஆயினார். வேதியரின் வார்த்தைகளைக் கேட்டு மனம் நொந்து இறைவனைப் பலவாறு வேண்டினார். “செய்யும் உபாயமறியே னறியேன் அரகரசிவனே தில்லைச்சிவனே' எனப்பலவாறு இரந்து வேண்ட, சிவபிரான் கனவிலே தோன்றி 'நந்தனாரே! உன்னிட கழனிகளை நமது பூதகணங்களாலே நடச் சொன்னோம். வேதியருக்குச் சொன்னால் உத்தாரங் கொடுப்பார்” எனக் கூறி மறைந்தார். எனவே நந்தனார் வேதியரிடம் விடைகேட்கச் சென்ற போது அவர் நம்பிலர். எனவே நந்தனார் “வந்து பாருங்கள்” என்று கூறினார். வேதியர் சென்று பார்த்துப் பெரிதும் திகைத்துப்போனார். “சிவபக்தரை அபசாரம் பண்ணினேனென்று மிகவும் குழைந்து சொல்வார். நந்தனாரேயுன்றன் பெருமையின்று கண்டேன் நானென் வினையை விண்டேன்’ எனப் பலவாறு கூறித் தான் செய்த பிழைக்கு மனம் நொந்தார். எனினும் நந்தனார் அந்நிலையிலும் அவருக்கு வணக்கம் செலுத்தினார். ஆனால் வேதியரோ அவரைத் தனது குருவாக உபதேசம் செய்யுமாறும் கேட்டார். வேதியர் ஞானநிலையடைந்து நந்தனாரிடம் “சிதம்பரம் போய் வாருமய்யா, நான் செய்த தெல்லா மபசாரம் ஐயா” எனக் கூறிச் சிதம்பரம் போக அனுமதி வழங்கினார். நந்தனாரும் அவரை வணங்கிவிட்டு மிக மகிழ்ச்சியுடன் தில்லைத்தரிசனம் காணப்புறப்பட்டார். கொள்ளிடம் ஆற்றைக் கடந்தவுடன் சிதம்பரத்திருக்கோயிலின் கோபுரங்கள் கரைகளுக்குத் தென்பட்டன. “கோபுரதரிசனமே எந்தன்பாவ விமோசனமே” எனக் கூறிக் கொண்டு செல்லுகையில் கண்டாமணி ஒசையைக் கேட்டு வணங்கினார். தில்லையைக் கண்டு “இது தானோ தில்லைத் தலம், இத்தனை நாளுமறியேன்” என ஆராத அன்புடன் கூறி 'ஆடியபாதத்தை தாரும் உம்மைத் தேடிவந்தேன் இதோ பாரும் பாரும்” எனச் சிவகாமி மணாளரான தில்லை நடராஜரைத் துதித்தார். அங்கிருந்தவாறே வேதியர் வேதமந்திரங்களுடன் ஆற்றிய கிரியைகளைக் கண்ணுற்றார்; வேதபாராயணத்தைக் கேட்டார். ஆனால் கோவிலுக்குள்ளே செல்ல முடியாது மனம் நொந்தார். தாம் தீண்டாத சமூகத்தவர் என்ற படியால்தான் இந்நிலை ஏற்பட்டதற்கு மனம் மிக வருந்தினார். ஆனால் இரவு பகல் என்று பாராது பல நாட்களாக இறைவனுடைய திருநாமங்களைப்பாடி ஆடி திருக்கோவிலைச் சுற்றி வலம் வந்தார். “தாண்டவ தரிசனம் தாரும் தாமதம் LTយោT வேண்டாம் இது ஆடியபாதா இருவர்கள் தேடிய பாதா” எனப் பலவாறு துதித்தார். தான் உள்ளே சென்று
GG
o o 55 சமயம்.தாண்டவதரிசனம் தாரும்",
தாண்டவதரிசனம் பார்க்க வரலாமா என உள்ளத்திலே 'வருகலாமோ ஐயா உன்தன் அருகில் நின்று கொண்டாடவும் பாடவும் நான் வருகலாமா ஐயா” என உள்ளம் உருகி ஆடற்கரசனை வேண்டினார். இறைவர் இவரின் கனவிலே தோன்றி “நீ தீக்குண்டத்தில் (அக்கினி குண்டத்திலே) மூழ்கி யெழுந்து என்னுடைய தரிசனம் காண வருக” எனக் கூறி மறைந்தார். அவ்வாறே இறைவன் சிதம்பரத்திலுள்ள தில்லை மூவாயிரவர் கனவிலும் தோன்றித் தமது பேரன்பிற்குரிய நந்தன்
இந்துக் கலைக்களஞ்சியம்

Page 75
உள்ளே வரமுடியாதிருக்கின்றான் எனவும், அவனை அக்கினிப் பிரவேசம் செய்து உள்ளே அழைத்து வருமாறும் கூறினார். அவர்கள் அடுத்தநாள் நந்தனாரைத் தேடிக் கண்டு பணிந்து ‘ஐயரே அம்பலவர் அருளால் இப்பொழுது அணைந்தோம். அவர் பணித்தவாறு நீர்மூழ்கி எழத் தீக்குண்டத்தினை அமைத் துள்ளோம்” எனக்கூறினர்.
அதனைக் கேட்ட நந்தனார், “கண்டேன் கலி தீர்ந்தேன் பவ கடற்கரையேறி வந்தேன்’ எனக்குமிரங்கிற்றோ நான்மெத்த ஏழைச்சாதியல்லவோ தனக்குள் தானாயிருந்த இப்பிரபஞ்சமுந் தன்னுள்ளடக்கிய பொன்னம்பலவன் கிருபை” என மனமுருகிப் பரமானந்த மடைந்தார். அவர்கள் அமைத்த அக்கினிக் குண்டத்திலே இறைவன் திருவடிகளை மனதிற் பதித்துக் கொண்டு அவரின் திருநாமத்தைக் கூறியவாறு மூழ்கினார். தொழுது கொண்டு எழுந்தார். அவர் சடைமுடி முப்புரி நூல் விளங்கப் புண்ணிய அந்தண முனிவடிவில் வெளிவந்து விளங்கினார். அங்கு குழுமியிருந்த தில்லைத் தீட்சிதர்கள் மூவாயிரவரும் கரங்கூப்பி நந்தனாரை வணங்கி வழிபட்டனர். ஒளி வெள்ளத்திலே மூழ்கியெழுந்த நந்தனார் தீட்சிதர்கள் தொடரத் திருச்சிற்றம் பலத்துத் திருவடித்தலைப்பட்டுத் திருவருட் கலப்பில் இணைந்து மறைந்தார்.
நந்தன் இறையருள் பெற்றவராகையால் நந்தனார் எனச் சிறப்பாகப் அழைக்கப்பட்டுள்ளார். இவருடைய பிறப்பு இறப்பு முதலியன பற்றி முற்குறிப்பிட்ட இலக்கிய நூல்கள் மூலம் அறிய ப்படினும் இவருடைய மறைவு பற்றிய செய்தி தெளிவாக இல்லை. கோவிலுக்குள்ளே சென்று இறைவனை வழிபடுதற்கு நந்தனாரின் சமூக நிலைமை பெரிய தடையாக இருந்தது. தடைகளும்,இடையூறுகளும் இருந்த போதும் திருப்புன்கூருக்கும், தில்லைக்கும் சென்று இறைவனை வழிபடவேண்டுமென்ற இலட்சியத்தை நிறைவேற்றிச் சமகாலத்திலே விதிக்கப்பட்டிருந்த கொடிய சமூகத் தடையை எதிர்த்துச் சாத்வீக முறையில் ஆன்மீகப்புரட்சி செய்த அருளாளர் என்ற வகையிலும் அவர் நன்கு குறிப்பிடற்பாலர். இவர் அக்கினி குண்டத்தில் பிரவேசித்து எழுந்தமை ஒருவகையான சுத்தி கரிப்புக்கிரியையைக் குறிக்கும் என ஒருசாரார் கருதுவர். எவ்வாறாயினும் சைவசமய வரலாற்றிலே தீண்டத்தகாதோர் சமூகங்களிருந்து தோன்றியோரிலே நந்தனார் மிகப் பிரபல்யமானவர். இவரை விடப் பெற்றான்சாம்பான், தில்லைவெட்டி முதலியோரையும் குறிப்பிடலாம். வைணவ சமயவரலாற்றிலே திருப்பாணாழ்வாரும் நந்தனார் போலவே கஷ்டங்களின் பின் திருமாலின் திருவருள் பெற்றவர்.
பக்த நந்தனாரின் சரித்திரம் சைவமக்களிடையே மிகவும் போற்றப்பட்டு வந்துள்ளது. இதற்கு ஏற்கனவே குறிப்பிட்ட கோபால கிருஷ்ணபாரதியாரின் நூல் சிறந்த சான்றாகும். இவர் இதற்கு முன் கதாகாலட்ஷேபமாக இக்கதையைக் கூறி வெற்றிகண்டவர். தென்னிந்தியாவிலுள்ள முதன்மையான
இந்துக்கலைக்களஞ்சியம்

சைவத்திருக் கோவில்களனைத்திலும் இலங்கையிலும் சில சிவாலயங்களிலும் 63 நாயன்களுக்கான சிலைகள் உள்ளன. அவர்களுக்கு வழிபாடுகள் நடைபெறுகின்றன. சென்ற நூற்றாண்டிலே பக்த நந்தனார் என்ற தமிழ்த் திரைப்படமும் பிரபல்யமாக வெளிவந்துள்ளது. தமிழகத்திலும், இலங்கையிலும் பக்த நந்தனார் வரலாறு கோபாலகிருஷ்ண பாரதியாரையொட்டி இசை நாடகமாக இன்றும் பிரபல்யமாக விளங்குகின்றது. இராமலிங்க சுவாமிகள், காந்தியடிகள், ராஜாஜி, கலாநிதி ச. ராதா கிருஷ்ணன், கலாநிதி அம்பேத்கார் போன்ற அருளாளரும், அறிஞர்களும் நந்தனாரின் இறைபக்தி, சமூகப்பணி, ஆர்வம், ஒழுக்கம், மனஉறுதி முதலியனவற்றைப் பாராட்டியுள்ளனர். இறைவன் திருமுன்னிலையில் அவனுடைய அடியார்கள் எவராயினும் சமநிலையிலுள்ளனர் எனும் சிறந்த கருத்தினை எடுத்துக் காட்டும் வகையில் நந்தனாரின் ஆன்மீக வரலாறு விளங்குகின்றது.
மேலும் சுந்தரமூர்த்தி சுவாமிகளுக்கு முன்பும் நந்தனாருக்குப்பின்பும் வாழ்ந்தவராகிய திருநாவுக்கரசு நாயனார்
தமது,
"சங்கநிதி பதுமநிதி இரண்டும் தந்து
தரணி யொடு வாணாளத் தருவரேனும் மங்குவார் அவர் செல்வம் மதிப்போ மல்லோம்
மாதேவர்க் கே காந்தரல்லராகில் அங்கமெலாம் குறைந்தழுகு தொழுநோயராய்
ஆவுரித்துத் தின்றுழலும் புலையரேனும் கங்கைவார் சடைக்கரந்தார்க் கன்பராகில்
o g o த9 அவாகனடீா நாம வணங்கும கடவுளாரே
எனும் தேவாரத்திலே கூறியுள்ள கருத்திற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகவும் நந்தனார் மிளிர்கின்றார்.
மேலும் திருப்புன்கூர் சிவாலயத்திலே நரம்புவாத்தியமான யாழினை மீட்டிக் கொண்டு இறைவனை வழிபடும் திருக்கோலத்தில் நந்தனாரின் சிலை உள்ளது. இவர் புதுப்பித்த திருக்குளம் கோவிலின் பின்புறத்தில் இன்றும் உள்ளது. சுவாமி சகஜானந்தர் நந்தனாரின் நினைவாகவும் அவர் கருத்துக்களைப் பரப்பும் வகையிலும் 1910லே தில்லையிலே திருமடத்தையும் நந்தனார் பள்ளியையும் நிறுவினார். பின்னர் நந்தனார் திருக்கோயிலையும் நிறுவினார். அக் கோயிலுக்கு காந்தியடிகள் அடிக்கல் நாட்டினார். நந்தனார் திருமடத்திற்கு அருகே நந்தனார் பெயரில் பல்வேறு பள்ளிகளையும் மாணவரில்லங்களையும் தமிழக அரசு ஏற்படுத்தியுள்ளது. (வி. சி)
திருநீர்மலை
இது தொண்டை நாட்டு வைணவத் திருப்பதிகங்களுள் ஒன்று. செங்கற்பட்டு மாவட்டம் பல்லாவரத்திலிருந்து 5 கி.மீ. தொலைவில் இது உள்ளது. மலையும் ஆலயமும்
45

Page 76
மிகப்புராதனமானவை. திருவேங்கடம், திருவரங்கம் போன்று மிகப்பழமையான தலம் என்று பூதத்தாழ்வார் தமது பாடல் மூலம் விளக்குகின்றார்.
பயின்ற தரங்கம் திருக்கோட்டி பன்னாள் பயின்றதுவும் வேங்கடமே பன்னாள் - பயின்ற தனி திகழப் சோலையணி நீர்மலையே மணி திகழும் வண் தடக்கை மால்.
திருமங்கையாழ்வாரும் தமது பாடலில் இத்தலத்தைப் பாடியுள்ளார். திருமங்கையாழ்வார் பாடல் நோக்கில் நீலவண்ணன் சேவை சாதிக்கும் மலையாதலால் நீர் மலை என்றும் வழங்கப்பெற்றதாக கருதலாம். நீர் வண்ணன் நீர்மலைக்கே (தாண்டகம் - 1)
இத்தலத்தின் இறைவன் நீலமுகில் வண்ணன், இறைவி அணிமாமலர் மங்கைத்தாயார். இவர்கள் மலையடிவாரக் கோயிலில் குடி கொண்டுள்ளனர். 200 அடி உயரமுள்ள குன்றின் மேல் பூரீரங்கநாதர் தெற்கு நோக்கி சயனக் கோலத்தில் எழுந்தருளியிருக்கிறார். இந்த சயனத்தை மாணிக்க சயனமென்பர். பக்கத்தில் கிழக்கு நோக்கிய வண்ணம் திருவரங்க நாயகிக் கோயில் அமைந்துள்ளது. இத்தல இறைவன் நான்கு திருக் கோலங்களில் காட்சியளிக்கிறார். திருநறையூரிலே நின்ற திருக்கோலமாகவும், திருவாவியிலே சிங்க உருவிலே வீற்றிருந்த திருக்கோலமாகவும், திருக் குடந்தையிலே பள்ளி கொண்ட திருக்கோலமாகவும், திருக் கோவலூரிலே உலகளக்கத் திருவடி நீட்டிநடக்கும் திருக் கோலமாகவும் சேவை சாதிக்கும் எம் பெருமான் இங்கு அந்த நான்கு திருக் கோலங்களிலும் காட்சி அளிக்கின்றார் என்று திருமங்கையாழ்வார் பாடிப்பரவுகின்றார்
நின்றான் இருந்தான் கிடந்தான் நடந்தாற்கிடம் மாமலையாவது நீர்மலையே
(பெரிய திருமொழி 2 - 4 - 1)
மலைமேல் கிடந்த கோலத்திலும், சுற்றுப் பிராகாரத்தில் நரசிங்க மூர்த்தியாய் இருந்த திருக்கோலத்திலும், நடந்தானாகிய திருக்கோலத்தில் உலகளந்த மூர்த்தியும் மலையடியில் நீலவண்ணப் பெருமான் நின்ற கோலத்திலும் காட்சியளிக் கின்றனர்.
இத்தலத்தின் தீர்த்தம் மணிகர்ணிகா தீர்த்தம். விமானம் தோயகிரி விமானமாகும். இத்திருத்தலத்தை திருமங்கை யாழ்வாரும் பூதத்தாழ்வாரும் பாடியுள்ளனர். இத்திருத்தலம் - “சேடார் பொழில் சூழ் திருநீர்மலை (பெரிய திருமொழி - 6.8.21) புலங்கள் பொருநீர் புட்குழி பாடும் போது மோ நீர்மலைக் கென்னும்” (பெரிய திருமொழி 6 -7-81) என்னும் ஆழ்வார் பாசுரங்களால் நீர்வளம், நிலவளம் மிக்கது என்பது அறியப் பெறுகின்றது. (தே.ஹ.)
46

திருநீலகண்ட நாயனார்
சிதம்பரத்திலே, குயவர் குலத்திலே பொய் சொல்லல் சிறிதுமின்றி தர்மநெறியிலே வாழ்கின்றவரும் இல்லறத்திலே நிற்பவரும் சிவ பக்தி, அடியார் பக்தியிலே சிறந்தவருமாக திரு நீல கண்ட நாயனார் விளங்கினார். இவர் தம்முடைய குலத்துக்கு ஏற்ப மட்கலங்களை வனைந்து விற்றும் சீவனம் செய்தும் தி ரு வே T டு க  ைள சிவ ன டி யார் க ஞ க் குத் தானமாகக் கொடுத்தும் வந்தார்.
இவர் நீலகண்டத்தின்மீது கொண்ட பேரன்பினால் இப் பெயரை இடையறாது ஒதும் இயல்பினர். எனவே இவர் நீலகண்டர் என்னும் பெயர் பெற்றார். பிறவிப் பிணி தீர்த்து உய்வதற்கு தடையாக உள்ளது காமம். நினைப்பினும், கானினும், கேட்பினும், தள்ளினும் விஷ மானது தலைக்கேறினாற் போல் அறிவைக் கெடுக்க வல்லது. சிவபக்தி அடியார் களிற் சிறந்த ៣] Tü இல்லறத்திலே வாழும் இயல் புடைய திருநீலகண்ட நாய
னார் தம்முடைய மனைவி இருப்பவும், தம்மனசிலே தலைப் பட்ட காம மிகுதியினாலே நூல் களிலே விலக்கப்பட்டதாகிய பரத்தைப்
புணர்ச்சியை மேற் கொண்டார்.
ஒருநாள் பரத்தையை அணைந்து பின் தம்மனைவியாரை அணுகிய நிலையில் அவ்வம்மையார் எம்மைத் தீண்டுவீராகில் திரு நீலகண்டம் என்று ஆணையிட்டார். அதைக் கேட்ட நாயனார் பரமசிவனுடைய நீலகண்டத்திலே தாம்வைத்திருந்த பக்தி குன்றா வண்ணம் அம்மனைவியாரைத் தொடாமல் நீங்கி அவர் "எம்மை’ என்று பன்மையாகச் சொன்னதால் இவரை மாத்திரமின்றி மற்றப் பெண்களையும் நான் மனதினால் நினைத்தலும் செய்யேன் என்று உறுதி கொண்டார். இவருடைய மனதிலே காமந்தலைப்பட்ட போதும் சிவபக்தி அதனினும் மிகத் தலைப்பட்டிருந்தது என்பதும், அதனால் சிவபக்தியானது பின்
இந்துக்கலைக்களஞ்சியம்

Page 77
ஒரு போதும் மனதிலே காமம் எழவெட்டாமல் தடுத்தது என்பதும் இதனால் துணியப்படும்.
இவர்கள் இளம்பிராயத்தினராக ஒரே இடத்தில் இருந்த போதும் உடனுறைவின்றி அதனை அயலவர்கள் அறியா வண்ணம் வாழ்ந்தனர். ஆண்டுகள் பலவும் செல்ல முதுமையுற்றனர். அவர்களது தூய ஒழுக்க நிலையை உலகத்தவர்க்கு உணர்த்தத் திருவுள்ளம் கொண்ட பரமசிவன் சிவயோகியின் வடிவங்கொண்டு இவ் அடியாரை அணுகி திருவோடு ஒன்றினைக் கொடுத்து இத் திரு வோட்டினைப் பாதுகாத்துப் பின் தருக என்றார்.
நெடுநாட்கள் கழிந்த பின் ஒருநாள் பரமசிவன், தாம் வைக்கக் கொடுத்த திரு வோட்டை மறைத்து, அவ்வடியாருடைய உண்மை நிலையை பிறர்க்கு உணர்த்தும் பொருட்டு முன்பு போல சிவ யோகி வடிவம் கொண்டு, முன்பு தந்த ஒட்டினைத் தருமாறு வேண்டி நின்றார். பல இடங்களிலும் தேடியும் அதனைக்காணாது திகைப்புற்ற நாயனார் அதனிலும் சிறப்பான ஒன்றைத் தருவதாகக் கூறினார். அவ்வோடு காணாமல் ஒழிந்ததைக் கூறக் கேட்ட யோகி நம்பாதவராய், அது உண்மையாயின் புத்திரனைக் கையிலே பிடித்துக் கொண்டு குளத்திலே மூழ்கி சத்தியம் செய்து தருமாறு கேட்டார். அதற்கு நாயனார் மகப் பேறு இல்லை என வருந்திக் கூற மனைவியின் கரம் பிடித்தாகிலும் சத்தியம் செய்தல் வேண்டும் என்றார். அடியவர் “நானும் எனது மனைவியும் எங்களிடத்துண்டாயிருக்கும் ஒரு சபதத்தினாலே ஒருங்கு முழுகுதல் கூடாது; நான்மாத்திரம் குளத்திலே மூழ்கி சத்தியம் பண்ணித் தருகின்றேன்” என்றார். சிவயோகி தில்லைவாழ் அந்தணரிடம் சொல்வதாக கூறிச் சென்றார். அவர் கூறியதனைக் கேட்ட அந்தணர்கள் சிவயோகிகள் தந்த திருவோட்டினை காணாமல் போக்கியது உண்மையாயின் குளத்திலே மூழ்கி சத்தியம் பண்ணிக் கொடுத்தலே சரியானது என்றனர். அது கேட்ட அடியார் “பொருந்திய வகையில் அதனைச் செய்வேன்” என்று மூங்கிலின் ஒரு முனையைத் தாமும் மறு முனையை மனைவியாரும் பற்றிக் கொண்டு குளத்தில் மூழ்கும் போது அதைக்கண்ட சிவயோகியார் “உம்மனைவியைக் கை பிடித்துக் கொண்டு மூழ்கு” என்று சொல்ல, அவ்வாறு செய்ய முடியாமைக்கான காரணத்தை உலகத்தார் அறியும்படி சொல்லி மூழ்கினார். மூழ்கிக் கரையேறிய நாயனாரும் மனைவியும் மூப்பு பருவம் நீங்கி இளமைப்பருவம் எய்தினர். சிவபெருமான் பார்வதிதேவியாரோடு இடபாரூடராய்க் காட்சியளித்தார். ஜம்புலன்களையும் வென்ற சிறப்புடைய இவர்களை என்றும் இளமையாக இருக்க அருள் புரிந்தார். அவர்கள் இருவரும் திருத்தொண்டில் ஈடுபட்டு பேரின்ப மடைந்தனர். இவரின் சிவபக்தி வியக்கத்தக்கது. பட்டணத்துப் பிள்ளையாரும் “மாது சொன்ன சூளாலிளமை துறக்க வல்லேனல்லன்” என்று வியந்து கூறியுள்ளார். (தே.ஹ.)
இந்துக்கலைக்களஞ்சியம்

திருநீலகண்ட யாழ்ப்பாண JIBITULIGOTITñit
இவர் நடுநாட்டிலே திருவெருக்கத்தம்புலியூரிலே யாழ்மீட்டும் பாணர் மரபிலே வந்தவர். இவரும் இவருடைய மனைவியார் மதங்க சூ ள |ா ம ணி ய |ா ரு ம் சோழநாட்டுத் தலங்களைப் LITTLg. பரவிப் பாண்டி நாடடைந்து ஆலவாய் அண்ணலைப் போற்றினர். இவரது இசை கேட்டு மகிழ்ந்த இறைவன் தம் தொண்டர் கனவில் தோன்றிப் பாணரைத் திரு முன்பு அழைத்து வரும்படி பணித்தார். பாணர்க்கும் இதனை உணர்த்தினார். இறைவன் பணித்த வண்ணம் பாணர் கோயிலை அடைந்து இறைவனை வணங்கிப் பாடிப் பணிந்தார். இவர்க்குப் பலகை இடும்படி அசரீரிகூற தொண்டர்கள் பொற்பலகை இட்டனர். அதன் பின் பல தலங்களை வழிபட்ட பாணர் ஆரூரை அடைந்தார். இன்னிசைக்கு யாழ்மீட்டி இறைவனைப் போற்றினார். இசைக்கு உவந்த இறைவன் இவர்க்கு வ ட தி  ைச யி ல்
வ T யி லெ ரா ன்  ைற
வகுத்தருளினான். பின்னர், திருஞான சம்பந்தரை வணங்கும் பெருவிருப்புடன் சீர்காழியை அடைந்தார். திருஞான சம்பந்தரும் இவர்க்கு தக்க சிறப்பருளித் தம்முடனிருந்து தாம் பாடுந் திருப்பதிகங்களை யாழிலிட்டு இசைக்கும் பேறு அருளினார்.
தருமபுரத்தினில் திருஞானசம்பந்தர் “மாதர் மடப்பிடி’ என்னும் பதிகம் பாடினார். அதனைப் பாணர் இசை அமைக்க முயன்றார். அது பூதலத்தோர் கண்டத்தும் கலத்தினிலும் உலகத்தவர் நாத இசை முயற்சிகளிலும் அடங்காதது. ஆதலால் அது யாழ் வழி அடங்காததாயிற்று. அப்போது பாணர் தம் யாழினை ஒடித்து எறிய முற்பட்டார். அதுகண்ட சம்பந்தர் ‘ஐயரே" என அன்புடன் உரைத்து, அவரைத் தடுத்து திருவருளின் பெருமை எல்லாம்
47

Page 78
இக்கருவியின் அளவு படுமோ, இந்த யாழினைக் கொண்டே பதிக இசை வாசிப்பீர் என வாழ்த்தி அருளினார். திருநள்ளாற்றில் சம்பந்தர் “போகமார்த்த பூண் முலையாள்” என்னும் திருப்பதிகத்தைத் தாளம் கொண்டு பாட அவர் பணித்த போது பெரும் பாணரும் யாழில் அதனை மீட்டிப் பாடினார். இவ்வாறு யாழிசை மீட்டித் தொண்டு செய்த திரு நீலகண்ட யாழ்ப்பாண நாயனாரும், துணைவியாரும் திரு நல்லூர்ப் பெருமணத்திலே (வைகாசி மூலம்) ஞானசம்பந்தருடனே சிவபதத்தை அடைந்தனர். (தே.ஹ.)
திருநீல நக்க நாயனார்
Dனித வாழ்வு இலட்சியத்தின் முடிந்த முடிபாவது உயிர் பாச நீக்கம் பெற்று சிவப்பேறடைதல். இவ்வாறான நிலைக்கு முன்னோடியாவது சிவ
பூசையாகும். திரு நீலநக்க
நாயனார் தம் பூர்வ புண்ணிய
பவப் பேறாக இத்தகு மகிமை
வாய்ந்த சிவபூசையையும்,
ଢିଛି சிவனடியார் வழிபாட்டையும் நித்த நியமமாக மேற் கொண்டு ރު$ \}{{ ഷ് දී ක්‍රීකතුව வந்தார்.
c. (2 དད་སེམས་ཛའི་
/2}\২ >
S. వి SY இந்த நாயனார் வேத
C உள்ளுறை உணர்ந்தவர் என்ற
மையாலே அவர் தூய வைதிக
60) OF 6) | IT OFIT IJ நெறியில்
欲 ஒழுகியவர். அத்தகைய இவர்,
திருவாதிரை நட்சத்திர
༢༦_____->《 நாளிலே சிவ பூசையை
SE முடித்துக் கொண்டு அந்த
ミエーニ。 ஸ்தலத்திலே உள்ள அயந்தி
என்னும் ஆலயத்தில் வீற்
றிருக்கின்ற சுவாமியையும்
Ο Ο அர்ச்சிக்க விரும்பி, தம் முடைய மனைவியார் பூசை
க்கு வேண்டும் பொருட்களைக்
கொண்டுவர, அவ்வா
லயத்திற்குச் சென்று பூசை
பண்ணி பிரதட்சிணம் செய்து
பஞ்சாட்சர மந்திரத்தை
ஜபித்தார். அவ்வாறு ஜபிக்கும்
பொழுது ஒரு சிலந்தி மேலே
நின்று வழுவி சிவலிங் கத்தின்
மேல் விழுந்தது. அதைச் சமீபத்தில் நின்ற மனைவியார் கண்டு, அச்சமடைந்து விரைந்து, குழந்தை மேல் விழுஞ் சிலந்தி நீங்கும் படி ஊதித் துமிபவர் போல
48

அன்பு மிகுதியினாலே அச்சிலந்தி நீங்கும் படி ஊதித் துமிந்தார். இதைக் கண்ட நீலநக்க நாயனார் தாம் வழிபட்ட சிவலிங்கத்தின்மேல் விழுந்த சிலந்தியை அயலில் நின்ற மனைவியார் வாய் நீர்பட ஊதித் துமிந்தமை அநாசாரமாகப் பட்டது. அப்படி அநாசாரம் செய்தவரை அருகிலும் அடுக்கலாகா தென்று உடனடியாகவே தான் அவரைத் துறந்து விட்டதாகச் சொல்லி அகற்றி விட்டார்.
தமக்கேயுரித்தான ஒரு முறையில் வைதிக ஆசாரப் பிடிப்புடன் முதிர்ச்சி பெற்றிருந்த அவரின் மெய்யின் தொழிற்பாடு அதுவாக, தமது அநுசரணையோடு தம் நாயகர் பூசித்த மூர்த்தியை வெறும் இலிங்கமாக அல்லாமல், உண்மையான ஜீவகளை துடிக்கும் உயிர்ப் பொருள் சிவமாகவே தம் அன்புக் கண்ணாற் கண்டவண்ணம் தம்மியல்பான பரிவோடு நின்றவராதலால் மனைவியார் செய்ததும் உத்தமமான தாயன்பின் வெளிப்பாடேயாகும். இங்ங்ணம் ஒன்றுக் கொன்று முரண்பாடாக
தோன்றும் இருவர் செயலும் சிவமகிமை பேணும் செயல்களாகும்.
இந்நிலையில் தற்செயலாக பாதிக்கப்பட்டிருக்கும் மனைவியார் துயர் துடைத்தல் ஒருபுறமும், மனைவியின்மையால் நாயனார் திருத் தொண்டு தடைப்படாமல் தொடரவைப்பது ஒரு புறமுமாக சிவத்தின் கருனைப் பொறுப்பு இரட்டிப்பாகியது. இரண்டுக்கும் பொருத்தமான உபாயத்தின் மூலம் தமது நடுவுநிலையை மேற் கொள்வதாயிற்று. அவ்வகையில் தம் உருவில் நீலநக்கரின் மனைவியார் துமிப்படாத பகுதி கொப்பளித்திருப்பதாக நாயனாரின் கனவில் காட்டி இருவர்க்கு மிடையில் மீள் இணக்கத்தை ஏற்படுத்தினார். சிவத்தின் இச்செயலானது “தொண்டர்க்குத் தூ நெறியாய் நின்றான் தன்னை” என்ற தேவார உண்மைக்கு விளக்கமாய் அமைகின்றது.
இந்நாயனாரின் சிவனடியார் வழிபாட்டின் இலட்சியப் பேறு அவர் கண் முன் எழுந்தருளியது போல, சிவஞானப் பெருங்கடலாகிய திருஞான சம்பந்த மூர்த்தி சுவாமிகள் தம் அடியார் குழுவுடன் ஒரு நாள் எழுந்தருளி, இவருடைய விருந்தாக ஒரு பகலும் ஒரிரவும் இவர் மனையிலே தங்கி இருக்கப் பெற்றமை இவர் பெருமைக்குச் சிறந்த அறிகுறியாகும். அத் தொடர்பில் நீலகண்ட யாழ்ப்பாண நாயனாருக்கும் அவர் தம் மனைவியா ருக்கும் இன்றிரவு தங்க இடம் கொடும் என்று திருஞான சம்பந்த மூர்த்தி சுவாமிகள் கேட்டதற்கிணங்க அவர்களுக்கு தம் சிவபூசை மேடையிலே இடங்கொடுத்ததுவும், அது அப்பொழுது வலஞ்சுழித்தெழுந்த சிவாக்கினியால் அங்கீகரிக்கப்பட்டதுவும், வர்ணமன்று பத்தியே மகிமை தருவது என்பதை விளக்கு வதாயமைந்தது.
இந்நாயனார் திருஞான சம்பந்தர் மீது கொண்ட அளவிலா அன்பு அவர் பின் செல்லும்படித் தூண்டிற்று. ஆயினும்
இந்துக் கலைக்களஞ்சியம்

Page 79
அவருடைய ஆக்ஞையைத் தட்டாமல் அந்தத் திருப்பதியிலேயே அவருடைய திருவடிகளை தியானித்துக் கொண்டிருந்தார். இவர் திருஞான சம்பந்தர் மூர்த்தி நாயனாருடைய திருமணத்தைச் சேவித்து சிவபதமடைந்தார். (தே. ஹ.)
O O O திருநீற்றுச் சோழன்
முதல் இராஜேந்திர சோழனின் மகள் அம்மங்கை தேவியின் புதல்வன் முதல் குலோத்துங்கச் சோழன். இவனுக்குத் திருநீற்றுச் சோழன், என்ற சிறப்புப் பெயர் சைவசமயத்தின் மேல்
இம்மன்னன் கொண்ட ஈடுபாட்டின் காரணமாக அமைந்தது.
மன்னார்குடி இராஜகோபால சுவாமி கோயில் இவனுடைய காலத்தில் கட்டப் பெற்றதாகும். சூரியனார் கோயிலைக் கட்டியவனும் இம்மன்னனேயாகும். வைணவ, சமண, பெளத்த கோயில்களில் இவன் கல்வெட்டுக்கள் காணப்படுவதால் இவனுடைய சமயப் பொதுநோக்குத் தெளிவாகிறது. இம் மன்னனின் படைத் தலைவன் குலோத்துங்க சோழ கேரளராசன் என்பவன் கோட்டாற்றில் சிவன் கோயிலை எடுப்பித்தான். மற்றொரு படைத்தலைவன் நரகலோக வீரன் என்ற காலிங்கராயன் ஆற்றிய சமயப்பணிகள் எண்ணிறந்தன. தில்லைப் பேரம்பலத்துக்கு செப்போடு வேய்ந்தான். திருஞான சம்பந்தர் கோயிலிற்குப் பொன் வேய்ந்தான். நூற்கால் மண்டபம், திருச்சுற்று மாளிகை, தேவார மண்டபம், சிவகாமகோட்டம்இவற்றைக் கட்டினான். திருவதிகைக் கோயிலிற்குப் பொன்வேய்ந்ததும், காமகோட்டம், நூற்றுக்கால் மண்டபம், திருநாவுக்கரசருக்குத் தனிக்கோயில், நடராஜருக்கு ஆடரங்கம் முதலியன அமைத்ததும் இவனுடைய அரும் பெரும் பணிகள். மூவர் தேவாரத்தையும் செப்பேடுகளில் எழுதுவித்துத் தில்லையம்பதியில் சேமித்து வைத்ததும் சிறந்த சைவத் தொண்டாகும்.
முதற் குலோத்துங்கன் காலத்தில் அவன் மேல் ஜயங்கொண்டார் என்ற புலவர் கலிங்கத்துப் பரணி என்ற ஈடும் எடுப்புமில்லாத நூலை யாத்தார். நெற்குன்ற வாணர் இயற்றிய திருப்புகலூர் அந்தாதியும், தில்லையுலாவும் இம்மன்னன் காலத்தில் எழுந்த செந்தமிழ்ப் புதையல்களாகும். இவன் காலத்தில் வீரைப் பரசமய கோளரி மாமுனிவர் இயற்றிய கன்னிவன புராணம் (திருப்பாதிரிப் புலியூர்) பூம்புலியூர் நாடகம் என்ற நூல்கள் நமக்குக் கிடைக்கவில்லை. (வ.வை.)
திருநீறு
சைவ சமயத்தின் சின்னங்களுள் ஒன்று திருநீறு. ஒவ்வொரு நாளும் திருநீற்றை நெற்றியில் பூசிக்கொள்ளும் பொழுதுமுடிமன்னரும் ஒருபிடி சாம்பராவர் என்ற நிலையாமைக் கருத்து நமது உள்ளத்தில் ஆழப் பதிந்து இவ்வுடல் இருக்கும்
இந்துக்கலைக்களஞ்சியம்

பொழுதே அறங்களைச் செய்யவேண்டும் என்ற உணர்வு தூண்டப்படும்.
மேலும் விபூதி என்பதற்கு மேலான செல்வம் என்பது பொருள். பிறவியை நீக்கி மேலான முக்தியை அளிக்கும். பாசங்களைச் சுட்டு நீறாக்குவதனால் நீறு என்று அழைக்கிறோம். ஞானாக்கினியால் சுடப்பட்ட பசுமல நீக்கத்தால் விளங்கும் சிவத்துவப் பேற்றின்அறிகுறியே திருநீறாகும். திருநீறணிவதால் முக்தியும், ஞானமும் கைவரப்பெறும் என்று அருள் நூல்கள் கூறுகின்றன. ஒருவன் திருநீறு அணியும் பொழுது அத்திருநீறு படிகின்ற இடமெல்லாம் சிவலிங்க மாகின்றது என சைவ நூல்கள் கூறுகின்றன.
தன்னைத் தரித்தவர்களுக்கு மேலான செல்வத்தைக் கொடுப்பதனால் விபூதி எனவும், ஒளியைக் கொடுப்பதனால் பசிதம் எனவும், பாவங்களை எரித்து நீறாக்குவதனால் பஸ்மம்' எனவும், தன்னைத்தரித்தவர்களைக் காப்பதனால் 'இரட்சை எனவும், உயிர்களது மலத்தைப் போக்குவதனால் 'க்ஷாரம் எனவும் பெயர் பெறுகின்றது.
விபூதி தயாரிக்கும் முறை (கற்பத் திருநீறு)
ஆவின் சாணத்தை, கீழே விழுமுன் தாமரை இலையில் தாங்கி, அதன் மேற்பகுதி, அடிப்பகுதிகளை நீக்கிவிட்டு, நடுப்பகுதியை மட்டும் எடுத்துக் கொண்டு, அதனோடு, பால், தயிர், நெய், கோசலம் ஆகியவை சேர்த்துப் பிசைந்து உருண்டைகளாக்கி, அதனைத் தூய்மையான இடத்தில் சூரிய ஒளியில் உலர்த்தி, சிவாக்கினியில் வைத்து நீறாக்க வேண்டும். பின்பு மெல்லிய துணியில் சலித்து எடுத்து, புது மண்பானையிலே இட்டு, மல்லிகை, முல்லை, பாதிரி, சிறு சண்பகம் முதலிய மலர்களை அதனுட் போட்டுப் புது வஸ்திரத்தினாலே வாயைக் கட்டி வைக்க வேண்டும். அவ் விபூதியினை பட்டுப்பையிலோ, அல்லது சம்புடம், வில்வக் குடுக்கையிலோ எடுத்து வைத்துத் தரிக்க வேண்டும்.
அநுகற்பத் திருநீறு
சித்திரை மாதத்தில் பசுமந்தை மேயும் இடத்திற்குச் சென்று உலர்ந்து கீழே கிடக்கும் கோமயத்தைத் திரட்டி உரலிலிட்டுத் தூளாக்கி, அதனுடன் கோசலம் கலந்து பிசைந்து சிறு சிறு உருண்டைகளாக்கி, 100 உருண்டைகளுக்கு 8 படி பதர் நெல்லைக் கீழே பரப்பி, மேலேயும் கொட்டி, காற்றுப் புகாதபடி மூடி, பஸ்மமாகச் செய்ய வேண்டும். மூன்று நாட்களுக்குப் பிறகு வெண்மையான விபூதி கிடைக்கும். ஒரத்தில் இருக்கும் கருமை நிற விபூதியைத் தள்ளிவிட்டு, வெண்மையான விபூதியைய் பேணி வைத்திருந்து பயன்படுத்தலாம். இவ் விபூதியை வளர்பிறை அஷ்டமியில் அல்லது திரயோதசியில் தயாரிக்க வேண்டும். இவ்வாறு தயாரிக்கப்படும் திருநீறு அநுகற்பத் திருநீறு ஆகும்.
49

Page 80
உபகற்பத் திருநீறு
காட்டு மரங்கள் எரிந்து உண்டான சாம்பல், செங்கல் சூளை, குயவன் சூளை இவற்றின் சாம்பல் இவைகளுடன் பால், தயிர், நெய், சாணம், கோசலம் இவற்றைக் கலந்து பிசைந்து உருண்டைகளாக்கிக் காயவைத்து, நெற்பதரை அதன் மீது பரப்பி நீறாக்க வேண்டும். இத்திருநீறு உபகற்பத் திருநீறு ஆகும்.
கங்காளன் பூசும் கவசத் திருநீற்றை மங்காமல் பூசி மகிழ்வாரே யாமாகில் தங்கா வினைகளும் சாரும் சிவகதி சிங்காரமான திருவடி சேர்வரே - திருமூலர்
வெண்நிற விபூதியே தரிக்கத் தகுந்தது ஆகும். கருநிற விபூதியும், செந்நிற விபூதியும், புகைநிற விபூதியும், பொன்நிற விபூதியும் தரிக்கத் தகுந்தது அல்ல.
திருநீற்றை நீரில் குழைத்து மூன்று பட்டைகளாக அணிவது திரிபுண்டரம் எனப்படும். தலை, நெற்றி, மார்பு, கொப்பூழ், முழங்கால் இரண்டு, இருபுயங்கள், முழங்கைகள் இரண்டு, இரண்டு மணிக் கட்டுகள், இரு விலாப் புறங்கள், முதுகு, கழுத்து ஆகிய 16 இடங்களில் அணிய வேண்டும். நெற்றியில் இரண்டு கடைப் புருவவெல்லை நீளமும், மற்றைத் தானங்களில் ஒவ்வோரங்குல நீளமும் பொருந்தத் தரிக்க வேண்டும். இவ்வெல்லையில் மிகினும், குறையினும் குற்றமாம். திரிபுண்டரம் என்பது மூன்று ரேகைகளாக நெற்றியின் கண் தரித்தலாகும். அகார, உகார, மகர, மூன்று மந்திரங்களையும் முறையே அநாமுகை, மத்யமை, தர்ஜனி விரல்களால் தியானித்துத் தரித்தல் வேண்டும். இவற்றிற்கு அதிதேவதைகள், பிரம்மா, விஷ்ணு, உருத்திரராவர். வேதியர் ஏழங்குல நீளமும், அரசர் ஆறுஅங்குலமும், வைசியரும் சூத்திரரும் மூன்றங்குலமும், பெண்கள் ஒரு அங்குல அளவும் தரிக்க வேண்டும்.
திருநீற்றை நீரில் குழைக்காமல் அப்படியே தூளாக உடம்பில் அணிவது உத்துTளனம் எனப்படும். தீகூைடி உடையவர் சந்தியா கால மூன்றிலும் நீரில் குழைத்துத் தரிக்கலாம். மற்றைக் காலங்களில் நீரில் குழைக்காமல் தரிக்க வேண்டும். தீகூைடியில்லாதவர்கள் மத்தியான காலத்திற்குப் பின் நீரில் குழைக்காமல் தரிக்க வேண்டும்.
விபூதியைத் தரிக்கும்பொழுது, வணங்கி, இரு கரங்களையும் நீட்டி வலக்கையை மேலாகவும் இடது கையைக் கீழே தாங்கியும், பணிவாகப் பெற்று, அண்ணாந்து, விபூதி சிறிதும் கீழே சிந்தா வண்ணம் இறைவனின் திருநாமத்தை உச்சரித்தவாறு நெற்றியில் வலக்கையின் நடுவிரல் மூன்றினால் எடுத்து அணிய வேண்டும். அங்காந்து கொண்டோ, தலைநடுங்கிக் கொண்டோ, கவிழ்ந்து கொண்டோ, ஒரு விரலாலேனும், ஒரு கையாலேனும் தரிக்கலாகாது.
50

பக்தியோடு சிவசிவா என்று திருநீற்றைப்
பரிந்து கையால் எடுத்துப் பாரினில் விழாதபடி அண்ணாந்து செவியோடு
பருத்த புயமிதில் ஒழுக நித்தமூ விரல்களால் நெற்றியில் அழுந்தலுற
நினைவாய்த் தரிப்பவர்க்கு நீடுவினை அணுகாது தேகபரி சுத்தமாம்
நீங்காமல் நிமலன் அங்கே சித்தியோடு நித்தம் விளையாடுவான் முகத்திலே
தாண்டவம் செய்யும் திரு சஞ்சலம் வராது பரகதி உதவும் இவரையே
சத்தியம் சிவம் எனலாம் மத்தினிய மேருஎன வைத்து அமுதினைக் கடையும்
மால் மருகனான முருகா மயிலேறி விளையாடு குகனே புல்வயல் நீடு
மலைமேவும் குமரேசனே.!
ஆசிரியராயினும், சிவனடிராயினும் விபூதி தந்தால், மூன்று தரமாயினும், ஐந்து தரமாயினும் நமஸ்கரித்து எழுந்து, வணங்கி இரு கரங்களையும் நீட்டி வாங்கித் தரித்துக் கொண்டு முன்போல மீண்டும் நமஸ்கரிக்க வேண்டும். ஒருகையால் வாங்கிய விபூதியையும் விலைக்கு வாங்கிய விபூதியையும் சிவதீகூைடியில்லாதார் தந்த விபூதியையும் தரித்தலாகாது. சண்டாளர் முன்பும், பாவிகள் முன்பும், அசுத்த நிலத்தில் வழி நடக்கும் போதும், கிடக்கும் போதும் விபூதி தரித்தலாகாது. சுவாமி முன்பும், சிவாக்கினி முன்னும், குரு முன்னும், சிவனடியார் முன்னும் முகத்தைத் திருப்பி நின்று தரித்தல் வேண்டும். சுவாமி பிரசாதமான விபூதியை தீகூைடி பெற்றவர் கொண்டு வந்தால், அவரை நமஸ்கரித்து வாங்கித் தரிக்க வேண்டும். அப்படி அல்லாதவராயின் விபூதிப் பிரசாதத்தை ஒரு பாத்திரத்தில் வைப்பித்து, அதனைப் பத்திர புஷ்பங்களால் அர்ச்சித்து நமஸ்கரித்து எடுத்து அணிய வேண்டும்.
விபூதியை வடக்கு திசையை நோக்கியேனும் கிழக்குத் திசையை நோக்கியேனும் தரிக்க வேண்டும். சந்தியாகாலம் மூன்றிலும் சூரியோதயத்திலும், அஸ்தமனத்திலும், நீராடிய வுடனும், பூசைக்கு முன்பும், பின்பும், போசனத்திற்கு முன்பும், பின்பும், தீகூைடியில்லாதவர் தீண்டியபொழுதும் பூனை, கொக்கு, எலி முதலியன தீண்டிய பொழுதும், விபூதி தரித்தல் வேண்டும்.
திருஞானசம்பந்தப் பெருமான் பாண்டியனின் வெப்பு நோயினை மந்திரமாவது நீறு என்று பதிகம்பாடி அணிவித்து அந்நோயினை நீங்கச் செய்தார். (6) .606).)
திருநெல்வாயில் அரத்துறை
நடு நாட்டுத் தலம். அப்பர், சம்பந்தர், சுந்தரர் ஆகியோரால் பாடப்பட்ட தலம். தொழுதுரர் விருத்தாசலம் பேருந்துச் சாலையில் தொழுதுாரில் இருந்து 20 கி. மீ. தொலைவில் உள்ளது. இத்
இந்துக் கலைக்களஞ்சியம்

Page 81
தலத்திற்கு அருகில் நிவா நதி ஓடுகிறது. ஊரின் பெயர் நெல்வாயில், கோயில் அரத்துறை தற்போது திருவரத்துறை என்றும் திருவட்டுறை என்றும் வழங்குகின்றது.
திருஞானசம்பந்தருக்கு முத்துப்பந்தரும், முத்துச்சிவிகையும், இறைவனால் வழங்கப்பட்ட தலம் இதுவே. வான்மீகி முனிவரால் வழிபடப்பட்ட தலம்.
கோயில்
இறைவன் - ஆனந்தீஸ்வரர் , தீர்த்த புரீஸ்வரர்,
அரத்துறைநாதர்.
இறைவி - ஆனந்தநாயகி, திரிபுரசுந்தரி, அரத்துறை
நாயகி.
தலமரம் - ஆலமரம்
தீர்த்தம் - நிவாநதி
ராஜகோபுரம் இல்லை; முகப்பு வாயில் மட்டுமே. வாயிலைக் கடந்து உட்சென்றால் வலப்பால் விநாயகர், சமய குரவர்கள் நால்வர், சப்தகன்னியர்கள், வான்மீகி முனிவர், வர்த்தமான லிங்கங்கள், ஜோதிலிங்கம், மகாவிஷ்ணு முதலிய சந்நிதிகள் உள்ளன. அப்பால் ஆதிசேஷன் அண்ணாமலை, வள்ளி தெய்வயானை சமேத முருகன், தண்டாயுதபாணி சந்திகளும், சேர, சோழ, பாண்டிய மன்னர்களின் பெயரிலுள்ள லிங்கங்கள், காசி விஸ்வநாதர் - விசாலாட்சி, கஜலட்சுமி, சந்தான குரவர்கள், பைரவர், சூரிய சந்திரர் சந்நிதிகளும் அமைந்துள்ளன.
உள்பிராகாரத்தில் நவக்கிரக சந்நிதியும், சனிபகவானுக்குச் சந்நிதியும் உள்ளன. சுவாமிக்கும் அம்பாளுக்கும் தனித்தனியே கொடிமரமும், பலிபீடமும், நந்தியும் உள்ளன. நிவாநதியில் வெள்ளம் பெருக்கெடுத்தபோது, வெள்ளப் பெருக்கினால் சேதம் உண்டாகாதிருக்க நந்தி தலையைத் திருப்பிப் பார்க்க வெள்ளம் வடிந்ததாம். அதனால் நந்தியின் தலை சற்றுத் திரும்பியுள்ளதாகக் கூறப்படுகிறது.
கோட்ட மூர்த்தங்களாக விநாயகர், பிட்சாடனர், தட்சிணாமூர்த்தி, இலிங்கோற்பவர், பிரம்மா உள்ளனர். சிவகாமி - நடராஜர், துர்க்கை, அர்த்தநாரீஸ்வரர், சண்டேஸ்வரர், பைரவர் ஆகிய மூர்த்தங்களைத் தரிசித்து பின் மூலவர் சந்நிதியைத் தரிசிக்கலாம்.
மூலவர் சுயம்பு கிழக்கு நோக்கிய சந்நிதி; இத் தலத்திற்கு தீர்த்தபுரி என்ற பெயரும் இருப்பதால் இறைவன் தீர்த்த புரீஸ்வரர் என்ற பெயரையும் பெறுகிறார். இங்கு நான்கு கால வழிபாடுகள் நடைபெறுகின்றன.
“எந்தை ஈசன் எம்பெருமான் ஏறமர் கடவுள் என்றேத்திச் சிந்தை செய்பவர்க் கல்லால் சென்று கைகூடுவ தன்றால் கந்த மாமலர் உந்திக் கடும்புனல் நிவாமல்கு கரைமேல் அந்தண் சோலை நெல்வாயில் அரத்துறை அடிகள் தம் அருளே’
என்று சம்பந்தப் பெருமானும்,
இந்துக்கலைக்களஞ்சியம்

"புனல் ஒப்பானைப் பொருந்தலர் தம்மையே மினலொப்பானை விண்ணோரும் அறிகிலார் அனலொப்பானை அரத்துறை மேவிய கனலொப்பானைக் கண்டீர் நாம் தொழுவதே"
என அப்பர் பெருமானும்,
“கல்வாயகிலுங் கதிர்மாமணியுங்
கலந்துந்திவருந் நிவவின் கரைமேல் நெல்வாயில் அரத்துறை நீடுறையுங்
நிலவெண்மதி சூடிய நின்மலனே நல்வாயில் செய்தார் நடந்தார் உடுத்தார்
நரைத்தார் இறந்தார் என்று நானிலத்தில் சொல்லாய்க் கழிகின்றது அறிந்தடியேன்
தொடர்ந்தேன் உய்யப் போவதோர் சூழல் சொல்லே”
எனச் சுந்தரர் பெருமானும் இத் தலத்திறைவனைப் போற்றிப் பாடியுள்ளனர். (நி.நி.)
O திருப்பட்டீச்சுவரம்
சோழநாட்டின் காவிரியின் தென்கரையிலுள்ள பாடல்பெற்ற தலங்களுள் இதுவும் ஒன்றாகும். காமதேனுவின் மகள் இத்தல இறைவனை வழிபட்டதால் பட்டீச்சுவரம் எனப் பெயர் பெற்றது. கோயில் தூண் ஒன்றில் பட்டிப்பசு தன் முலைக்காம்பிலிருந்து பொழியும் பாலைப் பெருமானுக்கு அபிடேகித்து வழிபடுவது போல ஒரு சிலையை இங்கு காணலாம். திருஞான சம்பந்தர் பதிகம் ஒன்று மாத்திரம் உள்ளது. அவர் தம் திருப்பாடல்களிற்
“மடைக்கயல் வயற் கொள் மழபாடி நகர்நீடு பழையாறையதனுள் படைக் கொருகரத்தன் மிடு பட்டீச்சுரம் ஒத்த வினைற்றுமே”
என்று பழையாறைச் சேர்ந்த மழபாடி என்றே குறிப்பிடுகின்றார்.
“காலை மடவார்கள் புனல் ஆடுவது
கெளவை கடியார்மறு கெலாம்
மாலை மன நாறு பழையாறை மழ
பாடியழ காயமலிசீர்ப் பாலையன நீறுபுனை மார்பன் உறை
பட்டீச்சுரமே பரவு வார் மேலையொரு மால்கடல்கள் போல் பெருகி
விண்ணுலகம் ஆளுமவரே!” (மூன்றாம் திருமுறை)
எனக் குறிப்பிடுகிறார். ஆகவே மழபாடி என்றும் இத்தலத்திற்கு வேறு பெயர் உண்டு. முற்காலத்துச் சோழர்கள் இப்பழையாறில் தான் முடிசூடும் பழக்கத்தைக் கொண்டிருந்ததால் முடி கொண்ட சோழபுரம் என்றும் இத் தலத்திற்கு வேறு பெயர் உண்டு. தேவி இங்கு தவம் செய்தமையால் தேவி வனம் என்றும், சக்தி வனம் என்றும் பெயர் உண்டு. நந்தியாவர்த்த மரங்கள்
51

Page 82
அடர்ந்து விளங்கியமையால் நந்தியாவர்த்தனம் எனவும் பெயர் பெற்றிருந்தது.
கோயில்:-
இறைவன் - தேனுடரீஸ்வரர், பட்டீச்சுவரர் இறைவி ஞானாம்பிகை, பல்வளை நாயகி தலமரம் வன்னி தீர்த்தம் - ஞானவாவி (குளம்) கோடி தீர்த்தம்
(திருமஞ்சனக்கிணறு)
காவிரியின் கிளையான திருமலைராஜன் ஆறு, மற்றும் பல கோயில்கள் நாற் புறங்களிலும் மதில்கள் சூழ ஐந்து கோபுரங்களையும் மூன்று திருச்சுற்றுக்களையும் அழகான பல மண்டபங்களையும் கொண்டு விளங்குகின்றது. சுவாமிக்கும் அம்மனுக்கும் தனித்தனியாக இரு கோயில்கள் உள்ளன. வடக்குக் கோபுர வாயிலில் உள்ள துர்க்கையம்மன் கோயில், வடக்கு திருச்சுற்றில் விளங்குகின்றது. கிழக்கு இராஜ கோபுர வாயிலில் வழியே உட்செல்லும்போது நந்திமண்டபம், ஞானவாவி தீர்த்தக் குளம், விநாயகர் கோயில், தலமரம் வன்னி, ஞானசம்பந்தர்மடம், நந்தவனம் ஆகியன உள்ளன. இரண்டாம் கோபுர வாயிலைக் கடந்து உட் செல்லும்போது அலங்கார மண்டபம், தென்புறம் தேவார முதலிகள் மூவரின் சந்நிதிகளும், தலவிநாயகரான மதவாரணப்பிள்ளையாரின் சந்நிதியும் உள்ளன. கிழக்கில் யாகசாலையை அடுத்து பைரவர் சந்நிதியும் உள்ளன. காலபைரவர் திரிசூலமேந்தி கண்களில் கனல்பறக்க சடைமுடிகள் தீப்பிழம்பாக சுடர்விட இடுப்பைச் சுற்றி நாகங்கள் சீறிப்பாய, பின்புறம் உள்ள நாய் தன் நாக்கைத் தொங்கவிட்டு நிற்கக் காட்சியளிக்கின்றார்.
அர்த்தமண்டபத்தில் சோமாஸ்கந்தர் சந்நிதியுள்ளது. கருவறையில் தேனுபரிச்சுவரர் இலிங்கத் திருவுருவில் காட்சியளிக்கிறார். பிரம்ம நந்தியும் சந்நிதியிலிருந்து ஒதுங்கியுள்ளது. இது இக்கோயிலில் விலகியுள்ள ஐந்தாவது நந்தி திருச்சுற்றில் சப்தமாதர், சுவர்ண கணபதி, கருவறையில் நேர் பின்புறம் வள்ளி தெய்வயானையுடன் ஆறுமுகன், இராமலிங்கம், கஜலட்சுமி, தேவகோட்டத்தில் தட்சிணாமூர்த்தி, லிங்கோற்பவர், பிரம்மா, கார்த்திகேய துர்க்கை, சண்டிகேச்சுவரர், சந்நிதிகளும், வடக்கில் இராமர், திருஞானசம்பந்தர் உருவப் படங்களும் உள்ளன. வடபுறம் தெற்கு நோக்கிய சந்நிதியில் தவக்கோலத்தில் அம்மன் சந்நிதியும், அடுத்துப் பள்ளியறை சந்நிதியும் உள்ளன. சுவாமி கோயிலில் வடபுறத்தில் அம்மன் பல்வளை நாயகியின் தனிக் கோயில் முன்மண்டபம், அர்த்தமண்டபம், சுற்றாலை இவற்றுடன் திகழ்கின்றது. முன்மண்டபத்தில் யாளித் தூண்களும் கூரையிலிருந்து தொங்கும் கற்சங்கிலியும் காணத்தக்கன.
வடக்குக் கோபுர வாயிலில் உள்ள துர்க்கையம்மன், சிறப்பு வழிபாட்டுக்குரியவர். அம்மனின் திரு உருவச்சிலை பழையாறை
52

சோழன் மாளிகையிலிருந்து கொண்டு வரப்பட்டு பிரதிட்டை செய்யப்பட்டது. கோட்டைவாயில் அம்மன் என வழிபடப்பெறும் அம்மன் எட்டுக் கரங்களுடன் விளங்குகிறார். சங்கு, சக்கரம், வில், சூலம், அங்குசம், பாசம் முதலியவற்றுடனும் அபயகரங்களுடனும் பட்டாடை அணிகள் பூண்டு வடக்கு நோக்கி நின்ற திருக் கோலத்தில் காட்சியளிக்கின்றார்.
இத்தலத்தை மாளபதேசத்து தர்மசர்மா என்னும் அந்தணன், காம்பிலி தேசத்து அரசனான சித்திருசேனன், விசுவாமித்திரர், இராமர் முதலியோர் வழிபட்டுப் பேறு பெற்றனர். திருஞான சம்பந்தர் இத்தலத்திற்கு வரும்போது கடும் வெயிலிருந்தமையால் பெருமான் பூதங்களை ஏவி முத்துப் பந்தர் பிடித்து வரச் செய்தார். மேலும் சம்பந்தர் வருகையைக் காணப்பெருமான் கட்டளைப்படி நந்தி விலகியுள்ளதாகவும் வரலாறுண்டு. இங்கு இப்போதும் நந்தி விலகியே இருக்கிறது. தஞ்சை அரசரிடம் அமைச்சராய் இருந்த கோவிற் தீட்சிதர் இத்தலத்தை வழிபட்டதோடன்றி அம்மன் கோயில் திருப்பணியையும் செய்தார். மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம்பிள்ளை இத்தலத்திற்கு சிறந்த புராணம் பாடியுள்ளார். இது ஒரு பழமையான திருக்கோயில். இக் கோயிலில் பல கல்வெட்டுக்கள் உள்ளன. அவை நிலக் கொடை கொடுத்தது பற்றியும், திருஞான சம்பந்தர் மடம், திருநாவுக்கரசர் மடம், திருமூலதேவர் திருமடம் பற்றியும் பல செய்திகளைக் கூறுகின்றன. நாள் தோறும் ஆறுகாலப் பூசைகள் நடை பெறுகின்றன. வைகாசி விசாகம், தீர்த்தவாரி, நடராஜருக்கு ஆறு அபிடேகங்கள், சிவராத்திரி, நவராத்திரி, ஆனியில் முத்துப் பந்தர் திருவிழா போன்ற விழாக்கள் இங்கு நடைபெறுகின்றன.
(தே.ஹ.)
திருப்படைக் கோவில்கள்
கிலக்கிலங்கையில் மிகத் தொன்மையானதும் பழங்காலத்தி லிருந்தே மன்னர்களாலும் வன்னிமைகளாலும் சீர்வரிசைகள், மானியங்கள் வழங்கப்பட்டு பேணப்பட்டு வந்ததுமாகிய கோவில்கள் திருப்படைக் கோவில்கள் என்று வழங்கப்பட்டன. இவை தேசத்துக் கோவில்கள் எனவும் அழைக்கப்படுகின்றன.
நாம் கிழக்கிலங்கைத் திருப்படைக் கோவில்கள் என்று கருதுவது குமண முதல் வெருகல் வரையுள்ள பிரதேசத்திலுள்ள பின்வரும் ஏழு தலங்களையுமேயாகும். அவற்றுள் ஆறுதலங்கள் முருக தலங்களாகக் காணப்பெற கொக்கட்டிச் சோலை
தான்தோன்றீஸ்வரர் கோயில் மட்டும் லிங்கக் கோயிலாகும்.
வெருகல் பூரீ சித்திர வேலாயுதர் கோவில் சித்தாண்டி பூரீ சித்திரவேலாயுதர் கோயில் கோவில்போரதீவு பூரீ சித்திர வேலாயுதர் கோவில் மண்டூர் பூரீ முருகன் கோவில்
இந்துக்கலைக்களஞ்சியம்

Page 83
திருக்கோவில் பூரீ சித்திர வேலாயுதர் கோவில் உகந்தை பூரீ சித்திரவேலாயுதர் கோவில்
கொக்கட்டிச் சோலை பூரீ தான்தோன்றீஸ்வரர் கோவில்
திருப்படைக் கோவில்கள் என்பதன் சிறப்பு
இக்கோயில்கள் திருப்படைக் கோவில்கள் என்ற சிறப்புப் பெயர் பெறக் காரணம் இக் கோயில்களின் மூலஸ்தானத்தில் முருகனுடைய படையாகிய வேல் பிரதிஷ்டை செய்யப் பட்டிருப்பதாகும். கிழக்குப் பிரதேசம் மிகப் பழங்காலத்திலிருந்தே வேல் வழிபாடு தொடர்ந்து வந்த இடமாகும். எனவே முருகனுடைய திருப்படையாகிய வேல் வைத்து வழிபட்ட தொன்மையான கோயில்கள் திருப்படைக் கோவில்கள் என
வழங்கப்பட்டன.
ஆதிகால வேடர் சம்பிரதாயங்கள் இக்கோவில்களில் இன்றும் பின்பற்றப்படுகின்றன. பழங்காலத்தில் இடம்பெற்ற சம்பிரதாயங்கள் பாரம்பரிய நடைமுறைகள் இன்றும் தொடர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.
இவ்வாலயங்களின் அமைவிடம் கர்ண பரம்பரைக் கதைகள், வரலாற்றுத் தகவல்கள், நிர்வாக நடைமுறைகள், பூசை முறைகள் அவற்றிலே பின்பற்றப்படும் பாரம்பரிய நடைமுறைகள் என்பன இவ்வாலயங்களின் தொன்மைக்கு மேலும்
சான்றாகின்றன.
முக்குவதேசம் என்றழைக்கப்பட்ட மட்டக்களப்புப் பிரதேசம் தேசம் என்ற சுருக்கப் பெயரால் அழைக்கப்பட்டது. இக்கோவில்கள் மட்டக்களப்புப் பிரதேசம் முழுவதற்குமே வழிபாட்டுக்குரிய கோயில்களாகையால் தேசத்துக் கோயில்கள் என அழைக்கப்படலாயின. மாகோன், குளக்கோட்டன் போன்ற மன்னர்கள், இங்கு ஆட்சி செலுத்திய சிற்றரசர்கள், வன்னியர்கள் முதலியோரால் இக் கோவில்களுக்கு மானியங்கள், நிவந்தங்கள் வழங்கப்பட்டன. அவற்றை இக்கோவில்களில் நிலவும் நடைமுறைகளும் கல்வெட்டுப் பாடல்களும் காட்டுகின்றன. பெரும்பாலும் முக்குவ மன்னர்களாலும் முக்குவ தேசம் என அழைக்கப்பட்டதோடு இவை தேசத்துக் கோயில்களுமாயின. இம்முறையிலே முருகன் கோயில்களுடன் அதே நடைமுறையிலே அமைந்த கொக்கட்டிச்சோலைத் தான் தோன்றீஸ்வரர் ஆலயமும் திருப்படைக் கோயில் வரிசையில் சேர்ந்து கொண்டது எனக் கருதலாம்.
திருப்படைப் பத்ததி
திருப்படைக் கோயில்களின் நிர்வாகம், நடைமுறைகள் பூசைகள் பற்றிய விடயம் திருப்படைப் பத்ததி என்பதில் அடங்கியுள்ளது. இதிலுள்ள கல்வெட்டுப் பாடல்கள் மாகோன், குளக்கோட்டன் போன்றோருடன் தொடர்புபடுத்தப்படுகின்றன.
இந்துக்கலைக்களஞ்சியம்

திருக்கோயில் திருப்படைப் பத்ததியில் ஏர்பெருகு பருதிகுலராச குளக்கோட்ட என்று கூறப்பட்டுள்ளது. களுதேவாலயக் கல்வெட்டு என்று கூறப்படுகின்ற களுதாவளைக் கோவிற் கல்வெட்டுப்பாடலில், மனுநீதி கண்ட குளக்கோட்டு ராமன் என்று கூறப்பட்டுள்ளது.
மாகோ அரழியம் வகுத்தமை என்னும் கல்வெட்டிலே மாகோன் பற்றிய விடயங்கள் கூறப்படுகின்றன.
கண்டனொடு சருகுபில்லி கட்டப்பத்தன் கருதரிய கவுத்தனுமத்தியாயன் மண்டலத்தில்மக்களிலே வர்னமாக்கியப் பண்டுமுறை தவறாமல் ஏழு குடியாய் பகுத்தீசர் பணிபுரிய பரவணியாய் அண்டர்தமைச் சாட்சி வைத்துத் தத்தம் வாங்கி அரனகத்து ஊழியராய் அமைத்துச் சொல்வார்
என்ற இக்கல்வெட்டுப் பாடலிலே கோயில் தொண்டுகளும் அதற்குரிய சமூகத்தவர் யார் என்பதும் கூறப்பட்டுள்ளது. திருக்கோவில் போன்ற கோவில்களில் இந்நடைமுறையே பின்பற்றப்படுகின்றது.
திருப்படைப் பத்ததி என்ற பெயரிலே ஏட்டு வடிவில் நீண்ட காலமாக நிலைபெற்று வந்த இக்கல்வெட்டுப் பாடல்கள் குளிக்கல்வெட்டு, பெரிய கல்வெட்டு, தாதன் கல்வெட்டு, மாகோன் அரனுTழியம் வகுத்த கல்வெட்டு, திருப்படைக் களஞ்சியம், எனப் பலதரப்பட்டன. இவை அனைத்தும் மட்டக்களப்பு பூர்வ சரித்திரம் என்ற ஏட்டிலிருந்து தொகுத்து மட்டக்களப்பு மான்மியம் என்ற நூலாக்கப்பட்டுள்ளன.
மட்டக்களப்புத் திருப்படைக் கோவில்களின் வேல் வழிபாட்டுத் தொன்மை
கிழக்கிலங்கையில் அமைந்துள்ள மட்டக்களப்பு, ஆதிக்குடிகளான இயக்கர், நாகர் வாழ்ந்த பிரதேசமாகும். பிற்காலத்தில் இவர்கள் வழிவந்த வேட இனத்தவர் மட்டக்களப்புப் பிரதேசத்தில் பல இடங்களில் வாழ்ந்துள்ளனர். (இவர்கள் சிறு பான்மையராய் இன்றும் வாழ்கின்றனர்)
இவர்களின் குல தெய்வம் முருகன் ஆகையால் மட்டக்களப்புப் பிரதேசத்தில் முருக வணக்கம் ஆதிகாலத்திலேயே வேரூன்றியது. கிழக்கிலங்கையின் தொன்மை பற்றிப் பல ஆய்வாளர்கள், புவியியல், மானுடவியல், தாவரவியல், விலங்கியல், அடிப்படையிலும் வரலாற்று ரீதியாகவும் பல சான்றுகளை முன்வைத்துள்ளனர்.
மட்டக்களப்புப் பிரதேசத்தில் இடைக் கற்காலம், புதிய கற்காலம், பெருங்கற்காலம் முதல் வேல் வழிபாட்டுத் தொன்மை
53

Page 84
காணப்பட்டது என்பதற்குப் பல சான்றுகள் காணப்படுகின்றன. கதிரவெளி, மகியங்கனை, விந்தன, வெல்லச, உகண, தீகவாவி, மாகம போன்ற இடங்களிற் காணப்பட்ட வரலாற்று எச்சங்கள் மூலம் ஆதிக்குடிகளின் வணக்கமுறைகளான லிங்கவழிபாடும், வேல் வழிபாடும் கொற்றவை வழிபாடும் நிலைத்திருந்ததை அறிய முடிகிறது.
இப்பிரதேசங்களில் கண்டெடுக்கப்பட்ட ஒருதலை, இருதலை, முத்தலைச் சூலங்கள், பெரிய தாழிகள், சூலம் பொறிக்கப்பட்ட மட்பாண்ட ஒடுகள் போன்றன தீகவாவி, அரும்பொருட் காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளன. இவை அப்பிரதேசங்களின் வேல் வழிபாட்டுத் தொன்மையை எடுத்துக் காட்டுகின்றன.
கிழக்கிலங்கையில் தலைமுறை தலை முறையாகத் தொடர்ந்து வரும் முருக வழிபாடு இப்பிரதேசத்தில் வாழும் இந்து மக்களை கந்தபுராண கலாசாரத்தில் ஊறியவர்களாக ஒழுக்க சீலர்களாக உருவாக்கியுள்ளது. இதே சிறப்பு இலங்கையின் ஏனைய தமிழ்ப் பிரதேசங்களில் வாழும் இந்து மக்களிடமும் நிலவுகிறது.
மட்டக்களப்பு திருப்படைக் கோவில்களின் தொன்மையைக் காட்டும் பெருங்கற்கால சின்னங்களும் பிராமிக் கல்வெட்டாதாரங்களும்
கதிர்காமம், திசமாறாமை (மாகம), உகந்தை, கதிரவெளி முதலிய இடங்களிற் காணப்பட்ட பெருங்கற்காலச் சின்னங்கள், இடுகாடுகள், மற்றும் ஆதித்திராவிடர்க்குரிய வாழ்க்கை முறை என்பன முருக, லிங்க வழிபாட்டுக் காலத்துக்கு உரியனவாகும்.
கதிரவெளியிற் கண்டெடுக்கப்பட்ட பெருங்கற்காலச் சின்னங்கள், சூலங்கள் பொறிக்கப்பட்ட பானை ஒடுகள், பெருங்கற்காலத்துக்குரிய இடுகாடுகள் என்பன இப்பிரதேசத் தின் தொன்மை வணக்கமான முருக வழிபாடு பற்றியும் அறிந்து கொள்ள உதவுகின்றன.
உலகெங்கும் காணப்பட்ட ஆதிக்குடிகளின் வழிபாட்டில் முதலில் மரவழிபாடும் பின்பு லிங்க வழிபாடும் பின்னர் வேல் வழிபாடும் சூல வழிபாடும் இடம்பெற்றன. இவ்வழிபாடுகள் கொடிநிலை, கந்தழி, வள்ளி என்ற முறையில் ஆரம்பிக்கப்பட்டு பின்னர் மேற்கண்டவாறு பரிணாம வளர்ச்சி பெற்றன என்பது
தொல்லியலாளர்கள் கருத்து ஆகும்.
கிழக்கிலங்கையிற் காணப்பட்ட பிராமிக் கல்வெட்டுக் களிலும் முருக வழிபாட்டுக்கான சான்றுகள் நிறையக் காணப்படுகின்றன. கந்த, குக, குமர, மகாசேன,சாமித்த, விசாக, வேலச, கார்த்திகேய, வேல போன்ற பெயர்கள் இக்கல்வெட்டுக் களிலே காணப்படுகின்றன. இவை ஹிந்தகல, ஒமுனுகம(403)
54

ஹிடகல்கே(447), நிலகம (880) போன்ற அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த இடங்களிற் காணப்பட்டன. அநுராதபுரம், பொலநறுவை ஆகிய இடங்களிற் காணப்பட்ட கல்வெட்டுக் களில் வேல், சக்கரம், சுவஸ்திகம் போன்ற சின்னங்களும் வேல் குறியீடுகளும் பெயர்களும் காணப்படுகின்றன.
திருப்படைக் கோவில்களுக்கும் கதிர்காமத் திற்கும் இடையே காணப்படும் தொடர்புகள்
கி.பி 5ஆம் நூற்றாண்டில் இப்பகுதியில் ஷத்திரிய மன்னர்கள் ஆட்சி நிலவியது. பாண்டிய மன்னர்கள் பரம்பரையைச் சேர்ந்த இவர்கள் கதிர்காம ஷத்திரியர்கள் என அழைக்கப்பட்டனர். இவர்கள் தென்கிழக்குப் பிரதேசத்தில் தமிழ் இராச்சியங்களை உருவாக்கி ஆண்டதையும், லிங்க, வேல் வழிபாடுகளையே கொண்டிருந்தார்கள் என்பதையும் இக்கல்வெட்டுக்கள் மூலம் அறிவதோடு, பெளத்த மதத்திற்கும் ஆதரவு வழங்கினார்கள் என்பதையும் அறிய முடிகிறது.
சபரர்கம எனப்பட்ட இன்றைய சப்பிரகமுவ மாவட்டத்தில் அமைந்துள்ள கதிர்காமம், தொன்று தொட்டே முருக வணக்கப் பிரதேசமாகும். வேடர்கள் தாயகமாக அமைந்துள்ள இப்பிரதேசம் சபரர் எனப்பட்ட பழங்குடிகளான வேடர் வாழ்ந்த, வழிபட்ட தலமாகும். சபரர், புளிஞர், முதுவர், எயினர், குறவர், குறும்பர், மலைப்பண்டாரம் போன்ற பல்வேறு பழங்குடிகளும் வேடர் இனத்தைச் சார்ந்தனவாகும். இவ்வேடர் இனத்தவர் கதிர்காமம், விந்தன, வெல்லச, பாணம போன்ற இடங்களில் நிலைபெற்று வாழ்ந்தவர்கள். இவ்விடங்கள் எல்லாம் பண்டைய
மட்டக்களப்பைச் சார்ந்த பிரதேசங்களாகும்.
கந்தபுராணம் கூறும் முருகன் வள்ளி திருமணம் கதிர் காமத்தில் நடந்ததாக கூறப்படுகின்றது. தட்சண கைலாய மான்மியம் கந்தபுராணத்தின் ஒரு பகுதியாகக் கொள்ளப் படுவது. இதில் முருகன் கதிர்காமத்தில் ஒளிப் பிளம்பாகக் காட்சி தந்தான் எனப்படுகின்றது. கதிர்காம வெற்பிலுறை வோனே என அருணகிரிநாதர் பாடியுள்ளார். ஈழம், கேரளம், தமிழகம் என்பன இடைக் கற்காலத்தில் ஒரே வகையான நாகரிகமே, நிலவிய இடங்கள் என பேராசிரியர் சிற்றம்பலம் கூறுவது கவனிக்கத்தக்கது. பெளத்தம் இலங்கைக்கு வரமுன் (கி.மு 247) இப்பிரதேசங்களில் முருக வழிபாடு மேலோங்கி இருந்தமைக்கு அதிகளவு சான்றுகள் கிடைக்கின்றன. கதிர்காமத்தை அடிப்படையாகக் கொண்டே பின்னர் பல இடங்களிலும் முருக வழிபாடு பரவியது எனலாம். அதன் பிரதிபலிப்பும் தொடர்ச்சியுமே மட்டக்களப்பின் ஏழு திருப்படைக் கோவில்களும் எனக் கருத முடிகிறது. கதிர்காமத்தைப் பின்னணியாகக் கொண்ட ஒரு வழிபாட்டு முறையே மட்டக்களப்புத் திருப்படைக் கோவில்கள் அனைத்திலும்
இழையோடுவதைக் காணமுடிகிறது.
இந்துக்கலைக்களஞ்சியம்

Page 85
உகந்தை பூணூரீ சித்திர வேலாயுதர் கோவில்
அமைவிடம் பொத்துவில் தாண்டி கூமுனைக்குச் செல்லும் நீண்டதொரு காட்டுப் பாதையோரம் அமையப் பெற்றுள்ள இத்தலம் தமிழகத்துக் குன்றுதோறாடல் மலைக் கோவில்களை நினைவூட்டும் வகையில் அமையப் பெற்றது. சமுத்திர அலைகள் தாலாட்ட பக்திமயமான சூழலில் உள்ள இவ்வாலயம் கிழக்கிலங்கையின் திருப்படைக் கோவில்களி லொன்றாக, தேசத்துக் கோயிலாகச் சிறப்புப் பெற்றது.
பாரம்பரியம்: கதிர்காமத்தோடு நெருங்கிய தொடர்புடைய இத்தலம் முருகன் மலை, வள்ளி மலை என்ற இரு பிரிவான மலைகளையுடையது. இயற்கையாகவே அமைந்த ஏழு நீர்ச் சுனைகள் இத்தலத்தை அழகு செய்கின்றன. கதிர்காமத்து முருகனுக்கு உகந்தமலை என்றதனால் இது உகந்தை என அழைக்கப்படலாயிற்று என்பது ஐதீகம். கதிர்காமம் செல்லும் அடியார்கள் இங்கு தங்கியே செல்வது வழக்கம்.
ஆரம்பத்தில் திறந்தவெளிக் கோயிலாக அமைந்திருந்த இவ்விடம் சூரிய வழிபாடு நடந்த இடமென்பர். மட்டக்களப்பில் உள்ள மூன்று மலைக் கோயில்களும் உகந்த மலை, தாந்தாமலை, சங்கமன் கண்டிமலை என்பனவாகும். இவை அனைத்துமே முருகன் கோயில்களாகும். முருகன் சூரனைக் கொல்ல விட்ட வேலானது வாகூர மலையைப் பிளந்து மூன்று குளம், கல்லி, கடலில் விழுந்த போது எழுந்த தீப்பொறிகளில் ஒன்று இம்மலை உச்சியிலே தங்கியது என ஐதீகக் கதைகள் கூறும் (மட்டக்களப்பு
மான்மியம்).
வரலாறு: யாழ்ப்பாணத்திலிருந்து வந்து மட்டக் களப்பை வாழ்விடமாகக் கொண்ட மார்க்கண்டு முதலியாரே 1885 இல் மலையடிவாரத்தில் ஒரு கோயிலைக் கட்டினார். கோளாவிலைச் சேர்ந்த காளியப்பனைக் குருவாகவும், ஜெயசேகர -ழரீ வன்னிதிசாநாயக என்பவரை வண்ணக்கராகவும் நியமித்தார்.
பாணமையைச் சேர்ந்த இவர் சைவபக்தியும் தமிழ்ப் பற்றும்மிக்கவர்.
இதற்கு முன்பு ஆலமரத்தடியில் மேடையில் வேல் மட்டும் கொண்டதாக அமைக்கப்பட்டிருந்த இக்கோயில் திறந்த வெளிக் கோயிலாகவே ஆரம்பத்திற் காட்சியளித்தது. ஆலயத்தில் உள்ள வெண்நாவல் மரமே தலவிருட்சமாகும். தெய்வயானை வழிபாடு புதிய கற்காலத்தில் ஏற்பட்டதென ஆய்வாளர் கருதுவர். எனவே இது அதற்கு முற்பட்ட காலத்திலேயே வழிபாடு ஆரம்பிக்கப்பட்ட தலம் எனக் கருத முடியும், வேடர் சமுதாயம் புதிய கற்காலத்திற்கு முந்தியது. புதிய கற்காலத்தில் விவசாய சமுதாயமும் தோன்றி விட்டமையினால் முருகனுக்கு வள்ளி,தெய்வானை என இரு மனைவியர் ஏற்பட்டனர். எனவே இது இடைக்கற்கால வேடர் வழிபாட்டு இடமெனக் கொள்ள முடியும் எனப் பேராசிரியர் சிற்றம்பலம் கூறுவார். -
இந்துக்கலைக்களஞ்சியம்

உகந்தையை அண்மிய பானம, கூமுனை போன்ற இடங்கள் ஆதிக்குடிகளான இயக்கர், நாகர் வாழ்ந்த இடங்களாவதோடு அவர்களின் வழி வந்த வேடர் இன்றும் வாழுமிடங்களுமாகும். இவர்களுக்கேயுரிய வேல் வணக்கமே இப்பகுதியில் நிலவியது என்பதற்கு இவ்விடம் சான்றாகும். ஈழத்திற் பெளத்தம் கால்கொள்ள முன்னர் பிராமி லிபிக் கல்வெட்டுக்கள் அதிகம் காணப்பட்டுள்ளன. அவற்றிலே ஆதிப் பிராமி மறைய அசோகப் பிராமி இடம் பிடித்துக் கொண்டது. தமிழ் பெளத்தர்களும் ஆதிப்பிராமியும் நிறைந்த இவ்விடம் பின்பு சிங்கள பெளத்தர் வாழு மிடமாகி விட்டது.
பூசை முறைகள்: கதிர்காமத்தைப் போலவே இங்கும் ஆடிப் பெளர்ணமியில் தீர்த்தோற்சவம் நடைபெறும். திருவிழாக்கள் இடம்பெறும்போது சுவாமியை (வேல்) தாம்பாளத்தில் வைத்துப் பட்டுச் சேலையினால் மூடி வீதிவலம் வருவார்கள். திறந்த தேரில் முருகப் பெருமான் வேல் பவனி இடம்பெறும்.
சுவாமி தீர்த்தமாடுவதற்கு முன்னரே கொடி இறக்கும் வழக்கமும் இங்கன்றி வேறெங்கும் இல்லை. அக்கொடியினையும் சுவாமியுடன் தீர்த்தமாட எடுத்துச் செல்வர். தீர்த்தம் முடிவுற வள்ளி கோயிலுக்குச் சென்று விட்டே சுவாமி தமதிருப்பிடம் செல்வார்.
முதலாவது மலையில் வள்ளி கோயிலும் வேலுமே அமையப் பெற்று உள்ளமை இதன் பழமைக்குச் சான்றாகிறது. கடலில் நீராடிவரும் பக்தர்கள் சரவணப் பொய்கை என்னும் பொய்கையில் நீராடுவர். வள்ளி அம்மன் கோயிலில் ஒருபுறம் வேலும் மறுபுறம் பிள்ளையார் கோயிலும் அமையப் பெற்றுள்ளன. மலை அடிவாரத்தில் பிள்ளையார் கோயில் ஒன்றும் உள்ளது.
மிகத் தொன்மை வாய்ந்த இக்கோயில் இடைக்கற்கால வேடர் வழிபட்ட இடமாகும். இதன் பழமைக்கு இப்பகுதிகளிற் காணப்படும் பிராமிக் கல்வெட்டுக்களே சான்றாகும். இவற்றிலே வேல், வேலச போன்ற பெயர்கள் இடம் பெறுவதும் அவதானிக்கத்தக்கது.
ஆல மரத்தடியில் அமைக்கப்பட்ட மேடையில் வேல் மட்டும் நடப்பட்டு திறந்தவெளிக் கோயிலாகக் காணப்பட்டதும் இதன் பழமையைப் பறைசாற்றும் மற்றுமொரு சான்றாதாரமாகும். மேலும் தெய்வயானை அம்மனுக்கு கோயில் அமையாததும் இதன் தொன்மைக்கு ஒரு ஆதாரமாக அமைகிறது எனலாம்.
திருக்கோயில் பூணூரீ சித்திர வேலாயுதர் ஆலயம்
அமைவிடம் மட்டக்களப்பிற்குத் தெற்கே சுமார் 50 மைல் தொலைவில் உள்ள தொன்மையான பதி இதுவாகும். பண்டு வெள்ளை நாவற்பதி. நாகர்முனை உன்னரசுகிரி என்ற பெயர்களால் அழைக்கப்பட்ட இத்தலம் பின்னர் திருக்கோவில் என்ற சிறப்புப் பெயரால் வழங்கப்படலாயிற்று.
55

Page 86
சமுத்திரக் கரையிலே திருச்செந்தூரை நினைவூட்டும் வகையில் இவ்வாலயம் பரந்த வெண் மணற் பரப்பிலே அமைந்துள்ளது. இது காவும் சோலையும் நிறைந்த தனி அழகுடன் மூர்த்தி, தலம், தீர்த்தம் என்பன அமையப் பெற்ற தலமாகும். கதிர்காமத்திற்கு கால்நடையாகச் செல்லும் யாத்திரிகர் இங்கும் தங்கிச் செல்வது வழக்கமாகும்.
பாரம்பரியம்: உகந்தை போலவே இவ் வாலயத்துடனும் முருகன் விட்ட வேலின் கதையே தொடர்புபடுத்தப்படுகிறது. வாகூர மலையைப் பிளந்த வேலின் ஒரு பொறி உகந்தையில் தங்க ஒரு பொறி இங்கும் வெள்ளை நாவலில் தங்கியதென்பர். அதனை வேடர்கள் கண்டு கொத்துப் பந்தலிட்டு வழிபட்டனர் என்பது ஐதீகம்.
திருக்கோவிலுக்கு அருகாமையில் இராவணன் கோட்டை இருந்ததாகவும், அது இன்றும் கடலின் அடியிற் காணப் படுகின்றது என்பதும் அதன் மேலே தான் போர்த்துக்கேயர் கலங்கரை விளக்கம் அமைத்தனர் என்பதும், ஐதீகம். கோணேஸ்வரம், மாமாங்கேஸ்வரம் என்பவற்றுடன் தொடர்பு படுத்தப்படும் இராவணன் ஈழத்தில் ஆண்ட இயக்கர் குல மன்னன் என்பது இன்றைய ஆய்வுகளின் விளக்கமாகும்.
இவன் தெட்சணாபதி எனப்பட்ட தென் இலங்கையான இப்பகுதியினையே ஆட்சி செய்தான் என உணரமுடிகின்றது.
வரலாறு: மட்டக்களப்பை, பிரசன்ன சித்து என்னும் மன்னன் ஆட்சி செய்த போது கலிங்க இளவரசனான புவனேககயவாகுவும் அவனது மனைவி தம்பதி நல்லாளும் இராமேஸ்வரம், கோணேஸ்வரம் தரிசனம் செய்து இங்கு வந்து, சோழ நாட்டிலிருந்து சிற்பிகளைத் தருவித்து நாகர்முனை சுப்பிரமணியர் ஆலயத்தைப் புதுப்பித்தனர் என மட்டக்களப்பு மான்மியம் கூறும்.
கோணேசர் கல்வெட்டு எனப்படும் ஏட்டுப் பிரதியும் இவ்விடயம்பற்றிக் கூறும். புவனேக கயபாகுவின் மகன் மனுநேயகயவாகு, குளக் கோட்டன் திருகோணமலையில் கோயில் கட்டுவதை அறிந்து தன்படைகளை அனுப்பினான். குளக் கோட்டன் அவற்றைத் தோற்கடித்து மட்டக்களப்பு அரசி ஆடகசவுந்தரியைத் திருமணம் செய்தான் எனக் கூறும்.
திருக்கோணேஸ்வர வரலாறு கூறும் மற்றொரு ஏட்டுப் பிரதியான தெட்சணகைலாய புராணத்திலும் இதே வரலாறு கூறப்படுகின்றது. குளக் கோட்டன் ஆடக சவுந்தரியினது மகன் சிங்கபாகு மட்டக்களப்பை ஆட்சி செய்தான் என்பதும் மேற்படி தெட்சணகைலாய புராணம், கோணேசர் கல்வெட்டு என்பன கூறும் தகவலாகும்.
கிறிஸ்துவுக்குப் பிற்பட்ட காலங்களிலும் இக்கோயில் புகழ் பெற்று விளங்கியதென்பதைக் கல்வெட்டுக்கள், திருப்படைக் கோயில் பத்ததி என்பன கூறும்.
56

மாகன் பொலநறுவையைத் தலைநகரமாகக் கொண்டு முழு இலங்கையையுமே ஆட்சி செய்த போது குளக்கோட்டன் திருகோணமலையில் கந்தளாய்க் குளத்தைக்கட்டி குடிகளைக் குடியேற்றிதொண்டு செய்தான் என்ற விடயம் கோணேசர் கல்வெட்டு மட்டக்களப்பு, மான்மியம், தெட்சண கைலாய புராணம் முதலியவற்றின் மூலம் அறிகின்றோம்.
ஏர் பெருகு பருதிகுல ராச குளக்கோட்டன் என்ற திருக்கோயில் திருப்படைக் கல்வெட்டு வாக்கியத்திலும் பருதி குலத்துதித்த குளக்கோட்டி ராமன் என்ற கோணேசர் கல்வெட்டு வாக்கியத் திலுமுள்ள ஒற்றுமை இருவரது சமகால தொண்டைக் காட்டுவதாகும். இவ்வாறே இவர்கள் வெருகல், மண்டூர், கொக்கட்டிச்சோலை, போரதீவு போன்ற திருப்படைக் கோவில்களிலும் நிவந்தங்கள் வழங்கி கோயிற் பணிகளை ஒழுங்கமைத்தமையையும் திருப்படைப் பத்ததி
கூறும்.
மாகோன் காலிங்க விஜயபாகு என்ற பெயருடனும் குளக்கோட்டன் 'ஜயபாகு' என்ற பெயருடனும் பல்வேறு பணிகளை ஆற்றியமை திருக்கோவில் தூண் கல்வெட்டுக் கள் மூலம் அறிய முடிகின்றது.
இக்கல்வெட்டில் கலிங்க விஜயபாகு எனப்பட்ட கலிங்க மாகோனுக்குப் பூரண விளக்கமும் கூறப்படுகின்றது. மாகோன் வகுத்த வன்னிமைப்படியே இன்றும் இங்கு ஆலய நிர்வாக நடைமுறைகள் இடம்பெறுவதைக் கண்டனொடு சநத பில்லி கட்டப் பத்தன். என்ற திருப்படைப் பத்ததிப் பாடல்கள் கூறும்.
பூசை நடை முறைகள் கதிர்காமத் தீர்த்தம் ஆடிப் பெளர்ணமியில் நடைபெற, இக்கோயிலின் தீர்த்தம் ஆடி அமாவாசையில் நடைபெறும். இக்கோயில் வரலாறு பற்றி மேலும் பல கோயில் திருப்பதிகங்கள் உள்ளன. குறிப்பாக சில வருமாறு. வேல் வந்த வரலாறு (ஆசிரியர் பெயர் தெரியாது), சித்திரவேல் முருகன் வருக்கமாலை (த. குஞ்சித்தம்பி) திருக்கோவில் ஊஞ்சல் முதலியன அவற்றுட் சிலவாகும்.
லிங்கக் கோயில்: மட்டக்களப்பு மாவட்டத்திலே சில கோயில்கள் லிங்கக் கோயிலாக இருந்து பின்னர் பிள்ளையார், முருகன் கோயிலாக மாறியுள்ளன. உ+ம்: மாமாங்கேஸ்வரம். களுதாவளை - சுயம்புலிங்கப் பிள்ளையார் கோயில் போன்றன. திருக்கோயில் ஆலயமும் ஆதியில் லிங்கக் கோயிலாக இருந்து பின்னர் சித்திரவேலாயுதர் கோயிலாக மாறியதென்பர். அதற்கு ஆதாரமாக இராவணன் இக்கோயிலை வழிபட்டமையும், அவனது ஆட்சி தெட்சணாபதி எனப்பட்ட இப்பிரதேசத்தில் நிலைத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கன.
இராவணன் கி. மு. 6000 இல் ஈழத்தை ஆட்சி செய்த இயக்கர் குல மன்னன் என்பது ஆய்வுகள் மூலம் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. பிற்காலத்தில் மநுநேயகயபாகு,
- க்களஞ்சியம்

Page 87
புவனேக கயபாகு போன்றோர் திருப்பணி செய்தபோது இவ்வாலயம் சுப்ரமணியர் ஆலயமாக மாறியுள்ளதை அவதானிக்க
முடிகிறது.
வேடர்கள் பூசையாலும், கதிர்காமத் தொடர்பாலும் இம்மாற்றம் ஏற்பட்டிருக்கலாம்.
இலங்கையில் உள்ள தேசத்துக் கோயில்களில் நிறைந்த வரலாற்றுத் தகவலைக் கொண்ட இடம் திருக்கோவிலாகும். இக்கோயில் தொடர்பான செப்பேடுகள் என்பன இவ்வாலயத்தின் திருமுகம் உள்ள பரம்பரையினரிடமிருந்து காலக்கிரமத்தில் மறைந்துவிட்டன என்பர். இங்குள்ள தூண் கல்வெட்டு, துண்டுக் கல்வெட்டுக்கள் இதற்குச் சான்று பகர்கின்றன.
இவ்வாலய முகப்பு வேடர்முகப்பு, சாமி முகப்பு என பெயர் பெற்றிருந்தது. ஆலயத்தைச் சுற்றி மூன்று வீதிகள் இருந்தன எனப்படுகின்றது. அதன் அடையாளமாக அடித்தளக் கற்கள் இன்றும் உள்ளன. இவ்வாலயம் போர்த்துக்கேயர் காலத்தில் முற்றாக அழிந்தது எனலாம்.
குயரோஸ் அடிகள் குறிப்பிட்டுள்ள இடிபாடுகள் இன்றும் பூமியில் புதைந்து காணப்படுகின்றன என்பர்.
மண்டூர் முருகன் ஆலயம்
அமைவிடம்: தில்லை மரக்காடும், வயல்வெளியும் சுற்றி அமைந்திருக்க மறுபுறம் மட்டக்களப்பு வாவி வளைந்தோட வாவி அருகில் மண்டூர் முருகன் ஆலயம் மூர்த்தி, தீர்த்தம், தலம், என்னும் சிறப்புகளுடன் உள்ளது. மட்டக்களப்பிலிருந்து தென்மேற்கில் சுமார் 20 மைல் தூரத்தில் இவ்வாலயம் உள்ளது. கடம்ப மரங்கள் நிழல் பரப்ப கதிர்காம முருகன் கோயில் போன்ற அதே அமைப்புடன் இத்தலம் அமையப் பெற்று உள்ளது.
பாரம்பரியம்: இவ்வாலயமும், திருக்கோயில், உகந்தை போல முருகன் சூரனைப் பிளக்க விட்ட வேலானது மூன்று குளம் கல்லி வாகூர மலையைப் பிளந்து ஒரு சுடர் இங்குள்ள தில்லை மரத்திலே தங்கியது என்பர். அதனை வேடர்கள் கண்டு பூசித்தமையினால் உருவாக்கப்பட்டதே இவ் வாலயம் என்பது கர்ண பரம்பரைக் கதை. சோழ இளவரசி சீர்பாத தேவியினால் கொடுக்கப்பட்ட வேலை சிந்தன் என்பவன் கொண்டு போய் மரத்திற் குத்தி வைத்து வழிபட்டான் என்பதும் ஒரு மரபுக்கதை. இக்கதை உக்கிரசேனன் காலத் தொடர்பு உடையது.
இவ்விடத்தின் வரலாற்றை அறிய தனிப்பட்ட கல்வெட்டோ செப்பேடோ இல்லாவிட்டாலும் மட்டக்களப்பு மான்மியம் கூறும் மாகோன் வகுத்த வன்னிமை, திருப்படைக் கோயில் ஒழுங்கின் படியே இங்கு சகல பூசை, நிர்வாக நடைமுறைகள்
இந்துக் கலைக்களஞ்சியம்

நடைபெறுகின்றன. வேடர்களால் பூஜிக்கப்பட்ட இவ்வாலயம் பின்னர் மட்டக்களப்பு வாவியில் மீன் பிடிக்கப் படகில் வந்த துறைநீலாவணை சீர்பாதர் இன மக்கள் மூலம் வெளிப் படுத்தப்பட்டது என்பது வரலாறாகும். இவ்வரலாற்றை அறிய வீரமுனைச் செப்பேடு போன்றனவும் உதவுகின்றன.
வரலாறு: மண்டூர்ப் பகுதியினை கலி 4079 (கி.பி 107) மண்டு நாகன் என்னும் மன்னன் ஆண்டதாகவும், மண்டு நாகன் சாலை என்னும் பெரிய கோட்டை அவனாற் கட்டப்பட்டது என்றும் மட்டக்களப்பு மான்மியம் கூறும்.
இவனே பின் மண்டூர் முருகன் கோயிலைக் கட்டுவித்தான் என்றும் கோயிற் போரதீவு சித்திர வேலாயதர் சுவாமி கோயிலுக்குத் திருப்பணி செய்தான் என்றும் மட்டக்களப்பு மான்மியம் கூறும். இவன் ஆண்ட இடம் மண்டூர் நாகன்சாலை என அழைக்கப்பட்டது.
மட்டக்களப்பு முக்குவதேசம் என வழங்கப்பட்ட போது முக்குவ வன்னிமையின் கீழ் ஆட்சி செய்யப்பட்டது. என அறிய முடிகின்றது. கலிங்க மாகோன் ஆட்சியின் போது நிர்வாகம், பூசை நடைமுறைகள் ஒழுங்கு செய்யப்பட்டன என அறிய முடிகின்றது. முக்குவ வன்னிமையின் கீழ் ஒழுங்கும் நிர்வாகமும் செயற்படுத்தப்பட்டன. சீர்பாத குலத்தினர் முக்கிய பங்கு வகிக்கும் இக்கோயிலின் பரிபாலனத்திற் பெரிய கவுத்தான்குடி வேளான் குடியினர் குடியேற்றப்பட்டதாக அறிய முடிகின்றது.
கதிர்காமம் போன்ற முகப்பு உடைய இவ்வாலயம் அதே ஆலய அமைப்புடன் கட்டப்பட்டுள்ளது. பிற்காலத்தில் முன்வாயில் பெரியதொரு முகப்புடன் அமைக்கப்பட்டுள்ளது. ஆலயத்தின் உட் பிராகாரத்தில் வேடர் வணக்க முறைப்படி சிறிய குமாரத்தன் கோயிலுடன் வெளியே வள்ளி, தெய்வானை கோயில்களும் உள்ளன.
பூசை முறை சின்னக் கதிர்காமம் என அழைக்கப்படும் இக்கோயில் கதிர்காமம் போன்று பூசை நடைமுறை உடையதாகும். இக்கோயில் மூலஸ்தானத்தில் வேல் உள்ளது என்பர். பூசை வேளையில் திரைமூடிப் பூசை செய்யும் இவ்வாலயத்தில் தங்கத்தேர் ஒன்றிலே (சிறிய அளவு) பிரசாசத்தை வைத்து உள்ளே மூலஸ்தானத்தில் தள்ளி விட்டு கப்புகனார் என்ற பூசகர் மூலம் பூசை நடக்கும்.
கப்புகனார் என்ற பூசகர் கதிர்காம ஆலயத்தில் நடைபெறுவதுபோல் துணியினால் வாய் மூடி பூசை செய்யும் நடைமுறையே இங்கு உள்ளது. கதிர்காமம் போன்று வேடர் பூசையும், மரக்கறி, மான் இறைச்சி சேர்ந்த அவிபாகமும் குமரத்தன் கோவிலில் வைக்கும் பூசையும் இடம்பெறுகின்றது. அட்டதிக்குப் பாலகர் பூசையானது வள்ளியம்மையின் சகோதரரும் முருகன் கோயில் பாதுகாவலருமான எட்டு
57

Page 88
வேடர்களாலுமே நடைபெறுகின்றது. இது அதன் தொன்மையும் பாரம்பரியமும் பேணப் படுவதைக் காட்டுவ தோடு வேடர் வழிபாடே முன்பு இருந்தது என்பதற்கும் சான்றாகின்றது. இறுதி நாள் அன்றிரவு கோயிலின் வெளிவீதியில் மடைப் பலி கொடுத்து வெறியாட்டு விழா நடைபெறும். அப்போது தெய்வமாடும் பக்தர் எதிர்காலம் பற்றிக் கூறுவர்.
இங்கு கந்தபுராணம் ஒதுவதில்லை திருச்செந்தூர்ப் புராணமே ஒதப்படுகிறது. சூரன் போர் இல்லை. வள்ளி காவியமே இடம்பெறும். ஆகையினால் இதுவும் புதிய கற்கால வழிபாட்டுத் தலம் என்றே எண்ண இடமுண்டு.
கோயிற் போரதீவு சித்திர வேலாயுதர் கோயில்
அமைவிடம் மட்டக்களப்புக்குத் தெற்கே படுவான் கரையில் (வாவிக்கு மேற்குப்புறம்) 19 மைல் தூரத்தில் மருதநிலச் சூழலில் அமைந்துள்ளது கோயில் போரதீவு கிராமம். ஏனைய முருகன் கோயில்கள் போலவே வானளாவ வளர்ந்த விருட்சங்களின் மத்தியில் இக்கோயில் அமைந்துள்ளது. இங்கும் ஆலய முன்னிலையில் ஒரு பாரிய கடம்பமரம் நிழல் பரப்பி நிற்கிறது. திருக்கோயில் வெள்ளை நாவற்பதி என வழங்குவது போல இத்தலமும் வெள்ளை நாவற்பதி என வழங்கப்படுகின்றது.
மூர்த்தி, தலம், தீர்த்தம் அமையப் பெற்ற இத்திருத்தலம் திருப்படைக் கோயிலாகவும், தேசத்துக் கோயிலாகவும் பெருமை பெற்றது. இப்பகுதியில் பெரிய போரதீவு என்று வேறொரு கிராமமும் உள்ளது. இது கோயில் அமையப் பெற்றமையில் கோயிற் போரதீவு என்ற பெயரைப் பெற்றது.
வரலாறு: மட்டக்களப்பு மான்மியம் கூறும் வரலாறு பின்வருமாறு அமைகின்றது. காலசேனன் என்னும் மன்னன் பெரும் படையுடன் வந்து இங்கு ஆட்சி செய்த மண்டு நாகனை வென்று மண்டூர், கோயில்போரதீவு எனும் இவ்விரண்டு ஆலயங்களையும் இடித்துத் தள்ளினான். பிற்காலத்தில் ஆட்சி பெற்ற மதிசுதன் தொண்டை நாட்டுச் சிற்பிகளை வரவழைத்து இவ்வாலயத்தைப் புதுப்பித் தான் என்று கூறுகின்றது, மட்டக்களப்பு மான்மியம்.
ஐந்து தள தூபி, கோபுரவாயில், தேர் தங்கத்தகடு பூட்டிய கொடித் தம்பம் என்பன இவன் அமைத்தான் எனக் கூறும். ஆனால் இன்று இவை எதுவும் இல்லை.
போரதீவு என்பது போர் முடைநாடு என்று பண்டு வழங்கியது என்பர். கி. பி. 10ஆம் நூற்றாண்டில் தமிழகத்தில் சோழர் ஆட்சி உச்சம் பெற்ற போது ஈழமும் சோழமண்டலத்தின் ஒரு பகுதியாக விளங்கியது, என்பது வரலாறு. அப்போது சோழர், பல சைவ ஆலயங்களைக் கட்டிப் புனரமைப்புச் செய்த போது இவ்வாலயமும் புனரமைப்புச் செய்யப்பட்டது. அதற்கு ஆதாரமாக அதன் கட்டடக் கலை அமைப்பு சோழர் பாணியில்
அமைந்துள்ளது எனலாம்.
58

பிற்காலத்தில் கலிங்க மாகோன் (1215-1255) இலங்கையின் கிழக்குப் பகுதியில் நிலையான ஆட்சியை ஏற்படுத்திய போது கொக்கட்டிச் சோலை, திருக்கோயில், கோயில்போரதீவு ஆகிய இடங்களில் அவனால் திருப்பணி செய்யப்பட்டது. ஆகவே இதுவும் கலிங்க மாகோன் திருப்பணி இடம் பெற்ற கோயிலாகும்.
பூசை நிர்வாகம் ஏனைய திருப்படைக்கோயில்கள் போன்று இவ்வாலயத்திலும் குடி முறையை அடிப்படையாகக் கொண்ட நிர்வாகமும், பூசையும் நடைபெறுகின்றன. அறங்காவலர் பின்வருமாறு தெரிவு செய்யப் படுகின்றனர்.
வண்ணக்கர் - களுவாஞ்சிக்குடி பெரிய கவுத்தன் குடி வேளாளர். கங்கணம் - கோயில் போரதீவு பொன்னாச்சி குடி கோவிலார். முகாமையாளர் - முக்குவ இன பனிக்கனா குடி, பிற்காலத்தில் இப்பகுதியைச் சேர்ந்த சகல குடிகளும் பங்கு கொள்ள வாய்ப்பளிக்கப்பட்டது.
இவ்வாலயம் அமைக்கப்பட்ட காலத்தில் நாதனையில் (வெல்லா வெளிப்பகுதி) முக்குவ வன்னிமையின் ஆட்சி நடைபெற்றது. பின்பு இதனைப் புனர் நிர்மானம் செய்து அமைத்த காரைக்குடி நாகப்பச் செட்டியர் நாதனை வன்னியனிடமும் ஊர்ப் பெரியார்களிடமும் கலந்து ஆலோசித்து திருத்தியதாக கூறுப்படுகின்றது. மட்டக்களப்பின் படுவான் கரையில் ஆலயங்களில் வீர சைவக் குருமார் பூசை செய்யும் போது இங்குமட்டும் பிராமணக் குருமார் பூசை செய்கின்றனர். பூசகருக்கு மானியமாக வீடும் நெற்காணியும் ஒதுக்கப் பட்டுள்ளது. ஆலயத்திற்கு மானியமாக உள்ள 99 ஏக்கர் காணியின் மூலம் பரிபாலனம் நடைபெறுகின்றது.
ஆண்டுதோறும் ஆடிமாசம் பூசை நடைபெறும். திருவிழாவில் பறையன், வண்ணார். தட்டார், முதலியோரும் சேர்த்துக் கொள்ளப் பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. மாகோன் காலத்தில் இத்தகைய நிர்வாக ஒழுங்கு மேற் கொள்ளப்பட்டது. தொழில் ரீதியான ஏற்றத்தாழ்வுக்கு இடம் இல்லை என்பது இதனாற் புலனாகின்றது. பிற்காலத்தில் ஏனைய குடிகளுடன் சிங்களக் குடிகளும் இடம் பெறுவதும் குறிப்பிடத்தக்கது.
இறுதி நாள் இங்கும் வெருகல், சித்தாண்டி போல தீமிதிப்பும், வேடர் பூசையும் இடம்பெறுவது அவதானிக்கத் தக்கது. ஏனைய கோயில்களிற் போன்று மிகத் தொன்மைக்காலச் சான்றுகள் எதுவும் கிடைக்கப் பெறவில்லை. எனவே இது சோழர்காலத்தில் நிருமாணிக்கப்பட்டது என்று கொள்ள முடியும். இக்கோயிலின் மூலத்தானப் படிக்கட்டில் தென்னிந்திய காரைக்குடி நாகப்ப செட்டிகள் உபயம், பிராமணர் பராமரிப்பு என்ற வாசகம்
காணப்பட்டது.
எனவே மாகோன் காலம் புனரமைப்பு நிர்வாகம் செய்யப்பட்ட இவ்வாலயம் பிற்காலத்தில் யாத்திரை நோக்கத்தில் வந்த
இந்துக்கலைக்களஞ்சியம்

Page 89
செட்டியாரால் புனரமைப்புச் செய்யப்பட்டிருக்கலாம் என
ஊகிக்கலாம்.
சித்தாண்டி சித்திர வேலாயுதர் கோயில் அமைவிடம்: கிழக்கிலங்கையில் வெருகலம்பதிக்கு அடுத்த படியாக சித்தாண்டித் திருத்தலம் அமைகிறது. இதுவும் திருப்படைக் கோவிலும், தேசத்துக் கோயிலுமாகும். மட்டக்களப்பு நகருக்கு 13 மைல் வடக்கில் கடம்பு முதலிய பாரிய விருட்சங்களின் மத்தியில் அமைந்துள்ளது. தல விருட்சம் கடம்பமரமேயாகும்.
இன்று அழகிய முன் வாசல் கோபுரத்துடன் கூடிய இவ்வாலயம் பண்டு சிகண்டி முனிவர் வழிபட்ட வேல் உள்ள தலம் என்பர். இவ்வாலயத்தில் கிணறுகள் உள்ளன. இவை மிகப் பழமை வாய்ந்தன எனவும் பண்டு போலவே இன்றும் உள்ளன என்றும் கூறுப்படுகின்றது. கோயிலின் தென்புறம் வள்ளி அம்மனதும் வடபுறம் தெய்வானை அம்மனதும் கோயிலும் அமையப் பெற்றுள்ளன. பிற்காலத்தில் தென்புறம் ஒரு
மாரியம்மன் கோயில் அமையப் பெற்றுள்ளது.
ஆலயத்திற்கு அண்மையில் மேற்குத் திசையில் உப்பாறு என்னும் கங்கை ஒடுகின்றது. இவ்வாற்றுப் பகுதிகளில் அடர்ந்த மரக் காடுகளும் குன்றுகளும் உள்ளன. இது இவ்வாலயத்திற்கு குறிஞ்சித் தன்மையைக் கொடுக்கின்றது.
பாரம்பரியம் ஏனைய முருகன் தலங்களைப் போலவே இங்கும் தலவரலாறும் பாரம்பரியக் கதைகளும் நிலவுகின்றன. இந்தியாவில் இருந்து கால்நடையாக யாத்திரை மேற்கொண்ட சிகண்டி என்னும் முனிவர் இவ்விடத்திற்கு வந்ததும் அதன் அமைதியான சூழலில் ஈடுபட்டு அத்திமர நிழலில் தவம் செய்தார். அவர், அங்கு வேல் ஒன்றினை நாட்டி வணங்கினார். அவர் பல சித்துகள் செய்தமையால் சித்து + ஆண்டி எனஆகி நாளடைவில் இத்தலமும் சித்தாண்டி என அழைக்கப்படலாயிற்று.
வரலாறு: மட்டக்களப்பில் வன்னிமை ஆட்சி நிலவிய காலத்தில் இவ்வாலய நடைமுறைகள் நிர்ணயிக்கப்பட்டன என்பர். இதன் அடிப்படையில் முகமதியர் காலத்தில் களுபண்டார வன்னிமை, குஞ்சுராளை வன்னிமை, நல்ல தம்பி வன்னிமை போன்றோர் இவ்வாலய நிர்வாகத்தை மேற்கொண்டனர்.
மூலத்தானத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கின்ற வேல் சிகண்டி முனிவர் தாபித்தது என்பது ஐதீகம். பிற்காலத்தில் மேலும் இரு வேல்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. இங்கும் ஆதியில் வீரசைவக் குருக்களே பூசை செய்தனர். இவர்கள் பரம்பரையைச் சேர்ந்த குருநாத பரம்பரையினர் பூசை செய்து வந்தனர். அப்பரம்பரை அருகிப்போக 1975ஆம் ஆண்டு முதல் பிராம்மணக் குருக்கள் பூசை செய்கின்றனர்.
இந்துக்கலைக்களஞ்சியம்

பூசை நடைமுறை இக்கோயிலின் வருடாந்த உற்சவம் ஆவணி பிரதமையில் ஆரம்பமாகி பெளர்ணமியில் முடிவடையும். இங்கும் குடி முறைப்படி திருவிழாக்கள் இடம்பெறுகின்றன. வன்னிமைக் குடியின் பிரதிநிதியான தலமை வண்ணக்கர் வன்னிமை என அழைக்கப்படுவர். திருவிழாவில் மயில்கட்டு திருவிழா என்பது மிகவும் பிரபல்யம் பெற்றது. இது முருகன் வள்ளியைத் திருமணம் செய்த சம்பவத்தை உள்ளடக்கியதாகும். இதையொட்டி இவ்வூரில் இத்திருவிழாவன்று பல திருமணங்கள் நடைபெறுவது வழக்கம்.
இறுதிநாள் (16ஆம் நாள்) அருகில் உள்ள குமரன் கோயில் முன்றலிலே தீமிதிப்பு இடம் பெறும்.
நிர்வாகம்: அக்காலத்தில் ஊரிலுள்ள முதியோர்களே வண்ணக்கர்களாகத் தெரிவு செய்யப்பட்டனர். இப்போது அத்தியாகுடி, புதூர்குடி ஆகியவற்றிலிருந்து மட்டும் வண்ணக்கமார்களைத் தெரிவு செய்கின்றனர். ஆனாலும் கங்காணிப் போடிகுடி, புலவனார்குடி, கோயில்குடி, பரமக்குட்டி பட்டியன்குடி, சந்தாப்பணிக்கன்குடி ஆகிய குடிகளைச் சேர்ந்தவர்கள் கோயில் நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர்.
பரம்பரை முறையில் ஆலயத் தொண்டு புரிவோர் கோவிலார் என அழைக்கப்படுவர். கோயில் திருவிழா, நடவடிக்கைகளில் முன்னுரிமையும், முன்னிடும் வழங்கப் படுகின்றது. கோவிலார் பகுதியில் பெண்களே நைவேத் தியத்திற்கு தேவையான அரிசியைக் குற்றி வழங்குவர். இவர்கள் வட்டுக்குத்துவோர் என அழைக்கப்படுவர். அவர்கள் போல பூ எடுப்போர், சங்கு ஊதுவோர், குருக்கள் போன்றோருக்கு வேதனம் வழங்கப்படுகிறது.
வெருகல் சித்திர வேலாயுதர்
அமைவிடம் திருகோணமலை மாவட்டத்தின் தென் எல்லையாகவும் மட்டக்களப்பு மாவட்டத்தின் வட எல்லையாகவும் அமைந்துள்ள இவ்வாலயம் மகாவலி கங்கையின் ஒரு கிளையான வெருகல் ஆற்றங் கரையில் அமைந்துள்ளது.
கதிர்காமத்தில் வள்ளிமலை தெய்வானை மலை அமைந்திருப்பது போல இங்கும் வெருகல் மலை, படிவெட்டுமலை என்பன அமைந்துள்ளன. அங்கு மாணிக்க கங்கை போல இங்கு வெருகல் ஆறு அமைந்துள்ளது. தெய்வ சாந்நித்தியம் நிறைந்த இவ்விடம் உபய கதிர்காமம் என அழைக்கப்படுகின்றது. இது கதிர்காமத்திற்கு யாத்திரை செல்வோர் மட்டக்களப்பு மாவட்டத்தில் முதலாவதாகத் தங்கிநின்று செல்லும் தலமாகும்.
கடம்ப மரத்தைத் தல விருட்சமாகக் கொண்ட இத்தலம் மூலஸ்தானத்தில் வேல் மட்டும் பிரதிஷ்டை செய்யப்பட்ட இடமாகும். குன்றும், குளங்களும், காவுகளும், சோலை
59

Page 90
நிலங்களும் நிறைந்துள்ள இவ்விடம் குறிஞ்சியும் முல்லையும் மயங்கிய அமைப்பாகும்.
பாரம்பரியம்: இங்கும் கர்ணபரம்பரைக்கதைகள் இவ்
வாலயத்தின் தொன்மையைக் காட்டுகின்றன.
இலங்கையின் ஆதிக்குடியினரான குவேனியின் வம்சத்து வேடர்கள் வாழ்ந்த காலத்தில் ஒரு வேல் இருந்தது எனவும் அதற்கே வேடர்கள் பூசை செய்ததாகவும், வழிபட்டதாகவும் கூறப் படுகின்றது. அதன் பின்னரே இவ்வழியே முருகன் தோன்றி ஒரு ஆலயம் அமைக்கும் படி கூறியதாகவும் அதன்படி செட்டியார் இவ்வாலயத்தினைஅமைத்ததாகவும் கூறுவர்.
வரலாறு: நல்லைநாத செட்டியார் எனப்படும் இவர் அருகில் உள்ள இலங்கைத்துறை துறைமுகத்திற்கு வியாபார நோக்கமாக வந்தவராயும் இருக்கலாம். அருகிலே உள்ள இத்துறை இலங்கைத்துறை என அழைக்கப்படுவதால் மிகவும் புராதன காலத்தில் இலங்கையின் முக்கிய துறைமுகமாக இருந் திருக்கலாம். அதன் காரணமாகவே இத்துறை லங்காபட்டினம் என்ற பெயரையும் பெற்றிருந்தது.
கலிங்க நாட்டிலிருந்து இலங்கை வந்து பொலனறுவையினைத் தலைநகராகக் கொண்டு 40 ஆண்டுகள் ஆட்சி செய்த கலிங்க மாகோன் காலத்தில் அவனது உபராசாவாகிய குளக்கோட்டன் தலைமையில் திருகோணமலை நிர்வாகம் பேணப்பட்டது. குளக்கோட்டன் திருகோணமலைப் பிரதேசத்தில் உள்ள ஆலயங்களுக்கு வருமானம் கிடைப்பதற்காக கந்தளாய்க் குளத்தைக் கட்டி பல ஏக்கர் நிலங்களுக்கு நீர்ப்பாசன வசதியை ஏற்படுத்தினான். இப்போது இப்பிரதேசம் கொட்டி யாரம் எனப்படுகிறது.
இவன் இதற்காக சிந்து நாட்டிலிருந்து குடிகளைக் கொண்டு வந்து வெருகல் தொடக்கம் தம்பலகாமம் வரை குடியமர்த்தினான். பூபால வன்னியன் என்பவனை மேற் பார்வைக்கு அமர்த்தினான். ஆலயத்தைப் பராமரிக்கும் பொறுப்பும் அவனிடமே விடப்பட்டது. இவனுடைய நிர்வாகத்தின் கீழ் மல்லிகைதீவு, பள்ளிக்குடியிருப்பு, கங்குவேலி, திருமங்கலாய், இலங்கைத்துறை, கிளிவெட்டி, சம்பூர், தோப்பூர் போன்ற கிராமங்களும் அமைந்தன.
வெருகலுக்குத் தெற்கே உள்ள கதிரவெளி என்னும் இடம் பெருங்கற்கால இடுகாடுகளைக் கொண்ட பழமைவாய்ந்த கிராமமாகும். மேலும் சாசனக் குறிப்பும் பல இங்கு கிடைக்கப் பெற்றுள்ளன. கயிலை வன்னியன் மகாராசன் மகன், பளை சிதம்பரப்பிள்ளை, மட்டகக் களப்பூரார், நீர் கொழும்புக் கரையார் போன்றோர் இக் கோயிலுக்கு உரித்துடையவராகின்றார் என்று கூறும் கல்வெட்டு ஒன்றும் இங்குள்ளது.
60

பூசை நிர்வாகம்: வெருகல் பதி பற்றிய பாடல்கள் பல உள்ளன. இவற்றுள் தம்பலகாமம் வீரக்கோன் புலவர் பாடிய வெருகல் சித்திரவேலாயுதர் காதல் குறிப்பிடத்தக்கது.
சித்திரவேலாயுதர் ஆலயத் தென்புறம் கதிர்காமக் கந்தன் கோயிலும் அதனுள் அட்சரமந்திரம் எழுதப்பெற்ற பேழையும் உள்ளன. கோயில் கிழக்கில் காவடிபிள்ளையார் கோயில் குரன்
கோட்டை என்பன உள்ளன.
கதிர்காமம் போலவே கோயிலும், நடை முறைகளும் இங்கு உள்ளன. சிந்து நாட்டிலிருந்து வந்த மக்களின் குடி வழியினரே நிருவாகத்தைச் செய்தனர். சிந்துநாடு, பெருநாடு, குருநாட்டு மக்களே இப்பகுதிகளில் உள்ளவர்கள். அதோடு வேடர்கள் பூசையும் சம்பிரதாயங்களும் உள்ளன.
கொக்கட்டிச் சோலை தான் தோன்றீஸ்வரம்
அமைவிடம்: லிங்கக் கோயிலான இது இலங்கை யிலுள்ள புராதன முருகன் கோயில்களாக அமையும் திருப்படைக்கோவில் வரிசையில் அமைவதோடு, ஒரு தேசத்துக் கோயிலுமாகும். மட்டக்களப்பின் தென்மேற்கில் சுமார் எட்டு மைல் தூரத்தில் முல்லையும் மருதமும் கலந்த சுற்றாடலில் கொக்கட்டிச் சோலைக் கிராமம் அமைந்துள்ளது.
பாரம்பரியம்: இதன் பூர்வீகம், தல வரலாறு தொடர்பாக பல ஐதீகக் கதைகள் நிலவுகின்றன. லிங்கம் ஒன்று கொக்கு நெட்டி மரத்தில் மறைக்கப்பட்டிருந்தது என்பது தேன் எடுக்கச் சென்ற வேடர்கள் நெட்டி மரத்தை வெட்டிபோது லிங்கம் காணப் பட்டதென்பது வேடர்கள் அந்த லிங்கத்திற்கு கோயில் அமைத்து வழிபடலாயினர் என்பதும் மரபுக் கதையாகும்.
மேலும் ஒரு கதை பண்டைக் காலத்தில் கதிரமலையைத் தரிசிக்கச் சென்ற கொக்கட்டியார், முத்துலிங்கர் என்ற இரு தபோதனர்களில் கொக்கட்டியார் சிவபதமடைய முத்துலிங்கர் அவரைச் சமாதியில் இருத்திச் சென்றார். அவ்விடமே மேற்படி லிங்கம் காணப்பட்ட இடம் எனவும் கூறப்படுகின்றது.
வரலாறு இவ்விடத்தின் வரலாறு பற்றி அறிவதாவது; மட்டக்களப்பை குணசிங்கன் என்னும் மன்னன் ஆட்சி செய்யும் போது கலிங்கதேசத்து இளவரசி உலகநாச்சி தனது சகோதரன் உலகநாதனுடன் புத்ததசனத்தைக் கொண்டு வந்தாள். கூடவே காசிலிங்கத்தையும் எடுத்துக் கொண்டு வந்தாள். அதனைக் கோயிற் குளத்தில் கோயில் ஒன்று அமைத்து பிரதிஷ்டை செய்தாள் என மட்டக்களப்பு மான்மியம் கூறுகின்றது.
சோழர் காலக் கட்டிட அமைப்பைக் கொண்ட இவ்வாலயம் பொலனறுவை சிவாலயம் போன்றது. உலக நாச்சி காலத்தில் கட்டப்பெற்று சோழர் காலத்திலும் மாகோன், குளக்கோட்டன்
இந்துக்கலைக்களஞ்சியம்

Page 91
காலத்திலும் புனரமைக்கப்பட்டிருக்கலாம் எனக் கருத முடிகின்றது. உலகநாச்சி 106 குகக் குடும்பங்களையும் 30 சிறைக்குடும்பங்களையும் வரவழைத்துக் குடியமர்த்தினாள். அவள் இருந்து ஆட்சி செலுத்திய இப்பிரதேசம் மண்முனை ராட்சியம் எனப்பட்டது. இவ்வழி வந்த குடிகளாக தான்தோன்றீஸ்வர ஆலய முன்னணிக் குடிகளில் ஒரு குடியினர் உலகிப்போடி (உலகநாச்சிகுடி) குடியாராவர். தந்த புரத்திலிருந்து பிராமணப் பெண்ணொருத்தி புத்தரின் தசனத்தை தனது கூந்தலுக்குள் மறைத்து வைத்து கொண்டுவந்து மேகவர்ணனிடம் கொடுத்தாள் என மட்டக்களப்பு மான்மியம் கூறும். உலக நாச்சி கதையிலும் மகாவம்சம் கூறும் பிராமணப் பெண் கதையிலும் இழையோடுகின்ற ஒற்றுமையையும் நாம் நோக்க வேண்டும்.
மட்டக்களப்பு மன்னனான தர்மசிங்கன் என்பவன் கலிவருடம் 4060இல் (கி.பி.958) சோழநாட்டு சிற்பிகளை வரவழைத்து மூன்று தேர்களைச் செய்தான் என்பது மட்டக்களப்பு மான்மியம் கூறும் வரலாறு. தற்போது இரண்டு தேர்கள் இவ்வாலயத்தில் இருந்தாலும் ஒரு தேர் கடலில் மூழ்கிய கதை இன்னும் இப்பிரதேச மக்களிடம் நிலவி வருவதிலிருந்து மூன்று தேர்கள் இருந்தமை உறுதியாகின்றது.
குளக்கோட்டன் மாகோன் இக்கோயிலுக்குச் செய்த தொண்டுகள் பற்றிய விபரம் திருப்படைப் பத்ததியிற் கூறப்பட்டுள்ளது.
சிர்மேவு இலங்கைப்பதி வாழ்வு தரு செல்வமும்
SL S LSSLLSSLLS S S S S S S S S SS SSLSLL LLLSS SSLSS SSLSLL SL SLLLL SSLSSS LSS L S SLLSLL SS SS SS SS SLLSS SLL LLLL SLLLS L S S சிவனேச இரு சமயமும். என்ற இப்பாடலில் குளக்கோட்டன் தொண்டு செய்த ஏழு கோயில்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. களுதேவாலயக் கல்வெட்டு என்பது களுதாவளைக் கோயிற் கல்வெட்டுப் பாடலாகும். இதில் மனுநீதி கண்ட குளக்கோட்டு இராமன் என்று கூறப்பட்டுள்ள பெயரானது குளகோட்டன் பற்றிய ஐதீகத்திற்கு ஒரு சான்றாக அமைகின்றது.
திருப்படைப்பத்ததியும் கொக்கட்டிச்சோலை ஆலய நடைமுறையும் குளக்கோட்டனைப் போலவே மாகோன் பற்றிய குறிப்புக்களும் திருப்படைப் பத்ததியில் தெளிவாகக் காணப்படுகின்றன. மாகன் கலிங்க தேசத்திலிருந்து வந்து அணிகங்கனைக் கொன்று தோப்பாவையைக் கைப்பற்றி படையாட்சி வன்னியருக்குக் கொடுத்து மலையாள முக்குவரை வரவழைத்து மட்டக்களப்பிற் குடியமர்த்தி லிங்கக் கோட்பாடும் சைவசமயமும் சிறக்கச் செய்தமையை இது கூறுகின்றது.
மாகோனால் உருவாக்கப்பட்ட ஆலய நடைமுறைகள், குலவிருது போன்றன இன்றும் இப்பிரதேச மக்களிடம் ஆழமாக வேரூன்றி உள்ளதைக் காணமுடிகின்றது.
இந்துக்கலைக்களஞ்சியம்

கண்டி மன்னர்கள் காலத்தில் அவர்களுடைய தொடர்புகள் காணப்பட்டமைக்கும் இத்திருப் படைப் பத்ததியில் சான்றுகள் காணப் படுகின்றன. ஏனைய திருப்படைக்கோயில்கள் எனக் குறிப்பிடும் முருகன்கோயில்களை விட திருப்படைப்பத்ததி முறை இங்குதான் ஆழமாக வேரூன்றி உள்ளமை குறிப்பிடத்தக்க ஒரு விடயம்.
பூசை நடைமுறைகள் : இவ்வாலய நடைமுறைகளில் பூபால கோத்திர வன்னிமை, இராசவன்னிமை என்பன முக்கியம் பெறுகின்றன.ஆலயச் சடங்கில் தேசத்து வன்னிமை தலைமை தாங்குவது மரபு. கோயிற் கருமங்களை நடாத்துவது வன்னிமைகளின் பொறுப்பாகும். மிகத் தொன்மையானதாக அமைந்துள்ள வண்ணக்குமுறை இன்றுமே மரபு வழியாகத் தொடர்வது முக்கியமாகும்.
உலகநாச்சி குடி (உலகிப் போடிகுடி), காலிங்க குடி, படையாட்சிக்குடி சார்ந்தவர்கள் முதன்மை வண்ணக்கர் ஆவர். ஆலயத் தொழும்புகளும் திருப்படைப்பத்ததியில் கூறிய படியே நடை பெறுகின்றன. தேசத்து வயல்களில் சென்று நெல் சேகரிக்கும் வழக்கம் இன்றும் நடைமுறையில் உள்ளது. மட்டக்களப்புப் பிரதேசத்திலே தேரோட்டம் நடைபெறும் ஒரே கோயில் இதுவாகும். ஆவணி முதலாம் தேதி கொடியேறி பூரணையை அடுத்தநாள் தேரோட்டம் நடைபெறும். சூகர வேட்டை, குடுக்கை கூறல் என்பவற்றுடன் நிறைவுறும். தேசத்து வன்னிமை மற்றைய வன்னிமைகள், வண்ணக்குமார் இருக்க செட்டிகள் வேளாளர்கள் கட்டி அடிக்கப்பட்டு பின்னர் முட்டி (குடுக்கை) கூறப்படும். கலிங்க மாகனினால் உருவாக்கப்பட்ட நடைமுறைகளில் விசேடமாக கஞ்சி முட்டிகள் வைத்து வழிபடல், தேரோட்டம் போன்றன பூரி ஜகந்நாத ஆலய நடைமுறைகளுடன் ஒத்துப்போவது. அங்கு காணப்படும் மகா ரசாதம் எனப்படும் சோறுகறி முட்டியில் வைத்து வழிபடும் முறையும் தேரோட்ட திகதியும் அனந்தவர்மன் சோடகங்க தேவன் எனும் கலிங்க மன்னனாலே இங்கு ஆரம்பிக்கப்பட்டன. திருப்படைப் பத்ததியிலே முக்குவ குடிகள் முதலாக 14 குடிகளின் விபரம் கூறப்படுகின்றது. இப்பகுதி முறைப்படி தான்தோன்றீஸ்வரர் கோயில் தொண்டுகள் தொழும்புகள் நிதிவிடயங்கள் என்பன நடைபெற்றுக் கொண்டு வருவதும் இதன் தொன்மைக்குச் சான்றாகும்.
திருப்படைக் கோவில் பற்றிய பிற தகவல்கள்
தாந்தாமலை முருகன் ஆலயம்: இக்கட்டுரையில் இடம்பெறும் ஆறுமுருகன் கோயில்களும் ஒரு லிங்கக் கோயிலும் திருப்படைக்கோயில்கள் என பண்டு தொட்டு இன்று வரை நடைமுறையில் தொடர்ந்து வருகின்றன. எனினும் சுமார் 200 வருடங்களுக்கு முன் உருவாக்கப்பட்ட தாந்தா மலை பூரீ முருகன் கோயிலும் இன்று திருப்படைக் கோயில் தேசத்து நடை முறைகளுடனே நடைபெறுகின்றது.
61

Page 92
குன்றுதோறும் குமரன் முருகனுக்கு உரிய குறிஞ்சி நிலச் சுற்றாடலில் குன்றும் சுனையும் காடும் அமையப் பெற்ற இவ்விடம் தொன்மையான ஒரிடமாகும். மிகவும் காடடர்ந்த நிலையில் இவ்விடம் சுமார் 200 வருடங்களுக்கு முன் கண்டுபிடிக்கப்பட்டது. ஏற்கனவே புகழ் பரப்பிய இடமாக இருந்து அழிவுற்ற இடமாகும். கொக்கட்டிச் சோலை, தான்தோன்றீஸ்வரர், பொக்கிஷமலை என்ற சிறப்புப் பெயரால் பண்டு அழைக்கப்பட்டதனால் இதுவும் கொக்கட்டிச் சோலையின் பழமை பெற்றது என்பது தெளிவாகிறது. இக்கோயில் கண்டு பிடிக்கப்பட்ட போது தேற்றா மரத்தின் கீழ் உள்ள விநாயகர் மட்டுமே அறியப்பட்டார். பின்னர் முருகன் கோயிலாக விரிவடைந்தது. இது சின்னக் கதிர்காமம் எனவும் அழைக்கப்படும்.
திருப்படைக் கோவில்களில் தொன்மைப் பாரம் பரியமும் ஒன்றுபட்ட தன்மைகளும் திருப்படைக் கோயில்கள், வேல் வழிபாடு தொடர்பாக ஒரு நீண்ட காலப் பாரம்பரியம் ஈழத்தில் குறிப்பாக மட்டக்களப்பில் நிலவுகின்றது. தமிழகம், ஈழத்தில் ஏனைய இடங்கள் போலல்லாது கிழக்கில் சற்று
வித்தியாசமான நடைமுறைகள் பேணப்பட்டுகின்றன.
பண்டு தொடக்கம் ஆதித்திராவிட பாரம் பரியத்துடன் கூடிய பூசை முறைகள் இங்கு காணப்படுகின்றன. வேடர் பூசை முறைகளும், பாரம்பரியங்களும் சேர்ந்து நடைபெறுவதும் இன்னோர் முக்கிய விடயமாகும். பிராமண நடைமுறைகள் எதுவுமே இங்கு இடம் பெறா திருப்பதுடன் திருப்படைப் பத்ததியில் கூறியுள்ள நடைமுறைகளுக்கமைய சகல விடயங்களும் இடம்பெறுவதும் குறிப்பிடத்தக்க ஓர் அம்சமாகும். இத்திருப்படைக் கோவில்களின் வரலாறு. பூசை நிர்வாகம் நடைமுறை போன்ற பல விடயங்கள் ஒத்த
பண்புடையனவாய் உள்ளன. அவை பின்வருமாறு அமையும்.
1. திருப்படைக் கோவில்கள் அனைத்துமே திராவிட முறையில்
வந்த வேல் வழிபாட்டுத் தொடர்ச்சியை உடையன.
2. பெரும்பாலான திருப்படைக் கோவில்கள் கடம்ப மரத்தையும்
அதன் அடியில் அமையப்பெற்ற வேலையும் கொண்டன.
3. அதிகமான திருப்படைக் கோவில்கள் குன்றின் மேல் அமையப் பெற்ற திறந்த வெளிக் கோயில்களாக ஆரம்பிக்கப்பட்டுப் பின்னர் கோயிலாக அமையப் பெற்றன.
4. மூடிய பெட்டியில் யந்திரம் வைத்து வழிபடும் முறையே
பெரும்பாலான கோயில்களில் நடைமுறையில் உள்ளது.
5. வேடர் பாரம்பரிய முறைப்படி குமாரத்தன் கோயில் போன்றன அமையப் பெற்று வேடர் பூசை முறைகளும் அமைப் பெற்றன.
62

6. மூலஸ்தான கதவு திரைச்சீலையால் மூடி இருக்க பூசாரி வாய்கட்டிப் பூசை செய்வதே பெரும்பாலான கோயில்களில் வழக்கமாகும். இது சங்ககால முறைகளின் தொடர்ச்சியும் கதிர்காமத்தின் நடைமுறைகளுமாகும்.
7. வேடர் பாரம்பரிய முறைப்படி தினைமா, தேன், மானிறைச்சி, மரக்கறிச் சோறுபடைப்பதும் திருப்படைக் கோயில்களிற் காணப்படும் கதிர்காமத்தை யொட்டிய நடைமுறையாகும்.
8. கதிர்காமத்தையொட்டி உபயகதிர்காமம், சின்னக் கதிர்காமம் என்று அழைக்கப்படும் பெயர் மரபுகளையும்
960)LL 60T.
9. மேற்கூறிய மரபு முறைகளுடனும் பண்டைய வழிபாட்டுச் சடங்குகளுடனும் தொடர்ச்சியாக வரும் திருப்படைக் கோயில்களில் பிராமண நடைமுறைகள் சேர்ந்து தற்போது மேலும் பல நிகழ்வுகள் கூடிக் கொண்டு போவதையும் காண முடிகின்றது.
நிறைவுரை
திருப்படைக் கோவில் என்பது மட்டக்களப்பு மாவட்டத்திற்கே (அம்பாறையையும் உள்ளடக்கிய பண்டைய மட்டக்களப்பு மாவட்டம்) உரித்தான ஒரு தனித்துவமான பண்பாகக் காணப்படுகின்றது. பண்டைய மன்னர்களாலும் வன்னிமை களாலும் மானியங்கள் நிவந்தங்கள் வழங்கப்பட்டு, பேணப் பட்டு வந்த இக்கோயில்கள் திருப்படைக் கோவில்கள் என்ற சிறப்பையும் பெற்றனவாகும்.
தமிழகத்தில் முருகனுக்கு ஆறுபடை வீடுகள் அமைந்தது
போல மட்டக்களப்பில் இத் திருப்படைக் கோயில்கள் ஆறுபடை
வீடுகள் என அமையப் பெற்றுள்ளன. அவை அனைத்தும்
கதிர்காமத்தை மையமாகக் கொண்டே காணப்படுகின்றன.
கதிர்காமத்தில் நடைபெறும் பூசை, நடைமுறைகள் போன்றே இத்
திருப்படைக் கோவில்களிலும் நடைபெறுவது கவனத்துக்குரியது.
(த.க.)
திருப்பதி
பதி என்னும் சொல்லின் பொருள் ஊர் என்பதாகும். தெய்வத் தொடர்பான பெயர்களுக்கு கெல்லாம் திரு என்னும் அடைமொழியைச் சேர்ப்பது தமிழ் மரபாகும். எனவே திருப்பதி என்பது பொதுவாக தெய்வத் தன்மையுடைய ஊர்கள் எல்லாவற்றையும் குறிக்கும் என்றாலும், சிறப்பாக திருமாலுக்குரிய ஊர்களை நூற்றெட்டுத் திருப்பதிகள் என்று குறிப்பிடுவது வழக்காயிற்று. இவற்றுள் பெருஞ்சிறப்பு வாய்ந்ததாக விளங்குவது திருவேங்கடமலை ஆகும். இன்று ஆந்திர மாநிலத்தைச் சார்ந்ததாக இருப்பினும் பண்டைய
இந்துக்கலைக்களஞ்சியம்

Page 93
வரலாற்றுச் செய்திகளும், இலக்கியங்களும் அது தமிழகத் திருமலையே என்பதைத் தெளிவாக உணர்த்துகின்றன. திருவேங்கடமலை உள்ள பகுதியை தொண்டைநாட்டின் வடபகுதி என்று கூறுவார்கள்.
வேம்' என்றால் மகா பாபங்கள், கடம் என்றால் பொசுக்குதல். தரிசனம் செய்பவர்களின் சகல பாவங்களையும் பொசுக்கிவிடுவதால் வேங்கடம் எனப்பட்டது. ஆதி சங்கரர் திரு வேங்கட மலைக்கு யாத்திரை செய்த போது இங்குள்ள ஆண்டவனை வழிபட்டு வேங்டேசுவரன் என்று பெயரிட்டதாகக் கூறப்படுகிறது. திருவேங்கடப் பதியில் கோயில் கொண்டு எழுந்தருளியிருக்கும் பெருமானின் திருவுருவ அமைப்பு ஒரு அரிய காட்சியாகத் தோன்றுகிறது. வைணவத் திருக் கோயில்களில் பெருமானின் திருவுருவம் கருவறைச் சுவரை ஒட்டிக் காட்சி தரும். ஆனால் இத் திருவேங்கட நாதர் இடை நடுவே காட்சி தருகிறார். அவ்வாறு காட்சி தரும் திருவுருவத்தில் சிவ சின்னங்கள் (ஆயுதங்கள்) காணப்படும். நவராத்திரி காலத்தில் இங்கு சக்திக்கு விழாக் கொண்டாடப்படுவதும் மார்கழி மாதத்தில் திருத்துழாய் கொண்டு அருச்சனை செய்வதற்குப் பதிலாக வில்வ இலைகளைக் கொண்டு அருச்சனை செய்வதும் நோக்கற்பாலது. சைவசமயத்தைச் சார்ந்த சோழர்கள் முருகப்பெருமானே இவ்வுருவம் எனக் கருதி
வழிபட்டனர் என்றுங் கூறப்படுகின்றது.
கருணையே உருவான வேங்கடநாதர் திருக் கோயில் கொண்டு விளங்கும் இத் தலத்திற்கு ஆதிசேஷனே மலையாகக் கிடந்ததால் சேஷாசலம் என்றும், வேதம் நிறைந்த இடமாதலால் வேதாசலம் என்றும், கருடனால் அமைக்கப்பட்டதால் கருடாசலம் என்றும், அஞ்ஞனாதேவிக்கு ஆஞ்சனேயர் உதித்த இடமாதலால் அஞ்சனாத்திரி என்றும், ஆனந்த நிலையம் அமைந்ததால் ஆனந்தகிரி என்றும், ஏழு சிகரங்கள் கொண்டதால் ஸப்தகிரி என்றும் அழைக்கப்படுகிறது. லட்சுமி நாதனின் நகரம் - பூரீ பதிபுரம் - திருப்பதி ஆகியது. இப்பெயரே இன்று நிலைத்துவிட்டது.
புராண வரலாறு
இவ் வேங்கடாசால மகாத்மியத்தை பவிஷ்யோத்ர புராணம், வராக புராணம், பத்மபுராணம், கருடபுராணம், பிரம்மபுராணம், மார்க்கண்டேய புராணம், வாமன புராணம், பிரும்மோத்ர புராணம், கந்தபுராணம், ஆதித்ய புராணம், ஹரிவம்சம் போன்ற பல புராணங்கள் விதந்து கூறியுள்ளன.இப்புராணங்களில் கூறப்பட்ட விஷயங்களை எல்லாம் கிரகித்து 15ஆம் நூற்றாண்டில் திருப்பதியில் வாழ்ந்த ராமானுஜய்யன் என்பார் வேங்கடாச்சல மகாத்மியம் என்னும் ஒர் நூலை இயற்றினார்.
திரு வேங்கட மலையின் அமைப்பு பெரிய அரவத்தைப் (பாம்பை ) போல் நீண்டு நிமிர்ந்து படம் விரித்தாற் போன்று அமைந்து விளங்குகின்றது. இதற்குப் புராணத்தில் ஒரு வரலாறு
இந்துக் கலைக்களஞ்சியம்

கூறப்படுகிறது. திருமால் தமிழகத்தின் எல்லையில் கோயில் கொள்ள விரும்பியபோது ஆதிசேஷனை அங்கு மலையாக அமையும்படி கட்டளையிட, ஆதிசேஷனும் அதற்கு உடன்பட்டு எழிலார்ந்த மலையாக அமைந்து காட்சியளித்தான். இம் மலையின் மீது திருமால் விக்கிரகமாக உருக்கொண்டு எழுந்தருளினார் என்பது புராண வரலாற்றுச் செய்தி. திரு வேங்கடமலை மீது புட்கரணி தீர்த்தம் என்னும் திருக்குளத்தின் மேற்பால் திரு வேங்கடநாதப் பெருமான் கோயில் கொண்டெழுந் தருளியுள்ளார். திரேதா யுகத்தில் கேஸரியின் மனைவி அஞ்சனாதேவி புத்திரசந்தானம் வேண்டி மதங்க மகரிஷியை வேண்ட அவரது வாக்குப்படி சேஷாசல புண்ணிய சேத்திரம் வந்து தவம் புரிந்து மிகப் பராக்கிரமசாலியாகிய அனுமனைப் பெற்றாள். இப் பர்வதமே அஞ்சனாத்ரி.
சீதையைத் தேடி அலைந்த இராமர் இந்த வேங்கடாசலம் அருகில் வந்த போது ஆஞ்சனேயரின் தாய் அஞ்ஞனாதேவி வேண்டுகோளுக்கிணங்கி சுவாமி புஸ்கரணி கரையில் தங்கினார்.
இத்திருமலையில் தான் தசரதச் சக்கரவர்த்திக்கு ராஜகுரு வசிஷ்டர் மந்திரோபதேசம் செய்தார் என்பதும் ஒரு புராண சாரமே.
அடுத்து முக்கியமான புராணக்கதை பவியோத்ர புராணத்திலுள்ள பூரீநிவாச பத்மாவதி திருமணம். ஆகாசராஜனின் புதல்வியான பத்மாவதி, பூரீநிவாசனை சந்திக்க காதல் மலர்ந்தது. ஆயினும் திருமணத்திற்கு வேண்டிய பணம், நகை எதுவும் இல்லாத நிலையில் குபேரனிடம் கை நீட்டி கடன் பத்திரத்தில் கையெழுத்திட்டு விட்டார். ஒரு கோடி பதினான்கு லட்சம் வராகன்கள் கடன், அதற்கு ஆண்டுக்கு வட்டி ஒரு லட்சம் வராகன். திருப்பி கலியுக அந்தியில் அசலைத் திருப்பி விடுவது என்று சம்மதித்து ஒப்பமிட்டனர். இதற்கு பிரும்மா சாட்சி. ஸ்வாமி புஸ்கரணி கரையிலுள்ள இரு அரச மரங்களும் இரண்டாவது சாட்சி. இப்போது கோடி கோடியாக மக்கள் கொண்டு வந்து கொட்டி உண்டியை நிரப்புகிறார்களே அவை அனைத்தும் பூரீநிவாசன் குபேரனிடம் பட்ட கடனை அடைக்கத்தான் என்று பெளராணிகர்கள் கூறுகிறார்கள். ஆதி சங்கரர் திக்விஜயத்தில் திருமலை வந்து கருவறைப் பீடத்தில் தன் ஆகர்ஷண யந்திரத்தை ஸ்தாபித்து விட்டார். செல்வம் கொழிக்க இதுவே காரணம் என்ற கருத்தும் கூறப்படுகிறது.
பத்மாவதி, பூரீநிவாசன் திருமணம் முடிந்துவிட்டது. இருக்க வீடுமில்லை. ஆகாசராஜன் மருமகன் ஊரார் வீடுகளில் காலம் தள்ளுகிறான் என்ற நிந்தனைக்கு இடமாயிற்று என்பதனை உணர்ந்த தொண்டைமான், சேஷாத்ரி பர்வதத்தில் கிழக்கு முகமாக ஆனந்த நிலையம், இருபிராகாரங்கள், வைகுண்ட துவாரம், பரிமளகிரகம், கல்யாண மண்டபம், ஆஸ்தான மண்டபம், தானிய சாலை, மடப்பள்ளி பூந்தோட்டம், இவ்வளவையும் அமைத்துக் கொடுத்தான் என இப் புராணம் மேலும் கூறுகிறது.
63

Page 94
வைணவத் தொண்டனான தொண்டைமான் பேரரசனாகத் திகழ்ந்தான். இவன் செய்து வந்த அறப்பணிகளுக்கு இடையூறாகப் பல பகைவர்கள் தோன்றினர். அப் பகைவர்களை அழிக்கும் பொருட்டு பூரீநிவாசன் தன் சங்கு, சக்கரங்களை தொண்டைமானுக்கு அளித்தான் எனத் திருப்பதி புராண வரலாறு கூறுகிறது. தொண்டைமானுக்கு சங்கு, சக்கரங்களை அளித்த பூரீநிவாசன் இன்றும் அவ்வாயுதங்கள் இல்லாமலேயே இங்கு கோயில் கொண்டுள்ளார். திருப்பதி வேங்கடேசனின் நெற்றியில் பெரிய திருநாமம்; கீழே மோவாய்க் கட்டையில் வட்ட வடிவில் வெண்ணிறம் கொண்ட நாமம் போன்ற குறி. அதன் பின் சுவையான கதை ஒன்றுண்டு. வெங்டேஸ்வரப் பெருமானுக்கு கைங்கரியம் செய்து வந்தவர் அனந்தாழ்வார். இவர் தான் பராமரித்து வந்த பூஞ்சோலைக்கு நீர்ப் பாய்ச்ச வசதியாக இருக்கும் எனக் கருதினார். அதைத் தானே செய்ய வேண்டும் என விரும்பிய அவர் மண்ணைத் தோண்டி அப்புறப்படுத்த மனைவியை அழைத்தார். அவ்வம்மையோ பூர்ண கர்ப்பிணி. கணவன் வெட்டிக் குவித்த மண்ணை பெருமூச்சுடன் ஒவ்வொரு கூடையாய்க் கொண்டு கொட்டி வந்தாள். அவளது பரிதாப நிலை கண்டு பரந்தாமன் உதவ வந்தான். ஆனால் அனந்தாழ்வார் மறுத்துவிட்டார். இருப்பினும் மலைச் சரிவின் மறைவில் சென்று அம்மையிடம் ஆழ்வார் அமர்த்தியதாகக் கூறி கூடையைச் சுமக்கும் வேலையில் இறங்கினார். மூச்சு திணறத் திண்டாடிய தன் மனைவி எப்படித் துரிதமாகக் கொட்டுகிறாள் என்று வேவுபார்த்த அனந்தாழ்வாருக்கு தன் கைங்கரியத்தில் பங்கு போடுகிறானே என்ற கோபம் மேலிட்டது. கையில் இருந்த மண்வெட்டியை அவன் மீது வீசி எறிய, அது அவன் மோவாயைத் தாக்கியது. ரத்தம் கொட்ட அவன் மறைந்துவிட்டான். மறுநாள் திருமலையான் கர்ப்பக் கிரகத்தில் நுழைந்த அனந்தாழ்வாருக்கு பெரும் அதிர்ச்சி. அங்கு திருமலையான் மண்வெட்டியை எறிந்த காயத்துடன் உதிரம்பெருகக் காட்சியளித்தார். உண்மை நிலையைப் புரிந்த கொண்ட ஆழ்வார் அப்படியே பச்சைக் கர்ப்பூரத்தை அப்ப, காயம் ஆறியது. அதுவே மூலவரின் மோவாயில் உள்ள வட்ட வடிவ வெண்பொட்டு என்று கூறப்படுகிறது.
திருப்பதி வேங்கடேஸ்வரருக்கு பக்தர்கள் தம் சிகையைக் காணிக்கையாக வழங்கும் வழக்கம் இன்றும் நிலவிவருகிறது. நம் சர்வ உடமைகளையும் ஸ்வீகரித்துக் கொண்டு விட்டான் திரு வேங்கடத்தான் என்பதைக் காட்ட மொட்டையடிக்கும் வழக்கம் ஏற்பட்டது என்றும் கூறுவார்கள். இதே கருத்து திருவேங்ட உலாவில் “வந்தவரைத் தன்னடிமையாக்கி தலைமயிர்
கண்டிப்பான்’ என்ற பதங்களில் புலனாகிறது.
இலக்கியச் செய்திகள்
தொல்காப்பியத்தில், திரு வேங்கடத்தைப் பற்றிய குறிப்பு
உள்ளது.
64

வடவேங்கடத் தென்குமரி ஆயிடைத்
தமிழ் கூறு நல்லுகத்து தமிழ்நாட்டின் எல்லைகளைத் தெளிவுபடுத்து மிடத்து வடக்கே வேங்கடம், தெற்கே குமரி என்கிறது. சங்கப்புலவர்களின் ஒருவரான மாமூலனார்,
"மழபுலம் வணங்கிய மாவண்ணிபுல்லி
விழவுடை விழுச்சீர் வேங்கடம் 99 (மாமூலனார்)
விழாக்கள் உடைய திருவேங்கடம் என்ற அவரது கூற்று அங்கு ஒர் ஆலயம் சிறப்புடன் விளங்கியிருந்ததைப் புலப்படுத்து கின்றது. மேலும் தாயம் கண்ணன், காட்டூர் கிழார் மகன் கண்ணன், நக்கீரன் ஆகியோரின் திருவேங்கடம் பற்றிய குறிப்புக்கள் அகநானூற்றில் இடம் பெற்றுள்ளன. பெரும்பாணாற்றுப்படையிலும் திருவேங்கடம் பற்றிய குறிப்புக்கள் இடம் பெற்றுள்ளன. ஐம்பெருங் காப்பியங்களுள் ஒன்றாய் பெருமைப்படுத்தப்பட்ட சிலப்பதிகாரத்திலும் திருவேங்கடத்தைப் பற்றிய செய்திகள் உண்டு.
வீங்கு நீரருவி வேங்கட மென்னு மோங்குயர் மலையத் துச்சி மீமிசை விரிகதிர் ஞாயிறும் திங்களும் விளங்கி யிரு மருங் கோங்கிய விடை நிலைத் தானத்து நன்நிற மேக நின்றது போலப் பகையணங் காழியும் பால்வெண் சங்கமும் தகை பெறு தாமரைக் கையிலேந்தி நலங்கிளரார மார்பிற் பூண்டு பொலம் பூ வாடையிற் பொலிந்து தோன்றிய செங்க ணெடியோ னின்ற வண்ணமும்
(சிலம்பு காடு காண் காதை)
இப் பாடல் திருவேங்கட மலையின் இயற்கை எழிலையும் அங்கு கோயில் கொண்டுள்ள பெருமானின் தோற்றப் பொலிவையும் துல்லியமாக எடுத்துக் கூறுகிறது.
ஆழ்வார்கள் வேங்கடவன் செளந்தரியத்தில் ஆழ்ந்து, அமிழ்ந்து பருகிப் பாக்களாய் உமிழ்ந்திருக்கிறார்கள். பன்னிரு ஆழ்வார்களில் மதுரகவி ஆழ்வார், தொண்டரடிப் பொடியாழ்வார் ஆகிய இருவரையும் தவிர ஏனைய பத்து ஆழ்வார்களும், வேங்கடவன், கழல்பணிந்து பாடிப் பரவியவர்கள். முதலாழ்
வார்களில் முதன்மையானவர் பொய்கையாழ்வார்.
"விண்ணகத்தாய் மண்ணகத்தாய் வேங்கடத்தாய் நால் வேதப் பண்ணகத்தாயே ” என்கிறார்.
மேலும் ஏகாதசிக்கு அடுத்த நாளான துவாதசி சிறப்பான தினம் என்பது பொதுப்படை பொய்கையர் காலத்தே தையலார்
இந்துக் க்களஞ்சியம்

Page 95
கொண்டாடிய விழாவின் தூபப் புகையினால் இவ்வூர் வானம் மூடித் தாரகைகளை மறைத்தன என்கிறார். பேயாழ்வார் கோபாலன் உறையும் இடங்கள் பற்றிக் குறிப்பிடும் போது பாற்கடல், வேங்கடம், பாம்பு, பனி, விசும்பு, கடல், தாமரை, பக்தர்மனம் என்று கூறித் திரு வேங்கடத்திற்குத் தனி ஏற்றம் அளிக்கிறார்.
ஏழாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் வாழ்ந்தவர் திருமழிசை யாழ்வார். இவர் தன் திருச்சந்த விருத்தம், நான்முகன் திருவந்தாதி இரண்டிலுமே வேங்கடவனை வாயாரப் புகழ்ந்துள்ளார்.
வேங்கடமே விண்ணோர் தொழுவதும் மெய்ம் மையால் வேங்கடமே மெய்வினை நோய் தீர்ப்பதுவும் வேங்கடமே தானவரை வீழத்தன்னாழி படை தொட்டு வானவரைக் காப்பான் மலை
(நான் முகன் திருவந்தாதி: 48) இவ்வாழ்வார் காலத்தில் திருமலை திருவிழாவால் திளைத்ததை அறியக் கூடியதாக உள்ளது. நம்மாழ்வார் நமது தீராப்பிணியைத் தீர்த்து வைக்கும் வைத்தியன் இவர் என்கிறார்.
ஒயு மூப்புப் பிறப்பிறப்புப் பிணி வீயுமாறு செய்வான் திருவேங்கடத்தான்
(திருவாய் மொழி)
பரமனுக்கு திருஷ்டி ஏற்பட்டு விடாமல் பல்லாண்டு பாடியவர் பட்டர் பெரியாழ்வார். வேங்கடத்தானைப் பார்த்து வெங்கான கத்திலே இடைக்கன்றி பின் குடையும், செருப்பும் கொள்ளாதே சென்றாயே என்று தானும் உருகி படிப்போரையும் உருகவைத்தவர் பெரியாழ்வார். மதுசூதனன் கைத்தலம் பற்றிய ஆண்டாள் வேங்கடவனை நினைத்து அனலில் இட்ட வெண்ணெயாய் உருகுகிறாள். இவள் தன் ஆவிதங்க வேங்கடத்து செங்கண் மாலுக்கு தூது அனுப்புகிறாள். ஒரு பெண்கொடியை வதை செய்தான் என்று உலகத்தார் தூற்றுவார்கள் என்று பயமுறுத்துகிறாள். குலசேகராழ்வாருக்கு ஒரே ஒரு ஆசை. திருவேங்கடத்தில் குருகாய், மீனாய், செண்பகமாய்ப் பிறக்க வேண்டும்; அம் மலையில் ஏதேனும் ஒன்றாகிவிட வேண்டும் என்று துடிக்கிறார்.
வைணவத்தை துளிரச் செய்தவர்கள் ஆழ்வார்கள். ஆனால் அதை முனைப்படுத்தி தீவிரமாக்கிய பணி ஆச்சாரியர், கீர்த்தனாசாரியர் எனப்பட்டவர்களுக்கே உரியது. இவர்களுள் நாத முனி, இராமனுஜர், புரந்தரதாசர், சங்கீத மும்மணிகளான சியாமா சாஸ்திரிகள், திருவையாறு தியாகையர், திருவாரூர் முத்துசாமித் தீட்சிதர் ஆகியோரைக் குறிப்பிடலாம். இவர்கள் ஏழுமலையானைப் பாடிய கீர்த்தனைகள், பிரபந்தங்கள், உலா
என்பவை மனம் கொள்ளத்தக்கவை.
இந்துக் கலைக்களஞ்சியம்

ஆலயம்
மூர்த்தி, தலம், தீர்த்தம் என்ற மூன்றின் சிறப்பினையும் முறையே கொண்டுள்ளது இத் திருவேங்கடமலை, இத் திருமலை கடல் மட்டத்திற்கு 860 மீற்றர் மேல் உள்ளது. 16.53 கிலோமீற்றர் சுற்றளவு கொண்டது. கீழ்த் திருப்பதியில் இருந்து திருமலையான் கோயில் ஏழு மலைகளுக்கப்பால் 14 மைல் தொலைவில் உள்ளது. இங்கு ஊர்திகள் போக வர தனிப் பாதையும், படிவழியும் உள்ளது. முதலாவது மலை செங்குத்தானது. இதன் முகட்டில் கலிகோபுரம் கொண்ட மண்டபம் ஒன்று இருக்கிறது. அலப்பிரி என அழைக்கப்படும் இம் மண்டப இரு புறச் சுவர்களிலும் உள்ள சாசனங்கள் இக் கலி கோபுரத்தை அமைத்தவன் சோழவம்சத்து மண்டல இன குமார அனந்து என்பவன் என அறியத் தருகின்றன. இவ்வரசனே கலிகோபுர வழியாகப் படிப்பாதை ஒன்றை திருமலைக்கு நிறுவினான் என அறியக் கிடக்கிறது. இப்படிகளின் வழியாக கோயிலை நோக்கி இயற்கைச் சூழலை அனுபவித்தபடி ஏறும் போது பல மண்டபங்களைக் காணலாம். அவைகளில் முக்கியமானது இரண்டு. ஒன்று கண்ட மண்டபம், மற்றையது ராமனுஜ மண்டபம். ஏழுமலைகளையும் தாண்டி விட்டால் முதலில் தெரிவது மொண்டிக் கோபுரம். அதனைக் கடந்து சென்று மற்றொரு கோபுரத்தையும் தாண்டிச் செல்ல கிழக்கு மேற்காக விளங்கும் சன்னதித் தெருவை அடையலாம். இங்குதான் திருமலைக் கோபுரம் அமைந்துள்ளது. சன்னதித் தெருவில் கோபுர வாசலுக்கு எதிர்ப்புறம் பல தூண்களுடன் உயர்ந்த அதிட்டானத்திலே ஆயிரம் கால் மண்டபம் விளங்குகிறது. இம் மண்டபத்திற்கு வலப் பக்கத்தில் விளங்குவது ஸ்வாமி புஸ்கரணி தீர்த்தம். இது 1.5 ஏக்கர் விஸ்தீரணம் உடையது. தமிழில் திருக்கோனேரி என்பது இதற்குப் பெயர். திருக்கோனேரியின் வடமேற்கு மூலையில் காணப்படும் சிறு ஆலயம் வராக மூர்த்தியினுடையது. இம் மூர்த்தியே இப்பிரதேசத்திற்கு ஆதிவாசி.
இன்று நாம் காணும் ஆலயத்தில் முதன் முதல் எழுந்த கற்றளி ஆனந்த நிலைய விமானத்தைச் சிகரமாகக் கொண்ட ஒரு 12 சதுர அடி அறை. அதன் எதிரில் மற்றொரு சிறிய அறை. இவை தான் ஆரம்பத்தில் இருந்த அமைப்பு. இன்று மூன்று திருச்சுற்றுகள் கல்யாண ரங்க மண்டபங்கள், மடப்பள்ளி, கோபுரம் ஆகியவற்றுடன் விளங்குகிறது. இவைகள் காலப் போக்கில் கொஞ்சம் கொஞ்சமாய்க் கூடிக் கொண்டவைகள். கோபுர வாயிலைத் தாண்டி உட்புகுந்ததும் எதிர்ப்படுவது முதற் பரிகாரமான சம்பங்கி பிரதட்சணம். இப்பிரகாரத்தின் இடதுபுறம் கோபுர வாயிலை ஒட்டி உள்ளது ரங்க மண்டபம். இதில் ஒரு பகுதி தேவஸ்தான அலுவலகமாக விளங்குகிறது. ரங்கமண்டபத்தை அடுத்துள்ளது திருமலைராயன் மண்டபம். கி.பி.1473 இல் சாலுவ நரசிம்மன், திருமலையானுக்கு ஊஞ்சல் உற்சவம் நடத்தக் கட்டியது. பிரும்மோத்சவத்தின்போது மலையப்பர் எழுந்தருளுவது இங்கே தான்.
65

Page 96
திருமலைராயன் மண்டபம் இரண்டு பாகங்களால் ஆனது. தென் கோடியில் உள்ளது சற்று உயரமாய் சாலுவ நரசிம்மனால் கட்டப்பட்டது. வடபுறம் உள்ளது, சற்றுப் பள்ளமாய் திருமலைராயனால் நிறுவப்பட்டது. தெற்கு மண்டபத்தினுள் நாலுகால் மண்டபம், அங்குள்ள சிறிய சிங்கங்கள் மீது விளங்கும் ஸ்தம்பங்களைத் தட்டினால் இனிய இசை எழும்பும். விஜய நகர மன்னர்கள் காலத்தில் இத்தகைய சப்தஸ்வரம் எழுப்பும் தூண்களை நிறுவுவது ஒரு தனிச் சிறப்புக் கலையாக இருந்தது. திருமலை ஆலயத்தில் சிறந்த சிற்பங்கள் உண்டென்றால் அது இந்த மண்டபத்தில் தான். சம்பங்கி பிரதட்சணத்தில் உள்ள பல மண்டப அறைகளில் மளிகைப் பொருட்கள், லட்டு, வடை, தயாரிக்கும் அறை தெப்பச் சாமான்கள் போன்றவை உள்ளன.
சம்பங்கி பிரதட்சணம் முடிய வருவது கொடிமரம். ஆகம ரீதியாக ஆலயங்களில் முதல் பிராகாரத்தில் கருடன், துவஜஸ் தம்பம், பலிபீடம் அமைய வேண்டும். ஆனால் திருமலையில் கருவறைக்கு முன்னிருந்த இடத்தில் திருமாமணி மண்டபம் கட்டப்பட்டதால் இட நெருக்கடி ஏற்பட்டு கொடிமரம் வெளியே தள்ளப்பட்டுள்ளது. கொடிமர மண்டபத் தூண் ஒன்றில் ஒரு சிற்பம் சதுர் புஜங்கள் பின் கையில் ஆழி, சங்கு முன் வலது கை அபய முத்திரை, இடது கரம் தொடையில் ஊன்றியுள்ளது. ஆனால் இதைத் தாங்கும் வாகனம் மயில். இது விஷ்ணுவா, முருகனா என்ற சர்ச்சை உள்ளது. இவ்விரண்டு அமைப்புகளும் விமர்சனத்துக்குரியதாக உள்ளது.
அடுத்து விமானப் பிரதட்சணம் புகும் கோபுரவாசல் உள்ளது. இக் கோபுர வாசலைத் தாண்டிச் சென்றால் விமானப் பிரதட்சணம் உள்ளது. ஆனந்த நிலைய விமானம் அமைந்திருப்பதால் விமானப் பிரதட்சணம் என்ற பெயரைப் பெற்றது. இதன் தென்கிழக்கு மூலையில் வரதராசர் சன்னிதி, தெற்கே மடப்பள்ளி, நாச்சியார், தென்மேற்கே கல்யாண மண்டபம், வடக்கே சங்கீத பண்டாரம், ராமானுசர் சன்னிதி, வடகிழக்கே நரசிம்மர் சன்னிதி இவ்வளவையும் அடக்கியுள்ளது இப்பிராகாரம்.
விமானப் பிரதட்சணம் முடிய வருவது கருவறை. கருவறைக்கு முன் இடையே சில மண்டபங்கள் உள்ளன. இவைகளுக்கு நடுவே விளங்குவது திருமாமணி மண்டபம். பூரீநிவாசன் பள்ளியெழுந்தருளப் பாடப்படும் சுப்பிரபாதம் ஒலிப்பது இம் மண்டபத்தில் தான். திருமாமணி மண்டபத்து நடுவில் நின்று பார்த்தால் இருபக்கம் துவாரபாலகர்கள் காவல் புரிய சீனிவாச மூர்த்தி கருவறையில் எழுந்தருளியிருப்பது தெரியும். இங்கு கி.பி. 966இல் போக சீனிவாச மூர்த்தியை எழுந்தருள வைத்தனர். கருவறைக்கு முன்நிற்பது சயன மண்டபம் என்ற அந்தராளம். பெருமாள் பள்ளி கொண்டருள்வது இங்கே தான். இதுவரையும் செல்ல பக்தர்களுக்கு அனுமதி உண்டு. அவ்விடத்தில் நின்றே திருமலையானை அந்த போக பூரீனிவாசனைத் தரிசிப்பார்கள் அன்பர்கள். ஒன்பதடிக்கு
66

மேலுயர்ந்த தோற்றத்தினனாய் கமல பீடத்தின் மீது பாதம் ஊன்றி நவரத்தினங்களால் ஆன அணிகள் பூண்டு, சுவர்ண மகுடம் தரித்து மகர குண்டலங்கள் செவிக்கு அணி செய்ய நாகாபரணம், 108 லட்சுமிகள் பதித்த மாலை, தங்கப் பூணுரல் தரித்து, இடுப்புப்பட்டையில் சூரிய கடாரி என்ற பட்டாக்கத்தி தொங்க மிடுக்குடன் காட்சியளிக்கின்றான் ஏழுமலையான்.
விழாக்கள்
ஆவணி பிரும்மோத்சவம், சுந்தரபாண்டியன் பட்டத்து ராணியால் ஆரம்பிக்கப்பட்டது. காடவன் பெருந்தேவி நிறுவியது புரட்டாசி பிரும்மோற்சவம். புக்கராயரின் கார்த்திகைப் பெருவிழா, கிருஷ்ண தேவமகாராயரின் மாசித் திருவிழா, வீரநரசிங்கையாத வரயரின் தை, பிரும்மோற்சவம் ஹிரிகர மகாராயரின் பங்குனி விழா, சித்திரையில் கோயிற் கணக்கர் விழா ஆகிய விழாக்களுடன் பூரீஜயந்தி, உறியடி, தீபாவளி, கார்த்திகை, ராமநவமி, ஏகாதசி, துவாதசி, பெளர்ணமி ஆகிய தினங்களிலும் விசேட பூசை வழிபாடு, விழாக்கள் இடம் பெறுகின்றன.
தீர்த்தங்கள்
திருவேங்கடத்தில் உள்ள தீர்த்தங்களில் கபில தீர்த்தமும், சுவாமி புஷ்கரணியும் முக்கியமானவை. மலை அடிவாரத்தில் உள்ள கபில தீர்த்தத்தில் இருந்து காளி கோபுரம் செல்ல பழைய காலத்தில் செங்குத்தான நேர் வழி ஒன்றிருந்தது. அம் மார்க்கம் பல புண்ணிய தீர்த்தங்களை ஒட்டி அமைந்திருந்தால் விசேஷமாகக் கருதப்பட்டது. கபில தீர்த்தத்திற்கு நேர் மேலே சக்ர தீர்த்தம், இதன் மேலே விஸ்வக்சேனர் தவமிருந்த விஸ்வக்சேன தீர்த்தம், மேலும் சற்று ஏறினால் உள்ளது பஞ்சாயுத தீர்த்தம். விஷ்ணுவின் ஐந்து ஆயுதங்களின் பெயரால் ஏற்பட்டவை. அதன் மேலே உள்ளவை அக்கினி குண்டதீர்த்தமும் பிரும்ம தீர்த்தமுமாகும். கடைசியில் இருப்பது சப்தரிஷி தீர்த்தம் காசியப்பர், அத்ரி, பாரத்வாஜர், விசுவாமித்திரர், கெளதமர், வசிஷ்டர், ஜமதக்கினி ஆகியோரின் பெயரால் ஏற்பட்டவை. இவை தவிர மேலும் பதினேழு தீர்த்தங்கள் திருமலையைச் சுற்றி உள்ளன. ஆலயத்திற்கு வெகு அண்மையில் உள்ளது பாண்டவ தீர்த்தம், பாண்டவர்கள் இதில் ஒருவருடம் தங்கியிருந்தார்கள் என்பது ஐதீகம்.
கோயிலுக்கு வடக்கே 2 மைல் தொலைவில் உள்ளது தெள்ளிய நீர் கொண்ட ஆகாச கங்கை. இங்கு அஞ்சனாதேவி 12 ஆண்டுகள் தவமிருந்து ஆஞ்சநேயரைப் பெற்றாள் என்பது புராணம். கோயிலுக்கு வடக்கே மூன்று மைல் தூரத்தில் ஒரு சிறிய நீர்வீழ்ச்சி உள்ளது. இதுவே பாபநாசம். இதில் நின்று ஸ்நானம் செய்ய வசதியாக இரும்புக் கம்பிகள் பொருத்தப்பட்டுள்ளன. ஆலயத்தின் வடகிழக்கே இரண்டு மைலில் ஒரு குகை. அதிலிருந்து பாய்வதே வைகுண்ட தீர்த்தம். ஆலயத்திற்கு வடக்கே 2 மைல் தொலைவில் அடவிக்குள் ஒர் ஆச்சிரமம் அமைத்து ஜபாலி முனிவர் தன் சிஷ்யர்களுடன் வாழ்ந்து வந்தார். இங்குள்ள தீர்த்தம் ஜபாலி தீர்த்தமாயிற்று.
இந்துக்கலைக்களஞ்சியம்

Page 97
கோயிலுக்கு வெகுதொலைவில் உள்ளது ராமகிருஷ்ண தீர்த்தம். அங்கு தவம் புரிந்த ராமகிருஷ்ண முனிவருக்கு வெங்கடேசன் தரிசனம் கிடைத்த நாள் புஷ்ய நட்சத்திரம் கூடிய பெளர்ணமி தினமாகும். அத் தினத்தில் கோயிலிலிருந்து பிரசாதங்கள் எடுத்துச் செல்லப்பட்டு அங்குள்ள கிருஷ்ண விக்கிரகத்திற்கு நிவேதித்த பின் பக்தர்களுக்குப் பகிர்ந்தளிக்கப்படுகின்றது. கோயிலுக்கு வடமேற்கில் 6மைல் தொலைவில் உள்ளது குமாரதாரை. இங்கு சுப்பிரமண்ய ஸ்வாமி தேவசேனையுடன் உறைவதாக ஐதீகம். மாசி மாதம் பெளர்ணமியில் இங்கு நீராடுவது கங்காஸ்நானத்திற்கு சமன் என்று கூறப்படுகிறது. இவ்வளவு தீர்த்தங்களின் புண்ணியமும் ஸ்வாமி புஸ்கரணியில் இருக்கிறது என்று கூறி அதில் மட்டுமே நீராடி வெங்டேசனைத் தரிசிக்க கோயிலுள் நுழைகிறார்கள். சுப்பிரபாதம் முடிந்தவுடனே தர்ம தரிசனம் ஆரம்பித்து இரவு ஏகாந்த சேவை வரை பூசைகள் தொடர்கிறது. ஆயினும் ஒவ்வொரு பக்தரும் ஒரு விநாடிக்கு மேல் நின்று அவன் சந்நிதியைத் தரிசிக்க முடியாத பக்தர் கூட்டம் பொங்கி வழிவது திருப்பதியில் மட்டுமே. இங்கு தெய்வ தரிசனத்திற்கு கட்டணம் வசூலிக்கப்பட்டாலும் மக்களின் நலனுக்காக பல சமூக சேவைகளைத் திருப்பதி தேவஸ்தானம் மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது. (நி.நி.)
O Θ O O திருப்பந்தனை நல்லூர்
சோழ நாட்டு வடகரைத் தலம்; அம்பிகை ஆடிய பந்து இறைவன் எற்ற வந்து அணைந்த இடம் பந்தனை நல்லூர் என்று பெயர் பெற்றது என்பர். தற்போது மக்கள் வழக்கில் பந்து நல்லூர் என அழைக்கப்படுகிறது. தென்கயிலை, கோவூர், கொன்றைவனம், விஷ்ணுபுரி, இந்திரபுரி, கண்வராச்சிரமம், வாவிநகர், பானுபுரி, ஆவூர், கந்துகபரி என்பன இத் தலத்திற்குரிய வேறு பெயர்கள். காம்பீலி மன்னனின் மகன் குருடு நீங்கிய இடம் இது. எனவே அம்மன்னன் தன் மகனுக்கு பசுபதி என்று பெயரிட்டான். இங்குள்ள திருக்குளம் இன்னும் காம்போச மன்னன்துறை என்றழைக்கப்படுகிறது. கண்ணுவ மகரிஷி, காமதேனு, திருமால், இந்திரன், வாலி ஆகியோர் வழிபட்ட g561)LD.
எழுந்தருளியுள்ள இறைவன் பெயர் பசுபதீஸ்வரர்; இறைவி வேணுபுஜாம்பிகை, தலமரம் சரக்கொன்றை, தீர்த்தம் சூரிய தீர்த்தம்; ஞானசம்பந்தர் அப்பர் ஆகியோரால் பாடப்பெற்ற தலம். காம்பீலி மன்னன் திருப்பணி செய்து கட்டுவித்த இக்கோயிலுக்குப் பின் சோழமன்னர்களும் திருப்பணிகள் செய்துள்ளனர்.
தலவரலாறு
உமாதேவியார் பந்து கொண்டு விளையாட விரும்பினார்.
இறைவன் நால்வேதங்களையும் பந்துக்களாக்கிக் கொடுக்க
அவரும் விருப்புடன் விளையாட இதற்கு இடையூறு விளைவிக்க
இந்துக்கலைக்களஞ்சியம்

விரும்பாத சூரியன் அஸ்தமிக்காது இருந்தான். காலநிலை மறுபாடடைவதைக் கண்ட தேவர்கள் இறைவனிடம் முறையிட இறைவனும் அவ்விடம் வந்தார். அவரைக் கவனியாது உமை விளையாட இறைவன் சினம் கொண்டு பந்தை எற்றினார். அப் பந்து வந்தணைந்த இடமே பந்தனை நல்லூராயிற்று. இறைவன் சாபத்துக்குள்ளான தேவி சாபவிமோசனம் வேண்ட, இறைவன் பந்து விழுந்த இடத்தில் கொன்றையின் கீழ் தான் வீற்றிருப்ப தாகவும் அங்கு வந்து வழிபடுமாறும் அதுவே சாப விமோ சனத்துக்குரிய வழி என்றும் கூறினார்.
பசு வடிவில் (காமதேனு) கண்ணுவ முனிவரின் ஆசிரமத்தை அடைந்து புற்றுருவில் இருந்த இறைவன் திருமேனிக்குப் பால் சொரிந்து வழிபட்டு வந்தார். ஒரு முறை பூசைக்குப் பசுவிடம் பால் இல்லாமை கண்டு சினமுற்று அதன் பின் சென்று பார்த்த போது அது புற்றில் பால் சொரிவது கண்டு சினந்து ஆயன் கோலினால் அடிக்க பசு துள்ளிட அதன் காற் குளம்பு புற்றின் மீது பட இறைவன் ஸ்பரிசத்தால் உமா தேவி தன் சுயஉருவம் பெற்றுச் சாபம் நீங்கப் பெற்றார். பசுவுக்குப் பதியாக வந்து
ஆட்கொண்டமையால் சுவாமி பசுபதி என்று பெயர் பெற்றார்.
ஊரின் சற்று உட்புறம் அமைந்துள்ள இக் கோயில் நல்ல நிலையில் உள்ளது. வாயிற் கோபுரம் ஐந்து நிலைகளை உடையது. உள்ளே விசாலமான மண்டபம், இடப்பக்கதில் அம்பாள் சந்நிதியும் உள்ளது. அருகில் காளி சந்நிதியும் உள்ளது. கவசமிடப்பட்ட கொடி மரம் உள்ளது. பிராகாரத்தில் சந்நிதிகள் எதுவும் இல்லை. முழுவதும் நந்தவனப் பகுதியே. பக்கதில் உள்ள ஆதிகேசவப் பெருமாள்தான் உமாதேவியுடன் ஆயனாக வந்தார். அவருடன் பரிமளவல்லி அம்மையாரும் உள்ளார். வலப்பக்கமாக வந்து நுழையும் சுவாமி சந்நிதி வாயிலுக்கு திருஞானசம்பந்தர் திருவாயில் என்று பெயர். இரு புறத்திலும் தலப் பதிகங்கள் பதித்த கல்வெட்டுக்கள். உள்ளே சென்றால் மகாமண்டபம், நடராச சபை, இங்கு வலப்பக்கத்தில் அமைந்துள்ள கல்யாணசுந்தரரின் பீடத்தின் அடியில் தல வரலாற்றுச் சிற்பம் (கொன்றையடியில் பசு புற்றில் பால் சொரிவது - பசுவைக் கோலோச்சி அடிப்பது) தகட்டில் அமைக்கப்பட்டுள்ளது. பக்கத்தில் இருபுறமும் துவார விநாயகர், சுப்பிரமணியர் சந்நிதிகள், நாயன்மார் அறுபத்து மூவரதும் சிலா ரூபங்கள் உள்ளன. சட்டநாதர் சந்நிதியும் அழகாக அமைக்கப்பட்டுள்ளது. கஜலட்சுமி, அன்னபூரணி ஆகியோரின் சந்நிதிகளும் உள்ளன. பிரமன், வாலி ஆகியோர் வழிபட்ட இலிங்கங்களும் உள்ளது. தலமரம் சரக்கொன்றை கீழ் சிலாரூபத்தில் பசு லிங்கத்தின் மீது பால் சொரிவது உள்ளது. பைரவரை அடுத்து நவக்கிரகங்கள் அனைத்தும் ஒரே வரிசையாகக் காட்சியளிக்கின்றன. இவற்றிற்குப் பக்கத்தில் சூரியன், சந்திரன், விநாயகர் உள்ளனர்.
உள்வலம் முடிந்த பின் உட் சென்றால் அர்த்தமண்டபம்,
இங்கு உற்சவ மூர்த்தங்கள் வைக்கப்பட்டுள்ளன.
67

Page 98
இவ்வுருவங்களில் பிட்சாடன மூர்த்தம் மிக அழகானது. கருவறையில் மூலவர் சுயம்புருவில் உள்ளார். குட்டையான பாணம், சிரசின் மீது பசுக் குழம்பின் அடையாளம். புற்றில் பால் சொரிந்து சொரிந்து வெண்மையாகியதால் இலிங்கத் திருமேனி வெண்ணிற மாகவுள்ளது. மூலவர் புற்று ஆதலின் கவசம் சாத்தியே அபிஷேகம் நடைபெறுகிறது. அம்பாள் சந்நிதி வடக்கு நோக்கி உள்ளது. அம்பாள் தவக்கோலத்தில் உள்ளதால் இருபுறமும் ஐயனார், காளி ஆகியோர் காவலாகவுள்ளனர். மாசிமாதத்தில் பெருவிழா நடைபெறுகிறது. நாள் தோறும் ஆறுகாலப் பூசை வழிபாடு இடம்பெறுகிறது. சோழ, விசயநகர காலக் கல்வெட்டுகள் இத் தலத்திறைவன் பசுபதிதேவர் என்றும் முதலாம் இராசராசன் கல்வெட்டில் பந்தனை நல்லூர் என்றும் குறிக்கப் பெறுகின்றது. இங்குள்ள கல்வெட்டொன்று முதலாம் இராசராசன் அரியணையேறிய 11ஆம் ஆண்டில் செம்பியன் மாதேவி, ஒரு விளக்குக்குப் பன்னிரண்டு கழஞ்சு பொன் வீதம் மூன்று விளக்குகளுக்கு நிவந்தம் அளித்த செய்தியைத் தெரிவிக்கின்றது.
"கோவணம் கொ கூத்தாடும்
படிறனார் போதும் பந்தனை நல்லூர்
திறன் எம் பசுபதியாரே' என்று சம்பந்தரும்,
"மறையவரும் வந்தெதிரே வணங்கியேத்தப் பண்ணமரும் பாடலார் பைங்கணேற்றார்
பலியேற்றார் பந்தணைநல்லூராரே'
எனஅப்பரும் இத்தலத்தில் எழுந்தருளியுள்ள இறைவனைப் போற்றிப் பாடியுள்ளனர். (நி.நி.)
திருப்பரங்குன்றம்
குன்றுதோறும் ஆடும் குமரன் விரும்பி உறையும் இடங்களில் திருத்தணிகை, திருப்பரங்குன்றம், திருந்செந்தூர், பழமுதிர்ச் சோலை, பழனி, சுவாமி மலை எனும் ஆறுபடை வீடுகள் சிறப்புக்குரியவை. சங்கத் தமிழ் தலைமைப் புலவராகிய நக்கீரனார் முத்தமிழ்க் கடவுளாகிய முருகப்பெருமானை நோக்கிப் பாடியருளிய திருமுருகாற்றுப்படையில் ஆறுமுகப் பரம்பொருளின் ஆறுபடை வீடுகளாக திருப்பரங்குன்றம், திருச்சீர் அலைவாய், திரு ஆவிநன்குடி, திருஎரகம், குன்றுதோறாடல், பழமுதிர்ச் சோலை என நிரல்படுத்தியுள்ளார். ஆறுபடை வீடுகளில் முதற்படை வீடாகத் திகழ்வது திருவும் சிறப்பும் தரும் திருப்பரங்குன்றம் ஆகும். சிவபெருமானின் பாண்டிப் பதினான்கு ஸ்தலங்களில் ஒன்றாகவும் திருப்பரங்குன்றம் திகழ்கிறது. மதுரையில் தமிழ் வளர்த்த கடைச்சங்க காலத்திலேயே மதுரைக்கு மேற்கே இது அமைந்திருந்தது என சங்க இலக்கியங்களான திருமுருகாற்றுப்படையும், அகநானூறும்
68

கூறுகின்றன. இதனால் இவ்வாலயம் பழங்காலச் சிறப்புடையதாக விளங்குகிறது.
திருப்பரங்குன்றம் மதுரைக்குத் தெற்கே பத்து கிலோமீற்றர் தூரத்தில் அமைந்துள்ளது. பெரிய மலையில் அமைந்துள்ள மலைக்கோயில் இது. கடல் மட்டத்திற்கு மேல் 1050 அடிகள் உயரம் கொண்டது. சிவலிங்க வடிவில் மலையின் தோற்றம் அமைந்துள்ளது. இதனால் சிவன் மலை என்றும் அழைக்கப்படுகிறது. மலை அடிவாரத்தில் கோயில் அமைந் துள்ளது. இம்மலை தேவலோகத்தில் உள்ள மலைகளின் சிறப்புக்களைக் கொண்டு விளங்குகிறது. சிவன் மலை என்பதால் பரங்குன்று என ஆதி காலத்தில் அழைக்கப்பட்டாலும் இன்று முருகன் மலை என்று வழங்கப்படுகிறது. இம்மலையின் தோற்றம் பற்றி புராணங்கள் பல கதைகளைக் கூறுகின்றன. திருப்பரங்கிரி புராணம் இக் குன்று, மேரு மலையில் இருந்த ஸத்யம் எனும் சிகரம் என்றும் ஆதிசேஷனுக்கும் வாயுபகவானுக்கும் ஏற்பட்ட பலப் பரீட்சையில் வாயு தேவனால் மேருவில் இருந்து பலமாய்ப் பிடுங்கி எறியப்பட்ட குன்றே இதுவென்றும் கூறுகிறது.
கயிலாயத்தில் உமா தேவியாருக்கு பிரணவ மந்திரத்தின் பொருளை சிவபெருமான் உபதேசிக்கும்போது தேவியாரின் மடியில் இருந்த பாலமுருகன் அம் மந்திரப் பொருளைத் தாமும் அறிந்து கொண்டார். புனிதமான மந்திரப் பொருளை குரு மூலமாகவே தெரிந்து கொள்ள வேண்டுமென்றும் மறைமுகமாக அறிந்து கொள்ளல் பாவம் என்றும் சாஸ்திரங்கள் கூறுகின்றன. முருகப்பெருமானே பிரணவ மந்திர சொரூபமாக இருந்த போதிலும் உலக நியதிக்குப் புறம்பான காரியத்தைச் செய்ததால் அக்குற்றத்திற்குப் பரிகாரம் செய்து நீதியை நிலைநிறுத்த வேண்டிக் குமரக் கடவுள் திருப்பரங்குன்றத்திற்கு வந்து தவம் செய்யலானார். முடிவில் சிவபெருமானும் பார்வதியும் காட்சியருளிப் பரங்கிரிநாதர், ஆவுடைநாயகி எனப் பெயர்பெற்றனர்.
சூரபத்மன் முதலிய அசுரர்களை அழித்து தேவர்களின் துயர் துடைத்ததற்கு நன்றி செலுத்தும் வகையில், இந்திரன் தன் புதல்வியாகிய தேவசேனா தேவியை முருகப் பெருமானுக்குத் திருமணம் செய்து வைக்க எண்ணினான். இத்திருமணம் திருப்பரங்குன்றத்தில் இடம் பெற்றது என கந்தபுராணம் கூறுகிறது. திருமணத்தில் பிரம்மா விவாக சடங்குகள் இயற்றவும், சூரிய சந்திரர் இரத்தின தீபங்கள் தாங்கி நிற்கவும், பார்வதி பரமேஸ்வரர் களிக்கவும், ஆயிரம் கண்ணுடைய இந்திரன் தாரை வார்க்க முருகப் பெருமான் தேவசேனாவை திருமணம் செய்து கொண்டார். திருபரங்குன்றமே திருமணக் கோலம் பூண்டு அழகாகக் காட்சி அளித்தது. விண்ணும் மண்ணும் மகிழுமாறு முருகப்பெருமானின் திருமணம் பரங்குன்றத்தில் நடைபெற்றபின்
இந்துக் கலைக்களஞ்சியம்

Page 99
ஆறுமுகப் பெருமானின் பன்னிரு கரங்களில் ஒருகரம் தெய்வயானையைத் தழுவி நிற்க, மற்றொரு திருக்கரம் அபயம் தாங்கி நிற்க, ஏனைய திருக்கரங்கள் வாள், சூலம், தண்டம் முதலிய கலங்களைத் தாங்கிநிற்க முருகன் எல்லோருக்கும் திருவருள் புரிந்தார். இத்தகைய திருமண்க் கோலத்துடனேயே திருப்பரங் குன்றத்து மூலத்தானத்தில் முருகப்பெருமானைக் காணக் கூடியதாக இருக்கிறது.
பரங்குன்றப்பதி இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் விளங்கிய அதே பொலிவுடனேயே இன்றும் தெய்வீகப் பொலிவும் இயற்கை வனப்பும் மிக்கதாகத் திகழ்கிறது. பரங்குன்றின் அடிவாரத்தில் இயற்கைவளம் கொழிக்கிறது. மலையைச் சுற்றிலும் பச்சைப் பசேலேன்ற பரந்து விரிந்த வயல்களின் பசும் பயிர்க்கோலமும், நீர்ச்சுனைகளும், தென்னைமரச் சோலைகளும் நிறைந்து விளங்கும் எழிற்கோலமும் நீண்டசாலைகளின் அமைப்பழகும் பக்தர்களைப் பரவசப்படுத்துகின்றவையாக உள்ளன. இச்சூழலில் கட்டிடமைப்பும் சிற்பவேலைப்பாடுகளும் நிறைந்த ஆலயங்களும், தீர்த்த மண்டபங்களும் அமைந்து சிறப்புத்தருகின்றன.
குன்றின் வடபக்கத்தில் முருகப்பெருமானது ஆலயம் அமைந்துள்ளது. கோபுரவாசலுக்கு முன்னால் சுந்தரபாண்டியன் மண்டபம் என அழைக்கப்படும் ஆஸ்தான மண்டபம் காணப்படுகிறது. இது 66 தூண்களைக் கொண்ட மிகப்பெரிய மண்டபம் ஆகும். இம் மண்டபத்தை அடுத்து ஏழுநிலை கொண்ட ராஜ கோபுரமும் கல்யாண மண்டபமும் இருக்கின்றன. கல்யாண மண்டபத்தின் கிழக்குப் பக்கத்தில் லக்ஷமி தீர்த்தமும் மேற்குப் பக்கத்தில் பிரம்மகூபம் எனப்படும் சந்நியாசிக் கிணறும் உள்ளன. கல்யாண மண்டபத்துக்கு அடுத்துள்ள கொடிமர மண்டபத்துக்கு படிவழியாக ஏறி மேலே செல்ல வேண்டும். கொடிமரத்தின் முன்புறம் மயில், நந்தி, மூசிகம் ஆகிய மூன்று வாகனங்களும் ஒருங்கே அமைந்துள்ளமை இவ்வாலயத்துக்கே உரிய தனிச் சிறப்பாகும்.
அடுத்து மகாமண்டபத்துக்குச் செல்லும் படிக்கட்டுகளுக்கு அருகில் வேதவியாசர், பராசரர் முதலிய முனிவர்களும், அண்டராபரணர், உக்கிரர் முதலிய பூதகணத் தலைவர்களும் உள்ளனர். இப்பூதகணங்களே திருப்பரங்குன்றுக்கு காவல் தெய்வங்களாக இருப்பதால் இவர்களை வணங்கியே மேற்கொண்டு செல்ல வேண்டும். மகாமண்டப வாசல் இருமருங்கிலும் இரட்டை விநாயகரும் கால சண்டி அம்மன் சமேத அதிகாரநந்தி தேவரும் அமர்ந்துள்ளனர். மகாமண்டபத்தில் சோமாஸ்கந்தர், நடராஜர், சண்டிகேஸ்வரர், நவவிரர், தட்சிணாமூர்த்தி, பைரவர், சந்திரன், சாயாதேவி, சமிஞாதேவி சமேத சூரியன் ஆகியோரின் சந்நிதிகள் உள்ளன. மகாமண்டபத்தின் கீழ்பாகம் உள்ள கோயிலில் வள்ளி தேவசேனா
இந்துக்கலைக்களஞ்சியம்

சமேத ஆறுமுகப் பெருமானுக்கும், அருணகிரிநாதர், பஞ்சலிங்கம், ஜ்வரதேவர், சனீஸ்வரபகவான் முதலியவர்களுக்கு சந்நிதிகள் இருக்கின்றன. இம் மண்டபத்தின் மேல்பாகத்தில் கோவர்த்தாம்பிகை தனிக் கோயில் கொண்டுள்ளார்.
மகாமண்டபத்தில் இருந்து மலையைக் குடைந்து உருவாக்கப்பட்ட கர்ப்பக்கிருகத்தை உடைய அர்த்த மண்டபத்தை அடைய ஆறு படிகளைக் கடந்து செல்ல வேண்டும். இப்படிகள் சடாட்சரப் படிகள் எனக் கருதப்படுகிறது. கர்ப்பகிருகத்தில் காணப்படும் பெரிய பாறையின் மத்தியில் மஹிஷாசுர மர்த்தினியின் உருவமும் அதனை அடுத்து கீழ்ப்பகுதியில் மூலவரான முருகப்பெருமானின் திருமணக்கோலமும் மேற்குப் பகுதியில் தாமரை மலரில் அமர்ந்து கரங்களில் கரும்பும், கனியும் ஏந்தி பூதகணங்கள் சூழ காட்சி அளிக்கும் கற்பகவிநாயகரின் உருவமும் குடைந்து வடிக்கப்பட்டுள்ளன. கற்பக விநாயகருக்கு அருகிலுள்ள குடைவரைக் கோயிலில் ஸ்தயகிரீஸ்வரர் எனும் சிவபெருமான் சிவலிங்க வடிவில் காட்சி தருகிறார். இக்கோயிலின் உட்புறச்சுவரில் சோமாஸ்கந்த உருவமும் வெளிப்புறச் சுவரில் கோபூசை புரியும் பார்வதியும் சந்தியா
தாண்டவமாடும் சிவனின் உருவமும் காணப்படுகின்றன.
மூலவராகிய முருகப்பெருமானின் சந்நிதி அருகே, மலையைக் குடைந்து அமைக்கப்பட்ட கோயிலில் பவளக்கனிவாய்ப் பெருமாள் மகால கூடிமியுடனும் மதங்க முனிவருடனும் காட்சி தருகிறார். மலையடிவாரத்தின் கீழ்பகுதியில் சரவணப்பொய்கை அமைந்துள்ளது. தென் பகுதியில் உமையாண்டவர் கோயில் என அழைக்கப்படும் மற்றோர் குடைவரைக் கோயிலும் இருக்கிறது. இதற்கு மேற்குப் பகுதியில் மலை மீது சிறிது தூரத்தில் பஞ்சபாண்டவர் படுக்கை எனப்படும் குகையும் மேற்குப் பாகத்தில் மலையுச்சிக்குச் செல்லும் பாதையும் அமைந்துள்ளன. இப்பாதையின் அடிவாரத்தில் பழனியாண்டவர் கோயிலும், மலை உச்சியில் இரு பாறைகளுக்கிடையே சிக்கந்தர் பாஷா என்ற முஸ்லீம் மஹானின் சமாதியும் இருக்கின்றன. மசூதிக்குத் தென்பாகத்தில் மலைமீது சிறிது தூரத்தில் காசி விஸ்வநாதர் கோயிலும், அதனருகில் என்றும் வற்றாத காசிச்சுனைத் தீர்த்தமும் இருக்கின்றன. மிக உயர்ந்த மலைச் சரிவில் காசி விஸ்வநாதர் கோயிலுக்கு முன் அழகான கல்மண்டபம் கட்டப்பட்டுள்ளது.
கண்ணையும் கருத்தையும் கவரும் வகையில் அமைந்துள்ள திருப்பரங்குன்றத்தில் சிவாச்சாரியார்கள் காலை மாலை இருவேளைகளிலும் பூசையை நிகழ்த்துகின்றனர். பிரதோஷம் மற்றும் சிவபெருமானுக்கு உகந்த நாட்களில் விசேட வழிபாடுகள் இடம் பெறும். மீனாட்சி சமேத சொக்கநாதரை வழிபட்ட பின்பே திருப்பரங்குன்றுறையும் முருகப் பெருமானை வழிபடவேண்டும் என்பது வழக்காக உள்ளது. திருப்பரங்குன்றத்துக் கோயில்
69

Page 100
காலை 6.00 மணி முதல் மதியம் 12.00 மணிவரையும், மாலை 4.00 மணி முதல் இரவு 8.00 மணிவரையும் திறந்திருக்கும். தைபூசத் திருவிழா, பங்குனி உத்தரத்தில் திருக்கல்யாணத் திருவிழா, திருக்கார்த்திகை போன்ற முருகனுக்குகந்த நாட்கள் அத்தனையும் விழாவாகவே நடைபெறும். அத்துடன் சுப்ரமணியர், அம்பாள், விநாயகர், சிவபெருமான் ஆகியோருக்கு உகந்த திதிகள், கிழமைகள், நட்சத்திரங்கள் ஆகிய நாட்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். திருப்பரங்குன்றத்தில் எப்போதும் மக்கள் கூட்டம் அலைமோதிய வண்ணமே இருக்கும். இங்கு
விசேட நாட்கள் எல்லாம் திருவிழாக்களே.
திருப்பரங்குன்றத்தில் மூர்த்தி, தலம், தீர்த்தம் சிறப்புறவே அமைந்துள்ளது. இந்த வகையில் இங்கு தீர்த்தம் விசேட முடையதாக உள்ளது. ஆறுமுகப்பெருமான் எழுந்தருளியிருக்கும் திருக்கோயிலில் உள்ள கல்யாண மண்டபத்தின் கிழக்குப் பாகத்தில் இலக்குமி தீர்த்தம் உண்டு. மேற்குப்பாகத்தில் பிரமசுட்பம் எனப்படும் சன்னியாசிகள் கிணறும், பரங்குன்றின் அடி வாரத்துக் கீழ்த்திசையில் சரவணப் பொய்கையும் காசி விஸ்வநாதர் ஆலயத்துக்கு அருகில் காசிச்சுனையும் தீர்த்தங்களாக விளங்குகின்றன. இத்தீர்த்தங்கள் சிறப்பு மிக்கவையாக விளங்குகின்றன. இலக்குமி தீர்த்தக் கரையில் உள்ள விநாயகப் பெருமானை வணங்கி வழிபட்டு, உப்பு, மிளகு முதலிய பொருட்களை இத்தீர்த்தத்தில் இட்டால் சர்மநோய்கள் நீங்குவதாகக் கூறப்படுகின்றது.
அடுத்து பிரம்மாவினால் தோற்றுவிக்கப்பட்ட தீர்த்தம் பிரம கூப தீர்த்தம், திருபரங்கிரிப் புராணத்தில் "வைத்திய சாரக் கடவ தீர்த்தம்” என இத் தீர்த்தம் குறிப்பிடப்படுகின்றது. கோவிதாரத்து வசன் என்ற பாண்டிய மன்னன் தன்னைப் பீடித்திருந்த வெண்குஷ்டத்தைப் போக்க இதில் மூழ்கி நோய் நீங்கி அழகும் வலிமையும் பெற்றான் எனக் கூறப்படுகின்றது. பிரம தேவனும் இதில் மூழ்கி அழகு பெற்று கலைமகளை மணம்புரிந்து கொண்டார். அதனால் இத் தீர்த்தத்திற்கு "கல்யாண கூபம்’ என்ற பெயரும் உண்டு. இதைவிட அரிச்சந்திர மன்னன் சத்தியத்தில் நிலை பெற இத்தீர்த்தத்தில் மூழ்கி எழுந்தார் எனவும், இதனால் இது “சத்திய கூபம்’ என்றும் அழைக்கப்படுகிறது என்றும் கூறுவர். இத்தீர்த்தம் மலையடிவாரத்தில் வடபாகத்தில் காணப்படுகின்றது. இங்கு தெப்பத் திருவிழா நடைபெறும்.
பரங்குன்றத்தின் அடிவாரத்தில் கீழ்த்திசையில் சரவணப் பொய்கை அமைந்துள்ளது. இத் தீர்த்தம் முருகப் பெருமானின் திருக்கர வேலினால் உண்டாக்கப்பட்டதென்றும், இதனைக் கண்டாலும், தொட்டாலும் பொருள் கிட்டும் என்றும் கூறப்படுகின்றது. இத்தீர்த்தம் கங்கைக்கு ஒப்பானது என்றும் புராணங்கள் கூறுகின்றன. ஆழம் மிகுந்த இச்சுனையில் நெடுங்காலமாக பல நிறவர்ணங்களுடன் மீன்கள் கூட்டம்
70

கூட்டமாக சஞ்சரித்துக் கொண்டிருக்கும். இவ்வாறாக தீர்த்த விசேடம் கொண்ட திருப்பரங்குன்றில் ஒன்பது தீர்த்தங்கள் உண்டு என சூதபெளராணிகர் கூறுகின்றனர்.
திருப்பரங்குன்றத்தில் தலச்சிறப்புடன் அழகிய நுண்ணிய சிற்பக் கலையையும் கண்டு களிக்கக் கூடியதாக உள்ளது. கோபுர வாசலுக்கு முன்னால் சுந்தரபாண்டியன் ஆஸ்தான மண்டபம் காணப்படுகிறது. 66தூண்கள் கொண்ட மிகப்பெரிய மண்டபத்தின் தூண்களின் நுண்ணிய வேலைப்பாடுகளுடனான யானைகள், குதிரைவீரர்கள், சிவபெருமானின் திரிபுவனக் கோலம் முதலிய சிற்பங்கள் அலங்கரிக்கின்றன. இம் மண்டபத்தின் மையத்தில் அமைந்துள்ள தூண்களில் நர்த்தன விநாயகர், துர்க்கையம்மன், தேவசேனாதேவி, வீரவாகுதேவர் முதலிய பல எழில் மிகுந்த சிற்பங்கள் காணப்படுகின்றன. அவற்றுள் தேவசேனாதேவியின் திருமணக் கோலத்தைக் காட்டும் சிற்பம் அற்புதமானது. பிரம்மா ஹோமம் வளர்த்து விவாகச் சடங்குகள் இயற்ற, இந்திரன் தாரைவார்க்க, முருகப்பெருமான் அன்னை தேவசேனாவின் கைத்தலம் பற்றும் திருக்கோலத்தில் ஒவ்வொரு திருவுருவமும் வெளிப்படுத்தும் மகிழ்ச்சி, நாணம், பெருமிதம் முதலிய உணர்ச்சி பாவங்களுடன் கலைநுட்பம் வாய்ந்தாக உள்ளது.
மகா மண்டபத்தில் மலையைக் குடைந்து கருப்பக்கிரகம் அமைக்கப்பட்டுள்ளது. கர்ப்பகிரகத்தில் காணப்படும் பெரிய பாறையின் மத்தியில் மஹிஷாஸுரமர்த்தினியின் உருவமும், கீழ்ப்பகுதியில் முருகப்பெருமானின் திருமணக்கோலமும், மேற்கு பகுதியில் தாமரை மலரின் மீது அமர்ந்து கரங்களில் கரும்பும் கனியும் ஏந்தி பூதகணங்கள் சூழக் காட்சியருளும் கற்பக விநாயகரின் உருவமும் மிகவும் அருமையாக வடிவமைக்கப் பட்டுள்ளன. முருகப்பெருமானின் திருப்பாதத்தின் அடியில் யானை, ஆடு போன்றவையும், காவல் தேவதைகளான அண்டராபரணர், உக்கிரர் ஆகிய உருவங்களும் பாறையில் அமைக்கப்பட்டுள்ளன.
மகாலசுஷ்மி கோயிலின் வெளிப்புறச் சுவரில் பாற்கடலில் ஆதிஷேடன் மீது அமர்ந்திருக்கும் பெருமாள் வராஹமூர்த்தி, நரசிம்மமூர்த்தி, ஆகியோரின் அர்த்த சித்திர உருவங்கள் அமைக்கப்பட்டுள்ளன. கற்பக விநாயகருக்கு அருகில் உள்ள குடைவரைக் கோயிலின் உட்புறச்சுவரில் சோமஸ்கந்த உருவம், வெளிப்புறச் சுவரில் கோபூசை புரியும் பார்வதி, சந்தியா தாண்டவம் ஆடும் சிவபெருமான் ஆகிய வடிவங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இவ்வாறு முருகனின் திருமணத்திற்கு அனைத்தும் ஒரே இடத்தில் கூடியுள்ள தெய்வங்கள் ஒரே பாறையில் குடையப்பட்டுள்ளன.
மலையடிவாரத்தில் உமையாண்டவர் கோயிலின் வெளிப்புறச்
சுவரில் பைரவர், விநாயகர், முதலிய உருவங்கள் செதுக்கப்
இந்துக் கலைக்களஞ்சியம்

Page 101
பட்டுள்ளன. உட்புறச் சுவரில் நடராஜர் தாண்டவம், வள்ளி தேவசேனாதேவி சமேத முருகன் ஆகியோரின் சிற்பங்கள் சிதைந்தநிலையில் காணப்படுகின்றன. பல கல்வெட்டுக்களும் இங்கு காணப்படுகின்றன. சிறிது தூரத்தில் பஞ்சபாண்டவர் படுக்கை என அழைக்கப்படும் ஐந்து படுக்கைகள் கல்லில் அமைக்கப்பட்டுள்ளன. காசிச்சுனைக்கு மறுபக்கம் உள்ள பாறையில் காசி விஸ்வநாதர், விசாலாட்சி, கணேசர், சுப்பிரமணியர், பைரவர் முதலிய உருவங்களும், பஞ்சலிங்கங் களின் முன்னால் அமர்ந்து பிரம்மா பூசை செய்யும் கோலமும் செதுக்கப்பட்டுள்ளன. இவ்வாறாக சிற்பக்கலை நிறைந்த ஒரு ஆலயமாக திருப்பரங்குன்றம் விளங்குகிறது.
மதுரை மாநகரத் திலிருந்து ஆட்சி புரிந்த பாண்டிய மன்னர்கள் பரங்குன்றப் பக்தர்களாக விளங்கியுள்ளனர். இவர்களின் பக்திநிலையை பரிபாடல் மிக அழகாகக் கூறுகிறது. கட்டட அமைப்பை எடுத்து நோக்கும் போது பரங்குன்றத்தின் தனிச் சிறப்பாக விளங்குவது பிறகோயில்களில் இருப்பதுபோல் சுற்றுப் பிராகாரங்கள் இல்லாமல் அடுத்தடுத்து மண்டபங்களால் அமைந்து விளங்குவதும் பிற ஆலயங்களில் கோயில் பிராகாரத்தில் சுற்றிச் சூழ்ந்து எழுந்தருளியிருக்கும் தெய்வங்கள் எல்லாம் சூழ்ந்து காட்சியளிக்க கந்தக் கடவுள் கலியாணக் கோலத்தில் எழுந்தருளியிருப்பதும் ஆகும். சங்க இலக்கியங் களால் குறிக்கப்படும் இக் குடவரைக் கோயில் பல்லவ மன்னர்களுக்குப் பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே பாண்டிய மன்னர்கள் பாறைகளைக் குடைந்து கோயில்களை அமைந்துள் ளனர் என்பதற்குச் சிறந்த சான்றாக விளங்குகிறது.
அடுத்து, திருப்பரங்குன்றத்தைப் போற்றிப் பாடும் இலக்கியங்களை எடுத்து நோக்கும்போது சங்க இலக்கியங்களான திருமுருகாற்றுப்படை, கலித்தொகை, மதுரைக்காஞ்சி, பரிபாடல், அகநானூறு முதலிய சங்க நூல்களிலும் சைவசமயாச்சாரியர்களான திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் ஆகிய இருவர் பாடல்களிலும், பிற்காலத்தில் அருணகிரிநாதர் போன்ற ஆன்றோர்களின் வாக்கிலும் புகழ்பெறும் திருப்பரங்குன்றத்து தெய்வப் பெருமையை அழகிய தேசிகர் திருப்பரங்கிரிப் புராணத்தில் அழகாகக் கூறுகிறார். கந்தபுராணத்தின் துதிப்பாடலில் திருப்பரங்குன்றில் உறையும் கந்தன் போற்றப்படுகிறார். இத்துடன் பல கல்வெட்டுக்களும் திருப்பரங்குன்றத்தில் காணப்படுகின்றன. இவை மூலம் திருப்பரங்குன்றின் பெருமையையும் பழமையையும் அறிய முடிகிறது.
முதற்படைவீடான திருப்பரங்குன்றின் சிறப்பினை எடுத்து நோக்கும்போது திருப்பரங்குன்றை சிவன் என எண்ணி நித்தம் தொழுதால் வினைகள் எல்லாம் தீர்ந்து விடும் என சம்பந்தர் பாடுகிறார். முருகப்பெருமானுக்கு சிவனும் உமையும் காட்சி கொடுத்த நாள் தைப்பூச நாள் என்பதால், இந்நாளில்
இந்துக்கலைக்களஞ்சியம்

முருகனையும் சிவனையும் வழிபடுபவர் இஷ்டகாரிய சித்தி எல்லாம் பெறுவார்கள், என திருப்பரங்கிரி புராணம் கூறுகிறது. திருப்பரங்குன்றில் முருகனுக்கும் தேவசேனாதேவிக்கும் திருமணம் இடம் பெற்ற பங்குனி உத்தர நாள் பிரம்மோற்சவமாக கொண்டாடப்படுகிறது. இங்கு காணப்படும் தீர்த்தங்கள்
பாவங்களையும், நோயையும் தீர்ப்பதாக விளங்குகின்றன. -
சிவனுடன் வாதம் புரிந்த நக்கீரர் அந்தப் பாவம் தொலைய தீர்த்தயாத்திரை செய்யப் புறப்பட்டார். செல்லும் வழியில் திருப்பரங்குன்றில் ஒரு குளக்கரையில் அமர்ந்து பூசை செய்யும் போது அரசமரத்திலிருந்து உதிர்ந்த இலையின் பாதி நீரில் விழுந்து மீனாகவும் பாதி தரையில் விழுந்து பறவையாகவும் மாறி ஒன்றை ஒன்று இழுத்தன. பூசையில் இருந்த நக்கீரர் இதைக் கண்டு மலைப்புற்று சிவபூசையில் தவறு செய்யவே கற்முகி என்ற பூதம் அவரை மலைக்குகையில் சிறைவைத்தது. 999 பேர் அக்குகையில் சிறைவைக்கப்பட்டிருந்தனர். ஆயிரம் பேர் சேர்ந்தவுடன் அனைவரையும் விழுங்குவதாக இருந்தது. ஆகையால் நக்கீரரைக் கண்டவுடன் தம் நிலையைக் கூறி சிறையில் இருந்தவர்கள் அழுதனர். நக்கீரர் முருகனைத் துதித்து திருமுருகாற்றுப்படை பாடினார். அப்போது முருகனருளால் அவரது கைவேலால் மலைக் குகையைப் பிளந்து பூதத்தைக் கொன்று யாவரையும் விடுதலை செய்தார். வேல் பாறையைப் பிளந்த இடத்தை தென்பரங்குன்றில் இன்றும் காணலாம். சரவணப் பொய்கைக்கு அருகில் நக்கீரருக்கு கோயில் அமைக்கப்பட்டு நவராத்திரிக்கு முன்பாக விழா நடைபெறும்.
அடுத்து, நெறிதவறி நடந்தமையால் தந்தை சாபத்துக்கு ஆளாகி மீன் உருப்பெற்ற தப்தர், அனந்தர், நந்தி, சதுர்முகர், சுக்ரபாணி, மாலி என்கின்ற பராசர முனிவரின் ஆறு புதல்வர்களும் முருகப்பெருமான் சரவணப்பொய்கையில் தோன்றி பராசக்தியின் ஞானப் பாலை அருந்திய பொழுது ஒழுகிய பாலை உண்டு சாப நீக்கம் பெற்றனர். ஆறுவருடம் திருப்பரங்குன்றம் வந்து தவமியற்றி முருகப் பெருமானால் ஞானயோகம் பெற்றமையால் இத்தலம் "பராசர ஷேத்திரம்” எனவும் அழைக்கப்படுகிறது. இத்தலத்தில் அன்னதானம் செய்தால் நோய்கள் நீங்குவதோடு மக்கட் செல்வமும் இறைவன் அருள்வான் என்பது நம்பிக்கை. அத்துடன் வறுமையையும் நீக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
குன்றாடும் குமரன் இயற்கையழகும் கலையழகும் நிறையப் பெற்ற திருப்பரங்குன்றில் மணக்கோலத்துடன் வீற்றிருந்து மக்களின் மனக் குறைகளை நீக்கி அருள் பொழிந்த வண்ணம் உள்ளார். மதுரையில் இருந்து தெற்கே எட்டு கிலோ மீற்றர் தொலைவில் உள்ளது திருப்பரங்குன்றம். இங்கு செல்வதற்கு பேரூந்து வசதிகள் பெருமளவு உள்ளது. யாத்திரீகர்கள் தங்குவதற்கு வசதிகள் விடுதிகள், கல்யாணமண்டபமும்,
ஆலயத்துக்கு அருகில் தேவஸ்தானத்தவரால் நிர்வகிக்கப்பட்டு
71

Page 102
வருகிறது. முதற்படை வீடான திருப்பரங்குன்று எல்லோருடைய குறைகளையும் தீர்க்கும் குன்றாக விளங்குகிறது.
கோயில் - திருப்பரங்குன்றம்
இறைவன் - பரங்கிரிநாதர், சத்தியகிரீச்வரர் இறைவி - ஆவுடைய நாயகி, கோவர்த்தனாம்பிகை தலமரம் - கல்லுத்தி
தீர்த்தம் - சரவணப்பொய்கை சிறப்பு வழிபாடு - தேவகுஞ்சரி உடனுறை
சுப்பிரமணிய சுவாமி தலச் சிறப்பு
முருகப்பெருமானின் முதற்படை வீடு
திருஞானசம்பந்தர் 1ம் திருமுறை
அங்கம் ஒர் ஆறும் அருமறை நான்கும் அருள்செய்து பொங்கு வெண்நூலும் பொடி அணி மார்பில் பொலிவித்துத் திங்களும் பாம்பும் திகழ்சடை வைத்து ஒர் தேன்மொழி பங்கினன் மேய நல்நகர் போலும் - பரங்குன்றே
(க.ஹே.)
O திருபள்ளியெழுச்சி
உறங்குகின்ற மன்னனை விடியலில் இசைப்பாடித் துயில் எழுப்புவது ஒர் மரபாகப் பண்டைக் காலத்தில் இருந்துள்ளது.
தொல்காப்பியம் இதனைத் துயிலெடை என்று கூறுகின்றது. இவ் வழக்கமே பக்தி இயக்க காலத்தில் இறைவனைத் துயில் எழுப்பும் திருப்பள்ளியெழுச்சியாக அமைந்துள்ளது. அரண்மனையிலோ, பாசறையிலோ உறங்கும் வேந்தரை, அவருடைய புகழினைக் கூறிச் சூதர்கள் எழுப்புதல் வழக்கம். பாணனும், விறலியும் யாழிசைத்து அரசனைத் துயிலெழுப்பும் நிகழ்ச்சியைத் திருக்கோவையார் உரை துயிலெழுமங்கலம் என்று குறிக்கின்றது.
பக்தி இயக்கம் உருவாகி வளர்ச்சியடைந்த காலத்தில் மன்னனின் இடம் தெய்வத்திற்கு வழங்கப்பட்டது. அரசனை இறைவன் எனக் குறிப்பிட்ட மக்கள், கடவுளையும் இறைவன் என்றனர். அரசனின் இருப்பிடமான கோயில் தெய்வ சந்நிதிக்குரிய பெயராயிற்று. மன்னனை அதிகாலையில் துயியெழுப்பப் பாடியது போன்று, கடவுைைளயும் பள்ளி எழுமாறு அடியவர்கள் பாடத் தொடங்கினர். அதுவே திருப்பள்ளியெழுச்சி என்னும் பக்தி இலக்கியமாக மலர்ந்து ஒவ்வொரு நாள் இரவிலும் திருக்கோயில் மூர்த்தியைத் திருப்பள்ளியறையில் எழுந்தருளச் செய்வதும் மறுநாள் காலை விழித்தெழுமாறு பாசுரங்கள் பாடி இறைவனை துதி செய்வதும் இந்துக் கோயில் மரபாகும் .
சைவ, வைணவ பக்தி நூல்களில் திருப்பள்ளியெழுச்சி சிறப்பிடம் பெறுகின்றது. மார்கழித் திங்களில் விடியற் காலத்தில்
72

எழுந்து குளித்துவிட்டுத் திருக்கோயிலுக்குச் சென்று திருப்பள்ளியெழுச்சி பாடும் மரபு பழமையானது. மாணிக்க வாசகரும் தொண்டரடிப்பொடியாழ்வாரும் திருப்பள்ளி யெழுச்சி பாடியுள்ளனர்.
திருப்பெருந்துறையில் கோயில் கொண்டு எழுந்தருளி யிருக்கும் சிவபெருமானைத் துயிலெழுப்பும் முறையில் மாணிக்கவாசரின் திருப்பள்ளியெழுச்சி அமைந்துள்ளது. முதல் எட்டுப்பாக்களின் மூன்றாம் அடியிலும், கடைசி இரண்டு பாடல்களின் இரண்டாம் அடியிலும் திருப்பெருந்துறை சுட்டப்படுகின்றது. ஒவ்வொருபாடலும் பள்ளி எழுந்தருளாயே என்று முடிகின்றது. இதில் உள்ள பத்துப் பாடல்களிலும் இயற்கையில் நாம் காணும் அழகையும் அதனால் ஏற்படும் செயல்களையும் தெளிவாகக் காணக்கூடியதாக உள்ளது.
"கூவின பூங்குயில் கூவின கோழி குருகுகள் இயம்பின இயம்பின சங்கம் ஒவின தாரகை ஒளி ஒளி உதயத்து'
இவ்வடிகளில் விடியற் காலையின் வியத்தகு நிகழ்ச்சிகளையும் இயற்கையின் இனிய எழில் காட்சிகளையும் மிக அழகாக வர்ணிக்கிறார் மாணிக்கவாசகர். குக்கூ என்று பூங்குயில் கூவுகிறது; கொக்கரக்கோ என்று தெருக் கோழிகள் கூப்பிடுகின்றன; விதம் விதமான புள்ளினங்கள் பலவகை இனிய ஒலிகளை எழுப்புகின்றன. சங்குகள் முழங்குகின்றன.கிழக்கு வெளுக்கின்றது அருணோதயம் ஆகிறது. அதன் ஒளியில் நட்சத்திரங்கள் மங்கி ஒளிர்கின்றன. இத்தகைய நிகழ்ச்சிகள் சூரிய உதயத்தை உணர்த்துகின்றன. அதிகாலையில் புறவுலகில் சாதரணமாக நடைபெறும் நிகழ்ச்சிகள் அனைத்தையும் விலாவரியாகக் கூறும் மாணிக்கவாசகர் அத்தகையதொரு அருமையான வேளைதான் நம் அகவுலகில் அருள் ஜோதியை உணர்த்துவதற்குத் தகுந்த நேரம் என எண்ணி அந்த உணர்வோடு ஆண்டவனைப் பள்ளி எழ வேண்டுகிறார்.
"ஒருப்படுகின்றது விருப்பொடு நமக்குத் தேவநல் செறிகழல் தாள் இணை காட்டாய் திருப்பெருந் துறைஉறை சிவபெருமானே’
அருமையான காலைப் பொழுதில் எங்களுடைய மனம் உனக்காட்படுவதற்கு அவாவுற்று நிற்கின்றது. திருப்பெருந் துறை உறை சிவனே உனது திருவடிகளை எம் சிரசின் மீது சூட்ட வேண்டும் என இரந்து நிற்கின்றார்.
திருவரங்கரத்தில் அறிதுயில் கொள்ளும் திருமாலைத் துயிலெழுப்பும் முறையில் தொண்டரடிப் பொடியாழ்வாரின் திருப்பள்ளி எழுச்சி அமைந்துள்ளது. ஐந்தாம், பத்தாம் பாடல்கள் தவிர்ந்த ஏனைய எட்டுப் பாடல்களின் இறுதியிலும் அரங்கத்தம்மா பள்ளியெழுந்தருளாயே என்று ஆழ்வார்
இந்துக் கலைக்களஞ்சியம்

Page 103
பாடுகின்றார். மாணிக்கவாசகர் போன்றே தொண்டரடிப் பொடி யாழ்வாரும் அருணோதயத்தை அழகாக வர்ணிக்கிறார். கதிரவன் உதித்தான்; கனவிருள் அகன்றது, பாயிருள் அகன்றது, புகுந்தது புலரி என்று கவினுற விளக்கி அமரரும் பிறரும் அரங்கத்தம்மானின் திருப்பள்ளி எழுச்சிக்காகக் காத்திருப்பதைத் தொண்டரடிப் பொடியாழ்வாரின் திருப்பள்ளி யெழுச்சி காட்டுகிறது.
திருப்பள்ளி எழுச்சி பற்றி தத்துவ நோக்கில் மற்றொரு கருத்துக் கூறப்படுவதை இச் சந்தர்ப்பத்தில் நோக்குவது பொருத்தமுடையது. நம் சிரசின் நடுவில் இருக்கும் ஞான பீடத்தில் அருட்பெருஞ் சோதியை எழுந்தருளப் பண்ணுவதற் காகவே திருப்பள்ளி எழுச்சிப் பாடல்கள் பாடப்பட்டதாக
தத்துவவாதிகள் கூறுவர்.
ஒவ்வொருவருடைய உயிருள்ளும் உயிராய் இருப்பவர் இறைவன். அவர் ஒவ்வொருவர் அகத்திலும் மறைந்து இருக்கிறார் அவரை எழுப்பி அவர் துணையுடன் நாம் செயல்பட வேண்டும். இந்த அருள் அனுபவம் பெறுவதற்கு புறத்திலே திரிகின்ற மன உணர்வை அகத்துள் திருப்பி ஆன்மாவில் பொருந்தச்செய்ய வேண்டும். அவ்வாறே மேற்கொள்ளும் போது அகவிழிப்பு ஏற்படும். அகவிழிப்பை, ஒடுங்கிக் கிடக்கும் தெய்வப் பண்பை, எழுப்புவதே திருப்பள்ளி எழுச்சிப் பாடல்களின் நோக்கமாகும். மாணிக்கவாசகர், வள்ளலார் போன்றோரின் பாடல்களை ஆதாரமாக வைத்தே இக்கருத்தை வலியுறுத்தி உள்ளனர்.
“அருணன் இந்திரன்திசை அணுகினன் இருள் போய் அகன்றது உதயம்நின் மலர்திரு முகத்தின் அருள்நிதி தரவரும் ஆனந்த மலையே அலை கடலே பள்ளி யெழுந்தரு ளாயே’
இவ்வடிகள் திருப்பள்ளி எழுச்சிப் பாடல்களின் குறிக்கோளைச் செம்மையாகக் காட்டி நிற்கின்றன. இந்திரன் திசை கிழக்கு; சூரிய உதயத்துக்கு முன் கீழ் வானத்தில் செம்மைபடர்ந்து ஒளி பரவுகிறது. இதுவே அருணோதயம். இவ்வொளி பரவப்பரவ இருள் தேய்ந்து அருகிப் போகிறது. இதுதான் இப்பாடலின் முதல் இருவரிகளின் நேர் பொருள். ஆயின் இறைவனின் ஒளி மெல்ல மெல்ல மேல் எழ எம்மைப் பீடித்துள்ள அறியாமை என்னும் மாயை விலகும். இறை அருள் என்னும் பெரும் பேறு எம்மை வந்தடையும். ஒவ்வொருவரின் சிரசின் நடுவிலும் ஒளிவடிவாய் உள்ளான் இறைவன். அவன் சிர நடுவிலே இருந்தாலும் மனிதனால் உணரப்படாமல் இருப்பதால் இறை அருள் வெளிப்பட வாய்ப்பின்றிக் கிடக்கிறது, சிரசின் நடுவில் இருக்கும் இறைவனை எழுப்பி அவன் அருளைப் பெறுவதற்காகவே பள்ளி எழுச்சிப் பாடல்கள் பாடப்பட்டன என்பது இவர்களது கருத்து.
இந்துக்கலைக்களஞ்சியம்

மாணிக்கவாசகரைப் போன்றே வள்ளலாரும் திருப்பள்ளி எழுச்சிப் பாடல்களைப் பாடியுள்ளார். தன் அகத்தில் பற்றிக் கொண்டிருந்த அருளொளியை எழுப்பிக் கொண்டு அந்த அருள் ஒளியுடன் ஒன்றி அதுவாகவே ஆகிவிட்டார்.
இறைவனுக்காகப் பாடப்பட்ட இத் திருப்பள்ளி எழுச்சிகள் தவிர வேறு நோக்கில் பாடப்பட்ட திருப்பள்ளி எழுச்சிப் பாடல்களும் உண்டு. துறைமங்கலம் சிவப்பிரகாசம் சுவாமிகள் தம்முடைய ஞானாசிரியனுக்குத் திருப்பள்ளி எழுச்சி பாடியுள்ளார். 'சிவஞான பாலய சுவாமிகள் திருபள்ளியெழுச்சி” என்னும் இந் நூலில் நான்கு பாடல்கள் மட்டுமே உள்ளன. "சிவஞான தேசிகனே அருண்மலையே பள்ளி யெழுந்தருளாயே” என்று அப்பாடல்கள் முடிவுறுகின்றன.
தேசியகவி சுப்பிரமணிய பாரதியார் தமது நோக்கத்திற்கு ஏற்ப திருப்பள்ளி எழுச்சியை புதுமையாகக் கையாண்டுள்ளார். உறங்கிக்கிடக்கின்ற பாரத அன்னையை பாரத மக்கள் துயில் எழுப்புவதாக இந்நூல் அமைந்துள்ளது. பாரதியார் பாரத மாதா திருப்பள்ளி எழுச்சியில் ஐந்து பாடல்கள் மட்டுமே பாடியுள்ளார். இதைவிடத் தமிழ்த்தாய் திருப்பள்ளி எழுச்சி என்னும் நூலும் வெளிவந்துள்ளது. / (நி.நி.)
O ● திருப்பறியலூர்
சோழ நாட்டிலுள்ள திருமுறைத் தலங்களில் திருப்பறியலூரும் ஒன்றாகும். இது அட்டவீரட்டத் தலங்களில் ஒன்று. சிவன் வீரபத்திரனை ஏவி தக்கனைச் சங்கரித்த இடம் இதனால் திருப்பறியலூர் வீரட்டம் எனப்படுகிறது. தக்கன் யாகம் செய்த இடம் என்பதால் தக்ஷபுரம்' என்றும், தேவர்களுக்கு ஏற்பட்ட பாவத்தை தண்டனை மூலம் பறித்ததால் பறியலூர் என்றும் அழைக்கப்படுகிறது. எனினும் தற்போதைய வழக்கில் வீரட்டேஸ்வரர் கோயில்’ என்றே அழைக்கப்படுகிறது. மயிலாடுதுறை - தரங்கம்பாடி வீதியில் உள்ள பரசலூரிலிருந்து சிறிது தூரத்தில் இவ் ஆலயம் அமைந்துள்ளது. சிறிய கிராமத்தில் மிகவும் இயற்கைச் சூழலில் அமைந்துள்ளது. இதன் அழகைச் சம்பந்தர் பின்வருமாறு பாடுகிறார்.
"வளைக்கும் மெயிற்றின் அரக்கன் வரைக்கீழ் இளைக்கும் படிதா னிருந்தேழை யன்னம் திளைக்கும் படுகர்த் திருப்பறியலூரில் விளைக்கும் வயல் சூழ்ந்த வீரட்டத்தானே'
“விரிந்த மலர்ச்சோலை வீரட்டத்தானே ”
9.
"திரையார் புனல் சூழ் திருப்பறியலூரில்
என நீர்வளம், நிலவளம் நிறைந்த சூழலில் இவ்வாலயம் அமைந்துள்ளது என்பதைக் குறிப்பிடுகிறார்.
73

Page 104
கோயிலின் அமைப்பு முறையை எடுத்து நோக்கினால் பழமையான ஆலயமாக விளங்குகின்றது. பெரிய கோபுரங்கள் எதுவுமில்லை. கொடிமரம் இல்லை - நந்தி பலிபீடத்துடன் நேரே மூலவர் சந்நிதி தெரியும். உள்ளே நுழைந்தால் விநாயகர், விஸ்வநாதர், பைரவர், சூரியன், சந்நிதிகள் உள்ளன. கோஷ்ட மூர்த்தங்களாக துர்க்கை, பிரம்மா, லிங்கோற்பவர், தட்சிணாமூர்த்தி, நர்த்தன விநாயகர் முதலியோர் காணப் படுகின்றனர். உள்மண்டபத்தில் இடப்பக்கமாக தட்சசம் ஹார மூர்த்தியைத் தரிசிக்கலாம். இவர் சூலம், வாள், தண்டு, மணி, கபாலம், ஏந்திய உற்சவமூர்த்தியாகக் காட்சி தருகிறார். இதற்குப் பக்கத்தில் நடராஜர் சபையும் உள்ளது. உற்சவமூர்த்திகளும் இங்கு காணப்படுகின்றன. வெளிமுன் மண்டபத்தில் அம்பாள் சந்நிதியும் தெற்கு நோக்கி உள்ளது. அம்பாள் அபயவரதத்துடன் கூடிய நான்கு திருக்கரங்களுடன் காட்சி தருகிறார். நவக்கிரகங்களில் சூரியன் மட்டுமே இவ்வாலயத்தில் உள்ளது.
திருப்பறியலூரின் மூலமூர்த்தி சுயம்பு லிங்கமாகும். பெரிய திருமேனி, சதுர ஆவுடையார், கோமுகை மாறியுள்ளது. மூலவர் வீரட்டேஸ்வரர் என்றும் தட்சபுரீஸ்வரர் என்றும் அழைக்கப் படுகின்றார். இறைவி இளங்கொம்பலையாள் என்றழைக்கப் படுகின்றாள். இதனை,
“வளங்கொள் மலர்மேல் அயன் ஒதவண்ணன் துளங்கும் மனந்தார் தொழுந்தழலாய் நின்றான் இளங்கொம்பானாளோடு இணைந்தும் பிணைந்தும் விளங்கும் திருப் பறியல் வீரட்டத் தானே'
எனப்பாடுகிறார் சம்பந்தர். தலமரமாக வில்வ மரமும் தீர்த்தமாக உத்திரவேதித் தீர்த்தமும் சிறந்து விளங்குகின்றன. இது ஒம குண்டம் எனவும் அழைக்கப்படுகிறது. சந்நிதிக்கு தெற்கே குளம் உள்ளது. இது தக்கன் யாகம் செய்த இடம் என்றும், நீர் வற்றும் காலத்தில் குளத்தினுள் யாக வேதிகையாக குண்டம் முதலியன காணப்படுகின்றன என்றும் கூறுவர்.
இவ்வாலயத்தில் நித்திய பூசைகள் சிறப்பாக நடை பெறுகின்றன. கார்த்திகை ஞாயிறு நாட்களில் சுவாமி புறப்பாடு நடைபெறுகிறது. முன்னால் இங்கு வருடப்பிறப்பு, ஆடிப்பிறப்பு, ஐப்பசிப்பிறப்பு, புரட்டாதிச் சதுர்த்தி, தைப்பிறப்பு, வைகாசித் திருவோண அபிஷேகம் சிறப்புற நடந்தன என்பதை அறிய முடிகிறது.
இவ்வாலயத்தில் சுந்தரபாண்டியன் ஆட்சிக்கால கல்வெட்டு ஒன்றிலே,
"ஜயங் கொண்ட சோழவள நாட்டு வீழை நாட்டு ராஜநாராயண சதுர்வேதி மங்கல மானி பறியலூர்”
74

என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இங்கு சிற்ப வேலைப் பாடுகளுடன் கூடிய மூர்த்திகளைக் காண முடிகிறது. கருவறைச் சுவரில் தக்கன் சிவலிங்கத்தைப் பூஜிக்கும் கோலத்திலும், கீழே செப்புத் தகட்டில் தக்கன் யாகம் செய்வது போலவும், பிரம்மன் இருப்பது போலவும் சிற்பம் காணப்படுகிறது. தட்சசங்கார மூர்த்தியாகிய வீரபத்திரரின் காலடியில் தக்கன் வீழ்ந்து கிடப்பது போன்ற சிற்பம் மிகவும் அழகாகச் செதுக்கப்பட்டுள்ளது. இதனைத் தகட்டினால்
மூடி வைத்துள்ளனர்.
திருப்பறியலூர் வீரட்டத்தை திருஞானசம்பந்தர் பாடியுள்ளார். இது முதலாம் திருமுறையில் அடங்குகின்றது. தலபுராணத்தை திருவாவடுதுறை ஆதீன குருமகா சந்நிதானம் பூரீலறுநீ வேலப்ப தேசிக சுவாமிகள் அருளிச் செய்துள்ளார். (க.ஹே.)
திருப்பனங்காடு
தொண்டை நாட்டுத் தலம். பனை மரக்காடக இருந்தமையால் பனங்காடு என்று பெயர் பெற்றது. பனையைத் தலமரமாகக் கொண்ட பாடல் பெற்ற தலங்கள் ஐந்தனுள் இதுவும் ஒன்று. சிறிய ஊர், நகரத்தார் திருப்பணி பெற்ற கோயில், கோயிலின் எதிரில் பெரிய குளம் உள்ளது. இதற்குச் சடாகங்கை என்று பெயர். அகஸ்தியர் வழிபட்ட போது இறைவனுடைய ஜடா முடியினுள்ள கங்கை தீர்த்தமாக பெளிப்பட்டது. இக் குளக்கரையில் கங்கா தேவியின் சிலை உள்ளது. மாசி மகத்தில் தீர்த்தோற்சவமும், தெப்பத் திருவிழாவும் இங்கு நடை பெறுகின்றன. பட்டினத்தாரின் திரு வேகம்பர் திருவந்தாதியில் இத் தலம் குறிக்கப்பட்டுள்ளது. இத் தலத்தை புலஸ்தியர், கண்ணுவ முனிவர் வழிபட்டதாகவும் சொல்லப்படுகிறது.
ஊருக்குப் பக்கத்தில் சற்றுத் தொலைவில் ஊற்றுத் தீர்த்தம் உள்ளது. சுந்தரருக்கு இறைவன் உணவளித்த வரலாறு இத் தலத்திற்கு கூறப்படுகிறது. இது செவி வழிக்கதையாக உள்ளதே தவிர பெரியபுராணத்தில் இல்லை. அப்பொழுது இறைவன் காலால் கிளறி உண்டாக்கிய தீர்த்தமே ஊற்றுத் தீர்த்தம் என்றும் கூறப்படுகிறது.
கோயில்
1 இறைவன் - தாலபுரீசுவரர் (சுயம்பு)
இறைவி - அமிர்தவல்லி
2 இறைன் - கிருபாநாதேசுவரர்
இறைவி - கிருபாநாயகி தலமரம் - பனை (கோயிலுக்கு உள்ளும் வெளியிலும்
இரு பனைகள் உள்ளன)
தீர்த்தம் - சடாகங்கை (கோயிலுக்கு எதிரில் உள்ளது)
இத் தலத்தில் அகஸ்தியர் வழிபட்ட சுவாமி சந்நிதியும், புலஸ்தியர் வழிபட்ட சுவாமி சந்நிதியுமாக இரு சந்நிதிகள்
இந்துக்கலைக்களஞ்சியம்

Page 105
உள்ளன. விமானம் கஜப்பிருஷ்ட அமைப்புடன் கூடியது. விமானத்தில் மூன்று கலசங்கள் இடம் பெற்றுள்ளன. இக்கோயிலுக்கு ராஜ கோபுரம் இல்லை. முகப்பு வாயில் மட்டுமே உண்டு உள் கோபுரம் மூன்று நிலைகளைக் கொண்டதாய் அமைந்துள்ளது. கிழக்கு நோக்கிய முகப்பு வாயிலைக் கடந்து உட் சென்றால் புலஸ்தியர் வழிபட்ட சுவாமி சந்நிதி காணப்படுகிறது. முன்னால் கொடிமரம், பலிபீடம், நந்தி ஆகியன உள்ளன. பக்கத்தில் அகஸ்தியர் வழிபட்ட சுவாமி சந்நிதி உள்ளது. எதிரில் வாயில் இல்லை. சுவரில் சாளரம் மட்டுமே இடம் பெற்றுள்ளது. இதன் எதிரில் கொடிமரம், பலிபீடம், நந்தி இடம் பெற்றுள்ளன. முன்மண்டப வாயிலின் ஒருபுறம் செல்வப் பிள்ளையார் சந்நிதியும், மறுபுறம் தண்டபாணி சந்நிதியும் உள்ளன. கிருபாநாதேசுவரர், புலஸ்தியார் வழிபட்டது. ஆவுடையார் சதுர வடிவமானது. இவரது சந்நிதித் துவாரபாலகர்கள் உருவம் வண்ணத்தில் சுவரில் வரையப்பட்டுள்ளது. தாலபுரீசுவரர் (அகஸ்தியர் வழிபட்டது) சந்நிதி துவாரபாலகர்கள் சுதை உருவம். உள் வாயிலில் நுழைந்ததும் வலப்பால் சூரியன். அடுத்துள்ள இடத்தில் வாகனங்கள் வைக்கப்பட்டுள்ளன. இடப்பகுதியில் இரு அம்பாள் சந்நிதிகளும் தெற்கு நோக்கி உள்ளன. இவ்விரு சந்நிதிகளுக்குமிடையில் பள்ளியறை உள்ளது. அகஸ்தியர் வழிபட்ட மூர்த்தி சந்நிதியின் முன்னால் ஒரு புறம், அகஸ்தியர் உருவமும் மறுபுறம், பனை மரமும் கல்லில் செதுக்கப்பட்டுள்ளது. இது போன்றே புலஸ்தியர் வழிபட்ட சுவாமி சந்நிதியின் ஒரு புறம் புலஸ்தியர் உருவமும், பனைமரமும் கல்லில் உள்ளன. தாலபுரீஸ்வரரின் கருவறையில், கோஷ்ட மூர்த்ங்களாக விநாயகர், தட்சிணாமூர்த்தி, லிங்கோற்பவர், பிரம்மா, துர்க்கை உள்ளன. இச் சந்நிதியில் சண்டேஸ்வரர் இல்லை. கிருபாநாதேசுவரரின் கருவறையில் கோஷ்ட மூர்த்தங்களாகத் தட்சிணாமூர்த்தி, மகாவிஷ்ணு, பிரம்மா உள்ளனர். இங்குள்ள தட்சிணாமூர்த்தி அமைப்பு அற்புதமானது. வலக்காலைத் தொங்கவிட்டு, இடக்காலை மேலே உயர்த்திக் குத்துக்காலிட்டு சின் முத்திரை பாவத்தில் அபய, வரத கரமும் கூடி அற்புத அமைப்பாக உள்ளது.
பிராகாரத்தில் வலமாக வரும் போது சேக்கிழார், நால்வர் சந்நிதி உள்ளது. அடுத்து வல்லபை விநாயகர் உள்ளார். பக்கத்தில் மீனாட்சி சொக்கநாதர் சந்நிதியும், அடுத்துத் தல மரத்தின் சிலாரூபமும், இரு சிவலிங்கங்களும் உள்ளன. அடுத்து உற்சவத் திருமேனிகளான நால்வர், சோமாஸ்கந்தர், பிரதோஷநாயகர் முதலியன இடம் பெற்றுள்ளன. கஜலட்சுமி சந்நிதியை அடுத்து முருகப் பெருமான் வள்ளி தெய்வ யானையுடன் காட்சி தருகிறார். சண்டேஸ்வரர், சந்நிதிக்கு முன் நவக்கிரகங்கள் தத்தம் வாகனங்களுடன் உள்ளன. நடராஜ சந்நிதி அழகாக உள்ளது.
இக்கோயில் உள்ள மண்டபத் தூண்களில் அரிய சிற்பங்கள் உள்ளன. அவற்றுள் அமிர்தவல்லி அம்பாள் சந்நிதியின் முன்னுள்ள நாகலிங்கச் சிற்பம், இராமனுடைய சிற்பம்.
இந்துக்கலைக்களஞ்சியம்

கிருபாநாதேஸ்வரர் சந்நிதிக்கு முன்புள்ள வாலி, சுக்ரீவர், போரிடும் சிற்பம், இத் தூணின் மறுபுறம் உள்ள தட்சிணாமூர்த்தி சிற்பம், ஆஞ்சநேயர் சிற்பம், தாலபுரீசுவரர் சந்நிதிக்கு முன்பாக உள்ள புருஷாமிருகத்தின் சிற்பம், சுந்தரர், மாணிக்கவாசகர், அப்பர், சம்பந்தர் சிற்பம், ஏகபாத மூர்த்தி சிற்பம், அதன் பின்புறம் அமைந்துள்ள கருடாழ்வார் சிற்பம், கருடனுக்கு முன் கண்ணன் குழலூதும் சிற்பமும், ஏகப்பச் செட்டியாரின் (கோயிற் திருபணி மேற்கொண்ட நகரத்தார்) உருவத்திற்கு பின்புறம் உள்ள தூணில் சமணர் கழுவேறும் சிற்பம் குறிப்பிடத்தக்கவை
கோயிலுக்கு வெளியில் கோட்டை முனீஸ்வரர் கோயில் உள்ளது. முனீஸ்வரர் யோகாசனத்தில் அமர்ந்த நிலையில் வலக்கையில் உருத்திராக்க மாலை கொண்டும், இடக்கையை தொடை மீது வைத்துக்கொண்டும், சடாமுடியுடன் காட்சி தருகிறார். ஒருபுறம் துவார விநாயகரும், மறுபுறம் யானை மீதமர்ந்த ஐயப்பனும் காட்சி தருகின்றனர். அகஸ்தியர் பூஜித்த போது இம் முனீஸ்வரர் பனங்கனிகளை உதிரச்செய்ய அகஸ்தியர் அதனையும் இறைவனுக்கு நிவேதனமாகப் படைத்தமையால் இன்றும் பனங்கனிகள் கிடைக்கும் காலத்தில் அது சுவாமிக்கு நிவேதனம் செய்யப்படுகிறது. மாசி மகத்தில் தலாபுரீஸ்வரருக்கு பெரு விழா நடைபெறுகிறது. கார்த்திகைச் சோமவார விழா கிருபாநாதேசுவரருக்கு விசேடம். நவராத்திரி, சஷ்டி உற்சவங்கள் சிறப்பாக இடம்பெறுகின்றன. கோயிலுள் பக்கத்துக்கு ஒன்றாக இருபுறமும் இரு பனைமரங்கள் உள்ளன. இதில் ஒன்று ஆண்பனை மற்றையது பெண்பனை. ஆதி பனை மரங்கள் இரண்டும் கோயிலில் வெளிப்புறம் உள்ள கோட்டை, முனீஸ்வரர் கோயிலின் பின்புறம் உள்ளன.
இத்தலத்தில் இருபத்திரண்டு கல்வெட்டுக்கள் கிடைக்கப் பெற்றுள்ளன. இவை முதலாம் இராஜேந்திர சோழன், முதலாம் குலோத்துங்க சோழன், விஜய நகர மன்னர்கள் ஆகியோரின் கல்வெட்டுகளாகும். கல்வெட்டில் இறைவன், திருப்பனங் காட்டூர் நாயனார் என்று குறிக்கப் பெற்றுள்ளார். ஊர்ப் பெயர் காலியூர்க் கோட்டத்து கழுமல நாட்டுத் திருப்பனங்காடு என்று பேசப்படுகிறது.
சுந்தரரிடம் இறைவன் நான் பனங்காட்டிற்கும் வன்பாக்கத்துக்குமாய் இருப்பவன்' என்றருளியமையால் இத் தலத்தை வன்பார்த்தான் பனங்காட்டூர் என்று சுந்தரர் பாடியுள்ளார்.
"விடையின்மேல் வருவானை வேதத்தின் பொருளானை அடையில் அன்புடையானை யாவர்க்கும்அறிவொண்ணா மடையில் வாளைகள் பாயும் வன்பார்த்தான் பனங்காட்டூர்ச் சடையிற் கங்கை தரித்தானைச் சாராதார் சார்வென்னே’
எனச் சுந்தரர் பெருமான் இத் தலத்து இறைவனைப் பாடிப் பரவியுள்ளார். (நி.நி.)
75

Page 106
O
திருப்பனந்தாள்
சோழ நாட்டு வட கரைத் தலம் திருப்பனந்தாள் ஊரின் நடுவில் உள்ளது. கோயில் பனையின் தாளில் இறைவன் எழுந்தருளியிருத்தலால் பனந் தாள் எனப்பட்டது. கோயில் பிராகாரத்தில் இரு ஆண் பனைகள் உள்ளன. பிரமன், திருமால், இந்திரன், ஐராவாதம், அகத்தியர், சூரிய, சந்திரர், ஆதிசேஷன், நாககன்னிகை, தாடகை, குங்கிலியக்கலய நாயனார் ஆகியயோர் வழிபட்டுப் பேறு பெற்ற தலம்.
புராணவரலாறு
தாடகை என்னும் அசுர குலமாது (இராமாயணத்தில் வரும் தாடகை அல்ல) மகப் பேறு வேண்டி இறைவனை நாடோறும் வழிபட்டு வந்தாள். தாடகையின் பக்தியைச் சோதிக்க திருவுளம் கொண்ட இறைவன், அவள் சிவலிங்கத்திற்கு மாலை சூட எத்தனித்தபோது அவளது ஆடையை நெகிழச் செய்தார். அவள் தம் ஆடைகளை முழங்கைகளில் இடுக்கிக் கொண்டு மாலையை ஏற்கும் படி இறைவனிடம் இரந்து நின்றாள். சிவலிங்கம் அவளின் பக்கம் வளைந்து கொடுக்க தாடகை மாலையை அணிவித்தாள். சிவபெருமான் தாடகைக்கு காட்சி தொடுத்து அவள் வேண்டிய வரங்களைத் தந்தருளினார். அப்பெண் விரும்பிய வாறே இத் தலம் தாடகையீச்சரம் எனவும் வழங்கப் பெற்றது.
அன்று தாடகைக்காக வளைந்த ஈசன் பின்னர் நிமிராமலேயே காட்சியளித்தார். பின்னர் ஒரு காலத்தில் சோழமன்னன் அவரை நிமிர்த்த விழைந்து பணியாட்கள், குதிரைகள், யானைகள் முதலியவற்றை கட்டி இழுத்தும் நிமிரச் செய்ய முடியவில்லை. திருகடவூரில் வாழ்ந்த குங்கிலியக் கலய நாயனார் சோழ மன்னனின் விருப்பத்தை அறிந்து தானே திருப்பனந்தாள் சென்று இறைவனைப் பலவாறு போற்றித் துதித்து இறைவன் முடியிலும் தம் கழுத்திலுமாக ஒரு நூலைக் கட்டி இழுத்தார். சிவலிங்கம் நிமிர்ந்தது. சோழனும் மக்களும் வியப்படைந்து நாயனாரை வணங்கினர். பின்னர் நாயனார் ஆவுடையார் செய்து இலிங்கத்தைப் பொருத்தியதும் நாயனாரின் இறந்த மகனை நாககன்னிகைத் திருக்குளத்தில் நீராட்டி உயிர்ப்பிக்க வைத்ததும் போன்ற பல புராணக் கதைகள் உள்ளன. குங்கிலிய நாயனாரின் பெருமையை உலகறியச் செய்யவே இறைவன் இந்த நாடகத்தை நடத்தினார் என்று கூறப்படுகிறது. இந் நிகழ்ச்சிகள் பதினாறு கால் மண்டபத் தூண்களில் சிற்பங்களாக வடிக்கப்பட்டுள்ளது. திருஞான சம்பந்தர் தம் பதிகம் முழுவதும் தீவினைகளைத் தொலைக்க திருப்பனந்தாளைச் சேர்மின் என்று கூறுகிறார். “சூழ்தரு வல்வினையும் உடன் தோன்றிய பல் பிணியும் பாழ்பட வேண்டுதிரேல் மிக ஏத்துமின். தாடகையீச்சரமே” எனபாடுகிறார்.
"மாலை சாத்துந் தாடகை மானங்காப்பான்
தாழ்ந்து பூங்கச்சிட்டீர்க்கும்
மீடுறுகலயன் அன்பின் நிமிர்ந்த எம்பிரான் ஊர் ஈதால்’
(திருவிளை, புரா)
76

கோயில்
இறைவன் - செஞ்சடையப்பர், தாலவனேஸ்வரர், ஜடாதரர்,
அருணஜடேஸ்வரர்.
இறைவி - பிருகந்நாயகி, பெரியநாயகி, தாலவனேஸ்வரி
தீர்த்தங்கள்- பிரமதீர்த்தம், ஜராவததிர்த்தம், தாடகை தீர்த்தம்
முதலிய பல தீர்த்தங்கள்.
ஊரின் நடுவில் மேற்கு நோக்கியமைந்த பெரிய கோயில், மேற்கு நோக்கியமைந்த இராஜகோபுரம் ஒன்பது நிலைகளுடனும் பல அழகான கதைச் சிற்பங்களுடனும் காட்சியளிக்கிறது. கோபுரத்தைக் கடந்து உள்ளே சென்றதும் பரந்தவெளி இடப்பக்கம் நாகதீர்த்தக் குளம். திருமாளிகைப் பத்தி மண்டபங்களுடன் அழகுற விளங்குகிறது. முன் வெளியின் நடுவில் நந்தி, பலிபீடம், கொடிமரம், நந்தி உள்ளன. ஐந்து நிலைக் கோபுரவாயில். இதனைக் கடந்ததும் வருவது பதினாறு கால் மண்டபம். இம் மண்டபத்தில் தாடகைப் பெருமான் வளைந்து கொடுத்ததும். குங்கிலியக் கலயனார் பெருமானின் வளவை நிமிர்த்தியதுமான சிற்பங்கள் உள்ளன. அடுத்து கோயிலின் முன் மண்டபம். இங்கு விநாயகர். குங்கிலியக் கலயநாயனார் சந்நிதிகள் உள்ளன. அலங்கார மண்டபத் தூண்களில் பல சிற்பங்களும் மண்டபக் கூரையில் தாடகையம்மை குங்கிலியக் கலய நாயனார் புராண நிகழ்ச்சிகள் ஒவியங்களாகவும் மிக எழிலுடன் காணப்படுகின்றன. அர்த்த மண்டபவாயிலில் இரு துவார பாலகர்கள் காவல் புரிகின்றனர்.
கருவறையில் இறைவன் இலிங்கத் திருவுருவில் காட்சியளிக்கிறார். உட்திருச் சுற்றில் சுப்பிரமணியர், நடராஜர், திருமகள், முத்துக்குமாரசுவாமி, பஞ்ச பூதலிங்கங்கள், பைரவர், சூரியன், அறுபத்து மூவர், சப்தகன்னியர் சந்நிதிகளும், கருவறை மாடங்களில் வடபுறம் துர்க்கை தென்புறம் தட்சிணா மூர்த்தி வடக்கில் சண்டிகேச்வரர் சந்நிதிகளும் உள்ளன. வடகிழக்கு மூலையில் நவக்கிரக சந்நிதி உள்ளது.
தல விருட்சத்தின் பக்கத்தில் உள்ள சிவலிங்கத்தை அடுத்துள்ள கிணறு நாககன்னிகை பிலம் எனப்படும். இதன் வழியாக நாக கன்னியர் வந்து இறைவனை வழிபடுவதாக ஐதீகம்.
சுவாமி கோயிலின் வலப்பக்கமாகக் உள்ள வாயிலின் வழியாக அம்மையின் தனிக் கோயிலை அடையலாம். இக் கோயில் முன் மண்டபம், அர்த்த மண்டபம் என்பவற்றுடன் விளங்குகிறது. பெரிய நாயகி அம்மன் நின்ற திருக்கொலத்தில் நான்கு கரங்களுடன் கிழக்கு நோக்கிய வண்ணம் உள்ளார். அருகில் உற்சவ அம்மன் சந்நிதி உள்ளது.
இத் திருக்கோயில் தருமையாதீனத்துற்குச் சொந்த மானது. இத் தலத்தில் தான் குமரகுருபர சுவாமிகள் நிறுவிய காசி மடம் உள்ளது. இம் மடத்தின் சார்பில் செந்தமிழ்க் கல்லூரி ஒன்று
இந்துக் கலைக்களஞ்சியம்

Page 107
நடைபெறுகின்றது. திருப்பனந்தாளில் வாழ்ந்த நக்கன் தரணி என்பவன் இக் கோயிலுக்கு கருங்கல் திருப்பணி செய்தான். நாள் தோறும் நான்கு காலப் பூஜை நடைபெறுகிறது.
"கண் பொலி நெற்றியினான் திகழ் கையிலொர் வெண் மழுவான் பெண் புணர் கூறுடையான் மிகு பீடுடை மால் விடையான் விண்பொலி மாமதிசேர் திரு செஞ்சடை வேதியனூர் தண் பொலி சூழ்பனந்தாள் திருத்தாடகை யீச்சரமே”
என சம்பந்தர் பெருமான் பாடியுள்ளார்.
"கரம் ஊன்றிக் கண் இடுங்கிக் கால் குலைய மற்றோர் மரம் ஊன்றி வாய் குதட்டா முன்னம் - புரமூன்றும் தீச்சரத்தால் செற்றான் திருப்பனந்தாள் தாடகைய ஈச்சரத்தான் பாதமே ஏத்து'
ஐயடிகள் காடவன் கோனின் பாடல் இது. (நி. நி.)
திருபாகர்
தொண்டை நாட்டுத் தலம். மக்கள் வழக்கில் திருப்பாச்சூர் என்று வழங்குகிறது. அம்பாள் வழிபட்ட தலம். சந்திரன், திருமால் ஆகியோரும் வழிபட்டுப் பேறடைந்துள்ளனர். திருமால் இங்குள்ள சோமதீர்த்தத்தில் நீராடிப் பேறு பெற்றதாகச் சொல்லப்படுகிறது கோயிலுள் இதை உணர்த்தும் வகையில் வினை தீர்த்த ஈஸ்வரர் திருமேனி உள்ளது.
வரலாறு
பசுவொன்று நாள்தோறும் மூங்கில் பற்றையினுள் பால் சொரிய வேடர்கள் அவ்விடத்தை வெட்டிப்பார்த்த போது அங்கு சிவலிங்கம் காணப்பட்டது என்றும் அச் சிவலிங்கத்திற்கு மன்னன் கரிகாலன் கோயில் எடுப்பித்தான் என்றும் கூறப்படுகிறது. மற்றொரு வரலாறு இக் கோயில் கட்ட விரும்பிய கரிகாலன் அவ்வூர் காளி உபாசகனான குறுநில மன்னனை வெல்ல முடியாது முறையிட இறைவனும் நந்தியம் பெருமானை கரிகாலனுக்குத் துணையாக அனுப்பினார். போரின் போது காளி தோன்ற நந்தியெம் பெருமான் அவளை உற்று நோக்க அவளும் வலியடங்கி நின்றாள். பின் அவளின் கைகளுக்கு விலங்கிட்டு இங்கு அடைத்தார். வெற்றி பெற்ற மன்னன் உள்ளம் மகிழ்ந்து இக் கோயிலைக் கட்டினான் என்பர். தற்போதும் கோயிலின் முன்னுள்ள சிதைவடைந்த நூற்றுக்கால் மண்டபத்தில் கைகளில் விலங்கிடப்பட்ட காளியின் உருவம் காணப்படுகிறது. சம்பந்தர், அப்பர், ஆகியோர் இத் தலத்து இறைவனைப் பாடிப் பரவியுள்ளனர்.
கோயில் இறைவன் - பசுபதீஸ்வரர், வாசீஸ்வரர், பாசூர்நாதர் இறைவி - பசுபதிநாயகி, மோகனாம்பாள், பணைமுலை
நாச்சியார், தம் காதலி.
இந்துக்கலைக்களஞ்சியம்

தீர்த்தம் - சோமதீர்த்தம், மங்களதீர்த்தம் தலமரம் - மூங்கில்
ராஜகோபுரம் தெற்கு நோக்கியது; மூன்று நிலைகளுடன் கூடியது. சுவாமி, அம்பாள் கோயில்கள் தனித் தனி விமானங் களுடன் தனித் தனிக் கோயில்களாக சுற்று மதில்களுடன் விளங்கு கிறன்றன. வெளி மதில் இவற்றை உள்ளடக்கியது. சந்நிதிகளுக்கு கிழக்கு நோக்கிய வாயில்கள் இருந்த போதும் தெற்கு வாயிலே பயன் படுத்தப்படுகிறது. வெளிப் பிராகாரத்தில் சந்நிதிகள் ஏதும் இல்லை.
உள்ளே சென்றதும் அம்பாள் சந்நிதி தெரிகிறது. நின்ற கோலம்; அபய, வரத முத்திரையுடனும் பசாங்குசம் ஏந்தியும் நான்கு கரங்களுடன் காட்சி தருகிறாள். வாயிலில் துவாரபாலகிகள் உள்ளனர். கோஷ்டமூர்த்தங்கள் இல்லை. இறைவனே அம்பாளின் அழகில் மயங்கி தங்காதலி என்று கூறியதாகவும் அப் பெயரே பின்பு அவருக்கு வழங்குவதாகவும் சொல்லப்படுகிறது.
அடுத்துள்ள வாயிலைத் தாண்டினால் செல்வமுருகனைக் காணலாம். எதிரில் நவக்கிரக சந்நிதி பக்கத்தில் உற்சவ முருகனின் சந்நிதி. அதற்கப்பால் சோமாஸ்கந்தர் சந்நிதி உள்ளன. இதனையடுத்து விநாயகர் சபை உள்ளது. இங்கு பல்வேறு அமைப்புகளில் பெரியதும், சிறியதுமாக பதினொரு விநாயகர்கள் காட்சி தருகின்றனர். இதில் வலம்புரி விநாயகர் குறிப்பிடத்தக்கவர். பக்கத்தில் வினைதீர்த்த ஈஸ்வரர் உருவமும் எதிரில் ஆதிசேடனுடன் கூடிய திருமாலின் உருவமும் உள்ளன. அடுத்த வாயிலைக் கடந்தால் நடராஜ சபை இருக்கிறது. சபையில் சிவபெருமானுடன் சிவகாமியம்மனும், மாணிக்கவா சகரும் காணப்படுகின்றனர். உற்சவத் திருமேனிகளான சந்திர சேகரர், சுக்கிரவார அம்மன், விநாயகர், சண்முகர், வள்ளி, தெய்வயானை, நால்வர் முதலியோரின் திருமேனிகள் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளன.
பிராகாரத்தில் வலமாக வரும்போது சப்த கன்னியர் உருவங்கள் உள்ளன. அப்பர், சுந்தரர், ஞானசம்பந்தர் ஆகியோரின் உருவச் சிலைகள் இடம் பெற்றுள்ளன. பிராகாரத்தில் வேறு சந்நிதிகள் இல்லை. கருவறை முழுவதும் கல்லால் ஆனது. மேற்பக்க விமானம் கஜப்பிருஷ்டமாக அமைந்துள்ளது. கீழ்ப்புறம் இவ்வமைப்பில் இல்லை. கருவறைக்கு வெளியே ஏராளமான கல்வெட்டுகள் உள. நுவாரபாலகரைக் கடந்து உட் சென்று மூலவரைத் தரிசிக்கலாம். முலமூர்த்தி சுயம்பு - தீண்டாத் திருமேனி, சதுரபீட ஆவுடையார். இலிங்கம் மேற்புறத்திலும் பக்கவாட்டிலும் வெட்டப்பட்டதால் மற்புறம் சொரசொரப்பாக தழும்புகளுடன் இருக்கிறது.
கோஷ்ட மூர்த்தங்களாகத் தட்சிணாமூர்த்தி, விநாயகர், லிங்கோற்பவர், பிரமன், துர்க்கை ஆகியோர் உள்ளனர். இக் காயிலில் பைரவர், வீரபத்திரர் சந்நிதிகளும் இருக்கின்றன.
77

Page 108
"கண்ணின் அயலே கண் ஒன்று உடையார் கழல் உன்னி எண்ணுந்தனையும் அடியார் ஒத்த அருள் செய்வார் உண்ணின்று உருக உவகை தருவாரூர் போலும் பண்ணின் மொழியார் பாடல் ஒவாப் பாகுரே'
என்று சம்பந்தர் பெருமானும்,
"முந்தி மூவெயில் எய்த முதல்வனார் சிந்திப்பார் வினை தீர்த்திடுஞ் செல்வனார். அந்திக் கோன் தனக்கே அருள் செய்தவர், பந்திச் செஞ்சடைப் பாசூர் அடிகளே”
என அப்பர் பெருமானும் இத்தலத்திறைவனைப் பாடிப் பரவியுள்ளனர். (நி. நி.)
திருபாண்டிக் கொடுமுடி
கொங்கு நாட்டுத் தலம், தற்போது இதனை மக்கள் கொடு முடி என்றழைக்கின்றனர். இது மும்மூர்த்தித் தலம். இத்தலத்தை வழிபட்டார்க்கு சிவன், பிரமன், விஷ்ணு ஆகிய மூவருடைய தரிசனமும் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. மூவரும் உவந்தெழுந்தருளியிருக்கும் தலம். அக்காலத்தில் இத்திருத்தலம் அரிகரபுரம், அமுதபுரி, கறையூர் எனப் பல யெர்களைப் பெற்று விளங்கியது. பாடல் பெற்ற கொங்கு நாட்டுத் தலங்கள் ஏழினுள் கொடுமுடி மட்டுமே தேவார ஆசிரியர்கள் மூவராலும் பாடப்பெற்ற சிறப்புப் பெற்றது.
புராண வரலாறு
முன்னொரு காலத்தில் ஆதி சேடனுக்கும், வாயுவுக்கும் தம் வலிமை குறித்துப் போட்டி ஏற்பட்டது. ஆதிசேடன் மேருமலை யின் ஒரு சிகரத்தை அசையாது தன் உடலால் சுற்றிக் கொண்டான் வாயு தன் பலத்தால் அச்சிகரத்தை மோதித்தள்ள முற்பட்டபோது சிகரத்தின் ஐந்து துண்டுகள் ஐந்து மணிகளாக ஐந்து இடங்களில் வீழ்ந்து அவை தலங்களாயின. அவற்றுள் சிவப்பு மணி திருவண்ணா மலையாகவும். மரகதம் ஈங்கோய் மலையாகவும், மாணிக்கம் திருவாட் போக்கியாகவும் நீலம் பொதியாகவும், வைரம் கொடுமுடியாகவும் ஆயின என்பது தலபுராணம். மேரு மலையான ஒரு கொடுமுடி வீழ்ந்தமையால் இப் பெயர் ஏற்பட்டது என்பது வரலாறு. அதுவே சிவலிங்க மானது என்பர். சிவலிங்கம் மிகக் குட்டையானது சிகரவடிவில் உள்ளது. பீடம் சதுரவடிவாக உள்ளது. பாண்டிய மன்னனின் விரல் வளர்ந்த குறையைப் போக்கிய தலமாதலின் பாண்டிக் கொடுமுடி என்றாயிற்று. அகத்தியரின் கமண்டலத்தினுள் இருந்த நீரை விநாயகர் காக உருவில் கவிழ்த்து, கமண்டல நீர் காவிரியாகப் பெருகி ஓடியது. விநாயகர் காவிரி கண்ட விநாயகர் என்ற பெயரில் இத் தலத்தில் எழுந்தருளியுள்ளார்.
இத்தலத்திலேயே சுந்தர மூர்த்தி சுவாமிகள் நமச்சிவாயப் பதிகம் பாடினார். சித்திரைப் பெளர்ணமியில் பரத்துவாசருக்கு
78

நடனக் காட்சி தந்த குஞ்சிதபாத நடராசர் முயலகன் இல்லாமல் நின்று சதுர்முகத் தாண்டவமிடுவதாக அமைந்துள்ள மூர்த்தம் வேறெங்கும் காணமுடியாத அரியதோர் அமைப்பு.
கோயில்
இறைவன் - மகுடேஸ்வரர், மலைக்கொழுந்தீசர்,கொடுமுடிநாதர்
இறைவி - வடிவுநாயகி, செளந்தர வல்லி, திரிபுர சுந்தரி
தீர்த்தம் - காவிரி, கோயிலினுள் தேவ தீர்த்தம், பரத்துவாச
தீர்த்தம், பிரம்ம தீர்த்தம்
தலமரம் - வன்னி
கோயில் காவிரி ஆற்றின் மேற்குக் கரையில் அமைந்துள்ளது. கிழக்கு நோக்கியது. கோயிலுக்கெதிரில் உள்ள காவிரி ஆற்றில் நீராடி சக்தி கணபதியை வழிபட்டுக் கோயிலினுள் செல்ல வேண்டும் என்பது மரபு. இராஜகோபுர வாயிலைக் கடந்து உட் சென்றதும் உள்ள முன் மண்டபத்தில் கொடிமரம், பலிபீடம், நந்நி உள்ளன. அர்த்த மண்டபத்தையடுத்துள்ள கருவறையில் மகுடேஸ்வரர் இலிங்கத் திருவுருவில் காட்சி தருகிறார். தான்தோன்றிஸ்வரர். ஐந்து தலை நாகம் குடை பிடிக்க வெள்ளித் திருநீற்றுப் பட்டையின் நடுவில் சந்தனம் துலங்க காட்சி தருகிறார். ஆவணி பங்குனி ஆகிய இரு மாதங்களிலும் காலைக்
கதிரவன் கதிர்கள் மூலவரின் திருவடியைச் சார்கின்றன.
திருச்சுற்றில் நால்வர், அறுபத்துமூவர், காவிரி கண்ட விநாயகர், ஆறுமுகன், சண்டேசர் சந்நிதிகளும் தேவகோட்ட
மூர்த்தங்களும் உள்ளன.
சுவாமியின் வலப்புறம் அம்மனின் தனிக் கோயில் உள்ளது. வடிவுடை நாயகி நான்கு திருக்கரங்களுடன் நின்ற திருக்கோலத்தில் காட்சி தருகிறார். சூரிய கிரகணங்கள் சுவாமியின் திருவடிகளைத் தழுவும் அதே நாளில் அம்மனின் திருவடிகளையும் தழுவுகின்றன. உட்திருச்சுற்றில் கணபதி, சரஸ்வதி, சப்தமாதர், சண்டிகேஸ்வரி பள்ளியறை சந்நிதிகள் உள்ளன. அம்மன் கோயிலுக்குப் பின்புறம் பிரம்மதீர்த்தம் அடுத்து வன்னிமரம், வன்னிமரத்தடியில் பிரம்ம தேவன் எழுந் தருளியுள்ளார். மூன்று முகங்களைக் கொண்ட பிரம்ம தேவனின் நான்காவது முகம் வன்னிமரம் என்று கூறப்படுகிறது. பிரம்மாவுக்கு அருகில் ஆஞ்சநேயர் சந்நிதி உள்ளது. அடுத்து வீரநாராயணப் பெருமாள் மகாலட்சுமியுடன் காட்சி தருகிறார்.
பெருமாள் பள்ளி கொண்ட திருக் கோலத்தில் காட்சி தருகிறார்.
வெளித் திருச்சுற்றின் வடகிழக்கில் பாரத்துவாச தீர்த்தம். பைரவர். சனீஸ்வரர், நவக்கிரக சந்நிதிகள் உள்ளன. இங்குள்ள காவிரியின் நடுவிலுள்ள அகத்தியர் பாறையில் தான் அகத்தியரின் கமண்டல நீரைக்காக உருக் கொண்ட விநாயகர்
கவிழ்த்த நிகழ்ச்சி நடந்ததென்பர். இங்கு துலாஸ்நானம்
இந்துக் கலைக்களஞ்சியம்

Page 109
செய்வது கங்காஸ்நானம் செய்வதற்குச் சமன் என்று சேது புராணம் கூறுகிறது.
இக் கோயில் பல்லவர் காலத்தையது என்று கூறப்படுகிறது. இவர்களுக்குப் பின் வந்த சோழர், நாயக்கர், பின்வந்த கொங்கு நாட்டு மன்னர்கள் காலத்தில் விரிவு பெற்றது. தேவார முதலிகளைத் தவிர கபிலதேவநாயனார், அருணகிரிநாதர், இராமானந்த அடிகள் மற்றும் பலரும் தலத்தைச் சிறப்பித்துப் பாடியுள்ளனர்.
நாள்தோறும் ஆறுகாலங்களில் இங்கு வழிபாடு நடைபெறும். திருவிழாக்கள் அனைத்திலும் சிவனும், திருமாலும் சேர்ந்தே எழுந்தருளுவார்கள். ஆடிப் பெருக்கு இத் தலத்தில் விசேஷம். சித்திரையில் பெருவிழா நடைபெறுகிறது.
“பெண்ணமர் மேனியினாரும் பிறைபுக்கு செஞ்சடையாரும்
கண்ணமர் நெற்றியினாருங் காசமருங் குழையாரும்
எண்ணமருங் குணத்தாரும் இமையவரேத்த நின்றாரும்
பண்ணமர் பாடலினாரும் பாண்டிக் கொடு முடியாரே' எனச் சம்பந்தர் பெருமானும்,
"சிட்டனைச் சிவனைச் செழுஞ்சோதியை அட்ட மூர்த்தியை ஆலநிழலமர் பட்டனைத் திருப்பாண்டிக் கொடுமுடி நட்டனைத் தொழ நம் வினை நாசமே” என திருநாவுக்கரச நாயனாரும்,
“மற்றுப் பற்றெனக்கின்றிநின் திருப்பாதமே மனம் பாவித்தேன் பெற்றலும் பிறந்தேனினிப் பிறவாத தன்மை வந்தெய்தினேன் கற்றவர் தொழுதேத்துஞ் சீர்க்கரையூரிற் பாண்டிக் கொடுமுடி நற்றவா உனை நான் மறக்கினுஞ் சொல்லுநா நமச்சிவாயவே'
எனச் சுந்தரர் பெருமானும் பாடிப் போற்றியுள்ளனர். (நி.நி)
திருப்பாணாழ்வார்
பன்னிரு ஆழ்வார்களில் ஒருவராக திருப்பாணழ்வார் விளக்குகிறார்.
சோழ மன்னர்களின் தலைநகராக விளங்கிய உறையூரில் நெற்பயிர்களுக்கிடையில் திருப்பாணழ்வார் அவதரித்தார். இவருடைய காலம் கி.பி. 8ஆம் நூற்றாண்டு எனக் கருதப்படுகிறது. துன்மதி ஆண்டு கார்த்திகை மாதம் தேய்பிறையில் பொருந்திய துவிதியை திதியில் புதன் கிழமையன்று உரோகிணி நட்சத்திரத்தில் திருமாலின் பூரீவத்ஸத்தின் அமிசராய் இவர் அவதரித்தார். பிறவாது பிறந்து நெற்பயிர்களுக்கிடையில் இருந்த இக்குழந்தையை, அவ்வூரில் பஞ்சம ஜாதியில் பாணர் குலத்தில் பிறந்த ஒருவன் எடுத்து தன்
இந்துக் கலைக்களஞ்சியம்

மனைவியிடம் கொடுத்து வளர்த்து வந்தான். குலத்திற்கேற்ப யாழ்பாடலில் தேர்ச்சி பெற்று பாணர் குலத்தில் சிறப்புப் பெற்று விளங்கியதால் திருப்பாணர் எனும் சிறப்புப் பெயர் பெற்றார்.
திருப்பாணாழ்வார் மனதில் அரங்கநாதருக்குப் பாடல் தொண்டு செய்யும் எண்ணம் தோன்றியது. எனினும் தான் தாழ்ந்த குலத்தில் வளர்ந்ததால் திருவரங்கத்தினுள் செல்லாது காவிரிக்கரையில் நின்று அரங்கத்துள்ளானை நினைத்து யாழ் இசைத்துப் பாடல்கள் பலவற்றைப் பாடுவார். ஒருநாள் உலோகசாரங்க முனிவர் காவிரியில் நீராடி திருவரங்கநாதனுக்கு திருமஞ்சன நீரைப் பொற்குடத்தில் எடுத்து வரும் போது எதிரில் நின்ற திருப்பாணரை “அப்பாற் செல்” என்று கூற, தன்னிலை மறந்து அரங்கனையே எண்ணியிருந்த பாணருக்கு அது விளங்காததால் முனிவர் கல்லொன்றை எடுத்து எறிய அது பாணரின் நெற்றியில் பட்டு இரத்தம் சிந்தியது. எதிரில் முனிவர் நிற்பதைக் கண்டு விலகிச் சென்றார். முனிவர் ஆலயத்துக்குச் சென்றார் திருவரங்கநாதனின் நெற்றியில் இருந்து குருதி வடிவதைக் கண்ட அர்ச்சகரும் முனிவரும் அதிகாரிகளுக்கும் அரசனுக்கும் தெரிவித்துவிட்டு காரணம் புரியாது இறைவனிடமே பாரத்தை விட்டுச் சென்றனர்.
இறைவன் பாணரின் பெருமையை உலகறிய வைக்க எண்ணி அன்றிரவு உலோக சாரங்கருடைய கனவில் தோன்றி “முனிவ நீ சென்று எம்முடைய நல்லன்பராகிய திருப்பாணரை இழி குலத்தவர் எனக் கருதாமல் உன்னுடைய தோள்கள் மீது எழுந்தருளச் செய்து என் முன்பு கொண்டு வருவாயாக’ எனப் பணித்தார். இறைவனின் ஆணையை எண்ணிக் களிப்படைந்த முனிவர் பாணர் வழக்கமாகத் திருப்பாடல் செய்யும் இடத்தை அடைந்து பாணரை மும்முறை வலம் வந்து திருவடிகளைத் தொழுது தன் தோள்களில் ஏறுமாறு கூற, தான் இழி குலத்தவர் என மறுக்க இறைவனின் ஆணையை முனிவர் கூற பாணர் தோளில் ஏறி திருவரங்கத்தை அடைந்தார். அரங்கநாதரைக் கண்டதும் திருவடி முதல் தலைவரையும் உள்ள அழகிய அவயங்களை கண்குளிரக் கண்டு களித்து அவ்வழகை பத்துப் பாட்டுக்களாகப் பாடினார். அத்தொகுதி 'அமலனாதிபிரான்” என்று அழைக்கப்படுகிறது.
பாணர் குலத்தில் வளர்ந்ததால் திருப்பாணர் என்ற பெயர் ஏற்பட்டது போவே லோகசாரங்க முனிவரின் தோளில் ஏறி அரங்கன் சன்னிதியை அடைந்ததால். “முநிவாகனர்” என்றும் “யோகிவாகனர்” என்றும் சிறப்புப் பெயர் பெற்றார். இவர் இவ்வுலகில் ஐம்பது ஆண்டுகள் வாழ்ந்தார். பின்னர் மக்கள் பலரும் காணத் பெருமையுடைய திரு மலரடிகளை அணுகி கிழே விழுந்து வணங்கி அத் திருவடிகளிடையே மறைந்து பேரின்ப வீட்டை அடைந்தார். திருப்பாணழ்வாரரைத் தூக்கி தன் முன் கொண்டு வந்தமையால் உலோகசாரங்களையும் பரமன் ஆட்கொண்டருளினார்.
79

Page 110
திருப்பாணாழ்வார் பாடிய அமலனாதிபிரான் எனும் பிரபந்தம் நாலாயிரத் திவ்விய பரபந்தத்தில் முதலாவது ஆயிரத்தின் இறுதியில் மதுரகவியாழ்வார் அருளிச் செய்த கண்நுண் சிறு தாம்புக்கு முன்னர் இடம் பெற்றுள்ளது. இதற்கு பெரிய வாச்சான் பிள்ளையும் அழகிய மணவாளப்பெருமாள் நாயனாரும் மணிப்பிரவாள நடையில் சிறந்த வியாக்கியானங்களைச் செய்துள்ளனர். வேதாந்த தேசிக திருப்பாணழ்வார் அருளிச் செய்த பிரபந்தத்தில் “தமிழ்வேதம்’ எனப்படும் நாலாயிரத்தின் சாரம் முழுவதும் அடங்கியுள்ளதாகக் கூறுவார்.
அமலனாதிபிரான் எனும் பிரபந்தத்தின் முதல் ஒன்பது பாடல்களும் தம் அகக்கண்ணாலும் பத்தாவது பாசுரம் கண்ணால் நேரில் கண்டும் பாடியது என்று கருதப்படுகிறது. ‘என் அமுதினைக் கண்ட கண்கள் மற்றொன்றையும் காணாவே' எனப்பாட அப்படியே அமலனது அடியை சேர்ந்தார் எனக் கூறப்படுகிறது. யாழ்மீட்டி தன் இனிய குரலால் அரங்கரை நினைத்து நின்ற பாணர் தனது அமலானாதிபிரான் பிரபந்தத்தில் திருவரங்கம், திருவேங்கடம், பரமபதம் ஆகிய திருத்தலங்களைப் போற்றிப்பாடியுள்ளார். அரங்கனின் அழகைப் பாடி அவர் மீது பக்தி கொண்டு வைணவத்தை வாழவைத்த சான்றோரில் திருப்பாணாழ்வாரும் ஒருவராக விளங்குகிறார். (க.ஹே.)
திருப்பாதிரிப்புலியூர்
நடு நாட்டுத் தலம். அக் காலத்தில் இப் பகுதி பாதிரி மரங்கள் அடர்ந்த காடாக விளங்கியதாலும் அங்கு வியாக்கிர பாதர் என்னும் புலிக்கால் முனிவர் தவமியற்றியதாலும் இப்பெயர் பெற்றது. பாதிரிச்சாரம், கடைஞாழல், கன்னிவனம் என்பன இத் தலத்திற்குரிய வேறு பெயர்களாகும். அகத்தியர், உபமன்யு முனிவர், கங்கை, அக்கினி முதலியோர் வழிபட்டது. அவர்களால் வழிபட்ட சிவலிங்கங்கள் உள.
புராண வரலாறு
திருநாவுக்கரசு நாயனாரின் வாழ்க்கையோடு மிக நெருக்கமான தொடர்பு கொண்டது இத்தலம். நாவுக்கரசரின் இளமைப் பெயர் மருள்நீக்கியார். அவர் சமண சமயத்தைச் சார்ந்து சமணதுறவிகளுள் முதன்மையானவராகத் திகழ்ந்தார். இதனால் மனம் வருந்திய மருள்நீக்கியாரின் தமக்கை திலகவதியார் அவரை விட்டகன்று திருவதிகையில் சிவத்தொண்டாற்றி வந்தார். மருள்நீக்கியர் மீண்டும் சைவசமயத்தைச் சார்ந்து தொண்டாற்ற வேண்டும் என இடையறாது இறைவனை வேண்டி நின்றார். சிவபெருமானின் திருவருட் பாங்கினால் மருள்நீக்கியார் சூலை நோயினால் பீடிக்கப்பட்டுத் துடித்தார். சமணத் துறவிகளும், மருத்துவர்களும் பலவாறு முயன்றும் அந்நோயைத் தீர்க்க முடியவில்லை. இறுதியில் திலகவதியாரிடம் வந்த மருள்நீக்கியார் அவர் வற்புறுத்தலினால் திருவதிகை வீரட்டானேஸ்வரனைப் போற்றி
80

“கூற்றாயினவாறு’ எனத் தொடங்கும் பாடலைப் பாட சூலைநோய் நீங்கியது. அன்று முதல் மருள் நீக்கியார் சைவம்
சார்ந்தார்.
சமணத் துறவிகளின் தூண்டுதலால் பல்லவ மன்னன் மகேந்திரன் அவரைப் பல இன்னல்களுக்காளாக்கினான். நீற்றறையில் இட்டான். சிவபெருமான் அருளால் அது குளிர்ந்தது. கல்லோடு கட்டி நடுக்கடலில் எறிந்தான். கடலில் கல் தெப்பமாக மிதந்து திருப்பாதிரிப்புலியூரை அடுத்து ஒரு குப்பத்தில் கரை சேர்ந்தது. இன்று அந்த இடம் கரையேறிய குப்பம்', 'வண்டிப்பாளையம் என அழைக்கப்படுகிறது. அப்பர் தமது நாவன்மையால் பல்லவ மன்னன் மகேந்திரவர்மனை சைவ சமயத்தைத் தழுவச் செய்தார். மகேந்திரவர்மன் சமணப் பள்ளிகளை இடித்து அக்கற்களால் கோயில்களை எழுப்பினான் என்பது வரலாறு. நாவுக்கரசர் பல ஆண்டுகள் வாழ்ந்த தலம் திருப்பாதிரிப்புலியூர்.
மாணிக்கவாசகர் இத்தல இறைவனை வழிபட எண்ணிச் சென்ற வேளை கெடில நதியில் நீர் பெருக்கெடுத்தோடித் தாமதமுற்ற போது இறைவன் திருவருளால் தெற்கில் பாய்ந்த நதி தன் திசை மாறி வடக்கில் சென்றது. திருஞானசம்பந்தர் இத் தல இறைவனைப் போற்றிப் பாடியதில்,
"முன்னம் நின்ற முடக்கால் முயற்கு அருள் செய்து நீள் புன்னை நின்று கமழ் பாதிரிப்புலியூர் உளான்”
என்ற செய்யுள் வரிகளால் மங்கள முனிவர், கால் முடமாகிய முயலாகச் சாபம் பெற்ற இத்தல புராண நிகழ்ச்சி கூறப்பட்டுள்ளது. மங்கள முனிவர் இறைவனைப் பூசிப்பதற்காக வனத்தில் பூக்களைப் பறித்த போது முள் ஒன்று அவர் பாதத்தைத் தைத்து விட்டது. குருதி வெளிப்படுவதற்குப் பதிலாக நீர் கசிந்தது. இவ்விந்தையைக் கண்ட முனிவர் வனத்தில் அங்குமிங்கும் ஆடிக்களித்தார். அப்போது அவரது கால் விரல்கள் அங்கு தவம் செய்து கொண்டிருந்த மற்றொரு முனிவர் மீது பட்டுவிட்டது இதனால் முடமான முயலாக வாழும் சாபத்தைப் பெற்றார் மங்கள முனிவர். பின்னொரு காலத்தில் முயலாகத் திரிந்து வாழ்ந்த அவரது திருமேனி உமையம்மை தவம்புரிந்து வந்த பாதிரி மரத்துக் கிளையொன்றில் படச் சாப நீக்கம் பெற்றார் என்பதும் அப்போது விநாயகக் கடவுள் அன்னையின் தவத்திற்கு இடையூறின்றிப் பாதுகாத்து வந்தார் என்பதும் அந்த பாதிரி மரத்தில் விநாயகர் அருவமாக இருக்கிறார் என்பதும் தலபுராணம் தரும் செய்திகளாகும். அப்பர் பெருமானும், திருானசம்பந்தரும் இத்தலத்தைப் போற்றிப் பரவியுள்ளனர். அருணகிரிநாதரின் திருப்புகழும் உள்ளது.
இறைவன் பாடலேஸ்சுவரர்,
தோன்றாத்துணைநாதர்
இந்துக் கலைக்களஞ்சியம்

Page 111
இறைவி - பெரியநாயகி தலமரம் பாதிரி தீர்த்தம் - சிவகரத் தீர்த்தக் குளம், கெடிலநதி
கோயிலின் கிழக்குப் பகுதியில் ராஜகோபுரம் உள்ளது. கோயிலுக்கு முன்புறம் சிவகரத் தீர்த்தம் நல்ல படித்துறைகளுடன் விளங்குகிறது. ராஜகோபுரம் ஐந்து நிலைகளுடையது. கோபுரத்தில் ஏராளமான சுதைச் சிற்பங்கள் உள்ளன.
கோயிலினுள் முன் மண்டபத் தூண்களில் குதிரை, யானை மீதமர்ந்த வீரர்களின் உருவச் சிலைகளைக் காணலாம். பலிபீடம் உயரத்தில் அமைக்கப்பட்டுள்ளது. கொடிமரம் செப்புக் கவசமிடப் பட்டுள்ளது. முன்னால் நந்தி உள்ளது. வெளித்திருச் சுற்றில் சந்நிதி எதுவும் இல்லை. இரு பாதிரி மரங்கள் உள்ளன. தலமரங்களான இவை வசந்த பருவத்தில் பூக்கும். ஆனால் காய்க்கா. மரத்தடியில் பாதிரி விநாயகர் வீற்றிருக்கின்றார். நாகபிரதிஷ்டையும் உள்ளது. வலம் முடிந்து துவார விநாயகர், துவார சுப்பிரமணியரைத் தொழுது வாயிலைக் கடந்து இடப்புறம் திரும்பினால் உள் சுற்றில் சந்திரனையடுத்து திருநாவுக்கரசர் உற்சவ மூர்த்தமும் அடுத்து மூலமூர்த்தமும் தனித்தனி சந்நிதிகளாக உள்ளன. அப்பர் கைகூப்பி உழவாரத்துடன் காட்சி தருகிறார்.
சுவாமியின் கருவறை அர்த்தமண்டபம், மகாமண்டபம் இவற்றுடன் காட்சி தருகிறது. கருவறையில் பாடலேஸ்வரர்; வெள்ளிக்கவசத்துடன் நாகாபரணம் பூண்டு வெண்ணிற்றுப் பட்டையுடன் காட்சியளிக்கும் இறைவனின் திருவுருவம் மிகவும் அழகானது. பக்கத்தில் பள்ளியறை. இக்கோயிலில் பள்ளியறை சுவாமி கோயிலில் உள்ளது. நாள் தோறும் அம்பிகையே பள்ளியறைக்கு எழுந்தருளுவது இங்கு நடைபெறும் தனிச் சிறப்பாகும்.
அறுபத்துமூவர் மூர்த்தங்களையும் கடந்த பின்னர் தலவிநாயகரான சொன்னவாறறி விநாயகரைத் தரிசிக்கலாம். வலம்புரி மூர்த்தி; இவருக்குக் கன்னி விநாயகர் என்று பெயர். அம்பிகை இறைவனை வழிபட்ட போது உதவி செய்தமையால் கையில் பாதிரி மலருடன் காட்சி தருகிறார். உற்சவத்திரு மேனிகளின் சந்நிதி, வியாக்கிரதபாதர், அகத்தியர் முதலியோர் பூஜித்தலிங்கங்கள், மீனாட்சி சுந்தரேசர், வள்ளி தெய்வானை சமேத ஆறுமுகர் சந்நிதிகள் ஆகியன உள்ளன. ஆதி பாதிரி மரம் கவசமிடப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகிறது. கஜலட்சுமி சந்நிதியை அடுத்து துர்க்கை கோஷ்ட மூர்த்தமுள்ள இடத்தில் அம்பிகை அருவ வடிவில் தவம் செய்த இடம். இங்கு உருவம் இல்லை. மேலும் இங்கு நடராஜர் சபை, நவக்கிரக சந்நிதி, பைரவர், சூரியன் ஆகிய மூர்த்தங்களின் சந்நிதிகளும் காணப்படுகின்றன.
இந்துக் கலைக்களஞ்சியம்

வடக்கு வாயில் வழியாக அம்பிகையின் கோயிலை அடையலாம். கிழக்கு நோக்கியது. முன் மண்டபத்தில் ரிஷபாரூடர், காளிங்கநர்த்தனம், மோகினி நடனம், காமதேமனு வழிபாடு, வீணாவாணி, ஆஞ்சநேயர் முதலிய உருவங்கள் கற்றுாணில் செதுக்கப்பட்டுள்ளன. உட் சுற்றில் விநாயகர், ஆறுமுகர், உற்சவ அம்பாள் சந்நிதிகள் உள. அம்பாள் நின்ற திருக்கோலம்; அம்பாள் சந்நிதியை ஒட்டியே வீதியோரமாகப் பிற்காலப் பிரதிஷ்டையாகிய பிடாரி கோயில் உள்ளது. கோயிலில் எல்லா மாதாந்த விழாக்களும், நவராத்திரி, சஷ்டி, கார்த்திகை சோமவாரங்கள், மாசிமக கடலாட்டு முதலிய அனைத்தும் நடைபெறுகின்றன. வைகாசியில் பெருவிழாவும், சித்திரையில் வசந்தோற்சவமும் சிறப்பாக நடைபெறுகிறது. சித்திரைச் சதயத்தில் அப்பர் சதய விழா மிகச் சிறப்பாக நடைபெறும். கடலிலிருந்து கரையேற்றிய திருவிழா சித்திரை அனுஷநாளிலும், பங்குனிப் பெருவிழா ஆறாம் நாளிலும் கொண்டாடப்படுகின்றன. கி.பி. 7ம் நூற்றாண்டுக்கு முற்பட்டதான இக்கோயிலில் கிடைத்த கல்வெட்டுகளிலிருந்து பராந்தக சோழன், முதலாம் இராசராசன், முதலாம் இராசேந்திரன், இரண்டாம் இராசேந்திரன், முதலாம் குலோத்துங்கன், விக்கிரம சோழன் ஆகியோரும் அவர்களைத் தொடர்ந்து பாண்டியர்களும் திருபணிகள் செய்தும் நன்கொடைகள் வழங்கியும் உள்ளமை அறியக் கூடியதாக
உள்ளது.
“போதினாலும் புகையாலும் உய்த்தே அடியார்கள் தாம்
போதினாலே வழிபாடு செய்யப் புலியூர் தன்னுள் ஆதிநாலும் அவலம் இல்லாத அடிகள் மறை ஒதிநாளும் இடும் பிச்சை ஒன்றுண்டுணப் பாலதே'
எனச் சம்பந்தரும்,
"கருவாய்க் கிடந்து உன்கழலே நினையுங் கருத்துடையேன் உருவாய்த் தெரிந்து உன் நாமம் பயின்றேன் உணதருளால் திருவாய் பொலியச் சிவாயநம என்று நீறணிந்தேன் தருவாய் சிவகதி நீ பாதிரிப் புலியூர் அரனே'
என்று அப்பர் பெருமானும் இத்தலப் பெருமையினைப் பாடியுள்ளனர். (நி.நி.)
திருப்பாம்புரம்
சோழ நாட்டுத் தலம். பாம்பு பூஜித்த இத்தலம் பாம்புரம் எனப்பெயர் பெற்றது. "பாம்புபுரம்” “பாம்புரம்” என மருவியது. திருஞானசம்பந்தர் இத்தலத்தை “பாம்புர நன்னகர்” என்று விளிக்கிறார். இத்தலம் நாகராஜனாகிய ஆதிசேடன் வழிபட்ட தலமாகும். நாகதோஷங்கள் நீங்கவும், மக்கட் பேறு அடையும், ராகுவினால் ஏற்படும் தோஷங்கள் அகலவும் இத்தலத்தில் எழுந்தருளியிருக்கும் பெருமானைப் பிரார்த்தித்து மக்கள் பெரிதும் பயன் அடைகின்றனர். இத்தலத்தில் பாம்பு கடித்து
81

Page 112
இறப்பவர்கள் இல்லையாம். வீடுகளில் பாம்பு வந்தாலும் சாதாரணமாகப் போய்விடும். இத் தலத்தின் வேறு பெயர்கள் , உரகடரம், சேஷபுரி என்பன.
வரலாறு
ஆதிசேடன் பல்லாயிரம் ஆண்டுகளாகத் தனது ஆயிரம் தலைகளால் பூமியைச் சுமந்து வருவதால் ஏற்பட்ட உடற்சோர்வைப் போக்கிப் கொள்ளவும் மேலும் வலிமை பெறவும் கைலாய மலைக்குச் சென்று சிவபெருமான் அருளை வேண்டினான். பெருமானும் நாகராஜனுக்குப் பேராற்றலை அருளியதோடு காவிரிக் கரையிலுள்ள பல சிவத்தலங்களுக்குச் சென்று வழிபடும்படியும் கட்டளையிட்டார். அதன்படி ஆதிசேடனும் மகாசிவராத்திரி முதற் காலம் குடந்தை நாகேச்சுவர சுவாமியையும், இரண்டாம் காலம் திருநாகேச்வர நாகநாத சுவாமியையும், மூன்றாம் காலம் திரும்பாம்புரம் பாம்புரேசரையும், நான்காம் காலம் நாகூர் நாகேச்வரரையும் வழிபட்டுக் குறையா உடல்வலி பெற்றான் என்று கூறப்படு கின்றது. பாம்பு வழிபட்டமைக்கு அடையாளமாக இக் கோயிலின் கருவறையில் பாம்பு வாழ்கிறது. இஷ்ட மகாநாகங்களான அனந்தன், வாசுகி,தட்சகன், கார்கோடன், சங்கபாலன், குளிகன், பத்மன், மகாபத்மன் ஆகியோரும் பாம்புரேச்வரரை வழிபட்டுப்
பயனடைந்துள்ளனர்.
இறைவன் - பாம்புரேஸ்வரர், சேஷபுரீஸ்வரர்,
பாம்பீசர், பாம்புரநாதர். இறைவி பிரமராம்பிகை, வண்டார்குழலி தலமரம் வன்னி தீர்த்தம் - ஆதிசேஷ தீர்த்தம்
திருப்பாம்புரம் கோயில் இரண்டு பிராகாரங்களுடன் கூடியது. நுழைவாயிலையடுத்துக் கொடிமர விநாயகர், நந்தி பலிபீடங்கள் இருக்கின்றன. இராஜகோபுரம் மூன்று நிலைகளுடன் கம்பீரமாக விளங்குகிறது. இராஜகோபுரத்தைக் கடந்து சென்றால் தென்பிராகாரத்தில் திருமலையீச்வரர் எழுந்தருளியுள்ள மாடக் கோயிலும், மேற்கே கன்னிமூலையில் தல விநாயகராகிய இராஜராஜப் பிள்ளையாரும், அடுத்து வள்ளி தெய்வயானையோடு முருகனும், தலவிருட்சமான வன்னி மரத்தடியில் வன்னிசுரர் என்று வழங்கும் ஆதிபாம்புரேஸ்வரரும் உறையும் தனித் தனி சந்நிதிகள் உள்ளன. வடக்குப் பிராகாரத்தில் சுவாமி கோயிலுக்கு இடப்புறம் பிரமராம்பிகை என்னும் வண்டார் குழலியம்மன் கோயில் கிழக்கு நோக்கி உள்ளது. ஒரு கையில் தாமரையும், ஒரு கையில் உருத்திராக்க மாலையும் கொண்டு அம்பிகை வரத அபயமொடு அற்புதமாகக் காட்சி தருகின்றாள்.
அடுத்துள்ள மண்டபத்தில் பைரவர், சூரியன், மகாவிஷ்ணு, பிரம்மா, மாணிக்கவாசகர், சுந்தரர், அப்பர், சம்பந்தர், ஆதிசேஷன், சனீஸ்வரர் முதலிய மூல உருவங்கள் வரிசையாகக்
82

காட்சியளிக்கின்றன. மூலவர் நோக்கிச் செல்லும் போது மகாமண்டபத்தில் பூரீநடராஜர் எழுந்தருளியுள்ளார். கருவறையைச் சுற்றிலும் அகழ் உள்ளது. அகழை மூடி மூன்று புறமும் மண்டபம் உள்ளது. இங்கு சட்டநாதர் சந்நிதி விசேடமானது. உற்சவத் திருமேனிகளுள் சுப்பிரமணியர் மூர்த்தம் மிகவும் விசேடமானது. வள்ளி தெய்வயானையுடன் வச்சிரம், வேல், தாங்கி, இடக்காலால் மயிலை மிதித்துக் காட்சி தருகின்றார்.
பாம்பு வழிபட்ட தலமாதலின் மூலத்தானத்தில் எப்போதேனும் ஒரொரு காலங்களில் இன்றும் பாம்பின் நடமாட்டம் இருப்பதாகக் கூறப்படுகிறது. ஞாயிறு, வெள்ளி, செவ்வாய் நாட்களில் மல்லிகை, தாழம்பூ வாசனை கோயிலுக்குள் கமகம என வீசுமாம். அப்பாம்பு கோயிலுக்குள் எங்கேனும் ஓரிடத்தில் உலவிக் கொண்டிருக்கும் என்று நம்பப்படுகிறது. திருவீழிமிழலையில் உமையம்மையை மணம் புரிந்து கொண்ட இறைவன் தன் திருக்கல்யாணக் கோலத்தை அன்பர்களுக்கு இத் தலத்தில் காட்டியருளினான் என்பது ஐதீகம்.
நாள்தோறும் நான்கு கால வழிபாடுகள், மாசி மகத்தில் நடைபெறும் பஞ்ச மூர்த்தி அபிஷேகமும், சிவராத்திரி உற்சவமும் இங்கு விசேஷம். மகாசிவராத்திரியில் ஆதிசேடன் புறப்பாடு ஐதீகத்திருவிழாவாக நடைபெறுகிறது. மகாசிவராத்திரியில் ஆதிசேஷன் இறைவனை வழிபட சிற்றம்பல விநாயகர் துணையுடன் ஏற்படுத்திய குளம் வடக்கு வீதியில் சிற்றம் பலக்குட்டை என்னும் பெயரில் உள்ளது. இராசராசன், இராசேந்திரன், சுந்தரபாண்டியன், சரபோஜி மன்னன் முதலியோர் காலத்தய 15 கல்வெட்டுகள் இக்கோயிலில் உள்ளன. இக் கல்வெட்டுகளில் இறைவன் பாம்புரம் உடையவர் என்றும், விநாயகர் இராஜ ராஜப் பிள்ளையார் என்றும்
குறிக்கப்பட்டுள்ளனர்.
இத்தலத்தின் நான்கு புறங்களிலும் கிராமதேவதைக் கோயில்கள் உள்ளன. வடமேற்குத் திசையில் விளங்கும் செல்லியம்மன் கிராம மக்களால் பெரிதும் போற்றி வணங்கப் படுகிறது. திரும்பாம்புரம் ஆலய இராஜகோபுரத்தின் முன்புறம் ஒரு திருக்குளம் உள்ளது. அதற்கு ஆதிசேஷ தீர்த்தம் என்று பெயர். இப் பகுதியிலுள்ள பல கோயில்களைப் போல் இந்தக் கோயிலிலும் கொடிமரம் இல்லை. மகாமண்டபத் தென்புறச் சுவரில் ஆதிசேஷன் பூஜித்த இத்தலத்தின் சிறப்புக்களை
விளக்கும் கலைப்படைப்புகள் உள்ளன.
இத்தலத்திற்குத் திருஞானசம்பந்தரின் தேவாரப் பதிகம் ஒன்றும். திருநாவுக்கரசர் பாடிய திருத்தாண்டகப் பாடல் ஒன்றும் சுந்தரரின் பாடல் ஒன்றும் உள்ளன.
இந்துக் கலைக்களஞ்சியம்

Page 113
“ஒதி நன் குணர்வார்க் குணர்வுடை யொருவர்
ஒளிதிகழ் உருவஞ் சேர் ஒருவர் மாதினை யிடமா வைத்த எம் வள்ளல்
மான்மறி யேந்திய மைந்தர் ஆதி நீ அருள் அன்று அமரர்கள் பணிய
அலை கடல் கடைய அன்றெழுந்த பாதி வெண் பிறை சடை வைத்த எம்பரமர்
பாம்புர நன்னக Ππ(βιτ
என்று சம்பந்தரும்,
"நெடியானும் மலரவனும் தேடியாங்கே நேருருவங் காணாமே சென்று நின்ற
99 படியானைப LITLhLITGLO காதலானை.
என்று அப்பர் பெருமானும்,
4.
தழலு மேனியன் தையலொர் பாகம் அமர்ந்தவன் தொழுந் தொல்வினை தீர்க்கின்ற சோதி சோற்றுத் துறை சூழலுங் கோவை யுடையவன் காதலிக் கும்மிடம்
பழனம் பாம்பணி பாம்புரம் தஞ்சை தஞ் சாக்கையே’
என்று சுந்தரமூர்த்தி சுவாமிகளும் இத்தலத்துப் பெருமானைப் பாடியுள்ளனர். (நி.நி.)
திருப்பாவை
ஆண்டாள் என்ற கோதை நாச்சியார் வைணவ ஆழ்வார்களில் ஒருவர். கண்ணனிடத்தே ஆண்டாள் கொண்ட காதலின் விளைவாகப் பல பாக்களை அருளிச் செய்தார். அவை திருப்பாவை, நாச்சியார் திருமொழி என்னும் பிரபந்த இலக்கியங்களாக விளங்குகின்றன. கண்ணனது பேரெழிலும், பெருங்கருணைத் திறமும் ஆண்டாளைக் கண்ணனிடத்து உறவு கொள்ள வைத்தன. தீராக் காதல் கொள்ளச் செய்தன. ஆண்டாள் கண்ணபிரானிடம் காதல் கொண்டு அவனையே கணவனாக வரிக்கக் கருதினார். இவர் கி.பி. 8ஆம் நூற்றாண்டில் பூரீ வில்லிபுரத்தூரில் வாழ்ந்தவர். தான் வாழ்ந்த பூரீ வில்லிபுரத்தூரை ஆயர்பாடியாக்கித், தன்னை நப்பின்னையாக்கி வடபத்திர சாயி கோயிலை நந்தகோபன் மாளிகையாக்கிப் பெருமாளைக் கண்ணனாக்கி ஆயர்குலப் பேச்சும் மரபும் கைவரப் பெற்று பாவை நோன்பு மேற்கொண்டு திருப்பாவை பாடுகிறாள். திருப்பாவை உரையாசிரியர் பெரியவாச்சான் பிள்ளை மார்கழி நோன்பிற்கு வேதத்தில் ஆதாரம் இல்லை என்பர். எனவே உலக வழக்கத்தைத் தழுவியே ஆண்டாள் மார்கழி நோன்பை உள்ளடக்கி திருப்பாவை பாடியுள்ளார்.
சங்ககாலத்தில் உலகியற் காதலின் நுட்ப உணர்வுகளை வெவ்வேறு வகையிலே சித்ததிரித்து வந்த தமிழ்ப் புலவர்கள்
இந்துக்கலைக்களஞ்சியம்

கி.பி. 6ஆம் நூற்றாண்டு காலப் பகுதி தொடக்கம் தெய்வீகக் காதற் பாடல்களைப் பெருந்தொகையாகப் பாடியதற்கு அக்காலச் சூழ்நிலையும் காரணமாகும். உணர்ச்சியைக் கட்டுப்படுத்து என்ற சமண பெளத்த பிராசரம் தோற்றுப்போய் உணர்ச்சியை இறைமேல் செலுத்துக என்ற சைவ வைணவப் பிரசாரம் அக் காலத்தில்லெழுகிறது. இதனால் இறைவனைத் தமது சொந்த மாக்கிக் கொள்ளும் நிலைப்பாட்டையும், இறைவனிடம் ஒரு உரிமையை ஏற்படுத்திக் கொண்ட ஒரு தன்மையினையும் அக் காலப் பாடல்களில் காணக் கூடியதாக உள்ளது. இதனால் அக்காலப் பாடல்கள் உணர்வாழம் மிக்கனவாகக் காணப்படுகின்றன. பரமாத்மா மட்டுமே ஆண் அவன் முன்னிலையில் மற்ற அனைத்து ஆன்மாக்களும் பெண் நிலையினரே என்பது வைணவ சமயக் கருத்து. ஆழ்வார்கள் முழுமையாகத் தம்மை இறைவனிடம் அர்ப்பணித்துக் கொள்பவர்கள். இவ்வகையிலேயே ஆண்டாளின் பாசுரங்களிலும் ஏக்கம், தவிப்பு, அமைதி, தலைவனைச் சேர்வதற்கான துடிப்புக் கலந்த மகிழ்ச்சி போன்ற பல உணர்வுகள் வெளிப்பட்டு நிற்பதைக் காணக் கூடியதாக உள்ளது. தன்னை ஆட்கொண்ட கண்ண பெருமானையே எந்த நிலையிலும் தலைவனாக அடைய விரும்பிய ஆண்டாள் “மானிடவர்க்கென்று பேச்சுப்படில் வாழ்கிலேன் கண்டாய்” என்று தனது பக்தி நிலையின் உச்சத்தில் நின்று பாடுகிறார். கண்ணனுக்குச் சூடுவதற்கெனத் தந்தையார் கொடுத்த மலர் மாலையைத் தானே சூட்டிப் பார்த்துத் திருப்தி கண்டு கண்ணனுக்கு சூடக்கொடுக்கிறாள். அதனால் அவர் சூடிக் கொடுத்த நாச்சியாராகிறார். இவரால் பாடப்பட்ட பாசுரங்களில் திருப்பாவையில் காணப்படும் காதல் அமைதியாகச் செல்வது. நாச்சியார் திருமொழியில் காணப்படும் காதல் கண்ணனடியார் நெஞ்சங்களைக் கசிந்துருக வைப்பது. சங்க காலத்தில் தைந்நீராடல் என்றும் அம்பாவாடல் என்றும் பேசப்படுவனவற்றின் தொடர்ச்சியும் வளர்ச்சியுமாக வருவது பாவை நோன்பும் பாவைப் பாடலுமாம். மார்கழி முழுநிலவு அன்று முடியும் இந்நோன்பு சந்திரனைக் கொண்டு மாதங்களைப் பகுத்த போது தைந்நீராடல் என்றும் சூரியனைக் கொண்டு மாதங்களை வரையறுத்த போது மார்கழி நீராடல் என்றும் ஆயிற்று.
திருப்பாவையின் முதல் ஐந்து பாசுரங்களில் மார்கழி நீராட மகளிரை அழைத்தல், பாவை நோன்பு முறைகள், பயன், மழையை வேண்டி வாழ்த்தல் ஆகியன இடம் பெறுகின்றன. திருப்பாவை முதலாம் பாடல் கன்னியருள் ஒருத்தி மற்றவர்களை நோன்பிற்கு வாரீர் என்று அழைக்கிறாள். சிறந்த மார்கழி மாதத்திலே சுக்கில பட்ச திதியிலே மங்கள முகூர்த்தமான வைகைறையில் நீராட வருவீர் என்று அழைக்கிறாள். இரண்டாம் பாடலில் நோன்பிற்காகச் செய்ய வேண்டுவன யாவை, விட வேண்டியவை யாவை என விபரிக்கிறாள்.
"பையந் துயின்ற பரம னடிபாடி நெய்யுண்ணோம் பாலுண்ணோம் நாட்காலே நீராடி மையிட் டெழுதோம் மலரிட்டு நாம் முடியோம் செய்யாதன செய்யோம் தீக்குறளைச் சென்றோதோம்
83

Page 114
ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கைகாட்டி உய்யுமா றெண்ணி உகந்தேலோ ரெம்பாவாய்”
திருப்பாற் கடலில் பள்ளி கொள்ளும் பரமனைப் பாடுவோம், நெய், பால் உண்ணோம், மலரிட்டு கூந்தலை முடியோம், நம் முன்னோர் அனுட்டிக்காததைச் செய்ய மாட்டோம், இல்லாதவருக்கு உதவி செய்வோம் என்று கூறுவதாக அமைகிறது. மூன்றாம் பாடலில் இந்த நோன்பிற்கு அனுமதி அளித்த ஆயர்கள் பெறும் பாலனைக் கூறுகிறார்கள். மாதம் மும்மாரி பெய்யும், நிலவளம், நீர்வளம் பெருகும், பசுச் செல்வமும், நீங்காத செல்வமும் பெறுவர் என்கிறார்கள். நான்காம் பாடல் மண்டலம் சர்வத்திற்கும் நாயகனே நீ சிறிதும் ஒழிக்காமல் மழை பெய்ய வேண்டும், நாங்கள் மார்கழி நீராடுமாறு சடக்கெனப் பெய்வாய் என்று வேண்டுவதாக அமைகிறது. ஐந்தாம் பாடல் நாம் பரிசுத்தராய் தூய மலர்களைத் தூவி அஞ்சலி செய்து வாய் படைத்த பயனாய் அவனது திருநாமங்களைப் பாடி மனதாலே சிந்திப்போமானால் இதுவரை சேர்ந்த பாவங்களும் இனி நாம் அறியாமல் வரும் பாவங்களும் நெருப்பிலிட்ட பஞ்சுபோல் உருகி மாய்ந்துபோம். அதனால் அவனது நாமங்களைக் கூறுவோம் என்று விளம்புகிறது.
அடுத்த பத்துப் பாசுரங்களில் கோபகன்னிகள் ஒருத்தியை ஒருத்தி எழுப்புவது கூறப்படுகிறது. இதில் ஒவ்வொரு ஆழ்வாரையும் ஆண்டாள் துயிலெழுப்புகிறாள் என்று, உட்பொருள் கூறப்படுகிறது. இப்பாக்கள் பத்திலும் பரந்தாமனின் எழில் உருவமும், பேரருள் திறனும், புராணக் கதைகளும் சிறப்பிக்கப்படுகின்றன. இக்கோப கன்னியர்கள் ஒவ்வொரு வீடாகச் சென்று மற்றைய கன்னியர்களைத் துயில் எழுப்புவது ஏற்கனவே பகவத் விஷயத்தில் தன்னை முற்றும் ஈடுபடுத்திய பெண் புதியவளான ஒருத்தியை இப்பகவத் கைங்கரியத்தில் ஈடுபட அழைப்பது போன்றுள்ளது.
"எங்களை முன்ன மெழுப்புவான் வாய் பேசும் நங்காய் எழுந்திராய் நாணாதாய்! நாவுடையாய்! சங்கொடு சக்கர மேந்துந் தடக்கையன்
= ラタ பங்கயக் கண்ணனைப் பாடேலோ ரெம்பாவாய்
நீயே வந்து எங்களை முன்னம் எழுப்புவதாகக் கூறினாய் சொன்னத்தைச் செய்யாததால் நாணமும் இல்லையோ உனக்கு. சங்கும், சக்கரமும் ஏந்தும் திண்ணிய கரங்களை உடையவனும், தாமரை போன்ற கண்களை உடையவனுமான பெருமானைப் பாடுவோம், எழுந்து வருவாய் என்பன போன்ற பல செய்திகள் இப்பத்துப் பாடல்களிலும் இடம் பெற்றுள்ளன.
பதினாளாவது பாடல் எல்லாப் பெண்களும் கூடி வந்து நந்தகோபரது மாளிகைக்குச் சென்று கோயிற் காப்பானையும், வாயிற் காப்பானையும் எழும்புகிறார்கள். அவர்களை எழுப்பி உள்ளே சென்ற பெண்கள் முதலில் நந்த கோபாரையும் பின்
84

யசோதையையும் எழுப்பிக் கண்ணனை எழுப்புகிறார்கள். பின்னர் பாலராமனை எழுப்புகிறார்கள். 56T60TT எழும்பாமையினால் கண்ணனையும் நப்பின்னைப் பிராட்டியையும் சேர்த்து எழுப்புகிறார்கள் இப்பெண் பிள்ளைகள். அப்போ நப்பின்னைப் பிராட்டி (நந்தகோபாலனின் மருமகள்) பெண்காள்! நானும் உங்களில் ஒருத்தியன்றோ நாம் எல்லோரும் சேர்ந்து கண்ணனிடம் உபகரணங்கள் வேண்டிக் கொள்வோம் என்றாள். பின் எல்லோரும் சேர்ந்து அவன் கல்யாண குணங்களைச் சொல்லி எழுப்புகிறார்கள். அவ்வாறு எழுப்பும் போது,
செங்கண் சிறுச் சிறிதே எம் மேல் விழியாவோ? திங்களு மாதித்தியனு மெழுந்தாற் போல் அங்க ணிரண்டுங்கொண் டெங்கண் மேல் நோக்குதியேல்
எங்கள் மேல் சாப மிழிந்தேலோ ரெம்பாவாய்
என்று பாடுகிறார்கள்.
சிவந்த கண்களை உடையவனே சூரியனும் சந்திரனும் ஒருங்கே உதித்தது போல உன் அழகிய கண்கள் இரண்டாலும் எம்மை நோக்குவாயாகில் எமது வினைகள் தீர்ந்து விடும் என்று செப்புகிறார்கள். இங்கே இறைவனின் அருட்கடாச்சம் ஆன் மாக்கள் மீது படியும் போது அவர்களது வினைகள் அனைத்தும் சூரியனைக் கண்ட பனித்துளிகள் போல் உருகிக் கலைந்து விடும்
என்னும் உண்மைப் பொருளை உணர்த்தி நிற்கிறார்கள்.
'நெருப்பென்ன நின்ற நெடுமாலே உன்னை அருத்தித்து வந்தோம் பனைகருதி யாகில் திருத்தக்க செல்வமும் சேவகமும் யாம்பாடி வருத்தமுந் தீர்ந்து மகிழ்ந்தேலோ ரெம்பவாய்!”
துயிலெழுந்த கண்ணன் “பெண்காள்! உங்களுக்கு வேண்டுவது யாது?’ என வினவ “உன்னைப் பெறுவதற்கு இடையூறுகள் நேர்ந்தால் நீயே அவற்றைப் போக்கி எங்களது துன்பம் நீங்குமாறு அருள வேண்டும்” என்கிறார்கள். இறைவனை அடைவதற்கு அவனருள் வேண்டும் என்பதும் அவ்வருளை வேண்டி நிற்பவர்கள் சர்வமும் அவனது தியானத்துடனே இருப்பார்கள், இருக்க வேண்டும் என்ற கருத்தும் துல்லியமாய்த் துலங்குகின்றன. திருப்பாவையின் பிற்பகுதி மகளிரை இறைவன் திருப்பணிக்கு தகுதியுடைய வராகச் செய்வது பற்றியது என்று கூறலாம்.
திருப்பாவை ஒரு சிறந்த கவிதை. இதன் கருத்து கோபகன்னிகைகள் நோன்பு நோற்றுக் கண்ணனை அடைந்து அவன் திருவடிக்கீழ் குற்றேவல் செய்து உய்ந்தனர் என்பது. இவர்கள் நோன்பிற்காக அதிகாலையிலே கண்விழித்து மற்றவர்களையும் எழுப்பிக் கொண்டு திரண்டு நந்தகோபரது திருமாளிகைக்குச் சென்று கண்ணனையும் நப்பின்னையையும் எழுப்பிக்கொண்டு, கண்ணனை சிங்காதனத்திற்கு எழுந்தருளச் செய்து நோன்பிற்கு வேண்டுவன எவை என்று விண்ணப்பம்
இந்துக் கலைக்களஞ்சியம்

Page 115
செய்கிறார்கள். பின்பு அவனோடு நீராடி ஆபரணங்கள் பூண்டு புது ஆடை தரித்து கையில் பால்சோறு கொண்டு அவனை நோக்கிக் கொண்டு இன்புற்றிருக்கின்றனர். அவனை விட்டுப் பிரியாமல் எப்போதும் வாழவேண்டும் என்றும், அவனுக்காகக் கைங்கரியம் செய்து உய்ய வேண்டும் என்றும் விரும்புகிறார்கள். இறைவனுக்கே உரிய ஆன்மாவானது நெடுங்காலமாக இறைவனை அணுகாமல் வருந்திய வருத்தம் தீர, இறைவனை நாடி, அவன் திருவடிகளை வணங்கி, திருவடிகளுக்குப் பல்லாண்டு பாடி மகிழ்வது. மழை பெய்வதற்காகத் திருவாய்ப்பாடிப் பெண்கள் கண்ணனைத் தலைவனாகக் கொண்டு நோன்பு நோற்பது என்பன இப்பிரபந்தத்தின் வெளிப்படையான கருத்து. ஆத்மா இறைவனோடு கூடி அவனுக்குக் குற்றேவல்கள் செய்து இன்புறுவது என்ற கருத்தும் அவ்வாறு இன்புறுவதற்கு மூலகாரணம் ஆசாரியன் (குரு) என்பதும் இப்பிரபந்தத்தினூடாகப் புலப்படுத்தப்படுகின்றன.
(நி.நி.)
திருப்புகழ்
சிந்தப்பாடல்களால் ஆகிய நூல் திருப்புகழ் ஆகும். இதனைப் பாடியவர் அருணகிரிநாதர். சந்தச் சிறப்போடு தொங்கல் ஒன்றும் அமைய அப்பாடல்கள் விளங்குகின்றன. மிகப் பெரும்பாலான பாடல்கள். திருப்புகழில் பெருமாளே என்று முடிவன. திருப்புகழ் என்னும் சொற்றொடர் சுந்தரர் தேவாரத்தில் ஆளப்படுகிறது. “திருப்புகழ் விருப்பால் பாடிய அடியேன்” என்னும் அடி திருமுல்லைவாயில் தேவாரத்தில் காணப்படு கின்றது. பொதுவாக இறைவன் புகழைக் குறிக்கும் திருப்புகழ் என்னும் சொல் பின்னர் அருணகிரிநாதரின் சந்தப் பாடல்களுக்குப் பெயராக அமைந்தது. அதன் பின்னர் காலப்போக்கிற் பேச்சு வழக்கிலே பெருகிச் சந்தப்பாவாக அமைந்து தொங்கலுடன் விளங்கும் எல்லாப் பாடல்களையும் குறிப்பதாயிற்று.
திருப்புகழ் பாடல்கள் 16, 000 ஆயிரம் பாடப்பட்டதாக கூறப்படுகிறது. அவற்றுள் கிட்டியவை 1311 பாடல்களே. அவை விநாயகர் வணக்கம் முதலிய 5 தலப்புகளில் அமைந்துள்ளன. விநாயகர் வணக்கம் 5 பாடல்கள், தலப்பாடல்கள் 995 பொதுப்பாடல்கள் 309 சேத்திர கோவை 1 பாடல். தலப்பாடல்கள் 204 தலங்களில் பாடல் பெற்றவை. திருப்பரங்குன்றம் திருச்செந்தூர் திருவாவினன் குடி - திருவேரகம் குன்று தோறாடல், (35 தலங்கள்) பழமுதிர்ச்சோலை, திருவானைக்கா, திருவருணை, திருக்காளாத்தி, சிதம்பரம், காசி முதலிய
தலங்களில் பாடல்கள் பாடியுள்ளார்.
அருணகிரிநாத அடிகள் புனைந்த திருப்புகழ் மாலை முருகக்கடவுளின் பெருமைகளை விரிவாகப் பேசுகிறது. தமிழகமெங்கும் எழுந்தருளியிருக்கும் முருகனைப் போற்றுகிறது. “கல்வியிற் பெரியவன் கம்பன்’ என்பது போல “வாக்கிற்கருண
இந்துக்கலைக்களஞ்சியம்

கிரி” என்னும் சிறப்பு திருப்புகழால் அருணகிரிநாதருக்கு ஏற்பட்டது. ஆழ்ந்த பொருள் அமைதி, பொருளுக்கேற்ற சந்தம், தடையில்லாத் தடையோட்டம், இசையின்பம், தாளக்கட்டு ஆகிய
இத்தனைக்கும் திருப்புகழ் இலக்கியமாக விளங்குகின்றது.
திருமுருகாற்றுப்படையில் நக்கீரர் பாடிய ஆறுதலங்களையும் அருணகிரிநாதரும் திருப்புகழில் போற்றுகின்றார். தேவாரத்தி லுள்ளது போலச் சேத்திரக் கோவைப் பாடல் ஒன்றும் உளது. அதன் ஈற்றடியில் "உலகெங்கும் மேவிய தேவாலயத் தோறும் பெருமாளே” எனப்பாடியுள்ளது திருப்புகழ் பாடல்களுள் முடிமணியாக உள்ளது.
வயலூரில் உள்ள பொய்யாக்கணபதி, முருகன் திருவுருவச் சிறப்பையும் வயலூரையும் வைத்துப் புகழ்பாடுக என்று அருளியதால் திருப்புகழ் பாடல்களில் வயலூர் பற்றிய குறிப்புக்கள் பல பாடல்களிற் காணப்படுகின்றன. ஆயினும் திருப்புகழைத் தவிர அருணகிரிநாதரின் ஏனைய நூல்களில் வயலூர் குறிப்பிடப்படவில்லை.
திருஞானசம்பந்தர் முருகனின் அவதாரம் என்னும் கொள்கை திருப்புகழிற் காணப்படுகிறது. திருப்புகழில் வடசொற்கள் மிகுந்து காணப்படுகின்றன. சந்த இசையால் தமிழ்ச்சொல்லோடு அவை கலந்து இனிய இசை நயமுண்டாக்கு கின்றன. அவர் வாழ்ந்த காலம் இதற்கு ஏதுவானது என்று கூறலாம். வடசொல் மாதிரமின்றி சபாசு, சலாம் போன்ற பிற மொழிச் சொற்களையும் இவர் பயன்படுத்தியுள்ளார்.
அருணகிரிநாதர் திருப்புகழில் இயற்கையையும் வர்ணித்துப் பாடுகிறார்.
“வளரும் வாழையு மஞ்சளு மிஞ்சியும் இடைவிடாது நெருங்கிய மங்கல மகிமை மாநகர் செந்தில்’
என விவரிக்கின்றார். அதே போன்று திருப்புகழ்ப் பாடல்கள் எதுகை மோனை நிறைந்தவை.
'மனைகள் பெண்டிர் மக்கள் தமை நினைந்து சுத்த மதிமயங்கி விட்டு மடியாமுன் மருவியின் றெனக்கு மரகதஞ் சிறக்கு மயிலில் வந்து முத்தி தர வேண்டும்” எனச் சிறப்பாகக் கையாளுகின்றார்.
திருப்புகழ் சொற்சுவை, பொருட்சுவை, பக்திச்சுவை ஆகிய மூன்றும் சிறந்த நூலாகும்.
இந்நூலின் பெருமைக்கு மற்றுமொரு காரணம் இதிற் காணப்படும் சமரசப்போக்கு, திருமால் சிவன், பார்வதி, கணபதி,
85

Page 116
ஆகிய கடவுளரையும் சிறப்பித்துப் பாடி முருகனுடன் உறவு காட்டி முடிவது திருப்புகழின் சிறப்பு. முற்பகுதி வேண்டுதலாகவும் பிற்பகுதி புகழாகவும் அமைவது ஆகும்.
தமிழ் அகப்பாடல் மரபுக்கு ஏற்ப திருப்புகழ் பாடல்களில் சில தலைவி, செவிலி, தோழர் ஆகியோர் கூற்றாகவும் அமைகின்றன. திருவிடை மருதூர்க்குரிய "அறுநுனி பனியனைய” என்னும் திருப்புகழ் வாழ்க்கையின் தொடக்கம் முதல் இறுதிவரை காட்டும் சிறப்பு கூற்று.
திருப்புகழ் ஆசிரியராகிய அருணகிரிநாதர், நற்குடியில் பிறந்து சுற்றத்தாரோடு வாழ்ந்தவர் என்பதனை, அவர் பாடிய திருப்புகழ் பாடல்களில் தம்மைக் குறித்துக் கூறும் குறிப்புக்களால் நன்குணரலாம். பொருட் பெண்டிர் பொய்ம்மை மயக்கத்தால் இழிநிலையடைந்த இவர் தம்மை நோக்கி நண்பர், சுற்றத்தார் முதலியவர்கள் கூறும் வசைச் சொற்களைப் பொறுக்க மாட்டாது நாணி உலக வாழ்க்கையை வெறுத்து தற்கொலை செய்து கொள்ளத் துணிந்த நிலையினையும், அருள் வள்ளலாகிய அறுமுகப் பெருமான் தம்மை அருள் தர கைகொடுத்து உய்வித்து பிணி தீர்த்த பேரருட்டிறத்தையும் தாம் பாடிய திருப்புகழ்ப் பாடல்களிற் பல விடத்திலும் உளங்கசிந்து எடுத்துரைத்துள்ளார்.
“மனையவள் நகைக்க ஊரிலனைவரும் நகைக்க லோக மகளிரும் நகைக்க தாதை தமரோடும் மனமது சலிப்ப நாயனுளமது சலிப்ப யாரும் வசைமொழி.”
சொல்லறச் சும்மா விருந்தலாகிய மோனநிலை பற்றியும் ஓங்காரப் பொருள், அத்துவிதவுண்மை முதலிய ஞானப் பொருட்களை உபதேசித்த அருட்செயல்களைப் பற்றியும் திருவண்ணாமலை, வயலூர், பழநி, திருச்செந்தில், திருத்தணிகை, முதலிய திருப்பதிகளில் முருகப் பெருமான் நனவிலும் கனவிலும் தமக்கு முன் தோன்றிக் காட்சியளித்தது, அரிதாகிய மெய்ப்பொருளை உரிய நிலையில் உபதேசித்த முறை பற்றியும் அருணகிரிநாதர் தாம்பாடிய திருப்புகழ்ப் பாடல்களிற் குறித்துப் போற்றுதலால் அடியார்க் கெளியவனாகிய அறுமுகச் செவ்வேள் அருணகிரிநாதர் முன் தோன்றி அருளுபதேசம் செய்தருளினமை நன்கு தெளியப் பெறும்.
இசைத்தமிழ் வளர்ச்சிக்குரிய தாள இலக்கண அமைதிகளும் அருணகிரிநாதர் காலத்தில் வழக்கத்திலுள்ள சிறந்த இராகங்களும், பழந்தமிழ் பண்களும் யாழ் முதலிய நரம்புக் கருவிகளும் தோற்கருவி, துளைக்கருவி, கஞ்சக்கருவி, என்பனவும் ஆடல், பாடல், இயல்புகளும் திருப்புகழ்ப் பாடல்களிற் குறிக்கப்பட்டுள்ளன. இராமாயணம், மகாபாரதம் என்பவற்றுட் கூறப்பட்ட திருமாலின் அருட்செயல்களும் செந்தமிழ்க் கடவுளாகிய முருகப் பெருமானது முழுமுதற் தன்மையும், அக் கடவுள் அவுணரைப் பொருது அமரரை வாழ்வித்த போர்த்திறமும்,
86

தன்னடியார்க்கு இன்பங்கள் தருமியல்பும் சைவசமய தத்துவ வுண்மைகளும், திருமுறையாசிரியர்கள் பெருமையும் முருகப் பெருமான் தலங்கள் தோறும் கொண்டெழுந்தருளிய திறமும், அங்கங்கே விரும்பி வழிபடும் அன்பராயினார்க்கு அப்பெருமான் அருள்புரியும் முறையும், முருகப் பெருமான் அடியார்க்கு எழுந்தருளும் அருட்திறமும் அவனோடு ஒன்றித்து நுகரும் அழிவில்லாப் பேரின்ப சுவைநலமும் திருப்புகழில் விரித்துரைக்கப் பட்டுள்ளன.
பிறவி நீங்கலே மெய்யின்பம் என்பது சைவ சித்தாந்த நெறி. இந்நிலையை அருணகிரிநாதரின் தத்துவ விசாரங்களும் முடிவுகளும் ஏற்படுத்த வல்லன. சங்கத் தமிழ் நூல்கள், சங்கத நூல்கள், கண்ட மெய்சாத்திரங்கள் ஆகியயவற்றையும் முற்ற உணர்ந்து முதிர்ந்த நிலையினை அருணகிரிநாதரின் திருப்பாடல்கள் மிகுதியும் புலப்படுத்துகின்றன.
இறைவன் நாதம், விந்து கலைகள் ஆகியவற்றைக் கடந்து நிற்பவன். இவனை உண்டென்றும், இல்லென்றும் ஆராய்பவர் பேதையர். அவன் உருவாயும் அருவாயும் உளனாயும், இலனாயும், மருவாயும், மணமாயும், மணியாயும், ஒளியாயும், கருவாயும், உயிராயும், கதியாயும், விதியாயும், குருவாயும் வந்து குறையும் தொலைத்து விமோசனம் தருவான்.
அருணகிரிநாதர் சிவபெருமான் வேறு முருகன் வேறு எனக் கொள்ளாமல் இருவரும் ஒருவரே எனக் கொண்டவர்.
"சந்தித்து அரகர சிவசிவ சரண் என கும்பிட்டு இணையடி அவையென தலை மிசை தங்கப் புளகிதம் எழு.” திருப்புகழ்-270
'பரம குருநாத கருணை உபதேச பதவி தரு ஞானப் பெருமாள் பகல் இரவில்லாத.
என்னும் திருப்புகழில் சிவபெருமானாகவே முருகப்பெருமானைப் பாடியுள்ளார். இப்பாடலிலும் சைவ சித்தாந்தக் கருத்தினைக் காணலாம். இதனை திருவண்ணாமலைத் திருப்புகழிலும்
காணலாம்.
"செய செய அருணாத்திரி சிவயநம செய செய அருணாத்திரி சிவயநம” என்று குறிப்பிட்டுள்ளார்.
சிவபெருமானுக்குத் தேவாரப் பதிகங்களைப் போல முருகப் பெருமானுக்கு திருப்புகழ் பாடல்கள் உவப்பானவை. முருகன் கோயில்களில் ஒதுவார்களாலும் இசையரங்குகளில் சில இசைவாணர்களாலும் பாடப்பட்டு வந்த இத் திருப்புகழ்ப் பாக்களின் இசையிலும் நுட்பத்திலும் ஆட்பட்டு, அவற்றை
இந்துக் கலைக்களஞ்சியம்

Page 117
முழுவதும் திரட்டி, அச்சேற்றி உலகுக்கு அளித்தவர் வ.த. சுப்பிரமணியம் பிள்ளை. அப்பாடல்களுக்கு அரிதின் முயன்று பொழிப்புரையும் ஒப்பீட்டுப் பகுதிகளும் தக்க மேற்கோளும் அரிய விளக்கங்களும் காட்டி கற்போருக்கு எளிமைப்படுத்தி உதவிய பெருமை அவர்தம் புதல்வர் செங்கல்வராயப்பிள்ளையைச் சாரும். இதனை முருகவேள் பன்னிரு திருமுறை என வெளியிட்டார். இதன் முதலாவது பதிப்பு 1952 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது.
(தே. ஹ.)
O திருப்புல்லாணி
நூற்றியெட்டு வைணவத் தலங்களுள் இதுவும் ஒன்று. இராமநாதபுரத்திலிருந்து 10 கிலோ மீற்றர் தொலைவில் இத்தலம் அமைந்துள்ளது. இத்தலம் புல்லாரண்யம், ஆதிசேது, தர்ப்பசயனம், திருவணை எனப்பல பெயர்களுடன் விளங்கு கின்றது. இராமபிரானின் தந்தை தசரதன் இத்தலத்தில் வழிபட்டதாக புராணம் கூறும். பதினெண் புராணங்களுள் ஒன்றான ஆக்கினேய புராணத்தில் புவனகோச வருணனைப் பகுதியில் ஒன்பது அத்தியாயங்களில் இத்தலத்தின் சிறப்புக் கூறப்பட்டுள்ளது.
சங்ககாலத்தில் வாழ்ந்த புல்லங்காடர், தெயவச்சிலையார் என்ற புலவர்களின் பெயர்கள் இத்தலத்துறையும் ஆதிஜெகநாதப் பெருமானின் மற்ற திருப் பெயர்களால் வழங்கப்பட்டிருப்பதால் இத்தலம் சங்க காலத்திற்கு முன் தோன்றியது என இதன் தொன்மைச்சிறப்பு விளக்கப்படுகின்றது. புல்லர் என்ற மாமுனிவர் தருப்பைப் புல் அடர்ந்த இப்பகுதியை அடைந்து சக்கர தீர்த்தக் குளத்தில் நீராடி ஒர் அரச மரத்தினடியில் அமர்ந்து நாளும் எம்பிரானை நோக்கி தவமியற்றினார். அவரது தவத்திற்கு அகமகிழ்ந்த ஆதிஜெகநாதப் பெருமான் தம் தேவியர் புடை சூழ நாற்கரங்களிலும் பஞ்சாயுதங்களை ஏந்தி முனிவரின் முன் தோன்றினார். புல்லர் தன்னெதிரில் நின்ற பெருமானின் வடிவழகில் மயங்கி நிலமிசை வீழ்ந்து வணங்கி தருப்பைப் புல்லாலான இருக்கையை அளித்து “பெருமானே! இம்மண்ணிலே பிறந்த அனைவரும் நற்கதியடையும் பொருட்டு இந்த அரச மரத்தினடியில் வீற்றிருந்து எப்போதும் எல்லோருக்கும் அருள் புரிய வேண்டும் என வேண்டி நின்றார். பெருமாளும் அவரது வேண்டுகோளுக்கிணங்கி இத்தலத்திலேயே உறைவதற்கிசைந்தார். புல்லர், கண்வர், தேவர் முதலான பல முனிவர்கள் ஆதி
ஜெகநாதரை வழிபட்டு பேறு பெற்றனர் என்பது புராணம்.
இராமபிரான் இத்தலத்தில் விபீடணனுக்கு அடைக்கலம் அளித்த காரணத்தினால் இது சரணாகதி ரகஸ்யம் விளைந்த சேத்திரம் எனப் புகழ் பெறுகிறது. இராமபிரான் சீதையை மீட்கும் தமது பணியில் வெற்றிபெற ஆதி ஜெகநாதரை வழிபட்டார். பெருமானும் அவர் முன் தோன்றி தமது திருக்கரத்தில் இருத்த வில்லை இராமபிரானுக்களித்து அதனது உதவியால் இராவணணைக் கொன்று சீதையை மீட்டு வர வரமும் அளித்தார்.
இந்துக் கலைக்களஞ்சியம்

பெருமான் தமது வில்லை இராமபிரானுக்கு அளித்த காரணத்தினால் தெய்வச் சிலையார், திவ்வியசாபர் என்னும் பெயர்கள் வழங்கலாயிற்று.
சீதா தேவியை மீட்கத் தமது வானரபடைகளுடன் இலங்கையை அடைவதற்கு வங்ககடல் ஒரு தடையாக இருந்தது. விபீடணின் அறிவுரைக்கிணங்க பூரீராமர் தருப்பைப் புல்லைத் தரையில் பரப்பி அதன் மீது அமர்ந்து சாத்திர முறைப்படி கடலரசனான வருணனை நினைந்து தியானத்தில் ஆழ்ந்தார். சில நாட்கள் கழிந்தும் கடலரசன் தோன்றாமற் போகவே இராமபிரான் சினங்கொண்டு கடல் நீர் வற்றிப்போகும்படி ஆக்கினையாஸ்திரம் என்னும் கணையை விடுக்கத் திருவுளம் பற்றிய போது கடலரசன் அவர்முன் தோன்றி தம்மை மன்னிக்கும் படியும் இயற்கையின் நியதியை மாற்றாது, கடலில் ஆழம் குறைவாக உள்ள இடத்தில் அணைகட்டி இலங்கையை அடையலாம் எனவும் கூறினான். கடலரசன் கூறியவாறு நளன் முதலான பல வாணர வீரர்களால் சேது அணை கட்டப்பெற்றது. பூரீராமர் தருப்பைப் புல்லின் மீது படுத்து தியானம் செய்ததால் இத்தலம் தருப்ப சயனம் எனவும் வழங்கப்பெறுகிறது.
மூலவர் - ஆதி ஜெகநாதர் - தெய்வச்சிலையார்,
உற்சவர் - கல்யாண ஜெகந்நாதர்
தாயார் - பதுமாசினி, கல்யாணவல்லி
விமானம் - கல்யாண விமானம்
தலமரம் - அரசு
தீர்த்தம் - சக்கர தீர்த்தம், ஹம்சதீர்த்தம் முதலான பத்து
தீர்த்தங்கள்
கோயில் கிழக்கு நோக்கியதாக அமைந்துள்ளது. தேரோடும் மாடவீதியுடன் ஐந்து சுற்றுக்களையுடையதாக அமையும் இத்தலத்தில் இராஜகோபுரம், அதன் முன்புறம் சக்கர தீர்த்தக்குளம், குளக்கரையை யொட்டி பெரியமண்டபம், பெருமாள் தாயார், ஆண்டாள், தருப்பசயன இராமர், பட்டாபிஷேக இராமர் ஆகியோர்கருவறைகளின் விமானங்களும் உள்ளன. நான்காம் சுற்றில் வடகிழக்கு பகுதியில் விளக்குக் கம்பத்தின் மீது கருடாழ்வார் உருவச்சிலை யாளிகளின் இடையே அமைந்துள்ளது. மூன்றாம் சுற்றில் கொடிமரம், பலிபீடம், மணவாளமாமுனிகள், இராமானுசர் சந்நிதிகள் உள்ளன. வடக்குத் திருச்சுற்றில் பரமபதவாயில் அத்யயன மண்டபம் உள்ளன. இரண்டாம் சுற்றில் ஆழ்வார், நாதமுனிகள் சந்நிதிகள், முன்மண்டபம், அர்த்தமண்டபம் இவற்றுடன் கூடிய தாயார் கோயில் ஆகியன அமைந்துள்ளன.
இத்தலத்தில் அமைந்துள்ள அரசமரம் மிகவும் புகழ் பெற்றதாக அமைந்துள்ளது அரசமரத்தினடியில் உள்ள மண்ணையும் அரசமரத்து காய்ந்த பட்டையையும் ஒன்று சேர அரைத்து சக்கர தீர்த்த குளத்து நீரில் கரைத்து நெற்றியில் தரித்துக் கொள்வதாலும் நீரைப்பருகுவதாலும் அரச மரத்தை
87

Page 118
வலம்வருவதாலும் மெய்யறிவு பெறுவர். நாகப் பிரதிட்டை செய்து வழிபடின் மகப்பேறும் அடைவர் என்பது நம்பிக்கை. ஆண்டாள் சந்நிதி, தருப்பசயன இராமர் கோயில் ஆகியனவும் இங்கு அமைந்துள்ளன. இராமர் தமது வாளைக் கச்சையில் செருகி தருப்பைப் புல்லணை மீது பள்ளி கொண்ட திருக்கோலத்தில் காட்சி தருகின்றார். இவரது தொப்புளிலிருந்து பிரமன், சந்திரன், சூரியன் ஆகியோர் காணப்படுகின்றனர். பட்டாபிஷேக இராமர், சீதை, இலக்குவணன், அனுமன் ஆகியோருடன் காட்சி தருகின்றார். மூலவர் ஆதிஜெகந்நாதர், பூமி தேவி, நீலா தேவி இருவருடன் வீற்றிருந்த கோலத்தில் காட்சியளிக்கின்றார்.
இத்தல இறைவனை அனுபவித்த திருமங்கையாழ்வார். பெரிய திருமொழி ஒன்பதாம் பத்தில் பெருமானுக்கு இரண்டு பதிகங்களைப் பாமாலையாகச் சூட்டியுள்ளார். நாயகனான எம்பெருமான் வரவு காணாமையாலே ஆற்றாமை மிக்கு நோவுபடும் பிராட்டி நிலையை அடைந்து ஆழ்வார் பாடும் பதிகம் அகத்துறைப் பாடலமைதி கொண்டு விளங்குகிறது.
"தன்னை நைவிக்கிலேன் வல்லினையேன் தொழுது மெழ பொன்னை நைவிக்கு மப்பூஞ் செருத்திமணி நீழல்வாய் என்னை நைவித்தெழில் கொண்டகன்ற பெருமானிடம் புன்னை முத்தம் பொழில் சூழ்ந்தழகாய புல்லாணியே’
(9 - 3 - 1)
பிள்ளைப் பெருமாளையங்கார் புல்லாணி மாலின் கீர்த்தியல்லது மற்றையோர் புகழ் என் செவிக்கு வலிய இரும்பாணி போன்றது என்கிறார். (தே. ஹ.)
O O O திருப்புன்கூர்
GaRITyp நாட்டு வடகரைத் தலம்; மூவர் பெருமக்களாலும் பாடப் பெற்ற சிறப்புடையது. வைத்தீஸ்வரன் கோயில் - திருப்பனந்தாள் சாலையில் இக் கோயில் அமைந்துள்ளது.
ஏயர்கோன் கலிக்காமர் சுந்தரருடன் வந்து தரிசித்த தலம். பிரமன், இந்திரன், அகத்தியர், சந்திரன், சூரியன், இராசேந்திர சோழன், அக்கினி, பதஞ்சலி, வியாக்கிரபாதர், சப்தகன்னியர், ஆகியோர் வழிபட்ட தலம். இங்குள்ள தீர்த்தம் விநாயகரின் துணையுடன் நந்தனார் வெட்டியதாகும்.
தன் நாட்டில் பஞ்சம் நிலவியதால் இராஜேந்திர சோழன் எல்லாச் சிவதேவாலயங்களிலும் பூசைகள் செய்வித்தான். அவன் கனவில் இறைவன் தோன்றித் திருப்புன்கூர்நாதரை வழிபட மழையுண்டாகும் என்று கூற, அவ்வாறே மன்னனும் அங்கு வந்து இறைவனை வழிபட்டான். அப்போது சுந்தரர் அங்கு வந்தார். மன்னன் சுந்தரரிடம் இறைவனை வேண்டிப் பாடி
மழை பெய்விக்குமாறு வேண்ட, சந்தரரும் மழை பெய்தால்
88

பன்னிரு வேலி நிலம் கோவிலுக்கு அளிக்க வேண்டும் எனக் கட்டளையிட்டு விட்டுப் பாடினார். மழை பெய்து வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. மழை மிகுதியைக் கண்ட மன்னன் அதை நிறுத்தாவிடின் பெருஞ்சேதம் உண்டாகும் என்று எண்ணி மீண்டும் சுந்தரரிடம் மழை நிற்குமாறு பாடியருள வேண்டும் என கேட்க, அவரும் மேலும் பன்னிரு வேலி கேட்க, மன்னனும் சம்மதிக்க, சுந்தரர் பாடி மழையை நிறுத்தினார் என ஐதீகம் நிலவுகின்றது.
திருநாளைப் போவார் என்று அழைக்கப்படும் நந்தனாரின் ஊரான ஆதனூர் இத் தலத்திற்குப் பக்கத்தில் 5 கிலோமீற்றர் தொலைவில் உள்ளது. திருப்புன்கூருக்கு வந்து சிவலோக நாதரைத் தரிசிக்க விரும்பினார் நந்தனார். அவர் தாழ்குலத்த வராதலாற் கோயிலுக்கு உள்ளே செல்ல விரும்பாது வெளியில் நின்று வணங்க முற்பட்டார். சிவனை வழிபட முடியாமல் நந்தி மறைக்கவே மனம் வருந்தினார். இறைவன் இவரது பக்திக்கு மனமகிழ்ந்து நந்தியை விலகியிருக்குமாறு பணித்தார். இன்றும் இத் தலத்தில் நந்தி விலவியே இருக்கின்றது.
நந்தி விலகத் தரிசித்து மகிழ்ந்த நந்தனார் கோயிலின் மேற்குப் புறமுள்ள தீர்த்தத்தை வெட்டிச் சீர் செய்ய எண்ணித் தனக்குத் துணை யாரும் இல்லாததால் இறைவனை வேண்ட, இறைவன் அவருக்குத் துணையாகுமாறு கணபதியை அனுப்பினார் என்றெல்லாம் ஐதீகம் உள்ளது. (நி.நி.)
திருப்பூவணம்
பாண்டி நாட்டுத் தலம். இவ்வூர் பழையூர், புதூர், கோட்டை, நெல்முடிக்கரை என நான்கு பகுதிகளாகவுள்ளது. இவற்றுள் கோட்டை என்னும் தலத்தில் கோயில் உள்ளது. தேவாரம், திருவாசகம், திருவிசைப்பா பெற்ற தலம். குலசேகர பாண்டியன் தன் முடிசூட்டு விழாவில் நெற்கதிரையே முடியாகச் சூடிக் கொண்டான். எனவே இத்தலத்திற்கு நெல் முடிக்கரை என்னும் பெயர் ஏற்பட்டது. இங்கு வைகையாறு வடக்கு நோக்கி ஒடுவது விசேடமானது. உத்தரவாகினி என்று கருதப்படுவதால் இறந்தோரின் எலும்புகளை இங்கு புதைப்பர். அதனால் அவர்கள் நற்கதி அடைவர் என்ற ஐதீகம் காணப்படுகிறது. புஷ்பவனகாசி, பிதுர்மோகூடிபுரம், பாஸ்கரபுரம், லட்சுமிபுரம், பிரமபுரம், ரசவாதபுரம் என்பவை இத்தலத்திற்குரிய வேறு பெயர்களாகும். பிரம்மன் வழிபட்ட பதி.
புராணவரலாறு
திருப்பூவணத்திலே உருத்திர கணிகையர் குலத்தில் வந்த பொன்னனையாள் நாள் தோறும் வைகறையில் நீராடிச் சிவபெருமானைத் துதித்து பூவணநாதரின் திருக் கோயில் சென்று நடனமாடி அதன் பின் தனதில்லத்திற் கேகி
இந்துக் கலைக்களஞ்சியம்

Page 119
சிவனடியார்களுக்கு அமுது படைத்து மீதம் உள்ளதைத் தான் உண்டு மகிழ்பவள். அவளது பக்தியை உலகறியச் செய்ய விழைந்த சிவபெருமான் தமது உருவைப் பொன்னால் வார்க்கும் ஆசையை ஏற்படுத்தினார். ஆயினும் நாளும் சிவத் தொண்டில் ஈடுபட்ட அவளிடம் பொருள் ஏதும் எஞ்சவில்லை. ஒரு நாள் சோமசுந்தரக் கடவுள் சித்தர் வேடம் அணிந்து பொன்னனையாள் இல்ல மேகினார். பொன்னனையாள் சித்தரை அமுதுண்ண அழைத்தாள். அவ்வேளையில் அச் சித்தர் பெண்ணே உனக்குக் குறையேதோ உளது, உடல் சற்று இளைத்துக் காணப்படுகிறதே என்று கேட்க அவளும் தனது விருப்பினையும் அது நிறைவேறும் வழியின்றித் தான் தவிப்பதையும் கூறினாள். இம்மையில் நீ மறுமைப் பயனை அடைய சிவனடியார்களுக்குத் தொண்டு செய் எனக் கூறிய சித்தர் உனது கருத்தின்படி திருவுருவத்தை வார்ப்பிக்க உனது இல்லத்திலுள்ள பித்தளை, ஈயம் ஆகிய உலோகப் பொருட்களை என் முன் கொணர்க என ஆணை யிட்டார். பொன்னனையாளும் அவற்றைத் திரட்டி அவர் முன் கொணர்ந்தாள். சித்தராக வேடம் பூண்ட சிவபெருமான் அவை அனைத்தும் பொன்னாக வேண்டும் எனச் சிந்தித்து அவற்றின் மேல் திருநீற்றைத் தூவினார். அன்றிரவு அவற்றை அனலிலிடும் படியும் அவை பொன்னாகும் எனவும் கூறிச் சென்றார். அவ்வாறே பொன்னனையாளும் செய்து உருவமற்ற சிவபெருமானுக்கு பொன்னால் உருவமைத்தார். அவ்வுருவின் அழகில் மயங்கிய அவள் அவ்வுருவை முத்தமிட்டுக் கன்னத்தில் கிள்ளினாள். அவ்வேளை அவளது நக அடையாளமும், விரல் அடையாளமும் கன்னத்தில் பதிந்தன. இவ்வடையாளம் இன்றும் சிவனுருவில் காணப்படுகிறது. (சோமாஸ்கந்த மூர்த்தியின்) இத் திருமேனி பொன்னனையான் எனவும் அழகிய பிரான் எனவும்
வழங்கப்படுகின்றது.
தேவார முதலிகள் மூவருக்கும் இத்தல (வைகை) மணல் சிவலிங்கமாகத் தோன்றியதால் மூவரும் மறு கரையில் இருந்தே வணங்க இறைவன் அவர்கள் தன்னை நேரே கண்டு வணங்குவதற்காக நந்தியை விலகச் செய்தருளினார் என்பது புராண வரலாறு. இதனால் நந்நி சாய்ந்துள்ளது. வைகையின் மறுகரையில் அவர்கள் தொழுத இடம் மூவர் மண்டபம் என வழங்குகிறது.
கோயில்
இறைவன் - திருப் பூவணநாதர், புஷ்பவனேசுவரர். இறைவி - மின்னனையாள், செளந்திர நாயகி, சோமாஸ்கந்தர் - பொன்னனையான், அழகிய பிரான். தலமரம் - L60 TT
தீர்த்தம் - 60)6)6O)55
திருக்கோயில் அளவிற் பெரியது. வடபுறம் சுவாமிக்கும், தென்புறம் அம்மனுக்கும் தனித்தனியாகக் கோயில் அமைத்து
இந்துக்கலைக்களஞ்சியம்

இரண்டையும் உள்ளடக்கி நாற்புறமும் மதிற் சுவர்கள் எழுப்பப்பட்டுள்ளன. கிழக்குப் பகுதியில் இராஜகோபுரம் ஐந்து நிலைகளுடன் காணப்படுகிறது. கோபுர வாயிலைக் கடந்ததும் முன் மண்டபம், மண்டபத்தின் நடுவில் கொடி மரம், பலிபீடம், நந்தி ஆகியவை உள்ளன. நுழைவாயிலின் வடபுறம் பொன்னனையாள், சொக்கப்ப நாயக்கர், அவரது அமைச்சர் ஆகியோரின் உருவங்களும் தென்புறம் அக்கினி, வீரபத்திரர் உருவச் சிலைகளும் உள்ளன. நந்தி சுவாமி சந்நிதியை விட்டுச் சற்று விலகியுள்ளது. மகாமண்டபத்தில் சுவாமி சந்நிதி நுழைவாயிலின் இரு புறங்களிலும் கணபதி, சுப்பிரமணியர் சந்நிதிகள் உள்ளன. துவாரபாலகர்களின் படைப்பு அற்புதமானது. கருவறையில் சுவாமி புஷ்வனேஸ்வரர் இலிங்கத் திருவுருவில் அழகாகக் காட்சி தருகிறார். திருச்சுற்றின் கீழ்ப்பகுதியில் பாலகணபதி முதலான பல சந்நிதிகளும் அடுத்து நால்வர், சேக்கிழார், சப்தமாதர், விநாயகர் சந்நிதிகளும் உள்ளன.
இத் தலத்தின் சிறப்பு மூர்த்தியான சோமாஸ்கந்தரின் சிற்றாலயம் வெகு அழகாகக் காட்சி தருகிறது. அழகிய பிரானின் கன்னத்தில் பொன்னனையாளின் நகக்குறி உள்ளது. அடுத்து கார்த்திகேயன். மகாலட்சுமி சந்நிதிகள் உள. கருவறை மாடங்களில் தென்புறம் தட்சிணாமூர்த்தி மேற்கில் இலிங்கோற்பவர், வடக்கில் பிரம்மா, துர்க்கை உருவச் சிலைகள் உள்ளன. மகாமண்டபத்தின் வடபுறம் நடராஜர் சிலை அழகுடன் விளங்குகிறது. மேலும் இங்கு காணப்படும் சிவகாமி, மாணிக்கவாசகர், காரைக்கால் அம்மையார், பதஞ்சலி, வியாக்ரபாதர் அனைத்து திருவுருவங்களும் எழிலுடன் காணப்படுகின்றன. இதனையடுத்து பாலதண்டாயுதபாணி சுவாமி, பைரவர், நவக்கிரகங்களின் சந்நிதிகள் உள்ளன. சுவாமி கோயிலின் வெளித் திருச் சுற்றுச் சுவர்களில் திருக்குறள், திருமந்திரப் பாக்கள் எழுதப்பட்டுள்ளன.
அம்மன் கோயில் முன்மண்டபம், மகாமண்டபம் இவற்றுடன் விளங்குகிறது. எதிரில் உள்ள கோபுர வாயில் மூடப்பட்டுள்ளது. முன் மண்டபத்தில் கொடிமரம், பலிபீடம், நந்தி உள்ளன. வாயிலில் துவார பாலகிகள் உள்ளனர். கருவறையில் செளந்தரநாயகி பெயருக்கேற்ப அழகுடன் நின்ற நிலையில் நான்கு திருக்கரங்களுடன் எழுந்தருளியுள்ளார். திருச்சுற்றில் கணபதி தேவியருடன் ஆறுமுகன் சண்டிகேஸ்வரி அடுத்துப் பள்ளியறைச் சந்நிதிகள் உள்ளன.
சிவகங்கை சமஸ்தானத்தின் தேவஸ்தான நிர்வாகத்தில் இக் கோயில் சிறப்பாக இயங்குகிறது. இக் கோயிலில் நாளும் ஆறு கால வழிபாடுகள். காலை 6 மணிமுதல் 12 மணிவரையும் மாலை 4.30 மணி முதல் இரவு 8.00 மணிவரையும் வழிபடலாம். பங்குனியில் பெருவிழா. சிவராத்திரி, நவராத்திரி, விநாயகர் சதுர்த்தி, கந்தர் சஷ்டி, கார்த்திகைத் தீபம் எனப் பல விழாக்களும் வழிபாடுகளும் நடைபெறுகின்றன.
89

Page 120
“அறை ஆர் புனலும் மாமலரும் ஆடுஅரவு ஆர் சடைமேல் குறை ஆர் மதியம் குடி மாது ஒர் கூறு டையான் இடமாம் முறை ஆர் முடிசேர் தென்னர் சேரர் சோழர்கள் தாம் வணங்கும் திறை ஆர் ஒளிசேர் செம்மை ஒங்கும் தென்திருப் பூவணமே”
என ஞானசம்பந்தப் பெருமானும்,
வடிவேறு திரிசூலந் தோன்றும் தோன்றும் வளர் சடைமேல் இளமதியம் தோன்றும் தோன்றும் கடியேறு கமழ் கொன்றைக் கண்ணி தோன்றும் காதில் வெண் குழைதோடு கலந்து தோன்றும் இடியேறு களிற்றுரிவைப் போர்வை தோன்றும் எழில்திகழும் திரு முடியும் இலங்கித் தோன்றும் பொடி யேறு திருமேனி பொலிந்து தோன்றும் பொழில் திகழும் பூவணத்தெம் புனிதனார்க்கே.
என அப்பர் பெருமானும்,
"எண்ணியிருந்து கிடந்து நடந்தும் அண்ணல் எனநினைவார் வினைதீர்ப்பார் பண்ணிசையார் மொழியார் பலர் பாடப்
புண்ணியனார் உறை பூவணம் ஈதோ'
6 60 சுந்தரர் பெருமானும் இத் தலத்தில் எழுந்தருளியிருக்கும் பெருமானைப் போற்றிப் பாடியுள்ளனர்.
(நி. நி.)
திருப்பெண்ணாகடம்
தென்னார்க்காடு மாவட்டத்தில் விருத்தாசலத்திற்குத் தென்மேற்கில் வெள்ளாறு நதிக்கரையில் திருப்பெண்ணாகடம் அமைந்துள்ளது. இந்திரனின் பூசைக்காக மலர் பறிக்க வந்த தேவ கன்னியர் இத்தலத்து இறைவனைக் கண்டு மகிழ்ந்து வழிபட்டு வாழ்ந்து வந்தனர். மலர் வந்து சேராததைக் கண்ட இந்திரன் காமதேவனுவை அனுப்ப அதுவும் இறைவனைக் கண்டு வணங்கி நிற்க இந்திரன் வெள்ளையானையை அனுப்பினான். வெள்ளை யானையும் திரும்பி வராததைக் கண்ட இந்திரன் தானே புறப்பட்டு வந்து நிலைமையை அறிந்து பெருமானை வழிபட்டான் என்பது வரலாறு. பெண் + ஆ + கடம் எனப் பிரிந்து தேவகன்னியரும், காமதேனுவும், வெள்ளை யானையும் வழிபட்ட தலம் என்பதால் பெண்ணாகடம் எனப் பெயர் பெற்றது என்பர். இக் கோயிலுக்கு தூங்கானைமாடம் என்பது பெயர் இவ்வூரில் ஆயிரம் கடந்தையர்கள் (வீரமக்கள்) வாழ்ந்ததால் கடந்தை நகர் எனவும் பெயர் பெறுகின்றது.
திருப்பெண்ணாகடத்திற்கு வேறு பல பெயர்கள் உண்டு. ஐராவதம் எனும் யானை வழிபட்டதால் கயராசபதி என்றும், ஆதி நாளில் மலர்வனமாக விளங்கியதால் புஷ்பவனம், புஷ்பாரண்யம் எனவும், இந்திரன் வழிபட்டு வந்ததால் மகேந்திரபுரி என்றும்,
90

பார்வதி வழிபட்டதால் பார்வதிபுரம் என்றும், நஞ்சுண்ட இறைவனின் களைப்பைத் தீர்த்தலால் சோக நாசனம் என்றும் இறைவனுக்கு உகந்தபதி என்பதால் சிவவாசம் எனவும் பல பெயர்களால் பெண்ணாகடம் அழைக்கப்பட்டு வருகின்றது.
நடுநாட்டில் பாடல் பெற்ற தலமாக விளங்கும் திருப்பெண்ணாகடம் கோச்செங்கட்சோழன் கட்டிய 78 மாடக் கோயில்களில் ஒன்றாகும். திருக்கோயிலின் கருவறை ஒரு யானை படுத்திருப்பது போன்ற வடிவில் அமைக்கப்பட்டுள்ளதால் "தூங்கானைமாடம்” என வழங்கப்படுகிறது. மூலஸ்தானத்திற்கு மூன்று பக்கம் பலகணியுள்ளது. ராஜகோபுரம் ஐந்து நிலைகளையுடையது. கோயிலின் முன் வாசலில் விநாயகரைத் தரிசிக்கலாம். வடக்கே வாகன மண்டபத்தில் அதிகார நந்தி பெருமிதத் தோற்றத்துடன் கிழக்கு நோக்கிச் காட்சி தருகிறார். அழகான கோபுரம் பல்வகைச் சிறியங்களைக் கொண்டது. 30, அடி உயரமுள்ள அழகான கொடித்தம்பம், பக்கத்தில் கிழக்கு நோக்கி பிரதோஷ நந்தி சந்நிதியுள்ளது உள்நுழைந்ததும் பதினாறுகால் மண்டபம் உள்ளது.
மூலலிங்கம் சுயம்பு; உயரமானது; ஆவுடையார் சதுரவடிவானது. கர்ப்பக்கிருகத்தின் மூன்று பக்கமும் யன்னல்கள் அமைந்திருப்பது சிறப்பம்சமாகும். சுற்றுப்பகுதியில் உற்சவத் திருமேனிகள் காட்சியளிக்கின்றன. மூலஸ்தானத்திற்கு வடக்கே கட்டு மலை மேல் செளந்தரேஸ்வரர் சந்நிதி உள்ளது. தனிக் கோபுரத்துடன் விளங்குகிறது. நால்வர் சந்நிதிகள், சேக்கிழார், சோமாஸ்கந்தர், விசுவேஸ்வரர், முருகன், மகாலக்ஷமி சந்நிதிகளும் உண்டு. கட்டுமலையின் கீழ்ப்பகுதியில் பிரளயகாலேஸ்வரி அம்மையின் சிலையுள்ளது. தலமரத்தின்கீழ் சண்டேஸ்வரர் சந்நிதி. அம்மன் சந்நிதியும் வடக்கே சண்டேஸ்வரி சந்நிதியும் உண்டு. அத்துடன் திருமண மண்டபமும் காணப்படுகிறது.
ஆலயத்தின் மூலமூர்த்தி பிரளய காலேஸ்வரர், சுடர்க்கொழுந்தீசர் எனப் பெயர் பெறுகிறார். அம்மையார் ஆமோதனாம்பாள், கடந்தை நாயகி, அழகிய காதலி என பல்வேறு பெயர்களால் அழைக்கப்படுகிறார். தல விருட்சமாக சண்பக மரமும் தீர்த்தங்களாக கயிலைத் தீர்த்தம், பார்வதி தீர்த்தம், இந்திர தீர்த்தம், முக்குளம், வெள்ளாறு என்பனவும் விளங்குகின்றன.
ஆண்டு தோறும் சித்திரையில் பெருவிழா நடைபெறுகின்றது. சித்திரைப் பெருவிழாவில் அப்பர் சுவாமி சைவசமயம் சார்ந்தது, இறைவனை வேண்டிச் சூலமும், இடபமும் பொறிக்குமாறு பெற்றது விழாவாக கொண்டாடப்படுகின்றன. அம்பாளுக்கு ஆடிமாத உற்சவம் சிறப்பாக நடத்தப்படுகிறது. ஆவணி மூல விழா, நவராத்திரி, சஷ்டி விழா, தைப்பூசம், சிவராத்திரி, பங்குனி உத்தரம் முதலிய விழாக்களும் சிறப்பாக நடத்தப் பெறுகின்றன.
இந்துக்கலைக்களஞ்சியம்

Page 121
சம்பந்தர், அப்பர் ஆகியோர் இத்தலத்தின் மீது பாடல்கள் பாடியுள்ளனர். திருநாவுக்கரசர் இத்தலத்தின் இறைவனை நோக்கி “ஏழையேன் இழிவுமிக்க சமணசமயத் தொடர்புற்று வருந்திய இவ்வுடலுடன் உயிர் வாழ்வதற்கு இசையேன், அடியேன் இசையுமாறு தேவரீர் இலச்சினையான சூலத்தையும் இடபத்தையும் அடியேன் மேற் பொறித்தல் வேண்டும்” என வேண்டித் திருவிருத்தம் பாடினர். அவர் விரும்பியவாறு இறைவன் அருள் புரிந்தார்.
“பொன்னார்திருவடிக் கொன்றுண்டு விண்ணப்பம் போற்றிசெய்யும் என்னாவி காப்பதற் கிச்சையுண்டே லிருங் கூற்றகல மின்னாரு மூவிலைச் சூலமென்மேற் பொறி மேவுகொண்டல்
துன்னார் கடந்தையுள் தூங்கானை மாடச் சுடர்க் கொழுந்தே"
எனப்பாடுகிறார் அப்பர்.
நாயன்மார் அறுபத்து மூவருள், தமது பழைய வேலையாள் சிவனடியாராக வந்த போது தாம் அவனை வழிபட்டு, வழிபடாத தமது மனைவியின் கையை வெட்டிய கலிக்கம்ப நாயனார் அவதரித்த தலம் இது. சிவஞான போதம் அருளிச் செய்து திருக்கைலாய பரம்பரையைத் தமிழ் நாட்டில் தாபித்த சந்தான முதற்குரவர் மெய்கண்டதேவர் இத்தலத்தில் அச்சுதகளப்பாளர் என்பவருக்கு புதல்வராகத் தோன்றினார். இத்தலத்திற்குத் தெற்கே 3 கி.மீ. தூரத்தில் உள்ள மருதூரில் சந்தானாசாரியருள் ஒருவரான மறைஞானசம்பந்தர் அவதரித்தார். இக் கோயிற் கோபுரவாசலில் மேற் பக்கச் சுவரில் தென்பால் மெய்கண்டார் கோயில் உள்ளனது. நேர் எதிரில் கலிக்கம்ப நாயனார் காட்சி
தருகிறார். மறைஞான சம்பந்தரின் பெயரில் மடமும் உண்டு.
திருப்பெண்ணாகடத்திற்கு சேது மகாராசா திருப்பணிகள் செய்ததுடன் தேரும் அமைத்துக் கொடுத்துள்ளார். சோழர் கால கல்வெட்டுக்கள் பல இக்கோயிலில் உள்ள கல்வெட்டுக்களில் இத்தலத்து இறைவன் "தூங்கானை மாடமுடைய நாயனார்” என்று குறிப்பிடப்படுகின்றார் கோயிலுக்கு பொன், பசு, நிலம் முதலியவை விட்ட செய்திகள் கல்வெட்டால் தெரியவருகின்றன. சிவஞானப் பிரான் பிள்ளை என்பவர் திருப்பெண்ணாகடத்தின்
மீது திருக்கடந்தைப் புராணம் என்னும் தல புராணம் பாடியுள்ளார்.
"ஒடுங்கும் பிணிபிறவி கோடன் றிவை உடைத்தாய
வாழ்க்கையொழியத் தவம்
அடங்கும் இடங்கருதி நின்றிரெல்லாம் அடிகளடி
நிழற் கீழாளாம் வண்ணம்
கிடங்கும் மதிலும் சுலாவியெங்குங் கெழு மனைகள்
தோறும் மறையின் ஒலி
தொடங்கும் கடந்தைத் தடங்கோயில் சேர் தூங்கானை
மாடம் தொழுமின்களே”
எனப் பாடுகின்றார் திருஞானசம்பந்த மூர்த்தி நாயனார்.
(க.ஹே.)
இந்துக் கலைக்களஞ்சியம்

O e திருப்பெருந்துறை
சிறப்புவாய்ந்த சைவத் திருத்தலங்களிலொன்றே திருப்பெருந்துறை. இத்திருத்தலம் குறிப்பாக மாணிக்கவாசக சுவாமிகளின் வரலாற்றுடன் மிக நெருங்கிய தொடர்பு கொண்டதாகும்.
தமிழகத்திலுள்ள புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள புதுக்கோட்டை நகரிலிருந்து 44 கிலோமீற்றர் தொலைவில் திருப்பெருந்துறை எனும் திருத்தலம் உள்ளது. இது ஒரு புகழ்மிக்க திருத்தலமாகும். இங்கு கோயில் கொண்டெழுந் தருளியிருக்கும் சிவ பெருமான் ஆத்ம நாதர் எனவும் இறைவி பூரீ யோக நாயகியோகாம்பிகை எனவும் போற்றப்படுகின்றனர். இவ் ஆலயம் ஆவுடையார் கோயில் என வழங்கப்படுகின்றது. திருமுறைகளிலும், இலக்கியங்களிலும் இது அநாதி மூர்த்தி தலம், ஆதிகயிலாயம், உபதேசதலம், குருந்தவனம், ஞானபுரம், சதுர்வேதபுரம், திரிமூர்த்திபுரம், தகூதிணகைலாய புரம், தென்கயிலை, யோகபீடபுரம், யோகவனம் எனப் பல பெயர்களால் அழைக்கப்பட்டுள்ளது. திருவாசகம் இதனைச் சிவபுரம் எனவும் குறிப்பிடுகின்றது. இத்திருத்தலம் வெள்ளாற்றங்கரையில் மருதமும் முல்லையும் சேர்ந்த சிறந்த சூழலில் அமைந்துள்ளது.
ஆவுடையார் கோயில் ஒரு சிவவழிபாட்டுத்தலமாக இருப்பினும் இங்கு ஏனைய சிவாலயங்களிற் போன்று கொடிமரம், நந்தி, பலிபீடமில்லை. ஆத்மநாதர் எனும் பெயரிலே சிவபிரான் கருவறையிலே லிங்க வடிவில் வழிபடப்பட்டாலும், அவர் பீடத்தில் அருவமாகவே எழுந்தருளியிருக்கிறார். பீடத்தில் ஆவுடையார் மட்டுமே உள்ளார். ஆவுடையார் மீது குவளை சாத்தி அலங்காரம் செய்து வழிபாடு நடைபெறும், அம்மனுக்கும் இங்கு உருவவழிபாடு இல்லை. எனவே சிவனும், சக்தியும் அருவமாகவே வழிபடப்படும் தனிச் சிறப்பான ஆலயமாக இஃது இலங்குகின்றது.
விநாயகர், முருகன், நடராஜர், வீரபத்திரர் நவக்கிரகங்கள் முதலிய பரிவாரத் தெய்வங்கள் இங்கு இடம் பெற்றிருப்பினும், சிவபிரான் அம்பாளுக்கு நிகரான சிறப்புகளை மாணிக்கவாசகரே பெற்றுத்திகழ்கிறார். அதிகார நந்தீஸ்வரராகவும், அனுக்கிரக சண்டீஸ்வரராகவும் மணிவாசகப்பெருமானே ஆட்சி செலுத்து கின்றார்.
இறைவனுக்குரிய ஆடை, ஆபரண அலங்காரங்களையும், ஊர்திகளையும், தேர்த்திருவிழாச் சிறப்புகளையும் வேறு எந்தப் பக்தனும், வேறு எந்த திருக்கோயிலிலும் பெற்றிருந்ததாகத் தெரியாது. ஆனால் மாணிக்கவாசகர் மட்டும் மகாதேவனுக்குரிய சகல மரியாதைகளையும் பெற்று விளங்குகின்றார். இதுவும் ஒரு தனிச்சிறப்பே. “இறைவனோ தொண்டர் உள்ளத்து ஒடுக்கம்.
91

Page 122
தொண்டர் தம் பெருமை சொல்லவும் பெரிதே' என ஒளவைப்பிராட்டியார் கூறியுள்ளமைக்கு இஃது ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக இலங்குகின்றது.
திருவாசகம், திருக்கோவையார் ஆகிய சைவத் திருமுறைகளை இயற்றிய மாணிக்கவாசகப் பெருமான் காலம் குறித்துக்கருத்து வேறுபாடுகள் உண்டு, இவர் கி. பி. 9ஆம் நூற்றாண்டிலே மதுரையிலே ஆட்சி செய்த வரகுண பாண்டியன் எனும் அரசனின் அமைச்சராகப் பணிபுரிந்தார் என ஒருசாரர் கொள்ளுவர். வேறொரு சாரார் இவர் ஏனைய சைவ நாயன்மாருக்கு முன்னர் வாழ்ந்தவர் எனக் கருதுகின்றனர். எவ்வாறாயினும் இவர் பாண்டியமன்னன் குதிரைகள் வாங்குவதற்கு வழங்கிய பணத்தைச் சிவபுண்ணியங்களிற் செலவு செய்தார். ஆவுடையார் கோவிலைக்கட்டும் திருப்பணிகளில் ஈடுபட்டார். இவரின் வாழ்க்கையிலே சிவபிரான் திருவிளையாடல்கள் சில நடைபெற்றனவாகப் பெளராணிக மரபிலே கூறப்படுகின்றது. இவருடைய நூல்களில் இவற்றிற்கான அகச்சான்றுகள் உள்ளன. மேலும் இக்கோவில் பகுதியிலே குருந்தமரத்தினடியில் சிவபிரான் குருவடிவாக இருந்து அவருக்கு ஞானோபதேசம் செய்ததாகவும் மேற்குறிப்பிட்டன மூலம் அறியலாம். இந்த அத்தியாத்மிக அநுபவம் பற்றி அவரே,
"நீதியே செல்வத்திருப் பெருந்துறையில் நிறைமலர்க் குருந்தமே வியசிர் ஆதியே அடியேன் ஆதரித்தழைத்தால் அதெந்துவே என்றருளாயே’
என்றும்
“தேடி நீ ஆண்டாய் சிவபுரத்தரசே திருப்பெருந்துறையுறை சிவனே'
எனவும் இதே போன்று பல இடங்களிலும் கூறியிருப்பதால் நன்கு
உணரப்படும்.
மணிவாசகப் பெருமானின் திருப்பணியைக் கொண்ட இக் கோவிலில், இக்கோவில் வட்டாரத்தைச் சேர்ந்த நிலக்கிழார்கள் பலரின் திருப்பணிகள் உள்ளன. எடுத்துக்காட்டாக மாணிக்கவாசகர் சந்நிதி முன்னுள்ள மண்டபம் இரகுநாத பூபாலனால் கட்டப்பட்டது. மணிவாசகப் பெருமானுக்கு இங்கு இரண்டு முக்கியமான சந்நிதிகள் உள்ளன. ஒன்றில் அவர் அமைச்சராக இருக்கும் கோலத்திலும், பிறிதொன்றிலே சிவபக்தராக ஞானத்திருக் கோலத்திலும் வணங்கப்படுகின்றார்.
சிற்பக்கலைக்குப் புகழ்பெற்ற உறைவிடமாகவும் இக்கோயில் இலங்குகின்றது. கோவிலின் வாயிலருகிலுள்ள பெரிய மண்டபம்
92

அல்லது ஆயிரங்கால் மண்டபத்தில் ரணவீரபத்திரர், அகோரவீரபத்திரர், காளி, ஊர்த்துவ தாண்டமூர்த்தி, பிக்ஷாடனர், கோதண்டபாணியாக விளங்கும் முருகன், இடபாரூடர், சங்கர நாராயணர் முதலிய மிகச் சிறந்த சிற்பங்கள் உள்ளன. இவை ஒவ்வொன்றும் ஒரே கல்லினாலான திருவுருவங்களாகும். இம்மண்டபத்திலே குதிரை வீரர்களைக் கொண்ட நான்கு கற்றுாண்களின் வேலைப்பாடு மிக நேர்த்தியானது. மேலும் தியாகராச மண்டபத்தில் 12 ராசிகளுக்கு அருகிலே காணப்படும்
கல் சங்கிலிவளையங்கள் நேர்த்தியான சிற்பவேலைப்பாடாகும்.
இக்கோவிலைப் பொறுத்த மட்டில் சிற்பியின் கைவண்ணம் இங்குள்ள கொடுங்கைகளிலே சிறப்பாகத் தென்படுகின்றது. கருங்கல்லை மரப் பலகை போலத் தட்டையாக்கியிருத்தல், அக்கல்லைப் பல கோணங்களைக் கொண்ட கம்பி போல வளைத்தல் ஆகியவை கடினமான மனித உழைப்பினால் சிற்பியின் கைவண்ணத்தில் உருவாக்கம் பெற்றவை. கொடுங்கைகள் கோவில் கலை அம்சமாகப் பல இடங்களிலே காணப்பட்டாலும் ஆவுடையார் கோவில் மண்டபக்
கொடுங்கைகள் உலகப்புகழ் பெற்றவையாகும்.
இங்கு சுவாமி சந்நிதியும் அம்பாள் சந்நிதியும் தெற்கு நோக்கி அமைந்துள்ளன. இதனாலும் சுவாமி குருவடிவாக வந்து மாணிக்கவாசகருக்கு அருள் பாலித்தமையாலும் இங்கு கோயில் கொண்டெழுந்தருளியிருக்கும் பூரீ ஆத்மநாதரை தகூதிணா மூர்த்தி ஸ்வரூபமாக வழிபடுவதுண்டு. தெற்கு நோக்கியுள்ள சுவாமி சந்நிதியில் சூரியோதயம் முதல் சூரியாஸ்தமனம் வரையில் சூரியநிழல் சுவாமி மீது படிவதைக் காணலாம் எனக் கூறப்படுகிறது. இவ்வாறு தெற்கு நோக்கிய சிவாலயம் மிக அரிதாகவே உள்ளது.
ஆத்மநாதர் ஆலயத்தில் ஆறுகால பூசை நடைபெறுகின்றது. தீபாராதனையின் போது ஆவாஹனம், பிரசன்னம் என இரண்டு முறை அலங்கார தீபம் செய்வது வழக்கம். இஃது ஒவொரு காலத்திலும் நடைபெறும்.
இந்த ஆலயத்திலே பூசை செய்பவர்களான நம்பியார் - ஸ்தானிகர்கள் என அழைக்கப்படுவர். இவர்கள் நீண்டகாலமாக வழிவழியாக இதனைச் செய்து வருகின்றனர். இவர்களைப்பற்றிய சில ஐதீகங்கங்கள் உள்ளன. எனினும் சிதம்பரத்திலுள்ள தில்லை மூவாயிரவர் போல இங்கு முன்னூறு நம்பியார் - ஸ்தானிகள் உள்ளனர். தில்லை மூவாயிரவர் களுக்குரிய சிறப்பு திருப்பெருந்துறை முன்னூற்றுவருக்கும் உண்டு. தில்லை நடராஜர் மூவாயிரத்துள் ஒருவர் போலவே திருப்பெருந்துறையாரும் முன்னூற்றுவருள் ஒருவராக இலங்குகின்றார். திருப்பெருந்துறை திருவாசகப் புகழ்வாய்ந்த தெய்வீக திருத்தலமாகும்.
இந்துக் கலைக்களஞ்சியம்

Page 123
எல்லா ஆன்மாக்களுக்கும் தலைவராகச் சிவபெருமான் திகழ்வதால் அவர் இங்கு ஆத்மநாதர் (ஆன்மாக்களுக்குத் தலைவர்) என வழிபடப்படுகிறார். யோகசித்தியால் அகங்கார மமகாரங்கள் நீங்கப்பெற்ற, பக்குவ ஆன்மாக்கள் முத்திப் பேறு பெறுவதற்கான திருத்தலமாகத் திருப்பெருந்துறை விளங்கு கின்றது. எனவே திருவருளாகிய ரீ யோகாம்பிகை | யோகநாயகி எனும் திருப்பெயருடன் ஆன்மாக்களை ஈடேற்றிக் கொண்டிருக்கிறாள்.
இத்திருத்தலத்திற்குரிய தலவிருட்ஷம் குருந்தமரம், தீர்த்தம், அக்கினி தீர்த்தம். (67. df.)
திருமகள்
இறைவனை ஆணாகவும் பெண்ணாகவும் உருவகித்துக் கூறும் மரபு இந்து சமயத்திலே மிக நீண்டகாலமாக நிலவிவந்துள்ளது. ஆண், பெண் தெய்வங்களைத் தனித் தனியாக மட்டுமன்றி, கணவன், மனைவியாகக் கூறும் மரபும் சிறப்பாக நிலவுகின்றது. இவ்வாறு நோக்கும்போது சைவசமய முழுமுதற் கடவுளான சிவபிரானுக்குப் பார்வதி சக்தியாக விளங்குவது போல, திருமாலுக்குத் திருமகள் திகழ்கிறாள். திருமகள் வட மொழியிலே லக்ஷமி, மஹாலக்ஷமி, பூரீ, பூரீதேவி, பத்மா, கமலா எனப் பலவாறு அழைக்கப்படுகிறாள். திருமகள் எனும் பதத்தில் உள்ள முன்பகுதியான திரு எனில் திருமாலின் சக்தி, அழகு, அழகுத் தெய்வம், செல்வம், செல்வத்திற்கும் வளத்திற்கும் இறைவி, சிறப்பு, தெய்வீகத்தன்மை பேரொளி, பாக்கியம், நல்வினை, பொலிவு எனப் பல பொருள்படும். லக்ஷமி எனும் பதம் இவற்றுடன் நல்ல குறியீடு, அடையாளம், மகிழ்ச்சி, அரசனின் அதிர்ஷ்டம், அரச ஆதிக்கம் எனப் பொருள்படும். பூரீ எனும் பதம் மேற்குறிப்பிட்ட பலவற்றுடன் மகிமை, நன்மை, வெற்றி, மங்கலம், சமூகத்தில் உயர் வர்க்கத்தினர், தாமரை மலர், அறிவு, இவளை அனைவரும் வந்தடைகின்றனர், முதலிய பல பொருட்படும். பொதுவாக நோக்கும் போது பலவிதமான செல்வங்களுக்கும். நன்மைகளுக்கும், அழகுக்கும் தெய்வமாகத் திருமகள் மிளிர்கிறாள். திரு' எனும் பதத்துடன் குறிப்பாகப் பெண்பிள்ளை / பெண் எனும் பொருள்படும் மகள் எனும் பதமும் சேர்ந்து அழகிய இளம் பெண் தெய்வம் எனும் கருத்துக் கொண்டதாகத் திருமகள் எனும் சொல் உள்ளது. காதல், அழகுத் தெய்வமான மன்மதன், திருமால், திருமகள் ஆகியோரின் மகனே. ஏற்கனவே குறிப்பிட்ட திரு, திருமகள் எனும் பதங்களும் கருதும் பொருளுக்கு எதிர்மாறான கருத்துக்கொண்டதாக அவரின் மூத்த சகோதரியைக் குறிக்கும் ஜயேஷ்டா (மூதேவி முத்தவள்) எனும் பதம் உள்ளது. திருமகள் அல்லது லக்ஷமி வழிபாடு மிகப் பழமையானது. புராதன காலத்திலே நிலவிவந்த பெண் தெய்வ / சக்தி வழிபாட்டின் ஒர் அமிசமாக இவ்வழிபாடு மலர்ந்திருக்கலாம். இங்கு குறிப்பாக செல்வம், அழகு பற்றிய கருத்துக்களின் அடிப்படையிலே உருவாகியிருக்கலாம். இவ்வழிபாடு பற்றிய
இந்துக் கலைக்களஞ்சியம்

பிற்கால நூல்களிலே காணப்படும் கருத்துக்கள் மேற்குறிப்பிட்டதை ஓரளவாவது வலியுறுத்துவன.
திருமகள் பற்றிய காலத்தால் முந்திய சான்றாக இருக்குவேதத்தில் உள்ள பிந்திய கால சூக்தங்களில் (பாடல்களில்) ஒன்றான பூரீசூக்தம் விளங்குகின்றது. 32 செய்யுள்களைக் கொண்டுள்ள இச் சூக்தம் இத் தெய்வம் பற்றிய முக்கியமான கருத்துக்கள் கொண்டுள்ளது. குறிப்பாகப் பிற்காலச்சிற்பங்கள், நாணயங்கள், ஒவியங்கள் முதலியவற்றிலே காணப்படும் கஜலக்ஷமி திருவுருவம் குறிப்பிடற்பாலது. அதாவது; தாமரை மலரில் வீற்றிருப்பவளும், பருத்த நிதம்பம் உடையவளும். தாமரையிதழ் போன்ற அகன்ற கண்களை உடையவளும், கம்பீரமான சுழல் போன்ற நாபியை உடையவளும். மார்பின் பாரத்தால் (சற்று) வளைந்தவளும், பிரகாசமான வெண்ணிற ஆடையும், உத்தரீயமும் அணிந்தவளும், இரத்தினங்களால் இழைக்கப்பட்ட பொற்கலச நீரால் தேவலோகத்துச் சிறந்த யானைகளாலே அபிஷேகம் செய்யப்படுபவளும், தாமரை மலரைக் கையிலேந்தியவளும் மங்களங்கள் அனைத்தும் உடையவளு மாகிய லக்ஷமி தேவி எப்போதும் என் வீட்டிலே வாசம் செய்து திருவருள் புரிவாராக, என வரும் செய்யுள் நன்கு கவனித்தற்பாலது. பிற்பட்ட காலத்திய உபநிஷதங்களில் ஒன்றான ஸெளபாக்ய லக்ஷ்மி உபநிஷத்திலே மஹாலக்மி பற்றிய 32 திருநாமங்கள் (பெயர்கள்) உள்ளன. இவற்றை முறைப்படி பாராயணம் செய்து பூசை செய்வோர் சகல வளங்களும் பெறுவர் எனக் கூறப்படுகின்றது. தொடர்ந்து பிற்பட்ட காலக் குறிப்பிட்ட சில சமஸ்கிருத நூல்கள், தமிழ நூல்கள் முதலியவற்றிலே லக்ஷமி பற்றிய பலதரப்பட்ட கருத்துக்கள் கூறப்பட்டுள்ளன. இவற்றுட் சில பற்றிக் கூறப்படும்.
லசுஷ்மியின் தோற்றம் பற்றிய பெளராணிக ரீதியிலான கதையொன்றின்படி பரமாத்மாவிலிருந்து ராதாதேவி, லக்ஷமிதேவி
எனும் இரு மிக அழகிகள் தோன்றினர். அவர்களுள் ராதாவைக் கிருஷ்ணர் திருமணம் செய்தார். மற்றவரும் அவரையே விரும்பியபடியால் அவரையும் பிறிதொரு திருவுருவத்திலே திருமணம் செய்தார். லக்ஷமியின் தோற்றம் பற்றிய இத்தகைய கதைகளிலே அவர் பாற்கடலிலிருந்து தோன்றியவர் என்ற கதை
93

Page 124
மிகப்பிரசித்தமானதாகும். துர்வாச மஹரிஷி பராசக்தியை வழிபட்டு வாடாத மலர் மாலையைப் பிரசாதமாகப் பெற்றார். வரும் வழியிலே தேவர்கள் புடைசூழ இந்திரன் தனது ஐராவதமெனும் யானையின் மீது இருந்து பவனிவரக்கண்டார். தேவியின் திருவருள் அவனுக்குக் கிடைக்கும் வண்ணம் அந்தமாலையை அவனிடம் நீட்டினார். இந்திரன் செருக்கினால் யானையிலிருந்து இறங்கி அதனைப் பெறாமல் அங்குசத்தை நீட்டி அதனால் அதைப் பெற்றுக் கொண்டு தான் அதனை அணியாமல் யானையின் மத்தகத்திலே வைத்தான். யானை அதைத் துதிக் கையால் இழுத்துத் தள்ளிற்று. இதனைக்கண்ணுற்ற முனிவர் கடுங்கோபங் கொண்டு “இந்த ராஜ்ய பூரீ (அரச செல்வமாகிய லக்ஷமி) உன்னை விட்டு அகலட்டும்” எனச் சபித்தார். மிகவும் அச்சம் கொண்ட இந்திரன் அவரின் காலில் விழுந்து வணங்கி மன்னித்து அருள் புரியுமாறு வேண்டினான். அதற்கு முனிவர் திருமாலின் திருவருளால் இந்திரனுக்கு மீண்டும் மஹாலசுஷ்மி கடாக்ஷம் கிட்டும் எனக் கூறிச் சென்றார்.
துர்வாசரின் சாபத்தால் இந்திரனின் உலகம் பொலிவிழந்தது. அசுரர்கள் இந்திரனை வென்று சுவர்க்க பூரீயைப் பெற்றனர். தேவர்கள் சோபையிழந்து பல துன்பங்களை அடைந்தனர். இதனால் பிரமாவிடம் சென்று அவரைச் சரணடைந்து தம்மைக் காக்குமாறு வேண்டினர். ஆனால் 'துர்வாசரின் சாபத்தால் இக்கதி நேர்ந்துள்ளபடியால் அனைவரும் பாற்கடலுக்குச் சென்று மகூடிாவிஷ்ணுவை வணங்குவோம். அவரின் திருவருளாலே லக்ஷமி கடாக்ஷம்கிட்டும்” எனக் கூறி அனைவரும் அங்கு சென்றனர். அவர்கள் அவரைப் பலவாறு பூசித்தனர். அவரும் கருணை கூர்ந்து மஹாலக்ஷமி மூலம் அவர்களின் துன்பம் நீங்கும் எனக் கூறி, அசுரர்களுடன் சேர்ந்து தேவர்களைப் பாற்கடலைக் கடையுமாறு கூறித் தாமும் உதவி செய்தார். இருசாராரும் பாற்கடலைக் கடைய ஹாலாஹலவிஷம், அமுதம், ஜியேஷ்டா, அப்சரஸ்கள், ஐராவதம் எனும் யானை, உச்சைச்ரவஸ் எனும் குதிரை, தன்வந்திரி, பாரி ஜாதம், காமதேனு, மஹாலசுஷ்மி எனப் பல தோன்றின. இவ்வாறு மஹாலக்ஷமி தோன்றக் கண்ட தேவர்கள் மிக மகிழ்ச்சியடைந்தனர். அவர்கள் மஹாலசுஷ்மியைப் பலவாறு துதித்தனர். அவரும் மகிழ்ந்து வரமளித்தார். திருமாலுக்கும் மஹாலக்ஷமிக்கும் திருமணம் நடைபெற்றது. பின்னர் தம்மை வழிபட்ட தேவர்களுக்கு அவர்கள் வரமளித்தனர். லசுஷ்மி கடாட்சம் பெற்ற தேவர்கள் மீண்டும் சுவர்க்க பூரீயைப் பெற்று விளங்கினர். பாற்கடலில் தோன்றியபடியால் லசுஷ்மி பாற்கடலின் மகள், அலைமகள், கூrரஸாகர தனயா என அழைக்கப்படுகிறாள். பிறிதொரு கதையின் படி மஹாலக்ஷமி பிருகு முனிவரின் மகளாகப் பிறந்தார். மேலும் அவர் அக்கினியிலிருந்தும், பூமியிலிருந்தும் தோன்றினார் எனும் கதைகளுமுண்டு.
இந்துசமய மரபிலே திருமால் உலகின் நன்மைக்கும், பாதுகாப்புக்குமாக பல அவதாரங்களை மேற்கொண்டார் எனக்
94

கூறப்படும். அதற்கு ஏற்ப லக்ஷமியும் அவதாரங்களை மேற் கொண்டார். எடுத்துக் காட்டுகளாத் திருமால் கிருஷ்ணாவதாரம் எடுத்தபோது, ருக்மிணியாகவும் ராமாவதாரம் எடுத்தபோது, சீதாபிராட்டியாகவும், பரசுராமாவதாரம் எடுத்த போது, பூமியாகவும் அவர் அவதரித்தார். மஹாலக்ஷமியின் தோற்றம் பற்றிய புராணக்கதைகள் எவ்வாறாக இருப்பினும் அவள் திருமாலின் சக்தியாக திருமாலுடன் உறை சக்தியாக விளங்குகிறாள்: வழிபடப்படுகிறாள். இத்தெய்வத்தினைத் தனியே வழிபடும் மரபும் நிலவுகிறது. திருமாலுடன் உறைசக்தியாக, லசஷ்மி அவரின் மிகுந்த அன்புக்குரியவளாக அவரின் பரந்த திருமார்பின் வலப்பக்கத்திலே வீற்றிருக்கின்றாள் எனக் கூறப்படுகிறது.
லசுஷ்மியின் பல்வேறு திருவுருவங்கள் பற்றிக் கூறப் படுகின்றது. ஏற்கனவே குறிப்பிட்ட லக்ஷமியின் சிறப்பு அமிசங்களையும், வேறு சிலவற்றையும் உள்ளடக்கியதாக நேர்த்தியான அஷ்டலசுஷ்மிஸ்தோத்திரம் இலங்குகின்றது. இதிலே ஆதிலசஷ்மி, தான்யலசுஷ்மி, தைரியலக்ஷமி, கஜலக்ஷமி, ஸந்தானலசஷ்மி, விஜயலக்ஷமி, வித்யாலஷ்மி, தனலக்ஷமி ஆகியோர்பற்றி ஒவ்வொரு செய்யுட்கள் உள்ளன. ஒவ்வொரு திருக்கோலமும் வெவ்வேறு சிறப்புகளை வழங்கும் பாங்கு கொண்டதாகும். இவற்றுள் எடுத்துக்காட்டாக தான்யலசஷ்மி பற்றிய "அயி கலிகல்மஷநாசிநி காமிநி, வைதிகரூபிணி வேதமயே, ஷிரஸமுத்பவ மங்கள ரூபிணி, மந்தரநிவாஸிநி மந்த்ரநுதே, மங்களதாயிநி அம்புஜவாஸிநி, தேவகணாச்ரித பாதயுதே, ஜய ஜய ஹே மதுஸ"தனகாமினி, தான்யலசுஷ்மி பாலயமாம்” எனும் பாடலைக் குறிப்பிடலாம். திருமகள் பற்றிய தோத்திரங்கள் பல வடமொழி, தமிழ்மொழி முதலிய மொழிகளிலும் உள்ளன. வடமொழியிலுள்ளவற்றுள் ஏற்கனவே குறிப்பிட்டதை விட கனகதாராஸ்தோத்திரம், மஹாலசுஷ்மி அஷ்டகம் போன்றவை உள்ளன. கோலாப்புரம் எனுமிடத்தில் எழுந்தருளியிருக்கும் மஹாலக்ஷமி பற்றி அகத்தியமுனிவர் சில பாடல்கள் இயற்றி அவரை வழிப்பட்டுத் திருவருள் பெற்றார். இவற்றை அதிவீரராம பாண்டியன் தமிழிலே மொழி பெயர்த்துக் காசிகாண்டம் எனும் நூலிலே சேர்த்துள்ளான். எடுத்துக்காட்டாக,
கொலுதிசை அளிமுரலும் தாமரைமென் பொகுட்டிலுறை கொள்கை போல மழையுறழுந் திருமேனி மணிவண்ணன்
இதய மலர் வைகுமானே முழுதுலகும் இனி தீன்ற அருட் கொம்பே
கரகமலர் முகிழ்த்தெந்நாளுங் களி பெருங்காதலில் தொழுவோர் வினைதீர
அருள் கொழிக்கும் கமலக் கண்ணாய்
என வரும் கவிச்சுவை, பக்திச்சுவையுடைய பாடலைக்
குறிப்பிடலாம்.
இந்துக் கலைக்களஞ்சியம்

Page 125
கர்நாடக இசைக்குரிய உருப்படிகளிலே லக்ஷமிபற்றிய நேர்த்தியானவை சில உள்ளன. இவையும் தமிழ், வடமொழி முதலிய மொழிகளில் உள்ளன.
சிலப்பதிகாரம் கூறும் பதினொரு ஆடல்களிலே பாவைக் கூத்துத் திருமகள் ஆடியதாகும். லக்ஷமி வழிபாட்டிற்கான திருப் பெயர்கள் - நாமாவளிகள் - குறிப்பாக அஷ்டோத்திர சதநாமாவளி (108), சஹஸ்ரநாமாவளி (1000) போன்றவற்றில் அவருடைய பல்வேறு சிறப்பியல்யுகள் நன்கு இடம் பெற்றுள்ளன. தமிழ் இலக்கிய நூல்களிலும் லக்ஷமியின் பல பெயர்கள்
வந்துள்ளன.
திருமால் ஆலயங்களிலே அவரின் சக்தியாகிய திருமகளுக்குச் சிறப்பான இடம் அளிக்கப்டுகின்றது. திருமகளுக்கான தனிக்கோவில்கள் இந்தியாவிலே காஷ்மீர், தமிழ்நாடு, மஹாராஷ்டிரம், ஆந்திரம் முதலிய மாநிலங்களில் உள்ளன. இவற்றுள் மஹாராஷ்டிர மாநிலத்தினைச் சேர்ந்த கோலாபூரிலுள்ள மஹாலசுஷ்மி ஆலயம் மிகப்புகழ் பெற்றதாகும். இலங்கையிலும் கொழும்பிலே ஒரு திருமகள் ஆலயம் அண்மையிலே தோற்றுவிக்கப் பெற்றுள்ளது.
திருமகளுக்குரிய விரதங்களிலே நவராத்திரி காலத்திலே இடையிலுள்ள மூன்று நாட்களும் (4-6) நன்கு குறிப்பிடற்பாலது. இதனை விட வரலசுஷ்மி விரதம் முதலியனவும் குறிப்பிடற்பாலன.
திருமகளின் திருக்கோலங்கள் பற்றிய விபரங்கள் ஆகமங்கள், சிற்பநூல்கள் முதலியனவற்றில் உள்ளன. ஒரு திருக்கோலத்தில் அவர் தாமரையாசனத்திலே வீற்றிருப்பார். வலது, இடது திருக்கரங்களிலே தாமரை மலர் மிளிரும். தாமரை மலர்மாலை அவரை அணி செய்யும். இரு பக்கங்களிலும் இரண்டு யானைகள் தெய்வீகமகளிர் வழங்கும் பொற்கலசங்களால் அவரை நீராட்டுவன. இவர் கறுப்பு நிறமுடையவரென விஷ்ணுதர்மோத்தரபுராணம் கூறும். ஆனால், அம்சுமத்பேதாகமம் இவர் பொன்மஞ்சள் நிறமுடையவர் எனக் கூறும். மாணிக்கக்கற்களும், பிற ரத்தினங்களும் பதித்த ஆபரணங்களை அணிந்தவராகவும், மகர குண்டலங்கள் அணி செய்யும் காதுகளை உடையவராகவும் அவர் விளங்குவார்; அன்றலர்ந்த தாமரை மலர்போலவும், அண்மையில் பருவமடைந்த இளநங்கை போலவும், சிறந்த அழகியாகவும் இலங்குவார். சிலவேளைகளிலே இரண்டு திருக்கரங்களுக்குப் பதிகளாக நான்கு திருக்கரங்களும் இடம் பெறும். அவற்றுள் வலது திருக்கரம் அபயகரமாகவும், இடது திருக்கரம் வரதமாகவும் அமையும். எனவே சில திருக்கோலங்களில் வேறுபாடுகள் சிலவும் காணப்படும்.
சில்பரத்தினம் எனும் நூலின்படி லக்ஷமி வெண்ணிற முடையவராகவும். இடது திருக்கரத்திலே தாமரை மலரும், வலது
இந்துக் கலைக்களஞ்சியம்

திருக்கரத்திலே வில்வம்பழமும் வைத்திருப்பவராகவும், திருக்கழுத்திலே முத்து மாலை அணிந்திருப்பவராகவும், இருமருங்கிலும் இரு பெண்கள் சாமரை வீசிக்கொண்டிருக்கத் தாமரைமலர் மீது வீற்றிருப்பார். திருமாலின் அருகில் இருக்கும் போது அவருக்கு இரண்டு திருக்கரங்களே இருக்கவேண்டும்.
கோலாம்பூரிலுள்ள மஹாலக்ஷமியின் லக்ஷணங்கள் பற்றி விஸ்வ கர்மசாஸ்திரம் கூறிகின்றது. இவர் ஆபரணங்கள் அனைத்தும் அணிந்தவர். கீழ்ப்புற வலது திருக்கையில் கலசம்: இடது திருக்கையில் கேட்கும் மேற்புற வலது திருக்கரத்தில் கதாயுதமும், இடது திருக்கரத்திலே வில்வபழமும் விளங்குவன. தனிப்பட்ட கோவில்களிலே வழிபடப்படும் லக்ஷ்மி சிங்காசனத்தின் மீதுள்ள எட்டு இதழ் கொண்ட தாமரை மலரில் வீற்றிருப்பார். அவர் நான்கு திருக்கரங்களுடன் இருப்பார். வலது பக்கத்திலுள்ள திருக்கரங்கள் ஒன்றிலே நீண்ட காம்புடன் கூடிய தாமரை மலரும், மற்றையதிலே வில்வப்பழமும், இடது திருக்கங்கள் ஒன்றிலே அமுத கலசமும், மற்றையதிலே சங்கும் இலங்கவேண்டும். அவருக்குச் சற்று பின்புறமாக இரண்டு யானைகள் கலசங்கள் மூலம் தூய நீரினால் அவரை நீராட்டுவன. அவருடைய தலையிலும் தாமரைமலர் திகழ வேண்டும். கேயூரம் காப்புகள் அவரை அணிசெய்வன.
ஒரே பரம்பொருளை ஆணாகவும், பெண்ணாகவும் பல்வேறு திருக்கோலங்களிலே பாவனை செய்து வணங்கும் மரபு இந்து சமயத்திலே நீண்டகாலமாக நிலவிவருகின்றது. எனவே இறைவன் சிவபெருமான், பிள்ளையார், முருகன், திருமால் முதலிய திருக்கோலங்களிலே வெளிப்படுவதுபோல, இறைவியும், பார்வதி, துர்க்கை, காமாகூழி, மீனாகூதி, லக்ஷ்மி, சரஸ்வதி எனப்பல திருவடிவங்களிலே வெளிப்படுகிறார். எனப் பொதுவாகக் கொள்ளப்படுகின்றது. எனவே லக்ஷமி விஷ்ணுவின் சக்தியாகவும், முழுமுதற் கடவுளாகவும் வணங்கப்படுகிறாள்.
திருமகள் வழிபாடு இந்துக்கள் மத்தியிலே பரவலாக நிலவுகின்றது. எல்லா வகையான செல்வங்களுக்கும், அழகுக்கும் தெய்வமாகத் திருமகள் திகழுகிறாள். வீடுகளிலும் திருமகளின் படம் வைத்து வழிபாடு நடைபெறுகின்றது. வீடுகளதும் அரண்மனை, கோயில்களதும் வாயில்களின் மேலே திருமகளின் திருவுருவம் அமைக்கப்படும் வழக்கம் பண்டுதொட்டே இருந்துவந்துள்ளது. உலக வாழ்விற்கு இன்றியமையாத செல்வங்களின் இறைவியாகப் பலரும் போற்றும்
தெய்வமாகத் திருமகள் சிறப்புப் பெறுகிறாள்.
திருமகள் அல்லது லசுஷ்மி பல அமிசங்களினதும் சிறப்புள்ள தெய்வமாகும். “அவள் ஸ்வர்க்கத்தில் (விண்ணுலகில்) ஸ்வர்க்க லக்ஷமி. பூவுலகில் அரசர்களிடையே ராஜ்யலசஷ்மி, வீடுகளில் இல்லத்தரசிகளின் வடிவிலே கிருஹ (வீடு) லசஷ்மி, பற்றையும்,
95

Page 126
பாசத்தையும், உலக இன்பங்களையும் துறந்த துறவிகள் கூட மோக்ஷலக்ஷமியின் கடாக்ஷத்தை விரும்புகிறார்கள்” என ஒர் அறிஞர்கூறியிருப்பது நன்கு கவனித்தற்பாலதே.
மேலும் பெளத்த, சமண சமய மரபுகளிலும், லசஷ்மி இடம் பெற்றுள்ளாள். (வி.சி.)
திருமங்கலக்குடி
சோழநாட்டு வடகரைத் தலம். அப்பர், சம்பந்தப் பெருமானால் பாடப்பெற்ற சிறப்புடையது. கும்பகோணத்திற்கு அருகில் இத் தலம் உள்ளது. இத் தலத்திலிருந்து திருக்கோடிகாவல், ஆவடுதுறை, திருப்பனந்தாள், ஆகிய தலங்களுக்குச் செல்லலாம். திருவாவடு துறை ஆதீனப் பராமரிப்பில் உள்ள ஆலயம் இது. காளி, சூரியன், திருமால், பிரமன், அகத்தியர் ஆகியோர் வழிபட்ட தலம். மேலும் பஞ்சமங்கள ஷேத்திரம் (மங்களவிமானம், மங்கள விநாயகர், மங்களாம்பிகை, மங்கள தீர்த்தம்) என்று புகழப்படும் சிறப்புடையது. நவக்கிரகங்களின் தோஷம் நீங்கிய தலம் சூரியனார் கோயில். அத் தோஷத்தை நீங்கியருளிய பெருமான் திருமங்கலக் குடியில் எழுந்தருளியுள்ள பிராணவரதேஸ் வரரேயாவார். ஆகவே திருமங்கலக் குடியை வழிபட்ட பின்பே சூரியனார் கோயில் சென்று வழிபட வேண்டும் என்ற மரபு
உள்ளது.
இறைவன் - பிராணவரதேஸ்வரர் இறைவி - மங்கள நாயகி தலமரம் - வெள்ளெருக்கு தீர்த்தம் - காவிரி
முதலாம் குலோத்துங்க மன்னன் காலத்தில் மந்திரி ஒருவன் மன்னனின் வரிப்பணத்தைக் கொண்டு திருமங்கலக்குடியில் பிராணவரதேஸ்வரருக்குக் கோயில் கட்டினான். அதையறிந்த மன்னன் சினம் கொண்டு மந்திரியைச் சிரச்சேதம் செய்யும் படி உத்தரவிட்டான். மந்திரியின்மனைவி இத் தலத்து இறைவி மங்கள நாயகியிடம் தனக்கு மாங்கல்யக்காப்பு தருமாறு நெஞ்சுருகி வேண்டினாள். மந்திரி தன் உடலை திருமங்கலக் குடியில் அடக்கம் செய்யுமாறு கேட்டுக் கொண்டான். அதற்கிணங்க மந்திரியின் உயிரற்ற உடலை திருமங்கலக் குடிக்கு எடுத்து வந்ததும் அவன் மங்கள நாயகியின் அருளால் உயிர் பெற்றான். அன்று முதல் தன்னை வழிபடுவோருக்கு மாங்கல்யக் காப்புத் தந்தருளுவதாக அருளினாள் என்பது வரலாறு திருமணத் தடை ஏற்படுபவர்கள் இங்குவந்து அம்பாளை அர்ச்சித்து வழிபடுகிறார்கள். இவ்வரலாற்றை நினைவுகூரும் வகையில்
“பிராணன் தந்த பிராணவரதேஸ்வரர் மாங்கல்யம் தந்த மங்களாம்பிகை” என்ற மொழி மக்கள் வழக்கில் இருந்து வருகின்றன.
96

இக்கோயில் ஐந்து நிலை ராஜகோபுரத்தை உடையது. வெளிச் சுற்றில் விநாயகர் சந்நிதி உள்ளது. முன் மண்டபத்தில் நந்தி, பலிபீடம், தெற்கு நோக்கிய அம்பாள் சந்நிதி அமைந்துள்ளன. உள் சுற்றில் பதினொரு சிவலிங்கங்கள் வரிசையாக உள்ளன. அத்துடன் விநாயகர், ஆறுமுகர், கஜலக்ஷசுமி, வைரவர் சந்நிதிகளும் நடராச சபையும் உள்ளன. இக் கோயில் இரு நடராஜ மூர்த்தங்கள் உள்ளன. ஒன்று ஆணித் திருமஞ்சனத்திலும் மற்றையது ஆருத்திராவிலும் உலா வரும்.
மூலவர் நீண்டுயர்ந்த பாணம். கோட்ட மூர்த்திகளாக தகூதினா மூர்த்தி, ரிஷபாரூடர், பிரம்மா, துர்க்கை ஆகிய திருவுருவங்கள் இடம் பெற்றுள்ளன. உற்சவ மூர்த்திகளில் சந்திரசேகரர், மயில் வாகனர், நால்வர், பிரதோஷ நாயகர்
ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.
உடலில் வியாதி உள்ளவர்கள் இங்கு வந்து காத்திதிகை முதல் ஞாயிறு தொடங்கி 11 ஞாயிற்றுக் கிழமைகளில் இங்குள்ள வெள்ளெருக்கம் இலையிலே தயிர் சாதம் சுவாமிக்கு நிவேதனம் செய்து சாப்பிட்டு வந்தால் வியாதியில் இருந்து நீங்கப் பெறுவர் என்ற நம்பிக்கையில் பலர் அவ்வாறு செய்து வருவதை அறியக் கூடியதாக உள்ளது.
"சீரினார் மணியும் அகில் சந்தும் செற்றவரை வாரிநீர் வருபொன்னி வடமங்கலக் குடி’
என்று சம்பந்தர் பெருமானும்,
“செல்வ மல்கு திருமங்கலக் குடி செல்வ மல்குசிவ நியமத்தராய்”
என்று அப்பர் பெருமானும் இத் தலத்தில் எழுந்தருளியிருக்கும் இறைவனைப் பாடியுள்ளார். (நி.நி.)
திருமங்கையாழ்வார்
வைணவ சமயம் விஷ்ணுவை முழுமுதலாகக் கொண்டது. விஷ்ணுவில் ஆழ்ந்து போனவர்கள் ஆழ்வார்கள். ஆழ்வார்கள் ஆற்றிய தொண்டினால் வைணவம் மீண்டும் தழைத்தோங்கி உயர்வு பெற்றது எனலாம். முதல் மூன்று ஆழ்வார்கள் சங்கமருவிய காலத்தில் தோன்றி வைணவ வளர்ச்சி எனும் வித்தை இட்டு வைத்தனர். அடுத்து வந்த பல்லவர் காலத்தில் தோற்றம் பெற்ற ஒன்பது ஆழ்வார்களும் வைணவ வளர்ச்சிக்கு பெரும்பணி ஆற்றியுள்ளனர். இந்த வகையில் திருமங்கை யாழ்வார் பிற்பட்ட காலத்தவர் ஆவார்.
திருமங்கையாழ்வார் சோழவள நாட்டில் குறையலூரில் உள்ள கள்ளர் மரபில் பிறந்தவர். இம்மரபில் நளவருடம் கார்த்திகை மாதம், கார்த்திகை நட்சத்திரத்தில் ஆலிநாடர், வல்லித்திரு ஆகிய
இந்துக்கலைக்களஞ்சியம்

Page 127
இருவருக்கும் பிறந்தார். இவருக்கு பெற்றோர் இட்ட பெயர் நீலன், நீலன் சிறுவயதிலேயே பொதுக்கலைகளும் போர்க்கலைகளும் பெற்று சிறந்த வீரனாகத் திகழ்ந்தார். இவரின் திறமையைக் கண்ட சோழ மன்னன் திருவாலியின் குறுமன்னனாக ஆக்கினான். ஆலிநாட்டின் அரசனாகவும் சோழமன்னனின் சேனாதிபதியாகவும் சிறப்புடன் விளங்கினார். குமுதவல்லியார் எனும் பெண்ணைத் திருமணம் செய்தார். குமுத வல்லியின் விருப்பத்திற்கேற்ப புயங்களில் சங்கு சக்கரம் பொறித்தார். இறைவனது பன்னிரு திருநாமங்களை ஒதி, மேனியில் பன்னிரண்டு இடங்களில் திருமண் காப்பு அணிந்து தாசன் என்னும் திருநாமம் ஏற்றார்.
இவர் திருமங்கை என்னும் பதியில் அவதரித்தமையால் திருமங்கையாழ்வார் எனப் பெயர் பெற்றார். பகைவர்களுக்கு காலனாக இருந்தமையால் பரகாலன் எனும் சிறப்புப் பட்டமும் பெற்றார். இவற்றைவிட நீலன், கலியன், கலிகன்றி, ஆலிநாடன், குறையற்கோன் முதலிய பல பெயர் கொண்டும் அழைக்கப்பட்டார். இவரது காலம் பற்றி நோக்கும்போது இவர் தனது பல பாடல்களில் “பல்லவன் பணிந்த பரமேஸ்வர விண்ணகரம்” என்று பல பாடல்களில் குறித்துள்ளார். அத்துடன் "நந்தி பணி செய்த நகர்’ என்றும் பாடியுள்ளார். பரமேஸ்வரன் என்றும் நந்தி வர்மன் என்றும் இரு பெயர்களைக் கொண்டவன் பல்லவ மன்னனேயாவன். இவனே காஞ்சியில் பரமேஸ்வர விண்ணகரத்தை அமைத்தவன். எனவே திருமங்கையாழ்வாரும் இம் மன்னன் காலமாகிய கி.பி 731-795 காலத்தவராக இருக்கலாம் எனக் கருதமுடிகிறது.
திருமங்கையாழ்வார் அடியாருக்கு நாளும் அறுசுவை அன்னம் அளித்தார். இதனால் தன் செல்வம் அனைத்தையும் இழந்தார். அரசுக்குரிய கடமைகளை மறந்து இறை பணியில் நின்றார். இதனால் அரசன் அவரைச் சிறைப்பிடிக்க கட்டளையிட்டான். சிறைப்பிடிக்கப்பட்ட ஆழ்வார். உபவாசம் செய்து இறைவனை வேண்டினார். இறைவன் கனவிலே தோன்றி அருள் கொடுத்தார். இதன் மூலம் பணம் பெற்று அரசனுக்குச் செலுத்தி விட்டு மிகுதியை அன்னதானத்திற்குப் பயன்படுத்தினார். கையில் பணம் இல்லாத போது திருமால் அடியவருக்கு அமுது செய்விப்பதற்காக வழிப்பறியில் ஈடுபட்டார். ஒரு நாள் இறைவனே மணவாளனாக பத்தினியோடு தோன்றினார். ஆழ்வாரும் வழிப்பறியில் ஈடுபட்டு அவர்களிடம் இருந்த பொருட்கள் அனைத்தையும் கவர்ந்து கட்டிக்கொண்டு தூக்கப் பார்த்த போது தூக்க முடியவில்லை. அப்போது பெருமான் இவரை நெருங்கி வலத்திருச் செவியில் அஷ்டாட்சர மந்திரத்தை உபதேசித்தருளினார்.
உபதேசம் பெற்ற ஆழ்வார் “பெற்ற தாயினும் ஆயின செய்யும் நலம் தரும் சொல்லை நான் கண்டு கொண்டேன்’
என்று வாயாரப் பாடினார். இறைவன் தனது திவ்விய மங்கள
இந்துக் கலைக்களஞ்சியம்

விக்கிரகத்தை பிராட்டியோடு காட்டியருளினார். இதனை தன் ஞானக் கண்ணால் அனுபவித்த திருமங்கை மன்னன் ஆனந்தம் உள்ளடங்காமல் திருமொழி பெருவள்ளமாக பெருகியது. இவரால் ஆறு திவ்விய பிரபந்தங்கள் அருளப்பட்டன. அவை பெரிய திருமொழி, திருக்குறுந்தாண்டகம், திருநெடுந்தாண்டகம், திருவெழுகூற்றிருக்கை, சிறிய திருமடல், பெரிய திருமடல் என்பவையாகும். இவற்றை ஆசு, மதுரம், சித்திரம், வித்தாரம் எனும் நாற்கவிகளால் அருளிச் செய்தார்.
திருமங்கையாழ்வார் சிறந்த தமிழ்க் கவிகளில் ஒருவர். இவருடைய பாடல்களில் நாராயண மந்திரத்தின் சிறப்பு, பெருமாளது கல்யாண குணங்கள், திருமாலின் அவதாரச் சிறப்புக்கள், புராண சம்பவங்கள், ஆலயங்களின் சிறப்புக்கள் போன்றவற்றைப் பாடியுள்ளார். இவரால் பாடப்பெற்ற திருத்தலங்களாக, திருப்பரிதி, திருவதரி, திருச்சாலிக்கிராமம், நைமிசாரணியம், சிங்கவேள் குன்றம், திருவேங்கடம், திரு எ வ் வுளூர் , திரு வ ல் லிக் கே னி, திரு நீர் மலை , திருக்கடல்மல்லை, திருவிடவெந்தை, திருவட்டபுயகரம், திருப்பரமேச்சுர விண்ணகரம், திருக்கோவலூர், திருவயிந்திய புரம், தில்லைத் திருச்சித்திரகூடம், திருக்காழிச்சீராம விண்ணகரம், திருவாலி, திருநாங்கூர், திருவிந்தளூர், திருவெள்ளியங்குடி, திருப்புள்ளம், பூதங்குடி, திருக்கூடலூர், திருவெள்ளறை, திருவரங்கம், திருப்பேர்நகர், திருநந்திபுர விண்ணகரம், திருவிண்ணகர், திருநறையூர், திருச்சேறை, திருவழுந்தூர், சிறுபுலியூர்ச்சல், சயனம், திருக்கண்ணமங்கை, திருக்கண்ணபுரம், திருக்கண்ணங்குடி, திருநாகை, திருப்புல்லாணி, திருக்குறுங்குடி, திருமாலிருஞ்சோலை, திருக்கோட்டியூர் என்பன விளங்குகின்றன.
ஆறுபிரபந்தங்களை அருளிய திருமங்கையாழ்வார். தலயாத்திரைகளையும் மேற்கொண்டார். இதன் மூலம் வைணவ வளர்ச்சிக்குப் பணியாற்றியுள்ளார். அத்துடன் இறைத் திருப்பணிகளையும் நிறைவாகச் செய்துள்ளார். திருவரங் கத்திற்கு விமானம், மண்டபம், திருத்தளிகை, கோபுரம், திருமதில் ஆகியவற்றை அமைக்க விரும்பினார். இப்பணிக்கான நிதி திரட்டுவதற்காக அமைச்சர்களின் ஆலோசனைப்படி நாகப்பட்டினத்திலுள்ள பொன்னால் செய்த புத்தர் சிலை ஒன்றை கவர்ந்து கொண்டு வந்து விற்றுத் திருப்பணி செய்தார். இவ்வாறாக பல திருத்தலங்களுக்குச் சென்று பெருமாளைச் சேவித்து அருள்மொழிப் பாசுரங்களைப் பாடி மக்கள் உயர்வு பெற வழிகாட்டினார். (நி.நி.)
O O திருமஞ்சனம்
இந்துக்களால் இறைவனுக்கு ஆற்றப்படும் பதினாறு வகை உபசாரங்களில் முதன்மையானது திருமஞ்சனம், திருமஞ்சனம் என்பது அபிடேகம், தூய்மையான நீரை எடுத்து வந்து மந்திரம் சொல்லி வழிபாட்டிற்கான விக்கிரகத்தை நீராட்டுதல்
97

Page 128
திருமஞ்சனம் ஆகும். தினமும் ஆலய நிலையில் அபிசேகம், ஆராதனை நைவேத்தியம் என்பன நடைபெறும். தினமும் நடைபெறும் அபிசேகம், திருமஞ்சனம். விசேடமான தினங்களில் விசேட அபிசேகங்கள் நடைபெறும். திருவருள் ஞானத்தை நீராகப் பாவித்து அசுத்தத்தைச் சுத்தி செய்தலே அபிஷேகம். ஆலயத்தில் உள்ள புனித கிணற்றிலிருந்து அல்லது புனித தீர்த்தத்தில் இருந்து குடங்களில் நீர் எடுத்து இறைவன் திருவுருவிற்கு திருமஞ்சனம் செய்யப்படுகிறது. விசேட தினங்களில் இத்திருமஞ்சனம் பல்வேறு பட்ட திரவியங்களாற் செய்யப்படுகிறது.
விசேடமாக ஆற்றப்படும் திருமஞ்சனத்தில் பல்வேறு பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன. அப்பொருட்களுக்கு ஏற்ப பயன்களும் கிடைக்கின்றன. நீர் அபிஷேகத்தால் சாந்தி உண்டாகும். திருமஞ்சன நீரில் வாசனைப் பொருட்களும் மலர்களும் இட்டு அபிஷேகம் செய்தால் மலநிவாரணம் உண்டாகும். வாசனைத் திரவிய அபிஷேகத்தால் ஆயுள் வலிமையும், சந்தன அபிஷேகத்தால் செல்வமும் உண்டாகும். பால் அபிஷேகத்தால் ஆயுள் விருத்தியும் தயிரினால் மக்கள் விருத்தியும் நெய்யினால் மோட்சமும் உண்டாகும். தேன் அபிஷேகத்தால் சங்கீத வன்மையும் கருபஞ்சாற்றினால் நித்திய சுகமும் சர்க்கரை அபிஷேகத்தால் பகை அழிதலும், வாழைப்பழத்தினால் பயிர்விருத்தி, பலாப்பழத்தினால் உலக வசியம், இரசபஞ்சாமிர்த அபிஷேகத்தால் செல்வமும் உண்டாகின்றன. பஞ்சகெளவியத்தினால் ஆன்மசுத்தியும் இளநீரால் சற்புத்திரப்பேறும் எலுமிச்சம் பழத்தினால் மருத்துவ நிவாரணமும் கிடைக்கின்றன.
இவற்றைவிட நல்லெண்ணை, மாம்பழம், மாதுளம்பழம், நாரத்தம்பழம், தேங்காய்த்துருவல், கோரோசனை, பச்சைக் கற்பூரம், கஸ்தூரி மஞ்சள், பன்னீர், சந்தனக்குழம்பு, அன்னம், மாக்காப்பு, நெல்லிக் காப்பு, மலர் முதலிய பல பொருட்களினால் அபிஷேகம் செய்யப்படுகின்றன. இப் பொருட்களினால் எந்ததெய்வத்திற்கு அபிஷேகம் செய்தாலும் பலன் ஒன்றே. எனினும் சிவனுக்கும் முருகனுக்கும் மட்டுமே விபூதி அபிஷேகம் செய்தல் வேண்டும். என்றும் பூவும் நீருமே அபிஷேகத்திற்கு முதன்மையானவை.
இறைவனுக்கு பூவும் நீரும் கொண்டு திருமஞ்சனம் செய்வித்து முத்தியடைந்ததை புராணங்களும் இலக்கியங்களும் கூறுகின்றன. மார்க்கண்டேயர் தன்னை அழிக்க வந்த யமனிடம் இருந்து விடுபட சிவபூசை செய்தார். மகனின் இறப்பு நெருங்கி விட்டதை அறிந்த தாய்தந்தையர் அழுதபோது மார்க்கண்டேயர் தாய் தந்தையரை நோக்கி “நீவிர் வருந்தற்க, வரம் தந்த வள்ளல் சிவபெருமான் இருக்கின்றார், அவரைத் திருமஞ்சனம் செய்ய நீர் இருக்கின்றது அர்ச்சனை செய்ய மலர் இருக்கின்றது” எனக்
98

கூறி சிவலிங்கமூர்த்தியை தினமும் நீராட்டி மலர் சூட்டி திருவைந்தெழுந்தை ஒதினார். இதனால் யமன் உதைபட என்றும் பதினாறு வயதினராக வாழ்ந்தார். இவர் பூவினாலும் நீரினாலும் செய்த திருமஞ்சனமே இவர் உயிரைக் காத்தது. திருமூலர் திருமந்திரத்தில் பின்வருமாறு கூறுவார்.
"புண்ணியஞ் செய்வார்க்குப் பூவுண்டு நீருண்டு அண்ணல் அதுகண் டருள்புரி யாநிற்கும் எண்ணிலி பாவிகள் எம்மிறை ஈசனை
நண்ணறி யாமல் நழுவுகின்றாரே”
ஒரு குடத்தில் தண்ணிரை மொண்டு இலிங்கத் திருமேனி மேல் வார்த்து அன்புடன் பூ இட்டுப் பூசித்தவர் இப்பரந்த உலகை ஆண்டு சிவபதஞ் சேர்ந்து பேரின்பம் உறுவர் எனக் கூறுகின்றார்.
"ஒரு குடங்கையிற் சலங்கொண்டு மறுகுவில்வ மொன்றினால்
G6
திருகுசிந்தை யின்றிலிங்க பூசை செய்த சீலர் .
என சிவலிங்க மூர்த்தியை நீரினாலும் அறுகு வில்வத்தினாலும் பூஜித்தவர் இம்மையில் இன்பத்தையும் மறுபிறப்பில்லா மறுமையையும் அடைவார்கள் என்கிறது சிவரகசியம். உமையம்மையார் கச்சியம்பதியில் தனி மாமரத்தின் கீழ் பூவும் நீரும் கொண்டு சிவனை வழிபட்டு இடப்பாகம் பெற்றார். பூவும் நீரும் கொண்டு சிவனை திருமஞ்சனம் செய்து திருமால் சக்கரமும், இராமர் சகல நலமும், கண்ணபிரான் சந்ததியும் பெற்றார்கள். இவ்வாறாக முனிவரும், தேவரும், சித்தரும், முத்தரும், பக்தரும் சிவனை பூவும் நீரும் கொண்டு வழிபட்டு சகல வரமும் பெற்றனர் என அறிய முடிகின்றது.
திருநாவுக்கரசரும் “போதொடு நீர் சுமந்தேத்திப் புகுவார் அவர்பின் புகுவேன்.” எனவும், “சலம்பூவொடு தூபம் மறந்தறியேன்” எனவும் பாடியுள்ளார். இவ்வாறாக இறைவனுக்கு முக்கியமான பூசைப் பொருள் நீர் என்பதை அறிமுடிகிறது. திருமஞ்சனம் நடைபெற்றே வேறு எந்தக் கிரியையும் இடம்பெறும். இதன் அடிப்படையில்தான் ஆலயங்களில் தீர்த்தங்கள் முக்கியத்துவம் பெறுகின்றன. இப் புனித தீர்த்த நீரினிலே வில்வம், துளசி, மூலிகைகள் கலந்து திருமஞ்சனம் ஆற்றப்படுகின்றன. இவ்வாறு மூலிகைகள் கலந்து அபிசேகம் செய்யப்படுகின்ற நீர் தீர்த்தமாக வழங்கப்படும் போது அது நோய் தீர்க்கும் மருந்தாகப் பயன்படுகின்றது. சில ஆலயங்களில் விக்கிரகங்களே மூலிகைகளினால் செய்யப்பட்டிருக்கும். அதன் மீது திருமஞ்சனம் செய்யப்படும் நீர் மிகவும் மருத்துவ குணம் மிக்கதாக இருக்கும். இவ்வாறாக ஆலயங்களில் திருமஞ்சனம்
முதன்மையானதும் முக்கியமானதுமாக விளங்குகின்றது
(க. ஹே.)
இந்துக்கலைக்களஞ்சியம்

Page 129
திருமண்
“விறகுக்கட்டையை அக்கினியானது பஸ்பமாக்குவது போல ஞானம் என்கின்ற அக்கினி எல்லாக் கருமங்களையும் பஸ்பமாக்குகிறது” என்று பகவத் கீதையில் கிருஷ்ணன் அருச்சுனனுக்கு உபதேசிக்கின்றார். பஸ்பமாக்கிய விபூதி திருமண் என்பவை ஞானத்துக்கு அடையாளமாக விளங்குகின்றன. பாரத நாட்டில் ஆஸ்திகர் இட்டுக் கொள்ள வேண்டிய 'திலகம்' எனப்படும் நெற்றிக்குறிகளைப் பற்றி உபநிடதங்களும் புராணங்களும் ஆகமங்களும் பேசுகின்றன. இவை அமைப்பினால் இருவகைப்படும். நெற்றியில் கீழிருந்து மேல் நோக்கி இடப்படுவது "ஊர்த்தவபுண்டரம்" எனப்படும். உயர நோக்கி இடம்பெறும் நெற்றிக்குறி என்று இதற்குப் பொருள். நெற்றியின் குறுக்கே இடம் பெறுவது “திரியக்குப் புண்டரம்" குறுக்கே இடம்பெறும் நெற்றிக்குறி என இதற்குப் பொருள். விஸ்ணு பக்தர்கள் ஊர்த்தவபுண்டரத்தையும். சிவபக்தர்கள் திரியக்குப் புண்டரத்தையும் பின்பற்றுவார்கள்.
நெற்றியில் இட்டுக்கொள்ளப் பயன்படும் பொருட்கள். வீயூதி, திருமண், பூநீசூரணம், சந்தனம், குங்குமம் என்பவை யாகும். ஆழ்வார்களையும் இராமனுஜர் முதலிய ஆசாரியர் களையும் பின்பற்றி நிற்கும் பூரீ வைணவர்கள் திருமண்ணையும் பூரீ சூரணத்தையும் அணிகிறார்கள். இத் திருமண், மேல் கோட்டைத் திருநாராயணபுரம் முதலிய புண்ணிய தலங்களில் கிடைக்கும் வெள்ளை மண்ணே ஆகும். இதை நாமக்கட்டிகளாகச் செய்கின்றனர். திருமண் இட்டுக் கொள்வதே திருமண் காப்பு என அழைக்கப்படுகிறது. துளசிச் செடியின் அடியில் இருந்து எடுக்கப்படும் மண்ணும் திருமண் காப்பிற்குப் பயன்படுகிறது. மண்ணில் பிறந்த நாம் மண்ணில் தான் முடியப் போகிறோம் என்பதை நினைவூட்டுகிறது திருமண் காப்பு.
திருமண் அணிவதை திருமண் காப்பு, நாமம் போடுதல், பூரீ சூரணம் செய்தல் என பலவகையாகக் கூறப்படுகிறது. மகாவிஷ்ணுவின் நாமங்களைக் கேசவ, நாராயண, மாதவ, கோவிந்த, விஷ்ணு, மதுசூதன, திரிவிக்ரம், வாமன, பூரீதர ஹ்ருஷிகேச, பத்மநாப, தாமோதர எனும் பன்னிரண்டு துவாதச
இந்துக் கலைக்களஞ்சியம்
 

நாமங்களையும் சொல்லி நெற்றி, மார்பு, வயிறு, புஜம், மணிக்கட்டு முதலிய 12 இடங்களில் திருமண் காப்பு செய்யப்பட வேண்டும். இறைவனின் பன்னிரண்டு நாமங்களையும் நினைவு படுத்துவதால் திருமண் காப்பு "துவாதசநாமம்’ போடுதல் என அழைக்கப்படுகிறது. ஒம் நமோ நாராயண எனும் மந்திரத்தை உச்சரித்து திருமண், பூரீசூரணம் அணிய வேண்டும்.
திருமண் அணிவது பரமாத்மஸ்வரூபத்தின் உண்மையையும் உலகில் உள்ள பொருட்களின் அநித்தியத்தையும் நினைவூட்டு கிறது. திருமாலின் திருவடிகளைத் தாங்கி நிற்பதே திருமண் காப்பின் தத்துவம். அத்துடன் பரந்தாமனின் பாதாரவிந்தமே உயிர்களுக்கு கதி என்பதை உணர்த்தும் பொருட்டு திருவடி போன்று இடப்படுகிறது. இரண்டு திருவடிகளின் அமைப்பில் திருமண் இடப்பட்டு அதன் நடுவில் பூரீதேவியையும் குறிக்கும் சிவந்த நிறமுடைய பூரீ சூரணம் வைணவர்களால் அணியப்படுகிறது. இது செந்தூரம் எனப்படும். இலக்குமியின் அம்சமாகும். பூரீரங்கத்தில் ம்ருத ஸங்க்ரஹணம் செய்யும் போது வில்வ விருட்ச மண்ணை எடுக்கிறார்கள். வில்வமும் லசுஷ்மி வசிக்கும் இடமாகும்.
வைஷ்ணவர்கள் அனைவரும் தவறாது திருமண் காப்பு அணிய வேண்டும். இதனை சிறந்த ஞானமும், ஒழுக்கமும் உடைய வைஷ்ணவர்களே அணிய வேண்டும் என வைணவ சாத்திரங்கள் கூறுகின்றன. ஐநூறு வருடங்களுக்கு முன் பூர்வாச்சாரியார் காலம் வரை வேற்றுமையில்லாது திருமண் காப்பு அணியப்பட்டு வந்தது. பிற்காலத்திலே சமஸ்கிருத வேத சாஸ்திரங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வடகலை வைஷ்ணவத்தில் பாதம் வைக்காது திருமண் காப்பிடுவார்கள். ஆழ்வார் பாடல்களுக்கு ஏற்றம் கொடுக்கும் தென்கலை வைணவத்தினர் திருமண் காப்பினை பாதம் வைத்து அணிவார்கள். எவ்வாறாயினும் சைவர்களைக் குறிப்பது வீயூதி போல வைணவர்களை நினைவூட்டுவது திருமண்ணாக விளங்குகிறது.
மேலும் திருமண்ணாவது புனிதமண், மலையின் உச்சி, நதிக்கரை, புண்ணிய பூமி, சமுத்திர தீரம், புற்றுக்கள், துளசிச் செடியின் அடியில் உள்ளமண், யானையடி மண் போன்றவையாகும் என பிரமாண்ட புராணம் கூறுகின்றது. கறுத்த மண் அனிஷ்டங்கள் (துன்பங்கள்) ஒழிக்கும். செம்மண் வசியத்தைத் தரும். பச்சைமண் செல்வத்தைத் தரும். வெள்ளை மண்ணை வைஷ்ணவர்கள் திருநாமம் இட்டுக் கொள்வதற்குப் பயன்படுத்துவர். பெருவிரலால் தரிக்கின் ஆரோக்கியத்தைத் தரும். நடுவிரல் ஆயுளைத்தரும், பவித்திரவிரல் விரும்பிய உணவைத் தரும். சுட்டுவிரல் முக்தியைத் தரும். நகத்தால் தரிக்கக் கூடாது.
திருமண் தரிக்குமிடத்துத் தீச்சுவாலையைப் போலவும் மூங்கிலைப் போலவும், அரும்பு போலவும், இதழ் போலவும்,
99

Page 130
மீனைப் போலவும், ஆமையைப் போலவும் தரிப்பது சிறப்பு. பத்து அங்குல நீளமுள்ள ஊர்த்துவ புண்டரம் உத்தமம். ஒன்பது அங்குலம் மத்திமம் - மற்றையவை அதமமாம்.
பரந்தாமனின் பாதாரவிந்தமே உயிர்க்கும் கதி என்பதை உணர்த்தும் பொருட்டு திருவடி போன்று இடப்படுகின்றது.
(க.ஹே.)
திருமணம்
திருமணம் என்பது இருவரின் உள்ளங்கள் இணைந்து இல்லவாழ்வினை ஆற்ற இணையும் போது செய்யப்படும் சடங்கு நம்மால் மீளமுடியாத தெய்வத்தின் மணம் அங்கே வீசுவதால் திருமணம் (தெய்வீக மணம்) எனப்படுகிறது. இதனை வடமொழியில் கல்யாணம் என்பர். இந்துக்கள் புரோகிதர் முன் அக்கினி சாட்சியாக வேதமொழியான சமஸ்கிருதத்தில் புரோகிதர் வேதமந்திரங்கள் ஒத திருமணம் செய்வர். இஸ்லாமியர் திருமணத்தில் மெளலவி தமது வேதமொழியான அரபு மொழியால் வாழ்த்தி மணமக்களைச் சேர்த்து வைப்பர். கிறிஸ்தவர்கள் தமது தேவாலயத்தில் மதகுருவான பாதிரியார் ஆசி கூற திருமணம் செய்வர். ஆங்கிலேயர் ஆட்சிக்கு முன் மதச் சடங்குகளே முக்கியத்துவம் பெற்றன. ஆனால் அதன் பின் சட்டப்படி திருமணம் நடைபெறுவதே முக்கியத்துவமுடைய தாயிற்று. திருமணபந்தத்தில் இணைவதற்கும் விலகுவதற்கும் அவரவர்கள் மதத்திற்கேற்ப சிறு சிறு வித்தியாசங்களைக் கொண்டு சட்டம் விளங்கினாலும் அது பொதுத்தன்மையுடையது என்றே கூறமுடிகின்றது. கலப்புத் திருமணம், பலதாரமணம் இவற்றுக்கு சட்டம் இடம் கொடுத்தாலும் பால்ய விவாகத்துக்கு சட்டம் இடம் கொடுக்க மாட்டாது.
ஆதிக்குடிகளின் திருமணமுறையினை நோக்குமிடத்து இரத்த சம்பந்தமுள்ள உறவினர்கள் பேதாபேதமில்லாமல் கூடிப் புணர்ந்து வம்சவிருத்தி செய்ததனையே காணமுடிகின்றது. இவர்கள் ஒன்றாகவே வாழ்ந்தனர் கூட்டாக வாழ்ந்த இவர்கள் கூட்டாகவே தமது காரியங்களை நிறைவேற்றியுள்ளனர். அண்ணன் தங்கை, அப்பா பிள்ளை, என்ற எந்த வேறு பாடும் இவர்கள் உறவிற் காணப்படவில்லை. யாரும் யாருடனும் புணர்ந்து வம்சவிருத்தி செய்யலாம் என்பது இவர்கள் கருத்து எனலாம்.
1. சங்கல்பம் - கிருதயுகம் 2. சமஸ்பரிசு - திரேதாயுகம் 3. மைதுனம் - துவாபரயுக்ம 4. துவந்தம் - கலியுகம்
இவ்வாறு நான்குவிதமான திருமண முறையைக் காணலாம்.
(1) பரிபூரண கலப்பு உறவுகளாகும். தனிநபர் தடையோ
100

சமூகத்தடையோ இல்லாத வகையில் இஷ்டப்பட்டவர்கள் கூடிப் புணரும் உறவாகும். (2) ஒரே கோத்திரத்தைச் சேர்ந்தவர்கள் திருமணம் செய்வதற்கு தடை ஏற்பட்டபொழுது கோத்திரங்களின் தொகுதிவழியில் வெவ்வேறு கோத்திரத்திலே திருமணம் புரிந்து கொள்ளுதல் (3) இயற்கைத் திருமணத்தின் கடைசிக்கட்டம் ஒரு பெண்ணும் ஒரு ஆணும் விருப்பம் உள்ளவரை மற்றவர்களை விலக்கிவிட்டு தமக்குள்ளே உறவு கொண்டு ஜதையாக வாழ்ந்தனர். இவ்வாறு இஷ்டம் உள்ள வரையில் ஜோடியாக வாழ்வது மைதுனம் எனப்படும் (4) ஒருதார விவாகத்தால் ஏற்படும் ஜோடி இதில் பெண் ஆணுக்கு அடிமை. ஆணுக்கு சொத்துரிமை அதிகாரம் உண்டு. இது துவந்துவம் எனப்படும்.
விவிஸ்த பிரஜாபதியின் பெண் ஷடரூபா வயது வந்தவுடன் தந்தையின் மனைவியாகின்றாள். மனு தன் மகளான இனாவைத் திருமணம் செய்து கொண்டான் என ஹரிவம்சம் கூறுகிறது. பீஷ்மனுடைய சகோதரன் மகப்பேறு இல்லாமல் இறந்தபின் அவனுடைய மனைவி வேற்று மனிதர்களுடன் கட்டாயமாகக் கூடி சொத்தையும் ராஜ்யத்தையும் உரிமையாகப் பெறக்கூடிய குழந்தைகளை ஈன்றெடுக்க வேண்டுமென்று அவனுடைய தாயார் விரும்புகிறாள். திரெளபதை பஞ்சபாண்டவர்களுக்கு மனைவியாகின்றாள். இங்கு திருமணம் என்பது வெவ்வேறு விதத்தில் ஒழுங்கற்ற ஒரு நிலையிலே காணப்படுகின்றது.
கோத்திர திருமணம் நடந்த காலத்திலே குறுகிய காலத்துக்கோ அல்லது கூடிய காலத்துக்கோ ஒரளவு நிலையான ஜோடியாக ஒரு ஆணும் ஒரு பெண்ணும் கூடி வாழும் முறையும் இருந்தது. ஒருவன் பல பெண்களுடன் தொடர்பு கொண்டிருந்த போதிலும் ஒருத்தியை பிரதான மனைவியாகக் கொண்டிருந்தான். அவளும் பல புருஷர்களுடன் பழகினாலும் ஒருத்தனை பிரதான புருஷனாகக் கொண்டிருந்தாள். இந்த வழக்கும் நாளடைவில் அதிகரித்தது. கண கோத்திரம் பெருகியது. இந்த உறவுமுறைகளில் உள்ளவர்களை மணந்து கொள்ளக் கூடாதென்ற தடைகள் பெருகத் தொடங்கிய பின் கோஷ்டித் திருமணத்திற்கு பதிலாக ஜோடித்திருமணம் வளரத் தொடங் கியது. இவ்வாறான திருமண முறையினையே ஆரியரிடம் காணக்கூடியாயிருந்தது.
தமிழ் இலக்கியங்களுடாக நோக்கும்போது ஒருவனுக்கு ஒருத்தி என்ற கோட்பாட்டினையும் திருமண முறையினையும் காணமுடிகின்றது.
“பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர் ஐயர் யாத்தனர் கரணம் என்ப"
என்கிறது தொல் காப்பியம். பிராமணகுரு தான் திருமணத்தை நடத்தும் குருவாக விளங்கினார் என்பதனை அறிய முடிகின்றது.
இந்துக் கலைக்களஞ்சியம்

Page 131
காரணம் - சடங்கு, பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர் திருமணத்தை முறைப்படுத்த நினைத்த தமிழ்ச்சான்றோர் இவ்வாறு ஒரு சடங்கினை முறைப்படுத்தினர் என அறியமுடிகின்றது. கபிலர்,
"தந்தை தோழன் இவர் என் மகளிர் அந்தணன் புலவன் கொண்டு வந்தனனே'
என்று கூறி 'யான்தர இவளைக் கொண்மதி” என்று கேட்டதாக புறநானூறு குறித்து நிற்கின்றது. மரபுநெறியில் பாரி மகளிர்க்கு மணம் புரிவிக்க முற்பட்டமையைக் காணலாம். பதிற்றுப்பத்து பதிகங்களில் சேர மன்னன் வேளிர் மகளிரை மணந்த செய்திகளை அறிய முடிகின்றது. சேரன் சோழர்குலப் பெண்ணை மணந்தான். ஒரு நாட்டரசர் மற்றைய நாட்டரசிகளை மணமுடித்துள்ளனர். போர் புரிந்து பெற்ற பெண்களை மணமுடித்த வரலாறும் உண்டு. சிலப்பதிகாரத்திலே கண்ணகி - கோவலன் திருமணம் கூறப்படுகின்றது.
"மாமுது பார்ப்பான் மறைவழி காட்டிடத்
99. தீவலம் செய்வது காண்பார்கள் நோன்புஎன்னை
திருமணச் சடங்கில் அருந்ததி காட்டியதாக தொடர்ந்து வர்ணிக்கிறார் இலிங்கோ. திருமணத்தில் அலங்காரங்களும் நடைபெற்றன. மணல் பரப்பிய இடத்தில் பெரிய பந்தல் அமைத்து மனைவிளக்கு நிறுத்தி பூமாலைகள் தொங்க உழுந்தம் பருப்புடன் கூட்டுச் சமைத்து விருந்தினர்க்களித்தனர் என இந்த இலக்கியங்கள் கூறுகின்றன. மணமகனும் மணமகளும் கைத்தலம் பற்றும் ஒரு திருமண முறையும் இருந்துள்ளது.
'மத்தளம் கொட்ட வரி சங்கம் நின்று ஊத முத்துடைத்தாமம் நிரை தாழ்த்த பந்தற் கீழ் மைத்துனன் நம்பி மதுசூதன் வந்து என்னைக் கைத்தலம் பற்றக் கனாக் கண்டேன் தோழி'
என்கிறது நாச்சியார் திருமொழி. திருமணச் சடங்கினை பின்வந்த இலக்கியங்களிடையே விரிவாகக் காணமுடிகின்றது.
திருமணம் (நடைமுறை) நிச்சயதாரத்துவம்
நிச்சயதாரத்துவம் முதலில் நடைபெறும். இதுவே நிச்சயதார்த்தம் என மருவியது. தாரம் - மனைவி, தாரத்துவம் - மனைவியாக்கும் தன்மையை நிச்சயப்படுத்துவது. இதனை தமிழில் திருமண உறுதி என்பர். இன்னார்க்கு இன்னார் என உறுதி செய்யப்பட்டு மணமக்களது பெற்றோர் சான்றோர் சுற்றம் கூடிய அவையில் பாக்கு வெற்றிலை பழம் இவற்றுடன் மண உறுதியையும் வைத்து சம்பந்திகள் (சம்பந்தம் செய்வோரின் பெற்றோர்) பரிமாறுவர். பின் சம்பந்திகள் ஒருவருக்கொருவர் மாலையிட்டு சந்தனம் குங்குமம் பன்னீர் என்பவற்றால் மரியாதை செய்வர். இதனை சம்பந்தக் கலப்பு எனவும் கூறுவர். பின் மனஉறுதி வாசிக்கப்பட்டு எல்லோருடைய சம்மதத்தினையும் பெற்று மணமகளுக்கு நிச்சயதார்த்த புடவை அணிகலன்களை
இந்துக் கலைக்களஞ்சியம்

மணமகன் வீட்டார் கொடுக்க அவள் அவற்றை அணிந்து அவைக்கு வந்து தன் சம்மதத்தை தோற்றத்தினால் எடுத்துக் கூறுவாள். மணமக்களும் இத்திருமணத்தை ஏற்றுக் கொண்ட பின் கடவுள் காட்சியாக மக்கள் காட்சியாக, ஐம்பூதங்கள் சாட்சியாக மணஒலை வாசிக்கப்பட்டு திருமண நாள் நிச்சயிக்கப் படும். இதுவே திருமணத்தின் ஆரம்பநிகழ்வாகும்.
நீராட்டுதல்
திருமண நாளன்று நான்கு சுமங்கலிகள் மணப் பெண்ணை நீராட்டி அலங்கரிப்பர். அவ்வாறே மணமகனையும் பால் அறுகு வைத்து நீராட்டுவர்.
மணமேடை
மஞ்சள் பிள்ளையார், மூன்று கலசங்கள், முளைப்பாலிகை நவ கோள்கள் என்பவற்றை முதலில் ஏற்பாடு செய்வர். மூன்று கலசங்களுள் ஒன்று புண்ணியாகவாசம் என்ற அருள் நீராக்கத்திற்கும் ஏனைய இரண்டு அம்மையப்பர் கலசமாக வழி பாட்டிற்கும் ஏற்பாடு செய்யப்பட வேண்டும்.
புண்ணியாகவாசம்
மணமேடையை தூய்மை செய்வது. அதன் பின்பு தான் திருமணக் காரியங்கள் நடைபெற வேண்டும்.
நவகோள் வழிபாடு
மணமக்களுடைய வாழ்வில் ஏதும் இடர் வராமல் அவர்தம் இல்லறம் மாண்புற இந்தவழிபாடு ஆற்றப்படுகிறது. பச்சைப் பாக்குகள் ஒன்பதின் மீது சந்தனம் குங்குமம் இட்டு வைக்க நவக்கிரகம் அமைந்தது போல் அதனை அமைக்க வேண்டும்.
முளைப்பாலிகை வழிபாடு
எட்டு அல்லது பன்னிரண்டு மண்பாத்திரங்களை எடுத்து மண் பரப்பி அதில் தானியங்களை இறைவழிபாட்டுடன் விதைப்பர். அவை முளைத்து பயிர் காட்டும். நன்றாக விளைந்திருக்குமானால் அது இறைவனுக்கு சம்மதம் என எடுப்பர். பின் அதனை மணமேடையில் ஒரு பக்கத்தில் வைப்பர். அதற்கு தூபதீபம் காட்டுவர். மணமக்கள் மேடைக்கு வந்ததும் கலசம் நவகோள்கள் முளைப்பாலிகை ஆகியவற்றிற்கும் புத்தாடைக்கும் மலர்களால் பூஜை செய்வர்.
அரசாணைக் கோல் வழிபாடு
இதனை அரசாணிக்கால் வழிபாடு எனக் கூறுவர். முன்பு திருமண பந்தத்திற்கு அரசப்பதிவு இல்லாததால் அரசனே மேடைக்கு வருவான். அதனால் அரசனால் அங்கீகரிக்கப்பட்ட திருமணம் ஆகின்றது. அரசன் செல்லமுடியாத விடத்து தனது ஆணைக்கோலை அனுப்பி வைப்பான். அதனால் அரச அங்கீகாரம் கிடைத்தது என ஏற்பர். பரம்பொருளின் மூன்று முக்கிய அதிகாரிகள் அயன், அரி, அரன் இவர்களை ஒரு மூங்கிலில் எழுந்தருளச் பொரம்பரியம்:சய்வர். அந்தக் கோலில் ஆவிலை அரசிலை அத்திஇலை ஆகியவற்றைக் கட்டுவர் அரி அயன் அரன் முறையே அதில் எழுந்தருளுவர்.
101

Page 132
அந்தக் கொப்பில் காப்பு நாண்கட்டி மும் மூர்த்திகளை முன்னிலைப்படுத்துவர். அதில் குங்குமம் மஞ்சள் திருநீறு பூசுவர் பின் ஐந்து சுமங்கலிப் பெண்கள் அக் கோலைப்பிடித்திருக்க ஒருவர் மாறி ஒருவர் அதன் மீது நீராலும் பாலாலும் திருமஞ்சனட் ஆட்டித் துடைத்து ஆடைசாத்தி கோலில் மகளிரைக் கொண்டு மஞ்சள் தடவச் செய்து மூன்று இடங்களில் குங்குமம் இடக் செய்வர். பின் தூய தீபம் காட்டுவர்.
மங்கல நாண் வழிபாடு
மங்கல நாணினை தேங்காயில் சுற்றி மஞ்சள் அரிசி இட்ட தட்டில் வைத்து - மங்கல நாணில் திருப்பாத உருவம் பொன்னால் செய்யப் பெற்று கோர்க்கப்பட்டிருக்கும் - அதை மேலாக வைத்து மஞ்சள் குங்குமம் இட்டு அதன் மீது மலர் தூவுதல் வேண்டும்.
அட்ட மங்கல வரவேற்பு
மணமக்கள் மேடைக்கு வரும்போது தாமரை, வலம்புரிச்
சங்கு, கண்ணாடி, விசிறி, நெல், நீர்க்குடம், காமாட்சிவிளக்கு
மங்கள வாத்தியம் என்பன எதிர்கொள்ள வேண்டும்.
விளக்கேற்றல்
மணமகள் வீட்டார் ஒருவரும் மணமகன் வீட்டார் ஒருவரும் குத்துவிளக்குகளை ஏற்ற வேண்டும்.
முன்னோர் வழிபாடு
மணமேடையில் தென்புலத்தார் வழிபாடாகிய முன்னோர் வழிபாடு நடத்துதல் வேண்டும். மணமக்கள் முன்னோர்களை நினைத்து அவர்கள் படத்திலோ அவர்களை உருவகப்படுத்தும் மஞ்சள் கூம்பிலோ படையல் இலையிலோ மலர்கள் தூவி வணங்குதல் வேண்டும். அவர்கள் அதற்கு தூபதீபம் காட்டுதல் வேண்டும். காப்பு நாண் கட்டுமுன் இதனைச் செய்தல் வேண்டும்
காப்பு நாண் கட்டுதல்
புரோகிதர் மணமக்களுக்கு எவ்வித இடையூறும் ஏற்படா
வண்ணம் காப்பதற்காக காப்புக் கட்டுவர். அதற்கும் திருநீறு
சந்தனம், குங்குமம் பூசி தீபம் காட்டுவர்.
பெற்றோர் வழிபாடு
தம்பிள்ளைகளை வாழ்த்துவதற்கு வரும் பெற்றோரை ஒரு ஆசனத்தில் உட்காரவைத்து ஒரு தாம்பாளத்தில் அவர்கள் பாதங்களை எடுத்து வைத்து பாதபூஜை செய்தல் வேண்டும் திருமணத்தால் பெற்றோரைப்பிரிபவர் யாரோ அவர் தான் முதலில் ஆற்ற வேண்டும். பாலால் காலைக் கழுவிப் பின் நீரால் கழுவி துடைத்து மஞ்சள் குங்குமம் தடவி மலர் சொரிந்து தூப தீபம் காட்டி பாதங்களைத் தொட்டு வணங்க வேண்டும்.
மணமக்கள் தீவேட்டல்
தீ வேட்டலின் நோக்கம் அம்மையப்பரை முன்னிலைப்படுத்தி அவர்கள் காட்சியாக திருமணம் செய்வதாகும். இத்தீயில் அம்மையப்பரை எழுந்தருளச் செய்தல் வேண்டும் அக்கினியே முக்கிய சாட்சியாகும்.
102

தாரைவார்த்தல்
பெற்றோர் பிள்ளைகளை தாரை வார்த்துக் கொடுத்தல். பெண்பிள்ளை திருமணத்தின் பின், வரப்போகும் கணவருக்கே முழு உரிமையும் உடையவள் என்பதனால் பெண் பிள்ளையின் பெறோர் தம் மகளை மணமகனிடம் தாரை வார்த்து கொடுப்பர். ஒரு பொருளை மற்றவர்களுக்கு கொடுக்கும் போது மீண்டும் மனம் மாறி பின்னால் அப்பொருள் என்னுடையது என்று உரிமை கோரக் கூடாது என்பதற்காக இதனைச் செய்தனர். இதனை திருமணத்தில் செய்து வருதல் மரபு.
மங்கல நாண் ஆகுதி
ஏற்கனவே வழிபாடு செய்யப்பெற்று அவையோர் ஆசீர் வாதம் பெற்று மீண்ட மங்கல நாணினை குண்டத்தின் அருகாமையில் வைத்து புரோகிதர் அதற்குரிய மந்திரங்களை ஒதி மங்கல நாணைத் தொட்டு நெல் ஆகுதி கொடுக்க அதன் பின் அம்மையப்பர் கலச தர்ப்பைக் கூர்ச்சத்தை தீயைச் சுற்றிக் காட்டி மங்கல நாணினைத் தொட்டு பதினாறு முறை செய்தல் வேண்டும்.
மணமக்கள் உறுதி
நம்முன்னே தீமுகத்தில் எழுந்தருளியுள்ள பரம் பொருளாகிய இறைவன் சாட்சியாக சான்றோர் சாட்சியாக அவையோர் சாட்சியாக பிதிர்கள் சாட்சியாக ஐம்பூதங்கள் சாட்சியாக இன்பத்திலும் துன்பத்திலும் பங்குகொண்டு இணைபிரியாது வாழ்வோம் என உறுதி கூறவேண்டும்.
மங்கல நாண் பூட்டல்
ஆசாரியார் மணமகன் கையில் மங்கல நாணை எடுத்துக் கொடுக்க மணமகள் கழுத்தில் பூட்டி மூன்று முடிச்சுப் போடுதல் வேண்டும். அப்போது மைத்துனர் மணமகனின் சகோதரி மணமகனுக்குப் பின்னால் காமாட்சி விளக்கை ஏந்தியவாறு நிற்றல் வேண்டும். மணமகன் மங்கல நாணின் பொற்பாதத்திலும் முடிச்சிலும் குங்குமம் சாத்த வேண்டும். பின் மணமகளின் நெற்றியிலும் குங்குமம் இடுதல் வேண்டும். பின் வேள்வித்தீயில் பொசுக்கிய தர்ப்பையின் கரி எச்சத்தில் நெய்யைக் குழைத்து சாந்தாக்கி அந்த வேள்விச் சாந்தை மணமகனின் நெற்றியில் இடுவர். பின் மணமகன் மணமகள் நெற்றியில் இடுவர்.
பட்டம் கட்டல்
பொன் தகட்டினால் ஆக்கி நூலால் கோர்த்து நெற்றியில் கட்டுவர். பின்பு இருவருக்கும் புரோகிதர் மஞ்சள் அரிசியைத் தூவுவர்.
தீவலம் வருதல்
மணமகளின் சுண்டுவிரலோடு மணமகன் சுண்டு விரலைக் கோத்து மணமகன் முன்னே செல்ல மணமகள் பின்னே செல்வர். மூன்று முறை இவ்வாறு தீவலம் வருதல் வேண்டும். அவர்களுக்கு முன் காமாட்சி விளக்கை ஏந்தியபடி ஒரு பெண் செல்லுதல் வேண்டும். பின்னே முளைப்பாலிகைகளைச் சிறுமிகள் ஏந்திவர வேண்டும். இதோ இந்த இல்லறம் இறைவன் திருவுளச் சம்மதத்துடன் முளைவிட்டிருக்கிறது. இது மேன் மேலும்
இந்துக் கலைக்களஞ்சியம்

Page 133
வளர்வதாகுக என்று காட்டுவன போல முளைப்பாலிகை மணமக்களின் பின் வரும்.
அம்மி மிதித்தல்
உலோகங்கள் எல்லாவற்றையும் வளைக்கலாம் ஆனால் கல்லை வளைக்க முடியாது; கல் பிளந்துவிடும். பெண்ணானவள் வளைந்து கொடுக்க கூடாது. கல்லுப்போல் பிளக்கலாம் என்பதனை உணர்த்தி நிற்கின்றது. மணமக்கள் மூன்றாவது முறை சுற்றி வரும்போது அம்மி மிதித்தல் சடங்கு நடைபெறும். மணமகன் மணமகள் காலை அம்மியில் எடுத்துவைத்து மெட்டி அணிவிப்பார்.
மாலை மாற்றுதல்
பெண்ணை இடப்பக்கத்தில் அமர்த்துவர். மணமகன்
வலதுபக்கம் இருப்பார். ஒருவருக்கொருவர் தம் கழுத்தில் உள்ள
மனமாலையை மாற்றிக் கொள்வர்.
மணமேடையைச் சுற்றி வருதல்
பெண்ணின் கையைப் பிடித்துக் கொண்டு மாப்பிள்ளைத் தோழனுடன் மூவரும் ஏழு அடிகள் சுற்றி வருதல் வேண்டும்.
முதலாம் அடி : அன்னம் குறையாது கிடைப்பதற்கு
இரண்டாவது அடி உடல் வலிமை பெறுவதற்காக
மூன்றாமடி விரதங்கள் அனுட்டிப்பதற்கு துணையாக
நிற்பதற்கு
நான்காமடி நல்ல சுகங்கள் கிடைப்பதற்காக
ஐந்தாம் அடி : பசுக்கள் முதலிய செல்வங்கள்
கிடைப்பதற்காக
ஆறாம் அடி எல்லாவிதமான ருதுக்களும் அனுகூலமாக
இருப்பதற்காக
ஏழாம் அடி சுபகாரியங்கள் செய்வதற்கு கணவனுக்கு
துணையாக நிற்பதற்காக. பொரியிடல்
மணமக்களை தீமுன் நேராக அமரச்செய்து ஓமத்தீயில் 16முறை ஓம் சிவாயநம சொல்லி நெய் ஊற்றி ஆகுதி செய்தல் வேண்டும். பதினாறுமுறை பொரி இடல்வேண்டும்.
நிறையவிநல்கல் (பூரணாகுதி செய்தல்)
பூரணாகுதிகளை மணமக்கள் கையால் குண்டத்தில் இடச் செய்தல் பின் அக்குண்டத்திற்கு மணமக்கள் தூபதீபம் காட்டல் வேண்டும்.
காப்பு நாண் களைதல்
மணமக்கள் காப்பு நாணைக் களைந்து குருவிடம் கொடுக்க அத்துடன் அரசாணைக் கோயிலில் கட்டிய காப்பும் களையப்பட்டு ஒரு தட்டில் வைத்து தீயில் இடுதல் வேண்டும். பின் குரு மணமக்களுக்கு திருநீறு வழங்கி, மஞ்சளரிசி தூவி வாழ்த்துவர். மணமக்கள் தட்சணை கொடுத்து புரோகிதரை வணங்குவர்.
இந்துக் கலைக்களஞ்சியம்

அரிசி துஷி வாழ்தல்
பெரியோர்களை ஐவர் அரிசி தூவி மணமக்களை வாழ்த்துவர். பின் பால், பழம் மணமக்களுக்கு கொடுப்பர். அன்பு அறிவு, அழகு, புகழ், கல்வி, வீரியம், மகிழ்ச்சி, தைரியம், பணம், தானியம், சுகம், பெருமை, குடிப்பிறப்பு, ஆரோக்கியம், நீண்ட ஆயுள், செளபாக்கியம் பதினாறு செல்வங்களும் கிடைக்க வாழ்த்துவர்.
அருந்ததி காட்டல்
அருந்ததி என்பவள் வசிட்டரின் மனைவி; கற்பிற் சிறந்தவள், அவள் தனது தெய்வத்தன்மையால் நட்சத்திரங்களுள் ஒன்றானவள் நீயும் கற்புமிக்கவளாக இருக்க வேண்டும் எனமணமகன் மணமகளுக்கு அருந்ததியைக் காட்டுவர். புதுமணவீட்டிற்கு மணமக்கள் புகும்போது பிரவேச ஹோமத்தின் பின் கணவன் மனைவிக்கு அருந்ததி காட்டுவான்.
மரு உண்ணுதல்
திருமணமக்கள் மரு உண்ணுதல் மரபு. மருவி உண்ணல் என்றால் கலந்து உண்ணல் என்பது பொருள். எங்கோ பிறந்து வளர்ந்த இருவர் திருமணத்தின் பின் ஒரிடத்தில் கலந்து முதன் முதல் உண்ணுவதற்கு மருவி உண்ணுதல் என்பர். பூதாக்கலம் கொடுத்தல் என்பது இதனையே குறிக்கும்.
சம்பிரதாயத் திருணம் இடத்துக்கு இடம் இனத்துக்கு இனம் வேறுபடும் என்பது இங்கு வலியுறுத்திக் கூறத்தக்கதாகும்.
திருமணம் தொடர்பான நடைமுறைச் சம்பிரதாயங்கள் பற்றி மட்டுமல்ல நடைமுறைச் சட்டம் பற்றியும் தெரிந்திருத்தல் வேண்டும். இந்து திருமணச் சட்டம் 1955 தனித்திருமணச்சட்டம் 1954, இந்திய - கிறிஸ்தவ திருமணச் சட்டம் 1872 இஸ்லாமியர் திருமணச் சட்டம் 1939 இந்திய மணமுறிவுச்சட்டம் 1869இல் இவ்வாறு சட்டங்கள் வகுக்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்டன.
இந்து திருமணச் சட்டத்தின் பிரிவு ஐந்து நிபந்தனைகள் பற்றிக் கூறுகின்றது. 1. திருமணத்தின் இருதரப்பினரும் திருமணம் நடைபெறுகிற வேளையில், வேறொரு வாழ்க்கைத் துணையை வைத்திருத்தல் கூடாது. 2. இருதரப்பினரும் திருமணத்திற்கான இசைவு தரும் மனநிலையில் இருக்க வேண்டும். மனநிலை பாதிக்கப் பட்டிருந்தால், இன்பப் பெருக்கம் அற்றவராக இருந்தால் காக்காய் வலிப்பு போன்ற நோய்கள் இருந்தால் இசைந்தாலும் அந்த மண இசைவு செல்லுபடியாகாது. 3. மணமகன் 21 வயது நிறைந்தவனாகவும் மணமகள் 19வயது
நிறைந்தவளாகவும் இருத்தல் வேண்டும். 4. இருதரப்பினரும் தடுக்கப்பட்ட உறவுமுறையால்
பிணைக்கப்பட்டவராய் இருத்தல் கூடாது. 5. திருமணத்தில் மணமக்களின் உறுதி மொழியே சட்டத்திலும்
சம்பிரதாயத்திலும் முக்கியத்துவம் பெறுகிறது. (இ.ச.)
103

Page 134
திருமந்திரம்
திருமந்திரம் சைவத் திருமுறைகள் பன்னிரண்டில் பத்தாவதாகும். மூவாயிரம் பாடல்களையும் ஒன்பது தந்திரங்களையும் கொண்டது. இந்நூல் திருமூலரால் இயற்றப்பட்டது. ஆகமங்கள் 28, இறைவனால் அருளப் பெற்றவை. ஆயினும், நந்தியம் பெருமான் றுநீகண்ட உருத்திரர்பால் பெற்ற 9 ஆகமங்களைத் திருமூலர் முதலிய எட்டுச் சீடர்கட்கும் உபதேசித்தருளினார். இவ்வாறு முதல் தந்திரம் காரண ஆகமத்தின் சாரமாகவும், இரண்டாம் தந்திரம் காமிக ஆகமத்தின் சாரமாகவும், மூன்றாம் தந்திரம் வீராகமத்தின் சாரமாகவும், நான்காம் தந்திரம் சிந்தியாகமத்தின் சாரமாகவும், ஆறாம்த ந்திரம் வியாமளாகமத்தின் சாரமாகவும், ஏழாம் தந்திரம் காலோத்திராகமத்தின் சாரமாகவும் எட்டாம் தந்திரம் சுப்பிரபேதாகமத்தின் சாரமாகவும், ஒன்பதாம் தந்திரம் மகுடாகமத்தின் சாரமாகவும் அமைந்திருக்கின்றன என்பர் அறிஞர். திருமந்திரம் ஆகமத்தின் சாரமாயினும் திருமூலர் அதனைத் தமிழிலேயே ஆக்கியுள்ளார். 'என்னை நன்றாக இறைவன் படைத்தனன் தன்னை நன்றாகத் தமிழ் செய்யுமாறே மூலன் உரை செய்த மூவாயிரந்தமிழ் என்றும் கூறுவார் திருமூலர்.
"தண்ணிலவார் சடையார்தாந் தந்த வாகமப் பொருளை மண்ணின்மிசைத் திருமூலர் வாக்கினாற் றமிழ்வகுப்பக் கண்ணியவத் திருவருளால் அவ்வுடலைக் கரப்பிக்க
எண்ணிறைந்த வுணர்வுடையார் ஈசரரு ளெனவுணர்ந்தார்’
என்பது சேக்கிழார் கூற்று.
தமிழ் மறையாகிய திருமந்திரத்தை இயற்றிய மூலருக்குத் தொன்மைத் திருபெயர் சுந்தரன் என்பது. திருமூல நாயனார் என்னும் திருப்பெயர்க்குக் காரணம் சாத்தனூர் ஆ மேய்க்கு இடையன் மூலன் உடம்பில் ஆத்துயர் நீங்கற் பொருட்டு தம்முயிரைப் புகுத்தி எழுந்தமையால் நேர்ந்தது என்பது எல்லோர்க்கும் ஒப்பு முடிந்த தொன்றாகும். இந்நூல் பற்றிய செவி வழிக் கதை ஒன்றும் உள்ளது.
திருஞான சம்பந்தர் தம் தந்தையார் நான்மறை வேள்வியினைச் சிறப்பாகச் செய்வதற்காக திருவாவடுதுறைப் பெருமானை இரந்து நின்றார். இறைவனும் உலவாக் கிழி நல்கியருளினன். சம்பந்தப் பெருமான் பீடத்தில் இருந்த உலவாக் கிழியினை எடுக்கும் முன் பீடத்தைப் பணிந்தெழுந்ததும், இறைருளினாலே தமிழ் மணம் நிலவாநின்று கமழ்கிறது பீடத்தின் கீழ்ப் பார்க்க என்று அருளினர். அகழ்ந்து பார்த்தபோது திருமந்திரச் செப்பேடு காணப்பட்டது. அதனை உச்சிமேற் கொண்டு உலகுக்கு அளித்தருளினர் என்பதே அச் செவிவழி கதையாகும். இச் செய்தி திருத்தொண்டர் புராணத்தில் காணப்படவில்லை. எவ்வாறாயினும் திருமந்திரம் மறைக்கப்பட்டு வெளிக்கொணரப்பட்டதென்ற உண்மை ஐயமின்றி வெளிப் படுகின்றது.
104.

முதல் தந்திரம்
முதல் தந்திரம் நூற்றறுபத்தாறு திருப்பாட்டுக்களை யுடையது. உபதேசம் முதல் கள்ளுண்ணாமை ஈறாகப் பதினேழு பிரிவுகளைக் கொண்டது. இஃது அறத்தின் இயல்புடையது. உபதேசப் பகுதியில் பதி, பசு, பாசம் என்னும் மூன்றும் நித்தியப் பொருள் என விளக்கப்படுகிறது. அவற்றுள் பதியைப் பசு, பாசம் அணுகாதென்கின்றது. பாசம் ஒருங்கிப் பதியை அடைய குருவின் உதவி தேவை என்கிறது. பாலினுள் நெய் போல் குருவுபதேசத்தை உணர்பவர்களே முத்தர்கள். இவ்வுண்மை மைக்கு அரணாவது நிலையாமை உணர்வு. இஃது யாக்கை நிலையாமை, செல்வ நிலையாமை, இளமைநிலையாமை, உயிர் நிலையாமை என்னும் நான்கு தலைப்புகளால் விளக்கப்படுகிறது. இன்நான்கு நிலையாமையையும் உணர்ந்தவர் கொல்லாமை, புலான் மறுத்தல், பிறன் மனை நயவாமை முதலிய முக்குற்றத்தினின்றும் தம்மை விடுத்துக் கொள்வர்.
இரண்டாம் தந்திரம்
இஃது இருநூற்றெட்டுத் திருப்பாட்டுக்களை உடையது. அகத்தியம் முதல் பெரியாரைத் துணைக் கோடலிறாக இருபத்தைந்து பிரிவுகளையுடையது. இதில் கல்வி, கேள்வி ஆகியவற்றால் திருவருள் கைவரப் பெற்று சிவனே மெய்ப்பொருள் என்று உணர வேண்டும் என்கிறார். கேடில் விழுச் செல்வம் கல்வி, நாடில் தலைச் செல்வம் கேள்வி, பாடில் துணைச் செல்வம் அருள், வீடில் முழுச்செல்வம் செம்பொருட் சிவன். அச்சிவனே மெய்ப்பொருள். அப்பொருள் தலைக் கூடுவதே பிறவிப் பெரும் பயன். அதற்குத் துணையாவதே ஏனைய பொருட்கள் அனைத்தும். இறை உண்மையை எடுத்து விளக்குவதே அகத்தியம். இறைவனின் அட்ட வீரட்டங்கள் பற்றிக் கூறும் திருமூலர் இவை உண்மை உணர்த்தும் புனைவு உருவம் என்பதனை திண்மையுற விளக்கியுள்ளார். ஏனைய திருமுறைகள் அங்ங்ணம் உணர்த்தாமைக்குக் காரணம் அவை இறைவன் புகழினையே முதன்மையாகக் கொண்டமையால் தான் எனக்கருத இடமுண்டு. முப்புர அழிவு உண்மையை விளக்கும் போது அது சிவனின் திருவுள்ளக் குறிப்பேயன்றிப் புறத்துத் தேர் முதலியன ஊர்ந்து சென்று செய்த புறச் செயல் அன்று என விளக்குகிறார். அதே போல் சிவபெருமானின் அருவுருவத் திருமேனியாம் சிவக் கொழுந்தே எத்திற வழிபாட்டிற்கும் உரியதென்கிறார். இறைவனின் முழுமுதற் தன்மை, ஐந்தொழிலைச் செய்யும் அவனே உடனிருந்து காப்பவன் என்கிறார். இவ்வகையில் இரண்டாம் தந்திரம் மெய்ப்பொருளை விளக்குகின்றது.
மூன்றாம் தந்திரம்
இது முந்நூற்று முப்பத்து மூன்று (333) செய்யுட்களை யுடையது. இருபத்தோர் (21) பிரிவுகளையுடையது. சிவன், சிவை இவர்களது தன்மை உலகியலோடு ஒப்பிட்டுக் காட்டப்படுகிறது. ஆன்மாக்கட்கு இன்பமாவது இல்வாழ் தவநிலையே. புதுமணம் பொருந்தி இல்வாழ் தவநிலை புகுவார் இருவரும் சிவனும் சிவையுமாம் என்கிறார். அத்தவ நிலைக்கு சிவநினைவு தவறாமை அவசியம். அட்டாங்க யோகத்தால் தவநிலை
இந்துக் கலைக்களஞ்சியம்

Page 135
உருவாகும். யோகம் என்பது பயிற்சி ஆகும். யோகப் பயிற்சி கைவரப் பெற்றவரே இறைநிலையை எளிதில் உணர்ந்தவர். யோக முயற்சியால் இறைவன்பால் காதலுண்டாகும் என்கிறார். யோகப் பயிற்சியால் உடல் திடம் அடையும். வாழ்நாள் சிறக்கும் வழிவகைகளும் காணலாம். இதுவே ஆன்மா அடையும் மெய்யின்பம். மெய்யின்பமாவது உடலை உறுதியாக வைத்துக் கொண்டு உள்ளத்தை வள்ளற் பிரானாகிய, சிவன் பால் செலுத்தி பள்ளத்து வெள்ளம் போல் பதிய வைத்து இல்வாழ்க்கைக்கண் நல்வாழ்வு பெறுவதாகும். நாயன்மார் திருவரலாறுகள் பலவும் அதனை நன்கு வலியுறுத்தும். இவ்வுண்மையை எடுத்து விளக்குவதே மூன்றாம் தந்திரமாகும்.
நான்காம் தந்திரம்
இது ஐந்நூற்று முப்பது (530) திருப்பாட்டுகளையுடையது. பதின்மூன்று (13) பிரிவுகளையுடையது. வீடாவது பொருளிழப்பன்று தன்னிழப்பாகும். தன்னிழப்பு என்பது தன்னைச் சிவனுக்கு அடிமையாக்குதல். ஆண்டாற்கடிமையாய் அவன்பால் தானொழுகல் வீடாம் தன்னிழப்பு' என்பதாலும் இதனை உணரலாம். இந்நிலையினை விழைவார் எல்லா மந்திரங்கட்கும் உயிராய் யாவற்றையும் இயக்கும் தன்மையாய், ஆதியந்தம் இல்லாததாய்த் திகழ்வது திருவைந்தெழுத்தாகும் என்னும் மாறா உண்மையினை உணர்வர். அதனையே நான்காம் தந்திரம் விளக்குகிறது. உயிர் மந்திரம் சிவயநம என்னும் திருவைந்தெழுத்தாகும். அதுவே ஆதி மந்திரம். அதன் பின் அச்சக்கரத்தின் வழிபாடமைத்தனர். அவ்வழிபாட்டிற்கு இன்றியமையாது வேண்டப்படும் தழலோம்பல் கூறப்படுகிறது. அம்மையும், அப்பனும் உயிரும், அறிவும் போன்று ஒன்றே என்றும் அம்மையே எஞ்ஞான்றும் தாங்கும் நிலை, தாங்கப்படுநிலை என்னும் இரண்டுமாய் நிறைந்து நிற்பள். இந்நிலையினை முறையே ஆதாரம், ஆதேயம் என்கிறார். முடிவாக அம்மையின் நவாக்கரி சக்கரத்தைக் கூறி நான்காம் தந்திரம் முடிகிறது.
ஐந்தாம் தந்திரம்
இது நூற்று ஐம்பத்து நான்கு (154) திருப்பாட்டுக்களைக் கொண்டது. சுத்த சைவம் முதல் உட்சமயம் ஈறாகச் சொல்லப்படும் இருபது (20) பிரிவுகளையுடையது. அறம், பொருள், இன்பம், வீடு என்னும் நான்கும் அறம் என்றே கூறப்படும். அறம் எனினும் வேதம் எனினும் ஒன்றே என்று கூறுவர். பின் அன் நான்கினும் மேலான பேறு கூறியருளுகிறார். பேறாவது சித்தாந்த சைவத்தினை மேற்கொள்வது. அந்நிலை வேதத் தொடர்பு புறச் சமயம், புறப் புறச் சமயம் எனமூவகைப் படுத்தி முடிவாகச் சித்தாந்த சைவமே சமயங் கடந்த பெரு நெறி ஆகும் என்று முடிக்கின்றார். சிவப்பேற்றின் அடிப்படை நெறியை எடுத்து விளக்குவதே ஐந்தாம் தந்திரம். நால்வகைச் சைவம், நால்வகை நெறி, நால் வகைத் தொண்டு; அத்தொண்டால் பெறும் பேறு, புறச் சமயப்புன்மை, அகச் சமயநெறி ஆகிய இவற்றை ஒன்றன் பின் ஒன்றாக வகைப்படுத்திக் கூறுகிறது.
இந்துக் கலைக்களஞ்சியம்

ஆறாம் தந்திரம்
இது நூற்றிருபத்தெட்டுத் (128) திருப்பாட்டுகளையுடையது. சிவகுரு தரிசனம் முதல் பக்குவன் ஈறாகப் பதினான்கு (14) பகுப்புகளையுடையது. இத் தந்திரம் சிவநெறியை அடைய எண்ணுபவர்கட்கு உறுதுணையாய் வந்து அருள் செய்பவர் சிவகுருவேயாவர் என்கிறது. சிவபெருமான் ஐம்புலன்களினால் இழுப்புண்டு அல்லற்படும் ஆருயிர்களை மீட்பதற்கு பிறவிப் பெருங் கடலினின்றும் கரை சேர்ப்பதற்கு எழுந்தருளும் தோற்றமே சிவகுருவின் தோற்றமாகும். இத் தந்திரம் குருவே சிவம் என்று வற்புறுத்துகிறது. அச்சிவனால் உணர்த்தப்படுவது திருவடிப்பேறாகும். சிவபெருமானை மறவாமையே துறவாகும். அது முப்பொருள் விளக்கத்தால் அமைவதாகும். சித்தம் சிவமாவார் தவக் கடப்பினை உடையவராவர். பள்ளியில் பிள்ளைகள் மேல்வகுப்புக்குச் செல்வது போல் தவமுடையாரும் தவக்கடப்பு எய்துவர். தவக் கடப்பால் திருவடி கைவரப்பெற்றாருக்கு எல்லா நலமும் என்றும் நிலவும். போலி வேடத்தாரால் எல்லாத் தீங்கும் உண்டாகும். அத்தகையோரை வேந்தன் நாடித் தண்டித்தல் கடனாகும். மெய்த்தவ வேடருக்கு வேண்டும் அடையாளம் பத்து ஆகும். திருநீறே திருவடி சேர்ப்பிக்கும். சிவவேடம் அனைத்தும் உடலுக்கன்று உயிருக்கேயாம். ஆகவே நற்குருவால் திருவடி ஞானம் உண்டாகும் என்று ஆறாம் தந்திரம் விளக்குகிறது.
ஏழாம் தந்திரம்
இது நானூற்று ஏழு (407) திருப்பாட்டுக்களையுடையது. ஆறாதாரம் முதல் இதோபதேசம் ஈறாக முப்பது பகுதிகளையுடையது. இது பேற்று வழிபாடாகும். பேற்று வழிபாடெனினும் சிவலிங்க வழிபாடெனினும் ஒன்றே. அவ்வழிபாட்டின் சிறப்புணர்வதற்கு உடம்பகத்துக் காணப்படும். ஆறு நிலைகளும் தூய்மை அடைதல் வேண்டும். அவற்றின் வழிகளும் தூய்மையாக இருக்க வேண்டும் என்கிறது. ஆறு ஆதாரம் ஆறு அத்துவா என்பதே அவ்விரு நெறிகளாகும். இவை தூய்மையடைவதன் மூலம் சிவலிங்கத்தின் வகைகளாகிய அண்டலிங்கம், பிண்டலிங்கம், சதாசிவலிங்கம், ஆன்மலிங்கம், ஞானலிங்கம், சிவலிங்கம் என்னும் அறுவகை இலிங்கங்களின் இயல்பை உணர முடியும். சிவபூசையின் பெறு பேறாகச் சிவகுருவின் பூசை உண்டாகும். குரு பூசைப் பயனாகச் சிவனடியார் வழிபாடு உண்டாகும். சிவனடியார் சிவனோடொப்பர். அவர் பெருமையறிந்து அவர்க்கு அடிமையாதலே செந்நெறிச் சிறப்பு உண்ணும் ஊண்முதல் சிவனுனடமையாதலின் யாண்டும் எப்பொருளையும் அவன்பால் இரந்து பெற்றேயுண்பர். இம்முறையில் ஏழாம் தந்திரம் முழுவதும் சிவலிங்க வழிபாடே கூறப்படுகின்றது.
எட்டாம் தந்திரம்
இது ஐந்நூற்றுப் பதினெட்டுத் (518) திருப்பாட்டுகளை உடையது. இஃது உடலிற் பஞ்சபேதம் முதல் சோதனை ஈறாக முப்பத்து மூன்று (33) பிரிவுகளை உடையது. உடலின் பாகுபாடே உடலிற் பஞ்ச பேதமாம். ஐவகை உடற்பாகுபாட்டினை விளக்கி உடம்பு அடையும் பேறுகளும் கூறி, அழியுந்தன்மைகளையும் கூறுகிறது. பின் அவத்தையினை விளக்குகிறது. பின் அறிவு
105

Page 136
தோன்றும் நிலை விளக்கப்படுகிறது. பின் அறுவேறு முடிவுகள் வெளிப்படும். வெளிப்படவே பதி, பசு, பாச உண்மை தெளியப்படும். பின் முக்குற்றம் புலனாகும். இதன் பின் முப்பதம், முப்பரம், முத்துரியம், மும்முத்தி, மும்மையிலக்கணம் ஆகிய நெறிகளை விளக்குகிறது. இதனை விளங்கிக் கொண்டால் சிவனியல்பு புலனாகும். புலனான நிலையில் புகலிடம் கிடைக்கும். புகலிடம் கிடைத்த நிலையில் மலநீக்கம் ஏற்பட்டு பக்தி கைகூடும். பக்தியின் முதிர்வே முத்தியாகும். முத்தியின் முடிவே செயலற்ற நிலை. ஆகவே எட்டாம் தந்திரம் பக்தியின் முதிர்வாம் முத்தியின் முடிந்த நிலையை விளக்குகிறது எனலாம்.
ஒன்பதாம் தந்திரம்
இது நானூறு (400) திருப்பாட்டுக்களைக் கொண்டது. குருமட தரிசனம் முதல் சர்வ வியாபிஈறாக இருபத்திரண்டு (22) பகுப்புகளையுடையது. இது அணைந்தோர் இயல்பு அருளுகிற தெனலாம். சித்தாந்த சைவர் உறைகின்ற இடமே மடம் என்று குறிக்கப்படுகின்றது. குருமடங்கண்டவரே குருவினைக் கண்டவராவார். இத்தந்திரம் சித்தர் நெறிகளைப் பல பரிபாஷைகளால் விளக்கிச் செல்கிறது. இத் தந்திரம் சிறப்பாக விளக்குவது குரு நெறியினையாம். மும்மலம் நீக்கி சிவனிலை எய்தி, ஒங்கார உண்மை தெரிந்து, 'நமசிவாய' என்னும் ஐந்தெழுத்துண்மையுணர்ந்து பின் சிவயநம என்னும் சூக்கும பஞ்சாட்சரத்தை அறிந்து அதன் பின்னர் சிவயசிவ என்னும் அதிசூக்கும் பஞ்சாட்சரத்தின் உண்மையினை உணரும் நெறிகளை விளக்கிக் கூறுகிறது. இந்நெறிகளை முறையாக உணர்ந்தோரே அம்பலவாணரின் ஐந்தொழிற் கூத்தின் உண்மை நெறியினை உணர்வர் என்று கூறி நூல் முடிகின்றது. திருமூல தேவர் ஒன்பது ஆகமங்களில் கண்டுள்ள கருத்துகளைத் தான் ஒன்பது தந்திரமாகப் பகுத்துப் பாடியுள்ளார் என்பதை அவரே, அந்திமதி புனை அரனடி நாடொறும் சிந்தை செய்து ஆகமம் செப்பலுற்றேனே என்று கூறியுள்ளது கொண்டு துணியலாம். திருமூலர் அருளியவை என்றும் குறைவின்றிப் பயன் நல்கும் திறத்தவையாகையால் திருமந்திரம் எனப்பட்டன. அவரது பாடல்களை நோக்குமிடத்து வேதசாரம் பொதுவாகவும், ஆகமசாரம் சிறப்பாகவும் அமைந்திருப்பதை அவதானிக்கலாம்.
நான் பெற்ற இன்பம் பெறுக இவ் வையகம் வான் பற்றி நின்ற மறைப் பொருள் சொல்லிடின் ஊன்பற்றி நின்ற உயர்வுறு மந்திரம் தான் பற்றப் பற்றத் தலைப்படும் தானே'
என்கிறார் திருமூலர். இறைவன் தரிசனம் கிடைத்துவிட்டது. யான்பெற்ற இன்பத்தினை இம்மண்ணுலகும் பெற வேண்டும். உயர்ந்த வேதப் பொருளை எடுத்துக் கூறினால் அதுவே நாவாகிய தசையைப் பற்றி நின்று உணர்ச்சியூட்டும் மந்திரமாகும். அம்மந்திரத்தை உச்சரிக்க உச்சரிக்க இறையருள் கிடைக்கப் பெறும் என்பது அதன் பொருளாகும்.
106

திருமந்திரமே சிவகதிக்கு வித்தாம் திருமந்திரமே சிவமாம் - அருமந்த புந்திக் குளேநினைத்துப் போற்றும் அடியார் தமக்குச் சந்திக்கும் தற்பரமே தான்
என்பது ஒரு தனிப்பாடல். 'ஆகமங்களின் உட்பொருளையும், சிவன் சக்தி வழிபாட்டின் தத்துவத்தையும், யோகத்தின் உண்மையான தன்மையையும் மாண்பையும், ஆத்மஞானத்தின் ஒளியையும் பற்றித் திடமான தமிழ்ப் பாடல்களடங்கிய ஞானக் களஞ்சியம்” என்று ஏ. வி சுப்பிரமணிய அய்யரும், “திருமுறைகளில் திருமந்திரம் புற நடையானது. அது தோத்திரமுமாம், சாத்திரமுமாம், அன்றி, சில பகுதி சித்த பரிபாஷையோடு கூடியதுமாம். திருமந்திரத்தையும் வேதாகம வரிசையில் வைத்துக் கொள்ளல் சாலும்” என்று இலக்கிய கலாநிதி பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளையும் கூறியுள்ளமை எண்ணிப் பார்க்கத்தக்கவையாகும்.
எளிதில் பொருள் அறியப்படாத பகுதிகளும் யோகம், தத்துவம், அறம் சம்பந்தமான கருத்துகளும் ஆங்காங்கு காணப்படுவதாலும் தேவார திருவாசகங்களைப் போல் அனுபவித்துப் பாடமுடியாததாலும் போலும் திருமந்திரம் போதிய கவனத்தைப் பெறவில்லை. ஆயினும் அது முக்கியமான ஒரு நூல். பொருட் செறிவும் சொற்சுவையும் மிக்கது. சிலவியல்புகளிலே திருமுறைகள் அனைத்திலும் மேம்பட்டது. சைவசித்தாந்த தத்துவத்தின் மூலாதார ஊற்றெனலாம்.
திருமூலரின் உலக நோக்கும் குறிக்கோளும் தெளிவானவை. "ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்” என்றுரைத்த திருமூலர் மனுக்குலத்தை ஒக்க நோக்கியதோடு உயிருள்ளனவற்றிலும் இல்லாதனவற்றிலும் இறைவனைத் தரிசித்தார். மனித குலத்திற்கு புத்துயிரூட்ட விழைந்த திருமூலர் உலக ஆசாபாசங்களில் அலைக்கழிந்தவர்களிடையே ஆன்மீக ஒளியைப் பாய்ச்சினார். உறுதியான பக்தியினால் ஒவ்வொருவரும் இறைவனின் பாதாரவிந்தங்களை அடையமுடியுமென்று எடுத்துக் காட்டினார். உடல் சார்பான வாழ்க்கையில் இருந்து ஆன்மீக வாழ்க்கையில் உச்ச நிலையினை எய்துவதற்குச் செய்ய வேண்டிய முயற்சிகளை எடுத்துரைத்தார்.
இவ்வுலகத்து உடலின்ப வாழ்க்கை நிலையற்றது என்பதை
வற்புறுத்திய திருமூலர் நீதி நெறி தவறாது நடுவுநிலை நின்று வாழ வேண்டியமையின் அவசியத்தை வலியுறுத்தினார்.
'நடுவுநின்றார்க்கன்றி ஞானமும் இல்லை நடுவுநின்றார்க்கு நரகமும் இல்லை நடுவு நின்றார் நல்ல தேவரும் ஆவர் நடுவுநின்றார்வழி நானும் நின்றேனே"
திருமூலர் “நடுவுநின்றார் நல்ல நம்பனும் ஆமே” அதாவது நடுநிலை தவறாதவர்கள் சிவனாக விளங்குவர் என்கிறார்.
இந்துக் கலைக்களஞ்சியம்

Page 137
நல்லவற்றைப் பேணித் தீயவற்றை விலக்கி நெறிப்படி வாழ வேண்டியமையின் அவசியத்தை விளக்கக் கருதியவிடத்து
'நெறியைப் படைத்தான் நெருஞ்சில் படைத்தான்
நெறியில் வழுவின் நெருஞ்சில் முள்பாயும் நெறியில் வழுவாது இயங்க வல்லார்க்கு நெறியில் நெருஞ்சில் முள் பாயகிலாவே'
என்றார். நெறியைப் படைத்த கடவுளே நெருஞ்சில் முள்ளையும் படைத்தது நெறிதவறி நடப்போருக்கு இடர் விளைவிக்கவேயாம். அறம் செய்ய வேண்டியதன் இன்றியமையாமையை திருமூலர் பலவாறாகக் கூறுகிறார்.
"அறம் அறியார் அண்ணல் பாதம் நினையும் திறம் அறியார்”
என்பது அவரது வாக்கு. செல்வத்தின் தேவையை மறுக்காத திருமூலர் அதனை அறவழிகளில் செலவிட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துகிறார். கல்வி, பெரியாரைத் துணைக் கோடல், தவம், துறவு, புலனடக்கம், அன்பு, பொறை, ஒழுக்கம், வாய்மை முதலியவற்றால் உண்டாகும் நன்மைகளையும் கல்லாமை, கொலை பிறன்மனை நயத்தல், புறங்கூறல், கள்ளுண்ணல், புலாலுண்ணல் முதலியவற்றின் தீமைகளையும் திருமூலர் எடுத்துரைக்கிறார்.
4 % -
கொல்லான் பொய் கூறான் களவிலான் எண்குணன் நல்லான் அடக்கம் உடையான் நடுச் செய்ய
வல்லான் பகுத்துண்பான் மாசிலான் கட்காமம்
இல்லான் இயமத் திடையில் நின்றானே'
என்பது திருமூலர் வாக்கு, கொலை, பொய், திருட்டுக் குற்றம், கட்குடி, காம வேட்கை ஆகியவற்றை ஒழித்து நற்குணங்கள் அடக்கம், நடுநிலை, பகுத்துண்ணும் பண்பு ஆகியவற்றை மேற்கொண்டு ஒழுகுபவன் இயமம் என்ற யோகப் பயிற்சியில் நின்றவனாவான். இயமம் என்றால் தீயனவற்றில் மனத்தைச் செல்லவிடாது கட்டுப் படுத்துதலாகும். இயமத்தில் ஈடுபடுவோர் இறைவனிடத்து விரும்புவதைப் பெறுவர் என்பது நம்பிக்கையாகும்.
மக்கள்படும் துன்பங்கள் பலவற்றிற்கு அடிப்படைக் காரணமாக அமைவது ஆசையே.
"ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள்
ஈசனோடாயினும் ஆசை அறுமின்கள் ஆசை படப்பட ஆய்வரும் துன்பங்கள் ஆசைவிடவிட ஆனந்தம் ஆமே”
என்ற திருமூலர் வாக்கு, பலராலும் மேற்கோள் காட்டப்படும் ஒர் யதார்த்தக் கோட்பாடாகும். மக்கள் நலனில் ஆர்வம் கொண்ட
இந்துக்கலைக்களஞ்சியம்

திருமூலர் அரச நிர்வாகம் நல்ல முறையில் விழிப்புடன் நடைபெற வேண்டுமென்பதையும் எடுத்துக் கூறத் தவறவில்லை.
"நாடொறும் மன்னவன் நாட்டில் தவநெறி நாடொறும் நாடி அவன் நெறி நாடானேல் நாடொறும் நாடும் கெடும் மூடம் நண்ணுமால் நாடொறும் செல்வம் நரபதி குன்றுமே”
என்று கூறியுள்ளார். திருமூலர் சமூகத்தின் சாதாரண மனிதர்களையும் அவர்களது தேவைகளையும் மறந்துவிடவில்லை.
"படமாடக் கோயில் பகவற்கு ஒன்று ஈயில் நடமாடக் கோயில் நம்பர்க்கு அங்கு ஆகா நடமாடக் கோயில் நம்பர்க்கு ஒன்று ஈயில் படமாடக் கோயில் பகவற்கு அது ஆமே”
அவரது என்பது மனித நேயத்தின் வெளிப்பாடாகும். மக்கள் சேவையே மகேஸ்வரன் சேவை என்பது திருமூலர் கொள்கை. மண்ணில் நல்லவண்ணம் வாழ்ந்து உயர் பேற்றினை எட்ட வழிகாட்டிய திருமூலர் இறைவனை அன்பின் வடிவாகக் கண்டார். தூய அன்பினால் இறைவனை அடையலாம் என்றார்.
"அன்புஞ் சிவமும் இரண்டு என்பர் அறிவிலார்
அன்பே சிவமாவது ஆரும் அறிகிலார் அன்பே சிவமாவது ஆரும் அறிந்த பின் அன்பே சிவமாய் அமர்ந்திருந்தாரே'
என்பதன் மூலம் அன்பே வடிவான உண்மைப் பரம் பொருளை அறியும் ஆர்வத்தினால் உந்தப்பட்டு ஒவ்வொரு ஆன்மாவும் உறுதியோடு முயற்சி மேற்கொள்ளவேண்டும் என்பது திருமூலர் கருத்தாகும். சிவத்தையோ சக்தியையோ அடைய வேண்டுமாயின் அதனிடத்து உண்மையான இடையறாத அன்பு வேண்டும். கோயில்கள், கிரியைகள், வேதங்கள், தேவ சாத்திரங்கள், சமயதத்துவங்கள் நோன்புகள், விரதங்கள் முதலானவை அன்பு மார்க்கத்தை அடைவதற்கான வழிமுறைகளே ஆகும். அன்போடு உருகி மனங்குழைவதனாலன்றி எலும்பை விறகாக்கித் தசைகளை வறுத்துத் தவம் செய்தாலும் இறைவனை அடைய முடியாது என அறுதியிட்டுக் கூறுகிறார் திருமூலர்.
"என்பே விறகாய் இறைச்சி அறுத்திட்டுப்
பொன் போல் கனலில் பொரிய வறுப்பினும் அன்போடு உருகி அகம் குழைவார்க்கன்றி என்போல் மணியினை எய்த ஒண்ணாதே’
திருமூலர் கூற்றுப்படி அன்பே சிவன். அதனை அடைவதற்கான வழியும் அன்பே தான். சிவானுபவத்திற்கு உகந்த சாதனம் அன்பு நெறி என்பதே திருமந்திர சாரமாகும். இதன் சிறப்புப் பற்றி கவியோகி சுத்தானந்த பாரதியார்,
107

Page 138
"திருமந்திரத்தில் அடங்காத வேதப் பொருள் இல்லை. ஆகம ரகசியமில்லை. ஞானிகள் கருத்து, யோகிகள் அனுபவம், ஜீவன் முத்தர் இயல்பு,அருட் புலவர் கண்ட தத்துவங்கள் அறிஞர் அறிந்த அறிவு இவை அனைத்தும் இதில் அடங்கியுள்ளன.” என்று கூறுவது மிகப் பொருத்தமானதே. (நி.நி.)
திருமயிலாடுதுறை
காவிரியின் தென்கரையிலே சோழ நாட்டின் திலகமாக விளங்குவது “மாயூரம்” எனப்பெறும் “திருமயிலாடுதுறை” எனும் சிவத்தலமாகும். மிகத் தொான்மை வாய்ந்த ஆலயங்களில் ஒன்றாக விளங்குகின்றது. இதனை தென்மயிலை எனவும் அழைப்பர். நான்கு பக்கச் சுற்று மதில்களும், கிழக்கே பெரிய கோபுரமும், ஏனைய மூன்று பக்கங்களிலும் மொட்டைக் கோபுரங்களும் அமைந்துள்ளன. இக்கோயில் 378913 சதுர அடி பரப்பளவு கொண்டது. இது ஐந்து சுற்று வீதிகளால் அமைக்கப்பட்ட பெருங்கோயிலாகும்.
மயிலாடுதுறை இறைவனுக்கும், இறைவிக்கும் பல திருப்பெயர்கள் உள்ளன. பிரமன் வழிபட்டதால் பிரமலிங்கம் எனவும், தேவர்களுக்குக் குறைவிலாது அருள் செய்தமையால் பூரீ வரதானீசுவரர் அல்லது வள்ளலார் எனவும், மயிலாக இறைவி வந்து வழிபட்டபோது இறைவனும் மயிலுருக் கொண்டு அருள் செய்தமையால் கெளரீ மாயூரநாதர், மாயூரநாதர் எனவும் மயிலுருவில் வந்த இறைவன் நடனமாடி இறைவியை ஆட்கொண்ட காரணத்தால் G56T தாண்டவேசுவரர் எனவும்
அழைக்கப்படுகிறார்.
இறைவி அபயாம்பிகை, அபயப்பிரதாம்பிகை, அஞ்சல் நாயகி, அஞ்சலை எனவும் அழைக்கப்படுகிறார். அம்மை நின்ற திருக்கோலத்தில் நான்கு கைகளுடன் திரிபங்கமாக எழுந்தருளியிருக்கின்றார். மேற்கரங்கள் இரண்டும் சங்கு சக்கரத்தைத்தாங்கியும், இடக்கரம் தொடை மேலாகத் தொங்கியும், வலது திருக்கரம் கிளியை ஏந்தி அபயம் அளிப்பதாகவும் விளங்குகின்றன. அம்மையின் கர்ப்பகிருகத்தின் தென்புறத்திலே ஒரு சிவலிங்கம் அமைந்துள்ளது. அது அநவித்யாம்பிகை என அழைக்கப்படுகிறது. நாதன்கன்மாவின் மனைவி அனவித்தியை இறைவனைப் பூசித்து இச்சிவலிங்கத் தோடு ஐக்கியமானதாக ஐதீகம் கூறுகின்றது.
தட்சயாகத்திலும் கெளதமரின் சாபத்தாலும் அஞ்சிவந்து அடைக்கலம் புகுந்த மயில்களுக்கு அபயமளித்தமையாலும், பிறவிச்சூழலிற்பட்டு அவதியுற்று வந்து அடைக்கலம்புகும் ஆன்மாக்களுக்கு அனவரதமும் அபயம் அளிக்கின்றமையாலும் அபயாம்பிகை, அபயப்பிரதாம்பிகை என வடமொழியிலும் அஞ்சல் நாயகி, அஞ்சலை எனத் தமிழ் மொழியிலும் அழைக்கப்படுகிறார்.
08

தீர்த்தம்
"துறை” என்பது தீர்த்த விசேடமுள்ள இடத்தைக் குறிப்பதாக அமையும். விருஷப தீர்த்தம், பிரம தீர்த்தம், அநவித்யாசரஸ், அகத்திய தீர்த்தம், கணேச தீர்த்தம், காசிப தீர்த்தம், பாபநாச தீர்த்தம், இந்திரன் முதலிய அட்டதிக்குப்பாலர் தீர்த்தம் என 86 தீர்த்தங்கள் அமைந்துள்ளன.
விருஷப தீர்த்தம் (இடபதிர்த்தம்)
துலாக்கட்டம் எனப் பெறும் காவிரித்துறையில் ஆற்றின் நடுவில் மேற்கு நோக்கி இடபப்பெருமான் எழுந்தருளி யிருக்கிறார். இடபத்தின் செருக்கு அடங்கப் பரமன் அருள் செய்த தீர்த்தம் என்பதால் இப்பெயர் பெற்றது. இங்கு, ஐப்பசி மாதம் முழுவதும் கார்த்திகை முதல் நாளும் இறைவனும் இறைவியும் தீர்த்தமாடுகின்றனர். ஐப்பசி அமாவாசை பகல் 15 நாழிகை வேளையில் கங்கை வந்து நீராடுவதாக ஒர் ஐதீகம் உண்டு. அன்று எடுக்கப்படும் தீர்த்தம் கங்கா தீர்த்தம் போன்று பல வருடங்கள் புனிதமாக இருப்பதாக கூறுகிறார்கள்.
பிரம்ம தீர்த்தம்
இது இவ்வாலயத்தின் உள்ளேயே அக்னி மூலையில் அமைந்த திருக்குளம் ஆகும். பிரமன் இங்கு நீராடிப் படைப்புத் தொழில் கைவரப் பெற்றமையால், இப்பெயர் பெற்றது. மயிலுருக் கொண்டு இறைவி இத்தீர்த்தத்தில் நீராடி இறைவனைப்பூசித்தார்.
அநவித்யாசரஸ்
சந்நிதிக்கு நேர்கிழக்கில் கிழக்கு வீதியில் உள்ளது. இன்று ஐயன்குளம், தேரடிக்குளம் என்று அழைக்கப் பெறுகின்றது.
அகத்திய தீர்த்தம்
அகத்தியர், தனது மாணவர்கள் 12 பேருடன் கேரளாவில் இருந்து (சேர நாட்டிலிருந்து) வடக்கு நோக்கி (சோழ நாட்டிற்கு) வரும் வழியில் இத்தலத்தின் எழிலையும், இறைவனின் பெருமையையும் கேள்வியுற்று, இத்தலத்தில் சிலகாலம் தங்கியிருந்து வழிபட எண்ணினார். தினமும் காவிரியில் நீராடி இறைவனை வழிபட்டார். அகத்தியர் அக்காலத்தில் ஒரு விநாயகரையும், ஒர் சிறிய குளத்தையும் அமைத்துள்ளார். அக்குளமே அகத்திய தீர்த்தம் என்றழைக்கப்படுகிறது. இதில் நீராடி அவ்விநாயகரை வழிபடுவோருக்கு எல்லா இன்பமும் கிடைக்கும்.
பாபநாச தீர்த்தம்
இது மாயூரநாதர் முன்பு அமைந்துள்ளது. பாவக்காட்டை எரிக்கும் செந்தழற் சோலை என்பதால் இப்பெயர் பெற்றது. இது பரமன் சூலத்தால் தோன்றிய காரணத்தினால் சூலதீர்த்தம் எனவும், முதன் முதலில் தோற்றுவிக்கப்பட்டதால் ஆதி தீர்த்தம் எனவும் பிரமன் முதல் பல தேவர்கள் நீராடி தமது பாவங்களைப் போக்கிக் கொண்டதால் பாவநாசம் (பாப நாசம்) எனவும் தருமங்களை அளிப்பதால் தருமதீர்த்தம் எனவும் வழங்கப்
இந்துக் கலைக்களஞ்சியம்

Page 139
பெறுகிறது. இதன் கரையில் ஜபம், தவம், சிரார்த்தம் செய்தால் ஒன்று பலகோடிகளாகப் பெருகிப் பயன்தரும். வருடப்பிறப்பு, உத்தராயண தகூதிணாயன புண்ணிய காலங்கள், மற்றும் மாசப் பிறப்பு, அமாவாசை, பெளர்ணமி, கிரகண காலங்களில் நீராடினால் புண்ணியம் கிடைக்கும்.
தலவிருட்சம்
இத்தலத்தின் தலவிருட்சமாக மாமரம் விளங்குகின்றது. இதனால் சூதவனம் என்று வடமொழி நூல்களில் இத்தலம் கூறப் பெறுகிறது.
தேவாரப் பதிகங்கள், இலக்கியங்கள்
திருவாவடுதுறை ஆதீனத்திற்குச் சொந்தமான இத்தலம் திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் ஆகியோரால் பாடல் பெற்றதாகும்.
"கரவின்றி நன்மா மலர் கொண்டு இரவும் பகலுந் தொழுவார்கள் சிரமொன்றிய செஞ் சடையான்வாழ் வரமா மயிலாடுதுறையே’
என்றும்,
"ஏனவெயி றாடரவொ டென்புவரி
யாமையிவை பூண்டிளைஞராய்க்
மூசுமயி லாடுதுறையே’ என்றும் திருஞானசம்பந்தர் பாடியுள்ளார்.
"கொள்ளுங் காதன்மை யெய்துறுங் கோல்வளை உள்ளம் உள்கி யுரைக்குந் திருப்பெயர் வள்ளல் மாமயிலாடு துறையுறை வெள்ளந் தாங்கு சடையனை வேண்டியே’
(5ம் திருமுறை) எனவும்,
99
“மயிலாடுதுறை யிடமா மகிழ்ந்தான் கண்டாய் .
எனவும்,
"மயிலாடுதுறையுளார் மாகாளத்தார்’
(திருவீழிமிழலை) எனவும்,
“மயிலாடுதுறை கடம்பத்துறை யாவடுதுறை. 99
(பொது) எனவும் திருநாவுக்கரசரால் இத்தலம் போற்றிப் பாடப் பெற்றுள்ளது.
மேலும், திருவெண்ணியூர்ப் பதிகத்தில், மயில் வடிவு நீங்கிய அம்பிகையை மகிழச் செய்வதற்கு இறைவன் ஆதிசபை
இந்துக் கலைக்களஞ்சியம்

அமைத்துத் தாண்டவமாடிப் பின்பு இறைவியைத் திருமணஞ் செய்து கொண்டான், இறைவன் ஆடிய தாண்டவம் கெளரீ தாண்டவம் என்றும் நாவுக்கரசர் பாடியுள்ளார்.
வடமொழி நூல்களான பூரீ மாயூர புராணம், பூரீ ரிஷப தீர்த்த மகாத்மியம், வடமொழிக் கீர்த்தனங்கள் என்பனவும், சிவரகஸ்யம், ஸ்கந்த புராணம், துலாகாவேரி, பூரீ சிதம்பர புராணம் போன்ற தமிழ் நூல்களும் இத்தலத்தின் பெருமையையும் சிறப்பையும் கூறுகின்றன.
சுற்றுத்தலங்களும், பிறகோயில்களும்
இத்தலத்தைச் சுற்றிலும் பல பாடல் பெற்ற சிவத் தலங்களும், திருவிழந்தூர் (திருஇந்தளூர்) மற்றும் கம்பன் பிறந்த தேரழுந்தூர் முதலிய வைணவத் தலங்களும் உண்டு. பாடல் பெற்ற சிவத்தலங்களுள் அஷ்ட வீரட்ட தலங்களுள் நான்கு இத்தலத்தைச் சுற்றி அமைந்துள்ளன. அவை,
1) காலஸம்ஹாரத் தலம் - திருக்கடையூர் 2) காமஸம்ஹாரத்தலம் - திருக்குறுக்கை 3) கஜஸம்ஹாரத் தலம் - திருவழுவூர் 4) தட்சயாக ஹாரத்தலம் - திருப்பறியலூர்.
என்பனவாம்.
மாயூரநாதர் வடக்கில் கைகாட்டும் வள்ளலாகவும், கிழக்கில் துறைகாட்டும் வள்ளலாகவும், தெற்கில் வாக்குக் காட்டும் வள்ளலாகவும், மேற்கில் வழிகாட்டும் வள்ளலாகவும்
அமர்ந்திருந்து அருள்செய்கிறார்.
கைகாட்டும் வள்ளல்
சிவஞானம் பெறுவதற்காகத் தவஞ்செய்தோருக்கும் ரிஷப
தேவருக்கும் தெட்சணாமூர்த்தியாக அமர்ந்து அருள் செய்வதால்
இப்பெயர் பெற்றது. இதனை உத்தர மாயூரம் என்றும் அழைப்பர்.
துறைகாட்டும் வள்ளல்
திருஞானசம்பந்தர் அடியார்களோடு மாயூரநாதரை தரிசிக்க வந்த போது காவேரியில் வெள்ளம் ஏற்பட்டது. அப்போது இறங்கு துறை தெரியாமல் தவித்த இவர்களுக்கு மாயூரநாதர் வேடனுருக் கொண்டு துறையைக் காட்டி முன் செல்ல காவேரி நீர் வடிந்து வழிவிட்டது. இதனால் இறைவன் துறைகாட்டும் வள்ளலாக கிழக்குத் திசையில் அமர்ந்தார். இதனை திருவிளநகர் என்றும் அழைப்பர்.
வாக்குக் காட்டும் வள்ளல்
மாயூர நாதரை நான்கு வகை நல்வாக்குகளையும் வேண்டி
வழிபாடு செய்த வியாழ பகவானுக்கு அருள்செய்த தலமாக
தாருகாவனம் (பெருஞ்சேரி) விளங்குகின்றது.
109

Page 140
வழிகாட்டும் வள்ளல்
திருமால், பிரமன், இந்திரன் மூவரும் திரிபுரம் எரித்த அம்பைத் தேடி வந்த போது காவிரியில் நீர் பெருக்கெடுத்து வழியை மறைத்தது. அப்போது இம்மூவரும் மாயூரநாதரை வேண்டியபோது இறைவன் வேடனுருவில் இவர்களுக்கு வழிகாட்டிச் சென்றார். இத்தலம் மூவலூர் எனப்பெறும்.
தவிர, ஸப்த மாதாக்கள் தனித்தனியே வழிபட்ட ஏழு சிவலிங்கங்கள் இத்தலத்தைச் சுற்றி அமைந்துள்ளன. இச்செய்தியை மாயூரபுராணம், சத்தபுரப் படலத்தில் காணலாம்.
முத்தித்தலம்
இத்திருத்தலம் சிறந்த முத்தித் தலங்களுள் ஒன்றாக விளங்குகின்றது. இங்கு தேவர்கள், முனிவர்கள் மட்டுமல்லாமல் அஃறிணைகளான யானை, குதிரை, நரி, குரங்கு, கழுகு, கிளி என்பனவும் முத்தி பெற்றதாக மாயூரப் புராணம் கூறுகின்றது.
(ச. ந.)
திருமருகல்
சோழ நாட்டுத் திருத்தலங்களில் திருமருகலும் ஒன்று. திருவாரூர் மயிலாடுதுறை சாலையில் இத்தலம் அமைந்துள்ளது. மருகல் என்பது ஒரு வகை வாழை. இது கல்வாழை எனவும் சொல்லப்படுகிறது. இவ்வாழை மரத்தை தலமரமாகக் கொண்டதனால் இத்தலம் திருமருகல் எனப்பெயர் பெற்றது. கோச்செங்கட் சோழன் கட்டிய மாடக் கோயில்களுள் இதுவும் ஒன்றாகும்.
கோயில் ஐந்து நிலைகளுடைய இராஜகோபுரத்துடன் இன்று புதுப் பொலிவுடன் திகழ்கின்றது. வாயிலைக் கடந்து உட்செல்லும் போது கொடிமரம் பலிபீடம் நந்தி உள்ளன. இடப்பக்கம் மேடையுடன் வன்னி மரம் உள்ளது. இம்மரத்தினடியில் தான் திருஞானசம்பந்தர் விஷம் தீண்டி எழுப்புவித்த செட்டிப் பெண்ணுக்கும் காதலனுக்கும் திருமணம் செய்து வைத்ததாகச் சொல்லப்படுகிறது. படிகளேறி முன்மண்டபத்தை அடைந்தால் வலப்பக்கமாக அம்பாள் சந்நிதியும் சனிபகவான்சந்நிதியும் உள்ளன. மேலேறிச் செல்ல நேரே சோமாஸ்கந்தர் சந்நிதி
உள்ளது.
மூலமூர்த்தி சிவலிங்கத் திருமேனி, தானாக தோன்றிய சுயம்பு மூர்த்தி ஆகும். கிழக்கு நோக்கிய வண்ணம் எடுப்பான தோற்றத்துடன் சதுர ஆவுடையார் கொண்டு விளங்குகின்றார். இவர் மாணிக்கவண்ணர், ரத்னகிரீஸ்வரர் என அழைக்கப் படுகிறார். இறைவி வண்டுவார்குழலி, ஆமோதாளக நாயகி என்றழைக்கப்படுன்றார். தலமரமாக மருகல் என்ற ஒரு வகை வாழை மரமும் தீர்த்தங்களாக இலக்குமி தீர்த்தம், மாணிக்க தீர்த்தம் என்பனவும் விளங்குகின்றன.
110

உள்பிராகாரத்தில் அறுபத்து மூவர் மூலத்திருமேனிகளும் பராசரலிங்கம் விநாயர் சுப்பிரமணியர் முதலிய சந்நிதிகளும் உண்டு. நடராசசபையில் வாசலில் பதஞ்சலி வியாக்ரபாதர் உருவங்கள் வண்ணத்தில் எழுதப்பட்டுள்ளன. நவக்கிரக சந்நிதி, பைரவர், சூரியன் திருவுருவங்களும் ஒரே பீடத்தில் அமைந்துள்ள செட்டியார் பெண் திருமேனிகளும் பக்கத்தில் ஞானசம்பந்தர் திருவுருவமும் அமைக்கப்பட்டுள்ளன.
வெளிச் சுற்றில் சப்தமாதாக்கள், விநாயகர், செளந்தரநாயகி, மருகலுடையார் சந்நிதிகள் உள்ளன. கோஷ்ட மூர்த்தங்களாக கணபதியும் தட்சிணாமூர்த்தியும் லிங்கோற்பவரும் பிரமாவும் துர்க்கையும் உள்ளனர். அம்பாள் சந்நிதியில் குசகேது மன்னன் வரலாறும் ஞானசம்பந்தர் விடந்தீர்த்த வரலாறும் வண்ணத்தில் எழுதப்பட்டுள்ளது. அம்பாள் சந்நிதிக்கு எதிரில் உள்ள தெற்கு வீதியின் கோடியில் விடந்தீர்த்த விநாயகர் கோயில் உள்ளது. பக்கத்தில் உள்ள மடத்தில் வணிகனும் செட்டிப் பெண்னும் படுத்துறங்கிய இடம் எனச் சொல்லப்படுகிறது. இங்கு விஷம் தீர்ந்ததால் இங்குள்ள பிள்ளையார் “விடம் தீர்த்த பிள்ளையார்’ என்ற பெயருடன் விளங்குகின்றார். இன்றும் அவ்வீதியில் பாம்பைக் காண்பது அரிது என்றும் பாம்பு கடிப்பது இல்லை கடித்தாலும் யாரும் இறப்பதில்லை என்றும் சொல்லப்படுகிறது.
திருமருகலில் தினமும் ஐந்து காலப்பூசைகள் இடம் பெறுகின்றன. சித்திரையில் பெருவிழா இடம் பெறுகின்றது. இவ்வாலயத்தில் அப்பர் சம்பந்தர் ஆகிய இருவரும் பதிகம் பாடியுள்ளனர். சம்பந்தர் பாம்பு கடித்து இறந்த செட்டிமகனை "சடையாய் எனுமால் .” பதிகம் பாடி எழுப்பித்தருளிய தலம் இதுவாகும். இதை சேக்கிழாரின் திருத்தொண்டர் புராணத்தின் திருஞானசம்பந்தர் வரலாற்றில் மிகச் சிறப்பாகப் பாடியுள்ளார். இவ்வரலாற்றுச் சிற்பம் இராஜ கோபுரத்தில் இடம் பெற்றுள்ளது. (க, ஹே.)
திருமலாச்சாரியார்
இவரது காலப் பகுதி கி. பி. 1458 - 1548ஆம் ஆண்டுக் காலப் பகுதியாகும். இவர் ஆந்திர நாட்டில் தமிழக வைணவ சம்பிரதாயத்தை அறிமுகப்படுத்திய தாள்ளபாக்கம் அன்னமாச் சாரியாரின் புதல்வர் ஆவார். இவரது தந்தை கீர்த்தனை இலக்கியத்தின் முதல்வர் எனப்படுகின்றார். பழுத்த வேதாந்தியான இவர் வைணவ மதத்தைப் பரப்புவதில் சிறந்த பங்காற்றினார். இவர் மன்னர்களைப் பாடுவதை மறுத்தார். இதனால் பூரீ கிருஷ்ண தேவராயரால் ஆதரிக்கப்படவில்லை. ஆனால் மன்னர் அச்சுதராயரால் ஆதரிக்கப்பட்டார். மன்னர் இவருக்கு சாவனூர், மருவாக்காரை, பூண்டி, சங்கமக் கோலம் போன்ற பல கிராமங்களைத் தானமாக வழங்கினார். இவர் இவற்றையெல்லாம் திருப்பதி வெங்கடேசுவரருக்கு அர்ப்பணித்து விட்டார். சுவாமி புட்கரணியைப் பழுது பார்த்து படிக்கட்டுகள் கட்டி வைத்தார். மண்டபங்கள் கட்டுவித்தார். இவர் தமது தந்தையாரின்
இந்துக்கலைக்களஞ்சியம்

Page 141
கீர்த்தனங்கள் அனைத்தையும் செப்புத் தகடுகளில் செதுக்குவித்துப் பாதுகாக்கவும் அவற்றை திருப்பதி கோயிலில் அறைகட்டிப் பாதுகாக்கவும் ஏற்பாடு செய்தார்.
கிருஷ்ண தேவராயரின் மந்திரியாகிய திம்மரசுவின் உற்ற நண்பராக இவர் திகழ்ந்தார். சிறந்த கல்விமானாகவும், இசைக் கலை வித்தகராகவும் திகழ்ந்த இவர் தம் தந்தையைப் போலவே கீர்த்தனைகளும் காவியங்களும் கவிதைகளும் யாத்தார்.
இவரால் பல படைப்புக்கள் படைக்கப்பட்டன. சிருங்கார சங்கீர்த்தனைகள், பூரீவெங்கடேசர் மேல் அமைந்த அகத்திணைப் பாடல்கள், ஆன்மீகப் பாடல்கள், தத்துவச் சிறப்புடையன வான கவிதைகள், சிருங்கார தண்டகம், சக்ரவாள மஞ்சரி, சிருங்கார விருத்த சதகம், பூரீ வெங்கடேசோதாகரணம், நீதிச்சதகம், இரேபறகாரமுலு, பகவத்கீதை தெலுங்கு வசனம் போன்றன இவரால் படைக்கப்பட்டவையாகும். (தே.ஹ.)
திருமழபாடி
சோழநாட்டு வடகரைத் தலம். முற்காலத்தில் மழவர் என்னும் பிரிவினர் ஆண்டு வந்த பகுதியாதலால் மழவர்பாடி என்று பெயராகி பின் மருவி மழபாடி என்றாயிற்று எனப்படுகிறது. கொல்லி மழவன் என்பவன் இப்பகுதியை ஆண்டு வந்தபோது அவனுடைய படைகள் தங்கியிருந்த இடமாதலின் மழவர்பாடி (பாடி - படைகள் தங்குமிடம்) என்றாகிப் பின்பு மழபாடியாயிற்று. இத்தலத்தில் இறைவன் மார்க்கண்டேயருக்காக மழுவேந்தி நடனமாடினார். எனவே இத்தலம் மழபாடி எனப்பெயர் பெற்றது என்பது தலபுராணச் செய்தி.
திருமால் இந்திரன் ஆகியோர் வழிபட்ட தலம். நந்திதேவர் திருமணம் கொண்ட சிறப்புத் தலம். சுந்தரர் கனவில் இறைவன் தோன்றி மழபாடி வர மறந்தனையோ என்று உணர்த்திட அவர் சென்று வழிபட்ட தலம். திருமழபாடி சென்ற சுந்தரர்
“பொன்னார் மேனியனே புலித்தோலை அரைக்கசைத்து மின்னார் செஞ்சடை மேல் மிளிர் கொன்றை அணிந்தவனே மன்னே மாமனியே மழபாடியுள் மாணிக்கமே அன்னே உன்னையல்லால் இனியாரை நினைக்கேனே'
எனத் தொடங்கும் அருமையான பதிகம் பாடினார். இங்கு கொள்ளிடம் ஆறு வடக்கு நோக்கிப் பாய்வது சிறப்பானது.
புராணவரலாறு
ஒரு காலத்தில் பிரமன் வழிபட்டு வந்த இலிங்கத்தை புருஷா மிருகம் என்ற ரிஷி இத்தலத்தில் பிரதிட்டை செய்து விட்டார். இவ்விலிங்கத்தைத் தேடியலைந்த பிரமன் இத்தலமேகி இலிங்கத்தைப் பெயர்த்து மீண்டும் சத்திய லோகத்திற்கு எடுத்துச் செல்ல முயன்றான். அவனால் இயலவில்லை. வஜ்ஜிரத்தூணோ
இந்துக் கலைக்களஞ்சியம்

இவர் என வியந்து சென்றான் என்பது புராண வரலாறு. இதனால் வைரத் தூண் நாதர், வச்சிரதம்பேஸ்வரர் என்று இறைவனுக்குப் பெயர்கள் வந்தன. திருநாவுக்கரச நாயனார் தம் பதிகத்தில் “மழபாடி வைரத்தூணே” என்று பாடிப் போற்றுகிறார்.
நந்தியெம் பெருமானுக்கும் சுயப்பிரபை தேவியாருக்கும் திருமணம் நிகழ்ந்த தலம் திருமழபாடி, திருவையாறு ஐயாறப்பர் திருமழபாடிக்குச் சென்று நந்தியெம் பெருமானுக்குத் திருமணம் நிகழ்த்திப் பின்னர் நந்தியெம்பெருமான் சுயப்பிரமை தேவியாருடன் திருவையாற்றுக்குச் சென்று பின் சப்தத்தானத் தலங்களுக்கு எழுந்தருளுவார். திருமழபாடியில் நந்தியம் பெருமானின் திருமணவிழாவன்று ஒவ்வொரு வீட்டின் முன்பும் பந்தல் அமைத்து தோரணங்கள் கட்டி, கோலங்கள் வரைந்து தம் வீட்டிலுள்ள பெண்களுக்குத் திருமணம் நிகழ்வது போலக் கொண்டாடுவர். திருமழபாடி பெண்வீடு. இத்திருமணவிழாவிற்கு கோயில் அறங்காவலர்கள் அழைப்பிதழை அச்சடித்து திருமணத்தைக் கண்டு களிக்குமாறு அனைத்து ஊர்களுக்கும் அனுப்புவர். விழா மிகச் சிறப்பாகக் கொண்டாடப் படுகிறது. நந்திதேவர் சுயம்பிரபை தேவி திருமணத்தைக் கண்டு களிக்கத் திருமணமாகாத ஆண் பெண் இருபாலாருக்கும் விரைவில் திருமணம் நிகழும் என்று நம்பப்படுகிறது. இக்கலியாணம் பங்குனி மாதம் புனர்பூச நட்சத்திரத்தில் நடைபெறும்.
இறைவன் - வைத்தியநாத சுவாமி, வஜ்ஜிரதம்பேஸ்வரர்
இறைவி - பாலாம்பிக்கை தலமரம் - பனை தீர்த்தம் - இலக்குமி தீர்த்தம், கொள்ளிடம்
கோயில் பெரியது; கிழக்கு நோக்கியது. எதிரில் கொள்ளிடம். இராஜகோபுரம் ஏழு நிலைகளைக் கொண்டது. சுற்று மதில்களுடனும் மூன்று திருச்சுற்றுகளுடனும் காணப்படுகிறது. உள் நுழைந்ததும் கொடிமரம் பலிபீடம், நந்தி உள்ளன. இரண்டாங் கோபுரத்தைக் கடந்ததும் மிகப் பெரிய அலங்கார மண்டபம் உள்ளது. இங்கு இரு நந்திகள் உள்ளன. பிராகாரத்தின் தென்பகுதியில் விநாயகர், முருகன், அகோர வீரபத்திரர் உருவச் சிலைகள் உள்ளன. மூன்றாவது வாயிலைக் கடந்தால் மகாமண்டபம், அர்த்த மண்டபம் கருவறை ஆகியன உள்ளன. கருவறையும் சோமாஸ்கந்தர் கோயிலும் இணைந்து பெரிய கோயிலாகக் காட்சியளிக்கின்றன. கருவறையில் இறைவன் மழுவாபீசர் இலிங்கத் திருவுருவில் காட்சியளிக்கிறார்.
திருச்சுற்று திருமாளிகைப் பத்தி மண்டபங்களுடன் விளங்குகிறது. சுவர்கள் முழுவதும் கல்வெட்டுகள் காணப்படுகின்றன. முதற் பராந்தகன், முதலாம் இராசராசன், முதலாம் இராசேந்திரன், இரண்டாம் இராசேந்திரன், முதற்குலோத்துங்கன் மூன்றாம் குலோத்துங்கன், சடையவர்மன் சுந்தரபாண்டியன், ஒய்சளமன்னன் வீரசோமேசுவரன் ஆகியோரது கல்வெட்டுகள் உள்ளன. 10 முதல் 13 ஆம் நூற்றாண்டுவரை இவர்களால் இக்கோயில் பல பணிகளைப் பெற்றுள்ளது.
111

Page 142
திருச்சுற்று திருமாளிகைப்பத்தி மண்டபங்களுடன் விளங்குகிறது. இங்குள்ள ஒரே கல்லில் அமைந்த சோமாஸ்கந்தர் திருவுருவம் காண்பவர் கண்ணை ஈர்க்கும் உருவம். முருகன், திருமால் திருமகள், பரவை நாச்சியாருடன் சுந்தரர், துர்க்கை, ஜுரகரேச்வரர், சண்டிகேச்வரர் முதலான பல சந்நிதிகள் உள்ளன. வடபால் மீனாட்சி சுந்தரேஸ்வரர் சந்நிதி. மகாமண்டபத்தின் வடபுறம் காலசங்காரக் கடவுள் சந்நிதி. அடுத்து இத்தலத்தின் இரண்டாவது அம்பிகையான பாலாம்பிகையின் சந்நிதி உள்ளது. பிரதான அம்மன் சுந்தராம்பிகை சந்நிதி சுவாமிக்கு இடப்புறம் ஒரு தனிக் கோயிலாக அமைந்துள்ளது. பாலாம்பிகை சந்நிதியை அடுத்து நடராசர் சபை. இச்சபையில் உள்ள ஒவியங்கள் மிக அழகாகத் தீட்டப்பட்டுள்ளன. இக்கோயிலில் நவக்கிரகங்கள் இல்லை. சுவாமியின் திருமுன்பில் உள்ள மூன்று குழிகளையே நவக்கிரகங்களாக வழிபடுகின்றனர்.
"சந்தவார் குழலாளுமை தன்னொரு கூறுடை
எந்தையா னிமையாத முக்கண்ணினன் எம்பிரான் மைந்தன் வார் பொழில் சூழ் மழபாடி மருந்தினைச் சிந்தியா வெழுவார் வினையாயின தேயுமே” எனச் சம்பந்தர் பெருமானும்,
"ஆலாம் உண்டுகந்த ஆதி கண்டாய்
அடையவர்தம் புரமூன்றும் எய்தான் கண்டாய் காலாக் காலனையும் காய்ந்தான் கண்டாய்
கண்ணப்பர்க் கருள் செய்த காளை கண்டாய் பாலாரும் மொழிமடவாள் பாகன் கண்டாய்
பசுவேறிப் பலிதிரியும் பண்பன் கண்டாய் மாலாலும் அறிவரிய மைந்தன் கண்டாய் மழபாடி மன்னு மணாளன் தானே'
என அப்பர் பெருமானும்,
"கண்ணாய் ஏழுலகுங் கருத்தாய் அருத்தமுமாய்ப் பண்ணார் இன் தமிழாய்ப் பரமாய பரஞ்சுடரே மண்ணார் பூம்பொழில் சூழ் மழபாடியுள் மாணிக்கமே அண்ணா நின்னையல்லால் இனி யாரை நினைக்கேனே’
எனச் சுந்தரமூர்த்தி நாயனாரும் இத்தலத்தில் எழுந்தருளியிருக்கும் பெருமானைப் பாடிப் போற்றியுள்ளனர்.
(நி.நி.)
திருமழிசை
திருமழிசை என்பது வைணவ சமயத்தைப் பொறுத்தவரையில் மிகவும் முக்கிய பெயராக விளங்குகிறது. “திருமழிசை ஆழ்வார்” அவதரித்தது இப்பதியிலேயே ஆகும். சைவமும், வைணவமும் தழைத்தோங்கிய திருவூராக விளங்குகிறது. மலைத் தொடர்கள், ஒலிக்கும் கடல்கள், ஆறுகள் என்பனவற்றை அரணாகக் கொண்டு விளங்கும் தொண்டை நாட்டின்கண் அமைந்துள்ளது
112

இவ்வூர். இது செங்கல்பட்டு மாவட்டத்தில் பூரீ பெரும்பூதூர் வட்டத்தில் அமைந்துள்ளது.
திருமழிசை ஊரில் சிவனுக்கும், விஷ்ணுவுக்கும் ஆலயம் அமைந்துள்ளன. இவ்விரு ஆலயங்களும் தொன்மை வாய்ந்தன மட்டுமல்லாமல் ஒன்றுக் கொன்று அற்புதங்களை வெளிப்படுத்திய தலங்களாகவும் விளங்குகின்றன.
திருமழிசை என்றவுடன் ஞாபகம் வருவது விஷ்ணு ஆலயமாகும். இங்குள்ள விஷ்ணு ஆலயத்தை ஜெகந்நாதப் பெருமாள் ஆலயம் என அழைப்பர். திருமழிசை ஊரின் மத்தியில் அமைந்துள்ள இத்தலம் வைணவர்களின் புராணக் கதையுடன் தொடர்புற்ற தலமாக விளங்குகிறது.
ஜெகந்நாதப் பெருமாள் சேவை சாதிக்கும் தலம் மூன்றே உள்ளது. அந்த வகையில் வடநாட்டிலே பூரியில் உள்ளதை உத்தர ஜெகந்நாத தலம் என்றும் தென்பகுதியில் திருப்புல்லாணி தட்சண ஜெகந்நாத தலம் என்றும் இவ்விரண்டுக்கும் இடையில் உள்ள திருமழிசை மத்திய ஜெகந்நாதத் தலம் என்றும் கூறுவர் இவ்வாலயம் மகிசாசுரஷேத்திரம் என்றும் அழைக்கப்படும் சிறப்பு உடையது. மகிசாசுர ஷேத்திரம் என்பது மகிமை, சாரம், ஷேத்திரம் என்ற மூன்று சிறப்பியல்புகளும் இங்கு நிலைத்து இருப்பதால் இப்பெயர் பெறுகிறது.
இவ்வாலயம் 58 மீற்றர் நீளமும் 54 மீற்றர் அகலமும் கொண்டது. கிழக்கு நோக்கிய ஆலயமாக விளங்குகிறது. ஆலயத்தின் முகப்பில் 9 நிலை கொண்ட கோபுரம் 5 கலசங்களுடன் வானளாவ உயர்ந்து பக்தர்களுக்கு பக்தியை ஊட்டுவதாக உள்ளது.
கோபுரவாயிலைக் கடந்து உட்சென்றதும் கொடிமரம் பலிபீடம் ஆகியவற்றைக் கடந்து பிராகாரத்தை வலம் வந்தவாறு மூலவரின் கருவறையை அடையலாம். மூலவர் கருவறையில் கிழக்கு நோக்கியவாறு சேவை சாதிக்கிறார். வீற்றிருந்த கோலத்தில் ஒரு காலைக் கீழே தொங்கவிட்டவாறு அபய வரத கரங்களுடன் மகுடம் தாங்கி, கவசங்கள் ஆடை அணிகள் புனைந்து சத்தியபாமா, ருக்குமணி சமேதராகக் காட்சி தருகிறார். இவர்களுக்கு அருகில் பிருகு, மார்க்கண்டேயமுனிவர்கள் தொழுதவாறு காட்சி தருகின்றனர்.
கருவறையை அடுத்து முன்மண்டபம், அர்த்த மண்டபம் உள்ளன. மூலவரின் சந்நிதிக்கு எதிரே கருடாழ்வார் மேற்கு நோக்கியவாறு காட்சி அளிக்கின்றார். மூலவரின் கருவறைக்கு செல்வதாயின் தெற்கு வாயில் வழியாகச் செல்ல வேண்டும். இங்கே வெளிப்புறச் சுவரில் வைணவ ஆலயங்களில் காண்பதற்கு அரிதாக விளங்கும் விநாயகர் திருவுருவச் சிலை அமைந்துள்ளது சிறப்பாகக் குறிப்பிடப்பட வேண்டிய விடயமாகும். உற்சவ மூர்த்திகளாக பூரீதேவி, பூதேவி, திருமழிசையாழ்வார், இராமானுசர் முதலானோர்களின் திருமேனிகள் உள்ளன.
இந்துக் கலைக்களஞ்சியம்

Page 143
பலிபீடம், கொடிமரம் என்பவற்றினை வலம் வரும் போது திருமங்கை வல்லித் தாயாரைத் தரிசிக்கலாம். இவருக்கு தனிக்கோயில் உண்டு. முன்மண்டபம், அர்த்த மண்டபம் என்பவற்றுடன் கூடியதாக அமைந்துள்ள இவ் ஆலயத்தில் அம்மை அமர்ந்த திருக்கோலத்தில் இருந்து அருள் பாலிக்கின்றாள்.
இவ்வாலயம் பற்றிய தல வரலாறு சிறப்பானது ஆகும். பிருகு, அத்திரி, வசிஷ்டர் முதலான முனிவர்கள் நான்முகனை அணுகி உலகிலே சிறந்த விஷ்ணு ஷேத்திரம் எது என்று கேட்ட போது நான்முகன் தேவசிற்பியை அழைத்து ஒரு துலாக்கோலை எடுத்து வரச் செய்து ஒரு தட்டில் திருமழிசையையும் மற்றை தட்டில் பிற வைணவத் தலங்களையும் நிறுத்தச் செய்து காட்டிய போது திருமழிசை இருந்த தட்டு அதிக கனத்தால் கீழே தாழ்ந்தது என்றும் இதன் மூலம் பிரம்மன் இப்பதியின் புனிதத் தன்மையை நிறுவினார் என்றும் கூறுவர். இந்த வரலாற்றை சிறப்பிக்கும் வகையில் நான்முகன் துலாக் கோலை ஏந்தியவாறு சிற்ப வடிவில்
காட்சி அளிக்கிறார்.
ஜெகந்நாதப் பெருமாளாக இறைவன் காட்சி கொடுத்த வரலாறு சிறப்பானதாகும். பிருகு, மார்க்கண்டேயர் ஆகிய இருவரும் திருமாலைத் தரிசனம் செய்ய எண்ணம் கொண்டு பன்னிரெண்டு ஆண்டுகள் தவம் புரிவதாக விரதம் கொண்டனர். எனினும் அவர்களின் தவம் 6 ஆண்டுகள் மட்டுமே கைகூடியது. இதற்குப் பலனாக பூரி என்ற தலத்தில் திருமால் பாதியளவு திருமேனியுடன் ஜெகந்நாதனாகக் காட்சி அளித்தார். பரந்தாமனின் முழுமையான திவ்விய காட்சியை காண வேண்டுமாயின் திருமழிசை சென்று அத்தலத்தில் தவமியற்றுமாறு அவர்களுக்கு திருமால் திருவாய் மலர்ந்தருள, அவர்களும் இறைவனின் திவ்விய காட்சியை காண வேண்டும் என்ற அவாவில் திருமழிசை சென்று தவம் இயற்றினர். அவர்களின் பக்தியை மெச்சிய திருமால் இப்பதியிலேயே ஜெகந்நாதப் பெருமாளாக முழு உருவத்துடன் காட்சியளித்தார். இதனாலேயே இத்தலம் ஜெகந்நாதத் தலமாக அழைக்கப்படுகிறது.
இவ்வாலயத்தில் நாள்தோறும் நான்கு கால வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன. இங்கே ஆனி மாதத்தில் பிரம்ம உற்சவமும் தெப்பத் திருவிழாவும் விமரிசையாகக் கொண்டப்பட்டு வருகின்றன. இதைவிட திருமழிசை ஆழ்வார் உற்சவம் இராமநவமி, ஆடிப்பூரம், நவராத்திரி வைகுண்ட ஏகாதசி ஆகிய விழாக்கள் சிறப்பாக இடம்பெற்று வரும் விழாக்கள் ஆகும்.
இவ்வாலயம் பற்றிய கல்வெட்டுகள் பல உள்ளன. 15ஆம் நூற்றாண்டு வரை பொறிக்கப்பட்ட பதின்னான்கு கல்வெட்டுக்கள்
படியெடுக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.
இந்துக் கலைக்களஞ்சியம்

இவ்வாலயத்திற்கு 1599 ஏக்கர் நன்னிலமும், 779 ஏக்கர் தரிசு நிலமும், ஒரு கிணறு, 2 குட்டைகள், 130 வீடுகள்
சென்னையில் ஒரு கட்டடம் என்பன சொந்தமாக உள்ளன.
பன்னிரு ஆழ்வார்களில் திருமழிசை யாழ்வார் அவதரித்த திருவூராக இவ்வூர் விளங்குகிறது. ஆனால் திருமழிசை ஆழ்வாரின் பாசுரங்களோ அல்லது ஏனைய ஆழ்வாரின் பாசுரங்களோ ஜெகந்நாத பெருமாள் ஆலயத்தின் மீது இருப்பதாக இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.
ஜெகந்நாதப் பெருமாள் ஆலயத்தை அடுத்து திருமழிசையில் அமைந்துள்ள மற்றைய ஆலயம் ஒத்தாண்டேச்சுவரர் திருக்கோயிலாகும் இக்கோயில் சுமார் இரண்டு ஏக்கர் நிலப்பரப்பளவில் தெற்கு நோக்கிய இராஜகோபுரத்துடன் அமைந்துள்ள சிவாலயமாகும்.
கருங்கல்லிலாலான தளவரிசை உள்மண்டபங்கள் என பலவும் உள்ளடங்கியதாக உள்ளது. இவ்வாலயம் அர்த்த மண்டபம், மகா மண்டபம் என்பவற்றை உள்ளடக்கியதுடன் கல்யாண மண்டபம் ஒன்றையும் கொண்டு விளங்குகிறது.
இங்கு மூலமூர்த்தியாக விளங்குவது சிவனின் சதாசிவ ரூபமான இலிங்கமாகும். இவ்லிங்கம் சுயம்பு ஆக தோன்றியது என்பது ஐதீகமாகும். இங்குள்ள இறைவனை அணுகுலேச்சுவரர் அல்லது ஒத்தாண்டேஸ்வரர் என அழைப்பர். இங்குள்ள இறைவன் கிழக்கு நோக்கி அமர்ந்துள்ளார். சுவாமி சந்நிதிக்கு முன்பாக கொடிமரம், பலிபீடம், நந்தி என்பன அமைந்துள்ளன. முன் மண்டபத்தில் விநாயகர் சந்நிதியுள்ளது.
அர்த்த மண்டபத்திற்கு முன்புறம் சோமாஸ்கந்தர் சந்நிதி அமைந்துள்ளது. மகா மண்டபத்தில் ரிஷப நாயகர், நடராஜர், அம்மன் ஆகிய தெய்வங்களின் சந்நிதிகள் அமைந்துள்ளன. நடராஜர் தாமரை பீடத்தில் காட்சி தர அன்னை சிவகாமியும், மாணிக்கவாசகர், காரைக்கால் அம்மையார் ஆகியோரும் திருவுருவங்களாக அருகில் உள்ளர்.
இங்குள்ள இறைவியை குளிர்ந்த நாயகி என்றும், சீதளாம்பாள் என்றும் அழைப்பர். சீதளம் என்றால் குளிர்மை என்பது பொருள். குளிர்ந்த நாயகி அம்பாள் நான்கு திருக்கரங்களுடன் நின்ற திருக்கோலத்தில் காட்சி தருகின்றார். நடராஜப் பெருமாள், ரிஷப நாயகர், குளிர்ந்த நாயகி அம்மாள் ஆகிய மூன்று திருவுருவங்களும் தெற்கு நோக்கியவாறு அமைந்துள்ளன.
இவ்வாலயம் ஒரு பிராகாரத்தை உடையது ஆகும். இது திறந்த வெளியாக அமைந்துள்ளது. வடபுறத்திலே கங்காதீஸ்வரர், சுப்பிரமணியர் கோயில்களும். கீழ்ப் பகுதியில்
113

Page 144
வாகன மண்டபமும் அமைந்துள்ளதுடன் நவக்கிரகம் தென்கிழக்கு பகுதியில் அமைந்துள்ளது. இவ் ஆலயத்தின் சிறப்பான அமைப்பே நவக்கிரக அமைப்பாகும். சாதாரணமாக ஆலயங்களில் நவக்கிரக பிரதிஷ்டை தென்கிழக்கு பகுதியில் இருப்பதே வழக்கமாகும். ஆனால் இவ்வாலயத்தில் புதுமையாக, வழக்கத்திற்கு மாறாராக வடகிழக்கு பகுதியில் அமைக்கப் பட்டுள்ளது என்பது சிறப்பான ஒன்றாகும்.
இவ்வாலயம் பற்றிய தல வரலாறு ஒன்று உள்ளது. சோழ அரசன் கரிகாற்பெருவளவன் யானைமீது அமர்ந்து இத்தலத்தில் செல்கையில் ஊணங்கொடி யானையின் கால்களைப் பற்றிக் கொள்ள அதனைக்கண்ட அரசன் தன் வாளால் கொடியை வெட்டிய போது அடியில் இருந்த இலிங்கத்தின்மீது பட்டு இரத்தம் கசியக் கண்டு அரசன் தன் கையை வெட்டிக் கொண்டான். அதைக் கண்ட இறைவன் அம்மன்னனுக்கு மீண்டும் கைகளைத் தந்து காட்சியளித்தார். இதனால் இத்தல இறைவனுக்கு கை தந்தபிரான் என்னும் பெயரும் வழங்கப்பட்டு வருகிறது. அது மட்டுமன்றி இங்குள்ள மூலஸ்தானத்து லிங்கம் இன்றும் வெட்டுக் காயத்துடனேயே இருப்பதைக் காணக்கூடியதாக உள்ளது.
இதனை இங்கு பூஜை செய்யும் பூசகர்கள் உறுதிபடுத்தியுள்ளனர்.
இவ்வாலயத்தின் தீர்த்தம், திருக்குளம் 6T60T அழைக்கப்படுகிறது. இவ்வாலயம் தூங்கானை மாடமாக அமைந்து விளங்குகிறது.
காலை, மாலை ஆகிய இருவேளை பூஜைகள் இடம்பெற்று வருகின்றன. சதுர்தசி தோறும் சிறப்பு வழிபாடும், பங்குனி உத்தரப் பெருவிழாவும், கந்த சஷ்டி, ஆருத்ரா தரிசனம் என்பனவும் சிறப்பாக இடம் பெற்று வரும் விழாக்களாக உள்ளன.
இவ்வாலயம் மிகப் பழமை வாய்ந்த ஆலயமாகும். சோழர் காலத்து ஆலயமாக விளங்கும் இவ்வாலயத்தை, முதன் முதலாக சோழப் பேரரசன் இரண்டாம் குலோத்துங்கன் எழுப்பினான் என்கிறது வரலாறு.
இந்துசமயத்தின் சைவம், வைணவம் என்ற இரு பெரும் பிரிவின் திருக்கோயில்களைக் கொண்டு விளங்குவது திருமழிசையாழ்வார் அவதரித்த பூமியாகும். (a .6.f.)
O O திருமழிசையாழ்வார்
புலவர் பாடும் புகழமைந்தது தொண்டை நன்நாடு. இந்நாட்டில் கடலுக்கு மேற்காகவும் காஞ்சித் திருநகருக்கு கிழக்காகவும் உள்ள திருப்பதி திருமழிசை மாதவமுனிவர்கள் இங்கு வந்து தவமியற்றி உய்வு பெறும் மேம்பாடு கொண்டது இத்தலம்.
114

திருமழிசைப்பதியில் முன்பொருகால் பார்கவர் என்னும் பெயருடைய முனிவர் கடுந்தவம் செய்து வந்தார். இம் முனிவருக்கும் கனகாங்கி எனப்படும் தேவமானுக்கும் திருமாலின் திருவருளால் தெய்வக் குழந்தையொன்று அவதரித்தது. இக்குழந்தை திருமாலின் சக்கரத்தில் விளங்கும் சுதர்சனம் என்னும் சக்கரத்தின் அம்சமாகத் தோன்றியது. துவாபரயுகம் தைமாதம் மக நட்சத்திரத்தில் அவதரித்த இக் குழந்தைக்கு உறுப்புக்கள் காணப்படவில்லை. வெறும் பிண்டமாகவே காட்சியளித்தது. எனவே இக்குழந்தையின் பெற்றோர் தங்கட்கு பிறந்த பிண்டத்தை அங்கிருந்த பிரப்பம் புதர் ஒன்றில் எறிந்து விட்டுப் போய்விட்டனர். பெற்றோர் சென்று சிறிது நேரம் கழித்து குழந்தை வாய்விட்டு அழத்தொடங்கியது.
குந்தையின் அழுகையொலியைக் கேட்டுத் திருமழிசையில் எழுந்தருளியுள்ள ஜகத்நாத பெருமானும், பிராட்டியும் குழந்தை இருக்குமிடத்துக்கு எழுந்தருளினர். குழந்தைக்கு தரிசனம் தந்துவிட்டு இருவரும் மறைந்தருளினர். பெருமானும் பிராட்டியும் மறைந்துவிட்டதைக் கண்ட குழந்தை பெரிதும் அழத்தொடங்கியது. அப்பொழுது திருவாளன் என்னும் வேளாளன் ஒருவன் அவ்வழியே சென்று கொண்டிருந்தான். குழந்தை அழுகையொலி வேளாளனின் செவியில் வீழ்ந்து அருகில் சென்று பார்த்தான். குழந்தையின் அழகில் மயங்கி அள்ளி எடுத்துக் கொண்டு வீடு விரைந்து தன் மனைவியிடம் அக்குழந்தையைக் கொடுத்தான்.
“பிள்ளைப் பேறு அற்ற நமக்கு இறைவன் தந்த பரிசு” எனக் கூறிய வண்ணம் அவ்வேளாளனின் மனைவியும் குழந்தையை மகிழ்ச்சியுடன் வளர்த்தாள். ஆனால் குழந்தையோ பால் உண்ண மறுத்துவிட்டது. பால் உண்ணாமலே ஒளியுடன் வளர்ந்து வரும் குழந்தையின் தெய்வத் தன்மையை அவ்வூரில் உள்ளோர் அனைவரும் வியந்து போற்றினர். அவ்வூரில் வாழ்ந்து வந்த வேளாளக் கிழவன் ஒருவன் தன் மனைவியை அழைத்துக் கொண்டு அக்குழந்தையைக் காண அங்கு வந்து சேர்ந்தனன். அன்புடன் தான் கொண்டு வந்த பாலை உண்டு அருள் புரியுமாறு அக்குழந்தையை வேண்டிக் கொண்டனன். வேளாளக் கிழவனின் அன்புக்குட்பட்டு அவன் கொண்டு வந்த பாலைக் குழந்தை உண்டு மகிழ்ச்சி தந்தது. நாள்தோறும் தவறாமல் பால் கொண்டு வரும் வேளாளனின் அன்பை அத்தெய்வக் குழந்தை ஏற்றுக்கொண்டது.
ஒருநாள் இவர் தான் பருகி மிகுந்த பாலை அவ் வேளாளனிடம் கொடுத்தார். நீங்கள் உண்ணுங்கள் என்று கூறினார். அவ்வேளாளனும் மனைவியும் அப்பாலைப் பருக அவர்கள் கிழப்பருவம் நீங்கி இளமைப்பருவம் பெற்றனர். அவர்களுக்கு இவரின் அருளால் ஆண்மகவு ஒன்று பிறந்தது. இக்குழந்தையே இவரது அருட்பார்வையால் பின்னர் கணிகண்ணன் என்னும் சீடராயினார். ஆறு தரிசனம், புத்தம்
இந்துக் கலைக்களஞ்சியம்

Page 145
சமணம், சைவம் முதலிய சமயக் கொள்கைகளை கற்றுத் தெளிந்து வைணவத்தினதும் சிறப்பை திருமழிசையாழ்வார் நிலை நிறுத்தினார். யோகம், பக்தி நெறி, என்னும் இரு நெறிகளை இவர் பின்பற்றினார். இவர் காலத்தவராகக் கருதப்பெறும் பொய்கையாழ்வார் இவருக்கு யோக நெறியைப் புகட்டியதாகவும் அதனால் இவர் பன்னூறு ஆண்டுகள் யோகத்தில் இருந்ததாகவும் திவ்விய சூரி சரிதம் கூறும். இவரைத் திருமூலரோடு ஒப்பிடுவர்.
இவர் சிவபெருமானால், “பக்திசாரர்” என்னும் நாமம் சூட்டப்பட்டவர். இவர்பால் திருமாலுக்கு இருந்த ஈடுபாட்டையும், அரசனைச் துச்சமெனக் கருதும் இவர்தம் வைராக்கிய உள்ளத்தையும் புலப்படுத்தவல்ல நிகழ்ச்சியொன்று இவர் வாழ்வில் நிகழ்ந்ததாக இவர் பற்றிய வரலாறு கூறுகிறது.
திருமழிசையாழ்வார் பாடியவை இரு பிரபந்தங்கள். அவை நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தில் அமைந்துள்ள திருச்சந்த விருத்தம், நான்முகன் திருவந்தாதி என்பன. திருச்சந்த விருத்தம் 120 சந்தக்கலி விருத்தத்தில் அமைந்துள்ளது. இதில் சித்தர்கள் பாடிய போக்கு காணப்படுகிறது. இவரது யோகத் தெளிவைப் புலப்படுத்த வல்லது இந்தப் பிரபந்தம். இவர்தம் திருச்சந்த விருத்தப் பாடல் திருமால் இவர் உள்ளத்தில் புகுந்து பரவிய யோக நிலையை உணர்த்த வல்லது. அப்படியே நான்முகன் திருவந்தாதி இவர்தம் பக்திச் சிறப்பைப் புலப்படுத்த வல்லது. 100 வெண்பாக்களால் அமைந்தது. பக்தி உழவன் என்ற புதியதொரு சொல்லாட்சியை இந்நூலில் தந்துள்ளார் ஆழ்வார்.
திருக்குடந்தை எம்பெருமானிடத்து இவர் ஆர்வத்தினர். இத்தகு ஆர்வத்திற்கு ஆளான ஆராவமுதன் காத்து தலைமை பூண்டதால் தனக்கே உரித்தான பிரான் என்னும் பட்டத்தை இவருக்கு அளித்து அவர்பால் அன்பின் ஆழத்தால் அமைந்த ஆழவார் என்னும் பட்டத்தை தான் பெற்றுக் கொண்டார். அதனால் ஆராவமுது ஆழ்வான் என்னும் திருக்குடந்தை திருமாளிகையில் குடி கொண்டிருக்கும் திருமாலின் பெயராகவும் திருமழிசைப் பிரான் என்பது இவர்தம் பெயராக அமைந்தது.
(தே.ஹ.)
O ܒ திருமறைக் காடு
சோழ நாட்டுத் தென் கரைத் தலம் தற்போது வேதாரண்யம் என்று வழங்குகிறது. வங்கக் கடற்கரை ஓரமாக அமைந்துள்ள இத்தலத்தில் மணலெல்லாம் சிவலிங்கங்களாகவும் நீரெல்லாம் தீர்த்தங்களாகவும் கருதப்படுகின்றன. முசுகுந்தச் சோழ சக்கரவர்த்தி தாம் இந்திரனிடமிருந்து பெற்ற ஏழு மரகத விடங்கர்களுள் ஒன்றான புவனி விடங்கரை இத் தலத்தில் பிரதிஷ்டை செய்து வழிபட்டார் என்று கூறப்படுகிறது.
இந்துக் கலைக்களஞ்சியம்

திருவிளையாடற் புராணம் இயற்றிய பரஞ்சோதி முனிவரும் தாயுமான அடிகளும் இத்தலத்தில் அவதரித்தனர். வேதங்கள் வழிப்பட்ட தலம் மறைவனம், வேதவனம், சத்யகிரி, ஆதிசேது. தென்கயிலாயம் என்பன வேறு பெயர்கள். ஏழு திருமுறைகளிலும் இடம்பெற்ற சிறப்புடைய தலம். சப்த விடங்கத் தலங்களுள் ஒன்று.
புராண வரலாறு
மறை என்றால் வேதம், ஆரண்யம் என்றால் காடு. ஒரு காலத்தில் ( மறைகள்) இத் திருக்கோயிலில் சிவபெருமானை வழிபட்டுப் பின்னர் திருக்கதவுகளை மூடிவிட்டுச் சென்றன. சிவபூசை செய்ய வந்த சிவாச்சாரியார்கள் திருக்கதவைத் திறக்க முயன்றபோது அவர்களால் அது இயலவில்லை. பின்னர் திருஞான சம்பந்தரும் அப்பர் பெருமானும் இத் திருத்தலமேகிய போது அப்பர் பெருமான் பதிகம் பாடி திருக்கதவைத் திறக்கச் செய்தார். ஆளுடைய பிள்ளையார் பதிகம் பாடி திருக்கதவை மூடச் செய்தார். அதன் பிறகு அக்கதவுகள் மூடவும், திறக்கவும் உள்ள இயல்பினைப் பெற்றன. சுந்தரமூர்த்தி சுவாமிகளும் சேரமான் பெருமான் நாயனாரும் இத் தலமேகி வழிபட்டனர். இங்குள்ள தீர்த்தங்களுள் வேத தீர்த்தம் என வழங்கப்படும் கடல்நீரில் நீராடுவது சிறப்பு. கோயிலினுள் உள்ளபெரிய தீர்த்தக் குளம் மிகப்புனிதமாக உள்ளது. இராமபிரான் இத் தலமேகி வீரஹத்தி விநாயகரை வழிபட்டுத் தமது வீரஹத்தித் தோஷத்தில் இருந்து விடுபட்டார் என்று கூறப்படுகிறது. சிவபெருமான் இத் தலத்தில் அகத்திய முனிவருக்குத் தன் மணவாளக் கோலத்தைக் காட்டியருளினார். விளக்கைத் தூண்டிய எலியை மாவலியாகப் பிறக்குமாறு அருள் செய்த இறைவன் எழுந்தருளியுள்ள பதி. வேதாரண்யம் விளக்கழகு, என்பது பழ மொழி. அகத்தியர், முசுகுந்தன், கெளதமர், விஸ்வாமித்திரர், வசிட்டர், நாரதர், பிரமர் முதலியோர் வழிபட்டதலம்.
கோயில் இறைவன் - வேதாரண்யேஸ்வரர், திருமறைக்காட்டீசர் இறைவி - யாழைப் பழித்த மென்மொழியாள், வேதநாயகி தலமரம் - வன்னி
தீர்த்தம் - வங்கக்கடல், கோயிலினுள் உள்ள பெரிய
தீர்த்தக்குளம்.
கோயில் நீண்ட மதிற் சுவர்களையுடையது. கிழக்கு,மேற்குத் திசைகளில் இரு இராஜ கோபுரங்கள் உள்ளன. இராஜ கோபுரங்கள் ஐந்து நிலைகளுடன் அமைந்துள்ளன. இரு திருச்சுற்றுக்கள் உள்ளன. இறைவன், இறைவி இருவருக்கும் தனித் தனியாக இரு கோயில்களும் உட்கோயில்களும் மண்டபங்களும் நிறைந்துள்ளன. கிழக்குக் கோபுர வாயில் வழியே உட்சென்றதும் கொடிமரம், பலிபீடம், நந்தி, பிள்ளையார் மண்டபம், தலமரமான வன்னி ஆகியன உள்ளன. இம்மரத்தின் அடியில் எண்ணற்ற நாகப்பிரதிட்டைகள். எதிரில்
115

Page 146
தீர்த்தமுள்ளது.வெளித் திருச்சுற்றில் பல உட் கோயில்களும் மண்டபங்களும் உள்ளன. மேற்குக் கோபுர வாயிலின் அருகில் வீரஹத்தி விநாயகர், குமரப் பெருமாள் சந்நிதிகளும் திருச்சுற்றில் தேவர்கள், முனிவர்கள், சப்தமாதர்களும் பூஜித்த பல
இலிங்கங்களும் உள்ளன.
இரண்டாம் கோபுர வாயிலைக் கடந்ததும் பெரியமுன் மண்டபம் உள்ளது. மகாமண்டபம், அர்த்த மண்டபம், இவற்றைக் கடந்ததும் மூலவரின் கருவறை. வேதாரண்யேல்வரர் இலிங்கத் திருமேனியில் காட்சி தருகிறார். அவருக்குப் பின்புறம் சிவன், பார்வதி, திருமணக் கோலச் சிற்பம் சந்தனக் காப்புடன் திகழ்கிறது. ஆண்டுக் கொருமுறை பழைய சந்தனக் காப்பு நீக்கி புதிய காப்பிடுவர். கருவறை வாயிலிலிருந்து முன் மண்டபம் வரை பித்தளையாலான திருவாசிகள் உள்ளன.
தென்புறம் தியாகராசர் சந்நிதியுள்ளது. அருகில் உள்ள புவனி விடங்கருக்கு (மரகதலிங்கம்) காலை, மாலை இரு வேளைகளிலும் அபிஷேகம் நடைபெறும். அர்த்த மண்டபத்தின் வட கீழ்ப் புறம் சம்பந்தர், அப்பர் பதிகம் பாடிய திருகதவுகள் உள்ள திருவாயில் உள்ளது. வாயிலின் தென்புறம் அவர்களின் திருவுருவச் சிலைகள் உள்ளன. உட்திருச்சுற்றில் அறுபத்து மூவர், தொகையடியார்கள் திருவுருவச் சிலைகள் உள்ளன.
அவர்களுடைய வரலாறு ஒவியங்களாகத் தீட்டப்பட்டுள்ளது.
தட்சிணாமூர்த்தி, வேதவிநாயகர், தேவியருடன் முருகன், கஜலட்சுமி, அவர் சந்நிதியிலேயே சனீஸ்வரர், வீணையின்றிக் கலைமகள், சண்டிகேஸ்வரர், நடராசர் சந்நிதிகளும் அடுத்து இத்தலத்தின் புகழ் பெற்ற துர்க்கையம்மன் சந்நிதியும் உள்ளன.அம்மன் தெற்கு நோக்கி எழுந்தருளியுள்ளார். இவர் பிரார்த்தனைத் தெய்வம். வெள்ளிக் கிழமைகளில் இவர் சந்நிதியில் மக்கள் கூட்டம் பெருகிக் காணப்படும். அடுத்து ஒரே நேர் கோட்டில் அமைந்த நவக்கிரகங்களின் சந்நிதி. இத்தலம் கோளிலித் தலங்களில் ஒன்றாதலின் நவக்கிரகங்கள் வரிசையாகவுள்ளன. பள்ளியறையை அடுத்துப் பைரவர், சூரிய
சந்திரர்கள் சந்நிதிகள்.
வெளித்திருச்சுற்றில் சுவாமிக்கு இடப்பக்கம் அன்னை வேதநாயகியின் தனிக் கோயில் உள்ளது. அம்மன் நின்ற திருக் கோலத்தில் காட்சியளிக்கிறார். அருகில் ஆடிப்பூர அம்மனின் சந்நிதி உள்ளது. சந்நிதி மிக அழகுடன் விளங்குகிறது. வேத நாயகி அம்மனுக்கும், கலைமகளுக்கும் நிகழ்த ஒரு போட்டியில் கலைமகளின் வீணையின் நாதத்தைக் காட்டிலும் அம்மையின் குரல் இனிமையாக இருந்ததால் அம்மன் வெற்றி பெற்றார். அதனால் அம்மை யாழைப் பழித்த மென்மொழியம்மை என அழைக்கப் படுகிறார். கலைமகள் வீணையின்றிக் காட்சியளிக்கிறார்.
16

இக்கோயில் ஒரு பிரார்த்தனைத் தலம். நாளும் மக்கள் கூட்டம் நிரம்பிக் காணப்படும். நாள்தோறும் ஆறுகால வழிபாடுகள். மாசியில் பெருவிழா 18 நாட்கள். மற்றும் சிவன் பார்வதி இருவருக்கும் உகந்த அனைத்து நாட்களிலும் சிறப்பு வழிபாடுகள் இடம் பெறுகின்றன. வீதியுலாவில் தியாகேசர் புறப்படாத நாட்களில் சந்திரசேகரரே எழுந்தருளுகிறார். தியாகேசருக்குப் பதிலாக இவருக்குப் பட்டம் என்பர். “பட்டம் கட்டிய சென்னிப்பரமர்' என்பது தேவாரம். இக்கோயிலில் 92 கல்வெட்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இவை சோழர் காலத்துக்குரியவை. கல்வெட்டு இறைவனை வேதவனமுடையார் என்று குறிப்பிடுகிறது. யாழ்ப்பாணத்து நல்லூர்ச் சின்னத்தம்பிப் புலவர் இத்தலத்துப் பெருமான் மீது அந்தாதி பாடியுள்ளார்.
"குரவம் குருக்கத்திகள் புன்னைகள் ஞாழல் மருவும் பொழில் சூழ் மறைக்காட்டுறை மைந்தா சிரமும் மலருந் திகழ் செஞ்சடை தன் மேல் அரவம் மதியோ டடைவித்தவழகே’
என ஞானசம்பந்தரும்,
"விண்ணினார் விண்ணின்மிக்கார் வேதங்கள் விரும்பியோதப் பண்ணினார் கின்னரங்கள் பக்தர்கள் பாடியாடக் கண்ணினார் கண்ணினுள்ளே சோதியாய் நின்ற எந்தை
மண்ணினார் வலங்கொண்டேத்து மாமறைக் காடனாரே'
எனஅப்பர் பெருமானும்,
'யாழைப் பழித்தன்ன மொழிமங்கை யொரு பங்கன்
பேழைச் சடைமுடிமேல் பிறை வைத்தானிடம் பேணில் தாழைப் பொழிலூடே சென்று பூழைத்தலை நுழைத்து வாழைக் கனி கூழைக் குரங்குண்ணும் மறைக்காடே"
எனச் சுந்தரர் பெருமானும் இத்தலச் சிறப்பினைப் பாடியுள்ளனர்.
(நி. நி.)
O
திருமாகறல்
காஞ்சிபுரத்திற்கருகில் உள்ள தொண்டை நாட்டுத் தலம். புராண காலத்தில் பிரமன், அகத்தியர், இந்திரன், சந்திரன் ஆகிய தேவர்களும் மாகறன், மலையன் என்னும் இரு அசுரர்களும் வழிபட்ட தலம். திருஞானசம்பந்தராற் பாடப்பெற்றது. அவரது பதிகத்தில் இத்தலத்தின் இயற்கை வனப்பினையும் இறைவனின் மாண்பையும் எடுத்துக் கூறி இத்தலத்து இறைவனை வழிபட்டோர் தொல்வினைகள் ஒழியப்பெற்று நன்மைகளை எய்துவர் என்று கூறுகின்றார்.
இராசேந்திர சோழமன்னனுக்கு நாடொறும் இங்குள்ள கோயிலிலிருந்து பலாப்பழம் ஒன்று அனுப்பப்பட்டு அது
இந்துக் கலைக்களஞ்சியம்

Page 147
தில்லையில் நடராசப் பெருமானுக்கு நிவேதிக்கப்பட்டு பின்பு மன்னனுக்குப் பிரசாதமாகத் தரப்பட்டு வந்தது. நாட் செல்ல இக்கோயிலில் பணிபுரிந்தோர் இம்மரத்தைத் தீயிட்டு அழித்து விட்டனர். பலாப்பழம் வராதது கண்ட மன்னன் செய்தி அறிந்து சினம் கொண்டான் எனினும் கோயில் பணியாட்களைத் தண்டிக்கலாகாது எனக் கருதி அவர்கள் அனைவரையும் இரவோடிரவாக ஊரை விட்டு அழைத்துச் சென்று மறுநாள் பொழுது விடியும் இடத்தில் விட்டுவிட்டு வருமாறு பணித்தான். அவ்வாறே அவர்கள் அழைத்துச் செல்லப்பட்டு விடப்பட்டனர்.
இவ்வூர் 'விடிமாகறல் என்று அழைக்கப்படுகிறது.
இராஜேந்திர சோழனுக்கு இறைவன் பொன் உடும்பாகத் தோன்றி அவன் துரத்த புற்றில் ஒடி ஒளிந்து பின் சிவலிங்க வடிவமாக வெளிப்பட்ட தலம். சிவலிங்கத் திருமேனி உடும்புபோல் சிறுத்துள்ளது. இறைவன் சுயம்பு, ஆவுடையார் கட்டப்பட்டது.
இத்தலம் தொடர்பான செவிவழிக் கதை இது.
இறைவன் - திருமாகறலீசர், உடும்பீசர், புற்றிடங்கொண்டார்
எனப் பன்னிரு திருப்பெயர்கள்.
இறைவி - திரிபுவனநாயகி, புவனநாயகி முதலான ஐந்து
பெயர்கள்.
தலமரம் - எலுமிச்சை
தீர்த்தம் - எண்திசைகளிலும் அமைந்துள்ள இந்திர தீர்த்தம், அக்கினி தீர்த்தம் முதலான எட்டுத் தீர்த்தங்கள்.
நாற்புறமும் மதில்களால் சூழப்பட்ட கோயில். கிழக்கில் ராஜகோபுரத்துடன் விளங்குகிறது. கோபுர வாயிலை அடுத்துப் பரந்த முன்வெளி, வாகன, உற்சவமண்டபங்கள். இடப்புறம் திருக்குளம், நடுவில் கொடிமரம், பலிபீடம், நந்தி உள்ளன. வெளித் திருச்சுற்றில் தென்புறம் ஒரு நுழைவாயில், மேற்கில் நந்தவனமும் அமைந்துள்ளது.
முதலாம் திருச்சுற்றில் இடப் பக்கம் ஆறுமுகனார் சந்நிதி உள்ளது. வலமாகச் சென்றால் விநாயகர், சுப்பிரமணியரைத் தரிசிக்கலாம். துவார பாலகர்களைக் கடந்து உட்புகுந்தால் நேரே மூலவர் காட்சி தருகிறார். சதுரபீடம், உடும்புவால் போன்ற அமைப்பில் சிறுத்த வடிவில் சிவலிங்கம். பக்கத்தில் நால்வர் புதிதாகப் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இப்பிரதிஷ்டை பூரீகாஞ்சி காம கோடி பீடாதிபதி ஜகத்குரு சங்கராசார்ய பூரீ ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் அவர்களின் பொன் விழா ஆண்டுப் பணி கருவறைக் கோஷ்ட மூர்த்தங்களாக விநாயகர், சிறிய தட்சிணாமூர்த்தி, விஷ்ணு, பிரம்மா, துர்க்கை ஆகியோர் உள்ளனர்.
ஆலய விமானம் கஜப்பிருஷ்ட அமைப்புடையது. நடராசர் சந்நிதிக்கு எதிர்ப்புறம் யானை மீது அமர்ந்திருக்கும் முருகனின்
இந்துக் கலைக்களஞ்சியம்

அபூர்வத் திருமேனி அழகுறக் காட்சி தருகிறது. வடகிழக்கில் இறைவியின் சந்நிதி உள்ளது. அன்னை திரிபுவனநாயகி நின்ற திருக் கோலத்தில் நான்கு கரங்களுடன் தெற்கு நோக்கி எழுந்தருளியுள்ளார். அடுத்துப் பள்ளியறை, பைரவி சந்நிதிகள் உள்ளன. நடராசர் சபைக்கும் இறைவியின் சந்நிதிக்குமிடையில் நவக்கிரக மேடை அமைந்துள்ளது.
கோயிற் சுவர்களில் தேவாரம், அபிராமி அந்தாதி எழுதப்பட்டுள்ளன. திருப்பனந்தாள் மடம் பூரீலழரீ அருள்நந்தித் தம்பிரான் அவர்களின் அருளாணையில் நாள்தோறும் காலை மாலை திருமுறை ஒதவும் சிவராத்திரியன்று ஒரு கால வழிபாட்டிற்கும், குமரகுருபர சுவாமிகளின் நினைவு நாளன்று அன்னம் பாலிக்கவும் அறக்கட்டளை ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஆண்டு தோறும் மாசிமகத்தில் பெருவிழா சிறப்பாக நடை பெறுகிறது. கல்வெட்டில் இத்தலம் சயங்கொண்ட சோழ மண்டலத்துப் பொற்கோட்டத்து மாகறல் நாட்டு மாகறல் என்று குறிக்கப்படுகிறது. குலோத்துங்க சோழன். சுந்தரபாண்டியன் விசய கண்ட கோபால தேவர் காலத்திய கல்வெட்டுகள் உள.
“விங்கு விழை கழனி மிகு கடைசியர்கள்
பாடல்விளை யாடலரவம் மங்குலொடு நீள் கொடிகள் மாடமலி
நீடுபொழின் மாகறலுளான் கொங்குவிரி கொன்றையொடு கங்கைவளர்
திங்களனி செஞ்சடையினான் செங்கண் விடை பண்ணலடி சேர்பவர்கள்
தீவினைகள் திருமுடனே'
என்று சம்பந்தர் பெருமான் இத்தலத்தின் இயற்கை எழிலையும், இறையருளையும் விதந்து போற்றியுள்ளார். (நி. நி.)
திருமாங்கல்யம்
இந்துக்களின் திருமணத்தின் போது மணமகனால் மணமகளுக்கு சுபமுகூர்த்தத்தில் அணிவிக்கப்படும் மங்கல நாண் தாலி என்றழைக்கப்படுகிறது. இன்றுள்ள இந்துக்களில் திருமணத்தன்று தாலி கட்டும் நிகழ்வு மிகப் பிரதானமானதாகவும் முக்கியமான ஒரு சடங்காகவும் கருதப்படுகிறது. இவ் வழக்கம் எப்பொழுது வந்தது என்று பண்டைய இலக்கியம், வழக்காறு, வரலாறு, ஆராய்ச்சியாளர் இது பற்றிக் கூறும் சான்றுகள் முதலியவற்றைக் கொண்டு ஆய்ந்து பார்க்கின் சங்க காலத்திலும் பிற்பட்ட நூற்றாண்டுகளிலும் (ஏறத்தாழ கி. பி 10ஆம் நூற்றாண்டு வரை) நடைபெற்ற திருமணங்களில் தாலிகட்டும் வழக்கம் இருந்ததற்கான நேரடியான ஆதாரங்கள் இல்லை என்றே கூற வேண்டும்.
竹7

Page 148
சங்க காலம் என்பது ஏறத்தாழ கி.மு.3ஆம் நூற்றாண்டிலிருந்து கி. பி. 3ஆம் நூற்றாண்டு வரை என்று கூறலாம். இக்காலத்தில் எட்டுத் தொகையும், பத்துப் பாட்டுமாகிய, இப்பரந்துபட்ட தொகை நூற்பாடல்களில் காணப்படும் திருமணச் செய்திகள் அக்கால
வழக்கங்களையும் மரபுகளையும் காட்டி நிற்கின்றன.
அகநானூறு 86ஆம் பாடல் பின்வரும் செய்திகளைத் தெரிவிக்கின்றது. மணத்தில் முதல் நிகழ்ச்சியாக விருந்து நடைபெற்றது. மணப்பந்தலின் கீழ் மணல் பரப்பப்பட்டு விளக்கு வைக்கப்பட்டது. இளங்காலைப் போதில் திங்கள் உரோகிணியுடன் கூடிய நல்வேளையில், முதுபெண்டிர் மணமகளை நீராட்டுதற்குரிய நீரைக் குடங்களில் ஏந்தி வந்தனர். அந்நீர்க் குடங்களில் மலரும் நெல்லும் தூவிப் பிள்ளை பெற்ற வாழ்வரசியர் நால்வர் மணமகளை “கற்பு நெறியினின்றும் வழுவாமல் பல நலன்களைச் செய்து கணவன் விரும்பத்தக்க மனைவி ஆகுக' என்று வாழ்த்தி மணநீராட்டினர். இத்துடன் திருமணம் நிறைவேறிற்று.
அகநானூறு செய்யுள் 136 பின்வரும் விபரங்களைத் தருகின்றது. இறைச்சி கலந்து ஆக்கப்பட்ட சோற்று விருந்து நடைபெற்றது; திங்கள் உரோகிணியுடன் கூடிய நல்வேளையில், மணமனை அலங்கரிக்கப்பட்டு இறைவழிபாடு நடைபெற்றது. மணமுழவும் முரசும் முழங்கின. தலைவிக்கு மணநீராட்டு நடைபெற்றது. வாகையிலை, அறுகின் கிழங்கிலுள்ள அரும்புகளோடு சேர்த்துக் கட்டப்பட்ட வெண்ணுரல் தலைவிக்குக் காப்பாகக் கட்டப்பட்டது. தலைவிக்கு தூய உடையும், அணிகலன் களும் அணிவிக்கப்பட்டு விழா நடைபெற்றது. இவ்வளவே மணச் செய்திகளாகக் கூறப்பட்டுள்ளன. இவ்விரண்டு திருமணங்களிலும் விருந்துபசாரமும், மங்கலநீராட்டும், புத்தாடை அணிகலன்களும் மணமக்கள் இருவரையும் உட்கார வைப்பதுமே திருமண விழாவாகக் கருதப்பட்டது. எரிவளர்த்தல், தீ வலம் வருதல், புரோகிதச் சடங்குகள், தட்சிணை - எதுவுமில்லை. இவ்விரு திருமணங்களிலும் தாலி கட்டும் நிகழ்ச்சி இடம் பெற்றிருப்பின் நீராட்டு விருந்து என்பவற்றைக் கூறும் புலவர் அந்நிகழ்வினைப் பற்றியும் குறிப்பிட்டிருப்பார் என்பது நோக்கற்பாலது.
கண்ணகி திருமணம் கூறும் சிலப்பதிகாரத்தில் பின் வரும் செய்திகள் இடம்பெற்றுள்ளன. திருமணப் பந்தலில் மாமுது பார்ப்பான் மறைவழிகாட்ட கோவலன் கண்ணகியுடன் தீ வலஞ் செய்தான்; பெண்டிர் பலர் வாசனைப் பொருட்களை ஏந்தி நின்றனர்; சிலர் மலர்களை ஏந்தி நின்றனர்; சிலர் உரையால் வாழ்த்தினர்; சிலர் பலவகைச் சாந்துகள் ஏந்தி நின்றனர்; சிலர் விளக்குகளையும்; சிலர் முளைப் பாலிகையையும் ஏந்தி நின்றனர்; வேறு சில மகளிர் “இக்கண்ணகி தன் தலைவனைப் பிரியாதவள் ஆகுக, இவள் காதலனும் இவளைத் தழுவிய கை நெகிழாமல் சேர்ந்திருப்பானாக இருவர் அன்பும் தீதற்று விளங்குக' என்று தம் வழிபடு கடவுளை வணங்கினர் என்ற விபரங்களை
118

அறியக்கூடியதாக உள்ளது. இத்திருமணத்தில் அகநானூற்றில் குறிக்கப்படாத சில செய்திகளை நாம் நோக்கக் கூடியதாகவுள்ளது. அவை கோவலன் கண்ணகியின் கரம் பற்றி தீ வலம் வருதல், மாமுது பார்ப்பான் மறைவழிகாட்டல், முளைப்பாலிகை மகளிர் ஏந்தி நிற்றல் என்பன. ஆகவே சிலப்பதிகார காலத்தில் கைத்தலம் பற்றி தீ வலம் வருதலே முக்கிய திருமணச் சடங்காக இருந்தது
எனலாம்.
சிலப்பதிகாரத்தில் மனையறம் படுத்த காதையிலும் அந்தி மாலைச் சிறப்புச் செய்காதையிலும் 'மங்கல அணி” என வரும் சொற்பதம் இயற்கை அழகையே குறிப்பதாக அடியார்க்கு நல்லார் விளக்கம் தந்துள்ளார். “மங்கல அணியிற் பிறதணி மகிழாள்” எனவரும் பாடல் வரி கணவன் பிரிவால் வாடிய கண்ணகி எவ்வித நகையும் இன்றி இயற்கையழகோடு இருந்தாள் என்ற பொருளையே குறித்து நிற்கின்றது என்பது அடியார்க்கு நல்லாரின் விளக்கம். அங்ங்னமன்றி அது தாலியைக் குறிக்குமாயின் திருமணச் சடங்கில் கூறப்படாமைக்குக் காரணம்
என்ன? என்ற வினாவுக்கு விடை கூறமுடியாமற் போய்விடும்.
கணவன் மதுரையில் கொலையுண்ட பின்பு கண்ணகி தன் கைவளையல்களை உடைத்தாள் என்ற குறிப்பு கவனிக்கத்தக்கது. புறநானூற்றுப் பாடல் ஒன்று வெளிமான் என்ற வள்ளல் இறந்தனன், அவன் உரிமை மகளிர் தொடி கழிக்கப்பட்டனர்.
தொடி கழி மகளிர் கண்ணகி கணவனை இழந்த பின்பும் வெளிமான் மனைவியர் தம் கணவனை இழந்த பின்பும் தொடிகளைந்தர் வளையல்களைக் கழற்றி உடைத்தல் தமிழ்ச் சமுதாயத்தில் பல வகுப்பினரிடமும் காணலாம். இங்கும் தாலி கழற்றப்பட்டதாகச் செய்தி இல்லை.
திருமணத்தில் தாலிகட்டியமைக்கான சான்று இல்லை. ஆயினும் சங்க நூல்களில் தாலி என்னும் சொல் சுட்டப்படாமலில்லை. கண்ணேறு முதலியன தாக்காது இருக்கும் பொருட்டு குழந்தைகளுக்கு திருமாலின் ஐந்து படைகளின் வடிவமாகச் செய்யப்பட்டு அணிவிக்கப்படுவது. ஐம்படைத் தாலி என்று பெயர் பெறும். வீரன் தான் கொன்ற புலியின் பற்களைத் துளைத்து மாலையாகச் செய்து தன் மக்களுக்கு அணிவிப்பது. புலிப்பல் தாலி. இப்புலிப்பல் தாலி ஆண்பிள்ளைகளே அன்றிப் பெண் பிள்ளைகளும் இளமைமுதல் அணிவது மரபு. இக்குறிப்புக்களில் இருந்து தாலி என்னும் சொல் சங்ககால வழக்கத்தில் இருந்ததேனும் அச்சொல் அக்காலச் சமுதாயத்தில் மணமகன் ஒருவன் தான் மனைவியாக ஏற்கும் ஒருத்திக்கு திருமணத்தின் போது கழுத்தில் கட்டும் தாலியைக் குறிக்காது என்பது கவனத்திற் கொள்ளத்தக்கது.
இடைக்கால இலக்கியங்களை நோக்கும் போது கொங்கு
வேளிர் என்பவர் இயற்றிய பெருங்கதை என்னும் விரிந்த நூலில்,
இந்துக் கலைக்களஞ்சியம்

Page 149
தலைவனாகக் கூறப்பட்ட உதயணன் பதுமாவதி, மானனீகை, விரிசிகை, வாசவதத்தை என்னும் நால்வரை மணந்து கொண்டான். இவனது மணவிழாவைப் பற்றிய விபரங்கள் இந்நூலில் விரிவாக இடம் பெற்றுள்ளது. எரிவளர்த்தல், அம்மி மிதித்தல், முன்கை பற்றி வலம் வருதல், அந்தணர் ஆசி கூறுதல், அருந்ததி காட்டல், மணமக்கள் இருவரும் பிரியாது விளங்குக எனப் பெரியோர்கள் வாழ்த்தல் என்பனவே குறிக்கப்பட்டுள்ளன. இத்துணைச் சடங்குகளையும் விரிவாகக் கூறிய ஆசிரியர் கழுத்தில் தாலி கட்டினான் என்னும் செய்தியைக் குறிக்கவில்லை.
கி. பி. எட்டாம் நூற்றாண்டினர் என்று கருதத்தகும் பெரியாழ்வார் பாடிய திருமொழியில் ஆமை வடிவிற் செய்த தாலி ஒன்று பிள்ளைப் பருவத்தை உடைய திருமால் அணிந்திருந்ததாகக் குறிப்பிடப்படுகின்றது. "அக்கு வடமுடுத்து ஆமைத்தாலி பூண்ட அனந்த சயனன்’ மற்றொரு செய்யுளில் பெரியாழ்வார், "தாலிக் கொழுந்தைத் தடங்கழுத்திற் பூண்டு” அஃதாவது கண்ணன் தன் இளமைப் பருவத்தே தாலிக் கொழுந்து என்னும் கழுத்தணியை அணிந்திருந்தான் என்பது இதனால் பெறப்படுகின்றது.
பெரியாழ்வாரின் மகளான ஆண்டாள் கண்ணனைக் கனவில் மணந்ததாகக் கூறும் பாடல்களில் திருமணச் சடங்குகள் பலவற்றை விளக்கமாகக் கூறியுள்ளார். மணமகள் புத்தாடை உடுத்தல், திருமாலின் தங்கையான அந்தரி (துர்க்கை) மணமகளுக்கு மாலை சூட்டல், மணமகளுக்கு காப்பு நாண் கட்டுதல், மணமகன் மணப்பந்தலுக்கு வருதல், வாத்தியங்கள் முழங்க கண்ணன் ஆண்டாளின் கையைப் பிடித்தல், தீவலம் வருதல், கண்ணன் தன் திருக்கரத்தால் ஆண்டாளின் பாதத்தை அம்மி மேல் வைத்தல், குங்குமம் அப்பிச் சாந்து பூசி வீதி வலம் செய்வித்து மஞ்சனம் ஆட்டல் என்னும் சடங்குகள் முறையே கூறப்பட்டுள்ளன. ஆனால் எவ்விடத்திலாவது கண்ணன்
தனக்குத் தாலி கட்டியதாக ஆண்டாள் கூறாமை நோக்கற்பாலது.
கி. பி 9ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் எழுதப்பட்ட சூளாமணி என்னும் சமணநூலில் கலியாணச் சருக்கம் என்னும் பகுதியில் திவிட்டன் என்ற அரசனுக்கும் சயம்பவை என்னும் அரச மகளுக்கும் நடந்த திருமணம் பல செய்யுட்களில் விபரிக்கப்பட்டுள்ளது. இதில் பெண்ணின் தந்தை தன் மகளைத் தாரை வார்த்துக் கொடுத்தல், எரிவளர்த்தல், மணமக்கள் தீவலம் வருதல், அம்மி மிதித்து அருந்ததி காட்டல் என்னும் சடங்குகளே குறிக்கப்பட்டுள்ளன. இத்திருமணத்திலும் தாலி பற்றிய குறிப்பு இடம் பெறாமை நோக்கற்பாலது.
திருத்தக்க தேவரால் கி. பி 10ஆம் நூற்றாண்டில் இயற்றப்பட்டது சீவகசிந்தாமணி, ஏறத்தாழ 3,200 பாடல்களைக் கொண்டது. பல்வகைச் சுவைகளையும் தன்னகத்தே கொண்டது.
இந்துக் கலைக்களஞ்சியம்

இப்பெருங் காவியத்தில் ஒன்பது திருமணங்கள் கூறப்பட்டது. இவ் ஒன்பது திருமணங்களில் மூன்று அரசர் திருமணங்கள், நான்கு வணிகர் திருமணங்கள், ஒன்று வித்தியா தரப் பெண்ணின் திருமணம். இவற்றுள் மூன்று திருமணங்கள் மணச் சடங்குகளைத் தெளிவாகக் குறிக்கின்றன. அவற்றுள் ஒன்றிலேனும் திருமணத்தின் போது மணமகன் மணமகளுக்குத் தாலி கட்டினான் என்று கூறப்படவில்லை.
மிகவும் பிற்பட்ட காலத்தவரான கச்சியப்ப சிவாச்சாரியாரால் இயற்றப்பட்ட கந்த புராணத்தில் மூன்று திருமணங்கள் கூறப்பட்டுள்ளன. 1) சிவபெருமானுக்கும் உமா தேவியாருக்கும் நடந்த திருமணம், 2) முருகனுக்கும் வள்ளியம்மைக்கும் நடந்த திருமணம், 3) முருகனுக்கும் தெய்வயானைக்கும் நடந்த திருமணம். இதில் தெய்வயானை அம்மையாருக்கும் முருகனுக்கும் நடைபெற்ற திருமண வைபவத்தின் போதே மங்கல நாண் கட்டப்பட்டதற்கான குறிப்பு முதன் முதல் இடம் பெற்றுள்ளது. தெய்வயானை இந்திரன் மகள். அவள் பல ஆடை அணிகளால் திருமணக்கோலம் செய்து கொண்டு மணப்பந்தலுக்கு வந்தாள். இந்திரன் முருகனுக்குப் பாத பூசை செய்தான். பின்னர் இந்திரன் மணமகள் கையை முருகன் கையில் வைத்து இவளை உனக்குத் தந்தேன் என்று தாரைவார்த்தான். முருகன் ஏற்றான். பின் நான்முகன் தன் கருத்தினால் ஆக்கிக் கரத்தினால் அளித்த மங்கல நாணை முருகன் தெய்வயானைக்கு அணிந்தான் என்று ஒரு செய்யுள் இடம் பெற்றுள்ளது.
“செங்கம லத்திறை சிந்தையின் ஆற்றி
அங்கையின் ஈந்திட ஆண்டகை கொண்ட மங்கல நாணை மணிக்களம் ஆர்த்து நங்கை முடிக்கோர் நறுந்தொடை சூழ்ந்தான்”
இதுவே, அப்பாடல். ஆசிரியர் கூற்றுப்படி மங்கல நாண் நான்முகன் தன் மனதால் படைத்தது. சிவபெருமான் திருமணத்திலும் வள்ளியம்மை திருமணத்திலும் மங்கல நாண் பற்றிக் குறிப்பிடாத கச்சியப்ப சிவாச்சாரியார் தெய்வயானை திருமணத்தின் போது மட்டும் குறிப்பிட்டுள்ளமை வியப்பாக உள்ளது. மங்கல நாணைக் குறிக்கும் இச்செய்யுள் இடைச்செருகலாக இருக்குமோ என்ற ஐயப்பாட்டையும் தோற்று விக்கின்றது. கி.பி 11 நூற்றாண்டில் முதற் குலோத்துங்க சோழன் காலத்தில் சயங்கொண்டாரால் பாடப் பெற்ற கலிங்கத்துப் பரணியில் கைப்பிடித்தலே (பாணிக் கிரகணம்) திருமணத்தின் முக்கிய சடங்காகக் குறிக்கப்பட்டுள்ளமை இவ்விடத்தில் நோக்கற்பாலது. கம்பரால் பாடப்பட்ட காம்பராமாயணத்தில் (கி. பி 12ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி) இராமன் சீதையை மணந்து கொண்ட நிகழ்ச்சியை ஒன்பது செய்யுட்களில் கூறியுள்ளார். சீதையும், இராமனும் மணத்தவிசில் ஏறியிருத்தல்,
119

Page 150
சனகன் சீதையைத் தாரை வார்த்துக் கொடுத்தல், அப்பொழுது வாழ்த்தொலி முதலியன ஒலித்தல், இராமன் ஒமஞ்செய்து சீதையை பாணிக்கிரணஞ் செய்தல், சீதை இராமனுடன் தீவலம் வருதல், பின் அம்மி மிதித்து அருந்ததி காணுதல், சீதை பெரியோரை வணங்கித் தன் மாளிகைக்குச் செல்லல், பலவகை மங்கல ஒலி எழுதல் என்பனபற்றிக் கூறியுள்ள கம்பர், தாலிச் சடங்கு பற்றிக் குறிப்பிடவில்லை. ஆயினும் தசரதன் கைகேயியைச் சபிக்கின்ற வேளையில்,
“நின் கழுத்தின் நாண் உன்மகற்குக் காப்பின்
。 ラジ நாணாம எனறான
நான் இறந்த பின் நீ அறுக்கும் கழுத்து நாண் உன்னுடைய மகனுக்குக் காப்பு நாண் ஆகுக என்பது இதன் பொருள். மகன் திருமணத்தின் போது குறிக்கப்படாத வழக்கில் இல்லாத கழுத்து நாண் (மங்கல நூல்) தந்தையின் திருமணக் காலத்தில் இருந்தது என்று கருதுவது பொருத்தமற்றது. ஆயினும் இப்புலவர் பெருமான் தம் கால வழக்கை ஏற்றுக் கூறினார் என்பதே பொருத்தமான கூற்றாக அமைகின்றது.
கி.பி 12ஆம்நூற்றாண்டில் பெரியபுராணம் பாடிய சேக்கிழார், தமது நூலில் தமக்குப் பல நூற்றாண்டுகட்கு முன்பு வாழ்ந்த (கி. பி 400 - 900) நாயன்மார் வரலாறுகளைப் பாடியுள்ளார். இதில் சுந்தரர் திருமணங்கள் இரண்டும், சம்பந்தர் திருமணம் ஒன்றும் கூறப்பட்டுள்ளது. ஸ்மார்த்த பிராமணராகிய சம்பந்தர் திருமண வைபவம் இங்கு விளக்கமாக இடம் பெற்றுள்ளது. சடங்கு விபரங்களைப் பார்க்கும் போது கைப்பிடித்தலே சிறப்புடைச் சடங்காக இருந்தமை தெளிவாகக் காணக்கூடியதாக உள்ளது. ஆயினும் குங்கிலியக்கலய நாயனார் புராணத்திலும், திருநாவுக்கரசு நாயனார் புராணத்திலும் மங்கல நூல்' அம்பொன்மணி நூல் தாங்கா தனைத் துயிர்க்கும் அருள் தாங்கி எனக் கூறியிருக்கின்றார். இங்கு சேக்கிழார் தம் கால வழக்கை முன்னோர் வாழ்வில் ஏற்றுக் கூறியிருக்கின்றார் என்று கூறுவதே பொருத்தமானது.
ஆகவே சேக்கிழார் காலமாகிய 12ஆம் நூற்றாண்டில் தமிழர் திருமணத்தின் போது மங்கல நூல் கட்டுதல் வழக்கில் இருந்தது என்பதும் அந்நூலில் தாலி என்னும் ஒர் அணி கோர்க்கப்பட்டிருந்ததென்பதும் தெளிவாகத் தெரிகின்றது. ஆயினும் அந்த நூற்றாண்டுகளில் தாலியின் வடிவம் எவ்வாறு இருந்தது. அது புலிப்பல் தாலிதானா? அல்லது வேறு உருவம் அமைந்ததா? என்பது தெளிவாகத் தெரியவில்லை. மங்கலநூல் வழக்கிற்கு வருமுன் புறநானூற்றில் கண்ட தொடி, இழை போன்ற சிறப்பு அணிகளே மண அணிகளாகக் கருதப்பட்டு வந்தன. மேலும் அக்கால தாலி கட்டும் முறையினைப் பார்க்கும் போது இந்தத் தாலி கட்டும் முறையில் ஒரு குறிப்பிட்ட நியதி முதலில்
120

தோன்றவில்லை என்பதும் அவரவர் இடத்திற்கு அல்லது பழக்க வழக்கத்திற்கு ஏற்ப இம்முறையை மேற்கொண்டனர் என்பதும் புலனாகின்றது.
இன்று தமிழரிடையே திருமணத்தின் போது கட்டப்படும் தாலி பல்வேறு வகையில் அமைந்துள்ளது. சில தாலிகள் புலிப்பல் போன்றுள்ளன. பொட்டுத் தாலி ஒருவகையினது முக்கோண வடிவில் அமைந்தவை ஒருவகை, கொம்புத்தாலி. இவை அவரவர் வசதிக்கேற்பவும், இடத்திற்கேற்பவும், பழக்க வழக்கத்திற்கு ஏற்பவும் அமைந்தனவாகலாம். தற்போது நடைபெறும் திருமணங்களைப் பார்க்கின்ற போது தாலி கட்டும் நிகழ்வு தான் திருமணச் சடங்கின் பிரதான அம்சமாகக் கருதப்படுகின்றது. குறிப்பிட்ட நல்ல நாளில் பொன்னை உருக்கிச் செய்யப்படும் தாலி, மஞ்சட் கயிற்றினாலோ பொன்னாலான கொடியிலோ கோர்க்கப்பட்டு, பின் திருமண நாளன்று பெரியோர்களின் ஆசீர்வாதத்துடன் மங்கள வாத்தியங்கள் முழங்க மணமகள் கழுத்தில் கட்டப்படுகின்றது. தம் கணவர் உயிரோடு இருக்கும் வரை பெண்கள் இத்தாலியை புனிதமாகப் போற்றி அணிந்திருப்பர். கணவர் இறந்த பின் பெரும்பாலான பெண்கள் தம் தாலியை கோவிலுக்குத் தானமாக வழங்கிவிடுவது வழக்கம்.
(நி.நி.)
திருமாலிருஞ்சோலை
பாண்டிய நாட்டு வைணவப் பதிகள் பதினெட்டு. அப்பதி னெட்டு திவ்விய திருப்பதிகளில் அழகர்மலை முதலாவது திவ்விய பதியாக விளங்கியது. இப் பதியை சோலை மலை என்றும் கூறுவர். சோலைக்கு மேற்கும் வடக்கும் நீண்டுயர்ந்த மலைச் சிகரமாக அமைந்துள்ளது. சோலை மரங்கள் நிறைந்த மலைப் பகுதியாகிய இங்கு திருமால் திருக்கோயில் கொண்டு விளங்குவதால் திருமாலிருஞ்சோலை என்றும், மாலிருங்குன்றம் என்றும், திருமால்குன்றம் என்றும் போற்றப்படுகிறது. மாலலங்காரராகிய அழகர் பெருமான் இம்மலைப் பகுதியில் திருக்கோயில் கொண்டு விளங்குவதால் அழகர் மலை எனும் சிறப்புப் பெயரும் பெற்று விளங்குகிறது.
திருமாலிருஞ்சோலை இயற்கை எழில் நிறைந்த குன்றாக விளங்குகிறது. மலையின் இயற்கை எழிலும் ஆர்த்து அசைந்து இழியும் சிலம்பாறும் சுனைகளில் மலர்ந்திருக்கும் மலர்களும் மனதைக் கொள்ளை கொள்வனவாக அமைகின்றன. இதன் அழகை "அதிர்குரல் சங்கத்தழகர் தம் கோயில் மதிதவழ் குடுமி மாலிருஞ்சோலை’ என நம்மாழ்வார் பாடுகிறார். கோநெடுமாறன் எனும் பாண்டிய மன்னன் பக்தியுடன் போற்றும் திருமலை சோலை மலை என்கிறார் பெரியாழ்வார். ஆறுகால் சிறுவண்டுகள் ஆயிரம் நாமம் சொல்லிப் பாடுகின்றன. மலையில் குறமாதர்கள் கோவிந்தனைப் பண்குறிஞ்சிப் பாவொலி பாடி நடம் பயில்கின்றார்கள். ஆறுகளும் சுனைகளும் பூம்பொழில்களும்
மலையில் இருக்கின்றன. இச்சிறப்புடைய மலையை அழகன்
இந்துக் கலைக்களஞ்சியம்

Page 151
அலங்காரன் மலை, குலமலை, கோலமலை, குளிர்மா மலை கொற்றமலை, நிலமலை நீண்டமலை என மலையைப் போற்றுகின்றார்.
திருமால் தமிழ்நாட்டில் இரண்டு மலைகளில் மிகவும் விருப்புடன் வாழ்கிறான். ஒன்று வடவேங்கடம் மற்றது திருமாலிருஞ்சோலை, திருமாலிருஞ்சோலையின் சிறப்பை பெரியாழ்வார் 24 பாடல்களில் சிறப்பித்திருக்கிறார். சிலம்பாறு பாய்வதும், பல்லாண்டு ஒலி கேட்பதும், செல்வன் வாழ்வதும், கற்பகத் தேனாறு பாயும் திருமாலிருஞ்சோலை எனவும், பாண்டியன் கொண்டாடும் மலை, கம்சனது யானையைக் கொன்றவன் மலை, வண்டுகள் சகஸ்ரநாமம் செய்யும் மலை ருக்மணி பிராட்டியை மீட்டவன் மலை, மணிவண்ணன் மலை, குறத்தியர் பாண்டிக் கூத்தாடும் மலை, விமலன் வாழும் மலை, அனந்தசயனன் ஆளும் மலை, தேவர்கள் பிரதட்சணம் செய்யும் LO60)6), தொல்லருவி பெருகும் மலை என திருமாலிருஞ் சோலையின் சிறப்பை பெரியாழ்வார் பலவாறு போற்றுகிறார்.
திருமாலிருஞ்சோலை உறை அழகன் சிறப்பை ஆண்டாள் தன் நாச்சியார் திருமொழிப் பாடல்களில் சிறப்பிக்கிறார். ஆண்டாள் திருமாலிருஞ்சோலை அழகிலும், அழகரின் திருமேனி செளந்தரியத்திலும் ஈடுபடுகிறாள். வானில் படர்ந்திருந்த கருமுகிலும் பொழிந்த மழையும், மழைக் காலத்துக்கே உரிய பூக்கள் திருமாலிருஞ்சோலையில் பூத்துக் குலுங்குவதைக் கண்ட ஆண்டாள் பிரிவுத் துன்பத்தினால் வாடி, திருமாலிருஞ்சோலை உறை அழகரை நோக்கியும், இயற்கையை நோக்கியும் பாடுகிறார். குயில்களையும், மயில்களையும், கனிகளையும் பார்த்து அழகரின் திருமேனி நிறம் உங்களுக்கு எதற்கு? என வினாவுகிறாள். மாலிருஞ்சோலையைச் சூழ உள்ள சோலைகளின் இயற்கை அழகையும் பாடுகிறார்.
திருமங்கை ஆழ்வார் தனது பெரிய திருமொழியில் 33 பாடல்களில் திருமாலிருஞ்சோலை பற்றிப் பாடியுள்ளார். மாதரார் கண் வலையில் சிக்கித் தடுமாறுவதை விட்டொழித்துத் திருமாலிருஞ்சோலையை வணங்குவோம் என அழைக்கிறார். பாம்பைப்பற்றிக் கொண்டவனும், தாடகையை வதைத்தவனும், இராவணனை வதைத்தவனும் ஆன திருவிக்கிரமன் கோயில் இது. அதை வணங்குவோம் வாருங்கள் என அழைக்கிறார். “வாகைச் சோலை மரகதச் செயல்கள் மாமணிக் கல்லதர் நிறைந்து மானுகர் சாரல் மாலிருஞ் சோலை வணங்குதும் வா மட நெஞ்சே” என அழைத்து, மாலிருஞ்சோலையை வணங்கிப் பாடுவோர் உலகை ஆள்வார்கள் எனவும், திருமங்கை ஆழ்வார் திருமாலிருஞ்சோலையின் சிறப்பைப்பாடுகிறார்.
பூதத்து ஆழ்வார் திருமாலிருஞ்சோலையில் திருமால் விரும்பி உறைகிறார் எனவும் பாடுகிறார். இவ்வாறாக திருமாலிருஞ் சோலை இயற்கை எழில் நிறைந்த இடம் என்பதைப் பேயாழ்வார்,
இந்துக்கலைக்களஞ்சியம்

வண்டு வளங்கிளரும் நீள்சோலை என்கிறார். நம்மாழ்வாரும் இதன் பெருமையை 36 பாடல்களில் பாடியுள்ளார். இத் திருமலை மதுரைக்கு கிழக்கே 18 கீ.மீ. தூரத்தில் அமைந்துள்ளது. இம்மலை கிழக்கு மேற்காக 15கி.மீ. நீளம் உடையது. மலையின் உயரம் ஆயிரம் அடிகளாகும். சோலைமலை, திருமாலிருஞ் சோலை, வனகிரி, விருஷபத்ரி, இடபகிரி, தகூழின திருப்பதி, திருமால் குன்றம், அழகர் மலை எனப் பல பெயர்கள் கொண்டு
அழைக்கப்படுகிறது.
இத்திருத்தலத்தின் மூலவர் பரமசுவாமி சங்கு, சக்கரம், வில், வாள், கதை முதலிய ஏந்தி பூரீதேவி, பூதேவி உடனுறைய நின்ற திருக்கோலத்தில் காட்சி தருகிறார். உற்சவரும் மூலவர் போலவே வடிவமைக்கப்பட்டுள்ளார். மூலவர் கள்ளழகர், சுந்தரர், பரமசுவாமி, மாமலங்காரர், சுந்தரத்தோளர், சுந்தரராஜர் எனப் பல பெயர் கொண்டு அழைக்கப்படுகிறார். பெயருக்கேற்பவே உற்சவ மூர்த்தியான அழகர் பேரழகு வடிவம் கொண்டவர். இவர் அபரஞ்சித் தங்கத்தினால் ஆனவர் இவருக்கு திருமஞ்சனம் நூபுரகங்கைத் தீர்த்தமே. மற்ற நீரால் அபிடேகம் செய்தால் இவர் கறுத்து விடுவார் எனக் கருதப்படுகிறது. கள்ளர்கள் உடைய திருநாட்டில் எழுந்தருளி இருப்பதால் கள்ளழகன் எனும் திருநாமம் இவருக்கு வழங்கப்படுகிறது.
இத்திருக்கோயிலின் பிரதான வாசல் எப்போதும் மூடியே வைக்கப்பட்டிருக்கும். இங்கு தான் இக்கோயிலின் காவல் தெய்வம் பதினெட்டாம் படிக் கறுப்பர் இருக்கிறார். இந்த கறுப்பண்ண சுவாமிக்கு உருவம் இல்லை. இவருடைய காவலில் தான் அழகர் மலை அழகர் வாழ்கிறார். பட்டர் நாள்தோறும் இக்கோயிலின் பண்டாரத்தைப் பூட்டி சாவியை இந்த பதினெட்டாம் படிக் கறுப்பரிடம் கொண்டு வந்து வைத்து விட்டுச் செல்வார். அத்துடன் அழகர் மதுரை மீனாட்சி கல்யாணத்துக்கு புறப்படும் போது அவர் அணிந்திருக்கும் நகைப்பட்டியல் கறுப்பரிடம் வாசித்துக் காட்டப்பட்டு பின் திரும்பி வரும் போதும் படித்துக் காட்டப்படும். இவ்வாறு இக் கோயிலின் சொத்துக் களுக்குப் பாதுகாப்பாக இவர் விளங்குகிறார். இவரது வரலாற்றை எடுத்து நோக்கும் போது மலையாளத்தில் இருந்து அழகரது திருவாபரணங்களை திருட வந்த கள்வர்களின் தலைவன் கறுப்பண்ணன். படிக்கொருவராய் இக்கள்வரை அழகர் பலியிட கடைசியாக கறுப்பன் அழகரைச் சரணடைந்தான். அன்றிலிருந்து தன் சந்நிதியை காக்கும் பொறுப்பு கருப்பண்ணனிடம் வழங்கப்பட்டது. கோபுர வாசலில் பதினெட்டுப் படிகள் இருக்கின்றன. சன்னதி இல்லை. வாசல் மூடப்பட்டிருக்கும். படியை வணங்கிச் செல்வார்கள். உருவமற்ற கறுப்பண்ணன் முன் சத்தியம் செய்வது இன்றும் நடைபெற்று வருகிறது.
திருக்கோயிலுக்குள் செல்ல பதினெட்டாம் படிவாசலுக்கு வடபுறம் உள்ள மதிலின் சுவர் திறந்திருக்கும். இது வண்டி வாசல்
121

Page 152
எனப்படும். இந்த வாசல் வழியாக நுழைந்து கோயிலின் வெளிப்பிராகாரத்தை அடையலாம். இக்கோயிலுக்கு முன்னால் கல்யாணமண்டபம் அமைந்துள்ளது. இதிலிருந்து கோயிலின் பிரதான வாசல் ஊடாக கோயிலுக்குச் செல்லலாம். இவ்வாசல் தொண்டைமான் கோபுர வாசல் எனப்படும். இக்கோயில் மூன்று கோபுரங்களையும், இரண்டு திருச்சுற்றுக்களையும் உடையது. உள்ளே பொன்னால் கவசமிடப்பட்ட கொடித் தம்பம் இருகிறது. கொடிமண்டபத்தில் இருந்து மேலே படியேறிச் சென்றால் சுந்தரபாண்டியன் மண்டபம், ஏரியன் மண்டபம், முனைய தரையன் மண்டபம் முதலியன காணப்படும். இவற்றைத் தாண்டி சூரிய வாசல் வழியாக மகா மண்டபத்தை அடையலாம். மகா மண்டபத்திலிருந்து அர்த்த மண்டபத்தை அடைந்து கருப்ப கிரகத்தில் உள்ள அழகரைத் தரிசிக்கலாம். கருவறையில் மூலவரான பரமமூர்த்தி திருக்கோலத்தில் ஐம்படை தாங்கியவராகக் காட்சி தருகிறார். இவரின் இருபுறமும் சீதேவி, பூதேவி நிற்கின்றனர். இவர் முன்பு எழுந்தருளி இருக்கும் உற்சவ மூர்த்தியே அழகர். இவரே சோலைமலைக்கரசர் ஆவர்.
அழகரைத் தவிர சுந்தரபாகு, சீனிவாசர், நித்தியோத்சவர், உற்சவமூர்த்திகளும் உள்ளனர். கருவறையை அடுத்த பிராகாரத்தில் வலம்புரி விநாயகர், சேனை முதலியார், ஷேத்திர பாலகரான பைரவர் ஆகியோர் காட்சி தருகின்றனர். கருவறையின்மேல் பொன்வேய்ந்த அர்த்தசந்திர விமானம் இருக்கிறது. இது சோம விமானம் எனவும் அழைக்கப்படுகிறது. கோயிலின் தென்பிராகாரத்தில் கல்யாண சுந்தரவல்லித் தாயார் தனிக்கோயில் இருக்கிறது. வடக்குப் பிராகாரத்தில் ஆண்டாள் சன்னதி இருக்கிறது. திருமணக்கோல அடையாளமாக இத்தளத்தில் ஆண்டாளின் உற்சவ மூர்த்தி உட்கார்ந்த கோலத்தில் எழுந்தருளி இருக்கிறது.
அழகர் கோயிலில் நாள்தோறும் ஆறுகாலப் பூசைகள் நடைபெறுகின்றன. காலை 6மணி முதல் 12வரையும் மாலை 4மணி முதல் இரவு 7.30 மணிவரையும் கோயில் திறந்திருக்கும். ஆண்டு முழுவதுமே திருவிழாக்கள் மலிந்த இத்திருத்தலத்தில் சித்திரைப் பெருவிழா, ஆடிப்பெருவிழா, வைகுந்த ஏகாதசி, அத்யயன உற்சவம் மிகச் சிறப்பானவை. திருக்கல்யாணத் திருவிழாவும் மிகவும் விசேஷமானது. சித்திரைப் பெருவிழாவில் அழகர் தங்கை மீனாட்சியின் திருமணத்துக்குச் செல்லும்போது பூரீ வல்லிபுத்தூரில் இருந்த ஆண்டாள் சூடிக் களைந்த மாலைகளைக் கொடுத்தனுப்புவார். மீனாட்சி திருக்கல்யாண விழாவின் ஒர் அம்சமாக அழகர் வைகையாற்றில் இறங்குவார் அன்று மதுரையில் மக்கள் லட்சக்கணக்கில் கூடுவார்கள் கருப்பண்ணனுக்கும் ஆடி அமாவாசை அன்று விசேட பூசை நடைபெறும். விபூதி பிரசாதம் இங்கு வழங்கப்படுவது சிறப்பு இவ்வாறு ஆண்டு முழுவதும் திருவிழாக் கோலமாகவே காட்சியளிக்கும்.
122

அடுத்து திருமாலிருஞ்சோலை தீர்த்தம் நூபுரகங்கை ஆகும். இது திருக்கோயிலின் வடக்கு வாசல் வழியாக மலை மீது ஏறி இரண்டு மைல் தூரம் சென்றால் நூபுரகங்கை எனும் தீர்த்தத்தை அடையலாம். இதன் உற்பத்தி எந்த இடம் என்பது தெரியவில்லை. யானையின் துதிக்கையைப் போல் அமைந்திருக்கும் கோமுகியின் வழியாக மாதவி மண்டபத்துக்கு வருகிறது. நூபுர கங்கைத் தீர்த்தம் தெற்கு நோக்கிப் பாயும் போது சிலம்பாறு எனும் பெயர் பெறுகிறது. இந்த சிலம்பாறு ஆதியில் பிரமன், திரிவிக்கிரமனின் தூக்கிய திருவடியில் அபிஷேகம் செய்த நீர் என்பது நம்பிக்கை. இன்று இந்த ஆறு சுந்தரராஜரின் திருவடிகளை வருடிக் கொண்டு பாய்ந்து பெருகி வயல்களை வளப்படுத்துகிறது. இத்தீர்த்தத்தின் சுவை மிகவும் இனிமையானது. எனவே இதனை ‘தேன் அருவி” என்று வழங்கிவருகின்றனர். இந்தத் தீர்த்தத்தில் இரும்புச் சத்தும், தாமிரசத்தும் மிகுதியாக உள்ளன என்றும் எனவே இத் தீர்த்தத்தில் நீராடுபவர்களுக்குத் தீராத நோயெல்லாம் தீர்கிறது என்றும் கூறுவர். அழகரின் அபிடேகத்திற்கு இத்தீர்த்தம் மாத்திரமே பயன்படுகிறது. நூபுரகங்கை, சிலம்பாறு எனும் இரு தீர்த்தமும் இங்கு விசேடம் பெறுகின்றன.
அழகாபுரிக் கோட்டையிலிருந்து உள்கோட்டைக்குச் செல்லும் இராய கோபுர வாயில் இடிந்து கிடக்கிறது. இரணியன் கோபுரவாசலின் பக்கத்திலுள்ள யானை வாகன மண்டபத்தில் அழகிய சிற்பங்கள் இருக்கின்றன. திருக்கோயிலின் தலை வாசலின் முன் உள்ள கல்யாண மண்டபம் கிருஷ்ணப்பர், வாசுநாதர் ஆகிய நாயக்க மன்னரால் கட்டப்பட்டவை. இம் மண்டபத் தூண்களில் இரணியன் உடலைக் கிழக்கு நரசிம்மர் யுத்தம், ரதிமன்மதர் கோலம், வேணுகோபாலன், கருட வாகனவிஷ்ணு, திரிவிக்கிரமர், இலட்சுமி, வராகர் போன்ற அழகிய சிற்பங்களைக் காணலாம். தொண்டைமான் கோபுர வாசலின் நிலைக் கதவுகள் சிற்பச்செறிவு மிக்கவையாக விளங்குகின்றன. சுவாமியின் கருவறை விமானத்தில் தேவர்கள் முனிவர்கள் கரம்கூப்பிய நிலையில் நிற்கும் சிற்பங்கள் காணப்படுகின்றன. அழகரின் விக்கிரகம் மிகவும் அழகுவாய்ந்தது எனக் கூறப்படுகிறது.
இக்கோயில் பற்றி பல ஐதீகக்கதைகள் காணப்படுகின்றன. பிரளய காலத்திலும் நிலைத்திருக்க எண்ணிய தர்மதேவதை திருமாலை நோக்கித் தவம் புரிந்து மலை வடிவம் கொண்டு அப்பிரானை தன்மீது தாங்கிக் கொண்டு இருப்பதாக கூடற் புராணம் கூறுகிறது. கள்வர்களுடைய திருநாட்டில் எழுந்தருளி இருப்பதால் கள்ளழகர் எனப் பெயர் பெறும் திருமால் கள்வர்களின் குலதெய்வமாக விளங்குகின்றார். மிலேச்ச இராச்சியத்திலும் முகம் மாறாது இரட்சிக்கும் படியான குணமூர்த்தி இம்மலையில் உள்ளதாகக் கூறுவார். கள்வர் முதலிய ஜாதிகளுக்கு முகம் கொடுத்த இனியராய்க் காட்டுப் பிரதேசத்தில் எழுந்தருளி யிருக்கிறார் பெருமாள். அழகர் ஆண்டு தோறும் சித்திரை
இந்துக் கலைக்களஞ்சியம்

Page 153
ஒன்பதாம் நாள் நடைபெறும் சித்திரைத் திருவிழாவின் போது நான்காம் நாள் அழகர் கள்ளர் திருக்கோலத்துடன் மதுரைக்குப் புறப்பட்டு ஒன்பதாம் நாள் இரவு கோயிலுக்கு திரும்பவும் வந்து சேருகிறார். துர்வாச முனிவரால் தவளையாகும்படி சபிக்கப்பட்ட சுதபஸ் முனிவரின் சாபவிமோசனத்தின் நிமித்தமாகவும், ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலையை ஏற்றுக்கொள்ளும் பொருட்டும் பூரீசுந்தரராஜன் கள்ளழகர் திருக்கோலத்துடன் மதுரைக்கு எழுந்தருளுகிறார் என அழகர் மதுரைக்கு வருவதற்கு காரணம் கூறப்படுகிறது.
மதுரையில் ஆட்சிபுரிந்த மன்னர்கள் அனைவரும் இக் கோயிலுக்குப் பொன்னும் மணியும் வாரி வழங்கியுள்ளனர். கள்ளழகர் பணக்காரர் என்பதை "அரங்கன் சொத்து அழகன் அங்கவடிக்கும் காணாது’ எனும் பழமொழி மெய்ப்பிக்கும். புராணங்கள், நாலாயிரத் திவ்விய பிரபந்தம், சங்கநூல்கள், சங்கமருவிய நூல்கள், பல வைணவ பிரபந்தங்களிலும் முனிவர்கள் ஆசாரியர்கள் இயற்றிய பாமாலைகளிலும் இத்தலம் புகழப்பட்டுள்ளது. ஆழ்வார்கள் தமது திவ்வியப் பிரபந்தத்தில் திருமாலிருஞ் சோலையைப் புகழ்ந்துள்ளனர். இவர்களில் ஆண்டாள் பதினொரு பாசுரங்களாலும், பெரியாழ்வார் இருபத்து நான்கு, பூதத்தாழ்வார் இரண்டு, திருமங்கையாழ்வார் இரண்டு நம்மாழ்வார் நான்கு, பேயாழ்வார் ஒன்று என்ற எண்ணிக்கையில் பாசுரங்களால் மங்களாசாசனம் செய்துள்ளனர். அத்துடன் ஒரு
சில கல்வெட்டுக்களும் கிடைக்கப்பட்டுள்ளன.
மலையின் அடிவாரத்தில் கள்ளழகர் கோயிலும் மலை மீது சுமார் 3 கீ.மீ. தொலைவில் முருகன் கோயிலும் உள்ளன. இம் முருகன் கோயில் ஆறுபடைவீடுகளில் ஆறாவது படைவீடான பழமுதிர்சோலை அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் ஆகும். நூபுர கங்கை சிலம்பாறு இருந்த இடத்தில் தான் முருகப்பெருமான் சோலைமலைக் கிழவோனாக முன்பு கோயில் கொண்டு எழுந்தருளி இருந்தார் என்றும் இதனால் இந்த மலை திருமாலுக்கும் முருகனுக்கும் உரிய மலையாக சைவ வைணவ ஒருமைப்பாட்டுடன் காணப்படுவதை அறிய முடிகிறது. இங்கு வீயூதியே பிரசாதமாக வழங்கப்படுகிறது.
திருமாலிருஞ்சோலை ஆழ்வார்களின் பாசுரங்களின் இவ் அழகர் மலைப்பதி 128 பாசுரங்களைப் பெற்று மூன்றாவது பதி எனும் பெருமையைக் கொண்டு விளங்குகிறது. மூர்த்தி, தலம், தீர்த்தம், தலவிருட்சம் எனும் பெருமை பெற்று நற்பதியாக விளங்குகிறது. அழகர் மலையின் தலவிருட்சம் சந்தன மரமாகும். இத்தலத்தில் ஆகமமரபுகளும், சமூக சம்பிரதாயங்களும் கலந்து பின்பற்றப்படுகிறது. திருவிழாக்களின் போது சமூக மரபுகளுக்கு ஏற்ப கள்ளழகருக்கு விழா எடுக்கப்படுகிறது. இவ்வாறாக தமிழ் நாட்டு வைணவத் திருப்பதிகளில் திருமாலிருஞ்சோலை எனும்
இந்துக் கலைக்களஞ்சியம்

அழகர் மலை கள்ளழகர் கோயில் சிறப்புப் பெற்ற திருப்பதியாக விளங்கி வருகிறது.
மூலவர் - பரமசுவாமி (அழகர்)
தாயார் - சுந்தரவல்லி (பூரீதேவி) உற்சவர் - சுந்தரராஜன் (கள்ளழகர்) தீர்த்தம் - நூபுரகங்கை (சிலம்பாறு) தலமரம் - சந்தனம் விமானம் - சோமசுந்தர விமானம் (க.ஹே.)
திருமாளிகைத் தேவர்
ைெசிவத் திருமுறைகளில் ஒன்பதாம் திருமுறையினை பாடியருளிய அடியார்கள் ஒன்பதின்மருள் ஒருவர்.
இவர் வேளாள மரபில் தோன்றியவரும் சோழ மன்னர்களின் தீட்சா குருவாக விளங்கியவருமான திருவிடை மருதூரில் வாழ்ந்து வந்த ஐந்து கொத்தாருள் (ஐந்து கொத்தார் - இவர் பரியேறும் பெரியோர், தெய்வ படிமப்பாதம் வைத்தோர் மாணிக்கக்கூத்தர், குருநாயர், சைவராயர் என 5 வகையினர்) ஒருவரான சைவராயர் வழியில் தோன்றிய உத்தமர். இவர்தம் முன்னோர்கள் வாழ்ந்த மடம் “மாளிகை மடம்” எனப் பெயர் பெறும். அம் மண்டபத்தின் சார்பால் இவர் திருமாளிகைத் தேவர் என்ற பெயரைப் பெற்றனர் என்பர். திரு - அடை மொழி. இவர் துறவு பூண்டு திருவாவடுதுறையை அடைந்து சில காலம் தவம் புரிந்தனர் என்பர். வேறொரு சாரார் திருமாளிகை என்பது கூத்தப் பெருமாள் வீற்றிருக்கும் மாளிகை, பெருமானை நாளும் வழிபட்டு வந்தமையில் இப்பெயர் பெற்றார் என்றும் கூறுவர்.
இவர் திருவாவடுதுறையில் சிவாலயத்திற்கு அருகே தென்றிசையில் தமக்கென ஒரு மடாலயம் (அருட்டுறைமடம்) அமைத்துக் கொண்டு இறைவழிபாட்டில் நின்றவர். அப்பொழுது அங்கு சிவயோகத்தில் அமர்ந்திருந்த சித்தரான போகநாதரிடம் ஞானோபதேசம் பெற்றவர். தம் தவத்தின் பயனாக அழகிய ஒளி வீசும் உடலைப்பெற்று விளங்கியவர். அப்பொழுது இவர் பல சித்திகளைப் பெற்றுத் திகழ்ந்தார். சைவ சமயத்தை நன்கு வளர்த்துப் போற்றினார். பற்பல சைவசித்தாந்த நூல்களை ஆராய்ந்து உணர்ந்த வித்தகராக விளங்கினார்.
இவரை பற்றிப் பல்வேறு செவிவழிச் செய்திகள் நிலவி வருகின்றன. திருமாளிகைத் தேவர் காவிரியில் நீராடிச் சிவ பூஜைக்காகத் திருமஞ்சனம், புஷ்பம் ஆகியவற்றை ஏந்திக் கொண்டு வரும் போது, வழியில் மக்கள் ஒரு சவத்தினைச் சுடலைக்கு எடுத்துச் செல்வதைக் கண்டு சவத்தீட்டினால் சிவ பூசைக்கு இடையூறு ஏற்படா வண்ணம் திருமஞ்சனக் குடம் முதலியவற்றை ஆகாயத்தில் எறிந்து அங்கே நிற்கச் செய்து, அச்சவத்தினை சுடலை வரை நடந்து செல்லுமாறு பணித்தார்.
123

Page 154
பிறகு திருமஞ்சனக் குடம் முதலியவற்றை எடுத்துக்கொண்டு சென்றார் என்றும், ஒரு சமயம் இவர் திருவிழிமிழலையிலிருந்த காலத்தில் அங்கு நடக்கும் தேர்த் திருவிழாவின் போது மக்கள் இழுக்க முடியாமல் ஓடாதிருந்த திருத்தேரினை வடம் கழற்றிவிட்டுத் தானே ஒடும்படி செய்தார் என்றும், இவர் தம்தவ வலிமையால் பேரழகு கொண்டு விளங்க, அதனைக் கண்ட மாதர் பலர் அவர் உருவத்தினைத் தம் மனதில் கொண்டனர். அதனால் அம்மாதர்கள் அவரைப் போலவே புதல்வர்களைப் பெற்றிருந்தனர். இச்செயல்களைக் கண்ட அந்த மாதர்களின் கணவன்மார்களும் பிறரும் திருமாளிகைத் தேவர் மீது சந்தேகம் கொண்டு பழிச்சொல் கூறலாயினர். பிறகு அங்கு ஆட்சி புரிந்த காடவர் கோன் கழற்சிங்கன் (கி.பி 825 - 50) ஆகிய பல்லவ அரசனின் சிற்றரசன் நரசிங்கன் என்னும் அரசனிடம் சென்று முறையிட்டனர். அப்பொழுது அம்மன்னன் உண்மை அறியாது தேவரைக் கட்டி அழைத்து கொண்டு வரக் காவலாளிகளிடம் கட்டளையிட்டார். அவர்கள் உடனே திருமாளிகைத் தேவர் திருமடத்திற்கு சென்று தாம் ஒருவரை ஒருவர் கட்டிக்கொண்டு அரசனிடம் படையெடுத்து வந்த போது திருமாளிகைத் தேவர் அரசனின் உள்ளக் கிடக்கையை அறிந்து துறைசை - கோமுத்தீசுவரர் திருக்கோயிலின் திருமதிலின் கண் இருந்த நந்திகளை உயிர்ப்பித்து ஏவி நரசிங்கனுடைய படையினை முறியடிக்கச் செய்தனர் என்றும் கூறப்படுகின்றது.
திருமாளிகைத் தேவர் ஒரு சமயம் சுடுகாட்டில் எழும் சவப்புகையின் நாற்றத்தை மாற்றியதும் கொங்கணவர் என்ற சித்தருடைய கமண்டலத்தில் என்றும் வற்றாத தண்ணிரை வற்றச் செய்ததும், சிவ நைவேத்தியமாகித் தமக்கு வந்த பயற்றம் சுண்டலை தம் மடாலயத்தின் புழக்கடையில் ஒரு பாத்தி கட்டி விதைத்துப் பலன் பெறச் செய்ததும் ஆகிய அற்புதச் செயல்களை
செய்தனர் என்பர். -
திருமந்திரத்தில் குருமட வரலாறு கூறும் பகுதியில் போக நாதர் என்னும் பெயருடையார் உளர். ஆயினும் அவர் இவருக்கு ஆசிரியராகார். அப்பெயருடைய பிறிதொருவர் ஆதல் வேண்டும் முதலாம் இராச இராசன் (கி.பி 985 - 1014) ஆட்சியில் திருவீழிமிழலைக் கோயிலில் நந்தா விளக்கு வைத்த ஜயந்தன் என்பவரைச் சிவஞானி என்றும் திருமாளிகைத் தேவர் என்றும் குறிக்கப் பெற்றறுள்ளது. ஜயந்தன் என்ற பெயரின் திரிடே சேந்தன் என ஆயிற்று என்பர். திருமாளிகைத் தேவர் பாடிய திருவிசைப்பா பதிகங்கள் நான்கினையும் அடுத்துச் சேந்தனார் பாடிய திருவிசைப்பா பதிகங்கள் மூன்றும் அமைந்திருத்தலையுப் திருமாளிகைத்தேவர் பாடியனவாக அமைந்த பதிகங்களில் இறுதிப் பதிகத்தின் இறுதிப் பாடலில் அவரது பெயர் குறிக்கட் பெறாமல் அவற்றின் பின் அமைந்த சேந்தனார் பாடிய திருவிடைக்கழித் திருவிசைப்பாவில் இறுதிப்பாடலில் “சேந்தன்'
124

என்ற பெயர் குறிக்கப்பட்டிருத்தலையும் கூர்ந்து நோக்கித் திருமாளிகைத் தேவர் என்பவரும் சேந்தனார் என்பவரும் ஒருவரே என்று ஆராய்ச்சியாளர் கருதுகின்றனர். இந்த ஆராய்ச்சியின் கருத்து “திருவிசைப்பா’ பாடிய ஆசிரியர் ஒன்பதின்மர் என்று தொட்டு வழங்கும் செய்திக்கு மிக முரணாகும். ஜயந்தன் என்ற பெயருடையவர் திருவிசைப்பா பாடிய திருமாளிகைத் தேவரது பெயரைத் தாங்கிய வேறொருவராவர் எனக் கோடலே பொருந்தும். அவரைச் சேந்தனார் என்று கருதுவதற்கு சிறிதும் இடமில்லை, திருமாளிகைத் தேவர் தாம் பாடிய திருவிசைப்பா முதல் பதிகத்து இறுதிப்பாடலில் “மூர்க்கனேன்” என்றும், இரண்டாம் பதிகத்து இறுதிப் பாடலில் “தவப் பெருந்தொண்டர் தொண்டனேன்” என்றும் தம்மைப் பணிவுடன் குறிப்பிடுதல் அன்றித் தம் இயற்பெயரைக் குறிப்பிடவில்லை. ஆனால் சேந்தனார் தம் இறுதிப் பதிகத்தில் (3ம் பதிகத்தில்) தம் பெயரைக் குறிப்பிடுகின்றார். ஆகவே திருமாளிகைத் தேவரும் சேந்தனாரும் இருவேறு ஆசிரியர்கள் என்பதே ஏற்புடைத்தாகும்.
திருவாவடுதுறை ஆதீன மடாலயத்துள் பஞ்சாக்கரதேசிகர் சந்நிதியின் வட பக்கத்துத் திருமாளிகைத் தேவருக்குத் தனிக் கோயில் உள்ளது. அவருடைய திருவுருவம் நான்கு திருக்கைகளுடன் திகழ்கின்றது. பூரீ கோமுக்தீசுவரர்க்கு உச்சிக் காலப் பூசை முடிந்தபின் உடனே திருமாளிகைத் தேவருக்கும் பூசை நடைபெறும். அதன் பின்னர் மடாலயத்தில் பகற் சந்தி போசனம் நடைபெறுவது வழக்கமாக இன்றும் இருந்து வருகிறது. "பேசு புகழ்ச் சுப்பிரமணிய தேசிகன் பொன், வீசு கழற்கடியேன் விண்ணப்பம், நேசம் வருதிரு மாளிகைத் தேவன் பூசையே, கருது பந்தியாதல் வழக்கம்” என்பதும் மீனாட்சி சுந்தரம் பிள்ளை
அவர்களின் தனிப்பாடல்.
திருமாளிகைத் தேவர் தில்லைக் கூத்தப் பெருமானை வழிபட்டுப் பாடியனவாகக் காணப்படும் திருவிசைப்பாத்
திருப்பதிகங்கள் நான்கு ஆகும். (தே. ஹ.)
திருமாற்பேறு
தொண்டை நாட்டுத் தலம். மக்கள் வழக்கில் திருமால்பூர் என்று வழங்குகிறது. திருமால் இறைவனை வழிபட்டுப் பேறு பெற்ற தலம். எனவே மாற்பேறு என்று பெயர் உண்டாயிற்று என்பர். திருமால் வழிபட்டு சக்கராயுதம் பெற்ற தலமாதலின் இதற்கு ஹரிசக்கரபுரம் என்றும் பெயர். சந்திரன் வழிபட்ட தலம். சம்பந்தர், அப்பர் பாடல் பெற்ற தலம்.
புராண தலம்
திருவீழிமிழலைக்குரிய வரலாறு இத்தலத்திற்கும் சொல்லப்படுகிறது. திருமால் நாள் தோறும் ஆயிரம் மலர்
கொண்டு சிவபெருமானை வழிபட்டார் என்றும் ஒரு நாள்
இந்துக்கலைக்களஞ்சியம்

Page 155
வழிபாட்டின் போது ஒரு மலர் குறையவே தன் கண்ணைப் பறித்து மலராக அர்ச்சித்துப் பேறு பெற்றார் என்பதும் வரலாறு. இவ்வாறு வழிபட்டுத் தம் சக்கராயுதமான சுதர்சனத்தைப் பெற்றார் என்று சொல்லப்படுகிறது. இதை வலியுறுத்தும் வகையில் திருமாலின் உற்சவத் திருமேனி ஒன்று 905 கையில் தாமரை மலரும் மறு கையில் கண்ணும் கொண்டு நின்ற
கோலத்தில் இருப்பதைக் இக்கோயிலில் காணக்கூடியதாக
உள்ளது.
இறைவன் மணிகண்டேஸ்வரர்
(வேறுஆறு பெயர்களும் உண்டு) இறைவி - அஞ்சனாட்சி, கருணாம்பிகை
தலமரம் - வில்வம் தீர்த்தம் - சக்கர தீர்த்தம் (கோயிலுக்கு
அருகில் புதர் மண்டிக்கிடக்கிறது.)
இராஜகோபுரம் கிழக்கு நோக்கியதாய் ஐந்து நிலைகளுடன் காணப்படுகிறது. பழமையான கோபுரம், சிற்பங்கள் இல்லை. வலம்புரி விநாயகர் உள்ளார். பக்கத்தில் உள்ள சக்கர தீர்த்தம் பயன்படுத்தும் நிலையில் இல்லை. உள் சுற்றுப்பிராகாரம் செடிகள் அடர்ந்து காணப்படுகிறது. உயரமான பீடத்தில் கவசமிடப்பட்ட
கொடிமரம், பலிபீடம், நந்தி முதலியன உள்ளன.
அடுத்துள்ள வாயிலின் மேற்புறம் பஞ்சமூர்த்திகளின் சுதை வேலைப்பாடுகள் இடம் பெற்றுள்ளன. வெளியில் வலப்பக்கம் அம்பாள் ஆலயமும் அடுத்து யாக தூண்களில் பசுவொன்று சிவலிங்கத் திருமேனிக்கு பால்சுரந்து வழிபடும் சிற்பமும், வாயிலுக்கு வெளியில் வலப்பால் நவக்கிரக சந்நிதியும் உள்ளன. வாயிலைக்கடக்கும் போது நந்தி தேவர் நின்ற கோலத்தில் காட்சி தருகிறார்.
உள் பிராகாரத்தில் சூரியன், நால்வர், சோழிஸ்வரர், பஞ்ச மாதாக்கள், பால கணபதி, உச்சிஷ்ட கணபதி, சிதம்பரேஸ்வரர், கஜலக்சுமி, வள்ளி, தெய்வயானை, முருகன் சந்நிதிகள் உள்ளன. தனியறையாக இல்லை. இரும்புத் தடுப்பு மட்டுமே உள்ளது. ஊஞ்சல் உள்ளது. அடுத்து வீரபத்திரர், பைரவர், சந்திரன் சந்நிதிகள் உள்ளன.
பிராகார வலம் முடிந்து படியேறும் போது வாயிலின் இரு புறமும் துவாரபாலகர்கள் உள்ளனர். ஒரு புறம் வல்லபை விநாயகர் பத்துக் கரங்களுடன் காட்சி தருகிறார். இது ஒரு அபூர்வ அமைப்பாகும். மறுபுறம் சண்முகர் உள்ளார். நடுவில் மூலவரைப் பார்த்தவாறு மகாவிஷ்ணு கூப்பிய கரங்களுடன் காட்சி தருகிறார். அவருக்கு முன் நந்தி உள்ளது. சந்நிதி வாயிலைக் கடந்து மண்டபத்தை அடையலாம். இங்குள்ள தூண்களில் மகாவிஷ்ணு, தக்ஷணாமூர்த்தி, சூரியன்,
இந்துக் கலைக்களஞ்சியம்

பாலசுப்பிரமணியர், அப்பர், சுந்தரர், சம்பந்தர், விநாயகர், முருகன், நான்கு முகங்களும் நன்கு தெரிய பிரம்மா, காளிங்கநர்த்தனம், காமதேனு, பைரவர், வீரபத்திரர், பலவகையான சிம்மங்கள் முதலான பல அரிய சிற்பங்கள் உள்ளன. நடராஜர் சிவகாமி யம்மன், மாணிக்கவாசகர் சிலைகள் உள்ளன. நேரே மூலவர் கருவறை. சிவலிங்கத் திருமேனி தீண்டாத் திருமேனி, குவளை (கவசம்) சாத்தியே அபிஷேகம் நடைபெறுகிறது. அவ்வப்பொழுது புனுகுச் சட்டம் சாத்தப்படுகிறது. கோஷ்ட மூர்த்தங்களாகத் தகூதிணாமூர்த்தி, மகாவிஷ்ணு, பிரம்மா, துர்க்கை ஆகியோர் உள்ளார். துர்க்கையின் திருமேனி அழகானது. அஷ்டபுஜங்களுடன் சங்கு, சக்கரம், ஏந்தி அழகாகத் காட்சித் தருகிறாள். உற்சவத் திருமேனிகளாகப் பிரதோஷ விநாயகர், சந்திரசேகரர், பள்ளியறை நாதர், விநாயகர், சுப்பிரமணியர், நால்வர், தல ஐதீகத்திற்குரிய மகாவிஷ்ணு ஒரு கையில் தாமரையும் மறுகையில் கண்மலரும் கொண்டு விளங்குகிறார். மூலவருக்கு முன் உள்ள விஷ்ணுவுக்கு தீபாராதனை முடிந்த பின் சடாரி சாத்திப் பின் தீர்த்தம் தரும்
வழக்கம் உண்டு.
அம்பாள் கோயில் தெற்கு நோக்கிய வண்ணம் தனிக் கோயிலாக உள்ளது. துவாரபாலகியர் உளர். அம்பாள் நின்ற கோலத்தில் அபய வரதகரத்துடன் காணப்படுகிறார். சந்நிதியின் மேற்புறத்தில் கல்லில் மீன் உருவமும் கைகூப்பிய உருவ மொன்றும், பக்கத்தில் யானையும் பெண் ஒருத்தியும் நிற்கும் அமைப்பில் சிற்பம் உள்ளது.
நாள் தோறும் ஐந்து காலப் பூஜைகள் நடைபெறுகின்றன. மாசிமகத்தில் பத்து நாட்களுக்குப் பெருவிழா நடைபெறுகிறது. இவற்றைவிட கிருத்திகை, ஆடிவெள்ளி, ஆடிப்பூரம், கார்த்திகைத் தீபம், ஆணித் திருமஞ்சனம், ஆருத்திரா தரிசனம் முதலிய சிறப்பு விழாக்களும் நடைபெறுகின்றன.
é
6.
ஊதியார் திருநஞ்சினை உண்டு உமை நீறுசேர் திருமேனியர் சேறுசேர் வயல் தென் திரு மாற்பேற்றின் மாறிலா மணி கண்டசேர்’
என்று சம்பந்தரும்,
‘ஐயனே அரனே என்று அரற்றினால்
உய்யலாம் உலகத்தவர் பேணுவர் செய்யபாதம் இரண்டும் நினையவே
வையம் ஆளவும் வைப்பர் மாற்பேறரே”
என அப்பர் பெருமானும் இத் தலத்து இறைவனைப் போற்றிப் பாடியுள்ளனர். (நி.நி.)
125
1 oq q 4, 8 SR

Page 156
திருமீயச்சூர்
GarnTyp நாட்டுத் தலம். பேரளத்திற்கு வட மேற்கே இரண்டு கிலோ மிற்றர் தொலைவில் திருமீயச்சூர் என்ற பாடல் பெற்ற தலம் உள்ளது. பேரளம் சுயம்பு நாதரைத் தரிசித்து விட்டு மிஹிர ஷேத்திரத்தைத் தரிசிக்க வேண்டும் என்று தல புராணம் கூறுகிறது. மீயச்சூர் கோயிலுக்குள்ளேயே இளங்கோயில் உள்ளது. சூரியதேவனால் வழிபடப்பட்ட பழம் பெரும் இத் தலத்திற்குச் செல்ல சரியான பாதை இல்லை. ஒற்றை மாட்டு
வண்டி செல்லும் பாதையே உள்ளது.
கோயில்
இறைவன் - மேகநாதர், முயற்சிநாதர் இறைவி செளந்தரநாயகி, லலிதாம்பாள் தலமரம் விஸ்வம் தீர்த்தம் சூரிய தீர்த்தம் சுவாமி சந்நிதிக்கு வடக்கில் மீயச்சூர் இளங் கோயில் உள்ளது.
இறைவன் சகலபுவனேஸ்வரர் இறைவி மேகலாம்பிகை
காளி வழிபட்ட சிறப்புடையது. கிழக்குப் பார்த்த ராஜகோபுரம் சிதைந்த நிலையில் உள்ளது. சுதைச் சிற்பங்கள் எதுவுமின்றி செங்கற்கள் பெயர்ந்து காணப்படுகிறது. உட்கோபுரம் நேர்த்தியாக உள்ளது. மூன்று நிலைக் கோபுரமாக பல சிற்பவடிவங்களுடன் விளங்குகிறது. கோபுரத்திற்குக் கீழே பல கல்வெட்டுக்கள் காணப்படுகின்றன. கொடி மரம் இல்லை. நந்தியும் , பலிபீடமும் மட்டுமே உள்ளன. சுவாமி சந்நிதிக்கு இடப்பால் விஸ்வநாதர் சந்நிதி, வலப்பால் அம்பாள் சந்நிதி, சுதையினாலான துவாரபாலகர்களைத் தரிசித்து வாயிலைக் கடந்து நேரே மூலவர் தரிசனம். இக் கோயில் விமானம் கஜப் ப்ருஷ்ட அமைப்புடையது. சூரிய பகவான் தன் சாபம் நீங்கும் பொருட்டு சுவாமியையும் அம்பாளையும் யானை மீது அமரவைத்து வழிபட்டாராம். அதனால் தான் இங்குள்ள விமானம் கஜப்ருஷ்ட வடிவத்தில் அமைந்துள்ளது. மூலவர் மிகச் சிறிய பாணமாக உள்ளார். காளி தன் கையால் பிடித்து வைத்து வழிபட்டதாதலின் மிகச்சிறிய பாணமாகவுள்ளது. பக்கத்தில் தியாகராஜர் சந்நிதி உள்ளது. இங்குள்ள சுப்பிரமணியர் வடிவம் வில்லேந்தியவாறு மிக்க அழகாகவுள்ளது. அம்பாள் சந்நிதி தனியே கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. வலதுகாலை மடித்து இடக் காலைத் தொங்கவிட்டுக் கொண்டு பஞ்ச சக்தி பீடத்தில் அமர்ந்திருக்கிறாள். வலக்கையில் புஷ்பம் ஏந்தியிருக்கிறாள்.
சுவாமி கோயிலில் தென்புறச் சுவரில் கோஷ்ட விநாயகரையடுத்துள்ள க்ஷேத்திர புராணேச்வரர் வடிவம் புதுமையான வடிவமாகவுள்ளது. அம்பிகை சற்றுச் சிணுங்கி,
126

முகத்தை வேறுபுறம் திருப்பிக் கொண்டிருக்க, பரமன் அவளைச் சமாதானப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார். முனிவர் ஒருவர் சற்றே பின்னே நின்று கொண்டிருக்கிறார். இதற்கு அடிப்படையாக ஒரு புராணக் கதை இருக்க வேண்டும். ஆனால்
அது பற்றித் தெளிவான குறிப்புக்கள் எதுவும் இல்லை.
திருமீயச்சூர் கோயில் கருவறையின் வடக்குப்புற வெளிச் சுவரில் விஷ்ணு துர்க்கையோடு, மற்ற இரு கோஷ்டங்களில் சந்திர சேகரரும் ரிஷிபாரூடரும் இருக்கின்றனர். இதுவும் ஒரு புதுமையான அமைப்பு. அதே போல் மேகநாத சுவாமிக்கு வடபுறம் மற்றொரு சிறு கோயில் உள்ளது. இங்கு உறைபவர் சகல புதனேச்வரர். அம்பிகையின் பெயர் மின்னுமேகலையாள். இக் கோயிலை இளங்கோயில் என்றழைப்பர். இளங்கோயிலின் வடபுறம் துர்க்கைக்குரிய கோஷ்டத்தில் சதுரமுகசண்டிகேச்வரர் இருக்கிறார். மேலும் இங்கு சப்த மாதர்கள் வழிபட்ட சப்தலிங்கங்கள், பாதாள லிங்கம், ஆகாசலிங்கம் என்று நிறைய
சிவலிங்கங்கள் இருக்கின்றன.
சித்திரை மாதம் 21 ஆம் திகதி முதல் 27 ஆம் திகதிவரை சூரிய கிரகணங்கள் சுவாமி மீது படுகின்றன. அதுவே சூரிய பூஜை சூரியன் தோற்றுவித்த சூரிய புஷ்கரணி கோயிலுக்கு வெளியே உள்ளது.
ஆடிப் பெருக்கு, விநாயகர் சதுர்த்தி, நவராத்திரி, சஷ்டி, கார்த்திகைச் சோமவாரங்கள், திருவாதிரை முதலிய விழாக்கள், சிறப்பாக நடைபெறுகின்றன. இக்கோயில் செம்பியன் மகாதேவி காலத் திருப்பணியைப் பெற்றது.
"பொன்னேர் கொன்றைமாலை புரளும் அகலத்தான் மின்னேர் சடைகள் உடையான் மீயச்சூரானைத் தன்னேர் பிறரில்லானைத் தலையால் வணங்குவார்
அன்னேர் இமையோர் உலகம் எய்தல் அரிதன்றே”
எனச் சம்பந்தப் பெருமானும்,
"வேதத்தான் என்பர் வேள்வியுளான் என்பர் பூதத்தான் என்பர் புண்ணியன் தன்னையே கீதத்தான் கிளறும் திருமீயச்சூர் ஏதம் தீர்க்க நின்றார் இளங்கோயிலே’
என அப்பர் பெருமானும்,
இத் தலத்து எழுந்தருளியிருக்கும் இறைவனைப் போற்றி பாடியுள்ளனர். (நி.நி.)
இந்துக்கலைக்களஞ்சியம்

Page 157
திருமுதுகுன்றம் (விருத்தாசலம்)
நடு நாட்டுத் தலம். மூவர் பாடல் பெற்ற தலம். விருத்தாசலம் புகையிரத நிலையத்தில் இருந்து 3 கி.மீ. தொலைவிலுள்ளது. திருச்சியில் இருந்தும் விழுப்புரத்தில் இருந்தும் பேருந்து வசதிகள் உண்டு. திருமுதுகுன்றம் தமிழ்ப் பெயர்; விருத்தாசலம் சமஸ்கிருதப் பெயர்.
இத்தலத்தின் பெயரில் குன்றம் என்ற சொல் இருப்பினும் காண்பதற்கு மலை எதுவுமில்லை. குன்று பூமியின் அடியில் புதைந்திருப்பதாக தலவரலாறு கூறுகின்றது. இதற்கேற்ப பூமிக்கடியில் பாறைகள் உள்ளன. எல்லா மலைகளும் தோன்றுவதற்கு முன்னர் இம்மலை தோன்றி மறைந்தமையால் பழமலை - முதுகுன்றம் என்று பெயர் வந்தது. (விருத்தம்- பழமை, அசலம்-மலை) இத்தலத்திற்கு விருத்தகாசி, சிரகிரி என்ற பெயர் களும் உண்டு. பண்டை நாளில் இத் தலத்தில் உள்ளோர் காசிக்குச் செல்வதில்லை என்ற மரபு இருந்ததாகத் தெரிகின்றது. மணிமுத்தா நதிக்கரையில் அமைந்துள்ளது இத்தலம். கோயிலின் வடக்குக் கோபுரவாயிலின் நேரே வடபால் மணி முத்தாற்றில் நீராட வேண்டும். இவ்விடமே புண்ணியமடு எனப்படுகின்றது.
சிவத்தலங்கள் ஆயிரத்தெட்டில் தலைமையான நான்கினுள் இத்தலம் ஒன்றாகும். ( ஏனைய மூன்று தலங்களும் காசி, சிதம்பரம், காளஹத்தியென்பன) சிதம்பரம் சிவபெருமான் திருநடனத்துக்குரிய தென்றும் கூறப்படும். இத்தலத்தில் தேவர்களின் பொருட்டு இறைவன் ஒரு முறை திரு நடனம் செய்தனர் என்று தலபுராணம் கூறும்.
இத்தலத்தில் மரிக்கும் உயிர்களை மரண சமயத்தில் உமாதேவியார் தம்மடியில் வைத்து முந்தானையால் விசிறுவாரென்பதும். சிவபெருமான் அவ்வுயிர்களின் வலக்காதில் பஞ்சாட்சர உபதேசம் செய்தருளுவாரென்பதும் பல நூல்களில் காணப்படுகின்றன.
"தூசினா லம்மை வீசத் துடையின்மேற் கிடத்தித்துஞ்சும் ஆசிலா உயிர்கட் கெல்லா மஞ்செழுத் தியல்பு கூறி ஈசனே தனது கோல மீந்திடு மியல்பா லந்தக் காசியின விழுமிதான முதுகுன்ற வரையுங் கண்டான்
என்பது கந்தபுராணம்.
மகா பிரளய காலத்திலும் இத் தலம் அழியாமல் மேலோங்கி நிற்பது.
“ஒவா புவரி கொள்ள ஷயர்ந்தா யென்றேத்தி மூவர் முனிவர் வணங்கும் கோயில் முது குன்றே”
என்று திருஞானசம்பந்தர் பாடியுள்ளார்.
இந்துக் கலைக்களஞ்சியம்

அகத்தியர், பிரமன், திருமால், சூரியன், இந்திரன் முதலியவர்கள் வழிபட்டுப் பேறு பெற்ற தலமாகும். அகத்தியரைப் பீடித்திருந்த பிரமஹத்தி தோஷம் இத்தல இறைவனை வழிபட்டே நீங்கப்பெற்றது என்பது தல புராணக் குறிப்பு. சுந்தரர் பரவைநாச்சியாருக்காக தான் பெற்ற பொன்னை மணிமுத்தா நதியில் (இத் தல தீர்த்தம்) இட்டு திருவாரூர்க் கமலாலயக் குளத்திலே சிவபெருமான் அருளாலே பெற்றனர்.
இத்தலத்தைச் சார்ந்ததாகக் “கோபருப்பதம்'என்னும் ஒரு சிறந்த சிவன் தலம் உன்டு. அத்தலமும் தல புராணத்திலும் வேறு பல நூல்களிலும் இத் தலத்துடன் சேர்த்தே சிறப்பிக்கப்படுவது. மகாநந்திபாராயண முனிவரென்னும் சித்தரொருவர் இருந்து சசிவர்ணனென்னும் மகாபாவி ஒருவனைத் தடுத்தாட் கொண்டு ஞானோபதேசம் செய்வதற்கு இடமாகிப் பெருமை பெற்றது அது.
குரு நமசிவாயர் பற்றிச்சொல்லப்படும் வரலாறு
குரு நமசிவாயர் என்னும் மகான் 16ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். ஒரு முறை அவர் திருவண்ணாமலையில் இருந்து தில்லை சென்றார். வழியில் திருமுது குன்றத்தில் இரவு தங்கினார். இறைவனைத் தரிசித்து விட்டு கோயிலின் ஒரு பக்கத்தில் படுத்திருந்தார். பசியெடுத்தது. பசி மிகுந்த வேளையில் எல்லாம் அம்பிகையைத் துதித்து உய்வு பெறுபவர் இவர். முதுகுன்ற பெரிய நாயகியைத் துதித்து உணவு வேண்டினார். தன் பாடலிலே பல முறையும் கிழத்தி, கிழத்தி என்று பாடினார். அவ் வேளையில் பெரிய நாயகி முதிய வடிவில் எதிர் தோன்றி கிழத்தி எவ்வாறு நீரும் சோறும் கொண்டு வர முடியும் என வினவ
குரு நமசிவாயர்,
முத்தி நதி சூடும் முதுகுன்றுறைவாளே பக்தர் பணியும் பதத்தாளே- அத்தன் இடத்தாளே முற்றா இளமுலை மேலார வடத்தாளே சோறு கொண்டு வா’
என்று பாடினார். அம்மையும் மகிழ்ந்து இள நாயகி வடிவு கொண்டு வந்து உணவு படைத்தாள் என்று சொல்லப்படுகிறது.
கோயில்
இறைவன் - விருத்தகிரீஸ்வரர், பழமைநாதர் இறைவி - விருத்தாம்பிகை, பெரியநாயகி, பாலாம்பிகை தீர்த்தம் - மணிமுத்தாறு, அக்கினி, குபேர சக்கர தீர்த்தங்கள் தல மரம் - வன்னி
தல விநாயகர் - ஆழத்துப் பிள்ளையார்
நாற்புறமும் ஏழு நிலைக் கோபுரங்களைக் கொண்ட மிகப் பெரிய கோயில். கிழக்குக் கோபுர வாயிலின் முன்னால் பதினாறு
கால் மண்டபம் உள்ளது. இதன் வட, தென்பாற் சுவர்களில் 72
127

Page 158
வகையான பரத நாட்டியக் கரண உருவங்கள்
சித்தரிக்கப்பட்டுள்ளன.
வாயிலின் உட்புறம் முன்னால் இருப்பது கைலாசப் பிராகாரம். அதன் முன்னால் உயர்வாக உள்ள மண்டபம் தீபாராதனை மண்டபம். மேற்புறம் உள்ள மண்டபம் நந்தி மண்டபம். ஆடிப்பூரத்தில் கலியாணப் பெருவிழா இங்கு தான் நடைபெறும். தென்பக்கத்தில் உள்ளது விபசித்து முனிவர் மண்டபம். மாசி மகத்தில் 6ஆம் நாள் விழாவில் உற்சவ மூர்த்தி பெரிய நாயகி காட்சி தர விபசித்து முனிவர் தரிசிக்கும் விழா இங்கு தான் நடைபெறுகிறது. இம் மண்டபத்திற் கிழக்குப் பக்கத்தில் அக்கினி தீர்த்தமும் அதன் தெற்கில் சொற்பொழிவு மண்டபமும் உள்ளன.
தல விநாயகர் ஆழத்துப் பிள்ளையார் சந்நிதி ஆழத்தில் உள்ளது. இறங்குவதற்குப் படிகள் உண்டு. தனிச் சுற்று மதிலும் கோபுரமும் கொண்டு இச்சந்நிதி விளங்குகின்றது. இப் பிராகாரத்தில் திருமாலின் சக்கரத்தால் உருவான சக்கர தீர்த்தம் உள்ளது. மேலும் இங்கு 28 ஆகமக் கோயில் உள்ளது. முருகக் கடவுள்28 ஆகமங்களையும் சிவலிங்கங்களாகப் பூஜித்தார். காமிகேசுவரர் முதல் வாதுளேசர் ஈறாக ஆகமங்களின் பெயர்களை இத் திருமேனிகள் பெற்றுள்ளன. பக்கத்தில் குபேர தீர்த்தம். அடுத்துள்ள யாகசாலை மண்டபம் மிகப் பழமையானது. சக்கரங்கள் பொருந்தி குதிரைகள் பூட்டப்பட்ட நிலையில் உள்ளது. இதுவே கைலாசப்பிராகாரத்தின் முடிவு.
அடுத்து உள்ள பிராகாரத்திற்கு வன்னியடிப்பிராகாரம் என்று பெயர். மடப்பள்ளிக்குப் பக்கத்தில் தலமரமான வன்னிமரம் உள்ளது. இங்குள்ள மேடையில் விநாயகர், விபசித்து முனிவர்.உரோமேச முனிவர், விதர்க்கண செட்டி ( வழிபட்டுச் சிவகணமான ஓர் அன்பர்) குபேரன் தங்கை ஆகியோரின் உருவங்கள் உள்ளன. இப் பிராகாரத்தில் வல்லபை கணபதி,மீனாட்சி, சொக்கலிங்கம், விசுவநாதலிங்கம், ஆறுமுகர், ஸஹஸ்ரலிங்கம், ஏகாம்பரலிங்கம், ஜம்புலிங்கம், அண்ணா மலையார் முதலிய சந்நிதிகள் உள்ளன. நவக்கிரக சந்நிதியும், தண்டபாணி சந்நிதியும் உள்ளன. இப் பிராகாரத்திலேயே அலங்கார மண்டபம் உள்ளது. உற்சவரான பெரிய நாயகர் எழுந்தருளியிருக்கும் இடம் இதுவாகும். இவர் ஆண்டில் ஒரு நாள் மட்டும் - மாசி மாதத்து ஆறாம் நாள் மட்டும் - வெளியில் உலாவருவார். மற்றைய விழா நாட்களில் சிறிய பழமலை நாயகர் வெளியில் உலா வருவது மரபு. பெரிய நாயகர் உற்சவமூர்த்தி ஆதலின் நாள் தோறும் அலங்காரம் தீபாராதனை அனைத்தும் ஸ்படிகலிங்கத்திற்கே செய்யப்படுகின்றன. நடராஜ சபையுடன் வன்னியடிப்பிராகாரம் முடிவடைகிறது.
மூன்றாவது சுற்றுப் பிராகாரம் அறுபத்து மூவர் பிராகாரமாகும். இங்கு நால்வர், அறுபத்து மூவர், ரிஷபாரூடர்,
128

யோக தட்சிணாமூர்த்தி, சப்தமாதர்கள், உருத்திரர், மாற்றுரைத்த விநாயகர் முதலிய திருவுருவங்கள் உள்ளன. மேலும் வருணலிங்கம், தட்சிணாமூர்த்தி, சின்னப்பழ மலைநாதர் இக் கோயிலிலிருந்து 72 கல்வெட்டுகள் படியெடுத்து வெளியிடப் பட்டுள்ளன. இவை கண்டராதித்தன், முதலாம் ராசராசன், மூன்றாம் குலோத்துங்கன் மற்றும் பாண்டியர், பல்லவர் விஜயநகர
மன்னர் முதலானோரின் காலத்தவை.
இக் கல்வெட்டுகளில் இருந்து வேதமோதவும், புராணம் படிக்கவும், திருமுறைப் பாராயணம் செய்யவும், நந்தவனம் வைக்கவும், நிலமும், பொன்னும், பொருளும், நெல்லும் கொடுத்த செய்திகள் அறியக் கிடக்கின்றன. வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்தத் தவறிய ஒருவனுக்குத் தண்டனையாக கோயில் விளக்கிடுமாறு பணித்த செய்தியொன்றும் ஒரு கல்வெட்டால் தெரிய வருகிறது. பல்லவ மன்னனான கோப்பெருஞ்சிங்கன் என்பவன், தான் போர்க் களத்தில் பலரைக் கொன்று பழி நீங்குவதற்காகப் பழ மலைநாதருக்கு வைரமுடி ஒன்று செய்து அதற்கு அவனியாளப் பிறந்தான் என்று பெயரும் சூட்டினான். என்பது மற்றைய கல்வெட்டுச் செய்தி.
கல்வெட்டில் இறைவன் திருப் பெயர் திருமுதுகுன்றம் உடையார். ராஜேந்திர சிம்ம வளநாட்டு இருங்கொள்ளிப் பாடி பழுவூர்க் கூற்றத்து நெற்குப்பை திருமுது குன்றம் உடையார்க்கு என்று குறிப்பிடப்பட்டிருக்கின்றது.
பூரீ ஞானக் கூடத்தரென்னும் பெரியாரால் தமிழில் இயற்றப்பட்ட புராணம் ஒன்று இதற்கு உண்டு. கவிஞர் பெருமானாகிய துறைமங்கலம் சிவப்பிரகாச சுவாமிகளால் இயற்றப் பெற்ற பழமலையந்தாதி பிகூடிாடன நவமணிமாலை, பெரிய நாயகி அம்மை விருத்தம், பெரிய நாயகி அம்மை கலித்துறை என்பனவும் குமாரதேவரால் இயற்றப் பெற்ற பெரிய நாயகியம்மை விருத்தம், கலித்துறையென்பனவும் குரு நமசிவாயரால் இயற்றபெற்ற சில வெண்பாக்களும் இத் தலம் சம்பந்தமானவை. சிதம்பர புராணம், சூதசங்கிதை, திருக்காளாத்தி புராணம், திருக்காளாத்தி நாதருலா முதலிய பல தமிழ் நூல்களில் இத்தலத்தின் பெருமை கூறப்படுகின்றது. இத்தலத்தில் எழுந்தருளியிருக்கும் முருகப் பெருமானைப் பற்றி அருணகிரிநாதரால் இயற்றப்பட்ட திருப்புகழ்ப் பாடல்கள் சில உண்டு. (நி.நி.)
திருமுருகநாயனார்
சோழவள நாட்டிலே திருப்புகலூர் என்னும் ஊரிலே பிறந்தவர் திருமுருகநாயனார். இவர் வேதியர் குலத்தைச் சேர்ந்தவர். சிறந்த சிவபக்தர். சிவபெருமானுடைய திருவடியை அனுதினமும் நினைத்து உருகுபவர். இலிங்க, சங்கம வழிபாட்டில் ஈடுபட்டவர்.
இந்துக் கலைக்களஞ்சியம்

Page 159
முருகநாயனார் நாள்தோறும் அதிகாலையில் எழுந்து காலைக் கடன்களை நிறைவுசெய்து, நீராடி திருநந்தவனம் சென்று கோட்டுப்பூ, கொடிப்பூ, நிலப்பூ, நீர்ப்பூ என்னும் நால்வகைப் பூக்களையும் கொய்து வந்து அவற்றை இண்டை, தாமம், கண்ணி, பிணையல் போன்ற வகை, வகையான மாலைகளாகக் கட்டி சிவபெருமானுக்குச் சூட்டும் திருத்தொண்டை தினம் செய்து வந்தவராவார்.
வேதியர் குலத்தைச் சேர்ந்த முருக நாயனார் வழிபட்டு சிவத்தொண்டு புரிந்த ஆலயம் வர்த்தமானிச்சரம் எனப் பெயர் பெறும் ஆலயமாகும். இவர் திருவைந்தெழுத்தாகிய "நமசிவாய' என்னும் பஞ்சாட்சர மந்திரத்தை இடைவிடாது ஓதி வழிபாடு செய்து வந்தார். திருவைந்தெழுத்து மந்திரம் மட்டுமல்லாது, சிவனடியார் வழிபாடு ஆகிய சங்கம வழிபாட்டிலும் ஈடுபாடு காட்டி வந்தவர் ஆவார்.
சிவனடியார் யாத்திரை செல்லும் போது தங்கி இருந்து இளைப்பாறிச் செல்ல திருமடம் அமைத்து அதனை நடாத்தி வந்தார். இவருடைய திருமடத்தில் சம்பந்தர், அப்பர், சிறுத்தொண்டர் முதலியவர்கள் தங்கி மகிழ்ந்தனர். இவர் சம்பந்தரின் நெருங்கிய தோழனாக விளங்கி உள்ளார். இதனை திருத்தொண்டர் திருவந்தாதியிலே,
துதியுங் கழற் சண்பை நாதற்குத் தோழன் வன்தொண்டன் பொன் அதிகம் பெறும் புகலூர் முருகனெனும் அந்தணனே'
என்று நம்பியாண்டார் நம்பி கூறுகிறார்.
திருஞானசம்பந்தர் தமது தேவாரப் பாடலில் முருகநாயனாரையும் புகழ்ந்து பாடியுள்ளார்.
சிறந்த சிவபக்தரான முருகநாயனார் திருஞானசம்பந்தரின் தோழமையினால் திருஞானசம்பந்தரின் திருமண வைபவத்தில் கலந்து கொண்டு அவருடனேயே சித்திரைச் சதய நாளில் சிவசோதியிற் கலந்தார். (a .6.)
திருமுருகன் பூண்டி
"வில்லைக் காட்டி வெருட்டி வேடுவர் விரவாமை சொல்லி கல்லினாலெறிந் திட்டுமோதியுங் கூறை கொள்ளுமிடம் முல்லைத் தாது மணங்கமழ் முருகன் பூண்டி மாநகர்வாய் எல்லைக்காப்பதொன் றில்லையாகில் நீர் எதுக்கிருந்தீர்
ரெம்பிரானிரே”
எனச் சுந்தரர் உரிமையுடன்பாடும் திருமுருகன் பூண்டி பாடல் பெற்ற கொங்கு நாட்டுத் தலங்கள் ஏழில் ஐந்தாவது தலமாகும்.
இந்துக்கலைக்களஞ்சியம்

அவிநாசியிலிருந்து ஐந்து கிலோமீற்றர் தூரத்தில் உள்ளது. இது மாதவிவனம் எனவும் அழைக்கப்படுகிறது. துருவாசர் கற்பகவுலகிலே இருந்து மாதவிமரத்தை (குருக்கத்திமரம்) இங்கு கொண்டு வந்தார் என்பர். இது முருகன் பூசித்த தலமாகும். இங்கு மாதவிவனேசுவரர் ஆலயம், திருமுகநாதர் ஆலயம் என
இரு பழம் பெரும் ஆலயங்கள் உள்ளன.
மேற்குப் பார்த்த சந்நிதி; மூலவரினதும் அம்பாளினதும் பீடத்தின் கோமுகம் வடக்கு நோக்கியுள்ளன. கோயிலின் நுழைவு வாசலிற் பதினாறுகால் மண்டபத்தில் விநாயகர் சந்நிதி உள்ளது. அதற்கப்பால் வலப்பக்கத்தில் வேடுவர் உருவமும் சுந்தரர் உருவமும் உள்ளன. கோயிற் பிராகாரத்தில் வைரவர் சந்நிதியும் நவக்கிரகங்களும் உள்ளன. இங்குள்ள சண்முகநாதர் சந்நிதியும் பிரம தாண்டவ நடராசர் சந்நிதியும் விசேஷமானவை.
இங்குள்ள இறைவன் முருகநாதேஸ்வரர், முருகநாத சுவாமிகள் என்றழைக்கப்படுகிறார். இறைவி ஆலிங்கபூஷண ஸ்தனாம்பிகை, முயங்கு பூண்முலையம்பிகை, ஆவுடைநாயகி, மங்களாம்பிகை எனப் பல பெயர்களால் அழைக்கப்படுகிறார். தீர்த்தங்களாக பிரமதீர்த்தம், ஞானதீர்த்தம், சுப்பிரமணிய தீர்த்தம் என மூன்று தீர்த்தங்கள் காணப்படுகின்றன. இங்குள்ள பிரம தீர்த்தத்தில் நீராடி முருகநாதப் பெருமானை வழிபட்டாற் பிரமஹத்தி சித்தசுவாதீனம், பில்லி, சூனியம் நீங்கும் என்பது இத்தலத்தின் தலையாய சிறப்பாகும். பிரமஹத்தி தோசம் நீங்கிய தலம் இதுவாகும். தலவிருட்சமாக வில்வமரம் காணப்படுகிறது.
இக்கோயிலுக்குப் பக்கத்தில் மாலாதரன் எனும் வேட மன்னன் வழிபட்ட மாதவிவனேஸ்வரர் கோயில் உள்ளது. மூலவர் கிழக்கு நோக்கியுள்ளார். இவர் சுயம்பு மூர்த்தி என்று சொல்லப்படுகின்றது. இறைவன் மாதவிவனேஸ்வரர் என்றும் இறைவி மங்களாம்பிகை எனவும் அழைக்கப்படுகின்றனர். கோயிலின் முன் மண்டபத்தின் மேலே ஆலயத்தைப் பார்த்தவாறு பெரிய நந்தி ஆக்கப்பட்டுள்ளது. ஆலயச் சுற்றில் நிருதி விநாயகர், கேது ஆகியோர்களின் சந்நிதிகள் உள்ளன. நாள்தோறும் நான்கு காலப் பூசைகள் இடம் பெறுகின்றன. மாசி மாதத்தில் 11 நாட்கள் பெருவிழா நடைபெறுகின்றது. இங்கு முதற் பூசை மாதவனேஸ்வரருக்கும் அடுத்த பூசையை திருமுருகநாதருக்கும் ஆதிசைவப் பெருமக்கள் செய்து வருகின்றனர்.
திருமுருகன் பூண்டி சிறந்த முருகன் தலமாகவும் விளங்குகிறது. கோயிலின் உள் மண்டபத்தில் ஆறுமுகப் பெருமான் வள்ளி தெய்வயானையுடன் சண்முகநாதர் என்ற திருப்பெயருடன் உள்ளார். மிக அழகான வடிவம் உள்ள இவரே இத்தலத்திற்கு முதன்மையானவர். வேண்டுவோர் வேண்டுவன அருளும் வரப்பிரசாதியான இப்பெருமானை அருணகிரிநாதர் திருப்புகழிற் பாடியுள்ளார். சுந்தரமூர்த்தி நாயனார், சேரமான்
129

Page 160
பெருமாள் நாயனார் அளித்த பொருளோடு திருமுருகன் பூண்டிக்கு அருகில் வரும் போது இறைவன் ஏவலால் பூதங்கள் வேடுவர்களாக வந்து அந்தப் பொருளைப் பறித்துப் போயின. சுந்தரர் இத்தலத்துக்கு வந்து ". கொடுகு வெஞ்சிலை வடுக வேடுவர்.” என்று தொடங்கும் திருப்பதிகத்தைப் பாடி இறைவன் அருளால் இழந்த பொருளை மீண்டும் பெற்றார். இக்கோயிலுள்ள மூன்று திருவுருவச் சிலைகள் காணப்படுகின்றன. இம்மூன்றினுள் ஒன்று வில்லும் அம்பும் பிடித்த வேட்டுவக் கோலம். மற்றொன்று பரிதாப நிலைத்தோற்றம், இன்னொன்று பரிதாப பரவச நிலைத்தோற்றம். இவை சுந்தரமூர்த்தி நாயனாரின் வரலாற்றைக் குறித்து நிற்கின்றன.
திருமுருகன் பூண்டித் திருத்தலத்தைச் சுந்தரமூர்த்தி நாயனாரும், அருணகிரிநாதரும் பாடியுள்ளனர். செட்டிப்பாளையம் வாசுதேவ முதலியார் தலபுராணம் பாடியுள்ளார். அகத்தியர் மார்க்கண்டேயர், துருவாசகர் ஆகியோர் வழிபட்ட தலம். இங்கு பல சாசனங்களும் சிற்பங்களும் இருப்பதால் இவ்வாலயம் தொல்பொருள் இலாகாவின் பாதுகாப்பில் உள்ளது. திருமுருகன் பூண்டியில் எண்ணற்ற சிற்பக் கூடங்களும் காணப்படுகின்றன.
(க.ஹே.)
திருமுருகாற்றுப்படை
தமிழ்ச் சங்க நூல்களில் பத்துப் பாட்டுத் தொகையின் முதல் பாடலாகவும் திருமுறைகளில் பதினோராம் திருமுறையில் ஒரு பிரபந்தமாகவும் உள்ளது நக்கீர நாயனாரால் இயற்றப்பட்ட திருமுருகாற்றுப்படை தமிழ் மக்கள் முருகனிடம் அளவற்ற பக்தி பூண்டவர்கள். எனவே அப்பெருமானைப் பற்றிய நூல் முதல் நூலாக கடவுள் வாழ்த்தாக இடம் பெற்றதில் வியப்பொன்றும் இல்லை.
ஒரு வள்ளலிடம் சென்று தன் புலமைத் திறத்தால் பெரும் பரிசில் பெற்று வந்த ஒரு புலவன் வறியவனான மற்றோர் புலவனுக்கு இந்த வள்ளலின் அருமை பெருமைகளைக் கூறி அவனையும் அவ்வள்ளலிடம் சென்று அவன் வித்துவச் சிறப்பினைக் காட்டி பரிசு பெறுமாறு வழிப்படுத்துவதே ஆற்றுப்படையாகும். ஆறு - வழி; படை - படுத்துதல், செலுத்துதல். பொதுவாக ஆற்றுப்படை யாருக்கு வழிகாட்டப்படுகிறதோ அவர் பெயரில் தான் அமையும். இங்கே முருகப் பெருமானுடைய அருளைப் பெற்று சீவன் முத்தி நிலையடைந்த புலவன் அப்பெருமானிடம் தீராத அன்பு கொண்டு அவனை அடையத்துடிக்கும் ஆர்வலனான புலவனுக்கு வழிகாட்டுகிறான். ஆகவே இந்நூல் புலவராற்றுப்படை என்றே குறிப்பிடப்படல் வேண்டும். எனினும் மறுமைப் பேற்றை நல்கும் பெருமானுக்கு ஆற்றுப்படுத்தலால் அப்பெருமானின் பெயரிலேயே திருமுருகாற்றுப்படை என அழைக்கப்படுகிறது.
130

கவி பிறந்த கதை
ஒரு முறை பாண்டிய மன்னனுக்கு காரிகையரின் கூந்தலின் மணம் இயற்கையா? செயற்கையா? என்ற சந்தேகம் எழுந்தது. தனது சந்தேகத்தைத் தீர்ப்பவர்களுக்கு ஆயிரம் பொன் கொண்ட ஒரு பொற்கிழி வழங்குவதாக மன்னன் அறிவித்தான். தன் ஐயம் நீங்கும் வகையில் பாட்டெழுதுவோருக்கு இப்பரிசு என்று அறிவித்தான். அவ்வேளையில் மதுரைச் சொக்கநாதருக்குத் தொண்டு செய்து வந்த தருமி - மிக ஏழை - திருமணம் செய்து கொள்ள விழைந்தான். தான் வணங்கும் ஐயனிடம் பொருள் இறைஞ்சி நின்றான். சிவபெருமான் ஒர் ஏட்டிலே பாட்டொன்றை எழுதி, இதை மன்னனுக்குக் காட்டு, உனக்குப் பொற்கிழி கிடைக்கும்” என்று அசரீரியாகக் கூறி அதை அவன் பெறச் செய்தார். பாட்டைக் கேட்டுத் திருப்தியுற்ற மன்னன் பெருமகிழ்வு கொண்டு தருமிக்கு பொற்கிழியைக் கொடுக்கும்படி கட்டளையிட்டான்.
அவ்வேளையில் குறுக்கிட்டார் நக்கீரர். பாட்டில் பொருட் குற்றம் உள்ளது, இதை உனக்குத் தந்த புலவனை வரச்சொல் என்று தருமியை விரட்டி விட்டார். ஒடோடிச் சென்று முறையிட்டான் சொக்கநாதனிடம் தருமி. முக்கண்ணன் ஒரு புலவனாக வந்து நக்கீரருடன் வாதிட்டு அப்பொற்கிழியைத் தருமிக்குப் பெற்றுக் கொடுத்தார். தண்டனைக்குள்ளான நக்கீரர் திருப்பரங்குன்றத்தை அடைந்து குளக்கரை ஒன்றில் சிவபூசை செய்யத் தொடங்கினார். அப்பொழுது மரத்தில் இருந்து ஒரு இலை கீழே விழுந்தது. நீரில் இருந்த பகுதி மீனாகவும், கரையில் இருந்த பகுதி பறவையாகவும் மாறி ஒன்றை ஒன்று இழுத்தன. இதனால் சிந்தை திரிந்து நக்கீரரின் சிவபூசை தடைப்பட்டது. அச்சமயம் குதிரை முகத்துடன் கூடிய கற்கமுகி என்னும் பூதம் அவரை ஒரு குகைக்குள் கொண்டு சென்று அடைத்தது.
குகைக்குள் ஏற்கனவே தொள்ளாயிரத்து தொண்ணுாற்று ஒன்பது பேர் நீண்ட காலமாக அடைபட்டுக் கிடந்தனர். ஆயிரம் பேர் ஆனதும் எல்லோரையும் சேர்த்து உண்பதற்காக அந்தப் பூதம் காத்திருந்தது. நக்கீரரைக் கண்டதும் அங்கிருந்தோர் அழுது கூக்குரலிட்டனர். இதனால் மனம் நொந்த நக்கீரர் அங்கிருந்து முருகப் பெருமானை நினைந்து மனமுருகி பிரார்த்தனை செய்தார். அதுவே திருமுருகாற்றுப்படை
இக்கதையின் உண்மைத் தன்மை எத்தகையது என்பது ஒரு புறமிருக்க, அஞ்ஞான இருளில் அழுந்திக் கிடக்கும் சீவன்களை அதற்குக் காரணமான அறியாமை என்னும் பூதத்தை அழித்து விடுதலை தருகிறான் முருகப் பெருமான் என்பதே இதன் தாற் பரியமாகும். இதுவே திருமுருகாற்றுப்படை பிறந்த வரலாற்றின் அடிப்படைத் தத்துவமாகும்.
தமிழர் பண்பாட்டின் கூறாக மட்டும் திகழ்ந்த முருகன் தொடர்பான சிந்தனை வடமொழிப் புராண மரபுகளோடு
இந்துக் கலைக்களஞ்சியம்

Page 161
சங்கமிக்கச் செய்த ஒரு கால நிலையைத் திருமுருகாற்றுப்படை காட்டுகிறது. திருமுருகாற்றுப்படையில் தமிழ் நாட்டில் முருகன் திருப்பருங்குன்றம், திருச்சீரலைவாய், திருவாவினன்குடி, திருவேரகம், குன்றுதோறாடல், பழமுதிர்ச்சோலை என்பன குறிப்பிடப்படுகின்றன. இவற்றிலே உறையும் முருகன் பற்றி அமையும் வர்ணனைகள், அவனது வழிபாட்டு முறைபற்றிய செய்திகளில் வடமொழிப் பண்பாட்டுக் கூறுகள், புராணச் செய்திகள் கலந்துள்ளன. 'கொற்றவை சிறுவன்’ என்றும் குறிஞ்சிக் கிழவன்' என்றும் (அடிகள் 250, 267) தமிழ் மரபுப்படி முருகனைச் சுட்டும் இந்நூல், புராணக் கதைகளைத் தழுவி,
"அறுவர் பயந்த ஆறமர் செல்வன்’ (அடி 255) "ஆல்கெழு கடவுட் புதல்வன்’(அடி 256) “வானோர் வணங்குவில் தானைத் தலைவன்’(அடி 260)
எனவும் சுட்டக் காணலாம். தமிழ் மரபுப்படி துணங்கை ஆட்டம், குரவை ஆட்டம் என்பவற்றால் முருகன் வழிபடப்படும் மரபைக் காட்டும் அதே வேளை (அடிகள் 47-56,190 - 217) அந்தணர்கள் வேத முறைப்படி வழிபாடு செய்வது பற்றியும் (அடிகள் 95 - 96) கூறுகின்றது. மேலும் திருச்சீரலைவாய் என்னும் தலத்தில் முருகனது தோற்றப் பொலிவு ஆறுமுகங்களும் பன்னிரு கரங்களும் கொண்டதாகும் (அடிகள் 91 - 102, 107, 118) என்கிறது. மேற்படி முகங்களில் ஒன்று பற்றிய செய்தி
"குறவர் மடமகள் கொடிபோல் நுசுப்பின்
மடவரல் வள்ளியொடு நகையமர்ந் தன்றே”
(அடிகள் 101 - 102)
என வள்ளியைத் தொடர்புபடுத்தி நிற்கிறது. முன்பு நற்றிணையில் வந்த வள்ளி பற்றிய குறிப்பை அடுத்து இந்நூலில் இவ்வடிகளிலேயே இக்குறிப்பு உள்ளது. திருவாவினன்குடி என்னும் தலத்தில் எழுந்தருளியிருக்கும் முருகன் பிரம்மன் உள்ளிட்ட தேவர் குழாத்தை வரவேற்று நின்ற செய்தி தரப்பட்டுள்ளது, (அடிகள் 164 - 165). ஆகவே திருமுருகாற்றுப் படையில் பண்டைத் தமிழரின் முருகவழிபாட்டுடன் வடமொழிப் புராண மரபும் இணைந்து செல்லும் ஒரு புதிய வழிபாட்டு மரபினை நாம் காணக்கூடியதாக உள்ளது.
முருகன் என்ற சொல்
திருமுருகாற்றுப்படை 'முருகு' என்னும் சொல்லை முருகனுக்குரியதாகக் குறிப்பிடுகின்றது. இங்கே முருகன் அழகு, இளமை, நறுமணம், தெய்வத்தன்மை ஆகியன வாய்ந்தவனாகக் கூறுகிறது.
முருகனது தோற்றம்
கார்த்திகைப் பெண்கள் பாராட்டி வளர்த்த ஆறு
உருவங்களையும் உமாதேவியார் ஒன்றாக எடுத்து அணைத்த
போது முருகன் ஆறுமுகத்துடன் தோன்றினார் என்பதை அறுவர்
இந்துக்கலைக்களஞ்சியம்

பயந்த ஆறு அமர்செல்வ' என்று திருமுருகாற்றுப்படை குறிப்பிடுகின்றது. முருகனை பரமசிவனின் மைந்தனாகவும் இமவான் புதல்வி உமாதேவியின் மகனாகவும் திருமுருகாற்றுப்படை சித்திரிக்கின்றது. இந்த வகையில் திருமுருகாற்றுப்படை முருகனை சிவசக்தியின் மைந்தனாகவே சித்திரிக்கிறது எனலாம்.
முருகனின் முழுமுதற் தன்மை
பிரணவப் பொருளை அறியாது நின்ற பிரமனைக் குட்டிச் சிறையிலடைக்கும் பரத்துவம் முருகனுக்கிருந்தது. சிறை யிலடைபட்ட பிரமனின் துன்பத்தைப் போக்கவும் அவனைச் சிறை மீட்கவும் சிவபெருமான், திருமால், இந்திரன் முதலானோரும் பதினெண் கணங்களும் திருவாவினன்குடி முருகனிடம் இரந்து வந்தனர் என்ற திருமுருகாற்றுப்படைக் குறிப்பானது முருகனது முழுமுதற் தன்மையைக் காட்டி நிற்கிறது.
முருகனின் திருவுருவம்
திருமுருகாற்றுப்படை ஆறுமுகங்களும் பன்னிரண்டு கரங்களுமுடைய முருகனின் திருவடிவத்தைச் சிறப்பாகச் சித்திரிக்கின்றது. ஆறுமுகனின் இத்திருப்பெருவடிவத்தையும் இப்பெருவடிவம் உணர்த்தி நிற்கும் உயரிய சமய தத்துவங்களையும் திருச்சீரலைவாயில் எழுந்தருளியிருக்கும் முருகனின் பெருமையினைக் கூறுவதினூடாக அவர் வெளிப்படுத்தியுள்ளார். திருமுருகாற்றுப்படை முருகனைப் பிரகாசிக்கும் பேரொளி வடிவமாகச் சித்திரிக்கின்றது. முருகன் செந்நிறமுடையவன் சிவந்த ஆடை தரிப்பவன். இதனை செய்யன் சிவந்த ஆடையன் எனத் திருமுருகாற்றுப்படை கூறுகின்றது. முருகனின் வாகனங்களாக மயில், களிறு, ஆடு என்பன திருமுருகாற்றுப் படையில் குறிக்கப்படுகின்றன. முருகனுக்குச் சேவலும், மயிலும் கொடியாக விளங்குவதைத் திருமுருகாற்றுப்படை கூறுகிறது. 'சேவலங் கொடி’, 'பல் பொறிமஞ்ஞை வெல் கொடியகவ' போன்ற பாடல் அடிகள் உணர்த்தி நிற்கின்றன. முருகன் வெற்றியினைச் சுட்டி நிற்கும் வெட்சிமாலை அணிபவன் என்கிறது இந்நூல். முருகனது கையானது பகைவராகிய அசுரர்களை வதைத்த இடியைப் போல் வலிமையுடையது என்கிறார் நக்கீரர். முருகனின் திருவடிக்குத் தம்மை அடைந்த அன்பர்களைப் பிறவிப் பெருங்கடலில் விழாமல் தாங்கும் தனிச் சிறப்புண்டு. இதனை உறுநர்த்தாங்கிய மதனுடைய நோன்றாள்' எனத் திருமுருகாற்றுப் படை கூறுவதாலறியலாம். முருகனின் படைக்கலங்களில் வேல் தனியிடம் பெறுகிறது. முருகனின் திருக்கரங்களில் விளங்கும் இவ்வேல் வெற்றிக்குத் துணை புரிவதுடன் முருகனின் திருவடிவமாகவும் விளங்குகிறது என்கிறது திருமுருகாற்றுப்
U60).
முருகனின் பெற்றோர்
முருகனின் தாயாக கார்த்திகை மாதர், மலைமகள், கொற்றவை, பழையோள் என்போரைக் குறிப்பிடுகின்றது.
'அறுவர் பயந்த ஆறமர் செல்வ', 'மலைமகள் மகனே'
is unorth
131

Page 162
"கொற்றவை சிறுவ, பழையோர் குழவி' எனவரும் திருமுருகாற்றுப்படை வரிகளால் அறிய முடிகிறது.
முருகனின் மனைவிமார்
வள்ளியம்மை, தெய்வயானை ஆகிய இருவரும் முருகனின் மனைவியர் என்கிறது திருமுருகாற்றுப்படை குற்றமில்லாத தெய்வயானையைத் திருப்பரங்குன்றத்தில் திருமணம் முடித்ததைத் மறுவில் கற்பின் வாள் நுதல் கணவன் என்ற வரிகளும் வள்ளியைத் திருச்சீரலைவாயிலிற் திருமணம் செய்து மகிழ்ந்ததை வள்ளியொடு நகையமர்ந்தன்றே என்ற குறிப்புகளும் எமக்கு உணர்த்தி நிற்கின்றன.
முருக நாமங்கள்
முருகனது பெருமை, தெய்வீகச் சிறப்பு முதலியவற்றோடு தொடர்புற்று விளங்கும் இருபத்தேழு நாமங்கள் திருமுருகாற்றுப் படையில் குறிக்கப்பட்டுள்ளது. இந்நாமங்களை அக்காலத்து முருக தோத்திரமாகவும் கொள்ளலாம். இவ்வகையில் முருகனின் பல பெயர்களைக் கூறி நிகழ்த்தப்படும் முருக நாம வழிபாட்டிற்குத் திருமுருகாற்றுப்படை கூறும் முருக நாமங்கள் ஊற்றாக விளங்குகின்றன எனலாம்.
முருகனின் ஆறுபடை வீடுகள்
தமிழ் நாட்டில் முருகன் கோயில் கொண்டு விளங்கிய திருத்தலங்கள் ஆறினையும் ஆறுபடை வீடுகள் என அழைப்பது பண்டுதொட்டு இன்றுவரை நிலவும் இந்து சமய மரபாகும். திருமுருகாற்றுப்படையானது திருப்பரங்குன்றம், திருச் சீரலைவாய், திருவாவினன்குடி, திருவேரகம், குன்று தோறாடல், பழமுதிர்ச் சோலை என்ற ஆறு இடங்களில் முருகன் எழுந்தருளியிருந்து அருள் பாலிப்பதை விரிவாகக் குறிப்பிட்டுள்ளது. முருகன் ஆறுவீடுகளில் மட்டுமன்றி இயற்கை எழில் நிறைந்த இடங்களிலெல்லாம் இருக்கிறார் என்கிறார் நக்கீரர். காட்டிலும் சோலையிலும் ஆற்றங்கரையிலும், குளங்களிலும், முச்சந்தி நாற்சந்தி, ஐந்து சந்திகளிலும் நறுமணம் பொருந்திய பூக்களையுடைய கடம்ப மரத்திலும் உறைவதாகத் திருமுருகாற்றுப்படை கூறுகிறது.
முருக வழிபாட்டு முறைகள்
பண்டைத் தமிழர்கள் முருகனை வேதாகம முறைப்படியும் அதற்குப் புறம்பாகவும் வழிபட்டார்கள் என்பதனை திருமுருகாற்றுப்படை விளக்கி நிற்கிறது. அந்தணர்கள் மந்திரமோதியும், வேள்வி வேட்டும் முருகனை வழிபட்டனர் அடியவர்கள் ஊர் ஊராக விழா எடுத்தும், தமது கைகளைக் சிரசிலே குவித்து அவன் தாள் பணிந்தும் வழிபட்டார்கள் என்பது அறியக் கிடக்கிறது. மேலும் சிறிய தினை அரிசியை மலரொடு கலந்தும் ஆட்டினை அறுத்தும் களம் நிறுவி வெறியாட்டப்
132

நடத்தியும் முருகனை வழிபட்டார்கள் என்பதை உணரக்கூடியதாக
உள்ளது.
முருகனின் தெய்வீக வரலாற்றைச் சிறப்பாகச் சித்திரிக்கும் தமிழ் நூல்களுள் திருமுருகாற்றுப்படை மிகவும் பழமை வாய்ந்தது. பண்டைத் தமிழகத்தில் முருகவழிபாடு பெற்றிருந்த சிறப்பினை இந்நூல் வாயிலாக அறியமுடிகிறது. ஆறுமுகனின் தத்துவப் பொருளை முதன் முதல் விளக்கும் தமிழ் நூல் என்ற பெருமை இதற்குண்டு. முருக வழிபாட்டிற்குரிய பண்டைத் தமிழரின் தோத்திர நூலாகவும் அதனைக் கொள்ளலாம். மேலும் கச்சியப்பரின் கந்தபுராணம் காட்டும் முருகன் பற்றிய பிரதான கருத்துகளுக்கு நக்கீரர் திருமுருகாற்றுப்படையில் முருகன் பற்றிக் குறிப்பிடும் சிந்தனைகள் ஊற்றாக விளங்கின என்பதும் குறிப்பிடத்தக்கது. (நி. நி.)
O O திருமுல்லைவாயில்
சென்னைக்கு அருகில் உள்ள தொண்டை நாட்டுத் தலம். சோழநாட்டில் தஞ்சை மாவட்டத்தில் தென் திருமுல்லை வாயில் இருப்பதால் இது வடதிருமுல்லை வாயில் என அழைக்கப்படுகிறது.
புராண வரலாறு
இத்தலம் கிருதயுகத்தில் இரத்தினபுரமாகவும், திரேதாயுகத்தில் வில்வ வனமாகவும், துவாபரயுகத்தில் சண்பக வனமாகவும், கலியுகத்தில் முல்லை வனமாகவும் திகழ்ந்தது. இங்குள்ள புழல் கோட்டையில் இருந்து கொண்டு ஒணன், காந்தன் என்னும் அசுரர்கள் பைரவ உபாசனையுடன் ஆண்டு வந்தனர். அவர்களது அரண்மனை எருக்கந்தூண்களும், பவளத்தூண்களும், வெண்கலக் கதவுகளும் கொண்டதாய் அமைந்திருந்ததாகக் கூறப்படுகின்றது. இவர்களே காஞ்சியில் சிவலிங்கப் பிரதிஷ்டை செய்து வழிபட்டுப் பேறுபெற்றவர்கள். அத்திருக்கோயிலே ஒணகாந்தன் தளி ஆகும்.
இவர்கள் காலத்தில் தொண்டைமான் காஞ்சியில் ஆட்சி செய்தான். இவர்களைக் காண தொண்டைமான் வந்தான். வரும் வழியில் கோழம்போடு என்னும் கிராமத்தில் இரவு உறங்கும் போது வெண்கல மணியோசை கேட்டது. அங்கே சிவத்தலம் இருக்கவேண்டும் என்று எண்ணிய மன்னன் யானை மீதேறி வந்தான். தொண்டைமானைக் கண்ட அசுரர்களின் குறுநில மன்னன் ஒருவன் தன் சேனைகளுடன் தொண்டைமானை எதிர் கொண்டான். தனியே வந்த தொண்டமான் தன் சேனைகளைக் கொண்டு வரத் திரும்பினான். அவ்வாறு திரும்பி இம்முல்லைப் புதர் வழியாக வரும் போது யானையின் கால்களில் முல்லைப் புதர் சிக்க அதனை மன்னன் தன் வாளால் வெட்டினான். அவ்வேளையில் இரத்தம் பீறிட்டுப்பாய்ந்தது. திடுக்கிட்ட மன்னன் கீழிறங்கிப் பார்த்த போது அங்கு சிவலிங்கத் திருமேனி காணப்பட்டது. தன் பிழைக்கு வருந்தி தன்னையே மாய்த்துக் கொள்ள முனைந்தான் தொண்டைமான், இறைவன் காட்சி தந்து
இந்துக் கலைக்களஞ்சியம்

Page 163
“வெட்டுப்பட்டாலும் குற்றமில்லை. மாசு இல்லாமணியே வருந்தற்க! நந்தியை உனக்குத் துணையாக அனுப்புகிறேன் வெற்றி பெற்றுவருவாயாக’ என்று கூறி அருள் புரிந்தார். நந்தியம்பெருமானுடன் மன்னன் வருவதை அறிந்த ஒனன், காந்தன் ஆகியோர் சரணடைந்தனர். இவர்களிடமிருந்து எடுத்து வந்த எருக்கத் தூண்களே இன்றும் சுவாமி சந்நிதியின் முன்னால் உள்ளதாகக் கூறப்படுகின்றது. பவளத் தூண்களும், வெண்கலக் கதவும் திருவொற்றியூரில் வைக்கப்பட்டதாகவும் காலப்போக்கில் அது வெள்ளத்தின் வாய்ப்பட்டதாகவும்
சொல்லப்படுகின்றது.
இறைவன் - நிர்மலமணிஸ்வரர், பாசுபதேஸ்வரர், மாசிலா
இறைவி - கொடியிடையம்மை, கொடியிடை நாயகி, லதா -
மத்யாம்பாள் தலமரம் - முல்லை தீர்த்தம் - கல்யாண தீர்த்தம்
சுந்தரர் பாடல் பெற்ற தலம். இக்கோயில் தொண்டைமானால் கட்டப்பட்டது. சுவாமி விமானம் கஜப்பிருஷ்ட அமைப்புடையது. இராஜகோபுரம் தெற்கு நோக்கியதாய் ஐந்து நிலைகளைக் கொண்டதாய் அமைந்துள்ளது. பக்கத்தில் தீர்த்தக் குளம் உள்ளது. இராஜகோபுரத்திற்கு எதிரில் சந்நிதி வீதியில் பதினாறு கால் மண்டபமும், பக்கத்தில் வசந்த மண்டபமும் உள்ளன. இராஜகோபுரத்தில் துவார பாலகர்கள் உள்ளனர்.
கோயிலினுள் நுழையும் போது பிரசன்ன விநாயகர். அவருக்குப் பின்னால் மதில் மீது ஆலய வரலாற்றுச் சிற்பங்கள் சுதையினால் அமைக்கப்பட்டுள்ளன. மன்னன் முல்லைக் கொடியை வெட்டுவது, தன் கழுத்தை வாளால் அரிய முற்படுவது, இறைவன் காாட்சி தருவது போன்ற சிற்பங்கள் இடம் பெற்றுள்ளன.
வலமாக வரும் போது கல்யாண மண்டபம் உள்ளது. அம்மண்டபத்துள், அம்பாள் சந்நிதியும், சோமாஸ்கந்தர் சந்நிதியும், சுப்பிரமணியர் சந்நிதியும் உள்ளன. இங்கு வில்வமரமும், பைரவர் சந்நிதியும் உள்ளன.
மூலவர் சந்நிதி கிழக்கு நோக்கியது. மூர்த்தி சுயம்பு மேற்குப் பக்கத்தில் வெட்டப்பட்டுள்ளது. எப்பொழுதும் சந்தனக் காப்பிட்ட படியிருக்கும். அதனால் அபிஷேகங்கள் சிரசில் கிடையாது. ஆவுடையாருக்கு மட்டுமே வருடத்தில் ஒருமுறை சித்திரைச் சதயத்தில் மட்டும், சந்தனக் காப்புக் களையப்பட்டு வெந்நீர் அபிஷேகம் நடைபெற்று மீண்டும் சந்தனக் காப்புச் சாத்தப்படும். அது அடுத்த சித்திரைச் சதயம் வரை அப்படியே இருக்கும். அபிடேக காலத்தில் மேன்மேலும் சந்தனக் காப்புச் சாத்தப்படும் ஆனால் களைவதில்லை களைந்து சாத்துவது மேற்குறிப்பிட்ட ஒரு நாளில் தான். மூலவர் முன்னால் இரு எருக்கந்தூண்கள்
இந்துக் கலைக்களஞ்சியம்

உள்ளன. பூண்கள் இடப்பட்டுள்ளன. கோஷ்ட மூர்த்தங்களாக கூழிப்ரகணபதி, தட்சிணாமூர்த்தி, மகாவிஷ்ணு, பிரம்மா, துர்க்கை
ஆகியோர் உள்ளனர். சண்டேஸ்வரர் சந்நிதியும் உள்ளது.
சுவாமிக்கு முன்பு வெளியில் துவார பாலகர்கள், தொண்டைமான், நீலகண்ட சிவாச்சாரியார், மகாவிஷ்ணு, பூரீதேவி, பூதேவி ஆகிய திருவுருவங்கள் உள்ளன. பக்கத்தில் பிற்காலத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்ட இரசலிங்கம் (பாதரசம், வெள்ளி இவற்றின் கலப்பினால் செய்யப்பட்டது) உள்ளது.
உள்சுற்றில் வீரபத்திரர், நால்வர், விநாயகர், நாகலிங்கம், மகாலட்சுமி ஆகியோரின் சந்நிதிகள் உள்ளன. அறுபத்து மூவர் சிலைகளில் ஒரு சிலவும் வைக்கப்பட்டுள்ளன.
நடராஜ சபைக்குப் பக்கத்தில் தொண்டைமானுக்குக் காட்சி தந்த நாயகர் உள்ளார். அம்பாள் சந்நிதி கிழக்கு நோக்கியது. வாயிலில் துவார பாலகிகள் உள்ளனர்.
வைகாசி விசாகத்தில் பத்து நாட்களுக்குப் பெருவிழா நடைபெறுகின்றது. இத்தலத்தில் தான் சிறப்புமிக்க வைஷ்ணவி ஆலயமும், பிரார்த்தனைக் கோயிலாகிய பச்சையம்மன் கோயிலும் உள்ளன. இக்கோயில் தொடர்பாகச் சொல்லப்பட்டுவரும் செவிவழிச் செய்தி ஒன்று. -
(1) சென்னை பொன்னேரிப் பாதையில் மீஞ்சூருக்கு அருகில்
உள்ள மேலூரில் வீற்றிருக்கும் திருவுடை நாயகி அம்மன்
(2) சென்னை திருவொற்றியூரில் வீற்றிருக்கும் வடிவுடை அம்மன்
(3) வட திருமுல்லை வாயில் - கொடியிடை அம்மை
ஆகிய மூன்று திருவுருவங்களும் ஒரே ஸ்தபதியால் செய்யப்பட்டவை என்றும் வெள்ளிக்கிழமை பெளர்ணமி சேர்ந்து வரும் நாளில் இம்மூன்று அம்பிகைகளையும் ஒரே நாளில் முறையே காலையிலும், நண்பகலிலும், மாலையிலும் தரிசித்தல் பெரும் பேறுகளைக் கொடுக்கும் என்றும் நம்பப்படுகின்றது. இன்றும் சிலர் இவ்வழக்கத்தைக் கைக் கொண்டு வருகின்றனர்.
" திருவுமெய்ப்பொருளும் செல்வமும் எனக்குன்
சீருடைக் கழல்கள் என்றெண்ணி
ஒருவரை மதியாது உறாமைகள் செய்து
மூடியு முறைப்பானாய்த் திரிவேன்
முருகமர் சோலை சூழ் திரு முல்லை
வாயிலாய் வாயினால் உன்னைப்
பரவிடும் அடியேன் படுதுயர் களையாய்
பாசுபதா பரஞ்சுடரே”
என்ற சுந்தரர் பாடல் இத்தலத்துறை பெருமானை நோக்கி நெஞ்சுருகப் பாடப்பட்டதே. (நி. நி.)
133

Page 164
திருமுறை ஒதுவார்
கோயில்களில் திருமுறைகளைப் பண்ணோடு ஒதும் திருத்தொண்டு புரிபவர்கள் ஒதுவார் எனப்படுவர். சைவசமய குரவர்களது திருமுறைப் பாடல்களைத் தொன்றுதொட்டு கோயில்களிற் பாடி வந்ததைத் தமிழ்நாட்டுக் கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன. கி. பி. ஒன்பதாம் நூற்றாண்டின் இறுதியி லிருந்து பதினேழாம் நூற்றாண்டு முடியவுள்ள கல்வெட்டுகள் மூலம், சைவத் திருமுறையைப் பாடியது, அவற்றைக் கோயில்களில் வைத்துப் பாதுகாத்தது, பூசைசெய்தது, பாடியவர்க்கு நிவந்தங்கள் அளித்தது போன்ற பல செய்திகளை அறிந்துகொள்ள முடிகிறது. திருமுறைகள் கோயில்களில் நாள்தோறும் நடைபெறும் பூசையின் போதும் திங்கள் ஆண்டு உற்சவங்களின் போதும் பாடப்பட்டன. இதனைக் கல்வெட்டுகள் திருப்பதியம் பாடுதல், திருப்பதியம் விண்ணப்பித்தல், திருமுறை ஒதுதல் என்று குறிப்பிடுகின்றன. திருமுறையைப் பண்ணுடன் பாடியவர்களைத் திருப்பதியம் பாடுவார், திருப்பதியம் விண்ணப்பம் செய்வார், திருப்பதிகம் ஒதுவார், திருமுறை ஒதுவார் என்று கூறுகின்றன. திருப்பதிகம் என்பதே 'திருப்பதியம்' என்று கல்வெட்டு வழக்கில் காணப்படுகிறது. பதியம்-பத்யம் என்ற வடசொல்லுக்குப் பாட்டு என்று பொருள். எனவே திருப்பதியம் என்பதற்குத் திருப்பாட்டு என்று பொருளாகும். இறைவனை நோக்கி முறையிட்டுப்பாடுவதால் இது திருப்பதியம் விண்ணப்பம் செய்தல் எனப்பட்டது. பூசையின்போது மந்திரப் பொருளாகச் சொல்வதால் திருமுறை ஒதுதல் என்று குறிப்பிடப்பட்டது. மூவர் பாடல்களைத் தேவாரம் என்று குறிப்பிடும் வழக்கம் சோழர்காலத்தில் இல்லை, அவற்றைத் திருப்பதியம், திருப்பாட்டு, திருமுறை என்று வழங்கும் வழக்கே இருந்திருக்கிறது.
தேவாரம் - திருமுறை
சம்பந்தர், அப்பர், சுந்தரர் பாடல்களைக் கல்வெட்டுகள் தேவாரம் என்று குறிப்பிடவில்லை. தேவாரம் என்ற சொல் மூவர் பாடல்களைக் குறிக்கும் வழக்கம் கி. பி. பதினான்காம் நூற்றாண்டிலிருந்தே தோன்றியது. அதற்கு முன்பு, வழிபடும் இறைவனது திருமேனி, வழிபாடு, வழிபாட்டிற்குரிய இடம் என்ற பொருள்களிலேயே இச்சொல் ஆளப்பட்டிருக்கிறது. முதலில் கி.பி.எட்டாம் நூற்றாண்டைச் சார்ந்த கருப்பங்குன்று சமணப்பள்ளிக் கல்வெட்டிலும் அடுத்து பத்தாம் நூற்றாண்டைச் சார்ந்த சோழவாண்டிபுரம் சமணப்பள்ளிக் கல்வெட்டிலும் தேவாரம் என்ற சொல் வருகிறது. இவற்றில் இச்சொல் இப்பள்ளிகளில் வழிபடுவதற்குச் செய்விக்கப்பட்ட தீர்த்தங்கரர் திருமேனிகளைக் குறிக்கவே வழங்கப்பட்டுள்ளது. இதே பொருளிலேயே இச்சொல் சோழர்காலச் சைவக் கோயில்களிலும் பயன்படுத்தப்பட்டுள்ளது. முதலாம் இராசராசனின் தஞ்சைப் பெரிய கோயிற் கல்வெட்டு ஒன்று, வழிபடுவதற்காகச் செய்விக்கப்பட்ட சிவனது சந்திரசேகரர் திருவுருவத்தைத்
134

தேவாரதேவர் என்று அழைக்கின்றது. பதின்மூன்றாம் நூற்றாண்டுக் கல்வெட்டு ஒன்று இறைவனைத் திருவுருவமாக வடித்ததைத் திருவுறல்பெருமானை தேவாரஞ் செய்து என்கிறது. சிவபெருமானது திருவுருவத்தின் முன்பாக அத்திருமேனியை வழிபடுவதற்காகப் பாடல்கள் பாடுவதைத் தேவாரத்துக்குத் திருப்பதியம் பாடும்', 'தேவாரத்திற்கு விண்ணப்பம் செய்யும் என்று கல்வெட்டுகள் குறிக்கின்றன. முதலாம் இராசேந்திரனின் கங்கைகொண்ட சோழபுரத்து அரண்மனையில் வழிபாட்டிற்குரிய இடமாக இருந்தபகுதி தேவாரம் என்று அழைக்கப்பட்டுள்ளது. எனவே தேவாரம் என்பதற்குத் தெய்வத்துக்குச் சூட்டப்பட்ட மாலை (தே*ஆரம்) என்றும் தெய்வத்தின் மீது பாடப்பெற்ற இசை யொழுக்கம் பொருந்திய பாடல் (தேவாரம்) என்றும் சொல்கிடந்த
முறையிற் கண்ட பொருள்கள் பொருந்தாதவை எனலாம்.
கி.பி. பதினொன்றாம் நூற்றாண்டில் நம்பி யாண்டார் நம்பி, சைவ சமயகுரவர்களது பாடல்களைப் பல தொகுதிகளாக எண்ணிட்டுத் தொகுத்தபின்னரே அவற்றிற்குத் திருமுறை என்ற பெயர் வழக்குத் தோன்றியிருக்கிறது. முதலாம் இராசராசன் காலத்தில் ஏழுதிருமுறைகள் (சம்பந்தர், அப்பர், சுந்தரர் பாடல்கள்) அவராலே தொகுக்கப்பட்டுள்ளன. அதன் பின்னர் முதலாம் இராசேந்திரசோழன் காலத்தில் எட்டிலிருந்து பதினொன்று வரையிலான திருமுறைகள் தொகுக்கப்பட்டன. பின்னர் கி.பி.12 ஆம் நூற்றாண்டில், சேக்கிழாராற் பாடப்பட்ட பெரிய புராணம் பன்னிரண்டாம் திருமுறையாகச் சேர்க்கப்பட்டு பன்னிரு திருமுறைகள் உருவாயின. கி. பி. 14 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த உமாபதி சிவாச்சாரியார் முதற் பதினொரு திருமுறைகள் தொகுக்கப்பட்ட வரலாற்றைத் 'திருமுறைகண்ட புராணம் என்ற நூலில் விரித்துரைக்கின்றார்.
திருமுறை என்ற சொல்வழக்கு கி.பி. பதினொன்றாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தோன்றியிருக்க வேண்டும். சீர்காழியிலுள்ள முதலாம் குலோத்துங்க சோழன் கல்வெட்டு அக்கோயிலில் இருந்த திருமுறைகள் பற்றிக் குறிப்பிடுகிறது. மானாமதுரைக்கு அருகிலுள்ள மேலநெட்டூர்ச் சிவன் கோயிலிலுள்ள கி. பி. பதிமூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்த பிற்காலப் பாண்டியர் கல்வெட்டு ஒன்றிலும் திருமுறை என்ற சொல் சைவசமய குரவர்களது பாடல்களைக் குறிக்க வழங்கப்பட்டுள்ளது. பிற்காலச் சோழர் கல்வெட்டு ஒன்றில் 'திருமுறை தேவாரச்செல்வன்' என்ற பெயர் வருவதும் குறிப்பிடத்தக்கது.
திருப்பதியம் பாடுவார்
(முதலாம் இராசராசசோழன் காலத்திற்கு முன்)
முதலாம் இராசராசன் காலத்திற்கு (கி. பி. 985 - 1014)
முன்பே சைவக் கோயில்களில் தேவார மூவரது பாடல்களைப்
பாடும் வழக்கம் இருந்துள்ளது. இவ்வழக்கம் பரவலாக
- இந்துக்கலைக்களஞ்சியம்

Page 165
வழக்கத்திற்கு வரவில்லை. எனவே இது குறித்த குறைவான கல்வெட்டுகளே கிடைக்கின்றன. முதலாம் இராசராசன் காலத் திற்கு முன்பு திருவல்லம், திருவெறும்பியூர், திருவாடுதுறை, குமாரவயலூர், அந்துவநல்லூர், முதலிய இடங்களிலுள்ள கோயில்களில் திருப்பதியம் பாடியது குறித்த கல்வெட்டுகள் காணப்படுகின்றன. இவற்றிற் பழமையானது, திருவல்லம் சிவன்கோயிலிற் காணப்படும் கி. பி. ஒன்பதாம் நூற்றாண்டின் இறுதியைச் சார்ந்த கங்கபல்லவ அரசன் விஜயநந்திவர்மனின் பதினேழாவது ஆட்சியாண்டுக் (கி.பி. 888), கல்வெட்டாகும். திருவல்லமுடைய பரமேசுவரர்க்குத் திருபதியம் பாடுவாருள்ளிட்ட பலபணிகளைச் செய்கின்றவர்களுக்கு இருபது கழஞ்சு பொன் தானமாகத் தரப்பட்டுள்ளதைத் தெரிவிக்கிறது. முதலாம் பராந்தகசோழன் காலத்தில் குமாரவயலூர் திருக்கற்றளிப் பரமேசுவரர்க்குத் திருப்பதியம் பாடுவதற்கு மூன்று பெண்களுக்குத் (தேவரடியார்) தானமளிக்கப்பட்டிருக்கிறது. திருவாடுதுறைக் கோயிலில் திருப்பதியம் பாடுவதற்குக் கற்றளிப்பிச்சன் என்பவனுக்கு இம்மன்னன் காலத்தில் நிலமளிக்கப்பட்டிருக்கிறது. திருப்பதியம் பாடுவார்க்குத் திருப்பதியக்காணி என்ற பெயரில் நிலமளித்ததைத் திருக்களர் முற்காலச்சோழர் கல்வெட்டு ஒன்று தெரிவிக்கிறது. இந்நிலத்தைப் பெரியான் மறைதேடும் பொருளான அகளங்கப் பிரியனும் அவன் வழியினரும் பெற்றுள்ளனர். உத்தமசோழன் காலத்தில் (கி. பி. 973–985) கோனேரிராஜபுரம், அந்தநல்லூர், திருவாடுதுறை, திருவெறும்பியூர் முதலிய இடங்களில் இருந்த சிவன் கோயில்களில் திருப்பதியம் பாடுவார்க்கு ஊதியமாக நிலமும், குறிப்பிட்ட அளவு நெல்லும் அளிக்கப்பட்டுள்ளன. திருவாடுதுறையில் திருப்பதியம் பாடுவார் ஒருவருக்கு ஆறுமாநிலம் தரப்பட்டுள்ளது. முதலாம் இராசராசனுக்கு முன்பாக உத்தம சோழன் காலத்தில் வாழ்ந்து ஏராளமான திருக்கோயில்களைக் கற்றளியாக்கிய, அவனது தாயார் செம்பிய மாதேவியார் முயற்சியால் கோயில்களில் திருப்பதியம் பாடும் வழக்கம் சற்று அதிகரித்திருக்க வேண்டும்.
முதலாம் இராசராசன் காலம்
முதலாம் இராசராசன் காலத்தில் தமிழ் நாட்டில் இருந்த பல கோயில்களில் இவ்வழக்கம் நிலைத்துவிட்டது. வழிவழியாகக் கோயில்களிலே பணிசெய்துவரும் நிவந்தக்காரர்களில் ஒருவராகத் திருப்பதியம் பாடுவாரும் தவறாது இடம்பெற்றனர். தஞ்சைப் பெருவுடையார் கோயிலிலுள்ள முதலாம் இராசராசனின் கல்வெட்டு இது குறித்து விரிவான செய்தியை முதன்முதலில் தருகின்றது. திருப்பதியம் பாடுதல் என்பதற்குப் பதிலாகத் 'திருப்பதியம் விண்ணப்பம் செய்தல்' என்ற தொடர் இராசராசன் காலத்திற் பயன்படுத்தப் பட்டள்ளது. திருப்பதியம் பாடுபவரை பிடாரர் என்று குறிக்கும் வழக்கமும் இராசராசன் காலத்தில் வந்துள்ளது. (பெரியோரைக் குறிக்கும் பட்டாரகர்
என்ற சொல்லே பிடாரர் என்று குறிக்கப்பட்டிருக்க வேண்டும். )
இந்துக் கலைக்களஞ்சியம்

வெற்றியின் பெருமிதத்தில் பக்தியின் அடிப்படையில் தான் கட்டிய தஞ்சைக் கோயிலில் திருப்பதியம் விண்ணப்பம் செய்யும் பிடாரர்கள் நாற்பத் தெண்மரை இராசராசன் நியமித்தான். திருப் பதியத்தை இசையுடன் பாடுவதற்காக இவர்களுடன் சேர்த்து உடுக்கை வாசிப்பவன் ஒருவனையும் கொட்டிமத்தளம் வாசிப்பவன் ஒருவனையும், நியமித்துள்ளான். இவர்களுக்கு நாளொன்றுக்கு ஊதியமாக முக்குறுணி நெல் உள்ளூர் பண்டாரத் திலிருந்து அளிக்கப்பெற்றது.
திருப்பதியம் விண்ணப்பம் செய்பவர்களுக்குரிய விதிமுறைகள், சில வழிமுறைகளோடு தஞ்சைக் கல்வெட்டிற் பொறிக்கப்பட்டுள்ளன. திருப்பதியம் விண்ணப்பம் செய்துவரும்போது யாரேனும் இறந்துபோனாலோ அல்லது வேறு ஊருக்குக் குடிபெயர்ந்து சென்றாலோ அவர்கள் வழிவந்த அடுத்த முறை கடவார் அவர்களுக்குப் பதிலாக இப்பணியைச் செய்யலாம். அவர்களின் வழிவந்தோர் தகுதியுடையவராக இல்லா விட்டால் தகுதியுடையாரை ஆளிட்டுத் திருப் பதியம் விண்ணப்பம் செய்யலாம் என்ற திட்டமிட்ட வரையறையை முதலாம் இராசராசன் செய்துள்ளதைக் கல்வெட்டுக் கூறுகிறது. அவனது கல்வெட்டில் பின்வரும் நாற்பத்தெட்டு, திருப்பதியம் விண்ணப்பம் செய்வார் பெயர்களும் உடுக்கை மற்றும் கொட்டிமத்தளம் வாசிப்பார் இருவரது பெயர்களும் குறிப்பிடப்படுகின்றன. திருப்பதியம் விண்ணப்பம் செய்வார் பெயரின் முற்பகுதி இயற்பெயராகவும் பிற்பகுதி சிவதீட்சை பெற்ற திருநாமமாகவும் உள்ளன. இதனால் இவர்கள் சிவதீட்சை பெற்றவர்களாக விளங்கியுள்ளனர் எனலாம். இவர்களது பெயர்கள் சிவன் என்ற பெயரோடு முடிவடை கின்றன.
இராசராசன் காலத்திற்குப் பின்பு
இராசராசனைத் தொடர்ந்து முதலாம் இராசேந்திர சோழன் காலத்திலும் அவனது பிள்ளைகளின் ஆட்சிக்காலத்திலும் திருமுறைகள் மேலும் தொகுக்கப்பட்டுக் கோயில்களில் முக்கிய இடத்தைப் பெற்றன. தொடர்ந்து பன்னிரண்டாம் நூற்றாண்டில் பிற்காலச் சோழர் காலத்திலும் பதின்மூன்றாம் நூற்றாண்டில் பிற்காலப்பாண்டியர் காலத்திலும் கோயில்களில் திருமுறை ஒதுவார்க்கு இடமளித்து அவர்களுக்கு நிலக்கொடைகள் வழங்கப்பட்டமையைப் பற்றி தமிழகமெங்கும் கல்வெட்டுகள் காணப்படுகின்றன. இக்காலத்தில் மாணிக்கவாசகர் திரு முறைக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு, கோயில்களில்
அவற்றைப் பாடுவார்க்கும் தானங்கள் தரப்பட்டுள்ளன.
கி. பி. பதினொன்றாம் நூற்றாண்டின் பிற்பகுதியிலிருந்து திருமுறைகள் கோயில்களில் அதிக அளவிற் பாடுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டமைக்குப் பல காரணங்கள் உள்ளன.
135

Page 166
இராசராசன் மற்றும் அவனது மகன் இராஜேந்திரன் காலங்களில் திருமுறைகள் தொகுக்கப்பட்டு மக்கள் அறியும்படி அளிக்கப்பட்டன. தில்லைபோன்ற இடங்களில் அவை அழியாதவண்ணம் செப்பேட்டில் எழுதிவைக்கப்பட்டன. நம்பி யாண்டார் நம்பி பாடிய திருத்தொண்டர் திருவந்தாதியும், சேக்கிழார் இயற்றிய பெரியபுராணமும் சைவகுரவர்களின் வாழ்க்கை வரலாற்றை மக்கள் அறியத் துணைசெய்தன. இதனால் அவர்களது பாடல்களைப் போற்றிப்பாடும் நிலை பரவலாகக் காணப்பட்டது. கோயில்கள் மட்டுமன்றி சைவ மடங்களும், சைவமரபைக் காத்த குகை என்று அழைக்கப்பட்ட சைவ மடங்களும் திருமுறைகளைப் போற்றிப் பாதுகாத்தன. அவற்றைப் பாடுவதற்கும் ஆதரவு தந்தன. அல்லூர்ப் பகுதியில் திருவடகுடி மாகாதேவர் ஸ்தானமடத்தில் திருப்பதியம் விண்ணப்பம் செய்ய அம்பலத்தாடி திருநாவுக்கரை யனுக்கும் அவன் தலைமுறையினர்க்கும் மடப் போகமாக நாள்தோறும்
தூணிநெல் கோயிற் பண்டாரத்திலிருந்து அளிக்கப்பட்டது.
இடைக்காலப் பிற்காலச் சோழர் காலங்களில் கி.பி.11,12, 13ஆம் நூற்றாண்டுகளில் குகூர், பிரம்ம தேசம், முதுகுன்றம், திருவிழிமிழலை, நல்லம், கடைமுடி, மாறன்பாடி, ஒற்றியூர், தென்கொளி, உடையலூர், துக்காச்சி, சோற்றுத்துறை, எலவானாசூர், ஆமாந்தூர், திருவாய்மூர், பனங்காட்டூர், கழுமலம், இடைவாய், வழுவூர், எண்ணாயிரம், புகலூர், தில்லையாடி, இடைவாய் போன்ற பல இடங்களிலுள்ள கோயில்களில் திருப்பதியம் பாடுவார்க்குக் கொடை அளித்ததைக் கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன இவர்களிற் சிலர் பிச்சன் என்று அழைக்கப் பட்டுள்ளனர். சோளேந்திர சிங்கபிச்சன், தியாகசமுத்திரபிச்சன், இராசராச பிச்சன் என்று கல்வெட்டுகளிற் குறிப்பிடப் படுகின்றனர். பாண்டிய நாட்டில் இடைக்காலப் பாண்டியர் காலத்தில் திருவாலீசுவரம், தென்கரை போன்ற இடங்களில் திருப்பதியம் பாடுவார், சைவசிகாமணி, உடையபிள்ளை என்ற பெயர் களைப் பெற்று விளங்கியுள்ளனர். கி.பி. பதிமூன்றாம் நூற்றாண்டில் பாண்டிய நாட்டில் மேலநெட்டூர் காளையார் கோயில், திருப்பத்தூர், பிரான்மலை, மதுரை அரண்மனை சிறுவயல், வள்ளியூர், கல்லிடைக்குறிச்சி, திருவாலீசுவரம், இளையாங்குடி, ஆனையூர் போன்ற இடங்களில் திருப்பதியம் பாடுவார்க்கு நிவந்தங்கள் அளிக்கப்பட்டுள்ளன.
பதியம்பாட பார்வையிழந்தோர்
சோழர் காலத்தில் குலோத்துங்கனது ஆட்சியில் திருவாமாத்தூர் சிவன்கோயிலில் திருப்பதியம் பாடுவதற்குப் பார்வையிழந்த குருடர்கள் பதினாறுபேர் நியமிக்கப்பட்டுள்ளதைக் கல்வெட்டு ஒன்று தெரிவிக்கிறது. திருமுறை ஒதுவார் வரலாற்றில் மனிதநேயத்திற்கு மதிப்பளித்து பார்வையிழந் தோரையும் கோயிற் றிருப்பணியில் ஈடுபடுத்தியதை இவ்வரிய வரலாற்றுச்சான்று காட்டுகிறது. திருவாமாத்தூர் கோயிலில்
136

திருப்பதியம் பாடிவந்த பார்வையிழந்தவர்கள் பதினாறுபேருக்கும் வழிகாட்டுவதற்குக் கண்தெரிந்த இருவர் நியமிக்கப்பட்டனர். இவர்கள் கண் காட்டுவார் என்று அழைக்கப்பட்டனர். கண் காட்டுவார் பார்வையிழந்தோரைக் கோயிலுக்கு அழைத்துவந்து மூன்று சந்திகளின் போதும் திருப்பதியம் பாடச் செய்தனர். இதற்காக நாள்தோறும் பேர் ஒருவருக்கு முக்கலம் நெல் ஊதியமாக அளிக்கப்பட்டது. இதற்காகப் பன்னிரு வேலிநிலம் திருப்பதியங் காணியாகத் தரப்பட்டது என்று திருவாமாத்தூர்க் கல்வெட்டு, தெரிவிக்கிறது.
திருக்கைக் கொடி
கோயில்களில் திருப்பதியங்களை வைத்துப் பாதுகாப்பதற்கும் பூசை செய்வதற்கும் பாடுவதற்கும், அமைந்த தனி மண்டபங்கள், திருக்கைக்கொட்டி என்ற பெயரில் முதலாம் குலோத்துங்க சோழன் காலத்திலிருந்து கட்டப்பட்டுள்ளன. இதுவும் திருமுறை பாடுவார் வரலாற்றில் ஏற்பட்ட முக்கிய மாற்றமாகும். திருமுறைகளுக்கு எந்த அளவு மதிப்பளிக்கப்பட்டு அவை தெய்வத்தைப் போன்று போற்றப்பட்டன என்பதனை இது காட்டுகிறது. திருப்பதியங்களைத் தாளத்துடன் கை கொட்டி இசையுடன் பாடியதால் இதற்குத் திருக்கைக்கொட்டி என்று பெயர் ஏற்பட்டிருக்க வேண்டும். சீர்காழியிலுள்ள திருஞானசம்பந்தர் திருக்கோயிலை ஒட்டி திருக்கைக்கொட்டி மண்டபம் ஒன்று முதலாம் குலோத்துங்க சோழன் காலத்தில் இருந்துள்ளது. அங்கிருந்த திருமுறைகளைத் திருக்காப்புநீக்கி, வேண்டும்போது அவற்றைத் திருக்கைக் கொட்டியில் எடுத்து வைப்பதற்குத் தமிழ்விரகர் என்றழைக்கப்பட்ட திருப்பதியம் வல்ல புலவர்கள் இருந்தனர். இவர்கள் திருப்பதியம் பாடுகின்றவர் களாகவும் இருக்க வேண்டும். இவர்களது பணி திருக்கைக் கொட்டியில் திருமுறைகளைத் திருக்காப்பு நீக்கி எடுத்து வைப்பதோடு அவற்றில் பழுதுபட்ட சுவடிகளை அகற்றி அவற்றிற்குப் பதிலாகப் புதிய சுவடிகளை எழுதிவைத்தலாகும். மேலும், திருமுறைகளுக்குப் பூசை செய்து வருவதும் இவர்களது கடமையாகும் என்று சீர்காழிக் கல்வெட்டு, தெரிவிக்கிறது. இப்பணிகளைச் செய்த தமிழ்விரகர்க்கு அவ்வூரில் நிலம் இறையிலியாக அளிக்கப்பட்டதையும், கல்வெட்டுக் கூறுகிறது. கி.பி.12,13ஆம் நூற் றாண்டுகளில் தமிழ்நாட்டில் பலவூர்களில் திருக்கைக் கொட்டி மண்டபங்கள் இருந் திருக்கின்றன. திருவிழிமிழலையில் திருக்கைக் கொட்டி மண்டபத்தை நரசிங்க தேவர் என்பவர் பிற்காலச் சோழர் காலத்திற். கட்டியுள்ளார். திருக்காராயில் கோவிலூர் (திருவுசாத்தானம்) முதலிய இடங்களில் சோழர்காலத்தில் இருந்த திருக்கைக்கொட்டிகளில் திருப்பதியம் ஒதுவார்க்கு நிலங்கள் அளிக்கப்பட்டுள்ளன. கழுமலம், இடைவாய், திருப் பாலைவனம் போன்ற இடங்களிலும் திருக்கைக் கொட்டிகள் சோழர் காலத்தில் இருந்துள்ளன. கன்னியாகுமரி மாவட்டத்தில் பிற்காலப் பாண்டியர் காலத்தில்
திருக்கைக்கொட்டி ஒன்று இருந்துள்ளது.
இந்துக்கலைக்களஞ்சியம்

Page 167
மாணிக்கவாசகர் பாடல்கள்
தேவார மூவர் பாடல்களை அடுத்து முதலாம் இராசேந்திரசோழன் காலத்திலிருந்து மாணிக்க வாசகரின் திருவாசகப் பாடல்களைப் பாடுவார்க்குச் சோழர், பிற்காலப் பாண்டியர் காலங்களில் நிவந்தங்கள் அளிக்கப்பட்டுள்ளன. இரண்டாம் இராசேந்திர சோழன் காலத்தில் (கி. பி. 1057) திருக்கோயிலூர்க்கு அருகிலுள்ள கீழுர்ச் சிவன் கோயிலில் மாணிக்கவாசகரின் திருவெம்பாவை விண்ணப்பிக்க நிவந்தம் அளிக்கப்பட்டுள்ளது. திருவொற்றியூர்க் கோயிலில் வீரராசேந்திர சோழன் காலத்தில் (கி. பி. 1070) திருவாதிரைத் திருநாட்களில் காராணைவிடங்கர் வீதிவுலா வருங்காலத்தில் இருபத்திரண்டு தளிச்சேரிப் பெண்கள் திருவெம்பாவையை விண்ணப்பித்துப் பாடலுக்கு ஏற்றமுறையில் ஆடவேண்டும், அகமார்க்கத்தில் பதினாறு பெண்கள் திருப்பதியம் விண்ணப்பிக்க வேண்டும்
என்று நிலக்கொடை அளிக்கப்பட்டுள்ளது.
விருத்தாச்சலம் வட்டத்து நல்லூர் கோயிலில் கி. பி. 1090 இல் திருவெம்பாவை விண்ணப்பம் செய்யப்பட்டுள்ளது. இக்கோயில் இறைவன் திருவீதியுலா வரும்போதும் தேரில் வலம் வரும்போதும் இரண்டு தேவரடியார்கள் திருவெம்பாவையில் முதற் பத்துப் பாடல்களைப் பாடிக்கொண்டு வரவேண்டும். அடுத்த பத்துப் பாடல்களைத் திருவிழாவின் போது இரண்டு தேவரடியார்கள் பாடிக்கொண்டு நடனமாட வேண்டும். மூன்றாம் பத்தினைச் சோழமாணிக்கம், பூமியாளினி என்ற தேவரடியார்கள் பாடவேண்டும் என்று நல்லூர்க் கல்வெட்டுக்கள் தெரிவிக்கின்றன. திருவெம்பாவையில் வரும் பாடல்கள் நாயகி பாவத்தில் அமைந்துள்ளமையால் அவற்றைப் பாடி அபிநயம் பிடித்து நடனமிடுவதற்குத் தேவரடியார் பெண்கள் நியமிக்கப்பட்டிருக்க வேண்டும். வழுவூர் வீரட்டானேசுவரர் கோயிலில் கி. பி. 1170 இல் திருவெம்பாவை விண்ணப்பம் செய்ய நிலமளிக்கப்பட்டுள்ளது. பாண்டிநாட்டு மதுரைக் கோயிலில் கி.பி. 1242இல் இரண்டாம் மாறவர்மன் சுந்தர பாண்டியன் காலத்தில் திருவெம்பாவை விண்ணப்பம் செய்ய நிவந்தம் அளிக்கப் பட்டுள்ளது. எலவானாசூர் கோயிலில் கி. பி. 1135 இல் திருப்பள்ளியறை நாச்சியார் ஞாயிற்றுக்கிழமை தோறும் திருவுலா எழுந்தருளும் போது திருச்சாழல் பாட நிவந்தம் அளிக்கப் பட்டுள்ளது. கி. பி. 1184 இல் மூன்றாம் குலோத்து சோழன் காலத்தில், திருச்சாழல் விண்ணப்பம் செய்ய தானமளிக்கப்
பட்டுள்ளது.
பிற்காலம்
விசயநகர - நாயக்கமன்னர் காலங்களிலும் திருமுறைகளைக் கோயில்களிற் பாடுவார்க்குத் தொடர்ந்து தானங்கள் தரப்பட்டுள்ளன. திருமலை நாயக்கர் காலத்தில் திருமுறை ஒதுவார் ஒருவருக்குச் செப்பேடு ஒன்று அளிக்கப்பட்டு இன்றும் அவரது வழிமுறையினரிடத்து அச்செப்பேடு உள்ளது.
இந்துக்கலைக்களஞ்சியம்

தமிழ்நாட்டுக் கோயில்களில் ஆண்களே திருமுறைகளைப் பாடும் பணியினை மேற்கொண்டு அதனை இன்றும் செய்து வருகின்றனர். பெண்கள் நாயகி பாவத்துடன் கூடிய பாடல்களைப் பாடி அபிநயம் பிடித்து ஆடுவதற்கு அக்காலத்தில் அருகிய அளவில் நியமிக்கப்பட்டுள்ளனர். இன்றும் தமிழ்நாட்டில் சைவக் கோயில்களில் ஒதுவார் பணியினை மரபுமாறாமல் செய்துவரும் வழிமுறையினர் உள்ளனர். தமிழர்களது இசைமரபினைக் காத்துவரும் பெருமைபடைத்தவர்களாக இவர்கள் விளங்கி
வருகின்றனர். (வெ.வே.)
O திருமுறை கண்ட புராணம்
சைவத் திருமுறைகள் தமிழகத்திற்குக் கிடைக்கச் செய்த வரலாறும் திருமுறைகள் வகுக்கப் பெற்ற முறைகளும்
பண்களைப் பற்றிய குறிப்புக்களும் திருமுறைகண்ட புராணத்தில் கூறப்பட்டுள்ளது.
பொருளடக்கம் - இவற்றுள் திருமுறைகளைக் கண்டெடுத்த வரலாற்றினைத் திருமுறைகண்ட சோழன் என்ற தனித் தலைப்பில் குறிப்பிடுவதால் திருமுறைகள் வகுக்கப் பெற்ற முறைகளும் பண்களைப் பற்றிய குறிப்புகளும் இங்கு கூறப்பட்டுள்ளன. ஞானசம்பந்தப் பெருமான் திருமுறைகள் முதற்கண் தொகுக்கப்பட்டமைக்கு காரணம் சிவபெருமான் திருமுலைப்பால் கொடுப்பித்து ஆட்கொண்டமையும் பின் திருக்காட்சியளித்தமையும் திருவாதவூரிற் சம்பந்தர் சிவபெருமானைத் திருவருளாற் கண்டு அப்பருக்கு காட்டினமையும் திருப்பூந்துருத்தியில் சம்பந்தர் சிவிகையினை அப்பரடிகள் தாங்கினமையும் கொண்டு உணரலாம். சம்பந்தர் முன்னிலையில் ஆட்கொள்ளப்பட்டதாகவும் அப்பரடிகள் படர்க்கையில் ஆட்கொள்ளப்பட்டதாகவும் இந்நூல் குறிப்பிடுகின்றது. 45 பாடல்களைக் கொண்ட நூலாக இது விளங்குகின்றது. தில்லையில் கிடைக்கப்பெற்ற திருமுறைகளின் பண்முறைகளைப் பெரும்பறறப் புலியூரில் உதித்த பானமரபுப் பெண்ணால் அறிந்து அதன்படி அமைத்தார்கள். திருஞானசம்பந்தர் அருளிச் செய்த திருப்பாடல்களில் முதற் திருமுறையாக வகுக்கப்பெற்ற பண்களும் கட்டளை முறைகளும் நட்டபாடைப் பண் எட்டுக் கட்டளையாகவும், தக்கராகப் பண், மேகராக குறிஞ்சிப் பண் ஆறுகட்டளையாகவும், குறிஞ்சிப் பண் ஐந்து கட்டளையாகவும், பழந்தக்கராகப் பண் மூன்று கட்டளையாகவும் தக்கேசிப்பண் மூன்று கட்டளையாகவும் முதன் மூன்று நாயனார் தேவாரங்களின் பண்களும் அவற்றின் வகுப்பும் ஏழு திருமுறைகளாக வகுத்தமையும் கூறி அதன் பின் திருவாசகம் திருக்கோவையார் ஆகிய மணிவாசகர் திருவாக்குகளை எட்டாம் திருமுறையாகவும், திருவிசைப்பா திருப்பல்லாண்டு என்பவற்றை ஒன்பதாந் திருமுறையாகவும், திருமந்திரம் பத்தாம் திருமுறையாகவும், இறையனார் உள்ளிட்ட
137

Page 168
பன்னிருவரால் பாடப்பெற்ற தொகுப்பு பதினோராந்
திருமுறையாகவும் அமைக்கப் பெற்ற செய்திகளைத் திருமுறை கண்ட புராணம் விரிவாகக் கூறுகின்றது.
இந்நூலில் நம்பியாண்டார் நம்பி கதை கூறப்படுகின்றது. நம்பியாண்டார் பிள்ளையாருக்கு நைவேத்தியம் வைத்தவேளை அதனைப் பிள்ளையார் உண்ணாமை கண்டு கவலையுடன் தலையைக் கல்லுடன் மோதமுற்பட்ட போது, “பொறு நம்பி’ என்று பிள்ளையார் தடுத்து அப்படையலை உண்டதாகக் கூறப்படுகின்றது. நம்பியின் இச்செயலை அறிந்த இராச இராச மன்னன் வாழைக்கனி, தேன், அவலோடப்பம், எள்ளுண்டை, யாவற்றுடனும் அங்கு வந்து நம்பியை நோக்கி “இதனைப் பொல்லாப் பிள்ளையாருக்கு இப்பொழுது நிவேதிக்க” எனக் கூற அவரும் நைவேத்தியத்தைப் பிள்ளையார் முன் வைக்க அதனைப் பிள்ளையார் எடுத்துக் கொண்டார். எனவும் இந்நூலில் கூறப்படுகிறது. மன்னனின் வேண்டுதலுக்கிணங்க, நம்பி திருமுறைகளை எல்லாம் தேடி எடுத்து அவற்றை திருமுறைகளாகத் தொகுத்தார். பின்பு அதற்கு பண்களையும் அமைத்தார் என நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது. திருமுறைகண்ட புராணத்தின் பயனும் இங்கு குறிப்பிடப்பட்டுள்ளது. நாளும் திருமுறையில் ஒன்றிரண்டு திருப்பதிகங்கள் ஒதிவருதல் வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆசிரியர்- இந்நூல் கி.பி 13 ஆம் நூற்றாண்டின் பிற் பகுதியில் வாழ்ந்த உமாபதிசிவாச்சாரியாரால் இயற்றப்பெற்றது. இவர் கொற்றவன் குடியில் வாழ்ந்தவர். சைவ வேதியர் குலத்தில் பிறந்த இவர் வேதசிவாகமங்களை ஒதி உணர்ந்தவர். மறைஞான சம்பந்தர் இவரது பரிபாகமறிந்து சிவஞான போதத்தை இவருக்கு உபதேசித்தார். இவர் சிதம்பரத்தின் துவசாரோகணம் தடைப்பட்டிருக்கக் கொடிக்கவி அருளிச் செய்து அதனை ஏற்றினார். இவர் பெளஷ்கர வியாக்கியானம், கோயிற்புராணம், திருத்தொண்டர் புராணசாரம், சேக்கிழார் நாயனார் புராணம், திருப்பதிக் கோவை, சிவப்பிரகாசம், திருவருட்பயன், வினாவெண்பா, போற்றிப்பஃறொடை, நெஞ்சுவிடுதூது, உண்மைநெறி விளக்கம், சிவபுண்ணியத் தெளிவு ஆகிய நூல்களையும் எழுதியுள்ளார். (இ. ச)
திருவக்கரை
தொண்டை நாட்டுத் தலம். கோயிலின் வாயில் வரை பேருந்தில் செல்ல முடியும். வராக நதி என அழைக்கப்படும் சங்கரபாணி ஆற்றங்கரையில் அமைந்துள்ள மிகப் பழமையான கோயில் இது. வல் + கரை - வலிய கரையுடைய இடமாதலில் (கோயிலைச் சுற்றிலும் கற்பாறைகள்) வக்கரை என்றாயிற்று என்று கூறுவர். வக்கிராசுரன் பூஜித்த தலமாதலில் இப் பெயர் பெற்றது என்று கூறுவாரும் உளர். சம்பந்தர் பாடல் பெற்ற தலம்.
138

mைவன் - சந்திரசேகரேஸ்வரர், சந்திரமெளலீசர்
@ 匹 匹 இறைவி
6u)LDIJLib - வில்வம் த
தீர்த்தம் - சந்திர தீர்த்தம், சூரிய தீர்த்தம்
அமிர்தேஸ்வரி, வடிவாம்பிகை
திருவக்கரைக் கோயில் பழமைச் சிறப்புடன் மிகப் பரந்த நிலப்பரப்பில் அமைந்துள்ளது. ஏழு நிலைகளைக் கொண்ட இராஜகோபுரம் கம்பீரமாகக் காட்சி தருகிறது. கோயிலைச் சுற்றி கருங்கல் மதிற்கவர் காணப்படுகின்றது. கோயிலினுள் நிழல் தரும் மாமரங்கள் நிறைய உண்டு. இராஜகோபுரத்தைக் கடந்து உள்ளே சென்றதும் இடப்பக்கம் வக்கிர காளி சந்நிதி உள்ளது. காளியின் உருவம் மிகவும் அழகுடையது. வக்கரையில் உள்ள காளி ஆதலால் வக்கரைக் காளி என அழைக்கப்படுகின்றாள். சந்நிதியின் முகப்பில் நான்கு பாலகியர் உருவங்கள் இடம் பெற்றுள்ளன.
தலை மண்டையோட்டுக் கிரீடம், வலக்காதில் பிரேத குண்டலம் இடக்காதில் பத்திரகுண்டலம், எட்டுக்கரங்கள் வலக்கைகளில் பாசம், சக்கரம், வாள், கட்டாரியும் இடக்கையில் உடுக்கை பாவனை, கேடயம், கபாலம், ஆட்காட்டி விரல் பூமியைச் சுட்டும் நிலையும், நீண்டு தொங்கும் தலைமாலை அதனையே மார்புக் கச்சாகக் கட்டியிருக்கும் தன்மை, கோரைப்பற்கள் பெரிய சின விழிகள், நீண்ட கால்களில் தண்டச் சரங்கள், சாய்ந்த உருவம், சூலம் இத்தகைய தோற்றத்துடன் விளங்குகிறாள் வக்கரைக் காளி. பெளர்ணமி தினம் விசேடமாதலின் பெருமளவு பக்தர்கள் அத்தினத்தில் வந்து வழிபாடு செய்கின்றனர்.
சந்நிதிக்கு எதிரில் வக்கிராசுரன் பூஜித்த வக்கிரலிங்கம் உள்ளது. சற்றுப் பெரியது. நேரே சென்றால் ஒரு கல் மண்டபம், நந்தி உள்ளது. இடப்பக்கதில் விநாயகர் சந்நிதி அமைந்துள்ளது. அடுத்து மூன்று நிலைகளையுடைய கிளிக்கோபுரம் உட் பிராகாரத்தில் குண்டலி மாமுனிவர் சந்நிதி. முனிவரின் சமாதியின் மீது சிவலிங்கம் உள்ளது. இதற்குக் கோஷ்ட மூர்த்தமாகத் தட்சிணாமூர்த்தி, திருமால், வரதராஜப் பெருமாள் உள்ளனர். எதிரில் கருடாழ்வார் உள்ளார். சஹஸ்ரலிங்கம் உள்ளது. உள் சுற்றில் நால்வர் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளனர்.
உள் சுற்றில் வலமாக வந்து படிகள் ஏறியே மூலவரைத் தரிசிக்கலாம். சதுர அடிப்பாகத்தின் மீதமைந்த வட்டமான ஆவுடையாரில் உள்ள மூலவர் அழகிய திருமேனி, மும்முகத்துடன் கம்பீரமாகக் காட்சி தருகின்றது. கோஷ்ட மூர்த்தங்களாக தட்சிணாமூர்த்தியும், விநாயகரும், ஆறுமுகரும், துர்க்கையும் உள்ளனர். சண்டேஸ்வரர் எதிரில் உள்ளனர். பின்னர் சுவர் ஒரமாக பைரவர், பிரம்மா, அர்த்தநாரீஸ்வரர் சிலாரூபங்கள்
வைக்கப்பட்டுள்ளன.
அர்த்த மண்டபத்தில் நடராஜர், கால் மாறி ஆடிய க்கோலக்கில் உள்ளார். க்கிய ബ டுப்புக்கு மேல் (5 函 துT (56)]Lş.
இந்துக் கலைக்களஞ்சியம்

Page 169
உயர்ந்துள்ளது. இது ஒர் புதிய அமைப்பு வக்கீர தாண்டவம் என்று கூறுவர். அம்பாள் சந்நிதி தெற்கு நோக்கியது. நின்ற திருக்கோலம். நவக்கிரக சந்நிதியும் உண்டு. இதில் சனிபகவானின் வாகனமான காகம், வழமைக்கு மாறாக தென்புறம் நோக்கியுள்ளது. குண்டலினி முனிவரின் வம்சத்தில் வந்த வக்கிராசுரன் இப்பகுதியை ஆண்டதாகவும் அவனை அழிக்க காளி இறைவனை (சந்திரசேகரனை) வழிபட்டு, அவனுடன் போர்புரிந்து வெற்றி பெற்றதாகவும் தலபுராணச் செய்தி கூறுகின்றது.
"சந்திரசேகரனே அருளாய் என்று தண்விசும்பில் இந்திரனும் முதலான இமையோர்கள் தொழு திறைஞ்ச அந்தர மூவெயினும் அனலாய் விழ ஒர் அம்பினால் மந்தர மேரு வில்லா வளைத்தான் இடம் வக்கரையே’
என்று சம்பந்தர் பெருமாள் இத்தலத்தெழுந்தருளியுள்ள பெருமானைப் போற்றிப் பாடியுள்ளார். (நி.நி.)
O
திருவகுப்பு
பன்னிரு திருமுறைகள் போன்று முருகவேள் பன்னிரு திருமுறைகளுள் ஒன்பதாம் திருமுறையாக இடம்பெறுவது திருவகுப்பு. இது முருகப் பெருமானின் பெருமைகளை விரித்துக் கூறுவதுடன் மக்களுக்கு வேண்டும் உபதேசங்களையும் வழங்குகின்றது. அருணகிரிநாதர் பாடியுள்ள திருப்புகழ், கந்தரலங்காரம், கந்தரந்தாதி, கந்தரனுபூதி ஆகியவற்றுடன் ஒரு சேர வைத்துப் போற்றுப்படுவது இந்நூல். முருகனின் திருவடிகள், அடியார்கள், வேல், திருக்கரங்கள் முதலியவற்றின் சிறப்புக்களை எடுத்துக் கூறுவதனால் இந்நூல் திருவகுப்பு எனப்படுகின்றது.
இந்நூலின் கண் சீர்பாதவகுப்பு, திருப்பரங்கிரி வகுப்பு முடிய 25 வகுப்புக்கள் உள்ளன. ஒவ்வொரு வகுப்பும் திருப்புகழ்ப் பாடல்களைப் போல சந்தம் மிகுந்த வரிகள் நிமிர்ந்த, நெடும் பாடலாகும். இவ்வகுப்பில் அடங்குவன மேல்வருவனவாகும். சீர்பாத வகுப்பு, திருவேளைக்காரன் வகுப்பு, வேல் வகுப்பு, பெருத்த வசன வகுப்பு, பூதவேதாள வகுப்பு, பொருகளத் தலகை வகுப்பு, செருக்களத் தலகை வகுப்பு, திருஞானவேழ் வகுப்பு, திருக்கையில் வழக்க வகுப்பு, வேடிச்சி காவலன் வகுப்பு, சேவகன் வகுப்பு, வேல் வாங்கும் வகுப்பு, புயவகுப்பு, சித்து வகுப்பு. கடைக்கணியில் வகுப்பு, சிவலோக வகுப்பு, மயில் வகுப்பு, கொலு வகுப்பு, வீரவாள் வகுப்பு, சிவகிரி வகுப்பு, திருச்செந்தில் வகுப்பு, திருப்பழனி வகுப்பு, திருப்பரங்கிரி வகுப்பு என்பன முதலாவதாகிய
1) சீர்பாத வகுப்பு - பிரதானமான வகுப்பு ஆகும். ஏனெனில் முருகனினும் சிறந்தது அவர் சீர்பாதம்
இந்துக்கலைக்களஞ்சியம்

“நின்னிற் சிறந்த நின் தாள் இணையவை'
என்பது பரிபாடல். ஜோதி வீசுவது முதல் கவிமாலை சூடுவது வரையும் குறிக்கப்பட்ட ஒளி, பெருமை, அருமை, கடல், ஆற்றல், கருணை வாய்ந்தன என 22 வகையான முருகனின் சிற்றடிகள்
இவ்வகுப்பில் மங்கல வகையில் விளக்கப்பட்டுள்ளன.
இரண்டாவதாகிய தேவேந்திர கங்க வகுப்பு - முருகன் திருநாமத்தை மொழிபவர் இவரென ஆராய்ந்தறிந்து அவர் தமைத் தேவேந்திர சங்கமும் வணங்கும் என்பது இதன் கருத்தாகும். இவ்வகுப்பில் உள்ள தேவி துதி போல அழகும் சிறப்பும் வாய்ந்த தேவி துதி தமிழ் நூல்களில் காணப்படுவது அரிது.
“கரிவளை விரிசடை யொடு புரைவடிவினள் சத குளமுகுளித தாமாங்குச மென்றிரு தாளாந்தர அம்பிகை”
இவ்வகுப்பில் முதலில் இருந்து 12 அடிவரை தேவியைப் போற்றும் அருமையான துதிப்பாகும். இரணியனைச் சங்கரித் தவள், பலியோடு ஏந்தினவள், நடனம் புரிபவள், வேதாந்தத்தில் விளங்குபவள், எரிநிறத்தினள், தாமரை மொட்டன்ன கொங்கை, மெல்லிய திருவடிகள் உடையவள், மடமயில் போன்றவள், நாகபூஷணி ஆகிய பார்வதி பெற்ற குமரன் சதாகாலமும் தியானிப்பவர்களின் சிந்தையில் வாழ்பவனாகிய குமரன் திருவருள் பெறும் வகையில் போற்றுபவர் யார் யார் என்று தேர்ந்தெடுத்து அவர்களை தேவேந்திர கூட்டங்கள் வணங்கி நிற்கும் என்பது இவ்வகுப்பின் சாராம்சம் ஆகும்.
மூன்றாவதாகிய வேல்வகுப்பு வேலின் பெருமைகளையும் ஆற்றலையும் விளக்கி நிற்கும் வகுப்பாகும். வள்ளியின் கடைக் கண்ணால் கிடைக்கும் பஞ்சகிருத்திய சக்தி வேலால் கிடைக்கும் எனவும், இந்திரன், பிரமன், திருமால் ஆகிய யாவருடைய துன்பங்களையும் வினைகளையும் ஒழிக்கும் எனவும் பலவாறாக
முருகனின் வேலின் ஆற்றல் இவ்வகுப்பில் பேசப்படுகின்றது.
திருவேளைக்காரன் வகுப்பு - வள்ளியம்மையொடு தமது வேளையைப் போக்குபவன் எனக்கூறி முருகன் பெருமையை எடுத்தியம்புவது இவ்வகுப்பு ஆகும்.
இவ் வகுப்பில் முருகனின் பெருமைகள், சுவாமிமலை,
திருவிடைகழி, திருச்சிராப்பள்ளி, பழநி, திருத்தணி ஆகிய தலங்களில் வீற்றிருப்பவன்; அருணகிரிக்கு அருள் புரிந்தவன் என முருகன் பலவாறாகப் பேசப்படுகிறான்.
ஐந்தாவதாகிய பெருத்த வசன வகுப்பு - இது முருகபிரான் தமக்குபதேசித்த மெளனோபதேசத்தின் சிறப்பைக் கூறுகின்றது.
139

Page 170
இவ் உபதேசம் நிறைபொருளாய், பாவநெறியிலிருந்து விளங்குவது, வினைக்கு இடமான பிறப்பை ஒழிப்பது எந்தக் கலைக்கும் நிகரானது எனத் திகழ்வது, பஞ்ச பூதங்களின் ஆற்றலுக்கு அகப்படாது ஒளித்து நிற்பது மனம், வாக்கு, காயம் இவைகளின் செயலை அடக்கவல்லது என இவ்வகுப்பில்
விரித்துரைக்கப்படுகின்றது.
ஆறாவதாகிய பூத வேதாள வகுப்பில் முருகப்பிரான் சூரனோடு பொருத, போர்க்களத்தில் ஆடிய அநேகவித பூத வேதாளத்தின் வருணனை இடம் பெற்றுள்ளது. பொருகளத்தலகை வகுப்பு - முருகப்பிரான் அசுரசம்ஹாரஞ் செய்த போர்க்களத்துள்ள பேய்கள் வர்ணனை இடம் பெற்றுள்ளது. செருக்களத்தலகை வகுப்பு, போர்களத் தலகை வகுப்பு ஆகிய இரண்டும் 7ஆம் வகுப்பைத் தழுவி நிற்கின்றன. 10ஆவதாகிய திருஞான வேழ வகுப்பு மெளன ஞான விசேடத்தை கூறிற்று. சிவமயத்திருஞான வேழம் என்பதில் சிவஞானத்தை யானைக்கு அருணகிரிநாதர் ஒப்பிட்டார். இத்திருவகுப்பில் சிவஞானம் வேழம் செய்ய வல்ல பெருஞ்செயல்கள் பதினெட்டினைக் கூறுகின்றார்.
திருக்கையில் வழக்க வகுப்பு; இது முருகன் புகழைப் படிப்பவர்க்கு அவன் திருக்கையால் வழங்கப்படுவதான பிரசாத மகிமையைக் கூறுகின்றது. வழங்கப்படுவது ஞானமேயாதலின் அந்த ஞானத்தை ஐராவதம் போன்ற நிருமல ஞானக் களிற்றுக்கு உவமையாக்கி ஞான வேழ வகுப்புப் போலவே அந்த ஞான சக்தியின் பெருமையை கூறினார். 12ஆவது வகுப்பாகிய வேடிச்சி காவலன் வகுப்பு வேடர் மகளாம் வள்ளியின் காதலராகிய முருகனின் பெருமையைக் கூறி நிற்பதாகும். 13ஆம் வகுப்பாக சேவகன் வகுப்பு யமபயதிரை நீக்கியருளுதல் பாடப்பட்ட வகுப்பாக அமைந்துள்ளது. பதினான்காவதாகிய வேல்வாங்கு வகுப்பு முருகப்பிரான் வேலாயுதத்தை பிரயோகித்ததால் நேர்ந்தன. இவை என விளக்குகின்றது. பதினைந்தாவதாகிய புய வகுப்பு முருகவேளின் பன்னிரு கரங்களின் செயல்களை எடுத்துக் கூறுகின்றது. இந்த வகுப்புக்கு வித்து "சந்தாரம் சாத்தும் புற இயல் கந்தா எனறேத்தும் படியென சந்தாபம் தீரத்ததென் றடியிணை தருவாயே” எனத் திருப்புகழில் (183) முன்னர் வேண்டின வேண்டுகோளே. இது அருமையாய் அமைந்து பொருள் செறிந்த வகுப்பு. இவ்வகுப்பினை பாராயணத்தில் கொள்வதால் “முன்பு செய்த பழிக்குத்துணை அவன் பன்னிரு தோளும்” என்னும் மறைமொழிப்படி பழவினை தொலையும் என்பது தெளிவு. இவ்வகுப்பானது முதல் பன்னிரு அடிகளின் திருமுரு காற்றுப்படையை அப்படியே தழுவிப் பின்னர் முருகனின் திருப்புயத்தின் பிற சிறப்பியல்புகளைக் கூறுகின்றது.
பதினாறாவதாகிய சித்து வகுப்பில் பல சித்திகளைப் பெறும்வழியைக் கூறி முருகன் திருப்புகழைக் கற்றவரே
140

சித்தருக்கும் மேலான சித்தரெனப்படுகிறது இந்த வகுப்பு ஆரிய உபதேச மந்திரம் இவ்வகுப்பில் இருப்பதால் வேலும் மயிலும் என்ற வாழ்த்துடன் ஆரம்பமாகின்றது. பலவகை மூலிகைகள் இவ்வகுப்பில் குறிப்பிடப்படுகின்றன.
பதினேழாவதாகிய கடைக்கணியல் வகுப்பு முருகக் கடவுளின் கடைக்கண் நோக்கின் பெருமையை விளக்குவது. முருகவேளின் மயில், திருக்கை வேல், கடைக்கண் பெருமை ஆக இம்மூன்றையும் தியானஞ் செய்வதால் இன்ன இன்ன பேறுகள் கிடைக்கும் என்பதை இவ்வகுப்பில் விளக்குகின்றார். பதினெட்டாவதாகிய சிவலோக வகுப்பு மெளன யோகநிலையில் வரும் பேரின்ப அன்பெனப்படுஞ் சிவலோகம் தருவதான சிறப்புக்களை எடுத்துக் கூறிற்று. இவ் வகுப்பு அன்பின் சிறப்பை விளக்குகின்றது. பத்தொன்பதாம் வகுப்பு மயில்வகுப்பு ஆகும். இது மயிலின் ஆற்றலைக் கூறுகின்றது.
இருபதாம் வகுப்பாகிய கொலுவகுப்பு முருகன் கொலு வீற்றிருக்கும் திரு ஒலக்கக் காட்சியைக் கூறுவது. முருகன் கொலு வீற்றிருந்த காட்சியில் 33-47, 42,43 தேவியர் பற்றியும் அடியவர்கள் பற்றியும் வர்ணிக்கப்படுகின்றது. இருபத்தோராம் வகுப்பாகிய வீரவாள் வகுப்பு வீரவாகு தேவரின் வாட் காட்சியின் சக்தியைக் கூறுவது ஆகும். இருபத்திரண்டாம் வகுப்பு சிவகிரி வகுப்பும் 23 ஆவதாக திருப்பரங்கிரி வகுப்புமாக அமைகின்றன.
சிலசுவடிகளில் 25 வகுப்புக்களுக்கு மேல் 32 வகுப்புக்கள் வரை உள்ளன. ஆனால் ஆராய்ச்சி அறிஞர்கள் அருணகிரிநாதர் பாடியவை சீர்பாத வகுப்பு முதல் சிவலோக வகுப்பு முடிய உள்ள 18 வகுப்புக்களே என்பர் 22, 23, 24, 25 எண்ணுள்ள திருவகுப்புக்கள் தலங்களைப்பற்றியனவாய் அமைவன. முருகேசனே என இவை முடிகின்றன. இதுவே அருணகிரிநாதர் வாக்கில்லை என்பதற்கு இடம் தருகின்றது என்பது ஆய்வாளர் கருத்தாகும். இதன் கண் பெரும்பாலான வகுப்புக்களில் திருத்தணிகை இடம் பெற்றுள்ளதால் அருணகிரிநாதர் தாம் கிளியாக மாறிய பின்னர் திருத்தணிகை வந்து திருமுருகன் திருக்கரத்தில் அமர்ந்து இவ்வகுப்புக்களைப் பாடியிருப்பார் என ஒரு சில ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். "ஏழையினி ரட்டை வினையாய தொரு டற்சிறையிராமல் விடுவித்தருள் நியாயக் காரனும்”
என வேளைக்காரன் வகுப்பிற்கூறிய திருவாக்கால் சுவாமிகள் மானுட தேகம் தீர்த்துக் கிளி ரூபம் பெற்ற பிறகு திருவகுப்புப் பாடல்களைப் பாடியிருத்தல் வேண்டும் எனத் தோன்றுகின்றது. இதனுண்மை திருப்புகழின் முக்கிய கருத்தாக உள்ள பெண்ணாசை யறுத்தலைப் பற்றி இத்திருவகுப்பில் எங்கும் கூறியில்லாமையானும், யமபயம் நீக்கிக் காத்தருள வேண்டும் எனத் திருப்புகழிற் பல இடத்தும் வேண்டினவாறு வேண்டாமல் வகுப்பிற் பெரும்பான்மை முருகன் பெருமையே கூறி உலகத் தாருக்கு உபதேசங்களையே எடுத்தோதும் உயர்நிலைப் பாடல்
இந்துக் கலைக்களஞ்சியம்

Page 171
களாயமைந்துள்ள காரணத்தாலும் நன்கு பெறப்படும். மேலும் வேடிச்சி காவலன் வகுப்பில்,
"உரைபெற வகுத்தருணை நகரினொரு பக்தனிடும் ஒளிவளர் திருப்புகழ் மதானிக் ரூபாகரனும்”
என்பதில் தம்மைப் படர்க்கையிடத்திற் குறித்ததும், தாம் மானுடப்பிறவியில் ஒதிய திருப்புகழைச் சுட்டியுள்ளதும் கவனிக்கற்பாலன.
இத்திருவகுப்பு நூலில் சைவசித்தாந்தக் கருத்துக்களையும், இசை, தாளம், பற்றிய தகவல்களையும் கொண்டுள்ளன. பேச்சு அற்று புலன்கள் செயல் ஒழிய எண்ணங்களுக்கு இருப்பிடமான உள்ளமும் ஒடுங்கி அதன் செயல் நீங்க, உயிரின் ஆணவ நிலையையும் ஒடுங்கி நீங்க, என்றும் அழியாது உள்ளதாக ஒரு தன்மையை நிலையை உணருமவர் - அறிகின்ற பெரியோர்களின் அனுபவ ஞானமாய் விளங்கி நிற்பதும் சிவஞானிகள் அனுபவிக்கும் ஆனந்த அரும்பொருளே முருகனின் சீரடி எனப் போற்றப்படுகின்றது.
"உரையவிழ வுணர்வவிழ வுளமவிழ வுயிரவிழ
வுள படியை யுணருமலரநுபூதியானதுவும்”
எனப் போற்றப்படுகின்றது.
"அமலனும் எனக்கரசும் அதிகுணனும் நிர்க்குணனும்
அகிலபுவனத்தமர சேனைக்கு நாயகனும்
அநுபவனும் அற்புதனும் அநுகுணனும் அக்ஷரனும்”
அருமனம் ஒழிக்கும் அநுபூதிச் சுகோதயனும் மலம் அற்றவனும் மேலான குணம் உள்ளவனும், குணம் அற்றவனும், சகல உலகங்களுக்கும் தலைவனும், தேவசேனைகளுக்கு தலைவனும் முருகன் என வர்ணிக்கப்படுகின்றான். சகல நுகர்ச்சிகளுக்கும், மூலகாரணனாய் இருப்பவனும் பிரணவ மூர்த்தியும் மனோலயம் தரவல் அநுபவல்ல ஞான சுகத்திற் கிடைப்பவன் என வேடிச்சி காவலன் வகுப்பில் கூறியுள்ளனர்.
"இணையிலி நிர்பயனும் மலமிலியும் நிஷ்களனும் இளையவனும் விப்ரகுல யாகச் சபாபதியும்”
தனக்கு நிகரில்லாதவனும் பயம் இல்லாதவனும் ஆணவம், கன்மம், மாயை எனப்படும் மும்மலங்கள் இல்லாதவனும், உருவம் இல்லாதவனும், வேதியர் செய்யும் யாகங்களுக்கு சபாநாயகனு மானவன் என வேடிச்சி காவலன் வகுப்பில் கூறப்பட்டுள்ளது.
"இருவினை கெட ஒரு நிரமய பரமவுனந்தரும் இன்பங் தேக்கிய அன்பின் சிவலோகமே”
(சிவலோக வகுப்பு)
இந்துக்கலைக்களஞ்சியம்

இவ்வாறு பல செய்திகள் காணப்படுகின்றன. பூத வேதாள வகுப்பில் இசைபற்றிய செய்திகள் காணப்படுகின்றன.
மேலும் தமிழின் சிறப்பு, தலங்களின் பெருமை, பல்வேறு அணிகலன்கள் மந்திரங்கள், பல்வேறு உயிரினங்கள் முதலியனவும் இந்நூலில் விளக்கப் பெற்றுள்ளன. திருமால், கிருட்டிணன், பிரமன், இந்திரன் முதலியோர் குறிப்புக்களும் இடம் பெற்றுள்ளன. நூல் முழுவதும் முருகன் புகழையும் அவனது மயிலையும் அவனது திருக்கரத்தில் உள்ள வேலாயுதத்தையும் அவரது கடைக்கண் இயலையும் கருணை, பெருமை ஆகிய தன்மைகளையும் கூறும் வகையில் அமைந்து முருகன் புகழ் மணக்க வைக்கிறது. இது அடியவர்கள் பாராயணம் செய்வதற்கான நூலாகும். (தே.ஹ.)
திருவட்டாறு
வைணவ திவ்விய தேசங்கள் 108 ஆகும். அவற்றுள் திருவட்டாறும் ஒன்றாகும். நாகர்கோவிலிருந்து திருவனந்தபுரம்
செல்லும் வழியில் தொடுவட்டி என்னுமிடத்திலிருந்து வடக்குத்திசையில் 9% கி.மீற்றரில் இத்தலம் அமைந்துள்ளது.
மகாவிஷ்ணுவின் தரிசனத்தைப் பெறவிரும்பிய நான்முகன் ஒரு மாபெரும் வேள்வியைப் புரிந்தார். ஆகமங்களில் விதிக்கப்பட்ட விதிமுறைகளை அந்த யாகத்தை செய்தபோது கடைப்பிடிக்கத் தவறினார். இதன் விளைவாக யாக குண்டத்திலிருந்து கேசன் என்ற அரக்கனும் அவனது சகோதரியான கேசியும் தோன்றினர். பசிப்பிணியால் அவதிப்பட்ட அவ்விருவரையும் உலகின் எல்லாப் பகுதிகளுக்கும் சுதந்திரமாகச் சென்று உணவு தேடிக் கொள்ளுமாறு பிரம்ம தேவன் கூறினார். மேலும் அவர்களுக்குச் சாகா வரத்தையும் அளித்தார். பெற்ற வரத்தால் செருக்குற்று உலகோர்க்குத் தொல்லைகள் பல அளித்து வந்த அந்த அரக்கர்களை ஒடுக்க மகாவிஷ்ணு ஆதிசேஷனுடன் பூவுலகிற்கு வந்தார். திருமாலுடன் நடந்த மற்போரில் கேசன் தோல்வியுற்றான். கேசனைக் கீழே தள்ளி அவன் மீது ஆதிசேஷன் தனது பாயை விரிக்க அப்பாயின் மேல் திருமால் பள்ளி கொண்டார். திருமால் தன்னுடைய இடத்தை விட்டு நகர்ந்தால், சாகாவரம் பெற்றுள்ள கேசன் தப்பிச் சென்று உலகோர்க்குத் துன்பம் அளிப்பான் என்று நம்பப்படுகின்றது. தன் சகோதரனின் தோல்விக்குப் பழிவாங்க எண்ணிய கேசியின் தூண்டுதலால் தாமிரபரணியாறு பிரளயமாகப் பெருகியது. திருமாலின் கட்டளையின் பேரில் பூமாதேவி அந்த இடத்தை மேட்டுப் பகுதியாக்கினாள். தாமிர பரணியும் திருமாலை வணங்கி மாலை சமர்ப்பித்தது போல இரண்டாகப் பிரிந்து வட்டமாகச் சென்றது. இதனால் இத்தலம் திருவட்டாறு எனப்பட்டது.
இங்குள்ள பெருமாள் ஆதிகேசவப் பெருமாள், தாயார் மரகதவல்லி நாச்சியார். மேற்கிலுள்ள திரிப்படதலுக்கடவு என
141

Page 172
அழைக்கப்படும் இராமப்புனல் மிகவும் புனிதமான தீர்த்தமாகும். அதில் நீராடினால் பிரம்மஹத்தி போன்ற கொடிய தோஷங்களும் நீங்கும். வைணவ ஆலயங்களில் மூலவர் மேற்கு நோக்கி எழுந்தருளியிருப்பது அபூர்வமான அம்சமாகும். இத்தகைய அபூர்வமான அமைப்பு இங்குள்ளது. திருவட்டாறு ஆலயம் மேற்கு நோக்கியவாறு அமைந்துள்ள போதிலும் கிழக்குப்புற வாயில் வழியாகவே பக்தர்கள் நுழைகின்றனர்.
இவ்வாலயத்தில் பலிபீட மண்டபத் தூண்களில் லக்ஷ்மணன், இந்திரஜித், வேணு கோபாலன், சக்தி, நடராஜன் ஆகியோரின் முழு உருவங்கள் இடம் பெற்றுள்ளன. இசைக்கருவிகளை ஏந்திய கோலத்தில் பிரம்மா, விஷ்ணு, கரும்பு வில்லேந்திய மன்மதன், அன்னப்பறவை மீதமர்ந்த ரதிதேவி ஆகிய உருவங்களும் பெரு வனப்புடன் தோற்றமளிக்கின்றன. பூரீகோயிலுக்கு முன்புள்ள உதய மார்த்தாண்ட மண்டபம் கேரளக் கட்டிடக் கலைக்கு ஒரு எடுத்துக்காட்டு, விநாயகரின் திருமண ஊர்வலக்காட்சி மரத்தில் மிகவும் அற்புதமாகச் செதுக்கப் பட்டுள்ளது. திருவட்டாறு பற்றிய குறிப்பு பத்மபுராணத்தில் இடம் பெற்றுள்ளது. மாங்குடிகிழார் பாடிய புற நானூற்றுப் பாடல் (எண் 396) ‘வளநீர் வட்டாறு” என்று இயம்புகின்றது. இந்நகரைத் தலைநகராகக் கொண்டு வேளிர் குலமன்னன் எழினியாதன் அரசாண்டான். திருவனந்தபுரத்திற்கு முன்பே இப்பதி தோன்றியதால் இது ஆதி ஆனந்தம் எனப்படுகிறது. திருவனந்தபுரம் அனந்தபத்மநாபர் கோயில் அமைப்பைப் பின்பற்றியே கட்டப்பட்டுள்ளது. இங்குள்ள விமானம் அஷ்டாக்ஷர விமானமாகும். இங்கு மேற்கு நோக்கித் திருமுகச் சேவை சாதிக்கும் பெருமாள் கிடந்த திருக்கோலம் கொண்டுள்ளார். இவர் பரசுராமருக்கும் சந்திரனுக்கும் திருக்கோலம் காட்டியவர் என்பது புராணவரலாறு.
நம்மாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட திருக்கோயில் இது "அருள் பெறுவார் அடியார்” என்னும் ஆறாம் திருவாய் மொழிப்பாசுரத்தில் கடுநரகம்புகலொழித்த வட்டாற்றெம் பெருமான்' என்பார் நம்மாழ்வார். நம்மாழ்வாரின் திருவாய் மொழியிலுள்ள பதினொரு பாசுரங்கள் இத்தலத்தின் சிறப்பையும், இயற்கை எழிலையும் படம்பிடித்துக் காட்டுகின்றன. பதினாறாம் நூற்றாண்டில் வாழ்ந்த கிருஷ்ண சைதன்யர் இங்கு வந்து வழிபட்டார். இதன் அமைதியான சூழலில் மனதைப் பறிகொடுத்த அம்மகான் பிரம்ம சம்ஹிதை எனும் தத்துவநூலை எழுதினார். நூற்றெட்டுத் திருப்பதி அந்தாதி பாடிய திவ்வியகவி பிள்ளைப் பெருமாள் இப்பதியைத் துதித்துப்பாடினார்.
இப்பதியில் கி.பி. 11-18ஆம் நூற்றாண்டுவரை அரசாண்ட மன்னர்களின் கல்வெட்டுக்கள் இக் கோயிலில் கண்டெடுக்கப் பட்டுள்ளன. பலிக்கல் மண்டபத்திலுள்ள முதலாம் இராஜேந்திர சோழனின் (1013 - 45) கல்வெட்டு “திருவட்டாறு பள்ளி கொண்டருளிய பெருமாள்” என்று பகர்கின்றது. கி.பி 174 ஆம்
142

ஆண்டு பூரீ உதயமார்த்தாண்ட மன்னனின் திருப்பணிகள் பற்றித் தெரிவிக்கின்றது. கி.பி 1604 ஐச் சார்ந்த இரு கல்வெட்டுக்கள் மூலம் வீரரவிவர்மன் கோயிலைச் சீரமைத்து ஒற்றைக்கல் மண்டபம் கட்டிய செய்தியை அறியக் கூடியதாகவுள்ளது. தமிழக தொல்பொருள் இலாகாவினர் வெளியிட்டுள்ள கன்னியாகுமரி கல்வெட்டுக்கள் என்ற நூலின் நான்காம் தொகுதியில் இக்கோயிலிற் படியெடுக்கப்பட்ட 37 கல்வெட்டுக்கள் பற்றிய விவரங்கள் உள்ளன. அவற்றில் பெருமளவு சிதைந்துள்ளன. இக்கல்வெட்டுக்கள் இக் கோவிலுக்குத் திருப்பணிகள் புரிந்தவர்கள் பற்றியே எடுத்தியம்புவனவாக உள்ளன.(தே.ஹ)
திருவடி பூசை
வழிபாட்டு முறைகளிலே திருவடிப்பூசையும் ஒன்றாகும். திருவடிவழிபாடு இறைவனுக்கு மட்டுமன்றி இறையன்பர், குரு முதலியோருக்கும் நடைபெறுமாயினும் இறைவனுக்குரியதாகவே பெரிதும் போற்றப்படும். இறைவழிபாட்டிலே திருவடிவழிபாடு லிங்க வழிபாடு போல அருவுருவ வழிபாடாகவும் விளங்குகின்றது
எனலாம்.
பார்க்குமிடந்தோறும் நீக்கமற விளங்கும் பரம் பொருளை அருவமாகவும், அருவுருவமாகவும் வழிபடும் முறைகளில் ஒன்றோ, இரண்டோ, மூன்றோ உலகிலுள்ள மதங்கள் அனைத்திலும் காணப்படுகின்றது. இந்து சமயத்தில் இம்மூன்றும் இடம் பெற்றுள்ளன. இறைவனை உருவவடிவிலே பல்வேறு திருவடிவங்களிலே அருளாளர் பாவனை செய்து வழிபட்டு வந்துள்ளனர். இத் திருவடிவங்களிலே மற்றவர்களும் தம் விருப்பத்திற்கேற்ப இறைவனின் திருவடிவத்தை அல்லது திருவடிவங்களை வழிபட்டு ஆன்ம ஈடேற்றம் பெற வழிகாட்டியுள்ளனர்.
திருவடி வழிபாடு மிக நீண்ட காலமாக நிலவி வந்துள்ளது. இறைவன் திருவுருவம் எதுவாயினும் அவரின் திருவடிச் சிறப்பினை பல்வேறு காலங்களிலும் வாழ்ந்த அருளாளர்களும், ஞானிகளும் குறிப்பிட்டுள்ளனர். திருவடியே இறைவன் என்ற கருத்தும் அழுத்திக் கூறப்பட்டுள்ளது.
காலத்தால் முந்திய சங்கநூல்களில் ஒன்றான ஐங்குறு நூற்றின் கடவுள் வாழ்த்துச் செய்யுளிலே உமைபாகனாகிய சிவ பிரானின் இரண்டு திருத்தாள்களிலிருந்தே மூவுலகங்கள் உருவாகின என்ற கருத்துப்பட
'நீலமேனி வாலிழை பாகத் தொருவன் இரு தாள் நிழற் கீழ் மூவகை யுலகும் முகிழ்த்தன முறையே’
என கூறப்பட்டுள்ளமை கவனித்தற்பாலது.
இந்துக் கலைக்களஞ்சியம்

Page 173
திருமாலிலும் பார்க்க அவனின் திருவடிகளே மிகச் சிறந்தவை எனக் கூறப்பட்டுள்ளது. இதற்கு விளக்கமளித்த ஒர் அறிஞர் “வீடளிக்குங்கால் நின்னினுஞ் சிறந்த நின் தாளிணையை உடையை’ என்பார். ஏனெனில் தெய்வம் செய்யும் எல்லாச் செயல்களையும் அந்த இரண்டு பாதங்களுமே செய்யவல்லனவாயுள்ளன. மேலும் “திருவடி” என்னும் சொல்லே
இறைவனைக்குறிக்கும் ஒர் அருஞ்சொல் என்பது,
"செங்காட்டங்குடிமேய திருவடி தன் திருவருளே பெறலாமோ திறந்தவர்க்கே”
எனத் திருஞானசம்பந்தரின் திருவாக்காலும்,
G6
திருவடியே சிவமாவது தேரில்” எனத் திருமூலரின் திருமந்திரத்தாலும் நன்கு புலப்படுகின்றது.
மனிதனின் உடலமைப்பினை நோக்கும் போது கால்களே அவனின் உடற்சுமை அனைத்தையும் தாங்கிக் கொண்டு நிற்கின்றன. நிற்பதோடன்றி தாங்கிக் கொண்டு நடக்கவும் ஒடுதற்கும் இன்றியமையாதனவாக இயங்குகின்றன. எனவே விராட் புருஷனாக விஷ்வரூபம் (பிரபஞ்சம் அனைத்தையும் உள்ளடக்கிய திருவடிவம்) எடுக்கும் இறைவனின் திருவடிகளே அண்ட பிண்டசராசரங்களாகிய அனைத்தையும் தாங்கி நடத்தும் ஆதார நிலையமாக இருக்கிறபடியால் தான் அவரின் திருவடிகளுக்கு ஒப்பற்ற சிறப்பு உள்ளதென ஞானிகள் கூறுவர்.
இறைவனை ஆணாகவோ, பெண்ணாகவோ பாவனை செய்து வழிபடும் போது அவரின் திருவடிகளே அன்பர்களால் நாடிச் சிறப்பாக வழிபடப்படுவன. எனவேதான் போலும் அத்திருவடிகளிலீடுபடுவோர் அடியார் என அழைக்கப் படுகின்றனர். அத்திருவடிகளிலிருந்து தோன்றிய ஆன்மாக்கள் அவற்றிலிடுபட்டு முடிவிலே அத்திருவடிகளை அடைகின்றன. எனவே இறந்தவர்கள் (இறைவனின்) திருவடிப்பேறு பெறுகின்றனர் எனக் கூறுவது சைவசமய மரபாகும்.
சிவபிரானின் ஐந்து தொழில்களையும் ஒருங்கே சுட்டும் நடராஜத் திருவுருவத்தில் ஊன்றிய வலது திருவடி மறைத்தலையும், தூக்கிய திருவடி முக்தியின்பத்தையும் அளிப்பன எனக் கூறப்படுவது இங்கு உற்று நோக்கற்பாலது. முயலகனாகிய மலங்களை, குறிப்பாக ஆணவத்தை அடக்கி மலபரிபாகம் செய்து முத்தியின்பத்தை இத்திருவடிகள் அளிக்கின்றன. இவ்வாறே சிவசக்தியாகிய அம்பாளின் இரு திருவடிகளும் தனிச்சிறப்பு வாய்ந்தவை. பொதுவாக மற்றத் தெய்வங்கள் அபய (பாதுகாப்பு) வரத (வரங்களைத் தரும்) திருக்கரங்களாலே செய்வன யாவற்றையும் அவரின் திருவடிகளே செய்கின்றன, எனும் கருத்துப்பட சங்கராச்சாரியர் செளந்தர்ய லஹரியிலே தேவியின் திருப்பாதங்களைப் பக்தியோடு போற்றுகிறார்.
இந்துக் கலைக்களஞ்சியம்

வைஷ்ணவ மரபிலும் திருவடி முக்கியமான இடம் வகிக்கின்றது. வைஷ்ணவ பக்திப் பாடல்களிலும் பிறவற்றிலும் இது பற்றிய குறிப்புகள் உள்ளன.
"புகழொன்றில்லா அடியான் உன் அடிக்கீழ் அமர்ந்து புகுந்தேனே'
எனத் திருவாய் மொழியிலே கூறப்பட்டுள்ளது. “திருமாலின் திருவடிகள் அவரையும் பிராட்டியாரையும் (அவரின் சக்தியாகிய திருமகள்) விடச்சிறந்தவை” என்பதும் “பிராட்டியும் அவனும் திருவடிகள் விடாது, திண்கழலாயிருக்கும்” என்பதும் வைஷ்ணவ சமய மரபிலே வலியுறுத்தப்படும். வேதாந்த தேசிகர் தாம் எழுதிய பாதுகா சகஸ்ரம் எனும் நூலிலே, “இராமரைக் காட்டிலும் பாதுகையே சிறந்தது” எனக் குறிப்பிட்டுள்ளார். இது இராமாயணத்தைப் பின்பற்றிக் கூறப்பட்டுள்ளது. ( அதாவது விஸ்வாமித்திரருடன் ராமனும் லக்ஷமணனும் காட்டிற்குச் சென்ற போது, வழியிலே கணவனால் கல்லாகச் சபிக்கப்பட்டுக் கிடந்த அகல்யா இராமனின் திருவடிபட்ட மாத்திரத்தே சாபவிமோசனம் பெற்று தூய்மையானவளாகப் பழைய நிலையை மீண்டும் பெற்றாள் எனக் கூறப்பட்டுள்ளது. மேலும் தன்னுடைய மூத்த சகோதரனாகிய இராமன் தந்தையின் வாக்குறுதியை நிறைவேற்றுதல் பொருட்டு குறிப்பிட்ட காலம் ( 16 வருடங்கள்) காட்டிலே வாழ்ந்து அரச பதவியை ஏற்க மறுத்ததனாலே இராமனின் பாதுகைகளைக் கொண்டு சென்று அவற்றைச் சிம்மாசனத்திலே வைத்து அவற்றுக்குப் பூசை செய்து பரதன் தமையனின் பெயரில் ஆட்சி செய்தான். இங்கு பாதங்களைப் போல பாதங்களில் அணியப்படும் பாதுகைகளும் முக்கியத்துவம் பெறுவதைக் காணலாம். அவ்வாறே பாதம், பாதுகை ஆகிய இரண்டும் குறிப்பிட்ட ஆளைக் குறிக்கின்றன.
வைஷ்ணவ மரபிலே திருவடியே பாதுகையாகும். பாதுகை, சடாரி, ஆழ்வார் ஆகியன ஒரே கருத்துடையன. பெருமாளுடைய பாதுகையும் ஆழ்வாருடைய திருநாமமும் ஒன்றே; அதுவே சடாரி. இதனைக் கோயில் அர்ச்சகர்கள் பக்தரின் தலையிலே வைக்கும் போது அதன் மூலமாகப் பெருமாள் திருவடித் தொடர்பு பக்தருக்கு ஏற்படுகின்றது. இது பற்றி மேலும் கூறப்படும்.
சைவ உலகிலே முதன்மை வாய்ந்த சிதம்பரம், திருச்செந்தூர், பழநி முதலிய இடங்களிலே பள்ளியறையிலிருந்து திருவடியே எழுந்தருளிவிக்கப்படுகின்றது. பள்ளியறையிலிருந்து மூலஸ்தானத்துக்குத் திருவடி எழுந்தருளி வந்த பின்னரே இவ்வாலயங்களில் நாள் பூசை முதலியன தொடங்கப்படும். நாள் முடிவிலும் அர்த்த சாமப் பூசை திருவடி பள்ளியறைக்கு வந்த பின்னரே நடநது முடிவடையும். மறைஞானசம்பந்தர் சமாதி விளங்குமிடத்திலும் திருவடிக்கே எல்லா வகையான பூசைகளும் நடைபெறுகின்றன. சைவ ஆகமங்களிலே திருவடி வணக்கச்
43

Page 174
சிறப்பு திருக்கோயில்களிலே நடைபெறும் கிரியைகளால் நன்கு
புலப்படும்.
வைஷ்ணவ ஆலயங்களில் மூலஸ்தானத்திலே ( கருப்பக் கிருகத்திலே) உத்சவ மூர்த்தியின் திருவடியின் கீழ் "சடகோபம்’ என்றழைக்கப்படும் கிரீடம் வைக்கப்படிருக்கும். இச்சட கோபத்தில் இரு அடிச்சுவடுகள் பொருத்தப் பெற்றிருக்கும். இவை மூல மூர்த்தியின் அடிச்சுவடுகளாகவே கொள்ளப்படும். இந்தச் சடகோபத்துக்கே முதற் பூசை நிகழும். இப்பூசை முடிந்த பின்னரே ஏனைய திருமேனிகளுக்குப் பூசை நடைபெறும். சரணாகதி தத்துவத்தில் நம்பிக்கையுள்ள வைரிகளான வைஷ்ணவர்கள் திருமாலின் திருப்பாத கமலங்களை அடைவதையே குறிக்கோளாகக் கொண்டவர்கள். திருப்பாற் கடலிற் பள்ளி கொள்ளும் பகவானுக்குப் பாத சேவை செய்வதே திருமகளின் பெரும் பேறாக உள்ளது. இதனாலேதான் வைணவ ஆலயங்களில் அங்குள்ள திருமேனிகளையும் விடச் சடகோபத்துக்கு முதன்மை அளிக்கப்படுகின்றது. பூசை முடிந்தபின் சட கோபத்தைப் பக்தர்களின் தலைமீது வைத்து
ஆசீர்வாதம் வழங்கப்படும்.
சைவ, வைஷ்ணவ ஆலயங்களில் திருவடிக்கென்று மூலஸ்தானத்தை விடத் தனியான சந்நிதிகளும் உள்ளன. வட இந்தியப் புனித தலங்களிலொன்றான கயை என்னும் திருத் தலத்திலுள்ள திருமாலின் திருப்பாதம் மிகப் பெரியதாகும். சிவனொளிபாத மலையிலுள்ள திருப்பாதம் இந்துக்கள், பெளத்தர், கிறிஸ்தவர், இஸ்லாமியர் ஆகிய பல சமயத்தவர்களாலும் பக்தியுடன் வழிபடப்படுவதாகும். ஆதிசங்கரர் பாரத தேசத்தின் பல இடங்களிலும் நிறுவிய மடங்களிலே திருவடிக்கே அபிஷேகம், பூசை செய்யப்படுகின்றன.
சைவசித்தாந்தத்திலும் ஏற்கனவே குறிப்பிட்டவாறு சிவபிரானின் திருவடியை அடைதலே ஆன்மாவின் முடிவான குறிக்கோளாகும். இரு பொருள் வேறற ஒன்று போல் நிற்கும். சைவசித்தாந்த சுத்தாத்துவித சுகம் “தாடலை” என்பதால் நன்கு விளக்கப்படும். சைவசித்தாந்தத்தின்படி இறைவன் திருவடித் தலைமேல் வைக்கும் திருவடித் தீக்கையே (தீகூைடியே) சிவஞானப் பேற்றின் உயர்ந்த பேறாகக் கொள்ளப்படும். மாணிக்கவாசக சுவாமிகள் இத்தகைய தீக்கையைக் குருவிடமிருந்து பெற்றுக் கொண்டார். சந்தான குரவர்களின் சமாதிகளிலே அவர்களின்
திருவடி வைத்துப் போற்றப்படுவதும் உற்றுநோக்கற்பாலது.
யாழ்ப்பாணத்திலேயுள்ள கொழும்புத்துறைக் கொட்டிலிலே சிவயோக சுவாமிகள் குடி புகுந்த சில நாட்களில் அவரின் ஆசீர்வாதம், ஆணை பெற்றுத் திருவடிப் பிரதிஷ்டை செய்து அவரின் அன்பர்கள் வழிபாடு செய்து வந்தனர். ஆண்டு தோறும்
144

பங்குனி மாதத்து இரண்டாவது திங்கட்கிழமை திருவடிப் பூசைத் தினமாகக் கொண்டாடப்பட்டு வந்தது. யாழ்ப்பாணத்து வண்ணார் பண்ணையில் சிவதொண்டன் நிலையம் நிறுவப்பட்டபோது அங்கே தியான மண்டபத்திலே திருவடிப் பிரதிஷ்டை செய்யப்பட்டது. சுவாமிகள் மகாசமாதியடைந்த ஆண்டிலே கால் கோள்விழாக் கொண்ட செங்கலடி சிவதொண்டன் நிலையத்தில் திருவடியே பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கிறது. ஆருத்திரா அபிசேகம், சிவராத்திரி, திருவடி பூசைத் தினம், கால் கோள் விழா தினம் என்னும் தினங்களிலே நடத்தப்படும் விழாக்களின் போது தியான மண்டபத்தினின்றும் புராண மண்டபத்திற்கு எழுந்தருளப்படும் திருவடிக்கே திவ்விய அபிஷேக ஆராதனைகள் நிகழ்த்தப்படுகின்றன.
சமண பெளத்த மரபுகளிலே திருவடி வணக்கத்திற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.புத்த சமயத்திலே சிலை வணக்கம் ஏற்படு முன் அரசமரம், ஸ்தூபி, திருவடி முதலியன வழிபடப்பட்டன. புத்தபிரானுக்குச் சிலைகள் அமைக்கப்பட்ட பின்னரும் திருவடி வழிபாடு தொடர்ந்து இடம் பெற்று வந்துள்ளது. இங்கு திருவடி புத்த பிரானின் திருவடியாகவே பாவனை செய்யப்படும். ஏற்கனவே குறிப்பிட்டவாறு சிவனொளிபாத மலையினுள்ள திருவடி பல மதங்களுக்கும் பொதுவாகக் கொள்ளப்படுகின்றது. சைவர்கள் இதனைச் சிவபிரானின் திருவடியெனவும், வைஷ்ணவர்கள் திருமாலின தெனவும், பெளத்தர்கள் புத்தபெருமானுடையதெனவும், கிறிஸ்தவர்களும், இஸ்லாமியரும் தத்தம் சமயம் கூறும் மனித மூதாதையான ஆதாமுடைய திருவடி எனவும் கொள்கின்றனர். ஆங்கிலத்தில் இத்திருவடியுள்ள மலை ஆதாமின் மலை (Adam's Peak) என அழைக்கப்படுவதும் குறிப்பிடற்பாலது.
திருவடியின் தனிச்சிறப்பினை மாணிக்கவாசகர் தமது திருவெம்பாவையின் இறுதிச் செய்யுளிலே,
போற்றி யருளுக நின் ஆதியாம் பாத மலர் போற்றி யருளுக நின் அந்தமாஞ் செந்தளிர்கள் போற்றி யெல்லாவுயிர்க்கும் தோற்றமாம் பொற் பாதம் போற்றி யெல்லாவுயிர்க்கும் போகமாம் பூங்கழல்கள் போற்றி யெல்லாவுயிர்க்கும் ஈறாம் இணையடிகள் போற்றி மால் நான்முகனுங் காணாத புண்டரிகம் போற்றியாம் உய்ய ஆட்கொண்டருளும் பொன்மலர்கள்
போற்றியாம் மார்கழி நீராடேலோர் எம்பாவாய்
என எடுத்துக் கூறியுள்ளார். இத்தகைய சிறப்பு வாய்ந்த திருவடிகளை ( புதிதாக மலர்ந்த - அன்றலர்ந்த) அழகிய செந்தாமரை மலர்களுக்கு ஒப்பிட்டுள்ளமையும் கவனித்தற்பாலது.
(வி.சி.)
இந்துக் கலைக்களஞ்சியம்

Page 175
O ●
திருவந்திபுரம்
திருமால் தானாகவே எழுந்தருளியுள்ள (சைத்தம்) தலங்களும் திருவகீந்த புரமும் ஒன்று. இங்கு மகாவிஷ்ணு திருவகீந்த நாதனாக அவதரித்து வழிபட்டதாக தலவரலாறு விளம்பும். இன்று திருவந்திபுரம் என வழங்கப்படும் இத்தலம் தென்னார்க்காடு மாவட்டத்தின் தலைமையிடமான கடலூரிலிருந்து 5 கி. மீ. தொலைவில் அமைந்துள்ளது. இத்தலத்தின் பெருமை பிரமாண்ட புராணத்தில் ஐந்து அத்தியாயங்களிலும், காந்த புராணத்தில் நான்கு அத்தியாயங்களிலும், பிரகத்நாதீய புராணத்தில் ஐந்து அத்தியாயங்களிலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இத்தலத்தில் தபோராகி என்ற முனிவர் வெகுகாலம் தங்கி நாராயண மூர்த்தியை ஆராதித்து வந்தார். தவமகிமைகளை அம்முனிவரிடம் கேட்டறிந்த பிருகுமுனிவர், இங்கு தவம் புரிந்துவந்தார். அருகிலுள்ள தெளிநீர்ப் பொய்கையின் நடுவே உள்ள அழகிய தாமரை மலரின் நடுவில் மகாலசுஷ்மி ஒளிவிடும் குழந்தை வடிவில் அவதரித்தாள். பிருகு முனிவர் அக்குழந்தையை வாஞ்சையுடன் வளர்த்து வந்தார். பார்கவி என அழைக்கப்பட்ட அம்மங்கை கல்வி, கேள்விகளில் சாலவும் சிறந்து விளங்கினாள். உரிய பருவம் அடைந்தவுடன் திருமாலை மணந்து கொள்ளும் நோக்கத்துடன் தவம்புரிந்தாள். திருமால் அவளது கோரிக்கையை ஏற்றுக் கொண்டார்.
மகாலசுஷ்மி தனது வாசஸ்தலமான திருமாலின் திருமார்பில் இடம் பெற்றாள். தனது மகளாக வளர்ந்த திருமகளைப் பார்த்தவாறே திருமாலின் இடப்புறத்தில் அமரும் பாக்கியம் பிருகுமுனிவருக்குக் கிடைத்தது.
இத்தலத்திலுள்ள இரு தீர்த்தங்கள் பலவகைப்பட்ட பாவங்களையும் நீக்க வல்லன என்று தல மகான்மியம்
போற்றுகின்றது.
முதலாவது கருடதீர்த்தமாகும். பாதாள லோகத்திலுள்ள ஸ"க்ரீவன் என்பானுக்குச் சொந்தமான நந்தவனத்தில் தவமியற்றி வந்த ஒரு முனிவர் தமது தபோ பலத்தால் விரஜை என்னும் தீர்த்தத்தை உண்டு பண்ணியிருந்தார். வானுலகிலுள்ள கங்கை போலவே மேன்மையான அந்த ஆற்று நீரைக் கொண்டு வருமாறு கருடாழ்வார் அனுப்பப்பட்டிருந்தார். முனிவரின் கமண்டலத்திலிருந்த அத்தீர்த்தத்தைக் கருடாழ்வார், ரிஷி தவத்தில் ஈடுபட்டிருந்த பொழுது எடுத்து வந்தார். பாதிவழி சென்றதும் முனிவருக்கு விஷயம் தெரிந்து சினமுற்றார். நீர் கலங்கலாக மாறுமாறு சபித்தார். கருடாழ்வார் திரும்பிச் சென்று மகாவிஷ்ணுவின் கட்டளையைத் தெரிவித்தார். மகரிஷியும் சமாதானமடைந்து தீர்த்தத்தை பூரீமன் நாராயணனிடம் சமர்ப்பிக்குமாறு வேண்டினார்.
இந்துக்கலைக்களஞ்சியம்

காலதாமதம் ஆகிவிட்டதால் ஆதி சேடனிடம் தீர்த்தம் ஒன்றை உண்டாக்குமாறு திருமால் கட்டளையிட்டார். சேடன் தனது வாலால் பிளவையுண்டாக்கி சேவு தீர்த்தத்தை உண்டாக்கினார். கமண்டலத்தில் விரஜா தீர்த்தத்துடன் வந்த கருடாழ்வார் ஏமாற்றம் அடைந்தார். திருமால் ரதோற்சவ நாளன்று கருடன் உண்டாக்கிய கருட தீர்த்தத்தின் கரையில் பூஜைகளை ஏற்றுக்கொள்வதாகக் கூறி சமாதானப்படுத்தினார். இதுவே இன்று கெடில நதியாக தென்னார்க்காடு மாவட்டத்தின் பல பகுதிகளில் பாய்கின்றது.
இக்கோயிலின் மேற்கு வாயிலின் மீது அழகிய 5 நிலைக் கோபுரம் உள்ளது. கிழக்கு வாயிலின்மீது கோபுரம் இல்லை. கருவறையின் மூலவராக தெய்வநாயகன் கிழக்கே திருமுக மண்டலத்துடன் நின்ற கோலத்தில் காட்சியளிக்கின்றார். தனிக் கோயிலில் செங்கமல வல்லித்தாயார் எழில்மிகு கோலத்துடன் அருள்புரிகிறார். இவரே பிருகுமுனிவரின் மகளாகவும் மார்க் கண்டேயரின் மகளாகவும் அவதரித்து மகாவிஷ்ணுவை மணந்தார். இக்கோயிலின் உட்புறத்தில் பள்ளிகொண்ட பெருமான், நம்மாழ்வார், ஆண்டாள், ஆழ்வார்கள், இராமனுஜர், உற்சவ நரசிம்மர் ஆகியோரையும் தரிசிக்கலாம். முன் பிராகாரத்தில் ஆதிகேசவனும், கருடாழ்வாரும் காணப்படு கின்றனர். கருடாழ்வார் கைகட்டி நின்ற நிலையில் காட்சி தருகின்றார். இங்குள்ள இராமபிரானின் திருவுருவமும் பேரெழில் வாய்ந்தது. வடுவூர், தில்லை வளாகம் ஆகிய தலங்களிலுள்ள திருமேனிக்கு ஈடான அழகைத் திருவந்திபுரத்திலுள்ள இராமர் பெற்றுள்ளார். பிறதலங்களில் இடது கரத்தில் வில் ஏந்தியுள்ள இராமர் இங்கு வலக்கரத்தில் கோதண்டம் ஏந்தியுள்ளமை சிறப்பு. பிற இடங்களில் அஞ்சலி ஹஸ்தராகத் தோன்றும் அனுமன் இத்தலத்தில் தனது கரத்தால் வாயைப் பொத்தியவாறு தோற்றமளிக்கின்றார்.
இக்கோவிலில் அமைந்துள்ள விமானம் சந்திர விமானம் எனவும் சுத்தஸத்வ விமானம் என்றும் அழைக்கப்படுகிறது. திருமங்கையாழ்வார் இப்பதியின் மீது பத்துப் பாசுரங்கள் பாடியுள்ளார் (எண் 148 - 57). சிறிய குன்றின் அடிவாரத்தில் இன்று போலவே அன்றும் கோயில் அமைந்திருந்ததாக ஆழ்வாரின் பாடல்கள் செப்புகின்றன.
“வையம் ஏழும் உண்டு ஆல் இலை வைகிய
மாயவன் அடியவர்க்கு மெய்யன் ஆகிய தெய்வ நாயகன் இடம்மெய்
தகு வரை சாரல்’ எனவும்,
"வானுலாவிய மதி தவழ் மால் வரை மாமதில் புடை சூழ
தேனுலாவிய செழும் பொழில் தழுவிய திருவகீந்திரபுரமே” எனவும்,
145

Page 176
“வரைவளந்திகழ் மதகரிமருப்போடு மலை வளர கிலுருத்தி தினை கொணர்ந்தனை செழுநதி வயல் புகு திரு வயிந்திர புரமே ர9 என்றும் இப்பதியின் இயற்கை வளங்களை ஆழ்வார் போற்றியுள்ளார்.
அர்ச்சுனன் தீர்த்த யாத்திரையின் போது திருவயிந்திரபுரத்தில் தீர்த்தமாடி வழிபட்டதாக வில்லி பாரதம் செப்பும்.
"மெய்யாகம வதிகைத் திருவீரட்டமு நேகே கையாளான் அகீந்திரபுரமும் கண்டுகை தொழுதான்”
(ஆதிபருவம், தீர்த்தயாத்திரைச் சருக்கம்)
இக்கோயிலில் சோழர், பாண்டியர் ஆகிய மன்னர் காலத்தைச் சார்ந்த ஐம்பதிற்கு மேற்பட்ட கல்வெட்டுக்கள் கண்டெடுக்கப் பட்டுள்ளன. முதலாம் குலோத்துங்க சோழன், விக்கிரம சோழன், மூன்றாம் இராஜ இராஜன், முதலாம் சுந்தரபாண்டியர் விக்கிரம பாண்டியன், விஜயநகர வேந்தன் அச்சுதராயர், பல்லவச் சிற்றரசன் கோட்பெருஞ்சிங்கன் ஆகியோர் காலத்தில் கோயிலில் விளக்கெரிய ஆடுகள், நிலம், பொன் போன்றவை வழங்கப்பட்ட செய்திகளைக் கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன.
தேவநாயகனின் இக்கோவிலுக்கு அருகே ஒளஷத கிரி என்னும் சிறுகுன்றுகள் உள்ளன. ஆஞ்சநேயர் சஞ்சீவி மலையைச் சுமந்து சென்ற போது விழுந்த ஒரு சிறு பகுதியே இக்குன்று எனக் கூறுவர். விண்வழியே சென்ற திருமால் இங்கு இளைப்பாறியதாகவும் கூறுவர். இக்குன்றின் மீது கிழக்கு நோக்கியவாறு ஒரு சிறு கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் லக்ஷ்மி சமேதராக ஹயக்ரீவர் காட்சியளிக்கிறார். ஹயக்ரீவருக்கு அருகே வேணுகோபாலன், கருடாழ்வார், ஆதிசேஷன் ஆகியோரும் உள்ளனர். பிறதலங்களில் நின்ற கோலத்தில் தோன்றும் கருடாழ்வார் இங்கு உபதேச நிலையிலிருப்பது குறிப்பிடத்தக்க அம்சமாகும். தமிழகத்தில் ஹயக்ரீவருக்காக ஏற்பட்டுள்ள தனிக்கோயில் இது ஒன்றாகும்.
வடகலைச் சம்பிரதாய வைணவ ஆச்சாரியராகிய வேதாந்த தேசிகர், இங்கு தவம் செய்து ஹயக்கிரீவர் அருளையும் கருடன் அருளையும் பெற்றுள்ளார். இந்த ஆச்சாரியர் நாற்பது ஆண்டுகளாக வாழ்ந்து வந்த திருமாளிகையும், தீர்த்தம் எடுத்துக் கொண்ட கிணறும் இன்றும் அங்கு உள்ளன. கோயிலுக்குள் இருக்கும் தேசிகர் சந்நிதி மிகவும் சிறப்பு வாய்ந்தது. இத்தேசிகர் இத்தலத்தின் மீது வடமொழியில் தேவநாயக பஞ்சாசதி, அச்யுத சதகம் ஆகிய நூல்களையும் தமிழில் மும்மணிக் கோவை, பந்துகழல், அம்மானை, ஊஞ்சல், ஏசல், நவமணிமாலை ஆகிய சிற்றிலக்கிய நூல்களையும் இயற்றியுள்ளார். வேதாந்த தேசிகருக்கு ஹயக்கிரீவர் காட்சியளித்து அருளிய இடத்தில் இவ்வாலயம் அமைந்துள்ளது மிகவும் பொருத்தமே. (தே.ஹ)
146

● @ ●
திருவரங்கத்தமுதனார்
சோழ நாட்டில் திருவரங்கத்தில் தோன்றியருளியவர் திருவரங்கத்தமுதனார். இவருடைய தந்தையின் பெயர் அணியரங்கத்தமுதனார். இவருடைய குடி மூங்கிற்குடி, இவர் பங்குனி அத்த நாளில் தோன்றியவர். இவர் காலம் கி. பி. 1100 - 1208 என்று அறிஞர் பெருமக்கள் கருதுவர். இவர் திருவரங்கம் சென்று அங்கே வாழ்ந்து வந்ததோடு அரங்கநாதனுக்குத் திருநந்தவனத்துத் திருப்பணி செய்து வந்தமையினால் அடியார் எல்லோரும் இவரைப் “பெரிய கோவில் நம்பி’ என்று அழைத்துப் போற்றி வந்தனர். வைணவ உலகின் பேரொளியாக, உடையவர் எனப்படும் இராமனுசர் காலத்தின் பிற்பகுதியினர் திருவரங்கத்த முதனார். இராமனுசர் இவரைத் திருத்திப் பணி கொள்ள எண்ணங் கொண்டு தம் சீடராகிய கூரத்தாழ்வானை நியமித்தார். கூரத்தாழ்வாரும் அமுதனாரின்அஞ்ஞான இருள் நீக்கி ஞானச் சுடர் ஏற்றினார். இவரை எம்பெருமானார் கீழ்க் கொண்டு சேர்ப்பித்தார். அவரும் இவரை ஏற்றுக் கொண்டு சமய சாத்திரங்களை எல்லாம் நன்கு போதித்தார். இவரும் இணக்கமாய் ஒன்றுபட்டிருந்தார். இவர் தம் கடமைகளை
யெல்லாம் கூரத்தாழ்வாரிடம் கொடுத்துவிட்டு ஒதுங்கி நின்றார்.
இராமனுசர் இவரிடத்தில் இரக்கங்கொண்டு இறைவன் திருமுன்னர் தினமும் பாசுரம் பாடும் திருப்பெருமான் அரையரைக் கூப்பிட்டு “இன்று இயற்பாவை நீங்கள் சேவிக்க வேண்டாம், அமுதனாரே சேவிக்கட்டும்” என்று கட்டளையிட அதன்படி அமுதனார் இயற்பா சேவிக்கும் நாளில் எல்லாம் அரையருக்குச் செய்யும் மரியாதை வரிசையெல்லாம் அமுதனார்க்குச் செய்யப் பெற்றன. அன்று முதல் இன்றும் அச்சிறப்பு அமுதனார் வழிமுறையினருக்கு நடைபெற்று வருகின்றது.
திருவரங்கத்தமுதனார் இராமனுசர் மீது பிரபந்தம் பாடிக் காட்ட, இராமனுசர் அதைக் கிழித்து எறிந்துவிட்டு, உமக்கு ஆசாரியராகிய கூரத்தாழ்வாரையும் ஆழ்வார்களையும் திவ்விய தேசங்களையும் பற்றிப் பிரபந்தம் செய்யும் என்று கட்டளையிட வைணவத் திருப்பதிகளையும் ஆழ்வார்களையும் குறிப்பிட்டு “இராமானுசர் நூற்றந்தாதி” பாடினார் அமுதனார். இதைப் பார்த்து இராமானுசர் மிகவும் மனம் மகிழ்ந்தார். இவருடைய வாக்கு அமுதவாக்காக இருந்தமையின் இவருக்கு அமுதனார் என்ற அரிய நாமத்தை வழங்கினார் இராமானுசர். அதுமுதல் “பெரிய கோவில் நம்பி’ என்ற இயற்பெயர் மாறி, திருவரங்கத்தமுதனார் என்று வழங்கலாயிற்று.
இவருடைய வழிமுறையினர் திருவரங்கத்தில் வடக்கு சித்திரை வீதியில் குடியிருந்து கோயிற் சிறப்புகளை இன்றும் பெற்று வருகின்றனர். இராமானுசர் நூற்றந்தாதி சொற்சுவையும் பொருட்சுவையும் மிக்கது. நாலாயிரத்திற்குச் சமமான பங்கு இதற்குண்டு. இராமானுசரின் புகழ்பாடுவதாக இது அமைகின்றது.
இந்துக்கலைக்களஞ்சியம்

Page 177
"என்னைப் புவியில் ஒரு பொருளாக்கி மருள் சுரந்த
முன்னைப் பழவினை வேரறுத்த ஊழிமுதல்வனையே பன்னப் பணித்த இராமானுசர் பரன் பாதம்”
என இராமானுசர் புகழைப் பாடுவதாக இந் நூற்றந்தாதி அமைகின்றது. இராமானுச நூற்றந்தாதியை நாலாயிரத்தில் சேர்த்தது ஏற்புடையதாக இல்லை என்பர் அறிஞர்கள். ஆழ்வார்களின் அருட் செயலைத் தொகுத்த நாதமுனி தமக்கு பின்னர் குறைந்தது 200 ஆண்டுகளாவது கழித்து வாழ்ந்த இராமானுசரின் சமகாலத்தவரான அமுதனாரின் பாடல்களைச் சேர்த்திருக்க முடியாது. இராமானுசரிடம் கொண்ட ஆழ்ந்த பக்தியால் வேதாந்த தேசிகரே 108 பாடல்களைக் கொண்ட திருவரங்கத்தமுதனாரின் “பிரபந்த காயத்ரி’ என்னும் இராமானுசரின் வரலாற்றைக் கூறும் முதல் நூலான இந்நூலை நாலாயிரத் திவ்விய பிரபந்தத்தில் சேர்த்திருக்கக்கூடும் என்பர்.
(தே.ஹ.)
திருவருட்பயன்
சிவனை முழுமுதற் கடவுளாகக் கொண்டு வழிபடும் சமயம் “சைவ சமயம்’ ஆகும். சைவம் பதி, பசு, பாசம் என்னும் முப்பொருள்களை அடிப்படையாகக் கொண்ட சமயமாகும். இவற்றைத் தெளிவாக உணர்வதற்கு, சித்தாந்த சாத்திர நூல்கள் உதவுகின்றன. இவற்றின் காலம் 12 தொடக்கம் 14ஆம் நூற்றாண்டு வரையான காலப்பகுதியாகும். இந்நூல்களை “மெய்கண்ட சாத்திரம்” என்றும் அழைப்பர். இப்பதினான்கு மெய்கண்ட சாத்திர நூல்களுட் சித்தாந்த அட்டகம் எனும் எட்டு நூல்களைச் செய்தவர் உமாபதி சிவாச்சாரியர் ஆவார். சித்தாந்த அட்டகத்துள் திருவருட்பயனும் ஒன்றாகும்.
திருவருளைப் பற்றியும் அதன் பயனைப் பற்றியும் கூறுவதலால் திருவருட்பயன் எனப் பெயர் பெற்றது. இந்நூல் பத்து அதிகாரங்களாக வகுக்கப்பட்டுள்ளது. அவை பதிமுது நிலை, உயிரவை நிலை, இருள்மல நிலை, அருளது நிலை, அருளுருநிலை, அறியும் நெறி, உயிர் விளக்கம், இன்புறு நிலை, அஞ்செழுத்து, அருள் நிலை, அணைந்தோர் தன்மை என்பன. ஒவ்வொரு அதிகாரமும் பத்துக் குறட்பாக்களை உடையது. கடவுள் வாழ்த்துடன் 101 குறட்பாக்கள் அமைந்துள்ளன. முதல் 5 அதிகாரங்களைப் பொது என்றும் இறுதி ஐந்து அதிகாரங்களையும் சிறப்பு எனவும் கூறுவர்.
இந்நூலில் முதல் மூன்று அதிகாரங்கள் இறை (பதி), பசு (உயிர்), பாசம் (தளை) எனும் முப்பொருள்களின் இலக்கணங்களைக் கூறுவனவாகும். நான்காம் அதிகாரம் இறைவனின் திருவருளே உலகிற் சிறந்ததும் உயர்ந்ததும் எனக் கூறுகிறது. ஐந்தாவது அதிகாரம் அவ்வருளே உயிர்கள் மீது
இந்துக் கலைக்களஞ்சியம்

கருணை கொண்டு அவற்றுக்கு உறுதியளிக்கின்றது. ஆறாவது அதிகாரம் அறிவிக்க அறியும் உயிரின் நிலையை இயம்புகின்றது. ஏழாவது அதிகாரம் அதன் மூலம் உயிர்பெறும் விளக்கத்தைக் கூறுகின்றது. எட்டாம் அதிகாரம் அவ்விளக்கம் மூலம் உயிர் இன்பம் அடைந்ததைக் கூறுகின்றது. ஒன்பதாம் அதிகாரம் பெற்ற இன்பம் நிலைத்திருப்பதற்குத் திருவைந்தெழுத்தை ஒத வேண்டும் எனக் கூறுகின்றது. இவ்வாறு திருவருளால் படிப்படியாக உயர்ந்த உயிர் இறைவனை அடைந்த பின்னர் எவ்வாறு இருக்கும் என்பதைப் பத்தாம் அதிகாரம் எனும் அணைந்தோர் தம்மை விளக்கிக் கூறுகின்றது.
பதிமுது நிலை:
பதியினது முதுமையான நிலை என விரியும் இது, இறைவன் உயிரோடு அநாதியாகவே இயைந்து நிற்கும் நிலையாகும். அகரம் எவ்வாறு தனித்தும், ஏனைய எழுத்துக்க ளோடு இயைந்தும், அவற்றிற்கு முதல் எழுத்தாகவும் இருப்பது போன்று இறைவனும் உள்ளான். இத்தகைய இறைவன் உண்மை, அறிவு, இன்பம் ஆகியவற்றின் வடிவானவன். இவ்வுலகைப் படைத்தும், காத்தும் உயிர்களுக்கு முழுமையான மலநீக்கம் பெறாத வகையில் தன்பால் அதனை ஒடுக்கியும் நிற்பவனே அவற்றின் புகலிடமாகவும் இருக்கின்றான். ஞானியர்க்கு அறிவு வடிவாயும் ஏனைய உயிர்களுக்கு அருவமும் உருவமும் கொண்டும் அருள் செய்கின்றான். அவன் மீது அன்பு வைத்த அடியவரிடத்து அகலாது அறிவு வடிவாய் இருப்பான். எல்லா உயிர்க்கும் இன்பம் தந்து பிறவிப் பிணி நீக்க உயிரோடு பிரிவின்றி இயைந்து நிற்கும் இறைவனை ஐயமின்றி உள்பொருளாகத் தெளிந்து நினைத்தல் வேண்டும் எனக் கூறுகின்றது இவ்வதிகாரம்.
உயிரவை நிலை:
இது உயிர் + அவை + நிலை என்றமையும். அஃதாவது உயிர்களாகிய அவற்றின் நிலையாகும். உயிர்கள் மும்மலம், இருமலம், ஒருமலம், கொண்டவையாகக் கூறப்பெறும். இவை அனைத்துக்கும் மூலமலமாக ஆணவமலம் விளங்குகின்றது. மாயை மலத்தை கொண்டமும்மலத்தவர், தம்மை பற்றிய மலங்கள் பற்றிய அறிவற்றவராவர். காணும் தன்மையற்ற கண்ணுக்கு உலகு, ஒளி, இருள் என்பவற்றை அறியும் தன்மை இல்லாதது போன்றே உயிர்களுக்கு உணர்வில்லை என்றால் சிவம், மலம், மாயை என்பவற்றைப் பற்றி அறிய முடியாது. இருளில் இருளாயும், ஒளியில் ஒளியாகியும் நிற்கும் பொருள்கள் போன்று, உயிரும் சார்ந்ததன் வண்ணமாய் நிற்கும் இயல்புடையது. மலப்பிணிப்புக் கொண்ட உயிர், இறைவன் உயிருக்குயிராய் இருப்பதை உணராது இருக்கின்றது என்று கூறுகிறது இவ்வதிகாரம்
இருள்மல நிலை:
இவ்வதிகாரம் ஆணவமலத்தின் நிலை பற்றிக் கூறுகிறது. உலகப் பொருட்களை இருள் எவ்வாறு மறைத்து நிற்கின்றதோ,
147

Page 178
அதே போன்று பிறப்பு, இறப்பின் துன்பத்தையும், வீட்டின்பத்தையும் மறைக்க வல்லது ஆணவமாகும். உயிரோடு இயைந்து நிற்கும் ஆணவம் அவ்வுயிரை மறைக்குமேயன்றி, உயிர்குயிரான இறைவனை மறைக்காது. அறியாமைக்குக் காரணமாக ஆணவம் இருந்து உயிர்களுக்குத் துன்பத்தைத் தருகிறது. ஒளியைக் கொண்டு இருளை நீக்குவது போன்று, இவ்வுடல் இருக்கும் போதே ஆணவத்தை நீக்க முற்படவேண்டும். எவ்வாறு பொழுது விடியும் வரை விளக்கு இருளை நீக்கத் துணை செய்கின்றதோ அதே போன்று ஆணவம் நீங்கும் வரை உயிர்க்கு இவ்வுடல் துணையாக இருக்கும் என்று விளக்குகின்றது இவ்வதிகாரம்.
அருளது நிலை:
அஃதாவது திருவருளின் தன்மையாகும். 9 6) bis இயக்கத்திற்குக் கதிரவன் துணையாவது போன்று உயிர்களின் இயக்கத்திற்கு திருவருள் துணையாக இருக்கின்றது. உயிர்கள் தம்மோடு இருக்கும் திருவருளை உணராது உலகப் பொருட்களிற் பற்றுக் கொண்டு இருக்கின்றது. எவ்வாறு ஐம்பொறிகள் தாம் உணர்வதற்குக் காரணமாக உயிர் இருக்கின்றது என்பதை உணர்வதில்லையோ, அதே போன்று உயிர்களும் திருவருளின் உண்மையை அறிவதில்லை எனக் கூறுகின்றது இவ்வதிகாரம்.
அருளுரு நிலை
அதாவது, உருவாய குருவினது தன்மையாய், உயிர் பக்குவம் பெறாத காலத்தில், உள் நின்றுணர்த்திய பரம்பொருளே பக்குவமுற்ற காலத்தில் காணும் பொருளாக (குருவாய்) முன்னின்று உணர்த்தும் என்பதாம். உயிரைப் பற்றிய மலத்தை அதனுடன் இருக்கும் இறைவன் மட்டுமே அறிவதோடு, அவ்வுயிர்க்கு இறைவன் குருவடிவில் மறைந்து நின்று அருள் செய்வான். அதனை இவ்வுலகமும் மலபிணிப்புடைய உயிர்களும் அறியமாட்டா. குருவருள் வினை நீக்க வல்லது. ஒருமலமுடையவர்க்கு உள் நின்றும், இருமலமுடையவர்க்கு முன்னின்றும், மும்மலமுடையவர்க்கு குருவாக வந்தும் இறைவன் அருளுவான். இக்குருவருள் மூலமே உயிர்க்கு ஞானம் வரும் என இவ்வதிகாரம் விளக்குகின்றது.
அறியும் நெறி:
உண்மைப் பொருளை அறியும் நெறி ஆகும். இறைவன், உயிர்கள், ஆணவம், வினை, சுத்த மாயை, அசுத்த மாயை, ஆகிய ஆறும் நித்தியமானவை. வினை செய்வோன், செய்யும் இருவினைப் பயனான இன்ப துன்பங்கள், அவற்றை நல்கும் இறைவன் ஆகிய நான்கும் உயிர் உய்தற்பொருட்டு உள்ளது என்பதை உணர வேண்டும். உயிர் தனக்கு இயல்பான வீடு பேற்றைப் பெறவும், தான் சார்ந்த பொருள்களில் அழுந்துவதற்கும் காரணமாக இருப்பது இறையருள் ஆகும். இத்தகைய திருவருளை எண்ணி உயிர் போற்றுதல் வேண்டும்
148

ஞானத்தால் பெறும் இன்பமே இன்பம் என்ற காரணத்தால், அஞ்ஞானத்தினைக் காணவும், அதன் கண் அடங்கவும் முயல்தல் வேண்டும் என்று கூறுவது இவ்வதிகாரம்.
உயிர் விளக்கம்:
உயிர் ஆணவமலம் நீங்கி, தன் செயலின்றித் திருவருள் வயப்பட்டு நிற்கும் நிலையாகும். ஆணவ மலத்தில் உயிர்கள் அழுந்தி நிற்கும்போது மறைப்பாற்றல் இன்பந்தராது. மலப்பிணிப்பு நீங்கிய போது இன்பம் தரும். திருவருள் தன்னைக் காட்டக் காணும் உயிரானது தானே கண்டதாகக் கருதுவது தவறாகும். உயிர் திருவருளால் கவரப்பட்ட போது மலத்தி னின்றும் நீங்கி நிற்கும். அத்திருவருளை முன்னிறுத்திச் செயற்பட்டால் இன்பம் கிட்டும். மாறாகச் செயல்பட்டால் துன்பம் தான் ஏற்படும். ஐம்பொறிகளின்றி உயிரும், உயிரின்றி ஐம்பொறிகளும் செயற்படுவதில்லை. திருவருளை உயிரோ ஐம்பொறிகளோ அறியமாட்டா. இறைவன் தானே தன்னை உயிர்களுக்கு உணர்த்தி நிற்கின்றான். எனவே, இறைவனை உயிர்கள் தம் வலிமையால் மட்டும் அடைந்து விட முடியாது என்று விளக்குவதாக இவ்வதிகாரம் அமைந்துள்ளது.
இன்புறுநிலை:
உயிர்கள் பேரின்பத்தைப் பெற்று இன்புறும் நிலை. இருளை நீக்கி இன்பத்தை நல்கும் திருவருளைப் பின்பற்றுவோர் இன்பத்தைப் பெறுவர். ஏனையோர் துன்பமடைவர். உயிரானது திருவருளைச் சார்ந்த நிலையில் இன்பத்தைப் பெற்றுவிடாது. அதன் மூலமாக சிவத்தை அடைந்த போதுதான் இன்பம் பெறும். உயிர்கட்கு இன்பத்தை நல்குவதால் இறைவன் தனியாக அவ்வின்பத்தைத் தான் அனுபவிக்க மாட்டான். எடுத்துக் காட்டாக, தாள் + தலை = தாடலை என்றானது போன்று உயிரும், இறைவனும் வீடுபேற்றில் இரண்டற்ற ஒன்றாக இருமையில் ஒருமையானதாக விளங்குகின்றன. இத்தகைய உயிர் தன் செயலன்றித் திருவருளின் செயலையே செய்யும். இந்நிலையிற் காண்பவன், காட்சி, காட்சிப்பொருள் என்ற மூவகை நிலையும் தோன்றாது. அன்பின் மூலம் பேரின்பத்தைப் பெறவும் அறியவும் முடியும் என இவ்வதிகாரம் கூறுகிறது.
ஐந்தெழுத்தருள் நிலை:
திருவைந்தெழுத்தை ஒதி அத்திருவருளிலேயே அழுந்தி நிற்கும் நிலை. வேதம், ஆகமம், பிற ஞான நூல்கள் அனைத்தும் ஐந்தெழுத்தின் உண்மையை உணர்த்துவன. ஓங்கார பிரணவத்துள் சிவம், சக்தி, மலம், மறைப்பாற்றல், உயிர் ஆகிய ஐந்தும் அடங்கியுள்ளன. "நம” என்னும் மலம் உயிரை நீங்காது பற்றி நிற்கும். திருவருள் மூலம் சிவத்தை அடையும் போது மலம் உயிரை விட்டு நீங்கும்.
'ந'கரத்தை முதலெழுத்தாகக் கொண்டு திருவைந்தெழுத்தை ஒதும் போது மலம் நீங்காது. (நமசிவாய) சிகரத்தை
இந்துக்கலைக்களஞ்சியம்

Page 179
முதலெழுத்தாகக் கொண்டு (சிவாயநம) ஒதும் போது மலம் நீங்கும். இவ்வாறு ஒதும் போது பிறவிப் பிணி நீங்கி வீடுபேறு கிட்டும். வகரமாகிய திருவருள், சிகரமாகிய சிவத்தை அடைவிக்கும். இதுவே இறைவனின் திருமேனி என விவரித்துக் கூறுவது இவ்வதிகாரம்.
அணைந்தோர் தன்மை:
இறையருளில் மூழ்கியோரது (அழுந்தியோரது) தன்மை ஆகும். திருவருள் மூலம் தம் அறிவு, இச்சை, செயல்கள் செயற்பட நிட்டையில் அழுந்தி நிற்பார்க்கு குறை ஏதும் ஏற்படாது. அனைத்தையும் அறியும் அறிவு இவர்க்கு இருந்தபோதும் இறையின்பத்தில் அழுந்தி நிற்பதன்றி வேறு கொடுஞ்செயல்கள் எதனையும் செய்யமாட்டார்கள். இவர்கள் அணைந்தோர் என்று இதன் காரணமாக அழைக்கப் பெற்றனர். இடர் ஏற்படாமல் காக்க ஆமை தன் ஐந்துறுப்புக்களையும் அடக்கியிருப்பது போல இவர்கள் ஜம்புலன்களையும் அடக்கியிருப்பார்கள்.
அணைந்தோர், உள்ளும் புறமும் ஒரே தன்மையை காணுவதால் எதனையும், யாரையும் இவர்கள் இகழ மாட்டார். பயன் கருதியும், பற்று வைத்தும் இவர்கள் செயலாற்றாத காரணத்தால் பேரின்பத்தைப் பெறுவார்கள். அணைந்தோரின் முன்வினைப் பாவம் உடலூழாய்க் கழிவதோடு, மேலும் புதிய வினை தோன்றாது திருவருள் காத்துநிற்கும். மனம், மொழி, மெய்களால் இவர்கள் செய்யும் எவ்வினைகளும் பிறப்பின் காரணமாக அமையாது. வீடு பேற்றையும் இவர்கள் இப்பிறவியிலேயே பெற்று நிற்பார்கள். (8 . (5.)
திருவருட்பா
திருவருட் பிரகாச வள்ளலார் எனச் சிறப்பிக்கப்படும் இராமலிங்க அடிகளாரால் திருவருட்பா பாடப்பட்டது. திருவருட்பா என்னும் சொல்லை திரு - அருள் - பா எனப் பிரிக்கலாம். திரு என்பது தெய்வத் தன்மை பொருந்தியது என்னும் பொருளுடையது. எனவே திருவருட்பா அருளால் பாடப்பட்ட பாக்கள் என்றும் அருளைப் பெற அருளாளரால் பாடப்பட்டது என்றும் பொருள் கொள்ளலாம்.
இராமலிங்க அடிகளார் தமிழகத்தில் தென்னார்க்காடு மாவட்டம் சிதம்பரத்திற்கு தென்மேற்கில் உள்ள மருதூரில் இராமையாப்பிள்ளை, சின்னம்மை ஆகியோருக்கு புதல்வராய் 5. 10. 1823 ஆம் நாள் அவதரித்தார். இவர் பள்ளிக் கூடம் சென்று கல்வி கற்றார் என்று கூறுவதற்கில்லை. ஆயின் இறையருளால் தமிழ் மொழி வடமொழிகளில் உள்ள நூல்களைக் கற்றுத் தேர்ந்தார். இவரது கல்வி ஞானம் திருவருளால் உண்டானது என்பதனை என்னுடைய துரையே நின்னுடைய அருளால் கற்றதும் நின்னிடத்தே பின் கேட்டதும் என்னும் இவரது வாக்கால் அறியலாம். தமது இளமைப் பருவம் முதல் பாமாலை
இந்துக் கலைக்களஞ்சியம்

பாடி இறைவனுக்குச் சாத்தும் விருப்புடைய இவர் திருத்தணிகை முருகன் மீதும், கந்த கோட்டத்து முருகனிடத்தும் அதீத அன்பு கொண்டிருந்தார். தனுக்கோடியம்மை என்னும் பெண்ணை மணந்து இல்லறத்தில் ஈடுபட்டபோதும் இவர் உள்ளம் இல்லற இன்பத்தில் நாட்டம் கொள்ளவில்லை. இறை அருளை நாடி நின்ற இவர் மாணவர்கட்கு பாடம் சொல்வதிலும் நூல் ஆராய்வு செய்வதிலும் ஆர்வம் கொண்டிருந்தார்.
வள்ளலார் கருங்குழி, வடலூர் ஆகிய இடங்களில் வாழ்ந்த பொழுது தம்மை நாடி வந்த நோயாளிகளுக்கு மருந்தளித்து நோய் தீர்த்து அற்புதங்கள் பலவற்றைச் செய்தார். இவரது பாடல்களை நோக்கும் போது சமயங்களைப் பற்றியும் சாத்திரங்களைப் பற்றியும் படித்து சமய வாதங்களில் பங்கு கொண்டார் என்பது புலனாகிறது. அடிகளாரின் வேதாந்த தேசிகர் குறட்பாவுரை, பெரியபுராண உரை, திருவடிப் புகழ்ச்சி, முதலிய பகுதிகளை ஊன்றிப் படிக்கின் இவ்வுண்மை தெளிவாகப் புலப்படும். இளமைக் காலத்தில் சமய சாத்திரங்களைப் படித்துச் சில காலம் மதவாதங்களில் ஈடுபட்டுப் பின்னரே தெளிந்தார் என்று அறிய முடிகிறது. சமயங்கள் வெறும் சடங்காய்ப் போன நிலை கண்டு இவர் மனம் வருந்தினார். சமுதாயத்தில் தலைவிரித்தாடிய தீண்டாமை, சாதி ஏற்றத் தாழ்வுகள் இவற்றைத் தடுக்க வலுவற்ற சமயம் சடங்குக்குள் சிறைப்பட்டு தத்துவ வாதங்களுக்குள் முடங்கிக் கிடந்தது. இத்தகைய சடங்கும், தத்துவமும் மக்களுக்கு எப்போதும் பயன்படாது எனக் கண்டார் இராமலிங்க அடிகள். அது வாழ்க்கை நெறியாக மலர வேண்டும் என விழைந்தார். அத்தகையதோர் நிலை ஏற்படின் சாதி, சமய, இன, குல, கோத்திர வேறுபாடுகள் எல்லாம் மறையும் என்னும் நோக்குடன் இவர் தம் கொள்கைகளையும். கருத்துக்களையும் வெளிப்படுத்தினார். இறைக் காட்சியை வெறும் சமயச் சடங்குகளால் பெற முடியாது என உறுதியாகக் கூறினார். அவற்றால் பயன் உண்டு. ஆனால் முடிந்த பயன் அதுவன்று, அதனையும் கடந்து செல்ல வேண்டும். பூசை, திருவிழா, தேங்காய் உடைத்தல், கற்பூரம் காட்டல் எல்லாம் புறக்காட்சி. இறைவனை அகத்திலே காண வேண்டும் என்ற ஆன்மீக அனுபவத்தையே இவர் வற்புறுத்துகிறார். அகமுகக் காட்சி இறை அருளால் தான் கிட்டும். அந்த அருளைப் பெற சமுதாய சேவை, ஜீவகாருண்யம் அவசியம் என வலியுறுத்தினார். இறைவழிபாடு, ஜீவகாருண்யத்தை, அடிப்படையாகக் கொண்டு சுத்த சன் மார்க்க நெறியைப் பரப்பினார். ஜீவகாருண்யப் பணிகளில் தலையாய பசி நீக்கும் தருமத்தைச் செய்வதற்கு இராமலிங்கர் நிறுவிய நிறுவனம் சத்திய தருமச் சாலை, சமயச் சடங்குகளை ஏற்றுக் கொள்ளாத இவர், இறைவனைச் சோதி வடிவில் வழிபடுவதற்காக சுத்த சன்மார்க்க அன்பர்களைக் கொண்டு சத்திய ஞான சபையை நிறுவினார். சத்திய ஞான சபையின் தொடக்கத்தில் அவர் வெளியிட்ட விளம்பரம் ஒன்றில் பின்வருமாறு குறித்திருக்கிறார்.
149

Page 180
“இனி இச் சீவர்கள் விரைந்து இறந்து வீண் போகாமல், உண்மையறிவு, உண்மையன்பு, உண்மை இரக்கம், முதலிய நற் குணங்களைப் பெற்று, நற்செய்கை உடையராய் எல்லாச் சமயங்களும், எல்லா மதங்களும், எல்லா மார்க்கங்களுக்கும் உண்மைப் பொதுநெறியாகி விளங்கும் சுத்த சன் மார்க்கத்தைப் பெற்று பெரும் சுகத்தையும் பெருங் களிப்பையும் அடைந்து வாழும் பொருட்டு, மேற்குறித்த உண்மைக் கடவுள் தாமே திருவுள்ளம் கொண்டு சுத்த சன் மார்க்கமாகிய உண்மை விளக்கம் செய்கிற ஒரு ஞான சபையை இங்கே தமது திருவருட் சம்மதத்தால் இயற்றுவித்து இக்காலம் தொடங்கி அளவு குறிக்கப்படாத நெடுங் காலம் அளவு அற்புத சித்திகள் எல்லாம் விளங்க யாமே அமர்ந்து விளையாடுகின்றோம்”
என்று வெளியிட்டார். இவர் தவம் மேற்கொண்டிருந்த சித்தி வளாகத் திருமாளிகையில் 30. 1. 1874 ஆம் ஆண்டு
சமாதியடைந்தார்.
இராமலிங்க அடிகளாரால் வெவ்வேறு காலங்களில் பாடிய பாடல்களை அவர் மாணவர் தொழுவூர் வேலாயுத முதலியார் தொகுத்து அவற்றை ஆறு திருமுறைகளாக வகுத்தார். அடிகளின் கடிதங்கள் மூலம் இவரது பாடல்கள் அச்சாவதிலும் வெளிப்படுவதிலும் இவருக்கு விருப்பம் இருக்கவிைைல என்பது புலனாகிறது. எனினும் அன்பர்கள் உண்ணா நோன்பிருந்து அனுமதி பெற்றனர் என்று அறியக்கூடியதாகவுள்ளது. திருவருட் பாவிலுள்ள ஆறு திருமுறைகளில் முதல் நான்கும் 1867 ஆப் ஆண்டும், ஐந்தாம் திருமுறை 1880 ஆம் ஆண்டும், ஆறாம் திருமுறை 1885 ஆம் ஆண்டும் வெளியிடப்பட்டன. இராமலிங்க சுவாமிகள் தமது ஒன்பதாம் வயது முதல் ஞானசித்தி எய்திய ஐம்பத்தொன்றாம் வயது வரை பாடிய பாடல்களும் எழுதிய உரைநடைப் பகுதிகளும் அவரது வாழ்வின் அனுபவ1 முழுவதையும் வெளிப்படுத்துவதுடன் அவர் மனித இனத்திற்கு வழங்கிய பொது நெறியின் சாத்திரமாகவும் விளங்குகின்றன அவர் தம் வாழ்க்கையை சைவராகத் தொடங்கி பின் சமயம் கடந் ஞானியாக வளர்ந்து இறையருள் பெற்று தமது ஊனுடம்ே படிப்படியாக ஞான உடம்பாக மாறப் பெற்று மரணமில்லா பெருவாழ்வு எய்தினார். இத்தகையதோர் நிலையைத் தா எவ்வாறு எய்தினார் என்பதனையே தாம் பாடிய பாக்களி கூறுகின்றார். மேலும் மக்கள் அந்த அனுபவங்களையும் ஆற்றல்களையும், மரணமில்லாப் பெருவாழ்வையும் எவ்வா தம்மைப் போல் அடையலாம் என்பதற்குரிய வழியை வகுத்து தொகுத்தும் விரித்தும் இப்பாக்களின் ஊடாகவும், உரை நை
வாயிலாகவும் கூறுகின்றார்.
முதலாம் திருமுறை திருவடிப் புகழ்ச்சி, விண்ணப்ட கலிவெண்பா, நெஞ்சறிவுறுத்தல், சிவ நேச வெண்பா, மக
150

தேவமாலை, திருவருண் முறையீடு, வடிவுடைய மாணிக்கமாலை, இங்கித மாலை என்னும் எட்டுத் தலைப்புகளை உடையது. இவற்றில் திருவடிப்புகழ்ச்சி, மகாதேவமாலை, திருவருண்முறையீடு, வடிவுடைய மாணிக்க மாலை ஆகியவற்றுக்கு அடிகளாரது மூல ஏடே கிடைக்கின்றன. பிற பகுதிகளுக்கு அன்பர்களது பிரதிகள் மூலமாக அமைகின்றன.
முதலாம் திருமுறை
திருவடிப்புகழ்ச்சியில் இறைவனது திருவடி சிறப்பிக்கப்படுகின்றது. விண்ணப்பக் கலிவெண்பா தமிழகத்தின் பல கோயில்களும் இறைவனது எல்லையற்ற கருணையையும் மனித மனதின் தீய உணர்வுகளையும் முறையீடுகளையும் கூறுகின்றது. நெஞ்சறிவுறுத்தலில் இறைவனின் பல்வகை வடிவங்கள், குணங்கள், ஆற்றல்கள், பெருங்கருணை, தியானங்களைச் செய்த அடியார்கள், கட்டுப்படுத்த முடியாத மனதின் இயல்பு சலனங்கள், பற்று, அதன் விளைவு பற்றியும், பிரார்த்தனையின் பலன் பற்றியும் கூறப்படுகின்றது. சிவநேச வெண்பாவில் விநாயகக் கடவுள் வணக்கம், அடிகளார் தமக்கும் பெருங்கருணையுடைய இறைவனுக்குமிடையே உள்ள அன்பு பற்றிப் பாடிய பாடல்களும் சம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், பரவை நாச்சியார், காரைக்கால் அம்மையார், மாணிக்கவாசகர், சிறுத்தொண்டர்
இவர்களைப் பற்றிய பாடல்களும் உள்ளன.
மகாதேவ மாலை, இறைவனுக்கான சொல்மாலை என்பது இதன் பொருள். இறைவனது பெருமையும், இறையருளின் பெருமையும் போற்றப் பெறுகின்றன. மெய்யடியார்களுக்கு அருள் புரியும் இறைவனது பெருங்கருணையும் பாடப்படுகின்றது. திருவருண் முறையீட்டில் அடிகளார் இறைவனின் அருளுக்காக முறையிடுகிறார். இத் திருமுறையில் முருகன், விநாயகர் சிவனைப்பற்றிய பாடல்களும், உடலின் பல்வேறு உறுப்புகளும் இறைவனைப் போற்றுவதற்கானவை என்ற செய்தியும் கூறப்படுகின்றது. வடிவுடை மாணிக்கமாலை திருவொற்றியூரில் கோயில் கொண்டுள்ள அன்னை வடிவுடை மாணிக்கத்தின் மேல் தொடுக்கப்பட்ட சொல்மாலை. இதில் முதல் 60 பாடல்களிலும் அன்னையின் பெருங்கருணையையும் பின்வரும் பாடல்களில் தமது புன்மையையும் கூறி, அவற்றை நீக்கி அன்னையின் அருளை வேண்டுதலும் கூறப்படுகின்றன. இங்கித மாலை முழுவதும் அகப்பொருள் பற்றியன. ஒப்பற்ற தலைவன்பால் கொண்ட காதலைப் பற்றியும் காதலனின் இனிய செய்கை பற்றியும் சிறப்பித்துக் கூறுவதாய் அமைந்த பகுதியாகும்.
இரண்டாம் திருமுறை
இரண்டாம் திருமுறையில் அமைந்த பாடல்களில் பெரும்பாலானவை ஒற்றியூரையும், ஒற்றியூர் கோயில் கொண்டானையும் பாடியதாகும். இதனைத் தவிர தில்லை, திருமுல்லைவாயில், புள்ளிருக்கு வேளூர், திருவண்ணாமலை,
இந்துக் கலைக்களஞ்சியம்

Page 181
திருவாரூர் ஆகிய தலங்களைப் பற்றிப் பாடிய பாடல்களும் இடம் பெற்றுள்ளன.
மூன்றாம் திருமுறை
இத் திருமுறை ஆசிரிய விருத்தத்தால் ஆகிய 19 பகுதிகளைக் கொண்டதாகும். ஒற்றியூரில் தங்கிப் பாடிய இப் பாடல்கள் அனைத்தும் அகத்துறைப்பாடல்களாகும். இவை அனைத்துக்கும் அடிகளார் கைப்பட எழுதிய ஏடுகள் கிடைக்கின்றன. திருவுலாப்பேறு தியாகேசர் பவனிவரக் கண்டு உள்ளம் இழந்த தலைவியின் அனுபவங்கள் கூறப்படுகின்றன. நாரையும் கிளியும் நாட்டுறு தூதில் தலைவி நாரை, கிளி ஆகியவற்றைத் தலைவன்பால் தூது விடுவதாக அமைந்துள்ளது. இரங்கன் மாலையில், தலைவி தோழியிடம் தலைவன் புணராமையைக் கூறி இரங்குவதாய் உள்ளது. திருவுலா வியப்பு தலைவன் சிறப்புகளைத் தன்னுள் வியந்து போற்றுவதாய் உள்ளது. சல்லாபவியன் மொழி, தலைவன் தலைவியருள் நடந்த உரையாடலைத் தனித்துத் தனக்குள் தலைவி கூறுவதாக உள்ளது. மறைபொருட் கூற்று நிறைந்தது (MyStical Ideas). இன்பக்கிளவியில் தலைவி தனக்குள் தலைவணை எண்ணி புளகாங்கிதம் கொள்வது போல் அமைந்துள்ளதாகும். இன்பப்புகழ்ச்சியில், தலைவனை (வஞ்சப் புகழ்ச்சியாக) இகழ்வதுபோல் தாய் தலைவிக்குக் கூறும் பகுதியாகும். திருவுலாத் திறம், தலைவி தோழியிடம் தலைவனின் திருவுலாச் சிறப்புக் கூறி அதை மீண்டும் காண அவாவும் வேட்கையைப் புலப்படுத்துவதாகும். வியட் மொழி காய், தலைவன் அன்பைப் பெற தலைவியின் டெ ற்றைப் பாராட்டுவதாக உள்ளது. புணரா விரகு பெருநதுறு வேட்கையின் இரங்கல் தலைவி தலைவன் வரவையும், புணர்ச்சியையும் வேண்டித் தோழிக்குக் கூறுவதாக உள்ளது. குறி ஆராய்ச்சி, தலைவி, தலைவன் தன்னுடன் சேரும் காலம் எதுவோ எனக் குறத்தியிடம் குறி கேட்பதாக அமைந்துள்ளது. காட்சி அற்புதம், தலைவனைக் கண்ட காதல் அனுபவங்களைத் தலைவி தோழிக்குக் கூறுவதாக உள்ளது. ஆறாக் காதலின் இரங்கல், தலைவன் தன்னுடன் சேர்வதற்குக் காலம் தாழ்த்துவது குறித்து தலைவி இரங்கித் தோழியிடம் முறையிடுவதாக உள்ளது.
திருக்கோலச் சிறப்பு, தலைவி தோழியிடம் பவனிவந்த தலைவனின் எழிலைச் சிறப்பித்துக் கூறுவதாகும். சோதிடம் நாடல், தலைவன் தன்னை வந்தணையும் காலம் எதுவெனச் சோதிடம் கேட்கும் தலைவியின் கூற்றாக அமைந்துள்ளது. திருவருட் பெருமிதம், செவிலித்தாய் (வஞ்சகப்புகழ்ச்சியாக) தலைவன் இயல்பு கூறி இகழ்ந்து தலைவியை வினவுவதாக அமைந்துள்ளது. காதற் சிறப்பு, கதுவாமாண்பு, செவிலி கூற்றுக்குத் தலைவி எதிர் மொழிவதாக உள்ளது. ஆற்றா விகாரம், தன்னைக் கூடாது வருத்தும் தலைவனைப் பற்றித்
தோழிக்குத் தலைவி ஆற்றாது கூறுவதாக உள்ளது. காதல்
இந்துக் கலைக்களஞ்சியம்

மாட்சி தன் உள்ளம் கவர்ந்த தலைவனைப் பற்றித் தோழியிடம்
தலைவி கூறுவதாக உள்ளது.
நான்காம் திருமுறை
இத் திருமுறை 12 நூற் பகுதிகளைக் கொண்டது. இவையனைத்தும் அடிகளார் தில்லை சென்று பாடியவை என்பது தெளிவு. எல்லாப் பகுதிகளிலும் அகச் சான்று உள்ளன. இத் திருமுறையில் உள்ள அனைத்துப் பகுதிகளும் மாலையாக அமைந்துள்ளன. அடிகளார் தமது அன்பர் இறுக்கம் இரத்தின முதலியாருக்கு எழுதிய கடிதம் வாயிலாக சென்னையினின்று நீங்கிய பின் அடிகளார் தில்லையைப் பற்றி 20 மாலைகள் இயற்றினார் என்பது தெளிவாகின்றது. ஆயினும் இன்று கிடைப்பன 12 மாலைகளாகும். அடிகளார் ஞானசம்பந்தர், நாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகியோரைப் பற்றிப் பாடிய பாடல்கள் இத் திருமுறையில் இடம் பெற்றுள்ளன.
ஐந்தாம் திருமுறை
இத் திருமுறைக்குத் திருத்தணிகைப் பகுதி என்றும், முருகன் பாசுரங்கள் என்றும் வேறு பெயர்கள் வழங்குகின்றன. இத் திருமுறையில் கருங்குழி விநாயகரையும், திருத்தணி குமரனையும் பாடுவனவாகக் காணப்படுகின்றன.
ஆறாவது திருமுறை
இது மூன்று பகுதிகளைக் கொண்டது. அடிகளார் கருங்குழியில் இருந்தபோது பாடிய பாடல்கள் முதல் பகுதியாகவும், அடிகளார் வடலூரில் இருந்த போது பாடிய பாடல்கள் இரண்டாவது பகுதியாகவும், மேட்டுக் குப்பத்தில் இருந்த போது பாடிய பாடல்கள் மூன்றாவது பகுதியாகவும் தொகுக்கப் பட்டுள்ளன.
ஆறாவது திருமுறையின் முதலாம் பகுதியைக் கருங்குழிப் பாசுரங்கள் என்றும் பூர்வஞான சிதம்பரப் பகுதி என்றும் வழங்குவர். கருங்குழியில் தங்கியிருந்த போது தில்லையை நினைத்தும், தில்லை சென்றும் பாடிய பாடல்களின் தொகுப்பாகும். இப் பகுதியில் இடம் பெற்றுள்ள பிள்ளைச் சிறு விண்ணப்பம், பிள்ளைப் பெரு விண்ணப்பம் ஆகிய இரு பகுதிகள் அடிகளாரின் வாழ்வைக் காட்டும் தன்மையின. வடலூர்ப் பகுதி என்றும் வழங்கப் பெறும் இரண்டாம் பகுதியிலும் சில பாடல்கள் அகத்துறையில் அமைந்துள்ளன. மூன்றாம் பகுதியான சித்திவளாகப் பகுதி அடிகளார் மேட்டுக் குப்பம் சென்றதும் அருட்பெருஞ் சோதி தரிசனம் பெற்றுப் பாடியதாகச் சொல்வர். இப்பகுதியில் 446 முறை அருட்பெருஞ் சோதியை வாழ்த்துவதாகத் தெரிகின்றது.
இவரைப் பற்றிக் கூறப்படும் கருத்துக்கள்: சீவகாருண்யத்தை ஒழுங்கு நெறியாக வாழ்க்கையில் நடை முறைப்படுத்தியவர். பசிப்பிணி மருத்துவர், தரும சாலை கண்ட
151

Page 182
தகைமைசால் தயவுருவர், அருட் சோதி வழிபாட்டை அருளியவர், ஆன்மநேய ஒருமைப் பாட்டுரிமைக் கொள்கைக்கு வடிவம் கொடுத்து வளர்க்கும் அன்புருவர். சங்கம், சாலை, சபை என மூன்று அமைப்புகளாலும் பெரும்பணி செய்த பேரருளாளர், இந்திய மறுமலர்ச்சிச் சிந்தனையாளர்களில் முதன்மையானவர். புதுமைக் கவி பாரதிக்கு முன்னோடி இராமலிங்க அடிகளாரின் திருவருட்பா ஒதுவதற்கும், நுகர்வதற்கும் எளியது. கல்லார்க்கும், கற்றார்க்கும் களிப்பு அளிக்கும்.
இவ்வாறு சமுதாய மறுமலர்ச்சிக்காக சுத்த சன்மார்க்க நெறியைப் பரப்பிய இராமலிங்க அடிகளாரின் திருவருட்பாவை மருட்பா எனக் கூறி முரண்பட்டவர்களும் இருந்தனர். இவர்களுள் ஆறுமுக நாவலர் குறிப்பிடத்தக்கவர். 1867 ஆம் ஆண்டுக்குப் பின்னரே (அருட்பா வெளியாகிய பின்) கருத்து முரண்பாடு அதிகம் ஏற்பட்டது. இதனால் அடிகளாருக்கும், நாவலருக்கும் குழுக்கள் தோன்றின. நாவலரின் சார்பாக, போலியருட்பா மறுப்பு, முதலியன எழுதப்பட்டன. இக்கருத்து வேறுபாட்டால் 1870 ஆம் ஆண்டு, நீதி மன்றம் வரை செல்ல வேண்டியதாயிற்று. வழக்கு விசாரணையில் அடிகளாருக்குச் சார்பாகவே நீதி வழங்கப்பட்டது. (நி.நி.)
O
திருவல்லம்
பாடல் பெற்ற தொண்டை நாட்டுத் தலங்களுள் திருவல்லமும் ஒன்று. நீவாநதி என்னும் பொன்னையாற்றின் கரையில் சாலையோரத்திலேயே கோயில் உள்ளது. இந்நதி ஓடிச் சென்று பாலாற்றில் ஒன்றாகிறது. இறைவன் தீர்த்தத்தின் பொருட்டு “நீ, வா’ என்றழைக்க இந்நதி அருகில் ஓடி வந்து பாய்ந்ததால் இப்பெயர் பெற்றது. “நீ, வா' காலகதியில் மருவி நிவா நதியாயிற்று. இன் நதியிலிருந்துதான் பண்டை நாளில் சுவாமிக்குத் தீர்த்தம் கொண்டுவரப்பட்டது. இப்போது கோயிலுக்குள் கெளரி தீர்த்தமும், தீர்த்தக் கிணறும் உள்ளன.
இத்தலம் வில்வவனம், வில்வாரணியம் எனப்படுகிறது. ஒரு காலத்தில் வில்வக்காடாக இப் பகுதி காணப்பட்டது. அக்காட்டில் இருந்த மண்புற்று ஒன்றன்மேல் நாள்தோறும் ஒரு பசு பாலைச் சுரந்து வந்தது. புற்றுக்கரைந்து அதனின்றும் சிவலிங்கம் வெளித் தோன்றியது. அதுவே இத்தலத்து இறைவனாக வழிபடப் பெறும் வில்வநாதீச்சுவரரின் சிவலிங்கத் திருமேனி, வல்லத் துறையும் எம் பெருமான் வல்லநாதர் எனவும் அழைக்கப்படுகிறார். கோயிலுக்குள் பலாமரங்களும், தென்னை மரங்களும் உள்ளன. தொலைவில் இருந்து பார்க்கும் போது பசுமையான சோலைகளுக்கிடையே கோயில் இருப்பது கண்ணுக்கு அழகான காட்சியாகும். பழைய கல்வெட்டில் இக்கோயில் ‘தீக்காலிவல்லம் என்று குறிப்பிடப்பட்டுள்ளதாகச் சொல்லப்படுகிறது. (சீர்காழிக்குப் பக்கத்தில் வல்லம் என்றொரு ஊர் இருப்பதால் அதனின் வேறாக இதை அறிவதற்காக)
152

புராண வரலாறு
இத் தலத்தைப் பற்றி பல புராணச் செய்திகள் உள்ளன. நாரதர் சிவபெருமானிடம் அளித்த மாங்கனியைப் பெறுவதற்கு விநாயகப் பெருமான் இத்தலத்தில் சிவசக்திகளை வலம் வந்து கனியைப் பெற்றார் என்பதும், ஒளவையார் கிடைத்தற்கரிய நெல்லிக் கனியை இவ்விடத்தில் பெற்றார் என்பதும், திருமால் நவக்கிரகங்கள் முதலான பல தேவர்கள், முனிவர்கள் இத்தல இறைவனை வழிபட்டனர் என்பதும் சில புராண நிகழ்ச்சிகள்.
இத்தலத்துறையும் வில்வநாதீஸ்சுவரர் திருமஞ்சனத்திற்காக கோயில் அர்ச்சகர் நாள் தோறும் அருகில் உள்ள கஞ்சனகிரிக்குச் சென்று நீர் கொண்டு வருவது வழக்கம், அம்மலையில் வாழ்ந்த கஞ்சன் என்னும் அரக்கன் அர்ச்சகருக்குத் தொல்லை கொடுத்து வந்தான். அர்ச்சகர் சிவபெருமானிடம் முறையிட்டார். சிவபெருமான் நந்தி தேவரை அழைத்து அரக்கனை அழிக்கப் பணித்தார். நந்தி தேவர் தம் கொம்புகளால் அவன் உடலைக் கீறி அழித்தார். அரக்கனது உடற்கூறுகள் மலையின் பல பகுதிகளிலும் வீழ்ந்து அதன் இரத்தத் துளிகள் எங்கும் சிந்தி சிவலிங்கங்களாக மாறின. நந்தி தேவர் அவற்றை அப்படியே ஆவாகனம் செய்து கோயிலுக்குத் திரும்பினார். திரும்பியவர் கிழக்குத் திசை நோக்கியே அமர்ந்துவிட்டார். இறக்கும் தறுவாயில் கஞ்சன் சிவபெருமானை வேண்ட அவனது உடற்கூறுகள் விழுந்த இடம் எங்கும் அவனுக்கு தரிசனம் கொடுத்து மோட்சமும் கொடுத்தார். கஞ்சனுக்கு இறைவன் அருள் புரிந்ததன் நினைவாக ஆண்டு தோறும் தைத் திங்கள் மூன்றாம் நாள் முதல் பத்தாம் நாள் வரை கஞ்சன் உடற்கூறுகள் விழுந்த பல இடங்களுக்கு வில்வநாதீஸ்வரர் எழுந்தருளிக் கடைசி நாளன்று கஞ்சன் மலையில் கஞ்சனுக்கு மோட்சம் தரும் ஐதீகத்தில் திருவிழா நடைபெறும். ஆண்டு தோறும் சித்திரை முழுநிலவன்று ஆயிரக் கணக்கான பக்தர்கள் கஞ்சன் மலைக்குச் சென்று அபிஷேக ஆராதனைகள் செய்விக்கின்றனர். நள்ளிரவில் வடதிசையில் மூன்றடி உயரத்தில் ஒரு ஜோதி தோன்றி வளர்ந்து பின் மறைகிறது. இந்த ஜோதி தரிசனத்திற்காகவே பெருமளவு மக்கள் கூடுகின்றனர்.
இத்தலத்து உறையும் அன்னை மிக உக்கிரத்துடன் காணப்பட்ட போது,ஆதி சங்கரர் இத்தலமேகி இறைவியை வேண்டி அவரது உக்கிரத்தைத் தணித்தார் என்றும் கூறப்படுகிறது. திருஞான சம்பந்தர் தாம் பாடிய இத்தலப் பதிகம் ஒன்றிலே அமைந்த பாடல் ஒன்று:
"கொய்தவம் மலரடி கூடுவார்தம்
மைதவழ் திருமகள் வணங்கவைத்துப் பெய்தவன் பெருமழை உலகம் உய்யச்
செய்தவன் உறைவிடம் திருவல்லமே”
பஞ்சம் ஏற்படின் இங்குள்ள பாதாள லிங்கேஸ்வரருக்கு நறுமணம் மிக்க மலர்களினால் அவரைப் பூஜித்து வேண்டி
இந்துக் கலைக்களஞ்சியம்

Page 183
நிற்பின் திருமகள் செல்வச் செழிப்பினை அருளுமாறு பெருமழை பெய்யும் என உணர்த்துகிறார். இது இத் தலத்தின் தலையாய சிறப்பு கெளரி, மகாவிஷ்ணு, சனகமுனிவர் ஆகியோர் வழிபட்டுப் பேறுபெற்ற தலம். அவர்கள் வழிபட்ட சிவலிங்கங்கள் கோயிலுள்
உள்ளன.
கோயில்
இறைவன் - வில்வநாதீச்வரர், வல்லநாதர் இறைவி - தனுமத்யாம்பாள், வல்லாம்பிகை தலமரம் - வில்வம் தீர்த்தம் - கெளரி தீர்த்தம், நிவாதீர்த்தம்
கோயிலுக்கு முன்புள்ள மண்டப முனைப்புடன் அழகான ஐந்தடுக்கு ராஜகோபுரம் தெற்கு நோக்கியுள்ளது. கோபுரத்தின் முன்புற மண்டபத்தில் மேற்குப் பகுதியில் மெளன குருசாமிகள் மடமும், பால கணபதி சிற்றாலயமும் அமைந்துள்ளன.
கோபுர வாயிலைக் கடந்து உட்சென்றதும் கிழக்கில் கெளரி தீர்த்தக் குளம் நடுமண்டபத்துடன் விளக்குகிறது. இடப்பால் அம்பிகேஸ்வரர் உடனாய ராஜேஸ்வரி ஆலயம் உள்ளது. இது பிற்காலத்தில் மெளனகுரு சுவாமிகளால் பிரதிஷ்டை செய்யப்பட்டது.
உள்கோபுரம் மூன்று நிலைகளைக் கொண்ட கோபுரத்தையுடையது. உள்நுழைந்து பிராகாரத்தில் வலமாக வரும்போது உற்சவர் மண்டபம் உள்ளது. பக்கத்தில் காசி விசுவநாதர் சந்நிதியும், அடுத்து சந்திர மெளலீசர் சந்நிதியும் உள்ளன. இவ்விரு சந்நிதிகளிலுமுள்ள சிவலிங்கங்கள் மிகச் சிறியவை. அடுத்துள்ள "ஸ்வரர் சந்நிதியிலுள்ள சிவலிங்கத் திருமேனி பெரியது. இதற்குப் பக்கத்தில் சதாசிவர், அனந்த, பூரீ கண்டர், அம்பிகேஸ்வரர் என்னும் பெயர்களில் சிவலிங்கங்கள் வரிசையாக உள்ளன.
இதனை அடுத்து சிறிய அழகான சகஸ்ரலிங்கம் உள்ளது. ஆறுமுகப் பெருமான் வள்ளி தெய்வயானையுடனான பிரதிஷ்டையும், மூலையில் அருணகிரிநாதர் உருவமும் உள்ளன. இதன் பக்கத்தில் குருஈஸ்வரர், விஷ்ணுஈஸ்வரர், விதாதா ஈஸ்வரர் என்னும் பெயர்களைக் கொண்ட சிவலிங்கங்கள் வரிசையாக உள்ளன. அடுத்துள்ளது வாகன மண்டபம்.
இதற்கு எதிரில் 'ஆதிவில்வநாதேஸ்வரர் சந்நிதி” தனிக் கோயிலாகவுள்ளது. இதன் அருகில் நெடுங்காலமாக இருந்து வரும் பலாமரம் ஒன்றுள்ளது, இதுவன்றிப் பிற்காலத்தில் வைத்து
உண்டாக்கப்பட்ட பலாமரங்களும் உள்ளன.
வலமாக வரும்போது அம்பாள் சந்நிதி முன்மண்டபத்துடன் கிழக்கு நோக்கியுள்ளது. கருவறை அகழி அமைப்புடையது. கோஷ்ட மூர்த்தமாக விநாயகர், அன்னபூரணி, அபய, வரதகரங்களுடன் அம்பாள் துர்க்கை ஆகியோர் உள்ளனர். எதிரில் சண்டிகேஸ்வரி சந்நிதி உள்ளது. சந்நிதி எதிரில் தலமரம் வில்வம் உள்ளது. சுந்தரேஸ்வரர் சந்நிதி கிழக்கு நோக்கியதாகத்
இந்துக் கலைக்களஞ்சியம்

தனிக் கோயிலாக உள்ளது. மீனாட்சியம்மை தெற்கு முகதரிசனம், கருவறைக் கோஷ்ட மூர்த்தங்களாகத் தட்சிணா மூர்த்தி, விஷ்ணு, பிரமன் துர்க்கை முதலிய மிகச் சிறிய திருவுருவங்கள் உள்ளன. சண்டேஸ்வரர் உள்ளார்.
பிராகாரத்தில் யாகசாலையும், பைரவர், சூரியன் சந்நிதிகளும் உள்ளன. கொடிமரம் செப்புக் கவசமிடப்பட்டுள்ளது. இங்குள்ள பெருமானை விஷ்ணு வழிபட்டதால் அவரது பாதம் பத்மபீடத்தில் கொடி மரத்தின் முன்பு உள்ளது. கொடிமரத்தின் பின்னால் உள்ள நந்தி கிழக்கு நோக்கியுள்ளது. இதற்குப் பின்னால் நின்ற நிலையில் அதிகார நந்தி சுவாமியைப் பார்த்தபடி உள்ளது. மூவர் சந்நிதியில் உள்ள நந்தியும் கிழக்கு நோக்கிய வண்ணம் உள்ளது. (கஞ்சனை அழித்தபின் காவலுக்காக கிழக்கு நோக்கி அமர்ந்துள்ளார் என்பது ஐதீகம்)
மூலவர் சந்நிதி வாயிலில் நுழைந்தவுடன் நேரே சிவலிங்கத் திருமேனியைக் காணலாம். சுயம்பு சதுர ஆவுடை கிழக்கு நோக்கியது. சுவாமிக்கு நேரே வெளியில் இங்கு வழிபட்ட சனகமுனிவரின் திருவோடு பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. கருவறை அகழி வடிவுடையது. கருவறைச் சுவரில் கல்வெட்டுகள் அதிகம் உள்ளன. கோஷ்டமூர்த்தமாக விநாயகர், தட்சிணா மூர்த்தி, மகாவிஷ்ணு, பிரமன் உள்ளனர். அறுபத்து மூவர் திருமேனிகள் மேலும் கீழுமாக இரு வரிசையில் வைக்கப் பட்டுள்ளன. மூலவர் சந்நிதியில் உள்ள துவாரபாலகர்கள் உருவங்கள் சிற்பக் கலையழகு மிகுந்தவை. இவற்றுள் ஒன்று ஒரு கையை மேலுயர்த்தி நடன பாவ முத்திரையுடன் இருக்கின்றது.
உள்வீதியிலே வலப்பால் சங்கர நாராயணர் திருவுருவமும் இடப்பால் பாதாளேஸ்வரர் சந்நிதியும் உள்ளன. பஞ்சம் நேரின் இப்பெருமானுக்கு ஒரு மண்டலம் அபிஷேகம் செய்யின் மழை பெய்யும் என்று சொல்லப்படுகிறது.
சந்நிதிக்கு வெளியில் நடராஜ சபையும் அடுத்து நவக்கிரக சந்நிதியும் உள்ளன. நடராஜ மூர்த்தம் உருண்டை வடிவான பிரபையுடன் அழகாகவுள்ளது. இங்குள்ள கொடிமரத்திற்கு வலமாக அகோர வீரபத்திரர் சந்நிதி உள்ளது. இங்குள்ள இரு உருவங்களில் ஆதி உருவம் சுவரில் உள்ளது. புதிய பிரதிஷ்டை முன்னால் உள்ளது. பக்கத்தில் நால்வர் பிரதிஷ்டை அடுத்து சனிபகவான் சந்நிதி உள்ளது. இதற்குப் பக்கத்தில் பத்ம பீடத்தில் விநாயகர் அமர்ந்துள்ளார். இறைவனிடம் கணிபெற்ற வரலாற்றை நினைவுகூரும் வகையில் கையில் மாங்கனியுடன் அமர்ந்துள்ளார்.
பங்குனியில் பெருவிழா நடைபெறுகிறது. தைத் திங்கள் கஞ்சனுக்குத் தரிசனம் தரும் விழா, ஆணித் திருமஞ்சனம், மார்கழித் திருவாதிரை, ஆடிப்பூரம், நவராத்திரி, மாசி மகம் அனைத்தும் சிறப்புடன் கொண்டாடப்படுகின்றன. நாள் தோறும் நான்கு கால வழிபாடு இடம் பெறுகிறது.
153

Page 184
“எரித்தவன் முப்புரம் எரியின் மூழ்கத் தரித்தவன் கங்கையைத் தாழ்சடை மேல் விரித்தவன் வேதங்கள் வேறு வேறு தெரித்தவன் உறைவிடம் திருவல்லமே”
என்று திருஞானசம்பந்தர் இத்தலத்திறைவனைப் பாடியுள்ளார். (நி.நி.)
. O O திருவல்லிக்கேணி
சென்னையின் கடற்கரையோரமாய் அமைந்துள்ள திவ்விய தலம் இதுவாகும். "மாடமாமயிலைத் திருவல்லிக்கேணி’ என்று திருமங்கையாழ்வாரும் 'மாமயிலை மாவல்லிக் கேணியான்” என்று திருமழிசையாழ்வாரும் இத்தலத்தைக் குறித்துள்ளதால் இது ஆதியில் மயிலையின் ஒரு பகுதியாக விளங்கிற்று எனலாம்.
அல்லிக் கேணிகள் நிரம்பியிருந்த தலமாதலால் திருவல்லிக்கேணி எனப் பெயர்பெற்றது. ஆலயம் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது.
இங்கு ஆதிபீடமாக அமைந்துள்ளவர் பூரீ ரங்கநாதரே என்பர். ஒருகாலத்தில் இப்பிரதேசம் துளசிச்செடிகள் அடர்ந்த காடாயிருந்தமையால் பிருந்தாரண்ய சேத்திரம் எனப்பெயர் பெற்றது. ஒரு சிறு கலகம் காரணமாகத் திருமகள் பாற்கடலில் திருமாலைப்பிரிந்து இத்தலத்தில் குழந்தை வடிவாகக் கிடந்தாள். அங்கே தவம் செய்து கொண்டிருந்த பிருகு முனிவர் அக்குழந்தையை எடுத்து வளர்த்து வந்தார். அப்பெண் குழந்தை வேதவல்லி என்ற பெயரோடு வளர்ந்தாள். எம்பெருமான் இராஜபுத்திரனாக எழுந்தருளி அவளை மணந்து கொண்டார் என்று புராணங்கள் எடுத்தியம்பும்.
இங்கு எழுந்தருளியுள்ள பெருமாள் பார்த்தசாரதி; தாயார் ருக்குமணிப் பிராட்டி, பெருமாள் நின்ற திருக்கோலத்தில் காட்சியளிக்கின்றார். வியாசர் இத்திருமேனியை வழிபட்டு மகிழ்ந்தார் என்பது செவி வழிச் செய்தி. தொண்டைமான் ராஜாவின் வேண்டுகோளின் படி திருவேங்கடமுடையான் இங்கே கண்ணனாக எழுந்தருளி அவனுக்குக் காட்சியளித்ததாகக் கூறப்படுகின்றது. வேங்கட கிருஷ்ணன் என்ற திருநாமம் பெருமானுக்குண்டு. கம்பீரமான தோற்றத்துடன் அரசனின் பிரார்த்தனைக்கிரங்கி அர்ஜூனனுக்கு சாரதியம் செய்யும் . கோலத்தில் வலது கையில் பாஞ்சஜன்யமும் இடது கையில் வரத் ஹஸ்தமாகவும் நின்ற கோலத்தில் காட்சி அளிக்கின்றார் பார்த்த சாரதி. பக்கத்திலே ருக்மணிப் பிராட்டியார். பிராட்டிக்குப் பக்கத்திலே ஒருகை கலப்பையும் மற்றொரு கை வரத ஹஸ்தமாயும் பலராமர் நிற்கிறார். பெருமானுக்கு வலதுபக்கமாக சாத்யசி, பிரத்யும்னன், அநிருத்தன் முதலானோர் எழுந்தருளியுள்ளனர்.
வேறெந்தத் திருப்பதியிலும் காண முடியாத சேவை பார்த்த சாரதியின் சேவை. மூலமூர்த்தியின் திருவுருவமே பகவத் கீதையின் சொரூபம் என்பார்கள்.
154

திருமங்கையாழ்வார் உள்ளிட்ட பல ஆழ்வார்கள் இத்தலப் பெருமையைத் தத்தம் பாசுரங்களில் பாடியுள்ளார்கள். திருமங்கையாழ்வார் திருவல்லிக் கேணி பற்றி பத்துப் பாசுரங்கள் பாடியுள்ளார். “விற் பெரு விழவும்” என்று தொடங்கும் பதிகத்தில் திருமங்கையாழ்வார் இத்தல மகிமையை உள்ளம் உருகப் பாடியுள்ளார். “சிற்றவை பணியால் முடிதுறந்தானைத் திருவல்லிக் கேணி கண்டேனே' என்றும் வரும் பாசுரப் பகுதிகள் மனங் கொள்ளத்தக்கவை.
திருவல்லிக் கேணியாகிய இவ்வைணவத் திருப்பதி சென்னை மாநகரின் கீழ்பால் அமைந்துள்ளது. நந்திவர்மன் கல்வெட்டொன்று (8ஆம் நூற்றாண்டு) ஆலயத்தின் துவஜஸ்தம்பத்தில் உள்ளது. இப்போது இருக்கும் ஆலயம் கி. பி. 1564 இல் திருப்பணி செய்யப்பட்டது. விஜயநகர அரசர்கள் இந்தக் கோயிலுக்கு பல நன்கொடைகள் அளித்தனர். (தே.ஹ.)
திருவலிதாயம்
தொண்டை நாட்டுத் தலம். தற்போது சென்னைக்கு அருகில் உள்ள பாடி என்ற இடமே திருவலிதாயம் என்னும் இடமாகும்.
இந்திரன், சூரியன், சந்திரன், ஆஞ்சநேயர், இராமர், பரத்வாசர் ஆகியோர் வழிபட்டுப் பேறு பெற்ற இடம். தலபுராணக் குறிப்பின்படி பரத்வாசர் வலியனாக (கருங்குருவி) சாபம் பெற்றார். சாப நீக்கத்தின் பொருட்டு இத்தலத்திற்கு வந்து தீர்த்தம் உண்டாக்கி இறைவழிபாடு செய்து சாபம் நீங்கப் பெற்றார் என்று கூறுகின்றது.
கோயில்
இறைவன் - வல்லிஸ்வரர், வலிதாயநாதர் இறைவி - ஜகதாம்பாள், தாயம்மை தலமரம் - பாதிரி தீர்த்தம் - பரத்வாஜ தீர்த்தம்
மூன்று நிலைகளுடன் ģill?L ராஜகோபுரம், வெளிப்பிராகாரத்தில் சந்நிதி எதுவும் இல்லை. ராஜகோபுரம் வழி உட்சென்றதும் வலப்பக்கத்தில் நவக்கிரக சந்நிதி உள்ளன. நவக்கிரக சந்நிதிக்கு எதிரில் தீர்த்தக் கிணறு உள்ளது. கிணற்று நீர் மிகுந்த சுவையுடையது என்று கூறப்படுகின்றது. உட்புற வாயிலைக் கடந்ததும் இடப் பக்கத்தில் அருணகிரிநாதரின் திருமேனியும் அவர் இத்தலத்துப் பாடிய திருப்புகழும் காணப்படுகின்றன.
பிராகாரத்தில் விநாயகர் சந்நிதி; இடத்தில் சோமாஸ்கந்தர் சந்நிதி உள்ளது. அவ்வாறே சுப்பிரமணியர் சந்நிதியும் முன்னால் உரிய இடத்தில் அமைவு பெறாமல் கருவறைப் பின்புறத்திற்கு எதிரில் அமைந்துள்ளது. சுப்பிரமணியருக்கு சிவலிங்கத்
இந்துக் கலைக்களஞ்சியம்

Page 185
திருமேனி உள்ளது. பக்கத்தில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் உள்ளார். 63 நாயன்மார்கள் முழுவதும் இல்லை. சில திருமேனிகளே உள்ளன. பரத்வாஜர் வழிபட்ட சிவலிங்கமும் உள்ளது. அடுத்து நால்வர் பிரதிஷ்டை, பைரவர், விநாயகர் சந்நிதிகள் உள்ளன. நடராஜர் சந்நிதிக்கு பக்கத்தில் அம்பாள் சந்நிதி உள்ளது. இரு சந்நிதிகளும் தெற்கு நோக்கிய வண்ணம் உள்ளன.
துவார பாலகர்களைக் கடந்து தரிசித்து உள்ளே சென்றால் மூலவர் காட்சி தருகிறார். கிழக்கு நோக்கிய சந்நிதி, ஆவுடை சதுரவடிவுடையது. கருவறையின் உள்இடம் விசாலமானது. பழைய அம்பாள் பின்னமாகிவிட்டதால் புதிய அம்பாள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. எனினும் பழைய அம்மனை வெளியேற்றி விடாமல் அத்திருமேனி மூலவருக்குப் பக்கத்தில் ஒர் மூலையில் வைக்கப்பட்டுள்ளது. கோஷ்ட மூர்த்தங்களாக விநாயகர், தட்சிணாமூர்த்தி, மகாவிஷ்ணு, துர்க்கை, பிரம்மா ஆகியோர் காட்சியளிக்கின்றனர். சண்டேஸ்வரர் சந்நிதியும் உள்ளது.
அம்பாளின் நின்ற நிலை அழகான தோற்றம். ஒரே இடத்தில் நின்று அம்பாளையும் சுவாமியையும் தரிசிக்கக் கூடிய வகையில் அமைந்துள்ளது. சித்திரைப் பெளர்ணமியில் பத்து நாட்களுக்குப் பெருவிழா நடைபெறுகிறது.
"கடலின் நஞ்சம் அமுதுண்டு இமையோர்
தொழுதேத்த நடமாடி அடல் இலங்கை அரையன் வலிசெற்று
அருள் அம்மான் அமர்கோயில் மடல் இலங்கு கமுகின் பலவின் மது விம்மும் வலிதாயம் உடல் இலங்கும் உயிர் உள்ளளவும்
தொழ உள்ளத் துயர் போமே”
என்று சம்பந்தப் பெருமான் இத்தலத்தில் எழுந்தருளியிருக்கும் இறைவனைப் போற்றிப் பாடியுள்ளார். (நி.நி.)
திருவாதவூரடிகள் புராணம்
திருஞானசம்பந்த மூர்த்தி சுவாமிகள் முதலிய சமயகுரவர் நால்வருள் ஒருவராகிய மணிவாசகரின் திவ்ய சரித்திரத்தை விளக்கிக் கூறும் நூல் திருவாதவூரடிகள் புராணமாகும். மணிவாசகர் பிறந்த ஊர் திருவாதவூர். இதனால் இவருக்கு திருவாதவூரர் எனப் பெயர். இந்நூல் பதினெண் புராணங்களுட் சிறந்த கந்தபுராணத்தினுள்ள ஆலாசிய மான்மியத்தினைத் தழுவி எழுதப்பட்டது எனவும் கூறுவர். இந்நூல் கடவுண் மாமுனிவரால் அருளிச் செய்யப்பட்டது. இதன் ஆசிரியர் சிவஞான முனிவரின் முதல் மாணாக்கராகிய கச்சியப்ப முனிவர் காலத்தவர். இவர் உடம்பில் பிணி தொல்லையுறுத்துவதைக் கண்ட கச்சியப்பர் இவரைத் திருவாதவூரர் புராணத்தை பாடச்செய்தார் என்பர். இந்நூலுக்கு அ. குமாரசுவாமிப் புலவர், ம.க. வேற்பிள்ளை என்ற இலங்கையைச் சேர்ந்த இரு வித்துவான்கள் உரை எழுதியுள்ளனர்.
இந்துக் கலைக்களஞ்சியம்

இந்நூல் எட்டுச் சருக்கங்களாக வகுக்கப்பட்டு மணிவாசகரின் பெருமைகளையும், அவரது ஞான அறிவையும், அவர் பாடிய திருவாசகத்தின் பெருமையினையும், அவரது திருவடிபட்ட திருத்தலங்களின் சிறப்பினையும், சைவசித்தாந்தக் கருத்துக்களையும் எடுத்துக் கூறுவனவாக அமைந்துள்ளது. (1) பாயிரம் (2) மந்திரிச் சருக்கம் (3) திருப்பெருந்துறைச் சருக்கம் (4) குதிரையிட்ட சருக்கம் (5) மண்சுமந்த சருக்கம் (6) திருவம்பலச் சருக்கம் (7) புத்தரை வாதில் வென்ற சருக்கம் (8) திருவடி பெற்ற சருக்கம் என்பன இந்நூலின் கண்அமைந்துள்ள சருக்கங்களாம்.
நூலின் உட்பொருள்:- காப்புக்கூறி நூலை ஆசிரியர் ஆரம்பிக்கின்றார். இன்றும் புராணம் படிக்கும் முன் ஆலயங்களில் காப்புக் கூறி விநாயகரை வேண்டியே புராணப் படிப்பினைத் தொடங்குவர்.
பவளமால் வரையி னிலவெறிப் பதுபோற்
பரந்த நீற்றழகுபச் சுடம்பிற றிவளமா துடனரின் றாடிய பரமன்
சிறுவனைப் பாரதப் பெரும் போர் தவளமா மருப்பொன் றொடித்தொரு கரத்திற்
தரித்துயர் கிரிப்புயத் தெழுதுங் கவளமா களிற்றின் திருமுகம் படைத்த
கடவுளை நினைந்துகை தொழுவாம்”
எனக் காப்புக் கூறிப் பின் சபாபதி சிவகாமியம்மை சுப்பிரமணியக் கடவுள் என்போரை வாழ்த்தி, பின் நூலின் கதை தொடங்குகிறது. கடவுள் வாழ்த்து முழுமையும் சந்தப்பாடல் களாலானது. சந்தங்கள் எளியனவாய் சொல்லையோ சீரையோ சிதைக்காதனவாய் உள்ளன.
இந்நூலின் பயனும் இங்கு கூறப்படுகின்றது. இப் புராணத்தினை அன்பு கூர்ந்து வாசிப்பவர்கள், பொருள் சொல்பவர்கள், செவிமடுப்பவர்கள், மனதாற் சிந்திப்பவர்கள் இப்பிறப்பில் மனமகிழ்வுடன் பூமியைப் பாதுகாப்பர். தேகம் நீங்கிய பின் சிவலோகத்தில் சிவ சந்நிதியில் வாழ்வர் என்பதே அப் பயனாகும்.
மந்திரிச் சருக்கத்தில் நாற்பது பாடல்களில் பாண்டிய நாட்டின் சிறப்பினையும் பாண்டிய நாட்டில் வேதங்களை ஒதும் பிராமணர்கள் வாழும் திருவாதவூரின் சிறப்பினையும் ஆசிரியர் வர்ணித்துள்ளார். இங்கு வாதவூரடிகளின் பிறப்பு கூறப் படுகின்றது. இவர் பிராமண வருணத்தில் அமாத்தியரது குடியில் சைவசமயத்தினரான சம்புபாதாசிரியர், சிவஞானவதி தம்பதியினர்க்கு மகனாகப் பிறந்தார். இவர் இளம் வயதில் சிவாகமங்களையும், ஞான நூல்களையும் நன்கு கற்றவராகக் காணப்பட்டமையால் அரசன் தனது அவையின் மந்திரி யாக்கினான். பின் இவரது திறமை கண்டு முதன் மந்திரி என்ற
155

Page 186
பதவியையும் 'தென்னவன் பிரம்மராயன்' என்ற பட்டத்தையும் வழங்கினான். முதலமைச்சரான இவரிடம் அரசின் திரவியங்களைக் கொடுத்து குதிரைப்படை கொள்வனவு செய்துவர அனுப்பிவைத்தான். இச்சருக்கத்தில் மந்திரியான கதை வரை கூறப்பட்டிருப்பதால் மந்திரிச் சருக்கம் எனப்படுகிறது.
ஒரு சருக்கம் முடிந்த பின் அடுத்த சருக்கம் ஆரம்பிக்கும் போது இக்கதையைச் “சொல்லுவாம்” எனக் குறிப்பிடுகின்றார். “உயர் பெருந்துறையடைந்தபடி சொல்வோம்” என திருப் பெருந்துறைச் சருக்கத்தில் திருவாதவூரடிகள் திருப்பெருந்துறை இறைவனின் அருள் வேண்டி நிற்பதைக் கூறத்தொடங்கு கின்றார் ஆசிரியர். இவ்வாறாக திருவாதவூரரின் வரலாறு முழுவதையும் புராணப் பாங்கில் கூறிமுடிக்கிறார் கடவுண்மா முனிவர். தாம்பாடிய திருவாசகங்களையெல்லாம் வாதவூரர் சிவபெருமானுக்குக் கூற அவர் அதனை எழுதி முடித்து ஆலயத்தின் வாசியில் வைத்து விட்டு மறைந்துவிட்டார். அதனைக் கண்ட வாதவூரர் அதிசயித்தார்; அழுதார், பின் சித்தாந்த சைவ சுத்தாத்துவித முத்தியடைந்தார் என இந்நூல் முடிவு பெறுகின்றது. வாதவூரடிகளின் பிறப்பும் அவரது திருவாழ்வும் முத்தியும் இந் நூலில் புராண இலக்கிய மரபிற்கமைய கூறப்பட்டுள்ளன. (இ.ச.)
O
திருவாதவூரர்
பாண்டி நாட்டிலுள்ள திருவாதவூரில் அமாத்திய குலத்தில் சம்புபாதாசிரியர் - சிவ ஞா ன வ தி யா ரு க் கு ப் புதல்வராக அவதரித்தார் திருவாதவூரர். வேதநெறியும், சிவாகம நெறியும் விளங்குவதற்கும் புறச்சமயமாகிய | آبی புத்த இருள் சிதறி ஓடுவதற்கும் இப்பிள்ளை அவதரித்ததாக பரஞ்சோதி முனிவர் குறிப்பிடுகின்றார். மேலும் தனது பதினாறு வயதுக்குள்ளாகவே ஆயகலைகள் அறுபத்து நான்கினையும் கற்றுத் தேர்ந்தார் என்றும் கூறுகிறார். இவரது அறிவு ஆற்றல், கீர்த்தி என்பன அக்காலத்தில் மதுரையைத் தலைநகராகக் கொண்டு ஆண்டு
வந்த அரிமர்த்தன பாண்டியன் செவிக்கு எட்டுகின்றன. அவரைத்
தன் அமைச்சராக்கிக் கொண்ட
156
 

துடன் தென்னவன் பிரமராயன் என்ற விருதையும் அளித்து கெளரவித்தார்.
இளமைக் காலத்தில் பாண்டிய மன்னனின் முதலமைச் சராக விளங்கிய அவர், தமது பதவிக்குரிய செல்வ வாழ்வை வாழ்ந்திருப்பார் என்பதை உணர்ந்து கொள்ளலாம். ஆயின் இறைவனால் ஆட்கொள்ளப்பட்ட பின் தன் கடந்த கால வாழ்வை எண்ணிக் கழிவிரக்கப்பட்டார் என்பதைத் திருவாசகத்தினூடாக அறிந்து கொள்ளக் கூடியதாக உள்ளது.
'நெறியல்லா நெறி தன்னை நெறியாக நினைவேனை சிறு நெறிகள் சேராமே திருவருளே சேரும் வண்ணம் குறியொன்று மில்லாத கூத்தன் தன் கூத்தை எனக்கு அறியும் வண்ணம் அருளியவாறு ஆர்பெறுவார் அச்சோவே'
என்று பாடியிருப்பது சிந்தனைக்குரியது. அவரது மனதை உறுத்தி நின்ற நெறியல்லா நெறி எது. புணர் முலையார் போகத்தே மையலுறக் கடவேன் என்றும், பஞ்சாய அடிமடவார் கடைக்கண்ணால் இடர்ப்பட்டு நெஞ்சாய இடர் கூர நிற்பேன் என்றும், கொந்து கோல் வளையார் குவிமுலை மேல் வீழ்வேன் என்றும், தையலார் மையலிலே தாழ்ந்து விழக்கடவேனை என்றும், காதல் மிக்கு அணியிழையார் கலவியிலே விழுவேனை என்றும் தமது நெறியல்லா நெறியினை வெளிப்படுத்திக் கழிவிரக்கமடைகிறார்.
அரச செல்வாக்குடன் உலகியல் இன்பங்களைத் துய்த்து வாழ்ந்தவர் திருவாதவூரர். எனினும் அவர் தம் நெஞ்சத்தின் ஆழத்தில் ஒர் குறை இருந்தது. கடவுளை நாடிய ஏக்கம் இருந்தது. இன்நிலையில் மன்னனுக்காக குதிரை வாங்கப் பெரும் பொருளுடன் புறப்பட்ட திருவாதவூரருக்கு திருப்பெருந்துறையில் அந்தக் குறையும் தீரும் வழி பிறந்தது. சிவபெருமான் குருவடிவாய் எழுந்தருளி ஒரு குருந்தமர நிழலில் அடியார் கூட்டத்துடன் காணப்பட்டார். மாணிக்கவாசகர் அந்தப் பெருமானின் கருணை
நோக்கினால் கவரப்பட்டார்; குருவால் ஆட்கொள்ளப்பட்டார்.
"கண்ணால் யானும் கண்டேன் காண்க அருன்நன? சுரக்கும் அமுதே காண்க கருணையின் பெருமை கண்டேன் காண்க புவனியிற் சேவடி தீண்டினன் காண்க சிவனென யானும் தேறினன் காண்க
அவனெனை ஆட்கொண் டருளினன் காண்க”
என்று அவரே தான் பெற்ற பேற்றை விளக்கியுள்ளார். குருவடிவாய் வந்தவரின் திருவருளைப் பெற்றவுடன் திருவாதவூரர் புத்துணர்வு பெற்றார். உள்ளத்தில் ஆனந்த அனுபவம் பெற்றார். இந் நிலையில் ஆட்கொண்ட பெருமான் மறைந்தார். தெளிவு பெற்றுத்
இந்துக் கலைக்களஞ்சியம்

Page 187
தேடிய திருவாதவூரர் குருவைக் காணாது துடித்தார், ஏங்கினார், புலம்பினார், இந்த நிலைகளே அவர் பாடிய திருவாசகப் பாட்டுகள் பலவற்றில் காணப்படுவன. சிலவற்றில் அவர் பெற்ற ஆனந்த அனுபவம், வேறு சிலவற்றில் பெருமானை விட்டுப் பிரிந்த பிரிவாற்றாமை, இன்னும் சிலவற்றில் அவர் பெற்ற தெளிந்த மெய்யுணர்வு ஆகிய இம் மூவகைப் பொருள் அமைந்தவை
திருவாசகப் பாட்டுகள்.
“அரைசனே அன்பர்க்கு அடியனேனுடைய அப்பனே ஆவியோ டாக்கை புரைபுரை கனியப் புகுந்து நின்றுருக்கிப்
பொய்யிருள் கடிந்த மெய்ச்சுடரே திரைபொரா மன்னும் அமுதத்தெண் கடலே
திருப்பெருந் துறையுறை சிவனே உரையுனர் விறந்துநின் றுணர்வதோர் உணர்வே
யான் உன்னை உரைக்குமா றுணர்த்தே' இவ்வாறான பல பாட்டுகளில் அவர் பெற்ற ஆனந்தத்தை நினைந்து மகிழ்கிறார். குருவாக வந்தவர் தன்னையே திருவாதவூரருக்குத் தந்து அதற்கு ஈடாக அவரையே பெற்றுக்
கொண்டதாகச் சொல்கிறார்.
"தந்தது உன்றன்னைக் கொண்டது என்றன்னை”
என்று எடுத்துக் கூறுகிறார்.
குருபிரான் மறைந்த பிறகு பிரிவாற்றாமையினால் நைந்து உருகுகிறார். என்னை நீயே வலிய வந்து ஆட்கொண்டாய், அப்போது காணாத குற்றம் இப்போது என்னிடம் புதிதாகக் கண்டாயோ, என்னை இந்த மண்ணுலகில் தனியே வருந்துமாறு விட்டுச் சென்ற காரணம் என்ன? என்று முறையிடுகிறார். இவ்வாறு முறையிட்டதுடன் பிரிவாற்றாமல் வருந்துகிறார். மீண்டும் தம்மை ஆட்கொள்ள வேண்டும் என்றும் அவ்வாறு செய்யாவிடில் தாம் வாழ விரும்பவில்லை என்றும் புலம்புகிறார். யாரோடு நோகேன்? ஆர்க்கு எடுத்துரைக்கேன்? என்கிறார்.
அப்பர், சம்பந்தர் ஆகியோர் வாழ்ந்த சூழலுடன் ஒப்பிடும் பொழுது திருவாதவூரர் வாழ்ந்த காலச் சூழல் வேறு. அப்பர், சம்பந்தருக்கு அவர்கள் காலத்தில் வீறு கொண்டெழுந்த சமண சமயச் செல்வாக்கை முறியடிக்க வேண்டிய பெரும் பொறுப்பு இருந்ததுடன், பழந் தமிழ் மக்களின் சமயக் கொள்கைகளையும், வைதீக நெறியையும் பெளராணிகக் கோட்பாடுகளையும் இணைத்து ஒர் சமய மறுமலர்ச்சியை ஏற்படுத்த வேண்டிய தலையாய கடப்பாடும் இருந்தது. இதற்காக அவர்கள் பக்தி நெறியை பொதுமக்கள் இயக்கமாக மலரச் செய்து சைவ சமயத்திற்கு ஒரு இறுக்கமான அடித்தளத்தை இட்டார்கள். திருவாதவூரர் வாழ்ந்த காலத்தில் “தென்னாடுடைய சிவனே
இந்துக் கலைக்களஞ்சியம்

போற்றி” என்று கூறக் கூடிய அளவில் சைவசமயம் ஓர் சிறப்பான இடத்தைப் பெற்றிருந்தது. திருவாதவூரர் பெளத்தர்களை வாதில் வென்று அவர்களைச் சைவர்கள் ஆக்கினார் என்றாலும் சமணம் அளவிற்கு பெளத்தம் தமிழ் நாட்டில் கால் ஊன்றவில்லை. திருவாதவூரர் வாழ்ந்த காலத்தில் அரசியல், சமூக, சமய நிலைகளில் அமைதியும் செழிப்பும், வளமும் இருந்தன. எனவே இவருடைய பாடல்களில் இறைவனைக்காண வேண்டும் என்ற ஏக்கம் அவர் கண்ட பின் ஏற்பட்ட ஆனந்தம், குருவாக வந்த இறைவன் மறைந்த பின் ஏற்பட்ட துன்பம், இவையே இவரது பாடல்கள் முழுவதும் இழையோடிக் கிடக்கின்றன. அழுது அழுது அடிசேர்ந்தவர் திருவாதவூரர். எனவே அவரது பாடல்கள் அனைத்தும் ஊனினை உருக்கும் வகையில் அமைந்திருந் தமையில் வியப்பில்லை.
இவரால் பாடப்பட்ட திருவாசகமும், திருக்கோவையாரும் திருமுறைகளில் எட்டாம் இடத்தில் வைக்கப்பட்டுள்ளன. இவரால் பாடப்பட்ட திருவாசகம் பல தனிப் பண்புகளைப் பெற்று விளங்குகிறது. திருவாசகத்தேன், திருவாசகத்துக்கு உருகார் ஒரு வாசகத்திற்கும் உருகார், அல்லல் அறுத்து ஆனந்தம் ஆக்குவது எனப் பலவாறு போற்றப்படுகின்றது. திருவாசகப் பாடல்கள் பாடும் நாவிற்கு சுவையாகவும் பிறவிப் பிணிக்கு மருந்தாகவும் உள்ளது என்பர். ஐம்பத்தொரு பிரபந்தங்களையும் 656 பாடல்களையும் கொண்டது திருவாசகம். திருவாதவூரரின் பழுத்த அனுபவத்தின் வெளிப்பாடாக உள்ள திருவாசகத்தில் வாதவூரர் தனது ஆழ்ந்த இறைபற்றை இறைவனுக்கு உணர்த்துவதற்குப் பல உத்திகளைக் கையாண்டுள்ளார்.
இறைவனின் அருட் பெருமை, பண்புகள், குணங்கள், திருவிளையாடல்கள் இவற்றைக் கூறி அருளை வேண்டிநிற்கும் தன்மை எல்லாத் திருமுறைகளிலும் காணப்படும் பண்பு எனினும் திருவாசகத்தில் சில சிறப்பியல்புகளைக் காணமுடியும் இறைவனின் சர்வவியாபகத் தன்மை பற்றிக் குறிப்பிடும் திருவாதவூரர்,
"விண்நிறைந்து மண்நிறைந்து மிக்காய் விளங்கு ஒளியாய்
எண் இறைந்து எல்லை இலாதானே'
என்றும், இயம்பமுடியாத அவரது பெருமையை,
"சொல்லற்கு அரியானை சொல்லித் திருவடிக்கீழ்”
என்றும்,
இறைவனின் சிறப்புக்களையும், முழுமுதற் தன்மையையும் போற்றி நிற்கிறார். இறைவனின் பெருமையைக் கூறும் பொழுது
சொற்களை எதிர்மறையாகவும், உடன்பாடாகவும் வழங்கும் தன்மையை திருவாசகத்தில் அதிகம் காணமுடியும்.
157

Page 188
ஏகன் அனேகன், ஆக்குவாய் அழிப்பாய், வெய்யாய் தணியாய், சேயாய் நணியாய், அந்தமும் ஆதியும், அழிவதும் ஆவதும், போக்கும் வரவும் இவ்வாறு எதிர்மறையாகவும், உடன்பாடாகவும் சொற்களை அமைத்து இறைவன் சகலதுமாய் இருக்கும் தன்மையைப் புலப்படுத்துகிறார்.
சிவனால் ஆட்கொள்ளப்பட்ட திருவாதவூரர் அவனே முழுமுதற் கடவுள், அவனையன்றிப் பிறிதோர் தெய்வம் இல்லை என்று உறுதியாகக் கொண்டவர். மேலும் அப்பர், சம்பந்தர், காலத்தில் சைவம் வைணவம் ஆகிய மதங்கள் தமது உட்பகையைத் தவிர்த்து தமது பொது எதிரியான சமணத்துக்கெதிராகப் போராட வேண்டிய சூழல் இருந்தது. ஆனால் திருவாதவூரரின் காலத்தில் சைவம் தனக்கென ஒரு திடமான நிலைைைய எய்தியிருந்ததால் மீண்டும் உட்சமயப் பூசல்கள் கிளர்ந்திருக்க பிரமனும், திருமாலும் சிவனை முற்றிலும் அறியமாட்டார்கள் எனப் பல இடங்களில் சுட்டிக் காட்டுகின்றார்.
"பிரமன் மால் காணாப் பெரியோன் காண்க”
"அரியொடு பிரமற்கு அளவு அறியாதவன்”
'கொளேன் புரந்தரன் மால் அயன் வாழ்வு குடி கெடினும் நள்ளேன் நினது அடியாரொடு அல்லால் நரகம் புகினும் ”
இக் கூற்றுகள் அனைத்தும் அக் காலத்தில் சைவ, வைணவ மதங்களிடையே நிறையப் போட்டி இருந்ததென்பதை உணர்த்துகின்றன. சிவபெருமான் மீது அசைக்கமுடியாத அன்பு கொண்டிருந்த திருவாதவூரர் சிவபெருமான் ஒருவரே தெய்வம், அவரே முழுமுதற் கடவுள் என்பதை வலியுறுத்திக் கூறுகிறார்.
பாண்டிய மன்னனின் முதல் மந்திரியாக இருந்தவர் திருவாதவூரர். இந்நிலையில் சகல செளகரியங்களுடன் தன் வாழ்க்கையை அனுபவித்திருப்பார். திடீரென திருப்பெருந் துறையில் குருந்த மரத்தடியில் கிடைத்த அருட் பிரகாசத்தால், இறை இன்பத்தால் மெய்யுணர்வு பெறுகிறார் வாதவூரர். குருவாய் எழுந்தருளிய இறைவன் மறையவே மீண்டும் இறை அருளைப் பெற ஏங்குகிறார். இதுவரை காலமும் உலகியல் இன்பங்களில் முற்றாக மூழ்கி வாழ்ந்த தன்னை பலவாறு தாழ்த்திப் பாடி இறைவனை இரங்க வைக்க முனைகிறார். நாய் என்னும் சொல்லைப் பல இடங்களில் பயன்படுத்தி இருக்கிறார் அடிநாயேன் அறியா நாயேன், ஊர்நாய், கடைநாயேன், சிறுநாயேன், புலையனேன், பேயேன், மூர்க்கனேன், வஞ்சனேன் போன்ற சொற்களைப் பயன்படுத்தி நாயிற் கடையவனான தன்னை நயந்து ஆட்கொள்ளும்படி வேண்டி நிற்கிறார்.
திருப்பெருந்துறையில் இறை அருளைப் பெற்று அனுபவித்த திருவாதவூரருக்கு இதுவரை காலமும் துய்த்து மகிழ்ந்த சிற்றின்ப
158

ஆசையினின்றும் தன்னை முற்றாக விடுவித்துக் கொள்ள முடியாமல் திணறி இறைவனை நோக்கி உன் அருள் இன்றி என்னால் கடைத்தேறமுடியாது எனக் குறையிரந்து நிற்கிறார்.
"துணை எதுவும் கிடைக்கப் பெறாத பிறவிப் பெருங் கடலில் நான் தத்தளிக்கிறேன். துன்பம் என்னும் பேரலை வந்து மோதுகிறது. மாதர் மயக்கம் என்னும் காற்று வீசி என் மனதைக் கலக்குகிறது. ஆசை என்னும் சுறாமீன் என்னை விழுங்க வருகிறது. இனி உய்யும் வகை யாது என்று பலவாறு எண்ணுகிறேன்” என்பார். மேலும் மன்மதபாணத்திற்கும் காமத்துக்கும் வசப்பட்டும் “மனதே நீ பாழாய்ப் போகின்றாய் மாதருடன் கலந்து சிற்றின்பம் துய்த்து அழிந்து போகும் அறிவிலியாகிய என்னைக் காப்பாற்ற மாட்டாயா?” எனப் புலம்பி
நிற்கிறார்.
இவ்விடத்தில் சுவாமி சித்பவானந்தரின் கூற்றைப் பார்ப்பது நல்லது. திருவாதவூரரின் வாழ்க்கை அத்தனை கீழ் நிலைக்குப் போனதற்கு ஆதாரம் எதுவும் இல்லை, எத்தகைய கடைப்பட்ட மாந்தரும் முயன்று உய்வு அடையலாம் என்பதைத் திருவாசகத்தினூடாகப் புலப்படுத்த முற்படுகிறார் வாதவூரர் அடிகள் என்பதே அவரது கருத்து.
திருவாதவூரர் சரியை, கிரியை, யோகம், ஞானம் என்னும் நான்கு மார்க்கங்களில் ஞானமார்க்கத்தில் நின்று சாயுச்சிய முத்தி அடைந்தவர் என்று பொதுவாகக் கூறினாலும் அவர் நான்கு நெறிகளையும் போற்றினார் என்றே கூறவேண்டும். நான்கு முறைகளிலும் வழிபடுதலைப் பின்வரும் பாடல்கள் சுட்டுகின்றன.
"சிந்தனை நின்தனக்கு ஆக்கி நாயினேன் தன்
கண்ணினை நின் திருப்பாதப் போதுக்கு ஆக்கி வந்தனையும் அம் மலர்க்கே ஆக்கி வாக்கு உன்
மணிவார்த்தைக்கு ஆக்கி கைதான் தலை வைத்துக் கண்ணிர்
99
ததும்பி வெதும்பி .
இவை இறைவனைச் சொல்லால் செயலால் பரவி நிற்கும்
பாங்கினை எடுத்துக் காட்டுகின்றன.
திருப்பெருந்துறையில் குருந்த மரத்தடியில் சற்றும் எதிர்பாராத விதத்தில் ஆட்கொண்டருளிய இறைவன் பின் பராமுகமாய் இருத்தல் கண்டு அவன் அருளைப் பெற பலவாறெல்லாம் இரந்தும், அழுதும், அரற்றியும், போற்றியும் நின்ற வாதவூரர் இறுதியில் மிரட்டியும் பார்க்கிறார். நான் பிழை செய்தவன் என்று நீ என்னை வெறுத்து ஒதுக்கினால் உன் செயல் சரியல்ல என ஊரார் சிரிக்கும்படி செய்துவிடுவேன்.
என்னை நீ ஒதுக்குவாய் எனில் நீ யானைத் தோலைப் போர்த்த
இந்துக் கலைக்களஞ்சியம்

Page 189
பித்தன், புலித் தோலை உடுத்த பித்தன், நஞ்சுண்ட பித்தன், சுடுகாட்டில் விளையாடும்பித்தன் எளன்னை ஆட்கொண்ட பிறகு புறக்கணித்த பித்தன் என்று பழிக்கு ஆளாக்குவேன் என்றும், நீ அருள் தராவிடில் நான் இறந்து படுவேன். அப்பழி உன்னை வந்தடையும் என்றும் பொருள்படப் பல பாடல்களைப் பாடியுள்ளார். இவ்வாறு திருவாதவூரர் இறைவன் கருணையைப் பெறவும் அவன் கவனத்தைத் தன் வசப்படுத்தவும் பல
உத்திகளைக் கையாண்டுள்ளார்.
புத்தர்களை வாதில் வென்று தில்லையில் இருந்தவேளை இறைவன் வேண்டுகோளுக்கு இணங்கி திருக்கோவையார் என்னும் இனிய நூலினை ஆக்கினார் என்றும் கூறப்படுகிறது. இதுவும் வாதவூர் அடிகள் மலர்வாய்ப் பிறந்த வாசகத்தேனாக விளங்குவதால் இதனைக் கோவைத் திருவாசகம் என்று சான்றோர் சிறப்பித்துப் போற்றுகின்றனர். திருக்கோவையாரில் இறைவனைத் தலைவனாகவும் தன்னைத் தலைவியாகவும் கொண்டு பாடியுள்ளார். இந்நூலில் உரையாடும் இயல்பினராகிய தலைவன், தலைவி, தோழி, பாங்கன், செவிலி முதலிய அனைவரும் பாட்டுடைத் தலைவனான தில்லையம்பலவனின் திருவடிகளில் பேரன்பு கொண்டவர்கள். திருவாதவூர் தில்லைச் சிற்றம்பலவன் திருப்பெருந்துறையில் குருவின் திருமேனி கொண்டு அடிகளை ஆட்கொண்டமையால் ஆன்மாவுக்குரிய கரணங்களெல்லாம் பதி கரணங்களாக மாறப் பெற்று ஐம்பொறி உணர்வுகள் நீங்கப் பெற்றவர். இந் நிலையினரான திருவாதவூர் அடிகளின் திருக்கோவையார் ஆன்மா இறைவனை அடைந்து என்றும் நீங்காப் பேரின்பப் பெருவாழ்வைப் பெறுவது பற்றியே பாடியுள்ளார் என்பதே பொதுவாகக் கூறப்படும் கருத்து. தெரிந்த ஒன்றை உதாரணமாகக் கூறி தெரியாத ஒன்றை விளக்க முற்படுவது போன்று உலகியல் இன்பங்களை விளக்குவது போல் பேரின்ப நிலையை விளக்கியுள்ளார், திருக்கோவையாரில் திருவாதவூரர். உயிராகிய தலைவி கடவுளாகிய தலைவனை பல துன்பங்களையும், சோதனைகளையும் கடந்து ஒன்று கூடுவதே கோவையின் கருப்பொருள். உயிராகிய தலைவி நிலையற்ற சிற்றின்பங்களை அனுபவித்துப் பேரின்ப நெறியைத் துச்சமாக மதித்திருந்தது. இந் நிலையில் உலக போகங்களில் ஆழ்ந்திருந்த திருவாதவூரரை இறைவன் ஆட்கொண்டான். ஆட்கொள்ளலின் பின் உயிராகிய தலைவி இறைவனுடன் கூடி இன்பம் சுகித்திருப்பதாக கோவை விபரிக்கும். இதில் உணர்த்தப்பட்ட ஒவ்வொரு அகத்துறையும் இறைவனுக்கும் உயிருக்குமுள்ள தொடர்பினை கோவையில் காதலரைச் சிவமும் சக்தியுமாகப் பாவனை பண்ணும் களவுப் பகுதியில் உயிர் கடவுளின் காட்சியைப் பெறத் துடிக்கும் நிலையும் பின் கற்புப் பகுதியில் கடவுளையடைந்து இன்புற்றிருக்கும் நிலையும் கூறப்பட்டுள்ளது. எனவே இறைவன் மாணிக்கவாசகரை ஆட்கொண்டிருக்
ைைகயில் ப்ேரின்பத்தில் திளைத்திருந்த அவர் பேரின்பக் காதலை
இந்துக்கலைக்களஞ்சியம்

உலகியல் அன்பினைந்திணை ஒழுக்கத்தினைக் கொண்டு
விளக்கியுள்ளார்.
சைவ நாற்குரவருள் ஒருவராய் சைவ சமயக் கருத்துக்கள் பலவற்றைத் தம் பாடல்களில் தத்துவ மொழியில்லாமல் எளிய வழக்கில் விளக்கி திருவாசகம், திருக்கோவையார் என்னும் இரு பெரும் பொக்கிஷங்களைத் தந்தருளியுள்ளார். (நி.நி.)
O O
திருவாதிரைத் திருநாள்
திருவாதிரை நோன்பு என்பது மார்கழி மாதம் பெளர்ணமி தினத்தில் சைவர்களால் கொண்டாடப்படுவது. இந்நாள் சிவனுக்குகந்ததாகும். ஆதிரை முதல்வன் என்றும் ஆதிரையான் என்றும் சிவனைச் சிறப்பிப்பர். அச்சுவினி முதலான நட்சத்திரங்களை எண்ணி வரும் போது திருவாதிரை ஆறாம் நட்சத்திரமாகும். ஆதிரை மிதுனராசியில் அமையும் மார்கழி மாதம் சூரியன் மறைந்த பிறகு கிழக்குத் திசையை நோக்கினால் திருவாதிரை என்னும் விண்மீன் தொகுதி நன்றாகப் புலப்படும். இஃது நாற்கோணம் அல்லது வகுத்தல் அடையாளம் போல் தென்படும். ஆதிரை சிவனுக்குரிய நட்சத்திரம் ஆதலால் திரு என்ற அடைமொழி கொடுத்து திருவாதிரை என்றனர்.
மார்கழி மாதத்தில் இத்தகைய சிறப்பு வாய்ந்த ஆதிரை நாளை இறுதியாகக் கொண்டு பத்து நாட்கள் நடராஜப்பெருமானுக்கு விழா நடத்தப்படுகிறது. இந்நாட்களில் ஏனைய திருமுறைப் பாக்களை ஒதாது திருவெம்பாவைப் பதிகமே ஒதப்படுகிறது.
ஆரம்பகாலத்தில் எந்தவித சமய சார்புமற்று இளம் பெண்களால் வெட்ட வெளியில் அனுட்டிக்கப்பட்ட சடங்கானது வளர்ந்து சமயச் சார்பைப் பெற்று இன்று கோயிலுக்குள்ளேயே நடைபெறும் பூசை முறையாகிவிட்டது. அபிடேகம், அர்ச்சனை, பாவைப் பிரபந்தங்கள் பாடுதல் எல்லாம் கோயிலுக்குள்ளேயே நடைபெறுகின்றன. திருவெம்பாவைப் பாடல்கள் முழுவதையும் நோக்கும் போது அங்கே நீராடல் என்னும் நிகழ்வே முக்கியம் பெறுவதை நாம் நோக்கக் கூடியதாக உள்ளது. ஆனால் இன்று இச்சடங்கின்றி வெறும் பாவைப் பாடல்களைப் பாடுவதும் பூசைகள் நடைபெறுவதையுமே காணக் கூடியதாக உள்ளது. ஆற்றங்கரையில் மணலில் பாவை செய்து நீர் ஆடுவதையே அடிப்படையாகக் கொண்ட நோன்பில், இன்று அப்பாவை பற்றிய எண்ணமே இல்லாத நிலையில் மேற்கொள்ளப்படுவதும் நோக்கற்
UT6l)gl.
பஞ்சகிருத்தியங்களையும் நடத்தும் நடராஜப் பெருமானுக்குத் திருவாதிரைத் திருநாள் மிகவும் உகந்தது. “ஆதிரைநாள் உகந்தான்”, “ஆதிரையாய்”, “ஆதிரையான் கண்டாய்”, “ஆதிரைநாள் காணாதே போதியோ பூம்பாவாய்” என்றெல்லாம் திருமுறைகளில் பேசப்படுகின்றது. திருபுகலூரில்
159

Page 190
சம்பந்தப் பிள்ளையார் அப்பரை நோக்கித் திருவாதவூர்ச் சிறப்பைக் கூறுக எனக்கேட்ட போது அவர் ஆரூரில் நிகழ்ந்த ஆதிரை நாளின் சிறப்பை "முத்து விதானம்” என்ற பதிகத்தால் மொழிந்தார். அப்பதிகத்திற்குத் திருவாதிரைப் பதிகம் என்று
பெயர்.
திருவாதிரைத் திருநாளில் தேவராதியோர்களும் கூட்டம் கூட்டமாக வந்து தெருக்களில் நிறைந்து நின்று பெருமானது தொல்புகழைப் பாடிப் பரவுவார்கள். ஆனந்தக் கூத்தாடி மகிழ்வார்கள். அப்போது தரிசனத்திற்காக எல்லோரும் வந்து விட்டார்களா? வந்தவர்கள் யார்? வராதவர்கள் யார்? என்றெல்லாம் கணக்கிடப்படுமாம்.
"ஆரார் வந்தார் அமரர் குழாத்தில் அணியுடை ஆதிரை நாள் நாராயணனொடு நான்முகன் அங்கி
இரவியும் இந்திரனும் தேரார் வீதியில் தேவர் குழாங்கள்
திசையனைத்தும் நிறைந்து பாரார் தொல் புகழ் பாடியும் ஆடியும்
பல்லாண்டு கூறுதுமே” (சேந்தனார்)
மார்கழித் திங்கள் முழுவதும் சென்று ஆடும் மார்கழி நீராட்டு, மாதேவனது பெருநாளான திருவாதிரைத் திருநாளையும் அதனை முன்னிட்டு நிற்கும் நாட்கள் பத்தினையும் சிறப்பாகக் கொண்டு விளங்கும். சைவமரபிலே மாணிக்கவாசகருக்கு இருக்கும் செல்வாக்கின் காரணமாகவும், அவர் திருவெம்பாவைப் பதிகம் அருளிய காரணத்தாலும், திருவெம்பாவை நோன்பு அவரோடு இயைந்ததொன்றாகவே நோக்கப்படுகிறது. திருவெம்பாவைக் காலத்தில் அவருடைய புராணம் படிக்கப் பெறுவதும், அவருடைய அற்புத வரலாற்று நிகழ்ச்சிகளை ஒவ்வொன்றாக ஒவ்வொரு நாளும் பாவனா முறையில் நிகழ்த்திக் காட்டுவதும், திருவாதிரையில் சிவன் தேரேறி வருவதும், கூடவே மாணிக்கவாசகரையும் எழுந்தருளப் பண்ணுவதும் இன்றைய பாவை நோன்பின் கூறுகளாகிவிட்டன. பெருங் கோயில்களில் எல்லாம் திருவெம்பாவை ஒரு மகோற்சவத்தை ஒத்ததாகவே
நடைபெறுகிறது.
திருவாதிரை விழா சிதம்பரத்தில் சிறப்பாகக் கொண்டாடப் படுகிறது. சூரிய உதயத்திற்கு முன்பாக கிழக்குத் திசை நோக்கி நுனிவாழையிலை இட்டு அதில் பழம், வெற்றிலை, பாக்கு, செவ்வந்திப்பூ, நோன்புக்கயிறு, ஆகியவற்றை வைத்து வழிபடுவர். ஒற்றைப்படை எண்ணிக்கையில் காய் கறிகளை ஒரு சேர இட்டுச் சமைத்து உண்பர். பூசைமுடிந்ததும் மூத்த மங்கல மகளிர் இளைய மங்கல மகளிர்க்கும், மூத்த மங்கல மகளிர்க்கு அவர் தம் கணவரும் நோன்புக் கயிற்றினை கையில் கட்டுவர். மணமான பெண்களே திருவாதிரை நோன்பை மேற்கொள்வர். கணவர் இறந்த பின் இதனை மேற்கொள்ள மாட்டார்கள். நடுத்தர வயதுக்கு மேற்பட்டவரே விரதம் இருப்பர். இக்காலத்தில்
160

எவ்வளவு கோயிலுக்குச் செல்ல முடியுமோ அவ்வளவு கோயில்களுக்கும் சென்று நடராஜப் பெருமானைத் தரிசிப்பர். சிவாலயங்கள் எங்கும் திருவாதிரைத் திருநாள் சிறப்பாக கொண்டாடப்படும். அன்று நடராஜப் பெருமான் வீதி உலாவந்து பக்தர்களுக்குக் காட்சியளிப்பார். திருவாதிரை நோன்பில் களி (உணவு) சிறப்பிடம் பெறுகிறது. இதனை ஆதிரைக்களி என்று கூறுவர். சங்கர சங்கிதை நூலின் ஏழாம் காண்டமான உபதேசக் காண்டத்தில் திருவாதிரை நோன்பின் பெருமை கூறப்பட்டுள்ளது.
(நி.நி.) திருவாய்மொழி
ஆழ்வார்களுள் ஒருவராகிய நம்மாழ்வாரால் இயற்றப் பட்டது. நாதமுனிகள் இதனைத் தொகுத்தார். 'வாய்மொழி என்றால் 'தமிழ்வேதம்’ என்பர். வேதம் வாய்மொழி எனக் குறிப்பிடப்படுவதால் இதனைத் தமிழ்வேதம் என்பர். இதில் உபநிடதங்கள் அவற்றின் ஆயிரம் கிளைகளுடன் இருப்பதனால் இதனை வேதக்கடல் எனவும் வர்ணிப்பர். 14ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் வாழ்ந்த வைணவ ஆச்சாரியார் பூரீவேதாந்த தேசிகர் இதனைத் தமிழ் உபநிடதம் என்றும் கூறியுள்ளார். பூரீ அழகிய மணவாளப்பெருமாள் நாயனார் இது மட்பானை அல்ல,
பொன்வட்டில் என்கிறார்.
திருவாய்மொழி நாலுவரிப் பாடல்களைக் கொண்டது. அந்தாதி யாப்பினால் ஆனது. ஆசிரிய விருத்தம், தரவு கொச்சகக் கலிப்பா முதலிய பாவகைகளால் இயற்றப்பட்டுள்ளது. பதினொரு பாடல்கள் கொண்ட பகுதிகளைக் கொண்டது. ஒரு பகுதியில் மட்டும் பதின்மூன்று பாடல்கள் உள்ளன. இவ்வாறு பதினொரு பாசுரங்கள் கொண்ட பகுதி ஒரு திருவாய்மொழி, இப்படி பத்துக் கொண்டது ஒரு பத்தாகும். இவ்வாறாக, திருவாய் மொழியில் பத்துப் பத்துக்கள் அதாவது ஒரு நூறு திருவாய் மொழிகள் அல்லது 1102 பாசுரங்கள் உள்ளன.
இதனைப் பாடியவரான நம்மாழ்வார் அவதரித்த நாடு பாண்டி நாடு. இவரது இயற்பெயர் சடகோபன். ஆழ்வார் திருநகரி என வழங்கும் திருக்குருகூரில் குலத்துங்காரியர் என்ற சிற்றரசனுக்கு மலைநாட்டு திருவண்பரிகாரம் என்ற தவத்தினரான உடைய நங்கையர் தேவியின் மகனாக சதுர்த்த வருணத்தில் பிரமாதி வருடம் வைகாசித் திங்கள் பன்னிரண்டாம் நாள் வளர்பிறையில் பெளர்ணமித் திதியில் வெள்ளிக்கிழமை அன்று விசாக நட்சத்திரத்தில் கடகலக்கினத்தில் அவதரித்தார். இவருக்கு மாறன், பராங்குசன் என்ற வேறு பெயர்களும் உண்டு.
காரிமாறன் எனவும் அழைப்பர்.
திருவாய்மொழியில் சித்து, அசித்து, ஈசுவரன் என்னும் மூன்றின் தன்மைகளும் கூறப்படுகின்றது. சித்தாந்த சாஸ்திரங்கள் பதினெட்டுக்கும் மூலமாக இருப்பது இறைவனின் நிலை, உயிர் நிலை, உயிர் இறைவனை அடைவதற்குரிய வழியின்
இந்துக்கலைக்களஞ்சியம்

Page 191
நிலை, அவ்வழியில் செல்லும் போது உண்டாகும் தடைகளின் நிலை, தடைகளை நீக்கி இறைவனை அடைந்த பின்னர் பெறும்பேற்றின் நிலை என்னும் இவ்வைந்து பொருள்களும் திருவாய்மொழியில் கூறப்படுகின்றன.
முதற் பத்து எனப்படும் முதல் நூறு பாடல்களில் இறைவன் எல்லா நல்ல பண்புகளினதும் உருவமாக வர்ணிக்கப்படுகிறான். இறைவனது திருவடித்தொண்டே கிடைத்தற்கரிய பேறு என்று கூறப்படுகின்றது.
இரண்டாம் பத்தில் இறைவனுடைய தொண்டுக்குத் தடையாக இருக்கும் இவ்வுலகத் தொடர்பினை அழித்து அடியார் கூட்டத்தில் சேர்வது நலம் என்பது கூறப்படுகின்றது.
மூன்றாம் பத்தில் கூறப்படுவது இறைவனுக்குச் செய்யும் தொண்டில் உள்ள ஆசையைக் கண்ட எம்பெருமான் திருமலையில் தான் எழுந்தருளியிருக்கும் காட்சியைத் தமக்கு
காட்டினான் என்பதாகும்.
நான்காம் பத்தில் நாராணனின் திருவடிகளே புருடார் தத்துக்குத் துணை என்பதனை உணர்த்தி, அதற்குத் தடையாயிருப்பன உலக இன்பங்கள் என்பதனை உணர்த்துகிறார். ஐம்புலன்களால் அனுபவிக்கப்படும் இன்பம் தேடத் தகாத சிற்றின்பமே என்பதனை உணர்கிறார்.
ஐந்தாம் பத்தில் தாம் விரும்பியதைப் பெறுவதற்கும், விருப்ப மில்லாதவற்றை நீக்குவதற்கும் வழியாக இறைவன் தன் திருவடிகளைத் தந்தான் எனக் குறிப்பிடுகின்றார்.
ஆறாம்பத்தில் அவனே தக்க துணையினைச் சேர்பவனாகத்
திருமகள் புருடாகாரமாக விளங்க அதனை ஏற்றுக்கொள்கிறார்.
ஏழாம்பத்தில் இறைவனையே இவ்வாறு துணைக் கொண்டிருக்கும் தம் எண்ணம் விரைவில் நிறைவேறாமையால் துயரடைகிறார். திருவேங்கடவன் திருவடிகளைப் பெரிய பிராட்டியாராகிய திருமகள் முன்னிலையில் பற்றி விண்ணப்பஞ் செய்தும் தம் வேண்டுதல் நிறைவேறாமையாலே தம்மைக் கைவிட்டு விடுவானோ என்று அஞ்சினார். இறைவனுடைய திருக் கோலத்தைக் கண்ணாற் கண்டு அனுபவிக்க வேண்டும் என்னும் பதற்றத்தை உடையவரானார். தமக்கு வினை உடல் ஐம்புலன்கள் முதலானவற்றையெல்லாம் கொடுத்து உலகப் பொருள்களில் தன் மனத்தைப் படியவிட்டு தம்மிடம் வரவொட்டாமல் இறைவன் தடுப்பதாக எண்ணினார். பின் இறைவன் காட்சி தந்தான். அவன் காட்சி ஆன்ம அனுபவமாக இருந்தது. புறத்தேயும் பிரானைக் காண வேண்டும் என்று எண்ணித் தம்மை தலைவியாகவும் இறைவனைத் தலைவனாகவும் கருதி தலைவனைப் பிரிந்த தலைவி நிலையில் இருந்து பாடுகிறார்.
இந்துக் கலைக்களஞ்சியம்

எட்டாம் பத்தில் தமக்கு கிடைத்த ஆன்ம அனுபவம் தம் புறக்கண்களுக்கும் கிட்டவேண்டும் என்று விரும்பினார். அவனுடைய காட்சி மாயையாக இருந்தது. ஆன்மாவிலும் ஆன்மாவுடைய தொடர்புடைய பொருள்களில் ஆசை இன்னும் அருமையே என்பதனையே உணர்ந்து கூறுகின்றார்.
ஒன்பதாம் பத்தில் தமக்கு இறைவன் மீதன்றிப் பொருள் மீது ஆசையில்லை என அறுதியிடுகின்றார். இவ்வாறு ஆசை அற்ற பின்பும் தன்னை அவன் காக்காமல் மறைவது ஏன் என்று ஐயம் கொள்கின்றார். இறைவன் தான் நாராயணன் என்றும், எல்லா ஆற்றல்களையும் உடையவன் என்றும், ஆழ்வாருடைய விருப்பங்களைத்தான் நிறைவேற்றுவேன் என்றும் கூறுகிறார். இதில் திருமுழிக்களம் என்னும் ஊரில் பெருமானிடத்துப் பறவைகளும் வண்டுகளும் தூது அனுப்பப் படுவதாகக் குறிப்பிடப்படுகின்றது.
பத்தாம் பத்தில் இறைவன் ஆழ்வாருடைய ஆற்றாமையைக் கண்டு திருமேகூரில் வந்து தங்கி இவருக்கு மாறாத பேரின்பப் பெருநிலையை அடையும் வழியையும் காட்டி, இவர் வேண்டிய
படி இப் பேற்றினை அருளினான் என்று கூறுகின்றார்.
திருவாய்மொழியில் அகத்துறைப் பாடல்கள் கூடுதலாகக் காணப்படுகின்றன. தத்துவநூலாக இது விளங்கினாலும் தலைவி கூற்றாக, தாய் கூற்றாக, தோழி கூற்றாக, அமைந்த பாடல்கள் அகத்துறைப்பாடல்களே. தலைவி கூற்றாக பதினேழு பதிகங்களும், தாய் கூற்றாக ஏழு பதிகங்களும், தோழி கூற்றாக மூன்று பதிகங்களும் தலைவி தூது அனுப்புவதாக நான்கு பதிகங்களும் இடம்பெறுகின்றன. அன்னம், கிளி, குயில், குருவி, கொக்கு, தும்பி, நாரை, பறவை, வண்டு எல்லாவற்றையும் தூதாக அனுப்புவதாக இந்த இலக்கியம் அமைகின்றது.
திருவாய்மொழியில் ஒரு நூறு பலசுருதிப் பாடல்கள் உள்ளன. இவை ஒவ்வொரு திருவாய்மொழியிலும் காணும் இறுதிப் பாசுரங்கள். இவற்றிலே ஆழ்வார் தான் இந்த நூலாசிரியர் என்று தெரிவிப்பதோடு இந்தப் பாசுரங்களைப் பயில்வோருக்கு நேரும் நற்பயன்களையும் தெரிவிக்கின்றார். நூலாசிரியர் இறுதியில் தமது கையொப்பம் இடுவது போலத் தம்மைப் புலப்படுத்தி நூல் இயற்றுவது வழக்கம்.
மதுரகவியாழ்வார் நம்மாழ்வரைப் போற்றிக் கண்ணின் நுண் சிறுத்தாம்பு, எனும் பத்துப் பாடல்களைப் பாடியுள்ளார். பராங்குச தாசர் என்பவரிடமிருந்து நாதமுனிகள் இதனைப் பெற்றார். இவ்வாறு பாடப்பட்ட நம்மாழ்வாரின் பாசுரங்கள் அத்தனையும் அவருக்கு வெளிப்பட்டமையால் அவற்றையெல்லாம் இசையில் அமைத்து வைணவத் திருகோயில்களில் பாடும் முறையை வகுத்தார். இம்முறை இன்றும் நிலவி வருகிறது.
161

Page 192
திருவாய்மொழிக்கு முதல் உரையாகிய ஆறாயிரப்படியினை வழங்கியவர் திருக்குருகைப்பிரான் பிள்ளை. ஒன்பதி னாயிரப்படியை அருளியவர் நஞ்சீயர். அழகிய மணவாளசியர் பன்னிராயிரப்படியை வெளியிட்டார். இருபத்து நாலாயிரப் படியை இயற்றியவர் பெரியவாச்சான் பிள்ளை. முப்பத்தாறாயிரப்படி என்னும் பேருரையை வழங்கியவர் நம்பிள்ளையாவர். திருவாய்மொழிக்கு ஐந்து உரைகள் வெளிவந்துள்ளன.
(இ.ச.)
திருவாலியமுதனார்
ஒன்பதாம் திருமுறையில் அடங்கும் நான்கு திருவிசைப்பாப் பதிகங்களின் ஆசிரியர். திருவிசைப்பா அருளிய ஆசிரியர்களுள் ஏழாமவராகத் திகழ்கின்றார். இவர் திருமயிலையில் வைணவ அந்தணர் குடியில் தோன்றியவர் ஆவர். சோழநாட்டில் சீர்காழிப் பதிக்கு கிழக்கே அருகிலுள்ளது ஆலிநாடு. அதன் தலைமை ஊர் திருவாலி என்பது. இங்கு திருக்கோயில் கொண்டுள்ள திருமாலுக்கு திருவாலியமுதனார் என்பது பெயர் ஆகும். இவரது பெற்றோர்கள் திருவாலியமுதனாரிடம் மிகுந்த பக்தி பூண்டவர்கள் அதனால் தம் புதல்வர்க்குத் திருவாலியமுதனார் என்ற பெயரையே இட்டு வழங்கினர் போலும். வைணவ அந்தணர் குடியில் தோன்றிய திருவாலியமுதனார் சிவபக்தியில் ஈடுபட்டுச் சைவ அடியாராக மாறினார். தில்லை நடராசப் பெருமானைத் தம் குல தெய்வமாகக் கொண்டு அடியார் பக்தி, சிவபக்தி முதலியவற்றில் சிறந்து விளங்கினார். பக்தி முதிர்ச்சியினால் சிவதலங்கள் தோறும் சென்று சிவபெருமானை வழிபட்டு வரலானார். பெரும்பாலும் இவர் தில்லைப்பதியிலேயே வசித்து வந்தவர்
என்பர்.
திருவாலியமுதனார் தம்மை “மயிலையர் மன்னன்’ என்றும் “அந்தணன்' என்றும் தாம் பாடிய திருவிசைப்பா இரண்டாம் பதிகக் திருக்கடைக் காப்பிலே “வரை செய்மாமதில் மயிலையர் மன்னவன் மறைவல திருவாலி” எனவும் கூறிக் கொள்கின்றார். அமுதனார் தம் ஊராகிய திருமயிலையைத் தாம் பாடியருளிய திருவிசைப்பா நான்காம் பதிக திருக்கடைக்காப்பிலே “அறை செந் நெல் வான் கரும்பின் அணியாலைகள் சூழ்நிலை” என்று கூறுவதால் செற்நெல், கரும்பு விளையும் மருத நிலத்துள்ள மயிலாடுதுறையே (மாயூரமே) அமுதனார் பிறந்தவூர் என்பர்.
திருவாலியமுதனார் பாடியனவாகக் கிடைத்துள்ள திருவிசைப்பாப் பதிகங்கள் நான்கு ஆகும். அவை யாவும் கோயில் என்னும் சிதம்பரத் தலத்தைப் பற்றியனவே. திருவாலியமுதனார் பாடியருளிய மூன்றாம் பதிகத்தில் 5ஆம் பாடலில் "எடுத்த பாதம்”, “மழலைச் சிலம்பு’ என்ற தொடர்கள் முதலாம் இராச இராசனால் தஞ்சைப் பெரிய கோயில் கைங்கரியங்களுக்காக நியமிக்கப் பெற்ற தளிச்சேரிப் பெண்கள்
(தேவரடியார்கள்) சிலருக்குப் பெயராக இருந்ததை ஒரு
162

கல்வெட்டுக் குறிப்பிடுதலின் திருவாலியமுதனார் காலம் முதலாம் இராசஇராச சோழன் (கி.பி 985 - 1014) காலத்திற்கு முன்னர் என்பது பெறப்படுகின்றது.
வைணவ சமயத்தினராய் இருந்த இவருக்கு சிதம்பரம் நடராசப் பெருமானிடம் அதிக ஈடுபாடு வந்ததனால் “கோயில்’ என்னும் சிதம்பரத்தைப் பற்றியே நான்கு திருவிசைப்பாக்களைப் பாடியுள்ளார். திருப்பாணாழ்வார் பாடியுள்ள அமலனாதி பிரான் பிரபந்தத்துள் பாதாதிகேச வருணனை உள்ளது. அதனை ஒட்டியே அமுதனரும்.நடராசப் பெருமான் மேல் பாதாதிகேசமாகப் பாடியுள்ளார். “செய்ய பாதம் வந்தென் சிந்தையுள்ளிடங் கொண்டனவே” என்றும், 'உந்தி வான் சுழி என் உள்ளத்து உள்ளிடங் கொண்டனவே” என்றும், “உதரபந்தனம் என் உள்ளத்து இடங்கொண்டனவே” என்றும், “பிறை கொள் சென்னியன்றே பிரியாது என்னுள் நின்றனவே” என்றும் வரும் தொடர்கள் அமுதனார் திருச்சிற்றம்பலத்தானை எப்படி அநுபவித்துள்ளார் என்பதனைக் காட்டுகின்றன. திருவரங்க நாதனை திருப்பாணாழ்வார் அனுபவித்த ஆனந்த உணர்வினை நினைவுபடுத்துகின்றன இத்தொடர்கள். தொண்டரடிப் பொடி ஆழ்வார், திருவரங்கநாதனை மட்டுமே பாடி அனுபவித்தது போல, இவர் திருச்சிற்றம்பல நாதனை மட்டுமே பாடியுள்ளார்.
பக்தர்கள், நாயக நாயகி பாவத்தில் இறைவனை அனுபவ ஆனந்தம் காண்பது ஒரு சிறந்த உறவு உணர்வு முறையாகும். அத்தகைய பாவனைப் பாடல்கள் இவரது கோயிற் பதிகத்திற் காணப்படுகின்றன. தில்லைப் பதியை "தென்னன் தமிழும் இசையும் கலந்த சிற்றம்பலம் தன்னுள் பொன்னும் மணியும் நிரந்தரம்” என்று சிறப்பித்தும் பாடுகின்றார் அமுதனார். "பாலினை இன்னமுதை பரமாய பரஞ்சுடரைச் சேலுகளும் வயல் சூழ் தில்லை மாநகர் சிற்றம்பலத்து ஏலுடை எம் இறையை என்று கொல் காண்பதுவே” என்ற இவரது ஏக்க உணர்வுத் தொடர், "திருச்சித்திர கூடந்தன்னுள் எங்கள் தனி முதல்வனை எம் பெருமான் தன்னை என்று கொலோ கண்குளிரக் காணும் நாளே” என்ற குலசேகராழ்வார் பாசுரப்பகுதியை நினைவூட்டு கிறது. (வ. வை.)
O O
திருவான்மியூர்
தொண்டை நாட்டுத் தலம். திருஞானசம்பந்தராலும் அப்பர் பெருழானாலும் பாடப் பெற்றது. தல முருகனை அருணகிரிநாதர் தொழுதேத்தி உள்ளார். சிறந்த மேதையாக விளங்கிய அப்பைய தீகூழிதர் அருகில் உள்ள வேளைச்சேரியில் வாழ்ந்து வந்தபோது நாடொறும் வான்மியூர் வந்து பெருமானை வழிபட்டு வந்தார். ஒருமுறை இறையருளால் இப்பகுதி முழுவதும் நீர்ப்பிரளயமாக மாற அப்பையர் பிரார்த்தித்தார். அவர் பிரார்த்தனையை ஏற்று அவருக்காக இறைவன் மேற்கு நோக்கிக்
காட்சியளித்தார் என்று கூறப்படுகிறது. வண்ணச் சரபம்
இந்துக் கலைக்களஞ்சியம்

Page 193
தண்டபாணி சுவாமிகள், மயிலைக் குருஜி சுந்தரர் சுவாமிகள், பாம்பன் குமரகுருதாச சுவாமிகள் முதலான பல பெரியோர்கள் இத்தலத்து இறைவனைத் தொழுதேத்தியுள்ளனர். பூவை பூரீ
கல்யாண சுந்தரனார் தலபுராணம் பாடியுள்ளார்.
கோயில் பல்லவர் காலத்தையது. முதலாம் ராஜேந்திர சோழ தேவர் காலம் முதலாகப் பல கல்வெட்டுகள் கோயிலின்
திருப்பணிகளைக் கூறுகின்றன.
புராணவரலாறு
இராம காதையை வடமொழியில் எழுதியவர் வான்மீகி முனிவர். அவர் சிரஞ்சீவித்துவத்தைப் பெற்றிருந்த மார்க்கண்டேய முனிவரைச் சந்தித்து அவர் அறிவுரைக் கிணங்க பல தலங்களைத் தரிசித்து கீழ்க்கடற் கரையோரமாகச் சென்று கொண்டிருந்தபோது இறைவன் ‘யாம் இங்குள்ளோம் என வான் மொழியாகக் கூறியதும் முனிவர் அங்கு நோக்கிய போது ஒரு வன்னி மரமும் ஒரு சிவலிங்கமும் காணப்பட்டன. மார்க் கண்டேயர் கூறிய தலம் அதுவே எனத் தெளிந்த முனிவர் அங்கு அமர்ந்து சிவலிங்கத்தை வழிபட்டுத் தவம் இயற்றினார். அவரது தவத்தின் பயனாக இறைவன் இறைவியுடன் அவர் முன் காட்சியளித்து முனிவர் வேண்டியவாறு என்றும் அத் தலத்தில் உறைவதாகக் கூறியருளினார். வான்மீகர் தவம் புரிந்த இடம் வான்மியூர் என வழங்கப்பட்டது. முனிவருக்குக் காட்சி கொடுத்த நாதர் வான்மீக நாதர் என அழைக்கப்பெற்றார். முனிவர் நாளும் இங்கு சிவபெருமானை வழிபட்டு வருகிறார் என்பது ஐதீகம். வான்மீக ருக்கு இறைவன் காட்சி கொடுத்தபோது அவரது சடையில் இருந்த கங்கை நீரில் ஐந்து துளிகள் நிலத்தில் சிந்தி அவை ளதீர்த்தங்களாகப் பெருகின. அந்தத் தீர்த்தக்குளங்களில் மூழ்கி இறைவனை வழிபட்டுத் தமது தீவினையில் இருந்து விடுபட்டோர் இந்திரன், சூரியன், சந்திரன் முதலான தேவர்கள்.
காமதேமனு என்னும் தெய்வப்பசு நாளும் வான்மீகநாதர் சிவலிங்கத்திற்கு தனது மடியிற் சுரந்த பாலினால், அபிஷேகம் செய்து வர இலிங்கம் வெண்ணிறம் அடைந்தது. இறைவன் பால்வண்ணர் எனப் பெயர் பெற்றார். சித்த வைத்தியத்தின் மூலவர் அகத்திய முனிவர். அவருக்கு மருத்துவ சாத்திரத்தை இத்தலத்தில் உபதேசித்த இறைவன் மருந்தீசர், ஒளஷதீச்வரர் எனப் பெயர்கள் பெற்று விளங்குகின்றார்.
கோயில்
இறைவன் - ஒளஷதீஸ்வரர்,மருந்தீசர், பால்வண்ண
நாதர், வேதபுரீஸ்வரர்
இறைவி - திரிபுரசுந்தரி, சொக்கநாயகி, சுந்தர
நாயகி
தீர்த்தம் - கோயிலுக்கு எதிரில் இடப்பால் ஒரு
தீர்த்தக்குளம் உள்ளது.
தலமரம் - வன்னி
இந்துக் கலைக்களஞ்சியம்

நாற்புறங்களிலும் மதிலாற் சூழப்பட்ட இத் திருக்கோயிலில் கிழக்கிலும், மேற்கிலும் இராஜகோபுரங்கள் உள்ளன. கிழக்குக் கோபுர வாயிலே பிரதானமானது. இது ஐந்து நிலைகளை யுடையது. வெளியில் பதினாறுகால் மண்டபம் உள்ளது. கோபுரத்தில் உள்ள சிற்பங்களுள் சம்பந்தரின் சிவிகையை அப்பர் தாங்குவது, ஊர்த்துவ தாண்டவம், தில்லைக்காளி, கஜசம்காரமூர்த்தி முதலியவை குறிப்பிடத்தக்கவை.
கோபுர வாயில் வழியே உள்ளே நுழைந்தால் நேரே வள்ளி, தெய்வானையுடன் கூடிய சுப்பிரமணியர் சந்நிதி உள்ளது. முகப்பில் கமல விநாயகர் உள்ளார். பக்கத்தில் அழகிய விஜய கணபதி ஆலயம் உள்ளது. இக்கோயிலின் மேற்புற வரிசையில்
சோடச கணபதி உருவங்கள் காட்சியளிக்கின்றன.
முன்மண்டபத்தில் வாயிலை ஒட்டி, இக்கோயிலில் பிரதோஷ உற்சவம், முருகனுக்கு விழா, துவஜாரோகன விழா, வான்மீகி நடன உற்சவம் ஆகியவைகளை நடத்துவதற்காக எழுதி வைத்துள்ள நிபந்தக் கல்வெட்டுக்கள் உள்ளன.
வெளிப் பிராகாரத்தில் வலமாக வரும் போது நான்கு கால் மண்டபம் உள்ளது. சற்றுத் தள்ளி விநாயகர் சந்நிதி மூன்று மூலத் திருமேனிகளுடன் காட்சி தருகிறது. வலப்பால் தியாகராஜ சபா கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. இதனைத் தரிசித்து தெற்குப் பக்க வாயில் வழியாக உட்சென்றால் அம்பலவாணரைத் தரிசிக்கலாம். அம்பலவாணர் உருவம் அழகானது. வான்மீகநாதர் கோயிலுக்குரிய சிறிய நடராஜ உருவம் பாதுகாப்பாக இச்சந்நிதியில் வைக்கப்பட்டுள்ளது. வலமாக வரும்போது அறுபத்து மூவர் சந்நிதிகள், விநாயகர் சந்நிதிகள் உள்ளன. இச்சந்நிதியில் இரு புறங்களிலும் நாகலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. அடுத்து நால்வர், கஜலட்சுமி, முத்துகுமாரசுவாமி சந்நிதிகள் உள்ளன. முத்துக்குமார சுவாமி சந்நிதியில் அருணகிரிநாதரும் உள்ளார்.
மூலவர் மேற்கு நோக்கிய சந்நிதி. கோமுகம் மாறியுள்ளது. சுயம்பு, பால் போன்ற வெண்மையாக உள்ளது. பசு (காமதேனு) பால் சொரிந்து வழிபட்டமை தொடர்பாகச் சிவலிங்கத் திருமேனியில் சிரசிலும், மார்பிலும், பசுவின் குளம்பு வடுத்தெரிகிறது. சுவாமிக்கு பால் அபிஷேகம் மட்டுமே செய்யப்படுகிறது. பஞ்சாமிர்தம் முதலான பிற அபிஷேகங்கள் அனைத்தும் ஆவுடையாருக்கே செய்யப்படுகின்றன. உள் பிராகாரத்தில் ஏராளமான சிவலிங்கங்கள் வைக்கப்பட்டுள்ளன. கோஷ்ட மூர்த்தங்களாக தட்சிணாமூர்த்தி, விநாயகர், மகாவிஷ்ணு, சண்டேஸ்வரர், துர்க்கை ஆகியோர் உள்ளனர். இக் கோயிலில் வில்வ மரங்கள் அதிகம் உள்ளன. சூரியன் இங்குள்ள பெருமானை அர்த்தசாமத்தில் வழிபட்டதாக வரலாறு உள்ளதால்
பெருவிழாவில் கொடியேற்றம் அர்த்தசாமத்தில் நடைபெறுகிறது.
163

Page 194
கிருத்திகை, பெளர்ணமி முதலிய விசேஷங்களும் இரவிலேயே நடைபெறுவது இக்கோயிலின் விசேஷமாகும். பங்குனி பெளர்ணமியில்தான் வான்மீகி முனிவர் வழிபட்டு முத்தி பெற்றதாகச் சொல்லப்படுகிறது.
கிழக்குக் கோபுர வாயில் வடபக்கம் அமைந்துள்ள அன்னையின் கோயில் முன் மண்டபம், திருச்சுற்று இவற்றுடன் விளங்குகின்றது. திருமுன்பில் சிம்மவாகனம் உள்ளது கருவறையில் அன்னை நான்கு திருக்கரங்களுடன் நின்ற திருக்கோலத்தில் எழிலுறக் காட்சியளிக்கின்றாள். திருச்சுற்றில் மேற்புறம் பள்ளியறை உள்ளது. கிழக்குப் பகுதியில் சுக்கிரவார அம்மன் சந்நிதி உள்ளது. அம்பாள் நின்ற திருக்கோலம், கோஷ்ட மூர்த்தங்கள் இல்லை.
அம்மன் கோயிலில் முன் மண்டபத் தூண்களில் பல அழகிய சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. அரவத்தின் தலை மீது நின்றாடும் கணபதி, அர்த்தநாரீஸ்வரர், சரபமூர்த்தி தட்சிணாமூர்த்தி, சிவபெருமான் , மகாவிஷ்ணு இவர்களின் பல அவதார நிலைகள் குதிரை மீதமர்ந்த வீரர்கள், காலாட்கள் எனப்
பல அற்புதமான சிற்பங்களை மண்டபத் தூண்களில் காணலாம்
நாள்தோறும் நான்கு காலங்களில் வழிபாடுகள் நடை பெறுகின்றன. கோயிலில் பல சிறப்பு வழிபாடுகளும் திருவிழாக்களும் நடைபெறுகின்றன. நவராத்திரி, சிவராத்திரி நடேசர் அபிஷேகங்கள், பெளர்ணமி தோறும் சுப்பிரமணியா தியாகராசர் அபிஷேக ஆராதனைகள், கிருத்திகை தோறுப் சுப்பிரமணியர் வழிபாடுகள், பிரதோஷ காலங்கள் எனப் பலவும் கொண்டாடப் படுகின்றன. இத்தலத்தில் மிகவும் விமரிசையாகச் கொண்டாடப்படும் பங்குனிப் பெருவிழா பதினொரு நாட்கள் நடைபெறுகிறது. பகலில் சந்திரசேகர மூர்த்தியும், இரவில் தியாகராசரும், வீதியுலா வருவர். பத்தாம் திருவிழா அன்று தியாகராசர் திருமேனியை தியாகராசர் கணையில் வைத்து பாதந்தாங்கிகள் அத் திருமேனியை முன்னும், பின்னும் புறமுட் தலைகீழாகவும் கூடச் சாய்த்து பதினெண் வகையாக நடனம் புரிவர். இந்நாளில்தான் வான்மீகி முனிவருக்கு பதினெட்டு வகையான நாட்டியங்களை காட்டியருளினார் என்ற ஐதீகம் நிலவுகிறது. அன்று திருவிழாவைக் காண ஆயிரக்கணக்கில் மக்கள் கூடுவர். இக்கோயில் நன்கு பராமரிக்கப்பட்டு வருகிறது
"கரையுலாங் கடலிற் பொலிசங்கம் வெள்ளிப்பி வன்
திரையுலாங் கழி மீனுகளுந் திருவான்மியூர் உரையுலாம் பொருளா யுலகாளுடையீர் சொலீர்
99 வரையுலா மடமாது உடனாகிய மாண்பதே
எனச் சம்பந்தர் பெருமானும்,
164

"விண்டமாமலர் கொண்டு விரைந்துநீர் அண்ட நாயகன் தன்னடி சூழ்மின்கள் பண்டு நீர்செய்த பாவம் பறந்திடும் வண்டு சேர்பொழில் வான்மியூர் ஈசனே'
என அப்பர் பெருமானும், இத் தலத்தையும், அங்கு எழுந்தருளியுள்ள பெருமானையும் பாடிப்பரவி உள்ளனர்.(நி.நி.)
Ο
திருவிடவெந்தை
சென்னையிலிருந்து மகாபலிபுரம் செல்லும் பாதையில் அமைந்துள்ள திருத்தலம் திருவிடவெந்தை. திருமால் கோயில் கொண்டருளிய தலங்களில் வராக மூர்த்தியாய் எழுந் தருளியிருக்கும் தலங்கள் சிலவே. அவற்றுள் திருமால் வராக மூர்த்தியாக எழுந்தருளியுள்ள தலம் இது. இங்கு வராகப் பெருமான் தம் தேவியை இடப்பக்கத்தில் கொண்டிருப்பதால் இத் தலத்திற்கு “திரு இட எந்தை” எனப் பொருள் தரும் திருவிடவெந்தை என்ற பெயர் வழங்கப் பெற்றதென்பர்.
இத்தலத்தில் வராகப் பெருமான் இடத்தோட்புறம் திலகவல்லி நாச்சியார் வீற்றிருக்கச் சேவை சாதிக்கின்றார். பெருமானின் திருப்பெயர் நித்தியகல்யாணர். தாயார் சோமவல்லித் தாயார். இத்தலம் பற்றிப் புராணவரலாறு பின்வருமாறு கூறுகின்றது. பலி என்ற வல்லமை பொருந்திய அசுரன் ஒருவன் இருந்தான். தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் பெரும் போர் ஒன்று நடந்தது. அப்போரில் அசுரர்கள் தோற்றுவிட்டனர். அசுரர்கள் பலியை வெகுதூரம் வேண்டிக் கொண்டதன் பேரில் பலி அசுரர்களுக்குத் துணையாக நின்று தேவர்களைத் தோற்கடித்தான். தேவர்களுடன் போர் புரிந்த பாவம் தொலைய, அவன் திரு வெந்தையில் விடாராக தீர்த்தக் கரையில் தவம் புரிந்து வந்தான். திருமால் வராக ரூபியாய் அவனுக்கு காட்சியளித்து அருள் புரிந்தார். அன்று முதல் எம்பெருமான் இவ்விடத்திலேயே வராக மூர்த்தியாகக் காட்சியளித்து வருகிறார்.
காலவமுனிவர் தம் பெண்களுக்கு வரன் தேடும் பொருட்டு இத் தலத்தை அடைந்தார். வராக மூர்த்தி காலவ முனிவரின் 364 பெண்களையும் ஒர் ஆண்டு முடிய திருமணம் புரிந்து கொண்டார். கடைசிக் கன்னியை மணந்த தினத்தில் எல்லாக் கன்னிகளையும் ஒன்று சேர்த்து ஒரே பெண் வடிவாக்கி தன்னுடைய இடதுபக்கத்தில் வைத்துக் கொண்டு வராக ரூபியாய் காட்சியளித்தார். தினமும் திருமணம் நடந்தேறிய தலமாதலால் நித்திய கல்யாணபுரி என்று ஊரும், நித்திய கல்யாணர் என்று பெருமானும் பெயர் பெற்றனர். முனிவரின் புத்திரிகளுள் முதல் மகளுக்கு கோமளவல்லி என்று திருநாமம். இப்பெயர் கொண்டே இத்தலத்துத் தாயார் எழுந்தருளியுள்ளார்.
இந்துக்கலைக்களஞ்சியம்

Page 195
பெருமான் கல்யாண விமானத்தில் எழுந்தருளியுள்ளார். கல்யாண தீர்த்தம், வராக தீர்த்தம் முதலியன கோயிலுக்கருகே உள்ளன. பெருமான் நின்ற திருக்கோலமாக கிழக்கே திருமுக மண்டலம் சாதித்து அருள்கிறார். ஒரு திருவடி பூமியிலும், மற்றொரு திருவடி ஆதிசேஷன், அவன் மனைவி ஆகியோர் மீதும் இருக்கிறது. இடது பக்கத் தொடையில் அகிலவல்லி நாச்சி யாரைத் தாங்கிய வண்ணம் வராகப் பெருமான் நிற்கின்றார். இப்பெருமான் மார்க்கண்டனுக்கு திருக்கோலம் காட்டினார் என்பது புராண நம்பிக்கை. திருமங்கையாழ்வரால் மங்களா சாசனம் செய்யப்பட்ட திருத்தலம் இது. 13 திருப்பாசுரங்களைப் பாடி மகிழ்ந்துள்ளார் ஆழ்வார். “ஏத்துவார் மனத்துள்ளான் இடவெந்தை மேவிய எம்பிரான்” என்று பரவும் திருமங்கையாழ்வார், "திவளும் வெண்மதி” என்று தொடங்கும் பாசுரத்தில் “திருவிடவெந்தைப் பிரானே’ என அவன் குணங்களில் ஈடுபட்டுப் பாடி மகிழ்கின்றார். இப்பாசுரம் அகத்துறை மரபில் பாடப் பெற்றது.
இவ்வாலயத்தைப் படுவூர் நாட்டுத் திருவிடவெந்தை என்று கல்வெட்டுக்கள் கூறுகின்றன. சோழ அரசர்கள் பெருமானுக்குச் செய்துள்ள பல தானங்களின் குறிப்புக்கள் கல்வெட்டுக்களில் காணப்படுகின்றன. கி.பி.1115 இல் கலிசிங்கன் மடம் என்ற மடம் திருமங்கை மன்னன் பெயரால் தாபிக்கப்பட்டதாகக் கல்வெட்டுக் கூறுகிறது. (தே.ஹ.)
திருவிடை மருதூர்
_(క్రిత్రాTg நாட்டுத் தென்கரைத் தலம். அக்காலத்தில் இத் தலம் செண்பகாரண்யம், இடைமருது, சக்திபுரம், வீரசோழபுரம், பூலோகம், மத்தியார்ச்சுன கூேடித்திரம் என்று பல பெயர்களைக் கொண்டு விளங்கியது. உமாதேவியார், விநாயகர், முருகன், திருமால், காளி, இலக்குமி, சரஸ்வதி, வேதம், வசிட்டர், உரோமேச முனிவர், ஐராவணம், சிவவாக்கியம், கபிலர், அகத்தியர் வரகுணபாண்டியர் என்போர் வழிபட்டுப் பேறு பெற்ற தலம். வரகுண பாண்டியனுக்கு பிரமஹத்தி தோஷம் நீங்கிய இடம். கிழக்குக் கோபுரவாயிலில் பிரமஹத்தி (ஹத்தி - கொலைப்பாவம்) உள்ளது. சோழமன்னன் ஒருவனைப் பிரமஹத்தி பீடித்தது அவன் பல சிவத்தலங்களையும் வழிபட்டு முடிவில் இத்தலமேகி கோயிலினுள் சென்றான். சிவசந்நிதியை அடைய அச்சமுற்ற பிரமஹத்தி அவன் வழிபட்டுத் திரும்பும் போது பிடித்துக் கொள்ளலாம் எனக் கிழக்குக் கோபுர வாயிலில் அமர்ந்தது. சோழன் மகாலிங்கேசுவரனைத் தரிசித்து மேற்கு கோபுர வாயில் வழியே வெளியே சென்றான். பிரமஹத்தி உள்ளே சென்றவன் திரும்பி வருவான் எனக் காத்திருக்கிறது. இப்புராண நிகழ்ச்சியை மனதிற் கொண்டு இத்தலத்திற்கு வழிபட வருபவர்கள் கிழக்கு வாயில் வழியே செல்ல மாட்டார்கள்.
இத்தலம் இடை மருது மத்தியார்ச்சுனம்' எனப் புகழப்படும் பதி, வடக்கே ஆந்திரத்தில் உள்ள பூரீசைலம் "மல்லிகார்ச்சுனம்'
இந்துக் கலைக்களஞ்சியம்

தலை மருது என்றும், நெல்லை மாவட்டத்தில் அம்பா சமுத் திரத்திற் அருகிலுள்ள திருப்புடை மருதூர் புடார்ச்சுனம்' கடை மருது என்றும் வழக்கப்படும். இவையிரண்டிற்கும் இடையில் இருப்பதால் இஃது இடை மருது ஆயிற்று.
ஒவ்வொரு தலத்திலும் சிவபெருமான் இலிங்க உருவில் காட்சியளித்தாலும் அவர் வெவ்வேறு பெயர்களில் வழங்க ப்படுவார். இத்தலத்தில் உள்ள சிவலிங்கம் மகாலிங்கத் தலம் என்று புகழப்படும். இத்தலத்தைச் சுற்றி பரிவாரத் தலங்கள் ஒன்பது உள்ளன. திருவலஞ்சுழி விநாயகர் சந்நிதியாகவும், சுவாமிமலை முருகன் சந்நிதியாகவும், ஆலங்குடி தட்சிணா மூர்த்தி தலமாகவும், திருஆலயப்படி சண்டேசுவரர் சந்நிதி யாகவும், சீர்காழி பைரவர் சந்நிதியாகவும், சூரியனார் கோயில் நவக்கிரகங்களின் சந்நிதியாகவும், திருவாரூர் சோமஸ் கந்தர் சந்நிதியாகவும் திருவாவடுதுறை நந்திகேச்சுவரர் சந்நிதியாகவும் உருவகப்படுத்தி இத்தலம் பெருமைப்படுத்தப்பட்டுள்ளது.
இறைவன் - மகாலிங்கேஸ்வரர், மருதவனேஸ்வரர், மருதவாணர் இறைவி - பிருகத்சுந்தர குஜாம்பிகை, பெருநலமுலையம்மை தலமரம் - மருது தீர்த்தம் - காவிரி, காருண்ய அமிர்தத் தீர்த்தம்
மூவர் பாடல் பெற்ற தலம். கருவூர்த் தேவர், மாணிக்கவாசகர், பட்டினத்தார் பாடல்களிலும் இத்தலம் புகழ்ந்து பாடப்படுகிறது. பெரிய கோயில் ஐந்து பிராகாரங்களைக் கொண்டது. வெளிப்பிராகாரம் பெரிய பிராகாரம். இது அஸ்வமேத பிராகாரம் எனப்படும். இப்பிராகாரத்தை வலம் வந்தால் பேய், பைத்தியம், நீங்கும். இன்றும் இவற்றால் பீடிக்கப்பட்டோர் வந்து வலம் செய்து குணமடைவதாகக் கூறப்படுகிறது. அடுத்துள்ள பிராகாரம் கொடுமுடிப்பிராகாரம், அடுத்துள்ளது பிரணவப் பிராகாரம். இப் பிராகாரத்தில் தல மரம் உள்ளது. உட் பிராகாரத்தில் அம்பாள் கோயில் உள்ளது.
இத்தலத்தின் தேரடியில் விநாயகர் கோயிலும், கீழ் வீதியில் விஸ்வநாதர் கோயிலும், மேல்வீதியில் ரிஷிபுரீஸ்வரர் கோயிலும், தெற்கு வீதியில் ஆத்மநாதர் கோயிலும், வடக்கு வீதியில் சொக்கநாதர் கோயிலும் இருக்க, இவற்றிற்கு மத்தியில் மகாலிங்கேஸ்வரர் வீற்றிருக்கிறார். எனவே இத்தலத்தை பஞ்சலிங்கத் தலம் என்றும் சொல்வர். வடக்குக் கோபுர வாயிலில் அகோர வீரப்பத்திரர் கோயிலும், மேற்குக் கோபுர வாயிலில் படித்துறை விநாயகரும், பட்டினத்தாரும், பத்ரகிரியாரும் தரிசனம் தருகின்றனர். சொக்கநாதர் கோயிலிலுள்ள மூர்த்திக்கு அபிஷேகம் செய்து மேகராகக் குறிஞ்சிப் பண் பாடினால் மழைபெய்யும் என்பது மக்களிடையே உள்ள நம்பிக்கையாகும்.
சுவாமி அம்பாள் சந்நிதிகள் கிழக்கு நோக்கியன. கோயிலின் உள்ளே உள்ள பாண்டியன் கோபுரத்தையும் சேர்த்து
165

Page 196
ஐந்து ராஜகோபுரங்கள் உள்ளன. நெடிதுயர்ந்த மதில்கள், உட்கோயில்கள், விமானங்கள், மண்டபங்கள், ஆகியவற்றுடன் கூடிய மிகப் பெரிய கோயில் திருவிடை மருதூர். கிழக்கு ராஜகோபுரம் வழியாக உட்செல்ல வேண்டும். கிழக்கில் ராஜ கோபுரத்தின் வடகிழக்குப் பகுதியில் காருண்யாம்ருதத் தீர்த்தக் குளம் உள்ளது. இது மூன்று திருவாயில்கள், சீரான படிக்கட்டுக்களுடன் விளங்குகின்றது. கோபுர வாயிலினின்றும் சுவாமி கருவறையை நோக்கினால் நம் எதிரே நீண்ட மண்டபங்களைக் காணலாம். மண்டபத் தூண்கள் வரிசையாக நின்று இராமேச்சுரத்தை நினைவுபடுத்துகின்றன. சுமார் 400 அடிகளுக்குமேல் நீண்டுள்ள இத்திருச்சந்நிதி வீதியை மனதில் கொண்டே திருவிடை மருதூர் வீதியழகு என்று சிறப்பித்துக் கூறும் வழக்கம் ஏற்பட்டு இருக்கலாம். கோபுர வாயிலில் பட்டினத்தார் உருவச் சிலை உள்ளது. உட் சென்றதும் காட்சி தருபவர் படித்துறை விநாயகர். அடுத்து கொடிமரம், பலிபீடம், நந்தி; சுதையாலான மற்றொரு நந்தியும் காணப்படுகிறது.
பெரிய நந்தியை அடுத்து மண்டபச் சுவரில் பல ஒவியங்கள் வரையப்பட்டுள்ளன. கருவறையில் மகாலிங்கேச்வரர் நாகாபரணமும் பட்டாடைகள் வெண்ணிற்றுப் பட்டையின் நடுவில் சந்தனம் துலங்க, பாதங்களின் அடியில் வில்வத் தளங்கள் சிதறிக் கிடக்க பெரிய திருவுருவில் காட்சியளிக்கிறார். கருவறைத் திருச்சுற்றில் ஆண்ட விநாயகர் முதலான பல சந்நிதிகளும், நடராசர், நவக்கிரகங்கள் சந்நிதிகளும் உள்ளன.
அடுத்து கொடுமுடித் திருச்சுற்றின் வழியே சுவாமியின் வலப் புறம் அமைந்துள்ள அம்மனின் தனிக் கோயிலுக்குச் செல்லலாம். கொடிமரம், பலிபீடம், நந்தி ஆகியன உள்ளன. அன்னை நான்கு திருக்கரங்களுடன் நின்ற திருக்கோலத்தில் கிழக்கு நோக்கிக் காட்சியளிக்கிறார். அவரை வழிபட்டுத் தென்புறம் சென்றால் மூக்காம்பிகையின் சந்நிதியை அடையலாம். இவருடைய கருவறை விமானம் தென்னாட்டுப் பாணியில் அமைந்துள்ளது. அன்னை இருகால்களையும் மடித்து அமர்ந்த நிலையில் நான்கு திருக்கரங்களுடன் தவக்கோலத்தில் காட்சியளிக்கிறார். இடப்பக்கம் பூரீ சக்கர பீடம் பிரதிட்டை செய்யப்பட்டுள்ளது. மேலக் கோபுர வாயிலை அடைந்தால் அங்கு பத்ரகிரியாரின் உருவச் சிலையைக் காணலாம். மன்னனாக வாழ்ந்த பத்ரகிரியார்
பட்டினத்தாரால் துறவறம் மேற் கொண்டவர்.
நாளும் ஆறு கால வழிபாடுகள், தைபூசத்தில் சுவாமி காவிரிக்கு எழுந்தருளி ஐராவணத் துறையில் தீர்த்தம் கொடுப்பது சிறப்பாக நடைபெறுகின்றன. வைகாசி வசந்த திருமண விழா, திருவாதிரைத் திருவிழா, நவராத்திரி, அறுபத்து மூவர் திருவிழா மற்றும் பல விழாக்களும் சிறப்புற நடை பெறுகின்றன. இக்கோயிலில் 149 கல்வெட்டுக்கள் உள. இவற்றுள் ஒரு கல்வெட்டிலிருந்து அந்நாளில் சுவாமி
166

திருமஞ்சனத்திற்கு நீர் கொண்டுவர மட்குடங்களே பயன்படுத்தப் பட்டன என்னும் செய்தியை அறியக் கூடியதாக உள்ளது. கல்வெட்டில் இத்தலம் உய்யக் கொண்ட சோழவளநாட்டுத் திரைமூர் நாட்டுத் திருவிடை மருதூர் என்று குறிக்கப் பெறுகின்றது.
"பொங்குநூன் மார்பினர் பூதப்படையீர் பூங்கங்கை
தங்குசெஞ் சடையின் சாமவேத மோதனிர் எங்கும் எழிலார் மறையோர்கண் முறையாலேத்த இடைமருதில்
மங்குல் தோய் கோயிலோ கோயிலாக மகிழ்ந்திரே”
எனச் சம்பந்தர் பெருமானும்,
"ஆலப் படையார்தாமே போலுஞ்
சுடர்த் திங்கள் கண்ணியுடையார் போலும் மாலை மகிழ் தொருபால் ஆனார் போலும்
மந்திரமும் தந்திரமும் ஆனார் போலும் வேலைக் கடல் நஞ்சை யுண்டார் போலும்
மேல்வினைகள் தீர்க்கும் விகிர்தர் போலும் ஒலக்கமழ் குழலாள் பாகர் போலும்
இடை மருது மேவிய ஈசனாரே'
என அப்பர் பெருமானும்,
“முந்திச் செய்வினை இம்மைக் கண் நலிய
மூர்க்கனாகிக் கழிந்தன காலம் சிந்தித்தே மனம் வைக்கவுமாட்டேன்
சிறுச்சிறிதே யிரப்பார்கட் கொன்றியேன் அந்தி வெண் பிறை குடும் எம்மானே
ஆரூர் மேவிய அமரர்கள் தலைவா எந்தை நீ எனக்கு உய்வகை அருளாய்
இடைமருதுறை எந்தை பிரானே'
என்று சுந்தரர் பெருமானும் இத்தலத்துறை பெருமானைப் போற்றிப் பாடியுள்ளனர். (நி.நி.)
திரு விண்ணகர்
திருமால் உவப்புடன் எழுந்தருளியுள்ள 108 திருத் தலங்களுள் 48 ஆவது திருப்பதியாகத் திகழ்வது இதுவாகும். குடந்தையிலிருந்து திருநாகேஸ்வரம் செல்லும் பாதையில் அமைந்துள்ளது இத்தலம். இத்தலம் ஒப்பிலியப்பன் கோயில் அல்லது உப்பிலியப்பன் கோயில் எனவும், மார்க்கண்டேயரின் அருந்தவப் பயனால் பெருமாளும் பிராட்டியாரும் எழுந்தருளி நித்யவாசம் புரிகின்ற காரணத்தினால், மார்க்கண்டேய ஷேத்திரம் எனவும், துளசிச் செடி மருங்கில் பூமிப்பிராட்டியார் அவதரித்த காரணத்தால் துளசிவனம் எனவும், வைகுந்தப் பெருமான் இங்கு எழுந்தருளியதால் திருவிண்ணகர் எனவும் தன்னை யொத்தவரில்லாத பெருமாளின் உறைவிடமானதால் ஒப்பிலியப்பன் கோயில் எனவும் வழங்கப்படுகின்றது. தமிழகத்தின் திருப்பதி என இக்கோயிலைக் கூறுவர்.
இந்துக்கலைக்களஞ்சியம்

Page 197
திருப்பதி பெருமாளுக்கு திருவெங்கடேச சுப்பிரபாதத்தைப் பண்ணிசைப்பது போல, இத்தலத்திலும் ஒப்பிலியப்பன் சுப்ரபாதம் பண்ணிசைக்கப்படுகின்றது. இங்கு பெருமாளுக்கு உப்புச் சேர்க்காது அமுது நிவேதனமாகப் படைக்கப்படுகின்றது. இது போன்று நிவேதனம் வேறு தலங்களிலில்லை. நம்மாழ்வார், திருமங்கையாழ்வார், பொய்கையாழ்வார், பேயாழ்வார் ஆகியோர் இத்தலத்தை மங்களாசாசனம் செய்துள்ளனர்.
இக்கோயிலின்
மூலவர்- ஒப்பிலியப்பன் அல்லது
உப்பிலியப்பன்,திருவிண்ணகரப்பன்.
தாயார் - பூமிநாச்சியார் விமானம் - சுத்தானந்த விமானம் தீர்த்தம் - அசோத்ர புட்கரிணி, பிரம்ம, இந்திர, சூர்ய,
ஆர்த்தி தீர்த்தங்கள், நாட்டாறு
கோயில் மதில்கள் சூழ கிழக்கில் இராஜ கோபுரத்துடன் விளங்குகிறது. இரு திருச்சுற்றுக்கள் உள்ளன. முன்மண்டபத்தில் கொடிமரம், பலிபீடம், கருடாழ்வார் சந்நிதி உள்ளன. வலப்பக்கம் வெளித் திருச்சுற்றில் அசோராத்ர புட்கரணி உள்ளது. தென்புறமாடத்தில் கண்ணன் சந்நிதியும், உட்திருச்சுற்றில் வெளி மண்டபத்தில் அனுமார் சந்நிதியும் உள்ளன. இச்சந்நிதியை அடுத்துள்ள திருச்சுற்றில் செளரிராஜன், வரதராஜன், பூரீரங்கநாதன், திருவுருவச் சிலைகள் உள்ளன. வடபுறம் ஆழ்வார்கள் சந்நிதிகளும், அதற்கு கிழக்கில் பூரீராமர் சந்நிதியும், தெற்கில் எம்பெருமானார் சந்நிதியும், பெருமாள் கருவறைக் கருகில் பூரீ தேசிகர் சந்நிதியும் உள்ளன. கருவறையில் மூலவர் நின்ற திருக்கோலத்தில் கிழக்கு நோக்கி எழுந்தருளியுள்ளார். பெருமானின் வலக்கரம் வைரங்களால் அணி செய்யப்பட்டுள்ளது. வலப்பக்கம் பூமிதேவி மண்டியிட்டு அமர்ந்த நிலையிலும் இடப்பக்கம் மார்க்கண்டேய மாமுனிவர் கால்களை மடித்து பத்மாசன நிலையிலும் காட்சியளிக்கின்றார். திருமுன்பில் எழுந்தருளும் திருமேனிகளாக ஐந்து கோலங்களில் பெருமாள் காட்சி தருகின்றார். தாயாருக்கு இங்கு தனியாகச் சந்நிதியில்லை. வெளித் திருச்சுற்றில் திருமண மண்டபத்தை யடுத்து திருக்குளக்கரையில் என்னப்பன் சந்நிதியும் நந்தவனத்தில் மணியப்பன் சந்நிதியும் உள்ளன.
இத்தலத்தில் வைகாசன விதிப்படி நாள் தோறும் ஆறுகாலங்களில் வழிபாடு நடைபெறுகின்றன. வைகாசி, ஆவணி, புரட்டாதி, தை, பங்குனி மாதங்களில் திருவோணம் ஈறாக உள்ள 10 நாட்களில் முறையே வசந்தோற்சவம், பவித்ரோற்சவம், பிரம்மோற்சவம், தெப்போற்சவம், அவதாரம கோற்சவம், முதலிய விழாக்களும் ஐப்பசித் திருவோணம் முதலாக 12 நாளுக்கு திருக் கல்யாண உற்சவமும் மார்கழியில் அத்யயன உற்சவம் (வைகுண்ட ஏகாதசி), பங்குனிப் பெருவிழாவை அடுத்து பூரீராம நவமியும் கொண்டாடப்படுகின்றன. (தே. ஹ)
இந்துக் கலைக்களஞ்சியம்

திருவிழாக்கள்
திருக்கோயில்களில் பத்து, பன்னிரண்டு, பதினேழு, இருபத்தொரு நாட்கள் வரையில் மிகச் சிறப்பாகப் பூசைகள் நடத்தி அங்குள்ள மூர்த்திகளின் திருவுருவங்களைப் பல வித வாகனங்களின் மேல் எழுந்தருளச் செய்து நடத்துவிக்கும் விழாவிற்குத் திருவிழா என்று பெயர். இது பெருவிழா என்றும் மகோற்சவம் என்றும் சொல்லப்படும். உற்சவம் என்பது உத்தம யாகம் எனவும், மேலான ஐந்தொழில்கள் எனவும், படைப்பு நெறியைக் குறிப்பதென்றும், போக மோட்சங்களைக் கொடுப்பதென்றும் பொருள் கொள்வர். இப் பெரிய திருவிழாக்களைச் செய்தவர்கள் சகல போகங்களையும் அனுபவித்து நற்பேறு பெறுவர்.
கிரியைகளில் நித்தியம், நைமித்தியம், காமியம் என மூவகை இருத்தல் போல், திருவிழாக்களிலும் மூவகை உண்டு. நித்திய பூசையின் இறுதியில் செய்யப்படுவது நித்திய விழா, வருடந்தோறும் குறித்த ஒரு காலத்தில் வருவது நைமித்திய விழா, இஷ்ட பூர்த்திகளின் போது செய்யப்படுவது காமிய விழா. கோயில்களில் ஆண்டுக் கொருமுறை அல்லது இரண்டு முறை பிரம்மோற்சவம் என்னும் பெரிய திருவிழாக்கள் நடைபெறுவதுண்டு.
சிதம்பரத்தில் ஆண்டுக்கு இரு முறை பிரமோற்சவம் என்னும் பெரிய திருவிழாக்கள் இடம் பெற, ஏனைய கோயில்களில் ஆண்டுக் கொருமுறையே திருவிழாக்கள் இடம் பெறுகின்றன. இத்திருவிழாக்களை நான்கு வகையாக நிர்ணயிக்கின்றார்கள். செளரம், சாந்திரம், நக்ஷத்திரம், சாவனம் என்பனவே அவை. ஏதாவதொரு மாதப் பிறப்பினை இறுதி நாளாகக் கொண்டமைவது செளரமாத விழா. இது பிரஜாவிருத்தியைக் கொடுக்கும். வைகாசி சதுர்த்தசி, மாசி மாத சஷ்டி, ஆனி மாத கிருஷ்ண பகூடி அஷ்டமி, பன்னிரண்டு மாதங்களிலும் வரும் பெளர்ணமி, அமாவாசை என்னும் திதிகளில் ஏதாவது ஒரு திதியை இறுதியாகக் கொள்வது சாந்திர மாத விழா. இது முத்தி தரவல்லது. மார்கழித் திருவாதிரை, தைப்பூசம், மாசிமகம், பங்குனி உத்தரம், சித்திரைச் சித்திரை, வைகாசி விசாகம், ஆனி உத்தரம், ஆடி உத்தராடம், ஆவணித் திருவோணம், புரட்டாதிப் புரட்டாதி, ஐப்பசி அஸ்வினி, கார்த்திகைக் கார்த்திகை மற்றும் எல்லா மாதங்களிலும் வரும் திருவாதிரை இவற்றுள் ஒன்றை இறுதியாகக் கொள்வது நக்ஷத்திரமாத விழா. இது பாவ நிவாரணத்தைக் கொடுக்கும். கோயில் எஜமான் கும்பாபிஷேக தினம் இவற்றுள் ஒன்றை இறுதியாகக் கொள்வது சாவன விழாவாகும். இது சாந்தியைக் கொடுக்கும்.
பொதுவாகத் திருவிழாக்கள் பத்து முதல் பதினைந்து நாட்கள் இடம் பெறும். இதில் கொடியேற்ற விழா படைத்தலையும்,
167

Page 198
வாகனத் திருவிழா காத்தலையும், தேர்த் திருவிழா அழித்தலையும், மெளன விழா மறைத்தலையும், தீர்த்தவிழா அருளலையும் குறித்து நிற்கின்றன. எனவே இறைவனின் ஐந்தொழில்களின் உண்மையை உலகுக்கு உணர்த்தவும், உயிர்கள் மல நீக்கம் பெற்று உய்ந்து நலம் பெறவும் இப்பெரு விழாக்கள் நடைபெறுகின்றன. இவ் விழாவானது கொடியேற்றம் முதல் தீர்த்தம் ஈறாக யாகம், பலி என்பவற்றுடன் செய்யப்படுவது. இதனைச் சாகல்யம் என்ற பெயரால் ஆகமங்கள் குறிப்பிடுகின்றன. இவற்றைவிட கொடியேற்றுதலின்றி யாகதரிசனம், பலியிடுதல் முதலிய அம்சங்கள் யாவும் உள்ள விழா பாவனம் எனப்படும். யாகம், பலி இவையும் இல்லாமலே செய்யப்படுவது சாந்தீகம். ஒரே நாளில் செய்து முடிக்கப்படுவது
மாங்கல்யம்.
திருவிழா நடைபெறுவதற்கு கொடிமரம் அவசியம். இது நந்தி, பலிபீடம் என்பவற்றை அடுத்து தண்டு போல நிமிர்ந்து நிற்பது. மூங்கில், கருங்காலி, வில்வம், தேவதாரு, பலா, தென்னை முதலிய மரங்களுள் ஒன்று கொடிமரமாகப் பயன்படுத்தப்படும். உலோகத் தகடுகளால் போர்க்கப்பட்டு மேலே கொடிச் சீலை விரிந்து நிற்கத்தக்க அமைப்புகளையும் கொண்டதாக உருவாக்கப்படிருக்கும். கொடிச் சீலையில் அந்தந்த ஆலய மூர்த்தியின் வாகனம் படத்தின் மையத்திலே வரையப்பட்டிருக்கும். திருவிழா தொடங்குவதற்கு முதல் நாள் மண்ணெடுப்பதும், மண்ணைப்பதம் பண்ணி முளையிடுவதும், வாஸ்து சாந்தி, கிராம சாந்தி என்னும் கிரியைகளும் சிவாசாரியார், தர்மகர்த்தா ஆகியோரின் ரக்ஷாபந்தனமும் (காவலுக்காகக் காப்புக் கட்டுதலும்) மேற் கொள்ளப்படும்.
கொடியேற்ற விழாவன்று கும்ப பூசை, அபிஷேக ஆராதனைகள் பேரீதாடனம், (பேரீ எனப்படும் மேளத்தில் மந்திர சகிதமாக குரு மேளத்தில் ஒலியெழுப்பி சகல தேவர்களையும் அங்கு எழுந்தருளும்படி வேண்டுதலே பேரீதாடனமாகும்). துவஜஸ்தம்ப ஆவாகனம் (ஆலய மூலமூர்த்தியைக் கொடிக் கம்பத்திலே எழுந்தருளச் செய்தல்) என்னும் கிரியைகள் நடைபெற்று துவஜாரோகணம் என்னும் கொடியேற்ற விழா நடைபெறும். திருவிழாவின் முதல் நாளில் கொடியேற்றுதலின் நோக்கமாவது திருவிழாவிற்கு வரும் அடியார்களை உயர்பதமடையச் செய்வதற்காக, இறைவன் திருவிழா நாட்களில் சிறப்பாக எழுந்தருளி அருள்பாலிக்கின்றார் என்பதை உணர்த்துதலே. மேலும் விழாக் காலங்களில் சுவாமி வீதிகளில் திருவுலாச் செய்தருளுவது மூவுலகங்களையும் காக்கவும், கோயில்களுக்கு வந்து வழிபடாதவர்களுக்காகவும், வந்து வழிபட முடியாதவர்களுக்காகவும் ஆகும்.
இறைவன் திருவிழாக் காலங்களில் ஒவ்வொரு நாளும் வெவ்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி வலம் வருவார்.
168

இவ்விழாக்களுள் கைலாயவாகனம், வேட்டைத் திருவிழா, தேர்த் திருவிழா, தீர்த்தத் திருவிழா, தெப்போற்சவம் என்பன குறிப்பிடத்தக்கவை. தன் அகங்காரத்தினால் கைலாய மலையைப் பெயர்த்தெடுக்க முற்பட்டான் இராவணன். பின் தன் பிழை உணர்ந்து இறைவனிடம் இரந்து நின்று வரம் பெற்றான். ஆணவ மலம் நிறைந்து நிற்கும் வரை இறை அருள் கிட்டாது என்பதனைப் புலப்படுத்துவதே இவ் வாகனத் திருவிழாவின் தத்துவமாகும். வேட்டைத் திருவிழாவை வடமொழியில் “மிருக யாத்திரை விழா” என்று கூறுவார்கள். மனிதர்களிடையே காணப்படும் மிருக குணங்களான காம, குரோத, மோக, லோப, மத, மாத்சரியம் என்பவற்றை அழித்து மேலான தன்மையை நல்குவதைக் குறிப்பதே இவ் விழாவின் நோக்கமாகும். சுவாலித்து எரியும் அக்கினியின் தோற்றத்தில் அமையப் பெற்ற தேரானது அழித்தலைக் குறிப்பது. தேரின் பாகங்கள் பிரபஞ்சத் தோற்றத்தையும் அதன் பீடம் இருதயத்தையும் குறிப்பன. அங்கு இறைவன் வீற்றிருந்ததும் தேர் ஒடுகின்றது. வாழ்க்கைத் தேர் சிறப்பாக ஒடுவதற்கு நமது இருதய பீடத்திலே இறைவனை எப்போதும் எழுந்தருளச் செய்ய வேண்டும். தேர் சரியான பாதையில் ஒடுவதற்கிசைவாகச் சறுக்குக் கட்டைகள் போட்டு அதனைக் கட்டுப்படுத்துவது போல நமது வாழ்க்கையையும் நல்வழிப்படுத்த வேண்டும். தேர்க் காலிலே தேங்காயைச் சிதற அடித்து நமது துன்பங்களும் சிதறும் வண்ணம் வேண்ட வேண்டும் என்பன போன்ற அனேக தத்துவங்களைத் தேர்த் திருவிழா விளக்கி நிற்கின்றது. மறைத்தலாகிய தொழிலைக் குறிப்பது சூரணோற்சவம். சூர்ணம் என்றால் தூள். பொன்னிறமான தூள் என்பது பொற் சூரணம் எனக் கூறப்பட்டு பின்னர் பொற் சுண்ணம் என மருவியது. சூர்னோற்சவத்தன்று பொற்சுண்ணம் இடித்து இறைவனுக்குச் சாத்தப்படும். பின் இறைவனை முழுக்காட்டி நாமும் தீர்த்தமாடுகிறோம். தீர்த்தத் திருவிழா அருளைக் குறிக்கும்.
கோயில்களில் வருடமொரு முறை நிகழும் இம் மகோற்சவ விழாவைத் தவிர, வாரத்துக் கொரு முறை அல்லது இரு வாரங்களுக் கொருமுறை நிகழும் விழாக்களும் மாதத்திற்கு ஒரு முறை அல்லது சில மாதங்களுக்கொருமுறை, வருடமொரு முறையும், பல வருடங்களுக்கொருமுறையும் விழாக்கள் நடைபெறுகின்றன. சுக்கிரவாரம், சோமவாரம், என்பன வாரந்தோறும் வரும் விசேட தின விழாக்கள். பிரதோஷ விழா இரு வாரங்களுக்கொருமுறை நிகழ்வது. கிருத்திகை, சதுர்த்தி, சஷ்டி, முதலியன மாதம் ஒரு முறை வருவன. நடேசரபிஷேகங்கள் ஒவ்வொரு ஆண்டும் ஆறு தடவைகள் இடம்பெறும் விழாவாகும். ஆடிப்பூரம், ஆவணிச் சதுர்த்தி, ஆவணி மூலம், நவராத்திரி, விஜயதசமி, கந்த சஷ்டி, திருக் கார்த்திகைத் தீபம், கார்த்திகை சோமவாரம், மார்கழித் திருவாதிரை, தை சங்கிராந்தி, மாசிமகம் முதலியன வருடமொரு முறை நிகழும் விழாக்களாகும். கும்பாபிஷேகம் பல வருடங்களுக்கொருமுறை வருவன.
இந்துக் கலைக்களஞ்சியம்

Page 199
இவற்றுள் பிரதிஷ்டை எனப்படும் கும்பாபிஷேகம் மிக விரிவான
கிரியைகளைக் கொண்ட விழாவாகும்.
கும்பாபிஷேகம்
அருள்நிறை நீரினால் இறைவனைத் திருமுழுக் காட்டுதலே கும்பாபிஷேகம் எனப்படும். இதனைக் குடமுழுக்கு, என்றும் கூறுவர். ஆகமங்கள், கிரியைகளை நான்காகப் பிரித்துள்ளன. அவை கர்ஷணம், பிரதிஷ்டை, உற்சவம், பிராயச்சித்தம் எனப்படும். கர்ஷணம் என்பது நிலத்தைச் செம்மையாக்கி, ஆலயம் அமைக்கும் பொழுது உழுது சீராக்கும் கிரியையாகும்.
பிரதிஷ்டையானது, அநாவர்த்தனம், ஆவர்த்தனம், புனராவர்த்தனம், அந்தரிதம் என நான்கு வகைப்படும். முதன் முதலாக ஆகம விதிப்படி புதிதாக ஆலயமமைத்து இறைவனைப் பிரதிஷ்டை செய்வது அநாவர்த்தனம் எனப்படும். பழைமை மிக்க ஆலயங்களில் எதிர்பாரா விதமாக மண்மாரி, தீ முதலிய குற்றங்கள் ஏற்பட்டால் அக்குற்றம் நீங்கப் புதிய ஆலயம் அமைத்தோ, அல்லது அதனைச் சீராக்கியோ நிகழ்த்தும் பிரதிஷ்டை ஆவர்த்தனப் பிரதிஷ்டை எனப்படும். ஆலய விமானம், கோபுரம், மண்டபம் திருச்சுற்று, ஆலய விக்கிரங்கள் ஆகியவற்றிற் பழுது ஏற்பட்டால் அல்லது சிதிலமடைந்தால் பாலஸ்தாபனம் செய்து பழுதடைந்தவைகளைச் செம்மையுறச் செய்வது புனராவர்த்தனப் பிரதிஷ்டை எனப்படும். இதனை ஜிர்னோத்தாரணம் என்றும் கூறுவர். ஆலயத்துள் மனிதர்கள் இறந்தாலும், மிருகங்கள் கொல்லப்பட்டாலும், வீட்டுக்கு விலக்கான பெண்கள் நுழைந்தாலும், வர்ணாசிரம தர்மம் தவறியவர்கள் பிரவேசித்தாலும், நாய், கழுதை, பன்றி, குரங்குகள் உள்ளே வந்தாலும், வேதாகமங்களை நிந்திப்பவர்கள் சமயப் பிரதிஷ்டர்கள் முதலியவர்கள் வந்தாலும் செய்யப்படுவது அந்தரிதப் பிரதிஷ்டையாகும் (பிராயச்சித்தம்).
அநாவர்த்தனப் பிரதிஷ்டை பற்பல பிரிவுகளை உள்ளடக்கியது. அவையாவன விநாயகர் வழிபாடு ஆசார்யா வரணம், திரவிய விபாகம், திரவிய சுத்தி, அனுக்ஞை கிராம சாந்தி, பிரவேச பலி, இரகூேடிாக்ன ஹோமம், திசாஹோமம், சாந்திஹோமம், சம்ஹிதா ஹோமம், மூர்த்தி ஹோமம், நவக்ரக மகம், வாஸ்து சாந்தி, மிருத் சங்கிரகணம், அங்குரார்ப்பணம், இரகூடிாபந்தனம், நயனோன்மீலனம், ஜலாதி வாசம், பிரசன்னாபிஷேகம், கடஸ்தாபனம், தீபஸ்தாபனம், ஸ்தூபிஸ்தாபனம், பிம்பஸ்தாபனம், அஷ்டபந்தனம், தைலாப்பியங்கம் (எண்ணெய்க் காப்பு) பிம்பகத்தி, விசேட திரவிய ஹோமம், ஸ்பர்சாகுதி, மஹாபூர்ணாகுதி, கும்ப உத்தாபனம், தூபிஅபிஷேகம், மஹா கும்பாபிஷேகம் முதலியன. இவற்றைச் சுருக்கமாக நோக்குவோம்.
விநாயகர் வழிபாடு
எடுத்த காரியம் இடையூறின்றி இனிதாக நிகழ விநாயகர் வழிபாட்டுடன் கிரியைகள் தொடங்கும்.
இந்துக்கலைக்களஞ்சியம்

ஆசார்ய வரனம்
ஆலயத்தைப் பரிபாலிக்கும், தலைவர் மஹா கும்பாபிஷேகத்தை நடத்தி இறையருள் பெற்றுத் தருமாறு கல்வி, கேள்விகளிலே வல்ல சிவாசாரியரையும், போதகாசாரியரையும் எட்டுறுப்பும் தோய வீழ்ந்து வணங்கும் நிகழ்வாகும்.
திரவிய விபாகம்
சேகரித்துள்ள பொருளை மூன்றாகப் பிரித்து ஒரு பங்கு ஆலயம் நிறுவவும், எஞ்சிய இருபங்கினுள் ஒருபங்கை கிராமத்தை அழகுறுத்தவும், மூன்றாவது பங்கை கும்பாபிஷேகச் செலவுகளுக்குமாகப் பங்கிடுதல்.
கும்பாபிஷேகத்திற்கென நியமிக்கப்பட்ட பொருளைத் தூய்மை செய்யும் பொருட்டு சிவாஸ்திர பூஜை, ஹோமம் முதலியன செய்து கும்பநீரினால் சுத்திகரித்து மங்கல வாத்தியங்கள் முழங்க அதனைப் பெற்று ஆசிகூறி, அத்திரவியத்தைப் பதினொரு பங்குகளாக்கி இரண்டு பங்கை யாகத்திற்கும், ஒரு பங்கை அபிஷேகத்திற்கும், ஒரு பங்கை சிவாச்சாரியாருக்கும் இரண்டு பங்கை இருத்து விக்குகளுக்கும், ஒரு பங்கை வேதாத்தியயனம், திருமுறை ஒதல் என்பவற்றுக்கும் ஒரு பங்கை தக்ஷணைக்காகவும், ஒரு பங்கு பிராம்மண போஜனம், மாகேசுரபூஜை என்பவற்றுக்கும், ஒரு பங்கு பரிசாரகர், வாத்தியகாரர்,சிற்பி முதலியவர்களுக்கும் ஒரு பங்கு யாகத் திரவியங்களுக்குமாக அமையும்படி பங்கிடுதலே திரவிய விபாகமாகும்.
திரவிய சுத்தி
சிவாச்சாரியார் தனித்தனித் தகழிகளில் நவதானியம் ஹோமத்திரவியங்களை நிரப்பி வழிபாடியற்றி, மங்கல வாத்தியம் முழங்க, பரிசாரகனை நயன தீகூைடி செய்வித்து, அவனது சிரசிலே திரவியங்கள் அடங்கிய தட்டை ஏற்றி ஆலயத்தை வலம் வந்து புனிதப்படுத்தல் திரவிய சுத்தியாகும்.
அனுக்ஞை
அனுக்ஞை என்பது கும்பாபிஷேகக் கிரியைகளை நன்முறையில் நிகழ்த்தும் பொருட்டுத் தெய்வங்களிடமும், அந்தணர்களிடத்தும் அனுமதி வேண்டுதல். இது மூவகைப்படும். அவை சாங்கானுக்ஞை, உபாங்கானுக்ஞை, பிரத்தியாங் கானுக்ஞை என்பன. ஆசாரியார் சிவமாகவே விளங்குபவர். எனவே முதலில் நிகழ்வது ஆசார்யானுக்ஞை. விநாயகர், முருகன், தகூதிணாமூர்த்தி, நந்திகேசுவரர், சண்டேசுவரர் ஆகிய ஐவரிடத்தும் பெறுவது உபாங்கானுக்ஞை, பரமசிவனிடமிருந்தும் அம்பிகையிடமிருந்தும் பெறுவது சாங்கானுக்ஞை.
அனுக்ஞையில் முதலிடம் பெறுவது விநாயக வழிபாடு. அதைத் தொடர்ந்து தூய்மை ஏற்பட வேண்டிப் புண்ணியாக
169

Page 200
வாசனம், பூதசுத்தி, அந்தர்யஜனம் ஆகியவற்றைச் செய்து அனுக்ஞை தொடங்க வேண்டும். மஞ்சள் பூசிய இரு தேங்காய்களைக் கையிலெடுத்துக் கொண்டு “ விக்கின விநாயகனே இடையூறுகள் நேராதிருக்கும் பொருட்டு இதனை உடைக்கின்றேன்” என்று பிரார்த்தித்துச் சமபாதிகளாகுமாறு தேங்காய்களை உடைத்து மோதகம், அப்பம், பொரி, கடலை, கரும்பு, வாழைப்பழம், மாம்பழம், பலாப்பழம், விளாம்பழம், அவல் முதலிய உண்டி வகைகளை நிவேதித்து, அறுகால் அர்ச்சித்து சோடசோபசாரம் நிகழ்வித்து கணதாளத்துடன் கண நிருத்தம் செய்வித்து, நீரஞ்சனம் செய்து, தட்டைக் கரங்களில் ஏந்தியவாறு மங்கல வாத்தியம் முழங்க ஆசாரியார், சிவன், நந்தி, பரிவார தேவதைகளை விரிவாகப் பூசித்து அனுக்ஞை பெறல் வேண்டும்.
கிராம சாந்தி
இது கிராமத்து மக்களின் நன்மையின் பொருட்டு நிகழ்த்தப் பெறும் கிரியையாகும். ஒவ்வொரு ஆண்டும் நகரில் இவ்வாறு கிராமசாந்தி செய்வது அரசனுக்கு வெற்றியை அளிக்கும். காவற் கடவுளான வைரவருக்கு அவரது ஆதிக்கத்தின் கீழுள்ள பூத, பைசாச, அசுர, பிரம ராக்ஷதர்களால் வரும் இடையூறுகளை நீக்கும் பொருட்டுப் பூசை, பலி, ஹோமம் முதலியன செய்தல் கிராம சாந்தியாகும்.
பிரவேச பலி
இடையூறு நீங்கி, எடுத்த காரியம் இனிதாக நிறைவேறிச் சிவத்தன்மை விளங்கும் பொருட்டு, மத்தியில் மகாலசஷ்மியையும், எண்திசைப் பாலகர்களுக்கு அவரவர்க்குரிய மண்டங்களையும் அமைத்து ஆவாஹனம் செய்து வெற்றிலை, பாக்கு, பழம், நெற்பொரி, கமுகம்பூ இளநீர், பலியுருண்டை, விளக்கு முதலியவைகளை அளித்து தீயசக்திகளைத் திருப்தி செய்வித்து, அந்த இடத்தை விட்டு நீங்கி, காடு, மலை, கடற்கரை, இடுகாடு முதலிய இடங்களைச் சென்றடையுமாறு வேண்டுதல் பிரவேச பலியாகும்.
இரகூேடிாக்ன ஹோமம்
அரக்கர்களை அழிக்கும் இரகூேடிாக்ன தேவரைத் திருப்தி செய்வது இது. பிரவேசபலி, கிராம சாந்தி போன்றது. குறிப்பாக அக்னி காரியம் இதில் இடம் பெறுகின்றது. பருத்தி, மிளகு, எள், வெண்கடுகு, பஞ்ச தைலமான வேப்பெண்ணெய், இலுப்பைநெய், ஆமணக்கு எண்ணெய், நல்லெண்ணெய், தேங்காயெண்ணெய், மகிழஞ்சமித்து, காஞ்சுரை, மூங்கில், வில்வம் முதலியவற்றால் இரகூேடிாக்ன ஹோமம் செய்வர்.
திசாஹோமம்
கிழக்கு, மேற்கு, தெற்கு, வடக்கு திசைகளில் நான்கு விதமான கும்பங்களை வைத்து பூசனை செய்து ஹோம நிறைவில், அந்தக் கும்பங்களின் நீரை கோபுர வாசலில் இருந்து வீதிவலமாகச் சொரிந்து ஆலயத்தைப் புனிதமாக்கல்.
170

சாந்தி ஹோமம்
மண்டபத்தின் நடுவில் பாசுபதாஸ்திர மூர்த்தியையும் எட்டுக் கும்பங்களிலும் வஜ்ரம், சக்தி, தண்டம், கட்கம், பாசம், துவஜம், கதை, திரிசூலம் முதலிய ஆயதங்களையும் பூசித்து, அக்னி காரியம் செய்து பாசுபதமூர்த்தியை, துவாதசாந்தத்திற் சேர்த்து நீரைப் புரோகூஜிக்க வேண்டும்.
சம்ஹிதா ஹோமம்
கும்பத்திற் சிவனைப் பூசித்து சம்ஹிதா மந்திரங்களால் அர்ச்சித்து, அக்னிகாரியம் நிகழ்த்தி, சம்ஹிதா மந்திரங்களாலும் தனித்தனியாக பலாசு முதலிய சமித்துக்களாலும் திரவியங்களாலும் ஹோமம் செய்து, அக்கினியைக் கும்பத்தில் ஒடுக்கிச் சுவாமிக்கு அபிஷேகம் செய்ய வேண்டும்.
மூர்த்தி ஹோமம்
வேதிகையில் சிவவர்தனி கும்பங்களைச் சுற்றி எட்டுக் கும்பங்களை வைத்து, நடுவிற் சிவனை ஆவரணாந்தமாகவும், எட்டுக் கும்பங்களில் வஜ்ராதி சக்திகளையும், வர்தனியில் அகோராஸ்திர சக்தியையும் அர்ச்சித்தபின் அகோரஸ்திர மந்திர ஜபம் செய்ய வேண்டும். விருத்த குண்டத்தில் அக்கினி காரியம் செய்து அக்கினியைக் கும்பத்தில் ஒடுக்கி, கும்பநீரைச் சுவாமிக்கு அபிஷேகம் செய்ய வேண்டும்.
நவக்கிரகஹோமம்
நவக்கிரக மண்டலம் அமைத்து அர்ச்சித்த வெளிப் பதங்களில் அமைக்கப்பட்ட நட்சத்திர கும்பங்களில் நட்சத்திர தேவதைகளைப் பூசித்து, அக்னி காரியம் நிகழ்த்தி, ஜயாதி ஹோமம் செய்து பூர்ணாஹுதி, அந்தர்பலி, பஹிர்பலி, அக்கினி விசர்ஜனம் முடித்து, அர்க்கியம் கொடுத்து கிரகப்ரீதியின் பொருட்டு நவக்கிரக தானம், தசதானம் கொடுப்பித்தல் வேண்டும்.
அதிகமழை, மழையின்மை, படைபயம், அம்மை நோய் முதலிய அபாயம் ஆகியன நிகழும் வேளையும் நவக்கிரக ஹோமம்
செய்வது வழக்கமாகும்.
வாஸ்து சாந்தி
பூமியில் உள்ள குற்றங்களை நீக்கும் கிரியை, வாஸ்து மண்டலமானது பரமசாயிபதம், மண்டூக பதம் என இருவகைத்து. பரமசாயிபதம் 81 கட்டங்களும், மண்டூக பதம் 64 கட்டங்களுமாக அரிசிமாவினாற் கோடுகள் அமைத்து வாஸ்து மண்டலம் அமைக்கப்பட்டுப் பூசிக்கப்படும். பெண்தெய்வங்களுக்கும், சக்தியின் அம்சமான முருகனுக்கும் உரியது பரமசாயிபத வாஸ்து மண்டலமே.
பூமிக்கு அதிபதி வாஸ்து பிரம்மா, அவரையும், பிற தேவதைகளையும் பூசித்து, பலிதானம் அளித்து பலாசு, அத்தி,
இந்துக் கலைக்களஞ்சியம்

Page 201
அரசு முதலியவற்றின் காய்ந்த சருகுகளாலும், தர்ப்பை, வைக்கோல் முதலியவற்றாலும் நான்கு முழ அளவான உருவம் செய்து, அதில் வாஸ்து புருஷனை ஆவாகித்து தலைப்பக்கத்தில் ஹோமாக்கினி பற்றிக் கொள்ளும்படி வைத்துப் பரிசாரகன் அதனின் காலைப்பற்றியவாறு, வலது கையில் பலியிடப்பட்ட பூசனிக்காயை எடுத்துக் கொண்டு ஆலயம், யாகசாலை, வீதிகள் முதலிய இடங்களில் இழுத்துச் சென்று, ஈசானத்திலே தடாகத்தில் விசர்ஜனம் செய்ய வேண்டும். சாதகாசாரியார் பிரம்ம
கும்ப நீரால் தொடர்ந்து புரோகூழித்துச் செல்ல வேண்டும்.
மிருத்சங்கிரகணம்
பூமித்தாயை வணங்கி முளைப்பாலிகை இடுவதற்காக மந்திர பூர்வமாக, சிவாஸ்திரமாக மண்வெட்டியைப் பாவித்து மண் எடுத்தல், மண் எடுத்த குற்றத்திற்குச் சாந்தியாகக் கும்பநீரினால் நிலத்தை அபிடேகித்தல்.
அங்குரார்ப்பணம்
சந்திரனையும் பன்னிரு ஆதித்தர்களையும் பூசித்து உரிய மந்திரங்களுடன் பாலிகைச் சட்டியில் நவதானியங்களை
விதைத்தல்.
இரகூடிாபந்தனம்
18 அல்லது 24 இழைகளுடன் கூடிய, தூய்மையாக இழைக்கப்பட்ட நூலை மஞ்சள் பூசி, பஞ்சகவ்யத்தால் சுத்திகரித்து, தேவர்களைப் பூஜித்து, சூக்தாதிகள் ஜபம் செய்து எடுத்த காரியம் தடையின்றி நிறைவேற உறுதிபூண்டு ஆசாரியர், துணை ஆச்சாரியார்கள், எஜமானன், மூர்த்திகள்
அனைவருக்கும் காப்பு நாண் கட்டுதல் இரகூடிாபந்தனம்.
நயனோன்மீலனம்
புதிதாகச் செய்யப்பட்ட விக்கிரங்களுக்கு கண்திறத்தல் (நயன- உன்மீலனம்). முறைப்படி பூஜை, அக்கினி காரியம் ஆகியவற்றை நிகழ்த்தித் திரையிட்டு, மூர்த்தியின் திருவுருவத்தில் தக்க ஊசியால் திருக்கண்களைத் திறந்து தானியத்தின் மீது வைத்துப் பொன், முதலிய மங்கலப் பொருட்கள், பிராமணர்கள், தீபம், நிறைகுடம், கண்ணாடி, துறவியர், அடியார்கள் ஆகியோரைத் தரிசிக்கச் செய்து
சிலைவடித்தவருக்கு சம்பாவனை செய்வர்.
ஜலாதிவாசம்
திருக்கண் திறப்பிக்கப்பெற்ற மூர்த்திகளை கிழக்கு நோக்கி நீரிலே அமிழ்த்தி வைத்தல்; ஜலாதி வாசம் முடிந்து புதிய நெல்லில் விக்கிரங்களை மூடி வைத்தல் தான்யாவதிவாசம்; மான்தோல் விரித்து தலையணை அமைத்து கிழக்கே திருமுடி
வைத்து சயனிக்கச் செய்தல் சயனாரோபணம் எனப்படும்.
இந்துக்கலைக்களஞ்சியம்

பிரசன்னாபிஷேகம்
பிரசன்னாபிஷேகத்திற் சங்கற்பம், சகளிகரணம், விக்னேசுவர பூஜை, புண்ணியாக வாசனம், பஞ்ச கவ்ய பூசை, பஞ்சாமிருத பூசை முதலியன பூர்வாங்கமான கிரியைகள். நடுவில் சிவகலசத்தையும் வர்தனி கலசத்தையும் அஷ்ட வித்யேஸ்வர கலசங்களையும் நிறுவி, கும்பபூசை அக்கினி காரியம் நிகழ்த்தி பூர்ணாகுதி முடிந்தபின் அக்கினியிலுள்ள தெய்வத்தை கும்பத்திலொடுக்கி, சுவாமிக்கு எண்ணெய் முதலிய திரவியங்களால் அபிஷேகித்துக் கும்ப நீரால் அபிஷேகம் செய்தல் வேண்டும். இதைத் தொடர்ந்து அலங்காரம், தீபாராதனை முதலியன நிகழும்.
கடஸ்தாபனம்
கடஸ்தாபனம் என்னும் இக்கிரியை மிக முக்கியமானது. கும்பம் வைப்பதற்காக நவதானியங்கள், நெற்பொரி, தர்ப்பை ஆகியவற்றை உரிய மந்திரங்களை உச்சரித்தவாறு முறைப்படி பரப்பிக் கும்பத்தைத் தூய்மை செய்து வடிகட்டிய சுத்தநீரை நிரப்பி, விஷ்ணுவை வணங்கி, வாசனைத் திரவியங்கள் பன்னீர்,கங்கைப் புனல் என்பவற்றைப் பூசித்து, நவரத்தினம், பொன், வெள்ளி முதலிய பொருட்களையிட்டு முப்பத்தாறு தத்துவங்களையும் அமைத்த தேவர்களையும், சதாசிவரையும் பூசித்து அமரச் செய்து தேங்காயைச் சிரசாகவும் மாவிலையைச் சடையாகவும் கூர்ச்சத்தை முடியாகவும் வஸ்திரத்தைத் தோலாகவும், கும்பத்து நீரை இரத்தமாகவும் தாதுக்களாகவும் கொண்டு மூர்த்திகள் கும்பத்தில் உருவேற்றப்படுவர். பிறகு அக் கும்பங்களை எடுத்து வேத கோஷவாத்திய ஒலியுடன் வீதிவலமாக வந்து யாக சபையில் சேர்ப்பிப்பர். இது யாகசாலைப் பிரவேசம் எனப்படும். பின் அக்கினி விபஜனம், தீபாராதனை முதலியன நிகழும்.
தீபஸ்தாபனம்
தீபத்தை அலங்கரித்து ஏற்றி, விக்னேசுவர பூஜை புண்ணியாக வாசனம் செய்து தீபத்தில் பஞ்சபிரம பூசை நிகழ்த்தி வியோம வியாபி மந்திரம் ஜபித்து சுமங்கலிப் பெண்கள் தீபங்களைத் தாங்கி ஆலயத்தை வலம் வந்து உரிய இடங்களில் தாபிப்பார்கள்.
தூபிஸ்தாபனம்
வெகுதொலைவில் வருபவர்களுக்கும் ஆலயத்தை நினைவூட்டுவது தூபியாகும். பூஜிக்கப்பட்ட தூபியை விமானத்தின் மீது நிறுவுவர்- அதன்பின் கோவாசம் முதலிய கிரியைகள் நிகழும்.
பிம்பஸ்தாபனம்
யந்திரங்களைத் தாபித்த பிறகு மூர்த்திகளை வேத
கோஷத்துடன் எழுந்தருளச் செய்து சுபமுஹ9ர்த்தத்தில்
மூர்த்திகளின் திருவுருக்களை அந்தந்த இடங்களிற் பொருந்தச்
செய்தல் பிம்பஸ்தாபனம் ஆகும்.
171

Page 202
அஷ்டபந்தனம்
பிம்பங்கள் பீடங்களுடன் நன்றாகப் பொருந்துவதற்கு உபயோகிக்கப்படுவது அஷ்டபந்தனம் ஆகும். சுக்கான்கல், குங்கிலி, கொம்பரக்கு, தேன்மெழுகு, நற்காவி, செம்பஞ்சு, சாதிலிங்கம், எருமை வெண்ணெய் ஆகிய எட்டுப் பொருட்களின் கூட்டு அஷ்டபந்தனம் ஆகும். பழைய பாடல் ஒன்று அஷ்டபந்தனப் பொருட்களையும் அதன் அளவுகளையும் தெரிவிக்கின்றது.
தைலாப்பியங்கம்
அஷ்டபந்தனம் நிகழ்ந்தபின் பக்தர்கள் இறைவனுக்கு எண்ணெய் சாத்துவார்கள். இது முக்கரணங்களாலும் இயற்றும்
குற்றங்கள் நீங்கற்பொருட்டு செய்யப்படுகின்றது.
பிம்பசுத்தி
அஷ்டபந்தனம் நிகழ்ந்தபின், படிமங்களைச் சுத்தி செய்தலாகும். அஷ்ட மிருத்திகைகளின் கஷாயம், பத்ரோதகம், காந்தோகம், மூலோதகம், மார்ஜநோதகம், பரிமார்ஜநோதகம், புஷ் போதகம், பலோதகம், ரத்நோதகம், தான்யோதகம், லோஹோதகம், மான்யோதகம், சிருங்கோதகம், அஸ்திரோதகம், ஆகியவற்றை உரியவாறு கலசங்களில் நிரப்பி, அக்னிகாரியம் செய்து மூர்த்திகளுக்கு முன் பூசிக்கப்பட்ட பதினாறு கும்பங்களையும் சாந்திக் கும்பங்களையும் தனித்தனியாக
அபிஷேகம் செய்தல் வேண்டும்.
விசேஷ திரவிய ஹோமம்
பலாசு, கருங்காலி, அரசு, இத்தி, சந்தனக்கட்டை, ஆல், வன்னி, வில்வை, எருக்கு, நாயுருவி, மாஞ்சமித்து, பாதிரி, மூங்கில், பலா, அறுகு, தர்ப்பை, நெய், பக்குவான்னம், பாலன்னம், எள்ளன்னம், மிளகன்னம், தயிரன்னம், பயற்றன்னம், உளுந்தன்னம், அரிசிப்பாயசம், தேனன்னம், கடுகன்னம், எள்ளு, கடுகு, உளுந்து, நெற்பொரி, பொரிமா, பால், தயிர், சர்க்கரை, வாழைப்பழம், மாம்பழம், பலாப்பழம், விளாம்பழம், மாதுளம்பழம், பேரீச்சம்பழம், நாரத்தம்பழம், எலுமிச்சம்பழம், திராட்சைப்பழம், தேங்காய், பயறு, கடலை, குளச்நெந்நெல், பன்றிநெல், கோதுமை, மூங்கிலரிசி, கொள்ளு, மொச்சை, துவரை, தினை, வெண்கடுகு, அவரை, நெல் வகைகள், சாமை, வரகு, அரிசி, கரும்புத் துண்டு, கீரை, தேன், சக்கரை, அவல், மோதகம், அப்பவகைகள், கிழங்கு வகைகள், தேவதாரு, வெட்டிவேர், விளாமிச்சை, மருக்கொழுந்து, குங்கிலியம், சிற்றேலம், இலவங்கப்பட்டை, பன்னீர், குங்குமப்பூ, பச்சைக் கற்பூரம், சந்தனம், கஸ்தூரி, கோரோசனை, கருஞ்சந்தனம், முதலியவற்றை யாக திரவியங்களாக அளித்து ஹோமம் செய்தால், பிரஜாவிருத்தி, வெற்றி, தனலாபம், தம்பனம், போகம், சாந்தி, ஆரோக்கியம், வசியம், புஷ்டி, தோஷ நீக்கம், பகைவர்
172

அழிவு, பகைவெல்லல், சர்வவசியம், ஆயுள் விருத்தி, ரோக நலம், தானிய விருத்தி, முக்தி, பசு விருத்தி, செளபாக்கியம்,
இலட்சுமிகரம் முதலியன உண்டாகும்.
ஸ்பர்சாஹCதி
விஷேச திரவிய ஹோமம் நிகழ்ந்தபின் யாகசாலையில் நிகழும் கிரியை ஸ்பரிசாஹுதியாகும். அக்கினி, கும்பம், பிம்பம், இவற்றை இணைக்கும் வகையில் இடப்படும் தர்ப்பைக் கயிறு “நாடீசந்தானம்’ ஆகும். இதன் வழியாக இறை அருளை அக்கினியிலிருந்து பிம்பத்திற்குக் கொண்டு செல்வர்.
ஆசாரியர் சிருக்கில் ஆத்மதத்துவத்தையும், தத்து வாதிபரையும் மூர்த்தி, மூர்த்தீசுவரர்களையும் பூசித்தல் வேண்டும். ஆத்ம தத்துவத்திற்குரிய பிரமனுக்கு ஹோமம் செய்து, இறுதியில் வரும் "ஸ்வாஹா’வில் “ஸ்வா'வை மட்டும் உச்சரித்து சிருக்கில் சிறிது நெய்யை மிகுதியாகக் கொண்டு சாந்தி கும்பத்தை பரிசாரகர் கொண்டு வர மூர்த்திபர்கள் பின்தொடர, இலிங்கத்தை அடைந்தபின் அதன் பிரம்மபாகத்தை தர்ப்பையினால் தொட்டு “ஹா’ என்று உச்சரித்து மிகுதியாக இருக்கும் நெய்யை பிரம்ம பாகத்தில் ஆகுதி செய்ய வேண்டும். விஷ்ணு பாகத்திற்கும், ருத்ர பாகத்திற்கும் உரிய மந்திரங்களால் தனித்தனியே ஸ்பரிசாஹுதி
செய்ய வேண்டும்.
மஹாபூர்ணாஹ9தி
ஆத்மதத்துவம், வித்யாதத்துவம், சிவதத்துவம் என்னும் தத்துவங்களையும் அவற்றின் அதிபதிகளையும் பிருதிவி முதலிய அஷ்ட மூர்த்திகளையும் அவற்றின் அதிபதிகளையும் பூஜித்து, தவறுகள், தோஷங்கள் நிகழ்ந்தபின் அவற்றிற்குப் பிராயச் சித்தமாக இயன்ற அளவு மூலமந்திர ஹோமம் செய்து, கிழக்கு முதலான குண்டங்களில் அக்கினி காரியத்தின் நிறைவிலே பூர்ணாஹ9தி செய்தல் வேண்டும். அந்தந்தக் குண்ட தேவதைகளையும் நாடி சந்தானம் வழியே புஷ்பம், அகூடிதை, தர்ப்பையுடன் எடுத்து பிரதான குண்டத்தில் சிவத்துடன் ஒடுக்கி ஜயாதி ஹோமம் நிகழ்த்தி, உபசாரமுடிவில் மஹாபூர்ணாகுதி செய்தல் வேண்டும்.
கும்ப உத்தாபனம்
பிரதான கும்பங்களை எழுந்தருளச் செய்துமங்கல வாத்தியம், வேதங்கள் முழங்க, இராஜோபசாரத்துடன் லாஜபுஷ்பம் இறைத்து வீதிவலம் வந்து அந்தந்தக் கும்பங்களை உரிய இடங்களிற் சேர்க்க வேண்டும்.
ஸ்தூபி அபிஷேகம் ஸ்தூபி கும்பத்தை இராஜகோபுரம் முதலிய விமான ஸ்தூபிக்கு அபிஷேகம் செய்வர்.
இந்துக் கலைக்களஞ்சியம்

Page 203
மஹாகும்பாபிஷேகம்
ஆசாரியர் மூலஸ்தானத்தே சேர்க்கப்பட்ட பிரதான கும்பத்தை சகளிகரணம் செய்து ஷட்திரிம்சத்கலா நியாசம் செய்து கும்பத்திலிருந்து பீஜத்தை கூர்ச்சத்துடன் எடுத்து மூலமூர்த்திக்கு அபிஷேகித்தலே மஹாகும்பாபிஷேகம் ஆகும்.
அதனை அடுத்து நிவேதனம், தசதர்சனம், யஜமானாபிஷேகம், ஆசார்யபூஜை முதலியன நடைபெறும். மாலை திருக்கல்யாணம் நடைபெறும். மண்டலாபிஷேகம் 40 முதல் 45 நாட்கள் வரை நடைபெறும். மக்களை திருவருள் நெறியிற் செலுத்தக் கும்பாபிஷேகக் கிரியைகள் பெரிதும் உதவுகின்றன. (இக் கட்டுரையில் கும்பாபிஷேகம் என்ற பகுதி இந்துக் கலைக்களஞ்சியம் நாலாம் தொகுதியிலிருந்து பெறப்பட்டது.) (நி.நி.)
திருவிளையாடற் புராணம்
சோமசுந்தரப் பெருமானின் அறுபத்து நான்கு திருவிளையாடல்களைக் கூறுகின்றது. பதினெட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்நூலை பரஞ்சோதி முனிவர் இயற்றினார். புராணம் என்றால் பழைய வரலாறு எனப்படும். விளையாட்டு என்ற சொல், விருப்பம் என்ற பொருளில் விள் என்ற வேர்ச்சொல்லில் இருந்து பிறந்தது. இறைவனின் தெய்வத்தன்மை வாய்ந்த பழமையான அருள் விளையாட்டினை விளக்குவதால் இது திருவிளையாடற்புராணம் எனப்படுகிறது.
தொல்காப்பியத்தில் குறிப்பிடப்படும் காவியப் பண்புகள் புராணத்திலும் காணப்படுகின்றன. திருவிளையாடற் புராணத்தில் தொல்காப்பியம் கூறும் நாடு, நகர், ஆறு, மலை, சூரியன், சந்திரன் தென்றல் என்பவற்றின் வர்ணனைகள் இடம்பெற்றிருக்கின்றன. மூர்த்தி, தலம், தீர்த்தம் போன்றவற்றின் பெருமையோடு விழா, வேள்வி, வழிபட்டோர் வரலாறு, அவர் அடைந்த நற்பயன், யாவும் இங்கு கூறப்பட்டுள்ளன. இந்நூலை திரு ஆலவாய் மான்மியம், மதுரைப் புராணம் எனவும் அழைப்பர்.
இந்நூல் முருகப்பெருமானால் அகத்தியருக்கு அருளப்பட்டு பின் அகத்தியரால் முனிவர்களுக்கு அருளப்பட்டது. இந் நூலில் காப்பு, கடவுள் வாழ்த்து, பாயிரம், சிறப்புப்பாயிரம், அவையடக்கம் என்பன கூறப்படுகின்றன. விநாயகப் பெருமானுக்கும் சொக்கலிங்க மூர்த்திக்கும் அங்கயற் கண்ணம்மைக்கும் வாழ்த்துக் (காப்பு) கூறப்படுகின்றது. இந்நூலைப் படிப்பவர்கள் செல்வத்தினையும் நன்மக்களையும் நீண்ட ஆயுளையும் பெறுவர் என புராணத்தின் பயனையும் ஆசிரியர் கூறியுள்ளார்.
கடவுள் வாழ்த்தில் பரமசிவம், பராசக்தி, சொக்கலிங்க
மூர்த்தி, அங்கயற்கண்ணம்மை, நடேசர், செளந்தரபாண்டியன்,
இந்துக்கலைக்களஞ்சியம்

தடாத கைப் பிராட்டியார், வெள்ளியம்பலவாணர், தகூதிணாமூர்த்தி, விநாயகர், சுப்பிரமணியன், சரஸ்வதி, திருநந்திதேவர், நாயன்மார்கள், சண்டேசுவரர் முதலியோரை நினைத்துப் பாடப்பட்டுள்ளது. பாயிரத்தில் இந்நூலின் முதல் நூலான ஸ்கந்தபுராணம் பற்றிக் கூறப்படுகின்றது. இந்நூலாசிரியர் நூற்பயனில் வடநூலில் சிறப்பிடம் பெறும் பெருமைகளையெல்லாம் தமிழிற் கூறும்படி வேண்டியதற் கிணங்கவே இதனைப்பாடியுள்ளதாகக் குறிப்பிடுகின்றார்.
தலவிசேடம், தீர்த்தவிசேடம், மூர்த்திவிசேடம் என்ற மூன்றும் அருமைமிக்க சோமசுந்தரப் பெருமானின் அருள் விளையாடல்கள் அறுபத்து நான்கும் அர்ச்சித்த செயல் ஒன்றும் ஆக அறுபத்தெட்டாகிய அவைகளை முறைப்படியே படலங்களாக அமைத்து விரித்தமுறையில் விருத்தமாகிய செய்யுள் வகையில் இந்நூல் அமைகின்றது.
இங்கு பாண்டிநாட்டின் சிறப்புப் பற்றியும், அந்நாட்டின் நகரமாகிய மதுரைபற்றியும் கூறப்படுகின்றது. பாண்டி நாட்டு மக்கள் துறவிகளுக்கும், பெருமானிடம் அன்பு பூண்ட தொண்டர்களுக்கும் பசியைப் போக்க நல்ல உணவு, நோய்நீக்க மருந்து, உடம்பின் குளிரைப் போக்க உடை, தங்குமிடம், வேறு தேவையான பொருட்கள் போன்றவற்றை அளித்து அவரவர் தத்தம் நிலையில் மாறுபடாமல் செய்கின்ற அறத்திற்கு நேரும் இடையூறுகளைப் போக்கி அவர்களை வீட்டு நெறியில் செலுத்துவார்கள் என பாண்டி நாட்டின் சிறப்பினைக் கூறுகின்றார். நகர்ச் சிறப்பில் நகரின் புற அகழியின் வர்ணனை, மதிலின் சிறப்பு, வீதிகளின் சிறப்பு என்பன சிறப்பிக்கப்பட்டுள்ளன. கைலாயத்தின் சிறப்பினை “தேவமகளிர் கூத்தாடுகின்ற ஒலியும் பாடலின் ஒலியும், யாழின் ஒலியும் மத்தளம் அதிர்கின்ற ஒலியும் “யானைகளின் அளவிலா ஒலியும், அருவிகள் விழுகிற ஒலியும் எப்போதும் கேட்டுக் கொண்டேயிருக்கும்” என்றெல்லாம் கூறும் வளம் நிறைந்த
பாடல்களை இந்நூலில் காணலாம்.
இந்நூலின் பொருளாக இறைவனின் அறுபத்தினான்கு திருவிளையாடல்கள் அமைகின்றன. இந்நூலின் படலங்கள்
வருமாறு:
1 இந்திரன் பழிதீர்த்த படலம்
இந்திரனைப் பீடித்த பிரமகத்தியை நீக்கி அவனைப் பாவச் செயல்களிலிருந்து மீட்டெடுத்தமை
2 வெள்ளை யானை சாபம் தீர்த்த படலம்
இந்திரனது வெள்ளையானை துர்வாச முனிவரின் சாபத்தால் காட்டானையானது. இறைவன் அருளால் சாபம் நீங்கப் பெற்று வெள்ளையானையாகி இந்திரனிடம் சொர்க்கலோகம் சென்றமை.
173

Page 204
3 திருநகரங் கண்ட படலம்
பாண்டிய மன்னன் கனவில் இறைவன் தோன்றி “கடம்ப வனத்தில் உள்ள காட்டை அழித்து அழகிய நகரமாகச் செய்வாயாக’ எனக் கூறியதும் அவன் அதனை நகரமாக்கியமை.
4 தடாதகைப்பிராட்டியார் திரு அவதாரப் படலம்
மலையத்துவச பாண்டியனுக்கும் அவன் மனைவி காஞ்சன மாலைக்கும் மூன்று தனங்களையுடையவளாய் மூன்று வயது நிரம்பிய தோற்றம் உடையவளாய் தடாதகைப் பிராட்டியார் இறையருளால் அவதரித்தமை.
5 திருமணப்படலம்
கைலைமலையில் சிவபெருமானைக் கண்ட தடாதகைப் பிராட்டியாரின் மூன்றாவது தனம் மறைந்துவிட்டது. இறைவன் அருளால் இவனுக்கு இவள்தான் என்பதனை முடிவுசெய்து மணமுடித்து வைத்தனர்.
6 வெள்ளியம்பலத்தில் கூத்தாடிய படலம்
இறைவன் வெள்ளியம்பலத்தில் பக்தனுக்காக கூத்தாடியமை.
7 குண்டோதரனுக்கு அன்னமிட்ட படலம்
தடாதகைப் பிராட்டியார் தன்திருமணத்திற்கு சமைத்த உணவை என்ன செய்வது எனக் கவலைப்பட்டபோது, இறைவன் குண்டோதரனுக்கு பெரும்பசி உண்டாகச் செய்து முழு உணவையும் உண்ண வைத்தமை.
8 அன்னக் குழியும் வைகையும் அழைத்த படலம்
குண்டோதரனுக்கு ஏற்பட்ட தாகத்தைத் தீர்க்க வைகையையும் பசியினைப் போக்க அன்னக் குழியையும் உருவாக்கியமை.
9 ஏழுகடல் அழைத்த படலம்
தடாதகைப் பிராட்டியின் தாய் காஞ்சனமாலை
நீராடுவதற்கு ஏழுகடலை இறைவன் வரவழைத்தமை.
10 மலையத்துவசனை அழைத்த படலம்
கடலில் நீராடி தன் பிறப்பின் தொடர்பை அறுக்க விரும்பிய காஞ்சன மாலைக்கு கணவனின் கைப்பிடித்து அதனைச் செய்ய முடியாது போனதும் சுவர்க்கத்தில் இருந்த மலையத்துவசனை வரவழைத்து நீராடி பாவம் போக்கியமை.
11 உக்கிரபாண்டியன் திரு அவதாரப்படலம்
தடாதகைப் பிராட்டியார் வயிற்றில் முருகன் கருவாக சுந்தரபாண்டியன் விரும்பியதும் உக்கிரபாண்டியன் அவதரித்தமை.
174

12 உக்கிரபாண்டியனுக்கு வேல், வளை, செண்டு கொடுத்த படலம்
உக்கிரபாண்டியனுக்கும் சோமசேகரரின் மகள் காந்திமதிக்கும் திருமணம் இனிதே முடிந்தபின் சுந்தரபாண்டியன் "இந்திரனின் முடி சிதறும் வண்ணம் வளையினை எறி, கடல் கவறும் வண்ணம் இந்த வேலைவிடு, மேருவின் செருக்கழிய இந்தச் செண்டினால் அடி” எனக் கூறி மூன்றையும் அளித்தமை.
13 கடல்கவற வேல்விட்ட படலம்.
கோபம் கொண்ட வர்ணன் கடலைப் பெருகச் செய்ததும் இறைவன் மன்னனின் கூரிய வேற்படையை எறியும்படி கூறினார். கடலும் நின்றது.
14 இந்திரன் முடிமேல் வளை எறிந்த படலம்
பாண்டியன் இந்திரன் முடிமேல் வளையை எறிந்ததும் போருக்கு ஆற்றாது புறங்கொடுத் தோடினான் இந்திரன். பாண்டியன் சிறைப்பிடித்த நான்கு மேகங்களையும் விடும்படி கூற அவனும் இணங்கினான், மழையும் பெய்தது.
15 மேருவைச் செண்டால் அடித்தபடலம்
இறைவன் பாண்டியனிடம் “மேருமலையின் பக்கத்தில் ஒரு குகையில் அளவற்ற செல்வமுளது. அம்மேருமலையைச் செண்டால் அடித்து, அதன் செருக்கை அழித்து, மூடியுள்ள பாறையை நீக்கி பொன்னை எடுத்தவுடன் அதனைமூடி அதன் மேல் உன் இலட்சனையைப் பொறி” என்று கூறினான். அரசனும் அவ்வாறே செய்தான்.
16. வேதத்துக்குப் பொருள் அருளிச் செய்த படலம் வேதத்தின் பொருளாய் விளங்கும் இறைவன் பதினாறு வயதினராய் வந்து வேதத்தின் பொருளை விளக்கியமை.
17. மாணிக்கம் விற்ற படலம்
வீரபாண்டியனின் மகனுக்கு முடிசூட்ட, முடி மாணிக்கம்
இல்லாது அமைச்சர்கள் துயருற்ற வேளை, இறைவன்
வணிகனாக வந்து மாணிக்கம் விற்றமை.
18. வருணன் விட்ட கடலை வற்றச் செய்த படலம்
வருணன் விட்ட கடலை இறைவன் தன் சடையில் உள்ள நான்கு மேகங்களை அழைத்து அதனை வற்றச் செய்தமை. இத்தனை திருவிளையாடல்களும் மதுரைக்காண்டத்தில் கூறப்பட்டுள்ளன.
19 நான்மாடக் கூடலான படலம்
வருணன் மதுரை நகரை அழிக்க ஏழு மேகங்களையும் மழை பெய்யும்படி ஏவினான். இறைவன் நான்கு வேதங்ளையும் “நான்கு மாடங்களாகி இந் நகரினைச் சூழ்ந்து காப்பாற்றுவீர்களாக” எனப் பணித்தான்.
இந்துக் கலைக்களஞ்சியம்

Page 205
20 எல்லாம் வல்ல சித்தரான படலம்
இறைவன் சித்தர் வடிவங்கொண்டு பல சித்து
விளையாட்டுக்களைச் செய்தமை.
21 கல்லானைக்குக் கரும்பருத்திய படலம்
சித்தரின் திருவிளையாடல்களைக் கண்ட அரசன் கல்லானையைக் கரும்புதின்னச் செய்யும்படி பணிக்க, அவ்வாறே தின்னச் செய்தமை. கல்லானை வாய் திறந்து பிளிறியமை, கண்திறந்தமை, கல்லானை அரசனின் முத்துமாலையை விழுங்கியமை, அச்சித்தரை அடிக்க விழைந்த மெய்ப்பாதுகாவலர் அசையமுடியாமல் நின்றமை, பின் அரசன் மன்னிக்கும்படி
வேண்ட அசைய வைத்தமை.
22 யானை எய்த படலம்
விக்கிரமபாண்டியனைக் கொல்வதற்காக ஒரு கொடிய யானையை சோழமன்னன் சமணமதத்தவர் மூலம் அனுப்பினான். இதனை அறிந்த இறைவன் வேடுவ வேடம் தாங்கி அரசன் அமைத்த அட்டாலை மண்டபத்தில் இருந்து எதிர் கொண்ட யானையைக் கொன்றமை.
23 விருத்த குமார பாவரான படலம்
மதுரையில் விருபாக்கனுக்கும் அபவிரகைக்கும் மகளாக கெளரி என்ற பெண் பிறந்தாள். அவளைப்பெற்றோர் வைணவன் ஒருவனுக்கு மணமுடித்துக் கொடுத்தனர். சிவபக்தையாகிய அவள் அங்கு அவமரியாதைக்குள்ளானாள். அங்கு அவள் தனித்திருக்கும் வேளை, முதிய வடிவில் சென்று பின் இளமை உருவில் நின்று பெற்றோர் வந்ததும் குழந்தை வடிவெடுத்து வயதுபோன இளமையான குழந்தையான மூன்று உருவத்தி னையும் இறைவன் எடுத்தமை.
24 கால்மாறி ஆடின படலம்
சிவராத்திரி அன்று பாண்டியன் வேண்டுகோளுக்கிணங்க இறைவன் ஊன்றிய திருவடியை மேலே எடுத்தும், தூக்கிய திருவடியை நிலத்தில் ஊன்றியும் கால்மாறி ஆடியமை. அன்று தொட்டு அங்கு சோமசுந்தரக் கடவுள் கால்மாறி ஆடிய திருக்கோலத்திலேயே நின்று அருள் புரிகின்றார்.
25 பழியஞ்சின படலம்
வேடுவன் பார்ப்பனப் பெண்ணைக் கொன்று விட்டான் என
எண்ணி, அவனுக்குத் தண்டனை அளித்த பாண்டியனுக்கு
எமது தர்கள்தான் கொன்றார்கள் என்ற உண்மையை
உணரவைத்து வேடனை உண்மையனாக்கியமை.
26 மாபாதகம் தீர்த்த படலம்
அந்தணன் ஒருவனின் அழகிய மனைவி தன் மகனுடன்
தகாத உறவு கொண்டமையால் பாவத்திற்குள்ளானாள். அவளது
இந்துக்கலைக்களஞ்சியம்

பாவம் தீரவேண்டுமாயின் ‘உன்கையால் பிச்சை எடுத்து உண்டு சிவனடியார்களுக்கு குற்றேவல் செய்து இத்தீர்த்தத்தில் நீராடி நூற்றெட்டு முறை அங்கப்பிரதட்சணம் செய்' என்று கூற, அவளும் அவ்வாறே செய்ய, பாவத்தை நீக்கியமை,
27 அங்கம் வெட்டின படலம்
முதிய வாட்போர் வித்தகனிடம் சித்தன் ஒருவன் போட்டி போட்டு அவனது மனைவியையும் காம இச்சையுடன் அணுகினான். அதனை அறிந்த இறைவன் குரு பத்தினியை விரும்பிய உள்ளத்தையும், தகாதமொழி பேசிய நாவினையும் தொட்ட கையையும் காமக் குறிப்போடு நோக்கிய கண்களையும் வெட்டி எறிந்தமை.
28 நாகமெய்த படலம்
சமணர்கள் ஏவிய நாகத்தை பாண்டிய மன்னன் மூலம்
அழித்தமை. இறந்த நாகத்திலிருந்து வெளிவந்த விஷத்தை
எடுத்து மக்களைக் காப்பாற்றியமை.
29 மாயப் பசுவை வதைத்த படலம்
சமணர் கொடிய பசுவை அனுப்பி பாண்டிய மன்னனை அழிக்க எண்ணியதும் அப்பசுவை இறைவன் இடப நந்தியை அனுப்பிக் கொன்றமை.
30 மெய்காட்டிட்ட படலம்
சவுந்தர சமாதத்தன் என்ற சிவபக்தன் அரசனின் பணத்தை வீரர்களுக்காகச் செலவழியாது சிவதொண்டுக்காகச் செல வழித்தான். அதனை அறிந்த அரசன் வீரர்களைக் கொண்டு வரும்படி பணிக்க சிவபக்தனுக்காக இறைவன் படைக்குத் தலைமைதாங்கி அவைக்குச் சென்றமை.
31 உலவாக்கிழியருளிய படலம்
குணபூடண பாண்டியன் ஆட்சிக் காலத்தில் மழையின்றி மக்கள் வாடினர். இறைவன் பாண்டியன் கனவில் தோன்றி “பாண்டியனே!உன்னிடம் ஒரு குறையுளது. நீ மற்றையவர்களைப் போற்ற மறந்தாய். அதனால் உன் நாட்டில் வேள்வித் தீ குறைந்தது. வேள்வியே மழைக்குக் காரணமாகும். அந்தணரை ஒம்பி வேள்வி செய்தால் மழைவளம் பெருகும் நாம் உனக்கு உலவாக்கிழி (பொற்கிழி) தருகின்றோம். அதில் எடுக்க பொன்பெருகும்” எனக் கூறியமை,
32 வளையல் விற்றபடலம்
சாபம் பெற்று வணிகப் பெண்களாக பாண்டி நாட்டில் அவதரித்த பெண்களிடம், சோமசுந்தரக் கடவுள் வளையல் வியாபாரியாக வந்து அப் பெண்களுக்கு வளையல் அணிவித்து அவர்களது சாபத்தை நீக்கியமை.
33 அட்டமா சித்தி உபதேசித்த படலம்
திருக்கைலை மலையில் சிவனும் உமையும் வீற்றிருக்கும்
போது கார்த்திகைப் பெண்களாகிய இயக்கமாதர்
175

Page 206
'அட்டமாசித்தியை உபதேசித்தருளும் என வேண்டினர். உமாதேவியை நினைக்கும்படி கூற அவர்கள் அதனை மறந்தமையால் கற்பாறைகளாயினர். ஆயிரம் வருடத்தின் பின் சோமசுந்தரக் கடவுள் தோன்றி அணிமா, மகிமா, இலகிமா, கரிமா, பிராத்தி, பிராகாமியம், ஈசத்துவம், வசித்துவம் என்ற அட்டமாசித்திகளையும் அருளிச் சென்றமை,
34 விடையிலச்சினையிட்ட படலம்
சோழன் சோமசுந்தரக் கடவுளைத் தரிசிக்க பாண்டி நாட்டுக்கு வந்த போது, வைகை பெருக்கெடுத்தது. இதனை அறிந்த இறைவன் வைகையை வற்றச் செய்தான். சோழன் இறைவனிடம் வந்து வணங்கி தனது இலட்சினையையும் பொறித்துச் சென்றான்.
35 தண்ணிர்ப்பந்தல் வைத்த படலம்
சோழர் பாண்டியர் போரிடும்போது படைவீரர்கள் தண்ணிர் இன்றித் தவித்தனர். வெப்பத்தால் இருதிறத்துப் படைகளும் வருந்தும் சமயத்தில், பாண்டியன் படையின் நடுவில் சோமசுந்தரக்கடவுள் ஒரு தண்ணிர்ப்பந்தல் வைத்து, கெண்டியால்
பாண்டியன் படைக்குத் தண்ணிர் வார்த்து தாகம் தீர்த்தமை.
36 இரசவாதம் செய்தபடலம்
உருத்திர கணிகையர்களுள் ஒருத்தியான பொன்னனையாள் சோமசுந்தரக் கடவுளின் உருவத்தைப் பொன்னாலாக்கி வழிபட நினைத்தாள். ஆடல்பாடலால் அவள் உழைத்தவை சிவதொண்டு செய்வதற்கு போதுமானதாயிற்று. இறைவன் அவளது கவலையை அறிந்து அவளது பொருட்கள் யாவற்றையும்
பொன்னாக்கியமை.
37 சோழனை மடுவில் வீட்டிய படலம்
சுந்தரேசபாதசேகரபாண்டியனுக்கும் சோழனுக்கும் இடையில் நடந்த போரில், இறைவன் பாண்டியன் படைக்கு தலைவனாகச் சென்று போரிட்டுப் பின் இருவரையும் மடுவில் தவறிவிழ வைத்து அதிலிருந்து பாண்டியனைக் காப்பாற்றியமை.
38 உலவாக் கோட்டை அருளிய படலம்
அடியார்க்கு நல்லான் என்ற மதுரை வேளாளனும் அவன் மனைவி தருமசீலை என்பவளும் சிவனடியார்க்கு திருவமுது செய்து வந்தனர். வறுமையால் வாடிய இவர்களுக்கு அரிசிக் கோட்டையை அருளியமை.
39 மாமனாக வந்து வழக்குரைத்த படலம்
தனபதி சுசீலை தம்பதியினர்க்கு புத்திரப்பேறின்மையால் தங்கையின் மகளை வளர்த்தனர். பொருள்மேல் ஆசைகொண்ட அவர்கள் தனபதி தம்பதியினரைத் துரத்திவிட்டனர். தனபதியின் தங்கையையும் மகனையும் பொருளையும் அபகரித்து தாயத்தார்
176

கொடுமைப்படுத்தினர். தனபதி வேடம் தாங்கி வந்த இறைவன்,
சொத்து முழுவதும் அவர் மருமகனுக்குரியது எனத் தீர்ப்பளித்தமை.
40 வரகுணனுக்குச் சிவலோகம் காட்டியமை
வரகுணபாண்டியன் பிரமஹத்திதோஷம் நீங்கியவனாக சிவலோகத்தைக் காண ஆவலுடையவனாய் இறைவனிடம் வேண்ட, இறைவன் சிவலோகத்தை இவ்வுலகத்திற்குக் கொண்டுவந்தமை.
41 விறகு விற்றபடலம்
பல விருதுகளைப் பெற்ற யாழ்பாடியான ஏமநாதனின்
செருக்கினை அடக்குவதற்காக, இறைவன் விறகுவிற்பவன்
வேடந்தாங்கி அவன்முன் யாழை வாசித்து அவன் செருக்கை
அடக்கியமை.
42 திருமுகம் கொடுத்தபடலம்
சோமசுந்தரரைப் பாடிவந்த பாணபத்திரன் பசியால் வாடினான். இறைவன் கனவில் தோன்றி “சேரமன்னனுக்கு ஒலை தருகிறோம்” அவனிடம் சென்று வேண்டிய பொருளைப் பெறு எனக் கூறியதும் அவ்வாறே பெற்றமை.
43 பலகை இட்ட படலம்
இறைவன் புகழ்பாடும் பாணபத்திரனுக்கு இறைவன் பலகை கொடுத்து அதின்மேல் நின்றுபாடியமை.
44 இசை வாது வென்ற படலம்
இராசராச பாண்டியன் அவையில் ஈழபாடினிக்கும் பாணபத்திரனின் மனைவிக்கும் இசைவாதம் நடைபெற்ற போது சோமசுந்தரப் புலவர் இசை நூலில் வல்ல புலவராகத் தோன்றி பாணபத்திரன் மனைவியே சிறந்தவள் எனக் கூறியமை.
45 பன்றிக் குட்டிக்கு முலை கொடுத்த படலம்
அகலன், அகலை என்ற தம்பதியினர்க்கு பிறந்த பன்னிரு குழந்தைகள் சாபத்தினால் பன்றிக்குட்டிகளாயின, பன்றிக் குட்டிகளின் பெற்றோர் மாண்டனர். தாய் தந்தையரை இழந்த பன்றிக் குட்டிகளுக்கு சோமசுந்தரக்கடவுள் தாய்ப்பன்றியாகி பால் கொடுத்தமை. பன்றிக்குட்டிகள் பன்றி முகத்துடன் மனித உருவானமை. இது நடந்த இடமே பன்றிமலையென அழைக்கப்படுகின்றது.
46 பன்றிக்குட்டிகளை மந்திரிகளாக்கிய படலம்
சோமசுந்தரக் கடவுள் பாண்டியனின் கனவில் தோன்றி
"பன்றிமலையில் பன்னிரண்டு பன்றி முகமுடைய பன்னிரு
குமாரர் இருக்கின்றனர். அவர்களை மந்திரிகளாகக் கொள்ளக்
கடவை” எனக் கூறியதும் அவ்வாறே பாண்டியனும் செய்தனன்.
இந்துக் கலைக்களஞ்சியம்

Page 207
47 கரிக்குருவிக்கு உபதேசம் செய்த படலம்
பொற்றாமரையில் நீராடி சோமசுந்தரக் கடவுளை வழிபட்ட கரிக்குருவிக்கு மிருத்தியுஞ்சய மந்திரத்தை அருளியமை,
48 நாரைக்கு முக்தி கொடுத்த படலம்
பொற்றாமரையில் நீராடி இறைவனை வழிபட்ட நாரை ‘ஐயனே இப்பிறவியைப் போக்கி சிவலோகத்தை அடையச் செய்வாயாக! எம்மரபில் உள்ள மற்றையோர் இப்புனித தீர்த்தத்தில் உள்ள மீனை உண்டால் எக்காலத்தும் நீங்காத பாவம்
வந்தெய்தப்படுவர்” என வேண்ட அவ்வாறே அளித்தமை.
49 திருவால வாயான படலம்
வங்கிய சேகரபாண்டியன் இறைவன் அருளினால் சக்கரவாள கிரி என்னும் மதிலைக் கட்டுவித்து அப் பெரிய மதிலை ஆலவாய் மதில் என்றும் அந்த நகரை ஆலவாய் எனவும் ஆக்கியமை,
50 சுந்தரப் பேரம் செய்தபடலம்
வங்கிய சேகரபாண்டியனுடன் விக்கிரம சோழன் போர்
செய்த போது இறைவன் சுந்தரேசன் வடிவில் வேடனாக வந்து
போரிட்டு சோழப்படையை அழித்தமை.
51 சங்கப் பலகை தந்த படலம்
சங்கப் புலவர்கள் சோமசுந்தரக் கடவுளிடம் “எம்மோடு வாதிடப் பல புலவர்கள் வருகின்றார்கள். எமது புலமைக்கு நீதியாய் சீர்தூக்கிப்பதில்தரக்கூடிய சங்கப்பலகை ஒன்று தருக" எனவேண்ட, மந்திரத் தன்மையுடைய அறிவால் முதிர்ந்தோர் கூடக் கூடக் கூடிக் கொண்டேயிருக்கும் பலகையைத்
கொடுத்தமை.
52 தருமிக்கு பொற்கிழியளித்த படலம்
வங்கிய சூடாமணிப்பாண்டியன் தன் மனைவியின் கூந்தலிலிருந்து வந்த மணம் இயற்கை மணமா செயற்கை பணமா எனப் புலவர்களிடம் பாடல்மூலம் கூறுமாறு கேட்க, தருமி இறைவன் அருள் பெற்று “கொங்குதேர் வாழ்க்கை” என்ற பாடலைப்பாடி பொற்கிழியைப் பெற்றமை.
53 கீரனைக் கரையேற்றியபடலம்
தருமியிடம் தோற்றுப்போன நக்கீரன் பொற்றாமரைத் தீர்த்தத்தில் வீழ்ந்தான். இறைவன் நக்கீரன் கைலாபாதி காளத்திபாதி எனப்பாட அவனது கையைப்பிடித்து தூக்கி விட்டமை.
54 கீரனுக்கு இலக்கணம் உபதேசித்தப்படலம்
அகத்தியர் மூலம் இறைவன் நக்கீரனுக்கு இலக்கணம் கற்பித்தமை.
இந்துக்கலைக்களஞ்சியம்

55 சங்கத்தார் கலகம் தீர்த்தபடலம்
சங்கப் புலவர் நாற்பத்தெண்மரும் தம்புலமையை வெளிப்படுத்த இறைவனை நாடினர். ஒரு ஊமையனை நடுவனாகத் தெரிவு செய்து அனுப்பினான். ஊமையன் தன் மகிழ்ச்சியினால் சங்கப்புலவர்களுள் நக்கீரர், கபிலர், பரணர் மூவரையும் சிறந்தவர் என்பதனை வெளிப்படுத்தினான். அவர்களும் அது இறைவனின் தீர்ப்பு என ஏற்றுக் கொண்டமை.
56 இடைக்காடன் பிணக்குத் தீர்த்தபடலம்
பாண்டியன் இடைக்காடனின் பாடலை அலட்சியம் செய்தமையால் அவன் சோமசேகரக் கடவுளை வேண்ட, அவர் ஆலயத்தை விட்டு வெளியேறி சங்கப் புலவருடன் வீற்றிருந்தார். இடைக்காடன் பாடலை இகழ்ந்த பாண்டியனுக்கு அதனை
உணரவைத்தார்.
57 வலைவீசினபடலம்
நந்திதேவர் சாபத்தினால் சுறாமீனாக கடலில் விடப்பட்டார் உமையம்மை. சாபத்தினால் பரதவர்குலத்தில் போய்ப் பிறந்தாள். இதனையறிந்த இறைவன் சுறாமீனைப் பிடிக்கும் பரதவனாக அங்கு சென்று அதனைப் பிடித்துக் கொடுத்து அதற்குச் சன்மானமாக பரதவர் குலத்தில் பிறந்த உமையம்மையை மணம்புரிந்தார்.
58 வாதவூரடிகளுக்கு உபதேசித்தபடலம்
திருவாதவூரர் திருப்பெருந்துறையில் குருந்த மரத்தின் கீழ் யோகாசனத்தில் இருந்த இறைவனை அணுகி ஞான உபதேசம் பண்ணும்படி கேட்டார். அருள் நோக்கால் அவருக்கு ஞானாசிரியன், மாணிக்கவாசகர் என்னும் திருநாமத்தை அளித்து உபதேசம் செய்தமை.
59 நரியைப் பரியாக்கிய படலம்
குதிரை வாங்கச் சென்ற வாதவூரடிகள் அதனைமறந்து ஆண்டவன் சந்நிதானத்தில் இருந்துவிட்டதை அறிந்து அரசன் அவனை அழைத்துவரும்படி கூறியதும் பயந்த வாதவூரடிகள் இறைவனை வேண்ட நரிகளையெல்லாம் பரிகளாக்கி அதற்கு
தலைமை தாங்கிச் சென்றமை.
60 பரிநாரியாகி ତ0) ଗ] @ 0) &S பெருக்கெடுக்கச் செய்தமை
நடு இரவில் சிவபெருமானின் அருளால் பரிகள் யாவும் நரிகளாயின. இதனால் கோபமடைந்த மன்னன் வாதவூரடிகளுக்கு தண்டனை வழங்கினான். வாதவூரடிகள் இறைவனை வேண்ட இறைவன் வைகையைப் பெருக்கெடுக்கச் செய்தமை.
6 மண்சுமந்த படலம்
வைகை பெருக்கெடுத்தோடியதும் மன்னன் மன்னித்தருள
வேண்ட வைகை ஒடுங்கியது. பின் இறைவன் கூலியாள்
177

Page 208
வேடந்தாங்கி, பிட்டு விற்கும் கிழவிக்காக பிட்டைக் கூலியாகப் பெற்று வைகைக் கரையை அடைக்க முற்பட்டதும், அதனை சரியாக நிறைவேற்றாததால் மன்னன் கோபங்கொண்டு பிரம்பால் அடிக்க, அந்த அடி இறைவன் மேற்படாமல் அரசன், அவன்
மனைவி, குடிமக்கள், தேவர்கள் எல்லோர் மீதும் பட்டமை.
62 பாண்டியன் சுரந்தீர்த்தபடலம்
சமணர் சம்பந்த மூர்த்தி நாயனார் தங்கிகிருந்த மடத்திற்குத் தீயிட்டனர். நாயனார் அத் தீ பாண்டியனுக்காகுக எனப் பணித்ததும் வெப்பு நோயாக பாண்டியனை அடைந்தது. பாண்டியனின் மனைவியின் வேண்டுகோளுக்கிணங்கி அதனை
நீக்கியமை.
63 சமணரைக் கழுவேற்றிய படலம்
பாண்டியனின் மனைவி மங்கையற்கரசியாரும் மந்திரி
குலச்சிறையாரும் கேட்டுக் கொண்டதற் கிணங்க சம்பந்தர்
சமணருடன் அனல் வாதம் புனல் வாதம் செய்து தோல்வியடையச்
செய்ய அவர்களைக் கழுவேற்றியமை.
64 வன்னியும் கிணறும் இலிங்கமும் அழைத்த LI L GoLD
வணிகன் தன்முறைப் பெண்ணுடன் வந்துகொண்டிருந்த வேளை பாம்பு தீண்டி இறந்துவிட்டான். அதனால் அப் பெண் புலம்பியதைக் கேட்ட ஞானசம்பந்தர் அவளின் கவலையைப் போக்க முறைமாமனை உயிர்பெறச்செய்தார். அவர்களுக்கு திருமணமும் செய்து வைத்தார். அவனது மூத்த மனைவி இளைய மனைவியை இரகசியமாக திருமணம் செய்துவிட்டான் எனத் திட்டத் தொடங்கினாள். இதனை அறிந்த இறைவன் வள்ளியும் கிணறும் இலிங்கமும் ஆகிய மூன்றையும் சாட்சிகளாக வரப்பண்ணி அவளது பிரச்சினையைத் தீர்த்துவைத்தார்.
இறைவனின் அறுபத்து நான்கு திருவிளையாடல்களையும் கூறும் புராணமாதலாலேயே இதனை திருவிளையாடற்புராணம் எனக் கூறினர். இறுதியாக அருச்சனைச் சிறப்பு என்ற ஒரு பகுதியும் அமைகின்றது. ஆலவாய் அண்ணலை அருச்சனை புரிந்து தரிசித்து வணங்கி ஆணவத்தை நீக்குவோம் எனக் கூறி பொற்றாமரையில் நீராடி சோமசுந்தரக்கடவுளை வணங்கி அகத்திய முனிவரும் முனிவர் குழாமும் மகிழ்ச்சியடைந்தமை கூறப்படுகின்றது.
இப்புராணத்திற்கு பூரீலறுநீஆறுமுகநாவலர், சுந்தரமுதலியார்
(சென்னை) சுவாமிநாத பண்டிதர், நமச்சிவாய முதலியார் முதலானோர் உரை எழுதியுள்ளனர். (S. f.)
178

O திருவிற்குடி
கரிய கண்டத்தர் வெளியவெண் பொடியணி
மார்பினர் வலங்கையில்
எரியர் புன்சடை யிடம்பெறக் காட்டகத்
தாடிய வேடத்தர் விரியு மாமலர்ப் பொய்கைசூழ் மதுமலி
விற்குடி வீரட்டம் பிரிவி லாதவர் பெருந்தவத் தோரெனப்
பேணுவ ருலகத்தே. எனச் சம்பந்தர் புகழ்ந்து போற்றும் திருவிற்குடி சோழ நாட்டுத் திருமுறைத் தலங்களில் ஒன்று. அட்ட வீரட்டத் தலங்களிலே சலந்தரனைச் சங்கரித்த தலமாக இது விளங்குகின்றது. கோயில் அமைந்துள்ள ஊரின் தென்புறம் விளப்பாறும் வடபுறம் பில்லாலி ஆறும் பாய்கின்றன. திருவிற்குடிக்குப் பக்கத்தில் மெய்ஞ்ஞானேஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. சலந்தரனின் மனைவியான பிருந்தையை திருமால் துளசியாக ஏற்ற தலம் என்பதால் மருந்தைமயானம்
என்றும் இவ்வாலயம் அழைக்கப்படுகின்றது.
ஆலயம் மேற்கு நோக்கியது; ராஜகோபுரம் ஐந்து நிலைகளையுடையது. தற்போது நகரத்தாரின் திருப்பணியில் மிக அழகாகக் காட்சியளிக்கின்றது. கோபுரவாசலைக் கடந்து உள்ளே நுழைந்ததும் எதிரில் வலப்புறமாக முதல் தூணில் நாகலிங்கச் சிற்பம் அழகாகச் செதுக்கப்பட்டுள்ளது. வெளிப்பிராகாரத்தில் பிருந்தையை, திருமாலுக்காக இறைவன் துளசியாக எழுப்பிய இடமும் திருமால் வழிபட்ட சிவாலயமும் உள்ளன. உள் பிரகாரத்தில் வலம் வரும் போது மகாலட்சுமி, வள்ளி தெய் வானையுடன் சுப்பிரமணியர், பள்ளியறை, தனிக்கோயில் கொண்டுள்ள பைரவர் நவக்கிரகங்கள், சனிபகவான், சூரியன், சந்நிதிகளும் உள்ளன. அழகிய ஐம்பொன்னால் செய்யப்பட்ட ஜலந்தரவத மூர்த்தி சக்கரம், மான்,
மழு, முத்திரை தாங்கிக் காணப்படுகிறார்.
மூலமூர்த்தி சுயம்புலிங்கமாகும். சதுர ஆவுடையார் பகுதியுடன் மூர்த்தியின் பாகம் உருண்டையாகவும் உள்ளது. கோஷ்ட மூர்த்தங்களாக பிரம்மா, மகாவிஷ்ணு, தட்சிணாமூர்த்தி, நர்த்தன விநாயகர், ஆகியோர் உள்ளனர். அம்பாள் சந்நிதி தெற்கு நோக்கியது. அபயவரதத்துடன் அமைந்த நான்கு திருக்கரங்களுடன் அம்பாள் காட்சியளிக்கின்றாள். அம்பாள் சந்நிதியின் எதிர் மண்டபத்தின் மேற்புறத்தில் பன்னிரு ராசிகளும் உரிய கட்டமைப்பிலே அமைக்கப்பட்டுள்ளன.
திருவிற்குடி இறைவன் வீரட்டானேஸ்வரர் எனவும் இறைவி ஏலவார்குழலி, பரிமள நாயகி, எனவும் அழைக்கப்படுகின்றனர். இவ்வாலயத் தலமரம் துளசிச் செடியாகும். அட்டவீரட்டத்
இந்துக் கலைக்களஞ்சியம்

Page 209
தலங்களில் ஒன்றாகும். தலச்சிறப்பு மூர்த்தியாக சலந்தரனைச் சங்கரித்த மூர்த்தி ஜலந்தரவத மூர்த்தி” உற்சவ மூர்த்தியாக விளங்குகின்றார். கோயிலுக்கு முன்னால் சக்கர தீர்த்தமும், கோயிலின் பின்புறம் சங்கு தீர்த்தமும் காணப்படுகின்றன. கோயிலின் உட்பிராகாரத்தில் ஞானதீர்த்தம் என்றழைக்கப்படும் தீர்த்தக் கிணறு காணப்படுகின்றது. நாள் தோறும் நான்கு காலப் பூசைகள் இடம் பெறுகின்றன. விஷேட தினங்களில் விஷேட பூசைகள் நடைபெறுகின்றன. சம்பந்தர், மாணிக்க வாசகர் இருவரும் இத்தலத்தினைப் பாடியுள்ளனர்.
"சலமுடைய சலந்தரன்றன் உடல் தடித்த நல்லாழி நலமுடைய நாரணற்கு அன்று அருளியவாறு என்னேடீ நலமுடைய நாரணன்தன் நயனம் இடந்து அரனடிக்கீழ் அலராக இட வாழியருளினன் காண் சாழலோ"
என திருவிற்குடி வீரட்டத்தில் உறையும் வீரட்டானேசுவரரை
மாணிக்கவாசகர் பாடுகின்றார். மூர்த்தி, தல, தீர்த்தச் சிறப்பு
மிக்க பாடல் பெற்ற தலங்களில் ஒன்றாகவும், அட்டவீரட்டத் தலங்களில் ஒன்றாகவும் திருவிற்குடி சிறந்து விளங்குகின்றது.
(க.ஹே.)
O O திருவிற் கோலம்
தொண்டை நாட்டுத் தலம். தற்போது கூவம் என்றழைக்கப்படுகின்றது. சம்பந்தர் பாடல் பெற்றதலம்.
புராணவரலாறு
பொன், வெள்ளி, இரும்புக் கோட்டைகளை வைத்திருந்த மூன்று அசுரர்கள் தேவர்களுக்கும், முனிவர்களுக்கும் சொல் லொணாத் துன்பம் விளைவித்து வந்தமையால், அவர்கள் முறையிட, சிவபெருமான் மேரு மலையை வில்லாகவும், வாசுகி என்னும் பாம்பை நாணாகவும் கொண்டு அவ்வசுரர்களை அழிக்க முற்பட்ட தலம் இது எனக் கூறப்படுகின்றது. கோயிலுக்கு வெளியே திரிபுரசம்ஹார காலத்தில் தேர் அச்சு முறிந்திட உடனே பெருமானே விடையாகவிருந்து தாங்கியதாகச் சொல்லப்படும் கரிய மாணிக்கப் பெருமாள் கோயில் உள்ளது. இறைவன், மேரு மலையை வில்லாகக் கையில் பிடித்த கோலம் திரு + வில் +
கோலம் - தலத்தின் பெயராயிற்று.
இறைவன் - திரிபுராந்தகேஸ்வரர், திருவிற்கோல நாதர்
இறைவி - திரிபுராந்தகி, திரிபுரசுந்தரி
தலமரம் - தனியாக ஏதுமில்லை. இத்தலமே
நைமிசாரண்ய கூேடித்திரம் எனப்படுகிறது
தீர்த்தம் - இது கோயிலுக்கு எதிரில் உள்ளது.
இந்துக் கலைக்களஞ்சியம்

இக் குளத்திற்கு 'அச்சிறுகேணி என்றும் கூபாக்கிணிதீர்த்தம் என்றும் பெயர்களுண்டு. சுற்றிலும் வயல்கள் இருந்தும் இக் குளத்தில் தவளைகளே இல்லை. பிடித்து வந்து விட்டாலும் போய் விடுமாம். இக்குளத்தில் மூழ்கி இறைவனை வழிபடுவோருக்கு புத்திரப் பேறு கிடைக்குமாம்.
கோயிலுக்கு ராஜ கோபுரம் இல்லை. தெற்கு நோக்கிய முகப்பு வாயில் மட்டும் தான். முகப்பு வாயிலின் ஒருபுறம் விநாயகரும் மறுபுறம் முருகனும் காட்சி தருகின்றனர். வெளிப் பிராகாரத்தில் சந்நிதிகள் ஏதும் இல்லை. வலமாக வந்து உள் நுழைந்தால் நேரே நடராஜர் சந்நிதி உள்பிராகாரத்தில் வலம் வரும் போது விநாயகர் சந்நிதி உள்ளது. இவர் பெயர் அச்சிறுத்த விநாயகர். (திரிபுரதகனத்திற்குப் புறப்பட்ட சிவனது தேர் அச்சினை முறித்தவர்) அடுத்துள்ள தகூதிணாமூர்த்தி அழகாக உள்ளார். கருவறையின் பின்புறம் இலிங்கோற்பவர், பிரம்மா, துர்க்கை முதலிய சந்நிதிகள் உள்ளன. சண்டேசுவரர் சந்நிதியும் உள்ளது. பிராகாரத்தில் முருகப் பெருமான் சந்நிதி உரிய இடத்திலில்லாமல் இலிங்கோற்பவருக்கு நேரே உள்ளது. பக்கத்தில் பாலமுருகன் சந்நிதியும் அடுத்து மீனாட்சி சுந்தரேஸ்வரர் சந்நிதியும் உள்ளன.
பைரவர் சந்நிதி தனிக் கோயிலாக உளது. பைரவருக்கு நாய் வாகனம் இல்லை. இதற்குச் சொல்லப்படும் செவிவழிக்கதை; திரிபுரசம்ஹார காலத்தில் பைரவர் சென்று தேவர்கள் அனைவரையும் அழைத்து வந்ததாகவும், அப்போது அவரது நாய் வழிதவறிவிட்டதாகவும், அதனால் இங்கு பைரவர்க்கு வாகனம் இல்லை என்றும் கூறப்படுகிறது. பைரவர் சந்நிதி விமானத்தில் நாயின் சுதைச் சிற்பங்கள் பல இடம் பெற்றுள்ளன.
பிராகார வலம் முடிந்து உள்ளே செல்லும் போது நேரே தெரிவது நடராஜர். இவர் காளிக்கு அருள் புரிந்த பெருமான். இவரது நடனம் ரக்ஷா நடனம் எனப்படுகிறது. நடராஜரைக் கடந்து உள்ளே சென்றால் நேரே மூலவர் காட்சி தருகிறார். பக்கத்தில் உற்சவத் திருமேனிகள் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளன. சோமாஸ்கந்தர், ஆறுமுகர், சந்திரசேகரர், விநாயகர், பள்ளியறை மூர்த்தி, சுக்கிரவார அம்பாள், பிரதோஷ நாயகர் பிட்சாடனர், பூதகணம், மான்,துர்க்கை, லட்சுமி, சரஸ்வதி,
நால்வர் முதலியோரின் திருமேனிகள் அற்புதப் படைப்புகள்.
மூலவர் சுயம்பு தீண்டாத் திருமேனி. மேலே செப்பு மண்டபம். மத்தியில் உருத்திராக்க விமானம். சுற்றியுள்ள பத்து ஊர்களுக்கும் இம்மூர்த்தியே குல தெய்வம். வாயிலில் இரு துவார பாலகர்கள். திரிபுராதிகள் மூவருள் இருவர் இவர்கள் என்று சொல்லப்படுகிறது. மணல் இலிங்கம் இங்கு மூர்த்தியைப் பாலாலயம் செய்யும் வழக்கமில்லையாம். பதினாறு முழ வேட்டியே சாத்தப்படுகிறது. அதிக மழை, வெள்ளம் ஏற்படும் போது
179

Page 210
இம்மூர்த்தியின் மீது வெண்மை படரும்; போர் நிகழ்வதாயின் செம்மைபடரும் என்றும் சொல்லப்படுகிறது. இது பற்றியே ஞானசம்பந்தர் தம் பாடலில் ஐயன் நல் அதிசயன்' என்று குறிப்பிடுகிறார். தற்போது இத்தகைய மாற்றம் ஏற்படுவதில்லையாம். சுவாமி கிழக்கு நோக்கிய திருமேனி, விமானம் கஜப்பிரஷ்டவிமான அமைப்பு.
கோயிலுக்கு 2 கி. மீற்றர் தொலைவில் உள்ள திருமஞ்சன மேடை என்று சொல்லப்படும் கூவம் ஆற்றின் கரையில் இருந்து தான் தீர்த்தம் கொண்டு வந்து சுவாமிக்கு அபிஷேகம் செய்யப்படுகிறது. கொண்டு வருபவர் அத்தீர்த்தத்திற்குப் பதில் அருகில் இருந்து வேறு தீர்த்தத்தைக் கொண்டு வந்து அதை அபிஷேகம் செய்து விட்டால், சுவாமியின் மீது சிற்றெறும்புகள் மொய்க்கும் என்றும், இதனைக் கொண்டு அத்தவற்றைக் கண்டு கொள்ளலாம் என்றும் சொல்லப்படுகிறது. மேலும் இப் பெருமானுக்கு உச்சிக்கால அபிஷேக நிகழ்வு பற்றிய ஒரு செய்தியும் உளது.
கடம்பத்தூர் புகைவண்டி நிலையத்திற்கு அருகிலுள்ள பிஞ்சிவாக்கம் கிராமத்திலிருந்து வேளாளர்கள் தர ஆயர் ஒருவர் சுவாமிக்கு உச்சிக் கால அபிஷேகத்திற்குப் பால் கொண்டு வருகிறார். அவர் அப்பாலை கீழே வைக்காமல் பயபக்தியுடன் கொண்டு வருகிறார். அதற்காக அவருக்கு அவ்வூரில் நிலமானியம் தரப்பட்டுள்ளது. சுவாமிக்குப் படைத்த பிரசாதமும் நாடொறும் தரப்படுகிறது. இந்தப் பால் வந்த பிறகே உச்சிக்கால அபிஷேகம் செய்யப்படுகிறது. தொன்று தொட்டுத் தடங்கலின்றி இப்பணி நடைபெற்று வருகிறது.
சுவாமிக்கு வலப்பால் 'ஆதி தம்பதி என்று விசேஷமாகச் சொல்லப்படும் அம்பாள் சந்நிதி உளது. அம்பாள் சந்நிதி நின்ற கோலம்; கிழக்கு நோக்கிய வாயில்.
சுவாமி அம்பாளுக்கு முன்னால் தனித்தனியே செப்புக் கவசமிட்ட கொடிமரங்கள் உள்ளன. அம்பாள் சந்நிதிக்கு எதிரில் நான்கு கால் மண்டபம் உள்ளது. ஆலயத்தில் நான்கு காலப் பூஜைகள் முறையாக நடைபெறுகின்றன. அத்துடன் பூஜைகள் அபிடேகம் அனைத்தும் மிக ஆசாரமாக நடைபெறுகின்றன. அவ்வாறு செய்யப்பட வேண்டும் என்றும், அதில் தவறு நேரின் தண்டிக்கப்படுவர் என்ற நம்பிக்கையும் உளது.
'திரிதரு புரமெரி செய்த சேவகன் வரியர வொடுமதி சடையில் வைத்தவன் அரியொடு பிரமன தாற்ற லாலுருத் தெரியல னுறைவிடந் திருவிற் கோலமே”
என ஞானசம்பந்தர் இத் தலத்து இறைவனைப் போற்றிப் பாடியுள்ளார். (இ. ச)
180

திருவூறல்
தொண்டை நாட்டுத் தலம். மக்கள் வழக்கில் தக்கோலம் என்று வழங்கப்படுகிறது. தக்கன் தலை கொய்யப்பட்ட தலம் என்பர். தக்கன் தனக்கு அழிவு வரப்போவதை அறிந்து ஒலமிட்டதால் தக்கன் - ஒலம் தக்கோலம் என்று மருவிற்றென்பர். இதனை உறுதிப்படுத்துவது போல் தேரடிக்கருகில் வீரபத்திரர் கோயில் இருக்கிறது. சம்பந்தரால் பாடப்பெற்ற தலம்.
இறைவன் - ஜல நாதேஸ்வரர், உமாபதீசர் இறைவி - கிரிஜா கன்னிகை, மோகனவல்லி தீர்த்தம் - நந்தி தீர்த்தம், பக்கத்தில் கல்லாறு ஒடுகிறது.
இராஜகோபுரம் மூன்று நிலைகளையுடையது. கோபுரத்தில் பல சிற்பங்கள் இடம் பெற்றுள்ளன. அதில் மார்க்கண்டே யருக்காகச் சிவன் இயமனை உதைத்த சிற்பம் குறிப்பிடத்தக்கது. கோபுரவாயிலால் உள் நுழைந்ததும் விநாயகர் சந்நிதி தனிக்கோயிலாக உள்ளது. பக்கத்தில் தீர்த்தக் குளம் உள்ளது. நன்கு பராமரிக்கப்படவில்லை. வெளியில் கொடிமரம், பலிபீடம், நந்தி உள்ளது. பக்கவாயில் வழியாக உட்சென்றால் துவார கணபதி, சுப்பிரமணியரைத் தரிசிக்கலாம். இங்கு நவக்கிரக மண்டபமும் உள்ளது. அடுத்துள்ள மண்டபத்தில் சோமாஸ்கந்தர், சந்திரசேகரர், பிட்சாடனர் முதலிய உற்சவத் திருமேனிகளும், நடராஜ சபையும் உள்ளன. இங்குள்ள துவாரபாலகர்களின் அமைப்பு சிறப்புடையது. நடனபாவனையில் மிக நேர்த்தியாக அமைந்துள்ளது. நேரே கருவறை, சிவலிங்கத் திருமேனி பிருத்வி (மணல்) இலிங்கம். அபிஷேகம் ஆவுடையாருக்கே நடைபெறுகிறது. பழமையான தீண்டாமூர்த்தி. சந்நிதிக்கு எதிரில் ஒரத்தில் சுரங்கப் பாதை ஒன்றுள்ளது. அது கல்லால் மூடப்பட்டுள்ளது. உள் பிராகாரத்தில் சுப்பிரமணியர், சம்பந்தர், வல்லபை விநாயகர், ஆறுமுகசுவாமி சந்நிதிகள் அமைந்துள்ளன.
கருவறைக் கோஷ்ட மூர்த்தங்களாக விநாயகர், தட்சிணாமூர்த்தி, மஹாவிஷ்ணு, பிரம்மா, விஷ்ணு துர்க்கை முதலிய மூர்த்தங்கள் உள்ளன. இவற்றுள் துர்க்கை நீங்கலாக உள்ள மற்ற மூர்த்தங்கள் அனைத்தும் அமர்ந்த நிலையிலேயே உள்ளன. தட்சிணாமூர்த்தி வலக்காலைத் தொங்க விட்டு இடக்காலைக் குத்துக் காலிட்டு அழகாக அமர்ந்துள்ளார். மஹா விஷ்ணுவும் வலக்காலை மடித்து இடக்காலைத் தொங்கவிட்டு, வலக்கை அபயமாகக் கொண்டு இடக்கையைத் தொடை மீது வைத்துள்ளார். பிரம்மாவும் அமர்ந்தநிலை. விஷ்ணு துர்க்கை அமைப்பு நின்ற நிலையினதாயினும் அழகான வேலைப்பாடு. பைரவர் சந்நிதியும் உள்ளது. வாயிலின் இருபுறமும் சூரிய, சந்திரர் உளர்.
அம்பாள் நின்ற கோலம், நான்கு கரங்கள், அபய வரத கரம். இச்சந்நிதிக்கு அருகில் தனியே உள்ள மண்டபத்தில் வள்ளி, தெய்வானையுடன் கூடிய சுப்பிரமணியர் சந்நிதி உள்ளது.
இந்துக்கலைக்களஞ்சியம்

Page 211
கல்லாற்றின் கரையில் உள்ள கோயில் ஜலகண்டேஸ்வரர் கோயில். இது மிகவும் பழுதடைந்த நிலையில் உள்ளது. பூஜைகள் இல்லை. இதன் மேற்கில் உள்ளது சத்திய கங்கைத் தீர்த்தம்.
சித்திரை மாதத்தில் பத்து நாட்களுக்குப் பெருவிழா நடைபெறுகிறது. இது தவிர ஆருத்திரா, சஷ்டி, நவராத்திரி முதலிய விழாக்களும் நடைபெறுகின்றன.
" கறுத்த மனத்தினொடுங் கடுங்காலன் வந்தெய்துதலுங்
கலங்கி மறுக்குறு மாணிக்கருள மகிழ்ந்தானிடம் வினவில் செறுத்து எழு வாள் அரக்கன் சிரந்தோளும் மெய்யுந்
நெரிய அன்று ஒறுத்தருள் செய்தபிரான் திருவூறலை உற்குதுமே”
எனச் சம்பந்தர் இத்தலத்து இறைவனைப் போற்றிப் பாடியுள்ளார்.
(நி.நி.)
திருவெண்காட்டு நங்கை
சேக்கிழாரின் பெரிபுராணம், வாழ்க்கைத் துணையாய் அமைந்த நங்கையர் சிலரின் மாண்பினையும் இல்லற தர்மத்தினையும், விருந்தோம்பும் பண்பினையும், பெண்மையின் திறனையும் நன்கு தெரிவிக்கின்றது. புலவர்கள் சிலரைப் போல் சேக்கிழார் பெரிய புராணத்தில் வரும் பெண்மக்களது உடலுறப்புக்களை வருணிப்பதில் வெற்றுக் கவனஞ் செலுத்தாது அவர்கள் அகவுணர்வுகளை, பெண்மையின் பண்புகளை நன்கு வெளிக் கொணர்கின்றார். அவர்களுள் ஒருவரே திருவெண் காட்டு நங்கையாவார்.
சோழநாட்டுப் பதியாகிய திருச்செங்காட்டங் குடியிலே தோன்றிய பரஞ்சோதியாரின் இல்லக் கிழத்தியாகும் பேறு பெற்றவர் திருவெண்காட்டு நங்கை. இவர் குற்றமற்ற நற்குடியில் பிறந்தவர். அடியார்களுக்கு திருஅமுது படைத்த பின்னரே உண்ணும் அறத்தை மேற் கொண்ட பரஞ்சோதியாரின் தொண்டிற்கு இடையூறு வராதபடி நடந்தொழுகிய பெருமைக்குரியவர் திருவெண்காட்டு நங்கை, சிறுத்தொண்டர் தம் செயலால் மிகப் பெரிய புகழை எய்திவிட்டாலும் அவருடைய புகழுக்கும், பெருமைக்கும் ஆணி வேராக விளங்கியவர் அவர் மனைவியார் ஆவார்;
இதனைச் சேக்கிழார்,
“மனைஅறத்தின் வேராகி விளங்கு திரு வெண்காட்டு நங்கை”
எனக் குறிப்பிடுகின்றார். மனையறத்தின் வேராக விளங்கிய இவரது மணி வயிற்றில் சீராள தேவர் என்னும் திருமகனார்
இந்துக் கலைக்களஞ்சியம்

உதித்தார். அவரது குழந்தைப் பருவத்தில் பரஞ்சோதியாரும் திருவெண்காட்டு நங்கையும் அணி மணிபூட்டி அழகு பார்த்து மகிழ்ந்தனர்.
அடியார் வேடங் கொண்ட சிவபெருமான் இல்லத்தில் வினவும் காலை சந்தனத் தாதியார் அவரை வரவேற்றார். “பெண்கள் இருக்குமிடம் நாம் தனியே புகோம்” என்ற அடியாரைப் பணிந்து தம் கணவனாரின் நியமங்களைக் கூறி விண்ணப்பம் செய்தவர் திருவெண்காட்டு நங்கையே. அடியார்களைக் காணாது வருந்தி வந்த தம் கணவரிடம் உலகம் அன்பு கூரும் அருள் வடிவுடன் வந்தவரைப் பற்றிக் கூறியவரும் இந்நங்கையே.
அன்பிலுங் கற்பிலும் சிறந்த அம்மையார், பிள்ளைக் கறி பற்றிய தமது கணவனாரின் உரை கேட்டு “ஒரு குடிக்கு ஒரு மகனாகப் பிறந்த சிறுவனை எங்ங்னம் பெறுவது” எனக் கேட்கிறார். தம் மகனை அங்ங்ணம் தரும் எண்ணம் அவரது தாயுள்ளத்தில் எழவில்லை. "நீ பெற்ற மகனையே அழைப்போம்” என்று கணவனார் கூறிய போது அச்சொல்லை மறுக்காது
உடன்பட்ட கற்பின் பெருமை வியக்கத்தக்கது.
எனச் சேக்கிழார் இதனை விளக்குகின்றார்.
பள்ளியிலிருந்து வந்த மகனை அம்மையார் குஞ்சி திருத்தி, முகம் துடைத்து, துகள் நீக்கி, மஞ்சனம் ஆட்டுவித்துக் குறைவில்லாக் கோலம் செய்து கொடுத்தார்.
"குஞ்சி திருத்திமுகம் துடைத்துக் கொட்டை
யரை நாண் கெணிக்கி மஞ்சளNந்த வதற்கிரங்கி மையுங்
கண்ணின்மரங்கொதுக்கிப் பஞ்சியஞ்சு மெல்லடியார் பரிந்து திருமஞ் சனமாட்டி
- பெஞ்சவில்லாக் கோலஞ் செய்தெடுத்து கணவர் கைகொடுத்தார்’
சி. தொ. பு - 60
எனச் இச்செயலை சேக்கிழார் பெரியபுராணத்தில் விவரிக்கின்றார். கணவனாரின் தொண்டிற்கு உடன்பட்டு ஒழுகும் சிறப்பு இதனால் வெளிப்படுகின்றது. இருவரும் திருமகனை இறைவனுக்காக உணவாக்கும் கால் அம்மையார் உள்ளம் “இப் புதல்வன் என் கணவனாரது அரிய உயிரை எனக்கு அளித்தான்’ என்று கூறியிருப்பது பிள்ளைப் பாசத்தையும் கடந்த பதிபக்தி நிலையை உணர்த்துகிறது.
மேலும், உணவு படைக்கும் கால் திரு அமுது படைக்கும் வகையைக் கூறுமாறு பைரவரிடம் பணிந்து கேட்பது
181

Page 212
அம்மையாரின் விருந்தோம்பும் பண்பின் சிறப்பு நிலையை விளக்கும். “தலையிறைச்சி உண்பது வழக்கம்” என்ற பைரவர் சொற்கேட்டுத் திகைத்த அம்மையார் மனம் களிக்கச் சந்தனத் தாதியார் அதனையும் அமுதாக்கிப் படைத்தார். உமக்கு மகன் உண்டேல் அழையும் என்ற போது சிறுத்தொண்டர் அங்ங்னமே வாயிலில் நின்று அழைத்தார். அப்போது அம்மையார் செய்ய மணியே! சீராளா சிவனடியார் யாம் உய்யும் வகையால் உடனுன்னை அழைக்கின்றார் என்று ஒலமிட்டார். இருவரும் அழைக்கும் முறையைக் கூறும் பொழுதே தொண்டருக்கும் அவர் மனைவியாருக்கும் உள்ள வேறுபாட்டை கவிஞர் காட்டிச் செல்கின்றார்.
“வையம் நிகழும் சிறுத்தொண்டர்
மைந்தா வருவாய் என அழைத்தார் தையலாளும் தலைவர் பணி
தலை நிற்பாராய்த் தாம் அழைப்பார் செய்ய மணியே 1 சீராளா ! வாராய் !
சிவனார் அடியார் யாம் உய்யும் வகையால் உடனுன்னை
அழைக்கின்றார் என்று ஒலமிட”
சிறுத்தொண்டர் அழைக்கும் பொழுது வராத மைந்தன், மனையறத்தின் வேராகி விளங்கும் அம்மையார் அழைக்கும் போது வருகின்றார். இதற்கு அம்மையின் அகங்கார, மமகாரமற்ற அழைப்பே என கவிஞர் பாடிச் செல்கின்றார். அடியார்க்கு அமுது செய்ய எதையும் துணிந்து செய்யும் இயல்பும், கணவன் நெறிப்பட்டு ஒழுகும் கடமைப்பாடும் இவரிடம் சிறந்து திகழ்கின்றன. மகன்மைப் பாசத்தை வென்ற நிலையில் கணவன் நெறிப்பட்டு ஒழுகிச் சிவனடியாரை உண்பிக்கும் எண்ணத்தை முற்றுப் பெறச் செய்த அம்மையார் பல வகையிலும் பாராட்டுக்குரியவராக விளங்குகின்றார். (தே.ஹ.)
திருவெண்காடு
(II நாட்டுத் தலம். சுவேதாரண்யம், சுவேதவனம் என்னும் பெயருடைய தலம். காசிக்கு ஈடாகக் கருதப்படும் தமிழகத் தலங்களில் திருவெண்காடும் ஒன்று. இத்தலம் முன்பு பெரிய மயானம், முத்திநகர், சித்திநகர், ஞானவனம் எனப் பல பெயர்களால் அழைக்கப்பட்டு வந்தது. இத் தலத்தில் நடராஜப் பெருமான் ஒன்பது தாண்டவங்களை ஆடியதால் இது ஆதி சிதம்பரம் எனவும் அழைக்கப்படுகிறது. இங்குள்ள இறைவியின் பெயர் பிரம்ம வித்யா நாயகி. பிரம்ம தேவனுக்குக் கல்வியும் கலைகளையும் கற்பித்தவர். இங்குள்ள தட்சிணாமூர்த்தி மேதா வித்யா என அழைக்கப்படுகிறார். இவர் சனகாதி முனிவர்களுக்குப் பதிலாக பிரமனுக்கு உபதேசம் செய்கிறார்.
182

தலச் சிறப்பு
இத் தலத்தில் மூன்று மூர்த்திகள், மூன்று திருக்குளங்கள், மூன்று தல மரங்கள் உள்ளன. சிறுத் தொண்ட நாயனாரின் பத்தினியார் திருவெண்காட்டு நங்கையும் அவரது தோழி சந்தனத் தாதியும் பிறந்தது இத்தலத்தில் தான். மெய்கண்டாரின் பெற்றோர் நீண்ட நாட்களாகப் பிள்ளையில்லாது வருந்தினார்கள். பின் அருணந்தி சிவாச்சாரியாரின் பணிப்பின் பேரில் திருவெண்காடடைந்து, அங்குள்ள முக்குளங்களில் அவரும் அவரது பத்தினியும் நீராடி, அத்தல இறைவனை இறைஞ்சி வேண்டி ஆண்மகவொன்றைப் பெற்றெடுத்தனர். அம்மகவே பிற்காலத்தில் தமது தந்தையாரின் குருவாக விளங்கிய அருணந்தி சிவாச்சாரியாரிடம் சீடராகி, சைவசித்தாந்த சாஸ்திர நூல்களில் சிறப்பானதாக விளங்கும் சிவஞானபோதத்தை இயற்றியவர். பட்டினத்தடிகள் திருவெண்காடடைந்து முக்குளங்களில் நீராடி சிவபூசை செய்து வரும் போது சிவபெருமானின் அருளாணையின் படி ஒரு முனிவர் அவர் முன் தோன்றி அவருக்குச் சிவதீட்சையளித்து சிவலிங்கம் ஒன்றையும் கொடுத்து மறைந்தார். சமய குரவர் நால்வரும் இத் தல இறைவனைத் தொழுதேத்திப் பாடியுள்ளனர். சைவப் பெரியார்
எல்லப்ப நாவலர் தல புராணம் எழுதியுள்ளார்.
புராண ஐதீகம்
இத்தலத்தில் நிகழ்ந்த பல அற்புதங்களைத் தலபுராணம் விரிவாகக் கூறும். அனைத்து மூர்த்திகளிலும் சிறப்புடன் விளங்கும் அகோர மூர்த்தியின் தோற்றம் இத் தலத்திலே நிகழ்ந்ததாகக் கூறப்படுகிறது. மருத்துவன் என்ற ஒர் அசுரன் சிவபெருமானிடம் தான் பெற்ற வரங்களினால் தேவர்களையும் உலகமாந்தரையும் துன்புறுத்த, அவர்கள் சிவபெருமானிடம் முறையிட்டார்கள். அசுரனை அழித்து வருமாறு நந்தி தேவருக்கு ஆணையிட்டார் சிவபெருமான். அவ் அசுரன் நந்திதேவரின் படைகளை வெற்றி கொண்டது மட்டுமல்லாமல் நந்திதேவரின் உடலிலும் பல காயங்களை ஏற்படுத்தினான். தோற்றுத் திரும்பிய நந்தி தேவரைக் கண்டதும் சிவபெருமான் அளவிலாச் சினம் கொண்டார். அகோர மூர்த்தியாய் உருவெடுத்து அசுரனைக் கொன்றார். அகோர மூர்த்தியின் திருவுருவம் கோயிலில் உள்ளது.
இறைவன் - சுவேதாரண்யேச்வரர், திருவெண்காட்டீசர் இறைவி -பிரம்ம வித்யா நாயகி, பெரிய நாயகி தலம் - ஆதிசிதம்பரம், ஞானவனம் சிறப்பு மூர்த்திகள் - நடராஜர், அகோர மூர்த்தி, புதன் தலமரங்கள் -வில்வம், கொன்றை, ஆல்
தீர்த்தங்கள் - அக்கினி, சூரியன், சந்திரன் பெயர்களால்
அமைந்த தீர்த்தக் குளங்கள்
மதில்களால் சூழப்பட்ட பெரிய கோயில் கிழக்கு நோக்கியது. கிழக்கிலும் மேற்கிலும் ராஜகோபுரங்கள் உள்ளன. ராஜ கோபுரம்
இந்துக்கலைக்களஞ்சியம்

Page 213
ஐந்து நிலைகளுடன் விளங்குகிறது. கிழக்கு ராஜ கோபுரத்தினூடாகச் செல்வது மரபு வாயிலைக் கடந்ததும் கொடி மரத்து விநாயகர் பலிபீடம், கொடிமரம் உள்ளன. அடுத்துள்ளது நந்தியின் உருவம் இடப்புறம்; அக்னி தீர்த்தக்குளம் உள்ளது. கரையில் விநாயகர், மெய்கண்டார் திருவுருவங்கள் உள்ளன. வலமாகச் செல்கையில் சூரிய தீர்த்தக் குளம். கரையில் சூர் யேச்வரர் சந்நிதி. மேற்குக் கோபுர வாயிலின் உட்புறம் மண்டபம். அதனை ஒட்டி சுப்பிரமணியர் கோயில், வட மேற்கில் அன்னையின் கோயில், எதிரில் சந்திர தீர்த்தக் குளமும் புதன் சந்நிதியும் உள்ளன. இத்தலம் புதனுக்குரிய தலமாதலின் புதனை வலம் வந்து வழிபட்ட பின்னரே இங்கு தரிசனம் பூர்த்தியாகும். முக்குளங்களில் நீராடி கோயில் சந்நிதிகளில் வழிபட வேண்டும் என்பது மரபு. புதன் சந்நிதிக்குப் பக்கத்தில் முள் இல்லாத வில்வமரம் உள்ளது. இதன் பக்கத்தே பிரம்மபீடம் உள்ளது. தன்னை வழிபட்ட பிரமனுக்கு அம்பாள் வித்தையை உபதேசித்தாள். அதனால் அம்பாளுக்கு பிரம்ம வித்தியாம்பிகை எனப் பெயர் வந்தது. நாயகியின் கோயில் அளவில் பெரியது. முன்மண்டபம், மகா மண்டபம், அர்த்த மண்டபம், சுற்றாலை, கொடிமரம், நந்தி இவற்றுடன் விளங்குகிறது. கருவறையில் அம்மன் தாமரை அருக்கலமாலை ஏந்தி அபய, வரத கரங்களுடன் நின்ற திருக் கோலத்திற் காட்சியளிக்கிறார். இவர் திருமுன் கல்வி கேள்விகளில் சிறக்க வழிபாடு செய்வர். திருச்சுற்றில் பிள்ளையிடுக்கியம்மன் சந்நிதியுள்ளது. திருஞான சம்பந்தர் இத்தலமேகியபோது மணலெல்லாம் சிவலிங்கங்களாகக் காட்சியளித்தது. அப்போது அவர் அஞ்சி 'அம்மா என அழைக்க, அவள் ஓடோடி வந்து சம்பந்தரை இடுப்பில் ஏந்தி சுவாமி சந்நிதிக்குச் சென்றார். இது தான் பிள்ளையிடுக்கியம்மன் வரலாறு. இடுப்பில் உள்ளது ஆளுடைய பிள்ளையார்; அடுத்து சண்டிகேச்வரி, பள்ளியறை சந்நிதிகள் உள்ளன.
சந்திர தீர்த்தக் கரையில் ஆலமரம் மிகப் பெரிய மரமாக விழுதுகளுடன் காணப்படுகிறது. மரத்தடியில் விநாயகரும், ருத்திரபாதம் என்னும் பெயரில் இரு திருவடிகள் செதுக்கப்பட்டும் உள்ளன. சந்திரன் வழிபட்ட லிங்கமும் உள்ளது. வெளிவலம் முடித்து கொடிமரம் தொழுது உள்ளே சென்றால், வலப் பால் உற்சவ மண்டபம் உள்ளது. இதன் வாயிலைக் கடந்து உள்ளே சென்றால் பிராகாரத்தில் சோமாஸ்கந்தரின் தரிசனத்தைப் பெறலாம். இங்கு அறுபத்து மூவரின் திருமேனிகள் இருவரிசையில் காட்சி தருகின்றன. அடுத்து பத்திரகாளி சந்நிதி உள்ளது. அகோரமூர்த்தி உள்ள தலமாதலின் இங்கு பத்திரகாளி சந்நிதி உள்ளது.
அடுத்து வீரபத்திரர், இடும்பன், சுகாசன மூர்த்தி, நாகலிங்கம், விநாயகர், நால்வர், விஸ்வேஸ்வரர் ஆகியோரின் உருவங்கள் ஒரு மண்டபத்தில் வைக்கப்பட்டுள்ளன.
இதனையடுத்து இத்தலத்தின் சிறப்பு மூர்த்தியான அகோர
இந்துக் கலைக்களஞ்சியம்

மூர்த்தி அற்புத வடிவில் காட்சி தருகிறார். இறைவன் அகோர வடிவெடுத்து மருத்துவனை அழித்த நாள் ஞாயிற்றுக் கிழமை பூரநாள் ஆகும். (மாசி மகத்துக்கு மறுநாள்) இதனால் இன்றும் இத்திருக்கோயிலில் ஞாயிற்றுக் கிழமைகளில் இரவு பத்து மணிக்கு மேல் அகோர மூர்த்திக்குச் சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது. மருத்துவனால் தோற்கடிக்கப்பட்ட நந்தி சுவாமி சந்நிதியின் முன் ஒன்பது துவாரங்களுடன் காணப்படுகிறது.
மூல அகோர மூர்த்திக்கு அருகில் உற்சவ அகோர மூர்த்தி காட்சி தருகிறார். திருவடியில் ஒருபுறம் மருத்துவன் தலை சாய்த்து விழும் அமைப்பும், மறுபுறம் நந்தியும் உள்ளமை காணத்தக்கது. இவ் அகோர மூர்த்திக்கு இக் கோயில் திருவிழாவின் போது சிறப்பு வழிபாடு நடைபெற்று வீதி உலா நிகழ்கிறது. இப் புறப்பாட்டின் போது இம்மூர்த்திக்குச் செய்யப்படும் சிறப்புக்கள் பல. ஆயிரம் புட்டிகள் பன்னீர் அபிஷேகம், எண்ணற்ற ரோஜா மாலைகள், புறப்பாட்டின் போது
அடிக்கொரு பட்டுச் சாத்தும் சிறப்பும் நடைபெறுகிறது.
இங்குள்ள நடராஜ சபை தில்லையைப் போல் செப்பறையில் அமைந்துள்ளது. உள்ளே உள்ள ஸ்படிக லிங்கத்திற்கு நாடோறும் பூசை நடைபெறுகிறது. பைரவரையடுத்து காசி துண்டீர விநாயகர். அஷ்டபுஜ துர்க்கைச் சந்நிதிகள் உள்ளன. துர்க்கை மேற்கு நோக்கி இருப்பது இங்கு விசேஷமானது. திருமணமா காதோர் இச்சந்நிதியில் பிரார்த்தனை செய்வது மரபாக இருந்து வருகிறது.
வலம் முடிந்து படிகளேறி முன்மண்டபம் அடைந்தால், நேரே கருவறையில் திருவெண்காட்டீச்வரர் இலிங்கத் திருமேனியில் காட்சி தருகிறார். அழகான திருமேனி; வழிபடுவோருக்கு வளமும் அமைதியும் நல்கும் சந்நிதானம்.
இக்கோயிலில் பல கல்வெட்டுகள் உள்ளன. பல நூல்கள் மலர்ந்துள்ளன. காலை முதல் மதியம் 12 மணி வரையும் மாலை 4 மணி முதல் இரவு 9 மணிவரையும் கோயில் திறந்திருக்கும்.
"விண்ட தாமரை மேல் அன்னம் வீற்றிருக்கும்
விழாவறா வீதி வெண்காடா'
எனப் பட்டினத்தடிகள் கூற்றுப்படி இங்கு ஆண்டு முழுவதும் பல விழாக்கள் இடம் பெறுகின்றன. மாசி வளர்பிறை துவாதசி புனர்பூச நாளில் கொடியேறி பன்னிரு நாட்கள் நடைபெறும். பங்குனி வளர்பிறை பிரதமை முதல் அகோர சிவத்திற்கு இலட்சார்ச்சனை, கார்த்திகை ஞாயிற்றுக் கிழமைகள் தோறும் அகோர சிவத்திற்குச் சிறப்பு வழிபாடுகள், நடராஜர் அபிஷேகங்கள், கந்தர்சஷ்டி, நவராத்திரி, விநாயகர் சதுர்த்தி எனப் பல வழிபாடுகளும், விழாக்களும் இக்கோயிலில் இடம் பெறுகின்றன.
183

Page 214
"பண்காட்டும் இசையானும் பயிர் காட்டும் புயலானும்
வெண் காட்டில் உறைவானும் விடைகாட்டும் கொடியானே'
"வேயனதோ ளுமைபங்கன் வெண்காட்டு முக்குள நீர்
தோய்வினையார் அவர் தம்மைத் தோயாவாம் தீவினையே’
என திருஞானசம்பந்தர் வெண்காட்டுப் பெருமானின் சிறப்பையும் முக்குள நீராடலின் பேற்றினையும் தமது தேவாரத்தில் பாடியுள்ளார். அப்பர் பெருமான்,
“வெண்காடே வெண்காடே என்பீராகில்
வீடாத வல்வினை நோய் வீட்டலாமே”
வெண்காட்டுறையும் பெருமானைத் தொழ எம் வினைகள் அனைத்தும் எம்மைவிட்டகன்று விடும் என்கிறார். சுந்தரமூர்த்தி சுவாமிகள், இத்தலத்து இறைவனைப் பாடும் போது சிவபெருமான் தமது பெருமைக்கு ஒவ்வாத பல நிலைகளில் தோன்றினாலும் அவை உலகுய்யும் பொருட்டேயாகும் என அவரது சிறப்பைப் பாடுகிறார். மாணிக்கவாசகர் தமது திருக்கோவையாரில் தில்லையம்பலவன் திருவெண்காட்டில்
புகுந்து நின்றான் எனச் சிறப்பிக்கின்றார். (நி.நி.)
e O e @ திருவெண்ணெய் நல்லூர்
நிடுநாட்டுத் தலம். சோழ நாட்டிற்கும் தொண்டை நாட்டிற்கும் இடையே உள்ள நாட்டை நடுநாடென்பர். இந்த நடு நாட்டின் ஒரு பகுதியாக விளங்குவது திருமுனைப் பாடி நாடு. இதன் தலைநகர் திருக்கோவலூர். இப்பகுதிகளை ஆண்டு வந்தவர்கள் மலையமான்கள். நாயன்மார்களுள் அப்பரும், சுந்தரரும் நடுநாட்டவர் ஆவார்கள். நடுநாடு தென் பெண்ணையாறு பாயும் பெருமை வாய்ந்தது. இத்தென் பெண்ணையாற்றின் தென்கரையில் திருவெண்ணெய் நல்லூர் என்ற சிவஸ்தலம் உள்ளது. இத்தலம் சுந்தர மூர்த்தி நாயனார் வாழ்க்கையோடு மிக நெருங்கிய தொடர்புடையது. சைவாகமங்களில் சித்தாந்தக் கருத்துக்களை எல்லாம் பன்னிரண்டே சூத்திரங்களில் வெளியிட்ட மெய்கண்டார் பிறந்த பேரும் புகழும் வெண்ணெய் நல்லூருக்கு உண்டு. சந்நிதித் தெருவில் அவர் பெயரால் மடமொன்றுள்ளது.
புராண வரலாறு
சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருநாவலூரில் அவதரித்தார். (இதுவும் நடு நாட்டைச் சார்ந்த தலம்) இசைஞானியாருக்கும், சடையனாருக்கும் மகவாகப் பிறந்தார் நம்பியாரூரர், இப்பிள்ளையை நரசிங்க முனையரையர் தத்தெடுத்து வளர்க்கலானார். அரசனுடைய அன்புக் குழந்தையாய் வளர்ந்தாலும் அந்தணருக் குரிய வைதீகத் திருவுடன் விளங்கினார் ஆரூரர்.
184

“அருமறை முந்நூல் சாத்தி
அளவில் தொல் கலைகளாய்ந்து
திருமலி சிறப்பின் ஓங்கிச்
சீர்மணப் பருவஞ் சேர்ந்தார்’
என்கிறார் சேக்கிழார். சுந்தரர் மணப் பருவம் எய்தினார். திருமணம் நிச்சயிக்கப்பட்டு திருமணத்தன்று பெண்ணும் பிள்ளையுமாய் பந்தலில் அமர்ந்திருக்கும் போது அவர்கள் முன் தோன்றினான் ஒர் அற்புதக் கிழவன். மணமகனான நம்பியாரூரன் தனக்கடிமை என்றான் அம்முதியவன். இதைக் கேட்ட சபையோர் முதியவரைப் பித்தனென்று பரிகசித்தனர். மணமகனின் பாட்டன் எழுதிக் கொடுத்த அடிமை ஒலை தன்னிடம் இருப்பதாக வாதிட்டார் முதியவர். தன்னுடைய ஊர் திருவெண்ணெய் நல்லூர் என்றும் அங்கு மூல ஒலை இருப்பதாகவும் வாதிட்டார்.
பஞ்சாயத்தார், வழக்கை முதியவர் ஊரிலேயே விசாரிப்பதாகக் கூறினார்கள். அந்தணர் அடிமையாகும் வழக்கமில்லை எனினும் முதியவர் விடாப்பிடியாக இருந்தார். அதனால் மூல ஓலையைக் காட்டச் சொன்னார்கள். மூல ஒலையில் “திருவெண்ணெய் நல்லூர்ப் பித்தனுக்கு நானும் என் மரபுளோரும் அடிமைத் தொண்டு செய்து வருவோம்” என்று பாட்டனார் கையெழுத்திட்டிருந்தார். கையெழுத்து பாட்டனாருடையதென்று உறுதியாகி விட்டது. தன் வீட்டைக் காட்டுவதாகக் கூறி, முதியவர் அவர்களைத் திருவெண்ணெய் நல்லூர் ஆலயத்துக்குள் அழைத்துச் சென்றார். திடீரென்று மறைந்தார். எனவே இறைவனே மறையவனாக வந்ததை உணர்ந்த சுந்தரரும் பிறரும், இறைவன் திருவருளை எண்ணி மனமுருகினர். இந்த ஆவேசத்தில் சுந்தரரால் பாடப்பட்டதே “பித்தா பிறை சூடி'என்னும் தேவாரம். உமாதேவியார் வெண்ணெய்யால் ஒரு கோட்டை கட்டி, அதன் நடுவில் பஞ்சாக்கினியை மூட்டித் தவம் புரிந்தார். இறைவன் அவளுக்கு இங்கே காட்சியளித்தாக ஐதீகம். இதன் பொருட்டே வெண்ணெய் நல்லூர் எனப் பெயர் பெற்றதென்பர்.
கோயில்
கோயிற் கல்வெட்டுகளில் தடுத்தாட் கொண்ட தேவர்,
c
ஆளுடைய நம்பி', 'வழக்கு வென்ற திருவம்பலம், ஆவணங்காட்டியான் என்ற குறிப்புகளுள்ளன.
இறைவன் - கிருபாபுரீஸ்வரர், வேணுபுரீஸ்வரர் அருட்டுறைநாதர், தடுத்தாட் கொண்ட நாதர். இறைவி - மங்களாம்பிகை, வேற்கன்னியம்மை தலமரம் - மூங்கில் (தற்போது இல்லை) தீர்த்தம் - தண்டதீர்த்தம் (அருகில் உள்ள குளம்)
ராஜகோபுரம் ஐந்து நிலைகளைக் கொண்டது. கோபுரம் கடந்து உள் நுழைந்ததும் சுந்தரர் வழக்கு நடந்த வழக்கு தீர்த்த
இந்துக் கலைக்களஞ்சியம்

Page 215
மண்டபம் உள்ளது. இம்மண்டபம் சிதைவுற்றுள்ளது. அடுத்து செப்புக் கவசமிடப்பட்ட கொடி மரமும், பலிபீடமும் உள்ளன. நேரே உயரத்தில் சுந்தரருக்கு இறைவன் இடபாரூடராகக் காட்சி கொடுத்த விமானக் கோயில் உள்ளது.
அதற்கு எதிரில் கீழே சுந்தரர் சந்நிதி உள்ளதையும் காணலாம். இங்குள்ள உருவத்தில் சுந்தரர் கையில் ஒலையுடன் காணப்படுகிறார். வெளிச் சுற்றில் அறுபத்து மூவர் திருமேனிகளும், சப்தமாதர், சம்பந்தர், மகா விஷ்ணு, அருணந்திசிவம், மெய்கண்ட தேவர் திருமேனிகளும் உள்ளன.
விசாலமான உட்பரப்பு விநாயகர், சுப்பிரமணியர் சந்நிதிகள் கஜலட்சுமி சந்நிதி, மறுகோடியில் நவக்கிரக சந்நிதியும் உள்ளன. நவக்கிரகங்கள் உரிய அமைப்பிலும் உரிய வாகனங்களுடனும்
அமைக்கப்பட்டுள்ளன.
மூலவர் அழகான சிவலிங்கத் திருமேனி. கோஷ்ட மூர்த்தங்களாகப் பிட்சாடனர், தட்சிணாமூர்த்தி, இலிங்கோற்பவர், மகாவிஷ்ணு, துர்க்கை ஆகியோர் உள்ளனர். சண்டேஸ்வரர் சந்நிதியும் உள்ளது.
அம்பாள் கோயில் இடப்பால் உள்ளது. நின்ற திருக்கோலம்; பள்ளியறை உள்ளது. உட்புறத் தூண்களில் பைரவர், தட்சிணாமூர்த்தி சிற்பங்கள் உள்ளன.
நாடொறும் நான்கு காலப் பூஜைகள் நடைபெறுகின்றன. பூரீ காஞ்சி காமகோடி பீடத்தாலும், மக்களின் பேராதரவாலும் சுவாமி, அம்பாள் விமானங்களும் ஏனைய திருப்பணிகளும் செய்யப்பட்டுள்ளன.
பங்குனி உத்திரம், ஆடிச் சுவாதி முதலிய உற்சவங்கள் மிகச் சிறப்பாக நடைபெறுகின்றன. ஆடிச் சுவாதி உற்சவத்தில் திருமண உற்சவம், திருமணத்தைத் தடுத்தது, சுந்தரருக்குக் காட்சி கொடுத்தது முதலிய ஐதீகங்கள் நடைபெறுகின்றன.
மெய்கண்டாரின் சமாதி வடக்கு வீதியின் கோடியில் உள்ளது. திருவாவடு துறை ஆதீனத்தைச் சேர்ந்த இம்மடாலயத்தில் ஆதீனத் தம்பிரான் சுவாமிகள் ஒருவர் இருக்கிறார். ஐப்பசி சுவாதியில் மெய்கண்டார் குருபூஜை மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.
சடையப்ப வள்ளலின் இல்லம் வடக்கு வீதியில் இருந்ததாகச் சொல்லப்படுகிறது.
பித்தா பிறைசூடி பெருமானே அருளாளா எத்தான் மறவாதே நினைக்கின்றேன் மனத்துன்னை
இந்துக்கலைக்களஞ்சியம்

வைத்தாய் பெண்ணைத் தென்பால் வெண்ணெய்
நல்லூர் அருட்டுறையுள் அத்தா உனக்கு ஆளாய் இனி அல்லேன் எனலாமே!
என்ற பாடலே இறைவனால் சுந்தரர் தடுத்தாட் கொண்டருளிய பின் பாடப்பட்டது. அருணகிரிநாதரின் திருப்புகழும் உள்ளது.
(நி.நி.)
O O O திருவெண்பாக்கம்
தொண்டை நாட்டுத் தலம். பழைய கோயில் திருவிளம்புதூரில் இருந்தது. திருவிளம்புதூருக்கு பத்ரிகாரண்யம் என்றும் பெயர். சுந்தரருக்கு இறைவன் ஊன்று கோலை அளித்த
956)LD.
1942ல் தமிழக அரசு சென்னை குடி நீர்த் தேவையைப் போக்க குசஸ்தலையாற்றில் அணையைக் கட்ட நடவடிக்கை மேற்கொண்டது. அவ்வேளையில் நிலப்பகுதிகளை எடுத்துக் கொண்ட போது, அப்பகுதியில் இருந்த திருவிளம்பூதூரும் அடங்கிற்று. வெண்பாக்கம் தற்போது பூண்டி நீர்த் தேக்கமாக உள்ளது. தற்போதுள்ள இடத்தில் பூண்டியில் புதிய கோயில் அமைக்கப்பட்டு, 1968 ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. இச் செய்தி அம்பாள் சந்நிதி வாயிலில் கல்லில் பொறிக்கப்பட்டுள்ளது. சுந்தரர் LTig L பதிகமும் பொறிக்கப்பட்டுள்ளது.
திருமுல்லையில் பணிந்து பின்பு இங்கு வந்த சுந்தரர், அடியார் புடைசூழ ஆலயம் சென்று “கோயில் உள்ளாயோ'என்று விண்ணப்பிக்க இறைவன் ஊன்று கோலை, கொடுத்து ‘யாம் உள்ளோம் போகீர்’ என்றார். அது கேட்ட சுந்தரர் “பிழையுள்ள
பொறுத்திடுவர்” என்னும் பதிகம் பாடிப் போற்றினார்.
(86Tuម៉ាស៊ា இறைவன் - ஆதாரதண்டேஸ்வரர், ஊன்றீஸ்வரர் இறைவி - மின்னொளியம்மை,
ராஜகோபுரம் இல்லை. முகப்பு வாயில் மட்டுமே உள்ள சாலையோரக் கோயில், வாயிலைக் கடந்து உள்ளே நுழைந்தால் நேரே தெரிவது அம்பாள் சந்நிதி. வெளிப்பிராகாரம் புல்தரை. வாயினுள் நுழைந்ததும் தெரிவது கல்மண்டபம். அழகான கட்டமைப்புடையது. இடப்பக்கத்தில் சூரியன் சந்நிதியும் நவக்கிரக சந்நிதியும் உள்ளன. வலப்பக்கத்தில் நால்வர், பைரவர், அருணகிரிநாதர் சந்நிதிகள். பக்கத்தில் கூத்தப் பெருமானுடன் சிவகாமியும், மாணிக்க வாசகரும் உள்ளனர். பக்கத்தில் பிரதோஷ நாயகர், வள்ளி, தெய்வயானை, சோமஸ்கந்தர், சுப்பிரமணியர்
முதலிய உற்சவத் திருமேனிகள் வைக்கப்பட்டுள்ளன.
185

Page 216
மண்டபத்தின் வலப்பால் அம்பாள் மின்னொளியம்மை கோயில் , தெற்கு நோக்கிய சந்நிதியாக உள்ளது. நின்ற திருக் கோலம், அபயவரத கரத்துடன் கூடிய நான்கு கரங்கள். கண்பார்வையை இழந்த சுந்தரர் வெண்பாக்கத்தை நோக்கி வரும் போது அம்பாள் மின்னலைப் போன்ற ஒளி அமைத்து வழிகாட்டி மறைந்தனள் என்று கூறப்படுகின்றது.
கருவறை வாயிலின் இரு மருங்கிலும் துவார கணபதியும், சுப்பிரமணியரும் காட்சி தருகின்றனர். மூலவர் சிவலிங்கத் திருமேனி. எதிரில் நந்தி வலக் கொம்புடைந்த வடிவில் காட்சி தருகிறார். கண்பார்வை இழந்த சுந்தரர் இறைவனிடம் வேண்ட அவர் ஊன்று கோல் ஒன்றை அருளினார். இதனால் கோபங் கொண்ட சுந்தரர் அதனை வீசி எறிய, அக்கோல் நந்தியம் பெருமான் வலக் கொம்பில் பட்டு அது உடைந்து விட்டது என்பது செவிவழி மரபுக்கதை, நந்தியின் பக்கத்தில் கண்ணிழந்த நிலையில் இறைவனை நோக்கியவாறு சுந்தரர் திருமேனி நின்ற நிலையில் உள்ளது.
கருவறையில் மூலவரின் பின்னால் சுவாமி, அம்பாள் பஞ்சலோகத் திருமேனிகள் வைக்கப்பட்டுள்ளன. உட்பிரா காரத்தில் விநாயகர் வள்ளி, தெய்வயானை, மகாலட்சுமி,
சுப்பிரமணியர் சந்நிதிகள் தனித் தனிக் கோயிலாக உள்ளன.
முதலாம் இராஜராஜன் காலத்தைச் சேர்ந்த கல்வெட்டுக்கள் பல இங்குள்ளன. அதில் இறைவன் பெயர் ஜயங் கொண்ட சோழமண்டலத்து ஈக்காட்டுக் கோட்டத்துப் பெருமூர் நாட்டு உடையார் திருவுளோம் போகி உடையநாயனார்’ என்று குறிக்கப்பட்டுள்ளது. இக்கல் வெட்டுக்களில் 1) சந்தி விளக்கு வைத்த நிபந்தம், 2) பூஜைக்கு நிலம் வைத்த நிபந்தம், 3) சுவாமி அமுதுக்கு நிலம் விட்ட நிபந்தம் முதலியவை குறிக்கப்பட்டுள்ளன.
சிவராத்திரி, கார்த்திகைச் சோமவாரங்கள், ஆருத்ரா முதலிய விஷேச கால வழிபாடுகள் சிறப்பாக நடைபெறுகின்றன. இக்கோயில் திருவேற்காடு அருள்மிகு கருமாரியம்மன் தேவஸ்தானத்துடன் இணைந்தது.
"பிழையுள்ளன பொறுத்திடுவர் என்றடியேன் பிழைத்தக்கால் பழிய தனைப் பாராதே படலம் என் கண் மறைப்பித்தாய் குழைவிரவு வடிகாதா கோயில் உளாயோ யென்ன உழையுடையானுள்ளிருந்து உளோம் போகி ரென்றானே’ "மான் திகழும் சங்கிலியைத் தந்து வரு பயன்கள் எல்லாம் தோன்ற அருள் செய்தளித் தாய் என்றுரைக்க உலகமெலாம் ஈன்றவனே வெண்கோயில் இங்கிருந்தாயோ என்ன
ஊன்று வதோர் கோல் அருளி உளோம் போகீர் என்றானே'
என்று சுந்தரர் இத்தலத்து எழுந்தருளியிருக்கும் இறைவனைப் போற்றிப் பாடியுள்ளார். (நி.நி.)
186

திருவெம்பாவை
திருவெம்பாவை எட்டாம் திருமுறையான திருவாசகத்தின் ஏழாம் பகுதி. இதனை கி.பி. 8 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் வாழ்ந்த மாணிக்கவாசகர் திருவண்ணாமலையில் பாடினார். இதில் இருபது பாடல்கள் உள்ளன. இதன் உள்ளுறை பொருள் சக்தியை வியந்தது.
மாணிக்கவாசகர் திருவாசகத்தைத் திருவாய் மலர முன்னரே, பாவைப் பாட்டு பண்டைக் காலத்தில் நிலவியதற்குச் சான்றுகள் உண்டு. சங்க நூல்களிலும் பாவை நோன்பிற்கு ஆதாரம் காணலாம். எடுத்துக்காட்டாக "வையெயிற்றவர் நாப்பண் வகையணிப் பொலிந்து நீ, தையினிராடிய தவந்தலைப் பாடுவாயோ’ என்ற கலித் தொகை வரிகளை மேற்கோள் காட்டலாம். பாண்டிய நாட்டுச் சங்கப்புலவர்கள் அம்பாவாடல் என்று மக்கள் கொண்டாடியதை இலக்கிய வழக்காக்கினர். பின் அப்பகுதியில் வாழ்ந்த ஆண்டாளும் மாணிக்கவாசகரும் அதனைத் தம் படைப்புத் திறனால் பாவை இலக்கியமாகப் படைத்தனர். பாண்டிய நாட்டு மகளிர் விளையாட்டும் நோன்பும் நீராடலும் பாவை எனத் தனி இலக்கிய வகை பிறக்க வழி வகுத்தன.
திருவெம்பாவை திருவாசகத்துள் சிறந்த பகுதி. இதில் மருள் நீக்கும் இருபது பாடல்கள் உள்ளன. மார்கழி மாதத்தை வைகறைக் காலமாக கணிப்பது மரபு. தைமுதல் ஆனி வரை பகலாகவும், ஆடிமுதல் மார்கழிவரை இரவாகவும் கொண்டு, ஒர் ஆண்டு தேவர்களுக்கு ஒரு நாளாகக் கணிக்கப்படுகிறது. மார்கழி மாதத்தில் வரும் திருவாதிரைத் திருநாளுக்கு முன் ஒன்பது நாட்களினதும் கன்னிப்பெண்கள் அதிகாலையில் துயில் எழுந்து ஒருவரை ஒருவர் பாடித் துயில் எழுப்பினர். இக் காட்சியினால் ஈர்ப்புண்டு மாணிக்கவாசகர் திருவெம்பாவை என்னும் இருபது பாடல்களையும் அருளிச் செய்தார். இந்நிகழ்ச்சி திருவாதவூரர் புராணத்தில் இவ்வாறு பாடப்பெற்றுள்ளது.
“மாதர்கொண் மாதரெல்லாம் மார்கழித் திங்கள் தன்னில் ஆதிரை முன்னி ரைந்தே ஆகிய திங்கள் தன்னில் மேதகு மனைகள் தோறும் அழைத்திருள் விடிவதான போதிலர் தம்மிற் கூடிப் புனல் தடம் ஆடல் செய்வார்”
"அன்னவர் இயல்பு கண்டார்.ஆங்கவர் புகன்றதாக
மன்னிய திருவெம் பாவை வாசகம் பேசி”
திருவெம்பாவை உலகம் நலம் பெற மழைவளம் வேண்டுவதுடன், மகளிர் நலம் பெற நற்கணவரையும் பெற வேண்டுகிறது. மார்கழி நீராடலை மேற்கொள்ளும் கன்னிப்
இந்துக்கலைக்களஞ்சியம்

Page 217
பெண்களின் பேச்சாகத் திருவெம்பாவை விளங்குகிறது. ஐந்து முதல் பன்னிரன்டு வரையான வயதுக் கன்னிப் பெண்கள் நோன்பு நோற்பதற்குரியவர். பராசக்தி வழிவந்த பல சக்திகள் ஒருங்கு கூடித் தம்முன் ஒருவரை ஒருவர் எழுப்பிக் கொண்டு இறைவன் புகழையும் பராசக்தியின் புகழையும் பாடிக் கொண்டு பொய்கைக்கு நீராடப் போனதாகத் திரு வெம்பாவைக்கு உட் பொருள் கூறுவர். ஆணவமலமாகிய இருளில் வீழ்ந்து உறங்கும் உயிர்களை அத்துயில் விட்டு எழுப்பிப் பிறவிப் பிணி நீங்க இறைவன் கருணை வெள்ளத்தில் ஆழ்ந்து இன்புற வருக என்பது மற்றோர் உட்பொருள். இச்செய்திகள் திருப் பெருந்துறைப் புராணம் கூறுவன.
இந்நூலின் முதற் பகுதியில் கன்னிப் பெண்கள் ஒருவரை ஒருவர் துயில் எழுப்புகின்றனர். மாதேவன் வாழ்த்தொலி கேட்டும் மாது எழாதது ஏனோ? என்று விளித்துப் பாடுகிறார். துயில் எழுப்பியும் கேளாது தூங்கும் கன்னி, பிரபஞ்ச வாழ்வில் அமிழ்ந்து அல்லலுறுகையில் உய்யும் வழி உணர்த்தப்பெற்றும் ஆணவப் பிணிப்பால் ஆன்மா உணருவதில்லை என்றே இதற்குப் பொருள் கொள்ள வேண்டும். மூன்றாம் பாடலில் முத்துப் போன்ற வெண்பற்களை உடையவளே "என் அத்தன்' 'ஆனந்தன்' என்று வாய் தித்திக்கப் பேசுவாய், இப்போ எதையும் உணராது துயில்கிறாயே, வந்து உன் கதவைத் திறவாய் என்று ஒரு பெண்பாடுவதாகக் காட்டுகிறார். மாணிக்கவாசகரின் நான்காம்
பாடலில் உயர்ந்த உளநூல் தத்துவம் பேசப்படுகிறது.
வண்ணக் கிளிமொழியார் எல்லோரும் வந்தாரோ எண்ணிக் கொடு உள்ளவாறு சொல்லுகோம் அவ்வளவும்
கண்ணைத் துயின்று அவமே காலத்தைப் போக்காதே
எவரையும் தூக்கத்திலிருந்து எழுப்பினால் உடனே எழுந்திருக்காது தட்டிக்கழிப்பது மக்களில் ஒட்டியுள்ளது. இப் பாட்டில் வண்ணக் கிளி மொழியார் எல்லோரும் வந்தாரோ என்று கேட்பது நொண்டிச் சாக்குக் கண்ட போக்கு. இதில் உளவியலும் இலக்கியச் சுவையும் கலந்துள்ளன. மேலும் கண்ணைத் துயின்று வீணாகக் காலத்தைப் போக்காமல் கண்ணுக்கு இனிமை தருபவனாகிய சிவபிரானைப் பாடி உள்ளம் கசிந்துருகுவாயாக
என்று கூறப்பட்டுள்ளது. எட்டாம் பாடலில்,
"கோழி சிலம்பச் சிலம்பும் குருகு எங்கும் ஏழில் இயம்ப இயம்பும் வெண் சங்கு எங்கும் கேழில் பரம் சோதி கேழில் பரம் கருணை கேழில் விழுப் பொருளை பாடினோம் கேட்டிலையோ'
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
இங்கு இயற்கை எழிலும், இறை அருளும் இணைத்துப் பேசப்படுகின்றன.
இந்துக்கலைக்களஞ்சியம்

ஒன்பதாம் செய்யுளில் “உன்னடியார் தாள் பணிவோம் ஆங்கவர்க்கே பாங்காவோம், அன்னவரே எம் கணவராவார்’ என்று ஆண்டவன் தொண்டரையே கன்னியர் தம் கணவராகப் பெறும் பேறு பேசப்பெறுகின்றது. பத்தாம் பாசுரத்தில் கோயிற் பணிப் பெண்களைக் கண்டு இறைவனின் இயல்பைக் கன்னியர் வினவுகின்றனர். ஒன்பதாம் பாடல் பெருமானின் அருவத்தையும், பத்தாவது அருவுருவத்தையும், பதினோராவது உருவத்தையும் குறிப்பன.
பன்னிரண்டாவது பாசுரத்தில் “கூத்தன் இவ்வானும் குவலயமும் எல்லோமும் காத்தும், படைத்தும், கரந்தும் விளையாடி’ என்று கூத்தப் பிரானின் முத்தொழில் திறம் பேசப்படுகிறது. பதின்மூன்றாம் பதிகம் அம்மை அப்பனின் செம்மையைச் செப்புகிறது.
"அங்கண் அரசை அடியோங்கட்கு ஆரமுதை நங்கள் பெருமானைப் பாடி நலந்திகழ வேண்டிப் பாடி நீராடுவதைப் பதினேழாம் பாடலும், அண்ணாமலையான் ஆடிப்பாடி ஆடுவதைப் பதினெட்டாம் பாசுரமும், “எங்கை உனக்கல்லாது எப்பணியும் செய்யற்க” என்று அன்பர் பணிசெய்ய ஆளாக்கி விடும் விண்ணப்பத்தைப் பத்தொன்பதாம் பாட்டும் காட்டுகின்றன. இறுதி இருபதாம் திருப்பாவில் ஆதியும் அந்தமுமான தோற்றம், நிலை, இறுதி, மறைப்பு, அருள் ஆகிய ஐந்தொழில்களையும் காட்டி நிற்கிறது. இதுவரை இறைவனை வாழ்த்துவதற்கு வழிவகுத்த “மார்கழி நீரை” நன்றியோடு நினைந்து “போற்றியாம் மார்கழி நீராடு” என்று பூங்கழல் போற்றி திருவெம்பாவை அரும் பொருள் இறுதிபெறுகிறது.
மார்கழி நீராடல் எனும் வழமை எல்லைக்குள் மாணிக்க வாசகரும் தன்னைப் பெண்ணாகவே பாவித்து இறைவன் மீது அன்பு செலுத்துகிறார். உயிரைக் கன்னிப் பெண்ணாகப் பாவித்து இறைவன் மீது கொண்ட அன்பை மேலும் வலுவடையச் செய்யும் ஆன்மீக வளர்ச்சியாகக் காண்பதற்கும் இடமுண்டு முன்னைப் பழம் பொருட்கு முன்னைப் பழம் பொருளை, பின்னைப் புதுமைக்கும் பேர்த்துமப் பெற்றியனை, ஆதியும் அந்தமும் இல்லாத அரும் பெரும் சோதியை, ஆக்கம் அளவு இறுதியிலாத காத்தும், படைத்தும், கரந்தும் விளையாடு பவரையே தலைவனாக ஏற்கிறார். (நி.நி.)
திருவேரகம்
முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளில் திருவேரகம் நான்காவது படை வீடாகும். திருவேரகம் என்னும் சொல் திரு + ஏர் + அகம் என்னுஞ் சொற்களின் சேர்க்கையாலானது. அழகான பேரின்பவிடு எனப் பொருள் கொள்ளப்படுகிறது. இத் தலத்தில் முருகப்பெருமான் தனது தந்தைக்குப் பிரணவத்தின் பொருளை உபதேசித்ததால் குருமலை, சுவாமிமலை எனவும்
187

Page 218
அழைக்கப்படுகின்றது. இதை விடச் சிவகிரி, சிரகிரி, தாத்ரீகிரி எனப் பல பெயர்களாலும் போற்றப்படுகின்றது. இத் தலம் சோழ நாட்டில் அமைந்துள்ளது. கும்பகோணத்தில் இருந்து தஞ்சாவூர் செல்லும் பேருந்து சாலையில் 8. கி.மீ தூரத்தில் உள்ளது. கோயிலுக்குத் தெற்கே சிறிது தூரத்தில் காவிரியாறு ஓடுகிறது.
முருகப் பெருமான் பிரணவத்தின் பொருள் தெரியாத பிரமனை சிறையிட்ட போது அவனை விடுவிக்குமாறு சிவன் கேட்க முருகனும் பரமனை விடுவித்தார். பின்னர் சிவன் “நான்முகனும் அறியாத பிரணவப் பொருளை நீ அறிவாயோ' எனக் கேட்க, தந்தையின் தொடை மீது அமர்ந்து முருகப் பெருமான் தந்தையின் செவியில் பிரணவப் பொருளை உபதேசித்தார்.
திருவேரகம் மூன்று வாசல்களுடன் மூன்று கோபுரங்களைக் கொண்டு அமைந்துள்ளது. தெற்கில் உள்ள இராஜ கோபுர வாசலே பிரதானமானது. ஆகும். இது ஐந்து நிலைகளை உடையது. மற்றைய இரு கோபுரமும் மேலைக் கோபுரம், கீழைக் கோபுரம் என மொட்டைக் கோபுரங்களாக விளங்குகின்றன. கோயிலின் முதற் பிராகாரம் அடிவாரத்திலும் இரண்டாம் பிராகாரம் செய்குன்றின் நடுத்தலத்திலும் மூன்றாம் பிராகாரம் செய்குன்றின் உச்சியில் சுவாமிநாதரைச் சுற்றியும் அமைந்துள்ளன.
கோயிலின் அடிவாரத்தில் சிவனும் உச்சியில் சுவாமிநாதரும் அமையப் பெற்றிருப்பது ஆழ்ந்த கருத்துடையது. பிரணவத்தின் பொருளைத் தந்தைக்கு உரைத்த குரு மேலே அமர்ந்திருப்பதும் பொருளைக் கேட்ட சீடன் கீழே இருப்பதும் பொருத்தமாக அமைகின்றது. கீழைக்கோயிலில் மீனாட்சி சுந்தரேசர் எழுந்தருளியுள்ளனர். இதன் மேற்குத் திருச்சுற்றில் சுவாமி நாதரின் தங்கரதம் வைக்கப்பட்டுள்ளது. கோயிலிற் சிவாலய மூர்த்தங்கள் அனைத்தும் உள்ளன. சுவாமி கிழக்கு நோக்கியும் அம்மன் தெற்கு நோக்கியும் காட்சி தருகின்றனர். கிழக்கு வாசலில் வல்லப கணபதியும் தலமரமாகிய நெல்லியும் தீர்த்தமான
வஜ்ஜிர தீர்த்தக் கிணறும் உள்ளன.
மீனாட்சியம்மன் கோயிலை அடுத்து வசந்த மண்டபம் காணப்படுகின்றது. வசந்த மண்டபத்தை அடுத்து மலை ஏறும் படிகள் உள்ளன. இதனைக் கடந்து மலையின் நடுப்பிராகார மாகிய இரண்டாம் பிராகாரத்தை அடைந்தால் அங்கு திருமால், நாரதர், அகத்தியர், நான்முகன், வீரபாகு ஆகியோர் இரு புறங்களிலும் சூழ்ந்து நிற்க காலடியில் நந்தி தேவருடன் வீற்றிருக்கும் சிவபெருமானின் மடிமீது அமர்ந்துள்ள குமரன் அவருக்கு உபதேசம் செய்யும் காட்சி வண்ணச் சுதை உருவங்களாக விளங்குகின்றன. இக் காட்சி தலச்சிறப்பை
விளக்குவதாக அமைகின்றது.
188

இதனைத் தொடர்ந்து படிகள் மீது ஏறி உச்சியை அடைந்ததும் மூன்றாம் பிராகாரமாகிய அங்கு தல விநாயகரான நேத்திர விநாயகர் காட்சியளிக்கிறார். சுவாமிநாதரை வழிபடவந்த குருடன் ஒருவனுக்குக் கண்பார்வை அருளியவர் இந்த விநாயகர். அதைத் தொடர்ந்து தங்க கவசமிடப்பட்ட கொடிமரம் அமைந்துள்ளது. தெய்வேந்திரனுக்குத் துஷ்ட எதிரியால் நேர்ந்த ஒரு கஷ்டத்தை சுவாமி நாதர் இத்தலத்திலே தீர்த்து வைத்தமையால் அதற்கு நன்றி தெரிவிக்கும் முகமாக தனது ஐராவதம் எனும் வெள்ளையானையைச் சந்நிதியின் முன் விட்டுச்சென்று விட்டான் என்பது புராணக்கதை. இதற்கேற்ப சுவாமி நாதரின் சந்நிதியின் முன் வெள்ளையானையைத்
தரிசிக்கலாம்.
மூலமூர்தியாம் சுவாமி நாதப் பெருமானின் திருமுகம் சிறப்பாகக் கருணை பொழிந்து ஆற்றல் அளிப்பது போல் தோன்றுகிறது. கையில் ஞானசக்தியாகிய வேலும் கழுத்தில் தாழ்வடமும், ருத்திராட்சமாலையுமாக, நின்ற திருவுருவும் காண்பவர் கண்ணையும் கருத்தையும் கவர்கின்றது. இப்பெருமான் சந்தன திருமுழுக்காட்டின் போது குமரனாகவும், வீபூதித் திருமேனியில் முதியவர் போன்றும், பட்டுடையுடுத்தி, தங்கக் கவசம் இரத்தின மகுடம், சகஸ்ரமாலை, வைர அணிகள் முதலியவற்றைப் பூண்டு வைரவேல் ஏந்தி நிற்கும் போது இராஜ குமாரனாகவும் காட்சியளிப்பார்.
உட்பிராகாரத்தில் வடபாகத்துச் சுவரில் நடராஜரின் திருவுருவம் காணப்படுகிறது. கருவறைக்கருகில் சுவாமிநாதப் பெருமானின் எழுந்தருளும் திருமேனிக்கும், தாரசா பரமேச்வரருக்கும் சந்நிதிகளும் உள்ளன. திருச்சுற்றில் விநாயகர், ஆறுமுகப் பெருமான், காசிவிஸ்வநாதர், விசாலாட்சி, சந்நிதரசேகரர், திருமகள், கலைமகள் முதலான பரிவாரக் கடவுளர்களுக்கும் நடராசர், சிவகாமி முதலானோர்களின் எழுந்தருளி திருமேனிக்கும் மகாமண்டபத்தின் ஒரு புறம் அகத்தியர், அருணகிரிநாதர், நவவிரர்கள், என்போருக்கும்
சந்நிதிகள் உள்ளன. வலப்பக்கத்தில் இடும்பன் சன்நிதி உண்டு.
திருவேரகம் சிறந்த சிற்பக்கலை நயத்துடன் விளங்குகின்றது. சுவாமிநாதரின் கர்ப்பக்கிருகம் தவிரக் கோயில் முழுவதும் புதிதாகத் திருப்பணி செய்யப்பட்டுள்ளது. கர்ப்பக்கிருகத்துச் சுற்றுச் சுவர்களிலே திரணைவரி, பதுமவரி, முப்பட்டைவரி முதலியன செதுக்கப்பட்டுள்ளன. மலைக் கோயிலின் முன்மண்டபத் தூண்கள் யாளி நிலை வைத்து அழகு செய்யப்பட்டுள்ளன. கொடுங்கைகள், தொங்கும் தாமரை மொட்டுக்கள் என்பன வைத்து வேலை செய்யப்பட்டுள்ளது. முன் மண்டபத்தூண் ஒன்றிலே அரசன் ஒருவனது சிலை காணப்படுகிறது. உட்பிராகாரத்தில் உள்ள நடராஜர் உருவம்
இந்துக் கலைக்களஞ்சியம்

Page 219
மிகுந்த சிற்பத்திறன் வாய்ந்தது. நடராஜர் உருவத்தின் சிறப்பை அருணகிரிநாதர் மேல்வருமாறு வர்ணிக்கிறார்:
"அரி அயன் அறிந்திடாத அடியினை சிவந்த பாதம் அடியென விளங்கி ஆடும் நடராஜன்’
இங்கு ஏழுகாலங்களிற் பூசைகள் நடைபெறுகின்றன. சித்திரை, வைகாசி, கார்த்திகை மாதங்களிற் பெருவிழாவும், தைபூசத்தை முன்னிட்டு பத்து நாட்கள் விழாவும் நடைபெறுகின்றன. கந்த சஷ்டியும் சிறப்பாகக் கொண்டாடப் படுகின்றது.
சுவாமி மலை பிரசித்தமான யாத்திரைத் தலமாக விளங்குகின்றது. இங்கு வந்து சுவாமிநாதரின் அருளைப் பெறுவோர் இம்மை, மறுமை இன்பமும், நல்வாழ்வும் எய்துவார்கள்.
“காமியத் தழுத்தி யினை யாதே
காலர் கை படிந்து மடியாதே ஒமெழுத்தி லன்பு மிகவூறி
ஒவியத் திலந்த மருள்வாயே தூமமெய்க் கணிந்த சுகலீலா
சூரனைக் கடிந்த கதிர்வேலா ஏமவெற் புயர்ந்த மயில் வீரா
ஏரகத் தமர்ந்த பெருமாளே”
என அருணகிரிநாதர் உலகியலில் ஈடுபட்டு காலன் கையில்
அகப்படாது பிரணவ மந்திரத்தில் மனத்தை ஈடுபடுத்தித் தியானம் புரிய வேண்டும் எனக் கூறுகிறார். (க.ஹே.)
திருவேற்காடு
“மன்னிப்பெருகும் பெருந்தொண்டை வள நாடு அதனில் வயல் பரப்பும் நல் நித்தில வெண்திரைப்பாலி நதியின் வடபால் நலங்கொள் பதி வேற்காடு என்பது சேக்கிழார் பெருமான் வாக்கு. இதற்கேற்ப சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலையில் சுமார் 20 கீ.மீ. தூரத்தில் கருமாரியம்மன் உறையும் பதியாகிய திருவேற்காடு உள்ளது. பரந்த நெல்வயல்கள் நிரம்பிய கிராமிய சூழ்நிலையில் திருவேற்காடு அமைந்துள்ளது. ஆயிரக் கணக்கான ஆண்டுகளாக புண்ணிய பூமியாகக் கருதப்படும் இத் தலத்தில் சிவன் கோயில் ஒன்றும் காணப்படுகிறது.
நான்கு வேதங்களும் வேலமரங்களாய் நின்று வழிபட்ட தலம் என்பதால் வேல் + காடு = வேற்காடு எனப் பெயர் பெற்றது. விஷம் தீண்டாப்பதி எனவும் இது அழைக்கபடுகிறது. தொண்டை
இந்துக் கலைக்களஞ்சியம்

நாட்டில் பாடல் பெற்ற சிவாலயங்கள் முப்பத்திரண்டில் திருவேற்காடும் ஒன்றாகும். தூங்கானை மடமாகக் கட்டப்பட்டுள்ள இத் தலத்தை வடவேதாரணியம் எனவும் கொண்டாடப்படுகின்றனர். இறைவன் அகத்தியர்க்குத் திருமணக் கோலம் காட்டிய தலம் இதுவாகும். சூரசம்ஹாரத்தின் பின் முருகப் பெருமான் இத் தலத்திற்கு வருகை தந்ததாகத் தலபுராணம் கூறுகின்றது. முருகப் பெருமான் வேலால் உண்டாக்கிய தீர்த்தமே வேலாயுத தீர்த்தம் எனப்படுகிறது.
வெகு காலம் அமைதியாக இருந்த இந்த கிராமப்புறத் தலத்திற்கு தற்காலத்தில் புதுமெருகு ஏற்பட்டுள்ளது. பல வசதிகளைக் கொண்ட தலை சிறந்த பிராத்தனைத் தலமாக விளங்குவது திருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோயில் ஆகும். ஐந்து நிலைகள் கொண்ட மிக அழகான கோபுரத்தோடு கூடிய திருக்கோயில் தினந்தோறும் ஆயிரக்கணக்காக பத்தர்களை வசீகரித்த வண்ணம் உள்ளது. சிவன் கோயிலின் முகப்பு வாசல் கிழக்கு நோக்கியது. உள்ளே நுழைந்ததும் செப்புக் கவசமிட்ட கொடிமரம் காட்சியளிக்கின்றது. வலப்புறம் அருணகிரிநாதர் சந்நிதியும், மறுபுறம் சனி பகவான் சந்நிதியும் மூர்க்க நாயனார் சந்நிதியும் உள்ளன. இதன் முன்னால் தலமரமும் அதற்கு முன்பு சிவலிங்கப் பிரதிஷ்டையும் காணப்படுகின்றன. வெளிப்பிராகாரத்தில் சந்நிதிகள் எவையுமில்லை. நேரே மூலவர் சந்நிதியும் உள்வாயிலைக் கடந்து சென்றால் வலப்புறம் அகத்தியரும் சூரியனும் உள்ளனர். அடுத்து பத்ம பீடத்தில் எண்கோணவடிவில் நவக்கிரக சந்நிதியுள்ளது. நால்வர் பிரதிஷ்டையைத் தொடர்ந்து அறுபத்துமூவர் காட்சியளிக் கின்றனர்.
நடராச சபைக்கு நேரான பக்கவாசல் பிராகாரமூலையில் விநாயகரும், அடுத்து காசி விசுவநாதர், விசாலாட்சி சந்நிதியும் பாலசுப்பிரமணியருக்கு முன்பு சிவலிங்கப் பிரதிஷ்டையும் அமைந்துள்ளன. விமானம் தூங்கணைமாடம் அமைப்பில் உள்ளது. கருவறைச் சுவரில் ஏராளமான கல்வெட்டுக்கள் உள்ளன. கோஷ்ட மூர்த்தங்களாக தட்சிணாமூர்த்தி, லிங்கோற்பவர், பிரம்மா, துர்க்கை ஆகியோர் உள்ளனர். நடராச சபை நேரே வாயில் உள்ளது. மூலவர் அழகிய சிவலிங்கத் திருமேனி. பின்னால் சுவரில் திருமணக்கோலத்தில் சுவாமி, அம்பாள் திருவுருவங்கள். பக்கத்தில் விநாயகர் உருவமும் உள்ளது. அம்பாள் சந்நிதி தெற்கு நோக்கியது. நின்ற நிலையில் உள்ளார். பக்கத்தில் பைரவரும் பைரவருக்கு முன்னால் உள்ள தூண் ஒன்றிலே கருமாரியம்மன் உருவம் கீழே பாம்புடன் அழகுறச் செதுக்கப்பட்டுள்ளது. இங்கு மகா கும்பாபிஷேகம் 1973இல் நடைபெற்றுள்ளது.
திருவேற்காட்டில் உறையும் இறைவன் வேதபுரீஸ்வரர் வேற்காட்டுநாதர் என்றும், இறைவி பாலாம்பிகை வேற்கண்ணி எனவும் அழைக்கப்படுகின்றனர். தலமரமாக வெளிப் பிராகாரத்தில் வெள்வேலமரம் அமைந்துள்ளது. தீர்த்தமாக வேலாயுத தீர்த்தம் விளங்குகின்றது. வேப்பிலையால் பிணி
189

Page 220
போக்கி வெண்ணிற்றால் வினை தீர்க்கும் கண்கண்ட தெய்வமாக வேண்டுவோர்க்கு வேண்டுவன வழங்கி அருள்கிறாள் அன்னை கருமாரி. இத்தலத்தில் அன்னைக்கு எத்துணை சிறப்புண்டோ அத்துணை சிறப்பு அன்னையின் அருட்சின்னமாகிய திருச்சாம்பலுக்கும் உண்டு.
நாகாபரணம் குடைபிடிக்க அருள் சுரக்கும் விழிகளுடன் அன்பு ததும்பும் பார்வையுடன் வட்டமான அழகு முகத்தில் புன்னகை தவழ புல்லாக்கு முத்து மிளிர சிலிர்த்த கேசம் ஒளிர மாலைக்குவியல்களுக்கு இடையில் எட்டிப் பார்க்கிறாள் அன்னை. இங்கு ஐந்தொழில்களைச் செய்து வீற்றிருக்கும் அன்னை கருமாரி கலச ரூபமாக தண்ணிரிலும், தீபவடிவமாக சுடரிலும், சிலா வடிவமாகவும் தோன்றி புற்று வடிவமாகக் கருநாகத்தின் இருப்பிடமாகவும் காட்சி தருகிறாள்.
ஆடிமாதம் மூன்றாவது ஞாயிற்றுக் கிழமையன்று திரு வேற்காட்டில் ஆடிப்பெருவிழா கோலாகலமாக நடக்கும். ஆயிரத்தெட்டு பால்குடம், ஆயிரத்தெட்டு சங்காபிஷேகம், படையல் வழிபாடு என்பன நடைபெறும். சந்நிதியில் பெரிய தலைவாழையிலை போட்டு உணவு வகைகளைப் படைக்கிறார்கள். இருபத்தொரு வகை இனிப்புப் பட்சணங்கள், ஏழுவகை கலந்த சுத்த அன்னம், அறுசுவை உண்டிகள் பரிமாறப்படுகின்றன. எல்லாவற்றையும் வேப்பிலையால் புனிதம் செய்து தேவிக்கு நிவேதனம் செய்கிறார்கள். அதைத் தொடர்ந்து தீபாராதனை நடக்கும். இது கண் கொள்ளாக் காட்சியாக இருக்கும். தினமும் பக்தர் கூட்டம் அலைமோதும் தலமாக திருவேற்காடு விளங்குகின்றது. சிவனும் சக்தியும் சேர்ந்திருந்து அருள் கொடுத்திடும் தலம் திருவேற்காடு.
வழிபடும் பக்தரின் பாவம் போக்கி கேட்போரின் குறை தீர்த்து அருள் பொழிந்த வண்ணம் உள்ளனர்.
"ஆழ்கடல் எனக் கங்கை சுரந்தவன் வீழ்சடையினன் வேற்காடு தாழ்விடை மனதாற் பணிந்தேத்திடப் பாழ்படு மவர் பாவமே”
எனச் சம்பந்தர் திருவேற்காட்டை வழிபடுவர்களின் பாவங்கள் போகும் என்கிறார். (க.ஹே.)
திருவைகுந்த விண்ணகரம்
சீர்காழிப் பகுதியிலே புனிதமான காவிரியின் கரை ஓரத்தில் பல நூறு தலங்களைக் கொண்டு விளங்கும் தஞ்சைப் பதியில் தாமரைக் கண்ணன் என்றும், வைகுந்தநாதர் என்றும் வழங்கும் வள்ளல் பிரான் வீற்றிருக்கும் திருத்தலமே வைகுந்த விண்ணகரமாகும். விண்ணகரம் என்று ஆழ்வார்கள் பாடிய விண்ணகரம் பொதுவாக விஷ்ணு கிருகங்களையே
190

குறிப்பவையாக உள்ளன. மண்ணகரம், விண்ணகரம் என்று பூமியிலுள்ள திருப்பதிகளை ஆழ்வார்கள் பாடியுள்ளார்கள். அந்த வகையில் நாங்கூர் திருவைகுந்த விண்ணகரம் சோழ நாட்டில் ஆழ்வார் பாடல் பெற்ற தலமாகும்.
இயற்கை எழில் சூழ அமைந்துள்ள இந்தத் திருப்பதி ஆலயத்தில் உள்ளே நீண்ட பாதையில் இருமருங்கிலும் வெள்ளை நிற நந்தியாவட்டை மலர் மரங்கள் அணி அணியாக நின்று வரவேற்பது மனதுக்கு மகிழ்வைத் தருகின்றது. இது மட்டுமல்லாமல் ஓங்கி உலகளந்த உத்தமனைப் போல ஓங்கி உயர்ந்து நிற்கும் தென்னை மரங்கள் சூழ்ந்து கொள்ளை அழகைத் தருகின்றன. மொத்தத்தில் சாந்தமும் அமைதியும் இயற்கையும் இங்கே கொலு வீற்றிருக்கும் இடமாக இது மிளிர்கின்றது.
இவ்வாலயத்திலே இறைவன் கிழக்கு நோக்கி சேவை தருகின்றான். கர்ப்ப கிருகத்தில் மூலவர் ஆதிஷேசன் குடை பிடிக்க வீற்றிருந்த திருக்கோலத்தில் பரமபதநாதன் காட்சி தருகிறார். இவரது தேவிமார்களும் உடனமர்ந்து இருக்கிறார்கள்.
இவ்வாலயத்தில் உறைந்துள்ள இறைவனை வைகுந்த நாதன், பரமபதநாதன், தாமரைக் கண்ணுடைய பிரான் என்று அழைப்பார்கள். இவர் அருகில் பூரீதேவி, பூதேவி, ஆகியோர் அமர்ந்துள்ளனர். இவர்களுக்கு அருகில் உற்சவ மூர்த்தியும் உள்ளது. வைகுந்த நாதன் அல்லது தாமரைக் கண்ணுடைய நெடிய பிரான் என்று இவர் அழைக்கப்படுகிறார். இங்குள்ள தாயாரை வைகுந்த வல்லி, லக்ஷமி பிராட்டி என அழைப்பர். தாயாருக்கு என தனிச் சந்நிதியும் உண்டு.
இவ்வாலயம் கிழக்கு நோக்கிய கர்ப்பகிருகத்துடன், பிராட்டிக்கு தனிச் சந்நிதியுடன் அமைந்து ஆழ்வார்கள், கிருஷ்ணன், சக்கரத்தாழ்வார், ஆகியோர்களுக்கும் தனிச் சந்நிதிகளை கொண்டு விளங்குகின்றது. ஆலயத்தைச் சுற்றி உயர்ந்த மதில்கள் அரண் செய்கின்றன. ஒரு பிராகாரத்தை உடையதாக விளங்குகிறது.
இவ்வாலயம் வைகுண்ட விண்ணகரம் எனப் பெயர் பெறுவதற்கு ஒரு வரலாறு உண்டு. ஸ்வேத கேது அரசு தம்பதியினர் தமது ராஜ்ஜிய கடமைகளை முடித்து வைகுண்டம் சென்று பெருமாளைத் தரிசிக்க கடும் தவம் செய்தனர். கடுந்தவத்தின் பயனாக விஷ்ணு லோகத்திற்கு சென்றனர். இவர்கள் சென்ற வேளை அங்கு வைகுண்ட நாதனை காணக்கிடைக்கவில்லை என்பதுடன் பெரும் பசியையும், தாகத்தையும் உணர்ந்தனர். எங்கு தேடியும் வைகுந்த நாதன் கிடைக்கப்பெறாமையாலும், பசி, தாக மேலீட்டினாலும் கவலையுற்ற தம்பதியினருக்கு நாரதர் எதிர்ப்பட்டு பூலோகத்தில் சுவேதாரண்யத்திற்கு மேற்கில் காவேரியாற்றின் கரையையொட்டி
இந்துக் கலைக்களஞ்சியம்

Page 221
பலாசவனம் என்ற தலத்திற்கு தெற்கு பக்கத்தில் கஜாரண்யம் என்ற சிவாலயத்தில் உள்ள ஐராவதேஸ்வரரை பக்தியோடு பூசை புரிந்தால் அவர் உங்களுக்கு அருள்வார் என்று விடைபகர்ந்தார். தம்பதியினரும் அவ்வாறே செய்ய, அவர்களின் பக்தியை மெச்சிய ஈசன் மன்னர் தம்பதியினருடன் உதங்க முனிவரும், இணைந்து வைகுண்டநாதனின் வரவுக்காக தவம் செய்தார்கள். அவர்களின் தவத்தை கண்டு வைகுந்த நாதன் ஆயிரம் கோடி சூரியப் பிரகாசத்துடன், பூமாதேவி, நீளாதேவி சமேதராய் ஆதிஷேசனின் மீது வீற்றிருக்க ஆனந்த விவர்தன விமானத்தில் ஐராவதேஸ்வரர், உதங்க முனிவர், ஸ்வேதகேது அரச தம்பதியினருக்கு சேவை சாதித்தார். இவர்களுக்கு காட்சி தந்த இந்தத் திருப்பதியே நாங்கூர் திருவைகுந்த விண்ணகரமாகும். பூரீ வைகுண்டநாதர் என்ற திருநாமத்தோடும் எப்போதும் காட்சி தந்து அருள வேண்டும் என்ற வேண்டுகோளுக்கு இணங்க இன்றும் பக்தர்களுக்குத் தீவினையைப் போக்கி, ஐஸ்வர்யம் புத்திர பாக்கியம், பரமபதத்தை ஈந்தருளுபவராக உள்ளார்.
இவ்வாலயத்திற்கு கோபுரம் இல்லை. ஆனால் விமானம் அமைந்துள்ளது. இவ்விமானம் 'ஆனந்த சத்ய வர்த்தன விமானம்’ என்று அழைக்கப்படுகிறது. இங்குள்ள தீர்த்தம் உதங்க தீர்த்தம், லட்சுமி புட்கரணி, விராஜ தீர்த்தம் என அழைக்கப்படுகிறது.
பூரீ வைகுண்டத்தின் எல்லையில் ஒடுவதாகக் கூறப்படும் விராஜ தீர்த்தத்தின் பெயரே இத் தலத்தின் தீர்த்தத்திற்கும் வழங்கப்படுகிறது. இத் தீர்த்தம் பற்றிய வரலாறு சிறப்பானது. இத் தீர்த்த நீரை பருகுபவர்கள் தீய செயல்களை விலக்கி நற்செயல் புரிவர் என்பது ஐதீகம். இதற்குச் சான்றாக ஹிம்சகன் என்னும் வேடன் தன் தீயசெயல்களை விட்டு அறச் செயல்களில் ஈடுபட்டான் என்று கூறப்படுகிறது.
இங்கு அன்றாடம் இருகால பூஜைகள் நிகழ்கின்றன. ஆடிமாதத்தில் பத்து நாட்களைக் கொண்ட பெருவிழா இடம்பெற்று வருகிறது. இவ்வாலயம் ஆதீனத்தின் பராமரிப்பில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
திருமங்கை ஆழ்வார் இவ்வாலயம் பற்றி 10 பாசுரங்களில் பாடியுள்ளார்.
"வங்கலி தடங்கடலுள் வானவர்களோடு
மா முனிவர் பலர் கூடி மாமலர்கள்துவி எங்கள் தனிநாயகனே! எமக்கு அருளாயென்னும்
ஈசனவன் மகிழ்ந்து இனிது மருவியுறை கோயில் மாறாத மலர்கலம் செங்கழுநீர் ததும்பி
மதுவெள்ளம் ஒழுக வயலுழவர் மடையடைப்ப மாறாத பெருஞ்செல்வம் வளருமணி நங்கூடர்
வைகுந்த விண்ணகரம் வணங்கு மடநெஞ்சே”
- திருமங்கையாழ்வார்.
இந்துக் கலைக்களஞ்சியம்

திருப்பாற்கடலில் தேவர்களும், முனிவர்களும் மலர் தூவி எமக்கு அருள்புரிவாயாக என்று வேண்ட, பெருமாள், திரு நாங்கூர் வைகுந்த விண்ணகரத்தில் இயற்கை எழில் பெற்று விளங்கும் நாங்கூரில் வீற்றிருக்கிறார்; நெஞ்சே நீ வணங்கு வாயாக எனப் பாடுகிறார்.
108 திருப்பதி அந்தாதியில் பிள்ளைப் பெருமாள் ஐயங்கார் இந்த வைகுண்ட விண்ணகரம் பற்றிப் பாசுரம் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு சிறப்புப் பெற்று விளங்கும் இவ்வாலயம் பற்றி அகத்திய மகரிஷியே உபரிசுரவசு மகாராஜாவுக்கு கூறியுள்ளார் என்பது ஒரு ஐதீகமாகும். அது மட்டுமல்லாது, மூவருக்கும் பிரத்யட்சம் செய்த கோலமே அர்ச்சா மூர்த்தியாக, சிலையாக எழுந்தருளினார் என்பதும் ஐதீகமாகும். (aFMT. 6ýr.)
O O
திருவைந்தெழுத்து
ஆன்மாக்களுக்கு மலம் நீங்கும் பொருட்டுப் பிறப்பினைக் கொடுத்து தொழிற்படுத்துவது "நமசிவாய' என்னும் திருவைந்தெழுத்தாகும். இதனைப் 'பஞ்சாக்ஷரம்” என்றும் கூறலாம். இதில் “ந” என்பது திரோதான (மறைப்பு) சக்தியையும், “ம” என்பது மலத்தையும், “சி” என்பது சிவத்தையும், “வ” என்பது அருட்சக்தி ( திருவருள்) யையும், 'ய' என்பது ஆன்மாவையும் குறிக்கும். திருவருட் சக்தியானது திரோதான சக்தியாக நின்று மலமானது உயிரை நீங்கும் பொருட்டு அம்மலத்தைத் தொழிற்படுத்தும். மறைத்தல் என்பது வினைபோகங்களிலே அழுந்தச் செய்தல். அருளல் என்பது உயிர்களுக்கு மலத்தை நீக்கி சிவத்துவத்தை அளித்தலாகும். அழித்தல் ஆன்மாக்களின் இளைப்பை ஒழித்தற் பொருட்டாகும். படைத்தல் மலபரிபாகம் வருவித்தற் பொருட்டாகும். காத்தல் வினைப் போகங்களை உண்பித்து வினைகளை ஒழித்தற் பொருட்டாகும். துன்பத்திற்குக் காரணமான செனன மரணக் கடலினின்றும் ஆன்மாக்களைக் காத்து அருள் புரிவதே இறைவனின் ஐந்தொழிற் குறிப்பாகும்.
பூரீ பஞ்சாட்சரமே திருமூல மந்திரம். இதனை குருவினிடமிருந்தே பெற்றுக் கொள்ள வேண்டும். பஞ்சாட்சரம் ஒவ்வொருவரின் பக்குவ நிலைக்கேற்ற வண்ணம் தூலம், சூக்குமம், காரணம், மகாகாரணம், மகாமனு என ஐந்து வகையாக விளங்கும். இதனை மானதம், மந்தம், உரை என மூவகையால் உச்சரிக்கலாம். மனதால் உச்சரிப்பதை “மானதம்” என்றும் தன் செவிக்கு மட்டும் கேட்கக் கூடியதாக உச்சரிப்பதை “மந்தம்” என்றும் பிறச் செவிக்குக் கேட்குமளவு உச்சரிப்பதை "உரை” எனவும் “வாசகம் ” என்றும் கூறுவர். இவைகளுள் மானதமே மிகச் சிறந்ததாகும். மானதம் கோடி மடங்கு பலமும், மந்தம் பதினாயிரம் மடங்கு பலமும் உரை நூறு மடங்கு பலமும் தரும்.
19

Page 222
தூலபஞ்சாட்சரம்:-
“நமசிவாய' என்பது தூல பஞ்சாட்சரமாகும் இதனைத் திருமூலர்,
“ஒன்றுகண் டேனிவ் வுலகுக் கொருகனி நன்று கண் டாலது நமச்சிவா யக்கனி மென்று கண் டாலது மெத்தென் றிருக்கும் தின்று கண் டாலது தித்திக்குந் தானன்றே”
என்கிறார். தூல பஞ்சாட்சரத்தை உச்சரிப்பதால் அஞ்ஞானம் நீங்கி ஞானம் விளக்கமுறும்.
சூக்கும பஞ்சாட்சரம்:- “சிவாயநம” என்பது சூக்கும பஞ்சாட்சரம். இதனை ஒதினால் பிறப்பு நீங்கி சிவத்தினைச் சார்வர். மணிவாசகரும்,
“நானேயோ தவஞ் செய்தேன் சிவாயநம எனப் பெற்றேன்.”
என்றும், திருநாவுக்கரசர் “கருவாய்க் கிடந்து” என்னும் பாடலில் "உனதருளால் திருவாய் பொலியச் சிவாயநம வென்று நீறணிந்தேன்’ என்றும் அருள்வர். (விஷய போகங்களில் வெறுப்பும், முக்தியின்பத்தில் நாட்டமுமுடையவர்கள் இதனை ஒதலாம்.)
காரண பஞ்சாட்சரம்:-
“சிவாய நம’ என்பது காரண பஞ்சாட்சரமாகும். ஆணவமலம் பரிபாகம் எய்தி திரோதான சக்தி அருட்சக்தியாய் மாறி ஆன்மாவில் பதியும். பின்னர் ஞானாசாரியரின் உபதேசம் கிடைக்கும்.
மகாகாரண பஞ்சாட்சரம்:-
“சிவசிவ” என்பது மகாகாரண பஞ்சாட்சரமாகும். இதில்
“ய'கரமாகிய ஆன்மா கழன்று அருளிலே தோய சிவமும்,
திருவருட் சக்தியுமே நின்று தொழிற்படும். இதனைத் திருமூலர்,
“சிவ சிவ என்கிலர் தீவினை யாளர்
சிவ சிவ என்றிடத் தீவினை மாளும் சிவ சிவ என்றிடத் தேவரு மாவர்
சிவ சிவ என்னச் சிவகதி தானே'
என்று அருளுவர்.
மகாமனு:-
“சி” என்பது மகாமனுவாகும். இதனை நாயோட்டி மந்திரம் என்பர். இதுவே இறை எழுத்து. பெருவெழுத்து. பிரம்மபீஜம் என்று கூறப்படும்.
192

மகாகாரண பஞ்சாட்சரத்திலுள்ள “சிவ” என்பதில் “வ'கரமாகிய அருளையும் 'சி'கரம் தன்னுள் அடக்கிக் கொண்டு தனித்து 'சி' கரமாக நிற்கும். இதனைப் பட்டினத்தடிகள்,
"மாயநட் டோரையும் மாயாமலமெனும் மாதரையும் வீயவிட் டோட்டிவெளியே புறப்பட்டு மெய்யருளாந் தாயுடன் சென்று பின் தாதையைக் கூடிப் பின் தாயை மறந் தேயும் தேநிட்டை யென்றா னெழிற்கச்சி பேகம்பனே'
என்று பாடுவார்.
இங்குய கரமாகிய ஆன்மாவுக்கு நகரமாகிய திரோதான சக்தி நண்பனாகவும், மகரமாகிய மலம் மனைவியாகவும், வகரமாகிய அருட்சக்தி தாயாகவும், சிகரமாகிய சிவன் தந்தையாகவும் கூறப்பட்டுள்ளது. நகார, மகாரங்களினின்று நீங்கி, அருள் வெளியே நின்று திருவருளாகிய தாயின் அருளைப் பெற்று, நிட்டை கூடிப் பேரின்பத்தை அநுபவித்து அதனையும் கடந்து, வகாரமேயாய்ப் பின்னர் அதனையும் மறந்து சிகாரமாய் நிற்பதுதான் உண்மைச் சிவானுபவம்.
பஞ்சாட்சரத்தை எவ்விதம் உச்சரிக்க வேண்டும் என்பதை
உமாபதிசிவம் “கொடிக்கவியில்,”
'அஞ்செழுத்தும், எட்டெழுத்தும், ஆறெழுத்தும் நாலெழுத்தும் மஞ்செழுத்தும் , மேலைப் பெருவெழுத்தும் - நெஞ்சழுத்திப் பேசும் எழுத்துடனே பேசா எழுத்தினையும்
99 கூசாமற் காட்டக் கொடி
என்கிறார். இப்பாடலில் கூறப்படும் அஞ்செழுத்தென்பது -
“சிவாயநம”
எட்டெழுத்து - ஒம் , ஹாம், ஒளம் சிவாயநம ஆறெழுத்து - ஒம் நமசிவாய நாலெழுத்து - ஓம் சிவாய பிஞ்செழுத்து - வகரமாகிய சக்தி பெருவெழுத்து - சி கரமாகிய சிவம் பேசும் எழுத்து - சக்தி பேசா எழுத்து - சிவம்
பஞ்சாட்சரத்தை நெஞ்சினிற் பதித்தால் க்திப்பேறு கிட்டும்.
ஞ ததை மlநஞ sD தத (U) Ol
(வ.வை.)
திருவையாறு
தமிழகத்துத் திருத்தலங்களில் மிகவும் புராதனமானவற்றில் ஒன்று திருவையாறு. சைவர்களின் முதன்மைத் தலங்களில் ஒன்றாக அது க்ஷேத்திரவெண்பாவிலே சொல்லப்படுகின்றது. தேவார முதலிகள் மூவராலும் பாடப்பெற்ற சிறப்புடையது. அப்பர்பெருமான் கயிலையில் வீற்றிருக்கும் சிவபெருமானின்
காட்சியைக் கண்டு, இன்புற்றுப் பாடிய தலம் திருவையாறு.
இந்துக் கலைக்களஞ்சியம்

Page 223
திருநாவுக்கரசு நாயனார் பாடிப் போற்றிய தலங்களில் அதுவே முதன்மையானது.
புராதனமான அத்தலம் அதன் சுற்றாடலினாற் சிறப்புப் பெற்றது. அந்நாட்களில் வானம் பொய்ப்பினும் அலைமோதி நீர் பாயும் காவிரியின் கிளைநதிகளாற் சூழப்பெற்ற தலம். கரும்புத் தோப்புக்களும், மாந்தோப்புக்களும், சாலிவயல்களும், நந்தவனங்களும் அங்கு நிறைந்திருந்தன. உழவரும் பிறரும் தங்கள் அயராத உழைப்பினாலே நிலவளமும் நீர்வளமுங் கொண்டு குன்றாத செல்வம் படைத்தனர். நானாவிதமான இயற்கைக் காட்சிகள், பசுமையான நெல்வயல்கள், காட்சிக்கினிய கமுகும், தெங்கும், பலாவும், வாழையுஞ் செறிந்த தோட்டங்கள், வாளை பாயும் நீரோடைகள், மலர்கள் விரிந்து வண்டுகள் மொய்க்கத் தேன் சொரிந்து பாயும் மலர் வனங்கள், மந்த மாருதம் வீச அதனாற் பேருவகை கொண்டு தோகை விரித்தாடும் மயிலின் ஒசை ஒருபால், கிளியின் ஒசையொருபால், குயிலின் கீதம் ஒரு பால். இவ்வாறங்கே பூலோகத்தின் சிறப்புகள் எல்லாம் பொலிந்த வண்ணமாயிருந்தன. பூலோகம், தேவலோம் அதுவே சிவலோகம் என்றாகிவிட்டது. காளிதாசர் முதலிய கவிஞர் பெருமக்கள் மறைபொருளான பரத்தின் இயல்புகள் யாவும் பூலோகத்திலே பிரசன்னமாய் உள்ளன என்று உணர்ந்தனர். காட்சிக்கும், கேட்பதற்கும், உணர்வதற்கும் இனியவை எல்லாவற்றையும் அப்பர் பெருமான் திருவையாற்றிலே கண்டார். அவருக்கு அது சிவலோகமாகத் தோன்றியது. திருவையாற்றின் அக்காலச் சிறப்பு இக்காலத்தவரின் கற்பனைக்கும் எட்டாக் கோலமாகும். அந்தக் கோலத்தைத் தேவாரப்பாடல்கள் மூலம் அறிந்து கொள்ளலாம்.
தேவாரகாலத்திற் திருவையாறு
"குன்றெல்லாங் குயில் கூவக் கொழும்பிரச
மலர் பாய்ந்து வாசமல்கு தென்றலா ரடி வருடச் செழுங்கரும்பு
கண்வளரும் திருவையாறே.”
“கடலேறித் திரைமோதிக் காவிரியி
னுடன் வந்து கங்குல் வைகித்
திடலேறிச் சுரிசங்கஞ் செழுமுத்தங்
கீன்றலைக்குந் திருவையாறே”
இவ்வாறாகத் திருஞானசம்பந்தர் திருவையாற்றின் இயற்கை வளத்தை வர்ணிக்கிறார்.
தேவார முதலிகளின் காலத்திலே புனித கூேடித்திரம் என்ற வகையிலே திருவையாறு பெருஞ் சிறப்புப் பெற்று விட்டது. அங்கு அமைந்த கோயில் பிரசித்தமாகிவிட்டது; கிரமமாக வழிபாடுகள் நடைபெற்றன. ஆராதனை வேளைகளில் ஆடல், பாடல்,
இந்துக்கலைக்களஞ்சியம்

வாத்தியம் என்பன உபசாரங்களாகி விட்டன. மேல்வரும் தேவாரப் பாடல்களால் இது தெளிவாகின்றது:
“பண்ணினல்ல மொழியார் பவளத்துவர் வாயினா
ரெண்ணி நல்ல குணத்தாரினை வேல் வென்றிக்
கண்ணினார்
வண்ணம் பாடி வலிபாடித் தம் வாய்மொழி பாடவே
99 பண்ணல் கேட் டுகந்தா னுமையாறுடையப்பனே
"கட்டுவட மெட்டுமுறுவட்ட முழவத்திற் கொட்கரமிட்ட வொலி தட்டும் வகை நந்திக் கிட்டமிக நட்டமவை யிட்டவரிடஞ்சீர்
வட்டமதி லுட்டிகழும் வண்டிருவையாறே”
திருஞானசம்பந்தர் ஐயாறப்பர் பள்ளிகொண்ட கோயிற் பதியை ‘வளநகரம் திருவையாறு’ என வர்ணிக்கின்றார். அப்பர் பெருமான் திருவையாறு பற்றி எல்லாமாகப் 42 பதிகங்களைப் பாடியுள்ளார். சிவஞானம், திருத்தல மகிமை, இயற்கை வளம், பக்தி நெறி என்பன பற்றிய விளக்கமாய் அவை அமைகின்றன. “மாதர்பிறைக் கண்ணியானை மலையான் மகளொடும் பாடி’ என்று தொடங்கும் பதிகத்திலே ஆணும் பெண்ணுமாகிக் கூடிவரும் விலங்குகளையும் புள்ளினங்களையும் சிவசக்தி சொரூபத்தின் அடையாளங்களாக அவர் கண்டார். அவற்றின் மூலமாக “கண்டேனவர் திருப்பாதம் கண்டறியாதன கண்டேன்’ என்று தனக்குற்ற அனுபவத்தை அவர் புலப்படுத்துகின்றார். அவர் திருவையாற்றிலே கயிலாயநாதரின் திருக்கோலத்தைக் கண்டார் என்பதனால் அத்தலத்தை தென்கயிலாயம் எனக் கொள்ளும் மரபு ஏற்பட்டது.
மாணிக்கவாசகர் திருவையாற்றின் சிறப்பினை மேல்வருமாறு பாடியுள்ளார்.
கையார் வளை சிலம்பக் காதார் குழையாட மையார் குழல்புரளத் தேன்பாய வண்டொலிப்ப செய்யானை வெண்ணிறனிந்தானைச் சேர்ந்தறியாக் கையானை யெங்குஞ் செறித்தானை யன்பர்க்கு மெய்யானை யல்லாதார்க் கல்லாத வேதியனை
ஐயாறமர்ந்தானைப் பாடுதுங்கா ணம்மானாய்
பட்டினத்தடிகளும் அருணகிரிநாதரும் திருவையாறு பற்றிப் பாடிய பாடல்கள் மிகவுங் கனிவானவை.
கோயில் வளாகமும் கட்டுமானங்களும்
தமிழகத்திலுள்ள மிகவும் புராதனமான திருத்தலங்களில்
ஒன்றான திருவையாற்றின் வளாகம் பிரமாண்டமானது.
பிரதானமான ஆலயங்களான ஐயாறப்பர் கோயில்,
193

Page 224
தென்கயிலாயம், வடகயிலாயம் ஆகிய மூன்றும் நெடுமதில் சூழ்ந்த வளாகத்தினுள் அமைத்திருக்கின்றன. அதன் சுற்றளவு ஏறக்குறைய 15 ஏக்கர் நிலப்பரப்பாகும். தஞ்சைப் பெருங் கோயிலின் வளாகத்தைக் காட்டிலும் இரு மடங்கு பெரியது.
ஐயாறப்பர் கோயிலைச் சுற்றி நான்கு பிராகாரங்கள் உள்ளன. தென்கயிலாயம், வடகயிலாயம் என்னும் கோயில்கள் நான்காம் பிராகாரத்தில் அமைந்துள்ளன. முதன் மூன்று பிராகாரங்களிலும் பிற்காலத்துத் திருப்பணிகளான பல கோயில்களும் வேறு கட்டடங்களும் நிறைந்துள்ளன. திருவையாற்றிலுள்ள கட்டடங்களில் ஐயாறப்பர் கோயிலே மிகவும் பழமையானது. அது வழமைபோல கிழக்கு நோக்கிய, வனப்பு மிக்க கோலமான சிறிய கோயிலாகும்.
ஐயாறப்பர் கோயில்
அது விமானம், அர்த்த மண்டபம், முன் மண்டபம் ஆகிய பகுதிகளைக் கொண்டது. அதன் விமானமும் அர்த்த மண்டபமும் முற்காலச் சோழர் கலைப்பாணியில் அமைந்தவை, அவற்றில் ஆதியான வேலைப்பாடுகள் எதுவித மாற்றமுமின்றிப் பேணப்பட்டுள்ளன. விஜயநகர காலத்தில், 15ஆம் 16ஆம் நூற்றாண்டுகளில் முன்மண்டபத்திலே சில மாற்றங்கள் செய்யப்பட்டன. அதன் தூண்களும் விதானமும் மாற்றப்பட்டு உயரமாக்கப்பட்டுள்ளன. ஆயினும் மண்டபத்தின் பழைய சுவர்கள் இடித்துப் புனராக்கம் செய்யப்படவில்லை.
அதிட்டானத்தில் உபானம், பத்மஜகதி, குமுதப்படை, யாளிவரி என்னும் பகுதிகள் உள்ளன. அவை மிகுந்த வனப்புடன் உருவாக்கப்பட்டுள்ளன. அவற்றிற் காணப்படும் விவரங்களின் அடிப்படையில் கி.பி. 866 - 940 ஆகிய காலப்பகுதியில் ஐயாறப்பர் கோயில் அமைக்கப்பட்டதென்று ஆய்வாளர் சிலர் கொள்வர். திருச்செந்துறை, திருநாமநல்லூர், அல்லூர், வாழையூர், வாலிகண்டபுரம், திருச்செந்தூர் ஆகியவற்றிலுள்ள கோயில்களும் இக்காலத்தனவாகும்.
சுவர்களில் அணைவுதூண்களும் தேவகோட்டங்களும் அமைந்துள்ளன. பூதவரி, கபோதம், யாளிவரி என்பன பிரஸ்தரப் பகுதியில் அமைந்துள்ளன. கபோதத்தின் கீழ் வரிசையாகச் சிறு வட்டங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. கபோதத்தில் மணிகள் இழைத்தாற் போன்ற கூதங்கள் தெரிகின்றன. திருப்பங்களில் அவை இவ்விரண்டாக அமைந்துள்ளன. கபோதத்தின் பூதவரியிலே பூதங்களின் உருவங்கள் வெவ்வேறான கோலங்களில் அமைக்கப்பட்டுள்ளன.
விமானம் ஒருதள வேஸர சிகர விமானம். அதன் நான்கு மூலைகளிற் கூடமும் பக்கப் பகுதிகளிற் சாலைகளும் உள்ளன. கிரீவத்திற் கிழக்கிலே சோமாஸ்கந்தரும் தெற்கிலே
194

தகூழிணாமூர்த்தியும் மேற்கில் மகாவிஷ்ணுவும் வடக்கில் பிரமனும் உள்ளனர். அண்மைக் காலத்தில் நடைபெற்ற திருப்பணி வேலைகளின் விளைவாக ஆதியான சுதை வேலைப்பாடுகள்
அழிந்துவிட்டன. புதிய உருவங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
அர்த்தமண்டபத் தூண்கள் நான்கும் ஆதியானவை. அம்மண்டபத்து வாயிலின் நிலையிலுள்ள கொடிகள் வனப்புடைய வேலைப்பாடுகளோடு அமைந்தவை. அதன் நடுவில் இலக்குமியும் அபிஷேகம் செய்யும் யானைகளும் நுண்ணுருவங்களாகச் செதுக்கப்பட்டுள்ளன. அதனிரு புறங்களிலும் அமைந்துள்ள சிறிய கொடிச் சுருள்களில் ஆடல், பாடல், வாத்தியக் காட்சிகள்
நுட்பமாகச் செதுக்கப்பட்டுள்ளன.
மூலஸ்தானத்திலுள்ள சுயம்புலிங்கம் எனப்படும் சிவலிங்கமும் துவாரபாலகர் வடிவங்களும் மணற்கல்லில் அமைந்தவை வடபுறத் துவாரபாலரின் கோலம் இடது காலை நேராகவும் வலது காலைச் சற்று மடக்கி ஊன்றிய நிலையிலும் அமைந்துள்ளது. வலது முழங்கை கதைமேல் ஊன்றிய கோலமானது. இடது கை விஸ்மய முத்திரையில் அமைந்துள்ளது. உபவீதம், பத்திரகுண்டலம், கரண்ட மகுடம், தோள்வளை, உதரபந்தனம் இடைக்கச்சை, காற்சிலம்புகள் என்பன அணிகளாகும். தென்புறத்துத் துவாரபாலகரின் வடிவம் எதுவித சிதைவுமின்றி இன்றும் பொலிவுடன் விளங்குகின்றது. அதன் வலக்கரம் தர்ஜனி முத்திரையிற் காணப்படுகின்றது. இடக்கரம் கதையின் மேல்
ஊன்றிய நிலையில் உள்ளது. ஜடாமுடி மகுடமாகும்.
மேற்புறத் தேவகோட்டத்தில் ஆதியில் அமைந்த ரிஷபவாகன அர்த்தநாரி வடிவம், வழமைக்குமாறாக, திருவேதிகுடியிற் போல அமைந்துள்ளது. இடப்பாகத்தில் ஆண் பாகமும் வலப்பாகத்திற் பெண்பாகமும் அமைந்துள்ளன.
ஐயாறப்பர் கோயிலின் முதற் சுற்றுமாளிகை 18ஆம் நூற்றாண்டில் மருதூரினரான ஆனையப்பபிள்ளை, வைத்தியநாத அண்ணன் என்போரால் அமைக்கப்பட்டது. சிதைவான 12 ஆம் நூற்றாண்டுக் கோயிலின் கற்களைப் பயன்படுத்தி இது அமைக்கப்பட்டுள்ளது. இங்கு கி. பி. 10 ஆம் நூற்றாண்டுக்குரிய சப்தமாதரின் சிற்பங்கள் காணப்படுகின்றன. அவற்றை கற்பலகை ஒன்றிலே மிகுந்த வனப்புடன்
செதுக்கியுள்ளனர்.
அவற்றின் பிரதிமாலசுஷ்ணங்கள் மேல்வருவனவாகும்:
1. பிராமி - மூன்று முகங்கள்; நான்கு கரங்கள்; பின்னிரு கரங்கள் அக்ஷமாலை, கெண்டி என்பவற்றை எந்திய கோலமானவை; வலப்பக்கத்தில் கொடி தெரிகின்றது.
இந்துக் கலைக்களஞ்சியம்

Page 225
2. மகேஸ்வரி
சடைமுடி, நான்கு கரங்கள்; பின்னிரு கரங்களிலும் மான், மழு என்பவற்றின் வடிவங்கள், ரிஷபக் கொடி.
3. கெளமாரி
முடி கரண்ட மகுடம், நான்கு கரங்கள்;
பின்னிரு கரங்கள் வச்சிரம், அக்ஷமாலை
என்பவற்றை ஏந்திய நிலை, மயிற் கொடி
4. வைஷ்ணவி - கிரீடம் தலைமேலே தெரிகின்றது; பின்னிரு கரங்களிற் சங்கு, சக்கர வடிவங்கள்; கருடக் கொடி
5. வராகி - முகம் வராக லக்ஷணம்; கலப்பை, தடி என்பன பின்னிரு கரங்களில் அமைந்துள்ளன; சிங்கக் கொடி.
6. இந்திராணி
பின்னிரு கரங்களும் அங்குசம், வச்சிரம் என்பவற்றை ஏந்தியுள்ளன; யானைக் கொடி.
7. சாமுண்டி - விரிசடை தலைமேற் கபாலம், பின்னிரு கரங்களிலும் சூலம், கபாலம்; காதுகளிற் கபால குண்டலங்கள்; மார்பினிற் கச்சை, கபாலம், பாம்பு, உபவிதம்; ஆந்தைக் கொடி.
சப்தமாதர்களின் முன்னும் பின்னுமாக இருந்த விநாயகர் வீரபத்திரரின் வடிவங்கள் சிதைந்துவிட்டன. இதற்குச் சமீபத்தில் 63 நாயன்மார்களின் உருவச் சிலைகள் காணப்படுகின்றன.
அவை 18 ஆம் 19 ஆம் நூற்றாண்டுகளில் வடிக்கப்பட்டவை.
திருச்சுற்று மாளிகையின் மேற்புறச் சுவரில் வனப்புமிக்க உமாமகேஸ்வரர் சிற்பம் உள்ளது. அதன் திருவாசி ஒங்கார வடிவமாய் விளங்குகின்றது. அளவிற் பெரியதான தகூதிணா மூர்த்தியின் பிரதிமை அருகில் அமைந்துள்ளது. இப் படிமங்கள் 16ஆம், 17ஆம் நூற்றாண்டுகளுக்குரிய சிற்பக்கலையின் அம்சங்களைப் பிரதிபலிக்கின்றன. ஐயாறப்பர் கோயிலின் வட கோஷ்டத்திலுள்ள நான்முகனின் உருவத்துக்கு எதிராகச் சண்டிகேஸ்வரரின் சிலை உண்டு. அது 12 ஆம் நூற்றாண்டுக் குரிய வடிவமாகும். நவீன காலத்தில் உருவாக்கப்பட்ட பல சிற்பங்களும் திருச்சுற்று மாளிகையில் உள்ளன. நடராசர், ராஜராஜேஸ்வரி ஆகியோரின் திருவுருவங்களும் அரசன், இராணி, திருப்பணிக்காரராகிய மருதூர் ஆனையப்பபிள்ளை, வைத்தியநாத அண்ணன், அடியார்கள் ஆகியோரின் உருவங்களும் அங்குள்ளன.
இரண்டாம் பிராகாரம்
பதின்மூன்றாம் நூற்றாண்டுவரை முதலாம் பிராகாரமாக வழங்கிய அமைப்பு பிற்காலத்துக் கட்டுமானங்களின் காரணமாக இரண்டாம் பிராகாரமாகிவிட்டது. இந்நாட்களில் இரண்டாம் பிராகாரத்து வளாகத்தினுள் அமைந்துள்ள கட்டடங்களிற் சண்டிகேஸ்வரர் கோயில் மட்டுமே புராதனமானது. அங்கு
இந்துக்கலைக்களஞ்சியம்

காணப்படும் சோமாஸ்கந்தர் மண்டபம், முக்தி மண்டபம், மகாலெட்சுமி கோயில், நடராஜர் சந்நிதி ஆகியவை 13 ஆம்
நூற்றாண்டுக்குப் பிற்பட்ட கட்டுமானங்களாகும்.
மண்டபங்கள்
சோமாஸ்கந்தர் மண்டபம் ஐயாறப்பர் கோயிலின் தென்பால் அமைந்துள்ளது. அதன் அதிஷ்டானம் நான்கு அடிகள் உயரமானது. மண்டபத்திலே 16 தூண்கள் நிறுத்தப்பட்டுள்ளன. அவற்றின் அடிப்பாகத்திலே சிங்கவடிவங்கள் செதுக்கப் பட்டுள்ளன. இம்மண்டபத்தின் தென்புறத்தில் 2 அறைகள்
உள்ளன.
இம்மண்டபத்தின் பின்னால் அமைந்திருப்பது முக்தி மண்டபம். அதில் விநாயகர், நவக்கிரகங்கள் ஆகியோரின் சிற்பங்களும் பல சிவலிங்கங்களும் வைக்கப்பட்டுள்ளன. நுளம்பர் கலைப்பாணியில் அமைந்த அழகிய வேலைப்பாடுகள் கொண்ட தூண் உள்ளது. பத்தாம் நூற்றாண்டுக்குரிய அத்துTண் நுளம்பபாடியிலிருந்து கொண்டுவரப்பட்டது. படையெடுப்புக் காலத்தில் நுளம்பர் கலைப்பாணியின் வனப்பினைக் கண்டு நயந்த சோழர் நுளம்பாடியிலுள்ள கோயிலொன்றிலிருந்து கவர்ந்து சென்ற கலைப்பொருள்களில் அது ஒன்றாதல்
வேண்டும்.
இரண்டாம் பிராகாரத்திலுள்ள சண்டிகேஸ்வரர் கோயில் சோழர் காலத்துக் கற்றளியாகும். அது ஒன்பதாம் நூற்றாண்டுக்குரிய கோயில் போலத் தெரிகின்றது. உபானம், ஜகதி, குமுதம் யாளிவரி என்பன அதன் அதிஷ்டானப் படைகளாகும். பூதவரி, கபோதம், யாளிவரி என்பன அதன் பிரஸ்தரப் பகுதிகள். கோயில் விமானம் ஏகதள வேஸரசிகர விமானம். விமான தளத்தின் நான்கு மூலைகளிற் கூடங்களும் பக்கங்களிற் சாலைகளும் அமைந்துள்ளன. அவற்றின் ஆதியான கோலம் திருப்பணிகளின் காரணமாகப் பெரிதும் மாறிவிட்டது.
இரண்டாம் பிராகாரத்துத் திருச்சுற்று மாளிகை திருமாளிகைப் பத்தி என்று சொல்லப்படும். அது இருதள அமைப்பாகும். அதன் கிழக்குப் பகுதியிற் கோபுரவாயில் அமைந்துள்ளது. கோபுரத்தின் அதிட்டானப் பகுதியிற் கிழக்கிலும் தெற்கிலும் பத்மம், ஜகதி, படை, முப்பட்டைக் குமுதம், பட்டிகை என்னும் படைகள் உள்ளன. மேற்கிலும் வடக்கிலும் பத்மம், ஜகதி, முப்படைக்குமுதம், பட்டிகை, யாளிவரி என்னும் படைகள்
காணப்படுகின்றன.
கீழ்த்தளத்திலுள்ள தூண்கள் கீழிருந்து மேலாக நான்குபட்டை, எட்டுப்பட்டை, கலசம், குடம், பலகை, போதிகை
ஆகிய அமைப்புக்களுடன் உள்ளன. கலசத்தின் வாய்ப்பகுதியில்
195

Page 226
எண்கோணமான நுண்ணிய பகுதிகளில் மிகவும் சிறிய
வடிவிலமைத்த சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன.
திருச்சுற்று மாளிகையின் மேல்தளத்துக்குச் செல்லக்கூடிய வகையிலே தென்மேற்குப் பகுதியிற் படிகள் அமைந்துள்ளன. மேல்தளத்தில் தனுசு சுப்பிரமணியர், காசிவிசுவநாதர் என்போரின் பெயர்களால் விளங்கும் கோயில்கள் உள்ளன. அவை பிற்காலத்தில் அமைக்கப்பட்டவை. அத்துடன் பிற்காலத்திற் பள்ளியறை, பரிவட்டங்கள் உலர்த்தும் அறை என்பன
அமைக்கப்பட்டுள்ளன.
திருச்சுற்று மாளிகை வடபுறத்திலும் தென்புறத்திலும் இரண்டு மடங்கு அகலமானது. காலாகாலம் ஏற்பட்ட சிதைவுகளின் விளைவாகத் திருத்தங்கள் ஏற்பட்டுள்ளன. சில விடங்களிலே புதிய தூண்கள் பழைய அமைப்பிற் செய்யப்பட்டு நிறுத்தப்பட்டுள்ளன. திருச்சுற்று மாளிகை 11 ஆம் நூற்றாண்டுத் திருப்பணியாகும். பதினான்காம் நூற்றாண்டிலே அதன் மதில் சீர்குலைந்து விட்டதால் 1381இல் பாண்டிய குலாசனி வளநாட்டுக் கச்சிவீரப்பெருமாள் என்னும் பிரதானியின் மகன் அதனைத் திருத்தி அமைத்தான்.
இரண்டாம் பிராகாரத்தில் மகாலக்ஷமி கோயிலும் நடராஜர் சந்நிதியும் அமைந்திருக்கின்றன. நாயக்கர் காலத்துக் கட்டுமானமாகிய மகாலசுஷ்மி கோயிலில் மகாலசுஷ்மி, சரஸ்வதி ஆகியோரின் சிற்பங்கள் உள்ளன. இக்கோயிலின் வெளியில் அமைந்துள்ள மண்டபம் சுவர்கள் அற்றது. அது சண்டிகேஸ்வரர் கோயிலை ஒட்டி அமைந்துள்ளது. கொற்றவையின் கற்படிமமொன்று அதில் அமைந்திருக்கின்றது. இம்மண்டபம் 12 ஆம் நூற்றாண்டுக் கட்டுமானம் போலத் தெரிகின்றது.
திருச்சுற்று மாளிகையின் வடகிழக்கு மூலையிலுள்ள நடராஜர் மண்டபத்தில் ஆடவல்லார், சிவகாமி, மகாலக்ஷமி ஆகியோரின் செப்புப் படிமங்கள் காணப்படுகின்றன. அவை பிற்காலச் சோழர் கலைப்பாணியில் உள்ளவை; 12 ஆம், 13 ஆம் நூற்றாண்டுகளுக்குரிய வார்ப்பு முறையில் அமைந்தவை. இம்மண்டபத்தில் வைரவரின் இரு கற்படிமங்களும் காணப்படுகின்றன. அவை 13ஆம், 14 ஆம் நூற்றாண்டு களுக்குரியன போலத் தெரிகின்றது. கோபுர வாயிலின் வட புறத்தில் 16ஆம், 17ஆம் நூற்றாண்டுகளுக்குரிய வேலைப்பாடு கொண்ட அதிகாரநந்தியின் அழகு பொலிந்த சிற்பம் அமைந்திருக்கின்றது. அவ்வடிவம் தேவியார் சமேதமான கோலம்.
மூன்றாம் பிராகாரம்
மூன்றாம் பிராகாரத்திற் கிழக்கிலும் தெற்கிலுங் கோபுரவாயில்கள் உள்ளன. கிழக்குக் கோபுரம் விக்கிரம
196

சோழனின் திருப்பணி. அதனைப் பற்றிய சாசனக் குறிப்புண்டு. தெற்குக் கோபுரம் 17ஆம் 18ஆம் நூற்றாண்டுகளில் உருவாக்கப்பட்டது.
ஒலொக்கமண்டபம், களஞ்சியம், நந்தி, பலிபீடம், கொடிமரம், உக்கிராணம், மடைப்பள்ளி ஆகியன மூன்றாம் பிராகாரத்தில் உள்ளன. ஒலொக்க மண்டபத்தில் இந்நாட்களில் நூல் நிலையம், வாகனங்கள், கோயில் அலுவலங்கள், அறைகள் என்பன அமைந்துள்ளன. சப்ததல விழாவில் ஏழுர் உற்சவ மூர்த்திகளும் இம்மண்டபத்திலே பிரசன்னமாவது வழமை. ஒலொக்க மண்டபம் விஜயநகர காலத்துத் திருப்பணியாகும். அது 14ஆம் 15ஆம் நூற்றாண்டுகள் அடங்கிய காலப்பகுதியில் உருவாக்கப்
பட்டுள்ளது போலத் தெரிகின்றது.
நான்காம் பிராகாரம்
வட கயிலாயம், தென் கயிலாயம் என்னும் வரலாற்றுச் சிறப்பு மிக்க கோயில்களும் திருக்காமக்கோட்டம், நூற்றுக்கால் மண்டபம், காசி விஸ்வநாதர் கோயில் என்பனவும் சூரிய புஷ்கரணி என்னும் தீர்த்தமும் நான்காம் பிரகாரத்தில் உள்ளன.
மூன்றாம் பிராகாரத்துக் கிழக்குப் கோபுரமான விக்கிர சோழன் கோபுரவாயில் வழியாக வெளிவருமிடத்து பச்சையப்ப முதலியார் மண்டபத்தை அடையலாம். அது 19 ஆம் நூற்றாண்டிலே பச்சையப்ப முதலியார் செய்த திருப்பணியாகும். கி. பி. 1842இல் எழுதிய கல்வெட்டிலே அவரது திருப்பணி விவரங்கள் சொல்லப்படுகின்றன. மண்டபத் தூண்களிற் காணப்படும் உருவச் சிலைகள் அவரதும் அவரது குடும்பத்தவரதும் பிரதிமைகளாதல் கூடும்.
நாலாம் பிராகாரத்துத் தென்கிழக்கு மூலையிற் சூரியபுஷ்கரணி என்னும் தீர்த்தக் குளம் உண்டு. அதன் நடுவில் சிறிய மண்டபமொன்று காணப்படுகிறது. குளத்தருகிலே 17ஆம், 18ஆம் நூற்றாண்டுக் கட்டுமானமாகிய காசிவிஸ்வநாதர் கோயில் உள்ளது. அது கிலமடைந்துவிட்டது. அதன் அதிட்டானமும் சுவர்களும் கற்றளிப் பாங்கானவை. விமானம் செங்கற்கள், சுதை
என்பன கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.
விஸ்வநாதர் கோயிலை அடுத்துத் தெற்குக் கோபுரம் அமைந்துள்ளது. அதன் துவாரபாலகர் ஆட்கொண்டார் உய்யக்கொண்டார் என்னும் நாமங்களால் விளங்குவர். இப்பிராகாரத்தின் நான்கு மூலைகளிலும் கிழக்கும் மேற்கும் நோக்கிய வண்ணமாக நான்கு விநாயகர் கோயில்கள் உள்ளன. இப் பிராகாரத்தின் தெற்குப்புறத்தில் அமைந்துள்ள தென்னந்தோப்பிற் புராதனமான திருக்காமக் கோட்டத்தின் அழிபாடுகள் சில எஞ்சியுள்ளன. கோயிலின் மூலவரைத் திருக்காமக்கோட்டத்து நாச்சியார் என்று சாசனமொன்று குறிப்பிடுகின்றது.
இந்துக் கலைக்களஞ்சியம்

Page 227
நாலாம் பிராகாரத்து வடகிழக்குத் திசையில் இருபதாம் நூற்றாண்டுத் திருப்பணியான அம்மன் கோயில் அமைந்துள்ளது. அறம் வளர்த்த நாயகி என்றும் தர்மசம்வர்த்தினி என்றும் அம்மனைக் குறிப்பிடுவர். கோபுரவாசல், அலங்கார மண்டபம், இரு சுற்றுப் பிராகாரங்கள் என்பன பொருந்திய தனிக் கோயிலாக அது அமைந்துள்ளது.
ஒலொகமாதேவீஸ்வரம்
முதலாம் இராஜராஜனின் பட்டத்தரசியான உலோகமாதேவி திருவையாற்றில் எடுப்பித்த கோயில் ஒலொகமாதேவீஸ்வரம் என்னும் பெயரால் வழங்கியது. இந்நாட்களில் அதனை வடகயிலாயம் எனும் பெயராற் குடுப்பிடுவது வழமை. அது கி.பி. 1008ஆம் ஆண்டிலே கட்டி முடிக்கப்பெற்றது. “றுநீராஜராஜதேவர் நம்பிராட்டியார் தந்திசக்தி விடங்கியாரான பூரீ ஒலோக மாதேவியார் வடகரை ராஜேந்திரசிங்க வளநாட்டுப் பொய்கை நாட்டுத் திருவையாற்றுப்பால் நாம் எடுப்பித்த திருக்கற்றளி ஒலோகமாதேவீஸ்வரம்” என்பது இக்கோயிலைப் பற்றிய சாசனக்குறிப்பு எழுவடியான் காரோணனான புவனமாணிக்க ஆசார்யன், நக்கன் ஆச்சனான கலியுகரம்பைப் பெருந்தச்சன் என்னும் சிற்பாசாரியர்கள் இக்கோயிலை நிர்மாணித்தனர்.
அளவிற் சிறிய கற்றளியான ஒலோகமாதேவி - ஈஸ்வரம் வனப்பு மிகுந்த கட்டுமானமாகும். கருவறை, அர்த்தமண்டபம், மண்டபம் என்பன அதன் பிரதான பகுதிகளாகும். விமானம் ஏகதளமானது. அதன் சிகரம் வேசர அமைப்புடையது. மூலஸ்தானம், அர்த்தமண்டபம் என்பவற்றின் அதிஷ்டானம் ஒன்றாகவும் மண்டபத்தின் அதிஷ்டானம் வேறுவிதமாகவும் அமைந்துள்ளமை குறிப்பிடற்குரியது. கோயில் கிழக்கு நோக்கியது. வாயில் கிழக்கில் அமைந்துள்ளது. மண்டபமும் அர்த்தமண்டபமும் இணையுமிடத்திலே வடக்கிலும் தெற்கிலும் வாயிற்புறங்கள் அமைந்துள்ளன. அர்த்த மண்டபத்தில் நான்கு வனப்புமிக்க தூண்களும் மண்டபத்தில் நான்கு சாதாரணமான தூண்களும் உள்ளன.
கருவறை, அர்த்தமண்டபம் ஆகியவற்றின் அதிஷ்டானம் உபானம், பத்மஜகதி, பத்மவரி, விருத்தகுமுதம், யாளிவரி, வேதிகை ஆகிய அமைப்புக்களுடன் காணப்படுகின்றது. உபானம், ஜகதி, விருத்த குமுதம், பட்டிகை, வேதிகை என்பன முன்மண்டபத்து அதிஷ்டானப் படைகளாகும்.
கர்ப்பக்கிருகத்தின் மூன்று பக்கத்துச் சுவர்களின் வெளிப்புறத்திலே தேவகோஷ்டங்கள் உள்ளன. அர்த்தமண்டபத்து தென், வடபுறச் சுவர்களில் ஒவ்வொரு தேவகோஷ்டம் அமைந்துள்ளது. பிரஸ்தாரப் பகுதி கட்டடம் முழுவதும் ஒரே விதமாக அமைந்துள்ளது. கீழே பூதவரியும் நடுவிற் கபோதமும் அதன் மேல் யாளிவரியுமாக அது விளங்குகின்றது. இக்கோயிலின் அதிஷ்டானம் கீழையூர், லால்குடி, கண்டியூர்,
இந்துக் கலைக்களஞ்சியம்

கிளியனூர், திருநாரையூர் என்னுமிடங்களிலுள்ள கோயில்களில் உள்ளவற்றைப் போன்றவை. ஒலொகமாதேவீஸ்வரத்து அர்த்த மண்டபத்தின் வடிவமைப்புத் தனிச்சிறப்புடையது.
இக்கோயிலிற் காணப்படும் சிற்பங்கள் மிகுந்த சிறப்புடையவை. பூத வரியிற் பூதங்கள் வரிசையாக நாட்டியமாடுவது போன்ற காட்சிகள் தெரிகின்றன. இடையிடையே இரண்டு பூதங்கள் சண்டையிடுவது போன்ற காட்சி சித்திரிக்கப்பட்டுள்ளது. குரங்குகள் குந்தியிருக்குங் கோலத்திலும் பூதங்கள் மனிதருடன் கைகோர்த்து நிற்கும் வடிவத்திலும் சில உருவங்கள் செதுக்கப்பட்டுள்ளன. அதிட்டானத்து யாளிவரியிற் சில யாளிகள் துதிக்கையுடனும் வேறு சில யாளிகள் அழகாகச் சுருண்டிருக்கும் பிடரிமுடிகளுடனும் அமைந்துள்ளன. யாளிவரித் திருப்பங்களில் வாயை வெளியே நீட்டிய மகர உருவங்கள் தெரிகின்றன. அவற்றின் வாய்களிலிருந்து வீரர்கள் வெளியேறும் காட்சியும் அவற்றின் தலைமேல் வீரர்கள் அமர்ந்திருக்கும் கோலமும் தெரிகின்றன.
கபோதக் கூடுகளில் அன்னம், கொக்கு, பசு, மீன் போன்ற உயிரினங்கள் சிவலிங்கத்தை வழிபடும் காட்சிகள் செம்மையாகச் செதுக்கப்பட்டுள்ளன. கர்ப்பகிருகத்தின் தென்புறத் தேவகோட்டத்திலே தகூதிணாமூர்த்தியின் உடைந்த கோலமான சிற்பம் அமைந்திருக்கின்றது. இரு கால்களும் கரங்களில் இரண்டும் ஒடிந்து விட்டன. உருவம் வடிவமைப்பில் உன்னதக் கோலமானது. குமுண் சிரிப்புடன் விளங்கும் முகம் அருள்பாலிக்கும் வடிவமானது. ஆலமரத்திலே அக்கமாலை தொங்குகின்றது. அரவமொன்று நகர்கின்றது; ஆந்தையொன்று விழித்த கோலத்தில் அமர்ந்துள்ளது. அணிலொன்று தீன் கொறிக்கின்றது; கிளியொன்று பழம் தின்கின்றது; பல்லியொன்று ஒடுகின்றது; துணியொன்று பறக்கின்றது; பூங்கொத்தும் சாமரையும் அசைந்தாடுகின்றன. தகூதிணா மூர்த்தியின் தலையில் விரிசடையும் மார்பில் உபவிதமும் வயிற்றில் உதரபந்தமும் இடையிற் கச்சையும் அமைந்துள்ளன. சடையில் அறுகு, ஊமத்தை, எருக்கு என்பன தெரிகின்றன. பிற்கரங்களில் அனலும் அக்கமாலையும் உள்ளன. காலடியில் பாம்பு, மான்கள். முயலகனின் கோலம் என்பன காணப்படுகின்றன. கோட்டத்துக்கு வெளியே தேவர்கள், முனிவர்கள் ஆகியோரின் காட்சிகள் தெரிகின்றன. கர்ப்பகிரகத்தின் மேற்குப்புறத் தேவகோட்டத்திற் சிற்பம் எதுவுமில்லை. வடக்கிலுள்ள கோட்டத்திற் பிரம்மதேவனின் உருவம் அமைந்துள்ளது. நான்கு கரங்களில் ஒன்று ஒடிந்துவிட்டது. பின்னிரு கரங்களில் அக்கமாலையும் கெண்டியும் உள்ளன. உருவம் பத்மபீடத்தில் அமைந்துள்ளது. இடதுகால் மடக்கிய கோலமானது; வலதுகால் தொங்கிய தோற்றங் கொண்டது. மகுடம், உபவிதம், உதரபந்தம் ான்பன அணிகலங்களாகும். வெண்கொற்றக்குடையும் இரு சாமரங்களும் தலைமேலே தெரிகின்றன. ஒலொகமாதேவீஸ்
197

Page 228
வரத்துத் தகூதிணாமூர்த்தி, நான்முகன் ஆகியோரின் படிமங்க வேலைப்பாட்டிற் பெருவுடையார் கோயிலில் உள்ளவற்றை
காட்டிலுந் தரத்தால் உயர்ந்தனவாகக் கொள்ளப்படுகின்றன.
அர்த்தமண்டபத் துவாரபாலகரின் தோற்றம் கம்பீரமானது முகபாவம் குமுண்சிரிப்புடன் கலந்தது. தென்புற துவாரபாலகரின் காலடியிற் கதைபிடித்த கோலமா குழந்தையின் உருவம் கவர்ச்சிமிக்க கோலமாகு துவாரபாலகரின் கதையைச் சுற்றியுள்ள பாம்பு பானையொன்ை
விழுங்கும் தோற்றத்தில் அமைந்துள்ளது.
உள்மண்டபத்துத் தூண்கள் நான்கும் சிற்பசாஸ்தி முறையில் நன்கு வடிவமைக்கப்பட்டுள்ளன. அவை கீழிருந் மேலாக நாற்கோணப் பாகம், எண்கோணப் பாகம், கலசம், குட பலகை, பத்மம், போதிகை என்னும் அம்சங்களைக் கொண்டை அவற்றில் மணி இழைத்தாற் போன்ற நுண்ணி வேலைப்பாடுகள் உள்ளன. முத்துச்சரங்கள் போன்ற அழகி
வடிவங்கள் செதுக்கப்பட்டுள்ளன.
தென்கயிலாயம்
அப்பர் பெருமான் திருவையாற்றிலே திருக்கயிலா தரிசனம் பெற்றார் என்பது ஐதீகம். சிவபெருமானுடை கோலத்தை அங்கு இயற்கைக் காட்சிகளிலே கண்டு பரவசமா அனுபவித்த பேரின்பநிலையினை அவர் பதிகமாக பாடியுள்ளார். திருநாவுக்கரசர் காலம் முதலாக திருவையாற்றினைத் தென்கயிலாயம் என்று சொல்வ
வழமையாகிவிட்டது.
தென்கயிலாயம் என வழங்கும் தனிக்கோயிலொன் திருவையாற்றிலே, ஐயாறப்பர் கோயிலின் தென்புறத்திலே, ஆம் நூற்றாண்டில் அமைக்கப்பட்டது. அது முதலா இராஜேந்திர சோழனின் தேவியான பஞ்சவன் மாதேவியா அமைக்கப்பட்டது. “வடகரை ராஜேந்திரசிங்க வளநாட் பொய்கைநாட்டு திருவையாற்று நம்பிராட்டியார் பஞ்சவ மாதேவி. (திருவை) யாற்று எடுப்பித்தருளுகின்ற திருக்கற்ற தென்கயிலாய முடையார் கோயில்” என்பது சாசனக்குறிப் அது கி.பி. 1143ஆம் ஆண்டில் எழுதப்பட்ட கல்வெட்டி காணப்படுகின்றது.
தென்கயிலாயம் வடக்கு நோக்கிய கற்றளி. அது கருவை உள்மண்டபம், முன்மண்டபம், திருச்சுற்று, திருச்சுற்று மாளிை கோபுரவாசல் என்னும் பகுதிகளைக் கொண்டது. அத அதிஷ்டானம் பத்ம ஜகதி, பத்மவரிகளுடன் கூடிய விருத் குமுதம், பட்டிகை, வேதிகை ஆகிய படைகளைக் கொண்டுள்ள உபானத்தின் கீழ்ப்பகுதியில் சாலை, கூடம் என்பன போன்
அமைப்புகள் உள்ளன. தாராசுரத்திலுள்ள இரண்ட
198

இராஜராஜன் காலத்துத் திருக்காமக் கோட்டத்திலும் இவ்வாறான அமைப்புகளைக் காணலாம்.
சுவர்ப்பகுதிகளிலே தேவகோஷ்டங்களும் கால்வரிகளும் காணப்படுகின்றன. பிரஸ்தாரப் பகுதியிற் பூதவரி கபோதம்,
யாளிவரி என்னும் அமைப்புகள் உள்ளன.
தேவகோஷ்டச் சிற்பங்கள்
அர்த்தமண்டபம், கருவறை ஆகியவற்றின் சுவர்களிலே தேவகோட்டங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அர்த்தமண்டபத்துத் தென்சுவரில் அலங்காரக் கோட்டமொன்றும் அதனையடுத்து வைரவர், விநாயகர் ஆகியோரின் கோட்டங்களும் உள்ளன. வைரவரின் வடிவம் பத்மபீடத்தில் அமைந்த ஸ்தானகக் கோலம். மகுடம் தீப்பிளம்பின் வடிவமானது. பிற்கரங்கள் உடுக்கை, பாசம் என்பனவற்றை எந்திய கோலமானவை. முன்னிரு கரங்களிலும் சூலமும் கபாலமும் அமைந்துள்ளன. கபாலங்கள் கோர்த்த உபவீதம், இடையில் அரவம், வயிற்றில் உதரபந்தனம் ஆகியன அணிகலன்களாகும் வலது காலில் ரக்ஷாபந்தனம் தெரிகின்றது.
விநாயகரின் படிமம் ஸ்தானகக் கோலமானது மேலே வெண்கொற்றக்குடையின் வடிவம் அமைந்துள்ளது. பின்னிரு கரங்களும் அங்குசம், பாசம் ஆகியவற்றை ஏந்திய கோலமானவை. முன்னிரு கரங்களில் இடது கரம் ஒடிந்து விட்டது; வலக்கரம் உடைந்த தந்தத்தினை ஏந்தியுள்ளது. துதிக்கை இடதுபுறம் நோக்கிய வளைவு கொண்டது. உந்தியும் உதரபந்தமும் கால்களும் வடிவத்திற்கேற்ற வனப்புடன் அமைந்துள்ளன.
கர்ப்பக்கிருகத்தின் மூன்று தேவகோட்டங்களிற் சிவபெருமானின் படிமங்கள் வெவ்வேறு கோலங்களில் அமைந்துள்ளன. கிழக்குப்புறத்திலே பத்மபீடத்தில் அமைத்துள்ள வடிவம் சகாசனக்கோலமானது. கரங்களில் ஒன்று ஒடிந்து விட்டது. பின்னிருகரங்கள் மான், ஆகூய மழு ஏந்தியவை. முன்னிடக்கரம் வரதகரமாக விளங்குகின்றது. இடக்கால் மடித்து வலக்காலின் முழங்கால் மேல் வைத்த வண்ணமானது. தென்புறக் கோட்டத்துப் படிமத்திலும் மூன்று கரங்களே தெரிகின்றன. பின்னிரு கரங்கள் சூலம், கபாலம் ஆகியவற்றை ஏந்தியுள்ளன. முன்னிடக்கரம் ஆகூய வரதகரமாகும். தலையிற் சடைமுடியும் காதுகளில் மகர, பத்திர குண்டலங்களுத் தெரிகின்றன. மேற்குப்புறக் கோட்டத்துப் பிரதிமையிலும் ஒரு கரம் ஒடிந்துவிட்டது. பின்னிரு கரங்களில் அக்கமாலை, கெண்டி ஆகியன அமைந்துள்ளன. எஞ்சியுள்ள முற்கரம் ஆகூய வரதகரமாகும்.
அர்த்தமண்டபத்து மேற்குப்புறக் கோட்டங்களிற் கொற்றவையின் படிமமும் குமாரக் கடவுளின் உருவமும்
இந்துக்கலைக்களஞ்சியம்

Page 229
அமைந்துள்ளன. குமாரக் கடவுளின் படிமம் ஸ்தானகக் கோலமானது; பின்னிரு கரங்கள் வச்சிராயுதம், சக்தி ஆகியவற்றை ஏந்தியுள்ளன. முன்னிரு கரங்களில் வலக்கரம் அபயகரம், இடக்கரம் இடையில் ஊன்றிய கோலமானது. மகர குண்டலங்கள், வீரசன்னம், கரண்டமசூடம் என்பன அணிகலன்களாகும். கொற்றவையின் ஸ்தானகக் கோலமான படிமம் அடுத்த கோட்டத்தில் அமைந்துள்ளது. பின்னிரு கரங்கள் சங்கு, சக்கரம் என்பவற்றை ஏந்திய கோலமானவை; முன் வலக்கரம் அபயகரம்; முன் இடக்கரம் தொடையில் ஊன்றிய
வண்ணமானது.
திருச்சுற்று மாளிகை
நுளம்பர் கலைப்பாணியில் அமைந்த வனப்புமிக்க தூண்கள் அமைந்துள்ளமை தென்கயிலாயத்துத் திருச்சுற்று மாளிகையின் சிறப்பம்சமாகும். சோழர் படையெடுத்துச் சென்ற தேசங்களிற் கலைவனப்புடைய சின்னங்களைக் கண்டு வியப்புற்ற பொழுது அவற்றை வெற்றிச் சின்னங்களாக அபகரித்துச் சென்றனர். கர்நாடக தேசத்துக் கோயில்களில் நுட்பமான வேலைப்பாடுகள் பொருந்திய சிற்பங்களும் தூண்களும் அமைந்திருந்தன. அங்கு கிடைத்த கருங்கற்களைப் பளிங்கு போன்று பளபளப்புடை யனவாக நுண்ணிய கருவிகளினால் அழுத்தஞ் செய்து, அவற்றிலே மணிகளை இழைத்தாற் போன்ற விநோதமான வேலைப்பாடுகளைச் செய்வதில் அந்நாட்டுக் கலைஞர்கள் தகைமையும் அநுபவமும் பெற்றிருந்தனர். விநோதமான வேலைப்பாடுகள் பொருந்திய சிற்பங்களையும் வேறு சின்னங்களையும் பல தடவைகளிற் சோழர் கவர்ந்து சென்றனர். கலிங்கரதும் சாளுக்கியரதும் கலைப்பாணிகளில் அமைந்த ஐந்துக்கும் மேற்பட்ட சிற்பங்கள் கங்கை கொண்ட சோழபுரத்தில் இருப்பதைத் தொல்பொருளியல் விற்பன்னரான இரா. நாகசாமி அடையாளங் கண்டுள்ளார். கல்யாணபுரத்திலிருந்து சோழர் கவர்ந்து சென்றதும் வடிவமைப்பில் அதிவிநோதமானதுமாகிய சிற்பமொன்று தஞ்சாவூர் அருங்காட்சியத்தில் உள்ளது. விஜயராஜேந்திரன் கல்யாணபுரம் எறிந்து, அத் துவாரபாலகர் படிமத்தைக் கொண்டுவந்தானென்று அதில் எழுதப்பட்டுள்ளது. நுளம்பர் கலைப்பாணியில் அமைந்த சிற்பங்கள் தர்மபுரியிலும் சென்னை அருங்காட்சியகத்திலும் திருவையாற்றுக்குச் சமீபமாகவுள்ள திருச்சோற்றுத்துறையிலும் அடையாளங்
காணப்பட்டுள்ளன.
திருவையாற்றிலே, தென்கயிலாயத்துத் திருச்சுற்று மாளிகையில் நுளம்பர் கலைப்பாணியிலுள்ள 46 தூண்கள் உள்ளன. அவற்றுள் நான்கு தூண்களிற் சிற்ப வேலைப்பாடுகள் மிகுதியாக உள்ளன. இத்தூண்கள் யாவும் உயரங்குறைந்தவை. எனவே, திருச்சுற்று மாளிகையின் உயரத்திற்கேற்ப மேலும் கீழும்
கற்களை வைத்துத் தூண்களின் உயரத்தைக் கூட்டியுள்ளனர்.
இந்துக்கலைக்களஞ்சியம்

“இவற்றில் முன்மண்டப கீழ்ப்புறவாயிலின் அருகில் திருச்சுற்று மாளிகையில் உள்ள இரண்டு தூண்கள் குறிப்பிடத் தக்கவை. வடபுறமுள்ள தூணின் நடுப்பகுதியின் ஒரு புறத்திலே திரும்பிய வண்ணம் ஆடுகின்ற ஆடவல்லான் உருவமும் குடமுழா வாசிக்கும் நந்தியும் காட்டப்பட்டுள்ளனர். மறுபுறம் களிநடை பயிலும் காதலரிருவர் காட்டப்பட்டுள்ளனர். மூன்றாம் பக்கத்தில் பூத கணங்களும் மறுபுறத்தில் மலருடன் கூடிய உருவங்களும் காட்டப்பட்டுள்ளன. நாகபந்த அமைப்பு இருக்க வேண்டிய இடங்களில் நான்கு புறங்களிலும் சிங்கங்களின் மீது அமர்ந்த உருவங்கள் சிறப்புச் செய்கின்றன. தென்புறமுள்ள தூணில் சூரியன், சந்திரன், உருவங்கள், நாட்டியமாடும் உருவங்கள், பன்றியுடன் கூடிய நான்முகன், லிங்கத்தை வழிபடும் உருவங்கள், அனலும் உடுக்கையும் ஏந்தி ஆனந்தத் தாண்டவமாடும் ஆடவல்லான் முதலிய சிற்பங்கள் அழகாகச் செதுக்கப்பட்டுள்ளன. நடுப்பகுதிகளில் யாளிமுகங்களும், அதனிலிருந்து துவங்கும் கொடி வட்டங்களும் சிற்பியின் கைத்திறனை விளக்குகின்றன. இத்தூணில் இரண்டு உருவங்கள் ஒரு காலை ஊன்றி, மறுகாலின் முழங்காலை முட்டிக்கொண்டு, கைகளை இடையில் வைத்துக்கொண்டு
ஒருவரை ஒருவர் நோக்கும் காட்சி சிறப்பாக உள்ளது.”
‘தென்திருச்சுற்று மாளிகையில் உள்ள தூண்கள் சிலவற்றின் கலசப்பகுதி, பூர்ண கும்பங்களுக்குத் திருநூல் சுற்றி விளங்குவது போலவே அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்க அமைப்பாகும். மேற்புறத் திருச்சுற்று மாளிகையில் உள்ள தூண்களில் இரண்டிற் சிற்ப வேலை மிகுந்து காணப்படுகிறது. அவற்றிலே பிச்சைபுகும் பெருமான், தன்னை மறந்த மாது, காளியாகிருஷ்ணன், தேவியுடன் கூடிய கஜசம்ஹாரமூர்த்தி முதலியன குறிப்பிடத்தக்கவை. கஜசம்கார மூர்த்தியின் காலடியில் யானையின் தலை அமையாது, அவருக்கு முன்னதாக அமைந்துள்ளது. இத்தூண்களிற் கலசப்பகுதி, இலை தேங்காயுடன் கூடிய பூர்ணகும்பமாகவே தோன்றுவது சிறப்புடையதாகும். இத்தூண்கள் சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்திய தமிழகத்தின் வெற்றிச் சிறப்பையும், கலையிடம் கொண்ட பற்றின் காரணமாக எத்தனையோ மைல்களுக்கப்பாலிருந்த பிறநாட்டுக் கலைப்பொருள்களைத் தமிழகத்திற்கு கொண்டு வந்து மகிழ்வுற்ற தன்மையையும் விளக்குவனவாக அமைந்துள்ளமை திருவையாற்றிற்கு ஒரு பெருமையாகும்.”
கோபுரங்கள்
திருவையாற்றில் எல்லாமாக எட்டுக் கோபுரங்கள் உள்ளன. மூன்றாம் திருச்சுற்றின் கிழக்கு வாசலிலுள்ள விக்கிரமசோழன் கோபுரம் அவற்றிலே புராதனமானது. அதன் மேற்குப்புற அதிஷ்டானத்தில் “ஸ்வஸ்தி பூரீ இத்திருக்கோபுரம் விக்கிரமசோழனதே" என்ற கல்வெட்டு அமைந்துள்ளது. எனவே அது விக்கிரமசோழனது (1118 - 1135) திருப்பணி என்பது உறுதியாகின்றது.
199

Page 230
அது மூன்று நிலைகளையுடையது. அதிலே, கீழிருந்து மேலாக உபானம், அதிஷ்டானம், சுவர், பிரஸ்தரம், மூன்று தலங்கள், சாலாசிகரம், ஐந்து ஸ்தூபிகள் என்னும் பகுதிகளைக் கொண்டுள்ளது. அதிஷ்டானம் ஜகதி, முப்படைக் குமுதம், பட்டிகை, வேதிகை என்னும் பகுதிகளால் அமைந்துள்ளது. பூதவரி, கபோதம், யாளிவரி என்பன பிரஸ்தரப் பகுதிகள்.
கீழ்த்தளக் கிழக்கு வாசலின் இரு பக்கங்களிலும் துவாரபாலகரின் சிற்பங்கள் உள்ளன. தென்புறத் துவாரபாலகரின் வடிவம் தர்ஜனி முத்திரை காட்டி மறுகரத்தாற் கதையினைப் பிடித்திருக்கும் கோலமாகும். வடபுறத் துவாரபாலகர் ஒரு கையில் விஸ்மய முத்திரை காட்டி மற்றக் கையில் மழுவைத் தாங்கிய கோலத்துடன் விளங்குகின்றார்.
திக்குப்பாலகரின் வடிவங்கள் கோபுரத்தின் மேல்தளத்தில் அமைந்துள்ளன. கிழக்கில் வச்சிரம், சக்தி ஆகியவற்றை ஏந்திய கோலத்தில் இந்திரனின் உருவமும் தென் கிழக்கிலே சிருவத்தை ஏந்திய கோலமான அக்கினியின் இரட்டைத் தலை பொருந்திய வடிவமுந் தெரிகின்றன. தெற்கிலே பரசு, பாசம் ஆகியவற்றை ஏந்திய நிலையில் யமனின் வடிவம் தெரிகின்றது. தென்மேற்கிற் கத்தியுடன் நிருதியின் கோலமும் மேற்கிலே பாசம், கலப்பை என்பவற்றை ஏந்தியுள்ள வருணனின் கோலமுந் தெரிகின்றன. வடமேற்கில் கொடியுடன் வாயுவும் வடக்கிலே குபேரனும் வடகிழக்கில் மான், மழு என்பவற்றை ஏந்திய ஈசானரும் அமைந்துள்ளனர்.
இரண்டாவது கிழக்குக் கோபுரம்
எளிமையான தோற்றங் கொண்ட இக்கோபுரம் விக்கிரம சோழன் கோபுரத்துக்கு முன்னால் உள்ளது. அது 13ஆம், 14ஆம் நூற்றாண்டுகளுக்குரிய கட்டுமானமாகும். கீழ்ப்புறத்தில் இரு பக்கங்களிலும் துவாரபாலகரின் உருவங்கள் உள்ளன. தென்புறத் துவாரபாலகர் ஜடாமண்டலத்துடனும் விஸ்மயமுத்திரை காட்டியும் ஒரு கையினைக் கதைமேல் ஊன்றிய கோலத்திலும் விளங்குகின்றார். காலடியிற் பூதகணம் தெரிகின்றது. வடபுறத்துத் துவாரபாலகரின் வடிவம் மழு ஏந்திய கோலமானது.
இராசகோபுரம்
திருவையாற்றுக் கோபுரங்களில் இதுவே மிகப்பெரியது. அது வனப்பு மிகுந்த கோலமானது. அதன் கீழ்ப்பகுதி கல்லினாலும் மேற்பகுதி செங்கல், சுதை என்பவற்றினாலும் உருவாக்கப் பட்டுள்ளது. அதிற் காணப்படும் பெருமளவிலான பொம்மைகள் சுதை வேலைப்பாடாகும். ஏழுநிலைகள் கொண்ட மிக உயரமான இக்கோபுரம் 16ஆம், 17ஆம் நூற்றாண்டுக்குரிய நாயக்கர் கலைப்பாணியில் அமைந்துள்ளது. கீழ்பகுதியில், கிழக்குப்புறக் கோட்டத்தில் கணேசர், சுப்பிரமணியர் ஆகியோரின் படிமங்களும் மேற்கிலே லிங்கோத்பவரின் சிற்பமும் உள்ளன. இச்சிற்பங்கள் 18 ஆம் நூற்றாண்டுக்குரிய வேலைப்பாடுகள் கொண்டவை.
200

மேற்பகுதிலே புராணக் கதைகளின் விளக்கமான சிற்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றிலொன்று தேவர்களும் அசுரர்களும் திருப்பாற்கடலைக் கடையும் காட்சியின் கோலமாகும். மற்றொன்று சிவபெருமானின் ஊர்த்துவ தாண்டவக் கோலமாகும். சிவனுக்குப் போட்டியாகக் காளியும் ஆட, நந்தி மேளம் வாசிக்க, நான்முகன் உடுக்கை வாசிக்க, திருமால் தாளமிட பதஞ்சலி, வியாக்கிரபாதர் முதலானோர் அக்காட்சியைக் பரவசமாகி வணங்கிப் போற்றும் காட்சியாக அது விளங்குகின்றது. சரபமூர்த்தி, காலசம்காரமூர்த்தி, பிச்சாடனர், நிசும்ப சூதனி, நடராஜர் ஆகியோரின் சுதைச் சிற்பங்களும் இப்பகுதியில் உள்ளன. தெற்கில், ஒவ்வொரு தளத்திலும் தகூதிணாமூர்த்தியின் உருவம் அமைந்துள்ளது. மேற்குப்புறத்திற் திருமாலின் அவதாரக் காட்சிகள் சிற்பங்களாகச் சுதையில் அமைக்கப் பட்டுள்ளன. வடக்குபுறத்தளங்கள் ஒவ்வொன்றிலும்
பிரம்மதேவனின் வடிவம் அமைந்துள்ளது.
தென் கோபுரங்கள்
திருவையாற்றிலே தென்புறத்தில் மூன்றாம் திருச்சுற்றிலும் நான்காம் திருச்சுற்றிலும் ஒவ்வொரு கோபுரம் உண்டு. அளவிற் சிறியதான மூன்றாந் திருச்சுற்றுக் கோபுரம் 17ஆம், 18ஆம் நூற்றாண்டுகளில் நிறைவேற்றப்பட்ட கட்டுமானமாகும். நான்காம் திருச்சுற்றிலுள்ள தென்கோபுரம் முன்னையதிலிருந்தும் இரண்டு, மூன்று நூற்றாண்டுகளுக்கு முற்பட்டது. இதில் அமைத்துள்ள துவாரபாலகரை ஆட்கொண்டார் என்றும் உய்யக்
கொண்டார் என்றுங் குறிப்பிடுவர்.
மேற்குக் கோபுரம்
இது 18ஆம் நூற்றாண்டில் மருதூர்ச் சகோதரர்களால் அமைக்கப்பட்டது. இதன் அளவுப் பிரமாணங்களிற் பொருத்தமில்லாத்தன்மை தெரிகின்றது. கட்டடம் மிகவும் உயரமானது. ஆனால் உயரத்துக்கேற்ப அகலப்பாட்டில் நீள அகலங்கள் அமைந்திருக்கவில்லை. இதிலே சுதைச் சிற்பங்கள் மிகுந்தும் நெருக்கமாகவும் காணப்படுகின்றன. அவற்றிலே பல கடவுட் படிமங்கள். வேறு பல சமகாலத்துப் பிரபலமான மனிதர்களின் உருவங்கள். மேற்கு வாசற் பகுதியில் அரச குடும்பத்தவரின் பிரதிமைகள். உடைந்த கோலத்திலே சிற்பங்கள் காணப்படுகின்றன. பிரதிமைகள் உயரமானவர், மெலிந்த தோற்றங் கொண்டவை. கோபுரத்தின் திண்ணையில் மருதூர்ச்
சகோதரரின் திருப்பணி விவரங்கள் GFT GF 6ÕTLD (T 55
எழுதப்பட்டுள்ளன.
தென்கயிலாயக் கோபுரம்
மூன்று நிலைக் கோபுரமான தென்கயிலாயக் கோபுரம்
கீழ்ப்பகுதியிற் கல்லினாலும் மேற் பகுதியிற் செங்கல், சுதை
என்பவற்றாலும் அமைக்கப்பட்டுள்ளது. மேல்தளங்களில் சிவன்,
மகாவிஷ்ணு ஆகியோரின் படிமங்கள் உள்ளன. வாயிற்புறத்திலே
இந்துக் கலைக்களஞ்சியம்

Page 231
தேவியர் இருவர் சகிதமாக வணங்கும் மன்னனின் கோலம்
அமைந்துள்ளது.
அம்மன் கோயிற் கோபுரம்
இருபதாம் நூற்றாண்டுத் திருப்பணியான இக்கோபுரத்தின் நிலைக்கால்களிற் கொடிப் பெண்களின் வடிவங்கள் வனப்புமிக்க கோலத்திற் செதுக்கப்பட்டுள்ளன. அடிப்பாகம் கல்லினால் அமைந்தது. மேற்பாகம் செங்கல் வேலைப்பாடாகும். சிற்பங்கள் யாவும் சுதையில் அமைந்தவை. அவற்றுட் சிலவற்றின் கோலம்
புதுமையானது. சமகாலச் சமுதாய நிலைகளைப் பிரதிபலிப்பது.
மண்டபங்கள்
திருவையாற்றிலுள்ள மண்டபங்கள் பெரும்பாலும் மிதமான அழவு கொண்டவை. அவை பயன்பாடு கருதிக் காலாகாலம் உருவாக்கப் பெற்றவை. பிரபலமான பிற தென்னிந்தியக் கோயில்களிற் போல அங்கு ஆயிரங்கால் மண்டபம், கல்யாண மண்டபம், ஆகியவை அமைக்கப்படவில்லை. மண்டபத் தூண்களிலும் பெருமளவிலான சிற்பங்கள் அமைக்கப்
படவில்லை.
ஐயாறப்பர் சந்நிதியின் முன்னதாக உள்ள மண்டபம் சொக்கட்டான் மண்டபம் என்று சொல்லப்படும். அது ஒன்பதாம் நூற்றாண்டுக்குரிய அதிஷ்டானத்தையும் சுவர்களையும் கொண்டுள்ளது. அதன் விதானமும் உட்புறத்தூண்களும் 15 ஆம் நூற்றாண்டிலே புதுப்பிக்கப்பட்டவை. அதனருகே சோமாஸ்கந்தர் மண்டபம், விநாயகர் மண்டபம் என்பன அமைந்துள்ளன. விக்கிரமசோழன் கோபுரத்தை அடுத்துள்ள மண்டபம் பச்சையப்ப முதலியார் மண்டபம். கொலு மண்டபம் என்பது அம்மன் கோயிலின் முன்னால் அமைந்துள்ளது.
ஐயாறப்பர் கோயிலின் எதிராக, எழுந்தருளும் இடங்கள் மூன்றாம் திருச்சுற்றில் அமைந்துள்ளது. உற்சவ மண்டபம். சப்ததல விழாக் காலத்தில் ஏழுர் இறைவர்களும் இம்மண்டபத்தில் எழுந்தருளி இருப்பர். கோயில் அலுவலகம், வாகனங்கள், நூலகம், நந்தி, பலிபீடம் ஆகியன இம்மண்டபத்தில் அமைந்துள்ளன. இங்கு 175க்கும் மேலான தூண்கள் உள்ளன. இதில் இரட்டைத் தூண்களும் மூன்று தூண்களும் இணைந்த கலப்புத் தூண்களும் உள்ளன. தெற்கிலும் கிழக்கிலும் மண்டபத்திலிருந்து இறங்கிச் செல்வதற்குப் படிகள் உள்ளன.
நூற்றுக்கல் மண்டபம் நான்காவது திருச்சுற்றிலே கிழக்குக் கோபுரத்தின் அருகில் உள்ளது. மண்டபத்தை அடைந்ததும் இரு தூண்களில் இராமர், இலக்குமணரின் உருவங்களைக் காணலாம். அதனை அடுத்துள்ள தூணில் மீசையைக் கையால் முறுக்கிக் கொண்டு நிற்கும் வீரனின் உருவம் அமைந்துள்ளது. அடுத்த தூணில் நான்கு கரங்களிலும் அம்பு, வில், கத்தி, கேடயம் என்பவற்றைத் தாங்கி நிற்கும் வைரவரின் உருவம்
இந்துக்கலைக்களஞ்சியம்

செதுக்கப்பட்டுள்ளது. நடுப்பகுதியிலுள்ள தூண்களிற் பலவிதமான சிற்பங்கள் காணப்படுகின்றன.
உலோகப் படிமங்கள்
திருவையாற்றில் நாற்பத்தைந்திற்கு மேலான வரலாற்றுச் சிறப்புடைய படிமங்கள் உள்ளன. கடவுட் படிமங்களும் சமயகுரவர் நால்வரின் படிமங்களும் அவற்றில் அடங்கும். ஏறக்குறையப் 10 படிமங்கள் சோழர் கலைப்பாணியில் அமைந்தவை. ஏனையவை பிற்காலத்தவை; அவை விஜயநகர,
நாயக்கர் காலங்களில் உருவாக்கப்பட்டவை.
சோமாஸ்கந்தர் மண்டபத்துப் பிச்சாடனர் வடிவம் மிகுந்த வனப்புடையது. முதலாம் இராஜராஜன் காலத்திற்குரிய அப்படிமம் 5 அடி உயரமானது. அதன் பின்னிரு கரங்களில் வலக்கரம் உடுக்கை ஏந்திய கோலமானது, இடக்கரம் கடக முத்திரையில் அமைந்துள்ளது. முன்வலக்கரம் மானுக்குத் தளிர் ஊட்டும் பாங்கிலும் உள்ளது.
நடராஜர் படிமம்
நடராஜர் மண்டபத்திலுள்ள ஆடவல்லானின் திருமேனி 4 அடி உயரமானது. பின்னிரு கரங்களும் உடுக்கை, அனல் ஆகியவற்றை ஏந்தியுள்ளன. முன்னிரு கரங்களில் ஒன்று அபயகரம், மற்றது கஜஹஸ்தம், படிமம் தாண்டவக் கோலமானது: வலது காலை முயலகன் மீது ஊன்றி, இடது காலை உயர்த்திக் கூத்தாடுங் கோலம். காலடியிலுள்ள முயலகனை அரவம் பார்த்த வண்ணமாயுள்ளது.
ஆடவல்லாரின் பின்புறமுள்ள பிரபாமண்டலத்தில் 24 சுடர்கள் உள்ளன. கடவுளின் காலடியில் உள்ள மகரவாய்களிலிருந்து வெளிப்படுவதாகப் பிரபாமண்டலம் அமைந்துள்ளது. அதிற் பல அலங்கார வேலைப்பாடுகள் அமைந்துள்ளன. சிவனாரின் இருபுறமும் ஆறு, ஆறு விரிசடைகள் படர்ந்து பிரபையுடன் ஒட்டியுள்ளன. விரிசடையிற் கூப்பிய கரங்களுடன் கங்கையும் அரவமும் காணப்படுகின்றன. தலையிலே கபாலமும் காதுகளில் மகர, பத்திர குண்டலங்களும் மார்பில் உபவிதமும் தெரிகின்றன. வயிற்றிலே உதரபந்தனமும் இடையிற் கச்சையும் அமைந்துள்ளன. இறைவன் சுழன்று ஆடுவதாற் பறக்கின்ற குஞ்சமும் வலது காலில் ரக்ஷாபந்தனமும் காணப்படுகின்றன. முகம் பிரகாசத்துடன் விளங்குகின்றது.
அருகிலே சிவகாமியின் ஸ்தானகக் கோலம் பத்மபீடத்தில் அமைந்துள்ளது. அம்மனின் வலக்கரம் கடகஹஸ்தம், இடக்கரம் தொங்கும் நிலையினதாகிய லோலஹஸ்தம். முகபாவம் புன்னகை பொலிந்த வண்ணமானது. வஸ்திரம் இடையிலிருந்து கணுக்கால் வரை நீளமானது. அதிற் பூவேலைப்பாடுகள் செம்மையாக அமைந்த கோலம் தெரிகின்றது. தலையினிற்
கரண்ட மகுடமும் காதுகளில் மகர குண்டலங்களும் கழுத்தில்
201

Page 232
ஆரங்களும் மார்பில் உபவிதமும் அமைந்துள்ளன. கைகளில் தோன்வளை, வளையல்கள் என்பனவும் இடையில் முத்துச் சரங்களும் ஆபரணங்களாய் உள்ளன. இப்படிமங்கள் சோழர் காலத்தவை; அவை 10 ஆம், 11 ஆம் நூற்றாண்டுகளுக்கு உரியவை. பிச்சாடனரின் கால்களிற் பாதரக்ஷைகளும் மார்பில் உத்தராக்கம், ஆரம், உபவிதம் என்பனவும் வயிற்றில் உதரபந்தனமும் கணுக்காலில் ரக்ஷாபந்தனமும் ஆபரணங்களாய் அமைந்துள்ளன. தலைமேற் சடா மண்டலமும் அதனிற் கபாலமும் காதணிகளாக மகர, பத்திர குண்டலங்களுந் தெரிகின்றன.
இடையினைச் சுற்றிய பாம்பு படமெடுக்கின்றது. படிமம் பத்ம பீடத்தில் அமைந்த ஸ்தானகக் கோலம். உதடுகளிற் குமுண் சிரிப்பும் கண்களிற் பரவசக் கோலமும் விளங்குகின்றன.
சோமாஸ்கந்தர் மண்டபத்தில் ஐந்து காளிகளின் செப்புத் திருமேனிகள் உள்ளன. அவற்றுள் ஐந்தாவதாக உள்ள காளியின் உருவம் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது. அது 10 ஆம், 11 ஆம் நூற்றாண்டுகளுக்குரியது. பின்னிரு கரங்களும் சூலம், பாசம் என்பனவற்றை ஏந்திய கோலமானவை. முன்னிரு கரகங்களும் அபய, வரத கரங்கள். தலையிலே சுவாலமாலை, கபாலம், மலர், பிறை, அரவம் என்பனவும் மார்பினில் ஆரம், வீரசன்னம், உபவீதம். ஆகியனவும் அமைந்துள்ளன. வலது காதிற் பிரேதகுண்டலமும் இடது காதிற் பத்திர குண்டலம் சகிதமான அரவமும் தெரிகின்றன. பற்கள் கோரமான கோலத்தில் அமைந்தவை. இடையில் அணியாகவுள்ள கச்சை கரைகளில் மணிகள் கோர்த்துச் செய்த அலங்கார வேலைப்பாட்டுடன் விளங்குகின்றது. காளியின் படிமம் வலது காலைத் தொங்க விட்டு, இடது காலை மடக்கிப் பத்மபீடத்தில் அமர்ந்த ஸ்தானகக் கோலம்.
உமாதேவியார்
போகசக்தி என வழங்கும் உமாதேவியாரின் படிமமும் குறிப்பிடத்தக்க கலைவனப்புக் கொண்டது. அது 10 ஆம், 11 ஆம் நூற்றாண்டுகளுக்குரிய வேலைப்பாட்டில் அமைந்துள்ளது. படிமம் ஆசனக் கோலமானது. வலக்கரம் கடக ஹஸ்தம். இடக்கரம் பீடத்தில் ஊன்றிய கோலமானது. தலையில் மகுடமும் காதுகளில் மகர குண்டலங்களும் மார்பில் உபவிதமும் இடையிலே கணுக்கால் வரை வரிந்த சேலையும் கால்களிற் சிலம்புகளும் அணிகளாகும்.
ஒவியங்கள்
திருவையாற்று ஒவியங்கள் நாயக்கர் காலத்தவை. அண்மைக் காலக் திருப்பணிகளின் போது அவற்றிலுள்ள சிதைவான பகுதிகள் மெழுக்கிடப்பட்டுள்ளன. அதனால் ஒவியங்களின் ஆதியான தோற்றமும், பொலிவுஞ் சிறப்பும் மங்கிவிட்டன. ஐயாறப்பர் கோயில் முதலாம் சுற்று விதானம்,
2O2

சோமாஸ்கந்தர் மண்டபவிதானம், திருச்சுற்று மாளிகையின் கிழக்கு, தெற்குச் சுவர்கள் ஆகியவற்றில் ஒவியங்கள்
அமைந்துள்ளன.
முதலாந் திருச்சுற்றிலுள்ள ஒவியங்கள் 17 ஆம், 18 ஆம் நூற்றாண்டுகளில் வரையப் பெற்றவை. மலர்வடிவங்களும் அவற்றைச் சுற்றி வட்டமாகப் பின்னிய கொடிகளும் அவற்றிலே வனப்பான கோலத்துடன் விளங்குகின்றன. அவற்றிலே வெண்மை நிறப் பூச்சுகளும் இளமஞ்சள் வண்ணப் பூச்சுகளும் வனப்பு மிக்கவை. இவ்வோவியங்கள் சேதமடையாதும் ஆதியான கோலத்துடனும் விளங்குகின்றன.
சோமாஸ்கந்தர் மண்டபத்திலுள்ள ஒவியங்களின் ஒரு பகுதி திருப்பணி வேலைகள் நடைபெற்ற பொழுது மீண்டும் பூசப்பட்டுள்ளது. இன்னொரு பகுதி ஆதியான கோலத்துடன் விளங்குகின்றது. சோமாஸ்கந்தர் மண்டபத்து விதானத்தின் மேற்குப் பகுதியின் நடுவிலே சூரியனுந் தேவியருஞ் சித்திரக் கோலமானவை. சூரியனின் இரு கரங்களும் குமுதம் ஏந்திய கோலமானவை. சூரியனின் இரு மருங்கிலும் நிலைகொண்டுள்ள தேவியர் குமுதம் ஏந்திய கரம், லோலஹஸ்தம் என்பவற்றோடு காட்சியளிக்கின்றனர். வெண்ணிலம், சிவப்பு, கருப்பு வண்ண
மைகளில் அவர்களின் உருவங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
சூரியனதும் தேவியரதும் சித்திரங்கள் தாமரை மலரின் நடுவே தெரிகின்றன. அகன்று விரிந்த மலரின் பதினாறு இதழ்களில் ஆணுருவங்களும் பெண்ணுருவங்களும் ஒவ்வொன்றாக மாறி வருங் கோலத்தில் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு உருவத்தின் இடையிலும் கச்சை அணியாகவுள்ளது. ஆணுருவங்களின் ஒரு கரத்தில் மலரும் மறுகரத்தில் வாளும் தெரிகின்றன. பெண்ணுருவங்கள் ஒரு கரத்திலே மலரும் மறு கரத்திற் சாமரமும் ஏந்திய கோலமானவை. இவ்வாறமைந்த தாமரை மலரினை அடுத்துச் சதுரமொன்றில் நவக்கிரகங்களின் உருவங்கள் தெரிகின்றன. சோமாஸ்கந்தர் மண்டபத்தின் நடுப்பகுதியிலே தாமரையும், அதனைச் சுற்றியுள்ள வட்டத்தில் 12 சூரியர்களும் அதனை அடுத்துள்ள எண்பட்டைப் பகுதியில் அன்னங்களும் சித்திரக் கோலமாயுள்ளன. அவற்றின் மேல் வண்ண மைப்பூச்சுத் தெரிகின்றது. அவற்றின் வெளிப்புறத்தில் 12 ராசிகளின் சித்திரக் கோலம் அமைந்திருக்கின்றது.
திருச்சுற்று மாளிகை ஒவியங்கள்
திருவையாற்றிலே, இரண்டாந் திருச்சுற்றில் அமைந் திருக்கும் திருச்சுற்று மாளிகையில் மிகக் கூடுதலான ஒவியங்கள் காணப்படுகின்றன. அதன் கிழக்குத் தெற்குச் சுவர்களிலே 17 ஆம் நூற்றாண்டிலே திருவையாற்றுப் புராணக் கதைகளைச் சித்திரங்களாக வரைந்துள்ளனர். பிற்காலத்தில் நடைபெற்ற
இந்துக் கலைக்களஞ்சியம்

Page 233
திருப்பணிகளின் விளைவாக அவற்றின் ஆதியான கோலங்கள் உருமாறிடவிட்டன.
தஞ்சை அரசரான அச்சுதப்ப நாயக்கரின் காலத்தில் (1577 - 1614) திருவையாற்றுப் புராணம் தமிழில் எழுதப்பட்டது. அது நாயக்கரின் அமைச்சரான கோவிந்த தீகூழிதர் என்பவரின் ஆதரவில் 1605 இல் எழுதப்பட்டது. கிழக்குச் சுவரின் ஒன்றன் கீழ் ஒன்றாக இரண்டு வரிசைகளில் ஒவியங்கள் வரையப்பட்டுள்ளன. தெற்குச் சுவரில் மூன்று வரிசைகளில் ஒவியங்களை வரைந்துள்ளனர். கிழக்குப் பகுதியில் காவிரி, சமுத்திரராஜன் ஆகியோரின் கல்யாணமும் பொங்கல் விழாவில் ஐயாறப்பர் கால்நடைகளை ஒட்டிச் செல்லுங் காட்சியும் சித்திரக்கோலமாய் அமைந்துள்ளன. தென்கிழக்கு மூலையிற் சுவர்க்கம், நரகம் என்பவற்றின் காட்சிகள் தெரிகின்றன.
தெற்குச் சுவரில் கோயிற் கட்டுமானக் காட்சிகளும் அபிஷேக ஆராதனைகளும் ஒவியங்களாக விளங்குகின்றன. கடைத் தெருக்கள், மடைப்பள்ளி, தம்மிடையே தகராறு புரியும் கணவன் மனைவியர், கலியாணக் காட்சி ஆகியவற்றின் சித்திரக் கோலங்கள் தெரிகின்றன. சர்வசித்து என்னும் அசுரனோடு சுதர்சன மகாராசன் சமர்புரியுங் கோலம் மிகுந்த வனப்புடன் வரையப்பட்டுள்ளது. உத்தர கயிலாயம், தக்ஷண கயிலாயம் ஆகிய கோயில்கள் சுதர்சன மகாராசனின் திருப்பணியானவை என்பதை உணர்த்தும் வகையில் ஒவியங்கள் அமைந்திருக்கின்றன.
தென் கயிலாயத்து முகமண்டபச் சித்திரங்கள்
திருநாவுக்கரசு நாயனார் திருவையாற்றிலே கயிலாயத்தின் கோலத்தைக் கண்டமை, அப்பூதி அடிகள் புராணக்கதை என்பன தென் கயிலாயத்து முகமண்டபத்து விதானத்தில் ஒவியங்களாக வரையப்பட்டுள்ளன. ஆதியான ஒவியங்களின் மேல் பிற்காலத்தில் மெழுக்கிட்டுள்ளனர்.
கோயிலுக்கு வழங்கப்பட்ட நன்கொடைகள்
திருவையாற்றில் அரசரும் அரசகுடும்பத்தவரும் பிரதானிகளும் பிறரும் செய்த திருப்பணிகள், அவர்கள் வழங்கிய தானங்கள் என்பன பற்றிய விவரங்கள் ஏறக்குறைய 150 கல்வெட்டுகளில் எழுதப்பட்டுள்ளன. இன்னும் சரியாகப் படி எடுக்கப்படாத கல்வெட்டுக்களும் உள்ளன. சோழப்பேரரசர் காலத்தின் முற்பகுதியில் ஆலயம் கற்றளியாகப் புனர் நிர்மாணம் பெற்ற பொழுது பழைய கட்டிடங்கள் இடிக்கப்பட்டன. எனவே ஒன்பதாம் நூற்றாண்டு முதலாக எழுதப்பட்ட சாசனங்களே பெரும்பாலும் கிடைத்துள்ளன. அவற்றுட் பெரும்பாலானவை சோழப்பேரரசர் காலத்துக் குரியவை என்பது குறிப்பிடற்குரியது.
தமிழகச் சைவநெறி ஆலய வழிப்பாட்டை அடிப்படையாகக்
கொண்டது. ஆலய வழிபாட்டில் நாள்தோறும் பல தடவைகளாக
இந்துக் கலைக்களஞ்சியம்

நடைபெறும் ஆராதனைகள், சிறப்பான காலத்து உற்சவங்கள், வருடாந்த உற்சவங்கள், உபசாரங்கள், அலங்கார உற்சவங்கள், திருவிழாக்கள் என்பன சிறப்பிடம் பெற்றன. வேதபாராயணம், இதிகாச புராணங்களின் பாராயணம் என்பனவும் நடைபெற்றன. அத்துடன் சமயகுரவரின் திருப்பதியங்களை ஒதுவதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டன. திருவையாற்றிலே காணப்படும். தானசாசனங்கள் பெரும்பான்மையும் ஒலொகமா தேவீஸ்வரம், தென்கைலாயம் என்னுங் கோயில்களுக்கு வழங்கப் பெற்ற தானங்களைப் பற்றியவை. அக்கோயில்கள் அரசியரால் அமைக்கப்பட்டவை. பிரமாண்டமான அளவிலே அவர்கள் தானங்களை வழங்கியுள்ளனர். விளக்குகள், ஆடு மாடுகள், நிலங்கள், ஆபரணங்கள், வஸ்திரங்கள் போன்றன வாழங்கப்பட்டன. தானசாசனங்களிற் கோயில் நிர்வாகம், ஆட்சியதிகாரஞ் செய்வோரின் கடமைகள் என்பன பற்றிய விவரங்களையும் அறிந்து கொள்ளலாம். சோழரின் ஆட்சியில் அரசிகளும் சில சமயங்களிலே நிர்வாக அதிகாரங்களைக் கொண்டிருந்தமைக்கு திருவையாற்றுச் சாசனங்களிற் சான்று கிடைக்கின்றது. உலக மகாதேவி வழங்கிய கட்டளை பற்றிய சாசனக் குறிப்பொன்று மேல் வருமாறுள்ளது: “திருவையாற்று ஒலொகமாதேவீஸ்வரத்து தட்டாரப்பணி செய்காணி தட்டான் சக்கடி சமுகையனான செம்பியன் மாதேவிப் பெருந்தட்டானுக்கே கல்லில் வெட்டுகவென்று பெரியதேவர் நம்பிராட்டியாய் தந்திசக்தி விடங்கியாரான பூரீ ஒலொகமாதேவியார் அருளிச்செய்ய சக்கடி ச(மு)தையனான செம்பியன் மாதேவிப் பெருந்தட்டானுக்கு
ஒலொகமாதேவீஸ்வரம் (சு)ட்டிய தட்டாரக் காணியாக வெட்டிச்சு”
இக்குறிப்பினால் மேல்வரும் விடயங்கள் தெளிவாகின்றன. திருவையாற்றில் புதிதாக உலோகமாதேவியால் எடுப்பிக்கப்பட்ட கோயிலிற் தட்டாரப்பணி செய்வோருக்கு மானியமாக நிலம் ஒதுக்கப்பட்டிருந்தது. அது தட்டாரப் பணி செய் காணி என்று சொல்லப்பட்டது. செம்பியன் மாதேவிப் பெருந்தட்டான் என்பவனை தட்டாரப்பணி செய்வதற்கென்று அங்கு நியமித்தனர். அவன் பேரிலே அந்தக்காணியைப் பதிவு செய்ய வேண்டும் என்பது அரசியின் கட்டளை. அந்தக் கட்டளை சாசனமாக எழுதப்பட்டது. பெருந்தட்டான் செம்பியன் மாதேவியின் பெயரால் வழங்கியமை குறிப்பிடக்குரியது. அவன் அரசகுடும்பத்தவரின் ஆதரவையும் பாராட்டினையும் பெற்றவன் என்பதில் ஐயமில்லை, அரச குடும்பத்தவருக்கு ஆபரணங்களைச் செய்கின்ற பொற்கொல்லர் இருந்தனரென்று கருதமுடிகின்றது. அத்தகையோரில் ஒருவனைத் திருவையாற்றிலே ஒலொகமகா தேவீஸ்வரத்துப் பெருந்தட்டானாக நியமித்துள்ளனர் என்று கருதலாம்.
உலோகமாதேவியாற் பெருமளவிலான பொன்னும் ஆபரணங்களும் கோயிலுக்குத் தானமாக வழங்கப்பட்டன.
அவற்றைப் பற்றிய சில விவரங்கள் மேல்வருவனவாகும்.
203

Page 234
1. பட்டம்
2. பொற்றாமரைப்பூ !
3. முடி
4. காதணிகள்
5. தாழ்க்கூட்டு
6. மாலை
7. தனிவடம்
8. திரிசரம்
9. பஞ்சசரி
10. பூரீ சந்தம்
11 முத்துப்பட்டிகை
204
(நெற்றியில் அணியும் 3 வரிகளுடைய திருநீற்றுப்பட்டம்)-89 கழஞ்சு பொன். 10 கழஞ்சு 108 கழஞ்சு பொன்னாலானது, அதில் 21 மாணிக்கம், 102 வைரம், நீலம் 1, தருப்பு 64, பொத்தி 79, சப்பிரயோகம் 240, 573 முத்துக்கள் என்பன இணைக்கப்பட்டிருந்தன. குதம்பை எனப்படும் அணி கலன்கள் 2 ஒவ்வொன்றும் ஒவ்வொரு கழஞ்சு பொன் நிறை கொண்டது. அவற்றிலே மாணிக்கம் 1 தருப்பு 23, சப்பிரயோகம் 17, முத்துக்கள் 27, என்பன கட்டப் பட்டிருந்தன. 3 % கழஞ்சு பொன்;
"கம்பி
ஒரணைவினால் துண்டமிரண்டும் ஆணி இரண்டும் உட்படப் பொன்’ 23 14 பொன். அதில் 27 தாலிகள், 2 கண்டல்பலகைகள், 57 சப்பிர யோகங்கள், 461 தருப்புகள், 27 பொத்திகள், 70 முத்துக்கள் ஆகியன கட்டப்பட்டிருந்தன. 42 முத்துக்கள் அடங்கியது. (மெலிவான மாலை) 308 முத்துக்கள், 3 சரங்களிற் கோர்க்கப்பட்டிருந்தன. “மூன்றொன்றாக அடுக்கி விளக்கிக் கட்டின தாளிம்பம்” இரண்டு இருந் தன. அதிற் படுகண் ஒன்றும் கொக்கி ஒன்றும் அடங்கியிருந்தன. 5 சரங்கள் கொண்ட மாலை, 214 முத்துகள் கட்டப்பட்டிருந்தன. இடையிற் பொன்னாலான இடைக்கட்டுக்கள் இரண்டும் “அஞ்சொன்றாக அடுத்து விளக்கின தாளிம்பம் இரண்டும்” அவற்றோடு படுகண், கொக்குவாய் என்பனவும் இருந்தன. 2 ககழ்சு 6 மஞ்சாடி 6 மாவினாற் செய்யப்பட்டது. அதன் முகத்தில் /2 கழஞ்சு நிறைகொண்ட “நாயக மாணிக்கம்” கட்டப்பட்டிருந்தது. மூன்று திருச்சன வடங்களில் 1278 முத்துகள் சேர்க்கப்பட்டிருந்தன. இடையில் அணியும் ஆபரணம்; முத்துக்களின் கோர்வையானது. அதில் 6 பொற்பூக்களும் நடுவில் ஒரு முகமும் இருந்தன. முகத்தில் 5 பெரிய

முத்துக்கள் இடப்பட்டிருந்தன. எல்லாமாக 1325 முத்துக்கள் இருந்தன. 12. முத்துவளையல் ஒன்று 207 முத்துக்கள் தைக்கப்பட்டு, 10 கழஞ்சினாற் செய்யப்பட்டது; மற்றது 126 முத்துக்கள் தைக்கப்பட்டு 8 கழஞ்சு பொன்னாற் செய்யப்பட்டது. 13. காற்காறை 91 முத்துக்கள் பதித்து 7 கழஞ்சு
பொன்னாற் செய்யப்பட்டது.
14. உலோக விடங்கர் படிமத்தின் நடுவிலுள்ள பிள்ளையார்
சுப்பிரமணிய தேவருக்குக் கொடுக்கப்பட்ட அணிகலன்களின் விவரங்கள் மேல்வருவனவாகும். 1) 4 கழஞ்சு பொன் முடி 2) முத்துக் கோர்த்த சுட்டி 1 3) அரைக் கழஞ்சு பொன்னாலான சூலம்
4) 3 கழஞ்சு பொன்னாலான இடுக்கு வளையல்
ஒலோகமாதேவீஸ்வரமுடையாருக்குச் சாளுக்கிய வம்சத்தவரான விஷ்ணுவர்தன தேவராலும் குறிப்பிடத்தக்க அளவிலான அணிகலன்கள் தானமாக வழங்கப்பட்டன. அவற்றுட் சில மேல்வருவனவாகும். (1) 337 கழஞ்சு நிறைகொண்ட 150 செங்கழுநிர் பொற் பூ (2) திருவடிக்காறை - 5 கழஞ்சு 3/4 மஞ்சாடி (3) சப்பிரயோகம் - 1/4 மஞ்சாடி6 மா (4) ஆடவல்லாருக்குச் சாத்தி அருளத் திருக்கால்காறை 2,
திருக்கைய் வளையில் 4 (79 கழஞ்சு 2 மஞ்சாடி 1 குன்றி) (5) திருச்சரணத்துத் தச்சத்தகடு 4 (6) பொற் பூ 23 (7) திருக்கொடுக்கில் தகடு 2 (8) உள்ளலை குறுந்தகடு 1 (9) செருந்திப் பூ 11 (10) கொய்சகம் 2 (11) தாழ்வடம் 4 851 முத்துக்கள் கோர்க்கப்பட்டது.
விஷ்ணுவர்த்தன தேவர் அணிகலன்களைச் செய்வதற்கென்று பொன், முத்துக்கள் ஆகியவற்றை வழங்கினார். அவற்றைப் பற்றிய விவரங்கள் சாசனத்திற் பதிவாகியுள்ளன. அணிகலன்கள் ஆலயத்திலே செய்யப்பட்டன. அங்கு பல நிலைகளிற் சேவைபுரிந்தவர்களின் கண்காணிப்பிலே அவை செய்யப்பட்டு அவற்றைப் பற்றிய விவரங்கள் எழுதப்பட்டன. மேல்வருஞ் சாசனப் பகுதியால் இவற்றை அறிந்து கொள்ள முடிகின்றது.
"திருவையாற்று ஒலொகமாதேவி ஈஸ்வரம், உடையார்க்கு அணுத்திர பல்லவரையனும் அதிகாரிச்சி சோமயன் அமித்திரவல்லியும் பூரீ காரியஞ் செய்கின்ற நந்தனூருடையான்
இந்துக் கலைக்களஞ்சியம்

Page 235
செல்வன் மயிலையும் ஸ்தானமுடைய கேத்திரசிவ பண்டிதர்க்காக திருவாராதனை செய்யும் ஆத்திரையன் நம்பி காடநம்பியும் மானமுதலி பாரதாயந் செல்வன் அரங்கனான ராஜமார்த்தாண்ட பிரம்மமாராயனும் வண்ணக்கு சாத்தன் நின்றானான வீரசோழ அணுக்க மாயிலட்டியும் பதியிலாள் நக்கன் அரங்கமான ஜயங்கொண்டசோழத் தலைக்கோலியும் நக்கன் பூமியான பரமார்க்க விடங்கத் தலைக்கோலியும் நக்கன் சோழவிச்சாதிரியான ஒலொக மகாதேவித்
தலைக்கோலியும் நக்கன் பவளக் குன்றான மதுராந்தகத் தலைக்கோலியும் உள்ளிட்ட பதியாரும் கரணத்தான் கேசவன்
மதுராந்தகனும் பொற்பண்டாரி மணிமத்தி மாதவகிரவித்தனும்
ஆக இவ்வனைவர் கண்காணியால்” விஷ்ணு வர்த்தன தேவர் வழங்கிய பொன், முத்துக்கள் ஆகியவற்றினால் கடவுட் படிமங்களுக்குச் சூட்டுவதற்கென்று ஆபரணங்கள் செய்யப் பெற்ற பொழுது அந்தப் பணி பலரின் கண்காணிப்பில் நடைபெற்றது. அவர்களிற் சிலர் அரசாங்க அதிகாரிகள். அணுத்திர பல்லவரையனும் அதிகாரிச்சி அமுத்திரவல்லியும் அத்தகையோர் வேறொருவன் பூரீ கார்யம் செய்கின்ற குழுவைச் சேர்ந்தவன். ஏனையோர் பதியிலார். ஸ்தானத்தார், திருவாராதனை செய்வோர், வண்ணக்கர், பதியிலார், கரணத்தான், பொற்பண்டாரம் என்போர் பதியிலாரில் அடங்குவர். பதியிலார் அனைவரும் ஒலொகமாதேவி ஈஸ்வரத்திலே கடமை புரிந்தவர்கள். கோயிற் கடமை புரிவதற்கென்று நியமனம் பெற்ற சேவையாளர், அவர்களுக்குரிய நிலப்பங்குகள் பற்றிய சில விவரங்கள் கல்வெட்டுகளிற் பதிவாகியுள்ளன. அவை மேல்வருவனவாகும்
1. ஆர்யபோகம் - 4 பங்குகள் (ஒரு பங்கு 12 வேலி 2 மா
அவவுடையது.) மாணிகள் 6 பேர் - எல்லாமாக 3 பங்குகள் பதியிலார் 32 பேர் - 48 பங்குகள்
நட்டுவர் - 4 பங்குகள்
கரணர் - 2 பங்குகள்
மெய்ம்மட்டு - 2 பங்குகள்
மோர்வியன் - 2 பங்குகள்
வங்கியன் - 2 பங்குகள்
வீணைக்காரர் - 2 பங்குகள்
O
உடுக்கை வாசிப்போன் - 2 பங்குகள்
1.
உவச்சு, தலைப்பறை, மத்தளம் 8 பேர், தாளம், கறடிகை, கண்டை 6 பேர், திமிலை, கைம்மணி - எல்லோருக்கம் 13 1/2 பங்குகள்
இந்துக்கலைக்களஞ்சியம்

12. குசவன் - 1/2 பங்கு 13. வண்ணத்தான் - 1/2 பங்கு 14. வண்ணான் - 1/2 பங்கு 15. காச்சுவன் - 1/2 பங்கு 16. கொல்லன் - 1/2 பங்கு 17. ஊர்ப் பறையன் - 1/4 பங்கு
18. திருவாராதனை செய்வார் - 112
மேலதிகமாக தேவகரணத்தான், நந்தவானக் குடிகள் 6 பேர், நீர் மாலிய நீர் கொட்டுவான், திருப்பள்ளித் தாமம் 3 பேர், திருமெழுகெடுவோர் 4 பேர், நாயகம் செய்வான், விறகிடுவான், திருமெய்க்காப்பாளர் இருவர், கவரிப்பினா 16 பேர், ஆசாரிய போகம், திருவிளக்குக்குச் சீலையிடும் வண்ணான் ஆகியோரும் சேவை புரிந்தனர். இவர்களுக்கு நாள்தோறம் ஒரு பதக்கு நெல்லுப் பெறும் வண்ணமாக நிலப்பங்குகள் கொடுக்கப்பட்டன.
(இக்கட்டுரை கலாநிதி - எஸ். ராஜகோபால் திருவையாறு பற்றி எழுதிய விரிவான நூலையும், திருவையாறு பற்றிய சாசனங்களையும் ஆதாரமாகக் கொண்டு எழுதப்பட்டது)
(afo. Lu.)
O O திருவொற்றியழர்
தொண்டை மண்டலப் பாடல் பெற்ற சிவத்தலங்களுள் திருவொற்றியூர் தியாகராஜ சுவாமித் திருத்தலமும் ஒன்று. தேவார ஆசிரியர்கள், ஐயடிகள் காடவர்கோன், பட்டினத்தடிகள், இராமலிங்க அடிகள் எனப் பல பெரியோர்கள் பாடிப்
புகழ்ந்தேத்திய திருத்தலம்.
புராண வரலாறு
பிரம்மதேவன் இத்தலத்தையடைந்து சிவபெருமானை நோக்கித் தவமியற்றிய போது அவனுக்கருள் புரிய, வேள்விக் குண்டத்தில் தோன்றினார் இறைவன். சோதி உருவில் பல அனற் பிழம்புகளுடன் தோன்றியதால் பல கைவடிநாதர் என்ற பெயரிலும் (அனற் பிழம்புகள் கைகளாக உருவகம்) ஆதிசேஷன் பெருமானைப் பூஜித்து வழிபட்டதால் படம்பக்கநாதர் எனவும், அயோத்திச் சக்கரவர்த்தி தமது நாட்டில் உள்ள பல கோயில்களில் அறக்கட்டளைகளைக் குறைத்து கட்டளை எழுதிய போது ஏட்டில் ஒற்றியூர் நீங்கலாக என இறைவன் அதனைத் திருத்தி எழுதியதால் எழுத்தறியும் பெருமான் எனவும், தொன்மையான தலத்தில் உறைவதால் ஆதிபுரீஸ்வரர் எனவும் இறைவன் பல பெயர்களைப் பெற்று விளங்குகிறார். இங்கு தியாகராஜரே சிறப்பு வழிபாட்டிற்குரியவர். இத்தலத்தில் 27 நட்சத்திரங்களும் வழிபட்டன எனத் தலபுராணம் கூறும்.
சுந்தரமூர்த்தி சுவாமிகள் கயிலையில் இறைவனுக்குத் தொண்டாற்றிய போது கமிலினி, அனந்ததை என இரு
205

Page 236
பெண்களையும் காதலித்து இறை அருளால் மூவரும் பூவுலகில் பிறந்தனர். அப்பெண்களில் ஒருவர் பரவையார் என்ற பெயரில் திருவாரூரிலும், மற்றொருவர் சங்கிலியார் என்ற பெயரில் திருவொற்றியூரிலும் பிறந்தார். சுந்தரர் திருநாவலூரில் பிறந்து நம்பியாரூரர் என்ற பெயரில் வாழ்ந்து திருமண நாளன்று இறைவனால் தடுத்தாட் கொள்ளப்பட்டுத் தலந்தோறும் சென்று இறைபுகழ் பாடிப் பரவி வந்தார். அவ்வேளையில் திருவாரூரில் பரவையாரைக் கண்டு விரும்பி திருமணம் புரிந்து இனிதாக வாழ்ந்தார். தலப்பயணத்தைத் தொடர்ந்து அவர் திருவொற்றியூரில் சங்கிலியாரைக் கண்டு விரும்பி மணக்க விழைந்து இறைவனிடம் வேண்டி நின்ற வேளையில், இறைவன் சங்கிலியாரிடம் சுந்தரரை மணந்து கொள்ளும்படி கூற, சங்கிலியாரும் இறைவனின் ஆணையை ஏற்று அவர் திருவாரூரில் இருக்கும் பரவையாரிடம் செல்லாதவாறு அருள்புரிய வேண்டும் என வேண்டி நின்றார். இறைவன் சுந்தரன் உன்னைப்
பிரியேன் எனச் சத்தியம் செய்வான் என்றார்.
பின்னர் இறைவன் சுந்தரரிடம், “நாம் சங்கிலியாரிடம் உன்னைத் திருமணம் புரியும் படி கூறினோம். அவருக்கு ஒரு குறை உள்ளது. அதனைப் போக்க வேண்டியது உன் கடமை. நீ அவரைப் பிரியேன் எனச் சத்திய வாக்குக் கொடுக்க வேண்டும்’ என்றார். சுந்தரர் அதற்கு சம்மதித்து தான் அவ்வாறு சத்தியம் செய்யும் போது இறைவனை கோயிலுனுள் இருக்காது மகிழமரத்தடியில் இருக்கும்படி வேண்டினார். இறைவனும் அதற்குச் சம்மதித்தார். அன்றிரவு சங்கிலியாரிடம் “சுந்தரன் உனக்கு வாக்குறுதி அளிக்க கோயிலுக்குள் அழைப்பான், அப்பொழுது நீ அவனை மகிழமரத்தடிக்கு அழைத்து அங்கு சத்திய வாக்கைப் பெற்றுக் கொள்” எனக் கூறினார். சுந்தரர் சங்கிலியாரின் வேண்டு கோட்படி மகிழமரத்தடியில் சூள் உரைத்தார். இறைவன் முன்னமே கூறிவைத்தவாறு இருவருக்கும் திருமணம் நிகழ்ந்தது. இனிதாக சில காலம் வாழ்ந்தனர். வசந்த காலம் வந்தது. திருவாரூர் தியாகராஜரின் விழா நினைவுக்கு வர சுந்தரர் திருவொற்றியூரை நீங்கிச் சென்றார். ஒற்றியூர் எல்லையைக் கடந்ததும் சுந்தரரின் இரு கண்களும் பார்வை இழந்தன. காஞ்சியில் ஒரு கண்ணில் ஒளி பெற்றுப் பின் திருவாரூரை அடைந்து அங்கு இறைவனைப் பலவாறு பாடித் துதித்து மறு கண்ணையும் பெற்றுக் கொண்டார். இவ்விபரங்கள் சேக்கிழாரின் பெரியபுராணத்தில் ஏயர்கோன்
கலிக்காமர் சரிதத்தில் 12 பாடல்களில் விவரிக்கப்பட்டுள்ளன.
பட்டினத்தடிகள் தமது வாழ்க்கையின் அந்திம காலத்தை திருவொற்றியூரிற் கழித்தார். காவிரிப்பூம் பட்டணத்தில் குவிந்திருந்த செல்வத்தையெல்லாம் துறந்து இரந்துண்டார். தத்துவமும், அறிவு ஞானமும் உடைய அவரின் பாடல்கள் ஏராளம். திருவொற்றியூரில் அவர் நிகழ்த்திய அற்புதங்கள் ஏராளம். சிறுவர்களிடம் விளையாடுவார். அவர்களிடம் தன்னை
206

ஒரு குழியில் புதைக்கும் படி கூறுவார். அவ்வாறே சிறுவர்களும் புதைக்க வேறு ஒரு இடத்தில் தோன்றுவார். பல முறை அவர் அவ்வாறு செய்ய இறுதியில் ஒரு நாள் அவர் ஒரு புதைகுழியின் மீது சிவலிங்கமாகக் காட்சியளித்தார். அதுவே அவரது சமாதி. அவருடைய பாடல்கள் சில பதினோராம் திருமுறையில்
சேர்க்கப்பட்டுள்ளன.
கலியநாயனார் திருவொற்றியூரில் பிறந்தவர். தலத்தில் உள்ள விளக்குகளில் எண்ணெய் ஊற்றி வழிபடுவது அவரது வழக்கம். சில காலம் செல்ல, வறியவராகி விளக்கிற்கு எண்ணெய் வாங்கப் பணமின்றி தமது தலையை அரிந்து அக்குருதியிலேயே விளக்கெரிக்க முற்பட்ட போது இறைவன் அவர் முன் காட்சியளித்து ஆட்கொண்டார். திருவொற்றியூர்க் கோயில் மிகப் பழமையானது. இரண்டாம் இராஜஇராஜ சோழன்,
மூன்றாம் குலோத்துங்க சோழன் காலத்தைய கல்வெட்டுக்கள்
உள்ளன.
இறைவன் - ஆதிபுரீவரர், படம்பக்கநாதர் உற்சவர் - தியாகராசர் இறைவி - வடிவுடைய நாயகி, திரிபுரசுந்தரி தலமரம் - மகிழம், அத்தி தீர்த்தம் - பிரம்ம தீர்த்தம், வங்கக்கடல்
இராஜகோபுரம் ஐந்து நிலைகளுடன் கிழக்கு நோக்கி உள்ளது. வாயிலைக் கடந்ததும் செப்புக்கவசமிடப்பட்ட கொடிமரம், பலிபீடம், நந்தி மண்டபம் உள்ளன. வலமாக வரும் போது சூரியன் சந்நிதி, அப்பர், சம்பந்தர், சுந்தரர் சங்கிலியாருடன், உயரமான சகஸ்ரலிங்கம், ஏகாம்பரர், இராமநாதர், ஜகந்நாதர், அமிர்த கண்டீஸ்வரர், யாகசாலை, சுப்பிமணியர் ஆகியோரின் சந்நிதிகள் உள்ளன. இருபத்தேழு நட்சத்திரங்களும் இத்தலத்தை வழிபட்டதாக ஐதீகம் உள்ளது. அதை உணர்த்தும் முகமாக நட்சத்திர சிவலிங்கங்கள் வரிசையாக அமைக்கப்பட்டடுள்ளன. இதற்கு வலப்பால் கெளரீஸ்வரர் சந்நிதி உள்ளது. இச்சந்நிதியில் தட்சிணாமூர்த்தி யோக முத்திரையுடன் காட்சி தருகின்றார். பக்கத்தில் ஆதிசங்கரரின் உருவம் உள்ளது. வேப்பமரத்தடியில் இலிங்கம் ஆவுடையார் இன்றி உள்ளது. அடுத்து ஆகாசலிங்கம், அண்ணாமலையார், ஜம்புகேஸ்வரர், நாகலிங்கேஸ்வரர்,
காளத்தீஸ்வரர் மீனாட்சி, சுந்தரேசுவரர் சந்நிதிகள் உள்ளன.
அதையடுத்து ஒற்றியூர் ஈஸ்வரர் கோயில் அழகான முன் மண்டபத்துடன் உள்ளது. இப்பெருமானுக்குத் தான் நான்கு காலப்பூஜைகளும் நடைபெறுகின்றன. இம்மண்டபத் தூண்கள் வியக்கத்தக்க சிற்ப வேலைப்பாடுகள் கொண்டவை. ஒரு தூணில் பட்டினத்து அடிகள் சிற்பம் உள்ளது. இங்குள்ள மனித உருவத்தில் தலைப்பக்கம் சூரியனும், காற்பக்கம் சந்திரனும்
இந்துக் கலைக்களஞ்சியம்

Page 237
அமைக்கப்பட்டுள்ளன. மேலும் அவ்வுடலில் பஞ்சாட்சர விளக்கம் அமைத்துக் காட்டப்பட்டுள்ளன. துவாரபாலகர் உருவங்கள் கலையம்சத்துடன் அமைக்கப்பட்டுள்ளது. இச்சந்நிதி ஆதி சங்கரரின் பிரதிஷ்டை என்று சொல்லப்படுகிறது.
நடராஜப் பெருமானின் பின்புறத்தில் வெளிச்சுவரில் ஏகபாதமூர்த்தி உருவம் அழகாகச் செதுக்கப்பட்டுள்ளது. அடுத்து சுந்தரமூர்த்தியார் கல்யாண மண்டபம். இதில் சுந்தரர் கலியாணக் கோலத்தில் சங்கிலியாருடன் காட்சி தருகிறார்.
வலம் முடிந்து நேரே சென்று தியாகராஜ சபா மண்டபம் அடையலாம். இங்கு தியாகராஜ சந்நிதி விசேஷமானது. தரிசித்துப் பின் நுழைவாயில் சென்றால் எதிரில் நடராஜர் காட்சி தருகிறார். இடப்பால் வள்ளி, தெய்வயானையுடன் சுப்பிரமணியர் சந்நிதி உள்ளது. அழகான முன் மண்டபம் கல்லால் ஆனது. வலப்பால் குணாலய விநாயகர் சந்நிதி. நேரே மூலவர் சந்நிதி. மூலவரான படபக்க நாதர் சுயம்புரு. நாக வடிவில் அமைந்த சிவலிங்கத் திருமேனி. சிவலிங்கமும், ஆவுடையாரும் சதுரவடிவில் அமைந்துள்ளன. கருவறை கஜப்பிரஷ்ட அமைப்புடையது. மூலவர் கவசத்துடன் உள்ளார். ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதம் பெளர்ணமி நாளில் மட்டும் இக்கவசம் அகற்றப்பட்டு புனுகுச் சட்டம், சவ்வாது, சாம்பிராணித்தைலம் ஆகியவை மட்டுமே சாத்தப்படுகின்றன. முதல் மூன்று நாட்களுக்கு சுவாமி கவசமில்லாமல் இருப்பார். மீண்டும் சாத்தப்பட்டு சுவாமி ஆண்டு முழுவதும் கவசத்துடன் இருப்பார். பிற அபிஷேகங்கள் அனைத்தும் ஆவுடையாருக்கே நடைபெறுகின்றன. விசாலமான கருவறை.
விமானத்தின் அடிப்பகுதி தேவகோட்டத்தில் விநாயகர், தட்சிணாமூர்த்தி, விஷ்ணு, பிரம்மா, துர்க்கை, உள்ளனர். மூலவர் பிராகாரத்தில் கலியநாயனார், அறுபத்து மூவர், தல விநாயகர் சந்நிதிகள் உள்ளன. அடுத்து ஆதிசங்கரர் சந்நிதி உள்ளது. பக்கத்தில் ஏகாதசருத்திரலிங்கம் உள்ளது. இதையடுத்து முருகன் சந்நிதி. இங்குள்ள துர்கையம்மன் வட்டப்பாறைக் காளியம்மன் என்று போற்றப் பெற்றார். உக்கிர சக்தி வாய்ந்த மிகவும் துன்பத்தையருளிய இத்தேவியின் திரு முன்பில் ஆதிசங்கரர் வழிபட்டு அம்பாளின் உக்கிரத்தைப் போக்கி சாந்தப்படுத்தியதாகக் கூறப்படுகிறது. இங்கு வழங்கப்படும் குங்குமப் பிரசாதம் சக்தி வாய்ந்தது. இத்திருச்சுற்றில் சோமாஸ்கந்தர் வடிவத்தில் அமர்ந்து அருள் பாலிக்கும் தியாகராசர் சிறப்பு வழிபாட்டிற்குரியவர். பெருவிழாவில் 18 வகை நடனங்களை அருளிச் செய்பவர்.
அடுத்து நவக்கிரகம் முதலான சந்நிதிகளை வழிபட்டு கோயிலின் வட கீழ்ப் பகுதியிலுள்ள அம்மன் கோயிலை அடையலாம். கருவறை முன் மண்டபம் திருச்சுற்று
முதலியவற்றுடன் தெற்கு நோக்கி அமைந்துள்ளது கோயில்.
இந்துக்கலைக்களஞ்சியம்

அன்னை நீலோற்பலம், பாசம் ஏந்தி, அபய, வரத திருக் கரங்களுடன் நின்ற திருக்கோலத்தில் காட்சி தருகிறார். வெள்ளிக் கவசம் பூண்டு பட்டாடைகள் புனைந்து அணிமணிகள் தரித்து வெள்ளி மகுடம் தாங்கி கருணை பொழியும் திருமுகத்துடன் திகழ்கிறார் வடிவுடை நாயகி என்னும் திரிபுர சுந்தரி, சலவைக் கற்களால் ஆன திருச்சுற்றில் வள்ளலார் பாடல்கள் பொறிக்கப்பட்டுள்ளன.
இத்தலத்தில் வடிவுடையம்மன் திருமேனியைத் தீண்டி வழிபாடியற்றி வைப்பவர்கள் நம்பூதிரிப் பட்டர்களேயாவர். நம்பூதிரி அந்தணர், சைவர், வைணவர், மார்த்தர், ஏச்சர், ஆதிசைவக் குருக்கள் என ஆறு பிரிவினரால் வழிபாடுகள் செய்விக்கப்படுகின்றன. இக்கோயில் ஆண்டு முழுவதும் திருவிழாக் கோலம் பூண்டிருக்கும். தியாகராசர் வசந்தோற்சவம் 15 நாட்கள், கந்தர்சஷ்டி மற்றும் கார்த்திகைப் பெளர்ணமி, ஆணி, மார்கழி நடராஜர் அபிஷேகம், மாசிமகம், மகிழடி சேவை, பங்குனி உத்திர விழாவில் தியாகராசர் 18 வகை நடனம், சித்திரையில் 18 நாட்கள் வட்டப்பாறை காளியம்மன் திருவிழாக்கள் எனப்பல திருவிழாக்கள் கொண்டாடப்படுகின்றன.
"விடையவன் விண்ணு மண்ணும்
தொழநின்றவன் வெண்மழு வாட்
படையவன் பாய்புலித் தோலுடைய
கோவணம் பல்கரந்தைச்
சடையவன் சாமதேவன் சசிதங்கிய
சங்க வெண்தோடு)
உடையவன் ஊனமில்லி உறையும்
இடம் ஒற்றியூரே”
என ஞானசம்பந்தரும்,
"ஒம்பினேன் கூட்டை வாளா உள்ளத்தோர்
கொடுமை வைத்துக் காம்பிலா மூழைபோலக் கருதிற்றே முகக்க
மாட்டேன் பாம்பின்வாய்த் தேரை போலப் பலபல
நினைக்கின்றேனே ஒம்பிநீ உய்யக் கொள்ளாய்
ஒற்றியூருடையகோவே'
என அப்பர் பெருமானும்,
"கலவ மயில் போல் வளைக்கை நல்லார் பலரும் பரவும் பவளப் படியான் உலகில் உள்ளார் வினைகள் தீர்ப்பான் உலவும் திரைவாய ஒற்றி யூரே” எனச் சுந்தரர் பெருமானும் இத் தலத்தைப் பாடிச் சிறப்பித் துள்ளனர். (நி.நி.)
2O7

Page 238
திருவோணம்
இருபத்தியேழு நட்சத்திரங்களையும் அசுவினி முதலாக எண்ணிவரும் பொழுது திருவோணம் இருபத்தியிரண்டாவது நட்சத்திரமாக அமையும். இது மகர ராசியில் இடம்பெறும். திருவோணத்தின் அதிபதி சந்திரன். எனவே திருவோணத்தில் பிறந்தவர்களின் திசை ஆரம்பம் சந்திர திசையிலிருந்து தொடங்கும். ஒணம் என்பதே பெயர் எனினும், திருமாலின் நட்சத்திரம் என்னும் முறையில் பெருமை பெற்றுத் திருவோணமாயிற்று. ஒணப் பண்டிகை மலையாள நாட்டில் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. திருமால் வாமன அவதாரம் எடுத்து மாபலியிடம் மூன்றடி மண் கேட்டார். அவன் கொடுக்க முன்வந்தபோது பேருருவம் எடுத்து உலகை அளக்கத் தொடங்கினார். மூன்றாவது அடிக்கு இடமில்லாத போது மாபலியின் தலைமீது திருவடியை வைத்தார் என்று புராணங்கள் குறிப்பிடும். அக்கதை நிகழ்ச்சியை நினைவு கூரும் நெறியில் திருவோணம் கொண்டாடப்படுகிறது.
பழங்காலத்தில் மதுரையில் ஒணத்திருவிழா நடைபெற்றதை மதுரைக் காஞ்சியால் அறியலாம். ஞான சம்பந்தர் ஐப்பசி ஒணம் பற்றியும் குறிப்பிடுகின்றார். “ஐப்பசி ஒணவிழாவும் அருந்தவர்கள் துய்ப்பனவும் காணாதே போதியோ பூம்பாவாய்” என்று பாடுவதாலறியலாம். சிறவோணம், திருவோணம் என்னும் சொற்களைப் பற்றி ஆராய்வோர் பின்வரும் கருத்தைக் கூறுகின்றனர். தனு இராசியில் நின்ற வேடன் அம்பு எய்துகின்ற நிலையில் காணப்படுகின்றான். மகர இராசியில் பறந்து கொண்டிருந்த கருடனின் சிறகு அற்று விழுவது போல் ஒணம் நட்சத்திரம் காணப்படுவதால் அதனைச்
சிறவோணம் என்றனர்.
இந் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணநலன்களை பல்வேறு சோதிட நூல்கள் பல்வேறு விதமாக எடுத்தியம்பு கின்றன.
இந் நட்சத்திரம் நான்கு பாதங்களாகப் பிரிக்கப்படுகின்றது.
1ஆம் பாதத்தில் பிறந்தவர்கள் திட ஆரோக்கியத்துடன் திறமைசாலிகளாகவும், கர்வம் கொண்டவர்களாகவும் தெய்வீக வழிபாடுகளில் பற்றுதல்களுடன், பெரியவர்கள், கற்றவர்கள், ஆசிரியர்கள் ஆகியோரிடத்தில் பக்தி சிரத்தை, மரியாதை குணங்கள் பொருந்தியவர்களாகவும் அமைவார்கள். 2 ஆம் பாதத்தில் பிறந்தவர்கள் செல்வந்தர்களாகவும், பெரியவர்களிடம் பக்தி கொண்டவர்களாகவும், பந்து மித்திரர்களோடு வாழ்பவர்களாகவும் இருப்பர். 3ம் பாதத்தில் பிறந்தவர்கள்
பொதுக் காரியங்களில் பற்றுதல் கொண்டவர்களாகவும், தயவு
208

தாட்சண்யம் இல்லாதவர்களாகவும், சதா சிந்தனை, கவலைகள் கொண்டவர்களாகவும் உடல் நோய்களுடனும், செல்வத்துடனும் மற்றவர்களைப் புரிந்து கொண்டு நடப்பவர்களாகவும் இருப்பார்கள். 4 ஆம் பாதத்தில் பிறந்தவர்கள் தான தரும குணம் கொண்டவர்களாகவும், செல்வம் செல்வாக்குடனும், நிலபுலன் வீடு, மாடு, கன்றுகளைக் கொண்டவர்களாகவும் சிறந்த அறிவாளிகளாகவும் விளங்குவர் என்று சோதிட நூல்கள் எடுத்தியம்புகின்றன. (தே.ஹ.)
திருவோத்தூர்
காஞ்சிக் கருகில் உள்ள தொண்டை நாட்டுத் தலம். இத் தலம் மக்கள் வழக்கில் திருவத்திபுரம், திருவத்தூர் என்றெல்லாம் அழைக்கப்படுகின்றது. இறைவன் வேதத்திற்கு பொருள் சொன்ன இடமாதலின் ஒத்தூர் எனப்பட்டது. திரு அடைமொழி, திரு ஒத்தூர் பின் வழக்கில் திருவோத்தூர் ஆயிற்று. சம்பந்தர் பாடல் பெற்ற தலம். இப் பெருமான் அருளால் ஆண்பனை பெண்பனையாயிற்று. ஆலய வெளிப்பிராகாரத்தில் பனை
மரங்கள் உள்ளன.
mைவன் - வேதபுரீஸ்வரர், வேதநாதர்
D த தநாத இறைவி பாலகுஜாம்பிகை, இளமுலைநாயகி
தலம் - பனை மரம்
தலபுராண வரலாறு
இங்கு அமைக்கப்பட்டுள்ள நந்தி சுவாமியை நோக்கி யிராமல் முன் கோபுரத்தைப் பார்த்த வண்ணம் உள்ளது. இது பற்றிய வரலாறு; விசுவாசு என்னும் மன்னனின் வீரத்திற்கு ஈடுகொடுக்க முடியாது காட்டில் அலைந்து திரிந்த தொண்டை மான் வேதபுரீஸ்வரரை வணங்கினான். இறைவன் அவனுக்கு அதிக படையும், சேனைகளும் அருளி விசுவாசுவுடன் போரிட்டு இழந்த ஆட்சியை மீண்டும் கைப்பற்றுமாறு பணித்தார். இதைக் கேட்ட மன்னன் நான் எவ்வாறு போரிடுவேன் என அஞ்சியபோது, நந்தி உனக்குப் படைத் துணையாக வருவார். நீ அதற்கு முன்பதாக யாம் கொடுத்த படைகளோடு சென்று போரிடுவாய் என்றார். மேலும் “நாம் கூறியதில் உன் மனத்திற் சந்தேகமிருப்பின் சாட்சி காட்டுகிறோம். நீ போய்ப் பார். அந்த நந்தி தேவன் கீழ்த்திசை நோக்கியிருக்கின்றார்” என்றார். அவ்வாறே தொண்டைமான் வந்து பார்க்க, மேற்கு நோக்கியிருந்த நந்தி தேவர் கீழ்த்திசையில் திரும்பியிருப்பது கண்டு பயம் நீங்கினான். இறைவன் நந்தியைத் தளபதியாக்கி, சிவ கணங்களைக் குதிரைகள் யானைகள் தேர்களாகச் செய்து தந்து தொண்டை மானைப் போருக்கு அனுப்ப, அவனும் அவ்வாறே சென்று விசுவர்சுவை வென்று நல்லாட்சி நடத்தினான் என்கிறது திருவொத்தூர்த் தலபுராணம் (தொண்டைமானுக்குப் படைத்துணை போன சருக்கம்
இயற்றியவர் கருணாகரக் கவிராயர்)
இந்துக் கலைக்களஞ்சியம்

Page 239
கோயில்
கிழக்கு நோக்கிய வாயிலும் ஆறு நிலைகளுடன் கோபுரமும் உள்ளன. வாயிலைக் கடந்து உள் நுழைந்தால் பரந்த இடம் காணப்படுகிறது. வலப்பக்கமாக உள்ள மண்டபம் ஒரு காலத்தில் வாகன மண்டபமாக இருந்திருக்கக் கூடும். இடப்பக்கத்தில் நந்தவனமும், திருக்குளமும் காணப்படுகின்றன. பலிபீடம் உயரமான பீடத்தில் அமைந்துள்ளது. நந்தி முன் கோபுரத்தைப் பார்த்த வண்ணம் உள்ளது. முன்னால் உள்ள மண்டபத்தில் புதிய சுதைச் சிற்பங்கள், முருகன், விநாயகர், நடராஜர், ஞான சம்பந்தர்,
பனை மரம் உள்ளன.
ஆலயத்தினுள் நுழைந்தால் வலப்பக்கம் அம்பாள் சந்நிதியும் எதிரில் கொடிமரமும் அம்பாளுக்குரிய சிம்மமும் அமைந்துள்ளன. இவற்றுக்கருகில் ஞானசம்பந்தர் தலத்து ஐதீகமான பனைமரம், சிவலிங்கம் கல்லில் அமைக்கப்பட்டுள்ளன. வெளிப்பிரகாரத்தில் இடப்பக்கமாக வலம் வரும் போது உற்சவ மூர்த்தி மண்டபமும் ஐந்து பனை மரங்களும் (தலமரம்) சிவலிங்கமும் அமைந்துள்ளன. பஞ்சபூதத் தலங்களை நினைவு கூரும் வகையில் - திருச்சிற்றம் பலம், திருக்காளத்தி, திருஆனைக்கா, திருவண்ணாமலை, திருவேகம்பம் தனித் தனிச் சந்நிதிகள் அமைந்துள்ளன. இங்குள்ள சண்டேஸ்வரர் ஒரு காலை மடக்கி ஒரு காலைத் தொங்க விட்டு, ஒரு கையில் மழுவுடன் ஒரு கையை மடக்கிய காலின் தொடை மீது வைத்தவாறு காட்சி தருகின்றார். இவற்றை விட வெளிப் பிராகாரத்தில் தீர்த்தக் கிணறும்,
யாகசாலையும், அலங்கார மண்டபமும் அமைந்துள்ளன.
வெளிப்பிராகார வலம் முடிந்து படிகள் ஏறினால் விநாயகரும், முருகனும், துவாரபாலகர்களும் காட்சி தருகின்றனர். ஒரு புறத்தில் உயரமான பீடத்தில் நாகலிங்கம் உள்ளது. உள் வீதி வலம் வரும் போது அறுபத்து மூவர் மூலத் திருமேனிகள், சப்தமாதர்கள், கோஷ்ட மூர்த்தி விநாயகர், தனிக் கோயிலாகத் தஷிணாமூர்த்தியும், துர்க்கையும், காட்சி தருகின்றனர். மேலும் வள்ளி தெய்வானையுடன் கூடிய சண்முகப் பெருமானும் பைரவர், சூரிய, சந்திரர்களும் இப் பிரகாரத்தில் அமைந்துள்ளன.
உள்ளே கருவறையில் வேதபுரீஸ்வரர் சிவலிங்கத் திருமேனியில் உள்ளார். கிழக்கு நோக்கிய சந்நிதி. சதுர ஆவுடையார். மூலஸ்தானத்தில் உள்ள இறைவனைத் தரிசித்து இடப்பக்கம் சென்றால் சண்டேஸ்வரர். அவரையும் பணிந்து வெளிவரலாம். பாலகுஜாம்பிகை கோயில் தனியாக உள்ளது. இங்குள்ள திருமேனி மிகப் பழமை யானது. நான்கு கரங்கள்; நின்ற திருக்கோலம். கோயிலுக்கு இடப்பகுதியில் வெளியே நவக்கிரகங்களும் அமைக்கப்பட்டுள்ளன. கோயிலுக்கு எதிரிலுள்ள தேர் மேடை சிதைந்துள்ளது. சிறிய தேர் உள்ளது. இராசாதிராசன் குலோத்துங்கன், இராஜேந்திரன், விக்கிரம சோழன் ஆகியோரின் கல்வெட்டுக்கள் கிடைக்கப் பெற்றுள்ளன.
இந்துக் கலைக்களஞ்சியம்

கல்வெட்டில் இறைவன் “ஒத்தூர் உடைய நாயனார்” என்று குறிக்கப் படுகிறார். வழிபாட்டிற்கும், நிவேதனத்திற்கும் அர்ச்சகருக்கும் நிலம் விடப்பட்ட செய்திகள் கல்வெட்டுகள் மூலம் தெரிய வருகிறது. இத் தலத்துப் பெருவிழா தைமாதத்தில் நடைபெறுகிறது.
"குரும்பை ஆண்பனை ஈன்குலை ஒத்தூர் அரும்பு கொன்றையடிகளைப் பெரும் புகலியுள் ஞானசம்ந்தன் சொல் வினை வீடே'
என்று ஞானசம்பந்தப் பெருமான் பாடியுள்ளார். (நி.நி.)
O O O O திருஷ்டத்யும்நன்
பாரத்வாஜர் என்ற அந்தணோத்தமரின் புதல்வன் துரோணன். பாஞ்சால தேசத்து அரசகுமாரனான துருபதன் என்ற யாக சேனனும் துரோணரும் ஒரு சாலை மாணாக்கர்கள். நெருங்கிய நண்பர்கள். தான் தனது தந்தைக்குப் பிறகு
பட்டத்திற்கு வரும் பொழுது துரோணருக்குப் பாதி இராஜ்யம் தருவதாகக் கூறினான்.
ஆசிரம வாசம் முடிந்து துரோணர் கிருபருடைய சகோதரி கிருபியை மணந்து அசுவத்தாமனைப் பெற்றார். குழந்தைக்குப் பால் கூட வாங்க முடியாத அளவு வறுமை வாட்டியது. இந்த நேரத்தில் துருபதனின் நினைவும், அவன் பாதி நாடு தருவதாகக் கூறிய மொழியும் நினைவிற்கு வந்தன. இந்தச் சமயத்தில் துருபதனின் தந்தை பிருஷத ராஜன் வானாடு ஏக அவன் அரசனானான். துருபதன் அரசனாகி விட்டதால் பாதி அரசு இல்லாவிட்டாலும் ஒரு பசுவையாவது பெற்றுவரலாம் என்று துரோணர் பாஞ்சால தேசம் சென்று அரிதின் முயன்று துருபதனைச் சந்திக்க அவன் “நீர் யார்” என்று கேட்க விதிர் விதிர்த்த துரோணர் “நான் உனது பாடசாலை நண்பன்’ என்று நவின்றார்.
“மாவின் பாலே யன்றி மரபுக் குரிய மைந்தன் ஆவின் பால்கண் டறியா னதனால் வருந்தியந்தக் கோவின் பாலெய்தலுங் கோமான் யார் நீ என்ன நாவின் பாலா னடுங்கி நானுன் னண்ப னென்றேன்”
(வில்லிபாரதம் - வாரணாவதச் சருக்கம் - 43)
செல்வச் செருக்கு மிக்க பாஞ்சாலன், அந்தணரே இந்த நடத்தை உமக்கு ஏற்றதல்ல என்ன துணிவுடன் நான் உனது நண்பன் என்று சொல்கிறீர். அரியாசனத்திலிருக்கும் எனக்கும் அதிர்ஷ்ட மற்ற உமக்கும் நட்பா? மந்த புத்தி உள்ளவரே பால்ய சிநேகிதத்தை ஆதாரமாகக் கொண்டு புவியாளும் வேந்தனிடம் நட்புப் பாராட்டாதீர். தரித்திரன் தனவானுக்கும், மூர்க்கன் வித்து
209

Page 240
வானுக்கும், பயந்தவன் பலசாலிக்கும் எப்படி நண்பராவார்கள்? செல்வம் சமமாக இருந்தால்தான் நட்பு உண்டாகும். என்று அகங்காரங் கொண்டு துரோணரை அவமானப்படுத்தி அனுப்பினான். இது துரோணர் உள்ளத்தில் கனலாகக் கரந்திருந்தது.
பீஷ்மருடைய ஆலோசனையின் வண்ணம், கெளர வர்களுக்கும் பாண்டவர்களுக்கும் வில்வித்தை கற்பிக்கும் ஆசிரியரானார் துரோணர். பயிற்சி முடிந்ததும் குருதட்சி ணையாக துருபதனைப் பிடித்து வருவதற்கு துரியோதனனையும், கர்ணனையும் அணுகினார். ஆனால் வெறுங்கையுடன் வந்தார்கள் இருவரும். அர்ச்சுனனை அனுப்பினார். அவன் போய் பாஞ்சாலனுடன் யுத்தம் செய்து தனது தேர்க்காலில் துருபதனைக் கட்டி இழுத்து வந்தான்.
ஆசாரிய துரோணர் புன்னகையுடன் துருபதனை நோக்கி ‘வீரனே! உனது உயிருக்கு ஊறு எதுவும் நேராது. இளமையில் என்னுடன் நட்புக் கொண்டிருந்து விட்டு என்னைப் பதவி மமதையால் அவமானம் செய்தாய். அரசன் அரசனோடுதான் நட்புச் செய்ய வேண்டும் என்றாய். அதனால் நான், உனக்குப்
பாதி இராஜ்யத்தைக் கொடுக்கிறேன் பெற்றுக்கொள்' என்றார்.
துருபதன் அவமானத்தால் உடலும், உள்ளமும் குறுகினான். அவன் மனத்தில் பழிவாங்கும் எண்ணம் மேலோங்கியது. துரோணரைக் கொல்லக் கூடிய மகனும், அர்ச்சுனனை மணக்க மகளையும் வேண்டி யாஜன், உபயாஜன் என்ற பிரும்மரிஷிகள் இருவரைக் கொண்டு யாகம் ஒன்று நடத்தினான்.
நிகழ்ந்த புத்திரகாமேஷ்டி யாகத்தில் யாக சேஷத்தை உண்பதற்கு துருபதன் மனைவி விலக்கான நிலையில் இருந்த மையினால் அந்த சேஷத்தை அக்னியில் சொரித்தார்கள். இமைப் பொழுதில் யாகத் தீயினின்று தோள் வலயம் பிறங்க மணிமுடி ஒளிவீச, மணிகுண்டலம் அழகு எறிப்ப, உடலில் வச்சிர கவசத்துடன் வில்லும் கையுமாக, சிங்கக் குருளையொன்று பொன் மேருமலையினின்று குதிப்பது போல் மைந்தன் ஒருவன் தோன்றினான்.
அவனுக்கு திருஷ்டத்யும்நன் என்று பெயரிட்டு களிப்பு மிக வளர்த்தார்கள். இந்த திருஷ்டத்யும்நன் தனக்கு வில்வித்தை பயிற்றுமாறு துரோணரை வேண்ட, அவனால் தனக்கு மரணம் உண்டாகுமென்று தெரிந்தும் ஆசாரியர் பெருந்தன்மையுடன் மறுக்காது உடன்பட்டார். அரணிக்கட்டையிடத்துத் தோன்றிய அழல் அதனையே அழிக்குமாறு போல துரோணருடைய மரணமும் நிகழ்ந்தது.
மகாபாரத யுத்தத்தில் திருஷ்டத்யும்நன் ஆற்றிய பங்கு மிகச் சிறப்பானது. கர்ணனின் சக்தியாயுதத்தினால் கடோத்கஜனைக்
210

கொன்றான். யுத்தத்தில் துரோணருடைய வில் இடைவிடாமல் பாண்டவ சேனைகளை காலாக்கினி போன்று எரித்துக் கொண்டிருந்தது. இதனைப் பார்த்த கண்ணபிரான் “அருச்சுனா” இந்தத் துரோணரை யுத்தத்தில் வெல்லக் கூடியவர் யாரும் இல்லை. இவர் ஆயுதத்தைப் பிடித்து நிற்கும் வரையில் யாரும் இவரை வெல்லமுடியாது. தருமத்தைப் புறக்கணித்து விட்டு ஏதேனும் செய்துதான் தீர வேண்டும். அசுவத்தாமன் இறந்ததாகக் கேள்விப்பட்டால் துரோணர் போர் புரிய மாட்டார். துயரத்தினால் வில்லைக் கீழே போட்டு விடுவார். யாராகிலும் இதனைச் செய்ய வேண்டும் என்றன். அர்ச்சுனன் உட்பட ஒருவரும் இதனை ஏற்கவில்லை. கடைசியாக பலருடைய நன்மை கருதி தருமர் தான்
இதனைச் செய்வதாகச் சொன்னார்.
பீமன் தன் இரும்புக் கதையினால் அசுவத்தாமன் என்ற ஒரு போர் யானையை அடித்துக் கொன்றான். கொன்று விட்டு துரோணர் இருக்கும் படைப் பகுதியை நாடி அவர் செவியில் படும்படியாக “நான் அசுவத்தாமனைக் கொன்றேன்” என்று கூறி தனது இழி செயலுக்காக நாணினான்.பிரம்மாஸ்திரப் பிரயோகம் மேற்கொள்ளும் நிலையில் இருந்த துரோணர், தன் மகன் இறந்து விட்டானோ என்று ஒரு கணம் தயங்கினார். அருகிலிருந்த தருமனை நோக்கி “என்மகன் இறந்தது உண்மையா?” என்று கேட்டார். எந்த ஒரு துன்பத்திலும் யுதிஷ்டிரன் பொய்யுரைக்க மாட்டான் என நம்பி வினவினார். சோதனைக்குள்ளான தருமபுத்திரர் செய்வகையறியாது திகைத்தார். கண்ணபிரான் உள்ளிட்டோர் தருமன் பொய்யுரைக்காவிடில் துரோணருடைய பிரம்மாஸ்திரத்திற்கு அனைவரும் பலியாவது உறுதி எனக் கவன்றார்கள்.
மனதை ஒருவாறு தேற்றிக் கொண்ட குந்தி புத்திரர், அசுவத்தாமன் என்கிற யானை என்பதை மனதுள் கூறிக் கொண்டு அசுவத்தாமன் இறந்தது உண்மை என்று கூறினார். பொய்யுரைக்காத தருமன் பொய் கூறியதும், பூமியைத் தீண்டாமற் செல்லும் அவருடைய தேர் திடீரென்று இறங்கி மண்ணைத் தொட்டது.
அசுவத்தாமன் இறந்தான் எனக் கேட்ட துரோணரது உயிரோசை அறவே அகன்றது. பீமன் நிந்தனை செய்தான். வெறுப்புற்ற துரோணர் ஆயுதங்களையும், அஸ்திரங்களையும் களைந்து தேர்த் தட்டின் மேல் பிராயோகவேச நிலையில் அமர்ந்தார். இத் தருணத்தில் அனைவரும் பார்த்துக் கொண்டிருக்க துரோணருடைய இரதத்தில் ஏறிய திருஷ்டத்யும்நன், அனைவரும் அவலக் குரல் எழுப்ப, ஒரே வெட்டில் துரோண ருடைய தலையை வேறுபடுத்தினான். பரத்வாஜ புத்திரரின் ஆன்மா ஜோதிமயமாய் விண்ணுலகு சென்றது. -
பாரதப் போரில் கெளரவர்கள் நூற்றுவரும், அவர்களது சேனைகளும், பாண்டவர்களும் சேனைகளும் அழிந்தன.
இந்துக்கலைக்களஞ்சியம்

Page 241
பாண்டவர்கள் அதர்ம வழியில் தனது பிதாவையும் கெளரவர்களையும் அழித்தது கண்டு கோபம் கொண்டான். ஒரு ஆலமரத்தடியில் கிருதவர்மனும், கிருபனும் அசுவத்தாமனும் தங்கியிருந்தார்கள். மேலே ஆலமரத்துக் கிளைகளில் காக்கைகள் கூட்டமாக இரவில் வந்து தங்கியிருந்தன. அப்போது ஒரு பெரிய கூகை உறங்கிக் கொண்டிருந்த காக்கைகளை ஒவ்வொன்றாகக் கொத்திக் கிழித்தது. இதனைப் பார்த்துக் கொண்டிருந்த அசுவத்தாமன் கிருபர் தடுத்தும் கேளாது பாண்டவர்களைக் கொல்வதற்காகப் பாசறை நோக்கிச் சென்றான்.
திருஷ்டத்யும்நன் கவசத்தைக் கழற்றிவிட்டு நன்றாக உறங்கிக் கொண்டிருந்தான். அவ்வீரன் மேல் குதித்த அசுவத்தாமன், அவனைக் கோரமாகக் கொன்று தனது சினத்தைத் தனித்துக் கொண்டான். (வ.வை.)
O
திரோதான சக்தி
சைவசித்தாந்தம் முப்பொருள் உண்மை பற்றிப் பேசும் பன்மைக் கோட்பாடுகளில் ஒன்று. முப்பொருட்களாவன, பதி, பசு, பாசம் என்பன. இவற்றுட் பாசம் என்பது ஆணவம், திரோதாயி, மாயை, கன்மம், மாயேயம் என்ற 5 மலங்களில் திரோதாயியை ஆணவத்துடனும், மாய காரியத்தை மாயையுடனும் சேர்த்து மலங்கள் மூன்றினையும் குறிக்கும். மும்மலங்களும் ஆன்மாக்களைப் பந்தித்து நிற்பதனால் அவை பாசம் என்று அழைக்கப்படுவது குறிப்பிடத்தக்கது. மும்மலங்களிலும் மூல மலமாக விளங்குவது ஆணவ மலமே. ஆணவ மலம் ஆன் மாக்களை அநாதியாகவே பந்தித்து நிற்பது. ஆன்மாவுடன் கூடப்பிறந்தது என்பதனால் அது சகசமலம் எனவும் அழைக் கப்படும். ஆணவமலம் ஒன்று. ஆனால் அது அநேக சக்திகளை உடையது. இதனை சிவஞான சித்தியார்,
“ஒன்றதாய் அநேக சக்தி உடையதாய் உடனாய் ஆதி அன்றதாய் ஆன்மாவின் தன் அறிவொடு தொழிலை ஆர்த்து நின்று போத்திருத்துவத்தைநிகழ்த்திச் செம்பினிற் களிம்பேய்ந்து என்றும் அஞ்ஞானங் காட்டும் ஆணவம் இயைந்து நின்றே”
எண்ணிறந்த சக்திகளை உடைய ஆணவமலம் செம்பினிற் களிம்பு போல் அநாதியே ஆன்மாவைப் பந்தித்து நிற்பது. கேவல நிலையில் அவ்வுயிர்களின் அறிவோடு தொழில்களை மறைத்து நின்று, சகலத்திலே போக நுகர்ச்சிக்குக் காரணமாய் நின்று எப்பொழுதும் அஞ்ஞானத்தை உண்டாக்கும். இதுவே சித்தியார் தரும் விளக்கம் ஆகும். (ஆனால் ஆணவ மலத்தின் சக்திகள் ஆன்மாவை மறைக்க இயலாத காலத்தில், பரிபாக காலத்தில் வலிகுன்றி நிற்கும்)
ஆணவ மலத்தின் பல்வேறு சக்திகளின் திரோதான சக்தியே முக்கியமானது. இதுவே மறைக்கும் சக்தி. கேவலாவத்தை
இந்துக் கலைக்களஞ்சியம்

நிலையில் அதாவது ஆன்மா ஆணவத்துடன் கூடிய நிலையில் அதன் அறிவை மறைத்து நிற்கிறது. இச்சா, கிரியா, ஞானத் தொழில் முழுவதையும் மறைத்து நிற்கும் ஆற்றல் உடையது. ஆணவம் ஆன்மாவின் வியாபகமான அறிவை ஒரு சிறிதும் விளங்கவொட்டாது மறைக்கும் நிலையில் ஆணவத்தின் பிரதான சக்தியான திரோதான சக்தியும் அதற்குத் துணையாக நின்று ஆன்மாக்களின் அறிவை மறைத்து நிற்கும். மறைக்கும் மல சக்திக்கு திரோதான சக்தி வலிமை கொடுத்து நிற்கும்.
திரோதான சக்தியின் சிறப்பியல்பு யாதெனில், ஆன் மாக்களின் அறிவை ஆணவமலம் மறைக்கும் காலத்தில் அதற்கு துணையாக நிற்பது போல் ஆணவமலம் வலி குன்றுங் காலத்தில், அதற்குத் துணையாக நின்று அத்த மாயா காரியங்களைத் தோற்றுவித்து, கன்மப் பலன்களை நுகரச் செய்து, ஆன்மா இறையருள் பெறத் துணை செய்யும். இந் நிலையில் இத் திரோதான சக்தி சிவசக்தி என்று அழைக்கப்படும். இது ஆதி சக்தி என்றும் அழைக்கப்படும். இத் திரோதான சக்தி ஆணவ மலத்துடன் கூடி நின்று தொழிற்படுவதன் காரணமாக அதுவும் மலம் என்றே அழைக்கப்படுகின்றது. ஆனால் அது மலம் அன்று உயிர்கள் மேற் கொண்ட கருணை காரணமாக அவை திருவருளைப் பெற்று ஆன்ம ஈடேற்றம் பெறுவதற்குத் துணை புரிகிறது. மல பரிபாகம் நிகழும் வேளை அதற்குத் துணை யாகவும் மலபரிபாகம் அடைந்த பின்னர் அருட் சக்தியாக மாறித்
திருவருள் பெறத் துணை செய்வதை சிவப்பிரகாசம் எனும் நூல்,
“பாகமாம் வகை நின்று திரோதான சக்தி பண்ணுதலான் மலமெனவும் பகர்வரது புரிந்து நாகமா நதி மதியம் பொதி சடையானடிக ணணுகும்வகை கருணை மிக நயக்கும் தானே”
என்ற பாடல் மூலம் தெளிவுபடுத்துகிறது.
சைவசித்தாந்திகளது கருத்துப்படி ஒடுங்கிய உலகம் மீண்டும் தோன்றுவது ஆன்மாக்களின் ஆணவ மலம் பரிபாக மடைதற் பொருட்டேயாகும். உலகம் சிருஷ்டி பெற்ற நிலையிலேயே ஆன்மாக்கள் கன்மப் பயன்களை நுகர்ந்து, வினையின் நீங்கி, சத்திநிபாத நிலையைப் பெற்று, இறைவனுடன் இரண்டறக் கலந்து விடுகின்றன. எனவே திரோதான சக்தி இல்லையேல் ஆன்மாக்களுக்கு ஈடேற்றம் இல்லை என்ற கருத்துத் தெளிவாக அறிந்து கொள்ளப்படுகிறது. (ஏ.என்.கி.)
திரெளபதி
பாஞ்சால அரசன் துருபதனின் மகள் திரெளபதி. துரோணருடன் தான் கொண்ட மனவேறுபாட்டின் காரணமாக அவரை வெல்வதற்கு ஒருமகனும், துரோணாச்சாரியரின் மாணவனும் தன்னை வென்ற வில்லாளியுமான அர்ச்சுனனை
211

Page 242
மணக்க ஒரு மகளையும் விரதமிருந்து பெற்றான். அவர்களே திருஷ்டதுய்மனும், திரெளபதியும் ஆவார்கள்.
கெளரவர்களிலே மூத்தவனான துரியோதனன், பாண்ட வர்கள் மீது கொண்ட பொறாமை காரணமாக வாரணாவதம் என்ற இடத்திலே ஒர் அரக்கு மாளிகையை அமைத்து, அதிலே வஞ்சகமாகப் பாண்டவர்களை வசிக்கச் செய்து, புரோசனன் என்ற அமைச்சனின் மூலமாக அவர்களைக் கொல்வதற்குத் திட்டமிட்டான். அரக்கு மாளிகையும் தீப்பற்றி எரிந்தது. அதிலிருந்த பஞ்ச பாண்டவர்களும் குந்தி தேவியும் எரிந்து மடிந்து விட்டதாகச் செய்தி காட்டுத்தீ போலப் பரவியது. துருபதன் இதனைக் கேட்டு வருந்தினான். ஆனாலும் அவர்கள் இறந்திருப்பார்கள் என்பதை அவனால் ஏற்க முடியவில்லை. அவர்கள் பிழைத்திருந்தால் அவர்களைக் காண்பதற்கு ஒரு உபாயம் செய்தான். அர்ச்சுனனை மணப்பதற்காகவே பெற்றெடுத்த திரெளபதிக்குச் சுயம்வரம் என அறிவித்தான்.
சுயம்வரத்திற்கு நாற்றிசையிலிருந்தும் வீரர்கள், நூற்றுக் கணக்கான மன்னாதி மன்னர்கள் வந்து கூடினார்கள். அரச மண்டபம் அலங்கரிக்கப்பட்டு ஒளிவீசியது. எஃகுத் தந்திகளால் திரிக்கப்பட்ட நாண் கொண்ட பெரிய வில் ஒன்று சுயம்வர மண்டபத்தில் வைக்கப்பட்டிருந்து. அந்த வில்லை வளைத்து எஃகு நாணை அதில் பூட்டி அம்பு எய்து மேலே வெகு உயரத்தில் அமைக்கப்பட்டிருந்த இலக்கை வீழ்த்துவதே விதிக்கப்பட்ட பணயம். அந்த இலக்கானது சுழலும் இயந்திரத்தின் மீது அமைக்கப்பட்டு அந்த இயந்திரத்தின் துவாரத்தின் வழியே அம்பு எய்து லகூதியத்தை வீழ்த்த வேண்டும். அனைவரும் முயன்று தோற்றனர். அந்தணர் வடிவத்தில் வந்த அர்ச்சுனன் வெற்றி பெற்றான்.
இந்த நற்செய்தியைக் கூற தருமன், நகுலன், சகாதேவன் முதலியோர் குந்திதேவி தங்கியிருந்த குலாலன் மனைக்குச் சென்று இன்று ஒர் ஐயம் பெற்றோம் என்று கூற, ஐவரும் பகிர்ந்து கொள்ளுங்கள் என்றாள். பிறகு தான் தனது தவறு உணர்ந்து வருந்த, திரெளபதி முற்பிறப்பில் இந்திரசேனையாக இருந்த போது ஐந்து கணவர்களைப் பெறுவாள் என்ற கூற்றுப் பொய்க்காத வண்ணம், குந்தியின் ஆசியால் பாண்டவர்கள் ஜவரையுமே கணவராகப் பெற்றாள்.
முற்பிறப்பு வரலாறு
யாகத்தீயில் எழுந்த திரெளபதி முற்பிறப்பில் நளாயினி என்ற பெயருடன் மெளத்கல்ய முனிவரின் மனைவியாவாள். நளாயினியின் கற்பின் உறுதியைச் சோதிக்கும் பொருட்டு முனிவர் தன்னைக் குஷ்டத்தால் சிதைந்த வடிவினனாகக் காட்டிக் கொண்டு அளவற்ற துன்பத்தைக் கொடுத்தார். அனைத்தையும் தனது கற்பின் ஆற்றலால் பொறுத்துக் கொண்டு கணவனின் விருப்பின் வழி நின்ற நளாயினி அடுத்த பிறவியிலும் மெளத்கல்ய
212

முனிவனே தனது கணவனாக வேண்டும் என்று நினைத்த படி இந்திர சேனையாகப் பிறந்து அவரையே கணவனாக அடைந்தாள். அவனோ இல்லற வாழ்கையைப் புறந்தள்ளி தவத்தில் நிலைத்தான்.
இல்லற வாழ்கையை விரும்பாது தவத்துறை நயந்து நின்ற முனிவனை அவனது மனைவியாகிய இந்திரசேனை இல்லற வாழ்க்கைக்கு வற்புறுத்த, அவன் வெகுண்டு யாகசேனன் மகளாய்ப் பிறந்து ஐவரை மணப்பாயாக என்று சபித்ததும் அவள் சிவபெருமானைக் குறித்துத் தவம் இயற்றினாள்.
ஜம்முகமுடையவனான சிவபெருமானிடம் ஜம்முறை கணவனை வேண்ட அவனும் அவ்வாறே அருள் செய்தான். அந் நங்கையும், கங்கையில் மூழ்கி, தன்னந் தனியாக நின்று அழுத பொழுது அக் கண்ணிர்த் துளிகள் பொற்கமலங்களாகின. இவ் வதிசயத்தைக் கண்ட இந்திரன் வியப்பின் விளிம்பில் இந்திர
சேனையை நெருங்கினான்.
அருகே நின்ற சிவபெருமானை சிறிதும் மதியாது இந்திரன் செல்ல, வாசவனின் ஆணவத்தைக் கண்டு கோபித்து அவனை செயலற்றவனாக்கினான். பிறை முடிப் பெம்மான் செருக்குற்ற இந்திரனது படைக்கலங்கள் பயனற்றுக் கீழே விழ, அவனுக்குச் சிவபெருமான் ஒரு குகையுள் அடைப்பட்டிருந்த நான்கு இந்திரர்களைக் காட்டினான். அவர்களுடன் நீலகண்டனது கோபத்திற்கு ஆளான இந்திரன் உள்ளிட்ட ஐவரையும் இப்பெண்ணிற்குக் கணவனாகுமாறு பெருமான் விதிக்க, அவர்கள் பூமியில் பாண்டவர்களாகப் பிறந்து துருபதன் கன்னியை மணந்தார்கள். யமன், வாயு, அசுவினி தேவர்கள் இவர்கள் சம்பந்தத்தால் பிறந்த தருமன், பீமன், நகுலன், சகாதேவன், நால்வரும் பிலத்தில் அடைபட்டிருந்த நான்கு இந்திரர்கள் ஆவர். இவர்களுக்குத் தலைவனான மகபதியே அர்ச்சுனன். அர்ச்சுனனின் தந்தையும் இந்திரன் ஆவான்.
பஞ்ச பாண்டவர்களை மணந்தாள் திரெளபதி. அரக்கு மாளிகையில் மாளாமல் துருபதன் மகளையும் மணந்து முன்னிலும் அதிக வன்மையுடன் பாண்டவர்கள் திகழ்வது துரியோதனனின் பொறாமையைத் தூண்டியது. திருதராஷ்டிரன் மனதிலும் அதிக மகிழ்ச்சியை உண்டாக்கவில்லை.
பீஷ்மர், துரோணர், விதுரர், இவர்களின் வற்புறுத் தலுக்கிணங்க, பாதி ராஜ்ஜியத்தைக் கொடுக்க இணங்கி, பயனற்ற பிரதேசமாகிய காண்டவப்ரஸ்தத்தை அளித்தான். அதனை நிபுணர்களின் உதவி கொண்டு புதுக்கி இந்திரப்ரஸ்தம் ஆக்கினார்கள் பாண்டவர்கள். தரும புத்திரனை அரசர்க் கரசனாக்கி இராஜசூய யாகம் நடத்தினார்கள். எல்லா மன்னர்களும் வந்திருந்தார்கள். துரியோதனனும் வந்திருந்தான். அவன் பாண்டவர்களின் ஏற்றத்தைக் கண்டும், அவர்களுக்கு
இந்துக் கலைக்களஞ்சியம்

Page 243
ஏனைய அரசர்கள் தரும் மரியாதையை கண்டும் உளம் புழுங்கினான். எப்படியாவது அவர்களது செல்வத்தைக் கவர்ந்து அவர்களை இழிவுபடுத்த வேண்டும் என்ற அவனது எண்ணத்தில் உதித்ததே சூதாட்ட சபா மண்டபம், சகுனியின் துணையுடன் கவறாட்டத்தில் வெற்றிகண்டு தவறான முறையில் பாண்டவர்களின் செல்வங்களைக் கவர்ந்தான். அவர்களை அடிமை கொண்டான். எல்லாத் தவறுகளுக்கும் தலையாயதாக, யாகத்தீயில் தோன்றிய கற்பின் கனலியான அப் பாஞ்சாலியை அரசர்கள், பெரியோர்கள், ஆன்றோர்கள், அமர்ந்திருக்கும் அவையில் கூந்தலைப் பற்றி இழுத்து வந்து மாடு நிகர்த்த துச்சாதனன் துகிலுரிந்தான். தரும தேவதை நாணித் தலைகவிழ்ந்தது. கொள்ளிக் கட்டையால் தலையைச் சொறிவதைப் போன்று தங்கள் அழிவிற்குத் தாங்களே வித்திட்டுக் கொண்டார்கள் கெளரவர்கள். கண்ணபிரானின் திருவருளால், துச்சாதனன் திரெளபதிபதியின் துகிலை இழுக்க இழுக்க அது வளர்ந்தது. துச்சாதனன் களைத்து வீழ்ந்தான். துருபதன் மகள் மூண்டெழும் கோபம் கொப்பளிக்க ‘துரியோதனனின் ஆக்கை இரத்தத்தையும், பாவி துச்சாதனின் இரத்தத்தையும், கலந்து பூசியலாது என் குழல் முடியேன் ” என்றும் “இவ் இருவரோடு இவர்களைச் சார்ந்தோரும் மாண்டு அவர்களின் மனைவியார் கூந்தலிருக்கும் வரையும் கூந்தலை முடியேன், தனது மடிமீது வந்தமர் என்று கூறிய துரியோதனன் தொடை வழியே பறவைகள் தங்கள் அலகினால் குத்தித் தின்னுமாறு உயிர் போகக் கடவது" என்றும் சபித்தாள்.
சூதாட்டப் பணயத்தின் படி பாண்டவர்கள் பன்னிரண்டு ஆண்டு வனவாசமும், ஒராண்டு அஞ்ஞாத வாசமும் (கரந்துறைதல்) மேற்கொண்டு, அத்தினாபுரத்தை விட்டுச் செல்லும் பொழுது பாஞ்சாலி அரற்றி அழ தீய உற்பாதங்கள் தோன்றின.
வனவாசம் செய்யப் புறப்பட்ட பாண்டவர்கள் முனிவர்களும் பெரியோர்களும் இருந்த காம்ய வனத்திலே திரெளபதியுடன் தங்கியிருந்தார்கள். கண்ணபிரானும் போருகுலத்தவர்களும் விருஷ்ணி குலத்தவர்களும், சேதி தேசத்து திருஷ்ட கேதுவும், கேகயர்களும் பாண்டவர்களைச் சந்தித்து மகிழ்ந்தார்கள்.
இந்நிலையில் பாசுபத அஸ்திரம் பெறச் சிவபெருமானைக் குறித்துத் தவஞ் செய்ய அர்ச்சுனன் இமயமலைக்குச் சென்றான். அர்ச்சுனனின் பிரிவைப் பாண்டவர்களினால் பொறுக்க முடியவில்லை. பாண்டவர்களுடன் பாஞ்சாலியும் இமயம் நோக்கிச் சென்றாள். சுபாகுவின் தேசமாகிய குலிந்த நாட்டை அடைந்தார்கள். அவனால் உபசரிக்கப்பட்டு நாராயணா சிரமவனத்தை அடைந்தார்கள். அங்கு சில நாட்கள் தங்கினார்கள்.
இந்துக்கலைக்களஞ்சியம்

ஒருநாள் வடக்கிலிருந்து வீசிய காற்றில் மணம் வீசும் அற்புதமான செளகந்திக மலர் ஒன்று பாஞ்சாலியிடம் வந்து வீழ்ந்தது. அதன் அழகிலும் ஒளியிலும், நறுமணத்திலும் மனதைப் பறிகொடுத்த அவள், பீமனிடம் சென்று இந்த மலர்ச் செடி தனக்கு வேண்டும் என்று விரும்பினாள். அவளது விருப்பத்தைப் பூர்த்தி செய்யத் தேவலோகம் சென்று தனது தன்மையன அனுமனைச் சந்தித்து மகிழ்ச்சியுடனும் மலருடனும் திரும்பினான் பவன குமாரன். சடாசுரன் என்ற அரக்கன் ஒர் அந்தண வடிவம் கொண்டு திரெளபதியைத் தூக்கிச் செல்ல அவ்வரக்கனை பீமன் வதைத்துப் பாஞ்சாலியை மீட்டான்.
முனி பத்தினிகளுடன் திரெளபதி நீராடுகையில் மிதந்து வந்த தாமரை மலர்மீது விருப்பம் கொள்ள, அதனைப் பெற விரும்பியபடி குபேரனது அளகாபுரி சென்று தன்னை எதிர்த்த இயக்கர் வாரணர் மணிமான் உட்பட அனைவரையும் வதைத்து மலரைக்கொண்டு வந்து மனைவியிடம் தந்தான் மருத்து
மைந்தன்.
கோபமே உருவான துர்வாச முனிவர் துரியோதனனிடம் வந்து விருந்துண்டு, அவனது வஞ்சனையான வேண்டுதலை ஏற்று சீடர்கள் புடைசூழப் பாண்டவரிடம் சென்றார். தருமபுத்திரர் முனிவரை எதிர்கொண்டார். தம்பிமார்களுடன் வணங்கி நின்றார் “நாங்கள் ஆற்றில் நீராடி வருகின்றோம். அன்னம் தயாராகட்டும்” என்று கூறிச் சென்றார்.
வனவாச ஆரம்பத்தில் யுதிஷ்டிரன் செய்த தவத்தின் பயனாக சூரியக் கடவுள் நேரே தோன்றி ஒர் அட்சய பாத்திரத்தை அளித்து “பன்னிரண்டு ஆண்டுகள் இதன் மூலம் உங்களுக்கு அன்னம் அளிப்பேன், நாள்தோறும் திரெளபதி இந்தப் பாத்திரத்தைக் கொண்டு எவ்வளவு பேருக்கு அன்னம் அளிக்க விரும்புகின்றாளோ அது வரையில் அன்னம் வளரும். அனைவருக்கும் அளித்துவிட்டு திரெளபதியும் புசித்த பின் பாத்திரத்தின் சக்தி மறைந்து விடும்.” என்று கதிரவன் கூறி மறைந்தான்.
நாள் தோறும் அந்தணர்களும் அதிதிகளும் புசிப்பார்கள். பின்பு தம்பிகள் உண்டபின் தருமபுத்திரன் போஜனம் செய்வான். கடைசியாக திரெளபதி உண்டபின் அட்சயபாத்திரத்தின் சக்தி அற்றுவிடும். துர்வாசர் விருந்திற்கு வந்த அன்று நண்பகல் கடந்து விட்டதால் அனைவரும் உண்டு முடிந்ததும் அட்சய பாத்திரமும் கழுவி வைக்கப்பட்டு விட்டது.
முனிவரும் சீடர்களும் நீராடி விட்டுப் பசியோடு வந்து விட்டால் உணவிற்கு எங்கே போவது என்ன செய்வது என்ற மனக்கவலையுடன் ஆபத்பாந்தவனான கண்ணபிரானை திரெளபதி துதித்தாள். அவளது துயர் தீர்க்க வந்த வாசுதேவனோ "திரெளபதி எனக்குப் பசிக்கிறது. சீக்கிரம் அன்னம் கொண்டு
213

Page 244
வா’ என்றான். கிருஷ்ணனை மனம் நொந்து ‘இதென்னி சோதனை - பாத்திரத்தின் சக்தியும் அற்றுப் போய்விட் நிலையில், துர்வாசர் சீடர்கள் பதினாயிரவர்களோடு உண உண்ண வந்திருக்கிறார். அவர்கள் நீராடி வந்து விட்டால் என்6 செய்வது என்று தெரியாமல் தவித்து, உன்னை உதவிக்( அழைத்தால் நீயும் பசிக்கிறது என்கிறாயே’ என்று வருந்தினால்
இதனைச் செவியேற்காது "பாஞ்சாலியே எனக்கு மிகவு பசிக்கிறது. அட்சய பாத்திரத்தைக் கொண்டுவா’ என்றான் பாத்திரத்தில் ஒரு சோற்றுப் பருக்கையும், கீரையு ஒட்டிக்கொண்டிருந்தது. அதனை எடுத்து “இது விசு ரூபனாகிய ஹரிக்கு உணவாகி அவன் பசி தீர்ந்து பிரீ, அடைவானாக” என்று மனதில் சொல்லி சோற்று பருக்கையையும் வாயில் போட்டுக் கொண்டார். வெளிே சென்று பீமசேனனைப் பார்த்து “நீ சீக்கிரம் ஆற்றுக்குப் போ முனிவர்களை அழைத்து வா” என்று கூற, நீராடி முனிவர்களுக்கோ வயிறு நிறைந்து பாண்டவர்களில் கோபத்திற்குப் பயந்து அங்கிருந்தே ஒடிவிட்டார்கள்.
நெடுநாட்கள் சென்றபின் செல்லும் வழியில் ஒர் அற்புதமா6 நெல்லிக்கனியைக் கண்டாள். அதனைப் பறித்துத் தருமா பார்த்தனைக் கேட்டாள். பாஞ்சாலன் பாவை கேட் முடிப்பதற்குள் தனது வில்லினால் அக்கனியைக் கொய்தால் இச்செயலைக் கண்டவர்கள் இந்த அருநெல்லிக்கனி அமித்தி முனிவரின் உணவுக்காகப் பழுக்கும்; ஆண்டொன்றிற் ஒருகனி வீதம் பழுக்கும் இதனைக் கொய்தவனைக் கண்டா
அவர் என்ன சாபம் இடுவாரோ என்று பேசிக் கொண்டனர்.
நெஞ்சம் நடுக்குற்ற விசயன் அக்கனியைத் தருமர் மு வைத்துத் தன் செயலுக்காக வருந்தினான். பீமன் முதலியே ஒவ்வொரு உபாயம் கூற, திரெளபதி தன் செயலுக்காக வருந்தி கண்ண பெருமானை நினைக்க, மதுசூதனன் அவர்கள் மு தோன்றி, நீங்கள் அனைவரும் உங்கள் மனதில் உள்ளன ஒளிக்காமல் கூறினால் பழம் மரத்தில் பொருந்திவிடும் என்றா? தருமர் முதல் சகாதேவன் ஈறாக அவரவர்கள் மனக்கிடக்கையை
கூற, துருபதன் கன்னி,
"ஜம்புலன் களும் போ லைவரும் பதிக
ளாகவும் இன்னம்வே றொருவன் எம்பெருங் கொழுநனாவதற் குருகு மிறைவனே எனது பேரிதயம் அம்புவி தனிற்பெண் பிறந்தவ ரெவர்க்கு மாடவ ரிலாமையி னல்லால் நம்புதற் குளரோ வென்றனள் வசிட்ட
னல்லற மனிவியோ யனையாள்'
214

T
க்
T
க்
ஐம்புலன்களும் போல் ஐவர் பதிகளாக இருக்கவும், வேறு ஒருவனை ஆறாவது பதியாகக் கொள்ள இதயம் விரும்புவதாகவும், பூமியில் பிறந்த எந்தப் பெண்களும் பிறரை விரும்பும் இயல்பு படைத்தவரே. யாவரும் தாம் விரும்பிய ஆடவர் கிடைக்கப் பெறாமையில் தான் ஒரு கணவரோடு வாழ்கின்றனர். என்ற உண்மை நிலையைக் கூறியவுடன் நெல்லிக்கனி மரத்தில்
பொருந்தியது.
பன்னிரண்டு ஆண்டுகள் வனவாசம் நிறைவுற்றது. ஒரு ஆண்டு அஞ்ஞாத வாசம் மறைந்து வாழ வேண்டும் எல்லோரும் ஆலோசித்து விராடனுடைய நாட்டிற் சென்று மாறுவேடத்தில் வாழ்வதாக முடிவு செய்தனர். அதன்படி தருமர் கங்கபட்டராகவும், பீமன் பலாயன் என்ற பெயரில் மடைத் தொழில் வல்லவனாகவும், முன்னர் ஊர்வசி நீ பேடியாகுக என்று அர்ச்சுனனுக்கு இட்ட சாபப்படி பிருகந்நளை என்ற பேடியாகவும், குதிரைகளைப் பராமரிக்கும் தாமக் கிரந்தியாக நகுலனும், மாடுகளைப் புரக்கும் தந்திரி பாலனாக சகாதேவனும், விராடனுடைய மனைவியாகிய சதேகூழினைக்கு வண்ணமகளாக விரதசாரிணி என்றும் பெயருடன் வேலைக்கு அமர்ந்தனர்.
இவ்வாறு இருந்து வரும் நாளில் சுதேசஷணையின் தம்பி கீசகன் விராட நாட்டின் சேனாபதி. பலசாலி; ஆனால் தீயவன் அவன் வண்ண மகளாகப் பணியாற்றும் திரெளபதியின் அழகில் மயங்கி அவளை அடைய நினைந்தான். ஆனால் திரெளபதி யாகிய விரதசாரிணி இதற்கு இணங்காமல், தன்னை யாராவது தவறான எண்ணத்துடன் நெருங்கினால் தனது கணவர்களான கந்தர்வர்கள் கொன்று விடுவார்கள் என்று அச்சுறுத்தினாள். ஆனால் காமம் தலைக்கேறிய கீசகன் இதனைச் செவியேற்க வில்லை. தனது சகோதரியிடம் எப்படியாவது விரதசாரிணியை தன்னிடம் அனுப்புமாறு கீசகன் கூற, அரசமாதேவியும் எத்தனையோ அறமொழிகள் கூறியும் கேட்காத தம்பியின் விருப்பத்திற்கு இசைந்து பலகாரங்களையும், மதுவையும் கீசகனுடைய வீட்டில் இருந்து பெற்றுவருமாறு திரெளபதியை அனுப்பினாள். பாஞ்சாலி எவ்வளவு மறுத்தும் அரசி கேட்க வில்லை. கீசகன் காமாந்தகாரனாகி அவளை அடைய முயன்றான். துருபதபுத்திரி அவனைத் தள்ளிவிட்டு பீமனிடம் சென்று தன்க்கு நடந்தவற்றைக் கூற “இப்பொழுதே அவனைக் கொல்வேன்’ என வெகுண்டெழுந்த விருகோதரனை அமைதிப்படுத்தி, மறுநாள் யாரும் இல்லாத இடத்தில் அவனை வரவழைத்துக் கொல்லத் திட்டமிட்டனர்.
மறுநாள் கீசகன் கிருஷ்ணையிடம் வந்த பொழுது, அன்று இரவு நடனசாலைக்கு வருமாறு கூற, கீசகனும் அதனை உண்மையென்று மகிழ்ந்து இரவு நடனசாலைக்கு செல்ல மறைந்திருந்த வீமன் கீசகனை வதம் செய்தான்.
இந்துக் க்களஞ்சியம்

Page 245
பதின்மூன்று ஆண்டுகள் முடிந்தவுடன் பாண்டவர்கள் திரெளபதியுடன் உபப்பிலாவிய நகருக்கு வந்தனர். மந்திரா லோசனை நடத்தினர். கெளரவர்கள் சஞ்சயனைத் தூதாக அனுப்பினார்கள். பாண்டவர்களின் சார்பில் கண்ணபிரான் தூதுவனாகச் செல்லத் துணிந்தான். புறப்படுவதற்கு முன் வெகுநேரம் பாண்டவர்களுடன் பேசிக் கொண்டிருந்தான். பீமன்
கூட சமாதானத்தையே விரும்பிப் பேசினான்.
ஆனால் திரெளபதிக்குச் சூதாட்டச் சபையிலே பட்ட அவமானத்தை மறக்க முடியவில்லை. “மது சூதனனே! விரித் திருக்கும் என் கூந்தலைப்பார். அர்ச்சுனனும், பீமனும், யுத்தம் வேண்டாம் என்றாலும், எனது ஐந்து மக்களும் துணையாகக் கொண்டு வயோதிபராயினும் எனது தந்தை போரை நடத்துவார். அப்படியும் இல்லையென்றால் சுபத்திரையின் குமாரன் அபிமன்யுவுடன் எனது புதல்வர்களே கெளரவர்களுடன் போர் செய்வார்கள். மூள்கின்ற கோபத்தீயைத் தருமருக்காகப் பதின் மூன்று ஆண்டுகள் அடக்கி வைத்திருக்கிறேன். இனிமேலும் அது இயலாது” என்று கண்ணீர் விட்ட திரெளபதியின் கண்ணிரைத் துடைத்து நிச்சியமாகப் போர் மூளும் என்ற செய்தியை அவளுக்குத் தெரிவித்து கேசவன் அத்தினாபுரம் நோக்கிச் சென்றான்.
குருக்ஷேத்திரப் போர் மூண்டது. திரெளபதி தனது சபதத்தை முடித்தாள். இருதரப்பிலும் எல்லோரும் மாண்டார்கள். உபபாண்டவர்களும் மாண்டனர். இறுதியாக எஞ்சியது பாண்டவர்கள் ஐவரும் கிருபர், கிருதவர்மன், அசுவத்தாமன் ஆக எண்மரே. பூபாரம் தீர்ந்தது. (வ.வை.)
gildogorarir
தில்லானா விறுவிறுப்பும் கவர்ச்சியும் கச்சிதமுமான ஒர் இசை உருப்படியாகும். இது “திலானா” ஆகிய தாளச் சொற் கட்டுகளால் அமைந்துள்ளது எனப் பேராசிரியர் பி. சாம்பமூர்த்தி கூறியுள்ளார். கலாநிதி கபிலா வாத்ஸ்யாயன் இக் கருத்தினைச் சற்று விரித்து குறிப்பிட்ட தாளத்திற்கு அமைவாகக் குறிப்பிட்ட ராகத்திற்குப் பாடப்படும் நினைவூட்டலில் அமைந்துள்ள ஓர் இசை உருப்படியாகும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
ஹிந்துஸ்தானி இசை உருப்படிகளிலொன்றான “தரானா” என்பதிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டதே "தில்லானா’ எனப் பொதுவாகக் கொள்ளப்படுகின்றது. லக்ஷணகிரந்தங்கள் தரும் சான்றுகளின்படி இக்கருத்தினை ஏற்றுக்கொள்ள முடியாது. சாஸ்திரீயப் பிரபந்தப் பாடல்களை நோக்கும் போது, இவற்றிலே ஸ்வரம், பிருதம், பதம், தேனகம், பாடம், தாளம் எனும் ஆறு அங்கங்கள் உள்ளனவாகக் கூறப்படுகின்றது. இவற்றுள் பாடம் என்பது வாத்தியங்களில் பேசும் சொற்களை சாஹித்தியத்தின் ஒருபகுதியிலமைப்பதாகும். இந்த ஆறு அங்கங்கள் அல்லது
இந்துக் கலைக்களஞ்சியம்

உறுப்புக்களையும் ஒவ்வொன்றைத் தனித்தனியே முக்கியமாக வைத்துப் பிற்காலத்தில் உருப்படிகள் எழுந்தன. இந்த முறையில் பாடம் என்ற வாத்தியச் சொற்களைச் சிறப்பாக வைத்து எழுதினால் தில்லானா போன்ற அமைப்புகள் வந்து சேரும் எனப் பிரபல நாட்டியக்கலைஞர் பாலசரஸ்வதியும் பேராசிரியர் வெ. ராகவனும் கூறியுள்ளனர். இதே கருத்தினை கலாநிதி ஆருத்திரா பேராசிரியை கெளரி குப்புசுவாமி, கலாநிதி எம். ஹரிஹரன் முதலியோரும் கொண்டுள்ளனர். எனவே இவ் இசை உருப்படிக்கான அடிப்படை தென்னிந்தியாவில் உள்ளது. ஆனால் சில வரலாற்றுச் சம்பவங்களால் வட இந்தியத் தொடர்பும் இதில் ஏற்பட்டுள்ளது.
இடைக்காலத்தில் தென்னிந்தியாவில் ஏற்பட்ட வடபுல முஸ்லிம் படையெடுப்புக்களின் விளைவாகக் கோபால நாயக்கர் என்ற பிரபல இசைவாணர் சிறைக்கைதியாக வட இந்தியாவுக்குக் கொண்டு செல்லப்பட்டார். அங்கே தில்லியில் முஸ்லீம்களின் நண்பராயினார். அவரின் அபாரமான இசைத் திறமையினை அவர்கள் பாராட்டிப் பயன்படுத்தினர். அக் காலகட்டத்தில் தில்லியில் ஆட்சி செய்த முஸ்லிம் பெருமன்னனான அலவுத்தின் கில்ஜியின் (கி.பி 1296-1315) அரண்மனை இசைக்கலைஞரும், பாரசீக மொழிப் புலவரும் ஹிந்துஸ்தானி இசையின் பிதாமகரெனக் கருதப்படுபவருமாகிய அமீர்குஸ்ரவ் என்பவருக்கு கோபால நாயக்கர் வேறு விடயங்களுடன் சங்கீதரத்னாகரம் கூறும் கரணப்பிரபந்தத்தையும் கற்றுக்கொடுத்தார் என அறியப்படுகின்றது.
இந்தக் கரணபிரபந்தமே தில்லானா அல்லது தரானா என மலர்ந்தது. அமிர் குஸ்ருவால் உருவாக்கப்பட்ட இசை உருவமான தரானா என்பது கரண பிரபந்தத்திலிருந்தும், திருவாழ்த்துப் பாடல்களில் இருந்தும் எடுக்கப்பட்ட சுருக்கமான பதங்களையும் (தும், தர்தானி முதலியன) பாரசீக மொழி வார்த்தைகளையும் சேர்த்து எழுதப்பட்டதாகும். குஸ்ரு என்பவர் இசைவடிவம் அமைந்த உருப்படியே தரானா எனப்பட்டது. அதனால் தில்லானா அல்லது தரானா பிரபந்தத்தின் இசை அடிப்படையைக் கொண்ட வட தென்னிந்திய இசைக்கலையின் சேர்க்கை எனலாம். “எனவே தில்லானா, கர்நாடக, இந்துஸ்தானி சம்பிர தாயங்களுக்குள்ளே நேர்ந்த கொடுக்கல் வாங்கல்களைக் காண்பிக்கும் ஓர் இசை உருப்படியாகும் ”
ஏற்கனவே குறிப்பிட்ட “பாடம்” என்பது வாத்திய அலங்கார அல்லது இசைக்கருவிகளின் எதிரொலியையும், பின்பு தாள சொற்கட்டுகளால் ஏற்படுத்தப்பட்ட சொல்லாகும். அதனால் அது காலப் போக்கில் தோல் இசைக்கருவிகளின் இசை அசைவுகளை உணர்த்தும் சொல்லாக மாறிற்று. முரஜ பாடம் என்பது மிருதங்கம், மத்தளம், முரசம் போன்ற தோலினாலான பல கருவிகளிலிருந்து பிறந்த இசை அதிர்வை உணர்த்துகிறது. தா, நம், கி, டா, தை, லா, நாம், தோம், தம், ஜம், ணம், த்ரு முதலியன “பாடத்தால்’ உணரக் கூடிய எளிய சொற்களாகும். இந்த
215

Page 246
ஒற்றைப் பதங்கள் சேர்ந்தால் தக்க, திக்கி, தக்கதிமி, தக்கஜணு, போன்ற ஜதிகள்உருவாகின்றன. இதுவே தில்லானாவின் பிறப்புக்கு காரணமாக இருக்கிறது. பிரபந்தத்தின் ஒன்றான பாட வகையைச் சேர்ந்த இக் கூட்டுப் பாதங்கள் 'ஜதிகள்” என்று அழைக்கப்படும். ஏனைய இசை உருப்படிகள் போலவே ஏற்கனவே குறிப்பிட்டவாறு தில்லானா ஒரு குறிப்பிட்ட ராக, தாளத்தில் அமைந்திருக்கும். ஆனால் சாஹித்தியச் சொற்களைத் தவிர்த்து வாத்தியத்திலும், ஆலாபனத்திலும், இடம்பெறும் தீம்தன நாத்ருதீம், தில்லானா, பீங்கு, தல்லாங்கு முதலிய சொற்களைக் கொண்டே இது அமைக்கப்படும்.
தில்லானாவிலே சொற்கட்டுக்கள் சிறந்த அம்சமாகும். இந்த உருப்படியை இசைக்கும், நடனத்திற்குமென இரு வகையாகக் கூறலாம். இசைக் கச்சேரிகளுக்குரிய தில்லானாக்களிலே ராக, பாவத்திற்கு முதலிடம் அளிக்கப்படும். கர்நாடக இசைக் கச்சேரிகளிலே இது பலமான ராகம், தாளம், பல்லவிக்குப் பிறகு இறுதியாக அழகான அமைப்பிலே பாடப்படும். ஹரிகதா காலட்ஷேபத்தில் வழிவழியாக அறிமுகவுரைக்கு அடுத்தபடியாக ஒர் இசைச் சூழலை உருவாக்கப் பாடப்படும் சில ஹரிகதா வித்துவான்கள் கதை கேட்டவர்களின் அயர்ச்சியைத் தவிர்க்க உடனடியாகக் கதையிலிருந்து விறுவிறுப்பான தில்லானாவுக்குச் செல்வதுண்டு. இன்று தில்லானா இசை நிகழ்ச்சிகளிலும் பார்க்க நடனத்திலே தான் அதிகமாக நன்கு பயன்படுத்தப்படுகின்றது. பரதநாட்டிய நிகழ்ச்சிக் கிரமத்தில் இது செளக்க நடையுடன் அபிநயங்களும் கூடிய பதங்கள் ஆடிய பின் இடம்பெறும். வேகமான நடையுள்ள விறுவிறுப்பான தில்லானாவை ஆடுவதால் கச்சேரி களைகட்டும். எனவே இந்த மாறுதல் வரவேற்கப் படுகின்றது. இது கலைஞர்களின் மேம்பட்ட ஆட்டத்திறனை எடுத்துக் காட்டும் இசை அசைவுகள், அழகிய இசை நிருத்தங்கள் முதலியன அறிமுகப்படுத்தப்படுவதால் தில்லானா நடனத்தின் அழகை மேலும் அதிகரித்துக் காண்பிக்கின்றது.
தில்லானா பொதுவாகப் பல்லவி, அநுபல்லவி, சரணம் ஆகிய மூன்று பகுதிகளைக் கொண்டிருக்கும். பல்லவி, அநுபல்லவி, ஜதிகளைக் கொண்டதாயிருக்கும். சரணம் பொதுவாக ஒன்றாகத்தான் இடம்பெறும். இதிலிரு பகுதிகள் உள்ளன. முதல் அரைவாசிப் பகுதியிலே இதனை இயற்றியவரின் முத்திரையும், இது கூறும் தெய்வம் அல்லது அரசன் அல்லது ஆதரவாளர் பற்றியதாக இருக்கும். இரண்டாம் அரைவாசிப் பகுதியிலே திரும்பவும் ஜதிகள் இடம்பெறும். சில தில்லானாக்கள் பல்லவியும் அநுபல்லவியும் அல்லது பல்லவியும் சரணமும் கொண்டவை. பல்லவி, அநுபல்லவி கொண்ட தில்லானாக்களில் அநுபல்லவி ஜதிகளையும், சிட்டைஸ்வரங்களையும், சாஹித்தியத்தையும் கொண்டதாக இருக்கும்.
மேற்குறிப்பிட்ட இலகூடிணங்களைக் கொண்ட தில்லா
னாக்களில் பெரும்பாலும் காலத்தால் முந்தியது பந்துவராளி
216

ராகம், ஆதிதாளத்தில் அமைந்ததும், அச்சுதவரத என்ற முத்திரை கொண்டதுமாகும். மேலத்தூர் வீரபத்திரய்யாவால் இது
இயற்றப்பட்டதெனக் கருதப்படுகிறது.
இசைவல்லுநர் கருத்துப்படி வேங்கடமகி கூறியுள்ள நாராணய கெளளராகம், மத்ய தாளத்திலமைந்துள்ள கைவர பிரபந்தமே தில்லானாவின் முன்னோடியாகும். ஏனெனில் இப்பிரபந்தம் சொல்லுக்கட்டுகளில் (பாடம்) தொடங்கி அவற்றுடனேயே முடிவடைகின்றது. இது பற்றி முன்னரும் குறிப்பிடப்பட்டது. ஆனால் பிறிதொருசாரார் தஞ்சாவூரிலே மராத்தியரின் ஆட்சிக்காலத்தில் வட இந்திய இசை (ஹிந்துஸ்தானி இசை) மரபிலுள்ள தரானா தில்லானாவாகப் பிரபல்யமாயிற்று எனக் கூறுவர். ஆனால் தரானாவின்
அடிப்படை பற்றி முன்னர் குறிப்பிடப்பட்டுள்ளது.
தில்லானாவிலுள்ள தாள வித்தியாசமும், ஆட்டத்தின் போக்கும், அழகும் மிகச் சிறப்பானவை. பதங்களிலே பாவத்தின் போக்கு விரிவாகப் புலப்படுவது போலத் தில்லானாவில் லயத்தின் முழுமலர்ச்சியும் சுத்த நிருத்தத்தின் மூலம் புலப்படுத்தப்படும். இதிலே அழகுமிக்க சிலைகள் போன்ற நடன நிலைகளும், கச்சிதமான ஆட்டங்களும் நன்கு சோபிப்பன. பளிச்சிடும் தீர்மானங்கள், அழகிய நிலைகள் ஆகியனவற்றைக் காட்டும் வண்ணம் ஒவ்வோர் அடவும் பெரும்பாலும் இரண்டு அல்லது மூன்று வகையில் வேகமாக இடம் பெறும். எனவே பரத நாட்டியக் கச்சேரியிலே நன்கு இடம் பெறும் தில்லானா சிறப்பான முத்தாய்ப்பாக மிளிர்கின்றது.
கடந்த மூன்று நூற்றாண்டுகளிலே பலர் நேர்த்தியான தில்லானாக்களை இயற்றியுள்ளனர். இசை மேதை மஹாவைத்தியநாதய்யரின் கானராக சிம்ம நந்தன தாளத்தில் அமைந்த “கெளரிநாயக” தில்லானா நன்கு குறிப்பிடற்ப்பாலது. சிம்மநந்தன தாளத்திலமைந்த ஒரேயொரு தில்லானா இது எனக் கூறப்படுகின்றது.
குன்னக்குடி கிருஷ்ணஐயரின் தோடிராகம், ஆதிதாளத் திலமைந்து “தானி தனதிரன” எனத் தொடங்கும் கம்ப ராமாயணத் தில்லானா, கிருஷ்ணஸ்சுவாமி ஐயாவின் “நாதிரி தாணி தீம்தரி” எனத் தொடங்கும் தில்லானா முதலியன இவற்றை இயற்றியவர்களின் திறனை நன்கு வெளிப்படுத்துவன. ஊத்துக்காடு வெங்கடசுப்பையர், தஞ்சை, பொன்னையா, சுவாதித் திருநாள், பட்டணம் சுப்பிரமணிய ஐயர், இராமநாதபுரம் பூச்சி பூரீநிவாச ஐயங்கார், ஹிரிகேசநல்லூர் முத்தையா பாகவதர், எம். பால முரளி கிருஷ்ணா, லால்குடி ஜி. ஜெயராமன், மஹாராஜபுரம் சந்தானம், எஸ். கல்யாணராமன் முதலியோர்
தில்லானா இயற்றியுள்ளனர். யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த
இந்துக் கலைக்களஞ்சியம்

Page 247
ந. வீரமணிஜயர், ஏ. கே. ஏரம்பமூர்த்தி முதலியோரும் தில்லானாக்கள் இயற்றியுள்ளனர்.
கர்நாடக இசைக்குரிய தில்லானாக்கள் தமிழ் சமஸ்கிருதம், தெலுங்கு முதலிய மொழிகளில் இயற்றப்பட்டுள்ளன.
ஏற்கனவே குறிப்பிட்டவாறு ஹிந்துஸ்தானி இசையில் இது தரானா என அழைக்கப்படுகின்றது. இது ஹிந்துஸ்தானி இசையிலும், வட இந்திய சாஸ்திரீய நடனங்களிலொன்றான “கதக்’கிலும் பயன்படுத்தப்படுகின்றது. இது வடஇந்திய மொழியான ஹிந்தி முதலியனவற்றிலமைந்திருக்கும். (வி.சி.)
O
தில்லைவாழந்தணர்கள்
கோயில் என சிறப்பிக்கப்படுவது சிதம்பரம். சிதம்பரம் தில்லை, சிற்றம்பலம், பெரும்பற்றப்புலியூர், புலியூர் எனப் பல பெயர்களால் அழைக்கப்படுகிறது. மூர்த்தி, தலம், தீர்த்தம் எனும் மூன்று சிறப்புக்களிலும் சிறந்து விளங்கும் தில்லை, பஞ்சபூதத் தலங்களில் ஆகாயத்தின் வடிவுடையதாகும். படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் ஆகிய ஐந்தொழில்களும் நடராஜப் பெருமானின் ஆனந்தத் தாண்டவத்தில் அமைந்துள்ளது. இறைவனின் முழுமையான விளக்கமும் நிறைந்துள்ள தலம் இதுவாகும். தில்லை மரங்கள் சூழ்ந்த இடத்தில் தோற்றம் பெற்றதால் தில்லை என்றும் சித்-ஞானம், அம்பலம் என்றால் மன்றம் சிற்றம்பலம் என்றால் ஞானவெளியாகிய மன்றில் இறைவன் நடனம் புரியும் தலம் சிற்றம்பலம் எனவும் போற்றப்படுகிறது. இங்கு தில்லைக் கூத்தனுடன் இடப்பாகத்தில் சிவகாமசுந்தரியும் எழுந்தருளியுள்ளார்.
தரிசிக்க முத்தி தரும் தில்லையம்பலத்திற் கனகசபை, தேவசபை, நிருத்தசபை, இராஜசபை, ஆனந்த தாண்டவம் நடை பெறும் சித்சபையுடன் ஐந்து சபைகள் உள்ளன. இக்கோயிலின் ஆதி அமைப்பு மரத்தினால் காணப்படுவதால், இது பல்லவர் கால குகைக் கோயில்களுக்கும் காலத்தால் முந்தியது எனக் கருதப்படுகிறது. நடராஜப் பெருமான் ஆனந்தத் தாண்டவம் ஆடும் திருச்சிற்றம்பலமே ஆலயத்தின் கருவறை. இதன் கூரை தங்க ஒடுகளினால் வேயப்பட்டுள்ளது. இவ்வாலயம் மனித உடலின் அமைப்பைக் கொண்டு விளங்குகிறது. தில்லையில் பத்துத் தீர்த்தங்கள் உள்ளன. மொழிக் கெல்லாம் அடியாகிய ஒலி தோன்றியதும் சிலம்பொலியாகிய பரத நாதம் தோன்றியதும் இத்தலத்திலேயே ஆகும். சைவத் திருமுறையைப் பாதுகாத்து அளித்ததாலும், இசையுலகிற்கே பிறப்பிடமாக இருப்பதாலும், அருள் விளக்கத்து அடித்தளமாக இருப்பதாலும், அன்றும் இன்றும் என்றும் திருமுறை ஒதுபவர்கள் திருச்சிற்றம்பலம் எனத் தொடங்கி திருச்சிற்றம்பலம் கூறியே முடிக்கின்றனர்.
இந்துக் கலைக்களஞ்சியம்

தரிசிக்க முத்தி தரும் தொன்மை வாய்ந்த தில்லையம்பலத்தில் வாழ்ந்து தில்லைக் கூத்தருக்குத் தொண்டு செய்து பூசித்து வரும் அந்தணர்களே “தில்லைவாழந்தணர்கள்’ என சிறப்பிக்கப் படுகின்றனர். இமயமலையில் அந்தர்வேதியில் நடந்த யாகத்திற்குப் பிரமனால் அழைத்துச் செல்லப் பெற்று திருப்பிக் கொண்டு வந்து விட்ட போது மூவாயிரம் பேர்களில் ஒருவர் குறைந்து காணப்பட்டார். அப்போது நடராஜப்பெரு மான்'மூவாயிரவருள் யாமும் ஒருவர்” எனத் திருவாய் அருளப் பெற்ற சிறப்பு வாய்ந்தவர்கள் தில்லை வாழ் அந்தணர்கள் எனவே 2999 அந்தணர்களுடன் நடராஜப் பெருமானும் சேர்ந்து “தில்லை மூவாயிரவர்” எனச் சிறப்பிக்கப்படுகின்றனர்.
தில்லைவாழ் அந்தணர்களின் இயல்புகளை திருத் தொண்டர் புராணத்தில் வரும் தில்லைவாழந்தணர் சருக்கத்தில் புராணம் பின்வருமாறு கூறுகிறது. "போற்றி நீள் தில்லை வாழ் அந்தணர் திறம் புகலலுற்றேன்; நீற்றினால் நிறைந்த கோலம் நிருத்தனுக்குரிய தொண்டாம், போற்றினார் பெருமைக் கெல்லை ஆயினர் பேணி வாழும், ஆற்றினார் பெருகு அன்பால் அடித்தவம் புரிந்து வாழ்வார்’ எனத் தொடங்கி அந்தணர் தம் சிறப்பைக் கூறிச் செல்கிறது. இவர்கள் நடராஜப் பெருமானுக்குத் தொண்டு செய்வதைத் தவமாகக் கொண்டு, நித்தமும் வேதமோதி, மங்களமான தொழில்கள் செய்து தம் உயர் பண்பினின்றும் வழுவாது வாழ்பவர்கள்; திருநீறு அணிந்த
கோலமுடையவர்கள்.
உலகம் உய்யும் பொருட்டு முறைப்படி எரிமூன் றோம்புபவர்கள். அறத்தினைப் பொருளாகக் கொண்டு வேதங்களையும், வேதாங்கங்களையும் பயில்வதே இவர்களின் பொழுது போக்கு, கரவு மாசு இல்லாதவர்கள். மாறுபாடு இல்லாத ஒழுக்கம் உடையவர்கள். அறு தொழில் ஆட்சியால் கலியின் கொடுமையை மாற்றுபவர்கள். திருநீறே செல்வம் எனக் கொள்ளும் உயர்ந்த உள்ளம் கொண்டவர்கள். சிவனது அன்பைப் பெறுவதே தாம் பெறும் பேறு என எண்ணுபவர்கள் தில்லைவாழந்தணர்கள். ஞானம் முதலிய நான்கு பாதங்களையும் அறிந்தவர்கள், தானமும், தவமும் செய்வதில் வல்லவர்கள்.
தில்லைவாழ் அந்தணர்களின் கட்டுப்பாடுகளையும் மரபுகளையும் விளக்கும் பல நிகழ்ச்சிகளில் சிலவற்றைப் பெரிய புராணம் பின்வருமாறு கூறுகிறது. சைவ நாயன்மார்கள் ஒருவரான கூற்றுநாயனார் சோழர்களுக்குப் பிரதிநிதியாக இருந்து தஞ்சை மாவட்டத்தின் திருக்களந்தை எனும் ஊரிற் சிற்றரசராக விளங்கியவர். சோழ அரசு வலிகுன்றிய காலப்பகுதியில் அதிகார பலத்தை பயன்படுத்தி பல நாடுகளுக்கு அதிபதியானார். முடிமன்னராக ஆவதற்கு முடியவில்லை. அக்காலத்தில் அரசர்களுக்கு முடி சூட்டும் வைபவத்தை நடத்துபவர்கள் தில்லை வாழந்தணர்கள். இதன் படி கூற்றுவரும் இவர்களிடம் சென்று கேட்டபோது ‘நாம் சோழ மன்னருக்கன்றி
27

Page 248
மற்றவர்களுக்கு முடி சூட்டமாட்டோம்” என மறுத்து விட்டனர். பின் கூற்றுவருக்கு அஞ்சி தில்லைவாழந்தணர்கள் தம்மில் ஒரே ஒரு குடும்பத்தை மட்டும் சிதம்பரத்தில் இருத்தி சேர நாட்டுக்கு ஒடிவிட்டனர் என பெரிய புராணம் இவர்கள் மேன்மையை எடுத்துக்கூறி தொகையடியவர்களில் முதலடியவர்களாக இவர்களைக் கொள்கிறது.
தில்லையிலே தில்லை மூவாயிரவர் எனப்படும் தீகூழிதர்களே பூசை செய்கின்றனர். தில்லை வாழந்தணர்களாகிய இவர்கள் தம் உயிரைக்கொடுத்து நடராஜரைக் காக்கும் தன்மை உள்ளவர்கள். காலந்தோறும் நடத்த வேண்டிய பூசைகளை காலந்தவறாது நடத்துவார்கள். யாருடைய தயவையும் எதிர்பாராது, அதிகார பலத்துக்கு அஞ்சாது, தமது கடமைகளை உரிய நேரத்தில் நிறைவேற்றி முடிப்பார்கள். " முட்டாத முச்சந்தி மூவாயிரவர்” என சுந்தர மூர்த்தி நாயனார் சிறப்பிக்கிறார். தில்லையில் பூசை செய்யும் உரிமை தமக்கு மட்டுமே உரியது என்றும், நடராஜருக்கு தொண்டு செய்வதற்கு என்றே தாங்கள் வாழ்வதாகவும் அப்பணி தங்கள் தனியுரிமை என்றுங் கருதுகின்றனர்.
தில்லைக் கோயில் இவர்களது சொந்தக் கோயிலாக இருந்து வருகிறது. எந்தத் தீட்சிதரும் திருமணம் செய்து கொண்ட பின்னரே நடராஜமூர்த்தியை அருச்சிக்கும் உரிமையையும் கோயில் நிர்வாகப் பொறுப்பையும், பெறுகின்றனர். இவர்கள் வயது, கல்வி, திறமை, செல்வம் போன்றவற்றால் எந்த வேறுபாடும் உடையவர்களாகக் கருதப்பட மாட்டார்கள். திருமணமான ஒவ்வொரு ஆணுக்கும் கோயில் வேளையிலும், கோயில் வருவாயிலும் தீகூழிதர்களின் அவையிலும் சம பங்கு அளிக்கப்படுகிறது. தீகூழிதர்கள் பலர் வறுமையாக வாழ்கின்ற போதிலும் கோயில் கணக்குகளைச் செம்மையாக வைத்துள்ளனர். இவர்கள் சிதம்பரத்துக்கு வெளியே வாழ்வதோ சம்பந்தம் செய்து கொள்வதோ இல்லை.
தீகூழிதர்களின் பொதுக்குழு, பொது தீட்சிதர் என வழங்கப்படுகிறது. இக்குழு பேரம்பலத்திற் கூடும். சமுதாய வேத சாஸ்திர சம்பிரதாயங்களுடன் இன்றியமையாச் சட்ட திட்டங்களை இயற்றிக் கோயில் பராமரிப்புடன் புராதன பழக்க வழக்கங்களில் வழுவாது நிலைத்து நிற்கும் சிறப்பு தில்லையம்பல சபைக்கே உரியதாக விளங்குகிறது. பரம்பரையாகக் கோயில் அறங்காவலர்களாக விளங்குவதுடன் கோயிலுக்கு என தனிப்பட்ட முறையில் காணி, நிலம் எதுவும் இல்லாத போதிலும் பொதுமக்களிடம் இருந்து பெறும் வருமானத்தை மட்டுமே கொண்டு ஆலயத்தில் சிறந்த முறையில் பூசைகளை ஆற்றி நிர்வகித்து வருகின்றனர்.
சோழர் காலத்தில் இருந்தே தில்லைவாழந்தணர்கள் சடங்குகளை ஆற்றுவதுடன், தீர்ப்புக் கூறுவதிலும் முதனிலைப் படுத்தப்படுகின்றனர். தில்லைவாழந்தணர் கூறும் தீர்ப்பு முறை
218

பிசகாது அத்துடன் கூரியமதி கொண்டு வழங்கப்படுகிறது. இராமாயணம் அரங்கேற்ற முதலில் கம்பர் தில்லையம்பதிக்கே வந்தார் என்பதும், தில்லைவாழ் அந்தணரின் நேர்மையான நிர்வாகத்திறத்தை பறைசாற்றி நிற்கிறது. எக்காலத்துக்கும் ஏற்ற வண்ணம் அமைந்துள்ள சட்ட திட்டங்கள், முறைகள், அமைப்பு முதலியனவும் வைதீக சம்பிரதாயப் பழக்க வழக்கங்கள் ஆகியவை இங்கு மட்டும் தான் சிறப்புடனும் , ஒழுங்குடனும் கடைப்பிடிக்கப்படுகின்றன.
தில்லைக் கூத்தப் பெருமானை பூசை செய்யும் தீகூழிதர்களில் 14 பேருக்கு அந்தந்த நாட்களில் நாள்தோறும் நண்பகலில் ஒரு வேளை சிதம்பரத்தில் அன்னம்பாலித்தற் பொருட்டு திருப்பனந்தாள் காசி மடத்தை, காசிவாசி அருள்நந்தி தம்பிரான் நிறுவியுள்ளார். இதற்கு “தில்லை வாழந்தணர் அன்னம் பாலிப்பு” என்று பெயரிடப்பட்டுள்ளது. இதைவிடத் திருத் தொண்டர் தொகையை நாடோறும் பாராயணம் பண்ணவும், தில்லை வாழந்தணர் என சுந்தரருக்கு அடியெடுத்துக் கொடுத்ததால் அத்தொகையடியார்களுக்கு கோயில் அமைக்கவும் விருப்பம் கொண்ட சோழ மன்னன், தில்லை வாழந்தணரை நடு நாயகமாகவும், மற்றைய எண்மரையும் சுற்றிலும் லிங்க வடிவில்
அமைத்து தில்லையில் தனிக்கோயில் அமைத்துள்ளார்.
சந்தான குரவர்களில் ஒருவரான உமாபதிசிவாச்சாரியார் தில்லை வாழந்தணர் மரபில் அவதரித்த மறைஞான சம்பந்தரிடம் தீட்சை பெற்றவர். மறைஞான சம்பந்தர் கீழ் சாதியருடன் நெருங்கிப் பழகியதில் தில்லை வாழந்தணர்கள் அவரை வெறுத்தனர். பின் இவர் பல அற்புதங்களை ஆற்றியதுடன் இறைவன் அருளால் ஆணித்திருமஞ்ன விழாவில் ஏறாது இருந்த கொடியை கொடிக்கவி பாடி ஏறச்செய்தார்.
திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரமூர்த்தி நாயனார் சுவாமிகள் தில்லைக் கோயிலுக்கு எழுந்தருளிய போது தில்லை வாழந்தணர்கள் நகரை அலங்கரித்து வேதநாதமும் முழங்க பொன்னம்பலத்துக்கு அவர்களை அழைத்துச் சென்றனர் என்றும், இரண்டாம் முறையாக திருஞானசம்பந்தர் தில்லைக்கு எழுந்தருளியபோது, தில்லைவாழந்தணர்கள் யாவரும் சிவகணங்களாகத் தோற்றமளித்த போது சம்பந்தர் திருப்படியில் நின்று “ஆடினாய் நறுநெய்யொடுபால் தயிர் அந்தணர்பிரியா சிற்றம்பலமே” எனத் தில்லை வாழந்தணர்களின் சிறப்பைப் பாடியமையையும் பெரியபுராணம் கூறுகிறது.
தில்லை வாழந்தணர்களின் சிறப்பைப் பாடாதவர்களே இல்லை. சம்பந்தர் தில்லையில் பாடும் போது "கற்றாங் கெரியோம்பிக் கலியை வாராமே, செற்றார் வாழ்தில்லை சிற்றம் பலமேய' என்றும், “பறப்பைப் படுத்தெங்கும் பசுவேட்டெரியோம்பும் சிறப்பர் வாழ்தில்லைச்சிற்றம்பலம்’ என்றும் போற்றிப் பாடியுள்ளார்.
இந்துக் கலைக்களஞ்சியம்

Page 249
சுந்தரர் “ஆடினாய் நறு நெய்யெழுபால் தயிர் அந்தணர் பிரியாத சிற்றம்பலம்’ எனவும், “நட்டமே நவில்வாய் மறையோர் தில்லை நல்லவர் பரியாத சிற்றம்பலமே.” என்றும் “பண்டரங்கா தில்லையார் தொழுதேத்து சிற்றம்பலமேந்து.” என்றும் தில்லை வாழந்தணர்களைப் புகழ்வதுடன் " தில்லைவாழந்தணர் தம் அடியார்க்கும் அடியேன்.” என முதலடி அமைத்துத் திருத் தொண்டர் தொகையைப் பாடியுள்ளார்.
திருநாவுக்கரசு நாயனார் தனது திருவிருத்தத்தில் “ திருவுடையந்தணர் வாழ்கின்ற திருச்சிற்றம்பலமே.” என்றும்”இமையவர் கோமான் இணையடிகள் தரித்த மனத்தவர் வாழ்கின்ற தில்லைச்சிற்றம் பலவன்.” “சிட்டர் வாழ்கின்ற தில்லைச்சிற்றம்பலம்’ எனப் பலவாறு தில்லை வாழந்தணர் களைச் சிறப்பித்துப் பாடியுள்ளார்.
தில்லையம்பலத்தையும், தில்லைவாழந்தணர்களையும் ஆழ்வார்களும் சிறப்பித்து பாடியுள்ளனர். “செந்தளர்வாய் மலர்நகை சேர் செழுந்தண் சோலைத் தில்லைநகர் சித்திர கூடந்தன்னுள் அந்தணர்களொரு மூவாயிரவ ரேத்த அணிமணியா.” என குலசேகர ஆழ்வாரும் போற்றியுள்ளார்.
"மூவாயிரநான் மறையாளர் நாளும் முறையால் வணங்க அணங்காய் தேவாதிதேவன் திகழ்கின்ற தில்லைத் திருச்சித்திர கூடம்.” எனத் திருமங்கையாழ்வாரும் தில்லைவாழந்தணர்களைச் சிறப்பித்துப் பாடியுள்ளார்.
இவ்வாறாகச் சிறப்பிக்கப்படும் தில்லைவாழந்தணர்கள் சிந்தையில் தில்லைக் கூத்தரை இருத்தி, நாள்தோறும் மூத்தீ வளர்த்து, வேதம் ஒதி, அம்பலத்தான் அடிக்கே அடியவர்களாக வாழும் பேறு பெற்றுத் திகழ்கின்றனர். இவர்கள் பெற்ற பேறு வேறு எவரும் பெறாத பேறாகும். “ஞானமே முதலா நான்கும் நவையறத் தெளிந்து மிக்கார்; தானமும் தவமும் வல்லார் தகுதியின் பகுதி சாய்ந்தார். ஊனமேல் ஒன்றும் இல்லார் உலகெலாம் புகழ்ந்து போற்றும் மானமும்,பொறையும் தாங்கி மனையறம் புரிந்து வாழ்வார்” என தில்லைவாழந்தணர் புராணம் கூறுவது போல, மானத்துடன் பொறையுடனும் ஒழுங்காக கோயில் நிர்வாகம் சட்ட ஒழுங்குகளைப் புரிந்து வாழ்பவர்களாக தில்லைவாழந்தணர் வழிவந்த தீகூழிதர்கள் இன்றும் சிறப்புடன் விளங்குகின்றனர். (க.ஹே.)
திலகவதியார்
பக்தி இயக்கத் தோற்றத்திற்கு முதல்வராக வாய்த்த சமயச் சான்றோருள் ஒருவரும், தேவார முதலிகளுள் ஒருவரும், நான்காம், ஐந்தாம், ஆறாம் திருமுறைகளை இயற்றிய வருமாகிய திருநாவுக்கரசரின் சகோதரியே திலகவதியாவார். திலகவதி
இந்துக்கலைக்களஞ்சியம்

என்னும் தமக்கையாராலேயே திருநாவுக்கரசர் என்னும் சமயச் சான்றோரை உலகம் பெற்றது.
திருமுனைப்பாடி நாட்டுத் திருவாமூரிலே புகழனார், மாதினியார் என்னும் இருவருக்கும் மகளாய் வாய்த்தவர். தக்க பருவத்திலே கலிப்பகையார் என்னும் வீரரை அவருக்குத் திருமணஞ் செய்வதற்குப் பெற்றோர் நிச்சயித்தனர். அதற்கு இடையில் போர் வந்தமையால் கலிப்பகையார் திருமணத்தை நிறுத்திவிட்டு வடநாடு நோக்கி போருக்குச் சென்றார். சில நாட்கள் ஆயின. தந்தை புகழனார் இயற்கை எய்தினார். கணவனை இழந்த மாதினியார் உடன் உயிர்விட்டார். தாயும், தந்தையும் இழந்த திலகவதியாரும் மருணிக்கியாரும் தனிமையராய் ஏங்கலாயினர். இதற்கிடையிலே போருக்குச் சென்ற கலிப்பகையார் மாண்டு போயினர். பெற்றோர் செய்த மண உறுதியை மனதிற் கொண்டு கலிப்பகையாரையே தம் கணவராக வரித்தமையால், அவர் இறந்தமை கேட்டு திலகவதியார் தானும் உயிர் விடத் தீர்மானித்தார். அப்பொழுது சிறுவனாக ஆதரவின்றி இருந்த திருநாவுக்கரசர் திலகவதியாருடைய அடிகளின் மேல் விழுந்து கதறுகிறார். இச் செய்தியினைக் கூற வந்த சேக்கிழார் பெருமான்,
" அந்நிலை மிகப்புலம்பி
அன்னையும் அத்தனும் அகன்ற பின்னையும் நான் உமை வணங்கப்
பெறுதலினால் உயிர் தரித்தேன் என்னையினித் தணிக்கை விட்டு
ஏகுவீர் எனில் யானும் முன்னம் உயிர் நீப்பன் என
மொழிந்து இடரின் அழுந்தினார்”
என்று கூறியருளுகிறார். இவ்வாறு தன் தம்பிக்காக உயிர் வாழ எண்ணிய திலகவதியாரின் பெருந்தன்மையை இவர் குறிப்பிடுவதிலிருந்து அறியமுடிகின்றது. தம்பியின் பால் வைத்த அன்பினால் உயிர்தாங்கி இல்லத்திலேயே தவ வாழ்வு வாழ்ந்து வந்தார். சிவபெருமானை வழிபட்டுத் தம் தம்பியை வளர்த்தார் தந்தை, தாய், தன் தமக்கைக்கு தேர்ந்த மணவாளன் கலிப்பகையார் அனைவரும் ஒருவர் பின் ஒருவராக இறைவனடி சேர்ந்ததைக் கண்ட மருணிக்கியார் மனம் மிகவும் நொந்தார். இந்த உலகத்தின் நிலையாமை அவர் நெஞ்சை ஈர்த்தது. அத்தகு கலங்கிய நிலையில் அவர் சமண சமயத்தைச் சார்ந்தார். இச்செயல், தம்பியார் உயிர் வாழ வேண்டும் என்ற ஒரே எண்ணத்துடன் உயிரை வைத்திருந்த திலகவதியாரை மனம் நோக வைத்தது. எனினும் தன் வருத்தம் காரணமாக தம்பியாரை ஏசவும் இல்லை, கடிந்து கொள்ளவுமில்லை. இறைவனிடம் முறையிட்டு எவ்வாறேனும் தம் குறையைத் தீர்த்து வைப்பான் என்று இருந்துவிட்டார் அம்மாதரசியார். இந்நிலையில் தம்குடிக்கும், கொள்கைக்கும் உரிய சைவசமய நெறியினின்றும்
219

Page 250
பிறழ்ந்த தம்பியை மீட்டுத் தருமாறு சிவபெருமானை வேண்டியவராகக் கோயிலைச் சுத்தம் செய்து தொழுது வரலாயினார். தினமும் திருவிளக்கிடல், மெழுகல், மலர் கொய்து மாலை தொடுத்தல் முதலிய திருப்பணிகள் பல செய்து வரலானார். திலகவதியாரின் திருவுள்ளக் கிடக்கைக்கு ஏற்ப திருநாவுக்கரசருக்கு சூலை நோய் கண்டது. மந்திர மருந்து என்ற எதனாலும் அந்நோயைப் போக்கிக் கொள்ள இயலவில்லை.
அந்நிலையில் தமக்கையாரை நினைக்கின்றார்.
"பண்டை உறவு உணர்ந்தார்க்குத் திலகவதியார் உளராகத் கொண்டவர் பால் ஊட்டுவான் தனை விட்டார்
குறிப்புணர்த்த” (திருநாவுக்கரசர் -55)
என்பதனால் தம் நிலையைக் குறிப்பாக அவரிடம் தெரிவிக்குமாறு ஏவலாளரை அனுப்பினாரே தவிர, அவரை வருமாறு அழைக்கவில்லை. இன்று வரை அவரை மறந்து தேவை வந்த போது வந்து காக்க வேண்டும் என்று அழைப்பது பண்புடைமை அன்று. மருணிக்கியார் அதனைச் செய்யவில்லை. தான் எத்துணை துன்பமுற்றாலும் தமக்கையாரைத் தவிர தமக்கு வேறு யாரும் இல்லை என்றாலும் அவரைக் கட்டாயமாக அழைத்து வருமாறு கூறுதல் தன்னலத்தின் பாற்பட்டதாகும். எனவே பண்புடைய பெரியோராகிய அவர் அதனைச் செய்யவில்லை. ஆண்டுகள் கழிந்து போனதால் ஏற்பாரா, மாட்டாரா என்றும் தெரியாது. எனவே திலகவதியாரிடம் குறிப்புணர்த்த அனுப்பியதாகச் சேக்கிழார் பாடுகிறார். அவர் ஏவலிற் சென்றவன் அம்மையாரை சந்தித்து “ஈங்கு யான் உமக்கு இளையார் ஏவலினால் வந்தது” எனக் கூறக்கேட்டவுடன் "தீங்குளவோ’ என்று திலகவதியார் கேட்டார். நடந்ததை ஏவலன் விளக்கினான். அதைக் கேட்ட அம்மையார்,
" என்றவன் முன் கூறுதலும் யான் அங்கு
உன்னுடன் போந்து நன்றறியா அமண்பாழி நண்ணுகிலேன் எனும் மாற்றம் சென்றவனுக்கு உரை என்று திலகவதியார் மொழிப'திருநாவுக்கரசர் -58
என்கின்றார். இங்கும் பண்பாட்டைக் காண்கிறோம். எந்தத் தம்பியர் உளராக வேண்டும் என்று உயிரை வைத்திருந்தாரோ அந்தத் தம்பியார் நோயுடன் போராடிச் சாகும் நிலையில் இருந்த நேரத்திலும், தம் கொள்கையினின்றும் இறங்கி வர அந்த அம்மையார் துணியவில்லை. தம்பியை இங்கு வரச் சொல் என்று கூறவுமில்லை. ஏனெனில் அவராக ஒரு வேளை வரவிரும்பாத நிலையில், தம்முடைய கட்டளைக்குப் பணிந்து வரலாம். அத்தகையதொரு நிலையினைத் தம்பியாருக்கு உண்டாக்க அம்மையார் விரும்பவில்லை. பிறர்பற்றிய செயல்களில் தம்
220

விருப்பு வெறுப்புகளுக்கு இடம் தராத பண்பை இவரிடம் காணமுடிகின்றது.
தமக்கையாரின் இந்த அருட் செயல் திருநாவுக்கரசரின் நெஞ்சில் நிலை பெற்றமையால் பிற்காலத்தில் சிவபெருமானைக் குறித்து தாம் பாடிய தேவாரப்பாடல்களில் குறித்துள்ளார். உதாரணம் 'ஈன்றாளுமாய் எனக்கு எந்தையுமாய் உடன் தோன்றினராய்” என்ற தேவாரப் பாடலையும், "துணையாய் என் நெஞ்சம் துறப்பித்தாய் நீ” என்ற சான்றையும் கூறலாம். அப்பர் என்னும் சைவச்சான்றோரைத் தந்த தவச்செல்வி திலகவதியார் என்பதில் எதுவித ஐயமுமில்லை. (தே.ஹ.)
திலதைப் பதி
சோழ நாட்டுக் காவிரித் தென்கரைத் தலங்களுள் 58வது தலமாகும். சடாயுவிற்கும் இராம லட்சுமணர் தனது தந்தை தசரத மாமன்னனுக்கும் எள்ளும் புனலும் இறைத்து (திலதர்ப்பணம்) பிதிர்க்கடன் செய்த தலமாதலின் திலதைப் பதி எனப் பெயர் பெற்றது எனக் கூறுவர். திலதர்ப்பணபுரி என்னும் பெயரே திலதைப்பதி ஆயிற்று. ஆனால், இன்று மக்கள் இப்பெயரையும் உருச்சிதைத்து 'செதலப் பதி என்று அழைக்கின்றனர்.
பேரளம் புகையிரத நிலையத்தினின்று தென்மேற்கே 34 மைல் தொலைவில், பூந்தோட்டத்தினின்று 1 கல் தொலைவில் இத்தலம் உள்ளது. ஊர்த் தொடக்கத்தில் உள்ள இடத்தில் வாகனத்தை நிறுத்தி விட்டு, வலது பக்கமாகச் செல்லும் அரிசிலாற்றின் கரை மீது நடந்து சென்று 2 கிலோ மீட்டர் கடந்த பின்பு இடது புற இறக்கத்தில் இறங்கி, மண்பாதையில் சிறிது தூரம் சென்றால் 'செதலபதி யை அடைந்து, ஊர்க் கோடியில் வலது பக்கம் செல்லும் சாலையில் சென்றால் கோயிலை அடையலாம். ஊரின் பெயர் திலதைப் பதி, ஆலயத்தின் பெயர் மதி முத்தம். இறைவனின் திருநாமம் - மதிமுத்தர் ; முத்தீஸ்வரர்; மந்தாரவனேஸ்வரர். இறைவியின் திருநாமம் - சுவர்ண வல்லி, பொற் கொடி நாயகி. தலமரம் - மந்தாரை தீர்த்தம் - சந்திர தீர்த்தம்
கிழக்கு நோக்கிய சந்நிதி அமைப்புக் கொண்ட சிறிய கோயில் உள்ளே சென்றால் கொடிமரம் நந்தி காணப்படுகின்றது. உள் வாயிலைக் கடந்து முன்மண்டபம் அடைந்தால் நேரே மூலவர்தரிசனம். வலது பக்கம் அம்பிகை சந்நிதி. திருச்சுற்றில் விநாயகர் இராம இலக்குவர் திருமேனி (தந்தை தசரதனுக்குப் பிதிர்க்கடன் செய்த திருத்தலம் என்பதற்குச் சான்று இத்திருமேனிகள்) அவர்கள் பிரதிஷ்டை செய்த சிவலிங்கங்கள், ஆறுமுகர்களுலட்சுமி, நவக்கிரகம், பைரவர், நால்வர், சூரியன், சந்திரன் பூரீதேவி - பூதேவி சமேத திருமால் ஆகியோர் காட்சி தருகின்றனர்.
இந்துக் கலைக்களஞ்சியம்

Page 251
கோஷ்டத்தில் தகூதிணாமூர்த்தி, மகா விஷ்ணு, பிரம்மா, துர்க்கை ஆகியோர் காணப்படுகின்றனர். கோயிலிற்கு எதிரிலே ஆதிவிநாயகர் அதிசய விநாயகராகக் காட்சி தருகின்றார். தவறாமல் தரிசிக்க வேண்டியவர். ஆதி விநாயகர் துதிக்கை இல்லாமல் வலது காலைத் தொங்கவிட்டு, இடது காலை மடித்து இடது கரத்தை இடக்காலின் மீது வைத்து, வலது கரம் சற்றே சாய்ந்து அபயகரமாக விளங்க, எங்கும் காண முடியாத அதிசயக் கோலத்தில் காட்சி தருகின்றார்.
"அங்குமாய் இங்குமாகி அநாதியாய் பலவாயானைத் துங்கமா முகமுந்தூய துதிக்கரம் தானுமின்றிப் பங்கயப் பழனவேலித் திலதையாம் பதியின் மேவும் புங்கவன் ஆதிநாதன் புதுமலர்த் தாள்கள் போற்றி
கோயிலிற்கு வெளியே பின்புறத்தில் அழகீசர் கோயிலுள்ளது. சிவலிங்கத் திருமேனி நகரத்தார் பாதுகாப்பில் ஆலயம் உள்ளது. ஒருவேளை பூஜை நடைபெறுகின்றது.
அருகே உள்ள கூத்தனூரில் துர்க்கை, இலக்குமி, சரஸ்வதி கோயில்கள் தரிசிக்கத் தக்கன. கலைமகளுக்குத் தனிக்கோயில் இருப்பது கூத்தனூரில் மட்டும் தான்.
இவ்வாலயத்தைக் கட்டியவர் ஒட்டக் கூத்தரின் பேரர் ஒவாக் கூத்தர் என்பது கல்வெட்டுச் செய்தி. யாழ்ப்பாணம் திரு. சி. நாகலிங்கம் பிள்ளை என்பவர் “திலதைப் பதிப் புராணம்’ பாடியுள்ளார். இந்நூல் 1941ல் தேவகோட்டை மெ. றாம லெட்சுமணன் செட்டியாரால் வெளியிடப்பட்டுள்ளது.
சண்பையர் கோன் திருத்திலதைப் பதி மீது பாடி அருளிய திருப்பதிகத்தில் முதலும், கடையுமான திருப்பாடல்கள். பண் செவ்வழியில் அமைந்து அழகு செய்வன.
திருச்சிற்றம்பலம்
"பொடிகள் பூசிப் பலதொண்டர் கூடிப் புலர் காலையே அடிகளாரத் தொழுதேத்த நின்ற அழகன்னிடம் கொடிக ளோங்கிக் குலவும் விழவார் திலதைப் பதி வடி கொள் சோலைம் மலர் மணங்கமழும் மதிமுத்தமே-”
"மந்தமாகும் பொழில் சூழ்திலதைம் மதிமுத்தமேற் கந்த மாருங் கடற்காழி யுளான் தமிழ் ஞானசம் பந்தன் மாலை பழிதீர நின்றேத்த வல்லார்கள் போய்ச் சிந்தை செய்வார் சிவன் சேவடி சேர்வது திண்ணமே”
சூரியன், சந்திரன், யானை, சிங்கம் இராமர், இலக்குவன் ஆகியோர் வழிபட்டுப் பேறுபெற்ற தலம் இது.
இத்தலத்து எழுந்தருளி அருள்புரியும் முக்தீசுவரர், சுவர்ண வல்லியின் துதியாகக் காணப்படும் பாடல்கள்.
இந்துக்கலைக்களஞ்சியம்

முக்தீஸ்வரர் துதி "மலராயன் முகுந்தன் பூமின் மாதுமை வணங்கியேத்தத் திலதருப் பணப்பேர் கொண்ட திருத்தலம் அதனின் மன்னி இலகு முத்திராக்க மேனியீசனை யெம்மான் தன்னைக் குலவு முத்தீச னென்றும் குழகனையேத்தி வாழ்வாம்.”
சுவர்ணவல்லி துதி "சுரும்பமர் குழல்கள் போற்றி சுந்தர வதனம் போற்றி அரும்பு புன்முறுவல் போற்றி ஆரணற் கருள் செயம்மை கரும்புறு பழனவேலித் திலதைக் காஞ்சன மாவல்லி சிரம்பெறு பதுமநேருஞ் சேவடி போற்றி போற்றி"
(வ. வை.) திவ்யகாரிகள்
திவ்ய சூரிகள் எனின் தெய்வத்தன்மையுள்ள அவதார புருடர்கள் எனப் பொருள்படும். இவர்களை ஆழ்வார்கள் எனவும் அழைப்பர். ஆழ்ந்த அறிவைக் கொண்டவர்கள். எம்பெருமானுடைய அருளினால் ஆழ்ந்துணரும் அறிவைப் பெற்று வேதமாகிய கடலில் ஆழ்ந்து கிடந்த மிக உயர்ந்த மந்திரத்தினாழ்ந்த விடயங்களை உலகிற்கு உதவிய காரணத்தால் இப்பெயர் பெற்றார்கள் என்பர். இவர்கள் சிறந்த அனுபூதிமான்களாகவும் பக்திமான்களாகவும் மெய்ஞ்ஞான அறிவுடையவர்களாகவும் இருந்தமையால் தம் கவித்திறத்தால் நாலாயிரம் பாடல்களைத் தந்துள்ளார்கள். இதனை நாலாயிரத் திவ்ய பிரபந்தம் என அழைப்பர். சமணமும், பெளத்தமும் மேலோங்கி இருந்த காலத்தில் நாயன்மார்களும் ஆழ்வார்களும் தோன்றிச் சைவத்தையும் வைணவத்தையும் காப்பாற்றினர். இவர்கள் பாமரமக்களும் புரிந்துணரக் கூடிய விதத்தில் சமய தத்துவ உண்மைகளையும் உலக வாழ்க்கையின் நிலையா மையையும் எளிய தமிழிற் பாடி மக்களை நெறிப்படுத்தினர்.
ஆழ்வார்கள் பன்னிருவர்.
1) பொய்கையாழ்வார் 2) பூதத்தாழ்வார் 3) பேயாழ்வார் 4) திருமழிசையாழ்வார் 5) நம்மாழ்வார் 6) மதுரகவியாழ்வார் 7) குலசேகராழ்வார் 8) பெரியாழ்வார் 9) ஆண்டாள் 10) தொண்டரடிப் பொடியாழ்வார் 11) திருப்பாணாழ்வார் 12) திருமங்கையாழ்வார்
என்ற முறையில் இவர்களது அவதாரத்தை மணவாள மாமுனிகள் கூறுவர்.
1) பொய்கையாழ்வார் கச்சித் திருவெஃகாவின் பொற்றாமரைப் பொய்கையிலே தாமரைப் பூவில் அவதரித்தவர். திரு நட்சத்திரம் - ஐப்பசித் திருவோணம். அருளிச் செய்த திவ்யப் பிரபந்தம் - முதல் திருவந்தாதி, 100 பாசுரங்கள்.
221
?؟ r^s P Q ہی ہے

Page 252
2)
3)
4)
5)
6)
7)
8)
222
பூதத்தாழ்வார்- திருக்கடல்மல்லையில் மாதவிப் பூவிலே அவதரித்தவர். திருநட்சத்திரம் - ஐப்பசி அவிட்டம்; அருளிச் செய்த திவ்வியப் பிரபந்தம் - இரண்டாம் திருவந்தாதி நூறு பாடல்கள்.
பேயாழ்வார் - திருமயிலையில் ஆதிகேசவப் பெருமாள் கோயிற் கிணற்றிலே செவ்வல்லிப் பூவில் அவதரித்தவர். திருநட்சத்திரம் - ஐப்பசிச் சதயம்; அருளிச் செய்த திவ்யப் பிரபந்தம் - மூன்றாம் திருவந்தாதி நூறு பாசுரங்கள்.
திருமழிசையாழ்வார் - திருமழிசையில் அவதரித்தவர். திருநட்சத்திரம் - தைமகம், அருளிச் செய்தது 1) நான்முகன் திருவந்தாதி - 96 பாசுரங்கள் 2)திருச்சந்த விருத்தம் - 120 பாசுரங்கள்
நம்மாழ்வார் - ஆழ்வார் திருநகரி என்னும் திருக்குருகூரில் அவதரித்தவர். திருநட்சத்திரம் - வைகாசி விசாகம்; அருளிச் செய்த பிரபந்தங்கள்: 1) திருவிருத்தம் 100 பாசுரங்கள் 2) திருவாசிரியம் 7 பாசுரங்கள் 3) பெரிய திருவந்தாதி எண்பத்தேழு பாசுரங்கள் 4) திருவாய் மொழி 1102 பாசுரங்கள், ஆக 1296
பாசுரங்களைப் பாடியுள்ளார்.
மதுரகவியாழ்வார் - திருக்கோளூரில் அவதரித்தவர். திருநட்சத்திரம் - சித்திரையில் சித்திரை, அருளிச் செய்த திவ்யப்பிரபந்தம். - கண்ணிநுண் சிறுத்தாம்பு
பதினொரு பாசுரங்கள்.
குலசேகராழ்வார் - சேரநாட்டு திருவஞ்சைக் களத்தில் அவதரித்தார். திருநட்சத்திரம் - மாசிப்புனர் பூசம்; அருளிச் செய்த திவ்யபிரபந்தம் பெருமாள் திருமொழி - நூற்றைந்தது பாசுரங்கள்.
பெரியாழ்வார் - வில்லிபுத்தூரில் முகுந்தபட்டம், பதுமவல்லி என்பவர்களுக்கு மகனாக அவதரித்தவர். திருநட்சத்திரம் - ஆனிச் சுவாதி; அருளிச் செய்த திவ்வியப் பிரபந்தம் - பெரியாழ்வார் திருமொழி - 473
பாசுரங்கள்.
ஆண்டாள் - பூரீ வில்லிபுத்தூரில் திருத்துழாய்ச் செடியின் அருகே அவதரித்தவர். திருநட்சத்திரம் - திரு ஆடிப்பூரம்; அருளிச் செய்த திவ்வியப் பிரபந்தங்கள்: 1) திருப்பாவை - 30 பாசுரங்கள்
2) நாச்சியார் திருமொழி - 143 பாசுரங்கள்

10) தொண்டரடிப் பொடியாழ்வார் - திருமண்டங்குடியில் அவதரித்தவர். திருநட்சத்திரம் - மார்கழிக் கேட்டை, அருளிச் செய்தபிரபந்தங்கள் : 1) திருமாலை - 45 பாசுரங்கள் 2) திருப்பள்ளியெழுச்சி - 10 பாசுரங்கள்
1) திருப்பாணாழ்வார் - திரு உறையூரில் அவதரித்தவர்.
திருநட்சத்திரம் - கார்த்திகை ரோகிணி, அருளிச் செய்த
திவ்யப்பிரபந்தம் - அமலனாதிபிரான் - பத்துப் பாசுரங்கள்
12) திருமங்கையாழ்வார்; திரு ஆலிநாட்டுத் திருக்குறைய லூரில் அவதரித்தவர். திரு நட்சத்திரம் - கார்த்திகையில் கார்த்திகை, அருளிச் செய்த திவ்யப் பிரபந்தங்கள் : 1) பெரிய திருமொழி 1084 பாசுரங்கள் 2) திருக்குறுந்தாண்டகம் 20 பாசுரங்கள் 3) திருநெடுந்தாண்டகம் முப்பது பாசுரங்கள் 4) திருவெழு கூற்றிருக்கை ஒரு பாசுரம் 5) சிறிய திருமடல் நாற்பது பாசுரங்கள் 6) பெரிய திருமடல் 78 பாசுரங்கள்
இவர்களது நூல்களை தென்னார்க்காடு மாவட்டம் காட்டு மன்னார் கோயிலைச் சேர்ந்த நாதமுனிகள் என்பார் தொகுத்து வெளியிட்டார். இந்நூல் முதலாயிரம், திருமொழி ஆயிரம், திருவாய்மொழி ஆயிரம், இயற்பா ஆயிரம் என நான்கு ஆயிரங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
ஆழ்வார்கள் ஒரே காலத்தைச் சேர்ந்தவர்கள் எனத் திவ்ய சூரிசரிதம் கூறுகின்றது. எனினும் இவர்கள் காலத்தை கி.பி 58 ஆம் நூற்றாண்டுகளின் இடைப்பட்ட காலமெனக் கொள்வர். உலக வாழ்க்கை வெறும்மாயை என்பது இவர்களது கோட்பாடாகும். இவர்கள் தமது பாசுரங்களில் இறைவன் பல்வேறு அவதார நிலைகளைத் தங்களது அகக் கண்களால் கண்டு அவர் தம் மெய்யுணர்வாற் பாசுரங்களாகப் பாடியுள்ளனர். பரமாத்மாவாகிய இறைவன்முன் அனைத்து உயிர்களும் பெண்களே என்பதனை உணர்ந்த ஆழ்வார்கள் அவனைவிட்டுப் பிரிந்து உலகவாழ்வில் உழலும் உயிர்களின் நிலையினை நாயகன் - நாயகி பாவமாகக் கற்பனை செய்து பாடியுள்ளனர். ஆழ்வார்கள் சாதிகுல வேற்றுமை பாராது அன்பு நெறியினை கடைப்பிடித்து ஒரு புதிய வாழ்வினை மக்களுக்கு எடுத்துக்காட்டினர். பெரியாழ்வார் பிராமண குலத்திலும் நம்மாழ்வார் வேளாளரின் மரபிலும் குலசேகராழ்வார் சத்திரிய மரபிலும் திருமங்கையாழ்வார் கள்ளர் மரபிலும் திருப்பாணாழ்வார் ஐந்தாம் வருணத்திலும் தோன்றியதாகக் கூறப்படுவது இதனை எடுத்துக் காட்டுகின்றது.
ஆழ்வார்களின் காலத்திற்குப் பின் வந்த ஆச்சாரியர்கள் ஆழ்வார்களின் வாழ்க்கை வரலாறுகளை எழுதியுள்ளனர். இதற்கு
ஆழ்வார்களின் பாசுரங்களிற் கூறப்பட்ட கருத்துக்களையும்,
இந்துக் கலைக்களஞ்சியம்

Page 253
வரலாற்றுச் சான்றுகளையும் குருபரம்பரைச் செய்திகளையும் ஆதாரமாகக் கொண்டுள்ளனர். கி. பி 13 ஆம் நூற்றாண்டில் லோகாச்சாரியார் எழுதிய தேசிக பிரபந்தம் கி.பி 16 ஆம் நூற்றாண்டில் குருகருடவாகன பண்டிதர் எழுதிய திவ்விய சூரிசரிதம் கி.பி. 17 ஆம் நூற்றாண்டில் அனந்தாச்சாரியார் எழுதிய பிரபன்னாம்ருதம், பிற்காலத்தில் பிரம்மதந்திர சுதந்திர சீயர் எழுதிய மூவாயிரப்படி குருபரம்பரைப் பிரபாவம் போன்ற நூல்கள் திவ்ய சூரிகளின் வாழ்க்கை வரலாற்றை எடுத்துக் கூறுகின்றன. (@ 8 )
திவ்விய தேசங்கள்
தமிழகத்து வைணவ சமயம் சார்ந்த ஆழ்வார்களாற் பாடப்பட்ட தலங்கள் 108 ஆகும். அவை திவ்விய தேசங்கள் எனப்படும். பாடல்பெற்ற தலங்களுள் எழுந்தருளியிருக்கும் வேங்கடவனை 9 ஆழ்வார்கள் பாடியுள்ளனர். இவ்விதம் திருமாலிருஞ்சோலை, திருநறையூர், திருவிண்ணகரம் போன்ற தலங்கள் பல ஆழ்வார்களாற் போற்றிப் பாடப்பட்டுள்ளன. ஆழ்வார்களின் பாடல்களைப் பெறாத மன்னார்குடி, காட்டு மன்னார்குடி, பூரீமுட்டம், மதுராந்தகம், திருநாராயணபுரம் போன்ற தலங்கள் கூட்டுத் திருமலையில் திவ்விய தேசம் எனப் பெயர்
பெறும்.
108 திவ்விய தேசங்களாவன சோழநாடு 40 பாண்டிநாடு 18
மலை நாடு - 13
நடு நாடு - 2
தொண்டை நாடு - 22
6) LIBITG -- 12
திருநாடு - 1
என அமைகின்றன.
சோழ நாட்டில் அமையும் 40 திருத்தலங்களும் மேல்வருமாறு அமையும்:
(1) நீரங்கம்:- திருச்சிக்கு அண்மையில் ரீரங்கத்தில் இவ்வாலயம் அமைந்துள்ளது. பதினொரு ஆழ்வார்களும் இக்கோயிலை மங்களாசாசனம் செய்துள்ளனர். மூலவராக பூரீரங்க நாதர் புஜங்க சயனத்தில் கிடந்த கோலத்தில் தென்திசை நோக்கியவராகக் காட்சி தருகின்றார். தாயார் பூரீ ரெங்கநாயகி ஆவார். இத்துடன் பெரியாழ்வார், ஆண்டாள், கண்ணபிரான், மணவாள முனிவர், ஆழ்வார்கள், நாதமுனிகள், ஆளவந்தார், அமிரிதகலச கருடன், திருவரங்கப் பெருமாளரையர், திருப்பாணாழ்வார், நாச்சியார், தன்வந்திரி ஆகியோருக்குச் சந்நிதிகள் உள்ளன. திருப்பாணாழ்வார் - 10, திருமழிசையாழ்வார் - 14 ஆண்டாள் - 10, குலசேகர ஆழ்வார் - 31, பொய்கையாழ்வார் - 1, திருமங்கையாழ்வார் 72, பேயாழ்வார்
இந்துக் கலைக்களஞ்சியம்

-2, பூதத்தாழ்வார் - 4 பாசுரங்கள், நம்மாழ்வார் -12 பாசுரங்களால்
இத்தலத்தைப் பாடியுள்ளனர்.
(2) அரிமேய விண்ணகரம்:-திருநாங்கூரில் இத்தலம் அமைந்துள்ளது. இத்தலத்திற்கு குடநாடு, கூத்தங் கோயில் என்ற பிற பெயர்களும் உண்டு. இக்கோயிலின் மூலவர் குடமாடு கூத்தன் வீற்றிருந்த கோலத்தில் கிழக்கு நோக்கி உள்ளார். தாயார் அமிர்த கடவல்லி. திருமங்கையாழ்வாராற் பத்துப் பாசுரங்கள் பாடப்பட்டுள்ளன. இவ்வாலய புஷ்கரணி கோடி தீர்த்தம், அமிர்த தீர்த்தம் ஆகியன. விமானம் உச்ச சிருங்க விமானம் ஆகும்.
(3) அழுந்தூர் - திருவழுந்தூர் என அழைக்கப்படும் இத்தலத்தின் மூலவராக தேவாதி ராஜன் நின்ற கோலத்தில் கிழக்கு நோக்கி எழுந்தருளியுள்ளார். தாயார் செங்கமல வல்லி, இத்தலத்தைத் திருமங்கையாழ்வார் 45 பாசுரங்களால் மங்களாசாசனம் செய்துள்ளார். மணவாள முனிவரும் மங்களாசாசனம் செய்துள்ளார். இத்தலத்து புஷ்கரணி தர்ஷணபுஷ் கரணி விமானம் கருடவிமானம் ஆகும்.
(4) அன்பில் :- இவ்வாலயம் லால்குடியில் அமைந்துள்ளது. மூலவர் வடிவழகிய நம்பி; தாயார் அழகியவல்லி நாச்சியார். திருமழிசையாழ்வார் ஒரு பாசுரம் பாடியுள்ளார். கோயில் புஷ்பகரணி மண்டூக புஷ்கரணி, கொள்ளிடம் ஆகியன. விமானம் தாரக விமான அம்சத்துடன் காணப்படுகின்றது.
(5) ஆதனுர் - சுவாமி மலையில் இத்தலம் உள்ளது. இத்தலத்தின் மூலவர் ஆண்டளக்குமையர் ஆவார். தாயார் ரெங்கநாயகி. திருமங்கையாழ்வார் ஒரு பாசுரத்தால் மங்களாசாசனம் செய்துள்ளார். இத்தல புஷ்கரணி சூரிய புஷ்கரணி. இக்கோயிலின் விமானமானது பிரணவிமான அம்சத்துடன் விளங்குகின்றது.
(6) ஆலி - திருநாங்கூரில் இத்தலம் உள்ளது இங்குள்ள மூலவர் லட்சுமி நரசிம்மர், தாயார் அமிர்தகடவல்லி. இக்கோயிலின் விமானம் அஷ்டாகர விமானம் ஆகும்.
(7) இந்தளூர் :- இத்தலம் மயிலாடுதுறையில் அமைந்துள்ளது. மூலவர் பரிமளரங்கநாதர், வீரசயனமாக கிழக்கு நோக்கி காட்சியளிக்கின்றார். தாயார் பரிமளரங்க நாயகி. திருமங்கையாழ்வார் 11 பாசுரங்களால் மங்களாசாசனம் செய்துள்ளார். விமானம் - வேதசலிர விமானம், புஷ்கரணி, இந்து புஷ்கரணியாகும்.
(8) கண்டியூர்- தஞ்சாவூரில் இவ்வாலயம் அமைந்துள்ளது. மூலவர் ஹரசாபவிமோசனப் பெருமாள்; தாயார் கமலவல்லி
நாச்சியார். திருமங்கையாழ்வார் ஒரு பாசுரம் பாடியுள்ளார்.
223

Page 254
தீர்த்தம் பத்மதிர்த்தம், கபாலதீர்த்தம்; விமானம் பஞ்சகமல அமைப்புடன் கூடியது.
(9) கண்ணங்குடி :- கீவளூர் என்னுமிடத்தில் அமைந்துள்ளது. மூலவர் லோகநாதன், நின்ற கோலத்தில் காட்சியளிக்கின்றார். தாயார் லோகநாயகி. திருமங்கையாழ்வார்
10 பாசுரங்கள் பாடியுள்ளார். விமானம் உத்பல விமானத்துடன்
விளங்குகிறது.
(10) கண்ணபுரம் :- நன்னிலத்தில் இவ்வாலயம் அமைந்துள்ளது. மூலவர் நீலமேகப்பெருமாள், நின்ற கோலத்தில் காட்சியளிக்கின்றார். தாயார் கண்ணபுரநாயகி.
திருமங்கையாழ்வார் 104 பாசுரங்கள், பெரியாழ்வார், ஆண்டாள் 1 பாசுரமும், குலசேகர ஆழ்வார் 11 பாசுரங்களும் பாடியுள்ளனர். புஷ்கரணி - நித்யபுஷ்கரணி விமானம் - உத்பலா வதக விமானம் ஆகும்.
(11) கண்ணமங்கை - திருவாரூரில் இத்தலம் அமைந்துள்ளது. மூலவர் பக்த வத்ஸல பெருமாள்; தாயார் அபிஷேக வல்லி. திருமங்கையாழ்வார் 14 பாசுரங்கள் பாடியுள்ளார். இவ்வாலய விமானம் உத்பல விமான அம்சம் உடையது. புஷ்கரணி - தர்ஸந புஷ்கரணியாகும்.
(12) கரம்பனூர் - இவ்வாலய மூலவரான புருஷோத்தமர் புஜங்க சயனத்திற் காட்சியளிக்கின்றார். தாயார் பூர்வாதேவி. திருமங்கையாழ்வார் ஒரு பாசுரத்தால் மங்களாசாசனம் செய்துள்ளார். கோயில் புஷ்கரணி - கதம்ப தீர்த்தம், விமானம் - உத்யோக விமானம் ஆகும்.
(13) கவித்தலம் - பாபநாசத்தில் இவ்வாலயம் அமைந்துள்ளது. மூலவராக கஜேந்திர வரதன் காட்சியளிக் கின்றார். தாயார் ரமாமணி வல்லி ஆவார். திருமழிசையாழ்வார் ஒரு பாசுரம் பாடியுள்ளார். புஷ்கரணி கஜேந்திர புஷ்கரணியாகும். இக் கோயிலின் விமானம் கதநாக்ருதி விமான அம்சத்துடன் விளங்குகின்றது.
(14) காவளம் பாடி- திருநாங்கூரில் இத்தலம் அமைந்துள்ளது. மூலவர் - கோபாலகிருஷ்ணன், தாயார் - செங்கமல நாச்சியார். திருமங்கையாழ்வார் பத்துப் பாசுரங்களால் மங்களாசாசனம் செய்துள்ளார். இத்தலத்துப் புஷ்கரணி
தடமலர்ப் பொய்கையாகும்.
(15) கழிச்சீராம விண்ணகரம் - சீர்காழியில் இத்தலம் அமைந்துள்ளது. மூலவர் திரிவிக்கிரமன்; தாயார் - மட்டவிழுங்குழலியார். திருமங்கையாழ்வார் 10 பாசுரங்களால் மங்களாசாசனம் செய்துள்ளார். இக்கோயில் புஷ்கரணி சங்க
புஷ்கரணியாகும்.
224

(16) குடந்தை :- கும்பகோணத்தில் இத்தலம் அமைந்துள்ளது. மூலவரான சாரங்கபாணி கிடந்த கோலத்தில் அமர்ந்துள்ளார். தாயார் - கோமள வல்லி நாச்சியார் ஆவார். பெரியாழ்வார் - 3 பாசுரங்கள், ஆண்டாள் - 1 பாசுரம், திருமங்கையாழ்வார் - 25, பூதத்தாழ்வார் -2, திருமழிசையாழ்வார் - 7, நம்மாழ்வார் - 11 பாசுரங்களால் மங்களாசாசனம் செய்துள்ளனர். கோபுர விமானம் வைதீக விமான அம்சத்துடன் விளங்குகின்றது.
(17) கூடலூர் - மூலவராக வையம் காத்த பெருமாள் நின்ற கோலத்துடன் காட்சியளிக்கின்றார். தாயார் புஷ்பவல்லித் தாயார். திருமங்கையாழ்வார் 10 பாசுரங்களால் மங்களாசாசனம் செய்துள்ளார். இவ்வாலய விமானம் சுத்ஸ்த்வ விமான அம்சத்துடன் விளங்குகின்றது.
(18) கோழியூர் - உறையூர் திருச்சியில் இவ்வாலயம் அமைந்துள்ளது. மூலவர் அழகிய மணவாளப் பெருமாள், தாயார் கமலவல்லி நாச்சியார், திருமங்கை யாழ்வார், குலசேகரத்தாழ்வார் ஆகியோர் ஒவ்வொரு பாசுரத்தால் இக்கோயிலை
மங்களாசாசனம் செய்துள்ளனர்.
(19) சித்ர கூடம் :- சிதம்பரத்தில் இவ்வாலயம் அமைந்துள்ளது. இத்தல மூலவராக கோவிந்தப் பெருமாளும், தாயாராக புண்டரீகவல்லியாரும் எழுந்தருளியுள்ளனர். திருமங்கையாழ்வார் 32 குலசேகர ஆழ்வார் 11 பாசுரங்களாலும் மங்களாசாசனம் செய்துள்ளனர். இவ்வாலய புஷ்கரணியை புண்டரீக புஷ்கரணி என்றழைக்கின்றனர். இக்கோயில் விமானம் ஸாத்வீக விமான அமைப்பு உடையது.
(20) சிறுபுலியூர் - கொல்லுமாங்குடி என்னுமிடத்தில் இவ்வாலயம் அமைந்துள்ளது. இத்தலத்து மூலவராக அருள்மாகடல் கிடந்த கோலத்தில் எழுந்தருளியுள்ளார். தாயார் திருமாமகள் நாச்சியார். திருமங்கையாழ்வார் 10 பாசுரங்கள் பாடியுள்ளார். இக்கோயிலின் புஷ்கரணி மானஸபுஷ்கரணி. இத்தலத்து கோபுர விமானம் நந்த வர்த்தன விமானம்.
(21) செம்பொன் செய்கோயில் - திருவாங்கூரில் இத்தலம் அமைந்துள்ளது. மூலவர் பேரருளாளன் நின்ற கோலத்தில் எழுந்தருளியுள்ளார். தாயார் அல்லிமாமலர் நாச்சியார். திருமங்கையாழ்வார் 10 பாசுரங்கள் பாடியுள்ளார். இத்தலத்துப் புஷ்கரணி ஹேம தீர்த்தம் எனவும், விமானம் கண்க விமானம் எனவும் பெயர் பெற்றுள்ளது.
(22) சேறை :- கும்பகோணத்தில் இவ்வாலயம் அமைந்துள்ளது. மூலவராக ஸாரநாதன் எழுந்தருளியுள்ளார். தாயார் சாரநாயகி. திருமங்கையாழ்வார் இத்தலத்தின் மீது 13 பாசுரங்கள் பாடியுள்ளார். இக்கோயில் விமானம் ஸார விமான அம்சம் கொண்டதாகும்.
இந்துக் கலைக்களஞ்சியம்

Page 255
(23) தஞ்சைமாமணிக்கோயில் - தஞ்சாவூரில் இத்தலம் அமைந்துள்ளது. இக்கோயில் மூலவர் நீலமேகப் பெருமாள்; தாயார் செங்கமலவல்லி. இக் கோவிலை நம்மாழ்வார், பூதத்தாழ்வார், திருமங்கையாழ்வார் முறையே 1, 3 பாசுரங்களால்
பாடியுள்ளனர்.
(24) தலைச்சங்காடு :- இவ்வாலயம் ஆக்கூரில் அமைந்துள்ளது; இத்தலத்து மூலவர் நாண்மதியப் பெருமாள். தாயார் தலைச்சங்க நாச்சியார். திருமங்கையாழ்வார் இத்தலத்தை இரண்டு பாசுரங்களால் மங்களாசாசனம் செய்துள்ளார். இக்கோயிலின் புஷ்கரணி சந்திர புஷ்கரணி. இத்தலத்துக் கோபுர விமானம் சந்திர விமானமாகும்.
(25) திருத்தெற்றியம்பலம் :- திருநாங்கூர் தலங்களுள் ஒன்று. இவ்வாலய மூலவர் செங்கண் மால், தாயார் செங்கமலவல்லி. திருமங்கையாழ்வார் இத்தலத்தினை பத்துப் பாசுரங்களால் மங்களாசாசனம் செய்துள்ளார். இக்கோயிலின் புஷ்கரணி சூரிய புஷ்கரணி விமானம் வேத விமானம் ஆகும்.
(26) தேவனுார் :- இவ்வாலயம் சீர்காழியில் அமைந்துள்ளது. இவ்வாலய மூலமூர்த்தியாக மாதவப் பெருமாள் எழுந் தருளியுள்ளார். தாயார் கடல்மகள் நாச்சியார்.
(27) திருநந்திபுர விண்ணகரம்:- இத்தலம் கும்பகோணத்தில் அமைந்துள்ளது. இவ்வாலய மூலவராக ஜெகநாதரும் தாயாராக செண்பக வல்லியும் எழுந்தருளியுள்ளார்கள். திருமங்கையாழ்வார் 10 பாசுரங்களால் மங்களசாசனம் செய்துள்ளார். இவ்வாலய விமானம் மந்தார விமான அம்சமாகும்.
(28) நறையூர் :- இவ்வாலயம் கும்பகோணத்தில் அமைந்துள்ளது. இவ்வாலய மூலவராக திருநறையூர் நம்பி நின்ற கோலத்திலும் தாயார் நம்பிக்கை நாச்சியாரை மணம் புரியும் கோலத்திலும் திகழ்கின்றார். திருமங்கையாழ்வார் நூற்றுப்பத்து
பாசுரங்களால் மங்களாசாசனம் செய்துள்ளார்.
(29) திருநாகை :- நாகபட்டினத்தில் இவ்வாலயம் அமைந்துள்ளது. இவ்வாலய மூலவராக நீலமேகப் பெருமாளும் தாயார் செளந்தர்யவல்லியும் எழுந்தருளியுள்ளனர். திருமங்கையாழ்வார் இவ்வாலயத்தைப் பத்துப் பாசுரங்களால் மங்களாசாசனம் செய்துள்ளார்.
(30) பார்த்தனன் பள்ளி - இத்தலம் திருநாங்கூரைச் சேர்ந்தது. இவ்வாலய மூலவராக தாமரையாள் கேசவனும் தாயார் தாமரை நாயகியும் எழுந்தருளியுள்ளார்.
(31) புள்ளம் பூதங்குடி - சுவாமிமலையில் இவ்வாலயம் அமைந்துள்ளது. இவ்வாலய மூலவராக வல்வில் இராமர் கிடந்த கோலத்தில் காணப்படுகின்றார். தாயார் பொற்றாமரையாள்.
இந்துக்கலைக்களஞ்சியம்

திருமங்கையாழ்வார் பத்துப் பாசுரங்களால் மங்களாசாசனம் செய்துள்ளார். இக்கோயிலின் விமானமானது சோபன விமான
அம்சத்துடன் உள்ளது.
(32) பேர்நகரி - இவ்வாலயம் லால்குடியில் அமைந்துள்ளது. இவ்வாலய மூலவர் அப்பக்குடத்தான் கிடந்த கோலத்தில் உள்ளார். தாயார் இந்திரா தேவி. இவ்வாலயத்தை திருமங்கையாழ்வார் பத்தொன்பது பாசுரங்களாலும், பெரியாழ்வார் இரு பாசுரங்களாலும் , நம்மாழ்வார் பதினொரு பாசுரங்களாலும், திருமழிசை ஆழ்வார் ஒரு பாசுரத்திலும்
மங்களாசாசனம் செய்துள்ளனர்.
(33) மணிக்கூடம்:- திருநாங்கூர் தலங்களுள் திருமணிக்கூடமும் ஒன்றாகும். இத்தலத்து மூலவராக வரதராஜப் பெருமாளும், தாயாராக திருமாமகள் நாச்சியாரும் எழுந்தருளியுள்ளனர் சந்திரனுக்கு பாவவிமோசனம் அளிக்கப்பட்ட தலம் திருமங்கையாழ்வார் 10 பாசுரங்களால்
மங்களாசாசனம் செய்துள்ளார்.
(34) மணிமாடக்கோயில்:- திருநாங்கூர் திருப்பதிகளுள் இதுவும் ஒன்று. இத்தலத்து மூலவராக நாராயணனும் தாயாராக புண்டரிகவல்லித் தாயாரும் எழுந்தருளியுள்ளனர். திருமங்கை யாழ்வார் பன்னிரண்டு பாசுரங்களால் இவ்வாலயத்தை மங்களாசாசனம் செய்துள்ளார்.
(35) திருவண்புருஷோத்தமம் - திருநாங்கூரில் உள்ள தலங்களுள் இதுவும் ஒன்று. இவ்வாலய மூலவராகப் புருஷோத்தமரும், தாயார் புருஷோத்தம நாயகியும் எழுந்தருளியுள்ளனர்.
(36) திரு விண்ணகர்- திருநாகேஸ்வரத்தில் இவ்வாலயம் அமைந்துள்ளது. இவ்வாலய மூலவராக உப்பிலியப்பரும் தாயாராக பூமாதேவி நாச்சியாரும் எழுந்தருளியுள்ளனர். இக்கோவிலில் திருமங்கையாழ்வார் 30, நம்மாழ்வார் 11, பேயாழ்வார் 2 பாசுரங்களாலும், மங்களாசாசனம் செய்துள்ளனர்.
இக்கோயில் கோபுரவிமானம் சுத்தானந்த விமான அம்சமாகும்.
(37) வெள்ளங்குளம் :- திருநாங்கூர் தலத்தைச் சேர்ந்தது இவ்வாலயம். இத்தலத்து மூலவராக பூரீநிவாஸனும் தாயார் அலர்மேல் மங்கையும் எழுந்தருளியுள்ளனர். இத்தலம் அண்ணன் கோவில் எனச் சிறப்பு பெயர் பெற்றது.
(38) வெள்ளறை:- இவ்வாலயம் பூரீரங்கத்தில் அமைந்துள்ளது. இவ்வாலய மூலவரான புண்டரீகநாதர் நின்ற கோலத்துடன் எழுந்தருளியுள்ளார். தாயார் செண்பக வல்லி ஆவார். திருமங்கையாழ்வார் 13 பாசுரங்களாலும் பெரியாழ்வார்
11 பாசுரங்களாலும் மங்களாசாசனம் செய்துள்ளனர்.
225

Page 256
(39) வெள்ளியங்குடி - சேங்கனூர் என்னும் ஊரில் இத்தலம் அமைந்துள்ளது. இத்தலத்து மூலவராக கோமளவல்லி இராமர் புஜங்க சயனராய் எழுந்தருளியுள்ளார். தாயார் மரகதவல்லித் தாயார் ஆவார். திருமங்கையாழ்வார் 10 பாசுரங்களால் மங்களாசாசனம் செய்துள்ளார். தலவிருட்சம்
வாழைமரம் ஆகும்.
(40) திருவைகுந்த விண்ணகரம்:- இவ்வாலயம் சீர்காழியில் அமைந்துள்ளது. இவ்வாலய மூலவராக வைகுந்தநாதனும் தாயாராக வைகுந்தவல்லியும் எழுந்தருளியுள்ளனர். திருமங்கையாழ்வார் 10 பாசுரங்களால் மங்களாசாசனம் செய்துள்ளார்.
பாண்டிய நாடு
இந்நாட்டைச் சேர்ந்ததாக பதினெட்டுத் தலங்கள்
உள்ளடக்கப்படுகின்றன.
(41) குருகூர் - ஆழ்வார் திருநகரி எனப்படும் இத்தலத்தின் மூலவராக ஆதி நாதப் பெருமாள் எழுந்தருளியுள்ளார். இந்தலத் தாயார் ஆதி நாதவல்லி (குருகூர்வல்லி) நம்மாழ்வார் பதினொரு
பாசுரங்களால் மங்களாசாசனம் செய்துள்ளார்.
(42) திருக்குளந்தை :- வைகுண்டத்தில் இவ்வாலயம் அமைந்துள்ளது. இவ்வாலய மூலவராக ரீநிவாஸனும் தாயாராக அலர் மேல் மங்கை, திருக்குளந்தை வல்லி ஆகியோரும் எழுந்தருளியுள்ளனர். நம்மாழ்வார் ஒரு பாசுரத்தால் மங்களாசாசனம் செய்துள்ளார்.
(43) குறுங்குடி - நெல்லை மாவட்டத்தில் இவ்வாலயம் அமைந்துள்ளது. மூலவராக வாமனர் நின்ற கோலத்திலும், தாயாராக குறுங்குடி வல்லி நாச்சியாரும் எழுந்தருளியுள்ளனர். இத்தலத்தை திருமழிசை ஆழ்வார் ஒரு பாசுரத்தாலும், பெரியாழ்வார் ஒரு பாசுரத்தாலும், திருமங்கையாழ்வார் இருபத்தைந்து பாசுரங்களாலும், நம்மாழ்வார் பதின்மூன்று பாசுரங்களாலும் மங்களாசாசனம் செய்துள்ளனர்.
(44) கூடல் - மதுரையில் இவ்வாலயம் அமைந்துள்ளது. மூலவராகக் கூடலழகர் வீற்றிருந்த கோலத்தில் தாயார் மதுரவல்லிநாச்சியாருடன் எழுந்தருளியுள்ளார். இவ்வாலயத்தை ஆண்டாள், திருமங்கையாழ்வார் ஆகியோர் மங்களாசாசனம் செய்துள்ளனர்.
(45) கோட்டியூர் - இராமநாதபுரம் மாவட்டத்தில் இவ்வாலயம் அமைந்துள்ளது. இத்தலத்து மூலவராக உரகமெல்லணையான் புஜங்க சயனராய் திருமாமகள் நாச்சியாருடன் எழுந்தருளியுள்ளார். இவ்வாலயத்தைப் பெரியாழ்வார் 21 பாசுரங்களாலும் பேயாழ்வார் ஒரு
பாசுரத்தாலும் திருமங்கையாழ்வார் பதின்மூன்று பாசுரங்களாலும்
226

திருமழிசையாழ்வார் ஒரு பாசுரத்தாலும், பூதத்தாழ்வார் இருபாசுரங்களாலும் மங்களாசாசனம் செய்துள்ளனர்.
(46) கோளூர் - ஆழ்வார் திருநகரியில் இத்தலம் அமைந்துள்ளது. மூலவராக வைத்தமாநிதிப் பெருமாள் அமுதவல்லி நாச்சியாரோடு எழுந்தருளியுள்ளார். நம்மாழ்வாரால் 12 பாசுரங்கள் இத்தலத்தின் மீது பாடப்பட்டுள்ளது.
(47) சீவரமங்கை:- திருநெல்வேலியில் இவ்வாலயம் அமைந்துள்ளது. இத்தலத்து மூலவர் தோத்தாத்திரிநாதன் வீற்றிருந்த கோலத்தில் தாயார் பூரீவரமங்கை நாச்சியார், பெரியபிராட்டி, பூமாதேவி ஆகியோருடன் எழுந்தருளியுள்ளனர். நம்மாழ்வார் பதினொரு பாசுரங்களால் மங்களாசாசனம் செய்துள்ளார்.
(48) தண்கால் :- இத்தலம் சிவகாசியில் அமைந்துள்ளது. இத்தலத்து மூலவராக நின்ற நாராயணன் நின்ற கோலத்தில் ஆனந்த நாயகியுடன் எழுந்தருளியுள்ளார். இத்தலத்தினை திருமங்கையாழ்வார் நான்கு பாசுரங்களாலும், பூதத்தாழ்வார் ஒரு பாசுரத்தாலும் மங்களாசாசனம் செய்துள்ளனர்.
(49) தொலைவில்லி மங்கலம் - ஆழ்வார் திருநகரியில் இத்தலம் அமைந்துள்ளது. இவ்வாலயத்தின் மூலவராக பூரீநிவாஸனும் தாயாராக பூமாதேவியும் எழுந்தருளியுள்ளனர். நம்மாழ்வார் பதினொரு பாசுரங்களால் மங்களாசாசனம் செய்துள்ளார். இத்தலத்தில் துலாம் சாபவிமோசனம் அடைந்ததாகத் தல வரலாறு கூறும்.
(50) திருப்புல்லாணி :- இராமநாதபுரத்தில் இவ்வாலயம் அமைந்துள்ளது. இவ்வாலய மூலவராக கல்யாண ஜெகந்நாதனும் தாயார் கல்யாணவல்லியும் எழுந்தருளியுள்ளனர். திருமங்கை யாழ்வார் இருபத்தொரு பாசுரங்களால் மங்களாசாசனம் செய்துள்ளார். யக்ஞ சர்மா என்ற அந்தணன் சாப விமோசனம்
அடைந்த தலமாகும்.
(51) புளியங்குடி - நெல்லை மாவட்டத்தில் இவ்வாலயம் அமைந்துள்ளது. இத்தல மூலவராக காய்சின வேந்தன் புஜங்க சயனராய் மலர்மகள் நாச்சியாருடன் எழுந்தருளியுள்ளார். இத்தலத்தை நம்மாழ்வார் பன்னிரண்டு பாசுரங்களால் மங்களா சாசனம் செய்துள்ளார். யக்ஞ சர்மா என்ற அந்தணன் சாப
விமோசனம் அடைந்த தலமாகும்.
(52) திருப்பேரை :- ஆழ்வார் திருநகரியில் இத்தலம் அமைந்துள்ளது. இத்தல மூலவர் மகர நெடுங்குழைக்காதன், தாயார் குழைக்காது வல்லி நாச்சியாருடன் எழுந்தருளியுள்ளார்.
நம்மாழ்வார் பதினொரு பாசுரங்கள் பாடியுள்ளார்.
இந்துக் கலைக்களஞ்சியம்

Page 257
(53) திருமாலிருஞ்சோலை :- மதுரையில் உள்ள திருமாலிருஞ்சோலை என்னும் மலையில் உள்ளது. இத்தலத்து மூலவர் அழகருடன் தாயார் சுந்தரவல்லி நாச்சியார் எழுந்தருளியுள்ளார். இத்தலத்தினை ஆண்டாள் பதினொரு பாசுரங்களாலும்,பெரியாழ்வார் இருபத்து நான்கு பாசுரங்களாலும் பூதத்தாழ்வார் மூன்று பாசுரங்களாலும், நம்மாழ்வார் முப்பத்தாறு பாசுரங்களாலும் மங்களாசாசனம் செய்துள்ளனர்.
(54) திருமெய்யம் :- இவ்வாலய மூலவராக சத்யகிரிநாதன் தாயார் உய்யவந்த நாச்சியாருடன் எழுந்தருளியுள்ளார். திருமங்கை ஆழ்வார் இக்கோயிலை ஒன்பது பாசுரங்களால்
மங்களாசாசனம் செய்துள்ளார்.
(55) திருமோகூர் - மதுரைக்கு வடக்கே இவ்வாலயம் அமைந்துள்ளது. இவ்வாலய மூலவராக காளமேகப் பெருமாள், தாயார் மோகூர் மோகன வல்லியுடன் எழுந்தருளியுள்ளார். நம்மாழ்வார் பதினொரு பாசுரங்களாலும் திருமங்கையாழ்வார் ஒரு பாசுரத்தாலும் மங்களாசாசனம் செய்துள்ளனர்.
(56) வரகுணமங்கை - நெல்லை மாவட்டத்தில் வைகுண்டத்திற்கு அண்மையில் உள்ளது. இத்தலத்து மூலவராக விஜயாசனப் பெருமாள் தாயார் வரகுணவல்லியுடன் எழுந்தருளியுள்ளார். நம்மாழ்வாரால் மங்களாசாசனம்
செய்யப்பட்ட தலமாகும்.
(57) பூநீவில்லிப்புத்தூர் :- இவ்வாலய மூலவராக வடபத்ரசாயி புஜங்க சயனராய் தாயார் ஆண்டாளுடன் சேவை தருகின்றார். இவ்வாலயத்தை பெரியாழ்வாரும், ஆண்டாளும் மங்களாசாசனம் செய்துள்ளனர். பெரியாழ்வார், பூரீ ஆண்டாள், வில்லிபுத்தூரர் அவதரித்த தலம் இதுவாகும்.
(58) வைகுந்தம் - பூரீவைகுண்டம் நெல்லை மாவட்டத்தில் அமைந்துள்ளது. இத்தலத்து மூலவராக பூரீவைகுந்த நாதர் தாயார் வைகுந்த வல்லியுடன் சேவை செய்கின்றார். நம்மாழ்வார்
இரண்டு பாசுரங்களால் மங்களாசாசனம் செய்துள்ளார்.
மலைநாட்டில் பதின்மூன்று தலங்கள் கூறப்படு கின்றன. (59) அனந்தசயனம் :- கேரள மாநிலத்தில் உள்ள திருவனந்தபுரத்தில் இவ்வாலயம் அமைந்துள்ளது. இத்தலத்து மூலவராக அனந்த பத்மநாபன் புஜங்க சயனராய் தாயார் பூரீஹரலட்சுமியுடன் எழுந்தருளியுள்ளார். இத்தலத்தின் தீப அலங்கார காட்சி மிகவும் அற்புதமான ஒன்றாகும்.
(60) திருக்கடித்தானம் :- கேரளாவின் கொட்டாரக்கரா என்னுமிடத்தில் இத்தலம் அமைந்துள்ளது. இத்தல மூலவராக அற்புத நாராயணன் நின்ற கோலத்தில் கற்பக வல்லித்
இந்துக் கலைக்களஞ்சியம்

தாயாருடன் காட்சியளிக்கின்றார். நம்மாழ்வார் பதினொரு பாசுரங்கள் இத்தலத்தின் மீது பாடியுள்ளார்.
(61) திருக்காட்கரை :- கேரள மாநிலம் இடப்பள்ளி என்னுமிடத்தில் இவ்வாலயம் அமைந்துள்ளது. இத்தல மூலவராகக் காட்கரை அப்பன் நின்ற கோலத்துடன் தாயார் பெருஞ் செல்வநாயகியுடன் காட்சியளிக்கின்றார். நம்மாழ்வார் பதினொரு பாசுரங்களால் மங்களாசாசனம் செய்துள்ளார். இத்தலத்தின் திருவோணப்பண்டிகை சிறப்பானதாகும்.
(62) திருச்செங்குன்றுார் :- கேரள மாநிலத்தில் எர்ணாகுளம் அருகில் உள்ளது. இத்தலத்து மூலவரான இமையவரப்பன் நின்ற கோலத்திலே தாயார் செங்கமல வல்லியுடன் சேவை தருகின்றார். நம்மாழ்வார் பதினொரு பாசுரங்களால் மங்களாசாசனம் செய்துள்ளனர். இவ்வாலயத்
தலவரலாறு திருமாலின் மோகினி அவதாரத்தைக் கூறுகின்றது.
(63) திருநாவாய் :- கேரளாவில் உள்ள எடக்குளம் என்னுமிடத்தில் இவ்வாலயம் அமைந்துள்ளது. இவ்வாலய மூலவராக நாவாய் முகுந்தன் நின்ற கோலத்தில் மலர் மங்கை நாச்சியாருடன் எழுந்தருளியுள்ளார். திருமங்கையாழ்வார் இரண்டு பாசுரங்களாலும், நம்மாழ்வார் பதினொரு பாசுரங்களாலும் மங்களாசாசனம் செய்துள்ளனர்.
(64) திருப்புலியூர் :- கேரளாவில் செங்கணுரர் என்னுமிடத்திற்கு அருகாமையில் இவ்வாலயம் அமைந்துள்ளது. இத்தலத்து மூலவராக மாயப்பிரான் நின்ற கோலத்தில் தாயார் பொற்கொடி நாச்சியாருடன் சேவை தருகின்றார். இத்தலத்தின்
மீது திரு மங்கையாழ்வார், நம்மாழ்வார் பாடல்கள் உள்ளன.
(65) மூழிக்களம் :- கேரளமாநிலம் ஆழவாய் நகரிக்கு அருகில் இத்தலம் உள்ளது. இத்தலத்து மூலவராக திருமூழிக்களத்தான் நின்ற கோலத்தில் மதுரவேணி நாச்சியாருடன் காட்சியளிக்கின்றார். திருமங்கையாழ்வார் மூன்று பாசுரங்களாலும் நம்மாழ்வார் பதினொரு பாசுரங்களாலும் இத்தல இறைவனைப் பாடியுள்ளனர்.
(66)திருவண்பரிசாரம் :- நாகர் கோயிலை அடுத்து இத்தலம் அமைந்துள்ளது. இத்தல மூலவர் திருக்குறளப்பன் வீற்றிருந்த கோலத்தில் தாயார் கமலவல்லி நாச்சியாருடன் எழுந்தருளியுள்ளார். இத்தலத்தினை நம்மாழ்வார் மங்களாசாசனம் செய்துள்ளார்.
(67) திருவண்வண்டூர் - கேரளாவின் செங்கண்ணுாரில் இருந்து 6 கிலோ மீற்றர் தூரத்தில் இவ்வாலயம் அமைந்துள்ளது. இவ்வாலய மூலவராக பாம்பணையப்பன் நின்ற கோலத்தில்
தாயார் கமலவல்லி நாச்சியாருடன் காட்சி தருகிறார்.
227

Page 258
நம்மாழ்வார் பதினொரு பாசுரங்களால் இத்தலத்தை மங்களாசாசனம் செய்துள்ளார்.
(68) திருவல்லவாழ் - கேரள மாநிலம் திருவல்லாவில் இவ்வாலயம் உள்ளது. இத்தலத்து மூலவராக கோலப்பிரான் நின்ற கோலத்திலே தாயார் செல்வத்திருக்கொழுந்து நாச்சியாருடன் காட்சி தருகின்றார்.
(69) திருவட்டாறு:- திருவனந்தபுரத்தில் இவ்வாலயம் அமைந்துள்ளது. இத்தலத்து மூலவராக ஆதிகேசவப் பெருமான் கிடந்த கோலத்தில் தாயார் மரகதவல்லி நாச்சியாருடன் காட்சியளிக்கின்றார். இத்தலத்தினை நம்மாழ்வார் பதினொரு
பாசுரங்களால் மங்களாசாசனம் செய்துள்ளார்.
(70) திருமாறன் விளை - இத்தலம் கேரளமாநிலத்தில் அமைந்துள்ளது. இத்தலத்து மூலவராக திருக்குறளப்பன் நின்ற கோலத்தில் தாயார் பத்மாசனித் தாயாருடன் கிழக்கு நோக்கி சேவை தருகின்றார். அர்ஜுனனால் வழிபடப்பட்ட தலம் எனப்படுகின்றது. நம்மாழ்வார் இத்தலத்தின் மீது பதினொரு பாசுரங்கள் செய்துள்ளார்.
(71) திருவித்துவக்கோடு :- கேரள மாநிலத்துப் பட்டாம்பியில் இவ்வாலயம் அமைந்துள்ளது. இவ்வாலய மூலவராக உய்ய வந்த பெருமாள் நின்ற கோலத்திலே தாயார் வித்துவக் கோட்டு வல்லியுடன் தென்திசை நோக்கிச் சேவை செய்கின்றார்.
நடுநாடு நடுநாட்டில் இரண்டு தலங்கள் அமைந்துள்ளன.
(72) திருக்கோவிலூர் - திருக்கோவிலூரில் இத்தலம் அமைந்துள்ளது. இக்கோயிலின் மூலவராக திரிவிக்ரமர் நின்ற கோலத்தில் தாயார் பூங்கோவில் நாச்சியாருடன் காட்சியளிக் கின்றார். இக்கோவிலை பொய்கையாழ்வார் இருபாசுரங் களாலும், திருமங்கை யாழ்வார் பதினெட்டுப் பாசுரங்களாலும்,
பூதத்தாழ்வார் ஒருபாசுரத்தாலும் மங்களாசாசனம் செய்துள்ளனர்.
(73) திருவந்திபுரம் :- இத்தலம் திருப்பாதிரிப்புலியூரில் அமைந்துள்ளது. இக்கோயிலின் மூலவர் தெய்வநாயகன் நின்ற கோலத்தில் தாயார் ஹேமாம்புஜவல்லியுடன் காட்சியளிக்கின்றார். திருமங்கையாழ்வார், மணவாள முனிவர் ஆகியோர் மங்களா சாசனம் செய்துள்ளனர். ஒன்றுக்கு ஒன்று பகையான கருடனும்
ஆதிசேடனும் ஒன்றாக வழிபட்ட தலம் ஆகும்.
தொண்டைநாடு
தொண்டைநாட்டில் இருபத்தியிரண்டு வைஷ்ணவத் தலங்கள் அமைந்துள்ளன.
228

(74) அஷ்டபுயம் :- இவ்வாலயம் காஞ்சிபுரத்தில் அமைந்துள்ளது. இவ்வாலய மூலவராக ஆதி கேசவப் பெருமாள் மேற்கு திசை நோக்கியவராக அலர்மேல் மங்கையுடன் காட்சியளிக்கின்றார். எட்டுக்கைகளிலும் எட்டு ஆயுதங்களை ஏந்தியுள்ளதால் அட்டபுயம் என்று சுவாமிக்குப் பெயர் வந்தது
என்பர்.
(75) அத்தியூர் (திருக்கச்சி) - காஞ்சிபுரத்தில் இவ்வாலயம் அமைந்துள்ளது. இங்குள்ள மூலவர் வரதராஜப் பெருமாள் நின்ற கோலத்திலே தாயார் பெருந்தேவியாருடன் காட்சி தருகின்றார். இவ்வாலயத்தைப் பூதத்தாழ்வார் (2) திருமங்கையாழ்வார் (4) பேயாழ்வார் (1 பாசுரம்) மங்களாசாசனம் செய்துள்ளனர்.
(76) திருவல்லிக்கேணி - திருவல்லிக்கேணியில் இத்தலம் அமைந்துள்ளது. இவ்வாலயத்தின் மூலவராக பார்த்தசாரதி நின்ற கோலத்தில் ருக்மணித்தாயாருடன் எழுந்தருளியுள்ளார். பலராமர், சாத்தகி, பிரத்யும்னன், அநிருத்தன் ஆகியோரும் காணப்படுகின்றனர். இவ்வாலயத்தில் ஐந்து சந்நிதிகள் உள்ளன. ஐந்து சந்நிதிகளிலும் உள்ள மூலவர்கள் மங்களாசாசனம் பெற்றுள்ளமையால் பஞ்சமூர்த்தி தலம் என்ற பெயர் உண்டானது. திருமங்கையாழ்வார் 10 பாசுரங்களாலும் பேயாழ்வார் ஒரு பாசுரத்தாலும், திருமழிசையாழ்வார் ஒரு பாசுரத்தாலும் மங்களாசாசனம் செய்துள்ளனர்.
(77) திருவிடந்தை - வண்டலூரில் இவ்வாலயம் அமைந்துள்ளது. இவ்வாலய மூலவராக நித்திய கல்யாணப் பெருமாள் நின்ற கோலத்தில் அகிலவல்லி நாச்சியாருடன் சேவை செய்கின்றார். திருமங்கையாழ்வார் பதின்மூன்று பாசுரங்களால் மங்களாசாசனம் செய்துள்ளார். சாலவ முனிவரின் 360 பெண்களையும் தினமும் மணம் புரிந்ததனால் மூலவருக்கு நித்திய கல்யாணப் பெருமாள் என்ற பெருமை உண்டானது எனத் தல
புராணம் கூறும்.
(78) திருஉளரகம் :- காஞ்சிபுரத்தில் இவ்வாலயம் அமைந்துள்ளது. இவ்வாலய மூலவராக உலகளந்த பெருமாள் உலகை அளந்திடும் கோலத்தில் மேற்குத் திசை நோக்கியபடி சேவை செய்கின்றார். தாயார் அமிர்தவல்லி ஆவார். இத்தலத்தினைத் திருமங்கையாழ்வார் நான்கு பாசுரங்களாலும் திருமழிசையாழ்வார் இரண்டு பாசுரங்களாலும் மங்களாசாசனம் செய்துள்ளனர்.
(79)திருஎவ்வுள் :- திருவள்ளூரில் இத்தலம் அமைந்துள்ளது. இக்கோயிலின் மூலவராக வீரராகவப் பெருமாள் புஜங்க சயனத்தில் கனக வல்லித்தாயருடன் சேவை செய்கின்றார். இக்கோயிலை திருமழிசையாழ்வார் ஒரு பாசுரத்தாலும், திருமங்கையாழ்வார் பதினொரு பாசுரங்களாலும்
மங்களாசாசனம் செய்துள்ளனர்.
இந்துக் கலைக்களஞ்சியம்

Page 259
(80) கடல்மல்லை :- மகாபலிபுரத்தில் இத்தலம் அமைந்துள்ளது. இக்கோயில் மூலவர் ஜலசயனப் பெருமாள் கிடந்த கோலத்தில் கடலை நோக்கியவாறு எழுந்தருளியுள்ளார்.
தாயார் நீலமங்கையாவார்.
(81) திருநீர்மலை :- இத்தலம் பல்லாவரத்தில் அமைந்துள்ளது. இத்தலம் அடிவார, மலை மேல் கோயிலாக உள்ளது. இவ்வாலய மூலவராக அரங்கநாதனாகவும் நரசிம்மராகவும், திரிவிக்கிரமனாகவும் மலைமேல் கோயிலிலும், பூரீராமராக மலை அடிவாரக் கோயிலில் சீதாப் பிராட்டியாருடன் சேவை செய்கின்றார். இக்கோயிலில் திருமங்கையாழ்வாரும் பூதத்தாழ்வாரும் முறையே 19, 20 பாசுரங்கள் பாடியுள்ளனர்.
(82) திருக்காரகம் :- காஞ்சிபுரத்தில் இத்தலம் அமைந்துள்ளது. இக்கோயிலின் மூலவராக கருணாகரப் பெருமாள் பத்மாமணி நாச்சியாருடன் நின்ற திருக்கோலத்திற் சேவை செய்கின்றார். இத்தலத்தினை திருமங்கையாழ்வார் ஒரு பாசுரம் மூலம் மங்களாசாசனம் செய்துள்ளார்.
(83) திருநீரகம் :- காஞ்சிபுரத்தில் இத்தலம் அமைந்துள்ளது. உற்சவ மூர்த்தியாக ஜகதீஸ்வரர், தாயார் நீலமங்கை வல்லியுடன் எழுந்தருளியுள்ளார். திருமங்கையாழ்வார் ஒரு பாசுரத்தால் மங்களாசாசனம் செய்துள்ளார்.
(84) திருவெஃகா - காஞ்சியிலே உள்ள தலம். இக்கோயில் மூலவர் யதோத்காரி பெருமாள் புஜங்க சயன கோலத்தில் வலமிருந்து இடமாகச் சயனம் கொண்டுள்ளார். இத்தலத் தாயார் கோமளவல்லி நாச்சியார் ஆவார். திருமங்கையாழ்வார் ஆறுபாசுரங்களாலும், நம்மாழ்வார் ஒரு பாசுரத்தாலும், திருமழிசையாழ்வார் மூன்று பாசுரங்களாலும், மங்களாசாசனம்
செய்துள்ளனர்.
(85) கடிகை - சோளிங்கபுரத்தில் இத்தலம் அமைந்துள்ளது. இவ்வாலய மூலவராக யோகநரசிம்மர் சேவை செய்கின்றார். தாயாரான அமிர்தவல்லி நாச்சியார் தனிச் சந்நிதானம் கொண்டு அருள்பாலிக்கின்றார். பேயாழ்வார் ஒரு பாசுரத்தாலும் திருமழிசையாழ்வார் மூன்று பாசுரங்களாலும் மங்களாசாசனம்
செய்துள்ளனர்.
(86) திருப்பவள வண்ணம் :- காஞ்சிபுரத்தில் இத்தலம் அமைந்துள்ளது. இக்கோயில் மூலவர் பவள வண்ணன், தாயார் பவள வல்லி ஆவார். திருமங்கையாழ்வார் ஒரு பாசுரத்தால்
மங்களாசாசனம் செய்துள்ளனர்.
(87) திருக்கார் வானம் - காஞ்சிபுரத்தில் அமைந்துள்ளது. இவ்வாலய மூலவர் கள்வர். தாயார் கமலவல்லி. இருவரும்
மேற்குத் திசை நோக்கியவாறு நின்ற கோலத்திற் சேவை
இந்துக்கலைக்களஞ்சியம்

செய்கின்றனர். திருமங்கையாழ்வார் ஒரு பாசுரத்தால் மங்களாசாசனம் செய்துள்ளார்.
(88) திருப்பரமேசுவர விண்ணகரம் :- காஞ்சிபுரத்தில் உள்ளது. இவ்வாலய மூலவர் பரமபத நாதர். வீற்றிருந்த கோலத்தில் மேற்கு திசை நோக்கியவாறு வைகுந்த வல்லித் தாயாருடன் சேவை செய்கின்றார். திருமங்கையாழ்வார் பத்துப் பாசுரங்களால் இத்தலத்தினை மங்களாசாசனம் செய்துள்ளார். பரமேஸ்வர வர்மன் என்ற மன்னனால் கட்டப்பட்டதாகச் சரித்திர சான்றுகள் கூறுகின்றன.
(89) திருத்தண்கா - காஞ்சிபுரத்தில் உள்ள ஆலயமாகும். இத்தலத்தில் வேதாந்ததேசிகர் அவதரித்தது சிறப்பான அம்சமாகும். கோயில் மூலவர் தீபப்பிரகாசர் நின்ற கோலத்தில் மரகதவல்லித் தாயாருடன் சேவை செய்கின்றார்.
(90) திரு நிலாத்திங்கள் துண்டம் :- பெரியகாஞ்சிபுரத்து ஏகாம்பரேஸ்வரர் ஆலயத்தின் உட்பிராகாரத்தில் மிகவும் சிறிய சந்நிதியாக இத்தலம் உள்ளது. இத்தலத்து மூலவர் நிலாத்திங்கள் துண்டத்தார் நின்ற கோலத்தில் நிலாத்திங்கள் துண்டத் தாயாருடன் சேவை செய்கின்றார். இவ்வாலய புஷ்கரணி சந்திர புஷ்கரணியாகும்.
(91) திருவேளுக்கை :- சின்னக்காஞ்சிபுரத்தில் இவ்வாலயம் அமைந்துள்ளது. இவ்வாலய மூலவர் அழகிய சிங்கர், தாயார் வேளுக்கை வல்லியுடன் நின்ற திருக்கோலத்திற் சேவை செய்கின்றார்.
(92) திருப்பாடகம் :- காஞ்சிபுரத்தில் இத்தலம் அமைந்துள்ளது. இவ்வாலய மூலவர் பாண்டவ தூதர் என்ற திருநாமத்துடன் கிழக்கு நோக்கிச் சேவை செய்கின்றார். தாயார்கள் ருக்மணி, சத்யபாமா ஆகியோர்.
(93) திருக்கள்வனூர் :- இத்தலம் பூரீ காமாட்சியம்மன் ஆலயத்தினுள் வலப்புறமாக அமைந்துள்ளது. மூலவர் ஆதிவராகப் பெருமாள் மேற்கு நோக்கிச் சேவை செய்கின்றார். தாயார் அஞ்சிலை வல்லி நாச்சியார். இவ் வாலயத்தின் புஷ்கரணி நித்திய புஷ்கரணி ஆகும்.
(94) திருநின்றவூர் :- இத்தலம் திண்ணனூரில் உள்ளது. இவ்வாலய மூலவர் பக்தவத்ஸலப் பெருமாள். இவருக்கு பத்ராவிப் பெருமாள் என்ற பெயரும் உண்டு. தாயார் என்னைப் பெற்ற தாயார் ஆவார் (பெரியபிராட்டி). இத்தலத்தினை இருபாசுரங்களால் திருமங்கையாழ்வார் மங்களாசாசனம் செய்துள்ளார். இவ்வாலய புஷ்கரணி வருண புஷ்கரணியாகும்.
(95) திருப்புட்குழி - காஞ்சிபுரத்தில் பாலுசெட்டி சத்திரம் என்னும் ஊரில் இத்தலம் உள்ளது. இங்குள்ள மூலவர்
229

Page 260
விஜயராகவப் பெருமாள்; தாயார் மரகதவல்லித் தாயார். திருமங்கையாழ்வார் இரு பாசுரங்களால் மங்களாசாசனம்
செய்துள்ளார். தீர்த்தம் ஜடாயு தீர்த்தமாகும்.
வடநாட்டுத் தலங்கள் பன்னிரண்டு ஆகும் (96) அயோத்தி - வட இந்தியாவில் லக்னோவிற்கும் காசிக்குமிடையில் இத்தலம் அமைந்துள்ளது. இத்தலத்து மூலவர் இராமபிரான் (ரகு நாயகன்) வீற்றிருந்த கோலத்தில் வடக்கு நோக்கிச் சேவை செய்கின்றார். தாயார் சீதாப்பிராட்டியாவார். இராமபிரான் அவதாரமுடிவில் சகோதரர் மூவருடன் சரயு நதியிற் சங்கமம் ஆகிய தலமும் இதுவே. இத்தலத்தைக் குலசேகர ஆழ்வார் நான்கு பாசுரங்களாலும், பெரியாழ்வார் ஆறு பாசுரங்களாலும், திருமங்கையாழ்வார் ஒரு பாசுரத்தாலும், தொண்டர் அடிப் பொடியாழ்வார் ஒரு பாசுரத்தாலும் மங்களாசாசனம் செய்துள்ளனர்.
(97) ஆயர்ப்பாடி கோகுலம் :- இத்தலம் யமுனா நதிக்கரையோரம் உள்ள கோகுலத்தில் உள்ளது. இத்தலத்து மூலவராக நவ மோகன கிருஷ்ணா, நின்ற கோலத்தில் சேவை செய்கின்றார். இத்தலத்தை பாமா, ருக்மணி இருவரும் பிராட்டியார்களாக உள்ளனர். இத்தலத்திற் திருமங்கையாழ்வார் ஏழு பாசுரங்களாலும், பெரியாழ்வார் பத்துப் பாசுரங்களாலும், ஆண்டாள் ஐந்து பாசுரங்களாலும், மங்களாசாசனம் செய்துள்ளனர். இத்தலத்து புஷ்கரணி யமுனா நதி, விமானம் ஹேமகூட விமான ஆகும்.
(98) தேவப்பிரயாகை - ரிஷி கேசத்தில் இருந்து 72 மைல் தொலைவில் இத்தலம் உள்ளது. இத்தலத்து மூலவர் நீல மேகப் பெருமாள் நின்ற கோலத்தில் கிழக்குத் திசை நோக்கி சேவை செய்கின்றார். தாயார் புண்டரீக வல்லி ஆவார். பெரியாழ்வார் ஒரு பாசுரத்தால் மங்களாசாசனம் செய்துள்ளார். இத்தலத்து
விமானம் மங்களா விமானம். தீர்த்தம் மங்கள தீர்த்தம்,
(99) திருச்சாளக்கிராமம் :- நேபாள நாட்டின் காட்மண்டு நகரிலிருந்து 90 கிலோ மீற்றர் தூரத்தில் உள்ள கண்டகி நதிக்கரையில் இத்தலம் அமைந்துள்ளது. இத்தலத்து மூலவரான பூரீ மூர்த்தி நின்ற கோலத்தில் வடக்கு நோக்கிச் சேவை தருகின்றார். தாயார் பூரீதேவி நாச்சியார் ஆவார். இத்தலத்தின் தீர்த்தம் சக்ர தீர்த்தமும் மற்றும் கண்டகி நதியுமாகும். இத்தலத்து விமானம் கனக விமானமாகும்.
(100) துவாரகை - இந்தியாவின் வடமேற்கில் உள்ள ஜாம் நகருக்கும் ஒக்காவிற்கும் இடையில் துவாரகை உள்ளது. இத்தலத்து மூலவர் கல்யாண நாராயணன் நின்ற கோலத்தில் மேற்கு திசை நோக்கி சேவை தருகின்றார். இத்தலத்துத் தாயார் கல்யாண நாச்சியார் ஆவார். இத்தலத்தை திருமங்கையாழ்வார்,
230

பெரியாழ்வார், ஆண்டாள் திருமழிசையாழ்வார், நம்மாழ்வார் முறையே 2, 5, 4, 1, 1, என பாசுரங்களால் மங்களாசாசனம் செய்துள்ளனர். இத்தலத்தின் தீர்த்தம் கோமதி நதி, சமுத்திர சங்கமம் ஆகியவை. விமானம் ஹேமகூட விமானம்.
(101) சிங்கவேள்குன்றம் :- இதனை நரசிம்ம ஷேத்திரம் என்பர். மலையைக்குடைந்து மலையிலேயே குடைவரைக் கோயிலாக இத்தலம் அமைக்கப்பட்டுள்ளது. இவ்வாலய மூலவர் நரசிம்மரும், தாயார் லட்சுமி நாச்சியாரும் ஆவார்கள். இத்தலம் ஆதிசங்கரர், இராமானுஜர், மத்வாச்சாரியர் ஆகிய மூவராலும் வழிபடப்பட்ட தலமாகும்.
(102) திருநைமிசாரண்யம் :- இந்தியாவின் வட நாட்டில் கல்கத்தாவில் இருந்து டேராடூன் செல்லும் வழியில் உள்ளது இத்தலத்து மூலவர் தேவர்ராஜன், தாயார் பூரீஹர வல்லியுடன் நின்ற கோலத்திலே கிழக்குத் திசை நோக்கிச் சேவை செய்கின்றார். திருமங்கையாழ்வார் பத்துப் பாசுரங்களால் இத் தலத்தை மங்களாசாசனம் செய்துள்ளார். இத்தல தீர்த்தம் கோமுகி நதி, புஷ்கரணி, சக்கர தீர்த்தம் என்பன ஆகும்.
(103) திருப்பிருதி - ஹரித்துவாரில் இத்தலம் அமைந்துள்ளது. இத்தலத்து மூலவர் பரம புருஷர், கிடந்த புஜங்க சயனமாகக் கிழக்கு நோக்கித் தாயார் பரிமள வல்லியுடன் சேவை தருகின்றார். திருமங்கையாழ்வார் பத்து பாசுரங்கள் இத்தலத்தின் மீது பாடியுள்ளார். இத்தலத்து புஷ்கரணி இந்திர தீர்த்தம், விமானம் கோவர்த்தன விமானமாகும்.
(104) திருவதரியாஸ்ரமம் :- இத்தலம் இமயமலையில் உள்ளது. இத்தலத்து மூலவர் பத்ரிநாராயணர் நின்ற கோலத்தில் கிழக்கு நோக்கியபடி சேவை தருகின்றார். இத்தலத்து தாயார் அரவிந்த வல்லி ஆவார். எம்பெருமான் தனக்குத் தானே ஆசானாக, மாணவனாக, எழுந்தருளி அர்த்தபஞ்சக ஞானத்தை உலகுக்கு உணர்த்திய புண்ணியத்தலமே பத்ரிநாத் என அழைக்கப்படும் இத்தலமாகும். இத்தலத்து தீர்த்தம் தப்தகுண்டம் ஆகும். விமானம் தப்த காஞ்சன விமானம் ஆகும்.
(105) திருவடமதுரை - மதுரா என்றழைக்கப்படும் இடத்தில் இத்தலம் அமைந்துள்ளது. இத்தலத்து மூலவராக கோவர்த்தன நேசன் நின்றகோலத்தில் சேவைதருகின்றார். தாயார் சத்யபாமா நாச்சியார் ஆவார். வடமதுரை என்பது கோவர்த்தனமும் பிருந்தாவனமும் சேர்ந்தது. இங்குள்ள தீர்த்தம் யமுனை தீர்த்தம், கோவர்த்தன தீர்த்தம் ஆகியன ஆகும். இத்தலத்தை நம்மாழ்வார் பத்து பாசுரங்களாலும் பெரியாழ்வார் நான்கு பாசுரங்களாலும் தொண்டரடிப் பொடியாழ்வார் ஒரு பாசுரத்தாலும் திருமங்கையாழ்வார் நான்கு பாசுரங்களாலும் ஆண்டாள் பத்துப் பாசுரங்களாலும் பெரியாழ்வார் பதினாறு பாசுரங்களாலும்
மங்களாசாசனம் செய்துள்ளனர்.
இந்துக்கலைக்களஞ்சியம்

Page 261
(106) திருமலைத் திருப்பதி - ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள இத்தலம் மூன்று கோவில்களை உடையது. கீழ்திருப்பதி, திருமலை, திருச்சானூர் அலர்மேல் மங்காபுரம் ஆகியன ஆகும் திருமலையில் மூலவர் வேங்கடம் உடையான். இவரை வேங்கடாசலபதி என்றும் அழைக்கின்றனர். இவர் நின்ற கோலத்துடன் கிழக்கு நோக்கி சேவைதருகின்றார். இவ்வாலயத் தாயார் அலர்மேல் மங்கை. இத்தலத்தை ஆண்டாள் (16) பெரியாழ்வார் (7) குலசேகர ஆழ்வார் (1) திருப்பாணாழ்வார் (2) பொய்கையாழ்வார் (10) திருமழிசையாழ்வார் (14) பேயாழ்வார் (19) பூதத்தாழ்வார் (9) நம்மாழ்வார் (52) திருமங்கையாழ்வார் (62)
ஆகிய பாசுரங்களால் மங்களாசாசனம் செய்துள்ளனர்.
(107) திருப்பாற்கடல் :- வெறும் ஊனக்கண்களால் பார்க்க முடியாத தலம் இதுவாகும். திருபாற்கடலின் மூலவர் கூrராப்திநாதன் எனவும் தாயார்கள் கடல்மகள் நாச்சியார், பூமாதேவி நாச்சியார் எனவும் கூறப்படுகின்றனர். இத்தலத்தை
தீட்சை
குரு மூர்த்திகளாய் இருப்பவர்கள் தம் சீடர்கட்குத் தவத்தையும் ஞானத்தையும் அளிக்கும் முறையைச் சைவ சித்தாந்தம் தீட்சை என வழங்கும். தீட்சை என்பது அஞ்ஞானத்தைப் போக்கி மெய்ஞ்ஞானத்தைத் தருவது என்று பொருள்படும். தீ கூடிா என்பது வடமொழிப்பதம். (கூடிா - நீக்குதல்; தீ-தருதல்). இந்தத் தீட்சை சமயதீட்சை, விசேட தீட்சை, நிருவாணதீட்சை என மூவகைப்படும். சமயதீட்சை யால் சரியையும், விசேட தீட்சையால் கிரியை, யோகம்’ என்பவையும், நிருவானதீக்கையால் ஞானமும் கிடைக்கும்.
இவற்றை விளக்குவோம்.
(அ) சமய தீட்சை: இது சத்திநிபாதத்தின் முதல் நிலை (மந்ததரம்) என்பதை அறிவோம். இதில் சிவபெருமானது முதன்மையை ஒருவாறு உணரும் நிலை உண்டாகும். இதனால் சிவபெருமானது சிறப்பு (மூல) மந்திரமாகிய திருவைந்தெழுத்தை (சிவாயநம என்ற பஞ்சாக்கரத்தை) தூலமாக உணர்ந்து கணிக்கும் உரிமையும், சிவாகமங்களை ஒதி உணரும் உரிமையும், அவ்வாகமங் கூறும் சரியா பாதத்தில் நிற்கும் உரிமையும் கிட்டும், அந்தர சத்திநிபாதத்திற்குச் சமயதீட்சையின் வழி அடைய முடியும். வேதத்தை ஒதுவதற்கும் வைதிக ஒழுக்கத்தை மேற்கொள்ளுவதற்கும் உபநயனம் இன்றியமையாதது என்பதை நாம் அறிவோம். அதுபோல சிவாகமங்கள் ஒதுவதற்கும் சைவ ஒழுக்கங்களை மேற் கொள்ளுவதற்கும் சமயதீட்சை மிகவும்
இன்றியமையாதது. உபநயனம் பெறாதவன் வேதியன் ஆகான்.
இந்துக்கலைக்களஞ்சியம்
:

ஆண்டாள் (3) பெரியாழ்வார் (5) திருமழிசையாழ்வார் (13) திருமங்கையாழ்வார் (10) குலசேகர ஆழ்வார் (2) பொய்கையாழ்வார் (1) பேயாழ்வார் (4) நம்மாழ்வார் (9) பூதத்தாழ்வார் (2) பாசுரங்களாலும் மங்களாசாசனம்
செய்துள்ளனர்.
(108) பரமபதம் - எம்பெருமான் பூரீ நாராயணனை வழிபடும் பக்த கோடிகள் இறுதியில் அடைந்திடும் முக்தியே பரமபதம் ஆகும். ஜீவாத்மாக்கள் பரமாத்மாவான எம் பெருமானுடன் இணைந்து வாழும் நிரந்தரமான பேரின்பநிலையாகும். பரமபதத்தின் மூலவரான பரமபதநாதர் வீற்றிருந்த கோலத்தில் தென்திசை நோக்கி சேவைசெய்கிறார் எனப்படுகின்றது. தாயார் பெரிய பிராட்டியார் ஆவார். முப்பத்து நான்கு பாசுரங்களால் ஆழ்வார்கள் மங்களாசாசனம் செய்துள்ளனர். பரமபதமாகிய இத்தலத்தை வைகுந்தம், விண்ணகரம், பேரின்ப வீடு என்னும் பிற பெயர்களாலும் அழைத்திடுவர். (தே.ஹ.)
அதுபோலவே சமயதீட்சை பெறாதவன் சைவன் ஆகான். சைவசமயியாகும் உரிமையைத் தருவதால்தான் இத்தீட்சை சமய தீட்சை என்ற திருப்பெயர் பெற்றது. சமயதீட்சை பெற்றவன் ‘சமயி“ எனப்பெயர் பெறுகின்றான்.
(ஆ) விசேட தீட்சை சமய தீட்சை பெற்று அதன் வழி நிற்கும்போது ஆணவமலம் மேலும் பரிபாகமுற்றுச் சத்திநிபாதம் மந்தமாய் நிகழும். அப்பொழுது சிவபெருமானை இலிங்க வடிவிற் கண்டு வழிபடுதலாகிய கிரியைத் தொண்டில் இச்சை உண்டாகும், அங்ங்ணம் இச்சை உண்டாகும்போது முன்னர் சமயதீட்சையைப் பெற்றவரிடமோ வேறோர் ஆசிரியரிமோ விசேட தீட்சை பெற்றுத் தம் பொருட்டான (ஆன்மார்த்தமான) சிவலிங்க மூர்த்தியை எழுந்தருளுவித்துக் கொடுக்கப் பெற்றுக் கிரியாபாத முறைப்படி அம் மூர்த்தியை நாடோறும் நியமமாக வழிபடுதலாகிய கிரியைத் தொண்டில் நிற்பர். சிவலிங்க மூர்த்தியை எழுந்தருள்வித்துக் கொடுக்கும் பொழுதே அகப்பூசை, புறப்பூசை முறைகளோடு யோக முறையும் உணர்த்தப்பெறும்.
கிரியைத் தொண்டினால் ஆணவமலம் மேலும் பரிமாகமுற்றவழிச் சத்தி நிபாதம் தீவிரமாய் நிகழும். இங்ங்ணம் நிகழப்பெற்றோர் யோகநிலைக்கண் நிற்பர். இந்நிலையில் விசேடதீட்சை மந்த சத்திநிபாதத்துக்கு உரியதாய்க் கிரியையைத் தந்து பின்னர் அதுவழியாகத் தீவிர சத்திநிபாதத்தை உண்டாக்கும். இந்நிலையில் யோகத்தைத் தரும் யோகத்திற்கு விசேடத்தில் விசேடமாக வேறு தீட்சை செய்யும் முறையும் சில இடங்களில் உண்டு. விசேட தீட்சை பெற்றுக் கிரியா பாதத்தில்
231

Page 262
நிற்போர்புத்திரர் என்று வழங்கப்பெறுவர். யோகத்தில் நிற்போர்
யோகியர் என்னும் பெயரைப் பெறுவர்.
(இ) நிருவாணதீட்சை! இவண் குறிப்பிட்ட இரண்டு தீட்சைகளால் சரியை, கிரியை, யோகம் என்னும் தவம் முழுவதும் கைவரப்பெறுவதால், நிருவாணதீட்சை ஞானத்திற்கே உரியதாகின்றது. சரியை முதலிய மூவகைத் தவங்களில் முதிர்ச்சியால் மலபரிபாகம் முற்றியவழி சக்திநிபாதம் அதிதீவிரமாய் நிகழும். அப்போது பதி, பசு, பாசம் என்னும் முப்பொருள் உண்மைகளின் இயல்களை உள்ளவாறு அறிய வேண்டும் என்ற பெரு வேட்கை எழும். அதாவது நான் யார்? நான் வந்த வழி எப்படி? போவது எப்படி? எனக்கு வரும் இன்பத்திற்கும் துன்பத்திற்கும் காரணம் யாது? துன்பம் நீக்கப்பெற்று இடையறாத இன்பத்தில் வாழும் நிலை இல்லையா? அப்படி உண்டாயின் அதற்கு வழியாது?’ என்று இங்ங்னம் பொருள் இயல்புகள் பலவற்றையும் உள்ளவாறு உணர்வதில் பேரவா நிகழும். நிகழவே வேண்டுவோர் வேண்டுவனவற்றை ஈவோனாகிய சிவபெருமான், ஞானச் செய்தியால் சிவோகம் பாவனையைத் தலைப்பட்டுச் சிவமேயாய் நிற்கும் ஞானகுருவின் சுத்தான்ம சைத்தன்யத்தில் ஆவேசித்து நின்று நிருவாணதீட்சையைச் செய்தருளுவான். தாயுமானவர் இரண்டாம் முறை தம் குருவிடம் பெற்றது இந்தத் தீட்சையையே. அத்துடன் துறவு நிலையையும் ஞானோபதேசத்தையும் பெற்றார் என்பதை நாம் அறிவோம்.
சமய, விசேடதீட்சைகளில் புறவுடம்பு அகவுடம்புகள் மந்திரங்களால் ஒரளவே தூய்மை அடைகின்றன. நிருவான தீட்சையில் அத்துவாக்கள் ஆறனையும் முறைப்படி ஒன்றில் ஒன்றை அடக்கி எல்லாவற்றையும் அடக்கி நிற்கும் கலையைச் சேதிக்கும். இதனால் ஆறத்துவாக்களையும் பற்றிநிற்கும் சஞஅசித கன்மங்களை (பழ வினைகளை) முற்றத் துடைத்துவிடும் ஆன்மாவையும் வினைக்கட்டினின்றும் விடுவிக்கும், திருவைந்தெழுத்து முத்தி பஞ்சாக்கரமாக உபதேசிக்கப் பெறும். சிவாகமத்தில் ஞானபாகத்தை உணர்த்து முகத்தால் பதி, பசு, பாசம் என்ற முப்பொருளின் இயல்புகளை நன்கு உணரும் நிலைகள் உண்டாகும். முப்பொருளின் இயல்புகளை உள்ளவாறு உணர்வதற்குத் தடையாக இருந்த வினைகட்கு ஆணவமல பரிபாகம் மெலவடைந்து ஞானாசிரியன் செய்யும் நிருவான தீட்சையால் அடியோடு அழிந்தமையால் பொருளியல்பு முற்றும் தெளிவாக உள்ளவாறு விளங்குதலே ஞானமாகும். இந்நிலையில் பொய்யைப் பொய்யெனக்கண்டு கழித்து மெய்யை மெய் என்று உணர்ந்து பற்றும் நிலை தானே உளதாகும். ஆகவே நிருவாணதீட்சை தீவிர சக்திநிபாதம் உடையார்க்கு உரியதாய் ஞானத்தைத் தருவதாய் அமைகின்றது. இந்த நிருவான தீட்சை அதிதீவிரத்திலும் தீவிரமாய் நிற்போர்க்கு அப்பொழுதே முத்தியை அளிக்கும் வகையிலும், ஏனையோர்க்கு உடம்பு நீங்கும் காலத்து முத்தியைக் கொடுக்கும் வரையிலும்
232

செய்யப்பெறும். இவற்றுள் முன்னது ‘சத்தியோ நிர்வாண தீட்சை என்றும், பின்னது அசத்தியோ நிர்வாண தீட்சை
என்றும் வழங்கப்பெறும்.
இந்தத் தீட்சை வகைகளைச் செய்வதில் ஒரு நியதியும் உண்டு. தீட்சை பெறுவோர் தகுதிக்குத் தக்கபடி வேறுவேறு வகையாகத் தீட்சை செய்யப் பெறும். இதனால் தீட்சை வகை இரண்டாகின்றது. முதலாவது அக்கினி காரியத்தால் செய்வது; இஃது அங்கிதீட்சை என்று பெயர் பெறும். இரண்டாவது அக்கினி இல்லாது செய்வது; இஃது அங்கதீட்சை என்று வழங்கப்பெறும்.
(6) சிவநெறி ஒழுக்கம்
தீட்சை பெற்றவர்கள் சிவநெறி ஒழுக்கத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். இவர்கள் ஒழுக வேண்டிய ஒழுக்கம் நித்தியம், நைமித்தியம், காமியம் என்று மூவகையாக நடைபெற வேண்டியவை. -
(அ) நித்தியம்: அன்றாடக் கடமைகளைத் தவறாது செய்து வருவது. இது காலை, நண்பகல், மாலை என்ற மூன்று பொழுதும் நீராடல், திருநீறு கண்டிகை அணிதல், மந்திர நீரைத் தெளித்துக் கொள்ளுதல், மந்திர ஆற்றல்களை நெஞ்சு, முகம், தலை, சிகை, கை, கால் என்னும் உறுப்புகளில் பதிவித்தல், காற்றினை உள்ளிழுத்து வெளியேற்றி, வெளியிலிருந்து உள்ளுக்குவாங்கி நிரப்புதல் முதலியவற்றால் உடலைத் தூய்மை செய்து கொள்ளல் போன்றவை நித்திய கருமங்களாகும். மேலும் திருஜந்தெழுத்தைக் கணித்தல், ஆலய வழிபாடு, அடியார் வழிபாடு, இவற்றை மேற்கொள்ளல், அகப்பூசை புறப்பூசைகளை இயற்றல், தியான சமாதியில் நிற்றல், உபதேச மொழியைச் சிந்தித்தல், தெளிதல், நிட்டையில் அழுந்தல் முதலியவையும் இரு கருமங்களுள் அடங்கும்.
(ஆ) நைமித்திகம் ஆண்டுதோறும் வரப்பெறும் நாள், பொழுதுகளில் தம் கடமைகளைத் தவறாமல் செய்து வருதல், வாரம், திதி, நட்சத்திரம், யோகம், கரணம் என்பவற்றுள் ஒன்றினானாதல் பலவற்றானாதல் சிறப்பெய்தும் நாள் அல்லது பொழுதுகளில் அம்பிகை, முருகன், தேவர், முனிவர், அடியார், மக்கள், அரசர், அசுரர் முதலியோரும், அஃறிணை உயிர்களும் சிவபெருமானது திருவருளைப் பெற்றுச் சிறப்பாகப் பூசித்தலும், விழா எடுத்தலும் ஆகியவை நைமித்திகக் கருமங்களில் அடங்கும்.
(இ) காமியம்: நாம் கோரும் பயன் கருதிச் செய்யும் வழிபாடுகள் காமிய கருமங்களாகும். நோய்நீக்கம், வாழ்நாள் திட்டம், மணப்பேறு, மக்கட்பேறு, வெற்றி முதலிய பயன்கருதி அவ்வப்பயனுக்கு ஏற்றவாறு சிவபெருமானுக்குச் செய்யப்பெறும் சிறப்பு வழிபாடுகளையும் விழாக்களையும் சில பல நாட்கள் செய்தல் இவ்வகைக் கருமங்களில் அடங்கும்.
இந்துக் கலைக்களஞ்சியம்

Page 263
மேற்கூறியவற்றுள் நித்தியத்தைத் தவிர ஏனைய இரண்டும் வசதிகள் படைத்தவர்கட்கேயன்றி எல்லோராலும் இயற்றுதல் முடியாது. ஆகவே தீட்சை செய்யும்பொழுதே ஏனைய இரண்டும் அவர்கட்குக் கடனாகாதவாறு நிரப்பியொழித்தல் இன்றி யமையாதது. இங்ங்ணம் நிரப்பியொழிக்கும் தீட்சை, நிரகாரதீட்சை என வழங்கப்பெறும். அங்ங்ணம் நிரப்பாது மூன்றையும் கடனாகவே வைக்கும் தீட்சை சாதிகார தீட்சை எனப்படும். இம்மூன்று வகைக் கருமங்களும் தம் பொருட்டா கவும் பிறர் பொருட்டாகவும் செய்யப்பெறும். இவற்றுள் நித்திய கருமம் நோயாலும் பிறவற்றாலும் அதனைச் செய்யமாட்டாது இடர்ப்படுவார் பொருட்டு, பிறரால் செய்யப்பெறும். ஏனைய இரண்டும் பிறர்பொருட்டு, பிறரால் செய்யப்பெறுங்கால் அவற்றை விரும்பிய ஒருவர் பொருட்டும், பொதுவாக உலகத்தின் பொருட்டும் செய்யப்பெறும். ஆசாரிய சுவாமிகள் அனைவராலும் செய்யப்பெறும் கருமங்கள் யாவும் உலக நன்மை பொருட்டே
LLIT(5th.
நைமித்திக, காமிக கர்மங்களைப் பிறர் பொருட்டுச் செய்வோர் ஆசாரியர் என்று வழங்கப்பெறுவர், சிவாச்சாரியர்கள் அனைவரும் இவ்வகையினரே. ஒன்றையும் பிறர் பொருட்டுச் செய்யும் உரிமையின்றித் தம் பொருட்டு சித்தி, புத்தி, முத்தி என்றவற்றை அடைய முயல்பவர் சாதகர்' என்ற பெயரைப் பெறுகின்றார். இவ்விரு திறத்தாருக்கு அந்த அதிகாரத்தைக் கொடுப்பதற்குச் செய்யப்பெறும் தீட்சை அபிடேகதீட்சை என்ற பெயரைப் பெறும்.
(ஈ) பாகுபாடுகள்: இக்கூறிய மூவகைக் கருமங்களையும்
இயற்றுவோரும் அவரவர் ஆற்றலுக்கு ஏற்றவாறு பாகுபாடு செய்யப்பெறுகின்றனர்.
நித்திய கருமத்தோடு நைமித்திக காமிய கருமங்களையும் கடமையாக இயற்றும் ஆற்றலுடையவர் மக்களுள், 'உத்தமர் என்று வழங்கப்பெறுவர். அவ்வாற்றலின்றி நித்திய கருமம் மட்டிலுமே செய்ய வல்லவர் மத்திமர் எனப்படுவர். அதுவும்
や செய்ய மாட்டாதார் 'அதமர் என்று கூறுப்பெறுவர். இதில் முதல்
で இருவரும் அங்கி தீட்சைக்கு உரியவராகார். அங்கதீட்சையே
இவர்கட்கு உரியது. இங்ங்ணம் ஆற்றலும் ஆற்றலற்ற
\ நிலைகளுமே வருணங்கள் ஏற்படும் சூழ்நிலைகள் என்று
கருதலாம்.
மேற்குறிப்பிட்ட உத்தமருள் வேத சிவாகமங்களை நன்றாக ஓதி உணர்ந்து அவற்றில் நுவலப்பெற்ற ஒழுக்கங்களை முற்றக் கடைப்பிடித்து ஒழுக வல்லவர்கள் 'உத்தமருள் உத்தமர் ஆவர். வேத சிவாகமங்களை ஒதி உணர்ந்தும் அவற்றிற் கூறுப்பெற்ற ஒழுக்கங்களைக் கடைப்பிடிக்க மாட்டாதவர் 'உத்தமருள் மத்திமர் ஆவர். வேத சிவாகமங்களை ஒதி உணரவும், அவற்றில் நுவலப்பெற்ற ஒழுக்கங்களைக் கடைப்பிடிக்கவும் மாட்டாமல் நித்திய, நைமித்திக, காமிய கருமங்களை மட்டிலும் செய்வோர்
இந்துக்கலைக்களஞ்சியம்

'உத்தமருள் அதமர் என்று வழங்கப்பெறுவர். இம்மூவரும் சாதிகாரதீட்சைக்கு உரியவர்களாவர். இவர்கள் அபிடேகதீட்சை பெற்றவராயின் ஆசாரியரும் சாதகருமான நிலைகளை அடைவர்.
(உ) மந்திரங்கள்: தீட்சையில் உபதேசிக்கப்பெறும் மந்திரங்கள் பலவற்றுள் பஞ்சாக்கரம் (சிவாய நம: என்பது) எனப்படும் திரு ஐந்தெழுத்தே முதன்மையானது. அதனால் அது மூலமந்திரம்' என வழங்கப்பெறும் அதற்கு அடுத்தநிலையில் உள்ளவை சம்மிதா மந்திரங்கள்; இவற்றுள் பதினொரு மந்திரங்கள் அடங்கும், அவற்றுள் ஐந்து பஞ்சபிரம்ம மந்திரம் என்றும் ஆறு'ஷடங்க மந்திரம் என்றும் வழங்கப்பெறும் மற்றும் 'கலாமந்திரங்கள், காயத்திரிகள் முதலாய பல மந்திரங்களும் அவற்றுக்குரிய பீஜாக்கரங்களும் உள்ளன. பஞ்சாக்கரம் தூலபஞ்சாக்கரம், சூக்கும பஞ்சாக்கரம், முத்தி பஞ்சாக்கரம் முதலியனவாகப் பிரித்துப் பேசப்பெறும். அவையும் அவ்வப் படிமுறைக்கேற்றவாறு உபதேசிக்கப்பெறும். அவற்றையும் ஞானத்திற்குச் சாதனமாய் உள்ள யோகம் முதலிய மூன்றின் இயல்புகளையும் குருமுகமாக அறிந்தும், சைவாகமங்கள், பத்ததிகள் முதலியவை ஒதியும் உணர்ந்து கொள்ள வேண்டியவை. இங்ங்ணம் இவற்றையெல்லாம் உணர்தற்கு முதற்படியாக நிற்பது சமயதீக்கை செய்யப்பெற்று மந்திராதிகாரத்தைப் பெறுதலாகும். இதன் பின்னரே மற்றவை யாவும் உண்டாகும்.
(ஊ) உபதேசிக்கும் முறை : தீட்சை பெறுங்கால் மந்திரங்களை உபதேசிப்பதிலும் முறைகள் உள்ளன. மந்திரங்களை பீஜாக்கரத்தைக் கூட்டி உபதேசித்தலும், கூட்டாது உபதேசித்தலும் என் இரண்டு வகை உண்டு. பீஜாக்கரம் இன்றி உபதேசிக்கும் தீட்சை நீர்ப்பீஜதீட்சை ஆகும்; பீஜாக்கரத்தோடு உபதேசிக்கும் தீட்சை சபீஜதீட்சை என்று வழங்கப்பெறும். அபிடேகத் தீட்சை சபீஜமேயன்றி, நிர்ப்பீஜம் என்னும் பிரிவுபடும். சாதிகார தீட்சை சபீஜமாகவும் நிரதிகார தீட்சை நிர்ப்பீஜமாகவும் செய்ய வேண்டும் என்றே சிவாகமங்கள் கூறுகின்றன. ஆயினும், நிரதிகார தீட்சையும் சபீஜமாகச் செய்தல் நடைமுறையில் உள்ளது.
(எ) அங்கிதீட்சை மேலே குறிப்பிட்ட முறைகளையெல்லாம் பின்பற்றிச் செய்யப்பெறுவதே அங்கிதீட்சை ஆகும். அஃது அழல் ஒம்பிச் செய்வதாகிய அக்கினி காரியத்துடன் நிறைவேற்றப் பெறுவதால் ஒளத்திரி தீட்சை என்றும் வழங்கப்பெறும் இந்த தீட்சை ஞானவதி, கிரியாவதி என்ற இருவகைகளுள் ஒருவகையாற் செய்ய வேண்டும் என்றே சிவாகமங்கள் கூறும். குண்டம், மண்டலம், வேதிகை, நெய், சுருக்கு, சுருவம் முதலிய அனைத்தையும் மனத்திற் கருதிக்கொண்டு அவற்றைக் கொண்டு செய்யப்பெறும் கிரியைகளையும் மனத்தினாலே செய்வது ஞானவதி ஆகும். மேற்சொல்லிய அனைத்தையும் புறத்தே அமைத்துக் கொண்டு கிரியைகளையும் வெளிப் படையாகப் புறத்தே செய்வது கிரியாவதி ஆகும். இது மாந்திரி தீட்சை என்றும் வழங்கப்பெறும்.
233

Page 264
(ஏ) அங்கதீட்சை அங்கியாகிய ஒளத்திரி தீட்சைக்கு அங்கமாகச் சிறந்தெடுத்துக் கூறப்பெறுவன ஆறு. அவை: ()ை நயனம், (ைை) பரிசம், (ைை)ை வாசகம், (னை) மானதம் (எ) சாத்திரம், (எ)ை யோகம் என்பனவாகும்.
()ை நயனதிட்சை ஆசாரியன் அங்கநியாச, கரநியாசங்களால் தன்னைச் சிவமாகப் பாவித்துக் கொண்டு அப்பாவனையோடு மாணாக்கனைக் கண்ணால் நோக்கி, இந் நோக்கினாலே, அவன் செய்த கருமங்களை அழித்தொழிப்பதாகும். இது சட்சு தீட்சை (சட்சு - கண்) என்றும் வழங்கப்பெறும். வேள்விக்குத் துணையாக இருப்பதற்கு இராம லக்குமணர்களை விசுவாமித்திரர் கானகத்திற்கு இட்டுச் சென்றபோது அவர்கள் ஒரு பாலைவனத்தின் வழியாகச் செல்ல நேரிடுகின்றது. அளவில்லாத ஆற்றலுடைய வர்களாயினும் பூவினும் மெல்லியர் வருந்துவர் என்று கருதி அவர்களை நோக்கினார் முனிவர், அவர்கள் முனிவரை அடிபணிய, அவர் பலை, அதிபலை என்ற இரண்டு விஞ்சைகளை உபதேசிக்க, சிறுவர்கள் அவற்றை மனத்தில் சிந்திக்கவே, அவர்களின் பயணம் குளிர்ந்த நீரிலே செல்லுதலை ஒக்கின்றது. இஃது நயனதிட்சையை ஒருபுடை யொக்கும் என்று கருதலாம்.
(ைை) பரிச தீட்சை: ஆச்சாரியன் தனது வலக்கையைச் சிவன் கையாகப் பாவித்து மாணாக்கனது சென்னிமேல் வைத்து அவனைச் சிவமாகச் செய்தல்.
(ைை)ை வாசகதீட்சை மந்திரங்களைச் சந்தர்ப்பத்திற் கேற்றவாறும் பொருந்துமாறும் மாணாக்கனுக்கு உபதேசிப்பது இது.
(னை) மானத தீட்சை ஆசாரியன் தன்னைச் சிவமாகப் பாவித்து அந்தப் பாவனையுடன் மாணாக்கனது ஆன்மாவை உடலினின்றும் பாவணையில் கொணர்ந்து தனது ஆன்மாவிற் சேர்த்துச் சிவமானதாகப் பாவித்து, மீள அவ்வான்மாவை அவனது உடலிற் சேர்த்தல் இத்தீக்கையாகும்.
(எ) சாத்திர தீட்சை: ஆசாரியன் மாணாக்கனுக்குச் சிவாகமங்களையும் திருமுறைகளையும் ஒதுவித்தல் சாத்திர தீக்கையாகும்.
(எ)ை யோக தீட்சை ஆசாரியன் மாணக்கனைச் சிவயோகம் பயிலச் செய்வதாகும் இது.
இந்த அங்க தீட்சைகள் ஒளத்திரி தீட்சைக்கு உரியவர்க்கு அங்கமாகவும், தீட்சைகைக்கு உரியரல்லாதவர்க்குத் தனியாகவும், செய்யப்பெறும். இப்பொழுது இவை சாம்பவ தீட்சை, விஞ்ஞான தீட்சை என்ற திருநாமங்களைப் பெறும். ஒளத்திரிதீட்சை பெறாத அங்க தீட்சை மட்டுமே பெற்றவர் மந்திரங்களைச் சிவாகமும் திருமுறைகளும் ஆகிய நூல்கள் வழியாகவே ஒதுவதற்கு உரியவர். தனியாகக்
234

கணித்தற்கு உரியரல்லர். கள், புலால் உண்ணல் முதலியவைகளைச் செய்வோர் சிவாகமம், திருமுறைகளைத் தவிர ஏனைய நூல்களையே ஒதுவதற்கு உரியர். அவற்றில் வரும் திருவைந்தெழுத்து முதலிய ஏனைய எழுத்துக்களோடும் சொற்களோடும் ஒப்பனவே யன்றி மந்திரங்களாகச் சிறந்து நில்லா என்பது அறியப்பெறும்.
(ஐ) நல்லாசிரியர் மூலம் இவண் குறிப்பிட்ட நயனம் முதலிய ஆறாகிய சாம்பவ தீட்சை,மற்றும் ஒளத்திரி தீட்சை ஆகிய அனைத்துத் தீட்சைகளும் நல்லாசிரியர் ஒருவரால் நன்மாணாக்கர்கட்குச் செய்யப்பெறுதல் வேண்டும். அப்பொழுது தான் நற்பயன் விளையும். பிறர் செய்தாலும் பெற்றாலும் அவை சடங்கு மாதிரியாய்ப் போய்விடும். உண்மையான தீட்சைகள் ஆகா. இவற்றுள்ளும் சமயதீட்சையும் விசேட தீட்சையும் ஒருவாறு சடங்கு மாத்திரையாய்ச் செய்தலும் பெறுதலும் உண்டு. நிர்வாணதீட்சையும் அபிடேகதீட்சையும் உண்மை யாகத்தான் செய்யப் பெறுதல் வேண்டும்; வெறும் சடங்குகட்கு இவண் இடமே இல்லை.
மற்றொரு குறிப்பு: ஆசிரியத் தன்மையை வழங்கும் அபிடேக தீட்சை பெறுவதற்கு உரியவர் இல்லறத்தவரே என்று சிவாகமங்கள் கூறும்; துறவிகளாயின் இல்லறத்துக்குச் செல்லாமலே துறந்த விரதியரே உரியர் என்றும், அந்நூல்களில் விதிக்கப்பெற்றுள்ளது. இல்லத்தினின்றும் துறந்தோர் மாணாக்கரை உடையராயின் அவர்தரும் பொருள் முதலியவற்றால் மீளவும் சுற்றத்தொடர்பு உடையவராய் விடுவர். இல்லறத்திற்குச் செல்லாமலே துறவுநிலை அடைந்தோர் அந்நிலையினின்றும் தாழாது நிற்றல் அரிது என்று கருதலாம், இத்தகைய உறுதி அவர்களிடம் இல்லையாயின் அவரை உலகம் ஏற்றுக் கொள்ளாது. மாணாக்கரும் அத்தகையோரை நாடிச் செல்லார். அபிடேக தீட்சை பெறுவோர் இல்லறத்தவராயின், ஆதிசைவ அந்தணராகவே இருத்தல் வேண்டும் என்ற ஒரு விதியும் காணப்பெறுகின்றது.
ஆசாரியன் மூலமாகச் செய்யப்பெறும் நிருவான தீட்சையின்றி ஞானம் உண்டாக மாட்டாதா? என்ற ஐயம் எழலாம். மும்மலம் உடைய சகலர்க்கு ஆசாரியன் அருள் இன்றி நிருவாண தீட்சையில்லாமல் ஞானம் உண்டாக மாட்டாது என்பது சிவாகமங்களின் தீர்ப்பு. இவர்கட்கு ஆணவமல மறைப்பு மிகவும் வன்மையாக இருக்கும். அதனால் இறைவன் ஆசாரியன் வாயிலாகச் செய்யும் பலவகைக் கிரியைகளால் அகற்றுவான். இம்மலம் நீங்கிய பிறகு ஞானத்தைச் சில சொற்களால் முதற்கண் அறிவுறுத்துவான். இங்ங்ணம் அறிவுறுத்தப் பெற்ற பொருள்களை நூலோடு வைத்துச் சிந்திக்கச் செய்வான். இங்ங்ணம் சிந்திக்கும்போது எழும் ஐயங்களை உடன் இருந்து அவ்வப்பொழுது தெளிவிப்பான். தெளிவித்தபின்பும் அந்நிலையில் நிற்கும் போதும், முறைமை எல்லாம் காட்டி நிற்பிப்பான். இப்பொழுது இவர்கட்கு ஞானம் தோன்றும்.
இந்துக்கலைக்களஞ்சியம்

Page 265
ஆசாரியன் செயலெல்லாம் அவரிடம் ஆவேசித்து நின்று செய்யும் இறைவனது செயலாகும். இதனால் தீட்சை என்பது, சிவபெருமானின் கிரியா சக்தியின் தொழிற்பாடாகும் என்பது அறியப்பெறும் சகலர் பொருட்டு ஆசாரியன் மூலம் இறைவன் நின்று செய்யும் இத்தீட்சை சாதார தீட்சை எனப்படும் " இங்குகூறியவற்றால் சகலர்க்கு ஆசாரியன் செய்யும் நிருவான தீட்சையினால்தான் ஞானம் உண்டாகின்றது என்பது உணரப்படும். சிவாகமங்களும் இதைத்தான் அறுதியிடுகின்றன.
கண்ணன் உபமன்யு முனிவரிடம் நிர்வாணதீட்சை பெற்ற வரலாற்றையும், இராமன் அகத்திய முனிவரிடத்துப் பெற்ற செய்தியையும் அரிவமிசம், பாரதம், பத்மபுராணம் முதலிய நூல்களால் அறிய முடிகின்றது. கண்ணன் உபமன்ய முனிவரிடம் பெற்றதை,
யாதவன் துவரைக் கிறையாகிய மாதவன் முடிமேல் அடிவைத்தவன்'
என்று சேக்கிழார் பெருமானும் குறிப்பிடுவர். இவை யாவும் சகலர்க்கு ஆசாரியன் செய்யும் நிருவாண தீட்சையன்றி ஞானம் உண்டாக மாட்டாது என்பதற்குச் சான்றுகளாக அமைகின்றன.
ஆயினும் திருத்தொண்டர் புராணம் நுவலும் நாயன்மார்கள் யாவரிடமும் ஆசாரியர் மூலம் நிருவாணதீட்சை பெறாமலே ஞானம் உண்டானதாகத் தெரிகின்றது. இஃது எவ்வாறு? இவர்கள் யாவரும் முன்னைய பிறப்பிலேயே உபதேசம் பெற்று நிட்டையிற் செல்லாது தடையுற்று நின்றவர்கள். அதனால் அடுத்த பிறப்பில் பெற்ற அந்த ஞானம் காரணமாகச் சிவபெருமானிடத்து என்றும் மாறாத இயல்பான மெய்யன்பு பெற்று வீடுபேற்றை எய்தினர் என்பது சிவாகம நூல்களின் துணிபாகும்.
ஒருமலம் உடைய விஞ்ஞானகலர்க்கு ஆணவமறைப்பு மிக மென்மையாய் உள்ளது. பக்குவகாலத்தில் இறைவன் அவர்க்கு உயிர்க்குயிராய் உள் நின்றவாறே அருளுவான். இவ்வாறு அவர்கள் பயனை அடைவர். இருமலம் உடைய பிரளயாகலர்க்கு ஆணவமலம் சிறிது வன்மை யுடையதாக இருக்கும். ஆதலால் இவர்க்கு இறைவன் ஒருமுறை இவர்முன் தனது உண்மை வடிவத்துடன் தோன்றி அருள்புரிந்து நீங்குவான். இவ்வாறும் தோன்றும் வடிவம் ' சதாசிவமூர்த்தம்’ என்றும், *மகேசுவரமூர்த்தம்’ என்றும் வழங்கப்பெறும் என்று இருவேறு கருத்துக்கள் உள்ளன. உள்நின்று உணர்த்தலும் முன்னின்று உணர்த்தலும் ஆகிய இவை இரண்டும் நிராதார தீட்சை என்று வழங்கப் பெறும்.
இங்ங்ணம் மூவகை உயிர்களும் ஞானம் பெறுகின்றன என்பதை அறிந்து தெளிந்தோம். (g) . . .)
இந்துக்கலைக்களஞ்சியம்

தீபம் - தீபாராதனை
கிரியைகள் நிகழும் வேளையில் தீபம் இடைவிடாது எரிதல் வேண்டும் என்பது விதி. எனவே தீப பூசையும் எல்லாக் கிரியைகளிலும் தனி இடம் பெறுகின்றது. கலையழகு மிளிரத் தீபங்கள் பல உருவங்களிற் குத்து விளக்காகவும், மாடவிளக்காகவும், சரவிளக்காகவும், தூண்டா விளக்காகவும், சட்டவிளக்காகவும், பதுமை விளக்காகவும், பஞ்சலோகங்களிலும் பித்தளையிலும், வெள்ளியிலும் உருவாக்கப்பட்டு தேவாலயங் களில் இடம் பெற்றுள்ளன.
ஆதிகாலம் தொட்டே மக்கள் அக்கினியைத் தெய்வமாகக் கொண்டாடி வந்தனர். அக்கினியைக் கொண்டாடுவதால் அம்பலத்தில் ஆடுகின்ற ஆனந்தக் கூத்தனைக் கொண்டா டுவது போலாகும். சிவபெருமான் ஜோதி வடிவானவர். ஆதியும் அந்தமும் இல்லா அரும் பெரும் ஜோதி என்கிறார் மாணிக்க வாசகர். "ஒளி வளர் விளக்கு என்றும், மாமணிச் சோதியான் என்றும், 'சோதியே சுடரே! சூழொளி விளக்கே என்றும் இறைவனைச் சோதி நிலையிலேயே அருளாளர்கள் தரிசித்தார்கள்.
பிரம்மா, விட்டுணுவுக்கும் இறைவன் சோதி வடிவமாகவே காட்சியளித்தான். அந்தச் சோதி சிவசோதியே என்பதை உணர்த்த இலிங்கோற்பவத்தையும் மகா சிவராத்திரியன்று நிகழ்த்திக் காட்டினான். அவன் அருவமாகவும் உருவமாகவும் விளங்குவது போல் அக்கினியும் பிரகாசிக்கிறது. ஒரு அக்கினியில் இருந்து பல தீபங்கள் தோன்றுவது போல் சிவம் என்ற ஒன்றே பல தத்துவங்களைக் கடந்த பற்பல ஜோதி வடிவமாகக் காட்சி தருகின்றது.
வேதகாலத்தில் மிகச் சிறந்த நிலையில் இருந்த அக்கினி வழிபாட்டின் ஒரு தொடர்ச்சியாகவே இன்றும் கோயில்களில் இடம் பெறும் அக்கினி காரியமும், தீப ஆராதனையும் எனக் கொள்ள வேண்டும். வேதகாலத்தில் இந்திரனுக்கு அடுத்த படியாக அக்கினியே போற்றப்பட்டான். வேதத்தில் அக்கினிக்குரிய பண்புகள் பலவாறு கூறப்பட்டுள்ளன. அவன் மக்களையும் தெய்வங்களையும் இணைப்பவனாகவும், அவர்களின் பொருட்களைக் காப்பவனாகவும், செயல்களுக்குச் சான்று பகர்பவனாகவும் ஒவ்வொரு வீட்டிலும் வரவேற்கப்படும் விருந்தினனாகவும் கருதப்பட்டான். அவனுக்கு நெய் சொரிந்து வழிபாடு நடத்தினர். நெருப்பை ஓமக்குண்டத்திலே உண்டாக்கி அதைச் சிவசொரூபமாக்குதலே அக்கினி காரியமாகும். நெருப்பை ஓமக் குண்டத்திலே வளர்த்து சிவனையும், சக்தியையும் பூஜித்து அவர்களுடைய திருவருளே அந்த அக்கினிக்கு உயிராக்கப் பெற்று அந்த அருள் வடிவத்திலே கடவுளுக்குப் பூஜை செய்யப்படும். நைவேத்தியத்தை நேரே ஏற்பது அனேகவிதமான சக்திகளைச் செய்ய வல்லது. சில
235

Page 266
கிரியைகளின் பலனை அந்தக் கணமே கொடுக்கத் தக்கது கும்பத்திலேனும் வேறிடத்திலேனும் உள்ள மூர்த்தியை அந்த சிவாக்கினியிலே பூசைசெய்வதுமுண்டு. அவ்வாறு பூை செய்யும் போது அதற்கு அடையாளமாக இரண்டையு நூலினாலேயும், தர்ப்பையினாலேயும் தொடுப்பர். இவ்வா தொடுத்தல் நாடிச்சந்தானம் எனப்படும்.
கோயில்களில் எரிஓம்பி யாகம் நிகழ்வது எத்தகை முக்கியமோ, அவ்வாறே பூசை வேளையில் நிகழு தீபாராதனையும். வழிபாடு செய்கின்ற மக்கள் ஏனை கிரியைகளைத் தவற விடினும் தீபாராதனை நடைபெறும் போ, இறைவனைக் கண்ணாரக் கண்டு தரிசிப்பர். தூப தீபங்காட் நைவேத்தியம் நிகழ்ந்ததும் தீபாராதனை தொடங்கு கோயில்களில் வழக்கத்திலுள்ள தீபங்கள் இடுக்குத் தீப நட்சத்திரம் தீபம், பஞ்சமுகதீபம், வில்வதீபம், நாகதீப விருஷதீபம், புருஷா மிருகதீபம், ஒற்றைத்தீபம், கும்பதீப ஈசானாதி தீபங்கள், கற்பூரதீபம் பஞ்சாராத்திக்குரிய தீப என்பன. இத் தீபங்களைக் காட்டும் முறைபற்றி ஆகமங்களி எடுத்துக் கூறப்பட்டுள்ளது. ஆசாரியார் தீபத்தைக் கையி வாங்கும் போது உரிய மந்திரம் கூறி, சம்ஸ்காரம் செய்து, மலரா பூஜித்த பின்பே அதனைப் பெற வேண்டும். முதலில் இட கண்ணுக்கும் பின் வலது கண் நெற்றி ஆகிய இடங்களிலு காலிலிருந்து தலை வரையும் மூன்று முறை சுற்றிக் காட் வேண்டும் என்பது ஆகம மரபு. முதலில் சுற்றிக் காட் வேண்டுவது உலக நன்மைக்காகவும், இரண்டாவதாக சுற்றி காட்டுவது கிராமத்தின் நன்மைக்காகவும், மூன்றாவதாக காட்டுவது உலக நன்மைக்காகவும் என்று குறிப்பிடுகின்றது தீபாராதனையின் போது அத் தீபத்துக்குரிய மந்திரங்கை முறைப்படி வேதம் பயின்ற ஆசாரியார் ஒத, மங்க வாத்தியங்களும் இசைக் கருவிகளும் அவ்வேளையி ஒலிக்கப்படும்.
தீபங்கள் பல முகங்களை உடையனவாக ஆரம்பித்து படிப்படியாகக் குறைந்து ஒரு முகமுடையதாக நிறை பெறுகின்றது. ஆன்மாக்களும் பரந்து பட்டு நிற்கும் புலன்கை ஒன்று படுத்தி ஒரு முகமாக இறைவனைத் தியானிக்க வேண்டு என்பதே இதன் குறிக்கோளாகும்.
வீட்டிலும் ஆலயங்களிலும் மங்கலப் பொருளா விளங்குகின்ற தீபத்தை பூசிக்கின்ற மரபு இப்பொழு கிராமங்களிலும் நாட்டிலும் பரவி வருகின்றது. சுமங்கலி பெண்களினால் பெளர்ணமி தினத்தில் செய்யப்படு திருவிளக்குப் பூசை இந்து மத சம்பிரதாயம், சடங்குகளில் தீப பெறும் உன்னத நிலையைப் புலப்படுத்துவதாய் உள்ளது. தி பூசை செய்யப்படும் இடத்தை மெழுகிக் கோலமிட்டு இருத்த நன்று. அவ்விடத்தில் தலைவாழையிலையிட்டு அதில் தீபத்ை வைத்துப் பசு நெய் அல்லது தெங்கு நெய் இட்டு, தாமரை நூ
236

o
堑h,
jů
|ம்
lւն
பருத்தி நூல் என்பவற்றுள் ஒன்றால் திரிகளிட்டு, தீபத்திற்கு பொட்டு, பூ சாத்தி வழிபாடு நடத்தப்படுகின்றது. தீப ஜோதி கிழக்கு முகமாக அமைதல் நன்று. வெற்றிலை, பாக்கு, பழம், சர்க்கரைப் பொங்கல் போன்ற நிவேதனப் பொருட்களைப் படைத்து 108 அல்லது 1008 நாமங்கள் கூறிப் பூக்களால், குங்குமத்தால் அர்ச்சித்து ஈற்றில் பஞ்சாங்க நமஸ்காரம் செய்வதே இவ் வழிபாட்டு முறை.
கார்த்திகை மாதம் பெளர்ணமி தினத்தன்று சந்திரன் கிருத்திகா (கார்த்திகை) நட்சத்திரத்தில் இருக்கும் போது கொண்டாடப்படுவது கார்த்திகைத் தீப வழிபாடு. அடி முடி காண முடியாத அனற் பிழம்பாகத் திருவண்ணாமலையில் எம் பெருமான் எழுந்தருளியுள்ள தத்துவத்தை உலகுக்கு உணர்த்தவே இவ் வழிபாடு இங்கு நடைபெறுகின்றது. ஜோதி லிங்கமாகக் காட்சி தரும் திருவண்ணாமலை ஒர் அக்கினித் தலமாகும். கார்த்திகைத் தீபத்தன்று திருவண்ணாமலைத் தீபத்தைக் காண்பது கண்கொள்ளாக் காட்சி. மலை மீது காணப்படும் பெரும் செப்புக் கொப்பரையில் இருபத்தி நான்கு முழத்துத் திரியிற் சேர்த்துச் சுற்றப்பட்டிருக்கும். நெய் ஊற்றித் தீபத்தை ஏற்றுவார்கள். அந்த ஜோதியைக் காண்பதற்கு பஞ்ச மூர்த்திகளும் எழுந்தருளுவதாக ஐதீகம். திருவண்ணாமலைக் குன்றின் சிகரத்திற் கார்த்திகை மாதத்தில் ஏற்றப்படும் ஜோதியானது உலகம் முழுவதும் உள்ள அஞ்ஞான இருளை அகற்றி மெய்ஞ்ஞான ஒளியைப் பரப்பும் சிவசோதி என்று கூறப்படுகின்றது. இந்த ஜோதியின் காரணமாகத் தான் ஏனைய இடங்களில் சொக்கப்பனை கொளுத்தும் பழக்கம்
ஏற்பட்டுள்ளது.
இறைவனைத் தீபமேற்றி வழிபடுவது தொன்று தொட்டு வந்த பழக்கமாயினும், அது என்றென்றும் நன்மை தரும் வழிபாடாகக் கருதப்படுகின்றது. அகல், எண்ணெய், திரி, சுடரொளி ஆகிய நான்கும் அறம், பொருள், இன்பம், வீடு என்ற
தத்துவங்களை உணர்த்துவது போலாகும்.
கணம் புல்லால் (அறுகம்புல்) விளக்கெரித்து வழிபாடு செய்தவர் கணம் புல் நாயனார். கார்த்திகைத் தினத்தன்று விடிய விடிய விளக்கு எரித்து வழிபட்டு வந்தார். இறைவன் சோதனையால் கணம் புல் பற்றாமல் போக, தமது சிரம் நோக முடியையே விளக்காக எரித்தார். சிரசில் இருந்து இரத்தம் வடிந்தது. அவ்வேளையில் எம் பெருமான் ஜோதி வடிவாக எழுந்தருளித் தன் அன்பரைத் தடுத்தாட் கொண்டருளினார்.
நமிநந்தி அடிகளாரும், திருவாரூர் தியாகேசப் பெருமானுக்கு திருவிளக்கேற்றும் பணியைச் செய்துள்ளார். இவ்வடியார் தம் பக்தியின் மேன்மையால் திருக்குளத்து நீரையே விளக்கில் ஊற்றி விளக்கு ஏற்றி வழிபட்டார்.
இந்துக் கலைக்களஞ்சியம்

Page 267
தொண்டை நாட்டைச் சார்ந்த கலிய நாயனாரும் சிவபெருமானுக்குத் திருவிளக்கேற்றும் பணியைத் தவறாது செய்து வந்தார். செல்வச் செழிப்பில் வாழ்ந்த இவ்வடியார் வறுமை சூழ்ந்த வேளையிலும் இப் பணியைத் தவறாது மேற்கொண்டு வந்தார். ஒரு முறை எண்ணெய் வாங்கப் பணம் இல்லாமல் போக, தமது உதிரத்தையே கொடுக்க முன் வந்தார். நாயனார் வாள் கொண்டு தனது சிரசை அரிய முற்பட்ட வேளையில், எம்பெருமான் எழுந்தருளி அவரை ஆட்கொண்டரு ளினார்.
ஒரு முறை அம்பிகை மகிஷாசுரனுடன் போர்புரியும் போது தவறுதலாக சிவலிங்கம் ஒன்றை உடைத்து விட்டாள். அதனால் ஏற்பட்ட தோஷத்தை நிவர்த்தி செய்வதற்காக, கார்த்திகைத் தினத்தன்று தீபம் ஏற்றி வைத்து விரதமிருந்து, பெருமானின் பேரருளால் தோஷம் போக்கிக் கொண்டாள் என தேவி புராணம் கூறுகின்றது.
தீபத்தின் ஒளி காணும் இடத்தில் லக்ஷமி வாசம் புரிவாள் என்ற ஐதீகம் இந்துக்களிடம் காணப்படுகின்றது.
"இல்லக விளக்கது இருள் கெடுப்பது சொல்லக விளக்கது சோதியுள்ளது பல்லக விளக்கது பலருங் காண்பது
நல்லக விளக்கது நமச்சிவாயவே” (நி.நி)
தீபாவளி
தீபாவளி என்பது தீப வரிசையைக் குறிப்பது. இல்லம் விளக்கு வரிசையில் ஒளி பெறுவது போல இதயம் மகிழ்ச்சியால் ஒளி பெறுகின்றது. புறவிருளைப் போக்கி அகவிருளை நீக்குவதற்கு விளக்கேற்றி மகிழ்வர்.
தீபாவளித் திருநாள் ஒரு வெற்றிப் பெருநாள். இத் தினத்தில் மறம் வலியிழந்து அறம் வென்றது. இறுதி வெற்றி எப்போதும் அறத்துக்குத்தான் என்பதை இத் தீபாவளித் திருநாள் உணர்த்துகின்றது.
அறம் குன்றி மறம் தோன்றும் போது நான் தோன்றுவேன்' என்று கிருஷ்ணபரமாத்மா பகவத் கீதையில் கூறியது போல், மறத்தின் பக்கம் நின்ற நரகாசுரனை அழித்து மக்களுக்கும் தேவர்களுக்கும் வாழ்வளித்தார். நரகாசுர வதத்தை நினைவு படுத்தும் நாளாக தீபாவளித் தினம் கொண்டாடப்படுகிறது.
அக்காலத்தில் நரகாசுரன் என்னும் அசுரனின் ஆட்சியில் தேவர்கள், முனிவர்கள், மக்கள் ஆகியோர் பெரும் துயரனுபவித்தனர். துயர் தாங்காத தேவர்கள் கிருஷ்ண பரமாத்மாவிடம் முறையிட்டனர். பரமாத்மா நரகாசுரனை அழித்து மக்களுக்கு வாழ்வளித்தார். “கொடியவனான நான்
இந்துக் கலைக்களஞ்சியம்

அழிந்த இத் தினத்தை மக்கள் நீராடிப் புத்தாடை அணிந்து குதூகலமாகக் கொண்டாட வேண்டும்” என அவ்வசுரன் தான் இறக்கும் தறுவாயில் வேண்டிக் கொண்டான். அதற்கமையவே தீபாவளித் திருநாளில் அதிகாலையில் ஸ்நானமும் புத்தாடையும், இனிப்புப் பண்டங்களும் முக்கிய இடம் பெறுகின்றன என்கின்றது புராணக் கதை. ஆயினும் பரத நாட்டின் வெவ்வேறு பகுதிகளிலும் வெவ்வேறு கதைகள் கூறப்படுகின்றன.
மகாராஷ்டிரம், உத்தரப் பிரதேசங்களில் அசுராதிபதியாக இருந்த மகாபலியின் சாம்ராட்சியத்தை மகாவிஷ்ணு வாமன அவதாரம் எடுத்து வென்ற நாளையே தீபாவளியாகக் கொண்டாடுகின்றனர். அன்று பெண்கள் சாணத்தினால் அல்லது மாவினால் மாபலியின் உருவம் செய்து வைத்து பூஜை செய்து “அலயா பலாய துர்ஹோ. ராஜாபலி ராஜ்யலவுட்டோர் (துன்பம் தொலையட்டும்; நோய் நீங்கட்டும்)’ எனப் பிரார்த்திக்கின்றனர்.
வங்காளத்தில் துர்க்கை சும்பன், நிசும்பன் ஆகியவர்களை அழித்த பின், அந்த வெறி அடங்காமல் தேவர்கள் சேனைக் குள்ளே புகுந்து அவர்களைச் சம்ஹாரம் செய்யத் தொடங்கி விட்டாளாம். இந்த மகா துர்க்கையைச் சிவபெருமான் அடக்கிய நாளே தீபாவளிப் பெருநாள் என்ற ஒரு கதையும் கூறப்படுகின்றது.
மத்திய பிரதேசம், தில்லி, ராஜஸ்தான் ஆகிய இடங்களில் மகாலட்சுமியின் கணவரான மகாவிஷ்ணு பூலோகத்திற்கு வந்த நாளாக இந்நாளைக் கொண்டாடுகின்றனர்.
பஞ்சாப்பில் நசிகேதனுக்கு யமதர்மராஜன் உயிர்ப்பிச்சையும், சாவித்திரிக்குப் புத்திரி வரமும் அளித்த நாளாகக் கொண்டாடப்படுகின்றது.
வட நாட்டில் தீபாவளிப் பண்டிகையை மூன்று நாட்கள் கொண்டாடுவர். முதலாம் நாள் சிறு தீபாவளி என்றும் (சோடா தீபாவளி). இரண்டாம் நாள் பெரிய தீபாவளி என்றும் இதனைப் படா தீபாவளி என்பர். மூன்றாம் நாள் கோவர்த்தன பூஜை செய்து கண்ணனைப் பிரார்த்திப்பர். அன்று தான் பகவான் கிருஷ்ண பரமாத்மா நரகாசுரனை வதம் செய்ததாகக் கருதி வழிபாடியற்றுகின்றனர்.
வங்காள தேசத்தின் நவராத்திரியின் போது துர்க்கா பூஜையும், அடுத்துவரும் பெளர்ணமியில் லக்சுமி பூஜையும், தீபாவளி அன்று காளி பூஜையும் இடம் பெறும். காளி உபாசகரான ராமகிருஷ்ண பரமஹம்சர் நிகழ்த்திய மகாகாளி பூஜையும் தீபாவளித் தினத்தன்றே நடைபெற்றதாகக் கூறப் படுகின்றது.
தீபாவளித் தினத்தன்று ஸ்நானம் செய்வதை கங்காஸ் நானம் என்றும், கோடியுடுத்தலை புத்தாடை அணிவதாகவும்
237

Page 268
கருதுவது வழக்கம். தீபாவளித் தினத்தன்று ஒருவரை ஒருவர் கண்டு உரையாடி மகிழும் போது “கங்காஸ்நானம் ஆயிற்றா?” என்று கேட்பர். இதன் "கவலைகள் எல்லாம் கழுவப்பட்டு தொலைந்தனவா?’ என்பது இதன் கருத்தாகும்.
தீபாவளித் தினத்தன்று மாளய பட்சத்தில் பூமிக்கு வந்த பிதிர்களை வழியனுப்பும் உபசாரமும் இடம் பெறுகின்றது. தீபாவளிக்கு முதல் நாள் உயர்ந்த கம்பத்தில் யமதீபம் ஏற்றுவதும் மறுநாள் அவர்களுக்குக்காக யமதர்ப்பணம் செய்வதும் இந்துக்களின் வழக்காகும்.
ஜைனர்களும் வெகு விமரிசையாகத் தீபாவளியைக் கொண்டாடுகின்றனர். ஜைன மத தாபகரான மகாவீரர் இகலோக வாழ்வை நீத்து மகாநிர்வாணம் எய்திய நாள் இது என்பது அம் மதத்தவர் கருத்து.
மகாவீரர் நிர்வாணம் எய்திய காசி கோசலைப் பகுதியைச் சேர்ந்த பதினெட்டு மன்னர்களும், மல்லலிச்சாவி பகுதியைச் சேர்ந்த இருபது மன்னர்களும் ஒன்று கூடி, எங்கும் தீப அலங்காரம் செய்து மகா நிர்வாணத்தைப் பெருவிழாவாகக் கொண்டாடியதாகவும், அன்று தொடங்கியே ஜைனர்கள் தீபாவளி உற்சவம் கொண்டாடி வருவதாகவும் ஜைன நூல்களான கல்ப சூத்திரம், ஹரிவம்ச புராணம் ஆகியன கூறுகின்றன.
பெளத்த தீபாவளி
இந்தியாவில் ஒரு காலத்தில் சிறப்பான நிலையில் இருந்த பெளத்த மதம் தற்போது அதிக செல்வாக்குடன் இல்லை. இமய மலைப் பிரதேசம், அசாம், மணிப்புரி, வங்காளம் ஆகிய பகுதிகளில் மட்டுமே பெளத்தர்கள் வாழ்கின்றார்கள். ஆனால் இலங்கை, பர்மா, சயாம், கம்போடியா, இந்தோனேசியா, சீனா, ஜப்பான், திபெத் ஆகிய நாடுகளில் பெளத்தர்கள் பெருமளவில் வாழ்கின்றனர். பெளத்தர்கள் தீபாவளித் தினத்தைக் கொண்டாடுவது பற்றிக் கூறும் கதை ஜைனர்கள் கதையை
ஒத்ததாகவே இருக்கின்றது.
பகவான் புத்தர் நிர்வாணம் எய்திய நாள் இது வென்று கூறப் படுகின்றது. அக்காலப் பெளத்த மன்னர்கள் சிராவஸ்தி யிலிருந்து காசிவரை எங்கும் தீபாலங்காரம் செய்து புத்தரின் மகா நிர்வாணத்தை வெகுவிமரிசியாகக் கொண்டாடினார்களாம். அதிலிருந்து பெளத்தர்கள் தீபாவளித் திருநாளைக் கொண்டாடி வருவதாக பெளத்த ஜாதகக் கதைகள் கூறுகின்றன.
தீபாவளியைப் பற்றிச் சரித்திரபூர்வமாக துருவிப் பார்ப் போமானால், கிறிஸ்துசகாப்த தொடக்கத்தில் எழுதப்பட்ட வாத்ஸாயரின் காம சூத்திரத்திலேயே முதன் முதலாகக் காணப்படுகிறது. அந்த நூலில் யட்சராத்திரி என்று அது
238

குறிப்பிடப்பட்டிருக்கிறது. யட்ச அதிபதியான குபேரனுக்கு நடத்தப்பட்ட விழாவாக அக் காலத்தில் அது விளங்கி இருக்கிறது. இதையே தற்போது "தன குபேர” எனக் கொண்டாடி வருகின்றார்கள்.
இவ்விதம் தீபாவளி கொண்டாடுவதற்குப் பலவித காரணங்கள் கூறப்படுகின்றன, ஆசியாவிலே மிக அதிகமான மக்கள் கொண்டாடும் ஒரே பண்டிகையாக தீபாவளிப் பண்டிகை விளங்குகின்றது. (நி.நி)
O
தீமை - இந்துமரபில்
மெய்யியல் ரீதியாகவும் ஐதீகத்தின் அடிப்படையிலும் தீமை தொடர்பான விசாரணை இந்துசமயமரபில் மேற்கொள்ளப் பட்டிருக்கிறது. இறையிருப்பு வாதத்திற்கு சவாலானதொரு கருத்தாக இது மெய்யியலாய்விற் பயன்படுகிறது. சமய மெய்யியலின் தீமையை நியாயப்படுத்தும் வாதம் மேல்வருமாறு முன்வைக்கப்படுகிறது.
இறைவன் உயிர்களிடத்தில் அன்புடையவராயிருப்பின் அவர் உயிர்களிற்கு தீமை விளைவதை அனுமதிக்கமாட்டார். அதே போல அவர் சர்வவல்லமை உடையவராயிருப்பின் எல்லா வகையான தீமைகளையும் நாசம் செய்பவராயிருத்தல் வேண்டும். ஆனால் தீமையோ உலகிற் காணப்படுகின்றது. ஆகவே இறைவன் சர்வ வல்லமையுடையவரோ அல்லது உயிர்களிடத்து முழுநிறைவான அன்புடையரோ அல்ல.
மனிதர் செய்யும் பாவத்திற்கான தண்டனையாக தீமை விளைகிறதென ஒகஸ்ரீன் என்ற மெய்யியலாளர் விளக்குவார். பொதுவாகவே தீமை பற்றிய சொல்லாடல்களில் அச் சொல்லானது தீமைபுரிதல், தீமையை அனுபவித்தல் என இருவித கருத்திற் புரிந்துகொள்ளப்படுவது மட்டுமல்ல, அது உடலியலான துன்பம், உளத்துன்பம், ஒழுக்கக் குற்ற உணர்வு என மூவகைத் தொடர்புகளில் ஆராயப்படலாமென ஹிக்ஸ் (John H. Hick) எடுத்துக்காட்டுவார். இதைவிட துன்பம் விளைவிக்கும் மனித நடத்தை, இயற்கை அனர்த்தங்களால் விளையும் துன்பம் என்றதொரு வகையீட்டையும் அவர் செய்கிறார். மிருகங்கள் முதலான கீழ்நிலை உயிர்களால் விளையும் துன்பம், மனிதரால் விளையும் துன்பம், தெய்வங்களால் விளையும் துன்பம் என ஹேர்மன் (Arthur L. Herman) என்பவரின் வகையீடும் உண்டு.
ஒழுக்கவிதிகள் தனிநபர்களால் விதிக்கப்பட்டவையல்ல. அவை நித்திய உண்மைகளாகும். இதன் படி அறம் நன்மையையும், அதர்மம் தீமையையும் விளைவிக்கு மென்பது வேதங்களின் நிலைப்பாடாகுமெனினும், தீமைபற்றிய விரிவான சொல்லாடல்கள் இந்தியதரிசனங்களாலேயே மேற் கொள்ளப் பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. இவர்களுடைய அபிப்பிராயப்படி
இந்துக் கலைக்களஞ்சியம்

Page 269
தீமையே துக்கத்தை விளைவிக்கிறது. துக்கத்துடன் தொடர்பு படுத்தியே தீமை பற்றிய விசாரணை சாங்கியம், வேதாந்தம் மற்றும் பெளத்தம் ஆகிய தரிசனங்களில் ஆராயப்பட்டுள்ளது. சாங்கியதரிசனம் துக்கம் தொடர்பாக மேல்வரும் விளக்கத்தைப் மொழிகிறது.
இன்பமும் துன்பமும் இரண்டறக் கலந்ததே மனிதவாழ்க்கை. பலவிதமான இன்பத்தை வாழ்க்கைதரினும், மனிதர்க்கு பலவிடயங்கள் நோதலையும் துன்பத்தையும் தருவதாயுள்ளது. ஏதோவொருவகையில் எல்லா உயிரினங்களும் இதனாற் பாதிக்கப்படுகின்றன. அனைத்து துன்பங்களிலிருந்தும் விடுபட முடிந்தாலும், மூப்பு, இறப்பு என்பவற்றிலிருந்து எவராலும் தப்பிக்க முடிவதில்லை. ஆத்யாமிகம், ஆதிபெளதீகம், ஆதிதெய்வீகம் ஆகிய மூவகைத் துன்பங்களால் உயிர்களனைத்தும் பாதிக்கப் படுகின்றன. இதில் முதலாவது உடல் - உள உபாதைகளினால் ஏற்படும் துன்பத்தைக் குறிக்கும். இரண்டாவது பிறமனிதர், விலங்குகள், அரசன் ஆகியோர்களால் விளையும் துன்பமாகும். பேய்கள், துர்த்தேவதைகள் ஆகியவற்றால் ஏற்படுத்தப்படும் துன்பம் மூன்றாவது பிரிவிலடங்கும். மேலைத்தேச சமயமெய்யியலில் தீமை என்ற கருத்தாக்கம் இயற்கையினாலும் மனிதசெயற்பாடுகளினாலும் விளையும் துன்பத்தை உள்ளடக்கிய பொழுதும், வாழ்வின் மீதான அதிருப்தியை அச்சிந்தனை மரபு உள்ளடக்கு வதில்லை. இந்துமரபு இதற்கு மறுதலையான நிலைப்பாட்டைக் கொண்டது. தீமை பற்றிய பிரச்சனை இந்துக்களின் நோக்கில் துன்பம் பற்றிய தீவிரமானதொரு அணுகுமுறையாகக் காணப்படுகிறது.
இந்துச்சிந்தனை மரபின் பிறிதொரு பார்வையின்படி, உதாரணமாக அத்வைதவேதாந்த அணுகுமுறையில் தீமையும் துன்பமும் மெய்யானவையல்ல. எனவே தீமைபற்றிய பிரச்சினைக்கு அங்கு இடமில்லையென வாதிடப்படுவதுண்டு. புலன் உலக அனுபவம் மெய்யானதல்ல, அது கனவினை ஒத்தது. என்ற நிலைபாட்டினையுடையவர்கள் வேதாந்திகள். ஆனால் இந்தியச் சிந்தனை மரபு அனைத்தும் அத்வைத வேதாந்த நிலைப்பாட்டை ஏகமனதாக ஏற்றுக் கொள்வதில்லை. உலகம் மெய்யானதே என ஏற்றுக் கொள்வோருக்குத் தீமை பற்றிய பிரச்சனையும் உண்மையானதே. உலகு தோற்றவியலான தென்போருக்கு தீமை பிரச்சனைக்குரிய கருத்தாக இல்லை. இவ்விடத்து சுவாரஸ்யமான குறிப்பொன்று பிரபல்யமான அத்வைத வேதாந்த நூலான விவேகசூடாமணியிற் காணப் படுவது குறிப்பிடத்தக்கது. துன்பவேதனையால் குருவைச் சரணடைந்து மாணவராகிய ஒருவர் குருவிடம் மேல்வருமாறு முறையிடுகிறார்.
வணக்கத்திற்குரியவரே சாகரமாகிய வாழ்க்கையை எவ்வாறு கடப்பது? எனது விதி யாது? எத்தகைய வழிமுறையை
நான் பின்பற்றுதல் வேண்டும்? குருவே என்னைக் காப்பாற்றும்.
இந்துக் கலைக்களஞ்சியம்

எனது துன்பத்திற்கு முடிவுகட்டும் வழிமுறையைக் எனக்குக் காட்டியருளும்.
இதற்குக் கருணைகூர்ந்த பார்வையுடனும், புன்முறுவலு டனும் எல்லா வகையான பயத்தையும் விட்டொழி என குரு பதிலளித்தார்.
மேற்படி உரையாடலில் தீமை அல்லது துன்பம் மெய்யான தேயென்ற தொனிப்பொருள் உணர்த்தப்படுவதை அவதானிக் கலாம். அத்வைத வேதாந்தம் தோற்றமும் உள் பொருளும் என்ற எதிர்நிலையை உள்ளுறையாக ஏற்றுக்கொண்டதொரு தத்துவமாகும். இதன்படி அனைத்திலும் எதிர்நிலைகள் உள்ளடங்கியிருத்தல் வேண்டும். தீமையுடன் நன்மையும், துன்பத்துடன் இன்பமும் எதிர்நிலை வடிவத்தில் இருப்புடையன வாகின்றன. நன்மைக்கும் தீமைக்கும், இன்பத்திற்கும் துன்பத்திற்கும் இடையில் மனிதராகிய நாம் அகப்பட்டுள்ளோம். தனியொரு மெய்மையான பிரமமே உள்பொருளென அத்வைத வேதாந்திகள் வாதிட்டாலும், இறைவன் (ஈஸ்வரன்) இருப்புடையவனென்பதை அவர்கள் நிராகரிக்காது, ஏற்றுக் கொண்டவர்களாகவே காணப்படுகின்றனர். இறைவன் இருப்புடையவனெனில், தீமை எதனால் விளைகிறதென்ற பிரச்சினை இங்கும் எழவே செய்கிறது.
இப்பிரச்சினையை ஆராய்வதற்கு முன்பதாக தீமைக்குக் காரணம் யாது?, இதனை எவ்வாறு அறியலாம்? என்ற இருவினாக்களிற்கும் விடைதேடல் வேண்டும். இந்துச் சிந்தனையின்படி கர்மமே தீமைக்குக் காரணம். அது மறுபிறப்புக் கோட்பாடுடன் இணைக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு செயலுக்கும் அது நல்லதோ தீயதோ அதற்குரிய பலாபலன் உண்டு. ஒரு பிறப்பில் ஒருவன் செய்யும் நன்மை மறுபிறப்பில் அவனுக்கு நன்மையையே தரும். மறுதலையாக, தீமை புரிந்த மனிதன் மறுபிறப்பிலே துன்பத்தையே அனுபவிப்பான். அவன் தாழ்நிலைப் பிறப்பெடுக்கலாம்; அல்லது மிருகப் பிறப்பெய்தலாம்; அல்லது நரகத்தில் அமிழ்ந்து போகலாம். இவையெல்லாம் சர்வ வல்லமையுடைய இறைவனால் ஏற்படுத்தப்படுவதல்ல. ஈர்ப்பு விதியைப் போல இதுவுமொரு இயற்கை விதியாகும். தவிர்க்க முடியாத ஒன்றாகும். அதாவது தனது தலைவிதியைத் தானே தீர்மானித்துக் கொள்கிறான். தாழ்நிலையிற் கிடந்து உழலும் ஆன்மா தன்முயற்சியாலேயே சரியானதைத் தெரிவு செய்து நடப்பதால் உயர்நிலையை
அடையலாம்.
மேற்படி விளக்கத்தின்படி, தீமைக்கு ஏதுவாக இருப்பவன் இறைவன் அல்ல, தனக்கு விளையும் தீமைக்குத் தானே காரணகர்த்தாவாக மனிதன் விளங்குகின்றான். ஒருவன்
அனுபவிக்கும் தீமைக்கு அவனால் செய்ப்பட்ட தீயசெயல்களே
239

Page 270
காரணமாகும். இது தொடர்பாக அத்யாத்ம இராமாணயத்தில்
விரிவான விளக்கமொன்று உண்டு.
ஒருவனுடைய அதிஷ்டத்திற்கும் அதிஷ்டமின்மைக்கும் வேறெவரும் காரணகர்த்தாவாக இருப்பதில்லை. கடந்த காலங்களில் புரிந்த கர்மவினையே அதற்குக் காரணமாகும். இதற்காக பிறிதொருவரைக் குறைகூறுவது ஏற்புடையதல்ல. அனைத்து உயிர்களும் கர்மவினைத் தொடர்பால் கட்டுப்படுத்தப் பட்டனவாகும். சிலரை நண்பராகவும், வேறுசிலரைப் பகைவ ராகவும் கருதிக்கொள்வதும் கர்மத் தொடர்பால் விளைவ தேயாகும். இதனால் ஒருவன் தனது அதிஷ்டத்தையும் அதிஷ்ட மின்மையையும் தானே அனுபவித்துக் கொள்ளுதல் வேண்டும். கர்மவினைப் புசிப்பென்பதே இதன் தாற்பரியமாகும். துன்பத்தை வெறுத்தலும், இன்பத்தை வேண்டலுமின்றி எதற்கும் அடிமையாக இல்லாதிருப்பதே விரும்பப்படுவதாகும். எத்தகைய சூழலிலும், எத்தகைய சந்தர்ப்பத்திலும், எத்தகைய நியாயமிருப்பினும் ஒருவனால் புரியப்பட்ட செயல்கள், அவை நன்மையானவையோ அல்லது தீமையானவையோ எதுவாயினும் அதற்குரிய பலாபலன்கள் கிடைத்தேயாகும்.
எனவே இன்ப - துன்பங்களால் ஆனந்திப்பதோ அல்லது வெறுப்படைவதோ பயனற்றது. தெய்வங்கள் கூட இதற்கு விதிவிலக்கல்ல. (சிவன் கூட பிரமஹத்தி தோஷத்தினால் அல்லற்பட்டதை இங்கு நினைவுகூருதல் பொருத்தமானதே). இன்ப - துன்பங்களிலிருந்து மனிதர் தப்பிக்க முடியாது. அவை நல்லதும் தீயதுமான மனித நடத்தைகளின் பெறுபேறேயன்றி வேறல்ல. பகலும் இரவும் போல இன்ப துன்பங்கள் மாறிமாறி வருவனவல்ல. அது சேறும் சகதியும் போன்றது. இதனை உணர்ந்ததாலேயே ஞானியர் இன்பத்தையும், துன்பத்தையும் ஒக்க நோக்கினர்.
சமய நிலையில் தீமை பற்றிய பிரச்சினைக்கு பெரும்பாலான இந்துக்கள் கர்மக் கோட்பாட்டிலேயே விளக்கத்தைத் தேடினர் இது தொடர்பான மெய்யியல் ரீதியான விளக்கத்தை தலைசிறந்த தற்கால இந்திய மெய்யியலாளராக விளங்கிய ஹரியண்ணா மேல்வருமாறு குறிப்பிட்டுள்ளார்:
கர்மவிதி யந்திரவியற்பாங்கான விதியல்ல. அது அடிப்படையில் ஒழுக்கவியலானது. வாழ்க்கையில் அசமத்துவ மென்பதே இல்லையென்பதால் வெறுப்புணர்வும் இல்லை யென்பது இந்துக்களின் அடிப்படை நம்பிக்கையாகும் அவர்களது அபிப்பிராயப்படி வாழ்க்கையில் துன்பமும் கவலையும் அவரவராக வருவித்துக் கொண்டதேயன்றிப் பிறரால் ஏற்பட்டதல்ல. கடவுளையோ அன்றி அயலவர்களையோ இந்துக்கள் மனம் நோவதில்லை. கர்மக்கோட்பாட்டில் நம்பிக்கை
கொண்டிருப்பதே இதற்குக் காரணமாகும்.
240

கர்மக்கோட்பாடும், மறுபிறப்பும் சமயம் சார்ந்த திருப்தி கரமான விளக்கம் மட்டுமல்ல, தீமை பற்றிய பிரச்சினைக்கு வலுவான மெய்யியற் தீர்வையும் தருகிறது. எவ்வாறாயினும் கர்மக் கோட்பாட்டுடன் இறைவனின் தொடர்பு எத்தகைய தென்பது ஆராயப்படல் அவசியமானது. இறைவனின் இருப்பை ஏற்றுக்கொள்ளாத இந்தியச் சிந்தனை மரபுகளிற்கு இதுவொரு பிரச்சினையல்ல. ஆனால் இறைவனின் இருப்பையும் அதேவேளை கர்மக்கோட்பாட்டையும் ஏற்றுக்கொள்ளும் தரிசனங்களைப் பொறுத்தவரையில் இவ்விளக்கம் மிகவும் இன்றியமையாதது. அதாவது தீமை பற்றிய பிரச்சினை இத்தரிசனங்களில் பிறிதொரு வடிவத்தில் விளக்கப்படுகிறது.
இறைவனுக்கும் கர்மக்கோட்பாட்டிற்குமிடையில் உள்ள தொடர்பு, குறிப்பாக நியாய வேதாந்த தரிசனங்களால் விரிவாக ஆராயப்பட்டுள்ளது. வேதாந்த தரிசனங்களில் அத்வைதம், விசிஷ்டாத்வைதம், துவைதம் என்பன குறிப்பிடத்தக்கவை.
தீமை பற்றிய பிரச்சினைக்கு கர்மக்கோட்பாடு போதிய விளக்கமாயின், தீமைக்கு இறைவன் காரணகர்த்தா அல்லவென வாதிடுவது பிரச்சினையைத் தராது. ஆனால் கர்மக் கோட்பாட்டின் இயக்கம் இறைவனால் கண்காணிக்கப் படுகிறதென வாதிட முயலுவது சிக்கலைத் தரும். அதாவது தீமை பற்றிய பிரச்சினையில் இறைவனின் (எல்லாம் வல்லவர், எல்லாம் அறிந்தவர், எங்கும் உள்ளவர் என்ற வரைவிலக்கணத்தின்படி) பங்கு என்னவென்பது மீண்டும் பிரச்சினையாகிறது. நியாய தரிசனக் கொள்கையினர் மேல்வருமாறு விடை தருகின்றனர்.
இறைவனே உலகிற்கு நிமித்தகாரணன். உயிரினங்கள் அனைத்தும் அவரது வழிகாட்டலிலேயே செயற்படுகின்றன. தனது செயல்களிற்கு தானே பொறுப்பாளியென்பதால், மனிதனுக்கு ஒப்பீட்டளவிலான சுதந்திரமே உண்டு. பிள்ளைகளின் ஆற்றல்களிற்கேற்ப அவர்களை வழிநடத்தும் அன்புடைப் பெற்றோர்களைப் போல, அனைத்து உயிர்களும் கடந்த கால நடத்தை, அவர்களின் குணாதிசயம் என்பனவற்றிற்கேற்ப இறைவனால் வழிநடத்தப்படுகின்றன. அவன் நிமித்த காரணன். பாரபட்சம் ஏதுமின்றி அவரவர் கன்மவினைக்கேற்ப பலாபலன்களைக் கிடைக்கச் செய்பவராக
இருக்கிறான்.
இங்கு தீமை பற்றிய பிரச்சினையும் கன்மக்கோட்பாடும் ஒழுக்கவியலுடன் தொடர்புடையதாயிருப்பதை அவதானிக்க முடிகிறது. ஒழுக்கவிதிகள் தம்மியல்பில் மீறமுடியாத தன்மையைக் கொண்டவை என கி.பி. 9ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த பிரபல இந்து சிந்தனையாளரான வாசஸ்பதி மிஸ்ரர் எடுத்துக் காட்டுவார். இதில் மன்னிப்பென்பதற்கு இடமில்லை. உயிர்கள் தம் கன்மவினையைப் புசித்து, இறைவனை அடையும் வண்ணம் உலகம் படைக்கப்படுகிறது. இதனால் ஆன்மாக்கள்
இந்துக் கலைக்களஞ்சியம்

Page 271
தம்மையுணர்ந்து ஞானத்தைப் பெறுவதற்கு துன்பம் ஏதுவாயிருக்கிறதென்பது இவரது நிலைப்பாடாகும்.
வாசஸ்பதி மிஸ்ரரின் விளக்கத்தின்படி கர்மவிதிக்கும் இறைவனின் இருப்பிற்குமிடையில் எத்தகைய முரண்பாடும் இல்லை. இறையியல்பின் ஒருபகுதியாக, இறையருளின் குறியீடாக கன்மக்கோட்பாடு உள்ளடக்கப் பட்டிருப்பதைக் காணலாம். இதனால் தீமை விளைகிறதேயென கவலைப்படத் தேவையில்லை. உலகத்தை இறைவன் படைப்பதற்கான ஆன்மாக்களின் தேவையும் (கன்மவினை புசிப்பு) இதனாலேயே பெறப்படுகிறது.
அத்வைத வேதாந்தத்தின் படி மனித இயல்பில் உள்ளடங்கிய அறியாமையே தீமைக்குக் காரணமாகிறது. இதனை அவித்யா என அழைப்பர். அவித்யா இல்லாதபொழுது தீமை ஏற்பட வாய்ப்பில்லை. இருளும் - ஒளியும் போல, அறிவும் - அறியாமையும் அவற்றின் முரண்பாடு இயல்பினால் ஒரே சமயத்தில் தனிமனிதரிடத்துக் காணப்படமுடியாது என்பதுடன் அறிவைப் பெறுவதன் மூலம் அறியாமை அகலுகிறதென்பதும் இவர்களது நிலைப்பாடாகும். அறியாமையே தீமைக்குக் காரணமாகிறது. அது நிரந்தரமானதல்ல. எனவே தீமையும் நிரந்தரமானதல்லவென்பது அத்வைத நிலைப்பாடாகும்.
இராமனுஜ வேதாந்தத்தின் படி பிரமம் முழுநிறைவானது. ஆன்மாக்களின் கர்மாவினால் அல்லது வினைப்பயனால் தீமை விளைகிறது. ஆன்மா பிரமத்தைச் சார்ந்திருப்பினும், அதற்கு தெரிவுசெய்யும் சுதந்திரம் உண்டு. இதனால் அவை நல்லவினையோ அல்லது தீயவினையோ தெரிவுசெய்து கொள்ளலாம். அவரவர் தெரிவிற்கு அவரவரே பொறுப் பென்பதால் நல்வினையாளனுக்கு நன்மையும், தீவினையாள னுக்குத் தீமையும் விளைகிறது. இங்கு தீமை தண்டனையாக மட்டுமல்லாது, ஆன்மாக்களிற்கு விமோசனமளிக்கு மொன்றாகவும் செயற்படுவதை அவதானிக்கலாம். பிரமன் தீமை அனுமதிப்பதற்கான காரணம் ஆன்மாக்களின் தெரிவு செய்யும் சுதந்திரத்தில் அவன் தலையிட விரும்பாமையேயாகும்.
மத்துவாச்சாரியாரின் வேதாந்தம் இப்பிரச்சினையை பிறிதொரு கோணத்தில் முன்வைக்கிறது. வியாச ராஜர் என்ற வியாக்கியான காரர் இதனைத் தெளிவுபடுத்துகிறார். நன்மையும் தீமையும் உள்ளுறை தத்துவங்களே என்றும், அவை அனாதி யானவை யென்றும் ஏற்றுக் கொண்டு, அதேவேளை இறைவனின் இருப்பையும் அங்கீகரிப்பது சுயமுரண்பாடாகும். தீமையான செயல்கள் தீமை பயக்குமென்பதோ அல்லது ஆன்மாக்களின் துன்பத்திற்கும் இறைவனுக்கும் எதுவித தொடர்புமில்லை என வாதிடுவதோ போதிய நியாயத்தினடியான வாதமல்ல என விமர்சிக்கும் மாதவவேதாந்தம், ஆன்மாக்களின் கன்மவினையே அதற்கு தீமை விளைவிக்கிறதெனினும், அது இறைவனின்
இந்துக்கலைக்களஞ்சியம்

ஆணையினாலேயே செயற்படுத்தப்படுகிறதென வாதிடு கின்றது.
மாதவ வேதாந்தத்தின் மேற்படி நிலைப்பாடு சைவசித் தாந்தத்திற்கும் ஏற்புடையதே. சிவஞானபோதத்தின் இரண்டாம் சூத்திரமும், அதற்கான சூர்ணியும் இதனைத் தெளிவாக உணர்த்தும். உயிர்களிற்குக் கன்மபலனைக் கொடுப்பவன் இறைவன் என்பது இரண்டாம் சூத்திரத்திற்கான இரண்டாம் சூர்ணிகை. (a ...)
O. O. O O தீர்த்தங்கள்
தீர்த்தம் என்றால் துறை என்று பொருள். இதற்கு வழி, பாதை என்று வேறு பெயர்களும் உண்டு. ஆற்றுக்குள் இறங்குவதற்கு கட்டப்பட்டிருக்கும் படிகளையும் இது குறிக்கும். பின்னர் இது ஆற்றிற் குளிக்கும் இடத்தையே சுட்டலாயிற்று. அதுவே பின்னர் தீர்த்த யாத்திரைக்குரிய புண்ணிய தலமாயிற்று. இப்புண்ணிய தீர்த்தங்கள் தெய்வீகம் வாய்ந்த நதிக்கரையில் அமைதல் வேண்டும் என்பது நியதி.
வேதநெறியை ஒட்டிய இதிகாச புராணங்கள் புனித தீர்த்த யாத்திரைக்கு ஏற்றம் தந்து பேசுகின்றன. அதற்கு முன்னோடி யாகவும் விளங்குகின்றன. இதிகாச புருஷனான பூரீராமன் கைகேகியின் வரத்தை மையமாகக் கொண்டு பதின்நான்கு ஆண்டுகள் காட்டுக்குப் போனான் என்றாலும் அதன் உள்ளுறைப் பொருள் தீர்த்த யாத்திரை தான். பல முனிவர்களைத் தரிசித்தான், புனித தீர்த்தங்களில் நீராடினான். வேதம் விதித்த கடமைகளை ஆற்றினான். முன்னோர்களைக் கரையேற்றினான். வனவாசம், அஞ்ஞாத வாசம் என்று சென்ற பாண்டவர்களும் இதையே தான் செய்து இருக்கிறார்கள். அர்ச்சுனன் தனியாகவே தீர்த்த யாத்திரை மேற் கொண்டிருக்கின்றான். புண்ணிய தீர்த்தங்களின் பெருமை பற்றியும் இவற்றினை நோக்கி யாத்திரை போவோர் அடையும் புண்ணியம் பற்றியும் இதிகாச புராணங்கள் கூறுகின்றன.
புனித தீர்த்தங்களுடன் தெய்வங்கள் தொடர்புபடுத்தப் பட்டுள்ளன. இத்தெய்வங்களின் சாந்நித்யம் இங்கு இருப்பதால் தீர்த்தங்களின் மகிமை உயர்கிறது. விஷ்ணு, சிவன் ஆகிய இருவருமே தீர்த்தங்களில் பெரும்பாலும் தொடர்புடையவர்கள். சிறு தெய்வங்களுக்குரிய தீர்த்தங்களும் உள. ஆனால் அவை அவ்வளவு பிரசித்தி பெறவில்லை. நாட்டின் பல பாகங்களிலும் விளங்கும் தீர்த்தங்களில் மக்கள் பல இடங்களில் இருந்தும் கூடி கிரியைகள் பலவற்றை நிகழ்த்துவர்.
புனித தீர்த்தங்களுக்கு யாத்திரை சென்று நீராடி
அவற்றுடன் தொடர்புடைய தெய்வங்களை வழிபடும் முறை இலகுவானது. உடலை வருத்தி நீண்ட நாட்கள் செய்யும்
241

Page 272
தவத்திலும், பெரும் பொருட் செலவில் மேற்கொள்ளப்படும் யாகங்களைக் காட்டிலும், தீர்த்த யாத்திரை மேற் கொள்வது இலகுவானது. அத்துடன் தவத்தால், யாகத்தால் ஈட்டவல்ல பெரும் பயனைத் தரவல்லன தீர்த்தங்கள். எனவே தீர்த்த யாத்திரை மேற் கொள்ளல் இந்துக்களிடையே பிரபல்யம் அடைந்துள்ளது.
தீர்த்த யாத்திரையும் தவத்தை ஒரளவிற்கு ஒத்தது. இங்கும் சில நியமங்கள் உண்டு. ஜம்புல அடக்கத்துடன் இன்பம் பயக்கும் பொருள்களை இவ் வேளையில் ஒதுக்கி தீர்த்த யாத்திரை மேற் கொள்ள வேண்டும். மனம், வாக்கு, காயம் மூன்றையும் கட்டுப்படுத்தி ஒழுக்க நெறி நிற்க வேண்டும். தானம் ஏற்காது உணவை வரைந்து உண்டு, முறைப்படி நியமங்களைக் கடைப்பிடிப்பவன் தீர்த்த யாத்திரையால் வரும் பயன் முழுதையும் பெறுவான்.
தீர்த்தங்கள் நீர்க்கரையினை அண்டியே விளங்குவதனால் அவை ஆறாகவும், குளமாகவும், கடலாகவும் இருக்கலாம். இங்கு நீராடுவது தீர்த்த யாத்திரையின் முக்கிய அம்சம். இவ்வாறு நீராடுவது பாவமனைத்தையும் போக்கும் என்று கருதப் படுகின்றது. நீர்க்கரையில் நிறுவப்பட்டு விளங்கும் இலிங்கங்களை வழிபடுதல் தீர்த்த யாத்திரையில் அடுத்தாற் போல் நிகழும் கிரியை. இவ் இலிங்கங்களில் இறைவன் எப்போதும் சாந்நித்தியமாக இருப்பான் என்பன புராணங்கள். இங்கு தான் கோயில் வழிபாட்டின் தொடக்க நிலையைக் காண்கின்றோம். தீர்த்தக் கரையில் நிறுவப்பட்ட இலிங்கங் களுக்கு அண்மையில் வளர்ந்த மரங்கள் நிழல் முதலிய பாதுகாப்பை அளித்திருக்கலாம். இவ் இலிங்கங்களுக்குப் பாதுகாப்பாகக் கட்டிடங்களும் அவற்றைச் சூழ்ந்து எழும்பி இருக்கலாம். இவ்வாறு இலிங்க வழிபாடு கோயில் வழிபாடாக உருவாகும் நிலையில் இலிங்கத்துடன் தீர்த்தமும், மரமும் தொடர்புபட்டிருக்கக் கூடும். இம் மரபைத் தொடர்ந்தே கோயில்கள் தோன்றுமிடம் எவ்வகையிடங்க ளாயினும் தல விருட்சங்களுடனும் அவற்றிற்குரிய தீர்த்தங்களுடனும் தொடர்புபடுத்தப்படுகின்றன. இவ் விருட்சங்கள் பெரும்பாலும் கர்ப்பக்கிருகத்தை அடுத்தே இடம் பெறுகின்றன.
இந்துக்களின் முக்கிய தீர்த்த யாத்திரைத் தலங்களாக இராமேஸ்வரமும், காசியும் விளங்குகின்றன. இராமேசுவரத்தின் வரலாறு இதிகாச புருஷனான இராமனின் வாழ்க்கையோடு பின்னிப் பிணைந்தது. இராமேசுவரத்தைச் சுற்றியுள்ள தீர்த்தங்கள் பிரம்ம தீர்த்தம், ஹனுமத் தீர்த்தம், அகஸ்திய தீர்த்தம், லக்ஷமண தீர்த்தம், இராம தீர்த்தம், ஜடா தீர்த்தம், அக்னி தீர்த்தம் ஆகியவை ஆகும். சேது மகாத்மியம் லக்ஷமண தீர்த்தத்திற்கு ஏற்றம் தந்து பேசுகிறது. உள்ளத் தூய்மையோடு உடல் தூய்மையும் பேணப்பட வேண்டும். ஆதலால் இந்தத்
242

தீர்த்தத்தில் சங்கல்பம் செய்து, சவரம் செய்து கொண்டு நீராட வேண்டும். அத்துடன் பிண்டதானம் செய்து நீத்தார் கடனை நிறைவேற்ற வேண்டும். இதனால் பாவங்கள் தொலைந்து பித்ருக்களும் முத்தி நிலை பெறுகிறார்கள் என்று இந்நூல் கூறுகின்றது. எல்லாவற்றுள்ளும் பெரிய தீர்த்தம் அக்னி தீர்த்தம். எல்லாத் தீர்த்தங்களையும் தன்னுள் அடக்கிய கடலே இந்தத் தீர்த்தமாகத் திகழ்கிறது.
அருள்மிகு இராமநாதர் ஆலயத்தில் நுழைந்து பிராகாரங்களைச் சுற்றி வந்தால் 22 தீர்த்தங்கள் இதிகாச - புராணப் புகழ்பாடுவதைக் காணலாம். மகாலசுஷ்மி தீர்த்தம், காயத்திரி-சாவித்திரி சரஸ்வதி தீர்த்தம், சங்கு சக்கர தீர்த்தம், சிவதீர்த்தம், கயா, கங்கை, யமுனை தீர்த்தம், சூரிய சந்திர தீர்த்தம், பிரமஹத்தி விமோசன தீர்த்தம், சர்வ தீர்த்தம், ஸாத்யாம்ருத தீர்த்தம், சேது மாதவ தீர்த்தம், நள தீர்த்தம், நீல தீர்த்தம், கவய தீர்த்தம், கவாகூ தீர்த்தம், கந்த மாதன தீர்த்தம், கோடி தீர்த்தம் என்பனவே அருள் மிகு இராமநாதர் ஆலயத்துள் இருக்கும் தீர்த்தங்கள். இராமேஸ்வரத்தில் இறுதியாக நீராடப்படும் தீர்த்தம் கோடி தீர்த்தம் கங்கை நீரைப் போல் கோடி தீர்த்தத்தையும் எடுத்துச் சென்று பூஜை செய்யும் வழக்கம்
உண்டு. -
வட இந்தியாவில் பிரயாகையில் உள்ள திரிவேணி சங்கமம் தீர்த்த யாத்திரைத் தலங்களில் சிறப்பானது. கங்கை, ஜமுனை, சரஸ்வதி ஆகிய மூன்று நதிகளும் கூடி இந்தத் தலத்திற்கு திருவேணி என்ற பெயரைத் தருகின்றன. இங்கே சவரம் செய்து கொண்டு கங்கை, யமுனை, திருவேணி நீராடித் தீர்த்த சிரார்த்தம் செய்ய வேண்டும். கங்கா பூஜை, தம்பத் பூஜை ஆகியவைகளும் சிறப்பாக மேற்கொள்ளப்படுகின்றன. இங்கு பெண்கள் வேணி தானம் செய்வது சிறப்பு என்று கருதப்படுகிறது. வேறு எந்தத் தலங்களிலும் பெண்கள் தங்கள் கேசத்தை மழிப்பதோ, கழிப்பதோ இல்லை. திருவேணிக்கு மட்டும் ஒரு தனிச் சிறப்பு விதி. பெண்கள் வேணி தானம் செய்ய வேண்டும். பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை பிரயாகை, உஜ்ஜயினி, ஹரித்வார், நாஸிக் ஆகிய இடங்களில் கும்பமேளா நடைபெறும். இவற்றுள் பிரயாகைக் கும்பமேளாவே மிகப்பிரசித்தம்.
முத்தித் தலமாகக் கருதப்படும் காசி இந்துக்களின் மிகப் பிரதானமான தீர்த்த யாத்திரைத் தலமாகும். இன்று காசியும் வாரணாஸியும் ஒரே பொருளில் வழங்கப்படுகின்றன. ஆனால் பழங் காலத்தில் காசி ஒரு குடியரசாகத் திகழ்ந்திருக்கிறது. அப்போது வாரணாஸி அதற்குத் தலைநகராக இருந்திருக் கிறது. இங்கு இறப்பவர்களுக்கு முத்தி அளிக்காத இடம் ஊசி முனையளவு கூட இல்லை என்கிறது பத்மபுராணம்.
இந்துக் கலைக்களஞ்சியம்

Page 273
இத்தனை சிறப்புகளும் காசிக்கு உண்டென்றால் அது கங்கா தீர்த்தத்தால் உண்டானதே. இமயமலைச் சாரலிலே ஏறக்குறைய பதினாலாயிரம் அடி உயரத்தில் ஒரு குகை. இதன் வாய் பசுவின் வாய் போல் இருப்பதால் கோமுகி என்று பெயர். இங்கு தான் கங்கை வெளிப்படுகிறாள். இப்பகுதி கங்கோத்ரி எனப்படுகிறது. இங்கு ஆரம்பமாகின்ற கங்கா நதி ரிஷிகேசம் போன்ற பல புண்ணிய தலங்களைக் கடந்து வந்தாலும் அது பிரகாசிப்பது காசியில்.
தீர்த்தங்கள் நான்கு வகையாகக் கூறப்படுகின்றன. தானதர்மம் செய்வதற்குரிய தீர்த்தம் தர்ம தீர்த்தம் என்றும், வர்த்தகத்துக்கு மட்டுமே உரியவை அர்த்த தீர்த்தம் எனவும், சில தீர்த்தங்கள் வாழ்க்கைக்கு இன்பம் தருவதால் உல்லாசப் பயணத்திற்கு ஏற்றவையாய் உள்ள அவை காமதீர்த்தம் என்றும், அறிவு வளர்ச்சிக்கும் ஆன்ம ஞானத்திற்கும் உகந்தவை மோகூடி தீர்த்தம் எனவும் சொல்லப்படுகிறது. ஆயின் கங்கா தீர்த்தத்துக்குள்ள சிறப்புஇந்த நான்கையும் தன்னுள் கொண்டதாகும். கங்கைக்கு அறுபத்து நான்கு ஸ்நான கட்டங்கள். இவை எல்லாவற்றிலும் நீராடுவது விசேடம் தான் எனினும் ஐந்து கட்டங்கள் ஸ்நானத்திற்கும் பித்ருக்களுக்கும் பிண்டம் போடவும் மிகச் சிறப்பானது. அளி கங்கா சங்கமம், தசாஸ்வமேதம், பஞ்சகங்கை வரணா சங்கமம், மணிகர்ணிகா கட்டம் ஆகியவையே அவை. கங்கையில் படகில் பயணம் செய்தபடி அத்தனை துறைகளையும் தரிசனம் செய்யலாம். பல புராதன மூடப்பழக்க வழக்கங்களும், நவநாகரீக வாழ்க்கை முறைகளும் பல வகையாலும் இன்று கங்கையை அசுத்தப்படுத்த முயல்கின்றன. அவற்றின் முயற்சி பலனளிக்கவில்லை என்று இன்றைய விஞ்ஞானம் ஏற்கிறது. கங்கை நீரில் நச்சுக் கிருமிகள் நீடித்து வாழ முடியாமல் மடிந்து போகின்றன என்று கூறப்படுவது மெய்ஞ்ஞானம் காட்டும் தெய்வ சக்தி கங்கைக்கு உண்டு என்பதை ஏற்க வைக்கிறது.
விந்திய மலைச் சாரலுக்கு வடக்கே மகத நாட்டிலே உள்ள கயா என்னும் திருத்தலமும் தீர்த்தயாத்திரைக்கும் சிரார்த்தத்திற்கும் உரிய சிறப்பான தலமாகும். கயை என்னும் அசுரன் தான் இறக்கும் தறுவாயில் “சூரியனும், சந்திரனும் நட்சத்திரங்களும், பூவுலகமும் இருக்கும் வரை எல்லாத் தெய்வங்களும் உருவமாகவோ அருவமாகவோ இங்கேயே என்னில் உறைய வேண்டும். இந்த ஷேத்திரம் என் பெயரால் கயை என்று விளங்க வேண்டும். இங்கிருந்து பிண்டம் போட்டு சிரார்த்தம் செய்பவர்களின் பித்ருக்கள் அனைவருக்கும் பிரம்ம லோகம் சித்திக்க வேண்டும். அவர்களை எந்த வகைப் பாவமும் தீண்டக் கூடாது.” என்று கேட்டுக் கொண்டதற்கமைய, இது சிறந்த ஒர் தீர்த்த யாத்திரைத் தலமாகவும், சிரார்த்தம் செய்யும் புண்ணிய பூமியாகவும் விளங்குகிறது. கயையிலே புனித தீர்த்தம் இல்லாத இடமே இல்லை என்கிறது அக்னி புராணம். கயையில்
இந்துக் கலைக்களஞ்சியம்

பிண்டம் போட்டுச் சிரார்த்தம் செய்யக் கூடிய இடங்கள் பல இருப்பினும் அஷ்ட கயா, பஞ்சகயா, ரகோதிஷ்டம் ஆகிய இடங்கள் சிறப்பானவை.
இந்தியாவில் உள்ள இப் புண்ணிய தீர்த்தங்களைப் போன்று இலங்கையிலும் புனித தீர்த்தத் தலங்கள் பலவுள. அவற்றுள் இலங்கையின் வட பகுதியில் உள்ள கீரிமலைக் கண்டகி தீர்த்தம், திருக்கேதீச்சரத்து பாலாவித் தீர்த்தம், கிழக்குப் பகுதியில் உள்ள கோணேசர ஆலய சமுத்திர தீர்த்தம் என்பவை குறிப்பிடத் தக்கவை. திரேதா யுகத்திலே பரமேஸ்வர மூர்த்தி பார்வதி தேவியுடன் இம்மலைச் சாரலில் எழுந்ருளியிருந்த பொழுது பார்வதி நீராடுவதற்காக கண்டகி தீர்த்தத்தை பரமேஸ்வரர் இவ்விடத்திற்கு அழைத்து வைத்தார். இப் புண்ணிய தீர்த்தத்திலே நகுலமுனிவர், நளமகாராஜன், அர்ச்சுனன், மாருதப்புரவீகவல்லி ஆகியோர் தீர்த்தமாடித் தம்துயர் நீங்கப் பெற்றமை பற்றி யாழ்ப்பாண வைபவமாலை
கூறுகின்றது.
மன்னார்ப் பகுதியில் மாந்தை என்னும் இடத்தில் பாடல் பெற்ற திருத்தலமான திருக்கேதீச்சரம் அமைந்துள்ளது. மாந்தை பெருந்துறைமுகமாகவும் விளங்கியது. இங்கு ஒர் சிவாலயமும் வரலாற்றுக் காலத்துக்கு முன்பே இருந்திருக்க வேண்டும் என்று கருத இடமுண்டு. இராவணன் மனைவி மண்டோதரி திருக்கேதீச்சரப் பெருமானிடம் அளவில்லா அன்பு கொண்டிருந்தாள் என்பது இராமாயணச் செய்தி. விஜயன் இலங்கைக்கு வந்து ஆட்சியைத் தமதாக்கி கொண்டு ஆட்சிபீடமேறும் முன்னரே தமது ஆட்சிக்குப் பாதுகாப்பாக நான்கு திசைகளிலும் நான்கு சிவாலயங்ககளை கட்டினான் என்று யாழ்ப்பாண வைபவமாலை குறிப்பிடுகின்றது. திருக்கேதீச்சரமும், பாலாவித் தீர்த்தமும் மிகப் புனிதமாகக் போற்றப்பட்டதென்பதற்கு கதிர்காமக் கல்வெட்டு சான்றாக உள்ளது. "கதிர்காம ஆலய பரிபாலனத்தில் தவறுகள் செய்தவன், திருக்கேதீச்சரப் பாலாவித் தீர்த்தக் கரையில் பசுவைக் கொன்ற பாவத்தை அடைவான்’ எனக் காணப்படுகின்றது.
இந்துக்களின் வழிபாட்டு முறைகளில் தீர்த்த யாத்திரை செல்லுதல், அவற்றை மனதால் நினைத்தல் என்பன பெரும் புண்ணியம் பயக்கும் என்று கொள்ளப்படுகிறது. இகழத்தக்க பெரும் பாவங்கள் புரிந்தோரும், புண்ணிய நதிகளிலே தீர்த்தமாடி அங்கு எழுந்தருளியிருக்கும் தெய்வங்களை மனப்பூர்வமாகத் தியானிப்பதன் மூலம் தமது பாவங்களைப் போக்கலாம். சுருங்கக்கூறின் புண்ணிய தீர்த்தங்களிலே தீர்த்தமாடுவது இம்மை, மறுமை, இரண்டிற்கும் வேண்டிய பேறுகளைப் பெற்றுத் தரும். (நி.நி.)
243

Page 274
O துகளறு போதம்
துகள் அறுவதற்குரிய காரணமாகிய போதம் துகள் குற்றம், உயிர்க்குற்றம் அதாவது ஆணவமலத்தினை அறுத்து நீக்குதல் பற்றிக் கூறும் நூலாகும். ஆணவ மலம் அறுவதற்கு ஏதுவாகிய சிவஞானத்தை விளைவிக்கும் நூல் என்பதே இதன்
பொருளாம்.
ஆசிரியர்:- காழி பழுதைகட்டி சிற்றம்பல நாடிகள் என்பவ திருக்கைலாய பரம்பரைத் திருநந்தி மரபு மெய் கண்டாரின் சந்தானத்திலே உபதேச பரம்பரையிலே வந்தவராவர். இவ காழி, கங்கை மெய்கண்டாருடைய திருவருளுபதேசம் பெற்றவர் கி.பி.14 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் தஞ்சை மாவட்டத்தி சீர்காழியில் வாழ்ந்தவர். சிற்றம்பல நாடிகள் தம்மாணாக்க அறுபத்து மூவருக்கும் சாம்ப தீட்சை செய்து அவர்கள் அனைவரையும் மயிலாடுதுறையினை யடுத்த சித்தர் காடு என் இடத்தில் ஒரே காலத்தில் சமாதிகொள்ளச் செய்தவர். இ செய்திகளை இந் நூலின் சிறப்புப்பாயிரப் பாடலும் குறித்து நிற்கின்றது. இவரது மாணவருள் ஒருவரான தத்துவப் பிரகாச இவரைச் சந்தான ஆசிரியரோடு ஒப்பிட்டுக் கூறுவதிலிருந்து இவரது சிறப்பினை அறிய முடிகின்றது.
நூல்:- காப்புச் செய்யுளுடன் நூற்றொரு வெண்பாக்கள் இர நூலில் அடங்கும். சைவசித்தாந்தத்தின் முப்பொருளான பதி பசு, பாசம் ஆகியவற்றின் விளக்கமாகிய தத்துவரூபம், தத்து தரிசனம், தத்துவ சுத்தி, ஆன்மரூபம், ஆன்மதரிசனம் ஆன்மசுத்தி, சிவரூபம், சிவதரிசனம், சிவபோகம், சிவயோக என்பனவற்றை முதன்முதல் வகுத்துக் கூறியது இத் துகளறு போதமேயாகும். முப்பதவதரம் என்பது, சிவன் முத்தியிலிருந்: ஆன்மா அந்த நிலையிலிருந்து வழுவிய காலத்து மீண்டு அந்நிலைக்குச் செல்லத் தடைப்படுங்கால் முப் பொருளின் உண்மை நிலையை உணர்ந்து மேல் நோக்கிச் செல்லு நெறியில் அமைந்த படிக்கல்லாகக் கூறுவதாகும்.
நூலின் பொருளடக்கம்:- மங்கள வாழ்த்துடன் நூ6 ஆரம்பமாகின்றது. “சிவஞான போதம் முதலிய சித்தாந்: நூல்கள் தசகாரியங்களாகத் தொகுத்துக் கூறும் ஞானத்தில் ஞானமாகிய நிட்டையினியல்பை முப்பதவதரங்களா வகுத்துரைக்க முற்படும் ஆசிரியர் சாக்கிரத்தே யதீதத்தை புரியுந் தமக்கு இடையூறு சிறிதுமனுகாமை உணர்ந்தாராயினு சான்றோராசாரம் பாதுகாத்தற் பொருட்டும், மாணாக்கர்க்கு அறிவுறுத்தற் பொருட்டும் முதற்கண் இடையூறு நீங்குதற்குரி கடவுளை வாழ்த்துவதாக "மங்கள வாழ்த்து' அமைகிறது விநாயகப் பெருமானை வாழ்த்தி இந்நூல் தொடங்குகிறது.
244

jl
ჭეil
அடுத்து இந்நூலிற் பாயிரம் மூன்று பாடல்களில்
அமைகின்றது. இங்கு நூலின் பயன் கூறப்படுகின்றது.
"பதி பசு பாசம் தெரிந்தப் பாச விதி வழியை வென்றதனின் வேறாங்கதி வழங்கும் மெய்கண்டான் சந்தான மேவிச் சிவானந்தங்
99. கை கனடா கானா கரு
பரபோகமாகிய வீட்டைப் பயக்கும் மெய்கண்ட தேவ நாயனாரது
சந்தானாசாரியரை அடைந்து சிவானந்தத்தைப் பயக்கும் நிட்டை
சிந்திக்கப் பெற்றுச் சிவபோகத் தழுந்தினோர் அன்னையின்
கருப்பாசயத்திற் புகார் (பிறவியெய்தார்) என இந்நூலின் பயனிற்
கூறப்பட்டுள்ளது.
1)
பூதப்பழிப்பு- ஏழு பாடல்களிற் பூதப்பழிப்பு பற்றிக் கூறப்பட்டுள்ளது. ஐம்பூதங்கள் பற்றியும் அதன் தன்மைகள் ஐம்பூதங்களிடமாகப் பொருந்தும் மெய், வாய், கண், மூக்கு, செவி என்னும் ஐம்பொறிகளையும் அவற்றின் வாயிலாகக் கந்தம், இரசம், உருவம், பரிசம், சத்தம் என்னும் ஐந்தையும் உணரும் புலன்களையும் மாணவனே நீ இறைவன் அருளாலே ஆராயின் அப்பொறி புலன்களின் வடிவத்தை ஒன்றொன்றாக உண்மையினை உணர அவை சடமாய் அழியும் பொருளாய்க் காணப்பட்டு உன்னைவிட்டு நீங்கும். அப்பொழுது சத்தம் முதலிய பஞ்ச தன்மாத்திரைகளும் உன்னை விட்டு நீங்கும் எனப் பாடல்களிற்
குறிப்பிட்டுள்ளார்.
2) பொறியறவுணர்தல் - பொறிகள் சடமாதலைத் தெருட்டி
அவற்றைத் துறக்கும் வழியை உணர்த்துதல்.
3) அந்தகரண சுத்தி - அந்தக் கரணங்களைச் சடமெனக்
கண்டு அவற்றினின்று நீங்குமுபாயம் கூறுவதாக இருபாடல்கள் இதில் இடம் பெறுகின்றன.
4) கலாதிஞானகிராகரணம் - கலாதியான ஞானமும்
உண்மையன்றெனத் துறத்தற்கு உபாயம் இருபாடல்களிற்
கூறப்பட்டுள்ளது.
சுத்த தத்துவ துடனம் - சுத்த தத்துவங்களை பதமுத்தியைப் பயந்து பரமுத்தியைப் பயக்கும் நிட்டைக்குத் தடையாயிருந்தவிடத்து அவற்றையும் துறத்தல் வேண்டுமென இரு பாடல்களில் கூறப்பட்டுள்ளது.
இந்துக் கலைக்களஞ்சியம்

Page 275
6) தத்துவாதீதம் - தத்துவங்களினின்றும் நீங்கிய நிலையை உணர்த்தல். இருபாடல்கள் இவைபற்றிக் குறிப்பிட்டுள்ளன.
7) சகல தரிசனம் - தத்துவங்களினின்று அவற்றை நீங்கி
தன்னின் வேறாகக் காண்டல்,
8) கேவலம் - ஆணவமலம் அறிவை மறைத்து நிற்கும் நிலையாதலின் கேவலம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
9) கேவலதரிசனம் - கேவல நிலையைக் காண்டல்.
10) கேவலாதீதம் - கேவலத்தினின்று நீங்குதலைக் கூறுதல்.
நெறியில் அமைந்த படிகளைக் கூறுவதாகும்.
11) தன்னுண்மை - தன்னை மும்மலங்களினின்று நீக்கி
வேறாகத் தனித்துக் காட்டல்.
12) சைதன்ய தரிசனம் - ஆன்மா மலத்தில் நீங்கிய சுத்த நிலையிற்றன்னைக் காணல் மூன்று பாடல்களிற் குறிப்பிடப் பட்டுள்ளது.
13) ஞான தரிசனம் - மெய்ஞ்ஞானமாகிய திருவருளை
யறிதல் பற்றிக் கூறுதல்.
14) பரை தரிசனம் - பராசக்தியைத் தரிசனம் செய்யும் நெறி.
15) பரையில் வியாத்தம் - பராசக்தியின் வியாபக அறிவில்
ஆன்மவறிவு அடங்கி அதுவாய் நிற்றல்.
16) பரையில் யோகமும் போகமும் - பராசக்தியோடு கூடிய இரண்டையும் கலந்து தன் செயலின்றி நிற்றலையும் பின் அதுவாய் ஆங்கு போகம் நுகர்த்தலையும் கூறுதல்.
17) சுத்த பர யோகமும் முக்திச் சாக்கிரமும் - ஆன்ம
சுத்தி பெற்றுச் சிவத்தைத் தரிசித்தல்.
18) சாக்கிராதாதீதம் - மேல் நின்ற நிலையுமறந்து
அவ்வறிவில் வசமாய் நிற்றலைக் கூறுதல்.
19) பரையிலத்தம் - சாக்கிராதீதத்தில் நின்ற நிலையும் விட்டு
பரையோடு ஒன்றாகி நிற்றலைக் கூறுதல்.
20) சுத்தாவத்தை - இதில் ஆன்மா இறைவனோடு ஏகனாகி இறைபணி நின்று மலமாயை கன்மங்களை அறவே ஒழித்துப் பிறவியில் மீண்டு செல்லாநிலலையை அடைதல்.
21) சுகரூபம் - பதைப்பற்று ஆறிலிருந்து சுகசோதியைத்
தரிசித்தல்.
இந்துக் கலைக்களஞ்சியம்

22) சுகாதீதம் - சுக ரூபத்தில் வசமாய் நிற்கும் நிலை.
23) சிவப்பேறு - பரசிவத்தோடு என்றும் நீங்காது நிற்கின்ற
நிலையைக் கூறுதல்.
24) பரமானந்த தரிசனம் - பரபோகத்தின் கண்ணதால்
பரமானந்தத்தை தரிசித்தல் இது பற்றி ஐந்து பாடல்கள் இடம் பெற்றுள்ளன.
25) பரமானந்த யோகம்- பரமானந்தத்தோடு ஒன்றாகுதல்.
26) பரமானந்த போகம் - பரமானந்தானுபவத்தைக் கூறுதல்.
27) பரமானந்தமேலிடு - பரமானந்தம் அதிகரித்து எல்லாப்
பொருளையும் ஆனந்த வடிவாகக் காணுதல்.
28) பரமானந்தவசம் - பரமானந்தத்தின் தன் செயலற்று
அதுவாய் அடங்கி நிற்கும் நிலை.
29) அணுவகை- ஆன்மாக்களின் வெவ்வேறான இயல்பைக்
கூறுதல்.
30) பஞ்சாக்கர தரிசனம் - ஐந்தெழுத்தையும் அவற்றால் உணர்த்தப்படும் பொருளையும் ஒதுமுறையையும் பயனையும் கூறுதல்.
31) குருத்துதி - ஞானதேசிகனைத் துதித்தல்.
32) சீடஇலக்கணம் - சீடனுக்குரிய இலக்கணம் குறிப்பிடப்பட்டுள்ளது. இரவும் பகலும் உடலும் நிழலும் போலக் குருவைப் பிரியாதிருந்து அவரிடும் ஏவலைச் செய்து அவரது புகழைப்பாடி விழுந்து வணங்கி கண்களில் நீர் சொரிய உடல் நடுங்க நின்று தொழுகின்றவன் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
33) முத்தனுக்கு முத்தியின்மை கூறல் - முக்திப் பயனைப் பெற்றவன் பயனை யிழத்தற்குக் காரணம் கூறுதல்.
34) குருவழிபாடே பொருளெனக் கூறல் -
திருமேனியருமை கூறல். சிவஞானதேசிகனது திருமேனி யின் பெருமையைக் கூறல், குருவே சிவமென்றல் - குருபணி செய்வோரை வழிபடுதல்.
யோகம் - மூன்று பாடலில் யோகம் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது.
கிரியை பற்றிய விளக்கம் இந்நூலில் இறுதியில்
குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நூல் தத்துவ நூலாக இருந்த போதும் கிரியை வழிபாடு பற்றியும் குறிப்பிடுவது சிறப்பம்சமாகும்.
245

Page 276
இந்நூலின் நான்காம் பாடலிலிருந்து எழுபத்தெட்டாம் பாடல் வரை முப்பதவதரங்களையும் பின்வரும் பாடல்களிற் பஞ்சாக்கிரம், குருத்துதி, சீடஇலக்கணம், யோகம், கிரியை ஆகிய யாவற்றையும் ஆசிரியர், குறிப்பிட்டுச் சென்றுள்ளார்.
இந்நூலுக்கு இருவர் உரை எழுதிப் பதிப்பித்துள்ளனர்.
1952இல் திருக்கைலாய பரம்பரைத் திருவாவடுதுறை ஆதீனத்து இருபத்தொன்பதாவது குருமஹா சந்நிதானம் பூரீலறுநீ சுப்பிரமணிய தேசிக சுவாமிகள் கட்டளையிட்டருளியபடி அவ்வாதீன வித்துவான் த.ச. மீனாட்சி சுந்தரம் பிள்ளைய வர்களால் இது பதிப்பிக்கப்பட்டது. 1950 அளவில் இலங்கையில் திக்கம் செல்லையா என்பவர் இதற்கு உரை எழுதினார். இந்நூல் பருத்தித்துறை கலாநிதி இயந்திர சாலையிற் பதிக்கப்பட்டது. இவ்வுரையாசிரியரை ஈசான சிவன் எனவும் அழைப்பர். (இ.ச)
துச்சாதனன்
பDகாபாரதத்திலே துரியோதனனுடன் பிறந்த நூற்றுவரில் துச்சாதனன் இரண்டாமவன் ஆவான். இவனுக்கு துரியோதனனுடன் சேர்த்து தொண்ணுாற்று ஒன்பது சகோதரர்களும் துச்சளை என்ற பெண் சகோதரியும் உண்டு. மகாபாரதத்திலே துரியோதனனின் தீய வழிக்கு உடந்தையாக இருந்தவரில் இவனும் குறிப்பிடத்தக்க ஒருவனாக விளங்குகிறான்.
துச்சாதனன் தனது சகோதரன் துரியோதனன் தீட்டும் தீய செயல்களை அமுல்படுத்துபவனாக விளங்கினான். “துஷ்ட சதுஷ்டர்கள்” என்று அழைக்கப்படும். துரியோதனன், சகுனி கர்ணன் என்பவர்களுள் நான்காவதாக விளங்கியவன்
துச்சாதனன் ஆவான்.
பஞ்சபாண்டவர்கள் புகழடைவதில் விருப்பம் அற்றவனாக விளங்கிய இவன், தனது சகோதரனுக்கு அவர்களின் புகழைக் கூறி நாம் அடங்கியிருக்கக் கூடாது என்றும் நாம் அடங்கி இருந்தால் தருமன் புகழுடன் விளங்குவான் என்று கூறி துரியோதனைத் தீய வழிக்குச் செல்ல ஆலோசனை வழங்குபவனாக இவன் விளங்கினான்.
நஞ்சு போன்ற கொடிய சொற்கள் இவன் வாயில் இருந்து வெளிவரும் தன்மையைக் கொண்டவன். பாண்டவர்கள் மீது துரியோதனன் கொண்ட வெறுப்பை மேலும் அதிகமாக்குப் வகையில் அவர்கள் துரியோதனை விட உயர்ந்து விடுவார்கள் என்றும், சிறப்பாக வாழப் போகிறார்கள் என்றும் கூறியதுடன் பளிங்கு மாளிகையில் வீமனும் திரெளபதையும் துரியோதனனைப் பார்த்து எள்ளி நகையாடியதைக் கூறி
அவனைத் தூண்டி விட்டவன் துச்சாதனன் ஆவான்.
246

தருமன் சூது விளையாடித் தோல்வியுற்ற வேளையில் துரியோதனன் துச்சாதனனைப் பார்த்து திரெளபதியை அவைக்கு அழைத்து வரும்படி கூறிய வேளை, துச்சாதனன் அவளைத் தனது தமையனின் மனைவி, தாய்க்கு ஒப்பானவள் என்பதை மறந்து, பலவாறு தீய சொற்களால் வசைமொழிந்து, அவளது தலைமயிரிற் பிடித்துக் கொண்டு இழுத்து வருகின்றமையைக் கூறலாம். இழுத்து வந்தது மட்டுமல்லாது, துரியோதனன் இட்ட கட்டளைப்படி எக்காலத்திலும் மன்னிக்க முடியாத செயலாகிய பெண்ணின் துகிலுரிதலைச் துச்சாதனன் செய்யும் இடம், இவனது அநாகரிகத் தன்மையைக் காட்டுவதுடன் பெண்ணைக் கடவுளாக மதிக்கும் பண்பாட்டினை உடைய சமூகத்தில், இவன் ஒரு பெண்ணை மானபங்கப்படுத்துவது இவனின் வக்கிர புத்திக்கு எடுத்துக் காட்டாக அமைந்துள்ளது.
துச்சாதனன் பல சந்தர்ப்பங்களில் தனது தமையனுக்கு தீய ஆலோசனை வழங்குபவனாக விளங்கி உள்ளான். குறிப்பாக பாண்டவர்களைத் தோற்கடிப்பதற்காகப் பல தீய ஆலோசனை களை இவன் வழங்கி வந்தான். பாண்டவர்களைக் காட்டுக்கு அனுப்புவதிற் கண்ணன் சல்லியனுடைய நாட்டுக்குச் சென்ற வேளை பாண்டவருக்கு ஊறு விளைவிக்கக் கூறியது, போன்ற சந்தர்ப்பங்களில் இவனது ஆலோசனையை துரியோதனன் ஏற்றுக் கொண்டது குறிப்பிடத்தக்கது.
துச்சாதனன் பதினெழாம் நாட் போரில் வீமனுடன் போரிட்டு வீமனாற் கொல்லப்படுகின்றான். திரெளபதியைத் தீண்டிய துச்சாதனன் விரல்களை வீமன் துண்டித்து விடுவதுடன், அவன் உடலில் இருந்து வரும் குருதியையும் குடிக்க முயல்வது, அவன் மேல் எத்தகைய பகை உணர்வு இருந்துள்ளது என்பதை விளக்குவதாக உள்ளது.
துச்சாதனன் சிறந்த பண்புகளைக் கொண்டு விளங்காதவன். தனது தாயின் முன்னாலேயே திரெளபதையின் தலையினைப் பிடித்து இழுத்து வருகின்றான். அவ்வேளை அவனது தாய் காந்தாரி அதனையிட்டு ஒரு வார்த்தையும் கூறாது இருப்பது, அவள் தனது பிள்ளைகளைப் பண்பாக வளர்க்க வில்லை என்பதை உணர்த்துகிறது.
இவ்வாறு பண்பற்ற, துஷ்டனாக விளங்கும் துச்சாதனன் மகாபாரதத்தில் ஒரு குறிப்பிடத்தக்க பாத்திரமாகவும் மகாபாரதக் கதையிற் போருக்கு வழிகோலியவனாகவும் விளங்குகிறான். (சா.வி.)
O O துசியந்தன்
துசியந்தன் சந்திர வம்சத்துப் பேரரசன். மகாபாரதம் ஆதி பருவத்தில் அவன் கதை கூறப்படுகின்றது. ஒருகால் இவன் வேட்டையாடும் பொருட்டு காட்டுக்குச் சென்றபோது அங்கே
கண்ணுவ முனிவரின் ஆசிரமத்திற் தனியே இருந்த சகுந்தலை
இந்துக்கலைக்களஞ்சியம்

Page 277
என்னும் பேரழகியைக் கண்டு அவளைக் காதலித்து கந்தருவ மணம் செய்து கொண்டான். பின்னர், அவளைத் தன்னிடம் அழைத்துக் கொள்வதாக வாக்களித்து விட்டு தன் நகருக்குச் சென்றுவிட்டான்.
ஆசிரமத்திற் தனியே இருந்த சகுந்தலை துசியந்தனையே எண்ணியபடி சிந்தனையில் ஆழ்ந்திருந்த போது துருவாச முனிவர் அங்குவர, அவரை அவள் கண்டு கொள்ளாமல் இருந்தாள். அதனால், வெகுண்ட முனிவர் அவளது நெஞ்சில் நிறைந்தவன் அவளை மறந்து விடுவானாக என்று சபித்தார். தன் நினைவு வரப்பெற்ற சகுந்தலை துணுக்குற்று முனிவரிடம் சாப விடை வேண்ட, துசியந்தன் தன் நினைவாக அவளிடம் கொடுத்துச் சென்ற ஏதேனும் ஒரு பொருளை அவன் காணும் பொழுது அவள் நினைவு அவனுக்கு வருமென்று அருளினார்.
துசியந்தன் தன் அரண்மனைக்குச் சென்றதும், முனிவர் இட்ட சாபத்தின்படி அரச காரியங்களில் தன்னை மறந்து சகுந்தலையை அறவே கைவிட்டுவிட்டான். அவன் வரவுக்காக ஏங்கிக் காத்திருந்த சகுந்தலை ஆறாத்துயரத்தில் ஆழ்ந்திருந் ததைக் கண்ட கண்ணுவ முனிவர், அவளைச் சில சீடர்களுடன் துசியந்தன் அரண்மனைக்கு அனுப்பி வைத்தார். துசியந்தன் அவளை இன்னாள் என இனங் கண்டு கொள்ளாமல் கடுஞ் சொற்களைக் கூறி அவளை ஏற்க மறுத்துவிட்டான். அதனால் மனமுடைந்த சகுந்தலை கண்ணுவ முனிவரது ஆச்சிரமத்திற்கே திரும்பிவந்து வாழலானாள். சிறிது காலத்திற்குப் பின்னர் காந்தருவ மணத்தால் கருவுற்றிருந்த அவள் பரதன் என்னும் ஆண்மகவைப் பெற்று அவனைப் போற்றி வளர்த்து வரலானாள். அம்மகன் இளவயதிலேயே அறிவும், ஆற்றலும் மிக்கவனாய், அஞ்சாதநெஞ்சனாய் விளங்கினான்.
இதற்கிடையில் துசியந்தன் தன் நினைவாகச் சகுந்தலையிடம் கொடுத்திருந்த முத்திரை பொறித்த மோதிரம் காணாமற் போய்விட்டது. அவள் நீராடிக் கொண்டிருந்த நீர் நிலையில் அது நழுவி விழுந்து விட்டதை அறியாமல் அதைப் பற்றி மறந்த நிலையில் அவள் இருந்தாள். அதனை மீனவர் சிலர் கண்டெடுத்து அரசனிடம் சேர்ப்பிக்க, அரசன் திடீரென்று சகுந்தலையின் நினைவு வரப்பெற்றான். தான் அவளை மணந்தது அவன்நினைவுக்கு வந்தது. அவளைப் புறக்கணித்த தன் செயலுக்கு வருந்தினான். பிறகு ஒருநாள் அவன் காட்டில் வேட்டையாடச் சென்ற போது பரதன் கொடிய விலங்குகளோடு அஞ்சாது விளையாடிக் கொண்டிருந்ததைக் கண்டு, அவன் யார் என வினவி அறிந்து கொண்டு, அவனுடன் சகுந்தலை இருந்த இடத்தை அடைந்தான். பின்னர் மூவரும் மகிழ்ந்து வாழ்ந்திருந்தனர்.
துசியந்தன் மகனாகிய பரதன் சிறந்து விளங்கிய
பேரரசனாகையால், அவன் நினைவாக இந்திய நாடு அப்பெயர்
இந்துக் கலைக்களஞ்சியம்

பெற்றது. மகாகவி காளிதாசரால் இயற்றப்பெற்ற வடமொழி நாடகம் "சாகுந்தலம்’ என்பது சகுந்தலை துசியந்தன் ஆகியோரைப் பற்றியதே ஆகும். (தே.ஹ.)
3519,
பDரத்தால் செய்யப்பட்ட தோல்வார்களால் இறுக வலித்து நுண்ணிய நூல்களால் கட்டப் பட்டதுமான ஒரு கருவியாகும். இது சிறுபறை, கொம்பு, தொண்டகப் பறை, வயிர் போன்ற பிறகருவிகளோடு சேர்த்தும் இசைக்கப்பட்டது. இக்கருவியைக் கொட்டுவோன் துடியன் என்று வழங்கப்பட்டான். பஞ்சமரபில் இரண்டாவது பெரும் பிரிவாகிய வாச்சிய மரபின் முதலாவது உட்பிரிவாகிய முழவு மரபில் பல வகையான தாளக் கருவிகளின் பெயர்கள் தரப்பட்டுள்ளன. அவற்றினுள் துடியும் ஒன்றாகும்.
"பேரிகை படகம் இடக்கை யுடுக்கை சீர் மிகு மத்தளஞ் சல்லிகை கரடிகை திமிலை குடமுழாத் தக்கை கணப்பறை தமகநுகந் தண்ணுமை தாவில் தடாக யந்தரி முழவொடு சந்திர வளையம் மொந்தை முரசே கண்விடு தூம்பு நிசாளநி துடுமை சிறுபறை யடக்கம் ஆசில் தகுணிச்சம் விரலேறு பாகம் தொக்கவு பாங்கி துடி பெரும் பறையென மிக்க நூலோர் விரித்துரைத்தனரே”
சிலப்பதிகாரத்திற்கு உரையெழுதியுள்ள அடியார்க்கு நல்லார் மேலே குறிப்பிட்டுள்ள நூற்பாவினை மேற்கோளாகக் காட்டியுள்ளார். சிலப்பதிகாரத்தில் தண்ணுமை என்னும் கருவியினுள் இக்கருவியினையும் அடக்கியுள்ளார் என்பர். பஞ்சமரபு தோற்கருவிகளை ஏழு வகையாகப் பிரித்து துடியினை வன்மைக் கருவிகளுள் ஒன்றாகக் குறிப்பிடப்படுகின்றது.
இத்துடி பாலை நிலத்திற்குரியதாக தொல்காப்பியத்தில் கூறப்படுகின்றது. பைரவர், முருகன், துர்க்கை ஆகிய மூன்று தெய்வங்களுக்கும் இயற்றப்படுவன பன்னிரு இடைக் கருவிகளாகும். தண்ணுமை, தக்கை, உடுக்கை, தமருகம், தடாரி, அந்தரிமுழவு போன்ற கருவிகளுள் துடியும் இடம் பெற்றுள்ளது. இக்கருவி சங்க நூல்களிலும் (பொரு - 125, 126, பெரும் 124, அகம் 159, 9-10) காப்பியங்களிலும் (சிலம்பு 6, 26 மணி 7, 69 பெருங் 3, 5, 18) பரவலாக இடம் பெற்றுள்ளது. (தே.ஹ.)
e O துாககை
துர்க்கை சக்தியின் ஒர் அம்சமாகக் கொள்ளப்படுகின்றாள்.
பராசக்தியின் காவற்படைத்தலைவி. ஆபத்துக் காலங்களில் அடைக்கலம் புகுந்தவர்களுக்கு அச்சம் போக்கி அருள்பவள்.
247

Page 278
தன்னை வழிபடும் அன்பர்களுக்கு துன்பங்கள் வராது, துர்க்கம் போன்று காத்தலை உடையவள் (துர்க்கம் - என்பது அகழி) ஆகவே இவள் துர்க்கை எனப் போற்றப்படுகின்றாள். அரசர்களுக்கும் வீரர்களுக்கும் உரிய வழிபாட்டுத் தெய்வம் இவளே. புரட்டாதி மாதத்தில் வரும் நவராத்திரி நாட்களில் கெளரி, லட்சுமி, சரசுவதி ஆகிய மூவரும் சேர்ந்த ஒருவராகத் திகழ்பவள்.
துர்க்கை நான்கு கரங்களிலும் சங்கு, சக்கரம், வில், அம்பு, ஆகியவற்றைத் தரித்திருப்பவள். அக்கினிகலை, சூரியகலை, சோமகலை என்னும் முக்கூறும் தன்பாற் கொண்டவள். மஞ்சள்
நிற மேனியும் சிவப்பு வஸ்திரமும் அணிந்தவள்.
கங்கைச் சமவெளியில் ஆரியரின் நாகரீகம் பரவிய பின்னரே பெண்தெய்வங்களான துர்க்கை, உமா, அம்பிகை, பார்வதி, காளி, போன்றவை முக்கியம் பெற்று, புராண இதிகாச காலத்தில் திராவிட ஆரிய நாகரீகங்களின் கலப்பால் அகில இந்திய வழிபாட்டு முறையாக மேன்மை பெற்றன. இருக்கு வேதத்தில் தாய்த் தெய்வத்திற்கு பதிலாக ஆண் தெய்வங்களுக்கே முக்கியத்துவம் வழங்கப்பட்டன. ஆனால் இருக்கு வேதப் பாக்களில் உவுவு, ராத்ரி, ராகா, சினிவாலி, சுவஸ்தி, ஆரண்யாணி, சீதா, வருணானி போன்ற பல பெண் பெயர்கள் காணப்படுகின்றன. இவை இயற்கைக்கு தெய்வாம்சம்
கொடுத்து வழிபட்ட தன்மையைப் பிரதிபலிப்பனவாகும்.
பிற்பட்ட வேதகாலங்களில் குறிப்பாக ஆரண்யகங்களிலும் உபநிடதங்களிலும் உமா, அம்பிகை, ஹிமபதி (பார்வதி), துர்க்கா, காளி, போன்ற பெயர்கள் குறிப்பிடப்படுகின்றன. துர்க்கை என்னும் இப்பெயர் பிற்பட்ட வேதகாலத்தில் காணப்பட்டாலுங் கூட துர்க்கையின் தோற்றத்தினையும் ஆதி வரலாற்றினையும், ஆராய்ந்த அறிஞர்கள் இவளைக் குறுணிக்கற்கால மக்களால் வழிபட்ட தெய்வம் என்று எடுத்துக்காட்டியுள்ளனர்.
தமிழ் இலக்கியங்களிற் கொற்றவை, காளி என்னும் பெயரால் இத்தெய்வம் குறிக்கப்படுகின்றது. கொற்றவையும் துர்க்கை போன்று கானமர் செல்வியே என்று அகநானூறு கூறுகின்றது. இவளை வனவாசி எனவும் அழைத்தனர். கொற்றவையின் பிற பெயர்களான பழையோள், மலைமகள் போன்ற பெயர்களும் இவற்றோடு தொடர்புள்ளனவாக உள்ளன. இக்கருத்தையே மேல்வரும் திருமுருகாற்றுப்படைப் பாடல் எடுத்தியம்புகின்றது.
“மலை மகனார் மகளே மாற்றோர் கடற்றே
வெற்றி வேல் போர்க் கொற்றவைச் சிறுவ
விழையணி சிறப்பில் பழையோள் குழவி'
(வரி 257 - 259)
248

சங்க இலக்கியங்களில் எயினர்கள், ஆறலைக்கள்வர்கள், பாலை நிலத்தில் வாழ்வோர் போன்றோர் கொற்றவையை வழிபட்டதற்கான குறிப்புகளுண்டு. இதனால் இப்பழங்குடி மக்களாகிய எயினர் வழிபட்ட தெய்வமே துர்க்கை அல்லது கொற்றவை எனலாம். துர்க்கை பிற்பட்டகாலத்தில் சிவனின் மனைவியாக இணைக்கப்பட்டாலும் ஆரம்பத்தில் கன்னிப் பெண்ணாகவே வழிபடப்பட்டாள். கொற்றவை பற்றிய வர்ணனை சிலப்பதிகாரம் வேட்டுவ வரியில் உள்ளது. வேட்டுவ வரியில் கொற்றவை, ஜயை என்ற தாய்த் தெய்வத்தோடு இணைத்து விளிக்கப்படுகின்றாள். துர்க்கை மதுராபதித் தேவதை எனச் சிலப்பதிகாரத்தின் 23 ஆவது காதையில் விளிக்கப்படுகின்றாள். இந்நூலில் இன்னோரிடத்தில் இம்மதுராபதித் தேவதை மகாலட்சுமி, மகா சரஸ்வதி, மகா துர்க்கா ஆகிய தெய்வங்களின் அம்சங்களை உடையவளாகக் குறிப்பிடப்படுவதை மேல்வரும் பாடல் எடுத்துக் காட்டுகின்றது.
"மாமகளு நாமகளு மாமயிடற் செற்றுகந்த
சோமகளுந் தாம் படைத்த கொற்றத்தாள் - நாம முதிரா முலை குறைத் தாண் முன்னரே வந்தாள் மதுராபதி என்னு மாது.”
(சிலப்பதிகாரம் மதுரைக் காண்டம் 22)
மேற்கூறியவாறு துர்க்கையைச் சரஸ்வதி, லட்சுமி, ஆகியோருடன் இணைக்கும் மரபை மார்க்கண்டேய
புராணத்திலும் காணக் கூடியதாக உள்ளது.
சாக்த நெறியில் சக்தி வழிபாடு செல்வாக்குப் பெற்ற நிலையில், துர்க்கை பூசை இந்துக்களின் ஒரு பகுதியினரால் சிறப்பாகப் பின்பற்றப்பட்டு வருகின்றது. இதனால் துர்க்கை பூசையும் பல்வேறு வகையாக மேற்கொள்ளப்படுகின்றது. சைவ உணவு படைத்து வழிபடுவது ஒரு முறை; அசைவ உணவு படைத்து வழிபடுவது மற்றொரு முறை. கல்வியறிவு, பழக்கவழக்கங்கள், பண்பாட்டுநிலை முதலியவற்றால் சமுதாயத்தில் மேல் தளத்தில் உள்ளவர்கள் புலால் முதலியவற்றைப் படைக்காத சைவபூசையாகவும், அங்ங்ணமின்றி கீழ்தளத்தில் வாழ்பவர்கள் மது, மாமிசம், படைத்து வழிபடும் அசைவ முறை பூசையாகவும் மேற் கொள்ளுகின்றனர். அட்டமி நாளில் ஒரு வேண்டுகோளை முன்னிட்டுத் தொடங்கி பதினாறு வாரம் விரதமிருந்து இப்பூசையை மேற்கொள்ளுவர். துர்க்கை பூசை செய்வோரை தீய ஆவிகள் தீண்டாவென்று கூறுகின்றனர். புரட்டாசி மாதத்தில் கொண்டாடப்படும் நவராத்திரி நாளின் மூன்று நாட்களும் துர்க்கைக்குரிய நாட்களாகும். இந்நாட்களில் நடைபெறும் பூசையில் பூவும் பொங்கலும் சிறப்புப் பொருளாக
வைக்கப்படும்.
திருக்கோவில்களில் அமைக்கப்பட்டுள்ள துர்க்கை திரு மேனிகளுக்கு வெள்ளி, செவ்வாய் ஆகிய கிழமைகளில்
இந்துக் கலைக்களஞ்சியம்

Page 279
எலுமிச்சை மாலையிட்டு குங்குமத்தால் அர்ச்சனை செய்வர். சிலை வடிவாக இருக்கும் துர்க்கா தேவிக்கு செந்நிற ஆடையை உடுத்துவது மரபாகும். கன்னிப்பெண்கள் இராகுகால நேரங்களிற் குறிப்பாக வெள்ளியன்று காலைப் பொழுதில் துர்க்கை சன்னிதியில் எலுமிச்சம் பழத் தோலில் எண்ணெயிட்டு விளக்கேற்றிப் பூசை செய்வர்.
துர்க்கையைத் தீவிரமாக வழிபடுவோர் நீலம் அல்லது செந்நிற ஆடை அணிவர். நாற்பத்தெட்டு நாட்கள் விரதமிருப்பர். ஆடி, தை மாதங்களில் மூன்றாம் வெள்ளி, சித்திரை மாதப் பெளர்ணமி ஆகிய நாட்களில் துர்க்கை பூசை சிறப்பாக நடைபெறும். துர்க்கையைத் துதிப்பதால் தீரமும் வீரமும் பெற்று பெரும் பயனடைவர். மகிஷாசுரனை அழிப்பதற்காக விஷ்ணு முகத்திலிருந்தும் தேவர்களின் முகத்திலிருந்தும் வெளிவந்த தீப்பிழம்பால் உருவான துர்க்கையை வழிபட்டபின்பே இராமபிரான் இராவணனை அழிக்க இலங்கை புறப்பட்டதாக கூறுவர். சுவர்களின் மேல் துர்க்கை படம் வரைந்து மஞ்சள், கிழங்கு, பால்சோறு வைத்து வழிபடுவர்.
தேவி பாகவதம், மார்க்கண்டேயபுராணம், அருணைமான்மியம், தேவி மகாத்மியம், ஆகிய நூல்கள் அம்பாளின் அவதார வைபவம், துர்க்கை பூசை ஆகியவை பற்றிய விளக்கங்களைக் கூறுகின்றன. துர்க்கை பூசைக்குரிய நூற்றெட்டு நாமாவளி நூல் உள்ளது. அவற்றில் கூறப்பட்ட நாமங்களாவன:
1) தேவி 2) துர்க்கா 3) திரிபுவனேஸ்சுவரி 4) யசோதாகர்ப்பஸம்பூதா 5) நாரயண வரப்பிரியா 6) நந்த கோபகுலஜா தா 7) மாங்கல்யா 8) குலவர்த்தினி 9) கம்ஸவித்ராவணகர்யா 10) அஸரக்ஷயம்கர்யா 1) சிலா தடவி நிஹிப்தா 12) ஆகாசகாமின்யா 13) வாஸுதேவபகின் 14) திவ்யமால்ய விபூஷிகா 15) திவ்யாம்பரத்ரா 16) கட்க கேடகதாரிண்யா 17) சிவா 18) பாபதாரிண்யா 19) வரதா 20) க்ருஷ்ணாயா 2) குமார் 22) ப்ரஹ்ம சாரிணி 23) பாலார்கஸத்ரு சாகாரா 24) பூர்ண சந்த்ரநிபானனா 25) சதுர்ப்புஜா 26) சதுர்வக்த்ரா 27) மீனச்ரோணிபயோதராணி 28) மயூரபிச்சவலயா 29) கேயூராங்கததாரிண்யை 30) க்ருஷ்ணச்சவிஸமாயா 3) க்ருஷ்ணா 32) ஸங்கர்வுணஸமானனா 33) இந்த்ரத்வஜஸமயாஹீதாரிண்யா 34) பாத்ரதாரிண்யா 35) பங்கஜதாரிணி 36) கண்டதாரிணி 37) பாசதாரிண்ணி 38) தனுர்த்தாரிணி 39) மஹாசக்ரதாரிணி 40) விவிதாயுததரா 4) குண்டலபூர்ணகர்ணவிபூஷிதா 42) சந்த்ரவிஸ்பர்திமுக விராஜிதா 43) முகுட விராஜிதா 44) சிசிபுச்சத்வஜபிராஜிதா 45) கெளமாரவர்த்தா 46) த்ரிதிவபாவயிர்த்தா 47) த்ரிதசபூஜிதா 48) த்ரைலோக்யரக்ஷன்யா
இந்துக் கலைக்களஞ்சியம்

49) மஹிஷாஸுரநாசின்னி 50) ப்ரஸன்யரக்ஷணா
51) ஸிரச்ரேஷ்ட்டாயா 52) சிவாயா 53) ஜயா 54) விஜயா 55) ஸங்க்ராமஜயப்ரதா 56) வரதா 57) விந்த்யவாஸின்னி 58) கான்யா 59) குமார்ரீ 60) மஹாகாள்ளி 6) nதுப்ரியா 62) மாம்ஸப்ரியா 63) பஸிப்ரியா 64) பூதாநுச்நதா 65) வரதா 66) காமசாரிண்யை 67) LITufs0of 68) கீர்த்தீ 69) ரீ 70) த்ருத்தாயை 7) ஸித்யா 72) ஹ்ரிf 73) வித்யா 74) ஸ்ந்தத்தீ 75) மத் 76) ஸந்த்யா 77) ராத்ர்ரீ 78) ப்ரபா 79) நித்ரா 80) ஐயோதஸ்னா 8) காந்த 82) க்ஷமா 83) தயா 84) பந்தன நாசினி 85) மோஹநாசினி 86) புத்ராபம்ருத்யநாசினி 87) தனக்ஷயநாசினி 88) வ்யாதிநாசினி 89) ம்ருத்யுநாசின்னி 90) பயநாசினி 9) பத்மபத்ராக்ஷயா 92) துர்க்கா 93) சரண்யா 94) பக்தவத்ஸலா 95) ஸௌக்யதா 96) ஆரோக்யதா 97) ராஜ்யதா 98) ஆயுர்தா 99) வர்தா 100) ஸுத்தா 10) ப்ரவாஸரக்ஷகா 102) நகராக்ஷகா 103) ஸங்கராமரக்ஷகா 104) சத்துஸங்கடேரக்ஷகாயை
105) அடவீதுர்க காந்தாரரக்ஷகா 106) ஸாகரகிரிரக்ஷகா 107) ஸர்வ கார்யசித்திப்ரதாயகா 108) பூரீதுர்க்காதேவி
துர்க்கைச் சிற்பங்கள்
துர்க்கை தெய்வத்தின் சிற்பங்கள் கி.பி 6ஆம் நூற்றாண்டிலிருந்தே கிடைக்கப்பெறுகின்றன. முதன் முதலில் கொற்றவையாகிய துர்க்கைக்கு சிற்பங்கள் அமைத்தவர்கள் பல்லவர்கள் எனலாம். ஏனெனில் பல்லவர்கள் அமைத்த குடைவரைகளிலேயே துர்க்கை சிலைகள் முதன் முதலில் இடம் பெற்றுள்ளன. முதலாம் மகேந்திரவர்மன் அமைத்த குடைவரைகளிலே துர்க்கை நான்கு கைகளுடன் காட்சியளிக் கின்றாள். மாமல்லைக் குடைவரையில் உள்ள துர்க்கையின் சிற்ப வலக்கையில் சக்கரமும் இடக்கையில் சங்கும் இடம் பெற்றுள்ளன. வலக்கையின் கீழ்க்கை அபய முத்திரையும், இடக்கை துடைமேல் வைக்கப் பெற்றும் காணப்படுகின்றது. வல்லம் என்னும் ஊரில் காணப்படும் மலைக்குன்றிலும் இத்தகைய சிற்பம் காணப்படுகின்றது. ஆனால் மகேந்திரவர்மன் அமைத்த குடைவரைக் கோயிலான சிங்கவரக் கோயிலில் உள்ள துர்க்கை சிற்பம் சற்று மாறுதலுடன் காணப்படுகின்றது. துர்க்கைக்கு நான்கு கைகளுடன் மேற் கைகளில் சங்கு,
சக்கரமும் கீழுள்ள வலப்புறக்கை எருமை மாட்டின் தலை மேல்
249

Page 280
வைக்கப்பட்ட காலின் துடைமிதும் மற்றதான இடப்புறக்கை இடுப்பின்மீதும் வைக்கப்பட்டுள்ளன.
இத்தகைய சிற்பங்கள் மதுராந்தகம் மாவட்டத்து புலிப்புரம் சிவன்கோயிலிலும், காட்டாங்குளத்தூர் ஒடிலூர் சிவன்கோயிலிலும் காணப்படு கின்றன. இச்சிற்பங்களை விஷ்ணு துர்க்கை என்பர். இவற்றிற்கு மாறாக எட்டுக் கைகளுடன் துர்க்கைச் சிற்பங்களும் காணப்படுகின்றன. இத்தகைய சிற்பங்கள் சிங்கவரம் வயல்வெளித் துர்க்கை கீழ்மா விலங்கை, நத்தமேடு, கட்டளை, சொர்வநந்தல், மானூர் ஆகிய இடங்களிற் காணப்படுகின்றன. மேலே கூறப்பட்ட இடங்களில் உள்ள துர்க்கைச் சிற்பங்களிற் படைக்கலங்களான சங்கு, சக்கரம், வாள், கேடயம், குறுவாள், திரிசூலம், அம்பு, அங்குசம் ஆகியன காணப்படும். இடப்புறக்கைகளிற் கீழுள்ள கை கட்டாயம் இடுப்பின் மீது வைக்கப்படும். இவ்வாறான துர்க்கையின் சிற்பங்கள் மேல் மகரூர் கோலத்தியம்மன் கோயிலில் கண்டுபிடிக்கப்பட்டன. இவை 7-8 ஆம் நூற்றாண்டைச் சார்ந்ததாக இருக்கலாம் எனத் தெரிகின்றது. பெரிய அளவில் துர்க்கை இருகரங்களை இரு தொடைகளின் மீது வைத்தும் மற்ற கைகளில் சங்கு, சக்கரம், மூவிலை வேல், வாள், வில், கேடயம், ஆகியவை ஏந்தியும் காணப்படுகின்றது. தலைக்கு வலப்பக்கத்தில் சிம்மத்தின் முகமும், இடப்பக்கத்தில் மானும் காணப்படுகின்றன. மேலும் பல சிற்பங்கள் மின்னலி சித்தாமூர், மானூர், சோமாண்டார் குடி ஆகிய இடங்களிலும் காணப்படுகின்றன. (தே.ஹ)
துர்வாசர்
இதிகாச புராணக் கதைகளில் பேசப்படும் ஒரு கதாபாத்திரம் துர்வாச முனிவர். அத்திரி முனிவருக்கும் அனசூயைக்கும் பிறந்தவர். சிவபெருமான் திரிபுரமெரித்த போது அவருடைய சீற்றத்தீ குழந்தையுரு எடுத்ததாகவும் அதனையே அனசூயை வளர்த்தாள் எனவும் அதனாலேயே அவர் விரைவில் கோபமடையும் குணத்தையுடையவராகக்க காணப்பட்டார் எனவும் குறிப்பிடப்படுகின்றது. துர்வாசர் - தன் குணங்களை மறைத்திருப்பவர் எனப் பொருள்படும். இவர் தனது தந்தையையே குருவாகக் கொண்டார்.
இவரைப் பற்றி இதிகாச புராணங்களிற் பல கதைகள் உண்டு. துர்வாசமுனி தவ மேற்கொண்டிருந்த வேளை சிவபெருமான் தோன்றி யாது வரம் வேண்டுமென்று கேட்க முனிவர் யான் எவருக்கேனும் சாபமிட்டால் எனது தவம் குறையக் கூடாது. அதிகமாக வேண்டும் என வேண்டினார். அன்று முதல் இவர் யாருக்காவது சாபமிட்டாலும் இவருடைய தவம் வளர்ந்து கொண்டே போனது. இவர் ஒரு முற்கோபக்காரராகவே காணப்பட்டார்.
250

துர்வாசமுனிவரை சகல சௌபாக்கியகளுடன் உபசரித்த துரியோதனன் வறுமையில் வாடிக் கொண்டிருந்த பாண்டவர் களிடம் யாசகஞ் செய்ய அனுப்பினான். எடுத்தவுடன் கோபமடைந்து சபாமிடும் இயல்பினனான துர்வாசமுனிவர் பாண்டவர்களுக்குக் கொடிய சாபத்தைக் கொடுப்பார் எனத் துரியோதனன் கற்பனைபண்ணினான். துர்வாசர் பூரீ கிருஷ்ணன் அருளால் அமுதம் புசித்தவன போல பெரும் திருப்தியடைந்து தான் வந்த காரணத்தையும் கூறிச் சென்றதாக மகாபாரதம் குறிப்பிடுகின்றது.
இவர் துவாரகைக்குச் சென்ற போது கோபாலர்கள் குறும்புத்தனம் செய்து கொண்டிருந்தார்கள். தங்களில் ஒருவனுக்கு கர்ப்பிணிக் கோலம் செய்து அவனை துர்வாச முனிவர் முன்னால் அழைத்துச் சென்று இவளது வயிற்றில் இருப்பது ஆணா, பெண்ணா என அறிந்து கூறும்படி வேண்டினர். துர்வாச முனிவர் உண்மையை உணர்ந்து கொண்டார். கோபமடைந்த முனிவர் உங்கள் குலத்தை நாசஞ் செய்ய ஒரு இரும்புலக்கை பிறக்கும் எனக் கூறினார். பொய்க்கர்ப்பம்
மெய்க்கர்ப்பமாகி அங்கு ஒரு இரும்புலக்கை தோன்றிற்று.
துர்வாசருக்கும் அசமுகிக்கும் வாதாபியும் வில்லவனும் என இரு ஆண்குழந்தைகள் பிறந்தனர். இவர்கள் தந்தையிடம் “நீ இதுவரை செய்த தவத்தை எங்களுக்குக் கொடு” என்று கேட்டனர். இவர் மறுத்தார். அவர்கள் சினம் கொண்டு தந்தையைக் கொல்ல முனைந்தனர். முனிவர் அவர்களை” நீங்கள் அகத்தியரால் இறந்தொழிக’ எனச் சாபமிட்டார்.
இவர் திருக்களரி என்னும் சிவப்பதியில் நெடுங்காலம் தவம் செய்து கொண்டிருந்தார். அங்கு இறைவர் தம் திருக்கூத்தை இவருக்கும் பிறமுனிவர்களுக்கும், காட்டியருளினார் எனவும் கூறுவர். இவர் உபதேசித்த மந்திரசக்தியினாலேயே குந்தி கர்ணன் முதலானவர்களைப் பெற்றாள் அத்தகை சக்திவாய்ந்த
முனிவர் இவர். (இ.ச.)
துரியம்
துரியம் எனில் நான்காவது (நிலை) எனப் பொருள்படும். ஆன்மாவின் காரிய அவத்தைகள் ஐந்தாகும். இவற்றைச் சிவஞான போதம் (4.3) "இனி இவ்வான்மாச்சாக்கிரஞ் சொப்பனஞ் சுழுத்தி துரியத் துரியாதீதமாயுள்ள பஞ்சாவத்திதனாய் நிற்குலமன்றது” எனக் குறிப்பிடும். இங்கு கூறப்படும் ஐந்து அவத்தைகளான சாக்கிரம், சொப்பனம், சுழுத்தி, துரியம், துரியாதீதம் என்பன முறையே நனவு, கனவு, உறக்கம், பேருறக்கம், உயிர்ப்படங்கல் என மாதவச்சிவஞான முனிவர் தமிழிலே கூறுவர். நனவு நிலையில் 35 கருவிகள் செயற்படும் எனவும், இந்நிலையில் ஆன்மா உடலின் புருவ
இந்துக்கலைக்களஞ்சியம்

Page 281
நடுவில் நிற்கும் எனவும் கூறப்படும். இதனை அடுத்த கனவு நிலையில் ஆன்மா கழுத்தில் இடம்பெறும் எனவும், அப்போது 25 கருவிகள் செயற்படுகின்றன எனவும் கூறப்படுகின்றது. மூன்றாவதாகிய உறக்கநிலையில் ஆன்மா இதயத்தில் இடம்பெறும் எனவும், அப்போது மூன்று கருவிகளே செயற்படும் எனவும், கூறப்படுகின்றது. நான்காவதாகிய பேருறக்கத்தில் (துரியத்தில்) ஆன்மா உந்தியை இடமாகக் கொள்ளும் எனவும், அப்போது இரண்டு கருவிகளே செயற்படும் எனவும் கூறப்படுகின்றது. ஐந்தாவதாகிய உயிர்ப்படங்கலில் ஆன்மா மூலாதாரத்தில் இடம் கொள்ளும் எனவும் அப்போது ஒரேயொரு கருவி மட்டும் செயற்படும் எனக் கூறப்படுகின்றது. புருவநடுவிலிருந்து கீழ்நோக்கிச் செல்லும் வேறுபாடுகளை கீழாலவத்தை எனவும், மூலாதாரத்திலிருந்து மேல் நோக்கிச் செல்லும் நிலை வேறுபாடுகள் மேலாலவத்தை எனவும் கூறுவது LOTLIT(5th.
துரியோதனன்
இதிகாசங்களிலே மகாபாரதம் சிறப்பாக விளங்குகின்றது. இது அறம் பொருள், இன்பம் வீடு என்னும் புருடார்த்தங்களை மட்டுமன்றி வரலாற்றுக் கதையைக் கூறுவதாகவும் விளங்குகின்றது. துஸ்யந்தன், சகுந்தலையின் புதல்வனான பரதன் குலத்தில் தோன்றிய பாண்டவர்களதும், துரியோதனர்களதும் வரலாற்றை கூறும் நூலாக விளங்குகின்றது. இப்பாரத பெருங்காப்பியத்தில் நாயகர்களாக பஞ்ச பாண்டவர்களும், ச' பனா களும் விளங்குகின்றனர். இவர்களுள் துரியோத எ6ானும் பாத்திரம் மிக முக்கியமானது ஆகும்.
'துரியோதனன்” என்னும் பெயரே "சுயோதனன்’ என்பது திரிந்து மருவி வந்துள்ளது என அறிஞர்கள் கூறுவர். “சுயோதனன்’ என்னும் சொல் வடமொழிச் சொல்லாகும். இதன் பொருள் “நன்கு வெற்றியுண்டாகப் போரிடுபவன்” என்பதாகும். அப்யெரினைப் போன்றே வெற்றியடைய வேண்டும் என்பதற்காக தனது குலத்தையே போரில் இழந்தான் இவன் என்பது யாவரும் அறிந்த கருத்து ஆகும்.
மகாபாரதத்திலே இவனது பிறப்பு பற்றி கூறப்பட்டுள்ள விடயம் மிகவும் விசித்திரமானது. இவனது தாயான காந்தாரி, பாண்டுவின் மனைவி குந்தி மந்திர வலிமையினால் குழந்தை பெற்றதைக் கேள்விப்பட்டதும் பொறாமை மேலிட்டதால், அவள் தான் கருவுற்று இருந்த வயிற்றினைக் கல்லினால் வயிறு குழம்பும்படியாக குத்தினாள் என்றும், இதனால் கரு கருப்பையோடு இரத்தம் பொங்கி வழிய வெளியே வந்து விழ, அதனை வியாச முனிவர் எடுத்து நூறு கூறாக்கி நூறு தாழியில் நெய்யிட்டு வைத்தார் என்றும், இந்நூறு கூறாக்கிய தசைகள் முற்றும் வளர்ந்து தானாகவே தாழியைப் பிளந்து வெளிவரும்
இந்துக்கலைக்களஞ்சியம்

வரையில் பாதுகாத்து வைத்தார் என்றும், அவர் இட்டு வைத்த தாழியில் முதலில் முற்றி குழந்தையாக வெளிப்பட்டதே துரியோதனன் என்றும் கூறப்படுகிறது. இவ்வாறு தானே உடைத்து வந்தவன் துரியோதனனாக மகாபாரதத்திலே முக்கியமான பாத்திரமாக விளங்குகின்றான்.
மகாபாரதத்தில் துரியோதனன் பெறாமை மிக்கவனாக, ஆணவக் காரனாக, பெரியோர் சொல் கேட்டு நடவாது தன்னிச்சையாக செயல்படுபவனாக, சூது சதிகளில் ஈடுபட்டு தனது காரியத்தை சாதிப்பவனாகச் சொன்ன சொல் தவறுபவனாக என பல்வேறு தீய குணங்களின் இருப்பிடமாக, துஷ்டனாக படைக்கப்பட்டிருக்கின்றான்.
துரியோதனன் தனது சிறிய தந்தையின் மகன்களாக விளங்கும் பஞ்சபாண்டவர்களான தருமன், வீமன், அருச்சுனன், நகுலன், சகாதேவன் போன்றோரைக் பகைவர்களாகக் கருதி அவர்களை அழித்துவிட வேண்டும் என்ற நோக்கத்தில் வாழ்ந்தவனாக மகாபாரதத்தில் காட்டப்பட்டுள்ளது. பஞ்சபாண்டவர்களின் நற்குணங்கள், அவர்களின் வீரம், அனைவரும் அவர்களிடம் காட்டிய அன்பு, போன்றவை துரியோதனனுக்கு அவர்களின் மேல் பொறாமையை ஏற்படுத்தி இருந்தது. இதுவே அவன் அவர்களை அடியோடு அழிக்கத் திட்டமிட்டதற்குக் காரணமாக இருந்தது.
துரியோதனன் பொறாமையின் காரணமாக பஞ்சபாண்டவர் களைக் கொலை செய்வதற்குத் திட்டமிட்டு வாரணாவதநகருக்கு அனுப்பி அங்கே அரக்கு மாளிகை ஒன்றை அமைப்பித்து அதில் வசிக்கச் செய்து இரவில் தீ வைத்து எரிக்க திட்டமிட்டு, அதனை செயற்படுத்தவும் செய்தான். அதே போன்று அவனது பொறாமைக்கு எடுத்துக் காட்டாக உள்ள மற்றும் ஒரு விடயம், சிறந்த மல்யுத்த வீரனாக விளங்கும் வீமனை கை, கால்கள் என்பவற்றை நன்றாகக் கட்டி கங்கையாற்றில் தூக்கிப் போட்டதும்
ஆகும்.
துரியோதனன் ஆணவம் மிக்கவன். இவன் கண்ண பிரானிடம் உதவி கேட்டுச் சென்ற போது கண்ணன் துயில் கொண்டு இருந்தான். அவ்வேளை அவன் கண்ணனுடைய திருமுடியின் பக்கம் அரியணையை இடச் செய்து அதில் கண்ணன் விழிக்கும் வரை அமர்ந்து இருந்தான். அவனது பாதத்தில் பக்கம் செல்லாது தலைப்பக்கமாக அமர்ந்து இருந்தது ஆணவத்தின் உச்சத்தைக் காட்டுகிறது. அதுமட்டுமன்றி கண்ணன் பாண்டவருக்காகத் தூது சென்ற போது, ஏனைய தூது செல்லும் தூதுவரை மதிக்காதது மட்டுமல்ல, ஏனைய மன்னர்களையும் தூதுவனாக வந்த கண்ணனுக்கு உரிய மரியாதையைச் செய்யக் கூடாது என்றும் கட்டளையிட்டு, செருக்கு மேலிட அரச சபையில் வீற்றிருந்த பாங்கினை கூறலாம். பெரியோர்களை கனம்பண்ணும், அவர்கள் சொல் கேட்டு நடக்கும் தன்மை இவனுக்கு இருக்கவில்லை.
251

Page 282
மகாபாரதத்தின் பிதாமகன் என்று போற்றப்படும் பீஷ்மரை பல தடவைகள் இவன் இகழ்ந்து பேசியதும், விதுரனை கோபமடையச் செய்து இகழ்ந்து பேசியதால் விதுரன் போருக்கு செல்வது இல்லை என சபதம் எடுத்ததும் நோக்கத்தக்க விடயங்கள். பீஷ்மர், விதுரன் போன்ற பெரியோரின் நல்லுரைகளை எதிர்த்த துடன் சகுனி போன்ற தீயவர்களிடம் நட்புரிமையை அதிகம் பாராட்டினான்.
பாண்டவர்களை வீரத்தால் வெல்ல முடியாது. சூதின் மூலம் சதி செய்து வெல்ல வேண்டும் என்ற தீய நோக்கில் தருமரை சூது விளையாட அழைத்து வஞ்சகமாக தோல்வியுறச் செய்து நாடு, நகரங்கள், செல்வங்கள் மட்டுமல்லாது திரெளபதையையும் மானபங்கப்படுத்தி பன்னிரண்டு ஆண்டுகள் வனவாசத்தையும், ஓராண்டு அஞ்ஞாத வாசமும் செய்யத் தூண்டியது அவனது தீய குணத்தின் வெளிப்பாடாக உள்ளது. வனவாசத்திற்கு சென்றவர்கள் இன்பத்தையே அடையக் கூடாது என்னும் நோக்கில் முனிவரின் சாபத்தை அவர்கள் பெற வேண்டும் என்ற தீய எண்ணத்தில் தன்னை நாடி வந்த துருவாசரை நன்கு உபசாரம் செய்து அவரிடம் வரமாக வனவாசம் அனுபவிக்கும் பாண்டவர்களிடம் சென்று விருந்து உபசாரத்தில் ஈடுபட வேண்டும் என்று கேட்டுக் கொண்டு அவ்வரத்தை பெற்றுக் கொண்டதும் அவனது துஷ்ட குணத்தைக் காட்டுவதாக உள்ளது.
துரியோதனன் பழிக்குப் பழிவாங்கும் தன்மை உள்ளவனாக காட்டப்பட்டுள்ளான். பளிங்கு நிலத்தில் நீர் இருப்பதாக நினைத்து துரியோதனன் கவனமாக நடந்ததைப் பார்த்து திரெளபதை, வீமனுடன் இணைந்து நகைத்ததை மனதில் கொண்டு அதற்கு பழிவாங்கும் நோக்கில் அறிஞர்கள், பெரியவர்கள் உறைந்திருக்கும் சபையின் நடுவில் திரெளபதையைக் கொண்டு வரச் செய்து, அவளை பல வகையிலும் இகழ்ந்து பேசியது மட்டுமல்லாது, துகிலுரிய ஆணையிட்டதும் அவனது பழிவாங்கும் தன்மைக்கு எடுத்துக் காட்டாக விளங்குகிறது. இது மட்டுமன்றி செய்நன்றி மறக்கும் தன்மை உள்ளனவாக விளக்கப்பட்டுள்ளது. சித்திரசேனனிடம் துரியோதனன் அகப்பட்டு இருந்தவேளை அவனை விடுவிப்பதற்கு பாண்டவர்கள் போரிட்ட நன்றியை மறந்தது மட்டுமல்லாது அவர்களை அழிக்கத் துணிந்ததும், தனக்கு உதவி புரிய சேனைகளைத் தந்து உதவிய கண்ணனையே தூது சென்ற வேளையில் "இடையன்” என்று இகழ்ந்ததுடன், அவனைப் பலர் முன் பாதாளத்தில் விழச் செய்யச் சதி செய்ததும் உதாரணமாக கூறக் கூடியவையாகும்.
சூதினால் சதி செய்து பஞ்ச பாண்டவர்களின் அனைத்துச் சொத்துக்கள், நகரங்கள் பெற்ற அவன் வனவாசம், அஞ்ஞாத வாசத்தின் பின்னர் நாடு தருவதாக வாக்களித்து விட்டு அவர்கள்
252

வந்து நாடு, நகரைக் கேட்டதும் ஐந்து வீடுகள் கூடக் கொடுக்க மறுத்து விட்டது அவன் சொன்ன சொல்லைக் காப்பாற்றும்
திறன் அற்றவனாக காட்டப்பட்டிருப்பதற்கு சான்று பகர்கிறது.
சிறந்த சந்தர்ப்பவாதியாக காட்டப்பட்டுள்ள இவன், தனக்கு எது தேவையாக உள்ளதோ அதனைப் பெற பகைவராக இருந்தாலும் சென்று தனது தேவையைப் பூர்த்தி செய்யும் தன்மை உள்ளவனாக விளக்கப்பட்டுள்ளது. மகாபாரதப் போர் ஆரம்பமாவதற்கு முன்னர் இடப்படும் களப்பலிக்கு நன்னாளைத் தேர்தெடுப்பதற்கு சோதிடக்கலையில் சிறந்தவனாக விளங்கியவனும் பஞ்சபாண்டவர்களின் இளையவனுமான சகாதேவனிடமே சென்று நன்னாளைத் தேர்ந்தெடுத்து தருமாறு கேட்டுக்கொண்டதும், களப்பலி இடுவதற்கு அருச்சுனனின் மகனான “இராவான்’ என்பவனை உடன்படுமாறு வேண்டியதும் இவனது சந்தர்ப்பவாதத் தன்மைக்கு உதாரணமாகக் காட்டக்
கூடிய விடயங்களாகும்.
இவ்வாறு பல்வேறு தீய குணங்களின் உறைவிடமாக படைக்கப்பட்டிருந்தாலும், அவனிடம் நற்பண்புகள் பல புதைந்து உள்ளதாகவும் காட்டப்பட்டுள்ளன. இவன் சிறந்த தோழன், நட்புரிமையினை மதிப்பதில் சிறந்தவனாக விளங்கி உள்ளான். கர்ணனை பலர் தேர்ப்பாகன் மகன் என்று இகழ்ந்து பேசிய போதும் அவனைத் தனது நண்பனாக வரிந்து அவனைப் போற்றி அங்க நாட்டிற்கு அரச பதவி அளித்து, தனக்கு நிகராக அமர்த்தி சீரும், சிறப்பும் அளித்து, தன்னுடைய செல்வத்தை எல்லாம் அவனுக்குக் கொடுத்து புகழ் பெறச் செய்தான். தனது நண்பனை தன்னை விட மேலாக மதித்து வாழ்ந்து வந்த தன்மை
சிறப்பாக கூறப்பட்டுள்ளது.
துரியோதனனின் நற்குணங்களிற் குறிப்பிடத்தக்க மற்றும் ஒரு விடயம், இவன் தனது மனைவியை எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் சந்தேக நோக்குடன் நம்பிக்கை அற்ற தன்மையில் நடந்து கொள்ளாமையாகும். திரெளபதையைப் பலர் முன்னிலையில் மானபங்கப்படுத்திய இவன், தனது மனைவியை இகழ்ந்து பேசாத தன்மையை உடையவனாக படைக்கப் பட்டுள்ளான். இதற்குச் சான்றாக கர்ணன் தனது தாயான குந்தியிடம் துரியோதனன் பற்றிக் கூறும் போது துரியோதனன் மனைவியான பானுமதியும் தானும் சூதாட்டம் ஆடிக்கொண்டு இருந்த வேளை, துரியோதனன் அங்கு வர, அவனைக் கண்டு விட்டு அவன் மனைவி எழுந்த போது துரியோதனன் வந்ததை அறியாது அவளைப் பிடித்து இழுக்க அவளது மேகலையின் மணிகள் அறுபட்டு சிதறிக் கீழே விழ அச்சமும், வெட்கமும் அடைந்த கர்ணனும், பானுமதியும் நின்ற வேளை துரியோதன் சிறிதும் கோபமோ, பதட்டமோ அடையாது, அம்மணிகளை எடுத்து கோத்து தரவா என்று கேட்டான் என்று கர்ணன்
கூறுகிறான். இதன் மூலம் அவன் தனது மனைவி மீது கொண்டு
இந்துக் கலைக்களஞ்சியம்

Page 283
இருந்த நம்பிக்கையும் அவனுடைய உயர்ந்த பண்புக்கு ஒரு எடுத்துக் காட்டாக காட்டப்பட்டுள்ளது.
அடுத்து அவனது நற்குணங்களில் ஒன்றாக காட்டப்பட்டுள்ளது இவன் சாதிப்பாகுபாட்டை எதிர்த்த தன்மையாகும். தேர்ப்பாகனின் வளர்ப்பு மகனான உன்னுடன் நான் போட்டிக்கு வரமுடியாது என போட்டிக்கு அழைத்த கர்ணனை இகழ்ந்து அருச்சுனன் பலர் முன்னிலையில் பேசிய போது அவையில் இருந்த துரியோதனன் அவ் அவையில் 'நன்கு படித்தவர்கள், ஈகைக் குணம் உடையவர்கள், வீரர்கள் என சிறப்பாக மதிக்கப்படுபவர்கள், செல்வம் மிக்குடைய அரசர்கள், மெய்ஞ்ஞானம், ஒழுக்கம் உடைய நற்றவ முனிவர்கள் போன்றோருக்கு கீழோர், மேலோர் என்ற பாகுபாடு கிடையாது என்று அவன் அவையில் வாதிடுவதுடன் அவனைத் தனக்கு சமமாக உயர்த்தியதும் குறிப்பிடத்தக்கது.
இவனது மற்றைய சிறப்பாக காட்டப்பட்ட விடயம் இவன் இறுதி வரை போரிட்டு உயிர் விட்ட தன்மையாகும். தனது நாட்டைத் தானே ஆள வேண்டும் என்ற அவாவினால் பெரும் போரை நிகழச் செய்து இறுதியில் போர்க்களத்திலே தனது உயிரை விட்டவனாக உள்ளான். இறுதிக் கட்டத்தில் தருமர் இரங்கி வேண்டிய போதும் அவன் தனது சுற்றத்தார்கள், நண்பர்கள், தம்பிமார்கள் என எல்லோரும் தன் பொருட்டு இறந்த பின் தான் மட்டும் தனியே பிழைப்பதை வெறுப்பதாக கூறியமை அவனுடைய சுய கெளரவத்தைக் காட்டும் வகையில் அமைந்துள்ளது.
துரியோதன ை ய பாத்திரப்படைப்பிலே அவன் துட்ட குணத்தை தூண்டி விட்டதற்கு சகுனி, துச்சாதனன், கர்ணன் ஆகியோருக்கு பங்கு உண்டு. இயல்பாகவே துஷ்டனாக விளங்கிய இவனை முற்று முழுதாக மாற்றியது இவனது மேற்படி உறவுகளே. தீயவர்கள் எந்நிலையை அடைவார்கள் என்பதற்கு உதாரணமாக இவன் காட்டப் பட்டுள்ளமை, சமூகத்திற்குச் சிறந்த UTLLOIT(öb. (a T.G.)
O
ğ6I(U35Lğ560T
பஞ்சால தேசத்துப் பிசிதமன்னன் குமரன். இவன் மகாபாரதக் கதையில் பேசப்படுகின்றான். இவன் அக்கினி கோத்திர முனிவரிடம் துரோணரோடு கல்வி பயின்றான். இவனும் துரோணாச்சாரியாரும் மாணாக்கராக இருக்கும் காலத்தில், இவன் தனக்கு நாட்டாட்சி வருங்கால், பாதி நாட்டினைத் தருவதாக கூறியிருந்தான். இவன் அரசேற்று ஆண்டு கொண்டிருக்கையில் வறுமையுற்ற துரோணர் இவனிடம் சென்று ஒரு பசுவினை வேண்டி நின்றார். இவரைக் கண்டதும் துருபதன் யாதும் அறியாதவனாக "உன்னை நான் அறியேன் நீ போகலாம்” எனக் கூறி அவமதித்து அனுப்பிவிட்டான். இதனாற் கோபமடைந்த துரோணர், உன்னை என் மாணாக்கனால்
இந்துக்கலைக்களஞ்சியம்

அவமதிக்கிறேன் எனச் சூளுரைத்துச் சென்றார். பின் பீஷ்மரிடம் வந்து பாண்டு புத்திரர்களுக்கு வில்வித்தை கற்பித்து அருச்சுனனுக்கு படைப்பயிற்சியினை அளித்துப் போரில் துருபதனை வரச்செய்து அவமதித்தார். அதனால் உட்பகை கொண்டு துருபதன் துரோணரைக் கொல்ல ஒரு குமாரனும் தன்னை வென்ற அருச்சுனனுக்கு ஒரு பெண்ணும் வேண்டித் தவமியற்றி, யாகத்தில் திட்டத்துய்மனையும் திரெளபதையையும் பெற்றுக் கொண்டான். அருச்சுனன் வில்லினை இழுத்ததும் தனது மகளை அவனுக்கு கொடுக்க விழைந்தபோது பாண்டவர்கள் ஜயவரும் மணக்க வேண்டும் என வேண்டியதும் துருபதன் வியப்பும் அருவருப்பும் அடைந்தான். எனினும் எல்லோரும் விரும்பியமையால் இதற்குச் சம்மதித்தான். திரெளபதை - பாண்டவர் திருமணத்தினை இனிதே நிறைவேற்றினான். துரோணரை திட்டத்துய்மன் மூலமும் பீஷ்மரை சிகண்டி மூலமும் கொன்றான். திட்டத்துய்மன் திரெளபதி சிகண்டி இவர்களுடன் சுமித்திரன், பிரிய தரிசனன் சித்திரகேது, சுகேது, துவசநேசன் ஆகியோரும் இவனது பிள்ளைகளே. (இ. ச)
துரோணர்
பாண்டவர்கள், கெளரவர்களின் வில்வித்தை ஆசான். இவர் பரத்துவாஜரின் மகன். பரத்துவாஜர் கங்கைக் கரையில் ஆச்சிரமம் அமைத்து வாழ்ந்தார். ஒரு நாள் கங்கையிலே நீராடும் போது கிருதாஸி எனும் அப்சரஸ் (தேவலோகப்) பெண்ணும் அங்கு வந்தாள். இவரைக்கண்டதும் அவ் அழகி அங்கிருந்து புறப்பட முயற்சிக்கும் போது, அவளின் ஆடை அங்கு வளர்த்திருந்த புற்களிலே சிக்குண்டது. அவளை ஆடையின்றிக் கண்ட பரத்துவாஜரின் வீரியம் வெளி வந்தது. இது ஒரு தொட்டி (த்ரோண)யிலே வைத்து பாதுகாக்கப்பட்டது. இதிலிருந்து துரோணர் எனும் ஒரு குழந்தை உண்டாகிப் பிறந்தது. இவ்வாறு தான் துரோணர் தோன்றினார் என மகாபாரதம் கூறுகிறது.
இவருடைய தந்தை ஒர் அந்தண முனிவர். எனினும் படைக்கலப் பயிற்சியும் பெற்றிருந்தார். துரோணர் தந்தையிடமும், அக்னி வேச எனும் முனிவரிடமும் படைக்கலப்பயிற்சி பெற்றார். பாஞ்சால நாட்டு இளவரசன் துருபதன் இவருடைய பெரிய நண்பன், சகமாணவன் கல்வி கற்றபின் துருபதன் பாஞ்சாலத்திற்குத் திரும்பினான். துரோணர் சரத்வானின் மகளான கிருபியைத் திருமணம் செய்தார். இவருக்கு அவளிடத்து ஒரு மகன் பிறந்தான். அவன் பிறக்கும் போது உச்சைச் சிரவஸ் எனும் குதிரை போலக் கனைத்தான். எனவே இவனுக்கு அஸ்வத்தாமன் எனும் பெயர் சூட்டப்பட்டது. அக்காலக்கட்டத்திலே பரசுராமர் துறவியாகும் முன் தனது செல்வங்களைப் பிராமணர்களுக்குத் தானமாக வழங்குவதைக் கேள்விப்பட்டுத் துரோணர் அவனிடம் சென்றார். இவர் அவரைக்காணுமுன் தானம் முடிவுற்று விட்டது. துரோணர் அவரிடமிருந்து தனுர் வேதத்தை (வில்வித்தையை)ப் பெற
253

Page 284
விரும்பினார். தம்மிடம் வந்த துரோணரிடம் “இப்பொழுது என்னிடம் உடலும் சில படைக்கலமும் உள்ளன. விரும்பியதைக் கேட்பாயாக’ என பரசுராமர் கூறினார். துரோணர் தாம் விரும்பிய படைக்கலம் முழுவதையும் அவரிடம் பெற்றுத் திரும்பினார்.
துரோணர் சிறந்த வீரர் ஆனால் வறுமை அவரின் குடும்பத்தை நன்கு வாட்டியது. பிள்ளைக்கு பால் வழங்கவும் பண மில்லை. ஒரு நாள் அஸ்வத்தாமனுக்குச் சக விளையாட்டுப் பிள்ளைகள் மாவையும், நீரையும் கலந்து பால் எனக் கொடுத்தனர். இத்தகைய வறுமையைப் போக்கும் நோக்குடன் தனது சகமாணவனாகிய பாஞ்சால நாட்டு அரசனிடம் சென்றான். ஆனால் இவர் எதிர்பார்த்ததிற்கு மாறாக அம் மன்னன் இவரை ஏசித் துரத்திவிட்டான். இதனால் இவர் மிகவும் மனம் நொந்து இதற்கு பழிக்குப் பழி வாங்குவதாகச் சபதம் செய்து கொண்டு திரும்பினார். எனவே நல்ல மாணவரைப் பெறுதலையே பிரதான நோக்கமாகக் கொண்டார். மாறுவேடம் பூண்டு ஹஸ்தினாபுரத்திற்குச் சென்று கெளதமருடன் தங்கியிருந்தார். இவர் செல்லும் வழியிலே சிறுவர்களான பாண்டவரும், கெளரவரும் கார (ஒரு வகைப் பந்து விளையாட்டு) விளையாட்டு விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது பந்து தற்செயலாகக் கிணற்றுள் விழுந்தபடியால் அதனை எடுக்க முடியாது பெரிதும் வருந்தினர்.அவ் வேளையிலே கறுத்த நிறமும், குறுகிய தோற்றமுமுள்ள துரோணர் அங்கு வந்தார். சிறுவர்கள் அவரை சூழ்ந்தனர். அவர் தனது மோதிரத்தைக் கிணற்றுள் எறிந்துவிட்டு அவர்களை நோக்கி “உங்களில் அரச இயல்புகள் மிக குறைவாக உள்ளன. படைக்கலப்பயிற்சியும் மிகச் சொற்பமே” எனக் கூறித் தனக்கு “ஒரு சாப்பாடு தந்தால் பந்தையும், மோதிரத்தையும் எடுத்துக் காட்டுவேன்” என்றார். சிறுவர்கள் அதற்கு உடன் பட்டனர். உடனே துரோணர் இவ்விரண்டிளையும் அம்பு, புல் முதலியன மூலம் எடுத்துக் காட்டினார். மகிழ்ச்சியுற்ற சிறுவர்கள் “என்ன வெகுமதி வேண்டும்” என்று துரோணரிடம் கேட்ட போது, அவர் பீஷ்மரிடம் தம்மைப் பற்றிக் கூறுமாறு சொன்னார். சிறுவர்கள் நடந்தவற்றை பீஷ்மரிடம் கூற, அவர் துரோணரை அடையாளங் கண்டு, அவரை அரச சபைக்கு கூட்டிக் கொண்டு வருமாறு அவர்களிடம் கூறினார். இதைத் தொடர்ந்து துரோணர் அரச சபைக்கு வந்தார். பாண்டவ, கெளரவ அரச குமாரர்களுக்குப் படைக் கலப்பயிற்சியளிக்கும் ஆசான் ஆனார்.
இவ்வாறு அரச குமாரர்கள் கல்வி கற்க வந்த போது, கல்வி கற்று முடிந்த பின் தான் விரும்பும் ஒன்றினை எவர் செய்ய முடியும் என்று கேட்டார். அப்போது அர்ஜுனன் தவிர்ந்த ஏனையோர் மெளனமாக இருந்தனர். ஆனால் அவன் மனமுவந்து அதனைச் செய்து தருவதாக வாக்குறுதி அளித்தான். குருவும் மாணவனிடத்து மிக மகிழ்ச்சியடைந்தார். பல்வேறு இடங்களி லிருந்து வந்து கற்ற மாணவர்களிலே அர்ஜுனன் மிகுந்த ஆற்றலுள்ள முதல் மாணவனாக விளங்கினான். குருவுக்கு மாணவர்கள் தொண்டு செய்யும் வேளைகளிலே அர்ஜுனன் தனது பணியினை விரைவில் செய்து விட்டுக் குருவின்
254 -

மகனோடு படைக்கலப் பயிற்சியைத் தொடருவான். ஒரு முறை அரச குமாரர்கள் காட்டிலே ஏகலைவன் எனும் வேடனின் அதிசயமான வில்வித்தைத் திறமைக்கண்டு குருவிடம் வந்து இது பற்றிக் கூறினர், ஏகலைவன் அர்ஜுனனுக்கு நிகராக மேம்பட்டவனாக விளங்குவதைத் துரோணர் விரும்பிலர். அவன் தன்னிடம் வில்வித்தை பயில வந்த போது வேடன் எனக்கூறி அவர் மறுத்தவர். ஆனால் அவன் மனமுடையாது குருவின் உருவமொன்று செய்து, அவரைப் பாவனை செய்து வணங்கித் தானே பயின்று வில்வித்தையில் அர்ஜுனனிலும் சிறந்து விளங்கினான். எனவே துரோணர் அவனிடம் சென்ற போது அவரை வணங்கி குரு காணிக்கையாக யாது வேண்டுமென ஏகலைவன் கேட்கத் துரோணர் அவனுடைய பெருவிரலைத் தருமாறு கேட்டார். அவன் அகமகிழ்ந்து பெருவிரலை வழங்கினான். ஆனால் இதற்குக் கைமாறாகத் துரோணர் அவனைத் தன் மாணவனாக ஏற்க நேர்ந்தது. எனவே இங்கு மாணவனின் பிரதான நோக்கம்- துரோணரின் மாணவன் எனும் பெரிய இலட்சியம் நிறைவேறி விட்டமை குறிப்பிடற்பாலது. அதே வேளையில் ஒரு வகையிலே குருவின் ஒருதலைசாய்வான நோக்கமும் இங்கு காணப்படுகின்றது.
துரோணரின் மாணவர்கள் பல்வேறுபடைக் கலப்பயிற்சியில் பிரபல்யமடைந்தனர்.அர்ஜுனன் வில்வித்தையில் நிகரின்றி விளங்கினான். துரியோதனனும், பீமனும் மல்யுத்தத்திலே சிறந்து விளங்கினர். நகுலனும், சகாதேவனும் வாள் சண்டையிலே சிறந்து விளங்கினர். துரோணரின் மகன் அஸ்வத்தாமன் வில்வித்தையில் மிகச் சிறந்து மிளிர்ந்தான், தருமன் தேர்படைப் போரில் திறமை பெற்றிருந்தார். இவ்வாறே மற்றவர்களும் குறிப்பிட்ட படைக்கலப் பயிற்சியிலே தேர்ச்சி பெற்றிருந்தனர்.
ஒரு நாள் துரோணர் கங்கையிலே நீராடிய போது முதலையொன்று அவரின் காலைப் பிடித்துக் கொண்டது. அப்போது நின்றவர்களிலே அர்ஜுனனே அம்முதலையைக் கொன்று குருவைக் காப்பாற்றினான். அவர் மகிழ்ந்து “பிரமசிராஸ்தர” எனும் படைக்கலவித்தையை அவனுக்குப் புகட்டினார். மாணவர்களின் படைக்கலப் பயிற்சிகள், சாதனைகள் பலரின் முன்னிலையிலே நடைபெற்றன. இதன் பின்னர் துரோணர் துருபதனைப் பழிவாங்கும் நோக்குடன் அவனைப் பிடித்து வருமாறு கூற துரியோதனனும், கர்ணனும் முதலிலே சென்றனர். அவர்களைத் துருபதன் தோற்கடித்துத் திருப்பிவிட்டான். பின்னர் அர்ஜுனன் சென்று துருபதனை வென்று அவனைக் கைதியாகப் பிடித்து வந்தான். துரோணர் அவனைக் கொல்லாது அவனின் இராச்சியத்தின் வடபகுதியான உத்ரபாஞ்சாலத்தை அவனுக்குத் திருப்பிக் கொடுத்தார். தென் பகுதியான தகூழின பாஞ்சாலத்தைத் தனதாக்கினார். போர் ஏற்பட்டால் அர்ஜுனன் தன்னுடன் போர் செய்யலாம் என்ச் சபையிலே அனுமதி வழங்கினார். இதற்கேற்ப அர்ஜுனன் பாரதப் போரிலே குருவுக்கு எதிராகவும் போர் செய்தான்.
இந்துக் கலைக்களஞ்சியம்

Page 285
பாரதப் போரிலே துரோணர் கெளரவரான துரியோதனன் முதலியோர் சார்பாகப் போர்புரிந்தாலும், பாண்டவர் வெல்லுவதையே விரும்பினார். திரெளபதி சுயம்வரத்தின் பின் கெளரவர் பாண்டவருக்கு எதிராகச்சதி செய்த போது, பாண்டவரை வரவேற்று அரைவாசி அரசை அவர்களுக்கு வழங்குமாறு துரியோதனிடம் துரோணர் கூறினார். யுதிஷ்டிரனின் ராஜசூய வேள்விக்கு இவர் சமூகமளித்தார். சகுனி- யுதிஷ்டிரன் சூதாட்டம் சரியானதன்று என இவர் கூறினார். விராடனுக்கு எதிராகக் கெளரவர் சார்பாகப்போரிட்டு அர்ஜுனனால் காயமுற்றுத் திரும்பினார். பாண்டவருக்கு எதிரான போரைத் தவிர்க்குமாறு துரியோதனனுக்கு வலியுறுத்திக் கூறியும் அவன் செவி சாய்க்காது போர் நிச்சயமான பின்னரே துரோணர்
கெளரவர் பக்கமாகப் போரில் ஈடுபட்டார்.
போர் தொடங்கு முன் யுதிஷ்டிரன் குருவான துரோணரிடம் சென்று தமக்கு வெற்றி கிடைக்கும் வண்ணம் ஆசீர்வதிக்குமாறு அவரை வேண்டினான். அவரும் மிக மகிழ்ச்சியுற்று ஆசீர்வதித்தார்; தன்னிடம் வராது விட்டிருந்தால் சபித்திருப்பேன் எனவும் கூறினார். பூரீகிருஷ்ண பகவான் பாண்டவர் பக்கம் இருப்பதால் அவர்களுக்கே வெற்றி நிச்சயமாகக் கிடைக்குமென்றார். நடைபெற்ற போரில் பல தடவைகள் பாண்டவர்களையும், படைகளையும் தோற்கடித்தவர் சிலவேளைகளில் தோல்வியுமடைந்தவர். எனினும் அஸ்வத் தாமன் என்னும் யானை கொல்லப்பட, யானை அஸ்வத்தாமன் இறந்து விட்டான் என்ற செய்தியை யுதிஷ்டிரன் தெளிவற்றுக் கூற, தனது மகனே இறந்துவிட்டான் என நினைத்து மயங்கிய போது திருஷ்டத்துய்மன் அவரைக் கொன்றான்.
துரோணர் ஒரு மிகச்சிறந்த போர் வீரராகவும், படைக்கலப் பயிற்சி ஆசான் ஆகவும் விளங்கியவர். பல வீரர்களை உருவாக்கிய பெருமைக்குரியவர். இவரின் வரலாற்றிலே அக்காலக் குருகுலக்கல்வி, குரு சிஷ்ய உறவுகள் பற்றிய முக்கியமான தகவல்களையும் அறியலாம். (வி.சி.)
துலாம்
துலாம், துலை, தராசு என்பன ஒரே பொருளுடைய சொற்கள். கோள்கள் சூரியனைச் சுற்றிவரும் பாதையை மேடம் முதல் மீனம் ஈறாகப் பன்னிரண்டு வீடுகளாகப் பகுத்துள்ளனர். சித்திரை மாதம் சூரியன் சஞ்சாரம் செய்வது போல் தோன்றும் வீடு மேடம். அப்போது சூரியன் உச்சத்தில் உள்ளான் என்று கூறுவர். ஐப்பசி மாதம் சூரியன் சஞ்சரிக்கும் வீடு துலாம் என்று சொல்லப்படும். அந்நேரம் சூரியன் நீசம் என்பார்கள். வான்வெளியிற் காணப்படும் இருபத்தேழு நட்சத்திரக் கூட்டத்தைப் பன்னிரண்டு வீடுகளுக்கும் பகுத்தளிக்கும் போது துலாம் வீட்டிற்கு 2 1/4 நட்சத்திரங்கள் அமைகின்றன. அவை அனைத்தும் துலாக் கோல் போன்ற தோற்றம் தருவதால் துலா வீடு என்றனர். ஒரு நட்சத்திரத்தை நான்கு கால்களாக பிரித்தால்
இந்துக்கலைக்களஞ்சியம்

துலா ராசியில் சித்திரையில் பன்னிரண்டு கால்களும், சுவாதி முழுமையும் மூன்று கால்களும் அமைந்து கிடக்கும். ஒருவர் மேற்குறித்த நட்சத்திரத்தில் பிறந்தால் துலா இராசியில் பிறந்தவர் என்று கூறலாம். சூரியன் நிற்கும் இராசியில் நின்றும் பிறந்த நேரத்தைக் கனக்கிட்டு பிறந்த லக்கினத்தை எடுத்துரைப்பதுண்டு. பிறந்த லக்கினம் துலா வீட்டில் அமையுமானால் துலா லக்கினத்தில் பிறந்தவர் என்பர்.
துலா கால புருஷ இராசிகளில் ஏழாவது இராசி. இதன் அதிபதி சுக்கிரன் அவ்வீட்டில் சனி உச்சம். சூரியன் நீசம் அடைகின்றான். சந்திரனுக்கு துலாம் பகை வீடு. புதன் செவ்வாய், வியாழன் ஆகிய மூவருக்கும் துலாம் நட்பு வீடு. துலா லக்கினத்தில் பிறந்தவர்களுக்கு வியாழன், செவ்வாய், சூரியன் என்பவை பாவிகள். சனி, சுக்கிரன், புதன் மூவரும் நல்லவர்கள். புதனும் சந்திரனும் கூடியிருப்பின் அல்லது ஒருவரையொருவர் பார்த்திடில் அரச யோகங்களைக் கொடுப்பதுண்டு. செவ்வாய், இரண்டாம் இடத்திற்கு உரிமை பெற்று நிற்பதால் சொல்லான் என்பது சோதிடக் குறிப்பு. ஐப்பசி மாதத்தை துலாம் மாதம் என்பர். இத்தகைய துலா இராசியில் பிறந்தவர்களது பண்புகளை சோதிட நூல்கள் மேல்வருமாறு குறிப்பிடுகின்றன. உயரமானவர்களாகவும், ஒல்லியானவர்களாகவும் அழகான வர்களாகவும் இருப்பார்கள். ஆண்களாக இருந்தால் உறுதியான உடல் வாகுடையவர்களாகப் பெண்களால் விரும்பப்படுபவர்களாக விளங்குவர். பெண்களானால் கவர்ச்சிப் பாவையாக விளங்குவர். நல்ல ஐஸ்வரியமும், தனதான்யங்களும், பூமி, காணி, வீடு போன்ற சொத்துக்களையும் பெற்று விளங்குவர். குடும்பத்தில் அதிகமாக நபர்கள் இருப்பார்கள். பெரிய மனிதர்கள், செல்வாக்கு அதிகாரம் உயர்பதவி கொண்டவர்களின் நட்பைப் பெற்றிருப்பார்கள். தர்மக் குணங்களும், தெய்வ வழிபாடுகளும் நிறைந்து விளங்கும். ஆசார அனுஷ்டானங்களைச் செய்து வருவார்கள். துலா இராசியில் பிறந்தவர்கள் பேச்சில் ஆணித்தரமாகவும் வியாபார நோக்கங்கள் கொண்ட பேச்சாகவும் பேசுவார்கள். அதிகமாக மற்றவர்களுடன் நெருங்கிப்பழக மாட்டார்கள். தங்கள் குடும்பத்தை விட்டு மற்றவர்களின் விவகாரங்களில் அதிகம் தலையிடமாட்டார்கள். சுபகிரகங்கள் பார்வையுடனும், பலங்களுடனும் பிறந்த துலா இராசிக்காரர்கள் நீண்ட ஆயுளைப் பெற்றிருப்பார்கள் என கூறுகின்றன. (தே.ஹ.)
துலுக்கநாச்சியார்
இந்துமத்தின் உட்பிரிவுகளுள் ஒன்றான வைணவம் அகண்ட இந்தியா எங்கணும் பரவி நிலைபெற்ற ஒரு நெறியாகும். அது இந்தியாவின் பிரதேசம் ஒவ்வொன்றிலும் அவ்வவற்றின் சிறப்பம்சங்கள் சிலவற்றைத் தனக்குரியதாக உள்வாங்கி வளர்ச்சிகண்டு வந்துள்ளது. அவ்வகையில் வங்களா தேசத்தில் இராதையும், தமிழகத்தில் ஆண்டாள் நாச்சியாரும், கிருஷ்ணனுக்கு உகந்த காதலியராகக் கொள்ளப்பட்டார்கள்.
255

Page 286
அதுபோல தமிழகத்தில் திருமாலுக்குகந்த மற்றொரு காதலியாக துலுக்கநாச்சியார் கொள்ளப்படக்காணலாம். அது தமிழகத்தில் நிலவும் இஸ்லாம் மதத்தின் செல்வாக்கால் விளைந்ததாகும்.
துலுக்கநாச்சியார் தொடர்பாக தமிழகத்தில் நாட்டார் வழக்கியல் சார்ந்த கதைகள் வழங்குகின்றன. அக்கதைகளுள் ஒன்று திருவரங்கத்தோடு தொடர்புபட்டதாக வழங்குகின்றது. சுல்தான் மகளொருத்தி திருமால் சிலையொன்றின் மீது காதல் கொண்டதாகவும், அச்சிலையைப் பிரிய நேர்ந்த சோகத்தால் அவள் உயிர் நீத்ததாகவும் அக்கதை அமைகின்றது.
அத்துலுக்க நாச்சியாருக்கு திருவரங்கம் கோயிலிலே ஒரு சந்நிதியும் அமைத்திருக்கிறார்கள். அதுபற்றி திருவரங்கம் கோயில் ஒழுகு கூறுகையில்,
"பெருமாள் நியமனத்தினாலே ராஜமகேந்திரன் திருவீதியில் வடகீழ் மூலையிலே திருநடை மாளிகை யிலே அறையாகத் தடுத்து அந்த டில்லீசுவரன் புத்திரியான ஸரதாணியை சித்ர ரூபமாக எழுதிவைத்துப் பிரதிஷ்டிப்பித்து” என்று கூறுகிறது.
மதுரையில் இடம் பெறும் சித்திரைத் திருவிழாவோடு தொடர்பு பட்டதாகவும், துலுக்கநாச்சியார் கதையொன்று நிலவுகின்றது. தன் தங்கை மீனாட்சியின் திருமணத்துக்காக அழகர் கோயிலிருந்து திருமால் புறப்பட்டதாகவும், அவர் வந்து சேர்வதற்கிடையில் மீனாட்சி திருமணம் முடிந்து விட்டதைக் கேள்விப்பட்டு அவர் கோபித்துச் சென்றதாகவும், அவ்வாறு கோபித்துச் சென்றவர் வண்டியூர் சென்று அங்கே தன் காதலி துலுக்கநாச்சியார் வீட்டில் தங்குவதாகவும் அக்கதை அமைகின்றது. ஆனால் துலுக்கநாச்சியார் கோயில் என்று எதுவும் அங்கு இல்லை. முற்காலத்தில் வண்டியூர் வரும் அழகரை இஸ்லாமியர்கள் வாணவேடிக்கையோடு வரவேற்பது நடை
முறையில் இருந்ததாகத் தெரியவருகின்றது.
துலுக்கநாச்சியாருக்கு சாந்துநாச்சியார்’ என்றும் ஒரு பெயர் இருப்பது அறியத்தக்கது. (க.இர.)
துவாதசி
திதிகள் பதினைந்தில் பன்னிரண்டாவது திதி துவாதசியாகும். மாதந்தோறும் வருகிற ஏகாதசி திதி வளர்பிறை தேய்பிறை பதினோராம் நாள் வரும். மேலதிகமாக ஒரு ஏகாதசி திதியையும் சேர்த்து ஒரு ஆண்டில் இருபத்தைந்து ஏகாதசி நாட்கள் வரும். ஏகாதசி விரதத்தைப் பற்றி பஹஷ்யோத்திர புராணத்திலும் பத்ம புராணத்திலும் விவரிக்கப்பட்டுள்ளது. ஏகாதசி புராணம் என்று தனியே ஒரு புராண நூலும் உண்டு. இதனை இயற்றியவர் சுன்னாகம் வரதராஜ பண்டிதர்.
256

ஏகாதசி விரதமிருப்போர் மறுநாள் துவாதசியில் காலை எட்டரை மணிக்கு முன் பாரணை செய்யவேண்டும். பாரணையில் நெல்லிக்காய், அகத்திக்கீரை முதலியவைகளை உணவில் சேர்த்துக் கொள்வது சிறப்பு. ஏகாதசி விரதம் விஷ்ணுவிற்குரியது.
துவாதசி திதியில் வரும் விரதங்கள் பல உண்டு. அவை
வருமாறு :
1. கல்யாண வீமத் துவாதசி விரதம் -
இது மாசிமாதம் வளர்பிறை தசமியில் ஆரம்பித்து ஏகாதசியை உபவாச காலமாகக் கொண்டு விதிப்படி விஷ்ணுவை பூஜித்து துவாதசியில் பிராமண போஜனம், தானம் முதலியவற்றை செய்பவர்கள் விஷ்ணு பதவி அடைவர். இது பீமனுக்குக் கிருஷ்ணன் கூறியது.
2. விசோக துவாதசி விரதம் -
ஐப்பசி மாத வளர்பிறை தசமி முதல் சுத்த துவாதசி வரையில் 13 மாதங்கள் லக்ஷமி நாராயணரைக் குறித்துப் பூசிப்பதாகும்.
3. விபூதி துவாதசி விரதம் -
சித்திரை, வைகாசி, ஆடி, கார்த்திகை, மார்கழி, பங்குனி மாதங்களில் வளர்பிறை தசமியில் ஒருவேளை உணவு உட்கொண்டு மறுநாள் ஏதும் உண்ணாமல் நீராகாரனாய்த் துவாதசியிற் பிராமண போஜனம் செய்விப்பதாக உறுதிகொண்டு ஒரு வருஷம் செய்து, விதிப்படி விஷ்ணுவைப் பூஜித்துக் கடைசியில் லவண பர்வத யுக்தமான சையா தானங்கள் செய்யின் ஆயிரம் யுகம் வரையில் சுவர்க்கத்தில் வசிப்பதற்கு முடியும். இது நாரதனுக்கு நந்தி கூறியது.
4. மதனத் துவாதசி
சித்திரை மாதம் வளர்பிறை துவாதசியில் ஒரு மட் பாத்திரத்திற் பழம், கரும்பு, கற்கண்டாதிகளை நிரப்பி, நிவேதனம் செய்து வேறொரு கற்பாத்திரத்தில் வெல்லம் நிறைத்து மட்பாத்திரத்தில் மேலிட்டு அதிலுள்ள வெல்லத்தின் நடுவில் வாழையிலை பரப்பி, இரதி மதன விக்ரகத்தை வைத்து பூஜிக்க வேண்டும். மற்றும் மதனகேசவர்களை விக்ரகமாய் அமைத்து மன்மத நாமத்தாற் பூஜிக்க வேண்டும். இவ்விரதம் கைக் கொள்பவர்கள் துவாதசியில் ஆகாரமின்றி இருந்து திரயோதசியில் திருமால் பூஜை செய்யவேண்டும். இது போன்று 13 வளர்பிறை துவாதசி விரதம் இருந்து கடைசி துவாதசியிற் பசுமாட்டைத் தானம் செய்து பத்தினியோடு கூடிய பிராமண னுக்கு மன்மதப் பதுமையும், வெள்ளைப் பசுவையும் தானம் செய்து வெள்ளை எள், பசுநெய், பாலன்னம் இவற்றால் மதனப்ரீதியாய் ஹோமம் செய்து பிராமண போஜனம் செய்விக்க வேண்டும். இப்படிச் செய்தவன் விஷ்ணு பதம் அடைவான்.
இந்துக் கலைக்களஞ்சியம்

Page 287
5. சைத்த சுக்லத் துவாதசி விரதம்
இது சித்திரை மாதத்தில் வளர்பிறை துவாதசியில் விரதமிருப்பது எல்லா நலமும் அளித்திடும்.
6. வைசாக சுக்லத் துவாதசி விரதம்
வைகாசி மாத வளர்பிறை துவாதசியில் விரதமிருப்பது. விஷ்ணுவைப் பூஜித்தால் எல்லா நலமும் அடைவர்.
7. ஆஷாட சுக்லத் துவாதசி விரதம்
ஆடிமாதம் வளர்பிறை துவாதசியில் விஷ்ணுவை எண்ணி விரதமிருப்பது. இதனை மேற்கொள்பவர் சகல சித்தியும் பெறுபவர்.
8. சிராவண சுக்லத் துவாதசி விரதம்
ஆவணி மாதம் வளர்பிறை துவாதசியில் விரதமிருப்பது. இதில் பவித்திரமணிந்து விரதம் மேற்கொள்ள வேண்டும்.
9. வாமன ஜயந்தி விரதம்:-
இது புரட்டாசி மாதம் வளர்பிறை துவாதசியில் திருவோன நக்ஷத்திரத்துடன் கூடிய நாள். இந்நாளில் தேவர்கள் பொருட்டு மகாபலியை அடக்கத் திரிவிக்ரம் அவதாரங் கொண்ட வாமன மூர்த்தியை பூஜித்து விரதமிருக்க வேண்டும்.
10. கூ$ராப்தி சயன விரதம்
கார்த்திகை மாதம் வளர்பிறை துவாதசியில் லக்ஷமி நாராயண பூஜை செய்து விரதமிருப்பது. இந்நாளில் விஷ்ணு பாற்கடலிலிருந்து பிருந்தாவனத்தில் அனைத்துத் தேவர்களாலும் பூஜிக்கப்பட்டார். (வ.வை.)
துவாரபாலகர்
துவாரம் என்பது கோயிலின் வாயிலைக் குறிக்கும். பெருங்கோயில்களில் வெளிவாயில் முதற்கொண்டு ஒவ்வொரு வாயிலின் இரு மருங்கிலும் இரு காவலர் இருப்பது மரபாகும். இவர்கள் துவாரபாலகர்கள் என்றோ துவாரபாலிகைகள் என்றோ அழைக்கப்படுகிறார்கள். இவர்கள் இரு கைகளையோ நான்கு கைகளையோ கொண்டு விளங்குகின்றனர். வாள் அல்லது தண்டாயுதம் இவர்களின் கையில் இருக்கும். இவர்கள் முக் கண்களுடன் சடாமகுடம் தாங்கி ஒரு காலை ஊன்றி ஒரு காலை உடலின் குறுக்காக தண்டத்தின் மீது வைத்திருப்பர். இவர்களின் உடலில் நாகங்கள், மணிவடம் ஆகியன இருக்கும். சில இடங்களில் துவாரபாலகர்களுக்குக் கொம்புகளும் உள. ஒரு கை ஒன்றெனச் சுட்டும் முத்திரையைக் காட்டுகிறது. இஃது இறைவன் ஒப்பற்ற நிலையில் உள்ளார் என்பதைக் காட்டுகிறது. இது பல்லவர் காலக் கோயில்களில் உள்ள நிலையாகும். இவ்வமைப்புகளைத் திருக் கழுக்குன்றத்து மலை இறங்கும் வழியில் உள்ள குடவரைக் கோயிலில் காணலாம்.
இந்துக் கலைக்களஞ்சியம்

பல்லவர் காலச் சிவன் கோயில்களில் இரண்டு கைகளுடனும் பூத உருவத்துடனும் துவார பாலகர்களைக் காண்கிறோம். இவர்களுள் கண்டாகர்ணன். குடகர்ணம் என்பார் சிறு துவாரபாலகர்களே ஆவார். திருமால் கோயில் துவாரபாலகர் களைத் செயன்விசயன் என்று கூறுவாரும் உளர். உத்தரமேரூர்ச் சுந்தரவரதர் கோயில் துவாரபாலகர்களாக நவன். சூடன் என்போர் விளங்குகின்றனர். இதே கோயிலின் மூன்றாம் தளத்திலுள்ள திருவரங்கநாதர் வாயிலில் கங்கையும் காவிரியும் துவாரபாலிகைகளாக விளங்குகின்றனர். சக்தி கோயில் துவார பாலிகைகள் நான்கு கைகள் உடையவர்கள். இத்தகையவர் களின் மிகப் பெரும் வடிவம் காஞ்சிபுரம் காளிகோயிலில் காணப்படுகிறது. முருகப் பெருமானின் துவாரபாலகர்கள் சுமுகர், சுதாகர் எனப்படுவர். இவர்கள் தேவர் இனத்தவர்கள். இவர்கள் தமது கரங்களிற் சக்தி, வச்சிரம், தண்டாயுதம் ஆகியவற்றை ஏந்திக் கிரீடம் அணிந்திருப்பர். பழனியாண்டவர் கோயிலிலுள்ள முகக் காவலர் இடும்பனும், கடம்பனும் ஆவார். விநாயகரின் துவாரபாலகர் அதிபலன், பலன் எனப்படுவர். விநாயகர் நர்த்தன நிலையில் இருப்பின் அவர் தம் துவாரபாலகர்கள் லம்போதரன், குண்டோதரன் ஆவார்கள்.
துவாரபாலகர்கள் உருவம் எப்போதும் கருங்கல்லில் செய்யப்படுவதே வழக்கம். எனினும் பல கோயில்களில் சுதையினாலான உருவங்களும் உள்ளன. இளையனார் குமாரன் கோயில் துவாரபாலகர்கள் மூன்று மீட்டர் உயரத்திற் சுதையினால் செய்யப்பட்டு பல்வேறு வண்ணங்கள், தீட்டப்பட்டு அழகு படுத்தப்பட்டுள்ளனர். பெரும்பாலும் கருங்கல் துவாரபாலகர்களே கோயில்களில் உள்ளன.
சில திருமால் கோயில்களில் உள்ள துவாரபாலகர்கள் உலோகத்தால் செய்யப்பட்டுள்ளனர். காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயிலிலுள்ள துவாரபாலகர்கள் செப்புத் திருமேனியாக எழுந்தருளி உள்ளனர். இவர்களது கிரீடத்தில் உச்சியில் ஒருவர் சங்கும் மற்றையவர் சுடர்களோடு கூடிய சங்கையும் தரித்துள்ளனர். பொதுவாகத் திருமாலின் துவாரபாலகர்கள் சங்கு, சக்கரம், கதை ஆகியவற்றை ஏந்தி இருப்பர்.
இவர்களுக்கு வடைமாலை, வெண்ணெய், அன்னபாவாடம் ஆகியவை படைக்கப்படுகிறது. திருவாயிலை அடையும் போது இவர்களது உத்தரவைப் பெற்றே உட்செல்ல வேண்டும். இவர்களுக்கென தனி விழா ஏதும் இல்லை. (நி.நி.)
துவைதம்
உண்மைப் பொருளைப் பற்றிய அறிவே வேதாந்தமாகும். வேதம் என்பது வித் என்ற வினையடியிலிருந்து பிறந்ததாகும். வித் என்பது அறிவு அல்லது என்றுமுள்ளதும் முடிவுற்றதுமாகும். வேதாந்தம் என்பது வேதத்தின் இறுதி. வேதத்தின் கருத்துக்கள் தெளிவின்றியும் ஒழுங்கின்றியும் காணப்பட்டன. இக்கருத்துக் களைத் தெளிவாக்கி ஒழுங்குபடுத்தும் நோக்குடன் பாதராயணர்
257

Page 288
வேதாந்த சூத்திரம் என்னும் நூலை ஆக்கினார். இது பிரம்மசூத்திரம் அல்லது சரீரக சூத்திரம் எனவும் அழைக்கப்படும். இவர் தனது கருத்துக்களை சூத்திர ரூபமாக மிகச் சுருக்கமான முறையில் கூறியமையால், பின் வந்தோரால் அதிற் கூறப்பட்ட கருத்துக்களை விளங்கிக் கொள்ள முடியாது இருந்தது. இதனால் அறிஞர் பலர் தமது அறிவுக்கு எட்டியவாறு வேதாந்த சூத்திரத்திற்கு விளக்கம் கொடுக்க முற்பட்டனர். அவ்வாறு விளக்கம் கொடுக்க முற்பட்டவர்களில் முக்கியமானவர்கள் சங்கரர். இராமானுஜர், மத்துவர் என்னும் மூவராவர் . இவர்கள் மூவராலும் உருவாக்கப்பட்ட தத்துவக் கொள்கை வேதாந்தம் என அழைக்கப்படலாயிற்று. இந்தியாவில் எழுந்த உயர்வானதும், பிறகருத்துக் கொள்கையுடன் ஒப்பிட முடியாததும் தரத்தில் உயர்வானதும், ஆழமான கருத்துக்களைக் கொண்டு விளக்கி நிற்பதும் வேதாந்தமாகும். இம்மூவராலும் உருவாக்கப்பட்ட வேதாந்தக் கொள்கைகள் முறையே அத்வைதம், விசிட்டாத்வைதம், துவைதம் என அழைக்கப்படும். இவர்கள் பிரம்ம சூத்திரத்தை ஆராய்ந்து அதனது முக்கியம்சங்கள் எது என்பதனை தமது நோக்கிற்கமைய எடுத்தியம்பினர். சூத்திரத்துக்கு உரை எழுதியவர்களுள் மேற்குறிப்பிட்டவர்களை விட பாஷ்கரர், கேசவர், நீலகண்டர், வல்லபர், பாலதேவர்
போன்றோர்களும் குறிப்பிடத்தக்கவர்கள்.
இவற்றில் துவைத வேதாந்தக் கோட்பாட்டை தத்துவ உலகிற்கு அருளியவர் மத்துவாச்சாரியாராவர். இவர் இந்தியாவின் மேற்குக் கரையிலே உடுப்பி என்னும் நகரத்திற்கு அருகில் உள்ள பாஜகதேசத்தில் மத்திய சோகப்பட்டரும் தாயார் வேதவதியாரும் 12 ஆண்டுகள் செய்த தவத்தின் பயனாக 199ஆம் ஆண்டு அவதரித்து 79 ஆண்டுகள் வாழ்ந்தார். இவருக்கு இளமையிலேயே ஆத்மீக ஞானம் கைவரப்பெற்றது. இவர் பிரமசூத்திரத்திற்கு நான்கு விளக்க உரையும், பகவத்கீதைக்கு இருவிளக்க உரைகளும், மற்றும் பத்து உபநிடதங்களுக்கான விளக்க உரையுமாக 37 நூல்களை எழுதியுள்ளார். இவை எல்லாவற்றிற்கும் மேலாக துவைத வேதாந்தம் எனும் பெரு விருட்சத்தை ஆக்கியருளியவராவர். இவர் பிரம்ம சூத்திரத்துக்கு உரை எழுதும் போது வேத உபநிடதங்கள், பகவத்கீதை, இதிகாசங்கள், பாகவதபுராணம், விஷ்ணுபராணம் போன்ற புராணங்களையும் ஆழ்வார்களது நாலாயிரந்திவ்விய பிரபந்தங்களையும் வைஷ்ணவ ஆகமங்களையும் பிரமாணங்களைக் கொண்டதாக அறியப்படுகிறது.
துவைதம் என்பது (த்வி) என்ற வேர்ச் சொல்லில் இருந்து உருவானது. துவைதம் என்பதன் நேரடிப் பொருள் இரண்டு எனப்படுகிறது. இங்கு இரண்டு எனப் பேசப்படுபவை ஆன்மாவும் இறைவனும் ஆகும். ஆன்மா வேறு இறைவன் வேறு இவை இரண்டு எனும் நிலை நீங்கி, ஒன்று எனும் நிலையை அடைவதில்லை. எப்பொழுதும் இரண்டு இரண்டுதான் என்பது மத்துவர் கொள்கையாகும். இதனால் இவரது கொள்கை
258

இருமைக் கொள்கை என அழைக்கப்படுகிறது. சங்கரர் தனது அத்வைதக் கோட்பாட்டில் இரண்டு அல்ல ஒன்று, அதுதான் பிரம்மம் என வாதிக்க, மத்துவாச்சாரியார் அதை மறுத்து வாதிப்பதுடன் இரண்டு எனக் குறிப்பிடுவது நோக்கத்தக்கது. துவைத வேதாந்தம் அல்லது தத்துவ வேதாந்தம் என வடமொழியில் பெயர்பெற்ற இவரது இருமைக்கோட்பாடானது ஈஸ்வரன்,உயிர், உலகு என்னும் முப்பொருட்களை அடிப்படையாகக் கொண்டமைந்தது. இம்முப்பொருட்களும் என்றுமே உள்ளவை என்பது இவரது கருத்து. இறைவன் வேறு உயிர்கள் வேறு. இறைவனே அனைத்து வல்லமை பெற்ற தன்னிகரற்ற தலைவன். உயிர்கள் அவரது ஆணைக்குட்பட்டு பக்தி செய்வதன் மூலம் உயர்வடைய முடியும் என்ற கருத்துக் களைக் கொண்டமைந்து காணப்படுகிறது. இறுதி நிலையாகிய முத்தி நிலையிலும் ஆன்மாவும் இறைவனும் ஒன்றாகாது இரு வேறுபட்ட தனித் தன்மைகளைக் கொண்டிருப்பன என்கிறார். இவர் வேறுபாட்டினை அடிநிலையாகக் கொண்டு இருமைத் தன்மையைக் கூறுவதனால் பேதவாதியாகக் கொள்ளப் படுகின்றார்.
மத்துவர் துவைதக் கொள்கை சங்கரர், இராமானுஜரது கொள்கையிலிருந்து வேறுபடுவதனையும் காணலாம். உண்மைப் பொருள் ஒன்றே என்றும் ஏனையவை வெறும் தோற்றப் பொருட்கள் என்றும் அந்த ஒன்று பிரம்மமே என்றும் இறுதி நிலையில் ஆன்மாவும் பிரம்மமும் இரண்டல்ல என அத்வைதக் கொள்கையைச் சங்கரர் விளக்குகின்றார். இராமானுஜர் ஆன்மாவையும் உலகினையும் பிரம்மத்தின் (அங்கங்களாக) விசேடனங்களாகக் குறிப்பிட்டு விசேடித்த அத்வைதமாகிய விசிட்டாத்வைதக் கொள்கையை விளக்கி நிற்கின்றார். சங்கரர், இராமானுஜர் என்போரது காலத்துக்குப் பிற்பட்டு வாழ்ந்தவர் மத்துவர். ஆதலால் இவர்களது கருத்துக்களை விமர்சிக்கும் வாய்ப்புப் பெற்றவராக அமைந்தார். இவ்வகையில் சங்கரர் இரண்டின் இன்மையைக் காட்டுகிறார். எனினும் இந்த இரண்டு பொருட்களும் இல்லாத பொருட்களாகச் சங்கரரால் அல்லது இராமானுஜராற் கொள்ளப்படவில்லை. இறுதியில் இரண்டும் ஒன்றொன்று குறிப்பிடுகின்றனர். இவர்கள் ஒன்றின் நிரந்தரத் தன்மையை நிலைநாட்டவே அத்வைதம் பேசி இரண்டின்மையைக் காட்டினர் எனலாம். இருமையின் இல்லாத் தன்மையைக் காட்டுகின்ற வகையில், இருமையையும் இருமையின்மையையும் கூறி, அது அத்வைதம் என்ற வகையில் சங்கரர் சுயமுரண்பாடுடையவர் என்பது மத்துவரது கொள்கை யாகவுள்ளது. இத்தன்மையை நீக்கிய வகையில் மத்துவர்
துவைதக் கொள்கையை முன்வைத்தவராக விளங்குகின்றார்.
மத்துவர் கொண்ட பிரம்மம் பற்றிய கருத்துக்களை நோக்குவோமாயின், இவரது கடவுட் கொள்கையானது நிறைவுற்ற தெய்வீகக் கொள்கை என விரித்துரை செய்யப் பெறலாம். சார்பற்ற தத்துவக் கொள்கையிலிருந்து வேறுபடுத்திக்
இந்துக் கலைக்களஞ்சியம்

Page 289
காட்டும் வகையில் தெய்வ இயலின் தத்துவநிலையை மேல்வருமாறு பகுக்கலாம்:
01. கடந்த நிலைப் பொருள் - கடவுள் நிலையானது மக்கள் நிலையிலிருந்தும் மிக உயர்ந்த நிலைவரை உயர்த்திச் சென்று, இறுதியில் உயர்ந்தும் நிறைவற்றதுமான முடிநிலைப் பொருள் எனக் கொள்ளல்.
02. உலகமும் உயிர்களும் உள்ள பொருள்களே. எனினும் கடவுளிடத்திலிருந்து வேறுபட்டவை; கடவுள் உயர்ந்தவர். அவர் உலகைப் படைத்தவர். பிரம்மத்தின் இயல்பு, உலகும் உயிர்களும் பிரம்மத்துடன் கொள்ளும் தொடர்பு என்ற இரண்டு கருத்திலிருந்தும் துவைத வேதாந்தம் அத்வைத வேதாந்தத்துடன் மாறுபட்டு நிற்கிறது.
மத்துவர் பிரம்மத்தை அறிதற்குரிய தன்மையுடையதாகக் குறிப்பிடுகிறார். அத்வைத வேதாந்தப்படி பிரம்மம் அறியப்பட முடியாத ஒன்று. ஜீவன் அறிபவனாக இருக்கும் போது அவனால் அறியப் பெறுகின்ற பொருளாகப் பிரம்மம் இருத்தல் முடியாது என்பதாகும். பிரம்மத்தை நாம் அறியப்படு பொருளாக நிறுத்தும் அதே நேரம் அது அறிபவனுக்கு வேறுபட்ட ஒன்றாகவும் அமைகிறது. அவ்வாறமைதல் பிரம்மத்தின் உண்மை இயல்பு அன்று. அது சகுணப் பிரம்மத்துக்கு மட்டுமே இயலுவதாகும். அத்வைதப்படி பிரம்மம் அறியப்பெற இயலாத ஒன்றாயின் பெளத்தத்தின் இன்மைக் கொள்கைக்கும் அத்வைதத்துக்கும் வேறுபாடேயில்லை என்பர்.
உயிர்கள் முத்தியடையப் பிரம்ம ஞானம் இன்றியமையாதது என எல்லாத் தத்துவங்களும் கூறுகின்றன. பிரம்மம் அறிய ஒண்ணாதது என அத்வைதிகள் கூறின் அது முத்தி என்பதை அடைய முடியாது என எதிர்மறையாகக் கூறுகிறது. எனவே பிரம்மம் அறிதற்குரியது எனத் துவைதம் கூறுகிறது. எந்த ஒர் உயிரும் தத்தம் அறிவாற்றலைச் செயற்படுத்தி நிற்குமளவிற்கு பிரம்மம் அறியப்பெற முடிந்ததாகவே அமைகிறது. பிரம்மத்தைப் பற்றிய அறிவை அடைவதற்குரிய முதன்மை மூலமாகத் திகழ்வது சுருதி பிரம்மம் அறியப்படுபொருளாக இருக்கிறது. ஆகையால் அது சில குணங்களைப் பெற்றிருக்கிறது என்பதை ஏற்பதாகவே அமையும். ஆகவே பிரம்மம் குணங்களுடன் கூடியது (சகுணம்) என விரிந்துரைக்கப்படுகிறது. அத்வைதிகள் பிரம்மம் குணமற்றது (நிர்க்குணம்) எனக் கூறுகின்றனர். இதற்கு எதிராக துவைத வேதாந்திகள் உரையளவையிலான பல மறுப்புக்களை எழுப்புகிறார்கள். குணங்களற்ற பிரம்மம் என்பதை விட இல்பொருள் என அதனைக் கொள்வதே நலம் என்பது உரையளவிலான மறுப்புரை. பிரம்மம் குணங்களைப் பெற்றது என்பதற்கு பல உபநிடதங்கள், உரைகள் உள்ளன. முண்டக உபநிடதம் பிரம்மம் உயர்ந்ததும் தற்பிரகாசமானதும் என்கிறது. சாந்தோக்கிய உபநிடதம் படைப்புச் செயலையும் தூய
இந்துக்கலைக்களஞ்சியம்

விருப்புக்களையும் கொண்டது பிரம்மம் என்கிறது. சுவேதாஸ்வதர உபநிடதம் நிர்க்குணம் என்பதற்கு பின்வரும் குணங்களைக் குறிப்பிடுகிறது. இருப்பினைக் கொண்ட ஒன்று; எல்லாப் பொருள்களிலும் மறைந்திருப்பது; எல்லாவற்றிற்கும் நிறைந்து வியாபகமாயிருப்பது; எல்லாச் செயல்களையும் முறைப்படுத்தி இயக்குவது எனக் கூறுகிறது.
துவைத வேதாந்தப்படி பிரம்மம் என்பது எட்டியிருப்பதும் உருவமற்றதும் ஆகிய மூலக்கூறு என இருப்பதன்று. மனிதனுடைய அறிதல் என்ற முயற்சிக்கு உட்பட்ட எல்லையில் பிரம்மத்தைக் கொண்டு வந்து நிறுத்துகிறார். வெளிப்படத் தோன்றி நிற்கின்ற குணங்களைப் பெற்றவனே பிரம்மம். மனிதன் என்பவனுக்குரிய எடுத்துக் காட்டு என்று கருதியுணரக் கூடிய நிலையில் விளங்கும் தெய்வ மனிதனே பிரம்மம். அதனாலேயே அவன் ஈஸ்வரன் எனவும் கடவுள் என்ற ஆங்கிலச் சொல்லுக்கு நேரான பகவான் எனவும் அழைக்கப்படுகிறான். இப்பகவான் விஷ்ணுவே. இவர் எல்லா உயர்நிறைக் குணங்களின் முழுமையானவர் (சர்வகுணபூரணன்). அதே சமயத்திற் பிரம்மம் எந்த ஒரு குறையின் சுவடு கூட இல்லாதவன். (சர்வ - தோஷகந்த - விதுர) இவ்விரு கூறுகளும் இணைந்து நின்று தோன்றிய நிலையே கடவுளின் நிலை. தலைவனின் குணங்கள் எண்ணிக்கையாலும் தரத்தாலும் எல்லையற்றவை. கடவுளின் செயலாற்றலானது மறைந்து நின்று செயற்படும் ஆற்றல் கூறு (சக்தி), வெளிப்பட நின்று செயற்படும் ஆற்றல் கூறு (வியத்தி) என இரு கூறுகளைக் கொண்டது. இவை முறையே தோற்ற ஒடுங்கலானது.
கடவுள் நம்மைச் செயல்களில் ஈடுபடுத்திக் கொள்வதனால் அவன் உருவம் அல்லது உடம்பு உடையவனோ எனின் அவன் பருவுடலோ சடப்பொருளால் ஆக்கப் பெற்ற உருவமோ உடையவனல்லன். ஏனெனில் அவ்வுருவம் நிறை தூய்மையு டையதாக இருக்க முடியாது. சடப்பொருள் மாற்றத்திற்குரியது. இருத்தல் அறிவு இன்பம் என்பவை மட்டுமே அவனுக்குரிய உடம்பை உண்டாக்குகின்றன. துவைத வேதாந்தம் இறை ஒருமைக் கொள்கையின்படி ஒரேயொரு மிகவுயர் இருப்புப் பொருளையே ஏற்கிறது. ஆனால் அந்த ஒரு கடவுளே தாம் ஏற்றுள்ள பாத்திரங்களில் விளையாடுவதற்கேற்ப தாம் விரும்பும் வெவ்வேறு வடிவங்களைத் தாமே உண்டாக்கிக் கொள்கிறது. எல்லாவற்றையும் கடந்தது. ஆதலின் எல்லாப் பொருள்களையும் புற நிலையிலிருந்தே ஆளுமை செய்கிறது. எல்லா உயிர்களுள்ளும் ஒன்றாய் நின்ற தாமே தம் பிரதிபலிப்பை உண்டாக்கிக் கொள்வது. ஆகையால் அது எல்லாப் பொருட்களின் உள்ளீடாய்க் கலந்த பொருளாக நின்று அவைகளுக்கு நல்வழிகாட்டியாய் அமைகிறது. மத்துவரின் இக்கொள்கை விசிட்டாத்வைத அந்தர்யாமிக் கொள்கையோடு ஒத்தாகவுள்ளது. இருவரும் வைணவர்கள் ஆதலால் அவர்கள் அவதாரக் கோட்பாட்டை ஏற்றவர்களாகவுள்ளனர். உயிர்களின்
259

Page 290
மீட்பினை உள்ளிட்ட செயல்கள் உலகைப் படைத்தல், காத்தல், அழித்தல் பற்றிய செயல்கள் ஆகியன முறையே வாசுதேவன் பிரத்யும்னன், அநிருத்தன், சங்கர்ஷணன் என்ற நான்கு உருவமைப்புக்களால் நிறைவு செய்யப்படுகின்றன. மீளவும் அதே உயர் இருப்புப் பரம்பொருள் இவ்வுலகில் சில சிறப்புச் செயல்களை நடத்துவதற்காக அவதாரங்கள் எனப்பெறும்.
மத்துவரது கொள்கைப்படி கடவுளே உயர் பரம்பொருள்; அன்பு அருள் வடிவானவர். அவரே உலகத்தையும் உயிர்களையும் தம்முள் அடக்கி கட்டுப்படுவதாகவும் செயலாற்றவும் வைக்கின்ற வகையில் ஆதிக்கமுடையனாக வுள்ளான். உலகம், உயிர்கள் சார்புற்ற பொருட்கள். அவைகளின் இருப்புடைமையின் முக்கியத்துவத்தை வரையறை செய்வது கடவுளின் ஆற்றலே. கடவுள் உலகைப் படைக்கிறார். உலகத்தோடும் உயிர்களோடும் உள்ளார்ந்த நிலையில் கலந்திருக்கிறார். கடவுள் என்ற கருத்தானது அவைகள் தத்தம் இருப்புடமைக்குத் தேவையான ஒவ்வொரு கணத்திற்கும் தத்தம் தனிநிலைத் தேவைகளுக்கும் கடவுளையே சார்ந்திருக்கின்றன என்பது மத்துவரது கொள்கை. இவ்வகையில் நியாய, வைசேடிகர், யோகம் ஆகியவற்றின் உலக உற்பத்தி பற்றிய கடவுள் கொள்கையிலிருந்து வேறுபட்ட வகையில் அமைந்துள்ளது, துவைத கடவுட் கோட்பாடு. இதிகாச புராணங்கள் உலகைப் படைத்தல்; பரமனையும் காத்தல் விஷ்ணுவையும் அழித்தல் சிவனையும் சார்ந்துள்ளன எனச் சுட்டுகின்றன. ஆனால் மத்துவர் இந்து சமய மும்மூர்த்திக் கொள்கையில் அடங்கிய மூவருக்கும் ஒத்த உரிமைச் செயல்கள், பெருமைகள் உண்டென்பதை ஏற்கவில்லை. அவரைப் பொறுத்தவரை விஷ்ணுவே உயர் பரம்பொருள் ஆதலால் விஷ்ணுவே அனைத்துச் செயல்களையும் செய்கிறார். அவ்வகையில் பிரமாவும் சிவனும் விஷ்ணுவைச் சார்ந்து நின்று தொழிற்படும் வழிநிலைக் கடவுளர்கள் ஆவர்.
உலகப் படைப்பில் துவைத வேதாந்தம் இறைவனை நிமித்த காரணனாகவே சுட்டுகிறது. உயிர்களின் மேல் வைத்த எல்லையற்ற கருணையால் பிரமம் உலகை, பிரகிருதியை, முதற்காரணமாகக் கொண்டு படைக்கிறது. உயிர்கள் விடுதலை அடைவதற்கு ஏற்ற பயிற்சியை அளிக்குமிடமாக உலகு அமைகிறது. மத்துவர் தமது கொள்கைகளை விளக்கக் காட்சி, அனுமானம், உரை எனும் மூன்று பிரமாணங்களையும் பயன்படுத்தியிருக்கக் காணலாம். இவ்வகையிற் பிரமத்தை நிமித்த காரணனாகச் சுட்டி, உலகப் படைப்பைக் கூறுமிடத்து சத் அசத் காரிய வாதக் கொள்கையடையவராகக் காணப் படுகிறார். அதாவது காரணத்தில் உள்ளது தான் காரியத்தில் தோன்றும் என்ற சத்காரிய வாதத்தையும் காரணத்திலில்லாது காரியத்தில் தோன்றும் என்ற அசத்காரிய வாதத்தையும் சேர்த்த சத் அசத் காரியவாதம் பேசுகிறார். எடுத்துக் காட்டாக, மண்ணிலிருந்து பானை தோற்றுவிக்கப்படுவது சத்காரியம். மண்ணிலில்லாத பானை என்ற வடிவம் அசத்காரியம் என்பதனை
260

கொள்ளலாம். பானையின் படைப்பில் குயவன் நிமித்த காரணனாவது போன்று உலகப் படைப்பிற் பிரமம் நிமித்த காரணனாக மத்துவராற் கொள்ளப்படுகிறது.
மத்துவர் சடமாகிய பிரகிருதியை முதற்காரணமாகக் கொண்டு, கடவுள் நிமித்த காரணனாக நின்று உலகைப் படைக்கிறார் எனக் கொள்ளுமிடத்து, உலகத்திற்குரிய முதற்காரணப் பொருள் அறிவில்லாததே. ஆகையால் இத்தகைய முறையானது அமைவதற்காகவே எந்த ஒரு நிலையிலும் அது கடவுளைச் சார்ந்தே இருக்கிறது என்கிறார். கடவுள் நிமித்த காரணனாக நின்று உலகைப் படைக்கின்ற நிலை, செயற்படுத்துகின்ற தன்மை போன்ற தொடர்பின் அடிப்படையில் கடவுள் பரா (Para) என்று குறிப்பிடுகிறார். பரா என்பது மற்றொன்று என்ற பொருளில் இங்கே எடுத்தாளப் படுகிறது. இவ்வாறாக துவைத வேதாந்தத்தில் உலகப் படைப்புக்கொள்கையானது பராதீன விசேஷாப்தி என்று குறிப்பிடப்படுகிறது.
இந்த வகையில் உலகைப் படைப்பவராக மத்துவர் குறிப்பிடுகின்ற பிரம்மம் நாராயணனே. இவர் பூரண சுதந்திரம் உடையவர். உலகும் ஜீவன்களும் அவரிலேயே தங்கித் தமக்கென சுதந்திரம் அற்றவையாய் உள்ளன என்றார் மத்துவர். இருப்பு, ஞானம், ஆனந்தம் என்பன ஈஸ்வரனுக்குரிய பதார்த்தங்கள் ஆகும். அதேவேளை ஜீவன்களின் உள்நின்று அவற்றை இயக்கி ஆள்பவரும் ஈஸ்வரனே. சிலரைத் தண்டித்தும் பலருக்கு அருள்பாலித்தும் விளங்குவது அவரியல்பு பூரணத்துவம் வாய்ந்த அவர் ஆன்மாக்களின் கன்மங்களை நெறிப்படுத்தும் தலைவருமாவார். பக்தி ஒன்றினாலேயே ஆன்மாக்கள் அவரைப் பிரீதிப்படுத்தலாம் என்பது மத்துவரது கருத்தாகும். பல்வகைத் திருமேனிகள் தாங்கியும், அவதாரங்கள் எடுத்தும், ஜீவன்களைக் காத்தருளும் ஈஸ்வரன் ஆலயங்களில் உள்ள விக்கிரகங்களிலும் எழுந்தருளி அடியார்களின் வழிபாட்டிற்கு உரியவராகின்றார். ஈஸ்வரன் உள்ளிருந்து ஜீவன்களைக் கட்டுப்படுத்துகிறார். எனவும் கூறப்படுகிறது. மத்துவர் பேதங்களை (வேறுபாட்டை) அடிநிலையாகக் கொண்டு இருமைக் கொள்கையை முன்வைத்தவராதலால், உலகம், ஜீவன், பிரம்மம் (ஈஸ்வரன்) என்ற மூன்று பொருட்களிடையேயும் ஐந்துவகையான பேதங்களைக் குறிப்பிடுகிறார். அவை ஒரு ஜீவனுக்கும் இன்னொரு ஜீவனுக்குமுள்ள வேறுபாடு. ஜிவ பரஸ்பர பேதம்; ஒரு சடத்திற்கும் இன்னொரு சடத்திற்குமுள்ள வேறுபாடு - பரஸ்பர பேதம் சடத்திற்கும் ஜீவனுக்குமுள்ள வேறுபாடு - சடஜிவபேதம் ஜீவனுக்கும் ஈஸ்வரனுக்கும் இடையிலான வேறுபாடு ஜீவஈஸ்வர பேதம் என்பனவாகும். இந்த வேறுபாடுகளிலிருந்து ஜீவனுக்குத் தன்னிலை வேறுபாடும், சடத்துக்கு தன்னிலை வேறுபாடும் இருப்பது போன்று ஈஸ்வரனுக்குத் தன்னிலை வேறுபாடில்லை என்பது பெறப்படுகிறது. இவ்வகையில் பிரம்மம் (ஈஸ்வரன்) ஒன்று என்ற கொள்கை காணப்படுகிறதெனலாம்.
இந்துக் கலைக்களஞ்சியம்

Page 291
மத்துவர் ஜீவனுக்கும் ஈஸ்வரனுக்கும் உள்ள பேதத்தைக் கூறுமிடத்து ஜிவனுக்கும் ஈஸ்வரனுக்கும் என்றும் பேதமிருப்பதைச் சுட்டிக்காட்டுகிறார். ஈஸ்வரனின் பேரானந்தம் ஜீவனுக்கு எக்காலத்தும் கிட்டாது என்பது மத்துவர் கொண்ட முடிவாகும். ஜீவன்கள் எல்லாம் ஹரியின் (பிரம்மத்தின்) பணியாட்கள் என்பர் மத்துவர். ஜீவனானது கடவுளை வழிபடும் போது கடவுள் ஜீவனுக்கு தம்மைப் பற்றிய அறிவை அளிக்கிறார். உயிர்களிடத்து அமையும் மறைப்புக்கோ அறியாமைக்கோ கடவுளே காரணமாகிறார். உயிர்களுக்கு அறிவை வழங்குவதிலும், விடுதலை அளிப்பதிலும், அருளானது கடவுளின் கருவியாகவும் உள்ளூக்கியாகவும் அமைகிறது என்பது மத்துவரது கொள்கையாகும். ஒழுக்கவியலான நீதியை உடனுக்குடன் வழங்கும் ஆளுமையுடைய கடவுள் மேல் நம்பிக்கை இல்லாமல் நன்னடத்தையுடையவனாக இருக்க வேண்டும் என்பதில் எவ்வகையான உற்சாகமும் இராது என்பதனால், கடவுளே நீதியை ஆன்மாக்களுக்கு வழங்கி
அவற்றை ரட்சிக்கிறான் என்பது இவரது கருத்தாகும்.
இவ்வாறாக, மத்துவரது தத்துவ சிந்தனையில் விஷ்ணுநாராயணனுக்கே (பிரம்மத்துக்கு) முதன்மை அளிக்கப்படுகிறது. ஆன்மாக்கள் பற்று உறுவதற்கும் விடுதலை அடைவதற்கும் நாராயணனே காரணமாவார் என்கிறார். உலகப் பொருட்களில் பற்று வைப்பதன் மூலமே பந்தம் ஏற்படுகிறது. கடவுளை நேரடியாக உணர்வதன் மூலம் வீடுபேறு கிடைக்கிறது. கடவுளை உணர அவன் அருட்பிரசாதம் வேண்டற்பாலது. அவன் அருளைப்பெறக் கருமம், ஞானம், பக்தி, முதலியன வழிகளாம். அருளன்றி வெறும் ஞானத்தினாலேயே மோட்சம் ஒரு போதும் கிட்டாதென்பது மத்துவர் துணிபு . ஆயினும் அவ்வருளை ஆன்மாக்கள் முயற்சி செய்தே பெற வேண்டும். அம்முயற்சிகள் சாதனங்கள் எனப்படுகின்றன. அவை கருமம், ஞானம், பக்தி உபாசனம் எனப்பல. எனினும் பக்திக்கே மத்துவர் முக்கியத்துவம் கொடுக்கிறார். அவ்வகையில் கடவுள் அருளைப்பெற இடையறாது அவனையே நினைந்துருகி பக்தியுடன் அவனை வழிபடவேண்டும என்கிறார்.
பக்தி செலுத்தி வழிபட நாராயணன் பெருமைகளை அறிந்திருக்க வேண்டும். அவ்வகையில் குருவின் மூலம் கற்றுணர்ந்த பொருளாகிய விஷ்ணு நாராயணனிடம் பக்தி செலுத்த வேண்டும். பக்தி செலுத்துவது மட்டுமன்றி விலக்கப்பட்ட செயல்களையும் செய்யாது விட வேண்டும் எனக் கூறப்படுகின்றது. விஷ்ணு நாராயணனைப்பற்றி நேரடியான அறிவு இல்லாமல் அவரிடம் அத்தியந்த அறிவு ஏற்படமாட்டாது. விஷ்ணுவை விட வேறு உலக விடயங்களிலும் மனம் ஈடுபடமாட்டாது. இறைவனை இடையறாது நினைந்து உருகுவதனாலேயே பக்தி மென்மேலும் வளர்கிறது. இறைவன் மேன்மை பற்றிய அறிவாற் கிடைப்பதும் உறுதியானதும் மற்றைய
இந்துக் கலைக்களஞ்சியம்

பற்றுக்களையெல்லாம் விஞ்சி நிற்பதுமான அந்த அன்பையே பக்தி என்கிறோம். மத்துவர் இப்படிப்பட்ட அன்பினால் மட்டுமே வீடுபேறடைய முடியும் என்கிறார். பக்திக்கு முக்கியத்துவம் கொடுத்த வகையில் விஷ்ணுவை அடைவதற்குரிய இலகுவான வழியைக் காட்டிச் செல்கிறார். இவ்வகையில் இராமானுஜரால் வளர்க்கப்பட்ட பக்தி மார்க்கத்தை மேலும் வளர்த்துச் சென்றவராகவும், விஷ்ணுவை வழிபாட்டிற்குரிய உயர்ந்த நிலைத் தெய்வமாகக் கொண்டவராகவும் மத்துவர் விளங்குகிறார்
எனலாம்.
பிறந்து இறந்து உழலும் ஆன்மாக்கள் விஷ்ணுவின் அருட் பிரசாதத்தால் கரையேற்றப்படுவர் என்பது மத்துவரது கருத்து. அவ்வகையில் ஒருவர் இவ்வுலக துன்பத்திலிருந்து கரையேறும் வண்ணம் விஷ்ணுவை நோக்கி இடையறாது பக்தி செலுத்தி வரவேண்டும் என்றும், எட்டு வயது தொடக்கம் எண்பது வயது வரை ஏகாதசி விரதம் கட்டாயம் அனுஷ்டித்து வரவேண்டும் என்றும் கூறுகிறார். நரகத் துன்பத்தை அனுபவியாமல் தப்புவதற்கு பாவச் செயல்களைச் செய்யாமல் விடுத்து விஷ்ணுவின் நாமங்களையே எப்போதும் பாடிக் கொண்டு செய்யும் எல்லாச் செயல்களையும் அவன் பொருட்டாகவே செய்து, பயனிற் பற்று வைக்காமல் வாழ்ந்து வரவேண்டும் என்று கூறுகிறார். இவற்றைக் கடைப்பிடிக்க ஆன்மாவின் பந்தங்கள், பற்றுக்களாகிய மாயைத் திரைகள் அறவே நீங்கி விட, ஆன்மாக்கள் தம்முண்மை நிலையை உணர்ந்து இறைவனின் அருட்கடலிலாழ்ந்து அவர் காலடியில் இன்புற்றிருப்பர் என்பது மத்துவரது கருத்தாகும்.
இவ்வகையில் இறையருளால் விடுதலை பெற்ற ஆன்மாக்கள் யாவும் சமமானவையல்ல. ஆனால் அவற்றிடையே முரண்பாடில்லை என்கிறார். இச்சந்தர்ப்பத்தில் மத்துவர் துரசுருதி என்னும் நூலிலிருந்து சான்று காட்டுகிறார். அதாவது பேரின்ப உலகிற் காணப்படும் ஆன்மாக்கள் ஏராளமான வையாகவும் பலதரப்பட்டவையாகவும் உள்ளன. அவை ஒன்றுக்கொன்று முரணானவையல்ல. அவையாவும் பிரமத்தை அறிந்தவை. அவை எல்லாக் குற்றங்களிலிருந்தும் விடுபட்டவை என்பதாகும். முத்தி நிலையிலும் ஆன்மாவும் பிரமமும் வேறுபாடானவை என்பது, மத்துவர் கொள்கையின் அடிப்படை அம்சமாகும். ஏனைய தத்துவவாதிகளது முத்தி நிலைக் கருத்துக்கள் போன்றல்லாது மத்துவரின் முத்தி நிலைக் கருத்துக்கள் வேறுபட்டமைகிறது. சங்கரர் முத்தி நிலையில் பிரமனும் ஜீவனும் ஒன்றாகின்றன என்று அத்வைதம் பேசுகிறார். சித்தாந்திகள் முத்திநிலையில் ஆன்மாவும் இறைவனும் ஒன்றாகாமலும் இரண்டாகவும் இருக்கின்றன எனக் குறிப்பிடுகிறார்கள். துவைத வேதாந்தத்தில் உயிர்களின் முத்தியானது பேரின்பப்படிநிலை என்ற அடிப்படையில் நான்கு படிகளாக விளக்கப்படுகின்றது.
261

Page 292
01. சாலோக்யம்
இதன் பொருள் விஷ்ணுவின் இருப்பிடமான வைகுந் தத்தினை அடைதல் என்பதாகும். முதன் நிலையில் முத்திபெற்ற எல்லா உயிர்களும் வைகுண்டத்தை அடையும் என விளக்கப் படுகிறது.
O2 GEITLນີ້ບໍub
இது கடவுளைப் பற்றிய அறிவை அதிகமாகப் பெற்று இருப்பவர்கள் கடவுளின் அண்மையை அடைந்து பெற்றுக் கொள்ளும் முத்தியாகும்.
03. சாரேக்கியம் அல்லது சாருப்யம்
இது சாமிப்ய நிலையில் இருந்து மேலும் உயர்ந்த அறிவைப் பெற்றவர்கள் கடவுளின் வடிவினை ஏற்கும் நிலையாகும்.
04. சாயுஜ்யம்
சாயுஜ்யம் என்பது இறைவனுடன் கலத்தல். அதாவது
உயிரானது இறைவனை அடைதல் என்ற உறவில் மிக நெருங்கிய
நிலையில் இருப்பது என்பதைப் புலப்படுத்தும்.
ஆனால் மத்துவர் முத்தி நிலையிலே ஆன்மாக்கள் இறைவனோடு இரண்டறக் கலப்பதில்லை என்றும், ஆன்மாவானது தன் தனித் தன்மையையும் முற்றுணர்வையும் முழுஞானத்தினையும் அடைந்து இறைவனைத் தரிசித்த வண்ணமாக இருப்பது என்கிறார். இவ்வகையில் இருமைக் கொள்கையிலேயே முத்தி பற்றிய கருத்தையும் கொண்டு விளங்குகின்றார் மத்துவர் எனலாம். எனவே மேற்கூறப்பட்ட வாறாக மத்துவரது பிரம்மம் பற்றிய கொள்கையானது நிறைவுற்ற இறை ஒருமைக் கொள்கையாக விளங்குவதனைக் காணமுடிகிறது. (நா.ஞா.)
துளசி
விஷ்ணுவின் மிகப் பிரியமான அர்ச்சனைப் பொருள் துளசியாகும். துளசி என்ற சொல்லுக்குத் தன்னிகரில்லாதவள் என்று பெயர். வைணவ சம்பிரதாயத்தில் துளசியைத் திருத்துழாய் என்பார்கள். மகாலட்சுமியின் சொரூபமாக துளசி கருதப்படுகின்றதோடு எப்போதும் திருமாலின் திருமார்பையும் அலங்கரிக்கின்றது. துளசியின் வேரில் தேவதைகள் வாசம் செய்கிறார்கள் என்றும் கருதப்படுகின்றது.
தர்மத்வஜன்- மாதவி என்ற தம்பதிகளுக்கு மகளாகக் கார்த்திகை மாதம் பெளர்ணமியில் அவதரித்தாள். பிரமனை நோக்கித் தவம் செய்து வரம் பெற்ற துளசி, செடியாக மாறி விஷ்ணுவுக்குப் பிரியமானவளாக விளக்குகிறாள். துளசிச் செடியின் கீழ் தேங்கியிருக்கும் நீரில் எல்லாப் புண்ணி தீர்த்தங்களும் இருப்பதாக ஐதீகம். துளசித் தீர்த்தத்தால் எனக்கு
262

அபிஷேகம் செய்தால் ஆயிரம் அமிர்தக் குடங்களால் அபிஷேகம் செய்த அளவிற்கு ஆனந்தமடைவேன் என்று மகா விஷ்ணு கூறியதாக நம்பப்படுகின்றது. கார்த்திகை மாத பெளர்ணமி தினமே துளசியை பூசிப்பதற்குரிய விசேட நாளாகும். மகா விஷ்ணு ஒரு முறை துளசியை மகிழ்விக்கும் பொருட்டு அவளை உருவகித்துப் பூஜை செய்தார் என்று ஹரிவம்சம் என்னும் நூல் குறிப்பிடுகின்றது.
நம் முன்னோர்கள் அனலுருவான சிவனுக்குக் குளிர்ச்சி பொருந்திய வில்வத்தையும், குளிர்ச்சியான மகா விஷ்ணுவுக்கு வெப்பத்தைத் தரும் துளசியையும் பூஜைக்குரிய பொருளாக ஏற்றுக் கொண்டிருக்கின்றார்கள். ஏகாதசி உபவாசம் இருப்பவர்கள் துவாதசியன்று துளசி தீர்த்தம் அருந்தி தம் விரதத்தை நிறைவேற்றுவர். தை மாத வெள்ளிக்கிழமையும், மாசி மாத சுக்லபக்ஷம் துவாதசியும், பங்குனி மாதப் அமாவாசை, பெளர்ணமி துவாதசி தினங்களும், சித்திரை மாத பெளர்ணமியும் ஆனி மாத சுக்கிலபக்ஷம் தசமியும், ஆடி மாத சுக்கிலபக்ஷம் துவாதசி முதல் கார்த்திகை மாதம் சுக்கிலபக்ஷம் துவாதசி வரை
உள்ள காலமும் மார்கழி மாத விடியற்
காலையும் துளசியைப் $“ பூசிப்பதற்குகந்த விசேட
தினங்களாகும்.
பூரீ பத்ம புராணம் துளசி மகாத்மியத்தில் பல்வேறு விடயங்கள் கூறப்பட்டுள்ளது. சகல ஐஸ்வரியங்களுடனும் ஆட்சி புரிந்த தசரத மகாராஜன் புத்திரர்கள் இன்றி மிக வருந்தி மகாவிஷ்ணுவை வேண்டி நிற்க, அவரும் அமிர்த ரூபியாயும் எனக்கு மிகவும் இஷ்டமானவளாக இருக்கும் துளசி தேவியை ஒரு வருடம் தினந்தோறும் பால், கருப்பஞ்சாறு, இளநீர் இவைகளினால் அபிஷேகம் செய்து, தூப தீப ஆராதனைகள் செய்து பாயாசம் முதலியன நைவேத்தியமாகப் படைத்து, பத்தினி சமேதமாய் வழிபாடு செய்வாய் ஆனால், துளசி தேவி மகிழ்ச்சியடைந்து உனக்குப் புத்திர பாக்கியம் கொடுப்பாள் என்று கூறியதாகவும், அதற்கிணங்க தசரத சக்கரவர்த்தியும், பட்டமகிஷியான கெளசல்யையும் துளசி பூஜையை மிகவும் பக்தி சிரத்தையுடன் மேற்கொண்டதாகவும் பூரீ பத்ம புராணம் கூறுகின்றது. இவர்களது பூஜை ஆராதனைகளால் மகிழ்வுற்ற துளசி தேவி- துளசி காஷ்டங்கள்(விறகு) சேர்த்துப் புத்திர காமேஷ்டி என்ற யாகத்தை மேற் கொண்டு பகவானைத் திருப்திப் படுத்தினாற் பகவானே உனக்குப் புத்திரராக அவதரிப்பார் எனக் கூறி மறைந்தாள். மனம் மகிழ்ந்த மன்னன், துளசி தேவியைத் துதித்து துளசி காஷ்டங்கள் சேகரித்து புத்திர காமேஷ்டி யாகம் செய்து இராமன், பரதன்,
இந்துக் கலைக்களஞ்சியம்

Page 293
இலட்சுமணன், சத்ருக்னன் என்னும் நான்கு புத்திரர்களைப் பெற்று மனமகிழ்ந்தார் என்று கூறப்பட்டுள்ளது.
துளசிச் செடியைப் பூசிப்பதன் மூலம் பாவங்கள் அத்தனையும் நாசமாகி விடுகின்றன என்று கூறுகின்றது ஸ்கந்த புராணம். ஒரு முறை விளையாட்டாகச் சிவனது கண்களைத் தன் கைகளால் மறைக்க சூரிய சந்திர மண்டலங்கள் இருளடைந்து பூ மண்டலம் முழுவதும் ஒரே இருள் மயமானது. இச்செயலாற் பெரும் பாவப் பழியைச் சுமந்த பார்வதி பாவங்களைப் போக்கக் கூடிய துளசி தேவியைப் பிரார்த்தனை செய்தாள். காஞ்சிபுரத்தை அடைந்து வரதராஜப் பெருமாள் சந்நிதியில் கம்பை என்னும் நதிக்கருகில் ஒரு மண்டபமியற்றி அவ்விடத்தில் துளசி வனம் உண்டு பண்ணித் தினந்தோறும் பால் அபிஷேகம் செய்து பக்தியுடன் பூசித்து வந்தார். இதனால் காமாட்சியான இவளுக்கு அபர்ணா என்ற பெயரும் ஏற்பட்டது. மிகப் புனிதமாகத் துளசி தேவியைப் பூசனை புரிந்ததால் பாவங்கள் முழுமையாக நீங்கப் பெற்று பங்குனி மாதப் பெளர்ணமி தினத்தில் சிவனுடன் இணைந்து கொண்டாள் என்று இப்புராணம் கூறுகின்றது.
துளசி தேவிக்குரிய கவசத்தை சூரிய உதய காலத்தில் மும்முறை படிப்பவர்க்கு கிடைத்தற்கரிய பல பேறுகள் கிடைக்கும் என்று பத்ம புராணம் துளசி மஹாத்மியம் கூறுகின்றது. சத்துருஜயம், மித்திரலாபம், புத்திரஸம்பத்து மற்றும் வியாதிகளையும் ஜயித்துவிடும் பலம் உண்டாகும் என்கிறது இப்புராணம்.
பூரீ தேவி பாகவததில் பூரீ துளசி சரித்திரம் விரிவாகக் கூறப்பட்டுள்ளது. பூரீ துளசி செடிவடிவாகவே திகழ்பவள். இருப்பினும் அவள் தெய்வாம்சம் பொருந்தியவள். பூரீ கிருஷ்ண பரமாத்மாவுக்கு அந்தரங்கமானவள். பூரீ துளசியை யார் வேண்டுமானாலும் எந்தப் பாகுபாடும் இன்றி தினமும் பூசனை செய்யலாம். அல்லது செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் பூரீ துளசிக்குச் செய்யும் பூசைகளில் பூரீ துளசி கிருஷ்ண பூசை முக்கியமானது. இப்பூசையைக் கார்த்திகை மாத வளர்பிறை (சுக்லபக்ஷம்) துவாதசி திதியில் (12ஆம் நாள்) செய்வதே சிறப்பாகும். பூரீ துளசி தேவி மகாலசுஷ்மியின் அவதாரம். ஆயினும் செடிவடிவாகத் திகழும் அவளது விவாக பூஜையைச் செய்யும் போது பக்கத்தில் நெல்லி மரக் கிளையை நட்டுப் பூஜிப்பது வழக்கம். ஏனெனில் அதில் பகவான் இருப்பதாக ஐதீகம். பூரீ கிருஷ்ணரின் விக்ரகத்தையோ, படத்தையோ வைத்துப் பூஜிப்பதும் வழக்கம். நெல்லிக் கிளை வாடிவிடுமாதலால் பூரீ கிருஷ்ணரின் விக்ரகம் அல்லது படம் வைத்துப் பூஜிப்பதுவே மிகவும் சிறப்பாகும். இப் பூஜை செய்ய வருபவர் எவராயினும் முதலில் கவச தோத்திரம் படித்து, மனதை அலைபாய விடாமல் தேகத்திற்கு எந்த ஒரு உபாதையும்
இந்துக்கலைக்களஞ்சியம்

ஏற்படாமல் தடுத்துக் கொள்ள வேண்டும். கட்டுப்பாட்டோடு மனதை ஒரு நிலைப் படுத்தி இப்பூஜையைச் செய்வோருக்கு சகல காரியங்களும் சித்திக்கும் என்பது இப்புராணக் கூற்று. மேலும் இத் தேவியின் மகத்துவத்தைச் சதுர் முகக் கடவுள் வியாசருக்கும், இந்திராணிக்கும் அனேக விதங்களாய்ச் சொல்லியிருக்கின்றனர். பார்வதி, சீதை, தமயந்தி, குந்தி, மாந்தாரா முதலிய சிரேஷ்டர்களும் விதிப்படி கொண்டாடிப் பேறு பெற்றனர். (நி.நி.)
துளசிதாசர்
இந்தியப் பக்தி வரலாற்றில் இடைக்காலத்திலே வாழ்ந்த மிகப்பிரபல்யமான ஞானிகளிலும், கவிஞர்களிலும் குறிப்பிடத்தக்க ஒருவராகவே துளசிதாசர் திகழ்ந்தார். இவர் தலை சிறந்த ஞானியாகவும், கவிஞராகவும் விளங்கினார். இவரைப்பற்றி கூறுமுன் கி.பி 13ஆம் நூற்றாண்டு தொடக்கம் 17ஆம் நூற்றாண்டு வரை நிலவிய பக்தி இயக்கம் பற்றிக் குறிப்பிடுதல் அவசியமாகின்றது. இக் காலகட்டத்திலே முதலிலே வட இந்தியாவிலும் பின்னர் தென்னிந்தியாவிலும் முஸ்லிம் ஆதிக்கம் ஏற்பட்டது. ஏறக்குறைய ஐந்து நூற்றாண்டுகளாக முஸ்லிம் ஆதிக்கம் வட இந்தியாவின் பல பகுதிகளிலும், தென்னிந்தியாவின் கணிசமான பகுதிகளிலும் நிலவிற்று. முஸ்லிம் ஆதிக்கம் ஏற்பட அரச ஆதரவுடன் ஆட்சியாளரின் சமயமாகிய இஸ்லாமும் பரவிற்று. இந்து சமய நிறுவனங்கள் குறிப்பாகக் கோயில்கள் பல அழிக்கப்பட்டன. சில இடங்களிலே - இந்துக் கோயில்களிருந்ந இடங்களிலே இஸ்லாமிய வழிபாட்டு நிறுவனங்கள் அமைக்கப்பட்டு வந்தன. இந்து சமயம் பொதுவாக அரச ஆதரவு இழந்ததுடன் வழிபாட்டு நிறுவனங்கள் பலவற்றையும் இழக்க நேரிட்டது. இப்பேராபத்தை வெற்றிகரமாக எதிர் கொள்ளும் வகையிலே பக்தி இயக்கம் இக்காலத்திலே தோன்றிற்று.
பல்லவர் பாண்டியர் காலப் பக்தி இயக்கம் தமிழ் நாட்டிலே உருவாகி வைதீக சமயங்களுக்குப் புத்துயிர் அளித்தது. முஸ்லிம் ஆதிக்கத்தினால் நன்கு பாதிப்புற்ற வட இந்தியாவின் பல பகுதிகளில் இப் பக்தி இயக்கம் மிகத் துணிகரமாகவும், வலுவாகவும் பரவி இந்துகளுக்குத் தேவையான பலத்தையும், சமயப்பற்றினையும் ஊட்டி வந்தது. இதன் செல்வாக்குத் தெற்கேயும் ஏற்பட்டது. ஆனால் இக்கட்டுரைக்கு வட இந்தியா ஞானிகளே முக்கியமாகையால் அவர்கள் பற்றிச் சிறிது குறிப்பிடப்படுகின்றது. இக்காலத்திலே மஹாராஷ்டிரப் பகுதியிலே ஞானேஸ்வரர், ஏகநாத், துகாராம், ராம்தாஸ் முதலிய ஞானிகள் தொடர்ந்து தோன்றினர். வங்காளத்திலே ராமானந்தர், வட இந்தியாவின் நடுப்பகுதியிலே துளசிதாசர், பஞ்சாப்பிலே குருநானக் முதலிய பலர் தோன்றினர். இவர்கள் அரச ஆதரவின்றி வழிபாட்டுத் தலங்கள் பலவற்றை இழந்து தத்தளித்துக் கொண்டிருந்த மக்களுக்கு உணர்வு பூர்வமான
263

Page 294
இறைபக்தியைப் போதித்து அவர்களுக்கு ஆறுதலளித்தது மட்டுமன்றிப் புதிய பேராபத்தை- பெரிய சவாலைச் சமாளிக்க வல்ல ஆத்மீக பலத்தையும், உத்வேகத்தையும் அளித்தனர். இவர்கள் மிக எளிமையான முன்மாதிரியான சமய வாழ்க்கை நடத்தி வந்தனர். சமய, சமூகப் பணிகளுக்காகவே தம்மை அர்ப்பணித்தனர். அவ்வப்பிராந்திய மொழிகளிலே மக்களைக் கவரக்கூடிய எளிமையான பக்திப் பாடல்களை இயற்றி மக்களோடு மக்களாகத் தாமும் ஊர் ஊராகச் சென்று அவர்களுக்கு இறைபக்தியையும், சமூக ஒற்றுமையையும் தத்தம் இசைப்பாடல்கள், பஜனைகள்- குறிப்பாக நாம பஜனைகள் மூலம் போதித்து வந்தனர். எனவே இஃது ஒரு பொது மக்கள் இயக்கமாகச் செயற்பட்டு இந்து சமயத்தை எதிர் நோக்கிய பெரிய சவாலைப் பெருமளவு வெற்றிகண்டது. இக்காலத்திலே திருமாலின் ராம, கிருஷ்ண அவதாரங்களே மக்களைப் பெரிதும் கவர்ந்தன. ராம, கிருஷ்ண வணக்கங்கள் முதன்மைப் படுத்தப்பட்டாலும், ஏனைய தெய்வ வணக்கங்களும் சமரச நோக்கிலே கவனிக்கப்பட்டன. தொடக்க காலகட்டங்களிலே இந்து- முஸ்லிம் தொடர்புகள் சுமுகமாக, இல்லாவிடினும் காலப்போக்கில் ஒரளவு நெகிழ்ச்சி ஏற்பட்டு இந்து- முஸ்லிம் ஒற்றுமையும் கபீர் போன்ற ஞானிகளாலும், அக்பர் போன்ற மொகலாயப் பெரு மன்னராலும் வலியுறுத்தப்பட்டும் வந்தது. இத்தகைய சூழ்நிலையிலே தான் துளசிதாசர் பிறந்தார்.
துளசிதாசரின் வாழ்க்கை வரலாறு பற்றியறிதற்கான நம்பகமான சான்றுகள் மிகக் குறைவாக உள்ளன. எனினும், இவரின் நூல்களிற் காணப்படும் அகச் சான்றுகள், சமகாலத்தின் பிற மூலங்கள் மூலம் இது பற்றி ஒரளவு கூறலாம். இவர் கி.பி 1532-1623 வரை வாழ்ந்தார் எனப் பொதுவாகக் கொள்ளப்படுகின்றது. இவரின் சொந்த இடம் பற்றியும் கருத்து வேறுபாடு உள்ளது. இவர் பெரும்பாலும் ராஜாபூர் அல்லது அதற்கு அண்மையில் உள்ள ஓரிடத்தைச் சேர்ந்தவர் எனக் கருதப்படுகின்றது. இவ்விடம் வட இந்தியாவிலுள்ள உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ளது. இவர் பிராமண குடும்பத்திலே பிறந்தவர். இவரின் பெற்றோர் மிகவறியவர்கள். வறுமையால் இளம் வயதிலே கஷ்டப்பட்ட இவர் பிச்சை எடுத்து வாழவேண்டிய நிலையேற்பட்டது. பெற்றோரை விட்டுப் பிரிந்து இவ்வாறு ஆதரவின்றி வாழ்ந்து கொண்டிருக்கையிலே ஞானிகள் சிலர் இவரை ராம பிரானிடத்துப் பக்தி கொள்ளுமாறு உபதேசித்தனர். இதன் பின்னர் இவரின் வாழ்க்கையிலே புதிய திருப்பம் ஏற்பட்டது. ராம பிரானிடத்து மிகுந்த பற்றுக் கொண்டார். ஹனுமான் கோவில் ஒன்றுடன் தொடர்பு கொண்டு, அங்கு தெய்வத்திற்கு அளிக்கப்படும் நைவேத்தியத்தை உண்டு சில ஆண்டுகளைக் கழித்தார். இந்த வாழ்க்கை பற்றி நன்றியுடன் தமது பாடல்களில் அடிக்கடி இவர் நினைவு கூர்ந்துள்ளார்.
இவருடைய ஆன்மீக குரு பற்றி அதிகம் அறிய முடியாதுள்ளது. ஆனால் அவர் ஒரு சிறந்த ராம பக்தர் எனவும் ராமரின் கதையைக் கேட்போருக்குக் கூறுவோராகவும்
264

அறியப்படுகின்றது. துளசிதாசர் முதலில் அவரைச் சந்தித்த போது, அக்கதையின் நுட்பங்களை அறியும் திறன் பெற்றிருக்கவில்லை. எனினும் சுகர்கேத எனும் இடத்தில் அக் கதையினை அவரிடம் கேட்டு அறிந்து கொண்டார். அக்குரு சிறந்த புலமையாளர். துளசிதாசரை ராமபக்தி வழியில் ஈடுபடத்தூண்டினார். இளைஞராகிய துளசிதாசரிலே குரு பெரிய தாக்கத்தினை ஏற்படுத்தினார். இதனால் அவரின் ராம பக்தி மேலும் அதிகரித்தது.
இவருடைய இயற் பெயர் துளசி எனவும், தாஸ் எனும் பதம் சமய தீட்சையின் பின் அத்துடன் இணைக்கப்பட்டதாகவும் கருதப்படுகின்றது. இவருக்கு 'ராம் போல” எனும் பெயர் ஆன்மீக குருவினால் வழங்கப்பட்டதாகலாம். இவர் தாம் ராம மன்னனின் தாசன் எனவும் தமது பெயர் ராம் போல எனவும் ஒரிடத்திலே குறிப்பிடப்பட்டுள்ளார். வாலிபப்பருவம் அடைந்த பின் இவர் திருமணம் செய்து, பின்னர் இல்லற வாழ்க்கையைக் கைவிட்டார் எனக் கூறப்படுகின்றது. துறவறத்தை மேற் கொண்ட பின் தனிமையிலே தவ வாழ்க்கையையும், சமூக சேவையையும் மேற் கொண்டார். இவர் இல்லறம் துறவறத்திற்கு இடையிலான வாழ்க்கையினை மேற் கொண்டார் என்பது இவரது தோஹாவலியில் (256) “ராம பக்திக் கான சிறிய நகரினைத் தனது வீட்டினுக்கும், காட்டிற்குமையில் துளசி அமைத்துள்ளான்.” எனவருவதால் புலப்படும் எனக் கருதப்படுகின்றது. இவர் கி.பி.1564 க்கு முன் சித்திரகூடமெனுமிடத்திலே சிலகாலம் வாழ்ந்தார். அங்கு இவருக்கு இராமபிரானின் தரிசனம் கிடைத்ததாக இவரின் விநயபத்திரிகா குறிப்பிடுகின்றது. இவ்விடத்தினை இவர் மிகவும் விரும்பினார். இங்கு சில தடவை வந்து சென்றார் எனக் கருதப்படுகின்றது. கி.பி.1564 ற்கு முன்பே இவர் காசிக்குச் சென்றிருப்பார் எனக் கூறப்படுகின்றது. ராமருடைய தொடர்புள்ள பல புனித இடங்களுக்கு இவர் பல தடவை சென்றாலும் காசியிலேயே தமது நிரந்தர வசிப்பிடத்தைக் கொண்டிருந்தார். தமது ராம சரிதமானசத்தை அயோத்தியிலே தொடங்கிப் பின் காசிக்குத் திரும்பினார்.
இவருக்கு நண்பர்கள் , நலன் விரும்பிகள் பலர் இருந்தனர். காசியில் நிருவாகத்தைக் கவனித்தவர்களில் ஒருவரான நவாப் அப்துர் ரஹ்மான், காங்கான, மான்சிங், கங்காராம், காசி நிலப் பிரபுவானதோடர் முதலியோர் இவரின் நண்பர்கள். ஆட்சியாளர் பலர் இவரைத் தரிசித்தனர், மரியாதை செய்தனர் என்பது “ஒரு காலத்திலே துளசி வீடு வீடாகப் பிச்சை எடுத்தான். ஆனால் பிறிதொருநாள் வலிமை மிக்க மன்னர் வந்து அவனை வணங்கி மரியாதை செய்தனர். (இத்தகைய வேறுபாடு என்னே!) முன்னர் ராமனின் திருவருள் பெறாத துளசி, ஆனால் இப்பொழுதோ ராமனின் பெரிய திருவருளால் ஆசீர்வதிக்கப்பட்ட துளசி” என இவர் தமது தோஹாவலியில் (109) குறிப்பிட்டிருப்பதாலே புலப்படும் ராமாயணக் கதை கூறும் ராம சரிதமானசத்தை இயற்றிய பின் இவரின் புகழ் பல இடங்களிலும் வேகமாக
இந்துக்கலைக்களஞ்சியம்

Page 295
பரவிற்று. இவரே இது பற்றிக் குறிப்பிட்டுள்ளார். வாழ்ந்த காலத்திலேயே இவர் ஆதி ராமாயணத்தை எழுதிய வால்மீகி முனிவரின் அவதாரமாகக் கருதப்பட்டார். அதாவது, “ராம நாமம் எனும் அற்புதத்தினாலே துளசி மஹர்ஷிக்குரிய (பெரிய ரிஷிக்குரிய) நிலையை அடைந்து விட்டான்’ என இவரின் கவிதாவலியில் வருவதால் இது புலப்படுகின்றது. நாபாதாச எனும் கவிஞர் “வால்மீகியே(மீண்டும்) மனித வடிவிலே- துளசி (தாசர்) வடிவிலே பரந்த (பிறவிக்) கடலை தாண்டுவதற்கான எளிமையான துணையாக இதனை (ராமசரித மானசத்தை) இயற்றியுள்ளார். கலியுகத்திலே வாழும் உயிர்கள் முத்தியடைதற்கும் இது வழிவகுக்கும்” என கூறியிருப்பதும் குறிப்பிடற்பாலது.
இவரது புகழ் குறிப்பாக மானசத்தின் பின் நன்கு வேகமாகப் பரவப் பல எதிர்ப்புகள், பொறாமை, பகைமை காரணமாக ஏற்பட்டன. இவரது பெற்றோர், சாதி, துறவறம் முதலியன குறித்து இவை ஏற்பட்டாலும், இவை குறித்து அவர் ஒன்றையும் பொருட்படுத்திலர். இதனை “என்னை மோசடிகாரன் அல்லது போலிப்பிச்சைகாரன் என அழைக்கலாம், என்னை அரச குமாரன் அல்லது நெசவுக்காரன் என அழைக்கலாம். எவருடைய மகளுக்கும் என் மகனைத் திருமணம் செய்ய வேண்டிய தேவையில்லை. எவருடைய சாதியையும் மாசுபடுத்தி, கீழ் நிலைப்படுத்தும் நோக்கம் எனக்கு இல்லையே என அவர் கவிதா வலியிலும் (7.106) விநயபத்திரிகாவிலும் (76) குறிப்பிட்டுள்ளமை கவனித்தற்பாலது. சிலர் அவரைக் கொல்லவும் முயற்சித்தனர். ஆனால் அம்முயற்சி பலனளிக்க வில்லை. தாம் எழுதிய தோஹாவலி, கவிதாவலி முதலிய நூல்களிலே தமக்கு ஏற்பட்டிருந்த கடுமையான நோவினைத் தீர்க்குமாறு ராமபிரானை வேண்டியுள்ளார். ராமனின் திருவருளால் அது தணிந்ததென பாஹகவில் அவர் குறிப்பிட்டுள்ளார். வயது முதிர வாதம் முதலிய நோய்களாற் பீடிக்கப்பட்டு இவ் உலக வாழ்வினை நீத்து ராமன் திருவடியை அடைந்தார். மேலும் இவர் காசியிலுள்ள லோலார்க்ககுண்ட எனுமிடத்தினுள்ள மடத்தின் தலைவராக “கோசைன்’என
அழைக்கப்பட்டார்.
பிரபல ஹிந்திப் புலவரான துளசிதாசர் பல நூல்களை இயற்றியுள்ள போதிலும், அவற்றின் தொகை குறித்து அறிஞர்கள் மத்தியிலே ஏகோபித்த கருத்து நிலவவில்லை. வாராணஸி நாகரிப்ரசாரிணி சபா 37 நூல்கள் எனக் கூறியுள்ளது.
எனினும் இவர் வாழ்ந்த மொகலாயப் பேரரசன் அக்பர், ஜஹங்கீர் காலப் புலவர்கள் பற்றி நன்கு ஆய்வு செய்த அறிஞர்கள் இவரின் 13 நூல்களைக் காலவரன் முறைப்படி அடையாளம் கண்டுள்ளனர்.
அவையாவன;
1) வைராக்ய சண்டீபனி 2) ராமலலாநச்சு 3) ஜானகி மங்கலம் 4) ராமாக்யாப்ரஸ்ன 5) ராமசரிதமானசம் 6) பார்வதி மங்கலம்
இந்துக் கலைக்களஞ்சியம்

7) கீதாவலி 8) கிருஷ்ணகீதாவலி 9) விநாயபத்திரிகா 10) பரவே ராமாயணம் 11) பாஹக 12) தோஹாவலி 13) கவிதாவலி என்பனவாகும்.
மரபு வழிக்கதையொன்றின் படி துளசிதாசர் இளம் பிராயத்திலே உலகியல் இன்பங்களிலே நன்கு ஈடுபட்டிருந்தார் எனவும், மனைவியான ரத்னாவலியின் ஆலோசனைப்படி ராம பக்தியிலிடுபட்டார், எனவும் கூறப்படுகின்றது. இக்கதை எவ்வாறாயினும், வைராக்ய சண்டிபணியே இவரின் முதலாவது நூலாகக் கொள்ளப்படுகின்றது. இந்நூலின் ஏழு செய்யுட்களிற் சீதா பிராட்டி, ராமன், லக்ஷமணன் ஒருங்கே உட்கார்ந்திருப்பதும் ராமன் புகழ் பாடப்படுவதும், மனித உடம்பு அழியும் தன்மையுடைய தென்பதும், பூரீ ராமனின் மகிமை பற்றிக் கூறப்படுவதும் இடம் பெற்றுள்ளன. அடுத்து வரும் 26 செய்யுட்களும் இயற்கை பற்றியும், ஞானிகளின் சிறப்பியல்புகள் பற்றியும் வருணிக்கின்றன. அடுத்து வரும் ஒன்பது செய்யுள்களிலும் ஒரு ஞானியின் தெய்வீகத் தன்மைகள் கூறப்படுகின்றன. இறுதியாக உள்ள இருபது செய்யுட்களும் சமாதானத்தின் (சாந்தியின்) பெறுமானம் பற்றியவை. இக் கவிஞர் உலக வாழ்வினைத் துறந்து பக்தி நெறியைப் பின்பற்றிய காலத் தொடக்கத்தில் இந்நூலினை எழுதினார் எனலாம்.
ராம பக்தியை மேற் கொண்ட பின் இவர் தன்னுடைய கவிதாசக்தியை ராமரின் புகழ் பாடுவதில் ஈடுபடுத்தத் தொடங்கினார். குறிப்பாக, ராமபிரானின் வரலாறு, அருஞ்செயல்கள், சாதனைகள் பற்றி எழுதினார். இத்தகைய நூல்களில் முதலாவதாக ராம்லலா நச்சு எழுதப்பட்டது. வடஇந்தியாவிலே பூணுால் சடங்கு அல்லது திருமணம் செய்யவுள்ள ஒர் அந்தண இளைஞனின் காலினுள்ள நகங்களுக்கு நாவிதனின் மனைவி சிவப்புச் சாயம் பூசுகின்ற கதையை இந்நூல் கூறுகின்றது. மேற்குறிப்பிட்ட சடங்கு தொடங்கு முன் இச்சம்பவம் இடம் பெற்றுள்ளது. இதிலே இது பற்றிய உயிரோட்டமுள்ள வருணனை உள்ளது. மேலும் பல திறப்பட்ட பெண்கள் பற்றிய வருணனைகள் உள்ளன. இந்நிகழ்வு அயோத்தியிலிடம் பெற்றமையாலே ஹிந்தியின் கிளை மொழியான அவதியில் 22 செய்யுட்களில் இந்நூல் உள்ளது.
மேற்குறிப்பிட்ட நூலைத் தொடர்ந்து ராமாக்யா பிரஸ்ன எனும் நூல் எழுதப்பட்டது. இந்நூல் ராமபிரானின் கதையமைப்பிலே நல்ல, தீய சகுனங்களைப் பற்றி எடுத்துக் கூறுகின்றது. இங்கு ராமர் கதை ராமசரிதமானசத்தை ஒட்டியதாகவன்றி வால்மீகி ராமாயணத்தைப் பின்பற்றி கூறப்படுகின்றது.
இதைத் தொடர்ந்து துளசிதாசர் ராமர் சீதாபிராட்டியைத் திருமணம் புரியும் நிகழ்வு கூறப்படுகின்றது. இக்கதை பெருமளவு ராமயாணத்தையொட்டியே எடுத்துரைக்கப்படுகின்றது. இங்கு
265

Page 296
ராமபிரான் பரம்பொருளின் அவதாரமாகவே வர்ணிக்கப்படுகின்றார். இதிலே கிராமிய அம்சங்கள் சிலவுமிடம் பெற்றுள்ளன. இப்பெரும் புலவரின் கவிதை ஆற்றல் இந்நூலிலே முதன்முதலாகப் புலனாகின்றது. கவிதைக்குரிய அணிகள் சில இதில் உள்ளன.
இவற்றைத் தொடர்ந்து இவரின் கவிதை முதிர்ச்சியைப் பிரதிப்பலிப்பனவும், வெவ்வேறு காலங்களில் இயற்றப்பட்டுப் பின்னர் தொகுக்கப்பட்டனவாகிய பரவேராமாயணம், கவிதாவலி, தோஹாவலி, கிருஷ்ண கீதா வலி, கீதாவலி ஆகியன இயற்றப்பட்டன. இத்தொகுப்புகளிலுள்ள செய்யுட்களை இயற்றி வந்த காலப்பகுதியிலே ராம பிரானின் வாழ்க்கை வரலாற்றினைக் கூறும் ராமசரிதமானசம் எனும் முக்கியமான நூலை எழுதத் திட்டமிட்டிருந்தார். இதனை எழுதிய பின் பார்வதீமங்கலம், விநயபத்திரிகா எனும் இரு நூல்களை இயற்றினார்.
துளசிதாசர் ராமசரிதமான சத்தினை விக்கிரம ஆண்டு 1631இலே (கி.பி 1574) தாம் இயற்றத் தொடங்கியதாக நூலிலே குறிப்பிட்டுள்ளார். இஃது அயோத்தியிலே தொடங்கப்பட்டுக் காசியிலே முற்றுப் பெற்றது. நான்கு அல்லது ஐந்து ஆண்டுகளாக இப் பெரிய நூல் தொடர்ந்து எழுதப்பட்டதாக அறிஞர் கருதுவர். தமக்கு முன் ராமர் கதையினை எழுதிய வால்மீகி ஏனைய கவிஞர்கள் படைப்புகளிலிருந்து வேறுபட்ட வகையில் இவர் தமது நூலினை இயற்றியுள்ளார். ராமரைப் பரம் பொருளின் அவதார புருஷராக உருவகித்து, அவரின் பிறப்புத் தொடக்கம் முடி சூடும் வரையுள்ள வரலாற்றை எடுத்துக் கூறி அதன் பின் ஒர் இலட்சிய பூர்வமான அரசு (ராமராஜ்யம்) நிறுவப்படுதலையும் இவர் வர்ணித்துள்ளார். ராமரின் வாழ்க்கையினைப் பெளராணிக மரபிலே கூறப்படும் மானசம்என்பதை மானசரோவர் எனும் பெரிய ஏரியாக உருவகித்துக் கூறியுள்ளார். இதன் நான்கு கரைகளிலும் ஒவ்வொரு பேச்சாளரும், கேட்போருமாக நான்கு தொகுதியினர் சம்பாஷணை வடிவிலே ராமனின் வாழ்க்கை நிகழ்ச்சிகளை எடுத்துக் கூறும் பாங்கில் நூல் அமைந்துள்ளது. மேற்குறிப்பிட்ட நான்கு தொகுதியினரில் யாஜ்ஞவல்க்யரும், பரத்துவாஜரும் சிவபிரானும், பார்வதியும், காகபுஷாண்டியும் கருடனும் துளசிதாசரும் ஞானிகள் கூட்டமும் அடங்குவர்.
ராமரின் கதையினை பெளராணிக ரீதியிலே துளசிதாசர் கூறினாலும், தமது காலத்திலே ராமர் பற்றிக்கிடைக்கக் கூடிய பல்வேறு மூலங்களின் சாரத்தை நூலில் உள்ளடக்கியுள்ளார் யதார்த்தத்தை மட்டுமன்றி இலட்சிய வாழ்க்கை பற்றியும் சிந்தித்துள்ளார். பிரதான கதையும் , உப கதைகளும் நன்கு ஒன்றிணைக்கப்பட்டு நேர்த்தியாக ஒழுங்குப்படுத்தப்பட்டுள்ளன ராமரின் வாழ்க்கையிலே உள்ளத்தைத் தொடும் மிகப்பிரதான சம்பவங்களைத் தக்கவாறு உணர்வுபூர்வமாக எடுத்துக் கூறியுள்ளார். விஸ்வாமித்திரனின் ஆச்சிரமத்தை பாதுகாப்பதற்காக ராமர் லசுஷ்மணனுடன் அயோத்தியை விட்டு
266

செல்லுதல், சீதா திருமணம், பதினான்கு ஆண்டுகளாக காட்டிலே வாழுதற்குச் செல்லுதல், சித்திர கூடத்திலே ராமரும் பரதனும் சந்தித்தல், சீதையை ராவணன் அபகரித்தலும் ராமனின் சோகமும், ராமனுக்கும் ராவணனுக்குமிடையில் நடைபெற்ற பெரியபோர், அயோத்திக்கு ராமர் திரும்புதல், முடிசூட்டு விழா என்பன குறிப்பிடத்தக்கவை.
துளசிதாசர் தமது நூலிலே பல்வேறு வகையான மனிதர்கள் வெவ்வேறு தொழில் செய்வோர், பல வயதினைச் சேர்ந்தோர், பல உணர்வுடையோர், சமூகத்தின் பல்வேறு தட்டுகளிலுள்ளோர் எனப் பலர் பற்றி வருணித்துள்ளார். மனித வாழ்வின் பல்வேறு கட்டங்களைச் சேர்ந்தவர்களின் படங்கள் அடங்கிய களஞ்சியம் போல இந்நூல் இலங்குகின்றது. இலட்சியபூர்வமான பல்வேறு பாத்திரங்களைச் சமூகத்தின் பல்வேறு பிரிவுகளிலிருந்தும் இந்நூல் சித்தரிக்கின்றது. பல்வேறு தரப்பட்டவர்களின் விருப்பங்களும், ஆர்வங்களும், உணர்வுகளும் தக்கவாறு புலப்படுத்தப்படுகின்றன. ஹிந்தியில் இவ்வாறு ராமசரிதமானசம் பக்திப் பெரும் பனுவலாகவும், அன்றாட வாழ்க்கைக்கான வழிகாட்டியாகவும் விழுமியமிக்க சிறந்த காப்பியமாகவும் விளங்குகின்றது. இந்நூல் இயற்றிய காலம் தொட்டு இன்று வரை வட இந்திய இந்துக்களின் மிகப்புனித நூலாகப் பாராயணம் செய்யப்பட்டு வருகின்றது. உலக இலக்கியங்களிலே ஒரு சிறந்த நூலாகவும் இது கருதப்படுகின்றது.
துளசிதாசரின் தொகுப்பு நூல்களிலே முதலிலே இயற்றப்பட்டது கவிதாவலி எனக் கருதப்படுகின்றது. இதில் இவர் இளமைப் பருவத்தில் மட்டுமன்றி முதிர்ந்த வயதில் இயற்றப்பட்ட செய்யுட்களும் இடம் பெற்றுள்ளன. இந்நூலின் சில சுவடிகளிலே இவருடைய பிறிதொரு நூலான ஹநுமான் பாஹூக அல்லது பாஹகவும் இடம் பெற்றுள்ளது. இதிலுள்ள செய்யுட்கள் இவரின் வயோதிபப் பருவத்தில் எழுதப்பட்டவையாகும். தமது புஜத்திலுள்ள கடும் நோவை நீக்குமாறு ஹனுமானை இவர் பிரார்த்தித்துள்ளார். சிறுவயது தொடக்கம் முதுமை வரையுள்ள இப்புலவரின் சுயசரிதைப்பற்றிய குறிப்புகள் இந்நூலில் உள்ளன. சமகால வானியல் நிகழ்வுகள் பற்றியும் இவர் இதிலே குறிப்பிட்டுள்ளார்.
கவிதாவலியிலே கலியுகம் பற்றிய வருணனை, சமகால சமூக நிலைமைகளைப் பிரதிபலிப்பனவாகவே பெரிதும் உள்ளன. ஒரு செய்யுளிலே புலவர் தேசப்பற்றினைப் புலப்படுத்தும் வகையில் பாரத தேசத்தின் மகிமை பற்றிப் பாடியுள்ளார். இந்நூல் ஏழு பிரிவுகளைக் கொண்டுள்ளது. முதல் ஆறு பகுதிகளிலும் ராமரின் வாழ்க்கை வரலாறு எடுத்துரைக்கப்படுகின்றது. ஏழாவதிலே நூலாசிரியர் இந்துத் தெய்வங்கள் பலரிடத்துத் தாம் கொண்டிருந்த பக்தியைப் புலப்படுத்துகின்றார். இந்நூல் உயர்ந்த கவிதை அமிசங்களைக் கொண்டிலங்குகின்றது. இவரின் இளமைப்பருவ, முதுமைப்பருவக் காலங்களில் இயற்றப்பட்ட செய்யுட்கள் இதில் அடங்கியுள்ளன.
இந்துக் கலைக்களஞ்சியம்

Page 297
இவரின் பிரிதொரு தொகுப்பு நூலாக பரவேராமாயணம் விளங்குகின்றது. இதிலுள்ள சில செய்யுட்கள் இவரின் இளம்வயதில் இயற்றப்பட்டவை. பரவே ஒரு குறிப்பிட்ட யாப்பின் பெயராகும். ராமருடைய வாழ்க்கை வரலாற்றினை இந்நூல் குறிப்பிட்ட யாப்பிலே எடுத்துக் கூறுகின்றது. இதிலே 69 செய்யுட்கள் ஏழு பகுதிகளாக வகுக்கப்பட்டுள்ளன.முதல் ஆறு பகுதிகளிலே ராமரின் வரலாறும், ஏழாவதிலே ராம பக்தியின் முக்கியத்துவமும் கூறப்பட்டுள்ளன. திரும்பக் கூறல் இதில் இல்லை. நல்ல மொழி நடையில் அமைந்து அணிகள் பலவும் கொண்டு இந்நூல் இலங்குகின்றது.
அக்காலச் செய்யுள் வடிவங்களிலே பதமும் (பாடலும்) ஒன்றாகும்.துளசிதாசர் இந்த வடிவத்திலும் ராமரின் வாழ்க்கை பற்றி எழுதியுள்ளார். இவ்வடிவிலான தனி உணர்வுப்பாடல்கள் (Lyrics) காலத்திற்குக் காலம் பாடப்பட்டுப் கவிதாவலி எனும் தொகுப்பாக உள்ளன. இங்கு ராமரின் மென்மையான உள்ள உணர்வுகளைப் பிரதிபலிக்கும் விடயங்கள் பற்றி இவர் பாடியுள்ளார். எடுத்துக்காட்டுகளாக ராமரின் குழந்தைப் பருவம், ராமனைக் காட்டுக்கு அனுப்புவது குறித்துத் தாய் கோசலை புலம்புதல், லக்ஷமணன் மயங்குதல், பரதனும், ஹனுமானும் சந்தித்தல் போன்றவற்றைக் குறிப்பிடலாம். மத்திய கால பக்தி இலக்கியத்திலே அழகு, மதிப்பு, வலிமை ஆகியன இறைவனின் சிறப்பியல்புகளாகக் கூறப்பட்டுள்ளன. துளசிதாசரின் ராமரில் இம்மூன்று அம்சங்களும் காணப்படுகின்றன. எனினும் கீதா வலியில் கூடுதலாக அழகே இடம் பெற்றுள்ளது. இந்நூலிலும் ஆசிரியர் கவித்திறனும் செம்மையான மொழி நடையும், அணிகளைக் கையாளும் ஆற்றலும் புலனாகின்றன.
மேலும் இவர் எழுதியுள்ள 67 தனி உணர்வுப் பாடல்களின் தொகுப்பாக கிருஷ்ண கீதாவலி அமைந்துள்ளது. இதிலே இவர் ஹிந்தியின் கிளைமொழியான பிரஜவினைக் கையாளும் திறன் வெளிப்படுகின்றது. இதிலே நூலாசிரியர் கிருஷ்ணரின் காதல் லீலைகளைப் பற்றிக் கூறினாலும், தமது இலட்சியத்தைக் கைவிட்டிலர்.
துளசிதாசர் தனிப்பாடல்களாகப் பாடிய பல தோஹாவலி எனும் தொகுப்பில் இடம் பெற்றுள்ளன. இன்று கிடைத்துள்ள பிரதியில் 551 தோஹாக்கள் உள்ளன. இவற்றுட் சில செய்யுட்கள் வைராக்ய சண்டீபனி, ராமசரிதமானசம் முதலியன இவரின் பிறநூல்களிலிருந்தும் எடுக்கப்பட்டவையாகும். இந்நூலிலே சமகால அரசியல் , பொருளியல், சமய சமூக நிலைமைகளும், கவிஞரின் வாழ்க்கை பற்றிய சில தகவல்களும் புலப்படுகின்றன. இதிலுள்ள மிகச் சிறந்த பாடல்கள் சாதகம் எனும் பறவை பற்றியவை. ஞானிகளுக்கும், பக்தர்களுக்குமான பிரிக்க முடியாத விசுவாசமாகிய இலட்சியத்தின் குறியீடாக இப்பறவை விளங்குகின்றது.
இந்துக்கலைக்களஞ்சியம்

பொதுவாக துளசிதாசர் பரந்த சமய சமரச நோக்கு உடையவர். பெரும்பாலும் இந்துசமயத் தெய்வங்கள் அனைவரிடத்திலும் பக்தியுள்ளவர். வாரணாசியிலே (காசியிலே) வாழ்ந்த போது, சிவபிரான் பார்வதி திருமணம் பற்றிப் பார்வதி மங்கலம் எனும் நூலினை இயற்றினார். சிறிய நூலாயினும், பார்வதியின் பிறப்புத் தொடக்கம் சிவபிரானை அவர் திருமணம் செய்யும் வரையுள்ள நிகழ்வுகள் இதில் இடம் பெற்றுள்ளன. காளிதாசரின் குமாரசம்பவத்தைப் பின்பற்றி எழுதப்பட்ட இந்நூலிலே அந்நூலின் சாயல் காணப்படுகின்றது. துளசிதாசரின் முந்திய நூலொன்றான ஜானகிமங்கலத்திற் போல இதிலும் கிராமிய செய்யுட் பண்பு காணப்படுகின்றது. ஹிந்தியிலுள்ள மங்கலமான செய்யுள் மரபிலே பார்வதீ மங்கலம் ஒரு முக்கியமான இடம் வகிக்கின்றது.
இறுதியானதும், ஒரு வகையில் இவருடைய மிக முக்கியமான நூலாகவும் விநயபத்திரிகா விளங்குகின்றது. விநயபத்திரிகா எனில் விண்ணப்பம் அல்லது வேண்டுகோள் எனப் பொருள்படும். பேரரசர்களுக்கும் மேலான பேரரசரான ராமபிரானுடைய சபைக்கு இறுதியான விடுதலை (முக்தி) பெற விரும்பித் துளசி செய்யும் விண்ணப்பம் எனப்பொருள்படும் வகையில் இந்நூல் அமைந்துள்ளது. அவ் அரச சபையினுள்ள உறுப்பினரின் சிபாரிசுகளையும், உதவிகளையும் பெற்று முடிவிலே ராம பிரானின் அனுமதியுடன் தமது விண்ணப்பத்தின் நோக்கமான கருணையைப் பெற்றுள்ளார். இந்நூல் கால, தேச வரையறைகளைக் கடந்துள்ளது. இதிலே நூலாசிரியர் தமது தீய குணங்கள் எனக் கூறுவன உண்மையில் எல்லா மக்களுக்கும் உரியவை. கலியுகம் துளசிதாசரை மட்டுமன்றி மனித வர்க்கம் முழுவதையும் துன்புறுத்துகின்றது. இந்த வகையில் இவர் துன்புறும் கோடிக்கணக்கான மக்களைப் பிரதிநிதிப்படுத்துகிறார்.
துளசிதாசர் வைஷ்ணவ சமயத்தவர். அச்சமய ஒழுக்க நெறிகளிலே முழுமையான நம்பிக்கையுடையவர். அவர் வர்ணாஸ்ரம தர்மத்தினை ஏற்றுக் கொண்டவர்; தெய்வங்கள் அனைவரிலும் பற்றுள்ளவர்; ராமபிரானிடத்து ஒப்பற்ற பற்றுடையவர். இக்கருத்துக்கள் இவரின் நூல்கள் அனைத்திலும் காணப்பட்டாலும், விநயபத்திரிகாவில் இவை நன்கு இடம் பெற்றுள்ளன. பக்தி பற்றிய மிகச் சிறந்த நூல்களில் இதுவும் ஒன்றாகும். தத்துவரீதியிலும் கலைfதியிலும் இது தனிச் சிறப்பு வாய்ந்த ஒன்றாகும். முதிர்ச்சியான இனிய கம்பீரமான மொழி நடையில் இஃது அமைந்துள்ளது. துளசிதாசரின் பக்தி ஆர்வம், கவித்திறன் ஆகியனவற்றின் மிக உச்சகட்டத்தினை இது நன்கு புலப்படுத்துகின்றது.
இவருடைய ராமசரிதமானசம் பல திறப்பட்ட நாடக இயல்பும் கொண்டுள்ள சிறந்த நூலாகும். நூலாசிரியரின் பணிவும், அடக்கமும் நன்கு குறிப்பிடற்பாலன. ராமசரிதமானசத்தின் முன்னுரை குறிப்பிடற்பாலது. காளிதாசர் தமது ரகுவம்ச முன்னுரையிலே தமது கவித்திறனை மிகவும் தாழ்த்திக்
267

Page 298
கூறியுள்ளார். துளசிதாசரும் தமது முன்னுரையில் “எனது மதிநுட்பம் கூர் அற்றது. ஆனால் எனது வேணவா மிகப் பெரிது. தந்தையும் தாயும் தமது சிறிய குழந்தையின் மழலைச் சொற்களை- பிதற்றல்களைக் கேட்டு இன்புறுவது போல நல்லவர்கள் அனைவரும் வரம்பு மீறிய எனது கவிதையை மன்னித்துக் கேட்பார்களாக” என மிக விநயமாகத் தம்மைத் தாழ்த்திக் கூறியுள்ளார். இவருக்குச் சில நூற்றாண்டுகளின் முன் வாழ்ந்த கம்பரும் ராமாயணத்தில் இது போன்றே அவையடக்கத்திலே கூறியுள்ளார்.
மற்றவர்களுக்கு நன்மை செய்வதையே இவர் விரும்பினார் என்பது " மற்றவர்களுக்கு நன்மை செய்வதே மிகச் சிறந்த கடமையாகும். அவர்களுக்கு எவ்வகையினும் தீங்கு செய்தல்
மிகக் கொடிய பாவம்” என வரும் பகுதியாற் புலனாகும்.
கவிதையின் நோக்கம் மக்களுக்கு நன்மை பயப்பதே என்பது “புகழ், கவிதை, செல்வச் செழிப்பு ஆகியன உண்மையிலே பயனளிக்க வேண்டுமாயின், விண்ணுலக ஆறு போல அவை அனைவரின் நன்மைக்கும் இட்டுச் செல்வனவாக இருக்க வேண்டும்” என வருவதால் உணரப்படும். கவிதையின் தரத்தை நிர்ணயிக்கக் கூடியவர் நன்கு கற்ற வாசகர் கேட்பவரே நல்லரசிகர் குறிப்பிட்ட கவிதையை ரசிக்காவிட்டால், கவிஞனின் முயற்சி பலனற்றுப் போகும். எனவே இவர் தமது ராமசரிதமானசத்தினை தொடங்குமுன் தனது ஆக்கம் தகுந்த இலக்கிய வட்டங்களில் மதிக்கப்பட வேண்டுமென வேண்டுகின்றார். “எனது ஆக்கம் பெரியோரின் மதிப்பினைப் பெறும் வகையில் மனமகிழ்ந்து ஆசீர்வாதம் வழங்குவீர்களாக அறிவுடையோரால் (சிறந்த விமர்சகரால்) பாராட்டப்படாத
தூங்கானைமாடம்
இது ஒருவகைக் கட்டட அமைப்பாகும். கடவுள் எழுந்தருளியிருக்கும் கருவறைக்கு (திருவுண்ணாழிகைக்கு) விமானம் என்பது பெயர். இந்த விமானங்களின் வெவ்வேறு விதமான அமைப்பைக் கொண்டு இவற்றிற்கு வெவ்வேறு பெயர் கூறுவர். முக்கியமாகக் கூரையின் அமைப்பைக் கொண்டு இப் பெயர்கள் அமைகின்றது. திருநாவுக்கரசு சுவாமிகள் திரு அடைவுத் திருத்தாண்டகத்தின் ஐந்தாம் செய்யுளில் கோயிற் கட்டட வகைகளின் பெயர்களைக் கூறுகிறார்.
"பெருக்காறு சடைக்கணிந்த பெருமான் சேரும் பெருங்கோயில் எழுபதினோடுஎட்டு மற்றும்
கரக் கோயில் கடி பொழில் சூழ் ஞாழற் கோயில் கருப்பறியல் பொருப்பனைய கொகுடிக் கோயில்
268

ஆக்கம், கவிஞனைப் பொறுத்தமட்டிலே காலத்தை வீணாக விரயம் செய்ததாகவே இருக்கும்” என அவர் கூறியிருப்பது இக்கருத்தினை வலியுறுத்துகின்றது. கவிதை ஆற்றல் இறைவனின் கொடையென இவர் கூறுகிறார். மேலும் ராமநாமம் இன்றிக் கவிதை மிளிராது. எனவே எந்தப் பெரிய புலவராயினும் ராமநாமம் இன்றிப்பாடினால் அந்தக் கவிதை மக்களைக் கவராது
என்பது இவரின் கருத்தாகும்.
புலவன் கையாளும் சொல்லிலும் அதன் பொருளிலுமே கவிதை தங்கியுள்ளது. புலவனின் உள்ளத்திலே கவிதை தோன்றினாலும் அதனைத் தகுந்தவாறு பயன்படுத்தக் கூடிய ரசிகன்/ விமர்சகன் இல்லாமல் அது மிளிராது. இந்த உண்மையினை மணி, மாணிக்கம், முத்து ஆகிய பொருட்களைச் சுட்டிக் காட்டி விளக்குகிறார். இப்பொருட்கள் முறையே நாகபாம்பின் தலை (ஜதிகம்) சுரங்கம், யானை (அல்லது கடல் ஆகியனவற்றிலே ) தோன்றினாலும். இவை தகுந்தவாறு தகைமைவாய்ந்தோராற் பயன்படுத்தப்படாவிடில் சோபிக்க மாட்டா. அதாவது இவை மன்னனின் மகுடத்தில் அல்லது அழகிய பெண்ணினால் அணியப்டும் போது தான் சோபிப்பன. இவ்வாறு ராமசரிதமானசத்திலே கவிதை பற்றிய முக்கியமான அமிசங்கள் சிலவற்றை இவர் குறிப்பிட்டுள்ளார்.
ஹிந்தி மொழியிலுள்ள பெரும் புலவர்களில் ஒருவராகத் துளசிதாசர் திகழ்கின்றார். வட இந்திய பக்தி இயக்கத்திற்கு இவரின் பங்களிப்புகள் மகத்தானவை. ராமசரிதமானசம் இவரின் சமயப்பற்றுக்கும், கவித்திறனுக்கும் சிறந்த சான்றாக என்றும் இலங்கும்.
བ་
IT
இருக் கோதி மறையவர்கள் வழிபட்டேத்தும் இளங் கோயில் மணிக்கோயில் ஆலக்கோயில் திருக்கோயில் சிவனுறையும் கோயில் சூழ்ந்து தாழ்ந்திறைஞ்சத் தீவினைகள் திரு மன்றே”
இப்பாடலிலே சோழன் செங்கணான் கட்டிய எழுபத்தெட்டுக் கோயில்களைக் கூறிய பின்னர் கரக்கோயில், ஞாழற் கோயில், கொகுடிக் கோயில், இளங்கோயில், மணிக்கோயில், ஆலக் கோயில், என்று சில வகையான கோயில்களைக் கூறுகிறார்.
திருநாவுக்கரசு சுவாமிகள் தமிழ்ப் பெயரால் கூறுகின்றதையே சிற்ப நூல்கள் விஜயம், பூரீபோகம், பூரீவிசாலகம், ஸ்கந்த காந்தகம், ஹஸ்தி பிருஷ்டம், கேசரம் என்னும் ஏழு விதமான பெயர்களை வடமொழியிற் கூறுகின்றன. இங்கு பெயர் வேற்றுமையே தவிர பொருள் வேற்றுமை இல்லை.
இந்துக் கலைக்களஞ்சியம்

Page 299
ஆலயக்கோயில் என்று நாவுக்கரசர் சுட்டுவது ஆனைக் கோயில் என்பதன் மரூஉ. சிலர் ஆலமரத்தினால் கட்டப்பட்ட கோயில் என்கிறார்கள். இது ஏற்றுக் கொள்ளக் கூடியது அன்று. ஆலமரத்தினால் கட்டடம் கட்டும் வழக்கம் இல்லை. வேறு சிலர் ஆலமரத்தின் கீழ் அமைந்த கோயில் என்றும் கருதுகிறார்கள். இதுவும் ஏற்புடைய கூற்று அன்று. ஆலக்கோயில் என்பது கோயிற் கட்டட வகைளில் ஒன்று. ஆலக்கோயிற் கட்டடம் சிற்ப சாஸ்திரங்களில் கூறப்படும் கஜபிருஷ்ட விமானக் கோயில் அல்லது ஹஸ்திப் பிருஷ்ட விமானக் கோயில் வகையைச் சார்ந்தது. கஜம், ஹஸ்தி என்னும் சொற்களுக்கு யானை என்பது பொருள். யானையின் முதுகு போன்று இதன் கூரை அமைந்திருப் பதனால் இதற்கு இப்பெயர் ஏற்பட்டது.
திருக்கச்சூர், திருவொற்றியூர், வடதிரு முல்லைவாயில், திருவேற்காடு, திருக்கழுக்குன்றத்து பக்தவத்சல ஈசுவரர் கோயில் திருவானைக்கா முதலியவை ஆலக் கோயில் எனப்படும் கஜபிருஷ்ட விமானக் கோயில்கள் ஆகும். மகாபலிபுரத்துச் சகாதேவ ரதம் என்னும் கோயிலும் மூன்று நிலையுள்ள மாடக் கோயிலாக அமைந்த ஆலக் கோயிலாகும்.
ର
தெய்வயானை
தெய்வயானை, தேவயானை என இரு பெண்கள் புராண இலக்கியங்களில் பேசப்படுகிறார்கள். இவ்விருவரையும் குறித்துக் கந்தபுராணம் உபதேச காண்டம், திருப்பரங்குன்றப் புராணம் பிரமணகவர்த்தம், தேவிபாகவதம், பாகவதம், பாரதம் ஆகிய நூல்கள் மூலம் அறிய முடிகின்றது.
கந்தபுராணத்தில் கூறப்பெறும் தெய்வயானை திருமாலின் திருக்கண்களிலே தோன்றிய அமிர்தவல்லி. இவ்வம்மை சரவணப் பொய்கையில் முருகனை மணமுடிக்கத் தவமியற்றிய போது முருகன் காட்சி தந்து நீ இந்திரனிடம் மகளாக வளர்க என அருள் கொடுத்தார். அவ்வாறே தவத்திலிருந்து நீங்கிய தெய்வயானை இந்திரனுடைய யானையால் வளர்க்கப் பெற்றாள். இந்திரனின் குழந்தையாக, தெய்வயானையால் வளர்க்கப் பெற்றமையால் தெய்வயானை எனப் பெயர் பெற்றாள் என்பர். சூரபன்மன் ஆகியோரை போரில் வெற்றிபெறச் செய்த முருகப் பெருமானுக்கு தன் அன்புக் காணிக்கையாக இந்திரன் திருப்பரங்குன்றத்தில் தெய்வயானையைத் திருமணஞ் செய்வித்தான்.
பாரதம், பாகவதம் ஆகிய நூல்களில் தேவயானை சுக்கிராச்சாரியாராகிய அசுர குருவின் மகளாய்ப் படைக்கப்படுகிறாள். இவள் மிருதசஞ்சீவினி மந்திரம் அறிந்து
இந்துக் கலைக்களஞ்சியம்

கி.மு. 200முதல் இந்தியா எங்கும் தூங்கானை வடிவில் கட்டிடங்கள் அமைக்கப்பட்டிருந்தமைக்கு வடநாட்டில் பாரூத், சாஞ்சி தூபிகளைச் சுற்றியுற்ற கல்வேலிகளில் செதுக்கப்பட்ட புடைப்புச் சிற்பங்கள் மூலமாகவும், ஆந்திராவில் அமராவதி நாகார்ச்சுன கொண்டா தூபிகளின் புடைப்புச் சிற்பங்களின் மூலமாகவும் அறியலாம்.
ஆந்திராவில் தூங்கானை மாடக் கோயில்களை பெளத்த சமயத்தார் மட்டுமன்றி இந்துக்களும் கட்டினர். கி.பி 3-4 ஆம் நூற்றாண்டுகளில் ஆந்திராவில் ஆட்சி புரிந்த இகூடிவாகு மரபினர் நாகார்ச்சுன கொண்டாவிலும் அதனைச் சுற்றிப் பல இடங்களிலும் சிவன், திருமால், முருகனுக்குத் தூங்கானை மாடக் கோயில்கள் எழுப்பினர். மேலும் ஆந்திராவிலும், கர்நாடகத்திலும் கி.பி 4 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட தூங்கானை வடிவப் பெளத்த சைத்தியங்கள் பிற்காலத்தில் இந்துக் கோயில்களாக மாற்றப்பெற்றன. மேலைச் சாளுக்கியர் கி.பி 5 ஆம் நூற்றாண்டில் ஐகொளே என்னுமிடத்திற் கட்டிய துர்க்கை கோயில் தூங்கானைமாட வகையைச் சார்ந்தது. (நி.நி.)
கொள்ளுதற் பொருட்டு தன் தந்தையிடம் சிஷ்யனாக வந்த தேவகுருவின் மகனான கசனிடம் அன்பு கொண்டவள். கசன் சுக்கிராச்சாரியாரிடம் பிரமச்சரியம் காத்து சிஷ்யனாக இருந்த போது அவன் குருவிடம் சஞ்சீவினி வித்தையை அபகரித்துப் போய்விடுவான் என நினைத்த அசுரர்கள் அவனைத் துண்டு துண்டாக வெட்டி நாய்களுக்கு இரையாக்கினர். அவன்வீடு திரும்பாததை அறிந்த தேவயானை “பிரபுவே சூரியன் அஸ்த்மித்தான். உம்முடைய அக்கினி ஹோத்திரமும் முடிந்துவிட்டது. இன்னும் கசன் வீடு வந்து சேரவில்லை. அவனுக்கு ஏதோ ஆபத்து நேர்ந்திருக்க வேண்டும். அவன் இல்லாமல் என்னால் வாழ முடியாது” என வேண்ட, தந்தையும் சஞ்சீவினி வித்தையைப் பிரயோகித்து இறந்து போனவனை வா என்று அழைத்தார். அவனும் நாய்களின் உடல்களைப் பிளந்து கொண்டு வெளியில் வந்தான். அசுரர்கள் அவனைத் தொடர்ந்து கொலை செய்து கொண்டேயிருந்தனர். இதனால் சுக்கிராச்சாரியாரின் உடலுக்குள் கசன் சென்று விட்டான். இதனால் இக்கட்டான நிலையினை அடைந்த சுக்கிராச்சாரியார், மகள் தேவயானையிடம் 'தான் சஞ்சீவினி மந்திரத்தை உச்சரித்தால் தனது வயிற்றைக் கிழித்துக் கொண்டு வெளியில் கசன் வந்துவிடுவான். ஆனால் எனது உயிர் போய்விடும்” என்றார். அதற்கு அவள் நீங்கள் இருவரும் எனக்கு வேண்டும் என்றாள். அவனை உயிருடன் வெளிவரச் செய்வதற்கும் தானும் இறவாமல் இருப்பதற்கும் ஒரே வழி கசனுக்கு சஞ்சீவினி
269

Page 300
மந்திரத்தை உபதேசிப்பதுவே என எண்ணி அவனுக்கு அம் மந்திரத்தை உபதேசித்தார். கசனும் உயிருடன் வெளிவந்தான். சுக்கிராச்சாரியார் வயிற்றில் இருந்து வெளிவந்தமையால் கசன் தேவயானைக்கு உடன் பிறந்தவனானான். பின் அவளே அம்மந்திரம் கசனுக்கு பலியாதிருக்குமாறும் சாபமிட்டாள்.
தேவயானையும் அசுர ராஜ கன்னிகைகளும் குளத்தில் நீராடிய போது சர்மிஷ்டை என்பவள் இவளது ஆடையை எடுத்து அணிந்து கொண்டாள். இதனால் தேவயானை கோபமடைந்து அவளைக் கடிய, சர்மிஷ்டை அவளைக் கிணற்றில் தள்ளிவிட்டு, சென்று விட்டாள். நீர் குடிப்பதற்காக யயாதிச் சக்கரவர்த்தி கிணற்றடிக்கு வந்தார். கிணற்றுக்குள் தேவயானையைக் கண்டதும் “நீ யார்? எப்படி விழுந்தாய்’ என வினவி அவளைக் கையில் பிடித்து வெளியேற்றிவிட்டான். அதற்கு தேவயானை “பிராமணப் பெண்ணுடைய வலது கையைப் பிடித்தீர். நீர் சாந்தியும் சக்தியும் கீர்த்தியும் பெற்றவராகக் காணப்படுகிறீர். யாராக இருந்தாலும் நீங்கள் தான் எனக்குப் புருஷன்” எனக் கூறினாள். அதற்கு யயாதி ‘நான் சத்திரியன் நீ பிராமணப் பெண்; உன்னுடன் எனக்கு எப்படி விவாகம் நடக்கும்” என்று கூறி மறுத்து சென்றுவிட்டான். தேவயானையும் யயாதியும் பின்னர் சந்தித்து இருவரும் முறைப்படி திருமணம் செய்து கொண்டனர். இவர்கள் இன்பமாக வாழும் காலத்தில் விருவுபர்மனின் மகளாகிய சர்மிஷ்டை இவர்களுக்குத் தொண்டு செய்பவளாக இவர்களுடன் வாழ்ந்து வந்தாள். அவள் யயாதியிடம் விருப்பம் கொண்டு மணம் முடிக்கும்படி கேட்க, அவனும் அதற்குட்பட்டு அவனை மணமுடிக்கின்றான், இதனை அறிந்த தேவயானை தகப்பனிடம் கூறி அவனை மூப்படையச் செய்தாள். யயாதிக்கும் தேவயானைக்கும் ஐந்து குழந்தைகள் இருந்தனர் என இந்நூல்கள் மேலும் கூறிச் செல்கின்றன.
( இ. 任。)
தெலுங்கு
இந்தியாவிலே நிலவுகின்ற திராவிடமொழிகளிலே தெலுங்கு ஒரு பிரதான மொழியாகும். ஆந்திர மாநிலத்திற்குச் சிறப்பான மொழியாக இது விளங்குகின்றது. இம் மொழி பேசும் மக்களில் ஒரு சாரார் தமிழ் நாட்டிலும், இந்தியாவின் பிற மாநிலங்கள் பலவற்றிலும், இந்தியாவுக்கு வெளியே பல நாடுகளிலும் குறிப்பிட்ட தொகையினராக வாழுகின்றனர். இம் மொழி நீண்ட காலமாக நிலவி வந்தாலும், சுமார் கி.பி பத்தாம் நூற்றாண்டு தொடக்கமே இலக்கியவளம் கொண்டமொழியாக இது திகழ்கின்றது. ஆனால் நிலப்பரப்பிலும், மக்கள் தொகையிலும் திராவிட மாநிலங்களில் இதுவே முதன்மையிடம் வகிக்கின்றது. இது தெலுங்கு, திரிலிங்கமு, ஆந்திரமு எனவும் அழைக்கப்படுகின்றது. ஆனால் தெனுகு என்பதே இதன் பழைய பெயர் என்பது கி.பி பதினோராம் நூற்றாண்டிலே நன்னையாவால் எழுதப்பட்ட மகாபாரதத்தின் மூலம் அறியப்படுகின்றது. 'தெலுங்கு எனும் சொல் 'திரிலிங்கமு' எனும் வடமொழிப்பதம்
27O

மூலமாக வந்த தெனவும் கருதப்படுகின்றது. வடமொழியில் திரிலிங்கமு' எனும் பதம் ஆந்திராவிலுள்ள திராட்சாராமம், பூரீசைலம், பூரீகாளஹஸ்தி ஆகிய மூன்று புனித இடங்களிலுள்ள சிவலிங்கங்களையும் குறிக்கும். ஆந்திரமு (தமிழில்ஆந்திரா / ஆந்திரம்) நாட்டையும், மொழியையும் குறிக்கும் வடமொழிப்பதமாகும்.
தமிழ் இனிமையான மொழி எனக் கூறப்படுவதுபோலத் தெலுங்கும் இனிமையானது எனக் கூறப்படுகின்றது. தெலுங்கு அகராதி ஒன்றினைத் தொகுத்த ஹென்றி மாரிஸ் என்பவர் திராவிட மொழிகளில் இனிமையானதும், சங்கீதம் போன்றதும் தெலுங்கு மொழியே என்கிறார். எழுத்தறிவு இல்லாதவனுக்குக் கூடத் தெலுங்கின் ஒலி இனிமையாக இருக்கிறது எனக் கூறியுள்ளார். திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணத்தை எழுதிய கால்ட்வெல் “திராவிடமொழிகளிலே தமிழுக்கு அடுத்த நிலையிலே தெலுங்கு உள்ளது. ஆனாலும் இனிமையிலே தெலுங்குக்கே முதலிடம்” எனக் கூறியுள்ளார். மகாகவி பாரதியாரும் சிந்துநதிக் கரையிலே எனத் தொடங்கும் தேசபக்திப் பாடலிலே “சுந்தரத் தெலுங்கினிற் பாட்டிசைத்து” எனக் குறிப்பிட்டுள்ளார்.
தெலுங்கு மொழி பேசப்படும் ஆந்திர மாநிலத்தையும், அதற்கு வடக்கிலும், வடமேற்கிலும் உள்ள பல பிரதேசங்களை முற்காலத்தில் ஆட்சி செய்த சாதவாஹனர் அல்லது ஆந்திர மன்னர் பிராகிருத மொழியையே சபை மொழியாகப் பயன்படுத்தினர் என்பது அவர்களின் கல்வெட்டுக்களாலே நன்கு புலப்படும். இவைகளிலே வடமொழிச்சாயலும் காணப் படுகின்றது. அதே வேளை இடப்பெயர்களும், மானிடப் பெயர்களும் தெலுங்கு மூலத்தைக் கொண்டிருப்பது கவனித்தற்பாலது. பிராகிருதம் அரசமொழியாக இருந்தாலும் தெலுங்கும் உபயோகத்தில் இருந்தது என்பது இதன் மூலம் அறியப்படும். பிராகிருத மொழியிலே பழையகாலத்தில் எழுதப்பட்ட எழுநூறு காதற்பாக்களின் தொகுப்பாகிய காலாசப்த சதீயிலும் தெலுங்குச் சொற்களும், கோதாவரிப் பிரதேச மகளிர் பற்றிய குறிப்புக்களும் உள்ளன.
தெலுங்குமொழி இலக்கிய வரலாற்றில் கி.பி 100 வரை பிராகிருதச் செல்வாக்கும், கி.பி.1100 - 1900 வரை வடமொழிச் செல்வாக்கும் கி.பி 1900 தொடக்கம் ஆங்கிலேயரின் செல்வாக்கும், நவீனப் போக்கும் பொதுவாக நிலவிவந்துள்ளன எனக் கூறப்படுகின்றது. ஆனால் பிராகிருத செல்வாக்கு நிலவிய காலத்தில் வடமொழிச் செல்வாக்கும் ஒரளவாவது ஏற்பட்டு விட்டது.
இந்திய மொழிகளில் அயல் மொழிச் சொற்களைக் கூடுதலாக ஏற்றுக்கொள்ளும் மொழி தெலுங்கு எனவும், இதனால் தான் இது இந்தியாவிலே பெரும் பான்மையோர் பேசும் ஹிந்தி மொழியுடன் விஞ்ஞானம் மருத்துவம், பொறியியல் போன்ற
இந்துக் கலைக்களஞ்சியம்
al

Page 301
துறைகளிலே போட்டியிடக் கூடியதாக உள்ளது எனவும் கருதப்படுகிறது. ஆனால் வடமொழிச்சொற்கள், வினைச்சொல், வினையெச்சம், பெயர்ச் சொற்கள், பெயரெச்சம் போன்ற உருவங்களும் தெலுங்கிலே பயன்படுத்தப்பட்டு வந்துள்ளன. ஹிந்தி வடமொழித் தொடர்புள்ளமையாலும் மேற்குறிப்பிட்ட தன்மை ஏற்பட உதவியிருக்கலாம்.
கி.பி 11ஆம் நூற்றாண்டிலே வாழ்ந்த நன்னையாவே தெலுங்கில் முதற்கவி எனப் போற்றப்படுகிறார். அவரை முதற் கவி என அழைத்தாலும், அவருக்கு முன்பே சிலகவிஞர்கள் இருந்திருப்பார்கள் எனக் கூறப்படுகின்றது. ஆனால் அவர்களைப் பற்றியோ அவர்களின் ஆக்கங்கள் பற்றியோ அறிய முடியாதுள்ளது. நன்னையா தெலுங்கிலும், சமஸ்கிருதத்திலும் சிறந்த விற்பன்னர். இக்காலத்தில் ஆந்திரா நாட்டில் ஆட்சிபுரிந்த கீழைச் சாளுக்கிய மன்னர்கள் தெலுங்கை அரச மொழியாக ஆதரித்தனர். அவர்களின் ஆதரவிலே தெலுங்கு நன்கு வளர்ச்சியுற்றது. சமகால அரசரான ராஜராஜ நரேந்திரன் நன்னையாவை நன்கு ஆதரித்தார். அரசருடைய வேண்டுகோளின் படி, நன்னையா வடமொழி மகாபாரதத்தைத் தழுவி தெலுங்கில் அதனை எழுதத் தொடங்கினார். மகாபாரதத்தின் முதலிருபர்வங்களையும் ஆரண்ய பர்வதத்தின் ஒருபகுதியையும் மட்டுமே அவர் எழுதினார். நன்னையா கவிதையும் உரைநடையும் கலந்த (சம்பு) நடையில் எழுதினார். பிற்காலக் கவிஞர்கள் வடமொழிப் புராணங்களை மொழி பெயர்க்கும் போது இந்நடையைப் பின்பற்றினர்.
நன்னையா கதை சொல்லுவதிலும் திறமை பெற்றிருந்தார். அவர் கதை கூறும் பாங்கு சீராகவும், தெளிவாகவும் இருக்கும். படிப்பவரின் மனதைக் கவரும் பாங்கில் அமைந்துள்ளது. அவரது நடையில் வடமொழிச் சொற்களும் வேறு சொற்களும் இருந்தாலும் அவை இனிமையாக உள்ளன. எனவே இவரது கதைகளை வாசகர்கள் விரும்பிக் கற்கின்றனர்.
நன்னையா ஆந்திர சப்த சிந்தாமணி எனும் தெலுங்கு இலக்கணநூலை வடமொழியில் எழுதியதாகக் கூறப்படுகின்றது. இதன் ஆசிரியர் பற்றிக் கருத்து வேறுபாடுகளிருப்பினும் இது ஒரு முக்கியமான நூலே. இதிலுள்ள சூத்திரத்திலே மொழி ஒரு ஒடைக்கு ஒப்பிடப்பட்டுள்ளது. மொழி அசைவற்றது அன்று, சுறுசுறுப்பானது. ஒடும் நதியில் நீர்வருவது போல மொழி வளரவளரப் புதுப்புதுச் சொற்களும் இடம் பெறும் என்பதே இதன் கருத்தாகும்.
நன்னையாவின் காலத்திலே வாழ்ந்தவர்களில் கன்னடம், பிராகிருதம், பைசாசி உட்பட எட்டு மொழிகளிலே தேர்ச்சி பெற்ற அறிஞரான நாராயணபட்டர் குறிப்பிடத்தக்கவர். இவர் நன்னையா மகாபாரதம் எழுதுவதற்கு உதவி செய்தார் எனக் கூறப்படுகின்றது. நன்னையாவின் பின் ஏறத்தாழ 200 ஆண்டுகள் கழிந்த பின்னரே, திக்கனா என்பவர் விராடபர்வதத்
இந்துக் கலைக்களஞ்சியம்

திலிருந்து தொடங்கி மகாபாரதத்தை எழுதி முடித்தார். திக்கனாவின் நூல்களை நோக்கும் போது, அவர் ஒரு சிறந்த கவிஞரும், நாடகாசிரியரும் என்பது புலப்படும். இவருடைய நூல்களைப் படிக்கும்போது, உயிரோட்டமுள்ள ஒரு நாடகத்தைப் பார்ப்பது போன்ற உணர்வு ஏற்படும் எனக் கூறப்படுகிறது. தமக்கு முற்பட்ட நன்னையா போன்று இவரும் அப்படியே மொழிபெயர்ப்புச் செய்திலர். எடுத்துக்காட்டாக 700 செய்யுட்களிலுள்ள பகவத்கீதையின் சாரத்தை 2அல்லது 3 செய்யுட்களில் எடுத்துக்கூறியுள்ளார். ஆனால் கீதை பிற்காலத் திலேதான் சேர்க்கப்பட்டதென்பது இன்றைய ஆய்வாளரின் கருத்தாகும். நுணுக்கமான வர்ணனைகள், சிறந்த பாத்திரப் படைப்பு, நாடகமுறையைப் பின்பற்றிய கவிதைப் பெருக்குப் போன்றவை. திக்கனாவின் தெலுங்குப் பாரதத்தை ஒரு சிறந்த இலக்கியமாக்கிவிட்டன எனக் கூறப்படுகின்றது.
நன்னையா விட்டுச்சென்ற மூன்றாம் (ஆரண்ய பர்வத்தை) எர்ரனா எழுதிமுடித்தபின் தெலுங்கு மகாபாரதத்தின் 18 பகுதிகளும் கிடைத்துள்ளன. இவ்வாறு நன்னையா, திக்கனா, எர்ரனா ஆகிய மூவரும் மகாபாரதத்தினை எழுதி முடித்தனர். இவர்கள் முப்பெருங்கவிஞர்கள் என அழைக்கப்பட்டனர். முன்னைய சென்னை மாநில ஆஸ்தான கவிஞராக விளங்கிய செள்ளபிள்ளை வெங்கடசாஸ்திரி கூறியதுபோல, தெலுங்கு மகாபாரதம் இன்றைய தெலுங்குக் கவிஞர்களின் வேதம் எனலாம். "கேட்க வேண்டுமெனில் மகாபாரதத்தைக் கேட்க வேண்டும். சாப்பிட வேண்டுமெனில் கரகர வென்றிருக்கும் வடை சாப்பிடவேண்டும்” எனும் பழமொழி தெலுங்கிலும் உள்ளது. தெலுங்கு மகாபாரதம் இன்றும் அதைப் பேசுகின்ற மக்களிடையே வாழ்ந்து கொண்டிருக்கிறது.
திக்கனாவின் சிறந்த நூல் மகாபாரதம் என்ற போதிலும், அவரது முதல் நூல் நிர்வாசன உத்தர ராமாயணம். இவருக்கு முன்கவிஞர்கள் கவிதையும் உரைநடையும் சேர்ந்த நடையில் எழுதிய போதிலும், இந்நூல் தொடக்கமுதல் இறுதிவரை கவிதையிலேயே எழுதப்பட்டுள்ளது. இதிலே ராமனின் பிற்காலத்திய கதை எடுத்துக் கூறப்படுகின்றது. மூலத்திலிருந்து விலகி ஒரளவு சுதந்திரமாக இவர் எழுதியுள்ளார் எனக் கருதப்படு கின்றது. ராமனின் மரணம் குறித்து இதில் ஒன்றும் கூறப்படாமை மூலத்திலிருந்து ஒரு முக்கிய மாற்றமாகும். இந்நிகழ்ச்சி மூலத்திலேயே பிற்காலத்திய சேர்க்கை எனக் கூறப்படுவதும் இதற்கு ஒரு காரணமாக இருக்கலாம். திக்கனா ஒரு சிறந்த கவி என்பதில் ஐயமில்லை. அவர் கவி பிரமர் எனப் போற்றப்படுவது சாலப் பொருத்தமே.
எர்ரனாவும் சிறந்த கவியே. நன்னையாவிட்டுச் சென்ற மகாபாரதத்தை முடித்தமையால் மட்டும் அவர் புகழ் ஓங்கவில்லை. ஹரிவம்சம், நிருசிம்ம புராணம் முதலிய முக்கியமான நூல்களையும் அவர் எழுதியுள்ளார். வருணனைகளிலிவரின் கவிதைகளில் மிகுதியாகக் காணப்படும். அவருக்குப் பிரபந்த
271

Page 302
பரமேஸ்வரர் என்ற பெயரும் உண்டு. எர்ரனாவின் சமகாலத்த வர்களிற் பாஸ்கரரும், நாசன சோமநாதரும் குறிப்பிடற்பாலர். எர்ரனா எழுதிய அதே நூல்களை இக்கவிகள் எழுதமுற்பட்டனர். எர்ரனா எழுதியதாகக் கூறப்படும் ராமாயணமே தெலுங்கு மொழியில் எழுந்த முதலாவது ராமாயணமாகும். ஆனால் இது இன்று கிடைக்கவில்லை. பாஸ்கரர் மாணவர்களோடும் நண்பர்க ளோடும் சேர்ந்து எழுதியது தான் பாஸ்கர ராமாயணம். இது 'சம்பு நடையில் எழுதப்பட்ட சிறந்த நூலாகும். சோமநாதர் உத்தரஹ திவம்சத்தை எழுதினார். சிலவிமர்சகர்கள் சோமநா தருடைய நூல் எர்ரனாவின் நூலிலும் சிறந்ததாகக் கருதுகின்றனர்.
கோனபுத்தாரெட்டி எழுதிய ரங்கநாத ராமாயணம் பாஸ்கர ராமாயணத்திற்கு முற்பட்டது. வால்மீகி ராமாயணம் உட்பட ஏனைய ராமாயணங்களில் இல்லாத சில நிகழ்ச்சிகள் இதில் உள்ளன. இசை அமைத்துப் பாடும் வகையில் இந் நூல் அமைந்துள்ளது. இன்றும் இந் நூலுக்கு மக்களிடையே செல்வாக்கு உள்ளது. பொம்மலாட்டங்களில் இந்நூலிலிருந்து சிலபகுதிகள் பாடப்படுகின்றன. ராவணனையும் அவனது குடும்பத்தினரின் நல்ல குணாதிசயங்களையும் அறிந்து கொள்ள விரும்புவர் ரங்கநாத ராமாயணத்தைப் படிக்க வேண்டும் என அறியப்படுகிறது.
கி.பி. 12, 13ம் நூற்றாண்டுகளிலே தோன்றிய தெலுங்கு இலக்கிய நூல்கள் பெரும்பாலும், அல்லது முற்றிலுமே சைவசமயச்சார்பானவை. எனவே இக்காலம் சைவப் புலவர் காலம் எனவும் அழைக்கப்படுகின்றது. இக்காலகட்டத்தில் நன்னசோடன் அல்லது நன்னி சோடன் எனும் அரசன் இருந்தான். இவர் சிறந்த கவிஞர். 12 பகுதிகளைக் கொண்ட குமாரசம்பவம் எனும் நூலை இவர் எழுதினார். இந் நூல் பெரிதாயினும், இதனைப் படிப்பவரின் ஆவலை இது தூண்டும். பிற்காலத்திலே தோன்றிய பிரபந்தம் எனும் கவிதையிலே வர்ணனைகள் உள்ளன.
நன்னசோடனின் கருத்துப்படி நல்லகவிதை என்பது 18 வகையான வர்ணனைகளையும், நவரசங்களையும், 36 அலங்காரங்களையும் கொண்டதாக விளங்க வேண்டும். தரமான, தரமற்ற கவிதைகள் பற்றியும் அவர் குறிப்பிட்டுள்ளார். “நல்லகவிதை ஒரு வில்லாளியின் அம்பைப் போலப் படிப்பவனின் இதயத்தைத்துளைக்க வேண்டும். கேட்பவர் தலை அசைக்காமல் இருந்தார்களாயின் அது நல்ல கவிதை ஆகாது” என இவர் கூறியுள்ளார். கர்ம மார்க்கம் பற்றிக் கூறுகையில், "ஒருவன் சிவபெருமானைத் துதிக்கும் போது அவனது எண்ணம், சொல், செயல் எல்லாம் ஒருங்கிணைந்து துதிக்கவேண்டும். கடவுளிலிருந்து, தான் வேறு அல்லன் என்பதைத் தெளிவாக அறிந்து கொள்ள வேண்டும். முக்தி பெறுவதற்கு இதுவே வழி. கர்ம வழியாக நான் முக்தி பெறுவேன் என்று ஒருவன் கூறினால் அது மாயையாகும்” எனக் கூறியுள்ளார்.
272

மல்லிகார்ச்சுன பண்டிதாராத்ய எனும் புலவர் 500 பாடல்களைக் கொண்ட சிவதத்துவ சாரமு எனும் நூலை எழுதியுள்ளார். இவரும் ஒரு சிறந்த கவியாயினும் இவருடைய நூல்கள் இன்று கிடைக்கவில்லை. பிராமணர்கள் அல்லாதவர் கூடச் சிவபெருமானை வணங்கினால் 'பிராமணர்களிலும் பார்க்க அவர்கள் சிறந்தவர்கள்; சிவபிரானை வணங்காத பிராமணனோ பிறசாதியினரைவிடத் தாழ்ந்தவனே” என அவர் ஒரு பாடலிலே குறிப்பிட்டுள்ளார். சர்வேஸ்வரசதகம் எனும் நூலை 1242லே எழுதியவராகிய ஆதாவாக்குல அன்னமய்யா ஒரு சிறந்த சைவக்கவிஞர். பக்திச் சுவை ததும்பும் இவரின் பாடல்கள் படிப்பதற்கு இன்பம் பயப்பன. “இறைவனை வணங்குவதை விடப் பக்திமான்களை வணங்குவதே சாலச்சிறந்ததாகும், சிறந்த பக்தர்களின் பாதங்களிலே பட்ட நீரைத் தெளித்துக் கொள்ளுவது பல புண்ணிய நதிகளின் நீரைத் தெளித்துக் கொள்ளுவதற்கு ஈடாகும், உண்மையான பக்தர்களைப் பார்த்தாலே ஒருவன் செய்த பாவங்கள் நீங்கும். சிறந்த புண்ணிய இடங்களை விடப் பக்தர்களின் உறைவிடமே சிறந்தது” என அவர் கூறியுள்ளமை ஏறத்தாழச் சமகாலத்திலே தமிழிலே எழுதப்பட்ட பெரிய புராணக்கருத்துக்களை நினைவூட்டுகின்றது.
பால்குலிகி சோமநாதர் ஒரு சிறந்த கல்விமானும் கவிஞருமாவார். வீரசைவத்திலே மிகுந்த பற்றுடையவர். தெலுங்கு, கன்னடம், தமிழ் முதலிய மொழிகளிலுள்ள உள்ளத்தை உருக்கும் சிவனடியார்களின் கதைகளிலிருந்து, தனது கவிதைக்குரிய கருப்பொருளையும், வடமொழியிலுள்ள புராணங்கள் போன்றவற்றிலிருந்தும், அக்காலச் சிவனடி யார்களின் வாழ்க்கையிலிருந்தும் ஆன்மீக உணர்ச்சியையும் பெற்று அனைவரும் விளங்கக் கூடிய எளிய 'ஜானு தெலுகு” நடையில் எழுதினார். வடமொழிச்சொற்களை அதிகம் பயன்படுத்தியபடியால் அவரின் கவிதை சில இடங்களில் கடினமாகவும் அமைந்துள்ளது. ஆனால் வடமொழி யாப்பு முறைகளைப் பயன்படுத்தாமல் தெலுங்கு மொழிக்கே உரிய துவிபத (ஈரடி) என்ற சீரைப்பயன்படுத்தியுள்ளார். இஃது இசைக்கு ஏற்றதாக அமைந்துள்ளது. முதன் முதலாகத் தெலுங்குக்கே உரித்தான ஈரடிச் சீரினை இலக்கியத்திற்குப் பயன்படுத்திய பெருமை இவரையே சாரும்.
வீரசைவசமயத்தை நிலைநாட்டிய பசவரின் பக்தராகச் சோமநாதர் விளங்கினார். விரிஷாதிபசதகம், பசவ புராணம், பண்டிதராத்ய சரித்திரம் உட்பட இருபதுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். கன்னடத்திலும், வடமொழியிலும் சில நூல்களை எழுதியுள்ளார். 108 பாடல்களைக் கொண்ட விருஷாதி ப்சதகம் பழைய சதகங்களில் ஒன்றாகும். வீரசைவத்தை நிலை நாட்டிய பசவரின் கதையைக் கவிதை வடிவிலே கூறும் பசவ புராணம் ஒரு பெரிய நூல். இதில் 12,542 வரிகள் உள்ளன. இதிலே 63 நாயன்மார்களின் கதையும் இடம் பெற்றுள்ளது. பண்டிதராத்ய சரித்திரம் எனும் நூலிலே சைவ சமயத்தவரான மல்லிகார்ச்சுன பண்டிதாராத்யரின் நூல்கள், அவரின் வாழ்க்கை ஆகியன
இந்துக் கலைக்களஞ்சியம்

Page 303
விவரிக்கப்படுகின்றன. இது 23, 620 வரிகளைக் கொண்ட மிகப் பெரிய நூல்.
இவர் பரந்த நோக்கும், தெலுங்கு மொழிக்கே உரித்தான யாப்பில் எழுதவேண்டும் என்ற கருத்துமுடையவர். ஒரு மனிதாபிமானி சாதி, மத வேறுபாடுகளைப் பொருட்படுத்திலர். உண்மையான சிவபக்தன் எந்த வகுப்பினைச் சேர்ந்தவனாக இருப்பினும் அவனை அவர் நன்கு மதித்தார். பசவ புராணம் எனும் நூலிலே மீனவரான ஆதிபர்தா, சலவைத் தொழிலாளியான மாசய்யா, குயவரான குண்டய்யா, மற்றும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் உரிய இடத்தை அளித்துள்ளார்.
கி.பி. பதினைந்தாம் நூற்றாண்டு தெலுங்கு இலக்கிய வரலாற்றிலே மிக முக்கியமான காலங்களில் ஒன்றாகும். இந்த நூற்றாண்டிலே தான் புகழ் பெற்ற பூரீநாதரும், போதனரும் தோன்றினர். மேலும், இக்காலத்தில் வடமொழி நூல் பெயர்ப்புகள் மட்டுமன்றி, தெலுங்கு நாட்டையும், மக்களையும் பிரதிபலிக்கும் பல கவிதைகளும் தோன்றின. இக்காலகட்டப் பகுதியிலே சிறப்புற்றிருந்த பூரீ நாதர் ஒரு சிறந்த தெலுங்கு இலக்கிய கர்த்தா. முதலாவது தெலுங்குச்சக்கரவர்த்தி இவரே, எனக் கூறப்படுகின்றது. அக்காலத்தில் ஆட்சிபுரிந்த ரெட்டி மன்னர் இவரைப் போற்றி ஆதரித்தனர்.
பூரீநாதர் வடமொழியிலும் தெலுங்கிலும் சிறந்த அறிஞர். அரசவைக்கு வரும் கவிஞர்களையும், அறிஞர்களையும் பரிசோதிக்கும் வித்யாதிகாரி எனும் உயர் பதவியை வகித்துவந்தார். தெலுங்கு மாநிலம் அடங்கலும் சுற்றியுள்ளார். அவ்வப்போது மக்களின் வாழ்க்கையைப் பிரதிபலிக்கும் பாடல்களைப் பாடியுள்ளார். பல அரசவைகளுக்குச் சென்று அங்குள்ள அறிஞர்களைப் போட்டியிலே வென்றுள்ளார். பீம கண்டம், ஹரவிலாஸம், சிருங்காரநைஷதமாகியவை இவருடைய பிரதான நூல்கள். ஆந்திரதேசத்திலுள்ள பீமேஸ்வரம் எனும் புண்ணிய தலத்தின் முக்கியத்துவத்தினை விவரிக்கும் பீமகண்டம் எனும் நூலில் இவரின் தேசப்பற்று புலப்படுகின்றது. அரசர்கள், மந்திரிகள், முதலியோரிடமிருந்து இவர் பலவிருதுகள் பெற்றுள்ளார். கனகாபிஷேகம், தங்கத்தாற் குளித்த பெருமையும் இவருக்கு உண்டு. ஆனால் ரெட்டி அரசர்களின் வீழ்ச்சிக்குப் பின்னர் இவர் மிகவும் கஷ்டப்பட்டார் என அறியப்படுகின்றது.
சிறுத்தொண்டநம்பி உட்படச் சிவபக்தர்களைப் பற்றிய கதைகளைக் கொண்டதாக ஹரவிலாசம் திகழ்கின்றது. தெலுங்கு இலக்கியத்தில் இதுவும் மிக முக்கியமானதாகும். பூரீநாதரின் கவிதைகளில் இதுவே சிறந்ததென ஒரு சாரார் கருதுவர். நளன் - தமயந்தி கதையைக் கூறும் சிருங்கார நைஷதம் பூரீஹர்ஷரின் நைஷதீயமெனும் கடினமான வடமொழிப் பெருங்காப்பியத்தின் மொழிபெயர்ப்பாகும். மேலும் பல்நாடி வீரசரித்திரம் என்ற நாட்டுப் பாடலையும், கிரீடாபிராமம்
இந்துக்கலைக்களஞ்சியம்

என்ற வீதி நாடகத்தையும் இவர் எழுதியதாகக் கூறப்படுகின்றது. பல் நாடி சரித்திரம் மஞ்சரீதிவிபத் எனும் யாப்புவகையில் எழுதப்பட்டுள்ளது. இஃது ஒரு மூல நூல். மக்களுடைய செல்வாக்குப் பெற்றதாகும். கிரீடா பல் நாடு எனுமிடத்தில் ஆட்சி செய்த இரு மன்னர்களுக்கிடையிலே நடைபெற்ற போர் பற்றி இந் நூல் விவரிக்கின்றது. மகாபாரதம் போல எழுதப்பட்டிருப்பதால் இது “பல் நாட்டின் மகாபாரதம்” எனவும் அழைக்கப்படும். மகாபாரதத்தைப் போலச் சகோதரர்களுக் கிடையில் நடைபெற்ற போரை விவரிப்பதாலும் இப்பெயர் ஏற்பட்டிருக்கலாம். கிரீடாபிராமம் தெலுங்கில் வெளிவந்த முதல் நையாண்டி நூல். கி.பி 15ஆம் நூற்றாண்டு ஆண்டு தெலுங்குச் சமூக சரித்திரத்தை அறிவதற்கு இது மிகவும் துணையாக உள்ளது. பண்டிதரும் பாமரரும் விளங்கிக் கொள்ளும் வகையில்
எழுதிய பூரீநாதர் நன்கு குறிப்பிடற்பாலர்
தெலுங்கு மொழியிலுள்ள பாகவதத்தின் ஆசிரியரான போதனர், பூரீநாதர் காலத்திலே வாழ்ந்த முக்கியமான ஒருகவி, இவரின் பாகவதம் ஜனரஞ்சகமானது. தெலுங்கு இலக்கியத்திற்கு இஃது ஒரு முன் மாதிரியான நூல் எனவும் கூறப்படுகின்றது.
பண்டிதர் மட்டுமன்றிப் பாமரரும் படித்து இன்புறத்தக்க வகையில் இந்நூல் அமைந்துள்ளது. இதிலே கஜேந்திர மோட்சம், ருக்மிணி கல்யாணம் போன்ற பகுதிகள் சிறப்பானவை. இப்பகுதிகள் இன்றும் பலரை ஈர்க்கின்றன. போதனரின் தூய பக்தி இதில் நன்கு வெளிப்படுகின்றது. இவர் சஹஜகவி (இயற்கைக்கவி) என அழைக்கப்படுகிறார். இவரது பாடல்களிற் பக்திச் சுவையும் அலங்காரமும் விரவிக் காணப்படுகின்றது. சமகாலத்துக் கவிஞர்களைப் போல இவரும் தமது நூலை மன்னனுக்கோ அல்லது வசதிபடைத்த வேறொருவனுக்கோ அர்ப்பணித்திலர், கஷ்டகாலத்திலும் திடமான கொள்கையி லிருந்தும் விலகிலர்.
போதனரின் சமகாலத்தவர்களில் கெளரனா, பினாவீரனா என்போரும் சிறந்த கவிஞர்கள். கெளரனா அரிச்சந்திரன் கதையை ஈரடிப்பாடல்களாக நன்கு இயற்றியுள்ளார். காளிதாசரின் அபிஜ்ஞான சாகுந்தலத்தைப் பின்பற்றிப் பினாவீரனா சிருங்கார சாகுந்தலம் என்ற நூலை எழுதினார்.
இவர்கள் காலத்தைத் தொடர்ந்து ஒரு சிறப்பான காலமாக கிருஷ்ண தேவராயர் காலம் விளங்கிற்று. இக்காலம் பிரபந்த காலம் எனவும் கூறப்படுகின்றது. தெலுங்கு கவிதை புதிய போக்கினையும் கொண்டிலங்கிற்று.
கி.பி 1509 - 1530 வரை தென்னிந்தியாவின் பெரும் பகுதியை ஆட்சி புரிந்த பெருமன்னரான கிருஷ்ண தேவராயரின் காலம் 'தெலுங்கு இலக்கியத்தின் பொற்காலம்” எனவும் விதந்து கூறப்படும். இப்பேரரசர் தெலுங்கிலும், வடமொழியிலும் சிறந்த கவிஞர். பல கலைகளிலும் வல்லுநர்; பல புலவர்களையும்,
273

Page 304
கலைஞர்களையும் நன்கு ஆதரித்தவர். இவரின் சபை சங்கீத வித்வான்களின் சபையாகவும் பல புலவர்களின் பேரவையாகவும் விளங்கிற்று.
அல்லசானி பெத்தன்ன, நந்தி திம்மனா, தூர்ஜடி, தெனாலிராம கிருஷ்ணா சங்குசால, நரசிம்மகவி, மல்லனா, ராமபத்ரகவி, எல்லனா எனும் அஷ்டதிக்கஜங்கள் அல்லது சிறந்த கவிஞர்கள் அவரின் சபையை அணிசெய்தனர். இவர்களில் எல்லனா பற்றிக் கருத்து வேறுபாடுகள் உள்ளன. கிருஷ்ணகவி என அழைக்கப்படும் கன்னடக்கவி இவரேயெனவும், கன்னட மகாபாரதத்தை எழுதி அதை அரசருக்குச் சமர்ப்பித்தார் எனவும் ஒரு சாரார் கருதுகின்றனர். பெத்தனா தெலுங்கு இலக்கியத்தைப் பொறுத்தவரை பெரியவரே. இங்கு புலவரின் பெயராயினும் பெத்தனா எனும் சொல் பெரியவர் எனப் பொருள்படும். மனுவின் பிறப்புப் பற்றிச் சித்திரிக்கும் இவரது மனுசரித்திரம் வாசகரை / கேட்போரை கவரவல்ல நல்லகவிதை. இதன் முற்பகுதியிலே கூறப்படும் கதை தெய்வசக்தி பெற்ற வரூதினி எனும் கந்தர்வமாது பற்றியும், அந்தண குலத்தைச் சேர்ந்த அப்பாவியான பிரவரன் பற்றியதுமாகும். பெத்தனாவின் சிறந்த கவித்துவம் குறிப்பிடற்பாலது.
அரசவையை அலங்கரித்தவர்களில் ஒருவரான திம்மனா வின் பாரிஜாதாபஹரணம் என்றும் மனதைக் கவரும் ஒரு காவியம். இதிலே சத்தியபாமாவைத் திருப்திப்படுத்தக் கிருஷ்ண பரமாத்மாவினால் தேவலோகத்திலிருந்து பூவுலகத்திற்குப் பாரிஜாதமரத்தைக் கொண்டுவரப்படுதல் கவிநயம்படக் கூறப்படுகின்றது. தென்னாட்டுக் காசியென்று புகழப்படும் பூநீகாளஹஸ்தி பற்றியும் அங்கு கோயில் கொண்டுடெழுந் தருளியிருக்கும் சிவபெருமானின் சிறப்பு, பெருமை ஆகியன பற்றியும் சிறந்த சிவபக்தரான தூர்ஜடி காப்பியம் இயற்றியுள்ளார். ராமலிங்கர் அல்லது தெனாலிராம கிருஷ்ண(ன்) தெலுங்கு நாட்டில் மட்டுமன்றி வெளிமாநிலங்களிலும் நன்கு அறியப் பட்டவர். நகைச்சுவைக் கவிதைகளில் அவர் ஒரு பாத்திரமாகப் படைக்கப்பட்டார். இஃது எந்த அளவுக்கு உண்மை என்பது தெளிவாகத் தெரியாது. அவர் ஒரு சிறந்த நகைச்சுவையாளராக இருந்திருக்கலாம். விகடகவி என்றே இவர் அழைக்கப்பட்டார். இவருடைய பாண்டுரங்க மாஹாத்மியம் ஒரு சிறந்த கவிதை. இதிலே நல்ல கதைகள் உள்ளன. இவற்றுள் ஒன்று சீரழிந்த நிகம சர்மா என்ற அந்தணனின் கதையாகும். இது பலரையும் கவர்ந்துள்ளது.
கிருஷ்ண தேவராயர் சிறந்த விஷ்ணு பக்தர். சிறந்த கவிஞராகவும், கல்விமானாகவும் விளங்கினார். இவர் ஆமுக்தமால்யதா எனும் அழியாப்புகழ் பெற்ற பெருங் காப்பியத்தைத் தெலுங்கில் எழுதிப் பேரும், புகழும் பெற்றார். இது தமிழகத்தைச் சேர்ந்த பெரியாழ்வாரின் மகளும், திருமாலின் சிறந்த பக்தையுமான ஆண்டாளின் கதை பற்றிக் கூறும். இவ்வரசர் வடமொழியிலும், தெலுங்கிலும் எழுதிய பிறநூல்கள்
274

கிடைத்தில. ஆழ்ந்த பக்தியால் எவரும் முக்தியடையலாம் என இந்நூல் கூறுகின்றது. இயற்கை பற்றியும், வாழ்க்கை பற்றியும், அழகான விபரங்கள் இந் நூலில் இடம் பெற்றுள்ளன.
இக்காலத்திய பிறிதொரு சிறந்த கவிஞரான பிங்களி சூரனா ராகவபாண்டவியம், கலாபூர்ணோதயம் ஆகிய நூல்களை எழுதியுள்ளார். முதன்முதலாகத் தெலுங்கு இலக்கியத்திலே இருகதைகளை ஒரே நேரத்தில் கூறும், நூலாக ராகவபாண்ட வீயம் அமைந்துள்ளது. இங்கு ராமாயணக் கதையும், மகாபாரதக் கதையும் ஒரே நேரத்தில் கூறப்பட்டுள்ளன. இவ்வாறு இரண்டு கதைகளை ஒரே காப்பியத்தில் எழுதுவது எளிதன்று. பிற்காலத்தில் மூன்று கதைகளையும் ஒரே நூலில் ஒரே செய்யுளமைப்பில் கூறும் வழக்கமும் இருந்தது. கலாபூர்ணோதயம் சூரனாவின் சிறப்பான ஒரு காப்பியம். கவிஞர் சுயமாக உருவாக்கிய கதையுடன் கூடிய சிறந்த படைப்பாக இது விளங்குகின்றது. இஃது ஒரு புதினமேயாகிலும் காப்பியமாக எழுதப்பட்டது.
ராமராஜ பூஷணர் என்றழைக்கப்பட்ட மூர்த்தி ஒரு முக்கியமான கவிஞர், ஆறு தர்சனங்களிலும், இசையிலும் வல்லுநர், அணி இலக்கியத்திலும் புலமையுள்ளவர். ஆறுபாகங் களாக எழுதப்பட்ட வசுசரித்திரம் அவரின் கவித்திறனுக்குப் பேர் போனதாகும், தெலுங்கு இலக்கியத்தில் உள்ள பஞ்சகா வியங்களில் இதுவும் ஒன்றாகும். ஏனையவை மனுசரித்திரம், ஆமுக்தமால்யதா, சிருங்காரநைஷதம், பாண்டுரங்கமாஹாத்மியம் என்பனவாகும். வசுசரித்திரம் வசுமன்னனின் முழுக்கதையையும் கூறாது, கிரிகாவை அவன் திருமணம் செய்த கதையை மட்டுமே கூறுகின்றது.
கந்துகூரிருத்ரகவி இக்காலத்திலே வாழ்ந்த பிறிதொரு முக்கியமான கவிஞராவார். சுக்ரீவ விஜயம் எனும் நூலை யகூஷிகானமாக எழுதினார். பிற்காலத்திலே நாடக இலக்கிய வளர்ச்சிக்கும், முன்னேற்றத்திற்கும் யக்ஷகானமே முன்னோடி யாக விளங்கிற்று. இக்காலத்திலே குயவர் சமூகத்தைச் சேர்ந்த பெண்பாற்புலவர் மொல்ல ராமாயணத்தை எழுதினார். ஏனைய ராமாயணங்களைப் போல இதுவும் மக்களின் ரசனையைப் பெற்றிருந்தது. வேறு சில பெண்பாற்புலவர்களும் இருந்தனர். அவர்களிலே கிருஷ்ணரின் சகோதரியான சுபத்திரையின்
கதையை எழுதிய தாள்ளபாக திம்மக்கா நன்கு குறிப்பிடற்பாலர்.
இக்காலத்திலே வடமொழிக் கலப்பில்லாத முற்றிலும் தெலுங்கிலான கவிதைகளும் எழுதப்பட்டன. இம் மொழி நடைக்கு “அச்சதெலுகு” என்று பெயர். பொன்ன கண்டி தெலகண்ணா எழுதிய யயாதி சரித்திரம் அச்ச தெலுங்கில் எழுதப்பட்ட காவியமாகும். இவரைப் பின்பற்றிக் குச்சி மஞ்சி, திம்மகவி இரண்டு காப்பியங்களை எழுதினார். ஆனால் அச்ச
தெலுங்கில் எழுதப்பட்ட நூல்கள் செயற்கையாகவும், எளிதிலே
இந்துக்கலைக்களஞ்சியம்

Page 305
விளங்கிக்கொள்ள முடியாமல் இருந்தமையாலும் எழுத்தாளர் களையோ, வாசகர்களையோ நன்கு கவர்ந்தில.
தெலுங்கு இலக்கியத்தில் நீதிக்கதைகள் அதிகமுள்ளன. சதகங்கள் பல தெலுங்கில் இருப்பது குறிப்பிடற்பாலது. சதகங்கள் கி.பி 12ம் நூற்றாண்டிலே தோன்றின. இவை பக்தி, நீதி, துறவு, தத்துவம், காதல், வஞ்சப் புகழ்ச்சி, சுயசரிதை ஆகியன பற்றிக் கூறுவனவாக உள்ளன. 100 செய்யுட்கள் கொண்டவை யாயினும், ஒவ்வொரு செய்யுளும் தனித்தனிப் பொருள்
கொண்டவை.
சதகம் பற்றிக் குறிப்பிடும் போது வேமனர் பெயர் முதலிலே தென்படுகின்றது. இவரின் பெயர் தெரியாத தெலுங்கர் பெரும்பாலும் இல்லையெனலாம். இவருடைய செய்யுட்கள் ஏதேனும் தெரியாத தெலுங்கன் இல்லை எனக் கூறப்படுகின்றது. வேமனர் 17ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். இவர் சதகம் எதுவும் எழுதிலர். ஆனால் ஆயிரக்கணக்கான செய்யுட்களை எழுதினார். எனினும் இவர் சதகக் கவிஞர்களோடு சேர்த்தே கூறப்படுகின்றார். இவர் ஒருசிறந்த சீர்திருத்தவாதி, மனிதாபி மானி, மக்கள் கவி, அச்சமின்றி எங்கு தவறு கண்டாலும் உடனே கடுமையாக விமர்சித்தார். இவரின் கவிதைகள் எளிமை யானவை. எவரின் உள்ளத்தையும் ஈர்க்கவல்லவை. ஆடவெலதி எனும் சந்தத்தில் இவர் எழுதிய செய்யுட்கள் இன்றும் நன்கு பயனுள்ளனவாக உள்ளன. இன்றைய எழுத்தாளர்கள் கூட வேமனரைப் போல எழுதுவதுடன் தங்கள் கவிதைகளில் இவரைப் பின்பற்றுகின்றனர். வேமனரின் கருத்துக்களுக்கு எடுத்துக் காட்டுகளாக,
"அடுத்தவரின் குற்றத்தை எடுத்துச் சொல்லுவது
எளிது. அதற்குச் செவி சாய்ப்போரும் பலரே. தவறு செய்யாத மனிதனே இலன். பிறர் குற்றத்தைப்
பார்ப்பவன் தன்குற்றத்தைப் பார்ப்பதில்லை.”
"ஒரு முட்டாளுக்கு அதிகாரம் கிடைத்தால், தகுதியுள்ளவர் யார் தகுதியில்லாதலர் யார் என்று அவன் கருதமட்டான். செருப்பைக் கடித்து
உண்ணும் நாய்க்குக் கரும்பின் இனிமை தெரியுமா?”
போன்றவற்றைக் குறிப்பிடலாம்.
13ஆம் நூற்றாண்டிலே வாழ்ந்த பத்தென எனும் அரசக்கவி எழுதிய சுமதிசதகமும் பலரால் மனனம் செய்யப்பட்டுக் கூறப்படுகின்றது. இந்நூல் உயர்ந்த நீதியை எடுத்துக் கூறுகின்றது. மக்களிடையே நன்கு செல்வாக்குப் பெற்றுள்ளது. இது தமிழிலும், ஆங்கிலத்திலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. 17ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த மாரவவெங்கய்யா பாஸ்கர சதகத்தினை இயற்றியுள்ளார். இதுவும் நீதிகளை நன்கு
இந்துக்கலைக்களஞ்சியம்

போதிக்கின்றது. இவற்றைவிட, பால்குருக்கி சோமநாதர், தூர்ஜடி ஆகியோர் எழுதியுள்ள சதகங்கள் பற்றி ஏற்கனவே குறிப்பிடப்பட்டுள்ளது. கோபண்ணா எழுதிய தாசரதி சதகம் பாடசாலைச் சிறுவர்களுக்கான சதகங்கள் போன்றவையும்
உள்ளன.
விஜயநகரப் பேரரசின் வீழ்ச்சிக்குப் பின், தெலுங்கு மொழி சில காலமாகத் தமிழ் நாட்டிலுள்ள தஞ்சையை ஆண்ட நாயக்க, மராத்திய மன்னர்கள் மதுரையிலாட்சி செய்த நாயக்க மன்னர்கள், முதலியோரின் ஆதரவு பெற்றிருந்தது. தஞ்சை, மதுரை நாயக்க மன்னர்கள் விஜய நகரப் பேரரசின் கீழ் ராணுவ, தேசாதிபதிகளாகக் கடமையாற்றிப் பேரரசு வீழ்ச்சியின் பின் சுதந்திரமாக ஆட்சி புரிந்தனர். இவர்களின் தாய் மொழி தெலுங்கு. கி.பி 15, 16, 17ஆம் நூற்றாண்டுகளிலே தெலுங்கு நாட்டிலிருந்து புலவர்கள், கல்விமான்கள், வீரர்கள், இசைக்கலைஞர்கள், நாட்டியக் கலைஞர்கள் முதலியோர்களில் ஒரு சாரார் புலம்பெயர்ந்து தமிழகத்தின் வெவ்வேறு இடங்களிலே நிரந்தரமான வதிவிடத்தை அமைத்தனர். சமகால நாயக்க மன்னர் பல புலவர்களையும் கலைஞர்களையும் ஆதரித்தனர். அரசர்களிற் பலர் தாமே கவிஞராகவும், கலைஞராகவும் விளங்கினர். இத்தகைய சூழ்நிலையிலே தமிழகத்திலும் தெலுங்கு இலக்கியமும், கலைகளும் போற்றப்பட்டன. இது பற்றிச் சுருக்கமாகக் கூறப்படும்.
இக்கால கட்டத்திலே தெலுங்கு மொழியில் உரை நடை நூல்கள் எழுந்தன. இம் மொழிக்கே உரித்தான இருவரிப் பாடல்கள் பயன்படுத்தப்பட்டன. யக்ஷகாணங்களும். பிரபந்தங் களும் இயற்றப்பட்டன. பெண்பாற் புலவர் சிலரும் தோன்றினர். பாடல்கள் பேச்சு மொழியிலும் நன்கு இயற்றப்பட்டன. அரசரின் வாழ்க்கை வரலாறுகள் எழுதப்பட்டன. இக்காலத்திலே சிறந்த நூல்கள் எழுந்தமை பற்றிக் கருத்து வேறுபாடுகள் உள்ளன. எனினும் பல திறப்பட்ட நூல்கள் எழுந்தன.
தஞ்சாவூரில் ஆட்சிசெய்த நாயக்க மன்னர்களில் அச்சுதப்ப நாயக்கர், ரகுநாதநாயக்கர், விஜயராகவ நாயக்கர் முதலியோரைக் குறிப்பிடலாம். இவ் அரசர்கள் சிறந்த கல்விமான்கள். பல புலவர்களையும், கலைஞர்களையும் நன்கு ஆதரித்தனர். இக்காலத்தில் அரசருடைய வாழ்க்கை வரலாறுகள், கவிதைகள், இசை நாடகங்கள் முதலியன எழுதப்பட்டன.
நாயக்க அரசர்களுக்குப் பின் தஞ்சையில் ஆட்சி புரிந்த மராத்திய மன்னரும் தெலுங்குக் கவிஞர்களை ஆதரித்தனர். சிவாஜியின் பேரரான சகாஜி மகராஜ் வடமொழியிலும், தெலுங்கிலும் சிறந்த கல்விமான். தெலுங்கில் 20 நூல்கள் எழுதியுள்ளார். துக்கோஜி, இரண்டாம் ஏகோஜி ஆகிய மன்னரும், முத்து பவனி எனும் பெண்பாற் புலவரும் சில நூல்களை எழுதியுள்ளனர்.
275

Page 306
மதுரையிலே தெலுங்கு உரை இலக்கியம் கூடுதலாகப் போற்றப்பட்டது. அரசர்கள் மட்டுமன்றி அரச அலுவலர்களில் ஒரு சாராரும் தெலுங்கிலே சிறந்த எழுத்தாளர்களாக விளங்கினர். ஓர் அரச அலுவலர் ராயவாசகம் எனும் நூலை எழுதினார். இது விஜயநகரப் பேரரசு பற்றி, குறிப்பாகக் கிருஷ்ண தேவராயர், மந்திரி திம்மரசு பற்றியும் விவரிக்கின்றது. இவரைவிட வெங்கட கிருஷ்ணப்ப நாயக்கர், துபாகுல் அனந்த பூபாலன் முதலிய கவிஞர்கள் உரை நடைநூல்கள் எழுதினர். மேலும் சிலகவிதைகளும் இக்காலத்தில் எழுதப்பட்டன. புதுக்கோட்டை, செஞ்சி, மைசூர் முதலிய இடங்களிலும் தெலுங்கு இலக்கியம் வளர்ந்தது. நுதுருபாடி வெங்கடகவி எனும் சிறந்த புலமையாளன் தெலுங்குச் சொல் அகராதியைக் கவிதை வடிவிலே தொகுத்தார். கதிரீ பதி (17ஆம் நூ) எனும் புலவர் சுகசப்ததி (கிளி சொல்லும் 70 கதைகள்) எனும் தலைப்பிலே ஆவலைத்தூண்டும் கதைகளை எழுதினார்.
இசைப் பாடலாசிரியர்கள் பற்றியும் கூறவேண்டியுள்ளது. அன்னமய்யா, க்ஷேத்திரய்யா, தியாகய்யா (தியாகராஜ சுவாமிகள்) ஆகியோர்கள் நன்கு குறிப்பிடத்தக்கவர்கள். இவர்களின் பாடல்களிலே பக்திச்சுவையும், சிறந்த சிந்தனைகளும் இடம் பெற்றன. நன்னையா காலத்திலிருந்து பாடலும், கவிதையும், ஒரே சீராக வளர்ந்து வந்தன.
தெலுங்கு இசைப் பாடல்கள் இயற்றியவர்களிலே அன்னமாச்சாரியர் என அழைக்கப்படும் தாள்ளபாக அன்ன மய்யா (1424-1503) நன்கு குறிப்பிடற்பாலர். கர்நாடக இசையின் பிதாமகர் எனக் கருதப்படும் புரந்தரதாசரின் காலத்திலே இவர் வாழ்ந்தவர். 32000 பாடல்களை இயற்றியுள்ளார். இவற்றுட்சில தத்துவப் பாடல்கள், வேறு சில சிருங்காரப் பாடல்கள். தத்துவப் பாடல்கள் கிருதி அல்ல கீர்த்தனை எனவும் சிருங்காரப் பாடல்கள் பதம் எனவும் அழைக்கப்பட்டன. தத்துவப்பாடல்கள் பக்திச்சுவை ததும்பி நீதி போதிப்பன. இவருடைய தாலாட்டுப் பாட்டான “ஜோ அச்சுதானந்தாஜோ, ஜோ முகுந்தா” ஆந்திர மாநிலமெங்கும் புகழ் பெற்றதாகும். இவர் குடும்பத்திலே பலர் கல்வியில் சிறந்து விளங்கினர். இசைக்கலைஞர்களாகவும் பிரசித்தி பெற்றிருந்தனர். இவர்கள் தாள்ளபாக கவிஞர்கள் / இசைக்கலைஞர்கள் (வாக்கேயகாரர்) என அழைக்கப்பட்டனர்.
க்ஷேத்திரய்யா (க்ஷேத்திரஜ்ஞ) (1680-1660) வரை வாழ்ந்த பிறிதொரு கவிஞர். கிருஷ்ணா மாவட்டத்தில் உள்ள மொவ்வ அல்லது முவ்வ என்ற கிராமத்தைச் சேர்ந்தவர். இவர் பதங்கள் எனும் இசை, நடனப்பாடல்கள், இயற்றுவதிலே வல்லுநர். இவரின் பாடல்கள் முவ்வ கோபால பதங்கள் என அழ்ைக்கப்படும். இவர் சுமார் 4000 பாடல்கள் இயற்றினார் எனக் கூறப்பட்டபோதும் ஏறத்தாழ 400 பாடல்களே இன்று கிடைத்துள்ளன.
பெரிய இசை மேதையாகிய தியாகராஜர் (1767-1847) தமிழகத்தில் தஞ்சை மாவட்டத்திலுள்ள திருவையாற்றிலே
276

வாழ்ந்த போதிலும், தமிழில் பாடாது தமது தாய் மொழியாகிய தெலுங்கிலேயே பல கிருதி அல்லது கீர்த்தனைகளை இயற்றிக் கர்நாடக இசையை நன்கு வளம் படுத்திய பெருமை இவருக்கு உண்டு. எளிமையான, இனிமையான நடையில் அமைந்துள்ள இசைப்பாடல்கள் பொதுவாக ராமரையே பரம்பொருளாகக் குறிப்பிடுகின்றன. அதே வேளையில் ஏனைய இந்து சமயத் தெய்வங்கள் - சிவபிரான், சக்தி, பிள்ளையார், முருகன் முதலியோர் பற்றியும் ஒருசில பாடல்களை இவர் இயற்றியுள்ளார்.
ஏனைய இந்திய மொழிகளைப் போலவே மேற்கத்திய இலக்கியத் தொடர்புகள், நவீன தெலுங்கு இலக்கியத்தின் தொடக்கத்திற்கு அடிப்படையாக இலங்கின. 19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலே தோன்றிய சமய சமூக, இலக்கிய, பண்பாட்டு மாற்றங்கள் புதுயுகம் ஏற்படுவதற்கு வழிவகுத்தன. இவ்வாய்ப்பினைப் பயன்படுத்திக் கந்துகூரிவிரேசலிங்கம் பந்துலு (1848 - 1919) தெலுங்கு இலக்கியத்திலே புதிய போக்குகளை ஏற்படுத்திய முன்னோடியாக விளங்கினார்.
நவீன ஆந்திர தேசத்தை நிர்மாணித்தவர்களில் ஒருவரான கந்துகூரி வீரேசலிங்கம் பந்துலு “நவீன தெலுங்கு இலக்கியத்தின் தந்தை” எனக்கருதப்படுகின்றார். அவர் கல்விமானும், சமூகத் தொண்டருமாவார். தெலுங்கு மொழி ஆசிரியராக விளங்கிய இவர், கல்விப் பணிக்காகவே தாம் சேகரித்த செல்வத்தைப் பயன்படுத்தினார். தெலுங்கில் மட்டுமன்றி ஆங்கிலம், வடமொழி ஆகியவற்றிலும் சிறந்த தேர்ச்சி பெற்றிருந்தார். இவர் கவிதை நாடகம், நாவல், கட்டுரை, இலக்கிய வரலாறு, மொழிபெயர்ப்பு, முதலிய பல துறைகளிலே சிறந்த பங்களிப்புகள் செய்துள்ளார். நவீன சிறுகதை தவிர ஏனைய இலக்கியப் பகுதிகளுக்கு இவரின் பங்களிப்புக்கள் உள்ளன. சில இலக்கியத் துறைகளுக்கு இவரே முதன்மையானவர். இவர் 130 நூல்களை இயற்றியுள்ளார். பாடசாலையிலே கற்கும் சிறுவர்களுக்கான தெலுங்கு நூல்களும் எழுதியுள்ளார். விஞ்ஞானம் பற்றிய சில நூல்களையும் இவர் எழுதியுள்ளார்.
இவருடைய சிறந்த நூல்களிலே ஆந்திர கவுலசரித்திரமு (1887) எனும் தெலுங்குக் கவிஞர்களின் ஆதார பூர்வமான வாழ்க்கைக் குறிப்பு, முதல் தெலுங்கு நாவல் ராஜசேகர சரித்திரமு (1889), சுவீய சரித்திரமு (1911) தெலுங்கிலே முதன்முதலாக வெளிவந்த வாழ்க்கைச் சரித்திரம், சத்யராஜபூர்வ தேசயாத்ரலு (இருபாகங்கள் 1891, 1894) எனும் சிறுவர்களுக்கான நையாண்டிக்கதை, சமூகத்திலே நிலவிய தீய பழக்கவழக்கங்கள், மூடநம்பிக்கைகள் முதலியனவற்றைப் புலப்படுத்தும் பிரகசனமுலு (நகைச்சுவை நாடகங்கள்) முதலியன குறிப்பிடற்பாலன. ‘தென்னிந்தியாவின் முதல் நவீன மனிதர் வீரேசலிங்கம். அவர் ஒரு சிறந்த கல்விமான், இலக்கியகர்த்தா, சமூகச்சீர்திருத்தவாதி, எல்லாவற்றிற்கும் மேல் அவர் ஒரு மனிதாபிமானி’ எனச்சிறந்த எழுத்தாளரான வி. ஆர் நர்லா இவரைப் பற்றிக் கூறியுள்ளார்.
இந்துக் க்களஞ்சியம்

Page 307
“ஆந்திரத்திற்கு மட்டுமன்றி நவீனத்தமிழ்க் கவிதையின் தந்தையான சுப்பிரமணிய பாரதியாருக்கும் இவர் முன்னோடியாக விளங்கினார்’ எனக் கருதப்படுகின்றது.
இக்காலபகுதியிலே வாழ்ந்த பிறிதொரு சிறந்த தெலுங்கு எழுத்தாளராகப் பரவஸ்து சின்னய்ய சூரி (1806 - 1862)யைக் குறிப்பிடலாம். இவர் உரை நடை எழுத்தாளர். சிறந்த இலக்கியகர்த்தா. இவரின் நூல்களிலே நீதி சந்திரிகா (1853), பாலவியாகரணமு (1855) என்பன குறிப்பிடத்தக்கன.
வேதம் வெங்கடராய சாஸ்திரி (1853 - 1929). சிலகமர்த்தி லக்ஷமி நரசிம்ம, குரஜாட வெங்கட அப்பாராவ் (1886 - 1950) முதலியோரும் இக்காலத்திய சிறந்த எழுத்தாளர்கள். இவர்களின் நூல்கள் நவீன தெலுங்கு இலக்கியத்தை வளம் படுத்தியுள்ளன. வேதம் வெங்கடராய சாஸ்திரி வடமொழியிலும், தெலுங்கிலும் சிறந்த விற்பன்னர். அவர் மொழிபெயர்த்த வடமொழி நாடகங்கள் மூலத்தை ஒட்டியே உள்ளன. வடமொழி விமர்சகரும், உரையா சிரியருமான மல்லிநாதசூரிக்கு நிகராக இவர் தெலுங்கிலே கருதப்படுகின்றார். சிருங்காரநைஷதம், ஆமுக்த மால்யதா ஆகிய நூல்களுக்குச் சிறந்த உரைகள் எழுதியுள்ளார். பிரதாபருத் திரீயம் இவரின் ஒரு சிறந்த நாடகம். சிலகமர்த்தி இக்காலத்திய பிறிதொரு சிறந்த கவிஞர், நாவலாசிரியர், நாடகாசிரியர். உயிரோட்டமுள்ள இவரின் படைப்புகளிலே கயோபாக்யானமு எனும் புராண நாடகமும், கணபதி எனும் நகைச்சுவைப் புதினமும் நன்கு குறிப்பிடத்தக்கவை.
வெங்கட அப்பாராவ் நவீன தெலுங்கு இலக்கியச் சிற்பிகளில் ஒரு பிரதான இடத்தினை வகிக்கின்றார். இவரைத் தெலுங்குக்கதை, சமூகநாடகத்தின் தந்தை எனவும் கூறப்படுகின்றது. இவரின் கன்யா சுல்கம் (1896) இந்திய மொழிகளில், பேச்சு மொழியில் எழுதப்பட்ட முதலாவது சமூகநாடகமாகும். இவருடைய கவிதைகள் தேசப்பற்றினை ஊக்குவித்தன. இவருடைய தேசமண்டே மட்டிகாதோய் (நாடு என்பது வெறும் களிமண் அன்று, நாடு என்றால் மக்கள்) என்பது சிறந்த பாடலாகும். இவருடைய புத்தடி பொம்ம பூர்ணகலா (பூர்ணம்மா ஒருதங்கப் பொம்மை) ஒருகிழவரை மணந்த துரதிர்ஷ்டசாலியான பெண்ணைப் பற்றிய கதையாகும்.
இக்காலப் பகுதியிலே வாழ்ந்த பிறிதொரு சிறந்த இலக்கிய கர்த்தாவாக பூரீ பாத கிருஷ்ணமூர்த்தி சாஸ்திரி (1866-1960), 200க்கு மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். இவற்றுள்ளே ராமாயணம், மகாபாரதம், பாகவதம், பொப்பிலியுத்தம், எனும் சரித்திர நாடகம் முதலியன குறிப்பிடற்பாலன.
சிறந்த இரட்டைப் புலவர்களான திருப்பதி வெங்கடகவலு (திவாகர்ல திருப்பதி சாஸ்திரி செல்லபிள்ள வெங்கட சாஸ்திரி) இக்காலகட்டத்திலே வாழ்ந்தவர்கள். இவர்கள் மக்களிடையே கவிதையைப் பரப்பினார்கள். ஜனரஞ்சகமான எளிமையான
இந்துக் க்களஞ்சியம்

கவிதைகள் மூலம் மக்களை நன்கு கவர்ந்துள்ளனர். இன்றைய கவிஞர்களிலே பலர் இவர்களின் மாணவர்கள் அல்லது ரசிகர்கள் எனக் கூறப்படுகின்றது.
தெலுங்குக் கவிஞர்களில் ஒருசாரார் அவதானம் எனும் கலையிலே சிறந்து விளங்கினர். அவதானம் அஷ்டாவதானம், சதாவதானம் என இருவகைப்படும். அஷ்டாவதானக் கலையிலே சிறந்த புலவர்கள் நினைத்த மாத்திரத்திலே கவிதை இயற்றும் ஆற்றல் பெற்றிருக்க வேண்டும். பலவிஷயங்களை அறிந்த வராகவும், நினைவாற்றல் வாய்ந்தவராகவும் விளங்க வேண்டும். ஒரே நேரத்திலே எட்டுவிதமான வினாக்களுக்குக் கவிதையிலேயே பதில் கூற வேண்டும். சதாவதானம் என்பது நூறு கேள்விகளுக்குக் கவிதையிலேயே பதிலளிக்க வேண்டும். திருப்பதி வெங்கடகவுலு, கொப்பரப்பு சகோதரர்கள், வேலூரி சிவராம சாஸ்திரி முதலியோர் அவதானக் கலையிலே சிறந்து விளங்கினர்.
திருப்பதி வெங்கடகவுலுவின் எண்ணற்ற கவிதைகளில் புத்தசரித்திரமு எனும் நீண்ட கவிதையும், பாண்டவர்களின் வெற்றியைக் கூறும் நாடகமும் குறிப்பிடற்பாலன. “இவர்களுடைய கவிதைகள் பழைய முறையின் முடிவு. புதிய முறையின் தொடக்கம்” எனக் கூறப்படுகின்றது. இந்த இரட்டையர்களில் ஒருவரான திருப்பதி சாஸ்திரி மறைவின் பின்னரும் மற்றவரான வெங்கடசாஸ்திரி திருப்பதி வெங்கடகவலு எனும் பொதுப்பெயரிலேயே எழுதிவந்தார்.
ஏற்கனவே குறிப்பிட்டனவற்றிற்குப் பிற்பட்ட காலம் தொட்டு இன்றைய காலம் வரையுள்ள தெலுங்கு இலக்கியத்தைக் கவிதை, புதினம், சிறுகதை, நாடகம், வாழ்க்கை வரலாறு, சுயசரிதை, தெலுங்கு இலக்கிய வரலாறு, மொழிபெயர்ப்புகள், குழந்தை இலக்கியம், நாட்டுப்புற இலக்கியம், திரைப்பாடல்கள் ஆகிய தலைப்புகளிலே சுருக்கமாகக் குறிப்பிடலாம்.
இக்காலத்திய கவிதைகள் பாரம்பரியத்தைப் பின் பற்றுவனவாகவும், புதிய கருத்துக்களை முதன்மைப் படுத்துவனமுமாகக் காணப்படுகின்றன. பாரம்பரியத்தைப் பின்பற்றுதல், புதுவகையில் சோதனை செய்தல் போன்றவை தெலுங்குக் கவிஞர்களிடத்துக் காணப்பட்டு வந்த முக்கிய பண்புகளாகும். எனினும் பிற்காலக் கவிஞர்கள் சோதனை முறையிலே முற்பட்டவர்களை விடக் கூடுதலாகக் கவனம் செலுத்தினர். இஃது இயற்கையே. தற்காலக் கவிஞர்கள் பழைய யாப்பு முறையில் இருந்து விடுபட விரும்பினர். ஆனால் இம் முயற்சியில் முழுமையான வெற்றிபெற்றனர் எனக் கூறமுடியாது.
குறைகள் காணப்பபடினும் தற்காலக் கவிதைக்குத் தனி மதிப்பு இருக்கின்றது. கவிஞர்கள் கவிதையின் தரத்தையும், பொருளையும், சமூகத்திற்குப் பயன்படுத்தக் கூடியவகையிலே பயன் படுத்தி வந்துள்ளனர். இவர்கள் தங்கள் கவிதைக்கான
277

Page 308
பொருளாகச் சமூகத்தின் கீழ் மட்டத்திலுள்ள மக்கள் குடிசைவாழ்வோர், தொழிலாளிகள், ஒழுக்கம் குன்றிய பெண்கள் போன்றோர்களின் வாழ்க்கை போன்றவற்றினையும் எடுத்துக் கொண்டுள்ளனர். இத்தகைய போக்கிற்கு முற்போக்கு எழுத்தாளர்களின் செயற்பாடுகள் குறிப்பிடத்தக்கவை. இவர்கள் ஏழை மக்கள் துன்பங்கள், கஷ்டங்கள் பற்றிய கவிதைகள் புனைந்தனர். கவிதைகளிலே சில அரசியல், தத்துவக் கோட்பாடுகள் காணப்படுகின்றன.
நவீன கவிதைகளிலே மேலைநாட்டுச் சிந்தனைகளான பொதுவுடைமை, (மார்க்சியம்) முதலியனவற்றின் செல்வாக்குத் தென்பட்டன. எனினும், ராஜாராம் மோகன்ராய், பூரீராமகிருஷ்ண பரமஹம்சர், காந்திஜி போன்றோரின் கருத்துக்களும், ஆந்திராவிலேற்பட்ட கற்பனை இயக்கத்தின் கருத்துக்களும் நவீன தெலுங்கு எழுத்தாளர்களைக் கவர்ந்துள்ளன. பாரம்பரியம் முற்றாகக் கைவிடப்படவில்லை. முற்பட்ட காலக் கவிஞர்கள் போல சிலர் மகாபாரதம், ராமாயணம், போன்றவற்றிலிருந்து கவிதைக்கான ஊக்கத்தைப் பெற்றனர். பழைய யாப்பினையும், பயன்படுத்தினர். ஆனால் அவர்களின் நோக்கம் புதிதாக இருந்தது. அவர்கள் அகல்யா, குந்தி போன்ற சிறிய கதாபாத்திரங்களும் முக்கியமானவர்கள் எனக் கருதினர். துப்பரவுத் தொழிலாளி கூட அவர்களின் கவனத்தை ஈர்த்தான்.
சில கவிஞர்கள் வரலாற்றில் அரசர்கள், உயர் வர்க்கத்தினர் முக்கியத்துவம் பெறுவதை விரும்பிலர். அவர்களின் செயற்பாடுகளுக்கு அடித்தளத்திலே பங்களிப்புச் செய்த தொழிலாளர்களுக்கும் உரிய இடம் அளிக்கப்படவேண்டுமென வலியுறுத்தினர். எடுத்துக்காட்டாக தெலுங்கின் முன்னேற்றக் கவிதையின் முன்னோடியான பூரீபூரீ. “பழைய சரித்திரம் நைல் நதிக்கரையில் வாழும் சாதாரண மனிதனின் வாழ்க்கையைப் பற்றிக் கூறவேண்டும். உலகப்புகழ்பெற்ற தாஜ்மகால் கட்டக் கல் சுமந்த தொழிலாளர் பற்றிக் கூறவேண்டும்” எனக் கூறியிருப்பது கவனித்தற்பாலது.
நவீன தெலுங்குக் கவிஞர்கள் தம்முடைய கவிதைக்குப் பொருளாகப் பலவற்றைக் கொண்டனர். முன்னர் ஒரு குறிப்பிட்ட வரையறையிலே தான் கவிஞர் கூறும் பொருளைத் தெரிவு செய்தனர். ஆனால் இக்காலத்தில் எது பற்றியும் எழுதும் நிலை ஏற்பட்டமை புதுமையே.
தெலுங்குக் கவிதையில் குரஜாட சுப்பராவ் எழுதிய முத்யாலசராலு (முத்தாரங்கள்) எனும் கவிதைத் தொகுப்பிலே புதுமையும், புதியபோக்கும் காணப்படுகின்றன. ராஜபுரேலு சுப்பராவ் என்பவரின் லலிதா திருண கங்கணம் (புல்காப்பு) ஆகியன கற்பனை நிறைந்த சிறுகாவியங்களாகும். இவை சிறந்த இலக்கிய ஆக்கங்கள். பூரீரங்கம் நாராயணபாபு, ஆருத்ரா, பட்டாபி அணி செட்டி முதலியோர் குறிப்பிடத்தக்க முற்போக்குக்
278

கவிஞர்களாவர். பழைய மரபு முறையில் எழுதுவோரும் நவீன கவிஞர்கள் அனைவரும் பாகுபாடின்றி வசன கவிதையைப்
பின்பற்றி வந்தனர்.
நாராயணரெட்டி போன்று சில கவிஞர்கள் நீண்ட கவிதைகளை எழுத வசனக்கவிதை எழுதும் முறையைப் பின்பற்றினர். தற்காலக் கவிஞர்களிலே பாரதீய ஞானப்பீடப் பரிசுபெற்ற விஸ்வநாத சத்திய நாராயண முக்கியமானவர். அவர் எழுதிய ராமாயண கல்பவிருக்ஷம் எனும் நீண்ட கவிதை மிகச் சிறந்தது எனக் கூறப்படுகின்றது. பழைய கதைகளைத் தழுவியும், சில சமகால நிகழ்வுகள், தலைவர்கள் பற்றியும் பல
கவிதைகள் எழுதப்பட்டன.
ஆங்கில இலக்கியத் தொடர்பினாலே தெலுங்கில் ஏற்பட்ட விளைவுகளிலே புதினங்கள் அல்லது நாவல்கள், சிறுகதைகள் ஆகியனவும் குறிப்பிடத்தவை. ஏற்கனவே குறிப்பிட்ட கந்து கூரி வீரேசலிங்கத்தின் ராஜசேகர சரித்திரமு என்பதே தெலுங்கில் வெளிவந்த முதற் புதினமாகும். இது கோல்டுஸ்மித் எழுதிய வேக் பீல்டுபாதிரி (Vicar Of WakeField) எனும் ஆங்கில நாவலைப் பின்பற்றி எழுதப்பட்டது. நாஹரி கோபால கிருஷ்ண செட்டியின் பூரீரங்கராஜ சரித்திரமும் குறிப்பிடத்தக்கது. தெலுங்கு மக்களின் வாழ்க்கையினை அடிப்படையாகக் கொண்டெழுதப் பட்டனவற்றிலே சிலகமர்த்தி லக்ஷமி நரசிம்மம் எழுதிய கணபதி, ராமகிருஷ்ண விஜயம் குறிப்பிடத்தக்கவை.
தெலுங்கிலே நாவலுக்குப் புதிய திருப்பத்தை ஏற்படுத்திய உன்னவ லஷ்மி நாராயணா (1877 - 1955) குறிப்பிடத்தக்கவர். இவரின் மாலபல்லி (சேரி) எனும் நாவல் இந்திய சுதந்திரப் போராட்டத்தின் பின்னணியிலே காந்தீயக் கொள்கைகளை விவரிக்கின்றது. இதிலே வரும் முக்கிய பாத்திரங்கள் பலர் ஹரி ஜனங்கள் (தாழ்த்தப்பட்ட மக்கள்). இவர் பேச்சு மொழியிலே எழுதியுள்ளார். இந்த இரண்டு அமிசங்களிலும் இது புதிய போக்கினைக் கொண்டுள்ளது. சரித்திர நாவல்கள், சமூக நாவல்கள், துப்பறியும் நாவல்கள் ஆகியனவற்றைத் தெலுங்கு எழுத்தாளர்கள் எழுதிவந்தனர்.
தெலுங்கு இலக்கியத்திலே சிறுகதை நன்கு வளர்ச்சி பெற்றுள்ளது. தரத்தில் மட்டுமன்றி எண்ணிக்கையிலும் கதைகள் கவனிக்கத்தக்கவை. தெலுங்கிலே பழையகதைகள் இருந்தன. ஆனால் குரஜாட ஆனி முத்யாலு எனும் தலைப்பில் ஒரு சில கதைகளை எழுதிய போதிலும், சிறுகதை இலக்கியத்திலே திருப்பத்தை அவரே ஏற்படுத்தினார் எனக் கூறப்படுகின்றது. இவருடைய தித்துபாடு இவரின் கதை கூறும் திறமைக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும். மீ.பே. ரேமி எனும் இவரின் கதையும் குறிப்பிடற்பாலது.
இந்துக் கலைக்களஞ்சியம்

Page 309
சிறுகதை எழுத்தாளர்களிலே பூரீபாத சுப்பிரமணிய சாஸ்திரி, வேலூரி சிவராம சாஸ்திரி, சிந்தாதீகூழிதுலு போன்றவர்கள் ஆரம்ப கட்டங்களிலே சிறுகதை இலக்கியத்திற்குக் குறிப்பிடத்தக்க பணிகள் செய்தனர். மேலும் “தற்காலத் தெலுங்குச் சிறுகதை எனும் மாளிகைக்குச் சிறுகதை இலக்கியத்தின் மூலவர்களான புச்சிபாபு பத்மராஜி, கோபீ சந்த் மற்றும் கொடவடிகண்டி ஆகியோரும், அவர்களின் எழுத்து வன்மையையுமே கடைக்கால்கள்” எனப்பிரபல இலக்கியத் திறனாய்வாளர் அமரேந்திரா கூறியுள்ளார். இவர்கள் தங்களுடைய எழுத்து மூலம் பல இளைஞர்களையும், பல பெண்
எழுத்தாளர்களையும் எழுத்துலகுக்குக் கொண்டுவந்தனர்.
தெலுங்கு இலக்கியம் தொன்மையானதாயினும், தெலுங்கு இலக்கியத்தில் நாடகம் 19ஆம் நூற்றாண்டிலே தான் தோன்றியதாகக் கூறப்படுகின்றது. முதற்கட்டத்திலே கோரடராமசந்திர சாஸ்திரி (1816-1900), கொக்கட வெங்கட்ரத்னம்பந்துலு (1842-1915) வாவிலால வாசுதேவ சாஸ்திரி (1851-1887) ஆகியோர் வடமொழியிலிருந்தும் ஆங்கிலத்திலிருந்தும் நாடகங்களைத் தெலுங்கிலே மொழிபெயர்த்தனர். 1880ஆம் ஆண்டிலே வாவிலால ஐந்து பாகங்களைக் கொண்ட சமூக நாடகம் ஒன்றைத் தெலுங்கில் கவிதை வடிவில் எழுதினார். உத்தரராம சரிதம், ஜூலியஸ் சீசர் போன்ற பல நாடகங்களை மொழிபெயர்த்தார். ஆனால் முதன் முதலில் தெலுங்கு நாடகத்தை அரங்கேற்றிய பெருமை கந்து கூரி வீரேசலிங்கத்திற்குரியதாகும். நாடகம் எழுதுவது, மொழி பெயர்ப்பதுடன் நின்று விடாது அதனை அரங்கேற்றுவதிலும் கவனம் செலுத்தினார். அவர் எழுதியுள்ள நாடகங்களிலே நகைச்சுவை நாடகங்களும், மொழிபெயர்ப்புகளும் அடங்கும்.
தெலுங்கு நாடக வரலாற்றில், அடுத்த கட்டம் “ஆந்திர நாடக பிதாமஹர்' என அழைக்கப்படும் தர்மவரம் ராமகிருஷ்ணாச் சார்யுலு (1852-1912) காலத்திலே தொடங்கிற்று. இவர் சிறந்த நடிகர். தமிழ் நாடகத்தின் தந்தை என அழைக்கப்படும் பம்மல் சம்மந்த முதலியாரும் இவரிடமிருந்து ஒர் உந்துதலைப் பெற்றார் எனக் கூறப்படுகின்றது.
தர்மவரம் ஏற்படுத்திய சரஸவிநோதினிசபா பம்மலின் பாராட்டைப் பெற்றது. அவர் தாம் தொடங்கிய சபைக்கு சுகுணவிலாஸசபா என்று பெயர் சூட்டினார். சிறந்த நாடகாசிரியரும், நடிகருமாகிய கிருஷ்ணாச் சார்யுலு 28 முழுநீள நாடகங்களையும், இரண்டு கன்னட நாடகங்களையும் எழுதி யுள்ளார். அவற்றினுள்ளே சித்திரநளியம் மிகச் சிறந்ததாகக் கூறப்படுகிறது.
பிறிதொரு நாடகாசிரியரான வேதம் வெங்கடராய சாஸ்திரி எழுதிய பிரதாபருத்ரீயம் பழைமையானது. இவரைவிட சிலக
இந்துக்கலைக்களஞ்சியம்

மர்த்திலசுஷிமி நரசிம்ம, இரட்டையர்களான திருப்பதி வெங்கடகவுலு முதலியோர் குறிப்பிடற்பாலர்.
அடுத்த கட்டத்திலே தெலுங்கு நாடகங்கள் பேச்சு மொழியிலே எழுதப்பட்டன. ஏற்கனவே குறிப்பிட்ட கன்யா சுல்கம் பேச்சு மொழியில் எழுதப்பட்ட ஒரு நல்ல நாடகம். நவீன தெலுங்கு நாடக வரலாறு 1929இலே தொடங்கிற்று. பி.வி. ராஜமன்னார் எனும் சிறந்த எழுத்தாளர் எழுதிய தப்பெவரிதி எனும் முழுநீள நாடகம் சமூகத்திலே பெண்கள் நிலைபற்றிய தாகும். இவருடைய நாடகங்களிலே நகைச்சுவை ததும்பும். இவரின் ஏமி மகிவாள்ளு? தெய்யால லங்க, நாகு பாமு போன்றவை குறிப்பிடற்பாலன. பிறிதொரு சிறந்த நாடகாசிரி யராக நார்ல வெங்கடேஸ்வரராவ் குறிப்பிடத்தக்கவர். இவரின் கொத்தகட்ட எனும் ஒரங்க நாடகத் தொகுப்பு கவனித்தற்பாலது. வானொலி நாடகங்கள் உட்படப் பல நாடகங்கள் தெலுங்கு மொழியில் எழுதப்பட்டுள்ளன.
வாழ்க்கை வரலாறு பற்றிக் குறிப்பிடத்தக்க பல நூல்கள் எழுதப்படவில்லை. வீரேசலிங்கம் 1913இலே வெளியிட்ட ஜீசஸ் சரித எனும் நூல் தான் தெலுங்கு மொழியிலே முதலாவதாக எழுதப்பட்ட வாழ்க்கை வரலாறு பற்றிய நூலாகும். சிலகமர்த்தி லக்ஷமி நரசிம்மம் ஆறு வாழ்க்கை வரலாறுகள் எழுதியுள்ளார். இவர்களைவிட அச்சமாம்பா, கே. வி. லக்ஷ்மணராவ், கொர்ரேபாடி வெங்கட சுப்பையா, சிரந்த நானந்தா முதலியோர் குறிப்பிடற்பாலர் லசுஷ்மணராவ் சிவாஜியின் வரலாற்றையும், சிரந்த நானந்தா சுவாமி ராமகிருஷ்ண பரமஹம்சரின் வாழ்க்கை வரலாற்றையும்
எழுதியுள்ளனர்.
சுயசரிதம் எழுதுவதிலும் கந்து கூரி வீரேசலிங்கமே முன்னோடியாக விளங்கினார். அவர் தன்னுடைய சுயசரிதையை நேர்மையாக எழுதியுள்ளார் எனக் கூறப்படுகிறது. இவரைவிட ஆந்திரகேசரி டி. பிரகாசம், கே.என். கேசரி, தரிசி செஞ்சையா, ஏ. நாகேஸ்வரராவ் போன்றோர் சுயசரிதை எழுதியுள்ளனர். சுதந்திரப் போராட்ட வீரரும், தேசியத்தலைவருமான டி. பிரகாசத்தின் சுயசரிதம் படிப்பவர்களின் ஆவலை தூண்டும்
வகையில் உள்ளது.
தெலுங்கிலே சிறந்த இலக்கியத் திறனாய்வாளர்களும் உள்ளனர். மானவல்லி ராமகிருஷ்ண கவி, வேதம், வெங்கட ராயசாஸ்திரி, வேடுரி பிரபாகர சாஸ்திரி போன்றோர் சிறந்த இலக்கியத் திறனாய்வாளர்களாகவும் விளங்கினர். “சி.ஆர். ரெட்டி எழுதிய கவித்துவிசாரமு (1954) தெலுங்கு இலக்கியத் திறனாய்வில் ஒரு முக்கியமான மைல் கல்’ எனக் கூறப்படு கின்றது. இவ்விடயம் பற்றி வி.பி. ஹனுமந்திராவ், கே. ராமகிருஷ்ணய்யா, பி. லக்ஷமிகாந்தம் முதலியோரும் எழுதியுள்ளனர். நவீன இலக்கியம் பற்றிப் பலர் எழுதிவரு
கின்றனர். கே. பிரசன்னாசார்ய சாஹித்ய விவேசன எனும்
279

Page 310
தலைப்பில் தொகுத்து வெளியிட்ட திறனாய்வுக் கட்டுரைகள் ஒரு சிறந்த திறனாய்வுத் தொகுப்பு எனக் கூறப்படுகின்றது. கிழக்கத்திய, மேற்கத்திய கல்வியாளர்களைப் பின்பற்றித் திறனாய்வு செய்யும் முறை பற்றித் தெலுங்கில் சில நூல்களே உள்ளன. அவற்றுள் ஹ. லசஷ்மிகாந்தம் எழுதிய சாஹித்ய சில்ப சமீகூடி, கே. வி. ஆர். நரசிம்மம் எழுதிய சாஹித்யதர்சனமு கவனித்தற்பாலன.
இக்காலகட்டத்திலே சி.பி. பிரவுண், எ.எச். ஆர்டன் முதலிய ஆங்கில அறிஞரும் தெலுங்குக்குச் சிறந்த சில பணிகள் செய்துள்ளனர். இவர்கள் அகராதி, இலக்கணம், இலக்கியம் முதலிய துறைகளிலே பங்களிப்புக்கள் செய்துள்ளனர்.
தெலுங்கு இலக்கிய வரலாற்றினை முதன் முதலாக எழுதியவரும் கந்து கூரி விரேசலிங்கம் அவர்களே. இவர் ஆந்திர காவுலா சரித்திர எனும் நூலை எழுதினார். இவரின் சமகாலத்தவரான குரஜாத பூநீராம மூர்த்தி கவிஜிவிதமு எனும் நூலை எழுதினார். இவர்களைத் தொடர்ந்து பலர் எழுதி யுள்ளனர். தமிழகத் தெலுங்கு இலக்கியம் பற்றியும் கட்டுரை களும், நூல்களும் வெளிவந்துள்ளன. 700 தெலுங்குக் கவிஞர்கள் பற்றி பி. வெங்கட ரமணய்யா எழுதிய அகராதியும், 100 நவீன தெலுங்குக் கவிஞர்கள் பற்றியும், எழுத்தாளர்கள் பற்றியும் எம். சத்திய நாராயண சாஸ்திரி எழுதிய நூலும் குறிப்பிடத்தக்கவை.
தெலுங்கிலே பல்வேறு மொழிகளிலிருந்து மொழி பெயர்ப்புக்கள் செய்யப்பட்டுள்ளன. நன்னையாவின் மகாபாரத மொழிப்பெயர்ப்பைத் தொடர்ந்து பல வடமொழி நூல்கள் தெலுங்கிலே மொழிபெயர்க்கப்பட்டன. காளிதாசனின் அபிஞான சகுந்தலத்தை இருபதுக்கு மேற்பட்ட கவிஞர்கள் தெலுங்கில் மொழிபெயர்த்துள்ளனர். வடமொழியிலிருந்தும், ஆங்கிலத்
தே
தேசிக விநாயகம்பிள்ளை
கி.பி 1876 ஆம் ஆண்டு தேரூரில் சிவதானுப்பிள்ளை, ஆதிலெட்சுமி ஆகியோருக்கு மகனாகப் பிறந்தார். இவரின் தொடக்கக்கல்வி மலையாள மொழியிலேயே அமைந்தது. எனினும், வாணன் திட்டில் திருவாவடுதுறை ஆதீன மடத்தின் தலைவர் சாந்தலிங்கத் தம்பிரானிடம் தமிழ் இலக்கிய, இலக்கணங்களைக் கற்றார். பின்னர், கோட்டாற்றில் கல்வியைத் தொடர்ந்தபோது குடும்பச் சூழ்நிலை காரணமாக அது தடைப்பட்டது. அச்சமயம் திருநெல்வேலி மடத்துக் குருக்கள் உமையொரு பாகனார் கோட்டாற்றுக்கு வந்தபோது அவரிடம்
சிவதீட்சையைப் பெற்றார். இவர் ஆங்கில நூல்களைக் கற்றுத்
280

திலிருந்தும் பெருந்தொகை மொழிபெயர்ப்புக்கள் வெளிவந்துள்ளன. வங்கமொழி, குஜராத்தி, ஹிந்தி, கன்னடம், மலை யாளம், ஒரியா, பஞ்சாபி, உருது, முதலிய மொழிகளிலிருந்தும் தெலுங்கு மொழிபெயர்ப்புக்கள்
ஆக்கப்பட்டன.
குழந்தை இலக்கியமும் தற்காலத்தில் வளர்ச்சி யடைந்துள்ளது. சிறுவர்களுக்கான கதைகள், கவிதைகள், நாடகங்கள் எழுதியோர்களிலே வெங்கட பார்வதீஸ்வரகவுலு (இரட்டைப் புலவர்கள்) சிந்தா தீகூSதுலு, ஜி.வி. சீதாபதி, பி.வி. நரசிம்மராவ், கவிராவு முதலியோரைக்கு குறிப்பிடலாம். வெங்கட பார்வதீஸ்வர கவுலு எழுதிய பாலகீதாஞ்சலி (குழந்தைப் பாடல்கள்) குறிப்பிடத்தக்கது.
நாட்டுப்புற இலக்கியம் பழைமையானது. நாட்டுப்புறப் பாடல்கள் பல தெலுங்கில் உள்ளன. கோலாட்டம் பாடலு, படவ பாடலு (படகுப்பாட்டு) லாலிபாடலு (தாலாட்டுப்பாடல்), பெள்ளிபாடலு (கல்யாணப்பாடல்கள்), ரோகடிபாடலு (தானியம் குத்தும் போது பாடும் பாட்டு) என பல வகை நாட்டுப்புறப் பாடல்கள் உள்ளன. ராமாயணம், கட்டுக்கதைகள், சில குறுநில மன்னர் பற்றிய கதைகள் எனப் பலவகை மூலங்களிலிருந்து இவை ஊக்கம் பெற்றுள்ளன. இன்றும் இவற்றிலே சில அறிஞர்கள் ஆர்வம் காட்டிவருகின்றனர்.
திரைப்படப்பாடல்களும் வசனங்களும் குறிப்பிடத் தக்கவையே. இவ்வாறு பல திறப்பட்ட வழிகளிலே தெலுங்குமொழி, இலக்கியம் ஆகியன வளம் பெற்றுள்ளன. ஏறத்தாழ கி.பி 1000 ஆண்டு தொடக்கம் இன்று வரையுள்ள தெலுங்கு இலக்கியப் போக்கினைச் சமகால தமிழிலக்கியத்துடன் ஒப்பிட்டுப் பார்க்குமிடத்துப் பலவகைகளில் ஒரே தன்மையும் காணப்படுகின்றது.
தம் புலமையைப் பெருக்கிக் கொண்டதோடு பல ஆய்வுக்
கட்டுரைகளையும் எழுதினார்.
கவிமணி தமது 25 ஆம் வயதில் புத்தேரியில் இருந்த உமையம்மையாரைத் திருமணஞ் செய்து கொண்டார். அத்துடன், கோட்டாற்றுத் தொடக்கப்பள்ளி ஆசிரியராகப் பணியேற்றார். பின் திருவனந்தபுரம் ஆசிரியர் பயிற்சிப் பள்ளியில் ஆசிரியராகவும் பணியாற்றினார். பின்பு திருவனந்தபுரம் மகாராஜா பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் ஆரம்பத்தில் அறிவியல் ஆசிரியராகவும், அடுத்துத் தமிழாசிரியராகவும் இருந்து 1931ஆம் ஆண்டு தம் 53 ஆம் வயதில் விருப்ப ஓய்வு பெற்றுக் கொண்டார்.
இந்துக் கலைக்களஞ்சியம்

Page 311
\
ビ
இளம் வயதிலிருந்து புனைபெயர் கொண்டு கவிபாடினார். இவர் படைப்புக்களாக மலரும் மாலையும், ஆசிய சோதி, உமர்கய்யாம் பாடல்கள், நாஞ்சில் நாட்டு மருமக்கள் வழி மான்மியம், கவிமணியின் கீர்த்தனைகள், உரைமணிகள், காந்தளூர்ச் சாலை ( ஆங்கிலம்) மற்றும் சில ஆங்கிலக் கட்டுரைகள் என்பன அமைந்துள்ளன. ஆசிய சோதி, உமர்கய்யாம் ஆகிய நூல்கள் மொழி பெயர்ப்பு நூல்களாகும். தமிழ் இதழ்களில் வெளிவந்த கவிதைகளின் தொகுப்பான மலரும் மாலையிலேயே முன்பு உமர்கய்யாம் பாடல்கள், ஆசிய சோதி ஆகியன வெளிவந்தன. இவை தவிர கவிமணி அழகம்மை விருத்தம் என்ற நூலையும் எழுதியுள்ளார்.
நாஞ்சில் நாட்டு மருமக்கள், தாயார் பற்றிய சட்டத்தை மாற்றியமைக்க முயன்று வெற்றி பெற்ற முற்போக்காளர்களில் கவிமணியும் ஒருவராவார். 1917ஆம் ஆண்டு மார்ச் மாதம் தொடங்கி 1918 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை, “தமிழன்' என்ற பத்திரிகையில் மருமக்கள் வழி தாயத்தின் தீங்கு பற்றி “மருமக்கள் வழி மான்மியம்’ என்ற தலைப்பில் தொடர் கவிதை எழுதினார். இது ஒர் சமுதாயச் சீர்திருத்தக் கவிதைத் தொகுப்பாகும். இக்கவிதையைப் படித்த இளைஞர், முதியோர் சீர்திருத்தத் தேவையினை உணர்ந்தார்கள். இக்கவிதைத் தொடரின் தாக்கத்தால் இந்தியாவில் 1926 ஆம் ஆண்டு சமுதாய சீர்திருத்தச் சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டு, 1927ஆம் ஆண்டு அது நடைமுறைப்படுத்தப்பட்டது.
1943ஆம் ஆண்டு எழுந்த தமிழிசை இயக்கத்தின் விளைவாக கவிமணி இகவாழ்வில் பற்றை விடுத்து, தெய்வ கீர்த்தனைகளை இயற்றினார். கவிமணி உரை நடை எழுதுவதிலும் சிறப்புப் பெற்றவர். இவரது உரை நடைப் படைப்புக்கள் யாவும் வரலாறு, சாசன ஆய்வுகளின் அடிப்படையில் அமைந்தவை ஆகும். “காந்தளூர்ச் சாலை” என்ற நூல் ஆங்கிலத்தில் எழுதப்பட்டதாகும்.
1940 ஆம் ஆண்டு, சென்னை மாகாணத் தமிழ்ச் சங்கத்தின் தலைவர் உமாமகேசுவரனார் இவருக்கு “கவிமணி” என்ற பட்டத்தை சென்னை பச்சையப்பன் கல்லூரியில் நடைபெற்ற பாராட்டு விழாவில் வழங்கினார். இராஜா சர்.அண்ணாமலைச் செட்டியார் பெரிய விருந்து கொடுத்து, பொன்னாடைப் போர்த்தி, ஆயிரம் வெண்பொற் காசுகளை இவருக்குப் பரிசாக வழங்கினார். கவிமணி சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி அமைப்பின் சிறப்பு ஆலோசகராகவும் கடமையாற்றினார். பலதுறைத் தமிழ்ச் சான்றோர் இவருக்கு பட்டம், பதவி வழங்கிச் சிறப்பித்தார்கள்.
ஒய்வு பெற்ற பின்னர் கவிமணி, ‘புத்தேரி” என்ற ஊரில் தங்கியிருந்தார். இவர் 1954 ஆம் ஆண்டு தமது 78 வது வயதில்
உயிர் துறந்தார். இவரின் சேவையும், புகழும் இன்று வரை நிலைத்திருப்பதைக் காணக் கூடியதாக உள்ளது. (சந.)
இந்துக்கலைக்களஞ்சியம்

O தேர்
தேர் என்ற சொல் தேர்ந்தெடுத்த என்றும் இரதம் என்ற
சொல் உயர்ந்த அமைப்புடையது என்றும் பொருள்படும். தேரும் தேரோட்டமும் பல்லாண்டு காலமாக நம் வாழ்வில் பங்குகொண்டு வருபவை. வட்டத் தேர், சதுரத்தேர் என்ற பலவகையான மரத் தேர்களைக் கண்டதோடு நில்லாது நுண்கலைக்கு இருப்பிடமான தேர்வடிவினைக் கல்லிலும் நம் முன்னோர்கள் செதுக்கியிருக் கிறார்கள். தொடக்க காலத்தில் போர்களுக்கும் மன்னர்கள் மக்களின் போக்குவரத்துக்கும் பயன்படத் தொடங்கிய தேர், பின்னர் கடவுளின் ஊர்தியாக உருவெடுத்து நகரும் கோயில் என்ற சிறப்புப் பெயருடன் தேர் என்றாலே, கோயில் தேரை மட்டும் குறிக்கும் அளவில் மாறி உள்ளது.
கிறீஸ்துவுக்கு பல ஆயிரம் ஆண்டுகட்கு முற்பட்ட ரிக் வேதத்தில் தேரின் பகுதிகளான கடையாணி பற்றிய செய்திகள் இடம் பெற்றுள்ளன. மேலும் இவ் வேதத்தில் கயிறுகளால் இழுக்கப்படும் தேர்கள் பற்றியும் இந்திரன், வருணன், அக்கினி, சூரியன் போன்ற கடவுளர்களுக்கு ஊர்தியாகத் தேர்கள் பயன்படுத்தப்பட்டமை பற்றியும் குறிப்புகள் காணக் கிடக்கின்றன. கடோபநிடதத்தில் தேர், தேர்ப்பாகன், குதிரை என்பவை மனிதனின் உடல் புலன்களோடு ஒப்பிட்டுப் பேசப்பட்டுள்ளன. மேலும் வேத காலத்தில் தேர்கள் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட சக்கரங்களையுடைய போர்க் கருவியாகப் பயன்படுத்தப்பட்டுள்ளன. அருத்தசாத்திரத்தில் (கி.மு 4 ஆம் நூற்றாண்டு) நாள் தோறும் போக்குவரத்துக்குப் பயன்படும் தேர்கள், போருக்குப் பயன்படும் தேர்கள், கடவுளின் தேர்கள் என்று மூன்று வகைப்படுத்தப்பட்டுள்ளன. மேலும் கிருனார் கல்வெட்டுகளிலும் தேர்கள் பற்றிய குறிப்புகள் கிடைக்கின்றன. காரவேலன் காலத்திய தேர்த் திருவிழா பற்றிய குறிப்புகளில் சமணசமயக் கடவுள்களுக்குத் தேர்த் திருவிழா நடத்தப்பட்ட செய்திகள் கிடைக்கின்றன.
தமிழகத்தில் சிலப்பதிகாரத்திலும், மணிமேகலையிலும் தேர் பற்றிய செய்திகள் நிரம்ப உள்ளன. சங்க இலக்கியங்களிலும் தேர்கள் பற்றிய செய்திகள் கூறப்பட்டுள்ளன. பன்னிரு திருமுறைகள் புராணங்கள் போன்றவற்றில் தேர்கள் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன. மாமல்லபுரம், தாராசுரம், திருவாரூர், கும்பகோணம், விருதாசலம் போன்ற தமிழ்நாட்டு நகரங்களிலும், ஹம்பி, கொனாரக் போன்ற வட நாட்டு நகரங்களிலும் கண்ணுக்கும் கலை உணர்வுக்கும் விருந்து வைக்கும் தேர்ச் சிற்பங்களை, தேர் வடிவ மண்டபங்களை நாம் இன்றும் காணலாம்.
நெடுநல்யானையும் தேரும் மாவும் படையமை மறவரும் உடையம் யாம்'
281

Page 312
என்ற கூற்று பண்டைக் கால படையமைப்பில் தேர்ப்படை வலிமை வாய்ந்த படையாகக் கருதப்பட்டிருக்கிறது என்பதைப் புலப்படுத்தி நிற்கிறது. யானை மீதும், குதிரை மீதும் சென்று போர் புரிவதை விட தேரேறிச் சென்று போர் புரிவது தான் அரச இலக்கணமாகப் போற்றப்பட்டிருக்கின்றது. இராமபிரானின் தந்தையின் இயற்பெயர் என்னவென்று நமக்குத் தெரியாது. பத்துத் திசைகளிலும் தேர் செலுத்தும் திறமை பெற்றிருந்த அவருக்குத் தசரதன்’ என்ற சிறப்புப் பெயர் தோன்றியது. இராமனும், இராவணனும் தேரேறிய சிறப்பை விரிவாகப் பாட விரும்பி இராமன் தேரேறு படலம், இராவணன் தேரேறு படலம் என்று தனித் தனிப் படலங்களையே கம்பர் வகுத்துக் கொள்கிறார். மகாபாரத யுத்தத்தில் ஆயிரக் கணக்கான தேர்கள் அணிவகுத்து நின்ற அற்புதக் காட்சியையும் அவை ஒன்றுடனொன்று நிகழ்த்திய கொடுமையான போரையும் நெஞ்சைப் பிணிக்கும் வகையில் வியாசரும், வில்லிபுத்தூராரும் கூறி உள்ளனர். விஜயனுக்கு கண்ணபிரான் தேர்ப்பீடத்திலேயே கீதையை உபதேசித்தார். தேரோட்டுவதில் நளமகாராசன் திறமைசாலி. அவர் திறமையைப் புகழேந்திப் புலவர் மிக அழகாகப் பாடுகிறார். அக்கால மன்னர்களின் செல்வச் செழிப்பினைக் காட்டும் அளவு கோல்களில் ஒன்றாகவும் தேர் விளங்கியிருக்கின்றது. தமிழனுக்கு நன்றாகத் தெரிந்த வாகனம் ரதம் என்னும் தேர். மனம் போகும் வேகத்தை மனோரதம் என்று சொன்னான். வானில் பறந்து செல்லும் ஊர்திக்கு வான ரதம் என்று பெயர் சூட்டினான். அறிவையே வாகனமாகக் கொண்டு அண்ட கோடிகளை அளக்க ஒரு ஞான ரதத்தை அவன் படைத்துக் கொண்டான். சிறு தேர் உருட்டல் என்ற ஒரு பிள்ளைத் தமிழ்ப்
பருவத்தை வகுத்துக் கொண்டான்.
மனிதர்கள் மட்டுமன்றி கடவுள்கள் கூட வெவ்வேறு வகையான தேர்களையே ஊர்தியாகக் கொண்டிருக்கிறார்கள். திரிபுரதகனம் செய்ய எழுந்த சிவபெருமானும் தேரைத் தான் ஊர்தியாகக் கொண்டார். சூரிய பகவான் ஏழு குதிரைகள் பூட்டிய ஒற்றைச் சக்கரத் தேரில் தான் உலகை வலம் வருகிறார். மன்மதன் தென்றல் என்னும் தேரில் ஏறித்தான் தன் திருவிளையாடல்களை நடத்துகிறான்.
தமிழக வரலாற்றில் பல்லவர் காலத்திற்கு முன்பே (கி.பி 45 ஆம் நூற்றாண்டுகள்) தேர்த்திருவிழா தொடங்கலாயிற்று. தேர்கள் பற்றிய கல்வெட்டுக் குறிப்புகள் திருவில்லிபுத்தூர், திருவரங்கம், நல்லூர், மதுரை மற்றும் பல இடங்களில் உள்ள கோயிற் கல்வெட்டுகளில் உள்ளன. அச்செய்திகள் தேர் பற்றிய gi, siggo)6OT 9 p5 GeFijésitpoor. (South Indian Inscriptions III, IV, V, VII, X1, XXIV) பல்லவர்கள் தமிழகத்தில் முதன் முதலில் குன்றுகளைக் குடைந்து குடைவரைக் கோயில்களையும் அதில் சிற்பங்களையும் செதுக்கினர். இவற்றுள் மாமல்லபுரத்தில்
செதுக்கப்பட்ட ஒற்றைக்கற் கோயில்கள் பஞ்ச பாண்டவர்
282

ரதங்கள் குறிப்பிடத்தக்கவை. இப்பல்லவத் தேர்கள் தமிழ் நாட்டில் முன்பே இருந்த மரத்தாலாகிய தேர்களைப் பார்த்து எழுதப்பப்பட்டவை என்று கூறப்படுகின்றது. மரவேலைப்பாட்டில் கைதேர்ந்த மரத்தச்சன் கற்றச்சன் ஆனான். அவனே பொன் முதலிய உலோகங்களில் வேலை செய்த பொற் கொல்லன் - தட்டான் ஆனான். இம் மூவகையினரும் இன்றும் ஒரே வகுப்பினராய் உள்ளனர். ஸ்தபதிகள் என்று சொல்லப்
படுபவர்களும் இவ் வகுப்பினரே.
இடைக்காலச் சமய எழுச்சியின் விளைவாக ஆலயங்கள் பிரமாண்டமான அமைப்புடன் எடுக்கப்பட்டதுடன் ஆண்டு தோறும் திருவிழாக்கள் கொண்டாடும் வழக்கமும் ஏற்பட்டது. பாண்டிய மன்னர்களின் கோயில் கட்டும் பணியின் ஓர் உறுப்பாகத் தேரின் வளர்ச்சி தொடங்கியது. அவ்வளர்ச்சிக் கட்டத்தில் விஜயநகரப் பேரரசின் காலம் தேர்களின் பொற்காலம் என்றே கூறலாம். தேர்களின் வடிவமைப்பும், படிமங்களும் அழகுற அமைக்கப்பட்டதோடு மரச் சிற்பங்களின் வளர்ச்சி ஒர் முழுமையடைந்த காலமாகவும் அது அமைந்தது.
தேர்கள் அமைப்பதைக் கலைஞன் தன் கருத்தில் தோன்றியவாறு அமைக்காமல் இருக்கச் மானசாரம் போன்ற சிற்ப நூல்கள் ஒரு வரையறையை வகுத்துள்ளன. விட்டுணு தத்துவ சம்கிதை என்னும் ஆகம நூலில் இரத நிர்மாணப் படலம் முழுமையான தேர் அமைப்பு விதிகளைக் கூறுகின்றது. அப்படலமே தேர் இந்துத் தெய்வங்களின் உறைவிடம் என்ற வரியுடனே தொடங்குகிறது.
அதே போன்று மானசாரம் என்ற சிற்பசாஸ்திரம் தேரின் அமைப்பு முறையையும் அதில் படிமங்கள் அமைய வேண்டிய இடங்களையும் தெளிவுபடுத்துகிறது.
கோயில்கள். நாகரம், திராவிடம், வேசரம் என்ற கோட்பாட்டில் (அதாவது சதுரம், அறு கோணம் அல்லது எண் கோணம், வட்டம் போன்ற அமைப்பில்) கருவறை அமைக்கப்படும். அதே போல் தேர்களின் அமைப்பும் நாகர, திராவிட வேசர முறையில் அமைய வேண்டும் என்று மானசாரம் கூறுவதன் மூலம் தேரும், கோயிலும் அமைப்பில்
ஒரு தன்மையின என்பதை உணரலாம்.
1) சகடை (மாடுகளால் இழுக்கப்படுவது. மிகச் சிறிய அடிப்பாகம் கொண்டு விமானம் என்னும் அமைப்பு இல்லாத ஒன்று)
2) சட்டத் தேர் (உறுதியான நான்கு சக்கரங்களுடன் கூடிய அடிப்பாகம், மேற்பகுதி முழுவதும் சட்டங்கள் கட்டப்பட்டு விழா நிறைவு பெற்ற பின் பிரிக்கப்படுவது)
இந்துக் க்களஞ்சியம்

Page 313
3) வைரத் தேர் (உறுதியான சக்கரங்களும், உறுதியான பெரிய அடிப்பாகமும் அதன் மேல் சிற்பங்களும் விமானத்துடன் கூடிய மேற் பகுதியும் உள்ள இக்காலத் தேர்) என்று மூன்று வகையாகப் பிரிக்கப்படுகின்றன.
தேர் கோயிலின் கருவறை அமைப்புப் போன்று உப்பீடம், அதிட்டானம், பாதம், விமானம் போன்ற உறுப்புகளால் அமைக்கப்பட்டிருப்பதால் இது கோயிலின் மறு உரு என்று சொல்லப்படுகிறது. ஒவ்வொரு தேரிலும் 250 முதல் 300 வரை சிற்பங்கள் இருக்கும். இதில் இந்துக் கடவுளர் சிற்பங்களும், புராண, தல புராண சிற்பங்களுடன் இராமாயண, மகா பாரத சிற்பங்களின் தொடர்கள் அணி செய்யும் யானை, யானை வீரர்கள், குதிரை வீரர்கள், சங்கநிதி, பதுமநிதி போன்ற சிற்பங்களும் உண்டு, கீழே அதிஷ்டானத்தில் சிங்கங்கள், யாளிகள், யானைகள், மகரங்கள், நுணுகிய மடிப்பு வேலைப்பாடுகள் இடம் பெறுகின்றன. மயிற் பீலிகளாலும், சாமரங்களாலும், தோரணங்களாலும் நல்லோசை தரும் சிறிய மணிகளாலும் ஒளி பொருந்திய கண்ணாடிகளாலும், விசிறிகளாலும், மாலைகளாலும் தேர்களின் மேற் பகுதி
அலங்கரிக்கப்படுவது வழக்கம்.
கோயில் மூலஸ்தான மூர்த்தியின் ஆசனத்தின் கீழ் யந்திரத் தகடு அமைந்திருப்பது போல தேரின் சிம்மாசனத்துக்குக் கீழ் சந்தனக் காலினுள் பொன், வெள்ளி போன்ற உலோகங்களும் இரத்தினங்களும் இடம் பெறுகின்றன. தேரின் முக்கிய உறுப்பு சில்லுகளாகும். இவை பெரும்பாலும் வாகை மரத்தினால் அல்லது வேங்கை மரத்தினால் செய்யப்படுகின்றன. சில்லுகள் பலம் பொருந்திய வளையங்களால் சுற்றிலும் பாதுகாக்கப்படுவன. தேருக்கு அடித்தளமாக விளங்கும் பகுதிகள் ஆதாரம் என்றும் உபாதாரம் என்றும் பெயர் பெறுவன. இங்கு தேரின் அச்சு பொருத்தப்படும். இதன் மேல் ஒன்பது தளங்கள் உண்டு. ஒவ்வொன்றும் மற்றயதைக் காட்டிலும் குறைந்த உயரம் வாய்ந்ததாக இருத்தல் வேண்டும் என்பது ஆகம விதி.
தென்னிந்தியாவிலுள்ள தேர்களில் பிரபல்யமான தேர்களெல்லாம் மேல் விதானப் பகுதியில் கட்டும் அமைப்புகள் கொண்ட தேர்களாகும். அதாவது பனை மரச் சட்டங்களால் பிணைக்கப்பட்டு, கொடிகளும் பூமாலைகளும் அசைந்தாட இவை வருவது ஒரு தனி அழகு. இலங்கையில் பெரும்பாலான தேர்களின் மேல் விதானப் பகுதி நிரந்தரமாக இணைக்கப்படுகிறது. இறைவனின் பஞ்ச கிருத்தியங்களில் தேர்த் திருவிழா, அழித்தல் தொழிலைக் குறிப்பது என்று கொள்ளப்படுகிறது. தேரோட்டம் இல்லாத திருவிழாவிற்கு உயிரோட்டம் இல்லை. (நி.நி.)
இந்துக் கலைக்களஞ்சியம்

தேவகி
கிருஷ்ணனைப் பெற்றவள். போவுகுலத்தவனான தேவகன் மகள். வாசுதேவனை மணந்தவள். இவளுடன் உடன்பிறந்த கம்சன் இவளுக்குப் பிறக்கும் குழந்தையால் தனக்கு சாவு நேருமென்று அசரீரி கூறியதால் தங்கையையும் வாசுதேவரையும் சிறையிலடைத்து, இவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகளைக் கொன்று வந்தான். ஏழு குழந்தைகளைக் கம்சன் கொன்று விட்டான். எட்டாவது குழந்தையாக கிருஷ்ணன் பிறந்தான். பிறந்தவுடனே தான் திருமால் என்பதனை தன் பெற்றோருக்கு அறிவித்துத் தன்னை யாசோதையிடம் விட்டுவிட்டு யசோதையின் மகவாகப் பிறந்த மாயையை இங்கே கொண்டுவரும்படி செய்தான். கம்சன் பெண் குழந்தையான மாயையைக் கொல்லப் போகும் போது அத்தெய்வம் வானிலே நின்று கிருஷ்ணன் ஆயர்பாடியில் வளர்வதைக் கூறி மறைந்தான். பின் கம்சன் தேவகியையும் வசுதேவரையும் சிறையிலிருந்து விடுவித்தான். கம்சனாற் கொல்லப்பட்ட தன் குழந்தைகளைக் கிருஷ்ணன் அருளால் பாதாளத்திலிருந்து திரும்பவும் இவள் அடைந்தாள்.
சுவாயம்பு மன்வந்தரத்தில் பிரசன்னியென்னும் பெயரடைந்தவள். கிரதி வந்தன், சுதேஷ்ணன், மித்திரசேனன் ருசு, சமந்தன், பத்திராக்கன், சங்கருஷணன், பூரீ கிருஷ்ணன், சுபத்திரை ஆகியோர் இவளது புதல்வர்களே. (இ. ச.)
தேவதாசி
தேவதாசி எனும் சொல்லுக்குத் தேவனுக்கு/ இறைவனுக்கு பணி செய்யும் பெண் என்பது பொருள். அதாவது தெய்வத் தொண்டு செய்யும் பணிப்பெண். இப்பதம் தேவரடியார், தேவடியாள் எனவும் வழங்கப்பட்டு வந்துள்ளது. தாசி எனும் பதத்திற்குப் பதிலாக அடியார், அடியாள் எனும் தமிழ்ப் பதங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இத்தகைய பெண்கள் நுண் கலைகளிலே குறிப்பாக நடனத்திலே சிறந்த தேர்ச்சி பெற்றவர்களாகக் கோயில் சம்பிரதாயங்களின் ஒரு பகுதியான இறைவன் சந்நிதியில் தம்முடைய நடனத்தை அர்ப்பணித்து வந்துள்ளனர்.
தேவதாசி தமிழ் நாட்டிற்கோ, இந்தியாவின் வேறெந்தப் பகுதிக்குமோ உரியவளாக கருதப்பட்டிலள். மிகப் பழைய காலம் தொட்டு உலகில் பல பாகங்களிலும் இறைபணிக்கே தம்மை அர்ப்பணித்த கலைஞர்கள் ஏதோ வகையில் இருந்து வந்துள்ளனர். இந்தியாவின் ஆதி நாகரிகமான சிந்து சமவெளி நாகரிகத்திலே நடனமும் இடம் பெற்றிருந்ததென்பது அந்நாகரிகச் சின்னங்களிலே கிடைத்த வெண்கலத்தாலான நடனமாதின் நேர்த்தியான சிலை மூலம் அறியப்படுகின்றது. இந்தியாவின் மிகப் பழைய இலக்கியமான இருக்கு வேதம் தொட்டு பிந்திய வேதங்களிலும், அவற்றின் சார்பு நூல்களிலும்
283

Page 314
நடனம், நடனமாது பற்றிய குறிப்புகள் வந்துள்ளன. குறிப்பாக இருக்கு வேதத்திலே உள்ள உஷா (வைகறைத் தெய்வம்) பற்றிய பாடலொன்றில் உஷா நன்கு ஆடை அணிந்த நடனப் பெண்ணுக்கு ஒப்பிடப்படுகிறாள். தொடர்ந்து இதிஹாசங்கள், புராணங்கள், பிற்கால இலக்கிய நூல்கள், சாசனங்கள்
ஆகியவற்றில் நடனமாது பற்றிய குறிப்புகள் வந்துள்ளன.
புராதன சுமேரிய, பாபிலோனிய நாகரிகங்களிலே தேவதாசிகள் போன்றோர் கோவில் சேவை செய்து வந்துள்ளனர்.
இந்தியாவிலே தேவதாசிகளைக் குறிக்கும் சொற்கள் பல்வேறுபட்டனவாக இருந்துள்ளன. ஆந்திரப் பிரதேசத்திலே சான் அல்லது மாதங்கி அல்லது விலாசினி எனவும், கர்நாடகத்திலே சூலி அல்லது சானி அல்லது பாத்ரா எனவும், மஹாராஷ்டிரத்திலே பாசவி எனவும், கொங்கணியில் நாயகின் எனவும், உத்தரப் பிரதேசத்தில் பாவினி எனவும், ஒரிசாவில் மகரி எனவும் தேவதாசி அழைக்கப்பட்டுள்ளாள். இக்கட்டுரை பொதுவாகத் தமிழகத்துத் தேவதாசிகளையே மையப்படுத்தி எழுதப்பட்டுள்ளது.
பழைய தமிழ் நூல்களிலுங் கல்வெட்டுகளிலும் பதியிலார், தளிச்சேரிப் பெண்டுகள், மாணிக்கம் போன்ற பதங்களாலே தேவதாசிகள் அழைக்கப்பட்டனர். மாணிக்கம் எனும் பெயர் அவர்களுக்குப் பெருமை சேர்க்கும் பெயரெனவும், அவர்கள் உண்மையிலேயே விலைமதிப்பற்ற மாணிக்கங்கள் எனவும் இசைப்பேரறிஞர் பி.எம் சுந்தரம் கூறியுள்ளார். ஆகமங்கள் இவர்களைக் கணிகை அல்லது ருத்திர கணிகை எனக் குறிப்பிடுகின்றன.
கணிகையின் லட்சணங்கள் ஆகமங்களிலும் குறிப்பிடப்பட்டுள்ளது. கணிகை தூய்மை, பொறுமை வாய்ந்தவளாகவும் எல்லா உறுப்புகளிலும் இளமை, மென்மை, முழுமையுடைவளாகவும், பேராசையற்றவளாகவும், நாட்டியத் தகுதியுடையவளாகவும், இரண்டு வேளை நீராடுபவளாகவும், தூய ஆடைகளை உடுப்பவளாகவும் அணிகலன்கள் அணிந்தவளாகவும், தலையில் வெண்மலர்கள் சூடியவளாகவும் இருக்க வேண்டுமென ரெளரவ ஆகமம் கூறுகின்றது. பரதரின் நாட்டிய சாஸ்திரம், வாத்ஸ்யாயனரின் காமசூத்திரம், வீராகமம் முதலிய நூல்கள் கணிகையரின் உயர்ந்த பண்புகள், கலைச் சிறப்பு ஆகியன பற்றிக் குறிப்பிட்டுள்ளன.
உருத்திர கணிகையர் பற்றித் திருநாவுக்கரசு சுவாமிகள்
“அருமணித்தடம் பூண் முலையரம்பையரொ டருளிப் பாடியர் உரிமையிற்றொழுவர் உருத்திரபல்கணத்தார்”
284

எனக் குறிப்பிட்டுள்ளார். சுந்தரமூர்த்தி சுவாமிகளின் மனைவியான பரவையார் ஒர் உருத்திர கணிகை. இவரைப்பற்றிச்
சேக்கிழார்,
*கதிர்மணி பிறந்தது என்ன உருத்திர கணிமாராம் பதியிலார்
குலத்துள் தோன்றிப் பரவையார் என்னும் நாமம்’
பெற்றார் எனப் பெரியபுராணத்திலே விதந்து குறிப்பிட்டுள்ளார்.
'பரமபதியான சிவனையே தம்பதியாகக் கொண்டு, மனிதருள் எவரையும் பதியாக கொள்ளாதவர் பதியிலார். ஒரு பதியுடன் வாழும் நிலையை இறைவனே அருள்வான். தேவதாசி என்பாள் மகா தேவனுக்குத் தாஸ்யம் செய்பவள் “உருத்திரகணிகையர் ஒருவரையே கணவராக உடையவர்கள் என்பது மழவை மகாலிங்கையரின் கருத்தாகும். உருத்திர கணிகையர் வேசியர்க்கு வேறாய் மணமின்றி பரமசிவனுக்குத் தாங்கள் செய்ய வேண்டிய ஊழியஞ் செய்து கொண்டு மணமின்றி உயர்ந்த சாதியர்களில் ஒருவனைக் கணவனாகக் கொண்டு பூஜா காலத்தில் சுத்த நிருத்தம் செய்யும் மகளிர்கள்” என ஆறுமுகத்தம்பிரான் குறிப்பிட்டுள்ளார். எனவே கணிகையர் அல்லது தேவதாசி இறைபணியிலீடுபாடும், ஒழுக்கமும் உடையவராக விளங்க வேண்டும் என்பது வெள்ளிடைமலை. ஆனால் நடைமுறையில் ஒரு சிலர் குறிப்பாகப் பிற்காலத்திலே ஒழுக்கம் குன்றியவர்களாக, விபசாரத்திலீடு படுபவர்களாக விலைமாதராக இருந்தபடியால், அனைவரும் ஒழுக்கமற்றவர்கள் எனக் கூறுவது தவறு.
தேவதாசிகள் பற்றிய பிறிதொரு தவறான கருத்து யாதெனில் அவர்கள் குறிப்பிட்ட ஒரு சாதி அல்லது சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதாகும். அவர்கள் பல்வேறு சமூகங்களிலிருந்தும் வந்து கோயிலிலே, குறிப்பாக நடனம், இசை மூலம் இறைவனுக்குத் தொண்டு செய்து வந்தனர்.
இவர்களின் தோற்றம் பற்றிச் சமய பெளராணிக ரீதியிலே சில கருத்துக்கள் கூறப்படுகின்றன. இச்சை, ஞானம், கிரியை என்ற சிவசக்திகள் மூவரின் நூபுர சத்தத்திலிருந்து முறையே உருத்திர கணிகை, உருத்திர கன்னி, உருத்திரதாசி எனும் மூவகையினர் தோன்றினர் எனக் காமிகாகமம் கூறும். இவர்கள் கோவில்களில் முறையே செய்ய வேண்டிய திருப்பணிகளையும் அவ் ஆகமம் விரிவாகக் கூறுகின்றது.
“உருத்திர கணிகையர் மகா மண்டபம் முதல் கருப்பாவாணம் வரை திருவலகு மெழுக்கிட்டுப் பஞ்ச சூர்ணங்களினால் அலங்கரித்துச் சுத்தமாய் இருந்து பூசை நேரங்களில் தீபங்களை ஏந்தியும், கானம் பாடல், நிர்த்தனம் ஆடல் செய்தும் உபசரிக்கத்தக்கவர்கள். சுத்தம், மிச்ரம், கேவலம் என்ற மூவகை ஆடல்களில் சுத்த நிர்த்தனமே உருத்திர கணிகைக்கு விதிக்கப்பட்டுள்ளது. ஆசாரியனால் பொட்டு அணியப் பெற்று
இந்துக் கலைக்களஞ்சியம்

Page 315
அவனை நாயகனாகக் கொள்ளுவதும் இவளுக்கு உரியதாம். இன்னும் இவ்வாறே துர்க்கை, இலக்குமி, சரஸ்வதி என்ற இவர்களுடைய பாதச்சிலம் பொலியினின்றும் முறையே இராசகணிகை, கிராம கன்னிகை, தாசி என்பவர்கள் உண்டானார்கள் எனவும், இவர்கள் இலக்கணம், கடமை, வாழ்க்கைத் திறம், மரபு வளர்ச்சி முதலியவை இன்ன எனவும் அவ்வாகமம் கூறுகின்றது.
பதியிலார் குலங்கள் பலவாயினும் அவர்களுள் உருத்திர கணிகையர் ஒரு பிரிவினர். பதியிலார் எனும் சொல் கல்வெட்டுகளிலே காணப்படுகின்றது.
இவர்களுடைய தோற்றம் பற்றி மேலும் சில புராணங்களிலும், பிற நூல்களிலும் கூறப்படுவனவற்றைச் சுருக்கமாகக் குறிப்பிடலாம். தேவலோக நடனமாதர்களில் ஒருவராகிய ஊர்வசி இந்திரனுடைய சபையில் நடனமாடிக் கொண்டிருந்தபோது இந்திரனுடைய மகன் ஜெயந்தன் மீது பார்வையைத் திருப்ப இருவரும் மதிமயங்கியதால் அவளுடைய நடனத்தில் ஜதி தவறியது. இதைக் கண்ணுற்ற அகத்திய முனிவர் அவர்களைப் பூமியிலே பிறக்குமாறு சபித்தார். அவர்களின் வழித் தோன்றல்களே தேவதாசிகள் ஆனார்கள் என மத்ஸ்யபுராணம் கூறுகின்றது. தமிழிலுள்ள சிலப்பதிகாரத்திலும் இதே போன்ற செய்தி காணப்படுகின்றது. மணிமேகலையின் தாயாகிய மாதவி சிலப்பதிகாரத்தில் வானவர் மகளிர் வழிவந்தவளாகக் கூறப்படுகின்றாள். வானவர் மகளிர் என்பது தேவலோக அரம்பையாகிய ஊர்வசியை இங்கு குறித்துள்ளது.
மேலும் பிச்சை கேட்டு வந்த சிவபிரானின் அருட் பார்வையால் "தாருகாவன ரிஷிபத்தினிகள் கருவுற்றுக் குழந்தைகளைப் பெற்று அவர்களைக் கைவிட்டனர். அவ்வாறு பிறந்த பெண்களுக்கு ருத்திர கணிகையர் என்று நந்தி தேவர் பெயரிட்டு நாட்டியக் கலையைப் பயிற்றுவித்தார். ஜந்தெழுத்து மந்திரத்தை ஒதி, உடல் தூய்மை, உளத்தூய்மையுடன் இறைவனுக்குச் சேவகம் செய்து அவர்கள் நித்திய சுமங்கலிகளாயினர்’ எனத் திருக்கோகர்ணம் ராமசுவாமி நட்டுவனார் 1678இலே எழுதிய ருத்திர கணிகாகவுத்துவம் கூறுகின்றது.
ஒரு பெண் பொட்டுக்கட்டும் சடங்கின் மூலமே தேவதாசியாவாள். பொதுவாகக் குடும்பத்தில் வயதான பெண்மணி கோவிலின் மூலவர் சன்னிதானத்தில் இச்சடங்கினைச் செய்து வைப்பார். சில சமயங்களில் கோவில் அர்ச்சகரும் இதனைச் செய்து வைப்பார். பொட்டு என்பது திருமாங்கல்யத்திற்கு இணையானதாகும். அதைக் கட்டுபவரிலேதான் வேறுபாடு உள்ளது. தேவதாசிக்குப் பிறந்து விட்டால் மட்டுமே ஒரு பெண் தேவதாசி ஆகிவிட முடியாது. பொட்டுக்கட்டு மூலம் ஒரு கடவுளுக்கு அவள் தன்னை அர்ப்பணிப்பது மூலமே தேவதாசியாக முடியும். பொதுவாக ஒரு
இந்துக் கலைக்களஞ்சியம்

பெண் பருவம் அடையும் போது அல்லது பன்னிரண்டு வயது எய்தும் போது இவற்றில் எது முந்தியதோ அப்போது அச்சடங்கு நிறைவேறும். ஆனால் இது கடுமையான விதியன்று. சில வேளை பத்து வயதிற் கூட இது நடைபெற்றுள்ளது.
கர்நாடக மாநிலத்தில் ஒரு பெண் அவள் வயது வருவதற்கு முன்பாகவே அர்ப்பணிக்க வேண்டும் என்ற வழக்கம் இருந்துள்ளது. ஆந்திரப் பிரதேசத்திலுள்ள கிருஷ்ண மாவட்டத்திலே கிடைத்த கல்வெட்டொன்றின் படி நாகேஸ்வர சுவாமி கோவில் பணியில் எட்டு வயதே நிரம்பிய சிறுமிகள் இருந்தனர் என அறியப்படுகின்றது.
பொதுவாக, ஒரு குறிப்பிட்ட ஆலயத்திற்கு அர்ப்பணிக்கப்பட்ட பெண் அந்தக் கோயிலில் மட்டுமே பணி செய்து கொண்டிருக்க வேண்டும். அவளுக்கு இரண்டாம் தடவை பொட்டுக் கட்ட முடியாது. ஆனால் சில விதிவிலக்குகள் இருந்தன.
ஆடலிலும், பாடலிலும் இசைக் கருவிகளை இசைப்பதிலும் சிறந்த தேர்ச்சி பெற்ற தேவதாசிகள் இறைவன் திருமுன்னிலையி லவற்றை நிகழ்த்தி வந்தனர். கோவிலமைத்தல், பூசை விதிகள் தெய்வத்திருவுருவங்கள் முதலியனவற்றை விளக்குவதற்காக எழுந்த சைவ, வைணவ, ஆகமங்கள் கோவில்களிலே தாசிகள் அல்லது கணிகையர்கள் நடனமாடுவது கட்டாயமானது என வலியுறுத்திக் கூறுகின்றன. மன்னன் இறைவனின் மனிதப் பிரதிநிதி என்பதால் தேவதாசிகள் பிற்காலத்தில் அரசவையிலும் ஆடல் மகளிராயினர் எனக் கூறப்படுகின்றது.
“உறுதிபடக் கூறுவதென்றால், தேவதாசி எனும் சொல் இறைவனுக்கு முன்னால் தங்களின் ஆடற்கலையை அர்ப்பணிப்பவர்களுக்கு மட்டுமே குறிப்பிட வேண்டும். அரசனுக்கு முன்னால் ஆடுபவர்களை ராஜதாசி என்று சொல்லலாம். ஆனால் பொது வழக்கில் இருசாராருமே தேவதாசிகள் என்றழைக்கப்பட்டு விட்டனர். தேவதாசியாகவும், ராஜ தாசியாகவும் தாயும் மகளுமோ அல்லது மகளும் தாயுமோ இருந்தது வழக்கத்தில் இல்லாமல் இல்லை. அரசசபையில் ஆடும் தாசி கோயில்களில் ஆடும் உரிமையை இழக்க வேண்டும் என்ற ஒழுங்கு கண்டிப்பாகக் கடைப்பிடிக்கப்பட்டது” என பீ.எம். சுந்தரம் குறிப்பிட்டுள்ளார்.
இறைவனின் தொண்டுக்குத் தங்களை ஆட்படுத்திக் கொண்டு கலைகளுக்குத் தங்களை அர்ப்பணித்துக் கொண்டு விட்டதால் அவர்கள் ஒரு சமுதாயமாக உருவெடுத்தனர். அவர்கள் ஒரு சாதிக்கு உரியரல்லர். பல்வேறு சாதிகள், சமூகங்களைச் சேர்ந்தவர்களும், சில சமயங்களில் அனாதைகளும் தேவதாசிகளாக வரிக்கப்பட்டுள்ளனர். குடும்பத்தில் முதலில் பிறக்கும் பெண்ணை கோயிலுக்கு அர்ப்பணிக்கும் வழக்கமும், சாதி, சமூக வேறுபாடின்றி மக்களிடையிலே நிலவி வந்துள்ளது.
285

Page 316
வேறொரு சாரார் தாங்கள் நேர்ந்து கொண்டதற்கேற்பத் தங்கள் மகளையோ, மகளிரையோ கோவிலுக்கு அர்ப்பணித் துள்ளனர். தங்களுக்கு மகள் பிறக்காவிடில், ஏழைப்பெண் ஒருத்தியை விலைக்கு வாங்கியும் அவளை அர்ப்பணித்துள்ளனர்.
ராஜாதிராஜ சோழ மன்னன் ஆட்சிக் காலத்தில் ஒருவர் நான்கு பெண்களை 700 காசுகளுக்கு வாங்கித் திருவாலங்காடு இறைவனுக்குத் தேவரடியாராக அர்ப்பணித்த தகவல் 174 ஆம் ஆண்டுக் கல்வெட்டொன்றிலே காணப்படுகின்றது. இது போன்று வேறு சில கோவில்களிலும் விலைக்கு வாங்கப்பட்ட இளம் பெண்கள் கோவிலிலே தேவதாசிகளாக இடம் பெற்றனர்.
கோவிலில் நடைபெறும் காலசந்தி உச்சிக் கால பூசைகளின் போது தேவதாசி குறிப்பிட்ட நடனங்களை இறைவன் திருமுன் ஆட வேண்டும், சாயரட்சை, அர்த்தயாமப் பூசைகளின் போதும் அவள் பங்கேற்க வேண்டும். அர்த்தயாமப் பூசைக்குப் பின் மூர்த்திகள் பள்ளியறைக்கு எடுத்துச் செல்லப்படுவர். அப்போது தாசியானவள் லாலி, ஊஞ்சல், கதவடைப்பு முதலிய பாடல்களைப் பாடுவாள். ஒர் ஆலயத்தில் ஒன்றுக்கும் மேற்பட்டு, அர்ப்பணிக்கப்பட்ட குடும்பங்களிருந்தால், இந்தத் தேவதாசிப் பணியானது முறை வைத்து நிகழ்த்தப்படும். நாட்டிய முறைகள், பாடல்கள் கோவிலுக்குக் கோவில் வேறுபடலாம். ஆடல், பாடல் தெரியாதவர்கள் பூத்தொடுத்தல், பூசைப்பாத்திரம் துலக்குதல் போன்ற சிறு வேலைககளைச் செய்திருப்பர் எனலாம்.
ஏறத்தாழ எண்பது ஆண்டுகளுக்கு முன் கருப்பகிருஹத் திற்குள் நின்று, இன்று அரிச்சர்கள் செய்யும் சோடசோபசார பூசையைத் தேவதாசிகள் திருவாரூர் தியாகராஜர் கோவில், திருச்செந்தூர் முருகள் கோவில் போன்ற சில கோவில்களிலே செய்து வந்தனர் எனக் கூறப்படுகின்றது. இம்முறை பின்னர் கைவிடப்பட்டது.
பெளத்த,சமணக் கோவில்கள் சிலவற்றிலும் தேவதாசிகள் இருந்தனர் என அறியப்படுகின்றது. குஜராத்திலுள்ள சோமநாதர் ஆலயத்தினைக் கஸ்னி முகம்மது சூறையாடிய போது (1024) அங்கு 500 தேவதாசிகள் இருந்தனர். தஞ்சாவூரிலே முதலாம் ராஜராஜன் அமைத்த பிருஹதீஸ்வரர் (தஞ்சைப் பெருவுடையார்) ஆலயத்திலே சோழப்பேரரசின் பல்வேறிடங்களிலுமிருந்து கொண்டுவரப்பட்ட 400 தேவதாசிகள் நியமிக்கப்பட்டிருந்தனர் என்பது கல்வெட்டுக்களால் அறியப்படுகின்றது.
இவ்வாறே சுசீந்திரம், திருவண்ணாமலை, திருச்செந்தூர், இலங்கையிலுள்ள தேவிநுவர முதலிய இடங்களிலிருந்த குறிப்பிட்ட சில பெரிய ஆலயங்களிலே பல தேவதாசிகள் இறைபணி செய்துவந்தனர். தேவதாசிகள் தமிழகத்தில் மட்டுமன்றி இந்தியாவிலுள்ள பல்வேறு மாநிலங்களிலும் உள்ள கோவில்களிலே இறைபணி செய்தமை பற்றி முன்னரே கூறப்பட்டுள்ளது.
286

முற்காலத்திலும், இடைக்காலத்திலும் வாழ்ந்த தேவதாசிகள் பொதுவாகப் பல்வேறு கலைகளிலே தேர்ச்சியுள்ளவர்களாகவும், சிறந்த குண்நலன்கள் உடையவராகவும் இலங்கினர். ஒருவரின் பெருமையை அறிவதிலும், தேவைப்படின் உதவி செய்வதிலும் தேவதாசிகள் தயங்கிலர். மகாமகோபாத்யாய உவே. சாமிநாதய்யர் தம்முடைய நினைவுமஞ்சரியிலே ஒர் ஆர்வமூட்டும் நிகழ்ச்சியைக் குறிப்பிட்டுள்ளார். நெற்குன்றவனார் எனும் பெரும் புலவர் பஞ்சத்தின் காரணத்தினால் செலுத்த வேண்டிய வரியைச் செலுத்தாமையால் சிறை போக வேண்டிய நிலை ஏற்பட்டது. அவ்வமயம் தற்செயலாக வந்த ஒரு தாசி அவர்மீது இரக்கம் கொண்டு அவர் செலுத்த வேண்டிய தொகையை வழங்கி அவரை மீட்டாள் என்று கூறப்படுகின்றது. விநோதரசமஞ்சரியிலே கூறப்பட்டுள்ள ஒரு நிகழ்ச்சியிலே கவிச் சக்கரவர்த்தி கம்பர் தமது இராமாயணத்தைத் திருவரங்கத்திலே அரங்கேற்றச் சென்ற போது கோவில் அதிகாரிகள் அவரிடம் மூன்று பேரறிஞர்களிடமிருந்து சாற்றுக்கவி பெற்று வருமாறு கூறினர். அம்மூவருள் ஒருவர் தேவதாசியாகிய தஞ்சாவூர் அஞ்சனாட்சியாவாள். அவள் கம்பரை வரவேற்று அவருக்குத் தேவையான பாடல்களை இயற்றிக் கொடுத்தாள். தஞ்சையிலிருந்து ஆட்சி புரிந்த விஜயராகவநாயக்கரின் சபையிலே நடனப் பெண்மணியாக விளங்கிய சந்திரரேகா அழகும், அறிவும் மிக்கவளாக மிளிர்ந்தாள். பரதசாஸ்திரம், நடன ஆற்றுகை சாகித்தியம் முதலியனவற்றிலே சிறந்து விளங்கினாள். இந்த அரச சபையிலிருந்த ப. ரங்கஜம்பா என்பவளும் நடனத்திலும் கவிதையிலும் சிறந்து திகழ்ந்தாள்.
சில தேவதாசிகள் தமிழ் மட்டுமன்றிச் சமஸ்கிருதம், தெலுங்கு மொழிகளிலும் மிகச்சிறந்த தேர்ச்சி பெற்றிருந்தனர். சென்னைத் தேவதாசிகள் சங்கத்தின் செயலாளராக இருந்த பெங்களூர் நாகரத்தினம்மா ஒரு சம்ஸ்கிருத மகாநாட்டிற்குத் தலைமை தாங்கி, தமது உரையினை வெகுலாவகமாகச் சமஸ்கிருதத்தில் ஆற்றினார். பெங்களூர் கமலா ஒரு புகழ் பெற்ற நர்த்தகி. அவள் பல சாஸ்திரங்களிலும், இலக்கணத்திலும் நன்கு தேர்ச்சி பெற்றிருந்தாள். சிருங்கேரி சங்கரமடத்தைச் சேர்ந்த மடாதிபதி பல பண்டிதர்கள் மூலம் அவளை ஒரு வித்வத்சபையிலே பரிசோதித்து அவளுக்கு உத்தரயஜ்ஞோபவிதம் என்ற சிறப்பான கெளரவத்தை வழங்கினார். இவ்வாறு பல துறைகளிலே துறைபோகிய தேவதாசிகள் இருந்தனர்.
தேவதாசிகள் பொதுவாகச் செல்வச் சிறப்புடன் வாழ்ந்தனர். ஆனால் அவர்களிற் பலர் ஒரு கணவனுடனேயே வாழ்ந்தனர். குலமாதர் போலவே விளங்கினார் என்பதற்கு இலக்கியமும், பிறவரலாற்று மூலங்களும் சான்றுபகவருவன. இவர்களிற் பலர் தங்கள் செல்வங்களைச் சமயத்திற்கும், அறக்கொடைக்கும் செலவிட்டனர் என்பதற்கும் சான்றுகள் உள்ளன. இராஜமுந்திரிக்கு அருகிலுள்ள கொருகொண்டாவில் உள்ள லக்ஷமிநரசிம்ம ஆலயம் லக்ஷ்மி எனும் தாசியினாலே கட்டப்பட்டதென அக்கோவிலிலுள்ள கல்வெட்டுக் கூறுவதாக
இந்துக்கலைக்களஞ்சியம்

Page 317
ஆந்திர தேசப் பிரபல அறிஞரான விஸ்வநாத சத்திய நாராயணன் கூறியுள்ளார். அபிநயக் கலைஞர்களான சீர்காழி செல்லம், அம்மணி சகோதரிகள் (19-20ஆம் நூற்றாண்டு) தங்கள் நகரின் வடக்குத் தெருவில், தங்கள் இல்லத்திற்கு எதிராக செல்வ விநாயகர் கோவிலைக் கட்டுவித்துள்ளனர். திருவாரூர் கோவிலுக்கு அணுக்கியார் பரவைநாச்சியார் (கி.பி 11ஆம் நூ.) தன்னுடைய கொடையாக 428 முத்துக்கள், 7 ரத்தினங்கள், 36 வைரங்கள், 1000 கழஞ்சு நிறையுள்ள தங்க ஆபரணங்களை
வழங்கினாள் எனக் கல்வெட்டொன்று குறிப்பிடுகின்றது.
புத்தருடைய வாழ்நாளில் அவர் கடைசியாகப் பெற்றுக் கொண்ட பரிசு அம்ரபாலி என்ற கணிகையால் சங்கத்திற்கு வழங்கப்பட்ட மாந்தோப்புத் தான் என யுவான் சுவாங் எனும் சீன யாத்திரிகர் குறிப்பிட்டுள்ளார். சென்ற நூற்றாண்டிலே திருவிடை மருதூரைச் சேர்ந்த செல்வந்த தேவதாசி ராஜாம்பாள் தன்னுடைய சொத்துக்கள் அனைத்தையும் அறப்பணிகளுக்காக அளித்தாள். திருவையாறு தியாகராஜப் பெருமானுக்குப் பெங்களூர் நவரத்தினம்மாள் இதே போன்று அறக் கொடை வழங்கினாள்.
தேவதாசிகள் தியாகச் செயல்களும் சிறப்பாகச் செய்துள்ளனர். சிதம்பரம் நடராஜர் ஆலயத்திலே தேவதாசியாகத் தொண்டு செய்த வைப்பி என்பவள் திப்பு சுல்தான் இக்கோவிலுக்குப் படையெடுத்து வந்த போது, நடராஜ விக்கிரகத்தினைப் பாதுகாத்தாள் எனக் கூறப்படுகின்றது. இதைப்போல திருவரங்கத்தின் மீது மாலிக்கபூரின் படைகள் படையெடுத்து வந்த போது பூரீ ரங்கநாத மாணிக்கம் என்றழைக்கப்பட்ட அம்சலேகா தனது புத்திசாதுரியமான செயற்பாட்டினாலே திருவரங்கப் பெருமானின் விக்கிரகத்தைக் காப்பற்றியது மட்டும்மன்றிப் படைகளையும் பின்வாங்கச் செய்தாள் என அறியப்படுகின்றது.
தேவதாசி, சமுதாயத்தில் ஒர் உயர் நிலை மதிப்பைப் பெற்றிருந்தாள் என்பது பற்றி ஏற்கனவே குறிப்பிட்ட காமசூத்திரம் போன்ற நூல்களால் அறியப்படும். இறைவனுக்கு கண்ணுாறு (திருஷ்டி தோஷம்) கழிக்கும் உரிமை அவளிடமே விடப்பட்டிருந்தது. கும்ப ஆராத்தி அல்லது குடமுறையின் அடிப்படைக் கருத்து இதுவாகும். உற்சவமூர்த்தி கோவிலின் நான்கு வீதிகளிலும் உலா சென்று, திரும்பவும் இருந்த இடத்திற்கு வரும் போது தேவதாசி கும்ப ஆராத்தி எடுப்பாள். இக்குட முறை தேவதாசியின் கெளரவ உரிமையாகும். இது மட்டு மன்றிச் சமயம் சார்ந்த அல்லது சமுதாயம் சார்ந்த மங்களகரமான எந்த விழாவிலும் அவளுக்கு முதலிடம் வழங்கப்படும். புதிதாக ஒர் அரசர் முடிசூடும் போது, தேவதாசியின் வீட்டின் முன்னால் படிக்கட்டிலுள்ள மண்னை எடுத்து வந்து அவருடைய இடுப்பில் பூசி அவரைத் தூய்மைப்படுத்த வேண்டுமென அக்கினி புராணம்
இந்துக்கலைக்களஞ்சியம்

கூறுகின்றது. தமிழ் நாட்டில் உள்ள ஒரு கல்வெட்டிலே ஒரு தேவதாசிக்கு “மன்னரை முடிசூடும் பெருமாள்” என்ற அடை மொழி வழங்கிப் பாரட்டப்படுகின்றது. “ தேவதாசியைக் கண்ணாலே பார்ப்பது புண்ணியச் செயல்” என லிங்கப்புராணம் கூறும். அவள் சகுனமாகவும் கருதப்பட்டாள். தேவதாசி மூப்பின் காரணமாகவோ அல்லது நோய் காாரணமாகவோ கோயில் சேவையிலிருந்து கோயி லதிகாரிகளின் அனுமதியுடன் ஒய்வு பெறலாம்.
ஒரு தேவதாசி இறந்துவிட்டால் மூலமூர்த்தியின் ஆடை கொண்டு வரப்பட்டு அவள் உடலின் மீது போர்த்தப்படும். கோயிலிற் பூசைகள் நடைபெறா. அவளுடைய உடல் தாங்கிய வண்டி, முன் கோபுர வாசலில் (கதவு மூடப்பட்டிருக்கும்) ஒரு நிமிடம் நிறுத்தப்பட்டு பின்னர் எடுத்துச் செல்லப்படும். இது அவளுடைய நாயகரிடமிருந்து விடை பெற்றுச் செல்வதற்கான அடையாளச் சடங்காகும், அவளுடைய எரியூட்டுக்குக் கோவில் அடுப்பிலிருந்து நெருப்புக் கொண்டு வரப்பட்டே எரியூட்டப்படும். இந்த வழக்கம் இவர்களின் பணிகளிடம்பெறும் கோவில்கள் அனைத்திலும் பின்பற்றப்பட்டு வந்துள்ளது.
தேவதாசிகள் பொதுவாக ஏகபதி (ஒரு கணவன்) விரதமுடையவளாக விளங்கினர். அவர்கள் குலமகளிர் போலவே திகழ்ந்தனர். இத்தகைய தகுதியிருந்தபடியாலேதான் இந்துமதி என்ற தாசி கங்கையின் போக்கையே மாற்ற முடிந்ததென மிலிந்த பஞ்ளு (கி.மு 2ஆம் நூற்றாண்டு) எனும் நூல் கூறுகிறது. சிலப்பதிகாரம் கூறும் மாதவியும் சிறந்த கற்புக்கரசியே. பெரும்பாலும் கடந்த ஒரு சில நூற்றாண்டுகளுக்குளே தான் தேவதாசிகளில் ஒரு சாரார் ஒழுக்கம் கெட்டவர்களாக
மாறிவிட்டனர் எனக் கருதப்படுகின்றது.
தேவதாசிகள் பற்றி மிக அண்மையில் ஆராய்ந்த இசைப் பேரறிஞர் பி. எம் சுந்தரம் ' தேவதாசியை எந்தச் சமுதாயம் கீழே வீழ்த்தியதோ, அதே சமுதாயம் அவள் மீது புழுதிவாரித் தூற்றவும் தொடங்கியதுதான் மிகவும் ஆச்சரியமானது. இந்தப் “பெருமைக்குரிய பணி” இன்னும் தொடருகிறது. தேவதாசி என்ற சொல் விபசாரி என்ற சொல்லுக்கு இணையானதாக மாற்றப்பட்டு விட்டது. “பூவிதழில் முள் விழுந்தாலும் முள்ளில் பூவிதழ் விழுந்தாலும் அழிவைச் சந்திப்பது பூவிதழே’ என மிக மனவேதனையுடன் தேவதாசிகளிற்கு ஏற்பட்டுள்ள மாறாத வடு பற்றிக் கூறியுள்ளார். மேலும் விபசாரம் தேவதாசிகளில் மட்டும் காணப்படவில்லை. மிக உயர்ந்த சமூகத்தவர்களிடத்திலும்
ஏனையோரிடத்திலும் நிலவுவதைச் சுட்டிக் காட்டியுள்ளனர்.
19ஆம் நூற்றாண்டு யாழ்ப்பாணத்திலே தேவதாசிகளின் ஒழுக்கக் கேட்டினையும் அதற்கு உடந்தையாக இருந்த பிரமுகர்களையும் மிக வன்மையாகக் கண்டித்த ஆறுமுக நாவலர் (நாவலர் பெருமான்) உண்மையான தேவதாசிகள் பற்றி
287

Page 318
குறிப்பிடுகையில் ருத்ர கணிகைகள் விபசாரம், மது அருந்துதல், அசைவ உணவு உண்ணுதல் ஆகியவற்றிற்கு அப்பாற்பட்டவர்கள் என்றும், பஞ்சாக்ஷர, ஜபத்தில் ஈடுபட்டதால் சிவவழிபாட்டில் உயர்ந்து நிற்பவர்கள் என்றும் ஆகமங்கள் கூறுகின்றன என இவர்களின் உயர் நிலையை சுட்டிக்காட்டியுள்ளார். பி.எம். சுந்தரம் அவர்களும் இப்போது இதே கருத்தினை வலியுறுத்தியுள்ளமை நன்கு குறிப்பிடற்பாலது.
பெரும்பாலான தேவதாசிகள் குலமகளிர் போல மிகுந்த ஒழுக்கக் கட்டுப்பாட்டுடன் வாழ்ந்தனர். அவர்கள் குறிப்பிட்ட ஆலயத்திலே எழுந்தருளியிருக்கும் இறைவனைத் திருமணம் செய்து கொண்டனர் என்ற பாவனையிலே நித்ய சுமங்கலியாக விளங்கினர். இறைவனைத் திருமணம் செய்தமையால் அவர்களின் கணவர் என்றுமுள்ள இறைவரே, எனவே மனைவியார் / நித்திய சுமங்கலிகளே. மேலும் ஏற்கனவே குறிப்பிட்டவாறு உண்மையான தேவதாசி பல வழிகளிலே மங்கல மானவளே.
சென்ற நூற்றாண்டின் முற்பகுதியிலே, தேவதாசிகள் ஒழுக்கக் கேடுகள் உள்ளவர்கள் ஆகையால் அவர்களைக் கோவிலுக்கு அர்ப்பணித்து அவர்களின் சேவை கோவில்களிலிடம் பெறுவதை முற்றாக நிறுத்தும் படி ஒரு சாரார் குறிப்பாக தேவதாசி சமூகத்தை சேர்ந்த கலாநிதி முத்துலட்சுமி ரெட்டி அம்மையார் முதலியோர் அரசாங்கத்திடம் வலியுறுத்தினர். இதன் விளைவாக 1947இல் தமிழ் நாட்டிலே தேவதாசிகள் கோயில்களில் ஆடுதல் சட்டபூர்வமாக நிறுத்தப்பட்டது. எனினும் திருத்தணி சுப்பிரமணியசுவாமி ஆலயம் போன்ற சில கோயில்களிலே தொடர்ந்து நிலவியதாக அறியப்படுகின்றது.
பல நூற்றாண்டுகளாக தேவதாசிகள் நன்கு போற்றி வளர்த்து வந்த பரத நாட்டியம் (முன்னைய சதிர், தேவதாசி நடனம்) ஈ.கிருஷ்ண ஐயர், பூரீமதி ருக்மிணிதேவி அருண்டேல் போன்றோரின் அயராத முயற்சிகளால் மேலும் மெருகு ஊட்டப் பெற்று இன்று சிறப்பாக விளங்குகின்றது. தேவதாசி குடும்பங்களைச் சேர்ந்த பிரபல பரதக் கலைஞர்கள் ஒரு சாரார் இன்றும் உள்ளனர். தமிழகத்திலே சென்ற நூற்றாண்டிலே வாழ்ந்த பிரபல தேவதாசி நடனமணிகளிற் 'சீர்காழி செல்லம் அம்மணி சகோதரிகள், தஞ்சாவூர் குசலாம்பாள், காரைக்கால் சாரதாம்பாள், திருவாரூர் ஞானம், மதுராந்தகம் ஜெகதாம்பாள், திருவாழபுத்தூர் கல்யாணி, பந்த நல்லூர் தங்கச்சி, திருவாரூர் கமலம், மயிலாப்பூர் கெளரி, திருநெல்வேலி முத்துரத்தினம்மாள், பந்தநல்லூர் சபாரஞ்சிதம், கும்பகோணம் பானுமதி, தஞ்சாவூர் பால சரஸ்வதி, பந்த நல்லூர் ஜெயலக்ஷமி முதலியோரைக் குறிப்பிடலாம்.
இவர்களைப் போல ஆந்திரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ரஞ்சகம் குப்பாயி, மட்டுல்லா லசுஷ்மி நாரயாணி, பெண்டியல்லா, அன்னபத்துலா சத்தியபாமா, சித்தாபத்துலா நாகமணி,
288

துக்கிராலா மாணிக்கம், எண்டமூரி ராமரத்தினம், காளஹஸ்தி ராஜம்மா போன்றோரையும், கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த மூகூரு ஜிஜம்மா, திருமுழுடலு சுந்தரம்மா, ஹஸ்ஸன் சுந்தரம்மா, கோலார் நாகரத்தினம், பெங்களூர் சந்திரவதனா, பெங்களூர் நாகரத்தினம்மா போன்றோரையும் குறிப்பிடலாம்.
மேலும் தேவதாசி முறையை ஒழிப்பதில் இ.வே.ராமசாமி நாயக்கரின் சுயமரியாதை இயக்கத்தின் பங்களிப்பும் குறிப்பிடற்பாலது. தேவதாசி குடும்பத்தைச் சேர்ந்த மூவதுார் செல்வி ராமதீர்த்தம்மாளும் இதிலே சேர்ந்து தேவதாசிகளின் நலனுக்காக உழைத்தார். கலாநிதி முத்துலசன்டிமி அம்மையாருடனும் சேர்ந்து செயற்பட்டார். சுயமரியாதை இயக்கச் செல்வாக்கினாலே தேவதாசிகள் மோசவழி அல்லது வாழ்வு பெற்ற மைனர் எனும் நாவலை எழுதினார். 1936இலே குற்றாலத்தில் அந்நூல் வெளிவந்தது.
இந்தியாவிற் போன்று இலங்கையிலும் தேவதாசிகள் பல்வேறு காலங்களில் இருந்தனர். குறிப்பாகச் சோழப் பேரரசின் ஆதிக்கம் இலங்கையிலேற்பட்டிருந்த காலத்தில் (கி.பி 11ஆம் நூ) தேவதாசிகள் பொலநறுவையிற் சோழர் அமைத்த வானவன்மாதேவி ஈஸ்வரத்திலும், விஜயராஜ ஈஸ்வரத்திலும் இறைபணி செய்தனர். கி.பி 1344இலே இலங்கைக்கு வந்த மொறொக்கோ நாட்டுப் பயணியான இபுன்பத்தூத்தா தேவிநுவர விஷ்ணு ஆலயத்திலே 500 தேவதாசிகள் இருந்தனர் எனக் குறிப்பிட்டுள்ளனர். கி.பி 15ஆம் நூற்றாண்டளவிலே கோட்டை அரசிலிருந்த இந்து கோவில்களில் நடனமும் இடம் பெற்றதாக அறியப்படுகின்றது. 19ஆம் நூற்றாண்டிலே யாழ்ப்பாணம் வண்ணை வைத்தீஸ்வரன் ஆலயத்திலே கனகி எனும் நடனமாது இருந்தாள் . அவளைப் பற்றிநட்டுவச் சுப்பையர் என்பவர் கனகி புராணம் எனும் நூலை எழுதினார். இந்நூல் முழுமையாகக் கிடைக்கவில்லை, ஆனால் சமகால தேவதாசி ஒருவரின் ஒழுக்கக்கேடு முதலியனவும் இதில் இடம் பெற்றுள்ளன. இக்காலத்திலும் 20ஆம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் தமிழகத்திலிருந்து தேவதாசிகள் ஒப்பந்த அடிப்படையிலே திருவிழாக் காலங்களிலே யாழ்ப்பாணத்திற்குச் சில பிரமுகர்களாலும், வர்த்தகர்களாலும் கொண்டுவரப்பட்டனர். அவர்களில் ஒரு சாரர் திருவிழாக்கள் முடிந்த பின்னர் தாயகம் திரும்பினர். ஒரு சிலர் இங்கே தங்கிவிட்டனர். அவர்களின் வழிவந்தவர்கள் வண்ணார் பண்ணை, நல்லூர், கொக்குவில்
அச்சுவேலி, சுழிபுரம், இணுவில் முதலிய இடங்களில் உள்ளனர்.
இவ்வாறாக நீண்ட வரலாறும், பல சிறப்புகளும் வாய்ந்த தேவதாசி மரபு இன்று மங்கிவிட்டது. ஆனால் கலைகளுக்குக் குறிப்பாக நடனத்திற்கு இம்மரபைச் சேர்ந்தோர் தொடர்ந்து ஆற்றிவந்த பங்களிப்புகள் என்றும் நினைவு கூரத்தக்கவையே. (6.d.)
இந்துக் கலைக்களஞ்சியம்

Page 319
தேவர்கள்
தே என்ற சொல் தெய்வத்தன்மை பொருந்தியவர் எனப் பொருள்படும். மிக உயர்ந்த புண்ணியப் பேறு பெற்றவர்கள் தேவர்கள் ஆவார். இவர்கள் நிட்டோமம் முதலிய யாகங்களைச் செய்தவர்கள். மகாவிரதம் புரிந்தவர்களே தேவராக விளங்குவார்கள். தெய்வம் வேறு; தேவர்கள் வேறு இறைவன் ஒருவனே. அவனே மூன்று ரூபங்களை எடுத்து பிரம்மாவாக படைத்து விஸ்ணுவாக காத்து உருத்திரனாக அழிக்கிறார். இந்த இறைவனால் படைக்கப்பட்டுள்ள இந்த அண்டத்தை மனிதர்களினதும் பிராணிகளினதும் வாழ்வுக்கு ஏற்றவாறு அனுகூலமாக்கித் தரும் பொறுப்பு தேவர்களைச் சேர்ந்ததாகும். எனவே தேவர்கள் இறைவனால் படைத்து, காத்து, அழிக்கப்படும்
இவ்வுலகை நிர்வாகிக்கும் பொறுப்புடையவர்கள்
உயிரினங்களில் உச்சநிலையில் உள்ள தேவர்களிற் பல வகையினர் உண்டு. கின்னரர், கிம்புருஷர், யக்ஷர், ஸித்தர், சாரணர், ஸாத்யர், கந்தர்வர் எனப் பல வகையுண்டு. பல வகையான இத்தேவர்களுக்கு மூன்று ரூபங்கள் உண்டு. தேவலோகத்தில் ஒவ்வொரு தேவதையும் திவ்விய சாரீரத்துடன் இருப்பதை “ஆதி தைவிக ரூபம்’ என்பார்கள். இத்தேவர்கள் பூலோகத்தில் பஞ்ச பூதங்களில் கரைந்து அரூபமாக இருப்பதை “ஆதி பெளதீக ரூபம்’ என்பர். அண்டத்தில் உள்ளது பிண்டத்திலும் உள்ளது என்பது போல் பிராணிகளின் ஒவ்வொரு அங்கத்திலும் தேவர்கள் இருப்பது “ஆத்யாத்மிகம் ரூபம்’ எனப்படும். இவ்வாறு மூன்றுருவில் தேவர்கள் உலா வருவார்கள்.
அடுத்து தேவர்கள் சுவர்க்க பூமி எனப்படும் தேவருலகில் வசிப்பவர்கள் என தொன்மைக் காலம் தொட்டு வழக்கிலிருக்கிறது. தேவருலகு பூலோகத்திற்கு மேல் அமைந்துள்ளது. எண்பத்தைந்து நூறாயிரத்து யோசனை பரப்பளவுள்ளது. தலைநகர் அமராவதி என்றும் தேவர்கள் இன்பத்தை மட்டுமே அனுபவிப்பவர்கள் என்றும் தேவருலகில் துன்பம் இல்லை என்றும் கூறப்படுகிறது. இங்கு இரவு பகல் வேறுபாடு இன்றி எப்போதும் ஒளி நிறைந்திருக்கும். தேவர்களுக்கு 365 நாட்கள் கொண்ட ஒரு மக்கள் ஆண்டு ஒரு நாள் ஆகும். இவர்களின் உணவு அமுதம், தேவர்களின் தலைவன் இந்திரன். இவன் முப்பத்து முக்கோடி தேவரும், முனிவரும் வணங்கத் தேவருலகை ஆள்பவன். இவனுடைய மனைவி இந்திராணி மகன் சயந்தன், பட்டத்து யானை ஜயிராவதம் இந்திரன் ஆட்சி செய்யும் சபை தெய்வ சபை, சுதன்மா என்று அழைக்கப்படுகிறது.
தேவலோகத்தில் உள்ள தேவர்கள் முப்பத்து முக்கோடி பேர் என புராணங்கள் கூறும். ஆதித்தர் பன்னிருவர்; ஏகாதச உருத்திரர் பதினொருவர், வசுக்கள் எண்மர், அச்சுவினி தேவர் எனப்படும் மருத்துவர் இருவர்; ஆக முப்பத்து, மூன்று பேருக்கும்,
இந்துக் கலைக்களஞ்சியம்

ஒவ்வொருவருக்கும் ஒரு கோடி பரிவாரங்கள் இருப்பதால் முப்பத்து முக்கோடி தேவர்கள் என பெயர் பெறுகின்றனர். இவர்களில் பன்னிரு ஆதித்தர்களாக விளங்குபவர்கள் வைகத்தன், விவச்சுதன், வாசன் மார்த்தாண்டன், பாற்கரன், இரவி, உலோக பிரகாசன், உலோக சாட்சி, திரிவிக்கிரமன், ஆதித்தன், திவாகரன் அங்கிசமாலி என்பவர்கள். இவர்கள் மாதம்
ஒருவராக இருளைப் போக்குவார்கள்.
அடுத்து பதினொரு உருத்திரர்களாக விளங்குபவர்கள், மாதேவன், அரன், உருத்திரன், சங்கரன், நீல லோகிதன், ஈசானன், விசயன், வீமதேவன், பவோற்பவன், காபாலி, செழியன் என்போர் ஆவர். இவர்கள் பிரமன் நெற்றியில் தோன்றிப் படைப்புத் தொழிலைச் செய்பவர்கள். இவ் உருத்திரர் ஒவ்வொருவரும் கோடி உருத்திரரைப் படைத்தனர். அவர்களை பிரமன் கண்டு “வினைக்கீடாகப் படைக்கமால் முடியாச் சிருஷ்டி செய்தல் கூடாது' என வேண்டி நிற்க சிவசாரூபந் தாங்கி தேவர்
கூட்டமானார்கள்.
வசுக்கள் எண்மராவர். அவர்கள் அனலன், அனிலன், ஆபத்சைவன், சோமன், தரன், துருவன், பிரத்தியூசன் பிரபாசன் என்போராவர். அச்சுவினி தேவர் இருவர்: நாசத்யன், தசரன் எனப்படுவோர். இவர்கள் இருவரும் தேவ மருத்துவராவர். இத் தேவர்களை நாம் ஊனக் கண்ணாற் பார்க்க முடியாது. இவர்களுக்கு மூப்பு. மரணம் கிடையாது. தேவர்களுக்கு பிறவியிலேயே வேத ஞானம் உண்டு. அவர்கள் உலகில் உள்ள எல்லா உயிரினங்களிலும் ஒவ்வொரு அங்கங்களிலும் ஒவ்வொரு தேவர்கள் வாசஸ்தலம் செய்கிறார்கள். சூரியன் நம் கண்ணிலும் அக்கினி வாக்கிலும் இந்திரன் கையிலும் வாசம் செய்வது போல உடலின் ஒவ்வொரு அங்கத்திலும் ஒவ்வொரு தேவதைகள் வாசம் செய்கிறார்கள். எனவே எமது குற்றம் குறைகளை அவர்கள் எந்நேரமும் கண்காணித்துக் கொண்டே இருப்பார்கள்.
தேவர்கள் எவ்வளவு சக்தி வாய்ந்தவர்களாக இருந்த போதிலும் அவர்களை மனிதர்களிடம் இருந்தே ஆகுதி பெறுமாறு இறைவன் வைத்திருக்கிறார். வைதிக கர்மா நுஷ்டானங்கள் குறையும் போதெல்லாம் தேவர்கள் இறைவனிடம் முறையிடுவதாகப் புராணங்களில் கூறப்படுகிறது. நாம் செய்யும் யாகங்கள் யக்ஞம் முதலிய கர்மானுஷ்டானங் களைக் கொண்டே தேவர்கள் வாழும்படி இறைவன் பணித்துள்ளார். பஞ்சபூதங்களை எமக்கு அனுகூலமாக்கித் தரும் தேவர்களுக்கு பிரதியாகவே நாம் கர்மானுஷ்டானம் செய்கின்றோம். நாம் எவ்வளவுக்கெவ்வளவு தேவர்களுக்கு ஆகுதிகளை வழங்கி அவர்களை மகிழ்விக்கிறோமோ அவ்வளவுக்கவளவு அவர்கள் எமக்கு நன்மை செய்வார்கள். அவர்களுக்கு வழங்கும் ஆகுதி குறையும் போது தீமை செய்கிறார்கள்.
289

Page 320
இன்பமே நிறைந்த சொர்க்கமாகத் திகழும் தேவருலகிலே சிந்தாமணி, சூளாமணி என்பவை செல்வங்களாகத் திகழ்கின்றன. கற்பகம், சந்தானம், அரிச்சந்தானம், பாரிசாதம், மந்தாரம் என்பன வாடாத மலர்கள் தரும் தெய்வத் தருக்கள் ஆகும். தெய்வப்பசுவாக காமதேனு விளங்குகிறது. தேவலோக நடனமாதர் அரம்பை, ஊர்வசி, மேனகை, திலோத்தமை எனும் நால்வராவர். மக்களில் நூறு அஸ்வமேத வேள்வி செய்தவர்களே இந்திரப் பதவியை அடைய முடியும். தேவர்கள் எத்தனை சிறப்படையவர்களாயினும் நேராக தவம் செய்து முத்தி பெற இயலாது. மண்ணுலகிலே பிறந்தே அதனை அடைய முடியும். இதனையே “வானிடத் தவரும் மண்மேல் வந்தரன் தனை அர்ச்சிப்பர், ஊனெடுத் துழலும் ஊமர் ஒன்றையும் உணரா
ரந்தோ’ எனும் பாடல் பகுதி உணர்த்துகிறது.
வேதகாலத்தில் இயற்கை சக்திகளாக இத்தேவர்களே முதன்மை பெற்று விளங்கினார்கள். இந்திரன், வருணன், அக்கினி, உருத்திரன், பிருதிவி, உலிஷ, மருத்துகர், இராத்திரி போன்ற 33 இயற்கை சக்திகளை வழிபட்டனர். இத்தேவர்களை மண்ணுக்கு உரியவை, விண்ணுக்குரியவை, இடைவெளிக் குரியவை என வகுத்து யாகங்களை ஆற்றி வழிபட்டனர் என அறியமுடிகிறது. இவ்வாறாக தேவர்கள் இந்துமதத்தின் அனைத்து இலக்கியங்களிலும் சிறப்புப் பெறுவதைக் காணக் கூடியதாக உள்ளது. இதிலிருந்து தேவர்கள் இந்து மதத்துடன் ஒன்றிய தன்மையைக் காண முடிகிறது.
தேவர்களுக்கு நாம் அளிக்க வேண்டிய ஆகுதிகளை வழங்கி அவர்களை மகிழ்ச்சி அடைய வைத்து நாம் நல்வாழ்வு வாழ முடியும் என்பதைத் தேவர்களின் கதைகள் ஊடாக அறிய முடிகிறது. எனவே இந்து சமயத்தைப் பொறுத்தவரை தேவர்கள் முதன்மை பெறுவதுடன் முக்கியத்துவம் உடையவர்களாகவும் விளங்குகின்றனர். (க.ஹே.)
O O O தேவாரப் பாடல் பெற்ற
Ο O
தலங்கள
தேவாரப் பாடல் பெற்ற தலங்கள் பற்றிய சுருக்க விளக்கங்களோடு கூடிய இவ்வகராதியிலே தலங்களின் தேவாரப்பெயர், வழங்கும் பெயர், அருகிலுள்ள ரயில் ஸ்டேஷன், ரயில் பகுதி, ஸ்டேஷனிலிருந்து தலம் எத்தனை மைல், தலப்பாசுர எண்கள், தலச்சிறப்புச் சுருக்கம், சில முக்கிய தலங்களிலுள்ள கல்வெட்டு எண்கள் முதலிய விவரங்கள் உள்ளன. தலப்பெயர்கள்முன் திரு என்று சேர்த்துக் கொள்க. கல்வெட்டு எண்களில் தெஇக என்பன தென் இந்திய கல்வெட்டுத் தொகுதியில் இந்த எண்ணுள்ள புத்தகத்தில் இந்த எண்கள் உள்ள கல்வெட்டுக்களின் தமிழ் மூலங்கள் என்று பொருள்படும். அ. ச. சு என்பன முறையே அப்பர் (திருநாவுக்கரசு சுவாமிகள்),
290

சம்பந்தர் (திருஞானசம்பமூர்த்தி சுவாமிகள்) சுந்தரர் (சுந்தர மூர்த்தி சுவாமிகள்) திருவாக்குக்களைக் குறிக்கும். a முதல் W வரை உள்ளன மேல்வரும் ரயிற் பகுதிகளைக் குறிக்கும். a முதல் சென்னப்பட்டணம் எழும்பூர், செங்கல்பட்டு, விழுப்புரம், மாயவரம், தஞ்சாவூர், திரிசிராப்பள்ளி, திண்டுக்கல், மதுரை, மானாமதுரை, பாம்பன், ராமேஸ்வரம். b செங்கல்பட்டு, காஞ்சிபுரம், அரங்கோணம். c புதுச்சேரி, விழுப்புரம் திருவண்ணாமலை, காட்டுப்பாடி, ரேணுகுண்டா கூடுர் d விழுப்புரம் விருத்தாசலம், லால் குடி, திரிசிராப்பள்ளி, புதுக்கோட்டை, காரைக்குடி, மானாமதுரை. e கூடலூர், வடலூர், விருத்தாசலம், சேலம். f மாயவரம், தரங்கம்பாடி, g மாயவரம், பேரளம், திருவாரூர், திருத்துறைப்பூண்டி, காரைக்குடி h பேரளம், காரைக்கால். j தஞ்சாவூர், நீடாமங்கலம், திருவாரூர், நாகூர். k நீடாமங்கலம், மன்னார்குடி திருக்கேதீஸ்வரம், மதவாச்சி, மாஹோ, திருக்கோணமலை, q சென்னப்பட்டணம் சென்ட்ரல், அரக்கோணம், காட்டுப்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, போத்தனூர், ஷோரனூர், திருச்சூர், இருஞாலக்குடா, கொச்சித் துறைமுகம், r ஈரோடு, திருசிராப்பள்ளி, S சென்னப்பட்டணம் சென்ட்ரல், திருவொற்றியூர், பெஜவாடா, நாக்பூர், டில்லி. t சென்னப்பட்டடணம் சென்ரல், குண்டக்கல், பம்பாய். ர பெஜவாடா, நந்தியால், குண்டக்கல், ஹூப்ளி. V மதராஸ், கல்கத்தை, லக்நோ, ஹரித்வார், ரிஷிகேஸ், டேராடூன் ய லக்நோ. பரெய்லி, காதகோடாம். X கல்கத்தா, பகால்பூர், தார்பங்கா,ரக்சூல், பிக்நதொரி.
1. அகத்தியான்பள்ளி (அகஸ்தியாம்பள்ளி) 1அகஸ்தியாம்பள்ளி 4 மைல். பார்வதி தேவியாருக்கு இமயமலையில் நடந்த
திருமணத்தை அகத்தியர் இத் தலத்திருந்தே தரிசித்தனர். கடற்கரைத் தலம் 2291 - 3201(ச).
2. அச்சிறுபாக்கம் (அச்சரவாக்கம்) a அச்சரவாக்கம் 4 மைல். முப்புரம் எரிக்கச் சிவபெருமான் தேர் ஏறிச் செல்லத் தொடங்கும்போது, தேரின் உறுப்புக்களாக அமைந்த தேவர்கள், விநாயகரை வணங்காமல் இறுமாப்புக் கொள்ள, அவர்கட்கு நல்லறிவூட்ட விநாயகரை அருளால் தேர் அச்சு இற்று ஒடிந்தது, (அச்சு இறு பாக்கம்) விநாயகரை வணங்கிய பின், தேர்புறப்பட்டுத் திருவதிகை சேர்ந்தது. மூலஸ்தான மூர்த்திகள் இருவர். முக்கியமானவர் கோபுரவாயிலுக்குச் சற்று வடபுறத்தில், நந்தி பலிபீடம் துவஜஸ்தம்பங்களோடு 'எமையாளீசர்” அல்லது ஆட்சிகொண்டாராக விளங்குகிறார். கோபுரவாயிலுக்கெதிரிலுள்ளவர் உமையாளீசர் எனப்படுகிறார். கல்வெட்டுக்கள் தெஇக 7 (447 - 476) 12 (83), இவற்றுள் “ஆட்சிகொண்ட மகாதேவர்” என்பதே சுவாமிபெயர். 831 - 841 (ச)
3. அஞ்சைக்களம் (திருவஞ்சிக்குளம்) q திருச்சூர் 30 மைல். திருச்சூரிலிருந்து கொடுங்கோளூர் (Cranganore) போகும் பஸ் ஏறிக் கொடுங்கோளூருக்கு எதிர்க் கரையில் இறங்கி உப்பங்கழி (Backwaters) வழியே வஞ்சி (சிறுபடகு) அமர்த்தி நேரே அம்பலம் (=கோயில்) போகலாம். கொடுங்கோளூர் சென்று, சேரன் செங்குட்டுவன் எடுப்பித்த கண்ணகிகோயில் என்று கருதப்படும் பகவதி கோயிலைத் தரிசித்து பஸ்மூலம்
இந்துக் கலைக்களஞ்சியம்

Page 321
அம்பலம் சேரலாம். சேரநாட்டு முறைப்படி நீராடி ஈர உடையோடு அல்லது பட்டுடுத்தியே உட்செல்ல வேண்டும். அஞ்சைக் களத்தப்பர் தரைமட்டத்திற்கு மேல் சில அங்குல உயரமே உள்ளார். தலைக்குத் தலைமாலை” என்று 7256 பாசுரம் கூறுவதைத் திருமேனியின் சிரசில் தரிசிக்கலாம். முதற் பிராகாரத்தில் ஒரு சிறு அறையில் சேரமான் பெருமாள் நாயனாரும் அவர் தோழரும் (=சுந்தரரும்) செப்புத் திருமேனிகளாகப் பிரதிஷ்டை செய்யப் பெற்றுள்ளனர். ஆடி சுவாதியன்று தமிழ்நாட்டு மக்கள் திரளாகச் சென்று வழிபடுகின்றனர். இத்தலத்திலிருந்து சுந்தரமூர்த்தி சுவாமிகள் இறைவன் அனுப்பிய வெள்ளானை மீதேறிக் கயிலாயம் சென்றனர். 7256 - 65 (சு).
4. அண்ணாமலை (திருவண்ணாமலை) C திருவண்ணாமலை 1 மைல். தெஇக 3 (57-165) பஞ்ச பூதத்தலங்களுக்குள் இது தேஜஸ் எனும் தீயைக் குறிக்கும். “பிரமன் அரி என்றிருவரும் தம் பேதைமையால், பரமம் யாம்பரம் என்றவர்கள் பதைப்பொடுங்க, அரனார் அழல் உருவாய் அங்கே அளவிறந்து, பரமாகி நின்றவாதோணோக்கம் ஆடாமோ” என்று திருவாசகம் 326ஆம் பாடல் கூறும் அழல் உருவே இப்போது மலை யுருவாயுள்ளது. மலையின் உயரம் கடல்மட்டத்துக்கு மேல் 2668 அடி மலைகள் நான்குவகை யென்று நிலநூல் (Geology) கூறுவதுள் இம்மலை நெருப்பினால் வந்தது (Igneous rock) என்று நிலநூல் வல்லுநர் கூறுகின்றனர். அண்ணாமலையார், உண்ணாமுலையம்மை திருவுருவங்கள் அழகும் அருளும் நிரம்பியன. சாதாரணமாகக் கோயில்களில் அஷ்டபந்தன மருந்து சாத்திப் பிரதிஷ்டை செய்வது போலன்றி, இக்கோயிலில் அண்ணாமலையார் சுவர்ணபந்தனம் (சுத்தமான தங்கத்தால் பந்தணம்) செய்யப் பெற்றுள்ளார். அபிஷேகத்தின்போது தரிசிக்கலாம். நினைத்தாலே முத்திதரும் தலம். அருணகிரிநாதர் வாழ்ந்து முத்திபெற்ற தலம். அவர் பாடலுக் கிரங்கிப் பிரபுடதேவமாராஜனுக்குக் காட்சியளித்த முருகன் சந்நிதி, கீழைக்கோபுர வாயிலுள் நுழையும்போது வடபுறம் இருக்கும் முருகனே, இக் கோபுரத்தின் மேலிருந்து அருணகிரி நாதர் குதிக்கும்போது, அவருக்குத் தீங்கு வாராமல் தாங்கிக் காத்தருளிய பெருமான். திருவாசகத்துள் திருவெம்பாவை என்ற பனுவல், இத்தலத்துப் பெண்கள் மார்கழி நீராட்டுக்கு அதிகாலையில் ஒருவரை ஒருவர் எழுப்பிச் சென்றதை அடிப்படையாகக் கொண்டது. தேவாரம், திருவாசகம், திருப்புகழ் முதலியவற்றோடு அருணகிரியந்தாதி, அண்ணாமலை வெண்பா, சோணசைலமாலை, அருணைக் கலம்பகம் முதலியனவும் புகழ்பெற்றவை. சைவ எல்லப்ப நாவலர் இயற்றிய “அருணாசலபுராணம்”இலக்கியச் சுவை மிக்க நூல். மலைவலம் (8 மைல்) வரும் வழியில் பற்பல தீர்த்தங்கள் (மொத்தம் 360). அணி அணாமலை (அடியண்ணாமலையென வழங்குவது) பஞ்சமுக தரிசனம் என்னும் மலையின் ஐந்து சிகரக்காட்சி முதலியன புழ்பெற்றன. மலைமேலேறிச் செல்லும் வழியில் முலைப்பால் தீர்த்தம், குகை நமச்சிவாயர் கோயில், குருநமச்சிவாயர் சந்நிதி முதலியன உள்ளன. கார்த்திகை மாதம் நடைபெறும் திருவிழாவில் 4ஆம் நாள் வெள்ளிக்கற்பக விருக்ஷம், காமதேனு. 5ஆம் நாள் வெள்ளி ரிஷபம், 6ஆம் நாள்
இந்துக் கலைக்களஞ்சியம்

வெள்ளி ரதம். 10ஆம் நாள் தீபதரிசனம் மிகப் பிரபலம். 10ஆம் திருநாளன்று அதிகாலையில் பரணி தீபதரிசனம் நடைபெறும். அண்ணாமலையார் சந்நிதிக் கெதிரில் 5 பெரிய நெய் அகண்டங்கள் ஏற்றிப் பஞ்ச ப்ரஹம மந்திரங்கள் முதலியவற்றோடு பூசித்து வைப்பார்கள். மாலை 5% மணிக்குள்ளாகப் பஞ்சமூர்த்திகளும், மேளவாத்தியம் தீ வத்திகள் முதலியன இன்றி, சுவாமி சந்நிதிக்கெதிரிலுள்ள பெரிய மண்டபத்தில், அழகிய பெருவிமானங்களில் மிகப் பருத்த மாலைகளால் அலங்கரிக்கப் பெற்று, மலையைத் திருக்கண் சாத்துகின்ற நிலையில் எழுந்தருளியிருப்பார்கள். சுவாமி சந்நிதியில் அர்த்தநாரீசுவரர், பரணி தீபங்கள் ஐந்தையும் சரியாக மாலை 6 மணிக்கு, வெளியே கொண்டுவந்து, திருக்கொடி மரத்துக்கெதிரிலுள்ள ஒரு பெரிய கொள்கலத்திற் சேர்ப்பார். பரணி தீபம் வெளிவரும் நேரத்தில் மலைமீது தீபக் காட்சி, கோயில் முழுமையும் எலெக்ட்ரிக் விளக்குகள், பல பெரிய தீவத்திகள், வாணவேடிக்கை, உடல் மேளங்களின் இடிமுழக்கம் எல்லாம் ஒரே விநாடிக்குள் ஒருங்கே நிகழும். அண்ணாமலையாரே அழலுருவாகி மலையாகக் காட்சியளிக்கிறார் என்பதற்கு அறிகுறியாகக், அர்த்தநாரீசுவரர் வெளிவரும்போது, சுவாமி கோயிலைத் தாளிட்டு, அடுத்தநாள் காலையில்தான் திறப்பார்கள். இந்த தீபதரிசனத்தை அனுபவிக்கப் பல்லாயிரக் கணக்கான மக்கள் கோயிலுக்குள் மாலை 3 மணியிலிருந்தே வந்து சேர்வார்கள். தை 2ஆம் தேதி திருவூடல் உத்ஸவம் சிறப்பாக நடைபெறும் 97 - 107, 743 - 53 (ச2); 4767 - 76, 5260 - 79 (அ3) ஆஉ 5 பதிகம்.
5. அதிகைவிரட்டானம் (திருவதிகை) a பண்ணுருட்டி 2 மைல். கல்வெட்டுக்கள் 28 - 60/1903, 358 - 4190 1921 தெஇக 8 (301 - 335) 12 (71, 73, 133 255) சிவஸ்தலங்களுள் அதிகரிப்பட்டது (மேம்பட்டது) அதிகா, அதிகை, பழைய பல்லவச் சிற்ப முறையிற் கோயிலும் சிவலிங்கமூர்த்தியும் அமைந்துள்ள சிறப்பை நேரில் அனுபவிக்க வேண்டும். அப்பர் சுவாமிகளை நீதியற்ற பல முறைகளிலே துன்புறுத்திக் கடைசியில் அவர் திருவடிகளில் வணங்கிச் சமணசமயம் விடுத்துச் சைவனாகிய மஹேந்திரவர்மபல்லவ மன்னன், சமண்பாழிகளை இடித்து, அக்கற்கள் கொண்டே எடுப்பித்த குணபரேசுவரம், வீரட்டேசர் திருக்கோயிலுக் கருகில் உள்ளது. அப்பர் சுவாமிகட்குச் சூலைநோய் நீக்கி “நாவுக்கரசு” என்ற பட்டம் அளித்தவர் வீரட்டேசரே. அப்பரும் அவர் தமக்கையார் திலகவதியாரும் சரியைத்தொண்டு செய்த அருமைத் தலம். சுந்தரமூர்த்தி சுவாமிகட்குத் திருவடி தீகூைடி செய்த திருவிளையாடல் நிகழ்ந்த சித்தவடமடம் கோயிலின் தெற்கு வீதியிலுள்ளது. அருகில் கெடில நதி ஓடுகின்றது. அஷ்ட வீரட்டங்களுள் இது திரிபுரம் பாசுரம் தீஎழ வில்தான் கொண்டு எயில் எய்தவர் வீரட்டம் (5761ஆம் பாசுரம்). திரிபுரதகன உத்ஸவம் சித்திரைப் பெருவிழாவில் திருத்தேரோட்டத் தன்று நடக்கிறது. 493 - 503 (GF) ; 4159 — 78, 4252 — 61, 4397 — 4441, 5160 — 66, 5758 — 79, 6265 - 6318 (அ); 7607 - 16 (சு) , ஆ 18 பதிகம். பல தலங்களிலுள்ள கல்வெட்டுக்களில் திருவிழாவிற்கு முன் திருவீதி ஆண்டார்கள் திருவதிகைக்கு ஒப்பாக வீதிகளைத் துப்பரவு செய்யவேண்டு மென்றுள்ளது அப்பர் சுவாமிகளுடைய உழவாரத்
291
拿

Page 322
தொண்டுக்குச் சான்று பகவர்வதாகும். பாண்டி நாட்டுத் தலங்கள் பகலவற்றுள் திருக்கொடி யேற்றத்திற்கு முன்னாள் அப்பர் சுவாமிகள் திருவீதி திருக்கண் சாத்தும் உத்ஸவம் நடக்கிறது.
6. அம்பர்பெருந் திருக்கோயில் (அம்பல் கோயில்) g பூந்தோட்டம் 2 மைல். கோச்செங்கட் சோழ நாயனார் எடுப்பித்த எண்தோள் முக்கண் ஈசற்கு எழில்மாடம் எழுபதுள் இக்கோயிலும் ஒன்று. செயற்கையாலான கட்டுமலைமேல், யானை உள்நூழையாதபடி சிறுவாயில் வைத்துக் கட்டப்பெறும் இவ்வகைக் கோயிலுக்கு மாடக் கோயில், பெருங்கோயில் என்று பெயர். சோமாசி மாறநாயனார் தமது மறையோர் குலத்துக்கேற்ப நாடோறும் முத்தீ வளர்த்து வழிபட்டு முத்திபெற்ற தலம். 2998 一3008(于)
7. அம்பர் மாகாளம் (திருமாளம்) g பூந்தோட்டம் 1 மைல். இங்கு வைகாசி ஆயிலியத்தன்று சோமாயாஜியாக உத்ஸவம், அரனும் உமையும் புலையன் புலைச்சி உருவில் யாகாசாலைக் கெழுந்தருளி அவிர்ப்பாகம் ஏற்கும் முறையில் மிகப்பிரபலமாக நடக்கிறது. பெரியபுராணத்துள் இது கூறப்படவேயில்லை. 'காளியேத்தும் அம்பர்மாகாளம் (3804) என்றபடி காளி வழிபட்ட தலம் 893 - 903, 2583 - 93, 3799 - 3809 (ச3).
8. அரசிலி (ஒழுந்தியாப்பட்டு) c புதுச்சேரி 7 மைல். 2497 — 2506 (GF).
9. அரதைப் பெரும்பாழி (அரித்வாரமங்கலம்) j கோயில் வெண்ணி 4 மைல் தெஇக 8 (208) வராஹ அவதார மூர்த்தியின் கொம்பைமுறித்துச் சிவபெருமான் தமது அணிகலன்களுள் ஒன்றாக்கிய தலம். 3118 - 28 (ச).
10. அரிசிற்கரைப் புத்தூர் (அழகார் புத்தூர்) a கும்பகோணம் 4 மைல் தளர்வெய்திய கிழப்பருவத்திலும், தவிராது நாள்தோறும் முப்போதும் திருமேனி தீண்டிப் பூசிக்கும் புகழ்த்துணை நாயனார் திருமுழுக்காட்டும் போது, ஒருநாள் குடம் நழுவிச் சிவலிங்கத் திருமேனியின் மேல் விழுந்தது. இந்த அபராதத்திற்கு மிக மிக அஞ்சிய நாயனாருக்கு இறைவன் அபயம் அளித்து ஒய்வு கொடுத்து அவர் உணர்வுக்காக நாடோறும ஒரு பொற்காசு கொடுத்த வரலாற்றை 2152,7312ஆம் பாசுரங்கள் கூறும். 2146 - 56 (ச); 5838, 47 (அ); 7307 - 17 (சு), ஆ, 3 பதிகம்.
11. அவளிவணல்லூர் கோயில் வெண்ணி 5 மைல். தெஇக 8 (200 203) 3679 - 89 (ச); 4726 - 35 (அ).
12. அவிநாசி q திருப்பூர் 8 மைல். கல்வெட்டு 170 - 2011 1909. இத்தலத்துச் சுவாமியின் பெயரே தலத்துக்கும் பெயராயிற்று. அவிநாசி = விநாசம் இல்லாதவன் - அயன் அரி
292

முதலியோர் நாசகாலத்திலும் இருப்பவன். சுந்தரமூர்த்தி சுவாமிகள் இத்தலம் சென்றபோது, ஒரு வீட்டில் மங்கல வாத்திய கோஷமும், எதிர்வீட்டில் அழுகுரலும் கேட்டது. இருமறைச் சிறுவர்கள் ஒரு மடுவில் நீராடச் சென்றபோது ஒருவனை முதலை விழுங்கிற்றென்றும், மற்றவனுக்கு உபநயனச் சடங்கு வாத்திய கோஷத்தோடு நடக்கிறதென்றும், எதிர் வீட்டில் மாண்ட சிறுவனின் தாய், தன் மகனும் உயிரோடிருந்தால் அவனுக்கும் உபநயனம் சிறப்பாக நடைபெறுமே என நினைந்து அழுகிறாள் என்றும், அங்குள்ள முதியோர்கள் கூறக் கேட்டார். இறந்த சிறுவனின் தாய் தந்தையர் விழுந்து வணங்கினர். இரக்கம் மிக்க சுந்தரர் மடுவிற்குச் சென்று, அதில் முதலையை வரவழைத்து, வளர்ச்சி பெற்ற மறைச்சிறுவனை அது தரும்படியாகக் காலனுக்குக் கட்டளையிடுமாறு அவிநாசியப்பனுக்குப் பதிகம் பாடி வேண்டுகோள் விடுத்தார் (8160). உடனே முதலை மறைச்சிறுவனை மடுக்கரையிற் சேர்த்தது. அவனுக்கும் அப்பொழுதே உபநயனம் செய்வித்தார். இந்த மடு இப்போது தாமரைக்குளம் எனப்படுகிறது. இதன் கரையில் சுந்தரர் கோயிலும், முதலை வாயினின்றும் மறைச்சிறுவனை வெளிவரும் கற்சித்திரமும் உள்ளன. ஹரதத்தாசாரிய சுவாமிகள் “ஹரிஹரதாரதம்யம்” என்ற வடமொழி நூலில் ஒரு சுலோகத்தில் இதைப் புகழ்கின்றார். சிறுவன் முதலை வாயினுட் புக்கு ஒளிந்த ஊர் புக்கொளியூர். 8157 - 66 சு
13. அழுந்தூர் (தேரெழுந்தூர்) a தேரழுந்தூர்ரோட்டால் 4 மைல். ஒரே வீதியின் ஒருமுனையில் இத்தலமும் எதிர்முனையில் பாடல் பெற்ற விஷ்ணுஸ்தலமும் உள்ளன. கவிச்சக்கரவர்த்தி கம்பர் வீடு இருந்த இடம் எனும் கம்பர் மேடு ஒன்றும் இங்குண்டு. 1677 - 87 (3)
14. அறையணிநல்லூர் (அறகண்ட நல்லூர்) உ திருக்கோயிலூர் 4 மைல். ஸ்டேஷனுக்கெதிரிலுள்ள கோயில். கல்வெட்டுக்கள் 386 - 91 / 1902, 26 / 1905, 11 - 199 / 1935 தெஇக 7 (1018 - 23) 12 (137, 145, 217, 226). கற்பாறையில் குடையப்பெற்ற குகைக்கோயில் வேறொன்றுளது. மலைமேல் வலம் வரும்போது ஒரிடத்தில் நின்று பார்த்தால் திரு அண்ணாமலை நன்கு தெரியும். அன்பர்கள் இதைக் காட்டக் கண்ட சம்பந்தர் இங்கிருந்தே “உண்ணாமுலை உமையாளொடும்” எனத் தொடங்கும் (97 - 107) பதிகத்தைப் பாடினார். 2302 - 12 (于)。
15. அனேக தங்காவதம் (கெளரிகுண்டம்) SV சென்னையிலிருந்து ரிஷிகேசம் போய் அங்கிருந்து பஸ் மூலமாகவும் கால் நடையாகவும் இமயமலையேறிச் செல்லவேண்டும். வழி விவரம் முழுமையும் 107 கேதாரம் என்ற தலக்குறிப்பில் பார்க்க. இத்தலம் கடல் மட்டத்தின்மேல் 12000 அடி உயரத்திலுள்ளது. வழிக்குறிப்பில் சட்டி என்றால் தங்கும் இடம் என்றும், பிரயாகை என்றால் இரண்டு ஆறுகள் கூடுமிடம் என்றும் பொருள். இத்தலம் செல்லும் வழியில் தேவப் பிரயாகையில் அலக்நந்த, பாகீரதி என்ற இருநதிகள் கூடுகின்றன. ருத்ரப்ரயாகையில் அலக்நந்த, மந்தாகினி நதிகள்
இந்துக் கலைக்களஞ்சியம்

Page 323
கூடுகின்றன. தேவப்ரயாகை என்பது மங்களா சாசனம் பெற்ற கண்டங்கடிநகர் எனும் விஷ்ணுதலம். உமாதேவியார் தவமிருந்தமையால் கெளரிகுண்டம் என்று அநேகதங்கா வதத்திற்கு வழங்கும் பெயர் ஏற்பட்டது. சம்பந்தர் காளத்தியிலிருந்தே இத்தலப் பதிகத்தை ஒதியருளினார் 1513 - 23 (GF).
16. அன்பில் ஆலந்துறை (அன்பில்) d லால்குடி 3 மைல். தெஇக 8 (192 - 195, 657 - 73) கொள்ளிடக் கரையிலுள்ள தலம். 349 - 59 (ச), 6023 - 32 (அ).
17 அன்னியூர் (பொன்னூர்) ய நீடூர் 3 மைல். 1036 - 46 (GF). 5302 —5311 (9).
18. ஆக்கூர் 4 ஆக்கூர் மைல். சிறப்புலி நாயனார் தலம். ஆலயப் பெயர் தான்தோன்றி மாடம் (தான்தோன்றி = சுயம்பு) இத் தலத்து வேளாளர் வள்ளன்மையை 1919 -ம் பாசுரம் கூறும. 1917 - 27 (ச); 6454 - 63 (அ).
19. ஆடானை (திருவாடானை) d காரைக்குடி 32 மைல். (தொண்டிபஸ்) ஒரு ரிஷியின் சாபத்தால் ஆட்டுத்தலையும் ஆனை உடலும் பெற்ற ஒரு தேவகுமாரன் இங்கு வழிபட்டு மீண்டும் தேவசரீரம் பெற்றதால் ஆடானை தலப்பெயராயிற்று. 2681 — 91 (GF).
20. ஆப்பனூர் (திருவாப்புடையார் கோயில்) a மதுரை ஜஞ்ஷன் 1 மைல், வைகையாற்றின் வடகரையிலுள்ளது. ஆற்று வெள்ளத்தால் தடைப்பட்ட ஒரு பாண்டிய மன்னன் ஆப்பு ஒன்றைத் தாபித்துச் சிவபூசை செய்தமையால் தலப்பெயர் ஏற்பட்டது, 948 - 58 (ச).
21. ஆப்பாடி a ஆடுதுறை 7 மைல். தெஇக 12 (233) சண்டேசுவர நாயனார் பூசித்ததை 4627 - ம் பாசுரம் கூறும். 4624 - 33 (அ).
22. ஆமாத்தூர் (திருவாமாத்தூர்) a விழுப்புரம் 4 மைல். தெஇக 3 (95) 8 (718 - 751) 12 (141 - 43, 181, 196). இவற்றுள் 8 (749) மிக முக்கியம், 16 குருடர்கள் நாடோறும் கோயிலில் திருப்பதிகம் விண்ணப்பிக்கவும் (=தேவாரம் ஒதவும்) அவர்கட்குக் கண்காட்டுவார் இருவர் (=விழிப்பார்வையுடைய வேறு இருவர்) வழித்துணையாக அவர்களைக் கையிற் பிடித்து நடத்திச் செல்லவும் திட்டம் செய்யப்பட்டதை இக்கல்வெட்டு விரிவாகக் கூறுகிறது. 700 ஆண்டுகட்கு முன்னரே, திருக்கோயில்களில் குருடர்கள் இவ்வாறு ஆதரிக்கப் பெற்ற செய்தி, இக்காலத்திய கோயிலதிகாரிகட்கு வழிகாட்டுகின்றது. இராமபிரான் வழிபட்டதை 5668 -ஆம் பாடல் கூறும். இத்தலப் பாசுரங்கள் சிலவற்றில் இறைவன் அழகியரே என்று அழைக்கப் படுவதற்கேற்பக் கல்வெட்டுக்களிலும் அழகிய நாயனார் என்ற பெயர் காணப்படுகின்றது. வடமொழியில் இதையே அபிராமேசுவரர் என்கிறார்கள். தாம் சகமார்க்கம் ஆகிய யோகநெறியில் நின்று வழிபடுவதைச் சுந்தரமூர்த்தி சுவாமிகள்
இந்துக் கலைக்களஞ்சியம்

வெளிப்படையாக 7688-ம் பாசுரத்தில் (செம்மலர்ப்பாதங்கள்) நாடோறும் நாடுவன் நாடுவன் நாபிகு மேலேயோர் நால்விரல்) கூறுகிறார் 1939-2004-14 (ச2). 5664-74, 6330-39 (அ2); 7680-90 (சு), ஆ, 5 பதிகம்.
23. ஆரூர் (திருவாரூர்) a திருவாவூர் 1 மைல் கல்வெட்டுக்கள் 73, 74/1890, 164/1894, 269/1901, 533-79/ 1904, 533/1918 699-81/1919 தெஇக 4 (397, 398) 5 (456, 457) 7 (485) மூர்த்தி தலம், தீர்த்தம் ஆகிய மூன்றாலும் சிறந்தது. மூர்த்தி-புற்றிடங் கொண்டார். வன்மீகநாதர், திருமூலட்டானநாதர், கச்சியேகம்பத்தையும் இத்தலத்தையும் பஞ்சபூதஸ்தலங்களுள் பிருதிவித்தலமாகக் கருதுவதுண்டு. மூலஸ்தானத்திலுள்ள சிவலிங்கமூர்த்திக்கு (ஏகம்பத்தில் செய்வது போலவே) புனுகு சட்டமே சாத்தப் பெறுகிறது. அபிஷேகம் ஆவுடையாருக்கே. சந்நிதிக்குத் தெற்கில் தலைச் சந்நிதியாக உள்ள தியாகராஜஸ்வாமி சந்நிதி மிகப்பிரபலம். திருமால் நாடோறும் இம்மூர்த்தியைப் பூசித்துத் தமது இருதயத் தானத்திலேயே எழுந்தருளுவித்தனர். மூச்சிழுத்தல் விடுதல் காரணமாக ஏற்படும் அசைவே திருநடனம். முசுகுந்த சக்கரவர்த்தி பெற்ற ஏழு விடங்க மூர்த்திகளுள் இங்குள்ள மூர்த்தியே திருமால் பூசித்தது. இவரை "பவனி வீதிவிடங்கள்” என்று 5297-ஆம் பாசுரம் கூறும். இத்தலத்து நடனம் அஜபாநடனம். பங்குனி உத்திரப் பெருவிழாவின் தொடக்க நாளாகிய வசந்தன் உத்ஸவத்திலும் திருத்தேர் விழாவிலுமே தியாகராஜஸ்வாமி, தாம் இருக்கும் திருஒலக்க மண்டபத்தை விட்டு வெளிவருகிறார். அப்பர் காலத்தில் நடந்த ஆதிரை விழாவின் சிறப்பை 4366-76ம் பாசுரங்கள் கூறும். சிதம்பரத்தில் ஸ்படிகலிங்கபூசை நடப்பதுபோலவே, உச்சிக் காலத்தில் ஏழுவிடங்கங்களிலும் நடக்கிறது.
ஆரூரண்ணல் தம்மைச் சுந்தரமூர்த்தி சுவாமிகட்குத் தோழராகத் தந்தருளி, அவருக்குப் பரவை நாச்சியாரை உலகறியத் திருமணம் செய்வித்து, அவ்வம்மையார் புலவிதீர்க்க நள்ளிரவில் ஒருமுறைக்கு இருமுறை நடந்துசென்ற பெருமையைத் தெய்வச் சேக்கிழாரே கூறவல்லார். திருமூலட்டானத்தின் பெயர் 'பூங்கோயில் (4272- ஆம் பாசுரம்). ஆரூர்க்கோயில் 5 வேலி பரப்புள்ளது (4672-ஆம் பாசுரம்), தலம் மூர்த்தியின் சிறப்புக்கு ஒத்த சிறப்புடையது. சோழ மன்னர்கள் முடிசூட்டு விழா கொண்டாடிய 5 நகரங்களுள் ஒன்று. அவர்களுள் பலருடைய இராஜதானித் தலைநகர். இறந்த பசுக்கன்றின் கொலை வழக்கைத் தாய்ப்பசு, ஆராய்ச்சி மணியை ஒலிப்பித்து அறிவிக்க, அவ்வழக்கை விசாரித்துத் தன் மகன்மேல் தேர் செலுத்தி நீதி வழங்கிய மனுச்சோழன் பெரும்புகழ், அன்றும் இன்றும் என்றும் நலிவுவதால் “திக்கெலாம் நிறைந்த புகழ்த் திருவாரூர்” (6544 - ம் பாசுரம்) ஆயிற்று. சிவபெருமானும் எமதர்மனுமே பசுவும் கன்றுமாக வந்தனர். இவ்வரலாறு அழகிய செய்யுள் வடிவிலும், வடலூரடிகள் உரைநடையிலும் இதை விவரித்துள்ளனர். பிறந்தாலே முத்திதரும் பெரும் பதி. ஆருரிற் பிறந்தார் எல்லாம் சிவசாரூப்பிய லக்ஷணம் பொருந்திய சிவகணங்கள் என்று நமிநந்தியடிகட்கு ஆருர் அண்ணல் கண்கூடாகக் காட்டினர். “திருவாரூர்ப் பிறந்தார்கள்
293

Page 324
எல்லார்க்கும் அடியேன்” காடவர்கோன், கழற்சிங்கர், செருத்துணையார், தண்டியடிகள், திருநீலகண்ட யாழ்ப்பாணர், நமிநந்தியடிகள், விறன்மிண்டர் முதலிய நாயன்மார்கள் வாழ்க்கைத் தொடர்புடைய தலம். சுந்தர மூர்த்தி சுவாமிகள் பரவை நாச்சியாரோடு இல்லறம் நடத்திச் சிவனடியார்களை ஆதரித்த தலம். மாதவம் செய்த தென்திசை வாழ்ந்திடத் தீதிலாத் திருத்தொண்டத் தொகை அருளப்பெற்றதும் இத்திருக் கோயிலிலுள்ள தேவாசிரிய மண்டபத்திலே நிகழ்ந்தது. கீழைக் கோபுரவாயிலுக்குள் நுழைந்தவுடன் காணப்படும் ஆயிரங்கால் மண்டபமே இத்தேவாசிரிய மண்டபம். சுழற்றறிவாரை வரவேற்று நன்கு உபசரித்து, அவரோடு சுந்தரரும் தலயாத்திரை தொடங்கியதும் முடித்ததும் இத்தத்தில் நிகழ்ந்தது. சுந்தரமூர்த்தி சுவாமிகள் கச்சியேகம்பத்தில் இடக்கண் பெற்று இங்கு வந்து வலக்கண் பார்வையும் பெற்றனர். இலக்குமி முதலிய பல வானோர் பூசித்துப் பேறுபெற்ற தலம். "நாளும் வானோர் சிறப்போடு பூசிக்கும் திருவாரூர்” (6547ம் பாசுரம்). இத்தலப் பெளரையே தேவாரம் அருளிய மூவர் முதலிகளும் நன்றாக அனுபவித்தனர். ஆருர் என்பது ஆர் + ஊர் எனப்பிரிந்து இருவகைப் பொருள்தரும் 1. ஆர் - அருமைமிக்க, ஊர் = தலம், 2. ஆர் = யாருடைய? ஊர் = இடம், ஆருரண்ணலே இத்தலம் யாருக்குச் சொந்தமானது? உம்முடையதல்லவோ? (7274,7551) முதலிய பாசுரங்கள் பார்க்க) தீர்த்தம் மூர்த்தி, தலச் சிறப்புக்கள் போலவே தீர்த்தச் சிறப்பும் அமைந்துள்ளது. கமலாலயம் என்ற திருக்கோயிலை ஒத்து 5 வேலி அளவுள்ளது. குளத்தின் நடுவில் ஒருசிறு தீவில் ஒருசிறு கோயிலில் ஒடுநாயக சுவாமி உள்ளார். படகிற் சென்று தரிசிக்கலாம். இக்குளத்து நீர்கொண்டே நமிநந்தியடிகள் திருவிளக்கேற்றினர். (5145-ஆம் பாசுரம்). பிறவிக் குருடர் ஆகிய தண்டியடிகள் இக்குளத்தின் மேற்குப் புறத்தை அகழ்ந்து விரிவாக்கும்போது, தடை செய்த சமணர்களைக் குருடர்களாக்கி வென்று, தாம் பார்வை பெற்று “நாட்டம்மிகுதண்டி'அடிகளாயினர். முதுகுன்றில் மணிமுத்தாற்றில் விடுத்த 12000 பொன்னையும், இக்குளத்தில் இறங்கி 7481 - ஆம் பாசம் பாடும் போது, பரவை நாச்சியார் எதிரே சுந்தரர் எடுத்த பெருமையும் இக்குளத்துக்குண்டு. இப்பொன்னுக்கு மாற்றுரைத்துக் காட்டிய விநாயகரும், மேலைக் கோபுரவாயிலுக்கு எதிரில் இக்குளப்படித் துறையில் கோயில் கொண்டுள்ளார். பெருமான் பங்குனி உத்திரப் பெருவிழாவின் இறுதியில் 'ருத்ரபாததீர்த்தம்” கொடுத்தருள்வதும் இத்திருக்குளத்தில் நிகழ்வது. இவ்வாறு மூர்த்திதலம் தீர்த்தம் ஆகிய மூன்றாலும் சிறந்திருப்பதனால் 'அமரர் நாடாளாதே ஆரூர் ஆண்ட அயிராவணமே” (6495) என்று அப்பர் வாயாரப் புகழ்கின்றார். ஏழுதிருமுறைகளிலும் மிகுதியான பாசுரங்கள் இத்தலத்துக்கே உண்டு (ஆரூர், கச்சியேகம்ப, மறைக்காடு ஆகிய மூன்று தலங்கட்கே ஏழுதிருமுறைகளிலம் பதிகங்களுண்டு சீகாழிக்கு மிகுதியான பதிக எண்ணிக்கை 71 இருப்பினும், ஆறாம் திருமுறையுள் ஒரு பாசுரங்கூட சீகாழிக்கில்லை) 981 - 91, 133 – 42,2324 — 34,2561 - 71, 3277 - 87, 3967 - 77 (5-6).: 4190 - 4209, 4345 - 75, 4656 - 75, 5134 - 50, 5280 - 5301, 6485 - 6572, 6583 - 92, (அ 21); 7297 - 7306, 7596 -
294

7606, 7617 - 27, 7742 - 53, 7827 - 37, 7964 - 74, 8066 - 75, 8188 - 98, (சு3); ஆ 35 பதிகம்.
24. ஆரூர் அறநெறி இது ஆருர்க் கோயிலின் தெற்குப் பிரகாரத்தில் மேற்கு சந்நிதித் தலைக்கோயிலாக உள்ளது. இக்கோயிலிலேயே நமிநந்தியடிகள் பல தொண்டுகள் புரிந்து நீர்விளக்கேற்றியது. 3424 - 34, 6573 - 93 (அ2).
25. ஆருர்ப்பரவையுண்மண்டளி (துலா நாயனார் கோயில்) ஆரூரிற் கீழை வீதியில் திருத்தேர் நிலையின் அருகிலுள்ளது 8100 - 8208 (சு).
26. ஆலங்காடு (திருவாலங்காடு) Q திருவாலங்காடு 3 மைல். கல்வெட்டுக்கள் 14, -16, 408 / 1896, 452 - 98 / 1905
தெஇக 3 (65, 205) 5 (878, 879) 12 (64, 66) இவற்றுள் தெஇக 3 (205) மிக முக்கியமானது. 8/4 மணங்கு எடையுள்ள 31 செப்பேடுகளில் கங்கை கொண்ட சோழன் என்ற முதல் இராஜந்திரசோழன் பழையனூர் கிராமத்தைத் திருஆலங்காடுடைய மகாதேவர்க்குத் தானமாகக் கொடுத்த செய்தி விவரிக்கப் பெற்றுள்ளது. தானச் செய்தியை ஊரார் அறியும் பொருட்டுப் பிடிசூழ்ந்து படாகை நடப்பித்து பிரசுரம் செய்யப்பட்டது. (பெண்யானையைக் கிராம எல்லை முழுமையும் சுற்றிவரச் செய்து, ஆங்காங்கு கள்ளியும் சூலக்கல்லும் நாடப்பட்டது). இவ்வூரில் “தெங்கும் பனையும் ஈழவர் ஏறப்பெறாததாகவும்” என்ற குறிப்பு அக்காலத்தில் கோயில் நிலங்களிலிருந்து, கள் இறக்குதல் இல்லை யென்பது, மதுவிலக்குக் கொள்கைக்கு ஆதரவாகும்.
காளியோடு தாண்டவம் புரிந்த சிவபெருமான், அவள் சமமாக ஆடுவதைக் கண்டு, அவளைத் தோற்கடிக்கக் கருதித் தமது இடது காலைத் தலையளவு உயரத்தூக்கி “ஊர்த்வ தாண்டவம்' புரிந்த அருமைத் தலம். ஊர்த்வ் தாண்டவ மூர்த்தி 8 கைகளுடைய கவர்ச்சி மிக்க திருவுருவத்தோடு விளங்குகிறார். காரைக்காலம்மையார் தலையாலே நடந்து வந்து "அறவா நீ ஆடும்போதுன் அடியின்கீழ் இருக்க” வேண்டிப் பெற்றவரத்தால் இங்கு பதஞ்சலி வியாக்ர பாதர்களோடு அம்மையார் திருவுருவமும் நடராஜர் சபையிலிருக்கின்றது. அம்மையார் தலையால் நடந்து வந்த இத்தலத்தைத் தமது காலால் மிதிக்க அஞ்சிய சம்பந்தர் ஊருக்கு வெளியில் ஒரிடத்தில் இறங்கி, அன்று இரவு துயிலும்போது, அவர் கனவில் வந்து ஆலங்காட்டப்பன் “நம்மை அயர்த்தனையோ பாடுதற்கு” என்று நினைவூட்ட அடுத்தநாள் தலத்துக்குட் சென்று கோயிலில் இறைவனைப் பதிகம்பாடி வணங்கினர். ஆலங்காட்டு நீலி வஞ்சனையால் உயிர்நீத்த வணிகனுக்கு, உறுதியளித்த 70 வேளாளர்கள் தாங்கள் உயிர்விட்ட செய்தியும் இத்தலவரலாற்றின் ஒரு பகுதியாகும். இவ்விரண்டையும் சேர்த்து 481ஆம் பாசுரத்திற் சம்பந்தர் கூறுகின்றார். கூத்தப்பிரான் சபைகள் ஐந்தனுள் இது இரத்தின சபை அல்லது மணிமன்று எனப்படும். பழையனூர், ஆலங்காட்டிற்கு 34 மைல் தொலைவிலுள்ளது. அங்கு காரைக் காலம்மையார் கோயில் ஒன்றுண்டு. தேவாரமுதலிகள் மூவர்கட்கும் அம்மையார் முற்பட்டவர். ஆகையால் அவர்
இந்துக் கலைக்களஞ்சியம்

Page 325
திருவந்தாதியோடு அம்மை திருவாக்கு முழுமையும் 11ஆம் திருமுறையுள் இடம்பெற்றுள்ளது. ஊர்த்துவதாண்டமூர்த்தி திருவீதிக் கெழுந்தருளிப் பழையனூர் சென்று வருவது பங்குனி உத்திரத்தன்றும், மார்கழித் திருவாதிரையன்றுமாக ஆண்டுக்கிருமுறை. முஞ்சிகேச முனிவர், கார்க்கோட முனிவர் ஆகிய இருவருக்கும் காட்சியளிப்பர். 48192 (ச); 4817 - 26, 7018 - 27 (அ2); 7754 - 63 (சு), ஆஉ 4 பதிகம்.(ஆலந்துறை க206 புள்ளமங்கை பார்க்க);
27. ஆலம்பொழில் a தஞ்சாவூர் 7 மைல். 7095 - 7103 (அ).
28. ஆலவாய் (மதுரை) a மதுரை ஜங்ஷன் 1 மைல். கல்வெட்டுக்கள் 46 - 48, 50 | 180, 56 - 82 / 1905, 502 - 51 / 1907, 35, 36 / 1908, 557 - 60 / 1911, 4 - 7 / 1915, 340 / 1936, 161/1938. தெஇக 4(369 - 71,373) பாண்டிநாட்டுத் தலைநகர். தமிழ்ச் சங்கங்கள் மூன்றும் திகழ்ந்த தலம். சிவபெருமான் 64 திருவிளையாடல்கள் புரிந்த சிறப்பைப் பரஞ்சோதி முனிவர் திருவிளையாடற்புராணத்துட் காண்க. அங்கயற் கண்ணியார் அவதாரம் செய்து, பாண்டியன் திருமகளாக வளர்க்கப்பெற்று, சோமசுந்தரராக வந்த சிவபெருமானைத் திருமணம் செய்து கொண்டு அரசு புரிந்த பழம்பதி. மும்மையால் உலகாண்ட மூர்த்தி நாயனார், நின்ற சீர்நெடுமாற நாயனார், மங்கையர்க்கரசியார், குலச்சிறை நாயனார் முதலியோர் வரலாற்றுத் தொடர்புடைய வளநகர். திருஞானசம்பந்தர் அனல் வாதம் புனல்வாதம் முதலியன செய்த சமணர்களைத் திருத்திச் சைவம் பரப்பிய வெற்றித்திருநகர். பரதநாட்டியக் கலை நிபுணனாகிய ஒரு பாண்டியனுக்குக் காலை மாற்றி ஆடிய கூத்தப்பிரான் கற்சிலையுருவில் வெள்ளியம்பலத்துட் காட்சியளிக்கிறார். புலவர்கள் “பொன்னுக்கு வெள்ளி கால்மாற்று அதிகம்” என்று தில்லையோடு ஒப்பிட்டு, இக்கால் மாறிய திருவிளையாடலை நயம்பெறச் கூறுவர். அங்கயற்கண்ணி அம்மையார் சந்நிதி மிகப் பிரபலம். அழகும் அருளும் நிரம்பிய திருவுருவம். அம்மையார் கோயில் வெளிப்பிரகாரத்தில், திருமலை நாயக்க மன்னர் தமது தேவியரோடு சிலையுருவிலுள்ளார். அம்மையின் சந்திக்கெதிரில் பொற்றாமரை தீர்த்தம் உள்ளது. இத்திருக்குளத்தின் பெருமை சங்க காலத் தொடர்புடையது. சங்கப் பலகை மிதந்து தக்க புலவர்களையும் அவர்கள் நூல்களையும் தாங்கி, ஏனையோரையும் அவர்கள் நூல்களையும் கவிழ்த்துவிடும் அற்புதம் சங்ககாலத்தில் இத்திருக்குளத்தில் நிகழ்ந்தது. "நெற்றிக்கண்ணைக் காட்டினும் குற்றம் குற்றமே” என்ற நக்கீரர், தமது பிழையை யுணர்ந்து, இக்குளத்தில் மூழ்கிக் கோபப்பிரசாதம்” என்ற (11ம் திருமுறையிலுள்ள) பனுவலை இயற்றி மன்னிப்புப் பெற்றதும் இங்கு நிகழ்ந்தது. இப்பொற்றாமரைத் தீர்த்தத்திலே தான் தருமபுர ஆதினத் தாபகர் கையில் அவ்வாதீன வழிபடு மூர்த்தியாகிய சொக்கலிங்கக் கடவுள் திருவுருவம் திருவருளாற் கிடைத்தது. குமரகுருபர சுவாமிகள் “மீனாகூழியம்மை பிள்ளைத்தமிழ்” பாடி அரங்கேற்றியபோது, அம்மை ஓர் இளம் பெண்ணாக வந்த தமது கழுத்திலிருந்த பொற் சங்கிலி ஒன்றைக் கழற்றி அவருக்குப் பரிசாக வழங்கியதும் இத்தலத்திற் சில
இந்துக்கலைக்களஞ்சியம்

நூற்றாண்டுகட்கு முன் நிகழ்ந்த திருவிளையாடல். சித்திரைப் பெருவிழாவில் மீனாகூதியம்மன் திக்குவிஜயம் திருக்கலியாணம் முதலியனவும், ஆவணி மூலத்திருவிழாவில் பாண்டியன் ஜ்வரம் தீர்த்தது, சமணரைக் கழுவேறச் செய்தது, பிட்டுக்கு மண் சுமந்தது முதலியனவும், ஏனைய மாதங்களில் வெவ்வேறு திருவிளையாடல்களும் உத்ஸவங்களாக நடைபெறுகின்றன. இந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் பாண்டித்துரைத் தேவர் முதலிய பெரியார்களால் நான்காவது தமிழ்ச்சங்கம் நிறுவப் பெற்று அரிய தமிழ்த்தொண்டாற்றி வருகின்றது. திருக்கோயில் வெளிப் பிரகாரத்தில் சங்கப்புலவர் நாற்பத் தொன்பதிமர், கற்சிலையுருவில் ஒரு சிறு கோயிலறையிற் காட்சியளிக்கின்றார். சுவாமி சந்திக்கு எதிரில் இருகற்றுரண்களிலே துர்க்கையும் வீரபத்திரரும் பெரிய சிலையுருவில் வெண்ணைய் சாத்தப் பெற்ற நிலையில் உள்ளனர். வாதவூரடிகள் வரலாற்றுத் தொடர்பும் இத்தலத்துக்குண்டு. “நரியைக் குதிரைப் பரியாக்கி. பெரிய தென்னன் மதுரையெல்லாம் பிச்சதேற்றும் திருவிளையாடலும், “பிட்டுநேர் படமண் சுமந்த” திருவிளையாடலும், “மண்சுமந்து கூலிகொண்டு அக்கோவால் மொத்துண்டு புண்சுமந்த” திருவிளையாடலும் இத்தலத்தே வாதவூரடிகள் பெருமையை உலகறியுமாறு நிகழ்ந்தனவே. 65 - 75, 1014 - 24, 2178 - 88, 3211 - 21, 3298 - 3308, 3339 - 60, 3956 - 66, 4035 - 45, 12 مرييg10); 4757 - 66, 6433 - 43 (e){2). e) 4100 - 4090 பதிகம்.
29. ஆவடுதுறை (திருவாவடுதுறை) a நாரசிங்கன் /2 பேட்டை மைல். கல்வெட்டுக்கள் 101 - 172 / 1925, 59 - 72 / 1926. திருமூலநாயனார் திருமந்திரம் அருளிய தலம். சம்பந்தர் தமது தந்தையார் வேள்வி செய்தற் பொருட்டு இறைவனைப்பாடி 1000 பொன்பெற்று அதைக் கொடுத்ததை 4696ஆம் பாசுரம் கூறும. திருவிசைப்பா பாடிய திருமாளிகைத் தேவர் தொடர்பும் இத்தலத்துக்குண்டு. திருவாவடுதுறை ஆதீனத் தலைமைத் திருமடம் இங்குளது. 2834 - 44 (ச); 4696 - 4715, 5513 - 22, 6701 – 21 (95); 7896 - 7900, 7933 - 42 (52); g, 8 பதிகம்.
30.அவ்வூர்ப்பசுபதீச்சரம் a சுந்தரப் பெருமாள் கோயில் 4 மைல். 76 - 86 (ச).
31. ஆனைக்கா (ஜம்புகேஸ்வரம்) d பூரீரங்கம் /2 மைல். கல்வெட்டுக்கள் 18 - 32 / 1891, 61 - 67 / 1903, 499 - 508 / 1905, 480 - 87 / 1908, 92 / 1910, 103 - 136 / 1937, 1 - 79 / 1938. தெஇக 3 (76) 4 (419 - 33) 8 (336 - 343) பஞ்சபூதஸ்தலங்களுள் இது நீர் அல்லது அப்புஸ்தலம். காவிரி கொள்ளிடம் ஆகிய இரண்டு ஆறுகளும் முறையே திருக்கோயிலுக்குத் தெற்கிலும் வடக்கிலும் ஒட, இவ விரண்டாறுகட்கும் இடைப்பட்ட இத்தலத்திலுள்ள மூலஸ்தான மூர்த்தியிருக்கும் இடம், இவ்வாறுகளின் தரைமட்டத்திற்கும் கீழிருப்பதால் எப்போதும் தண்ணிர்க் கசிவுள்ளது. ஆறுகளில் வெள்ளம் போகும்போது, ஓயாமல் இறைத்துக்கொண்டே இருந்தாலன்றி ஜம்புகேசுவரமூர்த்தியைத் தரிசிக்க முடியாது. இறைப்பதற்கே ஒர் எஞ்சின் தனியாக உள்ளது. இத்தலத்தில்
295

Page 326
மிகப் பழைய காலத்தில் வெண் நாவல் மரங்கள் நிறைந்த காடு இருந்தது. அக்காட்டில் ஒரு முனிவர் தவம் புரிந்தார். ஒரு நாள் அவரெதிரே ஒரு வெண்ணாவற்பழம் விழுந்தது. அதை முனிவர் திருக்கயிலாயம் சென்று இறைவனுக்கு நிவேதித்துப் பிரசாதமாக உண்டார். பிரசாதமாகையால் நாவற்கொட்டையையும் உமிழாமல் விழுங்கினார். இறைவன் திருவிளையாடலால் அக்கொட்டை முளைத்து முனிவர் விண்ணப்பிக்க, இறைவன் கட்டளைப்படி முனிவர் மீண்டும் நாவற்பழம் விழுந்த இடத்திற்கே மரமாக நடந்து வந்து சேர்ந்தார். இறைவன் அம்மரத்தடியில் அவர் பூசையை ஏற்று ஜம்புலிங்கம் ஆயினான். ஜம்பு நாவல் மரமும் ஸ்தல விருகூடிம் ஆயிற்று. திருக்கயிலாயத்தில் புஷ்பதந்தன், மாலியவான் என்ற கணநாதர் இருவர் போட்டியிட்டுத் தொண்டாற்றுவதிற் பொறாமை கொண்டு, ஒருவரை ஒருவர் சபித்து, முறையே யானையும் சிலந்தியுமாயினர். இருவரும் முறையிடுதற் கிரங்கிய சிவபெருமான், இத்தலத்தில் வழிபட்டு விமோசனம் பெறுமாறு அருளினான். யானையும் சிலந்தியும் ஜம்புலிங்கத்தை வழிபட்டன. யானை பூவும்நீரும் கொண்டு வழிபட்டது. மரத்திலிருந்து சருகுகள் விழாதபடி ஜம்புலிங்கத்திற்குச் சிலந்தி தனது வாய் நூலால் பந்தர் செய்தது. இப்பந்தர் அனுசிதம் (ஒட்டடை, ஒட்டரை என்று கூறப்படுவது) என்று யானை இதை நாடோறும் அழித்து வழிபட்டுச் சென்ற பிறகு, சிலந்தி நாடோறும் புதிய பந்தர் செய்துவந்தது. பந்தரையழிக்கும் யானையைத் தண்டிக்க எண்ணிய சிலந்தி, துதிக்கைக்குள் நுழைந்து மூளையைக் கடித்தது. யானை யிறந்தது, உள்ளிருந்த சிலந்தியுமிறந்தது. இறந்தவுடன் யானையும் சிலந்தியும் முறையே புஷ்பதந்தனும் மாலியவானும் ஆயினர். ஜமபுகேசுவர் அவர்கள் முன்தோன்றி, புஷ்பதந்தனைப் பழையபடி கணநாதனாகும்படியும், அவன் யானை வடிவ நினைவுக்குறியாக இத்தலம் ஆனைக்கா என்று பெயரெய்தும்படியும், மாலியவன் சோழமன்னனாகப் பிறந்து பல தொண்டுகள் புரிந்து பிறகு வீடெய்தும்படியும் அருள் புரிந்தார். சிலந்தியும் கோச்செங்கட் சோழனாக வந்தது. இம்மன்னன் சிவபெருமானுக்கு 70 மாடக்கோயில்கள் (யானை உள் நூழையாதபடி சிறிய வாயில் வைத்து) எடுப்பித்தான். அவ்வாறு எடுப்பித்த கோயில்களுள் இக்கோயிலும் ஒன்று. உமாதேவியார் பூசித்த தலங்களுள் ஒன்று.
நாடோறும் அம்மன் கோயில் பூசகர் பெண்ணுடை தரித்துக்கொண்டு உச்சிக்காலப் பூசை வேளையில் சுவாமி கோயிலில் வழிபாடு செய்கிறார். பிரமோத்ஸவத்திற் பங்குனி மாதம் சித்திரை நக்ஷத்திரத்தன்று பஞ்சப்ராகார உத்ஸவம் மிக விமரிசையாக நடைபெறும். சோமாஸ்கந்தர் அம்மன் வேடமும், அம்மன் சுவாமி வேடமும் பூண்டு ஐந்து வீதிகளில் வலம் வருவார்கள். ஆயிரக்கணக்கில் மக்கள் தரிசிப்பார்கள். திருநீறிட்டான் மதில் இன்றும் உளது. சோழமன்னன் ஒருவன் காவிரியில் நீராடும்போது கழுத்திலிருந்து பதக்கம் நழுவி வெள்ளத்தோடு போயிற்று. அவனும் சிவார்ப் பணம் என்று போயினான். நாடோறும் ஆற்றிலிருந்து வரும் திருமஞ்சனக் குடத்தில் அது அகப்பட்டுத் திருமஞ்சனம் செய்யும் போது
296

இறைவன் திருமேனியில் விழுந்தது. (3367,7791ம் பாசுரங்கள் காண்க.) அம்பிகை அகிலாண்டேசுவரி திருவுருவம் அழகும் அருளும் நிரம்பியது. இத்தலத்துக்கு அருமையான புராணத்தைக் கச்சியப்ப முனிவர் இயற்றியுள்ளார். 1710 - 19, 3367 - 77 (93); 5534 - 43, 6863 - 82 (g|3); 7985 94 (9). ஆ, 7பதிகம்.
32. இடும்பாவனம் g பாண்டி 3 மைல். 174 - 184 (ச).
33. இடைச்சுரம் (திருவடி சூலம்) a செங்கல்பட்டு 3 மைல். மூலஸ்தான லிங்கம் மிகவும் பளப்பளப்பானது. சிதம்பரம் இரத்தின சபாபதியைத் தரிசிப்பது போல் பின் புறம் கற்பூரம் காட்டினால் நன்றாகத் தெரியும். “இடைக்சுரம் மேவிய இவர்வணம் என்னே” என்று ஒவ்வொரு பாசுரத்திலும் சம்பந்தர் புகழ்கிறார். 842 - 52 (ச).
34. இடைமருதூர் (திருவிடைமருதூர்) a திருவிடை மருதூர், கல்வெட்டுக்கள் 130 - 159 / 1895, 193 - 313 / 1907 தெஇக 3 (72, 124, 138, 202, 203) 5 (694 - 723) 12 (59). வரகுணபாண்டியன் பெரும்புகழ் வரலாற்றுத் தொடர்புடையது. பட்டினத்தடிகள் வழிபட்டதலம். அவர் அருளிய மும்மணிக்கோவை பெற்றது. இங்கு தைப்பூசத்தில் காவிரியில் நீராடுதல் சிறந்தது. (2074 பாசுரம்) 338 - 48, 1025 - 35, 185 - 95, 1304 - 25, 2070 - 80, (Ժ6)։ 4502 — 11, 5363 - 79, 6402 - 21 (அ5); 7838 - 47 (சு); ஆ12 பதிகம்.
35. இடையாறு d திருவெண்ணெய் நல்லூர் ரோட் 7 மைல், 7534 — 43 (Gi).
36. இந்திர நீல பருப்பதம் Vx- சென்னையிலிருந்து கல்கத்தா போய் அங்கிருந்து (பழைய B.N.W.Ry. வழியாக) பகால்பூர், தார்பங்கா, ரக்சூல், பிக்நதொரி (Raxauli Bhikna Thoree) செல்லும் பாதையில் ரக் சூலிலாவது பிக்நதொரியிலாவது இறங்கி அங்கிருந்து சுமார் 60 மைல் தொலைவிலுள்ள நேபாள தேசத்திலுள்ள காட்மாண்டு (Khatmandu) என்னும் தலைநகர் செல்ல வேண்டும். இங்கு பசுபதிநேபாளம் என்று பெரியபுராணத்தில் திருமூலர் வரலாற்றிலுள்ள பசுபதி கோயிலைத் தரிசித்து அங்கிருந்து வடகிழக்கில் மலை மேலேறி, ஏறக்குறைய 100 மைல் சென்றால் இந்திர நீல பருப்பதம் சேரலாம். இது கடல் மட்டத்தின்மேல் சுமார் 18000 அடி உயரமுள்ளதெனக் கணிக்கப்பட்டுள்ளது. கேதாரம் கயிலாயம் செல்வது போலவே, பனிக்கட்டியின்மீது நடந்து எசல்ல வேண்டிய பகுதியுமுண்டு. ஒருமலை நாகபடம் போற்கவிந்து ஈசானதிக்கை நோக்கியிருக்கிறது. கட்டப்பட்ட கோயிலில்லை. மூர்த்தி "ஸ்தல சுயம்பு’ ஆகிய மலையின் பகுதி, குவிவான கீழ்ப்பகுதியே பீடம். இந்தக் கீழ்ப்பகுதி நீலமயமான கற்பாறை. இதற்கு வடமேற்கில் ஒரு பள்ளத்தாக்கில் ஒடுவது நீல்கங்கா எனும் சிறிய ஆறு. ஈசன் சந்நிதிக்குச் சிறிது வடகிழக்கில் பச்சை நிறமுள்ள கற்பாறையே சுயம்பு அம்பிகை. சுவாமியின் அருகில் அர்த்தசித்திர வடிவில் ஒரு பாறையே இந்திரன் மலை. இப்பாறையிற் கண்கள் போன்ற பலகுழிவுகள்,
இந்துக்கலைக்களஞ்சியம்

Page 327
பக்கத்தில் கிரீடம் வஜ்ராயுதம் போன்ற வடிவங்கள் உள்ளன.
இந்திரன் பூசித்த தலம். சம்பந்தர் காளத்திலியிருந்தே பதிகம் அருளினார். 1753 - 63 (ச),
37. இராமனதிச்சரம் g நன்னிலம் 4% மைல். திருப்புகலூரிலுருந்து முடிகொண்டான் ஆற்றைக் கடந்து திருக்கண்ணபுரம் எனும் விஷ்ணு ஸ்தலம் போகும் வழியிலுள்ளது 1238 — 48(GF).
38. இராமேச்சுரம் (ராமேஸ்வரம்) a ராமேஸ்வரம் 1 மைல். கல்வெட்டுக்கள் 97 - 105/1903, 89-90/1915. தெஇக 8 (382391). கடற்கரைத் தலம், ஒரு தீவிலிருக்கிறது. மண்டபம் ஸ்டேஷனிலிருந்து பாம்பன் ஸ்டேசனுக்கு ரயில் போகும்வழியில் கடலின்மேற் பாலம் உளது. இப்பாலத்தின் ஒரு பகுதி திறக்கவும் மூடவும் பெரிய இயந்திரங்கள் மூலமாகத் திட்டம் செய்யப் பெற்றுள்ளது. சில ஆண்டுகட்கு முன்பு வரையில் இராமேஸ்வரத்திலிருந்து நேரே தனுஷ்கோடி தீர்த்தக் கட்டத்திற்கு ரயில் போயிற்று. மணல்காற்றினால் ரயில் போகும் வழி தூர்ந்து போவதைத் தடுப்பதற்குப் பெரும் பொருள் செலவழிவதால், இவ் வழியில் இப்போது ரயில்போவதில்லை. இதற்குப் பதிலாகக் கடலின் தென்கரையோரமாகவே பாம்பனிலிருந்து நேரே தனுஷ் கோடி ஸ்டேஷன் வரையில் மட்டும் ரயில் போகிறது. தனுஷ்கோடி ஸ்டேஷனிலிருந்த தீர்த்த ஸ்நான கட்டம் ( சேது ஸ்நான கட்டம்) 3 மைல் மணல் வழியில் நடக்க வேண்டும். காலை 9 மணிக்குள் போய்த் திரும்ப வேண்டும். பிறகு கால் கொப்பளிக்கும்படி மணல்சுடும். காசிக்குச் செல்பவர்கள் கங்காதீர்த்தம் கொண்டு வந்து, இராமலிங்க மூர்த்திக்கு அபிஷேகம் செய்து, காசி யாத்திரையை முடிப்பது மரபு.
ஆண்டு முழுமையும் இந்தியாவின் எல்லாப் பகுதிகளிலும் இருந்து திரளாக மக்கள் வருகிறார்கள். தீர்த்தங்களில் ஸ்நான சங்கல்பம், பிண்டம், தர்ப்பணம், தென்புலத்தார் வழிபாடுகள், நாகப்பிரதிஷ்டை முதலியவற்றிற்குப் புரோஹிதம் செய்து பிழைக்கும் பண்டாக்களும் அவர்கள் தரகர்களும் திருச்சிராப்பள்ளி ஜங்ஷனிலிருந்து வழிநெடுகப் பிரயாணிகளை உபத்திரவம் செய்வார்கள். சிக்கிக் கொள்ளாமல், ஸ்டேஷனில் இறங்கி, ஸ்டேஷனுக்கு % பர்லாங்கு தொலைவிலுள்ள மேஹாபீர் தர்மசாலையில் தங்குவது மிகமிக நல்லது. மாடியில் 24மணி நேரத்திற்கு 8 அணா வீதம் வாடகையுள்ள நல்ல அறைகளுண்டு. கீழே சமையல் செய்ய இடமுண்டு. சாப்பாடு சிற்றுண்டி ஒட்டல்கள் நிரம்பவுண்டு. நாமே சங்கல்பம் செய்து கொள்வது நல்லது. தேவையானால் தீர்த்தங்களில் நூற்றுக்கணக்கில் காத்துக் கொண்டிருக்கும் புரோஹதரைக் கொண்டு, ஒரனா, 2 அணா, 4 அனா கொடுத்துச் சங்கல்பம் செய்தாற் போதும்.
இராமேஸ்வரத்தில் சிவராத்திரியை ஒட்டி 10 நாள் பெருவிழா நடக்கிறது. சிவராத்திரியன்று வெள்ளிவிரதம். ஆடி அமாவாசையை ஒட்டியும் 10 நாள் அயனோத்ஸவமுண்டு. ஒவ்வொரு அமாவாசையிலும் சேதுகரையில் ஸ்நானம் விசேஷம். அர்த்தோதயம், மஹோதயம் முதலிய புண்யகாலங்களில்
இந்துக்கலைக்களஞ்சியம்

பஞ்சமூர்த்திகளோடு இராமநாதசுவாமி சேதுக்கரையில் அதிகாலையில் தீர்த்தம் கொடுப்பதை 100000 பேருக்குமேல் தரிசிப்பதுண்டு. இராவண சம்ஹாரத்தால் ஏற்பட்ட பழிபோக இராமபிரான் சிவபூசை செய்ததை 2901ஆம் பாசுரம் கூறும். காசியிலிருந்து ஒரு லிங்கம் கொண்டு வரும்படி ஆஞ்சநேயரை அனுப்பினார். காலந்தாழ்ந்தும் வரவில்லை. சீதாபிராட்டியார் மணலைப் பிடித்து இலிங்கமாக்க அதை இராமர் வழிபட்டனர். அந்த லிங்கமே இராமலிங்கம். மூலஸ்தானத்திலிருப்பது ஆஞ்சநேயர் தாமதித்துக் கொணர்ந்த காசிலிங்கம், இராமலிங்கம் சந்நிதியின் வடக்கில் சில அடி தூரத்துக்குள் இருக்கிறது. பிரயாணிகள் இரு லிங்கங்களையும் தரிசிப்பதே முறையாக உள்ளது. நிரம்ப அழகிய தேசிகர் இயற்றிய சேதுபுராணம் முதலியன இத்தலத்துக்குமுண்டு. அம்பிகை அழகும் அருளும் நிரம்பிய பர்வதவர்த்தினி (மலைவளர் காதலி). தாயுமானார் பாடல்கள் அம்மையின் சிறப்பை நன்கு விளக்கும். மூன்றாம் பிராகாரம் வெளிநாட்டு ஐரோப்பியர்கள் பார்த்துப் பார்த்து மகிழ்வது. ஆஞ்சநேயர், சேதுமாதவர், காலபைரவர் முதலியோர் உட்கோயில்கள் சிறந்தவை. 2900-2909, 3879- 89(ச2); 4746569(அ) ஆடி 3 பதிகம்.
39. இரும்பூளை (ஆலங்காடி) த நீடாமங்கலம் 4 மைல். இங்கு தகூழிணாமூர்த்தி சந்நிதி பிரபலம். வியாழக்கிழமைகளில் வழிபாடு சிறப்புடைத்து. தகூதிணாமூர்த்தியே திருத்தேரில் எழுந்தருளுவார். 1852- 61(ச).
40. இரும்பை மாகாளம் (இரும்பை) c புதுச்சேரி 5 மைல், 2736-46 (GF).
41. இலம்பையங்கோட்டூர் a கடம்பத்தூர் 7 மைல் சென்னையிலிருந்து நேரே கூவத்திற்குப்பஸ் மூலம் போய் கூவம் ஏரியினுள் குறுக்கே 1 மைல் போக வேண்டும். ஏரியில் தண்ணிர் மிகுதியாயிருப்பின், கரைவழியே சுற்றிப்போக வேண்டும். இவ்வூரிற் கிறிஸ்தவர்களே மிகுதி. கூவத்திலிருந்த பூஜை செய்யப்போகும் குருக்களோடு போய்த் திரும்புதல் வசதி. 82030 (GF);
42. இன்னம்பர் (இன்னம்பூர்) கும்பகோணம் 4 1/2 மைல். 3820 - 30 4855-64), 5124-33, 5433-42, 7121-30 (മൃ4). ഷൂ, 5 பதிகம்.
43. ஈங்கோய்மலை (திருவிங்கநாதமாலை) குழித்தலை 2 மைல். அகத்திய முனிவர் ஈ உருவங்கொண்டு பூசித்த தலம். காலையில் 61 கடம்பந்துறை, கட்டுச்சியில் 251 வாட் கோக்கி, மாலையில் இத்தலம் ஆகிய மூன்றையும் கார்த்திகை சோமவாரங்களிலே தரிசிப்பது இந்நாட்டு மக்களுடைய புண்ணியச் செயல் 754-64 (ச)
44. உசாத்தானம் (கோயிலூர்) முத்துப்பேட்டை 2 மைல்.
இங்கு சங்கரவேதாந்திகள் மடம் ஒன்றுளது. இராமர், இலக்குமணர் அனுமான் முதலியோர் பூசித்ததை 3150-ஆம் பாசுரம் கூறும், 3150-58 (ச).
297

Page 328
45. ஊறல் (தக்கோலம்) தக்கோலம் 3 மைல். தெஇக 3 (166,173, 184,190) 5 (1364-82), கோயிலின் மேற்புறம் மலைச்சரிவில் ஒர் நந்தி வாயின் வழியாக வந்து, நாற்புறமும் ஒடி, கோயிலுக்கெதிரில் மற்றொரு நந்தி வாயின் வழியாக விழுந்து, ஒரு சிறு குளத்தை நிரப்பி வழிந்து ஓடுகிறது. சோழமன்னனுக்கும் மேலைச் சாளுக்கிய மன்னனுக்கும் போர் நிகழ்ந்த இடம் இங்கு மணற் பெருவெளியாக உள்ளது. 143-51 (GF).
46. எதிர்கொள்பாடி (மேலைத் திருமணஞ்செரி) a குத்தாலம் 3 % மைல். 7286-96 (சு)ள
47. எருக்கத்தம்புலியூர் (ராஜேந்திர பட்டனம்) d விருத்தாசலம் 7 மைல், திருநீலகண்டயாழ்ப்பாணர் அவதாரத்தலம் 959—68(于)
48. எரும்பியூர் (திருவெறும்பூர்) a திருவெறும்பூர் 4 மைல் எறும்பு பூசித்ததலம்; கோயில் சிறுகுன்றின் மேலுளது. 596877, 7141-50 (அ2).
49. ஏடகம் (திருவேடகம்) a சோழவந்தான் 3 மைல் சம்பந்தர் “வாழ்க அந்தணர்” என்று தொடங்கும் (3372-83) பதிகம் எழுதி, மதுரையில் வைகையாற்றிலிட்ட ஏடு, மருவுறும் பிறவியாற்றில் மாதவர் மனம் சென்றாற்போல், ஆற்றோட்டத்தை எதிர்த்துச் சென்று தங்கிய இடம். திருக்கோயில் ஆற்றோரத்தேயுளது. (3140-49) (ச)
50. ஐயாறு (திருவையாறு, திருவாடி) a தஞ்சாவூர் 9 மைல். தெஇக 5 (512- 555). தஞ்சாவூரிலிருந்து இத்தலம் செல்லும் வழியில் 5 ஆறுகளையும் பாலத்தின்மீது கடப்பதைக் காணலாம். திருக்கயிலை காணச்சென்று அப்பர் அத்தலம் போகும் வழியில் ஒரு குளத்தில் மூழ்கி, “யாதும் சுவடுபடாமல் ஐயாறடைகின்ற போது’ கயிலைக் காட்சி கண்டனர். இதன் ஞாபகார்த்தைமாகத் தென்கயிலாயம் என்ற உட்கோயிலில் ஆடி அமாவாசை யன்று உத்ஸவம் நடக்கின்றது. சுந்தரமூர்த்தி சுவாமிகள் வெள்ள மிகுதியால் காவிரிக்கரையில் நின்று, எதிர்க்கரையிலுள்ள கோயிலுள்ளிருக்கும் ஐயாற்றப்பரை நோக்கி 8013ம் பாசுரத்தில் “எதிர்த்து நீந்தமாட்டேன். ஐயாறுடைய அடிகளோ' எனும்போது ஆற்றில் மணல்வழி தோன்ற அவ் வழியிற் சென்று தரிசித்து மீண்டவுடன், அவ்வழி மறைந்து, மீண்டும வெள்ளம் முன்போல் ஒடிய செய்தியைப் பெரியபுராணம் கூறும். இந்திரன், வாலி முதலியோர் வழிபட்டதை இந்ததலப் பாசுரங்கள் கூறும். சித்திரைப் பெரு விழாவில் இத்தலத்து இறைவன் தன்னைத் தானே பூசித்தது ஆத்மபூஜை யென்ற உத்ஸவமாக நடக்கிறது. இப்பெருவிழாவின் இறுதியில் சப்தஸ்தான உத்ஸவம் (ஏழுர்த்திருவலம்) மிகப்பிரபலம். நந்திகேசுவரரும் அவர் தேவியாரும் வெட்டிவேர்ப் பல்லக்கில் முன்செல்ல, ஐயாறப்பரும் அறம் வளர்த்த நாயகியும் அழகிய கண்ணாடிப் பல்லக்கில் திருப்பழனம், திருச்சோற்றுத்துறை, திருவேதிகுடி, திருக்கண்டியூர், திருப்பூந்துருத்தி, திருநெய்த்தானம் ஆகிய ஆறு தலங்கட்குச் சென்று, அங்கங்குள்ள மூர்த்திகளோடெழுந்தருளி
298

மீண்டும் திருவையாறடையும்போது ஏழுர் மூர்த்திகளும் ஒருங்கே காட்சியளித்தது. கோயிற் பிராகாரத்தில் மெளனப் பிரதசுஷணம் செய்வது ஏறக்குறைய 30 மணிநேரம் நடைபெறும். நிகழ்ச்சியாகும். ஆற்றிலிருந்து தெற்குச் சந்நிதிக்குள் நுழையும்போது ஆட் கொண்டார் சந்நிதியும் குங்குலியக் குழியும் உள்ளன. அம்மையார் அறம் வளர்த்த நாயகியின் மூலத்தானத் திருவுருவம் மிகக்கெம்பீரமானது. தெலுங்கு மொழியிற் பல கீர்த்தனைகளியற்றிய தியாகராஜர் கோயில் ஆற்றங்கரையில் உண்டு. தமிழ்மொழி வடமொழிக் கல்லூரிகள் மகாராஷ்ட்ர மன்னர் அரண்மனை முதலியனவும் இத்தலத்திலுண்டு. 382-92, 1293- 1303, 1394-1404, 1524-35, 1808-18 (35); 4179-89, 4282-91, 4532/61, 5031-60, 5112-13, 5493-5512, 6613-33, (அ 12) ; 8005-15 (சு) ஆ 18 பதிகம்.
51. ஒற்றியூர் (திருவொத்தியூர்)8 S திருவொத்தியூர் 4 மைல் சென்னை தங்கசாலை பஸ் நிலையத்திலிருந்து அடிக்கடி பஸ் போகின்றது. கல்வெட்டுக்கள் 1892 (104 -110) 1896 (399-405) 1911 (366-372) 1912 (98-246) 1938 (162-167) தெஇக 3 (64, 103-105, 108, 115, 143, 145) 4 (552 – 57) 5 (1354–60) 12 (70, 87, 88, 90-93, 99, 100, 103, 105) புற்றிடங் கொண்டார் வன்மீகநாதர், படம்பக்கநாதர் என்பன மூலஸ்தானத்திலுள்ள மூர்த்தியின் பெயர். கார்த்திகைப் பெளர்ணமி, அடுத்த இரண்டு நாட்கள் புற்றின் மேலுள்ள கவசம் எடுத்து விடப்படும். புற்றாகவே உள்ள மூர்த்தியைத் தரிசிக்கலாம். கவசம் சாத்தியிருக்கும்போது புற்றின் ஒரு சிறு பகுதியை மட்டும் பார்க்கலாம். பஞ்சம் ஏற்பட்ட காலத்தில், சோழமன்னன் எல்லாத் தலங்களின் படித்தரத்தையும் குறைத்தனுப்பிய கட்டளை ஒலையில் இவ்வூர் இறைவன் ஒருவருமறியாதபடி “ஒற்றியூர் நீங்கலாக மற்றை யூர்க்கிக் கட்டளை” என்று எழுதியபடியால், எழுத்தறியும் பெருமான் எனப்படுகிறான். வடிவுடையம்மை சந்நிதியில் மலையாளத்து அந்தணர்கள் பூஜை, சப்தவிடங்கக் கணக்கில் சேராத தியாகராஜ ஸ்தலம். மாசி பெளர்ணமியைத் தீர்த்தமாகக் கொண்ட பத்துநாள் விழாவில் ஆறாம் நாளிரவு ஆறாம் பவனியும் ஒன்பதாம் நாள் மாலை மகிழடி சேவையும் மிகப் பிரபலம். கோயில் கர்ப்பக் கிரஹம் கஜப்ருஷ்ட வடிவுள்ளது. (யானையின் புட்டம் போன்ற அரை வட்டவடிவு). வாவியெல்லாம் தீர்த்தம் மணலெல்லாம் சிவலிங்கம் என்று பட்டினத்தடிகள் போற்றிய தலம். அவருடைய முத்தித் தலம். அவர் கோயில் தேர்நிலையிலிருந்து 2 மைல் தொலைவிலுள்ளது. கலியநாயானார் தொண்டு செய்து முத்தியடைந்த தலம். சங்கிலி நாச்சியார் புஷ்பத்தொண்டு செய்து, சுந்தரமூர்த்தி சுவாமிகளைத் திருமணம் புரிந்து வாழ்ந்த தலம். அவ்வம்மையாருக்கு மகிழமரத்தடியில் கொடுத்த வாக்குறுதிக்கு மாறாகச் சுந்தரர் திருவாரூருக்குச் செல்ல, ஒன்றியூர் எல்லை தாண்டி ஒரு காலடி வைத்தவுடன் கண் பார்வை இழந்த இடம் இன்றும் காலடிப்பேட்டை (காலாட்டிப் பேட்டை) என வழங்குகின்றது. கண் இழந்தது முதல் சுந்தரர் உருகிக் கசிந்து பாடிய பதிகங்கள் நமக்கு நல்லறிவூட்டும் முறையில் அமைந்துள்ளன. ஒற்றியூர்க் கோயிலின் வடமேற்குப் பகுதியில் ஆதிபுரீசர் கோயில் திருப்பணி மிக அழகிய முறையில் செய்யப் பெற்றுள்ளது. ஆதிசங்கரர், லகுலீசர்
இந்துக் கலைக்களஞ்சியம்

Page 329
முதலிய சமயத்தலைவர்கள் உருவங்கள் ஒற்றியூர்க் கோயில் உட்பிரகாரத்திலும், தியாகராஜர் சந்நிதியின் பின்புறத்திலும் உள்ளன. 3405-15 (ச); 4502-13, 4980-90, 5463-72, 66916700 (அ5) ; 7774-83, 8147-56 (சு2) , ஆ 8 பதிகம்.
52. ஒனகாந்தன்தளி b காஞ்சிபுரம் 1 மைல். சர்வதீர்த்தத்திற்கு அருகிலுள்ளது. சுந்தரர் பொன்பெற்ற தலங்களுள் ஒன்று. 7266 - 75 (சு).
53. ஒத்தூர் (திருவேதிபுரம், திருவத்தூர்) b காஞ்சிபுரம் 19 மைல். காஞ்சிபுரத்திலிருந்து வந்தவாசி போகும் பஸ் வழி. கோயிலின் மேற்கில் சேயாறு (செய்யாறு) ஒடுகின்றது. சிவபெருமான் தேவர்கள் முனிவர்கட்கு வேதப்பொருளை ஒதிய தலம். (ஒத்து = வேதம்). சம்பந்தர் அடியார் வேண்டுகோளுக் கிணங்கி ஆண்பனைகளைப் பெண் பனைகளாக்கிய அற்புதம் நிகழ்ந்த தலம். தைமாதம் இரத சப்தமியைத் தேர்த்திருநாளாகக் கொண்ட பத்துநாள் திருவிழா நடக்கிறது. 580-90 (ச).
54. ஓமாம்புலியூர் a குத்தாலாம் 11 மைல் (கொள்ளிடம் கடக்க வேண்டும்) a சிதம்பரம் 19 மைல். காட்டுமன்னார்குடி வழியாகப் பஸ்மூலம் போகலாம். 41 -20 (ச) ; 712-20 (அ).
55. கச்சி அநேகதங்காவதம் b காஞ்சிபுரம் 1/2 மைல். புத்தேரித் தெருவில் உள்ளது. கல்வெட்டுக்கள் தெஇக 4(345347) காஞ்சிபுரத்திள்ள சிவாலயங்களில் அம்பிகையின் மூலஸ்தானம் கிடையாது. காமா கூதியம்மன் சந்நிதி தனிக்கோயிலாக உள்ளது. 7318-27 (சு)
56. கச்சிஏகம்பம் (ஏகாம்பரேசுவரர் கோயில்) b காஞ்சிபுரம் 1 மைல். கல்வெட்டுக்கள் 1890 (25-28) 1893 (1-13, 54) 1906 (2-4). தெஇக4 (348-51, 813-815 a, 816-20,867) 7 (52-54 12 (14). அரசாங்கம் வெளியிடாதவை நிரம்பவுள. ஐயடிகள் காடவர்கோன், மறவாது கல்எறிந்த சாக்கியர், திருகுறிப்புத் தொண்டர் ஆகியோர் முத்திபெற்ற தலம். கரம்தரு பயன் இதுவெனக் கம்பையாற்றங்கரையில் மணலாற் சிவலிங்கம் எடுத்து ஆகம முறைப்படி பூசை செய்யும் உமையம்மையாரின் பேரன்பை வெளிப்படுத்தச் சிவபெருமான் திடீரென ஆற்றில் வெள்ளம் வரச்செய்ய, உமையாள் மணலில் இலிங்கத்தைக் காக்கத் தழுவினாள். முலைக்குவடும் வளைத்தழும்பும் சிவலிங்கத்தின் திருமேனியில் பதிந்தன. இதனால் தழுவக்குழைந்தகம்பன் என்ற பெயர் நிலவிற்று. என்றும் அழியாத மாவடியின்கீழ் இறைவன் இருந்ததால் ஏகாம்பரம் ஆயினன் (ஏக ஆம்ரன்=ஒரு மாவின் கீழிருப்பவன்). காஞ்சிப்பதியிலுள்ள எல்லாச் சிவாலயங்களும் (“கச்சிப் பலதளியும்'என்று 6947-ம் பாசுரம் கூறுவதால்) தேவார வைப்புத் தலங்களே. இப்பலதளிகள் வரலாற்றைச் சிவஞான முனிவர் அருளிய காஞ்சிப்புராணத்துட் காண்க. மூலஸ்தானம் மணலாதலால் அதற்கு அபிடேகமில்லை. புனுகுச் சட்டமே சாத்தப்பெறுவது. ஆவுடையாருக்கே அபிடேகம், சிவலிங்கத்தின்
இந்துக்கலைக்களஞ்சியம்

பின்புறம் மாடத்தின் திருமணக் கோல உருவில் பார்வதியும் பரமேசுவரரும் சாட்சியளிக்கின்றார்கள். காஞ்சிபுரத்திலுள்ள எந்தச் சிவாலயத்திலும் அம்மன் சந்நிதி கிடையாது. இவ்வாலயங்களிலுள்ள சிவபெருமானுக்கு அம்பிகை காமாட்சியம்மையாகத் தனிக்கோயிலில் உள்ளார். இவ்வம்மையாரே இருநாழி நெல் கொண்டு முப்பத்திரண்டு அறமும் வளர்ப்பவர் ஏகாம்பரேசர் ஆலயத்திற்கும் காமக் கோட்டத்துக்கும் இடையில் (சோமஸ்கந்த உருவத்தைப் போல்) குமரக்கோட்டத்துள் முருகப்பெருமான் காட்சியளிக்கிறார். இங்கு பூசை செய்த கச்சியப்ப சிவாசாரியரே கந்தபுராண ஆசிரியர். இவர் காப்புச் செய்யுளின் முதலடியிலுள்ள (திகடசக்கரம் திகழ்+தசக்கரம்) புணர்ச்சிக்கு இலக்கணங் கூறவே முருகப் பிரான் தமிழ்ப்புலவனாக வீரசோழிய இலக்கணச் சுவடியோடு வந்து சிவாசாரியருக்கு வெற்றியளித்தனன். பஞ்சபூதத் தலங்களுள், மணல் இலிங்கமுள்ள இத்தலம் பிருதிவித்தலம். சுந்தரமூர்த்தி சுவாமிகள் கண்ணிழந்த நிலைமையில் யாத்திரை செய்து இத்தலத்தில் இடக்கண் பெற்றனர். "அயோத்யா மதுரா” எனத் தொடங்கும் சுலோகத்தின்படி இத்தலம் முத்திதரும் நகரங்கள் ஏழினுள் ஒன்று. விஷ்ணுஸ்தலங்கள் 108இல் (=திவ்யதேசங்கள்) 14 காஞ்சியிலுள்ளன. சோழன் கரிகாற் பெருவளத்தான் காலத்தில் காஞ்சிபுரம் மிகச் செம்மையாக்கப் பெற்று நான்கு ராஜவீதிகளும் ஏற்பட்டன. இவை போன்ற அகன்ற மாடவீதிகள் வேறு எத்தலத்திலும் இல்லை. அரண் செய்யும் முறையில் இச்சோழனே நாற்புறத்திலும் உயர்ந்த பருத்த மதில்களை எழுப்பினான். 1432, 4228, 5116, 7442 முதலிய பல பாசுரங்களிற் கச்சியின் மதில் கூறப்படுகிறது. கச்சியை நடுவில் வைத்த தொண்டை நாட்டுப்பகுதியும் எயிற்கோட்டம் என்று பெயரிடப்பட்டது. ( எயில் = மதில்) சங்க காலத்திற் காஞ்சிபுரம் கச்சிப்பேடு என வழங்கிற்று. கச்சிப்பேட்டு இளந்தசனார், பெருச்சனார், காஞ்சிக் கொற்றனார், நன்னாகையார் முதலிய புலவர்கள் நற்றிணை குறுந்தொகை முதலிய சங்க இலக்கியங்களுட் பாடியன நமக்குக் கிடைத்துள்ளன. மணிமேகலை என்ற தமிழ்க் காப்பியத்தில் கச்சிமா நகர் புக்க காதை, சமயக் கணக்கர் தந்திரம் கேட்ட காதை முதலியவற்றுள் இந்நகரின் சிறப்பு, வாணிபச் சிறப்பு பற்பல சமயப்பேரறிஞர்கள் வாழ்ந்த சிறப்பு கூறப்பட்டுள்ளன. சங்க காலத்திற்குப் பிறகு பல்லவ மன்னர்கள் காலத்திலும் இது சிறந்த தலைநகராக விளங்கியது. “பாரூர் பல்லவனூர்” (7442) என்ற சுந்தரர் திருவாக்காலறியப்படும். 200 ஆண்டுகட்கு முன்பு மாதவச் சிவஞான யோகிகள் இத்தலத்திலுறைந்து காஞ்சிப்புராணம், சிவஞான போத மாபாடியம் முதலிய பல நூல்களை அருளிக் கச்சியப்பரோடு சிறந்த தமிழ்த் தொண்டும் புரிந்ததும் இத்தலச் சிறப்பினுள் பொன்னெழுத்தால் பொறித்தற்குரிய பகுதியாம். “கல்வியைக் கரையிலாத காஞ்சிமா நகர்” (4589 பார்க்க) என்று அப்பர் சுவாமிகள் அன்று புகழ்ந்தது இன்றும் உண்மையாகவே உள்ளது. வடமொழியிலும், “நகரேஷ காஞ்சி” எனப்படுதல் மிகையன்று. ஏழு திருமுறைகளிலும் கச்சியேகம்பத்திற்குப் பதிகங்களுமுண்டு. பதினோராந் திருமுறையிலும் மூவர் திருவாக்கிற் பல பாடல்கள் உண்டு. திருவாசகம்
299

Page 330
திருக்கோவையாரிலும் இத்தலம் குறிக்கப் பெற்றுள்ளது. 142736, 1590-1600, 3233–43, 4024-34 (F4); 4220-29, 4592-4601, 5114-24, 2695, 6883-6903 (அ7); 7848-58 (சு) 12 பதிகம்.
57. கச்சி நெறிக்காரைக்காடு (திருக்காலீசுவரன் கோயில்) b காஞ்சிபுரம் 1% மைல், 3492-3502 (ச)
58. கச்சித்திருமேற்றளி ( பிள்ளைப்பாளையம்) b காஞ்சிபுரம் 1/2 மைல். இக்கோயிலில் சிவபெருமான் சந்நிதிகள் இரண்டுள. ஒன்று, திருமாலுருவம் சம்பந்தர் பதிகம் ஒத உருகிச் சிவலிங்கமாகிய ஒதவுருகீசர் சந்நிதி- மற்றொன்று திருமேற்றளிநாதர் சந்நிதி-சந்நிதித் தெருவின் கோடியில் ஆளுடையபிள்ளையார் (=சம்பந்தர்) கோயிலுளது. இவர் வருகையால் இப்பகுதி பிள்ளையார் பாளையம் எனப் பெயர் பெற்றது. சம்பந்தர் பதிகம் கிடைத்திலது. 4582-91 (அ); 7433342(சு), ஆஉ 2 பதிகம்.
59. கச்சூர் (திருக்கச்சூர்) a சிங்கப் பெருமாள் கோயில் 1% மைல். சுந்தரமூர்த்தி சுவாமிகட்காக இறைவன் பிச்சையெடுத்துச் சோறுாட்டிய தலம். சப்தவிடங்கக் கணக்கில் சேராத தியாக ராஜஸ்தலம், ஆலக்கோயில் என்பது கோயிற்பெயர். இத்தலப் பதிகத்தில் “மலைமேல் மருந்தே' என வருதலால், இங்குள்ள மலைமேல் மருந்தீசர் கோயிலும் உண்டு. 7639-48 (சு).
60. கஞ்சனூர் a நாரசிங்கன் பேட்டை 1 மைல். கஞ்சன் (= பிரமன்) பூசித்த தலம். அக்கினி வழிபட்டதை 7131ஆம் பாசுரம் கூறும். ஹரதத்தாசாரிய சுவாமிகள் பழுக்கக் காய்ச்சிய பீடத்தின் மேலமர்ந்து சிவபரத்வத்தையும் சைவ சமய மேன்மையையும் நிலைநாட்டிப் பல வடமொழி நூல்களருளிச் செய்த தலம், 713140 (அ).
61. கடம்பந்துறை (கடம்பர் கோயில்) குழித்தலை 1 மைல். காலையில் இத்தலம், கட்டுச்சியில் 251 வாட்போக்கி, மாலையில் 43 ஈங்கோய்மலை ஆகிய மூன்றையும் கார்த்திகை சோமவாரங்களில் இந்நாட்டு மக்கள் தரிசிப்பதுண்டு. 5402541 (அ)
62. கடம்பூர் a சிதம்பரம் 15 மைல் காட்டு மன்னார் குடியிலிருந்த 3 மைல். ஆலயம் கரக்கோயில், ரதம், சக்கரம், குதிரை யமைந்துள்ள சிற்பமுறையில் மூலஸ்தானம் 2200-10 (ச) 5412-32 (அ2) ஆ, 3 பதிகம்.
63. கடவூர் மயானம் (திருமெஞ்ஞானம்) f திருக்கடையூர் 1% மைல். தெஇக 3 (90) பிரம தேவனை நீறாக்கிய மயானம். 2335-45 (ச); 5606-13 (அ); 7764-73 (சு),
64. கடவூர் வீரட்டம் fதிருக்கடையூர் 4 மைல். கல்வெட்டு 1906 (15-52) 1925 (241-58) தமக்குப் பதினாறு ஆண்டுகளே வயதென்று, தமது தந்தையார் பெற்ற வரத்தை மாற்றக் கருதிய மார்க்கண்டேயர் என்ற மறைச் சிறுவர், தமது ஆயுள்
300

இறுதிநாளன்று இத்தலத்து அண்ணலை இடைவிடாது வழிபாடு செய்து கொண்டிருக்கும் போது, காலன் தம்மீது பாசக் கயிறு வீசத் தாம் சிவலிங்க மூர்த்தியைச் சேர்த்துக் கட்டிக்கொள்ள, இலிங்கத்தையும் உட்படுத்திக் கயிறு வீசிய காலனை, இலிங்கத்திலிருந்து வெளிப்பட்ட கால சம்ஹாரமூர்த்தி உதைத்துத் தள்ளி மார்க்கண்டேயரை விடுவித்து அவருக்கு என்றும் பதினாறு வயதெனும் சிரஞ்சீவிப் பேறளித்த அருந்தலம். அமிர்தகடமே சிவலிங்கமாயிருத்தலின் அமிர்தகடேசுவரர் என்பது இறைவன் பெயர். இறைவி அபிராமி, காலசம்ஹாரமூர்த்தி சந்நிதி தெற்கு நோக்கியது குங்கிலியக் கலய நாயனாரும் காரி நாயனாரும் தொண்டு செய்து முத்தி பெற்ற தலம். "திருக்களிற்றுப்படியார்” என்ற சித்தாந்த சாத்திரம் இயற்றிய உய்ய வந்த தேவநாயனார் அவதரித்த தலம். அபிராமிபட்டர் "அபிராமியந்தாதி” பாடி, அபிராமி அம்மையின் அருளால் அமாவாசையன்று முழுமதியை ஆகாயத்திற் காட்டிய அற்புதம் நிகழ்ந்த தலம். சித்திரைப் பெருவிழாவில் 6ஆம் நாள் காலசம்ஹார உத்ஸவம் மிகப் பிரபலம். காலசம்ஹாரமூர்த்தியின் அருள் பெறுவதற்கு, அன்பர்கள் தமது 60ம் ஆண்டு நிறைவை (சஷ்டியப்த பூர்த்தியை) இத்தலத்தில் ஆயுஷ்ஹோமம் முதலியன செய்து கொண்டாடுவதுண்டு. அஷ்ட வீரட்டானங்களுள் இத்தலம் ஒன்று. 2878-88 (ச); 4462-71,5174-83,5595-5605 (அ3); 7503-(சு)ஆ5 பதிகம்.
65. கடிக்குளம் (கற்பகனார் கோயில்) g பாண்டி 4 மைல். 2594-2604 (g)
66. கடுவாய்க்கரைத் தென்புத்தூர் (ஆண்டாள் கோயில்) a கும்பகோணம் 6 மைல், 5848-57 (அ)
67.கடைமுடி (கீழுர்) f செம்பொனார் கோயில் 3 மைல். 1196-1206 (g)
68. கண்டியூர் வீரட்டம் a தஞ்சாவூர் 6 மைல். தெஇக 3 (134) 5 (568-79), ஆதிகாலத்தில் ஜம்முகச் சிவனாரைப் போல் பிரமனுக்கு ஜந்து சிரங்களிருந்தபடியால், பிரமன் சமத்வம் கொண்டாடிச் செருக்குற்றனன். பற்பல உயிர்கட்குத் துன்பம் விளைத்தனன். தேவர் வேண்டுகோளுக்கிரங்கி, அவனுடைய ஜந்தாவது சிரசைச் சிவபெருமான் கண்டித்தெறிந்தமையாற் கண்டியூர் வீரட்டம் ஆயிற்று. சப்தஸ்தான ஸ்தலங்களுள் ஒன்று. 3200-(ச); 5061-70 (அ)
69. கண்ணார் கோயில் (குறு மாணக்குடி) a வைத்தீஸ்வரன் கோயில் 1 1/2 மைல். அகலிகையைப் புணர்ந்த காரணமாகத் தேவேந்திரன் உடல் முழுமையும் ஆயிரம் பெண்குறி நிரம்பப் பெற்ற சாபம் நீங்க, இத்தலத்து இறைவனைப் பூசித்து, அக்குறிகள் கண்களாக மாற்றப்பெற்றதால், தலப்பெயர் கண்ணார் கோயிலாயிற்று. வாமனாவதாரத்தில் மாவலியிடம் மூவடி மண் இரந்து பெற்று உலகளந்த திருமால் செருக்கை ஒடுக்கி நெற்றியிலிருந்து இரத்தம் இறுத்த சிவபெருமானை
இந்துக் கலைக்களஞ்சியம்

Page 331
வழிபட்டு அருள் பெற்ற தலமாகையாற் குறுமாணிக்குடி குறுமாணக்குடி என மருவித்தலத்தில் வழங்கும் பெயராயிற்று. இவ்விரு வரலாறுகளையும் 1097, 1905ம் பாசுரங்களிற் காண்க. 1901—1101 (GF).
70. கயிலாயம் WW சென்னையிலிருந்து கல்கத்தா போய் அங்கிருந்து டேராடூன் எக்ஸ்பிரஸில் ஏறி லக்நோ சென்று அங்கிருந்து பரெய்லி (Bareily) வழியாகத் காதகோடம் (Kathagodam) ரயில் ஸ்டேஷனிலிருந்து அல்மோராவில் சுவாமி விவேகானந்தர் நிறுவிய மாயாவதி இராமகிருஷ்ணர் திருமடம் சென்று, அங்கிருந்து புறப்பட்டுக் கால்நடையாகவோ அல்லது குதிரை மீதோ இமயமலை ஏறிச்செல்ல வேண்டும். காதகோடாம் ரயில் ஸ்டேஷனிலிருந்து அல்மோராவிற்கு ஏறக்குறைய 100 மைல். அல் அமாரா-பரிச்சீனா 8 மைல், பரிச்சீனா-கனெரிச்சீனா 11 மைல். கனெரிச்சீனா-கனாய் 12 மைல். ஆஸ்கோட்டை-பலவக்கோட்டை 12 மைல், பலவக் , கோடை-டார்ச்சுலா 11 மைல், டார்ச்சுலா-கேலா 10 மைல், கேலாசிர்க்கா 10 மைல், சிர்க்கா-ஜிப்தி 11 மைல், ஜிப்தி-மால்ப்பா 10 மைல், மால்ப்பா-கர்பியாங்12 மைல், கர்பியாங்-காலபானி 10 மைல், காலபானி-லிப்புத் தடாகக் கணவாய் 7 மைல், லிகணவாய்-தக்களக்கோட்டை 12 மைல், த-கோட்டை-தீர்த்தாபுரி 75 மைல், தீ-புரி-கயிலை அடிவாரம் 45 மைல் ஆகமொத்தம் அல்மோராவலிருந்து 297 மைல். முழுவிவரங்களை இராமகிருஷ்ண மடத்தைச் சேர்ந்த சுவாமி சித்பவநாந்தர் வெளியிட்டுள்ள “திருடக்கைலாயகிரி யாத்திரை’ என்ற நூலிற் காண்க. கயிலாயம் இமயமலையின் சிகரங்களுள் ஒன்று. 22980 அடி உயரம். பனிக்கட்டியாலாகிய ஒரு பெரிய ஸ்தூபி போலிருக்கிறது. இதை பிரதசுஷணம் செய்ய 29 மைல் ஆகிறது. மிக மிகக் கடினமான யாத்திரை. சம்பந்தர் காளத்தியிலிருந்தே பதிகம் ஒதினர். அப்பர் கயிலாயம் செல்லும் வழியில், ஒரு முனிவர் வடிவிற் சிவபெருமான் தோன்றி ஒரு தீர்த்தத்தில் முழுகச் சொல்லி, யாதும் சுவடுபடாமல் திருஜயாற்றில் அவரை எழச்செய்து அங்குக் கயிலாயக் கோலம் காட்டியருளினார். சுந்தரர் கயிலாயத்திற்குச் சிவபெருமான் அனுப்பிய வெள்ளானையின் மீதேறிச் சென்றனர். காரைக்காலம்மையார், தமது தூல உடலை உதறியெறிந்து, எலும்புக் கூட்டோடுள்ள பேய் வடிவத்தோடு தலையினால் நடந்து சென்று சிவந்நிதி யடையும் போது சிவபெருமான் “ அம்மையே என்னும் செம்மை ஒருமொழி உலகமெல்லாம் உய்யவே அருளிச்செய்தார்.” அங்கு வரம் பெற்றுத் திருவாலங்காடு சேர்ந்து நடனங் கண்டார். சேரமான் பெருமாள் நாயனார் தமது குதிரையின் செவியில் பஞ்சாக்கரம் ஒதி, வான் வழியாகச் சுந்தரரை எதிர் சேவித்துக் கயிலை சேர்ந்து கயிலைநாதன் சந்நிதியில் “திருக்கயிலாய ஞானஉலா’பாடினார். பன்னிரு திருமுறைகளுள் இப்பனுவல் ஒன்றே கயிலாய நாதன் திருமுன்பு நேரே விண்ணப்பிக்கப் பெற்ற பெருமையுடைத்து. சுந்தரர் தோழரான பெருமிழலைக் குறும்ப நாயனார் யோகக் காட்சியிற் சுந்தரர் கயிலைக்குச் செல்வதை முன்னாளே யறிந்து, யோகநெறியில் பிரமநாடி வழியாகக் கபாலமோகூடிம் எய்திக் கயிலை சேர்ந்து சுந்தரரை எதிர்கொண்டழைத்தார். ஒளவை
இந்துக்கலைக்களஞ்சியம்

மூதாட்டியார் “சீதக்களப' எனத் தொடங்கும் அகவல் பாடி, விநாயகர் பூசை செய்யப் பூசையின் இறுதியில் விநாயகருடைய தும்பிக்கையால் தூக்கப்பெற்று நேரே கயிலை சேர்ந்தார். கயிலாயநாதன் அருளினால் தான் அவன் காட்டக் கண்டு அவன் திருவுருவைத் தரிசிக்க இயலும். இன்றேல் பனிமலைச் சிகரம் ஒன்றையே கண்டு திரும்ப வேண்டும். 733-42, 3526-36, 396777 (ச3) : 4614-23, 6794-6823 (அ4) , 8241-8250 (சு), ஆ 8 பதிகம் கயிலாய கிரியின் அடிவாரத்தில் இராவணன் கயிலையை எடுக்க முயன்ற இடம் முதலியன காட்டப்படுகின்றன. கயிலைமலை தெற்கு நோக்கியுள்ளது. எதிரில் பல மைல் தூரம் ஒரே சமவெளி.
71. கரவிரம் (கரையபுரம்) j குழிக்கரை 4 மைல் 623-33 (GF).
72. கருகாவூர் (திருக்களாவூர்) a பாபநாசம் 4 மைல், 328897 (3) ; 6391-6401 (9)
73. கருக்குடி (மருதாந்த நல்லூர்) a கும்பகோணம் 2 1/2 மைல் 3020-30 (ச).
74. கருப்பறியலூர் (தலைஞாயிறு) வைத்தீஸ்வரன் கோயில் 5 மைல் கோயிற் பெயர் “கொகுடிக் கோயில்’ 1797-1807 (ச); 7523-33 (Gi).
75. கருவிலிக் கொட்டிட்டை a கும்பகோணம் 12 மைல். நாச்சியார் கோயிர் குடவாயில் போகும் பஸ் வழி. 5918-27 (அ).
76. கருவூர் ஆனிலை (கரூர்) கரூர் 4 மைல். தெஇக 3 (20-26) 4 (387-90) எறிபத்தர், புகழ்ச்சோழர், கருவூர்த்தேவர் முதலியோர் வரலாறுகள் விளங்கும் தலம். காமதேனு பூசித்தமையால் கோயில் ஆன்நிலை, ஆனிலையாயிற்று 176474 (3)
77. கலயநல்லூர் (சாக்கோட்டை) a கும்பகோணம் 2 மைல். 7380-90 (3)
78. கலிக்காமூர் (அன்னப்பன் பேட்டை) a சீகாழி 7 மைல் 3923–33 (g)
79. கழிப்பாலை (திருக்கழிப்பாலை) சிதம்பரம் 3 மைல். பழைய தலம், கொள்ளிடத்தில் வெள்ளத்திற் போயிற்று. இப்போதுள்ள கோயில் 176 நெல்வாயில் ஆகிய சிவபுரியில் ஒரு தனிக் கோயிலாக உள்ளது. 1688-98, 3266-76 (ச);4210-19, 4452-61, 5171-73, 5625-33, 6360-69 (அ5); 7453-62 (சு). ஆ, 8 பதிகம்.
80. கழுக்குன்றம் (திருகழுக்குன்றம்) a செங்கல்பட்டு 9பஸ்வழி. வடநாட்டார் பகூதி தீர்த்தம் என்பர். கல்வெட்டுக்கள் 1894 (167-89) 1909 (57-75) 1911 (329-31) (121-91) தெஇக 3 (69,75) 5 (460-88) 12 (16,130,238,243) வேதமே மலையாதலின்
301

Page 332
வேதகிரி வேதாசலம் என்ற பெயருமுண்டு. மலையுச்சி யில் அருமையாகக் குடைதெடுக்கப் பெற்றது இக்கோயில். (Cave temple carved Out of rock in situ) G5řůLJësé6JG5ë G56) IsiG56f6) பல அழகிய சிவபராக்ரம வரலாறுகள் செதுக்கப் பெற்றுள்ளன. பாடல் பெற்ற தலங்களுள் இங்கும் திருப்பரங்குன்றத்திலுமே இன்றும் பூசிக்கப் பெறும் குகைக்கோயில்கள் உள்ளன. கோயிலுக்கு வடபுறம் ஒரு கற்பாறையின் மீது, உச்சி வேளையில் இரண்டு கழுகுகட்கு நெய்யும் சர்க்கரைப் பொங்கலும் 'பகூழி பண்டாரம்” என்பவரால் நாடேறும் அளிக்கப்படுகிறது. இராமாயண காலத்திலிருந்த ஜடாயு, சம்பாதி என்ற இரு கழுகுகள் கழுகுன்றத் துச்சியானை வழிபட்டன என்றும், இக்கழுகுகளின் வழித் தோன்றல்களே இப்போது வருவன என்றும் கூறப்படுகிறது. மாணிக்கவாசகருக்கு “ கணக்கிலாத் திருக்கோலம் நீ வந்து காட்டினாய் கழுகுன்றிலே’ என்று கூறப்படும் அனுபவம் நிகழ்ந்த இடம் மலைவலம் வரும் வழியில் இன்று மாணிக்கவாசகர் கோயிலாக உள்ளது. தேவார முதலிகள் மூவரும் தங்கியிருந்த இடம் “மூவர்பேட்டை” என வழங்குகின்றது. உடல் நலிவுற்ற பலர் இத்தலத்தில் ஒரு மண்டலம் கூேடித்திரவாஸம் பண்ணி, நாடேறும் மலையேறிக் கழுக்குன்றத் துச்சியான் அருளையும், சஞ்சீவிக் காற்றின் (Ozone) நன்மையையும் ஒருங்கே பெற்று, மாலையில் மலைவலம் வந்து திடம் பெறுவதால் இத்தலம் நலப்பேறுார் (Sanatorium) ஆகின்றது. அடிவாரத்தில் பக்தவத்ஸலர் ஆலயம் கிழக்கு சந்நிதி வீதியின் இறுதியில் சங்கு தீர்த்தத்தில் 12 ஆண்டுகட் கொருமுறை ஒரு சங்கு தோன்றி, நாடோறும் சங்காபிஷேகத்திற்கு உதவுகின்றது. சித்திரை விழாவில் 3ஆம் நாள் காலை அதிகாரநந்தி சேவையன்று பஞ்சமூர்த்திகள் 63 நாயன்மார்களோடு மலைவலம் வருதல் சிறந்த காட்சி. (இத்தலத்திற்கு 12 மைல் தொலைவில் திருப்போரூர் என்ற முருகன் தலமும் 9 மைலில் மாமல்லபுரம் (Seven pagodaS) என்ற விஷ்ணு ஸ்தலமும் உள்ளன. 12-21(ச); 7151-52 (அ) 8046-55 (சு), திருவாசகத்துள் திருக்கழுக்குன்றப் பதிகம். (468474 திருவாசகப் பாட்டெண்) தலபுராண ஆசிரியர் அந்தக் கவி ബ് ரராகவ முதலியார்.
81. களர் (திருக்களர், பாரிஜாதவனம்) gதிருத்துறைப் பூண்டி 4/4 மைல். 2015-15 (ச).
82. கள்ளில் (திருக்கள்ளம்) S பொன்னேரி 11 மைல். சென்னை தங்கசாலை பஸ் நிலையத்தில் பெரியபாளையம் நாகலாபுரம் பஸ் ஏறிக் கன்னிப்புத்தூர் (கன்னிப் பேர்) என்ற இடத்தில் இறங்கி 2 மைல் சென்றால் இத்தலம் போகலாம் (21 மைல்) சென்னை பர்மாஷெல் தலைமை நிலையத் தருகிலிருக்கும் பஸ் நிலையத்தில் பூண்டி, திருத்தணி, திருவள்ளூர் போகும் பஸ் ஏறி அத்திப்பேட்டிலிறங்கிக் கொடுதலையாற்றையும், பூண்டி வாய்க்காலையும் கடந்து சென்றாலும் இத்தலம் சேரலாம் (19 மைல்). திருவள்ளூர் ஸ்டேஷனிலிருந்து பஸ் வழியாக அத்திப் மேட்டிலிறங்கியும் போகலாம் (19 மைல்). 1282-92 (ச).
302
 

83. கற்குடி (உய்யக் கொண்டான் மலை) d திருச்சி டவுன் 2 மைல், சிறியமலை மேற்கோயில் 459-69 (ச); 6844-53 (அ) 7493-7502 (சு) ஆ 3 பதிகம்.
84. கன்றாப்பூர் (கோயில் கன்றாப்பூர்) g மாவூர் ரோட் 5% மைல், கன்றுக் குட்டியைக் கட்டிவைக்கும் தறியிலிருந்து இறைவன் வழிபாடு ஏற்றனன். “கன்றாப்பூர் நடுதறியைக் காணலாமே” என வருதல் காண்க. 6854-62 (அ).
85. காட்டுப் பள்ளி (கீழைத் திருக்காட்ப்பள்ளி) ஆரணிஸ்வரர் கோயில் என்றும் பெயர் வழங்கும் a சீகாழி 9 மைல். வழியில் திருவெண்காடு உளது. 45-54 (ச).
86. காட்டுப்பள்ளி (மேலை) (திருக்காட்டுப்பள்ளி) a பூதலூர் 5 மைல். பஸ் வழி3107-17 (ச); 6085-67 (அ).
87. காவிரிப் பூம்பட்டினத்துப் பல்லவனீச்சரம் (காவேரிப் பூம்பட்டணம், சங்கமம்) a சீகாழி 10 மைல். சங்ககாலத்தில், சோழ கரிகாற் பெருவளத்தான் அரசு புரிந்த “புகார்” என்னும் தலைநகர். இங்கிருந்த துறைமுகம், வாணிபம், மக்கள் செல்வநிலை முதலியவற்றைப் "பட்டினப் பாலை” என்ற சங்கநூல் கண்ணாடி போற் காட்டும். கோவலன், கண்ணகி, மாதவி, மணிமேகலை முதலியோர் வரலாற்றுத் தொடர்புடையது. நுதல்விழிநாட்டத் திறையோன் முதலாப்பதிவாழ் சதுக்கத்துப்பூதம் ஈறாக, எல்லாக் கடவுளர் கோயிலும் இருந்த நகர். இந்திரவிழா மிகச் சிறப்பாக நடந்ததைச் சிலப்பதிகாரம் புகார் காண்டத்துட் காண்க. கடல் கொண்டதால் முடிவுற்ற புகார் நகரச் சிதைவு இன்றும் காணப்படுகின்றது. 706,708, 709-ஆம் பாசுரங்களிற் "புகார்” என்றே சம்பந்தர் குறித்துள்ளார். பல்லவன் திருப்பணி செய்தபின்பு பல்லவனிச்சரம் என்ற பெயர் வந்தது. இயற்பகை நாயனாரும் பட்டினத்தடிகளும் வாழ்ந்த தலம். 70-71,40114011 (GF).
88. காழி (சீகாழி, பூரீகாழி) ய சிய்யாழி 1 மைல். கல்வெட்டுக்கள் 1896 (123-125) 1910 (140) 1918 (360-401) தெஇக 5 (988-890) 12 (210, 211, 252, 253) திருஞானசம்பந்தமூர்த்தி சுவாமிகள் திருஅவதாரம் செய்து, ஞானப்பால் உண்டு, மூன்றாம் வயது முதல் பதினாறம் ஆண்டு வரையில் தமிழ்நாடு முழுமையும் தலயாத்திரை செய்து, சமண சமயத் தவறுகளைத் திருத்திச் சைவசமயம் தழைத்தோங்கத் தொண்டு புரிந்த தலம். இத்தலத்தில் கணநாத நாயனார் பயிற்சிக் கல்லூரி வைத்துத் தொண்டரை ஆக்கும் தொண்டு புரிந்தனர். பிரமபுரீசுவரர் சந்நிதி தரைமட்டத்திலும், வடக்குப் பிரகாரத்தில் சிலபடிகள் ஏறிச் சென்றால் தோணியில் உமாதேவியாருட னிருக்கும் தோணியப்பர் சந்நிதியும், அங்கிருந்து மேலும் சில படிகள் ஏறிச் சென்றால் சட்டைநாதர் சந்நிதியும் உள்ளன. ஞானப்பால் உத்ஸவம் சித்திரைப் பெருவிழாவில் 2ஆம் நாள் நண்பகலில் நடக்கிறது. தலத்தின் பெயர்கள் பன்னிரண்டிற்கும் காரணங்கள் இவை யென்பதை அருணாசலக் கவிராயர் இயற்றிய தலபுராணத் துட் காணலாம். பாடல் பெற்ற தலங்கள்
இந்துக்கலைக்களஞ்சியம்

Page 333
மிகுதியான பதிகத் தொகை (71) இத்தலத்துக்கேயுண்டு. தலப்பெயர்கள் அகர வரிசையிலும் அவ்வப் பெயரோடுள்ள பதிகங்களின் பாசுரத் தொடக்க எண்களும் மேலே தரப்படுகின்றன.
கழுமலம் 195, 853, 1359, 1383, 3052, 4012. 4068യ്ക്കൂ, காழி 250,360, 875, 102, 1580, 1993, 2102, 2280, 2507, 2518, 2692, 3255, 4057 ஆ 13, கொச்சைவயம் 2367, 2432,3756 ஆ 3; சண்பை நகர் 712,3603 ஆ, 2; சிரபுரம் 504, 1742572 ஆஉ 3; தோணிபுரம் 645,3668,3872ஆஉ 3; பிரமபுரம் 1678, 696, 1259, 1370, 1382, 1895, 2167, 2222, 2256, 2268, 3190, 3395, 3514, 3978 ஆ. 15, புகலி 34, 316, 122, 1731, 175, 2048, 2791, 2823, 2867ஆஉ9 ; புறவம் 798, 1047, 3710 ஆ, 2; பூந்தராய் 14702812,2845,2932 ஆ 4;
வெங்குரு 809, 3810 ஆ, வேணுபுரம் 87.1645,2346 ஆஉ 3,சம்பந்தர் பதிகம் (67) கழுமலம் 4948, 4958; தோணிபுரம் 5675 ஆ அப்பர் பதிகம் (3) கழுமலம் 787 சுந்தரர் பதிகம் () ஆ மூவர் பதிகம் (71)
89. காளத்தி (பூரீகாளஹஸ்தி) உ காளஹஸ்தி 1 மைல். கல்வெட்டுக்கள்.1892,195-202,1903, (92-96,166-203), 1904 (276-303) 1922 (82-184) 1924 (150-186)தெஇக 4 (643-50) 8 (377-81463-502) சிலந்தி (பூீ) பாம்பு (காளம்) யானை (ஹஸ்தி) ஆகிய மூன்றும் பூசித்து முத்தியடைந்த தலம். மலைமேல் உச்சியிலிருந்த குடுமித்தேவர் வழிபாடே கண்ணப்ப நாயனார் செய்தென்பதும், மலைமேலேறியே தேவார முதலிகள் மூவரும் வழிபட்டனர் என்பதும் பெரியபுராணத்தாலறியப்படும். ஆனால் நாம் இப்போது பொன் முகலியாற்றங் கரையில் ஊர்த் தரைமட்டத் திலுள்ள கோயிலுக்குள் இருக்கும் மூர்த்தியை வணங்குகிறோம். ஆற்றிலிருந்து சில படிகளேறி ஆலயம் செல்வதால், இப்போதுள்ள ஆலயமும் மலைமீதுள்ள தென்பாரும் உளர். பஞ்சபூத ஸ்தலங்களுள் இது வாயுஸ்த்தலம். மூலஸ்த்தானத்துள்ளிருக்கும் விளக்குகள் எப்போதும் காற்றில் அசைந்து கொண்டேயிருக்கும். மூலஸ்தானத்துள்ள சிவலிங்க மூர்த்தியின் திருவுருவில் சிலந்தி, பாம்பு, யானை மூன்றுமுள்ளன. சுயம்புலிங்கம். நீண்ட பல செங்குத்தான உட்குழிந்த குடைவுகள் நிரம்பிய திருமேனி (shape Ofafluted pillar) பச்சைக் கருப்பூரம் சேர்ந்த நீரே அபிஷேகம். திருநீற்றோடு இவ்வபிஷேக தீர்த்தமும் விநியோகிக்கப்படுகிறது. கருப்பக் கிரக வாயிற்படிக்கருகில் கண்ணப்ப நாயனார் காட்சியளிக்கிறார். 11ஆம் திருமுறையிலுள்ள கயிலைபாதி காளத்திபாதியாந்தாதி திருக்கண்ணப்ப தேவர் திருமறமும் நக்கீரரால் பாடப் பெற்ற தலம். தென்கயிலாயம் எனக் கூறப்படும் தலங்களுள் இத்தலமும் ஒன்று. சிவராத்திரியை 5ஆம் திருநாளாகக் கொண்ட திருவிழா மாசி மாதத்தில் நடக்கிறது. 3181-89, 3537-47, (ச2) ; 6319-29 (அ); 7483-92 (5)
இந்துக்கலைக்களஞ்சியம்
 

90. காறாயில் (திருக்காறைவாசல்) g மாவூர்ரோட் 3 மைல். சப்தவிடங்களுள் ஒன்று. ஆதிவிடங்கர்குக்கு நடனம் 1623-33 (GF).
91. கானப்பேர் (களையார் கோயில்) a நாட்டரசன்போட்டை 6 மைல் தேவகோட்டை போகும் பஸ் வழியுள்ளது. தெஇக 8(166183) சுந்தரர் கனவிற் காளையாகத் தோன்றித் தாமிருப்பது கானப் பேர் எனக் கூறி அவரை வணங்கச் செய்து பதிகம் பெற்றப்படியாற் காளையார் கோயில் என்று தலப்பெயர் வழங்குகிறது. கோயிலும் திருக்குளமும் பெரிது. காலையீசுவரர், சுந்தரேசுவரர், சோமசுவரர் ஆகிய மூன்று சந்நிதிகள் உள்ளன. ஜராவதம் பூசித்துச் சாபவிமோசனம் பெற்றதை 3080ஆம் பாசுரம் கூறும். 3073-84 (ச); 8076-85 (சு).
92. கானட்டுமுள்ளூர் (கர்னாட்டாம் புலியூர்) a சிதம்பரம் 10 மைல். 7628-38 (சு). 93. கானூர் a பூதலூர் 7 மைல். மண்மூடிப் போயின கோயில் சென்ற நூற்றாண்டில் அகழ்ந்தெடுக்கப் பெற்றது. 787-97 (ச); 5988-96 (அ). 94. கீழ்வேளூர் கீவளூர் % மைல். கட்டுமலைக் கோயில்; முருகன் பூசித்த தலங்களுள் ஒன்று. 2605-15 (ச); 6914-23 (அ). 95. குடந்தைக் காரோணம் (காசி விசுவநாதர் கோயில் a கும்பகோணம் /2 மைல். மகாமகக் குளத்தின் வடகரையிலுள்ளது. 776-86 (ச). 96. குடந்தைக் கீழ்கோட்டம் (நாகேசுவரன் கோயில்) a கும்பகோணம் % மைல். ஊர்நடுவேயுள்ள பெரிய கோயில், கல்வெட்டுக்கள் தெஇக 3 (91, 131, 137, 200,201, 204). சித்திரைமாதம் 3 நாள் (11, 12, 13ஆம் தேதிகள்) சூரிய கிரகணங்கள் காலையில் மூலஸ்தானத்திலுள்ள மூர்த்தியின்மேற் படுகின்றன. (இதையே சூரிய பூசை என்பது மரபு) 6987-97 (அ).
97. குடமூக்கு (கும்பேசுவரர் கோயில்) a கும்பகோணம் 1 மைல். பன்னிரண்டு ஆண்டுகட்கு ஒருமுறை நடைபெறும் மகாமகத்தில் (மாமாங்கம் என்று உலக வழக்கிலுள்ள பெருழாவில்) கும்பேசுவரர் வெள்ளி ரிஷப வாகனத்தில் பஞ்ச மூர்த்திகளோடு எழுந்தருளி வந்து மகாமகக் குளக்கரையிலே தீர்த்தம் கொடுப்பர். அப்போது பல லக்ஷக்கணக்கான மக்கள் குளத்துள் முழுவதும் நின்று முழுகித் தரிசனம் செய்வார்கள். குளத்தில் நீர்முழுமையும் பல நாட்களாகப் பெரிய எஞ்சின்களால் இறைக்கப்பட்டு, முழங்கால் ஆழம் நிரே இருக்கும். இக்குள நீரில் மூழ்குவதால் இந்தியாவில்லுள்ள கங்கை, யமுனை, கோதாவிரி, கிருஷ்ணா, பெண்ணை, தண் பொருனை, குமரி முதலிய எல்லா தீர்த்தங்களிலும் முழுகும் பலன் கிடைக்குமென்பது புராண வரலாறு. இதன் சுருக்கம் 5446, 5450ஆம் பாசுரங்களிலும் கூறப்படுகிறது. மகாமகம் 1945 வருடம் வந்தது. அடுத்த மாமகம் 1957ம் வருடம் வரப்போகிறது. 3427-37(ச); 5443-52 (அ).
98. குடவாயில் (கொடவாசல்) j கொரடாச்சேரி 7மைல்.
கும்பகோணத்திலிருந்து திருவாரூர்போகும் பஸ் வழியிலுள்ளது. 1699-1709, 2092-2101 (GF).
303 ܬ̣ܘ̈ܳܬܐ ܓܼܵܡ18 شی
garb

Page 334
99. குரக்குக்கா a வைத்தீஸ்வரன் கோயில் 6 மைல். ஆஞ்சநேயர் பூசித்ததால் குரக்குக்கா 5978-87 (அ).
100. குரங்கணில் முட்டம் a காஞ்சிபுரம் 6 மைல். வாலி (குரங்கு) அணில், காக்கை (முட்டம்) பூசித்தலம். 327-337 (ச).
101. குரங்காடுதுறை (தென்) (ஆடுமுறை) a % மைல். காவிரியாற்றின் தென்கரையிலிரப்பதால் இது தென்குரங்காடு துறையாயிற்று. வடகுரங்காடு துறைக்கு வடகிழக்கே இத்தலம் உள்ளது. சுக்ரீவன் பூசித்த தலம் a 1841-51 (ச); 5858-58 (அ).
102. குரங்காடுதுறை (வட) a ஐயம்பேட்டை 3 மைல். வாலி பூசித்ததை 3783, 3784ஆம் பாசுரங்கள் கூறும், 3778-87 (ச).
103. குருகாவூர் (திருக்கடவூர்) a சீகாரி 3% மைல். இறைவன் சுந்தரருக்குக் கட்டமுது கொடுத்ததை 7515ம் பாசுரம் கூறும். 4131-46 (ச) 7513-22 (சு).
104. குறுக்கை வீரட்டம் a நீடூர் 5 மைல். மன்மதனை எரித்த வீரட்டம் 4634-45 (அ2).
105. குறும்பலா, குற்றாலம் (திருக்குற்றாலம்) n தென்காசி 3% மைல். கல்வெட்டுக்கள் 1917 (404-486) தெஇக 5 (767, 768) இங்குள்ள சாரல் நீர்வீழ்ச்சி முதலியவற்றை அனுபவிக்க ஜூலை ஆகஸ்ட் மாதங்களில் மக்கள் திரண்டு வருகிறார்கள். ஒரே காலத்தில் கோயிலுக்கருகிலுள்ள நீரருவியில் 500 பேர் குளிப்பதற்குத் தக்க சிமிட்டிநிலை கட்டப்பட்டுள்ளது. மலைமேல் உள்ள சண்பகாடவி யருவியும் தேனருவியும் 3 மைல் தொலைவில்லுள்ள ஐந்தருவியும் நெடுநேரம் அமைதியாக நீராடுவதற்கு வசதி. அகத்திய முனிவர் திருமால் உருவைக் குறக்கச்செய்து சிவலிங்கமாகியதால் குற்றாலம் எனவும், பலாமரம் தலவிருகூடிமாதல் பற்றிக் குறும்பலா எனவும் தலப்பெயர் ஏற்பட்டது. நடராஜர் 5 சபைகளுள் இங்குள்ளது கல்லாலாகிய சித்ரசபை, சித்திரை விஷPபுண்ணிய காலம் பிரபலம். குற்றால ஸ்தலபுராணம், குற்றாலக் குறவஞ்சி முதலிய நூல்கள் இலக்கியச் சுவை நிரம்பியவை. 1969-79, 2234-44 (ச2).
106. கூடலையாற்றுார் d விருத்தாசலம் 12 மைல். விருத்தாசலத்திலிருந்து புவனகிரிபோகும் பஸ்வழியில் வளையமா தேவியில் இறங்கிச் சென்றால் வெள்ளாறும் மணி முத்தாறும் கூடும் இடமே கூடலை ஆற்றுார். விருத்தாசலம் செல்லும் சுந்தரரை, இவ்வழியாகத்தான் போக வேண்டும் என்று சொல்லிய இறைவன் மறைந்து இத்தலப்பதிகம் பெற்றதைப் பாசுரம் தோறும் காண்க. 8086-95 (சு).
107. கேதாரம் (பத்திகேதார்) SV சென்னையிலிருந்து நேரே Grand Trunk Express 6Js) 1363 60) Logi). G3 Görgi ly,665 (இந்தியாவின் தலைநகரம்) சேர்ந்து, அங்கிருந்து 169 மைல் தொலைவிலுள்ள ரிஷிகேசம் (இது கல்கத்தாவிலிருந்து டேராடூன் போகும் V வழியிலுள்ள ஸ்டேஷன்) போய், அங்கிருந்து தேவப்ரயாகை 44 மைல், கீர்த்திநகர் 20 மைல் ஆக 64 மைல்
304

மேட்டார் பஸ் மூலம் போய், அங்கிருந்து 3 மைல் தொலைவில் உள்ள பூரீநகர் வரையில் நடந்து போய், அங்கிருந்து 23 மைல் பஸ் ஏறிப்போய் ருத்தரப்ரயாகை சேர்ந்து, அங்கிருந்து மலைஏறி நடந்து சத்தோலி 5 மைல், ராம்பூர் 2 மைல், குண்ட்சட்டி 6 மைல், குப்தகாசி 2 மைல் போய், குப்தகாசியில் பூரீ ஆனந்த நடராஜரைத் தரிசித்துக்கொண்டு அங்கிருந்து நளசட்டி 1% மைல், நாராயண் கோடி 2 மைல், மேகண்டா 4 மைல், பாடாசட்டி 2 மைல், பதல்பூர் 3 மைல், ராம்பூர் 2 மைல், கெளரி குண்டம் 6 மைல் போகவேண்டும். (கெளரிகுண்டம் என்பது அனேகதங்காவதம் என்று மேலே 15ஆம் எண்ணுள்ள தலம்) இங்கே வெந்நீர் ஊற்றில் ஸ்நானம் செய்து, தவம் செய்து கொண்டிருக்கும் அம்மையையும் உமாமஹேசுவரரையும் தரிசிக்கவேண்டும். பிறகு இங்கிருந்து மிகக் கஷ்டமான ஏற்றமாகிய வரியில் ஜங்கல் சட்டி 2 மைல், ராம்பர்ஹ 2 மைல், கேதார் நாத் 3 மைல் சென்றால் திருகேதாரம் என்ற ஸ்தலம் உளது. இங்குத் திருக்கேதார நாதரைத் தரிசிக்கலாம். பார்வதி தேவியார் இத்தலத்தில் நோன்பிருந்து கேதாரீசுவரரை வழிபட்டு, அர்த்தநாரீசுவரப் பேறு பெற்றனர். பிருங்பிரிஷி தம்மைப் பிரதசுஷ்ண நமஸ்காரம் செய்யாமற் பிரித்துப் பரமசிவனை மட்டும் வணங்கியதால், பிரிக்க இயலாத அர்த்தநாரீசுவரக் கோலத்தில் இடம் பெறுதற்கே பார்வதி தேவியார் நோன்பு நோற்றனர் என்பது புராண வரலாறு. இந்த நோன்பு, தீபாவளியை ஒட்டித் தமிழ் நாடெங்கும் கொண்டாடப் பெறுகின்றது. இத்தலம் கடல் மட்டத்தின் மேல் 14000 அடி உயரமுள்ளது. சித்திரை மாதம் 15ஆம் தேதி கோயில் மூடிவிடப்படும். பனிக்கட்டி விழுந்து கோயிலையே மூடிவிடும். கடைசிநாள் பூசித்த மலர்கள் பனிக்குளிர்சியால் (Cold Storage) திறக்கும் நாளன்று வாடாதிருக்கும். மூடியிருக்கும் 6 மாதங்களில் தேவர்கள் பூசிப்பதால் மலர்கள் வாடுவதில்லை என்பது புராண வரலாறு. சம்பந்தரும் அப்பரும் காளத்தியிலிருந்தே இத்தலப் பதிகங்களை ஒதினார்கள். 2703-13 (EE); 8016-25 (G1). g. 2 பதிகம்.
108. கேதீச்சரம் (திருக்கேஸ்வரம்) p திருக்கேஸ்வரம் 3 மைல். தலைமன்னார் பியரிலிருந்து 23 மைல் தொலைவிலுள்ளது. பழைய கோயில் போர்த்துக்கீசர் ஆட்சியில் தகர்க்கப்பட்டது. சம்பந்தரும் சுந்தரரும் இத்தலப் பதிகங்களை இராமேஸ்வரத்தி லிருந்தே ஒதினார்கள். 2627-367 (ச); 8036-45 (சு).
109. சைச்சினம் (கைச்சினம்) g ஆலத்தம்பாடி 1 மைல். இந்திரன் பூசித்த கைவிரற்குறி (கைச்சினம்) இலிங்கத்திற் காணப்படுகிறது. 1950-59 (ச).
10. கொடிமாடச் செங்குன்றுார் (திருச்செங்கோடு) q துர்க்கம் 6 மைல். பஸ் போகிறது. மலை உயரம் 1901 அடி மலைமேல் கோயில், அர்ந்தநாரீஸ்வரர் மூலஸ்தானத் திருவுருவம் சலவைக் கல்லாலாகியது, மிக அழகியது. திருவடியில் நீரூற்று. அர்த்தநாரீஸ்வரர் எழுந்தருள்வது வைகாசித் திருவிழாவில் திருத்தேர் விழாவிற்கு முருகன் சந்நிதி பெரிது. இம்முருகனைத் தரிசித்தற்கு ‘நாலாயிரம் கண் படைத்திலனே அந்த நான்முகனே' என்கிறார் அருணகிரி நாதர். சம்பந்தர் முன்
இந்துக் கலைக்களஞ்சியம்

Page 335
பனிக்காலத்தில் இங்கெழுந் தருளியபோது, உடன் வந்த தொண்டர்குழாம் குளிர்க்காய்ச்சலால் வருந்தின போது திருநீல கண்டப்பதிகம்பாடி அதைப் போக்கு வித்தனர். 152-62 (ச).
11. கொடுங்குன்றம் (பிரான்மலை) d காரைக்குடி 27 மைல். திருப்புத்தூர் வரையில் பஸ் ஏறிச் சென்று, வேறு பஸ் மாறிச் சிங்கம் புணரி பஸ்மூலம் 7 மைல் சென்று சதுர்வேதமங்கலம் (மட்டியூர்) எனும் இடத்தில் இறங்கி, மாட்டு வண்டியில் 5 மைல் போனால் இத்தலம் சேரலாம். மலை உயரம் 2452 அடி திரிசிராப்பள்ளியிலிருந்து மதுரைக்குப் போகும் பஸ் வழியில் 50 மைல் சென்று பள்ளப்பட்டியில் இறங்கி 3 மைல் மாட்டு வண்டியில் போனாலும் இத்தலம் சேரலாம். கல்வெட்டு தெஇக 8 (425-442) 1903 (38-154) 1924 (192-236) பாடல் பெற்றதலம் அடிவாரத்திலுள்ளது. மலை மேல் வயிரவர் கோயிலும் சிவன் கோயிலும் உண்டு. 141-51 (ச).
12. கொட்டையூர்க் கோடீச்சரம் a கும்பகோணம் 3 மைல். 6967-76 (9.)
113. கொண்டீச்சரம் g நன்னிலம் 1% மைல். பார்வதிதேவியார் பூசித்த தலங்களுள் ஒன்று 4807-16, 592837 (அ2).
14. கொள்ளம் பூதூர் (திருக்களம்பூர்) j கொரடாச்சேரி 4 மைல். கோயிலின் பக்கத்தில் ஒடுகின்ற முள்ளியாற்றுக்கு எதிர்கரையில் சம்பந்தர் வந்தபோது வெள்ளம் போயிற்று. ஒடக்கோல் நிலைக்காமையால், ஒடத்தைக் கரையிலுள்ள மரத்திற் கட்டிவிட்டு ஒடக்காரன் வீட்டிலிருந்தான். சம்பந்தர் ஒடத்தை அவிழ்த்து விட்டு ஏறிக் கொண்டு “கொட்டமே கமழும்” எனும் பதிகம்பாட, “நாவலமே கோலாக” ஒடம் கோயிலருகிற் சேர்ந்தது. இது ஐப்பசி அமாவாசையன்று உத்ஸவமாக நடக்கிறது. 285666 (GF).
15. கொள்ளிக்காடு g ஆலத்தம்பாடி 4 மைல். 2965-75 (ச).
16. கோகரணம் (கோகரண்) u ஹூப்ளி 90 மைல், பஸ் போகிறது. வழி நெடுகத் தேக்குமரக் காடுகளும், மலைச்சரிவுகளும், இயற்கை வனப்பு மிக்க சோலைகளுமுள்ளன. தலம் மேல்முத்திரக் கரையில் (ஹ) உள்ளது. பம்பாய் ஸ்டேட் வடகன்னர ஜில்லாவிலுள்ளது. கயிலையிலிருந்தது இராவணன் ஒரு சிவலிங்கம் கொண்டு வந்தான். மாலைக்கடன் முடித்தற் பொருட்டுத் தரையில் வைக்கக் கூடாதென்று நினைத்தபோது, விநாயகர் ஒரு சிறுவன் போல எதிர்வந்து, தமது கையிற் சிவலிங்கத்தை ஏற்று, மீண்டும் விரைவில் பெற்றுக் கொள்ளாவிடில் தரையில் வைத்து விட்டார். மாலைக்கடன் முடிந்தவுடன் இராவணன் எடுக்க முயன்றான். இலிங்கம் வேரூன்றியபடியால் எவ்வளவு முயன்றும் முடியவில்லை. பலமெல்லாம் பயன்படாதபடியால் இலிங்கம் மஹாபல லிங்கமாகிக் கீழேயே போய். மேலை ஒரு பசுவின் காதுநுனியளவே தெரிந்தபடியால், தலப்பெயர் கோகர்ணம் ஆயிற்று. இத்தலத்தில் நாமே மஹாபல லிங்கத்தைத் தொட்டு அபிஷேகம் செய்து
இந்துக்கலைக்களஞ்சியம்

வழிபடலாம். விநாயகர் திருவுருவம் நின்ற கோலமாக அழகு நிரம்பியுள்ளது. மகா சிவராத்திரியில் திருத்தேர், 3646-56 (ச); 6732-41 (அ).
17. கோடி (குழகர் கோயில், கோடிக்கரை) கோடிக்கரை 3 மைல். 7544-53 (சு).
18. கோடிகா (திருக்கோடிகாவல்) a நாரசிங்கன் பேட்டை 1 மைல். 2539-49 (ச); 4646-55, 6007-13, 7048-55 (அ3). ஆ, 4 பதிகம்.
119. கோட்டாறு hபாதிக்குடி2% மைல். யானை பூசித்ததை 2027ம் பாசுரம் கூறும். 2026-36, 2921-31 (ச2).
120. கோட்டுர் k மன்னார்குடி 10 மைல். 2648-58, (ச).
121. கோணமலை (திருக்கோணாமலை) p ட்ரிங்கமலி தலைமன்னார் (Trincomalee) பியரிலிருந்து மதவாச்சி, மாஹோ ஜங்ஷன்கள் வழியாக 221 மைல். ஈழநாட்டுத் தலம். இலங்கையில் கீழ்க் கடற்கரையிலுள்ளது. பழைய கோயில் போர்த்துக்கேயரால் இடித்து விடப்பட்டது. இப்போது கடற்கரையில் மலையின் உச்சியில் உள்ளது. இராமேஸ்வரத்திலிருந்தே சம்பந்தர். இத்தலப்பதிகம் ஒதினார்கள், 4121-30 (ச).
122. கோயில் (சிதம்பரம்) a சிதம்பரம் % மைல். கல்வெட்டுக்கள் 1888 (115-124) 1892 (170-84) 1902 (445-68) 1903 (390-401) 1913 (260-376) 1915 (1) 1918 (545-51) 1930 (610-616) 1935 (103-109) 1936 (1-48) தெஇக 3 (86, 87) 4 (220-29, 618-32) 8 (43–56, 706-717) 12 (149, 151, 152, 154, 157, 159, 160, 171-75, 201, 209, 215, 216, 245, 249-251). மிகப் பழைய காலத்தில் இது தில்லை வனமாயிருந்தது. புலிக்கால் முனிவர் (வியாக்கிரபாதர்) இவ்வனத்தில் தவம் புரிந்து சிவபூசை செய்திருந்தனர். பின்பு இரணியவர்மன் கோயில் கட்டிய வரலாறு உமாபதிசிவம் அருளிச் செய்த கோயிற் புராணத்துட் கூறப்பட்டுள்ளது. இக்கோயிலில் 5 சபைகள் உண்டு. (1) நடராஜப் பெருமான் (இருக்கும் சிற்றம்பலம் அல்லது சிற்சபை (6JLGALOITyuG6ù göůITGFLIT — Dhabra sabha) (2) óf shēF60)LJë, கெதிரிலுள்ள கனகசபை (பொன்னம்பலம்) இங்கு நாடோறும் ஸ்படிகலிங்கத்திற்கு 6 காலபூசை நடக்கிறது. (3) நிருத்தசபை. இது நாடராஜருக்கெதிரிலுள்ள திருக்கொடி மரத்திற்குச் சிறிது தெற்கிலுள்ளது. இங்கு ஊர்த்துவதாண்டவ மூர்த்தியைக் கற்சிலையுருவிற் தரிசிக்கலாம். (4) தேவசபை (பேரம்பலம்) யாகசாலைக்கருகில் ஈசான மூலையிலுள்ளது. பஞ்சமூர்த்திகள் இருக்குமிடம். (5) ராஜசபை (ஆயிரக்கால் மண்டபம்). சிற்றம்பலத்தின் மேலுள்ள ஸ்தூபி ஏனைய தலங்களில் உள்ளது போன்றதன்று. சாதாரண வீடுகளுக்குள்ள கூரை போன்றது. 21600 தங்க ஓடுகளால் ஆகியது. ஒரு நிமிஷத்திற்கு 15 மூச்சு வீதம் 24 மணிநேரம் கொண்ட ஒரு நாளுக்கு 21600 மூச்சு ஆகின்றது. இது தங்க ஒடுகளின் மொத்த எண்ணிக்கை. சிற்சபையின் கூரைக்குளிருப்பவன், உயிருக்குயிராயிருப்பவன், இதயப் பெரு வெளியில் நட்டம் புரிகபவன் என்றெல்லாம் தத்துவ
305

Page 336
உட்கருத்துக்கள் கூறப்படுவதுண்டு. சிற்சபையிலுள்ள தூண்களின் எண்ணிக்கை, கீழே பாவியிருக்கும் கற்களின் தொகை முதலியவற்றிற்கும் இவ்வாறு பல உட்கருத்துக்கள் கூறப்படுகின்றன. கனகசபையிலிருந்து சிற்சபைக்கு ஏறுவதற்கு 5 படிகள் உண்டு. இவை பஞ்சாக்ஷரப்படிகள். பஞ்சாக்ஷர ஜபத்தின் வழி இறைவனைக் காணலாம் என்பது கருத்து. படியின் இருபுறமும் யானையுருவங்கள் உள்ளன. சித்தாந்த சாத்திரம் 14இல் ஒன்று பஞ்சாக்கரப்படியில் வைக்கப் பெற்றபோது, இந்த யானைகளுள் ஒன்று, தும்பிக்கையால் இந்தச் சுவடியை தில்லைக் கூத்தன் திருவடியில் சேர்ப்பித்தபடியால், இந்த நூலுக்குத் திருக்களிற்றுப்படியார் என்று பெயரிடப்பெற்றது. சோழ மன்னர்கள் பலர் மகுடாபிஷேகம் இப்பஞ்சாக்ஷரப்படியில் நடைபெற்றது. திருமால், பிரமன், முதலியோர் இசைக்கருவிகளை ஒலிக்கக் கூத்தபிரான் என்றும் திருநடனம் புரிகின்றான். “தோற்றம் துடியதனில்” என்ற செய்யுளிற் காணுமாறு, திருநடனம் ஐம்பெருந்தொழில்களை (சிருஷ்டி முதல் அநுக்ரஹம் வரையுள்ள பஞ்சக்ருத்யங்களை) க் குறிக்கும். நடனம் நின்றால் உலக இயக்கமும் நிற்கும். அம்மை சிவகாம சுந்தரி இத்திரு நடனத்தை இடைவிடாது தரிசிக்கிறாள். “பாலுண்குழவி பசுங்குடர் பொறாதென, நோயுண் மருந்து தாயுண்டாங்கு” நமது பிறவிப் பிணி போக்கவே நம்பொருட்டு அம்மை தரிசிக்கின்றாள் என்பர் குமரகுருபர அடிகள். கூத்தப்பிரான் இடது பக்கம் அம்மையிருக்க, வலது புறம் ரஹஸ்யம் உள்ளது. பஞ்சபூதஸ்தலங்களுள் இது ஆகாயத்தலம் என்பதை அறிவுறுத்த ஆகாயத்திற்குப் பல பொன் வில்வமாலைகள் தொங்கவிடப்பட்டு உள்ளன. (திரையை நீக்கித் தரிசிப்பதால் இது ரஹஸ்யம் எனப்படுகிறது). தரிசித்தால் முத்திதரும் தலம் என்பது கூறப்படுவது. தரிசிப்பதே பிறவிப் பெரும்பயன் என்பதை அப்பர் “குனித்த புருவமும். காணப்பெற்றால் மனிதப் பிறவியும் வேண்டுவதே இந்த மாநிலத்தே' (4941ம் பாசுரம்) என்பதனால் தெரிவிக்கிறார். “என்று வந்தாய் என்னும் எம்பெருமான்தன்” திருக்குறிப்பை (4939 பாசுரம்) இன்று தரிசிப்போரும் அனுபவிக்கலாம். திருவிசைப்பா ஆசியர்கள் பாதாதிகேசம் அனுபவித்ததைத் திருவிசைப்பாவில் 12 - 22, 215 - 225 பாடல்களிற் காணலாம். தில்லைக் கூத்தன் திருவிளையாடல்கள் கணக்கற்றன. பாலுக்கு பாலகன் வேண்டியழுதிடப் பாற்கடல் ஈந்தான். இப்பாற் கடலையுண்ட உபமன்னிய முனிவரே கண்ணனுக்குத் திருவடி தீகூைடி செய்து பஞ்சாக்ஷர உபதேசம் அருளியவர். காயிலையில் இவரே முனி கணங்கட்குச் சுந்தரமூர்த்தி சுவாமிகள் வரலாற்றை உரைத்தவர். பாற்கடல் வற்றியதால் திருமால் இங்கு நடனம் தரிசிக்கிறார். கூத்தப்பிரான் சந்நிதிக்கெதிரிலுள்ள ஒரு சதுரத்தில் நின்றால் சிவன் மால் ஆகிய இருபெருங் கடவுளைரையும் ஒருங்கே தரிசிக்கலாம். இப்பெரும் பேறு வேறு எத்தலத்திலுமில்லை. கழற்றிற்றவார் வழிபாட்டில் சிலம்பொலி கேட்பிக்கக் காலந் தாழ்த்துப் பிறகு அக்காரணங் கொண்டே அவருக்குச் சுந்தரர் தோழமையைத் தந்ததும் கூத்தன் பெருவிளையாடலே. திருநீல கண்டத்துக் குயவனார்க்கு இளமையளித்தாலும், கணம் புலவர், கோச்செங்கட் சோழன், கூற்றுவ நாயனார் முதலியோருக்கு முத்தி யளித்தலும் அவன் செயலே. திருக்கொடியேற்றமாகாதபோது உமாபதிசிவம் கொடிக்கவி பாடக் கொடியேறியதால், அவர் பெருமையை
306

உணராத தில்லைவாழ் அந்தணர்கட்கு உணர வைத்த திருவிளையாடலும் புரிந்தனன். அவருக்குச் சீட்டெழுதியனுப்பிப் பெற்றான் சாம்பான் என்ற ஆதித்திராவிடத் தொண்டருக்கு முத்தியளித்ததும் அவன் செயலே. ஒரு விழாவில் திருத்தோர் ஓடாது தடைப்பட, சேந்தனார் திருப்பல்லாண்டு பாடிய பின்பு ஒட வைத்து அவர் நிவேதித்த கெளியன் என்பதை விளக்கும். மாணிக்கவாசகரைக்கொண்டு ஈழநாட்டுப் புத்தர்களை வாதில் வென்று, ஊமைப் பெண்ணைப் பேசவைத்துத் திருச்சாழல் கொண்டதோடு, “பாவைபாடிய வாயால் கோவைபாடு என்று வேண்டி, மாணிக்கவாசகர் பாடும்போது ஏடும் எழுத்தாணியும் கொண்டெழுதி இறுதியில் வைத்த திருவிளையாடலும் புரிந்தனன். நம்பியாண்டார் நம்பிகட்குத் திருமுறைகள் சேமிக்கப் பெற்றிருந்த அறையைந் காட்டி, திருமுறை கண்ட சோழனுக்கருளி திருமுறைகளை வெளிப்படுத்தியதும் அவன் கருணைச் செயலே. சேக்கிழார் பெருமானுக்கு “உலகெலாம்” என்று அடியெடுத்துக் கொடுத்துத் திருத்தொண்டர் புராணத்தை எழுதி முடிக்க அருள்புரிந்து அநபாய சோழனைக் கொண்டு ராஜசபையில் அரங்கேற்றச் செய்து, சேக்கிழாரையும் புராணத்தையும் யானைமேலேற்றி அரசன் பின்னிருந்து துணைக்கரத்தால் இணைக்கவரி வீசி நகர்வலம் வரச்செய்து சைவம் வளர்த்ததும் கூத்தப்பிரான் அருஞ்செயலே. இத்தலப்பெருமை, கூத்தப்பிரான் கருணை முதலியவற்றை "அளந்தறிதல் மன்னுயிர்க் கருமை” யாதலின் இம்மட்டில் விடுத்தாம். அர்த்தஜாமம் முடிந்தவுடன் எல்லா ஆலயங்களிலுமுள்ள சிவகலைகள் எல்லாம் இத்தலத்திலுள்ள மூலஸ்தான லிங்கத்தில் ஒடுங்குவதால் இம்மூர்த்திக்குத் திருமூலட்டான நாதர் என்றே பெயர். சிவகாமியம்மன் தனிக்கோயில், பாண்டி நாயகம் எனும் பெயர் அறுமுகப் பரமன்கோயில் முக்குறுணிப் பிள்ளையார். சிவகங்கை தீர்த்தம் முதலியனவும் சிறப்புடையன. இத்தலத்தில் இளமையாக்கினார் கோயில், திருப்புலிச்சரம், பதஞ்சலியார் கோயில், தில்லை மாகாளிக் கோயில் முதலியனவும் சிறந்தன. கொற்றங்குடியில் உமாபதி சிவம் திருக்கோயிலுண்டு. மார்கழித் திருவாதிரை, ஆனி உத்திரம் ஆகியவற்றைப் பத்தாம் திருநாளாகக் கொண்ட இரண்டு பிரஹ்மோத்ஸவங்கள் நடக்கின்றன. ஒன்பதாம் திருநாள் காலையில் தில்லைக்கூத்தன் திருத்தேருக் கெழுந்தருளி அன்று சென்று, விடியற் காலை 6 மணிக்குள் அபிஷேகம் செய்யப்பெற்று, 10ஆம் நாள் பகல் 12 மணிக்குமேல் 2 மணிக்குள்ளாகச் சிற்சபைக் கெழுந்தருளும் அநுக்கிரஹ தரிசனத்தைப் பல்லாயிரக் கணக்கான அன்பர்கட்கு வழங்கிப் பின்பு சிற்சபையுட் பிரவேசித்து நாடோறும். ஆறுகால பூசை ஸ்படிகலிகத்திற்கும், காலை 2ஆம் கால பூஜையில் இரத்தினசபாபதிக்கும் அபிஷேகம் வழிபாடு. மாசி, சித்திரை, ஆவணி புரட்டாசி மாதங்களில் நடக்கும் நான்கு அபிஷகங்கள் சிற்சபைக் கெதிரிலுள்ள கனகசபையில் நடைபெறும், 864 - 74, 2801 - 11 (32); 4376 - 96, 4928 - 47, 5229 - 49, 6244 - 64 (அ8); 8137 - 46 (சு) ஆ11 பதிகம்.
123. கோலக்கா (திருத்தாள முடையார் கோயில்) a சீகாழி /2 மைல். சம்பந்தர் கையினால் தாளம் போட்டுப் பாடும்போது இத்தலத்து ஈசன் ஐந்தெழுத்து வரையப் பெற்ற பொற்றாளங்கள்
இந்துக் கலைக்களஞ்சியம்

Page 337
இரண்டை அவருக்குத் தந்தான். அம்பிகை தாளங்கட்கு ஒசை தந்தாள். 239-49 (ச); 7859-68 (சு). -
124 கோவலூர் வீரட்டம் (கீழுர்) C திருக்கோயிலூர் 1 மைல். கல்வெட்டு தெஇக 3 (82)7 (857-935) பெண்ணையாற்றின் தென்கரையிலுள்ளது. அந்தகாசுரனைச் சங்கரித்த வீரட்டம். மெய்ப்பொருள் நாயனார் அரசுபுரிந்து முத்தியடைந்த தலம். 2550-60 (ச); 4827-36 (அ).
125 கோழம்பம் a நாரசிங்கன் பேட்டை 2 மைல். 1601-11 (ச); 5869-79 (அ).
126 கோளிலி (திருக்குவளை) g திருநெல்லிக்காவல் 6 மைல். சப்தவிடங்களுள் இங்கள்ளவர் அவனிவிடங்கர், நடனம் பிருங்கநடனம். குண்டையூரிற் பெற்ற நெல்லைத் திருவாரூருக்கு எடுத்துச் செல்ல ஆள்வேண்டிற் பதிகம் பாடிச் சுந்தரர் பூதகணங்களால் ஆரூருக்குக் கொண்டுசேர்த்த அற்புதம் நிகழ்ந்த தலம். குண்டையூர் இங்கிருந்து சுமார் % மைல் தொலைவிலுள்ளது. குண்டையூரிலிருந்து திருவாரூர் சுமார் 16 மைல் இருக்கும். 667 - 77 (ச) 5790 - 3809 (அ2); 7423 - 32 (சு) ஆ4 பதிகம்.
127 சக்கரப்பள்ளி a அய்யம்பேட்டை/2 மைல் 3085 - 95
(GF).
128, சத்திமுத்தம் (சத்தி முற்றம்) aதாராசுரம் 2 மைல், சத்தி சிவத்தை முத்தமிட்ட தலம். திருவடி தீகூைடி இத்தலத்தில் விண்ணப்பித்த அப்பருக்கு (158) நல்லூரில் அது கிடைத்தது. 5091 - 5100 (9).
129. சாத்தமங்கை (சீயாத்த மங்கை) g நன்னிலம் 7 மைல். பஸ் வழியில் திருப்புகலூர் உளது. திருநீலநக்க நாயனார் தொண்டுபுரிந்த தலம். 3416, 26 (ச).
130. சாயக்காடு (சாயாவனம்) a சீகாழி 9 மைல், f ஆக்கூர் 5 மைல். திருவெண் காட்டிலிருந்து 1 மைல். 1873 - 83, 1906 - 16 (52);
131. சிக்கல் ர் சிக்கல் 1/4 மைல். வெண்ணெய் லிங்கம் சிக்கிக்கொண்டதால் தலப்பெயர். கட்டுடலைக் கோயில், முருகப் பெருமான் பெயர்சிங்காரவேலர். ஸ்கந்தர்சஷ்டி விழாவில் 5ஆம் நாள் வேல் பெறுவதும் 6ஆம் நாள் மேஷவாகனத்தின் மீதேறிச் சூரனைச் சங்கரிப்பதும் மிகப் பிரபலமான உத்ஸவங்கள். 1547 — 57 (GF).
132. சிராப்பள்ளி (திருச்சிராப்பள்ளி, திருச்சி) d திருச்சிடவுன் 1/2 மைல். கல்வெட்டுக்கள் 1888 (62 - 64) 1904 (411-14) 1905 (134) 1938 (130 - 42) தெஇக 1 (33, 34) 12 (8, 9) திரிசிரன் என்ற அரக்கன் வழிபட்டதாலும், ஆதிசேடனுக்கும் வரயுதேவனுக்கும் ஏற்பட்ட சச்சரவில் வாயு வன்மையால் திருக்கயிலாயத்திலிருந்து மூன்று துண்டுகளுள் ஒரு சிகரம்
இந்துக் கலைக்களஞ்சியம்

இங்கு வந்து மலையாயினமையாலும் தலப்பெயர் ஏற்பட்ட தென்பது புராண வரலாறு. காளத்தி, சிராப்பள்ளி, திருக்கோணமலை ஆகிய மூன்றும் இதுபற்றித் தென்கயிலை யெனப்படும். இரத்தினாவதியென்ற வணிகப் பெண் பிரசவ சமயத்தில் தன் தாய் வருகையை எதிர்பார்த்தாள். காவிரிப்பூம்பட்டினத்திலிருந்து தாயும் விரைந்து வரும்போது, காவிரியில் வெள்ளம் மிகுதியாயிருந்தது. ஆற்றுக்குப் பாலமில்லாத அக்காலத்தில், இரத்தினாவதியின் தாய் போலவே இறைவன் வந்து உதவி செய்து காப்பாற்றினான். வெள்ளம் வடிந்த பிறகு உண்மைத் தாய் வந்தனள். அப்போதுதான் பிரசவ காலத்து உதவியவன் இத்தலத்து இறைவன் என்பது வெளியாயிற்று. இறைவனுக்குத் தாயுமானவன் என்ற பெயரும் வழங்கிற்று. இவ்வற்புதம் சித்திரைப் பெருவிழாவில் 5ஆம் நாளன்று காலை உத்ஸவத்தில் நடக்கிறது. திரிசிராப்பள்ளி மலை தரைமட்டத்திலிருந்து 273 அடி உயரம், ஏறுதற்கு 417 படிகளுண்டு. மலைக் கோயிலுக்குமேல் உச்சிப்பிள்ளையார் கோயிலிருக்கிறது. அங்கிருந்து பார்த்தால் காவிரி, கொள்ளிடம், திருவானைக்கா, பூரீரங்கம் முதலியன 55ITLʼ &f (' பெருவிருந்தளிக்கும். உச்சிப்பிள்ளையார் கோயில் போகும் வழியில் மஹேந்திர வர்ம பல்லவமன்னன் எடுப்பித்த குகைக்கோயிலுண்டு. மலைவலம் வரும் வழியிலும் ஒரு குகைக்கோயிலுண்டு. 300 ஆண்டுகட்கு முன்பிருந்த தாயுமான ஸ்வாமிகள் அவதரித்து, மூலன்மரபில் வரு மெளனகுருவினிடம் உபதேசம் பெற்று உருக்கமான பல பாடல்களை அருளிய தலம். இந்த மெளனகுரு இருந்த திருமடம் கோயிலுக்குச் செல்லும் படித் துறையில் உள்ளது. தல புராணம் சைவ எல்லப்ப நாவலர் இயற்றியது. செவ்வந்திப் புராணம் என்ற பெயருடையது. 105868 (ச); 6068-71 (அ).
133. சிவபுரம் a கும்பகோணம் 1% மைல். திருமால் வராகவுருவிற்பூசித்ததை 223,7190ஆம் பாசுரங்கள் கூறும் 21727, 1207-71, 1348-58 (ச) 3; 7104-11 (அ). 4பதிகம்.
134. சிறுகுடி g பேரளம் 5 மைல். 3842-52 (ச).
135. சிற்றேமம் (சிற்றாய்மூர், சிற்றாம்பூர் a ஆலத்தம்பாடி 4 மைல். 3842-52 (ச), 3244-54 ச.
136. சுழியல் a மதுரை 24 மைல். மதுரையிலிருந்து அருப்புக்கோட்டை பஸ்மூலம் 17 மைல். அங்கிருந்து இத்தலம். m விருதுநகரில் இருந்து 19 மைல் (அருப்புக் கோடைக்கு விருதுநகரிலிருந்து பஸ் 12 மைல். அங்கிருந்து மேற் கூறியபடி தலம் 7 மைல். 8056-65 (சு).
137. செங்காட்டங்குடி (திருசெங்காட்டாங்குடி)g நன்னிலம் 6 மைல். வழியில் திருப்புகலூர், இராமனதிச்சரம், கண்ணபுரம் (விஷ்ணு ஸ்தலம்) உள்ளன. சிறுத்தொண்ட நாயனார் பிள்ளைக் கறியளித்த அற்புதத்தலம். இவ்வற்புதம் அமுது படையல் உத்ஸவம் என்று சித்திரை மாதம் பரணியன்று மிகப் பிரபலமாக நடக்கிறது. உத்தராபதி சுவாமி திருவெழுச்சி, அவர் தங்கியிருந்த திரு ஆத்திமரம் முதலியன காணலாம்.
307

Page 338
சிறுதொண்டர் வாதாவிப் போர்வென்று கொணர்ந்த கணபதி பூசித்ததால் கோயிற் பெயர் கணபதீச்சரம் ஆயிற்று. 55-64, 656-66, 3471-80 (ச3); 7076-85 (அ). ஆ, 4 பதிகம்.
138. செம்பொன் பள்ளி (செம்பொனார் கோயில்)f செம்பொனார் கோயில் 261-71 (ச), 4442-52, 5585-94 (அ2).
139. சேய்ஞலூர் a ஆடுதுறை 7 மைல். முருகப்பிரான் பூசித்த தலங்களுள் ஒன்று. சண்டேசுவர நாயனார் அவதரித்துப் பூசித்து முத்தி பெற்ற தலம். 515-25 (ச).
140. சேறை (உடையார் கோயில்) a கும்பகோணம் 8 மைல். பஸ்வழி 3723-33 (ச), 4865-73, 5997-6006 (அ2).
141. சோபுரம் (தியாகவல்லி) a ஆலப்பாக்கம் 2 மைல். உப்பங்கழியைப் படகேறிக் கடக்கவேண்டும். கோயில் மணல் மூடியிருந்து சென்ற நூற்றாண்டில் அகழ்ந்தெடுக்கப்பட்டது. 548-58 (GF).
142. சோற்றுத் துறை a தஞ்சாவூர் 7% மைல். கல்வெட்டு தெஇக 5 (610-21). சப்ஸ்தானத் தலங்களுள் ஒன்று 294-304 (ச), 4562-71; 4970-79, 5554-64, 6681-90 (அ4); 8178-87 (சு), ஆ, 6 பதிகம்.
143. தண்டலைநீனெறி (தண்டலைச்சேரி) g திருத்துறைப்பூண்டி 2% மைல். இத்தலத் திறைவனுக்கு நாடோறும் (% மைல் தொலைவிலுள்ள) கணமங்கலத்திலிருந்து அரிவாட்டாய நாயனார் மாவடு செங்கீரை செந்நெல் அமுது முதலியன நிவேதித்து வர, ஒருநாள் அவை கமரில் வழுக்கிவிழத் தாம் கழத்தையரிய முற்பட்டபோது, கமரில் இறைவன் கைதோன்றி அவர் கழுத்தை அரிவதைத் தடுத்து அவருக்கு முத்தியளித்த தலம். 3331-33 (ச).
144 தருமபுரம் h காரைக்கால் 1மைல். சம்பந்தர் யாழ்மூரிப் பதிகம் பாடிய அற்புதத் தலம் 1459-69 (ச).
145. தலச்சங்காடு f ஆக்கூர் 3மைல். 2059-69 (ச).
146. தலையாலங்காடு) கொரடாச்சேரி 6மைல். 3063-73 (அ).
147. திருந்துதேவன்குடிaதிருவடமருதூர் 5மைல். 306373 (GF).
148. திலதைப்பதி (செதலைப்பதி, திலதர்ப்பணபுரி) g பூந்தோட்டம் 1% மைல், 2747-57 (ச).
149. தினைநகர் (தீர்த்தனகிரி) aஆலப்பாக்கம் 5% மைல் 7 (ச)
150. துருத்தி (குத்தாலம்) a குத்தாலம் % மைல், இறைவன் கட்டளைப்படி இங்குள்ள குளத்தில் மூழ்கிய சுந்தரர், தமது உடலுறுபிணி நீங்கி மணி ஒளிசேர் திருமேனி ஆயினார்.
308

2528-38, 3767-77 (32); 4572-81 (9); 7402-11, 7975-84 (சு2) ஆ 5 பதிகம்.
151. துறையூர் (திறைத்துறையூர்) aதிருத்துறையூர் 1/2 மைல். சிவஞான சித்தியார் என்ற சிறந்த சாத்திதரத்தின் ஆசிரியர் அருணந்தி சிவாச்சாரியர் ஸ்தலம். அவருடைய கோயிலும் இங்குள்ளது. சுந்தரர் காலத்தில் இத் தலம் பெண்ணையாற்றின் வடகேயிருந்தது. இப்பழைய பெண்ணை யாறு இப்போது மலட்டாறு எனப்படுகின்றது. இப்போதுள்ள பெண்ணையாறு தலத்தின் வடக்கேயுள்ளது. தலம் இவ் விரண்டிற்கும் நடுவேயுள்ளது 7347-57 (ச), தூங்கானைமாடம்-பெண்ணா கடம் பார்க்க.
152. தெங்கூர் திருநெல் g திருநெல்லிக்காவல் % மைல். 2475-85 (GF).
153. தெளிச்சேரி (கோயில் பத்து) h காரைக்கால் % மைல். சம்பந்தர் திருக்கூட்டத்தார் “பரசமய கோளாரி வந்தார்’ என்று விருது கூறிச் செல்வதைத் தடுத்த புத்தர்கள் தலையில் இடி விழும் படியாகத் திருமுறை எழுதும் தொண்டர் 3040ஆம் பாசுரம் ஒதியவுடன் அவ்வாறே இடிவிழுந்தது. பிறகு அவர்களுட் சிலரோடு வாதம் செய்து இத்தொண்டரே வென்றார். 1491-1501 (GF).
154. தென்குடித்திட்டை a திட்டை 1 மைல். 3170-80 (ச).
155 தேவூர் g கீவளூர் 2 மைல். கட்டுமலைக் கோயில் 235666, 3592-3602 (F2).
156, நணா (பவானி) q ஈரோடு 9 மைல். பவானியாறு காவிரியிற் கூடும் இடம். நல்ல இயற்கைக் காட்சி. ஜமக்காளத் தறிகள் மிகுதி. 2245-55 (4).
157. நல்லம் (கோனேரி ராஜபுரம்) a ஆடுதுறை 5 மைல். கல்வெட்டுக்கள் தெஇக 3 (130, 146, 147, 151, 151 a) 1908 (450) 1909 (622-662) திருவிசைப்பா பாடிய கண்டராதித்தர், அவர் தேவியாகிய செம்பியன் மஹாதேவியார் ஆகிய இருவர் திருவுருவம் தெஇக 3 (146, 147) என்ற கல்வெட்டுக்களின் கீழ் உள்ளது. 915-25 (ச); 5654-63 (அ).
158. நல்லூர் g சுந்தரப் பெருமாள் கோயில் 2 மைல். கல்வெட்டு 1911 (40-62) தெஇக 3 (136). அப்பருக்குத் திருவடி தீகூைடி செய்ததலம். அமர் நீதி நாயனார் இறைவன் தந்த கோவணத்துக்குப் பதிலாகத் தாமும் புதல்வனும் மனைவியும் தராசேறிக் கோவணக் குவியலோடு அர்பணம் செய்ததலம். இவ்விரண்டையும் 6380-90, 5107ம் பாசுரங்களில் அப்பர் முறையே கூறுகின்றார். அமர்நீதி நாயனார், இடுப்பிற் குழந்தையோடு மனைவியுருவங்கள் கற்சிலையிலும் செப்புத் திருமேனியிலும் உள்ளன. 926-36, 2081-91, 3690-3700 (ச3); 5101-5,11, 6380-90 (g|2).
இந்துக் கலைக்களஞ்சியம்

Page 339
159. நல்லூர்ப் பெருமணம் (ஆச்சாபுரம்) a கொள்ளிடம் 3 மைல். சம்பந்தர் திருக்கலியாணம் நடந்த தலம். சம்பந்தர் கலியாணத்திற்கு வந்தோர் அனைவருக்கும் கொள்ரக கொள வீடருளிய அற்புதத் தலம். திருநீலநக்கர், முருகநாயனார், நீலகண்ட யாழ்ப்பாணர், சிவபாதவிருதயர், நம்பாண்டார் நம்பிகள், முத்துச் சிவிகை தாங்குவோர் முதலிய பரிசனங்கள், கலியாணம் காண வந்தோர் ஆண்பெண் அனைவரும் சோதியுட் சென்ற பின்பு, காதலியைக் கைப்பற்றிச் சம்பந்தர் சோதியுட்புக்கு ஒன்றி உடனாய் முத்திபெற்ற தலம். இத்தகைய துறைமங்கலம் சிவப்பிரகாச சுவாமிகள் முதலிய பல பெரியார்கள் பாராட்டியுள்ளனர். இத்திருநாள் வைகாசி மூலம் தோறும் பிரபலமாக நடக்கிறது. 4137-47 (ச).
160. நள்ளாறு h திருநளார் % மைல். சப்தவிடங்களுள் இங்கு நகவிடங்கர், உன்மத்த நடனம். மதுரையில் சம்பந்தர் அனல்வாதம் செய்தபோது, தமது தேவார ஏடுகளில் ஒன்றையெடுத்து அனலில் இடும்போது இத்தலப் பதிகம் வரைந்த ஏடு கிடைத்தது. அனல் வாதத்தில் இந்த ஏடு எரியாமல் பச்சென்றிருந்த படியால் இப்பதிகம் (526-36) ‘பச்சைப்பதிகம்’ எனப் பெயர் பெற்றது. நளன் பூசித்துக் கலி நீங்கப்பெற்ற தலம். கோயிலுக்குள் போகும் வாயிலின் ஒருபுறம் சனிச்சரன் உருவமுள்ளது. 12 ராசிகளுள் ஒன்றைவிட்டு மற்றொன்றிற்கு முன்னாகவோ அல்லது வக்ரமாகப் பின்னாகவோ பெயர்வது சனிப்பெயர்ச்சி யாகும். இந்தச் சனிப்பெயர்ச்சி விழா ஒவ்வொன்றும் இத்தலத்தில் மிகப் பிரபலம். பல்லாயிரக் கணக்கான மக்கள் நளதீர்த்தத்தில் எண்ணெய் விளக்கேற்றி, “பகவான்’ எனும் சனிச்சரனுக்கு அர்ச்சனை முதலியன செய்து வழிபடுகிறார்கள். “பகவான்” வெள்ளிக் காக்கை வாகனத்தில் வீதி வலம் வருதல் முதலியன நடைபெறும். 65-75, 526-36, 1819-44 (ச4); 5908-17, 6444-53 (அ2); 7912-21 (சு), ஆ, 7 பதிகம்.
161. நறையூர்ச்சித்தீச்சரம் a கும்பகோணம் 5 மைல். நாச்சியார் கோயில் போகும் பஸ் வழி. 305-15, 765-36, 241020 (ச3); 8167-77 (சு), ஆ 4 பதிகம்.
162. நனிபள்ளி (புஞ்சை) f செம்பொனார் கோயில் 2% மைல். சம்பந்தர் தாயார் பிறந்த ஊர். சம்பந்தர் தமது அத்தர்பியல் மேலிருந்து (தந்தையார் இடுப்பில் தாங்கப் பெற்று) தம்மேல் ஆணை வைத்துப் பாடிய தலப்பதிகம் சிறப்புடைத்து. 2377-87 (ச); 4837-45 (அ), 8209-18 (சு), ஆ, 3 பதிகம்.
163. நன்னிலத்துப் பெருங்கோயில் gநன்னிலம் 3 மைல். கோச்செங்கட் சோழன் எடுப்பித்த கட்டுமலைக் கோயில், 821929 (Gi).
164. நாகேச்சரம் (திருநாகேஸ்வரம்) a திருநாகேஸ்வரம் 1 மைல். சேக்கிழார் சுவாமிகள் பெரிதும் இத்தலத்தில் ஈடுபட்டனர். தாம் குன்றத்தூரிற் கட்டிய ஆலயத்திற்கும் திருநாகேஸ்வரம் என்றே பெயரிட்டனர். சந்திரன் சூரியன் ஐந்தலை நாதம்
இந்துக்கலைக்களஞ்சியம்

பூசித்ததை 5748-57, 6904-13, (அ3), 8230-49 (சு), ஆ, 6 பதிகம்.
165. நாகைக்காரோணம் (நாகப்பட்டணம்) நாகபட்டனம் % மைல். ஒரு ரிஷியைக் காயத்தோடு வானுலகுக்கு ஆரோஹணம் என்பது மருவிக் காரோணம் எனத் தலப்பெயருட் சேர்ந்ததது. அதிபத்த நாயனார். அவதரித்துப் பொன்மீனைச் சிவார்ப்பணம் செய்து முத்திபெற்ற தலம். சுந்தரர் பொன்பெற்ற தலங்களுள் ஒன்று. சப்த விடங்கங்களுள் இங்கு சுந்தரர் விடங்கர், பாராவாரதரங்க நடனம், 904-14, 2725-35 (சு) ஆ7 பதிகம்.
166. நாட்டியத்தான்குடி (திருநாட்டியத்தான் குடி) g மாவூர்ரோட் % மைல். கோட்புலிநாயனார் தொண்டு புரிந்த தலம். சிங்கடி, வனப்பகை என்ற தமது புதல்வியரைச் சுந்தரருக்கு அளித்து அவர்களை வாழ்க்கைத் துணைவியராக ஏற்றுக் கொள்ளும் படி வேண்டிய கோட்புலியாருக்கு, அவர்களைத் தமது மக்களாக ஏற்று அருள் புரிந்து, தம்மை வனப்பகையப்பன், சிங்கடியப்பன் என்று சில பாசுரங்களிற் சுந்தரர் பாராட்டினர். 7370—79 (9).
167. நாரையூர் (திருநாரையூர்) a சிதம்பரம் 10 மைல். காட்டுமன்னார்குடி போகும் பஸ்வழி. நாரை வழிபட்டதலம். கோயில் பூசகர் ஒரு நாள் வெளியூர் போக நேர்ந்தது. தமது இளம் புதல்வனைப் பூசிக்குமாறு சொல்லிச் சென்றார். புதல்வன் முதலில் விநாயகரைப் பூசித்து நிவேதனத்தை உட்கொள்ளுமாறு விண்ணப்பிக்க, விநாயகர் வழக்கம் போல் பேசாதிருந்தார். உடனே புதல்வன் தனது தலையைத் திருவடியில் மோதி வருந்த “நம்பி பொறு’ என்று விநாயகர் நிவேதனத்தை உட்கொண்டார். நம்பி ஆண்டார் நம்பிகளும் “இனி நான் பள்ளிக்குச் சென்றால் ஆசிரியர் அடிப்பார். தாங்களே எனக்குப் பாடம் சொல்லித் தரவேண்டும்” என்று விண்ணப்பிக்க, விநாயகர் அன்று முதல் நம்பியாண்டார் நம்பிகட்கு எல்லாக் கலைகளையும் கற்பித்தார். உளியால் பொள்ளப்படாது சுயம்புவாகிய இவ்விநாயகருக்குப் பொல்லாப் பிள்ளையார் என்பது பெயர். (திருவெண்ணெய் நல்லூரிலுள்ள ஸ்தல விநாயகரும் இக்காரணம் பற்றியே பொல்லாப் பிள்ளையார் எனப்படுகிறார்) முதல் ராஜராஜ சோழன் தேவாரத் திருமுறைகளைக் கண்டெடுக்க முயற்சித்து நம்பியாண்டார் நம்பிகள் பெருமையைக் கேள்வியுற்று நாரையூர் நாற்பாங் கெல்லையிலும் பத்துக்காதம் சுற்றளவிற்கு முப்பழம் நிரப்பி நம்பிகளை யணுகிப் பொல்லாப் பிள்ளையாருக்கு அவற்றை நிவேதித்தருள வேண்டினன். நம்பிகளும் நாற்சுத்தி செய்து நிவேதித்தனர். பிள்ளையார் துதிக்கை புறப்பட்டு எல்லாவற்றையும் எடுத்து உட்கொண்டது. அரசன் திருமுறைகளைக் கண்டெடுக்க உதவியுரியுமாறு நம்பிகளை வேண்டினான். நம்பிகள் பொல்லாப் பிள்ளையார் அருளால் சிதம்பரத்தில் திருமுறை சேமித்திருந்த அறையைத் திறப்பித்து ஏடுகளை எடுத்துச் செல்லரித்தன போக எஞ்சியவற்றைத் தொகுத்துப் பண்முறை வகுத்துத் தேவாரத் திரு முறைகள் ஏழையும் கோவை செய்து, பிறகு 8,9,10ஆம் திருமுறைகளையும் வகுத்தனர். ஏனைய விவரங்களைத் திருமுறை கண்ட புராணம் கூறும். இத்தலத்தில் நம்பியாண்டார் நம்பிகளுடைய செப்புத்
309

Page 340
திருமேனி மிகமிகக் கவர்ச்சியுடையது, 2399-2409, 3890-3900, 3945-55, (ச3); 5780-89, 6977-86 (அ2) ஆ 5 பதிகம்.
168. நாலூர் மயானம் a கும்பகோணம் 812 மைல், கொடவாசல் பஸ்வழி. 1960-70 (ச).
169. நாவலூர் (திருநாம நல்லூர், திருநாவலூர்) d பரிக்கல் 2 மைல், கல்வெட்டுக்கள் 1902 (325-80) தெஇக 7 (954-1010). சுந்தரமூர்த்தி சுவாமிகள் திரு அவதாரம் செய்து நரசிங்க முனையரையரால் வளர்க்கப் பெற்ற தலம். “நாதனுக்கூர் நமக்கூர் நரசிங்கமுனையரையன், ஆதரித்தீசனுக்காட் செய்யுமூர் அணி நாவலூர் (7401 பாசுரம்). பழைய பல்லவச் சிற்பச் சிதைவுகள் பல கோயிலிலுண்டு. சுந்தரர், நரசிங்க முனையரையர் எழுந்தருளும் திருமேனிகள் கவர்ச்சியுடையன. 7391—7401(5)
170. நின்றியூர் a ஆனதாண்டவபுரம் 2 மைல். திருமகள் பூசித்ததை 7893ம் பாசுரம் கூறும். 185-94 (ச); 5453-62 (அ); 7412-22, 7889-95 (சு2) ஆ 4 பதிகம்.
171. நீடூர் a நீடூர் 1 மைல். முனையடுவார் நாயனார் தொண்டு புரிந்த தலம் 6350-59 (அ) 7794-7804 (சு2) ஆ 4 பதிகம்.
172, நீலக்குடி (தென்னல் குடி) a ஆடுதுறை 2 மைல். 5948-57 (அ).
173. நெடுங்களம் a சோழகம்பட்டி 2 மைல். 559-69 (ச).
174. நெய்த்தானம் (தில்லைஸ்தானம்) aதஞ்சாவூர் 10 மைல். கல்வவெட்டுக்கள் 1895 (24-52) 1911 (276-291) தெஇக 3 (89, 13, 127) 5 (580-609) சப்தஸ்தானத் தலங்களுள் ஒன்று. 15262 (ச); 4522-31, 501-20, 5565-74, 6651-70 (அ5). ஆ 6 பதிகம்.
175. நெல்லிக்கா (திருநெல்லிக்காவல்) 8. திருநெல்லிக்காவல் % மைல், தீபாவளி முதல் 7 நாளும் மாசி 18ஆம் தேதிமுதல் 7 நாளும் அஸ்தமனத்தின் போது, சூரிய கிரணங்கள் மூலஸ்தான மூர்த்தி மேல் விழுகின்ற சூரிய பூஜைத்தலம். 1666-76 (ச).
176. நெல்லிவாயில் (சிவபுரி) a சிதம்பரம் 3 மைல். 174252 (GF).
177. நெல்லிவாயில் அரத்துறை dபெண்ணாடம் 4 மைல். நிவா எனும் வெள்ளாற்றின் கரையில் உள்ளது. சம்பந்தருக்கு முத்துச்சிவிகை, குடை, சின்னங்கள் சிவபெருமானால் தரப்பட்ட அற்புதத் தலம். 2442-52 (ச); 5250-59 (அ); 7246-55 (சு)
178. நெல்வெண்ணெய் (நெய்வெணை) d உளுந்தூர்பேட்டை 4 மைல், 3831-41 (ச).
310

179. நெல்வேலி (திருநெல்வேலி) m திருநெல்வேலி டவுன் % மைல். கல்வெட்டுக்கள் 1894 (118-163) 1912 (15) 1927 (2887) தெஇக 5 (407-455). தாம்ரபரணி என வழங்கும் தண்பொருநை ஆற்றங்கரையிலுள்ளது. ஆற்றுவெள்ளச் சேதமின்றிச் சிவபெருமான் நிவேதனத்துக்குச் சேமிக்கப் பெற்ற நெற்களஞ்சியத்தை வேலிகட்டிக் காத்தமையால் நெல்வேலி ஆயிற்று. நடராஜர் 5 சபைகளுள் இங்குள்ளது தாம்பிரசபை எனும் செப்பறை, சுவாமி சந்நிதிக் கெதிரில் ஏழிசை ஒலி எழும்பும் கருங்கல் தூண்கள் உள்ளன. ஒரு சிறு குச்சியால் தட்டிக் கேட்கலாம். அம்மை காந்திமதியின் திருவுருவம் அழகும் அருளும் நிரம்பியது. ஆற்றின் நடுவின் குறுக்குத்துறை முருகன் கோயில் சிறப்புடையது. “மதுத்திவலை சிந்துபூந்துறை கமழ் திருநெல்வேலி' என்று 3795ஆம் பாசுரத்திலுள்ளதை ஒட்டி ஆற்றங்கரையிலுள்ள ஒரு ஊர்பகுதி சிந்துபூந்துறை என்று இன்றும் வழங்கப் பெறுகிறது. 3788-98 (ச).
180. பட்டீச்சரம் a தாராசுரம் 2 மைல். சம்பந்தருக்கு முத்துப் பந்தர் கொடுத்தருளிய தலம். 3581-91 (அ).
181. பந்தணைநல்லூர் a குத்தாலம் 6 மைல். 4101-10 (அ). 182. பயற்றுார் (திருப்பயத்தங்குடி) g விற்குடி 4 மைல். 4472-81 (அ).
183. பரங்குன்றம் (திருப்பரங் குன்றம்) m திருபரங்குன்றம் % மைல். மதுரையிலிருந்து பஸ் வழியாக 4மைல் மிக வசதி. கல்வெட்டுக்கள் 1890 (49) 1908 (37, 333) 1917 (860, 861) 1918 (336-39) தெஇக 4 (372). கோயில் மலைச்சரிவில் உள்ளது. முருகப்பிரான், சிவப்பெருமான், திருமால் முதலியோர் மூலஸ்தானங்கள் இருக்கும் கோயிற் பகுதி அருமையான நுட்பம் செறிந்த சிற்பம் நிறைந்த குகைக்கோயில் (Cave temple carved Out of rock in Situ). நக்கீரதேவர் திருமுருகாற்றுப்படை விண்ணப்பித்துத் தம்மோடு 999 உயிர்களைக் காப்பாற்றிய அற்புதத்தலம். அவர் சிவபூசை செய்த சரவணப் பொய்கை கோயிலுக்கருகிலுள்ளது. முருகன் ஆறுபடை வீடுகளுள் இதுவே முதலாவது. "சூர்மருங்கறுத்த சுடரிலை நெடுவேல் சினமிகு முருகன் தண்பரங்குன்று’ (அகநானூரு-59), “கொடி நுடங்கு மருங்கிற் கூடல்கூட அதுபல் பொறி மஞ்சைவெல் கொடி உயரிய ஒடியாவிழவின் நெடியோன் குன்றம்’ (அகநாநூரு-152), “ஒன்னாதார்கடந்தடு, உம் உரவு நீர்மாகொன்ற வெல்வேலோன் குன்று’ (பாலைக்கலி 26) என்று சங்கநூல்களுள் இத்தலமும் முருகனும் குறிக்கப் பெறுதல் காண்க. இத்தலத்திலே முருகன் தெய்வயானை அம்மையாரைத் திருமணம் புரிந்தனன். இங்கு முருகனுக்கு உபய நாச்சியார் கிடையாது. தெய்வயானை அம்மையார் ஒருவரே இடது பக்கத்தில் நாச்சியாராக உள்ளனர். ஒவ்வோரு கிருத்திகையிலும் மக்கள் ஆயிரக்கணக்கில் வழிபடுகின்றனர். சுந்தரர் மூவேந்தரொடும் இத்தலத்தில் தரிசனம் செய்தததை 7245ஆம் பாசுரம் கூறும். 1080-90 (ச), 7235-45 (சு). 184. பராய்த்துறை (திருப்பளாத்துறை) r திருப்பிராய்த்துறை ரோட் ஹால்ட் கல்வெட்டுக்கள் 1903 (244290) 1907 (169-180) 1908 (562-86) தெஇக 3 (11, 12, 133,
இந்துக் கலைக்களஞ்சியம்

Page 341
150) 8 (545-599). அகண்ட காவிரிக்கரையிலுள்ளது. 144858 (g); 5523-33 (9).
185. பரிதிநியமம் (பரித்தியப்பார் கோயில்) சாலியமங்கலம் 8 மைல். தஞ்சாவூரில் இருந்து பட்டுக்கோட்டை போகும் பஸ் வழியாக 10 மைல். 3912 22 (ச).
186. பருப்பதம் (பூரீசைலம்) சென்னையிலிருந்து t வழியாகக் குண்டல் ஜங்ஷன் போய், அங்கிருந்து ஆத்மகூர் (30மைல்) 104 மைல், பஸ் ஏறிச் சென்று, பிறகு காட்டு வழியாக 20மைல் டாக்ஸி மோட்டார் அல்லது மாட்டு வண்டி மூலம் சென்று பெத்தசெருவு என்ற எரிக்கரை சேர்ந்து, அங்கிருந்து 10 மைல் மலையேறிச் சென்றால் இத்தலத்தை யடையலாம். கல்வெட்டுக்கள் 1915 (10-52), “செல்லலுற அரிய சிவன் சீபர்ப்பதமலை” (8035ம் பாசுரம்) என்ற படி மிகவும் கஷ்டமான வழி. மலையேறிச் செல்லும் வழி முழுமையும் வறட்சிமிக்க காடாகையால் மண்கூஜா நிறையத் தணிணிர் கொண்டு போனால் அவ்வப்பொழுது தாகம் தணியும், காய்ந்த மரங்கள் ஒன்றோடொன்று மோதி உராய்வதால் தீப்பற்றித் தீபமாமரங்களாக இரவில் இருளைப் போக்கும் (ப) சிவராத்திரி சமயம் போவது வசதி. மற்றக் காலங்களிற் காட்டுவழி போதல் மிக ஆபத்து.
கோயில் மிகப் பெரிது, விஜயநகர மன்னர் கிருஷ்ணதேலராயர் பல திருப்பணிகள் செய்த தலம். மக்கள் மலையேறிச் சென்றவுடன் நீராடாமல் மூலஸ்தானத்திலுள்ள சிவலிங்கத்தைத் தழுவித் தரிசிக்கின்றது. ‘தூளி தரிசனம்” என்று சிறப்பாகக் கூறப்படுகிறது. திருநந்திதேவரே மலையாகப் பரமசிவனைத் தாங்குகிறார் என்று புராணம் கூறும். இத்தலத்தில் மூலஸ்தான இலிங்கத்தைத் தொட்டு அடிபிஷகம் அர்ச்சனை முதலியன செய்து நாமே வழிபடலாம். கோயிலிருந்து 3 மைல் செங்குத்தான இறக்கப்படிகள் வழியிற்சென்றால் கிருஷ்ணா நதி சேரலாம். கற்பாறைகளின் வழியில் நதி ஒடுவதால் வெகு ஜாக்கிரதையாக ஸ்நானம் செய்யவேண்டும். கற்பிளவுகளும் முதலைகளும் ஆபத்தைத்தரும். பலர் இங்கு ஸ்நானம் செய்து நதி தீர்த்தம் கொண்டு வந்து கோயிலில் மூலஸ்தான மூர்த்திக்கு அபிஷேகம் செய்வதுண்டு. சுவாமி டெயர் மல்லிகார்சுனேசுவரர், தேவியார் பிரமராம்பிகை. இலிங்கம் தரித்த ஜங்கமர் பூஜையே கோயிலில் நடக்கிறது. காலரா முதலிய கொள்ளை நோய்கள் சிற்சில ஆண்டுகளில் பீடிப்பதால் தண்ணிரைக் காய்ச்சியே சமயலுக்கும் குடிப்பதற்கும் உபயோகிக்கவேண்டும். சிவராத்திரி முன்னாள் மாலை சென்று சிவராத்திரி மறுநாள் காலை திரும்பி விடுவதால் மிக நல்லது. அப்பர் சுவாமிகள் நேரிற் சென்று தரிசித்தார். சம்பந்தரும் சுந்தரரும் காளத்தியிலிருந்தே பதிகம் ஒதினார்கள். பூரீ சைலமலையின் உயரம் கடல் மட்டத்தின் மேல் 1563 அடி என்று அரசாங்கத்தாராற் கூறப்பட்டுள்ளது. 1271-81 (ச); 4716-25 (அ); 8026-35 (Gi).
187. பழனம் a தஞ்சாவூர் 10 மைல். கல்வெட்டுக்கள் 1895 (123-129) 1928 (134-191) தெஇக 5 (684-93) சப்தஸ்தான
இந்துக்கலைக்களஞ்சியம்

ஸ்தலங்களுள் ஒன்று. காவிரிக்கரையிலுள்ளது. ஐயாற்றிலிருந்து இத்தலம் போகும் வழியில் அப்பூதியடிகள் தொண்டு செய்த திங்களூர் உள்ளது. 722-32 (ச); 4272-81, 4512-21, 4991-5000, 5575-84, 6603-6612 (அ5) ஆ 6 பதிகம்.
188. பழவூர் d கல்லகம் 4 மைல். 1830-40 (ச).189, பழையாறை வடதளி aதாராசுரம் 1% மைல். அமர்நீதி நாயனார் வாழ்ந்த தலம். 5810-19 (அ).
190 பள்ளியின் முக்கூடல் (திருப்பள்ளி முக்கூடல், அரிக்கரியான்பள்ளி) g விற்குடி 1% மைல். 6934-43 (அ).
191 பறியலூர்வீரட்டம் (பறசலூர்) fசெம்பொனார்கோயில் 1% மைல். தக்கன் வெள்வி தகர்த்த வீரட்டம். அவ்வேள்விக்கு வந்த வானோர் குற்றத்தைப் பழித்தமையால் பறியலூர் ஆயிற்று. 1437-47 (cy)
192. பனங்காட்டுர் (வன்பார்த்தான் பனங்காட்டூர், திருப்பனங்காடு) b காஞ்சிபுரம் 9 மைல், பஸ்வழி. 8096-8105 (சு)
193. பனடந்தாள் (திருப்பனந்தாள்) a ஆடுதுறை 6 மைல். பஸ்வழி தாடகையெனும் அசுரப்பெண் வழிபடும்போது அவள் உடை நெகிழ, அவள் கையிற் சேர்த்தணைத்து வழிபாட்டை ஏற்றனன். இதை நிமிர்த்த, மன்னன் யானைகளால் கயிறு சாத்தியிழுத்து முயன்றான். குங்குலியக்கலய நாயனார் தம் கழுத்திற் கயிறு சாத்தி அன்போடு இழுக்க, அன்புக்குச் சாய்ந்த பரமன் அன்புக்காக நிமிர்ந்தனன். குமரகுருபர சுவாமிகள் தாபித்த காசி மடத்தின் தலைமைத்தானம், 3460-70 (ச).
194. பனையூர் g நன்னிலம் 1% மைல். 393-403 (ச); 81068115 (yi).
195. பாசூர் (திருப்பாச்சூர்) q திருவள்ளூர் 4% மைல். 21323 (GF); 5473-83, 7066-75 (92).
196, பாச்சிலாச்சிராமம் (திருவாசி) dபிக்ஷாண்டார் கோயில் 2% மைல். கொல்லிமழவன் புதல்வியின் முயலகன் நோயைச் சம்பந்தர் தீர்த்த அற்புதத் தலம். இத்தலத்து நடராசார் ஊன்றிய திருவடியின் கீழ் முயலகனில்லை 470-80 (ச); 7358-69 (சு).
197, பாண்டிக்கொடுமுடி (கொடுமுடி) கொடுமுடி 4 மைல். அகண்ட காவிரிக்கரையில் உள்ளது. 221-21 (ச); 603337 (அ); 7712-21 (சு).
198. பாதாளிச்சரம் (பாமணி) kமன்னார்குடி 1 மைல். 163-73.
199, பாதிரிப்புலியூர் (திருப்பாப்புலியூர்) a திருப்பாபுலியூர். 4 மைல். கல்வெட்டுக்கள் 1902 (115-135) தெஇக 7 (739-769). கடற்கரைத் தலம். கெடில நதியின் தென்கரையிலுள்ளது.
31

Page 342
புலிக்கால் முனிவர் (வியாக்ரபாதர்) பாதிரி மரத்தின் கீழிருந்த சிவலிங்கத்தைப் பூசித்தமையால் பாதிரிப்புலியூர் என்பது தலப் பெயர். மங்கணர் என்ற முனிவர், சாபத்தாற் பெற்ற முடக்கால் முயல் உருவிற் பூசித்து அவ்வுரு நீங்கப்பெற்ற வரலாற்றுக் குறிப்பை 2780ஆம் பாசுரம் கூறும். கல்லிற் பூட்டிக் கடலிற் பாய்ச்சப்பட்ட அப்பர் சுவாமிகள், அக்கல்லையே தெப்பமாக் கொண்டு ஐந்தெழுத்தோதிக் கரையேறிய இத்தலத்தின் பகுதி கரையேறவிட்ட குப்பம் என வழங்கப்படுகிறது. 2780-90 (ச); 5071-80 (9).
200. பாம்புரம் (திருப்பாம்புரம்) g பேரளம் 4% மைல், 43747(于)
201. பாலைத்துறை a பாபநாசம் 1 மைல். 5737-47 (அ).
202 பாற்றுறை d பூரீரங்கம் 5 மைல். 601-61 (ச).
203. புகலூர் (திருப்புகலூர்) g நன்னிலம் 4 மைல். கல்வெட்டுக்கள் 1928 (42-108. கோயிலைச் சுற்றி நாற்புறமும் திருக்குளம் அகழ்போலுள்ளது. கோயிலுக்குப் போகமட்டும் ஒரு வழியுற்றது. இறைவன் சிறிது சாய்ந்துள்ள படியால் கோணப்பிரான் என்று 5170ஆம் பாசுரம் கூறும். முருக நாயனார் நாடோறும் பூத்தொடுத்து இறைவனுக் கலங்கரித்துத் தொண்டாடற்றியதை 2468ஆம் பாசுரம் கூறும். சுந்தரர் செங்கல்லைத் தலையணையாக வைத்து உறங்கும்போது அதைப் பொன்னாக்கி அவருக்களித்த அற்புதத் தலம். அப்பர் சுவாமிகள் முத்தி பெற்ற தலம். அவருக்குச் சித்திரைச் சதயத்தை முடிவாகக் கொண்ட 10நாள் விழா நடக்கிறது. சூலைநோய் நீங்கியது முதல் முத்தி பெற்றது வரையுள்ள வரலாற்றுப் பகுதிகள் காட்டப்பெறுகின்றன. ஆனால் முத்தி பெறுகிற நிகழ்ச்சி பெரியபுராணத்திற்கு மாறான முறையிலுள்ளது. திருவதிகை முதலிய எல்லாத் தலங்களிலும் சோதியிற் கலத்தலே நிகழும். இத்தலத்தில் கோணப் பிரானைச் சந்தனத்தால் சிங்கமுகம்போல் அலங்கரித்து அப்பர் சுவாமிகள் எல்லா விளக்குகளையும் தீவத்திகளையும் அனைத்துவிட்டு ஒரே இருள் மயத்தில் சிங்கப்பிரானிடம் சேர்கிறார்கள். சேக்கிழார் ‘அண்ணலார் சேவடிக்கீழ் ஆண்டஅர சமர்ந்திருந்தார்” என்கிறார், சிங்கம் விழுங்கிற்றென்று கூறவில்லை. சைவப்பற்றுடைய பெரியார்கள் இத்தலத்தில் நடைபெறும் முறையை மாற்ற முயன்று வெற்றி பெறுதற்கு அப்பரே துணைசெய்வாராக. 12-22, 2714-24, (ச2); 4314-23, 4676-85, 5167-70, 5685-94, 7215-24, 2714-24 (32); 4314-23, 4676-85, 5167-70, 5685-94, 7215-24 (915); 7564-74 (சு) ஆ 8 பதிகம்.
204. புகலூர் வர்த்தமானிச்சரம் இது மேலே கூறிய புகலூர்க்கோயிலிற் கோணப்பிரான் சந்நிதியின் வடக்குப் பக்கத்திலுள்ளது. முருக நாயனார் திருவுருவம் இங்குள்ளது. 2464-74 (GF).
205. புத்தூர் (திருப்பத்தூர்) d காரைக்குடி 15 மைல். ஸ்டேஷனிலிருந்து 3 மைல் டவுன் பஸ் ஏறிப் போய், அங்கிருந்து 12 மைல் பஸ்மூலம் போகலாம். திருப்பத்தூர் பெரிய பஸ் ஜங்ஷன்.
312

பல திசைகளிலும் பஸ்வண்டிகள் போகும். கல்வெட்டுக்கள் 1908 (89-140) 1924 (237) 1936 (163-191), வைரவர் சந்நிதி சிறப்புடைத்து. 272-82 (ச); 6998-7007 (அ);
206. புள்ளமங்கை ஆலந்துறை (பசுபதி கோயில்) aபசுபதி கோயில் / மைல். 163-73 (ச).
207 புள்ளிருக்குவேளூர் (வைத்தீஸ்வரன் கோயில்) a வைத்தீர்வரன் கோயில் 1 மைல். கல்வெட்டு 1918 (419-423). புள் (ஜடாயு, சம்பாதி) இருக்கு (ரிக்வேதம்) வேள் (முருகன்) பூசித்த தலம். இறைவன் வைத்திய நாதன் 'தீராநோய் தீர்த்தருள வல்லான்” (6791ம் பாசுரம்) அம்பிகை தையல்நாயகியின் அருட் பார்வையிலிருப்பது சித்தாமிர தீர்த்தம். சிறப்பெல்லாம் செல்வ முத்துக்குமாரசுவாமியெனும் முருகனுக்கே. கிருத்திகைதோறும் பகலில் மகாபிஷேகமும் இரவில் உத்ஸவமும் செல்வமுத்தையாவிற்குண்டு. அடியார்கள் ஆயிரக் கணக்கில் தரிசித்துச் சந்தனக் குழம்பு பெறுவர். நாடோறும் அர்த்தஜாம பூஜையில் முதலிற் செல்ல முத்தையாவிற்குப் பால் நிவேதனம், நேத்திரப் பிடிசந்தன அர்ப்பணம் செய்தபிறகே, மற்ற மூர்த்திகட்கு வழிபாடு. பஞ்சமூர்த்திகள் திருவீதியுலாவில் வலத்தில் வைத்தியநாதர், நடுவில் செல்வமுத்துக் குமாரசுவாமி, இடத்தில் தையல்நாயகி (சோமஸ்கந்த அமைப்பு வரிசையில்) எழுந்தருளுவர். அங்காரக தோஷம் போக்கும் தலம். செவ்வாய்க் கிழமை தோறும் மேஷ வாகனத்தில் அங்காரகன் பிராகாரத்தில் வலம் வருவதுண்டு. முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ் குமரகுருபர சுவாமிகள் அருளியது. தலபுராணம் வடுகநாத தேசகர் இயற்றியது. 1928-38 (ச); 6014-22, 6784-93 (அ2).
208. புறம்பயம் (திருப்புறம்பியம்) a கும்பகோணம் 6 மைல். கல்வெட்டுக்கள் 1897 (69-80) 1927 (323-57) 1932 (146-161) தெஇக (18-30). இங்கு சங்ககாலத்தில் பாண்டியனுக்கும் சோழனுக்கும் போர் நடந்தது. கொச்செங்கட் சோழன் வெற்றி பெற்றுத் தென்னவனாய் உலகாண்டான். (7627ம் பாசுரம்) திருமருகல் வரலாற்றினைப் போல் இங்கும் ஒரு வணிகப் பெண் திருமணத்தை மெய்ப்பிக்க இறைவன் சாகூதி சொல்லியதால் தலத்து இறைவனுக்குச் சாகூழிநாதேசுவரர் என்று பெயர். 178696(于);6370—79(g);7575—84(5)
209. புறவார் பனங்காட்டுர் (பனையபுரம்) a முண்டியம் பாக்கம் 1 மைல், 2037-47 (ச).
210. புனவாயில் (திருப்புனவாசல்) g அறந்தாங்கி 29 மைல். அறந்தாங்கியிலிருந்து 22 மைலிலுள்ள மீமிசல் போய், 7 மைல் மாட்டுவண்டியில் சென்றால்இத்தலம் சேரலாம். ஆடானை சென்று 12 மைல் போனாலும் இத்தலம் சேரலாம். கல்வெட்டு 1902 (612-616) தெஇக 8 (209-213) கடற்கரைத் தலம். மூலஸ்தான லிங்கம் மிகப்பெரிது. ஆவுடையாரைச் சுற்றியுடுத்த 30 முழம் நீளமுள்ள பரிவட்டம் தேவை. தஞ்சைப் பெரிய கோயில் பிருஹதேசுவரர் நினைவு வரும். 2910-20 (ச), 7732-41 (சு).
இந்துக்கலைக்களஞ்சியம்

Page 343
21. புன்கூர் (திருப்புன்கூர்) a வைத்தீஸ்வரன் கோயில் 2 மைல். திருநாளைப் போவாருக்குத் (திருக்கோயிலுள் ஆதி திராவிட மக்கள் சட்டப்படி உட்செல்லும் உரிமை பெறாத அக்காலத்துத் தேர்நிலையிலிருந்தே இறைவன் காட்சியளிக்கத் திருநந்தி தேவரை விலகியிருக்கும்படி தலம். திருநாளைப் போவார் திருப்பணியாகக் கோயிலின் மேற்கில் நந்தன் குளம் உளது. ஏயர்கோன் கலிக்காம நாயனாரிடத்தில் 12 வேலி நிலங்கொண்டு மழை பெய்வித்ததை 7785ஆம் பாசுரம் கூறும். 283-93) (EF); 6350-59 (9); 7784-93 (Gi).
212. பூந்துருத்தி (திருப்பூந்துருத்தி) a தஞ்சாவூர் 8 மைல். கல்வெட்டு 1894 (166) 1931 (75-120) தெஇக 5 (459). சப்தஸ்தான ஸ்தலங்களுள் ஒன்று அப்பர் சுவாமிகள் இங்கு திருமடச் சிதைவு இன்றுமுளது. பாண்டியநாட்டில் சைவம் பரப்பித் திரும்பும் வழியில் சம்பந்தர் அப்பரைக் காண இத்தலத்திற்கருகில் வரும்போது, ஒருவரும் காணாதபடி, முத்துச்சிவிகையைத் தாங்கும் தொண்டர்களோடு அப்பர் உள்நுழைந்து தாங்கி வந்தனர். இதையறிந்தவுடன் சம்பந்தர் கீழ் இழிந்து ஒருவரை ஒருவர் வணங்கி அளவளாவினர். 5001-10, 5544-53, 6671
80 (அ3).
213. பூவணம் (திருப்பூவணம்) a திருப்புவனம் % மைல். வைகையாற்றங் கரையிலிலுள்ளது. தமிழ் வேந்தர் மூவரும் வழிபட்ட தலம். 690-700, 3009-19 (ச2); 6422-32 (அ); 732885 (3).
214. பூவனூர் ர் நீடாமங்கலம் 4 மைல். 5800-90 (அ).
215. பெண்ணாகடம் (பெண்ணாகடம்) a பெண்ணாடம் 1 மைல். தலப்பெயர் சுருக்கமாகக் கடந்தை என்றும் ஆலயப் பெயர் மூதூங்கானை மாடம் என்றும் வழங்கும். கலிக்கம்ப நாயனார் தலம். அப்பர் சுவாமிகள் தம்மைச் சிவன் சொத்து என்று உலகம் அறியச் சூல முத்திரையும் இடபமுத்திரையும் தமது தூல உடலிற் பொறிக்கும் படி வேண்டி அவ்வாறே பெற்ற அற்புதத் தலம். அச்சுத களப்பாளர் என்ற வேளாளர், திருவெண்காட்டு முக்குள நிராடி வழிபாடு செய்து மெய்கண்டார் என்ற புதல்வரைப் பெற்ற தலம். மெய்கண்டார் சிவஞானபோதம் அருளிச் செய்து, திருக்கைலாய பரம்பரையைத் தமிழ் நாட்டில் தாபித்த சந்தான முதற்குரவர். 634-44 (ச), 5186-88 (அ).
216. பெரும்புலியூர் தஞ்சாவூர் 11 மைல். திருவையாற்றிலிருந்து 2 மைல். 2189-99 (ச).
217. பெருவேளூர் (காட்டுர் ஐயம்பேட்டை) கொரடாச்சேரி 8% மைல். 3481-91 (ச); 4736-45 (அ).
218. பேணுபெருந்துறை (திருப்பந்துறை) a கும்பகோணம் 6 மைல், பஸ்வழி 448-58 (ச).
இந்துக் கலைக்களஞ்சியம்

219. பேரெயில் (ஒகைப்பேரையூர்) j குழிக்கரை 3 மைல். 5380-90 (அ). அப்பர் சுவாமிகட்கு இறைவன் கட்டமுது கொடுத்த அற்புதத்தலம். 2943-53 (ச)
220. பைஞ்ஞலி a பிக்ஷாண்டார் கோயில் 3 மைல். அப்பர்
சுவாமிகட்கு இறைவன் கட்டமுது கொடுத்த அற்புதத்தலம். 2943-53 (ச), 5634-43 (அ); 7585-95 (சு) ஆ 3 பதிகம்.
221. மங்கலக்குடி (சூரியனார் கோயில்) a ஆடுதுறை 1% மைல். சூரியன், திருமால், பிரமன், காளி, அகத்திய முனி பூசித்த தலம். (4960ம் பாசுரம்) 1569-79 (ச); 5958-67 (அ).
222 மணஞ்சேரி (கீழைத் திருமணஞ் சேரி) a குத்தாலம் 3 மைல். 1634-44 (ச) 6082-91 (அ).
223. மண்ணிப்படிக்கரை (இலுப்பப்பட்டு) a வைதீஸ்வரன் கோயில் 9 மைல். 7443-52 (சு).
224. மயிலாடுதுறை (மாயவரம்) மாயவரம் டவுன் 14 மைல். மாயவரம் ஜங்ஷனிலிருந்தும் பஸ்மூலம் போகலாம். உமையம்மை மயில் உருவில் இறைவனை வழிபட்ட தலம். காவிரியாற்றின் தென்கரையில் உள்ளது. ஐப்பசி மாதம் கடைசி நாளன்று கடைமுழுக்கு, 404-414. 3548-58 (ச2); 5614-24 (அ).
225. மயிலை (மயிலாப்பூர்) a சென்னபட்டணம் எழும்பூர் 4 மைல். (ரூ, ள, வ. எ) மதராஸ் சென்ட்ரல் ஸ்டேஷன் 4 மைல். கல்வெட்டு 215-223/1923. உமாதேவியார் மயிலுருவில் சிவபெருமானைப் பூசித்துத் தமது சுயரூபம் பெற்று இறைவனைத் திருமணம் செய்துகொண்ட தலம். கோயிற் பெயர் கபாலீச்சரம். “மடமயிலைகட்கு இட்டம் கொண்டான் கபாலீச்சரம் அமர்ந்தான்” என்று 1971ஆம் பாசுரம் கூறும். பழைய காலத்தில் திருக்கோயில் கடற்கரை யோரத்தில் (இப்பொழுது ளய எனும் கிறிஸ்தவர்கள் கோயிலுள்ள இடத்திலிருந்தது கி.பி 16ஆம் நூற்றாண்டிற் போர்த்துக்கேசியர்கள் கைப்பற்றிக் கோயிலைத் தகர்த்து அங்கு ஒரு கோட்டை கட்டினர். அக் கோட்டையிலிருந்த கொடி மரச்சிதைவு இன்றும் காணப்படுகிறது. மேலே குறித்துள்ள கல்வெட்டறிக்கையிற் பார்த்தால், இப்பழைய கோயிற் கற்கள் இப்பொழுது கிறிஸ்தவர்கள் கோயிலின் பக்கத்திலுள்ள பிஷப் உறைவிடத்திலுள்ளன என்பது விளங்கும். பழைய கோயில் கடற்கரையில் (இப்பொது திருச்செந்தூர்க் கோயிலுள்ளது போல மதிற் சுவர்களில் அலைவீச இருந்தது. “உர்திரை வேலை உலாவும் உயர்மயிலை' என்று 1974ஆம் பாசுரத்திலுள்ள குறிப்பால் அறியப்படும். இத்தலத்திலிருந்த சிவநேசர் எனும் வணிகர் தமது ஒரே புதல்வியாகிய பூம்பாவையைத் திருஞான சம்பந்தருக்கே அர்ப்பணம் செய்வதாக உறுதிகொண்டு வளர்த்து வந்தனர். பூம்பாவை பாம்புகடித் திறந்தாள். ஈமக்கடன் முடித்து என்புகளைக் குடத்தில் சேமித்துக் கன்னி மாடத்தில் பூசித்து வந்தார். சம்பந்தர் திருவொற்றியூரிலிருக்கும் போது, அங்கிருந்த மயிலாப்பூர் வரையில் (10 மைல்) "துன்னுநீள் நடைக்காவணம் துகில் விதானித்து', "மகரதோரணம் வண்குலைக் கமுகொடு கதலி, நிகரில் பல்கொடித் தாமங்கள் அணிபெற நிரைத்து’ ஞானசம்பந்தப் பெருமானை மயிலைக்கு வரவேற்றார்.
313

Page 344
மயிலையில் தரிசனம் முடிந்தவுடன் சிவநேசர் பூம்பாவை வரலாற்றைச் சொல்லக் கேட்டு, என்புக்குடத்தை இறைவன் சந்நிதிக் கெதிரில் கோபுர வாயிலுக்கு வெளியில் வைக்கச் சொல்லி, “மட்டிட்ட” என்று தொடங்கும் பதிகம் பாடி, ஒவ்வொரு பாசுரத்தின் இறுதியிலும் “போதியோ பூம்பாவாய்” என்று உருக்கத்தோடு சம்பந்தர் செப்பினார். “போதியோ என்னும் அன்னமெய்த் திருவாக்கெனும் அமுதம் அவ்வங்கம் துன்னவந்து வந்துருவமாய்த் தொக்கதக் குடத்துள்” “உரிஞ்சாய' எனத் தொடங்கும் 10ஆம் பாசுரமாகிய சமணப்ாட்டில், என்புக் குடத்தை உடைத்துக் கொண்டு பூம்பாவை உயிரோடு வெளிவந்தனள், என்பு (அங்கம்) பெண்ணுருவான படியால் பூம்பாவைக்கு அங்கம் பூம்பாவை என்பது பெயராயிற்று. அங்கம்பூம்பாவையின் பேரழைகச் சேக்கிழார் 15 பாடல்களில் வருணிக்கிறார். சிவநேசர் அங்கம் பூவையைத் திருமணம் செய்து கொள்ளுமாறு சம்பந்தரை வேண்டுதலும் “நீர் பெற்ற பெண்விடத்தினால் வீந்த பின்னையான் கற்றைவார் சடையார் கருணை காண்வர உற்பவிப்பித்தலால் உரை தகாதென” மறுமொழி கூறினார் காழிவேந்தர். இத்தலப் பதிகத்தில் பாசுரந்தோறும் ஒவ்வொரு விழா குறிக்கப்பெறுகிறது. பங்குனிப் பெருவிழாவில் 3ஆம் நாள் காலை வெள்ளி அதிகார நந்திசேவை, 5ஆம் நாள் இரவு விருஷபோத்ஸவம், 8ம் நாள் மாலை வெள்ளி விமானத்தில் அறுபத்துமூன்று நாயன்மார்களோடு, திவ்விய சேவை, எலும்பைப் பெண்ணாக்கும் ஐதீகம், 10ம் நாள் புன்னை மரத்தடியில் உமையம்மை மயிலுருவாகப் பூசித்துச் சுயரூபம் பெற்று இறைவனை திருமணம் புரிதல் முதலியன மிகப் பிரபலமாக நெைபறும். வாயிலார் நாயனார் மெளன விரதம் பூண்டு அகப்பூசை செய்து முத்தி பெற்ற தலம். மூலஸ்தான முருகப்பிரான் ஆறுமுகங்களோடு விளங்குகிறான். திருக் கொடியேற்றமாகி, ஸ்கந்தர் ஷஷ்டி விழா 6 நாள் நடக்கிறது. 6ம் நாள் மாலை சூரசம்ஹாரம், அடுத்த நாள் திருக்கலியாணம். உலகப் பொதுமறையாகிய திருக்குறள் ஆசிரியர் திருவள்ளுவ நாயனார் வாழ்ந்த தலம். அவர் திருக்கோயில் கபாலிச்சரத்தின் வடக்கில் % மைல் தொலைவிலுள்ளது. 1971-81 (ச)
226. மயேந்திரப்பள்ளி (கோயிலடிப்பாளையம்) a கொள்ளிடம் 7 மைல். 3129-39, 3967-77, விஷம் தீண்டிய செட்டிப் பிள்ளையை உயிர்ப்பித்து, அவனுடன் வந்த பெண்ணை அவனுக்கத்
227. மருகல் (திருமருகல்) g நன்னிலம் 7 மைல். விஷம் தீண்டிய செட்டிப் பிள்ளையை உயிர்ப்பித்து, அவனுடன் வந்த பெண்ணை அவனுக்கத் திருஞானசம்பந்தர் திருமணம் செய்வித்த அற்புதத் தலம். 55-64, 1655-65 (ச2); 6092-6101 (9).
228. மழபாடி (திருமழுவாடி) d புள்ளம்பாடி 10 மைல். திருவையாற்றிலிருந்து 4 மைல். (கொள்ளிட நதியைக் கடக்க வேண்டும்). தெஇக 3 (79) 5 (627-660). திருமால் வழிபட்டதை
314

3101-ம் பாசுரம் கூறும். பங்குனி உத்திரத்தில் திருநந்தி தேவர் திக்கலியாணத்தைத் திருவையாற்றிலிருந்து ஐயாற்றப்பர் எழுந்தருளி வந்து நடத்தி வைக்கிறார். திருநந்தி தேவரும் அவர் தேவியாரும் வெட்டிவேர்ச் சிவிகையின் முன்செல்லப் பின்னணியில் ஐயாற்றுப்பரும் அறம் வளர்த்த நாயகியும் அழகிய கண்ணாடிச் சிவிகையின் எழிந்தருளி எழுர் வலம் வருவதுதான் பிரபலமான சப்தஸ்தான மஹோத்ஸவம். 1558-68, 3096-3106, 3309-19, (ச3); 6634-50 (அ2); 7463-77 (சு) ஆ 6 பதிகம்.
229. மறைக்காடு (வேதாரண்யம்) வேதராண்யம் 2 மைல். கல்வெட்டு 1904 (415-503), சப்தஸ்விடங்களுள் ஒன்று. புவனி விடங்கர், ஹம்ஸபாத நடனம், வேதங்கள் பூசித்து மூடிவிட்டுப் போயிருந்த கதவுகளைப் பதிகம் பாடி அப்பர் திறக்கவும் சம்பந்தர் மூடவும் செய்த அற்புதத் தலம். தமிழ் மொழியுள்ள தேவாரம் வடமொழி வேதத்திற்குத் தாழ்ந்ததல்ல என்பதைக் கட்புலனாக உலகுக்கு அறிவித்தது இவ்வற்புதம். பாண்டிய நாட்டுக்குக் கெழுந்தருளும்படி, சம்பந்தருக்கு அழைப்பு இத்தலத்திலிருக்கும் போது வந்தது. கோயிலில் உள்ள விளக்கு ஒன்றைத் தனது மூக்கினால் தூண்டிய எலி, அப்புண்ணியத்தின் பயனாக மறுபிறவியில் மாவலி சக்கரவர்த்தியான வரலாற்றை 4641ம் பாசுரங் கூறும். மேலைக் கோபுரவாயிலெதிரிலுள்ள விநாயகர் சந்நிதி பிரபலம். 228-38, 1862-72, 2453-63, 3614-23 (ச4); 4482-4501, 5312-31, 6475-84 (95); 7943-52 (Gi). 9, 10 பதிகம்.
230. மாகறல் (மாகறல்) b காஞ்சிபுரம் 10 மைல். பஸ்வழி. 3570—80(于)。
231 மாணிகுழி (திருமாணி குழி) a கடலூர் என்-டி. 3% மைல். கல்வெட்டுக்கள் 1902 (148-170) தெஇக 3 (85) 7 (772797) போகும் வழியில் திருவயிந்திரபுரம் என்ற விஷ்ணுஸ்தலம் உள்ளது. திருமால் வாமனாவதாரத்தில் (மாணி) பூசித்ததை 3627ஆம் பாசுரம் கூறும். 3624-34 (ச).
232 மாந்துறை (வடகரை மாந்துறை) d லால்குடி 2 மைல். 2659—69(守)
233. மாற்பேறு (திருமால்பூர்) b திருமால்பூர் 3 மைல். திருமால் சக்ராயுதம் வேண்டிச் சிவனை வரிபட்டுப் பெற்றதை 5820ம் பாசுரம் கூறும் 591-600, 1228-37 (சு2) 5184-85, 582037, 7038-47, (அ4) ஆ 6 பதிகம்.
234. மீயச்சூர் g பேரளம் % மைல். தேவியார் திருவுருவம் அமர்ந்ததிருக்கோலமாய் மிகஅழகு நிரம்பியது. 2135-45 (ச).
235. மீயச்சூர் இளங்கோயில் (இது 234 மீயச்சூர் கோயிலின் பிரகாரத்திலுள்ளது.) இளங்கோயில் என்பதை பாலாலயம் என்று வடமொரியிற் கூறுவர். கோயில் திருப்பணி
இந்துக்கலைக்களஞ்சியம்

Page 345
நடைபெறுங் காலத்தில் மூலஸ்தான மூர்த்தியைக் கலாகர்ஷணம் செய்து ஒருபாலாலயத்தில் வேறொரு மூர்த்தியில் ஆவாஹனம் செய்து பூசிப்பது ஆகமமுறை. அப்பர் சுவாமிகள் இத்தலம் சென்ற காலத்தில் திருப்பணி நடந்தது போலும், அவர் திருவாக்கில் மியச்சூருக்குப் பதிகமிராமல் இளங்கோயிலுக்கே பதிகம் இருப்பதும், இப்பதிகத்திலும் “தோற்றும் கோயிலும் தோன்றிய கோயிலும்” என்ற குறிப்பிருப்பதும், சம்பந்தர் திருவாக்கில் இளங்கோயிலுக்கில்லா திருப்பதும் மீயச்சூருக்கே பதிகமிருப்பதும், மேற்கூறிய உண்மையை வலியுறுத்தும். 533241 (அ).
236. முண்டீச்சரம் (கிராமம்) d திருவெண்ணெய் நல்லூர் ரோட் % மைல், பஸ்வழி 7086-94 (அ).
237 முதுகுன்றம் (விருத்தாசலம்) d விருத்தாசலம் டவுன் ரோட் ஹால்ட் % மைல். கோயில் சில அடிகளே உயரமுள்ள ஒரு சிறு கற்பாறையில் மேலுள்ளது. இதற்கே விருதாசலம் அல்லது பழமலை என்று பெயர். ஸ்தலவிநாயகர் (ஆழத்துப் பிள்ளையார்) பல படிகள் இறங்கிச் சென்று சேரும் பள்ளமான இடத்திலுள்ளார். இங்கிருந்த தண்ணிர் வெளியே செல்ல வழியிருப்பதால், பழமலையின் மேலுள்ளது. இதற்கே விருத்தாசலம் அல்லது பழமலையின் உயரத்தை ஊகிக்லாம். கோயிலுக்கெதிரில் மணிமுத்தாறு. சுந்தரர் இத்தலத்திற் பதிகம்பாடி 12000 பொன்பெற்று இந்த ஆற்றிலிட்டு ஆரூரிற் குளத்தில் எடுத்தார். காசியில் இறந்தால் முத்தி என்பது போல் இத்தலத்தில் இறந்தால் சாரூபபதமுத்தி கிடைக்கும் என்று கந்தபுராணம் கூறுகின்றது. (வழி நடைப்படலம் காண்க). திருமால், பிரமன், இந்திரன், சூரியன் பூசித்ததை 7478ஆம் பாசுரம் கூறும். துறைமங்கலம் சிவபிரகாச சுவாமிகள் முதலிய பல பெயர்கள் இத்தலத்திற் பெரிதும் ஈடுபட்டவர்கள். மாசிமகத்தைத் தீர்த்தமாகக் கொண்ட 10 நாள் விழாவில் 6ஆம் நாள் பகலில் ரிஷபோத்ஸவம் பிரபலம். காசியிலும் வீசம் பெரியதால் விருத்தகாசி என இத்தலம் கூறப்படுவதுண்டு. 19-129, 570-79, 1003-13, 1405-15, 215766, 3159-69, 3864-71 (57); 6927-33 (9); 7473-82, 7659– 69, 7869-78 (சு3) ஆஉ11 பதிகம். கல்வெட்டுக்கள் 1900 (132140) 1918 (39-92) 1935 (94-102) தெஇக 7 (145-153) 12 (18, 121, 123, 124, 131, 144, 167, 192, 227, 239, 260, 263)
238. முருகன் பூண்டி (திருமுருகன் பூண்டி) q திருப்பூர் 5 மைல். பஸ்வழி கல்வெட்டுக்கள் 1893 (571-579) 1915 சேரமான் பெருமாள் நாயனார் சுந்தரமூர்த்தி சுவாமிகளக்குக் கொடுத்த பெரும்பொருளைச் சிவபெருமான் வடுகவேடுவர் உருவில் பூதகணங்களை விட்டுக் கொள்ளையடிக்கச் செய்து, பிறகு சுந்தரர் பதிகத்தைப் பெற்று அப்பொருளைத் திரும்பக் கொடுத்த அற்புதம் நிகழ்ந்ததலம். “பொருவிடையார் நம்பிக்குத் தாமே பொன் கொடுப்பதலால் ஒருவர் கொடுப்பக் கொள்ள ஒண்ணாமைக்கது வாங்கிப் பெருகருளால் தாம் கொடுக்கப் பெறுவதற்கோ” என்று இதனைச் சேக்கிழார் நயம்பெறக் கூறுகிறார். 7722-31 (சு).
இந்துக்கலைக்களஞ்சியம்

239 முல்லைவாயில் (தென்) a சீகாழி 8 மைல். கடற்கரைத்தலம் 2421-31 (ச).
240. முல்லைவாயில் (வட) q அம்பந்தூர் 3 மைல். கல்வெட்டுக்கள் 1904 (662-684) தெஇக. 3 (141, 196) பழங்காலத்தில் இத்தலம் முல்லைக்காடாயிருந்தது. தொண்டை நாட்டு மன்னன் ஒருவன் வேட்டையாடி வரும்போது, அவனுடைய யானையின் காலில் முல்லைக்கொடி சிக்கிக் கொள்ளவே, யானை நின்றுவிட்டது. மன்னன் கிழே இறங்கி முல்லைக்கொடியை வெட்டும்போது, அங்கிருந்து இரத்தம் வெளிப்பட்டது. அகழ்ந்து பார்க்கும் போது, ஒரு சிவலிங்கம் காட்சியளித்து வெட்டுண்ட இடமும் தெரிந்தது. உடனே மன்னன் காட்டையளித்துக் கோயிலமைத்தான். இப்போதுள்ள மூலஸ்தான மூர்த்தியின் சிரசில் வெட்டுக்குறி இன்றுமுளது. இம்மூர்த்திக்கு வெந்நீரிலே அபிஷேகம். இவ்வரலாற்றை 7931ஆம் பாசுரம் கூறும். தலத்திறைவன் பெயர் மாசிலாமணி என்பதை 7926ஆம் பாசுரம் கூறும். சந்நிதியில் இரண்டு பருத்த எருக்கமரத்தூண்கள் உண்டு. பிரஹ்ம ஸ9த்திரங்கட்குச் சிவாத்துவித முறையில் பாஷ்யம் இயற்றிய நீலகண்ட சிவாச்சாரியார் கற்சிலையுருவம் இக்கோயிலில் வழிபடப் பெறுகின்றது. இத்தலத் தருகில் பெரிய மணல் வெளியுண்டு. பாலாற்றின் கிளையொன்று பழைய காலத்தில் இவ்வழிச் சென்று வறண்டமென்பது 7926ஆம் பாசுரத்திலறியப்படும். கண்பார்வை இழந்த பிறகு சுந்தரர் முதன் முதலாக வணங்கிய தலம் இஃதேயாம். “படுதுயர் களையாய் பாசுபதாபரஞ்சுடரே" என்று ஒவ்வொரு பாசுரத்திலும் விண்ணப்பிக்கிறார். 7922-32 (சு).
241. முக்கீச்சரம் (உறையூர்) திருச்சிக் கோட்டை 1 மைல். சோழ மன்னன் ஏறிச் செல்லும் யானையின் தலையை ஒரு கோழி கொத்தியதால் அம்மன்னன் இவ்விடத்திலே தலைநகரமைத்துக் “கோழி’ என்றே பெயரிட்டான். அரசன் உறைவிடம் உறையூராயிற்று. சங்ககாலத்திய வரலாற்றுத் தொடர்புடைய பழம்பதி. 2769-79 (ச).
242 வக்கரை (திருவக்கரை) a மயிலம் 12 மைல். மயிலம் தலத்திற்குப் போய் அங்கிருந்து புதுச்சேரி செல்லும் வழியில் 4மைல் போனால் தலத்தையடையலாம் . வக்கரையிலுள்ள கருங்கற்கள் மரங்களைப் போல் தோன்றும். கல்வெட்டுக்கள் 1904 (1904 (166-208) தெஇக 12 (246). மூலஸ்தான லிங்கம் மூன்று முகமுடைய. நடராஜர் வக்ரதாண்டவமூர்த்தி. 3438-48 (GF).
243. வடுகூர் C (ஆண்டார்கோயில்) சின்னபாபு சமுத்திரம் 2 மைல். 927-47 (ச).
244. வலஞ்சுலி (திருவலஞ்சுலி) a சுவாமிமலை % மைல். கல்வெட்டுக்கள் 1902-(618-634) 1928 (192-213) தெஇக 8(215238) 12 (223, 224) வெள்ளைப் பிள்ளையார் சந்நிதி மிகப்
315

Page 346
பிரபலம்1480-90, 2616-26, 3934-44 (ச3); 5891-5900, 696676 (அ3); ஆ 6 பதிகம்.
245 வலம்புரம் (பெரும்பள்ளம்) a சீகாழி 8% மைல். 39013911 (ச), 4686-95, 6824-33 (அ2);7953-63 (சு) ஆ4 பதிகம்.
246. வலிதாயம் (பாடி) q வில்லிவாக்கம். 2 மைல், 23-33 (ச).
247. வலிவலம் g மாவூர் ரோட் 5% மைல். கட்டுமலைக்கோயில், சுற்றிலும் அகழ் 537-47, 1326-36 (ச2); 6722-31 ( 99); 7901-7911 (Gi). ஆ, 4 பதிகம்.
248. வல்லம் (திருவலம்) திருவலம் 1% மைல். கல்வெட்டுக்கள் 1889 (75-82) 1890 (1-18) 1894 (190) 1897 (298-304) 1898 (146, 150) 1921 (208-240) தெஇக 3 (42-63) 4 (304-31, 323-341) 5 (489) 7 (82, 83) சி240 மாணிகுழி (திருமாணி குழி) a கடலூர் என்-டி. 3% மைல். நிவா நதிக்கரையிலுள்ளது. (இத்தலத்திலிருந்து 8 மைல் சென்றால் வள்ளிமலை எனும் முருகன் தலம் உளது. திணைப்புனம், நீராடிய சுனை முதலியன உள்ளன. 1218-27 (ச); (வன்பார்த்தான்
பனங்காட்டுர் 192 பனங்காட்டுர்).
249. வன்னியூர் gபூந்தோட்டம் 7 மைல், வன்னி (=அக்கினி) பூசித்த தலம் 5484-92 (அ)
250, வாஞ்சியம் (பூரீ வாஞ்சியம்) g நன்னிலம் 6 மைல். திருமால் பூரீ எனும் இலக்குமியை வாஞ்சித்துச் சிவபூசை செய்து பெற்றமையால் பூரீ வாஞ்சியம் ஆயிற்று. நாஞ்சிக்கு நிகர் எனப்படும் தலங்களுள் ஒன்று. 1536-46 (ச), 5901-07 (அ); 7995-8004 (சு), ஆ, 3 பதிகம்.
251 வாட்போக்கி (ரத்னகிரி) குழித்தலை 5மைல். உயர்ந்த மலை, கடல்மட்டத்தின் மேல் 1178 அடி உயரமுள்ளது. (952 படிகள்). காலையில் 61 கடம்பந்துறை, உச்சியில் இத்தலம், மாலையில் 43 ஈங்கோய்மலை ஆகிய மூன்றையும் கார்த்திகை சோமவாரங்களில் இந்நாட்டு மக்கள் தரிசிப்பதுண்டு. 6072-81 (அ).
252 வாய்மூர் g திருநெல்லிக்காவல் 8 மைல். அப்பருக்கு வருமாறு இறைவன் கட்டளையிட, அவர் சென்று தரிசித்ததை 5727, 5728ம் பாசுரங்கள் கூறும். சப்தவிடங்களுள், இங்கு கமல நடனம் புரியும் நீலவிடங்கர் உள்ளார். 2670-80 (ச), 5727-36, 7008-17 (அ2).
253. வாழ்கொளிப்புத்தூர் (திருவாளப்புத்தூர்) a வைத்தீஸ்வரன் கோயில் 5 மைல். வாள் ஒளிப் புற்றுார், வாள் ஒளிக்கப்பட்ட புற்று உள்ளஊர் என்றும் கூறப்படுகிறது. 42636 2486-96 (ச2); 7805-16 (சு), ஆ 3 பதிகம்
316

254. வான்மியூர் (திருவாமூர்) a சைதாப்பேட்டை 4 மைல் பஸ்வழி வால்மீகிரிஷிக்குத் திருநடன தரிசனம் கொடுத்த தலம். சப்தவிடங்கக் கணக்கில் சேராத தியாகராஜஸ்தலம். மூலஸ்தான சிவலிங்கத்தைக் காராம்பசு பால் சுரந்து அபிஷேபிக்க, உருகியதால், மூர்த்தி அந்நிலையில் காட்சியளிக்கிறார். கடற்கரை 56,oth. 1502–12, 3384-93 (52); 6038-47 (9).
255. விசயமங்கை a சுந்தரப் பெருமாள் கோயில் 4 மைல். விசயன் (= அருச்சுனன்) வழிபட்டு வரம் பெற்றதை 5945ம் பாசுரம் கூறும். 2976-86 (ச), 5938-47 (அ). (விடைவாய்-274 பார்க்க).
256. வியலூர் a கும்பகோணம் 4 மைல். 130-140 (ச).
257 வுளநகர் a மாயவரம் 4 மைல். 2313-23 (ச).
258. விளமர் g திருவாரூர் 2 மைல், 3745-55 (ச).
259. விற்குடி வீரட்டம் g விற்குடி 1% மைல். சலந்தராசுரனைச் சங்கரித்த வீரட்டம் 2638-47 (ச).
260. விற்கோலம் (கூவம்) q கடம்பத்தூர் 6 மைல். சென்னையிலிருந்து நேரே கூவத்திற்குப் பஸ் போகிறது. திரிபுரமெரிக்கச் செல்லும் வழியில் இத்தலத்தில் தேரின்கூவரம் (ஏர்க்கால்) ஒடிந்தமையால், சிவபெருமான் விற்கோலமாகக் காட்சியளித்தமையால், தலப்பெயர் திரு விற்கோலம் என்றும் கூவம் என்றும் வழங்குகிறது. சம்பந்தர் 3047, 3048ஆம் பாசுரங்களிற் கூறும் கூகம் என்பது மருவி கூவம் ஆயிற்றென்பதும் பொருந்தும். மூலஸ்தான மூர்த்தி தீண்டாத் திருமேனி. கல்வெட்டுக்கள் 1009 (322-250) 1912 (30) துறைமங்கலம் சிவப்பிரகாச சுவாமிகள் இயற்றிய தலபுராணம் அருமையானது. 3042-51 (ச).
26. வீழிமிழலை (திருவிழிமிழலை) g பூந்தோட்டம் 7 மைல். கல்வெட்டுக்கள் 382-499/1908. சக்கராயுதம் பெறுதற்காகத் திருமால் நாமோறும் இத்தலத் திறைவனை 1000 தாமரை மலர்களைக் கொண்டு அருச்சித்து வர, ஒருநாள் ஒரு மலர் குறையத் தனது கண்ணேயே எடுத்து அருச்சனையை முடித்ததை 4784ஆம் பாசுரம் கூறும். திருமால் விண்ணிலிருந்து கொணர்ந்த விமானமே கோயிலாயிற்றென்பதை 4085ஆம் பாசுரம் கூறும். மூலஸ்தான இலிங்க மூர்த்தித்தியின் பின்புறம் பார்வதி பரமேசுவரர் திருமணக் கோலம் உளது. பஞ்சம் வந்தபோது, அப்பருக்கும், சம்பந்தருக்கும் (அடியார்கட்கு அமுதளிக்க) இறைவன் நாடோறும் காசுபடி கொடுத்ததை 8121ம் பாசுரம் கூறும். இக்காசுகளுள் அப்பருக்களித்த 595T59 596)LJLOT595 மாறிற்று. சம்பந்தருக்களித்த காசு வாவியுள்ளதாயிருந்தது. "இமயப் பாவை திருமுலைப்பால் தேசம் உய்ய உண்டவர் தாடம்
இந்துக் கலைக்களஞ்சியம்

Page 347
திருமா மகனார் ஆகலினால் காசு வாசியுடன் பெற்றார், கைத்தொண்டாகும் படிமையினால் வாசி இல்லாக் காசுபடி பெற்று வந்தார் வாசீகர்’ என்று சேக்கிழார் இதை நயம்படக் கூறுகிறார். சம்பந்தர் (992-1002) 'வாசி தீரவே” எனும் பதிகம் பாடிய வாசியிலாக் காசு பெற்றார். சித்திரைப் பெருவிழாவில் 6ம் நாள் காத்யாயனி கலியான உத்ஸவம் மிகப் பிரபலம். 34-44, 108118, 206-216, 371-81, 882-92, 992-1002, 1337-47, 1416-26,
2886-99, 3657-56, 3712–22, 3853-63, 3990-4000, 404656, 4076-86 (ச) ஆ 24 பதிகம்.
262. வெஞ்சமாக் கூடல் கரூர் 15 மைல். 7649-58 (சு).
263, வெண்காடு (திருவெண்காடு) a சீகாழி 7 மைல். கல்வெட்டக்கள் 1896 (10-122) 1918 (449-521) தெஇக 5 (973987) கோயிலுக்குள் சூரிய தீர்த்தம், சந்திதர தீர்த்தம், அக்கினி தீர்த்தம் எனும் முக்குளங்கள் உள்ளன. இம்முக்குள் நீராடி இறைவனை வழிபடுவோர் புத்திரப் பேறுடன் வேண்டிய வரமேல்லாம் பெறுவர் என்று 1983ஆம் பாசுரம் கூறும். இவ்வாறு வரிபட்ட அச்சுத களப்பாளர் மெய்கண்டார் எனும் சந்தான குரவரைப் பெற்றெடுத்தார். தேவேந்திரனும் ஐராவதமும் வழிபட்டதை 1984, 1988ஆம் பாசுரங்கள் கூறும் இத்தலத்தில், பஞ்ச பிரஹ்ம மூர்த்தங்களுள் தென்முகமாயுள்ள அகோரமூர்த்தி சந்நிதியும் வழிபாடும் பிரபலம். இவர் எண் தோள் முக்கண் ஈசாராகக் காட்சியளிக்கிறார். மாசிமகப் பெருவிழாவில் 5ஆம் நாளன்று இவர் திருவீதியுலா வருதல் சிறப்புடைத்து. இவர் சந்நிதிக்கருகில் சிதம்பரத்திலுள்ளது போலவே நடராஜா சபை ரஹஸ்யம் முதலியன உள்ளன. “எண்ணிலி இந்திரர் எத்தனையோ பிரமர்களும் மண்மிசை மால் பலர் மாண்டனர்” என்ற கணக்கில் இறந்தவர்கள் ஈமச்சுடலை, இக்கோயில் சந்திர தீர்த்தத்தின் அருகிலுள்ளது. கயாக்ஷேத்திரத்தில் உள்ளதுபோலவே இங்கும் அகூடிய வடம் எனும் அழியாத ஆலமரமும் உளது. இங்கு முக்குள நீராடிப் பலர் தென்புலத்தார் வழிபாடும் செய்கின்றனர். திருவெண்காடர் எனப்பெயரிய பட்டினத்தடிகள் வரலாற்றுத் தொடர்பும் இத்தலத்திற்குண்டு ;(2إكول) 6602-6593 ,26-5716 ;(3-g) 2954-64 ,2124-34 و92-1982 7276-85 (சு) ஆ 6 பதிகங்கள்.
264. வெண்டுறை (திருவண்டுதுறை) k மன்னார்குடி 6 மைல். 3449-59 (ச).
265, வெண்ணியூர் (கோயில் வெண்ணி) j கோயில் வெண்ணி % மைல். 1612-22 (ச); 5391-5401, 6834-43 (அ2).
266. வெண்ணெய்நல்லூர் (திருவெண்ணெய் நல்லூர்) d திருவெண்ணெய் நல்லூர் ரோட் 4 மைல். கல்வெட்டுக்கள் 1902 (309-324) 1902 (309-324) 1921 (420-512) தெஇக 7 (938953) 12 (140, 150, 162, 177, 189, 193-95, 206, 229, 256, 264)
இந்துக்கலைக்களஞ்சியம்

உமாதேவியார் அருள் பெற்றமையால் அருட்டுறை ஆயிற்று. அப்பர் திருவாக்கில் “பெண்ணை அருட்டுறை” என்று 6949ஆம் பாசுரம் கூறுதல் காண்க. சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருமணத்தைத் தடுத்து ஆவணப் பழஒலை காட்டி ஆட்கொண்ட அற்புதத்தலம். மெய்கண்டார் தமது நல்லம்மானால் வளர்க்கப்பெற்றுச் சிவஞான போதம் அருளிச் செய்ததும். சடையப்ப வள்ளலால் ஆதரிக்கப் பெற்று, இராமாயணத்தைக் கவிச்சக்ரவர்த்தி கம்பர் பாடியதும் இத்தலத்தில் நிகழ்ந்தவை. விருத்தவேதியனாக வந்த இறைவன் சுந்தரர் வழக்கை வென்ற இடம், வழக்கு வென்ற திருவம்பலம் என்று கல்வெட்டிற் குறிக்கப்பட்டுளது. இது கோபுரவாயிலுக் கெதிரிலுள்ள 100 கால் மண்டபமாகும். 7225 - 34(ச).
267 வெண்பாக்கம் (திருவுளம்பூதூர்) () திருவள்ளூர் 7 மைல். சென்னைக்குக் குடிதண்ணிர் சேமிக்கப்பட்டிருக்கும் பூண்டி நீர்த்தேக்கத்துள் (Poondi Reservoir) இத்தலமும் கோயிலும் மூழ்கியுள்ளன. கோயிலிலிருந்த மூர்த்திகள் இத்தேக்கத்தின் கரையில் ஒரு அறையில் காட்சியளிக்கும். கண்ணிழந்த சுந்தரமூர்த்தி சுவாமிகள் இத்தலத்தில் ஊன்றுகோல் பெற்றனர். 8126 - 36(3).
268. வேட்களம் a சிதம்பரம் 1 மைல். இப்போது அண்ணாமலைப் பழ்கலைக்கழகம் இருக்கும் அண்ணாமலை நகரின் கிழக்கெல்லையிலுள்ளது. அருச்சுனன் பாசுபதாஸ்த்திரம் பெற்ற தலம். சம்பந்தர் தமது தங்குமிடத்தை இத்தலத்தில் வைத்துத் தில்லைக்குத் தரிசனம் செய்ய அவ்வப்போது சென்றனர் எனப் பெரியபுராணம் கூறும். 415-25 (ச); 5644 - 53 (அ).
269 வேட்டக்குடி h காரைக்கால் 5/2 மைல். 3503 - 13 (GF).
270 வேதிகுடி (திரு வேதிகுடி) a திட்டை 3 மைல். சப்தஸ்தான ஸ்தலங்களுள் ஒன்று. 3635 - 15 (ச); 5021 - 30 .(إك)
271 வேள்வித்குடி a குத்தாலம் 3 மைல், 3767-77 (ச); 7402 - 11,7975 84 (சு2).
272, வேற்காடு (திருவேற்காடு) Q ஆட்டி 4 மைல். மூர்க்கநாயனார் தலம். அகத்தியருக்குத் திருமணக் கோலம் காட்டியது மூலஸ்தான லிங்கத்தின் பின்புறம் உளது 612 - 22 (ச).
273. வைகன் மாடக்கோயில் (வைகல்) a ஆடுதுறை 4 மைல். கோச்செங்கட்சோழன் கட்டிய 70 கோயில்களுள் ஒன்று. 2987 — 97 (GF).
274. வைகாவூர் a சுந்தரப் பெருமான் கோயில் 5 மைல், கும்பகோணத்திலிருந்தும் 5 மைல். 3559 - 69 (ச).
317

Page 348
275. a. விடைவாய் (திருவிடைவாசல்) j கொரடாச்சேரி 3 மைல். திருமுறை கண்ட காலத்திற் கிடைக்காமல், 1918 வருடம் அரசாங்கத்து கல்வெட்டிலாகா அதிகாரிககளாற் கண்டு பிடிக்கப்பட்ட சம்பந்தர் பதிகம். இப்பதிப்பில் 3ஆம் திருமுறை முடிந்த பிறகு, 4ஆம் திருமுறை தொடங்குமுன், திருமுறைக் கணக்கில் சேராத வகையில் 4148 - 58 என்ற எண்களோடு அச்சிடப் பெற்றுள்ளது.
அஷ்ட வீரட்டத் தலங்கள் 5, 63, 68, 104, 124, 191, 259, வழுவூர் (இது வைப்புத்தலம் என்பது 6951ம் பாசுரத்தில் வைத்துள்ளதால் அறியப்படும். g மங்கா நல்லூரிலிருந்து 1 மைல்). கடவுளர் பூசித்த தலங்களுள் ஆனைமுகன் 137, இராமன் 22, 37, 38, இலக்குமி 23, 170, உமாதேவியார் 56, 107, 128, 224, 225 காளி 7, 88 திருமால் 69,127, 145,231, 233, 245,250, முருகவேள் 94, 139, 207, 217, 238 (முனிவர் முதலியோர் சிற்சில காரணங்கட்காக விலங்குகள் உருக்கொண்டு பூசித்த வரலாறுகளை ஒட்டி) விலங்குகள் பூசித்த தலங்களுள் அணில் பூசித்தது 100, ஆ (-பசு) 22, 29, 30, 76, 215, ஆனை 31, 89, 119, 215, ஈ 43, எறும்பு 48, கழுகு 80, 207, காக்கை 100, குரங்கு 99 - 102 சிலந்தி 31, 89 நாரை 167 பாம்பு 39, 96, 122, 164, 165, 198, 200 புலி 47, 54, 122, 199, 216 மயில் 224, 225 கடற்கரைத் தலங்கள் 1, 3, 38, 51, 87, 108, 16, 117, 121, 130, 141, 144, 153, 159, 165, 199,210, 225, 229, 239, 245, 254, 269 ജൂ, 23 தலங்கள். கயிலைக்கு நிகரெனப்படும் தலங்கள்89, 121, 132; (இவற்றைத் தகூதிணகயிலாயங்கள் என்பது புராண வரலாறு) காசிக்கு நிகரேனப்படுவன 6, 34, 50, 130, 224, 250, 263. சப்தவிடங்கங்கள் (தியாகராஜ ஸ்தலங்கள்) 23, 90,126, 160, 165, 229, 252, சப்தஸ்தானஸ்தலங்கள் (ஐயாற்று ஏழுர் வலம் வரும் விழாத்தலங்கள்) 50, 68,142, 174, 187, 212, 270. பஞ்ச பூதஸ்தலங்கள் 4,31, 56,89,122 (56 விட்டு 23 கொள்வாருமுளர்), மலைத்தலங்கள் 4, 15, 36, 43, 48, 70, 80, 83, 89, 105, 10, 11, 121, 132,183,186,237, 251(18 தலங்கள்) முத்தியளிக்கும் தலங்கள் (நினைத்தாலே முத்தி 4, தரிசித்தால் முத்தி 122 பிறந்தாலே முத்தி 23, இறந்தாலே முத்தி 6949ம் பாசுரத்துள் கூறப்படும் வாரணாசி அல்லது காசி எனும் வைப்புத் தலம் சேர சோழ பாண்டிய மன்னர்கள் செங்கோல் செலுத்திய காலத்தில் ஏற்பட்ட நாட்டுப் பிரிவினையின்படி, சேரநாடு அல்லது மலைநாட்டுத் தலம் 3, துளுவநாட்டுத் தலம் 16, ஈழநாட்டுத் தலங்கள் கொங்குநாட்டுத் தலங்கள் 12,76,10, 156,197, 238, 262(ஆஉ7), பாண்டி நாட்டுத் தலங்கள் 19, 20, 28, 38, 49, 91, 105, 11, 136, 179, 183, 205, 210, 213 (ஆ14) நடுநாட்டுத் தலங்கள் 4, 5, 1422, 35, 47, 106, 124, 141, 149, 151, 169, 177, 178, 199, 209, 215, 231, 236, 237, 243, 266 (ஆஉ22), தொண்டை நாட்டுத் தலங்கள் 2, 8, 26, 33, 40, 41, 45, 51, 52, 53, 54, 55,56, 57, 58, 59, 80, 82, 89, 100, 192, 195, 225, 230, 233, 239, 242, 246, 248, 254, 260, 267, 272 (ஆ. 32), சோழ நாட்டுத் தலங்கள் 190 (மேற்கூறிய எண்களைத் தவிர மற்ற எண்கள் உள்ளவை. இவற்றில் காவிரியாற்றின் வடகரையில் 63 தென்கரையில் 127) ஆ. எல்லா நாடும் சேர்ந்து 274 (திருவிடைவாயையைச் சேர்ப்பின் 275).
318

மூவரும் பாடிய தலங்கள் 5, 10, 22, 23, 26, 29, 31, 34, 50, 51, 56, 63, 64, 70, 79, 80, 83, 88, 89, 122, 126, 142, 150, 160, 162, 164, 165, 170, 177, 186, 197, 203, 208, 211, 213, 220, 228, 229, 237, 245, 250, 261, 263, (ஆ மொத்தம் 44), சம்பந்தரும் அப்பரும் பதிகம் ஒதிய தலங்கள் 52, சம்பந்தரும் சுந்தரரும் ஒதிய தலங்கள் 13, அப்பரும் ஒதிய தலங்கள் 2, சம்பந்தர் மட்டும் பாடியன 110, அப்பர் மட்டும் பாடியன 28, சுந்தரர் மட்டும் பாடியன 25. விவரங்கள் அவ்வத்தலங்களைப் பற்றிய குறிப்பிற் காண்க. பத்துக்கு மேற்பட்ட பதிகங்களுடைய தலங்கள் சீகாழி 71, ஆரூர் 35, விழிமிழலை 24, ஐயாறு 18, அதிகை 18, இடைமருது 12, கச்சிஏகம்பம் 12, ஆலவாய் 12, கோயில் 11, முதுகுன்றம் 11 (੬b 10), ஏழு திருமுறைகளிலும் பாடல்கள் உள்ள தலங்கள். வேறு பற்பல வழிகளில் வகைதொகை செய்யலாம்.
இறைவன் சந்நிதி நோக்கியிருக்கும் திசையைப் பற்றிய குறிப்பு மேல்வருமாறு: வடகிழக்கு (ஈசானியதிக்கு) 36 இந்திரநீல பருப்பதம், வசிக்கு 61 கடம்பந்துறை, தெற்கு 70 கயிலாயம், மேற்கு 8, 13, 14, 27, 31, 57, 58, 64, 67, 68, 83, 85, 89, 95, 100, 110, 115, 120, 124, 129, 132, 141, 150, 151, 153, 157, 175, 193, 207, 225, 238, 251, 254, 259, (அ. 34). ஏனைய 237 தலங்களில் கிழக்கு சந்நிதி. சதாசிவ மூர்த்தியின் ஐந்து முகங்களில் ஈசானியம் நோக்கியயிருப்பது ஊர்த்துவ முகமாகிய ஈசானம் எல்ல வித்தைகளையும் தருவது, கிழக்கு நோக்கிய தத்பூருஷம் எல்ல போகங்களையும் தருவது, தெற்கு நோக்கிய அகோரம் எல்லாப் எல்லாப் பாவங்களையும் போக்குவது, வசிக்கு நோக்கிய வாமதேவமுகம் தாழ்ந்த பலன் கொடுப்பது, மேற்கு நோக்கிய சத்தியோதமுகமே ஞானத்தையும் மோகூடித்தையும் கொடுப்பது என்று சிவாகமங்கள் கூறும். (O.L.T.)
தேவாரம்
தேவாரமுதலிகள் என்று போற்றப்படுகின்ற திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் என்னும் சைவநாயன்மார் மூவராலும் பாடப்பட்ட பாடல்கள், தேவாரம் என்ற பொதுப்பெயரால் இன்று சுட்டப்பெறுகின்றன. ஆனால் அவற்றைத் தேவாரம் என்று சுட்டும் வழக்கு மிகவும் பிற்பட்ட காலத்ததே. தேவார முதலிகள் முதலானோரின் வரலாற்றைப் புராணப்பாங்கிலே பாடியவரும் பிற்பட்ட சோழராட்சிக் காலத்தவருமான சேக்கிழார்கூட இவற்றைத் தேவாரம் என்ற பெயரால் எங்கும் சுட்டினாரில்லை. அவர் அவற்றைப் பதிகம் என்றே பெரும்பாலும் சுட்டினார்.
தேவார ஆசிரியர்கள் தாம் பாடியவற்றைத் தேவாரமென்றோ, பதிகம் என்றோ, குறிப்பிட்டார்களில்லை. தமிழ், தமிழ்மாலை, தமிழ்ப்பத்து, பாடல், மாலை என்றவாறாகவே குறிப்பிடுகிறார்கள். தேவாரமுதலிகள் தம் பாடல்களைப் பதிகம் என்று குறிப்பிடவில்லையாயினும் அவர்கள் காலத்தையொட்டிய ஒரிரு
இந்துக்கலைக்களஞ்சியம்

Page 349
நூற்றாண்டுகளுக்குள்ளாகவே அவற்றைப் பதிகம் என்று சுட்டும் வழக்குத் தோன்றிவிட்டது. கி பி. 852 ஆம் ஆண்டில் வட ஆர்க்காடு மாவட்டத் திருவல்லம் சிவாலயத்தில் வெட்டுவிக்கப்பெற்ற மூன்றாம் நந்திவர்மனின் கல்வெட்டில் மூவர்பாடல்களைத் திருப்பதியம் என்று சுட்டுதல் காணக்கூடியதாயுள்ளது. அக்கல்வெட்டு முதற்கொண்டு 12ஆம் நூற்றாண்டின் இறுதிப்பகுதி வரையில் வெட்டப்பட்ட ஏராளமான கல்வெட்டுக்களிலெல்லாம் தேவாரங்களைத் திருப்பதியம் என்று குறிப்பிடுவதையே காணக்கூடியதாயுள்ளது. ஆனால் இலக்கியங்களில் அவை திருப்பதிகம் என்று குறிப்பிடப்
படுதலையே காணக்கூடியதாக உள்ளது.
இலக்கியங்களில் பதிகம் என்று குறிப்பிடப்படுவதை நோக்குபவர்கள் கல்வெட்டுக்களில் உள்ள பதியம் என்பது, பதிகம் என்ற செவ்விய வடிவத்தின் கொச்சை வழக்கு எனக் கருதுவார்கள். பதிகம் என்பது பத்துப் பாட்டுக்களைக் கொண்டமைந்த இலக்கிய வடிவத்துக்கு பத்து என்ற எண்ணுப்பெயரின் அடியாக உண்டானதொரு பெயர் என்ற கருத்துக்காரணமாகவே அவர்கள் அவ்வாறானதொரு முடிவுக்கு வருகிறார்கள் எனலாம். ஆனால் தேவாரப் பாடல்களைச் சுட்டும் பதிகம் என்ற பெயர் அவற்றின் எண்ணிக்கை காரணமாக அமையவில்லை. உண்மையில் பதிகம் என்பது பத்திய என்ற வடசொல்லின் திரிபு என்றே புலப்படுகிறது. வசன நடையில் அமைந்தவற்றை கத்திய (கத்தியரூபம்) என்றும் பாடல்களாக (செய்யுள் வடிவினதாக) அமைந்தவற்றைப் பத்திய (பத்தியரூபம்) என்றும் சுட்டுவது வடமொழி மரபு. அவ்வகையில் தெய்வத்தன்மை வாய்ந்த பாடல் என்ற கருத்தில் அமைந்த திருப்பத்தியம் என்ற தொடர் மருவி திருப்பதியம் என்றும், பின் மேலும் மருவி திருப்பதிகம் என்றும் ஆயிற்று எனலாம். பாசுரம் என்ற சொல்லும் பாடல் என்ற பொருளை உடையதே. அதை உணர்ந்த நிலையில் வைணவ மரபில் ஆழ்வார் பாடல்களைத் திருப்பாசுரம் என்று சுட்டும் வழக்கத்துக்கு ஒப்பானதொரு வழக்கே இது என்பதும் உணரப்படும். தேவாரங்களைத் திருப்பாட்டு என்று சுட்டும் வழக்கம் இருந்தமையும் கல்வெட்டுக்கள், நூல்கள், உரைகள் என்பவற்றால் அறியப்படும் செய்தி. இவற்றால் திருப்பதிகம், திருப்பாசுரம், திருப்பாட்டு என்னும் மூன்றும் ஒரே பொருளுடையனவே என்பது பெறப்படும். காலகதியில் திருப்பதியம் என்பதை பத்து என்ற எண்ணிக்கையடியாக உருவான பெயரே என்று மயங்கிய நிலையில், அதை கல்வெட்டு வழக்கு, கல்வெட்டுகளிற் பெரும்பான்மையும் காணப்படும் கொச்சை வழக்குகளுள் ஒன்று என்று கருதிக்கொண்டு, புலவர்கள், தம் நூல்களில் அதனைத் திருப்பதிகம் என ஆக்கிக்கொண்டார்கள் என்று கருதுவதே தக்கதாகலாம்.
தேவாரம் என்ற சொல் ஆரம்பத்தில் வழிபாடு, வழிபாட்டுக்குரிய விக்கிரகம் என்பவற்றையே சுட்டியதாக
இந்துக்கலைக்களஞ்சியம்

ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். திருவொற்றியூரில் உள்ள சாசனமொன்றே தேவாரம் என்ற சொல் காணப்படும் சாசனங்களுள் பழமையானதாகக் கருதப்படுகிறது. அதிற் காணப்படும் ‘தேவாரமாணிகள் மூவர்க்கும்’ என்ற தொடர் பூசைக்கு வேண்டிய திருவமுதை ஆக்கும் பரிசாரகர்களையே குறிப்பாக உணரப்படுகிறது.
“தஞ்சைப் பெரிய கோயிலில் பூரீ கார்யமாகத் திகழ்ந்த ஆதித்தன் தென்னவன் மூவேந்த வேளான் தன் மன்னன் இராஜராஜனுக்கும் அவனது தேவி லோகமாதேவிக்கும் செம்பில் உருவச் சிலைகள் (படிமங்கள்) சமைத்தான். அவ்விருவருக்கும் எதிரே, அவர்கள் வணங்குமாறு சந்திரசேகரர் திருமேனி ஒன்றினைப் பித்தளை கொண்டு வடித்தான். அத்திருமேனிபற்றிக் கல்வெட்டிற் குறிப்பிடும்போது, பெரிய பெருமாளுக்கு தேவார தேவராக எழுந்தருளுவித்த தேவர் என்று குறிப்பிட்டுள்ளான். இங்கு கூறப்பட்டுள்ள 'தேவாரதேவர்' என்பது மன்னன் தனது இல்லில் நாளும் பூஜிக்கின்ற ஆன்மார்த்த மூர்த்தியைக் குறிப்பதாகும். இங்கு 'தேவாரம்' என்று சுட்டப்பெறுவது ஆன்ம மூர்த்தியை வைத்துப்போற்றும் இடம் அல்லது பெட்டி (கிருகாதன அறை அல்லது பூஜைப்பெட்டி) என்பவற்றைக் குறிப்பதாகும்.
ஒருவன் தன்வீடு தீப்பற்றி எரியும்போது, தன் கையிற் கிட்டிய பொருள்களான பூசைப்பெட்டியையும் அவனது செருப்பையும் ஒன்றாகக்கட்டி உயர்வுதாழ்வு நோக்காமல் ஆபத்தின்போது எடுத்து ஓடிவருவதைப்போல எனக் குறிக்குமிடத்துத் தேவாரமும் செருப்பும் ஒக்கக்கட்டி’ என்றும், பிறிதோர் இடத்தில் 'உம்முடைய தேவாரமோ எனவும் வைணவ ஈடு கூறுவதால் ஆன்மமூர்த்தியைப்
பூசிக்கும் இடமே தேவாரம் என்பது நன்கு விளங்கும்.
“மன்னர்களுடைய அரண்மனைப் பூசையிடம், மடங்களில் துறவிகள் பூசை செய்த இடம், அவர்கள் பயணம் செய்யும்போது எடுத்துச் செல்கின்ற பூசைப்பெட்டி’ ஆகியவை தேவாரம் எனக் குறிப்பிடப்பெற்றது கண்டோம். இவர்களது பூசையின்போது திருப்பதிகங்களே பாடப்பெற்றன என்பதையும் பல கல்வெட்டுச் சாசனங்கள்
மெய்ப்பிக்கின்றன.”
வழிபாட்டின்போது பதிகங்களைப்பாடும் மரபு பரவலாக இருந்தமையை அறியும்போது வழிபாடு என்ற பொருளையுடைய தேவாரம் என்ற சொல் திருப்பதிகங்களுக்கு உரியதாக ஆகியது வழிபாட்டுக்கும் அப் பதிகங்களுக்கும் இடையிலான இன்றியமையாத் தொடர்பு காரணமாகவே எனலாம். இரட்டைப்
புலவராற் பாடப்பெற்ற,
319

Page 350
66
வாத பேரன்பின் மூவர் முதலிகளும் தேவாரம் செய்த திருப்பாட்டும்”
என்னும் அடிகளிலேயே முதன்முதல் தேவாரம் என்ற சொல் மூவர் பாடல்களைச் சுட்டியதாகச் சதாசிவபண்டாரத்தார் கூறுகிறார். ஆனால் இவ்வடிகளில் தேவாரம் வேறு திருப்பாட்டு வேறாகவே அமைகின்றன. ஆதலால் அங்கும் அது வழிபாடு என்னும் பொருளில் (வழிபாடு செய்த பாட்டு) அமைந்ததாகவே கொள்ளப்படல் வேண்டும். தேவாரம் என்ற சொல் நேரடியாகவே மூவர் பாடல்களைச் சுட்டுவது எல்லப்ப நாவலரின் திருவருணைக் கலம்பகக் காப்புச் செய்யுள் ஒன்றிலேயே என்கிறார் செளந்தரா.
அச் செய்யுட்பகுதி வருமாறு:
"வாய்மை வைத்த சீர்திருத் தேவாரமும் திருவாசகமும் உய்வைத் தரச் செய்த நால்வர் பொற்றாள் எம்
உயிர்த்துணையே’
எல்லப்ப நாவலர் 16ஆம் நூற்றாண்டைச் சார்ந்தவர். ஆனால் கல்வெட்டாய்வாளர்கள் தேவாரம் என்ற சொல் திருப்பதிகங்களைக் குறிப்பதை 13ஆம் நூற்றாண்டின் இறுதிப்பகுதியைச் சார்ந்த கல்வெட்டொன்றிற் காணக்கூடியதாய் இருப்பதாகக் கூறுகிறார்கள். எனினும், 16ஆம் நூற்றாண்டு வரையில் அவ்வழக்கு பெருமளவிற் காணப்படவில்லை
எனக்கொள்வது பொருத்தமானதாகலாம்.
திவ்வியப் பிரபந்தத்துள் அடங்கும் பாசுரங்களும் வழிபாட்டின்போது பாடப்படும் வழக்கத்தைப் பெற்றனவே. அன்றியும் வைணவ மரபிலும் தேவாரம் என்ற சொல் வழிபாடு என்ற பொருளில் வழங்கப்பட்டிருக்கிறது. அவ்வாறிருக்கையில் மூவர் பாடல்கள் மாத்திரமே தேவாரம் என்ற சொல்லால் குறிப்பிடப்படுகிறது. இவற்றை நோக்கும்போது இரட்டையரின்,
"மூவாத பேரன்பின் மூவர் முதலிகளும் தேவாரம் செய்த திருப்பாட்டும்”
என்னும் அடிகளே தேவாரம் என்ற சொல் மூவர் பாடல்களுக்கே உரிய சிறப்புப் பெயராய் அமையக் காரணமாயிற்று என்று
சிந்திப்பதற்கும் இடந்தருவதாகிறது.
தேவாரம் சொற்பொருள் விளக்கம்
தேவாரம் என்ற சொல் வழிபாடு என்ற பொருளை விடுத்து மூவர் பாடல்களைக் குறித்து வழங்கும் இன்றைய நிலையில் அச்சொல்லுக்கும் பலரும் பலவாறு பொருள் கொள்வர். தே* வாரம் எனப் பிரித்து, வாரம் என்றால் அன்பு, எனவே தெய்வத்தின்மேல் வைத்த அன்பு எனச் சிலரும், தேர் ஆரம் எனப் பிரித்து தெய்வத்துக்குச் சூட்டப்படும் பூமாலை போலமைந்த
320

பாமாலை எனச் சிலரும் பொருள் கூறுவர். வாரம் என்பது நான்கு வகையான இசை இயக்கங்களுள் ஒன்று என்று சிலப்பதிகாரத்துக்கு உரை எழுதிய அரும்பத உரையாசிரியரும் அடியார்க்கு நல்லாரும் குறிப்பிடுகின்றனர். அத்தகைய செய்திகளை ஆதாரமாகக் கொண்டு வெள்ளைவாரணன்
கூறுவது வருமாறு:
“தேவபாணி என்பது முன்நிலையிடமாய் தெய்வத்தைப் பாடிய பாடல் என்பது பேராசிரியர் கருத்தாகும். வாரம் என்பது முன்நிலை, படர்க்கை என்ற ஈரிடத்திற்கும் பொதுவாகிய தெய்வப்பாடலைக் குறித்த பெயராகும். வாரம் என்ற சொல்லுக்கு இசையியக்கம் நான்கினுள் ஒன்று என்ற பொதுப்பொருளும் ‘தெய்வப்பாடல் என்ற சிறப்புப் பொருளும் உடையன ஆதலால், அப்பொதுப் பொருளை நீக்கி தெய்வப்பாடல் என்ற சிறப்புப் பொருளையே அச்சொல் தருதல் வேண்டி பிற்காலத்தார் தெய்வம் என்னும் பொருளையுடைய தே' என்னும் அடைமொழியைச் சேர்த்து தேவாரமென வழங்குவாராயினர். இறைவனது பொருள்சேர் புகழை இன்னிசையாற் பரவிப் போற்றுதலே சிறப்புடைக் கடவுள் வழிபாடாதலால் தெய்வ இசைப்பாடல்களைக் குறித்த தேவாரம் என்னும் இச்சொல் இறைவனை உளமுருகிப் போற்றும் வழிபாட்டினைக் குறிக்கும் சொல்லாகவும் பிற்காலத்தில் வழங்கப் பெறுவதாயிற்று”
தேவாரப்பாடல்களின் இசைத்தன்மையினை நோக்கும்போது வெள்ளைவாரணனாரது கருத்து பொருத்தமானதாகவே படுகிறது. எனினும் தேவாரம் என்னும் சொல் வழிபாடு என்ற பொருளில் கல்வெட்டுக்களில் வழங்குவதற்கு முன் அது இசைப்பாடல்களைக் குறித்து வழங்கியதற்கு எதுவித சான்றும் இல்லை. அதாவது வாரம் என்ற சொல் இசைப்பாடல்களைக் குறித்து வழங்கியமைக்குச் சான்று உண்டேயல்லாமல் அச்சொல் “தே’ என்ற அடைமொழியோடு கூடி, தேவாரமாக நின்று இசைப்பாடல்களைச் சுட்டிய பண்டை வழக்குக்குச் சான்று எதுவும் இல்லை. ஆதலால் வெள்ளை வாரணனாரது கூற்றைச் சில திருத்தங்களோடு ஏற்றுக்கொள்ள முடியும். அத்திருத்தம் வருமாறு அமையலாம். வாரம் என்பது இசைப்பாடல்களைக் குறித்து வழங்கியது; தெய்வ வழிபாட்டில் இசைப்பாடல்கள் இன்றியமையாத இடத்தைப் பெற்றன. அந்த இன்றியமையாமை காரணமாக வாரம் என்ற அச்சொல் ஆகுபெயராக வழிபாடு என்ற சிறப்புப் பொருளைப் பெற்றது. தே' என்ற முன்னொட்டு அதற்கு தெய்வ வழிபாடு என்ற சிறப்புப் பொருளைக் கொடுத்தது. தேவாரம் என்பது தெய்வ வழிபாடு என்று இடைக்காலத்தில் வழங்கிவந்த வேளையில் மூவர் பாடல்களைப் பாடுவது தெய்வ வழிபாட்டில் தவறாது இடம் பெறலாயிற்று. அக்காலகட்டத்தில் தெய்வ வழிபாடு என்ற பொருளில் வழங்கிவந்த தேவாரம் தெய்வ வழிபாட்டின்போது பாடப்படும் பாடல்களுக்கு உரியதாய் தன் பழைய பொருண்மையை உற்றது. அந்நிலையில் சைவ மரபில் மூவர் பாடல்களே தெய்வ வழிபாட்டில் இடம்பெற்றனவாதலால் தேவாரம் என்ற சொல் அவற்றுக்கேயுரியதாயிற்று.
இந்துக் கலைக்களஞ்சியம்

Page 351
" அலங்கு செந்நெற் கதிர்வேய்ந்த ஆய் கரும்பின் கொடிக் கூரை சாறுகொண்ட களம் போல வேறு வேறு பொலிவு தோன்ற குற்று ஆனா உலக்கையான்
கலிச்சும்மை வியல் ஆங்கண்' (புறம்-22:14-19)
(அசையும் செந்நெற் கதிர்களைக் கூரையாக வேய்ந்து கரும்பை இடையே கழிகளாக உடைய ஒழுங்கு பெற்ற கூரை, வேறு வேறாய் நின்று அழகுடன் விளங்கும், நெல் குற்றுவதால் அடங்காத உலக்கையின் பேரொலியுடன் மிக்க ஆரவாரத்தையும் உடைய அகலிடம்) அவ்வறுவடை விழா புதுக்கதிர் குற்றியெடுத்த புத்தரிசியைச் சமைத்து உண்ணுதலினாற் புதிதுண் விழா வாக அமைந்தது. தமிழ் சமுதாயத்தினது புதிதுண் விழாவின் தொடக்க நிலையொன்றினைச் சித்திரிப்பதாக மேல்வரும் புறநானூற்றடிகள் விளங்குகின்றன;
66
--- கேழல் உழுத பூழி நல் நாள் வருபதம் நோக்கி, குறவர் உழாது வித்திய பரூக்குரற் சிறுதினை முத்துவிளை யாணர் நாள் புதிது உண்மார் மரை ஆன் கறந்த நுரை கொள் தீம்பால் மான்தடி புழுக்கிய புலவு நாறு குழிசி வான்கேழ் இரும்புடை கழாஅது ஏற்றி
6g
O O O ●
தொணடரடிப் பொறயாழவா
பன்னிரு ஆழ்வார்களில் ஒருவர். சோழநாட்டில் உள்ள திருமண்டங்குடி என்னும் ஊரில் முன்குடுமிச் சோழியர் குலத்தில் இவர் தோன்றினார். இவரும் திருமங்கையாழ்வாரும் சமகாலத்தவர் (கி. பி. 731 - 795). ஆகவே இவர் காலம் எட்டாம் நூற்றாண்டு எனலாம். திருமங்கையாழ்வார் திருவரங்கம் திருமதிலையும், சிகரங்களையும் கட்டுவித்த போது அவர் அங்கு திருத்தொண்டு செய்து வந்தார் என்று குரு பரம்பரை நூல்கள் கூறுகின்றன. பெற்றோர்கள் இவருக்கிட்ட பெயர் விப்ர
நாராயணன்.
நான்கு மறைகளையும் ஆறு சாஸ்திரங்களையும் கற்றுத் தேர்ந்த விப்ரநாராயணனுக்கு இவ்வுலக இன்பத்தில் ஈடுபாடு ஏற்படவில்லை. எனவே இவர் திருமண பந்தத்தில் தன்னை ஈடுபடுத்த முனையவில்லை. திருவரங்கப் பெருமானிடம் அதீத ஈடுபாடு கொண்டிருந்த விப்ர நாராயணன் அரங்க நாதப்
இந்துக் கலைக்களஞ்சியம்

சாந்த விறகின் உவித்த புன்கம் கூதளம் கவினிய குளவி முன்றில் செழுங்கோள் வாழை அகல் இவைப் பகுக்கும் ஊராக் குதிரை. (புறம் 1684-14)
(பன்றி உழுத புழுதியில் , குறவர் நல்ல நாள் பார்த்து உழாமலே தினையை விதைத்தனர். பரிய தோகையுடைய நல்ல நாளில் புதிதுண்ண வேண்டி, மானிறைச்சி சமைத்த புலால் நாறும் பானையைக் கழுவாதே, மரைப் பசுவிடம் கறந்த நுரை கொண்ட இனிய பாலை உலை நீராக வார்த்து ஏற்றி சந்தன விறகால் எரியூட்டித் தினையைச் சமைத்தனர், கூதாளியால் அழகு பெற்ற மணல்மல்லிகை நாளும் முற்றத்திடத்து, வளவிய குலையுடைய வாழையின் இலையிலே பலருடனும் பகுத்து உண்ணுவர். அத்தகைய வளமுடைய ஊரப்படாததாகிய குதிரை என்னும்
மலை)
இவற்றை நோக்கும் போது பாவை நோன்பு, அறுவடை விழா முதலான பல மூலங்களின் கலவையாக அமைந்தே, பொங்கல் விழா பிற்காலத்திற் பொலிவு பெற்றது எனக் கொள்ள இடமுண்டாகின்றது. இன்று இப்பொங்கல் விழாவை திராவிட உணர்வு காரணமாக சமயச் சார்பற்ற நிலையில் தமிழ்த் தேசிய விழாவாக, தமிழர் திருநாளாக வலியுறுத்துகின்ற தன்மை தமிழகத்தில் உண்டு. கிறிஸ்தவத் தமிழர்களும் தேவாலயங்களில் பொங்கல் விழாவைக் கொண்டாடுகின்றமை குறிப்பிடத்தக்கது.
(க, இர)
GIT
பெருமானுக்குப் பூவும், மாலையும், திருத்துளாயும் சமர்ப்பிக்க வேண்டும் என்னும் அவாவில் நந்தவனம் ஒன்றை அமைத்து சேவை செய்து வந்தார்.
தேவதேவி என்னும் கணிகையர் குல மாது அவரைத் தன் வயப்படுத்தும் நோக்கில் சாத்வீக வேடம் பூண்டு ஆழ்வார் திருவடியில் வீழ்ந்து வணங்கி, ‘சுவாமி நான் ஒரு பொதுமகள், என் தாய் என்னைக் குலத்தொழில் செய்து பொருள் தேடும்படி வற்புறுத்துகிறாள். நான் சம்மதியாமல், தங்களுக்குச் சேவை செய்து இப் பாவப் பிறவியை ஒழிக்க வந்துள்ளேன். உங்களது திருநந்தவனத்தில் வேலை செய்ய அடியாளை ஏற்றுக் கொள்ள வேண்டுகிறேன்' என்றாள். ஆழ்வாரும் சம்மதித்தார். சில காலம் செல்ல சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக தேவ தேவியின் ஆசை வலையில் வீழ்ந்து விட்டார். அவளது ஆடல்பாடல்களில் ஈடுபட்டு இறைவனுக்குச் செய்யும் தொண்டையும் கைவிட்டார். இறுதியில் தன் கைப்பொருளை எல்லாம் இழந்து அவளால் கைவிடப்பட்டார்.
331

Page 352
விப்ரநாராயணனின் பரிதாப நிலை கண்டு மனமிரங்கிய எம் பிராட்டி இவருக்கு அருள் செய்யும்படி பெருமானை வேண்டினார். அவரும் மனமிரங்கித் தமது பொற்கிண்ணம் ஒன்றை எடுத்து தேவதேவியின் வீட்டிற்குச் சென்று தான் விப்ரநாராயணனின் தூதன் என்று சொல்லிக் கொடுத்தார். அவளும் மகிழ்வுற்று முன்போல் ஆழ்வாரை வரவழைத்து இன்புற்றிருந்தாள். மறுநாள் பொற்பாத்திரம் காணாமையினால் எங்கும் தேடி ஒரு சேடியின் மூலம் தேவதேவியிடமிருந்து அரசனது ஏவலாளர் கைப்பற்றினர். அவளிடமிருந்து வாங்கிய அபராதத் தொகையையும் பொற்பாத்திரத்தையும் கோயிலில் சேர்த்தனர். அரசன் விப்ர
நாராயணனைக் காவலில் வைத்தான்.
அன்றிரவு எம்பெருமான் அரசன் கனவில் தோன்றி 'நாராயணர் செய்த முன்வினைப் பயனைக் கழிக்க நாமே பொற்பாத்திரத்தைத் தேவதேவியிடம் தந்தோம். அவர் குற்றமற்றவர். அவரை விடுதலை செய்க என்று கூறினார். அரசன் தன் தவற்றிற்கு வருந்தி ஆழ்வாரை விடுதலை செய்து தன் பிழை பொறுத்தருள அடி பணிந்து நின்றான். ஆழ்வாரும் முன் போல இறை தொண்டில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டார். பழைய பேர் தவிர்ந்து தொண்டர் அடிப்பொடி' என்னும் திரு நாமம் பூண்டார். இவரை அன்பர் தாள் துளி என்றும் அழைத்தனர். திரு அரங்கப் பெருமானிடம் அதீதப் பிரியம் கொண்டிருந்த இவ்வாழ்வார் திரு அரங்கனை அன்றி வேறு தெய்வங்களைப் பாடவில்லை.
தொண்டரடிப் பொடியாழ்வார் பாடிய பிரபந்தங்கள் இரண்டு: திருமாலை, திருப்பள்ளி எழுச்சி. திருமாலை நாற்பத்தைந்து பாசுரங்களும், திருப்பள்ளி எழுச்சி பத்துப் பாசுரங்களும் ஆக
ஐம்பத்தைந்து பாசுரங்களை இவர் பாடியருளினார்.
இறை தொண்டில் ஈடுபட்டு மனம் குளிர்வதற்கு மனித வாழ்க்கையே சிறந்தது என உறுதி கொண்டிருந்த ஆழ்வார்,
"ஆயர்தம் கொழுந்தே என்னும் இச்சுவை தவிர யான் போய் இந்திர லோகம் ஆளும் அச்சுவை பெறினும் வேண்டேன்
அரங்கமா நகரு ளானே'
என்கிறார். திருவரங்கத்தான் மீதும் காவிரியின் மீதும் தொண்டரடிப்பொடி கொண்டிருந்த ஈடுபாடு மிகப் பெரியது. ஒருவன் எங்கு வாழ்ந்தாலும் ஆழ்ந்த பக்தியுடன் எளிய வாழ்க்கை வாழ்வானேயானால், அவ்விடம் புனிதத் தலமாகிறது என்பது இவரது அழுத்தமான கோட்பாடு. இதனால் தான் நாள்தோறும் நீராடிய காவிரி, கங்கையை விடப் புனிதமிக்கது என்கிறார்.
332

கங்கையிற் புனிதமாய காவிரி என்று பாடுகிறார். அவர் அறிந்த ஒரே இடம் திருவரங்கம். புனிதமான காவிரிக் கரையில் உள்ள அரங்கத்தை தான் பள்ளி கொள்ளுமிடமாகத் திருமால் கொண்டதால் திருவரங்கம் வைகுந்தம் ஆனது. தமது கடந்தகால வாழ்க்கையின் பாவங்களை எண்ணிக் கழிவிரக்கத்துடன் பாடிய பாடல்கள் பல திருமாலையில் இடம் பெற்றுள்ளன.
'சூதனாய்க் கள்வனாகித் தூர்த்தரோ டிசைந்த காலம்
மாதரார் கயற்கணென்னும் வலையுள்பட்டழுந்துவேளை’
"மெய் எல்லாம் போக விட்டு விரிகுழலாரிற் பட்டு பொய் எல்லாம் பொதிந்து கொண்ட போட்கனேன் வந்து
நின்றேன்’
சூதனாய்க் கள்வனாய்த் தூர்த்தரோடிசைந்து என்றும், உண்மையை எல்லாம் புறத்தே போக விட்டு விரிந்த கூந்தலையுடைய பெண்களது மையலிலே அகப்பட்டு என்றெல்லாம் பல படக் கூறித் தான் பாவங்கள் பல செய்து நின்ற வேளையில் கடவுளின் அழகும் அருளுமே தம்புந்தியில் புகுந்து தம்மைத் திருத்தி நல் வழிக்குத் திருப்பியதாக ஆழ்வார் பாடுகிறார்.
ஒருவரது பிறப்பு அல்லாமல் அவரது நடத்தையே பிறப்பைத் தீர்மானிக்கிறது. திருமால் அடியார்களைப் பழிக்கும் செயல் செய்பவர் அந்தணராயினும், அவர்கள் புலையராகவே கருதப்படுவர். ஆழ்வார் கொள்கையின் உயிர் மூச்சே இது தான்.
தொண்டரடிப் பொடியாழ்வாரின் காலத்தில் பெளத்த சமண சமயங்களின் செல்வாக்கு சமுதாயத்தில் நன்கு வேரூன்றி இருந்தது. பெளத்த சமணர்களைத் தொண்டரடிப் பொடி மிகவும் கடுமையாகத் தாக்குகிறார். கடவுள் மறுப்புக் கொள்கையுடன் வெறும் அறிவின் நிலைக்கு கடவுளைக் குறைத்து மதிப்பிட்டவர்கள் பெளத்த சமணர்களாதலால் அவர்களது
கொள்கையைக் கடுமையாகத் தன் பாசுரங்களிற் சாடியுள்ளார்.
இவர் பாடிய திருப்பள்ளி எழுச்சிப் பத்தும் பாசுரங்களும் தமிழ் இலக்கிய மரபு சார்ந்த பாடலாகும். இங்கு மன்னனுக்குப் பதிலாக திருமால் இடம் பெறுகிறார். பெருமாள், திருவரங்கம் ஆகிய இரண்டின் பழைமையான அழகையும், புகழையும் படம்
பிடித்துக்காட்டுகின்றன திருப்பள்ளி எழுச்சிப் பாடல்கள்.
"கதிரவன் குணதிசைச் சிகரம் வந்து அடைந்தான் கன இருள் அகன்றது; காலை அம் பொழுதாய் மது விரிந்து ஒழுகின மாமலர் எல்லாம்;
வானவர் அரசர்கள் வந்து வந்து ஈண்டி
எதிர்திசை நிறைந்தனர்.
罗%
இந்துக் கலைக்களஞ்சியம்

Page 353
"கடிமலர்க் கமலங்கள் மலர்ந்தன; இலையோ கதிரவன் கனைகடல் முளைத்தனன்; இவனோ! துடிஇடை யார் சுரி குழல் பிழிந்து உதறித் துகில் உடுத்து ஏறினர்; சூழ்புனல் அரங்கா'
கீழ்த் திசையில் ஆதவன் தோன்றிவிட்டான். எங்கும் இருள் நீங்கிவிட்டது. சிறந்த பூக்களிலெல்லாம் தேன் பாய்ந்து ஒடுகின்றது. அமரர்களும், மன்னர்களும் வந்து நெருங்கி எல்லாத் திக்குகளிலும் நிறைந்துவிட்டனர்.
தே
தோடி
ட்ெடாவது மேளகர்த்தா இராகம். இதற்கு ஹனும தோடி என்று பெயர். ஹனும என்பது கடபயாதி சங்கியைக்காக சேர்க்கப்பட்டிருக்கின்றது. இது நேத்ர என்னும் இரண்டாவது சக்கரத்தில் இரண்டாவது (பூரீ) மேளம் (நேத்ர -ழரீ).
ஆரோகணம் - ஸரிகமபதத்நிஸ் அவரோகணம் - ஸ்நிதபமகரிஸ்
இவ் இராகத்தில் வரும் சுரங்களாவன ஸட்ஸம், சுத்தரிஷபம், சாதாரணகாந்தாரம், சுத்தமத்திமம், பஞ்சமம், சுத்ததைவதம், கைசிகி நிஷாதம் ஆகியவை. காந்தாரம், மத்திமம், தைவதம் இவ் இராகத்தின் ஜீவசுரங்கள்.
இதன் பஞ்சமத்தை விலக்கினால் சுத்த தோடி ஆகும். அதிகமான ஜன்ய ராகங்களையுடைய ராகம். அசம்பூர்ண மேள பத்ததியில் இதற்கு ஜனதோடி என்று பெயர். பூர்வாங்கமும் உத்தராங்கமும் ஒரே சீராய் அமைந்த இராகம். கக மம தத, மம
இந்துக்கலைக்களஞ்சியம்

தாமரைப் பூக்கள் பூத்துவிட்டன. சூரியன் கத்தும் கடலிலே தோன்றி விட்டான். உடுக்கை போன்ற இடையை உடைய பெண்கள். இருண்ட கூந்தலைப் பிழிந்து நீரைப் போக்கி ஆடை உடுத்து ஆற்றினின்றும் கரையேறினர். காவிரிசூழ் அரங்கநாதா! என்று தனது திருப்பள்ளி எழுச்சியில் பாடியுள்ள தொண்டரடிப் பொடியாழ்வார், இயற்கையின் அழகில் எல்லாம் இறை
அழகையும், அருளையும் கண்டுணர்ந்தவர் என்பது தெளிவு.
(நி.நி)
GIT
தத நிநி, தத நிநி ஸ்ஸ் போன்ற ஜண்டை ஸ்வரப்பிரயோகங்களும், நிக்ரிநிதநிரிதம், கமநிதமகாரிஸா போன்ற தாட்டு ஸ்வரப் பிரயோகங்களும் ராக ரஞ்சகமானவை. பஞ்சம வர்ஜ பிரயோகங்களும் ராக ஸ்வரூபத்தை நன்றாக எடுத்துக்காட்டும். தரிஸ்தா ரிஸ்தா இவைகள் விசேஷ சஞ்சாரமாகும். சர்வஸ்வரகமக வரிக ரக்தி இராகம் எல்லாக் காலங்களிலும் பாடக்கூடிய இராகம். பஞ்சமத்தில் நின்று நன்றாக சஞ்சாரம் செய்யலாம். தரிஸ்தாயி ராகம் வுட்வு கிராமத்தின் ரிஷப மூர்ச்சனையே தோடி இராக ஆலாபனைக்கு ஏற்ற ராகம். எல்லா வகையான உருப்படிகளும் இந்த இராகத்தில் இருக்கின்றன. ஸ்லோகம், பத்யம், விருத்தம் முதலியவைகளில் உபயோகிக்கப்படும் இராகங்களில் ஒன்று. ஸ, க, மப, தநி ஆகிய சுரங்களில் இவ் விராகத்தின் உருப்படிகள் ஆரம்பமாகும்.
தோடி சீதாராமய்யர் என்பவர் இந்த இராகத்தை எட்டு நாட்கள் பாடினார். இவ் இராகம் ஹிந்துஸ்தானி இசையில் பைரவி தாட் என்று அழைக்கப்படுகின்றது. மத்த கோகிலம் என்னும் கிராமிய இசை வர்ணமெட்டு தோடி இராகத்தில் தான் உள்ளது. (தே.ஹ.)
Q
ܨܵܐܸ؟
333

Page 354
சொல்
திருக்கச்சிநம்பிகள் திருக்கயிலாயம் திருக்கரைசையம்பதி அகஸ்தியர் ஸ்தாபனம் திருக்கரைசையம்பதி திருமங்கலாய் சிவன்கோவில் திருகோணமலை பூநீபத்திரகாளி அம்பாள் ஆலயம் திருச்சாய்க்காடு திருச்சிராப்பள்ளி திருச்சிற்றேமம் திருச்சிவபுரம் திருச்சுற்றுப்பிராகாரம் திருச்செங்கோடு திருச்சேறை திருச்சோபுரம் திருத்தினைநகர் திருத்துருத்தி திருத்தொண்டர் திருவந்தாதி திருத்தொண்டர் புராணம் திருதராட்டிரன் திருந்துதேவன் குடி திருநல்லூர்ப்புராணம் திருநள்ளாறு திருநாகேச்சுரம் திருநாவலூர் திருநாவுக்கரசர் திருநாளைப்போவார் (நந்தனார்) திருநீர்மலை திருநீலகண்ட நாயனார் திருநீலகண்ட யாழ்ப்பாண நாயனார் திருநீலநக்க நாயனார் திருநீற்றுச் சோழன் திருநீறு திருநெல்வாயில் அரத்துறை திருப்பட்டிச்சுவரம் திருப்படைக் கோவில்கள் திருப்பதி திருப்பந்தணைநல்லூர் திருப்பரங்குன்றம் திருப்பள்ளியெழுச்சி திருப்பறியலூர் திருப்பனங்காடு திருப்பனந்தாள் திருபாசூர் திருபாண்டிக் கொடுமுடி திருப்பாணாழ்வார் திருப்பாதிரிப்புலியூர் திருப்பாம்புரம் திருப்பாவை திருப்புகழ் திருப்புல்லாணி திருப்புன்கூர் திருப்பூவணம் திருப்பெண்ணாகடம் திருப்பெருந்துறை திருமகள்
334

6D60) L6)
O
O1
O4
O4
O5
O8
O9
11
12
12
14
15
16
17
18
19
2O
27
3O
31
34
36
38
39
42
45
46
47
48
49
49
5O
51
52
62
67
68
72
73
74.
76
77
78
79
8O
81
83
85
87
88
88
90
91
93
இந்துக்கலைக்களஞ்சியம்

Page 355
திருமங்கலக்குடி திருமங்கையாழ்வார் திருமஞ்சனம்
திருமண்
திருமணம்
திருமந்திரம் திருமயிலாடுதுறை திருமருகல் திருமலாச்சாரியார் திருமழபாடி
திருமழிசை திருமழிசையாழ்வார் திருமறைக் காடு திருமாகறல் திருமாங்கல்யம் திருமாலிருஞ்சோலை திருமாளிகைத் தேவர் திருமாற்பேறு திருமீயச்சூர் திருமுதுகுன்றம் (விருத்தாசலம்) திருமுருகநாயனார் திருமுருகன் பூண்டி திருமுருகாற்றுப்படை திருமுல்லைவாயில் திருமுறை ஓதுவார் திருமுறைக் கண்ட புராணம் திருவக்கரை
திருவகுப்பு
திருவட்டாறு திருவடிபூசை திருவந்திபுரம் திருவரங்கத்த முதனார் திருவருட்பயன் திருவருட்பா
திருவல்லம் திருவல்லிக்கேணி திருவலிதாயம் திருவாதவூரடிகள் புராணம் திருவாதவூரர் திருவாதிரைத் திருநாள் திருவாய்மொழி திருவாலியமுதனார் திருவான்மியூர் திருவிடவெந்தை திருவிடைமருதூர் திருவிண்ணகள் திருவிழாக்கள் திருவிளையாடற் புராணம் திருவிற்குடி திருவிற்கோலம் திருவூறல் திருவெண்காட்டு நங்கை திருவெண்காடு திருவெண்ணெய் நல்லூர்
இந்துக்கலைக்களஞ்சியம்

96
96
97
99
1ΟΟ
1O4
O8
11Օ
1 1Ο
111
112
114
115
116
117
12O
123
124
126
127
128
129
13O
132
134
137
138
139
141
142
145
146
147
149
152
154
154
155
156
159
16O
162
162
164
165
166
167
173
178
179
18O
181
182
184
335

Page 356
திருவெண்பாக்கம் திருவெம்பாவை திருவேரகம் திருவேற்காடு திருவைகுந்த விண்ணகரம் திருவைந்தெழுத்து திருவையாறு திருவொற்றியூர் திருவோணம் திருவோத்தூர் திருஷ்டத்யும்நன் திரோதான சக்தி திரெளபதி Sl6o6OIT GOTIT தில்லைவாழ்ந்தணர்கள் திலகவதியார் திலதைப் பதி திவ்யசூரிகள் திவ்விய தேசங்கள் தீட்சை தீபம் - தீபாராதனை தீபாவளி தீமை - இந்துமரபில் தீர்த்தங்கள் துகளறு போதம் துச்சாதனன் துசியந்தன்
5JԼԳ
துர்க்கை
துர்வாசர்
துரியம் துரியோதனன் துருபதன்
துரோணர்
துலாம் துலுக்கநாச்சியார் துவாதசி gj6 JITUUIT Godsii துவைதம்
துளசி
துளசிதாசர் g|TIBIOSITOO)6OILDIT Lib தெய்வயானை தெலுங்கு தேசிக விநாயகம்பிள்ளை தேர்
தேவகி
தேவதாசி
தேவர்கள் தேவாரப் பாடல் பெற்ற தலங்கள் தேவாரம் தேவியர் மூவர் தைப்பூசம் தைப்பொங்கல் தொண்டரடிப் பொடியாழ்வார் தோடி
336

185
186
187
189
19 O
19
192
2O5
2O8
208
209
211
211
2飞5
217
219
220
221
223
231
235
237
238
24
244
246
246
247
247
25 O
25O
251
253
253
255
255
256
257
257
262
263
268
269
27 Ο
28O
281
283
283
289
29O
3.18
325
326
328
331
333
இந்துக் கலைக்களஞ்சியம்

Page 357
இந்துக் கலைக்களஞ்சியம்
 

337

Page 358


Page 359
தொகுப்புப் பணி
மூவர் முதலிகள் பாடிய பதிகங்கள் யாவும் இன்று தேவாரம் என்ற பொதுப்பெயரால் சுட்டப்பெறுகின்றன. அதனால் தேவாரம் என்பது தனியொரு நூல் என்பது போன்ற உணர்வைத் தருவதாயுள்ளது(திருவாசகமும் அவ்வாறானதே). தேவாரம் என்ற சொல் மூவர் பதிகங்கள் முழுமையும் அடங்கிய தொகுதியையும் குறித்து நிற்கிறது; அதேவேளை, அத்தொகுதியுள் அடங்கும் தனித்தனிப் பாடல் ஒவ்வொன்றையும் அது சுட்டி நிற்கிறது. உண்மையில் மூவராலும் பாடப்பட்ட ஒவ்வொரு பதிகமும் தனித்தனிப் பிரபந்தம் என்பதே சரியானது. அவற்றின் தொகுதியே முதல் ஏழு திருமுறைகள்.
தனித்தனிப் பிரபந்தங்களாக விளங்கிய மூவர் பதிகங்களை ஒன்று திரட்டித் திருமுறையாகத் தொகுத்தவர் நம்பியாண்டார் நம்பியே. அப்பணியை மேற்கொண்ட நம்பிக்கும் மூவர் பாடல் முழுமையும் கிடைத்தன என்று கூறக்கூடியதாயில்லை. திருமுறைத் தொகுப்புப் பணி பற்றிய வரலாற்றைப் புராணப் பாங்கில் கூறுவதாய் அமைந்த திருமுறைகண்ட புராணம் தரும் தகவற்படி, சம்பந்தர் பாடிய பதிகங்கள் பதினாறாயிரம்; நாவுக்கரசர் பாடிய பதிகங்கள் நாற்பத்தொன்பதாயிரம், சுந்தரர் பதிகங்கள் முப்பத்தெண்ணாயிரமாகும். நம்பியாண்டார் நம்பியால் மீட்கப்பட்ட ஏடுகளிற் காணப்பட்ட மூவர் பதிகங்கள் முறையே 384, 307, 100 என்ற எண்ணிக்கையினவாகும். திருமுறைகண்ட காலத்திற் கிடைத்ததாகக் கூறப்படும் சம்பந்தர் பதிகங்கள் முன்னூற்றெண்பத்து நான்கினுள் ஒன்று அவை முதன் முதலாக அச்சேறிய காலத்திற் கிடைக்கப்பெறவில்லை. தொலைந்த அப்பதிகம்போக திருவிடைவாய், கிளியன்னவூர் என்னும் இரு தலங்கள்மீது சம்பந்தராற் பாடப்பட்ட ஒவ்வோர் பதிகங்கள் முறையே இருபதாம் நூற்றாண்டின் இரண்டாம், மூன்றாம் தசாப்தங்களிற் கிடைக்கப்பெற்றன. இந்த இரு பதிகங்களையும் தவிர திருமறைக்காட்டின்மேல் சம்பந்தராற் பாடப்பட்டதாகக் கூறப்படும் புதிய பதிகம் ஒன்றும் உள்ளது. எனினும் அறிஞர் பலரும் அதனை வெள்ளிப் பாடலாக ஒதுக்கியுள்ளனர். வெள்ளிப்பாடலாகக் கருதப்படுவது நீங்கலாக, இன்று எமக்குக் கிடைக்கும் சம்பந்தர் பதிகங்கள் 385ஆகும். திருமுறைகண்ட காலத்திற் கிடைத்ததாகக் கூறப்படும் திருநாவுக்கரசர் பதிகங்கள் 307; ஆனால் இன்று 312 பதிகங்கள் காணப்படுகின்றன. கூடுதலாகக் கிடைத்த பதிகங்கள் எவை என்று இனங்கான முடியவில்லை. திருமுறைகண்ட காலத்துச் சுந்தரர் பதிகங்கள் 100. ஆனால் சில பிரதிகளிற் காணப்பெறும் திருநாகைக் காரோணப் பதிகத்தோடு சேர இன்று கிடைக்கும் சுந்தரர் பதிக எண்ணிக்கை 101 ஆகிறது (இன்று கிடைக்கும் மூவர் பதிகங்களுள்ளும் சிலவற்றில் ஒரிரு பாடல்கள் காணப்பெறாமையும் குறிப்பிடத்தக்கதே.).
திருமுறைகண்ட புராணத்தின்படி திருமுறைத் தொகுப்புப்பணி மேற்கொள்ளப்பட்ட வரலாறு வருமாறு: திருவாரூரிலிருந்து ஆட்சி நடாத்தி வந்த அபயகுலசேகரன் எனும் சோழமன்னனது அவைக்கு வந்த சிவனடியார் சிலர், மூவர்
இந்துக்கலைக்களஞ்சியம்

பதிகங்களில் ஒவ்வொன்றை ஒதினார்கள். அவற்றில் ஈடுபட்ட மன்னன் ஏனைய பதிகங்களையும் கேட்க ஆசைகொண்டான். ஆனால் எங்கு தேடியும் அவை கிடைக்கப்பெறவில்லை. அதனால் அம்மன்னன் கவலையுற்றிருந்த காலத்தில் பொல்லாப் பிள்ளையாரின் அருள்பெற்ற நம்பியாண்டார் நம்பியின் பெருமையைக் கேள்வியுற்று, அவரை நாடி, மெய்ப் புகழதுசேர் மூவர் தமிழ், தொண்டர் செய்தி பூதலத்தில் விளங்கச் செய்யவேண்டும்' என விண்ணப்பித்தான்.அவனது விண்ணப்பத்தை ஏற்றுக்கொண்ட நம்பி, பொல்லாப்பிள்ளையாரை வேண்ட, பொல்லாப்பிள்ளையார், தேவாரப்பதிகங்கள் தில்லையில் ஓரறையில் பூட்டிவைக்கப் பட்டுள்ளன என்ற செய்தியையும், திருத்தொண்டர் பற்றிய செய்திகளையும் நம்பிக்கு எடுத்துரைத்தார். நம்பி அச்செய்தியைச் சோழ மன்னனுக்குத் தெரிவிக்க, இருவருமாகச் சிதம்பரம் சென்று, தில்லைவாழந்தணரைக் கொண்டு தேவாரச் சுவடிகள் இருந்த அறையைத் திறந்தபோது சுவடிகள் பலவும் கறையானுக்கு இரையாகிப் போயிருக்கக் கண்டு மன்னன் மனம் வருந்தினான். அவ்வேளை வானில் "வேதச் சைவநெறித் தலைவரெனும் மூவர் பாடல் வேய்த்தனபோல் மண்மூடச் செய்தே ஈண்டு வேண்டுவன வைத்தோம் என்னும் வார்த்தை அசரீரியாக எழுந்தது. அதுகேட்டு மன்னன் மனம்தேறி சம்பந்தர் தேவாரங்களை மூன்றாகப் பகுத்து முதல் மூன்று திருமுறையாகவும், திருநாவுக்கரசர் தேவாரங்களை மூன்றாகப் பகுத்து நாலாம், ஐந்தாம், ஆறாம் திருமுறைகளாகவும் சுந்தரர் தேவாரங்களை ஒன்றாக்கி ஏழாவது திருமுறையாகவும் ஆக்கினான் - அதாவது தேவாரங்களை ஏழு திருமுறைகளாக்கினான்.
திருமுறைகண்ட புராணத்திற் கூறப்பட்டதுபோல தேவாரப் பதிகங்கள் யாவும் சிதம்பரத்திலேயே பூட்டி வைக்கப்பட்டிருந்தன என்ற செய்தியில் உண்மை இருப்பதாகக் கொள்ளமுடியவில்லை. காரணம்,
“பல்லவ பேரரசர்கள் காலந்தொட்டே திருக்கோயில்களில் இறைவன் திருமுன்பு திருப்பதிகம் பாடும் முறைமை நடைமுறையில் இருந்துள்ளது. கி. பி. 852 ஆம் ஆண்டில் வட ஆர்க்காடு மாவட்டத்திருவலம் சிவாலயத்தில் வெட்டுவிக்கப்பெற்ற மூன்றாம் நந்திவர்மனின் (நந்திக்கலம்பக நாயகன்) கல்வெட்டில் விக்கிரமாதித்த வாணராயன் என்பான் நாளும் திருப்பதியம் விண்ணப்பம் செய்ய நிவந்தம் கொடுத்தான் என்னும் செய்தி காணப்படுகிறது. ஒன்பதாம் நூற்றாண்டிலிருந்து இம் மரபு தொடர்ந்து இருந்ததற்கான பல சான்றுகள் கிடைக்கின்றன.”
திருமுறைத் தொகுப்புப்பணியை மேற்கொண்டவனாகத் திருமுறைகண்ட புராணம் கூறும் சோழ மன்னனாக பொதுவாகக்
கருதப்படுபவன் முதலாம் இராஜராஜனே. ஆனால்,
321

Page 360
“மாமன்னன் இராஜராஜசோழன் காலத்துக்கு முன்பு வாழ்ந்த சோழப் பேரரசர்களும் திருப்பதியம் பாடப் பல நிவந்தங்கள் அளித்ததை திருத்தவத்துறை (இலால்குடி), குமாரவயலூர், திருவெறும்பியூர், திருநல்லம், அல்லூர், பழுர், திருமணஞ்சேரி, குத்தாலம் போன்ற ஊர்களில் உள்ள சாசனங்கள் கூறுகின்றன.”
திருமுறைகண்ட புராணம் சிதம்பரத்திற் கிடைத்ததாகக் கூறும் பதிகங்களின் எண்ணிக்கையைவிட மேலதிக பதிகங்கள் இன்று காணப்பெறுவதை நோக்குகையில், அக்காலத்தில் இருந்த பதிகங்கள் யாவும் திருமுறைத் தொகுப்பு முயற்சியின்போது அகப்பட்டன என்றும் கூறமுடியவில்லை.
திருமுறைகளைத் தொகுத்தவர் நம்பியாண்டார் நம்பி என்றே பொதுவாகக் கூறப்படுகிறது. திருநாரையூர்த் தலபுராணமும் அவ்வாறே கூறுகிறது. ஆனால் திருமுறை கண்டபுராணமோவெனின், அச்செயலை மன்னன் செயலாகவே
கூறுகிறது.
66
--------------- வகை ஏழாக வகுத்துச் செய்தான் தூய மனு ஏழு கோடி என்பது உன்னி தன்னிகரில் திருவருளால் மன்னன் தானும் தாரணியோர் வீடுபெறும் தன்மை சூழ்ந்தே"
(தி. க. புரா, 24)
இதுபோலவே தேவாரம் தவிர்ந்தவற்றுள் திருவாசகம், திருவிசைப்பா, திருமந்திரம் என்பவற்றை முறையே எட்டாம், ஒன்பதாம், பத்தாம் திருமுறைகளாக வகுத்த செயலைத் தனியே மன்னனாலோ அல்லது நம்பியாண்டார் நம்பியாலோ செய்யப்பட்டதாகக் கூறாமல், பலராற் செய்யப்பட்டதாகவே அப்புராணம் கூறுகிறது.
66 அருட்டிரு வாசகம் ஒன்று மோகம் எறி திருவிசைப்பா மாலை முறை ஒன்று சிவ
போகம் மிகு மந்திரமாம் முறையொன்று புகழ்பெறவே பாசம் மிகு திருமுறைகள் பத்தாக வைத்தார்கள்.”
(தி க. புரா, 26)
அதன்பின்னர்தான் மன்னன் நம்பியாண்டார் நம்பியைப் பணிந்து, ‘இறைவன் அருளிய திருமுகப்பாசுரம் முதலான வற்றையும் தொகுத்து ஒரு திருமுறையாக்குக' என வேண்டினான் என்றும், நம்பியும் ஒரு திருமுறையாகத் தொகுத்து எல்லாமாக திருமுறைகள் பதினொன்றாகுமாறு செய்தார் என்றும் கூறுகிறது.
322

"வைத்ததற்பின் நம்பிகழல் மன்னாபிரான் மகிழ்ந்திறைஞ்சிச் சித்திதரும் இறைமொழிந்த திருமுகப்பாசுரம் முதலாம் உய்த்தபதிகங்களையும் ஒருமுறையாச் செய்க எனப் பத்திதரும் திருமுறைகள் பதினொன்றாப் பண்ணினார்.”
(தி. க. புரா, 27)
இங்கு பதினோராந்திருமுறை பற்றிய ஆலோசனையைக் கூறியவனாக மன்னனே சித்திரிக்கப்படுகின்றமை கருதத்தக்கது. திருமுறைகளைத் தொகுத்தவர் யார் என்று திருமுறைகண்ட புராணம் தெளிவாகக் கூறவில்லை என்பது இவற்றால் உணரப்படும். அதுபோலவே அப்புராணம் குறிப்பிடும் சோழமன்னன் யார் என்றும் ஒரு தெளிவுக்கு வரமுடியவில்லை. புராணம், அவனை அபயகுலசேகரன் என்றும் இராசராசன் என்றும் குலசேகரன் என்றும் வேறுவேறு இடங்களிற் கூறுகின்றது. இராசராசன் என்று குறிப்பிடப்பட்டிருப்பதால் அவனை முதலாம் இராஜராஜசோழன் என்றே பலரும் கருதினார்கள். உலகில் அவ்வெண்ணமே ஒரளவு நிலைபெற்றும் உள்ளது. ஆனால் சதாசிவ பண்டாரத்தார், வெள்ளைவாரணன் முதலான ஆய்வாளர்கள் அம்மன்னன் முதலாம் இராஜராஜ சோழன் அல்ல என நிறுவியுள்ளார்கள். அம்மன்னன் முதலாம் இராஜராஜசோழனே என்ற கருத்துடைய ஆய்வாளர்களும் உள்ளார்கள். ஆனால் திருமுறைகண்டபுராணத்திற் காணப்படும் தெளிவின்மையானது அச்சோழமன்னன் ஓர் கற்பனைப் பாத்திரமோ என்னும் ஐயத்தையும் எழச் செய்கிறது. அப்புராணம் சோழவமிசத்துக்குப் பெருமை சேர்க்க மேற்கொள்ளப்பட்ட
நடவடிக்கைகளுள் ஒன்றாகவும் இருத்தல் கூடும்.
நம்பியாண்டார் நம்பி இயற்றிய நூல்களுள் ஒன்றாகிய திருத்தொண்டர் திருவந்தாதியில் ஆதித்தன் என்னும் சோழமன்னன் பலமுறையும் குறிப்பிடப்படுகிறான். அவன் முதலாம் ஆதித்தனே என்று கொண்ட முடிவினால் சதாசிவபண்டாரத்தார் நம்பிகளின் காலத்தை முதலாம் ஆதித்தனின் காலமான கி. பி. 870-907 ஐ ஒட்டியதாக முடிவு செய்கிறார். அதிற் சிலவேளை தவறிருந்தாலும் வழக்கமாகக் கூறப்படுவதுபோல நம்பிகளை முதலாம் இராஜராஜன் காலத்தவராகக் கொள்வதில் உடன்பாடு காணமுடியவில்லை. காரணம்: முதலாம் இராஜராஜன் தான் செய்த காரியங்களையெல்லாம் சாசனப்படுத்துகின்ற வழக்கத்தைக் கொண்டிருந்தவன். அத்தகையவன் திருமுறைகளைத் தொகுப்பித்ததாய பெரும்பணியை (தானே செய்திருப்பின்) கல்வெட்டிற் பொளறியாது விட்டான் என்று கொள்ளமுடியாது. அதுவும் திருப்பதிகங்கள் சம்பந்தமாக தான் மேற்கொண்ட் பணிகள் பலவற்றையும் கல்வெட்டிற் பொறித்த அவன், இவ்வருஞ்செயலை மாத்திரம் விடுத்தான் என்று கொள்ளமுடியாது. திருப்பதிகங்கள் தொடர்பான அவனதும் அவனுக்கு முந்தியவர்களதுமான பெருந்தொகையான
இந்துக் கலைக்களஞ்சியம்

Page 361
சாசனங்கள் திருப்பதிகங்களின் தொகுப்புப்பணி ஏலவே நிறைவேறி விட்டதையே உணர்த்தி நிற்கின்றன எனலாம். எனினும் திருப்பதிகங்களைத் திருத்தலங்களில் முறைப்பட ஒதச் செய்வதில் பெரும் அக்கறை கொண்டு நிவந்தங்கள் பலவற்றையும் ஏற்படுத்திய மன்னர்களுள் முதலாம் இராஜராஜனே முதன்மையானவனாகக் கொள்ளத்தக்கவன் என்பதையும் குறிப்பிட்டேயாக வேண்டும்.
நம்பியாண்டார் நம்பியின் காலம் தொடர்பான சதாசிவபண்டாரத்தாரின் முடிவை ஏற்றுக்கொள்ளும்போது திருவிசைப்பா முதலானவற்றையும் அவரே தொகுத்தார் என்று கொள்ளமுடியாமற் போகிறது. ஏனெனில் அவற்றுட் பல குறிப்பிட்ட அக்காலத்துக்குப் பின்னர் தோன்றியவையே. உண்மையில் தேவாரங்கள் மாத்திரமே முதலில் தொகுக்கப்பட்டிருத்தல் வேண்டும். தேவாரத் திருமுறைத் தொகுப்பு பண், யாப்பு என்பவற்றின் அடிப்படையிலான தொகுப்பு என்பதும் ஏனையவை அவ்வாறானவையல்ல என்பதும் இங்கே கருதத்தக்கன. திருமுறைகண்ட புராணம் திருமுறைகள் பதினொன்றாக வகுக்கப்பட்டதாகக் கூறிய பின்னரும், வேறொருபாட்டில் முதலில் தேவாரங்கள் தொகுக்கப்பட்டதும் ஏனையவை பின்னர் தொகுக்கப்பட்டதுமான செய்திகளைக் கூறுகிறது. நீண்டகால இடைவெளியில் வேறு வேறு நபர்களால் மேற்கொள்ளப்பட்ட காரியங்களைப் புராணம் ஒரேகாலத்தில் ஒருவரால் மேற்கொள்ளப்பட்டவையாகச் சொல்லுகிறது என்று கொள்வதே பொருத்தமானதாகலாம்.
தேவாரத் தொகுப்பு:பண்முறைத் தொகுப்பு
தேவாரங்கள் பண் அடிப்படையில் தொகுக்கப்பட்டன என்பது இங்கே கூறப்பட்டது. அவ்வாறான தொகுப்பு பண்முறைத்தொகுப்பு என்று இன்று வழங்கப்படுகிறது. சம்பந்தர் காலத்தவரும் தலயாத்திரைகளின் போது அவருடன் கூடிச்சென்று, அவர் பதிகங்கள் பாடுகையில் உடன் யாழ் வாசித்தவருமான திருநீலகண்ட யாழ்ப்பாணரின் மரபில் வந்த பெண்மணியொருவரால் அப்பண்கள் அமைக்கப்பட்டதாக திருமுறைகண்ட புராணம் கூறுகிறது. பண்முறைத் தொகுப்பில் திருஞானசம்பந்தர் பாடிய பதிகங்களுள் நட்டபாடை முதல் மேகராகக்குறிஞ்சி வரையிலான ஏழு பண்களில் அமைந்தவை முதலாம் திருமுறையாகவும், இந்தளம் முதல் செவ்வழி வரையிலான ஆறு பண்களால் அமைந்தவை இரண்டாம் திருமுறையாகவும், காந்தாரபஞ்சமம் முதல் அந்தாளிக்குறிஞ்சி வரையிலான ஒன்பது பண்களில் அமைந்தவை மூன்றாந் திருமுறையாகவும் வகுக்கப்பட்டுள்ளன. இவ்வாறே திருநாவுக்கரசர் பாடியவற்றுள் கொல்லிப்பண்முதல் குறிஞ்சிப் பண் வரையில் அமைந்த பதிகங்கள் நான்காம் திருமுறையாகவும், திருக்குறுந்தொகைப் பதிகங்கள் யாவும் ஐந்தாம் திருமுறை யாகவும், திருநெடுந்தாண்டகங்கள் ஆறாம் திருமுறையாகவும் வகுக்கப்பட்டுள்ளன. சுந்தரர் பாடியவை இந்தளம் முதல் பஞ்சமம் ஈறாக பதினேழு பண்களிற் பகுத்து ஒரே திருமுறையாகத்
இந்துக் கலைக்களஞ்சியம்

தொகுத்து ஏழாவதாக வைக்கப்பட்டுள்ளன. இவற்றுள் திருநாவுக்கரசர் பதிகங்கள் பல, பண் அமைக்கப் பெறாது யாப்பினடிப்படையிலேயே தொகுக்கப்பட்டுள்ளமை கவனித்தற் குரியது.
பண்முறைத் தொகுப்பில் பதிகப்பகுப்பு பண், யாப்பு என்பவற்றின் அடிப்படையிலேயே மேற்கொள்ளப்பட்டதால் ஒரு தலத்தின் மீது ஒருவர் பாடிய பதிகங்கள் யாவற்றையுமோ அல்லது இருவரோ மூவருமேயோ பாடிய பதிகங்கள் யாவற்றையுமோ ஒருசேரக் காணமுடியாது. ஒரு தலத்தின்மீது பாடப்பட்ட தேவாரப்பதிகங்கள் அனைத்தையும் ஒன்றாகப் பேணக்கூடிய, ஒதக்கூடிய வசதியைக் கருத்திற்கொண்டு தலமுறைத்தொகுப்பு என்னும் ஒரு தொகுப்புமுறை பிற்காலத்தில் மேற் கொள்ளப்பட்டது.உமாபதிசிவாசாரியாரே இத்தொகுப்பினைச் செய்தார் என்பர். 19 பாடல்களைக் கொண்ட திருப்பதிக்கோவை என்னும் நூலில் சிதம்பரம் முதலாக 274 திருத்தலங்கள் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன. அவ்வரிசையிலேயே மூவர் பாடிய பதிகங்கள் யாவும் தொகுக்கப்பட்டு தலமுறைத் தொகுப்பு எனப்படுகிறது. தலைமுறைத் தொகுப்பிற் கூறப்படும் 274 தலங்களோடு இந்நூற்றாண்டின் தொடக்கத்திலேயே கிடைக்கப்பெற்ற இரு பதிகங்களுக்குரிய திருவிடைவாய், கிளியன்னவூர் என்னும் இரு தலங்களையும் சேர்க்க மூவர் பாடல் பெற்ற தலங்களாக இன்று அறியப்படுபவை எல்லாமாக 275 ஆகும். பண்முறை, தலமுறை என்னும் இருவகைத் தொகுப்புக்களுள்ளும் பண்முறைத்தொகுப்பே மிகப்பழைய ஏட்டுச் சுவடிகளிற் காணப்படுகின்றது என்பர். பண்முறை, தலமுறை இரண்டுமே கிடைக்கப்பெற்ற முழுத்தேவாரங்களையும் உள்ளடக்கிய தொகுப்புக்களே. அவற்றை அடங்கன்முறை என்பர். இவற்றைவிட சிறப்பாகக் கருதப்படும் பதிகங்களை, பாடல்களைத் தெரிந்தெடுத்துச் செய்யப்பட்ட தொகுப்புக்களும் உண்டு. இவ்வகையில் அகத்தியர் பேரில் அமைந்த தொகுப்பொன்று சிறப்பாகப் போற்றப்படுகின்றது. திருமுறைகண்ட புராணத்தில் கூறப்படுவதுபோல் இதற்கும் ஒரு வரலாறு கூறப்படுகிறது. அது
வருமாறு:
“கல்வியறிவொழுக்கங்களாற் சிறப்புற்று விளங்கிய சிவாலய முனிவர், அவ்வடங்கன் முறையினது மகிமையையும் அதனை நாடோறும் விதிப்படி சிரத்தையோடு பாராயணம் செய்யின் முத்தி சித்திக்குமென்பதையும் அறிந்து, தாம் அப்படி பாராயணம் செய்ய ஆசை கொண்டார். அது நிறைவேறுதல் கூடாமையால் வருத்தமுற்று சிதம்பரத்தை அடைந்து, கனகசபையின் கண்ணே ஆனந்தத் தாண்டவஞ் செய்தருளும் சபாநாதரை வணங்கி, தமது கருத்து முற்றுப்பெறும் பொருட்டு நெடுங்காலந் தவஞ்செய்தார். அப்பொழுது சபாநாதருடைய திருவருளினாலே, 'சிவாலய முனிவனே, நீ பொதியமலையிலிருக்கின்ற அகத்திய முனிவனிடத்தே போவாயாயின் உன்கருத்து நிறைவேறும் என்று ஒரசரீரி வாக்கு தோன்றிற்று. அது கேட்ட சிவாலய முனிவர்
323

Page 362
மனமகிழ்ந்து, சபாநாதரை வணங்கி, விடை பெற்றுக்கொண்டு சென்று, பொதியமலையை அடைந்து, அகத்திய முனிவரைச் சந்தித்து, மூன்று வருஷகாலம் அருந்தவஞ் செய்தார். அகத்திய மகாமுனிவர் அவருக்கு வெளிப்பட்டு அடங்கன் முறை முழுவதையும் அவருக்கு உபதேசித்து, அதனின்றும் இருபத்தைந்து திருப்பதிகங்களையும் எடுத்துத் திரட்டி இவைகளை நாடோறும் பாராயணஞ் செய்பவர்கள் அடங்கன் முறை முழுவதையும் பாராயணஞ் செய்பவர்களாவார்கள். என்று திருவாய் மலர்ந்து, மறைந்தருளினார். சிவாலய முனிவரும் அப்படியே அவ்விருபத்தைந்து திருப்பதிகங்களையும் நெடுங்காலம் பாராயணஞ் செய்து சிவபெருமானுடைய திருவருளைப் பெற்றார்.”
அகத்தியர் தேவாரத் திரட்டினுள் அடங்கும் 25 பதிகங்களும் குருவருள், வெண்ணிறு, பஞ்சாட்சரம் முதலான எட்டுத் தலைப்புகளுள் அடக்கப்படுகின்றன. இத்திரட்டின் வரலாற்றை நோக்கும்போது அது பாராயண வசதி கருதி மேற்கொள்ளப்பட்ட ஒரு தொகுப்பு என்றே தெரிகிறது. அதில் உள்ள தலைப்புக்கள், அத்தொகுப்பு, சைவசித்தாந்தக் கருத்துக்கள் ஒரளவு வளர்ச்சியுற்ற பிற்காலத்தில் மேற்கொள்ளப்பட்டது என்பதைக் காட்டுகின்றன.
சைவமரபில் தேவாரத்தின் முக்கியத்துவம்:
நெடுங்காலமாகவே தேவாரங்கள் பாராயணம் செய்யப்படும் வழக்கம் இருந்து வந்துள்ளது. கல்வெட்டுக்கள் பல, கோவில்களில் தேவாரப்பதிகங்கள் ஒதப்பட்டு வந்தமை, ஒதுபவர்களுக்கு நிவந்தங்கள் ஏற்படுத்தப்பட்டமை முதலான தகவல்களைத் தருகின்றன என்பதை ஏலவே கண்டோம். இச் சந்தர்ப்பத்தில் தேவாரங்கள் பயிலப்படுகின்ற முறைமையை நோக்குவது பொருத்தமானதே. தேவாரப் பயில்வானது வழிபாட்டோடு சம்பந்தப்பட்டதாகவே அமையக் காண்கிறோம். ‘தேவாரம்' என்ற சொல்லின் வரலாறே அதைத்தான் உணர்த்துகிறது. இன்றும் தமிழ் வழங்கும் பிரதேசங்களிலுள்ள சைவக் கோவில்கள் தோறும் விசேட பூசைகளின் ஓர் அங்கமாக திருமுறை ஒதல் அமைந்துள்ளது. பெருங்கோவில்களில் தினமும் இது நடைபெறுகிறது. திருமுறைகள் பன்னிரண்டையும் ஒதல் சிறந்ததென்றும் அல்லது அதற்குப் பதிலாக பஞ்சபுராணம் என்று சிறப்பிக்கப்படும் தேவாரம், திருவாசகம், திருவிசைப்பா, திருப்பல்லாண்டு, திருப்புராணம் ஒதவேண்டும் என்றும் கூறுவர். இந்த ஐந்தையும் ஒதாவிடினும் அவற்றுள் முதலாவதும் இறுதியானதுமான தேவாரம், திருப்புராணம் என்ற இரண்டையுமேனும் ஒதுவது சைவப் பாரம்பரியத்தில் வழக்கமாகிவிட்டது.
தேவாரங்கள் இவ்வாறு வழிபாட்டின் ஓர் அங்கமாகக்
கருதப்படுகின்ற அதேவேளை வழிபாட்டுக்குரிய திருநூலாகவும்
324

கருதப்படுகிறது. தெய்வத்திருவுருவங்களுக்குச் செய்யப்படும் தீபாராதனை முதலிய உபசாரங்கள் தேவாரச் சுவடிகளுக்கும் நிகழ்த்தப்படுகின்றன. தமிழகத்துப் பெருஞ்சிவத்தலங்களில் நடைபெறும் திருமுறைத் திருவிழாக்களில் சுவாமியை வீதிவலம் வரச்செய்வது போலவே தேவாரச் சுவடிகளையும் வீதிவலம் வரச் செய்விக்கிறார்கள். தேவார ஆசிரியர்களும் வழிபாட்டுக்கு உரியவர்களாகவே பூசிக்கப்படுகிறார்கள். சிவாலயங்களின் சுற்றுப் பிராகாரங்களில் தேவாரமுதலிகளுக்கு கோவில்களும் அமைக்கப்படுகின்றன. அவர்களுக்கென்று அமைக்கப்பட்ட தனிக் கோவில்களும் உண்டு. தெய்வங்களுக்குப் போலவே இவர்களுக்கும் அபிஷேக ஆராதனைகள் நிகழ்த்தப்படுகின்றன. மூவர் வாழ்வில் நிகழ்ந்ததாகக் கூறப்படும் அற்புதங்களோடு சம்பந்தப்பட்ட தலங்களில் வருடாவருடம் நிகழும் திருவிழாக்களில் அவ்வற்புதங்கள் நிகழ்வது போலக் காட்டுவதும் அத்திருவிழாக்களின் ஒர் அங்கமாகவுள்ளது.
தேவாரங்களை வேதங்களுக்கு ஒப்பாக - தமிழ் வேதமாகக் கொள்வதும் அவற்றுக்குக் கொடுக்கப்படும் இத்தகைய தெய்வாம்சத்தின் ஒரு பரிமாணமே. சம்பந்தர் தமது பதிகங்களை 'மறை இலங்குதமிழ்', 'மறை வளரும் தமிழ் என்றெல்லாம் வேதத்தோடு தொடர்புபடுத்திப் பாடியுள்ளார். பின் வந்தவர்கள் தேவாரங்களைத் தமிழ் வேதம் என்றே கூறினார்கள். திருமுறைகண்டபுராண ஆசிரியர் பொல்லாப் பிள்ளையாரின்
வாக்காக,
"கண்டபெரு மந்திரமே மூவர்பாடல்
கைகாணாமந்திரம் கண்ணுதலோன் கூறல்'(தி. க. புரா.13)
என்று வேதங்களுக்கும் தேவாரங்களுக்கும் இடையில் உள்ள வேற்றுமை அவை எழுதப்படாதன; இவை எழுதப்படுவன என்பது மாத்திரமே என்கிறார். சேக்கிழாரும் அக்கருத்திலேயே எழுதுமறை என்றார். தமிழை சம்பந்தர், எழுதுமொழி என்று கூறுவதும் இவ்விடத்தில் மனங்கொள்ளத்தக்கது. திருமறைக்காட்டில் மறைகளாற் பூட்டப்பட்டு மறைகளாலேயே
திறக்கப்படுவதான கோயிற்கதவு,
"அம்மறைகள் ஒதும் பெருகிய அன்புடை அடியார் அணைந்து நீக்கப் பெறாமையினால்” (பெரிய, 2483)
பூட்டப்பட்டே கிடந்தமை கண்ட அப்பரும் சம்பந்தரும் அக் கதவைப் பதிகம் பாடியே திறந்ததாகவும், பூட்டியதாகவும் கூறப்படும் வரலாற்றின் உள்ளாகவும் தேவாரம் தமிழ்வேதம் என்ற கருத்தே வலியுறுத்தப்படுகிறது. சைவத்திற் போலவே வைணவத்திலும் திருப்பாசுரங்களைத் தமிழ்வேதம் எனக்கொள்ளும் மரபு உண்டு. வைணவர்கள் வேதம் தமிழ் செய்த
சடகோபன்' என்று நம்மாழ்வாரைப் போற்றுவார்கள்.
இந்துக்கலைக்களஞ்சியம்

Page 363
தமிழ்நாட்டுச் சைவம், வைணவம், என்னும் இருமரபிலும் முறையே தேவாரங்களையும் திருப்பாசுரங்களையும் தமிழ்வேதம் எனக் கூறிக்கொள்வதுண்டானாலும், சைவத்தைவிட வைணவத்தில் அவ்வாறு கூறிக் கொள்வதற்கு கூடிய அர்த்தமும் அழுத்தமும் - உள்ளதைக் காணக்கூடியதாக உள்ளது. வைணவத்தில் விசிட்டாத்துவைதம் முதலான தத்துவங்களை முன்வைத்த இராமானுஜர் போன்ற ஆசிரியர்கள் தமது: தத்துவங்களுக்கு மூலங்களாக ஆழ்வார் பாசுரங்களைக் குறிப்பிடுகிறார்கள். வேதோபநிடதத்து மகா வாக்கியங்கள் போல ஆழ்வார் பாசுரங்களைப் போற்றியுள்ளார்கள். சைவ மரபிலும் சைவ சித்தாந்தக் கருத்துக்கள் யாவும் மூவர் பாடல்களில் இருந்து முகிழ்த்தவை என்றே கூறிக்கொள்கிறார்கள். திருமுறைத் தெளிவே சிவஞானபோதம் என்று நூல்களும்
எழுதப்பட்டுள்ளன. பழம் பாடலொன்று,
"வேதம் பசு அதன்பால் மெய்ஆகமம் நால்வர் ஒதும் தமிழ் அதன் உள்ளுறு நெய் – போதமிகு நெய்யின் உறுசுவையாம் நீள்வெண்ணை மெய்கண்டான்
செய்த தமிழ் நூலின் திறம்”
என்கிறது. இன்னும் அகத்தியர் பேரில் அமைந்த தேவாரப் பதிகங்களின் திரட்டுப்போல உமாபதிசிவம் பேரில் அமைந்த வேறொரு தேவாரத் திரட்டில் சைவசித்தாந்தக் கருத்துக்களைக் கொண்ட பாடல்கள் பல, திருவருட்பயன் என்னும் சித்தாந்த சாஸ்திர நூலின் உட்பிரிவுகளான பதிமுதுநிலை, உயிரவைநிலை, இருண்மலநிலை முதலான பத்துத் தலைப்புகளிலும் தொகுக்கப்பட்டுள்ளன.
"சைவசித்தாந்த உண்மைகள் அனைத்தும்
பன்னிருதிருமுறைகளுள்ளும், மூவர் முதலிகள் மொழிந்தருளிய தேவாரங்களின் பிழிவே என்பது விளங்கவும் ஆசிரியர் இத்திரட்டினைச் செய்தனர் ஆகலாம்”
என்பர். உமாபதிசிவம் என்ற பேரினர் ஒருவர் திருமுறைகளோடு சம்பந்தப்பட்ட பல முயற்சிகளை மேற்கொண்டுள்ளார். இங்கு குறிப்பிடப்பட்ட தேவாரத்திரட்டோடு திருமுறைகண்ட புராணம், சேக்கிழார் புராணம், தேவாரப்பதிகங்களின் தலமுறைத்தொகுப்பு என்பவற்றின் ஆசிரியரான உமாபதிசிவமும் திருவருட்பயன் முதலான சித்தாந்த அட்டகத்தை எழுதிய கொற்றவன்குடி உமாபதி சிவாசாரியாரும் ஒருவரா என்பது ஐயத்துக்கிடமானதே. பெரியபுராணத்தோடு சேர்த்து திருமுறைகண்ட புராணத்தைப் பதிப்பித்த ஆறுமுகநாவலரும் “இந்நூலின் ஆசிரியர் பெயர் தெரியவில்லை, சிலர் உமாபதிசிவம் என்பர்” எனக்
குறித்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது. (க.இர.)
இந்துக்கலைக்களஞ்சியம்

தேவியர் மூவர்
பராசக்தி எங்கும் நிறைந்தவள். மலரில் மணம் போலவும், பாலில் கரந்திருக்கும் நெய்யாகவும் யாண்டும் நீக்கமற நிறைந்து நிற்பவள். பூரணியாகவும், புராதனியாகவும் இலங்குபவள். ஆதிசங்கரர் அமைத்துத் தந்த அறுவகை சமயநெறிகளிலே "சாக்தம்”சக்தியின் மேன்மையையும் சிறப்பையும் மிகச் சிறப்பாக எடுத்துக் கூறுகின்றது.
பாரதம் முழுவதையுமே தேவி வழிப்பாட்டின் நிலைக்களன் என்று கூறலாம். இமயத்தின் கொடுமுடியான காஷ்மீரத்தில் கூrரபவானி, பம்பாயில் மகாலசுஷ்மி, குஜரத்திலே கல்யாணி, இராஜபுதனத்திலே பவானி, அஸ்ஸாமிலே காமரூபி, கல்கத்தாவிற் காளி, மைசூரில் சாமுண்டி, தமிழகத்திற் காமாட்சி, கேரளத்திற் பகவதி, கன்யாகுமரியில் கன்னிக்குமரி என பாரத தேசம் முழுவதுமே தனது அருளாட்சியை அவள் நடத்தி வருகின்றாள்.
படைக்கும் தொழிலிற்கு சிவன், சக்தி இரண்டுமே தேவை. உலர்ந்த களிமண்ணைக் கொண்டு பானை வனைய முடியாது. களிமண்ணைப் பதப்படுத்த நீர் அவசியமாகிறது. அது போன்றே பிரபஞ்ச சிருஷ்டியை சக்தியின் துணையின்றி தனிச் சிவமால் ஏற்படுத்த முடியாது. கருவியில்லாது இசையை ஒலிக்க முடியாது. சக்தியின் துணையில்லாது பிரம்மத்தை அறிந்து கொள்ள முடியாது என்பார் பூரீ இராம கிருஷ்ணர்.
அவளே பிரம்மா, அவளே விஷ்ணு; அவளே உருத்திரன்; அவளே ஈஸ்வரன்; அவளே சதாசிவன். இந்த உண்மையை சக்தி வழிப்பாட்டில் ஊறித்தினைத்தவர்கள் உணர்வார்கள். பராசக்தி மனோ வாக்கைக் கடந்து அசையாது சடநிலையில் பரப்பிரும்மத்தின் அம்சமாக விளங்குவாள். நாமமற்று, உருவமற்று தோன்றாப் பெருநிலையில் தோற்றங் கொள்கிறாள். தோன்றும் நிலையில் நாம ரூபங்களோடு பிரபஞ்ச முழுதும் ஊடுருவி நிற்கின்றாள். ஜந்தொழில்களைச் செய்யும் ஜந்து மூர்த்திகளாலும் அன்னையின் திருவருள் இல்லாமல் இயங்கவும்
(piguTgl
'ஆகமங்கள் எங்கே அறுசமயம் தான் எங்கே யோகங்கள் எங்கே உணர்வு எங்கே- பாகத்து அருள் வடிவும் தானுரமாய் ஆண்டிலனேல் அந்தப் பெருவடிவை யார் அறிவார் பேசு’
என்று திருக்களிற்றுப்படியாரும் அதிசயித்து நிற்கும். அன்னை தரும் அநுபவ அதிசயத்தைச் சொல்லில் வடிக்க முடியாது. பொருளாகவும், பொருள்முடிக்கும்போகமாகவும், போகம் செய்யும் மருளாகவும், மருளில் வருந்தெருளாகவும் இருக்கும் ஒளிவெளிப் பொருளாகிய பராசக்தியின் திருவடியல்லாது புகழ் வேறு இல்லை என்பார் அபிராமிப்பட்டர்.
325

Page 364
“கண்ணியது உன்புகழ் கற்பதுன்நாமம் கசிந்து பக்தி பண்ணியது உன்னிரு பாதாம் புயத்தில் பகலிரவா நண்ணியது உன்னை நயந்தோர் அவையத்து நான்
முன்செய்த புண்ணியம் ஏது என்னம் மே புவி பேழையும் பூத்தவளே’
மூம்மூர்த்திகளுக்கும் மூத்தவளாகிய அன்னை பராசக்தியை ஏற்றிப் பகோற்றும் காலம் இரவு நேரமே.
“ராத்ரீம் ப்ரபத்யே ஜனனீம் ஸப்வ பூத நவேசனம் பத்ராம் பகவதிம் க்ருஷ்ணாம் விஸ்வஸ்ய ஜகதோ நிசாம்’
காலமாக இருப்பவள் பகலாகப் பரிணமித்து இரவாக அடங்குகிறாள். புலன்களும் புவனமும் ஒடுங்கும் இரவிலே புவனேஸ்வரி விழித்திருந்து அருள் பாலிக்கின்றாள். ஒன்பது என்பது எண்களில் சிறந்தது. பெரியது- அதற்கு மேல் வேறு இல்லை ஒன்பது இரவுகளிலே தேவியை வழிபடும் வழிபாடே ஒன்பான் இரவுகள் அல்லது நவராத்திரி என்று கூறப்படும்.
நான்கு வகையான நவராத்திரிகள் உண்டு. ஆடிமாதத்திலே நடைபெறுவதை ஆஷாட நவரத்திரி எனவும், புரட்டாசியில் நடைபெறுவதை சாராதா நவராத்திரி என்றும், மாசியில் வருவதை மாக நவராத்திரி என்றும், பங்குனி அல்லது சித்திரையில் வருவதை வசந்த நவராத்திரி என்றும் அழைக்கின்றோம். புரட்டாசியில் வரும் சாராதா நவராத்திரியையே பொதுமக்கள் பெரும்பாலும் கொண்டாடி வருகின்றனர். வசந்த நவராத்திரி முன்னேஸ்வரம் போன்ற ஆலயங்களில் சண்டீ ஹோமத்துடன் மிகச் சிறப்பாக நிகழும்.
நவராத்திரி காலங்களில் அன்னையை , துர்க்கையாகவும், இலக்குமியாகவும், சரஸ்வதியாகவும் வழிபடுகின்றோம். முன்பு செய்த வினைப்பயனால் மக்களாகப் பிறந்த நாம் மாக்களாக வாழாமல் செந்நெறியில் செல்வதற்கு அடிப்படை ஆதாரங்களாகத் தேவைப்படுவது மூன்று நிலைகள். முதலிலே வேண்டுவது மனவலிமை. மனவலிமை உடையவனால் தான்
புலன் ஒருமைப்பாட்டுடன் வாழ முடியும்.
"ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்கல் ஆற்றின் எழுமையும் ஏமாப் புடைத்து 夕列
O O தைபழசம
மிக நீண்டகால மரபினை முது சொத்தாகக் கொண்டுள்ள இந்து சமயத்திலே விழாக்களும், விரதங்களும் முக்கியமான இடம் வகிக்கின்றன. ஓர் ஆண்டிற்குரிய ஒவ்வொரு மாதத்திலும் சில நாட்கள் இவற்றிற்கென ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளன. மிகப்
பழைய கால சமூக - பொருளாதார அமைப்பு, அவ்வவ்
326

என்று கூறுவது வள்ளுவம், ஐம்புலனை வென்றால் - அடிப்படுத்தினால் அவனியையே ஆள முடியும். அப்படிப்பட்ட புலனடக்கம் கல்விக்குத் தேவைப்படுகின்றது. கல்விகற்கும் பருவத்தினரை, மாணவன், மாணவி என அழைக்கின்றோம். “மாணி’ என்ற சொல்லிலிருந்தே மாணவன் என்பது வந்தது. மாணி என்ற சொல்லிற்கு “பிரம்மச்சாரி” என்பது பொருள் மெய், வாய், கண், மூக்கு, செவி என்ற புலன்களை அதனதன் போக்கிற்கு விடாமல் கட்டி ஆள்பவர். அவர்களால் மட்டும் தான் ஆழமான, நிலையான கல்வியைப் பெறமுடியும்.
ஆழம் கொண்ட கல்வியினால் செல்வத்தை ஈட்டலாம். மனவலிமையும், கல்வியும் இருபுறமும் இரு அரண்களாக இருந்து, பெற்ற செல்வத்தை நன்னெறியிற் போக்கி, அதன் மூலம் திருவருளைப் பெற வைக்கின்றது. புண்ணியத்தையும் ஈட்ட முடியும். நல்ல வழியிற் பெறாத செல்வம் ஆலகால நஞ்சாகிக் குடும்பத்தையே சுட்டெரித்து விடும். ஆதிசங்கரர் தனது பஜகோவிந்தத்திற்கூறும் பொழுது அர்த்தம் அனர்த்தமாகி விடும் என்பார். நல்லவனிடம் செல்வம் சேர்ந்தால் அது ஊருணி நீர் - எல்லோருக்கும் பயன்படும். அல்லாத இடத்து அழிவையே விளைவிக்கும். தமிழிலே செல்வத்திற்குப் பொருள் என்று பெயரிட்டது எத்துணை பொருத்தம் கொண்டது என்று எண்ணிப் பார்க்க வேண்டும்.
நவராத்திரி முறை வைப்பிலும் கூட மனவலிமையையும், வீரத்தையும் நல்கும் கொற்றவையை வணங்கி இடை மூன்று நாட்கள் மனச்செம்மையைத் தரும் செல்வத்தின் அதி தேவதையான செந்திருவை வணங்கி, கடை மூன்று நாட்கள் வெள்ளைக் கலையுடுத்தி, வெள்ளைப் பணி பூண்டு, வெண் கமலத்தில் வீற்றிருக்கும் கலைமகளை வணங்கினால் வாழ்வில் வெற்றி காணலாம் என்பதைப் பத்தாம் நாள் " விஜயதசமி” வென்றிப்பத்து உணர்த்துகின்றது.
நமது முன்னோர் இறை உணர்வைக் கூட நாம் வாழும் வாழ்க்கையோடு பிணைத்து விழாக்களாக்கி, படித்தவர் முதல் பாமரர் வரை, ஏழை முதல் செல்வந்தன் வரை அனைவரும் கொண்டாடும் முறையில் வகுத்திருப்பது அவர்களுடைய பட்டறிவின் சிறப்பைப் புலப்படுத்துகின்றது. (6).J.606) ...)
த
இடங்களிலே நிலவிவரும் கால (சீதோஷ்ண) நிலை , முதலியனவற்றின் அடிப்படையிலே தான் பொதுவாக விழாக்கள் தோன்றிச் சமய ரீதியிலே முக்கித்துவம் பெற்றிருக்கலாம்:
இந்த வகையிலே தைமாதத்திலே தைப்பொங்கல், தைப்பூசம் என்பன முக்கியமானவை. சூரியன் மகரராசியிலே பிரவேசிக்கும் நாளே தைப்பொங்கலாகும். பூமியின் நடுக்கோட்டிற்கு வடக்கே
இந்துக் கலைக்களஞ்சியம்

Page 365
வாழுவோருக்கு இம்மாதம் சிறப்பான ஒன்றாகும். ஏற்கனவே பயிரிட்ட தானியங்களின் அறுவடை பெரும்பாலும் இம்மாதத்திலே நடைபெறும். புதிதாக விளைந்த தானியத்தை எடுத்து தெய்வத்திற்கும், தமக்கும் முதன் முதலாக இம்மாதத்திலே குறிப்பாக தைப்பொங்கல் (தை முதலாம் நாள்) பூச நட்சத்திரம் கூடிய தைப்பூச நாட்களிலே மக்கள் பயன்படுத்தி மகிழ்ச்சியடைவர். மழைக்காலம் ஒய்ந்து விட்டாலும் பூமி அழகாக இலங்கும் மாதங்களில் தைமாதமும் ஒன்றாகும். மேலும் இந்து காலக்கணிப்பின்படி தைமாதம் தேவர்களுக்குக் காலையாகும். இவ்வகையிலும் தேவர்கள் விரும்பும் ஒரு புனித மாதமாகும்.
இம்மாதத்திலே சூரியன் மகரராசியில் இருப்பதால் சக்தி வடிவமாகிய சந்திரன் பூரண கலையுடன் வியாழனோடு விளங்கும் போது தைப்பூச விழா கொண்டாடப்படவேண்டுமெனக் கூறப்படுகிறது. சந்திரனுக்குரிய இராசி கர்க்கடகம். இந்த இராசியில் வியாழன் இருப்பது “குரு புஷ்யம்'(வியாழன் பூசம்) எனக் கூறப்படும். இந்த வேளையில் தேவர்களும், முனிவர்களும் புண்ணிய நீர் நிலைகளிற் தீர்த்தம் ஆடுவார்கள். இதனால் சிறந்த புண்ணியம் அடையலாமென்பது, சமய ஞானிகளின் கருத்து, தேவர்களின் குருவாகிய வியாழன் (பிருஹ்ஸ்பதி) பூச நட்சத்திரத்தின் அதி தெய்வம். அவர் அறிவு ஆற்றல் தெய்வம், ஞானம் மிக்கவர். எனவே இத்தினத்தில் இறைவனை வழிபடுவோருக்கு இவை எளிதிற் கிட்டும்.
தைப்பூசம் ஒரு முக்கியமான தினமாக நெடுங்காலமாகக் கருதப்பட்டு வந்துள்ளது. மங்கலமான நிகழ்வுகள் நடத்துவதற்கான பொதுவான தினமாகச் சோதிட ரீதியிலும் இது கணிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே குறிப்பிட்ட புதிதாக விளைந்த தானியத்தை முதலிலே பயன்படுத்தலைவிட, புதிதாகக் கல்வியைத் தொடக்குதல், நிறுவனைங்களைத் தொடங்குதல், திருமணம் முதலிய உலகியல் விடயங்களுக்கு மட்டுமன்றிக் கோவில்களில் இடம்பெறும் தேர், தீர்த்த, தெப்பத் திருவிழாக்களுக்கும் முக்கியமான நாளாக இது கொள்ளப்படுகின்றது. திருவிழா நடைபெறாத கோவில்களில் விசேட பூசை, அபிஷேகம் முதலியன நடைபெறும்.
திருஞானசம்பந்த சுவாமிகள் சென்னையிலுள்ள திருமயிலைக் கபாலீஸ்வரர் ஆலயத்திற்கு எழுந்தருளி, அங்கே எலும்பைப் பெண்ணாக்கிய (இறந்த பூம்பாவையின் சாம்பரிலிருந்து அவளை மீண்டும் உயிர்ப்பித்து) அற்புதம் நிகழ்த்திப் பாடியருளிய திருப்பதிகத்திலே, ஒவ்வொரு மாதமும் நடைபெறும் திருவிழாக்களைக் குறிப்பிடும் போது தைமாத முழு நிலா நாளையொட்டி நிகழும் தைப்பூசத் திருவிழா பற்றி
"மைப்பூசும் ஒண்கண் மடநல்லார் மாமயிலைக் கைப்பூசு நீற்றான் கபாலீச்சரம் அமர்ந்தான் நெய்ப்பூசும் ஒண் புழுக்கல் நேரிழையார் கொண்டாடும் தைப்பூசம் காணாதே போதியோ பூம்பாவாய்”
இந்துக் கலைக்களஞ்சியம்

எனப் பாடியுள்ளமை நன்கு குறிப்பிடற்பாலது. ஏற்கனவே குறிப்பிட்டவாறு தைப்பூசத்தினத்தன்று தேவர்கள், பெரிய தவ முனிவர்கள் முதலியோர் பூவுலகிற்கு வந்து புனித நீராடி, இறைவனை வணங்குவர் எனக் கூறப்படுகின்றது. தைப்பூச நீராடலால் உலகம் பொலிவுற்றுப் பலவகை நன்மைகளைப்
பெறுவதைச் சம்பந்தர்,
"வருந்திய மாதவத்தோர் வானோரேனோர் வந்து ஈண்டிப் பொருந்திய தைப்பூசம் ஆடி உலகம் பொலிவெய்த”
எனவும்,
“பூசம் புகுந்து ஆடிப் பொலிந்து ஆடி' எனவும், இரு தேவாரங்களில் சிறப்பாகக் குறிப்பிட்டுள்ளார்.
திருநாவுக்கரசு சுவாமிகளும் தேவாரம் ஒன்றிலே,
"ஈசன் எம்பெருமான் இடைமருதினில்
பூசம் நாம் புகுதும் பூம்புனல் ஆடலே”
என இது பற்றிக் குறிப்பிட்டுள்ளார். எனவே, திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசு சுவாமிகள் காலத்திற்கு (கி.பி 7ம் நூ) முன்பே தைப்பூசம் ஒரு முக்கியமான தினமாகச் சைவ உலகிலே
கருதப்பட்டு வந்துள்ளன.
இக்கருத்தினை உறுதிப்படுத்தும் வகையிலே சங்க நூல்கள் எனக் கருதப்படும் கலித்தொகையிலே (குறி. கலி33.13)
“வையெயிற்றவர் நாப்பண்வகையணிப் பொலிந்து நீ தையில் நீர் ஆடிய தவம் தலைப்படுவாயோ'
எனவும் பரிபாடலில் (1)
"தாய் அருகா நின்று தவத்தைந்நீர் ஆடுதல்”
எனவும் வரும் குறிப்புக்கள் ஈண்டு கவனித்தற்பாலன. தைநீராடல் பற்றிய இக்குறிப்புகள் தைப்பூசத்தையொட்டியதாகவே பெரும்பாலும் கருதப்படுகின்றது.
தைமாதத்திலே தவமும், நோன்பும் கடைப்பிடிக்கும், வழக்கம் பழையகாலம் தொட்டுநிலவி வந்துள்ளமை மேற்குறிப்பிட்ட வற்றால் மட்டுமன்றி “தையொரு திங்களும் தரை விளக்கித் தண் மண்டலம் இட்டு” எனும் ஆண்டாளின் திருப்பாடலாலும் அறியலாம். எனவே வைணவ சமய மரபிலும் இதே கருத்து நிலவி வந்துள்ளது எனலாம்.
சைவ சமய மரபிலே தைப்பூசம் சிவ வழிபாட்டுடனும், முருக வழிபாட்டுடனும் சிறப்பாகத் தொடர்புபடுத்தப்படுகின்றது.
327

Page 366
ஏற்கனவே குறிப்பிட்ட தேவாரக் குறிப்புகள் இதனைச் சிவ வழிபாட்டுடனேயே தொடர்புபடுத்தியுள்ளன. இவற்றைவிட வேறு மூலங்கள் மூலம் தைப்பூசதினத்தன்று சிவபெருமானுடைய சிறப்பான திருத்தாண்டவம் தில்லையிலே நடைபெற்றதாக அறியப்படுகிறது. அதாவது தாருகாவனத்திலே சிவபெருமான் ஆடிய திருத்தாண்டவத்தைக் கண்டுகளித்த திருமால் அதுபற்றி ஆதிசேடனாகிய பதஞ்சலி முனிவருக்கு எடுத்துக் கூறினார். அதைக்கேட்டு ஆர்வம் மிக்கவராகப் பதஞ்சலி தாமும் அதைப் பார்க்க விரும்பித் தவம் செய்தார். சிவபெருமான் அவருடைய தவத்தினால் மகிழ்ச்சியடைந்து அவன்முன் தோன்றித் தில்லையிலே (சிதம்பரத்திலே) தாம் வியாக்கிரபாத முனிவருக்கு நடனமாடிக் காட்டவிருப்பதாகவும், எனவே அங்கு சென்று திரு நடனத்தைத் தரிசிக்குமாறும் திருவாய் மலர்ந்தருளி மறைந்தார். அதன் வண்ணமே ஆதிசேடனும் தில்லைக்குச் சென்று வியாக்கிரமபாதமுனிவருடன் தங்கியிருந்த காலத்திலே நடராஜப் பெருமான் அவ்விருவருக்கும் அவர் விரும்பியவாறு தாம் ஆடிய திருக் கூத்தினை காட்டினார். இவ்வாறு திருநடனமாடிய தினமே தைப்பூசமாகும். தைமாதத்தில் பூரணையும், வியாழக்கிழமையும், பூச நட்சத்திரமும் சித்தயோகமும் கூடிய தினத்தன்று மத்தியான வேளையில் சிவபெருமான் சிதம்பரத்திலே வியாக்கிரபாதருக்கும், பதஞ்சலிக்கும் திருநடனத்தை ஆடி அருள்பாலித்தார். எனவே மேற்குறிப்பிட்டவாறு தைப்பூசம் அமையும் தினம் அதி உத்தமம் எனக் கூறப்படுகிறது.
தைப்பூசத் திருநாளிலே சிதம்பரத்தலத்திலே நடராஜப் பெருமான் வியாக்கிரபாத முனிவருக்கும், பதஞ்சலிக்கும் காட்டிய திருக்கூத்து பஞ்சகிருத்யநடனமாகிய ஆனந்தாண்டவம் எனக் கொள்ளப்படுகிறது. இத்திரு நாளிலே சிவாலயங்களிலே இது சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றது. யாழ்ப்பாணத்துத் தவ முனிவராகிய சிவயோக சுவாமிகள் தைமாதத்திலே சிவபிரானை “கையும் மெய்யும் கருத்திற்கிசைய வாழ்த்தி வணங்கிட வேண்டுமே” என அருளியுள்ளார். இது குறித்து,
"செய்ய மேனியனே சிவனே யுனைக் கையு மெய்யுங் கருத்திற் கிசையவே வையகந் தன்னில் வாழ்த்தி வணங்கிடத் தையில் வந்தருள் தான் செய்ய வேண்டுமே”
என அவர் பாடியுள்ளமை மனம் கொள்ளற்பாலது
தைப்பூசம் முருகப்பெருமானுக்கும் சிறப்பான ஒரு நாளாகும். தாரகன் முதலிய அசுரர்களை அழித்துத் தேவர்களின் துயர் துடைப்பதற்காக சிவன், பார்வதி ஆகியோரின் மகனாக அவர் திருவவதாரம் செய்தார். அவருக்குத் தாயாராகிய பார்வதி வேல் ஒன்றினை வழங்கினார். அதுவே அவரின் பிரதான ஆயுதமாகவும், சின்னமாகவும் விளங்குகின்றது. இவ்வாறு
328

அவருக்கு வேல் வழங்கப்பட்ட தினமே தைப்பூசம் எனக் கூறப்படுகின்றது.
சிவாலயங்களிற் போலவே சிறப்பாக முருகன் ஆலயங்களிலும் திருவிழா சிறப்பாக நடைபெறும். குறிப்பாக தேர் தீர்த்த,தெப்ப,உற்சவங்கள் சில குறிப்பிட்ட முருகன் ஆலயங்களிலே நடைபெறும். ஏனைய முருகன் ஆலயங்களிலும் அன்று விசேட அபிஷேகமும், பூசைகளும் இடம் பெறும் தமிழ் நாட்டிலுள்ள திருவிடைமருதூரிலுள்ள சிவாலயத்திலும், வைத்தீஸ்வரன் கோவிலிலுள்ள முத்துக்குமாரசுவாமிக்கும், பழனிமலையிலுள்ள முருகன் ஆலயத்திலும் ஏனைய படைவீடுகளிலும், வேறு பல ஆலயங்களிலும், மலேசியாவிலே பினாங்கிலுள்ள முருகன் கோவில், சிங்கப்பூரிலுள்ள தண்டாயுதபாணி கோவில், மொறிசியஸ் தீவிலுள்ள முருகன் ஆலயங்களிலும் இது மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றது. பக்தர்கள் தத்தம் நேர்த்திக் கடன்களை நிறைவேற்றும் வகையிலே காவடி எடுத்தல் முதலியனவற்றால் இறைவணக்கம் !சய்வர். இலங்கையிலே நல்லூர்க் கந்தசுவாமி கோவிலில் அன்று மஞ்சத்திருவிழா நடைபெறும்.
மார்கழி மாதம் தேவர்களுக்கு இரவாகிய தகூழிணாயனம் முடியும் காலமாகவும், தைமாதம் பகல் தொடங்கும் உத்தராயணத்தின் காலை நேரமாகவும் உள்ளன. எனவே இது தேவர்களுக்கு மட்டுமன்றி, மற்றும் உயிர்களுக்கும் புண்ணிய காலமாகும். இம்மாதத்திலேதான் உலக நன்மைக்காக முருகன் உதயம் செய்தார் எனவும் ஒரு சாரார் கூறுவர்.
செட்டி சமூகத்தினர் முருகப் பெருமானை தங்கள் குல தெய்வமாகவும் கொள்ளுவர். தமிழகத்திலுள்ள பழனி போன்ற திருத்தலங்களிலும், மலேசியா, சிங்கப்பூர் முதலிய இடங்களிலும்
அவர்கள் தைப்பூசத்தைச் சிறப்பாகப் கொண்டாடுவர்.
பழையகாலம் தொட்டு இந்து சமய மரபிலே தைப்பூசம் சிவபிரானுக்கும், அவரின் இளைய திருக்குமாரராகிய முருகப் பெருமானுக்கும் உகந்த சிறப்பான நாளாகக் கொண்டாடப்பட்டு வருகின்றது. பொதுவாகச் சிவாலயங்களிலும் முருகனுக்குச் சிறப்பான நிகழ்வுகள் இடம்பெறும். (வி. சி.)
O O O தைப்பொங்கல
ைெதப்பொங்கல் என்பது அடிப்படையில் அறுவடை விழாவாகும். அறுவடை விழா என்பது பண்டைய உலக சமுதாயம்
பலவற்றாலும் கொண்டாடப்பட்டமை ஒரு சமூகவியல் உண்மையாகும்.
எனினும் தமிழ்ச் சமுதாயம் அத்தகைய அறுவடை விழாவை இன்றுவரையில் கைவிடாது தெய்வத்தன்மையோடு கொண்டாடி வருகின்றது. பண்டைக்காலத்தில் பெரும்போகப் பயிர்
இந்துக் கலைக்களஞ்சியம்

Page 367
தைமாதத்துக்குள்ளாகவே முற்றி விளைந்து அறுவடை செய்யத்தக்கதாகத் தமிழகக் காலநிலை அமைந்திருந்தது. காலவோட்டத்தில் ஏற்பட்ட காலநிலை மாற்றங்களால் அறுவடைக்காலம் சற்றுப் பின்தள்ளிப்போயினும் தமிழர்கள் தங்கள் பொங்கல் விழாவைத் தைமாதம் முதல் நாளிலேயே கொண்டாடி வருகிறார்கள்.
தைமாதம் முதலாம் திகதி என்பது சூரியனை மாதமாய் அமைந்த தமிழ் வருடத்தின் (சூரியனை அடிப்படையாகக் கொண்டு கணக்கிடப்படும்) முதல் நாள் ஆகும். சூரியன் தனு ராசியிலிருந்து மகர ராசிக்குச் செல்லத் தொடங்கும் நாள் அது, என்று சோதிடவியல் கூறும். அவ்வகையால் அகண்ட இந்தியா எங்கணும் அத்தினத்தைச் ‘சங்கிராந்தி’ என்ற பெயரில் கொண்டாடக் காணலாம்.
இன்று தமிழர் வாழும் பிரதேசங்களில் தைமாதம் முதல் நாளிற் கொண்டாடப் பெறும் பொங்கல் விழா சூரியனுக்கு நன்றி தெரிவிக்கும் விழா என்றவாறாகவே கொண்டாடப்படுகிறது. அதனால் அதனைச் சூரிய பொங்கல் என்றும் அழைப்பர். வீட்டிலே கொண்டாடப் பெறுவதால் வீட்டுப் பொங்கல் என்றும் வீட்டு வாசலில் முற்றத்தில் பொங்கப் பெறுவதால் வாசற் பொங்கல் என்றும் தமிழகத்துப் பிரதேசங்களில் வழங்கப் பெறுகிறது. அறுவடைக் காலத்தில் “பொலியோ பொலி” என்று குரல் எழுப்பி சூடுமிதிப்பது வழக்கம். பொங்கல் விழாவில் பால் பொங்கும் போது “பொங்கலோ பொங்கல்” என்றும் ஒலித்து மகிழ்வர்.
வீட்டு வாசலில் முற்றத்தில் நீர் தெளித்து, கோலமிட்டு, மாவிலை தோரணம் கட்டி, புத்தடுப்பில் புதுப்பானை ஏற்றி, பானை நிறையப் பால் வார்த்து, அப்பால் பொங்கிச் சரிகையில் புத்தரிசியிட்டு, சர்க்கரை சேர்த்து, இனிய பொங்கல் பொங்கி, உதய சூரியனுக்குப் படையல் செய்வது பொங்கல் விழாவின் பிரதான அம்சமாகக் காணப்படுகிறது. பொங்கற் பானையை இஞ்சி இலை, மஞ்சளிலை, மாலை முதலியவற்றால் அலங்கரிப்பதும் சிறப்பம்சமாகும்.
தைமாதம் இரண்டாம் நாள் மாட்டுப் பொங்கலாக அமைகின்றது. அது பெரும்பாலும் கிராமப்புறங்களில் விவசாயிகள் மத்தியிலே கொண்டாடப் பெறுகிறது. மாடுகளை வளர்ப்போர் விவசாயிகளாயில்லாவிடினும் மாட்டுப் பொங்கல் கொண்டாடுகிறார்கள். மாடுகள் பண்டைச் சமுதாயத்தில் பெருஞ் செல்வமாகக் கருதப்பட்டன. விவசாயத் தொழிலுக்கு பேருதவியான விலங்காக மாடு அமைகின்றது. பால், நெய் முதலான பிரதான உணவுப் பண்டங்களை அது தருகிறது. அவ்வாறான விலங்குக்கு நன்றி செலுத்தும் விழாவாகவே மாட்டுப் பொங்கல் அமைகின்றது.
மாட்டுப் பொங்கலன்று மாடுகளுக்குக் குளிப்பாட்டி, கொம்பு சீவி, வண்ணம் பூசி, கொப்பியணிந்து, குஞ்சமும் சலங்கையும் கட்டி, மஞ்சள் குங்குமத் திலகம் தீட்டி, மாலையணிந்து,
இந்துக்கலைக்களஞ்சியம்

அலங்கரித்து, பட்டிகளின் முன்பாக நிலம் பெருக்கி, நீர் தெளித்துக் கோலமிட்டுப் பொங்கி மாடுகளுக்குப் படையல் செய்வர். இப்பொங்கல் மாலை வேளையிலேயே இடம்பெறும். மாட்டுப் பொங்கலைப் பட்டிப் பொங்கல் எனச் சுட்டும் வழக்கமும் உண்டு.
“பட்டி பெருக வேணும் தம்பிரானே பாற்பானை பொங்கவேண்டும் தம்பிரானே'
என்ற நாட்டார் பாடல் நோக்கத்தக்கது.
மேற்படி இருபொங்கல்களையும் ஒட்டியதாக மேலும் இரு பண்டிகைகள் தமிழகத்திற் கொண்டாடப் பெறுகின்றன. ஒன்று சூரியப் பொங்கலுக்கு முதல் நாள் கொண்டாடப் பெறும் போகிப்பண்டிகை என்பது. மற்றையது கரி நாள் எனப்படுவது. போகிப் பண்டிகை நாளான தைப்பொங்கலின் முதல் நாளன்று வீட்டிலுள்ள தேவையற்ற பழைய பொருள்களை நீக்கிப் புதுப் பொருள்கள் கொண்டு வீட்டை நிரப்புவது, காப்புக்கட்டுவது என்பன இடம் பெறும். காப்புக்கட்டுவது என்பது வீட்டு வாசலில் வேப்பிலை, பூளைப்பூ, அவிரம் பூ என்பவற்றைக் கொத்தாகக் கட்டி, தீய சக்திகள் அணுகாமல் காப்பதைக் குறிப்பதாகும். புதுப் பானைகளில் தானியங்களை நிரப்பி வைப்பதும் பயறு முதலான அவரை வகைகளை வேக வைத்துப் படைத்து உண்பதும் போகிப் பண்டிகையின் அம்சமாகும்.
இவையாவற்றுக்கும் முன்பாக வீடுகளை வெள்ளையடித்துக் கோலமிடுதல் முதலானவை இடம்பெறும். பழையனவற்றைப் போக்குவதனாலே வந்த பண்டிகை காலப்போக்கிற் போகிப் பண்டிகை என்று ஆனதாகச் சிலர் கூறுவர். இப்பண்டிகை தமிழ் மரபில் வந்ததொரு பண்டிகையல்ல என்றும் அது பின்னாளிலே புகுத்தப் பெற்ற ஒரு சடங்காசாரம் என்றும் கருதுவோரும் உளர். இந்திரனுக்குச் செய்யும் வழிபாடே போகிப் பண்டிகை என்ற கருத்தும் நிலவுகிறது. போகிப்பண்டிகை பெரும்பாலும் நகர்ப்புறங்களிலேயே கொண்டாடப் பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.
கரிநாள் எனப்படுவது மாட்டுப் பொங்கலை அடுத்த தினத்திற் கொண்டாடப் பெறுவதாகும். அன்று ஜல்லிக்கட்டு என்னும் வீர விளையாட்டு இடம்பெறும். பண்டைக்காலத்தில் ஏறுதழுவுதல் எனக் குறிப்பிட்ட வீர விளையாட்டின் மாற்று வடிவமொன்றே ஜல்லிக்கட்டாகும். சங்க காலத்தில் முல்லைத் திணைசார்ந்த மக்களிடையே கொல்லேறு தழுவுதல் மூலம் ஒரு பெண்ணைத் திருமணம் முடிக்கும் தகுதியை ஒரு ஆடவன் பெறுகிறான். தற்காலத்தில் மாட்டின் கொம்பில் கட்டி வைக்கப்படும் பொன்முடிப்பைப் பெறுவதும் தம் வீரத்தை விளம்பரப்படுத்துவதும் ஜல்லிக்கட்டில் பங்குகொள்ளும் ஆடவரின் நோக்கமாகவுள்ளனர். கரிநாளன்று பெண்கள் கூட்டமாகக் கூடிக் கும்மியடித்துக் கொண்டு தெருவிலே சென்று பணமும் பொருள்களும் பெறும் வழக்கமும் தமிழ் நாட்டுப் பிரதேசங்கள் சிலவற்றில் உண்டு.
329

Page 368
நான்காம் நாளிலும் ஒரு பொங்கல் இடம் பெறும் வழக்கம் தமிழ் நாட்டில் உண்டு. அது பெரும்பாலும் காணும் பொங்கல் என வழங்கப்பெறும். அது “கன்றுப்பொங்கல்’ கன்னிப் பொங்கல் என்னும் பெயர்களாலும் வழங்கப் பெறுகின்றது. ஒருவரையொருவர் கண்டு மகிழும் பொங்கலாதலால் காணும் பொங்கல் என்றும், கன்றுகளுக்குப் பொங்கிப் படையலிடுவதால் “கன்றுப் பொங்கல்’ என்றும், கன்னியர் ஒன்று சேர்ந்து பொங்கிப் படையிடுவதால் “கன்னிப் பொங்கல்’ என்றும்
அப்பெயர்களுக்கு விளக்கங்கள் கூற முற்படுவர்.
காணும் பொங்கலன்று ஆறு, குளம் முதலான நீர் நிலைகளின் கரைகளில் கன்னிப்பெண்கள் ஒன்று கூடிச் சமைப்பதும், அவற்றை இலைகளில் வைத்துப் பறவைகளுக்குப் படைப்பதும் ஏழைகளுக்கு வழங்குவதும் இடம் பெறும்.
தைமாதம் முதல் நாளை ஒட்டிய மேற்படி விழாக்கள் தமிழகத்துப் பிரதேசங்கள் சிலவற்றிலேயே அதிகம் நடைமுறையிலுள்ளது. தமிழகத்தின் பெரும்பாலான பிரதேசங்களிலும், இலங்கையிலும் மற்றும் உலகிலுள்ள தமிழர் வாழும் பிரதேசங்களிலும் தைப்பொங்கல் என்ற பெயரில் முக்கியமாகக் கொண்டாடப்படுவது தைமாதம் முதல் நாள் கொண்டாடப்பெறும் சூரிய பொங்கலேயாம். சூரியன் மூலமே உலக இயக்கம் இடம் பெறுகின்றது. சூரியனாலேயே மழை பொழிகிறது, ஒளி கிடைக்கிறது, பயிர் செழிக்கின்றது, இவற்றால் பண்டைச் சமூகங்களில் சூரியன் வழிபாட்டுக்குரிய தேவனாகவே கருதப்பட்டான். சூரியனை திருமுருகாற்றுப்படை “பலர் புகழ் ஞாயிறு" என்று கூறும். நற்றிணை என்னும் பழந்தமிழ் நூலிற் சூரியன்
"முந்நீர் மீமிசை பலர்தொழத் தோன்றி
ஏமுற விளங்கிய சுடர்' (483)
என்று போற்றப்படக் காணலாம். அகநாநூறு,
தயங்கு திரைப் பெருங்கடல் உலகு தொழத் தோன்றி வயங்குகதிர் விரிந்த உருகெழு - மண்டிலம்’(263)
என்று சூரியன் உலகத்தோரால் தொழப்படுவதையும், புறநாநூறு,
"புலவர் புகழ்ந்த பொய்யா நல்லிசை விரிகதிர் ஞாயிறு’ (228)
என்று சூரியன் புலவரால் போற்றப் பெறுவதையும் பாடுகின்றன.
அத்தகையான சூரிய வழிபாட்டின் வளர்ச்சியாகவே இன்றைய தைப்பொங்கல் விழா கருதப்பெறுகிறது. ஆனால் ஆராய்ச்சியறிஞர் சிலர் பண்டைக்கால தமிழர் சமூகத்தில் சூரியனுக்கு பொங்கலிட்டு வழிபடும் வழக்கம் இருக்கவில்லை
330

என்றும், பண்டைய தமிழ்ச் சமூகத்தில் இடம் பெற்ற பாவை நோன்பின் ஒரு கூறே பிற்காலத்தில் பொங்கல் விழாவாகப் பரிணமித்தது என்றுங் கருதுவர்.
பாவை நோன்பு பூமியைக் குறித்து நோற்கும் நோன்பு என்பதே அவர்கள் கருத்து. பாவையைப் பூமியின் குறியீடு என்றே அவர்கள் கொள்கிறார்கள். பூமியை மகிழ்விப்பதன் மூலம் செல்வச் செழிப்பைப் பெறும் நோக்கிலே பாவை நோன்பு நோற்கப்பட்டது என்றும் பிற்காலத்தில் பாவை நோன்பு வைதீக மயப்பட்ட நிலையிலும் அத்தன்மை இருந்தமையை ஆண்டாள், மாணிக்கவாசகர் ஆகியோர் பாடிய பாவைப் பாடல்களிற்
காணலாம் என்றும் அவர்கள் கூறுவர்.
உ+ம் :-"நாங்கள் நம் பாவைக்குச் சாற்றி நீர் ஆடினால்
தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரி பெய்து ஒங்கு பெரும் செந்நெல் ஊடு கயல் உகள பூங்குவளைப் போதில் பொறிவண்டு கண்படுப்ப தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலை பற்றி வாங்கக் குடம்நிறைக்கும் வள்ளற் பெரும்பசுக்கள் நீங்காத செல்வம் நிறைந்தேலோர் எம்பாவாய்”
( திருப்பாவை)
மார்கழி மாதம் முழுவதும் நோன்பிருந்த கன்னியர் நோன்பினை முடித்துக் கொள்ளும் செயற்பாட்டில் பொங்கல் விழாவின் தன்மை இருப்பதையும் உணரலாம்.
" பல்கலனும் யாம் அணிவோம் ஆடை உடுப்போம் அதன் பின்னே பாற்சோறு மூட நெய் செய்து முழங்கை வழி வார கூடியிருந்து குளிர்ந்ததேலோரெம்பாவாய்”
(திருப்பாவை)
இன்றும் கன்னிப் பொங்கல் என்று ஒருவகைப் பொங்கல் கொண்டாடப் பெறுவதை, அதுவும் நீர் நிலைகளின் கரைகளிற் கொண்டாடப் பெறுவதை அறியும் போது மேற்படி கருத்துக்கள் மனங்கொள்ளத் தக்கனவாகவே புலப்படுகின்றன. எது எவ்வாறாயினும் பொங்கல் விழா பூமியோடு- விவசாயத் தோடு அறுவடையோடு தொடர்புடைய விழா என்பது மறுதலிக்க இயலாத விடயமாகும். பொங்கல் விழாவின் ஆரம்ப கால கோலத்தைச் சில பழந்தமிழ்ச் செய்யுள்களிற் கண்டு கொள்ளக் கூடியதாயுள்ளது.
பொங்கல் விழா பண்டைக்காலத்தில் அறுவடை விழாவாக
அமைந்திருந்த தன்மையை கீழ்க்காணும் புறநானூற்று அடிகளால் உணரலாம்.
இந்துக் கலைக்களஞ்சியம்

Page 369


Page 370


Page 371


Page 372
DESIGNED & PRINTE UNIEARTS(PWT)LTD. 488, BLOEMENDHALROA
 
 

955-9233-11-4
ISBN
COLOMBO 3, IEL: 2330195
D BY ,