கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: பெற்ற மனம்

Page 1


Page 2

b திப் Vಣಿ nauk. 8js72/7051 1952பெப்ரவரி மாதம் 29ஆம் திகதி வெளியிடப்பட்ட இலங்கை அரசாங்க வர்த்தமானிப் பத்திரிகையில் வெளியிடப்பட்ட உதவி பெறும் சுயமொழி, இருமொழி மற்றும் ஆங்கிலப் பாடசாலைகள் பற்றிய பிரமாணக் குறிப்பின் 19ஏ பந்தியின் கீழ் கல்விப் பணிப்பாளர் நாயகம் அவர்களால் பாடசாலை நூலகப் புத்தகம் ஒன்றாக அனுமதிக்கப்பட்டுள்ளது.
ஈ.எப்.டி. நாணயக்கார et laurent கலவி நூல் வெளியிட்டு ஆலோசனைச் சபை, 2005.01.31 திகதி
மனிதவள அபிவிருத்தி, கல்வி, கலாச்சார அலுவல்கள் அமைச்சு இகருபாய, பத்தரமுல்ல.

Page 3

வபற்ற மனம்
دیتے araے بننےلگی

Page 4
ISBN 955-96932-1-2
Title of the Book : PETRAMWANAMA
Author : Dr. A. Jinnah Sherifudeen.
(JINNAH)
C) Mrs. Hamziya Farida Sherifudeen
No 16, School Avenue. Off Station Road, Dehiwala- Sri Lanka. Tel: 001-2730378
Published By : Annai Veliyeetakam
Maruthamunai
Cover Designed By : “Ramany”
First Edition : December 2003
Pages : XII-124
Type Seting By : F. Sawmiya Ilyas (Panadura)
Printed By : A.J. Prints, Dehiwela
Price : RS. 2OO/=

தென்கிழக்குப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் றமீஸ் அப்துல்லாஹற் அவர்கள் வழங்கிய
அணித்துரை
ஜின்னாஹ் கதைகள் ஒரு தனி ரகம்
புலவர்மணி ஆ.மு. ஷரிபுத்தீன் அவர்கள் ஈழத்துச் செய்யுள் மரபின் முக்கியமான பிரதிநிதி. அதேபோல இஸ்லாமிய உள்ளடக்கம் நிறைந்த கவிதைகளையும் எழுதியவர் அவர். 96)(560) -u புதல்வர்களும் கவிதைத் துறையில் அதிகம் ஈடுபாடுள்ளவர்கள். அந்த வகையில் ஜின்னாஹற் ஷரிபுத்தீன் குறிப்பிடத்தக்கவர்.
ஈழத்து இலக்கிய உலகில் ஜின்னாஹற் ஷரிபுத்தீன் கவிஞராகவே அறியப்பட்டவர். கவிதைகள், காவியங்கள் என்று எழுதிய அவர் புனைக்கதைத்துறையிலும் அக்கறை காட்டியுள்ளார். அண்மையில், அவரது “கருகாத பசுமை’ என்ற நாவல் வெளிவந்தது. அதேபோல இன்று “பெற்றமணம்’ என்ற சிறுகதைத் தொகுதியை வெளியிடுகின்றார். இதன் மூலம் ஈழத்தின் புனைகதையாசிரியர்களுள் ஒருவராகவும் ஜின்னாஹற் தன்னை இனங்காட்டிக் கொள்கின்றார். மொத்தத்தில் ஜின்னாஹற் பல்துறைப் படைப்பாளியாகின்றார்.
தமிழ்ச்சிறுகதையின் ஆரம்பகாலம் பெரும்பாலும் கதை அம்சத்துக்கு முக்கியத்துவம் கொடுப்பதாகாகவே அமைந்திருந்தது. ஜின்னாஹற்வின் கதைகளும் அத்தகைய தன்மையுடையனவாகவே அமைந்துள்ளன. ஆனால், ஜின்னாஹற் கையாண்டுள்ள கதைகளின் கருக்கள் தற்காலம்வரை விரிந்துள்ளன. மேலும், இஸ்லாமியத் தமிழ்ச் சிறுகதைகள் என்றளவில் ஈழத்தின் முக்கியமான சிறுகதையாளர்களுள் ஒருவராக ஜின்னாஹற்வை அடையாளப்படுத்த (փլգԱյլD.
III ஜின்னாஹ்

Page 5
1950-60களில் அ.ஸ்.அப்துல் ஸமது என்ற ஈழத்துச் சிறுகதையாளரின் தங்கை’ என்ற கதை, பெரும் வரவேற்பைப் பெற்றது. இதற்குக் காரணம், இஸ்லாமியத் திருமணத்திலுள்ள சட்டமுறையொன்றை அவர் அக்கதையினுடாக வெளிப்படுத்தியமை ஆகும். பின்னர் இக் கதை சி.வி. வேலுப்பிள்ளையால் (OLDTfGLJujds 35(JLJ (6 "Brother and Sister' 6T66T1 g5606). JLS6) வெளியானது. இவ்வாறு இஸ்லாமிய சமய விழுமியங்களை உள்ளடக்கிய பல கதைகளை ஜின்னாஹ் எழுதியுள்ளார்.
இவருடைய “பெண் உரிமை' என்ற கதை, முஸ்லிம்களிடம் உள்ள பலதார திருமணத்தினைப் பற்றிக் குறிப்பிடுவது. இக்கதையில் திருமண வாழ்க்கைக்காக ஏங்குகின்ற பெண், திருமணம் முடித்த ஆணை மணப்பது குறிப்பிடப்படுகின்றது. அதே போல இவரது 'ஒன்றும் ஒன்றும் ஒன்று’ என்ற கதை திருமண சுகத்தை அதிகம் விரும்புகின்ற ஆண், இன்னொரு திருமணம் முடிப்பதை அங்கீகரிக்கின்ற மனைவியினது மனப்பாங்கை எடுத்துக்காட்டுகின்றது. இவரது “பெண்ணுரிமை’ ‘நாமிருவர் நமக்கு இருவர்’ ‘உண்ணா நோன்பு' முதலானவையும் இஸ்லாமிய விழுமியங்களின் அடிப்படையில் அமைந்தவையே. ‘நாமிருவர் நமக்கிருவர்’ என்ற கதை இஸ்லாம் கருச்சிதைவு செய்வதை அங்கீகரிக்காமை பற்றிக் கூறுகின்றது. மொத்தத்தில் இக்கதைகள் மூலம் இஸ்லாமியத் தமிழ்ச் சிறுகதை உலகின் முக்கியதொரு பிரதிநிதியாக ஜின்னாஹற் வை அடையாளப்படுத்த முடியும்.
ஜின்னாஹற் தனது பள்ளிப் பருவத்தில் மலையகத்தில் வாழ்ந்தவர். இதனால் மலையக மக்களின் பிரச்சினைகளை நன்கு அறிந்தவர். இந்த வகையில் அவரது “பிறந்தமண்” “அடித்தவனுக்கு அடி’ முதலிய கதைகளைக் குறிப்பிட முடியும்.
இலங்கையின் இன முரண்பாட்டுப் பிரச்சினைகளால் பலர் நாட்டை விட்டுச் சென்று வேறு நாடுகளில் வசித்து வருவது
CIV) பெற்றமனம்

குறிப்பிடத்தக்கது. இந்தச் சூழ்நிலையால் ஏற்பட்ட வாழ்க்கை மாறுதல்களை ஜின்னாஹற் தமது பல கதைகளில் சித்திரித்துள்ளார். இந்த வகையில் அவரது நாடற்றுப் போனவர்கள்’ ‘கொழுகொம்பு ‘புலப்பெயர்வு’ ‘செத்தாலும் சாவது முதலிய கதைகள் குறிப்பிடத்தக்கன. அவரது தவறுகள் தூண்டப்படுகின்றன’ என்ற கதை, முஸ்லிம் பெண்கள் தொழிலுக்காக வெளிநாட்டுச்குச் செல்வதில் உள்ள பிரச்சினைகளைச் சித்திரிக்கின்றது.
ஜின்னாஹற்வின் 'மனித வேட்டை' என்ற கதை, ஈழத்தின் இனமுரண்பாட்டை சித்திரிக்கின்ற நல்ல கதை. இது பரிசு பெற்ற கதையும் கூட. இக்கதைக்கு ராஜழரீகாந்தன் ஒரு குறிப்பு எழுதியுள்ளார். இதுபோல ஜின்னாஹற்வின் இக்கதைத் தொகுதியுள் உள்ள சில கதைகளுக்கு என்.கே.ரகுநாதன், தகவம் இராசையா, அல்அயிஸ"மத், அன்புமணி, கலைவாதி கலீல் முதலானவர்கள் எழுதிய விமர்சனக் குறிப்புக்கள் சேர்க்கப்படுள்ளன. இத்தொகுதியல் உள்ள பல கதைகள் ஏற்கனவே பிரசுரமானவை.
‘ஓலை’யில் வெளிவந்த ஜின்னாஹற்வின் ‘இதயத்தின் ஈரிதழ்கள்’ என்ற கதை, கிழக்கிலங்கை தமிழ், முஸ்லிம் மக்களின் உறவு நிலையைச் சித்திரிக்கின்ற்து. இன்றுள்ள சூழ்நிலையில் அந்த உறவு நிலை தன் அடுத்த பரம்பரையினருக்கும் தொடர்வதனை இக்கதையின் முடிவாக ஆசிரியர் குறிப்பிட்டுள்ளார். கிழக்குப் பிரதேசத்தில் வாழும் இம்மக்களின் உறவு எப்படி எப்படியெல்லாம் தொடர்புபடுகின்றன என்பதை எடுத்துக் காட்டுவது கூர்ந்து கவனிக்கத்தக்கது. இக்கதையில் வரும் மிகச் செம்மையான மொழிநடை கதைவாசிப்பின் போது ஆங்காங்கே இடறச் செய்கின்றது. இது ஜின்னாஹற்வின் கதைக்குரிய பண்பே.
மனித உணர்வுகளைச் சித்தரிக்கின்ற சில கதைகளையும் ஜின்னாஹற் எழுதியுள்ளார். அந்த வகையில் ‘நன்மை தந்த பரிசு’ ‘பெற்றமனம்’ ‘மீண்டும் பூத்தமலர்’ ‘மனிதநேயம்' 'வெள்ளைப்புறா ஒன்று முதலான கதைகள் குறிப்பிடத்தக்கன.
CVD- ஜின்னாஹ்

Page 6
மொத்தத்தில் ஜின்னாஹற் ஷரிபுத்தீனின் கதைகள் ஈழத்தின் ஆரம்பக் காலக் கதைகள் போல உணர்வுகளைப் பிரதிபலிப்பன வாகவும் தற்காலக் கதையாசிரியர்கள் கையாண்டுள்ள புகலிடப் பிரச்சினைகள், மலையக பெண்களின் பிரச்சினைகள், மலையக மக்களின் பிரச்சினைகளையும் சித்தரிப்பனவாகவும் அமைந்துள்ளன. எல்லாவற்றிற்கும் மேலாக, இஸ்லாமிய விழுமியங்களை, சட்டங்களை அவர் கதையாக்கியிருப்பதை மிக முக்கியமாகக் கருத வேண்டியுள்ளது.
ஆற்றொழுக்கான நடை, தொய்வற்ற தன்மை, மனதில் நிலைத்து நிற்கும் பாத்திரங்கள். ஒரேமூச்சில் படித்து முடிக்கக் கூடிய கதையமைப்பு போன்றவை ஜின்னாஹற்வின் கதைகளின் சிறப்பம்சங்கள். ஜின்னாஹவின் சில கதைகளில் ஆசிரியரின் கருத்தும், சொந்த வாழ்க்கை அம்சமும் முதன்மை பெறுகின்றன. “பெற்றமனம் இதனைத் தெளிவாக எடுத்துக் காட்டுகின்றது.
ஜின்னாஹற் ஷரிபுத்தீன் தனது கவிதைகள் மூலம் குறிப்பிட்ட ஒரு பாரம்பரியத்தின் முக்கியமானவராகத் தெரிவதுபோல், தனது கதைகள் மூலமும் ஒரு பாரம்பரியத்தின் குறிப்பிடத்தக்க கதை ஆசிரியராகின்றார். ஒரு நல்ல இஸ்லாமியத் தமிழ்ச் சிறுகதையாளராக அவரை முதன் மைப்படுத்துவதில் நான் மகிழ்ச்சி அடைகின்றேன். தமிழகத்தின் ஜே.எம்.சாலி, ஹிமானாசையத் பரம்பரை போல ஈழத்தில் ஜின்னாஹற் முதன்மைப்படுகிறார். வாசகரஞ்சகமிக்க பல கதைகளை எழுதிய ஜின்னாஹற் இன்னும் சிறுகதைகளை எழுத வேண்டும். அவருக்கு அதற்குரிய வாய்ப்புக்களை இறைவன் சித்தமாக்க வேண்டும். ஜின்னாஹற்வின் கதைகள் ஒரு தனிரகம்; அவருக்கு வாழ்த்துக்கள்.
றமீஸ் அப்துல்லாஹ்.
CVID பெற்றமனம்

ø7aðězil slav ølwiešamsáså
பெற்றமனம் எனது முதலாவது சிறுகதைத் தொகுதியாகும். 1970களிலிருந்து நான் எழுதி, பத்திரிகைகளிலும் சஞ்சிகைகளிலும் வெளிவந்த சிறுகதைகளிலிருந்து, ஒரு பகுதியை இத்தொகுதியில் உள்ளடக்கியுள்ளேன்.
ஒரு படைப்பாளி என்னும் வகையில் எனக்கும் இத் தொகுதிக்கும் உள்ள உறவைவிட, இதிலுள்ள சிறுகதைகளில் நடமாடும் பாத்திரங்களுக்கும் இத்தொகுதிக்கும் இடையில் உள்ள உறவு மிக நெருக்கமானது.
கற்பனை, படைப்புகளுக்கு அழகூட்டுகின்றன. அவற்றுக்கு வீரியம் அளிப்பது கதைகளில் பேணப்படும் கருக்களே.
என்கதைகளில் பெரும்பாலனவை உண்மை நிகழ்வுகளின் வெளிப்பாடுகளே. கற்பனை வண்ணத்தால் மெருகூட்டப்பட்டுள்ளன. கருவையும் கற்பனை செய்து படைப்பவனே ஒரு படைப்பாளி எனில், நானொரு படைப்பாளியே அல்ல என்பேன்.
கவிதையில் ஆழமாகக் காலூன்றி ஐந்து காவியங்களோடு, மூன்று கவிதைத் தொகுதிகளையும் வெளியிட்ட நான், ஒரு மாற்றத்திற்காகவே சிறுகதை எழுத முயன்றேன். என்னை இலக்கிய உலகுக்கு அறிமுகஞ்செய்து வளர்த்தெடுத்த மரியாதைக்குரிய என் ஐயா எஸ்.டி. சிவநாயகம் அவர்கள், தனது சிந்தாமணியில் எனக்குக் களந்தந்து எழுதவும் தூண்டினார். அவரே என்னைச் சிறுகதை எழுதுபவனாகவும் உருச் சேர்த்தார்.
இளமைக் காலத்தில் நிறையவே நாவல்களைப் படித்து அவற்றை உள்வாங்கிக் கொண்ட அனுபவமே. எனக்குச் சிறுகதை எழுதுவதில் பரிச்சயத்தைத் தந்திருக்க வேண்டும். கவிதை எழுதும் ஆளுமை அதற்குத் துணைநின்றது. “கருகாத பசுமை” என்னுமோர் நாவலையும் நான் எழுதி வெளியிட்டுள்ளேன்.
சிறுகதைகளுக்காக எனக்குக் கிடைத்த பரிசில்கள், என்னை
(VII) ஜின்னாஹ்

Page 7
உற்சாகப் படுத்தின. எனது சிறுகதைகள் சிந்தாமணி, சூடாமணி, தினக்குரல், தினகரன், வீரகேசரி, நவமணி, இடி, மல்லிகை, கொழும்புத் தமிழ்ச் சங்கத்தின் ‘ஓலை’ என்பனவற்றில் பிரசுரமாகியதுடன், என் சிறுகதை முயற்சிக்கு உதவின.
நண்பர் 'அல் அஸ"மத்’ எனக்குச் சிறுகதை எழுதுவதில் ஊக்கம் தந்தார். தெளிவத்தை ஜோஸப் அவர்கள் தோள்தட்டி உற்சாகப் படுத்தினார். என் நாவலுக்கு அவர் அளித்த அணிந்துரை அதற்குச் சான்று. எழுத்தாளர் செ. யோகநாதனும் எனக்கு ஆர்வத்தை ஊட்டியவர்.
கற்பனையில் ஒருகருவைச் சிருஷ்டித்து எழுதுவதிலும், ஒரு யதார்த்த்தை வடிவமைப்பதிலும், இரண்டாவதே எனக்குப் பிடிக்கும். ஏனெனில் நான் கண்டு அனுபவித்ததைக் கவியாக்குவதிலும், கற்பனையாய் வடிப்பதிலும் உள்ள வேறுபாடுகளை நான் எனது கவிதை அனுபவத்தில் கண்டுள்ளேன்.
ஒரு படைப்பாளி தன் கண்களால் கண்டதையும், அனுபவித்ததையும், தனது படைப்புக்குக் கருவாக்கிக் கொண்டு எழுதும் போது ஏற்படும் திருப்தியை, கேட்டுப் படைப்பதன் மூலம் பெறுவதில்லை. அது செயற்கைத் தன்மை உடையதாய் அமைவதால்.
உள்வாங்கிப் பிரசவித்தல் படைப்பாளிக்குச் சிரமமானதல்ல. எனினும் உண்மையின் வெளிப்பாட்டில் ஏற்படும் ஆழம் அதில் இருப்பதில்லை என்பதை நான் உணர்கின்றேன்.
நான் எனது இளமைக் காலத்தில ஒரு நல்ல வாசகனாக இருந்தேன். பின்னர் வாழ்வில் ஏற்படும் இயல்பான பொறுப்புக்களும், படைப்பாற்றலால் ஏற்பட்ட வேகமும், அதனைத் தொடர முடியாது மறித்தன. கிடைக்கும் பொழுதில் எழுதுவதையே நான் கருத்தாக்கிக் கொண்டேன்.
தற்கால நவீனத்துவப் போக்கில் என்னை என்னால் முழுமையாகப் புதைத்துக் கொள்ள இயலாமற் போனமைக்கு என்
(VIID பெற்றமணம்

தேடுதலின்மையே காரணமாக இருக்கலாம். அதற்காக நான் வருத்தப்படவில்லை. பழைமையிலும் நம்மை நாம் முறையாகப் ஈடுபடுத்திக் கொண்டால், நாம் நமது இருப்பை நிச்சயப்படுத்திக் கொள்ள முடியும். இது எனது கவிதை அனுபவத்தில் ஏற்பட்ட அனுபவ உண்மையாகும்.
என் விருப்பத்திற்கிணங்க, இன்று சிறுகதை ஆய்வு முயற்சியில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டிருக்கும் தென்கிழக்குப் பல்கலைக்கழக விரிவுரையாளர் ஜனாப். றமிஸ் அப்துல்லாஹ் அவர்கள் ஓர் அணிந்துரை தந்து என்முயற்சிக்கு ஊக்குவிப்பளித்துள்ளார்.
அட்டைப்பட ஓவியத்தை பிரபல ஒவியர் 'ரமணி’ அவர்கள் வரைந்தளிக்க, தெஹிவலை ஏ.ஜே. பிறின்ட்ஸ் ஸ்தாபன முகாமையாளர் ஜனாப். ஏ. மர்சூக் அழகுற அச்சுப்பதிவும் செய்துள்ளார். கணனிப் பதிவினை செல்வி, பாத்திமா செளமியா (பாணந்துறை) செய்துள்ளார். இவர்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகளை இதன் மூலம் தெரிவித்துக் கொள்கின்றேன்.
29.12.2003 -ஜின்னாஹ்
( DX ) ஜின்னாஹ்

Page 8
PoŮUamö தந்தையாய்த் தாயாய் எங்கள் தலைவராய் வாழ்ந்த எமது சகோதரர் நயீம் ஷரிபுத்தீனுக்கு.
வெளியீட்டுரை
ஜின்னாஹ் ஷரிபுத்தீனின் கவிதைத் தொகுப்புகளையும், காவியங்களையும், அவர் தம் நாவலையும் வெளியிட்ட நாம் “பெற்ற மனம்” என்னும் அவரது சிறுகதைத் தொகுதியையும் இம்முறை வெளியிடுவதில் பெருமகிழ்ச்சியடைகிறோம்.
பத்திரிகைகளிலும், சஞ்சிகைகளிலும் வெளிவந்த ஜின்னாஹ்வின் இருபத்தொரு சிறுகதைகள் இத்தொகுப்பில் அடங்கியுள்ளன.
ஏற்கனவே எமது வெளியீடுகளுக்கு ஆதவளித்து உதவிதந்த வாசக நெஞ்சங்களுக்கு, எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதுடன், தொடர்ந்தும் நாம் வெளியிடும் எமது வெளியீடுகளுக்கு ஆதரவுதந்து ஊக்குவிக்கும் படியும், கேட்டுக் கொள்கின்றோம்.
ஹம்ஸியா பரீதா
அன்னை வெளியீட்டகம்.
மருதமுனை.

കഒക് ہندومتعۓھے ہے-<خ
O.
1.
12.
13.
14.
15。
18.
17.
18.
19.
2O.
21.
வயற்றமனம்
செத்தாலும் சாவது
நன்மை தந்த பரிசு
மனித வேட்டை
நிர்வாணம்
கொழுகொம்பு
பிரதிபலன்
நாமிருவர் நமக்கிருவர்
உண்ணாநோன்பு
இரு கோப்பைத் தேனி
அடித்தவனுக்கு அடி
ஒன்றும் ஒன்றும் ஒன்று
வபண்ணுரிமை
வெள்ளைப் புறா ஒன்று
மீண்டும் பூத்த மலர்
நாடற்றுப் போனவர்கள்
பிறந்த மண்
23Líb LIL6orib
தவறுகள்துண்டப்படுகின்றன
புலப் பெயர்வு
இதயத்தின் ஈரிதழ்கள்
XI
O1
O
22
29
46
57
86
71
81
91
O2
14
28
14 O
148
155
162
171
178
189
2O4.
O9
21
28
45
58
65
7Ο
8O
90
1O1
113
125
139
147
154
181
17 Ο
177
188
2O3
214

Page 9
ஜின்Mைஹ்வின் துWகல்
வெளிவந்தவை:
பாலையில் வசந்தம்
முத்து நகை
மஹ்ஜயீன் காவியம்
பனிமலையின் பூபாளம்
புனிதபூமியிலே காவியம்
Ф(5đБЛФ Шđ6000 (நாவல்)
ஜின்னாஹ்வின் இரு குறுங்காவியங்கள் ('பிரளயங்கண்ட பிதா', 'தாய்க்கென வாழ்ந்த தனயன்)
கடலில் மிதக்கும் மாழவீடு(சிறுவர் இலக்கியம்)
அகப்பட்ட கள்வன் (சிறுவர் இலக்கியம்)
எங்கள் உலகம் (சிறுவர் இலக்கியம்)
பெற்றமனம் (சிறுகதைத் தொகுப்பு)
оhoolflooйldыйшаoot:
பண்டாரவன்னியன்காவியம் (அச்சில்)
2. ஜின்னாஹ்வின் கவிதைகள்
3. ஜின்னாஹ்வின் சிறுகதைகள்
4. கவியரங்கக் கவிதைகள்
5. திருமறையும் நபிபோதமும்
(கட்டளைக் கலித்துறை)
XII
1989
1989
1992
1995
1998
2OOO
2OO
2OO2
2OO3
2OO3
2OO3
பெற்றமணம்

όλωξη η (9ორე(ხ
“என்ன வேலு இன்னும் நீ சாப்பிடலியா? நேரம் மூணுமணியாயிடுச்சே.” என்றேன் சற்றுக் கோபமாக.
“சாப்பிட்ரேன்யா!” என்றபடி, செய்த வேலையை அப்படியே விட்டுவிட்டுக் குழாயடிக்கு ஓடினான் வேலு.
நல்ல மனிதன். வந்து இரண்டு வாரங்கள்தான். சும்மா இரு என்றால் இருக்கமாட்டான். எதையாவது செய்து கொண்டு தானிருப்பான், உபயோககரமாக,
அவன் வந்தபின் வீட்டுத் தோட்டம் கண்ணாடிபோல் பளிச்சிட்டது.
‘புதுத் துடைப்பம் நன்றாகத்தான் கூட்டும; தேய்ந்தால் போச்சு!’ என்பாள் என் மனைவி. இருந்தும் அவன்மேல் ஏனோ
அவளுக்கு நம்பிக்கையும் இருந்தது நல்ல மனிதன் என்று.
( 0 ) ஜின்னாஹ்

Page 10
அன்று ஞாயிற்றுக்கிழமை. வெளிநாட்டிலிருந்து வந்த என் மகனுக்காக விசேட ஏற்பாடுகள். வீட்டில் சமையல் இல்லை. ஒரு மாற்றத்திற்காகக் கோழி புரியாணிக்கு வெளியில் ஏற்பாடாகி இருந்தது. ஒரு வருடம் கழித்து மகன் வந்திருந்ததால், எனக்கும் அன்று மனம் மகிழ்ச்சியாகவே இருந்தது. மாற்றத்தை நானும் விரும்பினேன். வேளைக்கே ஒழுங்கு செய்தபடி உணவும் வீடு தேடி வந்ததால், ஒரு மணிக்கே நாங்கள் பகலுணவை முடித்துக் கொண்டோம்.
நவீன காலம். மேசை, கதிரைகளென்று வசதிகள் பல வந்துவிட்டாலும், தாய் தகப்பனோடு நிலத்தில் பாய் விரித்து, அதன் மேல் துணி பரப்பி, அனைவரும் வளைத்திருந்து உண்டு பழகிய எனக்கு, அப்படி உண்பதில் ஏனோ ஒரு மனத்திருப்தி.
சிலபோது பிள்ளைகளின் முகம் சுளிக்கும். இருப்பினும் அதுவோர் நல்ல பழக்கம் என்பதில் எனக்கு உடன்பாடு இருந்தது. அது தொடர்கின்றது.
என் பெற்றோரின் வாழ்வுமுறை எனக்குப் பிடிக்கும். ஓர் ஒழுங்கான வழிமுறையை அவர்கள் பின்பற்றினார்கள். எங்களையும் பின்பற்ற வைத்தார்கள். அதனால்தான் தொண்ணுறு வயது தாண்டி என் தந்தையும், அதற்குச் சற்றுக் குறைவாய் என் தாயும் இன்னும் இறையருளால் நலத்தோடு வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.
“லெச்சுமி, வேலய்யாவுக்கு சாப்பாடு போட்டுக் குடும்மா!” என்றாள் என் மனைவி.
“நல்லதுங்கம்மா!’ எனப் பதிலுக்குச் சொல்லிவிட்டு அடுக்களைக்குள் நுழைந்தாள் அவள்.
அன்றைய தினப்பத்திரிகைகள் அனைத்தையும் அள்ளிக் கொண்டு ஒரு சாய்வு நாற்காலியைச் சொந்தமாக்கிக் கொண்டேன்
நான். kokk
C O2 ) பெற்றமனம்

“என்ன, ஒண்ணுமே தின்னாமப் பொறப்பட்டுட்டே?” வேலைக்குப் போகும் என் சின்னமகன் அவசர அவசரமாகப் புறப்பட்டுக் கொண்டிருந்தான்.
“பசிக்கல, நேரமாயிடிச்சி, அங்கேயே சாப்பிட்டுக்கறேன்!” என் கேள்விக்கு நடையிலேயே விடை சொல்லிக் கொண்டு வாசலைத் தாண்டினான் அவன்.
என்மனம் அலுத்துக் கொண்டது. ஏன்தான் இந்த வளரும் சமுதாயம் இப்படித் தம்மை மாற்றிக் கொண்டதோ..? வீட்டுக்கு வீடு வாசற்படி என்பது போல, எல்லா வீட்டிலும் இளைஞர்கள் இப்படித்தான் மாறிக் கொண்டிருக்கின்றனர்.
இது ஒழுங்கற்ற வாழ்வுமுறை. உணவில் கூட ஒரு அக்கறையின்மை. வீதிக்கு வீதி தோன்றியுள்ள குட்டிக் குட்டி உணவு விடுதிகள் இந்த இளைஞர்களுக்கு ஒரு வரப்பிரசாதம். கண்டதைக் கண்டபடி உண்டுவிட்டு வீட்டுச் சமையலை வீணடிக்கிறார்கள்.
என் நினைவில் என் தாய், தந்தையரின் நினைவு படர்ந்தது. “இஞ்ச ஒங்களத்தான் தலகாணிக்கிக் கீழே ரெண்டு “மஞ்சக் குருவி இருக்கி; மறந்திடாதீங்க,” என்பார்கள் என் தாயார்.
தினமும் இரவு படுக்கைக்குப் போகுமுன் இப்படி ஏதாவது ஓர் அறிவித்தல் நடக்கும். எங்களுக்கு விளங்காத குறியீடுகளில் ஒரு பரிமாற்றம், வளர்ந்த பின்தான் தெரிந்து கொண்டோம் மஞ்சக் குருவி என்பது வாழைப்பழம் என்று.
இன்னும் இந்தக் "கள்ளத்தீன்” தொடர்கின்றது. முன்போல் களவாக அல்ல, வெளிப்படையாக,
நாங்கள் சொல்லிச் சிரிப்பதுண்டு. திருட்டுச் சாப்பாட்டிற்கு இத்தனை பலமா, என்ன, தொண்ணுாறைத் தாண்டியும் இன்னும் திடமாக வைத்திருக்கின்றதே என்று.
C 03 ) ஜின்னாஹ்

Page 11
என் மனைவியிடமும் இப்படிச் சில பழக்கங்கள் உண்டு. உணவு பரிமாறும் போது, முதலில் வீட்டு முதல்வனுக்கே என, முதலில் எனக்கே பரிமாறுவாள். என் உணவு விடயத்திலும் மிகவும் கவனம். பகல் உணவு காலை ஆறுமணிக்கே பொட்டலமாகிவிடும். என்னையும் நூறு வயது வாழவைக்கும் எண்ணம் போலும்!
来米米
வேலு தோட்ட வேலையில் மும்முரமாகவிருந்தான். கடிகாரம் இரண்டு மணியையும் தாண்டி ஓடிக் கொண்டிருந்தது. அன்று நான் வேலைக்குப் போகவில்லை, வீட்டில் இருந்தேன்.
என் பகல் போசனத்தை முடித்துக் கொண்டு வெளியில் வந்த எனக்கு அவன் கண்ணில் பட்டான்.
வீட்டுக்குள் திரும்பிவந்த நான் என் மனைவியிடம், “என்ன, நாம் மட்டும் சாப்பிட்டா போதுமா? வேலு இன்னும் வேலை செய்கிறானே, சாப்பாடு குடுக்கலியா?” என்றேன்.
“லெச்சுமிதான் ' குடுப்பாளே! அவனுக்கு வேண்டியத போட்டுக்குடுன்னு சொல்லி வெச்சிருக்கேன். அவ குடுப்பா,’ என்றாள் என் மனைவி.
அத்தோடு அவள் நின்றுவிடவில்லை. அடுக்களையில் பாத்திரம் தேய்த்துக் கொண்டிருந்த லெட்சுமியிடமும் கேட்டாள்.
“வேலய்யா வந்ததுங் குடுக்கிறேன்,” என்றாள் லட்சுமி. காலம் தாமதிப்பது ஒரு பொருட்டாகத் தெரியவில்லை. அவளும் இன்னும் சாப்பிடவில்லை.
வேலைக்கிருப்பவர்கள் வயிறாறச் சாப்பிட வேண்டுமென்பதில் நானும் என் மனைவியும் ஒருமித்த கருத்துக் கொண்டிருந்தோம்.
C04 - பெற்றமனம்

பகலிரவாய்ப் பாடுபடும் அவர்கள் பசித்திருந்தால், எங்கள் பசிக்கு உணவு கிடைக்காமல் போகும் என்பதும் ஒரு காரணம்தான். கொடுப்பவர்களுக்குத்தானே இறைவனும் கொடுப்பான். அதிலும் வயிற்றுப் பசியாற்றல் எல்லாக் கொடைகளிலும் மேலானது. காலமெல்லாம் உழைத்தும் கால்வயிறு நிறையாத வாழ்வுக்குப் பழகிப் போன அந்த மலையகத் தோட்டத்து ஜீவன்கள் பசியைத் தாங்கிப் பழகிப் போயின.
ஐம்பது ஆண்டுகளைத் தாண்டினால் தோட்டத்தில் வேலை கிடைப்பதில்லை என்பதால், இப்படி நகர்ப்புறங்களில் சிறுதொகைக்கு வேலை செய்கின்றனர். சும்மா இருப்பதிலும் ஏதோ ஒரு தொகை கிடைப்பதும், வீட்டில் ஒருவருக்கான உணவுத் தேவை குறைவதும் ஒரு வகையில் ஆறுதலே.
“வேலு போய்ச் சாப்பிடய்யா,’ என்றேன். அவனனன்டை சென்ற நான்.
வாரிச் சுருட்டி எழுந்து கொண்டான். ஏதோ கட்டளைக்குப் பணியும் ராஜா வீட்டுச் சேவகன் போல. தோட்டத்தைச் சுற்றி வீட்டின் பின்புறம் நகர்ந்தான்.
பத்து நிமிடங்கள் தாமதித்து நான் வீட்டின் சமையலறைப் பக்கம் வேண்டுமென்றே சென்றேன். வேலு சாப்பிடுகின்றானா என்பதைப் UTijds85.
அப்போதுதான் அவன் உடலைத் துடைத்தபடி உள்ளே நுழைந்தான். லெட்சுமி அவனது உணவுத் தட்டோடு வெளியில்
வந்தாள்.
அந்த உணவுத் தட்டைக் கண்ட எனக்கு, லெட்சுமிக்கு ஓங்கி அறைய வேண்டும் போலிருந்தது. கோபம் என் தலைக்குள் கொதித்துக் கொப்பளித்தது. கத்திவிட்டேன்.
C 05 D ஜின்னாஹ்

Page 12
“ஐசே! இஞ்ச கொஞ்சம் வாங்க!” என்றேன் உள்ளிருந்த என் மனைவியின் செவிப்பறைகள் வெடித்துப் போக.
கையிலிருந்த புத்தகத்தோடு கண்ணாடியைக் கழற்றிக் கொண்டு என் மனைவியும் ஒரு வினாடிக்குள் அங்கு நின்றாள்.
“பாத்திங்களா இவள் வேலுக்குச் சாப்பாடு போடுற லட்சணத்த? வெறுஞ்சோறும் கொஞ்சம் பருப்பும்’!
லெட்சுமி கைகால் நடுங்க நின்று கொண்டிருந்தாள். என் கோபம் அவளை நிலைகுலையச் செய்திருந்தது.
உணவுத் தட்டைப் பார்த்த என் மனைவிக்குக் கோபம் தலைக்கேறிவிட்டது. ‘என்னடி இது, அந்த மனுஷனுக்கு இது போதுமா? ஏன் நீ மீன் குழம்புபோடல? மரக்கறி ஒன்றுமே
לין
இல்லையே! எல்லாந்தான் நெறைய இருக்கே என்றாள்.
லெட்சுமி வார்த்தைகளை வெளிப்படுத்த முடியாது வாய் குளறினாள்.
“அம்மா வேலய்யா தெனமும் இப்படித்தான் துண்ணும். அன்னைக்கி கோழிக்கறிகூடச் சாப்பிடல, பருப்பும் சோறும் போதுமாம் என்னுது’ என்றாள், வார்த்தைகளை ஒவ்வொன்றாய் அடுக்கியவளாக. என் மனைவி என் முகத்தை நோக்கினாள். நானும் அவளை ஒரு பார்வையால் என் வியப்பைப் பதித்துவிட்டு வேலுவைப் பார்த்தேன். அவன் தலை குனிந்து நின்றான். அவன் நிலை கண்ட என் கோபம் என்னை விடுத்து எங்கோ பறந்தது.
“வேலு. ஏனையா நீ.” என்று தொடர, வார்த்தை வராமல் கேள்வியைப் பாதியில் நிறுத்தினேன்.
மெல்ல அவன் தலையை உயர்த்தினான். கண்களில் கண்ணிர் ததும்பிக் கொட்டியது. அவன் பேசவில்லை. கைத்துணியால் கண்களைத் துடைத்துக் கொண்டாலும், அவனை மீறிக் கண்கள் பொழிந்தன.
C06) 6husbDLD60Tub

நான் என் மனைவியை மீண்டும் நோக்கினேன். அவள் கல்லாய்ச் சமைந்து நின்றாள். என் பார்வை அவளைச் சுட்டிருக்க வேண்டும். பேசினாள்.
“நான் தப்பா எதையுஞ் செய்யலிங்க! அவங்க வயிறாற வேண்டியதச் சாப்பிடட்டும் என்றுதான் நானாகப் பரிமாறல, கூடினா குத்தமில்ல. கொறஞ்சா கேக்காதுகள்! அதனால.”
அவள் வார்த்தைகளை முடிக்கவில்லை வேலு பேசினான். “ஐயா, அம்மா மேலே தப்பில்ல, லெட்சுமி மேலையும் தப்பில்ல. என் மேலதான்யா தப்பெல்லாம்!” என்றான்.
எனக்குப் புரியவில்லை இங்கு நடப்பது என்ன தான் என்று. பறித்து அனுபவிக்கும் இந்தக் கேடு மிகுந்த உலகத்தில், கொடுத்ததையே அனுபவிக்க மறுக்கும் மனிதர்களுமா?
"ஐயா! இங்க எனக்கு மூணு வேளையும் நல்லா துண்ணலாம். ஏன் நாலு வேளையும், அஞ்சு வேளையும் கொட்டிக்கலாம். ஒங்க மனசு, அம்மா மனசு. இந்த ரெண்டு கெழமையில நான் நல்லா புரிஞ்சுக்கிட்டேன். ஆனா.” என்றவன் வார்த்தைகளை நிறுத்திக் கொண்டான்.
இப்போது அவன் கண்கள் முன்னிலும் தீவிரமாய்ப் பொழியத் தொடங்கின. விம்மலிடையெ வாய் வார்த்தைகளை ஒவ்வொன்றாய் அடுக்கியது.
“ஐயா! எனக்கு நாலு பொண்ணுங்க. அதுங்க ஒரு வேளைக்கும் வயித்த நெரப்ப முடியாம கெடக்கிறப்போ. நான்
மட்டும்.’ என்றவாறு வார்த்தையின்றி மெளனமானான்.
என் மனைவியை நான் பார்க்க எண்ணிய அதே நொடியில் அவளும் என்னை நோக்கினாள். எங்கள் இருவர் மனமும்
பார்வைபோல் ஒன்றையே எண்ணின.
தினக்குரல்
06.08.2002
C 07 ) ஜின்னாஹ்

Page 13
Qe doubomisin Class&cmcs
பெற்றவர்களின் எல்லையில்லாத பாசத்தைத் தொட்டுக்காட்டும் ஓர் அருமையான சிறுகதை பெற்றமனம். கதாசிரியர் ஜின்னாஹ, தன்மையிலேயே கதையைச் சொல்கின்றார். முதலில் தன்னைப் பெற்று வளர்த்து ஆளாக்கிய தந்தை, தாயாரின் பேரன்பையும், அவர்களின் ஒழுங்கான வாழ்க்கை நெறியையும் சொல்லித் தந்தையார் தொண்ணுாறு வயதிலும், தாயார் சில வயதுகள் குறைந்தும் உடல் நலத்தோடும், மனநலத்தோடும் வாழ்வதைப் பெரும் மன நிறைவோடு சொல்லுகின்றார்.
இவர் வீட் டில் ஆணும் பெண் ணுமாக இரண்டு வேலைக்காரர்கள். பெண் சமையல் வேலை, பண்டபாத்திரங்கள், வீடுவாசல் துப்புரவாக்கும் வேலை. ஆணுக்குப் பெயர் வேலய்யா 50 வயதானதால் தோட்டத்தில் வேலை செய்ய முடியாததால் இங்குவந்திருக்கிறான். வீட்டுத் தோட்டவேலைகள் செய்வான். நேரத்துக்குச் சாப்பிடான்.
ஒரு நாள் அவனைச் சாப்பிடச் சொல்லிக் கேட்டு, லட்சுமி சோற்றுத் தட்டுடன் வந்து நின்றாள். தட்டைக் கண்டதும் எஜமானுக்குப் பெருங்கோபம் வந்தது. மனைவியைக் கூப்பிட்டுக் காட்டுகிறார். வெறும் சோறும், கொஞ்சம் பருப்புக் கறியும்தான்.
வேலைக்காரி மீது சீறிப் பாய்கிறார்கள். “இப்படித்தானா சாப்பாடு போடுகிறது? ஏனடி மீன் குழம்பு போடலை?” என்று பாய்கிறார்கள்.
“அம்மா, வேலய்யா தினமும் இப்படித்தான் சாப்புடும் அன்னைக்கும் கோழிக்கறிகூடச் சாப்பிடல்ல, சோறும் பருப்பும் போதுமாம் எண்ணுது.”
G08) பெற்றமனம்

இவர்கள் ஆளை ஆள் பார்க்கிறார்கள். (866duju uT
தலைகுனிந்து நிற்கிறான்.
எஜமான் ஏதோ கேட்க, அவன் மெல்லத் தலையை
உயர்த்தினான். கண்களில் கண்ணிர் ததும்பிக் கொட்டியது. அவன் பேசவில்லை. கைத் துணியால் கண்களைத் துடைத்துக் கொண்டாலும், அவனை மீறிக் கண்ணிர் பொழிகின்றது.
"ஐயா, இங்க எனக்கு மூணு வேளை நல்லாத் துண்ணலாம், ஏன், நாலுவேளை அஞ்சுவேளையும் கொட்டிக்கலாம். ஐயா, எனக்கு நாலு பொண்ணுங்க, அதுகள் ஒரு வேளைக்கும் வயித்த நெரப்ப முடியாமக் கிடக்கிறப்போ நான் மட்டும்.” என்றவாறு வார்ததையின்றித் தடுமாறுகிறான்.
எஜமானும் எஜமானியும் ஒருவரையொருவர் ஆச்சரியத்துடன் பார்க்கக் கதை முடிகின்றது! பெத்த வயிறு பத்தி எரிகிற உணர்ச்சி நெஞ்சை அழுத்த அவன் சொன்னதைக் கேட்டதும் அவர்களின் நெஞ்சில் அந்தத் தீ பற்றியெரிந்ததற்கான தவிப்பு, ஏக்கம், மனத்தாக்கம் கதையின் கடைசி வரிகளில் காட்டப்படாதது ஒரு சிறு குறைாயாகப்பட்டாலும், உணர்வு பீறிட்டெழும் ஒரு சிறந்த படைப்பு பெற்றமனம்.
என்.கே. ரகுநாதன்
“இலக்கியக் குரல்”
தினக்குரல்.
19. 11, 2001
C 09 ) ஜின்னாஹ்

Page 14
ါခခံ့ၾwလှုံ့ဖ် ä/ീേ..!
திகர டப்பாவிலிருந்து மாம்பழத் துண்டுகளை ஒரு வட்டத் தட்டில் கொட்டினாள் என் பேத்தி.
“ஈற்பப்பா!” என்றாள் தட்டை எனக்கு முன்னால் சற்றுத் தள்ளியவாறே.
கத்திரிப் பாத்திக்குள் மண்ணைக் கிளறிவிடும் முட்கிண்டியை நினைவுபடுத்துவது போல், அவள் எனக்கொன்றாயும் தனக்கொன்றாயும் இரண்டு முட்கரண்டிகளைக் கொண்டு வந்தாள்.
தேனில் மிதக்கும் வருக்கைப் பலாச் சுளைகள் போல, சீனிப்பாகில் மெல்ல நகர்ந்தன மாங்கனித் துண்டுகள். உவமைக்கு வந்த நினைவால் எமது நாக்கு நரம்புகள் மானசீகமாய்த் துாண்டப்பட்டதால் உமிழ்நீர்க் கலங்கள் உரத்துச் சுரந்தன.
குளிருக்கான தடித்த மேற்சட்டை, கால்களுக்கான நீண்ட காலுறை, தலையில் பனித் தொப்பி அணிந்து அவள் காட்சியறைப் பொம்மை போல் அழகாக இருந்தாள்.
C 10 Ꭰ பெற்றமனம்

அவளின் அழகிய தோற்றம் என் நெஞ்செல்லாம் நிறைந்து கிடக்க, அவள் மீண்டும், “ஈற்பப்பா ஈற்!” என்றாள். தனது முட்கரண்டியால் ஒரு துண்டைக் கொத்தி எடுத்து, அதில் படிந்திருந்த சீனிப்பாகு வடியும் வரை காத்திருந்து, மிகக் கவனமாக ஒரு துளியும் உடையில் சிந்தாது வாயிலிட்டு மென்றாள்.
“ம்.ஸ்வீற்.வெரி டேஸ்ரி!.ம்.பப்பா, ஈற்’ என்றவாறு என்னை அன்பாகப் பலாத்காரம் செய்தாள்.
தேனில் தோய்ந்த பலாப்பழச் சுளையை நினைத்தபடி இருந்த எனக்கு, மாம்பழத்தைச் சுவை பார்க்க வேண்டும் போல் இருந்தது. அவள் கட்டளைக்குப் பணிபவன் போல எடுக்க முயன்றேன்.
பெருவிரலும் சுட்டுவிரலும் பழக்க தோஷத்தால் சேர்ந்து துடித்தன. வலக்கரம் முன் நீள இடக்கரத்தில் இருந்த முட்கரண்டி சட்டென நினைவுக்கு வந்தது போல் இடம் மாறிக் கொண்டது. அதனைப் பாவிக்க எனக்குத் தெரியும். முன்னர் பாவித்துப் பழக்கம் உண்டெனினும், ஊரில் அந்தச் செம்பாட்டு மண்ணில் முற்றிய மா மரத்தில் கனிந்த கனிகள் என் நினைவுக்கு வந்தன.
கறுத்தக் கொழும்பானை, அம்பலவியைத் தோல் சீவித் துண்டமிட்டு, விரலிடையில் கோத்தெடுத்து வாயில் போட்டபின் விரல் நுனிகளை நாக்கில் தடவிக் கொண்ட நினைவுகள் என் பெருவிரலையும் சுட்டு விரலையும் துடிக்க வைத்தன்.
முட்கரண்டியால் ஒரு துண்டைக் குத்தியெடுத்துப் பேத்திபோல், அதில் படிந்திருந்த திரவத்தை வடியவிட்டு வாயில் போட்டுக் கொண்டேன். தேய்ந்துபோன கிழட்டுப் பற்கள் கூசின. மேலண்ணமும் நாக்கும் சேர்ந்து நெருக்க, என் நினைவில் மீண்டும் செம்பாட்டு மண் விளைத்த மாங்கனிகள் மீறி நின்றன. “கூவில்” தென்னங்கள்
அடித்தவனுக்கு வெள்ளைக்காரனின் 'பீர்’ குடித்தது போல் இருந்தது.
C 11 ) ஜின்னாஹ்

Page 15
ஏதோ இனிக்கிறதே என்பதால் விழுங்கிவிட எண்ணிய எனக்குப் பலாச் சுளைக்கு ஊறிய உமிழ்நீர், உள்ளே தள்ள உதவியது.
பேத்தியின் நச்சரிப்பு இன்னும் சில துண்டுகளை உள்வாங்கச் செய்ததால், அவள் போல் சுவைத்துச் சாப்பிடுவது போல் பாசாங்கு செய்தேன். அவள் மகிழ்ந்து போனாள்.
பேத்திப் பெட்டைக்கு, எட்டோ ஒன்பதோ தான் வயதிருக்கும். வயதுக்கு மீறிய வளர்ச்சி, செய்கைகளும் அப்படித்தான். அதிகம் பேசினாள். மிகச் சரளமான ஆங்கிலத்தில்.
எனக்கு ஆங்கிலம் புரியும். ஆனால் அவள் பேசுவது எல்லாம் எனக்கு விளங்கவில்லை.
குளிர் காலமென்பதால் நானும் என்னைத் தடித்த உடைகளுக்குள் புதைத்துக் கொண்டேன். பழக்கமில்லாத உடைகள்தான். என்றாலும் பழகிக் கொள்ள வேண்டிய நிர்ப்பந்தத்தைக் காலைக் குளிர் எனக்குத் தந்தது.
இடையில் கட்டிக் கொண்ட நான்கு முழ வேட்டியோடு, வெற்று மேனியாய் மாமர நிழலில் பனங்கீற்றுப் பாயில் படுத்து உருண்ட உடலுக்குச் சீ. இது என்ன சுமை பார இளவு.
வேலைக்குப் போகும் போது மட்டுமே காற்சட்டையும் மேற்சட்டையும், வீட்டில் இருக்கும் போது என் மண்ணின் காற்றை வெற்றுடலோடு சுகிப்பதில் தான் எத்தனை சுகம்?
சுதந்திரமாய் எந்தவிதக் கட்டுப்பாடுமற்று வாழ்ந்து கிடந்த உடல், இன்று கூண்டுக்குள் அடைபட்ட இரண்டு கால் பிராணி போல், கம்பளித் துணிகளுக்குள் துவண்டு கிடக்கின்றது.
பள்ளியில் இருந்து அப்போதுதான் என் பேத்தி வந்திருந்தாள். தாய்வரச் சிறிது தாமதமாகும் என்பதால் தனக்கு வேண்டிய இடைத் தீனைத் தானே தேர்ந்து உண்ணப் பழகி இருந்தாள்.
G12) பெற்றமனம்

ஊரை நினைத்துப் பார்க்கின்றேன். இந்த வயதில் இவள் அப்பனுக்கு உணவு ஊட்ட நாங்கள் பட்டபாடு ஒன்பது வயதிலும் “அம்மா ஊட்டிவிடு’ என்பான். பள்ளிவிட்டு வந்ததும், பம்பரமும் கையுமாய்ப் பறக்கப் போகும் அவனைப் பிடித்து வைத்துப் பலாத்காரப்
இன்று.? காலம் எவ்வளவு மாறிவிட்டது? பிஞ்சுப் பருவத்திலும் தனக்கு வேண்டியதைத் தானாகத் தேடிக் கொள்ளும் மேல்நாட்டு வாழ்வுமுறை. பின்பற்றத் தக்கன அனேகம் இருந்தாலும், நமது சொந்தக் கலாசாரம், பண்பாடுகளை மீறிப் பின்பற்றிப்படும் வேறு பலவற்றை எண்ணும் போது உள்ளம் குமைகின்றதே!
பேத்தி பஞ்சுமெத்தை நாற்காலியில் சுருண்டு கிடந்தாள். பள்ளியில் ஆடிய களைப்பு அவளுக்கு. கண்ணயர்ந்து போனாள். தாய் வந்து எழுப்பிப் பகலுணவு தரும்வரை அவள் அப்படியே கிடந்தாள்.
மின்சார மணியின் கிர். என்ற ஓசை என்னை வாசற்படிவரை இழுத்துச் சென்றது. வந்திருப்பது எனது மருமகள் என்பதைக் கதவில் பதித்திருந்த கண்ணாடிக் கண் காட்டிக் கொடுத்தும், நான் கதவைத் திறந்தேன்.
முடுக்கிவிட்ட இயந்திரம் போல் என்னை நோக்கி ஒரு புன்னகையை வீசி விட்டு, அவள் இயங்கினாள். சூடுகாட்டிய உணவுகளைத் தட்டுகளில் இட்டு மேசையில் பரப்பிவிட்டு, மகளை எழுப்பினாள். என்னையும் அழைத்துக் கொண்டு உணவு பரிமாறினாள். மூவரும் உண்டோம். கைக்குத்து நாட்டரிசியும் தோட்டத்தில் காய்ந்த கத்தரிக்காயும் வெண்டிக்காயும் வெங்காயமும் சேர்ந்த சமையலைச்
சுடச்சுட உண்ட நாட்களை என் மனம் எண்ணியது.
C13) 米米米 ஜின்னாஹ்

Page 16
“ப்ரேமா போடே’யில் ‘ஹரி ஹவுஸ்" சுற்றிலும் மலர்ச் செடிகளால் நிறைந்து காணப்பட்டது. சில்லென்று பூத்த பல வண்ண மலர்கள் பொலிந்து, ஒரு சுவர்க்கத்து நிலம் போல் அப்பிரதேசமே கண்களை வாங்கிக் கொண்டன.
நீர் நிறைந்த வட்ட நிலத்தேக்கத்துள் வண்ண வண்ண மீன்கள் சுற்றிச் சுழன்றன. குளிருக்கு அஞ்சிக் கட்டப்பட்ட கண்ணாடி வீட்டினுள் பல அரிய புஷ்பங்கள் செடிகளில் பூத்துத் தமது பங்கிற்கு அழகு காட்டின.
“மிஸ்டர் ஹரி ஸ்ரீபர்” எனது மகனின் நீண்ட நாள் நண்பர். வயது என்னவோ எண்பத்து ஐந்துதான். இரண்டாம் உலகப் போரில் ஹிட்லரின் கடற்படையில் ஓர் இளம் அதிகாரியாகப் பணிபுரிந்தவர். இன்னும் இரும்புபோல் இருந்தார் மனிதர். சில வருடங்களுக்கு முன் தன் மனைவியைப் புற்று நோய்க்குப் பலி கொடுத்து விட்டு, மகன் ஹரல்ட் வீட்டின் ஒரு பகுதியில் தனித்து வாழ்கின்றார்.
இயற்கைப் பிரியர். பல லட்சம் “டீ மார்க்கு” களை மலர்த் தோட்டங்களுக்காய் வாரி இறைப்பவர். முயல் பண்ணை ஒன்றின் சொந்தக்காரர். வருவாயும் செலவும் ஒன்றுபோல் ஆனவர்.
ஓய்வான ஒருநாள் அவரின் அழகான சுற்றாடலைத் தரிசிக்கக் குடும்பத்தோடு புறப்பட்டான் என்மகன். ஒரே இடத்தில் ஒடுங்கிக் கிடக்க மனமில்லாத நான், மிக்க மகிழ்வோடு இருந்தேன். “ப்ராங்போட்'டில் இருந்து நீண்ட துாரப் பயணம் ஒன்றும் களைப்பாக இருக்கவில்லை. கூண்டிலிருந்து தற்காலிகமாய் விடுபட்ட ஒரு பறவைபோல நானிருந்தேன். மாற்றம் மகிழ்வைத் தந்தது. காரணம் மிஸ்ட்டர் ஹரியின் உபசரிப்பு
எங்களை அவர் மிக உற்சாகமாக வரவேற்றார். நான் புதிதாக ஜேர்மனிக்கு வந்திருப்பது அவருக்குத் தெரிந்திருந்தது. மகன் சொல்லி இருப்பான்.
C 4 ) பெற்றமணம்

“ஹலோ! குட்டின் டாக்!” என்றார் அவர் என் வலக்கரம் குலுக்கி. மொழி புரியாத நான் ஏதோ ஒப்புதலுக்கு முக மலர்வோடு தலை அசைத்தேன்.
என் பேரப் பெண் அவரண்டை ஓடினாள். “ஹலோ! ஒப்பா குட்டின்டாக்” என்றான். அவரும் முகம் பொலியச் சிரித்தபடி குஞ்சுக் கோழியைப் பருந்து இறஞ்சுவது போல் அவளை அள்ளிக் கொண்டார். மிஸ்டர் ஹரி மற்றவர்களையும் வரவேற்க, நாமனைவரும் வீட்டினுள் நுழைந்தோம். உபசாரம் பலமாய் இருந்தது.
வெள்ளையரின் வழக்கப்படி என்மகனும் ஹரியும் சூடாக்கும் திரவங்களைத் தாமாகப் பரிமாறிக் கொண்டனர். மருமகளும் பேத்தியும் குளிர் பானம் பரிமாறப் பருகினர். எனக்கு மிஸ்ட்டர் ஹரி ஒரு “பீர்” டின்னை உடைத்து நீட்டினார். நன்றி சொல்லிப் பெற்றுக் கொண்டேன். இளமைக் காலத்தில் நண்பர்களுடன் கூடித் தென்னங்கள் அடித்த நினைவு மறந்திருந்தது. ஜேர்மனிக்கு வந்ததும் ஒரு மாதத்துள் நானும் அங்குள்ள குளிரை தாக்குப் பிடிக்க, அந்த மக்களின் நாகரிகத்துக்கு என்னையும் போலியாய்ப் பழக்கிக்கொள்ள “பீர்” மட்டும் சிலபோது குடித்தேன். முதன் முதலில் என்மகனே எனக்குப் பரிமாறினான்.
ஹரி சுமாராக ஆங்கிலம் பேசினார். எனது பேத்தி ஜேர்மனி மொழியிலும் வெளுத்து வாங்கினாள். மனம் பூரித்துப் போனது. ஒரிரு வினாடிக்குள் என் மனப் பூரிப்பு எங்கு போனதோ? தமிழில் நல்ல ஆளுமை உள்ள எனது இரண்டாம் தலைமுறைக்கு, இரண்டு வார்த்தைகள் கூடத் தன் தாய் மொழியில் பேசத் தெரியாதிருந்தது.
é i
"அம்மா, அப்பா’ என்று கூட அவள் சொல்லவில்லை. "மம்மி,
டாடி’ என்றாள்.
C 15 D ஜின்னாஹ்

Page 17
நெஞ்சுக்குள் கனத்தது. குழந்தை மீது குற்றமில்லை. பெற்றவர்கள் இருவரும் குழந்தைக்காகவே தமிழை மறந்தும் பேசாதிருந்தனர். பழகிக் கொள்வாளே என்பதனால் தங்களுக்குள்ளும் ஆங்கிலமே பேசினர்.
சிறிது நேரத்தில் அந்தப் பெரும் பூங்காவனத்தைக் கண்டு களிக்க வெளியில் வந்தோம். ஓர் அழகான கார் வீட்டு வாசலில் அப்பொழுது தான் வந்து நின்றது. ஓர் ஜோடி அதிலிருந்து இறங்கியது. வந்த பெண் கிழவரைக் கட்டியணைத்தாள். இரத்த பாசம் இருவர் முகங்களிலும் பொங்கிப் பொலிந்தது. இளைஞன் கைகுலுக்கிக் கொண்டான். ஒரு சிறிய அறிமுகம் எனக்காக மட்டும் அங்கு நடந்தது. இருவரும் என்னுடன் கைகுலுக்கிக் கொண்டனர். என் பேத்தியோடு அவர்கள் மிகச் சரளமாகப் பழகினர். அவள். மிஸ்டர் ஹரியின் மகன்வழிப் பேத்தி. இளைஞன் அவனை விட்டுச் செல்லத்தான் அவளோடு வந்திருந்தான். போகுமுன் அவளை இறுக அணைத்து முத்தமிட்டான்.
எனக்குள் ஏதோ செய்தது. எனது முகமாற்றத்தை எவருங் காணவில்லை. எனது மகன், மருமகள், பேத்தி, அவள் பாட்டன், புதியவனான நான். கணவன் என்றாலும் நடந்ததை மனம் ஏனோ ஏற்கவில்லை. கணவனல்ல அவன். அவள் காதலனாம்.
எனது மகனோ, மருமகளோ, ஏன் என் பேத்தியோ இதனைக் கண்டும், ஒன்றும் அலட்டிக் கொள்ளவில்லை. ஒரு சர்வ சாதாரண நிகழ்ச்சியாகவே சீரணித்துக் கொண்டனர். அவன் எங்களிடம் “ஒப்விர்தசேன்’ என்றபடி விடை பெற்றான்.
கிழவர் என்னோடு சிறிது நேரம் தனித்து விடப்பட்ட போது, அவரிடமிருந்து நான் பல தகவல்களைப் பெற்றுக் கொண்டேன்.
O6) பெற்றமணம்

வந்தவர்கள் இருவரும் காதலர்களாம். திருமணத்தின் முன் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள நகரத்தில் வீடெடுத்துத் தனிக்குடித்தனம் நடத்துகின்றனராம். லீவு நாள் என்பதனால் குடும்பத்தோடு தங்க அன்று அங்கு வந்திருக்கிறாள்.
மிஸ்டர் ஹரி சொன்ன மற்றொரு செய்தி இன்னும் என்னை வியப்பில் ஆழ்த்தியது. தனது மகள் “ஹைட்ரூன்’ மிகவும் சங்கோஜப் பேர் வழியாம். பெரும்பாலும் ஆண்களோடு பழகுவதை அவள் தவிர்த்துக் கொண்டிருந்தாள். அவள் வயதுக்கு வந்த பின்னரும் மற்றப் பெண்பிள்ளைகள் போலல்லாது அவள் தனித்திருப்பதைத் தான் விரும்பவில்லையாம்.
“ஏன் நீ இப்படி இருக்கின்றாய்? இரவுக் கேளிக்கைகளுக்குச் சென்று இளைஞர்களுடன் நடனமாடு. எவனாவது ஒரு நல்ல இளைஞன் வந்து சேர்வான். நீ அவனோடு நட்பாகிக் கொண்டு சில காலம் எங்களை விட்டு நீ அவனோடு வாழ்ந்து, அவனை நன்கு புரிந்து கொண்டதும் திருமணம் செய்து கொள்!” என்று புத்திமதி சொன்னாராம்.
அதன் பின்தான் அவளுக்குத் திருமணம் நடந்ததாம். இரண்டு மூன்று பேருடன் தனித்தனியே வாழ்ந்து பார்த்துக் கடைசியில் பிடித்த ஒருவனை மணந்து கொண்டாளாம்.
மனிதருக்குச் சந்தோஷம் பிடிபடவில்லை. இப்போது அவளுக்கு ஒரு பிள்ளையும் இருக்கின்றது என்றபடி வாய் விட்டுச் சிரிக்கலானார். எனக்கோ அருவருப்பாய் இருந்தாலும், அசடு வழிய அவரின் மகிழ்வுக்கு நானும் துணை சேர்ந்தேன்.
米※来
C 17 D ஜின்னாஹ்

Page 18
அன்று என் பேத்திக்குப் பிறந்த நாள். ஒரு சின்ன வீடுதான் அவர்களுக்குச் சொந்தமாய் இருந்நது. கொழுத்த வாடகைக்குச் சொந்தக்காரன் விட்டிருந்தான்.
பக்கத்து வீட்டாரோடு புரிந்துணர்வின் பேரில் இவ்வாறான வைபவங்களின் போது ஒருவருக்கொருவர் இடமொதுக்கிக் கொள்வதால், வந்த கூட்டத்தைச் சற்று நெருக்கத்தோடு சமாளிக்க முடிந்தது.
ஒன்றிரண்டு சோடிகளைத் தவிரப் பெரும்பாலும் இலங்கையில் இருந்து புலம் பெயர்ந்தவர்களே வந்திருந்தனர். சில வெள்ளைக் கலப்புகளும் எம்மவரோடு சேர்ந்திருந்தன. புரிந்து கொள்ளப் பழகும் சோடிகளோ அன்றி இணைந்து கொண்டவர்களோ எனப் புரியவில்லை. அத்தனை நெருக்கம் பத்துப் பதினைந்து வாண்டுகள் பெற்றோரோடு வந்திருந்தன எனது பேத்தியின் தோழிகளாம்.
ஆங்கில இசையின் அமர்களத்தில் “தண்ணி” ஆறாக ஓடியது. வகைவகையான மதுப் புட்டிகள் மேசை ஒன்றில் கண்ணாடிக் குவளைகளோடு காத்துக் கிடந்தன.
குழந்தைகள் புடைசூழ எனது பேத்தி "கேக்” வெட்டினாள் எல்லோரும் “ஹப்பீ பேத் டே” பாடினார்கள். தொடர்ந்து உணவுப் பரிமாற்றம். விலிப்பு நடனம்.
எல்லோரும் பெரும் பாலும் நம் மவர்கள் தான் . வெள்ளையர்களின் வாரிசுகளாக உருமாறி இருந்தனர். என் மனக் கண்முன் பழைய நினைவுகள் வட்டமிட்டு நின்றன.
என் மகனின் பிறந்த நாட்களில், அவன் பிஞ்சுப் பருவத்தில் நானும் என் மனைவியும் அவனுக்குப் புத்தாடை அணிவித்து அவனைக் கோயிலுக்கு அதிகாலையிலேயே கூட்டிச் செல்வோம். சுவாமி கும்பிடச் செய்து அவனுக்காய் அர்ச்சனை செய்து
ஏழைகளுக்கு உணவளித்து மகிழ்வோம்.
O18) பெற்றமணம்

இரவுக் கேளிக்கைகள் ஒருவாறு பின்னிரவுப் பொழுதோடு முடிவுற்றது. களைத்துப் போனவர்கள் துாங்கச் சென்றனர். நான் மட்டும் எனக்காக ஒதுக்கப்பட்ட முன் விறாந்தை மெத்தையில் துாக்கமின்றித் துவண்டேன்.
என்னைவிட்டு இறைவன் என் மனைவியைப் பிரித்துக் கொண்டதும் நான் தனித்து விடப்பட்டேன். என் விதியோ, என்னவோ, என் பெயர் சொல்ல இவன் மட்டுமே பிறந்தான்.
பத்து வருடங்களின் முன் நாட்டின் அமைதியின்மை காரணமாய்ப் புலம் பெயர்ந்த கூட்டத்தில் என் மகனும் சேர்ந்து கொள்வதை என்னாலும் தவிர்க்க முடியவில்லை. எங்கு வாழ்ந்தாலும் எமது பிள்ளை உயிருடன் இருப்பதொன்றே எங்கள் தேவையாய் இருந்தது.
சென்ற இடத்தில் வந்தவர்களில் ஒரு பெண்ணைக் காலத்தில் கைப்பிடித்ததையும் நாம் சீரணித்துக் கொண்டோம்.
என் மனைவியின் பிரிவின் பின்னும், என் சொந்த மண்ணைப் பிரியும் எண்ணம் எனக்கு என்றுமே ஏற்பட்டதில்லை. “செத்தாலும் சாவது நான் எனது மண்ணில் தான்!” என்றவொரு வைராக்கியம் என்னுள் ஊறிக் கிடந்தது. அதனால் அவன் என்னைப் பலமுறை அழைத்தும் நான் போக இசையவில்லை.
உடற்பலம் குன்றக் குன்ற எனக்கோர் கொழுகொம்பு வேண்டும் போல் இருப்பதை நான் உணர்ந்தேன். சொந்த பந்தங்களின் பராமரிப்பு எத்தனைக் காலம் நீடிக்கும்? சில காலம் ஒரு வயோதிய இல்லத்தில் என்னை நானே சேர்த்துக் கொண்டு வாழ்ந்தேன். எத்தனை செளகரியங்கள் இருந்தும் என் மகனின் சுய கெளரவம் என்னை அங்கு நீடித்திருக்க மறுத்ததும், அதுவே காரணமாகி எனது வைராக்கியமும் தோல்வியுற்று விமானம் ஏறினேன்.
C 19 D- ஜின்னாஹ்

Page 19
ஆனால் இங்கோ! நான் காணும் காட்சிகள் நமது இன, மொழி, கலாசார சீரழிவுகளுக்கிடையில் ஒரு போலி வாழ்க்கையைத் தமதாக்கிக் கொண்டு தம்மைத் தாமே ஏமாற்றிக் கொள்ளும் ஒரு புதிய தலைமுறையின் ஒழுங்கற்ற வாழ்வு முறைகளைத்தான். அதனை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் எனக்கில்லை. அது இனி மேலும் ஏற்பட வாய்ப்புமில்லை.
புலம் பெயர்ந்து வாழும் இன்றைய தலைமுறைக்குப் பின் அடுத்த தலைமுறையில் நாம் நம்மவரை இழந்து போவோம். இதை என்னால் எண்ணிப் பார்க்கவே இயலாதிருந்தது.
மீண்டும் என் வைராக்கியம் என்னுள் கிளர்ந்தெழுவதை நான் உணரலானேன். இரவுத் துாக்கத்திற்கு என் சிந்தனைகள் தடைபோட்டன.
காலையில் விழித்துக்கொண்ட என் மகனிடம் நான் எனது முடிவினைத் தீர்க்கமாக வெளியிட்டேன். “நான் இலங்கைக்கு போகவேண்டும் என்று. செத்தாலும் சாவது எனது மண்ணில்தான் என்று என் உள் மனம் ஓங்கி உரைத்துக் கொண்டிருந்தது.
வீரகேசரி
04.02.200
Qცა სოC_bunრ8რ7 60იარზსAცხ
இனமோதல் காரணமாக புலம் பெயர்ந்துள்ள தமிழ் மக்களின் தற்போதைய மேல்நாட்டு வாழ்க்கை முறையினை யதார்த்த பூர்வமாகக் கூற விழையும் கதாசிரியர், மேல்நாட்டுப் பண்பாட்டியலின் ஜீரணிக்க இயலாத பகுதிகளை வெகு நளினமாகத் தொட்டுச் செல்கிறார்.
“இரண்டு மூன்று பேருடன் தனித்தனியே வாழ்ந்து கடைசியில்
C20)- பெற்றமனம்

பிடித்த ஒருவனை மணந்து கொண்டாள்’ என்ற ஒரு தந்தை, தனது மகளைப் பற்றிப் பெருமிதத்துடன் கூறிக் கொள்ளும் மேல்நாட்டு அவலம், ஜின்னாஹற்வின் கதையில், அழகிய வலயமாகச் சொல்லப்பட்டிருப்பது சிலாகிக்கத்தக்கது.
ஜின்னாஹற் கதை சொல்ல எடுத்துக் கொள்ளும் கரு, அதனைக் கையாளும் விதம், கதை நகர்த்தும் உத்தி, சற்று கவிதைப் பாங்கான உரைநடையுடன் கூடிய வார்த்தைப் பிரயோகங்கள் ஆகியவற்றைக் கவனத்தில் கொண்டு பார்க்கும் போது சிறுகதை சொல்லுவதில் ஜின்னாஹற் ஒரு தற்றுணிவு மிக்கவராகவே எனக்குப் படுகிறார்.
“செத்தாலும் சாவது” என்ற இந்தச் சிறுகதை தனது மண்ணின் மீது மையல் கொண்ட கிராமத்து மனிதர்களது இலட்சிய வேட்கைகளையும் ஒப்பீட்டளவில் அவர்கள் மேற்கொள்ளும் நடவடிக்கைகளையும் துலாம்பரமாக்குகின்றது.
மேல்நாட்டுப் பண்பியலின் விஞ்ஞான தொழில்நுட்ப, வாழ்க்கைக் கூறுகளின் படிமங்களைச் சிறந்த முறையில் படம்பிடித்துள்ள கதாசிரியர், சிறிய் சிறிய வார்த்தைகளையும் சிறிய பந்திகளையும் பயன்படுத்தியிருப்பது கதை தொய்வற்ற முறையில் நகர உதவுகிறன.
ஒரு சில கவிஞர்களே சிறுகதைகள் படைத்து வெற்றி கண்டுள்ளனர். அந்த வகையில் வெற்றிகரமாகக் கதை படைக்கும் ஒருவராக ஜின்னாஹற் நிமிர்ந்து நிற்பதை மறுப்பதற்கில்லை.
கலைவாதி கலீல்.
( 21 ) ஜின்னாஹ்

Page 20
იტრlოU9 ήήή ി,
பேச்சு வார்த்தைகள் முடிந்து எல்லோரும் போய்விட்டார்கள். வீட்டுக்கு வந்த நான் நடந்ததை மனைவியிடம் சொன்னேன்.
“தாலி, கூறை எதுவும் வேண்டாம். எல்லாமே எங்கள் பொறுப்பு வழக்கமாக அணிகின்ற நகை போதும், மற்றப்படி பெற்றோர்கள் எதை விரும்புகின்றார்களோ, அவை மட்டும் தான், எங்களால் எந்த நிர்ப்பந்தமும் கிடையாது. வருகிற மாத முடிவில் கல்யாணத்தை வைத்துக் கொள்ளுவோம்’.
“முடிவாக நறுக் குத் தெறித் தாற் போன்ற மாப்பிள்ளையின் தந்தை இதைத் தான் சொன்னார். எல்லாம் தீர்மானமாகி விட்டது.’ என்றேன்.
எதிர் பார்த் துப் போனவைகள் எவ்வளவோ பேச்சுவார்த்தைக்குப் போகும் போது பெரியதோர் சுமையைத் தாங்க வேண்டிவரும், என்ற எண்ணத்தோடுதான் வீட்டிலிருந்து புறப்பட்டேன்.
C 22 ) பெற்றமனம்

மனைவி சொன்னாள், "நம்மால் முடிந்தவரை நாம் பிறருக்கு நல்லதுதான் செய்திருக்கின்றோம். ஆண்டவன் நம்மைக் கைவிட மாட்டான். தைரியமாகப் போய்வாருங்கள்,’ என்று.
ஆறுதலான அந்த வார்த்தைகள் என் மனதிற்கு ஓரளவு தெம்பைத் தந்தன. துணிவோடு இறைவன் மீது பாரத்தைப் போட்டுவிட்டுப் புறப்பட்டேன்.
இறைவனுக்காக எள்ளளவு செய்து விட்டு எல்லையில்லாமல் எதிர்பார்க்கின்றோம். சில வேளைகளில் நாம் எதிர்பார்க்கின்ற அளவை விட, அவன் ஏராளமாகவே தந்தும் விடுகின்றான்.
மனைவியின் நம்பிக்கை அப்படியே கைகூடி இருப்பதை எண்ணி இத்தனையும் நடக்க, நாம் என்னதான் அப்படி நன்மை செய்து விட்டோம்.?
என் மனம் பின்நோக்கி அலைபோடுகிறது.
米米米
நீண்ட தூரம் பெருஞ் சுமையை இழுத்து வந்த ஒற்ற்ை மாட்டு வண்டி களைப்புற்று நின்றது போல, நின்றது அந்த பஸ் வண்டி.
“பாரிஸ்!.” என்று உரக்கக் குரல் கொடுத்தார் நடத்துநர். பக்கத்தில் இருந்த என் மனைவி என்னை ஏறிட்டுப் பார்க்கிறாள்.
அவள் பார்வையின் பொருள் எனக்குப் புரிந்தது. தமிழகத்தின் “பல்லவன்’ போக்குவரத்துப் பேருந்துகளில் உலகின் அழகிய கேளிக்கை நகரமான பாரிஸ்"க்கு வந்து விட்டோமா என அவள் வியப்படைகிறாள் என்பதே அது.
C 23) ஜின்னாஹ்

Page 21
இருவரும் “பாரிஸ்’ என்ற அந்தப் “பாரிமுனை’யில் இறங்கிக் கொள்கிறோம். அங்கிருந்து மைலாப்பூர் சென்று “பாண்டிபசார்’ போவது எங்கள் திட்டம், பஸ் இலக்கங்களைக் கேட்டுக் கொண்டு பேருந்துக்காகக் காத்திருந்தோம்.
ஒட்டுக் கேட்கும் கெட்ட பழக்கம் எனக்கில்லை என்றாலும், அந்தவேளை காற்றாடி வருகின்ற ஒரு சம்பாஷணை என் காதுகளை வண்டாகத் துளைக்கும் போது, நான்தான் என்ன செய்வது?
புலனை வேறுபக்கம் திருப்ப முயன்றாலும் பக்கத்தில் இருந்த அந்த வயதான சோடியின் வார்த்தைகளில் அடிபட்ட செய்திகள் என் காதுகளைக் கூராக்கின.
மனைவி பொங்கி வரும் அழுகையைப் பிறர் கண்ணில் பட்டுவிடுமோ என அஞ்சி, அடக்கி, அடக்கிப் பேசினாள். அதையும் மீறிச் சில விம்மல்கள் பேச்சிடையே வெடித்தன.
“இப்படி அடம் பிடிக்கின்றார்களே, மாப்பிள்ளை மனம் இரங்குகின்றார். யார் எப்படிச் சொன்னாலும் தாய்க்காரியின் கைதான் அங்கு ஓங்கி நிற்கின்றது. பாவம் அந்த மனிதர். பேருக்குத்தான் தகப்பன். இரண்டுங் கெட்டான் நிலையில் தங்கியிருக்கிறார்”.
“நான்தான் சொன்னேனே, இன்னும் இரண்டொரு மாதத்தில் வயிற்றைக் கட்டியேனும் சொன்னபடி செய்கிறேன் என்று”
“மனிதனை மனிதன் நம்பக்கூடாதா? இன்னும் ஒரு வாரத்திற்குள் ஆகவில்லை என்றால், வீட்டுக்கு அனுப்பி விடுவாங்களாமே. நம் ஒரேயொரு பையன் விடயத்தில் நாம் எவ்வளவு தாராளமாக நடந்து கொண்டோம்”
C 24 ) பெற்றமனம்

“கடவுள் இப்படியும் நம்மை சோதிக்கக் கூடாது!’ மனம் நொந்து பேசினார் அந்த முதியவர்.
மகளுக்குத் திருமணமாகி மாப்பிள்ளை வீடு வந்து இரண்டு மாதங்கள்தான். சொன்னபடி அத்தனையும் கொடுக்கத்தான் செய்தார்கள்.
நகை விடயத்தில் கடைசி நேரத்தில் ஏற்பட்ட ஒரு தடங்கல் , இரண்டு பவுண் கள் குறைந்து விட்டன. அப்போதைக்கு ஒருவாறு சமாளித்து அனுப்பி வைத்தார்கள். மாதம் இரண்டாகிவிட்டதால் மகளைப் பார்க்க வந்த பெற்றோர்கள் முன்னே, மாப்பிள்ளையின் தாய் பத்ரகாளியானாள். இன்னும் பொறுக் கமாட்டாளாம்! ஏதேதோ சொல் லி கறுவியிருக்கிறாள்.
நாணயமான அந்த மனிதனுக்குப் பொருளாதாரக் கஷ்டம் இப்படியொரு நிலைக்குத் தள்ளியிருக்க வேண்டுமா? நிலைமையைச் சமாளிக்க வழியற்றுத் தவிப்பது அவர் பேச்சில் தெரிந்தது.
“இப்போதைய நிலையில் என்னால் என்னதான் செய்ய முடியும்? ஒரு வழியும் கிடையாது! திருப்பி அனுப்பினால் அனுப்பட்டும்! விதி அதுதான் என்றால், நான் தான் என்ன செய்வது” என்ற அவரின் கண்கள் பனித்ததைக் கடைக் கண்ணால் நான் கண்டேன்.
米米来
நாளை கொழும்புக்குப் புறப்பட வேண்டும். தனக்கு வேண்டியவற்றுள் கைக்கடக்கமாக ஓரளவு பொருட்களைச் சேர்த்துக் கொண்டாள் என் மனைவி.
எடுத்துச் சென்ற பணத்தில் பெரும்பகுதி அச்சாகும்
( 25 ) ஜின்னாஹ்

Page 22
எனது நூல்களின் கொடுப்பனவுக்கே சரியாகிப் போனதால், அதிகம் கையில் மிச்சமில்லை. மனைவி கேட்டாள்.
"ஏங்க பெண்ணுக்கு கூறைச் சேலை வாங்குவதாக இருந்தோமே மறந்து விட்டீர்களா?” என்று.
நான் அவள் மீது எரிந்து விழுந்தேன். “நீ என்னதான் சொல்கிறாய்? கையில் இருப்பது நாளைவரை நம் சொந்தச் செலவுக்குத்தான் போதும். அப்படியிருக்க சேலை வாங்கப் பணத்திற்கு எங்கே போவது?”
அப்போது அமைதியாக அவள் எனக்கோர் வழி சொன்னாள். அது சரியாகப்பட்டதால் தப்பென்றாலும் செய்யத் துணிந்தேன்.
என் தங்கைக்காகச் சேலை வாங்க இருவரும் புறப்பட்டோம். பாண்டி பசார் சென்றால் “ஹனிபா”, “நல்லி” போன்ற கடைகளில் நல்ல தெரிவுகள் உண்டு என்று நாங்கள் தங்கியிருந்த என் நண்பர் வீட்டார் சொன்னார்கள்.
米米米
வயதானவரின் கண்கள் பனித்ததைக் கண்ட நான் திரும்பி என் மனைவியைப் பார்த்தேன். அவளும் திடீரென என்னை நோக்கினாள்.
எங்கள் வாழ்க்கையில் அடிக்கடி நடக்கும் ஒரு நிகழ்வு தான். எதையாவது என் மனதில் பட்டதைச் சொல்லுவேன். உடனே அவள் "டச்வுட்” என்பாள்.
ஆங்கில மொழி மூலம் படித்தவள் ஆகையால், அவளுக்குப் பழகிப் போன வார்த்தை அதுதான். “நான் நினைத்ததை நீங்கள் சொல்லுகிறீர்கள்” என்பாள். இது தொடர்ந்தது, இது எனக்கும் நடக்கும். நான் ஒன்றைச் சொல்ல
C 26 ) பெற்றமனம்

நினைப்பேன். அடுத்த வினாடி அவள் அதைச் சொல்லுவாள். நான் "டச்வுட்” சொல்வதில்லை.
அன்றும் அதுபோல் தான் ஒன்றை நினைத்து நான் அவளை நோக்கினேன். அவளும் அதே போல நினைத்து என்னை நோக்கினாள்.
நான் அந்தத் தந்தை நிலையில் சிந்தித்தேன். அவள் தாயாகத் தன்னை உருவகஞ் செய்திருக்கிறாள். முடிவு! நான் நினைத்ததை அவள் செய்தாள்.
அவள் கழுத்தைச் சுற்றிச் சென்ற என் பார்வையின் பொருளைப் புரிந்து கொண்ட அவள், ஒரு சில வினாடியுள் தன் கையைப் பொத்தி என் கையுள் வைத்தாள்.
தந்ததை வாங்கிக் கொண்ட நான் அடுத்த வினாடியே அந்தப் பெரியவரை அண்டி அவர் கையுள் திணித்தேன்.
எதிர்பாராத அந்த நிகழ்ச்சி அவரை அதிர்ச்சியடையச் செய்திருக்க வேண்டும். “இது என்ன தம்பி?’ என்றார். வியப்பு மேலிட, நான் பதில் சொன்னேன்.
“ஐயா! நாங்கள் இலங்கையர்கள். நீங்கள் இருவரும் பேசியவற்றை எங்களால் கேட்க முடிந்தது. இதில் இரண்டரை சவரன் தங்கம் இருக்கின்றது.
இதன் மூலம் உங்கள் மகளின் ஒடிந்து போன வாழ்வு நிலை பெறுமானால் இதை அளிப் பதில் நாங்கள் பெருமைப்படுகின்றோம்! எடுத்துக் கொள்ளுங்கள்’ என்றேன். இதனைக் கேட்ட அந்தத் தம்பதிகள் அடக்கி வைத்திருந்த சோகக் கண்ணிர் மடை திறந்து உதிரத் தொடங்கியது ஆனந்தக் கண்ணிராக!
C 27 ) ஜின்னாஹ்

Page 23
மீண்டும் அங்கு பேருந்துக்குக் காத்திருக்க வேண்டிய அவசியமற்ற நாங்கள், எதிர்ப்புற பஸ்தரிப்பு நியைததை நோக்கி நடந்தோம்.
சிந்தாமணி
13.08. 1989.
米米米 Q(c ocou-lòomSăn Ólaboðome
வெறும் கற்பனை போல் தோன்றும் உண்மைச் சம்பவம் இது. உண்மைகள் சில வேளை நம்ப முடியாதவை என்பதற்குரிய ஓர் அரிய உதாரணம். அந்த உண்மை, இலங்கையர் நமது மனிதாபிமான மேன் மைக் கோர் கட்டியமாகிறது. சிறுகதை என்பது “மனிதநேயம்” என்பதன் மறுபெயர், என்பதாக இருக்க வேண்டும் என்பது என் நோக்கமாகும். அதைப் பிரதிபலிக்கும் ‘நன்மை தந்த பரிசு’ என்மனதை நெருடுகிறது.
මlෙහි මlබu“IDá
C28) பெற்றமனம்

૭કો Goyclou
5Tய்ந்து கணம்வெடித்து, புற்பூண்டு இல்லாது வரண்டு கிடந்தது அந்த வயற்பரப்பு வருடத்திற்கு மூன்றுமுறை விளைச்சல் கண்ட பூமியது.
வானத்தைப் பார்க்காது அதனை வளப்படுத்தக் “குடமுருட்டி” ஆறு இன்னமுந்தான் ஓடிக்கொண்டிருக்கின்றது. ஆற்றுக் கட்டுக் கட்டி, தண்ணிரைத் திருப்பி நிலத்துக்குப் பாய்ச்ச இன்று யாருமில்லை.
கைவிடப்பட்ட நிலம், கழனியாக இல்லாமல் வெறும் கட்டாந்தரையாக வானத்தைப் பார்த்து, வாய் திறந்து, காய்ந்து கணம் வெடித்து. என் கண்களை அதன் மீது பொழிய வைத்தது.
米>K>K
சின்ன வயதில் வாப்பாவுடன் பள்ளி விடுமுறை நாட்களில் நானும் காக்காவும் எட்டு மைல்கள் தாண்ட நடப்போம்.
C 29 ) ஜின்னாஹ்

Page 24
தலைச்சுமையுடன் அத்தனைத் தூரம் நடப்பது எங்களுக்குப் பாரமாக இருக்கவில்லை. பிரியமாகவே இருந்தது.
கிட் டங் கித் துறை கடந்தும் போவோ ம் , அன்னமலைத்துறை தாண்டித் தோணியில் மிதந்து கரை சேர்ந்தும் நடப்போம். எத்தனை இனிய அனுபவம் அது.!
எங்கள் வயலின் முல்லைக்காரன் கந்தப்போடி, வீமாப்
போடியின் அண்ணன். வீமாப்போடி எங்கள் சாச்சாவின்
முல்லைக்காரன்.
இரண்டு வயல்களும் அடுத்தடுத்துத்தான் இருந்தன.
iப்பாவுக்கு அரசாங்க உத்தியோகம். விதைப்புக்கும்
ைேட்டுக்கும் எங்களையும் கூட்டிச் செல்வார்கள். இடையிலும் இருந்திருந்து ஒரிரு முறை போவது வழக்கம்.
வாடியில் எப்போதும் இரண்டு சின்ன மண்வெட்டிகள் இருக்கும். எனக்கும் காக்கர்வுக்கும். வாப்பாவுக்கு ஒரு பெரிய பண்வெட்டி, அவற்றை யாரும் எடுப்பதில்லை. ஐயாவுடையவும் 1 க்களுடையவும் பொருட்கள் என்பதால் அவற்றிற்கும் அத்தனை மரியாதை.
வாப்பா திருநெல்வேலி விவசாயப் பள்ளியிலும் பயிற்சி பெற்றவர். ஓங்கிய மண்வெட்டியை மண் எங்கு விழ வேண்டும் :ன்பதை ஒங்கும் போதே தீர்மானித்து விடுவதால், எண்ணிய
த்தில்தான் அது ஒரு மண்ணும் பிசகாது விழும். மண்வெட்டி சற்று அசைந்து உன்னி இழுக்க, மண்ணோடு மேலெழும். மீண்டும் குறி தவறாமல் விழவேண்டும் என அவர் தீர்மானித்த இடத்தில் விழும்.
விழும் ஒவ்வோர் அட்டி மண்ணும் இடம்மாறி, ஒழுங்காக அடுக்கி வைத்தாற்போல் பள்ளத்தில் போய் இளைப்பாறும்.
GOD பெற்றமனம்
 
 

“என்னைப் பார்த்துச் செய்யுங்கள்” என்பார்கள் வாப்பா. நானும் காக்காவும் ஆளுக்கு ஒரு பக்கம் நின்று வாப்பாவைத் தொடர்வோம்.
வாப்பாவின் ஒவ்வொரு வெட்டும் மிகச் சீரான இடை வெளியில் நிதானமாக நிலத்தில் பதியும்.
குடமுருட்டி ஆற்றை அந்தக் கழிமடுக் கண்டத்து வயற்காரரெல்லாம் கூட்டாகச் சேர்ந்து மறித்துக் கட்டுவார்கள். காட்டு மரங்களைக் கொண்டு ஒரு குறிப்பிட்ட இடத்தில் இரண்டு மருதை மரங்களை இடைப்படுத்தி, கணுக்கள் போட்டு, காட்டுமரக் கொடிகளைக் கயிறுகளாக்கி, ஆற்று மணலையே கோணிச் சாக்குகளில் கட்டி, இலை குழைகளைக் கொண்டு இடையிடையே சொருகி, எப்படியெல்லாமோ வித்தைகளைக் கையாண்டு ஆற்றுக்குக் குறுக்கே எழும் அனைதான் ஆற்றக்கட்டு.
மிஞ்சி வழியும் நீரோடு பாதுகாப்புக்காய் ஒரு பக்கம் தேவைக் கேற்பத் திறந்துவிட ஒரு வடிச்சலோடு, ஒருபுறத்தில் பெரியதோர் வாய்க்காலும் வெட்டித் தண்ணிரைத் திசை திருப்புவர். அது மண்ணை, அதற்கு வேண்டியவாறு புசிக்க வைத்து எஞ்சிப் போவது அடுத்த பக்கம் ஓடும் “செம்பனாரப்பத்தை”ச் சிற்றோடையில் சங்கமமாகும்.
“பொன் விளையும் பூமி” என்பார்களே, அதைக்கான வேறு எங்கும் போகவேண்டாம். களிமடுக் கண்டத்து வயல்களே அதற்குச் சான்று சொல்லும்.
நீர்ப்பஞ்சம் இல்லா நிலமது. நிலஞ்செழிக்க எதையும் அன்று போடுவதில்லை. அதிக விளைச்சலைக் கருதி நிலத்தை நஞ்சாக்கும் நாசகார நாசினிகள் அன்று இருந்ததுமில்லை; நாங்கள் தெளித்ததுமில்லை.
C31 D ஜின்னாஹ்

Page 25
வாப்பாவுக்கு இன்று தொண்ணுாறு வயது. இன்றும் அவர் ஆரோக்கியமாய் இருப்பது, அந்த மண் விளைத்த சோற்றை உண்டதால்தான் என நான் எண்ணுவதுண்டு.
இன்று இரசாயனமும், மனிதப் பசளையும் சேர்ந்து கொண்டதால், நமது விளை நிலங்கள் மரித்துப் போய்விட்டன. என் கண் கள் பனித் தன. சுற்றிவளைத் துப் பார்க்கின்றேன். நான் படுத்துறங்கிய வாடியடிப் புட்டி இன்னும் அப்படியேதான் இருக்கின்றது. ஆனால் அங்கு வாடியுமில்லை. கந்தப் போடியுமில்லை.
குடமுருட்டி தன்னைச் திசை திருப்பிக் கொண்ட சில இடங்களில் கரையொடிந்து ஆழமாக இருக்கும். அந்த இடங்களில் தான் நான் ஆரல் மீன் பிடிப்பேன். அது விரைந்து ஒடும் இடங்களில் தூண்டிலைச் சட்டெனக் கவ்வும் வாய் பெருத்த வாளை மீனும் கொக் குசானும் என் துாண்டிலுக்குத் தப்புவதில்லை.
வாடி கட்டிய திடலில் என் கால்கள் பதிந்தன. என் பழைய நினைவுகள் ஆற்றுக் கட்டைத் தாண்டிப் பீறி வழியும் ஆற்று நீர்போல், என் மனச் சிறையிலிருந்து பொங்கி வழிந்தன. ‘தம்பி! வாப்பாவோட நீங்களும் எங்களோட வாறியளா. நாங்க வரம்பு கொத்தப் போற,’ என்பார் கந்தப்போடி அண்ணன். வயல் உரிமைக்காரர் என்பதால் எனது தந்தையார்தான் போடியார். நான் போடியார் மகன். ஆனால் எங்கள் முல்லைக்காரரும் போடியார்தான். பரம்பரைப் பெயர் அவருக்கு. அனைவரும் அவரைப் போடியார் என்றுதான் அழைப்போம்.
“இல்ல போடியார். நான் பகலக்கி கறிக்கி மீன் இழுத்துக்கு வாறன். ஆரல்மீன் வேணுமா, கொக்குசான் வேணுமா?
(32) பெற்றமணம்

எந்த மீனை எங்கு பிடிக்கலாம் என்பது எனக்குத் தண்ணிர் பட்டபாடு. வயலுக்கு நான் வருவதே மீன் பிடித்து மகிழத்தான். வரப்போரத்தில் இடையிடையே சிறிய சிறிய கும்பலாய் மண் குவிந்திருக்கும். அந்த இடங்களில் மண்வெட்டி கொண்டு ஓங்கி வெட்டினால் நீண்ட புழுக்களின் வெட்டுண்ட முனைதெரியும். அது உள்ளே நுழையுமுன் விரைந்து லாகவமாகப் பிடித்துக் கொண்டால், மிக நீண்ட மண் புழுக்கள் கிடைக்கும். இடையில் பிய்ந்து விடாதபடி மெல்ல மெல்ல இழுத்து, வெளியில் எடுத்து, சிறுசிறு துண்டுகளாக வெட்டி, சிரட்டையில் போட்டு மண்ணால் மூடிக்கொள்வோம். ஒரு புழுவே முழு நாளுக்கும் வேண்டிய மீனைத் தேடிக் கொள்ளப் போதுமாகும்.
நாட்டரிசிச் சோறும், வயலில் படரும் பொன்னாங்கண்ணிச் சுண்டலும், ஆத்து மீனும் அடே.யப்பா! வேலைக்குப்பின் ஆற்றில் குளித்து விட்டு, ஒரு பிடி பிடித்தால், தேவாமிர்தம் தோற்றல்லவா போகும்.
米米米
சிறுபொழுது என் சிந்தனை தடைப்பட்டது. மருதை மரத்தில் பாய்ந்த குரங்கின் ஆரவாரத்தால், என் கையிலிருந்த துப்பாக்கி “என்னைத் தூக்கு, என்னைத்துக்கு” என்றது. அந்த வாயில்லாப் பிராணியைக் கொல்ல என் கைகள் நடுங்கின. அதனைச் சிலகாலமாக நான் சுமந்து திரிந்தாலும் ஒரு காக்கையைக் கூட நான் மண்ணுண்ணச் செய்யவில்லை.
பாரமான “பூட்ஸ்’ தடித்த துணியினாலான “யூனிபோம்” இடுப்பை இறுக்கும் “பெல்ட்’ அதை நிரப் பியுள்ள “உயிருண்ணிகள்’ தலை தாங்கும் இரும்புத் தொப்பி.
C 33 D ஜின்னாஹ்

Page 26
நான் அணிந்திருந்த உடைகள் இப்போதுதான் எனக்குப் பாரமாகத் தெரிந்தன. நான் ஏன் இங்கு வந்தேன்? ஏன் என்னை இங்கு அனுப்பினார்கள்.?
அரசாங்கத்துக்கு எதிரான வன்முறைக் கூட்டமொன்றின் தலைவன் இந்தப் புறக் காட்டில் ஒளிந்திருப்பதால் அவனைப் பிடிப்பதற்காம்.
இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன் எனது பதினெட்டு வயதில், தொழிலுக்காக நான் இராணுவத்தில் சேர்ந்து கொண்ட பாவத்திற்கு, இது பரிகாரம் போலும்!
என் கையில்தான் தலைமைப் பொறுப்பு. முன்னரும் இங்குள்ள காடுகளுக்குள் நான் நுழைந்திருக்கிறேன். வாடி கட்டக் கம்பு தறித்தால், கந்தப் போடியாருக்கு உதவியாகக் காட்டுக்கொடி சுமந்துவர நானும் போவதுண்டு.
இன்று நான் வந்திருப்பது அதற்கல்ல. வேட்டைக்கு! மிருக வேட்டைக்கா? அல்ல. ஆறறிவு கொண்ட மனித ஜீவனின் உயிரைக் காவு கொள்ள!.
நெஞ்சம் கனத்தது. கந்தப்போடியாரின் மகன் முருகன்போடி. சின்ன வயதில் நான் அவனைப் பார்த்திருக்கிறேன். போடியாருக்கு வாப்பா சொல்லுஞ் சேதிகள் சொல்ல நான் அவர் வீட்டுக்கச் செல்வேன். என்னைவிடப் பத்துப் பன்னிரண்டு வயதுகள் இளயவன். அப்போது அவன் சின்னப் பிள்ளை. மூன்று நான்கு வயதுதானிருக்கும். அண்ணே, அண்ணே என்று என்னைச் சுற்றி வருவான். உட்கார்ந்திருக்கும் போது பார்த்து என் பின்னால் வந்து என் தலையில் மண்ணை அள்ளி வைத்துவிட்டு ஓடிவிடுவான். அவன் போடியாரிடமிருந்து அடிவாங்காமல் நான் பலமுறை அவனைக் காப்பாற்றியுள்ளேன்.
G34)- பெற்றமணம்

இன்று அவனையே தேடிப் பிடித்துவர அரசாங்கம் என்னைக் கட்டாயப்படுத்தியுள்ளது. என்னை அவன் முந்திக் கொண்டால் நிச்சயமாக அவன் என்னைக் கொல்வான். என்னை யாரென அறிந்து கொண்டாலும் கொல்வான். அண்ணன் என அவன் என்மீது, கொண்டுள்ள அன்பை விட, அவன் இலட்சியத்தின் மீது அவன் கொண்டுள்ள உறுதி மேலோங்கி நிற்பதால், ஆனால் என்நிலை!
நான் முந்திக்கொண்டால்!. மனம் முந்தியது. நான் அவனைக் கொல்ல மாட்டேன். என் நெஞ்சத்தில் அன்றும் இன்றும் மிகைத்து நிற்பது அவன் என் தம்பி என்ற பாசமல்லவா!
அன்று அவன் குறும் புகள் செய்யும் போது, அப்பாவிடமிருந்து ஓர் அடிகூடப் படாமல் எத்தனை முறை நான் அவனைக் காப்பாற்றி இருப்பேன். இன்று நானே அவன் மீது எப்படி ரவைகளைப் பொழிய வைப்பேன்.? அவ்வாறாயின் என் கடமையின் பொறுப்பு.?
米米米
“என்னம்பி கை கடுக்குதா? இஞ்ச கொண்டா!” மண்வெட்டியால் வரம்பின் கரைகொத்திய என் முன்னங்கைகள் வலித்தன. சற்று நான் ஒய்வு பெற்று மண்வெட்டியைக் கீழே போட்டுவிட்டுக் கைகளை உதறினேன். வேலை செய்பவர்களுக்குத் தேனீர் கொண்டு வந்த கந்தப்போடியார் என்கைகளைப் பற்றி வருடினார். என் கைகளுக்கு அந்த வருடல் இதமாக இருந்தது. எவ்வளவு நேரம் அவர் என்கைகளை உருவி விட்டாரோ, அந்த சுகானுபவத்தில் வேதனை தளர்ந்தும் நான் கையை மீட்டுக் கொள்ளாது நின்றேன்.
C 35) ஜின்னாஹ்

Page 27
“என்ன, இப்ப நோகல்லயே?’ என்று அவர் கேட்ட போதுதான், நான் கைகளை அவரிடமிருந்து மீட்டுக் கொண்டேன்.
米米米
ஒரு சின்ன அனுபவச் சுடர். சட்டென என் நினைவில் பட்டுத் தெறித்தது. என் முன்னங் கைகளை நான் அப்போதுதான் விடுவித்துக் கொண்டது போன்றதோர் உணர்வு. இதமான ஒரு வருடலிலிருந்து மீண்டவோர் மனநிலை.
அன்றும் இப்படித்தான். அந்த வயற் பரப்பில் கந்தப்போடியார் என் கைகளைப் பற்றி வருடினார். என் பிஞ்சுக் கரங்களின் வேதனையைக் கொஞ்சம் கூடப் பொறுக்கவில்லை அந்த மனம். என் தாயே என் கரங்களைத் தடவிவிட்டது போன்ற உணர்வை அப்போது நான் மனமார உணர்ந்தேன்.
நான் இராணுவத்தில் சேர்ந்த காலம். நாட்டிலொன்றும் இவ்வாறான பெரும் பிரச்சினை இருந்ததில்லை. அவ்வப்போது தோன்றும் பிரச்சினைகள் பொலிசாரினாலேயே தீர்த்து வைக்கப்பட்டன. ஏதோ தொழில் ஒன்று வேண்டுமே என்ற எண்ணத்தில்தான் சேர்ந்தேன். இளமைத் துடிப்புக்கு அந்த உடையும் செயற்பாடுகளும் எனக்குப் பிடித்திருந்தன.
இன்று கூட, எத்தனைப் பேர் தேசப் பற்றோடு இராணுவத்தில் சேருகின்றனர்? அன்று நான் பணத்தை மையமாக வைத்து இராணுவத்தில் சேரவில்லை. தொழில் வாய்ப்புக்கள் என் கல்வித் தகைமைக்கு நிறையவே இருந்தன. இருந்தும் நான் அதனையே விரும்பினேன்.
இருப்பினும், இப்போது தொடர்ந்து நடக்கும் பயங்கர நிலைக்கு இராணுவத்தின் அவசியமே இன்றியமையாததாக
C 36 D பெற்றமனம்

இருந்தும், எனக்குப் பொருந்தும் நிருவாகப் பொறுப்புக்கள் யுத்த பூமிக்கு என்னை அனுப்ப முடியாதவாறு செய்தன.
நெருக்கடிகள் தொடரத் தொடரப் பொறுப்புக்கள் கைமாறும் போது நானும் இடம் மாற்றப்பட்டேன். வெற்றுக் கையாக இருந்த என் கரங்களில் இன்று வலுாவன ஆயுதங்கள் அடிக்கடி ஏறின. ஆயினும் அவற்றைப் பயன்படுத்தும் சந்தர்ப்பம் ஏனோ எனக்குக் கிடைக்கவில்லை.
இப்போது நான் ஒரு பொறுப்புள்ள அதிகாரியாக ஒரு தேடுதல் வேட்டைக்குத் தலைமை தாங்க அனுப்பப்பட்டுள்ளேன்.
米米米
காடே அதிரப் பாய்ந்து திரியும் வானரங்களின் பயங்கரக் கூப்பாடு மீண்டும் என்னைச் சுயவுணர்வு கொள்ள வைத்தது. என்னோடு வந்த ஓர் இராணுவ வீரன் மந்தியொன்றிற்குக் குறிவைத்தான். சுடவல்ல, அவற்றைப் பயங்காட்ட நான் அதைத் தடுத்தேன்.
தவறிக் கூட ஒரு தோட் டா தெறித் தாலும் , நாமிருக்குமிடத்தை எதிரி சரியாக இனங்கண்டு கொள்ளலாம் என்பதும் ஒரு காரணம் தான்.
ஆற்றோர மணப் பரப்பில் வளர்ந்து கிடந்த செடிகளுக்கிடையில் சிறியதோர் சரசரப்பு என் செவிகளை உறுத்தியது. பாம்பொன்று நெளிந்து நகர்ந்தது. பகைக்கஞ்சிப் பதுங்கும் இன்றைய போர் வீரன் போல.
பாம்பு மீண்டும் என் சிந்தனையைப் பின்நோக்கி இழுத்தது. ஒரு நாள் என் தலைமாட்டின் தலையணைச் சாக்கின் கீழ் இருந்த சுருட்டைப் பாம்பைப் போடியார்தான் கண்டார். சம்பந்தமில்லாமல் என்னைப் புறம் தள்ளிவிட்டு, அவர் அதைக் கொன்ற லாகவம்!
C 37 ) ஜின்னாஹ்

Page 28
என் தோல் மயிர்கள் மெல்லச் சிலிர்த்தன. அன்று அதை அவர் காணாதிருந்திருந்தால், அதன் விஷத்திற்கு நான் நோயுற்றிருப்பேன். “பாம்புச் செய்யது காப்பாத்தினார்’ என்றார் போடியார். எனக்குப் பயத்துள்ளும் சிரிப்பு வந்தது.
பாம்புச் செய்யது மீது போடியாருக்கு நம்பிக்கை அதிகம். சற்றுத் தொலைவில் ஒரு பெரிய புளிய மரம் என் கண்களில் பட்டதும், எனக்குள் பதிந்து கிடந்த ஒரு பசுமையான நினைவு பூத்துப் புலர்ந்தது.
விதைப்புக் காலங்களில் வரப்புகளின் ஓரங்களை ஒரு சீராகவும், அடர்ந்து வளர்ந்துள்ள புற்காட்டை அகற்றவும் ஓரங்கொத்துவோம். பயிரில்லாக் காலங்களில் நண்டுகள் துளையிட்ட வளைகளுக்குள் பதுங்கிக் கொண்ட பாம்புகள், எங்கள் மண்வெட்டிக்கு வெட்டுண்டு துடிக்கும். சுற்றிக் காடுகள் இருப்பதால் இது அங்கு சாதாரண நிகழ்வுகள்தான்.
பாம் புக ளின் ஆபத் தலிருந்து தங்களைக் காத்துக்கொள்ள அந்த நாட்களில் “பாம்புச் செய்யது’க்குப் “புக்கை” ஆக்கி “பாத்திஹா’ ஒதுவார்கள். “ஹயாத்து நபி’ பேராலும் நேர்ச்சை செய்து “கந்தூரி” கொடுக்கும் வழக்கமும் அன்றிருந்தது.
இந்த அறிவுக்குப் புறம்பான வழக்கங்களில் அப்போதிருந்தே எங்கள் தந்தைக்கு ஒப்புதல் இருந்ததில்லை. சொல்லித் திருத்தும் நிலையில் அன்றைய மக்களும் இருந்ததில்லை. ஒவ்வாத சேதிகளைச் சொல்லும் போது அவர்கள் என் தந்தையை ஒரு நாஸ்திகர் போல எண்ணினர். இருப்பினும், கூடி விருந்துண்ணும் ஒரு சந்தர்ப்பம் கிடைப்பதால், எல்லோருடனும் சேர்ந்து கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் எங்களையும் இணைத்துக் கொள்ளும்.
G8) பெற்றமனம்

புளியமரத்தைப் பார்த்த போது இந்த நிகழ்வே என் மனத்தரையில் பூத்துப் புலர்ந்த சேதியாகும்.
களிமடு வட்டைக் காரரும் பக்கத்து வயற்காரரும் கூட்டாகச் சேர்ந்து இதனைச் செய்வார்கள். வாப்பாவின் அடியொற்றி நாங்களும் வளர்க்கப்பட்டதால் இந்தப் பொய்யான செய்கைகளில் எங்களுக்கும் நம்பிக்கை இருக்கவில்லை.
சுவையாகத் தயாராகும் “புக்கை” என்னும் பாற்சாதம் உண்ண, நாங்களும் மற்றவர்களோடு சம்மாணங்கொட்டி உட்கார்ந்து கொள்வோம். கந்தப்போடியும் வீமாப்போடியும் வீமாப்போடியின் மகன் “குள்ளத் தம்பி’யும் மிக பயபக்தியுடன் அன்றைக்கு இருப்பார்கள். கொள்ளி பொறுக்குவதிலிருந்து சாப்பிடப் பரிமாறும் தேக்கிலை பறிப்பது வரை மிகச் சிரத்தையோடு மற்றவர்களுடன் சேர்ந்து கொள்வார்கள்.
அதிக நாட்கள் வயல்களிலே கழிக்கும் அவர்களுக்குப் “பாம்புச் செய்யது"க்குப் புக்கை ஆக்கிப் பாத்திஹா ஒதினால் பாம்பு கடிக்காது என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை இருந்தது.
இன்னும் போடியார் என்னைச் சுற்றியே நின்றார். கறுத்த உருவம் தலையின் பின்புறத்தில் ஒரு சிறு குடும்பி, சுமாரான உயரம்தான். என்றாலும் சுறுசுறுப்பான தேகம், பல்லில்லாப் பொக்கைவாய் என்றாலும், எப்போதும் சிரித்தவாறுள்ள முகம். எதிலும் ஒரு ஒழுங்கும், கட்டுப்பாடும் பேணும் பண்பு மிகவும் நாணயமான மனிதருங்கூட.
முருகப்போடியும் அவரைப் போல்தான் இருப்பான். குடுமியும் இல்லை. முகத்தில் சிரிப்பும் இருக்காது. ஊருக்கு வரும் போது ஒரிருமுறை நான் அவனைக் கண்டிருக்கிறேன்.
C39D ஜின்னாஹ்

Page 29
என்னைக் கண்டதும் அவன் விலகிச் சென்றுவிடுவதால், பேசியதில்லை.
அன்றைய தேடுதல்,பொழுது மேற்கே ஒடுங்கப்போனதால் அத்தோடு முடிந்தது. என்னோடு வந்த வீரர்களோடு நான் முகாமுக்குத் திரும்பினேன். ஒரே மனநிலையில் கடமையை முன்வைத்து, தேடுதல் வேட்டைக்கு வந்த என் மனதில் களிமடுவட்டை தெளிந்த நீரில் வீழ்ந்த கல்லாகிக் கலங்க வைத்தது.
இராப்போசனம் சரியாக உண்ணப்படாமல் எஞ்சிப்போக, நான் படுக்கைக்குச் சென்றேன். பொழுது புலரும் வரை என் இமைகள் மூட மறுத்தன. நாளையும் இன்று போல் தேடுதலுக்கு காட்டின் மற்றொரு புறத்துக்கு நாங்கள் செல்ல வேண்டும். என் மனம் ஒரு நிலைப்படாது தவித்தது.
மறுநாள் தேடுதலின் அவன் மறைவிடம் தெரியப்பட்டால்!. ஆபத்துக்களைத் தாண்டி நான் எனக்கிட்ட பணியை முடிக்க வேண்டும். உயிரோடு அல்லது பிணமாய். என் உடல் சிலிர்த்தது. ஒன்று நான் அல்லது அவன். யாரந்த அவன்?
米米米
குயிலின் கூவலும், குருவிகளின் கீச் கீச். ஒலிகளுமி, வண்டினத்தின் நொய். யென்ற ஒலியும் என்னை எழுந்து உட்கார வைத்தன. பொழுது நன்கு புலர்ந்ததும் வீரர்களோடு நான் வேட்டைக்குப் புறப்பட்டேன்.
அடர்ந்த காட்டினுள் என் ஒவ்வோர் அடியும் அச்சத்தோடு தான் பதிந்தது. மற்றவர்களின் அடிகளும் அவ்வாறுதான்.
G40)- பெற்றமணம்

எனினும் வேட்டை நாயின் வக்கிரம் முகங்களில் விரவிக் கிடந்தது. என் மனதில் கடமை உணர்வோடு மற்றொரு உணர்வும் மாறி மாறித் தோன்றின. மனதைக் கல்லாக்க என்னால் இயலாது, நான் அடிக்கடி தோற்றுப் போனேன்.
காலைத் தொழுகையின் பின் என் நீண்ட நேரப் பிரார்த்தனை மீண்டும் என் நினைவுக்கு வந்தது. “ஆண்டவனே! என் கையால் அவன் சாகக்கூடாது!’ இப்போதும் அதே பிரார்த்தனை என் நெஞ்சில் உதித்துப் பதிந்தது.
நீண்ட காட்டுப் பயணம் எமது உடல்களைச் சோர்வடையச் செய்தன. தாகமும், பசியும் கொண்டுசென்ற பொருட்களால் தீர்ந்து போனாலும், உடற் சோர்வும் மனக்கவலையும் என்னைச் சற்று ஓரிடத்தில் ஒய்வுகொள்ள வைத்தன. சற்றுத் தொலைவில் மற்றவர்களும் இளைப்பாறினர். நான் ஒரு பெரிய மரத்தடியில் சாய்ந்து கொண்டேன். இரவும் தூக்கமின்மையால் இமைகள் சற்றுச் சரியத் தொடங்கின. முற்றாக அவை மூடிக்கொள்ளாத ஒரு வினாடிக்குள் பக்கத்தில் இருந்த ஒரு புற்புதர் மெல்ல அசையும் ஒலியை என் செவிகள் உள்வாங்கிக் கொள்ள, விழிமடல்கள் விரிந்து பார்வை அப்பக்கம் குத்திட்டு நின்றது.
நான் அதிர்ந்து போனேன். என்னை அறியாமல் என் இடுப்பிலிருந்த கைத்துப்பாக்கி சட்டெனக் கரம் மாறியது. என் கட்டளைக்கு முன் அதிர்ச்சியால் வலக்கரம் இயங்கியிருக்க வேண்டும்.
வேகமாய் நான் மரத்துள் பதுங்கிக் கொண்டேன். புற்புதர் நோக்கி எந்த வினாடியும் ரவைச்சரம் இராம பாணமாகலாம். நிலைமையை நிதானிக்கச் சற்றுப் பொறுத்த என் காதுகளில்
C 41 D ஜின்னாஹ்

Page 30
ஒரு முனங்கலொலி கேட்டதும், செவிப்புலன் கூர்மையடைந்தது. அது மரணத்துக்குப் போராடும் ஒரு மனித ஜீவனின் ஜீவமரணப் போராட்டத்தின் எதிரொலியாகவே என் மனம் எண்ணியது.
நெஞ்சு வேகமாகத் துடித்தாலும், மனம் நிதானமாகச் செயல்பட்டது. மரத்தின் மறுபுறம் சுற்றி என் கால்களை நகர்த்தினேன். புதரின் மறுபுறம் எனக்கு நன்றாகவே தெரிந்தது. அங்கே. ஒரு இளைஞனின் உடல் குப்புறக் கிடந்தது. மெல்லத் துடித்தது.
என் பரபரப்பை மற்றவர்கள் அவதானித்திருக்க வேண்டும். மிக நிதானமாக, மிக வேகமாக அவர்கள் அவனை நெருங்கினார்கள். என் பார்வை நின்ற பக்கம் நோக்கிய அவர்களின் ஆயுதங்கள் அந்த இளைஞனின் உடலை நோக்கி நீண்டன. யாரும் அவற்றை இயக்கவில்லை. என்றன் நிதானம், என் கையிலிருந்த ஆயுதத்தின் அமைதி, அவர்களை நிதானப்படுத்தின.
மெல்ல அடிவைத்து நான் முன்னேறினேன். எதற்கும் ஆயத்தமாய் என் சுட்டுவிரல் என் ஆணைக்காய்க் காத்திருந்தது. அவன் திரும்பவில்லை. வெறும் அசைவு மட்டும் தான். அரைக் காற்சட்டையும் ஷேட்டும் அணிந்திருந்தான். காலில் என்னைப் போல் “பூட்ஸ்’ இருக்கவில்லை. வெறும் தோற் செருப்புத்தான்.
அவன் தாங்கியிருந்த ஆயுதம், அவன் ஒரு புறத்தில் உடலோடு ஒட்டிக் கிடந்தது. எனக்குத் தெரிந்தது. அவனால் அதனை இயக்க மாட்டாதிருப்பது. சுற்றிவளைத்து என்னோடு என் சகாக்களும் ஒருசில அடிகள் தூரம் தங்களை நிறுத்திக் கொண்டனர். இப்போது துடிப்பும் அடங்கிப் போயிற்று.
G42) ஜின்னாஹ்

திட்டமாய்த் தெரிந்தது. அவன் உயிர் பிரிந்தது இப்போது தான் என்று.
படைவீரன் ஒருவன் பாய்ந்து தன் பூட்ஸ்காலால் என் கட்டளைக்குக் காத்திராமல் அந்த உடலை உதைத்து மறுபக்கம் புரட்டினான். தேடிவந்த பகைவன் இவனாகத் தானிருக்கும் என அவன் மனம் தீர்மானித்துக் கொண்டிருக்க வேண்டும். அவன் மன வெறி அவன் காலின் வேகத்தில் தெரிந்தது. செத்த பாம்மை அடித்தாலும், தான் எதையோ சாதித்து விட்டது போன்ற வெற்றிக் களிப்பை அவன் முகம் காட்டியது.
ஆவலோடு அனைவரும் அந்தச் சடலத்தின் முகத்தைப் பார்த்தனர். என் கண்களும் விவரம் தேடின. என்விழி மடல்கள் மேலும் விரிந்து அளவிட முடியா என் மனவுணர்வை வெளிப்படுத்தியிருக்க வேண்டும். அதனை மற்றவர்கள் அவதானித்திருந்தாலும், காரணத்தைப் புரிந்து கொள்ள வாய்ப்பிருந்திருக்காது. என் இதயம் படபடப்பதை நானே உணர்ந்தேன்.
தலைவரின் முகத்தில் தோன்றும் ஆச்சரியத்தின் அடையாளங்கள், படையினருக்கு வியப்பைத் தந்திருக்க வேண்டும். அனைவரும் என்னையே உற்றுக் கவனிப்பதைத் தலையைத் தூக்கிய என் கண்கள் வரித்துக் கொண்டன. நான் என்னைச் சுதாகரித்துக் கொண்டேன்.
மறுநாட்காலை பிரேதம் பரிசோதிக்கப்பட்டுக் ‘கொடிய விடத்தின் கோரவிளைவாய் மரணம்’ எனத் தீர்ப்புந் தரப்பட்டது. பிரேதத்தைப் பொறுப்பேற்க யாரும் முன்வராததால், அதனை அரசாங்கமே பொறுப்பேற்றுக் கொண்டது. அந்த
G43) பெற்றமனம்

Page 31
அநாதைப் பிணத்தின் நெருங்கிய ஒருவனாக, வேட்டைக்கு வந்தும் வேட்டையாடாமலேயே, வேட்டைப் பொருளையும் பெற்று, என் பழைய நினைவுகளால் நெஞ்சம் கணக்க நான் என் வாகனத்தில் ஏறிக் கொண்டேன்.
米米米
(தினகரன்-கண்டி மக்கள் கலை இலக்கிய ஒன்றியம் 2000 ஆண்டில் இணைந்து நடத்திய “அகஸ்தியர்” நினைவுச் சிறுகதைப் போட்டியில் இரண்டாம் பரிசு பெற்ற சிறுகதை.)
عمل نخل گنو/لین- رجال رم)
மனித வேட்டை ஒரு பதச்சோறு
இறுதி மூச்சுள்ளவரை இலக்கிய வேள்விக்கு தன்னை ஆகுதியாக்கிக் கொண்ட அகஸ்தியரின் ஞாபகார்த்தமாக தினகரன் மக்கள் கலை இலக்கிய ஒன்றியத்துடன் இணைந்து நடாத்திய சிறுகதைப் போட்டிப் பரிசு பெற்ற சிறுகதைத் தொகுதியில் இடம் பெறுகின்றது ஜின்னாஹ ஷரியத்தீனின் இந்த “மனிதவேட்டை”
வேகம், ஆர்முடுகலின் உச்சங்களைத் தொட்டு நிற்கும் இன்றைய உலகில் நீண்ட காவியங்களைச் சுவைத்துப் படிக்கும் அவகாசம் அவசரமாக மனிதர்களுக்கு அருகிப் போய் விட்டதால் அவர்களின் இலக்கிய நுகர்வுக்கு வசதியான வகையில் உருப்பெற்ற இலக்கிய வடிவமே சிறுகதை. சிறந்த இலக்கியங்கள் சமகால வாழ்க்கைப் போக்குகளை வரலாற்றில் கச்சிதமாக பதிவு செய்து வைக்கும் காலக் கருவூலங்களாகக் கருதப்படுகின்றன. இந்த வகையில் ஈழத்திரு நாட்டின் இனத்துவ முரண்பாடுகளின் விபரீத விளைவான உள் நாட் டு யுத் தத்தின் அவல மொன்றை
C 44 ) ஜின்னாஹ்

மனிதவேட்டையில் பொட்டலங் கட்டித் தந்துள்ளார் ஜின்னாஹற் ஷரிபுத்தீன்.
அமெரிக்காவிலும், ஆப்கானிஸ்தானிலும் அண்மையில் நிகழ்த்தப்பட்டதைப் போன்று முகமறியாத மனிதர்களை, அவர்கள் மீது எவ்விதமான முற்கோபமுமில்லாமல் தங்கள் தலைவர்களின் கட்டளைகளைச் சிரமேலேற்று வேட்டையாடியதை விட வேறுபட்ட போரே நமது நாட்டில் நடக்கிறது. ஒன்றாக உண்டு, உறங்கி அன்பு கொண்டு வாழும் இளைஞர்கள், யுவதிகள் இருமொழி பேசும் ஒரு தாய்மக்கள் ஒருவரையொருவர் வேட்டையாடுகின்றார்கள்.
இயற்கை வளங்கொழிக்கும் கிழக்கிலங்கையின் கதைப் புலத்தில் குடமுருட்டி ஆறோடும் வயல் நிலத்தில் கடமை உணர்வுமிக்க காவல்படை வீரர் ஒருவரின் தற்கூற்றாகக் கதை நெய்யப்பட்டுள்ளது.
இளம் பருவத்தில் தன்னை நேசித்த கந்தப் போடியாரின் மகன் முருகப் போடியை உயிரன்பு கொண்டு நேசித்த கதை முருகப்போடி தன் இனத்தின் விடுதலைப் போராளியாகி விட உடன்பிறவாத் தம்பியின் உயிர் பறிக்கப் புறப்பட்ட கதை.
மனித நாடி பிடித்து நோயறிந்து மருத்துவம் செய்யும் மருத்துவர் ஜின்னாஹற் ஷரிபுத்தீன் சமூகப் பிறழ்வொன்றினை நாடிபிடித்து கவித்துவச் சொல்லாட்சி கொண்டு கதை செதுக்கியுள்ளார். கவிஞன் ஒருவனால் மட்டுமே இலக்கியத்தின் அனைத்துத் துறைகளையும் வசப்படுத்திவிட முடியும். ஜின்னாஹற் ஒரு கவிஞன். பெரும் புகழீட்டிய புலவர்மணி ஷரிபுத்தீனை பிரதியாக்கஞ் செய்துவிட்டார் அவரீன்ற சான்றோன். இதற்கு இக்கதையொன்றே பதச்சோறு.
2002.01.18 இராஜ யூனிகாந்தன்
பிரதம ஆசிரியர் தினகரன்.
C45 ) பெற்றமனம்

Page 32
δήλωΛσηo
66
சிபைர்! இஞ்ச கொஞ்சம் வாங்கோ. கண்ணாடி கீள
வுளுந்திட்டுது, கொஞ்சம் எடுத்துத் தாங்கோ மவன்.” வார்த்தைகள்
மிக வினயமாக வெளிவந்தன.
அறுபத்தைந்து வயதுதான் ஆகின்றது. கண் நன்றாகவே மங்கிப் போயிற்று. கண்ணாடி இல்லாமல் மேசைகளும் கலங்கியே தெரிந்தன. வாழ்வுக்கு இன்று
உறுதுணையாய் இருப்பது அந்த இருதுண்டுப் வில்லைகளே. பலமுறை முயன்றும், பூரண ஒளியைப் கொள்ளக் கண்கள் மறுத்து விட்டன.
Lust sió0)6)
கதிரை,
பளிங்கு பெற்றுக்
இரவு பகலாக எத்தனை நூல்களைப் படிக்க அவை உதவி
செய்தன! பட்டங்கள் பலவும் பெற ஒத்தாசை செய்தன.
இப்போது.? இயங்கிக் களைத்ததன் இயலாமையை பார்வையால் அவை வெளிப்படுத்தின.
ஆனால்
மங்கிய
G46) பெற்றமனம்

“மெடம் ஷமீமா’ என்ற பெயர் அறிவுலகத்தில் நன்கு பரீச்சயமானது. மாதருள் முதன்மைப் பெண்களுள் ஒருவராக மதிக்கப்பட்டவர். குழந்தைப் பேறு இன்மையால் இல்லற வாழ்வின் இன்பங்களைக் கூடக் கல்விக்காக அர்ப்பணித்தவர் எனப் பேசப்பட்டார். பட்டங்களோடு, உயர்ந்த பதவிகளும் அவரைத் தேடி வந்தன. பொருளாதாரத்திலும் எந்தக் குறைபாடும் அவருக்கிருக்கவில்லை. புகழும் சேர்ந்தது. அத்தோடு பொருளும் சேர்ந்தது.
சேவை மனப்பான்மையோடு பணி புரிகின்றார் என்றுதான் அவரை அனைவரும் எண்ணினர். ஆனால் மெடம் ஷமீமாவின் நோக்கம் செல்வம் சேர்ப்பதிலும் கண்ணாய் இருந்தது.
அவர் எதிர்பார்ப்புக்கள் எதுவும் நிறைவேறாது போகவில்லை. செல்வத்தின் செழுமையில் இளமைக் காலம் திளைத்திருக்காத போதிலும், இன்று அதன் பெருமையை அவள் தெரிந்து கொண்டிருந்தார். பெண்ணியக் கொள்கைகளில் அவர் மனம் வயப்பட்டுப் போனதால், ஆண்மைக்கு அடங்குவதும், அதற்கு மதிப்பளித்து வாழ்வை ஓர் அழகுப் பூங்காவாக அமைத்துக் கொள்வதிலும் அவருக்கு நாட்டம் இருக்கவில்லை.
கைப்பிடித்த கணவர் ஒரு கண்ணியமான மனிதர். ஒரு பொறியியலாளராகவும், சமூகப் பற்றுள்ள ஒரு சேவையாளராகவும் அவர் இருந்தார். பொருளோடு சமூக அந்தஸ்தும் அவருக்குக் கிடைத்தது. கிடைத்துவிட்ட கெளரவத்தைப் பேண வேண்டும் என்பதால், வாழ்வில் பெறவேண்டிய பலவற்றையும் இழந்து நின்றார் மனிதர்.
இருவரும் உழைக்கின்றோம். இருவரும் ஒரே விதமான சமூக அந்தஸ்தைப் பெற்றுள்ளோம். இந்நிலையில் இருவரும் ஒன்றுக்கொன்று சமமாய் வாழ்வதே சரியானது, எனும் கோட்பாட்டுக்குள் தன்னை நியாயப்படுத்திக் கொண்டார் மெடம் ஷமீமா,
C-47D ஜின்னாஹ்

Page 33
ஒரே கூரையின் கீழ் இல்லறம் என்னும் போர்வைக்குள் இருவரின் தனித்தனி வாழ்க்கை மறைக்கப்பட்டு நடைபெற்றுக் கொண்டிருந்தன. இதனால், பசுமையாக இருக்கும் காலத்தில் பயிரிடப்பட வேண்டிய கருப்பை நிலம் பயிரிடப்படாமையால் மலடாகிக் கிடந்தது.
ஆனால், தமது எதிர்கால வாழ்வில் தமக்கென்றோர் நிலையான ஊன்றுகோல் வேண்டுமெனக் கணவர் மிர்ஷாத் ஏங்கினார். தமது பெயர் தாங்க ஒரு சந்ததி உருவாக வேண்டுமெனப் பலமுறை அவர் முயன்றும், ஏனோ அவர் கொண்ட எந்த முயற்சியும் கைகூடவில்லை. “ஒரு கை தட்டி ஓசையெழுவதில்லையே” “தேடாத வரையில் எதுவும் தேறுவதுமில்லை.” வாழ்வின் வசந்த காலம் வாழாமலே கழிந்தது.
சுற்றிக் கிடக்கும் புத்தகங்களுக்கிடையில்தான் தன் வாழ்வின் முன்னேற்றமே தங்கிக் கிடக்கின்றது என, எண்ணிய “மெடம் ஷமீமா” தன்னை நம்பித் தன்னோடு தன்னைப் பிணைத்துக் கொண்டு, உயிர் வாழ்ந்த ஓர் உயிர் பற்றிய நினைவை மறந்தே வாழ்ந்தார்.
இயற்கையான மனித உணர்வுகளுக்குச் சில சமயம் அவர் அடிமையாகும்போது அது தன்னை, தன் மனத்திடத்தை வெற்றிகொள்ளும் போது தோற்றுப் போனாலும், பின் தன் நெஞ்சழுத்தம் மேலோங்கத் தன் பழைய நிலைக்குத் தன்னை மீட்டுக் கொள்வார். அவ்வாறான வேளைகளில் கணவர் மிர்ஷாத் வெறும் பொம்மையாகத் தன்னை இழப்பது ஒன்றே. அவர்கள் வாழ்வின் தொடர்மைக்குத் துணை செய்தது.
வருடங்கள் ஓடி மறைந்தன. தனித்தனி இருவரும் தேடிக்கொண்ட சொத்துக்கள், ஓர் அலங்காரமான புறவாழ்வுக்குப்
பொய்க்கம்பளம் விரித்தன. தங்களைத் தாங்களே ஏமாற்றிக்
G48) பெற்றமணம்

கொண்டிருப்பது சமூகத்தின் கண்களுக்குத் தோன்றிவிடாதவாறு அவர்கள் தங்கள் அறிவுத் திறத்தால் மறைக்க முயன்றனர்.
தாம் மட்டும் தனித்து வாழ்ந்தால், பிறர் தலையீடும் வாழ்வின் பிரச்சினைகளும் குறைந்தே போகும். பிறரின் நச்சரிப்புகளுக்கும் மற்றவர்களின் வாழ்வுச் சிக்கல்களுக்கும் முகங்கொடுத்து, அதனால் ஏற்படும் பொருள் இழப்பும் தவிர்க்கப்படும் என்ற எண்ணத்தில் மெடம் ஷமீமா திடமாகக் காலுான்றி நின்றதால், வீட்டுச் சோபாக்கள் வெறுமனே கிடந்தன.
கணவர் மிர்ஷாத்திற்கு எப்போதும் மனிதர்கள் வேண்டும். வீட்டின் சுவர்களெல்லாம் மனிதக் குரல்களால் உயிர்பெற வேண்டுமென விரும்புவார். குடும்பம் குடும்பமாக இருவர் பக்கத்திலிருந்தும் உறவினர் வந்து தங்கள் வீட்டில் தங்கித் தங்களின் தனிமையைக் கொல்ல வேண்டுமென ஆசைப்படுவார். யாருமற்ற ஒய்ந்துகிடக்கும் மந்த நிலைமையை அவர் ஒரு போதும் நேசித்ததில்லை. சில வேளைகளில் அது நடைபெறும். அப்போது அவருக்கு ஏற்படும் உளப்பூரிப்புச் சொல்லுந் தரமன்று. ஆனால் அது ஒரிரு நாட்களுக்கு மேல் நீடிப்பதில்லை.
அமைதியான ஒரு சூழலை எவரெவரோ வந்து கலைக்கின்றார்களே, என மெடம் ஷமீமா எண்ணும்போது, அதன் பயங்கர வெளிப்பாடு மிர்ஷாத்தின் மனதையும் புண்படுத்தும். வந்திருப்போருக்கும் புரிந்து போகும்.
எதிர்பாராத வகையில் வாழ்வில் ஏற்படும் இழப்புக்களைக் கற்றவர்கள் பெரும்பாலும் வேறு வழிகளில் தாமாகத் தேடிக்கொள்ளும் மாற்று உத்திகளால் நிறைவு செய்து திருப்தி கொள்வார்கள். ஆனால், சிலரோ அவற்றால் தமது இயலாமை வெளிப்பட்டு விடுமோ என அஞ்சி வக்கிரத்தோடு வாழ முயல்கின்றனர். அதன் பின் விளைவைச்
C 49 ) ஜின்னாஹ்

Page 34
சற்றும் சிந்திப்பதில்லை. அதில் இரண்டாம் வகையைச் சார்ந்தார் மெடம் ஷமீமா,
米米米
வீழ்ந்து கிடந்த கண்ணாடியை எடுத்துக் கொடுக்க சுபைர் அங்கிருக்கவில்லை. அழைப்பைக் காதில் வாங்கிக் கொண்டாலும், அதற்கு எந்தவிதக் கரிசனையும் காட்டாது அவன் விளையாட ஓடிவிட்டான்.
"முஸம்மிலா. மகள் முஸம்மிலா. இஞ்ச கொஞ்சம் வாங்கோம்மா. மாமிட கண்ணாடி கீழ வுளுந்திட்டுது. கொஞ்சம் எடுத்துத் தாங்கோம்மா.
மெடம் ஷமீமாவின் வேண்டுதல் இப்போது வேறுபக்கம் திரும்பியது. ஆளரவம் அருகில் கேட்டாலும், வருவது போவது யாரெனத் தீர்மானிக்க முடியவில்லை. கண்ணாடியைப் போட்டுக் கொண்டாலும் உருவங்கள் சீராகப் புலப்படா. யாரும் கவனிப்பதாகத் தெரியவில்லை. கீழே குத்தி எவ்வளவுதான் நிலத்தைத் தடவியும் கண்ணாடி கையில் கிடைக்கவில்லை.
பேச்சொலி துாரத்தில் கேட்டது. வாய் முணுமுணுப்புத்தான். வெறுப்பையெல்லாம் கொட்டிப் பற்களை நறும்பி வார்த்தைகள் வெளிப்பட்டன. கனவில் கேட்பது போல் கேட்டது.
"இதென்ன நாசம். இந்தப் பொட்டக் கிழட ஏனிந்த மனுஷன் இங்கு கொண்டு வந்திச்சி! அவர் தம்பி ஊட்டுக்கு அனுப்பறது தானே. தேடின சொத்தயெல்லாம் எவனெவனுக்கெல்லாமோ பங்கு போட்டுட்டு இப்ப இங்க வந்து கஷ்டப்படுத்துதே.”
மூத்த தம்பி நியாசின் மனைவி தனக்குத் தானே கறுவிக் கொண்டிருந்தாள். அவளுக்குத் தெரிந்திருக்கவில்லை. அவள் கழுத்தில் இருக்கும் தங்க அட்டிகைக்குச் சொந்தக்காரி ஷமீமா
G50) பெற்றமனம்

என்பது அவளுக்கு தெரிந்திருக்கவில்லை. தன் சகோதரியின் அசையும் சொத்தில் தனக்குஞ் சொல்லாமல் பெரும் பகுதியைச் சுருட்டிக் கொண்டார் அவர் என்பதை, அதற்குப் பிராயச்சித்தமாகவே சகோதரியைத் தன் வீட்டில் வைத்துக் கொள்ள வேண்டியும் அவருக்குக் கட்டாயமாகிற்று.
米米米
வாழ்வின் ஆரம்பமே ஒரு புதிராகத்தான் தொடங்கியது. பெண்ணாகப் பிறந்துவிட்டால் ஓர் ஆணின் துணை வேண்டும் என்ற சமூகக் கட்டுப்பாட்டால் பெற்றோர்கள் சேர்த்து வைத்த ஒரு திருமணப் பந்தம். கல்விப் பொருத்தமும் ஒத்து வந்ததால் மிர்ஷாத் வெறும் பலிக்கடாவானார்.
திருமண வாழ்வின் எத்தனையோ எதிர்பார்ப்புகளுடன் புகுந்த மிர்ஷாத், பொருந்தாத ஒரு துணைக்கு என்னை தாரைவார்த்து விட்டேனே என வருந்தாத நாளே இருந்ததில்லை. ஒத்துவராத போது தன்னைத் தாழ்த்திக் கொண்டேனும் ஒரு நல்ல மாற்றத்திற்காக ஏங்கினார். ஆண்டுகள் தான் ஓடினவே தவிர, வாழ்வில் ஒட்டுதல்தான் சேரவில்லை.
தனக்கென்றோர் வாரிசின்மை மிர்ஷாதின் வாழ்வைச் சூன்யமாக்கியது. கொண்டவள் மீது அவருக்கு நம்பிக்கை பிறக்கவில்லை. மெடம் ஷமீமா இது பற்றிக் கவலையுங் கொள்ளவில்லை. இயற்கைக்கு முரணான அர்த்தமற்ற வரட்டுக் கோட்பாடுகளுக்குள் தம்மை வலிந்து புகுத்தி வாழ நினைக்கும் பெரும்பாலான பெண்களுக்கு, இறைவன் தரும் தண்டனையே வாரிசு இன்மையாகும்.
வாழ்வின் வசந்த காலம் வீணே கழிந்தது. இலையுதிர்காலம் மெல்லத் தலைப்பட்டது. மனித இயந்திரத்தில் அடிக்கடி கோளாறுகள்
( 51 ) ஜின்னாஹ்

Page 35
ஏற்படும் போது, அது தாங்கும் உயிருக்கு அச்சம் ஏற்படுவது இயல்பே. தாங்கத் துணையுள்ள பேர்களே முதுமை கண்டு அஞ்சும்போது, மிர்ஷாத் தன் நிலைமையை எண்ணிப் பார்க்க இயலாதிருந்தார்.
米米米
தன் செவிகளில் சன்னமாக ஒலித்த வார்த்தைகள் மெடம் ஷமீமாவின் நெஞ்சில் உறைத்தன. இப்பொழுதெல்லாம் இவ்வாறான செவி வாங்கல்கள் அடிக்கடி நடந்தாலும் ஒவ்வொருமுறையும் நெஞ்சத்தைச் சுடவே செய்தன.
சேர்த்து வைத்த சொத்துக்கள் பின்னொரு காலத்தில் தன்னைக் காப்பாற்றும் என்ற தன் திடமான நம்பிக்கை, சிறிது சிறிதாய்த் தகர்வதை அவர் உணர்ந்தார். பணத்தால் எதையும் சாதித்து விடலாம் என்றல்லவா நான் எண்ணியிருந்தேன்! பதவியும் புகழும் பொருளும் சேர்ந்தால் ஏற்பட்ட மனநிறைவொன்றே போதுமென்றிருந்தேன்! அவை என்னை அரவணைக்கும் துணைகளாக நான் எண்ணிய போது.
மெடம் ஷமீமாவுக்குக் கடந்த காலம் சிறிது சிறிதாய் நினைவுக்கு வரலாயிற்று . அவரை-அவர் அன்பை- அவர் அரவணைப்பை ஏன் நான் ஏற்றுக்கொள்ளாது போனேன்? இன்று என் பார்வை என்னை விட்டுப்போன போது, அவர்.அவர். என் அருகில் இருந்தால்?
“மணவாழ்வின் இன்பத்தை உணராது, நான் என்னை ஒதுக்கிக் கொண்ட போதெல்லாம் அவர் என்னை அண்டி வந்தார். அவரோடு வாழ்ந்த காலத்தில் அவருக்கு நான் என்ன பணிவிடை செய்தேன்? என் கடமைகள் எதனையும் நான் பூரணமாக அவருக்குச் செய்யாத பலவற்றைத் தான் தாங்கியும் அவர் செய்தபோது, அதனை
நான் அவர் குறைபாடென்றல்லவா எண்ணினேன்! இப்போதல்லவா
G52- பெற்றமனம்

புரிகின்றது. அது அவர் பெருந்தன்மை என்று!
என் பொறுப்புகளில் நான் வெற்றிபெற, என்னைப் புரிந்து கொண்டு வாழ்வின் பொறுப்புக்களைப் பங்கு போட்டுக் கொண்ட மனிதாபிமானியவர்!
நெஞ்சம் கனத்தது. “இவர்கள் ஏன் இப்படி என்னை வெறுக்கின்றார்கள்? எல்லோரும் ஒன்றித்தானே என்னை அவரிடமிருந்து பிரித்துக் கொண்டார்கள்? அவரைவிட இவர்கள் என்னை நேசிப்பதாகவல்லவா நான் எண்ணினேன்’
நான் தேடிய சொத்துக்களைப் பங்கு போடப் போட்டியிட்டு வெற்றி கொண்ட என் இரத்த உறவுகள் இப்போது எங்கே? ஒவ்வொருவராய் ஒதுங்க, ஒதுங்க முடியாமையால் ஒருவன் மடடும் ஏனோ என்னை ஏற்றுக் கொண்டுள்ளான். ஆனால் அவன் மனைவி மக்கள். யாருமே ஏன் என்னை ஏற்றுக்கொள்ள மறுக்கின்றார்கள்?” தெளிவில்லாத மனத்தோடு உண்மையைத் தேடிய ஷமீமாவின் எண்ணங்கள் மீண்டும் பின் நோக்கி நகர்ந்தன. அன்றொரு நாள் நான் அவரோடு பிணங்கிக் கொண்டு தனித்திருந்தேன். திடீரென எனக்கேற்பட்ட சுகயினம், அவரை என் சேவகனாகவல்லவா மாற்றியது. கடந்த கால நினைவுகள் ஒன்றன் பின் ஒன்றாக அவர் மனத்திரையில் நிழலாடிக் கண்களைப் பொழியச் செய்தன.
“தாத்தா! சாப்பிட்டியா?” தம்பி நியாசின் குரல் அவரைத் தன்னுணர்வு கொள்ளச் செய்தது.
“இல்லப்பா’ என்றார் அமைதியாக. “மூணு மணியாகுதே! இன்னஞ் சாப்பாட்ருக்கிருக்கலயா? முர்ஷிதா! இஞ்ச கொஞ்சம் வாங்கோ. தாத்தாக்குச் சாப்பாடு குடுங்கோ!’
C53 ) ஜின்னாஹ்

Page 36
நியாசின் குரல் ஓங்கி ஒலித்தது. அந்தக் கூக்குரல் மனைவிக்குப் பொறுக்கவில்லை. அது தனக்கு ஏற்பட்ட அவமானம் போல் அவள் எண்ணினாள். அவள் வாயிலிருந்து வார்த்தைகள் சூடாக வெளிப்பட்டன.
“இப்பென்ன, மூணு மணிதானே ஆகுது. கொஞ்சம் பொறுத்தா என்ன? தம்பி வந்ததும் ஒதிடோனுமோ! இந்த வூட்டில நானொண்ணும் வேலக்காரியில்ல.”
கணவன் குரலை விஞ்சியது அவள் குரல். தம்பி அடங்கிப் போனான். மெடம் ஷமீமாவுக்கு வெட்கமாயிருந்தது.
“சீ இவனெல்லாம் ஒரு ஆம்பிள்ளை” என்று எண்ணத் தோன்றியது.
சட்டென ஏதோ தன் எண்ணத்திற்குத் தடை போடுவதை
Y Yo &
இவளென்ன புருஷனை மதிக்காம.”
ஷமீமா உணர்ந்தார்.
நான். கடந்த காலத்தில் என் வாழ்வு. நான் என்னதான் செய்து கொண்டேன். என் தம்பிக்கு நடப்பதை ஏன் என்னால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.?
குழம்பிப் போனார் ஷமீமா. ஏதோவொரு பேரிழப்பு தனக்கு வந்துவிட்டதாக மனம் அங்கலாய்த்தது. தானே அதனை வலிந்து தேடிக் கொண்டதாயும் மனம் குற்றம் சாட்டியது.
சட்டெனத் தான் வானொலியில் கேட்ட சில திருமறை வசனங்கள் அவர் மனக்கதவைத் தட்டின.
"ஆணும் பெண்ணும் திருமண பந்தத்தால் ஒருவருக்கொருவர் ஆடையாக்கப்பட்டுள்ளனர்.”
அவ்வாறாயின் நானிப்போது ஒரு நிர்வாணியா?
ஞாயிறு தினக்குரல்
17 ஜனவரி 1999.
G54) பெற்றமனம்

Q(cococòomiSan Clayöome
அன்பர் ஜின்னாஹற் அவர்களுக்கு!
உங்களுக்கு எனது அன்பு உரித்தாகுக. நீங்கள் கடந்த ஞாயிறு (17.01.99) தினக்குரல் பத்திரிகையில் எழுதிய ‘நிர்வாணம்’ என்னும் சிறுகதையைப் படித்ததன் பயனாக எழுந்த மனஉந்துதலால் இந்தக் கடிதத்தை எழுதுகிறேன். இந்தக் கதையை ஒரு தடவை படித்து முடித்த போது, அதன் கலைத்துவம் கவர்ந்திழுக்க அதை மீண்டும் ஒரு தடவை படித்தேன்.
இந்த காலத்திலே பெண்ணியம் பற்றி உரக்கப் பேசிக் கொண்டிருக்கும் நங்கையர்களது சொந்த வாழ்க்கை எப்படியிருக்கும், அவர்கள் தமது தத்துவப் புதருக்குள் தலையைப் புதைத்துக் கொண்டு சொந்த வாழ்க்கையைக் கருக்கிக் கொள்கிறார்களோ! என்று நான் எண்ணுவதுண்டு. அதற்கு ஒரு பதில் போல உங்களுடைய சிறுகதை அமைந்திருக்கின்றது.
பெண்ணியம் சார்ந்த சிந்தனை வலுப்படுவதும் செயற்படுவதும் பெரும்பான்மையாகக் கல்வி அறிவிலே மேம்பட்டவர்களிடந்தான். அத்தகைய தளம் உங்களது கதைக்கு இருக்கின்றது. பெண்ணியச் சிந்தனைகள் இத்தகைய வடிவில் சாதாரண மக்களது வாழ்வில் வெளிப்படுவதில்லை. அவை அங்கே முகிழ்த்தாலும் அதனால் அத்தம்பதியினது வாழ்வு சீரழிந்து போவது மிக அரிது.
நிர்வாணம் கதையிலே, எல்லை மீறிப் போகின்ற இலட்சிய வேட்கை ஓர் அருமந்த வாழ்க்கையைப் பாழாக்கிவிடுவதை வெகு பக்குவமாக எடுத்துக் காட்டியிருக்கிறீர்கள். அந்தத் தம்பதியினது இல்லற சுகத்தில் ஏற்பட்ட வறட்சியையும் அதன் காரணங்களையும் இவ்வளவு நாகரிகமாகச் சொல்லும் திறன் பண்பட்ட ஒரு பேனாவுக்கு மாத்திரமே உரியது.
ஜின்னாஹ் سD 55 )

Page 37
இந்தக் கணவன்மனைவியரிடையே காணப்படும் முரண்பாடு களை மிக நன்றாகவும் நாசூக்காகவும் சித்திரித்திருக்கிறீர்கள். அறிவு நிலையில் உயர் மட்டத்தில் நிற்கும் இருவரிடையே ஏற்படும் முரண்பாடுகள், அவை பேச்சு, ஏச்சு, முறுகல் மோதல் என்று எதுவும் பெரிதாக இல்லாமல் உள்ளக் குகைக்குள் எல்லாம் நடந்து விடுகின்றன. இது கதாபாத்திரங்களின் உருவாக்கத்தில் காணப்படும் சிறப்பு.
"இவளென்ன, புருஷனை மதிக்காம.” இந்த இடத்தில் கதை தனது உச்சத்தை நோக்கிப் பாய்கிறது. அந்தக் கட்டத்திலே ஷமீமாவினது உள்மனதின் உணர்வும் அவரது வாழ்க்கையின் அறுவடையாகிய ஏமாற்றமும் எதிரெதிர் வந்து மோதிக் கொள்கின்றதைக் காண்கின்றேன்.
"ஆணும் பெண்ணும் திருமண பந்தத்தால் ஒருவருக்கொருவர் ஆடையாக்கப்பட்டுள்ளனர்.’ என்னும் பொருத்தமான மணிமகுடம்!
நிர்வாணம் சிறந்த ஒரு கதை. உங்களுக்கு எனது பாராட்டுகள் உரித்தாகுக!
24.01. 1999 தகவம் வ. இராசையா.
56 பெற்றமணம்

கொழு 0laΛόυ
சிரந்துவிட்ட கண்ணீர் பிறர் கண்ணில் பட்டுவிடாதபடி வெட்கத்தால் இமைகள் மூடிக்கொள்ள, கண்ணிர் இமைகளை வென்று வடிந்தது. கையில் இருந்த கைக்குட்டையால் கன்னத்தின் ஈரத்தைத் துடைத்துக் கொள்ள முடிந்ததே தவிர, கண்களின் சுரப்பைக் கட்டுப்படுத்த முடியவில்லை அந்த வயதான மனிதருக்கு.
விமான நிலையக் கட்டிணத்தைச் செலுத்தும் இடம் வரைதான் பயணியின் உருவம் தெரிந்தது. வெளியில் ஒரே கூட்டம். நிறையவே வழியனுப்ப ஆட்கள் வந்திருந்தனர். முண்டியடிக்கப் பலமில்லாததால், கூட வந்தவரின் உதவியோடு கண்ணாடித் தடுப்பருகில் சிறிது நேரம் தான் நிற்கமுடிந்தது. சற்றைக்கெல்லாம் எப்படியோ அவர் பின் தள்ளப்பட்டார். கூட இருந்தவரும் பலமிருந்தும், அவருக்குப் பாதுகாப்பாகத் தன்னையும் பின்னால் நகர்த்திக் கொண்டார்.
கூட வந்தவர் கையை உயர்த்தி அசைப்பதைக் கண்ட கிழவரும், கையை உயர்த்தி அவரைப் போல தானும் அசைத்தார். ஆனால் அவரால் எதையும் கண்டுகொள்ள முடியவில்லை.
G57)- ஜின்னாஹ்

Page 38
சிலமணி நேரங்களுக்கு முன் கட்டுநாயக்கா விமான நிலைய ஏறு துறையில் அந்த வாடகைக் கார் அவர்கள் மூவரையும் இறக்கிவிட்டு மெல்ல நகர்ந்தது. கொண்டு வந்த பொதி மிகவும் சிறியது. கூட்டி வந்தவர் கையில் துாக்கிக் கொண்டார். சில துணிமணிகள், ஒன்றிரண்டு நமது நாட்டு உற்பத்தி உணவுகள், மோர் மிளகாய், கொஞ்சம் புளுக்கொடியல், சிறிது ஊறுகாய், இப்படிச்
சில.
விமானத்தில் ஏறும் பிரயாணிகளுக்கான நுழைவாயில் வரை மூவரும் ஒன்றாவே வந்தனர். வாயிலில் இருந்த பாதுகாப்பு அதிகாரி பிரயாணிகளை மட்டும் உள்ளே செல்ல அனுமதித்தார். கூட்டி வந்தவர் சற்று விபரம் தெரிந்தவர். எல்லையில் தன்னை நிறுத்திக் கொண்டாலும் கிழவருக்கு நடைமுறை தெரியாததனால் தானும் கூடப் போகலாம் என்ற எண்ணத்தில் முன்னே செல்ல, அதிகாரி தடுத்தார். கூட வந்தவர் அவரைப் பின்னால் நகர்த்திக் கொள்ள,
“ஏனப்பா நமக்கு உள்ள போக இயலாதே?” என்றார் கிழவர். தலையைத் துாக்கிக் கண்களில் ஏக்கம் தவிக்க.
"இஞ்சாலே வாருங்கோ, அவ மட்டுந்தான் உள்ளுக்குப் போகலாம்,” என்றபடி அவரைக் கையில் பிடித்து இன்னுங் கொஞ்சம் பின்னால் அழைத்தெடுத்தார்.
கிழவருக்குத் தன்னிலிருந்து ஏதோவொன்று கழன்று போவது போன்ற உணர்வினால் உடல் நடுங்கியது. கூட ஒருவர் கைதாங்கி நின்றாலும், தான் தனித்து விடப்பட்டது போன்ற ஒரு மன நிலையில் அவர் கண்கள் பனித்தன.
படித்த மனிதர் தான். சூழ்நிலை அறிந்து நடந்து கொள்ளும் நாகரிகம் தெரிந்திருந்தாலும், அந்தப் பொழுதில் உணர்வுகள் அவர் பக்குவத்தை வென்று நின்றன. கைவிடப்பட்ட ஒரு சின்னக் குழந்தை போல, அக்கணமே தான் மாறி விட்டதை அவர் உணர்ந்தார்.
C 58 பெற்றமனம்

உள்ளே சுங்கச் சோதனை பலமாக இருந்தது. கனடா செல்லும் விமானத்தில் தமிழ் பேசும் மக்களே அதிகம் இருந்ததால், ஒவ்வொரு பொருளாக வெளியில் எடுத்துச் சோதனை செய்தார்கள். நீண்ட நேரத்தின் பின் சோதனையில் சித்தியடைந்த பள்ளிச் சிறுவர்கள் போல பிரயாணிகள் ஒவ்வொருவராக உள்ளே நுழைந்தனர்.
கூட வந்தவர் இன்னும் கையை அசைத்தவாறிருந்தார். அவர் கண்களுக்குத் தொலைவில் அசையும் கரம் தெரிந்தது. கிழவருக்குத் தெரியாவிட்டாலும் தன்னைப் பிரிந்து செல்லும் பிரயாணிக்குத் தன் கரம் தெரியும் என அவர் தெரிந்திருந்தார்.
来米米
“அன்பான அப்பாவுக்கு, வணக்கம். எல்லோரும் சுகமாக இருக்கின்றோம். அம்மாவும் நீங்களும் சுகம் தானே? கந்தப்பு மாமா மாமி எல்லோரும் எப்படி?.”
என்றுமில்லாதவாறு இம்முறை கடிதம் சற்று நீளமாக இருந்தது. முறைமைக்காக எழுதும் சாதாரண வரிகளோடு முக்கிய சேதியொன்றையும் அது தாங்கி வந்திருந்தது. மூக்குக் கண்ணாடி மூக்கு நுனிவரை இறங்கக் கடிதத்தை ஆய்ந்தன கண்கள், வாய் ஒவ்வொரு வரியாக உச்சரித்தது. மனம் அனைத்தையும் பதிவு செய்து கொண்டது.
பக்கத்தில் இருந்த மனைவி அனைத்தையும் செவியேற்றிக் கொண்டாலும், தானும் வாங்கி ஒரு முறை படித்துப் பார்த்தாள்.
கந்தசுவாமி வாத்தியார் ஊருக்கு முதல் ஆசிரியர். வீடு வாசல் சொந்தமாய் இருந்தது. மாதச் சம்பளம் போதுமான அளவுக்கு குடும்பம் மிகச் சிறிதாய் அமைந்தது. மனைவியோடு மகன் திருச்செல்வம் ஆக மூன்று பேர் மட்டுமே. திருச்செல்வம் ஆரம்பக் கல்வி முதற்கொண்டு நகர்ப்புறப் பள்ளியில்தான் படித்தான்.
C 59 ) ஜின்னாஹ்

Page 39
கொழும்பில் கல்வி தொடர்ந்தது.
பல்கலைக்கழகம் ஒரு காதலியைத் தந்தது. அவளே அவனுக்குத் தன்னை மனைவியாக்கிக் கொண்டாள். இருவரும் சிலகாலம் கொழும்பில் தொழில் செய்தனர். ஒன்றையடுத்து ஒன்றாய் ஆணும் பெண்ணுமாய், இரண்டு குழந்தைகள் பிறந்தன.
காலக் குலைவு பலரை நாடுவிட்டு நாடு செல்லத் துாண்டியது. வசதி வாய்ப்பும் பொருளாதாரப் பலமும் அனேகருக்கு உதவின. படித்தவர்கள் பலரும் தொழில்வாய்ப்புத் தேடிக்கொண்டு, பிறந்த மண்ணுக்கு நிரந்தர பிரியாவிடை தந்துவிட்டு, வெளிநாட்டை வதிவிடமாக்கிக் கொண்டனர்.
கடலைக் கடந்து விட்டால் ஏதேனுமொரு தொழிலைத் தேடிக் கொள்ளலாம் என்ற நம்பிக்கையில் சென்றவர்களே அதிகம்.சிலர் வெற்றியும் பெற்றனர். சிலர் நிராதரவாகித் துன்பங்களை அனுபவித்தனர். அதில் மரணத்தை வலிந்து தேடிக் கொண்டவர்களும் அடங்குவர்.
எல்லோரும் உழைத்து எல்லோரும் உண்ண வேண்டுமென்ற தவிர்க்க முடியாத நிர்ப்பந்தச் சூழலில், ஆணும் பெண்ணும் தொழில் செய்ய வேண்டிய அவசியம் இருந்தது. ஏற்கனவே பிறந்துவிட்ட பிள்ளைகள் பல பெற்றோருக்குச் சுமைகளாக அமைந்தன. புதிதாக இன்னுமொன்றைப் பெற்று வளர்க்கும் துணிவற்றுப் போனதால், கருப்பைகள் வலிந்து செயலிழக்கச் செய்யப்பட்டன. ஒன்றோ இரண்டோ பிறந்த நாட்டில் பிறந்து விட்டதால் வாழும் வரம் பெற்றன. திருவின் கடிதம் கந்தசுவாமி வாத்தியாருக்குப் பெரும் மனப்போராட்டத்தை ஏற்படுத்தியது. மனைவியுடன் பேசினார்.
“அப்பா, நாங்கள், இருவருமே வேலைக்குப் போகின்றோம். காலையில் நானும் மாலையில் மகேஷ"ம் மாறி மாறிச் செல்ல
G60) பெற்றமணம்

வேண்டும். பிள்ளைகள் இருவரையும் நாங்களே கவனித்துக் கொள்கின்றோம். கொழும்பைப் போல இங்கு எவரையும் வேலைக்கு அமர்த்திக் கொள்ள முடியாது. எல்லோரும் எங்களைப் போல் தான் வேலைக்குப் போகின்றனர்.
“நரேஷ் இன்னும் சில மாதங்களில் பள்ளிக்குப் போக இருக்கின்றான். படு சுட்டிப்பயல், மகள் உமாவுக்கு இப்போது வயது மூன்று ஆகின்றது. சென்றவாரம் அவளின் பிறந்த தினத்தை மிகச் சிறப்பாகக் கொண்டாடினோம்.
"அப்பா இருவரும் மிக அழகாக ஆங்கிலம் பேசுகின்றனர். சண்டை பிடிப்பதும் ஆங்கிலத்தில்தானப்பா. நரேஷ் முற்றாகத் தமிழை மறந்தே விட்டான். நாங்களும் அவர்களோடு ஆங்கிலத்தில் தான் பேசுகின்றோம். சின்னவளுக்குத் தமிழே தெரியாது. இங்கு எல்லோரும் அப்படித்தான், குழந்தைகளைப் பழக்கி வருகின்றனர்.” கடிதத்தை மீண்டும் ஒரு முறை படித்துப் பார்த்த கந்தசுவாமி வாத்தியாருக்கு மனத்துள் ஏதேதோ தோன்றியது. கடிதத்தின் ஒவ்வொரு வரிகளிலும் அவர் புதுப்புது அர்த்தங்களைத் தேடினார். நரேஷ் தமிழை மறந்துவிட்டதில் அவனுக்கிருந்த பூரிப்பு அவருக்கு எரிச்சலைத் தந்தது.
தாய்மொழியைத் தன் பிள்ளை மறந்து போனதை அவன் பெருமைப்பட்டு எழுதியிருந்தான். மொழியை இப்போது மறந்துவிட்ட பிள்ளையால் எப்படி எதிர்காலத்தில் தமது கலாசாரம், பண்பாடுகளைக் 85/Tais85 (uplgub.
மேலை நாட்டு நாகரிகத்துக்குச் சிறுகச் சிறுகத் தம்மை இழந்து வரும் மக்களை எண்ணி அவர் மனம் வருந்தியது. தனது பிள்ளையும் அந்தப் படைக்குள் தன்னைப் புகுத்திக் கொண்டு மகிழ்வது அவருக்கு வெறுப்பையே தந்தது.
C 61 ) ஜின்னாஹ்

Page 40
திருச்செல்வம் தன் ஒவ்வோர் எழுத்திலும் தன்னை மாற்றிக் கொண்டு தனது சந்ததியையும் அதன் வழி பயிற்றுவிப்பதையும் தெரியப்படுத்தி இருந்தான்.
"அப்பா, இப்போது மகேஷ"க்கு இராவேலைக்குச் செல்ல முடிவதில்லை. பகல் வேலைக்கு விண்ணப்பித்துள்ளாள். பெரும்பாலும் கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையோடு இருக்கின்றோம். இருவரும் ஒருமித்து வேலைக்குப் போனால், பிள்ளைகள் தனித்துவிடும். நரேஷ் பள்ளிக்குப் போனாலும் நாங்கள் வரும் வரை உமாவைப் பார்த்துக் கொள்ள இங்கு யாரும் இல்லை.”
"அப்பா, பிள்ளைகள் இன்னும் சிறிது வளருமட்டும் அம்மாவை இங்கு அனுப்பி வையுங்கள். எங்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும்.”
கந்தசுவாமி வாத்தியாரின் கைகள் நடுங்கின. பொன்னம்மாவை அவர் பிரிய வேண்டும். திருமணத்தின் பின் நீண்ட இடைவெளியில் என்றும் பிரிந்திராத அவர்கள், தங்கள் பேரப்பிள்ளைகளின் நலன் கருதி இப்போது பிரிந்து வாழும்படி நிர்ப்பந்திக்கப்படுகின்றனர்.
மகனின் வேண்டுகோளில் நியாயம் இருப்பது போன்றும் அவருக்குத் தோன்றியது. நமது நாட்டு நடப்பும் அதுதானே! பாட்டனும் பாட்டியும் பேரப்பிள்ளைகளை வளர்ப்பது இங்கொன்றும் புதிதல்லவே! இருந்தாலும் நாடுவிட்டு நாடு செல்லும் இந்த முறைமையை எப்படிப் பேணுவது?
பொன்னம்மா போனால் இந்த வயதான காலத்தில் என் நிலைமை என்ன? யார் என்னைக் கவனிப்பார்கள்? திருச்செல்வம் அதற்கு மாற்றுவழி சொல்லியிருந்தான்.
"அப்பா அம்மா இங்கு இருக்கும் வரை புஷ்பா மாமி வீட்டில் அப்பா தங்கிக் கொள்ளலாமே! அப்பாவின் ‘பென்ஷன்”
G62- பெற்றமனம்

பணத்தை மாமிக்கே தந்துவிடலாம். மாமா தொழில் இல்லாது இருக்கும் போது அவர்களுக்கும் அது உதவியாக இருக்கும். அவர்கள் உங்களை நன்றாகப் பார்த்துக் கொள்வார்கள்.”
பொன்னம்மா போனால் ஏற்படும் சிக்கலுக்கும் கடித்தில் பதில் இருந்தது.
“பொன்னம்மா! நீ என்ன சொல்லுறே? திரு சொல்லுறபடி செய்யலாமே?” என்றார் வாத்தியார்.
பொன்னம்மா ஒரு பதிலும் சொல்லவில்லை. மகனுக்கு உதவவேண்டும் என்ற மனத்துடிப்பும், கணவனை இந்த வயதில் பிறரிடம் ஒப்படைத்துவிட்டுச் செல்லும் பிரிவின் ஏக்கமும் ஒன்றாகி, அவளை இரண்டுங் கெட்டான் நிலைக்குத் தள்ளியது. அவள் மெளனமானாள்.
அந்த மெளனத்தின் பொருள் முதியவருக்குப் புரிந்தது. அவர் மேற்கொண்டு பொன்னம்மாவிடம் ஒன்றும் கேட்கவில்லை. நாட்களும் ஒவ்வொன்றாகத் தம்மை மாதத்திலிருந்து கழற்றிக் கொண்டன. கிழவரைத் தன்னிலிருந்து கழற்றிக் கொள்ள இயலாது பொன்னம்மா ஏங்கினாள்.
புஷ்பா மாமியும் கந்தப்பு மாமாவும் ஒருநாள் வீட்டுக்கு வந்தனர். திருவின் கடிதத்தை அவர்களிடம் தந்தார். இருவரும் மாறிமாறிப் படித்தனர். எல்லோரும் பேசி ஒரு முடிவுக்கு வந்தனர். சிலகாலம் திருவுக்கு உதவுவது. கனடா சென்று நிலைமை சாதகமாக இருந்தால் மட்டுமே தங்குவது. இல்லையென்றால் மீண்டும் திரும்பிவிடுவது.
திருச்செல்வத்திற்கு இந்த முடிவைத் தெரிவிக்க அதிக நாள் எடுக்கவில்லை. ஒரு மாத லீவில் வந்திருந்த ஒருவரிடம் கடிதத்தை நேரடியாகச் சேர்த்துவிடக் கந்தப்பு வழிசெய்தார்.
G63)- *kckck ஜின்னாஹ்

Page 41
பொன்னம்மா கையசைத்து விடைபெற்றுக் கொண்டு உள்ளே நுழைந்ததும் கந்தப்பு மனத்திருப்தியோடு திரும்பினார். கனடா செல்லும் ஒரு தமிழரிடம் பொன்னம்மாவுக்குச் சற்று உதவும்படி அவர் கேட்டுக் கொண்டிருந்தார். கனடா விமான நிலையத்தில் திருச்செல்வம் அம்மாவுக்காய்க் காத்திருப்பான்.
“என்ன தம்பி, பொன்னம்மா போட்டாளே?” வாத்தியார் வேதனையோடு வினவினார்.
“ஓம் போட்டா, வாருங்கோ, நாம போவம்!” என்ற கந்தப்பு பெரியவரின் கையைப் பற்றி அழைத்தார்.
“கொஞ்சம் பொறு கந்தப்பு! "பிளேன்' இன்னும் புறப்படல்லதானே பாத்திட்டு போவம்!”
அது புறப்பட இன்னும் ஒண்டரை மணித்தியாலம் ஆகும். அதுக்குள்ள நாம கொழும்புக்குப் போயிடலாம் வாருங்கோ.”
“இல்ல கொஞ்சம் பொறு கந்தப்பு அவ போனத்துக்கு பின்னால் நாம போகலாம்.”
கிழவர் வருவதாக இல்லை. பிரிவைத் தாங்கொணாத அவருக்கு விமான நிலையத்தை விட்டுப் போக மனமில்லாதிருந்தது. "இஞ்சாருங்கோ, அது உங்களுக்குத் தெரியவே போகுது. சும்மா மினைக்கெடாம வாருங்கோ போவம்!”
“பிளேன் போற சத்தம் கேக்கும். கந்தப்பு, கொஞ்சம் பொறு தம்பி!”
"அத்தான் வாருங்கோ! மிச்ச நேரம் நிண்டா இந்த நாசமறுத்ததுகள் துரத்தும்' மெல்லக் காதினிலே ஊதிய கந்தப்புவின் வார்த்தைகளில் இருந்த 'துரத்தும்’ என்ற சொல், அவருக்கு யாழ்ப்பாணத்தை நினைவுக்குக் கொண்டு வந்தது. அத்தோடு கந்தப்புவின் பிடியும் சற்று இறுகியது வாத்தியார் பின்னோக்கி மெல்லக்
C64) பெற்றமனம்

காலடி எடுத்து வைத்தார்.
ஒரு சில அடிகள் மட்டும்தான் அவரால் நகர முடிந்தது. ஏற்கனவே இரத்த அழுத்தத்தால் பாதிப்புற்றிருந்த வாத்தியார் சற்றுக் கால் தடுமாறி மெல்ல வலப்பக்கம் சரிந்தார். கந்தப்பு அவரைத் தாங்கிக்கொண்டு மடியில் கிடத்தினார். இடப்பக்கம் வாய் கோணிக் கொண்டது. நிரந்தரப் பக்க வாதம் பற்றிக்கொண்டு அவர் கண்களிலிருந்து கண்ணிர் வழிந்தோட வாய் குளறியது. அது
பொன்னம்.மா என்ற விளங்காத வார்த்தைகளா!
வீரகேசரி
Ol. 1.1998
ஒரு வாசகரின் கருத்து
வீரகேசரி வாரவெளியீடு அள்ளிவரும் அனைத் து அம்சங்களுமே பிரமாதம். கடந்த வார வெளியீட்டில் இடம் பெற்ற “கொழுகொம்பு”சிறுகதை படிப்பினையூட்டுவதாக அமைந்திருந்தது.
ஏ.சி.எம். முஸம்மில்,
வட்டதெனிய.
C 65 ) ஜின்னாஹ்

Page 42
nܗ̇ܥܢܘܢܘ2àܟܶܬܰ
சிறிது தூரமே ஆயினும் ஓடிவந்ததால் களைப்பு மேலிட, அந்த வயதானவள் பேசத் தடுமாறினாள். மூச்சிளைக்க அவள் சொல்வதை என் காதுகள் உள்வாங்கிக் கொண்டன.
உடை மாற்றிக் கொள்ளக் கூட கால விரயம் செய்யாத நான், அவள் கூறிய வீட்டை மனதிற்கொண்டு, கைப்பெட்டியுடன் ஓடினேன்.
அது ஒரு சின்னஞ் சிறிய ஒலைக்குடிசை. இருண்ட ஒற்றை அறைக்குள் கூரையின் ஊடாக சூரியன் ஒளி தந்து கொண்டிருந்தான். ஒர் மூலையில் குப்பி விளக்கொன்று இருட்டை அகற்றிக் கொண்டிருந்தது.
உள்ளே ஒருத்தி வேதனையால் துடிக்கும் முனகலொலி இடை இடையே பலமாக அலறினாள்.
C66 D பெற்றமனம்

என்னைக் கூட்டி வந்தவள் வாசலிலே தரித்து விட்டாள். மூவருக்கு நடமாட அங்கு இடமில்லை என்பதை அவள் அறிவாள். அவள் பக்கத்து வீட்டுக்காரி.
குப்பி விளக்கின் மங்கிய ஒளியில் உள்ளே கிடந்தவளை அடையாளங் கண்டு கொண்டேன்.
அவளை எனக்குத் தெரியும். எப்போதோ அவளை நான் பார்த்திருக்கிறேன். பேசியும் இருக்கிறேன். என்னிடம் அவள் முதற் குழந்தைக்குப் பரிகாரம் தேடி வந்திருக்கிறாள்.
நான் கேட்கும் கேள்விகளுக்குக் கூட ஒழுங்காகப் பதில் சொல்லத் தெரியாதவள்.
மூளை வளர்ச்சி குன்றிய மந்தமான பிறவி. யாரோ செய்த பாவத்திற்காக இயற்கையின் பழிவாங்கலுக்கு ஆளானவள். ஆனால் எத்தனையோ சர்வ லட்சணங்களும் பொருந்திய, புத்தி ஜீவிகளான பெண்களை விட, அவள் இறைவனால் இரட்சிக்கப்பட்டு இருந்தாள். அவள் திருமணமானவள். எவனோ ஒருவன், ஏதோ ஒரு காரணத்திற்காக அவளைக் கரம் பற்றி தன் வாழ்வோடு இணைத்துக் கொண்டுள்ளான்.
வேதனை தாங்காது என்னைக் கண்டதும் அவள் தேம்பித் தேம்பி அழுகின்றாள். வாய் ஏதேதோ உளறுகின்றது.
ஆண்டவனுக்கு அவள் மீது அக்கறை அதிகம். அங்கு அந்தச் சந்தரப்பத்தில் அவளுக்கு உதவி, தன் அருளை நிரூபிக்க என்னை அனுப்பி இருக்கின்றான், அவன் சேவகனாக.
ஆனால் எனக்கோ. அன்று அங்கு நின்ற வயதான பெண்ணும் உதவிக்கு வரவில்லை. அவள் ஓடிவந்த களைப்பில் வாசலின் ஒரு புறத்தே ஒதுங்கிக் கிடந்தாள்.
கண்களை இறுக மூடி இறைவனை ஒரு வினாடி நினைத்துக்
C 67 ) ஜின்னாஹ்

Page 43
கொள்கின்றேன். என் கடமை தொடர்கின்றது.
பத்து நிமிடங்கள் கூடக் கழித்திருக்காது, அவள் வேதனையின் சிகரத்துக்கே சென்றவள் போல் வாய் விட்டுக் கத்தினாள். அத்தோடு அவள் நின்றுவிடவில்லை. ജൂഖണ് செய்கைகள் எனக்கு உதவியாக இருந்தன. ஏற்கனவே அவளுக்கு இரண்டு வயதில் ஒரு மகன் இருக்கின்றான்.
முந்திய அனுபவம் அந்த மந்த புத்திக்குச் சமயத்தில் உதவியது என்பதை, என்னால் ஒப்புக்கொள்ள முடியவில்லை. என் உபதேசங்களும் அவளளவில் வெறும் சப்தங்களே.
சில வினாடிகளே, புத்தம் புதிய ஒரு ஜீவனின் வருகையை அறிவித்து அந்தச் சின்னஞ் சிறிய குடிசையின் ஒவ்வொரு ஒலைக்கிற்றின் இடையேயும் அழுகுரல் புகுந்து காற்றோடு கலந்தது. இப்போது அவள் அமைதியாகக் கிடந்தாள். குழந்தை தாய்விட்ட இடத்திலிருந்து அழுகையைத் தொடர்ந்தது.
இத்தனைக்கும் அந்த வயதானவள் அப்பக்கமே வரவில்லை. சோர்ந்து கிடந்த அவளுக்குக் குழந்தையின் அழுகுரல் “சத்து ஊசி” போட்டாற் போல் இருந்திருக்க வேண்டும். ஓடி வந்து ஒலை இடுக்கினுள் தலையை நுழைந்தாள்.
“என்ன புள்ள தொர?’ என்ற வினாவோடு. ஏனோ அதைத் தெரிந்து கொள்ள அவள் ஆசைப்பட்டாள்.
"ஆம்புளப் புள்ளதான்,” என்றேன் நான். அவள் விளங்கிக் கொள்ள அவள் மொழியிலேயே. பிரசவித்தவள் அதைப்பற்றி ஒன்றும் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. ஆணென்றாலென்ன பெண்ணென்றாலென்ன, தன் பாரம் நீங்கிவிட்ட நிம்மதியில் பேச்சற்றுக் கிடந்தாள்.
C68D- பெற்றமணம்

தாயை விட்டுக் குழந்தையைப் பிரித்தெடுத்த நான், குழந்தையைக் கழுவும்படி கூறி அந்த முதியவளிடம் நீட்டினேன். அதற்கு அவள் தயாரில்லை என்பதை அவள் நெளிந்த விதம் எனக்குச் சொல்லியது.
ஒரு வைத்தியனாக என் கடமைகளை நிறைவு செய்த நான், ஒரு தாதியாகவும் செயல்பட்டேன். காரியங்கள் அனைத்தும் முடிந்ததும் கழுவிக் கொடுத்த பிள்ளையைக் கையில் ஏந்தியபடி வாசலில் உட்கார்ந்திருந்த பக்கத்து வீட்டுக்காரியிடம் சொல்லிக் கொண்டு, வீட்டோடு கூடிய எனது வைத்தியசாலையை நோக்கி நடந்தேன்.
வரும் வழியில் ஒய்வு பெற்ற ஒரு தலைமை ஆசிரியர். ஷரீப் மாஸ்ட்டர் என்று பெயர். அவர் வீடு தாண்டியே நான் என் வீட்டுக்குச் செல்ல வேண்டும்.
அவர் வாசலில் காத்து நின்றார். அது எனக்காக என்பதை அவர் வார்த்தைகளே நிரூபணம் செய்தன.
“சேர்!’ என்றார் மிக அன்பாக, என்னிலும் மூத்தவர். கண்ணியப்படுத்த அவர் எப்போதும் என்னை அப்படியே அழைப்பார். தந்தைக்கு நிகரான அவரை நானும் பதிலுக்கு “சேர்’ என்றே
விளிப்பேன்.
அவர் கண்கள் ஏனோ பனித்திருந்தன. சற்று கம்மிய குரலில் அவர் பேசினார். “உங்களுக்கு ஆண்டவன் நீண்ட ஆயுளைத் தரவேண்டும். தேக சுகத்தையும் தரவேண்டும்” என்றார். சற்று நிறுத்தி மேலும் அவர் தொடர்ந்தார்.
“நீங்கள் இப்போது செய்துவிட்டு வரும் சேவை மகத்தானது. இதற்கு இறைவனின் நற்கூலி நிறைய உண்டு’, என்றார்.
C 69 ) ஜின்னாஹ்

Page 44
நடந்தவற்றை அந்தப் படித்த மனிதனால் ஊகித்து அறிந்து கொள்ள முடிந்திருக்க வேண்டும்.
உதவியற்ற ஓர் ஏழைப் பெண்ணின் பிரசவத்திற்கு எந்தவித ஊதிபமும் பெறாமல் உதவிவிட்டு வருகிறேன். இது எனக்கு ஓர் ஆத்ம திருப்தியை அளித்தாலும் அந்தப் படித்த முதியவரின் ஆசீர்வாதங்கள் என்னை மெய்சிலிர்க்க வைத்தன. நன்றி சொல்லிவிட்டு நடந்தேன்.
வீட்டு வாசலில் என் மனைவி எனக்காகக் காத்திருந்தாள்.
“எங்கே, வாயைத் திறவுங்கள்!” என்றாள் புன்னகையோடு. நானும் சொன்னபடி வாயைத் திறந்தேன், ஏன் என்ற கேள்விக் குறியை முகத்தில் காட்டியவனாக.
என் வாயில் ஒரு இனிப்பு மிட்டாயைத் திணித்தவளாக என் மனைவி சொன்னாள்.
“உங்களுக்கு ஒரு மரும்கன் பிறந்திருக்கின்றானாம்! இப்போது ஒரு அரைமணிக்கு முன்னர் தானாம். உங்கள் தாயார் தொலைபேசியில் சொன்னார்கள்! தாயும் சேயும் மிக்க நலமாக இருக்கின்றார்களாம்! என்றாள்.
சிந்தாமணி
25.11, 1990
C70)- பெற்றமணம்

AلمنعA8
noas(sayn
அன்று காலை மணி எட்டு. வழமைக்கு மாறாக டாக்டர் நசீர் முன்னதாகவே வைத்தியசாலையுள் நுழைந்த போது, சிப்பந்திகள் அதிர்ச்சியடைந்தனர்.
தங்கள் கடமைகளைத் தாங்கள் ஒழுங்காகச் செய்கின்றோமா என்பதனைக் கண்காணிக்கவே, அவர் அவ்வாறு வந்திருப்பதாக எண்ணினர். அவர்களை அறியாமலேயே அவர்கள் இயந்திரங்களாக இயங்க ஆரம்பித்தனர்.
அவர் அங்கு நடக்கும் எந்த நிகழ்வுகளையும் பொருட் படுத்தாது, அறையினுள் நுழைந்து தன் நாற்காலியில் அமர்ந்து கொண்டார். தூக்கமின்மையால் அவர் கண்கள் வீங்கிச் சிவந்திருந்தன. சிந்தனைக் கோடுகள் நெற்றியில் துல்லியமாகத் தோன்றின.
மின் விசிறி தலைக்கு மேல் சுழலத் தொடங்கிற்று. சிப்பந்தி ஒருவன் அதனைச் சுழலவிட்டுச் சென்றான்.
米米米
C71). ஜின்னாஹ்

Page 45
சுழல் நாற்காலியைச் சுற்றித் தன் வலப்பக்கமாகத் திரும்பிய டாக்டரின் கண்கள், அங்கு சுவரில் தொங்கிய விளம்பரத்தில் குத்திட்டு நின்றது.
“நாமிருவர்.
நமக்கிருவர்’
அந்த இரண்டு வார்த்தைகளும் அவர் கண்களை உறுத்தின. இத்தனை நாட்களும் தினந் தினம் கண்டு கொண்டிருந்த அந்த வார்த்தைகள், இன்று மட்டும் ஏதோ ஒரு புது உணர்வை, ஒருவித வெறுப்பினை அவர் மனதில் உண்டாக்கின.
வேண்டுமென்றே அவர் அதனை அங்கு தொங்க விட்டிருந்தார். வருவோர், போவோரெல்லாம் அதனைக் காண வேண்டுமென அவர் விரும்பினார்.
தன் உழைப்புக்கு அது எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பது அவருக்குத் தெரியும்.
உடல் குளிர்வது போன்றிருந்தது. ஏதோ இனந்தெரியாத ஒரு புதிய உணர்வு தன்னை ஆட்கொண்டிப்பதை அவர் அறிந்தார். அது என்ன..? அது என்ன..?
எதுவும் புரியாத நிலையில் ஒரு நீண்ட பெருமூச்சோடு தன் நாற்காலியைப் பின்புறமாகச் சாய்த்து மேல் நோக்கிப் பார்வையைச் செலுத்தினார்.
சுழலும் மின் விசிறி அவர் கண்களில் பட்டது. அதன் சுழற்சி அவர் சிந்தனைக் குத் தாளமிட, கண் கள் மூடிக்கொண்டன. அவர் அசையாது சிலையாக வீற்றிருந்தார். எண்ணங்கள் எங்கோ பறந்தோடின.
米米米
G72) பெற்றமணம்

“அல்ஹம்துலில்லாஹற் வமா தவ்பீக்கின் இல்லாபில்லாஹற் அலைஹி தவக்கல்து வயிலையி உணிப்.”
பிரம்மாண்டமான அந்தப் பள்ளிவாசலின் ஒவ்வொரு மூலையிலும் ஒலி பெருக்கிகள் ஒரே குரலில் பேசின. நிறைந்திருந்த மக்கள் கூட்டத்தின் செவிப்புலன்களுக்கு அன்று முழுமையாக வேலை. சிந்தனையைத் துண்டிவிடும் காலத்திற்கேற்ற கருத்துள்ள “குத்பா’ உபன்னியாசம்.
“. எல்லாம் வல்ல இறைவனின் நல்லடியார்களே!” “இன்று உலகெங்கிலும் பல்வேறு காரணங்களால் உயிரினங்கள் அழிந்து கொண்டிருக்கின்றன. புயலால் , வெள்ளத்தினால், யுத்தங்களால் இன்னும் பல்வேறு காரணங்களால் தொகை தொகையாக மக்கள் உயிரிழந்து கொண்டிருக்கின்றனர்.
“அதனிடையே இயற்கைக் காரணங்களையும் மிஞ்சி, மனிதன் தன்னிச்சையாகத் தங்கள் சந்ததியினரையும் தோன்றவிடாது தாமாகவே அழித்துக் கொண்டிருக்கின்றான்.”
“மனித உற்பத்திப் பெருக்கத்தால் எதிர் காலத்தில் உணவுப் பற்றாக் குறையும் பஞ்சமுந் தோன்றி, உலகிற்குப் பெருங்கேடு விளைந்து விடுமோவென ஐயமுறுகின்றனர்.”
“இத்தகைய சந்தேகங் கொள்வோர் வல்ல இறைவனின் மறை வசனங்களை எண்ணிப் பார்க்க வேண்டாமா?”
“மனிதர்களே நீங்கள் தரித்திரத்திற்குப் பயந்து உங்களது குழந்தைகளைக் கொலை செய்து விடாதீர்கள். நாம் அவர்களுக்கு உணவளிப்போம். உங்களுக்கும் அளிப்போம். அவர்களைக் கொலை செய்வது நிச்சயமாக அடாத பெரும் பாவமாகும்.”
(திருமறை 17:31)
C 73 ) ஜின்னாஹ்

Page 46
“பிறந்த பின் சிசுவைக் கொலை செய்வதும், கருவிலேயே அழித்துவிடுவதும் ஒன்றே. கொல்பவனோடு கொலைக்கு உதவுபவனும் குற்றமிழைத்தவனாகின்றான்.
“இரு சாராரும் இறைவனின் கொடிய தண்டனைக்கு ஆளாகாது விடப்போவதில்லை.”
நீண்ட அந்தப் பிரசங்கம் அன்று எவரையும் கண் மூடவிடவில்லை.
பள்ளியில் ஓர் ஒதுக்குப் புறத்தில் டாக்டர் நசீர் அமர்ந்திருந்தார். பிரசங்கத்தின் ஒவ்வொரு சொல்லும் தன்னை விளித்தே கூறப்படுவதாக, தன் தவறுகளைப் பறைசாற்றுவதாக அவரின் குற்றமுள்ள நெஞ்சு கூறிக் காட்டிற்று.
அவருக்கு இருப்புக் கொள்ளவில்லை. யாரோ தன் தலையில் ஒரு பெருஞ் சுமையை வைத்து அழுத்துவது போல் உணரலானார். தொழுகை முடிந்து ப்ள்ளியை விட்டு மக்கள் வெள்ளம் கலைய ஆரம்பித்தது. தன்னைக் கண்டு முகமன் சொல்பவர்க ளெல்லாம் தன்னை ஏளனம் செய்கிறார்களா என்று கூட, அவர் உள்மனம் சந்தேகங் கொண்டது.
பேதலித்த உணர்வோடு வீட்டை அடைந்த டாக்டர்க்கு உணவு கொள்ள மனம் வரவில்லை. அவர் போக்கில் பெரும் மாற்றந் தோன்றிற்று.
அரை நாள் ஒய்வும் அவருக்கு கசப்பாகத் தோன்றிற்று. இராப்போசனம், இரவுத் துயில் எல்லாமே அவருக்கு வெறுப்பை யூட்டின. உண்ணாது இரவு முழுவதும் படுக்கையில் விழித்துக் கிடந்தார்.
காலையில் வீட்டை விட்டு வெளியேறி நேரே வைத்திய
சாலைக்கு வந்து சேர்ந்தார்.
§ සද්ද සද්ද
G74) பெற்றமணம்

சுவர்க் கடிகாரம் தான் இயங்கிக் கொண்டிருப்பதை நினைவூட்டிற்று. ஒன்பது முறை ஓசை எழுப்பி விட்டு அது ஓய்ந்தது.
சிந்தனை சற்று குழம்பிய போது, அவர் கண்களில் மீண்டும் அந்த விளம்பரம் பூதாகரமாகத் தோன்றியது.
பெற்றோரும் இரு குழந்தைகளும் மகிழ்ச்சி பொங்க கைகோர்த்து நிற்கின்றனர். மூவண்ணத்திலான அந்த அழகிய வண்ணச் சித்திரத்தினடியில்,
"நாமிருவர்
நமக்கிருவர்”
அவர் கண்கள் மீண்டும் மூடிக் கொள்கின்றன. மனம் எங்கோ பின்னோக்கி ஒடிற்று.
3ද 2ද 3ද
மகப்பேறு வைத்தியத்தில் நிபுணத்துவம். பத்து வருட முழுமையான பயிற்சியின் முதுமையால் ஏற்பட்ட அனுபங்களின் பெறுபேறுகள். ஒன்றா இரண்டா, தினந்தினந்தான் எத்தனை எண்ணற்ற புதிய வரவுகளுக்குக் கதவடைப்பு?
உற்பத்திக்கு முன் மண்ணோடு விதை சேராமலும், சேர்ந்த விதைகளைச் சிதைத்து வளர விடாமலும் செய்த கொடுமைகள். களவு வழி விளைவுகளின் அழிவுகளுக்குக் கைகொடுப்பு. அந்த நம்பிக்கையின் பொருட்டால் தொடர்ந்தும் பலர் தப்பிழைக்கத் தரும் ஊக்குவிப்புக்கள்.
தினந்தினம் வைத்தியசாலையில் புதுப்புது உரையாடல்கள். வருவோருக்குத் தக்கவாறு வெவ்வேறு உபதேசங்கள். நம்பிக்கை யூட்டல்கள்.
“இனிமேல் பயப்பட வேண்டியதில்லை. இரண்டு மாதங்கள்
தானே ஆகியிருந்தது. ஒரு வாரம் வீட்டில் ஒய்வெடுத்துக்
(75) பெற்றமனம்

Page 47
கொள்ளுங்கள். நல்ல உணவுகளும், நான் எழுதிக் கொடுத்த மாத்திரைகளை ஒழுங்காக உட்கொள்வதாலும் உடல் பழையபடி தேறி விடும்.’ டாக்டர் கூறி முடிக்கின்றார்.
பத்துப் பதினைந்து நிமிடங்கள் பல நூறு ரூபாய்கள். அவர் கோட்டுப் பைகள் கனத்தன.
“நன்றி டாக்டர்' இருவர் திருப்தியோடு ஒரே குரலில் கூறிவிட்டு மன நிம்மதி பெற்றவர்களாக வெளியேறுகின்றனர்.
தினமும் கேட்டுக் கேட்டுப் புளித்துப் போன வார்த்தைகள் அவைகள். அவர் காதுகளில் விழுந்ததாகத் தெரியவில்லை. நன்றியை விட, அவர் நோக்கமெல்லாம் அவர்கள் தரும் பணத்திலேயே இருந்தது.
ஒவ்வொரு உறுப்பையும் சீராக சிருஷ்டித்து, அவற்றை ஒழுங்காக இயங்கச் செய்ய வேண்டிய சுரப்பிகளையும் உடலிலேயே சுரக்கச் செய்து, உடலைப் பாதுகாக்கும் வழி முறைகளையும் கூறி, போஷித்துக் காக்கும் இறைவனின் நிபுணத்துவத்தோடு அவன் படைப்பான மனிதனின் நிபுணத்துவம் போட்டியிட முயல்கின்றது.! வெற்றி பெற வேண்டுமென்று செய்யும் உடலின் இயற்கைத் தொழிற்பாடுகளுக்கு மாறான ஒவ்வொரு முயல்வுகளும், நஷ்டத்தின் வழியிலேயே கொண்டு செல்லும் என்பதை அவர் நன்கு அறிந்தவர் தானே!.
ஆயினும் குறுக்கு முயற்சிகளில் பொருள் தேடும் ஆசை அவர் புத்தியைக் கூட மங்கச் செய்து விட்டது.
தான் செய்யும் புனிதமான தொழில் மூலம் மக்களுக்கு நல்ல சேவையும், ஹலாலான முறையில் பொருள் தேடவும் முடிந்த அவர், தன் திறமையைப் பாவ வழியில் செயற்படுத்திப் பணந்தேட முயன்றார்.
C 76 ) ஜின்னாஹ்

பலன். மிகச் சிறப்பாகவே அமைந்தது. பல நூறு மனித உடல்களிலிருந்து வெளியேற்றப்பட்ட செந்நீர், இப்போது பெரும் மாளிகை போன்று வீடாக, பல வசதிகளுடன் கூடிய வாகனமாகக் குறுகிய கால இடைவெளிக்குள் பரிணமித்தது.
நகரத்திலும் அதனைச் சுற்றியுள்ள பிரதேசங்களிலும் பல டாக்டர்கள் அவருக்கு ஊதிபம் பெறாத தரகர்களாகப் பணி புரிந்தனர். சிலருக்குத் தரகும் கிடைத்தது.
தங்களின் முயற்சிகளில் தோல்வியுறும் அவர்களுக்கு “ஆபத்பாந்தவனா’கக் கைகொடுத்து உதவுபவர் அவரே.
ஒரு சிறு குறிப்புத் துண்டோடு வாழ்த்துக் கூறி அனுப்பி வைப்பார்கள். அவர்கள் நம்பிக்கை என்றும் பாழ்போனதில்லை.
米米来
திடீரென உள்ளே நுழைந்த தாதியின் வரவால் அவர் சிந்தனை தடைப்பட்டது. மூடி இருந்த கண்கள் மெல்லத் திறந்தன. “நேற்றைய “அப்பொயின்ட்மென்ட்’கள் சில வந்திருக்கின்றன டாக்டர்’ தாதி கூறி நின்றாள். சற்று அமைதியாக இருந்த டாக்டர் ஏதோவொரு முடிவுக்கு வந்தவராகப் பேசினார். அவர் சொற்கள் ஆணை பிறப்பிப்பது போலிருந்தன.
“எல்லாவற்றையும் "கென்சல்” செய்து விடு! வாங்கிய முற் பணத்தைத் திருப்பிக் கொடுத்து, என்னால் ஏற்பட்ட அசெளகரியத்துக்காக நான் மன்னிப்புக் கேட்டுக் கொண்டதாகவுங் கூறு” என்றார்.
தாதிக்கு அவர் சொன்ன சொற்கள் ஆச்சரியத்தை ஊட்டிற்று. எனினும் அவள் பணியைச் செய்ய அங்கிருந்து வெளியேறினாள்.
தன் அறையிலிருந்து வெளியேறிய டாக்டர், நேரே தன் வாகனத்தை நோக்கி நடக்கலானார். ஏதோ ஒரு சக்தி அவரைத்
C77) பெற்றமணம்

Page 48
தன் வயப்படுத்தி ஆட்சி செய்தது. அவர் இயங்கலானார்.
පදිං 3ද 38
பள்ளியின் முற்றத்தில் நின்றுவிட்ட அந்த வாகனத்திலிருந்து இறங்கிய டாக்டர் நசீருக்குத் தன் உடல் தனக்குப் பெரும் பாரமாக, அணிந்திருந்த உடைகள் பெருஞ் சுமையாக இருப்பதாகத் தோன்றிற்று. ஹராமான தேட்டத்தால் வளர்ந்து விட்ட உடலும், தேடிய செல்வத்தால் வாங்கப்பட்ட உடையுமது என்று அவர் உள்மனங் கூற, குற்ற உணர்வுகளால் உள்ளம் பதறியது. “வுழுச்” செய்த பின்னரும் அவர் உடல் வியர்த்துக் கொட்டியது. பள்ளி மிஹற்ராபின் முன் நின்று அவர் தொழுகையை ஆரம்பித்தார்.
தொழுகையை முடித்துக் கொண்ட அவர் கரங்கள் நெஞ்சளவில் உயர, வான் நோக்கி விழிகளும் உயர்ந்தன. விழிகள் மடையுடைந்த குளங்களாயின. உடல் நடுங்கிற்று.
“எல்லாம் வல்ல இறைவனே! பிரார்த்தனையைச் செவிமடுத்து மன்னிப்பருளும் நாயனே! ஈகையும் பிரார்த்தனையும் விதியையும் மாற்று மென்றாயே!”
“மனந்திருந்தி நான் கேட்கும் பிரார்தனையை ஏற்றுக் கொள்வாயாக! என்னை மன்னித்தருள்வாயாக!”
“இதுநாள் வரை நான் அறிந்திருந்துஞ் செய்த பெரும் பாவங்களுக்காக என்னையும் என் சந்ததியினரையும் தண்டித்து விடாதே.”
“இனிமேல் அக்கொடிய பாவங்களை மனதால் கூட நான் எண்ண மாட்டேனென்று உன்னிடம் உறுதி பகர்கிறேன். கருணைக் கடலான நீ என்னை மன்னித்தருள்.”
குலுங்கக் குலுங்க அவர் அழுது பிரார்த்தித்தார். நீண்ட நேரம் அவர் பிரார்த்தனை தொடர்ந்தது. ஆடைகள் வியர்வையால்
C 78 ) ஜின்னாஹ்

நனைந்து போயின.
“அல்லாஹ" அக்பர். அல்லாஹ" அக்பர்.” இனிமையான அந்த “பாங்கொலி’ பகல் தொழுகைக்காக மக்களைப் பள்ளியின் பால் அழைத்தது. டாக்டர் நசீர் தன்னுணர்வு பெற்றார்.
இருந்த இடத்திலிருந்தே “லுஹர்’ தொழுகையை “ஜமாஅத்' தோடு தொழுது முடித்துக் கொண்ட டாக்டர் நசீரின் உள்ளம், தெளிந்த நீர்நிலை போல் அமைதியுற்றிருந்தது.
தன்னில் ஏதோ ஒரு பெரும் மாற்றம் ஏற்பட்டிருப்பதை அவர்
உணர்ந்தார்.
பள்ளியை விட்டு வெளியேறிய அவருக்கு இதமான ஓர் உணர்வு தோன்றிற்று. இப்போது அவருக்கு அவர் உடல் முன் போல் பாரமாகவோ, உடைகள் சுமையாகவோ தோன்றவில்லை. கனமற்றுப் போன உடல், தெளிவான உள்ளம்.
அவர் உள்மனம் ஒன்று சொல்லியது. “ஈகையும் பிரார்த்தனையும் ஒருவரின் விதியையும் மாற்றிவிடும்.”
அவ்வாறாயின் எல்லாம் வல்ல இறைவன் என் பிரார்த்தனைகளை ஏற்று மன்னித்து விட்டானா?
ஆம், தவறுணர்ந்து மீண்டும் அதனைத் தொடராது மன்னிப்பு வேண்டி, அவனிடம் தொழுது பிரார்த்திப்பவர்களை அவன் என்றும்
மன்னித்தருள்வான்.
ஏனெனில். அவன் மிக மன்னிப்போனும் கிருபை உடையவனாகவும் இருக்கின்றான்.
சிந்தாமணி
05.08.0989
G79) பெற்றமனம்

Page 49
வாசகர் கருத்து
(l). ஜின்னாஹற் தந்த 'நாமிருவர் நமக்கு இருவர்” என்ற சிறுகதை அருமையிலும் அருமை! பல புதிய கருத்துக்களைக் கொண்ட வித்தியாசமான கதையாக இது அமைந்திருந்தது! கதாசிரியருக்குப் பாராட்டுக்கள்!
ரபீக் எம். மஷரூப், திப்பிட்டிய.
(2). "நாமிருவர் நமக்கு இருவர்” என்ற கதை மிகவும் சுவையாக இருந்தது! இப்படியான கதைகளினாலேதான் எமது சமுதாயத்திற்குப் பல நன்மைகள் கிடைக்க வழி உண்டு!
ரிஸ்வி வரியாம், அக்குறணை.
பரஸ்பரம்
சிந்தாமணி (12.08.0989)
( 80 ) ஜின்னாஹ்

2 രീതി/ Gly
(UPப்பது நாற்பது பேருக்குச் சாப்பாடாக்க வேண்டும். இன்ன இன்ன உணவுகள் தான் தயாரிக்க வேண்டும் என்று சொல்லும் போதே தாஜு நானாவிற்கு விளங்கிப் போயிற்று. இன்று பின்னேரப் பாட்டி ஹாஜியார் வீட்டில்தான் என்று.
வெற்றுக் கூடைகளைக் கையில் எடுத்துக் கொண்ட அவர், பையில் இருந்த காசையும் தட்டிப் பார்த்துக் கொண்டார்.
கூலிப் பையனையும் கூட அழைத்தபடி வீதிக்கு வந்தார். பகல் தொழுகைக்காக “பாங்கொலி’ காதில் விழுந்ததும், சற்றுத் தொலைவிலுள்ள பள்ளிவாசலை நோக்கி அவர் கால்கள் நடந்தன. கூட வந்த சின்னப் பையனிடம்,
“கொஞ்சம் நில்லுடா மனே, தொழுதிட்டு வாறன்!” என்றவர், கூடைகளோடு அவனை ஒரு புறத்தில் வைத்துவிட்டுப் பள்ளி வாசலுள் நுழைந்தார்.
米米米
C81) பெற்றமனம்

Page 50
“குர்ஷித் என்டபிரைசஸ்” வர்த்தகச் சந்தையில் மிக்க பிரபல்யமான பெயர். அதனைத் தெரியாதவர்களே இருக்க முடியாது. நாலாவித பொருட்களையும் இறக்குமதி செய்து, மொத்த விற்பனை செய்யும் மிகப் பெரிய ஸ்தாபனம்.
சஹித் ஹாஜியாரின் ஏக போக உரிமை. பங்குதாரர்கள் எவரும் அதில் இருக்கவில்லை. சேர்த்துக் கொள்ளவும் அவர் விரும்பியதுமில்லை.
ஒரு சில ஆண்டுகளுக்குள் மிகத் துரிதமாக வளர்ந்துவிட்ட, பிறரின் ஆச்சரியத்திற்கும் ஏன், சந்தேகங்களுக்கும் உள்ளான ஓர் இடம்.
அடிக்கடி ஹாஜியார் 'பாங்கொக்”, “சிங்கப்பூர்’ என்று பறந்தபடி இருப்பார். பெரிய கைகள் பல அவர் பையுள் என்றும் பேசிக் கொண்டார்கள்.
நோன்பு மாதத்தில் 'மட்டும் அவர் எங்கும் வெளிநாட்டுப் பயணம் செய்வதில்லை. புனிதமான அந்த மாதத்தின் புனிதத் தன்மையைச் சீர்குலைக்க அவர் விரும்புவதில்லை போலும். வழக்கம் போல இந்த வருட நோன்பிலும் அவர் எங்குஞ் செல்லாது நாட்டோடு தங்கி விட்டார்.
米米米
தொழுகையை முடித்துக் கொண்டு வெளியில் வந்த தாஜ நானா, சின்னப் பையனையும் கூட்டிக் கொண்டு தேவையான பொருட்களை வாங்கப் பொதுச் சந்தையுள் நுழைந்தார்.
கோழி, கோழி முட்டை, ஆட்டிறைச்சி, மரக்கறி வகைகள், சில்லறைச் சாமான்களோடு, சோற்றிற்கு “பாஸ்மதி' அரிசியையும் வாங்கிக் கொண்டார். அத்தோடு பாதாம்பருப்பும் கருப்பட்டியும் சேர்ந்து
கொண்டன.
C 82 ) ஜின்னாஹ்

வாங்கிய சாமான்களைச் சேர்த்தெடுத்துக் கொண்டனர். இருவருக்கும் துாக்க முடியாத சுமையாக அது இருந்தது.
சின்னப் பையன் வாடகைக்கார் ஒன்று கொண்டு வந்தான். பொருட்களை அதில் ஏற்றிக் கொண்டு இருவரும் புறப்பட்டனர்.
ஹாஜியாரின் வீட்டின்முன் கார் நின்றதும், இரண்டு வெளிநாட்டுக்காரர்கள் பாய்ந்து வந்து வரவேற்றார்கள். கறுத்துத் தடித்த பெரிய உருவங்கள். வால் குட்டையாய் வெட்டப்பட்ட இரண்டு ஜேர்மன் நாட்டு "டொபமன்கள்’ நல்ல குரல்வளம் இருந்ததால் ஒன்றை ஒன்று வெல்ல குரல் கொடுத்தன.
தாஜு நானாவுக்குப் பழக்கப்பட்ட குரல்தான் எதிர்பார்த்ததுங் கூட. ஆனால் பையன் புதியவன். அதனால் பயந்து நடுங்கிப் போனான். “ஹாய் கம்இன்’ அதிகார தோரணையில் ஒரு பெண்ணின் குரல் கேட்டதும் நாய்கள் மெல்ல நின்றன. பின்னால் நோக்கி மெல்லத் திரும்பிப் பெரிதாய் உறுமியபடி வீட்டினுள் ஓடி மறைந்தன. நன்றியுள்ள ஜீவன்கள் படைத்தவனுக்கே அடிபணியாத மனிதர்கள் வாழும் இந்த உலகில், கொடுக்கும் உணவிற்காக எத்தனை பணிவினைக் காட்டுகின்றன என, தாஜு நானா மனத்தினுள் நினைத்துக் கொண்டார்.
வீட்டினுள் நுழைந்ததும் “நோனா இண்டைக்கும் வழமைபோல "தலநோன்பு” நம்மவூட்டிலதான் தொறக்கணுமெண்டு எல்லாருஞ் சொல்லுறாங்களாம். சாமானெல்லாம் வாங்கிக் கொணந்திரிக்கன் சமையலுக்கு கையொதவிக்கி ஒங்கட வேலைக்காரிய தரோணும்!” என்றார்.
சமையற் கட்டில் இறைச்சி வாடையை நுகர்ந்த நாய்கள் எங்கிருந்தோ உறுமின. சின்னப் பையன் பயத்தால் தாஜு நானாவின் பின்னால் பதுங்கினான்.
C 83 ) பெற்றமனம்

Page 51
“பயப்பட வாணாம் புள்ள! அதுகளை நோனா அப்பவே கட்டிப்போட்டுட்டா” என்று அவனுக்குத் தெம்பளித்தார். இருந்தும் அந்தச் சின்ன மனத்தில் பயம் நீங்கவிலலை. முக்கு நுனி வியர்த்திருந்தது.
சமையற் கட்டில் வேலைகள் வேகமாக நடந்து கொண்டிருந்தன. மூவரும் பம்பரமாய்ச் சுழன்றனர். மின்சார உபகரணங்கள் வேலைப்பளுவைக் குறைத்தன. துரிதமாய்ச் செய்யவும் உதவின.
பகல் மணி இரண்டிருக்கும். வாட்டசாட்டமான ஓர் இளைஞன் வயது பதினைந்திருக்கும் வயதுக்கு மீறிய வளர்த்தி. சமையற் கட்டினுள் நுழைந்தான். குளிர்சாதனப் பெட்டியைத் திறந்து ஒரு “கொக்கா கோலாவை’ ஒரே உறிஞ்சாக உறிஞ்சினான். பின்னர்,
y
“மம்மீ. லஞ்.” என்று கத்தினான். ஏற்கனவே மேசையில் பரத்தியிருந்த உணவு வகைகளைக் கண்டதும், ஒவ்வொன்றிலும் நின்றவாறே ஒவ்வொரு கடி கடித்து விட்டு வெளியேறினான்.
※米米
தாஜு நானா நல்ல சமையற்காரர். கடையில் தான் தங்குவார். வீட்டுக்குப் போவோர் போக, கடையில் தங்கும் வெளியூர் சிப்பந்திகளுக்குச் சமைத்துப் போடுவதுதான் அவர் வேலை.
அவ்வப்போது ஹாஜியாரின் வீட்டில் நடைபெறும் திடீர் பணக்கார விருந்துகளிலெல்லாம் அவர் கைவண்ணம் விதம் விதமான உணவுகளாகப் பரிணமிக்கும்.
கடையில் வழக்கமாக கருவாட்டுக் குழம்பும், பருப்பு ஆணழும் தான். தப்பித் தவறிக் கருவாட்டுக்கு விலையேறிப் போனால், ஒரு துண்டு மாட்டிறைச்சியோடு நீண்ட சொதியும் கிடைக்கும்.
G84) ஜின்னாஹ்

எது எவ்வாறாயினும் தாஜு நானாவின் கைபட்டால் அது அமிர்தம் போலவே இருக்கும். "சமையற் கலையில் அவர் நளனுக்குத் தம்பி முறை” என்பார்கள்.
வேலைகளெல்லாம் துரிதமாக நடந்து முடிந்தன. நீண்ட ஒரு மேசையில் நோன்பு திறப்பதற்கான எல்லாப் பொருட்களும் தயாராக அடுக்கப்பட்டன.
விதை நீக்கப்பட்ட ஈராக்கின் ஈத்தங்கனிகள். குளிராக பாலுதா ஷர்பத், உறைப்பாக "சமூசா”, “கல்லட்”, “மட்டின் ரோல்ஸ்', கோதுமைக் கஞ்சியோடு சூடாகப் பால் கோப்பி இன்னும் இன்னும்.
நோன்பு திறந்த பின் சாப்பாட்டிற்குக் “குறுமா’, “முழுக்கோழிப்பொறியல்’, ‘புரியாணி', 'வட்டலாப்பம்', புருட் சலட், ஐஸ்கிறீம்.
66
சிறுவன், வேலைக்காரி இருவரினதும் உதவியோடு தாஜ" நானா எல்லாவற்றையும் வகைவகையாகவும் சுவையாகவும் துரிதமாகச் செய்து முடித்திருந்தார்.
ஐந்தரை மணிக்கெல்லாம் சமையற்கட்டின் பக்கம் ஒரு தலை தெரிந்தது. நீண்ட ஒரு கும்பகர்ண துாக்கத்தின் பின் வந்து நிற்பது, உப்பிப் போன அந்த முகத்தில் தெளிவாக எழுதி ஒட்டப்பட்டிருந்தது.
அது ஹாஜியாரின் மனைவி மிசிஸ் சஹீட் உடையது. அவர் போலி நாகரிகத்தில் திளைத்துப் போன ஒரு நடுத்தர வயதுப் பெண். ஒரே ஒரு பிள்ளைக்குத் தாய். இன்னொன்று பெறும் எண்ணமுமில்லை. பெற்றால் உடல் இளைத்துப் போகும் என்ற UJuLI(UpLĎ 8nL.
“நோன்பு பிடிப்பதால் உடலுக்கு நன்மையுண்டு” என்று எல்லோரும் சொல்வதால் அவரும் பிடிக்கின்றார். அதுவும் விட்டுவிட்டு.
G85) பெற்றமனம்

Page 52
“தலைநோன்பும் கடைசி நோன்பும் பிடித்தால் எல்லா நோன்பும் பிடித்தது போல தான்” என்று எவளோ ஒருத்தி சொன்ன சொல்லை நம்பிக் கொண்டவர். இன்று தலை நோன்பு அதனால் அதனைத் தப்பாது பிடித்திருக்கிறார். ஆண்டவன் கட்டளைக்கு அத்தனை மதிப்பு அந்திக் கருக்கல், ஆறு மணி தாண்டிவிட்டதைக் காட்டிற்று, ஆடம்பரமான அந்த பங்களாவின் விசாலமான முற்றத்தில் புதுப்புதுக் கார்கள் வந்து தரித்த வண்ணம் இருந்தன.
சோடி சோடியாகப் பலர் இறங்கி வந்தார்கள். சொல்லப் போனால் எல்லோருமே ஒரு வகையில் ஒத்திருந்தார்கள். நெட்டை குட்டையாக இருந்தாலும், சுற்றளவில், உடல் பருமனில் நெருக்கமான ஒற்றுமை இருந்தது. மருந்துக்குக் கூட ஒரு மெலிந்த ஜீவன் அங்கிருக்கவில்லை.
முன் கூட்டியே சஹிட் ஹாஜியார் வீட்டிற்கு வந்து விட்டார். ஆண்களை அவரும் பெண்களை அவர் மனைவியுமாக இன்முகங் கொண்டு வரவேற்றனர்.
பிரமாண்டமான அந்த முன்கூட்டத்தில் முப்பது நாற்பது பேர். பெண்கள் வேறாகவும், ஆண்கள் வேறாகவும் கூடி இருந்தனர். எல்லோரும் வந்து விட்டனர். ஒரே ஒருவர் மட்டும் இன்னும் வரவில்லை. எல்லோர் வாயிலும் அவரைப் பற்றியே பேச்சிருந்ததால், அவரே இன்று அங்கு முக்கிய “நாயகர்” என்பது சொல்லாமலே விளங்கிற்று.
சஹித் ஹாஜியார் வாசலுக்குப் போவதும் வருவதுமாக இருந்தார். நோன்பு திறக்கும் நேரம் நெருங்க நெருங்க அவருக்கு இருப்புக் கொள்ளவில்லை.
“பாங்கு” சொல்ல இன்னும் ஐந்து நிமிடங்களே இருந்தன. பீப்.பீப்.
C 86) ஜின்னாஹ்

ஹாஜியாரின் முகத்தில் சந்தோஷம் நிரம்பி வழிந்தது. அவரின் புத்தம் புதிய கார் வாசலைத் தாண்டி வீட்டின் முன்னால் வந்து நின்றது. எல்லோரும் ஒன்றுகூடி வந்தார்கள். அவர்கள் முகங்களில் ஒரு பக்திப் பிரவாகம் இழையோடிற்று.
காரின் பின்கதவைத் திறந்து விட்ட ஹாஜியார் சற்று விலகி ஒதுங்கிக் கொள்ள, நீண்ட அங்கி, தொப்பி தலைப்பாகையோடு, அழகாகக் கத்தரிக்கப்பட்ட வட்டத் தாடியுடன், நிறைந்த புன்னகை சேர, நடுத்தர வயது மதிக்கத்தக்க ஒருவர் இறங்கி வந்தார். முதற் பார்வையிலேயே அவர் ஒரு வெளிநாட்டுக்காரர் என்பது தெரிந்தது. சஹிட் ஹாஜியார் முந்திக் கொண்டு பயபக்தியோடு அவர் கரங்களைப் பற்றி முத்தமிட்டார். கண்களிலிலும் ஒற்றிக் கொண்டார். ஒருவர் மீதியில்லாது அங்கிருந்த ஆண்கள் அத்தனை பேரும் அவ்வாறே செய்து கொண்டனர். ஏதோ ஒரு முக்தி பெற்ற மனநிறைவினை அவர்கள் முகங்கள் காட்டின.
எல்லோரும் வழிவிட அந்தப் புதிய மனிதர் கூட்டத்துக்குள் நுழைந்தார். விசேடமாய்க் கம்பளம் விரிக்கப்பட்ட ஒரு சோபாவில் அவரை ஹாஜியார் உட்கார வைத்தார்.
ஒரே ஒரு நிமிட தாமதத்தின் பின்னர், “அல்லாஹ" அக்பர். அல்லாஹ" அக்பர்.” என்று பாங்கின் இனிய ஒலி வானொலியில் புறப்பட்டுக் காற்றில் கலந்தது.
முதலில் சம்பிரதாயபூர்வமாகப் பேரீத்தங் கனிகளும், குளிர் நீரும் பரிமாறப்பட்டன. சஹீட் ஹாஜியார் தானும் நோன்பு திறந்து கொண்டே மற்றவர்களையும், பெண்களை அவர் மனைவியும் உபசரித்தார்கள்.
விருந்தோம்பலுக்கு இலக்கணம் சொல்வது போல இருந்தன அவர்கள் உபசரணைகள். மிகக் கலகலப்பாக எல்லாம் நடந்து கொண்டிருந்தன.
G87) பெற்றமனம்

Page 53
தாஜ" நானா தன் கைவண்ணத்தை உணவுப் பண்டங்களில் காட்டியிருந்தார். வந்தவர்கள் அவர்கள் கைவரிசையை உணவில் காட்டினர்.
தொடர்ந்து இராப் போசனமும் பரிமாறப்பட்டது. எல்லோரும் நன்றாக உண்டார்கள். யாருக்கும் யாரும் சளைத்தவர்களில்லை என்பதை நிரூபித்தனர். வயிறார உண்டனர் என்பதைவிட, வயிறு புடைக்க உண்டனர் என்பதே பொருந்தும்.
மீண்டும் ஒரு முறை உணவு கேட்காதவாறு உணவு வகைகளைப் பரிமாறி வைத்த தாஜு நானா சில ஈத்தங்கனிகளையும், சிறிது நீரையும் சேர்த்து, சின்னப் பையனோடு நோன்பு திறந்து கொண்டார்.
அவர் காதுகள் வானொலியில் நடைபெறும் அன்றைய “இப்தார்’ நிகழ்ச்சியில் லயித்திருந்தன. அந்தப் பெரிய வீட்டில் இருந்த அத்தனைச் செவிகளிலும் அவற்றின் ஒரு வார்த்தை கூட விழாதபடி பேச்சுக் குரல்கள் தடுத்தன.
“விசுவாசங் கொண்டவர்களே! உங்களுக்கு முன்னர் இருந்தவர்கள் மீது விதிக்கப்பட்டது போன்றே உங்கள் மீதும் நோன்பு விதியாக்கப்பட்டுள்ளது. அதனை நோற்பதன் மூலம் நீங்கள் பக்தியுடையவர்களாகலாம்.”
என இறைமறை கூறுகின்றது. நோன்பு நோற்பதன் மூலம் அல்லாஹற்வின் மீது பக்தியும்.அவனைப் பற்றிய பயமும் ஏற்படுகின்றன. உணவையும், இச்சையையும் சில காலம் துறப்பதன் மூலம் மனம் துாய்மையடைகின்றது.
“சகோதரர்களே. அளவுமீறி உணவை உண்டு நோன்பை நோற்பதும் , திறப்பதும் நோன்பின் நோக்கத்திற்கு ஒவ்வாத செயலாகும். எனவே அளவோடு புசித்து நோன்பைப் பிடிப்பதும்,
C 88) ஜின்னாஹ்

திறப்பதும் இறைவனுக்கு உவப்பான செயலாகும். இதன் மூலமே பசியின் கொடுமையை நம்மால் உணர முடியும். தேகஆரோக்கியமும் இறையன்பும் கிட்டும்.”
இவ்வாறு தொடர்ந்த வானொலி உபன்னியாசம் தாஜ"நானாவின் சிந்தனைக்குத் துாபமிட்டது. அவர் சிந்திக்கலானார். விருந்தும் முடிந்து வந்தவர்களும் விடைபெற்றுச் சென்றனர். வேலைக்காரி பாத்திரங்களைச் சேகரிக்க சின்னப் பையனும் உதவினான். அவர்களுக்குத் தெரியும் இன்றைய மிச்ச சொச்சமெல்லாம் தனக்கும் தாஜு நானாவுக்குந்தானென்று.
தனது காரியங்கள் முடிந்ததும் “மஹற்ரிப்” தொழுகையை முடித்துக் கொண்ட தாஜு நானா சிறுவனோடு புறப்பட ஆயத்தமானார். ஹாஜியாரிடம் சொல்லிவிட்டுச் செல்லவென முன் கூட்டத்திற்கு வந்தார். அங்கு மனைவியோடு அன்றைய விருந்தைப் பற்றி மிகத் திருப்தியோடு பேசிக் கொண்டிருந்தார் ஹாஜியார்.
“தங்களுக்கு சரியான சந்தோஷம். மத்தவனுகளும் நல்லா புளுங்கினானுவள்!” என்றவர் தாஜு நானாவைக் கண்டதும்,
“தாஜ! நல்லா சமைச்சிருந்தீங்க புள்ள. நாலு நாளைக்கு
சாப்பாடே வாணாம்!” என்றார்.
இந்தப் புகழ் மாலையைக் கேட்டும், காதில் வாங்கிக் கொள்ளாதவர் போல் எந்தவித மாற்றத்தையும் முகத்திற் காட்டிக் கொள்ளாமல் “போய் வாறம் ஹாஜியார்!’ என்றார் தாஜு நானா.
இறைவனுக்குப் பொருந்தாத ஏதோ ஒரு வீண் விரயத்திற்குத் தானுந் துணைநின்ற குற்ற உணர்வு அவர் நெஞ்சத்தைக் குடைந்தது. “என்ன வெறுங்கையோட ஊட்டுக்கு ஒண்டும் கொண்டு போகாம.?’ என ஹாஜியார் பேச்சை முடிக்கு முன் தாஜு நானா
சொன்னார்.
C89 D பெற்றமனம்

Page 54
"வாணாம் ஹாஜியார் வழக்கமாக மீதத்தில் பெரும் பகுதியை அவருக்கே கொடுத்து விடுவார்கள். அடுத்த நாள் லீவும் கிடைக்கும் நேரே வீட்டுக்குக் கிளம்பி விடுவார்.
“ஏனப்பா, ஊட்டுக்குப் போகலியா?” “போகல ஹாஜியார்! நோம்பு நாளையஸ்ள நல்லா வகுத்த கட்டணுமாம். கொஞ்சமாத் திண்டாத்தான் பசிக் கொடுமை நமக்குத் தெரியுமாம். நோன்புட பலனும் கெடக்கிமாம், றெடியோவில் இப்பதான் சொன்னாங்க.”
ஹாஜியாருக்கு ஏதோ ஒன்று நெஞ்சில் தைப்பது போல் இருந்தது. மேற்கொண்டு அவர் ஒன்றும் பேசவில்லை. பதிலுக்குக் காத்திருக்காத தாஜ நானா சின்னப் பையனோடு வாசலை நோக்கி நடந்தார். கருவாட்டுக் குழம்பும் பருப்பு ஆணழும் அவர் நினைவுக்கு வந்தன.
சிந்தாமணி
OS. O. 1990
உண்ணா நோன்பு என்ற சிறுகதை பிரமாதம்
டி.எம்.நப்ஹான், மன்னார். பரஸ்பரம் 12.04.1990
C 90 ) ஜின்னாஹ்

இரு ၆éè/nပံဇာပနှံ Gశిగి
616öt நண்பனுக்கு நான் சொன்னேன், “என்னை நீ பூரணமாய் நம்பிவிடு! இல்லையேல் எனது உறவைத் துண்டித்துக் கொள்!” என்று. என் வார்த்தைகள் அவனைச் சுட்டிருக்க வேண்டும். சிறிது நேரம் மெளனமாக இருந்துவிட்டு, என் கைகளைப் பற்றி
அவன் சொன்னான்.
“நமது உறவு நமது இறப்புவரை நீடிக்க வேண்டும்’ என்று. அவன் கண்கள் கலங்கி இருந்தன. ஏற்கனவே அவனால் நொந்து போன நான், சற்று வெறுப்போடு இருந்ததால், அவன் வார்த்தைகளை என் செவிகள் மட்டுமே வாங்கிக் கொண்டன.
ஒரு சிறிய சந்தேகம் தான். அதனால், எவருக்கும் எந்தப் பாதிப்பும் இல்லாத போதும், எங்களுக்குள் ஒரு விரிசலை மனத்தளவில் ஏற்படுத்திவிடுவது போன்ற ஒரு நிலைமையைத் தோற்றுவித்தது அது.
எனக்குத் தெரியும். அவன் மிக நல்லவன். அவனை நான்
C 91 ) பெற்றமனம்

Page 55
என் உடன் பிறப்பிலும் மேலாக நேசித்தேன். அவனுக்கும் அது தெரியும். இருப்பினும் அவன் என்னை ஐயக்கண்ணோடு நோக்கினான். அவன் நல்லவன் என்பதால், மனத்துள் வைத்துப் புழுங்காமல் என்னிடம் நேரிடையாகவே கேட்டுவிட்டான்.
எனக்கு பற்றிக் கொண்டு வந்தது. அதனால்தான் அவன் எதிர்பார்க்காத அந்தப் பதிலை, நான் அவனுக்குச் சொன்னேன்.
என்னை விட, என்னை யாருக் குத் தெரியும் ...? இறைவனையன்றி, எனக்கு மட்டும்தான் என்னை பூரணமாக அறிந்து கொள்ள முடியும்.
என்னுள் இருக்கும் மனச்சாட்சி என்னை என்றும் கொன்றதில்லை. பல வேளைகளில் அது என் தோளைத் தட்டி “சபாஷ்” என்று சொல்லும். நானே பூரித்துப் போவேன்.
ஒரு முறை ஒரு பெளத்த நண்பன், என்னுடன் பெளத்த தர்மம் பற்றிப் பேசிக் கொண்டிருந்தான். நான் சொன்னேன்.
“காலத்துக்குக் காலம் வழிகெட்டுப் போகும் மனுக்குலத்தை நேர் வழிப்படுத்த இறைவன் தனது தூதர்களை உலகுக்கு அனுப்பிக் கொண்டிருந்தான் என்பர். அவ்வாறான ஓர் இறை தூதராகக் கூட புத்தபகவான் இருந்திருக்க கூடுமென நான் எண்ணுவதுண்டு
அது அவனுக்குச் சந்தோஷத்தைத் தந்திருக்க வேண்டும். புன்னகைத்தான். தொடர்ந்தும் நான் சொன்ன வார்த்தைகள் அவனைக்
என்று
கல்லாய்ச் சமைத்தன.
“நண்பனே! நான் ஒரு பெளத்தன் அல்லாத போதும், உன்னைவிட என்னாலேயே புத்தனின் பஞ்சசீலம் கடைப்பிடிக்கப் படுகின்றது’!
அவன் சிரசு தாழ்ந்தது. வாய் பேசவில்லை. எனக்கு நெருங்கியவன். ஓரளவு என் வாழ்வின் உள்ளும் புறமும் தெரிந்தவன்.
C92) ஜின்னாஹ்

அவனையும் அவன் அறிவான். அவன் மெளனம் “நீ சரி” என்று என்னை ஏற்பது போலிருந்தது.
வாழ்வில் நானும் சில தவறுகளைச் செய்திருக்கிறேன். ஆனால், அவை தப்புகள் அல்ல. தவறுகள் தான். 6(60{وقع( என்னென்ன என, என்னால் விரல்விட்டே எண்ணிவிட முடியும். மற்றப்படி நான் என் மனத்தாலும் எவருக்குந் தீங்கு நினைத்ததில்லை. எதிரிக்குக் கூட. என்னிடம் தொழில் கற்றுக்கொண்டு என்னையே வஞ்சித்த என்னைச் சார்ந்த ஒருவனை, எனது சமூக அந்தஸ்தைப் பலமாகக் கொண்டு தண்டிக்கும் வாய்ப்பிருந்தும், நான் அதனைச் GaFui Juu66d60D6).
நான் நெஞ்சால் மிகவும் நொந்து போனது உண்மைதான். எனினும் இறைவனிடம் பாரஞ்சாட்டிவிட்டு அமைதியடைந்தேன்.
“தெய்வம் நின்று கொல்லும்’ என்பார்கள். ஆனால், அதுமாறி அன்றே அவன் தண்டிக்கப்பட்டான். வாழ்நாள் முழுவதும் நினைத்து வருந்த, ஆண்டவன் அன்று அவனுக்கு அளித்த தண்டனையை எண்ணி, நான் இன்று அவன்மேல் கொண்ட அனுதாபத்தால் வருந்துகின்றேன்.
என் வாயிற் கதவுகள் என்றும் திறந்துதான் கிடக்கின்றன. ஒன்றுக்கொன்று ஒன்றாத இருவர் தனித்தனியே வரும்போது ஆறுதல் சொல்லும் நல்ல பண்பு என் மனைவியிடமும் இருப்பதால், பல்வேறு பிரச்சினைகளின் வெளிப்பாடான முறைப்பாடுகள், நீதித் தலம் போல நிறையவே வரும்.
என் தந்தையும் தாயும் ஊதியம் பெறாத இணக்கச் சபையை நடத்தியதை, நாம் முன்பெல்லாம் பார்த்திருக்கின்றோம். அதன் பலன்தானோ என்னவோ மற்றவர்களின் நெஞ்சார்ந்த பிரார்த்தனைகள் சாதாரண ஒரு மனிதனின் வாழ்வு எல்லையைத் தாண்டி, இன்னும் இறையருளால் அவர்கள் சேமமாய் வாழுகின்றனர்.
C 93 )ー பெற்றமனம்

Page 56
அதே நிலை எமக்கும் வந்ததால், வெறுப்பில்லாமல் அனைத்தையும் அணுகினோம். அவ்வாறான ஒரு நிகழ்வே, இன்று நான் என் நண்பனை “நம் வாழ்நாள் முழுவதும் பிரியாது இருக்க வேண்டும்’ என எண்ணிப் பொருந்திக் கொண்டேனோ அவனை என்னோடு பிரித்து வைத்துள்ளது.
பொழுது புலரவில்லை. மெய் வெள்ளை காரிக்கும் நேரம். மெல்லிய பனிக்காற்றின் சில்லிட்ட உடம்போடு, தட்டப்பட்ட முன்வாசற் கதவைத் திறக்கின்றேன்.
ஆச்சரியம்! என்னை அறியாமல், முற்றும் விரிந்துவிட்ட என் இமைகளுடே என் விழிகளுக்குள் நுழைந்தாள் அவள். அவள் வேறு யாருமல்ல என் நண்பனின் மனைவிதான். வேலைக்காரனின் துணையோடு அந்தப் புலராத பொழுதில் என்வீடு தேடி வந்திருந்தாள்.
வழிவிட்டு விலகினேன். சொந்தவீடு என்ற பூரண உரிமையோடு அவள் உள்ளே நுழைந்தாள். வாசல் சோபாவில் தன்னை வீசி எறிந்தாள். கூடவே அடக்க முடியாத பீறலுடன் அவள் சோகம் காட்டு வெள்ளமாகக் கண்களைச் சொரியச் செய்தது. “கோ’ வென அழுதாள்.
என் மனைவி அவளைத் தன் தோளோடு அணைத்துக் கொண்டாள். ஆதரவான அன்பு அணைப்பு அவளுக்கு அன்னையின் ஆதரவைத் தந்திருக்க வேண்டும்.
அவளைத் தன் பாட்டில் சிறிது நேரம் அழவிட்டோம். அது அவளின் மனச்சுமைக்கு மருந்தாகி இருக்க வேண்டும். தானாக அடங்கினாள். நாம் வலிந்து அவளிடம் எதனையும் கேட்வில்லை. வேலையாள் தோட்டத்து இருக்கையில் தன்னைத் தனித்துக்
கொண்டான்.
C94) ஜின்னாஹ்

படித்த பெண், தெளிவான சிந்தனையோடு, வாழ்வின் தத்துவங்களைப் புரிந்து கொண்டு, வாழ முயலாததால் ஏற்பட்ட பல்வேறு சிக்கல்களுக்குள் அவள் தன்னைப் புதைத்துக் கொண்டிருந்தாள். அதனை நாம் முன்பே அறிந்திருந்தோம்.
தன்னை நிதானப்படுத்தக் கொண்ட அவள், தன் மனத்தின் சுமைகளை எல்லாம் வார்த்தைகளால் இறக்கத் தொடங்கினாள். பொறுமையோடு அனைத்தையும் உள்வாங்கினோம். அன்றைய அவளின், அப்போதைய நிலைக்குப் பொருந்த ஆறுதலாய் வார்த்தைகளைப் பரிமாறினோம்.
தவறு எங்கு என்பது முன்பே எங்களுக்குத் தெரியும். நகத்தால் கீறிவிட்ட புண் இப்போது புரையோடிப் போயிருந்தது. தாமாகவே சிந்தனைக் களிம்பிட்டுச் சொஸ்தப்படுத்திக் கொள்ளும் திறன் இவருக்கும் இருந்தும், இப்போது தத்தமது வைராக்கியங்களால் அறுவைச் சிகிச்சைக்கு ஆள் தேடுகின்றனர்.
நண்பன் நல்லவன். பல வருடங்கள் பல்லைக் கடித்துக் கொண்டு வாழந்தவன்தான். மனைவியும் நல்லவள். அவர்கள் இருவர் உள்ளங்களிலும் ஆழமாகப் புதைந்து கிடக்கும் பாசத்தின் பிடிப்பினை அவர்களைவிட நாமே அறிந்திருந்தோம்.
பிரிவு ஒன்று தோன்றுவதைத் தாங்கிக் கொள்ளாத மனங்கள் இருவருக்கும் இருந்தன. அவ்வாறாயின் ஏனிந்தப் பிளவு.?
நாட்டுப் பழமொழி ஒன்றுண்டு- 'அறமும் அறமுஞ் சேர்ந்தால் கிண்ணறம்” என்று. ஒன்றுக்கொன்று முரணான முனைகள் தானே ஒன்று சேர்கின்றன. இரண்டும் ஒன்றானால் சேரவும் மாட்டா. சேர்க்கவும்
(ԼՔԼԳեւ III.
வாழ்வில் இந்த விதிமுறை அறிவால் ஏற்படுத்திக் கொள்ளும் புரிந்துணர்வால் மாற்றிக் கொள்ளலாம். விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை யாராவது ஒருவருக்கேனும் இருந்தாக வேண்டும்.
C 95 ) பெற்றமணம்

Page 57
முன்பெல்லாம் அவன் வருவான். முறைப்படுவான். பொறுமையாகக் கேட்பேன். ஆறுதல் சொல்வேன். ஒருமுறையல்ல, பலமுறைகள் அவ்வாறு நடைபெற்றன.
இன்றும் அதுபோல்தான் அவள் வந்தாள். முறைப்பட்டாள் ஆறுதல் சொன்னோம். விரிந்து கிடக்கும் எங்கள் வாயில் கதவுகள் எல்லோருக்குமாகத்தான் திறந்து கிடக்கின்றன.
அவனுக்காக அது திறந்த போது விருப்பம் கொண்டவன், அவளுக்காக திறந்ததை ஜீரணிக்க முடியாமல் போனதால், ஏற்பட்ட வினைதான் என்னிலிருந்து அவன் அவனைப் பிரித்துக் கொள்ள ஏதுவாயிற்று.
முன்பெல்லாம் அவன் முறைப்பாடுகளில் நியாயம் இருந்தது. அவளுக்கு உபதேசித்தோம். அவை வெறும் வாய்ப் பேச்சுக்களோடு, புல்லுக்கு வார்த்தை புனலாய்ப் போயின. இன்றோ அவள் முறைப்படுகின்றாள். அவள் பக்கம் நியாயம் மாறி நின்றது. காலம் தாழ்த்திய ஞானோதயம்தான். இருப்பினும் முன்போலல்லாது, நம்பும்படி இருந்தது.
எடுத்துச் சொல்ல எமக்குச் சந்தர்ப்பம் தராதவாறு, காலம் வெவ்வேறு தடங்கல்களை இடை புகுத்தியது.
அவன்தான் என்ன செய்வான், நம்பி, பின் மாறி, மீண்டும் நம்பி, மீண்டும் ஏமாந்து. அவன் அலுத்துப் போனான். இப்போது முற்றும் நம்பக்கூடிய நிர்ப்பந்தம். மாற்றம் தோன்றியும் நம்ப மறுக்கின்றான்.
வசந்தத்தின் வாத்சல்ய வாழ்வு வாழாமலே கருக்கிக் கொண்டாலும், வாழ்வில் துணை வேண்டுங் காலத்திற்காவது
சேர்ந்திருந்து அனுபவிக்க ஏனிவர்கள் துணிய மறுக்கின்றனர்?
C96 D ஜின்னாஹ்

மீண்டும் மனிதன் உலகில் மறுவாழ்வு பெறுவதில்லை என்பதை அவர்கள் புரிந்து கொண்டாலல்லவா மீண்டும் வாழ்வு மலரும்? அவர்கள் அதிகம் கற்றவர்கள்!.
ஒருநாள் என் பஞ்சசீல நண்பன் என்னைப் பார்க்க வந்தான். ஏதோவொரு பெரும் பிரச்சினைக்கு முகம் கறுத்திருந்தான்.
நீண்ட நாட்கள் கடந்து காண வந்தவனிடம் குசலம் விசாரித்தேன். “உடம்புக்கு ஒன்றுமில்லை” என்றான். அலுத்துக் கொண்டவனாய். அவன் பதிலால் உள்ளத்தில் ஏதோ சுமை இருப்பதை என்னால் மட்டிட முடிந்தது. நான் எதுவும் கேட்வில்லை. அவனே சொல்லத் தொடங்கினான். தொழிலால் ஏற்பட்ட உறவுதான். அவன் தப்பான வாழ்வில் அவனுக்கு ஏற்பட்ட ஒரு கசப்பான அனுபவத்திற்கு நல்லது செய்யப் போய்த்தான், அவனை நான் அறிந்து கொண்டேன். எப்படியோ, புனித யாத்திரை என்னும் போர்வையில் புறப்பட்ட கூட்டத்துள், போக்கிரித்தனம் பண்ணப் போய் ஒரு காதலியைத் தேடிக் கொண்டான்.
காய்ந்த மாடு கம்பில் விழுவது போல் தொங்கத் துணை தேடிவந்த அவளுக்கும் இவன் இராமனாகத் தோன்றினான்.
என்ன செய்வது, அவனோடு கூடிய அறிமுகம், நல்லது நாடி அவர்கள் இருவரையும் இணைக்கும் பந்தத்தில் நானே அச்சாணி ஆனேன்.
கிழக்குப் பிராந்தியத்தில் ஏதள்வது ஒருவகையில் ஒருவனுக்கு வாய்ப்பொன்று வந்துவிட்டால் “கொக்கடி அடித்துள்ளது” என்று சொல்வது வழக்கம்.
அதுபோல்தான் இவனுக்கும் எதிர்பாராத வகையில் “கொக்கடி அடித்தது போல்’ திடீர் பொருளாதார முன்னேற்றம் ஏற்பட்டது.
C 97 ) பெற்றமனம்

Page 58
அவன் மனைவி சொல்வாள் "நான் வந்த லக்” என்று. ஆரம்பக் காலத்தில் பேசாதிருந்தவன், இப்பொழுதெல்லாம் அவளை நையாண்டி செய்து "நீயும் உன் லக்கும்” என்பான்.
நண்பனின் வார்த்தைகளில் சோகமும், ஏக்கமும் தொனித்தன. தன் மகளை எண்ணி அவன் கலங்குவது புரிந்தது. ஏதோவொரு தப்பை அவன் புரிந்துவிட்டான். மனைவிக்கு மட்டும் அது தெரிந்திருந்தால், அத்தனைத் தூரம் அவன் அலட்டிக் கொள்ள மாட்டான். அவன் வாழ்வின் இளமைக் காலத்தைப் பிறர் சொல்லி அவள் தெரிந்து வைத்திருந்தாள்.
“நக்குகிற நாய்க்குச் செக்கென்ன, சிவலிங்கமென்ன!” கண்ட இடத்தில் பசியைத் தணித்துக் கொள்ளும் ஈனப் பிறவியாக ஒரு காலத்தில் அவன் வாழ்ந்தான்.
திருமணத்தின் பின் ஏற்பட்ட வாழ்வின் பந்தம், பொருளாதார வளச்சியால் ஏற்பட்ட ஒரு பொய்யான அந்தஸ்து, அவன் முன்போல் எதையும் வெளிப்படையாகச் செய்யவிடாது தடுத்தன.
இருந்துமென்ன? நடந்தது தொடர்ந்தது. சற்று இருள்மையுள் பிறரறியாதவாறு. மனைவியும் அவனை முழுமையாய் நம்பினாள். இப்பொழுது அவன் "பன்சல’ முக்கியஸ்தர்களில் ஒருவன்.
மகளுக்கு வயது பதினைந்து தான் ஆகிறது. அவனது திருட்டுத் தொலைபேசித் தொடர்பொன்றினைத் தாயில்லாத போது வேறொரு முனையில் தற்செயலக ஒட்டுக் கேட்டிருக்கிறாள். விளைவு? தந்தையின் வண்டவாளங்கள் தாயின் செவிப்பறைகளில் நிரந்தர ரீங்காரமாகிற்று.
கேள்வியும் பதிலும் அடியும் உதையும் ஆரம்பமாகின. பக்கத்து வீடுகளுக்கும் கூரான செவிகள் இருப்பதை அவனறிவான். எங்கே தனது தற்போதைய அந்தஸ்திற்குக் குந்தகம் ஏற்பட்டுவிடப் போகின்றதோ என, அவன் அஞ்சுவது பேச்சில் தெளிவாகிற்று.
C 98) ஜின்னாஹ்

இப்போது அவனுக்கு எனது பக்கபலம் வேண்டும். அவன் வீட்டில் அமைதி பிறக்க வேண்டும். என் பேச்சக்கு அவன் மனைவி மதிப்பளிப்பாள் என்பதில் என்னைவிட, அவனுக்கு நம்பிக்கை மிகுந்திருந்தது. தீவிரமான சிந்தனையிலும் தெளிவு பெறாத நான், அவன் வீட்டுக்கு வருவதாக வாக்களித்து விட்டு, அவனுக்கு விடையளித்தேன்.
இரவெல்லாம் சிந்தித்தேன். ஏற்கனவே முந்திய தம்பதிகளுக்கு இடையிலான ஒரு முயற்சியில் படுதோல்வி கண்ட எனக்கு. இதுபற்றி என் மனைவிக்கு சொல்ல மனமொப்பவில்லை. படித்தவர்களிடம் தோற்றுப் போன நியாயம், படிப்பு வாசனையில் மத்திம நிலை கொண்டவர்களிடம் எடுபடுமா என நான் அஞ்சினேன்.
நீண்ட கண்விழிப்பு. முடிவில்லாமலேயே, கண்கள் சோர்ந்து தூங்கிப் போயிருப்பதைக் காலைச் சேவலின் கூவல் என்னை உணரவைத்தது.
அன்று ஞாயிற்றுக்கிழமை. வழக்கமாக வீட்டில் தங்கும் நான், காலையிலேயே எனது பஞ்சசீல நண்பன் வீட்டுக்குப் புறப்பட்டேன்.
என்னை அவன் எதிர்பார்த்தான். அவளுக்கு என் வரவு அதிர்ச்சியைத் தந்திருக்கும். வளர்ப்பு நாய்களும் வந்தமரும் இருக்கைகளாதலால் நான் நின்று கொண்டே அவனுடன் உரையாடினேன். என் நிலைமையைப் புரிந்து கொண்ட அவன் வாசல் கதிரைகளுக்குப் பத்திரிகைக் கம்பளம் விரித்தான். நானும் உட்கார்ந்தேன். அவனும் உட்கார்ந்தான்.
அவள் வரவில்லை. எனக்கு முகம் கொடுக்க அவள் கூசினாள் போலும். தப்பு எங்கோ இருக்க, அவள் என்னைப் பார்க்க
விரும்பாதது எனக்குச் சங்கடத்தைத் தந்தது.
C 99 ) பெற்றமணம்

Page 59
வழமையாய் என் வருகை அறிந்ததும் தேநீர் க் கோப்பைகளுடன் தான் வருவாள். ஆனால், இன்று அவள் வரவில்லை. குடும்ப நெருக்கமும் கேட்ட சேதிகளும் அவளுடன் பேச வேண்டிய நிரப்பந்தத்தை எனக்குத்தர, வீட்டின் உட்பறம் நோக்கிப் பெயர் சொல்லி அழைத்தேன்.
சில வினாடிகள் கழித்து அவள் வந்தாள். முகம் வீங்கி உப்பி இருந்தது. சிரித்தாள். அந்தப் புன்னகை உயிர்த் துடிப்பற்றிருந்தது.
வாசற் கதவின் நிலையில் அவள் தன்னைச் சாய்த்து நின்றாள். அவனிருந்த திசை கூட அவள் பார்வை சொல்லவில்லை. "உட்கார் ஜெயந்தி’ என்றேன். பக்கத்தில் இருந்த இருக்கையைக் காட்டி. என் வார்த்தைக்கு மதிப்பளிக்க அவள் அதில் தன்னை இருத்திக் கொண்டாள்.
சிறிது நேர மெளனம். மூவரும் பேசாதிருந்தோம். மகள் “தஹம் பாசல' வுக்குப் போயிருந்தாள். வீட்டில் வேறு யாரும் இருக்கவில்லை.
வேளை பொருந்தியதால், என் வார்த்தைகளுக்கு வேலை வந்தது. நானே மெளனத்தைக் கலைத்தேன்.
நிலத்தையே வெறித்துக் கொண்டிருந்த அவளை மீண்டுமொரு முறை அழைத்தேன்.
“ஜெயந்தி’ “ம். ” அவள் தலை உயர்ந்தது. என்னப்ை பார்த்தாள். நெஞ்சில் படிந்திருந்த சோகம் கண்களால் வடிந்தது. அவன் கல்லாய்ச் சமைந்து போயிருந்தான்.
“ஜெயந்தி! எனக்கு எல்லாம் தெரியும். இப்போது நான் யாருக்கும் பரிந்து பேச வரவில்லை. இன்றைய நிலையில் நான்
100 ஜின்னாஹ்

உன் பக்கம் தான். குற்றம் செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். அதற்கு நான் என்றும் உடன்பாடுதான். இதுநாள் வரை நீ தந்த தண்டனை, அவனுக்குப் போதும் என்று நான் நினைக்கின்றேன்.”
அவள் என்னை வெறித்து நோக்கினாள். அதில் அவன் மீதுள்ள வெறுப்பு என்மீது பொழிவது போல் இருந்தது.
“உன் மகளுக்குத் தந்தையின் தவறு தெரிந்து போனதே அவனுக்குக் கிடைத்த பெரும் தண்டனையாக அவன் உணருவதை நான் புரிந்து கொண்டேன். இன்றைய நிலைமை தொடருவதால் ஏற்படும் பின்விளைவுகளைச் சற்று எண்ணிப்பார். நீ காட்டும் பொறுமை, தரும் மன்னிப்பு, எதிர்காலத்தின் உன் பெண்ணின் நல்வாழ்வுக்குப் பெரிதும் நன்மை சேர்க்கும்.”
நான் சுருக்கமாகப் பேசி முடித்தேன். அவள் அதிகம் படித்தவளல்ல. எனினும் என் வார்த்தைகளில் பொதிந்துள்ள ஆழமான பொருளை அவள் புரிந்து கொண்டாள். எழுந்து உள்ளே சென்றாள். தேநீர்க் கோப்பைகளோடு மீண்டும் வந்தாள். அதில் எனக்கு மட்டுமல்ல, அவனுக்கும் ஒன்று இருந்தது.
தினக்குரல்
0.5.12.1989
101 பெற்றமணம்

Page 60
டிெத்தவிஷுக்குடிெ
நேற்றுவரை கருமை மண்டிக்கிடந்த அந்த லயத்துச் சுவரில், புதிதிாக முளைத்திருந்தன அந்த வரிகள்.
இரண்டே இரண்டு வார்த்தைகள்தான். மீண்டும் மீண்டும் பல முறைகள் எல்லோரின் கண்களிலும் படும்படியாக, பெரிய எழுத்துக்களில் சுவரை நிறைத்து எழுதப்பட்டிருந்தன.
சூரியனின் ஒளிக்கதிர்கள் புலப்படாத அதிகாலைப் புலர்வில் விழித்துக் கொண்ட அனைவரின் கண்களிலும் அவ்வரிகள் பட்டபோதிலும், யாருமே அதனைப் பொருட்படுத்திக் கொள்ளவில்லை. ஏதோ ஒரு கிறுக்குப் பயல் செய்த விஷமச் சேட்டை என்றே அனைவரும் எண்ணினர்.
ஒற்றை அறைக் காம்பராவின் ஒரு மூலையில், அட்டை போல் தன்னைச் சுருட்டி இரவுத் துயிலுக்காய்ச் சாக்கொன்றில்
102 ஜின்னாஹ்

உடலைக் கிடத்திக் கொண்ட செவ்வந்தி, விடிந்ததை அறிந்து வெளியில் வந்து தன்னை நிமிர்த்திக் கொண்டாள்.
வாசலில் இருந்த தண்ணிர் குடத்தில் வாயலம்பிக் கொண்ட அவள், முகத்தையும் கழுவிக் கொள்ளத் தலையை உயர்த்தினாள். கரி படிந்த லயத்துச் சுவரில் சுண்ணக் கட்டியால் எழுதப்பட்டிருந்த அந்த வரிகள், அப்போதுதான் அவள் கண்களில் பட்டன. ஆவலோடு அந்த வாசகங்களைப் படிக்கலானாள். ஒரு முறைக்கு இருமுறை வாய்விட்டுச் சொன்னாள்.
“அடித்தவனுக்கு அடி! அடித்தவனுக்கு அடி!” அந்த வார்த்தைகளில் தொனித்த இறுமாப்பு, வாசிக்கும் போதே அவள் நெஞ்சத்துள் உறைத்தது. அவள் அதிர்ச்சி அடைந்தாள். கண்கள் இமை கொட்டாது அந்த வரிகளை உள்வாங்க, மனம் பதிவு செய்து கொண்டது.
வாழ் நாளில் என்றுமே கேட் டிராத வாசகங்கள். அடிபடுமுன்னே வார்த்தைக்கே அடங்கிப் போகும் வம்சப் பெண் 9ഖണ്.
“ஐயா சாமி” “ஆமாங்க தொரே” என்று மட்டுந் தான் சொல்லிப் பழகிப் போன நாவிற்குச் சொந்தக்காரர்களாக வாழ்வோரின் வழிவந்த வாரிசு.
செவ்வந்திக்கு இந்த வார்த்தைகளின் பொருள் புரியவில்லை. பெற்றோரின் கட்டாயத்துக்காகப் பள்ளிப்படிகளை மிதித்திருந்ததால், அவளால் அந்த வரிகளைப் படிக்க முடிந்தது. அதைப் பற்றிச் சிந்திக்கவும் தோன்றியது.
யாருக்கு யார் அடிப்பது? கேள்விகளால் கிளறுண்டு போன அவள் மனக்கண்முன், முதலில் தோன்றியவன் கங்காணி முனியனே.
103 பெற்றமனம்

Page 61
முனியனுக்கு அடிப்பதா? மலையில் அவன் தானே எமது மேய்ப்பன், தகாத வார்த்தைகளால் தாறுமாறாகப் பேசி வேலை வாங்குவான். அவனைக் கண்டால் பெண்களுக்குப் பிடிப்பதே இல்லை. மகா கெட்டவன்.
அவனை விட்டால் யாரை அடிப்பது? சின்னத்துரைக்கு அடிப்பதா? முனியனுக்கு அடுத்து அவளது வெறுப்புக்கு அவர் தான் காரணமாக இருந்தார். அவர் பார்வைக்குப் பலமுறை அவள் இரையாகி வெட்கித்துப் போவாள். சிலபோது தனித்து இருக்கும் வேளைகளில், அவர் வம்பு வார்த்தைகளும் அவளுக்குச் சொல்லி இருக்கின்றார். அவர் நிழல் கண்டாலே கால்கள் நடுங்கும். அவருக்கும் அடிப்பது எப்படி?
இவர்கள் இருவருமே சொல் லால் அடிப்பவர்கள். அப்படியானால் யாருக்கு அடிப்பது? தினமும் குடித்து விட்டு, அம்மணம்பாடி விட்டுப் பெண்களையும், பிள்ளைகளையும் அடித்து உதைக்கும் தோட்டத்துப் பெருங்குடி மக்களுக்கா?
அந்த அழுக்குவாய்ப் பேர்வழிகளுக்கு அடிப்பதனால் எத்தனைப்பேர் மிஞ்சுவார்கள்? இவர்களுக்கு அடித்தாலும் உதைத்தாலும் குடிப்பதைக் குறைக்கவா போகின்றனர்? அன்றி அடிப்பதையும் உதைப்பதையும் தான் விட்டுவிடப் போகின்றார்களா? செவ்வந்திக்கு விடையாக எதுவும் தோன்றவில்லை. அம்மா தந்த சாயத்தை நாக்கில் நக்கிக் கொண்ட சீனிப் பருக்கைகளோடு உள்ளே இறங்கவிட்டாள். காலைப் பனிக்குளிருக்கு அந்தச் சூடான தேநீர் இதமாகவே இருந்தது.
சில பொழுது கழிந்ததும், உணவுக்காய்க் கிடைத்ததைப்
விட்டபடி மலைக்குப் புறப்பட்டாள் செவ்வந்தி.
104 ஜின்னாஹ்

“இதுதான் இவ்வேளை உணவு” என்று எதைத்தான் அவர்கள் தேர்ந்து உண்டார்கள்? அன்றாட வயிற்று நெருப்பை அணைப்பதோடு தேசத்தின் பொருளாதாரத்தைத் தாங்கிப் பிடிக்க, கைகளுக்கும் கால்களுக்கும் உரமூட்டிக்கொள்ள, கிடைப்பதைக் கொண்டு வயிற்றை நிரப்பும் கூலிப்பட்டாளம் தானே அந்தத் தோட்டங்களில் வாழும் அப்பாவி மக்கள்?
கோணிச்சாக்கை இடுப்பில் சுற்றி கயிற்றால் இறுக்கிக் கட்டிக் கொண்டாள். வழியில் மாரியாயி செவ்வந்தியோடு சேர்ந்து கொண்டாள். மனதில் கனக்கும் கேள்விகளை யாரிடமாவது கேட்டுவிட வேண்டுமென்று அவள் மனம் துடித்தது.
மாரியிடம் பேசுவதில் பயனில்லை என்பது அவளுக்குத் தெரியும். பள்ளிப் படிகளையே கண்டிராத அவளிடம் இவ்வாறான பிரச்சினைகளுக்குப் பதில் எங்கே கிடைக்கப் போகின்றது என்பதால், வெற்றுப் புன்சிரிப்பை மட்டும் முகமனுக்காய் உதிர்த்து விட்டு கூடவே நடந்தாள்.
மலையில் பெண்கள் தங்கள் தங்கள் நிரைகளைப் பிடித்துக் கொண்டு இயங்கலாயினர். அன்று பனித்திருந்த பனிமுத்துக்கள், விரல்கள் பட்டுத் தெறிக்க, விரல்கள் இயந்திரங்களாக மாறித் தொழிற்பட்டன.
米米米
செவ்வந்தியும் வேலையில் சேர்ந்து கொண்டாள். பழக்க தோஷத்தால் கைகள் இயங்கினாலும், அவள் எண்ணத்தில் “யாரை அடிப்பது” என்ற கேள்வியே மேலோங்கி நின்றது.
கங்காணி முனியன் வழக்கம் போல் காலையிலேயே வாயை நனைத்துக் கொண்டதால் வெறியில் யாராருக்கோ எதையெதையோ
சொல்லிக் கொண்டிருந்தான்.
G105)- பெற்றமணம்

Page 62
அவன் வாய், பேசாதனவற்றையும் உரத்துப் பேசிக் கொண்டிருந்தது. வழக்கமான பல்லவிதான். எவருமே அவன் வார்த்தைகளைக் கருத்தில் வாங்கிக் கொள்ளவில்லை.
திடீரென்று செடியில் மேய்ந்த தன் கையை எடுத்துக் கன்னத்தில் ஓங்கி அறைந்து கொண்டாள் செவ்வந்தி. அவள் கன்னத்தில் இரத்தபானம் அருந்திக் கொண்டிருந்த ஒரு பெருச்சாளி நுளம்பு அவள் உட்புறக்கையில் நசுங்கிக் கிடந்தது. அதைச் சுற்றி இரத்தம் படிந்திருந்தது.
“நாடே உறிஞ்சுவது போதாதென்று நுளம்பு வேறு
''
ജൂഖണ്
அலுத்துக் கொண்டாள்.
கன்னம் இன்னும் வலித்தது. கையுள் நசுங்கிக் கிடந்த நுளம்பைக் கண்டதும், மனத்துக்குள் ஏனோ ஒரு திருப்தி. உடுத்தி இருந்த கோணிச் சாக்கில் கையைத் துடைத்துக் கொண்டாள். பாவம் போலும் இருந்தது அவளுக்கு.
“நாமென்ன செய்வது கடித்தது, அடித்தேன்!” என அவள் மனம் திருப்தி கொண்டது.
காலையில் பறித்த கொழுந்துக் கூடையோடு நிறுவைக்காக மடுவத்தை அடைந்தாள் செவ்வந்தி. தனது முறை முடிந்ததும் பகல் உணவாக எதையாவது போட்டுக் கொள்ள லயத்துக்கு வந்தாள். மீண்டும் சுவரே அவள் கண்களை உறுத்தியது. பார்வையால் அந்த வரிகளை ஜீரணித்துக் கொண்டு உள்ளே புகமுயன்றாலும், மனதில் பட்ட சில கேள்விகள் அவள் சிந்தனையைக் குடைந்தன. யாரிதனை எழுதினார்கள்? அவர்கள் நோக்கம்தான் என்ன? நிறுவை முடிந்து வீட்டுக்கு வந்த செவ்வந்தி வாசற்படியைக் கடக்கும் போது கால் விரலிடையில் ஏதோ உறுத்துவதை உணர்ந்தாள். குனிந்து விரலிடுக்கில் ஒட்டிக்கொண்டு இரத்தம்
106 ஜின்னாஹ்

பருகிய அட்டையைச் சுட்டு விரலிலும் பெருவிரலும் கூட்டிப் பிடுங்கி உள்ளே அடுப்பில் எரிந்து கொண்டிருந்த நெருப்பில் வெறுப்போடு வீசினாள்.
கடித்த இடம் வலித்தது. ரத்தமும் கசிந்தது. வழக்கமான செய்திதான் என்றாலும், அட்டையை நெருப்பிலிட்டது என்று மில்லாதவாறு இன்று அவளுக்குத் திருப்தியைத் தந்தது.
உள்ளே உணவு தயாரிக்கும் அம்மாவுக்கு உதவினாள். ஆயினும் அவள் மனத்தில் எழுந்த கேள்விகளுக்கான விடைகளைத் தேட மனம் அங்கலாய்த்தது. யாருக்கு அடிப்பது? சட்டென நினைவில் தேவகி தோன்றினாள். தேவகிக்கும் அவளுக்கும் நெருங்கிய தோழமை. சற்றுத் தொலைவெனினும் அடுத்துள்ள லயத்தில் வசிப்பதால் அடிக்கடி சந்தித்துக் கொள்வார்கள். பள்ளியில் கூடி ஒன்றாகப் படித்தவர்கள்.
தேவகியிடம் இதுபற்றி விசாரிக்க வேண்டுமென அவள் உள்மனம் கூறியது. மாலையானதும் அவளைக் காண வேண்டும் என்ற முடிவோடு மீண்டும் மலைக்குப் புறப்பட்டாள்.
இடையில் வயிற்றுக்குள், அம்மா கொடுத்த சோறும் கருவாட்டுக் குழம்பும் புகுந்து கொண்டன. குழப்பத்தோடு கொழுந்து பறித்து, மாலை நிறுவைக்குப் பின் லயத்துக்கு வந்த செவ்வந்தி, கைகால் கழுவிக் கொண்டு புறப்பட்டாள். சுடச்சுடக் கிடைத்த ஒரு கோப்பைத் தேநீர் உடம்புக்குத் தெம்பைத் தந்தது.
தேவகியின் லயத்தை அடைந்தாள். அங்கு அவளுக்கோர் அதிர்ச்சி காத்திருந்தது. அந்த லயத்துச் சுவரிலும் அதே வரிகள் மீண்டும் மீண்டும் பலமுறை எழுதப்படடிருந்தன.
செவ்வந்தி வைத்த கண் வாங்காது தேவகியை அவசரமாய் அழைத்தாள். அவள் குரல் கேட்டு வெளிவந்த தேவகி "செவ்வந்தி! வாடி உள்ளே!” என்றாள் முகம் மலர.
107 பெற்றமனம்

Page 63
அவள் அழைப்பைப் பொருட்படுத்தாத செவ்வந்தி, “தேவகி, சொவர பாத்தியா?” என்றாள். “காலையில் பார்த்தேன். எவனோ பொளப்புக் கெட்ட பய சொவர நாசம் பண்ணிருக்கான்!” என்றாள் அவளும் பதிலுக்கு.
“இல்லடி எங்க லயத்திலையும் எவனோ இப்படித்தான் எழுதி இரிக்கான். இதுக்கு ஏதாச்சும் ஒரு காரணம் இருக்கணும்' என்று செவ்வந்தி சொல்ல தேவகி சற்றுச் சிந்திக்கலானாள்.
அவள் வார்த்தைகளை உதிர்த்த தோரணை, கண்களில் தோன்றிய வியப்பு, தேவகியை அவ்வாறு சிந்திக்கப் பணித்தன.
சிறிது நேரம் இருவரும் பேசாதிருந்தனர். இதைச் செய்தவர் யாராக இருக்கலாம் என்பதில், இருவர் மனங்களும் ஒருமித்துத் தேடலாயின.
அவ்வேளை, நீண்ட மலைத் தொடரில் தன்பணி முடித்த கதிரவன் தன்னை மறைத்துக் கொள்ள, பூமி இருட் கரும்பட்டால் தன்னைப் போர்த்துக் கொள்ளத் தொடங்கினாள். அந்த மலை மக்களின் வாழ்வை அதன் செய்கை பிரதிபலிப்பது போலிருந்தது.
விளக்கு வைத்து வெகு நேரமாகிவிட்டதால் நாளை மற்ற லயங்களிலும் தோட்டங்களிலும் இது பற்றி விசாரித்தறிவது என்னும் முடிவோடு விடைபெற்றுக் கொண்டனர் தோழிகள்.
மறுநாள் காலை, மூடுபனிக்குள் முகம் புதைத்துக் கொண்ட சூரியன் ஒளிக்கரங்களை ஒளித்தே காய்ந்தான். வெண் பனியின் முத்துக்கள், தேயிலைத் தளிர்களில் இளவெயிலின் மெல்லிய ஒளிபட்டுத் துலங்கிக் கொண்டிருந்தன. அவற்றின் விதியை அறியாதவைகளாய்.
108 ஜின்னாஹ்

தோட்டத்து லயங்களெல்லாம் விழித்துக் கொண்டன. பெண்கள் தத்தமது வீட்டுக் கடமைகளில் துரிதமாயினர். வாழ்நாள் முழுவதும் வீட்டுப் பணியும் தோட்டத்து வேலையும்தான் அவர்களின் தலையெழுத்தாயிற்றே.
செவ்வந்தி அம்மாவுக்கு உதவினாள். அன்றைய அவள் இயக்கத்தில் வேகம் இருந்தது.
எதையோ சாதிக்க நாடுபவள் போல் இயங்கினாள். அம்மாவுக்கு மகிழ்வாக இருந்தது. ஆனால் அதன் காரணம் என்ன என்பதை அவள் அறிந்திருக்கவில்லை.
வேலைகள் முடிந்ததும் கூடையைச் சுமந்தபடி தோட்டத்துக்குப் புறப்பட்டாள் செவ்வந்தி. வழியில் மாரி முத்துவைக்
கண்டாள்.
கையில் கவ்வாத்துக் கத்தி இருந்தது. கூரிய அந்த ஆயுதத்தால் எத்தனையோ காரியங்களைச் செய்ய முடிந்தாலும், அது செய்யப்பழகிக் கொண்ட ஒரேயொரு வேலை தேயிலைச் செடிகளைக் காலத்துக்குக் காலம் சிரச்சேதம் செய்வது ஒன்று மட்டுமே.
நீண்ட நாள் இடைவெளிக்குப்பின், இன்றுதான் மாரி வேலைக்குப் போய்க் கொண்டிருந்தான். ஒரு மாதத்திற்கு முன் நகரத்துள் வைத்து அடியுண்டவர்களில் அவனும் ஒருவன். பலர் காயமுற்றிருந்தாலும் மாரிமுத்தே கடுமையான வெட்டுக் காயத்துக்குள்ளாகி இருந்தான்.
அவன் தலைப்புண் குணமாக ஒன்றரை மாதங்கள் பிடித்தன. தலை தொட்டு முகம் வரை காயம் நீண்டு விட்டதால் மாறாத ஒரு பெரும் வடு முகத்தை விகாரப்படுத்திக் கொண்டிருந்தது.
செவ்வந்தியைக் கண்டதும் அவன் புன்னகைத்தான்.
109 பெற்றமனம்

Page 64
“என்ன புள்ள, மலைக்கா?’ என்றான் எதையாவது அவளிடம் கேட்க வேண்டும் என்னும் முறைமைக்காக.
“ஆமாங்கண்னே! புண் சொகமாயிருச்சா?’ என்றாள் செவ்வந்தி பதிலும் கேள்வியுமாய்.
“ஆமா! இன்னைக்குத்தான் வேலைக்குப் போறேன்!” என்று சொன்னபடி அவளைக் கடந்து அவன் தன் வழியே நடந்தான்.
அவன் கையிலிருந்த கல்வாத்துக் கத்தி சூரிய ஒளியில் சுடரிட்டுத் துலங்கியது.
நாட்டில் ஏற்பட்டுள்ள பயங்கரவாதத்திற்கு அப்பாவிகள் பழிவாங்கப்படுவது, இன்று சாதாரண நிகழ்வுதான். ஆயினும் சம்பந்தமே இல்லாத ஓர் இனமான நம்மவர்கள் ஏன் இப்படி அடிக்கடி தாக்கப்பட வேண்டும்.?
நாட்டின் உயிர்நாடியே நம் கையில் இருக்கும்போது, இவ்வாறான அநியாயங்களுக்கு நாமேன் முகம் கொடுக்க வேண்டும்? பொருளாதாரத்தைத் தாக்குப்பிடிக்க உயிர் கொடுக்கும் பணிக்குக் கிடைக்கும் பரிசு இதுதான் போலும். அவள் நெஞ்சு கனத்தது. ஒரு முறையன் று பல முறை நகரத் தை அணி டியுள் ள தோட்டங்களுக்குள்ளும் , காடையர்களின் கை வரிசை காட்டப்பட்டுள்ளனவே. வசதிபடைத்த நகர்ப்புறக் கடைகள் பலவும், தமிழருக் குச் சொந்த மென்பதால் தெரிந்து தெரிந்து சூறையாடப்பட்டனவே.
உயிருக்குப் பயந்து காட்டுக்குள் குழந்தை குட்டிகளுடன் எத்தனை நாட்கள் ஒடி ஒளிந்துள்ளோம். இவ்வாறு சிந்தனை வயப்பட்ட செவ்வந்தி மலையை அடைந்தாள்.
அவளின் நீண்ட சிந்தனை முனியனின் அட்டகாசக் குரலால் அவிந்து போனது. அவள் நிரை பிடித்துக் கொழுந்து பறிக்கத் தொடங்கினாள்.
C110D ஜின்னாஹ்

நிறுவைக்கு நேரமானதை அறிந்த பெண்கள், மடுவத்தை நோக்கி நடந்தனர். செவ்வந்தியும் சேர்ந்து கொண்டாள்.
மடுவத்தில் தேவகியைக் கண்டாள். தேவகி பேச்சுவாக்கில் தேடிக் கொண்ட சில முக்கிய செய்திகளைக் கேட்ட செவ்வந்தி அதிர்ந்து போனாள்.
தோட்ட லயங்கள் பலவற்றிலும் இந்த வாசகங்கள் எழுதப்ப்டுள்ளதாகவும், எல்லா லயங்களிலும் ஒரே விதமான வரிகள் என்றும் அவள் சொன்னாள்.
இது ஒருவரன்றிப் பலர் கூடிச் செய்யும் ஒரு கூட்டு முயற்சியென்ற தான் சந்தேகிப்பதாகவும் சொன்னாள். விபரம் கேட்கப் போய்ப் பல படித்த இளம் பெண்கள் அதுபற்றி மிகுந்த அக்கறை கொண்டு உரையாடியதாகவும் தேவகி சொல்ல, அது மேலும் செவ்வந்திக்கு ஆச்சரியத்தையே தந்தது.
செவ்வந்தியின் சிந்தனையில் சில சந்தேகங்கள் தோன்றலாயின. இப்போதெல்லாம் படிப்பற்ற காலம் போய்ப் படித்த இளைஞர்களாலும், பெண்களாலும் ஒவ்வொரு லயத்தின் காமராக்களும் நிறைந்து போயிருந்தன.
தமது முன்னோர்களின் வாழ்வைத் தொடர, அவர்கள் வெறுப்புற்றிருப்பதும் தமது கல்வித் தகைமைக்கேற்பத் தொழில் வாய்ப்புக் கிடைக்காமையால், மனம் நொந்து போயிருப்பதையும் அவள் அறிவாள்.
இந்த நிலையில் செய்யும் தொழிலையும் செய்ய வாய்ப்பில்லாமல், இனக்கலவரங்களால் ஏற்படும் பாதிப்பு, அவர்களை மனக்கவலை கொள்ளச் செய்தது.
செவ்வந்தி விடை காண முடியாத ஒரு சூனியத்துள் தன்னைப் புதைத்தவளாக வீடு சென்ற போது, நகர்ப்புறம் போயிருந்த அப்பாவை வழியில் சந்தித்தாள். இருவரும் லயத்தை அடைந்தனர்.
C11 D பெற்றமனம்

Page 65
அப்பாவின் கையில் அன்றையப் பத்திரிகை இருந்தது. தந்தை படிப்பறியாதவராயினும், நகர்ப்புறம் போகும்போதெல்லாம் அன்றைய நாளிதழ் ஒன்றை வாங்கி வருவார் செவ்வந்திக்காக.
பத்திரிகையை வாங்கிக் கொண்ட செவ்வந்தி, முதற் பக்கத்தைப் புரட்டினாள். “கோயில் திருவிழாவில் குழப்பம் உண்டாக்க விஷமிகளின் முயற்சி” கொட்டை எழுத்துக்களில் கட்டமிட்டுப் போடப்பட்டிருந்த ஒரு செய்தி அவள் கண்களை உறுத்தியது.
“மஞ்சள் நீராடச் சென்ற இரு கூட்டங்களுக்கிடையில் கைகலப்பு இனக்கலவரத்தைத் தூண்ட முயற்சி” தொடர்ந்து படிப்பதை நிறுத்திவிட்டுச் செவ்வந்தி சிந்தனை வயப்பட்டாள்.
முன்னரும் ஒரு முறை இவ்வாறுதான் கோயிலுக்கருகிலேயே குழப்பம் விளைவித்திருந்தனர். தோட்டத்து இளைஞர்கள் பலர் கடுமையாகத் தாக்கப்பட்டனர். வீதியோரக கடைகள் பலவும் தீ நாக்குகளுக்கு இரையாக்கப்ப்ட்டன.
வேறு எங்கேனும் இனங்களுக்குள்ளே சிறு கலவரம் தோன்றினாலும், அதன் பிரதிபலிப்புக்களாகத் தோட்டத்து மக்களும் தாக்கப்பட்டனர். வேண்டுமென்றே இதுவோர் மரபாக மாறி இருப்பதை அவளறிவாள்.
முன்னர் நடந்த நிகழ்வுகள் பல, அடுக்கடுக்காக அவள் கண் முன் நிழலாடின. எப்போது நாம் இந்த மண்ணில் சுதந்திரமாக நடமாடுவது? எமக்கொன்று நாம் கொண்டுள்ள உரிமைகளை எப்போதுதான் அனுபவிப்பது?
தொட்டதற்கெல்லாம் அடிவாங்கும் இந்நிலை மாற, நாம் என்னதான் செய்வது? நிச்சயம் இந்நிலை மாற வேண்டும். அன்றேல் மாற்றியாக வேண்டும். ஏதோ ஒரு வைராக்கியம் மனத்தில் தோன்ற மீண்டும் பத்திரிகைச் செய்தியைத் தொடர்ந்தாள் செவ்வந்தி.
Cl 2D ஜின்னாஹ்

“கடந்த 13ம் திகதி தேர்த்திருவிழா ஆரம்பமானது. இதில் கலந்து கொள்ள வந்த அந்தப்பகுதிப் பெரும்பான்மை இன இளைஞர்களுக்கும், தோட்டத்து தமிழ் இளைஞர்களுக்கும் மஞ்சள் நீர் விளையாட்டின் போது தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது பெரும்பான்மை இன இளைஞர்களால் ஒரு தமிழ் இளைஞர் தாக்கப்பட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த தமிழ் இளைஞர்கள் பெரும்பான்மையின இளைஞர்களைக் கடுமையாகத் தாக்கியுள்ளனர்.”
இதுதான் அந்தச் செய்தி. படித்து முடித்த செவ்வந்தியின் சிந்தனையில் தெளிவாக ஒரு மின்னல் தெறித்து அடங்கியது. அது அந்த லயத்துச் சுவரின் வாசகங்கள்.!
அவள் அதரங்கள் அந்த வார்த்தைகளை அவளை அறியாமலேயே மீண்டும் மீண்டும் உச்சரித்தன. மனமோ இருபத்தோராம் நூற்றாண்டை அச்சமின்றி முகங்கொள்ள வைராக்கியம் கொண்டது.
வீரகேசரி
05.09. 1989.
13 பெற்றமனம்

Page 66
Qრlრ}-(ხ Qრერ-(ხ Qრlრ-!
(அநாதை(ப்பெண்)களுடன் நீதமாக நடக்க இயலாது என்று நீங்கள் அஞ்சினால் உங்களுக்கு விருப்பமான பெண்களை இரண்டிரண்டாக, மும்மூன்றாக, நான்கு நான்காக மணமுடித்துக் கொள்ளுங்கள், ஆனால். (திருக்குர்ஆன்:)
“சீ. என்ன வக்கிரமான மனசு வளர்ந்த பிள்ளைகள் நாங்களிருக்க, இப்படியொரு ஆசை வந்திருக்கவே வேண்டாம். இந்த மனுஷனுக்குத்தான் மூளை கெட்டுப்போனாலும் அவளாவது யோசித்திருக்க வேண்டாமா?”
வயது பதினேழைக் கடந்துவிட்ட சலீம் நெருப்பாய்த் தகித்தான். சின்னவள் நஜிமா நடப்பது என்னவென்ற விளக்கமற்று, ஒரு பக்கமாய்த் தன்னை ஒதுக்கிக் கொண்டாள். அவளுக்கு வயது பத்தேதான் ஆகின்றது. விபரமறியாவிட்டாலும், அவள் கண்கள் பயத்தால் பொழிந்தன. அடிக்கடி அவள் பார்வை அண்ணன் மீதும் தாயின் மீதும் மாறிமாறிப் பதிந்தது.
114 ஜின்னாஹ்

தாயின் கண்ணிருக்கு உருகிப் போனார்கள் மக்களிருவரும். கேள்விப்பட்ட செய்தி காய்ச்சிய ஈயத்தைக் காதில் கொட்டியது போலிருந்தது சுலைகாவுக்கு. அதிர்ந்து போனாள்.
தன் கணவனுக்கு என்னதான் நடந்தது? ஏணிப்படிச் செய்து கொண்டார்? அவருக்குக் குறையாக எதைத்தான் விட்டு வைத்தேன்? நான் இருபது வருட வாழ்வில் ஒரு மனைவியின் கடமைகளில் ஒன்றையேனும் நான் செய்யாது விடவில்லையே!
வாய்க்குச் சுவையாய் உண்ணும் உணவிலிருந்து, நேர்த்தியாய் உடுக்கும் உடைவரை, அனைத்தும் போக அவர் வெளிக்கிருத்தியங்களுக்கும் நான் தோள்தரத் தவறவில்லையே?
இதுவரை காலமும் அன்பும் மரியாதையும் கொண்டிருந்த கணவன் மேல், இனம்புரியாத ஒரு வெறுப்பே அவளுக்கு எஞ்சியது. ஏன், ஒரு தீண்டத்தகாத அருவெறுப்பும் அவள் உள்ளத்தில் பொங்கி வழிந்தது.
காலையில் தான் கேள்வியுற்றாள். தான் வேலை பார்க்குமிடத்தில் ஒருத்தியை இரண்டாம் தாரமாக்கிக் கொண்டாரென்று. அடங்காத வெள்ளம் போல் கண்ணிர் கண்களை ஒடித்துப் பிரவாகம் பெற்றது. அவளின் ஒவ்வொரு துளிக் கண்ணிரும் சலீமின் நெஞ்சுள் அமிலமாய்ச் சுட்டது.
தந்தையின் செய்கையை அவனால் ஜீரணிக்க முடியவில்லை. வேதனை ஒரு புறத்தும், அதை விஞ்சிய ஆத்திரம் ஒருபுறத்தும் பிஞ்சு இளைஞனை நிதானமிழக்கச் செய்தன. அவன் தன்னைக் கட்டுப்படுத்தத் தன்னை ஒரு சோபாவில் பலவந்தமாய் இருத்திக் கொண்டான்.
米米来
115 பெற்றமனம்

Page 67
காலையில் வேலைக்குப் புறப்பட்ட கணவனின் முகம் சோபையிழந்து கிடந்தது. அயன் செய்து தொங்கிக் கொண்டிருந்த உடைகளில் ஒன்றைத் தேர்ந்து அணிந்து கொண்டாலும், காலையுணவில் கரிசனையற்று ஏதோ வைத்திருந்ததால் உண்பவர் போல் காட்டிக்கொண்டு; யாருடனும் எதுவும் பேசாமல் சென்றுவிட்டது; சுலைகாவின் நெஞ்சுக்குள் உறுத்தியது. பள்ளி செல்லும் பிள்ளைகளுக்குக்கூட ஒழுங்கான விடை தரவில்லை அவர்.
முதல் நாள் அவள் வேலையை விட்டு வந்திருந்தாள். வேலைப் பளு, போக்குவரத்து இடைஞ்சல்கள், வீட்டில் பிள்ளைகளின் அன்றாடக் கடமைகள் எல்லாம் ஒன்றாகி அவளை அலுக்கச் செய்திருந்தன. உடற்களையோடு மனமும் சோர்ந்திருந்ததால், வேலைகள் முடிந்து படுக்கையில் சாய்ந்தவள், அன்று காலைவரை தன்னை அறியாது உறங்கிப் போனாள்.
காலையில் கடிகார்த்தின் அலார ஒலிதான் அவளின் தலையில் ஓங்கியடித்து எழுந்திருக்கச் செய்தது. பிள்ளைகளைப் பள்ளிக்கு அவசரமாக வெளிக்கிடுத்தும் வரை வேகமாய்ச் சுழன்றாள். கணவனுக்கான பணிவிடைகள் அடுத்துத் தொடர்ந்ததால் கடமை உணர்வே அவளுக்கு விஞ்சி நின்றது. அனைத்தையும் கச்சிதமாய் முடித்துவிட்டுத் தானும் வேலைக்குப் போக ஆயத்தமாகும் போதுதான் கணவனின் செய்கைகளில் தோன்றிய மாற்றங்களை அவளால் அவதானிக்க முடிந்தது.
பெரிதாக அலட்டிக் கொள்ள எதுவும் நடந்திராவிட்டாலும், அப்படி ஒன்று நடக்காமல் விட்டதே அவளுக்கு நெஞ்சுறுத்தலைத் தந்தது. இது ஏன் என்ற வினாவுக்குத் தெளிவில்லாத மனத்தோடு, அவள் தன் வேலைக்குப் புறப்பட்டாள்.
116 ஜின்னாஹ்

பிறப்பின் அர்த்தமே புரியாத பெண்கள். பேதையர் என்பது எவ்வளவு பொருத்தம். ஏழு வயதிற்கு மட்டுமா இப்பெயர் பொருந்தும். வாழ்வின் எல்லாப் பருவத்திற்குமே பொருந்தும் போலல்லவா இருக்கின்றது! அறியாமலா முன்னோர் பெயர் வைத்தார்கள். வீட்டைவிட்டுப் புறப்பட்டதிலிருந்தே சஹிதீன் சிந்தனையில் பெண்மை பலவாறாக விமர்சிக்கப்பட்டது.
உண்ணுவதும், குடிப்பதும், உடுப்பதும், வேலைக்குப் போவதும், வீட்டு வேலைகளைச் செய்வதும்தான் வாழ்வு என்று ஒரு சிறிய வட்டத்துள் தம்மைச் சுருக்கிக் கொண்டு வாழும் வாழ்வையே: திருமணத்தின் பின் பெரும்பாலான பெண்கள் தமக்காக வரித்துக் கொள்கின்றனர்.
தமது இளம் வயதின் மனத்தேடல்கள் எல்லாம் சட்டென மறந்துவிடும் மனக்கோளாறு பெண்களுக்கே உரியன போலும். பெரும்பாலும் தன்னைச் சுற்றியே வாழ்வைச் சுயநலமாய்ச் சிந்தித்து ஒடுங்கிக் கொள்கின்றனர். தன்னை நம்பி எத்தனையோ எதிர்பார்ப்புக்களுடன் கரம் பிடிக்கும் கணவன்மாரின் பக்கம் ஆழமாகச் சிந்திக்க அவர்கள் மனம் மறுக்கின்றன.
தியாகிகளாகத் தம்மை அடிக்கடி நினைவுபடுத்தத் துாண்டும் அவர்களின் தியாகம், புறக்கிருத்தியங்களோடு மட்டுப்படுத்தப்படுவது ஏன்? ஆண்டவன் படைப்பில் பெண்களைவிட ஆண்களுக்குத் தேவைகள் சற்று அதிகமே. மனக்கட்டுப்பாடும், பொறுமையும் அவர்களை விடக் குறைவென்றால் யதார்த்தம் அதுவாகும்.
சஹித் தனது நாற்காலியில் அமர்ந்து கொண்டான். முன் மேசையில் நிறைந்து கிடக்கும் எந்தக் கோவையிலும் அவன் புலன் நாடவில்லை. இருந்தும் மேலதிகாரியின் கழுகுப் பார்வைக்கு அஞ்சி ஒன்றை எடுத்துப் புரட்டினான்.
117 பெற்றமனம்

Page 68
அவசரக் கடிதங்கள், அனுப்பப்பட வேண்டிய குறிப்புகள் அவனைக் கடமைக்குத் துாண்டியதால், சொந்தப் பிரச்சினைகள் மெல்ல அவன் சிந்தனையிலிருந்து நழுவிக் கொண்டன.
மாலையானதும் உடற்களையைவிட மனக்களையே அவனுக்கு அதிகமாகத் தோன்றியது. வீட்டை அடைந்ததும் உடல் கழுவி உடைமாற்றிக் கொண்டதும், தொலைக்காட்சிப் பெட்டியின் குழிழை அழுத்தி விட்டு, அதன் முன்னமர்ந்து கொண்டான். சுலைகா சூடான தேநீர் பரிமாறினாள்.
இருவருமே எதுவும் பேசிக்கொள்ளவில்லை. தப்பெதுவும் தான் செய்யாததால் தானாகவே இளகட்டும் என்று அவள் எண்ணி வலிந்து பேச்சுக் கொடுக்காது, தேநீர்க் கோப்பையைக் கையில் தந்துவிட்டு தன் வேலைகளில் கருத்தானாள்.
ஒரு சில மணித்துளிகள் மெல்லக் கரைந்தன. அப்போது சலீமுக்கு வயது பத்து. சின்னவள் மூன்று வயதை முடித்திருந்தாள். மகனுக்கு பள்ளிப் பாடங்களுக்கு உதவியவள், மகளைக் கையில் ஏந்தியபடி மீண்டும் முன்வாசலுக்கு வந்தாள் சுலைகா. இன்னும் கணவன் தொலைக்காட்சியிலேயே கண் பதித்திருந்தான்.
இராப் போசனத்திற்கான நேரம் வந்தது. உணவுகளை மேசையில் பரிமாறிவிட்டு முதலில் குழந்தைகளை அழைத்தாள் சுலைகா. தங்கள் உதிரத்தில் உதித்தவர்களுக்கே முதன்மை தருகின்றாள் என்ற எண்ணம் போலிருந்தது அவள் அழைப்பு.
“என்ன, சாப்பிட வரலியா”? கணவனைப் பார்த்துச் சற்றுத் தாமதமாகவே அவள் கேள்வி பிறந்தது.
“எனக்கொன்றும் இப்ப பசியில்ல. பிள்ளைகள் சாப்பிடட்டும்!” தொலைக்காட்சியில் பதிந்த கண்ணோடு அவன் பதில் வெளிவந்தது.
8 ஜின்னாஹ்

சுலைகா அலட்டிக் கொள்ளவில்லை. பிள்ளைகளுக்கு உணவு தந்து அவர்களைத் துாங்க வைத்தாள். அவள் மனத்தில் எந்தவிதக் குற்ற உணர்வுந் தோன்றவில்லை. இருந்தும் இந்த மனிதனின் நடைமுறை மாற்றத்திற்கு அவள் காரணம் தேடினாள்.
தொலைக்காட்சி நாடகம் ஒன்று முடிவுற்றது. சஹித் மெல்ல எழுந்து அதனை அணைத்துவிட்டுப் படுக்கை அறையை நோக்கி நடந்தான்.
“ஏங்க சாப்பிடறதல்லையா? நான் கூடப்பசியாத்தானே யிருக்கேன்’?
“உனக்குப் பசியெண்ணாச் சாப்பிடு. நானா வேணான்டேன்? எனக்குப் பசியில்ல. சாப்பாடு வேண்டாம்.”
“ஏன் வாற வழியிலே ஏதாச்சும் சாப்பிட்டீங்களா?” “இந்தப் பாரு சுலைகா., எனக்குக் கடையேறிச் சாப்பிட்டுப் பழக்கமில்லை! அது தெரியாதா ஒனக்கு அப்படிச் சாப்பிட்டுப் பழக்கமில்லாதது தான் இப்ப தவறாத் தெரியுது”
அவன் வார்த்தைகள் அவளைச் சுட்டன. அவளுக்குப் புரிந்தது இந்தச் சொற்களுக்குப் பொருள் வேறு என்று.
வார்த்தைகள் உதிர்த்தவன் அவளைத் தனித்து விட்டு விட்டு உள்ளே நுழைந்து கதவைத் தாழிட்டுக் கொண்டான்.
சுலைகாவின் சிந்தனை முகத்தில் ஒரு ஆண்கள் படையே தோன்றி அவளை நோக்கி நகைத்தது.
காலையில் எல்லோருக்கும் முன் நான்தானே எழுந்து கொள்கின்றேன். காலைத் தேநீரிலிருந்து பகல் உணவுவரை நானேதான் செய்கிறேன். பிள்ளைகளைப் பள்ளிக்கு ஆயத்தம் செய்வது முதல் அவர்களை அனுப்புவது, தொடர்ந்தும் இவருக்கும் வேண்டியன செய்துவிட்டு, நானும் வேலைக்குப் போகின்றேன்.
119 பெற்றமனம்

Page 69
தொடர்ந்து காரியாலயப்பணி. மீண்டும் வீடு. வீட்டுப் பணிகளின் தொடர்ச்சி. அப்பப்பா தினமும் அதுதானே எனக்கும் என் போன்ற அனைத்துப் பெண்களுக்கும் உடற்சோர்வு, மன உளைச்சல்.
ஏன்தான் இந்த ஆண்கள் இப்படிச் சுயநலமிகளாக இருக்கின்றனரோ? பெண்களை வெறும் போகப் பொருளாகவே எண் ணுவதென்றால் பிள்ளைகள் எதற்கு? அவர்களை வளர்த்தெடுக்கும் பாரிய பொறுப்பெதற்கு?
அவள் நெஞ்சம் கனத்தது. இளமைக் காலத்தின் பசுமையான எத்தனைக் கனவுகள் திருமணத்தின் பின் தானாகவே கலைந்து போகின்றன! ஆரம்பக் காலச் சுவையான அனுபவங்கள் எப்படித்தான் காலம் முழுவதும் நீடிக்க முடியும்? அதற்கு உள்ளம் உவந்தாலும் உடல் உவக்காது போனால் என்ன செய்வது?
உணர்வுகளுக்கு எப்போதும் அடிமையாகிப் போகும் பலவீனம் ஆண்களுக்கு இறைவன் தந்த சோதனையா? அதற்கு ஈடு கொடுக்க எங்களால் இயலவில்லை என்றால்! நாங்கள் தான் என்ன செய்வது? அவளால் சிந்திக்கக்கூட இயலவில்லை. மன வேதனையால் பசியும் காய்ந்து போனது. போய்ப் பிள்ளைகளோடு படுத்துக் கொண்டாள்.
※米米
காலம் தன்னை அழித்துக் கொண்டு நாட்களையும் மாதங்களையும் வருடங்களையும் ஜீரணமாக்கிக் கொண்டிருந்தது. சுலைகா தன்னால் இயன்ற பொழுது சஹீதுக்குத் துணை நின்றாள். சோர்ந்த போது அவன் கோபத்திற்கும் புறக்கணிப்புக்கும் பாத்திரமானாள்.
இவ்வாறான ஒரு நாள்தான் அவளுக்கு அந்தச் சேதி நாராசமாய்ச் செவியுள் இறங்கியது. மறைக்க முடியாதவாறு மகனுந் தெரிந்து கொண்டான். தந்தையின் செய்கையிலில்லாத ஒரு
120 ஜின்னாஹ்

நியாயத்தை அவன் தேட முயலவில்லை. தாயின் கண்களில் உதிர்ந்து வடிந்த கண்ணிருள் அவன் தன்னைக் கரையவிட்டான். கோபமே எஞ்சியது. ஒழுங்காக வளர்க்கப்பட்டதால் வார்த்தைகள் பண்பாகவே வெளிப்பட்டன. ஆனால், அவன் ஒவ்வொரு வார்த்தைகளும் தீப்பொறியாய்ச் சிதறின. தாயின் மனத்துயருக்கு அவைகளாவது மருந்தாகட்டும் என அவன் எண்ணினானோ.
“உம்மா, நீங்கொண்டும் கவலைப்படாதீங்க! நானிருக்கேனில்ல ஆம்புளப்புள்ள வாப்பா சொமந்த சொமைய என்னாலையும் சொமக்க முடியும்!”
மகனின் ஆறுதல் வார்த்தைகள் அவள் நெஞ்சுக்கு இதமாக இருப்பினும், கணவனின் செய்கையை அவளால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஒருவனுக்கு ஒருத்தியென்னும் கீழைத்தேயப் பண்பாட்டில் ஊறிப்போன மனங்களுக்கு, அதுவே சரியெனப் படுவதில் தவறென்ன வேண்டும்?
ஒருவாறு கோபம் தணிந்து மகன் அமைதி அடைந்தான். அவள் படித்தவள் என்பதால், தலைக்கு மேல் போய்விட்ட வெள்ளத்தை எண்ணிப் பயனில்லைஎன்று, மனமுறுத்தத் தன்னைச் சற்று நிதானப்படுத்திக் கொண்டு எழுந்தாள்.
மன அமைதியின்மைக்கு மருந்து மாமறை குர்ஆன் என்ற எண்ணம் தோன்ற, அதனை எடுத்துப் புரட்டினாள். கருத்தோடு கூடிய திருமறை வசனங்களில் அவள் கண்கள் பதிய வாய் உச்சரிக்கத் தொடங்கியது. தன்னை மறந்து நெடு நேரம் ஒதினாள். அப்புனித வரிகள் அவள் நெஞ்சுக்கு அளவிலா ஆறுதலைத் தந்தன.
121 பெற்றமனம்

Page 70
நாட்கள் நகர்ந்தன. கணவன் வீட்டுப் பக்கம் தலை காட்டவேயில்லை. புதுத் தாம்பத்திய வாழ்வோ, அன்றிப் போனால் புயல் வீசும் என்று அஞ்சியோ, அவன் வரவைத் தாமதித்தான்.
மாதமொன்று மெல்லவே கழிய, ஒருநாள் ஞாயிற்றுக்கிழமை சஹித் வீட்டுக்கு வந்தான். அவளே கதவைத் திறந்து அவனுக்கு விலகி வழிவிட்டாள்.
பிள்ளைகள் இரண்டும் ஞாயிறு வகுப்புகளுக்குச் சென்றிருந்தனர்.
வாசலில் இருந்த சோபாவில் அவன் தன்னை இருத்திக் கொள்ள, சுலைகா ஒரு சுவரில் தன்னைச் சாத்திக் கொண்டாள். அவனையே அவள் பார்வை நிலைகுத்தி நின்றது.
தன் செய்கையில் நியாயமிருப்பதில் உறுதி கொண்டாலும், தன் முதல் மனைவியை ஏறெடுத்து நோக்கும் திராணி அப்போது அவனுக்கு ஏனோ இருக்கவில்லை.
சுலைகாவே முதலில் பேசினாள். பதற்றமின்றி அவள் வார்த்தைகள் மிக நிதானமாக வெளிப்பட்டன. ஏமாற்றத்தின், தோல்வியின், சுமை நெஞ்சுள் நிறைந்து கிடந்தாலும் கண்கள் காய்ந்தே கிடந்தன.
“நீங்க செஞ்சதில ஒரு தப்புமில்ல!’ அவள் வார்த்தைகளை அத்தோடு நிறுத்த, அவன் கண்கள் அகல விரிய அவளை நோக்கினான். அவனுக்குப் பேச நாவெழவில்லை. ஒரு பெரும் சூறாவளியை எதிர் கொள்ளும் எதிர்பார்ப்போடு வந்த அவனுக்குப், பனி போன்ற குளிரில் வெளிவந்த சொற்கள் ஆச்சரியத்தைத் தந்தன.
மீண்டும் அவளே தொடர்ந்தும் பேசினாள். "நீங்க செஞ்சதில எந்தத் தப்புமில்ல. யதார்த்தத்தை
122 ஜின்னாஹ்

மறுப்பது பொய். இசைந்து போகாவிடில் பாவம். பெண்மையின் உயர்வே இயற்கைக்கு ஒன்றுவதால்தான் நிதர்சனமாகும். ஆணுக்கும், பெண்ணுக்கும் இயற்கையே வேறுபாடுகளைத் தோற்றி நிற்கும் போது, அதனை மறுப்பதும் வெறுப்பதும் தோல்வியையே தோற்றுவிக்கும்.’
“உங்கள் மூலமாக நான் எத்தனையோ விடயங்களைப் புரிந்து கொண்டேன். பெண்களுக்கு இல்லாத உரிமையை இறைவன் ஏன் ஆண்களுக்குத் தந்தான். அவன் படைப்புக்களை அவனன்றிப் புரிந்தவர்கள் யார்? அதன் வெளிப்பாடுதான் உங்களின் செய்கையில் ஏற்படும் நியாயம்’
அவள் பேச்சை நிறுத்தினாள். அவன் கல்லாய்ச் சமைந்திருந்தான். பார்வை அவள் கண்களுக்கூடாய் அவள் நெஞ்சத்தைத் துழாவியது.
“என்னில் நீங்கள் எதிர்பார்த்ததில் பாதியைத் தான் என்னால் தர முடிந்தது. அதுதான் என்னால் முடிந்ததுங்கூட. மாறுபட்டு வாழ்வு நடத்துபவர்களும் இருக்கத்தானே செய்கின்றனர். அவ்வாறு ஒரு நிலை இறைவன் எனக்கு வைக்காதபோது, நான் பாக்கியம் செய்தவளாகின்றேன். எனக்கிருக்கும் இரு செல்வங்களும் உங்களால் கிடைத்த பெரும் பொக்கிஷங்கள் தான். குழந்தைப் பேற்றில்லாமல் வாழ்வே சூன்யமாய்த் தவிக்கும் எத்தனைப் பெண்களை நான் அறிவேன்.”
“உங்கள் செய்கை என்னை வருத்தியது உண்மைதான். அதற்கு ஆண்டவன் அருள் மறை விளக்கம் தந்தபோது, நான் மனித வாழ்வின் யதார்த்தத்தைப் புரிந்து கொண்டேன்.”
"ஆணுக்குப் பெண்ணும், பெண்ணுக்கு ஆணும் ஆடை போன்றவர்கள்’ என்று தாம்பத்தியத்தின் தத்துவத்தைச் சொன்ன இறைவேதம்.
C 123) பெற்றமணம்

Page 71
“அநாதை(ப்பெண்)களுடன் நீதமாக நடக்க இயலாது என்று நீங்கள் அஞ்சினால், உங்களுக்கு விருப்பமான பெண்களை இரண்டிரண்டாக, மும்மூன்றாக, நான்கு நான்காக மணமுடித்துக் கொள்ளுங்கள். ஆனால், (அவர்களிடையே) நிதானமாக நடந்திட முடியாதென்று நீங்கள் அஞ்சுவீர்களாயின், ஒரு பெண்ணை மட்டும் மண முடித்துக் கொள்ளுங்கள். அல்லது உங்கள் கரங்கள் சொந்தமாக்கிக் கொண்ட பெண்களையே மனைவியாக்கிக் கொள்ளுங்கள். நீதி தவறாமல் இருப்பதற்கு இதுவே மிக நெருக்கமானதாகும்.’ (திருக்குர்ஆன்)
“...என ஆணிகளுக்கு அனுமதியளித்துள்ளதே. ஆண்டவனை விட நாமா அறிந்தவர்கள்? தப்பான வழிகளில் தமது தேவைக்கு வடிகாலமைத்துச் சீரழிந்து, சேர்ந்துள்ள வர்களையும் சீரழிக்கும் கீழ்மையிலிருந்து ஆண்களைக் காக்க, ஏன் குடும்பங்களையே காக்க இவ்வாறு இறைவன் அனுமதியளித் துள்ளானல்லவா?”
என நீண்டதோர் பிரசங்கமே நடத்தி முடித்த சுலைகா, “இதோ, இதனைப் பாருங்கள்’ என ஒரு சஞ்சிகையை சஹித் முன் நீட்டினாள்.
உணர்வு பெற்ற அவன் அதனை வாங்கி அவள் காட்டிய பக்கங்களைப் படிக்கலானான். அது ஒரு பழைய 'ஆனந்த விகடன்’. மணியன் என்னும் பிரபலமான எழுத்தாளர் எழுதிய இதயம் பேசுகிறது என்னும் பிரயாணக் கட்டுரை தான் அது.
“மலேசியா நாட்டில் நான் ஒரு பெண் எழுத்தாளரைச் சந்தித்தேன். அவரோடு பேசுகையில் உங்கள் கணவர் எங்கே’ என வினவினேன். அவர் பதில் சொன்னார். அப்பதில் எனக்கு வியப்பையே தந்தது.
“எனது கணவர் சிவப் புவிளக் குப் பகுதிக் குப் போயிருக்கின்றார். நாளை காலையில் வந்துவிடுவார்’ எனச் சர்வ சாதாரணமாகக் கூறினார் அந்தப் பெண் எழுத்தாளர். நான் அதிர்ச்சியோடு எப்படி இதனை உங்களால் அனுமதிக்க முடிந்தது என்றேன். அவள் சொன்ன பதில் அவள் பரந்த மனதை என்னால் புரிந்து கொள்ள வைத்தது.
( 24) ஜின்னாஹ்

“என்னால் இயலாத போது அவர் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ள அவருக்கு நான் இடமளித்துள்ளேன். என் பொறுப்புகளுக்கிடையில் நான் சுயநலமியாக வாழத் தலைப்பட வில்லை.”
மணியனின் கட்டுரையின் முடிவும் இதனையே ஆதரிப்பதாக அமைந்திருந்தது.
படித்து முடித்த சஹித் விகடனைப் பக்கத்தில் வைத்துவிட்டு சுலைகாவின் முகத்தை ஏறிட்டு நோக்கினான். “பார்த்தீர்களா ஓரளவில் எனக்கும் அது சரியாகவே தோன்றுகின்றது. படித்த அந்தப் பெண்ணுக்கிருந்த மனப்பலம், இப்போது எனக்கும் இருக்கின்றது. ஆனால், உங்களைச் சிவப்புவிளக்குப் பகுதிக்கு அனுப்புவதற்கல்ல. நீங்கள் தேடிக் கொண்ட முடிவுக்குத் தலைசாய்க்க.”
சுலைகாவின் வார்த்தைகள் ஒவ்வொன்றும் அவன் நெஞ்சுள் இறுகிக்கிடந்த இருளை மெல்ல விலக்க, அதனுள் சுலைகா ஒரு ஒளிப்பிழம்பாய்த் துலங்கினாள்.
தனக் குரல் 04。02。2001
عامل نیل lی کامل ن- رجال رم)
“ஒருவனுக்கு ஒருத்தி’ என்ற தத்துவம், அவ்வப்போது தூக்கி நிறுத்தப்பட்டாலும், அது இலக்கிய காலத்திலிருந்தே தவிடு பொடியாகி வருகிறது என்பதற்கு இன்றைய “சின்ன வீடுகளும் 'சிவப்பு விளக்கு பகுதிகளும் சில்மிஷம் புரியும் கிளப்களுமே சான்றாகும். இதன் நடுவே, நடைமுறைக்கு ஒத்துப்போகும் வாழ்க்கை நெறியாக, இஸ்லாம் போதிக்கும் இல்லற தத்துவத்தின் மீது “ஒன்றும் ஒன்றும் ஒன்று’ என்ற இந்தக் கதை வெளிச்சமிடுகிறது. காலம் சிந்திக்க வேண்டிய சீரிய கருத்து எனலாம்.
06. 12. 2003 “காதிபுல் ஹக்”
எஸ்.ஐ. நாகூர் கனி
25 பெற்றமணம்

Page 72
ിരിഞ്ഞുീഞ്ഞും
66 துக்காக இப்படி வருத்தப்படுறே ஷமீமா? நானொண்டும் தப்பா சொல்லிடல்லியே! மார்க்கத்தில் அனுமதிச்ச ஒண்ட அனுபவிக்கிறது தப்பிலேம்மா. அப்படிச் செய்யாட்டித்தான் தப்புப் பண்ணுறோம்.”
“பொதுவான நியதிப் படி ஆம் பிளைங் க மேல பொம்பிளைங்களக்கு சில உரிமைகள் உண்டு, பொம்பிளைங்க மேலே ஆம்பிளைங்களுக்கு உள்ள உரிமைகள் போல. இது நான் சொல்லலம்மா, குர்ஆன் சொல்லுது.”
தன் வார்த்தைகளை நிறுத்திக் கலங்கிப் போயிருக்கும் ஷமீமாவின் அருகில் போய் அவள் முகத்தைத் தன் கைக்குள் ஏந்திக் கொண்டாள் ஜெமீலா.
முத்தாகப் பணித்துக் கன்னத்தில் வடிந்த கண்ணிர்த் துளிகளை மெல்ல அவள் கரம் துடைத்த போதும், மீண்டும் பீறிட்டுவரும் அதன் பிரவாகத்தை அவளால் நிறுத்த முடியவில்லை.
26 ஜின்னாஹ்

ஒரே வீட்டில் பணிப்பெண்களாக துபாய்க்கு வந்த அவர்கள் இருவரும், ஒரே அறையில்தான் தங்கி இருந்தார்கள். ஜெஸிமா வயதில் மூத்தவள். காலச் சூழற்சியின் காரணமாய் ஏற்பட்ட குடும்பப் பொருளாதாரம் அவளை துபாய்க்கு அனுப்பி இருந்தது. ஷமீமாவின் வருகைக்குக் காரணமோ வேறு.
ஷமீமா அழகானவள். பிறப்பில் ஏழை வயிற்றில் பிறந்திருந்தாலும், தோற்றத்தில் செல்வவதியாய் இருந்தாள். ஒன்றைக் குறைத்தாலும் மற்றொன்றின் நிறைவால், மனிதர்களை இறைவன் சமப்படுத்திவிடுவது அவள் ஏழ்மையின் அழகிலும் தெரிந்தது.
கையேந்திப் பிச்சை எடுக்கும் ஏழைகள் இரவில் நிம்மதிபாய்த் தூங்கும்போது, கோடி கோடியாய்ப் பணத்தைத் தேடிக் குவிக்கும் குபேரர்கள் கண்ணயரக் கஷ்டப்படுகின்றனர்.
ஷமீமாவுக்குத் திருமணமாகி இருந்தது. வயதில் அவள் ஜெமீலாவைவிடப் பத்துவருடங்கள் இளையவள். நாற்பது வயதுடைய ஜெமீலாவுக்குக் குழந்தைகள் மூன்று. அவளைவிட இரண்டே வயது மூத்த தன் மாமியின் மகனைத் திருமணம் செய்திருந்தாள். தன் வாழ்நாளின் ஏழு வருடங்களை துபாயின் பிரஜையாக்கிக் கொண்டவள்.
ஒரே வீட்டில் ஜெமீலாவும் ஷமீமாவும் ஒன்றி வாழ்ந்ததால் இருவருக்குமிடையில் ஒரு நெருங்கிய உறவு நாளடைவில் பெருகி வளர்ந்தது.
வாழ்வின் சுகத்தை அனுபவித்தவள் ஜெமீலா. திருமணமாகியும் குழந்தைப் பேறின்றி நான்கு வருடங்களை ஒட்டிவிட்ட ஷமீமா, தொழில் தேடி துபாய்க்கு வந்திருந்தாள்.
வேலை நேரம் போகத் தனித்திருந்து சிந்தனை வயப்படும் ஷமீமாவிடம், அதற்கான காரணத்தைக் கேட்டறிய மனம் பலமுறை உந்தினாலும் , ஜெமீலா நாகரிகம் கருதி நீண்டநாள்
127 பெற்றமணம்

Page 73
பொறுத்திருந்தாள். வாய்ப்பாக ஒருநாள் வந்தபோது இருவரும் தத்தம் சொந்த வாழ்வின் அந்தரங்கங்களைப் பகிர்ந்து கொண்டனர். தாங்கள் ஏழைகள் என்றும், இளமையிலேயே தந்தையை இழந்துவிடட தன்னையும் தன் சகோதரிகள் இருவரையும் ஆண் துணையற்றுத் தங்கள் தாய் வளர்த்து, தனது இயல்புக்கு ஏற்றபடி திருமணமும் செய்து வைத்ததாக ஷமீமா சொன்னாள்.
தனக்கு மூத்தவளும் இளையவளும் ஓரளவு திருப்தியாக குழந்தை குட்டிகளுடன் மகிழ்வாய் இருப்பதாகவும் கூறினாள்.
மூன்று பெண்களையும் ஒப்பேற்றிவிட்ட மகிழ்வோடு தாயாரும் கண் மூடிவிட்டதால், கணவரொருவரே கதியென வாழும் தன் வாழ்வின் சில பக்கங்களையும் விபரித்தாள் அவள்.
"ஏம்மா, கலியாணம் முடிச்சு நாலு வருஷம் என்கிறியே, ஒரு புள்ளைகூடத் தங்கலியா..?”
ஜெமீலாவின் கேள்வி புனலுாற்றைத் திறந்துவிட்டது போலானது. ஷமீமா கண்ணிரால் கன்னங்களைக் கழுவினாள். ஐயோ. ஏனிப்படி ஒரு கேள்வியைக் கேட்டேன் என்றாகிவிட்டது ஜெமீலாவுக்கு.
இருந்தும் அதன் காரணத்தைத் தெரிந்து கொண்டால் தன்னால் இயன்றதைச் செய்யலாம் என்னும் எண்ணமும் ஏறபட அவள் அழுகையை நிறுத்தும் வரை காத்திருந்தாள்.
நீண்ட நேரக் குமுறலின் பின் நிதானமுற்ற ஷமீமா, ஜெமீலாவின் முகத்தைப் பார்த்தாள். அழுகையால் அவள் மனச்சுமை குறைந்திருக்க வேண்டும். ஏக்கத்தின் பிரதிபலிப்பு இழையோடிய ஒரு மென்னகை அவள் சிவந்துபோன வதனத்தில் மின்னலாய்ச் சிதறியது. அவள் பேசினாள்.
“தாத்தா, நீங்க என் மேல காட்டுகிற அன்புதான் என்
128 ஜின்னாஹ்

கவலையை மறக்க உதவுது. சில நேரம் அதையும் மீறித்தான் என் கவலை என்ன அழச்செய்யுது. நானே என்னைப்பத்தி சொல்ல நெனச்சாலும், நீங்களும் என் கவலையால் வருத்தப்படக் கூடாதென்றுதான் நான் இதுவரையும் சொல்லல்ல.”
"ஆனா இனியும், அதுவும் நீங்க கேட்டபிறகும், ஏன் நான் சிலதை மறைக்கணும்?” என்றபடி தன் வாழ்வின் இருண்டுபோன பக்கங்களைப் புரட்டினாள்.
ஷமீமாவின் வார்த்தைகள் ஒவ்வொன்றும் தன் செவிப்பறைளைத் தட்டித்தட்டி, மூளையுள் சங்கமமாவதை உணர்ந்த ஜெமீலாவின் கண்களும் அவள் அறியாமல் பணித்தன.
எத்தனை சோகமது. வாழ்ந்தும் வாழாத ஒரு வாழ்வு. அவளால் நினைத்துப் பார்க்கவும் இயலவில்லை. கன்னியாகவே நீண்ட காலம் வாழ்வைக் கழித்து, செய்து கொண்ட திருமணத்தின் பின்னும் வாழாவெட்டியாக வாழும் துர்ப்பாக்கிய நிலை.
உலக வாழ்வில் எந்தவொரு பெண்ணுக்கும் ஏற்படக்கூடாத ஒரு சோக வரலாறு. இத்தனை நாளும் எப்படித் தாங்கினாள்? யார் மீது குற்றம் சொல்வது?
நாட்கள் ஒடி மறைந்தன. தீரவொன்று சொல்லத் திராணியற்ற ஜெமீலாவும் அந்த நாட்களில் அமைதிக்கு விடை கொடுத்து தெளிவைத் தேடினாள்.
ஒரு நாள் பிரச்சினைக்குத் தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கை மேலிட, திருக்குர்ஆனின் மொழிபெயர்ப்பொன்றைத் திறந்தாள். பொருளடக்கத்தின் தெளிவான சில வசனங்கள் அவளுக்கு துணை நின்றன.
இடையில் பெற்றவர்களின் நினைவால் அவள் நெஞ்சம் நெகிழ்ந்தது. இளமையிலேயே படிக்கவும் ஒதவும் தூண்டி
129 பெற்றமனம்

Page 74
வளர்த்ததால் அவளால் ஆண்டவன் மறையை அழகாக ஒதவும் அதன் பொருளைப் படித்துப் புரியவும் ஏதுவாகியது.
எத்தனைத் தெளிவாக வாழ்வின் இலக்கணத்தை “திருக்குர்ஆன்’ வகுத்துத் தந்துள்ளது! ஏற்படும் சிக்கல்களுக்கான தீர்வுகளை மிக நுணுக்கமாகத் திருமறை சொல்லுகின்றதே. பக்கம் பக்கமாய் நுணுகி ஆராய, அவள் மனம் இறைவன்பால் ஒன்றிப் போனது.
இரவு உணவை இருவரும் முடித்துக் கொண்டனர். வழமை போல வீட்டுக் காரியங்கள் அனைத்தையும் முடித்துக்கொண்டு படுக்கைக்குப் போக ஆயத்தமாகினர்.
ஷமீமா கட்டிலில் சாய்ந்தபடி வீட்டின் முகட்டில் கண் பதித்துக் கிடந்தாள்.
உடைகள் மாற்றிக் கொண்டு படுக்கைக்கு வந்த ஜெமீலா அன்றைய நாளில் வீட்டில் நடைபெற்ற சில நிகழ்வுகளை நினைவு படுத்திப் பேசினாள். ஷமீமாவின் மனநிலை நிதானமகவே இருப்பதை அவள் பேச்சிலிருந்து தீர்மானித்துக் கொண்ட ஜெமீலா, பேச்சைத் தன் திட்டத்திற்கு ஏற்றவாறு மாற்றினாள்.
“ஷமீமா, அண்டைக்கி நாம பேச்சை இடையில நிறுத்திட்டோம். ஒன்ன நெனச்சா நான் ரொம்ப வருத்தப்படுகிறேன். ஷமீமா, எந்தப் பிரச்சினைக்கும் தீர்வு உண்டு. அதை நாம தேடாத வரையும் பிரச்சினைகளுக்கு முடிவு கெடயாது’ என்று பேச்சை நிறுத்தி ஷமீமாவின் முகமாற்றத்தை அவதானித்தாள்.
வரண்டுபோன ஒரு பாலைவனத்தின் வெறுமை அவள் முகத்தில் மண்டியிட்டுக் கிடந்தது. எந்தவித உணர்வுகளையும் அது வெளிப்படுத்தவில்லை என்பதைக் கண்ட ஜெமீலா மீண்டும் தொடர்ந்தாள்.
130 ஜின்னாஹ்

“ஷமீமா, நீ படிச்சவ. முப்பதே வயதுதான் ஒனக்கு. இந்த வயசில உன் பொறப்பின் உரிமையை நீ அனுபவிக்கணும். அதுக்கு வழியுண்டு’ என்றாள்.
சட்டெனத் திரும்பினாள் ஷமீமா, ஜெமீலாவின் இறுதி வார்த்தைகள், அவளை அவ்வாறு திரும்ப வைத்தன. நீண்டு பரந்த கானல் வெளியில் தோன்றும் ஒரு நீர்ச்சுனைபோல, ஏதோவொன்று அவள் கருகிக்கொண்டிருக்கும் வாழ்க்கைப் பாதையில் தென்படுவது போன்ற உணர்வை அவை உண்டாக்கின.
அப்போது அவள் வாய் பேசவில்லை. பார்வை மட்டுமே ஜெமீலாவின் விழிகளோடு மோதிநின்றன. மீண்டும் ஜெமீலா பேச்சைத் தொடர்ந்தாள்.
“ஷமீமா, நீ சொன்னபடி உன் கணவன் நிரந்தர நோயாளியாய், குடும்ப வாழ்வுக்கு உகந்தவனாய் இல்லை என்றால், அந்த வாழ்வில் இருந்து பிரிந்து, நீ உனக்காக ஒரு புது வாழ்வைத் தேடிக் கொள்ளலாமே’.
திடீரென வெளிவந்த அவளின் வார்த்தைகள் ஷமீமாவின் செவியுள் தியெனச் சுட்டதும், அவள் அதிர்ந்து போனாள்.
“தாத்தா? நீங்க என்ன சொல்லுறீங்க? எப்படி நான் அதைச் செய்யிறது? பெரிய பாவம் தாத்தா, அது பெரிய பாவம். புருஷனுக்கு செய்யிற துரோகம்!’ எனப் பதறிப் போய்ச் சொன்னாள்.
“நிச்சயமாக பாவமில்லை. இதோ பாரு குர்ஆனில் நான் படிச்ச வாசகத்தைப் பார்!’ என்றபடி திருக்குர்ஆன் மொழி பெயர்ப்பைப் புரட்டினாள்.
"நீங்கள் பெண்களை விவாகரத்துச் செய்து, அவர்கள் தங்களின் தவணையைப் பூர்த்தியாக்கினால் அவர்கள்
தங்களுக்குரிய துணைவர்களை, நேர்மையான முறையிலும், பரஸ்பர
131 பெற்றமனம்

Page 75
பொருத்தத்தின் அடிப்படையிலும் திருமணம் செய்து கொள்ள விரும்பினால், அவர்களை நீங்கள் தடுக்காதீர்கள்’
“பாத்தியா ஷமீமா, உன் புருஷனுக்கு அவர் நிலைபற்றித் தெரிந்துதானே இருக்கும். மனிதாபிமாத்துடன் அவர் நடந்துக்க வேணாமா? முறைப்படிக் கேட்டுப்பார்ப்போம். அவராக விடட்டும். இல்லேண்ணா நாமாக விட்டுவிட வழியை தேடுவோம். அதற்கு வழியுண்டு,’ எனக்கூறி மீண்டும் பேச்சைச் சற்று நிறத்தினாள்.
“இல்ல தாத்தா, அத என்னால செய்ய ஏலா! அது பாவம்
என்றாள் ஷமீமா பதிலுக்கு. “இந்தாம்மா கல்லானாலும் கணவன். புல்லானாலும் புருஷன்
לין
தாத்தா. பெரிய பாவம்
என்ற காலம் எப்போதோ முடிஞ்சு போச்சி. ஒரு ஆணுக்குள்ள உரிமையில் பாதியாவது பொண்ணுக்கு இருந்தாகணும்.”
“நீதியாக நடக்க முடியுமான ஆம்பிள்ளைக்கு நான்கு திருமணம் செய்யலாம் என மார்க்கம் இடந்தரும் போது, இவ்வாறான நிலைமையில் ஒரு பெண் தனக்கு கெடச்ச வாழ்க்கையை சீர்படுத்திக் கொள்ள இடமளிக்காமலா போகும்?”
“அல்லாஹற்வின் வரம்புக்குள் நிலைத்திருக்க முடியாதென அஞ்சினால் மனைவி கணவனுக்கு ஏதேனும் ஈடாகக் கொடுத்து பிரிந்து விடுவதில் அவர்கள் மீது தவறில்லை.”
“பாத்தியா, தியாகம் என்று வெறும் போர்வையை போர்த்திக் கொண்டு தன்னைத் தான் அழித்துக் கொள்ளும் முட்டாள் தனத்தை இன்னும் நாம் தொடர வேணுமா?
“உங்கள் மனைவியர் உங்களுக்குரிய விளை நிலமாகும் என்றுந்தான் ஆண்டவன் கூறுகிறான். ஷமீமா, பூத்துக் காய்த்து வளர்க்கும் பக்குவம் உள்ள பூமி ஏனம்மா பயனில்லாம
போகணும்?”
32 ஜின்னாஹ்

'நீ உண்ட வாழ்வ மாத்திக்கணும் ஷமீமா. நான் வாழ்ந்து அனுபவித்தவள். வாழ்வில் உன்னதம் எனக்குத் தெரியும். திருமண வாழ்வில் குழந்த குட்டிங்க பெத்துக்கறது எவ்வளவு சந்தோஷம் தெரியுமா? அதையெல்லாம் அனுபவிக்காம நீ ஒன்னையே ஏமாத்திக்காதே’ என நீண்டதோர் பிரசங்கமே செய்து முடித்தாள் ஜெமீலா.
தலையைக் கெட்டியாய்ப் பிடித்துக் கொண்டே ஷமீமா ஜெமீலாவின் வார்த்தைகளால் திணறுண்டு தவித்தாள்.
பொலபொலத்து வடியும் கண்ணிர் விழிகளுடன் உடலும் குலுங்கியது. மீண்டும் ஜெமீலா தன் பேச்சைத் தொடராது பொறுத்திருந்தாள்.
சிறிது நேரத்தில் கட்டிலில் முகம் புதைத்து குப்புறச் சரிந்த ஷமீமாவின் அருகில் சென்று ஆதரவாக அவள் தலையைக் கோதினாள் ஜெமீலா.
அன்று வெள்ளிக்கிழமை. காலைக் கதிரவன் தன் பொற்கிரணங்களைத் திக்கெல்லாம் அள்ளிவீசித் தன்வரவை நிலை நிறுத்திக் கொண்டிருந்த வேளை..!
வீட்டில் எவருமே துயிலிலிருந்து எழுந்திருக்கவில்லை. ஷமீமாவும் ஜெமீலாவும் அன்றிரவின் உரையாடலின் பின் தாமதித்தே தூங்கியதால் சற்றுத் தாமதித்தே எழுந்தனர்.
இருவரும் ஒருவரோடொருவர் பேசிக்கொள்ளவில்லை. ஷமீமா மிக ஒதுங்கியே நடந்தாள். வலிந்து ஏதேனும் கேட்டுவிட்டால் விடயம் விபரீதமாகிவிடுமோ என ஜெமீலா அஞ்சினாள்.
ஷமீமாவின் நிதானம் அவளுக்குத் திருப்தியைத் தந்தது. தனது வார்த்தைகள் ஒவ்வொன்றும் அவள் சிந்தனையைக்
133 பெற்றமனம்

Page 76
கிளறிவிட்டிருக்கும். எப்படியும் ஒரு சரியான முடிவுக்கு அவளைக் கொண்டுவரத் திருமறை வசனங்கள் உதவியதை எண்ணி அவள் மகிழ்ந்தாள்.
மாலையானது, வழக்கம்போல் ஜெமீலா அறைக்கு வந்து உடைமாற்றிக் கொள்ளும் வரை ஷமீமா அறைக்கு வரவில்லை. பொறுத்திருந்து பார்த்தாள். நீண்ட நேரம் கழித்துக் கதவைத் திறந்து உள் நுழைந்தாள் ஷமீமா, எதிர்பார்த்ததற்கு மாறாய் ஜெமீலா விழித்துருப்பது கண்டு முகம் மாறினாள். அதன் பொருள் ஜெமீலாவுக்குப் புரிந்தது. அவளும் பாராமுகமாய் இருந்துவிட்டாள்.
நாட்கள் ஒவ்வொன்றாய் உதிர்ந்து வாரமொன்றானது. தேவைக்கு மட்டும் ஷமீமா பேசினாள். தினம்தினம் அவளில் மாற்றம் வளர்வது தெரிந்தது. ஏதோ ஒரு தெளிவு ஏற்பட்டிருப்பது நாளாந்தம் அதிகரிக்கும் அவள் நெருக்கம் ஜெமீலாவுக்குப் புரியவைத்தது.
ஒருநாள் இரவு ஷமீமாவே பேச்செடுத்தாள்.
“தாத்தா, இந்த ஒரு கிழமையும் நான் நல்லா யோசிச்சுப் பார்த்தேன். எனது கடந்துபோன வாழ்க்கையைப் பற்றி, எனது துர்ப்பாக்கியத்தை எண்ணி என்னால் கவலைப்படத்தான் முடிஞ்சிது. ஆனால் என் எதிர்காலத்தை நெனச் சுப் பார்க்கவும் அது உதவியது.” எனக் கூறிய ஷமீமா ஜெமீலாவின் முகத்தை நோக்கினாள்.
தனது முகமாற்றங்களோ வெளிப்படும் வார்த்தைகளோ ஷமீமாவின் மனக் கிடக்கைகளை வெளிப்படுத்த முடியாது தடுத்துவிடும் என்று அஞ்சிய ஜெமீலா நிதானமானாள். மீண்டும் ஷமீமா பேச்சைத் தொடர்ந்தாள்.
C134) ஜின்னாஹ்

“முன்னர் நான் ஒரு வருடம் வெளிநாட்டில் உழைத்த உழைப்பையும் நான் அவர் உடல் நோய்க்கே செலவு செய்தேன். அதுமட்டுமா அவருக்குச் சமூகத்தில் கணவன் என்ற அந்தஸ்தையும் நான் பெற்றுக் கொடுத்தேன். அது ஒன்று மட்டுமே அவருக்குப் போதுமாக இருந்தது. இன்னும் அதனைத் தொடருவது என்னை நான் அழித்துக் கொள்வது போல்தான்’ என்றாள்.
அவள் எதிர்பார்த்த முடிவே அதுவென்றதால் மகிழ்வடைந்த ஜெமீலா பேசினாள்.
“ஷமீமா, உன் முடிவு எனக்குச் சந்தோஷத்தைத் தருகிறது. மேற்கொண்டு உனது வாழ்வில் என்ன நடக்க வேண்டுமோ அத்தனையும் இறைவன் உதவியோடு நான் பொறுப்பேற்கிறேன்.” என்றபடி ஷமீமாவை அவள் ஆரத்தழுவிக் கொண்டாள்.
ஒரே வீட்டில் சில வருடங்கள் தொடர்ந்து வாழ்ந்ததால் அவர்களின் அரபுமொழியை ஜெமீலா நன்கு பேசவும் புரியவும் தெரிந்திருந்தாள்.
ஒருநாள் தனிமையில் வீட்டு எஜமானியைச் சந்திக்கும் வாயப்பை ஏற்படுத்திக் கொண்ட ஜெமீலா, ஷமீமா பற்றிய சகல விடயங்களையும் விபரமாகக் கூறி, அவள் எதிர்காலத்திற்கு உதவவேண்டும் எனவும் வினயமாய் வேண்டினாள்.
புரிந்துணர்வும், மனிதாபிமானமும் கொண்ட அந்தத் தம்பதிகளிடம் கூறுவதால் நன்மை பிறக்கும் என்ற நம்பிக்கை வீண் போகாதபடி சகல உதவிகளையும் செய்ய அவர்கள் ஒப்பினர். “ஒரு தொகையை ஈடாகக் கொடுத்துப் பிரிவை ஏற்படுத்திக் கொண்டாலும் அதன்பின் அவளுக்குக் கணவனை நீ எப்படிக் கண்டுபிடிப்பாய் ஜெமீலா’ என ஒரு கேள்வியை எஜமானி எழுப்பிய போது, அவள் சொன்ன பதில் கீழைத்தேய வாழ்வுமுறையை
135 பெற்றமனம்

Page 77
அவள் மூலமே அறிந்து வைத்திருந்த எஜமானிக்குப் பெரும் ஆச்சரியத்தைத் தந்தாலும், அதில் உள்ள யதார்த்தமும் புரிந்தது.
தாய் நாட்டுக்குள் புறப்படத் தயாரான ஷமீமாவின் கையில் காசோலையைத் தந்தாள் வீட்டு எஜமானி. ஏற்கனவே ஏற்றுக் கொண்டபடிதான். எனினும் அதில் குறிக்கப்பட்டிருந்த தொகை ஷமீமாவோடு, ஜெமீலாவையும் ஆச்சரியத்துக்குள்ளாகியது. அது ஷமீமாவின் கணவன் பேரில் எழுதப்பட்டிருந்தது.
கொழும்பு விமானத் துறையில் இறங்கிய இருவரும் ஜெமீலாவின் வீடு நோக்கிப் பயணமாகினர். அறிவிப்பு இல்லாததால் விமான நிலையத்திற்கு யாரும் வந்திருக்கவில்லை. வாடகை வேன் ஒன்றை அமர்த்திக் கொண்டனர்.
வாசலில் வந்து நின்ற வாகனமும், அதில் இருந்து தன் மனைவியும், புதுப் பெண்ணொருத்தியும் இறங்கி வரவும் கண்ட மர்சூக் விழிகள் விரிய நோக்கினார்.
“என்ன ஜெமீலா அறிவிக்காம.” என அவர் சொற்கள் இடையில் நின்றன.
எல்லோரும் வீட்டினுள் நுழைந்தார்கள். ஷமீமாவை யாரெனத் தன் கணவருக்கு அறிமுகஞ் செய்தாள் ஜெமீலா. ஷமீமாவின் வரவு அவள் குடும் பத்திற்குத் தெரியவர வாய்ப்பிருக்கவில்லை. அவள் கண்டியைச் சேர்ந்தவள்.
வாரமொன்று மெல்லவே நகர்ந்தது. ஷமீமா அந்த ஒரு வாரத்துள் குடும்பத்துள் ஒன்றானாள். ஜெமீலாவின் கணவருக்கும், குழந்தைகளுக்கும் அவளை நன்கு பிடித்துப் போயிற்று.
ஷமீமாவும் அவர்களோடு மனமொன்றிப் பழகினாள். ஜெமீலாவின் வேண்டுகோளுக்கிணங்க மர் சூக் ஷமீமாவின் மணவிடுதலைக்கு ஒத்தாசை செய்தார். கண்டிக்குச் சென்று
C 136) ஜின்னாஹ்

சம்பந்தப்பட்ட அனைவரையும் சந்தித்துக் காரியத்தை நிறைவு செய்தார்.
ஷமீமாவின் கணவர் கைக்குக் கிடைத்த கொழுத்த தொகையால் கண்களை மூடிக்கொணடார். எண்ணியவாறில்லாது அனைத்தும் எளிதாகவே முடிந்தன.
மணவிடுதலை பெற்றபின்தான் ஜெமீலா தன் திட்டத்தின் அடுத்தபடியில் ஏறுவதற்குள்ள கஷ்டங்களை உணர்ந்தாள். தீர்க்கமான ஒரு முடிவுடன் அவள் வந்திருந்தாலும், அதனைச் செயற்படுத்துவது அவள் கரத்தில் இருக்கவில்லை. ஒரு நாள் திட்டமிட்டபடி அனைவரும் காலிமுகக் கடற்கரைக்குச் சென்றிருந்தனர். வங்கக் கடலின் அலை தழுவி வெளிவந்த குளிர்காற்று அந்த மாலைப் பொழுதை இதமாக அனுபவிக்கச் செய்தது.
மக்கள் பலர் ஒன்றிக்கிடந்த அப்பரந்த புல்வெளியில் குழந்தைகள் சிட்டாய்ப் பறக்கப் பெற்றோர்கள் கூடி அமர்ந்து பேசி மகிழ்ந்தனர்.
ஷமீமாவும் ஜெமீலாவின் குழந்தைகளும் தனித்துச் சற்றுத் தொலைவில், கடலையும் அதன் சுற்றுச் சூழலையும் கண்டு மகிழ்ந்தனர். ஜெமீலாவும் மர்சூக்கும் தனித்த ஓர் இடத்தில் அமர்ந்து கொண்டனர். இவ்வாறான ஒரு சூழ்நிலையை உருவாக்கவே அனைவரையும் ஜெமீலா அங்கு அழைத்து வந்தாள். “ஏங்க, நீங்க எனக்கொரு உதவி பண்ணனும்!” என்றாள் ஜெமீலா திடீரென்று.
“என்ன ஜெமீலா, இப்படி ஒரு புதுக்கேள்வி? நான்தான் நீ என்ன கேட்டாலும் மறுக்காதவனாச்சே!”
“அதில்லிங்க, இது ஒரு முக்கியமான பிரச்சினைக்கு ஒரு முடிவு. அந்த முடிவு ஒங்க ஒப்புதல்லதான் தங்கியே இருக்கு!”
“ஜெமீலா நீ என்ன சொன்னாலும் நான் மறுக்காதவன், கேளு ஜெமீலா கேளு!”
C 137 ) பெற்றமணம்

Page 78
“சத்தியமா? என்றாள் அவர் கைகளைப்பற்றி. அவள் என்னதான் பிரமாதமாகக் கேட்டிடப் போகிறாள் என்ற தெம்பில் மர்சூக்.
“ஆமா சத்தியமாக” என்றார் உறுதியுடன். "நீங்க ஷமீமாவைக் கலியாணம் பண்ணிக்கணும்” திடீரென்று அவள் வாயிலிருந்து மிகத் தீர்க்கமாகப் புறப்பட்டது அந்த வார்த்தைகள். மர்சூக் அதிர்ந்து போனார். மாலைத் தென்றலின் குளிர்ச்சி மாறி அது அவர் உடலைச் சுட்டெரித்தது போல் உணர ஜெமீலாவை வெறிக்க நோக்கினார். வார்த்தைகள் தடுமாறிப் புறப்பட்டன.
“என்ன ஜெமீலா இப்படிக் கேட்டிட்டே?. நான் எதுக்காக அவவ கல்யாணம் பண்ணிக்கனும்?”
கணவரின் கேள்வியில் உள்ள பாரத்தை அவள் அறிவாள். இருந்தும் தனது நல்ல முயற்சிக்கு அவர் துணை வேண்டி நின்றதால் அவள் மீண்டும் பேசினாள்.
“பாருங்க ஷமீமாவைப் பத்திய எல்லா விவரங்களும் உங்களுக்குத் தெரியும். இப்ப அவ புருஷனைப் பிரிஞ்சிருக்கிற விதவை. அந்த விதவைக்கு வாழ்வளிக்கிறதில தப்பில்ல!”
“குடும்பச் சுமை என்ன வெளிநாடு போக வைச் சது. இன்னும் நம்ம தேவை நெறவேறல்ல. நீங்க ஒருவர் சம்பாதிக்கிற சம்பாத்தியம் நம்ம குடும்பத்துக்கும் போதல்ல. அதனால் நான் வெளிநாடு போறத நிறுத்த வழியே இல்ல. நீங்க தனிச்சு வாழுறத நான் விரும்பல. ஒரு ஆம்பிள ரெண்டு கல்யாணம் சட்டப்படி கட்டுறதில தப்பே இல்ல. ஒரு பெண்ணுக்கு வாழ்வு கொடுக்க நீங்க முன்வரணும்’ என்றாள். முடிந்தவரை மர்சூக் தன்பக்க நியாயங்களைக் கூறியும் ஜெமீலாவிடம் அவை தோற்றுப் போயின. இறுதியில் அவரால் அவள் வேண்டுகோளை மறுக்க இயலாது போயிற்று.
மாலை இருளின் கருமை போகச் சந்திரன் மெதுவாக வானில் உலாவரத் தொடங்கினான்.
138 ஜின்னாஹ்

மர்சூக்கின் ஒப்புதலைப் பெற்ற ஜெமீலாவின் முயற்சியில் ஷமீமாவைத் தக்க வைக்க மிகப்போராட வேண்டி ஏற்பட்டது.
ஜெமீலாவின் குடும்ப வாழ்வில் பங்குகொள்ள அவள் மறுத்தாள். இறுதியில், “வெளிநாட்டில் காலத்தை ஒட்டும் என் குடும்பத்தின் நலனுக்காக நீ அவரைத் திருமணம் செய்துகொள். எஜமானியின் பணிப்பும் அதுதான். உன்னை உன் கணவர் மண விடுதலை செய்ய உதவிய பணமும் நான் இந்த ஒப்புதலைத் தந்தியின் தான் தரப்பட்டது.’ என்றதும் அவள் பிடிவாதம் கரைந்தது.
米米米
விமான நிலையத்தின் கண்ணடிக் கதவுகளின் உள்ளே நின்றவாறு விடைபெறக் கையசைத்தாள் ஜெமீலா. தன் எண்ணம் நிறைவேறிய பூரிப்பு அவள் முகத்தில் தெரிந்தது.
வெளிப்புறத்தே மர்சூக்கும் குழந்தைகளும் ஷமீமாவுடன் ஒன்றி நின்று கையசைத்தனர். கண்கள் நீரைப் பொழிய அதனிடையே நிழலாய் நின்ற ஜெமீலாவின் உருவத்தைப் பார்த்தவாறு ஷமீமா கல்லாயச் சமைந்து நின்றாள்.
வீரகேசரி
18.03. 2001
)A لال ۶لای ۱۶۵/ لن- coل ۵)
போதிய வசதியுள்ள ஓர் ஆண்மகனுக்கு, அனைவரையும் ஒரே சமமாகப் பரிபாலிக்க முடியுமானால், ஒரே சமயத்தில் நான்கு பெண்களைத் திருமணம் செய்து கொள்ளலாம் என்பது திருமறை காட்டும் நெறி. ஜின்னாஹற் அவர்களின் “பெண்ணுரிமை” என்னும் இச் சிறுகதை ஒரு மூத்த பெண்மணி பல கஷடங்களை அனுபவிக்கும் தன் இளம் தோழிக்கு, தனது கணவனையே விவாகம் செய்து வைப்பது வியப்பூட்டும் ஒரு முன்மாதிரியாகத் திகழ்கிறது. ஒரு பெண்ணின் மகத்தான தியாகத்தையும் இக்கதை எடுத்துக் காட்டுகின்றது.
ப. ஆப்தின்
39 பெற்றமனம்

Page 79
ിപത്രം / ?.
பTதையில் பெரும்பாலும் எல்லோரின் பார்வைகளையும் ஒரு கணம் தனதாக வலிந்து பெற்றுக் கொண்ட அந்த த்ரீவீலர், வைத்தியசாலையின் விபத்துச் சேவையின் முன் திடீரென நின்றது.
வந்த வேகத்தின் பிரதிபலிப்பாய் ஏற்பட்ட “ப்ரேக்” சத்தம் மீண்டும் ஒரு முறை அந்தச் சுற்று வட்டாரத்தை அதிரச் செய்து தன்பக்கமாக்கிக் கொள்ள, அதிலிருந்து இருவர் வேகமாக வெளிப்பட்டனர்.
ஒருவன் ஒரு சிறுவனைத் துாக்கிக் கொள்ள மற்றவனும் துணையாக உள்ளே ஓடினர்.
நீண்ட தள்ளுவண்டியில் சிறுவனைக் கிடத்திக் கொண்ட வைத்தியசாலை ஊழியர்கள், வந்தவர்களில் ஒருவனைக் கூட்டிக் கொண்டு உள்ளே சென்றனர்.
சற்றைக்கெல்லாம் மேலும் பலர் வாசலில் வந்து கூடினர்.
140 ஜின்னாஹ்

எப்போதுமே சனங்கள் நிறைந்து பரபரப்பாக இருக்கும் அந்த இடத்தில், இன்று கூட்டம் சிறிது அதிகமாகவே இருந்தது.
இதற்கொன்றும் அங்கு கொண்டு வரப்பட்ட சிறுவன் ஒரு பெரும் புள்ளியின் மகனுமல்ல. ஒரு பணக்கார வீட்டுப் பிள்ளையுமல்ல.
சாதாரண சேரிக்குடிசையில் வாழும் ஒரு அநாமதேயத்தின் உணர்ச்சிப் பசியின் அர்த்தமற்ற வெளிப்பாடு மட்டுமே.
உள்ளே சென்றவன் போக மற்றவனைச் சுற்றிப் பலர் கூடிக் கொண்டனர். ஒருவன் கேட்டான்.
“கொஹமத மீரா அய்யே பொட்டாட்ட?” டாக்டர்கள் நிலைமையைச் சொல்லும்வரை அவனுக்கும் நிலைமை என்னவென அறிய ஆவலாகவே இருந்தது. அதனால் அவன் பதில் எனக்கும் தெரியாது என்பதுதாகவே இருந்தது.
சிறுவனுடன் உள்ளே சென்ற ராஜேஷிடம் தாதி சொன்னாள், “இரத்தம் கொடுப்போரைக் கூட்டி வாருங்கள். சிறுவனுக்கு சத்திர சிகிச்சை செய்ய வேண்டும்.”
நான் நீ என நான்கு பேர் முன் வந்தனர். நல்ல வாட்டசாட்டமான பேர்வழிகள். பிறரின் எச்சிலுக்காக ஏங்காமல் தங்கள் உழைப்பால் வாழ்பவர்கள் என்பது, உருவகங்களில் தெரிந்தது.
பீட்டரும் நிஹாலும் வந்தால் போதும் என ராஜேஷ் கூற, மற்ற இருவரும் விலகிக் கொண்டனர்.
ராஜேஷ"ம் பீட்டரும் நிஹாலும் மீரானும் இரத்ததானம் செய்தனர்.
ஏதோ அந்த இரத்தத்தை எடுத்துத்தான் சிறுவனுக்குச் சத்திர சிகிச்சை செய்வது போல வைத்தியசாலை ஊழியர்கள் செயற்பட்டனர்.
தப்ப விட்டால் கிடைக்காது என்ற பயம் அவர்களுக்கு.
141 பெற்றமனம்

Page 80
தானம் செய்யும் நால் வரும் அதனை அப்படியே நம்பிக் கொண்டவர்களாக ஒத்துழைத்தனர்.
அந்த நேரம் “புஞ்சிபுத்தாவுக்கு” சத்திர சிகிச்சை நடைபெற்றுக் கொண்டிருந்தது.
டாக்டர் - ஷெரீப்பின் விரல்கள் வேகமாக இயங்கின. வயிற்றில் மேலிருந்து கீழாக நீளமான ஒரு வெட்டு. உள்ளுறுப்புகள் கவனமாகப் பரீட்சிக்கப்பட்டு, ஏற்கனவே பெருகி இருந்த இரத்தமும் வெளியேற்றப்படுகின்றது.
மயக்க மருந்து கொடுத்த டாக்டர் செல்வம் தன் கடமையில் கண்ணாக இருந்தார். டாக்டர் - பெரைராவும், டாக்டர் - ஸ்டீபனும் தலைமை டாக்டர் ஷெரீபுக்குத் துணை செய்தனர்.
மூன்று மணித்தியாலங்கள் மெல்ல ஊர்ந்தன. மிக நிதானமாக எல்லாம் நடைபெற்றன. ஆண், பெண் தாதிகள் எறும்பாக இயங்கினர்.
※※米
தோட்டத்தில் ஒரே பரபரப்பு எல்லோர் வாயிலும் “புஞ்சிபுத்தா” என்ற மஞ்சுவைப் பற்றியே பேச்சாக இருந்தது.
சனிக்கிழமை பாடசாலை இல்லையாதலால் வாசலில் நின்ற “ஜாம்” மரத்தில் பழம் பிடுங்க ஏறி இருக்கிறான்.
உச்சிக் கொப்புவரை ஊரும் அவன் அணிலுக்குக் கூட ஒரு செங்காயையேனும் மிஞ்ச விடமாட்டான்.
அன்று கால் சறுக்கக் கீழே இருந்த பூந்தொட்டியின் மீது வயிறுபட வீழ்ந்திருக்கின்றான். பலமான அடி அவனை மயங்கிப்
காலையில் வேலைக்குப்போக ஆயத்தமான “ஆட்டோ மீரான்’ ஓடிவந்தான். மூலை வீட்டு ராஜேஷ் செய்திகேட்டு வர, இருவரும் பக்கத்தில் இருந்த தனியார் மருந்துச் சாலைக்கு எடுத்துக் கொண்டு 142 ஜின்னாஹ்

வெளிக்காயம் இல்லாவிட்டாலும், உட்பாதிப்பு அதிகமிருக்கும் என அவர் அஞ்சினார். விரைவாக விபத்துச் சேவைக்குக் கொண்டு செல்லப் பணித்தார்.
மீரானின் "த்ரீவீலர்’ அவன் பார்வையை முந்தப்
பின்னால் கிடந்தான்.
துாரத்தைக் குறைத்துக் கொள்ள குறுக்குப் பாதைகளுள் மீரான் புகுந்து புறப்பட்டான். வீதிகளைக் கரைத்துக் குடித்தவர் களல்லவா இக்கால "த்ரீவீலர்’ சாரதிகள்.
அஞ்சாது நடுவீதியில் வெட்டித் திருப்பிப் பின்னால் வருபவர்களைச் சங்கடத்தில் மாட்டாது மாட்டிவிடும் கெட்டிக்காரர்கள். மீரானும் அதற்கு விதிவிலக்காகாமல் வைத்தியசாலையை நோக்கிச் சிறகடித்தான். அதற்குள் தோட்டத்தில் மற்றவர்களுக்கும் செய்தி பரவ அவர்களில் பலரும் அங்கு வந்தனர்.
米米米。
அமைதியான அந்த இராப் பொழுதில் அனேகமாக எல்லோருமே துாங்கிப் போயிருந்தனர். பெரும்பாலானவர்களுக்கு மயக்க மருந்துகள் தாலாட்டுப் பாடின.
இடை இடையே ஆங்காங்கு வேதனைகளின் வெளிப்பாடுகள். வெளிவிறாந்தையில் எரிந்து கொண்டிருந்த மின்விளக்கு, தன் ஒளிக்கரங்களால் சுற்றியுள்ள பிரதேசங்களையும் மெல்ல அணைத்துக் கொண்டது.
அந்த மெல்லிய ஒளியில்.
இருதயத்தின் சீரான துடிப்புக்கு ஏற்பச் சொட்டுச் சொட்டாக வடிந்து கொண்டிருந்த இரத்தத் துளிகளைக் கண்ணிமைக்காமல் 143 பெற்றமணம்

Page 81
பார்த்துக் கொண்டிருந்தான். அந்தப் பாதுகாப்புப் படைவீரன்.
வடக்கில் ஏற்பட்ட குண்டு வெடிப்பொன்றில் ஏற்பட்ட காயங்களுக்குச் சத்திர சிகிச்சை செய்யப்பட்டிருந்தான் அவன்.
இரத்தக் கொள்கலனின் நீண்ட ரப்பர் குழாயோடு அவன் பார்வை கீழிறங்கி, பக்கத்துப் படுக்கையில் கிடத்தப்பட்டிருக்கும் சிறுவனின் முகத்தில் பரவியது.
அமைதியாகச் சிறுவன் மூச்சு வாங்கினான். தாதிகள் அடிக்கொருமுறை அவனை அவதானித்துக் கொண்டிருந்தனர்.
சிந்தனைத் தடாகத்தில் மீன்களாய் நெளிந்தன.
பார்க்கவே அனேகம் பேர். ஒரேவித சோக முகங்களோடு காணப்பட்டனர் அனைவரும்.
அவர்களைத் தாதிகள் அருகில் நெருங் க அனுமதிக்கவில்லை. வந்தவர்கள் தொலைவில் இருந்தே அவதானித்தனர்.
அவர்கள் பேசிக் கொண்டவை அந்த வீரனின் காதுகளில் துல்லியமாக கேட்டன. ஒருவன் சொன்னான்.
“அரபலபான் மச்சாங் அபே 'லே தமாய் அர யன்னே’என இரத்தம் தந்த நால்வரும் ஒன்றாகவே வந்திருந்தனர். அங்கு சிறுவனுக்குப் பாய்வது தங்களின் இரத்தம் தான் என்ற எண்ணத்தில் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.
இரண்டு மொழிகளிலும் எல்லோரும் சரளமாகப் பேசினர். இது அவனுக்கு வியப்பைத் தந்தது.
தாதியின் வார்த்தைகள் அவர்களுக்குத் தெம்பைத் தந்திருந்தாலும் அனைவருமே வேதனையோடு காணப்பட்டனர்.
144 ஜின்னாஹ்

“குழந்தைக்கு ஆபத்தில்லை. நீங்கள் பயப்பட வேண்டாம்” என அவள் கூறி இருந்தாள்.
“மே! மாத்தயா மே பெத்திவ கிலின்ன” என்ற குரல் கேட்டதும் சுய உணர்வு பெற்ற அந்தப் படைவீரன் தன்னை நிதானப்படுத்திக் கொண்டான்.
சிறிது நேரத்தில் அவன் உட்கொண்ட மாத்திரைகள் சிந்தனைக்கு தடை போட இமைகள் குவிந்தன.
米米米
திருநீறு கொண்டு வந்து, அவன் நெற்றியில் தடவினாள்.
இருந்தாள்.
தினமும் மேரி அருகில் இருந்து ஜெபம் - செய்வாள். எங்கோ துார இடத்திற்குப் போயிருந்த, ஆயிஷா வீட்டுக்கு வந்ததும் செய்தி அறிந்து மஞ்சுவைப் பார்க்க வந்தாள்.
அவன் அருகில் வந்ததும் அவன் தலையினை ஆதரவாகத் தடவி விட்டாள். அது அவன் இதயத்தைத் தடவி விட்டது போல் இதமாக இருந்தது.
தலையை உயர்த்தி அவன் ஆயிஷாவைப் பார்த்தான். அவள்
சாந்தப்படுத்த முனைந்தது.
"தென் மட்ட சனிப்பாய் அண்டி’ என்றான் புன்னகை பூக்க. வாரம் ஒன்று மெல்ல நகர்ந்தது. தினமும் ஓரிரு மணித்தியாலங்கள் தான் ஒரு புதிய சூழ்நிலையில் இருப்பதை மஞ்சுவின் அருகில் இருந்த அந்தப் படைவீரன் உணர்ந்தான்.
அவன் மனத்தில் வேர்விட்டுக் கிடந்த ஒரு வைராக்கியம்
145 பெற்றமனம்

Page 82
அவன் நினைவில் அதிர்ந்தது. சிறிது சிறிதாக அது தளர்வது போலும் உணரலானான்.
நோய் குணமானதும், வடக்கே சென்று பழிவாங்கும் பொருட்டு தான் எண்ணியிருந்த திட்டங்கள் ஒவ்வொருன்றாக அவன் நினைவுக்கு வந்தன. அவன் சிந்திக்கலானான்.
தங்கள் நோக்கம் நிறைவேற, சுதந்திரமான ஒரு பிரதேசத்தைத் தமதாக்கிக் கொள்ள, தமது உயிரையே பணயம்
முயலுவதையும் எண்ணிப் பார்க்கின்றான்.
உயிர்களை அழிக்கும் படுபாதக உணர்வில் நாமிருக்க இங்கு இப்படியும் மனித நேயங்கள்.
இன, மத, மொழி வேறுபாடற்று ஒரு உயிரைக் காக்க எத்தனை முயற்சிகள்.
米米米
பெரும்பாலும் குணமடைந்துவிட்ட நிலையில் அந்தப் கடை வீரன் வீடு செல்லும் நாள் நெருங்கியது.
மஞ்சுவோடு அவனுக்கு நன்கு பரிச்சயம் ஏற்பட்டும் இருந்தது. அடிக்கடி அங்கு வருபவர்களைப் பற்றியெல்லாம் கேட்டறிவான்.
அந்த மக்களின் வாழ்க்கை முறையும், புரிந்துணர்வும் அவனை வியப்படையச் செய்தன. இந்நிலை ஏன் நாடு முழுவதும் ஏற்படக் கூடாது. வேற்றுமையும் பிளவுகளும், அழிவுப் பாதையிலே நம்மை இட்டுச் செல்லும். ஒற்றுமைக்காய்ப் பாடுபடுவதே உயர்ந்த வழியென அவன் மனம் கூறிற்று.
விடைபெறும் நாளன்று அவன் மஞ்சுவின் அருகில் சென்று நெற்றியில் முத்தமிட்டான். தன் மனம் மாற அந்தச் சிறுவனே காரணம் என அவன் இதயம் சொல்லியது.
146 ஜின்னாஹ்

வைத்தியசாலையை விட்டு வெளியேறும் போது அவன் மனம் தெளிந்த நீர்போல் இருந்தது. போரை வெறுத்து, சமாதானத்திற்காகப் பாடுபடும் ஒரு சமாதானப் பிரியனாக அவன் வெளியேறினான். சொல்லி வைத்தாற் போன்று அன்று வீதியோரத்தில் எல்லா இனமக்களும் சமாதானத்திற்காகக் கைகோத்து நின்றனர். அவர்களோடு அவனும் இணைந்து கொண்டான்.
(1990ம் ஆண்டு கலாசார அமைச்சின் பரிசு பெற்ற, கதைத் தொகுதியிலும் வெளிவந்தது. )
Q(e, ocoulöomoon Clayoflöome,
புனைகதை இலக்கியங்கள் பாமர மக்களைச் சென்றடைய வேண்டும். பாமர மக்களைச் சென்றடைவதற்கு இலகு மொழியில், எளிய நடையில் எழுதப்பட வேண்டும்.
இதனைப் படைப்பாளர்கள் உணர வேண்டும். அந்த இலக்கு நோக்கிய கைங்கரியத்தை மிக அழகாக இந்தக் கதையில் செய்திருக்கிறார் டாக்டர்.
காலத்தின் தேவை கருதி எழுதப்பட்டிருக்கும் கதை. கதாசிரியரின் மனதில் ஆழமாகப் புதைந்து கிடக்கும் இன ஒற்றுமையின் வெளிப்பாடு. சமாதானத்தின் குறியீடாகிறது.
ஓ.கே. குணநாதன்
147 பெற்றமணம்

Page 83
اُلم 9 صفرل ضلعlہ لینڈ
அவள் தேனை அறிந்திருந்தாள். சுவைத்துப் பார்க்கும் ஆசையும், இயற்கையின் உந்துதலால் அவளுக்குள் இருந்தது. காலம் கனிந்த போது, பெற்றோர்களே அதனைத் தேடியுந்தந்தனர். ஓரிரு மாதங்கள்தான். அதன் சுவையை, உடலுக்கும் உள்ளத்திற்கும் அது தந்த அவளால் அணு அணுவாக அனுபவிக்க முடிந்தது.
பூரித்துப் போனாள். வாழ்நாளெல்லாம் அது போன்ற நாட்களாகவே இருக்கக் கூடாதா என மனம் அங்கலாய்த்தது. இத்தனை நாளும் நான் இதனை அறியாதிருந்தேனே.
சட்டென மனதுக்குள் ஒரு ஏக்கம். அவளறிய எத்தனை இள நெஞ்சங்கள் இதனை உணராது, அனுபவிக்காது வாழ்நாளை வெறுமையாய்க் கழித்து வாடிப் போயின.
மனத்துள் மாறியோர் இனம் தெரியாத பூரிப்பு. நான் சுவைத்து விட்டேன். சுவைக்கப் போகின்றேன். சுவைத்துக் கொண்டே இருப்பேன்.
148 ஜின்னாஹ்

நம்பிக்கை மேலோங்க உடலுக்குள் கிடந்து ஊஞ்சலாடும் மனத்தின் துள்ளாட்டம் அவள் செவிகளுக்குள் அல்லவா
“ஆண்டவனே, என்னை எப்போதுமே இப்படியே வைத்துக் கொள்” அவள் ஏங்கினாள். புலன்களையெல்லாம் ஒன்றாக அடக்கிப் பிரார்த்தித்தாள். கண்கள் மூடிக் கொண்டன. அந்த இருள்மைக்குள்.
அது யார்? பூதாகாரமான அந்த வெளிச்சத்துள் தோன்றுவது! ஆம் அது அவர். அவரே தான். அவள் கண்கள் முடியே கிடந்தன.
ஒரு மங்கிய மெல்லிய இருளுள் அவனும், அவளும் அங்கு நடப்பது என்ன! கண்களை மூடிக்கொண்டாலும் அனைத்தும் தெரிகின்றனவே. சட்டெனக் கைகள் முகத்தை மூடிக்கொள்ள, நாணத்தால் முகம் வியர்க்க உடல் நடுங்கியது.
தனிமையில் ஒரு தனியறையுள் மின் விசிறியின் தென்றலுக்குப் போட்டியிடும் மெல்லிய இளங்காற்றில் எண்ணங்களின் பேதலிப்பில் அவள் கிடந்தாள்.
米来来
புதிதாகக் குடிவந்த வீட்டுத் தோட்டத்தில் வாடிக் கிடந்த பூஞ்செடிகளுக்கு, நீண்ட குழாய் கொண்டு நீர் பாய்ச்சிக் கொண்டிருந்தவள் சட்டென உயர்ந்த தலையைக் கண்டதும் துணுக்குற்றாள்.
வீட்டுச் சுற்று மதிலைத் தாண்டி ஓரிரு அடிகளுக்குள் நனைந்து போன தோற்றத்தில் ஒரு முகம் கடுங்கோபம் நிழலாடத் தெரிந்தது.
புரிந்தது அவளுக்கு தன்னால் தவறொன்று நடந்து விட்டதாக. கோபத்தால் வெடித்திருக்க வேண்டும் ஏனோ அவளைக் கண்டதும் அரை வேக்காட்டில் சினம் தணிந்தது.
149 பெற்றமனம்

Page 84
வார்த்தைகள் எழவில்லை. தாமதித்துச் சொற்களைக் கூட்டி மன்னிப்புக் கேட்டாள். சினம் பணியான போது தலையும் தணிந்தது.
米米米
அவன் எவ்வளவு அழகான இளைஞன். முகப் பொலிவே அவன் உருவத்தைக் கற்பனைக்குள் வடிக்கச் செய்தது.
கற்பனை உருவம் சமைத்த அவன், கண்ணுக்குள் நின்றான். தெளிந்த நீரில் தோன்றும் களங்கமில்லாப் பிம்பம்போல.
“சீ, என்ன இது?’ அவள் உள் மனம் சொன்னது. கல்லொன்றை எறிந்து தேகத்தைக் குழப்பியது போல அவள் மனம் கலங்க அவன் மறைந்தான்.
எத்தனை நேரம்? ஒரு சில நிமிடத்துளிகளே. மெல்ல மெல்ல. மெல்ல மெல்ல. நினைவுகள் தெளிவடைய, மீண்டும் அதே. அவன். அவள் மனத்திரையில் பதிவானான். அச்சாக அழியாத கோலமாக,
米米米”
கட்டிலில் தனித்துப் புரண்டாள். தூக்கம் தூர நின்றது. இப்போதெல்லாம் அவளுக்கு இரவில் தூக்கம் வருவதில்லை. முன்பெல்லாம் ஆடிய கலைஞன் போல், அடித்துப் போட்டது போல் உறக்கம் தழுவி நிற்கும்.
இன்றோ கட்டிய மனக் கோட்டைகள் காணாமற் போனபோது. தினமும் இனிமேல் தேனருந்தும் இன்பம் தான், என்று திடமாக நம்பிய தன் எண்ணத்தில் மண் சரிந்தபோது, அவள் என்ன செய்வாள்?
மூன்றோ நான்கோ மாதங்கள் தான். அவள் சற்றேனும் எண்ணிப் பார்க்காத வேளை. எண்ணியும் பார்க்க இயலாத
தொலைவில் அவள் கற்பனையின் தளமே பிரிந்து போனது.
150 ஜின்னாஹ்

தூண்டி விடாத விளக்காக அவள் இருந்திருந்தால், சுற்றிவரத் தான் அனுபவித்த இருள்மைக்குள், தன்னைப் பிறர் போல் நிரந்தரப் படுத்திக் கொண்டிருப்பாள். சட்டெனத் தூண்டப்பட்டு, தன்னைச் சுற்றியொரு ஒளி இன்பத்துள் மூழ்கித் திளைக்கையில் அணைக்கப்பட்டால்! அவளால் தன்னை ஒரு கட்டுக் கோப்புக்குள் தவிக்க விடச் செய்தாள்.
தேனின் சுவை தந்தவன் தொலை தூரத்தில் தன்னை நிரந்தரப் படுத்திக் கொண்டதே. அவளால் தாங்கிக் கொள்ள இயலாதிருந்தது.
கண்களை இறுகவே மூடினாள். சுற்றியுள்ள அவன் அடையாளங்கள் அத்தனையும் பழைய நினைவுகளைத் துாண்டாதவாறு தடுத்துக் கொள்ள. எட்டாக் கனியவன் என்பதால் ஏமாற்றத்தின் பலனாய் எண்ணத்திலிருந்து மெல்ல அகன்று போனான்.
கண்கள் மூடிக் கிடந்தன. ஒரு சிறிய தூண்டுதலால் முற்றிலும் மாறிவிடும் கணனித் திரைபோல அவள் மனத்திரையில். அவன்.
ஆம். அவனேதான். முகத்தை மட்டும் வைத்து உருவத்தை அவள் உருவகச் செய்ய, மனத்துள் நிலைத்துவிட்ட மதிலுக்கப்பால் தெரிந்தவள்.
நெருப்பாய்த் தகித்தது உடல், சட்டென ஏற்பட்ட அந்த மாற்றத்தின் காரணம் அவளுக்குத் தெரிந்தது. அவள் மீண்டும் கண்களை இறுக்கமாக மூடிக்கொண்டாள்.
முன்பொரு நாள் தெரிந்த பேரொளியுள் ஒரு மெல்லிய இருளுள். அவள் கண்ட காட்சி. அங்கே அவன் இருந்தான். அதே வெறுமைக் கோலத்தில் ஆனால் முன்பிருந்த அவனில்லை.
151 பெற்றமனம்

Page 85
அவனுக்குப் பதிலாய் வேறொருவன். முகத்தை மட்டும் வைத்து அவள் உருவகம் செய்த மதிலுக்கப்பால் தெரிந்தவன்.
மனம் அதிர்ந்து போனது. விழித்துக் கொண்டாள். அவளை அறியாமல் உடல் எழுந்து கட்டிலில் தன்னை உட்கார வைத்துக் கொண்டது.
米米来
இன்றுதான் தோன்றுவான்போல் இளமைக் கோலத்தில் கதிரவன் கிழக்கில் தோன்றினான். வரவர வேகம் குன்றி மாலையில் மேற்கு வானுள் புதைந்து மறைந்தவன், புதியவனாய்ப், புத்தம் புதியவனாய் உருவெடுத்தே.
சுள்ளென முகத்தைச் சுட்ட அவன் செங்கதிரால் அவள் விழித்துக் கொண்டாள். தலை கனத்தது. தெளிவில்லாத ஒரு மன உணர்வினால் அவள் குழம்பிப் போய் இருப்பது. அவள் முகத் தோற்றத்தில் பிரதிபலிப்பானது.
பிரிவின் துயர் மெல்ல மெல்ல மறைந்துபோய்த் தனிமை தான், சாவு வரும்வரை வாழ்வு என்று மனத்தைச் சவமாக்கிக் கொண்டு நான்கு ஐந்து மாதங்களாகிவிட்டன. இரவின் தனிமை பழகிப் போனாலும், இடையிடையே ஏற்படும் இளமையின் வேண்டுதலுக்கு அவளால் தீனியிட முடியது தவித்த நாட்களில் அன்றும் ஒன்றானதால் ஏற்பட்ட மாற்றமே அது.
காலைக் கடன்களின் போது குளிர்ந்த நீரில் உடலை ஊறவைத்துக் கொண்ட அவளுக்கு மனதில் ஓரளவு பாரம் குறைந்தது.
வெளிநாட்டு மோகம் இன்று எத்தனை இளம் உள்ளங்களை இவ்வாறு ஏங்கவைத்துக் கொண்டிருக்கின்றது. போரின் கொடுமையால் குருத்திலேயே கிள்ளப்பட்ட வாழ்வின் முடிவுகள் ஒன்றிரண்டா, இல்லாத போது இல்லையென்றானாலும், இருந்தும் இல்லாத நிலை தோன்றும் போது. ஏமாற்றத்திற்கு அளவே இல்லையே.
C152D ஜின்னாஹ்

பணம் தேடும் ஆசை, அதனைவிட மேனாட்டின் நாகரிகம் எனத் தோன்றும பொய்யான வாழ்வு முறை: இளைஞர்களைப் பல இலட்சங்களாகப் பறக்க வைக்கின்றன.
தனித்துப் பறந்தவர்கள் போகத் துணைகளைத் தவிக்கவிட்டுப் போனவர்களும் அங்கு துணை தேடிக்கொள்வதில் மிகச் சாதாரணமே.
பசுப்பால் குடிக்கப் பசுவா வளர்க்க வேண்டும் மேல் நாட்டில்? வீதிக்கு வீதி பண்ணைகள் மலிந்த நாகரிகம், இளைஞர்களைப் பிறந்த மண்ணை மறக்கச் செய்கிறது என்றால் பொய்யேது? அவளின் துணையும் அவ்வாறு தான் புதிய வாழ்வுக்குத் தன்னையும் பழக்கிக் கொண்டிருக்கும்.
மாலையின் மங்களான கருமை வானத்தில் படர, சூரியன் தன்னை அதற்குள் புதைக்கலானான். தோட்டத்துப் பூஞ்செடிகள் நீருற்ற அவளை அழைப்பது போல் தங்களைச் சோர்வாக்கிக் கொண்டன.
நீண்ட நீர்க்குழாயின் வேகமான நீர்ப்பாய்ச்சல் செடிகளை ஸ்நானம் செய்வித்தது. நீரப்பட்டதும் சட்டென அவற்றில் தோன்றும் மலர்வு அவள் நெஞ்சத்தைக் கிளிற தலை தானாக உயர்ந்தது. கண்கள் எதையோ தேடின. தேடாதே என்பது போல் தெரிந்த உருவத்தில் அவள் பார்வை குத்திட, அவனும் நோக்கினான்.
நாட்கள் நகர்ந்தன. தினமும் அவள் பூஞ்செடிகள் நீரில் மிதந்தன. கண்களும் மனமும் கொண்ட களிப்பும் தொடர்ந்தது. தன்னைச் சுற்றி மீண்டுமோர் ஒளியின் மலர்வினை அவள் உணரும் போது, இழந்துபோன எல்லாமே அவளுக்குக் கிடைக்கலாயின.
அடிக்கடி அவள் செய்கைக்காய் உள்மனம் உறுத்தும். “ஒருத்திக்கு ஒருவனே’ என்ற அதன் தீர்மானத்தால் அவள் நொந்தே போவாள். இருப்பினும் அதனைப் பேணும் மனவலுவை இழக்கச் செய்யும் செய்கைக்குரிய யதார்த்தத்தை அவளால் மறுக்க இயலவில்லை. இயற்கையை வென்று எத்தனைப் பேரால்
153 பெற்றமனம்

Page 86
வாழமுடியும்? அந்தச் சாதாரணத்தில் ஒன்றாய் அவள் தன்னையும் சேர்த்துக் கொண்ட போது. தவிக்க விட்டவர்கள் அனைவரும் அவளுக்குத் துரோகிகளாகத் தோன்றினர்.
மல்லிகை
QG oøC-do^áSe) (laðåöoAG
எழுத்துக்களில் எல்லா எழுத்து வகைகளும் சமூகத்தின் மீதான அக்கறையுடன்தான் பிறக்கின்றன. ஜின்னாஹற்வின் “மீண்டும் பூத்த மலர்” என்ற இந்த படைப்பும் அத்தகைய ஒரு படைப்பே' பாலியல் சார்ந்த அகவியல் பிரச்சினைகள் எழுத முனையும் பொழுது, ஒவ்வொரு படைப்பாளியின் ஆளுமைக்கேற்ப மொழியாடல் கையாளப்படுகிறது. அதே வேளை அத்தகைய, அதாவது பாலியல் சார்ந்த அகவியல் பிரச்சினைகளை எழுத முனையும் பொழுது, கத்திமீதான ஒரு பயணமாக அவ்வெழுத்திற்காய் கையாளப்படும் மொழியாடல் மூலம் அவ்வெழுத்து, “போர்னோகிராபி” எழுத்தாக மாறி விடக்கூடடிய ஆபத்தும் இருக்கிறது. அவ்வாறான ஆபத்திற்கு மிகவும் குறைந்த அளவான முறையிலே ஜின்னாஹற்வின் “மீண்டும் பூத்த மலர்” என்ற இந்த படைப்பின் மொழியாடல் ஆளாகி இருப்பது, ஜின்னாஹற் இப்படைப்பில் கையாண்டு இருக்கும் பிரச்சனை மீதான அவரது ஆத்மார்த்தமான அக்கறையை எடுத்துக் காட்டுகிறது. அத்தோடு, நவீன சிறுகதைக்கு எதிரான ஒரு தன்மையான, பெரிய கதை செல்லும் தன்மை இல்லாது, மின்னல் கீற்றாய் ஒரு பெண்ணின் சிறிது நேர அக யதார்த்தத்தை சித்திரித்து இருப்பது, பாராட்டக் கூடிய அம்சம் எனலாம்.
அவளைப் போன்ற பெண்களின் அக யதார்த்தத்தைப் புரிந்து கொள்ளும் சமூகத்தின் அக்கறையும், மனோபக்குவமும் வளர்ச்சி அடையாதவரை, மீண்டும் பூத்த மலரின் நாயகிகளின் ஏக்கம் தொடரவே செய்யும்.
- மேகன் கவி
154 ஜின்னாஹ்

نام?*(۸۱)
شيدAلمكGAr
சிள்ளென்று முகத்தில் பதிந்த மதிய வெயிலின் ஒளிமுள், ஏனோ அவனுக்கு வெறுப்பைத் தந்தது. அப்போதுதான் விமானத்தில் படி இறங்கி, பத்து வருடங்களின் பின் பிறந்த மண்ணில் பாதம் பதிக்கின்றான்.
சதா தடிப்பான ஆடைகளுக்குள் சங்கமமாகிக் கிடந்த உடல் வெளிச்சூட்டின் ஆதிக்கத்தால் வெந்தபோது, அவனுக்கு எரிச்சலாய் இருந்தது. ‘கோட்டைக் கழற்றிக் கையில் ஏந்திக் கொண்டு கைப்பாரத்துடன் விமான நிலையத்துள் நுழைந்தான்.
உள்ளே அதிகாரிகளின் கெடுபிடிகள் பலமாக இருந்தன. நீண்ட நாட்களின் பின் வந்ததால் இன்றைய நடைமுறைகள் அவனுக்கு வெறுப்பை மூட்டின.
G55) பெற்றமணம்

Page 87
வாடகைக்கார் ஒன்றினை அமர்த்திக் கொண்டு கொழும்பை நோக்கி பயணம் தொடர்ந்தது. வதியும் நாட்டில் வினாடிக்கு வினாடி அதிகரிக்கும் வளர்ச்சியின் மாற்றங்கள். இங்கு இல்லாமல் இருப்பது அவனுக்கு ஆச்சரியத்தைத் தரவில்லை. என்னதான் பிறந்த நாட்டைப் பிரிந்து வாழ்ந்தாலும் தொடர்பு சாதனங்கள் மூலம் அவ்வப்போது இங்கு நடப்பவற்றை, அவன் தெரிந்து கொண்டு தான் இருந்தான்.
நெஞ்சுக்குள் ஒரு சோகம் மெல்லத் துளிர்த்துச் சட்டென அடங்கியது. மனம் இறுகிப்போக அவன் தன் பார்வையை வெளியில் இருந்து அகற்றி வாகனத்தின் ‘டாஷ்போட்டில் இருந்த பிளாஸ்டிக் பொம்மையை வெறிக்க நோக்கினான்
அது சுருள் கம்பியில் பொருத்தப்பட்டிருந்த சிரிக்கும் “ஹம்டி டம்டி’ “ஹேவ் எ னைஸ் டே” என்ற வாக்கியத்தைக் காட்டி வாகனத்தின் அசைவுக்கேற்ப குதித்துக் குதித்து வேடிக்கை காட்டியது.
அதில் பொறித்திருந்த வாசகத்தை அவன் மீண்டும் வாசித்தான். மனத்துள் ஒரு நெருடல். இன்று நாள் எப்படி இருக்குமோ!
வீதியில் கண்ணில்பட்ட ஒரு சோதனைச் சாவடியில்
பொம்மை. அதன் கையில் தாங்கிய சட்டத்தில்
வாகனம் நிறுத்தப்பட்டது. சாரதி இறங்கிக் கொண்டான். நடைமுறை வழக்கங்கள் அவனுக்குத் தெரிந்திருந்தன. மணிகண்டன் இறங்கவில்லை.
பதிந்திருந்த கண்ணாடி ஊடாக குனிந்து பார்த்த பொலிஸ்காரன், சைகை செய்தான் “இறங்கு’ என்று. அப்போதும் அவன் இறங்கவில்லை. பையில் இருந்த “பாஸ்போட்’ஐ எடுத்துக் கதவிடுக்கால் நீட்டினான். அதன் வண்ணமும் தோற்றமும் அவனொரு வெளிநாட்டுக்காரன் என்பதை பொலிஸ்காரனுக்குப் புரியவைத்தன.
156 ஜின்னாஹ்

சந்தேகம் நிறைந்த பார்வையுடன் அதில் பொறித்திருந்த பெயரைப் படித்தான்.
அவன் தொழிலுக்குப் புதுசுபோலும். மீசை துலங்காத முகத்தில் பூனைமயிர்கள் மேவிக்கிடந்தன. திரும்பித் தன் சகாவைப் பார்த்தான். அவன் இவனுக்குத் துணைசேர, வந்தவனும் “இறங்கு” என்றான்.
மணிகண்டனின் முகம் கோபத்தால் கடுகடுத்தாலும், சிறிதேனும் சட்டத்திற்கு மதிப்பளிக்க வேண்டும் என்பதால், தரையில் கால் பதித்தான். ஏனோ கால்கள் கூசின.
“கோ ஹந்துனும் பத்' மணிகண்டனுக்குப் புரிந்தது அவன் என்ன கேட்கின்றான் என்பது. கைகளை விரித்து இல்லை என்பது போல் சைகை காட்டினான்.
“ஒயா யாப்பனே நேத!” என்றான் அவன். இப்போது பதிலை “ஆம்’ என்றுதான் சொல்ல வேண்டி இருந்தாலும், மணிகண்டன் “ஜேர்மனி” என்றான். அவனது “பாஸ்போட்’ அதைத்தான் சொன்னது.
“தெமல நேத” மீண்டும் அவன் இரண்டாம் கேள்வி அம்பாகத் தெறித்தன. அவன் முகம் விகாரமடைந்திருந்தது.
சிங்களத்தைப் புரிந்து கொண்டதால் மணிகண்டன் ஒரு இலங்கைத் தமிழன் என்பதில் அவன் திடமானான். இங்கு பிறந்தும், குடியுரிமை பெற்றதால் கடவுப் புத்தகம் அந்நாட்டுக்குரியதாய் இருப்பது மணிகண்டனுக்குத் துணிவைத் தந்தது.
மணிகண்டன் எதுவும் பேசவில்லை. அவன் மெளனம் பொலிஸ்காரருக்கு “ஆம்’ என்ற பதிலையே தீர்மானிக்கச் செய்தது.
வினாவுக்கு பதில் “எனது சொந்தங்களை’ என்றிருந்தது.
157 பெற்றமனம்

Page 88
மேலும் அவன் கேள்விகளால் மணிகண்டனைத் துளைத்தும் அவனைத் தன் வலைக்குள் சிக்கவிடாதபடி, "பாஸ்போட்” வேற்று நாட்டான் என்னும் சாட்சியாக அமைந்ததால் “போ’ என்னும் அடையாளமாய்க் கரமசைத்தான்.
எப்படியோ தடைதாண்டி வெள்ளவத்தைக்கு வந்து சேர்ந்த அவனுக்கு அன்றிரவே ஒரு சோதனை காத்திருந்தது.
இரவு பன்னிரண்டு மணி தான்டி இருக்க வேண்டும். நண்பன் சுகுமார் தூக்கத்தை ஒடித்தான். “சோதனைக்கு வந்துள்ளார்கள் எழும்பு’ என்றான் அவன்.
“அதார்!’
“பொலிஸம் ஆமியும்’
"660TLT.'
“இதுதான் இஞ்ச வழக்கம் எழும்பு’ என்றான் அவன் மீண்டும். அதற்கிடையில் முன்வாசலில் நிறையவே சப்பாத்துச் சத்தங்கள். வெற்று உடம்பில் ஒரு துவாயைப் போர்த்திக் கொண்டு வெளியில் வந்தான் மணிகண்டன். வந்ததும் வராததுமாய் பொலிஸ் பதிவு செய்யாதது சிக்கலை உருவாக்கியது. பக்கத்து வீட்டார்கள் புதிதாக யாரோ வந்திருப்பதாகப் பொலிஸ"க்கு சொல்லி இருக்கின்றனர்.
வேறு யாருமல்ல, அவர்களும் நம்மவர்கள் தான். தெரிந்தும் தெரியாமலும் தற்பாதுகாப்பில்லை என்பதால், நம்மையே நாம் காட்டிக் கொடுக்கின்றோம் என்னும் உணர்வில் லாமல் அறிவித்திருக்கின்றனர்.
நீண்ட நேர விளக்கத்தின் பின் காலையிலேயே பதிவு செய்து விடுவதாக சுகுமார் வாக்களித்ததும், வந்தவர்கள் திரும்பிச் சென்றனர். மணிகண்டனுக்கு ஆத்திரம் தாங்கவில்லை.
158 ஜின்னாஹ்

“ஏனடா நான்தான் ஜேர்மன் பாஸ்போட் வெச்சிருக்கனில்ல என்னை ஏன் பதியச் சொல்லுறானுகள்’ என்றான். அவன் கைகால் கோபத்தால் நடுங்கின. சுகுமாருக்கு சிரிப்பு வந்தது.
“மச் சான் மணி, நீ தமிழனடா, யாழ்ப்பாணத்தில் பொறந்தவன். ஜெர்மனி நாட்டுப் பாஸ்போட் வெச்சிருந்தாலும் நீ இலங்கையன்டா”
“இந்த கோதாரி தாங்க எலாமத்தானடா நாங்க இஞ்ச இருந்து போனனாங்கள். இன்னும் ஏனடா எங்கள கரச்சல் பண்ணுகினம்”
இன்றைய நாட்டு நிலைமை புரியாமல் அவன் பேசுவது சுகுமாரனுக்கு புரிந்தது. அவன் நிதானமாகப் பதில் சொன்னான். “மணி கொழும்பில் நிரந்தரமா இருக்கிறவங்களத் தவிர புதுசா யாரு வந்தாலும் பதிய வேணும். வேலைக்கு ஒரு வெளியூர்காரனை வெச்சாலும் பதிய வேணும். இது சட்டமடா”
வெறுப்பாய் இருந்தது மணிக்கு. நீண்ட நேரம் அவன் பேசாமலே இருந்தான். அந்த அமைதியைக் கலைப்பது போல் சுகுவே பேசினான்.
“அது செரிடா மச்சான்-ஜேர்மனியல உங்கள ஜேர்மன் நாட்டுக்காரன் எண்டு நெனக்கினமே" சட்டென எதிர்பாராது வந்த அந்த வினா மணிகண்டனின் நெஞ்சுக்குள் காய்ச்சிய இரும்புக் கோலைப் பாய்ச்சியது போலிருந்தது.
பத்து வருட வாழ்வு. இன்னும் அவனால் கூட அவன் அந்த நாட்டின் பிரஜை என்பதை மனத்தளவேனும் பதித்துக்கொள்ள முடியவில்லை. பிறப்பால் ஜேர்மனியன். பரம்பரையாய் வாழ்ந்து வரும் தம்மவரைத் தவிர மற்றவர்களை வந்தேறு குடிகளாகவே எண்ணுகின்றான்.
159 பெற்றமனம்

Page 89
இரண்டாய் இருந்து, ஒன்றான பின்னும் கிழக்கு மேற்கு வேறுபாடு இருக்கவே செய்யும் போது, தோல்கறுத்த ஆசிய நாட்டவனை ஏன் அவன் ஏற்றுக்கொள்ளப் போகின்றான்?
அங்குள்ள ஒவ்வொருவனும் தான் தனது நாடு, தனது மக்கள் என்று மட்டுமே சிந்திக்கின்றான். வாழ இடங்கொடுத்தானே அன்றி என்றும் அவன் எங்களை அவனுக்கு இணையாய் நேசித்ததில்லை. நேசிக்கவும் மாட்டான்.
ஒரு கேள்வி எழுந்த போது பதில் சொல்ல வேண்டியவன் ஏதோ சிந்தனை வயப்பட்டிருப்பது சுகுமாரனுக்கு வியப்பைத் தந்தது. பதில் வரும்வரை காத்திருந்தான்.
ஜன்னலின் ஊடாய் இருண்டு பரந்து கிடந்த வானத்தில் தன் பார்வையைப் பதித்துக் கிடந்த மணிகண்டன், மெல்லத் திரும்பி சுகுவை நோக்கினான். சற்று முன் கோபத்தால் சிவந்து கிடந்த அவன் முகம், மின்விள்க்கொளியில் வியர்த்து வெளிறிக் கிடப்பது தன் கேள்விக்கு அவனிடம் விடை இல்லை என்பதை நிரூபணம் செய்தது.
சுகுமாரன் பேசினான். அவனின் ஒவ்வொரு சொல்லிலும் அர்த்தம் பொதிந்து கிடந்தது.
“மணி, நீ நடக்கிற கெடுபிடிகளுக்கு கோபப்பட்டாலும், ஒன்டமட்டும் நெனவில் வெச்சுக்க. இவங்கள் எங்கள வெறுத்தாலும், அடிமனத்தால நாம இந்த நாட்டுக்குச் சொந்தக்காரர் எண்டும், வடக்கில் பொறந்தவங்க எண்டும், ஏத்துக்கறதாலதான் இத்தன கெடுபிடியும் செய்யறாங்க.”
“இங்க மட்டுந்தானடா நாம நமக்குரிய உரிமைக்காகப் போராடலாம். உலகில் நாம எங்க வாழ்ந்தாலும், எந்த நாட்டுப் பிரஜா உரிமை வாங்கினாலும், அங்கெல்லாம் நாம வந்தேறு
60 ஜின்னாஹ்

குடிகள் தானடா. நாமளும் நம்மள அந்த நாட்டு இரண்டாம் பட்சப் பிரஜையாகத்தான் நெனச்சு வாழனும்.”
“கொஞ்சம் கொஞ்சம் நாம உலகமெல்லாம் கலைஞ்சு போனா, சிறுபான்மையிலும் சிறுபான்மை ஆகிவிடுவோம். அப்ப யாருக்கிட்ட யாரு எதக் கேக்கிறது.
“மணிகண்டா, "மரணத்துள் வாழ்வோம்’ எண் டு சொன்னவனும் மனம் மாறிப்போனா, இங்க நாங்க கொஞ்சப்பேர் தானடா மிஞ்சுவம்.”
"இஞ்ச மட்டும் தான் நாம நமது உரிமைக்காகப் போராடலாம். கிடைக்க வேண்டியது இங்க மட்டும்தான். இப்ப இல்லாட்டிலும் எப்பவோ ஒருநாள் நாம இந்த நாட்டின் சமஉரிமை, கொண்ட சனங்களா வாழத்தான் போறம். அப்ப இந்த நாடே வேண்டாமென்று போன நீங்களும் உங்கட சந்ததிகளும் நாடற்ற பிரஜைகளே’
சுகுமாரனின் நிதானமான வார்த்தைகள் ஒவ்வொன்றாய் மணிகண்டனின் நெஞ்சுள் பதிந்து அவனைச் சுட்டன.
பதில் பேச முடியாது மெளனியானான் அவன்.
வீரகேசரி
15.07 2001
161 பெற்றமனம்

Page 90
Spi? Noain
உயர்ந்து பதிந்த முட்குத்தியின் அடிப்பாகத்தில் தனது வலதுகால் பாதத்தை ஊன்றி, அதன் கைப்பிடியை முன்னும் பின்னும் அசைத்து, மீண்டும் ஒருமுறை பாதத்தைப் அழுத்தித் தன் பக்கமாய்ப் பதித்தான் மாரி.
புரண்டு விழுந்த மண்கட்டியோடு, ஒரு மண்டை ஓடும் கூடிப் புரண்டது. அதுவொன்றும் ஆச்சரியத்தைத் தரவில்லை அவனுக்கு. இப்படி எத்தனை மண்டை ஓடுகள், கைகால் எலும்புகள், நெஞ்செலும்புகள் அவன் மண்வெட்டிக்கும் முட்பகுதிக்கும் வெளிப்பட்டிருக்கும்!
குனிந்து அதை எடுத்தான். அதில் படிந்திருந்த மண்ணைத் துடைத்து, ஆதரவாக அதன் மேற்புறத்தைத் தடவினான். சிறிது நேரம் கண்ணிமைப்பில்லாமல் அதனை நோக்கினாள்.
162 ஜின்னாஹ்

சிறுபொழுதுள் அவன் மனம் அதனை விடுத்து எங்கோ தொலைதுார நினைவுகளில் சங்கமமாகியது.
நூறாகக் கடந்துபோன வருடங்கள். நூறுநூறாய் ஆயிரமாயிரமாய், இலட்சங்களாய், இதே மண்ணில் தோன்றி, இதே மண் செழிக்க உழைத்து, பின் இதே மண்ணுக்கே இரையாகி, உரமாகிப் போன அவன் முன்னோர்கள், அவர்களில் ஒருவனுடைய அல்லது ஒருத்தியினுடைய மண்டை ஓடு அது.
உடலோடு ஒன்றி இருந்த பாவத்திற்காய் இன்னும் இந்த மண்ணுக்குச் சொற்ப சொற்பமாய் உக்கி, ஊட்டமளித்துக் கொண்டிருக்கின்றது.
மாரியின் நெஞ்சு கணத்தது. மனித வாழ்வில் காலத்துக்குக் காலம் எத்தனை வளர்ச்சிகள், எத்தனை மாற்றங்கள் நிகழ்கின்றன! அந்த மாற்றங்கள் இந்த நாட்டின் உயிர் நாடியாம் பொருளாதாரத்தை வளப்படுத்தும் நமது மக்களின் வாழ்வில் ஏற்பட மறுக்கின்றது? அவனும் சில வருடங்கள் பள்ளிப்படிகள் ஏறியவன்தான். ஆயினும் பாட்டனும் பூட்டனும் செய்த அதே தொழில், அதே வாழ்வு. ஆண்டுகள்தான் மாறினவே தவிர, அவர்களின் வாழ்வு மாறவே இல்லை.
“என்னண்ணே! தலை ஒட்ட வைச் சிட்டு என்னதான் பண்ணுற? தூக்கி எறிஞ்சிட்டு வேலயப் பாக்காம.”
நஞ்சப்பனின் குரலால் சட்டெனக் கனவுலகில் காணாமல் போன மாரி அவன் பக்கம் திரும்பினான்.
"ஒண்ணுமிலபா, முள்ளுக் கிண்டிக்கி வெளியே வந்திச்சி! சும்மா கையிலெடுத்துப் பாக்கிறேன்.”
மாரியின் மனத்தில் கனத்த பாரம். அது அப்படியே இருந்தாலும் நஞ்சப்பனிடம் “சும்மா’ என்று ஒரு பதிலைச் சொல்லிவைத்தான்.
பள்ளத்தில் ஓர் ஆழமான குழியைத் தோண்டி அந்த
163 பெற்றமணம்

Page 91
மண்டை ஓட்டைப் புதைத்துவிட்டாலும் அவன் மனத்தில் அது ஏற்படுத்திய ஆழமான தழும்பு அகலாமல் நிலைத்தது.
பகல் போசனத்துக்கான நேரம் அறிவிக்கப்பட்டதும், தொழிலாளர்கள் தங்கள் தங்கள் லயங்களை நோக்கி நடந்தனர். மாரியும் நஞ்சப்பனும் அவர்களோடு இருவராகினர். உருக்குப் போன்ற உடம்பு தொழிலாளர் வர்க்கத்துக்கு, உண்ணும் உணவெல்லாம் உடலோடு ஒன்றிவிடும் தேக உழைப்புக்குக் கொடுப்பது செரித்துப் போவதால், கழிவுகள் இருப்பதில்லை.
ஊழைத்தசையும், உடல்கொழுப்பும் ஒன்றுவதில்லை அவர்களுக்கு. மிதமிஞ்சிப் போனால்தானே வேண்டாத இடங்களிலும் அவை வேரூன்றித் தொங்கும்.
தண்ணி போட்டுத் தன்னை அழிக்காத மட்டும், தேகத்தை நெருங்கத் தோஷங்கள் அஞ்சும், மாரியும் அப்படித்தான். உறுதியான தேகக்கட்டுடன் இருந்தான். கெட்ட பழக்கங்கள் எதுவும் இல்லாததால், நோய் கூட அவனை அண்டப் பயந்தது.
இரவு மாரிமுத்துவுக்குத் தூக்கம் தொலைவாகி நின்றது. மண்டையோட்டின் நினைவுகளே அவனை அவ்வாறு விழித்திருக்க வைத்தன. கண்களைப் பலவந்தமாய் மூடினான். எல்லாமே இருண்டு தோன்றின. காட்சிக்கு முன் சினிமாக் கொட்டகை போல.
கருமை படர்ந்த கண்களுக்குள் மூளைக் கணணி புதுத்திரை திறந்தது. பழைமையை நினைவூட்டப் பதிவுகளை வெளிச்சமிட்டது. மீண்டுவரும் கடந்தகால நிகழ்வுகள் தப்பித்துக் கொள்ளாது தொடர்ந்தன. மாரி கண்களை மூடியபடியே கிடந்தான்.
நீண்டு வளர்ந்த தேகம். நரையேறிக் கிடந்தாலும், முறுக்கி விடப்பட்ட மீசை, கண்களில்தான் எத்தனைக் கம்பீரம். மேலில் சட்டை இல்லாதிருப்பதே ஓர் அழகுதான். கடுங் குளிரில் மட்டுந்தான்
( 164) ஜின்னாஹ்

கம்பளி அவர் உடலில் தொங்க இடந்தேடும். இடுப்பில் கட்டிய நான்கு முள வேட்டியும் தலைத் துண்டுந்தான் நிரந்தரம்.
அப்பா.
அவன் சுய உணர்வோடு இருந்தாலும், நினைவுகள் கனவுபோல் அவன் மனத்திரையில் பதிவாகிக் கொண்டிருந்தன.
அப்பா கங்காணி. துரைக்கு வேண்டிய மனிதர். அந்தத் தோட்டத்தை முற்றும் நிருவகிக்கும் பொறுப்பைத், தன் நம்பிக்கைக்குப் பாத்திரமான அப்பாவிடந்தான் துரை தந்திருந்தார். வீட்டிலும் அம்மாவும் அவனோடு நான்கு பிள்ளைகளும், மூத்த இருவரும் பெண்கள். இவன் நடுஇளையவன். மற்றவள் இவனுக்கு மூன்று வயதுகள் இளையவளாய். ஆணாக எதிர்பார்த்து பெண்ணாகப் பிறந்தவள்.
அம்மா தோட்டத்தில் கொழுந்தெடுத்தாள். கால வேகத்தின் பிரதி பிம்பமாக வளர்ந்து விட்ட மூத்தவர்கள் இருவரும், தாய்க்குத் துணையானார்கள்.
மாரியும் சின்னவள் சிங்காரியும்தான் பள்ளிப்படிகளை மிதித்தனர். எட்டாம் ஆண்டு வரைதான் படித்தான் மாரி. தொடர்ந்து படிக்கச் சூழ்நிலை தோள் தரவில்லை. முள்ளுக் குத்தியும். மண்வெட்டியும், கவ்வாத்துக் கத்தியும் பரம்பரைத் தொழிலுக்குப் Ludb35L6)LDIT356O7.
அப்பாவின் ஆஜானுபாகுவான தோற்றமே அவரைத் தோட்டத்தின் கண்காணியாக்கியது. படிப்பறிவு இல்லாவிட்டாலும் அனுபவங்கள் அவரை நிருவாகத்திற்குப் பொருந்த வைத்தன.
நேர்மைக்கு நிதர்சனமான அப்பாவினால், சம்பளம் மட்டுமே பெற முடிந்ததால், எல்லோரும் உழைத்தே அரைவயிறு உண்ண வேண்டி இருந்தது.
165 பெற்றமனம்

Page 92
இயன்றவரை முடிந்ததை அம்மாவின் திறமை சேர்த்துக் கொண்டதால், மூத்தவர்கள் இருவரும் ஒருவாறு கரையேறினர்.
சிங் காரியை ஒருவன் கையில் சேர்க்கும் வரை பொறுக்காமல், அப்பாவை ஆண்டவன் அழைத்துக் கொண்டான். அம்மாவும் முதுமை அடைந்து போனதால் மூவரைத் தாங்கும் முழுப் பொறுப்பும் மாரியின் தலைச் சுமையானது.
அப்பாவைப் பற்றி அகலாத நினைவு மீண்டும் துளிர்த்ததால, சட்டென ஒரு நிகழ்வு அவன் நெஞ்சத்துள் மின்னித் துலங்கியது. காலைக் கதிரவன் உஷணத்தைத் தாங்கொணாத வியர்வைக் கலங்கள் பொங்கிச் சுரக்க, வியர்த்த முகத்தோடு LD 60) 6) ğf செடிகளிடையே புகுந்த வெளிப் பட் டார் பொன்னுசாமிப்பிள்ளை.
கடல் தாளும் மாலைக் கதிரவனின் செம்மையில் குளித்ததுபோல் கண்கள் சிவந்து கிடந்தன. தந்தையின் கோலத்தைக் கண்ட மாரி, ஏதோ விபரீதம் நடந்திருப்பதை உணர்ந்தான்.
வேகமாய் இறங்கி வந்த அவர் மாரியைக் கண்டதும் "மாரி! இங்க வாய்யா, இன்னிக்கி அவன தொலைக்காம உடுறதில்லை.”
கவ்வாத்துக் கத்தி கையில் மின்னியது. எப்போதும் அது அவர் கையில் இருக்கும் ஆயுதம். வழியில் காணும் செடிகளின் பக்கவாதுகள் நீண்டிருந்தால் மெல்லக் கோதிக் கொள்ளும்.
“அப்பா! என்னாச்சி? ஆர தொலைக்கணும்?” அருகில் வந்த அப்பாவின் கைகளை. அவர் பாதங்களைப் பற்றுவது போல் பற்றிக் கொண்டு கேட்டான் மாரி.
166 ஜின்னாஹ்

“அவன்தான் ஒங்க பெரியக்கா புருஷன். அந்தத் தேவ. மகன் ஏம் புள்ளையை குடிச்சிட்டு வந்து அடிச்சிருக்கான். அவ மொகமெல்லாங் காயம். வீங்கிப்போய்.” அவருக்குப் பேச்சு வரவில்லை. அவர் சிவந்த விழிகள் விழி நீருள் தழும்பின.
பொன்னுசாமி கோபக்காரர்தான். அது எப்பொழுதும் வெளிப்படாது. நியாயத்துக்குப் புறம்பான எதனைக் கண்டாலும், கொதித்துப் புறப்படும். தீர்க்கமான ஒருமுடிவு வரும்வரை அடங்காது. அன்றும் அப்படித்தான். அவர் வெறி கொண்டு கத்தினார். பிள்ளைப் பாசம் அவர் ஆத்தரத்தை அதிகப்படுத்தி இருந்தது.
மாரிக்குத் தெரியும், இப்போது அக்கா புருஷன் அவர் கண்ணில் பட்டால், ஆவது என்னவென்று. அவர் கோபத்தைத் தணிக்க முயன்றான். அது அடங்குவதாய் இல்லை.
யார் செய்த புண்ணியமோ. அந்த வேளை அந்தப் புறமாய்ப் பெரிய துரையின் முகம் தெரிந்தது. மாரி இடத்தைவிட்டு நிம்மதிாேயடு நகர்ந்தான்.
※米米
காலைப் பொழுதின் ரம்மியமான விடிவு, பசுந்தளிர்களில் பூத்துக் கிடந்தது. முத்துப் பணிகளின் மோகனப் புன்னகை, ஒவ்வொரு தளிரிலும் சூரியக் கதிர்களால் மின்னித் தெறித்தது. சில்லென்ற குளிர்காற்று மேனியைத் துளைத்து நெஞ்சினுள் குளிர்ந்தது. விழித்துக் கொண்ட லயன்களிலெல்லாம் உதயத்தின் ஆரவாரம்.
பிறந்த பாவத்திற்காய் தேசத்தின் சுமைதாங்க. தனித்தனி முந்திக் கொள்வதில் ஏற்படும் அவசரத்தின் சமிக்ஞைகள்.
அப்பா வாசலில் நின்ற நிழல் வேம்பின் கிளையொடித்து, ஒரு முனையை வாயிலிட்டு மென்று துப்பினார். தொடர்ந்து
67 பெற்றமனம்

Page 93
அவரது வலக்கரம் வெற்றிலைக் களிம்பேறி, வைரமூறிப்போன பற்களைச் சுத்தம் செய்தது.
காலையில் அம்மா தந்த சோற்றுக் கஞ்சியை தேவாமிர்தம் போல் உள்வாங்கிக் கொண்ட அவர், தலைத்துண்டைச் சுற்றிக் கொண்டு, கவ்வாத்துக் கத்தியை இறுக்கமாய்ப் பற்றியவாறு, போருக்குச் செல்லும் வீரத்தளபதி போல் மலைநோக்கி நடந்தார். மாரி பள்ளிக்குப் புறப்பட்டான். தங்கை சிங்காரியும் கூட ஆயத்தமானாள்.
அக்காக்கள் இருவரும் கோணிச் சாக்குகளை இடையில் சுற்றி கயிற்றால் வரிந்து கொண்டனர். கொங்காணியுடன், கூடையும் தலையில் ஏறக் கைத்தடியுடன் வெளியேறினர். அம்மாவும் அதுபோல் தன்னைத் தயார்படுத்திக் கொண்டு புறப்பட்டாள். லயம் வெளிச்சேறிப் போயிற்று.
தினமும் நடக்கும் அன்றாடக் கருமங்கள்தான். காலையில் போவதும், பகல் போசனத்துக்காய் லயத்துக்கு வருவதும். மீண்டும் மலையேறித் தளிர் பறிப்பதும். மீண்டும் மாலையில் கூடு நாடும் பறவை இனம் போல் மீள்வதும்.
உழைப்பே உயிரென வாழும் அந்த மலை மக்களின் சோகங்களை வானமும் பூமியும் தாங்கிக் கொண்டன.
பேர் பதித்துக் கொண்ட ஆண்களும் பெண்களும் தத்தமக்கான மலைகளைத் தேடிக்கொண்டனர். கங்காணிகளின் கடுப்பு வார்த்தைகளுக்குத் தங்களின் செவிப்பறைகளைக் குருடாக்கிக் கொண்டு, திக்கெல்லாம் அந்த மனித இயந்திரங்கள் இயங்கிக் கொண்டிருந்தன.
சப்பித் துப்பிய வெற்றிலைச் சாற்றின் கறைபடிந்த மீசையை உள்ளங்கையால் மேல் நோக்கித் தூக்கிவிட்ட கண்காணி பொன்னுசாமி, பக்கத்துச் செடிகளில் நீட்டி நின்ற செடித்
தலைப்புக்களைக் கல்வாத்துக் கத்தியால் சீவிவிட்டார்.
168 ஜின்னாஹ்

கும்மியடிக்கக் கூடிக் குனியும் குமரிப் பெண்களின் கொண்டைகள் போல, தேயிலைச் செடிகள் அவர் செய்கையால் அழகு பெற்றன.
நாடுவிட்டு நாடுவந்த கூலிகளென்றில்லாமல் ‘ஈழத்து மலை’ மண்ணைப் பிறந்த மண்ணாய் நேசித்துத் தன் முழு உழைப்பையும் தந்த மலையின் மைந்தர் அவர்.
சிந்தனையில் இருந்த அப்பா பொன்னுசாமி இன்னும் அகன்று போகவில்லை. அவரைப் போகவிட மாரியின் மனமும் ஒப்பவில்லை. மீண்டும் மீண்டும் மறையாது தரிசித்தார்.
‘அப்பா மாரி! நீயும் நானும் பொறந்த மண் இதுதான். எங்க பாட்டான்தான் இந்தியாவிலிருந்து இங்க வந்தாரு, எங்கப்பாவும் இங்கதான் பொறந்தாரு, நமக்கு திங்கத் தீனி போடுற மண்ணுக்கு நாம நன்றியோட இருக்கணும்பா.
அவன் சின்ன வயதில், அவர் நெஞ்சில் ஊட்டிய பாடமது. இன்னும் அது அவனுள் கல்லில் பொறித்த வார்த்தைகளாய்ப் பதிந்து கிடந்தன. இருந்தும் அவன் உள்மனம் அவனை உறுத்துவதை அவனால் தடைசெய்ய முடியவில்லை.
கடந்த சில காலமாகத் தோட்டங்களில் நடந்துவரும் அன்னியத் தலையீடுகளும், அடாவடித்தனங்களும் அப்பாவின் வார்த்தைகளை மறுத்துக் குரல்தர வைத்தன.
தங்கள் பரம்பரையின் வாழ்வின் பின்னணியை அடிக்கடி அவன் சிந்திக்க, இன்நிகழ்வுகள் காரணமாயின. முள்ளுக்குத்திக்கு வெளிப்பட்ட மண்டை ஒட்டை வீசி எறிய அவனுக்க மனம் தராது சிந்திக்க வைத்ததும் அந்தக் கடந்தகால அனுபவங்களே. “சம உரிமையோடு வாழுவதாய் நாம் எண்ணிக் கொண்டாலும், நம்மைப் போல் வந்தேறு குடிகளாக வாழும்
69 பெற்றமனம்

Page 94
அதிதொகைப் பேர்கள், நம்மை அடக்கி வைக்கவல்லவா நினைக்கின்றனர்.” அவன் சிந்தனையில் எத்தனையோ நினைவுகள் மின்னி மறைந்தன.
சேவலொன்று கூவித் தணிந்தது. சாமம் இரண்டையும் தாண்டி. இரவு கழியினும், அவன் கண்கள் மூட மறுத்தன. அப்பாவின் வார்த்தைகள் மீண்டும் மூளையுள் கனத்தன.
மனம் மீண்டும் மறுத்தலித்தது. “நாமேன் நன்றியோடு இருப்பது? நமக்கல்லவா இந்த மண் நன்றியோடு இருக்க வேண்டும்.? நான்கு தலை முறைகள் நாமல்லவா, இந்த மண்ணை வளம்பெறச் செய்கின்றோம்? மாரி வலுவாகச் சிந்தித்தான். சட்டென ஓர் எண்ணப்பொறி அவன் தெளிவற்ற சிந்தனைக்குள் தோன்றிச் சுட்டது.
இந்த மண் வேறு நாம் வேறு என்று நாமே எண்ணும் போது நாட்டுக்கு நாமோ, நமக்கு நாடோ நன்றி கூறக் கடமைப்பாடுடையவர் களாகின்றோம். தவிர்த்து
மண்ணும் நாமும் ஒன்றானால் அன்னியம் இல்லை. நாம் வளப்படுத்தும் மண் நமது மண்ணன்றி வேறு எவருக்குச் சொந்தம்.? பிறந்தது இங்கென்றால், மரிப்பதும் இங்கென்றால் பிறிதென்ன வேண்டும் உரிமைக்குச் சான்றென்று. “மதிப்பவனை மதிப்போம். மதியாதவனை மிதிப்போம்.” இதுவே இனி நமது தாரக மந்திரமாக வேண்டும்.
மாரியின் நெஞ்சில் விரவிக் கிடந்த சுமையொன்று விலகிப் போனதுபோல் வெறுமையானது. அதனுள் மீண்டும் புது ஒளி புகுந்தாய் ஒரு சோடி வார்த்தைகள் ஒங்கி ஒலித்தன.
“மதிப்பவனை மதி, மதியாதவனை மிதி!”
தினகரன் வாரஞ்சரி
11. 03. 2001
170 ஜின்னாஹ்

09ܟܝܠ 6 23
(முன்னால் இருந்த தொலைக்காட்சிப் பெட்டியைத் தூக்கி நிலத்திலடித்து நொருக்க வேண்டும் போலிருந்தது அவருக்கு.
“சீ. ஏன் இப்படிப் பெண்மையைச் சீரழிக்கின்றார்கள், இந்தக் கயவர்கள்’ என்றபடி அதனை நிறத்திவிட்டு எழுந்தார். ஞானசேகரம். பக்கத்தில் இருந்து அவருடன் அன்றைய இரவுச் செய்திகளைப் பார்த்துக் கொண்டிருந்த அவர் மனைவி சொன்னாள். “ஏணிவளுங்க போறாளுங்க. அவங்களே அவங்கள சீரழிச்சுக்கிட்டா? மத்தவங்களைக் குத்தஞ் சொல்லுறது தப்புங்க!” செய்திகளின் பின் அடுத்த நாள் ஒளிபரப்படவிருக்கும் தமிழ்த் திரைப்படத்திற்கான விளம்பரத் துண்டுப் படத்தில் வந்த ஆடல் காட்சியின், அசிங்கமான பெண்மைக் கோலத்தின் வெளிப்பாடு
அந்த உரையாடல்.
171 பெற்றமணம்

Page 95
இந்தியாவுக்குத் திருத்தல யாத்திரை போய்த் திரும்பி யிருந்தனர் அந்தத் தம்பதியினர். மாதம் இரண்டு கழிந்திருந்தது. சுபாவத்தில் நல்ல மனிதர். நேர்மையானவர் ஞானசேகரம்.
மிகத் தூய்மையான மனத்தை வைத்துக் கொண்டவர்தான, என்றாலும் திருத்தல யாத்திரையின் பின் அவரின் தோற்றத்தில் மேலுமொரு தனித்துவமான சோபை துலங்கியது.
தொட்டதற்கெல்லாம் கோபம் கொள்ளும் சுபாவம். அவர் நல்ல மனதிற்குச் சவாலாக இருந்தது. இதுநாள் வரை அதனை வெல்லும் திராணி அவருக்கு இருக்கவில்லை.
மாதம் இரண்டாய் மனிதனின் கோபநரம்பு சுளுக்கிக் கொண்டதோ, என்று குடும்பத்தவர்கள் ஆச்சரியப்படும்படி மாறியிருந்தார்.
தொலைபேசி மணி கலகலத்துச் சிரித்தது. “ஹலோ” என்றார் ஞானசேகரம். "அண்ணே நான்தான் பேசறேன். ராஜினி” என்றது மறுகுரல்.
“என்னம்மா செளக்கியமா? ஏன் குரல் ரொம்ப சோர்வா கேக்குதே! ஒடம்பு சரியில்லையா?
செவிக்குள் ஒலித்த குரலின் வழமையான சுறுசுறுப்பும் குதுாகலமும், அன்று இல்லாதிருந்தது அவரை அவ்வாறு கேட்க வைத்தது.
சற்றுத் தாமதித்து ஒரு நெடுமூச்சுடன் அவர் கேள்விக்குப் பதிலைத் தொலைபேசி சொன்னது.
“ஒடம்புக்கு ஒண்ணுமில்ல. மனசுக்குத்தான் அமைதி இல்ல.”
"ஆமா என்ன நீ சொல்லுறே? ஒனக்கு என்ன ஆச்சி? பள்ளியில் ஏதாவது பிரச்சினையா?”
172 ஜின்னாஹ்

பரிவோடு, மிக்க அக்கறையாய் வார்த்தைகள் வெளிவந்தன. ஓர் உடன் பிறப்பின் உணர்வுகளோடு சொற்கள் உதிர்ந்தன. “இல்லண்ணே. நான் வேலைய விட்டுட்டன்!” “என்னம்மா, நீ ஏன் திடீரென்று இப்படியொரு முடிவுக்கு வந்தே?”
"அண்ணே, நான் உங்க கூட நெறையப் பேசணும். தயவு செஞ்சி நீங்க தனியா எங்க வீட்டுக்கு வரணும்.”
ஞானசேகரம் சற்று யோசிக்கலானார். பின், "நான் ஒனக்குப் பின்னாலே போன் பண்ணுறன்,’ என்றார்.
தொலைபேசித் தொடர்பு துண்டிக்கப்பட்டது. மனைவி கேட்டாள் “யாரது?” “அவதான் ராஜினி. ஏதோ மனசுக்கு கஷ்டம்ணணு என்ன அவ வீட்டுக்கு வரச்சொல்லுறா. எதையோ பேசணுமாம். என்ன எதுண்ணு புரியல்ல. கொஞ்சம் தாமதிச்சி போன் பண்ணுறதா
சொல்லிட்டேன்.”
"ஏங்க, அவதான் கூப்பிடுறா. உங்கக்கிட்ட சொல்லுறதால அவ மனப்பாரம் கொறையுமென்னு நெனக்கிறா போல. போய் வர வேண்டியது தானே.”
விபத்தில் ஏற்பட்ட அவளது கணவனின் இழப்பு, ஞானசேகரத்தின் குடும்ப உறவை மிக ஆழமாக்கியது. அவரது வயதுவந்த ஆண் மக்களுக்கும் பெண்ணுக்கும் அவள் உறவுக்கு மாமியாவாள். பெண் சகோதரிகளுடன் பிறந்த ஞானசேகரத்திற்கு மேலுமொரு உடன்பிறப்பும், அவர் மனைவிக்கு ஒரு உறவுக்காரியும் கிடைத்தது.
நாடகங்களிலும் தொலைக்காட்சி விளம்பரங்களிலும் முகம் காட்டி வந்த அவளின் கலையார்வமே கலைஞனான ஒரு துணையையும் அவளுக்குத் தேடித்தந்தது.
173 பெற்றமணம்

Page 96
மனைவியின் வற்புறுத்தல் , அவரை மறுநாளே அதிகாலையில் ராஜினியின் வீட்டை நாடவைத்தது. அழைப்பு மணியின் அலறலுக்கு கதவு திறக்கப்பட அவள் நின்றாள்.
என்றுமில்லாவாறு முகம் சோபை இழந்து காணப்பட்டது. உச்சி வெயிலுக்கு வாடிப்போன தோட்டத்துச் செடிபோல் நின்றாள். “வாங்கண்ணா’ ஹீனஸ்வரமாய் குரல் கசிந்தது. அவளின் முகவாட்டம் அவருக்கு அளவில்லாத அனுதாபத்தைத் தோன்றச் செய்திருக்க வேண்டும். முகமாறுதலை வெளிக்காட்டாது வீட்டினுள் நுழைந்த அவர் ஒரு சோபாவில் தன்னை இருத்திக் கொண்டு, அவளையும் “உட்கார்’ என்றார்.
பக்கத்தில் இருந்து மற்றுமொரு சோபாவில் தன்னைத் தொங்க வைத்துக் கொண்ட அவள், தலை குனிந்து மெளனியானாள். தானாக அவளே தலை தூக்கி பேசட்டும் எனப் பொறுத்திருந்தும், பொழுது நீளவே ஞானசேகரனே பேசினார். “என்ன ராஜினி. எதுக்காக வரச் சொன்னே?’ அவர் கேள்வியே அவளைத் தலை உயர்த்த வைத்தது. கலங்கிய கண்களோடு அவள் அவரை நோக்கிய வாக்கில், அவர் மனம் அவள் மீது அனுதாபத்தைத் தோற்றுவிக்க “என்னம்மா ஏன் கண்கலங்குறே? விஷயத்தை சொல்லு. என்னால முடிஞ்சத நான் செய்யுறன்’ அவர் சொற்களில் சற்று வேகம் கலந்திருந்தது.
"அண்ணே, நாணிப்ப வேலைக்கிப் போறதில்ல' தனியார் பாடசாலை ஒன்றில் உயர் வகுப் பு மாணவர்களுக்குத் தமிழ் கற்றக் கொடுத்து வந்தாள் அவள்.
"ஏன்’ என்றார் ஞானசேகரம். சற்று வியப்பினை முகத்தில் தெளித்தவாறு.
“என்னால முடியல்ல. வளர்ந்த பொடியன்கள் கரைச்சல் படுத்துறானுகள்’
(174) ஜின்னாஹ்

அவளுக்கு இப்போது நாற்பத்தைந்தைத் தாண்டிய பருவம். சற்று அலங்காரங்களால் இளமையாக சற்று இருந்தாலும், பார்க்க ஒன்றும் பதினாறு போலல்ல. ஆயினும் அவள் வார்த்தைகளில் தொனித்த நளினம் அவள் தன்னை அப்படித்தான் நினைப்பது போல் அவருக்குப்பட்டது.
மனம் அருவருப்படைந்தது போலிருந்தது அவருக்கு. மேற்கொண்டு விபரம் கேட்டால், கேட்கத்ததகாததும் சொல்லி விடுவாளோ என மனம் அஞ்சியது. பேச்சை மாற்றினார்.
“சரி எதுக்கு என்ன வரச்சொன்னாய் ராஜினி?” அவர் வார்த்தைகளில் சற்று அவசரம் இருந்தது. கேள்விக்குப் பதிலாய் சட்டென எழுந்து உள்ளே சென்ற அவள், ஒரு காகிதத்துடன் வந்தமர்ந்தாள். ஞானசேகரம் எதுவும் பேசவில்லை. அவளின் செய்கையின் பொருளும் அவருக்குப் புரியவில்லை.
சற்று நேர அமைதி. நிலத்தை வெறித்திருந்த அவள், தலையை உயர்த்தாமலேயே கையில் இருந்த காகிதத்தை அவரிடம் நீட்டினாள்.
அது கண்களுக்கு ஒரு புதுக்கவிதையின் ஒழுங்கற்ற வடிவத்தில் இருந்தது. பார்வை அதில் வேகமாய்ப் பதிந்தது.
“என் இரண்டாம் சூரியனே’ என்று தொடங்கிய வரிகளில் நடந்த சில நிகழ்வுகள் அப்பட்டமாக, பச்சையாக வரிகளாகி காகிதத்தில் இறங்கியிருந்தன.
தெய்வ தரிசனம் செய்த கண்கள், அவற்றைப் பார்க்கக் கூசின. தெரியாது செய்த சிறிய சிறிய பாவங்களெல்லாம் தீய்ந்து போயிருக்கும் என்றிருந்த நெஞ்சில், இப்படியொரு கேவலத்தைப் பார்க்கும் கேடு ஏன் வந்தது என்று எண்ணி, அவர் நெஞ்சு பதறியது.
முன்னர் போலென்றால் நிதானங்கெட்டு வார்த்தைகள் நெருப்பாகச் சுட்டிருக்கும். காகிதத்தைச் சுழற்றி கன்னத்தில் அறைந்துவிட்டு வெளியேறியிருப்பார். ஆனால் இப்போது.
175 பெற்றமனம்

Page 97
தன்னடக்கம் விஞ்சி யிருந்ததால் படித்ததும், பொறுமை வென்று நின்றது. சிறிது நேரம் தன்னை நிதானப்படுத்திக் கொள்ள அமைதியாக இருந்த ஞானசேகரம், அவள் முகத்தை ஏறிட்டுப் பார்க்கக் கூசியவராய்க் கையில் இருந்த அவள் தந்த காகிதத்தைப் பார்த்தபடியே கேள்வியொன்றை எழுப்பினார்.
“யாரிவர்? விரும்பினால் சொல்லு, நானே முன்னின்று அனைத்தையும் செய்து வைக்கிறேன்!”
அவளிடமிருந்து எந்த பதிலும் கிடைக்கவில்லை. மீண்டும் அவரே பேசினார்.
‘ராஜினி, உன் உடல் உணர்வுகளைத் தீர்த்துக் கொள்ள நீயொரு வடிகால் தேடுவதில் குற்றமில்லை. அதனை நீ நீதிபூர்வமாகத் தேடிக்கொள்ள வாய்ப்புக்கள் இருந்தும், தப்பான வழியில் நீ இன்று உன்னை இழந்து நிற்கின்றாய்.
மனிதமனச் சபலங்களுக்கு உடன்பட்டு நாம் நம்மை இழந்துவிடும்போது, பின்னால் 'வருந்த வேண்டியிருக்கும். எது எப்படியானாலும் இப்போது நிலைமை தலைக்கு மேல் போன வெள்ளம்தான். இனி மேற்கொண்டு அதற்கான பரிகாரம் தேடுவதே ஓரளவு உன் பிரச்சினைக்குத் தீர்வுகாண உதவும். நானிருக்கிறேன். உனக்கு என்னாலான எல்லா உதவிகளும் செய்கின்றேன். சொல் uTTg5!?”
இன்னும் அவள் நிலத்தையே வெறித்தவாறு இருந்தாள். பதில் பிறக்கவில்லை.
ஞானசேகரம் பள்ளிப்பருவத்தில் ஆறுமுக நாவலரின் திருவிளையாடல் புராண உரையைப் படித்திருக்கின்றார். தமிழ்ப் பாடத்திற்காக, அதன் இருபத்து மூன்றாவது படலம் , பாடவிதானத்தில் இல்லாதபோதும் படித்திருந்தார்.
அதில் வந்தவோர் மாபாதகச் செயல் இளம் பருவத்தில் மாணவனான அவரால் ஜீரணிக்க முடியாதாக இருந்தது. இப்படியும்
176 ஜின்னாஹ்

நடக்குமா? சீ. ஏனிவர்கள் இதனை எழுத்தில் பதித்துள்ளார்கள், என்று அவர் மனம் அங்கலாய்த்தது. அன்று அவர் எண்ணவில்லை அதற்கு ஒப்பான ஓர் உண்மை நிகழ்வை அவர் வாழ்விலும் சந்திக்க வேண்டிவருமென்று.
நீண்ட நேர அமைதி. ஞானசேகரத்திற்கு இருக்கப் பிடிக்கவில்லை. பல முறை மிக விருப்போடு அமர்ந்திருந்தது அளவளாவிய இருக்கைதான். இன்று ஏனோ முள்ளாய்க் குத்தியது. தரிக்கக் கூடாத ஓர் இடத்தில் தரித்திருக்கும் மனச் சங்கடம் ஏற்படினும், தொடக்கத்திலேயே உதவி செய்ய வாக்களித்து விட்டதால், ஒரு முடிவுக்கு வராது எழுந்திருக்க அவரால் இயலவில்லை.
இத்தனை நாட்களும் எத்தனை உயர்வாக எண்ணியிருந்தார்! ஒரே வயிற்றில் பிறந்தவள் போல் எண்ணியதால், தன் குடும்பத்தில் ஒருத்தியாக அவளைப் பேணினார்.
ஒன்றோடு ஒன்றாய்க் குடும்பங்கள் உறவாட அனுமதித்த அவருக்கு அவள் குறிப்பிட்டிருந்த சேதிகள், அவள் பாதக நடத்தையின் வெளிப்பாடுகள் “சீ” யென எண்ணவைத்தன.
சாக்கடையொன்று நன்னீர்க் குளத்தில் கலந்துவிட்ட பாவத்தைச் செய்து விட்ட பழி அவர் நெஞ்சைப் பிளந்தது.
சிறிது நேரத்தில் அவள் பேசினாள். சுருக்கமாய் ஒரே வார்த்தையில். அவள் உச்சரித்தது ஒரு பெயர் மட்டுமே. அது. தகதகத் தெரியும் இரும்புச் சூளையுள் அவரை உயிருடன் இறக்கிவிட்டதுபோல் கருக்கியதும், அவர் திணறிப்போக உடல் வியர்த்து நடுங்கியது.
அந்தப் பேருக்குரியவன் அவள் பிள்ளை வயதைக் கொண்ட, அவளின் பாதி வயதுக்காரன்.
இடி
12. 0.8. 2001 177 பெற்றமனம்

Page 98
ఎగyan
ஆண்டப்படுகின்?னி
சேரக்க முயன்ற காந்தங்களின் பொருந்தாத இரு முனைகள் போல, அவன் கையில் இருந்த களிமண் கோப்பையும் கண்ணாடிப் போத்தலும் ஒன்றோடொன்று சேரமறுத்து விலகிக் கொண்டன.
நிதானமில்லாமல் அவன் கைகள் நடுங்கின. கடைசியில் கோப்பையை வைத்துவிட்டு, போத்தலை இறுக்கமாகப் பற்றிக் கொண்டான்.
கடைவாய் ஒரம் வடிந்தது போக, எஞ்சியது நெருப்பாக நெஞ்சுள் இறங்கியது. கண்களை ஒருமுறை இறுகமூடி, முகத்தைச் சுழித்து, தலையை ஒரு குலுக்குக் குலுக்கினான். சேர்ந்தாற்போல் வாயில் எஞ்சியிருந்த கழிவுகளை உமிழ்நீருடன் கூட்டிக் காறி உமிழ்ந்தான்.
இப்போது காய்ந்து வரண்டு கிடந்த அவன் உதடுகள் உமிழ்நீரால் நனைந்து வெளிறின. சற்று நேரம் கண்களை இறுக
178 பெற்றமனம்

மூடிக்கொண்டு எதுவும் பேசாது இருந்த அவன், புதிய உணர்வு பெற்றவனாய் நிலத்தில் கையூன்றி எழுந்தான். தினமும் காலைக் கடனின் முதற் கட்டம் அவனுக்கு இப்படியே ஆரம்பமாகும்.
மூட்டை தூக்கும் நாட்டாமை சரீபுக்கு காலையில் கண்களைத் திறந்ததும் முதலில் “அது’ வேண்டும். பகல் முழுவதும் வருவாய்க்கு ஏற்றபடி அவன் வாய் நனைந்து கொண்டே இருக்கும்.
மாலையானதும் அழுக்கேறிப்போன தன் உடலை, ஏதோ கடமைக்குப் போல நனைத்துக் கொள்வான். எங்கேனும் ஒய்ந்துபோன ஒரு திண்ணையைத் தன் கட்டிலாக்கிக்கொண்டு இரவைக் கழிப்பான்.
இரவில் பதினொரு மணியானதும் அவனைச் சுற்றி நான்கு, ஐந்து தெருநாய்கள் துணையாகத் துாங்கும். சிலவேலைகளில் அளவுக்கு அதிகமாக உணவோடு, மட்டமான சரக்கும் கலந்திருந்தால், அவை ஒன்றுக்கொன்று பொருந்தாமல், அவன் இரைப்பையை விட்டு வெளியேறிவிடும்.
தெருநாய்க்கு அது தேவாமிர்தம். நன்றிமறவாத அவை, அவனையும் அவன் வாயையும் நன்றாகத் துப்பரவு செய்துவிட்டு: போதையேறி ஊளையிடும்.
இவன் யார்? இவன் பூர்வீகமென்ன? எங்கிருந்து வந்தான் என்பதை எவருமே அறியமாட்டார்கள். அதுபற்றி அவனிடம் பலர் கேட்டும். அதனை வெளியிட அவன் விரும்பியதில்லை.
தேடும் பணத்தை உண்ணவும், குடிக்கவும் செலவு செய்துவிட்டு. மறுநாட் காலை மீண்டும் அவன் நேற்றைய வாழ்க்கை ஆரம்பாமாகும். இந்தக் கிராமத்துக்கு வந்த ஐந்தாறு வருடங்களும், இதே மாற்றமில்லாத அவன் வாழ்வு தொடர்ந்தது.
179 ஜின்னாஹ்

Page 99
சுபைதா வீட்டில் அன்று என்றுமில்லாதவாறு ஒரே அமர்க்களம். இரண்டாம் முறையாகவும் அவள் வெளிநாடு சென்று. நாடு திரும்பி இருந்தாள்.
நீண்ட பத்து வருடங்கள். ஓரிரு மாத கால இலங்கை வாழ்வினால், இரண்டாகப் பிரிக்கப்பட்டிருந்தாலும், அவளைப் பொறுத்த மட்டில் அது ஓர் இடைவெளியாகத் தோன்றவில்லை. காலத்தின் வேகத்தைத் தாயிடம் வளர்ந்த தன்னிரு குழந்தைகளிலும் அவள் கண்டாள்.
மூத்தவள் மும்தாஜ் பதினெட்டு வயதுக் குமரிப் பெண். மற்றவன் இரண்டு வயது இளைய நஸிர். இருவருமே நன்றாக வளர்ந்திருந்தனர்.
தான் அனுப்பும் தாபரிப்புப் பணத்தை வஞ்சனை இல்லாமல் தன் தாய் குழந்தைகளுக்காகச் செலவு செய்திருப்பதை, அவர்களின் வளர்ச்சியில் இருந்து அவளால் புரிந்து கொள்ள முடிந்தது.
புதிதாக அரும்பும் மிருதுவான மீசையைத் தன் ஒருகையால் பொத்திக் கொண்டு தாயண்டை வந்து நின்றான் நஸிர், அவனைக் கண்ட சுபைதா பூரித்துப் போனாள். தன்னையும் தன் குடும்பத்தையும் சுமக்கவல்ல ஓர் ஆண் துணை, தனக்கு இருப்பதை எண்ணி அவள் கண்கள் மகிழ்வினால் பணித்தன. அவ6ை0 அழைத்து அருகில் அமர்த்தினாள்.
புதுப் புதிதாய்த் தோன்றும் சூரிய தரிசனங்கள். தினமும் அவற்றை விழுங்கிவிடும் இருளரக்கனின் பிடிவாதம். இரண்டும் கூடி நாட்களை மாதங்களாக உருட்டின. ஆறேழு மாதங்கள் அறியாது கழிந்தன. ஒருநாள் பேச்சுவாக்கில் சுபைதாவின் தாய் சுபைதாவிடம் கேட்டார்.
“ஏண்டி மகளே, குமரொண்டு வளருறுது ஒண்ட கண்ணில
יין
படலயோ? வயது பதினெட்டத் தாண்டுது
18O பெற்றமனம்

இது நாள்வரை தன் மனத்துக்குப் படமலிருந்த ஒரு விடயத்தைத் தன்தாய் நினைவு காட்டியதும், சுபைதாவின் உணர்வுகள் சட்டெனத் தூண்டப்பட தாயை நோக்கினாள். சற்றுப் பொறுத்துத் தன்னைச் சுதாகரித்தவளாய்
“என்னம்மா அவசரம்? இன்னும் ரெண்டு மூணு வரிசம் போகட்டும்! அவளென்ன முத்திப் போனாளா? என்றாள் பதிலுக்கு. “ரெண்டு மூணு வரிசமென்ன, நாலு அஞ்சும் பொறுக்கலாம். ஆனா கையில இரிக்கிற ஐஞ்சும் பத்தும் கரைஞ்சி போனா, ஆர்ர காலப் புடிக்கிறது?”
தாய் இவ்வாறு கூறியதும், சுபைதாவின் கண்கள் தாயை மிக ஆழமாக எடை போட்டன.
“ஒண்டுமில்லாத வெத்துப் பொடியனுகளுக்கே ஒரு லெச்சமும் இரண்டுலெச்சமும் நகைநட்டும். கொஞ்சம் படிச்சிக் கிடிச்சி இருந்தா அது நமக்கு எட்டாக்கனி!” என்றாள் தாய் ஒரு நெடுமூச்சோடு.
கணிசமான ஒரு தொகை கையிருப்பில் இருந்தாலுமி, கல்யாணம் என்று வரும்போது எங்கே கையைக் கடிக்குமோ என்று, அனுபவமுள்ள தன் தாய் எண்ணுவதை சுபைதா தன் சிந்தனையில் இட்டு அலசினாள்.
தாய் தொடர்ந்தும் பல காரணங்களைக் கூறி, திருமணத்தின் அவசரத்தை நிலைப்படுத்தினாள். தாயின் பக்கம் முழுக்க முழுக்க நியாயங்கள் இருப்பதை அவதானித்த அவள், இத்தனை நாளும் தான் தன் தலையில் தாங்கியுள்ள பெருஞ்சுமையின் கனதியை உணராமல் வாழாதிருந்ததை எண்ணி வியந்தாள்.
ck k >k
அன்று இரவு முழுவதும் சுபைதாவின் கண்கள் மூட மறுத்தன. மகளின் திருமணம் பற்றிய புதுப்புது நினைவுகள் அவள் நெஞ்சத் தடாகத்தில் குமிழ்விட்டு மறைந்தன.
சட்டென ஒரு நினைவு அவள் சிந்தனையில் தோன்றி, (181) ஜின்னாஹ்

Page 100
காய்ச்சிய இரும்பாய் நெஞ்சுள் இறங்கியது. அந்த அதிர்ச்சி தாங்காது அவள் எழுந்து கட்டிலில் அமர்ந்து கொண்டாள். முள் குத்தக் காலைத் தூக்குபவன் போல, தோன்றிய மற்ற அனைத்து நினைவுகளும் அந்தப் புதுநினைவுள் அவிந்த போயின. தன் தலையை இரு கைகளுக்குள் இறுக்கிக் கொண்டு சிந்திக்கலாயினாள்.
திருமணத்துக்கு வேண்டிய அனைத்துப் பொருட்களும் அவளிடம் இருந்தன. பத்து வருட உழைப்பின் பக்கவமான சேமிப்புக்கள். ஒன்றுமட்டும் குறையாக இருப்பதும், அதனால் ஏற்பட்டிருக்கும் வெறுமையைத் தன்னால் ஈடுசெய்ய இயலாமலிருக்கும் நிலைமையும் அவளைக் கலங்கச் செய்தன.
இதுநாள்வரை அவள் மறந்து போயிருந்த தன்னளவில் வேண்டப்படாத ஒன்று. இன்று தன் மகளளவில் வேண்டியதாக, மிகமிக வேண்டியதாக இருப்பதை அவள் நெஞ்சும் வினாடிக்கு வினாடி சுட்டித் துடித்தது.
※来米
பத்து வருடங்களுக்கு முன் சுபைதா இன்றுள்ள நிலையில் இருக்கவில்லை. வாழ்க்கையின் கீழ்க் கோட்டில் தன் கணவன், இரு குழந்தைகள், தாயோடு வாழ்வை நடாத்தினாள்.
மூன்று வேளையும் வயிராற உண்ண முடியவிட்டாலும், முடிந்தவரை சுமுகமாய்க் காலம் கழிந்தது. பாடுபட்டுத் தேடும் வீட்டுத் தலைவனின் ஊதியம் அவர்களுக்குப் போதுமாக இருக்கவில்லை. இருப்பினும் ஏதோ ஒரு மன ஒருமைப்பாடும் அன்னியோன்னியமும் குடும்ப அமைதிக்குக் காரணங்களாக அமைந்தன.
படித்திராவிட்டாலும், சுபைதாவின் கணவன் எந்தவொரு தவறான பழக்கத்திற்கும் அடிமையாகி இருக்கவில்லை. இவ்வாறு
C182) பெற்றமனம்

ஏழு, எட்டு வருடங்கள் அவர்களின் திருமண வாழ்வு கழிந்து போயிருந்தது. மும்தாஜும் நஸிரும் இரண்டு கண்களாக வளர்ந்தனர். இந்த அமைதியைக் குலைக்க, அவர்கள் வாழ்வுத் தடாகத்துள் வீழ்ந்த ஒரு கல்லாக, சுபைதாவின் சொந்தத்தில் ஒருத்தி வெளிநாடு சென்று வந்திருந்தாள்.
சில நாட்கள் சுபைதாவின் வீட்டில் தங்கியிருந்த அவள், வெளிநாட்டு உழைப்பின் மிகுதியையும் அங்கு கிடைக்கும் சொகுசான வாழ்வின் உயர்ச்சியையும் வாய் ஓயாமல் சொல்லிக் கொண்டிருந்தாள். சுபைதாவின் கணவனுக்கு அவளைப் பிடிக்கவில்லை.
காலம் பார்த்து அவள் எரித்த வெளிநாடு செல்லும் ஆசைத்தீ, சுபைதாவின் நெஞ்சில் வேகமாகப் பரவுவதைக் கூட, அவள் மீது கொண்ட வெறுப்பினால், அவன் கண்களுக்குப் படாமற் போயிற்று.
கஷ்டமான ஒரு வாழ்க்கையை நடத்தும் சுபைதாவின் மனத்தில் சபலம் தோன்றத் தொடங்கியது. நாட்கள் ஒவ்வொன்றாய்க் கழிந்து அதனை வளர்த்தன.
அவளறியப் பலர் வெளிநாடு சென்றுவந்து, வசதியோடு வாழுவதை அவள் அறிந்திருந்தாள். ஆனால் அப்போதெல்லாம் இப்படியொரு சபலம் அவளுக்கு ஏற்பட்டதே இல்லை.
நாளுக்குநாள் அடக்கப்பட்ட ஆசை ஒருநாள் தீப்பற்றி எரிய, சுபைதா தன் எண்ணத்தைக் கணவனிடம் கூறினாள். அவன் அதற்கு முற்றாகத் தன் எதிர்ப்பைத் தெரிவித்தான். தன்னையும் தன்குழந்தைகளையும் பிரிந்து சென்று, அவள் உழைத்துப் பெறும் ஊதியத்தை அவன் விரும்பவில்லை. அதை அவளிடமே வெளிப்படுத்தினான்.
தாயில் லாமல் பிள்ளைகள் எதிர் நோக்கப் போகும்
183 ஜின்னாஹ்

Page 101
கஷடங்களையும், அளவில்லாத தனது வாழ்வின் வெறுமையையும், அவன் உள்ளத்திற்கும் உடலுக்கும் அவள் வேண்டியிருக்கும் அவசியத்தையும் எவ்வளவுதான் அவன் விளக்கிச் சொல்லியும் சுபைதாவின் பிடிவாதத்தினுள் அவன் வார்த்தைகள் செத்துப்போயின. தங்கள் வறுமையைப் போக்க இதுவொன்றே நிரந்தரப் பரிகாரம் செய்யும், என அவள் அடித்துக் கூறினாள். ஈற்றில் வெளிநாடு செல்லத் தீர்மானமாயிற்று.
சுபைதா இல்லாமல் இரண்டு வருடங்கள் திடமான மனத்துடன் கடத்திய அவள் கணவன், குறித்த காலத்தில் அவள் வருகைக்காக ஆவலோடு காத்திருந்தான். ஆனால் வந்தது அவளல்ல. தொடர்ந்து கடிதங்களும் காசோலைகளும்தான்.
புதிய வாழ்க்கை அவளுக்குப் பலவகையிலும் பிடித்துப் போயிருக்க வேண்டும். தான் அனுப்பும் பணத்தால் தனது குடும்பம் சந்தோஷமாக இருக்கும் என அவள் நம்பினாள்.
ஒரு சாதாரண ஆண்மகனின் உணர்வுகளை அவளால் புரிந்து கொள்ள முடியவில்லைப் போலும். தப்பான பழக்க வழக்கங்கள் இல்லாத தன் கணவனின் மனித உணர்வுகளைப் பற்றிக் கிஞ்சித்தும் உணர முடியாதவாறு, அவளுக்குப் புதுவாழ்க்கையின் சுகங்கள் இருந்திருக்க வேண்டும்.
காத்திருந்து ஏமாந்த கணவனுக்கு, இறுதியில் ஏமாற்றமும் அதனால் ஏற்பட்ட விரக்தியுமே எஞ்சி நின்றன. தன் அன்புக் குழந்தைகளுக்காக அவன் அடங்கிக் கிந்தாலும், அன்றாடம் தன் உடலை வருத்தி உழைத்து விட்டு வீடு வந்ததும், அன்போடு உபசரித்து உடலின் சோர் வைப் போக்கவும், உள்ளத் தெம்பையூட்டவம் மனைவி இல்லாமை, வாழ்வில் ஒரு பெரும் வெறுமையை ஏற்படுத்தியது.
184 பெற்றமனம்

நாட்கள் செல்லச்செல்ல ஏற்பட்ட விரக்தி மனப்பான்மை பொறுமையின்மைத்ை தோற்றுவிக்க, மன அமைதி வேண்டித் தினமும் இரவில் தன் தொழில் நண்பர்களால் மதுவுண்ணப் பழக்கப்பட்டான். பழக்கமும் முற்றிப்போக, அது அவன் வாழ்க்கைக்கு இன்றியமையாத ஒரு பொருளாக மாறிற்று.
குடிப்பழக்கம் குடும்ப நிம்மதிக்குக் குந்தகமாக, தினமும் அவன் தன் மாமியாரின் சுடு சொற்களுக்கு ஆளாக வேண்டியிருந்தது. தனது குடிப்பழக்கத்தை மறக்க முயன்றான். அது அவனுக்கு மன அமைதியின் மருந்தாக மாறிப்போனதால் முடியவில்லை. ஒருநாள் எவருக்குஞ் சொல்லாது வீட்டைவிட்டு நிரந்தரமாகவே வெளியேறினான்.
米来求
தொலை தூரத்தில் மாப்பிள்ளை எடுக்க சுபைதா விரும்பாவிட்டாலும், மும்தாஜுக்கு எல்லாவிதத்திலும் பொருந்தும் ஒரு நல்ல மாப்பிள்ளை கிடைப்பதால், தட்டிக் கழக்கவும் அவள் விரும்பவில்லை.
பேசியபடி அனைத்தும் கொடுக்கப்பட்டு, திருமணமும் நடந்தேறியது. ஆனால் மகளைப் புதியவன் கையில் ஒப்படைக்கும் பொறுப்புக்காரன் அன்று அங்கு இல்லை. அவன் இருக்கின்றானா, இல்லையா என்பதுகூட எவருக்குத் தெரிந்திருக்கவில்லை. இதுகாலவரை அவன் மறக்கப்பட்ட மனிதனாகவே கருதப்பட்டான். அவன் அன்று செய்ய வேண்டிய கடமையைத் தந்தைக்குப்பின் உரிமைக்காரனான தம்பி நஸிரே செய்து முடித்தான்.
மறுநாள் பெண் ணழைப்பு. மாப் பிள்ளை வீட்டில் இரவுச் சாப்பாடு. அன்று இரவு அங்கு தங்கி, காலையில் புறப்படுவதாக ஏற்பாடு. புதுத்தம்பதிகள் அங்கேயே தங்கி விடுவார்கள்.
C185) ஜின்னாஹ்

Page 102
திட்டப்படி இரவு உணவின் பின், நீண்ட தூர பிரயாணக் களைப்பு நீங்க, வந்தவர்களனைவரும் நன்றாகப் படுத்து உறங்கினர். ஆனால் சுபைதா மட்டும் தூங்கவில்லை. தன்தலையில் இருந்த பெருஞ்சுமை இறங்கிவிட்டதால் ஏற்பட்ட நிம்மதி அவளுக்கு. ஆனால் காலமெல்லாம் தன் பெருந்தவறினால் ஏற்பட்ட கொடுமையை எண்ணியெண்ணி வருந்த வேண்டிய ஒரு நிகழ்ச்சி, அவளை எதிர்நோக்கி இருப்பதை அப்போது அவள் அறிந்திருக்கவில்லை.
ஊரே உறங்கிக் கிடக்கும் அந்த நடுச்சாம வேளையில் வீதியில் ஒரு குரல் போதை மயக்கத்தில் பாடுகின்றது.
“சன்சாரே. பவே. துக்கா.” தன் செவிகளுக்குள் பேரிடி போல் ஒலித்த அந்தக் குரல் கேட்ட சுபைதா, சட்டெனக் கட்டிலில் எழுந்து உட்கார்ந்தாள். அவள் உடல் பதறியது. தொப்பாய் ஓர் நொடிக்குள் வியர்வையால் உடல் நனைய, தலை வெடித்துச் சிதறுவது போன்ற உபாதை தோன்றிற்று. தொடர்ந்து பாடும் அந்தக் குரலை அவள் காதுகள் உன்னிப்பாய் உள்வாங்கின.
சன்சாரே. பவே. துக்கா. ஆம், சந்தேகமற அதேகுரல்தான், அதே பாடல்தான். அந்த நாட்களில் நிதானமாக, மெல்ல ஒலித்தது அது. இப்போது போதை மயக்கத்தில் ஓங்கிக் கேட்கின்றது.
அவள் எண்ணங்கள் இளமை பெறுகின்றன. பத்துப் பன்னிரண்டு வருடங்களுக்கு முன்னால் தன்கணவன் பணமுடை வரும் போது இந்தப் பாலைப் பாடுவான். அதை அவள் பலமுறை கேட்டிருக்கின்றாள். இன்றும் அதே குரல் அதே பாடல்.
இப்போது குரல் ஓய்ந்து போனது. சுபைதாவின் படுக்கை அறை வீதியை ஒட்டியே இருந்தது. யன்னல் கதவுகளைத் திறந்து பாதையை நோக்கினாள்.
G86) பெற்றமணம்

கண்ணுக்கு மிக எட்டிய தூரத்தில் பாதையோரக் கடைத் திண்ணையில் ஒரு மனிதன் படுத்துக் கிடந்தான். பக்கம் சாய்ந்து கிடந்த அவன் முகத்தில் வீதி விளக்கின் பிரகாசமான ஒளி நன்றாய்ப் பரவிக் கிடந்தது. உடல் அசைவில்லாமல் கிடக்கச் சுற்றியும் நன்றியுள்ள நான்கு ஜீவன்கள் மெல்ல உறுமியவாறு நின்று கொண்டிருந்தன. நன்றாக உற்று நோக்கினாள். அவள் சந்தேகம் முற்றாக நீங்க கண்கள் குளமாயின. காலிரண்டும் சோர நிலை தடுமாறிப்போன அவள் விழுந்துவிடாதிருக்க நிலத்தில் குந்திக் கொண்டாள்.
米米米
மறுநாட்காலை ஊரெல்லாம் ஒரே பேச்சு. கல்யாண வீட்டிலும் பேசிக் கொண்டார்கள். “நாட்டாமை சரீபு மெளத்தாகி விட்டான்’ என்று. நேற்றெல்லாம் கல்யாண வீட்டிற்கு தண்ணிர் இழுத்துவிட்டு களைப்பு நீங்க நன்றாகக் குடித்தும் இருக்கின்றான். அதுவே அவனைக் கொன்றும் விட்டது.
பலர் பலவாறு பேசிக் கொண்டனர். ஊர் உறவு இல்லாத அவனை, அந்த ஊர் மக்களே கூடி அடக்கம் செய்ய ஆயத்தமாயினர்.
பெண் அழைப்புக்கு வந்தவர்கள் புறப்பட ஆயத்தமாயினர். எல்லோரும் வாகனங்களில் ஏறிக் கொண்டனர். சுபைதாவும் ஒரு புறத்தில் ஒதுங்கி இருந்தாள். அழுது அழுது அவள் முகம் வீங்கிச் சிவந்து கிடந்தது. தொடர்ந்தும் அவள் கண்கள் பிறர் அறியா வண்ணம் நீரைக் கொட்டின.
மகளின் பிரிவால் அவள் அப்படி இருக்கின்றாள், என எண்ணி எவரும் அதனைப் பொருட்படுத்தவில்லை. வாகனங்கள் புறப்பட ஆயத்தமாயின. அவ்வேளை பாரத்து தூரத்தே "ஷஹாதத்துக் கலிமாவின்’ ஒலி அந்தப் பிரதேசத்தையே அதிர
187 ஜின்னாஹ்

Page 103
வைத்தது. தொடர்ந்து நாட்டாமை வடிரீபின் “மையித்தும்” நூற்றுக் கணக்கான ஊர்மக்கள் தொடர்ந்துவர வந்து கொண்டிருந்தது.
யார் யாருக்கெல்லாம் அவன் மாடாக உழைத்தானோ' அவர்களலெல்லாம் நன்றி மறவாது அவன் மையித்தைத் தொடர்ந்து வந்தனர். அவன் பெற்ற மகனைத் தவிர.
ஒரு குடிகார மூட்டை தூக்கியின் இறுதி யாத்திரையில் இத்தனை சனங்களா! என்று வியக்கும் வண்ணம் கூட்டம் பாதையை நிறைத்தது.
வாகனத்தில் ஏறியவர்கள் இறங்கிக் கொண்டனர். பெண்கள் ஒரு புறம் ஒதுங்கினர். அவர்களைத் தாண்டி தான் யார் என இனங்காணப்பட்டால், தன் அன்புமகளின் இன்பகரமான வாழ்வுக்கு குந்தகம் ஏற்பட்டு விடலாம் என்று அஞ்சிப் பிரிந்தது போன்று பிரிந்துபோன, ஒரு ஜீவனின் உடல் சென்று மறைந்தது. அதனைக் காணத் திராணியற்று நின்று கொண்டிருந்த சுபைதா தன்னுணர்விழந்து மயங்கிச் சாய்ந்தாள்.
(இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம், கலாசார அமைச்சின் அனுசரணையுடன் 2001ம் ஆண்டு நடாத்திய அகில இலங்கை மீலாத் சிறுகதைப் போட்டியில் ருபா 5000 க்கான
முதற் பரிசைப் பெற்ற சிறுகதை)
188 பெற்றமனம்

يحAلعلا0ندمك
ஒவ்வொரு வரியாய்ப் படிக்கும் போதும் சிறிது சிறிதாய்க் கசிந்து, கடிதத்தைப் படித்து முடித்ததும் கன்னங்களில் கொட்டிச் சிதறின கண்ணிர்த் துளிகள்.
புலம் பெயர்ந்து பத்து வருடங்களாகப் பிரான்ஸ் நாட்டில் வாழ்ந்த என் உயிரான நண்பனின் பழைய கடிதம் அது.
ஏனோ மீண்டுமொரு முறை அவன் எழுதிய கடிதங்களை நான் படித்துப் பார்க்கின்றேன். வாராவாரம் பத்திரிகைகளில் வெளிவரும் தொடர்கதைபோல ஒவ்வொரு கடிதமும் அவன் இறுதிக் கால வாழ்வின் மாற்றங்களைச் சுமந்து வந்ததால், நான் அவற்றை இலக்கமிட்டுப் பத்திரப்படுத்தி வைத்திருந்தேன். அதன் பெறுமானம் இப்போது எனக்குப் புரிகின்றது.
நண்பன் வடக்கில் பிறந்தவன். நான் கிழக்கின் சொந்தக்காரன். கல்லுாரி வாழ்வில் கொழும்பில் இணைந்து கொண்டோம்.
189 ஜின்னாஹ்

Page 104
கல்லுாரியில் குழப்படி செய்வதில் நானும் அவனும் பங்குதாரர். அங்கு நாங்கள் இருவரும் அனைவரும் அறிந்த இருமுகங்கள். அவன் இந்து, நான் முஸ்லிம்.
பெரும்பான்மை இனத்தவரும் எம்மீது அன்பு செலுத்த அவ்வப்போது நாம் செய்யும் குறும்புகளே காரணமாயின.
பசி வரும் போது பைகள் காலியாக இருந்தால் , விளையாட்டுப் போல் நாங்கள் ஒரு காரியம் செய்வோம். ஒரு சின்ன அட்டைப் பெட்டியைக் கையில் ஏந்திக் கொண்டு ஐந்து சதத்திற்காய் ஒவ்வொருவரிடமும் அலைவோம். எங்கள் வலையில் அதிகம் விழுவது பெண் மாணவிகளே.
அந்தக் காலத்தில் ஐந்து சதம் என்பதே பெரிய காசுதான். புஞ்சி பொரல்லையில் இருந்து மருதானைக்கு ‘ட்றொலி பஸ்ஸில் சென்று விடலாம்.
எப்படியும் இரண்டு முன்று ரூபாய்களைச் சேர்த்துக் கொள்வோம். கல்லுாரி கன்டீனுள் நாம் நுழையும் போது, வழக்கம் போல் எம்மோடு பங்குசேரும் ஒசிக் கிராக்கிகள் சேர்ந்து கொள்ளும். துண்டுக் கேக்கும் பிளேன் டீயும் வயிற்றுக்கு இதமளிக்கும்.
ஞானம் ஒரு பெண்ணைக் காதலித்தான். கல்லுாரியில் ஒரு வருடத்தால் எங்களுக்கும் பிந்திய மாணவி. அவளும் அவன் போல் என்னை நேசித்தாள். அவன் எனக்கு மச்சான். அவள் எனக்குச் சகோதரி. நாம் அவ்வாறுதான் பாசத்தால் பிணைந்தோம்.
மச்சான் விகடக்காரன். சிலபோது களவாகக் கொஞ்சம் தண்ணியடிப்பான். அவன் காதலிக்கு அது தெரிந்திருக்கவில்லை. ஒருநாள் சந்தர்ப்ப வசத்தால் மாட்டிக் கொண்டான். அவன் அர்த்தமற்ற உளறலே அவனைக் காட்டிக் கொடுத்தது.
எங்களுக்கு ஒரு விரிவுரையாளர் இருந்தார். என்னை
90 பெற்றமணம்

அவருக்குப் பிடிக்கும். கலைகளில் எனக்கிருந்த கொள்ளை ஆசையை அவர் தெரிந்திருந்தார். அவரும் ஒரு கலைப்பிரியர். அழகினை இரசிப்பதில் அசகாய சூரர். தனது அழகிய மாணவிகளிலும் குறிப்புச் சொல்லும் ரசிகன். ஆனால் அதிலோர் கண்ணியம் இருக்கும். அந்தப் பெண்களிடமே சொல்லிவிடுவார்.
“இந்தாம்மா’ உன் முகவெட்டிற்கு இந்த "ஹெயர் ஸ்டையில்” கொஞ்சமும் பொருந்தல. மாற்றிக்கோ! நீ உன் நிறத்துக்கு இந்த வர்ணத்தில்தான் சாரீஸ் செலக்ட் பண்ணணும' என்பார். அவர் ரசனையை மாணவிகளும் ஏற்றுக் கொள்வர்.
ஒருநாள் அவர் என்னிடம், நீ கட்டாயம் இந்தியா போக வேணும். மதுரை மீனாட்சி அம்மன் கோயிலைப் பார்க்க வேணும். அதற்கு முன் ஒருமுறை கொச்சிக்கடைக் கோயிலுக்குப் போ. அங்குள்ள சின்னச் சின்ன சிற்பங்களை நன்றாகப் பார். மதுரைக்குப் போக உன்மனம் பதறும்! என்றார்.
இவற்றுக்கெல்லாம் அவர் ஒரு நாஸ்த்திகர். அவர் விருப்பப்படி நான் பின்னொரு போது மதுரை சென்று ஒரு முழு நானையே கோயிலில் கழித்து, அந்த அற்புத மனித சக்தியின் வெளிப்பாடுகளைக் கண்டு மகிழ்ந்தேன் என்பதை, இன்றும் மறக்காதிருக்கின்றேன்.
விரிவுரையாளர் சொன்னது போல் கோயிலுக்குச் செல்லும் என் ஆவலை நண்பன் ஞானத்திடம் சொன்னேன். அவன் நல்லது என்றான். ஒருநாள் குறித்து நாங்கள் இருவரும் கோயிலுக்குச் சென்றோம். அவன் காதலியும் வந்திருந்தாள்.
பூமகள் இறைபக்தி மிக்கவள். கோயிலை வலம் வந்து கும்பிட்டாள். அவளைத் தனிக்க விட்டு நாங்கள் இருவரும் சிற்ப
தரிசனம் செய்தோம்.
19 ஜின்னாஹ்

Page 105
என் கலைக்கண்களுக்கு அவை அற்புத விருந்தாக அமைந்தன. நண்பனுள் இறங்கி இருந்த இரண்டு மூன்று “ட்ராம்கள்’. அவனை விரசமாக விமர்சிக்க வைத்தன. உளறினான். சிரித்தான். என்றாலும் நிதானம் கெட்டுப்போகுமளவுக்கு அதிகமாக ஒன்றும் வயிற்றில் இறங்கி இருக்கவில்லை.
கோயிலைச் சுற்றி வந்த நண்பி ஓரிடத்தில் தரித்தாள். அங்கு ஒரு நீண்ட வரிசை நின்று கொண்ருெந்தது. அதில் அவளும் சேர்ந்து கொண்டாள்.
கர்ப்பக் கிருகத்தில் சுவாமிக்குச் செய்யும் பாலாபிஷேகம் வழிந்து வெளிவரும் பீலியில் அவர்கள் கைவைத்துப் பாலை மிகப் கத்தியோடு பெற்றுப் பருகினர். பூமகளும் பருகினாள்.
அதனைக் கண்ட நண்பன் அவளை அருகில் அழைத்துக் காதில் உளறினான். ‘சுவாமியை மடடுமல்ல பூமியையும் கழுவிக் கொண்டுதான் பால் வருகின்றது. குடி நல்லாக்குடி!” என்றான்.
அவளுக்குக் கோபம் பீறிட்டது. ‘உளறாதீங்கோ! என்ன தண்ணி அடிச்சிட்டு வந்த நீங்களே?’ என்றாள்.அதை அவள் தெரிந்து சொல்லவில்லை. இடக்கான அவன் பேச்சு அவளை அவ்வாறு கேட்க வைத்தது.
நண்பனுக்குக் குற்ற உணர்வு. உண்மையாகவே தன்னைக் கண்டு கொண்டாள் என்ற எண்ணம் வர இன்னும் அங்கிருந்தால் நிலைமை மோசமாகலாம்எனப் பொய்க்கோபம் காட்டி “டேய், இது போதுண்டா! வேணுமெண்டா இன்னொரு நாளைக்கி நீயும் நானும் வருவம்! இப்ப அது வந்தாப்போல போகட்டும்!” என்றவாறு என்கைகளைப்பற்றி இழுத்துக் கொண்டு கோயில் கதவுகளைத் தாண்டினான். அவள் அசையாது அங்கேயே நிற்பதைப் பார்த்தவாறு, மாற்றுவழியின்றி நான் அவனுடன் நடந்தேன்.
※※ ※
192 பெற்றமணம்

தொடர்ந்து நான் படித்த அவன் கடிதங்களில் ஒன்று மீண்டும் என்னைப் பார்க்கத் துாண்டியது. படிக்கலானேன்.
அன்பான நண்பனுக்கு என்ற வழமையான ஆரம்பத்தோடு கடிதம் தொடர்ந்தது.
காலமாற்றம் எம்மைக் கடல் கடந்து வாழ வைத்தது. எத்தனை சுதந்திரமாய் நாம் நமது சொந்த மண்ணில் வாழ்ந்தோம்! கொழும்பில் படிக்கும் காலத்தில் எப்போது விடுமுறை வரும் என எதிர்பார்த்திருப்பேன். நான் பிறந்த மண்ணில் பாதம் பதித்து நடமாட எங்கு நான் வாழ்ந்தபோதும் என்னை மகிழ்வித்தது என் சொந்த மண்தானடா. ஊரைச் சுற்றி வெற்றுக் காலோடு நடமாட என் மனம் இன்றும் அங்கலாய்ப்பதை, என்னால் எப்படி உனக்கு விபரித்துக் கூற முடியும்?
“நண்பா! நான் சொன்னால் நீ நகைப்பாய் பனைக் காட்டின் காய்ந்த ஒலைகளின் சலசலப்பு இன்னும் என் செவிகளில் தாள இசை பொழிகின்றன. சில வேளைகளில் என்னால் துாங்க முடிவதில்லை. சொப்பனத்திலும் நான் விழுந்த பூமியே என் கண்களில் தெரிகின்றது.
கலைக்கடன் கழிக்க நான் பனைமர அடிகளில் பதுங்கிய நினைவுகள் கூட, இன்னும் என்னால் மறக்க முடியாதனவே. எண்ணும் போது இன்பத்தைத் தருகின்றன. நாய் ஓடும் அதிர்வுகளுக்கும் மனிதரென எண்ணி உடலை நெகிழ்த்தி மறைந்த அனுபவங்கள்.
உனக்கு நினைவிருக்கின்றதா, முதல் முதலில் நீ வடபுலம் வந்தபோது கீரிமலைக்குக் குளிக்கப்போய், நீ கேணியில் தலைகீழாய்ப்
193 ஜின்னாஹ்

Page 106
பாய்ந்து கல்லில் உன் தலைத்தோலைக் கிழத்துக் கொண்டது? என்னடா, மறந்து போனாயா? உச்சந் தலையைத் தடவிப்பார் நினைவு வரும். இப்போது அந்த நினைவுகளை நினைத்துப் பார்க்கவும் நீ அஞ்சுவாய்! காலம் அவ்வாறு மாற்றப்பட்டுள்ளது.
பத்து வருடங்கள் பறந்தது எப்படி? இயந்திரமயமான ஒரு வாழ்வுமுறை. காலச் சுழற்சியின் வேகத்தைக்கூட மனத்தில் பதித்துக் கொள்ள இயலாது இருக்கின்றதே!.
அம்மா, அப்பா, தம்பி, தங்கைகள் ஏன் பாட்டனும் பாட்டியும் சேர்ந்து வாழ்ந்த வாழ்வு. அங்கு மட்டுமா? இங்கும்தான் அது இருக்கின்றது. இருப்பினும் எத்தனை வேறுபாடு!.
மாமரத்தடியில் பாய்விரித்துப் படுப்பதும், பண்டிகைக் காலங்களில் குழந்தை குட்டிகளாய் நாங்கள் கோயிலுக்குச் சென்றுவந்ததும், அடேய் தோல் நீக்கிப் பணம் பழத்தை சுவைத்த நினைவுகளும் இன்னும் என் மனக் கண்முன் தோன்றி மறைவனதான்! எனது வீட்டில் பாட்டனும் பாட்டியும் நானும் எனது மனைவியும் தான். பேரப்பிள்ளைகளுக்குப் பணிவிடை செய்யும் சம்பளம் பெறாத வேலையாட்களாக, நான்கு சுவர்களுக்குள் நாம் நாறிக் கிடைக்கின்றோம். குளிரின் உபாதைக்குப் போர்த்துக் கொள்ளக் கடும் போர்வைகள் நிறையவே உள்ளன. எங்கள் நெஞ்சத்தின் வெறுமைக்கு நிறைவு தருவது எது?
அரசாங்கத்தைப் பாதுகாக்கும் சீருடைக்காரரின் கொடுமைகள் எம்மைச் சிலகாலம் வதைத்தது போக, நாடு கடந்தும் நாய்கள் வந்தன. எம்மைப் பாதுகாக்கவா? இல்லையே. அவையும் சேர்ந்து ஆளுபவனுக்கு ஆதரவளித்து அடாது செய்தன!
நண்பா! நீயோ கொழும்புவாசி. எமது துன்பங்களை நீ எப்படி அறிவாய்? நீ வாழும் மண்ணில் எங்கோ ஒருமுறை, எப்போதோ
194 பெற்றமனம்

ஒருநாள் குண்டுகள் வெடித்துக் குழப்பங்கள் செய்யும். அங்கு எங்கள் செவிப்பறைகள் வெடித்துச் சிதறும் வெட்டுக்களுக்குத் தங்களைப் பழக்கிக் கொண்டாலும், உள்ளத்தில் ஏற்படும் பீதிகள் தினம் தினம் புத்துயிர் பெற்றுப் பதைக்கச் செய்தன.
பிறந்த மண்ணில் பிறருக்கு அஞ்சும் பரிதாப நிலையில் வாழ்ந்த எமக்குச், சொந்தத்துள்ளும் சோதனை தோன்றிட இனி இங்கு வாழ்ந்தது போதும் என்று தான்விடை பெற்று வந்தோம்.
நண்பா! இன்று நாம் சிறிது சிறிதாய் எமது சுயத்தை இழந்து வருவதை உணர்கின்றேன். கலாசாரம், பண்பாடு என்பன சிறிது சிறிதாய் எம்மை விட்டு விடைபெற்றுச் செல்லுகின்றன என்பதை விட, நாம் சிறிது சிறிதாய் அவற்றிலிருந்து நம்மை விடுவித்துக் கொண்டுள்ளோம் என்பதே பொருந்தும்.
சொன்னால் வியப்படைவாய். என் இளையமகன் ஒரு வெள்ளைத் தோலுக்கு விலையாகிப் போனான். மகளோ அதற்கு மாறாய் ஒரு கறுப்பினத்தவனைக் கையேற்றுக் கொண்டாள்.
இன்று நாம் மூத்த மகனின் அரவணைப்பில்தான். இல்லை! அவன் வீட்டுச் சேவகர்களாக வாழ்வைத் தொங்க வைத்துக் கொண்டிருக்கின்றோம்.
சாதிக்குள் மாற்றம் நடந்தாலும் சகித்துக் கொள்ள முடியாமல் கத்தியும் பொல்லும் துாக்கிய நாம், இன்று நாடும் குலமும் நமக்கெதற்கு, என்னுமோர் சமூக மாற்றத்துக்குள் நம்மை நாம் பழக்கிக் கொள்ள வேண்டிய நிர்ப்பந்தத்துக்குள்ளாகியுள்ளோம்.
நாகரிக உலகில் இந்த மாற்றம் சரியென்றுதான் நீ சொல்லாய், உலகம் சுருங்கி விட்டது என்பாய். நீ ஒரு முஸ்லிம். உங்கள் வாழ்வுமுறை இஸ்லாம் என்னும் ஒருங்கிணைப்பில் அதனைத் தாங்கிக்
கொள்ளும். ஆனால் இங்கோ சாதி இனம் என்பதை மறந்தாலும்,
195 ஜின்னாஹ்

Page 107
மதமும் மொழியும் கலாசாரமமல்லவா சேர்ந்து அழிகின்றன! அழிக்கப்படுகின்றன.
கட்டுப்பாட்டோடு வாழ்ந்து பழகிப்போன நமக்குக் கண்டபடி வாழும் வாழ்வைச் சீரணிக்க முடியாதே!
நண்பனின் ஆதங்கங்களும் மனத் துயரும் பல நாட்கள் என்னை வாட்டின. ஏதோ அவன் ஆறுதலுக்காய் அவ்வப்போது நான் பதில்கள் எமுதினேன்.
இன்று அவனில்லை. தீடீரென ஏற்பட்ட மாரடைப்பால் தன் கவலைகளுக்கு முத்தாய்ப்பு வைத்துக் கொண்டானாம். அவன் மனைவி எழுதி இருந்தாள்.
அந்தச் சோகத்தைத் தாளாது சில நிமிடங்கள் நான் தனித்திருந்து அழுதேன். என் மனத்துக்கு நிம்மதி தேட அவன் எழுதிய கடிதங்களைப் படித்தேன்.
ck kick
இரவுப் பொழுது எப்படித்தான் கழிந்ததோ! நீண்ட நேரம் துாக்கமின்றிக் கிடந்த நான் காலையில் சூரியன் பிறந்த சில மணிகளின் பின்தான் விழித்துக் கொண்டேன்.
தொலைபேசி அழைத்தது. செவியில் விழுந்த சேதி என் காலைக் கடன்களைத் துரிதப்படுத்தியது. காலம் தாமதித்ததால் அன்று நான் வேலைக்குப் போகவில்லை. வீட்டை விட்டு வெளியேறினேன். எனது நண்பனொருவன் என்னை உடன் அழைத்திருந்தான். அவன் வீட்டின் வாசலின் அழைப்பு மணியை அழுத்திருந்தான். உள்ளே அதன் ஒலி என் காதுகளிலும் நன்றாகவே விழந்தது. யாரும் கதவைத் திறக்கவில்லை. பரிச்சயமான வீடுதான். சிறிது தாமதித்ததின் பின், பின்பக்க வழியாகச் சமையல் கட்டுக் கதவுகளைத் தள்ளிக் கொண்டு உள்ளே நுழைந்தேன். அங்கு
196 பெற்றமணம்

நான் கண்ட காட்சி. என்நெஞ்சை உறைய வைத்தது.
அவன் கட்டிலில் தலைவைத்து நிலத்தில் கிடந்தான். பதறிப் போன நான் அவனைத் துாக்கினேன்.
அவனை என்னால் துாக்க முடிந்தது. பருத்துக் கொழுத்திருந்த அவன் இப்போது நோயினால் மெலிந்து சிறுத்திருந்தான்.
“குண்டு ரெத்தினம்’ கல்லுாரிக் காலத்தில் நாங்கள் அவனுக்கு இட்ட பெயரது. இப்போது குண்டு ரெத்தினம் குச்சி ரெத்தினமாக மாறியிருந்தான். அவனைத் தூக்கிக் கட்டிலில் சரியாகப் படுக்கவைத்தேன். அமைதியாய்ச் சற்று நேரம் மூச்சுவாங்கித் தன்தை தயார்படுத்திக் கொண்டு என்னைப் பார்த்து மெல்லச் சிரித்தான். அந்தப் புன்னகையில்தான் எத்தனைப் பொருள் பதிந்து கிடந்தது! ஏக்கம், ஏமாற்றம், தோல்வி. இன்னுமின்னும் எத்தனையோ.
“ரெத்தினம், என்னடா இது? ஊட்டில ஆருமில்ல? ஒண்ட மனுஷி எங்கடா?” இது என்கேள்வி. என் கேள்விக்கு அவனிடமிருந்து பதில் வந்தது. ஒரு விரக்திமிக்க பார்வையாக.
சிறிது நேரத்தின் பின் அவன் பேசினான். “சமைச்சுப்போட ஒரு பிள்ளை வருமடா மச்சான்!” என்றான்.
பொருந்தாத பதில். இருப்பினும் அதில் என் கேள்விக்கான பதில் பொதிந்து இருப்பதாகவும் நான் உணர்ந்தேன். அவன் விரக்திமிக்க பார்வையும், முகமாற்றமும் அதற்கு முன்னுரையாக அமைந்தன.
வீட்டில் அவன் மனைவி இல்லை. வேளைக்குச் சமையல் செய்து போடவும், வீட்டுப் பணிகளுக்கெனவும் ஒரு வேலைக்கார இளம் பெண் வந்து போகின்றாள். இது என் யூகம். அப்படியாயின் அவன் மனைவி எங்கே?
197 ஜின்னாஹ்

Page 108
மற்றுமொரு கேள்வியைக் கேட்பதா வேண்டாமா என நான் குழம்பிப் போனேன். அவனும் ஏனோ தன் முகத்தை மறுபுறம் திருப்பிக் கொண்டான்.
என் கண்கள் ஆழமாக அவன் மீது பதிந்து கிடந்தன. சிறிது நேரத்தில் அவன் புயங்களும் முதுகும் சேர்ந்து அசைந்தன. குலுங்கின. சில வினாடிகள்தான். பீறிட்டுக் கிளம்பும் ஒசையை அவனால் மேலும் கட்டுப்படுத்த இயலாத நிலையில் அவன் வாய்விட்டே அழலானாள். நான் அருகில் சென்று அவனைத் தூக்கி என் நெஞ்சோடு அணைத்துக் கொண்டேன். என்னையும் சேர்த்து அவன் உடல் குலுங்கியது. என் கண்களும் அவன் நிலையை எண்ணி வருந்திக் கலங்கின.
குண்டு ரெத்தினம் ஒரு கவிதைப் பிரியன். என் உடலோடு ஊறிய கலையும், இலக்கியமும் எங்கள் இருவரையும் அடிக்கடி சந்திக்க வைத்தன.
இலக்கிய விழாக்களிலும் கலை நிகழ்வுகளிலும் பங்கேற்கத் தலைநகரில் எனக்கு அழைப்பு வரும். நான் சார்ந்திருந்த ஸ்தாபனம் என்னை இலக்கிய உலகுக்கு அறிமுகப்படுத்தியது போல, என் படைப்புகளும் என்னை வெளியுலகுக் குத் தெரியவைத்தன.
பெரும்பாலும் இவ்வாறான விழாக்களில் நாங்கள் இருவரும் முன்வரிசையின் சொந்தக்காரர்கள். திரு. திருமதி எனச் சிறப்பு அழைப்புக்கள் தவறாது வரும். பெரும்பாலும் இருவரும் திருமதிகள் சகிதம்தான் போவோம்.
இடையிடையே சந்திப்புக்களில் குடும்ப விவகாரங்கள் அலசப்படும். நண்பன் மனைவிக்குக் கூட்டுச் சேர்வான். மூத்த மகன் அமெரிக்காவில், மகள் கனடாவில், இளையவன் ஜேர்மனியில்
என்பார்கள்.
198 பெற்றமனம்

பேச்சில் மிகுந்த உற்சாகமிருக்கும். பெருமை தாங்காது. வாழுங்காலத்தில் சொர்க்கவாசம் செய்வதுபோல் பூரித்துப் போவார்கள். நாங்களும் கேட்டுச் சந்தோஷப்படுவோம்.
தேகபலமும் மனத்துணிவும் இருந்த காலம், தங்கள் தேவைகளைத் தாங்களே நிறைவு செய்து கொண்டனர். பிறருதவி இருவருக்கும் வேண்டி இருக்கவில்லை என்பதால், பிள்ளைகளின் மேல்நாட்டு வாழ்வு பெருமை பேச வைத்தது.
மெல்ல மெல்ல ஏற்பட்ட காலத்தின் இடைவெளி, உடற் திசுக்களின் அழிவுக்குக் காரணமானதால் உடல் சோர, சின்னச் சின்ன உடல் உபாதைகளில் தொடங்கி, உள்ளே அடங்கிக் கிடந்த பரம்பரைச் சொத்துக்களான, நீரிழிவும், இரத்தக் கொதிப்பும் குண்டுரெத்தினத்தை அடிக்கடி மருந்துவர்களை நாட வைத்தன. மனைவியும் வயதுக்கேற்ப ஆரோக்கியம் குறையப் பெற்றாள். அப்போதே வேலைக்காய் ஒரு தோட்டத்துப் பெண்ணை வரப்போக வைத்துக் கொண்டார்கள்.
பெற்றோரின் நிலைமை அவ்வப்போது மக்களுக்குத்
தெரிய வந்தாலும், எவருக்கும் ஒருமித்து இருவரையும் அழைத்துப் பராமரிக்கும் சுமையைத் தாங்கத் தோதிருக்கவில்லை.
மகள் கணவனுக்குக் கட்டுப்பட்டவள் என்பதால், தன் இயலாமையைச் சகோதரர்களுக்குத் தெரிவித்தாள்.
நாகரிக வாழ்வுக்கு அடிமைப்பட்டுப் போன இளம் சந்ததியினருக்குத், தங்களுக்குத் தாங்களே கால்கட்டுப் போட்டுக் கொள்ள எப்படி மனம் வரும்?
பெற்றவர்கள் என்பதால் ஆண் மக்கள் தாங்கிக் கொண்டாலும வந்து சேர்ந்தவர்கள் விரும்புவார்களா? ஆண் மக்கள் அடங்கிப் போனதால், முடிவு பணமாகப் பெற்றோர் கரங்களில் நிறைந்து வழிந்தது.
199 ஜின்னாஹ்

Page 109
ஒருவருக்கொருவர் உதவும் நிலைமை மாறித், தங்களைத் தாங்களே தாங்கும் நிலையும போய், இருவரும் பிறரால் பராமரிக்கும் இக்கட்டான நிலைமை வந்தபோது, தன்னலமே மேலோங்கிப் போனது.
தனித்து என்பதால் தாயை அழைத்துக் கொள்ள மகளுக்குக் கணவனும் சம்மதம் தந்தான். குண்டுரெத்தினத்துக்கு வேறுவழி தோன்றவில்லை. மனைவி கார்முகில் வண்ண இராமனென்றானாள். “போகின்றேன் விடையுங் கொண்டேன்’ என்றவாறு கடல் தாண்டிக் கனடாவில் குடிபெயர்ந்தாள்.
தனித்துப்போன குண்டுரெத்தினத்தின் தனிமைக்குத் துணையாய்த் தமிழே தோள் தந்தது. சேர்த்து வைத்திருந்த புத்தகக் குவியலுக்குள் தன்னைப் புதைத்துக் கொண்டு நாட்களை ஒட்டினான்.
வேளைக்கு மருந்து கிரமமாகக் கிடைக்கவில்லை. சமையலுக்கு இருந்த இளம் பெண்ணே, துணிகளையும் துவைத்துத் தந்தாள். வீட்டையும் பெருக்கிச் சுத்தம் செய்வாள். இன்று அவனுக்குத் துணையென்று சொல்ல அவள் ஒருத்தி மட்டுமே இருந்தாள்.
நீண்ட நாட்களாக எந்தவொரு கலை, இலக்கிய நிகழ்வுகளுக்கும் போகமுடியாதவாறு, தானாகத் தேடிக் கொண்ட சில வேலைப் பளுக்கள், இரத்தினத்தின் தொடர்பையும் என்னோடு துண்டிக்க வைத்ததால், அவன் என்னை அழைக்கும் வரை நான புறம்போக்காய் இருந்து விட்டேன்.
அவன் வாய்ப்பு வசதிகளோடு வாழ்ந்ததால், அவன் மீது என் கவனம தடைப்பட்து போலும். இன்று என் செய்கையை எண்ணி நான் வருந்தும் நிலைக்குள்ளானேன்.
来米米 200 பெற்றமணம்

நெஞ்சில் சாய்ந்து கிடந்தவன் மெல்லத் தலையைத் தூக்கிய போதுதான் நான் தன்னுணர்வு பெற்றேன். அதுவரை அவன் அழுகை என்னைப் புதுப்புதுக் கற்பனைகளுக்குள்ளாக்கி இருந்தது.
அவன் தன்னை நிமிர்த்திக் கட்டிலின் ஒருபுறத்தில் சாத்திக் கொண்டான். நேரம் பார்த்து வேலைக்காரச் சிறுமி உள்ளே
வந்தாள்.
இரத்தினத்தின் தோற்றத்தைக் கண்ட அந்த இளைய மனம் இளகிப் போனது.
"ஐயா! என்னையா, ஒங்களுக்கு சுகமில்லையா?” என்றாள் அருகில் வந்தபடி அந்தக் கேள்வியில்தான் எத்தனைப் பரிவு, அனுதாப நெருடலில் அவள் கண்களும் கலங்கிப் போயின.
சிலகாலம் தொடர்ந்து அவனுக்கு அனுசரணையாக இருப்பதால், அவளுக்கு அவள் மீது இருந்த பச்சாத்தாபம் ஒரு பெற்ற பெண்போல் பாசத்தையும் மனத்துள் வளர்த்திருந்தது.
அவள் மன அச்சத்தைப் போக்க ரெத்தினம் பேசினாள். “ஒண்ணுமில்லம்மா, கொஞ்சம் தலைக்கால சுத்திச்சு!” என்றான். அவன் பேசியதைக் கேட்ட அவள் சிறிது மன ஆறுதல் பெற்றவளாய் எமக்குத் தேனீர் தயாரிக்க அடுப்பங்கரை சென்றாள். சிறிது நேரத்தில் அவள் தந்த சூடான கோப்பியை அருந்திய ரெத்தினத்திற்கு உடலில் சிறிது தெம்புவர என்னோடு தன் அன்றைய நிலை பற்றி விபரிக்கலானான்.
அன்று பகல் பொழுது நீங்கி மாலையும் வரும்வரை நான் அவனுடனேயே தங்கி இருந்தேன். பகலுணவு எனக்கும் சேர்த்துத் தயாராகியது.
காலையில் எழுந்திருந்த அவனுக்கச் சிறிது தலை சுற்றி
(201) ஜின்னாஹ்

Page 110
இருக்கின்றது. யாரும் துணைக்கில்லாத வேளை தனக்கு ஏதோ நடந்துவிடப் போகின்றது என்னும் மனப்பயம் வளர அவனுக்கு என் நினைவு வந்திருக்கின்றது.
பகலுணவு முடித்துக் கொண்டதும் , ரெத் தினம் உற்சாகமடைந்து காணப்பட்டான். சரியாகக் கவனிக்கப்படாமையால் ஏற்பட்ட உடற்சோர்வு அது என்பதை நாமாகவே தீர்மானித்துக் கொள்ளும்படி அவனில் மாற்றம் ஏற்பட்டதால், அவனது வழமையான மருத்துவரைக்கூட அன்று நாம் அணுக வேண்டிய தேவை இருக்கவில்லை.
மாலையானதும் நான் புறப்பட ஆயத்தமானேன். சிறிது நேரம் தன்னைத் தூக்கத்தில் புதைத்திருந்த ரெத்தினம் விழித்துக் கொண்டான். என்னைச் சற்று நேரம் பொறுத்திருக்கச் செய்த அவன் மெல்ல எழுந்து தனது அலுமாரியில் பத்திரப்படுத்தி வைத்திருந்த ஒரு நீண்ட காகிதக் கோவையை எடுத்து வந்து என்னிடம் தந்தான்.
அதனைப் படித்து முடித்த எனக்கு ஆச்சரியத்திலிருந்து மீள முடியாதிருந்தது. ரெத்தினம் பேசினான்.
“மச்சான்! நான் இவ்வளவு நாளும் தேடினத்தில மிஞ்சிக் கெடக்கிறது உந்த வீடொன்டுதான். மத்ததையெல்லாம் அப்பப்ப அவயள் வித்துட்டுப் போட்டாங்கள். இப்ப எனக்கு ஏலாதடா. ஏலாத காலத்தில் என்ன தன்ர அப்பர் போல கவனிச்சுப் பாக்கிற உந்தப் பிள்ளை எனக்குச் சொந்தபந்தம் இல்லாதவ எண்டாலும், இப்ப எனக்கு எல்லாமே அவள்தான்.”
“மச் சான், செத்துப்போனா “றேமன்”, “ஜெயரத்தின’ ‘மல்சாலாவில’ என்ர பொணத்த வெய்க்காம என்ர ஊட்டுலதான்
வெய்க்க வேணும் பொண்டாட்டி புள்ைைளகள் இருந்தும் இல்லாத
202 பெற்றமனம்

அனாத போல நான் சாகப்படாதடா! அது அவயஞக்கும் நல்லதில்ல. ஊருலகம் கதை சொல்லும். அதனால்தான் இவவ என்ர புள்ளையா நெனச்சி நான் இத அவ பேருல எழுதி வைச்சனான். இத அவவுக்கு நான் சொல்லல்ல மச் சான். இப்பைக்கு நீரும் சொல்லாதையும். அவளத்தவிர மூணாமாளா நான் இப்ப நம்புறது உன்னைத்தாண்டா. அதனாலதான் உன்னை நான் கூப்பிட்டநான். அதுக்கிடையிலே எனக்குத் தலசுத்து வந்துட்டுது.’ என்று ஒரு நீண்ட பிரசங்கம் செய்தான்.
வார்த்தை ஒன்றும் வெளிவராத நான் அவன் செய்கையை எண்ணி மகிழ்ந்து போனாலும், இத்தனைப் பெரிய சொத்தைச் சொந்த பந்தமற்ற ஓர் ஏழை வேலைக்காரப் பெண்ணுக்குத் தந்து விடும் தாராளத் தன்மையை எண்ணி வியந்து போனேன்.
வயதான காலத்தில் ஒவ்வொரு மனித ஜீவனும் வேண்டி நிற்கும் அரவணைப்புக்குக் கோடி கொடுத்தாலும் தகுமென்றது எனது
மனச்சாட்சி.
மனநிறைவோடு நான் அவனிடமிருந்து விடைபெற்று வந்த போது அவன் பெறாமகள் ஒரு பிச்சைக்காரிக்குச் சோறு போட்டுக் கொண்டிருந்தாள்.
“அப்பாவை நல்லாகப் பாத்துக்கோம்மா!” மறித்து நின்ற அந்தத் தள்ளு வண்டியை விலக்கியபடி நான் வீதிக்குவ வந்தேன். அதில் ஒரு வயதான மூதாட்டியை ஒரு குட்டிப் பெண் தள்ளிக் கொண்டு விலகினாள்.
* * *
என்றபடி வாசலை
2O3 ஜின்னாஹ்

Page 111
ခဲၾJခြုံခြုံစံါ Aဂ်မှ&a.6n
“siis நஜீமா..! இண்டைக்கு இறைச்சி ஆக்கிச் சோறு தா புள்ள கனநாளா இறைச்சிதின்னல்ல" கணபதி அண்ணன் என் தங்கையைக் கண்டதும் சிரித்தபடி சொன்னார்.
“சரியண்ணே மச் சானும் பள்ளியுட்டு வந்திருவார். வாப்பாவுக்கும் இஞ்சதான் சாப்பாடு. ஆக்கச் செல்லிப்போட்டு போயிராதீங்க” என்றாள். அவள் பதிலுக்குச் சற்றுக் காரமாக,
கணபதி அண்ணன் படிப்பாளி. வாப்பாவின் அன்புக்குரிய மாணவன். வாத்தியார் வேலையில் “பென்ஷன்” வாங்கிக் கொண்டு பொது வேலைகளில் நாட்டங்கொண்டவர்.
இப் படித்தான் குருதரிசனம் செய்ய வரும் போது, உரிமையோடு சில சமயங்களில் சொல்லுவார். சொல்லிவிட்டு சில நாட்களில் மறந்து போய் சாப்பிடாமல் போவதுமுண்டு. அதனால்தான் தங்கையின் வார்த்தைகளில் காரம் இருந்தது.
சாப்பாட்டில் ஒன்றிரண்டு உருப்படிகள் கூடவே சேரும். அவருக்காக.
204 பெற்றமணம்

மச்சான் பள்ளிவிட்டு வந்தார். வாப்பாவும் வந்தார்கள். குடும்ப அங்கத்தவர்களும் விரித்திருந்த பன்பாயில் வட்டமாக உட் கார்ந்து கொண்டோம். மத்தியில் ஏற்கனவே உணவு பரிமாறப்பட்டிருந்தது.
வழமைபோல் வாய்பாவுக்கருகில் கணபதி அண்ணன் இருந்து கொண்டார். விரலிடையில் உதிர்ந்துவிழும் இறைச்சிதான் வாப்பாவின் பல்லில்லா வாய்க்குப் பொருந்தும். உதிராதவை வலப்பக்கம் இருப்பவரின் கல்லையில் விழும்.
வாப் பாவின் கை விரல் UL L- இறைச் சித் துண்டுகளுக்காகத்தான் அண்ணன் கணபதி வந்தால் வாப்பாவின் வலப்பக்கமாய் அமர்ந்து கொள்வார். நாங்கள் ஒருநாளும் அவருடன் போட்டிக்குப் போவதில்லை. குருவின் கைபட்ட உணவில் ஏன்தான் அவருக்கு அத்தனை நாட்டம் என்பது எமக்கு இன்னும் எண்ணின் வியப்பாகவே இருக்கின்றது.
வாப்பாவுக்குப் பல்லுத்தான் போனதே தவிர சொல்லுப் போகவில்லை. “பழமொழி பொய்த்தால் பழம்சோறு சுடும்” என்பார்கள். எங்கள் வீட்டில் வாப்பா வாழும் வரை பழஞ்சோறு சுட்டது. தொண்ணுாறு தாண்டியும் லகர, ழகர பேதங்கள் சுருதி சுத்தமாய் மொழியப்பட்டன.
※米米》
“வாத்தியார் பொண்டி சுறுக்கா வாகா மகரியாப்போகுது. நான் 'வஸ்' புடிச்சி களுதாவளைக்கிப் போக வேணுங்கா’
தினமும் காலையில் வெற்றிலை தந்துவிட்டு மாலையில் காசு திரட்டிச் செல்லும் பொன்னம்மா அக்கா, எனது தாயாரை அவசரப்படுத்தினாள்.
205 ஜின்னாஹ்

Page 112
நான் கொழும்பில் இளமை தொட்டு வாசம் செய்வதால் முஸ்லிம்கள் தமிழோடு கலந்து பேசும் சில அறபுப் பதங்களை கிழக்கிலே ஒன்றிவாழும் இந்து மக்களும் முஸ்லிம் மக்களோடு பேசும் போது, அவற்றையும் கலந்து பேசுவதை நான் ஊருக்குப் போயிருந்தபோது அன்றுதான் அறிந்தேன்.
'ம.ரிப்' என்பது மாலைப்பொழுதில் நடத்தும் ஒரு தொழுகைப் பொழுது. அதனைக் குறிப்பிட்டு இரவாகப்போகும் காலத்தைப் பொன்னம்மா அக்கா என் தாய்க்கு உணர்த்தினாள். மிக நெருங்கிவாழும் அவர்களுக்கு இந்தப் பேச்சு வழக்கில் வேற்றுமை தோன்றாவிட்டாலும் எனக்கு ஆச்சரியத்தைத் தந்தது. "மகனே, ஒடிப்போய் தம்பிராசா மேசனாரக் கூட்டிக்கி வா வாப்பா. கட்டுவேலக்கி சீமேந்தி கொண்டு வந்திரிக்கெண்டு செல்லிற்று வாகிளி’ இது உம்மாவின் வேண்டுகோள்.
கல்லாற்றுக்கு இரண்டு மூன்று மைல்கள்தான். மேசனார் வீட்டுவாசல் மாமரத்தில் காய்க்கும் ஒட்டு மாங்காயில் எனக்கு எப்போதுமே ஒரு பசி,
மேசனாரின் மகள் தேவகி அக்கா வாடா என்றுதான் ஒருமையில் என்னை அழைப்பாள். என்னைத் தன்தம்பி என்ற உரிமையோடு.
மாங்காய் வெட்டித் தருவாள். மாங்காய் இல்லாத காலத்தில் தோட்டத்து முடக்குத் தென்னையில் குரும்பையாவது கத்திக்கம்பு கொண்டு பறித்து முதுகு வெட்டித் தருவாள்.
அவளின் அன்பும் உபசாரமும் எனக்குப் படிக்கும். என்னையும் அவளுக்குப் பிடிக்கும். தலையில் குட்டுவாள். மூக்கைத் திருகுவாள். நான் சின்னவன். அவள் எனக்கு ஏழெட்டு வயது மூத்தவள்.
206 பெற்றமணம்

மேசனார் வந்தார். “என்ன வாத்தியார் சீமேந்தி வந்திட்டா” என்றார். உம்மா சொன்ன விசயங்களைச் சொன்னேன். வாப்பா வாத்தியார் என்பதால், பிள்ளைகள் நாங்களும் வாத்தியார்மார்தான் அவருக்கு.
அவர் புறப்பட்டால் இருவரும் “பைசிக்கிள் றெஸ்' ஓடுவோம். அக்கா பார்த்துச் சிரிப்பாள். கிழவன் பலசாலி என்னைத் துரத்தவிட்டு அவர் பறப்பார். நான் மூச்சிறைக்க வீடு வந்து சேர்வேன்.
米米米
கந்தப் போடி எங்கள் வயற்காரர். நல்ல மனிதர் வீட்டுக்கு வந்தால் அவருக்கு எனது உம்மா செய்யும் உபசாரம் எனக்குப் பிடிக்கும். தேனீர் குடித்துவிட்டு பல்லில்லாத தனது வாய்க்குத் தோதாய் வெற்றிலை பாக்கை தனது இடது உள்ளங்கைக்குள் வைத்து வலது பெருவிரலால் கசக்குவார். கைக்குள்ளேயே அது சுண்ணாம்பும் சேர்ந்து சிவந்து போகும். பொக்கை வாய்க்குள் அதைப் போட்டு அவர் முரசால் மெல்லும் போது அவர் வாய்கோணும் கோணலைக் காண்பதில் எனக்கோர் சந்தோசம்.
பாடசாலை லீவு நாட்களில் நானும் காக்காவும் வாப்பாவுடன் களிமடுவட்டைக்குச் செல்வோம். அங்கு தங்கும் நாட்களில், கந்தப்போடியார் சமைத்துப் போடும் ஆத்துமீன் குழம்பும், பொன்னாங்கண்ணிச்சுண்டலும் தேவாமிர்தம்.
பெற்ற பிள்ளைகள்போல் எங்கள் இருவரையும் கவனிக்கும் அந்த மனிதரை இப்போது நினைத்தாலும் மனம் இளகிப் போகின்றது.
水米米
“அம்மாக்கா இதப்புடி அம்மாக்கா’ என்றான். சிற்றம்பலம் கையில் இருந்த கோணிப்பையை உம்மாவிடம் கொடுத்தபடி, அதில் புதிதாகப் பறித்த மரக்கறிவகைகள் இருந்தன.
G207) ஜின்னாஹ்

Page 113
சிற்றம்பலம் மரக்கறித் தோட்டக்காரன். கமத்துக்குள் மரக்கறிக்காலை செய்கின்றான். வாப்பாவிடம் சிறுவயதில் படித்தவன். ஐந்தோ ஆறோதான். அதற்கு அதிகம் ஏறவில்லை. பள்ளியில் இருந்து விலகிக் கொண் டான். வாப்பா அவன் வீட்டுக்கே சென்றுவிட்டார்கள், அவனை அழைத்துவர, அவன் வீட்டுக்குள்ளேயே ஒளிந்து கொண்டு வாப்பாவுக்குப் போக்குக் காட்டிவிட்டான். இருப்பினும் இறுதிவரை வாப்பாவைக் கண்டால் ஏழாய் மடிவான். கைகால் உதறும். அத்தனை குருபக்தி. இந்தக் காலத்தில் கற்பனைகூடச் செய்யமுடியாத மரியாதை.
மரக்கறிக் காலையில் அறுவடைமுடியும் வரை இந்த வழக்கம் தொடரும். வாப்பா சொல்லுவார்கள். அவனுக்குக் காசு கொடுக்கும்படி,
உம்மா கொடுக்கும் பணத்தை வாங்கமாட்டான். சண்டை பிடிப்பான். “நான் மரக்கறி யாவார்த்தில் கணக்குப் பாக்கும் கூட்டலும் கழித்தலும் ஐயாட்டப் படிச்சதுதான்’ என்பான்.
வெறும் கூட்டலுக்கும் கழித்தலுக்கும் இத்தனை பிராயச்சித்தம், வாப்பா சிரிப்பார்கள். அவன் நன்றியுணர்வு வென்றுவிடு போது. வெறும் தேனீர் கோப்பையோடு மனம் நிறைந்து திரும்புவான்.
※※※
பக்கத்து ஊர் பாண்டிருப்பு. கண்ணகி அம்மன் கோயில் தீ மிதிப்பு அப்போது வரடா வருடம் நடக்கும். மிகக் கோலாகலமாக தொடர்ந்து ஏழு நாட்கள் என்ற நினைவு.
கோயிலைச் சுற்றிப் பெரிய வெளி. நூற்றுக்கணக்கான கடைகள். பெரும்பாலும் எல்லாக் கடைகளிலும் தொப்பிகள் தான் வியாபாரம் செய்யும்.
208 பெற்றமணம்

அண்ணனும் காக்காவும் பெயரளவில் தான். மற்றப்படி எல்லோரும் ஒன்று. பாதி மருதமுனை(அதுதான் எனது ஊர்) அங்குதான் நிற்கும் பொருள்கள் வாங்க கரும்பு சுமக்க.
இறுதிநாள் தமிதிப் பில தரீக் குழியைச் சுற்றி ஆயிரக்கணக்கானோர் கூடிநிற்பர். சனக் கூட்டம் நெறுதுளிப்படும். அதற்குள் கந்தனும், காசீமும், கணபதியும், காதரும் பூபாலும் பவrரும் ஆள்மாறி ஆள் நெருங்கிக் கிடப்பர்.
தீப்பாயும் பக்தர்கள் போடும் கூச்சலோடு நெருக்கம் தாங்காமல் “அரோகரா’ ஒலியோடு “அல்லா’ என்ற சப்த்தமும் ஓங்கி ஒலிக்கும். எத்தனை முறை நான் நெருங்குண்டு போயிருப்பேன். மூச்சுத் திணறும் போது ஆண்டவனை நினைத்து கத்தி இருப்பேன்.
மஞ்சள் பூசிக்கொண்டு பத்திரக்கொத்துகளுடன் பேய்கள் ஆடிவரும் போது அவற்றிற்கு கொடுக்கும் சாட்டை அடிபார்க்கச் சிறுவர்கள் திரள்வார்கள்.
சுளிர்! சுளிர் என்று அடிப்பது எனக்கே அடிப்பது போல் மனத்துக்குள் வேதனை தோன்றும். தீப்பள்ளையம் என்பது எல்லோருக்கும் பொதுவான ஒரு விழாபோலத் தான் அந்த நாட்களில் நடைபெற்றது. ஒரு போதும் இனமத வேறுபாட்டால் குழப்பங்கள் தோன்றியதே இல்லை.
வாப்பா சொல்லுார்கள். அவர் கடந்தகால நினைவுகளை. அவை இப்போதும் என் நினைவுகளில் நிழலாடுகின்றன. வைரமுத்து வாத்தியாரிடம் தமிழ் இலக்கணம் படிக்கும் போது, வீட்டுக்குப் போய் இராச்சாப்பாடு கொண்டு வருவது சாமித்தம்பி வாத்தியாராம். என் தந்தைக்குத் திருமணம் பேசி முடித்ததே அவர் குரு வைரமுத்து ஐயா என்றால் அன்றைய உறவின் மேன்மை புரியும்.
3ද 3: 3:
209 ஜின்னாஹ்

Page 114
என் சிந்தனையில் எத்தனை எத்தனையோ நிகழ்வுகளின் புதுப்புது மீட்டல்கள். கையில் இருந்த பத்திரிகையின் செய்திகளால் நான் ஒரு புது உலகத்தில் சஞ்சரித்துக் கொண்டிருப்பதை, என் மனைவியின் தொடுதலால் உணர்ந்தேன்.
கைமாறிக் கொண்ட சூடான தேனீர்க் கோப்பை, அவள் கடமையை முடித்துக் கொண்டதாய் சொல்லாமல் சொல்ல அவள் அங்கிருந்து அகன்றாள்.
கொழும்புக்கு வரும் போது வழக்கமான பயணம் மட்டக்களப்பு வழிதான். அந்த வழியை மறந்து இப்போது எத்தனை வருடங்கள் ஆகின்றன. இரவென்ன பகலென்ன பலமைல் துாரம் பைசிக்கிள்களில் மட்டக்களப்புக்குப் படம் பார்க்கப் பறந்த நாட்களை எண்ணிப்பார்க்கின்றேன்.
வழியில் தாக சாந்திக்கு எந்தப் படலையையும் அவிழ்த்துக் கொண்டு செல்லலாம். சொந்த வீட்டுக்குள் நுழைவதுபோன்ற உரிமையுடன்,
குருக்கள் மடம், களவாஞ்சிக்குடி, கல்லாறு எல்லாமே எங்கள் ஊர்தான். அங்கெல்லாம் வசிப்பவர்களும் எங்களவர்கள் தான்.
குருகுல சிங்கமும், கனகரெத்தினமும் வகுப்பு நண்பர்கள். அவர்களின் வீட்டுக்குச் செல்லாத நாட்கள் எனது வீட்டுக் கலண்டர்களில் மிகக் குறைவே.
ஒரு முறை ஊருக்குப் போயிருந்தேன். எனது காக்காவுடன் படித்த ஒரு நண்பன். வீட்டுக்கு முன்னுள்ள வீதியால் நடந்து வந்தான். அவன் பெயர் எனக்கு மறந்து விட்டது. வேலாயுதம் என்ற ஒரு சின்ன ஞாபகம்.
210 6huip D60TLD

அவனைக் கண்டதும் எனக்கு ஏற்பட்ட மகிழ்ச்சியில் வயதையும் மறந்து ஒருமையில் “டேய் நில்லுடா” என்றேன். அவன் என்னை அடையாளம் கண்டு கொள்ளவில்லை. நான் சின்னத் தாடியுடன் இருந்ததால்.
அவன் பயந்து போனான். அருகில் சென்றேன். உரிமையோடு அவன் தோளில் கைபோட்டேன். அவன் உதடுகள் நடுங்குவதை என்னால் அவதானிக்க முடிந்தது. எனக்கு நிலைமை புரிந்து அவன் பெயரைச் சொல்லி அவன் கைகளைப் பற்றினேன். அது வியர்த்து குளிர்ந்தது.
ஆதரவான என்பிடி அவன் அச்சத்தைப் போக்கி இருக்க வேண்டும். மெல்லச் சிரித்தான். தன்னைச் சமாளித்துக் கொண்டு பேசினான். எனது ஊருக்குள் அவனுக்கு ஏற்பட்ட இந்த அனுபவம் அவன் ஊருக்குள் நானும், அவனானால் எனக்கும் அதுவாகவே இருந்திருக்கும்.
மீட்கப்படும் இந்த நினைவுகளிலிருந்து பத்திரிகையில் மேய்ந்த என் கண்களால் நான் விடுபட, என்மனம் அங்கலாய்த்தது. ஏனிந்த நிலை. யாரால் ஏற்பட்டது. எதற்காக ஏற்பட்டது.
யாழ்ப்பாணத்தில் இருந்து என் நண்பன் கொழும்புக்கு வந்திருந்தான். கூடப்படித்தவன். எப்படியோ பல வருடங்களின் பின் என்னைத் தேடிப்பிடித்து வந்திருந்தான். பெயர் புவிராஜன்.
கூட்டி வந்தவரை எனக்குத் தெரியும் தமிழ்ப் புலமையால் ஏற்பட்ட உறவு. அவர்தான் என்னைப்பற்றி சொல்லி இருக்கின்றார். மச்சான் என்றேன் வியப்புத் தாங்காமல் என்னை அவன் இறுக அணைக்க, நான் அவனை அணைக்க நெஞ்சங்கள் பேசின. இருவர் கண்களும் கலங்கிப் போயின. கூட்டி வந்தவர் நெகிழ்ந்து போகும் ஒரு சூழ்நிலை உருவானது.
21 ஜின்னாஹ்

Page 115
அன்று எங்கள் வீட்டில்தான் அவர்களுக்குச் சாப்பாடு. மனைவி கோழி பொரித்து புரியாணி பரிமாற மூவரும் உண்டோம். பழங்கால நினைவுகளின் அசைபோடலுடன் தற்கால நினைவுகளும் பரிமாறப்பட்டன. அவன் சொன்னான்.
“மச் சான் நாங்களடா மண்ணெண்ணெய்யிலதான் டா மோட்டார் வைக்கிள் ஒடுறம்” என்றான். கவலையை மறந்து மூவரும் வாய்விட்டுச் சிரித்தோம். “தலைக்குமேலே வெள்ளபோனால் சாணென்ன முழமென்ன’
போகும் போது வயதையும் மறந்து சிறுபிள்ளையைக் கொஞ்சுவது போல் நடுவீதியில் வைத்து என்னை மாறி மாறிக் கொஞ்சினேன். எங்கள் நரை மயிர்கள் ஒன்றோடு ஒன்று ஆலிங்கனம் செய்து கொண்டன. நான் கலங்கிப் போனேன். வார்த்தைகள் வெளிவராமல் வாய் குழற கண்ணிர் வழியும் கண்களுடன் விடை பெற்றுக் கொண்டோம்.
நெஞ்சம் கனத்தது. எங்கள் கிழக்கின் செல்வம் புலவர்மணி பெரியதம்பிப்பிள்ளை ஐயாவின் பாடலடியொன்று அப்போது நினைவுக்கு வந்தது.
“இருதயத்தின் ஈழரிதழ்கள் இந்து முஸ்லிம்’ ஆம் அன்று அப்படித்தான் வாழ்ந்தோம். இன்று ஏனிந்த நிலை. ஒரே கேள்வி மீண்டும் மீண்டும் என் நெஞ்சத்தைக் குடைந்தது. கடந்த காலத்தில் நடந்து போன கசப்பான நிகழ்வுகள் ஒவ்வொன்றாய் என்நினைவில் மீண்டன.
உயிரழிவால் பாதிப்புற்ற கிராமங்கள். ஊரைவிட்டே ஒட்டப்பட்ட உடன்பிறவாச் சகோதரர்கள்.
நடந்தவைகள் நடந்து போயின. இருந்தும் இன்னும் என்மனம் முன்னைய உறவையே தேடியது.
212 பெற்றமணம்

தொடர்ந்து அலறிய தொலைபேசிக்கு வாய் தந்தான் என் சின்னமகன்.
'ഇസെft'
"தீபாவளியா.சாப்பாடா. வாறென்டா வாறேன்’ அவன் பேச்சுத் தொடர்ந்தது. சிரிப்பு, கும்மாளம் வீடே அதிரப் பேசினான் என் மகன்.
சடடென என் நினைவில் ஒரு ஒளிக்கிற்றுப் படர்ந்தது. அழிந்த உறவுகள் மீண்டும் புதிய தலைமுறையால் புதுப்பிக்கப்படுவதாய்.
(கற்பனை இல்லை)
ஒலை - 5 கொழும்புத் தமிழ்ச் சங்க ஏடு.
Q0 banubom&&an Classidomo “ஒலை 5 இதழில்’ இதயத்தின் ஈரிதழ்கள் சிறுகதையைப் படித்தேன். இனக்கலவரத்துக்கு முன், இந்து முஸ்லிம்கள் எப்படி வாழ்ந்தார்கள் என்பதை அச்சொட்டாகப் படம்பிடித்துக் காட்டும் சிறகதை.
ஒவ்வொரு சம்பவமாக, கதையின் நாயகன் அசைபோடும் போது, அதைக் கதை என்றே எண்ண முடியவில்லை. அவை ஒவ்வொன்றும் உண்மையாக நடந்தவை, கதாசரியரின் சொந்த அனுபவமே அதை உறுதி செய்வதுபோல், கதை முடிவில் “கற்பனை இல்லை’ என்ற வாசகம் இடம்பெற்றிருந்தது.
சம்பவங்களைக் கோர்த்து சிறுகதை ஆக்கிய உத்தி
L560)LDUT6075).
G213) பெற்றமனம்

Page 116
கதையின் யதார்த்தமும் அவை சொல்லப்பட்ட பாங்கும் கதையின் உயிர்ப்பை நிறுவின. இவை அனைத்துக்கும் மேலாக, கதையின் உச்சக்கட்டம் (Climax-) இரண்டு வரிகளில் மிகவும் கச்சிதமாக அமைந்துள்ளது.
“சட்டென என் நினைவில் ஒரு ஒளிக்கிற்றுப்படர்ந்தது. அழிந்த உறவுகள் மீண் டும் புதிய தலைமுறையால் புதுப்பிக்கப்படுவதாய்’ கதாசிரியரின் அனுபவத்தை-மனித நேயத்தை, கதாசிரியரன் மகன் தொடர்வதாகக் கதை முடிந்திருப்பது மிகவும் சிறப்பு.’
அச்சம்பவத்தை தொலைபேசி உரையாடல் ஆக்கி, ‘தீபாவளியா சாப்பாடா. வாறேண்டா வாறேன்’ அவன் பேச்சுத் தொடர்ந்தது. சிரிப்பு கும்மாளம், விடே அதிரப் பேசினான் என் மகன்’ என்ற காட்சி இச் சிறுகதை மூலம் சமூகத்துக்கு விடுக்கப்படும் செயதியை (Message) மிகவும் இறுக்கமாகச் சொல்கிறது.
அரசியல் வாதிகள் இந்து-முஸ்லிம் ஒற்றுமையைக் குதறி வரும் இக் காலகட்டத்தில், நூறு கட்டுரைகள் மூலம் சொல்லி விளக்க முடியாத விடயத்தை இச்சிறுகதை சொல்கிறது. அது மனதில் ஆழப் பதிகிறது. என்ன அற்புதமான வார்ப்பு, நான் சுவைத்துப் படித்த அல்லது படித்துச் சுவைத்த அற்புதமான சிறுகதை இது. பாராட்டுக்கள்.
©le
அன்புமணி
(இரா. நாகலிங்கம்)
214 ஜின்னாஹ்


Page 117
*?) 6.a. s.
தண்டவாளத் தொடர் போல ஒரேவேளையில் இரண்டு துறைகளிலும் சமதையாகக் கால்ப புகழ் பதித்து வருபவர்கள் தமிழில் வெகு சில அந்த மிகச் சிலரில் கவிஞர் ஜின்னாஹ் ஷt ஜின்னாஹ் வாழ்வினைப் பற்றி தீட்சண்யமான பார்வை கொண்ட படைப்பா தன்னைப் பாதிக்கும் சிறுசம்பவத்தையும் பாசாங்கு ஏதுமின்றி படைப்பாக்கும் திறன் எந்தச் சுற்றிவளைப்புமின்றி நேரடியாக கதை சொல்லும் வல்லமையைப் ஆழ்ந்து பயின்ற இலக்கியவளம் எந்த இடையூறுமின்றி அவரை கதை சொல்ல வைக்கின்றது. ஜின்னாஹ்வின் கதைகளில் வரும் மனிதர் அந்நியப்பட்ட உதிரிகள் அல்ல. இதே இப்போதுதான் நாம் பேசிவிட்டு வந்த இரத்தமும் சதையும் உயிரும் உணர்வும் நிை சாதாரண மனிதர்கள் அவர்கள். நமது அய ஜின்னாஹ்வின் காவியநாயகர்கள் சாதாரணமனிதர்களின் போற்றுதலுக்குரிய தமிழின் செல்வமான இலக்கணநெறிநின் இலக்கியம் ஆகியுள்ளனர். அவரது புனைகதை மனிதர்கள் மானிடமேன்மையை வலியுறுத்தும் 96oo u Ironmå 6ed g601 mð56in. கவிதையில் ஈட்டிய புகழின் அடுத்த சகோதர புனைகதையிலும் அவர் சாதனை படைக்க ே அவர் கைகள் பற்றி உற்சாகப்படுத்துவதில்
செ.யோகநாதன்
 

శిష్ట్రాశ
தித்து
த்தீனும் ஒருவர்
6) Iğ5) e:21,61560IG)
பற்றிருக்கிறார்.
றந்த noon soit.
வீரர்கள்.
Georgeneo கிழ்வு அடைகிறேன்.