கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஜின்னாஹ்வின் இரு குறுங்காவியங்கள்

Page 1

ZA/ 9/ 7
Z Z Z
يمثل ليلة 26/2007
W627

Page 2

ജില്ക്ക്
♔ഫ്ര
கிரன22ம் கண்ட சிதர
(நூஹற் நபி காவியம்)
தரம்க்கென வாழ்த்த தன2ன்
(உவைசுல் கர்ணி காவியம்)
~ ஜின்னாஹற் ஷரிபுத்தீன் -
(یکم، C
அன்னை வேளியீட்டகம்
CCC
அன்னை வெளியீட்டகம்
மருதமுனை
நீலங்கா. 凯

Page 3
SGSC) g 1st Edition - February 2000
2nd Edition - October 2001
SBN - 955 - 97349-O-3
“JINNAHVIN IERU KURUNG KAVIYANGAL”
C) MRS. HAMZIYA FAREEDA SHERIFUDEEN
16, SCHOOLAVENUE OFF STATION ROAD, DEHIWELA, SRI LANKA. TEL: O - 73O378
AUTHOR : DR. A. JINNAH SHERIFUDEEN
COVER DESIGN BY :: ROSHAN HAMID SHERIFULDEEN
PRICE : l4O/=
PRINTED BY : A J PRINTS, DEHIWELA.
COMPUTER TYPE SETTING : Miss. JALEELA CADER
- MARUTHAMUNA -

27.7225
ሪmSóØ፲7Æሃ - മെ
(நாஹி நபி காவியம்)
0-8

Page 4
ஆசிரியரின் பிறநூல்கள் வெளிவந்தவை
1. பாலையில் வசந்தம்
2. முத்து நகை
3. மஹஜபீன் காவியம்
4. பனிமலையின் பூபாளம்
5. புனித பூமியிலே காவியம்
6. கருகாத பசுமை (நாவல்)
7. ஜின்னாஹ்வின் இரு குறுங்காவியங்கள்
வெளிவரவிருப்பவை
1. பண்டார வன்னியன் காவியம் (அச்சில்)
ஜின்னாஹ்வின் சிறுகதைகள்
8. ஜின்னாஹ்வின் கவிதைகள்
1989
1989
1992
1995
1998
2000
2001
○以リ○3
iv

அகமொன்றி இன்பதுன்பம் இரண்டின் பாலும்
அடுத்திருந்து பெரும்பலமாய் உதவி நின்றே
அகாலத்தில் இறைவனடி சேர்ந்த என்றன்
அகம்நிறைந்தே வாழுகின்ற தம்பி "அன்வர்" சுகநலங்கள் அத்தனையும் பெற்றே "பீர்தெளஸ்"
சுவனபதி கொளஇந்நூல் பொருட்டி னாலே
இகபரத்தின் அரசனிறை தனைஇறைஞ்சி
எனதிளவல் தமக்கிதனைச் சமர்ப்பித் தேனே,
శ్కీర్టీ

Page 5
காலஞ்சென்ற தமிழ்ப் பேரறிஞர் மாண்புமித எஸ். டி. சிவநாயகம் அவர்கள் வழங்கிய
ബff #ffffമ
நான்பார்த்த கவிஞரிலே நல்லதொரு கவிஞன்
நான்தேர்ந்த நண்பரிலே நல்லதொரு பண்பன் தேன்வார்த்த சொற்களினால் தெவிட்டாத கருத்தைத்
தென்றலென வீசியுளஞ் சிலிர்த்திவிடுஞ் சித்தன் கூன்நிமிர்ந்த தண்மதியம் பொழிநிலாவைப் போல
குளிர்பாயும் கற்பனையால் உலகாளும் புலவோன் மான்தோற்ற கண்ணுடையாள் என்தங்கை பரீதா
மனம்நிறைந்த மன்னனவன் நற்குடும்பத் தலைவன்
ஒருநாளில் ஏழுபத்தக் கவியெழுத வல்லான்
ஒருநூறு எழுதுவதம் இவனுக்கு இலகாம் வருநாளில் ஜின்னாஹற்வின் பெயர்கவிதை வானில்
வரகவியென் றேயொளிரும் அட்டியதற் கில்லை அருட்கவியாய்ப் பரிணமிக்கும் கவி கா.மு. ஷரீபும்
அன்பொழுக ஈங்கிவனை "மணிக்கவிஞன்" என்றார் ஒருக்காலும் மறையாதே உள்ளத்தே உறையும்
ஒண்கவிதை இவன்கவிதை திண்ணமிது என்பேன்
~ எஸ். டி. சிவநாயகம் - IS. I2. 1993 (பிரதம ஆசிரியர்) தினபதி, சிந்தாமணி, சூடாமணி

ക്നീ ബ
ஜின்னாஹற் ஷரீபுத்தீன் இன்புலமைக் காவியங்கள் முன்னோர் முறைமை முழுதம் தழுவியவை பின்னோரும் போற்றிசெய்த பேணும் தகுதிபெற்றே எந்நாளும் வாழ இதயத்தால் வாழ்த்துவோமே!
இஸ்லா மியத்தின் எழிலை வலியுறுத்தும் பல்லோரும் ஏத்திப் பயிலத் தகும்நலங்கள் எல்லாம் பொருந்தி இசைந்த செழித்திருக்கும் நல்லோரை மேம்படுத்தி நாட்டினர்க்கும் பண்பூட்டும்
ஊக்கம் நிறைந்த உழைப்பாற் பிறப்பெடுத்த ஆக்கங்கள் அல்லவோ! அத்தனையும் நம்செல்வம் தேக்கங்கள் இல்லாத தேனோட்டம் செந்தமிழ்க்குச் சேர்க்கும் வளத்தக்காய்ச் செப்பபோமோ நன்றிபல!
நாஹற்நபியின் காதை நவலும் புதுப்படைப்பின் பாநயங்கள் தேர்ந்து பயன்கொள்க - நம்மவர்கள். போன பழஞ்சிறுமைப் புண்மையெலாம் போயமிழ மேல்நிமிரும் புத்தாழி வேட்கைஎம்முள் மின்னட்டும்.
ஓயாத சொல்ஊறும் உள்ளத்தின் அன்புடைமை, தாய்தான பண்புடைமை, சோராத நண்புடைமை தோதான பாட்டியற்றும் தொண்டுத் தவமுடைமை, வாயாராப் பாடி மனத்தால் வழுத்துவமே.
நீவேலி தெற்கு, - இ. முருகையன் - நீர்வேலி
1997.01.07
$GOYKOS)
vii

Page 6
}(GORK6)
பேராதனைப் பல்களைக்கழக முதுநிலை விரிவுரையாளர் பாக்டர் எம். ஏ. நூஹற்மாண் அவர்கள் அளித்த அணிந்துரை
புலவர் மரபின் தொடர்ச்சியாக அமையும் கவிதர் ஜின்னாஹற்வின் படைப்புகள்
சகோதரர் ஜின்னாஹ ஷரிபுத்தீன் இலங்கையிலும் தமிழ்நாட்டிலும் பரவலாக அறியப்பட்ட கவிஞர். குறிப்பாக இஸ்லாமிய இலக்கிய வட்டாரத்தில் முக்கிய இடம் பெறுபவர். முத்துநகை, பாலையில் வசந்தம், பனிமலையின் பூபாளம் முதலிய கவிதைத் தொகுதிகளையும், மஹஜபீன் காவியம், புனித பூமியிலே காவியம் ஆகிய காவிய நூல்களையும் இதுவரை வெளியிட்டுள்ளார். பண்டார வன்னியன் காவியமும் முடிவுற்ற நிலையில் உள்ளது. சமீபத்தில் இவரது நாவல் ஒன்றும் வெளிவந்துள்ளது.
சிறுகதைகளும் எழுதி வருகிறார். இவரது இலக்கிய அக்கறை பரவலானது. எனினும் கவிதையையே இவர் தனது பிரதான வெளிப்பாட்டு ஊடகமாகக் கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
கவிஞர் ஜின்னாஹி காலம் சென்ற புலவர் மணி ஆமுஷரீபுத்தீன் அவர்களின் புதல்வர். இவரது குடும்பமே ஒரு கலைக் குடும்பம் எனலாம். புலவர்மணி அவர்கள் இடைக்காலப் புலவர் மரபின் கடைசி வாரிசு. ஜின்னாஹ் தந்தையின் மரபையே பெரிதும் பேணுகிறார். இப்புலவர் மரபு பாரதி தோற்றுவித்த நவீன கவிதை மரபுக்குச் சமாந்தரமாக இன்றுவரை தொடர்கின்றது. பெரிதும் சமய மரபைப் பேணுவதும் செய்யுளாக்கத்தைக் கவிதையின் தலையாய அம்சமாகக் கருதுவதும் இக்கவிதை மரபின் முக்கிய அம்சங்கள் எனலாம். உருவ, உள்ளடக்கப் பரிசோதனைகள் இம்மரபுக்குப் புறம்பானவை. பாரதியையும், பாரதி வழி தொடர்பவர்களையும் நவீன கவிஞர்கள் என்றால் இப்புலவர் மரபினை
viii
6S 93

S.G.39 Osog
3.
நாம் மரபு வழிக்கவிஞர் எனலாம். கவிஞர் ஜின்னாஹ் ஷரிபுத்தீன் சுத்தமான மரபுவழிக் கவிஞராகவே விளங்குகின்றார். அவரது கவிதைப் படைப்புகள் அவரது இலக்கிய இருக்கையை இவ்வகையிலேயே உறுதிப்படுத்துகின்றன.
கவிஞர் ஜின்னாஹ் இஸ்லாமியத் தமிழ் இலக்கிய மரபின் இன்றையப் பிரமுகர்களுள் ஒருவராகவும் விளங்குகின்றார். இஸ்லாமியத் தமிழ் இலக்கியம் இஸ்லாமிய மதப் பெரியார்களின் வாழ்க்கை வரலாறுகளையும் இஸ்லாமிய அறநெறிகள், விழுமியங்கள், வழிபாட்டு அம்சங்கள், நம்பிக்கைகள் ஆகியவற்றையும் பிரதான பாடுபொருள்களாகக் கொண்டது. பிரளயம் கண்ட பிதா, தாய்க்கென வாழ்ந்த தனயன் ஆகிய இவரது இரு புதிய குறுங் காவியங் களையும் இப்பின்னணியிலேயே நாம் நோக்க வேண்டும். இவரது முன்னைய படைப்புகள் போல் இவையும் இஸ்லாமியத் தமிழ் இலக்கிய மரபில் உறுதியாக இடம்பிடித்துக் கொள்கின்றன.
பிரளயம் கண்ட பிதா நூஹ் நபி அவர்களின் வரலாற்றைக் கூறுவது. குர்ஆன் கூறும் சம்பவங்களையும், குர்ஆன் விரிவுரையா ளர்கள் கூறும் நூஹ் நபி பற்றிய வரலாற்று ஐதீகங்களையும் அடிப்படையாகக் கொண்டு இக்குறுங்காவியத்தைத் கவிஞர் படைத்துள்ளார். நூஹ் நபி அவர்களின் பிறப்பு, வளர்ப்பு, அவர் தீர்க்கதரிசியாக இறைவனால் தேர்ந்தெடுக்கப்பட்டமை ஏக தெய்வக்கொள்கை பற்றிய அவரது பிரச்சாரம், பல தெய்வ வழிபாட்டாளர்களின் எதிர்ப்பு, அவர்களால் அவர் அடைந்த துன்பம், இறுதியில் இறைவன் இறைமறுப்பாளர்களைப் பிரளயத்தில் மூழ்கடித்துத் தண்டித்தமை, நூஹி நபியும் அவரைப் பின்பற்றியவர்களும் வேறு உயிரினங்களும் இறைவனின் ஆணைப்படி அவர் தயாரித்த கப்பலில் ஏறித் தப்பியமை, பின்னும் இவ்வுலகை நீத்தமை ஆகிய சம்பவங்களை அக்காவியம் வரிசைக் கிரமமாகக் கூறுகின்றது.

Page 7
S.G.39 O>ON
தாய்க்கென வாழ்ந்த தனயன் முகம்மது நபி (ஸல்) அவர்கள் காலத்திலும் அதன் பிறகும் வாழ்ந்த உவைசுல் கர்ணி என்ற இஸ்லாமிய சூபி ஞானி ஒருவரின் கதையைக் கூறுகின்றது. இஸ்லாமிய சூபித்துவ வரலாற்றில் இப்பெரியாருக்கு முக்கிய இடம் உண்டு. பெருமானார் (ஸல்) அவர்கள் காலத்தில் வாழ்ந்த போதும் தன் தாயைப் பராமரிக்க வேண்டிய தேவை காரணமாக அவரை நேரில் சந்திக்கும் வாய்ப்புகளை இழந்த பெரியார் இவர். இதன் காரணமாகவே பெருமானாரால் நன்மாராயம் பெற்றவர். பெருமானரின் மறைவின் பின்னர் கலிபா உமர்(ரலி) அவர்கள் இப்பெரியாரைச் சந்திக்க எடுத்த முயற்சிகளும் சந்தித்த வரலாறும் அதன் பிறகுள்ள அவரது வாழ்வும் மரணமும் பற்றிய தகவல்களை அடிப்படையாகக் கொண்டு கவிஞர் ஜின்னாஹ் இக்காவியத்தைப் படைத்துள்ளார்.
வரலற்றுப் புருஷர்களை, குறிப்பாக மதப் பொரியார்களைக் கதைத் தலைவர்களாகக் கொண்டு காவியம் படைக்கும் இஸ்லாமிய இலக்கிய கர்த்தாவுக்கு அதிக எல்லைப் பாடுகள் உள்ளன. இங்கு அவரது கற்பனைப் புனைவுகளுக்கு அதிக இடம் இல்லை. அங்கீகரிக்கப்பட்ட சம்பவங்கைளயே அவர் விபரிக்க வேண்டும். இவ்வெல்லைப் பாடுகளுக்குள் இருந்து கொண்டு இலக்கியச் சுவை குன்றாத காவியங்களைப் படைப்பது எளிய காரியம் அல்ல. ஜின்னாஹ்வின் இவ்விரு படைப்புகளிலும் இந்த எல்லைப் பாடுகளை நாம் துலக்கமாகக் காணமுடிகின்றது. நூஹ் நபியின் வரலாற்றிலும், உவைசுல் கர்ணியின் வாழ்விலும் உள்ளார்ந்து காணப்படும் கவித்துவக் கூறுகளே இக்காவியங்களின் இலக்கியத் தன்மையின் அடிப்படைகளாகவும் அமைகின்றன. கவிஞருடைய பணி அவற்றைச் செய்யுள் வடிவில் எடுத்துரைத்தமையே எனலாம். லாமாக் பன்யூஸைக் காணும் போது அவளது உடலழகை வருணிக்கும் பகுதிகளும் (பிரளயம் கண்டபிதா) கலிபா உமர் (ரலி) அவர்களும் அலி (ரலி) அவர்களும் உவைகல் கர்ணியைக் காண மக்காவில் இருந்து கூபாவுக்குக் குதிரைகளில் விரையும் காட்சியை விபரிக்கும்
23Go.3GS) 6SO3

SGSC) Q>O)
பகுதிகளும் (தாய்கென வாழ்ந்த தனயன்) கவிஞரின் தற்புனைவுக்கு உதாரணங்களாக அமைகின்றன. எனினும் பெண்ணின் உடலழகை வர்ணிப்பது இஸ்லாமிய மரபுக்கு ஏற்புடையது அல்ல என்பதையும் நாம் மனங்கொள்ள வேண்டும்.
பாரதியும் பாரதியின் வழிவந்த வேறுபல கவிஞர்களும் தமிழ்ச் செய்யுளை அதன் யாப்புக் கட்டமைப்பை மீறாமலே பெரிதும் நவினப் படுத்தியுள்ளனர். அவர்கள் தம் கவிதையில் கையாண்ட உள்ளடக்கம் அவர்களது செய்யுளாக்கத்தின் நவீனத் தன்மையைப் பெரிதும் தீர்மானித்தது எனலாம். கவிஞர் ஜின்னாஹ் அந்த வழியைப் பின்பற்றவில்லை. இவர் நேரடியாகப் புலவர் மரபில் இருந்து தன் செய்யுளைத் தேர்ந்து கொண்டார். சுவாமி விபுலானந்தர், பேராசிரியர் கணபதிப்பிள்ளை, கவிஞர் அப்துல்காதர் லெப்பை போன்றோரும் இந்தச் செய்யுள் மரபையே வெவ்வேறு அளவில் பேணினர் என்பதும் நாம் மனங்கொள்ளத்தக்கது.
இவ்வாறு நோக்குகையில் தற்காலத் தமிழ்க் கவிதையில் நாம் மூன்று தெளிவான போக்குகளை இனங்காண முடிகின்றது. முதலாவது பாரதி வழிவந்த நவீனப்படுத்தப்பட்ட யாப்பு மரபு பேணும் நவீன கவிதை; இரண்டாவது பாரதியின் வசன கவிதை மரபின் தொடர்ச்சியாக வளர்ச்சியடைந்த புதுக்கவிதை; மூன்றாவது இடைக்காலப் புலவர் மரபின் தொடர்ச்சியாக அமையும் மரபுவழிக் கவிதை, கவிஞர் ஜின்னாஹ் ஷரிபுத்தீன் மூன்றாவது பிரிவில் அடங்கும் முக்கியமான கவிஞர்களுள் ஒருவர். இந்நூலில் இடம்பெற்றுள்ள குறுங்காவியங்கள் இரண்டும் இதனை மேலும் உறுதிப்படுத்துகின்றன. அவருடைய முன்னைய படைப்புகளைப் போன்றே இவற்றையும் தமிழ் இலக்கிய உலகு வரவேற்கும் என்று நம்புகின்றேன். கவிஞருக்கு எனது பாராட்டுக்கள்.
எம். ஏ. நஹற்மான்
xi

Page 8
ஜின்னாஹர் ஷரிபுத்தீன்
GSC)
QRSO),
நாண்முகம்
ஆதிபிதா ஆதநபி முதலாய் முஹம்மத்
அறுதிநபி வரையிறைவன் பூத லத்தின் தீதகற்ற நபிமாரைப் பலநூ றாகத்
தோற்றுவித்தான் அன்னோர்தம் காலப் போழ்தில் பேதமற நடையுண்ட அனாச்சா ரத்தைப்
பல்லிறைமை வணக்கத்தைச் சாடித் தத்தம் தூதுவத்தின் காரணத்தை மக்க ளுக்குத்
தெளிவுறுத்திச் சுவனடைந்தார் அவர்க ளுள்ளே. 4
மனிதகுலம் தோன்றுதற்குக் கருவாய் ஆன
முதல்மனிதர் ஆதமேதான் முதலாம் தந்தை நனிமுற்றும் பிரளயத்தால் அழிந்த காலை
நிலைத்துநின்றார் விசுவாசம் கொண்ட பேர்கள் புனிதநபி நூஹே" அவ் அனைத்துப் பேர்க்கும்
பின்வந்தோர் அனைவருக்கும் தந்தை யாவார் எனுமுண்மை ஆய்ந்திடிலோ முதல்தந் தைபின்
இரண்டாவ தாகுமிவர் என்பா ருண்டே. 5
முன்னிரண்டு காவியங்கள் செய்தேன் ஒன்று
மஹஜப்பீன்" காவியமாம் மற்றை ஒன்று புனிதபூமியிலே"யென்ப தாகும் மூலம்
படைத்தவரோ ஹஸன்" என்னும் நாவல் மன்னர் என்தனிய முயற்சியினால் தகவல் பெற்றே
இந்நூலைப் பாடுகின்றேன் பாட என்னைச் சொன்னவர்கள் ஹஸனாரும் புலவர் கா.மு.
ஷரீப்" என்னும் பெருங்கலைமா மணியுந் தாமே. 6

பிரளயம் கண்ட பிதா
SKO
○叉○。
2
பாடென்று சொன்னதொடு ஹஸனார் வேண்டும்
பல்குறிப்பும் தந்தார்நான் இறைம றையில் தேடியவை யோடின்னும் பலவுங் கொண்டே
தனியோனின் துணையோடு பாட லானேன் கூடியவா றுண்மையற்ற `கிஸ்ஸா" வெல்லாம்
கொள்ளாது தவிர்த்தேன்நான் சொன்னோர் ஆசை கூடிடுமோ நானறியேன் எண்மு யற்சி
கூடியதாய் மனநிறைவு கொள்கின் றேனே. 7
பெற்றவரை மறந்தின்று வாழுங் காலம்
பிறப்பினுயர் வறியாத பவஞ்சேர் காலம் முற்பிறந்தோர் சரிதங்கள் அறியாக் காலம்
முதலவனின் வேதமொழி உணராக் காலம் குற்றங்கள் மலிந்தகொடுங் கோலர் காலம்
குபிரான செயல்களினால் நிறைந்த காலம் நற்பயனாம் இந்நாளில் முன்னோர் வாழ்வை
நினைவுறுதல் எனளண்ணிப் பாடி னேனே. 8
முற்றுந்தன் வாழ்வுதனை இறைபாற் செல்ல
முயன்றுவெற்றி கண்டோரை மறுத்தே வாழ்வில் முற்றுமழிந் தொழிந்தோரைச் சரிதஞ் சொல்லி
மன்னுலகுக் கறிவுறுத்தல் இற்றை நாளில் பொற்புடைய தாகுமிவை இன்று வாழ்வோர்
புரிந்துநடந் திடச்சற்றுக் கூறின் என்றே நற்றமிழிற் கவிகோத்தே காவி யத்தை
நான்பாடி னேன்உலகம் ஏற்க வேண்டும். 9

Page 9
ஜின்னாஹர் ஷரிபுத்தீன்
SGSC)
g
தமிழையெனக் கோதுவித்த தாதை ஆ.மு.
ஷரிபுத்தீன் புலவர்மணி தமக்கும் என்னைத் தமிழுலகம் அறிவதற்குத் தமிழை ஒதுந்
தலமமைத்துத் தந்தவுயர் அறிஞர் தூய தமிழ்வல்லார் எஸ். ரீ. சிவ நாய கர்க்கும்
தகவுரைகள் தந்தோர்க்கும் தூண்டி னோர்க்கும் தமிழினி தொப்பநன்றி கூறு கின்றேன்
தனியவனே இவர்க்கென்னோ டருள்செய் வாயே. 10
என்றும்போல் இந்நூலைப் பார்வை செய்தார்
என்இனிய நண்பர் அல்ஹாஜ் அஸஉமத்" கூட நின்றுதவி செய்தாரென் இளையான் டாக்டர்
நேர்கவி"தா ஸிம்அகமத் என்னும் நல்லோன் நன்றியுடை யோனாவேன் என்றும் நானென்
நலம்நாடும் சோதரரிவ் விருபே ருக்கும் குன்றாத புகழுமுயர் செல்வ மெல்லாம்
கூடுககை யென்னோடே இறைபே ராலே.
கையெழுத்துப் பிரதியினை என்தாய் மாமன்
குமாரி டாக்டர் கமருன்நிசா" செய்த வித்தார் கைவண்ணங் காட்டினனே றோஷன்" என்றன்
குமாரன்அட்டைப் படத்தினிலே இருபே ருக்கும் துய்யவழி காட்டிவழி நடத்தும் வல்லோன்
தனைவழுத்தி இறைஞ்சுகின்றேன் அவர்க்கும் இந்த வையத்தின் சிறப்போடே சுவனப் பேறும்
வழங்கவெனப் பணிந்துருகி வேண்டி னேனே. 12

பிரளயம் கண்ட பிதா
○丈○。
2
1. சந்திப்பும் மணவினையும்
இதிர்சு நபிபேரர் லாமாக் ஒர்நாள்
எழிலார்ந்த ஆரணங்காள் ஒருத்தி காட்டில் மதிசோர வைக்குந்தன் அழகு காட்டி
மந்தையொடு நிற்கின்ற வாகு கண்டார் புதுமையிவள் சுவர்க்கத்துப் பெண்ணோ மேனி
பொழிகின்ற வனப்புநிகர்த் தேதும் உண்டோ முதிராத பருவமிள மயிலாள் என்றே
மனமவள்பால் ஈர்க்கவாங்கே நின்றிட் டாரே. 13
செம்மைகலந் திருந்தசொர்ண வண்ணத் தாள்வான்
செறிந்தமழை முகிலனைய சிகையாள் வான்விற் தம்மைநுத லாக்கியவா கோடே அம்பு
தாங்கியவில் லனையவேஈர் புருவங் கொண்டாள் கம்மலிட்ட செவிமடல்கள் தொட்டு நிற்குங்
காந்தவிழிக் கருமணிகள் இரண்டு சுற்ற வெம்மைகொள வைத்தனளே உடலந் தன்னை
வைத்தவிழி வாங்காதே லாமாக் நின்றார். 14
மாதுளையின் பூநிகர்த்த செவ்வி தழ்கள்
மடித்தவிரு பங்கயத்தின் இதழ்க ளாகப் பாதிஅரிந் தெடுத்தகனி நாசி யோடே
பல்வரிசை அன்றுகொண்ட முத்தாய் மின்னும் காதிரண்டின் அருகிலுமீர் கன்னம் பொன்னிற்
கடைந்தெடுத்த வாறிருக்கக் கழுத்தோ ஓர் கோதுரித்த வாழைமரத் துண்ட மாகக்
கண்டுகளி கொண்டசையா தேநின் றாரே 5

Page 10
ஜின்னாஹர் ஷரிபுத்தீன்
SGy.9
தோளிரண்டின் கீழேமுன் றானை மூடித்
திரண்டிருந்த மார்பகங்கள் லாமாக் என்னும் காளையைத்தன் நினைவிழக்கச் செய்ய வென்றோ கட்டிவைத்த கச்சையினை மீறித் தென்னம் பாளைமுனை போலநிமிர்ந் திருந்த தெங்கும் பாராதே எனும்பாங்காய்ச் சற்றுக் கீழே தாழைமட லொக்கமணி நாபி யோடே
திகழுமடி வயிற்றினையுங் கண்ணுற் றாரே. 16
உண்டென்று சொல்லவிய லாதே அன்னாள்
ஒர்கரத்துள் அடங்கும்இடை கடைந்தெ டுத்த வண்ணமிரு கால்களொடு பின்பு றத்து
வடிவமிள நீரிரண்டு ஒளிந்த வாகாம் அன்னமவள் நடைகாணின் அசந்தே போகும்
அவள்நடையைத் தான்பயில முனைந்தாற் றோற்கும் சின்னவிரற் பாதங்கள் மலர்க ளாகும்
சொர்ணத்தால் ஆனசிலை போல்நின் றாளே 17
பொன்னழகுச் சிலையருகில் சென்ற லாமாக்
பெயரறிய வேண்டியவள் வதனம் நோக்கி என்னவுன்றன் பெயரென்றார் நீயார்" என்றார்
இதயத்தின் வியப்பெல்லாம் அடக்கி அன்னாள் புன்னகைக்கும் வதனத்தில் நாண மின்னல்
பளிச்சிடவே பூவிழிகள் நிலத்தை உண்ண பன்யூஸ்" என் பெயர்தந்தை அக்கீல்" என்றே
பதிலுரைத்தாள் லாமாக்தன் வினாத்தொ டர்ந்தார். 18

பிரளயம் கண்ட பிதா
மணமான பெண்ணாநீ" என்றார் வெட்கி
முகஞ்சிவக்க விழிபதற மின்ன லாலே சணத்துள்ளே தாக்குண்டாள் போலும் ஆனாள்
சாணாக உடல்குறுக இலையே" யென்றாள் இனங்காணற் கியலாத மகிழ்வால் உள்ளம்
எண்ணரிய எண்ணத்துள் ஊஞ்சலாட எனைமணக்க விரும்புவையோ" என்றார் லாமாக்
ஏந்திழையோ சுயநினைவை இழந்திட் டாளே
உதிரத்தை உறையவைத்த வினாவி னாலே
ஓர்கணத்துள் தனையிழந்த பன்யூஸ் சிந்தை எதிரிருக்கும் இவர்யாராய் இருப்ப ரென்றே
எண்ணிவிடை காணவெனத் துடிது டிக்கும் புதிதாகக் காணுமிவர் தோற்றத் தாலே
பெருங்குடியிற் பிறந்தவர்போல் காணு கின்றார் அதிதுணிவு மிக்கவராய்த் தனித்த வேளை
அகத்துதித்த ஆசைதனை வினவி னாரே
சோதிதவழ் வதனமிவர் நோக்கு தற்குச்
சிறந்தபெருஞ் சான்றோராய்த் தோன்றச் சற்றும் தீதறியார் போலுமிவர் காணு கின்றார்
திடமாக நல்லவரே எனத்தெ விந்து மாதவளோ மனந்துணிந்தாள் கேள்வி யொன்றை
மிகத்துணிவாய்க் கேட்டணளே ஐயா! தாங்கள் ஒதுகவே யாரென்று அறிய" என்றே
ஒர்புதுமைப் பதிலையுடன் பெற்றிட் டாளே
Ostog
2
20

Page 11
ஜின்னாஹர் ஷரிபுத்தீன்
S.G.39
麟
விலக்கியதை விதித்தொன்றாய் ஆக்கிக் கொள்ளார்
வழித்தோன்றல் நான்என்றார் விடையாய்க் கேட்டுத் துலக்கமுற்றாள் நினைத்ததெலாம் சரியே என்னுந்
திடங்கொண்டாள் நெஞ்சத்துள் அறியா இன்ப அலையொன்று தோன்றிப்பின் தோன்றித் தோன்றி
அடங்காது மோதுவதை அறிந்தாள் நின்றாள் நிலையுணரப் பதிலுரைத்தாள் “எந்தை யோடே நீங்களதைப் பேசுவதே உசிதம்" என்றே
எந்தையுடன் பேசுகவென் றுரைத்த தொன்றே
இணங்கிட்டாள் என்பதனை எடுத்துச் சொல்லச் சிந்தைகுளிர்ந் திட்டவந்த இளவல் லாமாக்
சென்றடைந்தார் தந்தையிடம் விபரஞ் சொன்னார். புத்திமிகை யோடுநல்ல குடிப்பி றப்பும்
புறவழகின் சீருமையும் உயர்ந்த பண்பும் சொந்தமுறத் தக்கவரே மகளுக் கேற்ற
துணையென்றும் எண்ணி அக்கீல்" சரியென்றாரே
2. மகன் பிறந்தார்
மகளோடு தந்தைமணம் மகிழ்ந்த தாலே
மணவினையுஞ் சிலநாளுள் முடிவுற் றன்னார் இகவாழ்வின் இன்பநுகள் வாலே யோர்நல்
ஏந்தலைத்தம் மகவாக இறைபாற் பெற்றார் செகமழிந்து மீண்டுமொரு செகந்தோன் றற்குச்
சாதகமா யானநபி நூஹே " அன்னார் மிகமகிழ்ந்தார் லாமாக்" தன் மனையா ளோடே
மறுவில்லாத் திருமகனாய் வளர்ந்திட் டாரே
QyVQ).3
22
23
24

பிரளயம் கண்ட பிதா
QVIGSK
2
அன்றலர்ந்த செம்மலர்போல் மென்மை வானின்
அழகியவெண் தாரகையின் ஒளிவிண் தோன்றும் மின்னலினைப் போன்றதுடி துடிப்பும் பொன்னால்
வார்த்தெடுத்த பதுமைநிகள் பொலிவு வாய்மென் புன்னகைக்கும் போதுகாணுங் கண்க ளெல்லாம்
யூரிக்கும் பூதலத்தின் பேறாம்" என்றே தன்னிலையே அறியாது பிதற்றும் வாகாய்த்
தந்தனனே தனியனவர் தனயன் என்றே 25
கையிலள்ளித் தனையனைத்தன் மனையாள் நோக்கிக் குலந்தழைக்கத் தந்தாய்இச் செல்வம் என்றார் ஒய்யாரப் பைங்கிளியே உனக்கிங் கீடாய்
ஒருபெண்ணும் பிறந்தில்லார் மேன்மை கொண்டாய் வையத்தில் பிறர்க்கில்லாப் பேறாய்ப் பெற்ற
வரையில்லாத் திருவிந்தச் செல்வம் என்றே மைவிழியாள் தனைச்சேர்த்தே அணைத்தார் லாமாக்
மைந்தனைத்தன் நெஞ்சோடே நெஞ்சாய்ச் சேர்த்தே 26
உனைப்போன்ற அழகிவன்பார்" என்றார் இல்லை
உங்களைப்போற் றான்வருவான்` என்றாள் நாதர் தனைப்போல என்றதனால் பூரித் தாள்ஆண்
தந்தையைப்போல் இருந்தாலே சிறப்பாம்" என்றாள் மனைவிளக்குத் தானேபெண் இவனோ இந்த மானிலத்தை ஆளவந்த தீரன்" என்றாள் எனையுன்னை இருவரையும் இணைத்தே தந்தான்
இறை" என்றார் இருவருமே பூரித் தாரே. 27

Page 12
ஜின்னாஹர் ஷரிபுத்தீன்
S.G.39
நாளுர்ந்தே சென்றதந்த மழலை வேக
நடைகொண்டான் வளர்ச்சியிலே நாளை வென்றே வேளைவந்த போதுகல்வி கற்றுத் தேர்ந்தான்
விளையாட்டில் விடைகொண்டான் இறைவன் மீது மாளாத அன்புகொண்டான் மனத்தைக் கெட்ட
வழிசெல்லா திளமையில்நல் வழியில் சென்றான் தோழமைக்குத் தெய்வமொன்றே எனநி னைந்தான்
தந்தையைத்தன் இளவயதில் இழந்திட்ட டானே. 28
தந்தையைத்தன் இளவயதில் இழந்து தாயின்
தாபரிப்பில் இருந்தார் நூஹி " அந்நாள் ஆட்டு மந்தைமேய்த்து வந்தார்கள் நாளும் போழ்தும்
மிகஅழகாய் வளர்ச்சியுற்றார் பருவம் எய்தச் சிந்தைகவர்ந் திடும்வாகாய்த் தோன்றி னார்தம்
தோற்றத்தில் பிறரெவரும் விஞ்சா வாறே புந்தியுள்ள இளவலுமாய்ச் சேர்ந்தி ருந்தார்
பண்ணவனின் பேரருளைப் பெற்ற தாலே 29
பரந்தபெரு மார்புமலை போன்ற தோள்கள்
பலமிக்க கரங்கள்வலுக் கொண்ட கால்கள் உரம்மிகுந்த உள்ளத்தின் வெளிப்பா டாக
உறுதிகொண்ட வீரநடை அறிவின் சோதி பரிணமிக்கும் விழிகளொடு நீண்டு யர்ந்த
பேருருவில் வீரத்தைக் காட்ட வென்றே அரும்பிநின்ற மீசையொடு தாழ்மைப் பண்பை
அறியவைக்குந் தாடியையுங் கொண்டி ருந்தார் 30
10

பிரளயம் கண்ட பிதா
@以リ○g
3.
காரிடையில் ஒளிப்பிளம்பாய்க் கேட்பா ரற்ற
கற்களிடை மரகதமாய்க் கண்ணைக் கவ்வும் பேரழக ரானநபி நூஹ" நாட்டிற்
பார்த்ததெல்லாம் பவவினைக ளாகத் தோன்றச் சீர்கெட்ட வாழ்வுதனை வெறுத்துப் பொல்லாச்
சிறுத்தைபுலி வாழுகின்ற கானம் நோக்கிப் பேர்தவமொன் றியற்றவெனச் சென்றா ராங்கே
படைத்தவனை எண்ணிமனம் உருகி னாரே. 31
3. உருவ வழிபாடும் ஒழுங்கற்ற வாழ்வும்
அருட்கொடையாய் நூஹை இறை" உலகுக் கீந்த
அந்நாளில் மக்களெல்லாம் வழிகேட் டின்பால் குறியாக இருந்தார்கள் தடுப்பா ரற்றே
கொண்டதெலாங் கடவுளென வழிபட் டார்கள் உருவமிலான் தனைமறந்தார் ஒழுக்கக் கேட்டில்
ஒன்றியவர் சீரழிந்தார் எதிர்கா லத்தில் மருவவுள்ள தண்டனையை அறியா மாந்தர்
மாசுற்ற வாழ்வுதனைக் கூறு வோமே 32
கொலைகளவு வழிப்பறியும் பொய்யும் சூதும் கூறவிய லாதபடி மலிந்தே போக விலைமாதர் தொகைபெருகி அந்நாள் மக்கள்
விபசார ராயலைந்தார் நீதி நேர்மை தொலைதூரம் ஒழிந்தோடிப் போன தாலே
துணிவுபலம் உள்ளவர்கள் பிறரை ஏய்த்தார் சிலைகளெங்கும் கடவுளராய்த் தோன்றி ஏக
தெய்வசிந்தை அற்றுமக்கள் திசைகெட் டாரே 33
ལྷོ་
6SO3
11

Page 13
ஜின்னாஹர் ஷரித்தீன்
SGXC)
மாதருற வோடுமது மயக்கந் தன்னில்
மன்னனிருந் தானவனைத் தொடர்ந்தார் மக்கள் குதுதனை விளையாட்டாய்க் கொண்டான் அந்தச்
செயலைத்தம் தொழிலாகக் கொண்டார் மக்கள் தீதுமிகுந் திருந்ததெங்கும் நன்மை காணாத்
திக்கொழிந்து போனதன்று தோல்வி கண்டெ யாதுசெய்வ தென்றறியாச் சொற்ப நல்லோர்
நிர்க்கதியாய் விடப்பட்ட நிலைக்குள் ளானார். 34
`காபீ"லின் வழிவந்தோர் தம்மிற் பெண்கள்
கண்கவரும் அழகியராய் ஆண்கள் காணச் சோபையற்றுக் குரூபிகளாய் வாழ்ந்தார் மாறாய்
வீது "நபித் தோன்றல்கள் பிறந்தி ருந்தார் சாபமென்ன கொண்டனரோ வாழ்வில் இந்தச்
சண்டாளர் வழிகேடே வாழ்வாய்க் கொண்டார் `காபீ"லின் வழிவந்த ஜபர்தஸ்" என்போன்
காவலனாய் அரசாட்சி செய்திட் டானே. 35
4. நபித்தவம் கொள்ளல்
கேடுகொண்ட மக்கள்தம் வாழ்வை மாற்றக்
கண்கலங்கி நெஞ்சுருக இறையை வேண்டி ஈடில்லாத் தவமியற்றி னார்கள் காலம்
ஈரிருபத் தைந்தாண்டைத் தாண்டிற் றன்றோ கோடைமழை என்றில்லா திரண்டும் ஒன்றாய்க்
கொடுவிலங்கின் தீங்கினுக்கும் அஞ்சி டாதே நாடிஇறை அருளொன்றே வேண்டி நின்ற
நபி'நூஹ்" ஓர் நாள்கண்ட புதுமை சொல்வோம் 36
s
6SO3
12

பிரளயம் கண்ட பிதா
Osog
2
வானளாவும் பேருருவாய் அழகைக் கூட்டி
வடித்தெடுத்த தனியுருவாய் ஒளியி னாலே ஆனவடி வாகவொரு தோற்றங் கண்டார்
ஆண்டவனே! இவர்யார்"என் றதிர்ந்தே போனார் ஞானமிகு வதனத்தில் கருணை தோய்த்து
நயனவழி மீததனைதப் பீற விட்டு மோனநகை அதரத்தில் சிதற ஓர்நல்
மாமனிதர் நூஹ்நபி "முன் தோன்றி நின்றார் 37
கண்முன்னே கண்டவரை நோக்கி நூஹும்
கருத்திருந்த வியப்படக்கி ஆசை உந்த மண்மயங்கும் எழிற்பெரும! யார்தான் நீவிர்
மறுக்காதே உரைசெய்ய வேண்டும்" என்றார். விண்ணவனின் தூதுவர்நான் ஜிப்ரீல்" என்பேர்
வாஞ்சைமிகு சலாமுரைத்தான் இறைவன் உம்மை அன்னவனின் நபியாக ரசூலு மாக
ஆக்கியநற் சேதிசொல வந்தேன்" என்றார் 38
இத்தனைநாள் பட்டதுயர் அத்த னைக்கும்
இணையில்லாப் பேறடைந்த மகிழ்வி னாலே உத்தமநந் நபிநூஹ்வும் அதிர்ந்து நிற்க
உடலணைத்து ஜப்ரீலும் உரைக்க லானார் சத்தியத்தைச் சென்றுன்றன் மக்க ளுக்குச்
செப்பிடுவீர் ஏகதெய்வக் கொள்கை தன்னை எத்திவைப்பீர்" என்றிறைவன் ஆணை கூறி
இருந்தவிடந் தனிலிருந்து மறைந்திட் டாரே 39
13

Page 14
ஜின்னாஹர் ஷரிபுத்தீன் SG9 QVIGSK
3.
இறையாணை கேட்டநபி இறைவன் தன்பால்
ஈந்தபெருங் கொடையெண்ணி நன்றி கூறி இறைவழியில் தணைநடத்த முடிவுங் கொண்டே
ஏகனைநெஞ் சிருத்திமனம் உருகி நின்றார் இறைவாஉன் பணிக்காக இன்றே என்றன்
இன்னுயிரை அர்ப்பணிக்கச் சித்தங் கொண்டேன் குறையாவுன் பேரருளைத் துணையாய் ஏற்பேன்
கொற்றவனே தந்தருள்"என் றிரக்க லானார். 40
5. பெயர் வந்த வரலாறு
சங்கைமிகு நபிநூஹ்வின் இயல்பு நாமம்
சுரியானி மொழியினிலே யஷ்கர்" ஆகும் சங்கையொடு மக்களன்னார் தனைவி பூழிப்பர்
ஷைகுல்அன்பி யா"வென்றும் மற்றும் அன்னார் துங்கநபி யாரைநஜி யுல்லாஹ்" என்றும்
தூயநல்ல அடைமொழியால் அழைப்பர் நூஹென்(று) எங்ங்ணமாய்ப் பெயர்வந்த தென்ப தைஈங்
கெடுத்தோதல் நலமாகும் சரிதம் சொல்வாம் 41
விதம்விதமாய்ச் சரிதங்கள் திரித்துக் கூறும்
வழமைஅன்று தொட்டின்றும் உலகில் உண்டாம் அதுவாறே நபிநூஹ்வின் நாமம் பற்றி
அறிந்தகதை மூன்றுண்டாம் அனைத்துங் கூறின் முதலாக நபியோர்நாள் வீதி யோரம்
முன்வந்த கோரவுருக் கொண்ட நாயை இதமற்ற வார்தைகளால் கடிந்து ரைக்க
இறைவனதை வாய்திறந்து பேச வைத்தான் 42
14

பிரளயம் கண்ட பிதா
QySQ) 3
2
கோரவுருக் கொண்டதெரு நாயோ அப்பால் கடந்தேகு" எனநபிகள் கடிதல் கேட்டு தேர்நீர் நூஹேஎன் தோற்றங் கண்டு
தாழ்வாகப் பேசுகின்றீர் முடியு மாயின் ஒரழகுத் தோற்றமுள்ள நாயை நீரும்
உற்பத்தி செய்யுமுன்றன் நாவ டக்கும் பேராளன் படைத்தவல்லோன்" நினைந்தால் என்னைப்
பேரழகாய் மாற்றிடுவான் எனவு ரைத்தே. 43
காரணமொன் றிலாதென்னை வைத தாலே
களங்கம்நீர் செய்தீர்உம் நபித்து வத்தின் சீர்மைதனைக் கெடுத்துவிட்டீர் மனித வாழ்வின் தூயதத்து வத்திற்கும் மாசு செய்தீர் ஒர்நாளும் இவ்வாறாய் இயம்ப வேண்டாம்
உலகாள்வோன் சினங்கொண்டால் இயலான் என்றே பேர்பொறிப்பான் உம்மவர்கள் வெற்றி மீதே
புரிந்துகொள்வீர்" எனக்கூறி மறைந்த தென்பார். 44
நாய்சொன்ன உபதேசம் கேட்டு நெஞ்சம்
நெகிழ்ந்தநபி தன்தவறை எண்ணி எண்ணி ஓயாது பலவருட காலம் கண்ணீர்
உகுத்தழுதார் நெஞ்சமது தணிந்தார் இல்லை காயாத விழியவர்க்காம் என்ப தாலே
காரணப்பேர் புலம்பியழும் பேராம்" என்றே மாயமனங் கொண்டஇப்லீஸ் பற்றித் தானும்
மற்றுமொரு கதையதுவும் கூறு வாரே 45
1S

Page 15
ஜின்னாஹர் ஷரித்தீன்
SGSO
g
பிளயத்தின் பின்நபிகள் மரக்க லத்தைப்
பிரிந்திறங்கி வரும்போது இப்லீஸ் வந்தே புரிந்தீர்கள் நற்கருமம் எனக்கா வல்போல்
பேருதவி யாமதற்கு நன்றி என்றான் புரியாதே நபியவர்கள் அவனை நோக்கிப்
பேருதவி நானுனக்காய் என்ன செய்தேன் சரியாகச் சொல் இப்லீஸ் மல்ஊ" னேநான்
புரிந்ததென்ன பேருதவி உனக் "கென் றார்கள்
நானுமெனைச் சார்ந்தோரும் உதவும் பேரும்
நபியேஉம் காலத்து மாந்தர் தம்மை வானுலகின் பெருந்தீக்குத் தீனி யாக
வழிசெய்ய முயன்றிருந்தோம் அந்த வேளை தானாக முன்வந்து நீரே ஏகன்
துணைகொண்டு அன்னவரை அழியச் செய்தீர் நானாகக் கெடுத்தவரை அனுப்பு முன்னர்
நன்றியொன்றே சொலவைத்தீர் நலமே " என்றான்
மாறுசெய்தே இறைசாபங் கொண்ட ஷைத்தான்" மீதுநபி வெகுண்டாலும் பொறுமை யுற்றே மாறேகற் கிழைத்தவரை அழிக்க வென்றே
மன்றாடி நின்றதெண்ணி வருந்தி னார்கள் ஆறுதலாய்ச் சிலகாலம் தவறு செய்தோர்
அறிவற்ற செயல்களினைப் பொறுத்தி ருந்தால் நூறுநூறாய் ஆயிரமாய் அழியா தின்று
நிலைத்திருப்ப ரென்றெண்ணித் துயருற் றாரே
46
47
48
أمه
16

பிரளயம் கண்ட பிதா
Osog
3.
வழிகெட்டோர் தமைவழிக்குள் அழைத்தும் அன்னார்
வழிமாறி வாராத கார ணத்தால் வழிவழியாய் வந்தவவ ரோடு கூட்டி
வழித்தோன்றல் தமையுமழித் தொழித்தே ஷைத்தான் வழிகேட்டுக் குதவியதாய் ஆனோம் ஒவ்வா
வழிதேடி னோம்அவரை அழித்தே மாற்று வழியிருந்தும் பொறுமையற்றோம் துயரை மாற்ற
வழியிலையே என்செய்வேன் என்றே நொந்தார். 49
பகலிரவாய் இதையெண்ணி நாற்ப தாண்டு
புலம்பியழு தார்களென்ற கார ணத்தால் புகன்றனரே மக்களன்னார் தமக்கு நூஹா"
புலம்பியழும் பேரென்ற பொருளி னோடே மகனைவைத்தும் மற்றேயோர் காதை சொல்வார்
மாபெரிய பிரளயத்தின் போது வல்லோன் இகபரத்தின் நாயகன் நூஹ் " இறைதூ தர்க்காய்
எச்சரிக்கை செய்தஉப தேசங் கொண்டே 50
பெரும்புயலுங் கொந்தளிப்பும் கூடிப் பேரோர்
பிரளயத்தை உண்டுபண்ணி நிராக ரித்தோர் ஒருவரையும் எஞ்சவிட திறைவன் பூவில்
ஒழிக்கின்ற போதாங்கே கன்ஆன்" என்போன் திருநபியின் புதலவனக் கூட்டத் தோடே
தவித்திட்டான் இதுகண்ட நபிஇ றைவன் கருணையினை வேண்டியிரந் தார்கள் ஏகன்
கட்டளையைச் செவியுற்றுக் கலங்கி னாரே 5.
17

Page 16
ஜின்னாஹர் ஷரித்தீன்
SGS)
疑
நிராகரித்தோர் தமைப்பற்றி விபரங் கூறி
நீரவனுக் காகவெனை இரக்க வேண்டாம்
அராஜகத்தைச் செய்யேன்யான் என்பான் போன்றே
அளித்தபதில் கேட்டநபி தவறு ணர்ந்தே
இராப்பகலாய் மண்டியிட்டே இறைமன் னிப்பை
இரந்தேயழு தார்களென்ற காரணத்தால்
பராபரனின் தூதருக்கப் பெயர்நி லைத்த
படியென்றுங் கூறுவாரே புவியி னோரே 52
தீமைக்கு வித்திட்ட தீயோன் ஷைத்தான்
(வேறு) மரணம் ஹஸரத் இத்ரீசை
மக்களி லிருந்தே பிரித்திடப்பின் திருநபி யொருவர் மண்மீது
தோன்றா திருக்க வழிமறந்தே ஒருவன் இறைவன் எனும்போதம்
ஒன்றா மக்கள் திசைமாறி உருவ வழிபா டியற்றினரே
உடந்தை ஆனான் ஷைத்தானும் 53
நேர்மை அற்ற வாழ்வுமுறை
நரக நெருப்பின் பாலழைக்க சீரற் றிழிவழி தொடர்ந்தார்கள்
தவவழி யவர்தமை நெறிப்படுத்துங் காரண மாகவே முதலவனும்
கண்ணியர் நூஹை நபியாகப் பாரினுக் கனுப்பினன் அன்னவர்தம்
பணியினைத் தொடர்ந்திட அந்நாளில் 54
18

பிரளயம் கண்ட பிதா
முதலாம் மனிதர் ஆதமுடை
மக்களிற் `காபீல்" சந்ததியோர் வதியக் கல்லால் அழகுமிகு
வீடுகள் கட்டி வாழ்ந்திருக்கப் புதிதாய் மலைகளைக் குடைந்துகுகை
படைத்தே ஹாபில்" வழிவந்தோர் பதியாய்க் கொண்டனர் அன்னவர்க்குப்
பண்ணவன் வகுத்ததன் வழியென்றே
குகைகளின் வாழ்வே நபி`வீதின்"
குலத்தவர் தாமுங் கொண்டிருந்தார் மிகையழ காமவர் ஆணினத்தோர் மாதர் குலமோ எதிர்மாறாம் அகமீர்த் திடுமா றழகுடைய
அரிவையர் `காபீல்" வழிவந்தோர் மிகஅழ கற்றோர் ஆடவரிம்
மாற்றங் கண்டான் இபுலீஸே
பெண்கள் அழகாய் ஆண்மாறாய்ப்
பிறந்தொரு குலமும் மற்றொன்றில் பெண்களில் மாறாய் ஆண் அழகாய்ப்
பிறந்தொரு குலமும் ஷைத்தானின் எண்ணத் தீயில் நெய்யூற்றி
இடர்செயும் வாய்ப்பினைத் தோற்றுவிக்க மண்ணுல கினிலே வாழுமொரு
மனுவுருக் கொண்டு தோன்றினனே
GOSODIK
3
55
56
57
(5S2)3
19

Page 17
ஜின்னாஹர் ஷரிபுத்தீன்
SGS)
赛
நீறிடை பொதிந்த நெருப்பாக
நீசகக் கருத்தை மனம்புதைத்துக் கூறிடு பணிசெய் சேவகனாய்க்
`காபில்" இனத்தவன் ஒருவனிடம் பேறினைப் பெற்றான் வாழவன்னாள்
படைத்தான் செவிப்புலன் தனைார்த்தே ஆறெனப் பாயும் இசையெழுப்பும்
அற்புத வாத்தியக் கருவியனை
நாவினுக் கினியநன் நறைபோலும்
நோக்கிடு விழிக்குயர் எழில்போலும் பூவினில் தோன்றி நுகர்புலனைப்
பித்தாய்ச் செய்யும் மணம்போலும் தாவியே தென்றலில் தவழ்ந்துசெவி
தாண்டிடா துட்புகுந் துணர்வுகளுள் மேவியே இன்பமீ தெனும்வாறாய்
மீட்டிட இசைத்தேன் பீறியதே
மீட்டிட எழுமென் ஒசையிலே
மெய்மறந் தாங்குள மக்களெலாம் நாட்டமுங் கொண்டனர் செவியேற்க
நிறைந்தனர் இபுலீஸ் மனமகிழ்ந்தான் கூட்டமும் பெருகிடத் தனித்தொருநாள்
குறித்தனன் அந்நாள் அவனிசையைக் கேட்டிடக் கூடிய கூட்டமொரு
குதூகலப் பெருவிழா ஆனதன்றோ
58
59
20

பிரளயம் கண்ட பிதா
@以○3
3.
7. திருவிழாத் தினத்தினிலே
வண்ணவண்ணப் புத்தாடை அணிந்தே மக்கள் வீதியெலாம் நிறைந்தார்கள் வீதி யெல்லாம் கண்கவரும் கொடிகளினால் எழில்பெற் றொன்றிக்
காணவரும் பேரைத்தம் பாலி ழுக்கப் பண்ணோடு இளமாதர் பாடக் காற்றுப்
போகுமிட மெலாமதனைத் தாங்கி யாங்கே திண்தோளின் நாயகர்தம் செவியுட் சேர்த்துத்
தேடியவர் பாலோடச் செய்த தன்றோ 6.
மதுகொண்ட நிலைகளிலே வேண்டு மட்டும்
மதுகொண்ட ஆடவர்கள் தமைம றந்தே மதுகொண்ட நிலையாலே ஆடி னார்கள்
மிதமிஞ்சி உண்டவர்கள் மண்ண ணைத்தார் பொதுமகளிர் காமுகரின் பிடியுட் சிக்கிப்
போகத்திற் துணைநின்றார் சூதுக் காரர் மிதமிஞ்சிச் செல்வத்தை அள்ளி வீசி
மகிழ்வுற்றார் பகலிரவாய்த் தொடர்ந்திட் டாரே 62
வண்ணவண்ணப் பறவைகளாய்ச் சிறார்கள் ஒவ்வோர்
வகைவகையாய் உடையுடுத்தே அங்கும் இங்கும் வண்ணத்துப் பூச்சிகளின் கூட்டம் போலும்
விளையாட்டில் தமைமறந்து திளைத்தி ருக்கப் பெண்டிர்கள் பருவத்திற் கேற்ற வாறாய்ப்
பொன்முத்துப் பவளவெள்ளி மாணிக் கத்தால் கண்கவரும் நகைபூண்டு பட்டு டுத்தே
காண்பவரைக் கண்வாங்கா தயரச் செய்தார் 63
21

Page 18
ஜின்னாஹர் ஷரிபுத்தீன்
SGS)
வயதுமுதிர்ந் திளமைக்கு விடைகொ டுத்தோர்
வெவ்வேறாய்த் தத்தமக்கென் றுவந்த தெய்வ வயமாகிச் சிலைவணக்கம் செய்யக் கோயில்
வழிதொடர்ந்தார் ஆங்கெல்லாம் கூடி நின்றோர் பயபக்தி யோடுகண்கள் மூடி நிற்கப்
பற்பலவாய் மந்திரங்கள் சொல்லிச் சொல்லித் தயவிறைஞ்சி நின்றார்கள் கற்கள் முன்னே
துணைசெய்யா தவையென்ப துணரா வாறே
பற்பலவாய்த் தின்பண்டம் செய்து வந்தே
படைத்தார்கள் பெண்டிர்கள் சிலைகள் முன்னே பற்பலவாய் மலர்களினைக் கொய்து வந்தும்
பரப்பினரே பூமணத்தை விஞ்சும் வாறோ கற்பூரத் தோடகிலும் சேர்த்தெ ரித்தார்
கண்கவரச் சோடனைகள் தாமுஞ் செய்தார் முற்றுமந்தச் செயல்களெல்லாம் வீணா மென்றே
மூடர்கள் உணர்ந்தனரோ இலையே ஐயோ!
ஓரிடத்தில் பெருந்திரளாய் மக்கள் கூடி
ஒன்றுக்கும் அதிகமதாய்ச் சிலைகள் வைத்தே பேரொலியில் மந்திரங்கள் செபித்தே மிக்க
பக்தியோடு நிற்கையிலே அவர்கள் அஞ்சும் வாறாகக் குரலொன்றைச் செவிம டுத்தே
வந்ததிசை நோக்கினரே கண்டார் அங்கே ஊரறிந்த பேரான நூஹை"த் தம்பால்
உணர்ச்சிபொங்க உரைசெய்யும் புதியோ ராக
64
65
66
GSO3
22

பிரளயம் கண்ட பிதா
ஆண்டவனின் வழியென்னும் ஒளியை ஏந்தி
அக்கால மக்களுள இருளைப் போக்கப் பூண்டமன உறுதியோடு நகரை நோக்கிப்
புறப்பட்ட நபியாங்கே மக்க ளெல்லாம் வேண்டாத பொருளையெல்லாம் தெய்வ மாக
வேண்டிநிதம் வணங்கிநிற்கும் நிலைமை கண்டே தோன்றாத துணையாக அவர்பால் நிற்குந்
தூயவனை மனத்திருத்திப் பேச லானார்.
“என்னருமைப் பெருமக்காள் இறைவன் ஒன்றே
இல்லைபல தெய்வங்கள் சிலைகள் பொய்யே அன்னவனை வழிபடுங்கள் அன்றி மற்ற
அனைத்துருவ வழிபாடும் நீக்கு வீரே மன்னுலகின் தூதாக இறைவன் என்னை
மாற்றியுங்கள் வழிதிருத்தத் தேர்ந்தான் வல்லோன் சொன்னவைதாம் நானுரைப்ப தெச்ச ரிக்கை
செய்கின்றேன்" எனக்கூற அதிர்ந்திட் டாரே
மக்களதிர்ந் தோர்காலாங் கிருக்க நின்ற
மன்னவனாம் ஜபர்தஸ்"ஸின் செவியுட் புக்கி மிக்கசினங் கொளவைத்த தவர்தம் வார்த்தை
மேட்டிமையாய் வினாவொன்றை வீசச் செய்யும் ஒக்காத சொல்லுதிர்க்கும் இவர்யார்" என்றே
உடனிருந்தோர் தமைவிளித்தான் அவருஞ் சொல்வார் முக்காலும் பித்தரிவர் லாமாக் ' என்போர்
மகன் நூஹ் ' தான்" என்றேபின் தொடர்ந்தும் சொல்வார்.
Qse
3.
67
68
69
23

Page 19
ஜிண்னாஹர் ஷரிபுத்தின்
SGSC)
பலகாலம் காட்டினிலே தனித்தி ருந்த
பின்னரிவர் நகர்புகுந்து பித்த ராக இலவேறு தெய்வமிறை ஒன்றே என்றே
இயம்புகின்றார் நாம்வணங்குஞ் சிலைக ளெல்லாம் பலனளிக்க வியலாக்கற் கூட்ட மென்றே
பிதற்றுகின்றார் பித்துமுற்றி இரட்சிப் போனாய் நலஞ்சேர்க்கும் வல்லவனாய்த் தான்வ ணங்கும்
நாயகனைக் கூறுகின்றார் நமக்கேன்" என்றார் 70
சினங்கொண்ட மன்னனவர் தம்மை நோக்கிச்
செருக்குடனே வாய்மொழிவான் நொடிக்குள் என்முன் தணைஇறைவன் துதரெனும் பேராம் அந்தத்
திமிர்கொண்ட மனிதனைநீர் நிறுத்தும்" என்றே கணப்பொழுதுள் அவன்ஆணை செயலாய் மாறக்
கண்சிவக்க நபிநூஹை நீர்யார்" என்னும் வினாச்சரத்தாற் றுளைத்திட்டான் வார்த்தை தன்னில்
வெறுப்போடு வெறியென்னும் நச்சும் சேர்த்தே 7
நானேஇந் நாடாளும் மன்னன் நீயென்
நல்லாட்சிக் கெதிராகக் கிளர்ச்சி யொன்றை ஏனியற்றுந் துணிவுகொண்டாய் என்ப தொக்க
இருந்ததவன் கேள்வியிலே தொனித்த வேகம் வானோனின் தூதரையள் வார்த்தை சற்றும்
வியப்படையச் செயவில்லை மாறாய் நெஞ்சில் தீன்" என்னும் ஒளிமிளிர்ந்த கார ணத்தால்
துணிவோடு பதிலிறுக்கத் தூண்டிற் றன்றோ 72

பிரளயம் கண்ட பிதா
Qsc)3
3.
மன்னனது கேள்விக்குப் பதிலாய் நாட்டின்
மக்களிலே தானொருவர் லாமாக்' மைந்தர் என்நாமம் நூஹ் என்ப தாகும் ஏக
இறைவனது தூதுவராய் நியமம் பெற்றேன் மன்னபெரு மானேநீ ரனைத்துப் பேரும்
மற்றொன்றால் இணைகொள்ள இயலா திந்த மன்னுலகைப் படைத்தாளும் வல்லோன் பாதை
மறுக்காது வரவேண்டும்" எனவு ரைத்தார் 73
வணங்குதலுக் குகந்தவன் அல் லாஹ் வே அன்றி வேறில்லை சிலைகள்வெறுங் கற்க ளேதாம் இணங்காதீர் அவைதம்மை இறைஞ்சச் சக்தி
இலாதனவாம் எனநீங்கள் உணர வேண்டும் இணங்கிமனம் ஒப்புங்கள் என்னை ஏக
இறைவனது தூதுவராய் என்முன் பின்னும் வணக்கத்துக் குரியவனின் தூதாய்த் தூதர்
வந்தார்கள் வருவார்கள் என்றும் சொன்னார் 74
ஓங்கியவன் கன்னத்தில் அறைந்தாற் போன்றே
உறுத்திடஅவ் வார்த்தைகளால் சினந்தான் மன்னன் தாங்காத வெறிசிரசைப் பிளக்க நீஎன்
செப்பினைஎம் கடவுளெலாம் பொய்யென் றாயோ? நீங்காத பித்துன்றன் தலையில் சேர்ந்து
நினைந்தபடி உளறவைக்கும் கேடாம் இஃதே தீங்குசெய விளையாதிம் மக்கள் தம்மைத்
திசைமாற்றத் துணிந்திடவும் வேண்டாம்" என்றான் 75
25

Page 20
ஜின்னாஹர் ஷரிபுத்தீன்
SGSC)
பொருள்திரட்டும் நோக்குனக்குள் இருக்கு மாயின்
பகருனக்கு வேண்டியன தருவேன் உன்னைத் திருவனைத்துங் கொண்டபெருஞ் சீமான் போன்று
திகழவழி செய்கின்றேன் நீயி யற்றும் கருமத்தை விட்டொழிப்பாய்ப் பித்த னாகக்
கதறுவதை நிறுத்திவிடும்" என்றே மன்னன் திருநபியாம் நூஹ் தம்மைப் பணிக்க அன்னார்
தொடந்துபதி லாகவரு மாறு சொல்வார் 76
பணந்திரட்டும் பேராசை கொண்டே னல்லேன்
பைத்தியமும் எனக்கில்லை நீங்க ளெல்லாம் வணங்குகின்ற சிலைகளினை மறந்தே ஏக
வல்லவனாம் அல்லாஹ்வை வணங்க இன்றே இணங்கிவர வேண்டுமென்றே ஆசை கொண்டேன்
இழிவழியில் இருந்து மனந் திருந்த வேண்டும் பிணமாகி உடலழிந்து போகு முன்னர்
பண்ணவனை விசுவாசங் கொள்வீ" ரென்றே 77
செவிகொண்ட பதில்உடலம் அனைத்தை யும்மே
சுண்டுபொழு திடைகட்டுப் பொசுக்க மன்னன் புவியாளும் பதியென்முன் துணிவு கொண்டு
பேசியவுன் தலைகொய்யா திருப்ப தின்று கவலைமறந் தொன்றிமக்கள் மகிழ்வு கொண்டே
களித்திருக்குந் திருநாளென் றிருப்ப தாலே இவண்விட்டுப் போம்"என்றே சினத்துத் தம்மின்
இருப்பிடத்தை நோக்கிப்பரி செலுத்தி னானே 78
26

பிரளயம் கண்ட பிதா
OX KOg.
2
மன்னன்அகன் றிட்டபின்னர் மக்க ளெல்லாம்
மிகமுற்றிப் போனபித்தர் இவர்தா" னென்றே சொன்னதொடு கூடிநின்றே நகைத்தார் ஒன்றிச்
சிறுவர்களைக் குரலெழுப்பத் துண்டி விட்டார். என்னவவர் செய்திட்ட போதும் நூஹ் "தம்
ஏகதெய்வக் கொள்கைதனை இறைவன் தூதை அன்னவர்முன் எடுத்துரைத்தார் மீண்டும் மீண்டும்
அஞ்சாது சோராது அயரா தன்றே 79
8. பிரச்சாரம் தொடங்கியத
நிச்சயமாய் நாம்நூஹை அவர்சார்ந் தோர்பால்
நோவினைகொள் வேதனைகள் நேரு முன்னே அச்சமூட்டி எச்சரிக்கை செய்வீ ராக
என்றேதான் அனுப்பிவைத்தோம்" எனம றைபால் இச்சையற்றோன் படைத்தாளும் வல்லோன் கூறும்
இறைதூதர் நூஹ் ' என்பார் இரண்டாந் தந்தை அச்சமூட்டி எச்சரிக்கை செய்தார் அந்நாள்
ஆயிரத்திற் கைம்பதாண்டு குறைவ தாமே. 80
ஆதிபிதா ஆதத்தின் செல்வ ருள்ளே
ஐவர் வத்து ஸ்வாஹ்' யநூது" யபூக்கு "நளிரு' ஆதியோரைத் தெய்வங்க ளாக மக்கள்
அமைத்துவழி பாடுசெய்து வந்த நாளில் தீதாகும் இஃதிறைவன் ஒன்றே என்னும்
திருமந்தி ரம்புகன்றார் நூஹ் 'அம் மாந்தர் ஒதியது செவிமடுத்தார் அல்லர் தாங்கள்
ஒன்றிவிட்ட வழிதொடர்ந்தார் துயருற் றாரே 8.
27

Page 21
ஜின்னாஹற் ஷரிபுத்தீன்
SG&C)
எனைச்சார்ந்த சமூகத்தின் சோத ரீர்நீர்
இறைவனையே வணங்கிடுவீர் அவனை அன்றித் துணையாக வேறிங்கோர் தெய்வ மில்லை
தேர்ந்தறிவீர் தவிர்த்தொன்றை வணங்கி டுங்கால் சினங்கொள்வான் பின்னோர்நாள் உங்கள் மீது
சகிக்கவொணா வேதனைகள் குழு மென்றே மனமஞ்சி வாடுகின்றேன்" என்றார் நூஹ் அம்
மானிடரோ மறுத்தவரைச் சாடி னாரே
நிச்சயமாயப் பகிரங்க வழிகேட் டில்தான்
நாங்களுமைக் காணுகின்றோம்" என்றார் அன்னார் நிச்சயமாய் இல்லைநான் படைத்தாள் வோனின்
நபியாக வந்துள்ளேன்" என்றார் நூஹம் அச்சுறுத்தி எச்சரிக்கை செய்ய வல்லோன்
ஆணைகளை எத்திவைப்பேன் உபதேசிப்பேன் நிச்சயமாய் இறைபால்நீர் அறியா வற்றை
நானறிவேன்" என்றார்பின் மீண்டுஞ் சொல்வார்
அதிசயிப்பீ ரோநீங்கள் உங்கள் மீது
அச்சமூட்டி எச்சரிக்கை செய்ய வென்றே புதிதாக மனுக்குலத்தில் ஒருவ ரைத்தன்
புலத்திருந்து அவனையஞ்சிக் கொளவும் நீங்கள் அதிபுகழுக் குரியவந்த றப்பினாலே
அருள்செய்யப் படும்பொருட்டும் அனுப்ப" என்றார் மதிகெட்டோர் பொய்யரென்றார் பொல்லார் என்றார்
மறையோனின் துதரினை மறுத்திட்ட டாரே
82
83
84
6SO
28

பிரளயம் கண்ட பிதா
○叉○3
2
மீண்டும் நூஹ் தம்சமூகத் தோரை நோக்கி
மனந்திறந்து வினவினரே பின்வா றாக ஈண்டுங்க ளோடேநான் இருப்ப தன்றி
ஏகனருள் வேதத்தை நினைவு செய்தல் வேண்டாத பளுவாக இருக்கு மானால்
விருப்பம்போல் செய்யுங்கள் நானோ என்றன் ஆண்டவன்மேல் நம்பிக்கை கொண்டுள் ளேன்நீர்
ஆவதனைச் செய்க"வென அறைய லானார். 85
எனையெதிர்த்துச் செய்யநீங்கள் விழைவ தெல்லாம்
இன்றேசெய் திடத்தொடங்கு வீர்கள் உங்கள் மனமொப்புந் தெய்வங்கள் அனைத்தை யும்நீர்
மேவியவை யோடொன்றித் தொடர்வீர் அஃதை கணநேர மாயிடினும் தாம தித்துக்
காத்திருக்க வேண்டாம்நான் படைத்த வல்லோன் துணைகொண்டேன் செய்கைக்குக் கூலி தன்னைத்
தேடுவதும் அவனிடத்தே எனவு ரைத்தார் 86
கூறியது செவிபுக்கப் பதிலாய் அன்னார்
கூறினாரே உமையும்நாம் எமைப்போல் அன்றி வோறாகக் காண்கிலமே தகுதி மிக்க
வல்லவராய்த் தானும்நீர் இல்லை" என்றே வேறெவரும் இலையெம்மில் இழிந்தோ ரன்றி
வழிதொடர்வோர் சிந்திக்குந் தகுதி அற்றோர் மாறாக நாம்காண்ப துமையோர் பொய்யின்
மறுபிறப்பென் றன்றியிலை" எனப்ப கர்ந்தார் 87
29

Page 22
ஜினர்னாஹர் ஷரித்தினர்
S.G.39
நான்செய்யும் பணிகளுக்காய் உம்மி டத்தில்
நாடுவதொன் றில்லையதன் கூலி யெல்லாம் வானோடு உலகுபடைத் தாளு கின்ற
வல்லவனின் பாலுண்டாம் வேறே இல்லை நானொருநா ளெனினுமெனைச் சார்ந்த பேரை
நிச்சயமாய் விரட்டிடவும் மாட்டேன் அன்னார் தானவர்கள் றப்பை முன் காண்போர் நீங்கள்
தெளிவில்லா அறிவிலிகள் எனவுஞ் சொல்வார் 88
இறையோனின் எல்லையற்ற பொக்கி ஷத்தை
ஏந்தியவன் என்றெனைநான் கூற வில்லை மறைவான எதையும்நான் அறியேன் நானோர்
மலக்கு "மென உம்மிடத்தில் கூற மாட்டேன் குறைவாக நீர்மதிக்கும் பேர்க்கு நன்மை
கொடாதிறைவன் விடுவனென்றும் சொல்லேன் அல்லாஹி அறிவானாம் மாந்தர்தம் இதயந் தன்னை
அவனையேநீர் வணங்கிடுதல் வேண்டும்" என்றார் 89
நல்லுரைகள் சொல்லுகின்ற நூஹை நோக்கி
நெறிகெட்ட மக்களெடுத் துரைப்பார் நீவிர் சொல்லியவா றெம்மீது வேத னைகள்
சேரவெனச் செய்திடுவீர் தவிர்த்து வீணே சொல்லாட வரவேண்டாம் உண்மை யின்பால்
சேர்ந்தவராய் நீர்இருப்பீ ரென்றால் உன்றன் வல்லமையைக் காட்டும் "என இகழ்ந்து ரைத்தார்
வழிகெட்டோர் தமைவிழித்து நபியு ரைப்பார் 90
30

பிரளயம் கண்ட பிதா
རྒྱུ་བ་་་༠
வேதனையை உம்மீது கொணர்வேன் அல்லாஹ்
வேண்டுகிற போததனைக் கொணர்வான் நீங்கள்
ஏதுமதற் கெதிர்த்தியற்ற வல்லோ ரன்றே
இயலாதே போதனைநான் செய்தா லுந்தான்
தீதான வழிநீங்கள் செல்ல ஏகன்
திருப்பொருத்தம் என்றாயின் பலனுஞ் சேரா
ஒதிடினி லவனேயும் றப்பு" மாவான்
ஒர்நாள்பின் அவன்புறமே மீள்வீர்" என்றார்
9. தண்புறத்தல் தொடங்கியது
அளவறச் சுற்றிநின் றெறிந்தனர் கற்களை அளவறச் சுற்றியே நிறைந்தன கற்களும் அளவறச் சுற்றிநின் றெறிந்தனர் சொற்சரம் அளவறச் சுற்றிடு பவத்தினைச் சேர்க்கவோ
ஒன்றினை ஒன்றுவென் றுறுத்திய கற்களால் ஒன்றினை ஒன்றியின் னொன்றென வடுக்களும் ஒன்றியே ஒன்றினை உடலெலாம் குருதிமேல் ஒன்றிய தாலவை உருச்சிவந் தொளிர்ந்தன
சேர்ந்தவக் கற்களால் சிறுமலை வடிவமுஞ் சேர்ந்தது நாப்பணே நபிகளை நிறுத்தியே சோர்ந்துடல் பலமிழந் தடங்கிய போழ்திலுஞ் சோர்ந்தடி வீழ்ந்திடாச் சிலையென நின்றதே
மூர்ச்சையுற் றார்நபி முடிந்ததே வாழ்வென மூர்க்கரும் எண்ணினர் முடங்கிடும் புத்தொரு மார்க்கமென் றவர்தரும் போதனை நம்மவர் மார்க்கமே இனித்தனி வேறிலை என்றுமே
31
QSOK
2
9.
92
93
94.

Page 23
ஜின்னாஹர் ஷரிபுத்தினர்
SGy.9
மயங்கியே போனவர் தமை"ஜீபு ரீல்"பகல் மயங்கியே போனபின் இராப்போழ் தினிலவர் மயங்கிய உடல்தனை மிருதுவாய்த் தடவியே மயங்கிய நிலைதவிர்ந் தெழுந்திடச் செய்குவார். 96
அடித்தடித் தேநபி சருமங்கி பூழிப்பரே அடித்தடித் தேநபி தசைகளும் நொருக்குவார் அடித்தடித் தேநபி என்புகள் ஒடிப்பராம் அடிதடுத் தேநபி காப்பரு மிலாமலே 97
போர்வையாற் போர்த்திவிட் டண்மையில் எறிவர்தீன் போர்வையைப் போர்த்தவம் மாநபி தமையேவாழ் சீர்மையைப் போதனை செய்தவச் செயலில்நற் சீர்மையைக் கண்டிடாச் சீர்கெட்ட மாந்தரே 98
அழிந்தனர் என்றவர் எண்ணிட வடுவெலாம் அழிந்தவ ராய்ப்புது ஆற்றலோ டறிவுதூர் அழிந்தவம் மாந்தரை ஆண்டவன் எனுந்தனி அழிவிலான் பாதையில் அழைத்திடத் தோன்றுவார் 99
ஏவினான் மகனையோர் இதயமி லான்நலம் ஏவிடும் நபிகளை இரக்கமி லாமலே நோவினை செயவென நலன்பல சேர்வதாய்க் கூவினன் மகனுமக் கொடுமையைச் செய்யவே 100
கல்லவை வேறில காத்தருள் வல்லமை இல்லையென் றேநம திறைவரைச் சாடிடும் புல்லரை ஏன்விட வேண்டுமெப் போழ்துமே தொல்லைகள் தந்துயிர் போக்குவீர் என்றனன் 101
32

பிரளயம் கண்ட பிதா
வணங்கிடிற் பாவமென் றாரிவர் நம்மவர் வணங்கிடுந் தெய்வமெ லாம்பிழை என்கிறார் வணங்கிடற் கேற்றதோர் உருவமி லாதுதான் வணங்கிடுந் தெய்வமே வேறிலை என்கிறார்
ஓங்கியே வீழ்ந்ததோர் அடிசிரம் பிளந்திட ஓங்கியே பீறுசெங் குருதியால் நபியுடல் தாங்கிய உடைகளுஞ் சிவந்தன நோவினைத் தாங்கிடா துடலமுந் துடித்ததோர் கோரமே.
(வேறு) தெருத்தெருவாய் வீடனைத்தும் இறைபோ தத்தைத்
திருநபிகள் சொல்லிவரச் சலிப்புக் கொண்டே துரத்தினரே மக்களவர் தரித்து நிற்கும்
திராணியற்று வீழுவரை கற்க ளாலும் அரக்கமனங் கொண்டவந்தப் பாவி யர்கள்
அடித்தார்கள் கூடியவர் மீது வீழ்ந்தே நெரித்தார்கள் கண்டத்தை உயிர்போ மென்றே
நீசர்தம் கொடுமைகளைத் தொடர லானார்.
மண்ணள்ளி வீசிவசை பாடி னார்கள்
மண்புரட்டி மார்பேறித் துள்ளி னார்கள் புண்ணாகிக் குருதிவழிந் தோட மேனி
புடைத்தார்கள் பதத்தைமுகம் பதித்த ழுத்திக் கண்ணிருஞ் செந்நீரும் கலந்தே கன்னக்
கரைதாவி உடல்நனைக்க நோவித் தார்கள் எண்ணிடவும் மனந்துணியாக் கொடுமை தம்மை
எழுத்தினிலே வடிப்பதெவ்வா றாகு மாமோ
Osog
2
102
103
104
105
6ŞOK
33

Page 24
ஜின்னாஹர் ஷரிபுத்தீன்
S.G.39
(வேறு) தாங்கொணாத துன்பமவர் இழைத்த போதும்
தொடர்ந்தேதம் கொள்கையினை மக்கள் நெஞ்சம் தாங்கவென முயன்றார்கள் முயற்சி எல்லாம்
தோல்வியினைத் தான்தழுவிச் சென்ற தன்றோ தீங்குமுற்றி உடல்மயங்கி மீண்டும் மீண்டும்
தெளிவுபெற்ற போதெல்லாம் இறைவன் தூதர் ஏங்கியழு வார்கள்இறை பால்கை யேந்தி
"ஏகணேஇம் மாந்தர்க்கருள் தாராய்” என்றே 106
"நெறிகெட்டுத் தவறிழைக்கும் என்றன் மக்கள்
நேர்வழியைக் காணமனம் தெளிந்து தூய அறிவொளியைப் பெறவருள்வாய் ஆதி அந்தம் அற்றவனே அளவற்ற அருளின் செல்வா பொறுமைதனை எனக்கருள்வாய் பாவி மாந்தர்
பிழைபொறுத்துக் கருணைமழை பொழிவாய்” என்றே உறுங்கொடுமை அனைத்தையுமே தாங்கிக் கொள்கை
உறுதியுடன் இறையைநபி வேண்டி னாரே 107
இனிமேலும் பொறுக்கமுடி யாதே என்னும்
இயலாமை வந்துற்ற போழ்தே ஓர்நாள் "தனியவனே இவருக்கென் உருவந் தோன்றா(து) இருக்கச்செய் போதனைகள் செவியுள் ஏகத் தனியேயென் குரல்மட்டும் கேட்கச் சேய்வாய்
திருந்தியவர் வழிமாற வேண்டும்” என்றே கனிந்துருகி வேண்டியவர் வேண்டு கோளும்
காருணியன் பால்ஏற்கப் பட்ட தன்றோ 108
34

பிரளயம் கண்ட பிதா
Qso
2
எவ்வாறு போதனைகள் செய்த போதும்
ஈனர்கள் திருந்தவில்லை மாறாய்த் தத்தம் ஒவ்வாத வழிகேட்டில் தான்தி ழைத்தார்
உருவமற்ற ஒலிகேட்டும் ஒதுங்கி னார்கள் இவ்வாறே இருப்பதினி ஏற்கா தென்றே
இறைவனை'நூஹ் இறைஞ்சினர்தம் உருவம் வேண்டி அவ்விதமே மீண்டும்இறை செய்தான் அ.தும்
அனர்த்தங்கள் விளைத்ததன்றி வேறில் லாதே 109
அடியுதைகள் தாங்காது நபிகள் ஒர்நாள்
அரையுயிர்தம் உடலைவிட்டுப் பிரிந்தா ரொப்ப அடிதளர்ந்தும் நிலம்புரண்டும் கிடக்கக் கண்டோர்
அருகமர்ந்து செவியுள்ளே சொல்லம் பெய்தார் "உடலிலென்ன சுரணையற்றுப் போன தாமோ
உளத்தினிலே நாணமென்ப திலையோ இன்னும் தொடருவதேன் பொய்யுரைக்கும் செயலைப் பித்துத்
தெளிவதென்னாள் கேடுகெட்ட பிணமே” என்றே 10
"உரைப்பதுபோல் உனக்கென்றோர் தெய்வம் உண்டேல்
உனைவந்து காத்திருக்க லாமே எங்குக் கரையொதுக்கிப் போனதது வந்திங் குன்னைக்
காக்குதிறன் அற்றததற் கேனாம்” என்றார் "புரியாத மனிதனாய்நீர் இன்னு மின்னும்
புலம்புகின்றீர் தெய்வமொன்றே என்ப தாக உரியதுனக் கிதுவேதான் பரிசாம் இன்றே
ஒப்புக்கொள்" எனtண்டும் உதைத்திட் டாரே 11
35

Page 25
ஜினர்னாஹர் ஷரிபுத்தினர்
SG9
g
சுயஉணர்வு வரும்போது நபியெ முந்தே
சொல்லுவார்தம் மனிதர்களை நோக்கி நீங்கள் அயராது துன்பமெனக் கிழைத்த போதும்
ஆண்டவனொன் றென்பதனை மொழியா தில்லேன் பயப்படுங்கள் இறைவனுக்கே அவனை அன்றிப்
பிறிதொன்றை வணங்காதீர் என்பார் கேட்டே தயவின்றித் தருக்கர்கள் கொடுமை செய்வார்
திரும்பியுமே மயங்குவரை துணையற் றோரே 12
முன்நபியை மணந்தேபின் விடுகை பெற்ற
மாதொருத்தி தனதுமன வஞ்சம் தீர்க்க நந்நபியைப் பொய்யரென்றும் பித்த ரென்றும்
நிந்தித்தாள் சிறுவர்களைக் கூட்டி வந்தே கன்மாரி பொழிந்தனளே அவரோ டொன்றிக்
கைகொட்டி நகைத்தனளே அறிவில் லாவவ் வன்மனத்தாள் மக்களிடை மொழிவாள் எங்கள்
விரோதியிவர் சமூகத்தின் பிணியாம் என்றே 113
ஒருநாளோ இருநாளோ வார மொன்றோ
ஓய்வின்றித் துயர்கொண்ட வருட மொன்றோ ஒருநூறோ இருநூறோ இல்லை ஐம்ப(து)
ஆண்டுகுறைத் தாயிரமாம் ஆயி னென்ன சிறிதேனுங் குறைந்ததிலை கேடு கெட்டோர்
செய்தகொடு வினைகளுக்கோ அளவே இல்லை பொறுமைகடந் திட்டார்கள் நபிகள் இஃது
போதுமென மனஞ்சோர்ந்து போன தாலே 114
36

பிரளயம் கண்ட பிதா
ஊனின்றி உறக்கமின்றி உடல்வ ருத்தி
உபதேசம் செய்திட்ட போதும் எல்லாம் வீணாகிப் போனதெண்ணி நபிகள் நெஞ்சுள்
வேதனையுற் றொருநாள்பேர் இறையை எண்ணி "ஊன்பிறவும் தந்துலகைக் காக்கும் வல்லோய்
உன்னாணை தனையேற்றே இந்நாள் ஈறாய் காணாத துன்பமெலாங் கண்டோ னாய்என்
கடமைதனைச் செய்தேனென் றுரைத்தே சொல்வார் 115
இரவுபக லாகவவர் தம்மை என்பால்
ஏகனேநான் அழைத்திட்ட போதும் அன்னார் வெருண்டோடி னார்களன்றி வேறு காணேன்
வழிவந்தோர் எண்பதன்றி மிகுதி இல்லை கருணைமிகக் கொண்டவனாம் இறைவன் நீங்கள்
காலமெல்லாம் இழைத்தபிழை நினைந்தி றைஞ்சின் அருள்புரிவான் என்றுரைத்தேன் ஏற்கா தோராய்
அடித்துதைத்தென் உயிர்போக்க முயல்கின் றாரே 116
நானுரைத்தல் செவியேற்று நடப்பீ ராயின்
நாமுவக்கும் வாறுமழை பொழியச் செய்வான் தேனினிய புனலோடு நதிகள் காய்க்குந்
தோட்டங்கள் பலவுமவன் தோன்றச் செய்வான் ஏனவனின் மாண்புதனை அறியா துற்றீர்
என்னநிகழ்ந் ததுவாமோ உங்கள் மீது வானவனை நம்பாது கேடு கெட்ட
வழிசெல்ல முயல்கின்றீர் என்றே இன்னும் 17
Q叉○3
2
37

Page 26
ஜின்னாஹர் ஷரிபுத்தினர்
S.G.39
அவனேதான் மனிதர்களை விதங்கள் வேறாய்
அவதரிக்கச் செய்கின்றான் வளரச் செய்வான் அவனேதான் வானேழும் படைத்தான் அஃதை
அடுக்கடுக்காய் ஒன்றின்மேல் ஒன்றாய் வைத்தான் அவனேதான் திங்களினைப் பிரதி காட்டும்
அழகுமிகு கோளமெனச் சுழல விட்டான் அவனேதான் கதிரவனை ஒளிப்பி ளம்பாய்
ஆக்கியருள் பாலித்தான் அறிவீ ரென்றே 18
மண்ணிருந்து நமைப்படைத்த தவனே மீண்டும்
மண்ணுண்ணச் செய்பவனும் அவனே பின்நாள் மண்ணிருந்தே உயிர்பிப்ப தவனே இந்த
மண்ணைவிரிப் பாக்கியவன் அவனே மாந்தர் மண்ணுலவப் பாதைசெய்த தவனே என்றும்
மண்ணாளும் பூபதியும் அவனே என்றேன் மண்ணளவும் என்வார்த்தை மதித்தா ரில்லை
மண்ணாகிப் போகுதவர் வாழ்வாம் என்றார் 19
அக்காலை இறைவனிடத் திருந்தே தூதை
அறிந்தார்கள் "நூஹுநபி' அவனு ரைப்பான் "மிக்ககவல் கொள்ளாதீர் நூஹே என்னை
மிஞ்சியொன்றும் நிகழாது இதுநாள் உன்றன் பக்கலொன்றி னாரன்றி வேறு யாரும்
பின்பற்றார் இஸ்லாத்தை அவர்பின் னோரும் எக்காலத் தேனும்இறை ஒன்றென் றெண்ணார்
என்எழுது கோலதனை எழுதிற் றென்றான் 120
38

பிரளயம் கண்ட பிதா
QSS)3
2
உன்னெழுத்தே அவ்வாறாய் இருக்கு மாயின்
ஒருவருமே இஸ்லாத்தைத் தழுவ மாட்டார் பின்னிவரின் சந்ததியும் பற்றா ராயின்
பிறிதெதற்காய் உலகிலிவர் வாழ வேண்டும் என்னைவிசு வாசித்தே உனைவ ணங்கும்
இறையடியார் தமையிவர்கள் வழிகெ டுப்பர் முன்னவனே படைத்தாளும் முதலோய் இந்த
மூர்க்கரைநீ அடியோடே அழிப்பாய் என்றார் 2.
எனையீன்ற பெற்றோர்க்கும் எனக்கும் என்றன்
இல்லத்தில் நுழைந்தோர்க்கும் இறையே உன்பால் தணைநடத்திச் செல்வோர்க்கும் மன்னிப் பைநீ
தந்தருள்வாய் அவரன்றி உனைவெ றுத்து மனமுரண்டாய் அக்கிரமம் செய்வோர் தம்மை
முற்றாக அழித்துவிடு எனைப்பொய் யாக்கும் இனத்தோர்க்கும் எனக்குமிடை உகந்த தீர்ப்பை
ஏற்படுத்த வேண்டும்நீ எனவுஞ் சொல்வார். 122
என்னோடே உன்னைவிசு வாசங் கொண்ட
இறைநேசர் தமையும்நீ இரட்சித் தேற்பாய் என்றுநபி "நூஹ்”இறைபால் கைக ளேந்தி
இறைஞ்சிநின்றார் இருவிழிநீர் சிந்தக் கேட்டே மன்னுலகில் வாழுகின்ற படைப்பி னங்கள்
மனமொன்றி ஒருமித்தே "ஆமீன்” “ஆமீன்" என்னும்வா றொலிசெய்ய அமரர் சேர்ந்தே
ஏற்பதுபோல் "ஆமீனெ"ன் றுரைக்க லானார் 23
39

Page 27
ஜினர்னாஹர் ஷரித்தீனர் SGSC) ○以リ○g
g 2
10. கப்பல் கட்டல்
இறுதியிலே இறைதூதர் இறைஞ்சு தற்காய்
இறைவன்றன் ஒப்புதலைத் தந்தான் "நூஹே! உறுதிமிக்க கப்பலொன்றைக் கட்டும்” என்றான்
உண்மைநபி "கப்பலென்ப தென்ன” வென்றார் “மரத்தாலே செய்யுமொரு வீடாம் நீரில்
மிதக்குமது” என்றிறைவன் பதிலுங் கூற உருவமெது வாறிருக்க வேண்டும்” என்றார்
"ஒருசேவல் வடிவாகச் செய்நீர்” என்றான் 24
“மரத்துக்கு நானெங்கே செல்வேன்” என்று
மீண்டுமவர் இறைவனையே வினவ வல்லோன் திருத்தூது கொண்டுவரும் "ஜிப்ரீல்" மூலம்
சுவர்க்கத்து மரக்கன்றை அனுப்ப அஃது பெருத்தேவான் தொடுமாறாய் வளர்ந்தே கப்பல் பொருத்தவுகந் தானததன் கீழே ஓர்நாள் திருத்துதர் தனித்திருந்தே இறையை எண்ணித்
துதிக்குங்கால் இறையாணை வந்த தம்மா. 25
"கண்முன்னே கப்பலொன்றைக் கட்டும் நூஹே
கருணைசெய வேண்டாதீர் பிறர்க்காய் அன்னார் மண்மீதே அக்கிரமம் செய்வோர் நீரால்
மூழ்கடிக்கப் படுவார்கள் முற்றும் உண்மை” விண்ணவனிஷ் வாறாயோர் ஆணை செப்ப
விபரம்அறி யாதநபி "கப்பல் கட்டல் என்னவிதம் என்றறியேன்” என்றார் நாயன்
இறைதூதர் ஜிப்ரீலை அனுப்பி வைத்தான் 26
40

பிரளயம் கண்ட பிதா
Q3VSO)É% 忍
பலகைகளாய் மரத்தைஅரிந் தெடுத்தே அந்தப்
பலகைகளைப் பொருத்துகவென் றதனைச் செய்யும் கலையினையுங் கற்பித்தார் தூதாய் வந்த
காப்பவனின் தூதர்கோன் "ஜிப்ரீல்" அன்றே அலைகடலோ பெருநதியோ இல்லாப் பாலை
அகன்றபெரு நிலப்பரப்பில் கப்பல் கட்டும் தலைவன்பணி ஏற்றார்கள் நபிக ளார்ஒர்
கணப்பொழுதும் வீண்விரயஞ் செய்தார் இல்லை 127
இரவுபகல் என்றில்லா திறைவன் ஆணை
ஏற்றுநபி செயற்படுதல் கண்டு மக்கள் திருநபியை ஏளனமே செய்தார் சிந்தை
தெளிவற்றுப் போனதென நகைக்க லானார் அருகேகி இதுவென்ன நூஹே? என்றே
அவர்வினவ நபியுரைப்பார் "நீரிற் செல்லும் ஒருவீடாம்” எனக்கேட்டே வழிகெட் டோர்கள்
ஒன்றியவர் தமைஇகழ்ந்தே மேலுஞ் சொல்வார் 128
"நீரற்ற பாலையிலே கப்பல் கட்டும்
நீர்பெரிய மூடரென எங்கி ருந்தாம் நீர்கொணர்வீர் இதையோட்டிச் செல்ல இது
நெறிமுறைக்கும் சாத்தியமே இலாத" தென்றே "ஓர்சிறிய கிணறேனும் இல்லா மண்ணில்
உமக்கென்ன பித்தாமோ கப்பல் கட்ட ஓராது செய்கின்றீர் உமது கப்பல்
ஓடிடுமோ நிலத்தில்"எனப் பரிக சித்தார். 29
41

Page 28
ஜின்னாஹர் ஷரிபுத்தினர்
SGSC)
QSXOX.
குலத்தினிலே இழிந்தவரோ டொன்றி வாழும்
குணக்கேடே நபியென்றே பொய்யு ரைத்தே நிலத்தினிலே ஒடற்கோர் கப்பல் செய்யும்
நிலைகொண்ட தச்சரென வாகிப் போனார் பலகாலம் அன்னவரோ டொன்றி வாழ்ந்த
பாவமிது அவர்போலும் இவரு மானார் செலுத்தஇதை எங்குசெல்வார் கடலைத் தேடிச்
செல்லுவரோ கடலையீங்கும் கொணரு வாரோ. 130
பரிகசித்தே இழித்துரைத்தார் பலவா றாகப்
பதிலாக நபிநூஹும் அவரை நோக்கிப் பரிகசிப்போம் நாங்களும்மை இழித்து ரைப்போம்
பின்னொருநாள் அதுதொலைவில் இல்லை நீங்கள் பரிகசிப்ப தாலென்றன் கடமை தன்னில்
பலமிழக்கச் செயலாமென் றெண்ணி டாதீர் பரிகசித்தோர் பரிகசிக்கப் படுவர் நானோ
படைத்தவனின் ஆணைக்குப் பணிந்தேன் என்றார் 131
நிச்சயமாய்ப் பொறுத்திருந்தே பார்ப்பீர் வல்லோன்
நிலையான இழிவுதரும் வேத னையை எச்சமயத் தென்றில்லை உங்கள் மீதே
ஏவிவிடு வானென்றார் இறைவன் அக்கால் "மிச்சமுள்ள வேலைகளை முடியும் என்றன்
வெஞ்சினமும் அவர்கள்பால் விஞ்சிற்” றென்றான் தச்சர்களை ஊக்குவித்தார் நபிநூஹற் தம்மின்
தனையர்க ளோடேயவர் தானுஞ் சேர்ந்தார் 32
42

பிரளயம் கண்ட பிதா
பகலெல்லாம் பாடுபட்டுக் கப்பல் கட்டிப்
பாதியிரா கேடுகெட்டோர் அதையு டைக்க மிகவருந்தி னார்நபியே இரவு வேளை
விரட்டிடவே மாற்றாரை விழித்தி ருந்தார் இகபரனின் துணையோடே இறுதி வேலை
எல்லாமே முடிந்திடவே இறைவன் ஆணை மிகஅழகாய் நிறைவேறி இருத்தல் கண்டே
மனநிறைவு கண்டுநபி மகிழ்ந்திட் டாரே
11. பிரளயம் தொடங்கியத
திருமக்கா சென்றுடனே ஹஜ்ஜுச் செய்து
திரும்பிடுக என்றும்இறை பணிக்க அந்தக் கருமமதை நிறைவுசெய்தே நபிகள் மீண்டார்
கப்பலினைக் காப்பவனும் காத்திட் டானே ஒருவாறாய் அத்தனையும் நிறைவு கண்ட
உடன்ரஜபுத் திங்கள்முதல் தேதி வெள்ளி பெருகியது புனல்பூமி பிளந்தே ஓர்பேர்
பிரளயத்தின் முதற்குறியாய் பவத்திற் கீடாய்
அக்கணமே இறையாணை வந்த தென்றன்
அடியார்கள் தம்மோடே உயிரி னத்தில் தக்கபடி இரண்டிரண்டாய்ச் சோடி சேர்த்துத்
துரிதத்தே கப்பலிலே ஏற்றும் இன்றே மிக்கபெரு மழையொன்றை இறக்க வுள்ளேன்
முற்றாக நாற்பதுநாள் தொடரும் ஜீவ வர்க்கத்தில் ஒன்றுமிலா தழிப்பேன் இந்த
வையத்தில் ஒருபுழுவும் இலாதே என்றே.
OXO).
2
133
134
135
GSO3
43

Page 29
ஜின்னாஹர் ஷரிபுத்தீன்
SGS) ○以○3
2
ஆணைதனை ஏற்றநபி இறைது தித்தே
அவனடியார் தமைநோக்கிப் பணித்தார் உம்மில்
ஆண்களெலாம் முதல்மாடி தனிலே றுங்கள்
ஆதிபிதா வுடலுடனே இரண்டாம் தட்டில்
பெண்கள்"ஹவ்வா" வுடலோடாம் என்று கூறப்
பிறிதொன்றில் மண்ணுளயா வற்றி லொன்றில்
ஆண்பெண்ணென் றிவ்விரண்டாய் ஏற வைத்தார்
அவையகைக்கா திறைவனருள் புரிந்திட் டானே 136
பலநாட்கள் உண்ணுதற்காய் உணவாய் வேண்டும்
பொருளெல்லாம் ஒருதட்டில் சேர்த்தெ டுத்தார் நிலம்வளரும் தானியங்கள் பழங்க ளோடே
நல்லினத்து விதைகளையும் நிறைத்து வைத்தார் இலையேது வோர்குறையும் என்ற வாறே
ஏற்றியதும் இறைவன்றன் பழியைத் தீர்க்க நிலம்நோக்கி ஆணையிட்டான் "மண்ணே உன்னுள்
நிறைந்துள்ள புனலைவெளிப் படுத்து” வென்றே 137
(வேறு)
படைந டுங்குபே ரொலியெ முப்பிவான்
பிளந்து மண்மிசை வீழுமால் இடியி டித்தது மின்ன லதனுடன்
இணைந்து நெருப்பையும் உமிழ்ந்ததே இடைவி டாதுமே பெய்யு மழையினால் எங்கு மேபுனல் செறிந்ததே கொடைய தென்றிறை கொடுத்த தின்றுபேர்
கொடுமை என்றுமே பொழிந்ததே 38
44

பிரளயம் கண்ட பிதா
கோடி கோடியாய்க் கரிகள் கூடியே
காட பூழிந்திடப் பொருதுமால் ஒடு வான்கரு முகில்கள் ஒன்றுடன்
ஒன்று மோதியே புரண்டன ஆடு பேய்களைப் போலு மாமவை
அண்ட வெளியினில் சுழன்றுமே நாடு திக்கெதென் றறிய வாகிலா
நிலையி லுருண்டுமே சிதறின.
சிறிது சிறிதென உயரும் நீரினில் சிக்க அஞ்சியே மனிதர்கள் உறுவ தென்னவென் றறிகி லாதுமே
ஒட முயன்றுபின் தோற்றனர் வெறுநி லங்களும் வீடு வாசலும்
வீதி யெங்கணும் நீர்புகச் சிறகொ டிந்தவான் பறவை போலுமே
தவித்த னர்பெருஞ் சோகமே
கையி லேந்திய குழந்தை யோடுதன் காலைச் சுற்றிடும் பிள்ளையும் செய்வ தென்னவென் றன்னை முகத்தினைத்
தேடுஞ் சிறுவரோ டெழவுமே மெய்யில் பலமிலா முதுமை கண்டவர் மிரள மிரளவே விழித்தனர் ஐய கோவென அழுது தவித்தனர்
அன்னை மாரிளம் பெண்டிரே.
○叉○3
2
139
140
141
45

Page 30
ஜின்னாஹர் ஷரிபுத்தின்
SGS)
கடலில் மாந்திய புனலை மேகவாய்
கொப்ப வித்திட நிலமிசை இடியும் மின்னலும் சேர்ந்து பொழிந்தது
எங்கும் நீர்செறி காடென வடிந்து சென்றிட வாகி லாததால்
வீழ்ந்த இடங்களில் தேங்கியே கடிதி லுயர்ந்தது கரையென் றொன்றிலா
கடலைப் போலெனு மாலுமே.
நீண்ட நெடும்பெரு மரங்கள் வேரொடு
நிலம்பு ரண்டிடச் செடிகொடி தோண்டி நிலத்திருந் தெறிந்த வாகெனச்
சேர்ந்து புனலொடும் ஒதுங்கின மாண்ட சிறுச்சிறு உயிரி னங்களும் மிதக்க நீரினில் பிறகில தூண்டில் வாய்படு மீனைப் போலுமால்
துடிது டித்துமே அழிந்தன
வான ளாவிய பருவ தங்களில்
வளைந்து தாவுநீ ரருவிகள் கான மரங்களைக் கவர்ந்து புரண்டன
கரைகள் ஒடிந்துமே பரவின ஆனை போற்பெரு மிருக முஞ்சிறு
அற்ப எறும்பெனும் வேறிலா கானில் வாழுமெல் லாமு மேயுயிர்
காக்க வழியிலா தோடின.
142
143
144
46

பிரன்ாயம் கண்ட பிதா
மாட மாளிகை வீடு குடிசைகள்
மாய்ந்து மண்ணென ஆகின தேடு வாரறத் தெருவி லும்பொருள்
சிதறிப் புனலொடு நகர்ந்தன ஆடு மாடொடு பன்றி பூனைகள்
அகமுங் காக்கும்நாய் அனைத்துமே ஓடிக் களைத்துநீர் உயரத் திணறியே உயிரைப் பறித்ததால் மிதந்தன.
பிளந்த நிலப்பெரு வாய்க ளுடுநீர்
பீறி வான்தொடப் பாய்ந்துமே பொழிகு புனலொடு கூடி யேபுவி
பெருகி மண்மறைத் துயர்ந்தது விழிபொ சுங்கிடு வாறு மின்னலும்
விட்டு விட்டுமே எறித்திட அழிக வுலகென ஆர்ப்ப ரித்திடி
அங்கு மிங்குமாய் வீழ்ந்தது.
வேக மாகவே வீசு புயல்நில
வெள்ள நீரினை அள்ளியே தாக சாந்தியுஞ் செய்து மீதியைச்
சிதறி யெங்கணும் அடித்தது ஏகு திசையெதென் றறிய மாட்டிலா
இடையி டைவழி மாற்றியே போகு திக்கெலாம் பேர ரழிவுகள்
புரிந்து புரிந்துமே சென்றது.
QsXOg
3.
145
146
147
فهو
47

Page 31
ஜின்னாஹர் ஷரிபுத்தீன்
SGS) GOINGSK,
疑 3.
கூறு கூறெனப் பிளந்து மலைகள்தாம்
கொண்ட உருவழிந் தமைந்தன ஆறு குளங்களென் றேதும் தனித்திலா(து) அனைத்தும் ஒன்றென ஆகின சீறும் பெரும்புயற் காற்று மோதியே
சிதைந்து மரங்களும் வீழ்ந்தன சூரி யன்கரஞ் சுடர ழிந்ததால்
தோன்றி டாதுமே ஒளிந்தனன் 148
12. பெற்ற மனமும் படைத்தவன் சினமும்
புயலொ டுங்கடு மழையொ டும்பெரு
கிடமி லாதமண் ஊற்றினால் செயவே றற்றுடன் திராணி யற்றுமே
தவித்த தேமனுக் கூட்டமே கயவ ராமவர் கூட வேநபி
குமார னானவன் ஒருவனும் துயரு றப்பொறுக் காத நந்நபி
தம்மி டம்வரக் கூவினார். 149
ஊழி வெள்ளமீ துணரு வாயுடன்
ஓரி றைதனை நம்பியே வாழ்வி ழந்திடாய் வந்து சேருவாய்
வேறு வழியிலை என்றிடப் பாழு டைமனம் மாறி டாதவன்
படகி லேறிட மறுத்ததால் ஆழி போற்பெரு வெள்ளம் அவனையுண்டு)
அகட்டி னையுடன் நிறைத்ததே. 150
48

பிரளயம் கண்ட பிதா
மகனை நீருண மனம்வ ருந்தியே
மாந பியுமிறை நோக்கியே தகுமோ நீயெனக் களித்த வாக்கினைத்
தராது போனதென் றேங்கினார்
எனது சந்ததி காப்பதாய் மிகவும் உறுதியொன் றளித்த தேன்மகன் மடியக் காரணம் ஆகினாய்
வாக்க ளித்திடில் தவறி ழைத்திடா
வள்ள லேயுனை நம்பினேன் வாக்க ளித்தநீ வாக்கு மாறிடாய்
வந்த தென்னதென் றறிகிலேன் காக்கு முன்கரம் காக்கும் என்மகன்
கதியை முடித்திடா தென்றுமே நோக்கி னேனது நினைந்த வாறிலா
நிறைவு றாதுமே போனதே.
அலறி அழுதிடும் அன்ன வர்தமை
அழைத்த இறைவனும் கூறுவான் "இலைய வனுமுன தினத்த வன்மிக
புலன்கொ ளாதவோர் சேதி யையொரு
போழ்தும் நீரெனை வினவிடேல் புலன்ம முங்கிய பேதை மாந்தர்தம் புறத்தி லாதிரும்" என்றுமே.
Osog
2
51
152
53
6SO23
49

Page 32
ஜின்னாஹர் ஷரித்தீன்
SGS)
察
இறைவன் ஆணையைக் கேட்டு நந்நபி
இதயம் பயந்துகை யேந்தியே குறைபொறுத்தருள் கொற்ற வாஎனைக்
காத்த ருள்புரி எனக்குநீ மறைத்த எதனையும் மீறி மனங்கொள
வைத்தி டாதருள் என்றவர் இறைப தம்பணிந் துருகி னார்இறை இரங்கி மனங்கனிந் தருளுவான்
"நீர்வி ரும்பிடில் உன்ம கன்முதல்
நீரில் அழிந்தவை அனைத்தையும் பாரில் உயிர்பெறச் செய்கு வேனவர் பற்றி நன்குநான் அறிகுவேன் கூறும் இம்மொழி கேட்ட நூஹ்நபி
கூறு வாரெனைக் கொல்வ தெனினும்நீ
கொன்றொ ழித்திடு என்றுமே.
உன்வி ருப்பமே எனது பாக்கியம்
ஒப்பி லாப்பெரும் பேறதாம் இன்ப வாழ்விலும் துன்ப நிலையிலும்
இறைவ நானுன தடிமையே என்ப தாமுன தேவ லெதுவுமே ஏற்ப தென்கடன் ஏற்பனே நின்ப தம்பணிந் தேனே எனக்கெலாம் நீயே முதலவன் என்றனர்.
54
155
156
50

பிரளயம் கண்ட பிதா
13. ஓய்ந்தத பெரும்புயல்
கரிய முகிலிடை புகுந்த மதியெனக்
கடலொ ழிந்தவெய் யோனென இரவு பகலறி யாத வாகிலா (து)
இருளில் புதைந்துல கிருந்ததே பரவி யெங்கணும் நிறைந்த நீரிடை
பாலை வனப்பெரு வெளியிலே ஒருமை யாகநின் றுலவும் ஒட்டைபோல் ஒட மோர்திசை நகர்ந்ததே.
அனைத்தும் அழிந்திடு நிலைய தென்னுமோர்
அணுவும் பழுதிலாப் படகினுள் தனைத்தொ டர்ந்தவர் தம்மி னோடிறை
தூதர் அமைதிகொண் டிருந்தனர் சினத்த வான்மழை பொழிதல் ஒழித்துமே
சீற்ற மடங்கிட நிலமகள் ஜனித்த புனற்கடல் தணைநிறுத்தினாள்
தொடர்ந்த நாற்பதாம் நாளிலே
திங்க ளாறுசென் றடைந்த போழ்திலும்
தொடர்ந்தும் நீர்நிலை கொண்டதாய்ச் சங்கை நபியிறை பணிந்து பிரார்த்தனை
செய்து வேண்டினர் நீர்அறப் பொங்கி நிலத்திடை பீறு புனலொடு
பெய்கு வானையும் நோக்கியே தங்கு மென்றிறை ஆணை இட்டனன்
தொடங்கி டாதவை அடங்கின
○叉○3
3.
157
158
159
أفعى
51

Page 33
ஜிண்னாஹர் ஷரிபுத்தீன்
SGS) Osog
察 3.
கொப்ப வித்தநீர் குடித்த தேநிலம்
கனிந்து வீழ்ந்தவான் புனல்கடல் ஒப்பி டப்பெரு வெள்ளம் அடங்கியே
ஒழிந்தி டத்தரை புலர்ந்தது தப்பி ஓடிடா நின்ற நீர்நிலை
தரித்து மேகுளம் ஆகின கப்பி இருந்தபேர் இருளும் மாய்ந்திடக்
கதிர வன்கரம் நீட்டினான் 160
நீர்நி றைந்வோர் தட்டெ னப்புவி
நிலையி லாதுமே சுழன்றிட கார்க விந்திராக் கால மெதுபகற்
கால மெதுவென அறிகிலார் ஊரெ ழுந்திடக் கூவுஞ் சேவலின்
ஒலியி னாலொரு வெண்ணிறப் பாறை யின்நிற வேறு கண்டுமே
பகலி ராவினை அறிந்தனர் 16
காலம் ஓரள வறிந்த கலத்துளோர்
கருணை கொண்டிறை பணிந்தனர் ஞால அழிவினுக் கான போதுதம்
நிலையு ணர்ந்துமே மகிழ்ந்தனர் "ஆலம்" அனைத்துமே படைத்துக் காத்திடும்
அரச னேதனி முதலவா தூலம் அழிந்திடா தெமக்கென் றருளிய
தூய னேயெனப் புகழ்ந்தனர் 162
(ஆலம் : உலகு)
52

பிரளயம் கண்ட பிதா
இப்பெ ரும்பே ரழிவி லும்மெம்மை
இம்மி யும்துயர் சேர்த்திடா(து) ஒப்பி லாதபேர் உதவி செய்தனை
உனது நபிவழி தொடர்ந்ததால் தப்பி ழைத்தவர் தண்ட னைபெறும்
தருமம் உரைத்தனை மறுமையில் கப்பி டாதொரு துயரும் எம்மைநீ
காத்தி டப்பணிந் திறைஞ்சினோம்
நன்றி யோடிறை வாழ்த்தி ஈர்கரம் நீட்டி யேமனம் உருகினார் கொன்ற பூழித்திடாக் கோனைப் படகுளோர்
கூடி யோர்மனப் பாங்கிலே நின்று மோரிடம் தரித்தி டாக்கலம் நீரில் ஊர்ந்துமே ஒருதினம் நின்ற திறைவனின் ஆணை கொண்டுமே
நிமலன் "பைத்துல்மு கத்தஸில்"
திங்க ளைந்துல கெங்க ணுந்திரிந் திருந்த பெருங்கலம் ஓரிடம் தங்கி நின்றதோர் திங்க ளிறுதிநாள்
திறந்த சாளரத் தூடதாய்ச் சங்கை பொருந்திய நபிகள் வெளியினில்
தோன்றுங் காட்சியை நோக்கினர் எங்கும் நீர்குறைந் திருத்த லோடுவான்
இருளும் போகிய துணர்ந்தனர்
Osc)3
3.
163
164
165
53

Page 34
ஜினினாஹர் ஷரித்தீன்
SGSC)
யாரு மேயுயிர் வாழ்ந்தி லாதுநீர்
அனைத்து ஜீவனும் மாய்ந்திட யாரு மேயுயிர் வாழ்ந்தி லாதுகண்
டிறைவன் தூதரும் வருந்தினர் யாரு மேயுயிர் வாழ்ந்தி டாதெனை
இணங்கி யோர்தமைத் தவிர்த்துமே யார ழித்தனோ அவனை நந்நபி
இருகை ஏந்தியே இறைஞ்சுவர்
நூறு நூறுபன் னுரறின் ஆண்டுகள்
நூஹே நின்பணி தொடர்ந்துமோர் நூறு பேரெனும் நினைத்தொ டர்ந்தெனை
நினைந்தி டாதுமே வெறுத்ததால் மாறு செய்தவம் மாந்த ருயிரினை மாற்று வழியிலா தழித்தெணு மாறு வொவ்வொரு தீங்கும் நேர்ந்திடா
வாறு காத்ததை எண்ணுவீர்
ஆண்ட வன்நபி நூஹை அழைத்துமுன் அறிந்த வாறுரை செய்துபின் வேண்டி னரிவர் வம்ச மும்மெனை
வணங்கி னாரென ஆனதாய்ப் பூண்டி னோடிவர் பல்கி டாதுமே
பிரள யத்தினால் புரட்டினேன் மீண்டு மோர்முறை வாரா தி.துபோல்
முதலுங் கடைசியும் ஈதென்றான்
166
167
168
} *یی

பிரளயம் கண்ட பிதா
கேடு கொண்டவிம் மாந்தர் தம்மினக்
குடும்ப வாரிசும் வளர்ந்தபின் கேடு செய்யுமென் றறிந்த தாலவர்
கூட அழிந்தனர் மீண்டுநாம் கோடி மாந்தரிப் பூவில் தோன்றிடக்
கருணை செய்குவம் அன்னவர் கேடு செய்திடில் இவர்கள் போலுமே
கொன்றொ ழிப்பமென் றறிகுவீர்
பிரள யத்தினால் மனித குலத்தினைப் பாரி லழித்தவிச் செய்கைபோல் பிரள யத்தினால் பிறிதோர் போழ்தினிப் பூவில் மனிதரை அழித்திடோம் உருவி லாதபே ரிறைவ னிங்ங்ணம்
உறுதி தந்திட நபிகளும் பொறுமை கொண்டனர் மனதி லமைதியும்
பெற்றே இறைவனைப் போற்றினர்
14. பிரளயத்தின் பின்
பிரளயம் ஓய்ந்து தங்கள்
படகொரு மலையின் மீது தரித்தது கண்டார் மக்கள்
துயரழிந் தமைதி கொண்டார் கருமையுற் றிருந்த வானில்
கண்கவர் வான்வில் ஒன்று தெரிவதும் அவர்தம் நெஞ்சில் துயரறக் கருவா யிற்றே
OscSS3
3
169
170
17
أمه
55

Page 35
ஜின்னாவர் ஷரித்தீன்
SGSC)
g
கண்கவர் சிவப்புப் பச்சை மருவுசெம் மஞ்சள் ஊதா
மனங்கவர் வண்ணம் ஒன்றும் உருவினில் வான்வில் தோன்றி
உயர்ந்திட மக்க ளெல்லாம் உருவிலான் எம்மு டன்செய்
ஒப்பந்தம் இதுவோ என்றார்.
மலைதட்டி மாத மொன்றில்
முஹர்ரம்நாள் பத்தின் போது கலத்தினை விட்டு நீரென்
கருணையாம் பேறோ டின்றே நிலத்தினை மிதிப்பீர் எல்லா
நற்பேறும் பெறுவீ ருன்றன் குலத்தொடு "நூஹே” என்றான்
குவலயம் படைத்தாள் "ரப்பே"
இன்பங்கள் அனைத்தும் பெற்றே இனிதுற வாழ்வா ருன்றன் இனத்திருந் துதிப்போர் என்னை
இணங்காது வழிமா றுங்கால் துன்பமுற் றழிவார் என்றும்
தூயவன் வஹீயின் மூலம் சொன்னனன் நபியவ் வார்த்தை
செவியுற்றார் ஆணை கொண்டார்
(வஹி : இறைதூது)
172
73
74
أمه
56

பிரளயம் கண்ட பிதா
நாற்பதின் ஆணும் கூட
நாற்பது பெண்ணும் ஆணை ஏற்றுயிர் பிழைத்தார் இம்மை
இருமுறை பிறந்தார் ஒப்ப நோற்றனர் நோன்பும் அந்நாள்
நன்றிசெய் உணர்வி னோடே தோற்றுவோன் அழிப்போன் மீண்டும் தோற்றுவோன் தம்பால் அம்ம.
கருமையில் உலகி ருந்த
காரணத் தாலே கண்கள் இருளடைந் திருந்த தன்னார்
இரவியின் ஒளியை நோக்கும் சிரமமுங் கொண்டார் கண்ட
தூதரும் உரைப்பார் நீங்கள் சுருமாவை அணிவீர் நன்கு
துலங்கிடும் விழிகள் என்றே
"ஜூதி"யெனு நாமங் கொண்ட
தம்மலை அடிவா ரத்தில் ஆதியைத் தொழவோர் பள்ளி
அமைத்தனர் நபிநூஹ் அன்றே தோதெனத் தமக்கோர் நாணற்
சிறுகுடில் செய்து வாழ ஏதுவாய் மற்றார் தத்தம்
இல்லங்கள் அமைத்திட் டாரே.
○以リ○g
2
175
176
177
Ge്
57

Page 36
ஜின்னாஹர் ஷரிபுத்தினர்
SGS)
15. "ஹாம்" கொண்ட சாபம்
கிறிஸ்தவரின் வேதநூலாம் "பைபிள்” தம்மில்
கூறுமொரு காதைதனை உலகோர் நன்கே அறியவைத்தல் ஆகுமதை அறிவுள் ளோர்கள்
ஆய்ந்தறிந்து புலன்கொள்ள வேண்டும் ஒர்நாள் இறைதூதர் "நூஹ்”அயர்ந்து தூங்கும் வேளை இடம்நழுவ ஆடையவர் மறைவுப் பாகம் குறையாக மூடுண்டே இருக்கக் கண்டு
"ஹாம்" என்னும் மகன்நகைத்தே வெளியிற் சென்றார்
வெளியினிலே இருந்ததன்னீர் சகோத ரர்க்கும்
விபரித்தார் தந்தைநிலை அறிந்த அன்னார் வளமாக உடல்மூடத் துணிகொ ணர்ந்தே
மறைத்தார்கள் தமதுகண்ணுங் காணா வாறே களைநீங்கி எழுந்தநபி சேதி கேட்டு
"ஹாமை" உடன் சபித்தார்பின்"யாபீத்" "ஷாமை” உளமாரப் போற்றியேவாழ்த் துரைத்தார் பின்னர்
ஒவ்வொருவர் நிலைபற்றி "பைபிள்” கூறும்.
பரிகசித்துச் சிரித்துடலை மறைக்கா தோடிப்
பிறருக்கும் எடுத்துரைத்த ஹாமின் பின்னோர் கருகியகார் வண்ணத்தைக் கொள்வார் கேசம்
காதைவிஞ்சி வளராமற் றிருவர் தம்மால் உருவாகுஞ் சந்ததிக்கும் அடிமைப் பேராய் ஊழியமுஞ் செய்வார்கள் என்ற சாபங் கருவாகி யேஇன்று மக்க ளுள்ளே
கருமைவெண்மை எனவேறாம் என்ற வாறாம்.
178
179
180 s
GSO3
58

பிரளயம் கண்ட பிதா
16. நபி நாஹற்வின் தனித்தன்மைகள்
பத்துவித தனித்துவங்கள் கொண்டி ருந்தார்
பாருலகில் நீடுவாழ்ந்த நபியாய் ஒன்றாம் உத்தமநன் நபி"ஆதம்" "வீத்" என் போரின்
"உயர்ஷரீஅத்" தமைமாற்றுந் தகைமை யொன்று சத்தியத்தை மறுத்ததனால் பிரள யத்தில்
சமாதிகொண்டார் ஆதநபி சந்த திப்பேர் நித்தியனின் அருளாலே எஞ்சி னோர்கள்
நிலைத்ததனால் இவர்இரண்டாந் தந்தை யானார்.
முதன்முதலாய்ப் பிரளயத்தின் பின்னர் வாழும் முற்றுமனுக் குலத்துவழி காட்டி யாக முதன்முதலாய் இறைமறுப்புச் செயலைத் தட்டி
மறுத்துபதே சஞ்செய்யும் உரிமை தாமும் முதலவனைத் துதியாத கார ணத்தால்
மனிதர்களை அழிக்கஇறை துணிந்த பேறும் அதிகாலம் வழிகாட்டும் பேறும் நாளும்
அதிகபொழு திறைவணங்கும் பேறும் பெற்றார்
நீண்டநெடு நாள்வாழ்ந்த இறைவன் தூதர்
நீள்நிலத்தில் நபிநூஹே மறுமை நாளில் ஆண்டவனின் சந்நிதியில் உயிர்ப்பெய் துங்கால்
அறுதிநபிக் கடுத்தெழுவார் அவரே யாகும் தாண்டிடினும் பன்னூறு வருட காலம்
தாடியிலாங் கோர்முடியாமோ கேச மொன்றோ பூண்டதில்லை வெண்மையவர் பல்லொன் றேனும்
பூதலத்தில் வாழுவரை வீழ்ந்த தில்லை
○又○3
3.
18
182
183 s 6SC)3
59

Page 37
ஜின்னாஹர் ஷரித்தினர்
SGS)
பிரளயத்தின் பின்னொருகால் மண்ணி னாலே
பாத்திரங்கள் பலவற்றைப் படையு மென்றே திருநபியை இறையவனும் பணித்தான் தூதர்
தானேயன் னுறாகச் செய்தெ டுத்தார் உருத்தெரியா தத்தனையும் தூள்தூ ளாக
உடைத்தெறியும் எனeண்டோர் ஆணை செய்ய வருத்தமுற்ற நபிகளுடன் சொல்வார் நானே
வடித்தவற்றை உடைப்பதுதான் எவ்வா றென்றே 184
உயிரற்ற மட்பாண்டம் தனையு டைக்க
உவக்காத தேன்நீர்உம் கைக ளாலே செய்ததென்ற காரணத்தா லன்றோ என்றன்
செயலெண்ணிப் பார்த்தீரோ நான்ப டைத்த உயிருள்ள மனுக்குலத்தை அழிக்க எவ்வா
றுளமுருகிப் போயிருப்பேன் இனிமே லிஃது செய்யேனோர் போழ்தேனும் எனந பிக்குச்
சபதமிட்டுக் கூறினனே படைத்தாள் வல்லோன் 85
கண்ணியத்தின் மீதுமென்றன் ஆற்றல் மீதுங்
கூறுகின்றேன் சத்தியமாய் இனிமே லிந்த மண்ணிலெந்தச் சமுதாயந் தனையும் வீணே
மாண்டழியச் செய்யேன்நான் பிரள யத்தால் விண்ணவனிஷ் வாறுரைக்கச் செவியுற் றேமெய்
வருந்தியழு தார்கள்பல் லாண்டுக் காலம் திண்ணமிது வாறேயிக் கால்வ ரைக்கும்
தன்வாக்கை இறைமாற்ற வில்லை யாமே. 186
60

பிரளயம் கண்ட பிதா
17. நரஹற் நபியின் மரணம்
நெருங்கிவந்து விட்டதுங்கள் சுவர்க்க வாழ்வு
நபியேயென் றிறைவன்றன் தூதர் மூலம் வருங்கால வாழ்வுபற்றி நினைவு கூர
வரவழைத்தார் தம்மகனாம் "ஸாம்” என் பாரை உரியபடி உபதேசம் செய்தே இந்த
உலகிலவர் பணியெடுத்துக் கூறித் தம்மின் பிரதிநிதி யாகவுமே நியமம் செய்தார்
பாருலக வாழ்வைவிட மனமுங் கொண்டார்
இறுதிக்கால் ஒர்நாள்தன் பொழுது போக
எவருமற்ற தனிமையிலோர் மலையின் மீது சிறிதுலவி வரலாமென் ற்ேக ஆங்கே
சந்தித்தார் "இஸ்ராயீல்" மலக்கல் மெளத்தை பெருவாழ்வு உங்களுக்காய்ச் சுவனந் தன்னில்
பாராள்வோன் வகுத்துள்ளான் இன்றே நானென் கருமத்தைச் செயற்படுத்த வேண்டும் ஆவி
கவரவந்தேன் என்றிறைவன் விதியு ரைத்தார்
உயிர்கவர வந்துள்ளேன் எனவு ரைக்க
உடனன்றிச் சிறிதுபொறுத் திடுக என்றன் உயிரனய மனைவிமக்கள் தம்மி டத்தே
உண்மைசொல்லி விடைபெற்று வருவே னென்றார்
செயலிஃது முறைமைக்கு மாறாம் என்றே
சொல்ல "இசு ராயீல்"எனை அடக்கஞ் செய்யும்
செயல்களுக்கு யார்பொறுப்பாம் என்றார் நூஹ்வும்
துணையாக வானவர்கள் உளரே என்றார்
ОХОЗ
3
187
188
189
61

Page 38
ஜின்னாஹர் ஷரித்தினர்
SGS)
赛
வானவர்கள் வரவை"இசு ராமீல்" கூற
வேறொன்றும் பேசாதே நின்றார் நூஹ்பின் தானாக வாய்மொழிந்தார் இனிமே லுங்கள்
தேவைதனை நிறைவுசெய்து கொளலா மென்றே ஊனுடலில் இருந்துயிரைப் பிரிக்க ஆங்கே
உடனிருந்த ஏவலர்கள் தூய்மை செய்தே ஆணஇறை தொழுகையின்பின் எஞ்சி யுள்ள
அனைத்தையுமே நிறைவுசெய்து வான டைந்தார் 190
நாற்பதாண்டு பூர்த்தியான பின்னர் "நூஹி"தன்
நபிப்பட்டம் கொண்டார்கள் ஏகன் தூதை ஏற்றுநடந் திடமக்கள் தமைய ழைத்தார்
இறைமறைசொல் லொன்பதரை நூற்றி னாண்டாய் ஈற்றில்பெரு வெள்ளத்தின் பின்னால் மேலும்
இருநூறு வருடங்கள் வாழ்ந்தார் என்பர் சாற்றுங்கால் அவர்வாழ்வு ஆயி ரத்தைத்
தாண்டியினும் நானூறோ டைம்ப தாண்டே 191
- நிறைவு -
62


Page 39

G.C) ○叉○演
ജ്ഞീഴ്ത്തൈ வாழ்த்த ഉമ്മള്
(உவைஸ்’ல் கர்ணி காவியம்)

Page 40
ഴ്ചzz /്ffമ 2
வெண்பாவாய் வாழ்ந்து விருத்தத்தைப் பெற்றளித்து விண்போந்த ஆமுஷவின் மேன்மகனே ~ தந்தைவழி மைந்தனாய் ஆகி மரபுவழிக் காவியங்கள் ஐந்தளித்தாய் காவியக்கோ வாய்
காவியங்கள் வீண்பயிலக் காலம் இலைதணிக்கைப் பாவினமே போதுமென்று பார்க்குரைத்துத் ~ தாம்மட்டும் செய்தளித்துக் காவியங்கள் சீரடைந்தார் போலின்றிச் செய்யென்று செய்தடைந்தாய் சீர்
காவியங்கள் பூக்கும் கனித்தமிழில் முக்குளிக்கும் நாவின் இலக்கியத்து நாயகனே~ பூவிழையும் பாமலர்கள் தாவிப் பயணவிழி காத்திடுமுன் காமத்தாற் பாப்பாவாய்க் கா
இந்துபுத்தம் வந்திணைந்த இஸ்லாம் கிறித்துவத்தின் சிந்தனைகள் சேர்ந்ததனாற் சீர்விந்த ~ செந்தமிழில் இஸ்லா மியர்செய் இலக்கியத்தில் ஜின்னாஹற்வே நிச்சயமுன் பேருண்டே நீண்டு
வானிறைக்கே யன்றி வணங்கா தெனதுதலை மாநபிக்கே யன்றிசல வாத்தமிலை ~ யானடிமை பெற்றார்க்கே காவியத்துப் பித்துக் கவிஞனேயுன் நற்றமிழ்க்கே வாதிடுமென் நா.
1/1, சாந்த மரியா பாதை, ~ அல் அஸ்சிமத் - மஹாபாகே, றாகம.
i. 27, O2, 2001 s
2(G):3G) ○江○愛
ii

தாய்க்கென வாழ்ந்த தணயனர்
Brzźzy
உவைஸ்இப்னு ஆமிர்அல் கள்ண் யென்னும் உலகாசை அற்றபெரு வணக்க வானைத் தவமிகுநல் வாழ்வினுயர் பெருமை தன்னைத்
தரணியிலே இன்றுள்ளோர் தெரிந்து கொள்ள அவாவுற்றேன் காவியமாய்ப் படைக்கத் தேவை அற்றவனே அகிலம்ப டைத்தாள் "ரப்பே" சுவைமிகுநற் பொருள்பொதிந்த சொல்லென் நாவில் சுனையிருந்து பெருகுபுனற் போல்தா ஆeன்.
படைத்தாளும் நீயேயென் சிந்த னைக்குப் பேராற்றல் தருபவனும் நீயே முன்நான் படைத்தமுன்று காவியங்கள் தமையும் விஞ்சும்
படிஇதைப் படைக்கவுன்றன் அருள்தா யாரும் படைக்கமுய லாதகரு தேர்ந்தேன் ஏக
பண்ணவனே "ஆமீர்அல் கர்ணி" உன்றன் படைப்பினிலே உன்னதநற் புருடர் எம்மான் பற்றினுக்கும் இலக்கான புண்ய சீலர்
ഷ്ടജാബ്ബ്
பனிமழையில் நனைந்துகுளிர் ஒளியை அள்ளிப்
பாரெங்கும் வீசியிருள் ஒட்டி வானில் தனியழகு காட்டுமுழு மதிமுன் வீம்பாய்த்
தனித்தமின்னுஞ் சிறுவிண்மீன் ஒப்ப நானும் புனையமுயன் றேனிந்தக் காவியத்தைப்
புலவர்கள் செய்தவுயர் தமிழ்கண் டென்னைத் தனியவனாம் முதலவன்பே ரருளை ஈந்த
தயைசெய்வான் காத்தருள்வான் பணிந்திட்டேனே
Qsed
2

Page 41
ஜின்னாஹர் ஷரிபுத்தினர்
g
SGS)
நாண்முகம்
தாபிமீன்க ளில்மிகவுஞ் சிறந்தோ ரென்னுந்
தாஹாநன் நபியன்பு கொண்ட தூயர் "சூஹிபி" உவைஸ் கர்ணிதம் வாழ்வை மக்கள் தெரிந்தறிந்தே இறைபால்தம் சிரம்ப னிக்க சோபனஞ்சேர்ந் தேமறுமை நாளில் "பிர்தெளஸ்”
சொர்க்கபதி பெறளன்றே தாமிந் நூலை பூபதியாம் இறைவனரு ளோடே இந்நாள்
படைக்கவிழைந் தேன்படித்துப் பயன்கொள் வீரே 4.
படையுண்ட அத்தனையும் அழிவை நாடும்
பண்புடைத்தாம் மனுக்குலமும் அவ்வா றேதான் இடையிலுள்ள வாழ்வுதனைச் சுகபோ கத்தில்
இறையைமறந் தேகளிப்போர் சென்னி கொண்டே அடையாது பெருநரகக் கொடும்ப திக்கே
அவனியிலே நன்மைசெய்து சுவனஞ் சேரும் படியாகத் தான்உவைசுல் கர்ணி என்னும்
பக்திமிகு தாபிமீனைப் பாடு கின்றேன் 5
நல்லோர்கள் வாழ்வுதனை அறிதல் யார்க்கும்
நன்மைதரும் அவர்வழியிற் செல்லத் தோன்றும் வல்லோனின் கிருபைகிட்டும் மறுமைப் பேறும்
வந்தடையும் இம்மையிலுஞ் சிறப்பே சேரும் தொல்லைவந்த போதுமிறை வழிபால் வாழ்வைத்
தொடருமனத் துணிவுவரும் பவவாழ் வின்பின் செல்லமனம் ஒப்பாதே வம்மும் எல்லாச்
சோதனையுந் தாங்குமனந் தேறு மாமே 6

தாய்க்கென வாழ்ந்த தனயனர்
G.9
சென்னைபுதுக் கல்லூரித் தமிழ்வ ளாகத்
தலைவர் "ஷா குல்ஹமீது" அற்றை நாளில் மன்னுலகுக் கோருயர்ந்த காவி யத்தை
மனமொப்பி னார்வடிக்கக் "கர்ணி” மீதே தன்தொழிலின் இடையூறும் பிறவுஞ் சேர்ந்து தொடரமுடி யாதபடி செயவே என்னை அன்பொழுகப் பணித்தார்நான் ஆமென் றொப்ப
அகமகிழ்ந்தார் அவர்பணியைத் தொடங்கு கின்றேன்
எனதுமுதற் காவியமாம் "மஹ்ஜ பீ"னை
இதயமொப்பிப் படித்துச்சுவை கண்ட அன்னார் தனதுமனத் தாசைதனைச் செய்ய என்னைத்
தகுதிகொண்டோ னெனவெண்ணி ஒப்பு விக்க முனமறியா இறைநேசர் உவைசுல் கர்ணி
மாநபிமேல் வாஞ்சைமிகு புனித ரின்மேல் எனதுதிறன் கொண்டுமுயன் றேனெ னக்கு
இறையருள்செய் வானெனும்நெஞ் சுறுதி யோடே
"புனிதமிகு மனிதரைநீ பாடு” என்றே
பணித்தவந்தப் பண்புடைநல் லறிஞர் தம்மை நனியறியும் ஆயினும்பிற் காலத் தோரும்
நன்கறிய வேண்டும்இந் நூல்பி றக்க முனைபொருளாய் இருந்துதவி செய்தார் ஈங்கு
மிகையற்றே யவர்பற்றி ஓர்ார் வார்த்தை தனைக்கூறல் கடனாகும் பொன்வி ளக்குந் தூண்டாது ஒளியுமிழா என்ப தாலே
Olso
2
7
8
9
ܐܶܘܗ

Page 42
ஜின்னாஹர் ஷரிபுத்தினர்
SGX9
察
தமிழ்கூறு நல்லுலகம் அறிந்த மேதை
தமிழுடாய் இசுலாத்தைச் சொல்லும் நல்லோன் அமிழ்தான சொற்பெருக்கி னாலே கேட்போர்
அகங்களிலே ஞானத்தைப் பதிக்கும் வல்லோன் சமகால அறிஞருள்ளே தனக்கென் றோர்நற்
றலத்தினையும் கொண்டிருக்ககுந் திறமை யாளர் அமைதிகொண்ட சுபாவமெனும் போழ்தும் வார்த்தை
அளந்துதிர்த்தே ஆளுதிறன் கொண்ட தீரர்
நாடுபல சென்றுதமிழ்ச் சொற்பெ ருக்கால் நாயகநந் நபிவாழ்வை நாய கன்றன் ஏடுணர்த்து வழிமுறையை மாந்த ருக்கு
ஏற்றபடி உணர்தித்தன் வாழ்வி லுங்கை கூடுவகை செய்துநலங் கண்டே உள்ளங்
கோணாதே பிறருயரத் துணையாய் நிற்போர் சீடரெனப் பலவாயி ரங்கள் கொண்ட
ஷாகுல்ஹ மீதெனும்நன் நாமங் கொண்டோர்
1. நபிகள் கூடறிய நல்லார்
"கரன்” என்னும் "எமன்" நாட்டுச் சிற்றுர் தன்னில்
"கரணி" "முராத்” கிளையினிலே பிறந்தார் "ஆமிர்" கரணியினைப் பெற்றதந்தை பிறந்த கத்தின்
காரணப்பேர் கொண்டுபிறர் அறிய லானார் உரியபடி அன்னைக்குப் பணிவி டைகள்
உவந்தேற்றுப் புரிந்ததனால் நபியைக் காண விரும்பிடினும் இயலாது போனார் தாயின்
விருப்பத்துக் காயொருநாள் மதீனா சென்றார்
10

தாய்க்கென வாழ்ந்த தணயன்
தேடியாங்கு சென்றநபி வதனங் காணத்
தோதின்றி மீண்டார்தாய் தனிப்பா ரென்றே நாடிவந்த சேதியினை அறிந்த நாதர்
நண்பரிடம் அவர்பற்றிக் கூற லானார் கோடான கோடிமக்கள் இவர்"ச பாஅத்"
கொண்டுசுவன் புகுவார்கள் மறுமை நாளில் ஈடில்லாப் பேறுகொள்வர் இறைவன் ஆணை
ஏற்றுப்பி றர்க்கிறைஞ்ச என்றே மின்னும் 12
பெருமானார் "அபூஹுரைரா" தம்மை நோக்கிப்
புகன்றார்கள் படைத்தாள்வோன் தம்ப டைப்பில் பரிசுத்த வான்களையும் மக்க ளுள்ளே
பற்றற்றுப் புனிதர்களாய் வாழு கின்ற அரியவுயர் பிறவிகளை விரும்பு கின்றான்
அன்னவர்கள் "ஹலாலான" உணவுக் காகத் திரிவார்கள் வயிறொட்டித் தலைவி ரித்தே
திக்கெல்லாந் தூசுகொண்ட வதனத் தோடே 13
அரசரிட மோபெரிய தலைவன் முன்னோ
அனுமதிக்கப் படாரன்றி அழகு மிக்க புருவஎழி லார்தம்மை மணக்கக் கோரின்
பேசிமுடித் திடவெவருந் துணிய மாட்டார் இருப்பிடத்தி லிருந்தவர்கள் சென்றிட் டாலும்
இல்லையெனும் குறையிருக்கா அழைப்பும் அற்றோர் வரிலுமவர் வருகையினால் பிறர்ம கிழ்ச்சி
வரித்திடவும் மாட்டாரே விதியா மென்றார் 14

Page 43
ஜின்னாஹர் ஷரிபுத்தினர்
SGS)
உடற்பிணியால் வாடிடுங்கால் குசலங் கேட்டே
உதவவொரு குழந்தையெனும் வாரா தன்னார் உடலுயிரைப் பிரிந்தாலும் மயான பூமி
உடன்வராரே ஒருவருமே எனவுங் கூற "புடமிட்ட பொன்னாமம் மாந்த ருள்ளே
புகலவின்நாள் எவருமுண்டோ நபியே” என்று உடன்வினவ நபிநாதர் "உவைசுல் கர்ணி”
உத்தமநற் தாபிமீன்கள் தலைவ ரென்றார் 5
"அறிவதவர் தமைநானெவ் வாறா" மென்றே
அவாவுந்த அபூஹுரைரா கேட்க நீல நிறமவர்கள் நயனமுடல் பழுப்பாம் தேகம்
நடுத்தரமாம் உயரத்தில் தாடி நெஞ்சு நிறைந்தவரை சிகையோசெம் பட்டை வண்ணம்
நிமலனருள் வேண்டுவதால் "ஸுஜு"தில் காண்பீர் மறையோதும் போததிகம் அழுவார் என்றும்
மனத்தைஇறை பால்செலுத்தும் நல்லோ ரென்றார் 16
உலகறியா தவர்தம்மை வானே ஏற்றும்
உயிர்விடினும் சத்தியத்தில் மாறு செய்யார் வலுமிக்க இடப்புயத்தின் கீழே யோர்வெண்
வட்டமுண்டு இறைஇறுதித் தீர்ப்பு நாளில் நலங்கொண்டோர் சொர்க்கபதி செலப்பணிக்கும்
நாயகனோ "நீர்நின்று மற்றோ ருக்கு” நலஞ்சேரத் "சபாஅத்"செய் வீரே என்பான்
நிகரற்றோர் அவர்பொருட்டால் சுவன்செல் வாரே 17

தாய்க்கென வாழ்ந்த தனயனர்
OXO
2
சொன்னதெலாஞ் செவியுண்ணத் தோழர் "நாயன்
திருநபியே என்றேனும் தானாய்த் தேடி முன்னவனின் தூதரைஅம் மனிதர் காண
முனைந்ததுண்டா” எனவினவ பெருமான் சொல்வார் "என்னையவர் தரிசித்த தில்லை தம்மின்
இருபுறக்கண் களினாலே நெஞ்ச கத்தின் கண்களினால் தரிசித்த பேறு கொண்டார்
காணாரக் காரணம்வே றுண்”டென் றார்கள் 18
"வாராத காரணந்தான் என்ன சொல்க
வள்ளலரே” எனமீண்டும் வியந்து கேட்க "தீராத வாஞ்சையோடு 'ஷரீயத்தைநற்
றெளிவோடு பின்பற்றி இறையோன் றம்மை ஆராதித் திரவுபகல் தனைம றந்தே
அவரிருப்ப தோடேதன் விழியிழந்த பேரான தாயாரை மந்தை மேய்த்துப்
பெறுபொருளால் உணவளிக்கும் பொறுப்பா"லென்றார் 19
கிடைக்கவழி யுண்டோஅத் தூய பேரைக்
காணுகின்ற பாக்கியமும் எமக்காம்” என்ன "கிடைக்காதே யுங்களுக்கென்” றிறுதித் தூதர்
கூறஅன்னார் "அபூபக்கள் தமக்கு" என்றார் "கிடைக்கா"தென் றுரைசெய்த பெருமா னார்கள் காணுகின்ற நற்பேறு உங்க ளுள்ளே கிடைக்கவழி உண்டு"உமர்” "அலி"க்காம் வல்லோன்
கடாட்சத்தால் எனநபிகள் புகன்றிட் டாரே 20
O(فكرى

Page 44
ஜின்னாஹர் ஷரிபுத்தினர்
S.G.39
"பிறர்கண்ணில் படாதுலகில் வாழ்தல் போல
பிறர்கண்ணில் மறுமையிலும் தோன்றா வாறு மறைத்திடுவான் இறைவனவர் தம்மைக் காண
மிகவிரும்பி நான்வருவேன் என்னை நோக்கி அறியாது நீங்களுல கிருந்த தொப்ப
அவரைஇங்குங் காணிர்கள்” என்பான் வல்லோன் இறையன்பைப் பெற்றசில வானோ ரன்றி
எவருமவர் தமைக்காணார் எனவுங் கூறி
மற்றோர்முன் வாய்மலர்ந்தார் இறுதித் தூதர்
மனந்திறந்தே தோழர்"உமர்” 'அலி'யை நோக்கிப் பெற்றிடுவீர் சந்திப்பை நீவிர் அந்தப்
பெருநலத்தின் திருவுருவை நலனை நாடி முற்றும்நீர் செய்தபவம் நீங்க ஏகன்
மண்ணிப்புக் காயவரை இரக்கக் கேண்மின் சற்றேனும் ஐயமில்லை கிருபை யாளன்
சங்கித்தே அருள்புரிவான் எனவு மாமே
2. தேடியறிந்த தவசீலர்
பெருமானார் சொல்மடுத்த உமரும் அந்தப்
பெருமகனை ஈரைந்து வருட காலம் தெரியவிய லாதிருந்தார் பலவா றாகத்
தேடியுமப் புண்ணியரைக் கண்டா ரில்லை அருகாத ஆசையவர் நெஞ்சி னுள்ளே
அலைமோதும் பேராழி போல நாளும் பெருகியதே யன்றியொரு பனிமுத் தேனும்
பொன்றிடவே இலைமீறிப் பொங்கிற் றன்றோ
2.
22
23
6SC)

தாய்க்கென வாழ்ந்த தணயனர்
SGy.9
QXG)"
2
காலம்தன் வேகத்தைக் குறையா தேநாள்
காற்றாகப் பறக்கநபி உலக வாழ்வின் காலமது முடிந்திறைபால் செல்ல ஆட்சி கைமாறி அபூபக்கர் வசமா யிற்றே காலமடைந் திடவவரும் கலீபா என்னுங்
கடமையினைப் பொறுப்பேற்றார் "உமரும்" நீண்ட காலமதாய்த் தேடிவந்த "கர்ணி" யைத்தங்
காலத்தில் தேடுவதில் கருத்தா னாரே 24
பெருமானார் வாய்மொழிந்த வாறாய் என்றப்
பேறெனக்குக் கிடைக்குமென ஏங்கி யாங்கு வருகின்ற எமன்நாட்டு மக்க ளண்டை
விபரமறிந் திடுமாறே வினவி வந்தார் ஒருவரெனும் விபரமொன்றுஞ் சொல்லாப் போதும் உற்சாகங் குன்றவில்லை என்றெப் போதும் பெருமானார் வார்த்தைபொய்த்த தில்லை என்ற
பழுதில்லா விசுவாசம் மிகைத்த தாலே 25
இருபதாண்டு கழிந்தெவர் தாமும் அன்னார்
இருப்பதனை இருப்பிடத்தைச் சிறிது கூடத் தெரிந்தறிந்து தகவல்தரத் திராணி யற்றார்
தொடர்ந்தும்"உமர்” முயற்சிதனைத் தொடர லானார் ஓராண்டு "ஹஜ்ஜு"க்காய் மக்கா சென்றே
உடன் "ஹஜ்ஜு"ச் செய்தோர்முன் எழுந்தே தம்மின் குரலுயர்த்தி உமறுஹத்தாப் பேச லானார்
கூடிநின்றோர் செவிப்புலனை ஈந்திட் டாரே 26

Page 45
ஜீனர்னாஹர் ஷரிபுத்தின்
SGS)
ஈராக்கைப் பிறப்பிடாய் கொண்டோ ரிங்கே
இருப்பரெனின் தயைகூர்ந்து எழுக என்றார் காரணத்தைக் கேளாதே கலீபா ஆணை
கடைப்பிடித்தார் மக்கள்பின் சொல்வார் கூபா ஊரைத்தம் பதியாகக் கொண்டோ ரன்றி
உடனிருப்போர் அமர்கவென்றார் அவருஞ் செய்தார் யாருள்ளார் "முராத்"கிளையி னோர்கள் அன்னார்
முன்வருவீர் எனப்பணித்தார் பலர்முன் வந்தார்
முன்வருக என்றதுமே முன்வந் தோரில்
மேற்கொண்டும் பிரிவொன்றைச் செய்தல் வேண்டி சொன்னார்கள் தயைகூர்ந்தே இங்குள் ளோரில்
தனித்திடுக "கர”னையூராய்க் கொண்டோ ரென்றார் பின்னடைந்தார் மற்றவர்கள் சிலர்த ரித்தார்
பேசமுதல் அனைவரையும் நோக்கி "ஹத்தாப் என்விருப்பை யுடன்செய்தீர் நன்றி சற்று
இறைவனுக்காய் அமைதிகொள்வீர்” என்பதாக
அமைதியுற்றோர் தமைநோக்கி "உங்க ளுள்ளே
எவரேனும் உண்டாமோ உவைஸ்"என் நாமம் தமைக்கொண்டோர்” எனவினவ அங்கி ருந்த
தாடிதலை நரைத்தவொரு மனிதர் தோன்றி எமதறிவுக் குற்றபடி அறியோம் நீங்கள்
எமைவிளித்துக் கேட்கும்படி உயர்ந்த பேரை சமமான பெயர்கொண்ட ஒருவர் என்றன்
சகோதரரின் மகனாக உள்ளார் என்றே
27
28
29
6SO3
10

தாய்க்கென வாழ்ந்த தணயனர்
○以○認
3.
ஊரறியா மனிதரவர் மக்க ளுள்ளே
ஊடாடாப் பேர்வழிதான் எவரைத் தானும் சாராது வாழுபவர் தமக்கென் றெந்தச்
சொத்தினையுஞ் சேர்க்காத ஏழை எம்மைச் சேருகின்ற மந்தைகளின் மேய்ப்பான் அந்தச்
சேவகரை எடுத்தோத வெள்கு கின்றேன் யாருமவர் தனைமதிப்ப தில்லை நாங்கள்
யாசகர்போல் எண்ணுகின்றோம் அவரை என்றார் 30
கூறியவை கேட்ட "உமர்" அவரை நோக்கி
கேட்டறிந்தார் நம்பிக்கை இழந்த போதும் வேறுவழி இலாது'அலி' தனைத்த னக்கு
வேண்டுதுணை யாயழைத்தே "கூபா" நோக்கி வீறுகொண்ட புலியிரண்டு போல எல்லை
விட்டகன்றார் புரவிகளுங் காற்றை வெல்லும் வாறாக மனவேகத்தோடே யொன்றி
விரைந்தனவவ் விருவருந்தம் இலக்கைச் சேர 31
3. மக்காவிலிருந்த கூபா நோக்கி
புனிதமிகு நகர்மக்காப் பதியின் மேன்மை
புகலுதற்கும் எளிதாமோ “கஃபா” என்னும் புனிதமிகு ஆலயத்தால் உலக மாந்தர்
பூவுலகம் உள்ளவரை தரிசிக் கின்ற புனிதமிகு நன்நகராய் இறைவ னாலே
பெருமைபெறப் பட்டதது தரிசிப் போர்கள் புனிதர்களாய்ப் பவமிழந்தே மீளு கின்ற
புண்ணியத்தின் பிறப்பிடமாம் அற்றை நாளில் 32
11

Page 46
ஜின்னாஹர் ஷரிபுத்தீனர்
SGSS)
தீயிட்டும் பொசுங்காது புனற்சு னைக்குள்
தரிந்திருந்தா ரொப்பவெளி வந்த தூதர் நேயமுடன் இறைவனுக்காய் மகனைக் குர்பான்
நிறைவேற்றத் துணிந்தபெருந் தியாகச் செம்மல் சேயைமனை யாளோடு வெங்கா னத்தில்
தவிக்கவிட்டே இறையாணை நிறைவு செய்தோர் தூயகாஃபா "தனைக்"கட்டி முடித்தார் அந்தத்
திருத்தலத்தைத் தாங்கியதால் பெருமை கொள்ளும் 33
மக்காவின் தெருவெல்லாம் மக்கள் கூட்டம்
மிகவிஞ்சிக் காணுமவை யூடே வேகம் மிக்கவிரு புரவிகளும் பாய்ந்தே ஒட
மக்கள்தமை மறந்தேமுன் நோக்க லானார் திக்கெல்லாம் மாடிகொண்ட வீடும் வாழுஞ்
சிறுகுடிசை பற்பலவும் கண்ணைத் தம்மேல் தக்கவைக்கும் பொருள்நிறைந்த கடைத்த லங்கள்
தாண்டியவை பறந்தனகண் இமைக்கும் போதே 34
ஆடவரோ டொன்றாதே அகத்தில் தம்மால்
ஆகுவினை அத்தனையும் இயற்றும் பெண்டிர் வீடதிரு மாறுமிக வேக மாக
வீதிவழி ஓடுமிரு புரவி காண நாடிவந்தே ஒன்றினரே நிலாமுற் றத்தில்
நயனமலர் மலர்ந்தனவான் பரிதி கண்டே கூடியொரு தண்டலையில் விரித்தி ருந்த
கோமளச்செந் தாமரைகள் போலு மம்மா 35
12

தாய்க்கென வாழ்ந்த தனயனர்
SGS)
མ་ཨ་ཧྥུ་
அன்றுவெளி கண்டசிறு நனைகள் போலும்
அரும்பவின்னும் ஓரிருநாள் தாமே உண்டாம் என்றுரைக்கும் கூம்புகளும் அழகாய்ச் சற்றே
இதழ்விலக்க முயலுகின்ற மொட்டோ டொன்றி மென்கரங்கள் விலக்கிமெல்ல மரகந் தப்பை
வெளிக்காட்டும் இளமலர்கள் அளிகள் கூடப் புன்னகைக்கும் வாறாய்த்தேன் பொதிந்தே முற்றாப்
பூத்தமலர்ப் பொய்கையினைப் போலு மாமே 36
ஆவலொடு ஓடிவந்தும் யாரும் இல்லா
அதிசயத்தைக் கண்டார்கள் மாத ரெல்லாம் மேவிநின்ற மணற்புழுதிக் கிடையே மக்கள்
முகம்முகத்தை நோக்கியவா றசையா துற்றார் ஆவிகளோ சென்றதாங்கே அடடா இஃதோர்
அற்புதமே எனளண்ணி அயர்ந்தே போனார் யாவுமிவை ஒருநொடிக்குட் தானே கண்ணை
இமைப்பதற்குள் நடந்தபெரும் புதுமை யன்றோ 37
நெய்யுண்ட நெருப்பாகக் காணும் ஆசை
நெஞ்சத்தில் கொழுந்துவிட்டே எரிய வல்லோன் துய்யநபித் தோழர்கள் சுவர்க்க வாழ்வைச்
சொந்தமெனக் கொண்டவருள் இருவர் போதல் பொய்யோவென் றெண்ணிடுமால் காண்போர் கண்ணைப் பிசைந்தேபின் நோக்கினரே நோக்க முன்னர் எய்தசிலை போலபல காத வேகம்
ஏற்றனவாய்ப் பறந்தனவப் புரவிப் பேய்கள் 38
13

Page 47
ஜின்னாஹர் ஷரித்தீன் SGSC) Osc
2
பார்வைபட்டுப் பட்டென்றே மறைந்து போன பரிகளில்யார் உளராமென் றறியா மாந்தர்
பார்வைதனைப் பக்கத்தே நிற்போர் மீது
படரவிட்டார் அவருமிவர் தம்மை நோக்கி
யாரேன்று கேட்பார்போல் நோக்க மாறி
எதிர்நிற்போர் தமையுமவர் நோக்கப் பார்வை
யாரென்று கேட்பதுபோல் இருந்த தாங்கும்
என்விந்தை இஃதென்ன வேக மாமோ 39
நகரவழி யிலாதொருவர் ஒருவர் மீது
நின்றபடி சாய்ந்துவழி விட்டார் அந்த நகரவழி வருமிருவர் யார்தா மென்றே
நின்றவர்கள் நின்றபடி நோக்க லானார் நகரவிழி யத்தனையும் ஒரேதி சையில்
நிலைகுத்தி நிற்கவவர் வளியை வென்றே நகரவழி கடந்தேவெங் கானப் பூமி
நண்ணினரே வழிமருங்கு நோக்கா வாறே 40
(வேறு)
தனிய வன்றன் திரும னையில்
தவம்இ யற்ற வந்தவர் இனிய சேதி கேட்டு டன்னே
இருக்கும் இடமுந் தேடியே புனித மண்ணின் கடன்மு டித்து
பெருநெ டுங்கான் வெளியிலே நனிபு கழ்மா மனித ரைத்தம்
நயனங் காணப் பறந்தனர் 41
14

தாய்க்கென வாழ்ந்த தணயனர்
வருடந் தோறுங் கூடுகின்ற
மக்கள் வெள்ளம் இறைவனை ஒரும னத்தோ டிறைஞ்சு வோர்கள் உலக வாழ்வின் பாவங்களை அருகச் செய்யும் தலத்தி ருந்தே
அலியும் உமறுஞ் சென்றனர் உருவி லாத தனியோன் அவர்
உடனி ருந்தே உதவினான்
சீறு கின்ற காற்றி னோடு
செம்மண் ஒன்றி வேறிடம் வீறு கொண்டு பறந்த ததனின்
வேகஞ் சொல்லல் கூடுமோ ஏறு போன்ற இரண்டு வீரர்
இருப்ப னைய மேனியில் தாறு மாறாய்ச் சொரிந்த தவர்கள்
செய்த பாவம் என்னவோ
வேறு
நெருப்பினிற் காயும் நீர்மேல்
நிழல்விடும் ஆவி போன்றே சுருக்கெனத் தாவுங் கானற்
சுடுவளி மோத மண்ணைக் கருக்கியே வழிகள் எல்லாம்
கொட்டியே இருப்ப தாலே உருக்கிடும் உஷ்ணங் கூட
உணர்ந்திடாப் பரிகள் ஒடும்
Q>XOo
2
42
43
44
شهنو
15

Page 48
ஜினர்னாஹற் ஷரிபுத்தினர்
SGS)
疑
இடையிடை தோன்று கின்ற
ஈத்தையின் தோப்பில் வல்லோன் கொடையெனக் காணும் ஆங்கே
கொள்ளையாய் கனிகள் வண்டு இடையிலா தொன்றித் தொங்கும்
'இன்புனல் வதையைப் போலாம் படைகண்டு அஞ்சா வீரர்
பார்வையிற் படாத பாங்கே
வெண்பசும் பிஞ்சாய்ச் சாற்றே
வெகுநிறக் காயாய்ப் பொன்ஆம் மண்ணிற வடிவாய் நன்கு
மிகுந்தசென் நிறத்தின் வாகாய் உண்ணுதற் குகந்த பாங்கில் ஊறிய மதுவி னோடே கண்ணுண்ணக் கண்டுங் காணார்
கருத்தினிற் கருத்தாய்ச் சென்றார்
பாலைவெம் வனத்தின் ஊடே
பரிகளும் பறந்து சோர்வின் பாலுறின் புனலும் வேண்டும்
படியினால் தரித்துச் சற்றே காலாறி மனிதர் தாமும்
கடுவரஸ் நாந னைக்க ஏலவே பசுந்த ரைகள்
இறைகொடை எனவே காணும்
Q
どや○
45
46
47
GSO3
16

தாய்க்கென வாழ்ந்த தணயனர்
QXSCO):g
2
4. எழில்மிகு கூபா நகள்
தூரத்தே அழகு மிக்க
தோகையர் போலும் வானை ஆரத்த மூஉம் போன்றே
ஆயிரம் பல்லா யிரமாய் நேருயர்ந் திருந்த மாடி
நெடுந்தொடர்க் கட்டி டங்கள் சீரிய நகராங் கூபா
சிறப்பினைக் கூறிற் றன்றோ 48
எங்கணும் அழகு மிக்க
இறைபள்ளி வாயில் கற்க எங்கணுங் கல்விக் கூடம்
எழிலுறு பூவ னங்கள் எங்கணும் வயல்கள் நோக்கும்
இடமெலாந் தோப்பும் நீர்க்கால் எங்கணும் நிறைந்தே காணும்
இணையிலாக் கூபா மண்ணே 49
பொன்நிற வயல்கள் தான்யம்
பொலிந்திடும் பாங்கு காட்டப் பொன்நிறங் காட்டும் ஈந்தைப்
பழக்கொன்னை அவற்றை வெல்லும் பொன்னளி மலர்கள் மீது
புதுமது மாந்திச் சுற்றும் பொன்னணி மாதர் கண்போல்
பூத்தன மலர்கள் ஆங்கே 50

Page 49
ஆண்ணாவற் ஷரிபுத்தின்
தேன்சொரி பழக்கு லைகள்
தோப்பெலாம் நிறைந்தே ஓங்கி வான்தொடு மரங்கள் மீதே
வகைவகை யாகத் தொங்கும் கூண்படு வில்லிற் கல்லை
கொண்டிளஞ் சிறார்கள் எய்வர் வீண்படும் நிலத்தில் வீழ்ந்தே
வேண்டுவார் அற்ற தாலே
பள்ளிகள் தோறும் "பாங்கின்"
புகழொலி காற்றில் மேவி உள்ளங்க ளெல்லாம் பக்தி
ஊற்றெடுத் தோடச் செய்ய கள்ளமில் சிறாரும் மூத்தோர்
காளையர் முதியோர் எல்லாம் புள்ளினம் போலும் வெள்ளைப்
புறாக்களும் போலுஞ் சென்றார்
அள்ளிடக் குறையா வாறே
அருட்கனை எங்கும் நீரை வெள்ளமாய்ப் பெருக்க ஆங்கே
வயல்களுஞ் செழிக்கும் மந்தை கொள்ளையாம் ஆடு மாடு
குதிரைகள் ஒட்ட கைகள் உள்ளன எனுமால் மேயும்
ஊர்க்கடை நிலங்கள் மீதே
18
9 QXXOŠK
5.
52
53
6

தாய்க்கென வாழ்ந்த தனயனர்
SASq qSAAqqqS qqq S SSSSSSSSSA SSSSSS
ठ
G
செல்வத்தின் சிறப்பாய் அந்தச் சீர்பெறு நகரந் தன்னில் இல்லையென் றெதுவும் இல்லா
திருந்தன அனைத்தும் மக்கள் சொல்லிடக் குறையும் அற்றே
துயரற வாழ்ந்தார் ஆங்கே அல்லல்கள் தாங்கி வாழ்ந்தார்
"அல்கள்ணி” எனும்மா ஞானி
நிழல்தரும் மரமுந் தூய
நீர்தருஞ் சுனையும் உண்ணப் பழந்தருந் தருவும் ஆங்கே
பாடிடக் குயில்கள் தாமும் எழிலுறு மலர்கள் பூத்த
இசைவொடு வண்டு நாடும் பொழிலுமாங் திருத்தல் கண்டும்
புலன்கொளார் புரவி ஊர்ந்தார்
5. கர்ணியைக் கண்டனர்
பாலையைத் தாண்டி ஒப்பில்
பசுந்தரை தாண்டிக் கூபாச்
சாலையுட் புகுந்தார் சற்றுத்
தொலைநகர்ந் தழக மிகக்
வாலையர் போலும் அன்ன
வேலையைத் தொடர்ந்தார் "கர்ணி”
வளர்நகள் கண்டார் வந்த
விபரமும் வினவ லானார்
○叉○g 9
54
55
56
O(نتیجہ
(ଦ୍ଦ)
19

Page 50
ஜின்னாஹர் ஷரிபுத்தீனி
S.G.39
凍○○
பலரிடங் கேட்ட போழ்தும்
பலனிலா திருத்தல் கண்டே இலைஇனி எவரும் என்றே
எண்ணமும் எழுந்த போது அலைகடல் இலையென் றாலும்
அண்ணலார் வார்த்தை என்றும் இலையென வாகா வென்னும்
உறுதியோங் கிடத்து னிந்தார்
நாமாகத் தேடல் ஒன்றே
நலந்தரும் எனநி னைந்து தாமாக ஒவ்வோர் கூபாத்
தெருக்களுஞ் சுழன்றார் இன்னும் ஏமாற்றந் தொடர ஊரின்
எல்லையை அடைந்தார் ஆங்கே பூமானின் வார்த்தை பொய்யாப்
பேறினை அடைந்திட் டாரே
(வேறு)
பலகாதந் தேடிவந்தே ஓரி டத்தில்
பட்டதவர் கண்களுக்கோர் காட்சி யாங்கே நிலமாளும் பூபதியைத் துதித்த வாறே
நிற்குமொரு மனிதரையும் அவரைச் சுற்றிப் பலநூறு ஒட்டகைகள் புல்லை மேய்ந்து
பசியாறும் வாகினையும் நெருங்கி அன்னார் சலாமுரைக்க பதிலுக்காய் அவருங் கூட
சலாமுரைக்க வந்தவரும் வினவ லானார்
5
57
58
59
20

தாய்க்கென வாழ்ந்த தனயன்
QỳXCD):3
"யார்நீவிர் பெரியீர்நும் விபரந் தன்னை
யாமறிய உரையுங்கள் தயைகூர்ந்”தென்ன "தேர்வீர்நீர் மந்தைமேய்க்கும் இடையன் நானே
தேவைக்காய் கூலிபெற்றே உழைப்போன்” என்றார் "யாருங்கள் தொழில்கேட்டார் கூலி கேட்டார்
யாமறியும் படியுங்கள் பெற்றோ ரிட்ட பேரென்ன கூறுங்கள்” என்ற போழ்து
"பேர்அப்துல் லாஹ்"என்றே பதிலு ரைத்தார் 60
அப்துல்லாஹ் எனிலிந்த உலகை ஆள்வோன் அடியாரென் றறிவோம்நாம் நாமுங் கூட ஒப்பில்லா நாயகனின் அடியார் தாமே
உங்களன்னை இட்டபெயர் சொல்க" என்றார் அப்போதவ் விருவரையும் நோக்கி அன்னார்
"அறியேன்நான் எனிலென்ன தேவை என்றே செப்பிடுவீர் இயன்றதைநான் செய்வேன்" என்றார்
சென்றவர்கள் காரணத்தை விளம்பி னாரே 6.
பெருமானார் எமக்குவைசுல் கர்ணி என்னும்
பெயருடைய பெயர்தம்மைக் கூறும் போது அரியஇரு நீலவிழி தமையுங் கூறி
அன்னவர்தம் செவ்வண்ணச் சிகையி னோடே தெரியாத மறைவிலிடத் தோளில் வெள்ளைத்
தழும்பொன்றும் இருக்குமெனப் புகன்றிட் டார்கள் உருவினிலே நபிக் கூற்றைக் கண்டாம் தோளில்
உள்ளழுதம் பறியோ"மென் றுரைசெய் தாரே 62
3.
21

Page 51
ஜினர்னாஹர் ஷரிபுத்தீன்
SGSC)
g
விருப்பறிந்து புயத்தைவெளிக் காட்ட ஆங்கே
வாஞ்சையொடு கட்டியேமுத் திட்டே நாங்கள் தெரிந்துகொண்டோம் நீங்கள்தாம் நபிபு கன்றோர்
தெளிவான அத்தாட்சி கண்ணுற் றோம்நாம் புரிந்தசிறு பெரும்பாவம் அனைத்தும் நீங்கப்
புண்ணியரே இறைஞ்சுங்கள் என்றார் கேட்டே புரிவதில்லை எனக்கோநான் பிறர்க்கோ தெய்வப்
புறம்நோக்கிப் பிரார்த்தனைகள் என்றார் மீண்டும்
கரையினிலுங் கடலினிலும் உள்ள முஃமீன்
கண்ணியர்நல் முஸ்லிம்கள் தமக்காய் நாளும் சிரங்தாழ்த்திப் பின்"இஸ்தி. பார்"நான் செய்வேன்
சொல்லுகநீர் யாரென்றே வினவ லானார் உருவமிலான் வழிசெல்வோர் தலைவர் என்றே
உமர்இபுனு ஹத்தாபைச் சுட்டித் தன்னைப் பெருமானார் மருகள்"அலி” எனவும் அந்தப்
பெருமகனுக் கறிமுகமுஞ் செய்திட் டாரே.
அலிஇபுனு அபீதாலிப் உமர்ஹத் தாயை
அறிமுகஞ்செய் திட்டதுமே உவைசுல் கர்ணி "உலகாள்வோன் ரஹ்மத்தும் பரகத் துந்தான் உங்கள்மீ துண்டாக அமீரே" என்றும் அலிரலியைச் சேர்த்துநபி உம்மத் பேரால்
அருளாளன் நற்கூலி அளிப்பா ன்ெறும் நிலமேவு புகழ்கொண்ட நபிக ளன்பும்
நிமலனருள் தமையுங்கொள்"சூஹற்பி" சொன்னார்"
63
64
65
أمه
22

தாய்க்கென வாழ்ந்த தணயனர்
QXG)):
2
சங்கைமிகு இறையடியார் உவைசுல் கர்ணி
சாற்றியவவ் வாழ்த்துகளால் நெஞ்சம் விம்ம "உங்களுக்கு வேண்டியதாய் உடையும் உண்ண
உணவுக்காய்ப் பொருளும்நான் கொணர்வேன் மட்டில் இங்கிருந்து வேறெங்குஞ் செல்லா தீர்கள்
இறைநேசப் பெரும"என இசைவை வேண்டித் தங்குவதாய் வாக்கொன்றுந் தருக வென்றே
தயவோடு உமர்கேட்க அவருஞ் சொல்வார் 66
"வாக்கொன்றுந் தந்திடநான் மாட்டேன் என்னை வாழ்நாளில் பின்னென்றுங் கானிர் நீங்கள் வாக்களித்தல் போலஉடை உணவு தந்தால்
வாங்கியதை நானென்ன செய்வேன் மானங் காக்குமெந்தன் கம்பளித்துண் டிரண்டு மென்று
கிழிந்தழிந்து போமோநான் மந்தை மேய்த்தே சேர்க்கின்ற பணத்திலென்று உண்டு தீர்ப்பேன்
சொல்லுகநீர் அறிவீரோ அமீரே" என்றார் 67
சொன்னவரை இடைமறித்தே உமருஞ் சொல்வார்
சீரியரே நபிபெருமான் உங்க ளுக்காய்த் தன்னுடலைப் போர்த்தியவோர் போர்வை தன்னைத்
தந்தார்கள் இதையேனுங் கொள்க என்றே கண்ணியரப் போர்வைதனைக் கையெ டுத்தே கடந்துசில அடிதூரஞ் சென்றே நின்று முன்னவனை வழுத்தியபின் இறைஞ்ச லானார்
முஃமின்கள் தனைப்பொறுத்தே அருள்வா யென்றே 88
23

Page 52
இறையோனே முஃமீன்கள் பாவ மெல்லாம்
இரவிகண்ட பனிபோல்நீ அழித்தா லன்றி இறைதூதர் எனக்களித்த போர்வை தன்னை ஏற்றிடநான் மாட்டேனென் றதிக நேரம் சிறுபிள்ளை போலஅடம் பிடித்த பாங்காய்
சிந்திடுகண் ணிர்வந்தே மண்ண ணைக்க இறைஞ்சினரே மனமுருகி இறைவன னஃதை
ஏற்றனனென் றுளமுரைக்க ஏற்றிட் டாரே
பின்னரவர் இருவரையும் நோக்கி நீங்கள்
பெருமானார் மீதன்பு கொண்டோ ராயின் அன்னியரால் "உஹது"யுத்தந் தன்னில் ஈர்பல்
அடியுண்டு வீழந்ததனை அறிந்தும் உங்கள் அன்பினுயர் வாய்நீங்கள் பற்க ளையேன்
அகற்றாதே பேனிர்கள் என்றே தன்வாய் என்புகளைத் திறந்தவர்குக் காட்டி னார்பல்
ஏதுமற்ற வெறுமைதனை நோக்க வென்றே
பெருமானார் பல்லுடைந்த சேதி கேட்டுப்
பெருந்துயரங் கொண்டேன்என் பல்லி ரண்டை உருவிவிட்டேன் இழந்ததெந்தப் பற்க ளென்றே
ஊகிக்க இயலாத கார ணத்தால் அருகிருந்த மற்றிரண்டை அகலச் செய்தேன்
அப்போதும் எனதிதயம் தாங்காப் போழ்து ஒருபல்லைத் தானெனினும் விடாது முற்றும்
உடைத்தெறிந்தேன் எனவுமவர் கூறி னாரே
XQXXG)
ہسس
24

தாய்க்கென வாழ்ந்த தனயன்
மேலுமவர் "உமர்" "அலி"யை நோக்கிச் சொல்வார்
மேதினியைப் படைத்தாள்வோன் உங்க ளுக்கு மேலுமவன் ரஹ்மத்தை அருள்வான் நீங்கள்
மேலவனின் ஆசியொடு மக்கா நோக்கி காலவிரை யம்செயாதே செல்வி ரென்றே
காவல்செய்த மந்தைகளை மேய்த்தே தம்மின் வேலைமுடிந் தெதிர்த்திசையை நோக்கிச் செல்ல
வேறுவழி இலாதவர்கள் திரும்பின னாரே
மந்தைகளை உரியவர்கை வசம வித்து
மறந்தந்தத் தொழிலைஇனி வணக்கம் ஒன்றே சொந்தமெனக் கொண்டிரவு பகல னைத்தும்
தூயவனைத் தொழுதுவழி பாடு செய்தார் வந்ததுய ரத்தனையும் தாங்கி ஏகன்
வழியொன்றே மேன்மைதரும் என்றே தெய்வ பந்தத்தில் திளைத்தார்கள் உவைசுல் கர்னி
பரமனருள் பெற்றபெரும் சூஹ்பி ஆனார்
இறுதிநபி யோர்கால்தம் தோழ ருக்கு
இயம்பினர்தம் வழிபற்றி வாழ்வோ ருள்ளே உறுதிமிக்க ஈமானின் கார ணத்தால்
உணவுஉடைக் காயிரக்காச் சிலரும் உள்ளார் வறுமையுற்றுத் தொழுந்தலமும் வராதி ருப்பார்
வளைத்துடலை மறைத்திடுவோர் துணியு மற்றோர் உறைவரவர் உள்ளே"புராத் இபுனு ஹையான்"
"உவைஸ்இபுனு ஆமிர்அல் கர்ணி" என்றே
○以○認
2
72
73
74

Page 53
ஜின்னாஹர் ஷரிபுத்தீன்
凌○数○
6. ஹரமிபுனு ஹையான் சந்தித்தல்
"ஹரமிபுனு ஹையான்என் றொருவர் உவைசுல்
கர்ணியைப் பற்றியுரை செய்யும் போது ஒருமுறைநான் கூபாசென் றிருந்தேன் அந்த
உத்தமரைக் காண்பதென்னும் கருத்தி னோடே "புராத்"என்னும் நதிக்கரையின் ஒரம் தன்னைப்
புனிதமுற வைக்க"வுழு"ச் செய்த வாறே இருப்பதுகண் டவரண்டை சென்றேன் அன்னார்
இயல்பான உருவமைப்பை அறிந்த தாலே 75
அண்டைசென்று சலாமுரைத்துக் கரங்கள் நீட்ட
அணைத்தவரை "முஸாபஹா"நான் செய்ய நெஞ்சில் எண்ணமுற்றேன் மறுத்தவரும் விரும்பி டாதே
எனைத்தவிர்த்தார் ஐயமுற்றேன் இவரா என்றே பின்னவரை நோக்கி"அஸ்ஸ லாமு அலைக்க”
பண்ணவனின் அருட்திருவே உவைசுல் கர்ணி என்றேன்நான் எனைநோக்கிப் பதிலு ரைத்து
எனையதிரச் செய்யுமொரு வினாத்தொ டுத்தார் 76
"ஹரமிபுனு ஹையானே எனைநீர் அண்டக்
காரணர்யார்” எனநானோ அதிர்ச்சி யுற்றே புரியாது நின்றேன்முன் பின்னோர் காலும்
பார்த்தறியாப் போதுமவர் என்றன் தந்தை உரியதிரு நாமத்தை உச்ச ரிக்கும்
உயர்வுகண்டே சற்றுப்பின் நிதான முற்றுத் தெரிந்ததெவ்வா றெமதுபெயர் என்றேன் நானும்
தெளிவுபெறப் பின்வருமா றுரைக்க லானார் 77
26

தாய்க்கென வாழ்ந்த தணயணி
@*Cx 5. (O||
என்னுடைய "ரூஹி"என்னும் ஆத்மா உம்மோ
டிணைந்துந்தன் ரூஹினைநன் கறிந்த தாலே என்னுடைய "நப்ஸ்”ஸேதான் பேசிற் றொள்வோர்
இறைபடைப்பும் நப்ஸ்'உடைத்தல் போல ரூஹும் தன்னளவில் நப்ஸையடைத் திருப்ப தாகும்
தோன்றாத தொலைவாழ்ந்த போதி லுந்தான் முன்னவனின் அருளாலே அறிதல் கூடும்
முஃமின்கள் தமக்கென்றே புகல லானார் 78
பின்னரவர் தமைநோக்கி எனக்காய் நீங்கள்
பிராத்திக்க வேண்டும்நல் லுபதே சங்கள் என்னளவில் மனமிரங்கிச் செய்தல் வேண்டும்
என்றேநான் பணிந்திருக்கக் கையைப் பற்றிச் சென்றார்அப்"புராத்”நதியின் PJ LDIISå
திருமறையின் வசனத்தில் ஒதிக் காட்டி தன்னைமறந் தேநிலத்தில் வீழ்ந்தார் மூர்ச்சை
தெளிந்தபின்னர் எனைநோக்கிப் பேச லானார் 79
நும்தந்தை இறந்துவிட்டார் சீக்கி ரத்தில்
நீர்கூட இறந்தழிந்து போவீர் முன்னர் நும்தந்தை தனைப்பெற்ற தாதை கூட
நீள்நிலத்து வாழ்வுதனை முடித்த கன்றார் தம்வாழ்வின் செயல்களுக்கு ஏற்ற வாறே
சேர்வார்நற் சுவனமின்றி நரகத் தீயின் வெம்மையிலே வதையுறுவர் அவர வர்தம்
விதிப்படியே நடக்குமென்றார் மீண்டுஞ் சொல்வார் 80
27

Page 54
ஜின்னாஹர் ஷரிபுத்தீன்
S.G.S)
Qsc)3
ஆதிபிதா ஆதமும்மண் மறைந்தார் அன்னை
"ஹவ்வாவும்” ஆண்டவன்பாற் சென்றார் வல்லோன் தூதுவராம் இபுறாஹீம் மூசா "முஹம்மத்”
சங்கைமிகு சுவனநலம் பெற்ற கன்றார் தூதுவத்தை ஒதியதும் விசுவா சித்த
சித்தீக்"அபூபக்கர்" மறைய இந்த மேதினியில் நீதிக்கோர் நிழலாய் நின்று
மோட்சமுற்றார் உமரென்றே புலம்ப லானார் 8.
உயிரோடே உமர்இருக்க உவைசுல் கர்ணி
உலகைவிட்டு நீங்கியதாய்ப் புலம்பக் கண்டே "உயிரோடே உமரிருக்க ஏனோ நீங்கள்
உலகைவிட்டு நீங்கியதாய் உரைத்தல்" என்றேன் உயிரோடே உமரில்லை இறைவன் அன்னார்
உலகைவிட்டு நீங்கியதாய் உதிப்பைத் தந்தான் உயிரோடே உமையுமிறை விடானே நானும்
உலகைவிட்டு நீங்கிடுநாள் அருகில் என்றார் 82
பின்னுமவர் எனைவிளித்து "வஸியத்" தாகப்
பின்வருமா றுபதேசம் செய்ய லானார் முன்னவனின் வேதத்தைப் பற்றிக் கொள்வீர்
முஃமீனுள் நல்லடியார் இறப்பை எண்ணும் மின்னலிடைப் போழ்தேனும் மரணத் தைநீர்
மறந்திடவே வேண்டாம்உம் இனத்தோ ரண்டை நண்ணுங்கால் அவர்தமக்கும் அச்சம் ஊட்டி
நன்மைதீமை கொண்டவரை எச்ச ரிப்பீர் 83
28

தாய்க்கென வாழ்ந்த தணயணி
○以○3
3
கூட்டத்தில் இருந்தும்மைப் பிரித்துக் கொள்ளும்
கேடுசெய்ய வேண்டாம்நீர் செய்தால் உன்றன் தேட்டத்தில் தோன்றுகின்ற தவறி னாலே
"தீனை"விட்டும் விரண்டோடி மறுமை நாளில் வாட்டிவதை செய்கின்ற நரகத் தீயில்
வாடுநிலை தோன்றுமெனக் கூறிப் பின்றன் பாட்டிலிறை தணைநினைந்து கைக ளேந்திப்
பிரார்த்தனையில் உலகைமறந் திறைஞ்ச லானார் 84
கண்ணிரண்டும் நீர்சொரியக் கையு யர்த்திக்
காத்தருளும் "யாஅல்லாஹி" உன்பொ ருட்டாய் எனைக்காண இம்மனிதர் வந்துள் ளார்நீ
எனைக்காணும் ஒருவரெனச் சுவர்க்கந் தன்னில் விண்ணவனே நுழையச்செய் உலக வாழ்வில்
வகைந்தவற்றில் திருப்திபெறும் மனத்தைத் தாராய் பண்ணவனே படைத்தாளுந் தனியோய் என்றன்
பிராத்தனைக்குப் பலனளிப்பாய் எனவி ரந்தார் 85
எங்கிருந்த போதுமிவர் என்பொ றுப்பில்
இருத்திக்கொள் இவ்வுலகச் செல்வத் துள்ளோர் பங்கினையுந் தந்தருள்நீ அதனை அன்னார்
பொருந்துகின்ற மனத்தினையும் கொடுப்பாய் மிக்க சங்கையுள்ள ரஹ்மானே இவற்றுக் குன்னைத்
தோத்தரிக்கும் நினைவளிப்பாய் இப்பூ வாழ்வில் பங்கமிலா வாழ்வளித்து மறுமை நாளில்
புனிதசுவன் பெறவருள்வாய் ஆமீன் என்றார் 86
29

Page 55
ஜினர்னாஹர் ஷரிபுத்தீனர்
SGSC)
இறைவனிடம் எனக்காகப் பிரார்த்தித் துப்பின்
எனைநோக்கிப் பெயர்சொல்லி அழைத்தே யுன்னை இறைவனிடம் ஒப்படைத்தேன் இனிமேல் உம்மை என்றும்நான் காண்பதற்கு விதியும் இல்லை சிறிதேனும் விளம்பரத்தை விரும்பேன் என்னைத்
தனித்திருக்க வைத்திடநான் அவாவுங் கொண்டேன் பிறமனித ரோடொன்றி வாழ்ந்தாற் றுன்பப்
பெருஞ்சுமையை அனுபவிக்க வேண்டும் என்றார்
எனைக்குறித்து விசாரிக்க வேண்டாம் நீரும்
எனைத்தேடி அலைந்திடவும் வேண்டாம் நெஞ்சுள் நினைந்திருப்பேன் உம்மையென்றும் அதுபோல் என்னை நினைவிருத்திக் கொள்ளவும்நீர் வேண்டும் பிற்கால் எனைநீருங் காணவிய லாத வாறே
எனக்குமுமைக் காணவிய லாது போகும் எனக்காகப் பிரார்த்திப்பீர் உமக்காய் நானும்
இறைவனிடம் பிரார்த்திப்பேன் எனவு ரைத்தார்
புறப்பட்டுச் செல்லவவர் பின்தொ டர்ந்து
புறப்பட்டேன் நானுமவர் தம்மி னோடே சிறிதின்னும் அவரோடு தரிக்கும் ஆசை
சென்னிகொள வருகைகண்டே அவர்ம றுத்தார் பொறுமையற்றுக் கண்ணிரண்டும் நீர்சொ ரிந்தே
போகுவழி நோக்கிநிற்க உடலுஞ் சேர வெறுமைகொண்ட பாலையிலே தனித்தோன் போன்று
வாடிநின்றேன் விழிமறைந்து சென்றிட் டாரே
87
88
89
(5SO3
30

தாய்க்கென வாழ்ந்த தணயனர்
Oso
2
7. தாயியீன்கள் தலைவர்
நன்மை செய்வ தோடிரக்கம்
நாடுந் தாபி மீன்களுள்ளே மென்மே லுயர்ந்தவர் கர்ணியென
மாநபி நாதர் ஒதினரே இன்னும் ஓர்கால் நபிமுஹம்மத்
எமன்நாட் டிருந்தே அன்புசெறி மென்காற் றென்னை மருவுதென
மொழிந்ததும் கர்ணியை மனம்பதித்தே 90
மீண்டும் உயிர்பெறு மறுமையிலே
முதலவன் எழுபதி னாயிரமாய்த் தோன்றிடச் செய்வான் வானவரைத்
தோற்றத் தனைவருங் கர்ணியேபோல் தோன்றாத் தலைவன் விரும்பிடுவோர்
தனைத்தவிர்த் தெவர்முனும் அன்னவரை தோன்றிடச் செய்யான் சுவனபதி
சென்றிட அவரைப் பணிப்பானே 9.
சீரழி உலகில் எவருமவர்
சிறப்பறி யாத போதினிலே பாராள் பதியைத் தனித்திருந்தே
பணிந்து வணங்கித் துதித்தார்கள் யாரும் அறியா உலகிலவர்
இருந்ததை யொப்ப மறுமையிலும் யாரும் அறிந்திட இயலாவா
றிறைவன் பேரருள் புரிவானே 92
31

Page 56
ஜீனர்னாஹர் ஷரிபுத்தீன்
S.G.39
SQ3d)
8. தாயும் மகனும்
விழிஇழந்த தாயொன்றே உறவுக் காரர்
வேறெவரின் உதவியுமில் லாத வாழ்வு உளமார நபிபோதந் தனைம தித்தே
ஊழியஞ்செய் தார்களன்னை பதத்தின் கீழே உளதாமோர் மகனினுயர் சுவர்க்கம் என்றே
உறுதியொடு விசுவாசங் கொண்டார் கர்ணி தெழுவதொடு அன்னைக்குப் பணிவி டைகள்
செய்வதன்றி வேறறியார் தூயோன் தோழர்
தாயுயிரோ டிருக்கும்வரை தனிக்க விட்டுத்
தொடர்ந்துபல நாளிகைகள் எங்குஞ் செல்லா தேயிருந்தார் உவைஸ்இப்னுல் கர்ணி தாயின்
தேவையறிந் துதவிடுநற் பேறுக் காக தூயவனின் இல்லமெனும் காஃபா வையோர்
தரமேனும் தரிசித்தா ரில்லை வல்லோன் தூயநபி தனைக்கூட வாழ்நா வில்லோர்
தரமேனும் கண்டதில்லை தாயன் பாலே
பெற்றோர்க்குப் பணிவிடைகள் செய்யா தோரைப்
பெருமானார் விரும்பியதே இல்லை தம்மின் பெற்றோர்க்கப் பணிவிடைகள் செய்து போரிற்
பங்குற்றே "ஷஹீ"தாகும் பாக்கி யத்தின் நற்பேற்றில் உயர்வென்றே கொள்ளு மாறு
நபிநாதர் ஓர்போழ்து நவின்ற வாறே முற்றுமன்னை சுகமொன்றே தன்வாழ் வென்று
மாமனிதர் உவைஸ்இப்னுல் கர்ணி வாழ்ந்தார்
93
94
95
6SA93
32

தாய்க்கென வாழ்ந்த தனயன்
○又○3
2
பெருமானார் வாழ்ந்திருந்த காலந் தன்னில்
பிறந்திருந்தும் பெருமானார் தம்மைத் தம்மால் ஒருமுறையுங் காணவிய லாதே போனார்
உவப்பிருந்தும் உவைஸ்இப்னுல் கர்ணி ஒர்நாள் விருப்பறிந்த தாயாரும் விடைய கர்ந்தார்.
வல்லவனின் தூதரைப்போய்க் காண்பீ ரென்றே நிருப்பந்தந் தாங்காதே சென்றார் ஆங்கு
நடந்ததைஈங் கெடுத்துரைத்தல் சிறப்பா மன்றோ 96
பொங்குகின்ற சுணைபோல நெஞ்சில் ஆசை
பெருக்கெடுக்கப் பெற்றஅன்னை பிரியத் தோடே சங்கைமிகு நபியைக்கண் காணக் கூபாத்
திருப்பதியை விட்டுமதி னாபோய்ச் சேர்ந்தார் எங்குமவர் தேடியலைந் தாங்குற் றோரை
இருக்குமிடங் கூறவெனக் கேட்டுங் கோமான் தங்குமிடம் அறியாதே தாயார் கூபா
தனித்திருப்பார் எனவருந்தித் திரும்பின னாரே 97
திருநபியைக் காணாதே மதீனா விட்டுத்
திரும்பிவந்தார் நெஞ்சழுத்துந் துயரத் தோடே திருநபியயும் அவர்வரவை அறிந்தே நெஞ்சத் துரயடைந்தார் காணவிய லாது போன பெருமகனை அவர்தமது உயர்வை மற்றோர்
புரிந்துகொளு மாறெடுத்துக் கூறித் தம்மின் திருவுடலைப் போர்த்துமொரு போர்வை தன்னைத்
தந்தவர்க்குச் சேர்த்திடவும் பணித்திட டாரே 98
33

Page 57
ஜிண்ணாவற் ஷரிபுத்தீன்
S.G.39
g
கிடைத்தவொரு தருணத்தைப் பயன்படுத்தக்
கிட்டாது போனநிலை எண்ணித் துன்பம் அடைந்தார்தன் கையெட்டி வாயெட் டாத
அவலத்தை அன்னையிடங் கூறி நொந்தார் படைத்தவனின் விதியதுதான் என்றே அந்தப்
பாக்கியத்தை இழந்தனைத் தாங்கி நெஞ்சிற் துடைத்தெறிய முயன்றாலும் ஏமாற் றத்தைத்
தூரறுக்க வியலாதே துயருற் றாரே
9. இறைநேச ரோடுபிறர்
இயற்கையிலே இறைநேசங் கொண்ட நல்லார்
இறுதிநபி மேற்காதல் பூண்டோர் தம்மில் வயமான இவ்விரண்டும் அன்றி வேறோர்
வேண்டுதலோ விருப்புகளோ இலாதி ருந்தார் அயராதே ஆண்டவனைத் துதிப்ப தில்தன்
அடங்காத இறைவேட்கை தனையுந் தீர்க்க முயன்றாரே ஆனாலும் முடியா வாறே
முதலவன்மீ தாசைமிக வேங்கிற் றன்றே
பெருமானர் தமைக்கண்ணாற் காணாப்போழ்தும் பொன்றாத காதலினால் அகக்கண் ணாலே பரமனருட் தூதரினைக் கண்டார் கண்டோர்
"பனுயிர்ர சூல்" என்றே போற்ற லானார் அருகில்லாப் போதினிலும் அண்ண லாரின்
ஆதர்ஷ சக்தியினுள் அடங்கி நாதர் அருகினிலே இருப்பதொப்ப மகிழ்வார் வெய்யோன்
அருகிலாதும் பூமிஒளி கொள்தல் போன்றே
5 प्रकट
99
100
0. أمه
34

தாய்க்கென வாழ்ந்த தணயணி
G
G2}XCD),
வானவர்போல் இறைவணக்கஞ் செய்ய நானும்
விரும்புகிறேன் என்பவரை நோக்கி பக்தி ஆனநிலை தனில்வணக்கஞ் செய்வ தெவ்வா
றாகுமென வினவவவர் சொல்வார் ஈட்டி ஊனுடலைப் பிளந்துள்ளே ஏகி னாலும்
உணராத நிலைகாணின் அதுவே பக்தி ஆனவுயர் வானநிலை யாகு மென்றார்
ஆருளரோ இன்றதுபோல் இயற்று வாரே 102
நிறைவான விசுவாசங் கொளாதி ருப்பின்
நீசெய்யும் வணக்கங்கள் வானம் பூமி நிறைவாக இருந்திடினும் இறைவன் ஏற்கான்
நீயுனக்குக் கிடைப்பதிலே திருப்தி யுற்று மறையோனின் வணக்கத்தில் மனமும் ஒன்றி
மற்றெந்தப் பொருள்மீதும் ஆசை அற்றால் நிறைவான விசுவாசங் கொண்ட தாகும்
நாயனுந்தன் வணக்கத்தை ஏற்பான் என்பர் 103
உணவுஉடை உறைவிடமாம் உலகப் பற்றில்
ஒதுங்கியவர் வாழ்ந்தார்தன் பசியைப் போக்கும் உணவுக்காய் ஒட்டகங்கள் மேய்ந்தார் தம்மின்
உடையாகக் கம்பளித்துண் டிரண்டை அன்றி அணிவதற்கு வேறொன்றுங் கொண்டா ரில்லை
அகமெனப்பாழ் வீடோன்றில் தனித்தி ருந்தே வணங்கியிறை பணிந்துறங்கி வாழ்ந்தார் அந்த
வரலாறு கூறுமுயர் உவைசுல் கர்ணி 104
35

Page 58
ஜின்னாஹர் ஷரிபுத்தீன்
SGyS)
g
நல்லபல வசதிகளைச் செய்க என்றே
நிருபமொன்றால் "கூபாவின் ஆளு னர்க்கு சொல்லவிளைந் தார்கஃபா உமரும் அஃதை
செயல்பெறாது தடுத்தார்கள் உவைசுல் கர்ணி "மெய்யாய்என் உடலிருக்கும் துணியும் என்றன்
வயிற்றிலுள்ள உணவுமன்றி வேறே ஒன்றும் துய்யவனே என்சொந்தம் இல்லை நீயுந்
தெரிந்ததது” எனஇறைபாற் கூறு வாரே 105
கிடைக்காத போதுபிறர் கொடுக்கும் ஊணைக்
கொண்டிடுவார் அதுவாறே உடையும் கொள்வார் பிடிக்காத சிலரிவரைப் பரிக சித்தே
பொய்வேட தாரியென்பார் பித்த ரென்பார் நடிக்கின்றார் என்பார்ஒன் றாகக் கூடி
நகைத்துத்துன் புறுத்தியவர் பின்னாற் செல்வார் படைத்தவனின் நேசத்தால் பித்தா னோரைப்
பற்றியறிந் தோருலகில் சிலர தாமே. 106
பணம்சிறிது தருகின்றேன் பெறுக என்றே
பிரியமுடன் கர்ணிதமை ஒருவர் கேட்க இணங்காது மறுத்துரைத்தார் என்தே வைக்காய்
இரண்டு 'திர்ஹம் உண்டென்றே பதிலு ரைக்க உணவுக்காய் எத்தனைநாள் போதும் அஃது
என்றவரை மற்றவருங் கேட்கச் சொல்வார் கணப்பொழுதும் உறுதியிலா தென்றன் வாழ்வின்
கடைப்பொழுதை சொல்லுகபின் சொல்வே னென்றார் 107
36

தாய்க்கென வாழ்ந்த தணயனர்
QXG)"
2
சந்திக்கச் சென்றொருவர் உவைசுல் கர்ணி
தொழுவதுகண் டோர்புறத்தே ஒதுங்கி நின்றார் முந்தியநற் "பஜ்ருடைய வேளை அஃது
முடியுவரை காத்திருந்தார் தொடர்ந்தாற் போல சொந்தநிழல் தன்னுள்ளே அடங்கும் போழ்தும்
தரித்திருந்தார் தொடர்ந்துமவர் தொழுதல் கண்டார் பிந்திவரும் இறுதிஇராத் தெழுகை தொட்டுப்
"பஜ்ரு”பற்றித் தொடர்ந்திடக்கண் டயர்ந்திட் டாரே 108
10. உணவும் உடையும்
பிறருண்டு எஞ்சியதால் எறிந்த வற்றைப்
பொறுக்கியதன் அழுக்ககற்றி உணவாய்க் கொள்வார் புறம்வீசிக் கிடக்கின்ற ஈத்தம் வித்தைப்
பசிக்குணவு தேடவெனச் சேர்த்தே விற்பார் இறையுவக்கா வழிகளிலே எதையும் ஏற்கார்
இருப்பதனைக் கொண்டுமனம் திருப்தி கொள்வார் குறையென்றே எதனையுமே கொள்ளார் கையில்
கிடைப்பதனைத் தருமமெனச் செய்கு வாரே 09
குப்பைமேட்டில் கிடந்தசில உணவுக் காககக்
குனிந்தார்முன் வந்ததொரு குக்கல் தன்முன் குப்பைதனைக் கிளறுகின்ற மனிதர் கண்டே
குரைத்திடவே கர்ணியதை நோக்கிச் சொல்வார் “குப்பையில்உன் பக்கமுள்ள பங்கை நீயுண்
கிடைத்ததனை நானுண்பேன் தூய பாதை எப்போதும் நான்சென்றால் நல்லோன்! அன்றின்
எனைவிடநீ உயர்வாவாய்" எனவு ரைத்தார் 110
37

Page 59
ஜின்னாஹர் ஷரிபுத்தீன்
S.G.39
புசிக்கவொன்று இலாநிலையில் மூன்று நாட்கள்
பசித்திருந்தார் கர்ணியுண்ண உணவு தேடி வசிப்பிடத்தை விட்டுவெளி யேறி னார்செல்
வழியினிலே நாணயங்கள் பலவுங் கண்டார் இச்சையுற்றா ரில்லையவை மீது உண்ண
ஏதுமிலாப் போதினிலும் பசியைப் போக்க பச்சிலையைப் பறித்துண்டார் இறைவன் அன்னார் பசிபோக்க வேறுவழி செய்திட் டானே.
உடையாக இரண்டுகடுந் துணிகள் அன்றி
உவந்ததில்லை கர்ணியவர் உடல்ம றைக்க கிடைத்ததெலாங் கந்தைகளே தூய்மை செய்து கட்டியுடல் மறைந்தேதன் மானங் காப்பார் கடுந்தவத்தின் காரணராய் இருந்தா ரென்றும்
கிழிந்தஉடை தனிலிருப்பார் கிடைத்திட் டாலும் அடையவவர் மனமொப்ப வில்லை அஃதால்
ஆத்மபலம் குன்றிஆசை தோண்று மென்றே
ஒருமுறையோர் நண்பர்உடை தந்தே நீங்கள்
உடுத்தஇதை வேண்டுமென அன்பாய்க் கேட்க விருப்பமின்றி மறுத்துரைத்தார்கள் பிறர்கண் டாலோ
வேண்டுமென்றே பரிகசிப்பர் எனவு ரைத்தார் பெருவிருப்பங் கொண்டவரும் பல்கால் வேண்டப்
பண்பையெண்ணி அதையணிந்தே பள்ளி சென்றார் கருதியவா றாங்குள்ளோர் திருட ரென்றார்
கவல்கொண்டார் தந்தவர்கை தந்திட் டாரே
112
13
38

தாய்க்கென வாழ்ந்த தணயனர்
Oscy
2
உலகாசை மறுத்ததனால் தோற்றந் தன்னில்
ஒழுங்கற்ற நிலைகண்டு சிறுவர் கூடிப் பலவாறு துன்பங்கள் செய்வார் சென்னீர்
பீறுகின்ற வாறுகல்லால் அடிக்க லானார் நிலம்போன்று பொறுமைகொண்ட தாலே அந்த
நாசகரை மன்னித்தே வழிந டப்பார் பலமழிந்து சோர்வுடலில் தோன்றும் போது
பின்வருமா றன்னவரை வேண்டு வாரே 114
சிறுகல்லால் அடியுங்கள் புண்ணுண் டானால்
சிந்துகின்ற குருதியால்என்"உளுவும்” போகும் இறையோனைத் தொழுவதற்கும் இடைஞ்சல் தோன்றும் என்னுடையில் அழுக்கேறும் என்றன் மேனி குறித்தொன்றும் நான்கவலை கொள்ள வில்லை
காலுடைந்தால் நின்றென்னால் தொழுதல் ஆகா அறியாத சிறுவர்களே பெரிய கல்லால்
அடியாதீர்” என்றுமணங் கசிந்தே கேட்பார் 5
உடல்வருந்தும் துன்பங்கள் செய்யும் பேர்க்கும்
உளம்வருந்தப் பரிகசித்தே சிரிக்கும் பேர்க்கும் கடல்போன்ற மனமுடையார் கர்ணி என்றுங்
கடிந்தொன்றும் சொல்லாதே அமைதி யோடு முடிந்தவரை நல்லுன்ரகள் செய்வார் அந்த
மூர்க்கர்கள் திருந்தவென்றே பொறுமை எல்லை கடவாதே தனையுமவர் காத்தார் வல்லோன்
கருணையவர் மீதிருந்து காத்த தன்றோ 16
39

Page 60
ஜின்னாஹர் ஷரிபுத்தினர்
SGS)
g
11. உமர் (ரலி) மீதுகொண்ட அன்பு
உளமொன்றி னார்உமறோ டுவைசுல் கர்ணி
ஒன்றனைய நேசித்தார் உமறும் கூபா வழிவருவோர் அறிந்திடுவார் கர்ணி பற்றி
விசாரித்தே அறிந்திடுவார் அவ்வா றோர்நாள் வளிபாட்டுக் காக"மக்கா"வந்த கூபா
வாசிசொன்ன தகவலவர் வறுமையுற்றே இழிநிலையில் இருக்கின்றார் காண்டோ ரெல்லாம்
இழித்துரைப்பர் நாமுந்தாம் என்ற வாறே 117
செவிகொண்ட சேதியினால் உமறே பாறுக்
சொலவொண்ணா வாறுளமும் நொந்தே சொல்வார் புவியினிலே தோற்றத்தைக் கண்டு நீங்கள்
பரிகசிக்க வேண்டாமே மறுமை நாளில் எவருக்குங் கிடைக்காத பேறு கொண்டோர்
எண்ணிறைந்த மாந்தரவர் பொருட்டால் மேலாம் சுவன்புகுவர் எனநபிகள் கூறிப் போந்தார்
தூதர்தம் வார்த்தைதனை மதிப்பீ ரென்றார்
ஊரடைந்த மனிதருடன் உவைகல் கர்ணி
உறைபதியை அடைந்தெனக்காய் இறைபால் நீங்கள் பேரன்பு கொண்டிறைஞ்ச வேண்டும் என்றே பணிவாகக் கேட்கஅவர் நீரே யன்றோ சீராக "ஹஜ்"முடித்து வந்தீர் நான்செய்
தவறெல்லாம் பொறுத்திடவென் றிறைஞ்சும் என்றே நீர்உமரைக் கண்டீரோ எனவுங் கேட்டார்
நான்கண்டேன்’ எனப்பதிலுங் கொண்டிட் டாரே
118
19
6S93
40

தாய்க்கென வாழ்ந்த தனயனர்
○又○3
3.
கண்டேநான் உமரையெனக் கேட்க உள்ளங்
களிப்படைந்தே சொன்னவர்மீ தன்புங் கொண்டு விண்டவரும் இறைஞ்சிடும்பால் கேட்க அன்னார்
விருப்பத்துக் கிணங்கிஇறை தனையி றைஞ்சி கண்டபடி இனியுமெனைப் பரிக சித்தே
கவலைகொளச் செய்திடநீர் வேண்டாம் கேட்ட உண்மைகளை யாரிடத்தும் உரைக்க வேண்டாம்
உமர்சொன்ன விபரமவை தாமே என்றார் 20
சொர்க்கபதி தனைவிதியாய்க் கொண்டி ருந்தும் தூதர்நபி உமறுஹத்தாப் தம்மை நோக்கி கர்னியிடம் உமக்காக வேண்டு தற்குக்
கூறுமெனப் பணித்திருந்தால் அன்னார் தம்மின் பெருமைதனை எவ்வாறு சொல்வ தாமோ
புரிந்தியுள்ளோர் சிந்தித்தல் வேண்டும் அந்தப் பெருமகனை எண்ணியவர் பொருட்டு நாமும்
பிரார்த்தித்தே இறையருளைப் பெற்றே உய்வோம் 121
12. கர்ணியின் கடைசிக் காலம்
போரிலே பங்குகொண்டு "ஷஹீதா"கின்ற
பாக்கியத்தைப் பெற்றிடுதல் வேண்டு மென்ற பேராவல் கொண்டிருந்தார் அதுபோ லோர்நற்
பாக்கியமுங் கொண்டார்கள் அலியி னோடு போர்கொண்ட உமையாக்கள் தமையெ திர்த்தே
போர்புரிந்தார் போர்க்களத்தில் "ஷஹீ"தாய்ப் போனார் யாரறிவார் அவர்புகழை இந்த மண்ணில்
இறைநேசர் எண்ணம்போல் இறைபாற் சேர்ந்தார் 122
ལྷོ་
6SO3
41

Page 61
ஜின்னாஹர் ஷரிபுத்தினர்
SGSC)
களத்தினிலே "ஷஹீ"தாகிப் போனா ரென்றும்
காயமுற்றுப் பின்சிலநாள் வாழ்ந்தே ஆவி இழந்தார்கள் என்றுமிரு வாறாய்ச் சொல்வார்
எதுஉண்மை இறையன்றி அறிந்தோர் இல்லை இழந்தாலும் உயிரையந்தப் பெருமான் இன்னும்
இறவாத புகழ்கொண்டார் இறைவன் மீதே கழங்கமில்லாப் பக்தியொடு நபிக ளின்பால்
கொண்டஅன்பின் காரணமாய் என்றும் வாழ்வார் 123
13. பிரார்த்தனை
மறுமையிலே முஸ்லிம்கள் தமக்குச் சொர்க்க
மகிமைபெற "ஷபாஅத்துச்" செய்யும் பேற்றை பெறுவார்கள் "அல்கர்ணி" அப்போழ் தென்னைப்
பெற்றவர்க்கும் எனக்கும்என் மனையாள் மக்கள் உறவினர்க்கும் உவந்திதனைப் படிக்கும் பேர்க்கும்
உளம்விரும்பிச் "ஷபா அத்துச்" செய்ய வல்லோன் குறையின்றிப் பேரருளைச் சொரிய வேண்டும்
கோமானின் அன்புகிட்டச் செய்தல் வேண்டும் 124
பிரார்த்தனையே ஈதன்றி வேறொன் றில்லை
படைத்தவனின் பதம்பணிந்த வேண்டு தல்தான் மரித்தபின்னே மண்ணுள்ளும் வேத னைகள்
மாதவத்தாற் பேறுகொண்ட உவைகல் கர்ணி பொருட்டாலே இலாதொழிந்து மறுமை நாளில்
"பிர்தெள"ஸைப் பெறஅன்னார் "ஷபாஆத்"தன்னை உதரித்தாக்க வேண்டுமிறை என்றே நெஞ்சம்
உருகியவன் கருணைக்காய் வேண்டு கின்றேன் 125
s
GSO3
42

தாய்க்கென வாழ்ந்த தணயனர்
OXXO).
பெற்றோரைப் பேணாத பாவத் திற்குப்
பெருநரக நெருப்புண்டாம் அன்னை மீது உற்றவுள அன்பாலே நபியைக் காணும்
உவப்பிருந்துங் காணாத செய்கை தன்னைக் கற்பவர்கள் உணர்ந்திடுதல் கடனே மற்றோர்
கடைப்பிடிக்கச் சொல்லுதலுங் கடனே செய்தால் நற்பேறு பெறலாமே நாமுங்"கர்ணி”
நல்வழியைத் தொடர்ந்தவராய்ச் சிறப்புங் கொள்வோம் 126
ஆண்டவன்மேல் அழியாத பக்தி கொண்டும்
அண்ணல்நபி மீதுயர்ந்த பாசங் கொண்டும் வேண்டுவன ஏதுமின்றி வாழ்ந்தா ரன்று
வரலாறு போற்றும் `உவைஸ்" கர்னி இன்றோ ஆண்டனை அவன்ரசூலை மறந்தே மக்கள்
அவரவர்தம் விருப்பத்திற் கிணங்கி வாழ்தல் காண்பதுகண் கூடன்றோ கர்ணி" வாழ்வைக்
கடைப்பிடித்தே ஒழுகிடுதல் உயர்வாம் அன்றோ 127
தோற்றத்தைக் கொண்டொருவர் தமைஇ கழ்தல்
தவறாகும் அன்னவருள் தேங்கி யுள்ள ஆற்றலினை அல்லாஹ்வே அறிவான் கர்ணி
அணிந்திருந்தார் இருகந்தைத் துணிகள் தானே. போற்றும்வா றுடையணிந்து சிலபேர் வேஷம்
போட்டவராய் மனத்துய்மை அற்றி ருப்பார் ஏற்றமிலாச் செயலாகும் தண்ட னைக்கும்
இடஞ்சேர்க்கும் செயலாமே இழித்து ரைத்தல் 128
நிறைவு
43

Page 62


Page 63
கவிஞரா ஜின்னாத
அல்ஹா செழுமை பாரம்பர் இஸ்லா ஜின்னாலு பாலையில் வசந்தம், முத்துநகை,
காவியம், பனிமலையின் பூபாளம் பசுமை எனும் நாவலுமாகும். விரைவி கொண்ட பண்டார வன்னியன் கா:
தமிழலக்கியத்தில் ஒரு காப்பியங்களைப் பாடியோர் உண்டு காப்பியங்கள் இயற்றியோர் அரித வரிசையில் சேர்கிறார் ஜின்னாஹற். அத் எழுதுவதே மரபு. எனினும் உரை புனித பூமியிலே என்பனவற்றைக் க தந்தையார் நூருல் பனான் 'ஷம்ஷ’ஸ்ஷஆரா' ஜின்னாஹீவு என்றென்றும் பொருத்தமுடைத்த.
"வெண்பா வகவல் விருத்த பண்பாகப் பாடும் திறம்படை நாட்டிற் பெயரும் புகழும் சி ஏட்டிற் குலப்பேர் வரைந்து
~ அல்:
9ى
 

് ഗുമ്
ற் காலத் தமிழிலக் கியவுலகினி றந்த காப்பியங்களை இயற்றும் கத் திகழ்கிறார் வைத்திய கலாநிதி ற் ஷரீபுத்தீன் அவர்கள்.
தனது தந்தையாரான புலவர்மணி ஜ் ஆ. மு. ஷரீபுத்தீன் அவர்களது யையும் கிழக்கிலங்கையின் கவிதா யத்தையும் தன்னகத்தே கொண்டு, மிய நெறி நின்று இலக்கியமியற்றும் ற்வின் இதுவரை வெளிவந்த நால்கள் மஹஜபீன் காவியம், புனித பூமியிலே எனும் கவிதை நால்களும், கருகாத ல் வெளிவரவுள்ளது. 1600 பாக்களைக் வியமாகும்.
காப்பியம் இயற்றியோருண்டு இரு ). ஆனால் மூன்றும் அதற்கு மேலும் ாகவேயுண்டு. அத்தகைய அரியோர் தடன் காப்பிய நால்களுக்கு உரைநால் நூல்களான ஹஸனின் மஹற்ஜமீன், ாவியமாக்கினார் ஜின்னாஹற்.
'ஷரீபுத்தீன் அவர்கள் தமது மகனான க்கு நல்லாசி கூறிய வார்த்தைகள்
ம் பலவகையும் த்து ~ நன்றாக றந்தமைக
r /
ஹாஜ் எஸ். எச். எம். ஜெமீல் - லோசகள், கலாசார அமைச்சு