கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மன நெறியாள்கையும் இறையோகமும்

Page 1

贸 血 있 历 So 丽 函

Page 2

மன நெறியாள்கையும்
இறையோகமும்
திருமதி. இராஜினி. தேவராஜன்

Page 3
தலைப்பு
ஆசிரியர்
விலாசம்
உரிமை
பதிப்பு
அச்சிட்டோர்
விலை
மன நெறியாள்கையும் இறையோகமும்
திருமதி. இராஜினி. தேவராஜன் தொலைபேசி இல. 2364129
திருமதி. ஆர். லோகநாதன் மே/பா இல. 01, விவேகானந்த அவன்யூ, வெள்ளவத்தை
ஆசிரியருக்கே
ஒக்டோபர் 2012
பூரீ டிஜிட்டல் அச்சகம்
bUIT. 120/=

பொருளடக்கம்
சிவ வழிபாடும் சைவசித்தாந்தத்தில் ஒரு நோக்கும்.
ஒவ்வொரு மனிதனின் இலக்கும் இன்பமே.
மெய்ப் பொருள் காண்பதறிவு.
நானே எனக்கு நண்பன் - நானே எனக்கு எதிரி.
வெற்றி என்பது.
மனிதன் என்பவன் தெய்வம் ஆகலாம்.
வரையறையே நிறைவு தரும்.
மீண்டும் பிறவாமை வேண்டில்.
சிறு துளி பெரு வெள்ளம்.

Page 4
afsh LDub
வாழ்த்துரை
“மன நெறியாள்கையும், இறையோகமும்’ எனும் இந்நூல் பயனுள்ள ஒன்பது கட்டுரைகளைத் தன்னகத்தே கொண்டுள்ளது. இதன் ஆசிரியர் திருமதி. இராஜினி தேவராஜன் அவர்கள் ஆன்மிகத் துறையில் ஈடுபாடுடையவர். தான் கற்றபடி இறைவழிபாடு செய்ய வேண்டும் என்னும் தாகம் உடையவர். ஆன்ம விடுதலைதான் இந்த வாழ்வின் நோக்கம் என்பதை நன்குணர்ந்து செயற்படுபவர்.
இந்த நோக்கத்தைப் பூர்த்தி செய்யும் வகையில் தன் அனுபவத்திற் கண்ட பல கருத்துக்களைக் கட்டுரையாக்கம்
ஆன்மிக சஞ்சிகைகளில் மற்றவர்களும் பயன் கொள்ளத்தக்க வகையில் வெளியிட்டுள்ளார்.
தனது ஆக்கங்களில் இருந்து ஒன்பது கட்டுரைகளைத் தொகுத்து நூலாக்கி இப்போது வெளியிடுகின்றார். அவரது நோக்கம் பெயர், புகழ், ஆரவாரம் என்பதை விடுத்து, அமைதியான முறையில் ஆன்மிக ஈடுபாடு கொண்டவர்களுக்கு உதவ வேண்டும் என்பதேயாகும்.
ஆன்மிக தாகங் கொண்டவர்களுக்கும் அதே வேளை ஏனையவர்க்கும் உதவக்கூடி இரு தூய நோக்கங்களைக் கொண்ட இந்நூல் அவர் எதிர் பார்க்கும் பயனைக் கொடுக்க வேண்டும் என இறைவனை வேண்டுவோம்.
கலாபூஷணம், சைவப்புலவர் சு.செல்லத்துரை 27.09.2012

இப்பூவுலகில் கோடிக்கனககான உயிரினங்களை இறைவன் படைத்துள்ளான். மனிதனைத் தவிர்ந்த ஏனைய உயிரினங்கள் எல்லாம் அவ்வவற்றுக்கு வகுக்கப்பட்ட வாழ்க்கை நெறிவழியில் இயங்கிக் கொண்டிருக்கின்றன. அதாவது எவ்வளவு பசியெடுத்தாலும் பசு மாமிசம் உண்ணாது, கரடி புல்லைத் தின்னாது என்பதை நாம் யாவரும் அநுபவரீதியாக அறிவோம்.
மனிதனோ இறைவனால், தேர்ந்து எடுத்து சுதந்திரமாக வாழும் நெறிமுறையை அருளப் பெற்றவன். ஐம்புலன்களின் தூண்டுதலினால் ஆசைக்கு உட்படுகிறான். ஆசை எண்ணங்களை ஏற்படுத்துகின்றது. எண்ணங்களின் வகைக்களுக்கும் பரிமாணங்களுக்கும் ஏற்றவாறு மனம் செயற்பட ஆரம்பிக்கின்றது. மனத்தின் தூண்டுதல் அறிவைத் தடுமாறு வைக்கின்றது.
இந்நிலையில் அறிவின் தேர்ந்தெடுத்தல் எப்படி அமைகின்றதோ, அப்படியே வாழ்க்கையும் அதனாலான விளைவுகளும் தோன்றுகின்றன. நல்ல பயன்தரும் விளைவுகளுக்கு வழிகாட்டுவதே ஆன்மீகம் ஆகும்.
தற்போது ஆன்மீகத்தில் ஈடுபாடு என்பது, எல்லா வயதினரிடத் திலும் அதிகரித்திருப்பதை நாம் காண்கின்றோம். ஆன்மீகத்தில் ஈடுபாடு என்பது நாம் பிறந்து வளர்ந்த சூழல்கள், வாழ்க்கை அநுபவங்கள், முகங்கொடுக்க வேண்டி ஏற்பட்ட இன்னல்கள் துன்பங்கள், அநுபவித்த இறை அனுபவங்கள், சந்தோஷங்கள் மகிமைகள் அல்லது ஏற்பட்ட இழப்புகள் இப்படிப் பல்வேறுபட்ட காரணங்களாலும் அல்லது அவற்றின் ஒன்றினாலும் அல்லது இயல்பாகவே பிராரர்த்த கன்மவிதியாலும் ஏற்படலாம்.
என்னைப் பெற்ற தாய் தந்தையர் இறை பக்தி நிறைந்த ஒழுக்க சீலர்களாய், சமய விழாக்கள், விரத அநுஷ்டானங்களை முறையாகக் கடைப்பிடிப்பவர்களாக இருந்ததினால், சிறு வயதிலிருந்தே இறைபக்தி, நம்பிக்கை நிறைந்தவளாய் வளர்ந்து வந்தேன்.
அத்துடன், மும்மொழியிலும் சம புலமை எழுத்திலும் பேச்சிலும் கொண்டிருந்த மறைந்த என் தந்தையின் ஆற்றல் கூட என்னுள்ளே
- 5 -

Page 5
மறைந்து ஒளிந்து இருந்து இப்போது வெளிப்பட்டிருக்கலாம் என்று நினைக்கின்றேன்.
எனவே, ஆன்மீகக் கட்டுரைகள் அடங்கிய இந்நூலை நான் வெளியிடுவதற்கு முழுமுதற்காரணமாக இருந்த என் பெற்றோர்களுக்கு என் முதற்கண் நன்றியைத் தெரிவிக்கக் கடமைப்பட்டுள்ளேன்.
யான் கற்று, அறிந்தவற்றை யாவரும் அறிய வேண்டும் என்ற அவாவில் எனது குருமார்களான பகவான் பூரீ சத்திய சாயி பாபா சுவாமிஜி, சுவாமி கிருஷ்ணாத்மாந்தஜி, சுவாமி தர்ஷன்ஜி, சுவாமி சிவயோகானந்தாஜி, சுவாமி பார்த்தசாரதியின் சிரேஷ்ட சீடரான திருமதி. உமையாள்ஜி, சொல்வேந்தர் சுகி சிவம், சைவப்புலவர் திரு. செல்லத்துரை ஐயா ஆகியோரிடம் கற்று அறிந்து பயன் பெற்ற அறிவுரைகளையும், உபதேசங்களையும் கட்டுரையாக வெளியிட்டு இன்று, ‘மன நெறியாள்கையும் இறையோகமும்’ என்ற தலைப்பில் ஒரு நூலாகத் தொகுத்துள்ளேன்.
பத்திரிகைகளுக்கு எழுதிக் கொண்டிருந்த என்னை, யாழ்ப்பாணம் சைவபரிபாலன சபையினால் வெளியிடப்படும் “இந்து சாதனம்’ மாதாந்த இதழுக்கு அறிமுகம் செய்த எனது நண்பி திருமதி. வசந்தி. தயாபரன் அவர்களுக்கும், மிகுந்த ஊக்கமளித்து எனது கட்டுரைகளுக்கு வரவேற்பு அளித்த மறைந்த திரு. நயினைநடராசா. “இந்து சாதனம்’ துணை ஆசிரியர் அவர்களுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். அத்துடன், பிரபல எழுத்தாளர் சமய, இலக்கிய ஆய்வாளர் திரு. கே. சிவகுமாரன் அவர்கள் “உங்கள் கட்டுரைகளை ஒரு நூலாகத் தொகுக்கலாமே” என்ற அவரது கருணை மிகு கூற்றினால் எனது வாழ்க்கையில் ஒரு பெரும் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளார் என்று கூறிக்கொள்வதுடன் அவருக்கு மதிப்புக்குரிய நன்றியைத் தெரிவிப்பதில் பெருமகிழ்ச்சி அடைகின்றேன்.
எனது ஆன்மீக ஈடுபாடுகளுக்கு தடையேதுமின்றி ஒத்தாசை வழங்கிய என் கணவருக்கும், புதல் வர்களுக்கும் என்றும் கடமைப்பட்டுள்ளேன்.
இறைபக்தி நிறைந்தவராய், அன்பு, நேர்மை, சத்தியம்
தவறாதவராய் உதாரண புருஷராய் வாழ்ந்து, அன்றும் இன்றும், என்றும் நிழலாய் நின்று எம்மை வழி நடத்திக் கொண்டிருக்கும்,
- 6 -

தனக்கென வாழாது பிறர்க்கென வாழ்ந்த அந்தப் ‘புண்ணிய ஆத்மா” ‘மறைந்த என் தந்தைக்கு இந்நூல் சமர்ப்பணம்.
எழுதும் எழுத்தும் இறைவன், எழுது கோலும் இறைவன் என்று நம்பி, கை வைத்து, நம்பிக்கை வைத்து யான் தொகுத்துள்ள எனது குருமார்களின் உரைகளின் தொகுப்பு, எமது எண்ணங்களின் ஒட்டமான மனதை நல்வழியில் நெறிப்படுத்தி, யோக முறைகளைச் செவ்வனே கடைப்பிடித்து ஈடேற்றமடைய பயன் தரும் என்ற நம்பிக்கையுடன் இந்நூலை வெளியிடுவதில் பங்கு கொண்ட அனைவருக்கும், வாழ்த்துரை வழங்கிய சைவப்புலவர் திரு. சு. செல்லத்துரை ஐயா அவர்களுக்கும் நன்றி கூறிக் கொள்வது எனது கடமையாகும்.
திருமதி இராஜினி. தேவராஜன்
27.09.2012.

Page 6
சிவ வழிபாடும் சைவசித்தாந்தத்தில் ஒரு நோக்கும்
சிவன் உலக முதல்வன் என்னும் நிலையைச் சர்வபாவங்களி னாலும் பரிபூரணமாகத் தழுவிக் கொண்டு விளங்குவது, விளக்குவது சைவ சித்தாந்தம். தான் நிமித்த காரணமாயிருந்து சக்தியைத் துணைக் கொண்டு முதற்காரணமாகிய மாயையிலிருந்து உலகைத் தோற்றுதல், ஐந்தொழிலியற்றி உயிர்களை ஈடேற்றுதல் முதலான பெருங் கைங்கரியங்களிற் போல, சாதாரணமாக உயிருக்கு உணர்வூட்டி வினை செய்வித்தல், வினைப் பலனைக் கொடுத்தல், அநுபவிப்பித்தல் முதலாயினவும் சிவன் தான் செய்யுந் தொழில்கள் என்பது சைவசித்தாந்தத்தின் நிலை ஆகும்.
அறிந்தோ, அறியாமலோ செய்யும் ஒவ்வொரு செயலுக்கும் பலன் என ஒன்று நிச்சயம் உண்டு. வினைப்பயன்கள் பிறப்புகளினுடே சென்று இன்ப, துன்பங்களை அநுபவிக்கச் செய்கின்றன. “வினை’ என்பது தன்னியக்க சாதனமாகிய அறிவுணர்வற்ற சடம். அது தானாக தன்னைச் செய்தவரை சென்றடையுமென்று கூற இடமில்லை. “உயிர்” தானாகத் தெரிந்து தேடித் தன் வினைப்பலனை அடையும் என்று சொல்வதற்கும் இடமில்லை. அத்துடன் உயிர் தன்வினைப் பயனைத் தான் தேடி எடுப்பதாயின், நிச்சயம் துன்பப் பலனை எடுத்துக் கொள்ளாது என்பதை ஆட்சேபிப்பதற்கும் ஏது இல்லை. ஆகவே செய்யப்பட்ட வினையுஞ் செய்தவனுமல்லாத மற்றொரு கர்த்தாவால் வினைப்பலன் அநுபவத்துக்கு வருகிறது, என்ற கருத்து வலிவுறுகிறது. ஆதலால், வினையும், வினையைச் செய்தவனையும், அவ்வினை அநுபவத்துக்குரிய சந்தர்ப்ப சூழ்நிலைகளையும் அறிபவராக, என்றும் எல்லாம் அறிபவரான சிவனே வினைப்பலன்களைக் கொடுப்பவர் என்ற கருத்து உறுதியாக ஒப்புக் கொள்ளப்படுகின்றது.
இப்பொறுப்பைத் தான் மேற்கொள்ளும் அவசியம் யாதெனில், இயல்பாகவே இறைவனுக்கு உயிர்களிடத்தில் உள்ள கருணையாகும். இக்கருணையானது உயிர்களை மல பந்தத்திலிருந்து விடுவிக்கும் ஒரே காரணத்தினாலானதாகும். எனவே, துன்புற வைப்பதாகிய நிக்கிரகமும் கருணையோ எனக் கேட்கலாம். ஆம்.
- 8 -

அது மறைமுகமான கருணை. எங்ங்னமெனில், அவரவர் செய்த அக்கிரமமான தீவினைப் பலனாக உரிய உரிய தண்டனைகளைக் கொடுத்து, தம் தவறுகளைத் தாம் உணர வைத்து, அதன் மூலம் அச்சம் தோன்றப் பண்ணி, ‘இனிமேல் இன்னஇன்ன முறையில் நற்கருமங்களையே செய்’ என அறிவுறுத்தி, இறைவன் படிப்படியாக மல பந்தத்திலிருந்து உயிர்களை விடுவித்து ஈடேற்றம் அடையச் செய்கின்றான். இது சைவ சித்தாந்தின் “நன்னோக்கு உண்மை இயல்பு’க்கு ஒரு எடுத்துக்காட்டாகும். இதனையே “எல்லாம் நன்மைக்கே” என்பார்கள். பிள்ளைகளை நல்வழிப்படுத்தும் நோக்கிற் பெற்றோர் வழங்கும் தண்டனை போல் ஆகும்.
இறைவனால் வேதமூலம் விதிக்கப்பட்டு சான்றோரால் உபதேசிக்கப்பட்டவையான ஒழுக்கம், அன்பு, அருள், ஆகாரம், உபசாரம், உறவு, சீலம் என்ற நற்பண்புகளைத் தழுவி வாழ்தலும், இப் பண்புகளில் வழுவாது நின்று செய்யுந் தானம், தவம் முதலாய செயல்களும் அறங்கள் - புண்ணியங்கள் ஆகும். இறைவனின் பரிபூரண மகிழ்வுக்குரிய இச் செயல்களுக்கு இறைவன் இரங்குகிறான். இவற்றின் மறுதலைப் பண்புகளைத் தழுவி வாழும் வாழ்க்கையும், அச் சூழ்நிலையில் நிகழும் தானம், தவம் உட்பட்ட எல்லாச் செயல்களும் பாவம் ஆகும்.
முழுமுதலான சிவனை நோக்கி நிகழும் வழிபாடே வழிபாடாவது. அவரவர் தத்தம் கால, தேச, வியவஹார வேறுபாடுகளைப் பொறுத்து அமையும் கன்மச் சூழ்நிலைக்கேற்ப அவ்வப்போதைக்கு அவரவர்க்குப் பொருத்தமான வெவ்வேறு தெய்வங்களை வழிபடுகிறார்கள். அவரவர் தகுதியைப் பொறுத்த அளவில் முற்கூறப்பட்ட அறிவாசார அடிப்படையில் நற்பண்புகளைத் தழுவி ஆற்றும் வழிபாடாக அமையின், முழுமுதல்வனாகிய சிவனே அத்தெய்வங்கள் மூலம், அவரவர் வழிபாட்டுக்குரிய பலன்களை கிடைக்க அருளுகின்றார். அனைத்து ஏனைய தெய்வங்களும் அவன் ஆணையின் வழி நிற்பதே.
எனவே, உண்மையான சிவபக்தியுடன் செய்யும் செயல்கள் சிலவேளை செயலளவில் பாபமாய்த் தோன்றினாலும், யதார்த்தத்தில் புண்ணியமாம். அதற்கு எதிராக சிவபக்தி இல்லாமல் செய்யும் செயல்கள் சிலவேளை புண்ணியமாகத் தோன்றினாலும் அவை LJT6LDITLD.
- 9 -

Page 7
சண்டீசரால் நிகழ்ந்த தந்தை கொலை செயலளவில் பாபமாயிருந்தும் அது அவர் இறையன்பில் ஈடுபட்டிருந்து நிகழ்ந்த சிவபூசை உத்வேகத்தில் நிகழ்ந்தது என்ற வகையில் புண்ணியம் ஆனதும், வேதவிதிப்படி தக்கனியற்றிய யாகம் செயல் தன்மை மட்டிற் புண்ணியமாயிருந்தும் சிவநிந்தனை அடிப்படையில் நிகழ்ந்தது ஆகையால் பாவமாக ஆனதும் பிரசித்தமான உதாரணங்கள் ஆகும்.
சண்டீசரர் பெற்ற பலன் ஆத்மிக உலகில் அதியுயர் மதிப்பும், தக்கன் பெற்ற பலன் அகவுலகில் மட்டுமன்றிப் புறவுலகிலேயே பொல்லாத அவமதிப்பும் பெற்றமை அறிந்ததே.
ஒழுக்கம் முதலாயன யதார்த்த நிலை பெறுவதும், ஸ்திரத்தன்மையுறுவதம் சம்பந்தப் பட்டோரிடத்தில் இறைவழிபாட்டு உறுதி இருத்தலைப் பொறுத்தே அமையும் என்ற நோக்கு சைவ சித்தாந்தத்திற்கே சிறப்பாய் உள்ளது.
பஞ்ச மலக் கட்டாகிய உடலைத் தாங்கி வினை களையியற்றி இன்பதுன்பங்களை அநுபவித்துக் கொண்டிருத்தல் வாழ்க்கைப் பண்பாகிறது. இந்த அநுபவத்தோடு இங்கு ஒன்றுமே நிலையில்லை என்ற இரகசியமும் ஒருங்கே உணர்ந்தும் உணராதது போல் ஓடிக் கொண்டிருக்கிறது. இளமை, இன்பம், செல்வம் என இப்படியே உயிர்க்கு ஆதாராமாக இருக்கும் உடம்பே நிலையில்லாதது அழிந்து போகும் என்பது தென்படுகிறது. இவ்வாறு அழிவுடல் தாங்கிக் கொண்டிருக்கும் உயிர்க்கு, அறுதியான உறுதியான பலன் ஒன்று ஏற்படுவதற்கு, மனிதனானவன் அதற்குரிய மார்க்கத்தில் நடையிட்டு பின்பற்றி உய்ய வேண்டியது அவனது தலையாய கடனாகும்.
இவ்வுடம்பு கருவிலும் அழியும், கருமுற்றி வெளி வருந் தருணத்திலும் அழியும். இளமைப் பருவத்திலும் அழியும். நரைதிரை மூப்புக் கண்டும் அழியும். அழிவு எந்நிலையிலும் நிச்சயம். இவ்வுடலில் இருந்து கொண்டு உயிர் பெறும் இன்ப அநுபவங்கள் நிலையானவை அல்ல. நிறைவானது மல்ல. அது அடிக்கடி துன்பத்தினால் குறுக்கீடு அடையும்.
பிறப்புக்களில் மனிதப் பிறப்பு அருமையானது. எல்லாப் பிறப்பும் பிறந்து இழைத்து மனிதப் பிறப்பில் வருதல், கடலைக் கையால் நீந்திக் கரையேறல் போன்ற ஓர் காரியமாகும்.
- 10 -

வேதாகம வழக்கு இல்லாத நாடுகளில் பிறவாமல் தப்பிக் கொள்வதும், தவ ஒழுக்கம் மிக்க சாதியில் தோன்றி சிவ சமய நெறிப்பட்டிருத்தலும், வாழ்க்கை வாழ்வதற்கே என்ற லெளகீக மயக்கத்தை விட்டிருத்தலும், எந்நிலையிலும் தெய்வீக மேன்மைக்குத் தாழ்ந்து கொடுக்கும் "பணிவு” என்னும் பண்பு கைவரப் பெற்றிருத்தலும் புண்ணியப் பேறாம். அதிலும், சிவஞான விளக்கம் பெற்றுச் சிவனை அறிந்து பூஜிப்பவரே அவனருளைத் தவறாது பெற்றுக் கொள்வோராவர்.
மனம், வாக்கு, காயம் மூன்றினாலும் சிவன் பணி புரிவதற்கே இந்த மனிதப் பிறவி கொடுக்கப்பட்டது. பணிகளிற் பெரும்பணி சிவ பூஜைப்பணி. இதனருமையை உணர்ந்து தேவர்கள் கூட மானுட உருவில் தோன்றிச் சிவ பூஜைப் பணி செய்துள்ள வரலாறுகள் பல உள்ளன. ஆதலால் அனைவரும் சிவ பூஜைப் பணியில் நிலைநின்று, சிவனைப் பூஜித்து வணங்குங்கள். அவன் உங்களைத் தேவர்களும் வணங்கத்தக்க உயர் சிவ லோக பதவியில் வைப்பான்.
"உடம்பினை முன்னம் இழுக்கென்றிருந்தேன் உடம்பின் உள்ளே உறுபொருள் கண்டேன் உடம்பினுள் உத்தமன் கோயில் கொண்டானென்று உடம்பினை யானிருந் தோம்பு கின்றேனே’
- திருமந்திரம் உடல் ஐம்பொறிகளையும் தாங்கியுள்ளது. எனவே, உடல் தான் அறிவது எனக் கூற முடியாது. உடல் தான் அறிவதாயின் பிரேத நிலையிலும் ஒருவருக்கு அறிவு நிகழ வேண்டும். அப்படியல்லவே. பிராணன் நீங்காதிருந்தால் உடல் அறிந்திருக்கும் என்று நினைத்தால் உறங்கும் வேளையில் உடல் ஐம்பொறிகளால் அறிய வேண்டுமே. ஆதலால் உடலும் உயிரல்ல. பிராணனும் உயிரல்ல. பிராணனைப் போன்று சடமல்லதாய்ச் சித்தானதாயும் உள்ள மற்றொரு பொருள் உள்ளது. அதுவே உயிர். விழிப்பு நிலையில் அறிவு நிகழ்கையில், ஒரு பொறி இன்னொரு பொறியை அறியாதிருக்கிறது. எனவே, எல்லாவற்றுக்கும் வேறாகவும், இவற்றின் இயக்கத்துக்குத் தான் காரணமாகவும் உள்ள சித்துப்பொருள் "உயிர்” ஆகும். என அருணந்தி சிவாசாரியார் நிறுவியுள்ளார்.
"தீதும் நன்றும் பிறர் தர வாரா” நல்வினை தீவினை என்ற இரண்டும் “கன்மம்” என்ற பதத்தில்
- 11 -

Page 8
அடங்கும். ஒரு செயல் செயற்படும் போது அது நல்வினை ஆகவோ தீவினை ஆகவோ இருக்கும். அந்நிலையில் அது “ஆகாமிய கன்மம்’ எனப்படும். அதாவது அதற்குரிய பலனை அனுபவிக்கவுள்ளது. செயல்கள் அப்போதே அழிந்துவிட்டாலும், வினைக்கேற்ப பாப, புண்ணியங்கள் செய்பவரின் புத்தியோடொட்டி, அவருக்குமே தோன்றாதிருக்கும். அந்நிலையில் அது "சஞ்சித கன்மம்” எனப்படும். சஞ்சிதம் என்றால் தொகுத்துக் கிடப்பது எனப்பொருள். இத் தொகையில் உயிரின் நிலைக்கு ஏற்ப குறிப்பிட்ட ஒரு தொகுதி ஒரு பிறப்பில் அநுபவத்துக்கு வரும். இந்நிலையில் புண்ணிய, பாப செயல்களுக்கேற்ப ஏற்படும். இன்ப, துன்ப அநுபவங்களின் தொகுப்பு “ப்ராரர்த்த கன்மம்” எனப்படும். முன் எப்பவோ செய்த தீவினையால் சஞ்சிதமாக உள்ள பாபம், பிறப்பெடுத்து தண்டனைக்குரிய துன்பத்தை அநுபவிக்க வேண்டிய பொழுது அதற்காக ஒரு குற்றத்திலீடுபட்டே அதை பெற வேண்டும். தாவரம், விலங்கு, பறவை, ஊர்வன, நீர்வாழ்வன, தேவர், மனிதர் என்ற ஏழு வகைப் பிறப்பு வளாகத்துள் எண்பத்து நான்கு லட்சம் யோனி பேதமும் உண்டு. எந்த உயிரும் எந்த வகைப் பிறப்பிலும் எல்லா வகை யோனியிலும் மாறி, மாறிப் பிறப்பெய்தும் என்பது சைவசித்தாந்த உண்மை. எனவே, அருவமான சூக்கும தேகம், ஸ்தூல தேகங்கள் பல தோற்றுவதற்கேற்ற சக்தியுள்ளதாக மஹா சங்கார காலம் வரை அழியாததாயிருக்கும் வகையில் அதன் பண்புகள் பேணப்பட்டிருக்கும். சிவன் எல்லா நிலைகளிலுஞ் சக்தியும் தானுமாய் நின்று வெவ்வேறு வடிவுகளும் பெயர்களும் தாங்கிச் சுத்த மாயையிலுள்ள தத்துவங்களைச் சார்ந்து நின்றவாறே அசுத்த மாயைத் தத்துவங்களை இயக்கி, அவற்றின் மூலம் பிரகிருதி மாயைத் தத்துவங்களையும் தொழிற்படுத்துவதால், ஆன்மாக்கள் தநுகரண புவன போகங்களைப் பெறுகின்றன. அந்நிலையில் வினைகள் மூலம் இன்ப துன்பப் பலன்களை அநுபவிக்கின்றன. கால அடைவில் பிரபஞ்சப் பற்று ஒழியும் சூழ்நிலை உயிர்களுக்கு ஏற்படும் நிலையில் மல நீக்கம் பெறுகின்றன.
உயிருக்கு இப்பேறு விளையும் வகையில் சிவமும் சக்தியும்
எவ்வளவுதான் செறிவாய் அவற்றுடன் ஈடுபட்டிருந்த போதிலும், அவற்றின் தன்மைகளில் தோய்வதோ, பாதிக்கப்படுவதோ இல்லை.
ஆதாரம் : சிவஞானசித்தியார் - 12 -

ஒவ்வொரு மனிதனின் இலக்கும் இன்பமே
சந்தோஷம், சந்தோஷம் இல்லாது வாழ்க்கையில் ஏது பலன்?
மனித வாழ்வு அநுபவங்களினாலான ஒரு தொடர் ஆகும். மனிதரில் ஒரு சாரார் லெளகீக வாழ்க்கையில் இன்பத்தில் மூழ்கியிருப்போர் ஆனால், மன அழுத்தத்தின் மிகுதியால் தவிப் போராகவும், மற்றைய சாரார் சாதாரண எளிமையான வாழ்க்கையில் மிகுந்த மன அமைதியுடனும் காணப்படுகின்றனர்.
மனிதரில் உணர்ச்சித் ததும்பலே பலவீனமாக வெளிப்படுகின்றன. உணர்ச்சி வெளிப்பாட்டினை தத்தமது பலமாக (Strength), மாற்றிக் கொள்ள வழி வகுப்பதே வேதாந்தம் என்னும் விஞ்ஞானம் ஆகும். படைப்புக்களில் மனிதன் மட்டுமே தான் விரும்பிய பாஜஇதர்ந்து எடுத்து வாழும் சக்தி படைத்தவனாக இருக்கின்றான். படைப்புகள் அனைத்தும் தத்தமக்கு முன்கூட்டியே அமைத்துக் கொடுக்கப்பட்ட விதி முறையிலேயே வாழ நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளன. மனம், புத்தி இவை இரண்டில் எதனைக் கொண்டு தீர்மானிக்கிறோம் என்பதிலேயே, எமது வெளிப்புறச் செயல்களின் ஆற்றலும் அவற்றின் பலன்களும் தங்கியிருக்கின்றன.
மனிதன் உடல், மனம், புத்தி என்னும் மூன்று காரணங்களால் ஆக்கப்பட்டவன். வேதாந்தம் உடலாலும், மனதாலும், புத்தியாலும் முறையான பாதையில் மனிதன் வாழுவதற்கு வழிகாட்டுகின்றது. பிரம்மம் தனித்திருக்கும் போது பரம்பிரம்மம் அது மாயையுடன் சேரும் போது சிருஷ்டி ஆகிறது. மாயை சத்வ, ரஜஸ், தமஸ் என்னும் முக்குணங்களை உடையது. காரணத்தின் குணங்கள் காரியத்தில் வெளிப்படுகின்றன. பிரம்மம் மாயையுடன் சேர்ந்து ஈஸ்வரனாக பஞ்சபூதங்களைத் தோற்றுவித்தார். ஆதியில் தோன்றியது ஆகாயம். ஆகாயத்திலிருந்து வாயு, வாயவிலிருந்து அக்னி, அக்னியிலிருந்து நீர், நீரிலிருந்து மண் தோன்றின. மாயையின் முக்குணங்கள் அதனாலான பஞ்சபூதங்களில் பிரதிபலித்தன. பஞ்ச பூதங்களிலிருந்து தோன்றிய சத்வ அம்சங்கள் முறையே காது, தோல், கண், நாக்கு,
- 13 -

Page 9
மூக்கு என்ற ஐந்து ஞான இந்திரியங்கள் ஆகும். சாத்வீக அம்சங்கள் ஒன்றாகும் போது மனோ, புத்தி, சித்தம், அகங்காரம் என்ற நான்கு அந்தக் கரணங்கள் தோன்றி, உடலினுள்ளே இருந்து செயற்படுகினறன. ரஜோ குணங்களினால் தோன்றிய வாக்கு, கை, கால், கருவாய், வெருவாய் என்ற கர்ம இந்திரியங்க்ளின் இயைந்த தொழிற்பாட்டால் பிராண, அபான, சமான, உதான, வியான என்ற ஐந்து பிராணங்கள் உண்டாயின. தமோ குணமானது, சூசுஷ்”ம குணங்களால் ஸ்தூல நிலையை உருவாக்கும் குணமாகும். இத் தொழிற்பாடு பஞ்சீகரணம் எனப்படும்.
இந்த 24 த்துவங்களும் அடங்கிய மனிதன் என்ற அற்புதப் படைப்பை உருவாக்கியவர் ஈஸ்வரர்.
மாயையின் பெரும் தேவை காமினி (Women) காஞ்சனி (Comforts), கீர்த்தி (Fame) ஆகும். ஒருவன் துர்க்குணங்களாலும், தகாத செயல்களாலும் தன் உடலுக்கும் மனதுக்கும் இன்பத்தை தேடிக் கொள்ளலாம். ஆனால், அந்த நிரந்தரமற்ற தீய விளைவுகளை ஏற்படுத்தக் கூடிய இன்பத்தை நாடாது, அப் பழக்க வழக்கங்களை விலக்கி விடுவது சிறந்ததாகும்.
24 தத்துவங்களையும் கடந்து மாயையிலிருந்து விடுபட்டு உள்ளிருக்கும் பரம்பொருளை அறிந்தவன், வாழ்ந்து கொண்டிருக்கும் போதே ஜீவன் முக்தன் ஆகிறான். ஆத்மாவை அறிந்தால், இறைவனை அறிகிறாய்.
பக்தி, பரவசம், தர்மம், ஜீவகாருண்யம் என்ற மனித குணங்கள் இருக்கும் போதுதான், வேதாந்தம் உள்வாங்கப்பட்டு, சரியான முறையில் ஞானம் பெற முடியும். அப்போது தான் நிலையான இன்பமான பேரின்பத்தை அடைய முடியும்.
ஒரு குழந்தை பிறந்து ஏறத்தாழ 25 வயதுக்கு பின்பே தனித்து நின்று செயலாற்ற ஆரம்பிக்கிறது. ஆனால், ஒரு மிருகம் ஈன்ற பொழுதின் சில மணி நேரங்களிலேயே சுயமாக ஓடி, ஆடிப்பின் இரைதேடி மீண்டும் தன் தாயின் இருப்பிடத்தை வந்து அடைகின்றது.
- 14

பாடசாலையில் நாம் கற்பிக்கப்பட்ட பாடவிதானத்துக்கமைய தயார் செய்யப்பட்ட (சோதனை) பரீட்சைக்கு முகம் கொடுக்கிறோம். ஆனால், நம் அன்றாட வாழக்கையில் சோதனைக்கு உட்பட்டு பின் அதன் மூலம் கற்றுத் தெளிவு அடைகிறோம்.
நாம் வாழ்க்கைக்கு முகம் கொடுத்து, வாழக்கையை அமைத்துக் கொள்ள பயில வேண்டும். ஒவ்வொரு மனிதனிலிருந்தும் எதிர்பார்க்கப்படுவது மனிதத் தன்மையே.
மனிதன் பகுதியை முழுமையென்றும், முழுமையைப் பகுதியென்றும் மாறாகக் கடைப்பிடிப்பதால், வாழ்க்கையின் சவால்களுக்கு முகம் கொடுக்கவோ வெற்றியடையவோ முடியாது அல்லற்படுகிறான். உதாரணமாக ஒரு குறிப்பிட்ட துறையில் பட்டப்படிப்பினை தனது இலக்காகக் கொண்ட ஒருவன், அலுவலக நேரத்தில் தனது கடமையில் அதிசிறந்த ஆற்றலின் வெளிப்பாட்டால் உயர்ந்த மனத்திருப்தியைக் காணலாம். ஆனால், ஏனைய நேரத்தில் தான் முகம் கொடுக்க வேண்டியுள்ள பல்வேறுபட்ட சமூக, குடும்ப பிரச்சனைகளை சமாளிக்கும் திறனற்றவனாக அல்லற்படுவதைக் காண்கிறோம். தனது உத்தியோகக் கல்வியை முழுமையாக நினைத்து, மிகுதியை பகுதியாக நினைத்ததினாலேயே இந்நிலை ஏற்படுகிறது.
ஒவ்வொருவரும் செயலாற்றுவது மனத்திருப்திக்காகவே என நாம் அறிவோம். அதாவது ஒவ்வொருவரது இலக்கும் இன்பமே. ஒரு தற்கொலையை புரிபவனும், தன் துன்பத்தில் இருந்து விடுபடுவதற்காக அல்லது தன் இன்பத்துக்காகவே செயற்படுகின்றான் என்பதை உணர்ந்து கொள்ளும் போது, அவனது இலக்கும் அந்நேரத்தில் இன்பமே ஆகும். நிரந்தர இன்பத்தை எங்ங்ணம் வழி வகுத்துக் கொள்ளலாம் என வேதாந்தம் கூறுகிறது.
அன்பு, இரக்கம், ஈகை போன்ற வழிகளால் நாம் பரிபூரண மனத்திருப்தி அடைய முடியும். அன்பு என்பது எந்த ஒருவருடனும், சமுதாயத்துடனும், பரந்த சாகித்தியத்துடனும் 'ஒன்று' (Oneness) என்ற ஒருமைப்பாட்டு உணர்ச்சியுடன் வாழ்வது ஆகும். நாம் எல்லா ஜீவராசிகளிடத்தும், எம்மைப் போலவே நேசித்து அன்பை சொரியும்
- 15 -

Page 10
போது மிகுந்த மனத்திருப்தியும் பூரணத்துவமும் எமக்கு கிடைக்கிறது.
ஒருவரது உள்ளுணர்ச்சித் ததும்பலின் பலமே (Strength) இரக்கமாக வெளிப்படுகிறது. உயர்ந்ததும், மென்மையானதுமான உணர்வுகளான இரக்க உணர்ச்சி, அறிவு பூர்வமாகக் கையாளப்படும் போது பலம் தோற்றுவிக்கப்படுகிறது. இரக்கம் ஒரு ஆன்மீக வாதியின் இன்றியமையாத இயல்பு ஆகும். ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கைக் கோட்பாடு "கொடுப்பதுவே அன்றி எடுப்பதாக அமையக்கூடாது. கல்விச் செல்வமாக இருந்தாலென்ன, பொருட்செல்வமாக இருந்தாலென்ன எம்மிடம் இருப்பதை மற்றவர்களுக்கு பகிர்ந்து வாழும் போது, கொடுக்க கொடுக்க மனதின் செல்வச் செழிப்பு அதிகரித்துக் கொண்டே போகிறது. அடுத்தவரிடத்தில் அன்பு காட்டி இரங்கும் போது, அனைத்து பிரச்சனைகளும் தீர்த்து பூரணத்துவம் அடையும் ஒவ்வொரு பிரஜையும் ஒற்றுமையையும், நாட்டிற்கே ஒரு மேம்பாட்டையும் தோற்றுவிக்கிறான்.
ஈகை என்பது கொடை, அது ஒரு தனிப்பட்டவருக்கோ அன்றி ஒரு கூட்டுத்தாபனத்துக்காகவோ இருக்கலாம். கொடுக்கும் போது குறித்த நேரத்தில் அத்தியாவசியமானதை பெறுவர் மனம் திருப்தி அடையுமாறு கொடுத்தல் வேண்டும்.
நாம் வாழ்க்கையில் நிரந்தர இன்பத்தை அடைய வேண்டுமாயின் உயர்ந்ததும், உறுதியானதுமான ஒரு இலக்கை நாம் அமைத்து, அதை நோக்கிச் செயற்பட வேண்டும். இலக்கு எவ்வளவு உயர்ந்ததோ அவ்வளவு பிரதிபலனும், மனத் திருப்தியும் நிச்சயம் ஈட்ட முடியும். இன்பத்துக்கும், துன்பத்துக்கும் ஒருவனது மனமே காரணமாகிறது. மனம் என்பது எண்ணங்களின் ஓட்டமாகும். வெளிப்புறச் சூழலுக்கமைய, பிரச்சனைகளுக்கு ஏற்றவாறு மனதை சரிப்படுத்திக் கொள்ளும் உயர்ந்தும், ஆழமானதுமான ஆற்றலை ஒருவன் எய்தினால் மனம் அமைதியாக இருக்கும். நிரந்தர இன்பம் கிடைக்கப்பெறும்.
எல்லாவற்றிலும் மேலானதும் பரிபூரணமானதுமான அளப்பரிய செல்வம், எமக்குள் உள்நிளைத்திருக்கும் பரம்பொருளே என்பதை அறியாத மனிதன், கோயில்களுக்குச் சென்று இறைவனைத் தேடுவதும், வேண்டுதல்களை செய்வதுமாக தன் காலத்தைக் கழிக்கிறான்.
- 16

மனம், சொல், செயல் ஆகிய மூன்று காரணங்களாலும் அடுத்தவனின் நன்மையையும், இன்பத்தையும் எப்பொழுதும் கருத்திற் கொண்டு வாழ்வதால் உயர்ந்த மனநிறைவும், மகிழ்ச்சியும் அடையலாம் என்பது திண்ணம்.
நிரந்தர மன அமைதி அடைந்தவன் உள்நிறைந்த இறைவனை அநுபவத்தால் உணர்கிறான். நிரந்தர இன்பம் அடைகின்றான்.
“அனைத்தும் ஒன்று என உணர்ந்திடுவாய் செல்வம் அனைத்தும் பகிர்ந்திடுவாய் உண்மை இன்பம் உள்நிறைந்த - பரம்பொருள் என்பதை அறிந்திடுவாய்”
முற்றும்
- இராஜினி. தேவராஜன்
- 17

Page 11
மெய்ய்பொருள் காண்பது அறிவு
absT6IOLb (Time), uJbg5G6J6î (Space) absTJ600T (Élab6f (Causation) முதலியவற்றின் வெளிப்பாடே இப் பூவுலகம் ஆகும். இது இரவு பகல், சூடுகுளிர், இன்பம் துன்பம், இருள் ஒளி போன்ற இருமைகளாலானது.
இவை யாவற்றுக்கும் மேலான ஒரேயொரு அதியுயர்ந்த மெய்ப்பொருள் ஒன்று உள்ளது. எமது அறியாமையின் காரணத்தால் நாம் இதை உணருவதில்லை. இந்த அதியுயர் பரம்பொருளே ஒவ்வொரு ஜீவஜடத்துள்ளும் நிரம்பி இருக்கின்றது.
"மெய்ப் பொருள் காண்பது அறிவு
இந்த அறிவை நாம் எவ்வளவுக்குப் பெறுகின்றோமோ அவ்வளவுக்கு எமது அறியாமை நீங்கப் பெறுகின்றது. அந்த அளவிற்கு சாந்தியும் சந்தோஷமும் கிடைக்கப் பெறுகின்றது.
ஒருவன் தனது செயற்பாடுகளை உடல், மனம், புத்தி ஆகிய மூன்று வழிகளிலும் சீராக நடைமுறைப்படுத்திக் கொள்ள வேண்டும். நிறைவேறாத விருப்புகள், எண்ணங்களின் காரணத்தால் நாம் பிறப்பு எடுக்கின்றோம். இவை நிறைவேறும் வரை பிறப்புகளை எடுத்துக் கொண்டே செல்லும் போது, மேலும் ஆசைகளுக்கு இடம் கொடுத்து உலகிற்கு அடிமை ஆகிறோம்.
உள்நிறைந்த பரமாத்மாவை (SELF) அறிந்து, அதை அறிந்து ஒன்றுபடுவதற்கு, நான் இந்த உடல், மனம், புத்தி என்ற எண்ணத்தை சிறிது சிறிதாக விலக்கிக் கொண்டே செல்ல வேண்டும். நான் இந்த உடல், மனம், புத்தி என்ற எண்ணம் முற்றாக நீங்கி, “நான் இந்த உடல் அல்ல. நான் ஜிவாத்மாவே. எனக்கு இந்த உடல் கிடைத்தது, இறைவனை வணங்கி முத்தியின்பம் பெறும் பொருட்டேயாகும்” என்ற அறிவைப் பெற வேண்டும். இதனை உணர்ந்ததும் அனைத்து கவலைகளிலிருந்தும், துன்பங்களிலிருந்தும் விடுபடுகின்ற நிலை நிச்சயம் ஏற்பட்டுவிடும்.
இந்தப் ‘பரம் பொருள் என்று கூறப்படும் அதியுயர் மெய்ப்பொருளானது இறந்த, நிகழ் எதிர் காலங்களில் இருந்து
- 18 -

கொண்டே இருக்கின்றது. ரஷிகளும் முனிவர்களும் மட்டுமே அநுபவ ரீதியாக இதை உணர்ந்தவர்கள்.
சாக்கிரம், சொப்பனம், சுழுத்தி, துரியம், துரியாதீத என்று ஐந்து நிலைகள் உள்ளன. அவையாவன :
• சாக்கிரம் என்னும் விழித்திருக்கும் நனவு நிலை
9 சொப்பனம் என்னும் கனவு நிலை
0 சுழுத்தி என்னும் உறக்க நிலை 0 துரியம் என்னும் பேருறக்க நிலை
• துரியாதீதம் என்னும் உயிர்ப்படங்கள் நிலை ஆகும்.
ஒருவரின் உள்ளக சீர்திருத்தமே (Inner development) உண்மையான சீர்திருத்தமாகும். இது ஆன்மீக அறிவினால் அடையப்பட வேண்டியது ஒன்றாகும். ஒரு குறிப்பிட்ட துறையில் பூரண அறிவைப் பெற்றிருக்கும் ஒருவர், அத்துறை சம்பந்தப்பட்ட சவால்களுக்கு மட்டுமே முகம் கொடுக்கக் கூடிய ஆற்றலைப் பெற்றிருப்பார். அதேவேளை அன்றாட வாழ்க்கையில் முகம் கொடுக்க வேண்டிய பல்வேறுபட்ட பிரச்சனைகளையும் சவால்களையும் சமாளிக்கும் ஆற்றல் அற்றவராய் இருப்பார். ஆன்மீக அறிவின் உள்வாங்குதலால், வழிகாட்டலால் ஒருவர் அதியுயர் நிலைக்கு உயர்த்தப்பட்டு முழுமையான அறிவைப் பெற்று எந்த வேறுபட்ட சவால்களையும் முகம் கொடுக்கவும், தீர்த்து வைக்கவும். அப் பிரச்சனைகளிலிருந்து விடுபடவும் கூடுமான ஒரு ஆற்றலைப் பெறுகின்றார்.
கர்ம யோகா, பக்தி யோகா, ஞான யோகா என்பவை ஒரே
நேரத்தில் ஒழுங்காக அநுஷ்டிக்கப்படுவதன் மூலம் ஒருவரின் உள்ளக selb60)LDub (Inner personality) soil fab FGUITGib (SLDib JGub.
எமக்கு கொடுக்கப்பட்டவைக்கு நன்றி கூறும், வேண்டுதலற்ற வழிபாடு பக்தி யோகா ஆகும்.
தன்னலம் மமகாரம் அற்றவனாய் உயர்ந்தது (higher ideal) ஒன்றை நோக்கி கார்மமாற்றுவது கர்ம யோகா ஆகும்.
மெய்ப்பொருளையும், மெய்யற்ற மற்றவையையும் வேறுபடுத்தி நோக்கிக் கொண்டிருக்கும் நிலையான இடைவிடாத பக்தி முறை
- 19 -

Page 12
ஞானயோகா ஆகும்.
தத்துவம் அசி’ என்ற மகா வாக்கியத்தைப் பின்பற்றி வாழ வேண்டும் என்பதை வலியுறுத்துவதே வேதாந்தம் ஆகும்.
நிரந்தரமற்ற பொய்யான உலக இன்பங்களில் மூழ்கியிருக்கும் மனிதன், மெய்ப் பொருளின் அறிவு அற்றவன் ஆதலால் அவ்வகையான இன்பங்களுக்குப் பின்னே ஓடிக் கொண்டிருக்கிறான்.
குருவினிடமிருந்து சிஷ்யனாய் பணிந்து இவ்வறிவைப் பெற முயன்று கொண்டிருப்பவனும் கூட, இவ் உலக வாழ்க்கையில் மூழ்கி இருப்பதால் தாம் பெற்றுக் கொண்டே இந்த மெய்பொருளின் அறிவை நடைமுறைப்படுத்தி வாழ முடியாது அல்லற்படுகின்றான்.
கவனமற்ற செயற்பாடுகள், சோம்பேறித் தனமான பழக்க வழக்கங்கள், மந்தகரமான தூக்க நிலை ஆகியவற்றை முற்றாக நீக்கி, வாழ்வின் அதியுயர் நிலையை அடையும் பொருட்டு, தேகம் என்னும் உறுதியான எல்லையை விட்டு மேல் நோக்கி எழுந்து, அனைத்து வேற்றுமைகளிலும் உள்நிறைந்துள்ள ஒரே ஆத்மா வான ஒற்றுமையை நோக்குவதால், முழுமையான மனத் திருப்தியை நிச்சயம் அடைய முடியும். இவ் வழியில், தெளிவு அற்றதாய் இருந்த ஒருவனுக்கும் ‘வேதாந்தம்’ என்னும் ஆன்மீகக் கல்வி அதன் உட்கருத்தை முழுமையாக உணரவும் மகோன்னத சந்தோஷ நிலையை அடையவும் கூடுமானதாக அமைகிறது.
- 20 -

நானே எனக்கு நண்பன் . நானே எனக்கு எதிரி
நாம் பேசும் ஒவ்வொரு வார்த்தைக்கும் நாம் ஆற்றும் ஒவ்வொரு செயலுக்கும் காரணமாக இருப்பது எமது மனம், அவற்றால் ஏற்படும் விளைவுகளால் குழப்பமடைவதும் எமது மனம், எமது எண்ணங்களின் ஒட்டமே மனம் ஆகும். எனவே, எண்ணங்கள் அற்ற தியானநிலையை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். அமைதி என்பது ஏற்கனவே உள்ளது. அது செயலினால் குழப்பப்படுகிறது.
எண்ணங்கள் அடங்க மனக்கட்டுப்பாடும் அதிலிருந்து மன ஒருமைப்பாடும் அமைதியும் ஏற்பட தியான நிலையை ஒருவன் அடைகின்றான்.
எனவே, மன அமைதிக்கேற்ப காரியங்களை ஆற்ற வேண்டும். அதுவே கர்மயோகா எனப்படும். அதாவது கர்மங்களை, செயல்களை ஏன் செய்கிறோம் என நினைத்துச் செய்தால், அமைதியும் இன்பமும் நோக்கிய தேடுதல் ஆக இருக்கும். செய்யும் கருமத்தைச் சரியா என சரிபார்த்துச் செய்தால், சரியான முடிவை அடைய, மனம் அமைதி அடையும். அமைதியைக் கெடுக்கும் செயல்களை விலக்க வேண்டும்.
யார் ஒருவன் விருப்புவெறுப்பு இல்லாமல் கடமையில் ஈடுபடுகிறானோ அவன் யோகி ஆவான் விருப்பு இருந்தால் செய்யக் கூடாததையும் செய்வோம். வெறுப்பு இருந்தால் செய்யக்கூடுமானதையும் செய்யமாட்டோம்.
ஆத்மாவினால் ஆத்மாவை உயர்த்த வேண்டும், தாழ்த்தக் கூடாது. நமக்கு நல்லதை விரும்புபவன் நண்பன். அது நட்பின் ஆழத்தைப் பொறுத்தது. ஆனால் எந்நேரத்திலும் நட்பு உடைந்து விடலாம். மறைந்தும் விடலாம். எப்பொழுதும் எமக்கு நல்லதையே விரும்புபவன் நாமே. எப்பொழுதும் நம்முடன் இருக்கிறோம். அதை எதுவும், எவரும் ஒன்றும் செய்ய முடியாது. ஆகவே நமக்கு நாமே நண்பன்.
உடலுக்கு, மனதுக்கு பங்கம் ஏற்படலாம், உணர்ச்சி பாதிக்கப்படலாம். இவை எல்லாம் நம்மால் நமக்கு ஏற்படுபவை. மற்றவர்கள் எமக்கு செய்யும் தீங்கு இப்பிறவியில் அகன்றுவிடும்.
- 21 -

Page 13
ஆனால் ஒரு தவிர்க்க முடியாத நிலையில் நாம் ஒரு பிழையை செய்துவிட்டால், அது மீண்டுவிகளை எடுக்க வைக்கும். நானே செய்த வினை ஏதனுடன பல பிறவிகளுக்குத் தொடருகிறது. எனவே எனக்கு எதிரியும் நானே.
நம்மை நாம் உயர்த்திக் கொள்ள வேண்டும். தாழ்த்திக் கொள்ளக்கூடாது. முடியாது என்று எதையும் நினைக்கக்கூடாது. ஒரு பெரிய பாறாங்கல்லை முதுகில் கட்டிவைப்பதைப் போன்றது நம்மை நாமே தாழ்த்திக் கொள்வது. நமது ஆற்றலை நாம் அறிந்திருப்பதில்லை. அது உண்மையில் எல்லையற்றது. எமது எண்ணங்களால் இவ் ஆற்றலுக்கு எல்லைகளை நாமே உருவாக்குகின்றோம். பின், எமது செயற்பாடுகளால் எமது எல்லையை நாம் தாண்டமாட்டோம். முயற்சி முற்றுப்பெற்றுவிடும். "ஆற்றல்’ எனப்படும். எல்லையற்ற சக்தி எந்நிலையிலும் உள்ளது. உடல், மனம், புத்தியினால் எல்லை வரையறுக்கப்படுவதால் வேறுபாட்டைக் காண்கிறோம். எனவே, வழிப்புணர்வுடன் இருந்து, நாமே உருவாக்கிய இந்த தடைகள், உணர்ச்சிகளிலிருந்து விடுபட்டு எம்மை உயர்த்திக் கொள்ள வேண்டும்.
உயர்வும், தாழ்வும் பந்தத்தால் ஏற்படுவது. நானே இந்த உடல், மனம், புத்தி என்ற எண்ணத்தால் பந்தம் ஏற்பட்டது. எமது உண்மையான உள்நிறைந்த சொரூபத்துக்கு “பந்தம்” இல்லை. மனத்தாலும், புத்தியாலும் எம்மை உயர்த்தி, தேகத்தோடு கொண்ட ஐக்கியத்தைக் குறைத்துக் கொண்டால், உயர்ந்து கொண்டே செல்வோம். உடலும், மனமும் புத்திக்குக் கட்டுப்பட வேண்டும்.
நம்மைப் பற்றி நமக்குத்தான் தெரியும் மற்றவர்கள் நம்மைப் பற்றி எப்படி நினைக்க வேண்டும் என, அதற்கேற்ப சில விஷயங்களையே வெளிப்படுத்துவோம். அது மிகவும் கஷ்டம் மிகுந்த சக்தி விரயமாகும். ஆனால் மற்றவர்கள் அதை நடிப்பு என்று நிச்சயம் உணர்வார்கள். இதனால், எதுவித பயனுமில்லை.
நாம் நல்லவர்களாக உண்மையில் மாறவேண்டும், நடக்க வேண்டும். இது சுலபம், சக்தி விரயம் குறைவு.
யார் ஒருவன் தன் சொரூபத்துடன் ஐக்கியப் பட்டு செயற்படுகின்றானோ, அவன் ஆன்மீக சாதனைகளிலும், லெளகீக
- 22 -

வாழ்க்கையிலும் வெற்றி பெறுகின்றான். அவனே தனக்கு நண்பன் ஆவான்.
உணவு, பழக வழக்கங்களில் சீரானதாகவும், மனம் அமைதி கட்டுப்பாடு நிறைந்ததாய் ஒருமுகப்பட்டதாகவும் நல்ல எண்ணங்கள் நிறைந்ததாகவும், உடலின் கருவிகள் பயன்படும் நிலையிற் பேணப்பட்டு, எல்லையற்ற ஆற்றலை வெளிப்படுத்தக் கூடிய நிலையில் உள்ளதாகவும் எம்மை நாம் பராமரித்துக் கொள்ள வேண்டும். சீதஉஷ்ணம், சுகதுக்கம், மானஅவமானங்களில் உறுதியாய் இருப்பவன் தன்னைத்தான் வென்றவனாவான்.
மனமானது விரும்பியவற்றைச் சாரும்போது, வெறுப்பவையும் எம்மைப் பிடித்துக் கொள்ளும். அப்போது வெறுப்பவற்றை ஒதுக்க நினைத்தால் விரும்புபவையும் விலகிச் செல்லும். எனவே, விருப்பு, வெறுப்பு அற்றவன் சமநிலையில் இருப்பான்.
தன்னைத்தானே அறிந்து தன் சொரூபமே சுகம் என்பதை, இந்திரியங்களை அடக்கி நிரந்தர மன அடக்கம் கொண்டவன் காண்கிறான். அவன் அனைத்திலுமே தன்னைக் காண்கிறான். இதனால் ஒன்றைவிட்டு இன்னொன்றை தாவும் தேவையற்றவனாய், எதை அடைய வேண்டுமோ, அதை அடைந்துவிட்டோம் என்ற நிலையில் இருக்கின்றான். பரிபூரண இன்பத்தை உணருகின்றான்.
விருப்பு, வெறுப்புக்கள் எல்லாம் எனக்குள்ளேயே என்று உணர, யாரெல்லாம் எம்மைப் பற்றி நல்லதை சொல்லவேண்டும் என்ற எதிர்பார்ப்பு இல்லையோ, அவர்கள் என்ன சொன்னாலும் துன்பம் வராது. ஆனால், எதிர்பார்ப்பு இருக்கும் இடத்தில் நல்லதை சொன்னால் சந்தோஷமும், கூடாததை சொன்னால் துக்கமும் ஏற்படுகின்றது. எதிர்பார்ப்பு யதார்த்தம் எல்லாமே எண்ணங்கள். மனம் இரண்டையும் ஏற்றுக்கொள்ள வேண்டிய நிலையில் பதற்றம் அடையும். ஆனால், நாளடைவில் பதற்றம் குறையும்; உண்மையை உணரும். யதார்த்த வலிமையை உணரும்; எதிர்பார்ப்பு வலிமை குறைந்து கொணடேபோக துன்பம் குறையும். மனம் அமைதி அடையும். துன்பம் என்பது வெறும் எண்ணம் என்பது புரிந்துவிடும். ஆத்மா வெறும் சாகூழியாவே இருக்கின்றது என்பதை உணர்ந்துவிடும்.
- 23 -

Page 14
அனைத்து ஜட, ஜீவராசிகளிலும் உள்நிறைந்திருப்பது அந்தப் "பரமாத்மா” என்ற ஒன்றே. என்னும் மெய்யறிவோடு, வேறுபாடுகளையே பார்த்துக் கொண்டிருக்கும் நாம், அதனால் மனஅமைதி குலைந்து கொண்டே போய்க் கொண்டிருக்கும். இந்நிலையில், வேறுபாடுகளுக் கிடையே உள்ள ஒற்றுமையையே பார்க்கும்போது, மனம் அமைதி அடையும் என்ற முடிவான முடிவை அறிந்து, அதைப் பழக்கிக் கொண்டால், மனத்தை ஒருமைப்படுத்தி பிரபஞ்சத்தோடு ஒன்றுபட்டு இயங்கும்போது நினைத்ததெல்லாம் கிடைக்கும். நமக்கு நாமே நண்பனாவோம் என்பதில் ஐயமில்லை.
- 24

வெற்றி என்பது .
எந்த ஒருவனும் ஒரு காரியத்தைச் செய்யும் போது, அந்தக் காரியத்தைச் செய்வதன் நோக்கம் என்ன என்பதை வைத்தே அவன் எத்தகையவன் எனக் கணிக்கப்படுகின்றான். ஒரு செயலைப் பார்க்கும்போது அது கொடுமையாகத் தோன்றினாலும், அதன் நோக்கம் நல்லதானால் இறைவன் மன்னிக்கிறான்.
செயலை மாற்றிமைப்பதால் அது நல்ல செயல் ஆகாது. செயலுக்கான நோக்கத்தை மாற்றிமைப்பதால், செயல் நல்லதாகலாம். வெற்றியையும் தரும். தோல்வியால் ஏற்படும் உணர்வை, ஓர் அநுபவமாக எடுத்துக் கொள்ளும் போது, அது மேலும் முயற்சியைத் தூண்டுவதாய் அமையும்.
இன்பம், துன்பம், வெற்றி, தோல்வி எல்லாவற்றையும் அநுபவமாக எடுத்துக்கொள்ளவேண்டும். எதிலும் சமநிலையாய் இருக்க வேண்டும். உண்மையான வெற்றி உடையவன். எந்தவெரு துக்கத்தாலும் பாதிக்கப்படாதவனே. வெற்றியின் அளவு கோலாக பணம், சொத்து, வங்கியின் வைப்புகளை எடுத்துக் கொள்ளுகிறார்கள். அது முற்றிலும் தவறு. எவ்வளவு பெற்றாலும் ஓட்டைப் பானையில் தண்ணி ஊற்றினால் போல் எமது மனம் இருக்க வேண்டும். எண்ணங்கள் நல்ல எண்ணங்களாக மாற்றி அமைக்கப்படும்போது, அவை வலிமை பெறுகின்றன. நோக்கம் நல்லதாக இருக்கும்போது வெற்றி நிச்சயம். போற்றுதலை ஏற்காத சமநிலையில் இருக்க வேண்டும். அவ்வாறு திட்டுதலையும் ஏற்காது இருக்கும்போது, திட்டுதல் திட்டுபவனிடத்தி லேயே இருக்கும். எம்மைத் தாக்காது. வெற்றியும் தோல்வியும் பாடத்தைப் புகட்டுகின்றன. அதனால் இரண்டையுமே வெறும் அநுபவமாக எடுத்துக் கொண்டால் எதுவும் எம்மைப் பாதிக்காது. எங்கு சென்றாலும் மனம் பந்தப் படுத்தப்படாமல் இருக்குமேயானால், செயல்கள் எல்லாம் அநுபவமாக உணரப்படும்.
‘எம்மை வென்றால் எமக்கு ஒரு கேடில்லை' வெற்றி என்பது ஒரு செயலின் பின்னாலுள்ள நோக்கத்தை அடைவது தான்.
'இராவணன் ஜடாயுவை வெட்ட கீழே விழுந்தது பறவை. ஜடாயுவின் நோக்கம் சீதையைக் காப்பது. இராவணனின் நோக்கம்
- 25 -

Page 15
சீதையை அடைவது. இங்கே இராவணன் வென்றான் என்று யாராவது கூறுவீர்களா?
மகாத்மா காந்தி வாழ்க்கையில் வென்றவரா? தோற்றவரா? எத்தனையோ இன்னல்களுக்கு மத்தியில் அஹிம்சைப் போர் புரிந்தவராய், இறுதியில் கொலை செய்யப்பட்டவராயினும், அவரது நோக்கத்தைப் பொறுத்தமட்டில் வென்றவரே! அவரது பவித்ரமான தோற்றம் , நேர்மை, அஹரிம் சை, சத்தியம் நிறைந்த ஆத்மவெளிப்பாட்டினால், எதிரியும் மரியாதை செய்யும் சக்தியைப் பெற்றிருந்தார்.
மலராயப் அடித்த மன்மதன் நெற்றிக்கண் பார்வையால் எரிக்கப்பட்டான். ஆனால், கல்லால் அடித்த சாக்கிய நாயனார் கைலையில் பக்கத்தில் அமர்த்தப்பட்டார். அனைத்தும் நோக்கத்தின் விளைவே என்பதை உணருகின்றோம் அல்லவா?
இறைவன் நம்மை சோதிப்பான். ஆனால் கை விடமாட்டான். தன் - நம்பிக்கை இருப்பின் செய்யும் செயல்களுக்கு ஏற்றதாக அனைத்தும் அமையும். யாகத்தின் போது, ஓம குண்டத்தில் "ஸ்வாகா, ஸ்வாகா” என்ற சொல்லிக் கொண்டு எல்லாவற்றையும் ஒவ்வொன்றாகப் போடுவார்கள். எல்லாம் எனக்கு முன்னமோ, பின்னாலோ போய் விடும். எதுவும் என்னுடையது கிடையாது. எல்லாம் என்னுடன் தொடர்புடையவை. எல்லாம் இறைவனால் தரப்பட்டவை. அவ்வாறே ஒவ்வொரு செயலையும் இறைவனுக்கு அர்ப்பணிப்பதாக வாழ்க்கையையும் வேள்வியாக வாழ வேண்டும். வேள்விமயமான வாழ்க்கையை அநுபவிப்பவனாய் இருந்து, அநுபவங்களைப் பார்க்கும் போது அநுபவங்கள் ஒவ்வொன்றாக போய்க் கொண்டு இருக்கின்றன. புறத்திலே ஏற்படும் வெற்றி வெறும் அனுபவமே. அது பாடத்தை புகட்டும். அகத்திலே ஏற்படும் வெற்றி உண்மையானது. ஒன்றையுமே எனது என்று உரிமை கொண்டாடாது. பயன்படுத்தி வாழவேண்டும். அனைத்து செயல்களையும் இவைனுக்கே அர்ப்பணமாகச் செய்ய வேண்டும்.
சுயநலமற்று, பற்றற்று, பிரதிபலனை எதிர்பாராது கடமை உணர்வோடு, ஒருவரோ, பலரோ, தனியாகவோ கூடியோ, பிறன் நலன் பொருட்டோ, சமுதாய நலன் பொருட்டோ, உலக நலன் பொருட்டோ ஒரு செயலைச் செய்வது 'வேள்வி' எனப்படும்.
- 26 -

பஞ்சபூதங்களை நல்லமுறையில் தூய்மையாக வைத்து பாதுகாத்து தகாத விளைவுகள் ஏற்படாதவாறு காத்துப் பேணுதல் பூஜை ஆகும். ஒருவனின் அழகு அவனது ஆத்மாவின் தன்மையில் நிர்ணயிக்கப்படும். அவனது பெளதீக உடலின் வெளிப்புற அழகிலல்ல.
ஒருவன் உன்னைப்பற்றிக் குறை கூறினால், இறைவனால் இவன் உன்னிடம் அனுப்பப்பட்டிருக்கின்றான் என நினைத்துக் கொண்டு, அவன் சொல்லும் குறைகளை ஒவ்வொன்றாக குறித்துக் கொண்டு, அதை ஒவ்வொன்றாக உன்னிடமிருந்து களைந்து கொள்ள வழிபார்த்து, முற்றாகவே அகற்றி விடு. உன்னைப் பற்றிக் கூடாமல் கதைப்பவன். உன்னை முழு மனிதனாக்க கடவுளால் அனுப்பப்பட்டவன் என்று நினைத்துக் கொள்.
ஒரு தாய் தன் பிள்ளையை எந்தவித எதிர்பார்ப்புமின்றி, சிறிதும் தன் நலமற்றவளாய் பராமரித்து வளர்க்கின்றாள். பெரியவனாகி அவன் தன்னைக் கண்டு கொள்ளாவிட்டாலும், எதுவித பராமரிப்பும் கிடைக்காதவளாய் இருந்தாலும், எக்கணமும் அவனுக்காக அவன் நல் வாழ்வுக்காக பிரார்த்தித்துக் கொண்டே இருக்கிறாள். எது செய்தாலும் எந்த நிலையிலும் பொறுமையுடன் அவனது நலனையே நினைத்துக்கொண்டு எந்தவித எதிர்பாப்புமின்றி பிரார்த்தனை செய்பவள் ‘ஒரு தாய் மட்டுமே. இது முற்றிலும் உண்மை. இங்கு அந்தப் பெற்ற தெய்வத்தின் தனித்துவமான முழுமையான நோக்கம், தன் பிள்ளையின் நலனே அன்றி வேறெதுவுமில்லை. இந்த உயர்ந்த நோக்கத்தைக் கொண்ட தாயானவள், என்றோ ஒரு நாள், இறைவனிடம் இருந்து அந்தப் பேரானந்தத்தை அடைவாள் என்பது நிச்சயம். எனவே வெற்றி என்பது நோக்கத்துக்கே அன்றி செயலுக்கு அல்ல என்பது திண்ணம்.
- 27

Page 16
மனிதன் என்பவன் தெய்வம் ஆகலாம்
இவ்வுலகில் மன வேதனை இல்லாமல் இருவர் வாழ முடியுமா? முடியும். அதற்கான வழிதான் கர்ம யோகம் உலக வாழக்கையைக் கண்டு பயந்து ஒதுங்கிவிடுதல் கூடாது. மனிதன் இவ்வுலகில் வாழந்து அனுபவப்பட்டு தெளிவடைதலே கர்ம யோகம்.
வயிற்றில் குழந்தையைச் சுமக்கும் தாய் வேதனைகளை யெல்லாம் மகிழ்ச்சியாக ஏற்றுக்கொள்கிறாள் ஏன்? பத்து மாதங்களில் தன் குழந்தை பிறந்துவிடும். அதன்பின் எந்தவித வேதனையும் ஏற்படப் போவதில்லை என்பதை அவள் நன்கு அறிவாள். குழந்தையைப் பெற்றவுடன் அவள் முகத்தில் நாம் காணும் மகிழ்ச்சி அளப்பரியது.
வாழ்க்கையில் ஏற்படும் வேதனைகளை மகிழ்ச்சியாக மாற்றிக் கொள்ள முடியும். ஒவ்வொரு பிரச்சனை ஏற்படும் போதும், அதைப் பற்றிய தெளிவை நாம் பெற்றுக் கொள்ள வேண்டும். எப்படிப் பிரச்சனைகள் தோன்றின என்பதை சிந்திக்க வேண்டும். மனிதனை மிகவும் மோசமான நிலைக்குக் கொண்டு செல்லும் வேதனையில் பிறப்பிடம் எது? அது தான் 'ஆசை அது விதை போல் ஊன்றி விருட்சம் போல் வளர்ந்து, மனிதனின் சக்திக்கு எதிர்த்து சவால் விடும் ஒரு சக்தி.
"ஸ்வதர்மம்' என்ற ஒன்றை, "கர்மயோகம் நமக்கு கூறுகின்றது. ஸ்வதர்மம்' என்றால் என்ன? இயற்கையாகவே எம்மோடு கூடியிருக்கும் இயல்புகளும், அதனாலாய கடமை உணர்வுகளும் ஆகும். நமது அறிவுக்கும் தகுதிக்கும் ஏற்றாற் போல், இவ்வுலகில் நமக்காக உள்ள கடமைகளைச் செய்வது தான் "ஸ்வதர்மம்'
நம்மைப் படைத்த இறைவன். நமக்கு வேண்டிய எல்லாவற்றையும் படைத்து, நாம் எப்படி வாழ வேண்டும் என்ற வழிமுறைகளையும் வகுத்து, நம்முடனேயே அவன் இருக்கும் போது, துன்பம் எப்படி நம்மைப் பாதிக்கின்றது. என்பதற்கான விடையையும, அந்தத் துன்பத்திலிருந்து விடுதலை பெறுவதற்கான வழிமுறைகளையும், பகவத்கீதையில் “கர்மயோகம்’ மூலம் எமக்கு அருளியுள்ளார்.
ஒரு குழந்தையை சீராக சிறப்பாக தன் வயிற்றில் சுமந்து, நலமே பெற்றெடுத்து நன்னெறியில் வளர்த்தெடுப்பதற்கு 'தாயாகவும்,
- 28 -

போற்றிப் புகழ்ந்து சிறப்புற வாழ்க்கையை அமைத்துக் கொடுக்கத் "தந்தையாகவும், நற்கல்வி, மனித விழுமியங்கள், நல்லொழுக்க சீலர்களாய் அறிவுட்டி வழிநடத்துவதற்கு ‘குரு’ அல்லது ஆசிரியனாகவும், எஜமானுக்கு வேலைக்காரனாகவும், வேலைக்கார னுக்கு எஜமானாகவும், வறுமையில் வாடித் தவிப்போருக்கு "வேலை ஆகவும், "தொழில்’ ஆகவும் வருபவர் இறைவன்.
ஆன்மீக ஈடுபாடு வயதானவர்களுக்கு மட்டுமே என்ற ஒரு தவறான கருத்து மக்களிடையே இருந்து வருகிறது. அப்படியல்ல. “கர்ம யோகம் எந்த ஒருவருக்கும் தெளிந்த அறிவையும், உலக வாழக்கையின் சவால்களுக்கு முகம் கொடுக்கக்கூடிய மனத் தெளிவையும், தைரியத்தையும், தோல்விகள் ஏற்பட்டால் துவண்டு, மனமுடைந்து சோர்வடைந்து விடாத சக்தியையும் கொடுத்து, மகிழ்ச்சியான வாழக்கையில் முன்னேறி தம் இலக்கை அடைய நிச்சயம் உதவுகின்றது.நம் மூதாதையர்களிலிருந்து நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் வாழக்கை முறை ஸ்வதர்மத்தைச் சேர்ந்ததாகும். ஆனால் பயிர் வளரும் போது கூடவே களையும் வளர்வது போல், நமக்குத் தேவையில்லாதவையும் நம் வாழ்வோடு சேர்ந்தே வளர்கின்றன. நாம் செய்ய வேண்டியது எல்லாம் களையைக் களைந்து விடுவது தான்.எது நம்மோடு உள்ளது? எது இடையில் வந்து சேர்ந்தது? என்பதை அறிந்து அவற்றை அகற்றி விட்டால், நாம் யார் என்பதை நம்மால் புரிந்து கொள்ள முடியும்.
'மனநிறைவு' ஒன்றே மனிதனுக்கு வேண்டியது. எமது எண்ணங்களின் ஒட்டமே மனம், மனத்தில் ஏற்படும் விருப்பு, வெறுப்புகளே மன அவஸ்தைகளையும் அதனால் உடல் வியாதிகளையும் ஏற்படுத்துகின்றன.
இம்மியும் அகங்கார - மற்றவராய், பிறர் தம்மை மதிப்பதிலோ, மதிக்காமல் போவதிலோ, ஆடம்பரமோ, அலங்காரமோ எந்நிலையிலும் எதுவித தாக்கமோ, வெளிப்பாடோ அற்றவராய் இருப்பவர் மகான்கள். நாம் வாழ்க்கையில் எத்தனையோ மகான்களைப் பற்றி வரலாறுகளைப் படித்தும், கேட்டும், அறிந்தும், பார்த்தும் உள்ளோம். அவர்கள் மான அவமான, உயர்வு - தாழ்வு இகழ் - புகழ் சிறப்பு - சிறப்பின்மை எல்லாவற்றுக்கும் சமநிலையில் இருப்பர். அவர்கள் மரபுகளின் ரட்சகர்கள் தம்மை அடையாளப்படுத்திக் கொள்ள மாட்டார்கள்.
- 29

Page 17
தனிப்பட்ட நிலையில் தனது பண்பு நலன் பாதிக்காத படியே இருந்து, இரண்டு நேரெதிரான குதிரைகளை ஒரே நேரத்தில் ஒரே மாதிரி ஒட்டிச் செல்லும் தன்மை உடையவர்கள்.
நாம் மகான்களிடம் சென்று பிரசாதம், பரிசுகளை வாங்கி வருகிறோம் அவர்களது மகோன்தை பண்பு, கருணை, அன்பு என்பவற்றைச் சிறதளவேனும் வாங்கி வருவதுண்டா?
எந்தக் கொடூரமானவனிடத்திலும் ஒரு "உருகுநிலை (melting point) உண்டு. அதுவரைக்கும் சென்று ஒருவனைப் பக்குவப்படுத்தும் சக்தியை, வல்லமையை, பக்குவநிலையை அடைந்தவர்கள். அதனைச் செயற்படுத்த முடிந்தவர்கள் மகான்கள் மட்டுமே.
எந்தவொருவனையும் தண்டிக்க வேண்டும் என்று இல்லாமல், அவனை மாற்ற வேண்டும் என்ற உள்ளம் படைத்தவர்கள் மகான்கள். அவர்களால் அது நிச்சயம் முடியும்.
எவ்வளவு மகோன் தைமான மனப் பக்குவ நிலையை அடைந்தவரும், சந்தர்ப்ப சூழ்நிலையால் தவறு செய்ய வேண்டி ஏற்படுவதைக் காண்கிறோம். கேள்வியுற்றிருக்கிறோம். அவனது இடைவிடாத தபஸ், இறை எண்ணம், நாமஸ்மரணம் அவனுக்கு அப்படிச் சந்தர்ப்பங்களை ஏற்படுத்தாது.
'பொய்’ பேசாதவர்கள் பகவானுக்கு மிகவும் வேண்டியவர்கள். மிகவும் நெருக்கமானவர்கள். அவர்களுக்கு மீண்டும் பிறவி கிடையாது. வான மண்டலத்தில் உயர்ந்து நசவடித்திரங்களாக என்றென்றும் ஒளிவீசிப் பிரகாசமாய் இருப்பர். சப்தரிஷி மண்டலத்தில் ஏழு நட்சத்திரங்களாக ஒளிவீசிக் கொண்டிருப்பவர்கள். காசியப மகரிஷி, அத்திரி மகரிஷி, வசிஷ்டர் மகரிஷி, விஸ்வாமித்திரர் மகரிஷி, கெளதமர் மகரிஷி, ஜமதக்னி மகரிஷி, பரத்துவாஜ மகரிஷிகளாவர்.
துருவன் ஐந்து வயது முதல் தவம் செய்து தெய்வ தரிசனம் பெற்று, 27,000 வருடங்கள் நீதி நெறியில் அரசாட்சி செய்து வாழ்ந்ததால் அவருடைய ஆத்மா, மரணத்துக்குப் பின் பிரமாண்டமான சக்தி உடையதாக வளர்ந்து வான மண்டலத்தில் துருவ நக்ஷத்திரமாக ஒளிவீசிக் கொண்டிருக்கின்றார்.
- 30

‘கடவுளை இடைவிடாது தியானித்துக் கொண்டு கர்மம் ஆற்றுவதால் நமது உயிர்ச் சக்தியை மிக மிக பிரமாண்மானதாக வளர்த்து நமது மரணத்துக்குப் பின்னும், வான மண்டலத்தில் என்றென்னும் நசஷத்திரமாகப் பிரகாசித்து ஒளி வீசிக் கொண்டே இருக்கச் செய்யலாம்.”
சரணடைவது ஓர் ஆரம்ப நிலை மட்டுமே. அதை தொடர்ந்து மேலும் மேலும் அதிகரிக்கச் செய்யப்பயிற்சி தேவை.
*வைரம் எத்தனையோ முகங்களைக் கொண்டதால் அதி பிரகாசத்தைத் தருகிறது. அது போலவே மகான்களும், எல்லாப் பக்கத்தாலும் தமது கவனத்தை ஒரே நேரத்தில் வைத்த வண்ணமே இருப்பார்கள். உயர்ந்த சந்தியாசம் செய்பவர்கள் ஒரு சிறு கீரை மீதுகூட ஆசை வைக்க மாட்டார்கள். ஆசை ஏற்பட்டால் தன்னைத் தானே தண்டித்துக் கொள்வார்கள். ஒரு குற்றத்திலிருந்து விடுதலை அடைவது வேறு அது இன்னொருத்தர் கொடுப்பது. குற்ற உணர்வில் இருந்து விடுதலை அடைவது வேறு. அதை நினைத்து நினைத்து வருந்தி, இறைவனிடம் மன்னிப்பு வேண்டிவிடுதலை அடைவது. சத்தியம் சாமத்தியத்தை விட மேலானது. அநேகமாக ஒருவரது வாழ்க்கையில் ஏற்படும் குறையே அவரது உயர்ச்சிக்கு காரணமாகிறது. வாழ்க்கையில் கஷடங்களுக்கு முகம் கொடுப்பவனே உயர்ச்சி அடைகிறான். ஒருவர் தம் வாழ்க்கையில் முன்னேறுவது என்பது சிரமம். முன்னேறும் போது மகிழ்ச்சி நிறைந்தவராய் முயற்சி செய்ய வேண்டும். எனவே, மனதை நிகழ்காலத்தில் மட்டுமே வைத்திருக்க வேண்டும். கடந்தவற்றை நினைத்து வருந்துதலும், எதிர்காலத்தில் வரப் போவதை கற்பனை செய்து வருந்திக் கொள்வதும் முன்னேற்றத்துக்கு தடையாக இருக்கும் என்பது யாவரும் அறிந்ததே. மகான்கள் அனைவருமே, நம்மிலிருந்து புறப்பட்டு மிக உயர்ந்த நிலைக்குச் சென்று எம்மையும் அந்நிலைக்கு மேம்படுத்த ஒழுக்க சீலர்களாயப் , பிறருக்காக வாழும் மனோநிலையையும், தூய மனத்தையும் உடையவர்களாய் வாழ்ந்து காட்டிய உதாரண புருஷர்களே ஆவார்.
எனவே, ஒரு சராசரியான தாயின் யோனியில் உதயமாகும் ஒரு குழந்தையும், தெய்வமாக நிச்சயம் முடியும்.
“வையத்தள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்
தெய்வத்தள் வைக்கப்படும்.”
- 31 -

Page 18
வரையறையே நிறைவு தரும்
இறைவன் மனிதனுக்கு மட்டுமே தேர்ந்தெடுக்கும் உரிமையை கொடுத்திருக்கிறான். எமக்கு கொடுத்த வாய்ப்பினை நாம் வாழும் போதே பயன்படுத்திக் கொள்ள வேண்டும். நல்லோர்களின் நோக்கம் மனிதர்களை உயர்த்துவது. நம்மை நாமே தாழ்த்திக் கொள்ளக்கூடாது. எது நல்லது, எது கெட்டது என்று நன்கு ஆய்ந்து தேர்ந்தெடுத்தல் அக மலர்ச்சிக்கு உதவும்.
ஐம்புலன்களின் கட்டுப்பாட்டை நன்கு செயற்படுத்தினாலேயே மனதைக் கட்டுப்படுத்த முடியும். விழிப்பு நிலையை வாழ்க்கை ஆகும். உடலினால் சீத உஷணம், மனதினால் சுக-துக்கம், புத்தியினால் மான அவமானம் என எல்லாம் விழிப்பு நிலையிலேயே அநுபவிக்கப்படுகின்றன. எனவே, உடல், மனம், புத்தியை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதால், விழிப்பு நிலையையே கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரலாம். “பொறி வாயில் ஐந்து அவித்தான் பொய்தீர் ஒழுக்க நெறி நின்றார் நீடு வாழ்வார்”.
அறிவில்லாத மனிதன் ஐந்து. ஏதாவது ஒரு புலனுக்காவது அடிமையானவன் ஜந்து எனப்படுவான்.
நல்ல ஒசைக்கு மான்கள் அடிமையாகின்றன. ஓசையைக் கேட்டதும் அசையாது நின்று விடும். உடனே வேடனின் அம்புக்கு இலக்காகி தன்னை அழித்து விடுகின்றது. அதே போன்று ஸ்பரிசத்துக்கு யானையும், வெளிச்சத்துக்கு ஈசற்பூச்சியும், நறுமணத்திற்கு மலரில் அமரும் வண்டும் அடிமையாகித் தம் வாழ்வை அழித்துக் கொள்கின்றன. வாயினால் ருசிக்கு அடிமையாகியும், வேண்டாத பேச்சுக்கு இடம் கொடுத்தும் அழிவையும் அல்லலையும் மனிதன் தேடிக் கொள்கின்றான்.
ஒவ்வொரு ஜந்துவும் ஒவ்வொரு புலனுக்கு அடிமையாகிறது. மனிதனோ ஐந்து புலன்களுக்கும் ஒரே நேரத்தில் அடிமை ஆகிறான். பொறிகள் மூலம் புலன் உணர்ச்சிகளுக்கு அடிமையாகித் தனது சக்தியை வீண் விரயமாக்கும் மனிதன், ஒரு நல்ல விஷயத்தில் நீண்ட நேரம் தொடர்ந்து கேட்கும் அல்லது ஈடுபடும் சக்தியை இழக்கிறான். இந்திரியங்கள் வாயிலாக பயன்பாட்டு வேளையில் நல்ல
-32 -

விஷயங்களையே உள் வாங்கிப் பதிவு செய்தல் வேண்டும். நாம் வாழ்வின் இலக்கை அடைவதற்கு உடல், மனம், புத்தி என்பவற்றை கட்டுப்பாட்டில் வைத்து, முன்னோக்கி பயணம் செய்தல் வேண்டும். மனிதனின் மாபெரும் வெற்றிக்குக் காரணம் அவனது அடித்தளத்திலுள்ள தன்னம்பிக்கையே ஆகும். ஒரு காரியத்தின் முடிவு, புத்தியானதும் ஆரம்பத்திலேயே எடுக்கும் முடிவிலேயே தங்கியுள்ளது. ஒரு மனிதனுடைய தீவிரமான இடைவிடாத முயற்சிக்கு நிச்சயம் பரம்பொருள் அருள் செய்யும்.
"உறுதி நெடுந்தக்காய் வாய் ஒன்று சொல்லி, மனம் ஒன்று சிந்தித்து நீ ஒன்று செய்யாய்”
- என திருமூலர் கூறியுள்ளார். திரிகரண சுத்தி உண்டானால் மாமலராள் நோக்கு நேரடியாக உன்மேல் இருக்கும். இடைவிடாத முயற்சி என்னும் அக்னி உன்னுள்ளே இருக்க வேண்டும்.
புலனடக்கம் இயமம், நியமம், ஆசனம், பிராணாயாமம், பிரத்தியாகாரம் என்பவற்றால் கையாளப்படும்.
இயமம் : உலகத்தில் மனிதர்களோடு இருக்கும் போது கடைப்பிடிக்க வேண்டியது. அதாவது அஹிம்சை, சத்தியம் பிறர் பொருள் மீது ஆசைப்படாதிருத்தல், பிரம்மச்சரியம், அப்பரிக்கிரக என்பன. (அப்பரிக்கிரக - பிறர் கொடுக்கும் பொருளை ஆராய்ந்து பார்க்காமல் எடுக்கக் கூடாது.)
நியமம் : தனியாக வாழ்ந்து உள்ளும், புறமும் முற்றிலும் தூய்மையாக இருத்தல் ஆகும். இது செளசம் என்று சொல்லப்படும்.
ஆசனம் : ஒருவர் மனதை அலைய விடாமல், உடலை அசைக்காமல் ஒரு உறுதியான நிலையில் அமர்ந்திருத்தல். இந்நிலையில் புலன்கள் அடங்கி இருக்கும்.
பிராணாயாமம் : அதிகாலையில் நிமிர்ந்து உட்கார்ந்த நிலையில் மூச்சுப் பயிற்சி செய்தல்.
பிரத்தியாகாராம் : உங்கள் கவனத்தை ஹற்ருதயத்தின் மத்தியில்
- 33

Page 19
இழத்துக் கொண்டு கண்களை மூடிக்கொண்டு 15 நிமிடங்கள் அமைதியாக அமர்ந்து இருத்தல்.
இம்முறைகளை செவ்வனே சிறப்பாக செய்யும் போது இனம் தெரியாத உற்சாகத்தை ஏற்படுத்திக் கொள்ளலாம். மனிதருள் அநேகம் உள்ளொன்று வைத்தும், புறம் ஒன்று பேசுபவர்களையே காண்கிறோம்.
* மனத்தது மாசாக மாண்டார் நீராடி,
மறைந்த ஒழுகும் மாந்தர் பலர்.”
மனத் தூய்மை கொண்டவரே, மண்ணில் மாற்றத்தைக் கொண்டு வர முடியும்.
அறிவு (ஞானம்) எம்மை வீழ்ச்சியிலிருந்து காக்கும் கருவி. அறிவைக் கொண்டு நம் மனதுக்குள்ளே உருவாகும் எதிரிகளை அழித்து விடலாம்.
ஒளவைப் பாட்டியின் முதல் வரி :
"அறம் செய விரும்பு’
அறத்தினால் மனத்தூய்மை அடைய முடியும். அழுக்காறுபொறாமை, அவா-அதீத ஆசை, வெகுளி - கோபம், இன்னாசொல்புறம் கூறல், இந்நான்கையும் இழுக்கா இயன்றது அறம் என திருவள்ளுவர் கூறியுள்ளார்.
எமது மனத்தில் தோன்றும் அழுக்குகளை அகற்றுவதற்கு கவனமாக இருக்க வேண்டும். அதற்கு, ஏற்படக் கூடிய பின் விளைவுகளை அறிந்து பேச வேண்டும். அறிவு என்பது ஒரு செயலைச் செய்ய முன்போ அல்லது பின்போ இருப்பதை விட, அச் செயலைச் செய்யும் போது இருப்பது முக்கியம். எமது நிலைமைக்கு எம்மிடமுள்ள சிறுமைகளை, தவறுகளை நாமே நியாயப்படுத்தக் கூடாது. ஒரு நல்ல பழக்கத்தைப் பழகுவது கடினம். விடுவது சுலபம். ஒரு கெட்ட பழக்கத்தை பழகுவது சுலபம். விடுவது கடினம். ஒவ்வொரு பழக்க வழக்கத்துக்குப் பின்னாலும் ஒரு எண்ணம் காரணமாக இருக்கும். அது அதிதீவிரம் அடையும் போது செயல் ஆகின்றது.
மனதின் கண் உள்ள மலங்களாகவன, விருப்பு, வெறுப்பு, ஆசை, கோபம், பேராசை, சுயநலம், பயம், கவலை, மயக்கம், தற்பெருமை, அதீத பற்று.
- 34 -

விருப்பு, வெறுப்பு பிறவிகளுடே தொடர்கின்றது. அதீத விருப்பு ஆசையும், அது கிடைக்காமல் போகும் நிலையில் ஏற்படும் அதீத வெறுப்பு கோபத்தையும், கிடைத்துவிட்டால் அதை தமக்கெனவே உரிமை கொண்டாடிடும் அதீத ஆசை பேராசையையும், அந்தந்தப் பிறவிகளில் அந்தந்தப் பொருட்களைப் பார்க்கும் போது ஏற்படுத்துகின்றன. மனிதனில் அநேகரிடம் நாம் பார்க்கும் இயல்பு சுயநலம் ஆகும். எல்லா உயிர்களுக்கும் பயம்' என்பது ஒரு பொதுவான இயல்பு ஆகும். இது இறைவனால், பாதுகாப்புக்காக கொடுக்கப்பட்ட தொன்றாகும். மனிதனோ உட்கார்ந்து இருந்து சிந்தித்துச் சிந்திந்துப் பயப்படுவான். கிடைக்குமா? கிடைக்காதா? எனக்கு கிடைக்காதது வேறு யாருக்கும் கிடைத்து விடுமா? என பயப்பட்டுக் கொண்டே இருப்பது மனித மனம், "அவமானம்' என்ற எதிர்ப்பார்ப்பு உணர்வும் ஒருவனுக்கு பயத்தை ஏற்படுத்துகிறது. கவலை வந்ததும் அறிவை மறைத்து விடும். சிலர் தற்பெருமையை அடித்துக் கொண்டு பிறர் பெருமையை போற்ற முன் வர மாட்டார்கள். ஒவ்வொருவரும் தனது எப்பேற்பட்ட உறவு நிலைக்கோ அல்லது தனது செயலுக்கோ உள்ள நிலைப்பாட்டுக்கும், தனக்கும் இடையில் ஒரு இடை வெளியை நிலை நிறுத்திக் கொள்ள வேண்டும். பற்று ஏற்படாதவாறு சமநிலையை வைத்திருக்கும் கலையை அறிந்திருத்தல் வேண்டும். நாம் அதீத பற்றை வைத்து அவஸ்தைப்படுவதையும், முற்றிலும் வெறுத்து விலகுவதையுமே அன்றாட வாழ்க்கையில் பார்க்கின்றோம்.
‘எல்லாவற்றையும் தறப்பத தறவு அல்ல.
எல்லாவற்றையும் நேசிப்பதே தறவு ஆகும்.’
வாழக்கை எல்லாவற்றுக்கும் ஒரு வரம்பு வைத்திருக்க வேண்டும். வரையறை பரிபூரணத்துக்கு வழிவகுக்கும். (LIMITATIONLEADSTO PERFECTION) ஒருவன் வெறுப்பினால் அழிவைத் தேடிக் கொள்கிறான். வெறுப்பானது தோன்றும் இடமும், சேரும் இடமும் அழிந்து விடுகின்றது. விருப்பும், பற்றும் மறு பிறப்பை ஏற்படுத்துகின்றது. காமம், குரோதம், லோபம் இந்த மூன்றுமே நரகத்தின் வாயில்கள் ஆகும்.
ஒரு விஷயத்தைப் பற்றித் தீவிரமாகச் சிந்திப்பதால், அதாவது பார்த்தவுடன் அல்லது மீண்டும் மீண்டும் சிந்திப்பதால் ஆசை வருகிறது.
س- 35 -

Page 20
அதை அநுபவிக்கும் போது மேலும் மேலும் ஆசையை தூண்டுகிறது. ஆசை தீயைப் போன்றது. ஆசைப்பட்ட பொருள் கிடைத்துவிட்டால் அது பேராசை ஆகும். கிடைக்காவிட்டால் அது கோபமாகும். “தர்மத்துக்கு விரோதமான ஆசைகளை ஒரு மனிதன் விட வேண்டும்.”
அதிதீவிர கோபம், குரோதமாகும் போது மனிதன் விவேகத்தை இழந்துவிடுகிறான். தமது ரூபம், எண்ணம், செயல்களில் எதுவித குறை குற்றமும் காண முடியாத, அகங்காரமற்ற, பணிவு என்ற இயல்பை மேலான குணமாகக் கொண்டவராய் பிறவி எடுத்தல் இறைவனின் முழுமையான வரம் பெற்றவர் ஆவர்.
- 36

மீண்ரும் பிறவாமை வேண்டில்.
எமது எண்ணங்களின் ஓட்டமே மனம், மனம் உடலையும், புத்தியையும் இணைக்கின்றது. ஒவ்வொரு கணமும் செய்யலாமோ வேண்டாமோ என அலைந்து கொண்டு மாற்றி மாற்றி யோசித்துக் கொண்டே இருப்பது மனம்.
மனம் கட்டுப்பாடாக, ஒழுங்காக இருந்தால் தான் உடல் சரியான முறையில் செயற்படும். "எல்லாம் அற என்னையே இழந்தேன் நலம்’ என அருணகிரிநாதர் கூறியுள்ளார்.
மனிதன் ஒரு சாதாரண ஜீவன், அல்பன், எதுவுமற்றவன், ஆனால், எல்லாம் வல்ல இறைவனை சேர்ந்திருக்கும் நிலையில் அவன் குணம் இறைவனது ஆகின்றது. எந்த ஒரு சிந்தனை வந்தாலும் எது உண்மை என்று மனம் விசாரணை செய்யும். எந்த ஒரு வஸ்து வந்ததும், அது என்றோ ஒருநாள் போய்விடும் என நினைக்க வேண்டும். அழிந்து போகக்கூடிய இந்த உடலுக்கு வந்து சேரும் எந்த வஸ்துவும், அழியும் குணத்தை எடுத்துக் கொள்ளும். பின்னர் அழிந்துவிடும். தோன்றியது மறைந்தே தீரும், பிறந்தது இறந்தேதீரும். வாழ்க்கை வருகின்றது பின் போகின்றது. இவை அனைத்துக்கும் ஆதாரமாக ஒருவன் இருக்கின்றான். அவனே இறைவன்.
எது நிலையற்றதோ அதைக் காண்கிறோம். எது நிலையானதோ அதைக் காண்பதில்லை. புரிந்து கொள்வதுமில்லை. இயங்குகின்ற இந்த உடலை இயக்குகின்ற மெய்ப்பொருள் பின்னாலே உள்ளது. இறைவன் உடலைத் தந்தான். அதைப் பயன்படுத்தி வாழ்வதற்கே. ஆனால் மனிதனோ உடலையே பற்றாக்கிக்கொண்டான். இறைவன் உறவைத் தந்தான். அதனைப் பயன்படுத்தி வாழ்வதற்கே. ஆனால் மனிதனோ அதன்மீதும் பற்றை வளர்த்துக் கொள்கிறான். உடலையும், உறவையும் பற்றிப் பிடித்துக் கொண்டே சுற்றி சுற்றி அலைந்து தானாகவே உலக சம்ஸாரத்தில் அகப்பட்டு அவஸ்தைப் படுபவன் தான் மனிதன். உறவுகளைப் பயன்படுத்தலாம். அன்பு செலுத்தலாம் ஆனால், பற்று வைக்கும் போது பற்று, புற்றாக (நோய்-புற்று) மாறுகிறது.
- 37

Page 21
உலகப் பற்று நித்தியம், அவசியம் என எண்ணும் எண்ணம் மாயை. இவை எல்லாம் என்னுடையவை என எண்ணும் எண்ணம்
D6OU.
எது எல்லாம் "நான்” “நான்’ என நினைக்கிறோமோ அது மாயை. நிலையற்றவற்றையெல்லாம் அவசியம் என நினைப்பது மாயை. ஒன்றையுமே உள்ளபடி காட்டாது நிறமூட்டி அலங்கரித்து அதை வேறு பொருளாக, உண்மைத் தன்மையை மறைத்துக் காட்டுவது
DT6).
எனவே, மாயை என்பது உண்மையை மறைக்கும் ஒரு திரையாகும். இல்லாததை இருப்பதாகக் காட்டுவது எதுவோ அது LDIT60)u 9(5b.
எதுவந்தாலும், வந்தது போய்விடும் என்ற எண்ணத்துடன் மனதைச் சமநிலையில் வைத்திருக்க வேண்டும். இந்த நிலையில் இறைவனின் கால்களைப் பற்றிப் பிடித்துக் கொண்டால், மாயை வலையிலிருந்து வெளிவர முடியும். பற்றற்றவனை நினைக்கும் போது, நாம் பற்று அற்றவராகிறோம். மாயைக்கு அப்பாற்பட்டவனைச் சார்ந்திருக்கும் போது, மாயைக்குள் அகப்பட மாட்டோம்.
இறந்த காலத்தையே நினைத்து நினைத்து அல்லற்பட்டுக் கொண்டிருக்கும் எமது மனமானது தீயவற்றையே நினைத்துக் கொண்டிருக்கின்றது. நல்லவற்றை நினைப்பது இல்லை. புத்திக்குக் கட்டுப்படுவது இல்லை. மனம் சத்குருவின் பாதத்தையே நாடிக்கொண்டிருக்க வேண்டும். தீயவர்களின் கூட்டம் இன்றி இருக்க வேண்டும். ஒரு கையால் இறைவனின் பாதங்களைப் பற்றிக் கொண்டு மறு கையால் செயல்களைச் செய்து கொண்டே இருக்க வேண்டும். நித்தியத்தை (நிலையானதை) நினை அநித்தியத்தை நினைக்காதே. எங்கெல்லாம் “சத்சங்’ நடக்கின்றதோ அங்கெல்லாம் சென்று உட்கார்ந்து கொள்ள வேண்டும். நமது தெளிவின்மை கெட மகாமாயைக் களைந்திட, மெய்ப்பொருள் ஞானத்தைப் பெற்றுக் கொள்ள ஞான குருவின் முன் சென்று பணிந்து உட்கார்ந்து உபதேசம் கேட்டுக் கொண்டு, அதன் வழி நடக்க வேண்டும்.
- 38 -

எதிலும் பற்று வைக்காது, எல்லாவற்றையும் விட்டு விலக கற்றுக்கொண்டால், இறுதியில் நாம் எப்படி வந்தோமோ, அப்படியே அனுப்பி வைக்கப்படுவோம் என்பதை அறிந்து கொள்வாய் மனமே. இடையில் ஏனோ இவை எல்லாம்? என்ற நிலையில் மீண்டும் பிறப்பை நினைக்காது மனம்.
எல்லா வல்ல இறைவன், பரம்பொருளான சிவன், ஏகனாக, சிவசக்தியாக, படைப்பவர், காப்பவர், அழிப்பவனாக, வேதங்கள் நான்கையும் தந்து அதன் பொருளாய் இருப்பவனாக ஐந்தொழிலையும் வெற்றிகரமாக நடத்துபவனாக, பிண்டத்தில் ஆறு ஆதாரங்களிலும் விரிந்து நிற்கின்றவனாக, சூரியன் சந்திரன் ஆன்மா பஞ்சபூதங்களாக எந்நாட்டவர்க்கும் இறைவனாகவும் தென் நாட்டவர்களுக்குச் சிவனாகவும் எட்டுத்திக்குகளிலும் வானளாவியும் பரந்து விரிந்து நிற்கின்றான். அண்டத்தில் ஜோதிமயமாக உள்ள அவன், பிண்டத்துக்குள்ளும் மனதில் தன் நிகரற்றவராய் உள்ளான்.
சிவனோடு ஒக்கும் தெய்வம் தேடினும் இல்லை அவனோடு ஒப்பார் இங்கு யாவரும் இல்லை புவனம் கடந்த அன்று பொன் ஒளி மின்னும் தவளம் சடை முடித்தாமரையானே.
தொடர்ந்தும், படர்ந்தும், கடந்தும், உடனும் இருப்பவனை எப்பொழும் தொழுபவனுக்கு சிவனடிப் பேறு கிடைக்கும். மற்கட சம்பந்தத்தின் பின், இறைவனதும் பக்தனதும் சம்பந்தம் மாச்சார சம்பந்தமாகும்.
அருள் நூல்களைப் படிக்க சிவனின் அருள் வேண்டும். தீதும் நன்றும் பிறர்தர வாரா. பிறா கருவிகளேயன்றி கர்த்தா நாமே. முன் வினை தீர அருள் நூல்களைப் படிக்க வேண்டும்.
“அவனருளாலே அவன்தாள் வணங்கி’ என மாணிக்கவாசக சுவாமிகள் கூறினாரன்றோ. உலகியல் தேவைக்குரிய நூல்கள் கருவி நூல்கள். இறைவனை அடைய வழிகாட்டுபவை ஞானநூல்கள். கருவி நூல்களைக் கற்றவரே ஞான நூல்களைக் கற்கும் தகைமை உடையவர். கடவுள் பொய், கண்ணால் காண முடியாதவை பொய் என்பவர்கள் ஞான நூல்களைப் படிக்க முடியாது. சிவனை முழுமுதற்
- 39

Page 22
கடவுளாகக் கொண்டு சமய அநுட்டானங்களோடு இருப்பவர் ஞானநூல்களைக் கற்கலாம். சென்ற பிறப்பில் ஞான நூல்களைக் கற்று முடித்து. இப் பிறப்பில் உடம்பில் இருந்து கொண்டு பேரின்பம் காண்பவர்களே மஹாரிஷிகள்.
தேவர்கள் எந்நேரமும் இன்புற்றிருப்பார்கள். அவர்களும் புவியில் பிறந்து பலன் பெற்றே சிவனை அடைய வேண்டும். வேதனைப்படும், பிறக்கும், இறக்கும் அவர்கள் கடவுள் அல்லர்.சிவன் மாயை மூலம் ஆன்மாவுக்கு தனு, கரண, புவன, போகங்களைக் கொடுத்து செயற்படவைக்கிறான். செயல்களைப் பொறுத்து நல்ல, தீய வினைகளுக்கு ஏற்ப ஆன்மா பலனை அநுபவிக்கின்றது.
உடம்பை உயிர் இயக்குவது போல், உயிருக்கு உயிராய் நின்று இயக்குபவர் இறைவன், வடவாமுக அக்கினியாய் சமுத்திரத்தின் நடுவில் இருந்து நாட்டைக் காப்பது போல், உதர அக்கினியாய் நின்று உடலை சமநிலையில் வைத்துள்ளார். மாறுபட்ட தன்மையில் மறைந்து, தோன்றாத் துணையாய், வழித்துணையாய் இருப்பவனும், தீயில் சூடாகவும், தண்ணிரில் குளிராகவும் இருப்பவனுமான எல்லாம் வல்லவனை மனிதர்களுக்கு மனிதராய், வானவர்களுக்கு வானவராய் அவ்வவ் வடிவத்தில் வந்து அருள் பொழிபவனை அகக் கண்களால் கண்டு வழிபட்டு, இடைவிடாது நினைத்திருப்போமாக.
உடம்பினை முன்னம் இழுக்கென்றிருந்தேன்
உடம்பினுக்கு உள்ளே உறுபொருள் கண்டேன்
உடம்புளே உத்தமன் கோயில் கொண்டவன் என்று
உடம்பினை யானிருந்த ஒம்புகின்றேனே.
நினைப்பது சித்திக்க வைப்பது மந்திரம். திருமந்திரம் ஸ்தோத்திர வடிவிலும், சாஸ்திர வடிவிலும், வாழ்வியல் நூலாகவும் திருமூலரினால் பாடப்பட்டது.
தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி
- 40 -

சிறு துளி பெரு வெள்ளம்
எம்மில் அநேகர்மானோர் ஏதோ ஒரு வகையில் சேவை’ என்னும் தெய்வீகப் பணியில் நாளாந்தம் ஈடுபட்டுக்கொண்டிருக்கின்றோம். சேவை ஆனது 'இறைவன்' என்ற ஏகாந்த இலக்கை அடையும் பாதையில் படிப்படியாகக் கொண்டு செல்லும் ஒரு மார்க்கமாகக் கூறலாம். அப்படி இருந்தும் நாம், எம்மை அறியாமலேயே, விழுகுழிகளில் விழுந்து எழும்பிக் கொண்டே செல்வதை நாம் அநுபவத்தில் காண்கிறோம்.
'அறியாமை என்னும் ஒரு பெரும் ஆதிக்கத்தின் கீழ், இந்தப் பரந்த உலகமே அடிமையாக்கப்பட்டிருத்தலே இதற்கு காரணம் ஆகும்.
இந்நிலையில் இயற்கையானது தனது படைப்புக்களைக் குறிப்பிட்ட எல்லையை மீற விடாது மிகுந்த அவதானத்தை, கவனத்தை வைத்துக் கொண்டே இருக்கின்றது.
படைப்புக்கள் அனைத்தும் பஞ்சபூதங்களாலானவை. ஒவ்வொரு பூதமும், மற்றைய நான்கு பூதங்களை குறிப்பிட்ட விகிதாசாரத்தில் அடக்கியுள்ளது. அதற்கு இணங்க, அவ்வற்றுக்குரிய பண்புகளும், இயல்புகளும் வெளிப்படுகின்றன என்பதை நாம் யாவரும் அறிவோம்.
இங்கு இயற்கை எனப்படுவது தொடக்கமும் முடிவுமற்ற எல்லாம் வல்ல பரம்பொருளே ஆகும். பரம்பொருளானது சில குறிப்பிட்ட இயல்புகளை, பழக்க வழக்கங்களை தனது ஒவ்வொரு படைப்பிலும் உள் விதைத்து, அவ்வற்றுக்குரிய நிலையிலிருந்து தாழவோ அல்லது நிலையை மீறி அழியவோ விடாது பாதுகாத்துக் கொண்டிருக்கின்றது. இது அறியாமை என்னும் சக்தியினால், முன்னோக்கிய மேல் நோக்கிய இயக்கம் தடைப்படாது காக்கின்றது. இங்கு அறியாமை எனப்படுவது LDT60)u saglb.
ஒரு தனிப்பட்டவரோ, சமுதாயமோ ஒரு நிரந்தர நன்மையை நோக்கிப் பயணிக்கும் போது, ஒரு நேரெதிரான தடையையோ அல்லது அப்பாதையில் ஒரு மாறுதலை, திருப்பத்தை ஏற்படுத்தும் ஒரு சக்தி எப்பொழுதும் இருப்பதை நாம் காண்கிறோம். இத்தகைய ஒரு நல்ல நோக்கத்தைக் கொண்ட பயணத்தை, சமுதாய நிலைப்பாட்டுக்கு
- 41 -

Page 23
ஏற்றாற் போல் நாம், பிற்போடுவதையோ மாற்றியமைப்பதையோ கைக்கொண்டு பயண வேகததைக் குறைத்துக் கொள்கின்றோம். இதற்கு சிறப்பான காரணங்கள் அமைந்திருக்கலாம்.
மகத்தான இறை அநுபவங்களை சந்தித்தாலும், உயர்ந்த புதிதான உண்மைகள் எம்முன்னே வைக்கப்பட்டாலும், ஒரு தனிமனிதனிடத்தில் 'சந்தேகம்' என்பது தோன்றிக் கொண்டே இருக்கும். 'சந்தேகம்' என்பது மனத்தை துருபிடிக்க வைத்து இறுதியில் அழித்தே விடும் ஒரு நோய் என்றே கூறலாம். இது எவ்வளவு ஆணித்தரமான நிரூபணத்தை முன்னே நிறுத்தினாலும், எப்பொழுதும் ஒரு கேள்வியை எழுப்பிக் கொண்டே இருப்பதோடு எந்த ஒன்றையும் ஏற்க மறுத்து விடும்.
எந்தவொரு நல்ல முன்னேற்றத்துக்கும், சாதனைக்கும் அதைத் தொடர முடியாத வகையில் ‘சந்தேகங்கள் தடையாகின்றன. இதுவே selu T60)LD (Ignorance) sagib.
நாம் பெரிய விஷயங்களை நடைமுறைப்படுத்த ஆரம்பிக்கும் போது, அனைத்து கோணங்களிலுமிருந்து நோக்கி முற்பாதுகாப்பை மிகவும் அவதானத்துடன் எடுத்துக் கொள்வது வழக்கம். ஆனால், அன்றாட வாழ்க்கையில், நாளாந்தம், எம்மையறியாமலேயே ஒரு செயலாலோ, பேர்ச்சாலோ, ஒரு சொல்லிலோ வசனத்திலோ நாம் வீழ்குழியில் (pitfals) விழுந்து விடுகின்றோம். கடிகார முள்ளுடன் சேர்ந்தே அவசரமாக ஓடிக் கொண்டிருக்கும் இவ்வுலகிலே, நாளாந்த செயற்பாட்டில் அத்தகைய கவனத்தை, முற்பாதுகாப்பை நாம் எடுத்துக் கொள்வது மிகவும் குறைவு. இல்லை என்றே கூறலாம். எனவே, பெரிய வியங்களை விட, சிற்சிறிய நாளாந்த சந்தர்ப்பங்களிலேயே நாம் இறைவனின் சோதனைக்கு உட்பட்டு விடுகின்றோம். அறியாமையின் காரணத்தால் இதை நாளாந்தம் சேகரித்துக் கொண்டே செல்கின்றோம். ஆனால் அதை நாம் உணருவதில்லை. இங்கு தான் நாம் வினைப்பயனுக்கு ஆளாகின்றோம், தகுதி பெறுகின்றோம், பிறப்புக்கள் எடுக்கின்றோம், தண்டிக்கப்படுகின்றோம். இந்த வீழ் குழிகள் எமது கவனத்தை ஈர்க்காத வகையில் நாம் இந்நிலைக்கு ஆளாகின்றோம்.
- 42 -

லெளகீக ஆசைகளுக்கு அடிமையாகும் போது, அவை எமது கவனத்தை ஈர்க்கும் போது, சரியானதும் தூய்மையானதுமான ஆன்மீக பாதையை அறிந்திருந்தும், அப் பாதையில் செல்லும் போதும், அறியாமையினால் போர்த்து மறைக்கப்பட்ட இந்த வீழ்குழிகளை நாம் காணாது கடந்து விடுகின்றோம்.
தொடக்கமும் முடிவுமற்ற, உறுதியான, நிலைத்த, உண்மையான பரம் பொருளை அடையும் மார்க்கம் வேறு, அடையும் இலக்கு வேறு ஆகும். பரம் பொருள் இலக்கு. மார்க்கங்கள் பல உள்ளன. முதலில் வழிமுறையை அடைந்து பின் சீராகச் சென்று இலக்கை இடைய வேண்டும். இந்த இலக்கை அடையும் பாதையில் பயணித்துக் கொண்டு செல்லும் வேளையில் நாம் திசை மாறி எம்மையே நாம் இழந்து விடுவதுமுண்டு. நாம் அத்தனை அளவற்ற ஆர்வத்துடன் அவ்விலக்கை நோக்கிப் பயணிக்கும் வேளையில், நாம் எதற்காக இப்பாதையில் செல்கிறோம் என்பதையே மறந்து விடுகின்றோம்.
உதாரணமாக “தியானம்’ எம்மை வெளி உலகத்திலிருந்து மீட்டு எம் பார்வையை உள் நோக்கிச் செலுத்துகின்றது. அதன் மூலம் எண்ணங்கள் அற்ற நிலையை உருவாக்கி அமைதி என்ற நிலையில் இறை அநுபவத்தை ஏற்படுத்துகின்றது. அந்த உயர்ந்த இலக்கை அநுபவத்தால் கண்ட ஒருவருக்கும் மேலும் "தியானம் செய்வது அவசியமற்றதாகிறது. தனது நாளாந்த கர்மாக்களுடன் ஈடுபட்டிருந்தாலும் அவனது எண்ணம் அந்த உள்நோக்கிய இறையனுபவத்திலேயே நிலைத் திருக்கின்றது. செயப்யும் செயற்பாடுகளில் பற்று அற்றவனாய், செவ்வனே செயற்பட்டுக் கொண்டு செல்பவனாகின்றான். அதாவது தியானத்தினால் காணும் முடிவான முழுமையான பயனை அவன் அடைந்துவிட்ட நிலையில், மேலும் முறைப்படி அமர்ந்து ‘தியானம்’ செய்ய வேண்டிய தேவை அற்றவனாகிறான்.
அளவற்ற ஆர்வத்துடன் செய்பவன், தனது இலக்கை, அதாவது ‘என்ன காரணத்துக்காக நான் தியானம் செய்கின்றேன்’ என்பதையே மறந்து, வெறுமனே தியானம் செய்கின்றேன்’ என்று தொடர்ந்து கொண்டே இருப்பான்.
- 43 -

Page 24
நான் இந்த இலக்கை அடைவதற்காக இவ் வழியில் செல்கின்றேன்’ என்ற எண்ணத்தை இழந்து விடக்கூடாது. பசுஞானமான மாயை, பரம்பொருள் என்ற ஒரே இலக்கை அடையும் பாதையில் எம்மைத் திசை திருப்புகின்றது.
எனவே 'அறியாமை என்ற ஆதிக்கத்துக்கு அடிமை ஆகாது, வெளகிக மாயைக்கு உட்படாது. அடைய முயலும் இலக்கை மனத்தில் உறுதியாக நிலைக்க வைத்து, ஆன்மீகப் பாதையில் முன்னேறிப் பயன்பெறுவோமாக.
அன்றாட சிற்சிறு செயற்பாடுகளினுாடே கன்மவினைப்பயன் மூலம் தண்டனைக்குட்படாதவாறு, ஒவ்வொரு சொல்லிலும் செயலிலும் அவதானத்துடன் முன்னேறுவோமாக.
- 44


Page 25
ीषु,
L5656ful A LD56fi
மாணவிய மானிப்பா GET6.5 L
தனது ஆரம்பக்கல்வியை மகளிர் கல்லூரியிலும், வ பாடசாலையிலும் பயின் (உயர்தரம்) கல்வியை இந்துக் கல்லூரியில் பய GDGDIĞİLGÖ 2.5GT LÊ.6J. G. தேர்ச்சியுடன் அக்பார் கொழும்பு, சிலோன் டி கொழும்பு ஆகிய நிறு LIIGIGÍN UITGögâUUGIĩ.
ஆன்மீகத் துறையில் மிகு பத்திரிகைகளுக்கும். இத சமர்ப்பித்துள்ளார்.
யாழ்ப்பாணம் (66/6fամլմլյ6
p6If 繳 ঢাng வருகிறார்.
long, S.
M O77 W.Sridig.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தி. இராஜினி தேவராஜன்
o திருமதி லோகநாதனி D, UplIG)
பிறப்பிடமாகக்
றவர். தனது க.பொ.த இரத்மலானை கொழும்பு பின்று தேர்ச்சி பெற்ற இவர் ற்கை நெறியில் பகுதித்
பிரதர்ஸ் லிமிடெட் - மார்க்கட்டிங் லிமிடெட் 60 Big56.f65 56.5 L 5Toof
பரிபாலனை சபையினரால் தழ் "இந்து சாதனம்’ இதழ் கட்டுரைகளை வெளியிட்டு